கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொல்சீர் சமூகவியல் சிந்தனையாளர்

Page 1
ANYWANY
W
W у AAN
W
A A.
JAWA
AWA
 


Page 2


Page 3

தொல்சீர் O சமூகவிமல் சிந்தனைமரவுர்
கலாநிதி என்.சண்முகலிங்கன் தலைவர், அரசறிவியல்-சமுகவியல் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம்
AKř
7Ä6Y` egpabsődózs egpaláb யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். 2002

Page 4
7Øo/SeerSamookønvillem/s/mé#aamallendar(Žalmy)
മീഭ//%B07ട0ff
Author : Dr.N.Shanmugalingan
(C) : Mrs. Gowri Shanmugalingan
First Edition : 5.5.2002
Published by : Sociological Society,
University of Jaffna. Printed at HariKanan Printers, Jaffna.
Price
: 250/=

என்னை எனக்கறிவித்து எங்கள் புலமை மரபின் கைலாசமாய் என்றும் வழிகாட்டும் எங்கள் பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் அழியா நினைவுகளுக்கு

Page 5
யாழ்ப்பான பல்கலைக்கழக துணைவேந்தர்
பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் வழங்கிய அணிந்துரை
19ம் நூற்றாண்டிலும், 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலப் பகுதிகளிலும் உலகம் எதிர்கொண்ட புதிய சூழலில் சமூகவிய லென்ற அறிவுத்துறையின் மலர்ச்சியைக் காண்கின்றோம். பிரான் சியப்புரட்சி, தொழிற்புரட்சி, சோசலிசத்தின் எழுச்சி, நகர மயமாக 'கம் என இக் காலத்து ஏற்பட்ட மாற்றங்கள் சமூக வாழ்வில் பாரிய தாக்கங்களை விளைவித்தன. ஏற்கனவே நிலைபெற்றிருந்த வாழ்வும், விழுமியங்களும் கேள்விக்குள்ளாகின. இந்நிலையில் சமூகத்தினை விளங்கவும் அதனை மேம்பாடான முறிையில் வடிவமைக்கவும் புதிய அறிவு இன்றியமையாததாக இருந்தது. இந்த வகையில் தோற்றம் பெற்ற சமூகவியல் சிந்தனை மரபானது இன்றுவரை மிகமுக்கியமானதோர் அறிவுப் புலமாக எங்கணும் வியாபித்துள்ளது.
தமிழில் சமூகவியற்கல்வியை நிலைநாட்டி அந்த அறிவின் பயன்களை எம்மவற்கு தருதற்கான முயற்சிகள் மூன்று தசாப்தங் களிற்கு மேல் கைகூடாமலேயீே இருந்து வந்தன. எனினும் தொண்ணுாறுகளின் தொடக்கத்தில் எங்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிறப்புக்கலை கற்கை நெறியாக சமூகவியல் கல்வி தூரதரிசனத்துடனும், நிறைந்த அர்ப்பணிப் புடனும் தொடங்கப்பட்டு நிறைவாக தொடரப்படுகின்றது. இந்தப்
 

பணிகளில் தலைமகனாய் பொறுப்பை ஏற்று இன்று அத்துறையின் முதற்தலைவராயும் பணிதொடர்பவர் கலாநிதி என். சண்முகலிங்கன். பல சர்வதேச ஆய்வரங்குகள், புலமையாளர் களுடனான ஊடாட்டங்களின் வழி தமது அறிவையும் வளம படுத்தி துறையினையும் மேம்படுத்தி வருபவர் சண்முகலிங்கன்.
அண்மையில் புகழ்பெற்ற டெல்கி, காலிங்கா பிரசுர நிறுவனத்தின் வெளியீடாக அவரது கலாநிதிப்பட்ட ஆய்வு நூலான A New Face of Durga வெளியாகி எமக்கெல்லாம் பெருமை சேர்த்துள்ளது. புதிய நூலான தொல்சீர் சமூவியல் சிந்தனையாளர் தமிழில் இப்பொழுதுவெளியாகின்றது. 'தமிழை அறிவியல் மொழியாக்கவேண்டும்' என எங்கள் கல்விசார் அரங்குகளில் அடிக்கடி வலியுறுத்தும் கலாநிதி என். சண்முகலிங்கனின் கருத்து நிலைக்கு வடிவம் தருவதாக இந்த புதிய நூல் அழகாக தொல்சீர் சமூகவியல் சிந்தனையாளரின் வாழ்வையும் பணிகளையும் விரிவாக எடுத்தியம்புகின்றது. "சண்'னின் தெளிந்த சிந்தையும் தொடர்பியல் வல்லமையும் இவரது ஏனைய ஆக்கங்களைப் போன்றே இந்நூலிலும் பளிச்சிடுகின்றது.
மென்மேலும் இவர் புதிய பல அறிவு நூல்களை தமிழுக்கு, அறிவுலகுக்குத்தர என்றென்றும் என் அன்பான வாழ்த்துக்கள்.
பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை துணைவேந்தர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திருநெல்வேலி
யாழ்ப்பாணம்.

Page 6
பொருளடக்கம்
தொல்சீர் சிந்தனை மரபு O
9y66yügü 6)esarabigh — August Comte 07
ஹேர்பேட் ஸ்பெனிசர் - 39ebot Spence 9.
ésarář6ů uDariéš6rů – JKat0 UMary 99
எமில் (6ář60p6sab - Cmdle C-Duitbheim 60
மக்ஸ் வெபர் - UWay GWebel 36
தொல்சீர் சிந்தனையாளரின்
தேர்ந்த நூற்பட்டியல் 122

தொல்சீர் மரபு - அறிமுகம்
சமூகம் பற்றிய கோட்பாடுகளின் தோற்றப்புள்ளிகள் தொன்மை யானவையெனினும், விஞ்ஞான விசாரணையின் வழியான கோட்பாடுகளின் தொடக்கம் என்பது சமூகவியலுடன் மிக அண்மைக்காலத்துத்தான் கைவசமாகும்.
சமூகம் தொடர்பான முறையியல் வழிப்பட்ட கற்கை நெறியாக S0ciology எனும் பதத்தினை 1822ல் அகஸ்ற் கொம்ற் (Auguste comte, 1798-1857) eysiqp5b Q5Fuüg5 Tff. Q5Tübsbfl6ôt சிந்தனைத்தடத்திலே ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்னைய GLDIT6öTG)J6öölus (Montesquieu, 1689-1755) (Upg560ITuu 9gó வொளிக்கால மெய்யியலாளர்களின் செல்வாக்கினைக் காண முடியும். கூடவே தனிமனித சுதந்திரம், மானுட முழுமை, சமூக முன்னேற்றம் என்பவை தொடர்பான நம்பிக்கைச் சிந்தனையாளர்களான வால்டேயர் (Voltaire, 1674-1778), ரூசோ (Rousseau, 1712-1778) போன்றோரின் அறிவனுபவங்களும் சமூகவியல் கோட்பாட்டிலே உள்வாங்கப்பட்டமையையும் உணர
முடியும்.
மொன்டெஸ்கியூவின் Persian letters, 17216) நூல்வடிவம் பெற்றது. அக்கால பிரெஞ்சு சமூகத்தின் பழக்க வழக்கங்களை சமூகவியல் நோக்கில் வெளிப்படுத்தும் கடித வடிவிலான ஆய்வு இலக்கியமாக இது அமைந்திருந்தது. இவரின் LDsbGBTQB Ligug)LDIT6OT BIT6 si6OT The spirit of the laws, 17286) வெளியானது. ஒரு பண்பாட்டுப் புலத்து மக்கள் எவ்வாறு தமது புவியியற் சூழலினால் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்பதனை
051

Page 7
இந்நூல் விளக்கியது. சட்டங்களும் வழமைகளும் அரசாங்க வடிவங்களும் இயல்பான பொருண்மைகள் அல்ல; வாழும் சூழ்நிலைகளினால் தீர்மானிக்கப்படுபவை என்பதனையும் தெளிவாக்கியது.
சமூக ஒழுங்கு, வகுப்புக்கள் இடையிலான அசமத்துவம், முடியாட்சியின் மேலாதிக்கம் என்பன தெய்வ அநுக்கிரகத்தின் வழியானவை; மாற்றவியலாத உண்மைகள் எனும் நம்பிக்கைகள் புதிய சிந்தனைச்சூழலில் வலுவிழந்தன. மனித உரிமை களினடியான ஜனநாயக ஒழுங்கு எனும் சமூகவியல் சிந்தனை, புதுவரவாகும்.
இரண்டு வகையான அசமத்துவ நிலைமைகளை ரூசோவின் எழுத்துக்கள் வெளிப்படுத்தின. இயற்கையான பெளதீக அடிப்படையிலான அசமத்துவம், ஒழுக்க நிலைப்பட்ட அல்லது அரசியல் சார்ந்த அசமத்துவம் என வேறுபடுத்திய ரூசோவின் கருத்துநிலை மேலும் புதிய தேடல்களுக்கு வழிசமைத்தது.
இக்காலத்து முதன்மை பெற்ற மற்றொரு சிந்தனை யாளரான கொண்டோசற் (Condorcet) ஒரு கணிதவியலாளர். இயற்கை விஞ்ஞான விதிகளைப் பயன்படுத்தினால் சமூக விஞ்ஞானம் விரைந்து வளர்ச்சி காணும் என்பது இவரது கருத்துநிலை முன்வைப்பாகும். இதன் வழி மனித முழுமையும், நீதியான சமூக வாழ்வும் உறுதி பெறும் என்பதும் இவரது நம்பிக்கையாகும். பெண்களுக்கு சமஉரிமை, அடிமைநிலை ஒழிப்பு, அனைவருக்கும் வாக்குரிமை, கருத்துச் சுதந்திரம் எனும் புதிய விழுமியங்கள் இதன் வழி முதன்மை பெற்றன. அரசும் திருச்சபையும் வெவ்வேறாக்கப்படவேண்டும்; பல்வேறு சமூகநல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற கருத்தும்

கூடவே இவரால் முன்வைக்கப்பட்டது.
இந்த கருத்து நிலை தளத்தில் தான் பிரான்சிய புரட்சி செயல்வடிவம் கண்டது.
0 பகுத்தறிவினடியான சட்டவாக்கம்; அதன் வழியான
புதிய சமூக ஒழுங்கு. 0 மக்களின் சமூக, அரசியல், பொருளாதார பண்பாட்டு
வாழ்வில் புதிய உருமாற்றங்கள். 0 முடியாட்சிக்கு முடிவு 0 கல்வியமைப்பில் சீர்திருத்தங்கள்; மையப்படுத்தல்கள் 0 மேற்கண்ட புரட்சிகர மாற்றங்களினடியாக சமூக நிறுவனங்களை தனியன்களின் உரிமைக்களுக்கான தாக்குதல் எனும் புதிய இக் கருத்தியல் சூழலில்தான் சமூகவியலின் பிறப்பு சாத்தியமானது.
19ம் நூற்றாண்டிலும், 20ம் நூற்றாண்டின் தொடக்க காலப்பகுதியிலும் மேலைநாடுகள் பலவற்றிலும் எழுச்சி கண்ட தொழிற்புரட்சியும் சமூகவியலின் உருவாக்கத்தில் மிக முக்கியமான பங்கினை வகித்தது. தொழிற்புரட்சி என்பது ஒரு தனி நிகழ்வு அல்ல; பல ஒன்றிணைந்த மேம்பாட்டு நிலைமைகள் - சமூக உருமாற்றங்களுக்கு அது வழிவகுத்தது பெரும் எண்ணிக்கையான பண்ணை விவசாயிகள் தம் விவசாயப் புலங்களை விட்டு தொழிற்சாலைகளை நாடி புறப்பட்டனர். தொழிற்சாலைகளும் பல புதிய தொழிநுட்ப மேம்பாடுகளைக் கண்டன முதலாளித்துவ பொருளாதாரம் பல சேவைத் தொழிலாளரை உருவாக்கியது. சிலரிடம் இலாபம் குவிந்தது பலர் நீண்ட மணிநேரம் வேலைசெய்தும் குறைந்தளவு கூலியையே பெற முடிந்தது. விளைவாக தொழிற் சங்க அமைப்புக்களும், வேறுபட்ட புரட்சிகர அமைப்புக்களும் தோற்றம் பெற்றன.
(0.3

Page 8
தொழிற்புரட்சி, முதலாளித்துவம், புரட்சிகர எதிர்வினை கள் என்ற இந்த மேலைச் சூழல்களின் பின்னணியிலேயே தொல்சீர் சமூகவியலாளர்களின் தோற்றத்தினையும் சிந்தனை விரிவையும் சந்திக்கின்றோம். முதலாளித்துவ பொருளாதார அமைப்பு தந்த மனித துயரங்கள், தொழிற்புரட்சியின் விளைவான நகரமயமாக்கல், நகரமயமாக்கத்தில் தம் வாழ்வினை இசைவாக்கம் காண்பதில் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், புதிய புரட்சிகர சூழலில் இது வரை முதன்மை கண்ட சமய கருத்தியல்கள் கண்ட மாற்றங்கள் என்பன இச் சிந்தனையாளரின் குவிமையங்களாகின. இந்த வகையில் தான் நவீன சமூகவியலின் தந்தையென அழைக்கப்படும் அகஸ்ற் கொம்ற்(August Comte), 5.Titsio LDTió6ro (Karl Marx), LD56ro G6)lui (Max Weber), 6TL66io டுர்கைம் (Emile Durkheim) ஆகியோர் அடிப்படை தொல்சீர் சமூகவியல் சிந்தனையாளர்களாக கவனம் பெறுகின்றார்கள்.
ஊகநிலைப்பட்ட ஒழுக்க மெய்யியல் சிந்தனை மரபினின்றும் வேறுபட்ட சமூகம் பற்றிய விஞ்ஞான கல்வியாளர்களாக தொல்சீர் சிந்தனையாளர் தம்மை வெளிப்படுத்தினர். அனைத்து தொல்சீர் சிந்தனையாளர்களையும் இணைக்கும் களமும் இதுதான். தமது இந்த இலக்கினை முழுமையாக எய்துவதில் அக-புற தடைகளை இவர்கள் சந்திக்க நேர்ந்தமையும் இங்கு கவனத்திற்குரியது. புதிய இலக்குப்பற்றிய தெளிவிடையும் முன்னை ஒழுக்க நிலைப்பட்ட கருத்தாக்கங்களை முற்றாக இவர்களால் விட்டுவிட முடியவில்லை. எனினும் நவீனமயமாக்கல் விசைகள் பற்றியும், மனித சூழலில் அவற்றின் தாக்கங்கள் பற்றியும் இவர்கள் மேற்கொண்ட நம்பகமான பகுப்பாய்வின் வழி சமூகம் பற்றிய அறிவியலை கண்ட பெருமையை தேடிக் கொண்டார்கள்.
@氹

தொல்சீர் சமூகவியல் சிந்தனையாளர் குழாத்தின் ஆக்கங்கள் ஒரேகுரலில் பேசுபவையல்ல; இவர்களிடை ஒரு பொதுமையைக் காண்பது இலகுவானது அல்ல.
எனினும்
- மானுட முன்னேற்றம் தொடர்பான இவர்களது நம்பிக்கை
என்ன? - விஞ்ஞானமென்பது மனிதனுக்கு வாய்த்த இணையிலா
வரப்பிரசாதம் என இவர்கள் கருதுகின்றனரா? - மனித பகுத்தறிவென்பது நீதியான, மனிதத்தன்மை கொண்ட
சமூகத்திற்கு வழிசமைக்குமா? அல்லது - விஞ்ஞான யுகத்தில் புதிய வடிவிலான மேலாண்மைகள்
எழுமா?
என்கின்ற அடிப்படை வினாக்களுக்கான விடைகளின் வழி இவர்களின் கருத்துநிலை, முறையியல் வேறுபாடுகளை நாம் தெளிந்திட முடியும்.
அனுபவங்களினடியான ஆதாரங்களை வலியுறுத்துபவர், வரலாற்றுப் பகுப்பாய்வை முதன்மைப்படுத்துபவர், ஆதாரங் களுடன் பகுத்தறிவு தர்க்கங்களை முன்வைப்பவர் என இவர்களது அணுகுமுறைகளிடை நாம் வேறுபாடுகளைக் காணமுடியும். அவ்வாறே சமூகத்தை முழுமையாக காணவேண்டும் என்பதில் இருந்து, சமூகத்தின் அங்கங்களான தனிமனித அலகுகளை படிக்கவேண்டும் என்பதான வேறுபாடுகளையும் இச்சிந்தனையாளர் களிடை அவதானிக்கலாம். சமூகத்தின் ஒழுங்கே இலக்கு எனும் சிந்தனைக்குழுமம் ஒருபுறமாக, முரண்பாடு இயல்பானது; சமூகம் இயங்கியல் தன்மையது, முரண்வழிதான் சமூகநீதியும் மனித மேம்பாடும் எய்தப்படும் எனும் சமூக மாற்ற சிந்தனைக்குழுமம் மறுபுறமாகும். தொல்சீர் சிந்தனை மரபு முதல் இன்றைய

Page 9
சமூகவியல் கோட்பாட்டு வடிவங்கள் வரை இந்த கருத்து நிலை வேறுபாடுகளை நாம் அவதானிக்க முடியும். சிக்கலான பன்மைத்தன்மையான சமூகப்பொருண்மைகளை விளங்கிக் கொள்வதில் இத் தொல்சீர் சிந்தனையாளர்கள் எல்லோருமே ஏதோ ஒருவகையில் துணையாகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக இவர்களது சிந்தனைத்தளத்திலே தான் இன்றைய சமூகவியலின் வளர்ச்சியும் மேம்பாடும் சாத்தியமாகியுள்ளது.
தொல்சீர் சமூகவியல் த சிந்தனையாளரின் வாழ்வென்பது இலகுவானதொரு பயணமாக அமைந்ததில்லை. தனிப்பட்ட வாழ்விலும் சமூக வாழ்விலும் பல்வேறு முட்களைத் தாண்டியே அவர்களது சாதனை மலர்கள் முகிழ்ந்தன. அவர்களது வாழ்வும் பணிகளும் பற்றிய அறிவு அனுபவ தரிசனம், இன்றைய எங்கள் சமூகவியல் அனுபவ மேம்பாட்டுக்கான அத்திவாரமெனலாம்.

1. அகஸ்ற் கொம்ற் Auguste Comte 1798-1857.
வாழ்வும் காலமும்
கொம்ற் 1968ம் ஆண்டு ஜனவரி 19ம் திகதி மொன்ற்பெலியரில் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு விசுவாசமான கத்தோலிக் கர்; அரச ஊழியர்; ஒழுங்கான, நேர்மையான வாழ்க்கை நடத்தியவர். தனது தொழில், சமயம், குடும்பம் என்பவற்றிற்கென தன்னை அர்ப்பணித்தவர். இளவயதில் சிறியவனாய் பல நோய்களின் வயப்பட்டிருந்தாலும். பள்ளிக் கூடத்தில் கெட்டிக்காரனாக இனங்காட்டினார் கொம்ற். தன் சொந்த நகரில் விளங்கிய இம்பீரியல் லைசியில் ஒன்பதாவது வயதில் சேர்ந்து கொண்டார். வாழ்வின் இளமைப் பருவத்தில் குறிப்பிடத்தக் களவில் மனவளர்ச்சி கொண்டவனாக கொம்ற் விளங்கினார். தமது பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அதே வேளையில் ஏனைய மாணவர்களிலிருந்து தனித்துவமானவனாய், துடிப்பும் புரட்சிமனப்பாங்கும் கொண்டவனாயிருந்தார். பள்ளி வாழ்வின் ஆரம்ப நிலையிலேயே நிர்வாகிகளுக் கெதிராகவும், பெற்றோரின் 9|1960) D அரசியல் நிலைகெதிராகவும் தன்னை 305 குடியரசுவாதியாக பிரகடனப்படுத்தினார். சர்வாதிகார ஆட்சியாளர் களை வெறுத்து கொம்ற், புரட்சியின் மகோன்னத நாட்களின் மறுமலர்ச்சியை காண விழைந்தார். பள்ளிப்பருவத்தில் தமது கணிதப் பேராசிரியர் டானியல் என்கொன்றி அவர்க்ள்து

Page 10
ஆளுமையின்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். கொம்ற் பரந்த அறிவும் கத்தோலிக்க மத ஈடுபாடும் கொள்ள இவரே காரணமானவர். கூடவே பல்துறை ஆர்வம் கொண்ட அறிஞராக, மாதிரி ஆளுமையாக கருதும்படி செய்தவர். எனினும் பின்னாளில் இவர் கத்தோலிக்க மதத்தை நிராகரிக்கும் நிலைமையை காண
(UpliqujLD.
தமது பதினாறாவது வயதில் ஈகோல் பல் தொழிநுட்ப
நிறுவனத்தின் அனுமதி பரீட்சைக்கு தோற்றினார் கொம்ற். பிரான்சின் மிக மதிப்பார்ந்த இந்த கல்லூரியின் அனுமதி தேர்வில் நான்காவதாக கொம்ற் தேறினார். இதனைத் தொடர்ந்து 1814 ஆகஸ்டில் பாரிஸ் சேர்ந்தார். ஈகோல் பல் தொழில் நுட்ப கல்லூரி பேராசிரியர்களில் பெரும்பாலானோர், கணிதம், பெளதீகம் ஆகிய துறைகளிலேயே பெரிதும் தேர்ந்தவர்களாக இருந்தார்கள். மனித நடவடிக்கைகளில் மிக குறைந்தளவு ஆர்வமே கொண்டிருந் தார்கள். ஆனால் தம்காலத்து ஏனைய சமூக மெய்யியலாளர்கள் போன்றே கொம்ற்ரும், பிரான்சிய புரட்சியின் பாதகமான விளைவுகளில் கருத்தினைச் செலுத்தினார். இதன்படி சமூகத்தின் முன்னேற்றத்தினையே தமது பிரதான இலக்காகக் கொண்டார்.
ஈகோல் Lj6) தொழினுட்பநிறுவனம் விஞ்ஞான கல்லூரியாகவே ஆரம்பிக்கப்பட்ட போதும், சர்வாதிகாரி நெப்போலியன் அதனை இராணுவ மாதிரியாக ஒழுங்கமைத் திருந்தான். பொதுச் சேவைக்கான பொறியியலாளர்களை உருவாக்குதலே நோக்காக இருக்க, நெப்போலியன். அலுவலர்களை உற்பத்தி செய்யும் மையமாகவே இருக்க வேண்டு மென்றான். ஆனாலும் தொடர்ந்தும் மாணவர்கள் அதனை ஒரு விஞ்ஞானக்கல்விக்கான மையமாகக்கருதி. மலரும் விஞ்ஞானி களாகி, நெப்போலியனின் எண்ணத்துடன் முரண்பட்டனர். 1814ல்
அல்லிஸ் (Alies) பாரீசைத் தாக்கியபோது ஈகோல்
ر

பல்தொழினுட்ப மாணவர்கள் எதிர்த்துப் போரிட்டனர். இந்தச் சூழல் கொம்ற்க்கு சலிப்பைத் தந்தபோதும், ஈகோல் பல்தொழினுட்ப கல்லூரியின் சிறந்த விஞ்ஞானிகளின் நீழலில் இருக்க கிடைத்த வாய்ப்பை அனுபவித்தார். இக்கல்லூரியின் சிறப்பு தகைமையை பெறுவது மட்டுமன்றி, இங்கு ஒரு ஆசிரியராகி எதிர்காலத்து விளங்க வேண்டுமென்பது அவர் பெருவிருப்பாகவிருந்தது. ஆயினும் தொடர்ந்தும் இவர் ஒரு கிளர்ச்சியாளராகவே அங்கு கருதப்பட்டார்.
நெப்போலியன்மீதான இவரது தொடர் வெறுப்பு, Bourbon அரசர்களின் மீள்வருகையின் பின் ஒப்பிட்டு அளவில் தணிந்தது எனலாம். நெப்போலியன் மீண்டபோது முழுக்கல்லூரியும் அவன் முகாமில் சேர்ந்து கொண்டது. அவர்களிடையே புரட்சிகர தலைவராக கொம்ற்ரும் இருந்தார். வாட்டலூவின் பின் பாரீசை மீள பிடித்தபின், ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு கல்லூரி வழமைபோல் செயற்பட்டது. கொம்ற்ரும் தன் வழமையான கற்கை நெறிக்கு மீண்டார். ஆயினும் வழமைபோல, கல்லூரி அதிகாரிகளுக் கெதிரான நிலைப்பாட்டுடனேயே கல்வி தொடர்ந்தது.
1816ல் நிர்வாகத்தின் பழையபாணியிலான பரீட்சை முறைக்கெதிராக ஆறு மாணவர்கள் போராட்டம் நடத்திய போது அனைத்து மாணவர்களினதும் முழுமையான ஆதரவு கிடைத்தது. ஆளுநர் கல்லூரியை மூடுமாறுபணித்தார். கல்லூரி மீளமைக்கப்பட வேண்டும், மாணவர்கள் மீள கல்லூரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனப் பணிக்கப்பட்டது. கொதிக்கும் மன நிலையோடு கொமற் மொன்ற்பெல்லியருக்கு திரும்பினார். மீளவும் ஜூலை மாதம் பாரீசுக்கு வந்து சேர்ந்தார். மாணவருக்கு பாடம் சொல்லித்தருவதன் மூலம் தம் வாழ்க்கையை ஒட்டினார். இந்த

Page 11
வேளையில், ஐக்கிய அமெரிக்காவுடன் பலவழித் தொடர்புகளைக் கொண்ட ஒரு ஜெனரலை சந்தித்தார். அவர் அமெரிக்காவிலுள்ள, ஈகோல் பல்தொழினுட்ப கல்லூரியின் அமெரிக்க வளாகமொன்றில் அனுமதி பெற்று தருவதாக கூறினார். ஆயினும் கொம்ற்ரின் இந்த குடியகல்வுக்கனவு, குறித்த கல்லூரி மூடப்பட்டதால் சாத்தியமாகவில்லை. தொடர்ந்து தனியாருக்கு பாடம் சொல்லி கொடுப்பதுடன் ஆங்கிலத்திலிருந்து ஒரு கேத்திர கணித நூலை மொழி பெயர்க்கும் பணியிலும் ஈடுபட்டார்.
1817ல் மிகமுக்கியமான ஒரு சந்திப்பு நிகழ்ந்தது 'Industrie' என்ற பருவ இதழின் இயக்குனரான ஹென்றி செயின் சைமன் உடனான கொம்ற்ரின் சந்திப்பு புதிய வாய்ப்புக்களை அவருக்குத் தந்தது. முறையியலின் வழிபட்ட சிறந்த பணியாள ராக கொம்ற் இருந்தமையால், சைமன் தன் செயலாளராக அவரை ஏற்றுக் கொண்டார். இருவரும் இணைந்து செயற்பட்டனர். ஆரம்பத்தில் மாதம் 350 பிராங் கொமற்க்கு வேதனமாக வழங்கப்பட்டது. ஆயினும் சைமன் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியால், அடிக்கடி வேதனம் இன்றியே கொம்ற் செயற்பட வேண்டியிருந்தது. இதற்கு மேலாக கொம்ற், தன் புலமைத் தேடலின் வழி எதிர்கால வெகுமதியை கருத்திற் கொண்டு உழைத்தார் என்பதே பொருத்தமானது. 1817க்கும் 1823க்கு மிடைப்பட்ட காலப்பகுதியில், கொம்ற்ரும் சைமனும் நெருங்கி இணைந்து சமூக மீளமைப்புக்கு இன்றியமையாத விஞ்ஞான செயற்பாடுகள் என்ற தலைப்பிலான ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். (The scientific operatury necessary for the reorganization of Society). எனினும் இவ்வாறான இணை செயல்பாடுகளிடையேயும் 1824ல் இருவரும் பிரிய நேர்ந்தது. இவர்களிடையான முரண்பாடு கருத்து நிலைசார்ந்ததாயும் பொருளாதாரம் தொடர்பானதாயு மிருந்தது. மக்களை தம்திட்டத்திற்கு எவ்வாறு வசப்படுத்துவது
(6.

என்பதில்தான் இவர்களது கருத்தியல் முரண்பாடு குவிந்திருந்தது. தீவிரவாதியான சைமன், உடனடியான சமூக சீர்திருத்தத்தின் அவசியத்தை வற்புறுத்தினார். தமது ஆதரவாளர்களான தாராண்மைக் கைத்தொழிலாளர்கள், உற்பத்தியாளர்களிடையே விழிப்புணர்வை முதலில் ஏற்படுத்தி, பிரான்சினது சமூக மீளமைப்பை காண விழைந்தார். ஆனால் கொம்ற்ரின் நிலைப்பாடு நடைமுறை சார்ந்த இந்த நடவடிக்கைக்கு பதில் கோட்பாட்டு ரீதியான விஞ்ஞான அடிப்படைகளை காண்பதனையே அழுத்தி நின்றது. மேலும், தமது கோட்பாட்டிற்கு சைமன் தந்த சமய அழுத்தத்தையும் கொம்ற் எதிர்த்தார். இக்காலத்து கொம்ற் தாராண்மை விடுதலை இதழியலாளராகவும் மேனிலை விஞ்ஞான குழாத்தை சேர்ந்த அறிஞராகவும் உலக அரங்கில் அறியப்பட்டிருந்தார். கொமற்ரைப் பொறுத்தவரை மகோன்னதமான அறிவியற் சாதனைகளை ஈட்டி, தேர்ந்த விஞ்ஞானிகளின் ஆதரவையும் ஆகர்சிப்பையும் பெற்றபோதும், தனித்தே செயல்பட வேண்டிய நிலை. அறிவியல் உண்மை நிலைநாட்டப்பட்ட போதும் அதன் தந்தைக்கு ஒரு பதவியோ நிலையான, வேதனமோ இல்லாத ஒரு நிலை.
1825 Quij6Ifuhsi), B(3y T656ór LDF6ör (Caroline Massin) ஐ மணம் புரிந்து கொண்டார் கொம்ற். பல ஆண்டு காலம் கொம்ற்க்கு அறிமுகமான இவர், ஒரு சிறிய புத்தக நிலையத்தின் சொந்தக்காரர். இந்த மணவாழ்வு துயரமானது. பதினேழுவருட கால முரண்பாட்டினுாடு தொடர்ந்த மகிழ்ச்சியற்ற இந்த வாழ்வு 1842ல் இவர்கள் முற்றாக பிரிந்ததுடன் முடிந்தது. இவரது மணவாழ்வை பொருளாதாரமும் பாதித்ததெனலாம். தொடர்ந்து தனியாருக்கு பாடம் சொல்லித்தந்ததுடன் மேலும் தீவிர அர்ப்பணிப்புடன் தமது ஆய்வுலகில் சஞ்சரித்தார் கொம்ற்.

Page 12
விளைவாக இவரது மகத்தான ஆய்வு நூலான Positive Philosophy வடிவம் பெற்றது; 1830-1842 வரையான 12 வருட கால முயற்சி கனிந்தது. அவரது ஆய்வு முடிவுகளை மக்கள் முன் வைக்கும் நிலை ஏற்பட்டபோது அவருக்கென ஒர் உத்தியோக பூர்வமான பதவி இருந்ததில்லை. இதனால் கணக்காளர்களுக் கென ஒரு தனிப்பட்ட பயிற்சி நெறியினை ஒழுங்கு செய்தார். தனது புலனறிவாத / புறமெய்மை அறிவின் சாரத்தை அவர்கள் முன் வைத்தார்.
குறிப்பிடத்தக்க ஆளுமைகளான விஞ்ஞான அக்கடமிகளைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் வொன் ஹம்போல்ற், (Alexander Von Humboldt) GlLumG6sflu 60m5Ilyss60 5ss6ss6rd டுநொயர் (Charles Dunoyer), இன்னும் ஈகோல் பல் தொழினுட்ப கல்லூரியின் முன்னாள் மாணவ நண்பர்கள் என தரமான ஆய்வாளர்கள் இவரது விரிவுரைகளுக்கு சமூகம் தந்து கெளரவமளித்தனர்.
இவ்வேளை ஈகோல் பல் தொழிநுட்பக் கல்லூரியில் பேராசிரியர் பதவி ஒன்றினைப்பெற முயன்றும் அது கைகூடாமற் போனது. எனினும் பின்னாளில் பரீட்சகராகும் அந்தஸ்து மட்டும் கிடைத்தது. தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் கணித போதனை வழி கிடைத்த வருமானத்தின் துணையோடு வாழ்வின் வறுமையோடு ஓரளவிற்கு அவரால் போராட முடிந்தது.
இந்த துயரமான நிலைமைகளிடையேயும் குறிப்பிடத்தக்க நன்மாணாக்கர்களை பெறும்பேறு கொம்ற்க்கு வாய்த்தது. SN6ffa56f6d 6TLÓ6ö 6óibgBuurt (Emile Littre), (BaFiii îG6l6öyff (Sir - Bewster), GgTGör 6öQB6JÚ L66ò (John Stuart Mill) GLUTGörGripTif குறிப்பிடத்தக்கவர்கள். மில், கொம்ற்க்கான பொருளாதார
 

தேவைகளிலும் உதவியாயிருந்தார். கூடவே கொம்ற்ரை நேசித்தவர்களிடம் இருந்து பொருளாதார உதவிகளைப் பெறவும் துணையானார். இக்காலத்தும் தன்னை அங்கீகரிக்க மறுத்தவர்களுடன் போராடுவதில் தீவிரமாக இயங்கினார் கொம்ற். தம்மை எதிர்த்தவர்கள் தொடர்பாக மிக கடுமையான கடிதங்களை பத்திரிகைகளுக்கு எழுதினார். 1944ல் ஈகோலிலே பல எதிரிகளை எதிர் கொள்ள நேர்ந்தது. விளைவாக இவரது பரீட்சகர் பதவி புதுப்பிக்கப்படாமல் போனது. அரைவாசி வருமானம் இழக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் தான் குளோதில் g 66ä56ü (Clothilde de Vaux) 66õrgub puuri 6lgL பெண்ணுடனான காதல் உறவு துளிர்த்தது. ஒரே ஒருவருட உறவுதான் இங்கும் மிஞ்சியது. காசநோயால் குளோதில்டியை இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை. இந்த துயரம் தந்த சுமையுடனேயே மீளவும் தீவிரமான ஆய்வில் தம்மை ஈடுபடுத்தினார் கொம்ற். இழந்து போன காதலியின் உணர்வுத் தாக்கம் அவரது கருத்து நிலையிலும் வெளிப்படும். 18446ö 96).J35 System de politique positive (DIT6ù Gl6).6fluUIT601g5. இந்நூலில் அறிவுக்கு மேலாக மன வெழுச்சியை அழுத்தும் கொம்ற்ரின் உள்ளத்திடை ஆய்வாளர் இம் மாற்றத்தினை இனங்காண்பர். நீண்டகாலமாக மேலாண்மை செலுத்தி வந்த ஆணாதிக்க அறிவுக்கு மருந்தாக பெண்மையின் சக்தி மானிடத்தின் மேன்மைக்கு இன்றியமையாதது என்னும் அவரது கருத்தியல் இங்கு துலங்கும். இந்த யுகத்தின் பிரச்சினைகளுக்கு எல்லாம் உலகளாவிய அன்பு தான் தீர்வு என்ற கொம்றின் கருத்தை, அவரது மாணவரான ஜே.எஸ் மில்ஸ் போன்றவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதுபோலவே கொம்ற் முன்வைத்த LDITg)|L &LDu Jib (Religion of Humanity) 6T6örp 35(555ugub இவர்களால் நிராகரிக்கப்படும். புலனறிவாத்தின் பிதாமகர் மீளவும்

Page 13
இறையியல் நிலைக்குள் வீழ்ந்து விட்டதான விமர்சனங்கள் மேலெழும்.
ஒருபுறம் நண்பர்களை இழந்தநிலை. அதே வேளை புதிய திருச்சபையைச் சேர்ந்த பலர் கொம்ற் இன் கருத்துக்களால் கவரப்படும் நிலைமையினைக் காண முடியும். 1848, பெப்ரவரி புரட்சியை தொடரும் சில நாட்களில் Society Positivist என்ற சங்கத்தை அமைத்தார். 50களின் ஆரம்பத்தில் இவரது போதனைகளின் பிரதான களமாக இந்நிலையம் விளங்கியது. இந்த அமைப்பின் கிளை நிலையங்கள் ஸ்பெயின், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் அமைக்கப்பட்டன. வாரந்தோறும் இங்குள்ள தம் மாணவர்களுக்கு செய்திகளை அனுப்பிவந்தார் கொம்ற். புதன்கிழமை தவிர்ந்த ஒவ்வொரு நாள் மாலையிலும் ஏழு மணியில் இருந்து ஒன்பது மணிவரை இந்த புலனறிவாத சமூகத்தில் கூட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. இக்காலப்பகுதியில் புலனறிவாத திருச்சபையின் இரட்டை இலக்குகளாக ஒழுங்கும் முன்னேற்றமும் கொம்ற்ரினால் முன்வைக்கப்பட்டபோதும் பின்னைய காலங்களில் ஒழுங்கு என்பதே முக்கியத்துவம் கொண்டதாக வெளிப்பட்டது. 1857ல் புற்றுநோயினால் பீடிக்கப் பெற்ற கொம்ற்ரின் மரணம் நிகழ்ந்தது. 59.1857ல் புலனறிவாத மயானத்தின் கல்லறைக்குள் கொம்ற்ரின் பூதவுடல் விதைக்கப்பட்டது. கொம்ற்க்கு மிகவும் 6idiólstaf Dreot மாணவர்களின் உடலங்களும் குருவின் நினைவுத் தூபிக்கு அருகி லேயே பின்னாளில் புதைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
சமூகவியலுக்கான கொம்ற்ரின் பிரதான பங்களிப்புக் களை பின்வரும் தலைப்புக்களின் கீழ் இனி காண்போம்.

புறமெய்மை வாதம்/புலனறிவாதம் (Positivism)
சமூகம் தொடர்பான இயற்கை வழி விஞ்ஞானம் ஒன்றினைக் காண்பதே கொம்ற்ரின் பிரதான இலக்காகும். இது மனிதகுலத்தின் கடந்த கால வளர்ச்சியை விளக்குவதுடன் வருங்காலம் பற்றிய எதிர்வு கூறலாகவும் அமையும். ஒழுங்கின்றி விபத்துப்போலவும் விதிகளற்றும் கிடந்ததாக கருதப்பட்ட இயற்கைப் பொருண்மைகளிடை ஓர் ஒழுங்கினைக் காண்பதில் இயற்கை விஞ்ஞானம் வெற்றி கண்டதாக கொம்ற் வாதிட்டார். இவ்வாறே சமூகத்தையும் விஞ்ஞான முறையில் கற்க வேண்டும் என்றார். இதற்கான ஒரு முறையியலாகவே Positivism என்பதனை இயற்கை விஞ்ஞான நுட்பங்களின் மாதிரிகளிலிருந்து உருவாக்கினார். தமிழில் புற மெய்மைவாதம், புலனறிவாதம், நிச்சயவாதம், நேர்க்காட்சிவாதம் எனும் பெயர்களால் சமூகவியல் புலங்களில் இது வழங்கப்படுகின்றது. நேராகக் கண்ட உண்மைகளையன்றி பிறகொள்கைகள் எதனையும் அடிப்படை யாகக் கொள்ளாத தரிசனமாக இது அமைகின்றது. அறியப்படாத பிரபஞ்ச இரகசியங்களை தேடி இந்த தரிசனம் கவலை கொள்வதில்லை. மனித வாழ்விற்குப் பயனான அறிவே இதன் எல்லை ஆகும். சமூக நலனும் சீர்திருத்தமுமே இதன் நோக்காகும்.
கொம்ற்ரின் முறையியல்
O 916).35|T607b (Observation)
Lifics Tg560601 (Experiment) O glu60sful 6 (Comparative Method)
என்பவற்றின் வழியாகவே சமூக முன்னேற்றம், சமூக
l

Page 14
ஒழுங்கு என்பவற்றிற்கான விதிகளை விளக்க முடியும் என்றார் கொம்ற்.
அனைத்து விஞ்ஞானக் கோட்பாடுகளும் அவதானிக்கப் பட்ட உண்மைகளினடியாகவே அமையவேண்டும். அதேவேளை யாதேனுமொரு கோட்பாட்டின் வழிகாட்டலின்றி உண்மைகளை அவதானித்தலும் இயலாது. சமூக உண்மைகள் தொடர்பான யாதேனுமொரு கோட்பாட்டுடன் இணைத்து நோக்கும் போதே விஞ்ஞான ரீதியான அர்த்தத்தைக் காண முடியும். அவதானங் களை தனித்து மேற்கொண்டபோதும் அவை புள்ளிவிபரங்கள், மற்றும் குறித்த விடயத்தின் இயங்கு விதிகள் என்பவற்றுடன் இணைத்தே நோக்கப்படவேண்டும் என்றும் கொம்ற் தனது முறையியலில் விளக்குவார்.
சோதனை முறை கடினமானது. சமூக நிகழ்வுகளைப் பொறுத்தவரையில் பகுதிநிலையிலேயே பயன்படுத்தக் கூடியது. எல்லா வேளைகளிலும் சமூக நிகழ்வுகள் தொடர்பான நேரடி அவதானம் சாத்தியப்படாதபோது இம்முறை பெரிதும் துணையாகும். குறிப்பாக சமூக செயற்பாட்டில் பாதிப்பான நோயியல் விளைகின்றபோது சில வகையான பரிசோதனை முறைகள் சாத்தியமாகலாம். நோய்நிலைக்கு முன்னைய நிலைமைகளை ஒப்பிடுவதன் மூலம் சமூக அறிவு இங்கே பெறப்படும். 17ம் நூற்றாண்டின் ஆரம்ப கால பிரான்சிய சமூகத்தில் தான் கண்ட அனுபவங்களினடியாகவே கொம்ற் இதனை முன்வைத்தார்.
சமூகவியலாளர்களின் விஞ்ஞான முறையியலின் மையமாக கொம்ற் குறிப்பிடும் ஒப்பியலாய்வும் முக்கியமானது. மனித சமூகங்களை விலங்கினங்களோடு ஒப்பிடும் போது சமூக உறவுகள் தொடர்பான அடிப்படைக் கீற்றுக்களை அறிய முடியும்;

அவ்வாறே மனித உயிரிகளுக்கும் விலங்குகளுக்குமிடையிலான வேறுபாடுகளையும் காணமுடியும். மனித சமூகங்களுக்கி டையிலான இத்தகைய ஒப்பீடுகளின் வழியான அறிவு. சமூகவியலுக்கு பெரிதும் துணையாகவுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் முற்றிலும் தனித்து தனித்து இயங்குகின்ற மனித சமூகங்களுக்கிடையிலான ஒப்பீடாக இது அமைந்தது. இம் முறையானது சமூகப்படிமலர்ச்சியின் வேறுபடும் நிலைமைகளை தேடிக்காண்பதில் துணையானது. மனுக்குலம் முழுமையும தனித்த, சீரான, ஒரேபாதையில் முன்னேற்றம் கண்டபோதிலும் வெவ்வேறு சமூகங்களும் பெருமளவில் சமனற்ற வளர்ச்சி நிலைகளை, மேம்பாட்டினை கொண்டிருப்பது, இங்கு கவனத்திற்கு ரியது. இந் நிலைமைகளுக்கான காரணங்கள் இன்னமும் சிறியளவிலேயே அறியப்பட்டுள்ளன. மேம்பாட்டின சில படிநிலைகள் தொடர்பாக நாகரீகங்களின் வரலாறு எந்தவித தடயங்களையும் விட்டுச் செல்லாத போது ஒப்பியல் முறையில் இதனைக்காண்பது சிரமமானது என்பதும் இங்கு கவனம் பெறவேண்டும்.
மரபுவழியான இம்மூன்று விஞ்ஞான முறைகளையும் சமூகவியல் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு மேலாக இவற்றில் aly Songbo (p60Busir (Historical method) g6örguóOLDuut மையையும் கொம்ற் பெரிதும் அழுத்தினார். மனிதத்துவத்தின் தொடர் நிலைகளை வரலாற்று ரீதியில் ஒப்பிடும் விஞ்ஞான முறையியலின் வழியாகவே அரசியல் தத்துவம் உருவானதுடன் விஞ்ஞானத்தின் துணை அடுக்காகவுமானது. மனுக்குலத்தின் படிமலர்ச்சி நிலைகளை வரலாற்றுரீதியின் வழி ஒப்பிடுவதன் வழிதான் சமூகவியல் விசாரணையின் மையநிலை நிறைவு காணும். வரலாற்று ரீதியான படிமலர்ச்சிநிலையினை அறியாத சமூகவியல் அர்த்தமற்றது என்பதும் கொம்ற்ரின் அழுத்தமான

Page 15
கருத்துநிலையாகும்.
தொடக்க காலத்தில் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வுகள் விஞ்ஞானத்தில் இருப்தாக கொம்ற் நம்பினார். பின்னாளில் சமூகவியலின் வளர்ச்சியுடன் விஞ்ஞானம் என்பது தான் தோற்றுவித்த நோய்களை மட்டுமே தீர்க்கவல்லது என குறிப்பிட்டார்.
மனித முன்னேற்றத்திற்கான விதி (Law of Human progress)
ஆரம்பகாலத்து செயின் சைமனுடன் இணைந்து செயற்பட்ட வேளையிலே மனித குலத்து நிகழ்ந்து கொண்டிருந்த தொடர் மாற்றங்களை கொம்ற் ஆராய்ந்தார். விஞ்ஞான ரீதியான ஒப்பியல் ஆய்வின் வழி கொம்ற் முன்வைத்த முக்கியமான அறிவுக்கனியாக மனிதமுன்னேற்றத்திற்கான விதி அல்லது
அறிவியல் படிமலர்ச்சியின் முன்று படிநிலைகள் பற்றிய விதி (The
Law of three stages of intellectual evolution) 6Tgob தலைப்பிலான கொம்ற்ரின் ஆக்கம் அமைந்தது. மனிதப் பண்பின் வளர்ச்சியுடனும், தனிமனிதர்களின் வாழ்க்கை வட்டத்துடனும் வாழ்க்கை பற்றிய மனித விளக்கம் எவ்வாறு அமைந்தது என்பதனை கொம்ற் இந் நூலிலே தெளிவாக விளக்கினார். ஒரு தனியனின் மன வளர்ச்சிக்கு சமாந்தரமாகவே மனித இன படிமலர்ச்சியும் அமைந்தது என்றார். மனித இனமானது குழந்தைப்பருவத்து அர்ப்பணிப்பான நம்பிக்கையாளராகவும், குமரப்பருவத்து விமர்சன மனப்பாங்குடனான நுண் பொருள் கோட்பாட்டு வாதியாகவும், முதிர்பருவத்து இயற்கையான தத்துவவியலாளனாகவும் விளங்குவதாகவும் கொம்ற் கூறினார்.

எங்கள் அறிவின் ஒவ்வொரு கூறும் பின்வரும் மூன்று படிநிலைகளை கடந்து வந்தது என்பது கொம்ற்ரின் படிமலர்ச்சிவிதி ஆகும்.
முதல்நிலையான இறையியல் நிலையில் மனித மனமானது உலகநிகழ்வுகளுக்கெல்லாம் இயல்நிலை கடந்த சக்திகள் தான் காரணம் என நம்புகிறது. இறைசக்திகள் தாம் உலக உயிர்களை இயக்குவன; செயல்களை நிர்ணயிப்பன அனைத்திற்கும் அவையே மூலகாரணம் என்பது இக்காலத்துக் குரிய நம்பிக்கையாகும். இது சமயம் உண்டான பருவ காலம்.
இரண்டாவது நிலையான நுண்பொருள் நிலையானது தத்துவ ஞானம் வளர்ச்சி கண்டதன் விளைவானது. தான்
கண்டவற்றின் பின்னாதாரமான பரமாத்திக உண்மைகளை கற்பனையில் கருத்துருவாகக் காணும் பருவமாக இது அமைகின்றது.
மூன்றாவது நிலையான புற மெய்மை நிலையானது, கற்பனை நீங்கிய விஞ்ஞான அறிவின் வளர்ச்சிப்பருவமாகும்.

Page 16
அறிவுக்கு எட்டியதையே அளக்கின்ற இந்தப் பருவமே மனித
மனச்செயற்பாட்டின் உச்ச நிலையான மெய்யறிவியல் நிலை என்பது கொம்ற்ரின் கருத்து.
சமூகம் பற்றிய சிந்தனை இன்னமும் இறையியல் நிலையிலும், நுண்பொருள் கோட்பாட்டு நிலையிலுமே அதிகளவு இருப்பதாக கொம்ற் கருதினார். இந்த வகையில் முதன் முதலாக புற மெய்மையுடன் தொடர்புகொள்ளும் அறிவாக வானியலை கொம்ற் இனம் காண்பார். நிறைவான உச்சநிலை வளர்ச்சியாக புறமெய்மை வழி சமூகவியல் வளர்ச்சி காண்கின்றதென்பார் கொம்ற். மனித நடத்தை, பண்பாட்டுக் கோலங்களின் சிக்கல் நிலைமைகளிடை இத்துறையின் வரவு தாமதமானது என்றும் குறிப்பிடுவார்.
கொம்ற்ரை பொறுத்தவரை மனித மனத்தின் ஒவ்வொரு படிநிலையும் அதன் உப படிநிலைகளும் ஒன்றிலிருந்து ஒன்று என்றவாறே தொடரக் காணலாம். பழைய அமைப்பு அழியாமல் புதியது தோன்ற முடியாது. புதியதன் தோற்றத்திற்கு பழைய உள ஒழுங்கு முற்றாக அகலுதல் இன்றியமையாததாகும். இந்த நிலையை எய்தும்வரை வரவிருக்கும் கால இயல்புகளைப் புரிதலும் இயலாது.
மனித மனத்தின் முற்போக்கான விடுதலையின் வளர்ச்சிப் படி நிலைகளிலுமே கொம்ற்ரின் சிந்தனை குவிந்திருந்தது. கூடவே இந்தப் படிநிலைகளுடன் தொடர்புடையதாக சமாந்தரமாகக் காணப்பட்ட சமூக நிறுவமைப்புக்கள், சமூக ஒழுங்கின் தன்மை, மற்றும் மனித வாழ்வின் பொருளாதார, உணர்வு நிலைமைகள் அனைத்தையும் இணைத்து விளக்கினார்.
7.
2.

காட்டுரு
1.
கொம்ற்ரின் கருத்துநிலை
ஒழுக்கம்சார் சக்கதிகள் (உணர்தல்
SeglsFTf சக்திகள் (சிந்தனை)
பொருள்சார் சக்திகள் (செயற்றிறன்)
சுயதிருப்தி
நிறுவனங்களின் ஒருங்கிசைவு
suputb
அரசியல் நிறுவனங்கள்
நிறுவனம்
೧೮ಃಹಣೆ
மூகத்தின செயல்பாட்டுத் தேவைப்பாடுகள்
J.
மொழி
உள்ளுணர்ச்சிப்பாங்கு - நுண்மதி - மனம் திரள் அறிவு பொதுநலப்பண்பின் விரிவாக்கமும் நிறுவனங்களின் முன்னேற்றமும்
سلیه ما 2“-|“ჯა) V/
தொழிற்பகுப்
இயற்கையில் மனிதன் பொருள்சார் தேவைகள் தொடர்பான நிபந்தனைக்குட்படுத்தப்பட்ட செயற்பாடுகள்
~പ് படைத்துறை
புலனறிவாதம் (தொழில்சார்)
AM
நுண்ெ ருெள் (Bastitutu'.G
66)
இறையியல் (இறைசார் படையியல்
நிலை)
மேம்பாட்டின் படிநிலைகள்

Page 17
அறிவார்ந்த பொருள்சார் சமுக9லகின் ஒழங்கின் உணர்வு
நிலை முகம் s s நிலை. இறையியல் இராணுவமயமானது குடும்பம் வீடுசார்ந்தது பிணைப்பு
நுண்பொருள் | சட்டரீதியானது அரசு கூட்டுவாழ்வு பயபக்தி கோட்பாடு புறமெய்மை தொழில்சார்ந்தது இனம் உலகளாவியது சாத்வீகம்
முதற்படிநிலையான இறையியல் தொடர்பாகவே ஒப்பீட்டளவில் விளக்கமான ஆய்வுகளை கொம்ற் முன்வைத்துள்ளாரெனலாம். இறையியல் நிலையை ஐந்து துணைப்பிரிவுகளாக வகுத்து இவையொவ்வொன்றும் முன்னேற்றத்திற்கு வழங்கியுள்ள பங்களிப்பினை இனங்காட்டுவர். துணைநிலைகள், அவற்றின் சமூகப்பங்களிப்புகள் சார்ந்த கொம்ற்ரின் வகைப்பாடு பின்வருமாறு
Ց|60լDեւյtb.
போலிப்பொருள் வணக்கம் ஆ குடும்பம் பலதெய்வ வணக்கம் ஆ அரசு , நிலவுடைமை
அறிவார்ந்த பல் தெய்வ விளக்கம் ஆ அறிவார்ந்த பங்களிப்பு சமூகமட்டத்திலான ஒரு தெய்வ
வணக்கம் Pதந்தையர் தேசம் தற்காப்பு நிலையான ஒரு தெய்வ ஆ பெண்களினதும் தொழிலாளா வணக்கம் களினதும் விடுதலை
ஒவ்வொரு 96 பருவத்திற்குமான இயல்புகளையும் அவற்றிற்கான சமூக அமைப்புக்களையும், அரசியல் ஆதிக்கங்களையும் கொம்ற் இணைத்து விளக்கினார். இறையியல் நிலையானது; குருமாரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது; இராணுவத்தால் ஆளப்படுவது. நுண்பொருள் கோட்பாட்டு நிலையானது, மத்திய கால மறுமலர்ச்சியுடன் இணைத்து நோக்கக் கூடியது. இது திருச்சபையினரதும் சட்டத்தரணி களினதும் ஆதிக்கத்திற்குட்பட்டது. இவ்வேளை உதயமாகும்

புறமெய்மை நிலையில், தொழில்துறை நிர்வாகிகளினதும் விஞ்ஞான ஒழுக்க வழிகாட்டிகளினதும். ஆட்சி இருக்குமென்றார் கொம்ற். இவ்வாறே முதல்நிலையில் குடும்பமே உலக பொதுவான சமூக அலகாகும். இரண்டாவது நிலையில் அரசுதான் சமூகமுதன்மை பெறும். மூன்றாவதில் மனித இனமே செயற்பாட்டுக்குரிய சமூக அலகாகும். இவையனைத்துமே நிகழும் முற்போக்கான உளவிருத்தி மாற்றங்களுக்கு ஏற்பவே தோற்றம் பெறும்.
மனித முன்னேற்றத்துக்கான விதிகள் பற்றிய தமது விளக்கத்தில் அறிவியல் படிமலர்ச்சியின் அவசியத்தினை அழுத்திய போதிலும், ஏனைய செல்வாக்கு காரணிகளையும் ஏற்றுக்கொள்கின்றார் கொம்ற். சமூக முன்னேற்ற வேகத்தினை தீர்மானிக்கும் பிரதான காரணியாக குடித்தொகை, வளர்ச்சியினைக் குறிப்பிடுகிறார். அதிகரிக்கும் குடித்தொகை, இருப்புக்கான புதிய வழிகளைகாண ஊக்குதலாகும்; புதிய தேவைகளினடியாக அறிவார்ந்த, ஒழுக்க விசைகளும் வளர்ச்சி காணும்; பெளதீக நிலையிலான அசமத்துவங்களும் இல்லா தொழிக்கப்படும். இவற்றினை விட சமூக படிமலர்ச்சிக்கான மற்றொரு காரணியாக தொழிற்பிரிப்பையும் கொம்ற் இனங்காட்டுவதும் இங்கு கவனத்திற் கொள்ளத்தக்கது.
afei'errorisofoir Luigcup60so (Hierarchy of Sciences)
விஞ்ஞானங்களின் படிமுறையமைப்பு தொடர்பான கொம்ற் கருத்துநிலை அவரது படிமலர்ச்சி விதியின் வழியது. வேறுபடும் துறைகளிடை தர்க்க ரீதியான தொடர்புண்டு. ஒவ்வொரு தொடர் நிலையும் முன்னைய காலத்துடன் கூட்டிணைவு கொண்டுள்ளது. அவற்றின் முன்னேற்ற வேகங்களில் வேறுபாடுண்டு.

Page 18
காட்டுரு 1.2 விஞ்ஞானங்களின் படிமுறை
விஞ்ஞானங்களின் படிநிலையில் சமூகவியலை உச்சியிலே வைப்பார் கொம்ற். ஏனைய அனைத்து விஞ்ஞானங்களும் சமூக விஞ்ஞானங்களுக்கான தயார் நிலைகளே என்றும் குறிப்பிடுவார். சமூகவியலானது ஏனைய விஞ்ஞானங்களில் தங்கியிருந்தாலும், படிநிலையில் தனக்கு அருகிலுள்ள உயிரியலில் பெரிதும் தங்கியுள்ளது. ஏனைய அறிவுகள் போலன்றி, உயிரியல் முழுதளாவிய நிலையில் உயிரியைக் காண்பது. இவ்வாறான முழுமைவெளிச்சத்தில் கூறுகளை காண்பதே சமூகவியலுக்கு பொருத்தமானது என்றும் கொம்ற் வலியுறுத்துவார்.
சமூகவியலின் fascir (Division of Sociology)
உயிரியலானது உடலியல் (Anatomy), உடற்
றொழிலியல் (Physiology) என இரு பிரிவுகளாகவுள்ளமை
 

போன்றே சமூகவியலையும் நிலையியல் (Statics), இயக்கவியல் (Dynamics) என இரு கூறுகளாக பிரிக்க முடியுமென்பார் கொம்ற். இவற்றுள் சமூக நிலையியல் அடிப்படையானது. இப்பிரிவுகள் உண்மைகளுக்கிடையிலானதாக அல்லாமல் கோட்பாட்டின் இரு கூறுகளுக்கிடையிலானவை. சமூக இருப்பு நிலைமைகளின்
நிலைபேறான எத்திசைவுத் தன்மையை ஒழுங்கு (Order) குறித்து நிற்கின்றது. சமூக வளர்ச்சியை விளக்குவதாய் முன்னேற்றம் (Progress) அமைகின்றது என்பார் கொம்ற். இங்கு ஒழுங்கு என்பது நிலையியலையும், முன்னேற்றமென்பது இயக்க வியலையும் சுட்டிநிற்பன.
சமுகநிலையியல்
மனித முன்னேற்றம் தொடர்பான தமது விதிகளின் வழி சமூக அசைவுக்கான அடிப்படைகளை கொம்ற் விளக்கினார். 1838ல் புதிய சமூகவியலுக்கான உருவைத் தந்தார் கொம்ற். சமூக ஒருங்கிசைவுக்கான அடிப்படைகளை தீர்மானிக்கும் காரணிகளாக சமூக ஒத்திசைவு என்ற புறமெய்மைக் கருத்தாக்கத்தினை சமூக நிலையியல் என்ற தமது எண்ணக் கருவாக்கத்தினுாடாக கொம்ற் ஆராய்ந்தார்.
சமூகவியலில் புள்ளிவிபரவியல் ஆய்வானது, சமூக அமைப்பின் வேறுபட்ட பகுதிகளுக்கிடையிலான செயல், எதிர்ச் செயல் சார் விதிகளை வெளிப்படுத்துகின்றது. சமூக முழுமையின் கூறுகளுக்கிடையிலான பரஸ்பர சமநிலையையும் இது ஆராய்கின்றது. சமூக தொகுதியின் பகுதிகளுக்கும் முழுமைக்குமிடையில் எப்பொழுதும் தடையிலாததோர் இசைவு காணப்படுகின்றது. இந்த இசைவு குழப்பப்படும் பொழுது நோய்
soos ou JITaf66ögBg5. (Pathological conditions)

Page 19
ஒர் அமைப்பாக சமூக பொருண்மை காணப்படுவதற்கான நிலைமையை விளக்கியதோடு அவ்வமைப்பின் கூறுகளுக் கிடையிலான தொடர்புகளையும் கொம்ற் தெளிவுபடுத்தினார். இதன் வழி சமூகம் பற்றிய ஆரம்ப கால செயற்பாட்டியல் ஆய்வாளராக கொம்ற்ரை கருதமுடியும். தமது நிலையியல் தொடர்பான ஆய்வில் சமூக உயிரியின் பகுதிகளுக்கிடையிலான ஒருமைப்பாட்டிற்கான அடிப்படைகளின் இயல்புகளையும் மூலங் bങ്ങണu|b விரிவாகவே கொம்ற் விளக்கினார்.
சமூகவியலை உயிரியலுடன் இணைத்து கொம்ற் நோக்கிய போதும் சமூக உயிரிகளின் தனித்துவத்தையும் கொம்ற் ஏற்றுக்கொண்டார். சமூக ஒருங்கிணைவினை ஆத்மார்த்தமான பிணைப்புக்களின் வழியேதான் ஏற்படுத்தமுடியும் என்றார். இதனால் அனைத்து சமயங்களுக்கும் மொழிக்கும் முக்கியத்துவம் தந்தார் கொம்ற்.
எங்கள் மூதாதையரின் தேடலில் உருப்பெற்ற பண்பாட்டினை தலைமுறை தலைமுறையாக கையளிக்கும் பிரதான கருவியாக மொழியை கொம்ற் சுட்டுவார். உலகளாவிய மொழிக்குடும்பத்தில் பங்குகொள்வதன் வழி, நாம் ஒரு மொழியியற் சமூகத்தின் பகுதிகள் ஆகின்றோம். மொழியானது எங்களை எங்கள் காலத்து சகமனிதர்களோடு மட்டும் தொடர்பு கொள்ளவைக்கவில்லை. இன்றைய சமூகத்தை எம் முந்தையோர் சமூகத்துடன் இணைக்கும் பணியையும் அது ஆற்றுகின்றது. மனித வரலாற்றில் வாழும் அங்கத்தினரை விட இறந்தவர்களே அதிகம். ஒரு பொது மொழியின்றி சமூக ஒழுங்கோ சமூக உறுதிப்பாடோ சாத்தியமில்லை என கொம்ற் உறுதியாக நம்பினார்.
 

மொழியானது மனித சமூகத்தின் வாழ்வியலில் தவிர்க்க முடியாததொன்றெனினும் அது ஒர் ஊடகம் மட்டுமே என்பதனையும் கொம்ற் கவனிக்கத் தவறவில்லை. மொழியின் இந்த மட்டுப்பாபட்டினை கருத்திற்கொண்டுதான். சமூகத்தை ஒருங்கிணைக்கும் விசையாக சமயத்தினை முதன்மைப் படுத்தினார் கொம்ற். எனினும் கொம்ற்ரினது சமயமானது தனது முனைப்பான இயல்புகளை விட்டு சக மனிதருடன் அன்பு கொள்ளுமாறு செய்யவல்லது.
சமூக உறுதிப்பாட்டில் தொழிற்பிரிப்பின் முக்கியத்துவத் தினையும் கொம்ற் தம் ஆய்வு வழி வெளிப்படுத்தினார். ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் கூட்டுவாழ்வின் அடிப்படையாக இதனைச் சுட்டினார். அதேவேளை தொழிற்பிரிப்பின் பாதகமான மறுபக்கத் தையும் கொம்ற் அவதானிக்கத்தவறவில்லை. ஒவ்வொரு தனியனும் மற்றவர்களில் தங்கியிருக்கும் நிலையென்பது சிறப்புத் துவத் தேர்ச்சியினால் அர்த்தமிழந்து போகின்றமையையும் இனங் காட்டுவார். அனுகூலங்களை விட பிரதிகூலங்களே அதிகரித்துச் செல்லும் நிலையில் இவ்வுலக தெய்வீக சக்திகள் இரண்டையும் முழுமையான இலக்கினை நோக்கி இணைத்தல் அவசியம் 616öTLITf.
அரசுபற்றிய தமது பகுப்பாய்வை குடும்பம் வரை கொம்ற் விரிவுபடுத்தினார். குடும்பத்திலே தான் மனிதனின் தன் முனைப்பான தன்மைகள் சீரமைக்கப்பட்டு சமூக நோக்கங் களுக்கான வாழ்வு தயாராகின்றது. பிறருக்காக வாழும் தன்மை யை சமூகமயமாக்கலின் வழி ஒரு குழந்தைக்கு ஊட்டும் அடிப்படை நிறுவனமாக குடும்பம் அமைந்திருக்கின்றது. இவ்வா றான நெருக்கமான உறவுகளின் வழிதான் மற்றவர்களுக்காக வாழவும் அதிலே நிறைவு காணவும் முடிகின்றது. இந்த உறவுப்

Page 20
பயிற்சி குடும்பத்துக்கு வெளியிலான பரந்த உறவுகளுக்கும் காலப் போக்கில் விரிகின்றது. இந்த அடிப்படையில்தான் பல்வேறு சமூக இணைவுகளுக்குமான அடிப்படையாக குடும்பத்தினை முதன்மைப்படுத்தினார் கொம்ற். இவ்வாறான அன்புப்பிணைப் பினை நான்கு முக்கியமான உணர்வு உறவுநிலைகளின் ஊடாக தம் பகுப்பாய்வில் விளக்குவார் கொம்ற். தாய் - தந்தை பாசம், பிள்ளைகள் மீதான பாசம், கணவன்-மனைவி இடையிலான அன்பு, சகோதர பாசம் எனும் உணர்வுகளின் வழி விரியும் உறவுகள் குடும்பத்திற்கும் அப்பால் சமூகம் வரை பயன்விளைவிப்பது என்பது கொம்ற்ரின் கருத்து. தாய் - தந்தையர் மீதான பாசமானது மிக அடிப்படையானதும் எளிமையானதும், உலகளாவிதுமான ஓர் அன்புப் பிணைப்புமாகும். இவ்வாறான உறவும் உணர்வும் சமூக உறுதிப்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதன. இதுவே குடும்பத்திற்கு வெளியிலும் விரிந்து குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் இடையிலான இணைவுக்கும் காலாவது என்பார் கொம்ற்.
சமூகம் விரிவடைந்து மேலும் சிக்கலாகின்ற போது அரசின் செயற்பாடுகளும் பெரியளவில் அதிகரிக்கின்றன. அவசியமானவையாகின்றன. இந்நிலையில் அரசானது உன்னதாமான பொதுநல உணர்வுகளை ஆளப்பதிக்கும் சமூக ஒழுக்கங்களை வெளிப்படுத்தி சமூகத்தை நெறிப்படுத்தும் பெரும்பணியில் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்பதும் கொம்ற்ரின் கருத்து நிலையாகும்.
சமுக இயக்கவியல்
நிலையியல் தொடர்பான தமது ஆய்வுத் தேடலை தவிர்க்க முடியாதவாறு சமூக இயக்கவியலுடன் இணைந்த
 

ஒன்றாகவே கொம்ற் கருதினார். சமூக இயக்கவியலை ஒர் ஒழுங்கின் விருத்தியென விளக்குவார் கொம்ற். ஒழுங்கினைத் தொடர்ந்து எப்பொழுதும் முன்னேற்றம் அமையும் என அழுத்தமாகவே குறிப்பிடுவார் கொம்ற். நிலையியல், இயக்கவியல் என்ற வகைப்பாடுகள் முறையியல், ஆய்வு நோக் கங்களிற்காக செய்யப்பட்டபோதும் அவை ஒன்றுடன் ஒன்று இசைவானவை என்பது கொம்ற்ரின் கருத்தாகும். செயற்பாட்டியல், படிமலர்ச்சி பகுப்பாய்வில் ஒன்றுடன் ஒன்று முரண்படுவதற்குப் பதில், ஒன்றில் ஒன்று முழுமை காண்கின்றன எனவும் கொம்ற் குறிப்பிடுவார்.
நெறிமுறைத் தத்துவம்
ஓர் எதிர்கால புறமெய்மை சமூகத்திற்கான சிக்கலான ஒரு மாதிரியை கொம்ற் விபரிக்கின்றார். இந்த சமூகமானது புதிய புற மெய்மை / புலனறிவாத சமய குருமாரின் ஆத்ம சக்தியினாலும், வங்கி மற்றும் தொழிற்துறை சார் நிபுணர்களினாலும், வழிப்படுத்தப்படும் என்பது கொம்ற்ரின் எதிர்பார்ப்பு. இவ்விஞ்ஞான சமூகவியலில் மதகுருமார் அறவழிகாட்டிகளாகவும் சமூதாய கட்டுப்பாட்டாளர்களாகவும் விளங்குவர். தம் அதியுயர் அறிவினைப்பயன்படுத்தி மக்களை தம் கடமைகளைச் செய்யவும், நெறிமுறையான வாழ்வினை வாழவும் துணையாவார்கள். இவர்களே சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினருக்குமான கல்வியை வழங்குபவர்களாகவும் அவர் திறன்கள் தொடர்பான மதிப்பீட்டாளர்களாகவும் விளங்குவர்; தமது அறிவின் வழி நல்லது கெட்டது எதுவென மக்களுக்கு உணர்த்தி அவர்களது கூட்டுக்கடமைகளையும் வலியுறுத்துவர்.

Page 21
கொம்ற்ரின் புதிய புற மெய்மை ஒழுங்கின் கோட்பாடாக அன்பு விளங்கும். அதனடிப்படையாக ஒழுங்கு அமையும். முன்னேற்றம் அதன் இலக்காகும். தன்முனைப்பான கடந்தகால வரலாற்று நிலைமைகள் அகன்று மற்றவர்களுக்காக வாழுதல் என்ற பொது நல நிலையினை மனித இனம் அடையும். சமூகவியலாளர்கள், மனிதனின் கடந்தகால, நிகழ்கால விஞ்ஞான அறிவினை உள்வாங்கி எதிர்காலத்திற்கான பாதையினை எதிர்வு கூறி சட்டபூர்வமாக தீர்மானிப்பார்கள். ஆத்மாவின் புற மெய்மை பொறிவலரான இவர்களை மனிதர் வணங்குவர். தன் இறுதிநாட்களில் மனுக்குலத்தின் அனைத்துத் துயரங்களினின்றும் விடுதலை தரவல்ல புதியதொரு சமயத்தின் தாபகராக தம்மைக் கொம்ற் கருதியிருந்தமையையும் இங்கு குறிப்பிடவேண்டும்

2 வேறர்பேட் ஸ்பென்சர் Herbert Spencer (1820- 1903)
வாழ்வும் காலமும்
சமூகவியல் தந்தையான கொம்ற்ரின் சமூக நிலையியல் சமூக இயக்கவியல் கருத்துக்களில் ஈடுபாடும் ஆர்வமும் கொண்டு சமூகவியலின் இரண்டாவது தந்தையெனவும் அறிஞர்களால் குறிப்பிடப்படும் ஸ்பென்சர், இங்கிலாந்தின் டெர்பி எனும் இடத்தில் 1820 ஏப்பிரல் 27ம் திகதி புகழ்பெற்ற ஜோர்ச்
குடும்பத்தின் ஒரே மகனாய் பிறந்தார். தந்தையார் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர்; சமய தராண்மைவாதி. பிள்ளைப்பருவத்து "வருத்தக 'காரப் பிள்ளையாக தளர்ந்த நிலையில் ஒழுங்காக பள்ளிசெல்ல முடியவில்லை. தாயும் தந்தையும் வீட்டிலே தந்த கல்வி மட்டுமே வாய்த்தது. பதின்மூன்றாவது வயதிலே மதகுருவான இவரது மாமனார் ஒருவருடன் வாழும் வாய்ப்பிடை மெய்யியல், இயற்கை விஞ்ஞானம் பற்றிய அடிப்படைக் கல்வியை பயில முடிந்தது. தொடர்ந்து பதினாறாவது வயதிலே கணிதம், இயற்கை விஞ்ஞானம் பற்றிய முறைமையான கல்வியை காணும் பேறும் கிடைத்தது. எனினும் அவரது ஆத்மார்த்த ஈடுபாடு, ஒழுக்க வியலிலும் அரசியலிலுமே குவிந்திருந்தது.
சிறிது காலம் பேர்மிங்ஹாம் புகையிரத பொறியியலா ளராக பணியாற்றி அந்த ஒப்பந்தம் முடிய மீளவும் 1941ல் தாயாரிடம் மீண்டார் ஸ்பென்சர். தொடக்க காலத்தில் பல

Page 22
பொறியியல் சார் கட்டுரைகளை, துறை சார் ஏடுகளில் எழுதி புகழ்பெற்ற ஸ்பென்சர், பின்னாளில் தன் S 60ór60)LDust f6) துறைகளான சமூக அரசியல் விவகாரங்களைப்பற்றி தீவிரவாத செய்தித்தாள்களுக்கு எழுதத் தொடங்கினார். இந்த வகையில் The Nonconformist g56) g6.jf 6TQg5uu '9Jaf6 QuT(555 மானபுலம்' பற்றிய கட்டுரை புகழ்பெற்றது. காவல்துறை மற்றும் பாதுகாப்பு என்பன தனியார் துறையிடமே விடப்படவேண்டும் என்பதே இக்கட்டுரையின் அடிநாதமாகும்.
1948ல் லண்டன் Economist சஞ்சிகையின் ஆசிரியராகப் பணியேற்றார். இரண்டு ஆண்டுகளில் அவரது முதல் அரசியல் GLDujuluj6) b|T6 stool Social statics G66furtóOrgb. 18826) Leader சஞ்சிகையில் வெளியான மேம்பாடு தொடர்பான கருதுகோளை விளக்கும் இவரது கட்டுரையும் குறிப்பான கவனத்தைப் பெற்றது. அக்காலத்து கொம்ற் மற்றும் அடிப்படை மாற்றவாத சிந்தனை யாளர்கள் பயன்படுத்திய ProgreSS-முன்னேற்றம் எனும் பதத்திற்
குப் பதிலாக Evolution - படிமலர்ச்சி எனும் பதத்தினைப் பயன் படுத்தினார். ஒரு படித்தான தன்மையிலிருந்து பன்மை நிலைக்கு சமூகம் மாறும் என்பது முன்னேற்றத்தின் உலகளாவிய விதி என்பார் ஸ்பென்சர். அசேதன > சேதன > உயர் சேதன (சமூக) மாற்றம் அனைத்துக்கும் பொதுவானதும் என்பார்.
1857ல் இவரது மாமனார் காலமானார். அவருக்குச் சொந்தமான கணிசமானளவு சொத்து இவரது ஆய்வுகளுக்கும் பிரசுரங்களுக்குமான பெருநிதியமானது. 18626), - First Principles, 18676o-Principles of Biology
(u6)0g5 Tg5,556in) 18726) Principles of Psychology, 1883-1894 35|Too Lugg5ulsi) Study of Descriptive Sociology, (6T' (6 Qg5 Tg55

as6in) 18736) The Study of Sociology 61gjib 6 Qugiraffair u6) ஆக்கங்கள் அறிவுலகைச் சேர்ந்தன. முழு ஐரோப்பாவிலும் ஈர்க்கப்படும் புலமையாளர் பெருமை கிடைத்தது. ஜோன் ஸ்ருவட் மில், தொமஸ் ஹக்லி, ரைண்டால், ஜோர்ச் எலியற் போன்ற அறிஞர் குழாம் சூழவே காணப்பட்டார் ஸ்பென்சர்.
வெற்றி பெற்ற நூலாசிரியரான ஸ்பென்சரின் ஆக்கங்கள் இங்கிலாந்து, அமெரிக்காவில் மட்டுமன்றி ஜேர்மன், ஸ்பானிஸ், இத்தாலிய, ரஷ்ய மொழியாக்கத்தின் வழி பல்வேறு புலங்களையும் சேர்ந்தது. பல்லாயிரம் பிரதிகள் விற்பனையானது. இவரது Principles of Biology ஒக்ஸ்போட் பலகலைக்கழகத்தின், பாட நூல் அங்கீகாரத்தைப் பெற்றது. யேல் பல்கலைக்கழகத்தில் 66)6.Su Jib aggrib Fib6Orff (Willium Graham Sumner), g6.jpg ஆய்வறிவினை வகுப்பறைப் பாடமாக்கினார்.
தனித்துவத்தைக் காத்தபடி எப்படி சமுதாய வாழ்வினை அமைப்பது என்ற கருத்து நிலையையே வாழ்வாகக்கொண்டு நீண்ட பெரும் ஆய்வுகளைக் கொண்ட ஸ்பென்சர், தன் இறுதிநாட்களில் உள உடைவுக்குள்ளாகி தனித்துப் போகும் நிலை. 1903 டிசம்பர் 8ம் திகதி தனியனாய் டெர்பியில் காலமானார் ஸ்பென்சர். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கு மேலான கவனிப்பின்மைக்குப் பின், இப்பொழுது இவரது எழுத்துக்கள் மீள் மதிப்பீடு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பென்சரின் சமூகவியல் சிந்தனைகளில் உயிரினம் சார்
ஒப்புமை, சமூக படிமலர்ச்சி மற்றும் சமூக வகைப்பாடு என்பன, இன்றைய சமூகவியலில் இடம்பிடிப்பன.

Page 23
சமுகம் சார் ஒப்புமை
தமது சமூகவியல் கோட்பாடு பற்றிய நூலிலே தமது ஒப்புமைக் கோட்பாட்டை விளக்கினார் ஸ்பென்சர். சமூகமானது உயிரினத்தை ஒத்தது எனும் கருத்து நிலையின் அடியாக இந்தக் கோட்பாட்டினை வடிவமைத்தார் ஸ்பென்சர்.
1. சமூகம் உயிரினம் இரண்டுமே வளர்ச்சியடைவன; குழந்தை மனிதனாக வளர்வது போல் சிறிய சமுதாயம் பெரு நகராகின்றது. இவ்வாறே சிற்றரசு பேரரசாகின்றது.
2. வளர்ச்சியின் போது சமூகத்தினதும் உயிரினங்களினதும் அமைப்புகள் சிக்கல் அடைவன. வளர்ச்சிப் படிநிலையில் உறுப்புக்களும் வேறு வேறாவன. ஒத்திருந்த உறுப்புக் களிடையே மாறுபாடுகள் தோற்றம் பெறுகின்றன. மாறும் உறுப்புக்களோ புதிய செயற்பாடுகளை மேற்கொள்கின்றன. இதன் வழி அமைப்புக்கள் சிக்கல் நிலையை எய்துகின்றன.
3. உறுப்புக்களிடையே வேறுபாடுகள் செயல்கள் விளைந்தபோதும் அவற்றிடையே ஒன்றிலொன்று சார்ந்து இயங்கும் தன்மையையும் காணமுடியும்.
4. எவ்வாறு ஒரு உயிரி தன் உறுப்புக்களை விட மீள நிலைக்க முடிகிறதோ அவ்வாறே சமூகமும் தன் பகுதிகளைக் கடந்து நிலைக்கக் கூடியது.

காட்டுரு 2.1 சமுக நிலையியலும், சமுக இயக்கவியலும்
சமுகம் (நிறுவனங்களை உள்ளடக்கியது)
தொழிற்பாடு )Function(سب سے
(சமூக இயக்கவியல் மனித உயற்றொழிலியல் போல)
சமூக நில்லயியல்
(Social Statics)
(சமூகக் கட்டமைப்பு - மனித
SL65usio (LIT60)
இவ்வாறாக உயிரின உள்ளமைப்பு முறைகளை
யொத்ததாகவே சமூக அமைப்பினையும் இனங்காண்பார் ஸ்பென்சர். உயிரிகளின் உறுப்புக்களுக்கான ஊட்டத்தினை வழங்குதற்கு உணவு மண்டலம் காணப்படுவதனைப்போல், சமூகத்தின் தேவைகளை நிறைவாக்குவதற்கென உற்பத்தித் தொழில்கள் காணப்படுகின்றன. உடலின் பகுதிகளை இரத்தோட்ட மண்டலம் இணைப்பதைப்போல சமூகத்தின் பகுதிகளை போக்குவரத்து,தொடர்பு சாதனங்கள் இணைத்து நிற்கின்றன. உடலை கட்டுப்படுத்த நரம்புமண்டலம்; சமூகத்தைக் கட்டியாள அரசு.
மேற்கண்ட ஒப்புமைகள் காணப்பட்டபோதும் இவற்றிற்

Page 24
கிடையிலான வேறுபாடுகளையும் ஸ்பென்சர் சுட்டத்தவறவில்லை.
1.
உயிரின புற வடிவம் கட்புலனாவது, ஆனால் சமூகத்திற்கு இவ்வாறான குறிப்பான வடிவம் இல்லை.
உயிரின அங்கங்கள் உடலோடு இணைந்தவை. ஆனால் சமூக அங்கங்களோ தனித்தனியாக அமைந்திருப்பன.
உயிரின அங்கங்கள் நிலையான இடஅமைவினைக் கொண்டன. ஆனால் சமூகப் பகுதிகளோ நிலையற்று அசையும் தன்மையின.
உயிரினங்களின் உணர்வென்பது, மூளையென்கின்ற ஒரு சிறு பகுதியில் குவிந்திருப்பது, ஆனால் சமூகத்தில் பரந்து காணப்படும் தனியன்கள் ஒவ்வொருவரிடமும் அது வியாபித்துள்ளது. உயிரின உறுப்புக்கள் அதன் நலன்நோக்கி இயங்குவன; ஆனால் சமூகமோ தனது உறுப்புக்களின் நலனுக்காக இயங்குவது.
உயிரின உறுப்புக்கள் அவற்றின் நலனுக்காகவே இயங்குவன; ஆனால் சமூகமோ அதன் உறுப்புக்களின் நலனுக்காய் இயங்குவது.
இவ்வாறாக வேறுபாடுகளை இனங்காட்டிய போதும்
“சமூகமே உயரினம்தான்" எனும் தமது கருத்தாக்கத்தினின்றும் அவர் விலகியதில்லை.
சமுக படிமலர்ச்சி
உயிரினங்களைப் போலவே சமூகமும் படிமலர்ச்சி காண்பது என்பது ஸ்பென்சரின் கருத்து நிலையாகும். டார்வினுடைய

Origin of species byT6) Gloissol (5615ibg sq. 6(g ஆண்டுகளுக்கு முன்னரேயே இக்கருத்தாக்கம் இவருக்குள் வெளிப்பட்டது. உயிரின் தொடக்கம் போல மிகச் சிறிய வடிவிலிருந்தே சமூகமும் படிப்படியாக விரிந்து செல்கின்றது. எளிமையான நிலையில் இருந்து சமூகப்படிமலர்ச்சி வழி சிக்கல்நிலையை எய்துகின்றது. பின்னர் அதுவே ஓர் கூட்டிசைவுச் சமூகமாகின்றது. தனியே குடும்பங்களை அலகுகளாகக் கொண்ட எளிமையான நிலை மாறி குடும்பங்கள் ஒன்றிணைந்த புலங்கள் தோற்றம் பெற்றன. பின்னர் குலங்கள் இனக் குழுக்களாகின. அவையே தேசிய இனங்களாகவும், தனித்த அரசுகளாகவும் படிமலர்ச்சி காணுகின்றன. குடித்தொகை அதிகரிப்போடு சமூகத் தின் அலகுகளும் அளவும் விரிவுகாணுகின்றன; சமூகப் படி மலர்ச்சி விளைவாகின்றது என்பார் ஸ்பென்சர்.
சமுக வகைப்பாடு
ஒப்பியல் நோக்கில் சமூகங்களை வன்முறையான சமூகம், தொழில்சார் சமூகம் என இரண்டு வகைகளாகப் பிரித்து நோக்குவார் ஸ்பென்சர். சமூகங்களிற்கிடையிலான உறவுகளின் அடிப்படையில் இந்த பாகுபாட்டினை முன்வைத்தார் ஸ்பென்சர். முன்னையது முரண்களும் குரோதங்களும் நிறைந்தது. பின்னயது சுமூகமான இசைந்த உறவுகளைக் கொண்டது என்கின்றார். இரண்டிலும் அதிகார தன்மையிலும் வேறுபாடுகளை சுட்டுவார் ஸ்பென்சர். வன்முறை சமூகஅமைப்பில் அதிகாரம் மையநிலைப் படுத்தப்பட்டிருக்கும். தொழிற்சமூகத்திலே பரவலாக்கப் பட்டிருக்கும். வன்முறைச் சமூக அமைப்பிலே அனைத்துச் செயற்பாடுகளும் நிபந்தனைப்படுத்தப்பட்டிருக்கும். ஒருவருக் கொருவரான உறவுகள் செயற்பாடுகள் எல்லாமே கட்டாயத்தின் பேரிலேயே இங்கு நடக்கின்றன. தொழிற்சமூகத்திலேயோ

Page 25
எல்லாமே இயல்பாகவே நடக்கின்றன. வன்முறைச் சமூக அமைப்பில் தனியன்களுக்கான உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படும். ஆனால் தொழில் சமூக நிலையில் தனியுரிமைகளோடு மனிதர்கள் சுதந்திரமாய் வாழ்வார்கள்.
ஸ்பென்சருடைய இவ்வகைப்பாடானது கட்டற்ற பொருளாதாரத்தை நியாயப்படுத்தி, அதன்வழி அக்காலத்து நிலவிய முதலாளித்துவ சமூகத்திற்கு ஏற்படக்கூடிய கருத்துக் களின் பாதிப்புக்களினின்றும் அவ்வமைப்பை காக்கும் நோக்கி லானது எனும் விமர்சனங்கள் மார்க்சிய சிந்தனையாளர்களினால் முன்வைக்கப்படுவதும் இங்கு கவனத்திற்குரியது.
ஸ்பென்சருடைய கோட்பாடுகள் வெறும் மெய்யியல் விசாரங்களாகவே அமைந்தன என விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன. அறிவியல் நிலையில் தம் சிந்தனைகளை மேலும் தெளிவாகத் தருவதன் மூலம் புறமெய்மைசார் சமூகவியலுக்கு சிறப்பான முறையில் பங்களித்திருக்கலாம் எனவும் இவ்விமர்சனங்
கள் கூறுகின்றன
 

3
கார்ல் மார்க்ஸ்
Karl Marx 1818-1883
வாழ்வும் காலமும்
சிந்தனையாளர் வட்டத்தில் கார்ல் மார்க்ஸ் அளவுக்கு அதிகளவு எண்ணிக்கை யானோரை பின்பற்றுவோராகக் கொண்டோர் எவரும் இல்லையெனலாம். வரலாற்றின் தடத் திலே கோடிக்கணக்கான உழைக்கும் மக்களா லும் புலமையாளர்களினாலும் விஞ்ஞான சோசலிசத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர்
கார்ல் மாக்ஸ்.
பெருசியாவின் ரிவெஸ் பிரதேசத்தில் ஒரு யூதக் குடும்பத்தில் 1818ம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி மார்க்ஸ் பிறந்தார். கிறிஸ்தவசமய ஞானஸ்னானம் பெற்றபோதும் சமயத்தினதோ இனத்தினதோ செல்வாக்கிற்கு உள்ளாகாம லேயே வளர்ந்தார். உள்ளூரிலிருந்த உயர் இலக்கணப் பள்ளியில் ஆரம்பக்கல்வியை பெற்ற பின் பொன், பேர்லின் பல்கலைக்கழக கத்தில் உயர் கல்வியைத் தொடர்ந்தார். பேர்லின் பல்கலைக் கழகத்தில் இளைய ஹெகலியன் கோட்பாட்டாளருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார். ஹெகலிய இயங்கியலை மனித சமூகத்தின் பொருள்சார் கோட்பாட்டிற்கு பொருத்தமானதாக்கும் ஆய்வுப்பணியை இங்கேதான் மேற்கொண்டார்.
18416) ஜெனா பல்கலைக்கழகத்தில் இயற்கை மெய்யியல் தொடர்பான ஆய்வுக்கென கலாநிதிப்பட்டம் இவருக்கு

Page 26
வழங்கப்பட்டது. பொன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிய மார்க்ஸ் விரும்பியபோதும், அது கைகூடாமற் போனது. மாற்றங்களை விரும்பாத அன்றைய பெருசிய அரசினால் சுதந்திரமாகச் சிந்திக்கின்ற மார்க்ஸ் போன்ற சுய சிந்தனை யாளர்களை ஏற்க முடியவில்லை. இந்நிலையில் ஆசிரியப் பணியை மேற்கொள்ளும் தமது இலட்சியத்தை விரக்தியுடன் கைவிட்டு, 1842ல் புரட்சிகர செய்தித்தாளான " Zeitung ல் இணைந்து கொண்டார். இந்த செய்தித்தாளையும் பெருசிய்" அரசினால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் அடுத்த ஆண்டிலே அதனை நிறுத்திவிட நேர்ந்தது.
1943ம் ஆண்டில் தன்பிள்ளைப்பருவ சினேகிதியான ஜென்னி வான் வெஸ்ட்ஃபாலென் ஐ திருமணம் செய்தார் மார்க்ஸ். இவரது மனைவி பிரஷ்ய பிரபுத்துவ குடும்பம் ஒன்றினைச் சேர்ந்தவர். மிக பிற்போக்கான இவர்கள் குடும்பத்தின் எதிர்ப்புடனேயே திருமணம் நடந்தது.
1843 இலையுதிர் காலத்தில் மார்க்ஸ், பாரீசுக்குச் சென்றார். அங்கே தான் தமது எதிர்கால நண்பரும் இணை ஆய்வாளருமான பிரட்றிக் ஏங்கல்ஸ்சை (Friedrich Engels) சந்தித்தார். பாரீசிலும் மார்க்ஸின் எழுத்துக்கள் விரைவிலேயே சாதகமற்ற விமர்சனங்களுக்கு உள்ளாகின. இதனைத் தொடாந்து புருசெல்சுக்குச் சென்றார் மார்க்ஸ். ஏங்கல்ஸ்சும் உடன் சென்றார். இங்கே இருவரும் தொழிலாளர் இயக்கத்தில் தீவிரபங்கேற்றதுடன் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைத் திட்டத்தை (Manifesto of the communist party) 6T(ggislg56) 360601 bgol Gafugibu L60 i. பிரான்சியப் புரட்சி ஆரம்பித்த கையோடு இது வெளியானது. பிரான்சியப் புரட்சியின் எதிரொலியை ஜெர்மனியிலும் காணலாம் என்ற நம்பிக்கையுடன் ஜேர்மனிக்கு புறப்பட்ட மர்ர்க்ஸ் புரட்சிகர

கருத்துக்களைப் பரப்பும் நாளிதழ் ஒன்றினை மீளவும் ஆரம்பித்தார். இதனை விரும்பாத பெருசிய மன்னன் மார்க்சை கைது செய்து அவர் சுதந்திரமான இருப்புக்கு கேடு விளைவித்தார். விசாரணை மன்றம் மார்க்சை குற்றமற்றவராகக் கண்டபோதும் அவர் ஜேர்மனியிலிருந்து 1849ல் நாடு கடத்தப் பட்டார். தற்காலிகமாக சிறிது காலம் பிரான்சில் இருந்த பின் இங்கிலாந்துக்கு சென்ற மார்க்ஸ், தன்வாழ்நாளில் மிகுதிக் காலத்தை அங்கேயே கழித்தார். இங்கே தானாகவே ஏற்படுத்திக் கொண்ட தனிமைப்படுத்தலில், லண்டன் மியூசியத்தில் பொழுது களைக் கழித்தார் மார்க்ஸ். தொழில்சார் முதலாளித்துவம் பற்றிய விமர்சன பகுப்பாய்வு அவரது இக்கால ஆய்வுக் குவிமையமாக அமைந்தது. இக்காலத்து வறுமையின் துயரவிளிம்பில் அவர் சந்தித்த துயரங்கள் சொல்லொணாதவை. மனித விடுதலைக்கான மகத்தான ஆய்வுகளைத் தந்த கார்ல் மார்க்ஸ் தன் Das Capital நூலின் முதல் பாகத்தை நிறைவு செய்யும் வேளை அவரது மூன்று பிள்ளைகளை வறுமையின் விளிம்பில் போஷாக்கின்மை யால் இழக்கும் கொடுமையை தாங்க வேண்டியவரானார். எனினும் இக்காலத்து ஜனநாயக இயக்கங்கள் மீளவும் தழைத்தபோது, மீண்டும் நடைமுறை இயக்கப்பணிகளில் ஈடுபடமுடிந்தது. உலகப் புகழ்பெற்ற தொழிலாளர் சங்கமான முதலாவது அகிலம் நிறுவப்பட்டது. இதன் இதயமாகவும் ஆத்மா ஆகவும் மார்க்ஸ் செயற்பட்டார். இந்நாட்களில் ஓரளவு அடிப்படை வாழ்வு வசதிகளை பெற முடிந்தது. உலகெங்கணுமிருந்தான பல்வேறு சோலிசத்தலைவர்களின் மதிப்பார்ந்த சந்திப்புக்கள் வாய்த்தது.
எனினும் அகிலத்தில் அவராற்றிய கடுமையான பணிகளும், ஆழ்ந்த ஆய்வு ஈடுபாடும், வறுமையின் தாக்கமும் ஒருங்கு சேர மார்க்ஸின உடல் நிலை பாதிக்கப்பட்டது. அதே வேளை 1881 டிசம்பர் 2ம் திகதி மனைவி ஜென்னியின் மரணத்

Page 27
துயரையும் சந்திக்க நேர்ந்தது.தம் அன்புக்குரிய மூத்தமகளினதும் மனைவியினதும் பிரிவுத்துயரில் இருந்து மீள முடியாதவராக இறுதிவரை மார்க்ஸ் காணப்பட்டார்
1883 மார்ச் 14ம் திகதி நாற்காலியிற் சாய்ந்தவாறே அவரது இறுதி மூச்சு. லண்டன் ஹைகேட் மயானத்தில் மனைவி ஜென்னியின் கல்லறைக்கு அருகில் இறுதி உறக்கம்.
கார்ல் மார்க்ஸின் ஆய்வுப்பணிகள்
பெருமளவில் எழுதிய மார்க்ஸின் ஆக்கங்களை மதிப்பிட இந்த சிறு அத்தியாயத்தில் இயலாது எனலாம். இந்நிலையில் அவரது பிரதான ஆக்கங்கள் பற்றிய சுருக்கக் குறிப்பு ஒன்றினையே தர முடியும்.
18446) Holy Family 6T6ir brig06) 6TQg56OTrrif. 1845 Thesis of Feurback 6igib broi) 06.j6fluj T60rg5. gibbsfoSs) மெய்யியலின் இலக்குப் பற்றிய தமது எண்ணக்கருவை மிகத் தெளிவாகவே மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளர்.
இத நாள் வரை மெய்யியலாளர் உலகை விளங்குவதை
மட்டுமே தம் இலக்காக கொண்டார்கள், உண்மையில்
அதனை மாற்றுவதே முக்கியமானத.
ukwñilikiq
என்பது மார்க்ஸிய சித்தாந்தம். மார்க்ஸின் மெய்யியல் அணுகுமுறை ஹெகலிய நோக்குக்கு எதிர்த்திசையானது என்பதனை தெளிவாக எம்மால் உணரமுடிகிறது. Manifesto of the communist party 18486) 066ifuT6Orgs). Feypast J'dulair முழுமையான கோட்பாடாகவும் அதற்கான தந்திரோபாயமாகவும்
 
 
 
 
 

முதன் முதலில் எழுந்த நூல், என்ற பெருமையை இது பெறுகின்றது. வகுப்புக்களுக்கிடையிலான கடந்தகால போராட்டங்கள் பற்றிய விபரமானதும் சாரமானதுமான மார்க்ஸின் கருத்தாக்கங்கள் இங்கே தரப்பட்டன. தொழிலாளர் வகுப்புக்கும் முதலாளித்தவ வகுப்புக்கும் இடையிலான நவீன முரண்பாடும் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டது. இன்றைய முதலாளித்து வத்தின் அழிவை நோக்கிய தவிர்க்கமுடியாத அசைவையும், தம்மைப்பிணைத்துள்ள சங்கிலியை அறுத்தெறிந்து சுதந்திரத்தின் புதிய யுகத்தையும், சமூகநீதியையும் நிலைநாட்ட தொழிலாளர் மேற்கொள்ள வேண்டிய செயற்றிட்டங்களையும் மிக விரிவாகவே இதிலே குறிப்பிட்டார் கார்ல் மார்க்ஸ்.
1847s) Poverty of Philosophy 6Tsiris Tsi) 06hl6fursorgs பிரான்சிய அராஜக சிந்தனையாளராகிய Proudhon க்கு எதிரான கண்டனமாக இந்நூல் அமைந்தது. இந்நூலில் பொருளாதார போராட்டங்களும். தொழிலாளர்களின் அமைப்புக்களும் சமூகத தை நீதியானதும் சமத்துவமானதுமான பாதையில் இட்டுச் செல்ல இன்றியமையாததென விளக்குவார் மார்க்ஸ்
18516ö Gl6u6fluuff60T Eighteenth Brumaire GBü®UT6û) யனின் யதார்த்த நிலைபற்றிய ஆழமான ஒரு பகுப்பாய்வு நூலாகும்.
A Contribution to the Critique of Political Economy, 1860ல் பிரசுரமானது இந்நூலில் வரலாற்றின் மெய்யியல் பற்றி சுருக்கமாக மார்க்ஸ் குறிப்பிடுகின்றார். சிவில் சமூகத்தின் வடிவத்தினை அரசியல் பொருளாதாரத்திலேயே காணவேண்டும் என இந்நூலில் விளக்குவார் மார்க்ஸ்.
1847ல் Das Capital முதல் தொகுதி வெளியானது

Page 28
இரண்டாம் மூன்றாம் பாகங்கள், அவர் இறந்த பின் 1893, 1894ம் ஆண்டுகளில் வெளியானது. இந்நூல்முழுமையும் சோசலிச சிந்தனையே வியாபித்துள்ளது. மிகை இலாபம் (Surpus value) தொடர்பான மார்க்ஸிய கோட்பாடும் இங்கு விரிவாக
விளக்கப்பட்டுள்ளது.
மார்க்ஸின் சிந்தனைப்புலம்
மார்க்ஸின் காலம், தொழிநுட்பத்துறையும், தொழிற் துறையும் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்த காலம். அரசியல் பொருளாதார தேசிய வாதங்களின் தோற்றத்தை நேரடியாகவே காணும், உணரும் வயதில் இருந்தார் மார்க்ஸ். மிகவும் சக்தி வாய்ந்த அதே வேளையில் சமனற்ற நிலைமைகள் தோற்றுவிக்கப்பட்டமை மார்க்ஸின் மனதிலே episostô0 தாக்கத்தினை விளைவித்தது. ஒரு புறத்தே முதலாளிகளுக்கு சொர்க்க நிலையும், மறுபுறத்தே தொழிலாள மக்களுக்கு மிகமோசமான நரக வாழ்வுமே கிடைப்பதனைக் கண்டார் மார்க்ஸ். கூலி மிகக்குறைந்ததாகவே இருந்தது; வேலை நேரமோ அதிகமாயிருந்தது. வேலையின்மை பில்லியன் கணக்கில் அபாயகரமாய் அதிகரித்துச் சென்றது. உடல் நலத்துக்கோ அடிப்படை வாழ்வுக்கோ பொருத்தமில்லாத நிலைமைகளில் ஏழைமக்கள் வாழவேண்டிய அவல நிலை காணப்பட்டது. முதலாளித்துவ நாகரீகமானது மனிதர்களுக் கிடையிலான அனைத்து உறவுகளையும் அறுத்து விட்டது என்பார் மார்க்ஸ். நிர்வாணமான சுயநலம் மட்டுமே மிஞ்சியது என்பது மார்க்ஸின்
சாரம்.
இந்த காலகட்டத்தில் தொழிற்சங்க இயக்கம் ஒரு குற்றவியல் இயக்கமாக கருதப்பட்டமையும் இங்கு கவனத்திற்

குரியது. இந்நிலையில் கூட்டு பேரம்பேசுதலுக்காய் ஒன்றுபடும் தொழிலாளர் இரக்கமற்ற துன்புறுத்தலுக்கு உள்ளாக வேண்டி யிருந்தது. தேசங்களிடையே ஆழ வேர்விட்ட வகுப்பு முரண் பாட்டை சமாளிக்க முடியவில்லை. முரண்நிலை மென்மேலும் அதிகரித்தே சென்றது.
மார்க்ஸின் முலங்கள்
சிந்தனையாளர்கள் தமக்கு முன்னைய காலத்து அறிவுக் கலசத்திலிருந்து தம் கருத்தியல் மூலங்களைப் பெற்றுக் கொள்வதுண்டு. இந்த வகையில் மார்க்சும் தமக்கு முன்னைய அறிவுப் புலங்களைப் பயன்படுத்தினார். எனினும் மற்றவர்களோடு ஒப்பிட முடியாத அளவிற்கு தொகுத்துத் தரும்திறனில் மார்க்ஸ் தனித்துவமாய் நிற்கின்றார். நீண்டகாலமாக தளர்நிலையில் கவனம் பெறாமல் கிடந்த மெய்யியல் அறிவுகளை உரியவாறு ஒழுங்கமைத்து இயக்கச் சக்திகொண்ட கோட்பாடாகவும், செயலுக்கான மகோன்னத துண்டலாகவும் மார்க்சினால் வடிவமைத்து தரப்பட்டது. தொழில்தான் அனைத்து விழுமியங்களுக்குமான மூலமும் அளவீடும் என்கின்ற றெக்காடோ கோட்பாட்டை தமது நோக்கிற்கு ஏற்ப பயன்படுத்தினார் மார்க்ஸ். உலக வரலாற்றை எதிர்க்கருத்துக்களினது முரண்பாட்டின் விளைவாகக் கண்ட ஹெகலின் இயங்கியல் முறையையும் மார்க்ஸ் பயன்படுத்தினார். ஆனால் மறுதலையாக ஹெகலின் கருத்துக்குப் பதில் பொருளாதார விசைகளின் முரண்பாடாகவே மார்க்ஸ் வரலாற்றைக் கண்டார். டார்வினின் படிமலர்ச்சிக் கோட்பாட்டின் முக்கியத்துவத்தினை உணர்ந்த அரசியல் சிந்தனையாளர்களிடையேயும் மார்க்ஸ் முதன்மை பெறுகிறார். இளம் ஹெகலியன்களுக்கு மார்க்ஸ் பெரிதும் கடமைப் பட்டுள்ளார். மனித இனம் எதிர் கொள்ளும் நடைமுறைப்

Page 29
பிரச்சினைகளுக்கு ஏற்ப மெய்யியலை மீளமைக்கும் முறையி யலை மார்க்ஸ் கற்று கொள்ள இவர்கள் துணையானார்கள். மேலும் மனிதனை அவன் தர்க்க ரீதியான கருத்தாக்கத்தி னாலன்றி சமூகச் சூழலிற்தான் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதனையும் இக்கால அறிவுப்புலத்திலிருந்தே மார்க்ஸ் பெற்றுக்கொண்டார். செயின் சைமனின் சோசலிச கருத்துக்களும் மார்க்ஸ்சை ஈர்த்துள்ளன. சமூக ஒழுங்கிற்கு இன்றியமையாத இயல்புகளினால் சொத்துடமை இயல்புகள் பேணப்படுகின்றன என்பார் செயின் சைமன். இதனையே உற்பத்தி உறவுகள் என ஏற்றுக் கொள்வார் கார்ல் மார்க்ஸ். சமூக ஒழுங்குக்கு இன்றியமையாத இயல்பினை ஒவ்வொன்றிலிருந்தும் அதனதன் திறனுக்கு ஏற்ப, ஒவ்வொன்றுக்கும் அவற்றின் தேவைகளுக்கேற்ப என்பது மார்க்ஸின் சூத்திரம். இச் சிந்தனையின் மூலத்தினை
பிரான்சின் சோசலிசச் சிந்தனையா ளரான Louis Planc போதனை களிடை காணமுடியும். தம் முன்னையோர்களின் பயனான சிந்தனைகளை ஏற்றுக்கொண்ட அதே வேளையில் சமூகக் கேடான சிந்தனைகளுக்கெதிரான கண்டனங்களையும் மார்க்ஸ் முன்வைக்கத்தவறியதில்லை. எடுத்துக்காட்டாக Prodhon எழுதிய வறுமையின் மெய்யியலுக்கு எதிர்க் கண்டனமாக மார்க்ஸ் தமது வறுமையின் மெய்யியலை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக நோக்குகையில் உலகளாவிய நிலையில் பிரயோகிக்கக் கூடிய சமூகமாற்றத்திற்கான ஒரு கோட்பாட்டி னையும் அதன் செயல்பாட்டுக்கான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தி னையும் தன் பகுப்பாய்வுத் திறத்தாலே உலகிற்கு மார்க்ஸ் வகுத்துத் தந்தார் எனலாம்.

síádagŠsaá afaryúb
மார்க்சியச் சிந்தனையின் அடிப்படையான இயங்கிய லானது வரலாற்றுப்போக்கை பழைய - புதிய விசைகளுக்கு இடையிலான முரண்பாடாகக் காண்கின்றது. ஹெகல் முன்வைத்த கோட்பாடு - முரண்கோட்பாடு - இசைந்த கோட்பாடு எனும் முறையியலை மறுதலையாக்கி ஹெகல் கருத்தியலுக்கு தந்த இடத்தில், பொருளாதாரக் காரணிகளைப் பிரதியிட்டார் மார்க்ஸ். இதுதான் மார்க்சின் வரலாறு பற்றிய பொருளாதார விளக்கமாகும்.
அனைத்த சமூக மாற்றங்களும், அரசியல் புரட்சிகளும் மனித
மூளைகளிலே அன்றி உண்மை, நீதி பற்றிய அவர்
ஞானத்தினாலே ஏற்படுபவை அல்ல; உற்பத்தி முறைகளிலும், பரிமாற்றத்திலும் ஏற்படும் மாற்றங்களின் வழியானதே
என்பது மார்க்ஸின் தெளிந்த ஞானமாகும். இந்த
அணுகுமுறையே மார்க்சின் இயங்கியல் பொருள் முதல்வாதமாகின்றது. கோட்பாடு- முரண்கோட்பாடு என்பவற்றிற்
கிடையிலான முரணின் விளைவான இசைந்த புது கோட்பாடுதான் மார்க்ஸ் குறிப்பிடும் புதிய பொருளாதார அமைப்பாகும். இங்கு கோட்பாடு - முரண்கோட்பாடு என்பன
வகுப்புக்களையும் அவற்றிற்கிடையிலான போராட்ட செயற்பாட்டினையும் குறித்து நிற்கின்றது.
பொதுவான பொருளாதார ஆர்வங்களைக்கொண்ட ஒரு குழுவையே வகுப்பு என வரையறுத்தார் மார்க்ஸ். இவை ஏனைய குழுக்களினின்றும் அடிப்படையில் வேறுபடுவன. ஒரு வகுப்பின் ஆர்வம் மற்றையதன் ஆர்வங்களினின்று முரண்படுகின்றது. இதனால்தான், நிலவும் சமூகம் என்பது வகுப்புக்களிற்

Page 30
கிடையிலான போராட்ட வரலாறே என்கின்றார் மார்க்ஸ்.
வகுப்புப் போராட்டமானது தொழிலாளர்களின் இடையறாத சுரண்டலின் வழி தீவிரமாக்கப்படுகின்றது. முதலாளித்துவ உற்பத்திமுறையின் கீழ் உற்பத்தி சாதனங் களின் உரிமையாளர்களான முதலாளிகள், கூலித்தொழிலாளர் களின் உழைப்பினை சுரன்டுகிறார்கள். இந்த சுரண்டலானது மூலதனத்தின் வல்லமை, மற்றும் மிகை இலாபம் என்பவற்றினால் ஆளப்படுகின்றது.
இதனால் இரண்டு விளைவுகள் தோற்றம் பெறுகின்றன.
1. பாரிய வியாபார அலகுகளில் எப்பொழுதும்
அதிகரிக்கும் செல்வத்தின் செறிவு
2. எண்ணற்ற தொழிலாளர்களின் அதிகரிக்கும்
துயரவாழ்வு
இதனால் தான் முதலாளித்துவம் தனக்குள்ளேயே தன்னை அழிக்கக் கூடிய விதைகளையும் கொண்டுள்ளது என்றார் மார்க்ஸ். முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் இந்த முரண்பாடும் அதிகரித்து, முதலாளித்துவம் சிதைவது தவிர்க்கமுடியாத தாகின்றது. இந்த சிதைவானது தானாகவே சோசலிசத்திற்கான பாதையாகிவிடாது. இதற்கு திட்டமிட்ட நுண்ணறிவுடனான செயல் அவசியம் என்பதனையும் மார்க்ஸ் வலியுறுத்துவார். இதுவே மார்க்சின் புரட்சிக் கோட்பாட்டின் விருத்திக்குக் காலானது. முதலாளித்தவ வகுப்பினரின் அரசை அழித்து தொழிலாளரின் அரசை அமைத்து வகுப்புகளற்ற ஒரு சமூக அமைப்புக்கு இட்டுச் செல்வதே அவர் நோக்காக இருந்தது. அரசு என்பது உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர்களின் ஆர்வங்களைப் பிரதிபலிப்பதால் வகுப்புகளற்ற சமூகம், அரசு அற்ற

சமூகமுமாகும். வகுப்புக்கள் இல்லாதொழிக்கப்படுவதால், அரசும் வலிமையற்றதாகும். மார்க்சின் கருத்துநிலை அடிப்படை இவைதான்.
இயங்கியல் பொருள் முதல் வாதம்
உலகம் பற்றிய மார்க்சின் பார்வையானது, இயங்கியல் பொருள் முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டது யதார்த்த உலகின் அனுபவங்கள் எப்பொழுதும் மாறும் நிலையின; அவை இயங்கியல் முறையிலேயே நிகழ்வன எனும் எடுகோளினையே மார்க்சிய இயங்கியல் அடிப்படையாகக் கொண்டுள்ளது. மார்க்சிய இயங்கியலின் வழி வரலாற்று மாற்றங்களுக்கான விசைகளை கருத்துக்களிடை காணமுடியாது. புறவயமான உற்பத்திசார் ஆற்றல்களிலேயே அது தங்கியுள்ளது. இங்கு ஆற்றல்கள் எனும்போது அது வெறும் பொருளாதார பண்டங்களைக் குறித்திடவில்லை; உற்பத்தியில் தொடர்புபடும் உறவுகளையே மையப்படுத்தி நிற்கின்றது ‘அவையே சமூக அமைப்பை நிர்ணயிக்கின்றன என மார்க்ஸின் பொருளாதார நிர்ணயக் கோட்பாடு தெளிவாக்குகின்றது.
பொருளாதார அமைப்பு மாறும்போது சமூக அமைப்பின் தன்மையும் மாறுகின்றது. சமூகத்து மேற்கட்டுமானங்களாக நிலவும் அரசு, மதம், கல்வி, குடும்பம் ஆகிய நிறுவனங்களும் கலை, இலக்கியம், சட்டம், மெய்யியல் போன்றனவும் பொருளாதார உறவுகள் எனும் அடிக்கட்டுமானத்தின் மீதே அமைகின்றன.
மார்க்ஸின் கருத்து நிலையை காட்டுரு 3.1 தெளிவுபடுத்தும்.

Page 31
காட்டுரு 3.1
அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானம் தொடர்பான மார்க்ஸிய காட்டுரு
சமூக மேற்கட்டுமானம்
சமூகத்தினுடைய ஏனைய கூறுகள் (உ-ம்) அரசியல்/
சமூக சமயம்/குடும்பம்.
அடிக்கட்டுமானம் (பொருளாதார அடித்தளம்)
மனித வரலாற்றில் பொருளாதார அமைப்பு இதுவரை நான்கு நிலைகளை தாண்டி மாறி வந்துள்ளது என்பார் மார்க்ஸ்.
ஆரம்பத்தில் ஆசிய நிலை (Asiatic phase); அடுத்து தொன்மை
5606) (Ancient phase); 995606015025TLstsbgs fooLDIT6ful Éléool)
Feudal phase); GlgbtLifeigs (pg56)ngsgs.g6 Ba06) (Capitalistic
phase). இந் நிலைகள் ஒவ்வொன்றும் முன்னைய நிலைகளுடன் முரண்பட்டு அதன் விளைவாகவே தோற்றம்பெறுகின்றன. (காட்டுரு 3.2) இன்றைய பொருளாதார அமைப்பானது புதிய நிலையொன்றைக் கடக்கவுள்ளது. அதுவே மாற்றத்தின் எல்லை
நிலை. அதுவே பொதுவுடைமை நிலை (Communistic phase) பொதுவுடைமை என்பது ஓர் இலட்சிய நிலை. இதனது தோற்றம் தவிர்க் முடியாதது என்பது மார்க்சின் கருத்தியல்.
 
 
 
 

காட்டுரு 3.2
மார்க்ஸின் வரலாற்று படிநிலை
நிலமானிய அமைப்பு முதலாளித்துவம்
உற்பத்தி உறவுகள் (வகுப்ப கட்டமைப்பு) பிரபுக்கள் பண்ணையாள்)
அடிக்கட்டு LD.T6OTib (பொருளாதார அடித்தளம்)
கொண்ட உற்பத்தி)
குறிப்பு: உறுதியான அம்புக்குறிகள் முதல் நிலை விளைவு உண்டாக்குகிற
தொடர்புகளை பிரதிபலிக்கும். உடைந்த அம்புக்குறிகள் வழிநிலை விளைவு உண்டாக்குகின்ற தொடர்புகளை விளக்கும்.
ஆசிய உற்பத்தி நிலை என்பது மிகவும் தொன்மையானது; பின்தங்கியது; நுகர்வுக்காக மட்டுமே உற்பத்தி அமைந்தது. இங்கு நிலம் தனியன்களின் உரிமையாக அன்றி சமூக உடைமையாக காணப்பட்டது. இங்கு கூட்டு உழைப்பு பொதுஉடைமையை உறுதிப்படுத்தியது. லாப நோக்கிலான வாணிப உற்பத்திகளின் ஆரம்பத்துடன் நிலம், கால்நடை ஆகியவற்றில் தனிச் சொத்துரிமை தோன்றியது. ஆதி பொதுவுடைமை வாழ்வு மறைந்து, அடிமைகளைக்கொண்ட ஒரு சமூகம் தோற்றம் பெற்றது. இங்கு நிலம் வசதிபடைத்த பிரபுக்களின் உடைமையானது. இந் நிலங்கள் பாரிய பண்ணைகளாக உருமாற்றம் செய்யப்பட்டபோது பண்ணை அடிமைகள் தோற்றம் பெற்றனர். இந்நிலையிற்தான் நில மானிய அமைப்பின் தோற்றத்தினைக் காண்கின்றோம். அடிமைகள்

Page 32
மீதான சுரண்டல் அதிக அளவில் தொடர்ந்தது. பணப் பொருளாதாரம் தோற்றம் பெற்ற போது உழைப்பாளர்களின் ஊதியக் கோரிக்கைகள் மேலெழுந்தன. கூடவே புதிய தொழிநுட்ப கண்டுபிடிப்புக்களும் எழுச்சி பெற்றன. விளைவாக முதலாளித்துவ அமைப்பு தோற்றம் பெற்றது. இங்கு தன் உழைப்பை விற்பதைத்தவிர தொழிலாளர்களுக்கு வேறு மார்க்கம் இல்லை. செல்வம் சிலர் கைகளிலேயே குவிந்தது. தொழிலாளர் வறுமை பெருகியது. இந்த இரண்டு அணிகளிற்கும் இடையிலான போராட்டத்தில் தொழிலாளர்களின் வெற்றி தவிர்க்க முடியாதது. ஏனெனில் முதலாளித்துவம் அதன் சொந்த முரண்பாடுகளாலேயே மடிய வேண்டும் என்றார் மார்க்ஸ். மலரும் சோசலிச சமூகத்தில் உற்பத்திச் சாதனங்கள் கூட்டுடமைகளாக அனைத்து மக்களுக்கும் பொதுவாய் இருக்கும். இதனால் அங்கு சுரண்டுபவரும் இல்லை; சுரண்டப்படுபவரும் இல்லை என்பார்
prisis56).
வகுப்புக் கோட்பாடு
மார்க்ஸின் அரசியல் மெய்யியலில், வகுப்பு என்பது மையநிலையானது. வகுப்புகள் தம் அளவில் கூட்டு ஒருமைப்பாடு கொண்டவை. தமக்கென நம்பிக்கைகள், ஊகங்கள், பாரம்பரியங்களைக் கொண்டுள்ளன. மார்க்ஸ் முக்கியமான இரண்டு வகுப்புகளை இனம் காட்டினார். அடிமைகள் சமூகத்தில் நாம் ஏற்கனவே குறிப்பிட்டவாறு அடிமைகள் - அடிமைச் சொந்தக்காரர் என இரண்டு வகுப்புக்களைக் காணலாம். நிலவுடைமைச் சமூகத்தில் நிலப்பிரபுக்கள் பணியாளர்கள் என வகுப்புகள் நிலவும். முதலாளித்துவ சமூகத்திலே முதலாளிகள் - தொழிலாளிகள் என வகுப்புப் பிரிவு அமையும். இந்த அடிப்படை வகுப்புகளிடையான உறவுகள் எப்பொழுதும் ஒன்றுடன் ஒன்று

முரண்படுவனவாகவே 9|60)LDub. இந்த முரண்பாட்டின் விளைவாகவே போராட்டம் நிகழ்கின்றன. இங்கு போராடுபவர்கள் தனியன்கள் அல்ல. சமூக குழுக்களாகவே இப்போரில் சந்தித்துக் கொள்கிறார்கள். மனித வரலாறு முழுமையும் இவ்வாறான போராட்டங்கள் தொடரக் காணலாம்.
மார்க்ஸினுடைய கருத்தில் வகுப்புப்போராட்டம் என்பது சமூக மாற்றத்திற்கான ஒரு செயற்றிட்டமாகவே அமைவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இங்கு ஆதிக்க வகுப்பு என்பது நிலவும் ஓர் அமைப்புக்கு சாதகமாக விளங்குவதும் இதனை தற்காத்துக் கொள்வதில் அரசும் அதன் இயந்திரங்களும் துணைபோவதும் மார்க்சினால் இனம் காட்டப்படும். இந்நிலையில் தான் உழைக்கும் மக்கள் தம் கூட்டுப்பலத்தின் வழி அரச அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும் என்பார் மார்க்ஸ். புதிய அதிகாரத்திற்கான இந்த விசையை, பழைய சமுகத்திலிருந்து புதியதை பிறக்க வைப்பிக்கும் மருத்துவிச்சி என ஒப்பிடுவார் மார்க்ஸ். சோசலிச நிர்மாணத்திற்கான முன் தேவையாக புரட்சிவழியான அரசியல் அதிகாரத்திற்கான இன்றியமை யாமையை இவ்வாறான ஒரு பின்புலத்திலேயே மார்க்ஸ் அழுத்தி நின்றார்.
தொழிலாளர்களின் சர்வாதிகாரம்
உயர்வகுப்பினரிடமிருந்து அரசியல் அதிகாரத்தை தொழிலாளர் எடுத்துக்கொண்டபின் புதியதோர் சமூகஒழுங்கை கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபடுவர். புதிய அரசின் பொருளாதார ஆற்றலின்மீது புதிய அரசியலமைப்பு, நீதி நிர்வாக அதிகாரம் என்பவற்றினை கட்டியெழுப்புவர். இவ்வரசியல் நிறுவனங்கள் யாவும் தொழிலாளர் கட்சியின் வழிகாட்டலில்

Page 33
செயற்படும். இதனைத் தொடர்ந்துதான் சோசலிச நிர்மானத்திற் கான செயற்பாடுகள் தொடங்கும். நிலம் பொதுவுடைமையாக்கப் படும். தொடர்பு, போக்குவரத்து அனைத்தும் மையப்படுத்தப்படும். இலவசமான பொதுக்கல்வி அனைவருக்குமாகும், தொழிலாளர் சர்வாதிகாரமானது ஒரு நிரந்தரமான அமைப்புநிலையல்ல. அனைத்து வகுப்பக்களையும் இல்லாதொழிக்கும் ஒரு இடைக் கால ஏற்பாடே சுதந்திரம், சமத்துவம் என்கின்ற இரட்டைக் கோட்பாடுகளுடனான ஒரு சமூகத்தை ஒழுங்கமைக்கும் வரையே இதன் நீடிப்பு என தெளிவாகவே குறிப்பிடுவார் மார்க்ஸ். புதிய இந்த யுகத்தில் எல்லோருமே உழைப்பாளர்களாக இருப்பார்கள். எந்த ஒரு தனியனோ, குழுவோ பிறர் உழைப்பில் வாழ அனுமதிக்கப்படமாட்டார்கள். ஒழுங்கமைக்கப்பட்ட சமூகமைப்பு திட்டமிட்ட உற்பத்திமுறை. இதனால் மிகை இலாபம் சார்ந்த வீண் போட்டிகளுக்கு இடமில்லை. இங்கே "சும்மா” இருப்பவர் களுக்கோ குருவிச்சைகளுக்கோ இடமில்லை. உழைக்காத வருமானம் என்று ஒன்றே இருக்காது. உண்மையில் பொதுவுட மைச் சமூகம் என்பது உழைக்காதவன் உண்ண மாட்டான் எனும் தாரகமந்திரத்தின் அடிப்படையிலேயே இயங்கும். இங்கு பொருளாதார பாதுகாப்புக்கான உத்தரவாதம் வழங்கப்படும். இது சமூகத்தின் அனைத்து அங்கத்தினருக்கும் சுதந்திரத்தை சாத்தியமாக்கும். கூடவே உள உடல் உழைப்புக்களிடை எந்த ஒரு எதிர்விசையையும் பொதுவுடைமைச் சமூகம் சகித்துக் கொள்ளாது. எல்லோரும் வகுப்புப் பேதமின்றி இன்புற்றிருப்பர் என்பதுவே LDITsidisfair தொழிலாளர் சர்வாதிகாரத்தின் விளைபொருளாகும்.
சமயங்கள் தொடர்பான கோட்பாடு
3FLDuä856T தொடர்பான LDTidsdair விமர்சனம் யதார்த்தத்தினை தலைகீழாகப் புரட்டும் இறையியல்

கோட்பாடுகளின் பகுப்பாய்வின் வழியானது. இயற்கையின் இரகசியங்கள் பற்றிய அறியாமையே இயல்நிலை கடந்த ஆற்றல்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையானது.
மனிதன் என்று சொல்லும் போது மனிதனின், அரசின், சமுதாயத்தின் உலகம் என்றாகின்றது. இந்த அரசும் சமுதாயமும் நேர்எதிராய் மாற்றப்பட்ட உலகின் உணர்வாகிய சமயத்தை தோற்றுவிக்கின்றன. சமயம் என்பது அந்த உலகத்தின் பொதுவான மெய்யியல் ஆகின்றது. இந்த உலகத்தின் பல்கலை அறிவாகவும் வெகுஜன தர்க்கமாகவும் அதன் செயற்பாடு அமைகின்றது. அதன் அறவியல் அதிகாரத்தின் அடிப்படையாகின்றது. அதன் பயபக்தி, அதற்கான முழுமையாகின்றது. ஆறுதல்தருதலும், நியாயம் கற்பித்தலும் அதன் வியாபக தன்மைகளாகின்றன. மனித சாரம் நிஜமாக இன்மையால் அதுவே அதீத கற்பனையில் நிஜமாக்கப்படுகின்றது. அதேவேளை சமய உலகில் வெளிப்படுத்தப்படும் துன்பமானது உண்மை யுலகில் காணப்படும் துன்பத்தின் வெளிப்பாடே. அதுவே. உண்மையுலகின் துன்பத்தின் எதிர்ப்புக்குரலும் ஆகும். சமயம் என்பது அடக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சு ஆகும். இதயமற்ற உலகத்தின் இதயமாகும், ஆத்மா அற்ற நிலையில் உள்ள ஆத்மாவாகும். (மார்க்ஸ் & ஏங்கல்ஸ்)
சமயத்தின் பெயரால் கம்பனிகள், நிதியங்கள், வங்கிகள், சாம்ராச்சியங்கள் என்பன கோடிக்கணக்கில் உழைப்பையும் பொருளையும் சுரண்டிய வரலாறுகளை, தம் கருத்து நிலைக்கான ஆதாரமாக எடுத்துக்காட்டுவார் மார்க்ஸ். "வறுமை நாங்கள்

Page 34
செய்த பாவத்தின் பலன் இதற்கான விமோசனம் சொர்க்கத்தில் கிடைக்கும்" என்கின்றதான பிரசாரங்களினால் முதலாளித்துவ அமைப்பின் காவலர்களால் தொழிலாளரை ஒரு மாயையில் வைத்திருக்க முடிகிறது. தமது துயரநிலைக்கான காரணங்களை அறியமுடியாத நிலைக்கு அவர்களை ஆளாக்க முடிகிறது. இந்த வகையில் தான் மக்களின் போதைப்பொருளாக சமயம் பயன்படுத்தப்படுகின்றது என்ற மார்க்ஸின் விமர்சனம் அமைந்தது.
மனிதனுக்கும் மனிதனுக்கும், மனிதனுக்கும் இயற்கைக் குமிடையில் அறிவார்ந்த தகுந்த உறவுகளை உருவாக்குவதன் வழி சமயத்தின் இந்நிலைக்கு முடிவு காணலாம். முதலாளித்துவத்தால் வேண்டுமென்றே தோற்றுவிக் கப்பட்ட, தெய்வீகமயமாக்கப்பட்ட இந்த அற்புத நிலை அகன்றே ஆகவேண்டும். அப்பொழுதுதான் யதார்த்த உலகின் வாழ்வு எல்லோர்க்கும் கிட்டும் என்பது மார்க்ஸின் கருத்தாகும்.
அன்னியமாதல் கோட்பாடு
அன்னியமாதல் (Alienation) என்ற பதம் கார்ல் மார்க்சின் பல எழுத்துக்களிடை பயன்படுத்தபட்டுள்ளது. வெறுமனே ஒரு கருத்தாக்கமாக இதனை மார்க்ஸ் அமைக்கவில்லை. முதலாளித் துவ உற்பத்திமுறையின் கீழான, மனிதன் நிலையை பகுப்பாய்வு செய்யவே இதனைப் பயன்படுத்தினார். தொழிலாளி உழைப்பின் உற்பத்தி அவனுக்கு சொந்தமாய் இல்லை; அவன் கட்டுப்பாட்டில் இல்லை; ஆனால் அவன் மட்டும் அதனோடு பிணைக்கப் பட்டுள்ளான். தொழிலாளி தன் உழைப்பைத் தருகின்றான். தன் வாழ்வையே இந்த உற்பத்திக்காய் தருகின்றான். ஆனால் அந்த உழைப்பு அவனினின்றும் அன்னியப்பட்டதாக இருக்கின்றது. அதுமட்டுமல்ல அதுவே அவனுக்கு எதிரான விசையாகியும்

இருக்கின்றது. முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளியின் உழைப்பே அவனை வரட்சிநிலைக்கு இட்டுச்சென்றது. எவ்வளவுக்கு எவ்வளவு அதிக பெறுமதியை அவன் உற்பத்தி செய்தானோ அந்தளவிற்கு அவன் பெறுமதியற்றவனானான். உற்பத்தியை சிறப்பான வடிவில் தருவதற்காக அவன் ஊனமானான்.
தொழிற் பிரிப்பின் வழியேதான் மனிதனை தன் உழைப் பில் இருந்து துண்டாடும் இந்த அன்னியமாதல் விளைகின்றது. மார்க்ஸ் மீண்டும் மத்தியகால உற்பத்தி முறைகளுக்கு மீள விரும்பவில்லை. ஆனால் இலாபமீட்டல் என்ற சாபக்கேட்டி னின்றும் விடுபட்டபின், நவீன தொழிநுட்பமானது நவீன மனிதனை விடுவிக்கும் என நம்பினார். அதன் பின், சமூக உற்பத்தி முறையில் தீவிரபங்காளியாக அவன் தன்னைக் கருதி உழைப்பான். உண்மையில் இந்த ஈடுபாட்டு உணர்வானது புதிய திருப்தியை அமைத்துத் தரும்; இந்நிலையில் அன்னியமாதல் அகலும்.
அரசு பற்றிய கோட்பாடு
அரசு பற்றிய மார்க்சின் கோட்பாடு அவர் விமர்சகர்கள் முன்வைப்பது போல எளிமையான ஒரு படித்தான விடயம் அல்ல. அரசியல் ஆற்றல் என்பது உண்மையில் ஒன்றையொன்று எதிர்க்கும் ஒரு வகுப்பின் ஒழுங்கமைக்கப்பட்ட ஆற்றல் என்பார் மார்க்ஸ். மார்க்ஸின் கருத்துநிலையின் சாரத்தை காட்டுரு 3.3 தெளிவாகச் சித்திரிக்கும். மார்க்ஸ் அரசின் தோற்றத்தை தனி உடைமையின் தோற்றத்துடன் இனம் காண்கின்றார். கூடவே ஏற்கனவே விளக்கியவாறு சமூகமானது இரண்டு எதிரெதிரான வகுப்புகளாக பிளவுபடுவதையும் சுட்டுகிறார். தனிச்

Page 35
காட்டுரு 3.3
மார்க்ஸின் வரலாற்று இயங்கியல் பொருள்முதல் வாதம்
கம்
MM சமத்துவம்
நிறுவனங்களின் மேற்கட்டுமானம்
அரசு
சோஸலிசம்- (அரசியல் அமைப்புக்கள்)
கருத்தியல் محققبہ 66 سے கைத்தொழில் சார் சட்டம் கல்வி
முதலாளித்துவம் இராணுவ FLDuUCupb,
அமைப்புகள் ஒழுக்கமும்
சமூகத்தின் பொருசார் அடிப்படை
நிலமானிய உற்பத்தி சக்திகள் அமைப்பு
வகுப்பு முறைமை
(அன்னியமாதல்)
உற்பத்தி வழிமுறைகள் தொடர்பான மனிதஉறவு முறைகள்
(சொத்து உறவுகள் + தொழிற்பகுப்பு)
உற்பத்திகள்
--
உற்பத்தி வழிமுறைகள்
தொன்மைநிலை =
நடைமுறை செற்பாடுகள், திறன்கள் நுட்பங்கள், உற்பத்தி கருவிகள்
〉།
இயற்கை பொருள்சார் சூழலும் அதன் மூலவளங்களும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சொத்துக்களை 96.OL6DDT's கொண்ட வகுப்புகளே மேலாதிக்க சக்திகளாகின்றன. இவ் வகுப்பினர் மிகக் குறைந்தளவு எண்ணிக்கையினராக இருப்பதால் 85 LTu அதிகாரத்தின் மூலமே தமது ஆற்றலை தக்கவைத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இந்த வகையில் சுரண்டும் சிறுபான்மையினர் கைகளில் கிடைத்த வலிமையான ஆயுதமாகவே அரசு அமைகின்றது. இந்நிலையின் நிலவும் அரசின் முதன்மை நோக்கமென்பது மேலாதிக்கம் செலுத்தும் வகுப்பைப் பேணுவதேயாகும் என்பது வெளிப்படையாகும். உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர்களின் பொருளாதார ஆர்வங்களை பாதுகாக்கும் பணி அதனாகின்றது. எனினும் தனியுடைமை, வகுப்புக்களிடையிலான போராட்டம் என்பவற்றி லேயே அதன் நிலைபேறு தங்கியுள்ளது. சமூகமானது சுதந்திர, சமத்துவ இயல்பினை எய்தும்போது அங்கு ஆதிக்க அமைப்புக்களும் மறைந்து விடுகின்றன 66 தம் எழுத்துக்களிடையே மீள மீள வலியுறுத்துவார் மார்க்ஸ்.
உலகின் சமூகவியல், பொருளியல், அரசியல் சிந்தனைப் புலன்களில் மார்க்சின் செல்வாக்கும், வழிகாட்டலும் இன்றுவரை நிலைபெறக் காணலாம். உலகம் கண்ட மாற்றங்கள் பலவற்றின் இயங்குவிசையாக மார்க்சியம் வரலாற்றுடன் கலந்திருக்கின்றது. முரண்பாடும் மாற்றமும் பற்றிய மார்க்சின் பகுப்பாய்வுச் சட்டகம், எங்கள் சமூகவியல் மேம்பாட்டிற்கும் முறையியல் செழுமைக்கும் துணையாகியுள்ளது. இன்று மார்க்சிய சமூகவியலாகவே அது வடிவம் காண்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது ஐ

Page 36
4. எமில் ருர்கைம் Emile Durkheim
1858 - 1917
வாழ்வும் காலமும்
பிரான்சிய கல்வியுலகின் முதன்மைக் கல்வியாளராக புகழ் பெறும் டுர்கைம், லொறெயினின் கிழக்குப் பிரான்ஸ் மாகாணமான எபிநோல் என்ற இடத்தில் 1858 ஏப்பிரல் 15ம் திகதி பிறந்தார். யூதமத புலமையாளர்களைக் கொண்ட குடும்பம். ஆரம்ப நாட்களின் யூதமத குருவாகும் எண்ணத்தோடு மரபு வழி கல்வியை தொடர்ந்தார் டுர்கைம். தல்மட் (Talmud) ல் ஹிப்ரூ மொழியைக் கற்றதோடு நியமக் கல்வியையும் G(5 மதசார்பற்ற பள்ளிக்கூடத்திலேயே மேற்கொண்டார். பதின்மூன்றாவது வயதிலே Uபூதமத ஞானஸ்னானத்தைப் பெற்றக்கொண்டார் டுர்கைம். இதனைத் தொடர்ந்த காலப்பகுதிக்குள் அற்புத அனுபவங்களின் வழி கத்தோலிக்க ஆசிரியர் ஒருவரின் செல்வாக்கினால் கத்தோலிக்க சமயத்தில் ஆர்வங்கொண்டார். எனினும் மிகவிரைவிலேயே தமது சமய ஈடுபாடுகளைக் கைவிட்டு, கடவுள் இருப்பை நிறுவுதல் இயலாது எனும் கொள்கையராய் மாறினார். எனினும், சமயம், ஒழுக்கம் தொடர்பான ஆர்வம் தணிந்ததில்லை; இவரது கல்வியுலக ஆய்வுக்காலமெல்லாம் இவை மேலாதிக்கம் செலுத்தி வந்தமையை அவதானிக்கலாம்.
 

டீ-எபினோல் கல்லூரியின் மிகச் சிறந்ததொரு 1வை னாக டுர்கைம் விளங்கினார். பல பரிசுகளையும் பாராட்டுக் களையும் கெளரவங்களையும் பெற்றுக்கொண்டார். தம்முள் வளர்ந்த பெரிய இலட்சியங்களுடன் பாரிசிலுள்ள லைசிலோவிஸ் - லி - கிராண்ட எனும் மதிப்பார்ந்த கல்லூரியில் சேர்ந்தார். இங்குதான் பிரான்சின் உயர் குழாம்களுக்கான பயிற்சிக்களமான ஈகோல் Normaleல் சேருவதற்கான அனுமதிப் பரீட்சைக்கு தோற்றினார். அரிதின் முயன்று 1879ல் அனுமதி பெற்றார். ஈகோல் நோமலியில் பிரான்சின் அறிவியல் வாழ்வில் முக்கிய தடங்களைப் பதித்த பல அறிஞர்களை இங்கு தான் சந்தித்தார் டுர்கைம். இங்கு எதிர்காலத்தில் சிறந்த சோசலிச, மெய்யியல், உளவியல், அறிஞர்களாக மிளிரப்போகும் பல ஒரேவகுப்புத் தோழர்களைக் கொண்டிருந்தார் டுர்கைம். இவர்களில் ஹென்றி பேக்கசன், ஜேன் ஜருஸ், பியரே ஜெனற் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
ஈகோல் நோமலியின் அனுமதி பெற்றமையை ஒரு பெரும் சாதனையாகக் கருதியபோதும், அங்கு பெற்ற அனுபவங்களிடை டுர்கைமினால் பெரிதும் மகிழ்ச்சி காண முடியவில்லை. ஒழுக்கம் மற்றும் ஆழமான விஞ்ஞான அறிவுறுத்தல்கள் தொடர்பான வழிகாட்டல்களுக்கான தாகத்துடன் இருந்த டுர்கைமினால், இன்னமும் இலக்கிய நுண்கலைத் துறைகளுக்கே அதிகளவு அழுத்தம் தந்த ஈகோலில் திருப்திகாண முடியவில்லை. விஞ்ஞானத்தின் புதிய கண்டுபிடிப்புக்கள் அல்லது கோட்பாடுகளுக்குப் பதிலாக, கிரேக்க கவிதைகள் இலக்கியப் பாடல்களைப் படிப்பதே முக்கியமானது எனும் கலைத்திட்டங்களை டுர்கைம் எதிர்த்தார்; மேலோட்டமான நிலையிலேயே கல்வி வழங்கப்படுவதை உணர்ந்தார் டுர்கைம்.

Page 37
ஜேன் ஜவுறிஸ் (Jean Jaures) போன்ற சில நண்பர்களை தேடிக் கொண்டபோதும் ஏனைய மாணவர்களால் தான்தோன்றித் தனமான ஒருவராகவே அவர் கணிக்கப்படும் நிலை காணப்பட்டது. அவ்வாறே பெரும்பாலான விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் கூட அவர்மீது அதிருப்தி கொண்டிருந்தனர். எப்படியோ 1882ல் பட்டதாரியாக தேர்ச்சிபெற்று வெளியேறினார் டுர்கைம்.
டுர்கைமின் பேராசிரியர்களில் பெரும்பாலானோர் அவர் மீது கோபம் கொண்டவர்களாய் அவரை வெறுத்த போதும், வேறு சில பேராசிரியர்களுக்கு டுர்கைம் பெரிதும் கடப்பாடுடையவராக
விருந்தார். இவர்களில், Ancient city- புராதன நகரம் என்ற நூலை எழுதிய, கல்லூரி பணிப்பாளராக விளங்கிய புஸ்ரல் டி கொலங்ஸ் (FusteIde Coulanges) என்ற பெரும் வரலாற்றாசிரியர்,
மற்றும் மெய்யியலாளரான எமில் பொறோக்ஸ் (Emile Boutroux) ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். வரலாற்று ஆய்வில் கடுமையான விமர்சன முறையியலை பயன்படுத்துதலின் அவசியத்தை இவர்கள் தமக்கு உணர்த்தியதாக டுர்கைம் கூறுவார். விஞ்ஞானத்தின் மெய்யியல் தொடர்பான அணுகு முறைகளை இவர்களிடம் தாம் கற்றுணர்ந்ததாக டுர்கைம் குறிப்பிடுவார். ஒரு மட்டப் பகுப்பாய்வில் இருந்து மற்றொரு மட்டத்திற்கு செல்லுகையில் எழக்கூடிய தொடர்புகள் பற்றிய பகுப்பாய்வில் இவ் அணுகுமுறைகள் பெரிதும் பயன்பட்டன. டுர்கைமின் சமூகவியலில் பிரதான தடத்தைப் பதிப்பனவாக இவ் அணுகுமுறைகள் விளங்கியதையும் நாம் காணமுடியும். இவ் அணுகுமுறைகளின் ஊடாகவே தம் ஆய்வுப் பொருளையும் வாழ்வு இலக்கினையும் இனங் கண்டு கொண்டுவிட்டார் என விமர்சனவியலாளர்கள் குறிப்பிடுவர்.

டுர்கைமின் சிந்தனை, மரபு வழி மெய்யியலாளரின் தன்மையதல்ல. அக்காலத்து கற்பிக்கப்பட்ட மெய்யியலானது அன்றாட விவகாரங்களினின்றும் பெரிதும் விலகியதாக, அனாவசிய விடயங்கள் தொடர்பான 'மயிர் பிய்த்தல்களாகவே” விளங்கக் கண்டார் டுர்கைம். இந்த யுகத்தை கட்டியாளும் பிரதான ஒழுக்கவியல் வினாக்களுக்கான விடைகளை பகுத்துணர்வ திலேயே தம்மை அர்ப்பணித்தார் டுர்கைம். கூடவே சமகால சமூகத்தின் நடைமுறை விவகாரங்களுக்கு வழிகாட்டும் அறிவை யும் கொடுக்க விரும்பினார். அக்கால அரசியல் உறுதிப் பாட்டிற்கும் ஒழுக்க நிலைபேற்றிற்கும் பங்களிக்க பெரிதும் விரும்பினார். உடையும் நிலையில் தளர்ந்திருந்த அன்றைய அரசியலில் உறுதிப்படுத்தும் ஒழுக்க வழிகாட்டலை வழங்கு வதற்கு முழுமையான விஞ்ஞானப் பயிற்சி அவசியம் என கருதினார் டுர்கைம். இதற்கென சமூகம் பற்றிய விஞ்ஞான ஆய்வையே தம் குவிமையமாகக் கொண்டார் டுர்கைம்.
விஞ்ஞான ரீதியான சமூகவியல் கட்டமைப்பொன்றினை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த டுர்கைம் இந்நோக்கில் இறுதிவரை விலகாமல் உழைத்தார். இதனை ஒரு முடிவு இலக்காக அன்றி சமூக ஒழுக்க திசைக்கான ஒரு வழிகாட்டியாகவே மேற்கொண்டார்.
அக்காலத்து சமூகவியல், கல்வி நிறுவனங்களில் ஒரு பாடநெறியாக இல்லாததால், மெய்யியல் ஆசிரியராகவே தம் பணியைத் தொடங்கினார் டுர்கைம். 1882-1887 காலப்பகுதியில் பாரீசை அண்டிய எண்ணற்ற மாகாண லைசீஸ் பள்ளிகளில் மெய்யியலைக் கற்பித்தார். இவ்வேளையிலேயே லூயிஸ் டிரைபஸ் (Louise Dreyfus) எனும் மரபு வழி யூத குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை மணம்புரிந்தார் டுர்கைம். இவர்களது

Page 38
மணவாழ்வில் மாறி, அன்ரூ என இரண்டு குழந்தைச் செல்வங்கள். தன் கணவரின் ஆய்வு வாழ்வில் உறுதுணையாகவும், நல்லதோர் அம்மாவாகவும் லூயிஸ் விளங்கியதாக அறிய முடிகின்றது. இக்காலப்பகுதியில் ஒரு வருடம் மட்டும் உயர்கல்விக்கென பாரீசிலும், ஜேர்மனியிலும் செலவு செய்தார் டுர்கைம்.
ஜேர்மனியில் இருந்த காலத்தில் குறிப்பாக கற்பித்தல் முறை, ஒழுக்க மெய்யியல், சமூக விஞ்ஞானங்கள் தொடர்பான ஆய்வுகளில் கருத்தைச் செலுத்தினார். டுர்கைமின் பெரும்பாலான கொள்கைகள் லிப்சிக்கிலுள்ள வில்ஹைம் வூண்ரின் உளவியல் ஆய்வுக் கூடத்திலேயே கழிந்தது. விஞ்ஞான ரீதியான புறவயத்தன்மை, நுண்மை ஆகியவற்றில் பேரார்வம் கொண்டிருந்த டுர்கைம், அவற்றினை வூண்ரின் ஆய்வுகூடத்திலே நிதர்சனமாகக் கண்டார். ஒழுக்கக் கடமையின் சமூக வேர்களை அழுத்திய பல்வேறு ஜேர்மனிய சமூக விஞ்ஞானிகள், மெய்யியலாளர்களை மனமார அங்கீகரித்ததுடன் ஒழுக்கவியல் என்பது ஒரு தனித்துவமான விஞ்ஞானத் துறையாகும் என்ற அவர்களின் கருத்து நிலையுடனும் உடன்பட்டார். பின்னர் 1902ல் பாரீஸ்
கிடைக்கப்பெற்றது. 1917ல் இறக்கும் வரை பல்வேறு சமூக விஞ்ஞானத்துறைகளும் அவரது அரிய விரிவுரைகளால் பயன்கண்டன.
டுர்கைமின் எழுத்துக்களில் செல்வாக்குச் செலுத்தியோரும், டுக்கைமின் எழுத்துக்களும்
டுர்கைம், அகஸ்ற் கொம்ற்ரின் செல்வாக்கிற்கு பெரிதும் உட்பட்டிருந்தார். தனியன்களை சமூக யதார்த்தத்தின் சாரமாகக் காணும் டுர்கைமின் கருத்தும் புற மெய்மை வாதமும் கொம்ற், ஸ்பென்சர் ஆகியோரின் சமூகப்படிமலர்ச்சிக் கோட்பாட்டின்

செல்வாக்கில் விளைந்தவை. டுர்கைமின் கூட்டுப்பிரதிநிதித்துவம் பற்றிய ஆய்விலே ஜேர்மனிய உளவியலின் செல்வாக்கினையும் இனங்காணமுடியும்.
இவரது நூல்களும் கட்டுரைகளும் 1885முதல் அவர் மறையும் வரை ஒழுங்காகத் தொடர்ந்து வெளிவந்தன.
Gif605Ligór (pg56) T6)MGOT The Division of Lobour of Society - சமுகத்தில் தொழிற்பிரிப்பு, 1883ல் வெளியானது. இது இவரது கலாநிதிப்பட்ட ஆய்வாகும். இரு ஆண்டுகள் கழித்து The Rules of Sociological Method - af(pasomugi (p60.pdisassT60T விதிகள் பிரசுரமானது.
1897ல் Sயicide என்ற நூல் வெளியானது இவரது இறுதி b|T6OT601 The Elementry forms of Religious life-afIDu alsTypefair அடிப்படை வடிவங்கள், 1912ல் பிரசுரமானது. தனியனும் கூட்டுபிரதிநிதித்துவமும் தொடர்பான புகழ்பெற்ற இரவது கட்டுரை 1924ல் வெளியானது.
சமூகவியலுக்கான டுர்கைமின் குறிப்பிடத்தக்க பங்களிப்புக்கள்
0 Fepas 60660)LD56ir (Social Facts) (up60Buju6) (Methodology) QöFuugibUTLʻlquu6Ö u(g5ÜJLJITuiu6)| (FunctionalAnalysis) &ep35 6.6035 UTG (Social Typology) சமயத்தின் சமூகவியல் (Sociology of Religion)
கூட்டுப் பிரக்ஞை (Collective Consciousness)
சமூகத்தில் தொழிற்பிரிப்பு (Division of Labour in

Page 39
Society)
9360 Tuó (Anomie)
g5ibQa5IT606) (Suicide) 9667 felp3565u6) (Siciology of Knowledge)
செயற்பாட்டியல் விளக்கம் (Functionalexplanation)
சமுக உண்மைகள்
இறுதியான சமூக யாதார்த்தம் தனியன் அல்ல; குழு என்பதே டுர்கைமின் உறுதியான கருத்தாகும். சமூக உண்மைகள் தனியன்களின் உண்மைகளாக குறுக்கி நோக்க முடியாதவை என்றார் டுர்கைம். இந்த வகையில் ஸ்பென்சரின் தனிமனித வாதத்தினின்றும் முரண்படுகின்றார் டுர்கைம்.
சமூக உண்மை என்ற பதம் சமூகத்துடன் தொடர்பான நிகழ்வை அல்லது விடயத்தைக் குறிக்கின்றது. சமூக வாழ்வின் யதார்த்தங்களை பெளதீக அல்லது உளவியல் பகுப்பாய்வுகளின் வழி விளக்குதல் சாத்தியமில்லை என்பது இன்று சமூகவியல் கல்வியில் மேலாதிக்கம் செலுத்தும் டுர்கைமின் சமூக உண்மைகள் பற்றிய பிரதான கருத்தாகும். சிந்திக்கும், உணரும் வழிவகைகளும், செயற்பாடும் ஒரு தனியனுக்கு புறத்திருந்தே தரப்படுவன. எடுத்துக்காட்டாக குடும்பக்கடமைகள், சமய அனுஷ்டானங்கள், பொது ஒழுக்கம், தொழில் அறம் என்பவற் றைக் குறிப்பிடலாம். உறுதியான சமூக அமைப்புக்கள் இல்லாத போதும் கூட இந்தச் சமூக உண்மைகள் நிலவக் காணலாம்.
தனியன்களின் ஒழுங்கு, சமூக ஒழுங்கு எனும் உண்மைகளிடை முக்கிய வேறுபாடுகளை பகுத்துணரமுடியும். சிலவகைச் சிந்தனைகளும் செயல்களும் மீள மீள செய்வதன்

வழி ஒருவரில் விளைவிக்கும் தனித்துவமான நடத்தைக் கோலங்களை முதலாவது குறிக்கின்றது. இரண்டாவது வகை ஒழுங்கில், சமூகவிதி என்ற நிலையில் அமைந்திருக்கின்றது. இந்த இரண்டும் உண்மை, ஒழுங்குகள் தொடர்பான தனியன்நிலை, சமூகஉளவியல் சார்ந்தவை.
டுர்கைம், சமூக உண்மைகளை பொருட்களாகவே நோக்குகின்றார். அவருக்கு முன்னைய சிந்தனையாளர்களோ அவற்றினை எண்ணக்கருக்களாகவே கண்டனர். எண்ணக் கருரீதியான சிந்தனையானது பொருளிலிருந்து வேறுபடுவது. டுர்கைமைப் பொறுத்தவரையில் அனைத்து அறிவுக் கூறுகளும் பொருளில் உள்ளடங்கியிருந்தன. அவற்றினை தனித்து உளச்செயற்பாட்டினால் மட்டும் விளங்கிக்கொள்ள முடியாது. மனதுக்கு புறத்திலிருந்து எண்ணக்கருவுக்கான தரவுகளைப் பெறவேண்டி உள்ளது. அவதானங்கள், பரிசோதனைகளின் வழி பெறப்படும் தரவுகளிலிருந்தே சாத்தியமான உயர்ந்த அறிவுத் திறனை பெறமுடிகின்றது.
சமூகம் பற்றிய கற்கைகள், அகக் காட்சி முறையில் தங்கியிருக்க முடியாது என்பதனை டுர்கைம் அழுத்தினார். சமூக உண்மைகள் தனிமனித விருப்பங்களின் வழி தோன்றியவை அல்ல; எனவே அவற்றினை தனியன்களின் கூட்டு வாழ்வுக்கான உண்மைகளிலிருந்தே உணர்ந்து கொள்ள வேண்டும். சமூக உண்மைகள் தன்மை ரீதியில் உளவியல் ரீதியான உண்மைகளினின்றும் வேறுபட்டுள்ளதால் இவை பற்றிய ஆய்வுகள் வெவ்வேறு மட்டப் பகுப்பாய்வினை வேண்டி நிற்கின்றன.

Page 40
முறையியல்
முறையியலுக்கான டுர்கைமின் பெறுமதியான பங்களிப்பானது அவரது பிரதான ஆய்வுகளிலெல்லாம் வெளிப்பட்டது. சமூக உண்மைகளை தனிமைப்படுத்தி அறிவதற் கான விதிகளை அவரது முறையியல் உள்ளடக்கியுள்ளது. முதல் நடவடிக்கையாக முற்கற்பிதமான எண்ணங்களை துடைத் தெறியவேண்டும் என்பார் டுர்கைம். சமூக உண்மைகளை அவதானிப்பதன் வழி சாதாரண மனித சிந்தனையில் மேலாதிக்கம் செலுத்தும் தவறான கருத்துக்களை இனம்கண்டு அதினின்று ஆய்வாளர் விடுபட வேண்டும். அடுத்து அனைத்து சமூகவியல் ஆய்வின் உள்ளடக்கமும் சில பொதுவான புறவய இயல்புகளால் வரையறுக்கப்பட்டதாகவும் அமையவேண்டும் என்பார் டுர்கைம். மேலும் தனிமனித வெளிப்பாடுகளிலிருந்து சுதந்திரமான முறையில் சமூக உண்மைகளை ஆய்வாளர் நோக்க வேண்டும் என்பார். கூட்டு வழக்கங்களுக்கான நிரந்தர அடிப்படைகளைக் காண வேண்டும். இந்த வகையில் சமூக நியமங்களே அவர் ஆய்வுப்பொருளாக வேண்டும்.
டுர்கைமின் பிரதான விதியானது சுதந்திரமான இந்த சமூக உண்மைகளினின்றும் பெறப்பட்டது. சமூக உண்மைகள் தொடர்பான உளவியல் ரீதியான விளக்கங்கள் அடிப்டையான சமூக வாழ்வின் யதார்த்தங்களைக் காட்டத்தவறிவிட்டன. சமூக வாழ்வு பற்றிய விளக்கங்கள் சமூகத்தின் வழியே தான் விளக்கப்படவேண்டும். அன்பு, சமயபக்தி, திருமண விசுவாசம் போன்ற கட்டுப்பாடான பிணைப்புக்களின் மூலங்கள் எல்லாம் தனியன்களுக்குப் புறத்தேயே உள்ளன. உண்மையில் பெரும் பாலும் தனியன்களின் பிரஞ்ஞை மீதான, சமூக உண்மைகளின் அழுத்தல்களின் விளைவாகவே இவை அமைகின்றன என

மீளtள தன் எழுத்துக்களில் கூட்டு சமூக பிரஞ்ஞையின் முக்கியத்துவத்தினை வலியுறுத்துவார் டுர்கைம்.
டுர்கைமைப் பொறுத்தவரை மறைமுகமான பரிசோதனை அல்லது ஒப்பியல் முறை என்பது சமூகவியல் ஆய்வுக்கு பொருத்தமான முறை என்றார். கொம்ற்ரின் வரலாற்று முறையை இவர் விமர்சித்தார். முன்னேற்றத்திற்கான நிலைமைகளை அறிவதால் மட்டும் காரணகாரியங்களை விளங்கிவிட முடியாது இருவேறு நிலைகளை ஒப்பிடுவதே பொருத்தமானது என்றார். இங்கு ஒப்பியல் சமூகவியலானது ஒரு தனித்துறையாக கருதப்படவில்லை. படிமலர்ச்சியின்போது ஒரே காலப்பகுதிக்குரிய சமூகங்களுக்கிடையிலான ஒப்பீடாய் அவற்றிற்கிடையிலான வேறு பாடுகளைக் கருத்திற்கொள்வதாகவே அமையும். ஒரு மாறியில் ஏற்படும் மாற்றம் இன்னொன்றின் மாற்றத்துடன் யாதேனும் ஒரு சமூக உண்மையின் அடிப்படையில் நேரடியாக தொடர்புபடலாம் எனவும் டுர்கைம் வலியுறுத்துவார்.
செயற்பாட்டியல் பகுப்பாய்வு
விதிக்கோட்பாட்டு முறைகளுக்குப் பதிலாக செயற் பாட்டியல் அணுகுமுறைகளை அறிமுகம் செய்தார் டுர்கைம். ஒரு சமூகப்பொருண்மையை விளக்க முற்படும்போது அது உண்டாக் கிய வினைத்திறனான விளைவுகளையும் அது நிறைவு செய்த செயற்பாட்டையும் கருத்திற்கொள்வது அவசியம் என்றார். செயற்பாட்டியல் பகுப்பாய்வினை இருவேறு படிமுறைகளின் வழி விளக்கினார் டுர்கைம். ஒன்று வரலாற்று ரீதியான விசாரணை. மற்றையது தனியன்களின் ஊக்கல்களினடியான விசாரணை. இவற்றில் இரண்டாவது வகை, சமூகவியல் விசாரணையில் எல்லைநிலை முக்கியத்துவம்மட்டுமே கொண்டது. விளைவுகளை

Page 41
எதிர்பார்க்க முடியாமலேயே தனியன்கள் செயற்படும் விடயங் களை மட்டுமே இவை விளக்கக்கூடியன. ஒரு சமூகப் பொருண்மையின் முழுமையான விளக்கத்திற்கு வரலாற்று மற்றும் செயற்பாட்டியலாகிய இருவகை பகுப்பாய்வுகளும் இன்றியமை யாதவை. ஒரு குறித்த தொகுதியில் அல்லது பகுதிக் கூறின் செயற்பாட்டிற்கு ஏன் ஒரு குறித்த அம்சம் இன்றியமையாத தாய் அமைகின்றதென்பதை காண்பதில் செயற்பாட்டியல் பகுப்பாய்வு துணையாவது. எனவே தான், தோற்றக் காரணிகளை யும் செயற்பாடுகளை தீர்மானிக்கின்ற காரணிகளையும் இணைத்து நோக்கவேண்டும் என்றார். தொழிற்பிரிப்பு, சமயவாழ்வின் அடிப்படை வடிவங்களாகிய இரண்டு பகுப்பாய்வுகளிலும் இக் கருத்து நிலையை தெளிவாகவே பயன்படுத்துவார் டுர்கைம்.
சமுக வகைப்பாடு
டுர்கைம் சமூகம் பற்றிய ஒரு வகைப்பாட்டினை காண முனைந்தார். உயிரியல் உயிரிகளைப் போல ஒரே அலகுகளின் வெவ்வேறு செயற்கைகளின் வழி வெவ்வேறு சமூகங்கள் தோன்றுகின்றன என்றார் டுர்கைம். கூடவே சமூக உயிரியல் வகைப்பாடுகளிடை பிரதான வேறுபாடுகளையும் அவதானித்தார். மீளுருவாக்கம் தொடர்பாக சமூக உயிரிகளிடை பரம்பரைச் செல்வாக்கு ஒன்றில்லை என்றார். ஆனால் ஏனைய உயிரிகளைப் பொறுத்தவரை பரம்பரையின் செல்வாக்கு அதிகமானது. அத்தோடு சமூக உயிரிகளை திட்டமாக நோக்குவதும் கடினமானது. ஒன்றுடன் ஒன்று இணைந்து கலந்த பன்முக தன்மைகளை கருத்தில் கொள்வனவாகவே பகுப்பாய்வு அமையவேண்டும் எனவும் குறிப்பிடுவார் டுர்கைம். எவ்வாறெனினும் இவ்வாறான இந்த வகைப்பாட்டியலை மேலும் வளர்த்தெடுப்பதில் டுர்கைம் மட்டுப்பாடுகளைக் கண்டதாக ஆய்வாளர் குறிப்பிடுவர்.

சமயத்தின் சமுகவியல்
சமூக ஒழுங்கில் நிறைந்த ஆர்வம் கொண்டிருந்த டுர்கைம் கட்டுப்பாட்டில் தாக்கம் செலுத்தும் புற விசைகள் பற்றி ஆழ ஆய்ந்தார். தொடக்கநிலையில் சட்டஒழுங்கில் தம் கவனத்தைக் குவித்திருந்த போதும் பின்னாட்களில் சமயத்தை
சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யுமாறு தனியன் களை தூண்டும் உணர்வை சமயம் உருவாக்குவதாக கருதினார். சமூக ஒழுங்கை அச்சுறுத்தும் செயற்பாட்டை விளங்கும் ஆர்வத்தினாலும் அவர் சமயம் பற்றி ஆராய்ந்தார். இதன் விளைவாகவே இவரின் சமய வாழ்வின் அடிப்படை வடிவங்கள் எனும் மிக முக்கியமான நூல் உருப்பெற்றது.
இந்த ஆய்வுக்கென அருந்தா (Arunta) எனும் ஆஸ்திரேலிய பழங்குடிகளை வழிநிலைத்தரவுகளின் வழி தேர்ந்தெடுத்தார். படிமலர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த இப் பழங்குடியினர் டுர்கைமின் ஆய்வுக்கான இலட்சிய மூலங்களாக அமைந்தனர். அகவயக் கூறுகள், நிறுவன ரீதியான இடைத்தொடர்புகள் என்பவற்றை பரிசோதனை ரீதியாக இவர்களிடை அவதானிக்க முடிந்தது. இம் மக்களிடை காணப்பட்ட சமயமான குலக்குறியம் (Totemism) டுர்கைமின் ஆய்வுப் பொருளானது.
குலக்குறியம் என்பது 956) Ul நம்பிக்கையை குறிக்கின்றது. குலக்குறியாக அமையும் புனிதப்பொருட்கள்,
0 சமூக விலக்குகளை (Social Taboo) மீறுபவர்களுக்கு
தண்டனை தருகின்றன.

Page 42
0 குறித்த குழுவில் அற ஒழுக்க பொறுப்புக்களை
விதைக்கின்றன.
b6gs: American Museum of Natural Histroy
குலக்குறியமானது விலங்கு தாவரம் அல்லது யாதேனும் ஒரு இயற்கைப்பொருளாக அமைந்தது. ஒரு குலத்தின் அல்லது குழுவின் புனித குலக்குறிக் கோட்பாட்டின் குறியீடாக வெளிப்படுவது
அருந்தாக்களின் வாழ்வு இரு கூறுகளாக பிரிக்கப்பட்டிருந்தது.
1. லெளகீக இலக்குகளுடனான செயலாக்கம் குறைந்த
மந்தமான சிறு குழுக்கள்.
2. கூட்டுவாழ்வில் செயற்றிறனோடு புனிதப்பொருட்களைச்
சார்ந்து இயங்கும் குழுக்கள்.
டுர்கைம் சமயப்பொருண்மையை தனியன்கள் சார்ந்த
s
 

விடயமாக அன்றி சமூகப் பொருளாகக் கண்டார். அவரைப் பொறுத்தவரை சமயம் என்பது புனிதப் பொருட்கள் தொடர்பான ஒன்றிணைக்கப்பட்ட நம்பிக்கைகள், நடைமுறைகளின் தொகுதி யாகவே அமைந்தது. சமயம் செயற்படுவதற்கான வினைத் திறனான விசையாக குழுவாழ்வு விளங்குவதாக டுர்கைம் குறிப்பிடுவார். சமயக் கருத்தும், நடைமுறைகளும் ஒரு குழுவின் குறியீடாக விளங்குவன. எந்த ஒரு சமூகத்திலும் புனிதப் பொருள கள் - அல்லாதவை என பாகுபாடு தோன்றுகிற போது சமயம் சார் பொருண்மையும் சமூகத்தில் தோற்றம் பெற்று விடுகின்றது என்பார் டுர்கைம்.
புனிதப்பொருட்கள் என்பன மனிதனுக்கு அப்பாற்பட்ட சமய நம்பிக்கைகள், சடங்குகள், தெய்வங்கள் இன்னும் சமய மதிப்பை வேண்டி நிற்கும் அனைத்தையும் உள்ளடக்குவன. புனிதப்பொருட்கள் எண்ணிறைந்தவை; அசாதாரணமானவை; எண்ணங்கடந்தவை; புனிதப்பொருள் வட்டத்தை அனைவரும் ஒரே தன்மையதாய் புரிதல் இயலாது. வெவ்வேறு சமயங்களுக்கு ஏற்ப அவை வேறுபடுகின்றன. புனிதப்பொருட்களின் முக்கியத்துவம், புனிதப்பொருள் அல்லாதவற்றினின்றும் அவை வேறுபடுகின்ற தன்மையில் தங்கியுள்ளன. புனிதப்பொருட்களை தொடக்கூடாது; தூய்மையின்றி தொடவே முடியாது; புனிதம் அல்லாதவையோ அன்றாட பயன்பாட்டு செயல்களாய் அமைவன. சமய நம்பிக்கையில் புனிதக் குறியீடுகளும் நடைமுறைகளும் புறச்சூழலையே குறிக்கின்றன. அல்லது தனிமனித இயல்பிற்கான சமூக ஒழுக்க யதார்த்தத்தை வகுப்பன. சமயத்தின் மூலமும் இலக்கும் கூட்டு வாழ்க்கையே. ஒரு பொருளானது இயல்பில் புனிதப் பொருளாகவோ அன்றியோ அமையலாம். ஆனால் மனிதர் தம் பயன்பாட்டு நிலையில் அதனை எவ்வாறு காண்கிறார்கள் என்பதனைப் பொறுத்தே அதன் நிலை தீர்மானமாகின்றது.

Page 43
எடுத்துக் காட்டாக புனிதச் சடங்குகளில் முக்கியத்துவம் பெறும் "வைன்” ஐ கட்டுவார் டுர்கைம், இங்கு கிறிஸ்துவின் இரத்தக் குறியீடாக இது பயன்படுவது; குடிவகையாக அல்ல. புனித செயற்பாடுகள் முடிவின் வழிமுறையாக அன்றி வழிபாட்டு முறையின் பகுதியாகவே அமைவன. புனித சடங்குகளில் கலந்துகொள்வதன் வழி, சிறப்பான சமூக கெளரவம் கிடைக்கின்றது. சமயத்தின் சமூகச் செயற்பாடுகளில் இதுவும் ஒன்றாகும்.
சமயம் ஒரு சிறப்பான கூட்டுப் பொருண்மை. அது மனிதர்களை ஒன்றிணைக்கின்றது. சமயம் என்பது புனிதப் பொருட்கள் தொடர்பான நம்பிக்கைகள் நடைமுறைகளின் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தொகுதி என்பார் டுர்கைம். புனித நம்பிக்கைகளும் நடைமுறைகளும் மக்களை ஒரு ஒழுக்க சமுதாயமாக ஒன்றிணைப்பன. மறுதலையாக சமயத்தின் விருத்திக்கு நம்பிக்கைகளின் கூட்டான பகிர்தல் இன்றியமை யாதது. இது ஒரு ஆக்கம் மட்டுமன்றி புனித பொருள்களைக் கொண்டாடுதலின் வழி தெய்வமாக்கப்பட்டதுமாகும்.
சமயம் என்பது சமூக வல்லமையின் சூழ்நிலை பிரதிபலிப்பின் சாரம் எனவும் டுர்கைம் குறிப்பிடுகிறார். மரபு வழிச்சமயத்தின் மறைவு என்பது சமூக குலைவாக அமையாது. ஆதிமனிதன் சமய பிரதிநிதித்துவங்களின் ஊடக வழியேதான் சமூகத்தில் தான் தங்கியுள்ளமையை உணர்ந்தான். நவீன மனிதன் இச் சமய ஊடக நிலை கருத்துக்களுக்குப் பதிலாக தர்க்கரீதியான பிரதியீடுகளை கண்டுகொள்ள வேண்டும் என்றார்.
சமயம் தொடர்பான லெளகீக ரீதியான சமூகவியல் விளக்கமானது, கடவுள் மீதான மனித உளச் சார்பினை சார்ந்தது. ஒரு சமூக உறுப்பினன் என்ற வகையில் புறவயமான சில ஒழுக்க

ஆற்றல்களில் தங்கியிருப்பதாக உணரும் நிலையில் சமூகத் திற்காய் வாழ்கின்றனர்.
டுர்கைமின் நோக்கில் சமூகம் என்பது நம் அனைவரினதும் தந்தையாகும். எனவே அதற்கே கடவுளுக்கு செய்கின்றதான நன்றியை நாம் செலுத்தவேண்டும். இந்த வகையில் புதியதொரு மனிதாபிமான வழிபாட்டு மரபை அறிமுகம் செய்ய விழைந்தார் டுர்கைம். சமூகத்தை ஒருங்கிணைக்கும் ஒழுக்க ஆளுமையை இதனாற் பெறமுடியும் எனக் கருதினார். குடியியல் இயக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு மனிதர் களை ஒன்றுபட அழைத்தார் டுர்கைம். எமது இன்றைய இருப்பு சமூக மயமானது; சமூகம் எங்களை உயர்த்துதற்காக எங்களுக் குள் இயங்குவது என்பது டுர்கைமின் கருத்துநிலை.
சமயத்தின் பல்வேறு வடிவங்களையும் தனியே விபரிப்பதுடன் நின்று விடாமல், சமயத்தின் தொழிற்பாடுகளையும் விளக்குவதில் கருத்தாக இருந்தார். இந்த வகையில் நான்கு பிரதான செயற்பாடுகளை இனங்காட்டுவார் டுர்கைம்.
0 ஒழுக்காற்றுச் செயல்
சமயச்சடங்குகள் சமூக வாழ்வுக்கு மனிதனை தயார்ப்படுத்துவன. 8U ஒழுக்கம், சிலவகை துறவு நடவடிக்கையின் வழி ஒழுக்க செயற்பட்டினை விளைவிப்பது.
0 ஒருங்கிணைப்புச்செயல்
GFLDu jäF சடங்குகளின் வழி சமய உறுதிப்பாட்டினை ஆக்குதல், மீள வலியுறுத்துதல், பராமரித்தல் ஆகியன நிகழ்கின்றன. சமயச் சடங்குகள் மக்களை ஒன்றிணைக்கின்றன. அதன் வழி பிணைப்புகள் உறுதிபெறுகின்றன. சமூகத்தின்

Page 44
உறுதிப்பாடும் பேணப்படுகின்றது.
0 பேணுகின்ற செயல்
8FLDUU நடைமுறைகள் 905 குழுவின் சமூகப் பாரம்பரியங்களைப் பேணுவதுடன் அவற்றினை மீள் மறுமலர்ச்சி அடையவும் வைக்கின்றன. கூடவே நிலவும் விழுமியங்களை எதிர்கால சந்ததிக்கு கடத்துவதின் வழி சமூக தொடர்ச்சியை பேணுதலில் துணையாகின்றன.
0 மதிப்பார்ந்த சமூக விசையாகும் செயல்.
சமயம் தன் உயர் விசை செயற்பாட்டின் வழி விரக்தி உணர்வுகளுக்கு எதிராகவும், நம்பிக்கை இழப்புக்களுக்கு பதிலாகவும் நம்பிக்கையை தருவது. எடுத்துக்காட்டாக இறப்பு முதலாய இழப்புக்களிலிருந்து மீளுதற்கான சமநிலையை தருவதன் மூலம், தளரா மனதோடு மனித இருப்பும் அர்த்தங்களும் தொடர துணையாகின்றது.
afin.L.6ûLÎJé6og5 (Collective Consciousness)
சமூக உண்மைகள் தொடர்பன டுர்கைமின் பல்வேறு பகுப்பாய்வுகளிடையேயும் கூட்டுப்பிரஞ்ஞை தொடர்பான விவாதங் களைக் காண முடியும். கூட்டு வாழ்வில் தொடர்புபடும் விசைகளை இனங்காண்பதில் பெரிதும் உழைத்தார் டுர்கைம். யாதார்த்தின் மதிப்பீடும் விழுமியங்களின் மதிப்பீடும் தொடர்பான தமது ஆய்வு நூலில் சமூக இலட்சியங்களுக்கும் கூட்டுப் பிரஞ்ஞைக்கும் இடையிலான தொடர்பை விளக்கினார் டுர்கைம். ஒன்றையொன்று இவை எவ்வாறு வளர்க்கின்றன என்பதை தெளிவாக்கினார். சமூக கருத்தியல்கள் கூட்டுப்பிரஞ்ஞையை தோற்றுவிக்கின்றன. அவை

தனியன்களின் கருத்தாக்கத்தில் சுதந்திரமாய் நிலைபெறுகின்றன. அதேவேளை விழுமியங்கள் தனிமனிதர்களுக்கான பொது மனச்சாட்சியாய் உருப்பெறுகின்றன. டுர்கைமின் கருத்தில் சமயம், சட்டம், ஒழுக்கம், பொருளாதாரம் என்பன விழுமியங்களினதும் கருத்து நிலைகளினதும் தொகுதியாகவே கொள்ளப்படுகின்றன.
டுர்கைம் ஒவ்வொரு தனியன்களிலும் இரண்டு பிரஞ்ஞை நிலைகளை அவதானிக்கின்றார். ஒன்று தனியன்களுக்கே உரியது; மற்றையது குழுவுடன் பகிர்ந்து கொள்ளப்படுவது அதுவே கூட்டுப் பிரஞ்ஞை எனப்படுவது. இக்கூட்டு உணர்வினை அதன் பகுதிகளின் கூட்டாக விளங்கி விடக் கூடாது. குழுவின் சிந்தனை, உணர்வு, செயல் என்பன அவற்றை ஆக்கும் தனியன்களில் நின்று வேறுபடுவன. எனவே குழு நடத்தை தொடர்பான பகுப்பாய்வு என்பது, கூட்டுப்பொருண்மை பற்றிய ஆய்வில் இருந்தே தொடங்கப்பட வேண்டும். கூட்டுப்பொருண்மை என்பது தனியன்களின் மீது வலிமையான அழுத்தத்தை செலுத்துவது. தனியன்களுக்குப் பொதுவான இயற்பண்புகள் யாவும், இந்த அழுத்தின் விளைவுகளே என்பார் டுர்கைம்.
ஆயினும் தன் தொழிற்பிரிப்பு என்ற ஆய்வினுள்ளே கூட்டுப் பிரஞ்ஞை என்பது, சராசரி மனிதரின் பிரதிநிதித்துவ உணர்வு நிலைகளின் கூட்டாக டுர்கைமினால் விளக்கப்படுவதும் இங்கு நம் கவனத்திற்குரியது. இங்கு சமூகப்பொருண்மையானது தொழிற்பிரிப்பின் விளைவாக நோக்கப்பட்டது. தற்கொலை பற்றிய தம் கோட்பாட்டிலும் தற்கொலை வீதத்தில் காணப்படும் வேறு பாட்டினை சமூக வேறுபாடுகளின் விளைவாகவே டுர்கைம் காண்பதும் குறிப்பிடத்தக்கது.

Page 45
சமுக உறுதிப்பாடும் சமுகத்தில் தொழிற்பிரிப்பும்
சமூகத்தின் தொழிற்பிரிப்பு என்ற இவரின் நூலில் சமூகப் படிமலர்ச்சியின் தன்மை மற்றும் விளைவுகள் பற்றி கருத்தைச் செலுத்தினார் டுர்கைம். ஆதி, நவீன சமூகங்களிடையில் வேறுபாடுகளை அவதானித்தார். அதிகரிக்கும் தொழிற்பிரிப்பு, சமூகஉறுதிப்பாட்டின் தன்மை என்பவற்றில் இந்த வேறுபாட்டினை இனங் காட்டினார் டுர்கைம். ஆதி சமூகங்களை தொழிற்புரட்சிக்கு பிந்திய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் முன்னையவை இயல்பான
உறுதிப்பாடு (Mechanical Solidarity) கொண்டவை, பின்னயவை
elsolo.IL fâuits s-pg|ILI(8 (Organic Solidarity) கொண்டவை என வகுத்துக் கூறுவார் டுர்கைம். ஆதிச்சமூகங் களின் தொழிற்பிரிப்பானது மிக எளிதானது. தனியன்கள் சார்பளவில் ஒத்ததன்மையன. இயல்பான உறுதிப்பாட்டின் வழி இதன் அங்கத்தினர் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர். இங்கே சட்ட அமைப்பு என்பது கூட்டு எண்ணத்தை மீறுபவர்களை தண்டிப்பதன் வழி, அதனை பாதுகாத்து ஒழுக்கச் சமநிலையை பேணி நிற்கின்றது. அடக்குமுறை, குற்றவியல்சட்டம் போன்ற கடின நடைமுறைகளின் வழி சமூகக் கட்டுப்பாடு இங்கே வெளிப்படுத்தப் படுகின்றது. இவ்வாறான சமூகங்களில் ஒழுக்க சட்ட பொறுப் புணர்வு என்பது கூட்டு, சமூக அந்தஸ்து நிலைமைகளாக மரபுவழி நிர்ணயமாகின்றன. வாழ்வின் ஒரு சிறு பகுதி மட்டும் ஒப்பந்தக் கோட்பாட்டின் வழி கட்டுப்படுத்தப்படுகின்றது. இது மனித ஒத்ததன்மையின் விளைவாகவும் அதன் u6) DT356b அமைகின்றது.
நவீன தொழில் வளர்ச்சி அடைந்த சமூகங்களில் தனியன்கள் வேறுபடும் ஆளுமைகளை கொண்டிருக்கிறார்கள். இதன் வழி வேறுபட்ட அனுபவங்களை செயற்பாடுகளை

வெளிப்படுத்துகிறார்கள். இந்நிலையில் அமைப்பு ரீதியான உறுதிப்பாட்டினாலேயே இவர்கள் இணைக்கப்படுகிறார்கள். இங்கு தனியன்களிடையிலான ஒத்த தன்மைக்குப் பதிலாக வேறுபாடுகளே இணைவின் அடிப்டையாகின்றது. இது தொழிற் பிரிப்பின் விளைவாகவும் காணப்படுவது. தொழிற்பிரிப்பும், அதன்விளைவாக மனிதரிடை காணப்படும் சமமின்மை யும், சமூகத்தில் மனிதர் ஒருவரில் ஒருவர் தங்கிநிற்க வழிசெய்கின்றது. தங்கிநிற்றல் என்பது மனித உள நிலை, ஒழுக்கநிலை மற்றுமமைப்பு ரீதியான ஒழுக்கநிலை என்பவற்றில் தங்கியுள்ளது. அமைப்பு ரீதியான உறுதிப்பாடு அதிகரிக்கும்போது கூட்டுப் பிரக்ஞையின் முக்கியத்துவம் குறைகின்றது. சமூகத்தில் மனிதனை இணைப்பதற்கான பொது நம்பிக்கைகளின் தேவை இல்லாது போவதன் விளைவே இந்நிலையாகும். இதனால் அடக்குமுறைகளின் துணையுடன் குடியியல் சட்டங்களுக்குப் பதிலாக குடியியல் நிர்வாக விதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. வளர்ச்சியடைந்த சமூகங்களில், உயர்நிலை உறுதிப்பாட்டுடன் சமத்துவத்தின் உயர் விழுமியங்கள், தாராண்மை, சகோதரத்து வம், நீதி போன்ற ஒழுக்க நிலையை பிரதிபலிக்கும் கூறுகள் வெளிப்படும் என்றார் டுர்கைம். தனிமனித வாதம் ஒருபோதும் சமூக உறுதிப்பாட்டை விளைவிக்காது என்பதனையும் கூடவே குறிப்பிடுவார். அத்துடன் சமாதானமான பயன்பாடுள்ள ஒப்பந்தங்களே நவீன சமூகத்தில் பிரதான உறுதிப்பாட்டு காரணிகள் என்றும் டுர்கைம் குறிப்பிடுவார்.
இந்நூலின் இரண்டாம் பாகத்திலே அதிகரித்து வரும் தொழிற்பிரிப்பின் விளைவுகளை விரிவாக ஆராய்ந்தார் டுர்கைம். தொழிற்பிரிப்பானது பொருளாதார உற்பத்தியில் நல்ல விளைவுகளைத் தருவதுடன், தனியன்களின் செல்வ விருத்திக்கும் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கான ஆசைகளை பூர்த்தி செய்யும்

Page 46
என, அக்காலத்து பயன்பாட்டு வாதிகளின் கருத்தியலோடு டுர்கைம் முரண்படுகின்றார். மனித உயிரிகள் ஒர் அளவுக்குத் தான் பொருளாதார பண்டங்களை அனுபவிக்கலாம். அதிகரிக்கும் உற்பத்திக்கு மகிழ்ச்சி தான் ஊக்கமெனில், அவர்கள் எப்பொழுதோ உற்பத்தியை நிறுதியிருப்பார்கள். மகிழ்ச்சி என்பது சமூக நலத்துடன் தொடர்பானது எனவும் விளக்குவார் டுர்கைம்.
இதற்கும் மேலதிகமாக வடிவவியல் சார்ந்த விளக்கத் தையும் டுர்கைம் முன்வைத்தார். இதன் படி தொழிற்பிரிப்பு என்பது, அதிகரித்த குடித்தொகையினால் ஏற்பட்ட சமூக மாற்றத்தின் விளைவு என்கின்றார். குடித்தொகை அதிகரிப்பு தனியன்களி டையே போட்டியை செறிவாக்குகின்றது. தனியன்கள் பிழைப்பிற் கான சிறப்புத் தேர்ச்சியையும் அது தூண்டி நிற்கின்றது. எனினும் குடித்தொகை வளர்ச்சியுடன் மட்டும் சமூக உறுதிப்பாட்டினை முழுமையாக இணைத்துக் கூறிவிட முடியாது எனும் டுர்கைமின் கருத்தும் இங்கே கவனத்திற்குரியது.
அனோமி - நியமமறுநிலை (Anomie)
டுர்கைமின் அனோமி பற்றிய பகுப்பாய்வானது தற்கொலை பற்றிய அவரின் ஆய்வின் ஒரு பகுதியாகும். ஒரு வரிடம் எவ்வளவுக்கு அதிகமாக உள்ளதோ, அவ்வளவுக்கு அதிகமாக இன்னமும் அவர் வேண்டுவார். இதனால் பெறப்படும் திருப்தி என்பது, தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் பதில் மேலும் தூண்டுவதாகவே அமைகின்றது என டுர்கைம் கூறுவார். மனித ஆசைகள் எல்லையற்றவை. எல்லையற்ற இந்த ஆசைகள், சமூக கட்டுப்பாட்டின்வழி வழிப்படுத்தப்பட வேண்டியவை. இந்த வகையில் சமூகமானது, மனித ஆசைகளை மட்டுப்படுத்தும் ஓர் ஒழுங்கு விசையாக தொழிற்படுகின்றது. நன்கு ஒழுங்கமைக்

கப்பட்ட சமூகத்தில் தனியன்களின் இயல்பான விருப்பங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இங்கே ஒவ்வொருவரும் தமது இலக்கு களுக்கு அப்பால் செல்வ்தில்லை.
தனியன்களின் இயல்பான ஆசைகள் தொடர்பான கட்டுப்படுத்தும் ஆற்றல் சமூகத்தில் தளர்கின்றபோது, சமூக ஒழுங்குகள் உடைவதுடன் தனியன்கள் தமது சொந்தத் தடத்திலேயே விடப்படுகின்றார்கள். இந்த நிலையே அனோமி எனப்படுகின்றது. முழுச்சமுகம் அல்லது அதன் சில கூறுகளான குழுக்களிடையே சார்பளவிலான நியமமறுநிலை காணப்படு வதையே இது குறித்து நிற்கின்றது. பொதுநியமங்களால் தனியன்களின் விருப்பங்கள் ஒழுங்குபடுத்தப்பட முடியாத ஒரு நிலையே இதுவாகும். இந்நிலையில் தமது இலக்குகளை எய்துவதில் ஒழுக்க வழிகாட்டல் எதுவுமின்றி தனியன்கள் விடப்படுகின்றனர். அனோமியானது உண்மையில் முழுமையான நியம மறு நிலையை குறித்தாலும் நடைமுறையில் சமூகங்கள் அதிக அல்லது குறைந்த அளவில் நியம விதிகளைக் கொண்டிருக்கலாம். இதற்கு மேலாக எந்த ஒரு சமூகத்திலும் உள்ள குழுக்களுக்கிடையிலான அவர்களுக்கு பிரச்சினை தரும் அனோமியின் அளவு வேறுபடலாம். எடுத்துக்காட்டாக சமூக மாற்றமானது, முழுச்சமூகத்தையோ அன்றி அதன் சில பகுதிகளிலோ அனோமி நிலையை தோற்றுவிக்கலாம். இதே போல அழுத்தமானது கீழ்ந்ோக்கிய அசைவிற்கு வழிவகுக்கும் போது பாதிக்கப்படும் மனிதர் தம் வாழ்வில் ஒழுங்கு குலைவை அதிகரிப்பர். சமூகக் கட்டமைப்பு வலைப்பின்னலை குழப்பக் கூடிய எந்த ஒரு திம்ர் மாற்றமும் அனோமியை விளைவிக்கக் கூடியன. பொருளாதார செழிப்பு நிலை, மனித ஆசைகளை துண்டி அனோமி நிலை அபாயத்தை ஏற்படுத்துவதாக டுர்கைம் விளக்குகின்றார். மனித ஆசைகளின் பூர்த்தி என்பது கையிலுள்ள

Page 47
வளங்களில் தங்கியுள்ளதால் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்ட வறியவர்கள் அனோமி நிலையினால் பீடிக்கப்படுவது குறைவாக உள்ளதென்று டுர்கைம் குறிப்பிடுவது கவனத்திற் குரியதாகும்.
தற்கொலை
தற்கொலை பற்றிய தம் ஆய்விலே பரிசோதனைத் தரவுகளுக்கு கோட்பாட்டு வடிவம் தரும் டுர்கைமின் ஆய்வார்வம் வெளிப்படக் காணலாம். தற்கொலை என்பதனை ஒரு உள்நோக்கான, சுய அளிப்புச் செயலாக வரையறுக்க தயங்கினார் டுர்கைம். பதிலாக தற்கொலை என்பதனை ஒரு சமூக விளைவாகவே நோக்குவார் டுர்கைம். தமது கருத்தினை நிறுவும் நோக்கில் புள்ளிவிபரவியல் பகுப்பாய்வை பயன்படுத்துவார் டுர்கைம். இப்பகுப்பாய்வின் வழி,
0 தற்கொலைக்கு உளவியல், மரபுரிமையியல், சூழலியல், புவியியல், இனவியல் காரணிகளை முன்வைத்த
முன்னைக் கோட்பாடுகளை மறுதலிப்பார். D தம் சொந்த கோட்டு விளக்கமான தற்கொலையின்
அடிப்படையான சமூக உண்மையை விளக்குவார்.
தற்கொலை வீதத்திற்கும் குழுக்களுக்கிடையிலான இணைவு நிலை, முக்கிய கூட்டுச் செயற்பாடு என்பவற்றிற்கிடையிலான இணைவினை வெளிப்படுத்துவதன் வழி சமூகக் காரணிகளின் செல்வாக்கினை ஆழ நிறுவினார் டுர்கைம்.
சுதந்திர சிந்தனையாளரிடைதான் உச்ச தற்கொலை வீதம் காணப்படுவதை குறிப்பாகச் சுட்டினார் டுர்கைம். அடுத்ததாக புரட்ஸ்தாந்த மதத்தினரிடை அதிகரித்த தற்கொலை

விதமும், கத்தோலிக்கரிடை குறைந்தளவு வீதமும், யூதரிடை மிகக் குறைந்தளவு வீதமும் இடம்பெறுவதை இனங்காட்டுவார். இந்தவேறுபாடுகளை வெறுமனே அவர்களின சமயநம்பிக்கை களின் அடிப்படையில் அவர் விளக்கவில்லை. இச் சமயக் குழுக்களிடை காணப்படுக்கூடிய உறவு நெருக்க அளவின் வழியிலேயே விளக்குகின்றார்.
ஒட்டு மொத்தமாக சமூகக் கட்டமைப்பின் வேறுபாடுகளின யடியாகவே தற்கொலை வீதமும் வேறுபடுவதாக கூறுவார் டுர்கைம். குறிப்பாக சமூக உறுதிப்பாட்டின் வகை, அளவு என்பவற்றில் காணப்படும் வேறுபாடுகளினடியாகவே தற்கொலை வீதமும் அமையும் என்கின்றார்.
தற்கொலையாளருக்கும் சமூகத்திற்குமிடையிலான உறவின் வழி, மூன்று வகை தற்கொலைகளை டுர்கைம் இனங்காண்கிறார்.
O 56ircypsosons bibQa5Tsos) (Egoistic Suicide) D era Tif bibQa5ITapso (Anomic Suicide) O GuTg556o 5bGaSTSOL (Altruistic)
சார்பளவில் தளர்ச்சியான குழு உறவுகளின் விளைவாக தன்முனைப்பு தற்கொலையை விளக்குகிறார் டுர்கைம். குழுவாழ்வில் போதுமான அளவு பங்குபற்றுதல் இன்மையால் இது விளைகின்றது என்கிறார். சமூகத்திலிருந்து விடுபட்டு அதன் மீது குறைந்தளவு பெறுமதியையே தரும்போது தனியன்கள் தமது சொந்தத் தடத்துக்குள்ளேயே விழுத்தப்படுகின்றார்கள். இவ்வாறு தனிக்கும் தனியன்கள் தமது இருப்புக்கு காரணம் ஏதும் காணமுடியாத நிலையில் தன்முனைப்பு தற்கொலை நிகழ்கின்றது. புரட்டஸ்தாந்து சமயிகளிடமும், திருமணமாகாத

Page 48
வரிடமும் இவ்வகை தற்கொலை மிகுந்திருப்பதனையும் டுர்கைம் சுட்டுகிறார்.
அடுத்த வகையான அனோமி தற்கொலையானது சமூக நியமங்களில் ஏற்படுகின்ற உடைவுகளினால் விளைவது; திடீர் சமூக மாற்றங்களினால் ஊக்குவிக்கப்படுவது 6T6 விளக்குகின்றார் டுர்கைம். சமூகமானது தனியன்களின் மீது, அவர்களது எல்லையிலா ஆசைகள் மீது மட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால் செல்வச் செழிப்பான காலப்பகுதிகளில் மரபு வழி விழுமியங்கள் இலகுவில் கைவிடப்பட்டு புதிய நியமங்கள் நிலை நாட்டப்படுகின்றன. ஆனால் எல்லையில்லாத ஆசைகள் உடனடியாகவோ அன்றி சற்றுக் காலம் தள்ளியோ விரக்தி நிலைமைக்கு இட்டுச்சென்று, அனோமி தற்கொலைக்கு வழியாகின்றது என்கின்றார் டுர்கைம். இதனால் தான் போர்க்காலங்களில் தற்கொலை வீதம் குறைந்துள்ளது என்பதனையும் சுட்டுகின்றார். இக்காலத்து தனியன்கள் மீது உறுதியான கட்டுப்பாடு உள்ளதால் தற்கொலையும் குறைகின்றது. சமூக ஒழுங்கமைவின்மையின் விளைவான உச்ச மன அழுத்தத்தினாலும் அதிகளவு எண்ணிக்கையானோர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதனையும் டுர்கைம்
பொதுநல நோக்கிலான தற்கொடையானது தனியன் களிடையே காணப்படும் அளவுக்கு மிஞ்சிய உறுதி, ஒழுங்கின் விளைவென்கிறார் டுர்கைம். அளவுக்கு மிஞ்சிய தனிமனித வாதம், அளவுக்கு மிஞ்சிய ஒழுங்கு கட்டுப்பாடு ஆகிய இரண்டிலும் இவ்வகை தற்கொலை சம்மந்தப்படுகின்றது. எடுத்துக் காட்டாக இந்து சதி வழக்கத்தினைக் குறிப்பிடலாம். சமூக நியமத்தின் அழுத்தத்தினை விருப்புடன் ஏற்று தன் உயிரையே தரும்

இவ்வழக்கினைப்போல பல எடுத்துக்காட்டினை முன்வைப்பார் டுர்கைம்.
அறிவின் சமுகவியல்
அறிவின் சமூகவியல் முன்னோடிகளில் ஒருவராக டுர்கைம் கணிக்கப்படுகின்றார். தம் முன்னையோர் கருத்துக்களை மேலும் விளக்கமாக வகைப்பாடு செய்து சமூக அறிகையின் அடிப்படைகளை இனங்காட்டினார் டுர்கைம். அவரது அறிவின் சமூகவியலானது, மனித சிந்தனை, வெளி, காலம் என்பவற்றை புரிந்து கொள்ளும் விளங்கிக்கொள்ளும் சமூக வாழ்வு கோலங்களின் பகுப்பாய்வினை குறித்து நிற்பது எனலாம். மனித சிந்தனையின் அடிப்படை வகைகள் பற்றிய தம் சமூகவியல் விளக்கத்தில் காலம், வெளி பற்றிய எண்ணக்கருக்கள், சமூக உற்பத்திகள் என்கின்றார். ஆதிச்சமூகங்களின் சமூக அமைப்புக் கள், அவற்றைச் சூழ்ந்த உலகின் ஆதிவெளி அமைப்புக்களாக இருக்கும். இது போலவே நாள், கிழமை, மாதம், வருடம் என்பனவெல்லாம் சடங்குகளின், திருவிழாக்களின் பருவ மீள்பொழுதுகளே. நாட்காட்டி-கலண்டர் என்பது கூட்டுவாழ்வின் லயத்தினை வெளிப்படுத்துவதுடன் அதன் ஒழுங்கினையும் உறுதிப்படுத்தி நிற்கின்றது எனவும் விளக்குவார் டுர்கைம்

Page 49
5
Dd.6t) Golf
Max Weber
1864 - 1920
வாழ்வும் காலமும்
மக்ஸ் வெபர், ஜேர்மனியில் மத்தியதர குடும்பமொன்றில் 1864 ஏப்பிரல் 21ம் திகதி பிறந்தார். செல்ஸ்போர்க் கத்தோலிக்க தண்டனைக் குட்பட்டு அகதிகளாகி புரட்டஸ்தாந்து மதத்தைத் தழுவிய குடும்பத்தின் வழித்தோன்றல். வெபரின்
தந்தையார் ஒரு முதன்மையான யூரி. தாயார் ஒரு செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கல்வினின்
சமயப் பிரிவில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். கடமையில் கருத்தாய் இருக்கும் கல்வின் சமய இயல்பு, தாயினுாடாக வெபரைச் சேர்ந்தது. மத்திய தர வகுப்புச் சூழலில் வளர்க்கப்பட்டாலும் தாராண்மை, மனிதாபிமான விழுமியங்கள் இளமைப்பருவ சமூக மயமாக்கலிலேயே வெபருக்கு வாய்த்தது.
மிகச் சிறந்த சட்ட, பொருளியல் கல்வியைப் பெற்றுக் கொண்டதுடன் தம் குடும்ப தொடர்புகளுக்கூடாக முன்னிலை அரசியல் வாதிகள், அறிஞர்களுடனான உறவின் வழி அசாதாரண அறிவியல் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார் வெபர். கூடவே ஆழ்ந்த ஒரு வாசகராகவும் திகழ்ந்தார். தனது பதினான்காவது வயதிலேயே ஹோமர், லிவி போன்றோர் பற்றியெல்லாம் எழுதி இருக்கிறார் வெபர். பல்கலைக்கழகம் புகுமுன்னரேயே கதே
(Goethe), 6müd6ODLUG86OTTFIT (Spinoza), absT6öri (Kant) (BLJAT6ör (8BT60DJŮu
 

பற்றிய அறிவையும் நிறையப் பெற்றிருந்ததார்.
கல்விப்பின்னணி
ஹைடில்பேர்க் பல்கலைக்கழகத்தில் மூன்று தவணை கற்றபின் ஸ்ராஸ்பேர்கில் ராணுவ சேவைக்கென சென்றார் வெபர். இராணுவ சேவையிலிருந்து மீண்டதும் பேர்லின் பல்கலைக் கழகத்திலும் பின் கொட்டிங்கன் பல்கலைக் கழகத்திலும் கற்று சட்டமாணிப்பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து தன் ஆர்வத்துறையான பொருளியலுக்கு மாறினார்.
சிறிது காலம் பேர்லின் பல்கலைக்கழகத்தில் தமது
ஆசிரியரான யேகப் கோல்ஸ் கிமிட்ற் (Jacap Goldschmidt) க்குப் பதிலாக கடமையாற்றினார். இக்காலத்தில் தான் மரியானா
6),l50)60Isö85T (Marianne Schnitger) g LD600ID Lflbg5Tff. f60
காலத்தின் பின் பிறைபேர்க் பல்கலைக்கழகத்தில் (Freiberg) பொருளியல் பேராசிரியராக நியமனம் பெற்றார். 1895ல் இவர் நிகழ்த்திய தேசிய அரசும் பொருளாதாரக் கொள்கையும் பற்றிய தொடக்க உரையிடை இவரது உயர் அறிவுத் திறன் வெளிப்பட்டது. அவரது தேசிய வாதம் பரந்த அறிஞர் குழாத்தையும் அரசியல் உலகையும் எட்டியது. இந்தப் புகழ் ஹைடில் பேர்க் பல்கலைக்கழகத்தில் இவரது ஆசிரியரான கார்ல் நீஸ்ஸைத் தொடர்ந்து பேராசிரியராகும் வாய்ப்பைத் தேடிக் கொடுத்தது. ஹைடில் பேர்க்கில் தம் முன்னைய உயர் ஆசிரியர்களோடு தொடர்பு கொள்ள முடிந்ததுடன், அக்காலத்து அறிஞர் குழாத்துடன் நட்புப் பூணவும் வழி செய்தது. வெபரின் வீடு பல்வேறு அறிஞர்களின் செழுமையான சிந்தனைகள் பிறக்கும் களமானது. எனினும் இடையிலே சில காலம் பாரிய உளநோயால் வெபரின் ஆய்வு முயற்சிகள் தடைப்பட்ட போதும் மீளவும் 1918ல்

Page 50
வியன்னா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகி தன் ஆய்வுகளை முன்னெடுக்க முடிந்தது. ஒரு வருடத்தின் பின் முனிச் பல்கலைக்கழக அழைப்பை ஏற்று அங்கு சென்றார். "விஞ்ஞானம் ஒரு தொழிலாகவும், அரசியல் ஒரு தொழிலாகவும்" எனும் இவரது பிரபல்யமான விரிவுரை, இங்கு தான் நிகழ்த்தப்பட்டது. முனிச்சில் கடமைபுரியும் வேைைளயிலேயே 1920 யூன் மாதம் 24ம் திகதி நியூமோனியாவினால் காலமானார் வெபர்.
அரசியல் வாழ்வு
தம் வாழ்வின் இறுதி மூன்றாண்டு காலப்பகுதியில் வெபர் அரசியல் நடவடிக்கைகளில் அதிக ஆர்வத்தை வளர்த்திருந்தார். எண்ணிறைந்த பத்திரிகைக்கட்டுரைகள், அறிக்கைகளை வெளியிட்டு ஜேர்மனிய அரசியல் அமைப்பில் மாற்றத்தை வேண்டி நின்றார். பொறுப்பு வாய்ந்த பாராளுமன்ற அரசாங்கம் ஒன்றின் அவசியம் பற்றியும் அதன் அதிகார எல்லைகள் பற்றியும் இவற்றிலே தெளிவாக விளக்கினார். புதிதாக அமைக்கப்பட்ட Deutsche Demokraische partie uî6ÖT 6ög5TLJab » JÜILî60TJ Tab6b,
முக்கிய செயல் வீரராகவும் வெபர் விளங்கினார். Versailles சமாதான மாநாட்டிற்குச் சென்ற ஜேர்மனியப் பிரதிநிதிகளின் ஆலோசகராக விளங்கியதுடன் சமாதான உணர்வுடையவர்களின் குரலாகவும் ஒலித்தார் வெபர். மாணவர் அவைகள், கல்வியாளர் குழாம்களிலெல்லாம் அறிவார்ந்த ஜனநாயக அமைப்பின் அவசியம் பற்றிய கருத்துரைகளை வழங்கினார். புதியதொரு ஜேர்மனிய அரசியலமைப்புச் சட்டத்தை வரைவதிலும் ஈடுபட்டார். இந்த அனைத்து நிலைமைகளிலும் தாம் சுதந்திரமான அரசியல் நிலைப்பாட்டினையே கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெபரின் ஆக்கங்கள்
ஜேர்மனிய சமூகவியல் இன்று அமெரிக்காவிலும் ஏனைய உலக நாடுகளிலும் மொழி பெயர்க்கப்பட்ட ஆக்கங்களின் மூலம் அறியப்பட்டுள்ளது. இவரது ஆக்கங்கள் சமூகவியல் கோட்பாடு, முறையியல் வளர்ச்சியில் பெரும் பங்களிப்புக்களைச் செய்துள்ளன. உளவியலை மையமாகக் கொண்ட 20ம் நூற்றாண்டின் சமூகவியல் போக்கினை வெபரின் ஆக்கங்கள் பிரதிபலித்தன.
0 வெபர் தன் கலாநிதிப்பட்ட ஆய்விற்கென மத்திய காலத்து, வர்த்தக சமூகங்களின் வரலாற்றினை (History of commerical societies in the middle ages) G35ffbg கொண்டார். பொருளியலும் சட்ட வரலாறும் இணைந்த
இவ்வாய்வு 1889ல் எழுதப்பட்டது. O கலாநிதிப்பட்ட ஆய்வைத்தொடர்ந்து எழுதப்பட்ட
முக்கியமான ஆய்வு, உரோமானிய விவசாய வரலாறு (Roman Agrarian History). 935, 18916) 6T(gg5. ULg).
0 இதனைத்தொடர்நது எஸ் எல்பியன் விவசாயத் தொழிலா
ளர்கள் பற்றி நிறையவே எழுதினார் வெபர்.
O வெபரின் மிகப் பிரபலமான ஆய்வான புரட்டஸ்தாந்து ஒழுக்கமும் முதலாளித்துவ எழுச்சியும் (The Protestant ethic and spirt of Capitalism) 19066) 06.16su II6015). இரண்டு கருத்தியல்களுக்கு இடையிலான உறவு பற்றிய ஒரு பகுப்பாய்வாக இது அமைந்தது. மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க வரலாறுகளை அடிப்படையாக் கொண்டது இவ்வாய்வு. இக்கருப்பொருளானது உலகின் ஏனைய பிரதான சமயங்களையும் அவை அமைந்த பொருளாதார

Page 51
பின்புலங்களையும் ஆய்ந்து, உலகின் 660)6OTU பகுதிகளில் முதலாளித்துவம் ஏன் விருத்தியாக
வில்லை எனக் காணத்துணையானது.
போர்க்காலத்தில் வெபர் தமது சமயத்தின் சமூகவியல் (Sociology of Religion) 6T6örg j600TLJG55 படாமலிருந்த ஆய்வுப்பணியை நிறைவு செய்வதில் ஈடுபட்டார். இவ்வாய்வானது தொகுக்கப்பட்டு நான்கு நூல்களாக வெளியானது.
1. The Hindu social system - g5 FLDu Feups
அமைப்பு
2. The Religion of China : Confucianism and taoism)- சீன சமயம் கொன்பியூசனிசமும் தாவோயிசமும்
3. AncientJudaism-Lyirbor upfruitfib
4. The Sociology of Religion - FLDubair
சமூகவியல்
போருக்குப் பிந்திய காலப்பகுதியில் சமூகவியல் கோட்பாடு தொடர்பான தமது பிரதான ஆய்வுப்பணியில் ஈடுபட்டார். பொருளாதாரமும் சமூகமும் தொடர்பான உச்சமானதோர் Քնան 6)!ծ செல்வமாக இது மதிப்பிடப்படுவது. அந்நாளில் முதன்மையான ஜேர்மனிய சமூக விஞ்ஞானிகள் பலருடைய பங்களிப்பக்களை உள்ளடக்கியது. எனினும் இதனை நிறைவுசெய்ய முன்னரேயே வெபர் காலமானர். வெபரினால் மட்டும்

எழுதப்பட்ட பகுதிகளை ரல்கொட் பார்சன் (Talcott
Parsons) ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பொருளாதார சமூக அமைப்புக்களின் கோட்பாடு என்ற நூல்வடிவில் 1947ல் வெளியிட்டார்.
இதே போன்று முனிச்சில் இவர் நிகழ்த்திய தொடர் விரிவுரைகள் பொது பொருளாதார வரலாறு General Economic History 616 B g5606), Lisi) 916 if LD50p6bgu பின் வெளியிடப்பட்டது
வெபரின் பல்வேறு கட்டுரைகளையும் உள்ளடக்கிய From Max Weber: Essays in Sociology 616örp தலைப்பிலான தொகுப்பு நூல் 1946ல் வெளியானது. எச்.எச். கிர்த், சீ டபிள்யூ மில்ஸ் ஆகியோர் மொழி பெயர்த்திருந்தார்கள்.
Sociology and Social Policy - depassius to depad, Gd5(T6it60)85ub, Sociology and Economic History -சமூகவியலும் பொருளியல் வரலாறும் ஆகிய முக்கிய கட்டுரைகளையும் இது உள்ளடக்கி இருந்தது.
சமூகவியலும் அதன் முறையியலும் தொடர்பான நிறைவு GUBT5 &6 (560Lu suis Max Weber on the
Methodology of the Social Science - சமூக விஞ்ஞானங்களின் முறையியல் பற்றி மக்ஸ் வெபர் என்ற தலைப்பில் 1949ல் வெளியிடப்பட்டது. எட்வேட் ஏ.வில்ஸ், ஹென்றி ஏ. பின்ச் ஆகியோர் மொழிபெயர்த்து, இந் நூலைத் தொகுத்திருந்தார்கள்.

Page 52
மக்ஸ் வெபரில் ஏனையோரின் செல்வாக்கு
மக்ஸ்வெபரில் செல்வாக்கு செலுத்திய அறிவியல் மரபுகளை அறியாமல் அவரின் சமூகவியலை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாது. மக்ஸ்வெபரின் சிந்தனையில் செல்வாக்குச் செலுத்திய மரபுகள் பல.
இறையியல் தொடர்பான இவரது ஆழ்ந்த வாசிப்பும் செம்மையான தத்துவார்த்த அமைப்புக்களில் அவருக்கிருந்த அறிமுகமும் அவரது ஆக்கங்களில் தெளிவாக புலப்படுகின்றன. அவரது மாமியார் ஒருவரின் தூண்டுதாலேயே சமயம் தொடர்பான ஆய்வுகளில் அதிகளவில் ஈடுபட்டதாக அறிய முடிகின்றது. புரட்டஸ்தாந்து ஒழுக்கத்தில் அவர் கொண்ட ஈடுபாடே, புரட்டஸ்தாந்து ஒழுக்கமும் முதலாளித்துவமும் சார்ந்த ஆய்விற்கு வழிவகுத்தது. இதனை விட பொருளியல் வரலாற்று ஆசிரியர்கள், வரலாற்று பொருளியலாளர்கள் ஆகியோரின் செல்வாக்கினையும் இவரில் காணலாம். இந்த வகையில் வில்ஹைம் றொச்சர், கால் நீஸ் போன்ற அவரது ஆசிரியர்கள் குறிபிடத்தக்கவர்கள். வெபர் தமது பொருளியல் வரலாறு, சமூகவியல் தொடர்பான அணுகுமுறைகளை பெரும்பாலும் வரலாற்று பள்ளியில் இருந்தே பெற்றுக் கொண்டார். பொருளியல் வரலாறு தொடர்பான இவரது பன்முக அறிவும், சட்டம் தொடர்பான அறிவும் இவரது எழுத்துக்களில் முதன்மையாய் அழுத்தப்படக் 85/T600T6) Tib.
ஜேர்மனிய அறிவியல் சூழலில் ஆதிக்கம் செலுத்திய, மீள் மலர்ச்சி கண்ட கான்டின் மெய்யியல், இவரது முறையியலில் பெரிதும் செல்வாக்கினை செலுத்துவதைக் BIT60076) Tb. பொருள்சார் உலகிற்கும் விழுமியங்களில் தாக்கம் செலுத்தும் தெய்வீக உலகிற்கும் இடையிலான வெளியை நிரப்பும் பாலமாக

இவரது ஆக்கங்கள் அமைந்தன.
வெபரில் செல்வாக்குச்செலுத்திய அறிஞர்களிடை, சிம்மல் (Simmel), ரொனிஸ் (Tonnies) ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். வெபர் தமது Communal - Associative உறவுகள் பற்றிய எண்ணக்கருவை ரொனிஸின் GemenschaftGeseleschaft வகைப்பாட்டிலிந்தே பெற்றுக் கொண்டார். வெபரின் தனிப்பட்ட நண்பராக விளங்கிய சிம்மலின் செல்வாக்கு இலகுவாக இனங்காணப்படலாம். சிம்மலின் சமூக வடிவங்கள் தொடர்பான எண்ணக்கரு வெபரின் இலட்சிய வகைகளுடன் பெரிதும் ஒத்திருக்கக் காணலாம். தொழிற்துறை முதலாளித்து வத்தின் தோற்றத்தில் பணத்தின் முக்கியத்துவம் பற்றிய வெபரின் அழுத்தமானது, சிம்மலின் பணத்தின் மெய்யியல் என்ற எண்ணக்கருவிலிருந்து பெறப்பட்டது எனலாம். வெபரின் முறையியல் கருத்துக்களிலும் சிம்மலின் வரலாற்று மெய்யியல் பிரச்சினை என்ற நூலின் செல்வாக்கினை ஓரளவிற்கு காண முடியும். வெபரின் வாழ்நாள் முழுமையும் அவர் மீது செல்வாக்குச் செலுத்திய இரு பெரும் மேதைகளான பிரெட்றிக் நீட்சே, கார்ல் மார்க்ஸ் ஆகிய இருவரையும் பற்றி இங்கு சிறப்பாக குறிப்பிடவேண்டும். கருத்துக்களினதும் ஆர்வங்களினதும் சமூகவியல் பற்றிய வெபரின் சிந்தனையில் இவ்விருவரின் முக்கியமான தடங்களைக் காண முடியும். நீட்சேயின் செல்வாக்கு வெபரின் விலகிச்செல்லுதல் (Disenchantment), கவர்ச்சிசார் தலைமை (Charisma) ஆகியவற்றில் இனங்காணப்படலாம். அடுக்கமைவு, பொருளாதார நடத்தை தொடர்பான வெபரின் கோட்பாட்டின் வேர்களை மார்க்ஸிய பொருளியலிலும் சமூகவியலிலும் காணலாம்.

Page 53
சமுகவியலுக்கான வெபரின் பங்களிப்புக்கள்
சமூகவியல் கோட்பாட்டிற்கும் முறையியலுக்கும். வெபர் ஈந்த பங்களிப்புக்களை பகுத்துணரும் நோக்கில் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
0 சமூக விஞ்ஞானங்களின் மெய்யியல் (Philosophy of Social science) சமூகவியலும் சமூகச் செயலும் (Sociology and social action) (p6oguiluj6ö FLL85Lb (Methodologicalframework) dep35 sei(65560)LD6 (Social stratification) 3LDugg56, Jep356ius) (Sociology of Religion) 913666, Fepas6ius) (Sociology of Knowledge) பகுத்தறிவும் பணிக்குழுவாட்சியும் (Rationality and
Bureaucracy) 0 அதிகாரத்தின் நிறுவனமயமாக்கம் (lnstitutionalization
of Authority)
சமுக விஞ்ஞானங்களின் மெய்யியல்
வெபரின் அணுகுமுறையினை, அக்காலத்து ஜேர்மனியில் செல்வாக்குச் செலுத்திய அறிவியற்சூழலின் பின்னணியிலேயே விளங்கிக் கொள்ள முடியும். சமூக விஞ்ஞானங்கள் தொடர்பான வெபரின் விளக்கங்கள், அவரது கால புற மெய்மை வாதத்தின் விளைவாகவும் எதிர்வினையாகவும் அமைந்தன எனலாம். புறமெய்மைவாத உளவியலாளர், தமது நோக்கில் மனிதனைப் பற்றிய உலகளாவிய புதுமைப்படுத்தல்களைச் செய்தார்கள். வெளித்தெரிகின்ற, மீள மீள செய்யப்படுகின்ற நடத்தைகளை மட்டுமே இவர்கள் கருத்திற் கொண்டார்கள். குறிப்பிட்ட காலம், இடம் தொடர்பாக மனிதரின் ஒத்த செயற்பாடுகளையே தம்

பகுப்பாய்விற்கென இவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.
இயற்கை, சமூக விஞ்ஞானங்கள் இரண்டினதும் இலக்கு கள் அடிப்படையில் ஒன்றானவை எனும் புற மெய்மை வாதிகளின் கருத்தை வெபர் நிராகரித்தார். மனிதர் ஏனைய பொருள்களி னின்றும் வேறுபட்டவர்கள்; வெளிப்படையான நடத்தைகளின் வழிமட்டுமன்றி, அவற்றிற்குப் பின்னாலுள்ள ஊக்கல்களின் வழியாகவும் விளக்கப்பட வேண்டியவர்கள் என்பது வெபரின் கருத்தியியல். அதேவேளையில் ஜேர்மனிய பண்பாட்டாளர் களினதும் வரலாற்றினதும் இராச்சியம் என்ற போதனையை வெபர் ஏற்றுக்கொள்ளவில்லை. இயற்கை உலகினை ஆளும் ஒழுங்குகளைப் போன்றதே மனித செயற்பாடுகளும் எனினும் சட்ட ரீதியான புதுமைப்படுத்தல்களை செய்வது சாத்தியமானது அல்ல என்றார் வெபர். விஞ்ஞான முறையியலைப் பொறுத்தவரை அது இயற்கை விஞ்ஞானமோ, சமூக விஞ்ஞானமோ பொதுமைப் படுத்தல், சாரமாக தொகுத்துக் கூறல் என்ற படிமுறைகளையே எப்பொழுதும் கொண்டிருக்க வேண்டும் என வரலாற்றியலாளருக்கு முரண்பட்ட கருத்தையே வெபர் கொண்டிருந்தார். பொதுமைப் படுத்தலை வெபர் ஏற்றுக்கொண்ட போது, அதை மனிதரில் பிரயோகிப்பதில் எச்சரிக்கையாகவும் இருந்தார். சமூக விஞ்ஞானங்களின் பொருள் இயற்கைவிஞ்ஞானங்களினின்றும் வேறுபடுவதால் மனித பண்பாடு தொடர்பான கற்கைகளில் பொதுமையாக்க முறையியலை மீளமைத்தலின் அவசியத்தை வலியுறுத்தினார். இந்தத் தேவையினை நிறைவு செய்யும்
பொருட்டே, இன்று விதந்து போற்றப்படும் இலட்சிய வகை (Ideal Type) என்ற தம் கோட்பாட்டினை உருவாக்கினார். இவற்றிற்குப் புறம்பாக விழுமிய செல்வாக்குடன் இணைந்த பிரச்சினைத் தேர்வு, சமூக ஆய்வில் நடுநிலையான விழுமிய முறை எனும் வெபரின் கருத்தாக்கங்களும் கவனத்திற்குரியன.

Page 54
வெபரின் நோக்கில் சமூக, இயற்கை விஞ்ஞானங்களுக் கிடையிலான வேறுபாடுகள், ஆய்வாளர்களின் அறிகை உள்நோக்கங்களினடியாகவே வேறுபடுகின்றன. இத்தேய்வானது ஆய்வாளர்களின் விழுமியங்களினாலும் அவர் சார்ந்த குழு ஆர்வங்களினாலும் தீர்மானிக்கப்படுகின்றன. இயற்கை விஞ்ஞானங்கள் போல அன்றி சமூக விஞ்ஞானங்களில் இந்நிலைமை காண எடுத்துக்காட்டுகளையும் முன்வைப்பார் வெபர். புவியீர்ப்பு என்ற எண்ணக்கரு புவியில் எங்கெங்கு காணிலும் ஒரேதன்மையதாய் அமைந்திருக்கும். ஆனால், முரண்பாட்டுச் செயல் என்பது வேறுபட்ட நிலைமைகளில் வெவ்வேறு வழிகளில் விளக்கப்படலாம். ஆய்வாளர்களின் விழுமியங்கள் ஆய்வுப் பொருள் சார்ந்த முதன்மையை தீர்மானிக்
(B6)TD.
இயற்கை விஞ்ஞானிகள் இயற்கை நிகழ்வுகள் தொடர்பான உண்மைகளைக் காண்பதில் ஆர்வமாக உள்ளனர்; இவை தொடர்பான கருத்துருவ விதிகளை இவர்களால் வகுக்க முடிகிறது. இவ்வாறான விதி வடிவில் பொதுமையாக்கல்களை செய்ய சமூகவிஞ்ஞானிகள் முற்படும் போது குறித்த தன்மைகளுடன் செயல்படும் பாத்திரங்களையும், அந்த செயல்களுக்கு அவர்கள் கொள்ளும் அர்த்தங்களையும் காண்பதில் ஆர்வமாய் இருக்கின்றார்கள். சமூக விஞ்ஞானிகள் பொதுமையாக்கல் முறைகளை பயன்படுத்தும் பொழுது யதார்த்த மாதிரிகள், ஒத்த கூறுகளினடியாகவே தமது முடிவுகளைப் பெறுகின்றனர். தனியன்களின் செயல்கள் தனித்தனியாக அறியப்பட்டு அவற்றிலிருந்தே கோட்பாட்டுப் புதுமையாக்கம் பெறப்படும். தனிநபர் அணுகுமுறையானது குழுநிலைக் கூறுகளை புறக்கணித்து பொருண்மையின் குறிப்பான கூறுகளிலேயே

கருத்துச் செலுத்தும் நிலையாகும். இந்த இரண்டு அணுகுமுறைகளுமே ஏற்றுக்கொள்ளக் கூடியனதான். இவற்றுள் ஒன்றை விட ஒன்று முதன்மையான தென்றோ சிறந்ததென்றோ
ծռՔ3 (ԼplՁեւ IIIՖl.
விழுமிய நடுநிலை
சமூக அறிவியல்களின் மெய்யியல் தொடர்பான வெபரின் மற்றொரு கருத்தாக விழுமிய நடுநிலையைக் குறிப்பிடலாம். இம்முறையியலின் வழி ஆய்வாளரின் விருப்பார்வ சிந்தனைக்குள் கட்டுப்படாத நிலையில் உண்மைகளைக் காண்பதே அவர் நோக்காகும். ஒரு பிரச்சினையைத் தேர்கையில் ஆய்வாளர் நடுநிலையாளராக இருக்க வேண்டும். விஞ்ஞானிகள் எப்பொழுதும் உண்மையில் வழுவாது, நேர்மையாக ஆய்வின் உயர் கோட்பாடுகளில் உறுதியாக இருக்க வேண்டும் என்பார் வெபர். உண்மையை திரிபுபடுத்தும் தம் உணர்வுகளை மறுப்பதுடன், புறத்திருந்து வரக்கூடிய அழுத்தங்களைத் தடுப்பவராகவும் ஆய்வாளர் அமையவேண்டும் என்பார். விஞ்ஞானம் நடுநிலை விழுமியத்துடன் விளங்க வேண்டும். விஞ்ஞானிகள், அரசு, நண்பர் என்ற செல்வாக்குகளுக்கப்பால் தம் புறவயத்தன்மையில் வழுவாது விளங்க வேண்டும். தாம் பெற்ற தரவுகளில் தமது விழுமியங்களை நுழைக்கக் கூடாது. தம் விருப்பார்வங்களுக்கு பணியாது ஆய்வு தரும் முடிவுகளை அவ்வாறே வெளியிட வேண்டும். இதன் வழி விழுமிய நடுநிலை என்பது, விஞ்ஞானிகளுக்கான நியம கட்டளை ஆகும். விஞ்ஞானி என்ற தம் பாத்திரத்தை விஞ்ஞானத்தின் அறங்களின் வழிநின்றே நாம் நிறைவு செய்யவேண்டும் என வெபர் உறுதியாய்க் கூறுவார். அத்துடன் இது தான் சரியான விழுமியம் என்று தீர்ப்புச் சொல்லவல்ல பாத்திரமாக தம்மை விஞ்ஞானிகள் கருதுவதும்

Page 55
சரிஅல்ல; உண்மைகள் மதிப்பீடுகளின் மேல் செல்வாக்குச் செலுத்துதல் கூடாது. உண்மைகளும் விழுமியங்களும் தர்க்க ரீதியாக ஒன்றிலிருந்து ஒன்று சுதந்திரமானவை; தொடர்பான உண்மைகளின் துணையுடன் விழுமியங்களை மதிப்பிட முடிந்தாலும் அவை ஒன்றில் ஒன்று தங்கியவை அல்ல என்பது வெபரின் உறுதியான கருத்தாகும்.
சமுகவியலும் சமுகச் செயலும்
சமூகவியல், சமூகச்செயல்தொடர்பான முழுமையான தொரு விஞ்ஞானம் என மக்ஸ் வெபர் கருதினார். சமூகவியலை சமூக -அமைப்பின் வழிகண்ட தம் முன்னோரிடமிருந்து மக்ஸ் வெபர் வேறுபடுகின்றார். தனிமனித பாத்திரங்களிலேயே வெபரின் குவிமையமிருந்தது. வெபரின் பார்வையில் சமூகவியலானது, சமூக செயலை விளங்கி அதன் வழி செயலுக்கான காரண - விளைவுகளை காணும் ஒரு விஞ்ஞானமாகவே அமைகின்றது. குறித்த ஒரு சமூக - வரலாற்று நிலைமையில், ஒருவர் தமது செயலுக்கு அகவயமாகக்கொடுக்கின்ற அர்த்த்திலேயே வெபரின் குவிமையம் இருந்தது. அர்த்தம் தவிர்த்த நடத்தை என்பது சமூகவியலுக்கு அப்பாற்பட்டதென வெபர் வாதிடுகின்றார்.
தொடக்கத்திலேயே நடத்தை, செயல், சமூகச்செயல் என்பவற்றினை வேறுபடுத்தினார் வெபர். நடத்தை என்பது செயலாகாது. யாதேனுமொரு நடிகர் ஒருதொகுதி பாத்திரங்கள் அல்லது ஒரு பண்பாடு, அற்கென சில அர்த்தங்களைக் கொடுக்க வேண்டியது அவசியம். மனித உயிரிகள் இயந்திரப்பாங்காக இயங்குவதில்லை. பரஸ்பர உள்நோக்கங்களின் எதிர் பார்ப்புக் களை பகிர்ந்து கொள்ளும் நோக்கிலேயே அர்த்தமுடன் தான் அவர்கள் ஒருவரோடு ஒருவர் இடைவினை கொள்கிறார்கள்.

எனவே ஒருசெயல் சமூகத்தன்மையானதாக, அது ஏனையோரை மையமாகக் கொண்டமைதல் இன்றியமை யாதது. சமூகச் செயலின் நிகழ்வுகளும், மனித நிகழ்வுகளின் ஒழுங்கும் அகவய அர்த்தங்களின் வழியே தான் விளங்கிக் கொள்ளப்படலாம். எனவே வெபரின் மனித செயல் என்ற சட்டகமானது, செயலை செய்பவரது அகவயக் காரணிகளை, அவற்றிற்குப் பொறுப்பான ஊக்கல்களை, செயலின் பரந்த உள்ளடக்கத்தை கருத்தில் கொள்வதனடியாகவே புரிந்துகொள்ள முடியும் என்பதனையே வலியுறுத்துகிறது எனலாம்.
சமுகச் செயலின் வகைகள்
வெபரின் சமூகவியல், நான்கு பிரதான இலட்சிய வகைகளாக சமூகச் செயலை வகைப்படுத்துகின்றது.
இலக்கினை மையமாகக்கொண்ட தர்க்கரீதியானசெயல்
இலக்கினை மையமாகக்கொண்ட தர்க்கரீதியான செயலானது முடிவு, வழி எனும் இரண்டு அம்சங்களிலும் தர்க்கரீதியான தெரிவுகளைக் கொண்டமைகின்றது. பல்வேறு இலக்குகளிடை உச்ச அடைவு தருவது தேர்ந்து கொள்ளப்படுவதுடன் அடையும் வழியைத் தேர்கின்ற போது வினைத்திறனுடைய தொழிநுட்பம், ஏற்படக்கூடிய செலவு என்பனவும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.
0 தர்க்கரீதியான செயல்
தர்க்கரீதியான செயலானது விழுமியத்தை மையமாகக் கொண்டது அத்தியாவசியமெனக்கருதும் ஓர் இலக்கினை நோக்கிய கடினமுயற்சியாக இது அமையும். இந்தத்

Page 56
தேர்வு தர்க்கரீதியற்றும் அமையலாம். அனாவசிமான வழிகள் தொடர்பான தர்க்க ரீதியான மதிப்பீடுகள் செய்யப்பட்டாலும் எந்தவித ஆய்வுமின்றி முடிவு இங்கு ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இலக்கு போதுமானளவு பெறுமதி கொண்டதாக அமைவதுடன் அதுவே செயலைக் கட்டாயப்படுத்துவதாகவும் விளங்குகின்றது. கிடைக்கக் கூடிய மிகச் சிறந்த வினைத்திறனான வழிமுறைகள் தேர்ந்தெடுக்கப்படு கின்றன. அதன் போது ஏற்படக்கூடிய செலவையோ ஏனைய விழுமியங்களை யோ கருத்திற்கொள்ளாது இலக்கே இங்கு குறியாகிறது.
மரபு வழியான செயல்
மரவுவழிச்செயலானது தர்க்கத்தன்மை குறைந்தது; பாரம்பரிய சிந்தனை வழக்கங்களினால் வழிப்படுத்தப் படுவது. இலக்கைப்பற்றியோ வழிமுறை பற்றியோ செயற்றிறன் பற்றியோ எந்தவித கணிப்பும் இல்லாமல் அமைவதனால் இது தர்க்கரீயற்றதாகின்றது. ஏற்கனவே நிலைநாட்டப்பட்டுள்ள இலக்கு வழி கோலங்களை எந்த வித கேள்வியும் இன்றி வழிபாடாக ஏற்றுக்கொள்ளும், பின்பற்றும் நிலையாக இது அமைகின்றது.
உணர்வுவழிச்செயல்
உணர்வு வழிச் செயலானது தர்க்கரீதியான அடிப்படை
யாக அமையாமல் மரபு வழியானதாகவே விளங்கக் காணலாம்.
வழி முறைகள், இலக்குகள் தொடர்பான தர்க்கரீதியான கணிப்பீடு களிலும் பார்க்க மனவெழுச்சி நிலையினாலேயே பெரிதும் தீர்மான மாகின்றன. தனிப்பட்ட உணர்வுகளின் அக நிலைகள், மனவெழுச்
100

சிகள், உணர்வு நிலைகள், இங்கு ஒர் இலக்கினை அடைதற்கான வழிமுறைகளாகின்றன.
தமது ஆய்வுகள் அனைத்திலும் வெபர் இதனைப்பயன் படுத்துவதனைக் காணலாம். மென்மேலும் சிக்கலான சமூக உறவு அமைப்புக்களின் வகையீடு, தொகையீடுகளையெல்லாம் சமூக உறவுகள் தொடர்பான வகைப்பாட்டின் வழி ஒழுங்காக்குவதே வெபரின் இலக்காகவிருந்தது.
கருத்து நிலையில் சமூக அமைப்புப்பற்றிய பொதுமைப் படுத்தல் திட்டமொன்றை வெபர் வகுத்திருந்தார். இத்திட்டத்தின் அடிப்டைக் கூறுகள் செயலின் வகைகளல்ல; அமைப்பியற் கூறுகளே சமூகச் செயல் வகைப்பாட்டில் குறிப்பிட்டவாறு தொடக்கப் புள்ளியில் தர்க்க ரீதியான வழிகள் - இலக்குகள் என்ற பகுப்பாய்வைக் காணலாம். ஆனால் செயலானது தனியே குறித்த இலக்குகளை மட்டும் கொண்டது அல்ல. சமூகத் தொகுதிகளில் காணப்படும் ஒழுங்கானது எத்தகைய நிலைமைகளில் இலக்குகளை அணுகலாம் என்பதனை வரையறுத்தும் நிற்பது. வெபரைப் பொறுத்தவரை சமூக வாழ்வில் ஒழுங்குத் தொகுதிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அவையே அதிகாரத்திற்கு சட்ட பூர்வ அந்தஸ்து தருவன. வழிகள் - இலக்குகள் தொகுதிக்கு காலாகும் அடிப்படை விழுமியங் களையும் சட்ட பூர்வ தன்மையின் கூறுகளையும் தொடர்புபடுத்தி வெபர் நோக்குவதும் இங்கு கவனத்திற்குரியது.
சமுகவியலின் முறையியல் அடிப்படைகள்
சமூக விஞ்ஞானங்களின் முறையியலுக்கான வெபரின் பங்களிப்புக்களில் அவரது ஒழுக்க நடுநிலை சட்டகம், இலட்சிய வகை என்ற எண்ணக்கரு ஆகியன குறிப்பான கவனம் பெறுவன.

Page 57
ஒழுக்கநிலை சட்டகம்
வெபரின் ஒழுக்க நடுநிலை தொடர்பான சட்டகத்தை ஒரு முறையியல் விதியாகக் கொள்வது கடினமெனினும் ஆய்வுகளில் அதன் அவசியத்தை புறக்கணிக்க முடியாது. உண்மைகள் தொடர்பான மதிப்பீட்டிலிருந்து விழுமியம் தொடர்பான மதிப்பீட்டினை பிரித்து நோக்கவும் ஆசை, ஆர்வங்களின் செல்வாக்குகளினின்றும் விடுபட்டு சுதந்திரமாக நியாயங்களைப் புரியவும் இது துணை செய்கின்றது. உண்மையற்றவை களிலிருந்து உண்மையை அறிவதிலுள்ள சிரமங்களையும், விழுமிய நடு நிலை மூலம் தவிர்க்க முடிகின்றது.
இலட்சிய வகை
இலட்சிய வகை என்பது பகுப்பாய்விற்கான ஓர் உள ஏற்பாடு எனலாம். ஒத்த, வேறுபட்ட தன்மைகளை உறுதியாக அளக்கும் அளவுகோலாக இது அமைகிறது. இலட்சிய வகையானது ஒழுக்க இலட்சியங்களுக்கு அல்லது புள்ளி விபர ஒப்பீடுகளுக்குப் UUJ6LIG55 LIL6)Tib. இலட்சிய 665 எப்பொழுதும் உண்மை யதார்த்தத்திற்குப் பொருந்துவதில்லை. வெபரின் இலட்சிய வகைகளில் தனியன்களின் செயல்களுக்குப் பதிலாக சமூகப் பொருண்மைக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. இலட்சிய வகையென்பது ஒரு கருதுகோள் அல்ல; கருதுகோளை அமைப்பதற்கு துணையாவது. இதனை ஒப்பீட்டு நோக்கிற்காகவே உருவாக்கினார் வெபர். ஒழுங்காக உள்ள விசையுடன் ஏனையவை எவ்வளவு தூரம் விலகியுள்ளன என்பதனை காணும் அளவு கருவியாக இதனைப் பயன்படுத்தினார்.
இந்த நடைமுறையின் தொடர்பறு பிரச்சினைகளையும்

வெபர் குறிப்பிட்டார், தூய வகை தர்க்கரீதியான செயலை உருவாக்கியதுடன் தர்க்கரீதியற்ற செயலை இலட்சிய வகையின் விலகல்களாகக் கொள்ள முடியும் என்ற கருத்தையும் முன்வைத்தார். அவர் முன்வைத்த சமூகச் செயல் தொடர்பான நான்கு வகைப்பாடுகளில் இரண்டு தர்க்கரீதியானவை, ஏனையவை, மரபு வழியான உணர்வு நிலைப்பட்டவை.
“வெபரின் பொருளாதாரமும் சமூகமும்” என்ற ஆக்கமானது இலட்சியவகைகளின் தொகுதியொன்றினை உருவாக்கும் முயற்சியாகும். இதனை கோட்பாட்டு கருத்துருவ வடிவில் உருவாக்கி ஒவ்வொரு இயற் பண்புகளையும் உரிய வரலாற்று நிலைமைகளுடன் விபரமாக விளக்கினார் வெபர். இந்த இலட்சிய வகைகளை உருக்கமான தொகுத்தறி படிமுறைகளின் வழி அவர் உருவாக்கவில்லை. சில பண்புகளை உள்ளுணர்வாக தேர்ந்ததுடன் பொருத்தமான தரவுகளின் நியமமற்ற பகுப்பாய்வுகளின் வழிதான் உருவாக்கினார்.
வெபர் மூன்று இலட்சிய வகைகளை இனங்கண்டு வேறுபடுத்துகிறர்.
0 புரட்டஸ்தாந்த ஒழுக்கம் நவீன முதலாளித்தவம் போன்ற வரலாற்று நிலைமைகளில் வேர் விட்டுள்ள இலட்சிய வகைகள். இவை, குறித்த வரலாற்றுக் காலங்களுக்கும், பண்பாட்டுப் பரப்புகளுக்குமே உரியன.
0 பணிகுழுவாட்சி அல்லது நிலமானிய அமைப்போடு தொடர்புபடும் சமூக யதார்த்தக் கூறுகளின் நிலைமைகள். இவையும் வேறுபடும் வரலாற்று L160б LITI" (Б நிலைமைகளைக் காட்டுவன.
குறித்ததொரு வகை நடத்தையின் தர்க்கரீதியான

Page 58
மீளுருவாக்கல் நிலை. முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து பொருளியல் கோட்பாடுகளும் இந்த வகைக்குள் 960) D6)6OT,
சமுகச் செயலின் பகுப்பாய்வு
சமூகவியலானது சமூகச் செயல் பற்றிய ஒரு விஞ்ஞானமாக அமைவது, சமூகச் செயலுக்கான காரண விளக்கங்களை அது தருகின்றது. நடத்தைச் செயலையும், சமூகச் செயலையும் வெபர் வேறுபடுத்துகின்றார். செய்யப்படும் செயலுக்கு குறித்த பண்பாடு அர்த்தம் தருகின்ற பொழுதே, அது செயலாகின்றது. அது போலவே செயலென்பது சமூகச் செயலாக ஏனைய சமூக அங்கத்தினருடனானதாக அமைவது அவசியம் எனவும் வெபரினால் வலியுறுத்தப்பட்டது. மனிதர்கள் இயந்திரமாக செயற்படுபவர்களல்ல; பரஸ்பர உள்நோக்கான எதிர்பார்ப்புக் களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் ஒருவருக்கொருவர் அர்த்தம் தரும் வண்ணமே செயற்படுகின்றனர்.வெபரின் பார்வையில் புரிதல் இரண்டு வகைகளில் அமையலாம்.
0 நேரடி அவதானத்தின் வழியான புரிதல்
அகவய அர்த்தங்களை விளங்கும் புரிதல்
நேரடி அவதானத்தின் வழியான புரிதல் என்பது, மேலும் வகைப்படுத்தப்படலாம். கருத்துக்களின் நேரடி தர்க்கரீதியான புரிதல், தர்க்கரீதியற்ற மனவெழுச்சி எதிர்விளைவுகளின் அவதான
ரீதியான புரிதல், செயலின் தர்க்கரீதியான அவதான வழி புரிதல், என அவை அமையும்.
நாம் ஒரு செயலின் அகவயமான அர்த்தத்தை நேரடி அவதானத்தின் மூலம் விளங்கி கொள்ளும் போது, அது

கருத்துக்களின் தர்க்கரீதியான புரிதலாகின்றது. தனியன்களின் மனவெழுச்சியை முகபாவ அங்க அசைவுகள் போன்றவற்றின் வழி புரிதல் மனவெழுச்சி, எதிர்ச் செயல் பற்றிய தர்க்கரீதியற்ற புரிதலாகின்றது. வெளிப்படையாக தெரியும் நடத்தை அல்லது செயல்களின் வழியான புரிதலே தர்க்கரீதியான அவதான வழி புரிதல் ஆகின்றது. ஒருவரின் செயல்கள், மனவெழுசசிகள் அல்லது அவரது வார்த்தைகளின் அகவய அர்த்தங்கள் போன்ற வற்றினை அவர் ஊக்கல்களின் வழி நாம் புரிதலே, விளக்க ரீதியான புரிதல் எனப்படும். இந்த தர்க்கரீதியான புரிதலின் போது ஒரு தனியன் என்ன செய்கிறான் என்பதனை மட்டுமன்றி, ஏன்அவ்வாறு செய்கிறார் என்பதனையும் அறிவது அவசியம். எடுத்துக்காட்டாக ஒருவர் ஒரு பூந்தோட்டத்தில் பூக் கொய்கின்றார் என எடுத்துக் கொண்டால், அதனை விற்பதற்காகவா அல்லது தன் அன்புக்குரிய ஒருவருக்கு கொடுப்பதற்காகவா அன்றேல் கோபத்தினால் மரத்திலிருந்து கொய்கிறாரா என காணவேண்டியது அவசியம்.
வெபரைப் பொறுத்தவரை சமூகப் பொருண்மையின் உச்ச புரிதலானது போதுமானளவு அர்த்தமட்டத்தை விளங்குதலில் தங்கியுள்ளது. போதுமானளவு அர்த்தமட்டம் என்பது எங்களின் மரவுவழிச் சிந்தனை, உணர்வு வழி தெரியும் அர்த்தத்தினை விட அதிகமானது.
செயலுக்கான காரணம் சிந்தனை நியமங்களினாலேயே கட்டுப்படுத்தப்படுவது; நிகழ்வுகளின் விளக்கமென்பது தற்காலிக போதுமான புரிதல் என்றே சொல்லவேண்டும். இந்த தற்காலிக புரிதலின்போது புதுமையாக்கலை புள்ளிவிபரவியல் ரீதியாக ՑI60ւսI(լքlգԱկլք. அவ்வாறு விளக்க முடியாதவற்றைப் பொறுத்தவரை அவற்றினை அதிகளவிலான வரலாற்று அல்லது நிகழ்கால படிமுறைகளுடன் ஒப்பிட்டு அறியமுடியும். பின்

Page 59
நாட்களில் சமூக வரலாற்று நிலையில் இவ்வாறான ஒப்பீட்டு முறையினை பயன்படுத்துவது சாத்தியமற்றது என்பதனை உணர்ந்து கொண்ட வெபர் நிகழ்வுகளை கற்பனா ரீதியில் மீளமைத்து தர்க்கரீதியான பகுப்பாய்வுகளை மேற்கொள்ளும் கற்பனாரீதியான பரிசோதனை என்ற முறையை அறிமுகம் செய்தார்.
காரணகாரியத்தன்மையும் நிகழ்தகவும்
சமூக உறவு, ஒழுங்கமைக்கப்பட்ட குழு வெளிப்படை யான கட்டுப்பாடு, மரபு வழி மற்றும் சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் தொடர்பான வரைவிலக்கணத்தில் ஏற்படக் கூடிய மாற்றம் தொடர்பான நிகழ்தகவினை, வெபர் அடிக்கடி அழுத்துவதனைக் 5 T 600T 6ADT Lb. வெபரைப் பொறுத்தவரை (6) upsT60T உறுதிப்பாட்டினை காண்பதென்பது மிகக் கடினமான ஒரு விடயமே. எனவே தான் மாறும் தற்காலிகமான ஒரு நிகழ்தகவு சட்டகத்திற்குள்ளே தான் செயல்பட வேண்டும் என்றார் வெபர். அவரது வரைவிலக்கணங்கள் செயற்பாட்டின்பாற்பட்டவை நேரடியான பரிசோதனை ஆய்வுகளில் பயன்படுத்தப்படக்
9guങ്ങഖ.
சமுக அடுக்கமைவு
வகுப்பு, அந்தஸ்து, அதிகாரம்
கார்ல் மார்க்ஸினால் பெரிதும் கவனத்தில் கொள்ளப் படாத மத்திய தர வகுப்பில் வெபர் அக்கறை கொண்டிருந்தார். அடுக்கமைவின் பொருளியல் அடிப்படைகளின் முக்கியத்து வத்தை வெபர் ஏற்றுக்கொண்டார். வகுப்பு பற்றிய தம்

வரையறையில் பின்வரும் பொதுப்பண்புகளைக் கொண்ட மனிதரை ஒரு வகுப்பினுள் அடக்குவார் வெபர்.
0 வாழ்க்கை வாய்ப்புக்களில் குறித்த தற்காலிக கூறுகளை
பொதுவாகக் கொண்டவர்கள்.
0 இந்தக் கூறுகள் பெரும்பாலும் பொருட்களை உடைமையாகக் கொள்ளுதல், வருமானத்திற்கான வாய்ப்புக்கள் ஆகிய பொருளியல் ஆர்வங்கள் தொடர்பானவை.
0 பண்டங்கள் அல்லது ஊழியர் சந்தையினால் கட்டுப்படுத்தப்படும் வகுப்பு நிலைமைகளை பிரதிபலிப் பவர்களை உள்ளடக்கியவை.
வகுப்பு நிலைமை தொடர்பான காரணங்களுக்கும் நிலைமைகளுக்கும் இடையிலான தொடர்பு வெளிப்படையாக உணரப்படும் பொழுதே, கூட்டு வகுப்பு செயல் எழும் என்கிறார் வெபர்.
வகுப்பு நிலைமையானது பொருட்களின் நிரம்பல், புற வாழ்க்கை நிலைமைகள், தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவற்றின் வாய்ப்புக்களின் வழியே வெளிப்படுத்தப்படுவது. இந்த வாய்ப்பானது குறித்த ஒரு பொருளாதார ஒழுங்கில் பொருட்களை அல்லது திறன்களை பெறக் கூடிய சக்தியின் பாற்பட்டது. ஒரே வகுப்பு நிலைமையிலுள்ள யாதேனுமொரு மக்கள் குழுவினர் வகுப்பு என்பதனுள் அடங்குகிறார்கள். மக்களிடை சொத்துக்களின் விநியோகத்தின் வழியும் குறிப்பான வாழ்க்கை வாய்ப்புக்கள் ஏற்படலாம். சந்தை நிலைமையில் பொருளற்றவர்கள், உயர் பெறுமதி பொருட்களுக்கான போட்டியிலிருந்து விலக்கப்பட்டிருப்பார்கள். இப்பொருட்கள்

Page 60
ஏனையோரின் தனிஉரிமைக்குரியதாகும். சொத்துடைமை அற்ற மக்களால் எட்டப்படமுடியாத விலைகளையும் இவை கொண்டிருக் கும். இவர்களால் கொடுப்பதற்கென உள்ளது இவர்களின் சேவை மட்டுமே. அதேவேளை இந்த உற்பத்திப் பொருட்களும் அவர் ஊழியத்தின் வழி உருவானதாக இருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக தமது உற்பத்திகளை தாம் உடைமையாகக் கொள்ளமுடியாத நிலையே காணப்படும். இந்த சொத்துடைமை குழுவானது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தமது முதலை விற்று இலாபம் தேடுவதாகவோ அமையும். ஒரு சரியான சந்தை நிலைமை காணப்படும் போதே இது சாத்தியமாகும்.
சொத்துடைமை, சொத்துடைமையில் குறைபாட்டு நிலை என்பதே அனைத்து வகுப்புப் பிரிவுகளினதும் அடிப்படையாகும். இந்த வகைகளுக்கு உள்ளேயும் மீள் வருமானம் தரக்கூடியதாக பயன்தரக் கூடிய சொத்துக்கள் சேவைகள் என மேலும் வேறுபாடுகளைக் காணலாம். வதிவிடக்கட்டடங்கள், உற்பத்தி நிறுவமைப்புக்கள், களஞ்சியங்கள், விவசாய நிலங்கள், சுரங்கங்கள், கால்நடைகள், அடிமைகள் என உடைமைகள் வேறுபடலாம்.
சொத்துடைமை அற்ற மக்களை அவர்கள் வழங்கும் சேவைகளின் அடிப்படையிலும் தொடர்ந்தோ அன்றி தொடர்பற்றறோ அவர் சேவைகளைப் பெறுபவர்களிடம் அவர் கொண்டுள்ள உறவின் அடிப்படையிலும் வேறுபடுத்தலாம். வகுப்பு நிலைமையானது சந்தைநிலைமையில் தங்கியுள்ளது.
மேலதிக அடுக்கமைவு வகையாக அந்தஸ்துக் குழு என்ற ஒரு வகைப்பாட்டை முன்வைத்தார் வெபர். சந்தை, உற்பத்தி முறைகளினாலன்றி ஒருவரின் நுகர்வுக் கோலங்களினடி

யாக இந்த வகுப்பை வெபர் வரையறுக்கின்றார். முழுக்க முழுக்க உற்பத்திப் பரப்பினுள்ளேயே தமது சிந்தையை செலுத்தியதால் மேற்கண்ட வகைப்பாட்டை மார்க்ஸ் கவனியாது விட்டுவிட்டார் என வெபர் கருதினார். தனியே பொருளாதார அடிப்படையில் மட்டுமன்றி 660)6OTul காரணங்களையும் உள்ளடக்கிய வெபரின் பார்வை அந்தஸ்து பரிமாணங்களின் அடிப்படையில் வகுப்புக்களை வகைப்படுத்த இடமளித்தது. வேறுபடும் அந்தஸ்துக் குழுக்களிடையிலான இடைவினை களிடை கட்டுப்பாடுகள் சமூகத் தூரம் என்பவற்றினை இனங்காட்டிய வெபர், ஒரு குறித்த குழு அங்கத்தினருக்கு ஏனைய குழுவினர் கெளரவத்தை தருகின்றவரை அவர் அதே அந்தஸ்துக் குழுவில் அங்கத்துவம் பெற முடியும், அவமதிப்பைத் தருகின்ற பொழுது அதனினின்றும் விலக்கப்படுவார். இதன்படி குழுக்களுக் கிடையிலான சமூகத்தூரம் பேணப்படும்.
ஒரு வகுப்பில் ஒருவர் பெறும் இடத்திற்கும், அந்தஸ்து ஒழுங்கில் பெறும் நிலைக்கும் உயர்ந்த இணைவு காணப்படுவதை ஆய்வு அனுபவமாக உணரலாம். எடுத்துக்காட்டாக, முதலாளித்துவ சமூகங்களில் பொருளாதார ரீதியில் செல்வாக்குப் பெறும் வகுப்பு, காலப்போக்கில் உயர் அந்தஸ்தையும் பெறக்காணலாம். அதே வேளையில் சொத்துடைமை அற்ற மக்களும் கூட அதே அந்தஸ்துக் குழுவில் இடம்பெறக் கூடும். தமது முன்னை அந்தஸ்தின் வழி, கணிசமானளவு செல்வாக்கை பெலவீனமான பொருளாதார நிலையிலும் இவர்கள் கொண்டிருக்கக் காணலாம்.
வெபரின் பார்வையில் ஒவ்வொரு சமூகமும் வேறுபடும்
வாழ்க்கைப்பாங்குகள், உலகம் பற்றிய பார்வைகளின் வழி
குழுக்களாகவும் அடுக்குகளாகவும், பிரிக்கப்பட்டுள்ளன. இவை
குறிப்பான வகுப்புக்கள் எனப்படுகின்றன. அந்தஸ்து வகுப்புக்
[[[)
、X_。

Page 61
குழுக்களிடை முரண்பாடுகள் இருந்தபோதிலும் இக் குழுக்களின் அங்கத்தினர் ஓரளவிற்கு மேலாதிக்க பெற்றுக் கொள்கின்ற நிலைமைகளையும் காண முடியும்.
அடுக்கமைவின் மற்றொரு பிரதான பரிமாணமாக அரசியல் அதிகாரத்தையும் வெபர் குறிப்பிடுகின்றார். வகுப்பு, அந்தஸ்து என்பவற்றிற்கு சமாந்தரமாகவே அரசியல் அதிகாரத்தை வெபர் குறிப்பிடுகின்றார். ஒட்டுமொத்தமாக நோக்குகையில் சமூக அடுக்கமைவின் பின்வரும் மூன்று பரிமாணங்களும் முழுமையான பகுப்பாய்விற்கு அவசியம் என்கிறார் வெபர்.
0 வகுப்பு (பொருளாதார ரீதியானது)
அந்தஸ்து (சமூக கெளரவம் சார்ந்தது)
O அதிகாரம் (அரசியல் ரீதியானது)
அதிகாரம்
அதிகாரம் தொடர்பான வெபரின் பகுப்பாய்வில் மார்க்ஸின் கருத்தியலுடன் வெபர் உடன்பட்ட போதும் அதனை மேலும் மீளமைப்புச் செய்துள்ளமையை காணலாம். மார்க்ஸ்சைப் பொறுத்தவரை அதிகாரம் என்பது எப்பொழுதும் பொருளாதார உறவுகளின் அடியானது. உற்பத்திச் சாதனங்களை சொந்தமாகக் கொண்டவர்களே நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ அரசியல் அதிகாரத்தைக்கொண்டிருக்கிறார்கள். நவீன சமூகங்களில் பொருளாதார அதிகாரங்களே மேலாதிக்கம் செலுத்தும் என்கின்ற மார்க்ஸின் கருத்துடன் வெபர் உடன்படுவார். எனினும் பொருளாதார அடிப்படையற்ற ஏனை நிலைமை களினாலும் அதிகாரம் வாய்க்கப்பெறலாம் என்பதனையும் சுட்டுகிறார். எடுத்துக் காட்டாக ஒரு பாரிய பணிக்குழுவாட்சி அமைப்பில் உயர்நிலை மேலதிகாரி வெறுமனே சம்பளத்திற்குப்

பணியாற்றுபவராக இருந்தபோதிலும் நிறைந்த அதிகாரத்தினை கொண்டவராக விளங்கினார்.
ஒரு செயலில் பங்கு கொள்ளும்போது ஏனையோர் எதிர்த்தாலும் கூட ஒருவர் அல்லது ஒரு குழு தமது சொந்த சக்திகளினால் பெறக்கூடிய வாய்ப்பாகவே அதிகாரத்தை வெபர்
கருதுகின்றார்.
சமூக நிலைமைகளுக்கு ஏற்ப அதிகார அடிப்படைகளும் வேறுபடுவன என்ற கருத்தையும் வெபர் கொண்டிருந்தார். மனிதர்கள் எப்பொழுதுமே பொருளாதார ரீதியாக மட்டுமே தான் தம்மை உயர்த்த உழைப்பவர்கள் அல்ல. அதிகாரத்திற்கான முயற்சி என்பது சமூக மதிப்பின் பாற்பட்டதுமாகும். தனியே பொருளாதார அதிகாரம் மட்டும் சமூக மதிப்பிற்கான வழியாகாது. அவ்வாறே அதிகாரம் தான் சமூக மதிப்பிற்கான அடிப்படையுமாகாது. சமூக மதிப்பானது பொருளாதார, அரசியல் அதிகாரங்களுக்கான அடிப்படையாக அமையலாம். அதிகாரமும் மதிப்பும் சட்டஒழுங்கால் அங்கீகரிக்கப்படலாம். இதனால் சட்ட ஒழுங்கானது அதிகாரத்தை அல்லது மதிப்பை கொண்டிருப் பதற்கான ஒரு மேலதிக காரணியாகும். ஒரு சமூகத்தில் குழுக்களிடை சமூக மதிப்பு எவ்வாறு பிரித்து தரப்பட்டுள்ள தென்பதனையே சமூக ஒழுங்கு என்பது குறிக்கின்றது. இந்நிலையில் வகுப்பு, அந்தஸ்துக் குழுக்கள் கட்சிகள் என்பவற்றிடை ஒரு சமூகத்தின் அதிகாரங்கள் வகுத்துத் தரப்பட்டுள்ளன எனலாம்.
ш6яfѣсв5(црsuт"dF (Bureaucracy)
அதிகாரம், வல்லமை ஆகியவற்றின் g566,60) D, பகுத்தறிவின் வழியான தர்க்கரீதியான செயற்பாடு தொடர்பான

Page 62
வெபரின் ஆய்வானது பாரிய அரசியல், தீர்வாக, பொருளாதார, புலன்களிலுள்ள நிறுவமைப்புக்களின் செயல் முறைகளை ஆராயும் ஈடுபாட்டை வெபருக்குத் தந்தது. நவீன நிறுவமைப்புக்களில் மேலாதிக்கம் செலுத்தும் அமைப்பியல் கூறுகளாக, பணிக்குழுவாட்சி கூட்டிணைப்புகளை வெபர் கருதுகிறார். இவை இலக்குகளையும் வழிமுறைகளையும் மரபு வழியாக அன்றி தர்க்கரீதியாக நிர்ணயிக்கின்றன. இதன் வழி அலுவலகங்கள் குறிப்பான பொறுப்புக்களைக் கொண்டிருப்பதுடன் சங்கிலித்தொடரான பொது நடைமுறைகளால் ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளன.
பணிக்குழுவாட்சியின் முக்கிய இயல்புகள்
1. விதிகள் அல்லது சட்டங்கள் அல்லது நிர்வாக ஒழுங்கு முறைகளால் ஒழுங்கமைக்கப்பட்ட நிலையான உத்தியோக பூர்வ நீதி வரம்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
2. 1 பணிக்குழு அதிகாரமானது உத்தியோகபூர்வமான கடமைகளாக, ஒழுங்கான செயற்பாடுகளாக வகுக்கப் பட்டுள்ளன. 11. கடமைகளை செய்விப்பதற்கான கட்டளைகளை வழங்கும்
அதிகாரமும் சட்ட விதிகளால் வகுத்துத் தரப்பட்டுள்ளன. I. இந்தக்கடமைகளை ஒழுங்காகவும் தொடர்ந்தும் நிறைவு
செய்வதற்கான முறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
3. அடுக்கமைவு ஒழுங்கில் உயர்-துணை அலுவலர்கள் என தரப்படுத்தப்பட்டுள்ளன. கீழ்மட்ட அலுவல்களை உயர்நிலை அலுவலர்கள் மேற்பார்வை செய்வதற்கான ஏற்பாடுகளும்
உள்ளன. 4. முகாமைத்துவம், பேணப்படும் கோவைகளின் அடிப்படையில்

அமைகின்றது. இக் கோவைகளை, நடைமுறைப்படுத்தற்கான கருவிகளுடன் ஒர் ஆளணியினர் பொது அலுவலகங்களில் நியமிக்கப்படுகின்றனர்.
அலுவலக முகாமைத்துவமானது நிபுணத்துவ பயிற்சியுடனான நவீன சிறப்புத்துவ தேர்ச்சியினை கொண்டுள்ளது.
அலுவலகமானது முழுமையாக விருத்தி அடையும் நிலையில், அலுவலகச் செயற்பாடான அலுவலர்களின் முழுமையான வினைத்திறனான செயற்பாட்டை வேண்டி நிற்கின்றது.
நிலையாகவும் தெளிவாகவும், வகுக்கப்பட்டுள்ள பொதுவான விதிகளையே முகாமை பின்பற்றுகின்றது. இந்த விதிகள் தொடர்பான அறிவு என்பது, நிர்வாக அல்லது வியாபார முகாமைத்துவம் தொடர்பான சிறப்பான தொழிநுட்பப் பயிற்சியினை வேண்டி நிற்கிறது.
அலுவலர்களின் நிலைகள்
1.
ஒரு அலுவலகத் தொழிலில் இருத்தல் என்பது குறித்த தொழில் சார் நியமப் பயிற்சியுடனான சிறப்பு தொழிநுட்பத் தேர்ச்சியை வேண்டி நிற்கின்றது. அலுவலர்களின் நிலைகளே அவர்களது உறவுகளின் உள்ளக அமைப்பை தீர்மானிப்பன. ஒரு தொழிலினை ஏற்கின்றமை குறித்த முகாமைத்துவத்தின் குறிப்பான எதிர்பார்ப்புகளுக்கு கடப்பாடாகுதல் என்றாகிறது.
உறவுகள் தற் சார்பற்றவை; விசுவாசமென்பது செயற்பாட்டு நோக்கங்களுக்கான அர்ப்பணிப்பாகவே அமைய வேண்டும். எடுத்துக் காட்டாக நவீன சமூகங்களில் அரசியல் அலுவலர்கள், ஒரு ஆட்சியாளரின் தனிப்பட்ட சேவகர்கள்
S.

Page 63
அல்ல;
நவீன அலுவலர்கள் தனித்துவமான சமூக மதிப்பைப் பெறுகிறார்கள். இவர்களது சமூகநிலைமையானது ஏற்கனவே வகுக்கப்பட்ட விதிகளின் வழியானது. நவீன சமூகத்தில் பயிற்சி பெற்ற நிபுணர்களுக்கு பெறுமதியான இடம் வழங்கப்படுகின்றன. இந்நிலைமைகளை இவர்கள் தமது சமூக பொருளாதார வாய்ப்புக்களின் வழியே எய்துகிறார்கள். இந்த பயிற்சிக்கான சான்றிதழ்கள், இவரது தகுதி நிலைகளை உறுதிப்படுத்துகின்றன.
தூயவகை பணிக்குழுவாட்சி அலுவலகர், உயர் அதிகாரி யினால் நியமிக்கப்படுபவராகவே இருக்கின்றார். நியமிக்கப் பட்ட உத்தியோக செயற்பாடுகள் தனி உறவுகள் சாதாரண விதிகளின் வழி அமைவதாலும், தெரிவு தராதரங்களின் வழி மேற்கொள்ளப்படுவதாலும், அடுக்கமைவில் ஒருவரில் ஒருவர் தங்கிநிற்கும் தன்மை குறைவாகவே உள்ளது.
ஒருவரது பதவிக்காலம் முன்னரே நிர்ணயிக்கப்பட்டதாக இருக்கின்றது. இதனால் தொழிலில் சுதந்திர செயற்பாட்டிற் கான கால உத்தரவாதம் உறுதியாகின்றது எனலாம்.
அலுவலர்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட்ட வேதனத்தையும், முதுமை பருவத்திற்கான ஓய்வூதிய பாதுகாப்பையும் கொண்டிருக்கின்றார்கள். வேதனமானது செய்யப்பட்ட வேலையின் அடிப்படையில் 96)6)TLD6), ஒருவரின் தகைமையில் அல்லது சேவைக்காலம் என்பவற்றினடியாகவே
வழங்கப்படுகின்றது.
. பொதுச் சேவை அடுக்கமைவு ஒழுங்கில் அலுவலர் ஒருவர் கீழ்நிலையிலிந்து உயர் நிலையான பதவிகள் வரை பெற

வாய்ப்பு இருக்கிறது. சராசரி அலுவலர் ஒருவர் எப்பொழுதும் இத்தகு ஏற்பாட்டினை பெரிதும் விரும்புகிறார். குறைந்த பட்சம் வேதனத்தின் அதிகரிப்பையேனும். வேண்டுகின்றனர். இந்த சம்பள அதிகரிப்பு ஏற்பாட்டினை தமது மூப்புரிமை அடிப்படையிலும் தரங்களின் அடிப்படையிலும் வேண்டி நிற்கின்றனர். இதற்கென பரீட்சை ஏற்பாடுகளை அலுவலகங்கள் கொண்டுள்ளன. இவை அலுவலரை தகைமை பெறுமாறு ஊக்கும் காரணிகளாகின்றன.
பணிக்குழுவாட்சியின் முக்கியத்துவம்
தர்க்கரீதியான கோட்பாடுகளினடியாக ஒழுங்கமைக்கப் பட்டுள்ள பணிக்குழுவாட்சியானது நவீன யுகத்தின தனித்துவமான ஒரு மைல்கல் என வெபர் குறிப்பிடுகின்றார். ஒர் அரசு மையப்படுத்திய தன் அரசியல் அதிகார வளங்களை செயல் படுத்தவும் பொருளாதார வளங்களை கையாளவும் கூடிய ஓர் அமைப்பாக பணிக்குழுவாட்சி அமைகின்றது. நவீன அரசு நவீன பொருளாதாரம், நவீன தொழிநுட்பம் ஆகியவற்றை சீராக்கக் கிடைத்ததோர் வரப்பிரசாதமாகவே பணிக்குழுவாட்சி அமைப்பை வெபர் கருதுகின்றார். அனைத்து வகை நிர்வாக வடிவங்களையும் விட நுட்பமானதாக பணிக்குழுவாட்சி விளங்குகின்றது என்பது வெபரின் கணிப்பீடாகும்.
பணிக்குழுவாட்சியின் எதிர்த்தொழிற்பாடு
பணிக்குழுவாட்சியின் நலன்களை அழுத்திய அதே வேளையில் அதன் எதிர் தொழிற்பாடுகளையும் வெபர் குறிப்பிடுவார். முடிவுகளை திட்டமிட்டுக் கணிக்கக் கூடிய நிலையே இவ்வமைப்பின் பிரதான அநுகூலமாகும் எனினும்

Page 64
தனிப்பட்டவர்களுக்குரிய விடயங்களை அணுகுவதில் நவீன தர்க்கரீதியான பணிக்குழு அமைப்பின் சட்டங்கள் போதுமானவை யாக இல்லாமையை வெபர் சுட்டுகிறார். நடைமுறையில் நிலவும் தளர்வினை சரிசெய்யக் கூடிய ஆளுமை மிக்க தலைவர்களின் தோற்றத்தில் வெபர் நம்பிக்கை கொண்டிருந்தார். எதிர்கால மென்பது எடணின் பூந்தோட்டமாகவன்றி இரும்புக்கூடமாகவே அமையலாம் நவீன வாழ்வின் அனைத்துப் பரப்புகளிலும் ஒருவர் பாரிய அளவிலான அமைப்பில் இணைந்து, தன் தனிப்பட்ட விருப்பார்வங்களை தியாகம் செய்து, தன் பொதுவான இலக்குகளை நிறைவேற்றுதலின் வழிதான் சமூக முக்கியத்துவம் வாய்ந்த செயலில் ஈடுபடமுடியும் என்றார்.
கருத்துக்களின் தொழிற்பாடு
நவீன முதலாளித்துவத்தின் தோற்றத்தில் 8-LDu 185 கருத்துக்களின் செல்வாக்குப் பற்றிய அழுத்தத்தில் வெபர், கார்ல்மார்க்ஸிநின்றும் வேறுபடுகின்றார். வெபர், கார்ல் மார்க்ஸின் மீது மிகுந்த மதிப்புக்கொண்டிருந்தபோதும், மார்க்ஸின் தனித்து பொருளாதார அடிக்கட்டுமானத்தின் மீதே பண்பாட்டு மேற் கட்டுமானம் என்ற கருத்தினை வெபர் ஏற்கவில்லை. அறிவார்ந்த உளத்தின் விருத்தியான விஞ்ஞான, அரசியல், சமய பரப்புகள் அனைத்தும் ஒன்றிலொன்று செல்வாக்குச் செலுத்திய போதிலும் சார்பளவில் தனித்துவமானவை என்றார். ஒரு கருத்துருவத்திற்கும் பொருளாதார ஆர்வத்திற்கும் முன் நிர்ணயமான இசைவேதும் இல்லை என்பார் வெபர். பல எடுத்துக்காட்டின் வழி தமது
கருத்தியலை விளக்குவார் வெபர்.
கருத்தியல் தொகுதிக்கும், சமூகக் கட்டமைப்புக்கும் இடையிலான தொடர்பு பன்முகப்பட்டது; வேறுபாடுகளைக்

கொண்டது; பரஸ்பரமானது என்பார் வெபர். அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானத்தில் செல்வாக்கு செலுத்துவது போலவே மறுதலையான செல்வாக்கினையும் அவதானிக்கி முடியும் என்கிறார் வெபர்.
அதிகார வகைகள்
வல்லமையை வரையறுப்பதுடன் அதனை அ ாரத்தினின்றும் வேறுபடுத்தியும் காட்டுகின்றார். ஒரு சமூக உறவமைப்புக்குள் ஒருவர் தம் எண்ணப்படி செயற்படுவதற்கான நிகழ்தகவே வல்லமை எனும் வெபர், அந்தக் கட்டளைகள் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய நிகழ்தகவு என்ற கருத்தாக்கத்தையும் கூடவே முன்வைக்கிறார். சட்ட பூர்வ தன்மைதான், தனியன்கள், தாமாகவே தமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் கட்டளையை ஏற்குமாறு செய்வது. கூடவே வல்லமையை அதிகாரமாக
அதிகார உறவுகள் தொடர்பான தமதுh விளக்கத்தில்
மாற்றுவது. சட்டபூர்வ தன்மைகளின் அடிப்படையில் மூன்று தூய வகை அதிகாரங்களை வேறுபடுத்திக் காட்டுகின்றார் வெபர்.
0 தர்க்கரீதியான சட்டபூர்வ அதிகாரம்
0 மரபுவழி அதிகாரம்
0 தனித்துவ ஆளுமை வழி (Charismatic) அதிகாரம்
இந்த அதிகார வகைகள் அதிகாரத்தினதும் மேலைப்புலத்தில் ஆற்றலின் வரலாற்றினையும் பிரதிபலிப்பன. முதலிரண்டும் சமூகவியல் முக்கியத்துவம் கொண்டவை. இவ்வதிகார வகைகள் அனைத்தினைப் பொறுத்த வரையிலும் வல்லமை தொடர்பான தனியன்களின் நம்பிக்கையும் முக்கிய இடம் பெறுவது.

Page 65
தர்க்கரீதியான சட்ட பூர்வ அதிகாரமானது தர்க்க அடிப்படைகளால் ஆனது. நவீன சமூகங்களின் அதிகரித்து வரும் அடுக்கமைவு உறவுகள் இவ்வகையில் அடங்குவன. இந்த அதிகார அமைப்பில் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பணிப்புகளை செய்யும் பொறுப்பினை ஒருவர் கொண்டுள்ளார். என்ற நம்பிக்கையின் அடியாகவே இங்கு தனியன்கள் செயற்படுகின்றார்கள். தற்சார்பற்ற விதிகளால் நிலைநாட்டப்பட்ட இந்த அதிகாரமானது சமத்து வத்தையும் த்ர்க்கரீதியான 6)]6Üb6)60)LD உறவுகளையும்
உணர்த்துகிறது.
மரபு வழி அதிகாரமானது தொழிற்சமூகத்திற்கு முன்னைய காலத்து மேலாதிக்கமாக விளங்கியது; மரபின் வழி தரப்பட்டது என்ற நம்பிக்கையினை அடிப்படையாகக் கொண்டது. இங்கு புறவயமான விதிகளின் வழி உறவுகள் அமைவதில்லை. மரபு வழி கையளிக்கப்பட்ட விதிகளின் வழிதான் அதிகாரம் பெறப்படுகின்றது. குரு சிஷய, எஜமான் - பணியாள் உறவுகளில் இதனை அவதானிக்கலாம். சமூகங்களிடை நிலவும் தந்தை வழி அதிகாரமும் இவ்வகையினதே. இவ்வகை அதிகார அமைப்பின் நியமங்கள் மீறப்படமுடியாதவை.
ஆளுமைத் தனித்துவத்தின் வழியான அதிகாரம் Charisma என்ற கருத்தாக்கத்தின் வழியானது. வழமைக்கு புறம்பான உன்னத ஆளுமைத்திறனைக் குறித்து நிற்பது. குறிப்பிட்ட சக்தி உண்மையானதா, ஊகிக்கப்பட்டதா என்பது இங்கு முக்கியம் அல்ல; ஒருவரின் ஆளுமையை வியந்து மற்றவர் அவரிடத்து தம்மை அர்ப்பணிப்பதன் வழி பெறப்படுவது இந்த அதிகாரம். ஏனைய அதிகார வகைகளை விட மேலான வல்லமை கொண்டதாக இது அமையலாம். அற்புதங்கள், வெற்றிகள்

போன்ற சாதனைகளின் வழி இங்கு வல்லமை மீதான நம்பிக்கை நிலைநாட்டப்படுகின்றது. இந்நிலைமைகளில் தளர்வு ஏற்படும் போது நம்பிக்கையும் அதிகாரமும் தளர்வடைந்து போகலாம். இதனால் தான் இவ்வகை அதிகாரம் நிலைபேறான ஒன்றல்ல என்கிறார் வெபர். நிலவும் ஒழுங்குக்கும் E. ஒன்று என்பதால் இது புரட்சிகரமான ஒன்றாகவும் கருதப்படலாம் எனவும் வெபர் குறிப்பிடுவதனையும் இங்கு கருத்திற் கொள்ளலாம்.
அதிகார வகைகள் பற்றிய தமது ஆய்வில் இலட்சிய வகை பகுப்பாய்வினைக் கருவியாக பயன்படுத்தியு போதிலும் நடைமுறையில் இம் மூவகை அதிகாரங்களும் இசைந்தும் காணப்படலாம் என்பதனையும் வெபர் ೫. கொண்டார். எடுத்துக் காட்டாக ஹரிட்லரின் மேலதிக்கத்தினை குறிப்பிடுவார். ஹிட்லரின் மேலாதிக்கம் கணிசமானளவு அவன் ஆளுமையின் பாற்பட்டதெனினும் ஜேர்மனிய சட்ட அமைப்புத் தந்த தர்க்கரீதியான அதிகாரமும், ஜேர்மனிய நாட்டார் மரபு வழி பெறப்பட்ட தேசியக் கூறுகளின் தாக்கமும் கூடவே கலந்துள்ளதினை உணரமுடியும் என்பார் வெப்ர்.
தர்க்க சிந்தனையும் மதசார்பின்மையும்
முன்னைய காலத்தில் ஆளுமைத் திறன்கொண்ட வீரர்களின் தனிப்பட்ட வேண்டுதல், ஒழுக்க நியமங்கள், அருள், அர்ப்பணிப்பு போன்ற வற்றினால் ஆளப்பட்ட சமூக நிலைமை நவீன யுகத்தில் தர்க்கரீதியானதாகவும் எதிர்வு கூறக்கூடியதாகவும் அமைந்தது. இவ் விருத்தி நிலையானது சமயத்தின் சமூகவியலாக விளக்கப்பட்டுள்ளது. சட்டப்புலத்திலும் மாற்றங்களை வெபர் அவதானித்தார். அறிவார்ந்த தலைவர்கள் முதியோர்களிடமிருந்து நீதி என்ற நிலைமை நவீன உலகில் தனித்துவமான

Page 66
நீதியமைப்புக்களிடம் என மாற்றங்காண்பதினைச் சுட்டுகிறார். அரசியல் அதிகார விருத்தியிலும் தர்க்க ரீதியான சட்டவழி ஆட்சி மாற்றங்கள்ை இனங்காட்டுகிறார். இசை dhin L- இதற்கு விதிவிலக்கர்கவில்லை. ஆதி இசை புலத்தின் இயல்பான ஆற்றொழுக்கிான எழுச்சி நிலைமை புதிய சிம்பனி கூட்டிசைவில் திட்டமிட்ட க்டுமையான விதிகளுக்குட்படுவதையும் எடுத்துக் காட்டுகிறார்.
சமயமும் பொருளாதாரமும்
56: North wind Picture Archive.
புரட்டஸ்தாந்து அற ஒழுக்கமும் முதலாளித்துவத்தின் எழுச்சியும் தொடர்பான வெபரின் கட்டுரையிலே சமய நம்பிக்கைகளை சமூக நிறுவனங்களுடன் தொடர்புபடுத்துகிறார் வெபர். ஒத்திசைவு, வேறுபாடு என்ற இரண்டு முக்கியமான நோக்குகளில் தன் பகுப்பாய்வுகளை மேற்கொண்டார் வெபர்.
 

முதலாளித்துவம் வளர்ச்சி காண்பதற்கு மக்களிடதுக் கொண்ட இசைவான பண்பாட்டுக் கூறுகள் அவசியமாகும். புரட்டஸ்தாந்து சமயம் குறிப்பாக கல்வினிசம் செய்யும் தொழிலே தெய்வம் என்பதான கருத்தியலை முன்வைத்தபோது அது இலகுவாக மக்களிடத்து செல்வாக்குச் செலுத்தியது.
கத்தோலிக்க சமயத்தினரை விட செழிப்பான பொருளாதார வாழ்வில் புரட்டஸ்தாந்து சமயத்தினர் காணப்படுவதற்கு இதனையே அடிப்படையாக கூறுவர் வெபர். வேறுபாடு தொடர்பான வெபரின் கோட்பாடுக்கு ஆதாரமாகவும் முதலாளித்துவம் வேகமாக வளர்ச்சி கண்ட புரட்டஸ்தாந்து நாடுகளையே எடுத்துக்காட்டாக காட்டுவார் வெபர். தனது ஆய்வினை தெளிவாக்குதற்காக உலக சமயங்கள் பலவற்றினை ஒப்பியல் பகுப்பாய்வாக நோக்குவார் வெபர். இந்த வகையில் யூதாயிசம், கொன்பியூசனிசம், இந்து சமயம் ஆகியன முதலாளித்துவ வளர்ச்சிக்குத் தடையாக அமைந்ததையும் தன் ஆய்விடை எடுத்து விளக்குவார் வெபர். பொருளாதார நடத்தையினை தீர்மானிக்கும் சமய நம்பிக்கைகள் பற்றி வெபர் அதிகளவு அழுத்தம் கொடுத்து விட்டார் என்பதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும். சமயத்தின் சமூகவியலில் வெபரின் கருத்தாக்கம் இன்னமும் செல்வாக்குச் செலுத்தக் காணலாம்

Page 67
தொல்சிர் சிந்தனையாளரின் தேர்ந்த நூற்பட்டியல்
Comte, Auguste
1830-1842/ The Positive Philosophy. New Yourk: AMS Press.
1974
1851-1854/ System of Positive Philosophy. 4 vols. new Your:
1976 Burt Franklin.
Drukheim, Emile
1893/1960 Montesquieu and Rousseau: Forerunners of
Sociology. Ann Arbor: University of Michigan Press.
1893/1964. The Division of Labor in Society. New York: Free
Press.
1895/1964. The Rules of Sociological Method. New York: Free
Press.
1897/1951 Suicide. New York: Free PreSS.
1900/1973 'Sociology in France in the Nineteenth Century." In R.Bellah (ed.), Emile Durkheim: On Morality and Society. Chicago: University of Chicago Press: 3-32
1912/1965 The Elementary Forms of Religious Life. New York:
Free PreSS.
1913/1914 Pragmatism and Sociology. Cambridge: Cambridge

1983
194/1973
1922/1956
1928/1962
1957
1973
University Press. "The Dualism of Human Nature and Its Social Condition.' In R.Bellah (ed.), Emile Durkheim: On Morality and Society. Chicago: University of Chicago PreSS:49 - 163.
Education and Sociology. New York: Free Press. Socialism. New York: Collier Books.
Professional Ethics and Civil Morals. London: Routledge and Kegan Paul Moral Education: A Study in the Theory and Application of the Sociology of Education. New York: Free Press.
Durkheim, Emile, and Mauss, Marcel
1903/1963 Primitive Classification. Chicago: University of
Chicago Press.
Marx, Karl
1842/1977 "Communism and the Augsburger Allegemeine Zeitung." In D.McLellan (ed.), Karl Marx: Selected Writtings. New York: Oxford University Press:20.
1847/1963 The Poverty of Philosophy. New York: International
Publishers.
1852/1970 "The Eighteenth Brumaire of Louis Bonaparte.' In R.C.Tucker (ed.), The Marx-Engels Reader. New York: Norton: 436-525.
1857-1858/ Pre-Capitalist Economic Formations, Eric.
1964 J.Hobsbawm (ed.), New York: International Publishers.

Page 68
1857-1858/
1974
1859/1970
1862-1863/
1867/1967
1869/1963
1932/1964
The Grundrisse: Foundationsofthe Critique of Political Economy. New York: Random House. A Contribution to the Critique of Political Economy. New York: International Publisher.
Theories of Surplus Value, Part I &II. Moscow: Progress Publishers. Capital: a Critique of Political Economy, Vol. 1 New York: international Publishers.
The 18th Brumaire of Louis Bonaparte. New York: International Publishers.
The Economic and Philosophic Manuscripts of 1844, DirkJ. Struik (ed). New York: International Publishers.
Marx, Karl, and Engels, Friedrich
1845/1956 The Holy Family. Moscow: foreing Language
Publishing House.
1845-1846/ The German Ideology, Part 1, C.J. Arthur(ed.).
1970 New York: International Publishers.
1848/1948 Manifesto of the Communist Party. New York:
international Publishers.
Spencer, Herbert
1850 Social Statics, London: Routledge.
1854-1859 Education: Intellectual, Moral, and Physical Patterns,
NJ: Littlefield.
1855 Principles of Psychology.3ded. 2 vols. NY: Appleton.
1858-1874 Essays: Scientific, Political, and Speculative. 3 Vols.

NY: Appleton.
1864-1867 The Principles of Biology. 2 Vols. NY: Appleton. 1873 The Study of Sociology. Ann Arbor: University of
Michigan Press. 1873-1934. Descriptive Sociology: or Group of Siciological Facts, Classified and Arranged by Herbert Spencer. 17 Vols. London: Williams & Norgate. 1904 An Autobiography. 2 Vols London: Watts.
Weber, Max
1895/1989 "The National State and Economic Policy." In K.Tribe
(ed.), Reading Weber, London: Routledge: 188-209
1896-1906/ "The Agrarian Sociology of Ancient Civilizations. 1976 London: NLB.
1903-1906 Roscher and Knies: The Logical Problems of
Histrorical Economics. New Youk: Free Press. 1903-1917 The Methodology of the Social Sciences, Edward Shils
and Henry Finch (eds), New York: Free Press. 1904-1905/. The Protestant Ethic and the Spirit of Capitalism. 1958 New York: Scribner's.
1906/1985 "Churches' and 'Sects' in North America: An Ecclesiastical Socio - Political Sketch." Sociological Theory 3:7-13. 1915/1958 "Religious Rejections of the World and Their
Directions." In H.H. Gerth and C.W.Mills (eds.), From

Page 69
Max Weber: Essays in Sociology. New York: Oxford University Press: 323-359. 1916/1964 The Religion of China: Confucianism and Taoism.
New York: Macmillan.
1916-1917/ The Religion of India: The Sociology of Hinduism
and Buddhism. Glencoe, Ill.:Free Press.
1921/1958. The Rational and Social Foundations of Music.
Carbondale: Southern Illinois University Press. 1921/1963 The Sociology of Religion. Boston: Beacon Press. 1921/1968 Economy and Society. 3 vols. Totowa, N.J.:
Bedminster Press.
1922-1923/ "The Social Psychology of the World Religions." In
H.H. Gerth and C.W.
1958 Mills (eds.), From Max Weber : Essays in Sociology.
New York: Oxford University Press: 267-301.
1927/1981 General Economic History. New Brunswick, N.J.:
Transaction Books.


Page 70


Page 71
கலாநிதி என் கலைக்கழக அ ஸ்தாபக ♔ഞ്ഞ്ജബ முதன்மைப்புலமைய
FLADULjači பண்பாடும் தெ
ஆய்வார்வங்கள். ட நூற்தொகுப்புக்களில் இவரது கட்டுரைக மேம்பாடு தொடர்பான இவரது அண்ை பண்பாடு (2000), மரபுகளும் மாற்றங் வளம் சேர்ப்பன. புகழ் பெற்ற மானுடன் ஒபயசேகர அவர்களின் வழிகாட்டலி gigs G, A New face of Durga. Relig இவ்வாண்டில் டெல்கி காலிங்கா வெள் தடம்பதித்துள்ளது.
தன் கல்விசார் செயற்பாடுகளுக் படைப்புக்களின் வழியும் நன்கு அறியப்படு கவிதை நூலான நாகரிகத்தின் நிறம் (19 நாவலான சான்றோன் எனக் கேட்ட இவரது ஆக்கஇசை நிகழ்ச்சிகளான கண் உயிரின் குரல் (1994), மானஸி (1997) குறிப்பான கவனத்தைப் பெறுகின்றன. சடங்கும் (1999), மண்டூர் முருகன் வழி காட்சிசார் மானுடவியல் விவரணங்கள் 6 துணையாகின்றன.
புதிய நூலான தொல்சீர் சமூகவிய மொழியாக்கும் எங்கள் பணிக்கு மேலும் வ
பேராசிரியர் அ. சண்முகதாஸ் பீடாதிபதி, உயர்பட்டப்படிப்புக்கள் பீடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
*轟霄轄轟*轟轉事菅重*
 
 
 
 
 
 
 
 

சண்முகலிங்கன், யாழ்ப்பாணப் ரசறிவியல் - சமூகவியல் துறையின் ர். தமிழில் சமூகவியலை எழுதும்
சமூகவியல் சமூக மேம்பாடும் ாடர்பியல் இவரது சிறப்பு ல சர்வதேச ஆய்வரங்குகளில், ஆய்வு ள் இடம் பிடித்துள்ளன. பண்பாட்டு மய நூல்களான சமூக மாற்றத்தில் களும் (2001) தமிழ் சிந்தனை மரபிற்கு பியலாளரான பேராசிரியர் கனநாத் உருவான இவரின் கலாநிதிப்பட்ட ious and Social change in Sri Lanka, பீடாகி உலக சமூகவியல் புலத்தில்
கப்பால் ஆக்க இலக்கிய, கலைப் பவர் கலாநிதி சண்முகலிங்கன் இவரது 93), சாஹித்திய விருது பெற்றது. சிறுவர் தாய் (1993) யுனஸ்கோ பரிசு பெற்றது.
ாணிரைத் துடைத்துக்கொள் (1990) என்பன ஈழத்து சமூகத் தொடர்பாடலில் ட்டக்களப்பில் அம்மன் வழிபாடும் பாட்டு மரபுகள் (2000) எனும் இவரது ாங்கள் பண்பாட்டு கல்வியில் பெரிதும்
ல் சிந்தனையாளர் தமிழை அறிவியல் பிமை சேர்க்கின்றது.
TEFS - AFFMA