கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தென்னிந்தியக் குடிகளும் குலங்களும்

Page 1
| || | | |
| | | |
|- , .|-
r.|-~~ ~ ~ !, , ,! --|- -
( , . . . . . . . . . ........ .|-|-
, , ,|-: : ( ) : 『: : : - * * -
 


Page 2


Page 3

தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
ந.சி. கந்தையா

Page 4
முதல் பதிப்பு அக்டோபர் 1999
பக்கம் 160
விலை ரூ 45/- வெளிநாடு : 10 US டாலர்
ஒளி அச்சு : வள்ளுவர் கணினியம்
சென்னை
அச்சு : உதயம் அச்சகம்
சென்னை

முனனுரை
மக்களினம் சம்பந்தமான ஆராய்ச்சிக்குப் பயன்படும் இந் நூல் அரை நூற்றாண்டுக்கு முன் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நூல்களைத் தழுவிச் சுருக்கி எழுதப்பட்டதாகும். தென்னிந்திய மக்கள் எல்லோருக்கும் பொதுவான சில பழக்க வழக்கங்கள் உள்ளன. அவ்வகை வழக்கங்களை விரித்துக் கூறாது ஒவ் வொரு கூட்டத்தினரிடையும் சிறப்பாகக் காணப்படுகின்றவற் றையே விரித்துக் கூறியுள்ளோம். மேல் நாட்டுக் கல்வி, நாகரி கம் என்பவற்றின் நுழைவால் விரைந்து மறைந்து கொண்டு வரும் தென்னாட்டு மக்களின் பழைய பழக்க வழக்கங்களை அறிந்து கொள்வதற்கு இந்நூல் வாய்ப்பளிக்கும். அரை நூற் றாண்டுக்குள் இந்நூலிற் கூறப்பட்டுள்ள பழக்க வழக்கங்கள்
பல மறைந்து விட்டன;சில மறைந்துகொண்டு வருகின்றன.
ந.சி.க.
இருபது ஆண்டுகளின் முன் டாக்டர் ஐசாக் தம்பையா அவர்கள், இந்நூலாசிரியரைப் பற்றி எழுதிய கருத்துரை
Penang House, Jaffna, 8th January 1938.
Mr. N.S.Kandiah of Navaly is a very agreeable discovery. He is a Tamil whose interest in Tamil Literature is splendidly altruistic. There are not many who are so supremely unselfish. Mr.N.S.Kandiah is a scholar, and a scholar with a modern environment. This is a great adantage, for it enables him to be a liberal in literary values and cultural assessments. He is doing yeoman service to the cause of Tamil learning by his prose rendering in Tamil of such classics as Pattuppattu and Purapporul. His Tamilagam is a mine of scholarly information well and balancedly presented. He is a patriotic scholar whose scholarship is unaffacted by national bias.
(s.d.) T.Isaac Thambyah, D.Th. President, Jaffna Association.

Page 5
பதிப்பாசிரியர் உரை
தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டு செய்து வருவதே எம் தலையாய பணி என்ற நோக்கில் யானும் எம் நிறுவனமும்" கடந்த பல ஆண்டுகளாகத் தொண்டு செய்து வருகிறோம்.
இதனால்தான் இயல்பானதும் இயற்கையானதுமான சைவ சமயப் பரப்புதலையும் திருக்குறளை உலகெங்கும் பரப்புதலையும் எமது வழிமுறைகளாகக் கொண்டுள்ளோம்.
திருமந்திரம் ஆங்கில உரையை வெளியிட்டோம். சைவ சமய வினாவிடை, சைவ சமய தத்துவங்கள் மரபு சார்ந்த கதைகள் இன்னோரன்ன அரிய நூல்களை வெளியிட்டு வருகிறோம்.
திருக்குறள் எளிய பதிப்பு, ஆங்கில உரை, திருக்குறளில் பலவகை உரைகள், கையடக்கப் பதிப்பு, திருக்குறள் சொல்லகராதி, திருக்குறள் கதைகள், திருக்குறள் அதிகாரத் தொகுப்பு, திருக்குறள் புதிர்கள், திருக்குறள் வகை விளையாட்டுக்கள் இப்படி இருபதுக்கும் மேற்பட்ட முயற்சிகள் . . . . . .
யாவும் எங்கள் நிறுவனத்தின் அரிய செயல்கள். யாரும் திருக்குறளை உலகெங்கும் வேகமாகப் பரப்பிட நினையாத போது யாமும் எங்கள் நிறுவனமும் திருக்குறள் கற்றிட, பத்து தங்கக் கட்டளைகள் என்ற எளிய ஆனால் நூதன முறையை அறிமுகப்படுத்தி வருகிறோம். இதற்காகவே பத்து நூல்களை வெளியிட்டிருக்கிறோம்.
தமிழ் கற்கும் சிறார்களுக்கு நல்ல தமிழை அறிமுகப் படுத்த தமிழ் கையேடு போன்ற பல முயற்சிகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் செய்து வருகிறோம்.
தமிழ் இளைஞர்கள் பிற மொழி கற்றுத் தம் வாழ்க்கைத் தரத்தை வெகுவாக உயர்த்திக் கொள்ள முடியும் அல்லவா? இதனால் தமிழ் - ஜப்பானிய மொழி, தமிழ் - ஹக்கன் மொழி (சீன மொழி), தமிழ் - மாண்டரின் மொழி (சீனப் பொது
iV

ந.சி. கந்தையா
மொழி), தமிழ் - காண்டனீசு (தென் சீன மொழி), தமிழ் - மலாய், தமிழ் - சிங்களம், தமிழ் - ஐரோப்பிய மொழிகள் ஆகிய நூல்களை வெளிக்கொண்டு வந்து கொண்டிருக் கிறோம்.
இந்த வரிசையில் இன்னும் சில நூல்களையும் மொழியறிஞர் சாத்தூர் சேகரனின் முயற்சியுடன் செய்ய இருக்கிறோம்.
ஆம் தமிழ் மேம்பாட்டிற்காகவும் தமிழர் நல்வாழ்விற் காகவும் வழிகாட்ட இன்னும் பல திட்டங்கள் உள்ளன.
பிழையற்ற தமிழை எழுத வேண்டும் என்பது தானே எல்லாத் தமிழருடைய ஆர்வம்? அதற்கு உதவ ஒரு நூல் வெளியிட்டிருக்கிறோம்.
மொழி பெயர்ப்பு என்பது அரிய கலையாகும். பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்வது என்பது கூட தமிழ் அன்னைக்கு அணிகலன் சூட்டுவதாகும். மொழிபெயர்ப்பு சிலருக்கு வேலை வாய்ப்பைக் கூடத் தரவல்லது. மாணவர்களுக்கு அவசியமான நூலாகும்.
இப்போது எங்களுடைய பணியில் மற்றுமொரு புதிய முனையைத் தொடங்கியுள்ளோம்.
eéeğLfb • • • • • • • பழந்தமிழர் பற்றிய செய்திகளைப் பதிவு செய்து நூலாக்கித் தருதலாகும். பழமை பற்றிய அரிய நூல்களை மறுபதிப்புச் செய்வது . . . . . . . . இதில் அடக்கமாகும்.
இத்தகைய அரிய பணியில் வெளிவருவதே "தென்னிந் திய குலங்களும் குடிகளும்” என்ற இந்நூலாகும்.
பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தில் சாதிகளே கிடையாது. சங்க காலத்தில் தொழிற்சாதி மட்டுமே இருந்தது. அவையும் நிரந்தரமானதல்ல. ஒரு தொழில் செய்வோர் பிற தொழில் செய்யலாம். எனவே சாதி பற்றிய சிந்தனை இல்லை. ஆகவே ஏற்றத் தாழ்வும் அன்று இல்லை.

Page 6
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
இதனால் தான் "பிறப்பொக்கும் எல்லா உயிரும்’ என்றார் திருவள்ளுவப் பெருந்தகை.
இடைக்காலத்தில், கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்குப் பின் போலி சமயக்காரர்கள் தொழிற் சாதியை உண்மைச் சாதியாக்கி விட்டனர். மக்களுள் ஏற்றத் தாழ்வையும் ஏற்படுத்தலாயினர்.
கோவில் கட்டியது தமிழர்கள். அதற்கு ஊழியர்கள் மட்டுமே பிறாமணர்கள்.
தேவாரப் பெருமக்கள் எழுதிவைத்த தேவார ஏடுகளை கோவில் அறையில் பூட்டிவைத்த பிறாமணப் பூசாரிகள் தர மறுத்தனர். அறுபத்து மூவரே வர வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்தனர். ஆகவே இராசராசன் அறுபத்துமூவர் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு வந்து பட்டர்களை மிரட்டிப் பெற்றான். இலட்சம் பாடல்கள் இருந்த ஏடுகள் கரையான் அரித்து விட்டன. எஞ்சியவையே இன்றுள்ள தேவாரப் பாடல்கள் ஆகும்.
இராச இராச சோழன் காலத்தில் மற்றும் ஒரு போராட்டம் நடந்தது. வலங்கை இடங்கைப் போரட்டம் நடைபெற்றதாகத் தெரிகிறது.
கி.பி. 15ம் நூற்றாண்டிற்குப் பின் சேர சோழ பாண்டிய ஆட்சிகள் முற்றிலும் மறைந்தன. அயலவர் ஆட்சியைத் துணை கொண்டும், பொய்யான நான்கு வேதச் சான்றுகளைக் காட்டியும் பண்டித மதவாதிகளால் சாதிகளும் ஏற்றத் தாழ்வும் பல்கிப் பெருகின.
கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிபுகுந்தாற் போல்ா யிற்று தமிழகம். தமிழகம் மட்டுமா? இந்தியா முழுவதிலும் காட்டுத்தீ போன்று சாதித் தீ பரவியது. இந்தியா முழுவதிலும் நிலவி வந்த பழந்தமிழ்ப் பண்பாட்டைச் சிதைத்தது.
நாடோடியாக வந்தோர் பேச்சை நாடாள்வோர் கேட்டதால் வீடும் கெட்டது; நாடும் கெட்டது.
எந்த எதிர்காலத் திட்டமும் இல்லாதவர்களாயினர் திருவிட மக்கள். சிந்தனை வளம் மிக்கிருந்தோர் - உலகின்
vi

ந.சி. கந்தையா
முதல் கடலோடிகளான தமிழர், உலகிற்கே கல்வியையும் சமயத்தையும் கற்றுத் தந்தவர்கள் - தம்முள் சண்டையிட்டுத் தொழில் வளம் இழந்தனர்; கடல் தாண்டிச் செல்ல அஞ்சினர். வறுமையால் தம் மாண்பை இழந்தனர்; மரபை இழந்தனர்; மங்கா வீரத்தையும் இழந்தனர்.
அடடா, ஒளிரும் கூரிய வாள் . . . . தர்ப்பைப் புல்லுக்கு முன் தோல்வி கண்டது. இத்தகைய இழி அற்புதம் உலகில் வேறெங்கும் நடைபெறவில்லை. இந்தியாவில் - குறிப்பாகத் தமிழகத்தில் விமரிசையாக நடைபெற்றது. அறிஞர்கள் வைதிகத்தின் முன் வாயடைத்துப் போயினர்; வீரர்கள் சாதி சமயச் சழக்கில் செயலற்றுப் போயினர்; கலைஞர்கள் வறுமை யால் கலைகளை மறந்தனர். தமிழில் இருந்த கலைகளை எல்லாம் சமஸ்கிருதம் என்ற - என்றுமே பேசப்படாத மொழியில் பெயர்க்கப்பட்டது. தமிழில் உள்ள மூல நூல்களை அழித்தனர் வந்தேறிகள்.
★ ★ ・ ★ ★ ★ ★
தென்னிந்திய மக்களின் சாதி பற்றி தர்ஸ்டன் என்னும் ஆங்கிலேயர் நூறாண்டுகளுக்கு முன் பல மடலங்கள் எழுதினார். இவற்றில் பல பிறர் கூறக் கேட்ட செய்திகளே ஆகும். தர்ஸ்டன் கள ஆய்வு செய்ய எங்கும் போகவில்லை. எனவே அவை முற்றிலும் உண்மையெனக் கொள்ள இயலாது.
பிறாமணர்கள் சுற்றியிருக்க, அவர்கள் கூறியதையே தர்ஸ் டன் பதிவு செய்திருக்கிறார். எனவே ஒரு வகையில் இவை சரியான செய்திகள் அல்ல. இருப்பினும் சிற்சில உண்மைகள் மட்டுமே கிட்டுகின்றன. அவை ஆய்வாளருக்கும் தொன்மை பற்றிய அறிய விரும்புவோருக்கும் பயன்படும்.
★ ★ ★ 女 ★ ★
தர்ஸ்டன் எழுதியுள்ள கருத்துகளில் இருந்து சுவையான சில செய்திகளை நா.சி. கந்தையா இந்நூலில் தருகிறார். சில செய்திகள் உண்மையானவை அல்ல; சில பழக்க வழக்கங்கள் காலத்தால் மாறியுள்ளன. மறுக்க வேண்டிய செய்திகளை சாத்தூர் சேகரன் அடிக்குறிப்பில் கூறியுள்ளார்.
vii

Page 7
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
நூற்றைம்பது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிற் சில பழக்க வழக்கங்களை இந்நூல் மூலம் பதிவு செய்துள் ளோம். யாரையும் குறைவு படுத்துவதோ நிறைவுபடுத்து வதோ எங்கள் நோக்கம் இல்லை. நா.சி. கந்தையா பிள்ளை யின் நூலை மறுபதிப்பு செய்துள்ளோம்.
மேலும் நமது குலங்கள் பற்றி அறிய விரும்புவோர் கீழ்க்கண்ட நூல்களைப் படிக்கலாம்.
பேரறிஞர் அண்ணா அடிக்கடி மேற்கோள் காட்டும் நூல் : 'Hindu Manners, Customs and Cermonies'.
G.U. Pope 67(upgu “People of India'.
Viii

பொருளடக்கம்
பக்கம் 1. தென்னிந்திய குலங்களும் குடிகளும் . I 2. வட இந்திய குலங்களும் குடிகளும் . 118 3. இலங்கைத் தமிழர்
பழக்கவழக்கங்கள் 0. 129 திருமணம் ... I31
மரணம் ei e s 133 புத்தளம் கரையார் I33
அணிவகை a s 135 ஆடவர் அணிபவை Vr V W I35 பெண்களனிகள் e. 136 இலங்கைத் தமிழரிடையே
காணப்படும் சாதிகள் - I38 மாட்டுக்குறிசுடும் அடையாளங்கள் . 139 சாதிகளின் பட்டப் பெயர் 140
Appendix a 149

Page 8
தோற்றுவாய்
ஹெக்கல், படைப்பின் வரலாறு' என்னும் நூலில் இப்பூமி யின் தரை, நீர்ப்பரப்புக்கள் தொடர்ந்து மாற்றமடைந்து வந்த தன்மைகளை ஆராய்ந்து கூறியுள்ளார். அவர் கூற்று வருமாறு: "இந்துமாக்கடல் முன் ஒரு பூகண்டமாக இருந்தது. அது சந்தாத் தீவுகள் முதல் (ஆசியாவின் தென் கரை வழியாக) ஆப்ரிக்கா வின் கிழக்குக் கரை வரையில் பரந்திருந்தது. முற்காலத்தில் மக்களின் பிறப்பிடமாக விளங்கிய இத்தரைக்கு இஸ்கி ளாத்தர் இலெமூரியா எனப் பெயரிட்டுள்ளார். இப்பெயர் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த குரங்கு போன்ற மக்கள் காரண மாக இடப்பட்டது. இலெமூர் என்பதற்கு தேவாங்கு என்பது பொருள். இலெமூரியா, மக்களுக்குப் பிறப்பிடமாகவுள்ளது என்னும் பெருமையுடையது. மலாய்த் தீவுக் கூட்டங்கள் முற்காலத்தில் இரு பிரிவுகளாக இருந்தனவென்று வாலேசு என்னும் இயற்கை வரலாற்றியலார் ஆராய்ந்து கூறியுள்ளார்.
மலாய்த் தீவிலும் தென்னிந்தியாவிலும் வாழும் மக்கள் சிலரின் பழக்க வழக்கங்கள் ஒரே வகையாக உள்ளன. போர்ணி யோத் தீவில் வாழும் (இ)டைக்கர் மரமேறும் வகையும் தென்னிந்தியாவில் ஆனை மலையில் வாழும் காடர் மரமேறும் வகையும் ஒரே வகையாகவுள்ளன. காடரும் திருவிதாங்கூர் மலை வேடரும் தமது முன் பற்களை உடைத்து அல்லது அராவிக் கூராக்கிக் கொள்வர். ஆண்கள் பதினெட்டு வயதடையும் போதும் பெண்கள் பத்து வயதடையும்போதும் இவ்வாறு செய்துகொள்கின்றார்கள். மலாயாவில் யக்குன் என்னும் மக்கள் இவ்வாறு செய்துகொள்கின்றார்கள். மலாய்த் தீவுக் கூட்டங்களில் பெண்கள் பருவமடையுங் காலத்தில் பற்களை அராவிக் கறுப்பு நிறமூட்டுகின்றனர். தென்னிந்திய காடர் முடியில் சீப்பணிந்து கொள்வது போலவே மலாக்கா வில் வாழும் நீக்கிரோயிட்டு இனத்தைச் சேர்ந்த மக்களும் சீப்புகளை முடியில் அணிந்துகொள்கின்றனர். கலிங்க நாட்டி
1. History of Creation. 2. Sunda Islands. 3. Sclater. 4. Wallace.
Χ

ந.சி. கந்தையா
னின்றும் சென்று மலேயாவில் குடியேறிய மக்கள் கிளிங்கர் எனப்படுகின்றனர்; இக்காலத்தில் அப் பெயர் தமிழர்களை மாத்திரம் குறிக்க வழங்குகின்றது.
பழங்காலத்தில் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் காணப்பட்ட தாவரங்களும் விலங்குகளும் ஒரே வகையின வென்று ஆல்ட்காம் முடிவு செய்து தென்னிந்தியாவையும் ஆப்பிரிக்காவையும் தொடுத்துத் தரையிருந்ததெனக் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்கக் கரையிலுள்ள நெத்தாலிலும் திருச்சிராப்பள்ளி பாறையடுக்குகளிலும் காணப்பட்ட சில உயிர்களின் கற்படி உருவங்கள் (fossis) ஒரே வகையாகக் காணப்பட்டன. இவையும் இவை போன்ற காரணங்களும் இந்தியாவும் ஆப்பிரிக்காவும் இணைக்கப்பட்டிருந்தன என்னும் கொள்கையை வலியுறுத்துகின்றன. ஆஸ்திரேலியர் பூமாரங் என்னும் வளை தடிகளைப் பயன்படுத்துகின்றனர். ஒரு இலக்கின் மீது வளை தடியை எறிந்தால் அது இலக்கில் பட்டு மீண்டு வருகின்றது. வளைதடி தென்னிந்திய மறவரால் பயன்படுத்தப்படுகின்றது. கள்ளரின் திருமணத்தில் மணமகள் இல்லத்தில் விருந்து நடக்கும் போது மணமகன் வீட்டாரும் பெண் வீட்டாரும் வளைதடிகளை மாற்றிக் கொள்வர்.
ஆஸ்திரேலியரும், பப்புவர், புதுக்கினியர், சந்தா தீவினர், மலேயர், மயோரியர் (நீயூசீலந்து மக்கள்) முதலியோரும் ஒரே இனத்தவர்களாகக் காணப்படுகின்றனர். தென்னிந்திய ஆதி குடிமக்கள் மக்களினப் பிரிவுப்படி ஆஸ்திரேலிய மக்களாகக் காணப்படுகின்றனர். இவ்வாரய்ச்சியினால் ஒரு காலத்தில் நியுசீலந்து முதல் மலாய்த் தீவுகள், இந்தியா, மாலைதீவுக் கூட்டங்கள் வரையில் ஒரு இன மக்கள் வாழ்ந்தார்கள் என்ப தும், அவ்வினத்தைச் சேர்ந்தவர்களே தென்னிந்திய ஆதிக் குடியினரிற் சிலரென்பதும் தெரிய வருகின்றன. முண்டா சாந்தால் மக்களும் இவ்வினத்தைச் சேர்ந்தவராகக் கொள்ளப் படுவர். இவ்வாறு தர்ஸ்டன் தனது "தென்னிந்திய சாதிகளும் இனங்களும் என்னும் நூலிற் கூறியுள்ளார்.
இந்தியாவில் மிகப் பழங்காலத்தில் மூன்று இன மக்கள் வாழ்ந்தார்கள். (1) மத்தியதரை மக்கள். இவர்களே திராவிட
xi

Page 9
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
இனத்தவர் எனப்படுவோர். (2) நிகிரிட்டோ மக்கள். (3) ஆதி ஆஸ்திரலாயிட்டு மக்கள். நிகிரிட்டோ வகை தென்னிந்திய மலைச் சாதியினராகிய இருளர், காடர்களிடையே காணப்படு கின்றது. ஆதி ஆஸ்திரலாயிட்டு வகை முண்டா, சாந்தால், கோல் முதலிய மொழிகளைப் பேசும் மக்களிடையே காணப் படுகின்றது. இம் மக்கள் ஆரியரின் வருகைக்குமுன் வட மேற்குத் திசையினின்று வந்தவர்களாகலாமென்று ஆராய்ச்சி யாளர் கூறுவர். இவ்வினத்திரையே மேல்நாட்டு ஆராய்ச்சி யாளர் கோலரியர் எனக் கூறியுள்ளார்கள். ஆதி ஆஸ்திர லாயிட்டு இனத்தவர்களே மலாய்த்தீவுகள், பர்மா, சயாம் முதலிய நாடுகளின் ஆதி மக்களாவர். இவர்கள் எப்படி இந்தியாவை அடைந்தார்கள் என்று கூற முடியவில்லை. ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் நில இணைப்பு இருந்த காலத்தில் இவர்கள் இந்தியாவை அடைந்திருக்கலா மெனச் சிலர் கூறுவர். இந்திய மக்கள் (People of Imdia) என்னும் நூல் எழுதிய ஹெர்பெட் இரின்லி இந்தியாவில் தொடக்கத்தில் திராவிட மக்கள் வாழ்ந்தார்கள் என்றும், பின்பு பல்வேறு இனத்தவர்கள் இம் மக்களோடு வந்து கலந்தார்கள் என்றும் கொண்டு இந்திய இனத்தவர்களை, சித்திய திராவிடர், ஆரிய திராவிடர், மங்கோலிய திராவிடர், திராவிடர் முதலிய பிரிவுகளாகப் பிரித்தார். திராவிட மக்களுக்கும் ஆஸ்திரலா யிட்டுகளுக்கும் சில ஒற்றுமைகள் காணப்படும். தமிழ் மக்கள் நெளிந்த கூந்தலை அழகாகக் கொள்கின்றனர். இலக்கியங் களிலும் நெளிந்த கூந்தல் அழகாகவே கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் வாழும் ஆதிக்குடிகளின் தொகை இந்திய சனத்தொகையில் 1.3 பகுதி. இவர்கள் பெரும்பாலும் வங்காளத்துக்கும் பீகாருக்கும் இடையில் வாழ்கிறர்கள்.
'தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்னும் இந்நூல் இந்திய மக்கட் கூட்டத்தினரின் பழக்க வழக்கங்களை பிற மக்கட் கூட்டத்தினரின் பழக்க வழக்கங்களோடு ஒப்பிட்டு நோக்கி, இன ஒற்றுமை - வேற்றுமை காண்பதற்கு உதவி யளிக்கும். h−
xii

தென்னிந்திய குலங்களும் குடிகளும்
அகமுடையர்:
தமிழ் நாட்டிலே உழவு தொழில் செய்யும் ஒரு கூட்டத் தினர் அகமுடையார் எனப்படுகின்றனர். அவர்கள் வேளாண் மக்கள் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவர். இப் பெயர் வேளாளப் பள்ளிகளையும், குறும்பர்களையும் குறிக்கச் சில மாகாணங்களில் வழங்கும். அகமுடையான் என்பதற்கு வீடு அல்லது நிலமுடையவன் என்பது பொருள். அகமுடையரின் ஒரு பிரிவினர் அகம்படியர் எனப்படுவர். அகம்படியன் என்பதற்கு உள்ளே இருப்பவன் என்பது பொருள். அவர்கள் அரசரின் அரண்மனைகளில் அல்லது கோயில்களில் வேலை புரிவோர். தஞ்சாவூர் அகமுடையர் தெற்கத்தியார் எனப்படு வர். அகமுடையானின் பட்டப்பெயர் சேர்வைக்காரன். கள்ளர், மறவர், அகம்படியர் என்னும் மூன்று வகுப்பினர் களுக்கிடையில் திருமணக் கலப்பு உண்டு. மறவ அகம்படிய திருமணக் கலப்பினால் தோன்றினோர் அகமுடையர் எனப்படுகின்றனர் என்று சொல்லப்படுகிறது.
அகம்படியர்:
அகமுடையர் பார்க்க.
அக்கினி:
ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொள்ளாத குறும்பர் கோலர் (Golar) என்பார் அக்கினி எனப்படுவர். பள்ளிகள் தம்மை அக்கினி குலத்தவர் எனக் கூறுவர்.

Page 10
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
அச்சன்:
இது தந்தை அல்லது பிரபு என்னும் பொருள்தரும் பெயர். பாலைக்காட்டு அரச குடும்பத்தினருக்கு அச்சன் என்னும் பட்டப் பெயர் வழங்கும். சுள்ளிக் கோட்டை அரசனின் மந்திரி பாலைக் காட்டு அச்சன் எனப்படுவான்.
அச்சுவெள்ளாளர்:
இரு பட்டணவர் (மீன்பிடிகாரர்) சிலருக்கு வழங்கும் சாதிப்பெயர்.
அடிகள்:
இவர்கள் அம்பலக்காரரில் ஒரு பிரிவினர்; இவர்கள் பூணுரலணிவதுண்டு. இவர்கள் பதினெட்டு நாள் மரணத் தீட்டுக் காப்பர்; தீம் சாதியினரே தமக்குக் குருக்களாக இருப்பர். அடுத்தோன்:
இதற்கு அடுத்து நிற்போன் என்பது பொருள். மலையாளத்து அம்பட்டருள் ஒரு பிரிவினராகிய காவுத்தீயர் அடுத்தோன் எனப்படுவர். அம்ப (கிட்ட) ஸ்த (நிற்றல்) என்னும் வட சொற்களின் சிதைவே 'அம்பட்ட" என்று கருதப்படுகின்றது.
அம்பட்டர்:
தமிழ் நாட்டில் அம்பட்டப் பெண்கள் மருத்துவிச்சி வேலை பார்ப்பர். செகந்நாத ஆலயத்தில் அம்பட்டர் சமைக்கும் உணவுக்குத் தீட்டு இல்லை. அக்கோயிலில் பூசை செய்யும் பூசாரி அம்பட்டன். அவன் சமைத்துக் கடவுளுக்குப் படைத்த உணவைப் பிராமணரும் அமுது கொள்வர். சேலத்திலே கொங்கு வேளாளரின் திருமணத்தில் அம்பட்டனே புரோகிதனாகவிருந்து மணக்கிரியைகள் புரிந்து தாலி கட்டுவான். தலைப்பூப்பெய்திய அம்பட்டப் பெண் பதினொரு நாட்களுக்குத் தனியாக இருக்கவிடப்படுவாள். ஒவ்வொரு நாட் காலையிலும் கோழிமுட்டை வெள்ளைக் கருவோடு கலந்த நல்லெண்ணெய் குடிக்கும்படி அவளுக்குக்
2

ந.சி. கந்தையா
கொடுக்கப்படும். அம்பட்டன் கொள்ளிக்குடம் உடைத்தற்கு நீர்க் குடத்தைத் தாங்கிக் கொண்டு இறந்தவனின் மகனுடன் சுடலைக்குச் செல்வான். அம்பட்டரின் சாதிக் தலைவன் பெரியதனக்காரன் எனப்படுவான். மயிர் வினை செய்தல், வைத்தியம் பார்த்தல், வாத்திய மொலித்தல் என்றும் மூன்று தொழில்கள் அம்பட்டருக்குரியன. பண்டிதன், பரியாரி, குடிமகன், நாசுவன், 'மயிர்வினைஞன் என்பன அம்பட்டனைக் குறிக்க வழங்கும் பெயர்கள்.
திருவிதாங்கூரில் இவர்களுக்குப் பிரானோபகாரிகள் என்னும் பெயர் வழங்கும். பல சாதியினருக்குக் கிரியைகள் புரிவதால் இவர்களுக்கு இப்பெயர் வழங்குகின்றது. விளக்குத் தலையர் என்னும் அம்பட்டப் பிரிவிலிருந்து அரசருக்கு மயிர்வினை செய்யும் அம்பட்டன் தெரிந்தெடுக்கப்படுவான். திருவிதாங்கூர் அம்பட்டர் சிலர் அரசரால் தமக்குக் கொடுக் கப்பட்ட பணிக்கர், வைத்தியர் முதலிய பட்டங்கள் பொறிக்கப்பட்ட பட்டையங்களை வைத்திருக்கின்றனர். மலையாள அம்பட்டரின் சொத்துரிமை மருமக்கள் தாய முறையானது. அம்பட்டப் பெண்கள் பெரும்ப்ாலும் பச்சை குத்திக் கொள்வர். இவர்களில் ஒருவன் இறந்து போனால் உடல் புதைக்க அல்லது எரிக்கப்பட்டபின் சுற்றத்தவரில் இருவர் ஒரு கயிற்றை இழுத்துப் பிடிக்க இறந்தவனின் கிட்டிய உறவினன் கயிற்றைவெட்டி விடுவான். இக்கிரியைக்குப் பந்தமறுப்பு என்று பெயர். இதற்கு இறந்தவனின் உறவு மற்றவர்களிருந்து வெட்டப்பட்டது என்பது பொருள். அம்பலக்காரர்:
அம்பலக்கார் கள்ளச் சாதியினருக்கு இனமுடைய ஒரு வகுப்பினர். இவர்கள் வேளாண்மை செய்வதோடு கிராமக் காவலும் புரிவர். இவர்களின் சாதிப் பட்டப் பெயர் சேர்வைக் காரன். முத்திரையன், மளவராயன், முத்தரசன், வன்னியன் என்பனவும் இவர்கள் பட்டப்பெயர்களாக வழங்கும். இவர்கள் குலத்தலைவன் காரியக்காரன் எனப்படுவன். இப் பதவி பரம்பரையாகத் தந்தையிலிருந்து மகனுக்கு வருவது. காரியக்காரனின் சேவுகன் குடிப்பிள்ளை எனப்படுவான்.

Page 11
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
வலையரினின்றும் பிரிந்து வாழும் ஒரு பிரிவினரே அம்பலக் காரர் எனக் கருதப்படுவர். அம்பலவாசி:
மலையாளத்துக் கோயிற் பணிவிடைக்காரர் அம்பலவாசி கள் எனப்படுவர். இவர்களுள் பூணுரலணிவோர், பூணுரலணி யாதோர் என இரு பிரிவினருண்டு. இவர்களின் உரிமை முறை மருமக்கள் தாயம்; மக்கள் தாயமும் உண்டு. அம்பலவாசிப் பெண்கள் பிராமணருடன் அல்லது சொந்தச் சாதியாருடன் சம்பந்தங் கொள்வர். அரவா:
இவர்கள் தொல்லா (Gola) வேள்மா என்னும் தெலுங்குச் சாதிகளுள் ஒரு பிரிவினர். தெலுங்கு நாட்டிற் குடியேறிய வேளாளரும் இடையரும் அரவா எனப்படுவர். அரவா என்பது அரைவாய் (அரைப் பேச்சு?) என்பதன் திரிபு எனக் கருதப்படுகின்றது.
அறுத்துக்கட்டாத:
பறையருள் ஒரு பிரிவினர் அறுத்துக்கட்டாத என்னும் பெயர் பெறுவர். இவர்களுள் விதவைகள் மறுமணம் செய்து கொள்வதில்லை. அறுத்துக்கட்டாத என்பதற்கு வாழ்விழந்த பெண்மகள் மறுமணஞ் செய்து கொள்ளாத என்பது பொருள்.
ஹடியர்:
இவர்கள் தமிழ்ப் பறையர், தெலுங்கு மாலர், மாதிகர் போன்ற தாழ்ந்த ஒரிய வகுப்பினர்.
ஆசாடியர்:
இவர்கள் பெல்லாரி மாகாணத்திற் காணப்படும் ஹோலிய அல்லது மால சாதியினரின் ஒரு பிரிவினர். இவர்களிடையே பெண்கள் நாட்டிய மாடுவோரும் ஒழுக்கத் தளர்வுடையோரு மாவர்.
1. அரவர் = தமிழர். தமிழகத்திலிருந்து சென்றவர்.
4.

ந.சி. கந்தையா
ஆசாரி:
ஆசாரி அல்லது ஆச்சாரி என்பது கம்மாளரின் பட்டப் பெயர். மலையாளத்தில் கம்மாளப் பிராமணன் ஆசாரி எனப்படுவான். கம்மாளன் நாயருக்குப் பன்னிரண்டடி தூரத் திலும், பிராமணருக்கு முப்பத்திரண்டடி தூரத்திலும் வரின் இவர்களுக்குத் தீட்டுண்டாகும். கம்மாளன் அளவு கோலைக் கையிற்பிடித்துக் கொண்டு இவர்களை மிக அணுகினாலும் அல்லது இவர்கள் வீடுகளுள் நுழைந்தாலும் தீட்டு உண்டாக மாட்டாது.
ஆண்டி:
ஆண்டிகள் தமிழ் வகுப்பைச் சேர்ந்த பிச்சைக்காரர். இவர்கள் பண்டாரங்களிலும் தாழ்ந்தோர். கோயில்களிலும் மடங்களிலும் வேலை செய்வோர் முறையே கோவிலாண் டிகள் மடஆண்டிகள் எனப்படுவர். திருநெல்வேலி ஆண்டி களுள் திருமணக் காலத்தில் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுகின்றவள் மணமகனின் உடன் பிறந்தாளாவள். ஆண்டி களுள் கோமணஆண்டி, இலிங்கதாரி, முடவாண்டி, பஞ்சத்துக் காண்டி எனப் பல பிரிவுகளுண்டு. இப் பிரிவுகள் பஞ்சத்துக் கர்ண்டி, பரம்பரை ஆண்டி என்னும் இரு பிரிவுகளிலடங்கும். ஆதிசைவர்:
இவர்கள் வேளாளருள் ஒரு பிரிவினர்; ஓதுவார் வகுப்பைச் சேர்ந்தோர். இலிங்கங்கட்டுவோர் வீரசைவர் எனப்படுவர். வீரசைவ மதத்தினரல்லாத சைவர்களே ஆதி சைவராவர். ஆத்திரேயர்:
அத்திரி இருடி கோத்திரத்தினர். ஆரி:
இது மராத்தி என்பதன் மறுபெயர். ஆரிகள் தென் கன்னடம், பெல்லாரி, அனந்தப்பூர் முதலிய இடங்களில் காணப்படுகின்றனர். ஆரிய என்னும் பெயரே ஆரி எனச் சிதைந்து வழங்குகின்றது. இவர்கள் பூணுரலணிந்து கொள்வர். மராத்தி அல்லது கொங்கணி பேசுவர்.
5

Page 12
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
இடிகர்:
இவர்கள் தெலுங்கு நாட்டில் கள்ளிறக்கும் வகுப்பினர். தமிழ் இடிகர் கத்தியைப் பின்னால் செருகுவர்; தெலுங்கர் வலது தொடையிற் கட்டுவர். தமிழ் இடிகர் பனையிலும் தென்னையிலும் கள்ளிறக்குவர்; தெலுங்கர் பனையிலும் ஈந்திலும் கள் எடுப்பர். தெலுங்கர் கள்ளின் செல்வியாகிய எல்லம்மா என்னும் தெய்வத்தை வழிபடுவர்.
இடியர்:
திருவிதாங்கூரில் அவலிடிக்கும் சாதியினர் இடியர் எனப்படுவர்.
இடையர்:
ஆடு மாடு மேய்ப்போர் இடையர் எனப்படுவர். இவர் களுள் வைணவர் நாமம் தரித்துக்கொள்வர்; தம்மை யாதவர் எனக் கூறிகொள்வர். மறவ நாட்டு இடையருள் மணமகளின் உடன்பிறந்தாள் மணமகளுக்குத் தாலி கட்டுவள்.
இராசபுத்திரர்:
வடநாட்டிலுள்ள காணியாளரும் இராணுவ சேவை செய்வோருமாகிய சாதியினர் இராசபுத்திரர் என்னும் பெயர் பெறுவர். இவர்களின் சிறு கூட்டத்தினர் வேலூர், சித்துளர், திருப்பதி முதலிய இடங்களில் காணப்படுகின்றனர். இவர் களின் பெயர் சிங் என்று முடியும்.
இராசு:
இவர்கள் இராணுவத் தொழில் புரியும் காப்பு, கம்மா, வேள்மா முதலிய சாதி வகுப்பினரின்றும் தோன்றியவர்களாக லாம். திருமணக் காலத்தில் இவர்கள் வாளை வணங்குவர். போர் வீரர் என்று அறிவித்தற்கு வாள் அடையாளமாகும். வட ஆர்க்காடு, கடப்பா முதலிய இடங்களில் இவர்கள் பெரும் பாலும் காணப்படுவர். இவர்கள் பேசும் மொழி தெலுங்கு.
1. ஆ ( பசு = ஃ கால்நடை) > ஆதவர் = யாதவர். எ-ய-ஜ என்பதால் (எ.கா: யாமுனை = ஜமுன நதி, எம்பு = Jump. யாக்கோபு = Jacob). வட இந்தி யாவில் யாதவர்களை (யாதவ் ->) ஜாதவ் என்று அழைக்கப்படுகின்றனர்.
6

ந.சி. கந்தையா
பெண்கள் முட்டாக் கிட்டுக் கொள்வர். ஆண்கள் தலையின் எந்தப் பகுதியையும் மழித்துக் கொள்வதில்லை. திருமணக் காலத்தில் காசி யாத்திரை போதல், தாலிதரித்தல் போன்ற கிரியைகள் இவர்களுக்கு உண்டு.
இரால்பு:
தென் கன்னடத்திலுள்ள கொங்கணம் பேசும் வணிகரும் வேளாண்மை செய்வோரும் இப்பெயர் பெறுவர். இவர்கள் பூனூலணிவர். பெண்கள் பூப்படையுமுன் திருமணம் செய்துகொள்வர். விதவைகள் மறுமணம் செய்துகொள்வர்.
இருளர்;
இவர்கள் நீலகிரியில் வாழும் மலைச் சாதியினர். இருளர் என்பதற்கு இருண்ட நிறத்தினர் என்பது பொருள். இருளர் தமிழின் சிதைவாகிய மொழியைப் பேசுவர். இவர்களுள் ஆண்களும் பெண்களும் கணவன் மனைவியராக நிலைத் திருந்து வாழ்தல் பெண்களின் விருப்பத்தைப் பொறுத்தது. இறந்தவர்களின் உடல் சப்பாணி கட்டி இருக்கும் நிலையில் வைத்துப் புதைக்கப்படும். ஒவ்வொரு சமாதியின் மீதும் நீருள் இருந்து எடுக்கப்பட்ட கல் கொண்டுவந்து வைக்கப்படும். அக் கற்கள் தேவ கோட்டக் கற்கள் எனப்படுகின்றன. இறகு களைந்த ஈசல்களை இவர்கள் உண்பர்; நோய்க் காலங்களில் மாரியம்மாவை வழிபடுவர்; ஏழு கன்னிமாரையும் ஏழு மண் விளக்கு வடிவில் வழிபடுவர்.
இல்லம்:
நம்பூதிரிப் பிராமணரின் வீடு இல்லம் எனப்படும். நாயர் வகுப்பினரின் ஒரு பிரிவினரும் இல்லம் எனப்படுவர். தமிழ் நாட்டுப் பணிக்கர் சிலர் தம்மை இல்லம், வெள்ளாளர் எனக் கூறிக்கொள்வர்.
இளமகன்;
மதுரை மாவட்டத்திலே திருப்பத்தூரில் வாழும் உழவு தொழில் செய்வோர் இப்பெயர் பெறுவர். இவர்கள் கள்ளச்

Page 13
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
சாதியினரை ஒத்தவர்கள். இவர்களின் தலைமைக்காரன் அம்பலன் எனப்படுவான்.
இளையது:
இவர்கள் மலையாளத்துச் சாதிமான்களுள் ஒரு பிரிவினர். இளையதின் வீடு நம்பூதிரியின் வீட்டைப்போல இல்லம் எனப்படும். ஒவ்வொரு இளையதின் தோட்டத்திலும் நாகக்கா உண்டு. இவர்கள் நாயருக்குக் குருக்களாக இருப்பர். மலையாளத்திலுள்ள நாகக்கோயில்களுக்கும் குருக்கள் இவர்களே. இவர்களின் மூத்த மகன் மாத்திரம் திருமணம் செய்துகொள்ளலாம். மற்றவர்கள் அம்பலவாசி அல்லது நாயர்ப் பெண்களைச் சம்பந்தம் வைத்துக்கொள்வர். கைம்
ギ பெண்கள் கூந்தல் களைவதில்லை; அணிந்திருக்கும் ஆபரணங்களைக் களைந்து கணவனின் பிணத்தின் மீது இடுவர். இஃது உடன் கட்டை ஏறும் வழக்கத்துக்குப் பதிலாக இருக்கலாம். மூத்த மகனுக்குப் பாட்டனின் பெயரும். மூன்றா வது மகனுக்குத் தந்தையின் பெயரும் இடப்படும். இவ்வாறே பெண்களுக்கும் பெண்வழிப் பெயர்கள் இடப்படுகின்றன. பிள்ளைப் பேற்றுக்குப்பின் பெண்கள் தொண்ணுறு நாட்கள் தீட்டுக் காப்பர். ஆண்கள் பூணுரலணிவர். பெண்கள் அகத் துளவர் எனப்படுவர். நம்பூதிரிப் பெண்களுக்கும் இப்பெயர் வழங்கும். இறங்காரி:
மராட்டி பேசும் சாயத்தொழில் செய்வோரும் தையற்கார ரும் இப்பெயர் பெறுவர். இவர்கள் தெலுங்கு மாகாணங்களி
லும் காணப்படுகின்றனர். இவர்களின் பட்டப்பெயர் இராவ்.
இறவுலோ:
இவர்கள் ஒரிய கோயில்களில் பணிவிடை செய்வோர். இவர்கள் கோயில்களில் சங்கு ஊதுவர்; பூ விற்பர். இவர்களுள் சிறுபிள்ளைத் திருமணம் கட்டாயம். இப்பொழுது இவர்கள் வண்டி ஒட்டுதல், மண் வேலை செய்தல் முதலிய தொழில்கள் புரிவர்.
1. அரவர் = தமிழர். அரவரின் திரிபே ராவ் ஆகி இராவ் ஆயிற்று.
8

ந.சி. கந்தையா
இறையர்:
இவர்கள் எசமானின் இறை (வீட்டுக்கூரை) வரையும் செல்லக் கூடிய மலையாளத்துச் செருமான் என்னும் சாதியினர். ஈழவர்:
ஈழவர், தீயர் என்போர் மலையாளம் கொச்சி என்னும் இடங்களிற் காணப்படுகின்றனர். மத்திய திருவிதாங்கூரின் தென்புறங்களில் இவர்கள் ஈழவர் என்றும் வட மத்திய பகுதிகளில் சேரவர் என்றும் அறியப்படுவர். திருவிதாங்கூர்ச் சனத்தொகையில் 17 சதத்தினர் இவர்களாவர். யாழ்ப்பாணம், ஈழம் என்னும் பெயர் பெற்றிருந்ததெனத் தெரிகிறது. ஈழவர் அங்கிருந்து வந்தார்கள் எனக் கருதப்படுகின்றனர். சேரவர் என்பது சேவுகர் என்பதன் திரிபு. மலையாளத்தில் வழங்கும் கப்பற் பாட்டுகளில் சேவுகர் என்னும் பெயர் காணப்படு கின்றது. தென் திருவிதாங்கூரில் வாழும் ஈழவர் முதலியார் எனப்படுவர். புலையர் அவர்களை மூத்த தம்பிரான் என அழைப்பர். அவர்கள் தொடக்கத்தில் தென்னையைப் பயிரி டும் தொழில் செய்து வந்தனர். கி.பி 824-ல் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு பட்டையத்தினால் அவர்களுக்குத் தலையாரி இருந்தானென்றும், அவர்கள் வீட்டு நிலங்களில் தென்னையைப் பயிரிடுதல் அவர்களின் தொழில் என்றும் தெரிகின்றன. தமது வேண்டுகோளுக்கிணங்கி ஈழவர் மேற்குக் கடற்கரையில் சென்று குடியேறினார்களென்று சிரியன் கிறித்த வர் கூறுவர். மத்திய காலங்களில் இவர்கள் அரசரின் கீழ் போர் வீரராக அமர்ந்திருந்தார்கள். கொல்லமாண்டு 973-ல் மரண மான இராமவன்மன் காலத்தில் பெருந்தொகை ஈழவர் இராணுவ சேவையில் இருந்தார்கள். ஒண விழாக்காலங்களில் இவர்கள் இரண்டாகப் பிரிந்து நின்று போலிப் போர் செய்வது வழக்கம். ஈழவரின் அடிமைகள் வடுவன்கள் எனப்படுவர். முற்காலங்களில் இவ்வடிமைகள், உடையவனால் விற்கவும் கூடிய முறையாக இருந்தனர். ஈழவரின் குரு வகுப்பினர் சாணார் எனப்பட்டனர். சாணார் என்பது சான்றோர் என்னும் சொல்லின் திரிபு. சாணாருக்கு அடுத்த படியிலுள்ளவன் பணிக்கன்.

Page 14
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
ஒவ்வொரு இல்லத்திலும் பல சிறிய வீடுகள் உண்டு. இவைகளுள் முக்கியமுடையது. அறப்புறம். இது நடுவிலிருக் கும். அதன் இடப்புறத்திலுள்ள வீடு வடக்கெட்டு எனப்படும். இது பெண்கள் தங்கும் பகுதியும் சமையலறையுமடங்கியது. அறப்புறத்தின் முன்னால் முற்றம் இருக்கும். அதனைச் சூழ்ந்து கிழக்குப்புறத்திலிருப்பது கிழக்கெட்டு எனப்படும். வீடுகள் கிழக்கை நோக்கியிருக்கும். பாதை கிழக்கெட்டுக்குச் சிறிது தெற்கே யிருக்கும். சில இல்லங்களில் அறப்புறத்துக்கு இடப் புறத்தில் தெற் கெட்டுக் காணப்படும். அது அக்குடும்பத்தில் இறந்தவர்களின் ஞாபகமாக இடப்பட்டதாகும். அதனுள்ளே ஒரு பீடம், சங்கு, பிரம்பு, சாம்பல் முடிச்சு முதலியன வைக்கப் பட்டிருக்கும். பெண்கள் காதில் நாகபடம், கையில் வெண்கலக்காப்பு, மூக்கில் மூக்குத்தி, நத்து முதலியன அணிவர். நாயர்ப் பெண்கள் இடது கன்னத்தில் கொண்டை முடிவர்; ஈழவப் பெண்கள் நெற்றிக்கு நேரே முடிவர். இவர்களின் குலதெய்வம் பத்திரகாளி. பத்திரகாளிக்கு ஆடு, கோழி முதலியன பலியிடப்படும். இவர்களுக்கிடையில் மக்கள் தாயம், மருமக்கள் தாயம் என்னும் இரு வழக்கு களுமுண்டு. சம்பந்தம் நடைபெறுவதன் முன் பெண்களுக்குத் தாலிகட்டுக் கலியாணம் நடைபெறுவதுண்டு. இவ்வழக்கம் இப்பொழுது அருகி வருகின்றது. தாலிகட்டுக் கலியாண மென்பது போலியாக நடத்தப்படும் ஒருவகைக் கலியாணம். தாலிகட்டுச் சடங்கின் விபரம் வருமாறு.
கிராமத்திலுள்ள முதியவர்கள் மணமக்கள் வீட்டில் கூடியிருப்பார்கள். பின்பு வீட்டின் தென் கிழக்கு மூலையில் பலாத் தூண் நடப்படும். அங்கு கூடியிருக்கும் கணிகன் (சோதிடன்) முழுத்தம் என்று கூறியவுடன் அங்கு வந்திருக்கும் தட்டான், பெண்ணின் தந்தையிடம் பொன் மோதிரம் ஒன் றைக் கொடுப்பான். அதை அவன் பெற்று அங்கு வந்திருக்கும் உவாத்தி(குருக்கள்) யிடம் கொடுக்க அவன் அதைத் தூணில் கட்டுவான். தச்சன், கணிகன், தட்டான் தக்கணைகள் பெற்றுச் செல்வர். பந்தல் வீட்டின் தென்புறத்தில் இடப்பட்டிருக்கும். திருமணத்துக்கு முதல் நாள் பெண் முழுகி மண்ணான்
1. தக்கணை - தக்க சன்மானம். இச் சொல்லே தட்சணை ஆயிற்று.
10

ந.சி. கந்தையா
(வண்ணான்) கொடுக்கும் கஞ்சி தோய்த்த ஆடையை உடுப் பாள். அதன் பின் கலாதி எள்னும் சடங்கு தொடங்கும். அப் பொழுது நூலிற் கோக்கப்பட்ட வெள்ளி மோதிரம் அவள் மணிக்கட்டிற் கட்டப்படுகிறது. கலாதி என்பது கிராமப் பெண்கள் மணமகள் எதிரில் நின்று பலவகை வேடிக்கைப் பாடல்களைப் பாடுவதாகும். இதன்பின் பெண்கள் மரப் பொம்மைகளின் மத்தியில் இருத்திப் பாடுவார்கள். இந் நிகழ்ச்சி காஞ்சிரமாலை எனப்படும். அடுத்த நாள் அவள் தானியக் கதிர்களாலலங்கரித்த கதிர் மண்டபத்தில் இருத்தப் படுவாள். அப்பொழுது தட்டான் மின்னு என்னும் தாலியைக் குருக்களின் கையிற் கொடுப்பான். அப்பொழுது மணமகனும் மணமகளும் உடுத்துக் கொள்வதற்கு ஆடை கொடுக்கப்படும். அவ்வாடைகளிலிருந்து எடுத்துத் திரித்த நூலில் மின்னுக் கட்டப்படும். அப்பொழுது பெண்ணின் தாய் வாயிலில் காத்து நிற்பாள். மணமகன் வருதலும் அவள் அவள் கழுத்தில் பூமாலையிடுவாள். பின் உவாத்தியும் அவன் மனைவியும் ஆடைகளை மணமகனுக்கும் மணமகளுக்கும் கொடுப் பார்கள். பின்பு கிராமத் தலைவன் தென்னங் குருத்துக்களை மணமகனின் இடுப்பில் சொருகுவான். இது ஈழவரின் தொழி லைக் குறிப்பதாகலாம். முற்காலத்தில் தென்னங் குருத்துக்குப் பதில் வாள் சொருகப்பட்டது. மணமகன் மணமகள் கழுத்தில் மின்னுவைக் கட்டுவான். வந்திருப்போர் அவர்களுக்குப் பல பரிசுகளை வழங்குவர். பெண்ணின் கையில் காப்பாகக் கட்டப் பட்ட கயிறு நான்காவது நாள் உவாத்தியால் அறுக்கப்படும். இக்கலியாணம் பெண் பூப்பு அடைவதன் முன் நடைபெறு வது. பெண் பூப்பு அடைந்தபின் தாலி கட்டியவன் அல்லது வேறு ஒருவன் அவளைச் சம்பந்தம் வைத்துக் கொள்ளலாம். தாலிகட்டியவனே அவளின் கணவனாக இருக்கவேண்டும் என்னுங் கட்டாயமில்லை. வட திருவிதாங்கூரில் நடக்கும் சம்பந்தத்தின் விபரம் வருமாறு.
தாலி கட்டியவனல்லாத ஒரு மணமகன் தனது இனசனத் தாருடன் மணமகளின் வீட்டுக்குச் செல்கின்றான். மணமக னைச் சேர்ந்தவர்கள் பெண்ணின் தாய்க்கு ஒரு தொகை பணம் கொடுப்பார்கள். பின்பு மணமகன் பெண்ணுக்குப் பத்துச்
11

Page 15
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
சக்கரங்கள் வைத்து உடை கொடுப்பான். பணம் தாயைச் சேர்கின்றது. அது அம்மாயிப் பணம் எனப்படும். பெண்ணின் தாய் மகளுக்கு பாக்கு வெட்டி, சுண்ணாம்புக் கரண்டகம், அரிசி நிரப்பிய பெட்டி, ஒரு பாய் என்பவற்றைக் கொடுப் பான். கணவன் பெண்ணுக்குச் சிவப்பு ஆடையால் முட்டாக் கிட்டு அவளைத் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்வான். இவ்வழக்கம் குடிவைப்பு எனப்படும்.
பிள்ளைப் பேற்றுக்குப் பின் 3, 5, 9-ஆவது நாட்களில் பெண் குளித்து மண்ணாத்தி கொடுக்கும் மாற்றை உடுப்பாள். இருபத்தெட்டாவது நாள் பிள்ளைக்குப் பெயர் இடப்படும். பின்பு பிள்ளைக்கு இரும்புக் காப்புகள் இடப்படும். சோறு ஊட்டும் சடங்கு ஆறாவது மாதம் நடைபெறுகின்றது. அப்பொழுது இரும்புக் காப்புகள் கழற்றப்படுகின்றன; இவற் றுக்குப் பதில் வெள்ளி அல்லது தங்கக் காப்பு இடப்படும். ஏழு ஆண்டுகள் நிறைவதற்குமுன் பிள்ளைக்குக் காது குத்துப் படுகிறது. இறந்தவர்களின் உடல் கடப்படுகின்றது. சுடலை யில் கொள்ளிக் குடம் உடைத்தல் முதலிய கிரியைகள் நடைபெறுகின்றன. இரண்டாவது நாள் பிண்டம் வைக்கப் படும். ஐந்தாவது நாள் சாம்பல் அள்ளப்படுகிறது. இவர் களுக்குப் பதினைந்து நாட்கள் தீட்டு உண்டு.
உரோனா:
மலைகளில் வாழும் ஒரிய உழவு தொழில் செய்வோர் இப்பெயர் பெறுவர். இவர்களுள் விதவைகள் மறுமணஞ் செய்து கொள்வர். வாழ்விழந்த பெண்கள் பெரும்பாலும் கணவனின் இளைய சகோதரனை மணப்பர். இவர்களின் சாதித் தலைவன் பாதோ, நாய்க்கோ எனப்படுவான். இக் கூட்டத்தினருள் உண்டாகும் பிணக்குகளைச் சாதித் தலைவன் தீர்த்துவைப்பான். ஆண்கள் பூணுரலணிவர். இவர்கள் வழிபடும் கிராம தெய்வங்கள் தகுறாணி எனப்படுகின்றன. இவர்களின் சாதிப் பட்டப் பெயர் நாய்க்கோ
எட்டரை:
இவர்கள் தமிழ் நாட்டுத் தட்டாரிலொரு பிரிவினர்.
12

ந.சி. கந்தையா
எம்பிரான்:
இது மலையாளத்திற குடியேறிய துளுவப் பிராமண ருக்குப் பெயராக வழங்குகின்றது.
எரவாளர்:
இவர்கள் மலையாளத்திலே காடுகளிலுள்ள பதி என்னுங் கிராமங்களில் காணியாளரின் கீழ் கூலி வேலை செய்யும் மக்கள். இவர்களில் பெண்கள் தலைப்பூப்பு எய்தினால் தனியே இடப்பட்ட கொட்டிலில் ஏழு நாட்கள் விடப்படு வார்கள். ஏழாவது நாள் நீராடிய பின்பே அவர்கள் குடிசை களுள் நுழைவார்கள். எரவாளர் வெற்றிலையும் பாக்கும் வைத்து உயர்ந்தவர்களுக்குத் திருமணத்தை அறிவிப்பர். உயர்ந்தோர் அவர்களின் திருமணச் செலவுக்கு வேண்டிய நெல் முதலியன கொடுப்பர். இவர்கள் பேய், பைசாசுகளிருப்பதை நம்புவார்கள். மந்திரவாதி பேய் பிடித்தவர்களிடமிருந்து பேயை ஒட்டுவான். அவர்கள் மந்திரவாதி பனை ஓலையில் எழுதிக் கொடுக்கும் இயந்திரங்களை நூலாற் சுற்றிக் கழுத்தில் அணிவர். இவர்களின் முக்கிய தெய்வங்கள் ஏழு கன்னிப் பெண்களும், கறுப்பனும்:
எழுத்தச்சன்:
எழுத்தச்சன் என்பதற்குப் பண்டிதன் என்பது பொருள். இப்பெயர் மலையாளப் பள்ளிக்கூட ஆசிரியருக்குப் பெயராக வழங்குகின்றது. ஹெக்காடி (Heggadi)";
கன்னட இடையரும் உழவரும் இப்பெயர் பெறுவர்.
ஏராடி:
இது இடையனைக் குறிக்கும் பெயர். ஏர் - நாட்டை ஆண்ட நாயர்ச் சாதியாரின் பெயர். ஏர் நாடு என்பது எருதுநாடு
என்பதன் திரிபு.
1. இன்று இப்பெயர் ஹெக்டே எனத் திரிந்துள்ளது.
13

Page 16
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
ஏராளன் :
இது செறுமான் சாதியின் ஒரு பிரிவு. செறு-வயல். எனவே வயலில் பணிபுரிபவர் ஆவர்.
ஏனாதி:
இது முதன்மையுடைய அம்பட்டன் அல்லது மந்திரியைக் குறிக்கும். சாணாருக்கும் இப்பெயர் வழங்கும். ஏனாதி நாயனார் மூலம் தமக்கு இப்பெயர் வந்ததென அவர் கூறுவர். ஒக்கிலியர்:
பயிர்த் தொழில் செய்யும் கன்னடத் தொழிலாளர் ஒக்கிலி யர் எனப்படுவர். அவர்களின் சாதித் தலைவன் பட்டக்காரன் எனப்படுவான். பருவமடையாத ஒக்கிலியச் சிறுவர் பருவ மடைந்த பெண்ணை மணக்க நேர்ந்தால் கணவனின் கடமைகளை அவன் தந்தை நிறைவேற்றுவான். விபச்சாரக் குற்றத்துக் குட்பட்டவர்கள் ஒரு கூடை மண்ணைத் தலையில் வைத்துக் கிராமத்தைச் சுற்றி வருதல் வேண்டும். அப்பொழுது சின்னப் பட்டக்காரன் பின்னால் நின்று அவர்களைப் புளியம் மிலாறுகளால் விளாசுவான். பெண்களுக்கு முதற்பிள்ளை பிறந்த பின் சீதனம் கொடுக்கப்படும். இறந்தவரின் பிணத்தை எடுத்துச் செல்லும்போது பழம், காசு, சோறு முதலியன எறியப்படும். இறந்தவனின் மனைவி சுடலைக்குச் சென்று தனது கைவளைகளை உடைத்தெறிவாள். இவர்களுக்கு மரணத்தீட்டு பதினெட்டு நாட்களுக்குண்டு. ஒட்டியர் அல்லது ஒட்டர்:
இவர்கள் கிணறு தோண்டுதல், குளங்களுக்கு அணை கட்டுதல் போன்ற வேலைகள் செய்வர். ஒரிசா மாகாணத் தினின்றும் வந்த காரணத்தினால் இவர்கள் ஒட்டர் எனப்பட்ட னர். இவர்களின் திருமணக் கட்டுப்பாடுகள் நுகைவுடையவை. பெண்களும் ஆண்களும் விரும்பினால் மணத் தொடர்பை நீக்கிவிடலாம். இரு பாலினரும் பதினெட்டு முறைக்கு அதிகம் திருமணம் செய்து கொள்ளுதல் கூடாதென்னும் கட்டுப்பாடுண்டு.
1. புளியம் மிளறு = புளிய விளாறு, புளியங்குச்சு.
14

ந.சி. கந்தையா
96tLIT:
திருவிதாங்கூரில் வாழும் மகமதியரின் அம்பட்டர் ஒஸ்டா
எனப்படுவர்.
ஒருநூல்:
விதைவைகள் மறுமணஞ் செய்யாத மறவர் வகுப்பில் ஒரு
பிரிவினர் இப்பெயர் பெறுவர்.
ஒச்சர்:
இவர்கள் பிடாரிகோயிலுக்குப் பூசை செய்யும் குலத்தினர்.
இவர்களின் கொடி உடுக்கை. செங்கற்பட்டுப் பகுதிகளில்
ஒச்சர் தேவடியாட்களை ஆட்டும் நட்டுவத் தொழில் புரிவர்.
ஒச்சன் என்னும் சொல் ஓசை என்னும் அடியாகப் பிறந்தது.
அதற்கு மேளமடித்துத் துதிப் பாடல்கள் பாடுவோன் என்பது
பொருள்.
ஒடட்டு:
மலையாளத்தில் கோயில்களுக்கும் பிராமணரின் வீடு
களுக்கும் செங்கல் செய்யும் நாயர் வகுப்பினர் இப்பெயர்
பெறுவர்.
ஒதுவார்:
இவர்கள் பண்டாரங்களுள் ஒரு பிரிவினர். இவர்கள்
தேவாரம் திருவாசகம் முதலிய பாடல்களைக் கோயில்களில்
பண்ணோடு பாடுவர்.
ஹொலியர்:
இப்பெயர் பறையன், புலையன் என்னும் பெயர்களுக்கு
நேரானது. இவர்கள் தென் கன்னடத்தில் காணப்படு
கின்றார்கள்.
கங்கேயர்:
இவர்கள் திருவிதாங்கூரில் வாழும் இடையரில் ஒரு
பிரிவினர்.
1. ஒரு நூல் = ஒரே ஒரு தாலி.
15

Page 17
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
கஞ்சகாரர்:
இவர்கள் செம்பு, பித்தளை, வெண்கலம் முதலியவை களில் வேலை செய்வோர்.
&5L&Eii:
திருநெல்வேலிப் பக்கங்களில் சூளை இடுவோர் இப் பெயர் பெறுவர். இவர்களுள் நாட்டரசன், பட்டங்கட்டி என இருபிரிவினருண்டு. இவர்கள் வேட்டுவரிலும் பார்க்க உயர்ந்தோர். இவர்கள் கோயில்களுள் நுழைதல் கூடாது. இவர்களுக்குத் தனி அம்பட்டனும் வண்ணாணுமுண்டு.
கடையர்:
பள்ளரில் ஒரு பிரிவினர் கடையர் எனப்படுவர். இவர்கள் இராமேசுவரத்திலே சிப்பி ஒடுகளைச் சூளை வைத்துச் சுண்ணாம்பு செய்கிறார்கள். இக்கூட்டத்தினரிலிருந்து முத்து குளிப்பதற்கு ஆட்கள் தெரிந்தெடுக்கப்படுவார்கள். மதுரை திருநெல்வேலிக் கோட்டங்களில் இவர்கள் கிறித்துவ மதத் தைக் தழுவியுள்ளார்கள். பரவரை ஒப்ப இவர்களும் பிரான்சிஸ் சேவியரால் மதமாற்றம் செய்யப்பட்டவர்களாவர். கணக்கர்:
இது கணக்கு என்னும் சொல்லடியாகப் பிறந்த பெயர். இவர்கள் அரசரால் கிராமக் கணக்கர்களாக நியமிக்கப்பட்டவர் களாவர். கர்ணம் அல்லது கணக்கன் என்னும் பெயர்கள் பட்டையங்களிற் காணப்படுகின்றன. இவர்களுக்குப் பட்டப் பெயர் வேளான். கர்ணங்களுள் கை காட்டிக் கர்ணம் என்னும் ஒரு பிரிவு உண்டு. இவர்களுள் மருமகள் மாமியுடன் (கணவ னின் தாய்) பேச அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், கைகாட்டி (சமிக்கையால்) பேசுவர். பெண்ணின் தாய் பெண்ணுக்குத் தாலிகட்டுவாள்.
J560flui;
இப்பெயர் கணி என வழங்குகின்றது பழைய ஆவணங் களில் கணி என்னும் சொல் காணப்படுகின்றது. கணிகன், கணி என்னும் பெயர்கள் பணிக்கனையும் அரசனையும் குறிக்கும்.
16

ந.சி. கந்தையா
பணிக்கன் என்னும் சொல் பணி (வேலை) என்னும் அடியாகப் பிறந்தது. பணிக்கனுக்கு இராணுவத் தொழில் பயிற்றும் வேலை உரியது என்று கேரள உற்பத்தி என்னும் நூல் கூறு கின்றது. வடக்கே கணிகள் நம்பிக் குருப்பு எனவும் படுவான். கணியரில் கணியர், தீண்டர் என இரு பிரிவினருண்டு. முதற் பிரிவினர் சோதிடம் சொல்வோர். இரண்டாவது வகுப்பினர் குடை செய்வோரும் பேயோட்டுவோருமாவர். கணியன் முட்டினால் களரிப்பணிக்கனுக்குத் தீட்டு உண்டாகின்றது. களரிப்பணிக்கர் முற்காலத்தில் போர்ப் பயிற்சி அளிக்கும் ஆசிரியராகவிருந்தனர். பிடிச்சுகளி, வாட்சிலம்பம், பாரீசாதம் களி, கோலடி முதலிய ஆடல்கள் இன்றும் களரிகளில் நடை பெறுகின்றன. புது வருடப்பிறப்புக்குப்பின் மலையாளத்தில் நடைபெறும் சால் (உழவு) கிரியையில் ஒவ்வொருவரும் அவ்வக்கிராமத்துக்குரிய கணிகனிடம் ஆண்டுப் பலனைக் கேட்டறிந்த பின் அவனுக்குச் சிறிது பொருள் வழங்குவது மரபு. பலன் பனை ஒலையில் எழுதிக்கொடுக்கப்படும். இது விட்டுணு பலன் என்று சொல்லப்படுகின்றது. பாழுரிலிருக் கும் கணி மிகப் புகழ் பெற்றவன். கணிகளுள் பெண் பூப்படையுமுன் தாலிகட்டுக் கலியாணமும் பின் சம்பந்தமும் நடைபெறும். அவர்களுட் பலர் பாண்டவரைப்போல ஒரே மனைவி உடையவராக இருப்பர். விதவை மறுமணம் செய்து கொள்வாள்.
பணிக்கருள்ளும் கணிகருள்ளும் பெண்கள் ஒரே காலத்தில் பல கணவரை மணக்கும் வழக்கம் உண்டு. கிராமத்தின் நாயர்த்தலைவன் களரிமூப்பன் எனப்படுவான். கணிகளில் பொதுவன் அல்லது கணிக குருப்புக்கள் அம்பட்டராவர். இவர்கள் பிணத்தோடு இடுகாட்டுக்குச் செல்வார்கள். பொது வர் தீண்டாக் கணிகளுக்கு மயிர்வினை செய்யார். கணியர் கோவில்களில் நுழையக்கூடாது. இவர்கள் இருபத்து நான்கடி தூரத்தில் வந்தால் பிராமணருக்குத் தீட்டு உண்டாகிறது.
கண்கெட்டு:
இவர்கள் மாடாட்டிகள்; தெலுங்கு பேசுவர்; வைணவ மதத்தினர். இவர்களின் குரு வைணவ அடையாளமாகிய சங்கு
17

Page 18
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
சக்கரம் முதலியவைகளை இவர்கள் தோள்கள் மீது சுடுவார். பெருமாள் மாட்டுக்காரன் அல்லது பெருமாள் எருதுக்காரன் என்னும் மாடாட்டிகள் செங்கற்பட்டு, வட ஆர்க்காடு முதலிய இடங்களிற் காணப்படுகின்றனர்.
கத்திரி:
பட்டு நெசவு செய்வோர் கத்திரிகளாவர். பட்டில் வேலை செய்வதால் இவர்கள் பட்டுநூற்காரர் எனவும் அறியப்படுவர். இவர்கள் தமது வமிசம் காத்த வீரிய அருச்சுனனிலிருந்து வருவதாகக் கூறுவர். பெண்கள் மறுமணம் செய்துகொள்வர். இவர்கள் தாய்மாமன் பிள்ளையை மணப்பதில்லை. பெண்கள் பூப்பு அடையுமுன் மணம் முடிக்கப்படுவர். மணமாகும் போது ஆண்கள் பூனூல் தரிப்பர்.
கபேரர்:
இவர்கள் கன்னட மீன் பிடிக்கும் வகுப்பினர். இவர்களுள் கெளரி (பார்வதி) மக்கள், கங்கைமக்கள் என இரு பிரிவினர் உண்டு. இவ்விரு வகுப்பினரிடையும் திருமணக்கலப்பு நடப்ப தில்லை; ஆனால் உண்பனவும், தின்பனவும் உண்டு. இவர்க ளுள் பெண்கள் மறுமணஞ் செய்வதில்லை. திருமணத்தின் போது பிராமணன் பெண்ணின் கழுத்தில் தாலிகட்டுவான். விதவை மறுமணம் செய்து கொள்ளுவளாயின் விதவை ஒருத்தியே பெண்ணுக்கு தாலி கட்டுவள். இவ்வகுப்பினருள் சில பெண்கள் தேவரடியாட்களாகக் கோயிலுக்கு நேர்ந்து விடப்படுகிறார்கள். இறந்தவரின் உடல் புதைக்கப்படுகிறது. கம்பலத்தார்:
தொட்டியான் பார்க்க.
கம்பர்:
இது ஒச்சர் குலத்தின் பெயர்.
கம்மா
இவர்கள் தமிழரினின்றும் பிரிந்து சென்ற காப்புக்கள், இரெட்டிகள், வேள்மாக்கள் என்போராவர். இப்பொழுது
1. உவச்சர் குலம் = ஒச்சர் குலம்.
18

ந.சி. கந்தையா
இவர்கள் இராசு என்று அறியப்படுகின்றனர். மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களிற் காணப்படும் காப்புக் களும், கம்மாக்களும் விசயநகரத் தேசாதிபதிகள் காலத்தில் இராணுவ சேவை புரிந்தோராவர். கம்மாப் பெண்களுட் சிலர் முட்டாக் கிடுவர். கம்மாகளில் மணமகன் பெரும்பாலும் மணமகளிலும் இளையவனாக இருப்பான். 22 வயதுள்ள பெண் தனது குழந்தை மணவாளனை ஒக்கலையில் எடுத்துச் சென்ற குறிப்பு ஒன்று சென்னை ஆட்கணக்கு (Madras Census) என்னும் நூலிற் காணப்படுகின்றது. உருசிய நாட்டிலும் பருவடைந்த பெண்கள் தமக்குக் கணவராக நிச்சயிக்கப்பட்ட ஆறு அல்லது ஏழு வயதுள்ள கணவன்மாரை கூட்டிக்கொண்டு திரிவது வழக்கம். விதவைகள் பெரும்பாலும் மறுமணம் புரிவதில்லை.
கம்மாளர், கம்சாலர்:
இவர்கள் தெலுங்குக் கொல்லர்
கம்மாளர்:
கம்மாளன் கண்ணாளன் எனவும் படுவான். பிராமணரைப் போலவே கம்மாளரும் விசுவகு, சனகன், அகிமான், யனாதனன், உபேந்திரன் முதலியவர்களைத் தமது கோத்திர முதல்வர்களாகக் கொள்வர். ஒவ்வொரு கூட்டத்துக்கும் நாட்டாண்மைக்காரன் உண்டு. நாட்டாண்மைக்காரனுக்கு மேலே ஐந்து வீட்டு நாட்டாண்மைக்காரன் அல்லது ஐந்து வீட்டுப் பெரிய கைக்காரன் உண்டு. இறந்தவர்களின் உடல் குந்தியிருக்கும் நிலையில் சமாதி வைக்கப்படும். சில சமயங்களில் பிரேதங்கள் எரிக்கப்படுகின்றன. இவர்களின் குலதெய்வங்கள் மீனாட்சி அம்மன், கோச்சடைப் பெரிய ஆண்டவன், பெரிய நனாயிர் முதலியன. ஏழு கன்னிப்பெண் தெய்வங்களையும் இவர்கள் வழிபடுவர். ஏழு கன்னிப்பெண் தெய்வங்களை வழிபடுவோர் மாதர் வகுப்பு எனப்படுவர். கோச்சடைப் பெரிய ஆண்டவன் என்னும் பெயர் கோச்சடைப் பெரிய பாண்டியன் என்பதன் திரிபு. இவர் விட்டுணு கோச்சடைப் பெரிய நயினார் சிவன் எனவும் படுவர். கம்மாளர்
1. Russia.
19

Page 19
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
தாம் விசுவகன்மாவின் வழித்தோன்றல்கள் எனக் கூறுவர். கி.பி 1013-ல் உள்ள ஆதராங்களால் அவர்கள் தாழ்த்தப் பட்டவர்களாகக் கொள்ளப்பட்டார்களென்றும் அவர்கள் கிராமத்தின் ஒரு பகுதியில் ஒதுக்கப்பட்டிருந்தார்களென்றும் தெரிகின்றன. சோழ அரசருள் ஒருவன், அவர்களை வீடுகளில் சங்கு ஊதவும், மேளம் அடிக்கவும், மிரிதடி தரிக்கவும், வீட்டுக்குச் சாந்து பூசவும் அனுமதித்தான். இவ்வகையைச் சேர்ந்த கம்மாளருக்கு ஆசாரி என்னும் பட்டப்பெயருண்டு.
கம்மாளர் (மலையாளம்):
இவர்கள் பூணுரலணிவதில்லை. இவர்கள் தம்மைத் தீட்டுச்
செய்யும் சாதியினர் என ஏற்றுக்கொள்வர். கோயில்களிலும் பிராமணர் இல்ல்ங்களிலும் இவர்கள் நுழைதல் ஆகாது. இவர்களில் உயர்ந்தோர் ஆசாரிகள் எனப்படுவர். இவர்களில்
ஆண்கள் பலர் ஒரு பெண்ணை மனைவியாகக்கொள்வர். நாயர்களைப் போல இவர்களுக்கும் தாலிகட்டுக் கலியான முண்டு. தாலிகட்டுக் கலியாணத்தில் பெண்ணின் சாதகத்துக்கு எற்ற கணவன் தெரியப்படுவான். தாலிகட்டு நடந்த பின் கணவன் தனது ஆடையிலிருந்து ஒரு நூலை எடுத்து 'கட்டு அறுந்து விட்டது’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பாராது போய்விடுவான்.
இவர்களுக்குத் தனியப்பட்ட நாவிதன் உண்டு. இவர்க ளின் குலதெய்வங்கள் தீக்குட்டி, பறக்குட்டி, காலபைரவன் முதலியன. இவர்களுள் கல் ஆசாரி, மரஆசாரி, மூசாரி (பித்தளை வேலை செய்பவன்), கொல்லன், தட்டான், தோற் கொல்லன் எனப் பிரிவுகளுண்டு. கல்லாசாரி முதலிய முதல் ஐந்து வகுப்பினருக்கிடையில் பெண்கொடுத்தல், உண்பன வும், தின்பனவும் உண்டு. தோற்கொல்லன் இவர்களினும் தாழ்ந்தவனாவன். இவர்களின் உரிமை வழி மருமக்கள் தாயம். இவர்களின் நாவிதனுக்கு குருப்பு என்னும் தச்சர் வில்லாசான் எனவும் அறியப்படுவர். இவர் முற்காலத்தில் திருவிதாங்கூர் அரசினர் படைக்கு வில்லுச்செய்து கொடுத்தனர். கி.பி. 9-ம் நூற்றாண்டில் கம்மாளர் மலையாளத்தில் இருந்தார்கள் என்ப தற்கு சிரியன் கிறித்தவர்களின் பட்டையம் ஒன்று சான்று
2O

ந.சி. கந்தையா
தருகின்றது. கம்மாளரைப் பரசுராமர் கேரளத்துக்குக் கொண்டு வந்தாரென்றும் பெருமாள்களுள் ஒருவர் அவர்களை வண்ணாருள் திருமணம் செய்யும்படி கட்டளையிட்டமையால் அவர்கள் இலங்கைக்குச் சென்றுவிட்டார்களென்றும் கன்ன பரம்பரைக் கதைகளுண்டு. கம்மாளனின் வீடு கொட்டில் எனப்படும். அவை ஒலைக்கற்றைகளால் வேயப்பட்ட சிறு குடிசைகளாகும். பெண்கள் நாயர்ப் பெண்களனியும் அணி களைப் போன்றவற்றை அணிவர், மூக்குத்தி, நத்து முதலிய மூக்கு அணிகளை அணிவதில்லை. வீடு கட்டி முடிந்ததும் ஆசாரிமார் குடிபுகும் கிரியை செய்வார்கள். அதில் பால் காய்ச்சுவது முதன்மையான கிரியை. தென்திருவிதாங்கூரில் இவர்கள் ஈழவரிலும் உயர்ந்தவர்களாகக் கருதப்படுவர்.
பெண்களுக்குத் தாலிகட்டுக் கலியாணம் நடந்தபின் வாழிப்பு என்னும் கிரியை நடத்தப்படுகிறது. இதனால் தாலி கட்டினவனுக்கும் பெண்ணுக்கு முள்ள தொடர்பு நீக்கப்படு கிறது. ஈழவரைப் போலவே பெண்கள் மின்னு என்னும் தாலி தரிப்பர்.
கஞ்சம். ஒரிசா மாகாணங்களில் வாழும் கர்ணம் (கணக் கன்) சாதியினர் கரணா எனப்படுவர். இவர்கள் யயாதிகேசரி என்னும் ஒரிசா நாட்டு அரசனால் (கி.பி. 47-526) வடநாட்டி னின்றும் எழுத்தாளராக கொண்டுவரப்பட்டவர்கள். விதவை கள் மறுமணம் செய்வதில்லை. முட்டாக்கிடும் கரனோப் பெண்கள் கோசா வழக்கத்தைக் கைக்கொள்வர். பருவ மடைந்த பெண்கள் சகோதரனுக்கு முன்னால் தானும் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.
கலவாந்து:
இவர்கள் தென்கன்னடம் தெலுங்கு நாடுகளில் வாழும் பாடல் ஆடல் மாதராவர்.
கழைக்கூத்தாடி:
கம்பங்கூத்தாடி. மூங்கில் (= கழை) கொண்டு வித்தை காட்டிப் பிழைப்பவன்.
21

Page 20
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
கள்ளமூப்பர்:
இவர்கள் மலையாளக் கம்மாளரின் ஒரு பிரிவினர். மலையாளத்தில் கம்மாளர் தீட்டு உண்டாக்கும் வகுப்பினர். கள்ள மூப்பன் கோயிலின் மதிலுக்கு உட்பட்ட வெளிவீதி வரையிற் செல்லலாம். இவர்களின் விதவைகள் மறுமணம் புரிவதில்லை. இவர்களின் புரோகிதன் அம்பட்டன். அவன் மணமகன் வீட்டிலிருந்து பெண்ணின் வீடுவரையும் சங்கு ஊதிச்செல்வான்.
J56irati:
கள்ளர் என்பதற்குக் கொள்ளையடிப்போர் என்பது பொருள். இவர்கள் பெரும்பாலும் தஞ்சாவூர், புதுக்கோட்டை முதலிய பகுதிகள்ற் காணப்படுவர். பெண்களும் ஆண்களும் காதில் துளைசெய்து காது தோளில் முட்டும் படியான காதணி களை அணிவர். இவர்களின் தலைமைக்காரன் அம்பலக்காரன் எனப்படுவான். இவர்களின் தாய்நாடு தொண்டைமண்டலம் அல்லது பல்லவர் நாடாகும். புதுக்கோட்டை அரசர் இன்றும் தொண்டைமான் எனப்படுவர். கள்ளர் குறும்பரில் ஒரு பிரிவினர். படையினின்றும் கலைக்கப்பட்டதும் இவர்கள் கொள்ளையடிக்கும் தொழிலை கைக்கொண்டனர். திருமணத் தில் மணமகனின் சகோதரி பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவாள். கள்ளரில் தெற்கத்தியார் எனப்படுவோர் புதுக் கோட்டையிற் காணப்படுகின்றனர். இவர்கள் தலைமயிரை நீளமாக வளரவிடுவர். ஆண்களும் பெண்களும் காதைத் துளையிட்டு ஒலைச்சுருளைச் செருகித் துளையைப்பெருக்கச் செய்வர். தஞ்சாவூரில் வாழ்வோருக்குக் கள்ளன், மறவன், அகமுடையான் முதலிய பெயர்கள் வழங்கும். மாயவரம் பகுதியில் அகமுடையன், வலையன் என்போருக்கும் கள்ளன் என்னும் பெயர் வழங்கும். கள்ளன், மறவன், அகமுடையான் என்போருக்கு நெருங்கிய உறவுண்டு. கிராமங்கள் கொள்ளை யடிக்கப்படாதிருப்பதற்கு ஒவ்வொரு கிராமமும் அவர்களுக் குத் திறை கொடுத்து வந்தது. திறை கொடுக்கப்படாவிடில் மாடுகள் திருட்டுப்போயின. சில சமயங்களில் வீடுகள் தீப்பிடித்துவிடும். கள்ளரால் பெரிதும் பாதிக்கப்படுவோர்
22

ந.சி. கந்தையா
இடையர் அல்லது கோனாராவர். மாடு திருட்டுக் கொடுத்த வன் கள்ளன் ஒருவனுக்குத் துப்புக்சுலி கொடுத்தால் அவன் இன்ன கிராமத்தில் இன்ன இடத்தில் மாடு கட்டி நிற்கிறது என்று சொல்வான். மாட்டுக்காரன் அவ்விடத்திற்சென்று தன் மாட்டைப் பெற்றுக்கொள்வான். துப்புக்கூலி மாட்டின் பாதி விலையளவு ஆகும். மாடு திருட்டுப் போனதைப் பொலீசா ருக்குத் தெரிவித்தால் மாடு கிடைக்க மாட்டாது. இவர்கள் வளைதடி என்னும் ஒருவகை எறிதடியைப் பயன் படுத்துவர். இத்தடி இலக்கை நோக்கி எறியப்பட்டால் இலக்கில்பட்டு எறிந்தவனிடம் திரும்பி வரும். இவ்வகை வளைதடி (Boomerang) ஆஸ்ரேலியப் பழங்குடிகளாலும் பயன்படுத்தப் படும். வெல்லூர்க் கள்ளரின் பெயர்கள் வினோதமானவை. வேங்கைப்புலி, வெங்காலிப்புலி, செம்புலி, சம்மட்டிகள், திருமான், சாயும்படை தாங்கி போல்வன.
இவர்களுள் அண்ணன் தங்கை பிள்ளைகள் மணம் செய்து கொள்ளலாம்; தாய்மாமன் பிள்ளையை மணத்தல் கூடாது. புறமலை நாட்டுக் கள்ளர் சுன்னத்துச் செய்து கொள்வர். சிறு குடிக்கள்ளர் கட்டும் தாலியில் மகமதியரின் நட்சத்திரமும் பிறையுமுண்டு. திருநெல்வேலியிலும் மதுரையிலும் வாழும் கள்ளப்பெண் மூர்க்கங்கொண்ட எருத்தின் கொம்பிலே கட்டிய துணியை எடுத்துக்கொண்டு வந்தவனையே கணவனாகத் தெரிவார்கள். மாட்டின் கொம்புகளில் விலையுர்ந்த பொருள் களைக் கட்டி மாட்டை அவிழ்த்து விடுவார்கள். சனங்களின் ஆரவாரத்துக்கும் மேளங்களின் ஒலிக்கும் நடுவே அது அங்கும் இங்கும் ஒடும். கள்ளன் மாட்டுக்குப்பின்னால் சென்று அதன் கொம்பிற் கட்டியிருப்பதை அவிழ்த்தெடுப்பான். மேற்கத்திய கள்ளருள் பெரும்பாலும் ஒரு கள்ளப்பெண் பத்து, எட்டு அல்லது இரண்டு கணவருக்கு மனைவியாக இருப்பாள். பிள்ளைகள் எல்லாருக்கும் சொந்தமுடையவர்களாவர். மணமகனின் உடன் பிறந்தாள் பெண்வீட்டுக்குச் சென்று 21 பணம் கொடுத்து பெண்ணின் கழுத்தில் குதிரை மயிரைக் கட்டி அவளையும் அவள் இனத்தவர்களையும் மணமகன் வீட்டுக்கு அழைத்துச் செல்வாள். மணமகனும் மணமகளும் வளைதடி
1. பிரான்மலை.
23

Page 21
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
மாற்றிக் கொள்வார்கள். கள்ளரின் முதன்மையான கடவுள் அழகர்சாமி. மதுரையில் அழகர் கள்ளசாமி எனப்படுவர். கள்ளர் மாட்டுச்சண்டை நடத்துவதில் விருப்பமுடையர். இது கொழுமாடு எனப்படும். இன்னொரு வகை மாட்டுச் சண்டை பாய்ச்சல் மாடு எனப்படும். கள்ளரின் வழக்கமான பட்டப் பெயர் அம்பலக்காரன். சிலர் அகமுடையான், சேர்வை, தேவன் எனவும் பெயர்பெறுவர்.
கன்னடியர்:
இவர்கள் மைசூரிலிருந்து வந்து தமிழ் நாட்டில் குடியேறினோராவர்.
sitdismari:
இவர்கள் மத்திய திருவிதாங்கூரிலுள்ள காக்காக்குறவர். பெண்கள் பச்சை குத்தும் தொழில் புரிவர். காதுகுத்து, கைநோக்கு (இரேகை பார்த்தல்), கொம்பு வைப்பு (நோவுள்ள இடத்தில் கொம்பாலூதுதல்), பாம்பாட்டு, வாய்ப்புக்கூறுதல் (சோசியம் சொல்லுதல்) போன்ற தொழில்களையும் இவர்கள் புரிவர். காக்காளர் காலை ஞாயிறை வணங்கி ஞாயிற்று வாரத்தில் பொங்கலிடுவர். ஆடவர் பன்னிரண்டு மனைவியர் வரையில் மணப்பர். இவர்களின் சொத்து வழி தந்தை தாயரிலிருந்து பிள்ளைகளைச் சேர்வது.
காடர்:
ஆனைமலையில் வாழும் மக்கள் காடர் எனப்படுவார்கள். ஆண்களும் பெண்களும் பற்களின் முனைகளை அராவிக் கூராக்குவர். பெண்கள் கூந்தலில் மூங்கிற் சீப்பு அணிவர். இவர்கள் பேசும் மொழியில் தமிழ் மலையாளச் சிதைவுகள் காணப்படுகின்றன. இவர்கள் ஆளை ஆளி என்பர்; முடி ஆளி - முடியுடையவன்; கத்தி ஆளி - கத்தியுடையவன்; பூ ஆளி - பூ வுடையவன். இராக் காலங்களில் இவர்கள் தமது குடிசைகளின் முன் விளக்கெரிப்பர். இவ்வாறு இவர்கள் செய்தால் கரடி, யானை, புலி, சிறுத்தை முதலிய விலங்குகள் தமது குடிசைகளை அணுகாமல் இருப்பதற்காகும். தீத்தட்டிக்
1. கள்ளழகர்.
24

ந.சி. கந்தையா
கற்களால் இவர்கள் தீ உண்டாக்குகின்றனர். பெண்கள் தமது குழந்தைகளைத் தோளிற் கட்டிய துணியில் இட்டுச் செல்வர். காடர் வாலிபன் திருமணம் செய்ய விரும்பினால் பெண் இருக்கும் கிராமத்துக்குச் சென்று ஓர் ஆண்டு தங்கித் தான் ஈட்டிய பொருளைக் கொடுப்பான். திருமணத்தின்போது ஆண் களும் பெண்களும் பந்தலுக்கு முன்னால் நின்று ஆடுவார்கள். பெண்ணின் தாய் அல்லது உடன் பிறந்தாள் தாலியை அவள் கழுத்தில் கட்டுவாள். பெண்ணின் தந்தை மணமகனின் தலையில் தலைப்பாகை வைப்பான். பூப்புக்காலங்களில் பெண்கள் தனிமையாக ஓரிடத்திலிருப்பர். பூப்படைந்தபின் அவர்கள் தமக்கு வேறு பெயர் இட்டுக்கொள்வார்கள். குழந்தையைப் பெற்ற பெண்ணுக்கு மூன்று மாதங்களுக்குத் தீட்டு உண்டு. ஒரு மாதமானதும் பெண்கள் எல்லோரும் கூடிக் குழந்தைக்குப் பெயரிடுவார்கள். கைம் பெண்கள் மறுமணம் செய்வதில்லை; ஆனால் வைப்பாட்டிகளாக இருக்க அனுமதிக் கப்படுவர். தாய்மார் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை குழந்தைக்குப் பாலூட்டி வளர்ப்பர். பல்லை அரத்தி னால் அராவிக் கூராக்குதல் அழகு என்று காடர் கருதுவர். சிறு வர் புலிநகம், முதலைப்பல் முதலியவற்றை அணிந்திருப்பர். பெண்கள் காதிலுள்ள துளைகளில் ஒலையைச் சுருட்டிச் செருகுவர். இரும்புக் காப்பு, இரும்பு மோதிரம், மணிகோத்த மாலைகள் என்பவற்றையும் இவர்கள் அணிவர். காடுபட்டர்:
இவர்கள் மலையாளத்திலுள்ள நாயர்ச் சாதியினர் போன்றோர். இவர்களின் உரிமை வழி தந்தை தாயரிலிருந்து சொத்து பிள்ளைகளைச் சேர்வது. மணமகளுக்குப் பெண்ணின் சகோதரி தாலி கட்டுவாள். பிணச் சடங்குகளை அம்பட்டன் செய்வான். பெண், ஆண் சந்ததியின்றிக் கைம்மையானல் கணவனிறந்த 12-வது நாள் பெற்றோர் வீட்டுக்குச் செல்வாள். ஆண் சந்ததியிருந்தால் கணவன் வீட்டிலிருப்பாள்.
காட்டு மராத்தி:
தென் திருவிதாங்கூரில் மலைகளில் வாழும் மக்கள் இப்பெயர் பெறுவர். காணிக்காரரின் உட்பிரிவினர் இல்லங்கள்
25

Page 22
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
எனப்படுவர். இவர்கள் பேசும் மொழி மலையாளம். இவர்க ளின் உரிமை தந்தையின் சொத்து பிள்ளைகளைச் சேர்வது. அம்மன், பூதநாதன், வெடிக்காட்டுப்பூதம், வடதலைப்பூதம் முதலிய தெய்வங்களை இவர்கள் வழிபடுவர். திருமணத்தின் போது பெண் சிறுமியாயின் மணமகனே தாலி கட்டுவான்; பருவமடைந்தவளாயின் பெண்ணின் சகோதரி கட்டுவாள். பெண் கருப்பமடைந்து ஏழாவது மாதம் வயிற்றுப் பொங்கல் என்னும் பொங்கல் இடப்படுகிறது. இப்பொங்கல் ஏழு அடுப்பில் ஏழு உலைகளை வைத்துச் செய்யப்படும்.
காது குத்துக் குறவர்:
பல சாதியினருக்கும் காது குத்தும் குறவர் இப் பெயர் பெறுவர்.
காப்பிலியர்:
இவர்கள் குறும்பரில் ஒரு பிரிவினர். பெண்களுக்குத் திருமணத்தின் அடையாளமாக பொட்டு அல்லது தாலி கட்டப் படும். கணவன் வயதில் இளையவனாக விருந்தால் பெண் கிட்டிய உறவினனைச் சேர்ந்து பெறும் பிள்ளை கணவனின் பிள்ளையாகக் கொள்ளப்படும். உடன் பிறந்தாளின் கணவ னோடு உறவு பூண்டிருந்தால் அவள் ஒழுக்கத்தில் தவறியவ ளாகக் கருதப்படமாட்டாள். இவர்களின் தெய்வங்கள் இலக்கம்மா, வீர இலக்கம்மா, தெண்டையா, திம்மப்பன், சிங்காரப் பெருமாள் முதலியவை.
&frւնւյ:
இவர்கள் இரெட்டி வகுப்பினர். இவர்கள் தெலுங்கு நாட்டில் உழு தொழில் செய்கின்றனர். இவர்கள் பிராமண ருக்கு அடுத்தபடியிலுள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்.
கிராமணி:
இது (சாணார்) சான்றோர் வகுப்பார் சிலரின் பட்டப் பெயர். இவர்களின் தலைமைக்காரருக்குக் காத்திரி என்னும் பட்டப்பெயர் வழங்கும்.
26

ந.சி. கந்தையா
கிருஷ்ணாவைக் காக்கா:
இவர்கள் இரணியல், கல்குளம் (திருவிதாங்கூர்) முதலிய இடங்களில் வாழ்வோர். ஆண்களின் பெயர் இறுதியில் ஆயன் என்றும் பெண்களின் பெயரிறுதியில் ஆய்ச்சி என்றும் முடிவுகள் சேர்ந்து வழங்கும். இவர்கள் வட இந்தியாவிலுள்ள அம்பாதியிலிருந்து வந்து காஞ்சீபுரத்தில் ஆயர்பாடியில் வாழ்ந்தார்கள். மகராசா உடைய மார்த்தாண்டவர்மன் காலத் தில் இவர்கள் கேரளத்துக்குச் சென்றார்கள். மார்த்தாண்டவர் மன் காலம் கொல்லமாண்டு 904-933. இவர்களிடையே மருமக்கள் தாயம், மக்கள் தாயம் என்னும் இருவகை உரிமை வழிகளும் உண்டு. இவர்களின் குரு காணத்தன் அல்லது கசான் எனப்படுவர். குருக்கள்குலப் பெண்கள் மங்கலி அம்மா எனப்படுவர். மருமக்கள் தாயக்காரர் மலையாள மொழிபேசு வர். மக்கள் வழித் தாயக்காரர் கொச்சைத் தமிழ் பேசுவர். மருமக்கள் தாயக்காரருக்கு இளமையில் தாலி கட்டுக் கலியாணமுண்டு. ஒருத்தியின் கணவன் இறந்து போனால் அவள் அவன் தம்பியின் மனைவியாவாள். அவள் அணிந்திருக் கும் ஆபரணங்களைக் களையவேண்டியதில்லை. மருமக்கள் தாயக்காரரின் பெண்கள் தாய் வழியால் அறியப்படுவர்.
60aonróf):
இவர்கள் தெலுங்கு அம்பட்டர். இவர்களின் உரிமை
பெண் வழியாக வருவது.
கிழக்கத்தி:
வட அல்லது தெற்கு ஆர்க்காட்டுப் பறையர் சென்னையில்
கிழக்கத்தி எனப்படுவர்
கீரைக்காரன்:
கோயம்புத்தூரில் கீரை பயிரிடும் அகம்படியார் சிலருக்கு
இப்பெயர் வழங்கும்.
குகவேளாளர்:
சில வேளாளரும் மறவரும் தாம் இராமருக்கு ஒடம் விட்ட குகனிலிருந்து தோன்றியவர்கள் எனக்கொண்டு தம்மைக் குகவேளாளர் என்பர்.
27

Page 23
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
குசராத்தி:
கூர்ச்சரத்தினின்றும் வந்து தென்னாட்டிற் குடியேறினோர் குசராத்தி எனப்படுவர். குடிகாரர்:
ஒவியந் தீட்டுவோர், மரங்களில் உருவங்கள் வெட்டு வோருக்குக் கன்னட நாட்டில் இப்பெயர் வழங்கும். குடி என்பது கோயிலைக் குறிக்கும் குடிக்கார்:
திருவிதாங்கூரிலுள்ள தேவதாசிகளுக்கு இப்பெயர் வழங்கும். இவர்களுக்கு வீட்டுக் கூலி இல்லை. குடிமகன்; s
இது அம்பட்டனுக்கு வழங்கும் தமிழ்ப் பெயர். குடியர்:
(குடி=மலை). இவர்கள் தென் கன்னடத்தில் காணப்படு கின்றனர்; கொச்சைத்துளுப் பேசுகின்றனர். மைசூர் எல்லைப் புறங்களில் இவர்கள் காணப்படுகின்றனர். இவர்களின் முக்கிய கடவுளர் பைரவர், காமன் தேவாரு, பஞ்சபாண்டவர் என்போராவர். பெண்ணும் மணமகனும் கையைப் பிடித்து நிற்க மணமகளின் தந்தை நீரை ஊற்றுவதே அவர்களின் மணக்கிரியையாகும். சில சமயங்களில் மணமகனும் மணமகளும் குடித்தலைவனின் முன்னால் நின்று ஒருவருக்கு ஒருவர் பொட்டு இட்டுக் கொள்வர்.
G95цqшт:
ஒரியாநாட்டு மிட்டாய் விற்போர் இப்பெயர் பெறுவர். (குடோ - கருப்புக் கட்டி. தமிழில் கூழ் என்றால் கருப்பட்டி / வெல்லப்பாகு ஆகும். இச்சொல் வட இந்திய மொழிகளில் பலவாறாகத் திரிந்துள்ளது).
28

ந.சி. கந்தையா
குடுபியர்:
இவர்களின் சாதிப் பெயர் குளவாடி. இவர்கள் பெரிதும் குண்டப்பூர் மாகாணத்தில் காணப்படுவர். கொங்கணி, மராட்டி முதலியன இவர்களின் மொழிகளாகும். இவர்களுள் வியபிசார நடத்தையுள்ள ஆணின் தலையையும் முகத்தையும் சிரைத்து அவனைக் குழியில் நிறுத்தி எச்சில் இலையைத் தலைமீது எறிவது வழக்கு. தலைமைக்காரன் பணத் தண்டம் விதிப்பான். பெண் உண்மை கூறாவிடில் இரும்புக் கம்பியுடன் வெயிலில் நிறுத்தப்படுவாள். இவர்கள் தமது குலதெய்வத்தை வீட்டின் ஒரு புறத்தில் வைத்து வழிபடுவர்; குடும்பத்தினருள் ஒருவன் பூசாரியாக இருப்பான். இவர்கள் பூதங்களையும் காலபைரவரையும் வழிபடுவர். விதவைகள் மறுமணம் செய்து கொள்வர். ஆனால் இறந்த கணவனின் குடும்பத்தில் மணம் முடிக்க மாட்டார்கள்; பெரும்பாலும் காசுக் கட்டி செய்வர். காசுக் கட்டி ஒரு வகை மரத்தை வெட்டி அவித்து அதன் சத்திலிருந்து செய்யப்படுகிறது. குடுமி அல்லது குடுமிக்காரர்:
இப்பெயர் ஒரே குடும்பம் என்பதன் சிதைவு என்று சொல்லப்படுகிறது. இவர்கள் குடியர் எனவும் படுவர். இப்பொழுது இவர்கள் தாம் செட்டி இனத்தைச் சேர்ந்தவர் களெனக் கூறுவர். இவர்களில் மரியாதைக்குரியவரைக் கொச்சி அரசர் மூப்பன் என்று அழைப்பர். கொங்கண மொழியின் சிதைவாகிய ஒரு வகை மொழியை இவர்கள் பேசுவர். பெண்கள் பூப்புக்குப்பின் நான்கு நாட்கள் தீட்டுக் காப்பர். அக்காலத்தில் அவள் மற்றவர்களுக்கு ஏழடி தூரத்தில் நிற்க வேண்டுமென்றும், நிழல் மற்றவர்கள் மீது விழுதல் கூடாதென்றும் விதிகளுண்டு. பெண்களுக்குத் திருமணம் பூப்படையும் முன் நடக்கும். விதவைகள் மறுமணம் முடிப்பர். குடும்பத்தில் மிக முதியவரின் பிணம் மாத்திரம் சுடப்படும். இவர்களுக்கு இறப்பு பிறப்புத் தீட்டுகள் பதினாறு நாட்களுக்குண்டு. இவர்களின் முக்கிய பொழுதுபோக்கு
கோலாட்டம்.
29

Page 24
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
குடைகட்டி:
இவர்கள் பாணரில் ஒரு பிரிவினர். குணி:
இவர்கள் ஆடல் பாடல் புரியும் ஒரிய தாசி வகுப்பினர். கும்மாரர்:
(கும்பகாரர்-குயவர்) அவர்கள் கன்னட தெலுங்கு குயவரில் ஒரு பிரிவினர். தமிழ் நாட்டுக் குயவரைப் போல இவர்கள் நூல் தரிப்பதில்லை. குயவர்:
மட்பாண்டங்கள் செய்வோர் இப்பெயர் பெறுவர். இவர்கள் பூணுரலுணிவர். பிடாரி கோயில்களில் இவர்கள் பூசாரி யாக இருப்பதுண்டு. இவர்களின் பட்டப்பெயர் உடையான், வேளான் என்பன. முற்காலத்தில் இறந்தவர்களை வைத்துப் புதைக்கும் அழகிய தாழிகளை இவர்கள் செய்தார்கள். திருநெல்வேலி, மதுரை, மலையாளம் முதலிய இடங்களில் தாழிகள் கிண்டி எடுக்கப்பட்டன. குயவன் மாமியின் மகளை மணக்கலாம். பெண்பருவமடைவதன் முன் மணம் நடக் கின்றது. மணமகனின் சகோதரி பெண்ணுக்குத் தாலி தரிப்பாள்.
குருக்கள்:
இவர்கள் மலையாளக் குரு வகுப்பின் ஒரு பிரிவினர். இவர்கள் தமிழ் உற்பத்தியைச் சேர்ந்தவராகலாம். ஆடவர் நயினார் எனவும் மகளிர் நாச்சியார் எனவும் படுவர். இவர்கள் திருவனந்தபுரத்திலுள்ள பத்மநாப சுவாமிக்கு வழித் தொண் டர். இவர்கள், மடத்தலைவர்களும், தேவார பண்டாரங்களும் சமயக் கிரியைகள் புரியும்போது உதவி செய்வர்களாவர். கொல்லம் ஆண்டின் எட்டாவது நூற்றாண்டு வரையில் பத்மநாபசாமி கோயிலின் உள் மண்டபங்களை அலகிடும் வேலை செய்து வந்தனர். இவர்களின் இல்லம் பவனம் அல் லது வீடு எனப்படும். பெண்கள் குருக்கத்திகள் எனப்படுவர். அவர்கள் கழுத்தில் அரசிலைத் தாலியையும், காதில் சூட்டு
3O

ந.சி. கந்தையா
என்னும் அணியையும், மூக்கில் நத்து அல்லது மூக்குத்தி யையும் அணிவர்; கையிலும் நெற்றியிலும் பச்சை குத்திக் கொள்வர். குருகளின் புரோகிதர் உபாத்தியாயர் எனப்படுவர். தாலிகட்டுக் கலியாணம் சம்பந்தம் முதலிய வழக்கங்கள் இவர்களிடையே உண்டு. இவர்களுக்கு மரணத் தீட்டு ஏழுநாள்.
குருப்பு:
இவர்கள் மலையாளத்திற் காணப்படும் கொல்ல வகுப்பில் ஒரு பிரிவினர். இவர்களிற் பல பிரிவுகளுண்டு. காய, பலிச (கேடகம்) தோல் முதலிய பெயர்கள் அவர்கள் பெயர்களுக்கு முன்னால் இட்டு வழங்கப்படும். குருவிக்காரர்:
குருவி பிடிப்போரில் மராட்டி பேசுகின்ற கூட்டத்தினர் இப்பெயர் பெறுவர். இவர்கள் காட்டு மராட்டிகள் எனவும் அறியப்படுவர். இவர்கள் தமது பொருள் பண்டங்களையும் குடிசைகளையும் பொதிமாடுகளில் ஏற்றிக்கொண்டு அலைந்து திரிவர். இவர்கள் பிச்சை எடுத்தும், ஊசி, மணி முதலியன விற்றும் வாழ்க்கை நடத்துவர். இவர்கள் பலரைச் சென்னை நகரில் காணலாம். குருவிக்காரன் வலையைக் கட்டி அதனுள்ளி ருந்து நரிபோலச் சத்தமிடுவான். நரிகள் அச்சத்ததைக் கேட்டு ஓடி வரும். குருவிக்காரன் அவற்றை அடித்துக் கொல்லுவான். கலியாணமான குருவிக்காரி பகல் முழுதும் அலைந்து திரிந்து விட்டு இரவானதும் கணவனிருக்குமிடத்துக்கு வரவேண்டும்; அல்லாவிடில் வேகக் காய்ச்சிய இரும்பைப் பிடித்துக் கொண்டு அவள் பதினாறடி செல்லவேண்டும்; அல்லது கொதிக்கக் காய்ச்சிய சாணி நீருள் கைவத்து அடியில் இருக்கும் காலணாவைத் தடவி எடுக்கவேண்டும். அவள் குற்றமற்றவ ளானால் உடனே உள்ளங்கையில் நெல்லை வைத்து உரைஞ்சி உமியைப் போக்க கூடியவளாவள். ஆண்கள் தமது பெயரினிறுதியில் சிங் என்பதைச் சேர்த்துக் கொள்வர். திருமணத்தின்போது அவர்களின் தலைமைக்காரன் கறுப்புக் கயிற்றை அல்லது மணிகள் கோத்த மாலையை மணமகனின்
31

Page 25
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
கழுத்தில் அணிவான். துர்க்கையும் காளியும் அவர்களின் முதன்மையான தெய்வங்கள்.
குறவர்:
இவர்கள் இடம்விட்டு இடம்பெயர்ந்து திரியும் மலைச் சாதியினர். இவர்கள் கொச்சைத் தமிழ் பேசுவர்; கூடைமுடை வர். வாய்ப்புக் (சோசியம்) கூறுவர். திருமணத்தில் மணமகள் மஞ்சள்நூல் தாலி தரிப்பர். குறப் பெண்கள் பச்சை குத்து வார்கள். குறவர் பூனை, கோழி, மீன், பன்றி, கருங்குரங்கு, நரி, எலி, மான் முதலியவற்றின் இறைச்சியை உண்பர். மணமான பெண்கள் கழுத்தில் கறுப்புப் பாசியும் கையில் வளையலும் அணிந்திருப்பர். கணவனை இழந்த பெண்கள் அவற்றைக் களைந்துவிடுவர்; "குறத்தி பிள்ளையைப் பெறக் குறவன் காயந்தின்கிறது" என்னும் பழமொழியுண்டு. குறத்தி பிள்ளை பெற்றால் குறவன் மூன்று நாட்களுக்குப் படுக்கையிலிருந்து காயந் தின்பான். குறுவர் (திருவிதாங்கூர்):
திருவிதாங்கூர்ப் பகுதியில் 50,000-க்கு மேற்பட்ட குறவர் வாழ்கின்றனர். இவர்கள் குண்டக்குறவர், பூங்குறவர், காக்காக் குறவர் என மூன்று பிரிவினராவர். பாண்டிக் குறவர் தமிழ் பேசுவர். இவர்கள் பெரிதும் நாஞ்சில் நாட்டில் (நாகர்கோயிற் பகுதி) காணப்படுவர். நாஞ்சில் குறவர் என்பது அவர்களின் மறுபெயர். குண்டக்குறவர் தமது முன்னோர் ஓம குண்டத்தி னின்றும் பிறந்தவர் எனக் கூறுவர். மூன்று நூற்றாண்டுகளின் முன் நாஞ்சில் நாடு நாஞ்சிற் குறவரால் ஆளப்பட்டது. இவர்கள் இறந்த முன்னோரின் ஆவிகளை வணங்குவர். இவர் களின் மேலான கடவுள் கார்த்திகேய அடிகள். இவர்களின் இறந்துபோன முன்னோர் சாவார் எனப்படுவர். சாவாருக்குச் சிறுகுகைக் கோயில்களுண்டு. சாவாருக்குப் பூசை செய்யும் பூசாரி பிணியாளி எனப்படுவான். இராரக்காரர் அல்லது விச்சாரக்காரர் என்னும் ஒரு வகையினருண்டு. அவர்கள் நோய்களின் காரணங்களை ஆராய்வர். அவர்களின் தெய்வங்கள் சாவார், ஆயிரவல்லி, சாத்தான், பகவதி, மாடன், மூடி, தெய்வம், பகவான், அப்புப்பன், மருதன் முதலியன.
32

ந.சி. கந்தையா
இவர்களின் குடித்தலைவன் ஊராளி, பணிக்கன் எனப்படு வான். பெண்களுக்குத் திருமணம் பூப்பாவதன்முன் நடை பெறும். தாலிகட்டுக் கலியாணமுண்டு. சம்பந்தம் கொள்ளும் வழக்கமும் உண்டு. தாலிகட்டுக் கலியாணத்தில் குறத்தி பெண் ணின் கழுத்தில் தாலிகட்டுவாள். குறவன் ஒரு பெண்ணை மணக்க விரும்பினால் அவன் பெண்ணின் தந்தைக்குப் பன்னி ரண்டு பணம் கொடுக்கவேண்டும். விதவைகள் மறுமணஞ் செய்வர். இவர்களின் உரிமைவழி மருமக்கள் தாயம். இவர் களுக்கு மரணத்தீட்டு பன்னிரண்டு நாள். தாழ்ந்தவர் உயர்ந்த சாதியினருக்கு நாற்பத்தெட்டடி தூரத்தில் நிற்றல் வேண்டும்.
குறிச்சான்:
மலையாளத்தில் வேட்டையாடி வாழும் சாதியினருக்கு இப்பெயர் வழங்கும். இப் பெயர் குறிச்சி என்னும் அடியாகப் பிறந்திருக்கலாம். மலையாளத்தில் குறிச்சி என்பது மலை யைக் குறிக்கும். குறிச்சான்கள் பிராமணரிடத்தில் அதிக வெறுப்புக் காட்டுவர். பிராமணனொருவன் குறிச்சான் வீட்டுக்குச்சென்று திரும்பினால் குறிச்சான் பிராமணன் இருந்த இடத்தைச் சாணியால் மெழுகிச் சுத்தஞ் செய்வான். மருமக்கள் தாயமும், மக்கள் தாயமும் இவர்களிடையே உண்டு. இவர்க ளின் தெய்வம் மூத்தப்பன் (பாட்டன்). இப்பொழுது இவர்கள் புனம் செய்வர். இவர்கள் பெரும்பாலும் வேணாடு, கள்ளிக் கொடு, மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரல்களிற் காணப்படுவர். தீயரும், கம்மாளரும் தீண்டினால் இவர்களுக்குத் தீட்டு உண்டு. பூப்பு எய்து முன் பெண்களுக்குத் தாலிகட்டுக் கலி யாணம் நடக்கும். விழாக் காலங்களில் இவர்கள் மீது தெய்வம் ஏறி ஆடி வெளிப்புக் கூறும். சில இடங்களில் வாழ்வோர் நல்ல தண்ணிரில் வாழும் மீன்களைக் கைவில்லால் அம்பை எய்து கொல்வர். அம்பு நீண்ட கயிற்றிற் கட்டப்பட்டிருக்கும். கரிம்பில் பகவதி, மலைக் குறத்தி, அதிர் அள்ளன் முதலிய கடவுளரை இவர்கள் வழிபடுவர்.
1. தமிழில் குறிஞ்சி = குறிச்சி யாகும். இச்சொல்லில் பல ஊர்கள் உண்டு. இச் சொல்லே மலையாளத்திற்குச் சென்றுள்ளது.
33

Page 26
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
குறுமோ
குறுமோ என்பார் இறசல் கொண்டாப் பகுதிகளில் வாழும் பயிர்த்தொழில் புரியும் ஒரிய வகுப்பினர். தெலுங்கர் இவர்களைக் குடுமோ என்பர். இவர்களின் கிராம தெய்வங்கள் தக்குறாணி எனப்படும். பாகதேவி, கும்பேசுவரி, சாதபலுனி முதலியன அவர்கள் குடும்பத் தெய்வங்களாகும்.
குறும்பர்:
ஆட்டைக் குறிக்கும் குறு என்னும் கன்னடச் சொல்லி லிருந்து இப்பெயர் உண்டானதென்று கருத இடமுண்டு. குறு என்பது கொறி (ஆடு) என்னுஞ் சொல்லின் திரிபு. இவர்களின் தலைமைக்காரன் கொடு எனப்படுவான். தலைப் பூப்படைந்த பெண்கள் வீட்டின் ஒரு மூலையில் எட்டு நாட்கள் விடப் படுவார்கள். ஒன்பதாவது நாள் பெண்கள் அவளை முழுக் காட்டிப் பீடத்தின் மீது இருத்தி, மஞ்சள் நீரும் சுண்ணாம்பு நீரும் கலந்த தட்டை அவளுக்கு முன்னல் ஏந்தி அவளின் கால், மடி, தலைகள் மீது அரிசி தூவி உடுக்கப் புதிய ஆடை கொடுப்பார்கள். திருமணத்தின்போது ஐந்து பெண்கள் தாலியைத் தொட்ட பின்பு குருக்கள் பெண்ணின் கழுத்தில் அதனைக் கட்டுவார், பின்னர் மற்றப் பெண்கள் கலியாணத் துக்குத் தெரியப்படுவார்கள். நல்ல சுழிகளிலொன்று பாசிங் கம். இது நெற்றியிற் காணப்படுவது. மிகக் கூடாத சுழிகள் பேய், யானை என்பன இவை தலையின் பின்புறத்திற் காணப் படுவன. கூடாத சுழியுடைய பெண்கள் கணவனைக்கொன்று விடுவார்கள் என்னும் நம்பிக்கை இவர்களிடையே உண்டு. ஆகவே தீய சுழியுடைய பெண்கள் மனைவியை இழந்த ஆண்களுக்கு மணமுடித்துக் கொடுக்கப்படுவர். மணம் கணவன் வீட்டில் நடைபெறும் பூப்படைந்த பெண்களுக்குப் பூப்புக் கலியாணம் முன்னதாக நடைபெறுகின்றது. பெண்கள் மறுமணம் செய்துகொள்வர். இவர்களுக்கு இன்னொரு விதவை தாலி கட்டுவாள். இறந்துபோன தந்தைக்கு மூத்த மகன் கொள்ளிக் குடமுடைப்பான். இறந்தவனின் மனைவி பதினோராவது நாள் கைவளைகளை உடைத்துவிடுவாள். வண்ணத்தம்மா, துர்க்கம்மா முதலிய பெண் தெய்வங்களின்
34

ந.சி. கந்தையா
கோயில்களில் பெண் பூசாரிகள் பூசை செய்வர். விழாக் காலங்களில் பூசாரி தெய்வமேறி ஆடி வருங்காரியங் கூறுவான். இவ்வாறு தெய்வமேறுவது காரணிகம் எனப்படும். வளர்ந்தவர்களின் பிரேதம் எரிக்கப்படும். சிறுவரின் பிரேதம் புதைக்கப்படும். இவர்களுக்கு மரணத்தீட்டு பத்து நாள். மணமாகாத பெண்கள் தனித்தனி விடப்பட்ட குடிசைகளில் படுத்துறங்குவார்கள். பயிரை மேயவரும் யானைகளின் முகத்துக்கு நேரே இவர்கள் சூளைக்காட்டியும், காட்டுப் பன்றிகளைக் கவணிற் கல்லை வைத்தெறிந்தும் ஒட்டுவார்கள். இவர்களில் தென்குறும்பர் என்னும் ஒரு பிரிவினரும் உண்டு. குறும்பரின் சாதித் தலைவன் முதலி எனப்படுவான். இவர்களிடையே வேட்ட, உறளி என்னும் இரு பிரிவினரும் உண்டு. நீலகிரிக் குறும்பரில் பல சகோதரர் சேர்ந்து ஒரு பெண்ணை மணப்பர். இறந்தவர்களின் சமாதியில் அவர்கள் நீருள் இருக்கும் கல்லை (தேவ கோட்டக் கல்) எடுத்துக் கொண்டு வந்து நடுவார்கள். இரங்கசாமிக் கோடு, பராலியர் (Baraliar) முதலிய குன்றுகளில் வாழ்வோர் இறந்தவரின் உடலை எரித்து எலும்பின் ஒரு சிறு துண்டையும் சிறு கல்லையும் அவரின் சமாதியில் (சாவுமனை) வைப்பர்; சில பகுதிகளில் இரு பெரிய கற்களை நாட்டி மேலே ஒரு பாவுகல்லை வைப்பர்.
குன்றுவர்:
இவர்கள் பழநி மலையில் வாழும் பயிர்த்தொழில் புரியும் மக்கள். இவர்களின் மொழி தமிழ். இவர்கள் தமது முன்னோர் வேளாளர் எனக் கூறுவர். இவர்கள் தலைவன் மண்ணாடி எனப்படுவன். பெண்கள் வெள்ளை ஆடை உடுப்பார்கள். ஒருவன் மாமியின் மகளை மணக்கலாம். கணவன் இளம் வயதினனாயின் அவள் அச்சாதி ஆடவன் ஒருவனோடு சேர்ந்து வாழ்வாள். அவ்வாறு பிறக்கும் பிள்ளைகள் கணவனின் பிள்ளைகளாகவே கருதப்படும். எட்டு வயதுள்ள ஒருவனுக்கு இரண்டு அல்லது மூன்று பிள்ளைகள் இருக்கக்கூடும்.
35

Page 27
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
கூடலர்:
விசாகப்பட்டினம் கஞ்சம்பகுதிகளில் வாழும் கூடை முடையும் வகுப்பினர் இப்பெயர் பெறுவர்.
கூடான்:
மலையாளத்திற் காணப்படும் காணியாளரின் அடிமைகள் கூடானெனப்படுவர். இவர்கள் எல்லா உயர்ந்த சாதியினருக் கும் நாற்பத்திரண்டடி தூரத்தில் நிற்றல் வேண்டும். புலையர், நாயாடி, உல்லாடர் முதலியவர்களுக்குப் பக்கத்தில் நின்றால் இவர்களுக்கு தீட்டுண்டாகும். இவர்களுக்கு அம்பட்டரும், வண்ணாரும் உண்டு. பெண்கள் பூப்பு அடைந்தால் நான்கு அல்லது எழு நாட்களுக்குத் தீட்டுக் காப்பார்கள். கூடான் தனது சொந்தச் சாதியில் அல்லது பறையர் வகுப்பில் சம்பந்தம் வைத்துக் கொள்ளலாம். இவர்களுக்கு மருமக்கள் தாயம் உண்டு. இவர்களிடத்தில் சொத்து இருப்பதில்லை. ஒரு ஆடு, ஒரு மாடு அல்லது சில சோழிகளே இவர்களின் சொத்தாகும்.
96RIT
இவர்கள் வேள்மா வகுப்பினரின் ஒரு பிரிவினர்.
கூத்தாடி:
ஆரியக் கூத்தன், கூழைக் கூத்தன் முதலியோர் இப்பெயர் பெறுவர்.
கூர்மாப்பு:
இவர்கள் விசாகப்பட்டினப் பகுதியில் காணப்படும் ஆடல் மகளிராவர். இவர்கள் மணம் முடிப்பதில்லை; விபச் சாரத்தினால் பொருளீட்டுவர். விருந்துக் காலங்களில் ஆடல் புரிவர். இவர்கள் விசாகப்பட்டினத்திலுள்ள சிறீ கூர்மம் என்னும் கோயிலில் தேவரடியாட்களாக இருந்தவர்களாவர்.
கைக்கோளர்:
தென்னாட்டில் நெசவுத் தொழில் புரியும் பெரும் பிரிவி னர் இப்பெயர் பெறுவர். மதுரை நாயக்க அரசர் கைக்கோளர் வேலையில் திருப்தியுறாது வடநாட்டினின்றும் பட்டுநூற்
36

ந.சி. கந்தையா
காரரை அழைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இன்று தமிழ் நெசவாளரைவிடப் பட்டு நூற்காரரின் எண்ணிக்கை அதிகமாகும். கைக்கோளர் செங்குந்தர் எனவும் படுவர். பறை யரும் இவர்களும் தம்மை வீரபாகுவின் வழித்தோன்றல்கள் எனக் கூறுவர். இவர்களுள் சோழியர், இரட்டு சிறுதாலி, பெருந்தாலி, சீர்பாதம், சேவுகவிருத்தி என்னும் பிரிவு களுண்டு. சிறுதாலி பெருந்தாலி என்பன சிறிய தாலியையும் பெரிய தாலியையும் அணிவது காரணமாகத் தோன்றிய பெயர்கள். கைக்கோளரிற் பெரும்பாலினர் சைவர். இவர் இலிங்கங் கட்டுவர். சிறு தொகையினர் வைணவ மதத்தினர். இவர்களின் தலைமைக்காரன் பெரியதனக்காரன் அல்லது பட்டக்காரன் எனப்படுவான். பெரிய தனக்காரன் மகாநாட் டான் எனவும் படுவன். இவர்களுள் நட்டுக்கட்டாத நாயன்மார் என்னும் பண்டாரங்களுண்டு. இவர்கள் நாடுகளிற் சென்று தமது குலத்தவர்களுக்கிடையில் தோன்றும் பிணக்குகளைத் தீர்த்து வைப்பர். கைக்கோளருள் பொன்னம்பலத்தார் என்னும் பண்டாரங்களுமுண்டு. ஒட்டக்கூத்தப் புலவர் கைக்கோள வகுப்பைச் சேர்ந்தவராவர். காஞ்சிபுரத்திற் சபை கூடும்போது கைக்கோளத் தலைவன் தலையணையிற் சாய்ந்து கொண்டி ருப்பான். ஆகவே அவன் திண்டுக்காரன் எனப்படுவான். கைக்கோளக் குடும்பமொவ்வொன்றிலும் ஆலயசேவைக்குப் பெண்கள் நேர்ந்து விடப்படவேண்டும். கைக்கோளர் தாம் தேவதாசிகளோடு தொடர்பற்றவர் எனக் கூறுகின்றனர். தாசிகளுக்கு கோயில் விக்கிரகத்துக்கு முன்னிலையில் பிராமணன் தாலி கட்டுகிறான். தாலி என்பது கறுப்புமணிகள் கோத்தமாலை (கறுப்புப்பாசி). கைக்கோளருக்கு முதலி, நாயன்மாரென்ற பட்டப்பெயர்களுண்டு.
கொங்கணி:
கொங்கணரின் ஆதி இருப்பிடம் சரசுவதி ஆற்றை அடுத்த இடங்கள். அங்கிருந்து வந்து தெற்கே குடியேறினோர் கொங்கணிகள் எனப்படுவர்.
37

Page 28
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
கொங்க வேளாளர்:
இரெட்டிடமார் இவர்களுடனிருந்து உண்ணமாட்டார்கள், காதில் தொங்கும் வளையங்களையும் மேற்காதில் தொங்கும் முருகுகளையும் கொண்டு இவர்கள் மதிக்கப்படுவார்கள். முறுக்கித் திரிக்கப்படாத நூலில் பெண்கள் தாலி அணி வார்கள். தாயத்து என்னும் அணியை இடதுகையில் அரிை வார்கள். ஆண்கள் தாய்மாமன் மகளை மணப்பர். சிறுபையன் வளர்ந்த பெண்ணுக்குக் கலியாணம் முடிக்கப்படுவான். மகன் வளரும் வரையும் அவன் தந்தை அவளுக்குக் கணவனின் கடமைகளைச் செய்து வருவான். திருமணக்காலத்தில் அவர்கள் குரு அருமைக்காரன் என அழைக்கப்படுவான். குரு வின் மனைவி அருமைக்காரி எனப்படுவள். அருமைக்காரன் பெண்ணின் கழுத்தில் தாலிகட்டுவான். அப்பொழுது அம்பட்டன் 'சந்திரசூரியர் உள்ளளவும் உங்கள் கிளைகள் ஆல்போல் தழைத்துச் சுற்றம் மூங்கில்போல் பெருக’ என்று வாழ்த்துவான். இவர்களுட் பிச்சைக்காரர் முடவாண்டிகள் எனப்படுவர்.
கொடிக்கால்:
கொடிக்கால் - வெற்றிலை. வெற்றிலை பயிரிடுவோர்க்கு இப்பெயர் வழங்கும். சாணாரில் ஒரு பிரிவினருக்கும் கொடிக்கால் என்னும் பெயருண்டு. கொடிப்பட்டர்:
இவர்கள் மலையாளத்தில் வாழும் தமிழ்ப் பிராமணருள் ஒரு பகுதியினர். இவர்கள் வெற்றிலைக் கொடிகளைப் பயிரிட்டமையால் பிராமணத் தன்மையை இழந்தார்கள். இவர்களின் முக்கிய இருப்பிடம் வாமனபுரி. கொண்டதோரர்:
விசாகப்பட்டினத்திற் பயிரிடும் மலைவாசிகள் இப்பெயர் பெறுவர். இவர்கள் பாண்டவரையும், தலுபுல் அம்மாவையும் வழிபடுவர். இவர்கள் தம்மைப் பாண்டவர் குலத்தினரெனக் கூறிக் கொள்வர்.
38

ந.சி. கந்தையா
கொண்டர்:
இவர்கள் கஞ்சம், விசாகப்பட்டினம், வங்காளம், மத்திய மாகாணங்களில் வாழ்கின்றனர். இவர்கள் தம்மை கூய் என்னும் பெயர் கொடுத்தும் வழங்குவர். இது கோய அல்லது கோயாவுக்குச் சமம். இவர்களில் 58 பிரிவுகளுண்டு. போர் செய்யும் போது இவர்கள் எருமைக் கொம்பும் மயிலிறகு மணிவர். பெண்கள் முகத்தில் பச்சை குத்திக்கொள்வர். முற்காலத்தில் கொண்டர் பூமிக் கடவுளுக்கு நரபலி இட்டனர். நரபலியிடுதற்குப் பயன்படுத்தப்பட்ட மரப் பலிபீடமொன்று சென்னை நூதன பொருட்காட்சி சாலையிற் காணப்படு கின்றது. நரபலி ஆங்கிலரால் நிறுத்தப்பட்டது. திருமண காலத்தில் மணமகன் மணமகளைத் திருடிக்கொண்டு போவ தாகவும் பெண்வீட்டார் பெண்ணை மீட்டுக்கொண்டு போவ தாகவும் இரு பகுதியாருக் கிடையிலும் போலிப் போர் நடத்தப் படுவதுண்டு.
கொண்டாலிகர்:
மராட்டி பகுதியைச் சேர்ந்த பிச்சை எடுக்கும் பண்டா ரங்கள் இப்பெயர் பெறுவர்.
கொல்லர்:
இவர்கள் மலையாளக் கம்மாள வகுப்பினர். இவர்களுள் தீக்கொல்லன், பெருங்கொல்லன், கனசிற்கொல்லன், தோற்கொல்லன் எனப் பல பிரிவுகளுண்டு.
கோசாக்கள்:
இவர்கள் அண்ணகர் (விதையடிக்கப்பட்டவர்). தென்னிந் தியாவில் இவர்களிற் பலர் காணப்படவில்லை. சில சமயங் களில் இந்துக்கள் சிலரும் பிராமணர் சிலரும் அவர்களின் சம்மதத்தின்பேரில் அண்ணகராக்கப்படுகிறார்கள். விரையை எடுத்துவிடும் வேலை அம்பட்ட வகுப்பினராலும் அண்ணக ராலும் செய்யப்படுகிறது. இவர்கள் முசல்மான்களின் அந்தப்புரங்களில் வேலை செய்வார்கள்.
39

Page 29
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
கோஷ்டி அல்லது கோஷ்டா:
சூடியநாகபுரியில் நெசவு, பயிர்த் தொழில்கள் புரியும் தெலுங்கு வகுப்பினர் இப்பெயர் பெறுவர்.
கோடர்:
இவர்கள் முன்பு மைசூரிலுள்ள கொல்லி மலையில் வாழ்ந்தார்கள். இப்பொழுது நீலகிரிப் பீடபூமியிலுள்ள ஏழு கிராமங்களில் வாழ்கின்றனர். கன்னடமும் தெலுங்கும் கலந்த மொழி பேசுகின்றனர்; எல்லா வகை இறைச்சிகளையும் உண்பர். கோடருள் கொல்லர், தச்சர், தட்டார், தோல் மெருகிடுவோர், குயவர், வண்ணார், பயிரிடுவோர் முதலிய பல பிரிவினருளர். இவர்கள் எருமைத் தோலினாற் பின்னிய நீண்ட கயிறுகளால் ஆடு மாடுகளைக் கட்டுவர்; ஆவரசம் பட்டை சுண்ணாம்பு முதலியவைகளைக் கொண்டு தோலைப் பதனிடுவர். இவர்களின் குருமார் பூசாரி, தேவாதி என இருபிரிவினராவர். இவர்கள் மணம் செய்து கொண்டவர் களாயிருத்தல் வேண்டும். மனைவி இறந்தால் இவர்கள் குருமாராக இருக்கமுடியாது. காமாடராயன், மங்காளி, வேட்டைக்காரச் சுவாமி, அதிரல், உதிரல் முதலிய தெய்வங்களை இவர்கள் வழிபடுவர்; ஒண நாளைப் பெரு நாளாகக் கொண்டாடுவர். வைசூரி நோய் மாரியம்மாவால் உண்டாகின்றதென்று நம்புவர்; மாகாளியைக் கற்றுாண் வடிவில் வழிபடுவர். மனைவி கருப்பமாயிருந்தால் கோடன் தனது தலைமயிரையும் முகமயிரையும் வளரவிடுவான். பெண்கள் பிள்ளையின்றதனாலுண்டான தீட்டு அடுத்த பிறை காணும் வரையும் உண்டு. பூப்புக் காலத்தில் பெண்களுக்கு மூன்று நாட்கள் தீட்டு உண்டு. கணவனை இழந்த பெண்கள் அணிகலன்களைக் களைந்து விடுவார்கள்.
கோட்டைப் பத்து:
இவர்கள் அகம்படியாருள் ஒரு பிரிவினர்.
கோட்டை வேளாளர்:
திருநெல்வேலியிலுள்ள சீர்வைகுண்டத்தில் L l GoR)
கோட்டை வேளாள குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்கள்
40

ந.சி. கந்தையா
இருக்கும் கோட்டைக்குள் பிற ஆடவர் செல்லுதல் கூடாது; பெண்கள் செல்லலாம். மணமான பெண்கள் கணவன் தந்தை, தாய் மாமன், சகோதரன் அல்லாத பிறரின் முகத்தைப் பார்த்தல் கூடாது. இவர்களின் தலைவன் கோட்டைப் பிள்ளை எனப் படுவான். பெண்கள் ஐந்து தலைநாகத்தின் படம் போன்ற ஒருவகை அணியை அணிவர்.
கோமட்டியர்:
இவர்கள் சென்னை மாகாணத்தில் வாணிகம் செய்யும் சாதியினர். இவர்கள் மைசூர், பம்பாய், பீரார் (Berar), மத்திய மாகாணம், வடமேற்குப் பரோடா முதலிய இடங்களிற் காணப்படுவர். கோமட்டிச் செட்டிகள் தாய் மாமன் மகளை மணப்பர். 18-ம் நூற்றாண்டில் கோமட்டிகளின் திருமணத்தில் வயது முதிர்ந்த மாதங்கன் தாலியை அசீர்வதிப்பது வழக்கமாக இருந்தது. இதனால் மாதங்கருக்கும் கோமட்டிகளுக்கும் யாதோ தொடர்பு இருக்கிறதெனத் தெரிகிறது. மாதங்கன் கலியாணத்தை விரும்பாவிடில் அவன் கலியாணப் பந்தலிற் கட்டியிருக்கும் வாழை மரங்களை வெட்டி கலியாணத்தை நிறுத்தலாம். இவ்வாறே கம்மாளர் கலியாணத்தை நிறுத்த வெட்டியானுக்கு உரிமையுண்டு. இவ்வழக்கங்களால் கோமட்டிகள், கம்மாளர்களுடைய நிலங்களுக்கு மாதங்கர் வெட்டியான் முதலியோர் அதிபதிகளாயிருந்தார்களெனத் தெரிகிறது. கோமாட்டிகள் வெற்றிலையும் பாக்கும் வைத்து மாதங்கரைக் கலியாணத்துக்கு அழைப்பார்கள். கோமாட்டி களின் குலதெய்வம் கன்னிகை அம்மா. இத் தெய்வத்தைக் குறிக்கக் கரகத்தில் தண்ணீர் நிரப்பி வைக்கப் படுகின்றது. மாதங்கர் தமது தெய்வம் கன்னி எனக் கூறி அதனை மாதங்கி என்னும் பெயர் கொடுத்து வழிபடுவர். திருமணத்தில் தாலி குருக்கள் அல்லது மணமகனால் கட்டப்படுகிறது.
கோமணாண்டி:
ஆண்டிகளுள் ஒரு பிரிவினர்.
கோமாளி:
ஒட்டியருள் ஒரு வகுப்பினர்.
41

Page 30
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
G5Tut:
கோயி அல்லது கோயா என்போர் கோதாவரிக்கு வடக்கே யுள்ள மலைகளில் வாழ்வோராவர். இவர்கள் கொண்டர் வகுப்பைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவர். இவர்கள் நாலு ஆண்டுகள் வரையில் ஓர் இடத்தில் தங்கியிருந்து பயிரிடு வார்கள்; பின் பிறிதொரு இடத்துக்குச் சென்றுவிடுவர். கோயிச் சாதியினரின் கலியாண வழக்கம் மிக வியப்புடையது. ஒருவ னுக்குப் பெண் வேண்டியிருந்தால் அவன் தன் பெற்றோரை யும் நண்பரையும் பெண் வீட்டுக்கு அனுப்பி முடிவு செய்கிறான். பெண் விறகு பொறுக்கவோ தண்ணீர் எடுக்கவோ வரும் சமயம் பார்த்துக் கணவன் பகுதியார் பெண்ணைத் தூக்கி மணமகன் வீட்டுக்குக் கொண்டு செல்வார்கள். பெண் வீட்டா ருக்கு இச்செய்தியை அறிவித்தபின் மணக்கிரியை நடைபெறு கிறது. கோயர் பெரும்பாலும் பல பெண்களை மணப்பர். தாழ்ந்த வகுப்பானுடன் சேர்க்கை வைத்திருக்கும் பெண்ணின் நாக்கில் பொன் கம்பி காய்ச்சிச் சுடப்படும். பனை ஒலை யினால் வில் வடிவாகச் செய்யப்பட்ட ஏழு வில்களுக்கூடாக அவளை நுழையச் செய்த பின் ஒலையைச் சுட்டு அவள் சுத்தஞ் செய்யப்படுவாள்.
குழந்தை பிறந்த ஏழாவது நாள் அதற்குப் பெயரிடப்படும். பிணங்கள் சுடப்படும். இறந்தவரைச் சுட்ட சாம்பலைப் புதைத்து அவ்விடத்தில் நேரான கல்லை நட்டு அதன் மீது தட்டைக் கல் வைக்கப்படும். அவ்வழியாற் செல்வோர் அதன்மீது சிறிது புகையிலையை வைப்பர். இவர்கள் தாம் வீமசேனனுக்கும் காட்டுச் சாதிப் பெண்ணுக்கும் தோன்றிய சந்ததியினர் எனக் கூறிக் கொள்கின்றனர். இவர்கள் நரபலி யிடுவர். நரபலி இப்பொழுது தடைசெய்யப்பட்டுள்ளது. மனித பலிக்குப் பதில் குரங்கு புலியிடப்படுகிறது. வைசூரி நோயை உண்டாக்கும் தேவதை முடியாள் அம்மா எனப்படும். சாளம்மா, கொம்மாளம்மா முதலிய தெய்வங்களையும் அவர்கள் வணங்குவர். இறந்தவர்களின் ஆவிகளும் வணங்கப்படும். நோய்களைப் பேய்கள் உண்டாக்குகின்றன என்னும் நம்பிக்கை இவர்களிடமுண்டு.
42

ந.சி. கந்தையா
கோயிலார்பிள்ளை:
இவர்கள் வன்னியரில் ஒரு பிரிவினர்; நூலணிவர். கோயிற்றம்பிரான்:
இவர்கள் வட திருவிதாங்கூரிலும் கொச்சியிலும் காணப் படும் சத்திரிய வகுப்பினர். பழைய சாசனங்கள் இவர்களைக் கோயிலதிகாரிகளெனக் குறிப்பிடுகின்றன. இவர்கள் கொல்லா மாண்டு 300-ல் சேரமான் பெருமாளால் பெயூரி (Beypore) லிருந்து கொண்டு வரப்பட்டார்கள். ஆண்கள் வேணாட்டுச் சிவரூபம் என்று அழைக்கப்படுவர். இவர்கள் அரச குடும்பப் பெண்களை மணந்தார்கள் என்னும் பழங்கதை உள்ளது. இவர்களுக்கு உரிமை பெண் வழி. நம்பூதிரிப் பிராமணர் இவர் பெண்களை மணப்பர்.
கோலா:
தெலுங்கு உழவர் கோலா எனப்படுவர். இவர்கள் எத்தனை மனைவியரை வேண்டுமாயினும் மணக்கலாம். பெண்கள் இறவுக்கை அணிவதில்லை. கணவனை இழந்த பெண்கள் கைவளைகளை உடைப்பதில்லை. பிள்ளையைப் பெற்ற கோலாப் பெண் 90-நாள் தீட்டுக் காப்பாள்.
கோலாயர்:
இவர்கள் தென் கன்னடத்திற் காணப்படுவர். வடமலையா ளத்தில் இவர்கள் ஊராளி எனப்படுவர். ஆயன், கோல் ஆயன், மாரியன் அல்லது எருமான் (எருமா - எருமை) என இவர்களுட் பல பிரிவுகளுண்டு. கோலாயரின் குரு மூத்தவன் அல்லது பொதுவன் எனப்படுவன். அவன் பெரும்பாலும் அரசரால் தெரியப்படுவன். கோலாயர் பெண்கள் பருவடைய முன் தாலிகட்டுக் கலியாணம் நடத்துவர். தந்தை தாலி கட்டுவான். பூப்படைந்த பெண் மூன்று நாள் தீட்டுக்காப்பாள்.
கோலியர்:
நெசவு செய்யும் பறைய வகுப்பினர் இப்பெயர் பெறுவர். இவ்வகுப்பினர் பெரும்பாலும் தஞ்சாவூர் மதுரைப் பகுதிகளிற் காணப்படுவர். சில பறையருக்குச் சாம்பான் என்னும் பட்டப்
43

Page 31
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
பெயருண்டு. ஈசன் என்பதும் அவர்களின் பட்டப்பெயர்; திருமணக் காலங்களில் இவர்களின் பட்டப்பெயர் சொல்லப் படுதல் வேண்டும். கணவனின் சகோதரி பெண்ணுக்குத் தாலி கட்டுவாள்.
கெளடோ:
கஞ்சத்தில் காணப்படும் ஒரிய உழவர் இப்பெயர் பெறுவர். இவர்களில் ஆண்கள் தாய் மாமன் மகளைக் கலியாணஞ் செய்து கொள்வர்; சகோதரியின் மகளைக் கலியாணஞ் செய்வதுமுண்டு. ஏழு கணவரை மணந்தவள் பெத்தம்மா என மரியாதை செய்யப்படுவள்.
சக்கிலியர்:
சக்கிலியர் திெலுங்கு கன்னட நாடுகளிலிருந்து வந்தோர் களாவர். இவர்கள் எல்லாச் சாதியினரிலும் பார்க்கத் தாழ்ந் தோராவர். ஆவரசஞ் செடியை இவர்கள் பரிசுத்த முடைய தாகக் கொள்வர். திருமணத்தின்முன் தாலியை அச்செடியின் கிளைகள் ஒன்றில் கட்டுவர். இவர்கள் செருப்புத் தைப்பர். பறையர் தாம் சக்கிலியரிலும் உயர்ந்தவராகக் கொள்வர். மதுரைவிரன், மாரியம்மன், திரெளபதி, கங்கம்மா முதலிய தெய்வங்களை இவர்கள் வழிபடுவர். இவர்களின் திருமணங் களை வள்ளுவக் குருக்கள் நடத்திவைப்பர்.
சத்திரியர்:
சத்திரியர் என்னும் பிரிவு திராவிடருக்குரியதன்று. ஆனால் சத்திரியர் என்னும் தலைப்பின் கீழ் குறிக்கப்பட்டுள்ளோர் திராவிடர்களாவர். வன்னியர், சாணார் (சான்றோர்) பயிர்த் தொழிலாளரிலொரு பிரிவினர், கள்ளிறக்குவோர் முதலினோ ரும் தம்மைச் சத்திரியர் எனக் கூறுகின்றனர். தென்கன்னடத்தி லுள்ள மராட்டியர் சிலரும் திருநெல்வேலிச் சாணாரும் (சாண் றோர்) தம்மை அக்கினி குலச் சத்திரியர் எனக் கூறிக்கொள்வர். மைசூர் ஆட்கணக்கு அறிக்கையில் அரசுக்கள், இராசபுத்திரர், கூர்க்கர், சீக்கியர். ஆகியோர் சத்திரியர் எனக் கொள்ளப்பட்டுள் ளார்கள். அரசுக்கள் என்போர் மைசூரிலுள்ள அரச குடும்பத் தினர். மலையாளத்திலுள்ள சத்திரியர் நான்கு பிரிவுகளாக்கப்
44

ந.சி. கந்தையா
பட்டுள்ளனர். கோயில் பண்டாலா (பண்டாலா - பண்ட சாலை), இராசா, தம்பான், திருமுப்பாத் என்பன அப்பிரிவுக ளாகும். தம்பானின் பெண்கள் தம்புராட்டிகள் எனப்படுவர். கன்னட பரம்பரைக் கதையின்படி கோயிற்றம்பிரான்மார் சேரமான் பெருமானின் மருமக்களாவர். இவர்களில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் பிரிட்டிஷ் மலையாளத்திலுள்ள பேச்பூரில் (Bejpore) வாழ்ந்தார்கள். மலையாளம் ஆண்டு 300 வரையில் இக் குடும்பம் ஒன்றிலிருந்த ஆண்கள் வேணாட்டு சுபரூபத் (திருவனந்தபுர அரச குடும்பம்) தினிடையே மணஞ் செய்வதற்கு அழைக்கப்பட்டார்கள். கொல்லமாண்டு 963-ல் திப்புச் சுல்தான் மலையாளத்தின் மீது படையெடுத்த போது ஆலியம்கோடு கோவிலகத்தைச் சேர்ந்த ஐந்து பெண்களும் மூன்று ஆண்களும் திருவிதாங்கூருக்கு ஒடிச்சென்று தங்கினர். தம்புரான்கள், அரசர்கள் வீடுகள் கொட்டாரம் அல்லது திருமால் பாடிகளின் வீடுகள் கோவிலகம், மடம் எனப்படும். சத்திரியப் பெண்களின் செருத்தாலி, எந்திரம், குழல் என்னும் அணிகளை பெண்கள் சிறப்பாக அணிவார்கள். தம்பான், திருமால்பாடிகள் அரச குடும்பங்களில் வேலைக்காரராவர். மலையாள சத்திரியரின் வீடுகள் தேவாரபுரம் எனப்படும். கோயில் தம்புரான்மார் விசுவாமித்திர கோத்திரத்தவர்; அரசர் பார்க்கவ கோத்திரத்தினர். இவர்கள் தமது கூட்டத்துள் மணம் முடிப்பதில்லை; கோயில் தம்புராட்டிகள், நம்பூதிரி ஆடவர் களை மணஞ் செய்வர். கோயில் தம்புரான்கள் அரசரிடம் பெண் கொள்வர். அரசர் நாயர்ப் பெண்களை மனைவியராக வைத்திருக்கலாம். தம்பான், திருமால் பாடிகளும் இவ்வாறே செய்வர். இராணிகளும் பண்டாலங்களும் நம்பூதிரி ஆண்களை மணப்பர். தம்பான், திருமால் பாடிப் பெண்கள் எந்தப் பிராமணனுடனும் வாழ்வர். தம்பான், திருமால்பாடி, பண்டாலம் பெண்களுக்கு ஆரியப்பட்டர் தாலி கட்டுவர். விதவைகள் மறுமணம் புரிவர். தம்புராட்டியின் திருமணத்தில் பெண்கள் சேர்ந்து பிராமணியப் பாட்டுப் பாடுவார்கள். கொள்கையளவில் பெண்களே சொத்துக்குரியவராவர். மூத்த சகோதரனே சொத்தை மேற்பார்ப்பன். சொத்துப் பிரிவினை செய்யப்படுதல் கிடையாது. சொத்து இவர்கள் எல்லோரின் வாழ்க்கைக்காக விடப்படும்.
45

Page 32
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
சமகாரர்:
தென்கன்னடத்தில் வாழும் தோலில் வேலை செய்வோர்
இவர்களாவர். தோல் பதனிடும் வேலை பெரும்பாலும்
இவர்களாற் செய்யப்படுகின்றது.
3F)
இவர்கள் வைணவ ஆச்சாரியர்களாவர். திருமணக் கிரியை களையோ சமயக் கிரியைகளையோ இவர்களுக்குத் தக்கணை கொடாது புரிதல் கூடாது. முற்கால அரசர் ஒவ்வொரு பட்டினங்களிலும் சமயாச் சாரியா என்னும் நிலையம் நிறுவியிருந்தார்கள். அவர்களின் வருவாய் பெரும்பாலும் கற்பில் தவறிய பெண்களை விற்பதால் கிடைத்தது. அப் பெண்கள் சக்கார்ப் பெண்கள் என அறியப்பட்டார்கள். பிராமணப் பெண்களும் கோமட்டிப் பெண்களும் விற்கப் பட்டிலர். சாதியிலிருந்து விலக்கப்பட்டார்கள். அவர்களின் கையில் விபச்சாரிகள் என்று சூட்டுக்கோலினால் எழுதப்பட் டது. மற்றச் சாதிப் பெண்கள் விற்கப்பட்டார்கள். பங்களூரில் ஐரோப்பியர் காலம்வரையிலும் இவ்வகைப் பெண்கள் வாழும் பெரிய கட்டடம் பட்டினத்திலே இருந்தது. 1833-ல் இவ்வழக்கம் அரசினால் ஒழிக்கப்பட்டது. சலங்குக்காரர்:
இது மீன்பிடிகாரருக்கும் முத்துக் குளிகாரருக்கும் வழங்கும் பெயர்.
சவரர்:
கஞ்சம் பகுதிகளில் வாழும் மலைச்சாதியினர் இப்பெயர் பெறுவர். இவர்களின் மொழி முண்டா இனத்தைச் சேர்ந்தது எனக் கிரீர்யசன் கூறியுள்ளார். ஆண்கள் இரண்டு அல்லது மூன்று மனைவியரை மணப்பர். பெண் தான் விரும்பினால் கணவனை விட்டுப் பிரிந்துவிடலாம். அதனைத் தடுக்க முடியாது. சவரரின் விருந்துகளில் ஆண்களும் பெண்களும் சேர்க்கை வைத்துக் கொள்கின்றனர். விதவைகள் கணவனின் சகோதரனை மணப்பர். சவர இளைஞன் ஒருவன் மணஞ் செய்துகொள்ள விரும்பினால் அவன் ஒரு குடத்தில் கள்ளை
46

ந.சி. கந்தைய்ா
எடுத்துக்கொண்டு தனது சுற்றத்துடன் பெண்ணின் தந்தை வீட்டுக்குச் செல்வான். பெண்ணின் தந்தை கள்ளை ஏற்றுக் கொண்டால் அது பெண்ணைக் கொடுப்பதற்கு அடையாள மாகும். இவர்கள் பிராமணப் புரோகிதரைக் கொண்டு எதுவும் செய்விப்பதில்லை. இறந்தவரின் உடல் சுடப்படும்; அடுத்த நாள் தண்ணிர் தெளித்து நெருப்பை அணைத்துக் கருகிய எலும்புகளை எடுத்து இரண்டடி ஆழத்திற் புதைத்து அவ்விடத் தில் சிறு குடிசையிடுவர். இறந்தவரைக் குறித்து மரங்களின் கீழ் நேரிய கற்களை நாட்டுவர். கற்கள் பெரும்பாலும் ஒன்றரை அடிமுதல் நாலு அடிவரை உயர்ந்திருக்கும். விபச்சாரம் செய்ப வர்களுள் பெண்கள் தண்டிக்கப்படமாட்டார்கள்; ஆண்கள் தண்டிக்கப்படுவர். இவர்களுள் சாதித்தலைவன் உண்டு. அவனே வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிப்பான். மகுவா (Mahua) என்னும் ஒரு வகைப் பூவிலிருந்து இலுப்பை(பூ?) கள்ளைச் செய்வர்.
சவலைக்காரர்:
இது மீன்பிடிக்காரருக்கு வழங்கும் பெயர். சவலை என்பது சவள்; ஒடக்கோலை உணர்த்தும் இவர்கள் வன்னியர், செம்படவர்களை ஒத்தவர். சிலர் பயிர்த் தொழில் செய்வோ ராகவும் சிலர் நாகசுரம் வாசிப்போராகவும் இருக்கின்றனர். திருநெல்வேலிப் பகுதியில் வாத்தியக்காரர் சவலைக்காரரும் பணிக்கர்களுமாவர்.
சாக்கியர்:
இவர்கள் அம்பலவாசிகளுள் ஒரு பிரிவினர். இவர்களிள் பெண்கள் தமது சாதிக்குள் மணமுடித்துக் கொள்வர் அல்லது நம்பூதிரிகளோடு சம்பந்தம் வைத்துக் கொள்வர். சாக்கியர் நம்பியார் சாதியாருள் சம்பந்தம் வைத்துக்கொள்ளலாம். இவர்களுக்குக் குருமாருண்டு. இவர்கள் வீடுகளில் பிறப்பு இறப்புத் தீட்டுகளைப் பிராமணக் குருமார் நீக்குவர். வட திருவிதாங்கூரில் விழாக் காலங்களில் சாக்கியர் கூத்து முதன்மையுடையது. இவர்கள் கூத்தாடுவதற்கென அமைக்கப் பட்ட கட்டடம் கூத்தம்பலம் எனப்படும். சாக்கியன் பழங்கால முறையில் உடுத்துக்கொண்டு முக்காலி மீதிருந்து பாடுவான்.
47

Page 33
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
அவனுக்குப் பின்னால் நம்பியார் முழவுடன் நிற்பார். நங்கையார் என்னும் நம்பியார்ப் பெண் முன்னால் இருந்து சல்லரியால் தாளம் போடுவாள்.
சாணார் (சான்றோன்) :
இவர்களில் சிலர் தமிழ்நாட்டுக் கள் விற்கும் சாதியினர். கோயில்களுள் இவர்கள் நுழைதல் கூடாது. சாணார் கோயில் களுள் நுழையவேண்டுமென வாதாடியதால் உள்நாட்டுக் கலகங்கள் பல உண்டாயின. இவர்களை எதிர்த்தோர் மறச் சாதியினராவர். திருவிதாங்கூரில் கிறித்துவ மதத்தைத் தழுவிய சாணாரப் பெண்கள் மார்பில் துணியணியாமல் இருக்கும் வழக்கை மீறியதால் கலகங்கள் உண்டாயின. சென்னைத் தேசாதிபதி பெண்கள் இறவுக்கை அணியவும் மாறாடி இட்டு மார்பை மறைத்துக்கொள்ளவும் உரிமை வழங்கினார். நாடார், கிராமணி என்பன இவர்களின் பட்டப் பெயர். சாணார் என்பது அவர்கள் மரம் ஏறப் பயன்படுத்தும் சாண் நார் காரணமாக வந்த (கேலி) பெயர் என்பாருமுளர். சான்றோரின் திரிபே சாணார் என்பாருமுளர்.
சாணி அல்லது சாணி வாள்ளு
இவர்கள் தெலுங்குச் சாதிக்குலத்தினர். இவர்கள் கோயிற் பணிவிடை செய்வார்கள். இவர்கள் தெற்கேயுள்ள தாசிகளைப் போலக் கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்டவர்களாவர். அகம்படியாரிலொரு பிரிவினரும் சாணி எனப்படுவர்.
சாதானி:
பிச்சைக்காரப் பண்டாரங்களும் மற்றச் சாதிகளிலிருந்து சாதியால் விலக்கப்பட்டோரும் இப்பிரிவில் சேர்வர். விபச் சாரிப் பெண்களும் இவ்வகுப்பில் சேர்வர். பெண்கள் வைண வப் பெண்களைப்போல உடுத்துக் கொள்வர். சாதானியர் இறவுக்கை உற்சவம் என ஒரு விழா நடத்துவர். இப்பொழுது அது கந்தப்பொடி உற்சவம் எனப்படுகிறது. இவ்வுற்சவத்தில்
1. சான்றோர் கற்றறிந்த போர்த் தலைவர் அல்லது போர் வீரர் ஆவர். போர்க்கலை கற்றுத் தரும் குருமார் என்கிறார் நெல்லை நெடுமாறன். குமரிக் கண்டத்திலிருந்து இறுதியாக வந்தவர் சான்றோர் என்பது சாத்தூர் சேகரனின் கருத்தாகும்.
48

ந.சி. கந்தையா
முற்காலத்தில் இடக்கரான கிரியைகள் நடத்தப்பட்டன. இப் பொழுது கடவுள் வணக்கத்துக்குப் பின் கந்தகப் பொடியை ஒருவர் மற்றவர் மீது எறிவர். விழாவுக்குப்பின் அவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்து மதுவருந்துவார்கள். பெண்கள் தமது இறவுக்கைகளைக் கழற்றி ஒரு ஏனத்துள் இடுவார்கள். அவைகளை ஆண்கள் ஆளுக்கு ஒன்றாக எடுப்பார்கள். எந்த இறவுக்கை எவனுடைய கையிற் கிடைக்கிறதோ அப்பெண் அன்று அவனுடைய மனைவியாவள்.
சாத்திரி":
இது ஸ்மார்த்த பிராமணரின் பட்டப்பெயர். தேவாங்கு வகுப்பினருக்கும் இப்பட்டப்பெயர் வழங்கும். சாமந்தர்:
மலையாள அரசரும் பெருமக்களும் இச்சாதியினராவர். சாமந்தன் என்பதற்கு ஒரு பகுதிக்கு அதிகாரி என்பது பொருள். இவர்கள் பூணுரலணிவதில்லை. இவர்களுக்கு மக்கள் தாய முண்டு. பெண்கள் பிராமணரையும் சத்திரியரையும் சம்பந்தம் கொள்வர். பெண்கள் கோயில் அம்மாமார் எனப்படுவர். அவர்கள் செருத்தாலி, எந்திரம் குழல் என்பவைகளைத் திருமணக் காலத்தில் அணிவர். சாமந்தனின் வீடு கொட்டாரம் (அரண்மனை) எனப்படும். பிராமணரின் வீடு மடம் எனப்படும்.
FITaslui;
மலையாள நெசவு தொழிலாளர் சாலியர் எனப்படுவர். இவர்களுக்குப் பொதுவான் என்னும் அம்பட்டன் உண்டு. பொதுவானே சாலியரின் புரோகிதனாவன். இவர்களில் சிலருக்கு மருமக்கள் தாயமும், சிலருக்கு மக்கள் தாயமும் உண்டு. இவர்கள் வீதிகளிலே வாழ்கின்றமையின் தெருவர் எனவும் அறியப்படுவர். இவர்களுக்கு இறப்புப் பிறப்புத் தீட்டு பத்து நாட்களுக்கு உண்டு. பெண் தலைப்பூப்பு
1. தொடக்க காலத்தில் நாடோடிகளாகவும் சமையற்காரர்களாகவும் இருந்த பிராமணரில் சிலர் பின்னால் தமிழ் சாத்திரங்கள் (நூல்கள்) கற்றுச் சாத்திரி ஆயினர்.
49

Page 34
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
அடைந்தால் பெண்கள் அவளைக் குளத்துக்கு அழைத்துச் சென்று இலைகளாற் செய்த ஏனங்களால் நீரை அள்ளி அவளை முழுக்காட்டுவர். பின்பு அவளைத் தென்னங்குருத்தால் செய்த அறையில் இருத்துவர். அவளிருக்கும் பாயைச் சுற்றி அரிசியும் நெல்லும், தென்னம் பூவும், தேங்காய்களும் வைக்கப்படும். மூன்றாம் நாள் மாலை நேரத்தில் பெருவண்ணான் வெளுத்த மாற்றுத் துணி கொண்டு வருவான். அவனுக்குச் சிறிது நெல்லும் அரிசியும் கொடுப்பார்கள். அவன் அவற்றை ஓர் இலையில் வைத்துப் பூசை செய்வான். பின்பு அவன் துணிகளை மரத்தட்டில் வைத்துத் தட்டைத் தனது தலை மீது ஏந்துவான். அவன் சில வாழ்த்துப் பாடல்கள் பாடியபின் அத்தட்டை நிலத்தில் வைப்பான். பெண்ணின் உறவினராகிய சில பெண்கள் எரியும் விளக்கு, நிறை குடம், ஒரு படி அரிசி முதலியவைகளைக் கொண்டு பலகையை மூன்று முறை சுற்றி வருவார்கள். அடுத்த நாள் பெண்ணை முழுக்காட்டுவார்கள். பாயில் வைக்கப்பட்ட எல்லாப் பொருள்களும் ஆற்றில் வீசப்படும்.
சாலியருக்குத் தாலிகட்டுச் சடங்கு உண்டு. பந்தல் இடப்படுகின்றது. ஒரு பலாப் பலகையின் மீது கொளுத்திய விளக்கு, வெற்றிலை, பாக்கு, ஒரு படி பச்சையரிசி முதலியன வைக்கப்படும். பெண் தனது வலது கையில் ஒரு போலி அம்மன் பாவையை வைத்துக்கொண்டு ஒரு பலகை மீது இருப்பாள். பொதுவனுக்கு ஒரு பிடி வெற்றிலையும் ஒரு பணமும் கொடுப்பார்கள். அவன் மணவாளனிடம் தாலியை எடுத்துக் கொடுப்பான். அவன் அதைப் பெண்ணின் கழுத்தில் கட்டுவான். கலியாணத்துக்கு முதல் நாள் மணவாளன் தனது ஆண் சுற்றத்தாரோடு மணமகள் வீட்டுக்குச் செல்வான். அங்கு விருந்துக் கொண்டாட்டம் நடைபெறும். பெண் கருப்ப மடைந்து ஏழாவது மாதம் புளிக்குடி என்னும் சடங்கு நடத்தப் படுகிறது. பெண்ணின் சகோதரன் புளியங்கிளை ஒன்றைக் கொண்டுவருவான். இலைகளை எல்லாம் உருவிய பின் அது முற்றத்தில் நடப்படும். புளியமிலையிலிருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு ஏழு தேங்காய்களிலுள்ள இள நீரில் கலக்கப்படும். பின்பு குடும்பத்தில் முதிய பெண் அதில்
50

ந.சி. கந்தையா
சிறிதை அக்கருப்பவதி குடிக்கும்படி கொடுப்பாள். இவ்வாறு மூன்று நாட்கள் செய்யப்படுகிறது. இறந்தவர்கள் புதைக்கப் படுவர். இறந்தவனின் மகன் புதுப்பானையில் தண்ணீரைச் சுடலைக்குக் கொண்டு செல்வான். அவன் குடத்தோடு பிணத்தைச் சுற்றி வந்து அதனை எறிந்துவிடுவான். பிணத்தைப் புதைத்த இடத்தில் மூன்று கற்கள் வைக்கப்படும். சாலியர்:
இவர்கள் தெலுங்கு நெசவாளர். இவர் தம்மைச் சேனாபதியர் என வழங்குவர் இவர்களின் சாதித்தலைவன் சேனாதிபதி எனப்படுவான். பட்டுச் சாலியர், பதும சாலியர் என இவரில் இருவகையினருண்டு. பட்டுச் சாலியர் பூணு லணிவர். கொரு நாடு, ஐயம் பேட்டை முதலிய இடங்களில் வாழும் நெசவாளரும் சாலியர் எனப்படுவர். இவர்கள் திருநெல்வேலிச் சாலியருடையவும் கைக்கோளருடையவும் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவர். செங்கற்பட்டிலுள்ள சாலியர் பெரிதும் கைக்கோளராவர். இவர்களின் குலதெய்வம் முத்தாட்சி அம்மன்.
gaunti:
இவர்கள் பல்லக்குக் காவுஞ் சாதியினர். இடையரில் ஒரு பிரிவினருக்கும் இப்பெயருண்டு. விபச்சாரிகள் தூணிற் கட்டிப் புளியம் மிலாறுகளால் அடிக்கப்படுவர். பருவமடைந்து மணமாகாதவர்கள் மணமானால் பனை ஓலையில் வேண்டிய ஆண்வடிவங்களை வைத்து அவர்களுக்கு மணக்கிரியை நடத்தப்படும். சிறுகுடி:
இது கள்ளரின் கிராமம் அல்லது ஊர். சிறுதாலி:
இவர்கள் கைக்கோளர், மறவர்களுள் காணப்படும்
பிரிவினர்.
51

Page 35
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
SFNgô Luri:
இவர்களுள் பஞ்சகம்மாளரில் ஒரு பிரிவினர்; கற்களில் வேலை செய்பவர்.
சிரியன் கிறித்தவர்:
கி.பி.52-ல் தோமஸ் ஞானியார் கொடுங்கோளூரில் வந்திறங்கினார். அவ்விடம் குசிறி அல்லது முசிறிக்கோடு எனப்படும். அக்காலத்தில் பினிசியரும் ஆப்பிரிக்க வணிகரும் வாணிகத்தின் பொருட்டு அங்கு வந்தார்கள். தோமஸ் ஞானியார் இந்தியாவில் பலரைக் கத்தோலிக்க மதத்தைத் தழுவச் செய்தார். இறுதியில் இவர் பிராமண மதத்தினர் ஒருவரால் ஈட்டியால் எறிந்து கொல்லப்பட்டு மயிலாப்பூரி லுள்ள சாந்தோமில் அடக்கஞ் செய்யப்பட்டார். இவ்வாறு பழங்கதை வழங்குகின்றது. இரண்டாம் தியதோய்சசு (Theodoisus) காலத்தில் பாலஸ்தீனத்தில் யூதர் ஈவு இரக்கமின் றிக் கொல்லப்பட்டார்கள். அப்பொழுது அவர்களின் பலர் வந்து இந்தியாவிற் குடியேறினார்கள். இன்னும் சிலர் கி.பி.345-வரையில் சிரியாவிலிருந்து வந்தார்கள். வீரராகவச் சக்கரவர்த்தி (774) ஸ்தானுரவி குப்பன் (824) முதலியோரளித்த பட்டயங்களில் சிரிய கிறித்தவர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. வீரராகவச் சக்கரவர்த்தி அளித்த பட்டையம் சிரிய கிறித்தவர்களிடத்திலுள்ளது.
பட்டையத்தில் சங்குமுத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. இப்பட்டையத்தால் சேராமன், உலோகப் பெருஞ் சேவடி என்னும் இரவிக் கொற்றணுக்கு மணி மங்கலம் என்னும் பட்டமளித்துள்ளான். விழாக்கால உடை அணிதல், வணிக உரிமை, பரிவாரம் வைத்துக் கொள்ளுதல், ஐந்து வாத்தியங் கள், சங்கு முதலிய வாத்தியங்களைப் பயன்படுத்துதல், பகலில் பந்தம் பிடித்தல், நில பாவாடை விரித்தல், பல்லக்கு வைத்திருத்தல், அரசனைப் போல உலாவருதல், அலங்கரிக்கப் பட்ட வில் வைத்திருத்தல், வீட்டுவாயிலை வில் வடிவாக அமைத்தல் போன்ற உரிமைகள் அவனுக்கு வழங்கப்பட்டுள் ளன. இப்பட்டையத்தை வரைந்தவன் சேரமான் உலோகப் பெருந்தட்டான் நம்பி சடையன். இரவிக் கொற்றன் சிரியன்
52

ந.சி. கந்தையா
கிறித்தவருள் ஒருவன். சிரியன் கிறித்தவர் 9-ம் நூற்றாண்டுக் கும் 14-ம் நூற்றாண்டுக்கும் இடையில் பெருமை பெற்று விளங்கினார்கள். இவர்கள் உடையப் பேரூரைத் தலைநகராகக் கொண்ட கிறித்துவ அரசனால் ஆளப்பட்டார்கள் என்னும் செவிவழிச் செய்தி உண்டு. இன்றும் சில சிரியன் கிறித்துவர் இந்து ஆலயங்களுக்குக் காணிக்கைக் கொடுப்பர். பிராணரல் லாத சில இந்துக்களும் சிரியன் கிறித்தவ ஆலயங்களுக்குக் காணிக்கை கொடுப்பர். சிரியன் கிறித்தவர் தமது குழந்தை களுக்குச் சாதகமெழுதி வைப்பர். திருமணத்தில் மணமகன் பெண்ணுக்குத் தாலி தரிப்பான். கணவன் மரணமானால் மனைவி தாலியைக் களைந்துவிடுவாள். மரணத்துக்குப்பின் பத்து அல்லது பதினைந்து நாட்களுக்குப் புலர் என்னும் தீட்டுக் காப்பார்கள். ஆண்டில் ஒரு முறை இறந்த நாள் கொண்டாடப்படும். சூலி:
கன்னடத் தேவதாசிகள் இப்பெயர் பெறுவர். செக்கர்:
வன்னியனுக்கு இது மற்றொரு பெயர். செக்கார்:
இவர்கள் தென் மலையாளத்தில் வட்டக் காடர் எனவும் வடமலையாளத்தில் வாணியர் எனவும் படுவர். செக்கார் வாணியரிலும் பார்க்க உயர்ந்தவர்களாவர். செக்கார் தீண்டுவ தால் நாயருக்குத் தீட்டு உண்டு. இவர்கள் பழக்கவழக்கங்கள் நாயர் சாதியினருடையவை போல்வன. செட்டியார்:
நெசவுகாரர், செக்கார் முதலியோர் இதனைத் தமக்குப் பட்டப் பெயராகக் கொள்வர். பேரிச் செட்டி, நகரச் செட்டி, காசுக்காரச் செட்டி, நாட்டுக் கோட்டைச் செட்டி முதலியோர் செட்டி வகுப்பிற் சில்ராவர். (செட்டிகள் தம்மைத் தன வைசியர் எனக் கூறுவர். தனவைசியரின் பிரிவுகள் காவிரிப்பூம் பட்டினத்துச் செட்டி, ஏழிலைச் செட்டி, இளையாத்துக்
53

Page 36
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
குடிச்செட்டி, சோழபுரத்துச் செட்டி, புளியங்குடிச் செட்டி, பூவள்ளுக் குடிச்செட்டி, திருவாப்பூர்ச் செட்டி, கருப்பூரச் செட்டி, காவேரிசெட்டி, வளையல்செட்டி, மஞ்சப்பட்டுச் செட்டி எனச் சைமன் காசிச் செட்டியவர்கள் குறிப்பிடுவர்.
செம்டவர்:
தமிழ் நாட்டில் மீன் பிடிகாரர் செம்படராவர். இவர்கள் நாட்டான், கவண்டன், மணியக்காரன், பாகுத்தன், பிள்ளை முதலிய பட்டப் பெயரை வைத்துக் கொள்வர். மலையனூரில் எல்லாச் செம்படவரும் தம்மைப் பூசாரிகள் என வழங்குவர். சிதம்பரத்திலே குறிக்கப்பட்ட ஒரு நாளில் செம்படவர் சுவாமியைச் சுமந்து ஊர்வலம் வருவர். அதற்காக அவர் களுக்குக் கூலியும் "பொங்கலும் கொடுக்கப்படும். அம்மன் ஊர்லம் வரும்போது செம்படவர் அம்மனை நிறுத்தி ஆடை கொடுப்பார்கள். அவர்கள் தலைவன் நாட்டாண்மைக்காரன் எனப்படுவான். அவனுடைய உதவிக்காரன் சங்கதிப் பிள்ளை அல்லது சங்கதிக்காரன் எனப்படுவான். படகு ஒட்டும் செம்படவர் கங்கையை வழிபடுவர். பூப்படைந்த பெண் காவலாகக் கையில் இரும்பை வைத்திருப்பாள். பெண் கருப்பமாகி ஏழாவது மாதம் முதுகுநீர் குத்தல் என்னும் சடங்கு நடத்தப்படும். பெண் குனிந்து நிற்கும்போது உறவினர். வெற்றிலையின் நுனியால் அவள் முதுகின் மீது பால் வார்ப்பார்கள்.
செம்மார்:
இவர்கள் பறையரில் ஒரு பிரிவினர்; தோலில் வேலை செய்வோர். இப்பொழுது இவர்கள் செய்யும் வேலையைச் சக்கிலியர் புரிகின்றனர். செருமார்:
இவர்கள் மலையாளத்தில் உழவு தொழில் செய்யும் வேலையாளர்; வட மலையாளத்தில் இவர்கள் புலையர் எனப்படுவர். இவர்கள் காணியாளரால் அடிமைகளாய் விற்க வும் வாங்கவும் பட்டார்கள். 1862-ல் இவ்வாறு விற்று வாங்கு தல் சட்ட விரோதமாக்கபட்டது. இவர்கள் சாதிமான்களுக்கு 30
54

ந.சி. கந்தையா
அடி தூரத்தில் வந்தால் தீட்டு உண்டாகும். செருமார், பிராமணர் கோயில்களை அணுகுதல் கூடாது. இவர்கள் பிராமணருக்கும் நாயருக்கும் அறுபத்து நான்கடி தூரத்தில் நிற்றல் வேண்டும்.
சேணியர்:
நெசவு தொழிலாளர் சேணியரெனப்படுவர். காஞ்சீபுரத் தில் சேணியார் இலிங்க மதத்தினராவர். சேனைக்குடையார்:
இவர்கள் வெற்றிலை பயிரிடுவர். இவர்கள் இலை எனவும், கொடிக்காற் பிள்ளைகள் எனவும் அறியப்படுவர். மூப்பன், பிள்ளை என்னும் பட்டப் பெயர்களும் இவர்களுக்கு வழங்கும். இவர்கள் வீடுகளில் பறையர், அம்பட்டர், வண்ணார் உண்ணமாட்டார்கள். சொண்டி:
ஒரிய வகுப்பினருள் கள் விற்போர் இவர்களாவர். இவர் கள் அரிசி, பனங்கட்டி பனங்கள், இருப்பைப் பூ முதலிய வற்றிலிருந்து சாராயம் வடிப்பர். தலைப் பூப்பு எய்திய பெண், நான்கு அம்புகளை நட்டுக் கயிற்றாற்றொடுத்துக் கட்டப்பட்ட இடத்தில் விடப்படுவாள். ஏழாவது நாள் அவளுக்கு முழுக் காட்டப்படும். பூப்படையுமுன் பெண்களுக்கு மணமாகும். இறந்தவர்கள் புதைக்கப்படுவார்கள். மரணத்தீட்டுப் பத்து நாட்களுக்குண்டு. பெண்கள் மச்ச மாமிசம் உண்ணார்கள். கஞ்சம் பகுதியில் பெண்கள் பூப்படைந்த பின் மணப்பர். சோலகர்:
இவர்கள் கொச்சைக் கன்னட மொழிபேசும் மக்கள். சோழியப்பட்டார்:
இது பட்டப் பிராமண வகுப்பினருக்கு மலையாளத்தில் வழங்கும் பெயர்.
55

Page 37
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
சோனகர்:
இவர்கள் இந்துத் தாய் தந்தையர் மரபில் வந்த முசல் மான்களாவர். சோனகன் என்னும் பெயர் அரபியனைக் குறிக்கும். மலையாளத்து மாப்பிள்ளைமார் சோனக மாப் பிள்ளைமார் எனப்படுவர். கிரேக்கரைக் குறிக்கும் யவனரென் னும் சொல்லுக்குப் பதில் சோனகர் என்னும் சொல் வழங்கு கின்றது.
Gg-ITaormii:
இவர்கள் மராத்தி மொழியில் ஒரு பிரிவினராகிய கொங்கணம் பேசும் தட்டார். இவர்களின் சாதித்தலைவன் முக்கியஸ்தன் எனப்படுவன்; இவன் வழக்குகளை விளங்கித் தீர்ப்பளிப்பான். ஒரு கோத்திரத்தில் இவர்கள் மணஞ்செய்து கொள்வதில்லை. இவர்களின் பட்டப் பெயர் செட்டி. சென்னையில் 408 பேருக்கு ஒரு தட்டானுண்டு. இங்கிலாந்தில் 1100-க்கு ஒரு தட்டானுண்டு. செளராட்டிரர்:
இவர்கள் பட்டு நூற்காரர் எனப்படுவார்கள். இப்பெயர் இவர்கள் இருந்துவந்த செளராட்டிர நாடு தொடர்புடைய பெயர்.
தக்கடோ:
இவர்கள் மலைச்சாதியினரும், பிராமணரும் கலந்து உதித்தோர். இவர்கள் செயப்பூர்ப் பக்கங்களிற் காணப்படு கின்றனர்.
தங்கர்:
மராட்டிய இடையர் இப்பெயர் பெறுவர். தங்கலார்:
இவர்கள் பறையரில் ஒரு பிரிவினர். தங்கலான் என்பதற்குக் கிட்ட நிற்கத் தகாதவன் என்பது பொருள்.
1. மராத்தி மொழி பஞ்சதிராவிட மொழிகளில் ஒன்று. எனவே தமிழ்ச் சொற்கள் மிகுந்திருக்கும்.
2. உத்தேசக் கணக்கு.
56

ந.சி. கந்தையா
தசாரிகள்:
இவர்கள் ஒரு வகை வைணவப் பண்டாரங்கள். இவர்களை ஒரு சாதியினர் என்று கூறமுடியாது.
தச்சநாடன் மூப்பன்:
இது குறிச்சான்களுக்கும் நீலகிரிக் குறும்பர்களிற் சிலருக்கும் வழங்கும் பெயர்.
தச்சர்:
இவர்கள் மரவேலை செய்வோர். பறையரில் ஒரு பிரிவினரும் இப்பெயர் பெறுவர்.
தண்டப்புலையர்:
இவர்கள் தென் மலையாளத்தில் வாழும் புலையரில் ஒரு பிரிவினர். இவர்கள் தண்டக்கொடியை அறுத்துப் பின்னிய ஆடையை உடுப்பர். இப்புலைக் குடும்பங்கள் இல்லங் களாகக் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு இல்லத்தில் உள்ளவர்கள் அதே குடும்பத்தில் மணம் முடித்தல் ஆகாது. இவர்கள் குடியிருக்குமிடம் மன்றம் எனப்படும். இவர்கள் சூரியனைப் பார்த்து “சூரியனறிய கண் கெட்டுப் போக’ என்று சொல்லிச் சத்தியஞ் செய்வர். இவர்கள் ஐஞ்சு தம்புராக்கள் எனப் பாண்டவரை வழிபடுவர்; இறந்தவருக்குக் கொள்ளிக் குடம் உடைப்பர்; பிணத்துக்கு வாய்க்கரிசி போடுவர். இறந்தவரின் ஆவி சாவார் எனப்படும்.
தண்டர்:
மலையாளத்திலும், வள்ளுவ நாட்டிலும் பாலைக்காட்டி லும் வாழும் ஈழவருக்கு இப் பெயர் வழங்கும். இவர்களிற் பெண்கள் பல கணவரை மணப்பர். ஊராளி என்பது இவர் களின் பட்டப் பெயர். சில இடங்களில் இவர்கள் வேளான் எனவும் படுவர். சாதிமான்களோடு பேசும் போது இவர்கள் தம்மைக் குழியர் (குழியில் வாழ்வோர்) என்பர். ஆண்களும் பெண்களும் நெற்றியில் பிறையும் ஒரு புள்ளியும் பச்சை குத்திக் கொள்வர். இவர்களுள் குருமார் மார்த்தாண்ட குருப் புக்கள் எனப்படுவர். குருப்புக்கள் அம்பட்டருமாவர். இவர்
57

Page 38
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
களின் கடவுள் பத்திரகாளி. பெண்கள் எழு அல்லது எட்டு வயதாகவிருக்கும்போது தாலிகட்டுக் கலியாணம் நடத்தப் படும். இக்கலியாணம் கழுத்துக்கெட்டி எனப்படும். மண மகன் மச்சாம்பி எனப்படுவான். இறப்பவர்களுள் குடும்பத் தில் வயதின் மூத்தவர் மாத்திரம் இறந்தால் சுடப்படுவர். இவர்களுக்கு மரணத்தீட்டு பத்து நாள் உண்டு. இறந்தவரின் கிரியைகள் கடற்கரையில் நடத்தப்படும். இறந்தவர்களுக்கு எள்ளோடு கலந்த உணவு கொடுக்கப்படும்.
தண்டார்:
இவர்கள் தீயர். கிராமத்தில் தலைமுறையாக வரும் தலையாரிகள். தலையாரி அரசனால் நியமிக்கப்படுவான்.
தம்பல்:
தெலுங்கு பேசும் கோயிற் குருமார் இப்பெயர் பெறுவர். கோதாவரி, கிருட்டிணா முதலிய இடங்களில் இவர்கள் பிராமணர்களாகவும், தெலுங்கு நாட்டில் சூத்திரராகவும் கருதப்படுவர். இவர்கள் பூணுரலணிந்து கொள்வர்.
தம்பி;
இது திருவிதாங்கூர் நாயருக்கு வழங்கும் மரியாதைப் பட்டப்பெயர். திருவிதாங்கூர் அரசரின் பிள்ளைகளும் தம்பி எனப்படுவர். தம்பிரான்:
திருவாடுதுறை, மயிலம் (தென் ஆர்க்காடு) முதலிய இடங்களிற் கருமங்களைப் பார்க்கும் பண்டாரங்கள் தம்பிரான் எனப்படுவர்.
தம்புரான்:
திருவிதாங்கூரில் வாழும் ஒரு கூட்டத்தினர் தம்புரான் எனப்படுவர். இவர்கள் இருக்கும் இடப்பெயர்களால் வேறு படுத்தி அறியப்படுவர். இவர்கள் வட மலையாளத்திலுள்ள கோலாட்டு நாட்டிலிருந்து வந்தார்கள். இவர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்குத் தாலிக்கட்டு அல்லது பள்ளிக்கட்டுச் செய்து அவர்களோடு கணவர்போல வாழ்வர்.
58

ந.சி. கந்தையா
அரச குடும்பத்திலுள்ள ஆடவர் சூத்திரப் பெண்ணைக் கொள்வர். பெண்ணின் கணவன் இறந்துவிட்டால் அல்லது ஏதும் காரணத்தை முன்னிட்டுப் பிரிந்துவிட்டால் அவள் இன்னொரு கோயிற்றம்புரானைக் கொள்ளலாம். இவர்களின் குருக்கள் மலையாளப் போற்றிகளாவர். திருவிதாங்கூர் அரச குடும்பத்தில் முதற்பெண்ணுக்கு இலக்குமி என்றும், இரண்டா வது பெண்ணுக்குப் பார்வதி என்றும் பெயரிடப்படும். தருராசர்
இவர்கள் வட ஆற்க்காட்டிலுள்ள இருளரில் ஒரு பிரிவினர்.
தலையாரி:
இவர்கள் முதன்மையான கிராமக் காவலர். தெலுங்கு நாட்டில் முத்திராசர் கிராமக் காவலர்களாவர். அவர்கள் தலாரி வாலு எனப்படுவர். (தலையாரி அவர்கள்). தலைவர்:
இது பரவரின் பட்டப்பெயர். சாதித் தலைவனென்பது திருநெல்வேலி முத்துக்குளிகாரர் தலைவனுக்கு வழங்கும் பெயர்.
தாசி:
நம்பூதிரிப் பெண்களின் பிராமணரல்லாத பணிப்பெண் இப்பெயர் பெறுவள். இவள் தேவதாசியில் வேறானவள். g5tti:
இது வட இந்தியாவினின்றும் வந்த சைனரின் பட்டப் பெயர். இவர்கள் பெரும்பாலும் வணிகராவர். தார்வாட் (தாரவாடு):
இவர்கள் மருமக்கள் தாயக் குடும்பத்தில் ஒருதாய் வட்டத் தைச் சேர்ந்தோர். தாலிகட்டுக் கலியாணம்:
இது நாயர்ப்பெண்கள் பருவமடையுமுன் அவர்களுக்கு நடத்தப்படும் கலியாணம். மருமக்கள் தாயமுடைய ஆண்
59

Page 39
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
பெண் என்பவர்களின் ஒழுக்கங்கள் தளர்ந்தவை. இக் கலியானம் தேவதாசிகளுக்குச் செய்யப்படும் கலியாணம் போன்றது. திகம்பரர்':
இவர்கள் முழு நிர்வாணம் பரிசுத்தத்துக்கு அடையாள மெனக் கொள்ளும் சைனர். திராவிட்:
தென்னிந்திய பிராமணர் திராவிட் எனப்படுவர்.
திருமுடி:
செங்கல் வேலை செய்வோர் திருமுடியாளர் எனப்படுவர். சேலம், கோயம்புத்தூர் முதலிய இடங்களில் இவர்கள் பெரும் பாலும் காணப்படுகின்றனர். பெண்கள் ஒழுக்கத்தளர்வுடை யர். இவர்கள் பெரும்பாலும் வேட்டுவர் அல்லது கைக் கோளராவர். கோயிலுக்கு நேர்ந்து விடப்படும் கைக்கோளப் பெண்கள் கடவுளுக்குக் கலியாணம் செய்யப்பட்டவர்களாகக் கருதப்படுவர்.
gGuit:
இவர்கள் பொண்டாரி வகுப்பில் ஒரு பிரிவினர்.
தீயர்:
தீயரும் ஈழவரும் மலையாளத்தில் கள்ளிறக்கும் சாதி யினர். வட மலையாளத்தில் தீயப் பெண்களுக்கு ஐரோப்பியர் தொடர்பினால் பிள்ளைகள் பிறந்துள்ளன. இவர்களுக்கு மருமக்கள் தாயம் உண்டு. ஆகவே பிள்ளைகள் தாய் வட்டத் தைச் சேர்ந்தவர்களாவர். முற்காலத்தில் பெண்கள் ஐரோப்பிய ருடன் வாழ்தல் இழிவாகக் கருதப்படவில்லை. கல்வி அறிவு ஏறப்பெற்ற இக் காலத்தில் இது இழிவாகக் கருதப்படுகிறது. ஈழவரும் தீயரும் இலங்கையிலிருந்து சென்றார்கள் என்னும்
1. ஆசையை அகற்றும் மன நிர்வாணத்தையே மகாவீரரும் அவருக்கு முந்தைய குருக்களும் கூறினர். பிற்காலத்தவர் உடல் ஆடையை அகற்றிடும் பெருந்தவறு புரியலாயினர்.
2. பஞ்ச திராவிடப் பகுதியில் வாழ்ந்த பிறாமணர்.
60

ந.சி. கந்தையா
ஐதீகம் உள்ளது. ஈழத்து மக்கள் சிலர் மலையாளத்தில் வந்து குடியேறினார்களென்றும், அவர்கள் வரும்போது தென் னையை (தெற்கே உண்டாகும் மரம்) கொண்டுவந்தார்க ளென்றும், அவர்கள் தீவார் எனப்பட்டார்கள் என்றும், தீவார் என்பதே தீயார், தீயர் என்று ஆயிற்றென்றும் கூறப்படுகின்றன. நில சம்பந்தமான ஆவணங்களில் தீயர் ஈழவர் எனக் குறிக்கப்பட்டுள்ளார்கள் தீயர் ஈழவருக்குத் தாழ்ந்தவராகக் கருதப்படுவர்.
ஒருவன் சாதியிலிருந்து தள்ளப்பட்டால் வண்ணான் அம்பட்டன் முதலியோர் அவனுக்குக் கடமைசெய்ய மறுப் பார்கள். வண்ணாரப் பெண்கள் பெரும்பாலும் தீய வகுப்பைச் சேர்ந்தவர்களாவர். பூப்பினாலுண்டாகும் தீட்டு, பிள்ளையைப் பெற்ற தீட்டு முதலியன. நீராடியபின் வண்ணாத்தி கொடுக்கும் 'மாத்து' (மாற்று) உடுப்பதால் நீங்கும். ஈழவர் மாத்தைப் பற்றி அறியார்கள். தீயன் ஈழவன் சமைத்த உணவை உண்பான். ஈழவன் தீயன் சமைத்த உணவை உண்ண மாட்டான். தீயர் குடியிருப்புத் தரை எனப்படும். ஒவ்வொரு தரைக்கும் ஒவ்வொரு நாயர் அதிகாரியும், தீயத்தண்டனும், சோதிடனும், அம்பட்டனும் பலவகைத் தொழிலாளருமிருப்பர்.
மணமகன் வீட்டாரையும் மணமகள் வீட்டாரையும் பொருந்தவைத்து மணம் ஒழுங்குசெய்வோர் சங்கதி எனப்படு வர். தந்தையின் குடும்பம் இல்லம் எனவும், தாயின் குடும்பம் குலம் எனவும்படும். ஒரே இல்லத்தில் மணங்கள் நடப்ப தில்லை. தென்மலையாளத்தில் மணமகன் மற்போருக்குச் செல்கின்றவனைப் போல அரையில் ஆடையைக் கட்டிக் கொண்டும், கையில் வாள், கேடகம் என்பவற்றைப் பிடித்துக் கொண்டும், இவ்வாறு உடுத்திக்கொண்ட இரண்டு தோழர் பக்கத்தே வரக் கூத்தாடிக் கொண்டும் போவான். ஈழவன் ஒருபோதும் வாள்கொண்டு போவதில்லை. கலியாணத்தில் முக்கிய பகுதி வாயில் துற பாட்டு. வடமலையாளத்தில் இவர்கள் நெற்றியிலும் தோளிலும் திருநீறு பூசிக் கொள்வர்; பொன்கடுக்கன் அணிவர், இடக்கை மோதிரவிரலில் வெள்ளி அல்லது பித்தளை மோதிரமணிவர். பலர் தாயத்து கட்டிக் கொள்வர். முற்காலத்தில் தென்மலையாளத் தீயர் முழங்
61

Page 40
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
காலுக்கு மேல் ஆடை உடுத்தார்கள். எல்லோரும் காது குத்திக் கொண்டனர்; காதில் கடுக்கனும் அரையில் தாயத்தும் அணிந் தார்கள். அரைக்குமேல் யாதும் அணியவில்லை. அன்று பெண்கள் மார்பை மறைப்பது அரிது. ஈழவப் பெண்கள் நீல ஆடையைப் பெரிதுமுடுப்பர். இப்பொழுது இவர்கள் மார்பை மறைத்து ஆடையை அணிகிறார்கள். தீயர்ப் பெண்களில் சிலர் அணியும் தோடு அவர்களுக்குரியதன்று. முற்காலத்தில் பல தீயச் சகோதரர் கூடி ஒரு மனைவியை மணந்து வாழ்வார்கள். இவ்வகை நிகழ்ச்சியைப் பற்றிய சான்றுகள் எழுத்து மூலம் உள்ளன. தென் மலையாளத்தில் இவர்களுக்கு மக்கள் தாயமுண்டு. பூப்பு அடையுமுன் பெண்ணுக்குத் தாலிகட்டுக் கலியாணம் நடைபெறும். இறந்தவனின் தலை தெற்கே இருக்கும்படி பிணம் கிடத்தப்படுகிறது. கைப்பெருவிரல் களும் கால்பெருவிரல்களும் சேர்த்துக் கட்டப்படுகின்றன. கால்மாடு தலைமாடுகளில் விளக்குகள் வைக்கப்படுகின்றன. இறந்தவரின் உடல் கொளுத்தப்பட்டால் சாம்பல் கடலில் அல்லது ஆற்றில் கொட்டப்படுகிறது. ஆண்டில் ஒருமுறை இறந்தவரின் நினைவுநாள் கொண்டாடப்படுகின்றது. அப்பொழுது வீட்டின் நடுவே விளக்குக் கொளுத்தி வைத்துப் பக்கத்தே தண்ணீரும் இளநீரும் வைக்கப்படும். இவர்கள் மாட்டு இறைச்சியை உண்பதில்லை.
துருவாளர்:
இவர்கள் கட்டுக் கொடுக்கிற (கலியாணம் பொருத்தி வைக்கிற) சாதியினர். இவர்களுக்கு வேண்டான் என்பது மறுபெயர். துலாபாரம்:
இது திருவிதாங்கூர் அரசரால் செய்யப்படும் ஒருவகைத் தானம். அரசன் தனது நிறையுள்ள பொன்னைப் பிராமண ருக்குத் தானஞ் செய்வான். துலுக்கர்:
(துருக்கியர்) இப்பெயர் சில சமயங்களில் மகமதியரைக் குறிக்க வழங்கப்படும்.
1. பஞ்ச பாண்டவரின் பத்தினி ஒருத்தி தானே?
62

ந.சி. கந்தையா
தேசிகர்:
இவர்கள் பண்டாரங்களுள் ஒரு பிரிவினர். தேசாரி:
வட ஆர்க்காட்டில் ஒவ்வொரு இடத்திலுமுள்ள தலையாரி தேசாரி எனப்படுவன்.
தேவரடியாள்:
தேவதாசி.
தேவதாசி:
தாசிகளில் ஏழு வகையினர்களுண்டு. (1) தத்தம் - தன் னைக் கோயிலுக்கு ஒப்படைத்தவள். (2) விக்கிரகம் - தன்னைக் கோயிலுக்கு விற்றவள். (3) பிரித்திய - தன் குடும்ப நன்மைக் காக கோயிற்பணிவிடை செய்பவள். (4) பத்தி காரணமாகக் கோயிலை அடைபவள். (5) தானே விரும்பி வந்து சேர்பவள். (6) அலங்காரஞ் செய்து அரசரால் கோயிலுக்குக் கொடுக்கப் பட்டவள். கோவில் மற்றும் அரசவையில் பணிபுரிபவள்.
இவர்களின் வேலை விக்கிரங்களுக்குச் சாமரை வீசுதல், கும்ப ஆராத்தி கொண்டு செல்லுதல், கடவுள் உலா வரும் போது ஆடிப்பாடுதல் என்பன. 1004-ல் இராச இராசன் கட்டிய பெரிய தஞ்சாவூர்க் கோயிலின் நான்கு வீதிகளிலும் நானூறு தழுக்குச் சேரிப்பெண்கள் வாழ்ந்தார்கள். சென்ற நூற்றாண்டின் இறுதியில் காஞ்சீபுரத்தில் நூறு ஆடல் மாதர் இருந்தார்கள்; மதுரை, காஞ்சீபுரம் முதலிய கோயில்களில் இன்னும் பெருந்தொகையினர் காணப்படுகின்றனர். இவர்களுக்குக் கோயில் வருவாயிலிருந்து மானியங் கிடைக்கிறது. அப்துரர் இராசாக் (Adur Rasak) என்னும் துருக்கிய தூதர் 15-ம் நூற்றாண்டில் விசயநகரத்திலிருந்தார். இப்பெண்கள் மூலம் கிடைக்கும் வருவாய் நகரகாவலர் (police) சம்பளம் முதலிய வற்றுக்குச் சென்றதென அவர் கூறியுள்ளார். இப் பெண்க ளுக்கும் வாளுக்கும் அல்லது கடவுளுக்கும் கோயிலில் கலியாணம் நடத்தப் படுகின்றது. பெண்களின் கழுத்தில் அவர்கள் குலத்திலுள்ள ஆடவர் தாலி கட்டுகின்றனர். தாசி
63

Page 41
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
குலத்தவர்களுக்கு ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு. தாசிகுல ஆடவர் நட்டுவர் எனப்படுவர். அவர்கள் தமது பெயருடன் பிள்ளை என்பதைச் சேர்த்து வழங்குவர். தாசிகளில் வலங்கை, இடங்கை என இரு பிரிவு களுண்டு. வலங்கையினர் இடங்கைக் கம்மாளர் வீடுகளில் - பாடவோ ஆடவோ மாட்டார்கள். மற்றவர்கள் கம்மாளத் தாசிகள் எனப்படுவார்கள். தெலுங்கு நாட்டில் கம்மாளர் போகம் அல்லது சாணி எனப்படுவர். ஒரியநாட்டுத் தாசிகள் குனி எனப்படுவர்.
பெல்லாரியின் மேற்குத் தாலுகாவிலும் அதன் அயலே யுள்ள தார்வர், மைசூர் முதலிய இடங்களிலும் போயர், பினாசூஸ் முதலியவர்களுள் ஆண்குழந்தை இல்லாத குடும்பங்களுள் ஒரு பெண் குழந்தை தாசியாகக் கோயிலுக்கு விடப்பட வேண்டுமென்று சட்டமுண்டு. திருவிதாங்கூர்த் தாசிகள் தேவரடியாட்கள், குடிக்காரி (வீட்டுக்குரியவள்) அல்லது பெண்கள் எனப்படுவர். ஆடவர் தேவடியான் அல் லது நாஞ்சில் நாட்டுவேளாளன் எனப்படுவர். திருவிதாங்கூர்த் தாசிகள் வீடுகளில் சேவிக்கப் போவதில்லை. தேவடியாள் முதுமை யடைந்துவிட்டால் தோடு களையும் சடங்கு நடத்தப்படுகிறது. இது அரசனது அரண்மனையில் நடக்கும். பின்பு அவள் தாய்க்கிழவி ஆகிவிடுவாள். கேரளத்தில் முறக் குடி சிறப்புக்குடி என இருவகைத் தாசிகள் உளர். முறக்குடிப் பெண்கள் முக்கிய காலங்களில் மாத்திரம் சேவிப்பர். திருவிதாங்கூர்த் தாசிகளின் சொத்துரிமை பெண்களைச் சார்கின்றது.
தேவர்:
புதுச்சேரியில் கண்ணாடிப் பொருள்களில் வாணிகஞ் செய்யும் தெலுங்கர் தேவர் எனப்படுவர். கிராம தேவதைகளுக் குப் பூசை செய்யும் பூசாரிகளும் தேவர் எனப்படுவர். மறவரின் பட்டப்பெயர் தேவன். தென் கன்னடத்திற் கள்ளிறக்குவோர் தேவருகளு (தேவரின் மக்கள்) எனப்படுவர். இவர்கள் இலங்கையிலிருந்து வந்தவர்களாகக் கருதப்படுவர்.
64

ந.சி. கந்தையா
தேவாங்கர்:
சென்னை மாகாணம் முழுமையிலும் காணப்படும் துளுவும் கன்னடமும் பேசும் நெசவுத்தொழிலாளர் இப் பெயர் பெறுவர். கோயம்புத்தூர்ப் பகுதியில் இவர்கள் செட்டுக்காரன் எனப்படுவார்கள். இவர்கள் செளவேஸ்வரி என்னும் தெய்வத்தை வழிபடுவர். இவ்வழிபாடு காளி, துர்க்கை வழிபாட்டின் வேறுபாடாகும். இவர்கள் பெரிதும் சைவ மதத்தினர்; இலிங்கம் கட்டிக்கொள்வர். நாட்டு மக்கள் பல எருதுகளை வளர்ப்பர்; எருது இறந்து விட்டால் துக்கம் கொண்டாடிப் பலர் பின்தொடர்ந்து செல்ல அதனை எடுத்துசென்று புதைப்பர். தேவாதிக்கர்:
இவர்கள் கன்னடத்தில் கோயில்தொண்டு செய்யும் கன்னடம் பேசும் மக்கள். மயூரவர்மன், பூசை மாத்திரம் பிராம ணர் செய்தல் வேண்டுமென்றும், மற்ற வேலைகள் ஸ்தானிகர், தேவாதிக்கர்கள் செய்யவேண்டுமென்றும் விதித்தான். இப்பொழுது இவர்களிற் பலர் உழவு தொழில் செய்கின்றனர். பெண்களின் சொத்துரிமை பெண்களைச் சார்வது. தொண்டமான்:
இவர்கள் திருநெல்வேலிப் பகுதியில் வாழும் சுண்ணாம்புக்காரர். இவர்கள் புதுக்கோட்டையிலிருந்து திருநெல்வேலியிற் சென்று குடியேறிய கள்ளரில் ஒரு பிரிவினர். இவர்களில் தொண்டமான், தோல்மேஸ்திரி என இருபிரிவினருண்டு. தொம்மாரர்:
இவர்கள் ஓரிடத்தில் தங்காது திரியும் கழைக்கூத்தர். இவர்கள் தெலுங்கு மராட்டியர்; இந்துஸ்தானி பேசுவர். இவர்கள் சாதிப்பறையரிலும் உயர்ந்தவர். ஆரியக்கூத்தாடிகள் என்பதும் இவர்களுக்குப் பெயர். கழைக் கூத்து தொடங்கு முன் இவர்கள் சாணியினால் பிள்ளையார் பிடித்துவைத்து அதனை வழிபடுவர்.
65

Page 42
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
தோடர் (தோதர்):
இவர்கள் நீலகிரி மலையில் வாழ்வர்; எருமைகளை வளர்ப்பர்; தமிழ் பேசுவர். இவர்களுக்குச் சுருண்டு தொங்கும் தடித்த தலைமயிரும் அடர்ந்ததாடியும் உண்டு. பெண்கள் பூப்படைந்தபின் பச்சை குத்திக்கொள்வர். பெண்கள் மாட்டுத் தொழுவத்தில் எரியும் கொள்ளிக் கட்டையைத் தொட்டால் தீட்டு உண்டாகும். தோதரின் தொழுவத்துக்குப் பிராமணன் செல்லுதல் ஆகாது. தோதர் பெரும்பாலும் மோரில் சோறு ஆக்குவர். பெண்கள் பல கணவரை மணப்பர். தோதப்பெண் ஒருத்தி ஒருவனுக்கு மனைவியாகும்போது அவள் அவன் சகோதரர் எல்லாருக்கும் மனைவி என்பது விளங்கிக் கொள்ளத் தக்கது. சில சமயங்களில் கணவர் சகோதரராயிராவிட்டாலும் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவராயிருப்பர். இரண்டு அல்லது பல சகோதரர் பல பெண்களைத் தமக்குப் பொது மனைவியராக வைத்திருப்பர். இறந்தவரின் உடல் சுடப்படும். அப்பொழுது சுடலையில் எருமை பலியிடப்படும். தோட்டியர்:
இவர்கள் சக்கிலியருள் ஒரு பிரிவினர். தஞ்சாவூர்த் தோட்டியான் அல்லது கம்பளத்தான் பன்றி வளர்த்தல், பாம்பு பிடித்தல், பிச்சையெடுத்தல் முதலிய தொழில்களைச் செய். வான். தோட்டி தந்தையின் சகோதரி மகளை அல்லது தாய் மாமன் மகளைக் கலியாணம் செய்யலாம். இக்கட்டுப்பாடு இருப்பதால் சிறுவருக்கு வளர்ந்த பெண்கள் கலியாணம் முடிக்கப்படுவர். அப்பொழுது மணமகனின் தந்தை பெண் ணோடு சேர்ந்து பிள்ளைகளைப் பெறுவான். தோட்டியான் பிராமணன் வீட்டில் உண்ணமாட்டான். இதற்குக் காரணம் புலப்படவில்லை. பெண்கள் குடும்ப வட்டத்துக்குள் புரியும் விபச்சாரம் குற்றமாகக் கருதப்படமாட்டாது. தோட்டிகளின் குடித்தலைவன் ஊர் நாயகன் எனப்படுவான். மணமான பெண்கள் கணவனின் உறவினருக்குத் தமது தயவைக் கொடுத் தல் குற்றமாகக் கருதப்படமாட்டாது. வாயிலில் ஒருவனின் செருப்பு இருப்பதைக்கண்டால் கணவன் உள்ளே செல்ல மாட்டான். இவர்கள் இறந்தவரைக் கல் நட்டு வழிபடுவர்.
66

ந.சி. கந்தையா
தோணி';
தோணி பேழைபோன்றது; 70 அடி நீளமும் 20 அடி அகலமும் 11 ஆழமுமுடையது. அடி தட்டையாக இருக்கும். அடிப்பகுதி 7 அடி அகலமுடையது. தென்னிந்தியாவில் அடிக்கப்பட்ட ஈய, செம்பு நாணயங்களில் தோணி பொறிக்கப் பட்டுள்ளது. GLITL? (Dhobi):
இது வண்ணானுக்கு இந்தியா முழுவதிலும் வழங்கும் பெயர். இது கழுவு என்னும் பொருள் தருவது. தாவ என்னும் சமக்கிருத அடியாகப் பிறந்தது. இவர்கள் ஆதியில் ஒரிசா மாகாணத்திலிருந்து வந்தார்கள். மணக் காலங்களில் இவர்கள் ஏழு வீடுகளிலிருந்து ஏழு குடத்தில் தண்ணீர் கொண்டுவந்து மணமகனையும் பெண்ணையும் முழுக்காட்டுவார்கள். மணக் கிரியையில் இருவரின் இடக்கையும் சேர்த்துக் கட்டப்படும். பந்தலிலிருப்போர் இருவர் மீதும் மஞ்சளையும் அரிசியையும் எறிவார்கள். தோரியர்:
இவர்கள் கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களிற் காணப்படுவர். இவர்கள் முற்காலத்தில் மீன் பிடிப்போரும் பல்லக்குச் சுமப்போருமாக இருந்தனர். இப்பொழுது இவர்கள் வெற்றிலை பயிரிடுவர். இவர்களின் சாதித்தலைவன் எசமானன் எனப்படுவன். இவன் இவர்களிடையே உள்ள வழக்குகளை விளங்கித்தீர்ப்பன். நகரத்தார்:
இவர்கள் செட்டிகளில் ஒரு பிரிவினர். நகரமென்பது பட்டினம். இவர்கள் முன்பு காஞ்சிபுரத்திலிருந்தார்களென்பது
1. தென்னிந்தியரான பழந்தமிழரே உலகின் முதல் கடலோடிகளாவர். இவர்களே உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் குடியேறினர். தமிழை யும் திரிந்த தமிழையும் உலகெங்கும் பரப்பினர்.
2. ஆசிரியரின் இக் கருத்து தவறானது. துவை என்ற தூய தமிழ்ச் சொல்லே வேர்ச்சொல்லாகும். உலகெங்கும் தமிழும் திரிந்த தமிழே உள்ளன. உலக மொழிகள் யாவும் தமிழின் கிளைமொழிகளே.
67

Page 43
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
ஐதீகம். இவர்களின் வேலையாள் சாதிப்பிள்ளை எனப்படு வன். விதவைகள் மறுமணஞ் செய்யவதில்லை.
நங்குடிவேளாளர்:
இவர்கள் திருநெல்வேலியிற் பல பாகங்களிலே வாழ்கின் றனர். கோட்டைவேளாளரிருக்கும் சிறிவைகுந்தக் கோட் டைக்கு நங்குடி வேளாளப் பெண்கள் போக அனுமதிக்கப் படுவதில்லை. இவர்களுள் ஒருவர் இறந்து போனால் அச் செய்தியை அம்பட்டன் அறிவிப்பான். அக்கினி என்னும் மகாமுனி தவம்செய்து கொண்டிருக்கும் போது தெய்வப் பெண்கள் நீராட வந்தார்களென்றும் முனிவர் அவர்களைக் காதலித்து மூன்று தமாரரைப் பெற்றாரென்றும் அவர்களை வேளாளர்கள் வளர்த்தார்களென்றும் அவர்களே சேர, சோழ, பாண்டிய அரசர்கள் என்றும் ஐதீகங்கள் உள்ளன.
நம்பிடி:
இவர்கள் மலையாளத்தில் காணப்படும் நம்பூதிரிகள் போன்ற ஒரு கூட்டத்தினர். இவர்கள் பூணுரலணிவர். இவர்க ளுக்கு மருமக்கள் தாயமுண்டு. தாலிகட்டுக் கலியாணம் இவர்கள் சொந்தச் சாதியினரால் செய்யப்படும். நம்பூதிரி மாரும், இச்சாதி ஆடவரும் நம்பிடிப் பெண்களைச் சம்பந்தங் கொள்வர். நம்பிடி ஆடவர் நாயர்ப்பெண்களைச் சம்பந்தம் வைக்கலாம். இவர்கள் விருந்துகளில் நம்பூதிரிகளோடு இருந்து உண்பர். பெண்கள் மனோலபாடு எனப்படுவர்.
நம்பூதிரி';
கேரள உற்பத்தி என்னும் நூல் மலையாள மொழியிலுள் ளது. அது பரசுராமர் கன்னியாகுமரியிலிருந்து வருணனை நோக்கித் தவம் செய்து கன்னியாகுமரி முதல் கோகர்ணம் வரையிலுள்ள நிலத்தைப் பெற்றாரென்றும், பரசுராமராற் குடியேற்றப்பட்டவர்களே நம்பூதிரிகள் என்றும் கூறுகின்றது. இவர்களின் உரிமைவழி மருமக்கள் தாயம். நம்பூதிரிப் பெண் கள் வெளியே செல்லும்போது தம்மை வைக்கான் குடையால் மறைத்துக் கொள்வர். விரிசாலி என்னும் நாயர்ப் பெண்
1. கடல் வழியே வந்த மேற்கு ஆசியப் பூசாரிமார் ஆவர்.
68

ந.சி. கந்தையா
அவர்களின் முன்னே செல்வாள். நம்பூதிரிப் பெண்கள் வெள்யே செல்லும்போது தம்மைக் கழுத்துமுதல் கால்வரை யும் துணியால்போர்த்து மறைத்துக்கொள்வர். இவர்கள் நகை அணிதல் கூடாது. இவர்களைப் பரசுராமர் கொண்டுவந்து குடியேற்றினார் என்னும் கதை நம்பத்தக்கதன்று. இவர்கள் கி.பி. 7-ம் நூற்றாண்டுக்கும் 8-ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் மலையாளத்தில் குடியேறியவர்களாகலாம்.
தாலமி, பெரிபுளூஸ் என்போர் பிராமணர் சிறுபான்மை யாக மலையாளத்தில் குடியேறியிருந்தமையை கி.பி. முதலாம் நூற்றாண்டில் குறிப்பிட்டுள்ளார்கள். மேற்குச் சாளுக்கிய அரசர் வலிமை பெற்றிருந்த கி.பி. 4-ம், 5-ம் நூற்றாண்டுகளில் இங்கு வந்து தங்கிய பிராமணர் நம்பூதிரிகளோடு கலந்து ஒன்று பட்டிருத்தல் கூடும். சாளுக்கியருக்குப் பன்றிக்கொடி உண்டு. ஆதலின் சாளுக்கியப் பிராமணர் குடியேறிய இடம் பன்னியூர் (பன்றியூர்) எனப்பெயர் பெற்றிருக்கலாம். சேவூர்ப் (சிவனுரர்) பிராமணர் சைவ சமயத்தினராவர். இவர்கள் சாளுக்கியருக்குப் முன் வந்த சேர, சோழ, பாண்டிய அரசர்களின் சமயத்தையே பின்பற்றியவர்களாகலாம். பெருமாளென்னுமரசர் சேரநாட் டுக்கு அயலே இருந்து வந்தவர்களாகலாம். இவர்கள் தமது சொந்த நாட்டை விட்டு வந்தமையால் இவர்கள் நம்பூதிரிப் பெண்களை மணந்துகொள்ள நம்பூதிரிகள் மற்ற வகுப்பு பெண்களைச் சம்பந்தங் கொண்டார்களாகலாம். ஆகவே மருமக்கள் தாயம் அவசியமாயிற்று. கேரளத்தின் சில பகுதிகள் அதிகாரிகளால் ஆளப்பட்டது. வள்ளுவநாடல்லாத மற்றைய இடங்களில் நம்பூதிரிகள் அதிகாரிகளாக இருந்திருக்கின்றனர்.
நம்பூதிரிமார் கோயிற் பூஜை செய்வர். இவர்கள் அரசரின் தூதராகவும் செல்வர். மலையாளத்தில் பட்டர்ப்பிராமணர் அங்கு மிங்கும் அலைந்து திரிவர். அவர்களுக்கு உணவு நம்பூதிரிகள் இல்லங்களிலும், கோவிலகங்களிலும், கோவில் களிலும் கிடைக்கும். நம்பூதிரிகளுக்கு ஏடு (வேதம்) படித்தலும் படிப்பித்தலும், பிச்சை, ஒது, அடுக்களை கதவு (எல்லாப் பிராமணரும் குளிக்குமிடத்தில் நின்று குளித்தல்), ஆடு (வேள்வி), சந்தி, குருவாயிருந்து கோயிற் கிரியை
1. தென் பாண்டிய நாடு.
69

Page 44
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
செய்தல், அரங்கு, பந்தி (எல்லாப் பிராமணரோடு மிருந்து உண்ணுதல்) போன்ற உரிமைகள் உண்டு. இவர்கள் தலை மயிரை நெற்றிக்கு முன்னால் தொங்கும்படி முடிந்துவிடுவர். நல்ல நாள் பார்த்து முகத்தையும் மழித்துக் கொள்வர்.
மனைவி கருப்பவதியானல் நம்பூதிரி மயிரை வளரவிடு வான். இவர்களுக்கு அடர்ந்த மயிருண்டு. இவர்களின் பழக்க வழக்கங்க்ளுட் சில தோதரிடையே காணப்படுவன போல் வன. அதனால் இவர்கள் தோதரில் ஒரு பிரிவினர் என்று கருதப் படுவர். இவர்கள் விரல் நகங்களை நீளமாக வளர விடுவர். ஆடவரின் உடுக்கும் வகை "தட்டுத் தூக்குக' எனப்படும். நம்பூதிரிகள் மிரிதடி தரிப்பர். பெண்கள் உடுக்கும் வகை "ஒக்கும் கொலுத்தும் வச்சுத் தூக்குக' எனப்படும். ஆடவர் காதில் துளையிட்டுக் குண்டலமணிவர். பெண்கள் சூட்டு என் னும் காதணி செருத்தாலி முதலியவற்றையணிவர். அவர்கள் மூக்கைத் துளையிட்டு அணியும் அணிகளை அணிவதில்லை; நீராடியபின் நெற்றியில் சந்தனத்தால் மூன்று குறிகள் வைப்பர். அது அம்புலிக் குறி எனப்படும். அவர்கள் ஒருபோதும் குங்குமம் அணிவதில்லை; மஞ்சள் குளிப்பதுமில்லை. ஆட வர் கைவிரலில் பவித்திரம் என்னும் ஆழி அணிவார்கள்; Ա9ծ9T லில் யந்திரத் தகடு அடைத்த கூட்டைத் தொங்கவிடுவார்கள்.
பன்னிரண்டு வயதுப் பையன் கவரிமான் தோல்வாரை இடது தோளுக்கு மோலால் போட்டிருப்பான். இரண்டு தலைப்புகளும் அத்தோலினாலேயே பொருத்தித் தைக்கப் பட்டிருக்கும். இவர்கள் திருமணத்துக்குப் பின் பூணுரலை மாற் றிக் கொள்வதில்லை. தென்னிந்திய பிராமணர் ஒர் ஆண்டுக்கு ஒரு முறை பூணுரலை மாற்றுவர். நம்பூதிரி இருக்கும் வளவுக் குப் பெயருண்டு. வீட்டின் வடகிழக்கில் தொழுவம் இருக்கும். அது கோசாலை எனப்படும். இவர்கள் இருப்பதற்குப் பெரும்பாலும் மான் தோலைப் பயன்படுத்துவர். நம்பூதிரியின் மூத்த குமாரன் காரணவன் எனப்படுவன். அவன் உணவை உண்ட பின் எழும்போது இடக்கையால் இலையைத் தொடு வான்; மனைவி வலக்கையால் தொடுவாள். அப்பொழுது அது எச்சில் ஆகமாட்டாது. அவள் அவ்விலையில் உணவைப் புசிப்பாள். நம்பூதிரி, பட்டர் சமைத்த உணவை உண்ணலாம்.
70

ந.சி. கந்தையா
சுரைக்காய், பனம்பழம், பனங்கட்டி முதலியவைகளை நம்பூதிரி உண்பதில்லை. பால்பாயசமாக மாத்திரம் (பிரதமன்) உண்ணப்படும்.
நம்பூதிரி மந்திரவாதிகள் ஒருவனைக் கொல்லவேண்டு மானால் அவனைப் போன்ற வடிவை உலோகத் தகட்டில் எழுதி அதன் கீழ் யந்திரம் வரைந்து மந்திரம் செபிப்பார்கள். பின்பு அதனை இன்னொரு உலோகத் தகட்டில் வைத்துச் சுருட்டி அதை அவன் குடியிருக்குமிடத்துக்குக் கிட்டப் புதைப் பார்கள். அவன் அவ்விடத்தில் மிதித்தால் உடனே மந்திரம் பலிதமாகும். அவன் இறந்துவிடுவான். அல்லது ஏதும் துயரத்துக்கு ஆளாவான். மந்திரவித்தைக்காரர் குட்டிச் சாத்தானை வாலாயம் செய்துகொள்வார்கள் என்று மலையா ளத்தில் நம்பப்படுகிறது. ஆண் குழந்தையில்லாத நம்பூதிரி மனைவியின் மரணத்துக்குப்பின் மயிரை ஓராண்டுக்கு வளரவிடுவான். தாய் அல்லது தந்தைக்குக் கடமை செய்யும் மூத்த மகனும் அவ்வாறே ஒராண்டுக்கு மயிரை நீள வளரவிடு வான். மயிரை வளரவிடும் காலத்தில் முருங்கைக்காய், பால், மிளகாய், துவரை, அவரை, பப்படம் முதலிய உணவுகள் நீக்கப்படும். குளிக்கும்போதல்லாமல் இவர்கள் கெளடபீன மணிவதில்லை. கடைசிப் பெருமாள் அராபியாவுக்குச் சென்ற காலம் முதல் (கி.பி. 825) மலையாள ஆண்டு கணக்கிடப்படும். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிக’ என்னும் ஒரு நாள் சேர்க்கப்படும்.
நாயர் நம்பூதிரிக்கு ஆறு அடிக்குள்ளும், அம்பட்டன் 12 அடிக்குள்ளும், தீயன் 36 அடிக்குள்ளும், மலையன் 64 அடிக்குள்ளும், புலையன் 96 அடிக்குள்ளும் வருதல் கூடாது. உயர்ந்த சாதியான் வீதி வழியே செல்லும்போது தாழ்ந்த சாதியான் விலகிச் செல்லும்படி சத்தமிடுவான். தாழ்ந்த சாதி யான் போகும்போது தான் செல்வதை உயர்ந்த சாதியாருக்கு அறிவித்தற்கும், உயர்ந்த சாதியாரின் சத்தத்தைக் கேட்டுத் தான் விலகி நிற்றற்கும் சத்தமிடுவான். இவர்கள் ஒரே கோத்திரத்தில் மணப்பதில்லை. மணமான பெண் கணவனின் கோத்திரத்தைச் சேர்ந்துவிடுகிறாள். மணமாகாது இறந்த பெண்களுக்கு
1. லீப் ஆண்டு என்பதைப் போல.
71

Page 45
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
மணக்கிரியை செய்து தாலி கட்டப்படும். தோதர் சாதியினரும் இவ்வாறே செய்வர். மணத்தின்போது பெண் வீட்டார் மண மகன் வீட்டுக்குச் சென்று அவனை அழைத்து வருவார்கள். மணமகன் வைக்கான் குடையின் கீழ்ச் செல்வான். நாயர்ப் பெண்களும் நாயரும் நம்பூதிரிகளும் வாயிலில் நின்று பவனி வருவார்கள். மணமகன் துட்ட தேவதைகள் அணுகாதபடி கையில் கங்கணங் கட்டிக்கொண்டும் பதினாறு கணுவுள்ள மூங்கில், முகம் பார்க்கும் கண்ணாடி, அம்பு, நாலு சேலை, தாலி முதலியவற்றைக் கொண்டும் வருவான். வாயிலில் நம்பூதிரிப் பெண்களைப் போல் உடுத்த நாயர்ப் பெண்கள் பவனி வருபவர்களை எதிர்கொள்வார்கள், மணமகனின் முகத்துக் கெதிராக ஆலத்தி காட்டுவார்கள். சடங்கின் முன் பகுதி 'நந்தி முகம்" (புண்ணிய ஆக வசனம்) எனப்படும். மணமகளை மணவறைக்குக் கொண்டு செல்வதன் முன் மணமகளின் தந்தை மணமகனின் காலைக் கழுவுவான். நாயர்ப்பெண்கள் ஆயிரந்திரி என்னும் ஆலத்தியைக் காட்டு வர். மணப்பந்தல் தூண்களுக்குச் சிவப்பு ஆடை சுற்றப்பட்டி ருக்கும். மணமகனையும் மணமகளையும் மணவறைக்கு அழைத்துச் செல்லும்போது ஒருவரை ஒருவர் பாராதபடி நடுவில் வைக்கான் குடை பிடிக்கப்படும். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்குஞ் சடங்கு முகதரிசனம் எனப்படும். மண மகளும் மணமகனும் மூன்று நாட்கள் பிரிந்து தனியே இருப்பர். நாலாம் நாள் இருவரையும் படுக்கையறைக்குக் கொண்டு சென்று அறையின் கதவைத் தாழிட்டு விட்டு குருக்கள் வெளியே நின்று சுலோகஞ் சொல்லுவர். ஐந்தாவது நாள் குளத்தில் நீராடிய பின் இருவரும் மீன் பிடிப்பார்கள். மீன் பிடிக்கும் கிரியை, முன் மீன் பிடிப்பவர்களாக இருந்தவர் களைப் பரசுராமர் பிராமணராக்கினார் என்னும் ஐதீகத்தைக் குறிக்கின்றதென்பர். நம்பூதிரிகளில் விபச்சார நடத்தையுள்ள பெண்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். விபச்சாரி
1. இன்று உண்மைப் பிராமணர் (பிற*அமணர். சமண சமயத்தைச் சாராதவர் என்பதே மெய்ப்பொருள். பிரமனுக்கும் இவருக்கும் எள்முனை அளவு கூட ஒற்றுமை கிடையாது.) யாரும் கிடையாது. பல்வேறு காலங் களில் பல்வேறு சமயத் தலைவர்களால் சாதி மாற்றம் செய்யப்பட்டவர் களே இன்றைய கலப்பு பிறாமணராகும். (எ.கா: கருத்தப் பாப்பான்).
72

ந.சி. கந்தையா
என்று சந்தேகிக்கப்பட்டவள் ஜஞ்சாம்புரம் அல்லது பஞ்சோலைப்புரம் என்னும் இடத்தில் விடப்படுவாள். அப்பொழுது அகக்கோயின்மார், புறக்கோயின்மார் என்போர் வந்திருப்பார்கள். அகக்கோயின்மார் ஒழுக்கத்தைப் பாதுகாப் போர். புறக்கோயின்மார் அரசன் சார்பில் வந்திருப்போர். விசாரணைத் தலைவன் ஸ்மார்த்தன் எனப்படுவன். ஸ்மார்த்த னால் செய்யப்படும் விசாரணை ஸ்மார்த்த விசாரணை எனப்படும். குற்றச்சாட்டு உறுதியானால் பெண்ணின் கிட்டிய உறவினன் அவளுக்குச் செய்ய வேண்டிய அந்தியக் கிரியைகளைச் செய்வான்.
சமய சம்பந்தமாகப் பதினெட்டுச் சங்கங்கள் உண்டு. அவற்றின் தலைவன் வாக்கிய விருத்தி எனப்படுவான். அவன் ஒத்து நம்பூதிரியாக இருத்தல் வேண்டும். அவனுக்கு அடுத்த படியிலுள்ளவன் பாஸ்கரன். இவன் சாஸ்திரிகளுக்கு (அத்திரப் பயிற்சிக்கு) குரு. கதைகளி என்பது மலையாளத்து நாடகம். இவர்கள் அசயாகம் என்னும் ஆட்டுக்கடா யாகம் செய்து யாகத்தில் கொன்ற ஆட்டின் இறைச்சியை உண்பர். சிறுவர் பூணுரலணிவர். முற்காலப்பெண்களும் பூணுரலணிந்தார்கள். பூணுரல் கிருஷ்ண மிருகா என்னும் மான் தோலினால் இடப்படும் நரிக்கால்:
நரி அங்கம்மாவின் வாகனம். இப்பெயர் நரிக்கொம்பு செய்யும் குருவிக்காரனுக்கும் வழங்கும். நாகர்:
கஞ்சம், விசாகப்பட்டினப் பக்கங்களில் வாழும் பலர் தமது குலம் நாக வமிச மென்பர். குர்னியர், தொரியர் என்போர் திருமணக் காலத்தில் பாம்புகளுறையும் எறும்புப் புற்றுகளை வணங்குவர். பள்ளிகளில் ஒரு பிரிவினர் நாகபடம் என்னும் பாம்பின் தலை போன்ற ஒரு வகை அணியை அணிவர். அவர்கள் நாகர் எனப்படுவர்.
நாகவாசுலு:
விசாகப்பட்டினப் பக்கங்களில் உழவு தொழில் செய்யும் மக்கள் இப்பெயர் பெறுவர். விவாகத்தை விரும்பாதிருக்கும்
73

Page 46
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
மகளிர் விபச்சாரத்தால் பொருளீட்டுவர்; வீடுகளில் நடன மாடுவர். இவர்கள் நாயுடு சாதிக்குத் தாழ்ந்தோர். நாஞ்சில் நாட்டு வேளாளர்:
நாஞ்சில் நாட்டு வேளாளர் என்னும் ஒரு பிரிவினர் திருவிதாங்கூர் முழுமையிலும் அங்குமிங்கும் காணப்படுகின் றனர். இவர்களின் முக்கிய இடம் தோவலா (Tovala). இவர்க ளின் பழக்க வழக்கங்கள் வேளாளர் பழக்க வழக்கங்களில் வேறானவை. இவர்கள் தங்கள் பெயர்களுடன் கணக்குப் பிள்ளை என்னும் பட்டப்பெயரைச் சேர்த்துக்கொள்வர். கி.பி. 825-ல் சீரிய கிறித்தவருக்கு அளிக்கப்பட்ட் நன்கொடைப் பட்டையத்தில் ஒரு தச்சகுடும்பமும் நான்கு வேளாளக் குடும்பங்களும் கடிற்கரையில் மரங்களை வைத்து உண்டாக்கு தற்குப் பொறுப்புடையன என்று கூறப்பட்டுள்ளது. வேளாளர் காராளர் எனப்பட்டுள்ளார்கள். பாண்டிய அரசர் இந் நாட்டின் சில பகுதிகளை ஆண்ட காலத்து இவ்வேளாளர் வந்து குடியேறியிருத்தல் கூடும். பலர் நாஞ்சில் நாட்டு வேளாளர் என்னும் பெயரை விட்டு நாயர் என்னும் பெயரை வைத்துக் கொண்டனர். இவர்களின் முதன்மையுடைய தெய்வங்கள் மாடன், இசக்கி, இனன் முதலியன.
நாஞ்சில் நாட்டு வேளாளரின் கிரியை சம்பந்தமாகப் பாடப்படும் பாட்டு வில்லடிச்சான் பாட்டு எனப்படும். அவர்க ளின் விழாக்களிற் சிறந்தது அம்மன்கொடை என்பது. சித்திரை மாதத்து அமாவாசியன்று சித்திரபுத்திரன் கதை கோயில்களில் படிக்கப்படும். இவர்களிற் பலர் 'காரியஸ்தன் முதல்பிடி (பொக்கிஷக்காரன்) கணக்கன் முதலிய அலுவல்களில் அமர்ந்துள்ளார்கள். பெண்கள் பருவமடைந்தபின் மணப்பர். தாய்மாமன் மகள், சிறியதாய் மகள் சிறந்த மணமகளிராகக் கொள்ளப்படுவர். மணமகனுக்குக் கொடுக்கும் பரிசுகளில் முண்டு, இரும்பு எழுத்தாணி, கத்தி முதலியன அடங்கும். நாஞ்சில் நாட்டு வேளாளர் நாயர்ப் பெண்களிடையே சம்பந்தங் கொள்வர். கணவன் விடுமுறி எழுதிக் கொடுத்துக் கலியாண நீக்கம் செய்து கொள்ளலாம். ஆண்பிள்ளைகளுக்கு தந்தை தேடிய சொத்தில் நாலிலொன்றும் தந்தைவழி வரும்
1. முன்னோர் சொத்து; பரம்பரைச் சொத்து.
74

ந.சி. கந்தையா
சொத்தில் நாலிலொன்றும் சேரும். அது உகந்துகாமா எனப்படும். கலியாணம் தள்ளப்பட்ட பெண்டிர்கதக் கணவனிடம் சீவிய காலம் வரையும் வாழ்க்கைச் செலவு பெற உரிமையுண்டு. இதற்காக அவள் உரிமை கோரும் சொத்து நங்கு (கை)தாமா எனப்படும். (நங்கை = பெண்.)
நாடார்:
சானார்.
நாட்டுக் கோட்டைச் செட்டியார்:
நாட்டுக் கோட்டைச் செட்டிமார் பெரிதும் வட்டிக்குப் பணங் கொடுத்து வாங்குவர். இவ்வகையில் இவர்கள் தென்னிந்திய யூதர்கள் எனப்படுவர். இவர்களின் தத்துப் பிள்ளை மஞ்சள் நீர்ப்பிள்ளை எனப்படுவர். செட்டிகள் தலை மயிரை மழித்துக் கொள்வர். இப்பொழுது இவ்வழக்கம் பெரும்பாலும் நின்று போய்விட்டது. பெண்களும், ஆண்க ளும் காதைத் துளையிட்டுக்கொள்வர். சிறுமியர் மணிகளும் சிப்பிகளும் கோத்த மாலைகளை அணிவர். இவர்களுக்குக் கோயில் வாயில் மறியல், மடத்துவாயில் மறியல் என இரண்டு பஞ்சாயத்துக்களுண்டு. பிணச்சடங்குக்கு இடும்பந்தல் கொட்டிற்பந்தல் எனப்படும். மணத்துக்கு இடும்பந்தல் கொட்டகை அல்லது காவனம் எனப்படும்.
நாயக்:
நாய்கா - தலைவன். இவர்கள் விசயநகர அரசர். சில பிராம ணக் குடும்பங்களுக்கும் இப்பெயருண்டு. முற்காலத்தில் சென்ளை நகரில் 'போலிஸ் மேல் அதிகாரி வேலை பெத்த நாயக்கர்களுக்குக் கொடுக்கப்பட்டது. தென் கன்னடத்தில் தேவடியாள் நாய்கனி எனப்படுவாள்.
நாயர்:
நாயர் என்போர் மலையாளத்தில் காணப்படும் ஒரு சாதியினர். முற்கால நாயர் உழவு தொழில் செய்பவர்களாவும், போர் வீரர்களாகவும் இருந்தார்கள். இப்பொழுது வணிகர், கைத்தொழில்கள் புரிவோர், எண்ணெய் வாணிகர், பல்லக்குச்
75

Page 47
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
சுமப்போர். அம்பட்டர், வண்ணார் முதலிய பல பிரிவினர் நாயர் வகுபயிற் காணப்படுகின்றனர். கன்னடம் முதலய இடங்களிலிருந்து வந்து மலையாளத்திற் குடியேறிய மக்கள் பலர் நாயரின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றியுள்ளார்கள். சில காலங்களில் அரசர் தாழ்ந்த வகுப்பினர் சிலரை நாயர் களாக்கி யுள்ளார்கள்.
கி.பி. 9-ம் நூற்றாண்டில் முகமதிய பயணி ஒருவன் எழுதி யிருப்பது வருமாறு: அரசன் எதிரில் ஓர் அளவு சோறு படைக்கப்படுகின்றது. நானூறு அல்லது ஐந்நூறு பேர் வந்து அரசனுடைய கையிலிருந்து சிறிது சோறு வாங்கி உண்கி றார்கள். தான் முதலிற் சோற்றை உண்டபின் மற்றவர்களுக்குக் கொடுக்கிறான். அரசன் இறக்கும்போது அல்லது கொல்லப் பட்ட போது தாம் உடன்கட்டை ஏறுவதாக அவர்கள் சத்தியஞ் செய்கிறார்கள்.
பூர்ச்சாஸ் (Purchas) என்பவன் எழுதியிருப்பது வருமாறு: கொச்சி யரசனிடம் பலர் இருக்கிறார்கள். அவர்கள் அமொச்சி எனப்படுவர். சிலர் நாயர் எனப்படுவர். இவர்கள் தமது அரசனுக்காக உயிரைவிட ஆயத்தமாகவிருக்கிறார்கள். மலையாள மொழியில் இவர்கள் சாவார் எனப்படுவார்கள். குலோத்துங்க சோழனின் கல்வெட்டில் (கி.பி.1083) அவன் குடநாட்டை வென்ற போது நாயரின் முன்னோராகிய வீரர் இறுதிவரையில் போர் செய்து மடிந்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
16-ம் நூற்றாண்டில் பார்போசா (Barbosa) என்பவர் எழுதி யிருப்பது வருமாறு: இவர்களுக்குப் போர் செய்வதையன்றி வேறு வேலையில்லை. இவர்கள் எப்பொழுதும் வாள், வில், அம்பு, கேடயம், ஈட்டி முதலியவைகளைக் கொண்டு செல் வர். இவர்களில் சிலர் அரசனின் உறவினராகிய பிரபுக்களோடு மிருப்பார்கள். இவர்கள் ஏழு வயதிலேயே ஆயுதப் பயிற்சி பெறுவர்.
18-ம் நூற்றாண்டில் ஹமில்டன் எழுதியிருப்பது வருமாறு: சமரின் என்னும் மலையாள அரசன் 12 ஆண்டுகள் மாத்திரம்
1. உடன் இறப்போர் : (சாவு + ஆர்) சாவார் (தமிழ்ச் சொல்).
76

ந.சி. கந்தையா
ஆட்சி புரிவது பழங்கால முறை. 12-வது ஆண்டின் இறுதியில் அரசன் பொது வெளியில் கூடார மடித்து விழாக் கொண்டாடுவான். அப்பொழுது அவனைக் காத்து நிற்கும் நாற்பதாயிரம் அல்லது ஐம்பதாயிரம் வீரரைக் கடந்து வந்து அவனைக் கொல்பவன் பட்டத்துக்கு வருவான். 1645-ல் இவ்வகை விழா ஒன்று நடைபெற்றது.
சொனரத் (Sornerat) என்பவர் எழுதியிருப்பது வருமாறு: நாயர் போர் வீரச் சாதியினர். இவர்களுக்குத் தமது சாதிக் பெண்களை அனுபவிக்கும் உரிமையுண்டு. அவர்கள் வீதியிற் செல்லும்போது பறையர் விலகிச் செல்லும்படி சத்தமிட்டுக் கொண்டு செல்கின்றனர். பறையன் ஒருவன் அவர்களைத் தீண்டினால் அவர்கள் அவனைக் கொன்றுவிடலாம்; ஆனால் அவர்களைத் தீண்டுவதற்குப் பறையருக்கு ஆண்டிலொரு முறை உரிமையுண்டு. அந்நாளில் அவர்கள் நாயரில் எவனை யாவது தொட்டால் அவன் பறையனுக்கு அடிமையாக வேண் டும். ஆகவே அந்நாளில் நாயர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பார்கள். நாயர் என்பது நாயன் என்பதிலிருந்து பிறந்ததென்று கருதப்படுகின்றது.
அரசனுக்குப் பொருள் கொடுத்து கணக்கு, பிள்ளை முதலிய பட்டங்களும் பெறப்பட்டன. பட்டமளிக்கும் சடங்கு திருமுக மளிக்குக' எனப்படும். திருவிதாங்கூரில் தம்பி என்னும் ஒரு பட்டமும் உண்டு. இது திருவிதாங்கூர் அரசனின் நாயர்ப் புதல்வனுக்கு வழங்கப்படுவது. தம்பிமார் தலைப்பாகையின்றிப் பல்லக்கில் அரசன் முன் செல்லலாம். இக்குடும்பங்களிலிருந்து அரசனின் மனைவி தெரியப்படுவர். நாயருக்குக் காத்த என்னும் பட்டமும் உண்டு. மத்திய காலத்தில் செம்படகராமன் என்பது பட்டத்துக்கு அடையாள மான பெயராக வழங்கப்பட்டது.
கி.பி. 1500-ல் பார்போசா (Barbosa) எழுதியிருப்பது வருமாறு: அரசனுக்கு 1000 பரிவாரங்கள் இருக்கின்றனர். அவர்களுக்குச் சம்பளம் உண்டு. அவர்கள் அரண்மனையைப் பெருக்குதல் முதல் எல்லாப் பணிவிடைகளையும் செய்கின் றார்கள். அவர்களின் மனைவி பணப்பிள்ளை அம்மா எனப்
77

Page 48
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
படுவாள். கைமால் என்னும் பட்டம் சிலருக்கு வழங்கும். இப்பட்டம் அதிகாரத்தைக் குறிப்பது. உன்னிதன், வலியதன் என்னும் பட்டங்கள் திருதாங்கூரிலுள்ள சில குடும்பங்களுக்கு வழங்குகின்றன. மேனன்' என்னும் பட்டப் பெயர் மேல் என்னும் அடியாகப் பிறந்தது, (மேலவன் - மேனவன் - மேனன்). சிலர் பணம் கொடுத்து இப்பட்டத்தைப் பெறு கிறார்கள். மேனன் பட்டம் அளிக்கப்படும் போது பனை யோலைச் சட்டமும் எழுத்தாணியும் அளித்தல் வழக்கம். பிரிட்டிஷ் மலையாளத்தில் ஒவ்வொரு அம்சத்திலும் அல்லது கிராமத்திலும் கணக்கெழுதும் மேனன் உண்டு. மேனோக்கி என்னும் பட்டம் கண்காணிப்பவன் என்னும் பொருள்தருவது. இவர்கள் பெரும்பாலும் கோயிற் கணக்குகளை மேற்பார்த் தார்கள். நாயர்ப் பெண் மூன்று நாள் தீட்டுக் காப்பாள்.
நாயர்ப் பெண்களுக்கு பூப்படையுமுன் தாலிகட்டுக் கலியாணம் நடைபெறும். தாலிகட்டுக் கலியாணமென்பது தேவதாசிகளுக்குத் தாலிகட்டுவது போன்றது. அரச குடும்பப் பெண்களுக்கு நெடுங்காடி என்பவன் நல்ல வேளையில் தாலி கட்டுவான். அவனுக்கு அதற்காகக் கிடைக்கும் கூலி உண்டு. மற்ற வகுப்பினருக்கு இருவரின் சாதகப்பொருத்தமும் பார்க் கப்படுகிறது. பொருத்தமுள்ள பையன் மணவாளன் எனப்படு (6) 1 fToő.
மணவாளன் தனது பரிவாரங்களுடன் தனது வீட்டினின் றும் புறப்படுவான். பெண்வீட்டினின்றும் துவக்கப்புறப்பாடு நடக்கும். இரு பகுதியினரும் வழியில் சந்தித்து பெண் வீட்டுக்குச் செல்வர். பெண்ணின் சகோதரன் மணவாளனின் கால்களைக் கழுவுவான். பின்னர் அவன் பெண்ணை அழைத்து வந்து மணவாளனின் இடப்புறத்தில் இருத்துவான். மணவாளன் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவான். மூன்று நாட்களுக்கு ஒரு வகைத் தீட்டுக் காக்கப்படும். நாலாவது நாள் இருவரும் ஆற்றில் முழுகுவார்கள். வீட்டுக்குத் திரும்பிவரும் போது கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும். மணவாளன் கதவைத் தட்டி அதனைத் திறக்கும்படி செய்வான். பின் பெண்
1. மேனன் - மேலானவன். மலையாளத்தில் உள்ள
78

ந.சி. கந்தையா
னின் தாயும் மற்றைய பெண்களும் இருவருக்கு மிடையி லிருந்து உண்பார்கள். பின் இருவரும் பந்தலுக்குச் செல் வார்கள். பின்பு ஆடையை இரண்டாகக் கிழித்து ஆளுக்கு ஒரு துண்டு கொடுக்கப்படும். ஆடையைக் கிழிப்பது கலியாணம் தள்ளுவதைக் குறிக்கும். ஒரு மணவாளன் எத்தனை பெண்க ளுக்கும் தாலிகட்டலாம். பெரும்பாலும் மணவாளன் பிராமணனாக இருப்பான். இவன் தான் செய்யும் கடமை களுக்குக் கூலி பெற்றுச் செல்வான். பெண் விரும்பினால் நாலாவது நாள் தாலியைக் கழற்றி விடலாம். சில இடங்களில் தாலி கட்டியவனே சம்பந்தத்துக்கு உரிமையுடையவன் என்று கருதப்படுகின்றது. தாலிகட்டும்போது அம்மாச்சாம் பாட்டு என்னும் ஒருவகைப் பாட்டுப் பாடப்படும். தாலி மன்னு எனப்படும். தென்மேற்கு மூலையில் கன்னிக்கால் நடப்படும். கலியாணப்பந்தல் நெற்கதிர்களால் அலங்கரிக்கப்பட்டிருக் கும். அதற்குக் கதிர் மண்டபமென்பது பெயர். அது முல்லைப் பந்தல் எனப்படுவதுண்டு. மணநாளுக்கு முதல் நாள் நடத்தப்படும் விருந்து அயணி ஊண் எனப்படும். பிராமணத்தி பெண்ணின் இடது கையில் காப்புக் கட்டி சுபத்திரை வேலி என்னும் பாட்டுப் பாடுவாள். கலியாணக் காலத்தில் கதைகளி, ஒட்டம், துள்ளல் முதலியன நடைபெறும்.
பிராயமான பெண்ணைக் கன்னி அழிப்பது தீட்டான செயல் எனக் கருதப்பட்டது. ஆகவே பூப்படைந்த பெண்க ளைக் கன்னியழிக்கும்படி பெண்ணின் தாய்மார் இளைஞரை இரந்து வேண்டுவர். கிடக்கிறதென்பது சம்பந்தத்துக்கு மற் றொரு பெயர். பெண்கள் பூப்படைவது தரண்டுகுளி எனப் படும். நாயர்ப்பெண்கள் கருவடைந்து ஏழாவது மாதத்தில் புளிக்குடி என்னும் சடங்கு புரிவர். வீட்டின் வடக்குச் சிறகு வடக்கிணி என்றும் தெற்குச்சிறகு தெற்கிணி எனவும் படும். நடுவே உள்ள முற்றம் நடுமுற்றம் எனப்படும். நாட்டுக்கத்தி பீசான்கத்தி எனவும் தூக்கும் விளக்கு தூக்குவிளக்கெனவும் படும். ஆண் குழந்தை பிறந்தால் நிலத்தில் தென்னோலையால் அடிப்பார்கள். இருபத்தேழாவது நாள் குழந்தைக்குப் பால் பருக்கிப் பெயரிடப்படும். சோறுரட்டும் சடங்கு சோறுரண் எனப்படும். நாழியில் அரிசி நிரப்பிவைத்தல் நிறைச் சுவைப்பு எனப்படும்.
79

Page 49
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
புரோதிதன் சாந்திக்காரன் எனவும் உபாத்தியாயன் எனவும் எழுத்தச்சன் எனவும் படுவான். பால் குடிககுப் பின் தட்டானை அழைத்து வந்து பொன் கம்பியினால் காது குத்தப்படும். அப்பொழுது நில விளக்குக் கொளுத்தி வைக்கப்படும். மலையாள வீடு நாற்புறம் எனப்படும். மத்தியகாலத்தில் வாசலில் பதிபுரம் என்னும் காவற் கொட்டில் இருந்தது. இப்பொழுது அவ்விடத்தில் வேயப்பட்ட கொட்டிலுண்டு. நாயர்ப் பெண்கள் மார்பை மறைப்பதில்லை. மார்பை மறைப்பது தாழ்ந்த சாதிக்கு அறிகுறி.
1740-ல் மலையாளத்துக்கு வந்த எட்வர்ட் ஈவ்ஸ் என்பவர், “சாதாரண வயல் வேலை செய்பவர்களின் பெண்கள் முதல் அரச குடும்பப் பெண்கள் வரையும் அரைக்குமேல் உடை யில்லாதவர்களாக இருக்கின்றனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார். நாயர்ப் பெண்கள் நாக படம் என்னும் ஒருவகை மாலையை யணிவர். மூக்கில் மூக்குத்தி இடுவர். அதில் தூக்கப்படுவது நத்து எனப்படும். அரையில் பொன் வெள்ளி ஆபரணங் களனிவர் ஒட்டியாணம் கச்சாபுரம் எனப்படும். மணமாகாது இறந்த பெண்களின் மரணம் கழிச் சாவு, கன்னிச் சாவு எனப்படும். பெண்கள் கண்ணுக்கு மை தீட்டுவர். ஊஞ்சல் உழிஞ்கால் எனப்படும்.
நாயாடி:
மலையாளத்தில் மிகத் தாழ்ந்த சாதியினர் நாயாடிகளாவர். நீர்நாயின் இறைச்சியை உண்பதால் அவர்களுக்கு இப்பெயர் உண்டாயிற்று. முந்நூறு கசத்திற்குள் நாயாடி வந்தால் பிராமணன் குளித்துப் பூணுரல் மாற்றிக் கொள்ள வேண்டும். பெண்கள் நாயாடிச்சிகள் எனப்படுவார்கள். சிறுவர் மொலா யர் என்றும் சிறுமியர் மனிச்சியர் எனவும் அழைக்கப் படுவர். இவர்களுக்கு மக்கள் தாயம் உண்டு. இவர்கள் தேன், மட்டிப் பால் முதலியன எடுப்பர். ஒவ்வொரு நாயாடியும் ஒணப் பெருநாளுக்கு நம்பூதிரி இல்லத்துக்கு எட்டுயாருள்ள (கெசம்) நாலுகயிறும் நாயர் வீட்டுக்கு இரண்டு கயிறும் கொடுக்க வேண்டும். அவற்றுக்குக் கூலியாக நாயாடி நெல் பெறுவான். கயிறுகள் ஆடு மாடுகள் கட்டவும் தண்ணீர் இறைக்கவும் உதவும.
80

ந.சி. கந்தையா
ஆண் குழந்தைக்குத் தந்தையின் தகப்பன் பெயர் இடப் படும். மணப்பெண் தனியாக இடப்பட்ட ஒரு குடிசையுள் இருப்பாள். பருவமடைந்த இளைஞர் குடிசையைச் சுற்றி நின்று கூத்தாடுவர். அவர்கள் எல்லோரும் கையில் வைத்திருக் கும் தடியைக் கூரை வழியாகக் குடிசைக்குள் போடுவர். பெண் எந்தத் தடியை எடுக்கிறாளோ அத்தடிக்குரியவனே அவள் கணவனாவன். இவர்களின் கடவுளர் மல்லர், மலைவன், பறக்குட்டி முதலியோராவர். இவர்களின் சோதிடர் பறைய வகுப்பினராவர். ஒருவனுக்குக் கண் திட்டி அல்லது பேய்க் குறைபாடு இருந்தால் உப்பு, மிளகாய், புளி, எண்ணெய், கடுகு, தேங்காய், காசு என்பவைகளை ஒரு ஏனத்திலிட்டு அவனுடைய தலையை மூன்று முறை சுற்றிய பின் அவை நாயாடிக்குக் கொடுக்கப்படும். சோனகராக மாறிய நாயாடிகள் தொப்பியிட்ட நாயாடி எனப்படுவர். நாலில்லக்காரர்:
முக்குவர். p5íraibG? (Nalike):
இவர்கள் கன்னடத்தில் வாழும் கூடைமுடையும், குடை செய்யும் மக்கள். இவர்கள் ஹோலியர் அல்லது பறையர் எனப் படுவர். பேய் கூத்தாடுவர். பெண்கள் பூப்படைந்த பின் மண முடிப்பர். இவர்களின் நாட்டாண்மைக்காரன் குறிக்காரன் எனப்படுவன். அவன் புரோகிதனாக இருந்து மணங்களை நடத்துவான். இறந்தவர்களைச் சுட்ட அல்லது புதைத்த இடத்தில் மண்மேடு செய்யப்படுகின்றது. பஞ்சமர்:
ஐந்தாவது குலத்தவரும் பறையரும் அவர்கள் போன்ற சாதியினரும் பஞ்சமரெனப்படுவர். படகர் அல்லது வடுகர்:
இவர்கள் மைசூரிலிருந்து சென்று நீலகிரியிற் குடியேறி
யவர்கள். இவர்கள் கன்னடச் சிதைவான மொழி பேசுவர்.
1. கன்னடமே தமிழின் திரிபு தானே. எனவே படகா மொழி தமிழின் மிகத் திரிந்த கிளை மொழியாகும்.
81

Page 50
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
பட்டணவர்:
கிழக்குக் கடற்கரையில் கிருட்டிணா முதல் தஞ்சாவூர் வரையிலுள்ள மீன் பிடிகாரர் இப் பெயர் பெறுவர்; கரையார் (கரையர்) என்னும் பெயரும் இவர்களுக்கு வழங்கும். சில செம்படவர் ஆரியர், ஐயாயிரத் தலைவர், ஆரிய நாட்டுச் செட்டி, அச்சு வெள்ளாளன், கரைத்துறை வெள்ளாளன், வருணகுல வெள்ளாளன், குருகுலவமிசம் முதலியவற்றைத் தமது குலப் பெயர்களாக வழங்குவர். இவர்கள் பெரும்பாலும் தம்மைப் பிள்ளை என வழங்குகின்றனர். பட்டணவர் செம்பட வருக்குக் கீழ்ப்பட்டவரெனக் கருதப்படுவர். இவர்களின் சிறந்த தெய்வங்கள் குட்டி ஆண்டவன், குட்டி ஆண்டவனின் பரிவாரம், செம்பு வீரப்பன், மீனோடும் பிள்ளை என்பன. தஞ்சாவூரில் இவர்கள் கடவுள் பாவாடை ராயன். இவர்கள் இக் கடவுளையும் வலையையும் வணங்குவர். மணற்கும்பங்கள் அவர்கள் கடவுளரைக் குறிப்பனவாகும். தலைமைக்காரன் எசமானன் எனப்படுவன். இவனுக்குத் தண்டக்காரன் என்னும் துணைவன் உண்டு. இவர்களின் இழவு சொல்லிச் செல்பவன் சலவாதி எனப்படுவன். பட்டுநூற்காரர்:
இவர்கள் பிறநாடுகளிலிருந்து வந்து தமிழ்நாட்டில் தங்கிய, நெசவாளர். இவர்களின் ஆதி இடம் குசராத்து. குமரா குப்தா வின் பட்டையத்தில் (கி.பி.473) இவர்கள் 'பட்டவாயாக’ எனக் கூறப்பட்டுள்ளார்கள். இது பட்டுநூற்காரர் என்பதன் சமக்கிருத மொழி பெயர்ப்பு. இராணி மங்கம்மாளின் பட்டையத்திலும் இவர்கள் பட்டுநூற்காரர் எனக் குறிக்கப்பட்டுள்ளார்கள். பிற் காலத்தில் இவர்கள் தம்மைச் செளராட்டிரர் எனக் கூறிக் கொண்டனர். இவர்கள் தம்மைப் பிராமணர் எனவும் கூறிக் கொள்வர். குமார குப்தனின் சாசனத்தில் இவர்கள் போர் வீரரும் நெசவாளருமெனக் கூறப்பட்டுள்ளார்கள். பட்டுநூற் காரர் தெலுங்கு மொழியும் பேசுவர். இதனால் இவர்கள் நீண்டகாலம் தெலுங்கு நாட்டிலும் வாழ்ந்தார்கள் எனத் தெரி கிறது. இவர்கள் பிராமணரைப் போல நூலணிவர். பெண்கள் பூப்படையுமுன் மணமுடிப்பர். இவர்களின் மணக்கிரியை
82

ந.சி. கந்தையா
பெரிதும் பிராமணருடையது போன்றது. பெண்ணின் கழுத்தில் கட்டப்படும் தாலி பொட்டு எனப்படும். நாலாவது நாள் நாகவல்லி என்னும் சடங்கு நடைபெறும். பிறந்து பதினோ ராவது நாள் பிள்ளைக்குப் பெயரிடப்படும். எட்டாவது பிள்ளை ஆணாக இருந்தால் கிருஷ்ணா என்னும் பெயரிடப் படும். இது கிருஷ்ணன் வாசுதேவருக்கு எட்டாவது பிள்ளை யாகப் பிறந்தாரென்னும் ஐதீகத்தைப் பற்றியது. இவர்களுக்கு மரணத் தீட்டு பத்துநாள். விதவைகள் தலையை மொட்டை யடிப்பதில்லை; பொட்டைக் கழற்றி விடுவார்கள். பட்டு நூற்காரரிடையே மற்றவர்கள் விளங்கமாட்டாத வியாபார மொழி உண்டு.
பணிக்கர்:
பணிக்கன் என்னும் பெயர் அம்பட்டன், கம்மாளன், மாறன், நாயர், பாணன், பறையன் முதலியவர்களுக்கிடையில் வழங்கும். மதுரை, திருநெல்வேலிப் பகுதிகளில் பணிக்கர் சிலர் காணப்படுகின்றனர். அவர்களில் சிலர் அம்பட்டரும் சாணாருமாவர். சிலர் நெசவு தொழில் புரிவர். இப்பொழுது பணிக்கர் தம்மை இல்லம் வேளாளர் என்பர். அவர்கள் தமது பெயரைப் பிள்ளை எனத் திருத்தி வழங்குகின்றனர். பணிசவர்:
பணிசவன் என்பது பணி செய்கின்றவன் என்பதன் திரிபு. இவர்கள் இழவு அறிவிப்பர்களாவர்; சாரை அல்லது எக்காளம் ஊதுவர். இவர்களில் வலங்கை, இடங்கை என இருவகைப் பிரிவுகளுண்டு. பணிசவன் சங்கு ஊதிக்கொண்டு பிணத்துக்குப் பின்னால் செல்வன். இறந்தவர் கண்ணியமுடையவரானால் கொம்பு ஊதுவான். மற்றவர்களுக்குள் அம்பட்டன் இழவு அறிவிக்கச் செல்வான். தஞ்சாவூரிலும் தென்ஆர்க்காட்டிலும் பணிசவர்களின் வேலையைச் செய்வோர் நோக்கான் எனப் படுவர். திருநெல்வேலிப் பாசவரின் கோயில்களில் நாகசுரம் வாசித்தல், தேவரடியாட்களுக்கு நாட்டியம் பழக்குதல் முதலிய வேலைகளையும் இவர்கள் செய்வர். சிலர் அச்சு
1. தமிழின் வட இந்தியக் கிளைமொழிகளில் செளராட்டிர மொழியும் ஒன்று. இவர்கள் பல நாடுகள் சுற்றியலைந்து இறுதியில் தமிழ்நாடு வந்துள் ளமையால் இவர்கள் மொழியில் பல கலப்பு மொழிகள் சேர்ந்திருக்கும்.
83

Page 51
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
வேலையும் செய்வர். அச்சு வேலையென்பது நெசவாளர் பாவோடும் அச்சுச் செய்வது.
பணியர்:
இவர்கள் மலையாளத்திலும் நீலகிரிப் பகுதியிலும் காணப்படுவர். இவர்கள் காணியாளரின் அடிமைகளாவர். இவர்கள் உயர்ந்த இடங்களில் கூளி என்னும் தெய்வத்தை வைத்து வழிபடுவர். அவ்வகைத் திடர் குளித்தரை எனப்படும். இவர்களின் சிறந்த பொழுதுபோக்கு ஊஞ்சலாடுதல். பணியரிற் சிலர் தமது மணிக்கட்டுகளிலும் கழுத்திலும் மந்திர மோதிய நூலைக் கட்டியிருப்பர். பண்டாரம்:
இவர்கள் பிராமணரல்லாத குருமார். திருத்தணிகையில் பண்டாரங்கள் பெரிதும் காணப்படுவர். சைவ மடங்களின் தலைவரும் பண்டாரங்கள் எனப்படுவர். பண்டாரங்கள் இலிங்கந் தரிப்பர். இவர்களில் சிலர் கோயில்களில் மாலை கட்டுதல், பண் ஒதுதல் முதலிய பணிகள் செய்வர். அவர்கள் ஒதுவார், மெய்காவல் என்னும் பெயர்களும் பெறுவர். இவர்களில் இல்லறத்தார், துறவிகள் என இரு பிரிவினருண்டு. மடங்களுக்குத் தலைவராயிருக்கும் சன்னதிகள் துறவி வகுப் பினராவர். மலைகளிலும் குகைகளிலும், மரப் பொந்துகளி லும் வாழும் ஒருவகைக் காட்டுச் சாதியினரும் பண்டாரங்கள் எனப்படுவர். அவர்கள் மலையாளத்தை அடுத்த மலைகளிற் காணப்படுகின்றனர். பண்டிதர்:
மேற்கோர்ட்டு நியாயாதிபதிக்குத் துணையாகப் பண்டித னிருப்பான். 1862-ல் இப்பதவி ஒழிக்கப்பட்டது. பண்டிதன் அம்பட்டனின் பட்டப்பெயருமாகும். தமிழ் நாட்டில் மத்துவப்பிராமணரும் பண்டிதரெனப்படுவர். இவர்களிற் பலர் கோர்ட்டுகளிற் பண்டிதராக விருந்தனர். ஒரிய சாதியின ரின் சோதிடரும் பண்டிதரெனப்படுவர்.
84

ந.சி. கந்தையா
பதினெட்டான்:
இது மலையாளத்தில் தச்சருக்கு வழங்கும் பெயர்.
பத்திராளு;
இவர்கள் தெலுங்கு பேசும் வாத்தியகாரர்; இவர்கள் ஆடுவோர் பாடுவோராவர். பரவர்":
பரவர் தமது ஆதிஇடம் அயோத்தி எனக் கருதுகிறார்கள். இவர்கள் தென்னிந்திய கடலோரங்களிலும் இலங்கையிலும் காணப்படுகின்றனர். இவர்களின் முக்கிய இடம் தூத்துக்குடி. தென்கிழக்குக் கரைகளில் வாழும் பரவர் பெரும்பாலும் கிறித்துவ கத்தோலிக்க மதத்தினராவர். இவர்களுக்குப் போர்ச்சுக்கீசியரின் பெயர்கள் வழங்கும். இவர்கள் பிரான்சிஸ் சேவியரால் கிறித்துவ மதத்துக்குத் திருப்பப்பட்டவர்களாவர். இவர்களின் உரிமை வழி மக்கள்தாயம். மத்திய திருவிதாங் கூரில் இவர்கள் மரமேறுவர்; மீன் பிடிப்பர்; கிறித்துவருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் துணி வெளுப்பர்; பெண்கள் சிப்பியைச் சுட்டுச் சுண்ணாம்பு செய்வர். பரிவாரம்:
மறவர் அகம்படியாருள் ஒரு பிரிவினர். இவர்களில் சின்ன ஊழியம், பெரிய ஊழியம் என இருபிரிவுகள் உண்டு. இவர்களுள் கணவனின் உடன்பிறந்தாள் பெண்ணுக்குத் தாலி கட்டுவாள். சொந்தச் சாதியாருடன் அல்லது சமீன்தாருடன் பெண்கள் சேர்க்கை வைத்திருப்பது குற்றமாகக் கருதப்படுவ தில்லை. சமீன்தார்களுக்கு அவ்வாறு பிறக்கும் பிள்ளைகளைக் கணவர் ஏற்றுக்கொள்வர். அவ்வகைப் பிள்ளைகள் பெரிய கம்களத்தார் எனப்படுவர்.
பரதேசி:
இவர்கள் ஒருவகைப் பிச்சைக்காரர். இப்பெயர் கொச்சி வெள்ளையூதருக்கும் பெயராக வழங்கும்.
1. மீன் பரதவரே, பரவர் ஆகியுள்ளனர். 2. பிறதேசி = பரதேசி. பிற நாடுகளிலிருந்து அல்லது பிற இடங்களி லிருந்து வந்தோரைக் குறிக்கும்.
85

Page 52
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
பலிசக் கொல்லன்:
மலையாளத்தில் கேடகம் செய்யும் கொல்லர் இப்பெயர் பெறுவர். பலியர் அல்லது பொலியர்:
இவர்கள் பழநிமலையில் வாழும் குடிகள். இவர்கள் ஒருவகைத் தமிழ் பேசுவர்; பெரிதும் காடுகளிலும் மலைகளி லும் திரிவர்; பலர் மூலிகைகளைக் கொண்டு நோய்களை மாற்றுவர்; பாம்புவிடத்தைப் போக்குதற்கு நறுவல்லி வேரை வைத்திருப்பர்; விலங்குகளைப் பொறிக் கிடங்குகளிலும் அடார்களிலும் அகப்படுத்துவர்; கங்கக் கொடி இலையைக் கசக்கித் தண்ணீரில் எறிவார்கள். உடனே மீன்கள் தண்ணீரில் மிதக்கும். இவர்களின் கடவுள் மாயாண்டி. பல்லவராயர்:
இது பல்லவர் தலைவனுக்கு வழங்கும் பெயர். ஒச்சரில் ஒரு பிரிவினருக்கும் பல்லவராயன் என்னும் பெயர் வழங்கும்.
பள்ளர்:
இவர்கள் உழவுதொழில் புரியும் வேலையாட்கள். இவர்கள் முற்காலத்தில் வெள்ளாளருக்கு அடிமைகளாக இருந் தார்கள். மதுரைப் பள்ளரின் அதிகாரி குடும்பன் எனப்படு வான். கோயமுத்தூரில் பள்ளரின் அதிகாரி பட்டக்காரன் எனப் படுவான். அவனுக்குத் துணையாகவுள்ளவன் ஒடும் பிள்ளை எனப்படுவான். திருச்சிராப்பள்ளியில் பள்ளரின் அதிகாரி நாட்டுமூப்பன் எனப்படுவன். இவர்களுக்கு வண்ணார் அம்பட்டர்களுண்டு.
பள்ளி:
தெலுங்கு நாட்டில் மீன் பிடிப்போர், உழுதொழில் செய் வோர் எனப் பள்ளிகளில் இருபிரிவுகள் உண்டு. மீன் பிடிப் போர் மீன் பள்ளிகள் எனப்படுவர். பள்ளிகள் சில இடங்களில் தம்மை இரெட்டிகள் எனக் கூறுவர். மீன் பிடிப்போர் அக்கா, தேவராலு என்னும் தெய்வங்களை வழிபடுவர்.
86

ந.சி. கந்தையா
பள்ளி அல்லது வன்னியர்:
பள்ளிகள் தாம் வன்னியகுல அரச குலத்தினர் எனக் கூறுவர். திருவிதாங்கூர் அரசருள் ஒருவராகிய குலசேகர ஆழ்வார் தங்கள் சாதியரசன் எனக் கூறுவர். சென்னையில் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோயிற் பட்டையத்தின் படி அது பள்ளரால் கட்டப்பட்டது. அங்கு பள்ளிகள் குலசேகர ஆழ்வாருக்குக் குருபூசை நடத்துவார்கள். மைலாப்பூர் சிவன் கோயிலில் பள்ளிகள் கற்பூரம் கொளுத்திக் காட்டும் உரிமை பெற்றிருந்தார்கள். அவர்கள் கோயில் தமக்கு உரியதாக இருந்ததென்றும் பிற்காலத்தில் தாம் சிறிது சிறிதாக உரிமையை இழந்துவிட்டார்கள் என்றும் கூறுகின்றனர். கற்பூரம் கொளுத்தும் உரிமையைப்பற்றி சமீபத்தில் விவாதம் நடந்து விசாரணை மேற்கோர்ட்டுக்கு வந்தது. பள்ளிகள் சார்பாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் ஏகாம்பர நாதர் கோயிற் கோபுரமொன்று பள்ளி கோபுரமெனப்படும். அங்குள்ள பள்ளிகள் அது தமக்குரியதென்று கூறி அதனை ஆண்டுதோறும் பழுது பார்ப்பர். சிதம்பர ஆலயத்தைக் கட்டியவன் இரணியவன்மன் (கி.பி. 6-ஆம் நூற்றாண்டு). அவனுடைய வழித்தோன்றல்கள் தாம் என்று சிதம்பரத்துக்குக் கிழக்கே நான்கு மைல் தூரத்தி லுள்ள ஒரு பள்ளிக் குடும்பத்தினர் உரிமை கொண்டாடுவர். பள்ளிப் பொலிகரிற் சிலர் "அக்கினி குதிரையேறிய ராய ராவுத்த மிண்ட நயினார்’ (இராசராவுத்தரை வென்று அக்கி னிக் குதிரை ஏறிய) என்று பெயர் பெறுவர். தென்னார்க் காட்டில் குமாலம் என்னும் இடத்தில் பள்ளிக்குச் சிறீனிவாச ஆலயமுண்டு. அங்கு பள்ளிகள் கோயிலைச் சுற்றி வாழ்கின்ற னர். இவர்கள் கோயிற் பட்டரைப்போல உடுப்பர். பள்ளிப் பெண்களைப் பட்டர்மார் மணப்பர்; ஆனால் தமது பெண்க ளைப் பள்ளிக்குக் கொடுக்கமாட்டார்கள். சேலம் பகுதியில் ஒலைப் பள்ளி, நாகவடம்பள்ளி என இருபிரிவினருண்டு. இவை அவர்கள் அணியும் ஒலை; நாகவடம் முதலியன பற்றி வந்த பெயர்கள். பள்ளிகளும் பேரிச்செட்டிகளும் மன்னார் சாமியை வணங்குவர். கிராமத்தெய்வங்கள் ஏழுகும்பம் அல் லது கரகங்களாற் குறிக்கப்படும். இவர்களுள் பிச்சைக்காரர்
87

Page 53
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
நோக்கான் எனப்படுவர். இவர்களின் தலைமைக்காரன் பெரிய தனக்காரன் அல்லது நாட்டாண்மைக் காரனெனப்படுவான். விதவைகளின் மறுமணம் நடுவீட்டுத்தாலி எனப்படும். தலைப்பூப்பு அடைந்த பெண் முழுகிய பின் அவளைப் பலகைமேல் இருத்தி அவள் முன்னால் பிட்டுவைத்து ஆராத்தி காட்டப்படும்.
பறையர்:
18-ஆம் நூற்றாண்டில் சொனரத் (Sonnerat) என்பவர் பறையரைப் பற்றி எழுதியிருப்பது வருமாறு. மற்றவர்களோடு பேசும்போது பறையன் தனது வாயைக் கையினால் பொத்திக் கொள்ள வேண்டும். அவன் வீதியிற் போய்க்கொண்டிருந்தால் அவன் ஒரு பக்கம் ஒதுங்கி நின்று மற்றவர்களைச் செல்ல வழிவிட வேண்டும். அவனை எவராவது தீண்டினால் அவர் உடனே குளித்துத் தோய்ந்து தீட்டைப் போக்கிக் கொள்ள வேண்டும். பிராமணர் இவர்களைப் பார்த்தல் கூடாது. இவர்களுள் பல பிரிவுகளுண்டு. கோலியர் நெசவு செய்வர். வள்ளுவர் மந்திர வித்தைக்காரராகவும் குருமாராகவும் வேலை செய்வர்; நூலுமணிவர்.
பறையர் அடிக்கும் பறை உறுமி எனப்படும். இவர்களின் வண்ணான் போதராயன் எனப்படுவான். பேலூரில் (Belur), உள்ள கோயிலுள் மூன்று நாட்களுக்கு உள்ளே செல்ல இவர்க ளுக்கு உரிமையுண்டு. மேல் கோட்டையில் மூன்று நாட்களுக் குப் பிராமணருடன் ஆதிமூலத்துக்கு (கருப்பக் கிரகத்துக்குச்) செல்ல இராமானுசரால் இவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப் பட்டதென்று சொல்லப்படுகின்றது. 1799-முதல் இவர்கள் கொடிமரத்துக்கு அப்பால் செல்லாதபடி தடுக்கப்பட்டார்கள். செங்கற்பட்டிலுள்ள சிறிபெரும்புத்தூரில் திருவாரூரிற் போன்ற உரிமை பறையருக்குண்டு. வெட்டியான், தலையாரி, தண்டாசி, தோட்டி முதலிய கிராம உத்தியோகங்கள் பறைச் சாதியினருக்கு உரியதாகும்.
காஞ்சிபுரம், கும்பகோணம், சிறிவில்லிபுத்தூர் முதலிய இடங்களில் பறையர் மற்றவர்களோடு வடம் பிடித்துத் தேர் இழுப்பர். கிராம தேவதைகளுக்கு மடை போடும்போது பூசாரி
88

ந.சி. கந்தையா
பறையனின் மணிக்கட்டில் மஞ்சள் நூல்கட்டி அவனை எல்லோருக்கும் முன்னால் ஊர்வலத்தில் வரவிடுவது வழக் கம். மழையில்லாத காலத்தில் பறையர் கொடும்பாவி கட்டி இழுப்பர். பிராமணர் வருமுன், வள்ளுவா அரசர்களுக்குக் குருக்களாக இருந்தார் என்று ஸ்டுவாட் (Stuwart) கூறியுள்ளார். அவர் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட பட்டய மொன்றை இதற்கு ஆதாரமாகக் காட்டுவர். அதில் "சிறி வள்ளுவன் புவனவனாகிய உவச்சன் தினமும் அறுவரைக் கொண்டு வேலை செய்வித்து ஆலயக் கடமைகளைப் பார்க்க வேண்டும்’ எனப் பொறிக்கப்பட்டுள்ளது. 11-ஆம் நூற்றாண் டிற் பொறிக்கப்பட்ட இராசரானின் கல்வெட்டில் பறையர் உழவு, நெசவு என இரு பிரிவினராகவிருந்தனர் எனக் குறிக்கப் பட்டுள்ளது. திருவாரூரில் நடக்கும் பெரிய விழாவில் பறையன் யானை மீது ஏறியிருந்து சுவாமிக்குச் சாமரை வீசுவான். சென்னைனயில் ஜாட்ஸ்டவுனில் நடக்கும் ஏகாட்ட விழாவில் விக்கிரகத்தின் கழுத்தில் பறையன் தாலிகட்டுவது வழக்கம். நிலங்களின் எல்லையைப் பறையன் நன்கு அறி வான். எல்லையைப் பற்றிப் பிணக்கு உண்டானால் தலையில் நீர்க்குடம் வைத்து அவனை எல்லையைச் சுற்றிவரும்படி செய் தல் இன்றும் சில இடங்களில் வழக்காக உள்ளது. இதனால் மற்றச் சாதியினரிலும் பார்க்கப் பறையன் நெடுங்காலம் நாட்டில் வாழ்ந்து வருகின்றானென்று அறியப்படுகின்றது.
பறையரிருக்குமிடம் சேரி எனப்படும். பிராமணன் தொடுவதால் தமக்குத் தீட்டு உண்டாகிறதெனப் பறையர் கருது வர். பிராமணன் சேரிக்குள் நுழைந்தால் அவனைத் தலையில் சாணித்தண்ணீர் ஊற்றித் துரத்துவர். மைசூர்ப் பிராமணர் ஹோலியரின் சேரிக்குக் கூட்டாகச் சென்றால் தமக்கு அதிட்டம் உண்டாகும் எனக் கருதுவர். பிராமணன் அவ்வாறு சென்றால் ஹோலியர் திரண்டு அவனைச் செருப்பாலடித்துத் துரத்துவர்; முற்காலத்தில் சாகும்படி அடிப்பர். பத்துத் தலை முறைக்கு முன் பறையர் நெசவுக்காரராகவும், மரியாதைக் குரியவர்களாவுமிருந்தார்கள். இவர்களிற் கண்ணியமுடைய வன் பணக்காரன் எனப்படுவன். தென்னார்க்காட்டுப் பறையருள் பெரிய நாட்டான், சின்ன நாட்டான் என்னும்
89

Page 54
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
தலைமைக்காரர் உண்டு. விதவை தாலி தரிப்பதில்லை. பறையர் பெரும்பாலும் ஏழு கன்னியம்மாவை வணங்குவர். தமிழ் தெலுங்குப் பறையர் எல்லம்மா என்னும் தெய்வத்தை வண்ங்குவர். இவர்கள் தெய்வத்தைக் குறிக்கும் சிலை மீது எண்ணெய் ஊற்றி மஞ்சள் பூசி குங்குமம் தூவி மாலைகளாலலங்கரித்து வணங்குவர். பெரியபாளையத்தில் (சென்னையிலிருந்து பதினாறு மைல்) பவானி அம்மன் கோயிலுண்டு. இங்கு பறையர், பள்ளிகள், சக்கிலியர் முதலானோர் பெரும்பாலும் வழிபடுவோராவர். அங்கு அவர்கள் ஆடுகளைப் பலியிடுவதோடு நிர்வாணமாக வேப்பிலை உடை உடுத்துக்கொண்டு கோயிலைச் சுற்றி வருவர். வள்ளுவர் மற்றப் பறையரோடு திருமணம் செய்து கொள்வதில்லை. திருவிதாங்கூர், கொச்சி முதலிய இடங்களில் திருமணத்துக்குப் பந்தற்கால் நிறுத்துதல் பறையரால் செய்யப்படும். பறையன் பிராமணனுக்கு 128 அடி தூரத்தில் நிற்றல் வேண்டும். புலையன் இதற்கு இரட்டித் தூரத்தில் நிற்றல் வேண்டும். பறையன் மனைவியின் பிள்ளைப் பேற்றுக்குப் பின் ஏழு நாட்களுக்குச் சோறு உண்ணாது பழங்களையும் கிழங்குகளையும் உண்பான். நாஞ்சில் நாட்டுப் பறையருக்குச் சொத்து உண்டு. இவர்கள் அரசருக்குப் பணங் கொடுத்துப் பட்டங்கள் பெற்றுள்ளார்கள். பாண்டிப்பறையன் சாம்புவன் எனப்படுவன்.
Lur6:00Tli: '
மதுரையிலும் திருநெல்வேலியிலும் இவர்கள் தையல் வேலை செய்வர். அம்பட்டரும் வண்ணாரும் இவர் வீடுகளில் உண்ணார்கள். இவர்கள் கோயில்களுள் நுழையலாம். மலையாளப் பாணர் பேய்க் கூத்தாடுவோராவர்.
பாணோ:
இவர்கள் கஞ்சம் மாகாணத்தில் காணப்படும் நெசவாளர். சூடிய நாகபுரியிலும், ஒரிசாவிலும் நெசவு, கூடைமுடைதல் முதலிய வேலைகள் செய்யும் பாண என்னும் ஒரு சாதியினரும் காணப்படுகின்றனர். இவர்கள் மண வீடுகளிலும், பிண வீடுகளிலும், கோயில்களிலும் வாத்தியம் சேவிப்பர். பாணோ
90

ந.சி. கந்தையா
ஒருவன் கொண்டர் வகுப்புப் பெண்ணோடு விபச்சாரம் செய் தால் அவன் பெண்ணின் கணவனுக்கு எருமை, ஆடு, பன்றி, ஒரு கூடை நெல், ஒரு ரூபாய், ஒரு சுமை பானை முதலிய வற்றைக் கொடுக்கவேண்டும். கொண்டர்ப் பெண்களைப் போலவே பாணோப் பெண்களும் அவர்களுக்காக ஒதுக்கப் பட்டுள்ள தனியிடத்தில் இராக்காலத்தில் நித்திரை கொள்வர். பாண்டியர்:
அம்பட்டன், கம்மாளன், ஒச்சன், பள்ளன், வண்ணான், வேளாளன் முதலியவர்களிடையே இது பெயராக வழங்கும். மலையாளத்தில் ஈழவர் பாண்டி எனப்படுவர். பாரத்துவாசர்":
இது ஒரு பிராமண கோத்திரத்தின் பெயர். 5meomiumTLq:
இவர்கள் அம்பலவாசிகளில் ஒரு பிரிவினர். இவர்கள் கோயில்களில் பூமாலை கட்டிப் பணிவிடை புரிவர். பெண்களுக்குப் பூப்பு அடையமுன் தாலி கட்டுக் கலியாணம் நடக்கும். மணமகன் மணமகள் என்பவர்களின் கைகளை இணைப்பது மணத்தில் முக்கிய சடங்காகும்.
LITyri:
இவர்கள் அம்பலவாசிகளில் ஒரு பிரிவினர்; பத்திர காளியை வணங்குவர். பாம்பு பிடிப்போரும் பிடாரர் எனப் படுவர். பிரமசாக்தா:
இவர்கள் பிராமணருள் மத்தியானப் பறையர் எனப்படு வர். இவர்கள் மத்தியானம் முதல் ஒரு மணி வரை வீட்டுக்கு வெளியே நின்று பின் குளித்துத் தீட்டுப் போக்கிக்கொள்வர்.
1. பாரத்து வாசியே - இந்தியப் பழங்குடி மக்களோடு கலந்து இந்திய மக்களாக (பழந்தமிழராக) மாறிய பிறாமணருக்கே இப்பெயர் ஏற்பட்டது. பெரிய கூட்டமாய் வெளிநாட்டிலிருந்து வந்தோர் பெருகுசரணம் எனப் பட்டனர்.
91

Page 55
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
பிராமணர்:
தென்னிந்தியப் பிராமணரிற் பல பிரிவுகளுண்டு. அவர்க ளின் மொழிகளும் பழக்க வழக்கங்களும் வேறுபட்டுள்ளன. இவர்கள் தாம் பிரமாவின் முகத்தினின்றும் பிறந்தவர்களென நம்புகின்றனர். இருக்கு வேதிகள், சாமவேதிகள், யசுர் வேதிகள் என மூன்று பிரிவில் இவர்கள் அடங்குவர். இவை சமயக்கிரியை தொடர்பான பிரிவுகள். தாம் வாழும் இடங் களில் வழங்கும் மொழிகளையே இவர்களும் வழங்குவர்; அத்திரி, பிருகு, வசிஷ்டர், கெளதமர், காசியபர் முதலாயி னோரைத் தமது கோத்திர முதல்வராகக் கொள்வர். சிலர் அகத்தியர், அங்கீரர், அத்திரி, பிருகு, காசியபர், வதிஷ்டர், கெளதமர் எனவும் தமது கோத்திர முதல்வரைக் கொள்வர். பிராமணர் பஞ்சத் திராவிடர், கெளடர் என இருபெரும் பிரிவினராகப் பிரிக்கப்படுவர். கெளடர் மாமிசமுண்பர்; ஒரியா, கொங்கணி மொழிகளைப் பேசுவோரல்லாத தென்னிந் தியப் பிராமணரெல்லோரும் பஞ்சத் திராவிடர்களாவர். இவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டி, குசராத்திப் பிராமணர்களெனப் பிரிக்கப்பட்டுள்ளார்கள்.
தெலுங்கு பேசும் சிவாலிப் பிராமணர் கருநாடகப் பிராமணரில் அடங்குவர். பட்டர், நம்பூதிரிகள் திராவிடப் பிராமணரைச் சேர்ந்தோராவர். சமயத் தொடர்பாகப் பிராமணர் வைணவருமல்லர், சைவருமல்லர், ஸ்மார்த்தர் பிரமமே உயிர்கள் என நம்புவோர். பிராமணச் சிறுவர் எட்டு வயதுக்கு முன் பூணுரல் தரித்துக்கொள்ள வேண்டும். பூணுரல் தரிக்கும் போது சிறிய மான்தோல் துண்டு ஒன்று நூலிற் கட்டப்படும். ஐம்பது ஆண்டுகளின்முன் விபச்சாரிகள் கழுதையில் வாற் பக்கத்தைப் பார்க்கும்படி இருத்தி கிராம வீதிகளில் கொண்டு செல்லப் பட்டார்கள். பொது மக்கள் எருக்கம்பூ மாலையை அவள் கழுத்திலிட்டார்கள். விபச்சாரிகளான உப்பிலியப் பெண்களைத் தலையில் ஒரு கூடை மண்ணைச் சுமந்து கொண்டு மரத்தைச் சுற்றிவரச் செய்வது வழக்கு. இவர்களின் பிணக் கிரியை கருட புராணத்தைத் தழுவியது.
1. இவர்களுக்கென சொந்த மொழியோ பண்பாடோ கிடையாது. தமிழ் மொழியைத் திரித்து தம் மொழியை அமைத்தனர். தமிழ்ப் பண்பாட்டை தமதாக ஏற்றுக் கொண்டனர்.
92

ந.சி. கந்தையா
பில்லவர்:
இவர்கள் துளுப்பேசுவர், கள்ளிறக்கும் தென் கன்னடர். தமிழர் இலங்கை மீது படைஎடுத்தபோது இலங்கை மக்கள் பலர் திருவிதாங்கூரிலும், மேற்குக்கரைப் பகுதிகளிலும் குடியேறினார்கள். அவர்கள் திருதாங்குருக்குச் சென்றபோது தெற்கிலுள்ளது என்னும் பொருள்தரும் தென்ளையையும் கொண்டு சென்றார்கள். இவர்கள் தீயர் அல்லது ஈழவர் எனப் பட்டனர். தீவார் என்பது தீயர் எனத் திரிந்து வழங்கிற்று. இவ் வகுப்பினரே பின்பு பில்லவர் எனப்பட்டார்களாகலாம். தெங்கு இலங்கையிலிருந்து வந்ததென்பதற்கு எடுத்துக்காட் டாக பெரிப்புளூஸ், மலையாளத்திலிருந்து மேல் நாடுகளுக் குச் சென்ற பொருள்களுள் தேங்காயைக் குறிப்பிடாதிருப்ப தாகும். சிரியன் கிறித்தவரின் செப்புப்பட்டையத்தால் தீயர் பயிரிடுவோராயிருந்தனரெனத் தெரிகிறது. பில்லவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களாகலாம். இவர்களுக்கு அம்பட்டன் புரோகிதனாகவிருந்து மணக் கிரியைகள் செய்வான். இவர்க ளுக்குப் பெண் வழி உரிமையுண்டு. பிள்ளை:
இது வேளாளரின் பட்டப்பெயர். இப்பெயர் இப்பொழுது அகம்படியான், அம்பலக்காரன், கோவலன், இடையன், நாயர், நோக்கான், பணிசவன், பணிக்கன், பறையன், சாயக் காரன், தேவதாசி வகுப்பின் ஆண்களுக்கும் வழங்கும். ஐரோப்பியரின் சமையற்காரான பட்லர்களும் பிள்ளை என்னும் பெயரை வழங்குவர். வேளாளர் எனச் சொல்லிக் கொள்ளும் குறவரும் இதனை வழங்குகின்றனர். பூலான்:
இவர்கள் திருவிதாங்கூரில் குடியேறிய தமிழ் அம்பட்டர்.
பூழிஆசாரி:
பூழி (மண்) யில் வேலை செய்யும் மலையாளக் கம்மாள ரில் ஒரு பிரிவினர் இப்பெயர் பெறுவர்.
1. இலங்கைத் தீவில் இருந்து வந்தோர் தீவார் எனப்பட்டனர். இவரே தீயர் ஆயினர்.
93

Page 56
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
புள்ளுவர்:
மலையாளத்தில் சோதிடர், மந்திர வித்தைக்காரன், பூசாரி, பாம்புக் காக்களில் (பாம்புக் கோயிலிருக்கும் சோலை) பாடுவோர் இப்பெயர் பெறுவர். இவர்கள் சட்டியின் அடியை உடைத்து வெளிப்பக்கத்தில் தோல் போர்த்த ஒருவகைப் பறையைத் தட்டுவர். இவர்களுக்குத் தாலிகட்டு சம்பந்தம் முதலியன உண்டு. நாகத்தான் காக்கடவுளைச் சேவிக்கும் போது இவர்கள் பாம்பன் துள்ளு என்னும் ஆடல் புரிவார்கள். பைராகி:
இவர்கள் வட இந்தியாவினின்றும் வந்த பிச்சை எடுக்கும் மக்கள். பைராகிகள் மதத்தில் வைணவர்; தென்கலை நாமம் இடுவர்; துளசி மாலை அணிவர். பொண்டாரி:
இவர்கள் கஞ்சம் பகுதியில் வாழும் ஒரியரின் அம்பட்டர். இவர்கள் தாய் மாமன் பிள்ளையை அல்லது தந்தையின் சகோதரியின் பிள்ளையை மணத்தல் கூடாது. கலியாணத்துக்கு முன் இவர்களுக்கு வில், அம்பு அல்லது சகடை மரத்தோடு போலிமணம் நடத்தப்படும்.
(o maiTLTi:
இவர்கள் வட மலையாள அரசனின் பல்லக்குக் காவுவோர். இவர்களிற் சிலர் மாத்திரம் கள்ளிக்கோட்டையிற் காணப்படுகின்றனர். இவர்களின் நடை உடை, பேச்சு முதலியன தமிழரைப் போன்றவை. சாதாரண தமிழனைத் தொடுவதால் அரசனுக்குத் தீட்டு உண்டாகும். அப்பொழுது இவர்கள் அவனை அரண்மனையிலிருந்து ஆலயத்துக்கும் ஆலயத்திலிருந்து அரண்மனைக்கும் சுமந்து செல்வர். பொதுவார்:
கோயிற் காவல் புரியும் அம்பலவாசிகள் இப்பெயர் பெறுவர். திருவிதாங்கூரில் பொதுவர் என்பது மறவரில் ஒரு பிரிவினருக்குப் பெயர். பெண்கள் தமது சாதியிலுள்ள ஆடவரோடும் பிராமணரோடும் சம்பந்தம் வைத்துக் கொள்
94

ந.சி. கந்தையா
வர். ஆடவர் தமது சாதியிலும் நாயர்ச் சாதியிலும் சம்பந்தம் வைக்கலாம். பெண்கள் பொதுவிச்சியர் அல்லது பொது வத்திகள் எனப்படுவர்.
பொலிகர்:
இது பாளையக்காரன் என்பதற்கு இன்னொரு பெயர். பாளையக்காரரின் கீழுள்ளவர்களும் பொலிகர் எனப்படுவர். பொறோசா:
இவர்கள் கஞ்சம், விசாகப்பட்டினங்களில் வாழும் உழவர்.
மங்கலவர்:
அம்பட்டர் மங்கலவர் எனப்படுவர். இவர்கள் துளுவர், தமிழர் என இரு பிரிவினராவர். இவர்களுக்குள் திருமணக் கலப்பு இல்லை. திருமணக் காலத்தில் நாகசுரம் ஊதுதலால் இவர்கள் மங்கலவர் எனப்படுவர். கலியாணகுலம் என்பதுவும் இவர்களுக்கு மற்றொரு பெயர்.
மணவாளர்:
இவர்கள் நாயரின் ஒரு பிரிவினர். Darfuussmīgi:
இதற்குக் கண்காணிப்பவன் என்பது பொருள். இது செம்படவன், பரிவாரங்கள் என்போருக்கும் பட்டப்பெயர். இடையரில் ஒரு வகுப்பினரையும் இது குறிக்கும். இப்பெயர் (மாட்டுக்குக் கட்டும்) மணி என்பதிலிருந்து உண்டாயிற்று. இச்சொல் மணிகர் எனத் திரிந்து தமிழ் நாட்டில் கிராமத் தலைமைக்காரனைக் குறிக்கும். மண்டாதான்செட்டியார்:
இவர்கள் சிதைந்த கன்னடமொழி பேசுவர். மக்கள் தாயம் கொள்வர். இவர்கள் வேநாட்டில் வாழ்ந்தார்கள். மந்தாதனன் என்பது மகாவலி நாடு என்பதன் திரிபு. நெல்லக் கோட்டைக் கும் தீப்பக் காட்டுக்குமிடையிலுள்ள பகுதிக்கு இப்பெயர் இன்றும் வழங்கும். பூப்பு அடைந்தபின் பெண்களுக்கு
95

Page 57
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
மணமாகும். சில சமயங்களில் மணமகன் பெண்ணைப் பெறுவதற்குப் பெண்ணின் தந்தை வீட்டிலிருந்து ஒரு ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை வேலை செய்வான். மணமான பெண்கள் கணவனின் சகோதரரோடு கூடி வாழ்தல் குற்ற மாகாது. இறக்கும் தறுவாயிலுள்ளவர்களுக்குச் சோறும் பொன்னும் இட்ட ஏனத்திலிருந்து சிறிது நீரைக் குடிக்கக் கொடுப்பார்கள்.
மண்டை:
மண்டைக் கறுப்பனை வழிபடும் கள்ளர் சாதியினர் இப் பெயர் பெறுவர்.
மண்டுவர்:
தெலுங்கு நாட்டில் அலைந்து திரியும் மருத்துவர் இப் பெயர் பெறுவர். இவர்களின் மனைவியர் மருத்துவச்சிகளாகத் தொழில் புரிவர்.
LoGir63.TTg:
பழநி மலையில் வாழும் குறவருக்கு இப்பெயர் வழங்கும்.
ID616oriti:
இது திருவிதாங்கூர் மலைச் சாதியினருக்கு வழங்கும் பெயர். குழந்தை பிறந்து ஒரு ஆண்டுக்குப் பின் குடும்பத்தில் மூத்தவர் மணி கோத்த மாலையைக் குழந்தையின் கழுத்திற் கட்டி அதற்குப் பெயரிடுவார். இறந்தவர் புதைக்கப்படுவர். பிணங்களைப் புதைக்கு முன் அவற்றின் வாயில் அரிசி யிடப்படும். ஒரு ஆண்டின் பின் இறந்தவருக்கு உணவு கொடுக்கப்படும். மண்ணார் தமிழ் பேசுவர். இவர்களுக்கு அம்பட்டனும் வண்ணானும் இல்லை. உரிமை தாய் வழி. மண்ணானென்பது வண்ணானுக்கும் பெயராக வழங்கும். மதிகர்:
இவர்கள் சக்கிலியருக்குச் சமமான தெலுங்கர். இவர்களின் தேவராட்டி மாதங்கி எனப்படுவாள். மாதங்கி என்றும் கன்னியாகவிருப்பாள்; ஆனால் அவளுக்குப் பல பிள்ளைகள்
96

ந.சி. கந்தையா
இருப்பர். இவ்வாறிருத்தல் குற்றமாகக் கருதிப்படமாட்டாது. மாதங்கியின் ஆண்பால் ஆசாதி. இவர்கள் எல்லம்மாவைப் புகழ்ந்து பாடுவர். எல்லாம்மா எல்லி எனப்படுவாள். அவள் தீச்சடர்போல வெளிப்படுவாள். பிராமணர் எல்லம்மாவை இலக்குமி, கெளரம்மா, சரஸ்வதி என வழிபடுவர். கிருட்டிணா மாகாணத்தில் மாதங்கச் சிறுவர் நூல் போன்ற மெல்லிய வாரை இடத்தோள் மீது பூணுரலாக அணிவர். மாதங்கர் ஊரம்மா என்னும் தெய்வத்தையும் வழிபடுவர். ஊர்வலத்தில் மாதங்கத் தேவரடியாட்கள் பாடி ஆடுவர். இவர்களின் சடங்குகள் பிரதானம் எனப்படும். பெண்கள் பொட்டுத் தாலி அணிவர். தலைப் பூப்புக் காலத்தில் பெண்ணுக்குப் பத்து நாள் தீட்டு உண்டு. இவர்கள் சாம்பவர் எனப்படுவார்கள்.
மரக்காயர்:
மரக்காயர் பெரும்பாலும் பறங்கிப் பேட்டையிற் காணப்படுவர். இப்பெயர் மரக் கலத்தைக் குறிக்கும் மரக்காபி என்னும் அராபிச் சொல்லின் திரிபு. இவர்கள் இந்தியத் தாய்மாருக்கும் அராபியத் தந்தையருக்கும் உதித்தோர். சோன கம் என்பது அராபியாவுக்கு இன்னொரு பெயர். இந்துக்களா யிருந்து மரக்காயராக மாறியவர்கள் புளுக்கைகள் எனப்படுவர். மரக்காயர் அராபித் தமிழ் பேசுவர்; தமிழை அராபி எழுத்துக் களாலெழுதுவர்.
மராட்டி அல்லது மராசாரி:
மராத்தி மொழி பேசுவோர் மராட்டிகள் எனப்படுவர். உண்மையான மராத்திகள் கோவாவிலிருந்து வந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களின் சிறந்த தெய்வம் மகாதேவி. விதவைகள் மறுமணம் புரிவர். தஞ்சாவூரில் இருந்த கடைசி மராட்டிய அரசன் சிவாசி. இவன் 1855-ல் மரணமடைந்தான்.
upavFri:
இவர்கள் கோயமுத்தூர், கொச்சி முதலிய இடங்களிற் காணப்படுவர்; காணியாளருக்கு அடிமைகள் போல வேலை
1. மரக்கப்பல் என்னும் தூய தமிழ்ச் சொல்லே அரேபி மொழியில் "மரக்கப்” எனக் குறுகிற்று.
97

Page 58
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
கள் புரிவர்; தமிழும் மலையாளமுங் கலந்த மொழி பேசுவர். இவர்களின் குடிசைகள் பதி எனப்படும். காளி, மணக் காடாத்தா. மாரியம்மா முதலியன இவர்களின் தெய்வங் களாகும். இவர்களின் வீதிகள், சாலைகள் எனப்படும். நிலமுடையவன் மண்ணாடி எனப்படுவான். திருமணங்கள் பெண் வீட்டில் நடைபெறும். மணமகன் பெண்ணுக்குத் தாலி கட்டுவான். மூப்பன் இருவரின் கைகளையும் சேர்த்து வைப் பான். இவர்கள் இறந்து போன முன்னோரை வழிபடுவர். அவர்களுக்கு உணவு ஏழு இலைகளில் படைக்கப்படும். தலைப்பூப்பு அடைந்த பெண் தனிக் குடிசையில் ஏழு நாள் தங்குவாள். குடிசையின் முன்னால் நாழியும் விளக்கும் வைக்கப்படும். அவள் அவற்றை வலக்காலை முன்னே வைத்துக் கடந்து செல்வாள். பிணங்கள் முகம் கீழே இருக்கும்படி புதைக்கப்படும்; சில சமயங்களில் இருக்கும் நிலையிலும் புதைக்கப்படும். பெண்கள் இடது கைகளில் மாத்திரம் வளையல்கள் அணிந்திருப்பார்கள்; இரண்டு கைகளிலும் அணிந்தால் பறையன் அவற்றை உடைத்து மூப்பனுக்கு அறிவிக்க வேண்டும். மலைக்காரர்:
மலையாளத்தில் மலைகளில் வாழும் உழவர் இப்பெயர் பெறுவர். இவர்களின் தலைமைக்காரன் மலைமூத்தான் எனப்படுவன்.
மலையாளியர்:
மலையாளி என்பதற்கு மலையில் வாழ்பவன் என்பது பொருள். மகமதிய ஆட்சி தொடங்கிய காலத்தில் காஞ்சி புரத்தினின்றும் மலையாளத்திற் சென்று வாழ்ந்தோர் மலையா ளிகள் எனப்படுகின்றனர் என்னும் கதையுண்டு. இவர்கள் சேர்வராய் (Servaroy) மலைகளில் வாழ்கின்றனர். சேர்வராய் மலையில் வாழும் மக்கள் தம்மைக் காஞ்சி மண்டலம் எனக் கூறிக் கொள்வர். இவர்கள் சிவன், விட்டுணு, மாரியம்மன், துரெளபதி முதலிய கடவுளரை வழிபடுவர். சில கோயில் களில் மிகப் பழங்காலக் கல்லாயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன.
98

ந.சி. கந்தையா
இவர்கள் கோயில்களில் சத்தியஞ் செய்து வழக்குகளைத் தீர்த்துக் கொள்வார்கள்.
பொங்கல் விழாவுக்குப் பின் எருது ஆட்டம் என்னும் விழாவை இவர்கள் நடத்துவார்கள். மிக உயர்ந்த குலத்தவன் குரு எனப்படுவான். கிராமத்திலுள்ள வழக்குகளைத் தீர்க்க வரும் போது இவன் குதிரை மீதேறி வருவான்; மேலே குடை பிடிககப்படும்; பின்னால் வாத்தியங்கள் ஒலிக்கும். குரு தலைமுறையாக வருபவன். பத்துக் கிராமங்களுக்கு ஒரு தலைமைக் காரனிருப்பான். அவன் பட்டக்காரன் எனப்படு வான். திருமணக் காலத்தில் முதியவர் அறுகம்புல், வெற்றிலை களில் பாலைத் தொட்டு மணமக்களின் தலையைச் சுற்றுவர். மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவான். கலியாண நாள் இலக்கினம் எனப்படும். கன்னியின் மணம் கலியாணம் எனப்படும். விதவையின் மணம் 'கட்டிக்கிறது" எனப்படும். வியபிசாரக் குற்றத்துக்கு குரு தீர்த்தங் கொடுத்துப் பெண்ணைச் சுத்தஞ் செய்வார். இவர்கள் இறந்தவரைப் புதைப்பர். குட்ட வியாதியாளரதும் கருப்பிணிகளதும் உடல் கடப்படும்.
பெண்ணைப் பெறுவதற்கு மணமகன் பெண்ணின் தந்தை வீட்டிலிருந்து ஒரு ஆண்டாவது பணி செய்யவேண்டும். கொல்லிமலை மலையாளிகள் திருவரங்கத்துக்கு (சீரங்கத் துக்கு) மாடு நேர்ந்து விடுவர். பிணத்தைப் புதைத்த விடத்தில் அலரிச் செடி நடப்படும். கோயில் மாடுகள் பொலி எருதுகள் எனப்படும். இறந்த கோயில் மாடுகளுக்கு மரியாதை செய்யப்படும். வீட்டில் கோட்டான் இருக்காதபடி முகட்டில் புற்பிடிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். மழை வேண்டு மாயின் ஒருவர் மற்றவர் மீது சாணி உருண்டைகளை எறிவர்; சாணியாற் செய்யப்பட்ட பிள்ளையாரை எருக் கும்பத்துள் புதைப்பர். மழை வந்தவுடன் பிள்ளையாரை எடுப்பர். தலையிடி நோய் கண்டோர் தெய்வத்துக்குச் சிவப்புச் சேவல் நேர்ந்துவிடுவர். பல் நெருடுகிறவர்கள் கோயிற் பிரசாதத்தை உண்பர். திருச்சினாப்பள்ளி மலையாளிகள் தாயின் சகோதரி யின் பிள்ளையை மணப்பர். இவ்வழக்கினால் சிறுவன் பிராயமடைந்த பெண்ணை மணக்க நேரும். கொல்லிமலைப் பெண்கள் பிற ஆடவரோடு வாழலாம். பெறும் பிள்ளைகள்
99

Page 59
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
கணவனுக்குரியனவாகக் கருதப்படும். இரு பாலாரும் பல மணங்கள் செய்வர். மலையாளி என்பது மலை நாட்ட வருக்கும் பெயராகும்.
மலையார்:
இவர்கள் வடமலையாளத்திற் காணப்படும் ஒரு கூட்டத் தினர். இவர்களுக்கு நோய் வந்தால் எந்த மூர்த்தியால் (தெய்வத்தால்) நேர்ந்த நோய் எனச் சோதிடனால் அறிந்த தீர்த்து என்னும் ஒருவகைப் பேய்க்கூத்து ஆடப்படும்; உச்சவெளி என்னும் இன்னொரு கிரியையும் செய்வார்கள். இக்கிரியையில் நோயாளி போலியாக உயிருடன் புதைக்கப் படுவான். மலையாளிகள் பெரியண்ணனையும், பத்திரகாளி யையும் வழிபடுவர். அப்பொழுது வெளிப்பாடு கூறப்படும். பேய்க் கூத்துக்களிலொன்று நிணவெளி எனப்படும். இலங்கைச் சிங்களவரும் நோயைப் போக்குவதற்குப் பேயாட்டம் ஆடுவர்.
மல்பராயர்:
இவர்கள் மலைகளில் வாழும் மண்ணானிலும் மேலான சாதியினர். இவர்களுள் மக்கள் தாயமும் உண்டு. இவர்கள் மொழி மலையாளத்தின் சிதைவு. மணமகனும் மணமகளும் ஒரு இலையிலிருந்து உண்டபின் தாலி கட்டப்படும். பிறப்புத் தீட்டு தந்தைக்கு ஒரு மாதமும், தாய்க்கு ஏழு நாளும் உண்டு. இறந்தவர்களை அடக்கஞ் செய்த இடத்தில் இவர்கள் கல்
60}6) 1LILITT.
மளவாரர்:
இது அம்பலக்காரரின் பட்டப்பெயர்.
மறவர்:
இவர்கள் மதுரை, திருநெல்வேலி, வட இராமநாதபுரம் முதலிய இடங்களில் வாழ்கின்றனர். இவர்களும் கள்ளர் வகுப்பினரைப் போலப் பிராமணரின் தொடர்பு சிறிதும் இல்லாதவர். மறவர் என்னும் சொல் மறம்" என்னும் அடியா கப் பிறந்தது. கள்ளரின் உட்பிரிவில் மறவரும் காணப்படு
1. மறம் = வீரம்.
1OO

ந.சி. கந்தையா
கின்றனர். மறவரின் தலைவன் சேதுபதி எனப்படுபவன். மறவர் பெரும்பாலும் அரசரின் கீழ் போர்வீரராக இருந்தனர். இவர்களிற் பெரும்பாலோர் இப்பொழுது உழுதொழில் செய்கின்றனர். முன்பு இவர்களிற் பலர் மாடு திருடுவோராக இருந்தனர்.
திருமணத்தில் கணவனின் உடன்பிறந்தாள் பெண்ணுக்குத் தாலி கட்டுவாள். அதன் பின் வங்கு ஊதப்படும். பெண்கள் குழவி இடல் என்னும் பாட்டுப் பாடுவார்கள். மணத்துக்கு முன்பு மணமகனின் இளைய சகோதரி பெண் வீட்டுக்குச் சென்று அவள் கழுத்தில் தாலிகட்டிப் பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்வாள். சில மாதங்களின் பின் மணக்கிரியை நடப்பதுமுண்டு. பெண்கள் மறுமணஞ் செய்வார்கள். பெண் பூப்படைந்த செய்தியை வண்ணான் உறவினருக்குக் கூறுவான். 16-ஆம் நாள் அவர்களுக்கு முழுக் காட்டப்படும். இராமநாத புரத்துச் செம்பு நாட்டு மறவர் அகம்படியாரைத் தமது வேலைக்காரராகக் கருதுவர். இறந்தவனுக்கு அகம்படியானே கொள்ளிக் குடத்தைச் சுடலைக்குக் கொண்டு செல்வான். பிணக்குழியை ஆண்டி தோண்டுவான். பிணம் சாமி வைக்கப் படும். மறவரிடையே பிணத்தைச் சுடும் வழக்கமும் உண்டு. பிணத்தைச் சுமந்து செல்பவர் நில பாவாடை மீது நடந்து போவர். மூன்றாவது நாள் மண்ணினால் இலிங்கம் பிடித்து வைத்து இலிங்கத்துக்கும், இறந்தவர்களுக்கும், காக்கைகளுக் கும் பலியிடப்படும். 16-ஆம் நாள் பிணத்தைப் புதைத்த இடத்தில் நவதானியம் விதைக்கப்படும்.
சல்லி கட்டுதல் என்னும் விளையாட்டு மறவர்களுக்குள் நடைபெறும். அது இப்பொழுது அரசினரால் குறைக்கப்பட் டுள்ளது. குறிக்கப்பட்ட ஒரு தினத்தில் மூர்க்கமுள்ள எருதுகள் களரிக்குக் கொண்டு வரப்படும். அவற்றிலொன்றை அவிழ்த்து விட்டால் அது நிற்கும் கூட்டத்திற் பாய்ந்து ஒருவனைத் துரத்திச் செல்லும். அப்பொழுது அவன் நிலத்தில் விழுந்து படுத்துக் கொள்வான். அப்பொழுது அது இன்னொருவனைத் துரத்திச்செல்லும். மக்கள் ஆரவாரஞ் செய்து கொண்டு ஓடுவார்கள். மறவர் வேட்டையாடும்போது வளைதடியைப்
1. வளைதடி இன்றும் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களிடத்தில் இருந்து வருகிறது.
101

Page 60
தென்னிந்திய மக்கள் குலங்களும் குடிகளும்
பயன்படுத்துவர். அது இலக்கிற்பட்டு எறிந்தவனிடத்துக்குத் திரும்பிவரும். காளி, கறுப்பன், மூத்த கறுப்பன், பெரிய கறுப்பன், மதுரை வீரன், ஐயனார் முனிசாமி முதலியோர் இவர்களின் தெய்வங்களாவர். மறவப் பெண்கள் காதைத் துளையிட்டும் துளையைப் பெரியதாக்குவர். மறவரின் பட்டப் பெயர் தேவன். தலைவன், சேர்வைக்காரன், கரையான், இராச வம்சம் என்பன.
மஸ்தான்:
இது மகமதிய ஞானிகளுக்கு வழங்கும் பட்டப்பெயர்.
மாங்கல்யம்:
இது மாரான்களின் உட்பிரிவு. இவர்கள் நாயரின் தாலி கட் டுக் கலியாணத்தில் அட்டமங்கலங்களைக் கொண்டு செல்வர். அரிசி, நெல், தென்னங்குருத்து, அம்பு, முகம்பார்க்கும் கண்ணாடி, வெண்துகில், செப்பு முதலியன அட்ட மங்கலத்திலடங்கும்.
மாதங்கர்:
இது மதிங்கருக்கு இன்னொரு பெயர். மதிங்கர் தம்மை மாதங்க மக்கள் எனவுங் கூறுவர். இவர்களின் தெய்வம் மாதங்கி. மாதங்கரால் மரியாதை செய்யப்படும் தேவரடியாட் களுக்கும் மாதங்கர் எனப் பெயருண்டு.
மாதவர்;
இது நாயரின் உட்பிரிவினராகிய புவிக்காப்பணிக்கரின் பட்டப்பெயர்.
மாப்பிள்ளைமார்:
இவர்கள் மலையாளத்திலுள்ள கலப்பு மகமதியர். இவர்க ளின் தந்தையர் அராபியர். தாயர் திராவிடர். இவர்களின் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் மலையாளத்தில் பெருகத்தொடங்கினார்கள். பதினைந்தாம் நூற்றாண்டில் வாஸ்கோட காமா கள்ளிக்கோட்டைக்கு வந்தபோது மாப்பிள்ளைமார் அரசாங்கத்தில் அதிகாரம் பெற்றிருந்தார்கள். திப்புச்சுல்தான் மலையாளத்தை ஆண்ட காலத்தில் பலர் மகமதிய மதத்துக்கு
102

ந.சி. கந்தையா
மாற்றப்பட்டார்கள். இதனால் இவர்களின் எண் அதிகப்பட் டது. மதம் மாற்றப்பட்டவர்கள் பெரும்பாலும் முக்குவர் அல்லது கரையாராவர். மாப்பிள்ளை என்னும் சொல் மருமகன் அல்லது மணமகன் என்னும் பொருள் தரும். இப்பெயர் மலையாளத்தில் குடியேறி மலையாளிகளை மணந்த மகமதி யர், கிறித்துவர், யூதர்களைக் குறித்தது. இது இப்பொழுது மகமதியரை மாத்திரம் குறிக்கின்றது. இவர்கள் பெரும்பாலும் மருமக்கள் தாயம் உடையவர்கள். இவர்கள் மகமதிய சட்டத் தின்படி நடப்பர்; பெரும்பாலும் பல பெண்களை மணப்பர். இலக்கத் தீவுகளிலும் மாப்பிள்ளைமார் காணப்படுகின்றனர். இவர்கள் அங்கு கோயர், மாலுமி, உருக்காரன், தக்குரு, மிலிக்கன் எனப்படுவர்.
மாரார் அல்லது மாராயர்:
இவர்கள் மலையாளத்தில் மேளமடிப்போர். வடமலையா ளத்தில் இவர்கள் ஒச்சர் எனப்படுவர். இவர்கள் உயர்ந்த நாயர் குடும்பத்தினருக்கு அம்பட்டராகச் சேவிப்பர். கோட்டயம், குரும்பிர நாட்டுத்தாலுகாக்களில் இவர்கள் நாவிதர், மேளகார் ஆவர்; நாயர் இழவு வீடுகளில் புரோகிதராகச் சேவிப்பர். இவர்கள் பெண்களோடு பிராமணர் சம்பந்தம் வைத்துக் கொள் வர். வடதிருவிதாங்கூரில் இவர்கள் மாங்கலியம் எனவும் படுவர். இவர்களுக்குக் குருப்பு, பணிக்கர் முதலிய பட்டப் பெயர்களுண்டு. இவர்களில் ஒரு நூல், இரு நூல் என்னும் இரு பிரிவினருண்டு. ஒரு நூலென்பது வாழ்நாளில் ஒரு கலியாணம் மாத்திரம் செய்து கொள்ளும் பிரிவு. இவர்கள் அசுப்பாணிகள் எனவும் படுவர். உயர்ந்த மறவருக்கு ஆறு உரிமைகளுண்டு. அவை பானோ (பண்), சோணி (பாடை), திருமுற்றம் (கோயில் முற்றம் பெருக்கல்), வெளிச் சோறு (பேய்களுக்கு வெளியே வைக்கப்படும் பலிச்சோறு), புச்சோறு (தெய்வத்துக்கு வைக்கப்படுஞ்சோறு) என்பன. இழவு வீட்டில் எள்போடும் கிரியை அவனால் செய்யப்படுகிறது. மலையாளத்தில் வாத்தி யங்கள் மரம் எனப்படும். திமிலை சங்கு, செண்குலம், சென்ட(டு) முதலியவற்றை ஒருங்கே ஒலித்தல் பாணி கொட்டுகு எனப்படும்.
103

Page 61
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
மார்வாடி:
மார்வாடா தேசத்தவர் மார்வாடி அல்லது மார்வாரி எனப்படுவர். இ7 ‘**ள் பெரும்பாலும் சைவமதத்தினர்.
LOITaUIT:
இவர்கள் தெலுங்கு நாட்டுப் பறையர், மாதங்கர்களைக் குறிக்கும். இவர்களுக்கு அம்பட்டர், வாத்தியகாரர், தேவரடி யாட்கள் உண்டு. அங்கம்மா, பெத்தம்மா முதலியன இவர்கள் தெய்வங்கள். மாலரின் முக்கிய தொழில் நெசவு. திருமணம் மணமகள் வீட்டில் நிகழும்.
LDngytól:
இலக்கத் தீவுகளில் மரக்கலமோட்டும் முகமதியர் மாலுமி களெனப்படுவர்.
மாலை (மாலி):
இவர்கள் தாம் முன் காசியில் வாழ்ந்து பின் செயப்பூர் அரசரைச் சேவிப்பதற்கு வந்தார்கள் எளக் கூறுவர். பூப்படையு முன் பெண்கள் மணமுடிப்பர். விதவைகள் மறுமணஞ் செய்வர். மாலை என்பதற்கு மாலை கட்டிகள் என்பது பொருள். இவர்கள் கோயில்களில் வேலைபுரிவார்கள்; ஒரிய மொழி பேசுவார்கள். மானிகட்டான்:
இது தேவதாசிக்கு இன்னொரு பெயர்.
மீதாரக்காரன்:
இவர் தெலுங்கு, கன்னட, ஒரிய தமிழ் நாடுகளில் மூங்கிற் கூடை பாய் முதலியன முடைகின்றவர்களாவர். இவர்கள் வீருல்லு (மணமாகாது இறந்த வாலிபர்), பேராண்டாலு (மணமாகாது இறந்த பெண்கள் அல்லது கணவனுக்கு முன் இறந்தவர்கள்) என்போரை வழிபடுவர். இவர்களுள் சிவவழி பாட்டினர் இறந்தோரைச் சமாதிவைப்பர்; வைணவர் சுடுவர். இவர்கள் இயந்திரங்களை எழுதி வைத்து அடைத்த தாயத்துக்களை அணிவர்; விதவைகள் தாலியும் காப்பும்
104

ந.சி. கந்தையா
அணியமாட்டார்கள். காலின் இரண்டாவது விரலில் அணியும் மெட்டு என்னும் மோதிரமும் அணியார்கள்.
மீலதேவர்:
இவர்கள் தென்கன்னடத்துத் தேவரடியாட்களாவர்.
மீனோன்:
இது சாமரின் (வடமலையாள அரசன்) தனது எழுத்தாள னுக்குக் கொடுக்கும் பட்டப்பெயர். இப்பொழுது அது நாயரில் ஒரு பிரிவினருக்குப் பெயராக வழங்குகின்றது. மலையாளத் தில் கிராமக்கணக்கன் (கர்ணம்) மீனோன் எனப்படுவான். இப் பட்டம் கொச்சி அரசனால் பலருக்குக் கொடுக்கப்பட்டது. இது தெற்கே வழங்கும் பிள்ளைப்பட்டத்துக்குச் சமம். மீனோன் பட்டம் கொடுத்தபின் அவனுக்கு ஒலையும் எழுத்தாணியும் கொடுக்கப்படுகிறது. இப்பட்டம் பெற்றவர்களின் பெண் வழியார் மாத்திரம் இப்பட்டத்தைப் பயன்படுத்தலாம். மீனோன் என்பது போன்றது இராவ். இராவ் என்பது மராட்டிப் பட்டப் பெயர்.
முகதோரர்:
இவர்கள் கொண்டதோரரின் ஒரு பிரிவினர். இவர்களின் மொழி தெலுங்கு. அண்ணா, ஐயா, தோரா என்பன இவர்களின் பட்டப்பெயர். இவர்களில் சூரியவமிசம், நாகவமிசம் என இருபிரிவுகளுண்டு. ஒருவன் தாய்மாமன் LD956)6. மணக்கலாம். மணமகன் மணமகள் என்னும் இருவரின் விரல்களையும் தாய்மாமன் சேர்த்து வைப்பான்.
முக்குவர்:
முக்குவர் மலையாளக் கடல்களில் மீன் பிடிப்பவர்களா வர். தாழ்ந்தவகுப்பினருக்கு இவர்கள் பல்லக்குச் சுமப்பர்; ஒடக்காரராகவும் தொழில் செய்வர். பரம்பரையாக வரும் இவர்களின் தலைவன் அரையன் எனப்படுவன். இவர்களின் முக்கிய தெய்வம் பத்திரகாளி. இவர்கள் குலத்தில் ஒருவன் பூசாரியாக இருப்பான். பிராமணர் கோயில்களில் இவர்கள் நுழைதல் கூடாது. வடமலையாளத்தில் இவர்களுக்கு மருமக்
105

Page 62
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
கள் தாயமும், தெற்கில் மக்கள் தாயமும் உண்டு. இவர்களின் முக்கிய தொழில்கள் சுண்ணாம்புச் சூளைவைப்பது, மஞ்கள் சுமப்பது முதலியன. மஞ்கள் என்பது தடியில் கட்டப்பட்ட ஒரு வகை ஊஞ்சல்மீது ஆளைவைத்துச் சுமத்தல். இவர்கள் இலங்கையிலிருந்து சென்றவர்களெனக் கருதப்படுவர்.
முக்குவர் தீயரிலும் தாழ்ந்தோர். இவர்களிற் பலர் மேல் நிலைக்கு வந்துள்ளனர். இவர்களிற் பொன்னில்லம், செம்பில் லம், காரில்லம், காச்சில்லம் என நான்கு பிரிவுகளுண்டு. இவர் களுள் காவுத்தீயன் அல்லது மணிமகன் என்னும் பிரிவுமுண்டு. இவர்கள் மற்றவர்களுக்கு மயிர்வினையும் செய்வர். இவர்க ளின் சங்கங்கள் இராச்சியம் எனப்படும். பெரியவர்கள் கடவன் எனப்படுவார்கள்தலைவன் அரயன் அல்லது கரணவன் எனப் படுவார்கள். கரணவன் அரசனால் தெரியப்படுவான். இவர்க ளுக்கு மூட்டப்பட்ட ஒலைக்குடை, தடி, அரைக்குக் கட்டும் சிவப்புத்துணி முதலிய அடையாளங்களுண்டு. வெளிப்பாடு கூறுவோர் ஆயத்தன் அல்லது அத்தன் எனப்படுவர். ஆயத்தன் என்பது ஆயுதத்தன் என்பதன் மரூஉ ஆகலாம். உருக்கொள்ப வன் அல்லது தெய்வமேறுபவன் வாளை வைத்திருப்பான். பெண்கள் பூப்படைந்தபின் மணம் முடிக்கப்படுவர். கருப்ப வதிக்கு ஏழாவது மாதம் புளிக்குடி அல்லது நெய்க்குடி என்னும் சடங்கு நடத்தப்படும். குழந்தை பிறக்கும் வரையும் கணவன் தாடி வளர்ப்பான்; பிள்ளை பிறந்த பின் மூன்றாவது நாள் மயிர்வினை செய்துகொள்வான். தீட்டு ஏழு நாட்களுக் குண்டு. இறந்தவனின் மூத்தமகன் ஆறு மாதங்களுக்கு மயிர் வினை செய்து கொள்ளமாட்டான்.
முசாத்து:
இவர்கள் மலையாளத்திலுள்ள மூத்ததுகளாவர். இவர்கள் அம்பலவாசிகளிலும் உயர்ந்தோர். நம்பி, நம்பியார் என்னும் பட்டங்கள் இவர்களுக்கு உண்டு. இவர்களின் பெண்கள் மண அம்மாமார் எனப்படுவர். இளையதுகளும் மூத்ததுகளும் மலையாளத்தில் நயினாக்கள் எனப்படுவர். மூத்ததுகளின் வீடுகள் மடம், இல்லம் எனப்படும். நம்பூதிரிகள் வீடுகளுக் கும் இப்பெயர்கள் உண்டு. திருமணத்துக்கு முன் பெண்கள்
106

ந.சி. கந்தையா
திருவளையமும், குழலுமணிவர். விழாக்காலங்களில் பலக்கா வளையமணிவர்; திருமணத்துக்குப்பின் காதில் சூட்டும், கழுத்தில் தாலியுமனிவர். விதவைகள் சூட்டுமாத்திரமணிவர். மூத்ததுகள் உட்கோயிலின் படிகளைக் கழுவுவர்; விக்கிரகங் களைப் பாதுகாத்துக் கொள்வர்; கோயிற்பிரசாதம் முதலியவற் றைக்கொண்டு வாழ்வர். இவர்களின் குடும்பத்தில் மூத்தவன் மாத்திரம் மணம் செய்து கொள்வன். மற்றவர்கள் அம்பல வாசிப் பெண்களைச் சம்பந்தம் வைப்பர்.
ஆண்கள் நான்கு பெண்கள் வரையில் மணக்கலாம். மூத்த மகனுக்குத் தாய்வழிப் பாட்டனின் பெயரிடப்படும். பூணு லணிதல் ஏழுவயது முதல் பதினெரு வயதுக்கிடையில் நடை பெறும். இவர்களுக்கு மரணத்தீட்டு பத்து நாள். கோயிலுள் இருந்து இவர்கள் உண்ணலாம். மூத்ததுகள் அம்பலவாசி களிலும் உயர்ந்தோரும், முசாத்து மூத்தது என்னும் பெயர்கள் அகப்பொதுவல் என்னும் பெயரோடு ஒற்றுமையுடையன. தடம்பு மீது கடவுனின் திருவுருவம் வைத்து வீதிவலம் செய்யப்படும். தடம்பு என்பது கேடகம் போன்ற கவிழ்ந்த தட்டு. அடிகள் என்போரும் பிடாரளும் ஒருவரெனத் தெரி கிறது. பிடாரர் பூணுரலணியாது கோயிற் பூசை செய்வர்.
முடவாண்டி:
இவர்கள் கொங்கண வேளாளரில் ஒரு பிரிவினர். ஆண்டி என்பதற்குப் பரம்பரைப் பிச்சைக்காரர் என்பது பொருள்.
முதுவர்:
இவர்கள் கோயம்புத்தூர், மதுரை, மலையாளம் பகுதிகளில் காணப்படும் உழவராகிய மலைச்சாதியினர். இவர்கள் மற்றவர் களைத் தகப்பன்மார் என்பர். இவர்களுக்கிடையில் கஞ்சன், கறுப்புக் குஞ்சி, குஞ்சித, கார்மேகம் முதலிய பெயர்கள் பெரி தும் வழங்கும். கறுப்பாயி, கூப்பி, பேய்ச்சி முதலிய பெயர்கள் பெண்களுக்கு வழங்கும். கடைசியாகப்பெறும் ஆண் பிள்ளைகளுக்கு இராமன் இலக்குமணன் என்றும், இரட்டைப் பெண்களுக்கு இலட்சுமி, இராமி என்றும் பெயரிடப்படும். இவர்களின் தலைமைக்காரன் மேல்வாகன் எனவும் உதவி அதிகாரி மூப்பன் எனவும் படுவர். இவர்களுக்கு மருமக்கள்
107

Page 63
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
தாயமுண்டு. நிமித்தங்களில் இவர்களுக்கு நம்பிக்கையுண்டு. ஒருவன் மாமன் மகளை மணக்கலாம். மதம் சம்பந்தமான சடங்குகளுக்கு இவர்கள் குருமாரை அழைப்பதில்லை. இறந்தவர்களின் முகம் கீழே பார்க்கும்படியாகப் பிணத்தைப் புதைப்பர்; தீத்தட்டிக் கற்களாலும், இரும்பாலும் தீமூட்டுவர். கருங்குரங்கின் இறைச்சியை உண்பர். இருளரும் முதுவரும் மலைப்பக்கங்களில் தொங்கும் தேன் கூடுகளிலிருந்து தேனெடுப்பர்.
முத்திரையர்:
பாளயக்காரர்களுக்கு இப்பெயர் வழங்கும். இது தெலுங் கில் முத்திராசன் என வழங்கும். இத்தெலுங்குச் சாதியினர் கிருட்டிணா, வடஆர்க்காடு முதலிய இடங்களிற் காணப்படு கின்றனர். இவர்களின் பட்டப்பெயர்கள் தோராவும் நாயுடு வும். இவர்கள் ஈசல்களைப் பிடித்து வற்றலிட்டுப் பானை களில் சேமித்துவைத்து அவற்றை உணவாகப் பயன்படுத்துவர். இவர்களுக்குப் பிறப்புத் தீட்டு பத்து நாள். மூதார்:
இவர்கள் மலையாளத்திலுள்ள வாணிகம் புரியும் வகுப் பினர். பெண்கள் செட்டிச்சிகள் எனப்படுவர். இவர்கள் நாய ரின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவர். பாலக்காடு, வள்ளுவ நாடு முதலிய இடங்களில் இவர்கள் பெரும்பாலும் காணப்படுவர். இவர்களிற் சிலர் தமக்கு எழுத்தச்சன் என்னும் பட்டப் பெயரை வைத்து வழங்குவர். இவர்களுக்கு மருமக்கள் தாயமுண்டு. இவர்களின் தீட்டுக் கழிப்பு கொட்டுவன் என்னும் புரோகிதனாற் செய்யப்படும்.
மெய்காவல்:
இது பண்டாரங்களுக்கு ஒருபெயர். இவர்கள் கடவுளின் மெய்யைக் காப்பவர்கள்.
மேஸ்திரி:
இது போர்ச்சுக்கீசிய மொழியில் (மேஸ்திரி) மெய்த்திரி (Meytre) என்னும் சொல். இது இந்தியநாட்டு மொழிகளில்
108

ந.சி. கந்தையா
சென்று வழங்குகின்றது. மேஸ்திரி என்பதற்கு திறமையான வேலையாள் என்பது பொருள். இது தமிழ் நாட்டில் செம்மா ருக்கும் வேறு சில தொழிலாளருக்கும் பெயராக வழங்கும்.
மேளக்காரர்:
இவர்கள் வாத்தியக்காரர். தோரியமேளக்காரன் பெரிய மேள சேவை மாத்திரம் சேவிப்பன். தமிழ் மேளக்காரர் தேவரடியாட்களோடு சம்பந்தப்பட்ட சின்னமேள சேவனை யும் செய்வர். தேவரடியாளின் மகள் தாய் செய்து வந்த தொழிலையே செய்வாள். நட்டுவன் என்போர் தேவரடியாட் களுக்கு நடனம் பழக்குவோர்.
மொண்டி:
இலண்டா, கல்லாடிச்சித்தன், கல்லடிமங்கன் என்பன ஒரே கூட்டத்தினரைக் குறிக்கும் பெயர்கள். இவர்கள் பிச்சை எடுக்கும் பரம்பரைப் பண்டாரங்கள். பிச்சையிடாவிட்டால் இவர்கள் தமது தொடையை வெட்டுவார்கள். கல்லில் தலையை உடைப்பார்கள். வாந்தி எடுப்பார்கள்.
மொயிலி:
இவர்கள் தென்கன்னடத்தில் கோயில்களில் வேலை புரி வோர். பெண்கள் தமது கணவரோடு வாழ விரும்பாவிடிலும், விதவைகள் மறுமணம் செய்ய முடியாமலிருந்தாலும் அவர்கள் கோயிலுக்குச் சென்று கோயிற்பலிச் சோற்றில் சில உருண்டை கள் பெற்று உண்பார்கள. பின்பு அவர்கள் அரசினர் உத்தியோ கத்தரிடம் கொண்டு போகப்படுவர். அவர்கள் அவ்வாறு செய் யத் துணிந்தமைக்குக் காரணம் விசாரிக்கப்படும். பிராமணப் பெண்களாயின் கோயிலினுள் இருக்க அனுமதிக்கப்படுவார் கள். அவர்களுக்குத் தினம் உணவும் ஆண்டில் ஒரு துணியும் கிடைக்கும். அவர்கள் கோயிலைப் பெருக்கவும் சாமரை வீசவும் வேண்டும். அவர்கள் பெரும்பாலும் பிராமணரின் அல்லது உத்தியோகத்தரின் வைப்பாட்டிகளாக இருப்பார்கள். அவர்கள் பெறும்பிள்ளைகள் மொயிர் எனப்படுவர். அவர்கள் நூலணிந்து கோயிலைப் பெருக்கிக் கோயிற்பணிவிடை செய்வர். அவர்கள் தேவரடிகர் எனவும் படுவர்.
109

Page 64
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
மொராசு:
இவர்கள் மைசூரில் காணப்படுவர். மணம் பேசும் பருவம் வந்ததும் பெண்கள் வலக்கையின் மூன்றாம் நாலாம் விரல் களை வெட்டிவிடுவர். இவ்வழக்கு ஆஸ்திரேலிய, பொலி நீசிய, அமெரிக்க பழங்குடிகளிடையும் காணப்படுகின்றது.
மோகெர்:
இவர்கள் துளு மொழி பேசும் தென்கன்னட மீன் பிடிக் காரர். இவர்களின் குடியிருப்பு பட்டினமெனப்படும். சென்னையிலுள்ள மீன் பிடிக்காரர் பட்டணவர் எனப்படுவர். இவர்களின் தலைமைக்காரன் குறிக்காரன் எனப்படுவான். இப் பதவி தலைமுறையாக வருவது. இவர்களின் உரிமை பெண் வழி. கேவா என்னும் துளு அம்பட்டன் இவர்களுக்குச் சிரைக்கமாட்டான்; கொங்கணி அம்பட்டர் சிரைப்பர். குழந்தை பிறந்து ஏழாவது நாள் வண்ணாத்தி குழந்தையின் அரையில் நூல் கட்டிப் பெயரிடுவாள். இப்பெயர் சிலநாட்க ளின் பின் கைவிடப்படும்; பின் வேறு பெயரிடப்படும். இவர்களின் பட்டப்பெயர் மரக்காவேரு.
glg5ft
கொச்சித்தீவில் கறுப்பு யூதர், வெள்ளை யூதர் என இரு வகை யூதர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் நெடுநாட்க ளுக்கு முன் பாலஸ்தீன் நாட்டினின்றும் வந்தோராவர். பாஸ்கர இரவிவர்மன் என்னும் அரசன் முசிறிக்கோட்டில் வாழ்ந்த யூதனொருவனுக்கு அளித்த பட்டையமொன்று காணப்படு கின்றது. அது அவ்வரசனின் ஆட்சியில் 36-வது ஆண்டு யோசேப் இரப்பான் அஞ்சுவண்ணன் என்னும் யூதனுக்கு அளிக்கப்பட்டது. இவனுக்குக் கொடுக்கப்பட்ட உரிமைகள் வருமாறு: அவன் ஐந்து கொடிகளைப் பயன்படுத்தலாம். உலாவச் செல்லும்போது வேலையாட்கள் தீபம் பிடித்துச் செல்லலாம். யானை குதிரைகளில் ஏறிச்செல்லலாம். அரச ரைப்போல பவனி வரலாம். பகற்காலத்தில் தீவர்த்தியைப் பயன்படுத்தலாம். பலவகை வாத்தியங்கள், பெரிய மேளம் முதலியவற்றை ஒலிப்பிக்க உரிமையுண்டு. நிலபாவாடையிற் செல்லலாம். அரசரைப்போல் மேற்கட்டியின் கீழ் இருக்க
11 O

ந.சி. கந்தையா
லாம். இரப்பானின் கீழ் உள்ள எழுபத்திரண்டு குடும்பங்களும் அவனுக்குக் கீழ் அடங்கி நடக்க வேண்டும். இச்சாசனம் கலியுகம் 3481-ல் (கி.பி. 370-ல்) எழுதப்பட்டது. யூதர் சாலமன் அரசன் காலம் முதல் (கி.மு. 900 ) மலையாளக் கரைகளுக்கு வந்து வாணிகம் புரிந்தார்கள். கி.மு 6-ஆம் நூற்றாண்டில் சைரசு (Cyrus) என்னும் பாரசீக அரசனின் கீழ் அடிமைகளாக வாழ விரும்பாத யூத மக்கள் இந்தியாவில் வந்து குடியேறினர்.
ஹன்டர் (E.W.Hunter), "யூதர் கி.பி. இரண்டாம் நூற்றாண் டுக்கு முன் இந்தியாவிற் குடியேறியிருந்தார்கள்’ எனக் கூறி யுள்ளார். செங்கடலிலுள்ள மேலுஸ், ஹேமஸிலிருந்து அராபி யர் இலங்கை, மலையாளம் முதலிய நாடுகளுக்குச் சென்ற ஓர் உரோமானியர் மலையாளத்தில் ஒரு யூதர் குடியிருப்பை கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் கண்டார். விஷ் (Wish) என்பார், தோமஸ் ஞானியார் கி.பி. 5-ல் இந்தியாவை அடைந்தாரென்றும் யூதர் கி.பி. 69-ல் இந்தியாவுக்குச் சென்றனர் என்றும் கூறியுள்ளார்.
கறுப்பு யூதர், தாம் முன் வந்தவர்களென்றும் வெள்ளை யூதர் பின் வந்தவர்களென்றும் கூறுவர். கறுப்பு யூதர் யூதரல்லலென்றும் அவர்கள் யூத மதத்துக்குத் திருப்பப்பட்ட இந்தியரென்றும் வெள்ளை யூதர் கூறுவர். எருசலேம் அழிக்கப்படுவதற்குப் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் அங்கு நின்று துரத்தப்பட்டவர்களே தாம் என்று கறுப்பு யூதர் கூறுவர். அவர் கள்ளிக்கோட்டைக்கு வந்து பின் கரங்கனூரை அடைந்தார்கள். கறுப்பு யூதர் இன்னும் செப்புப்பட்டையத்திற் சொல்லப்பட்ட உரிமைகளை அனுபவிக்கின்றனர்.
அவர்கள் தமது குழந்தைகளைப் பிறந்த பின் எட்டாம் நாள் கோயிலுக்கு கொண்டு செல்லும் போது பட்டுக்குடை, தீபம் முதலியவற்றைக் கொண்டு செல்கின்றனர். மணமக்கள் வீதிவலம் வரும்போது நில பாவாடை விரித்துத் தெருக்கள் தோரணங்களால் அலங்கரிக்கப்படுகின்றன. நாலு தடிகளில் வெள்ளாடை கட்டப்பட்ட மேற்கட்டி அவர்கள் மீது பிடிக்கப் படுகிறது. தீவர்த்தியும் கொண்டு செல்லப்படுகிறது. வெள்ளை யூதர் இவை யொன்றையும் கையாளுவதில்லை. முன் வந்து குடியேறிய யூதர் அடிமைகளை வாங்கினார்கள். அவர்கள்
111

Page 65
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
அவர்களுக்கு விருத்த சேதனஞ் செய்து அவர்களை இஸ்ரவேல ரைப் போல் நடத்தினார்கள். அவர்களின் சமயக்கிரியைகளால் யூதராக்கப்பட்ட பெண் அல்லது ஆண் அடிமைகள் ஒரு போதும் விற்கப்படவில்லை. யூதர் அவ்வடிமைகளுடன் கலப்பதால் சுறுப்பு யூதர் தோன்றினார்களென சிலர் கருதி னார்கள். இதனால் கறுப்பு யூதர் முற்றாகக் கலப்பு யூதர் எனக் கூற முடியாது. வெள்ளை யூதர் பரதேசிகள் எனப்படுவர். யூத மணமக்கள் கலியாணம் முடிக்கக் கோயிலுக்குச் செல்வதன் முன் மணமகளின் உடன் பிறந்தாள் மணமகள் கழுத்தில் தாலி கட்டுவாள்.
யூரேசியர்:
இவர்கள் ஐரோப்பியத் தந்தைக்கும் இந்தியத் தாய்மாருக் கும் பிறந்தோர். சட்டைக்காரர் என்பதும் இவர்களுக்கு மற்றொரு பெயர். பறங்கி என்பதும் இவர்களைக் குறிக்க வழங்கும் பெயர். பறங்கி என்பது பிறாங்க் (Frank) என்பதன் திரிபு. பிறாங்க் என்பதற்கு ஐரோப்பியன் என்பது பொருள். இவர்கள் வலண்டிஸ் (Walandez) அல்லது உல்லாண்டி (Oolandy) எனவும் படுவர். இவை ஒல்லாந்திஸ் (Hollandis) என்பதன் திரிபு. இப்பெயர் 17-ஆம், 18-ஆம் நூற்றாண்டுகளில் ஒல்லாந்தர் வழியாக வந்தது.
யோகி:
தெலுங்குப் பிச்சை யெடுக்கும் பண்டாரங்கள் யோகிகள் எனப்படுவர். தமிழ்நாட்டில் இவர் தோட்டியான் எனப்படுவர்.
வடுகர்:
தெலுங்கு நாட்டவர் வடுகர் எனப்படுவர். தமிழ் நாட்டில் தெலுங்கு பேசுகின்றவர்களும் வடுகர் எனப்படுவர்.
வட்டக்காரர்:
இவர்கள் வன்னியர், செக்காருள் ஒரு பிரிவினர். இவர்கள் வட்டக்காட்டார்களாவர்.
112

ந.சி. கந்தையா
வண்ணத்தார்:
இவர்கள் நாயருக்கு வெள்ளை வெளுக்கும் வெளுத் தெடாதாராவர்.
வண்ணார்:
இவர்கள் தாம் வீரபத்திர வமிசத்தவர் எனக் கூறுவர். வண்ணார் அம்பட்டரிலும் தாழ்ந்த வகுப்பினர். பெண்கள் பூப்படைந்தபின் மணமுடிப்பர். திருமணத்தில் மணமகனின் உடன்பிறந்தாள் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவள். இவர்களின் சாதித் தெய்வம் குருநாதன். மலையாள வண் ணான், மண்ணான் எனப்படுவர். மலையாள மலைச்சாதியின ருள் ஒரு கூட்டத்தினரும் மண்ணாரெனப்படுவர். இவர்களை மண்ணான் அல்லது வண்ணான் எனக்கொண்டு மயங்குத லாகாது. மண்ணாருள் பெண்கள் பல கணவரை மணப்பர். மலையாளத்தில் பகவதி கோயில்களில் வண்ணான் பூசாரியாக இருப்பான்.
வலையர்:
இவர்கள் வலையால் மீன்களையும் பறவைகளையும் பிடிப் பர். அம்பலக்காரன், சேர்வைக்காரன், வேடன், சிவியான், குருவிக்காரன் முதலியனவும் இவர்களின் பெயர்களாக வழங் கும். அம்பலக்காரர் தாம் கண்ணப்ப நாயனாரின் வழித் தோன்றல்கள் எனக்கூறுவர். மணமகளின் உடன்பிறந்தாள் பெண்ணுக்குத் தாலி கட்டுவள். மணத்துக்கு முன் பெண்கள் பிள்ளைப்பெறுவது குற்றமாகக் கருதப்படமாட்டாது. அவ் வாறு பிறக்கும் பிள்ளைகள் வேறுபாடின்றிச் சாதியிற் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். விபச்சாரிப் பெண்கள் எருக்கமாலை சூட்டி சேற்றுக்கூடையைச் சுமந்து கிராமத்தைச் சுற்றிவரச் செய்வார்கள். வலையர் தெய்வங்கள் சிங்கப்பிடாரி, (ஐயனார்) பதினெட்டாம்படிக் கறுப்பன் முதலியன.
வல்லம்பர்:
இவர்கள் தஞ்சாவூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் வாழும் உழவரின் ஒரு பிரிவினர். இவர்கள் வேளாளத் தந்தை யருக்கும் வலையத் தாய்மாருக்கும் தோன்றியவர்கள் எனக்
113

Page 66
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
கருதப்படுவர். இவர்களின் சாதித்தலைவன் சேர்வை எனப்படு வன். இவர்களில் ஆடவர் தாய் மாமன் மகளை அல்லது தந்தை யின் உடன்பிறந்தாள் மகளை மணப்பர். சில சமயங்களில் பத்து வயதுப் பையனுக்கு இருபது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள பெண் கலியாணம் செய்யப்படுவாள். அப்பொழுது அவள் கணவனின் தமையன் அல்லது வளர்ந்த உறவினனைச் சேர்ந்து பிள்ளைகளைப் பெறுவாள். வள்ளுவர்:
இவர்கள் பறையர், பள்ளிகளின் புரோகிதராவர். பிராமண ருக்கு முன் வள்ளுவர் பல்லவரின் புரோகிதராக இருந்தனர். பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் நூலணிவர். இவர் களின் ஆண்களும் பெண்களும் சோசியம் சொல்வர். சாதித் தலைவன் கோற்காரன் எனப்படுவன். திருமணக்காலத்தில் மணமகன் பரியம், உறவு முறைக்கட்டு (பெண்ணின் சுற்றத் தாருக்குக் கொடுக்கும் பணம்) பந்தல் வரிசை முதலியவற் றைப் பெண் வீட்டாருக்குக் கொடுப்பான். மணவறை, குட விளக்கு, அலங்கார விளக்கு, பாலிகை விளக்கு முதலியவை களால் அலங்கரிக்கப்படும். அதைச் சுற்றிக் குடங்கள் வைக்கப்படும். இவை குடும்பத்தெய்வங்களைக் குறிப்பன. வள்ளுவர் வள்ளுவப் பண்டாரங்கள் எனப்படுவர்.
வன்னியர்:
இவர்கள் வலையன், அம்பலவர், பள்ளிகளில் ஒரு பிரிவினர்.
வாலர்:
இவர்கள் கொச்சிப் பக்கங்களில் வாழும் மீன் பிடிக்கும் குலத்தினர். இப்பெயர் வலையன் என்பதன் திரிபு. பூப்படை யும் முன் பெண்களுக்குத் தாலிகட்டுக் கலியாணம் நடத்தப் படும். ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணக்கலாம். விதவைகள் மறுமணம் புரியலாம். தலைப்பூப் பெய்திய பெண் நாலுநாள் தனியறையில் விடப்படுவாள்; ஐந்தாவதுநாள் அவள் தோய்ந்தபின் விருந்து நடைபெறும். இவர்களின் சாதித்தலைவன் அரயன் எனப்படுவன். அவன்
114

ந.சி. கந்தையா
அரசனின் "தீட்டுறத்தினாலைத் தெரிவிப்பான் (தீட்டு - எழுத்து). இவர்களுக்கு மக்கள் தாயமுண்டு. இறந்தவனின் மகன் ஒரு மாதம் மயிர்வினை செய்துகொள்ளமாட்டான். (எண்ணெய்) வன்னியர்:
மலையாளச் செக்கான் போன்று எண்ணெயூற்றுவோர் வன்னியர் எனப்படுவர். இவர் வீடுகளில் வண்ணார் உண்ப தில்லை. இவர்களின் சாதிப் பட்டப்பெயர் செட்டி, மண மாகாதவர்கள் இறந்தால் எருக்கஞ் செடிக்குப் போலி மணச் சடங்கு நடத்தப்படும்.
onuntífluuii: .
இவர்கள் அம்பலவாசிகளில் ஒரு பிரிவினர். இவர்கள் பெரும்பலும் நல்ல வைத்தியரும் சோதிடருமாவர். மணமான பெண்கள் நாயர்ப் பெண்களைப் போலத் தலையின் இடப் பக்கத்தே குடுமி முடிந்திருப்பர். இவர்களின் தாலி மாத்திரா எனப்படும். இது மத்தளம் போன்ற வடிவு உடையது. மற்ற அணிகள் எந்திரமும் குழலும். இவர்கள் நாயர்ப் பெண்களனி யும் தோடனிவர்; நெற்றியில் சந்தனத்தால் குறியிடுவர். இவர்கள் கோயிலிற் செய்யும் வேலை கழகம் எனப்படும். இது கழுவு என்னும் சொல் அடியாகப் பிறந்திருக்கலாம். கோயிலில் வறியதுகள் சொல்லும் வேலையை இவர்கள் செய்தல் வேண்டும். இவர்களுக்கு மருமக்கள் தாயமுண்டு. திருவிதாங்கூரில் ஒணத்துக்காரர் என்னும் வறியதுகளின் சொத்து ஆண்பெண் என்னும் இருபாலாருக்கும் சமமாகப் பிரிக்கப்படும். பெண்கள் பிராயமடையுமுன் தாலிகட்டுச் சடங்கு நடக்கிறது. குடிவைப்பு முறையில் இது செய்யப்படு மாயின் சம்பந்தமுறையில் கலியாணம் மறுபடியும் செய்யப் பட வேண்டியதில்லை. பருவமடைந்த பெண்கள் மணமாகும் வரை கோயிலுள் நுழைதல் கூடாது. இவர்ளுக்கு மரணத் தீட்டுப் பன்னிரண்டு நாள்.
வாலி சுக்கிரீவர்:
இலம்பாடிகள் இப்பெயர் பெறுவர். இவர்கள் தாம் வாலி சுக்கிரீவர் வழித்தோன்றல்கள் என்பர்.
115

Page 67
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
விலகுருப்பு:
இவர்கள் மலையாளக் கம்மாளருக்கும் அம்பட்டருக்கும்
குருக்கள். நாயரின் தாலிகட்டுக் கலியாணத்துக்கு இவர்கள் ஒரு
வில்லும் சில அம்புகளும் கொடுக்க வேண்டும்.
வீரபத்திரர்:
இவர்கள் தமிழ்நாட்டு வண்ணார். இவர்கள் தம்மை வீரபத்திரர் வமிசத்தவர் எனக் கூறிக் கொள்வர். வெட்டியான்:
இவன் பறைச் சேரியிலுள்ள ஒரு தொட்டியான் அல்லது தோட்டி என்னும் உத்தியோகத்தன். இவன் வயல்களுக்கு நீர் பாயும்படி கால்வாய்களைத் திறந்து விடுவன். பிரசித்தப்படுத் தும் (செய்திகனிள அறிவிக்கும்) மேளமடிப்பான். இவன் சுடலைக்குத் தலைவன். பறையரின் மணங்களில் பானைகள் வணங்கப்படும். வெட்டியான் வகுப்பினர் வலங்கையினர்.
Gauri:
இவர்கள் வேட்டையாடும் சாதியினர். இவர்களிற் சிலர் போர்வீரர்களாக இருந்தனர். வேட்டுவர் என்னும் சாதியினர் தாம் வேடருக்கும் உயர்ந்தோர் எனக் கூறுகின்றனர். விதவை கள் கணவனின் சகோதரனை மணப்பர். இவர்கள் தமது பரம் பரை கண்ணப்ப நாயனாரிலிருந்து வருகின்றதெனக் கூறுவர். வேடரின் பட்டப் பெயர் நாயக்கன். சேலம் பகுதியில் வேடன் திருவளர் எனப்படுவன். இவர்கள் கலியாணம் பொருத்துகின்ற மையால் கட்டுக்கொடுக்கிற சாதி எனப்படுவர். இவர்கள் மேல் வாயிற் பல்லை அராவிக் கூராக்கிவிடுவார்கள். காடரும் இவ்வாறு செய்வர். இவர்களின் கடவுள் சாத்தன். இவர்களும் குரங்கின் இறைச்சியை உண்பர். பூப்புக் காலத்தில் பெண்கள் தனிக் குடிசையில் ஐந்து நாட்களுக்குத் தங்கியிருப்பர். வேட்டுவர்:
இவர்கள் சேலம், கோயம்புத்தூர், மதுரைப் பகுதிகளிற் காணப்படும் உழுதொழில் செய்யும் வேட்டையாடும் மக்கள். வேடர் இலங்கை வேடருக்கு இனமுடையவர். இவர்களுக்கு
116

ந.சி. கந்தையா
அம்பட்டர் உண்டு. இவர்கள் வேட்டுவ அம்பட்டர் எனப் படுவர். வேட்டுவரில் இரு பிரிவினருண்டு. ஒரு பிரிவினர் ஆடை உடுப்பர்; மற்றவர் இலைகளை உடுப்பர். வேலக்காட்டாள்வார்:
இவர்கள் திருவிதாங்கூர் அம்பட்டரின் தலைமைக்காரர். இவர்கள் அரசனுக்கு மயிர்வினை செய்வர். வடமலையாளத் தில் இவர்கள் வலிஞ்சியான், நாவிதன், நாசுவன், எனப்படு வர். வடமலையாளத்தில் இவர்களுக்கு மக்கள் தாயமுண்டு. வேல்:
இவர்கள் மலையாளப் பறையரில் ஒரு பிரிவினர்.
மலையா மலைச்சாதியினரில் ஒரு பிரிவினரும் வேலன்மார் எனப்படுவர்.
வேளர்:
(வேளர் - குயவர்) திருவிதாங்கூரில் பறையரும் வேளான் எனப்படுவர். மலையாளத்தில் பேய்க் கூத்தாடும் பாணர் போன்ற ஒரு சாதியினர் வேளன் (வேலன்) எனப்படுவர். பெண்கள் வெளுத்தெடாத்தி எனப்படுவர். இவர்கள் பிராம ணர் கோயில்களில் நுழைதல் கூடாது. இவர்கள் தளக்கல்லுக்கு வெளியே நிற்றல் வேண்டும். இவர்களுக்குத் தாலிகட்டுக் கலியாணமும் சம்பந்தமும் தனித்தனியே நடத்தப்படும். வறிய குடும்பப்பெண் பன்னிரண்டு வயதாகியிருக்கும்போது தாலி கட்டிக் கொள்வாள். இது பகவன் தாலி எனப்படும். இவர்களுக்கு மருமக்கள் தாயமுண்டு. வேளம்பர்:
இவர்கள் கயிற்றில் ஏறிக் கூத்தாடும் கூத்தாடிகள்; கழைக் கூத்தர்.
வைராவி:
வைராவிகள் பண்டாரத்தில் ஒரு பிரிவினர். மதுரை பகுதியிற் வைராவிகள் மேளகாரரில் ஒரு பிரிவினர்.
117

Page 68
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
வடஇந்திய குலங்களும் குடிகளும் அகர்வாலா (Agarwala) - மேல் (upper) இந்தியாவில் காணப் படும் முக்கிய வணிகர்; நாக கன்னியிலிருந்து தோன்றி யவர்; சமணமதத்தினர். அகாரியர் (Agarya) - மத்திய இந்தியாவில் காணப்படும் ஆதிக் குடிகள். இவர்களின் தொழில் இரும்பு மண்ணை உலையி லிட்டு இரும்பெடுத்தல். அகார் (Ahar) - உரோகில் கண்டில் (Rohilkhand) வாழும்
இடையர். அகிர் (Akir) - வடக்கு இந்தியா, மத்திய இந்தியாவில் காணப்
படும் இடையரும் பயிரிடுவோரும். அகோம் - அசாமிலுள்ள சான் (Shan) கூட்டத்தினர். அகோரிபந்தி - ஒருவகைப் பண்டாரி வகுப்பினர். இவர்களின் மதக்கொள்கைப்படி நரமாமிசத்தையும், மலத்தையும் உண்ணலாம்.
அங்கமி - அசாம் நாட்டு நாகர். அசாலா (Hasala) - மைசூரிலே கன்னட நாட்டில் காட்டுத்
திரவியங்களைச் சேகரிக்குஞ் சாதியார். அபதானி - பிரமபுத்திராவுக்கு வடக்கிலுள்ள அசாம் மலைச்
சாதியார். அபோர் (Abor) - அசாம் காட்டுச் சாதியினர். அரட்டா (Arata) பழைய பஞ்சாப் சாதியினர். இவர்களுக்குத்
தாய்வழி உரிமையுண்டு. அரி - கிழக்கு இந்தியாவில் நகர் சுத்திசெய்யும் சாதியார். அரோரா - பஞ்சாப்பில் வாழும் வணிக கூட்டத்தார். அவான் (Awan) - பஞ்சாப்பில் வேளாண்மை புரியும்
காணியாள முசிலிம்கள்.
1. ஆக்ரா பகுதியில் வாழ்ந்து பிற பகுதிகளுக்குப் பரவிய வணிகர்களே அகர்வால்கள் ஆகும்.
118

ந.சி. கந்தையா,
அவோ (AO) - அசாம் நாகர். (இ) டார்சி (Dazi) - இந்திய தையல்தைக்கும் சாதியார். (இ)டார்ட் (Dazd) - தாதிஸ்தானிலுள்ள இமலாயப் பழங்
குடிகள். (இ) டால்வா (Data) - பிரமபுத்திராவின் வடகரையிலுள்ள
அசாம் சாதியார். (இ) டான்கர் (Dankar) - மேற்கு இந்தியாவில் வாழும் இடைச்
சாதியார். (இ) டி ஒரி (Deori) - மேற்கு இந்தியாவில் வயல் வேலை,
ஏவல் வேலை செய்யும் வெளிச்சாதியினர். (இ)டேட் (Dhed) - மேற்கு இந்தியாவில் வயல் வேலை ஏவல்
வேலை செய்யும் வெளிச்சாதியினர். (இ) லப்சா (Lapcha) - வங்காளத்திலும் இமயமலையிலுமுள்ள
மலைச் சாதியினர். (இ) லால்பெகி (Labegi) - மேல் இந்தியாவில் சுத்தம் செய்யும்
தொழிலாளர். (உ)லுஷி (Lushei) - ஓர் அசாம் சாதியார். (உ)லோகார் (Lohar) - கோதாவரி வடக்கில் வாழும் கொல்லர். (உ) லோகானா - சிந்து நாட்டில் வாணிகம் செய்யும் சாதியார். (உ) லோடா (Lodha) - வேலைபுரிவோரும் பயிரிடுவோரும்: ஐக்கிய மாகாணங்கள், ஆக்ரா, அவுட்த் முதலிய இடங் களில் காணப்படுவர். (உ)லோதா (Lhota) - அசாம் நாகசாதியார். (உ)லோய் (Loi) - அசாமில் மணிப்பூர்ப் பகுதியில் வாழும்
பழங் குடிகள். (உ)லோரி (Lor) - பலுச்சிஸ்தானத்தில் அலைந்து திரியும் சாதியார். இவர்கள் வாத்தியகாரரும் தகரவேலை செய்வோருமாவர். எருவா (Yeruva) - குறுக்கால் தாழ்ந்த சாதியினராகிய ஆதிக்
குடிகள்.
119

Page 69
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
ஒ (Ho) - மத்திய கிழக்கு மாகாணத்திலுள்ள கொலாரியர்
(முண்டர் சாதியைச் சேர்ந்தவர்). ஒசுவால் (Oswal) - இராசபுதானத்தில் மேவாரிலுள்ள வணிக
சாதியினர். ஒரயன் (Oraon) - சோட்டநாகபுரி ஆதிகுடிகளில் திராவிட
மொழிபேசுவோர். கச்சரி (Kachari) - அசாம் ஆதிகுடிகள். கச்சி (Kachi) - வடஇந்தியாவில் கசகசா பயிரிடுவோர். கச்சின் (Kachin) - பர்மாவிலும் வட எல்லைப்புறத்தும் வாழும்
ஆதிகுடிகள். * கஞ்சர் (Kanjar) - வட இந்தியாவிலும் மத்திய இந்தியாவிலும் பாய்முடைவோரும் குற்றவாளிகளுமாயுள்ள நாடோடிகள். கடபா (Gadaba) - ஒரிசாவில் வாழும் கொலாரியர். கட்டி (Gaddi) - பஞ்சாப்பில் வாழும் இடையர்; பகுதியினர்
முசிலிம்கள்; பகுதியினர் இந்துக்கள். கண்டயட் (Khandat) - ஒரிசாவில் பகுதி காணியாளரும், பகுதி
பட்டாளச்சேவை புரிவோருமாகிய சாதியார். கண்டியோகி (Hand jogi) - தென்னிந்திய பண்டாரங்களில் ஒரு பிரிவினர்; பன்றி வளர்த்தல், சில்லரை வைத்தியம் புரிதல், பாம்பாட்டுதல் முதலியன இவர்கள் தொழில். கத்தரி - பஞ்சாப்பிலும் வடமேற்கு இந்தியாவிலும் வாணிகம்
செய்யும் சாதியார். கத்தாரி (Kathari) - பம்பாய்க் காட்டுச்சாதியினர். கபூலி - ஆப்கான் அல்லது பட்டாணியர். காபூல் பகுதியில்
வாழ்ந்தோர். கயஸ்தா (Kayastha) - வங்காளத்தில் எழுத்து வேலை செய்யும் பிராமண (க்கலப்பு) சாதியார். இந்திய மேற்குக்கரை பகுதி
களிலும் உள்ளனர்.
120

ந.சி. கந்தையா,
கரன் (Karan) - ஒரிசாவில் எழுத்தாள வகுப்பினர். கலிதா (Kalita) - அசாம் விவசாயிகள். கல்டியா (Haldiya) - அகர்வாலர்களிலொரு பிரிவினர். இவர்கள்
மஞ்சளை உண்ணமாட்டார். கல்தா - ஒரிசா விவசாயிகள். ஹல்வாய் (Halwai) - வட இந்தியாவில் மிட்டாய் செய்வோர். கல்வார் (Kalwar) - வட இந்தியாவில் சாராயம் வடிப்போரும்
விற்போரும். காசி (Khasi) - அசாமில் வாழும் மன்கெமர் மொழி பேசும்
மக்கள்; இவர்களுக்குப் பெண்வழித் தாயமுண்டு. காசீரா (Kasera) - இந்தியாவில் வேலையாளர். இறைச்சியடிப்
போர், மரக்கறி வியாபாரிகள். காதோணி (Kathoni) - அசாமில் நெசவாளர். காமி (Kami) - நேபாளக் கொல்லர். காயாவால் (Gayawal) - பிராமணப் பண்டாரங்களிலொரு பிரிவினர். இவர்கள் கயாவுக்கு யாத்திரை செல்வோரிடும் தானத்தைப்பெற்று வாழ்வர். காரியா (Kharia) - சோட்டநாகபுரியிலும் மத்திய இந்தியா
விலும் வாழும் கொலாரிய ஆதிக்குடிகள்.
காரவா (Kharava) - மேற்கு இந்தியாவில் உப்பு விளை
விப்போர். காரோ (Garo) - தாய்வழி உரிமை பெறும் அசாம் பழங்குடிகள். கார்வாலி (Garwai) - இமயமலைச் சாதியார். காவிர் (Kafr) - இமாலய சாதியார். கான்கர் (Khanger) - மத்திய இந்தியாவிற் காவற்காரச் சாதியார். கான்சி (Ganchi) - மேற்கு இந்தியாவில் செக்காட்டுவோரும்
எண்ணெய் விற்போரும். காஹார் (Kahar) - வடஇந்தியாவில் மீன்பிடிகாரர், குயவர்,
வீட்டு வேலைக்காரர்.
121

Page 70
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
காஸ் (Khas) - நேபாளப் பழங்குடிகளில் ஒருவர். கிசான் (Kisan) - மேல் (upper) இந்தியாவில் பயிரிடுவோர். குஜார் (Gujar) - பஞ்சாப்பிலும் வடமேற்கு இந்தியாவிலும் காணப்படும் மந்தைமேய்ப்போர். இவர்கள் வெள்ளை
gyGq GOOTṁ6õT (white Huns) Fjög5gufaðTi.
காகி(Kaki) - அசாமிலும் பர்மாவிலும் வாழும் மலைச்
சாதியினர். கேவாட் (Kewat) - வட இந்திய மீன் பிடிக்கும், பயிரிடும் சாதி. கைபர்த்தா (Kaibartha) - வங்காளத்திலும் மீன் பிடிக்கும் ஒரு
சாதியினர்.
g 姆 始 கொச் (Kochh) - வட் வங்காளத்திலும் அசாமிலுமுள்ள ஒரு
சாதியினர். கொண்டு (Kond) - ஒரிசாவில் வாழும் திராவிட மலைச்
சாதியினர். கொரகா (Koraga) - தென் கன்னடத்தில் கூடைமுடையும்
வெளிச்சாதியினர்.
கொன்யாக் (Konyak) - அசாம் நாகர். கோ (Kho) - இமயமலைச் சாதியார்.
கோசா (Khoja) - மேற்கு இந்தியாவில் வாழும் இரண்டு
வணிகப் பிரிவினர்.
கோடகா (Kodaga) - பட்டாளத்தில் சேரும் கூர்க்க சாதியார்.
கோதா (Kota) - நீலகிரியில் வாழும் சாதியினர், வாத்தியகாரர்.
கோபா (Gopa) - வங்காள இடையர்.
கோரா (Kora) - சோட்டநாகபுரியில் குயவர்; கொலாரிய
உற்பத்தியினர்.
கோரி (Kor) - மேல் இந்தியாவில் பயிரிடும், மந்தை
மேய்க்கும் சாதியார்.
கோர்கு (Korku) - மத்திய இந்தியாவில் மலை அல்லது காட்டுச்
சாதியினர்.
122

ந.சி. கந்தையா
கோலா (Kola) - வட இந்தியாவில் இடையரும் பால்
விற்போரும்.
கோலி - மேற்கு இந்தியாவில் வேலையாட்கள். கோஷ - பஞ்சாபில் பால் விற்கும் இடையர். சட்கொப் (Sadgop) - வங்காளத்தில் பயிரிடுவோர். சண்டாளர் - இந்து சமூகத்தில் தாழ்ந்த சாதியினர். வங்காளத் தில் பயிரிடுவோர், ஒடமோட்டுவோர், மீன் பிடிப்போர் இச்சாதியினராவர். சத்தர்காய் (Chattarkhai) - ஒரிசாவில் 1886-ல் நேர்ந்த பஞ்சத்தில் சத்திரங்களிலுண்டதால் சாதியை இழந்தவர்களிலிருந்து தோன்றியவர்களும் அவர்களது கூட்டத்தினரும். சமர்கூர் (Chamargaur) - இராசபுத்திர சாதியினர். இவர்களில்
இந்து, முசிலிம் பிரிவுகளுண்டு.
சரஸ்வாட் (Saraswat) - பஞ்சாப்பிலுள்ள பிராமணரிலொரு
Srihaiasti.
சாரக் (Sarak) கிழக்கிந்தியாவில் பயிரிடுவோரும் நெசவு
செய்வோருமாகிய சாதியர்.
சவரர் - ஒரிசாவிலுள்ள கொலாரிய வகுப்பினர். சாகா - வங்காளத்தில் சாராயம் வடிப்போர், விற்போர். சாக்மா (Chakma) - கிழக்கு வங்காளத்தில் சிட்டசிகாங்கில்
வாழும் ஆதிகுடிகள். சாகிட்பெஷ்ஷா (Shagerdpesha) - ஒரிசா நாட்டில் வீட்டு
வேலைக்காரர்.
சாங் (Chang) - அசாம் நாகர். சாசா (Chasa) - ஒரிசாவில் வாழும் பயிரிடும் சாதியார். . சாந்தால் - சோட்ட நாகபுரி, பீகார், வங்காளம் முதலிய நாடு
களில் காணப்படும் கொலாரியக் குழு. சான்சிலா (Sansia) - இராசபுத்தானத்திலுள்ள குற்றம் புரியும்
சாதி.
123

Page 71
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
சிற்பாவன் (Chitpavan) - கொங்கண பிராமணரிலொரு
பிரிவினர். சின் (Chin) - அசாமிலும் பர்மாவிலுமுள்ள சாதியினர். சுத் (Sut) - அசாமில் பயிரிடுவோர். சுதார் (Sutar) - தெற்கல்லாத மற்றை இடங்களிற் காணப்படும்
g533 T. சூத்திரதார் - வங்காளத் தச்சர். சேமா - அசாம் நாக வகுப்பினர்.
சேரோ (Chero) -ஐத்கிய மாகாணங்களிற் காணப்படும் பயிரிடு
வோர்; கொலாரிய இனத்தவர்.
சோத்திரா (Chodra) - பம்பாயில் ஊர் சுற்றும் கூட்டத்தினர். சோனி (Soni) - மேற்கு இந்தியாவில் தட்டார். செளரர் (Sourar) - பஞ்சாப்பிலும் வடமேற்கு இந்தியாவிலு
முள்ள சுத்தஞ்செய்வோர். தாடோ (Thado) - அசாமிலுள்ள ஒரு சாதி. தாதிரா (Thathera) - பித்தளை வேலை செய்யும் சாதி.
தாவைவ் (Tawait) - முசிலிம் இந்துக்களுள், முசிலிம்களுக்
கிடையிலுள்ள நடனமாடும் விபச்சாரிகள்.
தாரி (Dhari) - வாத்தியகாரர்.
தானுக் (Dhanuk) - வட இந்தியாவில் வயல் வேலை
செய்வோர்.
திலி (Ti) - வங்காள எண்ணெய் வாணிகர். துமால் (Dumal) - ஒரிசாவில் பயிரிடும் சாதியார்.
தூரி (Turi) - சோட்டா நாகபுரியில் காணப்படும் விவசாயம், மூங்கில் வேலை, கூடை முடைதல் முதலிய தொழில்கள் புரிவோர்.
124

ந.சி. கந்தையா
தெய்வேந்திர குலவேளாளர் - பள்ளர் சாதிக்கு ஒரு பட்டப்
பெயர்.
தெலகா (Telaga) - தெலுங்கு நாட்டு விவசாயிகள். தேலி (Teli) - கிழக்கு இந்தியாவில் எண்ணெயாட்டுவோரும்,
எண்ணெய் விற்போரும். தேஷ்ஆஸ்த் (Deshasth) - மராட்டிப் பிராமணரிலொரு
பிரிவினர்.
தொக்ரா (Dogra) - இமயமலைச் சாதியாரில் ஒரு கூட்டத்தினர். தோம் (Dom) - சுத்தஞ் செய்யும் சாதியார். நெவார் (Newar) - குறுக்கருக்கு இனமுடையவர்களாகக் கூறிக்
கொள்ளும் நேபாள சாதியார். பதான் - வடமேற்கு எல்லைப்புறத்தில் வாழும் முசிலிம்கள். பலுச்சி - ஆப்கானிஸ்தானத்திலொரு சாதியார். பனியர் (Baniya) - வட்டிக்குப் பணங்கொடுப்போர்; வணிக ருக்கு இராசபுதனத்திலும் மேற்கு இந்தியாவிலும் வழங்கும் பெயர். பனசிகா (Banajiga) - கன்னட வணிக சாதியார்; தெலுங்கு
பலிசா போன்றவர். பன்யரா (Banyara) - திரிந்து வியாபாரஞ் செய்பவர், மந்தை வைத்திருப்பவர்களாகிய நாடோடி மக்களுக்கு வழங்கும் பெயர்.
பாட் (Bhat) - வட இந்திய பாட்டுப்பாடும் சாதியார். பாட்னி (Patni) - வடவங்காள மீன்பிடிகாரரும் கூடை இழைப்
போரும். шпағт65) – கோயிலுக்குத் தேவரடியாளாக விடப்பட்ட
கன்னடப் பெண்.
1. வணிகர் என்ற தமிழ்ச் சொல்லே, வ=ப என்பதால் பணிகர் ஆகிப் பனியா எனத் திரிந்துள்ளது. வடஇந்திய மக்கள் எல்லாம் வெவ்வேறு காலத்தில் (கி.மு. 15000 - கி.பி. 1000) வரையில் குடியேறிய பழந்தமிழர் ஆகும். இந்தியா தமிழ் இந்தியாவே ஆகும்.
125

Page 72
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
பாசி (Pasi) - வட இந்தியாவில் கள்ளிறக்குவோர்.
பாப்பன் (Babhan) - வட இந்தியாவில் காணியாளரும் பயிரிடு
வோருமாகிய கூட்டத்தினர்.
பைத்தியா (Baidya) - வங்காள மருத்துவ சாதி.
பாய்தி (Batti) - சுண்ணாம்பு சூளையிடும் சாதியார், இவர்கள்
சுண்ணாறி, டோலி எனவும் படுவர் (டோலி - மேளம்).
பாரகியா (Parahiya) - ஐக்கியமாகாண மலைச்சாதியார் பாரூய் (Barui) - ஒரு வங்காளச் சாதியினர்.
பார் (Bhar) - ஐக்கிய மாகாணத்திலும், பீகாரிலுமுள்ள
சாதியார்.
பார்காய் (Barhai) - வட இந்திய தச்சச் சாதியினர்.
பார்ஜா (Paria) - ஒரிசாவிலொரு சாதியினர்; கொலாரிய மொழி
பேசுவோர்.
பார்புஞ்சா - வட இந்திய தானிய வியாபாரிகள்.
பாங்கி (Bhangi) - தென்னிந்தியா அல்லாத இடங்களில் அழுக்
கெடுக்கும் சாதியார்.
பானவார் (Panawar) - இராசபுத்திரரில் அக்கினி குலத்தவர்.
பிராகூய் - பலுச்சிஸ்தானத்தில் வாழும் திராவிட சாதியார்;
திராவிட மொழி பேசுகிறவர்.
பிராலி (Piral) - வங்காளப் பிராமணரிலொரு பிரிவினர்.
பிரித்தியல் பணியர் (Brithiyal Banya) - அசாமில் காணப்படும்
வெளிச்சாதியார்.
பிசோனி (Besoni) - இராஜபுதனாவில் காணப்படும் கலப்புச்
சாதியார்.
1. வைத்தியர் என்ற தமிழ்ச் சொல்லே, வ=ப என்பதால், பைத்தியா என்று திரிந்துள்ளது.
2. ஐக்கியமாகாணம் இன்று உத்திரப்பிரதேசம் என அழைக்கப் படுகிறது.
126

ந.சி. கந்தையா
u 9? ffG335mtfi (Birhor) – சோட்ட நாகபுரியிற் காணப்படும் பகுதியில்
அலைந்து திரியும் சாதியார். பின்ட் (Bind) - ஐக்கிய மாகாணத்திற் காணப்படும் பயிரிடு
வோரும், வயல் வேலை செய்வோரும். புருசோ (Burusho) - இந்துக்குவில் காணப்படும் இமயமலைச்
சாதியார். புறொக்பா (Brokpa) - இந்துக்குஷில் காணப்படும் இமயமலை
ஆதிக்குடிகள். பூஜா (Bhuja) - சோட்ட நாகபுரியிலும், வங்காளத்திலும்
வாழும் கொலாரிய மக்கள். பூயின்மாலி (Bhuinmal) - கிழக்கு வங்காளத்தில் பல்லக்குச்
சுமப்போரும் ஏவல் வேலை புரிவோரும்.
பெக்கன்வாலா - பன்றியிறைச்சி விற்போர். வில்லாளர் - வில்லியரும் இராசபுத்திரரும் கலந்த கூட்டத்
தினர். மேற்கு இந்தியாவிற் காணப்படுவர். பென் இ இசிரேல் - பம்பாய் யூதர். பெண்டோபார்சா (Bondopoja) - ஒரிசாவிற் காணப்படும்
பிற்போக்கான கூட்டத்தினர். போத்தியா (Bhotiya) - இமாசலத்தின் கீழ்ப்பிரதேசத்திற் காணப்
படும் மங்கோலிய மக்கள்; நேபாள உற்பத்தியினர். போக்சா (Bhoksa) - இமயமலை அடிவாரத்திலும் ஐக்கிய மாகாணத்திலும் காணப்படும் கூட்டத்தினர்; இராசபுத்திர உற்பத்தியினர். போரா (Bohra) - மேற்கு இந்தியாவில் காணப்படும் முசிலிம்
வணிகர்கள்.
மாஃலி (Mahi) - மத்திய இந்தியாவிற் காணப்படும் கூலி
வேலை செய்வோர், கூடைமுடைவோர்.
1. வட இந்தியாவில் இவர்களை, வ=ப என்பதால் பில், பில்லவர் என்று பிறர் அழைக்கின்றனர்.
127

Page 73
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
மாக் (Magh) - வங்காளத்திலுள்ள பெளத்த வகுப்பினர். மாகரா (Mahara) - அசாமிலுள்ள ஒரு சாதியினர். மாகடா - தெலுங்கர்; தோல் வேலை செய்வோர்; சக்கிலியரை
ஒததவா. மாச்வார் (Majhwar) - மத்திய இந்திய காட்டுச் சாதியார் மாபார் (Mabar) - சிந்து மாகாணத்திலுள்ள ஒரு சாதியார். மாவர் - வங்காளத்தில் பிகாரிலுள்ள மலைச்சாதி.
மாலி - வட இந்தியாவில் வீட்டு வேலைக்காரரும் காய்கறித்
தோட்டம் செய்வோரும்.
மாலோ - வங்காஷாத்தில் மீன் பிடிக்கும் படகோட்டும்
சாதியார்.
மேகார் (Mehar) - வயல் வேலை, கூலி வேலை செய்வோர். யன்னப்பன்ட் - கோணி பின்னும் தெலுங்குச்சாதி யஸ்வா - இராசபுதன வணிகசாதியார். யாட் (Jat) - வேளாண்மை செய்யும் சாதி. யாலியகை பார்தா - வங்காளத்தில் மீன் பிடிக்கும் சாதி. யாலுவா, யாவோ - வங்காளத்திலுள்ள மீன் பிடிக்கும் சாதி. யுவாங் - ஒரிசா மலைகளில் வாழும் ஒரியர். யூகி - அசாமில் பட்டுப்புழு வளர்ப்போரும் பட்டு நெசவு
செய்வோரும். வா (Wa) - கிழக்குப் பர்மாவில் காணப்படும் ஆதிக்குடிகள். வில்லியர் (Bhil) - மத்திய இந்தியாவிற் காணப்படும் ஆதிக்
குடிகள். வெரங்கி (Fering) - வங்காளத்திலுள்ள பறங்கியர் (போர்ச்சுக்
கீசியக் கலப்பு மக்கள்).
128

ந.சி. கந்தையா
இலங்கைத் தமிழர் பழக்கவழக்கங்கள்
(இஃது இற்றைக்கு நூறாண்டுகளின் முன் சைமன் சாசிச் செட்டி அவர்களால் எழுதப்பட்ட "The Castes, Customs, Manners and Literature of the Tamils' 6Tairg)|lb (5.TaSaSolbig, எடுக்கப்பட்டது.)
கர்ப்பதானம்
இது கர்ப்பக் குறி காணப்பட்டவுடன் செய்யப்படுவது. வீடு முழுவதும் பசுச்சாணியால் மெழுகிச் சுத்தஞ் செய்யப்படு கிறது. தலைவாயிலில் அமைக்கப்பட்ட பீடத்தில் பிள்ளையார் பிடித்து வைக்கப்படுகிறது. புரோகிதர் தேங்காயுடைத்து ஓமம் வளர்த்துப் பூசை செய்தபின் கருப்பிணிக்கு ஆசிர்வாதஞ் செய்வார். இதற்குக் கூலியாக பணம், துணி அல்லது மாடு கொடுக்கப்படுகிறது.
பும்சவானம்
இது மூன்றாவது மாதத்தில் செய்யப்படுகிறது. மேற் கூறியதுபோல் செய்த பின் பெண்கள் கருப்பவதியின் தலையைச் சுற்றி ஆலத்தி எடுப்பார்கள். பெண்ணின் தந்தை ஒரு சோடி காப்பைப் பெண்ணுக்குக் கொடுப்பார்.
சீமந்தம்
இது ஏழாவது மாதத்தில் செய்யப்படுவது. கருப்பிணியின் சுற்றத்தவர் பந்தலின் கீழ் கூடியிருப்பர். அவர்கள் மூன்று பானையில் சோறு சமைத்துத் தெய்வங்களுக்குப் படைப் பார்கள். பெண் கலியாண உடையோடு முன்னால் வைக்கப் பட்டுள்ள உரலில் வளைந்து கைவிரலால் தொட்டுக் கொண்டு நிற்பாள். கணவனின் பகுதியைச் சேர்ந்த பெண்கள் அகப்பை யில் சிறிது பாலை எடுத்து ஒவ்வொருவராக அவள் தோளில் வார்ப்பார்கள். சில பகுதிகளில் கோயிலிலிருந்து கொண்டு
f 129

Page 74
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
வரப்பட்ட தீர்த்தத்தை அவள் உறிஞ்சிக்குக்கும்படி கொடுப் பார்கள்.
பெண் கருப்பமாக இருக்கும்போது பெண்ணின் கணவன் தாடியை வெட்டுவதில்லை. விரதங்களனுட்டிப்பான். குழந்தை பிறப்பதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களின் முன் குடியிருக்கும் வீட்டிலிருந்து பெண் இன்னொரு இடத் துக்கு மாற்றப்படுவாள். இது பிள்ளைப்பேற்றால் வீடு தீட்டடையாமலிருப்பதற்காகவாகும். பிள்ளைப்பேற்றின்பின் 16, 21, அல்லது 31 நாட்களின் பின் புரோகிதர் வீட்டுக்குச் சென்று தீட்டுக் கழிப்பார். குழந்தை பிறந்ததும் தந்தை சோதிட ரிடம் சென்று சாதக பலனை அறிகிறார். குழந்தை பிறந்து பத்து அல்லது பன்னிரண்டு நாட்களின் பின் பிள்ளைக்குப் பெயரிடப்படுகிறது. பெரும்பாலும் பெயர் தந்தையாலிட்ப் படுகிறது.
12 அல்லது 16-வது நாளில் காது குத்தப்படுகிறது. பெரும் பாலும் இது 6-வது அல்லது 8-வது மாதத்தில் சோறுதீற்றுச் சடங்கு நடைபெறுகிறது. கிரியை முடிவில் குழந்தைக்குச் சிற்றாடையுடுத்தி குழந்தையைக் கோயிலுக்கு எடுத்துச் சென்று சிற்றாடை கோயிலுக்குக் கொடுக்கப்படுகிறது. முதலாவது அல்லது மூன்றாவது வாரத்தில் முடி இறக்கப்படுகிறது. உச்சி யில் அல்லது நெற்றிக்குமேல் ஒரு பிடி மயிர் விட்டு நாவிதன் தலையை மழித்து விடுவான். சில பகுதிகளில் உறுமால்கட்டு என்னும் விருந்துக் கொண்டாட்டம் நடக்கும் வரையில் இளைஞர் தலையை மழித்துக்கொள்ள மாட்டார்கள். சிறுவர் சிறுமியரைப் பள்ளிக்கு வைத்தல் ஏடு தொடக்குதல் எனப் படுகிறது. பள்ளிக்கூட ஆசிரியர் மூன்று பனை ஓலைச் சட்டங் களில் அரிவரியை எழுதி எழுத்துக்களுக்கு மஞ்சள் பூசித் தூபங்காட்டிக் கொடுப்பது இக்கிரியையாகும். சிறுவர் பள்ளிக்குச் செல்லும் வயது 5. பெண் பருவமடைந்ததும் சாமர்த்தியக் கலியாணம் நடைபெறுகிறது. பூப்பு அடைந்ததும் அவள் வீட்டில் மறைவான ஒரு இடத்தில் ஏழு அல்லது 11-நாட்களுக்கு விடப்படுகிறாள். பின்பு அவளுக்கு முழுக் காட்டப்படுகிறது. அப்பொழுது நண்பரும் சுற்றத்தவரும் அழைக்கப்படுவார்கள். முழுக்காட்டும் போது பெண்கள்
130

ந.சி. கந்தையா
ஒருவர் மீதொருவர் மஞ்சள் நீர் தெளித்துக் கொள்வர். பின் பெண்ணுக்கு ஆராத்தி காட்டுவார்கள். சில பகுதிகளில் மூன்றாவது நாள் கலியாணமான பெண்கள் கூடியிருந்து சில கிரியைகளின் பின் பெண்ணைச் சுற்றி நின்று கைதட்டி ஆடுவார்கள். (இவ்வழக்கங்கள் இப்பொழுது பெரும்பாலும் மறைந்துவிட்டன.)
திருமணம்
திருமணப்பேச்சு மணமகனின் தந்தையால் தொடங்கப் படுகிறது. தொடங்குமுன் அவன் இரு பகுதியாரின் சாதகங் களையும் சோதிடர்மூலம் பார்த்துப் பொருத்தமிருக்கிறதா என்று அறிந்து கொள்வான். கலியாணம் நிச்சயமானதும் மணமகனின் தந்தை, முன்னால் மேளம் அடித்துச் செல்ல சில நண்பர்களுடன் ஏழு அல்லது 9 வாழைக் குலைகளுடனும் மஞ்சள் பூசிய தேங்காய்களோடும் பெண்ணின் தந்தை வீட்டுக்குச் சீதனம் நிச்சயிப்பதற்குச் செல்வான். அவர்கள் ஒரு நிபந்தனை அல்லது பட்டோலை எழுதிக்கொண்டு கலியாணத் துக்கு நாள் வைப்பார்கள்.
இரு பகுதியார் வீட்டு முற்றங்களிலம் பந்தலிடப்படும். எத்தனை பந்தற்கால்கள் நட வேண்டுமென்பதில் சில சமயங் களில் தர்க்கம் எழுவதுண்டு. முதற் பந்தற்கால் வடகிழக்குத் திசையில் நடப்படும். இதுஒதிய மரக்காலாக இருக்கும். நடும்முன் அதற்குச் சந்தனம், மஞ்சள் குங்குமம் முதலியன பூசி மாவிலை, தருப்பைப் புல் முதலியன கட்டப்படும். நடுவதன் முன் பருத்திக் கொட்டை கலந்த பால் வார்த்து தேங்கா யுடைக்கப்படும். பந்தல் வெள்ளைகட்டி பாக்குக் குலைகள், தென்னம் பூ, இலைகள், கண்ணாடி விளக்குகள், காகிதப் பூக்கள், வத்தித் தாள்களால் அலங்கரிக்கப்படும். பந்தலின் முன் வில் வடிவாகக் கம்புகள் கட்டித் தோரணம் தூக்கி வாழைகள் நட்டு அலங்கரிக்கப்படும்.
பந்தலின் மத்தியில் கலியாணக் கால் நாட்டப்பட்டிருக் கும். இஃது அரசாணிக்கால் எனப்படும். அதன் பக்கத்தில் கிண்டப்பட்ட ஒமகுண்டம் சாணியால் மெழுகப்பட்டிருக்கும்.
131

Page 75
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
இதன் பக்கத்தில் விளக்குகள் கொளுத்தி வைக்கப்பட்டிருக் கும். அவற்றின் பக்கத்தில் களிமண்ணால் செய்த யானையின் முதுகில் மூன்று அல்லது ஏழு, நிறம் பூசிய பானைகள் ஒன்றின் மேலொன்றக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். மேலே இருக்கும் பானையின் வாயில் மஞ்சள் பூசிய தேங்காய் வைக்கப்படும்.
மணமகன் பகுதியார் மணமகள் வீட்டுக்குத் தாலி கூறை களுடன் செல்வார்கள். செல்வர் பல்லக்கில் அல்லது குதிரை மேலேறிப் போவர். வண்ணான் வீதியில் நில பாவாடை விரித்துச் செல்வான். வேறு இருவர் சாமரை வீசுவர். நால்வர் மேற்கட்டி (மோலாப்பு) பிடிப்பர். வாத்தியகாரர் வாத்திய மொலிப்பர்; இரு நாவிதர் சங்கு ஊதுவர். நாட்டியப் பெண்கள் நாட்டிய மாடிச் சிெல்வர்; பல இளைஞர் தீவட்டி, வெள்ளைக் குடை, கொடி, விருது முதலியன பிடித்துச் செல்வர்.
மணமகன் வந்ததும் மணமான பெண்கள் ஆராத்தி காட்டு வர். பெண்ணின் தாய் அல்லது சகோதரி ஒரு கிண்ணத்தில் பிசைந்த வாழைப்பழத்தையும், பாலையும் பந்தலிலுள்ள பீடத் தில் வைக்கும்படி கொடுப்பர். வீட்டில் மறைவாக இருந்த பெண் இப்பொழுது பல்லக்கில் கோயிலுக்கு எடுத்துச் சென்ற பின் பந்தலுக்கு கொண்டுவரப்படுவாள். இருவரும் கிழக்கு நோக்கியிருக்கும்படி அங்குள்ள பீடத்தில் இருத்தப்படு வார்கள்.
புரோகிதர் பெண்ணின் இடது கையிலும் மணமகனின் வலது கையிலும் கங்கணங் கட்டியபின் கிரியைகளைப் புரிவர். தாலியை மணமகனின் சகோதரி எடுத்துப் புரோகிதரிடம் கொடுப்பாள். அவர் அதற்குத் தூபங்காட்டியபின் சபையோ ரிடத்தில் கொடுப்பார். அவர்கள் ஒவ்வொருவராக அதை ஆசிர்வதித்துத் தொடுவார்கள். பின்பு மணமகன் தாலி கட்டுவான். பின்னால் நிற்கும் அவனுடைய சகோதரி அதனை நன்றாகக் கட்டி விடுவாள். பின்பு அவ்விடத்திற் கூடியிருக்கும் கலியாணமான பெண்கள் நெல்லும் வெற்றிலையும் வைத்த நாழியால் மணமகன மணமகள் என்னும் இருவரின் தலையை யும் சுற்றுவார்கள். அப்பொழுது புரோகிதர் தேங்காயுடைப்
132

ந.சி. கந்தையா
பார். பின் அருந்ததி காட்டுதல், அம்மி மிதித்தல் முதலிய கிரியைகள் நடைபெறும்
மரணம்
ஒருவனுக்கு மரணம் அணுகும்போது புரோகிதர் அழைக்கப்படுகிறார். அவர் சிறிது பஞ்ச கெளவியத்தை அவன் வாயினுள் விடுவார். பின்பு நோயாளி பசு மாட்டின் வாலைய்ை பிடித்துப் புரோகிதருக்கு அதனைத் தானமாகக் கொடுப்பான். மரணமடைந்ததும் தலை வடக்கே கிடக்கும் படி பிரேதம் கிடத்தப்படுகிறது. பக்கத்தில் நிற்பவர்கள் 'சிவா? என்று மூன்று முறை பிரேதத்தின் காதில் சொல்லி நெற்றிக்கும் நெஞ்சுக்கும் திருநீறு பூசுவர். மரணச் செய்தி சங்கு ஊதி அயலவர்க்கு அறிவிக்கப்படும்.
பெண்கள் சவத்தைச் சுற்றியிருந்து ஒப்பாரிவைத்தழுவர். முற்றத்தில் நாலு கம்புகள் நட்டு வெள்ளைகட்டிப் பந்தலிடப் படும். அங்கு பிணம் எள்ளெண்ணையும் அரப்பும் தலையில் வைத்து முழுக்காட்டியபின் பந்தலின் மத்தியில் கிடத்தப் படும். பின்பு பிணம், பாடை அல்லது தண்டிகையில் வைத்துத் தலை முன்புறம் நிற்கத் தக்கதாகச் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும். செல்லும் வழியில் அரிசிப்பொரி, பருத்தி விதை, அத்திஇலை, காசு என்பன எறியப்படும். பிணத்தை விறகின் மீது கிடத்தியபின் வாய்க்கரிசி போட்டுக் கொள்ளிக் குடமுடைத்துத் தீ மூட்டப்படும். ஈமச் சடங்குக்குச் சமூக மாயிருந்தோர் எல்லோரும் நீராடுவர்.
இறந்தவனின் மனைவி கைம்பெண் எனப்படுவாள். இவளுடைய தாலி மூன்றவது நாள் கழற்றப்படும்.
புத்தளக் கரையார்
புத்தளக் கரையார்களிடையில் மூன்று வகைக் கலியா ணங்கள் நடைபெறுகின்றன. ஒன்று மாலை மணம். மணமக னின் சகோதரி பெண்ணை பூமாலை வாசனைப் பொருள் களாலலங்கரித்த பின் அவள் கழுத்தில் தாலியணிவாள். கலியாணம் செய்துகொண்ட இருவருக்கும் ஒருமித்து வாழப்
133

Page 76
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
பிரிய மில்லாவிடில் அவர்கள் பிரிந்து கொள்ளலாம். பிரிந்து கொள்ள விரும்பும் பகுதி கிட்ட உள்ள கோயிலுக்கு 25 இறசால் கொடுக்கவேண்டும்.
இரண்டாவது மணம் சிறுதாலி. இது யாதும் கிரியை களில்லாமல் முன் கூறியது போலத் தாலி தரித்தல். கலியாண நீக்கம் செய்து கொள்ள விரும்பும் பகுதி 25 இறசால் ஆறு பணம் கோயிலுக்குத் தண்டம் கொடுக்க வேண்டும்.
மூன்றாவது மஞ்சள் பூசல். இது தாலிகட்டாமல் மணஞ் செய்துகொள்வது. மணமகனின் சகோதரி பெண்ணின் உடையில் அரைத்த மஞ்சளைப் பூசி விடுவாள். கலியாண நீக்கம் செய்து கொள்ளும் பகுதி ஆறு இறசால் மூன்று பணம் தண்டமாகக் கட்டவேண்டும்.
134

ந.சி. கந்தையா
அணிவகை - ஆடவர் அணிபவை ஒட்டு - இரத்தினம் வைக்கப்பட்ட பொன் வளையம். காதில்
அணியப்படுவது. கடுக்கன் - காதில் அணியப்படுவது. இதில் பல வகை
களுண்டு. செட்டிக்கடுக்கன் - 10 முதல் 11 அங்குலச் சுற்றளவுள்ளது. பொன் கம்பிகளை முறுக்கிச் செய்யப்படுவது. நடுவில் இரத்தினம் வைக்கப்பட்டிருக்கும். கொழும்புச் செட்டிகள் அதல் ஐந்து அல்லது ஆறு வளையங்களை ஒவ்வொரு காதிலுமணிவர். சூட்டுக்கடுக்கன் - நீண்ட வட்டமான வளையம். அரிப்புச்சாரிக் கடுக்கன் - பொன் பூவரும்புகள் கோக்கப்பட்ட
பொன் கம்பி.
உருத்திராட்சக் கடுக்கன் - உருத்திராக்கம் நடுவில் வைக்கப்
பட்ட கடுக்கன். புலிநகக் கடுக்கன் - முன்பக்கத்தில் புலிமுகம் பொறிக்கப்
பட்ட கடுக்கன். முருகு - காதின் மேற்பகுதியில் அணியப்படுவது; கீழே முத்து
அல்லது இரத்தினக்கல் தொங்கவிடப்பட்டிருப்பது. சரப்பள்ளி - பொன் சங்கிலி. பதக்கம் - சங்கிலியில் கோத்துக் கழுத்திலனியப்படுவது. அரைஞாண் - பொன் அல்லது வெள்ளியாற் செய்து அரையி
லணியப்படுவது. மிஞ்சி - காற் பெருவிரலிலனியும் வெள்ளி மோதிரம். காறை - இது நடுவில் சந்திரனின் வடிவம் தொங்கும்படியாக வெள்ளி அல்லது பொன்னாற் செய்யப்பட்ட மாலை.
135

Page 77
தென்னிநதிய மக்கள்: குலங்களும் குடிகளும்
பெண்களனிகள்
குப்பி - கொண்டையில் செருகப்படுவது; கடுக்காயளவு
பருமையுடைதாக இரத்தினக் கற்கள் பதிக்கப் பட்டது. சுட்டி - மூக்குக்கு நேரே நெற்றியில் தொங்கும்படி தலையில்
அணியப்படுவது.
சிணுக்கி - சங்கிலி கோத்த தட்டையான பொன் தகடு;
காதணியில் மாட்டி கொண்டையில் கொளுவப்படுவது. பிறைபொழுது - பிறையையும் சூரியனையும் போற் செய்யப்
பட்ட இரண்டு பொன்னாபரணங்கள்; ஒன்றை ஒன்று பார்க்கும்படி தலையிலனியப்படுவன. பட்டம் - நெற்றியில் கட்டும் பொன் தகடு. மூக்குத்தி - மூக்கின் இடப்பக்கத்தி லணியப்படுவது; முத்துத்
தொங்கவிடப் பட்டிருப்பது.
நத்து - மூக்கின் இரண்டு துவாரங்களுக்கு நடுவில் அணியப் படுவது; முத்து அல்லது இரத்தினக்கல் தொங்கவிடப் பட்டிருப்பது.
தோடு - பூவின் வடிவினதாகக் காதிலனியப்படுவது. துலாக்கு - முத்து தொங்கவிடப்பட்ட தோடு. கொப்பு - மேற்காதிலனியப்படும் தங்க வளையம். நாகபடம் - கொப்புக்குக் கீழ் அணியப்படுவது. பாம்பின்
தலையைப் போல் தோற்றமளிப்பது. மணி - பல பட்டுக்களில் அணியப்படும் மணி கோத்த மாலை. சவடி - தோளில் பொறுத்து நிற்கும்படி அணியப்படும் மாலை. அட்டிகை - இரத்தினக் கற்கள் பதித்த கழுத்தணி. கழுத்தில்
ஒட்டக் கட்டப்படுவது. உள்கட்டு - கல் பதிக்காத அட்டிகை. தாலி - கலியாணத்தின்போது கணவன் பொன் கயிற்றில் அல் லது மஞ்சட் கயிற்றில் கோத்து மனைவி கழுத்தில் அணி வது. தற்காலத்தில் பொன்னால் தாலியைச் செய்கின்றனர்.
136

ந.சி. கந்தையா
நெல்லி - இரண்டு பொன் அல்லது வெள்ளிக் கம்பிகளை முறுக்கிச் செய்தது; முழங்கைக்கு மேல் அணியப்படுவது.
கை வளையல்கள் - இதில் காப்பு, கங்கணம், வளையல்,சாரி, கடகம் எனப் பல வகைகளுண்டு. இவை வெள்ளி அல்லது பொன்னினால் செய்யப்பட்டு மணிக்கட்டில் அணியப்படுவன. இவை உள்ளே துளை உடையன வாய் கால் மற்றும் அரை அங்குலக் குறுக்களவுடையனவாக விருக்கும்.
ஒட்டியாணம் - பொன் அல்லது வெள்ளியினாற் செய்த
அரைப்பட்டிகை.
தண்டை - உள்ளே பரலிடப்பட்ட காப்பு; வெள்ளியாற்
செய்யப்படுவது. காலிலனியப்படுவது. சதங்கை - இது தண்டைக்குக் கீழ் அணியப்படும் பாதசரம்.
பாடகம் - குதிரைக் கடிவாளத்தின் மேற்பாகம் போன்ற பெரிய வெள்ளிச் சங்கிலி. இது கணைக்காலுக்கு மேல் அணியப்படுவது.
கொலுசு - முன் கூறப்பட்டது போன்றது.
கால் மோதிரங்கள் - இவற்றில் பலவகைகளுண்டு; நகமூடி,
பீலி, முன்தாங்கி, மயிலடி, மகரமீன்.
மோதிரம் - இருபாலாரும் இரத்தினக்கற்கள் பதித்த வெள்ளி
அல்லது தங்க மோதிரங்கள் பலவற்றைக் கையிலனிவர். கொழும்புச் செட்டிப் பெண்கள் பெனிச்சை என்னும் பொன் கொண்டை ஊசிகளைக் கொண்டையில் குத்திக் கொள்வர். மேற்பக்கம் பொன் பதிக்கப்பட்டு இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட ஒட்டுச் சீப்பைக் கொண்டையிலனிவர். அவர்கள் மேற்காதில் கப்பு என்னும் அணியையும் அதற்குக் கீழ் கிராபு என்னும் அணியையும், உருக்குமணி என்னும் ஐந்து அல்லது ஆறு வளையங்களையும் அவற்றின் கீழ் சவடிக் கடுக்கன் என்னும் தோள்வரை தொங்கும் மூன்று பெரிய ஆபரணங்களையும் அணிவர். அவர்கள் கழுத்து, கை, பாதம் என்பவற்றில் பல ஆபரணங்களை அணிவர்.
ብ ሜ7

Page 78
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
இலங்கைத் தமிழரிடையே காணப்படும் சாதிகள்
அகம்படியார் அரிப்பர்
இருளர் இலைவாணியர் (பழ
வியாபாரிகள்) உப்பளவர் (உப்பு விளை
விப்போர்) எண்ணெய் வாணியர்
ஒச்சர் (கலியாணம், இழவு
முதலியவற்றை அறிவிப் போர்; கோயிற்பூசை செய்வோர்) கடையர் (மீன் பிடிப்போர்,
சாயவேர் கிண்டுவோர் என இருவகையினர்)
கருமான் (கொல்லன்) கரையார் (பள்ளிகளில் ஒரு
வகையினர்) கர்ணம் (கிராமக் கணக்கன்) கலயர் (வடம் திரிப்போர்) கல்தச்சன் கள்ளர்
கன்னான் (1) கொத்துக்
கன்னான் (உலோகத்தை அடித்து வேலை செய்வோன்); (2) வார்ப்புக் கன்னான்
காவல் (கிராம எல்லையைப்
பார்ப்பவன்) காவற் பள்ளி (காவற்காரன்)
குயவன்
குறும்பர் கைக்கோளர் கொட்டியார் (கீழ்த்தர
நெசவாளர்) கோமட்டி
கோவியர் (வேளாளரின்
அடிமைகள்)
சக்கிலியர்
சலுப்பர் (மரத்தளவாட
வியாபாரிகள்)
சாணார் (சாண்டார்) சாலியர் (நெசவாளர்) சிவியார்
செம்மார் (செருப்புத்
தைப்போர்)
செம்படவர்
சேணியர் (நெசவாளர்)
சேதர் (நெசவாளர்)
தச்சர்
தட்டார்
தனக்காரர் (யானைக்காரர்)
தாதர் (பாவைக்
கூத்தாட்டுவோர்)
திமிலர்
தொட்டியர்
நத்தம்பாடி
நளவர் (மரமேறு Tர்)
நாவிதர்
பட்டினவர் (மீன்பிடிகாரர்)
138

ந.சி. கந்தையா
பரம்பர் பரவர் பரவணியர் (கிராமக் கடை வைத்திருக்கும் செட்டி) பரிக்குலத்தார் (குதிரைக்காரர்) பள்ளர்
பள்ளி பள்ளிவில்லி (மீன்பிடிக்காரர்) பறிக்காரர் (மீன்பிடிக்காரர்) பறையர் பாணர் (தையற்காரர்) பாய் வாணியர் (கடைக்காரர்) பூமாலைக்காரர் (பூ விற்போர்) மருத்துவர் மறவர் முக்குவர் முச்சியர் (வர்ணம் பூசுவோர்) யாழ்ப்பாணர் வண்ணைக்காரர் (வாளுறை
செய்வோர்)
வண்ணார் (1) வெள் வண் ணார் (உயர்ந்த வாதியா ருக்கு வெளுப்பவர்); (2) நீலவண்ணார் (சாயம் தோய்ப்பவர்); (3) சாய வண்ணார் (சாயக்காரர் - சிவப்புச் சாயம் தோய்ப் பவர்); (4) துரும்ப வண்ணார் (கீழச் சாதியா ருக்கு வெளுப்போர்)
வலம்பர்
வலையர் (வலைகட்டி
வேட்டையாடுவோர்)
வள்ளுவர் (சோதிடம் சொல்
வோர்; பறையரின் புரோகிதர்)
வீரக்குடியான் (சங்கு
ஊதுவோன்)
வெட்டியான் (பிணம்
சுடுவோன்)
வேடர்
மாட்டுக்குறி சுடும் அடையாளங்கள்
வணிகர் - தராசு
வேளாளர் - பசும்பை
(அறுகோண வடிவம்)
எண்ணெய் வாணியர் - விளக்கு
பரவர் - சவளம்
கரையார் - மீன் கம்மாளர் - குறடு கடையர் - குடையுங் கொடியும் நாவிதர் - கத்திரிக்கோல்
வண்ணார் - கல்(லு)
139

Page 79
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
சாதிகளின் பட்டப்பெயர்
பிராமணர் - ஐயர், பார்ப்பர்
வணிகர் - செட்டியார்
வேளாளர் - பிள்ளை,
முதலியார்
இடையர் - கோனார் நத்தம்பாடி - உடையார் பள்ளி - படையாச்சி தொட்டியார் - நாயக்கர் கோமுட்டி - செட்டியார் எண்ணெய் வாணியர் -
செட்டியார்
பரவர் - அடப்பர் பட்டணவர் - செட்டியார் செம்படவர் - அம்பலவர் வலையர் - மூப்பர்
முக்குவர் - போடி
கைக்கோளர் - செட்டியார்,
முதலியார்
சேணியர் - செட்டியார்,
முதலியார்
அகம்படியர் - சேர்வைக்காரர் மறவர் - தேவர் கள்ளர் - குடியான் நாவிதர் - பாரிகாரி, பிரானோபகாரி
ஒச்சர் - பூசாரி சிவியார் - பொகடன்
சாணார் - நாடார் வண்ணார் - ஏகாலி நளவர் - தன்னயன் வள்ளுவர் - திருசாம்பான் சக்கிலியர் - பகடையர்
பறையர் - சாம்புவர்
பள்ளர் - குடும்பர்
140

அ அகமுடையர் 1 அகம்படியர் 1, 138 அக்கினி 1 அச்சன் 2 அச்சு வெள்ளாளர் 2 அடிகள் 2 அடுத்தோன் 2 அணிவகை 135 அம்பட்டர் 2 அம்பலக்காரர் 3 அம்பலவன் 140 அம்பலவாசி 4
அரவா 4 அறுத்துக் கட்டாத 4
ஆ ஆசாடியர் 4 ஆசாரி 5 ஆண்டி 5 ஆதிசைவர் 5 ஆத்திரேயர் 5 ஆரி 5
இ இடிகர் 6 இடியர் 6 இடையர் 6 இராசபுத்திரர் 6 இராசு 6, 19
ந.சி. கந்தையா
பொருட்குறிப்பு
இரால்பு 7 இருளர் 7, 138 இலங்கைத் தமிழர் 129 இல்லம் 7 இளமகன் 7 இளையது 8 இறங்காரி 8 இறந்தவன் தலையை தெற்கே
வைத்தல் 62
இறவுலோ 8 இறையர் 9
FF
ஈழவர் 9
(உ)டோபி 67 உரோனா 12
6
எட்டரை 12 எண்ணெய் வாணியர் 138 எம்பிரான் 13
எரவாளர் 13 எழுத்தச்சன் 13
gJ.
ஏராடி 13 ஏராளன் 14 ஏழு கன்னிப்பெண்கள் 13 ஏழு கன்னிப் பெண்கள்
விளக்கு வடிவினர் 7

Page 80
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
ஏனாதி 14
69 ஒக்கிலியர் 14 ஒட்டர் 14 ஒட்டியர் 14 ஒரு நூல் 15
g ஒச்சர் 15, 138 ஒடட்டு 15 ஒதுவார் 15
«Ց5
கங்கேயர் 15 கஞ்சகாரர் 16 3.Lgi 16
கடையர் 16
கணக்கர் 16
கணிகர் 10, 16 கணியர் 16 கண்கெட்டு 17 கத்திரி 18 கபேரர் 18 கம்பலத்தார் 18 கம்பர் 18
கம்மா 18
கம்மாளர் 19
கரனா 21 கலவாந்து 21
கழைக்கூத்தாடி 21 h−
களரிமூப்பர் 17
கள்ளமூப்பர் 22
கள்ளர் 22
கன்னடியர் 24
ፊቻ5ዘ‛
காக்காளர் 24
காடர் 24
காடுபட்டர் 25 காட்டு மராத்தி 25 காணிக்காரர் 25 காதுக்குத்துக் குறவர் 26 காப்பிலியர் 26 காப்பு 26
இ, இ
கிராமணி 26 கிருஷ்ணாவைக்காக்கா 27 35ουπβε 27 கிழக்கத்தி 27
கீரைக்காரன் 27
@ குகவேளாளர் 27 குசராத்தி 28 குடிக்காரர் 28 குடிப்பிள்ளை 3 குடிமகன் 28 குடியர் 28 குடியா 28 குடியார் 140 குடுபியர் 29 குடுமி அல்லது குடுமிக்காரர் 29 குடும்பர் 140 குடைகட்டி 30
142

ந.சி. கந்தையா
குணி 30 கும்மாரர் 30 குயவர் 30, 138 குருக்கள் 30 குருப்பு 31 குருவிக்காரர் 31 குறத்தி பிள்ளைப் பெறக்
குறவன் காயம் தின்னல் 32 குறவர் 32 குறிச்சான் (குறி வைச்சான்) 33 குறுமோ 34 குறும்பர் 34, 138 குன்றுவர் 35
கூடலர் 36
கூடான் 36
56.6887 nr 36
கூத்தாடி 36 கூர்மாப்பு 36
65
கைகாட்டிக் கர்ணம் 16 கைக்கோளர் 36
கொ
கொங்கணி 37
கொங்கவேளாளர் 38 கொடிக்கால் 38 கொடிப்பட்டர் 38 கொண்டதோரர் 38 கொண்டர் 39
கொண்டாலிகர் 39
கொல்லர் 39
கோ
கோசாக்கள் 39 கோஷ்டி அல்லது கோஷ்டா 40 கோடர் 40
கோட்டைப்பத்து 40 கோட்டை வேளாளர் 40 கோமட்டி 41 கோமணாண்டி 41 கோமாளி 41
கோயா 42
கோயி 42
கோயிலார்பிள்ளை 43 கோயிற்றம்பிரான் 43 கோலா 43
கோலாயர் 43
கோலியர் 43
கோவியர் 138
கெள
கெளடோ 44
சக்கிலியர் 44, 138 சங்கதிப் பிள்ளை 54
சண்டாளர் 123
சத்திரியர் 44 சமகாரர் 46
&FLDu 46
சலங்குக்காரர் 46 சலுப்பர் 138 சவரர் 46
143

Page 81
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
சவலைக்காரர் 47
FI
சாக்கியர் 47
சானார் 48
சாணி 48
சாதாணி 48 சாதிகளின் பட்டப்பெயர்கள் 140 சாத்திரி 49 சாந்தால் 123 சாமந்தர் 49 சாலியர் 49
gETəlumtri 32
GF)
சிதம்பரத்தில் செம்படவர்
சுவாமியைச் சுமப்பர் 54
சிவியார் 51
சிறுகுடி 51 சிறுதாலி 51, 134 சிற்பர் 52
இ?
சிரியன் கிறித்தவர் 9, 52 சுன்னத்து 23 சூலி 53
செ
செக்கர் 53
செக்கார் 53 செங்குந்தர் 37 செட்டி 53, 140 செம்படவர் 54, 138 செம்மார் 54, 138
செருமார் 9, 54
சே
சேணியர் 55, 138
சேனைக்குடையார் 55
Glégo-mt
சொண்டி 55
சோ
சோலகர் 55 சோழியப்பட்டர் 55 சோனகர் 56
சோனார் 56
செள
செளராட்டிரர் 56
த
தக்கடோ 56 தங்கர் 56 தங்கலார் 56 தசாரிகள் 57 தச்சநாடன் மூப்பன் 57 தச்சர் 57, 138
தட்டார் 138
தண்டப் புலையர் 57 தண்டர் 57 தண்டார் 58 தம்பல் 58
தம்பி 58 தம்பிரான் 58 தம்புரான் 58
144

ந.சி. கந்தையா
தருமராசர் 59 தேவாங்கர் 65 தலையாரி 59 தேவாதிக்கர் 65
தலைவர் 59
தா
தாசி 59 தாய் 59 தார்வாட் 59
தாலிகட்டுக் கலியாணம் 59
தி
திகம்பரர் 60 திமிலர் 138 திராவிட் 60 திருமுடி 60
தீ
தீபோ 60 தீயர் 60
து
துப்புக்கூலி 23 துருவாளர் 62 துலாபாரம் 62 துலுக்கர் 62
தெ தெய்வேந்திரகுல வேளாளர் 125 தென்னை 61
தே
தேசாரி 63 தேசிகர் 63 தேவரடியாள் 63 தேவர் 64, 140
தொ தொண்டமான் 65 தொம்மாரர் 85
தோ
தோடர் 66 தோட்டி 66 தோணி 67 தோரியர் 67
ந
நகரத்தார் 67 நங்குடி வேளாளர் 68 நட்டுக்கட்டாத நாயன்மார் 37 நம்பிடி 68 நம்பூதிரி 68 நரிக்கால் 73 நளவர் 138
நா
நாகர் 73 நாகவாலுசு 73 நாஞ்சில் நாட்டு வேளாளர் 74 நாடார் 75, 140
நாட்டுக் கோட்டைச் செட்டியார் 75
நாயக் 75 நாயக்கர் 140 நாயர் 75 நாயாடி 80 நாலில்லக்காரர் 81
145

Page 82
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
நால்கி 81 நாவிதர் 138
பஞ்சமர் 81 படகர் 81
படையாச்சி 140
பட்டவனர் 82, 138 பட்டுநூற்காரர் 82 பணிக்கர் 83
Lasailstai 83
பணியர் 84
பண்டாரம் 84 பண்டிதர் 84 பதினெட்டான் 85 பத்திராளு 85 பரவணியர் 139
பரவர் 85, 139 பரிக்குலத்தார் 139 பரிவாரம் 85
பலிசக்கொல்லன் 86
பலியர் 86
பல்லவராயர் 86
பள்ளர் 86
Lugiraf 86
பள்ளி அல்லது வன்னியர் 87
பள்ளிவில்லி 139
பறிக்காரர் 139 பறையர் 88 160flui 125
II
பாணர் 90
பாணோ90
பாண்டியர் 91
பாய்வாணியர் 139
பாரத்துவாசர் 91
լ Ո
பிசாராடி 91 பிடாரர் 9 பிராமசாக்தா 91 பிராகூய் 126
பிரானோபகாரி 140
பில்லவர் 93
பிள்ளை 93, 140
Լ!
பும்சவனம் 129 புலிநகக் கடுக்கன் 135
5.
பூசாரி 140 பூமாலைக்காரர் 139 பூவான் 93 பூழி ஆசாரி 93
பெ
பெண்களனிகள் 136
g
பைராகி 94
பொ, போ
பொகடன் 140
146

ந.சி. கந்தையா
பொண்டாரி 94 பொண்டார் 94 பொதுவான் 94 பொலிகர் 95 பொறோசா 95 போடி 140
மங்கலவர் 95 மஞ்சள் மணம் 134 மணியகாரர் 95 மண்டாதான் செட்டியார் 95 மண்டை 96 மண்டுவர் 96 மண்ணாடி 96 மண்ணார் 96 மதிகர் 96 மரக்காயர் 97 மராட்டி 97 மருத்துவர் 139 மலைக்காரர் 98 மலையாளி 98 மல்பரயர் 100 மளவராயர் 100 மறவர் 100, 139 மஸ்தான் 102
DMT
மாங்கல்யம் 102 மாதங்கர் 102 மாதவர் 102
மாப்பிள்ளைமார் 102
மாரான் 103 மார்வாடி 104 மாலர் 104 மாலுமி 104
tDfTGð)G) 104 மாலைமணம் 133
மானிகட்டாள் 104
uß
மீதாரக்காரன் 104 மீலதேவர் 105 மீனோன் 105
(tp முகதோரர் 105 முக்குவர் 105 முசாத்து 106 முச்சியர் 139 முடவாண்டி 107 முதலியார் 140 முதுவர் 107 முத்தரையர் 108
eup மூதார் 108 மூப்பன் 140
மெ
மெய்காவல் 108
மே
GubGiugf 108 மேளக்காரர் 109
147

Page 83
தென்னிந்திய மக்கள்: குலங்களும் குடிகளும்
மொ
மொண்டி 109 மொராசு 110
மோ
மோகெர் 110
I
யாழ்ப்பாணர் 139
马 யூகி 128 யூதர் 110 யூரேசியர் 112
யோ
யோதி 112
o
வடுகர் 112 வட்டக்காரர் 112 வணிகர் 139 வண்ணத்தார் 113 வண்ணர் 113, 139 வண்ணைக்காரர் 139 வலம்பர் 139
வலையர் 113 வல்லம்பர் 113
வள்ளுவர் 114, 139
வன்னியர் 114
of
வாரியர் 115
வாலர் 114
வாலிசுக்கிரீவர் 115
வி
வில் குருப்பு 116 ଗର୍ହ
வீரபத்திரர் 116
வெ
வெட்டியான் 116 வெரங்கி 128
வே
வேடர் 116, 139 வேட்டுவர் 116 வேலக்காட்டாள்வார் 117 Gaugis 117
வேளர் 117
வேளம்பர் 117
வேளாளர் 139
GROG
வைராவி 117


Page 84


Page 85