கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிர்வாணம்

Page 1


Page 2

൧൬ിസ്റ്റ്
டாக்டர் மரீதரன்
38, Moffat Road, London SW17 7EZ
3Խ Ծ 00

Page 3
NRWANAM
by
Dr. Sridh carcan
January 2004
Published by
Putih in cum Publishers
38, Moffat Road London SW177EZ
Te:02087678004 Fax: 0208767 7866 e-mail: Puthinam,5Ghotmail.com
(C) Puthinam
Layout:
V. Karunanithy
Printed by :
፲፩መ ፱ዎሖARKሖAk8 293, Ahamed Complex, 2nd Floor Royopettah High Road, Chennai. 600 Ol4. Ph: 3835 3983, 3100 8554, 2835 3983.

பதிப்புரை
கிடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ‘புதினம்’ வாசகர்களோடு தனது கருத்துக்களைப் பகிர்ந்து, அவர்களில் பெரும்பாலானோரை தன் வசமாக்கிக் கொண்டவர் டாக்டர் பூரீதரன். அவர் எழுதத் தொடங்கிய பின்னர், ‘புதினம்’ இதழ் புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் பரவலாகப் பேசப் படத் தொடங்கியதையும் கூறிக் கொள்வதில் பெருமை யடைகிறேன்.
பொங்கி, பிரவகித்து, இடையறாது ஒடிக்கொண் டிருக்கும் அவர் சிந்தனை ஊற்றைப் படித்துச் சிலிர்த் திருக்கிறேன். அவரது ஆளுமையில் பிறந்த எழுத்துக்கள் என்னை வியக்க வைத்தன.
பத்தோடு பதினொன்றாக வாழாமல், சுயமாகச் சிந்திக்க ஏன் தயங்குகிறாய்? என்று கூறி, புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்கள் பார்க்க விரும்பாத, பார்க்க மறுக்கும் கோணங்களை மிகத் தெளிவுடன் காட்டியிருக்கிறார். பொய்யான போர்வைகளைக் களைந்து, நிர்வாணத்தைத் தரிசிக்க வைத்திருக்கிறார்.
உள்ளத்தால் பாராட்டியவர்கள் பலர் தூற்றியவர் களும் உண்டு. அவருடைய எழுத்துக்கு கிடைத்த வெற்றி யாகவே இவற்றைக் கருதுகிறேன்.
‘சிதம்பரம் சக்கரம்’ என்ற அவரது முதல் நூல் பற்றி பிரபல ஒலிபரப்பாளரும் நண்பருமான விமல் சொக்க நாதன் ‘புதினம்’ இதழில் “இப்படி ஒரு நூல் இதுவரை வெளிவந்ததில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். அந் நூலைப் படித்தேன். விமல் கூறியது உண்மை தான். "

Page 4
டாக்டர் பூரீதரன்
இதன் பின்னர் டாக்டர் பூரீதரனுடன் தொடர்பு கொண்டு, தொடர்ந்து ‘புதினம்’ இதழுக்கு எழுதும் படி தொலைபேசியில் கேட்டேன். அவரும் ஒப்புக் கொண்டார். தபாலில் அவரது கட்டுரைகள் தவறாது வரும்.
அவரது எழுத்துக்கள் வெளிவரத் தொடங்கி ஒன்றரை ஆண்டு காலத்திற்குப் பின்னரே, அவரை வீட்டில் நேரில் சந்தித்தேன். அவர் எழுத்துக்களைப் போலவே, அவரும் என் இதயத்தில் இடம் பிடித்துக் கொண்டார்.
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரும் அவரது எழுத்துக்களைப் படித்து உண்மைகளை உணர வேண்டும் என்ற ஆவலில் இந்நூலைப் ‘புதினம்’ வெளியிட்டுள்ளது. அதற்கு அனுமதி தந்த டாக்டர் பூணூரீதரனுக்கு இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- ஈ. கே. ராஜகோபால்
(ஆசிரியர், புதினம்) 38, Moffat Road London SW177EZ
Tel:0.2087678004
Fax: 0208767 7866 e-mail: Puthinam,5Ghotmail.com

அணிந்துரை
நிர்வாணம் - என்ற சொல், ஒரு இளைஞனுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தலாம். ஒரு யுவதிக்கு நாணத்தை ஏற்படுத்தலாம். முற்றும் கற்றுத் தெளிந்த ஒருவருக்கு இறைவனுடன் நாம் இணைவதை நினைவூட்டலாம். டாக்டர் பூரீதரன் காட்டும் ‘நிர்வாணம்’ புதிய கோணத் திலானது. பலரை இது திகைப்படைய வைக்கலாம். சிலருக்கு அருவருப்பையும் ஆத்திரத்தையும் உருவாக்கலாம். என்னைப் போன்றவர்களுக்கு இது ஒரு கொண்டாட்டம். புலம் பெயர்ந்து தாய் மண்ணுக்கு வெளியே வாழும் எம்மவர்கள், தம்மீது போர்த்திக் கொண்டிருக்கும் கலாச்சாரம் என்ற போர்வையை நீக்கிக் காட்டுகிறார். மதம் - பண்பாடு என்ற மற்றப் போர்வைகளையும் பிய்த்துக் கழற்றி எறிகிறார். நிர்வாணமாக்கிக் காட்டுகிறார்!
நெஞ்சில் வஞ்சனை, மாசு எதுவுமில்லாமல் அந்த நிர்வாணத்தைப் பார்ப்பவர்களுக்கு அதுவே சத்தியம் - அதுவே உண்மை என்று புரியும். ஆனால் மனதில் களங்கத் துடன், கறுப்புக் கண்ணாடிகள் ஊடாக அந்த நிர்வாணத் தைப் பார்க்க மறுப்பவர்கள் உண்மைகளை ஏற்க மறுக்க லாம். பூரீதரனின் துணிச்சலைக் கண்டிக்க முற்படலாம்.
எம்மை மானிடராகப் பிறக்க வைத்து, கூன் குருடு நீங்கிப் பிறக்கச் செய்து, உலாவ விட்டிருக்கிறான் முதலும் முடிவு மற்ற முதல்வன், அடியும் முடியும் இல்லாத இறைவன். அவனது சந்நிதியில் போய் நின்று நன்றி செலுத்தாமல், அவனுடன் பிஸினஸ் பேசி விட்டு வருகிறோம். உனக்கும் ஒரு பங்கு என்று சொல்கிறோம். குடித்துவிட்டுக் குடும் பத்தை கவனிக்காமல், ஊதாரியாகச் சுற்றித் திரியும் ஒரு தந்தையைப் பார்த்து, மூத்த மகள் நினைவூட்டுவதைப் போல. "அப்பா! நாங்கள் உங்கள் பிள்ளைகள். எங்களை உணவூட்டிப் பாதுகாத்து வளர்க்க வேண்டியது உனது பொறுப்பு” என்ற பாணியில் பூரீதரன் எழுதியிருப்பது, எமக்கு முந்திய ஞானிகள் வழங்கிய ஞானப்பழங்களி லிருந்து பிழிந்தெடுத்த சாறு!

Page 5
டாக்டர் பூரீதரன்
புல்லாகிப் பூண்டாகி, புழுவாய் மரமாகி, எமது பரிணாமப் பயணம் பிறப்பு - இறப்பு - பிறப்பு என்ற மாகடலில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எமது உடல் என்ற பாய் மரக் கப்பலுக்கு இறை அருள் என்ற காற்று வீசினால் கப்பல் விரைவாக ‘பிறவாமை’ என்ற கரையை போய் சேர்ந்து விடும். அதற்கு உதவ குரு என்ற படகோட்டி தேவை. இப்படியாக கரையை அடையும் நோக்கமில் லாமல் வாழும் மனிதர்கள், உயிருடன் இருந்தாலும் உயிரற்ற சடலங்கள் தான் என்று கீதையில் இறைவன் திருவாய் மலர்ந்திருக்கிறார். புலம் பெயர்ந்த தமிழர்களையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் கிண்டல் செய்து எழுதி பிரபலம் அடைய முற்படும் போலிகளுக்கு சில பத்திரிகை ஆசிரியர்கள் துணை போகிறார்கள். பத்திரிகா தர்மத்தை மீறி பரத்தையர்கள் போல நடந்து கொள்கிறார்கள். அந்த நையாண்டிக் கதைகள் வேறு, டாக்டர் பூரீதரனின் ‘நிர்வாணம்’ வேறு. கோயில் கர்ப்பக்கரஹத்தில் வெறும் கல்லாக வீற்றிருக்கும் அந்த வினை கடந்த தத்துவத்தை நாம் எப்படி நிரந்தர மாக அடைவது, பூரணத்துடன் பூரணமாக இணைந்து கொள்வது பற்றி விளக்கங்களைப் போதித்துள்ள மகான்கள் அனைவருமே, எமது குற்றங் குறைகளை, பலவீனங் களை சுட்டிக் காட்டத் தவறியது கிடையாது. எமது குறைகளைச் சொன்னமைக்காக அந்த மகான்களை நாம் வெறுப்பது கிடையாது. கண்டிப்பதும் கிடையாது!
அதே போலத் தான் இந்த நூலாசிரியர் டாக்டர் பூரீதரனை ஒரு யதார்த்த சிந்தனைவாதியாக, துணிச்சல் மிகவே கொண்ட ஒரு சீர்திருத்தவாதியாக நான் கருதுகிறேன். பல நூறு ஆன்மீக நூல்கள் அடித்து அடித்து அழுத்த மாகச் சொல்லும் இந்து மத தத்துவங்களை மிகவும் ரத்தினச் சுருக்கமாக, பாலும் தெளி தேனும் சற்றுத் தெளித்து, பாகும் பருப்பும் சற்று சேர்த்து குழைத்து, இனிமை சொட்டச் சொட்ட தனக்கே உரிய பாணியில் நமக்கு ஊட்டியிருக்கிறார் டாக்டர் பூரீதரன். நூலை முற்றாகப் படித்த பின் ஒரு சாரார் நூலின் கருத்துக் களை ஏற்க மறுக்கலாம். அவர்கள் இதனை ரயில் பயணத்தில் படிக்கும் ஒரு நூலாகவாயினும் ஏற்கும் விதத்தில் நகைச் சுவையாகவும் தம்மால் எழுத முடியும் என்று நிரூபித் திருக்கிறார் டாக்டர் பூரீதரன்!

நிர்வாணம்
சில உதாரணங்கள்: தொலைக்காட்சிப் பேட்டியின் போது முகத்தில் விழும் கேசத்தை பின்னால் தள்ளிக் கொண்டிருக்கும் நடிகை ஜிந்தா, தன் கைவிரல்கள் அனைத்திலுமுள்ள மோதிரங்களையும் தொலைக் காட்சி கமெராவில் காட்டுவது.
பதவி கிடைத்த பின் கோவிலுக்குப் போனவர் உயர் பதவி கேட்பது, காதலி மனைவியாக வேண்டுமென்று இறைவனைக் கேட்பது, மனைவி வந்த பின் மாதவி வேண்டும் என்று இறைவனைத் தொந்தரவு செய்வது, ஜப்பான் கார் வாங்கிய பின் ஜேர்மன் கார் வேண்டு மென்று இறைவனைக் கேட்பது. எமது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பலர் கதா பாத்திரங்களாக உலவுவது போல நீங்கள் உணரலாம். என்னைப் பொறுத்த மட்டில், “ஆசாமி பக்தர்கள் - அட்டகாசமான பஜனைகள்’ கட்டுரையில், “சுவாமிஜி யிட்டை வாற வழியிலை நீங்கள் ஜிலேபியை பிக்கப் பண்ணுங்கோ.” - வசனங்கள் எங்கேயோ - எப்போதோ நான் நேரில் கேட்டது போல உணர்கிறேன்.
நிறைவாக, ‘நிர்வாணம்’ நூலிலே நான் மறக்க முடியாத பாத்திரம் வீணை அரங்கேற்றம் செய்த அபிராமி தான்! (அமர்க்களமான அரங்கேற்றங்கள்). தன் தந்தை டாக்டர் ரவி பற்றியும் தன்னைப் பற்றியும் அபிராமி தன் குரலில் பேசுவது போல நூலாசிரியர் அற்புதமாக எழுதியிருக் கிறார். அவளது அப்பா பாசம் என் நெஞ்சை நெகிழ வைத்தது. அபிராமியின் குரல் என் செவியில் இன்னும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அது மட்டுமல்ல, பக்கத்து அறையில் டாக்டர் ரவியின் இருமலும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. மொத்தத்தில், ‘நிர்வாணம்’ நூல், நான் ஒரு இந்து என்று என்னைப் பெருமைப்பட வைத்திருக்கிறது. சபாஷ் டாக்டர் பூரீதரன் இவரது முன்னைய படைப்பான “சிதம்பர சக்கரம்’ பற்றி சொன்னதையே மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.
இது போன்ற நூல் இதுவரை வந்ததேயில்லை!
- விமல் சொக்கநாதன்
(வழக்கறிஞர் - ஆய்வாளர் - முன்னிலை ஊடகவியலாளர்)

Page 6
19.
2O.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
3O.
3.
32.
பொருளடக்கம்
முன்னுரை காகங்கள் கரையட்டும் - குயில்கள் கூவட்டும் கேட்கத்தவறிய அபஸ்வரம் பார்வைக்குத் தெரியாத பார்வைகள் சங்கடம் தரும் சடங்குகள் உள்ளத்தை மறந்த உடல்கள் ஆன்மீகத்தின்மடியில் அஞ்ஞானம் சிரிப்பை மறந்த மனிதர்கள் போட்டு முடித்த கணக்குகள் பிரம்மத்தை அறிந்தவன் பிராமணன் உணவைத் தேடும் உபவாசங்கள் ஆண்டவன்இல்லாத ஆலயங்கள் அஞ்ஞானம் தரும் விஞ்ஞானம் ஏன் சிரித்தான் பரமசிவன்? ஆபத்தான அரைகுறை உண்மைகள் கறைபடிந்த கல்வி சூரன்கள் நடாத்தும் சூரன் போர் கானல்நீர் தான் கலாச்சாரம் எண்ணப்படும் மோதகங்கள்
- எழுதப்படும் வடைகள் எள்ளில் எழுந்தருளும் சனியன் விதைத்ததும் குப்பை - விளைந்ததும் குப்பை அமர்க்களமான அரங்கேற்றங்கள்
- அந்தரங்கமான அழுகைகள் பூனையைத் தேடும் தியானங்கள் அர்ச்சனை தட்டில் ஆசை மூட்டைகள் பணம் படைத்த ஏழைகள் காட்டில் வாழும் மனிதர்கள் ஆஹா! எங்கும் சுகம் - எதிலும் சுகம் ஆசாமிப் பக்தர்கள்
- அட்டகாசமான பஜனைகள் மாயையின் மறுபெயர் மனஇறுக்கம் உறைக்க வைக்கும் உண்மைகள் கலாச்சாரம் தந்த உடன் கட்டைகள் மரணம் என்னும் ஜனனம் பதினாறும் பெற்ற பனங்காட்டுநரிகள்
OOO
18
:
45
SO
56
62
67
Z2
:
OO
iOS
111
116
122
128
133
139
145
151
157
162
168
174
18O 186.

முன்னுரை
கிாரணம் கூற முடியாத காரணங்களுக்காக ஒரு பொறுப் புள்ள எழுத்தாளன் இங்கு போர்வைகளால் மூடி மறைக்கும் அவனது எழுத்தின் ஒரு சில பரிமாணங்களை - ஒரு சில கோணங்களை - முற்று முழுதாக வாசகர்களுக்கு விளக்குவ தற்கும் - போர்வைகளால் மறைக்கப்பட்ட அந்த நிர்வாணங் களை அவர்கள் தரிசிப்பதற்காக அந்தப் போர்வைகளைக் களைவதற்கும் - ஒரு நூலின் முன்னுரை ஒரு அற்புதமான மேடை அந்த மேடையில் அவன் போடும் வேடம் துச்சாதனன்.
‘சிதம்பர சக்கரம்’ என்ற எனது முதல் நூலைப் படித்த பலர் - என்னிடம் மீண்டும் மீண்டும் கேட்ட ஒரு கேள்வி: “இப்படி எழுதலாமா?”
“ஏன் எழுதக் கூடாது?’ என்ற கேள்வியையே நான் பதிலாக வழங்கிய போது - “என்ன இருந்தாலும் ------ ’ என்ற ஒரு வித இழுப்புடனேயே - அத்தனை கேள்வியாளர்களின் ஆதங்கங்களும் ஆரம்பமாகின.
எனது பார்வையில் - இந்த இழுப்புத் தான் இங்கு நாம் சுயமாகச் சிந்திக்கத் தயாராக இல்லை என்பதன் எதிரொலி. இந்த இழுப்புத் தான் நாம் மந்தையில்பத்தோடு பதினொன் றாகவே வாழ விரும்புகிறோம் என்ற நமது மன அமைப்பின் பிரதிபலிப்பு. இந்த இழுப்புத் தான் அந்த புத்தன் அடைந்த நிர்வாணத்தை இங்கு நாமும் அடைய விடாது தடுக்கும் மாரீசன்.
நம்மைப் பற்றி - நமது அக அமைப்பைப் பற்றி - எதுவுமே தெரிந்து கொள்ளாமல் - தெரிந்துகொள்வதற்கான எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளாமல் - சதா நேரமும் நமது புறத்தைப் பற்றி - நாம் வாழும் இந்த உலகைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் - அன்றிலிருந்து இன்று வரை மனித இனம் ஒடிக்கொண்டிருப்பதனால் தான் - இங்கு
9

Page 7
டாக்டர் பூரீதரன்
நடைபெறுவது மனித இனத்தின் வளர்ச்சியல்ல. அது அந்த இனத்தின் வீழ்ச்சி.
ஏனெனில் - பார்ப்பவன் இல்லையானால் இங்கு பார்க்கப் படுவதும் இல்லை. அகத்திலிருந்து பிறப்பது தான் புறம் என்ப தால் அகமில்லையேல் இங்கு புறமுமில்லை. அதே சமயம் - அன்றிலிருந்து இன்று வரை நாம் அறிய முயற்சித்த - அன்றி லிருந்து இன்று வரை நாம் அவதானித்த - நாம் வாழும் இந்த உலகைப் பற்றி இன்று நமக்கு என்ன தெரியும்? என்ற கேள்விக்கு - ஆலாபனை எதுவுமின்றி நேரடியாகவே பதில் சொல்வ தானால் - இங்கு நம்மில் எவருக்குமே எதுவுமே தெரியாது. தெரியவும் முடியாது.
நாம் வாழும் உலகைப் பற்றி நமக்குத் தெரிந்ததெல்லாம் - தெரியுமென்று ஒரு சில அரைகுறைகள் அடிக்கடி பிதற்றிக் கொள்வதெல்லாம் அதன் ஒரு சில கோணங்கள் மட்டுமே - அதன் ஒரு சில பரிமாணங்கள் மட்டுமே.
அது ஒரு பகுதி மட்டுமே. அது ஒரு முழுமையல்ல.
முழுமை என்று நம்பி நம்மில் பலர் பார்த்துக் கொண் டிருக்கும் இந்த உலகின் ஒரு சில கோணங்களை - நம்மில் பலர் பார்க்க மறுக்கும் அந்தக் கோணங்களை - பார்க்க விரும்பாத அந்தக் கோணங்களை - உங்களுக்கு காட்டி - உலகைப் பற்றிய நமது பார்வை ஒரு முழுமையற்ற பார்வை - ஒரு அரைகுறைப் பார்வை என்று கூற முயல்கின்றன எனது எழுத்தும் - எனது கருத்துக்களும்,
இந்தக் கோணம் மட்டும் தான் உலகமென்பதல்ல. இதுவும் உலகத்தின் ஒரு கோணம் தான். இந்தப் பார்வை தான் பார்வை யென்பதல்ல. இதுவும் ஒரு பார்வை தான். இது தான் உண்மை என்பதல்ல. இதுவும் உண்மை தான்.
இந்தக் கோட்பாட்டை அரவணைக்கும் ஒரு அத்தி வாரத்தின் மீது நின்று கொண்டுநான் பார்க்கும் கோணத்தை உங்களுக்காக விபரிக்கும் போது - அங்கு எனக்குத் தெரிப வற்றை நான் எடுத்துக் கூறும் போது - அதை விளங்க முயல் வதும் - அது உங்களுக்கு விளங்குவதும் - தனிப்பட்டவர்களின் மன அமைப்பைப் பொறுத்த விடயம் - மனமுதிர்ச்சியைப் பொறுத்த விடயம் - மனப்பக்குவத்தைப் பொறுத்தவிடயம்.
O

நிர்வாணம்
s
“இந்தக் கோணம் இதுவரை நமக்குத் தெரியவில்லையே! - என்று கூறுவது நமது வளர்ச்சியின் ஆரம்பம்,
“இப்படியொரு கோணமே இல்லை” - என்று அடம் பிடிப்பது நமது வீழ்ச்சியின் ஆரம்பம்.
இந்த நூலின் நான் கூறியிருக்கும் கருத்துக்கள் - நான் எழுதியிருக்கும் எழுத்துக்கள் - இவை எல்லாமே நாம் வாழும் இந்த உலகம் நமக்குத் தரிசனம் கொடுக்கும் - கொடுப்பதற்கு தயாராக இருக்கும் ஒரு சில கோணங்கள் தான் - ஒரு சில சத்தியங்கள் தான்.
கலாச்சாரம் என்ற போர்வையால் - மதம் என்ற போர்வை யால் - நாகரீகம் என்ற போர்வையால் - பண்பாடு என்ற போர்வை யால் - நாம் பார்க்க விரும்பாத அந்த நிர்வாணங்களை - அந்தச் சத்தியங்களை - கன கச்சிதமாக மூடி மறைத்து விட்டு - “நான் பார்க்கும் உலகம் மட்டும் தான் உண்மை - இங்கு எனக்குத் தெரிபவற்றைத் தவிர வேறு எதுவுமே கிடையாது’ - என்ற தீக்கோழி வாழ்க்கை நமக்கு கைவந்த ஒரு கலை.
நாமே போர்த்துக்கொண்ட - சமூகத்தால் போர்க்கப் பட்ட - அத்தனை போர்வைகளையும் களைந்து - அதன் விளை வாக தெரியும் நிர்வாணத்தை தரிசித்து - அவையும் இந்த உலகின் கோணங்கள் தான் - அவையும் இந்த உலகின் பரிமாணங்கள் தான் - என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளும் போது - அப்படி ஒரு மன முதிர்ச்சி நமக்கு வரும்போது - நாம் இதுவரை காலமும் உலகம் என்று நம்பிக்கொண்டிருந்த மாயை மறைய ஆரம்பிக்கிறது - தேய ஆரம்பிக்கிறது.
இந்தத் தேய்வின் முடிவு தான் மாமனித வாழ்க்கையின் ஆரம்பம். அந்த வாழ்க்கை ஒரு கொண்டாட்டம் - அது ஒரு திருவிழா - ஒரு பெளர்ணமி.
அப்படி ஒரு வாழ்க்கைக்கு ஏதோ ஒரு வகையில் அடிக்கல் நாட்டுவதே இந்த நூலின் பங்களிப்பு.
‘சிதம்பர சக்கரம்’ என்ற சர்ச்சைக்குரிய எனது முதல் நூலைப் படித்த பின் - ஒரு பொது வைபவமொன்றில் - மனம் திறந்து - மனம் மகிழ்ந்து - இதய பூர்வமாக என்னைப் பாராட் டியவர் திரு விமல் சொக்கநாதன். அதன் பின்பு - அந்த நூலுக்கு
l

Page 8
டாக்டர் பூரீதரன்
எத்தனை எத்தனையோ பாராட்டுதல்கள் - யார் யாரிடமிருந் தெல்லாமோ கிடைத்ததெனினும் - அவரது அந்த முதல் பாராட்டு - அந்த முதல் ஆதரவு - ஒரு அற்புதமான தாலாட்டாக - ஒரு அபூர்வமான சுகமாக - இன்றும் எனக்கு ஒரு வித சுகத்தை - ஒரு வித கிறக்கத்தைக் கொடுக்கிறது.
அந்த முதல் பாராட்டின் விளைவாக - தொலைபேசியில் ஆரம்பமாகியது தான் ‘புதினம்’ ஆசிரியர் திரு ராஜகோபால் அவர்களுடனான எனது நட்பு. சுமார் பதினெட்டு மாதங் களாக - ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே - நான் தபாலில் அனுப்பிய எனது சர்ச்சைக்குரிய நிர்வாணங்களை’ - அவரது சிந்தனைக்குச் சரியெனப்பட்டதால் - வெட்டுதல் - அழித்தல் - கிழித்தல் - அடக்கல் - இதுபோன்ற எதுவுமேயின்றி - குட்டி நாய்களின் குரைத்தலுக்கு அஞ்சாது - அவற்றைத் தொடர்ந்து பிரசுரித்து - எனது எண்ணங்களுக்கும் எழுத்துக்கும் ஒரு களமமைத்துத் தந்தவர் திரு ராஜகோபால். அந்தக் களத்தில் விளைந்தவற்றின் தொகுப்பு தான் நீங்கள் இப்பொழுது படிக்கவிருக்கும் ‘நிர்வாணம்’
இந்த இரு நண்பர்களுக்கும் - அந்தரங்க சுத்தியுடன் நான் கூறுவது வெறும் நன்றியல்ல. எனது மனம் உருகிய நன்றி
எனது மனம் கனிந்த நன்றி.
- பூரீதரன்
2

காகங்கள் கரையட்டும் - குயில்கள் கூவட்டும்
குள்ள நரியின் தலைக்குள் இருப்பது நயவஞ்சகம். திருடித் தின்பது உள்ளே இருக்கும் அந்த நயவஞ்சகக் குணத்தின் ஒரு வெளிப்பாடு. நன்றியுள்ள மிருகம் நாய். எஜமானைப் பார்த்து வாலை ஆட்டுதல் அந்தக் குணத்தின் ஒரு வெளிப்பாடு. பத்தினி யின் அடக்கம் அவளது பண்புகளில் ஒன்று. பதினாறு முழச் சேலை அந்தப் பண்பின் ஒரு வெளிப்பாடு.
காட்டில் இருக்கும் குள்ள நரியைப் பிடித்து வந்து அதற்கு வாலாட்டப் பழக்கிவிட்டால் மட்டும் அது நன்றியுள்ள நாயாகி விடுவதில்லை. மாறாக- அது வாலாட்டும் நரி, வீட்டு நாய்க்குத் திருடித் தின்னப் பழக்குவதால் மட்டும் அது காட்டில் வாழும் நயவஞ்சகமுடைய நரியாகி விடுவதில்லை. மாறாக - அது திருடித் தின்னும் நாய். பதினாறு முழச் சேலையை அணிவதால் மட்டும் பரத்தை பத்தினியாகி விடுவதில்லை. மாறாக - அவள் சேலை அணியும் பரத்தை.
அகத்தில் - மனத்தில் - இருப்பவை தான் புறத்தில் தோற்றங்களாக - செய்கைகளாக - வெளிப்படுகின்றன. நாம் விரும்பும் - நமக்குப் பிடித்த - தோற்றங்களை - செய்கைகளை - புறத்தில் செயற்கையாகத் தோற்றுவித்து அகத்தில் அடிப் படை மாற்றங்களை ஏற்படுத்த முடியாது - ஏற்படமாட்டாது. அகத்தின் மாற்றங்களால் ஏற்படும் புறத்தின் வெளிப்பாடு களுக்கு மட்டுமே அர்த்தமுண்டு - அழகுண்டு.
அகத்தில் அடிப்படை மாற்றங்கள் ஏற்படாமல் புறத் தளவில் மட்டுமே ஏற்படும் - ஏற்படுத்தப்படும் வெளிப்பாடு களுக்குப் பெயர் தான் வேஷம் - பம்மாத்து - பித்தலாட்டம்.
ஒரு சிறு உதாரணம்.
3

Page 9
டாக்டர் பூரீதரன்
இந்திய நண்பனொருவனின் திருமண வரவேற்பு வைபவத் திற்கு ஆங்கிலப் பெண்ணொருத்தி - கச்சிதமாக - கவனமாக சேலை அணிந்து கொண்டு வருகிறாள். பார்த்த சில அசடுகள் அவளின் பண்பை - பரந்த மனப்பான்மையை - சேலைக்கு அவள் கொடுத்த மதிப்பை போற்றுகிறார்கள். சிலமணி நேரத்தில் வைபவம் களைகட்டுகிறது. மது - சிரிப்பு - கலகலப்பு - இசை - நடனம். ஆடத் தெரிந்தவர்கள் - ஆட முடிந்தவர்கள் ஆடுகிறார்கள். ஆங்கிலப் பெண்மணி தன்னை மறந்து ஆடுகிறாள். ஆட்டத்தின் போது இசைக்கு ஏற்றபடி சேலை உயர உயரப் போகிறது. உள்ளாடை அணிந்திருப்பதால் உயரப் போகும் சேலையைப் பற்றி எது வித கவலையுமின்றி ஆடு கிறாள் ஆங்கிலப் பெண்மணி.
ஒரு ஆங்கிலப் பெண்ணுக்கு - அவளின் மனதுக்கு - சேலை என்பது எது வித விஷேட அர்த்தங்களுமில்லாத ஒரு வெறும் உடை வினோத உடைப் போட்டிக்கு தயாராகுபவர்கள் வெவ்வேறு உடைகளை - வெவ்வேறு வேடங்களை போடுவது போல - ஒரு இந்திய வைபவத்திற்கு சேலை அணிந்து செல்வது ஒரு ஆங்கிலப் பெண்ணுக்கு ஒரு வெறும் வேடம். முழங் காலுக்கு மேல் ஆடைகள் அணிவது - உயர்வது - ஒரு ஆங்கில மனதுக்கு மிகவும் இயல்பான - சாதாரண ஒரு விடயம். உயர்வது இயல்பாக இருக்கும் போது அது சட்டையாகத் தான் இருக்க வேண்டியதில்லை. சேலையாகவும் இருக்கலாம். திருமண வரவேற்பு வைபவத்தில் இது தான் நடந்தது.
அகத்திற்கும் புறத்திற்கும் உள்ள முரண்பாடு இது தான். இந்த நரி வாலாட்டுகிறது. ஆனால் இது நாயல்ல. அகமும் புறமும் இணையாமல் உருவாகும் இப்படியான செய்கை களுக்கு அழகில்லை - அர்த்தமில்லை. அவை பார்க்கச் சகிக்காத அசிங்கங்கள் - பார்க்க முடியாத கேவலங்கள்.
ஆனால் ஒரு இந்தியப் பெண்ணுக்கு - இந்திய மனதுடைய ஒரு பெண்ணுக்கு - இந்தியப் பண்புள்ள ஒரு பெண்ணுக்கு - சேலை ஒரு வெறும் உடையல்ல. அந்த உடையுடன் இணைந்து - பிணைந்து அவளின் மனதிற்குள் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் - தத்துவங்கள். பெண்மை - நாணம் - பண்பு - அடக்கம் - கற்பு - கண்ணகி - பாஞ்சாலி - திருவள்ளுவர் - அடுக்கிக் கொண்டே போகலாம்.
14

நிர்வாணம்
இதனால் தான் - வேட்டி அணியும் வில்லியம் வேலுப் பிள்ளையாகி விடுவதில்லை. கூந்தலை குறுக வெட்டி - உதட்டுச் சாயம் பூசும் அன்னபூரணி அன்ஜலாவாகி விடுவதில்லை.
வேலுப்பிள்ளையும் வில்லியமும் அகம் சம்பந்தப்பட்ட மனம் சம்பந்தப்பட்ட - குணம் சம்பந்தப்பட்ட - விடயங்கள். வேட்டியும் வெளி அலங்காரங்களும் அகத்திலிருந்து உருவாகும் புறங்கள். புறம் அகத்துடன் இணையாத போது நாம் பார்ப்பது முரண்பாடுகளின் மூட்டையை.
வேட்டி கட்டுபவனெல்லாம் வேலுப்பிள்ளையல்ல என்றால் - எந்த அளவுகோலால் நாம் மனிதர்களை அளந்து - இவன் தமிழன் - இவன் ஆங்கிலேயன் - இவன் சீனன் - என்று முடிவு கட்டுகிறோம். ஒரு தமிழன் - ஒரு ஆங்கிலேயன் - ஒரு சீனன் - இவர்கள் எப்படி உருவாகினார்கள்? எப்படி உருவாகு கிறார்கள்?
ஒரு தனி மனிதனின் அகத்தை - மனத்தை - உருவாக்குவது சூழல். தான் வாழும் சூழலில் கண்ணால் பார்ப்பவை - காதால் கேட்பவை - மூக்கால் முகர்பவை - ஸ்பரிசத்தால் உண்பவை - நாக்கால் சுவைப்பவை - இவற்றின் மொத்த வடிவம் மனிதர்கள்.
இலங்கையில் நாம் நமது சமூக வட்டத்திற்குள் வாழ்ந்த போது - அந்த வட்டத்திற்குள் நடந்தவற்றைப் பார்த்தோம் - கேட்டோம் - முகர்ந்தோம் - சுவைத்தோம் - ஸ்பரிசித்தோம். இதன் விளைவு தான் நமது அகம் - மனம் - குணம் - நடத்தைகள் - செய்கைகள். இவை தான் நம்மை யாழ்ப்பாணத் தமிழன் - கொழும்புத் தமிழன் - அச்சுவேலித் தமிழன் - ஆவிரங்கால் தமிழன் என்று மற்றவர்களுக்கு அடையாளம் காட்டியது.
கற்ற கல்வி இதை அழகாக கூறுகிறது.
பிறந்த இனம் - பேசும் மொழி - பயின்ற கல்வி - வாழும் சூழல் - கடைப்பிடித்த சமயம் - பார்த்த கலைகள் - இவை உருவாக்கிய நம் மனம் கொடுக்கும் தோற்றங்களே நாம் வாழும் - பார்க்கும் உலகம்,
சூழல் மாறும் போது - பார்ப்பவை - கேட்பவை - முகர் பவை - சுவைப்பவை - ஸ்பரிசிப்பவை மாறும் போது நமது
அகம் மாறுகிறது - டாம் மாறுகிறோம் - மாற வேண்டும்.
5

Page 10
டாக்ட்ர் பூரீதரன்
நாற்பது வருடங்களாக மானிப்பாயில் வாழ்ந்த மயில் வாகனம் அல்ல இன்று இலண்டனில் வாழும் மயில்வாகனம். இருபது வருடங்களாக பம்பலப்பட்டியில் வாழ்ந்த பரமசிவம் அல்ல இன்று இலண்டனில் வாழும் பரமசிவம்.
இது இயற்கை - இது தான் பரிணாமம் நமக்குப் புகட்டும் பாடங்களில் ஒன்று. மாறா விட்டால் - வளையாவிட்டால் - மல்லுக்கு நின்றால் - உடைந்து விடுவோம் - அழிந்து விடுவோம்.
காலம் போட்ட கோலங்கள் - இயற்கை ஆடிய நடனங்கள். நமது சூழல் மாறிவிட்டது. மாறிவிட்ட இந்தப் புதிய சூழலில் நமக்கு வாரிசுகள், இங்கு பிறந்து - வளரும் - வாழப்போகும் வாரிசுகள்.
அவர்கள் பார்ப்பது - கேட்பது - முகர்வது - சுவைப்பது - ஸ்பரிசிப்பது இங்கிலாந்தை. தொலைக்காட்சியில் - வானொலி யில் - பத்திரிகைகளில் - பள்ளியில் - புகையிரதத்தில் - நாள் முழுவதும் - வாரம் முழுவதும் - ஆண்டு முழுவதும் - இங்கி லாந்து. இங்கிலாந்து உருவாக்கிய அகம் - மனம் - குணம் - அவர்களின் நடையில் - உடையில் - செய்கைகளில் வெளிப் படுகிறது. “அம்மா” என்று ஒலிக்கும் தமிழ்ச் சொல்லுக்குப் பின்னால் கூட “MUM” தான் உண்மையில் ஒலிக்கிறது என்பது ஒரு தாய்க்குப் புரியும்.
யார் பண்ணிய தப்பு இது? யார் மேலும் தப்பில்லை. இயற்கை விதித்த நியதி இது.
ஆனால் நமக்கு - பெற்றோர்களுக்கு ஒரு ஆதங்கம். என்னில் இருந்து வந்தது இது. நான் உருவாக்கியது இது. ஆனால் இதன் நடை - உடை - பாவனை எதுவுமே என்னைப் போல இல்லையே! காகம் நான் அடைகாத்த முட்டையிலிருந்து பொரித்தது கரைவதற்குப் பதிலாக கூவுகிறதே!
விடுவார்களா நம்மவர்கள்? இப்படி நடக்கக்கூடாது - நடக்கவிடக்கூடாது.
கூவும் குயிலை காகம் போலக் கரைய வைக்கும் கலை மகள் பெற்றெடுத்த கலாச்சாரத் தந்தைகள் நாங்கள் - அழைத்து வாருங்கள் நம்மிடம். அபயக்கரம் நீட்டுகிறார்கள் இலண்டனில் வலம் வரும் கலாச்சாரத் தந்தைகள்.
6

நிர்வாணம்
இதன் நடைமுறை விளைவு; வாரத்திற்கொரு தடவை - ஒன்று அல்லது இரண்டு மணித்தியாலங்களுக்கு - குயில்களுக்கு கரைய கற்றுக் கொடுக்கப்படுகிறது. சங்கீதம் - வாத்தியம் - நடனம் - தேவாரம் - திருவாசகம் - திருக்குறள் - அடுக்கிக் கொண்டே போகலாம்.
“உன் ஆனந்த மோகன வேணுகாண்மதில் அலை பாயுமே - கண்ணா - என் மனம் அலை பாயுமே” என்று பாடும் ஒரு இந்துத் தமிழ்ப் பெண்ணின் - இந்துக் கலாச்சாரம் உருவாக்கிய மனதுடைய - தமிழ்க் கலாச்சாரம் உருவாக்கிய மனதுடைய ஒரு பெண்ணின் ஊனை உருக்கும் பாட்டுக்கும் - உள்ளத்தை உலுப்பும் அபிநயத்திற்கும் - இதையே ஆங்கிலத்தில் எழுதி - iš 6 GUjĝSlav LufTL LLDITj 6) – “Un anantha mohana venu kanamathil alai payuthe - Kanna - en manam alai payuthe” GT Gð7 gp1 அர்த்தம் புரியாது ஒலிக்கும் அவலத்திற்கும் - உடல் அசைவு களுக்கும் உள்ள முரண்பாடுகள் பார்த்தவர்களுக்கு புரியும்.
இந்த அலசலின் முடிவு?
நான் அடைகாத்தாலும் வந்து பிறந்திருப்பது குயில், அது குயிலாக இருப்பது தான் - கூவுவது தான் அதற்குப் பெருமை என்று சிந்திக்கும் பக்குவம் காகத்திற்கு வேண்டும்.
நான் ஒரு குயில் - கரைவதில் உள்ள அர்த்தம் எனக்குப் புரியவில்லை - கரைய மாட்டேன் என்று உறுதியாக மறுக்கும் மனம் குயில்களுக்கு வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக - குயில்களை கரைய வைப் போம் - வைக்க வேண்டும் - என்று அடம் பிடிக்கும் கலாச்சாரத் தந்தைகள் - இயற்கை எழுதாத சட்டத்தைப் படிக்க வேண்டும் - புரிந்து கொள்ள வேண்டும் - உணர்ந்து கொள்ள வேண்டும்.
இது தான் அந்தச் சட்டம்: காகம் கரையட்டும் - குயில் கூவட்டும் - மயில் அகவட்டும். இது தான் அழகு. அது தான் இயற்கை.
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம்.
அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம்.
அது ஒரு சத்தியம்.
COO
7

Page 11
கேட்கத் தவறிய அபஸ்வரம்
உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பதற்காக - ஐரோப்பாவில் இயங்கும் அந்த தொலைக்காட்சி நிறுவனம் - ஒரு நாள் ஒளி பரப்பிய - ஒரு இந்தியர் - ஒரு படித்தவர் - ஒரு பெரியவரின் பேச்சிலிருந்து ஒரு பகுதி இது.
“உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் - தமது கலை கலாச்சாரங்களைப் பேணிப் பாதுகாப்பதில் இலங்கைத் தமிழர் களுக்கு நிகர் இந்த உலகில் எவருமே கிடையாது. கடந்த வருடன் கூட இலண்டனுக்குச் சென்றிருந்த போது - அங்கிருக்கும் கோவில்களின் எண்ணிக்கையையும் அவர்களின் இறைபக்தி யையும் பார்த்து நான் மெய் சிலிர்த்து நின்றேன்.”
பேச்சாளர் மெய் சிலிர்த்துப் பேசியபோது - மெய் விதிர்த்துப் போனார்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்த நம்மவர்கள்.
அரோஹரா - இந்த அபஸ்வரங்களுக்கு!
படித்தவர்கள் - பெரியவர்கள் - என்று நமது சமூகத்தால் கருதப்படுபவர்கள் - மதிக்கப்படுபவர்கள் - இப்படி நிறத்தை அறியாது - ஸ்வரத்தை புரியாது - தப்புத் தாளத்தில் மயங்கி - தம்மை மறந்து மெய் சிலிர்த்து ஆங்காங்கே உரையாற்றுவ தால் தான் உண்மையின் சகல பரிமாணங்களையும் நமது சமூகம் தரிசிக்க முடியாமல் - அடிக்கொரு தடவை மெய் விதிர்ப்பதோடு மட்டுமே நின்றுவிடுகிறது.
ஒரு நாட்டில் - வீதிக்கொரு வைத்தியசாலை இயங்கி னால் அந்த நாட்டில் நோயாளிகள் அதிகம் என்பது அர்த்தம். பார்க்குமிடமெல்லாம் மதுபானசாலைகள் தென்பட்டால் அந்த நாட்டவர்கள் மது பிரியர்கள் என்பது அர்த்தம். திரும்பும்
8

நிர்வாணம்
இடமெல்லாம் கேளிக்கை விடுதிகள் நிறைந்திருந்தால் அவர்கள் உல்லாச பிரியர்கள் என்பது அர்த்தம்.
ஆனால் - எங்கோ பிறந்த நம்மவர்கள் - எப்படி எப்படியோ வாழ்ந்த நம்மவர்கள் - காரணம் புரியாத ஒரு காரணத்திற்காக சொந்த நாட்டை விட்டு வெளியேறி - இன்று அந்நிய நாடு ஒன்றில் சிக்கலான பல பல பிரச்சனைகளுடன் திரிசங்கு வாழும் நம்மவர்கள் செறிந்து வாழும் இடங்களில் வீதிக்கொரு கோவில் தென்பட்டால் அவர்கள் எல்லாம் பக்திமான்கள் இறை நம்பிக்கை உடையவர்கள் - நாடு மாறினாலும் தமது கலை கலாச்சாரங்களைப் பேணிப் பாதுகாப்பதில் அக்கறை உள்ள வர்கள் என்று கூறும் அந்தப் பல்லவியில் பொருளில்லை - இலக்கணமில்லை.
இன்று - இங்கியங்கும் கோவில்களுக்கும் நமது தெய்வ பக்திக்கும் முடிச்சுப் போட முனைவது - அச்சுவேலிக்கும் அந்த மான் தீவுக்கும் பாலம் அமைப்பதற்கு ஒப்பான ஒரு விடயம் காரணம் - கோவிலுக்கு போகும் நம்மில் எவருமே - ஆதியும் அந்தமுமற்ற இந்தப் பிரபஞ்ச வினோதத்தின் சூத்திரதாரி நம்மை முற்று முழுதாக ஆட்கொள்ள வேண்டுமென்ற ஆவலில் அங்கு செல்வதில்லை. அந்த பூரணத்திலிருந்து தோன்றிய நானும் ஒரு பூரணம் தான் என்ற அந்தச் சத்தியத்தை மறைக்கும் இந்த மனம் என்ற மாயையை எவ்வாறு அழிப்பது என்ற வழியை நாடி அங்கு செல்வதில்லை. புல்லாகி பூடாகி - புழுவாகி - தொடர்ந்து செல்லும் எனது பரிணாம பயணத்தை இந்த பிறவியுடன் நிறுத்தி விடு என்று மன்றாடுவதற்காக அங்கு செல்வதில்லை.
மாறாக - நாம் கோவிலுக்குச் செல்வது யாசிப்பதற்காக - வேண்டுவதற்காக - இரப்தற்காக, இங்கு - இன்று - நமது உடல் நிலை - உள நிலை - அந்தஸ்து - வதிவிடம் - பணம் - பதவி - பிள்ளைகள் - நிகழ் காலம் - எதிர்காலம் - இப்படி எதிலெதி லெல்லாமோ நமக்குப் பிரச்சனைகள் - எங்கெங்கெல்லாமோ நமக்குப் பிரச்சனைகள் - எதற்கெதற்கெல்லாமோ நமக்குப் பிரச்சனைகள். நாளுக்கொரு கோரிக்கையுடனும் பொழுதுக் கொரு விண்ணப்பத்துடனும் - அர்ச்சனைத் தட்டுக்களுடனும் பூஜை சீட்டுக்களுடனும் ஏதாவது ஒன்றை யாசிப்பதைத் தவிர வேறு எது செய்கிறோம் நாம் கோவிலில்? வேறு எதற்காகச் செல்கிறோம் நாம் கோவிலுக்கு?

Page 12
டாக்டர் பூரீதரன்
அந்த வடக்கு இலண்டன் வைரவரை விட - இந்த கிழக்கு இலண்டன் விநாயகர் அதிக வரம் தருவார் என்று யாராவது கூறி விட்டால் போதும் நமக்கு. அன்றிலிருந்து அந்த வடக்கில் கோவில் கொண்டிருப்பவர்க்கு மரணச் சனி ஆரம்பம். அவரது உண்டியலில் ஒரு செல்லாக் காசு கூட விழாத அதே சமயம் - அந்த கிழக்கு வாழ் விநாயகரும் அவரைச் சார்ந்தோரும் நமது தயவால் செல்வச் செருக்குடன் வாழ ஆரம்பித்து விடுவார்கள். அந்த அயர்லாந்து முருகனை விட - இந்த கேம்பிரிட்ஜ் முருகன் பலம் மிக்கவர் என்று ஊரார் பேசினால் போதும் நமக்கு அதன் பின்பு அயர்லாந்தானுக்கு மாற்றிக் கட்டுவதற்கு ஒரு கோவணம் கூட இருக்காத ஒரு வறுமை நிலையில் அவரை வாட விட்டு விட்டு கேம்பிரிஜ் முருகனுக்கு பட்டு பட்டாகச் சாத்துவோம்.
“எனது பிள்ளையை இந்தத் தடவை பரீட்சையில் சித்தி யடைய வைத்தாயானால் உனக்கு மாபெரும் வடை மாலை ஒன்று வாத்துவேன்” இந்த வேண்டுதலுக்கு மறைந்திருக்கும் மிக முக்கியமான ஒரு விடயம் “அவன் சித்தியடையாவிட்டால் உனக்கு ஒரு உப்புக்கட்டி கூட கிடையாது”
நம்மில் பெரும்பாலானோர்க்கும் தெய்வத்திற்கும் உள்ள உறவுக்குப் பெயர் பக்தி அல்ல. மாறாக - அது ஒரு சிக்கலான வியாபாரம். அங்கு பேரம் ஒரு வழமை - ஒப்பந்தம் - ஒரு யதார்த்தம் மறுக்க முடியாத விடயமானாலும் கன கச்சிதமாக மறைக்கப்படும் விடயம் இது.
வியாபாரத்தின் அடிப்படையில் அமுல்படுத்தப்படும் இந்த ஒப்பந்தங்களையும் - பேசப்படும் இப்படியான பேரங் களையும் - இவற்றின் அடிப்படையில் இங்கு எழுந்து நிற்கும் கோவில்களையும் அடையாளம் காணாது - நாடு மாறினாலும் தமது கலை கலாச்சாரங்களைப் பேணிப்பாதுகாப்பதில் அக்கறை உள்ளவர்கள் - பக்திமான்கள் - இறை நம்பிக்கை உடையவர்கள் என்றெல்லாம் கூறுவது யதார்த்தத்தை மறைக் கும் ஒரு கனமான போர்வை.
துணிவாக ஆண்மையுடன் - நாமே போர்த்துக் கொண்ட - நமக்குப் போர்க்கப்பட்ட - இது போன்ற போர்வைகள் களையப் படும் போது - நமக்கு சுயதரிசனம் ஏற்படும் போது - அந்த நிர்வாணத்தை நாம் பார்க்கும் போது - அப்பொழுது நமக்கு புரியும் நம்மிடையே பெருகி இருக்கும் கோவில்களின் அர்த்தம்.
20

நிர்வாணம்
படைத்தவனைப் பற்றிய நமது அறியாமை - நமது ஏமாளித் தனம் - நமது பித்துக்குளித்தனம் - நாம் காவி திரியும் ஆசை மூட்டைகள் - என்றுமே தீராத நமது குறைகள் - குறைபட்ட நமது மனம் நமது ஏக்க மூச்சுகள் - இவை தான் இன்று - இங்கு - நமது கோவில்களின் அத்திவாரம். எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் - எப்படி ஆராய்ந்தாலும் - மீண்டும் மீண்டும் இதே பதில் தான் கிடைக்கிறது.
நமது ஏமாளித்தனத்தை - குறைகளை - பலவீனங்களை - அறியாமையை - சரியாக புரிந்து கொண்டு - அந்த அத்திவாரத்தின் மீது தான் இங்கு பெரும்பாலான கோவில் கற்கள் அடுக்கப்படுகின்றன - சுய நன்மைக்காக - சுயநலத்திற்காக,
இதன் விளைவு: பதவியை பறை சாற்றுவதற்கு கோவில் - பதவியை பற்றிக் கொள்வதற்கு கோவில் - பணம் பண்ணுவதற்கு கோவில் - சுயபுராணம் பாடுவதற்கு கோவில் - சுய விளம் பரத்திற்கு கோவில் - போட்டிக்கு கோவில் - பொறாமைக்கு கோவில் - இச்சைக்காக கோவில் - இசைப்பதற்காக கோவில்.
இதன் முடிவு: கோவில்களுக்கு முன்னால் அழகு- பின்னால் அசிங்கம். முன்னால் அரோஹரா - பின்னால் அராஜகம். முன்னால் பக்தி - பின்னால் பதவிப் போட்டி,
பிரம்மம் என்று அவதாரங்கள் பெயரிட்ட - இந்த பிரபஞ்சத்தின் சூத்திரதாரியை முற்று முழுதாக நம்புபவனின் பெயர் தான் ஆத்திகன் என்றால் - இன்று - இங்கு- நம்மில் பெரும்பாலானோர் நாத்திகர்களே.
"எல்லாம் அறிபவன் அவன்” என்று கூறிவிட்டு - அதே சமயம் - அந்த எல்லாம் அறிபவன் நமக்கு கொடுத்தவை களுடன் திருப்தியடையாது - மேலும் மேலும் யாசித்து - அந்த யாசனைக்குப் பெயர் பிரார்த்தனை என்று நாம் பிரகடனம் செய்வதனால் தான் நாம் ஆத்திகர்களல்ல - நாத்திகர்கள்.
கோவில் திருவிழாவில் ஈ மொய்க்கும் வண்ண வண்ண இனிப்பு பண்டங்களை அறிவுக் குறைவால் தனது குழந்தை கேட்கிறதே என்பதற்காக ஒரு தாய் வாங்கிக் கொடுப்பதில்லை என்பதைத் தெரிந்து வைத்திருக்கும் நமக்கு - வாழ்க்கைத் திருவிழாவில் நமது அறியாமையால் நாம் விரும்பும் வண்ணங் களையும் - கேட்கும் வண்ணங்களையும் ஆண்டவன் அள்ளிக்
ry

Page 13
டாக்டர் பூரீதரன்
கொடுப்பதில்லை என்பது மட்டும் தெரியாமல் போய்விடுவ தனால் தான் நாம் ஆத்திகர்களல்ல - நாத்திகர்கள்.
நாம் திருடும் பொழுது ஒருவன் பார்த்து விட்டால் - அவனுக்கும் திருட்டில் ஒரு பங்கு கொடுத்து அவனைச் சமாதானப்படுத்தப் பழகிவிட்ட நாம் - அநியாயத்துக்கு மேல் அநியாயம் செய்து சம்பாதித்துவிட்டு - "அப்பனே உனக்கு காணிக்கை போடுகிறேன்” என்று அதில் ஒரு பகுதியை உண்டியில் போட்டு - ஆண்டவனுடன் கணக்குத் தீர்க்க முயற்சி செய்வ தனால் தான் நாம் ஆத்திகர்களல்ல - நாத்திகர்கள்.
அலுவலகத்தில் நமது மேலதிகாரி ஒரு முடிவெடுத்த பின் - அது நமக்குப் பிடிக்காவிட்டால் - அவரை தாஜா பண்ணி அவரது முடிவை மாற்றச் சொல்வது போல - எல்லாம் அறிந் தவன் என்றோ போட்டு முடித்த கணக்குகள் மாற்றப்படலாம் என்ற அடிப்படையில் காணிக்கைக்கு மேல் காணிக்கை செலுத்துவதனால் தான் நாம் ஆத்திகர்களல்ல நாத்திகர்கள்.
எங்கும் நிறைந்தவனால் - எல்லாம் வல்லவனால் - எல்லாம் அறிபவனால் - இயக்கப்படும் இந்த வாழ்க்கை என்ற புகையிரத பயணத்தில் - சும்மாவிருப்பதே சுகம். அடித்து - அலை மோதி - ஆர்ப்பரித்து-குதித்து - கும்மாளமிட்டு-பொங்கி-ததும்பி - பாயும் இந்த வாழ்க்கை நதியில் அலுங்காமல் அசை யாமல் மிதந்து செல்வதே சுகம். காரணம் - எப்பொழுதோ முடிந்த காரியங்கள். இங்கு எல்லாமே அவன் தான் - எல்லாமே நாம் தான். இங்கு நாயும்நாம் தான் - நரியும் நாம் தான். வேசியும் நாம் தான் - விடனும் நாம்தான். இங்கு யார் கேட்பது? யார் கொடுப்பது? யார் பறிப்பது? யார் இழப்பது?
அதனால் தான் - ஆண்டவனை நம்புபவன் கோவிலுக்குச் செல்வதில்லை - மதகுருமார்களின் தயவை நாடுவதில்லை - பிரார்த்தனைகள் பண்ணுவதில்லை.
இவை எல்லாவற்றையும் அடிப்படையாக வைத்துக் கூறப்பட்ட கருத்துத் தான்: இங்கியங்கும் கோவில்களின் எண்ணிக்கை இசைக்கும் இசையில் அபஸ்வரங்கள் அதிகம்.
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம். அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம். அது ஒரு சத்தியம்.
COO
22

பார்வைக்குத் தெரியாத பார்வைகள்
O(Tர்வைகள்! நேற்று அழகாகத் தோற்றமளித்த அந்தப் பொருள் - இன்று அசிங்கமாகத் தோற்றமளிப்பதன் காரணம் - நமது பார்வைகள். இன்று நியாயம் போலத் தென்படும் ஒரு விடயம் நாளை அநியாயமாகத் தென்படுவதன் காரணம் - நமது பார்வைகள். எனக்கு இன்பமூட்டும் ஒரு விடயம் அவனுக்குத் துன்பத்தைக் கொடுப்பதன் காரணம் - நமது பார்வைகள்.
இது மட்டுமா! சங்கராச்சாரியாரைச்சனி வாட்ட முடி யாததன் காரணம் - அவரது பார்வை, புற்று நோய் உக்கிரம் கொண்டிருந்த போதும் பரமஹம்ஸர் சிரித்ததன் காரணம் - அவரது பார்வை. “மன்னவனும் நீயோ - வள நாடும் உனதோ' என்று அரசனைப் பார்த்து துச்சமாக ஒளவையார் பாடியதன் காரணம் - அவரது பார்வை.
அது மட்டுமல்ல - “தரகரே! எனது கடைசி மகளுக்கு ஒரு நல்ல டாக்டர் அல்லது என்ஜினியர் மாப்பிள்ளை இருந்தால் மட்டுமே இந்தப் பக்கம் வரவேணும்” - என்று பெண்ணைப் பெற்றவர்களைப் பேசவைப்பதும் அவர்களது பார்வை.
ஆகவே - எந்த வகையில் நோக்கினாலும் - எப்படி ஆராய்ந்தாலும் - நமது பார்வைகள் தான் இங்கு நமது அன்றாட வாழ்க்கையின் மகிழ்ச்சியையும் துன்பத்தையும் நிர்ணயிக் கின்றன - நமது சிரிப்பையும் அழுகையையும் நிர்ணயிக்கின்றன - இரவில் நமது நிம்மதியான தூக்கத்தையும் தூக்கமின்மை யையும் நிர்ணயிக்கின்றன.
இரண்டாயிரத்தி ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் - உண்மையிலேயே நடந்ததாக நூல்கள் குறிப்பிடும் ஒரு சம்பவம்
23

Page 14
டாக்டர் பூரீதரன்
மூலம் - “பார்வைகள்” என்ற இந்தச் சிக்கலான சொல்லின் சகல பரிமாணங்களையும் அழகாக விளங்கிக் கொள்ளலாம்.
ஒரு நாள் - புத்தர் தனது சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் உபதேசித்துக் கொண்டிருந்த வேளையில் - மிகப் படித்த மனிதர் ஒருவர் - மகா பண்டிதர் ஒருவர் - அவரது மனதில் எழுந்த எண்ணற்ற சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் விடை காணும் நோக்குடன் புத்தரிடம் வந்திருந்தார். உபதேசம் முடிந்ததும் - அவர் வந்ததன் காரணத்தைக் கேட்டறிந்த புத்தர் பின்வரு மாறு கூறினார்:
“உன்னுடைய எல்லாச் சந்தேகங்களுக்கும் - எல்லாக் கேள்விகளுக்கும் என்னால் பதில் கூற முடியும். ஆனால் ஒரு நிபந்தனை எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் - எதுவுமே பேசாமல் - நீ ஒரு வருட காலத்திற்கு என்னுடன் வசிக்க வேண்டும்”
பண்டிதரும் இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு - ஆ. முதல் புத்தருடன் வசிப்பதற்கு ஒப்புக்கொண்டார். சிறிது - நேரத்தில் புத்தர் தனது வேலைகளைக் கவனிக்க எழுந்து சென்றதும் - கூட்டத்திலிருந்த ஒருவர் மிகப் பலமாக - பண்டிதரைப் பார்த்துச் சிரித்தார். எதற்காக என்னைப் பார்த்துச் சிரித்தாய்? - என்று வினாவிய போது - சிரித்தவர் பதிலளித்தார்.
“அப்பனே! உன்னைப் போலவே நானும் ஒரு பண்டிதன் தான் - அதிகம் படித்தவன் தான். நானும் எண்ணற்ற வாதங் களுடனும் - கேள்விகளுடனும்தான் பல வருடங்களுக்கு முன்னர் இந்த மனிதரிடம் வந்தேன். உனக்கு இன்று விதித்த இந்த நிபந்தனையே அன்று எனக்கும் விதிக்கப்பட்டது.
ஆனால் - நான் வந்து இப்பொழுது ஐந்து வருடங்களாகி விட்டன. இதுவரை எந்தக் கேள்வியையும் நான் கேட்டதில்லை. காரணம் - எனது மனதில் கேள்விகளே இல்லாமல் போய் விட்டன - எனது சந்தேகங்கள் ஒடி ஒளிந்து கொண்டன. என்னைப் போலவே இந்தக் கூட்டத்தில் இன்னும் பல பண்டிதர்கள் இருக்கிறார்கள். உனக்கும் அதே கதி தான் என்று நினைத்த போது சிரிப்பை அடக்க முடியவில்லை. இன்று இந்த மனிதரிடம் எதுவுமே கேட்காவிட்டால் - நாளை கேட்பதற்கு உன்னிடம் கேள்விகள் இருக்காது”
24

நிர்வாணம்
எதற்காகப் புத்தர் அந்த நிபந்தனையை விதித்தார்? எதனால் பண்டிதர்களிடன் கேள்விகள் காணாமல் போயின? எதற்காக பண்டிதர்களின் சந்தேகங்கள் ஒடி ஒளிந்து கொண்டன? கேள்விகள் காணாமல் போய்விட்ட பின்பும் - சந்தேகங்கள் மறைந்த பின்பும் - எதற்காக பண்டிதர்கள் திரும்பிச் செல்ல வில்லை? நமது மனதில் எழும் இதுபோன்ற கேள்விகளுக் கெல்லாம் பின்வரும் ஒரே ஒரு பதில் தான் உண்டு.
அதாவது - பண்டிதர்களின் பார்வைகள்தான் ஆரம்பத்தில் அவர்களின் மனதில் கேள்விகளை எழுப்பின. புத்தருடன் வாழ்ந்திருந்த காலத்தில் - அவர்களின் பார்வைகள் மாறியதால் - மனதில் எழுந்த கேள்விகள் மறைந்துவிட்டன. மாறிய பார்வைகள் கொடுத்த சுகானுபவத்தை இழக்க விரும்பாததால் பண்டிதர்கள் புத்தரை விட்டு விலகிச் செல்லவில்லை.
இந்தப் பதிலை நடைமுறையில் விளக்கும் ஒரு சிறு உதாரணம்.
சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் - ஏட்டில் படித்த இலண்டன் மாநகரை நாம் முதன் முதலாக நேரில் பார்த்த போது - ஆங்கில நாவல்களில் பார்த்த அந்நியர்களை நாம் முதன் முதலாக நேரில் பார்த்த போது - நமது திரிசங்கு மனதில் தான் அன்று எத்தனை எத்தனை கேள்விகள் - எத்தனை எத்தனை சந்தேகங்கள்!
அது எப்படி திருமணம் செய்து கொள்ளாமல் இவர்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள்? எதற்காக இந்த வெள்ளைக்கார பெண்மணிகள் ஆபிரிக்க இனத்தவர்களுடன் இவ்வளவு அந்நியோன்யமாக பழகுகிறார்கள்? அது எப்படி இவ்வளவு மக்களுக்கு மத்தியில் - பகிரங்கமாக - இவர்களால் ஒருவரை ஒருவர் மறந்து உதட்டில் முத்தமிட்டுக்கொள்ள முடிகிறது? ஒன்றல்ல - இரண்டல்ல - இதுபோன்ற ஒராயிரம் கேள்விகள் நமது மனதில்!
அதே சமயம் - ஏற்கனவே பல வருடங்கள் இலண்டனில் வாழ்ந்து விட்ட ஒருவரிடம் நாம் அன்று நமது சந்தேகங் களைக் கேட்டிருந்தால் - அவரால் நமது அத்தனை கேள்வி களுக்கும் நிச்சயமாகப் பதில் கூறியிருக்க முடியாது. காரணம் - அவருக்கு அது கேள்விகளேயல்ல. அது மட்டுமல்ல - அவர்
25

Page 15
டாக்டர் பூரீதரன்
கூறியிருந்தாலும் கூட - கூற முயற்சித்திருந்தாலும் கூட - நமக்கு எதுவுமே முற்றுமுழுதாகப் புரிந்திருக்க முடியாது.
ஆனால் - இருபது வருடங்களுக்கு முன்னர் தோன்றிய அந்தக் கேள்விகள் - அந்தச் சந்தேகங்கள் - இன்று நமது மனதில் தோன்றுவதில்லை - எழுவதில்லை. அவை இன்று மறைந்து விட்டதன் காரணம் - ஒடி ஒளிந்து கொண்டதன் காரணம் - அவற்றிற்கெல்லாம் நமக்கு பதில் கிடைத்தனால் அல்ல. ஏனெனில் - இன்றுகூட நாம் இங்கு பார்க்கும் பல விடயங் களுக்கு நம்மால் விளக்கமளிக்க முடியாது.
ஆனால் - அன்றுபோல் கேள்விகள் இன்று நம்மைக் குடைவதில்லை. காரணம் - இன்று - இருபது வருடங்களில் - நமது பார்வைகள் மாறிவிட்டன. அதனால் கேள்விகளும் மறைந்துவிட்டன தற்செயலாக - அசம்பாவிதமாக - அது எப்படி? - இது எப்படி? என்பது போன்ற கேள்விகள் நம்முள் எழும் பேதெல்லாம் - நமது மனது அதற்கெல்லாம் பதில் தேடுவதில்லை. மாறாக - “அது அப்படித்தான்” - “இது இப்படித்தான்” - "அவ்வளவு தான்” - என்று முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது.
நமது பார்வைக்கும் நாம் பார்க்கும் உலகுக்கும் பேதம் ஏற்படும்போது எழும் கேள்விகள் - எவ்வாறு நமது பார்வைகள் மாறியதும் மறைந்து போகின்றனவோ - அது போலவே - அப்படியே - சுய சிந்தனையின் மூலம் நமது பார்வைகள் மாற்றி அமைக்கப்படும் போது - நமது துன்பங்களும் மறைந்து போகின்றன. -
நமது பார்வை எப்படி உருவாகியது? யார் உருவாக்கு கிறார்கள்? எப்படி வளர்கிறது? என்பது போன்ற விடயங் களை ஆராய்வது ஒரு மிகச் சிக்கலான விடயம். ஆன்ால் -- மேலெழுந்தவாரியாகக் கூறுவதானால் - பொதுவாகக் கூறுவ தானால் - நமது வாழ்க்கையை இயக்கி - நமது இன்ப துன்பங் களை நிர்ணயிக்கும் நமது இன்றைய பார்வையின் பெரும் பாலான பரிமாணங்கள் - தெரிந்தோ தெரியாமலோ - திட்ட மிட்டோ திட்டமிடாமலோ வேண்டுமென்றோ அசம்பாவித மாகவோ - நம் மீது திணிக்கப்பட்ட ஒருவிடயம்.
யார் யாராலோ திணிக்கப்படும் விடயங்கள் - சுயசிந்தனை யின்றி நம்மால் உள்ளெடுக்கப்படும் போது - அவை பார்வை
26

நிர்வாணம்
களாக மாறி நம்மையே வருத்துவதை விளக்குவதற்கு ஒரு சிறு நடைமுறை உதாரணம்.
நான் சிறுவனாக இருந்த போது தமிழகத்திலிருந்து வெளி வரும் ஒரு பத்திரிகையில் வெளிவந்த ஒரு விளம்பரம் இது:
“ஞாபக சக்தி சிறக்க - பரீட்சையில் சித்தி பெற - வாழ்க் கையில் வெற்றிபெற - சிட்டுக்குருவி லேகியம் அருந்துங்கள்!”
அந்த வயதில் எனக்கு வாழ்க்கையும் தெரியவில்லை - வெற்றியும் புரியவில்லை - அதனால் நான் லேகியம் அருந்த வில்லை. ஆனால் - ஒரு பத்திரிகையின் மூலமாக ஒரு வியாபார ஸ்தாபனம் பணத்திற்காக ஏற்படுத்திய இந்தத் திணிப்பைப் புரிந்து கொள்ளாமல் - அதன் சகல பரிமாணங்களையும் விளங்கிக் கொள்ளாமல் - அந்தத் திணிப்பு ஏற்படுத்திய பார்வை யால் - இன்று எத்தனையோ மனிதர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்காக இன்னும் லேகியம் அருந்திக் கொண்டேயிருக் கிறார்கள்.
சிரிக்க முடிந்தால் சிரியுங்கள். சிட்டுக்குருவி லேகியத்தை நினைத்தல்ல - நம்மை நினைத்துச் சிரியுங்கள்! இங்கு நாம் அன்றாடம் அருந்தும் வித விதமான லேகியங்களை நினைத்துச் சிரியுங்கள்!
சுயமாகச் சிந்தித்தால் - நமது கல்வித் திட்டங்கள் - நமது சமூக வாழ்க்கை - அதில் நாம் பண்ணும் சடங்குகள் - நாம் கொண்டாடும் உற்சவங்கள் - தெய்வத்துடன் நாம் செய்யும் கொடுக்கல் வாங்கல்கள் - நமது வழிபாட்டுத் தலங்கள் - நமது கலாரசனை - நாம் வாங்கியிருக்கும் பொருட்கள் - அதற்காக நாம் வாங்கியிருக்கும் காப்புறுதிகள் - இவை எல்லாமே ஒரு வகையில் சிட்டுக்குருவி லேகியங்கள் இல்லையா? எல்லாமே ஒரு வகையில் திணிப்புகள் இல்லையா?
ஆபிரகாம்லிங்கன் சேற்றில் விழுந்து தத்தளித்த பன்றி யைத் தூக்கிய பின் - உடையிலும் உடலிலும் இருந்த சேற்றைக் கழுவிய போது - “உங்களுக்கு இதுதேவைதானா?” என்று கூட இருந்தவர்கள் வினாவிய போது - அவர் கூறியது - “சேற்றில் விழுந்த பன்றி படும் துன்பத்தை பார்க்க எனக்குச் சகிக்க வில்லை - எனது மனம் சாந்தியடைய வேண்டும் என்ற சுயநலத் தினாலேயே இப்படிச் செய்தேன்.”
27

Page 16
டாக்டர் பூரீதரன்
சுயநலம் இல்லாமல் - சுயலாபம் இல்லாமல் - எந்த ஒரு மனிதனும் இங்கு எந்த ஒரு காரியமும் செய்வது கிடையாது. ஆகவே - நம்மீது திணிக்கப்பட்ட ஒவ்வொரு திணிப்பிற்குப் பின்னாலும் ஒரு சுயநலம் உண்டு - சுயலாபம் உண்டு. காரணம் - திணிப்பவர்கள் எல்லோருமே இங்கு மனிதர்கள்.
பிறந்ததிலிருந்து இன்றுவரை - யார் யாராலோ - ஏதேதோ சுயலாபம் வேண்டி திணித்த திணிப்புக்களை - கேள்விகளெதுவு மின்றி அப்படியே ஏற்றுக் கொண்டு - அவை ஏற்படுத்திய பார்வைகளால் உலகைப் பார்த்துக் கொண்டு - பொதி மாடுகள் போல சுற்றிச்சுற்றி வருகிறோம்.
இதை அறிவு பூர்வமாக அறிந்து - உணர்வு பூர்வமாக உணர்ந்து - திணிப்புக்களை தூக்கியெறிந்து - நமது சுய சிந்தனை மூலம் நமது பார்வைகளை நாமே உருவாக்கிக் கொள்ளும் போது - அந்தப் பார்வையால் உலகைப் பார்க்கும் போது - அந்தப் பார்வை கொடுக்கும் ஆனந்தத்தில் நமது மனம் தாண்டவம் ஆடும் போது - நமது பெயர் மனிதர்களல்ல. மாமனிதர்கள்.
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம். அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம். அது ஒரு சத்தியம்.
OOO
28

சங்கடம் தரும் சடங்குகள்
உயிரைத் தாங்கும் ஊன் போல சேயைத் தாங்கும் தாய் போல - நிலவைத் தாங்கும் வான் போல - சடங்குகளைத் தாங்கு கிறது நமது சமூகம்.
இங்கு - பிறந்தால் ஒரு சடங்கு - இறந்தால் வேறொரு சடங்கு வாழ்ந்தாலும் சடங்கு - வாழாவிட்டாலும் சடங்கு கூடும் போது ஒரு சடங்கு - கூடிப் பிரிகையில் வேறொரு சடங்கு முடி வளர்ப்பதற்கு ஒரு சடங்கு - வளர்த்த முடியை இறக்குவதற்கு ஒரு சடங்கு. நமது மாட்டிற்கும் சடங்கு - அடுத்த வீட்டு ஆட்டிற்கும் சடங்கு.
தைப்பூசம் - மாசி மகம் - பங்குனி உத்தரம் - ஐப்பசி திங்கள் - கார்த்திகை வெள்ளி - புரட்டாசி சனி - இப்படியாக - மாதத்திற்கொரு சடங்கு - நாளுக்கொரு சடங்கு. மொத்தத்தில் - நமது வாழ்வில் எப்போதுமே சடங்கு - எல்லாமே சடங்கு - எதற்குமே சடங்கு.
யாராலோ - என்றோ - ஏதேதோ தேவைகளுக்காக - ஏதேதோ காரணங்களுக்காக - ஏற்படுத்தப்பட்ட சடங்குகளை இடம் புரியாமல் - காலம் புரியாமல் - காரணம் புரியாமல் வெறும் கிளிப்பிள்ளைகள் போல தொடர்ந்து செய்து கொண் டிருக்கிறோம். இது பற்றி நாம் சிந்திப்பதில்லை. சிந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை. காரணம் - அது தெய்வ நிந்தனை கிரக தோஷம் - நாத்திக வாதம்.
எப்போதாவது - ஆடிக்கொரு தடவை - ஆவணிக்கொரு தடவை - நமது கிளிப்பிள்ளை உணர்வுகள் அடங்கி - கும்ப கர்ணன் போல தூங்கும் நமது பகுத்தறிவு விழித்துக் கொள்ளும் போது - அது சடங்குகளுக்கு அர்த்தம் கேட்கிறது. அப்போது -
29

Page 17
டாக் ர் பூரீதரன்
கவிஞர் ஒன்று சொல்கிறார் - பார்ப்பனர் இன்னொன்று சொல் கிறார் . பெளராணிகர் வேறொன்று சொல்கிறார் அப்பா அது என்கிறார் - பாட்டி அது அல்ல இது என்கிறாள்.
மொத்தத்தில் - தங்கள் தங்கள் வசதிக்கேற்ப - மன அமைப்புக்கேற்ப - தொழில் - பொருட் தேவைகளுக்கேற்ப இங்கு ஒவ்வொருவரும் ஏதேதோ பிதற்றுகிறார்கள்.
இடியப்ப வியாபாரம் செய்து - கை நிறையச் சம்பாதிக்கும் ஒரு வியாபாரியிடம் - “உனது கை எலும்பு மிகவும் பலவீன மாக இருக்கிறது - இன்றிலிருந்து நீ இந்தத் தொழிலைச் செய்யக் கூடாது” என்று வைத்தியர் சொன்னபோது - தொடர்ந்து பணம் சேர்க்க விரும்பும் வியாபாரி “டாக்டர்! நான் ஏன் இடியப்பம் அவித்து விற்கிறேன் தெரியுமா? வாழ்க்கையும் இடியப்பம் போல சிக்கலானது என்ற உயர்ந்த தத்துவத்தை நமது தமிழ் மக்களுக்கு உணர்த்துவதற்காகவே இந்தத் தொழி லைச் செய்கிறேன் - பணத்திற்காகவல்ல” என்று கூறுவதைப் போல இருக்கிறது நமது சடங்குகளுக்கு இன்று நாம்பெறும் விளக்கங்கள்.
மரம் உதிர்த்த இலைகளின் பூமியை நோக்கிய பயணம் ஒரு காரியம் - அதன் காரணம் புவியீர்ப்பு.
சமுத்திரத்தை தாண்டும் பிரமாண்டமான அந்தக் கப்பலை நொறுக்கும் - பாறையிலும் கடினமான பனிக்கட்டி இருந்த இடம் தெரியாமல் மறைவது ஒரு காரியம் - அதன் காரணம் பனிக்கட்டியின் மூலக்கூறுகளின் இயக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வெப்பநிலை மாற்றங்கள்.
முதியவர் ஒருவர் ஓட முயற்ச்சிக்கும் போது அவரது இருதயம் அழுவது ஒரு காரியம் - இருதயத்திற்கு போதியளவு இரத்தம் கிடைக்காது அதன் காரணம்.
நம்மைச் சுற்றி நடக்கும் காரியங்களை அவதானித்து அதற்குரிய காரணிகளை உற்றுநோக்கி - அதை மீண்டும் மீண்டும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி - காரண - காரிய விதிகளை பிரகடனப்படுத்துவது விஞ்ஞான விதிமுறை. காரணங்களைத் தூண்டும்போது அதற்குரிய காரியங்கள் தாமாக நிகழ்கின்றன. இந்த காரண - காரிய சூத்திரம் விஞ்ஞானத்தை தாங்கும் ஒரு பலமான தூண்
30

நிர்வாணம்
ஆனால் விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டது மனித வாழ்க்கை. நாம் அன்றாம் பார்க்கும் கேட்கும் - நடாத்தும் எத்தனை எத்தனையோ பண்டிகைகள் - கொண்டாட்டங்கள் - சடங்குகள் காரண - காரிய விதிமுறைகளுக்கப்பாற்பட்டவை. காரண - காரிய விதிக்கு அப்பாற்பட்டு நிற்பதால் தான் தனி மனித வாழ்க்கை - சமூக வாழ்க்கை இங்கு அர்த்தம் பெறுகிறது - சுவை அடைகிறது இது தான் மனித வாழ்க்கையின் தனி சிறப்பு.
ஆனால் நாமோ காரண - காரிய விதிகளுக்கு கட்டுப் படாத - தனி மனித மனம் மட்டுமே சம்பந்தப்பட்ட எத்தனை எத்தனையோ விடயங்களை - தனிமனித மனத்தால் மட்டுமே அர்த்தம் பெறும் எத்தனை எத்தனையோ சடங்குகளை - பயம் கலந்த பக்தியுடனும் - கட்டாயப்படுத்தப்பட்ட கடமை உணர் வுடனும் - கிளிப்பிள்ளைகளைப் போல - சிரம் தாழ்த்தி செய்து கொண்டிருக்கிறோம்.
அது என்ன காரண - காரிய விதிகளுக்கு கட்டுப்படாத - தனிமனித மனம் மட்டுமே சம்பந்தப்பட்ட விடயங்கள்? இதோ ஒரு சில உதாரணங்கள்:
நேற்று நான் வீதியில் செல்லும் போது கல் தடுக்கி விழுந்தது ஒரு காரியம் - அதற்கு நான் கூறும் காரணம் - கந்தசஷ்டி விரதத்தை பாதியில் முறித்ததனால் முருகனுக்கு என் மீது ஏற்பட்ட கோபம்! கல் தடுக்கி விழுபவனெல்லாம் கந்தசஷ்டி விரதத்தை பாதியில் முறித்தவனுமல்ல - கல் தடுக்கி விழாதவர் களெல்லாம் கந்தசஷ்டி விரதத்தை முற்றாக கடைப்பிடித்தவர் களுமல்ல என்பதனால் - காரண - காரிய விதிகளுக்கு கட்டுப் படாத - தனிமனித மனம் மட்டுமே சம்பந்தப்பட்ட விடயம் இது.
எனது விவாகம் ஒரு வருடத்திலேயே விவாகரத்தில் முடிந்தது ஒரு காரியம் - அதற்கு நான் கூறும் காரணம் தாலிக் கொடியை மதிக்காமல் முதல் மாதத்திலேயே அதை அடைவு வைத்தது. விவாகரத்து செய்பவர்களெல்லாம் அடைவு கடைக்கு விஜயம் செய்தவர்களுமல்ல - தாம்பத்தியம் நடாத்துபவர் களெல்லாம் தாலி கட்டியவர்களுமல்ல என்பதனால் - காரண - காரிய விதிகளுக்கு கட்டுப்படாத - தனிமனித மனம் மட்டுமே சம்பந்தப்பட்ட விடயம் இது.
நேற்று எனது வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்யும் போது அடுத்த வீட்டு நாய் என்னைக் கடித்தது ஒரு காரியம்
3)

Page 18
டாக்டர் மரீதரன்
அட்டமியில் வீட்டிற்கு முதன் முதலாக குடியேறியது அதற்கு நான் கூறும் காரணம். அட்டமி தெரியாத ஆங்கிலேயர்களுக் கெல்லாம் நாய் கடிப்பமில்லை - அட்டமி தெரிந்த நமக்கெல் லாம் காளை முட்டாமல் விடுவதுமில்லை என்பதனால் - காரண - காரிய விதிகளுக்கு கட்டுப்படாத - தனிமனித மனம் மட்டுமே சம்பந்தப்பட்ட விடயம் இது.
“வெள்ளிக்கிழமை மதியம் பன்னிரண்டு மணிக்கும் ஒரு மணிக்கு மிடையில் நேரம் அமர்க்களமாயிருக்கு - புது வீடு குடி புகுதலை அந்த நேரமே வைத்துக்கொள்ளலாம் - அதன் பின்பு அட்டமி’ - பார்ப்பனர் கூறுகிறார் வீடு வாங்கிய கந்தசாமிக்கு!
உலகமே அழிந்தாலும் அட்டமிக்கு முன்பு எப்படியாவது குடி புகுதலை வைத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு - தன்னை வருத்தி - தன்னைச் சுற்றியுள்ளவர்களை வருத்தி ஏதேதோவெல்லாம் செய்கிறார் கந்தசாமி.
இலங்கையிலிருந்து இங்கிலாந்திற்கு வரும்போது சுப நேரம் பார்த்து நாம் விமானத்தில் ஏறவில்லை. இராகு காலம் பார்த்து நமது விமானம் புறப்படவில்லை. நமது வலது காலை எடுத்து வைத்து நாம் விமான நிலையத்தில் இறங்கவில்லை. அட்டமி பார்த்து நாம் அகதி அந்தஸ்து கேட்கவில்லை.
துண்டை காணோம் - துணியை காணோம்! இராகு பார்த்தாலென்ன - கேது சிரித்தாலென்ன நம்மை உள்ளே விட்டால் மட்டும் போதும்! என்று அந்நிய நாடு ஒன்றில் குடி புகுந்த நாம் - இன்று சிறிது வேரூன்றிய பின் - அதே நாட்டிற்குள் வீட்டை வாங்கி விட்டு - அந்த நாட்டிற்குள் இருக்கும் - வீட்டிற்குள் புகுவதற்குமுன் - இராகு பங்கு நிற்கிறான் - கேது என்ன சொல்கிறான் என்று கட்டாயம் நமக்குத் தெரிந் தாக வேண்டும் என்று அடம் பிடிக்கிறோம். அதன் அடிப் படையில் அமர்களமாக குடி புகுதல் சடங்கு வேறு செய்கி றோம் அப்படிச் செய்யாதவர்களை - கலை கலாச்சாரத்தை மறந்த சமூகத் துரோகிகள் என்று மறைவாக வேறுதிட்டுகிறோம்.
என்ன லாஜிக் இது - பரமசிவனையே குழப்பும் லாஜிக்! சிரிக்க முடிந்தால் சிரியுங்கள். நமது வாழ்க்கையை - நாம் செய்யும் கண்மூடித்தனமான சடங்குகளை அதற்கு சிலர் கூறும் அர்த்தங்களை -அதை நம்பும் நமது பித்துக்குளித்
32

நிர்வாணம்
தனமான மன அமைப்புகளை நினைத்து நினைத்து - சிவ மூலிகை புகைத்த சித்தனைப் போல - உண்மையை தரிசிக்கும் வரையில் சிரித்துக் கொண்டேயிருங்கள்.
சத்தியம் என்ற தலையை விடுத்து - சடங்கு என்ற வாலைப்பிடிப்பது தான் நமது இனத்தின் சாபக்கேடு.
இதனால் தான் - திருமண வாழ்க்கையில் அன்பை மறந்து விட்டு நகை வியாபாரி செய்த தாலியின் சுரையை மட்டும் இறுக்கமாக பூட்டிக் கொண்டிருக்கிறோம்! குறைகள் நிறைந்த மனத்துடன் மங்கல நாள் நிறைகுடத்திற்கு மாவிலைதேடி அலைகிறோம்! உணவைப் பற்றியே சதா காலம் உள்ளம் நினைத்திருக்க உபவாசம் இருக்கிறோம்! மொத்தத்தில் - சுளையை கோட்டை விட்டு விட்டு தோலை மட்டும் பற்றிக் கொண்டிருக்கிறோம்.
சடங்கு செய்தால் தான் ஒரு கிரகத்தை வழிப்படுத்த முடியுமென்றால் தொலைந்து போகட்டும் அந்தக் கிரகம். சடங்கு செய்தால் தான் அருளுவான் ஆண்டவன் என்றால் தொலைத்து விட வேண்டும் அந்த ஆண்டவனை. காரணம் - சடங்கு என்பதே வெறும் சடங்குதான்.
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம்.
அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம்.
அது ஒரு சத்தியம்.
OOO

Page 19
உள்ளத்தை மறந்த உடல்கள்
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்காக - தமிழர்களால் தமிழிலேயே நடாத்தப்படும் பெரும்பாலான வானொலி நிகழ்ச்சிகளில் - பத்திரிகைகளில் - தொலைக்காட்சி நிகழ்ச்சி களில், இன்று தவறாது இடம் பெறும் ஒரு விடயம் - மருத்துவம். நம்மவர்களும் இவற்றை உன்னிப்பாகக் கேட்கிறார்கள் - படிக் கிறார்கள் - பார்க்கிறார்கள். இவர்களின் பேச்சில் செய்கையில் இந்த மருத்துவ அறிவுரைகளின் பிரதிபலிப்புகள்.
“ஐயோ Aunty! ஏன் இந்த நண்டு - இறால் எல்லாம் வாங்கு கிறீர்கள்? சரியான கொலஸ்ட்ரோல்” எச்சரிக்கிறது ஒரு குரல்
"அக்கா! இந்த நல்லெண்ணையை - விட ஒலிவ் ஒயில் தானாம் Heart க்கு நல்லது”புத்தி கூறுகிறது இன்னொரு குரல்!
“மாமி! இவருக்கும் இந்த வருடத்துடன் நாற்பது வயதா கிறது - நாங்கள் இப்பொழுது red meat சாப்பிடுவதேயில்லை - சாப்பாட்டில் சரியான கவனம்’- போதிக்கிறது வேறொரு குரல்!
ஆஹா!ஆஹா! என்ன அறிவு! என்ன ஞானம்! எவ்வளவு புத்திசாலிகள்! எவ்வளவு சுகதேகிகள்!
ஆனால் ஒரு நிமிடம் உன்னிப்பாகக் கேட்டால் - தீர்க்க மாக அவதானித்தால் - எங்கோ - ஏதோ ஒரு இடத்தில் அபஸ்வரம் கேட்கிறதே! தப்புத்தாளம் விழுகிறதே!
“இளவயதில் ஏற்படும் மாரடைப்புநோய்இன்றுவெளிநாடு களில் வாழும் இலங்கையர்கள் பலரைப்பாதிக்கிறது”-மருத்துவ ஆராய்ச்சிகளின் ஏகோபித்த முடிவுகளில் இதுவும் ஒன்று.
எப்படிச் சாத்தியமாகும் இது? எங்கு நடக்கிறது தவறு? ஏன் நடக்கிறது இப்படி? இந்த அலசல் பதில் தேட முயல்கிறது.
34

நிர்வாணம்
பிக்கல்களும் பிடுங்கல்களும் நிறைந்த வீட்டிலிருந்து - மனக்கசப்புடனும் விரக்தியுடனும் அலுவலகம் செல்லும் @@ வனால் - மகிழ்ச்சியாக - உல்லாசமாக வேலை செய்ய முடியாது. அலுவலக நிர்வாகம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் அலுவலக கட்டடங்கள் எவ்வளவு நாகரீகமாக நிர்மாணிக்கப் பட்டிருந்தாலும் - அலுவலக தளபாடங்கள் எவ்வளவு சொகு சாக அமைக்கப்பட்டிருந்தாலும் - வீட்டிலிருந்து சோக மூட்டையை காவி வரும் ஒருவனால் அலுவலகத்தில் ஒரு போதும் சீராக வேலை செய்ய முடியாதது மட்டுமன்றி பாதிக்கப் பட்டவனின் மனக் கசப்பும் விரக்தியும் அலுவலகத்திலிருக்கும் மற்றவர்களையும் சிறிது சிறிதாக பற்றிக் கொள்ள ஆரம்பிக்கும், அன்றாடம் நாம் பார்க்கும் விடயம் இது.
இதுபோலவே - தேவையற்ற போட்டிகளும் -அநாவசிய மான விதிமுறைகளும் - துல்லியமான பாரபட்ச மனப்பான்மை களும் மலிந்திருக்கும் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவன் - அதி நவீன காரில் வேலையிலிருந்தும் வீட்டிற்கு திரும்பி வந்தாலும் - வீட்டு அலங்காரங்கள் எவ்வளவு சிறப்பாக அமைந்திருந்தாலும் - விலை உயர்ந்த ஆடம்பரப் பொருட்கள் வீட்டை நிறைத்திருந்தாலும் - அலுவலகத்திலிருந்தும் அழுக்கு மூட்டையை காவி வரும் ஒருவனால் - வீட்டில் ஒரு போதும் மனைவி மக்களுடன் மனதார ஒட்டி உறவாட முடியாதது மட்டுமன்றி - பாதிக்கப்பட்டவனின் மனக் கசப்பும் விரக்தியும் வீட்டிலிருக்கும் மற்றவர்களையும் சிறிது சிறிதாகப் பற்றிக் கொள்ள ஆரம்பிக்கும். அன்றாடம் நாம் பார்க்கும் விடயம் இது. நமது அலுவலக வாழ்க்கையும் வீட்டு வாழ்க்கையும் எப்படி ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றனவோ - எப்படி ஒன்றில் உருவாகுவது மற்றதிற்குச் சென்று அதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றதோ - எப்படி ஒன்றின் நிகழ்காலம் மற்றொன் றின் எதிர்காலமாக மாறுகின்றதோ - அது போலவே அப்படியே - மனித உடலும் மனித மனமும் - ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் - ஒன்றை ஒன்று பாதிக்கும் - மனிதன் என்னும் ஒரு முழுமையின் இரு வேறுபரிமாணங்கள்.
கடந்த காலத்தில் - தகுந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படாத நிலையில் - உடல் வேறு உள்ளம் வேறு இரண்டுமே.
Ao 5f, ,
இரு வேறு தன்மைகள் - என்று கூறு ப்ோட்டு விதி வகுத்திருந்த்
35

Page 20
டாக்டர் பூரீதரன்
மருத்துவ விஞ்ஞானம் - இந்த அரைகுறைக் கோட்பாட்டை கைவிட்டு இப்பொழுது பல வருடங்களாகின்றன.
எத்தனை எத்தனையோ ஆராய்ச்சிகள் - யார் யாருடையோ தேடல்கள் - எங்கெங்கோ விலக்கப்பட்டஇருள்கள் - இன்று ஏக மனதாகக் கூறும் ஒரு விடயம்
மனித உடலும் - மனித மனமும் - மனிதன் என்னும் சமுத்திரத்தின் இரு வேறு கரைகள். இந்தக் கரைகளுக்கு இடை யில் தான் மனித வாழ்க்கை பரிணமிக்கிறது. இரு கரைகளும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன - ஒன்றை ஒன்று பாதிக்கின்றன.
உடல் என்னும் ஒரு கரையில் ஏற்படும் உபாதைகள் உள்ளம் என்ற மறு கரையைத் தாக்குகின்றன என்று சொல்லித் தான் நமக்குத் தெரிய வேண்டியதில்லை. தலையில் வலி ஏற்பட்டதும் - வயிற்றில் அஜீரணம் தோன்றியதும் - நெஞ்சில் சளி அடைத்ததும் - சீறிச் சினப்பதும் - பொரிந்து தள்ளுவதும் - எரிந்து விழுவதும் நமக்கொன்றும் புதிதல்ல.
ஆனால் - ஒன்றும் ஒன்றும் இரண்டு - என்று வெகுவேக மாகக் கூறும் நமக்கு இரண்டிலிருந்து ஒன்றுபோனால் மிகுதி ஒன்று - என்று கூறுவதற்கு சிரமமாக இருக்கிறது - நம்ப முடியாமல் இருக்கிறது - சந்தேகம் வேறு தோன்றுகிறது.
உள்ளத்தில் ஏற்படும் உபாதைகள் - ஊனங்கள் - உடலைத் தாக்குவதை நாம் நம்ப மறுப்பதால் தான் - அதைக் கருத்தில் கொள்ள மறப்பதால் தான் - இங்குள்ள நம்மவர்கள் பலரின் வாழ்வில் இன்று அந்த அபஸ்வரம் கேட்கிறது - தப்புத்தாளம் விழுகிறது.
“இலண்டனில் பிறந்து வளரும் எனது பேரனுக்கு ஒரு சொல் தமிழ் தெரியாது - ஒரு தேவாரம் தெரியாது - リ@ திருக்குறள் தெரியாது - என்ன வளர்ப்பு இது? என்ன வாழ்க்கை இது இவை எதுவுமே தெரியாமல் இதுகளெல்லாம் வருங் காலத்தில் எப்படி வாழ்க்கை நடாத்தப் போகிறதுகள்?” - எப்படி எப்படியோ வாழப்போகும் - யார் யாருடையோ வாழ்க்கையை எண்ணி - உத்தரவாதம் எதுவுமில்லாத வருங்காலத்தை நினைத்து - இரவு பகலாகக் கவலைப்பட்டுக் கொண்டு - மனம் புழுங்கிக் கொண்டு - இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்காக அன்றாடம்
36

நிர்வாணம்
அரை டசின் மாத்திரைகளை விழுங்கிவிட்டு - எனது உடல் நலத்தில் நான் சரியான கவனம் - என்று பிதற்றுவதில் எது வித அர்த்தமுமில்லை.
“கேம்பிரிட்ஜில் வசிக்கும் எனது மகனும் மருமகளும் கந்தசஷ்டி விரதம் பிடிப்பதில்லை - சனியனுக்கு புரட்டாசியில் எதுவுமே எரிப்பதில்லை - நவராத்திரியில் பூஜை நடாத்துவ தில்லை - இதற்கெல்லாம் அந்தத் தெய்வம் இதுகளுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறதோ?” - ஒரு கப்பம் வசூலிப் பவனைப் பார்த்துப் பயப்படுவதுபோல படைத்தவனைப் பார்த்துப் பயந்து கொண்டு - இந்தப் பயத்தால் ஒடிப்போன தூக்கத்தை மீண்டும் வரவழைப்பதற்காக தூக்க மாத்திரை களை விழுங்கிவிட்டு - எனது உடல் நலத்தில் நான் சரியான கவனம் - என்று பிதற்றுவதில் எது வித அர்த்தமுமில்லை.
“என்னுடன் ஒன்றாகப் படித்தவன் - என்னை விட படிப்பில் மட்டமானவன் - என்னிடமே கேட்டுப் படித்து பரீட்சையில் சித்தி அடைந்தவனின் மகன் இன்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கற்கிறான்! எனது மகனுக் காக - எவ்வளவு பணம் டியூஷனுக்குச் செவழித்திருப்பேன் - அவன் படிப்பதற்காக எத்தனை நாள் அலுவலகத்திற்கு நான் லீவு போட்டிருப்பேன் - அந்தப் பிள்ளையாருக்கு எத்தனை அபிஷேகங்கள் நடாத்திருக்கிறேன். ஆனால் இன்று எனது மகன் இலண்டனில் உள்ள ஒரு உதவாத பல்கலைக்கழகத்தில் - ஒன்றுக்கும் உதவாத ஒரு மண்ணாங்கட்டி படிப்பு படிக் கிறான்” என்று அர்த்தமற்ற போட்டிகளாலும் தேவையற்ற பொறாமைகளினாலும் மனம் வெந்து கொண்டு - நீரிழிவு நோயைத் தடுப்பதற்காக சீனியில்லாமல் தேநீர் அருந்துவதில் எது வித அர்த்தமுமில்லை.
கணவனின் ஊதியத்தை - தகுதிகளை - கருத்தில் கொள் ளாமல் - ஆனந்தியின் கழுத்தில் அட்டியல் ஜொலிக்கிறது - நிர்மலாவின் காரில் குளிர் சாதனம் சில்லிடுகிறது - சந்திராவின் சுவரில் டி.வி பளபளக்கிறது - நமது வீட்டிலும் இவையெல் லாம் வேண்டும் என்று அந்த உயிரினத்தை இரவு பகலாக நச்சரித்து விட்டு - தொட்டதற்கெல்லாம் பொரிந்து தள்ளி விட்டு - பார்க்கும் பேதெல்லாம் சினந்து விட்டு - Aunty 67 gir னுடைய இவருக்கு நான் கொலஸ்டரோல் உள்ள சாப்பாடுகள்
37

Page 21
டாக்டர் பூரீதரன்
கொடுப்பதேயில்லை - ஒலிவ் Oil தவிர வேறெந்த Oilம் சாப்பாட்டிற்குப் பாவிப்பதில்லை என்று பிதற்றித் திரிவதில் அர்த்தமேயில்லை.
குரங்கிற்கு கள்ளைக் கொடுத்து - அதன் கையில் தடி யையும் கொடுத்தால் பார்க்குமிடமெல்லாம் அழிவு. இந்த அழிவுக்கு மூல காரணம் கள்ளுமல்ல - தடியுமல்ல குரங்கின் புத்தியே அழிவின் அடிப்படை. இது எப்படி நியாயப்படுத்தப் படுகிறதெனில் - அதே கள்ளும் அதே தடியும் ஒரு முதிர்ந்த ஞானியிடம் சென்றடையும் போது விளைவுகள் முற்றிலும் வேறானவை. இந்த வேறுபாட்டிற்கு மூல காரணம் ஞானியின் பக்குவம்.
நமது இனத்தின் - நமது சமூகத்தின் பெரும்பாலான உடல் கோளாறுகளின் - உபாதைகளின் மூல காரணம் - ஆதி மூலம் - நமது மனம். அந்த மனத்தினால் தான் பல சந்தர்ப்பங் களில் நமது உடல் கெடுகிறது - அங்கிருந்து தான் பெரும் பாலும் கோளாறுகள் உடலுக்கு பரவுகின்றன.
அர்த்தமற்ற போட்டிகள் - பொறாமைகள் - அன்றாடம் போடும் போலி வேடங்கள் - அளவற்ற ஆசைகள் - சாதி மத பாகுபாடுகள் - பித்துக்குளித்தனமான செய்கைகள் - அடுத்தவன் நன்றாக வாழ்வதை பொறுக்காத மனம் - கூட இருப்பவனுக்கு குழி பறிக்கும் குணம் - இப்படியான அக அழுக்குகள் கழுவப் பட்டு - அகம் புனிதமாக இருக்கும்போது - குதூகலித்து நடன மாடும் போது - இங்கு நமக்கு நரையில்லை - பிணியில்லை - மருத்துகளில்லை - மாத்திரைகளில்லை.
உடலை மறந்த உள்ளமும் வாழ்வதில்லை - உள்ளத்தை மறந்த உடலும் வாழ்வதில்லை.
நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களின்
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம். அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம், அது ஒரு சத்தியம்.
OOO
38

ஆன்மீகத்தின் மடியில் அஞஞானம்
(Dதம். ஒரு தனிமனிதனின் பார்வையை உருவாக்குவதில் ஒரு இனத்தின் பார்வை உருவாக்குவதில் - ஒரு நாட்டின் பார்வையை உருவாக்குவதில் - எண்ணற்ற காரணிகள் பங்கெடுத்துக் கொள்கின்றனவென்றாலும் - அவையெல்லா வற்றினுள்ளும் மிக முக்கிய இடத்தை வகிப்பது மதம்.
மதத்தைப் பற்றிய நமது பார்வை - நமது சுயமான சிந்த னையின் விளைவாக அமையும் போது - நமது சுய சிந்தனை யால் மாற்றி அமைக்கப்படும் போது - ஒரு தனி மனிதன் - ஒரு இனம் - ஒரு நாடு - இவை எல்லாமே ஒரு உன்னதமான வாழ்க் கையை வாழ முடியுமென்று - இங்கு வாழ்ந்து காட்டியவர்கள் ஒராயிரம் - வாழ்ந்து காட்டுபவர்களும் ஓராயிரம்.
ஒரு சிறு உதாரணம். “எழுந்து நில்லுங்கள். நிமிர்ந்து நில்லுங்கள். குட்டி நாய்களின் குரைத்தலைக் கண்டு அஞ்ச வேண்டாம். வானத்தே முழங்கும் இடிக்கும் அஞ்ச வேண்டாம்” என்று வீரத்துறவி விவேகானந்தரை உலகே கேட்கும் வண்ணம் கர்ஜிக்க வைத்தது இந்து மதம் கொடுத்த அவரது பார்வை ஒன்று மட்டுமே - உபநிடதங்கள் அளித்த ஊக்கம் மட்டுமே.
அதே சமயம் - யார் யாராலோ - ஏதேதோ சந்தர்ப்பங் களில் - சுயலாபத்திற்காக - சுயநலத்திற்காக - மதம் என்ற பெயரில் - தெய்வ வழிபாடு என்ற பெயரில் - நம்மீது என்றோ திணிக்கப்பட்ட எண்ணற்ற குப்பைகளை - இன்றும் திணிக்கப் படும் எண்ணற்ற குப்பைகளை - கேள்விகளேதுமின்றி - சுய சிந்தனையின்றி - அப்படியே நாம் அன்று ஏற்றுக்கொண்ட தனால் இன்றும் ஏற்றுக்கொள்வதனால் - இந்தக் குப்பைகள் நமக்குள் உருவாக்கிய பார்வை - அந்தத் தவறான பார்வை
39

Page 22
டாக்டர் பூரீதரன்
அன்றாட வாழ்வில் நமக்குத் தந்தது - தருவது - மனித வாழ்க்கையைப் பற்றிய ஒரு தவறான கண்ணோட்டம் - தெய் வத்தைப் பற்றிய ஒரு தப்பான மன அமைப்பு - அர்த்தமற்ற அச்சங்கள் - தேவையற்ற தயக்கங்கள் - நகைப்புக்குரிய ஏமாளித் தனம் - அர்த்தமற்ற பணச்செலவு - பயனற்ற பொருட் செலவு - தூக்கமற்ற இரவுகள் - அடுக்கிக் கொண்டே போகலாம். கண் களைச் சற்றுத் திறந்தால் - உதாரணம் தேவையில்லை இதற்கு.
இந்தக் கட்டுரையை எழுதும் எனது பார்வையையும்
இந்தக் கட்டுரையைப் படிக்கும் உங்களில் பெரும்பாலானோ ரினது பார்வைகளையும் உருவாக்கியதில் - இந்துமதம் ஒரு மிக முக்கிய பங்கை வகித்திருக்கிறது என்ற காரணத்திற்காக - அது எதைச் சொல்கிறது? - அதை நாம் எவ்வாறு விளங்கிக் கொண்டோம்? யார் இதை நமக்கு விளக்கினார்கள்? எதற்காக விளக்கினார்கள்? இந்த விளக்கங்கள் நமக்குள் உருவாக்கிய நமது பார்வைகள் எவ்வாறு நமது அன்றாட வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன? - என்பது போன்ற விடயங்களை சுருக்க மாக விளக்க முயல்கிறது இந்தக் கட்டுரை.
இந்து மதம். முதலும் முடிவுமற்ற அந்த முதல்வனைப் போல - அடியும் முடியும் காண முடியாத அந்த அருட்பெரும் ஜோதியைப் போல - வானையே மறைத்து நிற்கும் ஒரு மாபெரும் விருட்சத்தைப் போல - நதிகளெல்லாம் சங்கமித்த பின்பும் கரைகளைத் தாண்டாத ஒரு மாபெரும் சமுத்திரத் தைப் போல - மதங்களுக்குள் ஒரு மதமாக - அதே சமயம் - மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு சத்தியமாக ஸ்தாபிக்கப்படாத ஒரு மதமாக - ஸ்தாபகர்களற்ற 6رe (B5 மதமாக - காலத்தைக் கடந்து - காலத்தை வென்று நிற்கும் - ஒரு உன்னதமான தர்மம் - சநாதன தர்மம் - இந்து மதம். தயக்கமெதுவும் வேண்டாம் இதை ஏற்றுக் கொள்வதற்கு. காரணம் - சான்றோரின் வார்த்தைகள் இவை - கற்றோரின் முடிவுகள் இவை - அவதாரங்களின் அறிவுரைகள் இவை.
என்ன சொல்கிறது இந்த மாபெரும் தர்மம்?
மனித புத்திக்கு விளங்காத - மனித புத்தியால் புரிந்து கொள்ள முடியாத - முதலில்லாத - முடிவில்லாத - எங்கும் நிறைந்த - எல்லாம் வல்ல - எல்லாம் அறிந்த - அணுவுக்குள்
40

நிர்வாணம்
அணுவாய் - அப்பாலுக்கு அப்பாலாய் விளங்கும் பிரம்மம் ஒன்று மட்டுமே இங்கு நித்தியமான சத்தியம்.
இந்தப் பிரபஞ்சமும் அதில் நாம் காணும் எண்ணற்ற உயிரினங்களும் - அந்தப் பூரணமான பிரம்மத்தின் வெவ்வேறு தோற்றங்களே - வெவ்வேறு வெளிப்பாடுகளே. கடலில் தோன்றும் அலைகள் கடலிலேயே வாழ்ந்து - கடலிலேயே சங்கமமாவதுபோல - பிரபஞ்ச லீலையின் காரணமாக பிரம்மத்திலிருந்து உருவாகும் பூரணங்கள் - தமது அறியாமை யினால் - தாம் யாரென்று அறியாமல் - பிரம்மத்திலேயே வாழ்ந்து - பிரம்மத்திலேயே சங்கமமாகின்றன. ஸம்சாரசாகரம் என்னும் இந்தச் சிக்கலான வட்டம் - மனிதர்கள் புரியும் கர்மத்தால் உந்தப்பட்டு கால எல்லைகளைத் தாண்டி நிற்கும் ஒரு நித்திய பிரசன்னம்.
உபநிடதங்களின் சாரம் இதுதான் - வேதாந்தத்தின் சாரம் இதுதான் - கீதையின் சாரம் இதுதான். மொத்தத்தில் இதுதான் இந்து மதத்தின் சாரம். இதைப் பல தடவைகள் படித்து - இதன் அர்த்தங்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் எவருமே - விஞ்ஞானிகளுக்கெல்லாம் விஞ்ஞானியான - அந்த மாபெரும் விஞ்ஞானி அல்பேர்ட் ஜன்ஸ்டைனின் பின்வரும் வார்த்தை களைப் படிக்கும்போது - சநாதனதர்மத்தின் விஸ்வரூபத்தில் சொக்கிப் போவார்கள்.
‘விஞ்ஞானிகளாகிய நாம் பிரபஞ்சம் என்று அழைக்கும் ஒரு மாபெரும் சக்தியின் ஒரு அம்சமே மனிதன். தனது நினைவு களாலும் - தனது உணர்வுகளாலும் தன்னைத் தானே அறியும் மனதின் - தனது அறியாமையால் - தானே பிரபஞ்சம் என்று அறியாமல் - தன்னைப் பிரபஞ்சத்திலிருந்து வேறுபடுத்தி - ஒரு புறம்பான தனியாகக் கருதிக் கொள்கிறான். இதுதான் அவனின் சிறை. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் இந்தச் சிறையி லிருந்து விடுபட்டு - தன்னைத் தானே பிரபஞ்சமாக உணர முயற்சிக்க வேண்டும்.”
இந்த மாபெரும் விஞ்ஞானியின் கருத்துக்கும் - இந்து மதத்தின் சாரத்திற்கும் எது வித வேறுபாடுமில்லை என்பதனால் தான் - இன்று அணுவைக் குடையும் அதி சிறந்த விஞ்ஞானி களில் பலர் சிவதாண்டவத்தின் அர்த்தத்தைப் படித்துக்
4.

Page 23
டாக்டர் பூரீதரன்
கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஆதாரம் கூறும் நூல்கள் ஏராளம். sgy6ugbgpygir ge Gölgy. The Tao of Physics: By Fritjof Capra. விற்பனையில் கோடிகள் பல தாண்டிய நூல் இது.
அதே சமயம் - பெளதீக விஞ்ஞானிகளுக்கு உபதேசிக்கும் இந்த மாபெரும் மதத்தைப் பற்றி - ஆழ்ந்து படிப்பவர்களை அதிசயிக்க வைக்கும் இந்த உன்னத மதத்தைப் பற்றி புத்தி ஜீவிகளைப் பிரமிக்க வைக்கும் இந்த அற்புத மதத்தைப் பற்றி - அந்த மதத்தையே கடைப்பிடிக்கும் நம்மில் பலருக்குத் தெரிந்த தெல்லாம் - அன்றாடம் நாம் பார்ப்பதெல்லாம் - ஒராயிரம் தெய்வங்கள் - ஓராயிரம் வழிபாட்டு முறைகள் - ஒராயிரம் சடங்குகள் - ஒராயிரம் பயமுறுத்தல்கள் - ஓராயிரம் சாந்திகள்
ஓராயிரம் பரிகாரங்கள்!
எங்கிருந்து வந்தன இந்தச் சாபக்கேடுகள்?எப்படிச் சிக்குண்டோம் இந்த பாழும் வலையினுள்?
இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காக ஒரு சிறு விளக்கம்.
இலண்டன் போன்ற மேற்கத்திய நாடுகளில் - ஆங்கிலத்தில் ஒளிபரப்பப்படும் ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உன்னிப்பாக அவதானித்தால் - நமது இரத்த அழுத்தத்தை அதிகமாக்கும் எத்தனையோ விடயங்களை அவதானிக்கலாம்.
உதாரணமாக - இந்திய சம்பந்தமான ஒரு விடயத்தை ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் ஒரு நிகழ்ச்சியின் மத்தியில் சொல்வதானால் - இந்தியாவைப் பிரதிபலிப்பதற்காக ஒளி பரப்பாளர்கள் தெரிந்தெடுக்கும் வழமையான ஒரு சில காட்சிகள்: சன நெருக்கம் நிறைந்த நகர வீதியொன்றின் நடுவில் ஆடி அசைந்து செல்லும் ஒரு யானை - வீதியோரத்தில் வித்தை காட்டும் ஒரு குரங்காட்டி - உணவு தேடி குப்பைத் தொட்டி யைக் கிளறும் எலும்பும் தோலுமாக சிறுவர்கள்!
இலண்டன் மாநகரின் ஒரு சில புகையிரத நிலையங்களுக் கருகில் - ஒரு சிலர் பிச்சையெடுக்கம் காட்சிகள் எவ்வாறு இலண்டனை முழுமையாகப் பிரதிபலிப்பதில்லையோ - அது போலவே - யானையும் குரங்காட்டியும் இந்தியாவை முழுமை யாகப் பிரதிபலிக்கவில்லையென்பது இங்குள்ள சிலருக்கு மட்டுமே தெரியும் - பலருக்குத் தெரியாது.
42

நிர்வாணம்
இந்தியாவைப் போல பரந்து விரிந்த ஒரு நாட்டைப் பற்றி - எத்தனை எத்தனையோ அர்த்தமுள்ள - பயனுள்ள - நியாய மான - விடயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வாய்ப் பிருந்தும் - குரங்காட்டியையும் பிச்சைக்காரர்களையும் மட்டுமே கோளாறு படைத்த மேற்கு நாட்டு தொலைதொடர்புச் சாதனங்கள் மக்களின் மீது திணித்ததால் - எவ்வாறு இங்குள்ள பலரின் இந்தியாவைப் பற்றிய பார்வை ஒரு முழுமையற்ற பார்வையோ - ஒரு தப்பான பார்வையோ - அது போலவே - அப்படியே - இந்து மதத்தைப் போல ஒரு மாபெரும் மதத்தினுள் - உலகம் வியக்கும் தத்துவங்கள் ஆயிரம் இருந்தும் - மனச்சாந்தி கொடுக்கும் உபதேசங்கள் ஆயிரம் இருந்தும் - வாழ்க்கைக்கு வழிகாட்டும் பாதைகள் ஆயிரம் இருந்தும் - சுயலாபத்திற்காக சுயநலத்திற்காக - திரிக்கப்பட்ட சடங்குகளையும் - வித்தை காட்டும் திருவிழாக்களையும் மட்டுமே நம்மைச் சுற்றியுள்ள பல பல காரணிகள் தெரிந்தே தெரிவு செய்து நம்மீது திணித்ததனால் - திணிப்பதனால் - நமது மதத்தைப் பற்றிய நம்மில் பலரது பார்வையும் ஒரு முழுமையற்ற பார்வையே - ஒரு தப்பான பார்வையே.
இந்து மதத்தின் முகத்தில் கரிபூசும் இந்தக் காரணிகளை ஆராயும் எந்த நூலை எடுத்துக்கொண்டாலும் - யாருடைய ஆய்வுளைப் படித்தாலும் - அவைகள் கூறும் அந்தப் பல பல காரணிகளுள் ஒரு முக்கிய இடத்தை வகிப்பது பிராமணியம்.
இங்கு அழுத்தமாகச்சொல்லப்படவேண்டிய ஒரு விடயம்: பிராமணியம் வேறு பிராமணியத்தின் பிரதிநிதிகள் வேறு - பிராமணர்கள் வேறு. அடுத்து வரும் கட்டுரைகள் இவற்றைத் தெளிவாக விளக்கும்.
சுருக்கமாகச் சொல்வதானால் - பிராமணியம் என்பது வெறுக்கத்தக்க ஒரு வகை மன அமைப்பு - பிராமணர்கள் என்பவர்கள் மனித வடிவில் வலம் வரும் தெய்வங்கள். பிராமணியம் என்பது பதிவு செய்யப்படாத ஒரு வர்த்தக ஸ்தாபனம் - பிராமணர்கள் என்பவர்கள் கடைந்தெடுத்த ஞானிகள். பிராமணியத்தின் கரு அசிங்கமான சுயநலம் பிராமணர்களின் கரு அப்பழுக்கற்ற மக்கள் நலம்.
“இங்கிருப்பதும் பூரணம் - அங்கிருப்பதும் பூரணம் - பூரணத்திலிருந்து தான் பூரணம் வந்தது” - என்று சொல்லும்
43

Page 24
டாக்டர் பூரீதரன்
இந்து மதத்தின் பரிமாணத்தை தந்திரமாக மறைப்பது பிராமணியம். “நீயே அது’ - என்று சொல்லும் இந்து மதத்தின் பரிமாணத்தை கபடமாக மறைப்பது பிராமணியம். "ஆத்மனும் பிரம்மமும் இரண்டல்ல - ஒன்று தான்” - என்று சொல்லும் இந்து மதத்தின் பரிமாணத்தை முற்றாக மறைப்பதுவும் பிராமணியம் தான்.
அது மட்டுமல்ல - பிரம்மத்தைப் பற்றிய பயத்தை மக்கள் மனதில் விதைத்தது பிராமணியம். பிரம்மத்தைப் பற்றிய அறியாமையை மக்கள் மனதில் வளர்த்தது பிராமணியம். பிரம்மத் திற்கு மக்களைக் கப்பம் கட்ட வைத்தது பிராமணியம். சடங்குகள் தான் சமயம் என்ற கருத்தை மக்கள் மனதில் புகுத்தியது பிராமணியம்.
“பொது மக்களின் மனதில் எவ்வளவு தூரத்திற்கு தெய்வத்தைப் பற்றிய பயமும் அறியாமையும் நிலவுகிறதோ - அவ்வளவு தூரத்திற்கு இங்கு மத குருமார்களின் வாழ்க்கையும் வாழ்க்கை முறைகளும் சிறப்பாக அமைகின்றன” - என்ற ஒரு மாமனிதரின் வாக்கு - பொதுவாக எல்லா மதங்களுக்குமே ஏதோ ஒரு பரிமாணத்தில் பொருந்துகிறது என்றாலும் - பிராமணியத்திற்கு மட்டும் அது கன கச்சிதமாகப் பொருந்துகிறது.
“சநாதனதர்மம் என்னும் பாற்கடலில் விழுந்த பிராமணியம் என்னும் நஞ்சினால் அந்தப் பாற்கடல் இன்று அணுகு வாரின்றிப் பரிதவிக்கிறது’ - இந்த வசனம் மட்டுமே எனது ஆக்கம். ஆனால் இந்தக் கருத்து - கடந்த இரண்டாயிரத்தி ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மாமனிதர்கள் பலராலும் ஆதரிக்கப்பட்ட - அங்கீகரிக்கப்பட்ட ஒரு கருத்து.
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம். அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம். அது ஒரு சத்தியம்.
OO
44

சிரிப்பை மறந்த மனிதர்கள்
அந்தி சாயும் பொழுதில் - மாந்தோப்பிலிருந்து வரும் அந்தக் குயிலின் பாட்டு ஆனந்தம். மேகம் கறுக்கும் வேளையில் - மலையடி வாரத்தில் தோகை விரித்து ஆடும் அந்த மயிலின் நடனம் அற்புதம், எகிறிக் குதிக்கும் அந்த மானை - கச்சிதமாகப் பாய்ந்து கவ்வும் அந்த வேங்கையின் லாவகம் அதிசயம்.
குயிலுக்குப் பாட்டு - மயிலுக்கு ஆட்டம் - வேங்கைக்குப் பாய்ச்சல் - இப்படி இப்படியே - தான் படைத்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் - எதை எதையோ - ஏதேதோ காரணத்திற் காக ஈந்த இயற்கை - சிரிப்பு என்ற அற்புதத்தை - அருமருந்தை மனிதனுக்கு மட்டுமே அளித்திருக்கிறது. இயற்கை சிருஷ்டித்த உயிரினங்களிலேயே சிரிக்கத் தெரிந்த ஒரே ஒரு உயிரினம் மனிதன் தான்.
உடலை உலுப்பி - உள்ளத்தை மலர வைத்து - மூளையின் அதிர்வலைகளை அமைதியாக்கி - இதயத்தின் சுமைகளைக் குறைத்து - தசைகளைத் தளர வைத்து - உடலின் இரசாயணத் தையே நமக்குச் சாதகமாக மாற்றும் - நம்மிலிருந்து வெடித்துச் சிதறும் அந்தச் சிரிப்பு - இயற்கை மனிதனுக்கு அளித்த ஒரு மாபெரும் மருந்து. சிரித்துக் கொண்டேயிருப்பவனை நரை அணுகுவதில்லை - பிணி நெருங்குவதில்லை. வாய்விட்டுச் சிரிப் பவன் கவலைப்படுவதில்லை - மரணத்தைக் கண்டு அஞ்சுவ தில்லை. அங்கும் குலுங்கச் சிரிப்பவனுக்கு தூக்க மாத்திரைகள் தேவையில்லை - வைத்தியரின் துணை அவசியமில்லை.
ஊரை மறந்து - உலகத்தை மறந்து - தன்னையே மறந்து சிரிக்கும் அந்தச் சிரிப்பு ஒரு மாபெரும் மருந்து மட்டுமல்ல - அது ஒரு உன்னத தியானம் - ஒரு மோனம். வாய்விட்டுச் சிரிக்கும்
45

Page 25
டாக்டர் பூநீதரன்
போது நமது உடல் மறைகிறது - உள்ளம் மறைகிறது. சிரிப்பு - சிரிப்பவன் இரண்டுமே ஒன்றாகி பிரபஞ்ச சூத்திரம் புலனாகிறது. அது சுயதரிசனத்தின் வாசல் படி எண்ணற்ற யோகிகள் - ஞானிகள் - சிரிப்பை ஒருவகைத் தியானமாகப் போதித்ததற்கு ஆதாரங்கள் ஏராளம். உபாதைகளுக்கு மருந்தாக - கவலை களுக்கு எதிரியாக - தியானத்தின் ஒரு வடிவாக சுய தரிசனத் தின் வாசற்படியாக - இயற்கை கொடுத்த அந்தச் சிரிப்பை நம்மில் பெரும்பாலானோர் மறந்து எத்தனை எத்தனையோ வருடங்களாகின்றன.
இயற்கை கொடுத்த எதையுமே - எதுவுமே மறக்கவில்லை. குயில் பாட மறக்கவில்லை மயில் ஆட மறக்கவில்லை - வேங்கை பாய மறக்கவில்லை. ஆனால் நாம் மட்டும் இயற்கை கொடுத்த அந்தச் சிரிப்பை - குழந்தைப் பருவத்ததைத் தாண்டியதுமே மறந்து விட்டோம்.
அன்றாடம் நாம் எல்லோருமே சிரிக்கிறோம். ஆனால் அது சிரிப்பல்ல. அது நடிப்பு. நமது சுயரூபத்தை மறைக்க - நமது மன அழுக்குகளை மறைக்க - நம்மைச் சுற்றியிருப்பவர் களை ஏமாற்ற - உதடுகளை அசைத்து - பற்களைச் சிறிது நேரம் காட்ட முயலும் முயற்சிக்குப் பெயர் சிரிப்பல்ல.
நம்மவர்கள் கூடும் எந்த ஒரு பொது இடத்திற்கு - நிகழ்ச் சிக்குச் சென்றாலும் - ஒரு அபிஷேகம் - ஒரு அரங்கேற்றம் - ஒரு இசை நிகழ்ச்சி - ஒரு நாடகம் - ஒரு பிரசங்கம் - அங்குள்ள நம்மவர்களில் பெரும்பாலானோர் - சிரிக்கத் தெரியாத மனிதர் களாக - உதடுகளை மட்டுமே அசைத்துக் கொண்டு - எதையோ பறி கொடுத்தவர்கள் போல - சதா நேரமும் எதைப் பற்றியோ தீவிரமாக சிந்தித்துக் கொண்டு - முகத்தைத் தொங்கப் போட்ட வண்ணம் - மிகவும் "சீரியஸாக” - மிகவும் இறுக்கமாக இருக் கிறார்கள்.
பரமனையே பயப்படுத்தும் இறுக்கம் நம்மவர்களின் இந்த இறுக்கம்!
சற்று உற்று நோக்கினால் - குருஷேத்திரத்தில் பார்த்திபனின் ரதத்தை நாளை இவர் தான் ஒட்ட வேண்டும் என்று பரமனால் பணிக்கப்பட்டதைப் போலவும் - செவ்வாய் கிரகத்திற்கு முதன் முதலாகச் செல்ல இருக்கும் செய்மதியை இயக்குவதற்கு
46

நிர்வாணம்
அரசாங்கத்தினால் பலவந்தமாகக் கட்டளையிடப்பட்டது போலவும் - பக்தர்கள் பலரின் முன்னிலையில் சிவலிங்கம் சிருஷ்டிக்கப்போகும் சாமியாரைப் போலவும் - அவ்வளவு இறுக்கமாக - அவ்வளவு அழுத்தமாக - அவ்வளவு "சீரியஸாக” இருக்கிறார்கள். அப்படி என்ன கவலை நம்மவர்களுக்கு? ஏன் இந்த இறுக்கம்? எதற்காக இந்த அழுத்தம்?
இந்த இறுக்கத்தின் - அழுத்தத்தின் மூலகாரணம் நமது அறியாமை. பிரபஞ்ச விதிகளைப் பற்றிய - நாம் வாழும் இந்த உலகைப் பற்றிய - நமது வாழ்க்கை நியதிகளைப் பற்றிய நமது அறியாமையின் மறுவடிவே வாய்விட்டுச் சிரிக்கத் தெரியாத நமது முகங்கள்.
கீதையின் வடிவில் பரமன் சொல்கிறான் - கேட்கிறான்
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது - எது நடக் கிறதோ அது நன்றாகவே நடக்கிறது- எது நடக்கஇருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். எதற்காக நீஅழுகிறாய்?
கண்களை மூடி - சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து - பரமனின் விளக்கத்தை தியானித்தால் - அப்பொழுது ஒடும் நமது இறுக்கம் - அதில் தோன்றும் நமக்கு சிரிப்பு.
நான் பிறக்க முன்னும் இந்த உலகம் இருந்தது - சீராகவே இயங்கியது. நான் இறந்த பின்பும் இந்த உலகம் இருக்கும் - சீராகவே இயங்கும். இடையில் வந்த நான் இங்கு எதைச் செய்து விடப் போகிறேன்? வரும் பொழுது ஆடையின்றி வந்த நான் - போகும் பொழுதும் அப்படித்தான் போகப் போகிறேன். இடையில் அமைந்த இந்த வாழ்க்கை அந்த இயற்கை ஈந்த கொடை அதை உல்லாசமாக - மகிழ்ச்சியாக - பண்டிகையாக - கொண்டாடாமல் - அனுபவிக்காமல் எதற்காக அழுது வடிகிறேன்? எதற்காக கவலைப்படுகிறேன்? கவலைப்பட்டு என்னால் இங்கு எதைத்தான் செய்துவிட முடியும்?
கீதையின் வடிவில் பரமனின் பிரகடனம்
நீஎதை எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.நீ எதைக் கொடுத்தாயோ அது இங்கிருந்தே கொடுக்கப்பட்டது. இன்று உன்னுடையதுநாளை மற்றொருவருடையதாகிறது.

Page 26
டாக்டர் பூரீதரன்
அப்பா - அம்மா - மனைவி - பிள்ளைகள் - வீடு - தோட்டம் - கார் - பட்டம் - பதவி - எல்லாமே நான் உலகிற்கு வந்த பின் உருவாக்கிய வெறும் பந்தங்கள் - சொல்லித் தெரிந்த பந்தங்கள் - கேட்டுப் புரிந்த பந்தங்கள் - வெறும் சொற்கள் - நான் மறைந்ததும் தானாக மறையும் சொற்கள்.
எதுவுமே புரியாமல் - புரிய மறுத்து - வாழ்க்கையின் சாரதி நான்தான் என்று முட்டாள்த்தனமாக நினைத்து - நான் இல்லாவிட்டால் என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு வாழ்க்கையே இல்லை என்று நினைத்து - நான் போகும்போது நான் சேர்த்த இத்தனை பொருட்களும் கப்பலில் அனுப்பப்படும் என்பது போல - தேவையற்ற எத்தனை எத்தனையோ சுமைகளை தலையில் ஏற்றிக் கொண்டு - பொதிமாடுகள் போல உலகில் உலவாமல் - முகத்தை 'உம்' என்று வைத்துக் கொள்ளாமல் - படைத்தவன் செலுத்துகிறான் எனது ரதத்தை என்ற உண்மையை நினைத்து - நமது வாழ்க்கையை ஒரு கொண் டாட்டமாகக் கருதினால் - அப்பொழுது பொங்கும் அந்தச் சிரிப்பு. அதுதான் இயற்கை நமக்கு ஈந்த கொடை மாறிய நமது சிந்தனையுடன் வெடித்துக் கிளம்பும் அந்தச் சிரிப்பு - உண்மையை அறிந்து விட்ட - சத்தியத்தைத் தரிசித்து விட்ட ஞானச்சிரிப்பு.
அந்தச் சிந்தனை மட்டும் நமக்கு வந்துவிட்ட்ால் - அந்தப் பக்குவம் மட்டும் நமக்குக் கிட்டிவிட்டால் - இங்கு நடக்கும் எல்லாமே சிரிப்பு - எல்லோருமே சிரிப்பு - எப்போதுமே சிரிப்பு. நாம் செய்யும் அத்தனையும் வேடிக்கை - நம்மைச் சுற்றி நடப்பவை யாவும் வேடிக்கை.
புரியவில்லை! இதோ ஒரு உதாரணம்:
எல்லைகளற்றுப் பரந்து கிடக்கிறது ஆதி அந்தமற்ற பிரபஞ்சம் - அதில் ஒரு மிகச் சிறிய கோளமாக மிதக்கிறது. நாம் வாழும் இந்தப் பூமி - அதில் எங்கோ ஒரு சிறிய இடத்தில் நாம் இலங்கை என்று பெயரிட்ட ஒரு சிறு தீவு - அதற்குள் ஒரு சிறிய யாழ்ப்பாணம் - யாழ்ப்பாணத்திற்குள் ஒரு அச்சுவேலி - அங்கே - இரு மனிதர்கள் - வேலுப்பிள்ளையும் சுப்பிரமணிய மும் சண்டையிடுகிறார்கள்! சண்டையோ சண்டை - அப்படி ஒரு சண்டை என்ன சண்டை? எதற்காகச் சண்டை?
48

நிர்வாணம்
இருவரின் காணிக்கும் நடுவில் - இடையில் வளர்ந்து வேப்ப மரத்தை விலக்கி வேலி அடைப்பதா? அல்லது உள்ளடக்கி வேலி அடைப்பதா?
ஊர்ப் பெரியவர்களின் முடிவு: மரம் இருவருக்கும் சொந்தம். எனவே வேலி மரத்தின் இரு பக்கத்திலும் - மரத்தை முட்டியவாறு - தொடராமல் இரு துண்டுகளாக - இரு புறமும் நிற்க வேண்டும்.
இருபது வருடங்களின் பின்பு - இன்று - வேலுப்பிள்ளை மண்ணோடு மண்ணாகிவிட்டார் சுப்பிரமணியம் சாம்ப லோடு சாம்பலாகி விட்டார். காணியில்லை - வேலியில்லை. வேப்பமரம் மட்டும் இன்னும் நிற்கிறது.
சிரிப்பு வரவில்லை! நினைத்து நினைத்துச் சிரியுங்கள். நமக்குள் இருக்கும் அந்த எண்ணற்ற வேலுப்பிள்ளைகளை நினைத்து - நமக்குள் இருக்கும் கணக்கற்ற அந்தச் சுப்பிர மணியங்களை நினைத்து நினைத்து சிரியுங்கள்.
இதுதான் நாம் மறந்து விட்ட சிரிப்பு - இதுதான் இயற்கை நமக்குக் கொடுத்த சிரிப்பு. இப்பொழுது நமக்கு நரையில்லை பிணியில்லை - அச்சமில்லை - ஆணவமில்லை.
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம். அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம். அது ஒரு சத்தியம்.
OOO

Page 27
போட்டு முடித்த கணக்குகள்
தியேகத்தில் இன்று சமாதானப் பேச்சு வார்த்தைகள். வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் மனங்களில் இன்று சுரக்க ஆரம்பித்திருக்கிறது ஒரு புதிய நம்பிக்கை ஊற்று. இக்கரையில் இப்பொழுது இருப்பவர்களுக்குப் பச்சையாகத் தெரிய ஆரம்பிக்கும் அக்கரையில் முளைக்கத் தொடங்குகிறது ஒரு விடிவெள்ளி.
அதே சமயம் - கடந்த இருபது வருடங்களாக - பிறந்த நாட்டை மறக்கவும் முடியாமல் - புகுந்த நாட்டை ஏற்கவும் முடியாமல் - அங்குமின்றி இங்குமின்றி - திரிசங்கு வாழ்க்கை வாழும் நம்மில் கணிசமான ஒரு தொகையினருக்கு - இன்று - ஆப்பிழுத்த குரங்கின் நிலை.
காரணம் - நம்மவர்களில் பலருக்கு அக்கரைக்குச் செல் வதற்கு அடிமனதில் ஒரு சபலம். ஆனால் இந்தச் சபலத்தை முளையிலேயே கிள்ளியெறியும் காரணங்கள் ஆயிரமாயிரம் இக்கரையில். புறப்படவும் முடியாமல் - வேரூண்டவும் மன மில்லாமல் தவிக்கும் உள்ளங்கள் பலவற்றை அன்றாடம் பார்க்கிறோம் - சந்திக்கிறோம்.
தவிக்கும் இந்த உள்ளங்களின் தனிப்பட்ட காரணங்கள் தனிப்பட்டவை - நமக்குத் தேவையற்றவை. ஆனால் - இங்கு நாற்பது வயதைத் தாண்டியவர்கள் - சிறிது வேகமாக நடந் தால் மூச்சு வாங்கும் வயதை எட்டியவர்கள் - ஏகமனதாகக் கூறும் பொதுவான பல காரணங்களுள் ஒன்று - அந்த ஒன்றே ஒன்று மட்டும் - கீறல் விழுந்த இசைத்தட்டுப் போல மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது.
50

நிர்வாணம்
“என்ன இருந்தாலும் எங்களுக்கும் வயதாகிக் கொண்டே போகிறது - ஏற்கனவே மருந்து மாத்திரைகளுடன்தான் இங்கு வாழ்கிறோம் - இங்கு இருக்கும் இந்த மருத்துவ வசதிகளும் மருந்து வகைகளும் அங்கு கிடைக்குமா என்பது சந்தேகம் - அதை நினைத்தால் தான் போவதற்கு சிறிது தயக்கமாக இருக்கிறது.”
எடுத்த எடுப்பில் நோக்கும் போது -நியாயமான - நீதியான காரணம்.
ஏனெனில் - சிவ மூலிகையிடம் தங்களைத் தாங்கவோ தொலைக்கும் அந்தச் சித்தர்களைப்போல - பக்தர்களின் பக்தியில் தன்னைத் தானே தொலைக்கும் அந்தப் பரமனைப் போல - மாதவியின் வீட்டில் தன்னைத் தானே தொலைத்த அந்தக் கோவலனைப் போல - மருத்துவ விஞ்ஞானம் படைத் திருக்கும் எண்ணற்ற மாத்திரைகளிடம் தங்களைத் தாங்களே தொலைத்திருக்கிறார்கள் இன்று நம்மவர்களில் பலர்.
அன்றாடம் பார்கிறோம் - சந்திக்கிறோம். உணவு அருந்து வதற்கு முன் - உணவு அருந்தும் பொழுது - உணவு அருந்திய பின் - அலுவலகத்திற்கு செல்வதற்கு முன் - அலுவலகத்தில் - அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் - தூங்குவதற்கு முன் - தூங்கி எழுந்தபின் - மாத்திரைகள் - மாத்திரைகள். இது தவிர - தலைவலிக்கு மாத்திரை - வயிற்றுவலிக்கு மாத்திரை - பசிப் பதற்கு மாத்திரை - பசிக்காமலிப்பதற்கு மாத்திரை - இச்சைக்கு மாத்திரை - இசைவதற்கு மாத்திரை - இசைப்பதற்கு மாத்திரை. இப்படியாக - எதற்குமே மாத்திரைகள் - எல்லாவற் றிற்குமே மாத்திரைகள், மாத்திரைகள்தான் இங்கு நம்மில் பலரை வாழ வைக்கின்றன. மாத்திரைகளை நம்பியே இன்று நம்மில் பலர் வாழ்கிறோம்.
இதனால் தான் - இப்படி அடிமைப்பட்டு விட்டதால் தான் - இந்த நாட்டின் மீது நமக்கு ஒரு மோகம் - பயம் கலந்த பக்தி - மரியாதை. இதனால் தான் - அக்கரைக்குச் செல்வதற்கு ஒரு தயக்கம் - பயம் - சந்தேகம்.
ஆனால் - சிறிது சிந்தித்தால் - இக்கரையில் நம்மை அடிமைப்படுத்திய இந்த மாத்திரைகள் மருத்துவ வசதிகள் -
5

Page 28
டாக்டர் பூரீதரன்
மருத்துவர்கள் - இவை பற்றிய நமது பார்வை ஒரு குறைபட்ட பார்வை - ஒற்றைக்கண் பார்வை - யானை பார்த்த அந்தக் குருடர் களின் பார்வை.
பார்வை என்று வந்து விட்டால் - பார்ப்பது என்று புறப்பட்டு விட்டால் - எல்லாவற்றையும் தான் பார்க்க வேண்டும் - எல்லாக் கோணங்களிலிருந்தும் தான் பார்க்க வேண்டும் பார்ப்போம்.
பார்ப்பதை இலகுவாக்குவதற்காக இதோ குட்டிக் கதை.
அன்று சனிக்கிழமை. நேரம் இரவு பன்னிரண்டு மணி. மாடியில் அமைந்திருக்கும் தனது அறையில் - சுகமாக குறட்டை விட்டுத் தூங்கும் நித்திரைப் பிரியன் சுகந்தனின் தூக்கத்தைக் கலக்கிறது தெருவையே அதிர வைக்கும் அவனது நாயின் குரைப்பு. படுக்கையில் புரண்படியே நாயை அதட்டி மேலே அழைத்து - இரண்டு உதை கொடுத்து - அடுத்த அறையில் பூட்டிய பின் - தூக்கத்தைத் தொடர்ந்தான் சுகந்தன். தூக்கத்தைக் கெடுக்கும் எதையும் அவனால் பொறுத்துக் கொள்ள முடியாது.
மறு நாள் காலை. அட்டகாசமான கொட்டாவியுடன் துயிலெழுந்த சுகந்தனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி வீட்டி லிருந்த விலையுயர்ந்த பொருட்களெல்லாம் இரவு திருட்டுப் போய்விட்டன!
வெறுமையாக - எதுவுமற்று வெறிச்சோடிக் கிடக்கும் வீட்டைப் பார்க்கும் போது - சுகந்தனுக்கு என்றோ படித்த - இயற்கை எழுதாத அந்தச் சட்டம் நினைவுக்கு வருகிறது.
காரணங்களின்றி இங்கு காரியங்களில்லை. காரியங்கள் நடக்கும்போது - அதன் காரணத்தை அறியாது - அறிய முயற்சி எடுக்காது - காரியங்களை மட்டுமே பார்த்து - அவற்றிற்குப் பரிகாரம் தேடும்போது - காரியங்கள் தற்காலிகமாக மறைந் தாலும் மாறினாலும் - காரணம் காத்திருந்து - வேறு எத்தனையோ விபரீதமான காரியங்களை உருவாக்கிவிடும்.
நாயின் குரைப்பு ஒரு காரியம் - அதன் காரணம் வீட்டினுள் நடமாடிய திருடன். இந்தக் காரணத்தை அறியாது - அந்தக் காரியத்தை மறைத்ததன் விளைவு - எனது இன்றைய பரதேசிக் கோலம்!
52

நிர்வாணம்
அந்தச் சுகந்தனுக்கு இப்பொழுது எல்லாமே புரிந்துவிட்டது - ஆனால் நமக்கு மட்டும் இன்னும் எதுவுமே புரியவில்லை. இதற்கு ஆதாரம்?
இலண்டனில் வாழும் வேலுப்பிள்ளைக்கு கடந்த சில மாதங்களாக ஒரு வகை சரும வியாதி. தோல் வரண்டு - சிவந்து - அரிப்பெடுக்கிறது. சொறிந்தால் ஒரு வகை நீர் வடிகிறது. இனியும் பொறுக்க முடியாது. என்ற நிலையில் டாக்டரைப் பார்க்கிறார். டாக்டர் ஒரே ஒரு ஊசி மட்டும் தான் போட்டார். இரண்டு நாட்களில் சருமம் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டது.
இலண்டன் மருத்துவர்களையும் - மருத்துவ வசதி களையும் - மருந்து வகைகளையும் மனம் திறந்து சிலாகிக் கிறார் - போற்றுகிறார் வேலுப்பிள்ளை! வாழ்ந்தால் இப்படி ஒரு நாட்டில் தான் வாழ வேண்டும் என்பது அவரது இன்றைய சங்கல்பம்!
ஆனால் - குரைத்த நாயை டாக்டர் கச்சிதமாக அறையில் அடைத்து விட்டார் என்பது வேலுப்பிள்ளைக்குத் தெரியாது. திருடன் இப்பொழுது மிகவும் சுதந்திரமாக உலவுகிறான் என்பது வேலுப்பிள்ளைக்குப்புரியவில்லை. இன்னும் சிறிது காலத்தில் எதை எதையோவெல்லாம் திருடப் போகிறான் என்பதையும் வேலுப்பிள்ளை அறியவில்லை. வேலுப்பிள்ளை மட்டுமா?
இந்த அலசலின் முடிவு?
நாம் வசிக்கும் இந்த மனித உடல் - அந்த இயற்கையின் ஒரு அற்புத வார்ப்பு - அதிசய வார்ப்பு. நமது ஒவ்வொரு உடலும் ஒவ்வொரு வார்ப்பு - தனி வார்ப்பு - தனிப்பட்ட வார்ப்பு.
எவ்வாறு ஒருவரின் மனதுபோல இன்னொருவரின் மனது இல்லையோ - அது போலவே - அப்படியே - ஒருவரின் உடல் போல இன்னொருவரின் உடல் இல்லை. எவ்வாறு மனதுக்கு விருப்பு வெறுப்புக்கள் உண்டோ - அது போலவே - அப்படியே - உடலுக்கும் விருப்பு வெறுப்புக்கள் உண்டு. எவ்வாறு மகிழ்ச்சி யாக இருக்கும்போது ஒரு விதமாகவும் - கோபமாகவும் இருக்கும்போது வேறு ஒரு விதமாகவும் நமது மனது நடந்து கொள்கிறதோ - அதுபோலவே - அப்படியே - தேவையானது
S3

Page 29
டாக்டர் பூரீதரன்
கிடைக்கும் போது ஒரு விதமாகவும் தேவையற்றது கிடைக்கும் போது வேறு ஒரு விதமாகவும் நமது உடலும் நடந்து கொள்கிறது. இன்று - இங்கு - நாம் வியாதிகள் என்று நினைப்பவற்றில் - வியாதிகள் என்று நினைத்து மாத்திரைகளை விழுங்குபவற்றில் பெரும்பாலானவை வியாதிகளேயல்ல - நோய்களேயல்ல. அவை நமது உடலின் விருப்பு வெறுப்புக்களின் வெறும் வெளிப் பாடுகள் - நிரந்தரமற்ற வெளிப்பாடுகள் - காரணங்கள் மாறும் போது மாறிவிடும் காரியங்கள். அது மட்டுமல்ல. அது ஒரு மொழி - ஒரு தனி மொழி - நமது உடல் நம்முடன் மட்டுமே பேசும் ஒரு மொழி. அது நமக்கு மட்டும் தான் புரியும் - அதைப் புரிவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.
நாம் வாழும் சூழல் - நாம் உண்ணும் உணவு - அதன் அளவு - நாம் செய்யும் தொழில் - நாம் அணியும் உடை - நாம் விளையாடும் விளையாட்டு - நாம் ரசிக்கும் கலை - நாம் சந்திக்கும் மனிதர்கள் - இவற்றைப் பற்றிய தனது கருத்தை - விருப்பு வெறுப்புக்களை நமது உடல் நமக்கு அன்றாடம் தெரியப்படுத்துகிறது - அதற்கே உரிய அந்தத் தனி மொழியில். அந்த மொழி டாக்டர்களுக்குப் புரியாது - மாத்திரைகளுக்குத் தெரியாது.
இங்கு - மாத்திரைகள் மாற்றிய வியாதிகள் அதிகமா? அல்லது அவை உருவாக்கிய வியாதிகள் அதிகமா?
இங்கு - வயோதிபர்களை மருத்துவ விஞ்ஞானம் வாழ வைக்கிறதா? - அல்லது அன்றாடம் வதைத்துக் கொல்கிறதா?
இங்கு - வைத்தியசாலைக்குச் செல்வதால் ஒருவனின் நோய் குறைகிறதா? - அல்லது அதிகமாகிறதா?
பட்டி மன்றங்கள் அமைத்தால் சத்தியம் புலனாகும் பாதிக்கப்பட்டவர்களை விசாரித்தால் நிர்வாணம் துலங்கும்.
நமது உடலை நாம் புரிந்து கொண்டால் - அதன் விருப்பு வெறுப்புக்களை அறிந்துகொண்டால் - அதன் மொழியை விளங்கிக் கொண்டால் - இங்கு நமக்கு நோயில்லை - மருந் தில்லை - மாத்திரைகளில்லை. அப்பொழுது நாம் இக்கரை யிலும் இருக்கலாம் - அக்கரையிலும் இருக்கலாம்.
54

நிர்வாணம்
ஆனால் - இவை எல்லாவற்றையும் மீறி - என்றோ ஒரு
நாள் நமக்கும் ஒரு நோய் வரும் - வரலாம். எப்படி வரும்? இந்த வினாடி காற்று உள்ளே செல்ல வேண்டும் - இந்த வினாடி அது வெளியேற வேண்டும் - இந்த வினாடி வெளியே சென்ற காற்று இந்த வினாடிக்குப் பின் மீண்டும் உள்ளே வரக்கூடாது என்று நிர்ணயிப்பவன் எழுதிய எழுத்து அது. எப்பவோ முடிந்த காரியம் அது - போட்டு முடித்த கணக்கு அது. அப்பொழுது - ஆம்புலன்ஸ் நேரத்திற்கு வரமாட்டாது - மருந்து பயனளிக் காது - மாத்திரை வேலை செய்யாது. வாழும் இடம் இதை நிர்ணயிப்பதில்லை - வாழ வைத்தவனின் நிர்ணயம் இது. அதை மகிழ்ச்சியுடன் - கொண்டாட்டத்துடன் - உற்சாகத்துடன் அரவணைப்போம். ஏனெனில் - அது ஒரு முடிவல்ல - அது ஒரு சுகத்தின் ஆரம்பம்.
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம்.
அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம்.
அது ஒரு சத்தியம்.
OOC
55

Page 30
பிரம்மத்தை அறிந்தவன் பிராமணன்
இந்து மதம், அணுவைக்குடையும் விஞ்ஞானிகளை குழப்பும் - பரம்பொருளைத் தேடும் மெஞ்ஞானிகளைக் கவரும் - இந்த மாபெரும் மதத்தினுள் - உலகம் வியக்கும் தத்துவங்கள் ஆயிரம் இருந்தும் - மனச்சாந்தி கொடுக்கும் உபதேசங்கள் ஆயிரம் இருந்தும் - வாழ்க்கைக்கு வழிகாட்டும் பாதைகள் ஆயிரம் இருந்தும் - சுயலாபத்திற்காக - சுயநலத்திற்காக - திரிக்கப்பட்ட சடங்குகளையும் - வித்தை காட்டும் திருவிழாக் களையும் மட்டுமே நம்மீது திணித்து - மதத்தைப் பற்றிய ஒரு முழுமையற்ற பார்வையை நம்முன் உருவாக்கி - நமது அன்றாட வாழ்வில் தேவையற்ற பல சிக்கல்களை ஏற்படுத்தும் எண்ணற்ற காரணிகளுள் - மிக முக்கிய இடத்தை வகிப்பது பிராமணியம் என்ற உண்மை - இன்று பலராலும் - எழுதப்பட்ட ஒரு உண்மை - ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு உண்மை - உணரப்பட்ட ஒரு
OG 600.
அதே சமயம் - இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயம் பிராமணர்கள் வேறு - பிராமணியம் வேறு.
பிராமணர்கள் என்பவர்கள் யார்? இவர்களை அடை யாளம் காண்பது எப்படி? பிராமணர்கள் அல்லாதவர்களை - பிராமணர்கள் என்ற எண்ணத்துடன் நாம் பார்ப்பதால் - அவர்களுடன் தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்வதனால் - உருவாக்கும் நமது பார்வை - நமது அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது? - என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் கூற முயல்கிறது இந்த இதழ் கட்டுரை. அதற்கு அத்திவாரமாக அமைகிறது பின்வரும் சிறு விளக்கம்:
இன்றைய காலகட்டத்தில் - கம்ப்யூட்டர்கள் செய்யும் விடயங்களுக்கு - அவற்றால் செய்ய முடிந்த விடயங்களுக்கு -
S6

நிர்வாணம்
அவை இனியும் செய்யப்போகும் விடயங்களுக்கு அளவே கிடையாது என்பது இந்தத் துறையில் பரிச்சயமுடையவர் களுக்கு நன்கு விளங்கும். அதே சமயம் - இந்தத் துறையில் பரிச்சயமற்றவர்கள் கூட - அன்றாட வாழ்வில் நாம் பார்க்கும் எத்தனை எத்தனையோ விடயங்களை கருத்தில் கொண்டு அவற்றின் தகுதிகளை ஊகித்துக் கொள்ளலாம்.
இன்று - கம்யூட்டர்கள் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கின்றன - நோயாளிகளுக்குச் சத்திர சிகிச்சை செய் கின்றன - நாம் பயணம் செய்யும் மாபெரும் விமானங்களை இயக்குகின்றன - பிரமாண்டமான தொழிற்சாலைகளை பரி பாலித்து காவல் புரிகின்றன - பலரின் காமக் களியாட்டங் களுக்குத் துணையாக இருந்து அவர்களின் இச்சைகளைப் பூர்த்தி செய்கின்றன - அடுக்கிக்கொண்டே போகலாம்.
அதே சமயம் - சிறிது சிந்தித்தால் - மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் ஒரு கம்ப்யூட்டரை நாம் விரிவுரையாளர் என்பதில்லை - நோயாளிக்குச் சத்திர சிகிச்சை செய்யும் ஒரு கம்ப்யூட்டரை நாம் டாக்டர் என்பதில்லை - நமது விமானத்தை இயக்கும் ஒரு கம்ப்யூட்டரை நாம் பைலட் என்பதில்லை - காமக் களியாட்டங்களுக்குத் துணையாக இருக்கும் ஒரு கம்ப்யூட்டரை நாம் டார்லிங் என்பதில்லை.
ஒரு கம்ப்யூட்டரை டார்லிங் என்று அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது? ஒரு கம்ப்யூட்டரை டாக்டர் என்று எதற் காக அழைக்கக் கூடாது? எதற்காக அவை செய்யும் தொழிலைப் பார்த்து பெயர் மாற்றம் செய்வதற்கு நாம் தயங்குகிறோம்? ஒரு பெயரில் அப்படி என்ன பெரிய விடயம் அடங்கியிருக்கிறது?
இப்படியான கேள்விகளை நாம் கேட்பதில்லை. காரணம் - நாம் சிந்திக்கத் தெரிந்த மனிதர்கள்.
ஒரு பெயரில் - ஒரு பெயருடன் இணைந்து - அந்தப் பெயருக்குப் பின்னால் - ஆயிரமாயிரம் அர்த்தங்கள் - ஆயிர மாயிரம் இயல்புகள் இருப்பது நமக்குத் தெரியும். உதாரண மாக - கற்பு என்ற பெயருக்கும் - அதற்கு நாம் கொடுக்கும் அர்த்தத்தையும் மையமாக வைத்துத்தான் சிலப்பதிகாரம் அர்த்தமுடையதாகிறது.
57

Page 31
டாக்டர் பூரீதரன்
சூதாட்டம் என்ற சொல்லுக்கும் - அதற்கு நாம் கொடுக்கும் அர்த்தமும் தான் மகாபாரத்திற்கு முதுகெலும்பாக அமைகிறது. ஆகவே - பெயர் தான் இங்கு எல்லாமே. ஆழ்ந்து சித்தித்தால் - பெயர்களையும் அதற்கு நாம் கற்பிக்கும் அர்த்தங்களையும் மையமாக வைத்துத்தான் மனித வாழ்க்கையே இங்கு இயங்கு கிறது - இயக்கமடைகிறது.
அப்படியானால் இந்தச் சந்தர்ப்பத்தில் நமது மனதில் எழும் - பிராமணர்கள் என்னும் பெயருடையவர்கள் யார்? - அவர்களை அடையாளம் காண்பது எப்படி? - என்பது போன்ற கேள்விகளுக்கு - இந்திய முன்னாள் ஜனாதிபதி - மாபெரும் தத்துவ ஞானி - டாக்டர் ராதாகிருஷ்ணனால் எழுதப்பட்டு இன்று பல பல்கலைக்கழகங்களில் பாட நூலாக உபயோகிக்கப் படும் - "இந்திய தத்துவம்’ என்ற பிரபல நூல் - பின்வருமாறு பதில் கூறுகிறது:
“பகலில் பிரகாசிக்கும் அந்தச் சூரியனைப் போல - இரவில் ஜொலிக்கும் அந்தச் சந்திரனைப் போல - சதா காலமும் தியானத்தில் மூழ்கியதால் - மூழ்கியிருப்பதால் - தீப்பிழம்பு போல ஜொலிக்கும் பிராமணனே! நான் உன்னைச் சிரம் தாழ்த்தி - கைகூப்பி வணங்குகிறேன். நீ பிரம்மத்தை அறிந்தவன் - உணர்ந் தவன் - அதனால்தான் உன் பெயர் பிராமணன். பிரம்மத்தை அறிந்ததால் - நீ வேடம் போடாதவன் - உண்மை பேசுபவன். வானமே கூரை - என வாழும் நீ - உலக மனிதர்கள் ஆசைப் படும் பொருட்களை வெறுப்பவன். அதனால் தான் உனக்கென எதையுமே நீ சேர்ப்பதில்லை. நீ ஸம்சார சாகரத்திலிருந்து விடுபட்டவன் - அதனால் தான் உனக்கு இனி பிறவிகளில்லை. நிர்வாணமடைந்த நீ - உன்னை மட்டுமல்ல உனது முன்னைய பிறவிகளையும் அறிந்தவன். இக்கரைப் பச்சை அக்கரைப் பச்சை - என எந்தப் பச்சையிலும் நாட்டமற்றவன் நீ பற்றற் றவன் நீ - அதனால் தான் - தாமரை இலைத் தண்ணிர் போல - உலக செல்வங்களில் - உலக போகங்களில் ஒட்டாது நீ வாழ் கிறாய். அச்சமற்றவன் நீ உனது நன்மை வேண்டி யாருக்கும் தலை வணங்காதவன் நீ தளைகளிலிருந்து விடுபற்றதால் - திரி கரண சுத்தியுடன் காரியம் செய்பவன் நீ பலனை எதிர்பாராது காரியம் செய்யும் நீ - மனம் வாக்கு காயத்தால் யாருக்குமே தீங்கிழைக்காதவன். கடைந்தெடுத்த ஞானியாகிய நீ - யாருடைய
58

நிர்வாணம்
மரணத்திற்கும் ஒரு போதும் காரணமாக இருந்ததில்லை. எந்த உயிருக்கும் நீ தீங்கு விழைவித்ததில்லை - விழைவிப்பதில்லை. உனக்கென கொடுக்காத எதையும் நீ எடுத்துக் கொள்ளாதவன். ஒரு ஜீவாத்மா செய்ய வேண்டியவற்றையெல்லாம் செய்து முடித்த தூய பிராமணனே! பிரம்மத்தை அறிந்தவனே! பிரமத்துடன் சங்கமமாக விருப்பவனே! நான் உன்னைச் சிரம் தாழ்த்தி
கைகூப்பி வணங்குகிறேன்”
அபாரமாக இல்லை?! அற்புதமாக இல்லை?! படிக்கும் பொழுதே பிரம்மத்தைத் தரிசித்த சுகானுபவத்தை ஏற்படுத்தும் இவை தான் பிராமணன் என்னும் பெயருடைய ஒருவனின் இயல்புகள் - இந்த இயல்புகளைக் கொண்டவனின் பெயர் தான் பிராமணன் - இந்த இயல்புகளைக் கொண்டிருந்தால் தான் ஒருவனை நாம் பிராமணன் என அழைக்க முடியும். அவன் வணக்கத்துக்குரியவன். எந்த நூலைப் புரட்டினாலும் - எந்த ஆய்வைப் படித்தாலும் - பிரம்மத்தை அறிந்தவன் தான் பிராமணன் - என்ற இந்தக் கூற்றில் எதுவித மாற்றமுமில்லை.
ஆகவே - பிராமணன் என்ற சொல்லுக்கு ஒரு தனிப்பட்ட அர்த்தமுண்டு - ஒரு விஷேட அர்த்தமுண்டு - ஒரு புனிதமான அர்த்தமுண்டு அந்தச் சொல்லுக்குரிய அந்தஸ்தை அதனுடன் இணைந்துள்ள தர்மத்தை - அதைப் பிரயோகிக்கும் முறையை - நமது பார்வை பிரதிபலிக்க வேண்டும் - அது நமது அன்றாட வாழ்வில் உபயோகிக்கப்பட வேண்டும்.
நாம் விரும்பினாலும் சரி - விரும்பாவிட்டாலும் சரி - நாம் தெரிவு செய்தாலும் சரி - தெரிவு செய்யாவிட்டால் சரி - நம்மில் பெரும்பாலோரினது வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பு முனை யும் பிராமணர்களுடன் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது - ஒவ்வொரு திருப்பு முனையிலும் பிராமணர்களே நிற்கிறார்கள். நினைத்துப் பார்த்தால் - பிறந்தவுடன் ஏற்படும் இந்தத் தொடர் புகள் - இல்லை - பிறக்கும் முன்னரே ஏற்படும் இந்தத் தொடர்பு கள் - இறப்பில் மட்டுமல்ல - இறந்த பின்பும் தொடர்கின்றன.
நம்மில் பலருக்கும் பிராமணர்களுக்கும் இருக்கும் இந்த உறவினால்தான் - நம்மில் பலரது வாழ்க்கையில் அவர்கள் எந்நேரமும் சம்பந்தப்பட்டு இருப்பதனால் தான் - நமது வாழ்க்கையில் அவர்களும் எங்களுடன் தொடர்ந்து வருவத
59

Page 32
டாக்டர் பூரீதரன்
னால் தான் - அவர்களைப் பற்றிய நமது பார்வை சரியாக அமைய வேண்டும் - முழுமையாக அமைய வேண்டும். ஏனெனில் - கணவனைப் பற்றிய மனைவியின் பார்வை சரியாக அமையாத போது வீட்டில் பிக்கல் பிடுங்கல்கள் - மக்களைப் பற்றிய மந்திரியின் பார்வை சரியாக அமையாத போது நாட்டில் பிக்கல் பிடுங்கல்கள் - ஒரு நாட்டைப் பற்றிய இன்னொரு நாட்டின் பார்வை சரியாக அமையாத போது உலகில் பிக்கல் பிடுங்கல்கள். பிராமணர்களைப் பற்றிய தமது பார்வை சரியாக அமையாத போது வாழ்க்கை முழுவதுமே பிக்கல் பிடுங்கல்கள்.
இந்த இடத்தில் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயம் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதனால் மட்டும் எவ்வாறு ஒரு கம்ப்யூட்டர் விரிவுரையாளராகி விடுவதில்லையோ - ஒரு நோயாளிக்குச் சத்திர சிகிச்சை செய்தனால் மட்டும் எவ்வாறு ஒரு கம்ப்யூட்டர் டாக்டராகி விடுவதில்லையோ - காமக் களியாட்டங்களுக்கு துணையாக இருப்பதால் மட்டும் எவ்வாறு ஒரு கம்ப்யூட்டர் தாசியாகி விடுவதில்லையோ - அது போலவே - அப்படியே - ஒருவன் பிறந்த குலத்தைப் பார்த்து அவனைப் பிராமணனாகப் பார்ப்பது ஒரு முழுமையற்ற பார்வை - ஒருவன் செய்யும் தொழிலைப் பார்த்து அவனைப் பிராமணனாகப் பார்ப்பது ஒரு முழுமையற்ற பார்வை - ஒருவன் படித்த ஏடுகளைப் பார்த்து அவனைப் பிராமண னாகப் பார்ப்பது ஒரு முழுமையற்ற பார்வை - ஒருவன் தெரிந்து வைத்திருக்கும் சடங்குகளைப் பார்த்து அவனைப் பிராமணனாகப் பார்ப்பது ஒரு முழுமையற்ற பார்வை. அது மட்டுமல்ல - அணியும் உடை - போடும் ஆபரணங்கள் நீண்ட தலை முடி - உண்ணும் உணவு - உணவு இவை எவற்றாலும் கூட ஒருவன் பிராமணனாகிவிடுவதில்லை.
இந்த முழுமையற்ற பார்வையுடன் கடந்த காலத்தில் நாம் சில மனிதர்களை எடை போட்டபோது - இப்பொழுதும் 6T60) போடும் போது - இந்த முழுமையற்ற பார்வையுடன் கடந்த காலத்தில் நாம் சில மனிதர்களுடன் தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்ட போது - இப்பொழுதும் ஏற்படுத்திக் கொள்ளும் போது - நமது வாழ்க்கையில் எத்தனை எத்தனை பிக்கல்கள் பிடுங்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை நிதானமாகச்
60

நிர்வாணம்
சிந்தித்து - நமது தவறுகளை ஏற்றுக் கொள்வதற்கு நமக்கு ஒரு துணிவு வேண்டும் - ஒரு பக்குவம் வேண்டும்.
இன்றிலிருந்து - நமது வாழ்க்கை இங்கு அன்றாடம் ஒரு கொண்டாட்டமாக அமையவேண்டுமானால் - ஒரு பண்டிகை யாக அமைய வேண்டுமானால் - தேவையற்ற பயங்களும் அர்த்தமற்ற தயக்கங்களும் நமது அன்றாட வாழ்க்கையைச் சீர்குலைக்காது இருக்க வேண்டுமானால் - எதற்குமே அஞ்சாத ஒரு மனப்பான்மை நமக்கு வேண்டுமானால் - பிரம்மத்தை அறிந்த பிராமணர்களை அடையாளம் கண்டு - அமுதம் இது - நஞ்சு இது - என்று முடிவு செய்யும் ஆய்வுத்திறன் நமக்கு வேண்டும் - அதை அமுல்படுத்தும் துணிவு நமக்கு வேண்டும். இந்தத் திறன் மட்டும் நமக்கு வந்து விட்டால் - இதற்கு மட்டும் நாம் துணிந்து விட்டால் - அன்றிலிருந்து நமது வாழ்க்கையில் - அர்த்தமற்ற பயங்களில்லை - ஆதாரமற்ற தயக்கங்களில்லை - தேவையற்ற பொருட்செலவுகளில்லை.
வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டி - அமைதி வேண்டி - ஆனந்தம் வேண்டி - நேற்று ஏதேதோ செய்தோம் - இன்று ஏதேதோ செய்கிறோம் - நாளையும் ஏதேதோ செய்வோம்.
எதையுமே இழந்துவிட மாட்டோம் இதையும் ஒரு தடவை முயற்சி செய்து பார்ப்பதனால் - நிச்சயமாக,
காரணம் - எதையுமே நாம் இங்குகொண்டு வரவில்லை - அதை நாம் இழந்து விடுவதற்கு.
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம். அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம். அது ஒரு சத்தியம்.

Page 33
உணவைத் தேடும் உபவாசங்கள்
உள்ளொளி பெற்ற சித்தர் சிவவாக்கியரின் இதய கீதம் இது.
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்ட பின் என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ? என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே.
தன்னைத் தானே அறிந்து கொள்வதே மனித ஜனனத்தின் அத்திவாரம் - மானிட வாழ்வின் அடிப்படையென்று பரமாத் மாக்கள் கூறுகிறார்கள். இந்த முயற்சியில் மனதார ஈடுபடும் ஒரு மனிதனுக்கு - ஈடுபடத் துடிக்கும் ஒரு மனிதனுக்கு ஆன்மீகம் காட்டும் வழிகளில் ஒன்று உபவாசம் என்று கூறப்படுகிறது. உடலைச் சுத்தமாக்கி - உள்ளத்தைப் புனிதமாக்கும் உபவாசம் - சத்தியத்தை அறியத் துடிக்கும் மனிதனின் முயற்சியை இலகு வாக்குவதாகவும் - அவனின் முயற்சிக்குத் துணை நிற்பத்ாகவும் சாத்திரங்கள் பகர்கின்றன.
நம்ப முடியவில்லையே!
இது உண்மையெனில் - உபவாசத்திற்கு இப்படி ஒரு சக்தி உள்ளதெனில் - தர்க்கரீதியாகப் பார்த்தால் - எத்தனை எத்தனையோ உபவாசங்களைத் தெரிந்து வைத்திருக்கும் நமது சமூகத்தில் பலர் - அவற்றில் ஒரு சிலவற்றையாவது தவறாது கடைப்பிடிக்கும் நமது சமூகத்தில் சிலர் - இன்று ஆன்மீகப் பாதையில் எவ்வளவோ தூரத்தைத் தாண்டி - இப்பொழுது தேவர்களுக்கு அடுத்த படியில் நின்று கொண்டிருக்க வேண்டுமே இது வரையில் நம்மிடையே பல சித்தர்கள் - ஞானிகள் தோன்றி யிருக்க வேண்டுமே மகாத்மாக்கள் உருவாகியிருக்க வேண்டுமே.
62

நிர்வாணம்
ஆனால் - நடைமுறை அவதானத்தில் நமது சமூகத்தில் இவையெதுவுமே நிறைவேறியிருப்பதாகத் தெரியவில்லை. தேவர் களுக்கு அடுத்த படி வேண்டாம் - அசுரர்களுக்கு அருகில் கூட நாம் இருப்பதாகத் தெரியவில்லையே. சித்தர்கள் தோன்ற வேண்டாம் - ஒழுங்கான பக்தர்கள் கூட நம்மிடையே தோன்ற வில்லையே மகாத்மாக்கள் வேண்டாம் - மனிதர்களைக் கூடக் காணவில்லையே!
எப்படித் தவறாகும் நம் சாத்திரங்கள் பகர்பவை? எப்படிப் பொய்யாகும் ஆன்மீகம் காட்டும் பாதை? இந்த அலசல் பதில் தேட முயல்கிறது.
நாடு நகரங்களைத் தாண்டி - கண்டங்களைத் தாண்டி சமுத்திரங்களைத் தாண்டி - வாழும் நாட்டிலிருந்து வெகு தொலைவிலிருக்கும் வேறொரு நாட்டிற்கு நாம் பயணம் செய்யும் போது - சிறு சிறு ஒய்வெடுத்து - வெவ்வேறு விமானங் களில் மாறி மாறிப் பயணம் செய்ய நேரிடுகிறது.
இது போலவே - இப்படியே - சம்சார சாகரத்திலிருந்து விடுபடுவதற்காக - மாயையில், பிடியிலிருந்து விலகிக் கொள் வதற்காக - பிரம்மத்துடன் சங்கமிப்பதற்காக - மனிதர்கள் மேற்கொண்டுள்ள நீண்ட பயணத்தில் - ஜனனம் என்பது ஒரு பயணத்தின் ஆரம்பம், மரணம் என்பது ஒரு ஒய்வின் ஆரம்பம்.
பயணம் - ஒய்வு - மீண்டும் பயணம். ஜனனம் - மரணம் - மீண்டும் ஜனனம். புல்லாக - பூடாக - புழுவாக - மரமாக - நமது பயணம் தொடர்கிறது. நம்மை நாமே அறிந்து கொள்ளும் வரையில் தொடரும் நமது பயணமும்.
பிறவி என்னும் பயணத்தில் உயிரைத் தாங்கிச் செல்லும் நமது உடலுக்கு - அதற்காக உழைக்கும் நமது உடலுக்கு - உணவு தேவை. உணவால் தான் உடல் உழைக்கிறது - வளர்கிறது - செழிக்கிறது - சிதைகிறது.
நாம் உண்ணும் உணவு சரியாக அமையும் போது அளவாக அமையும் போது - தேவையானதாக அமையும் போது உடல் சிரிக்கிறது - செழிக்கிறது. நமது பயணம் சுகமாக அமைகிறது.
அதே சமயம் - நாம் உண்ணும் உணவு தேவைக்கதிகமாக இருக்கும் போது - தேவையற்றதாக இருக்கும் போது
63

Page 34
டாக்டர் பூரீதரன்
அசுத்தங்கள் நிறைந்ததாக இருக்கும் போது - உடல் அழுகிறது - சிதைகிறது. நமது பயணம் குழம்புகிறது மனிதர்களைத் தவிர - பூமியிலுள்ள மற்ற எல்லா உயிரினங்களுமே உணவு விடயத்தில் அதி உன்னதமாக நடந்து கொள்கின்றன. ஏனெனில் - சிங்கம் ஜஸ்கிறீம் அருந்துவதில்லை - நரி சுருட்டு புகைப்பதில்லை - கரடி கேக் சாப்பிடுவதில்லை. இதனால் தான் காட்டில் டாக்டர்கள் இல்லை - வைத்தியசாலைகள் இல்லை - மருந்துக் கடைகள் இல்லை. அதே சமயம் - இவையேதும் இல்லாததனால் விலங்குகள் - பறவைகள் அழிந்து விடவுமில்லை - அழுது வடியவுமில்லை.
நாம் நாகரீகமடைந்த மனிதர்கள். அதனால் தான் நாம் எதையும் தின் கிறோம் - எப்போதும் தின் கிறோம் - எதற்கும் தின் கிறோம்.
இதன் விளைவாக உயிரைச் சுமக்க வேண்டிய உடல் தன்னைத் தானே சுமக்க முடியாமல் தடுமாறுகிறது - உபாதை களால் அவதிப்படுகிறது - இயங்க முடியாமல் தடுமாறுகிறது.
ஒரு பொழுது - ஒரு நாள் - ஒரு சில நாட்களுக்கு உணவுண்ணாமல் இருக்கும் போது - உடலில் கொழுப்பாக உள்ள சேமிப்பு கரைகிறது. அதே சமயம் - சமிபாட்டு வேலை இல்லாததால் - ஏற்கனவே சேர்ந்திருக்கும் நச்சுப் பொருட் களை வெளியகற்றி தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்ளும் முயற்சியிலும் உடல் இறங்குகிறது.
தேவையற்ற சுமைகள் இறங்கும் போது - சேர்ந்திருந்த அழுக்குகள் வெளியேறும் போது - உடல் செழிக்கிறது - உற்சாக மாக உழைக்கிறது. நமது பயணம் சொகுசாக - சுகமாக அமைகிறது.
உடலைப் புனிதமாக்கி - அதை வளப்படுத்தி - அதன் மூலம் நமது பயணத்தை இலகுவாக்குவதே உபவாசத்தின் முதல் குறிக்கோள்.
உபவாசத்தின் இரண்டாவது இலக்கு மனம்.
ஒரு பொழுது - ஒரு நாள் - ஒரு சில நாட்களுக்கு நாம் உணவுண்ணாமல் இருக்க முயலும் போது - எத்தனை எத்தனையோ அனுபவங்கள். உடலுக்கு பசிக்கிறது - இல்லை - நமது மனம் பசிக்கிறது என நினைக்கிறது - சிறிது உணவு உண்ண மனம் ஆசைப்படுகிறது - ஏதோ ஒன்று தடுக்கிறது -
64

நிர்வாணம்
தொடர்ந்து போராட்டம் - சில சமயங்களில் தோல்வி - ஒரு முறை வெற்றி - நாளடைவில் போராட்டம் குறைகிறது தொடர்ந்து தொடர்ந்து வெற்றி.
என்ன நடக்கிறது - நடந்திருக்கிறது இங்கு? உபவாசத்தின் ஆரம்ப காலங்களில் நமது மனத்தை நாமே சந்திக்கிறோம் - அதனுடன் போராடுகிறோம் - தோல்வியுற்று வெற்றியடைகிறோம். நாளடைவில் அதைக் கட்டுப்படுத்த நமக்குத் தெரிகிறது - அதுவும் கட்டுப்படுகிறது.
கட்டுப்படுத்தத் தெரிந்தவுடன் - மனம் கட்டுப்படப் பழகிய பின் - தியானம் - மோனம் - பிரம்மம்.
எனவே - நம்மை நாமே அறிந்து கொள்ள - அதற்கு உதவி யாக - உடலையும் மனதையும் புனிதப்படுத்தும் முயற்சிக்குப் பெயர் தான் உபவாசம். இது தான் ஆன்மீகம் போதிக்கும் உபவாசம். ஆகவே - உபவாசம் என்பது ஒரு வாழ்க்கை முறை. அது ஒரு நிர்ப்பந்தமல்ல.
ஆனால் நம்மில் பலரின் உபவாசத்தில் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அபஸ்வரம். காரணம் - அவற்றின் அடிப்படை நிர்ப்பந்தம்.
மகளின் திருமணம் குழம்பாமல் இருப்பதற்காக கந்தசஷ்டி -
விரதம் மகனுக்கு வேலை கிடைக்க வேண்டுமென்பதற்காக விநாயகர் விரதம் - வீட்டிலிருக்கும் மாமனார் சீக்கிரமாக இலங்கைக்குத் திரும்புவதற்காக புரட்டாசிச் சனி விரதம் - பிரித்தானிய கடவுச்சீட்டு இன்னும் கிடைக்காததால் ஏற்பட் டிருக்கும் கவலையால் ஏறியிருக்கும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வெள்ளி தோறும் விரதம் - இப்படி இப்படியே - ஆரம்பத்திலேயே அபஸ்வரம்.
அதன் பின்பு - கந்தனிடம் இது வேண்டி விரதம் - சனியிடம் அது வேண்டி விரதம் - விநாயகரிடம் வேறொன்று வேண்டி விரதம் - என்று வியாபார விரதம் இருக்கும் நம்மில் பெரும் பாலானவர்களின் மனதில் விரதத்தின் போது இல்லாத ஒரே ஒரு விடயம் கந்தன் - சனிபகவான் - விநாயகர், மனம் முழு வதையும் ஆக்கிரமித்து இருக்கும் ஒரே ஒரு விடயம் உணவு - உணவு - உணவு.
6S

Page 35
டாக்டர் பூரீதரன்
“இன்று சரியாக ஆறு மணிக்கு எனது விரதம் முடிகிறது. நல்ல ஊர் அசிச் சோறும் கத்தரிக்காய் பொரித்த குழம்பும் ஒரு பிடி பிடிக்க வேண்டும்”- என்று நாள் முழுவதும் சோற்றைப் பற்றியும் கறியைப் பற்றியும் நினைப்பவர்கள் ஒரு புறம்.
“இன்னும் இரண்டு மணித்தியாலங்களில் விரதம் முடிந்து விடும் - அதன் பின்பு பால் - பழம் - இன்று கட்டாயம் மாம்பழம் சாப்பிட வேண்டும்” - என்று மாம்பழம் வாங்கி வர நினைப் பவர்கள் மறு புறம்
“இன்னும் இரண்டு நாட்களில் விரதம் ஆரம்பம் - அதற்கு முதல் ஒவ்வொரு பொழுதும் விருந்துச் சாப்பாடு சாப்பிட வேண்டும்” என்று வரப்போகும் விரதத்திற்காகத் முன் ஆயத்தங்கள் செய்பவர்கள் வேறொரு புறம்.
நம்மில் யாருக்கு வேண்டும் உடல் சுத்தம்? நம்மில் யாருக்கு வேண்டும் மனச் சுத்தம்? இதற்காகவா நாம் உபவாசம் இருக் கிறோம்? எந்த முட்டாள் இதை எழுதுகிறான்?
சிரிக்க முடிந்தால் சிரியுங்கள். நம்மை - நமது பக்தியை - உபவாசம் இருந்து நாம் எடுக்கும் ஆன்மீக முயற்சியை - அதை நினைத்துப் பெருமைப்படும் நமது மன அமைப்பை - நினைத்து நினைத்து சிரியுங்கள்.
உபவாசம் என்பது ஒரு வாழ்க்கை முறை. அது ஒரு நிர்ப்பந்தமற்ற தெரிவு.
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம். அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம். அது ஒரு சத்தியம்.
O)
66

ஆண்டவன் இல்லாத ஆலயங்கள்
பிராமணர்கள் - பிராமணியம். மதத்தைப் பற்றிய ஒரு முழுமையற்ற பார்வையை நம்முள் உருவாக்கி - நமது அன்றாட வாழ்வில் தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும் எண்ணற்ற காரணிகளுள் - மிக முக்கிய இடத்தை வகிக்கும் - வர்த்தக மனப்பான்மையுள்ள பிராமணியம் வேறு - வணக்கத்துக்குரிய பிராமணர்கள் வேறு என்பது - பல ஆயிரம் வருடங்களாக மாமனிதர்களால் - சிந்தனையாளர்களால் - ஆராய்ச்சியாளர் களால் தொடர்ந்து கூறப்பட்டு வந்த ஒரு உண்மை.
ஆண்டுகள் பல வாழ்ந்து - விழுதுகள் பல ஊன்றி - விருத்தியாகி நிற்கும் ஒரு ஆலமரத்தைப் போல - கடந்த இரண்டாயிரத்தி ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக செழித்து வளர்ந்து நிற்கும் பிராமணியம் என்னும் அந்த ஆலமரத்தின் பரிமாணங்கள் என்ன? அது எந்த எந்த வடிவங்களில் நமது அன்றாட வாழ்வில் தலையிடுகிறது? அது நமக்குள் ஏற்படுத்தும் - ஏற்படுத்தியிருக்கும் பார்வைகள் எவ்வாறு நமது அன்றாட வாழ்க்கையைச் சிக்கலாக்கியிருக்கின்றன? - என்பது போன்ற கேள்விகளுக்கு - இந்த மாபெரும் ஆலமரத்தின் ஓராயிரம் விழுதுகளுள் - ஒரு விழுதை விபரித்து - விடையளிக்க முயல் கிறது இந்த இதழ் கட்டுரை. அதற்கு அத்திவாரமாக அமைகிறது பின்வரும் உவமானம்.
நாம் ஐந்து வயதுச் சிறுவர் - சிறுமிகளாக இருந்த போது - பாடசாலையில் - நமது கணக்கு ஆசிரியர் நமக்கு - ஒன்று இரண்டு - மூன்று - என பத்து வரை எண்ணக் கற்றுத் தந்தார். அதன் பின்பு - சரளமாக நமக்கு எண்ணத் தெரிந்த போது - ஒன்றும் ஒன்றும் இரண்டு - என்று இலக்கங்களைக் கூட்டு
67

Page 36
டாக்டர் பூரீதரன்
வதற்குக் கற்றுத் தந்தார். மூன்றிலிருந்து ஒன்று போனால் இரண்டு - என்று இலக்கங்களைக் கழிப்பதற்குக் கற்றுத் தந்தார்.
இன்று - கண்களைச் சற்று மூடி - எவ்வாறு இவை நமக்கு அந்த வயதில் கற்றுத் தரப்பட்டன? - எவ்வாறு அன்று நாம் இவற்றைக் கற்றுக் கொண்டோம்? - எனச் சிந்தித்தால் - இப்பொழுது சிரிப்பு வருகிறது நமக்கு இரண்டு மாம்பழங்கள் இருக்கும் ஒரு கூடையில் - மேலும் மூன்று மாம்பழங்களைப் போட்டால் - மொத்தம் எத்தனை மாம்பழங்கள்? - என்று ஆசிரியர் கேட்ட போது - வலது கையிலுள்ள இரண்டு விரல் களை மடக்கி - பின் இடது கையிலுள்ள மூன்று விரல்களை மடக்கி - மடக்கிய விரல்களை ஒன்று - இரண்டு என எண்ணி - மொத்தம் ஐந்து மாம்பழங்கள் என - விழிகள் பிதுங்க - ஆசிரியரின் கையிலிருக்கும் கம்பை முறைத்தபடியே கூட்டல் படித்தோம்.
ஆற்றங்கரையில் நின்ற ஜந்து கொக்குகளில் ஒரு கொக்கு பறந்து சென்றால் மிகுதி எத்தனை கொக்குகள்? - என்று கேட்ட போது - வலது கையிலுள்ள ஐந்து விரல்களை மடக்கி - பின் ஒரு விரலை விரித்து - மடக்கியிருந்த மீதி விரல்களை எண்ணி - கீழே விழும் கால்சட்டையை ஒரு கையால் மேலே இழுத்து விட்ட பின் - மூக்கை ஒரு தடவை பலமாக உறிஞ்சிய பின் - நாலு கொக்குகள் என்று கழித்தல் படித்தோம்
எதற்காக அன்று அந்த மாம்பழங்கள்? எதற்காக அன்று அந்தக் கொக்குகள்? காரணம் - இலக்கங்கள் என்பது நூதன மான ஒரு மனித கற்பனை. நாம் சிறுவர்களாக இருந்த போது - அப்போது நமக்கிருந்த மனஅமைப்புடன் - நாம் அன்றாடம் பார்க்கும் - நமக்குத் தெரிந்த - ஏதோ ஒரு உண்மையான பொரு ளுடன் இலக்கங்களை இணைக்காமல் - அவற்றை வெறும் இலக்கங்களாக நம்மால் கற்பனை பண்ணியிருக்க முடியாது - புரிந்து கொண்டிருக்க முடியாது.
உதாரணமாக - இரண்டு மாம்பழங்கள் என்று சொல்லி - மாம்பழத்துடன் இரண்டை இணைத்தன் மூலமே இரண்டு என்ற இலக்கம் அன்று அர்த்தம் பெற்றது. கூடையிலிருக்கும் இரண்டு மாம்பழங்களையும் - மேலும் மூன்று மாம்பழங் களையும் இணைத்த போதே ஐந்து என்ற இலக்கம் அர்த்தம்
68

நிர்வாணம்
பெற்றது. அதனால் தான் - அன்று அந்தக் கைவிரல்கள் - மாம்பழங்கள் - கொக்குகள் - இப்படி ஏதேதோவெல்லாம் தேவைப்பட்டன நமக்கு.
ஆனால் இன்று - நாம் உடலால் - உள்ளத்தால் வளர்ந்து விட்டோம். இரண்டு என்றால் உண்மையில் என்ன? என இன்று யாராவது நம்மிடம் கேட்டால் - அதற்கு ஒரு சரியான - புத்திசாலித்தனமான பதிலை - நறுக்கென்று நம்மால் உடனே கூற முடியாவிட்டாலும் கூட - ஏதோ ஒரு விதத்தில் - நமக்கு ஏதோவொன்று புரிந்திருக்கிறது - புரிகிறது - புரிய வேண்டும். அதனால் தான் - இன்று - தெரு முனையிலிருக்கும் கடையில் பொருட்கள் வாங்கும் போது கணக்குப் பார்ப்பதற்காக நாம் கைவிரல்களை மடக்குவதில்லை. வீட்டில் வரவு - செலவு கணக்குப் பார்க்கும் போது கூடையிலுள்ள மாம்பழங்களை நினைப்பதில்லை. வங்கியில் பணம் எடுத்த பின் - மிகுதி பணத்தை அறிந்து கொள்வதற்காக ஆற்றங்கரையிலுள்ள கொக்குகளை நினைப்பதில்லை.
சிறுவர் சிறுமிகளால் எந்த ஒரு பொருளுடனும் இணைக் காமல் புரிந்து கொள்ள முடியாத - தெளிவற்ற அந்த இலக்கங் களைப் போலவே - முதிர்ச்சியடைந்த மனங்களால் இன்று கூட இலகுவில் விளக்கம் கூற முடியாது அந்த இலக்கங்களைப் போலவே - இந்து மதம் என்ற மாபெரும் மதம் கூறும் - ஆதியும் அந்தமுமற்ற - உருவமும் அருவமுமற்ற - தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் - அணுவுக்குள் அணுவாயும் அப்பாலுக்கு அப்பாலாகவும் விளங்கும் - சுயம்புவான பிரம்மம் என்ற அந்த ஜோதியும் ஒரு சிக்கலான தத்துவமே - ஒரு சிக்கலான சத்தியமே.
அதே சமயம் - இந்து மதம் பற்றிய எந்த ஆய் கொண்டாலும் - அவை தவறாமல் கூறும் ஒரு தீப் மத்தைத் தவிர மற்றவை யாவும் இங்கு வெறும் கற்பனையே. பிரம்மம் மட்டுமே உண்மை - மற்றவை யாவும் நமது பிரமை களே - என்ற அந்த முடிவான உண்மையைச் சொல்வதனால் தான் (eternal truth) இந்து மதத்திற்கு இங்கு ஆரம்பமும் இல்லை - முடிவுமில்லை. இது தான் இந்து மதத்தின் பலம்.
இந்து மதம் கூறும் பிரம்மம் என்னும் இந்தச் சிக்கலான தத்துவத்தை பாமர மக்களுக்குப் புரிய வைப்பதற்காக - அதன் வெவ்வேறு தொழிற்பாடுகளை வெவ்வேறு இயல்புகளை -
69

Page 37
டாக்டர் பூரீதரன்
வெவ்வேறு பரிமாணங்களை அவர்களுக்குப் புரியவைப்பதற் காக - அன்று - அதாவது மொழிகள் வளர்ச்சியடையாத ஒரு காலத்தில் - எழுத்துக்கள் எதுவுமற்ற ஒரு காலத்தில் வாழ்ந்த மாமனிதர்களுக்கு ஒரு கற்பிக்கும் முறை தேவைப்பட்டது.
இந்தச் சந்தர்ப்பத்தில் - நமது கணக்கு ஆசிரியர் மாம்பழங் களையும் கொக்குகளையும் உருவாக்கியது போல - அன்று வாழ்ந்த மாமனிதர்கள் புராணங்களையும் இதிகாசங்களையும் உருவாக்கினார்கள்.
இந்தப் புராணங்களைக் கேட்பதன் மூலமே - இந்த இதிகாசங்களை அறிந்து கொள்வதன் மூலமே - சாதாரண மக்கள் அன்று இந்து மதம் கூறிய தத்துவங்களுக்கு அர்த்தம் கற்பித்துக் கொண்டார்கள் - நாம் சிறுவயதில் இலக்கங்களைப் புரிந்து கொண்டது போல. இந்து மதத்தில் உள்ள பதினெட்டு மகாபுராணங்கள் - இருபத்தி நாலு உபபுராணங்கள் - இரண்டு இதிகாசங்கள் - எல்லாமே ஒரு கற்பிக்கும் முறைக்காகத் தான் அன்று ஏற்படுத்தப்பட்டன - இயற்றப்பட்டன.
இந்த இடத்தில் அழுத்திச் சொல்லப்பட வேண்டிய ஒரு விடயம் - நாம் அழுத்தமாகப் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விடயம். இந்தப் புராணங்கள் கூறும் அத்தனை ஆயிரம் தெய்வங் களுக்கும் - இந்த இதிகாசங்கள கூறும் அத்தனை ஆயிரம் தேவர்களுக்கும் பின்னணியில் இருப்பது ஒரே ஒரு பிரம்மமே. தாயுமானவர் சொல்கிறார்:
ஒன்றாகிப் பலவாகிப் பலவாகக் கண்ட
ஒளியாகி வெளியாகி உருவும் ஆகி
நன்றாகித் தீதாதி மற்றும் ஆகி
நாசமுடன் உற்பத்தி நண்ணாது ஆகி.
அதே சமயம் - மொழிகள் வளர்ந்து விட்ட இந்தக் கால
கட்டத்தில் - எழுத்துக்கள் பெருகி விட்ட இந்தக் கால கட்டத்தில் - மக்களின் சிந்தனைத் திறன் வளர்ந்து விட்ட இந்தக் கால கட்டத்தில் - கற்பிக்கும் முறைகள் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் - இந்து மதம் கூறும் மாபெரும் தத்துவங் களை தந்திரமாக - வேண்டுமென்றே மறைத்து - புராணங் களை ஆதாரமாக வைத்து வித்தை காட்டும் திருவிழாக்களை உருவாக்கி - சுயநலத்திற்காக - சுயலாபத்திற்காக - இது தான் இந்து மதம் என தொடர்ந்து மக்கள் மீது திணித்து - மக்கள்
70

நிர்வாணம்
மனதில் அறியாமையை வளர்த்து - மதம் பற்றிய முழுமையற்ற பார்வைகளை அவர்களுக்குள் உருவாக்கி - அந்த அறியாமையில் தன்னை வளர்க்கும் ஒரு வர்த்தக மனப்பான்மைக்குப் பெயர் தான் பிராமணியம்.
வளர்ந்து விட்ட ஒரு மாணவனை - மாம்பழங்களை நினைத்துத் தான் நீ வாழ்க்கை முழுவதும் இலக்கங்களைக் கூட்ட வேண்டும் - கொக்குகளை நினைத்துத் தான் நீ வாழ்க்கை முழுவதும் இலக்கங்களைக் கழிக்க வேண்டும் என்று சொல்லி அடம் பிடிக்கும் ஒரு கணக்கு ஆசிரியரை - பக்குவம் வாய்ந்த மாணவன் எவ்வாறு விலக்கி வைக்க வேண்டுமோ - எவ்வாறு அவரை விட்டு விலகிக் கொள்ள வேண்டுமோ - அது போலவே - அப்படியே - உண்மைகளை மறைப்பதற்காக - புராணங்களை யும் இதிகாசங்களையும் உண்மை போல நம்மீது திணிக்கும் பிராமணியத்திலிருந்தும் நாம் விலகிக் கொள்ள வேண்டும் - அந்த மனப்பான்மை உள்ளவர்களை விலக்கி வைக்க வேண்டும்.
வளர்ந்த விட்ட ஒரு மனிதன் - சிறுவயதில் தான் படித்ததை மறக்க முடியாமல் - அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லும் பையில் - கூட்டுவதற்காகவும் கழிப்பதற்காகவும் - மாம்பழங் களையும் கொக்குகளையும் எடுத்துச் சென்றால் - எவ்வளவு மானபங்கங்களுக்கும் அவதூறுகளுக்கும் ஆளாவானோ - அதைவிட ஆயிரமாயிரம் மானபங்கங்களுக்கும் அவதூறு களுக்கும் நாம் ஆளாகினோம் - ஆளாகிறோம் - ஆளாவோம் பிராமணியம் காட்டும் யன்னலினூடாக மதத்தைப் பார்ப்ப தனால் - தெய்வத்தைப் பார்ப்பதனால்,
ஆலயங்கள் செயல்பட வேண்டும் நம்மிடையே. ஆனால் - அவை பிராமணியம் செயல்படாத ஆலயங்களாக அமைய வேண்டும்.
ஆலயங்கள் வளர வேண்டும் நம்மிடையே. ஆனால் - அவை இந்து மதம் கூறும் உயர்வான தத்துவங்களை மக்களிடமிருந்து மறைக்காத இடமாக வளர வேண்டும்.
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம். அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம். அது ஒரு சத்தியம்.
COO

Page 38
அஞ்ஞானம் தரும் விஞ்ஞானம்
நிமிடத்திற்கு நிமிடம் கிளை விட்டுக் கிளை தாவுவது குரங்கின் இயல்பு. எதிலுமே நிலை கொள்ளாத - எப்போதுமே மாறுதலைத் தேடும் குரங்கின் இயற்கை இயல்பே இந்தத் தாவுதலின் அடிப்படை மனித மனத்தை குரங்கிற்கு ஒப்பிடுவது நமது இலக்கியத்தில் - தத்துவத்தில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட விடயம். எதையுமே தொடர்ந்து பற்றிக் கொள்ளாமல் நிமிடத்திற்கு நிமிடம் - காலத்திற்குக் காலம் - புதுப் புது விடயங் களை நாடி ஒடும் மனித மனதை ஒப்பிடுவதற்கு குரங்கை விடச் சிறந்த உதாரணம் நமக்குக் கிடைக்க முடியாது.
இந்தக் குரங்கு மனத்தை - இந்தத் தாவுதலை - ஒரு தனி மனிதனிடம் மட்டுமல்ல ஒரு சமூகத்திடமும் கூட அவதானிக்க முடியும். காலத்திற்கு காலம் - நேரத்திற்கு நேரம் - ஒரு சமூகத்தின் விருப்பு வெறுப்புக்களும் - அதன் பார்வைகளும் - அதன் கோட் பாடுகளும் மாறிக்கொண்டேயிருப்பதை அவதானிக்கலாம்.
உத்தியோகம் தரும் கல்வி மீது நமது சமூகம் வைத்திருந்த - வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் சொல்லித் தான் நமக்குத் தெரிய வேண்டுமென்பதல்ல. இந்த உத்தியோகத்தில் கூட - ஒரு சில உத்தியோகங்களை மட்டுமே நமது சமூகத்திலுள்ள பெரியவர்கள் அங்கீகரிக்கிறார்கள் - விவாகத் தரகர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
“எதை விற்றாலும் சரி - எதை அடைவு வைத்தாலும் சரி - எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சரி - என்னுடைய மகனை ஒரு டாக்டர் ஆக்க வேண்டும்” - காலம் காலமாக நமது சமூகத்தில் உள்ள பெரும்பாலான பெற்றோர்களின் ஆன்ம ஆதங்கம் இது.
72

நிர்வாணம்
நமது சமூகத்தின் இந்த டாக்டர் மோகம் பல பல ரூபங்களாக - காலத்திற்கு காலம் பரிணாமமடைந்து - இன்று இங்கிலாந்தில் - விஞ்ஞானியின் வடிவில் உருவெடுத்திருக்கிறது. ஒரு மாணவன் பரீட்சைகளில் அதி திறமையாகச் சித்தி எய்தி னால் அவன் ஒரு டாக்டராகவல்ல - ஒரு விஞ்ஞானியாகத் தான் வர வேண்டும் என்பது நமது சமூகத்தில் சிலரின் இன்றைய கணிப்பு - இன்றைய மோகம். அதுவும் சாதாரண விஞ்ஞானி யாகவல்ல - NASAவில் வேலை பார்க்கும் விஞ்ஞானியாக! அரோஹரா!
நாடு போற்றும் விஞ்ஞானத்திற்கு - விஞ்ஞானம் கற்ற விஞ்ஞானிக்கு - எண்ணற்ற பரிமாணங்கள். அவற்றுள் ஒரு பரிமாணத்தை - நாம் சாதாரணமாகப் பார்க்க மறுக்கும் - பொதுவாக மூடி மறைக்கும் ஒரு பரிமாணத்தை ஆராய்கிறது இந்த அலசல்,
அதற்கு முன் - ஆலாபனையாக இரண்டு குட்டிக் கதைகள் இதோ முதல் கதை. வீட்டின் முன்னால் நீண்ட காலமாக குவிந்திருக்கும் ஒரு மிகப் பெரிய மணல் குவியலை எப்படியாவது அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் தனது மூத்த மகனிடம் புத்திமதி கேட்டார் ஒரு வயதான தந்தையார்.
“இது ஒரு பெரிய பிரச்சனையே அல்ல - நமது வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒரு மிகப்பெரிய குழி தோண்டி இவ்வளவு மணலையும் அதில் புதைத்து விடலாம்”மூத்த மகனின் பதில் இது.
“அடே முட்டாளே! மணலைப் புதைப்பதற்காக தோண்டும் குழியிலிருந்து வரும் மணலை என்ன செய்வது” தந்தையின் கேள்வி இது.
“இது கூடவா தெரியவில்லை வயது போகப் போக உங்கள் புத்தியும் மங்கி விட்டது. புதிதாக வேறொரு குழி தோண்டி அதைப் புதைத்து விடலாம்” இரண்டாவது மகனின் பதில் இது.
இவர்கள் இருவரும் வருங்காலத்தில் நாடு போற்றும் விஞ்ஞானிகளாவார்கள் என்பது அனுபவமுள்ள தந்தையின் கணிப்பு.
இதோ இரண்டாவது கதை.
73

Page 39
டாக்டர் பூரீதரன்
தனது வீட்டில் சிறு சிறு பூச்சிகளின் தொல்லை அதிக மாகி விட்டது என்று தனியாக வாழும் ஒரு மூதாட்டி - மிகப் படித்தவர் என்று ஊர் போற்றும் ஒருவரிடம் முறைப்பாடு செய்தாள் - புத்திமதி கேட்டாள்.
“கவலையை விடுங்கள்” - என்று கூறி சிறு பூச்சிகளைப் பிடித்து உணவாக உண்ணும் ஒரு சில வண்டுகளை மூதாட்டியின் வீட்டில் அறிமுகப்படுத்தினார் படித்தவர். ஒரு சில மாதங்களில் சிறு பூச்சிகளின் தொல்லை முடிந்து வண்டுகளின் அட்டகாசம் ஆரம்பமாகியது. சில நாட்களின் பின் - வண்டுகளை ஒழிப்பதற் காக பூனைகள், அதன் பின் - பூனைகளை ஒழிப்பதற்காக நாய்கள்.
இன்று - வீடு முழுவதும் நாய்கள் நிரம்பி வழிவதால் - வீட்டில் வாழ முடியாமல் - இடமில்லாமல் மூதாட்டி தெருவில் நின்று அழுகிறாள்.
அப்பொழுது அந்த வழியில் வந்த படித்தவர் - தான் ஒரு விஞ்ஞானி என்பதை முதன் முறையாக மூதாட்டியிடம் எடுத்துரைத்தார்.
சிரிக்க முடிந்தால் இப்பொழுதே சிரியுங்கள். ஏனெனில் நமது சிரிப்பு வெகு விரைவில் அழுகையாகும். காரணம் - அந்த மூதாட்டியின் நிலையிலிருந்து நாம் வெகு தூரத்திலில்லை.
தவறு - தப்பு. வெகு தூரம் என்று கூறியது மாபெரும் தவறு - தப்பு. நம்மில் எத்தனையோ பேர் இன்று ஏற்கனவே அந்த மூதாட்டியை விட மிக அதிகமாகவே பாதிக்கப்பட்டிருக்கிறோம்.
தலைவலிக்கு மருந்து கண்டு பிடித்தது விஞ்ஞானம். தலை வலி மறைந்தது உண்மை. அதே சமயம் - அதே மருந்தினால் - வயிற்றுவலியும் இதயவலியும் புதிதாக உருவாகியதும் உண்மை.
வயிற்றுவலிக்கும் இதயவலிக்கும் மருந்து கண்டு பிடித்தது விஞ்ஞானம். வயிற்றுவலியும் இதயவலியும் மறைந்தது உண்மை. அதே சமயம் - அதே மருந்தினால் சிறுநீரகம் நம்மிடமிருந்து பறிபோனதும் உண்மை.
மனிதனின் ஆயுட்காலத்தைக் கூட்டியது விஞ்ஞானம், புவியில் சனத்தொகை அதிகமானது. பெருகிய மக்களுக்கு அதிக உணவு தேவைப்பட்டது. இதை நிவர்த்தி செய்வதற்காக - உணவு உற்பத்திப் பெருக்கத்திற்காக - செயற்கை உரம் - உழவு
74

நிர்வாணம்
இயந்திரங்கள் - கிருமி நாசினிகள் என ஏதேதோவெல்லாவற்
றையும் அறிமுகப்படுத்தியது விஞ்ஞானம்.
ஆனால் இன்று - செயற்கை உரத்தால் மண்ணில் விஷம் -
பயிரில் விஷம் - உடலில் விஷம் - மனிதனுக்கு புதிய புதிய நோய்கள்.
இயந்திரங்களினால் காற்றில் விஷம் - மனிதனுக்கு நுரையீரல் நோய்கள். கிருமிநாசினிகளால் உண்ணும் உணவில் விஷயம் - மனிதனுக்கு உடலெல்லாம் உபாதைகள்,
உபாதைகளுக்கு மருந்து - ஆராய்ச்சி - கண்டுபிடிப்புகள். விஞ்ஞானம் தொடர்கிறது.
சந்திரனுக்குப் போய் விட்டோம் - செவ்வாய் கிரகத்திற்குப் போய் விட்டோம் - விஞ்ஞானத்தின் அரும் பெரும் சாதனை இவைகள் என்று அரைகுறைகளால் மட்டுமே கூற முடியும். சிந்தித்தால் - இவை சாதனைகள் அல்ல - சாபக்கேடுகள். இந்தப் பூமியிலேயே நம்மால் ஒழுங்காக - மகிழ்ச்சியாக - ஒற்றுமை யாக வாழ முடியவில்லை - சந்திரனிலும் செவ்வாயிலுமா வாழ்ந்து கிழித்து விடப் போகிறோம்?
இந்தப் பூமியையே நம்மால் சுத்தமாக - சுகாதாரமாக அழகாக வைத்திருக்க முடியவில்லை - சந்திரனையும் செவ்வாயையுமா பேணப் போகிறோம்.
சும்மா இருந்த சங்கை ஊதிக் கொடுக்கும் ஆண்டி - இதை விளக்குவதற்கு ஒரு விஞ்ஞானியை விட ஒரு சிறந்த நடைமுறை உதாரணத்தை பார்க்கவே முடியாது.
மனிதர்களின் பிரச்சனைகளை - துன்பங்களை விஞ்ஞானம் என்றுமே தீர்த்ததில்லை - தீர்க்கவும் முடியாது. பணமில்லாத வர்கள் பண்டமாற்றுச் செய்வது போல - ஒரு பிரச்சனையை இன்னொரு பிரச்சனையாக மாற்ற முடியுமே தவிர - பழைய பிரச்சனைக்குப் பதிலாக புதிதாக ஒரு பிரச்சனையை உரு வாக்க முடியுமே தவிர - பிரச்சனைகளே இல்லாத உலகத்தை விஞ்ஞானத்தால் உருவாக்க முடியாது.
காரணம் - விஞ்ஞானம் என்பது நாம் வாழும் வெளி உலகைப் பற்றிய அறிவு.
வெளி உலகைப் பற்றிய அறிவைத் தேடி அலைவது மனித இயல்பு. இதைத் தான் செய்தார்கள் கிரேக்கர்களும் சிந்து வெளியில் வாழ்ந்தவர்களும் அன்று.
75

Page 40
டாக்டர் பூரீதரன்
ஆனால் கையிலிருக்கும் சிறு பாத்திரத்தினால் எவ்வாறு சமுத்திரத்திலுள்ள நீரை அளக்க முடியாதோ - அதே போல - மட்டுப்படுத்தப்பட்ட புலன்களால் இயற்கையைப் பற்றிய முழுமையான அறிவைத் தேட முடியாது. தேடினால் - தேட முயற்சித்தால் கிட்டுவது அரைகுறை அறிவு மட்டுமே. இந்த அரைகுறை அறிவை - அரைகுறை அறிவு படைத்தவர்கள் அமுலாக்க முயற்சித்தால் தான் இன்று நம்மிடையே இத்தனை சீர்கேடுகள் - துன்பங்கள்.
மனித நாகரீகத்தின் ஆரம்பக் காலத்தில் - கிரேக்கர்கள் தொடர்ந்து வெளியிலேயே உலகைப் பற்றிய முழுமையான அறிவைத் தேடிக் கொண்டிருந்த போது - அந்த முயற்சியில் மீண்டும் மீண்டும் தோல்விகளைத் தழுவிக் கொண்டிருந்த போது - விழித்துக் கொண்டார்கள் சிந்து வெளியில் வாழ்ந்தவர்கள்.
அவர்களின் சிந்தனை மாறியது. எதை அறிவதால் எல்லாம் அறியப்படுகிறதோ அதைத் தேட - அறிய முயற்சித்தார்கள் கண்டும் பிடித்தார்கள்.
ஆனால் வெளியிலல்ல - நமக்குள்ளேயே. நமக்குள்ளேயே இருக்கும் அந்தப் பரத்தைத் தேடும் முயற்சிக்குப் பெயர் விஞ்ஞான மல்ல - மெய்ஞானம். அதை அடைந்தவர்கள் பாடிய பாடல்:
ஆவதும் பரத்துளே அழிவதும் பரத்துளே போவதும் பரத்துளே புதுவதும் பரத்துளே தேவரும் பரத்துளே திசைகளும் பரத்தளே யாவரும் பரத்துளே யானும் அப்பரத்துளே. ஒரு சமூகத்திற்கு - ஒரு நாட்டிற்கு - நாம் வாழும் உலகிற்கு விமோசனம் அளிப்பவர்கள் மெய்ஞானிகள், விஞ்ஞானிகளல்ல.
சிறு வயதில் அன்று படித்த ஒரு விகடத் துணுக்கு ஞாபகம் வருகிறது:
“ஒளவையாரைக் கண்டால் அறிவி பொலிஸில்” இதையே சிறிது மாற்றி: "விஞ்ஞானியைக் கண்டால் அடித்து விடுங்கள் கல்லால்” என்று இன்று எழுதுவது அதி பொருத்தமாக இருக்கிறது.
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம். அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம். அது ஒரு சத்தியம்.
OCO
I6

ஏன் சிரித்தான் பரமசிவன்?
(Cd, யுகாந்திரமாக - காலம் காலமாக - ஜீவாத்மாக்களின் இசைக்கு இசைந்த - அவர்களின் பாட்டுக்குப் பணிந்த - அந்தப் பரமாத்மாவான பரமசிவன் - கைலையில் உறையும் அந்தக் கைலைநாதன் - முதன் முறையாக இன்று - அந்த வெள்ளி மலையில் தனிமையில் அமர்ந்து - பூமியைப் பார்த்த வண்ணம் - அண்ட சராசரங்களும் அதிரும்படியாக - வாய்விட்டுச் சிரித்த படியே பாடிக்கொண்டிருக்கிறான்.
“சிரிப்பு வருது - சிரிப்பு வருது - சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது. மனித மனத்தை - மனித குணத்தை - நினைக்க நினைக்கச் சிரிப்பு வருது”
ஹா - ஹா - ஹா - - - ஹா - ஹா - ஹா - - - ஹா - ஹா - ஹா - உடல் குலுங்க - உள்ளம் மலர - முப்பது முக்கோடி தேவர்களும் மலைக்கும் வண்ணம் - ஈரேழு உலகங்களும் பிரமிக்கும் வண்ணம் தன்னை மறந்து கைலைநாதன் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறான்.
இப்பொழுது - இந்த நேரத்தில் - பூலோகத்தில் அவனுக்கு யாரைப் பார்த்தாலும் - எதைப் பார்த்தாலும் - எதைக் கேட்டாலும் சிரிப்பு வருகிறது.
பரமசிவனின் சிரிப்பு இது படைத்தவனின் சிரிப்பு இது. சரியான காரணமில்லாமல் - ஆழமான அர்த்தமில்லாமல் உதயமாகியிருக்க முடியாது இந்தச் சிரிப்பு.
எதற்காகச் சிரித்தான் அந்தப் பரமசிவன்? எதைப் பார்த்துச்
சிரித்தான் அந்தப் பரமசிவன்?
ון

Page 41
டாக்டர் பூரீதரன்
நாமோ வெறும் மனிதர்கள் - ஜீவாத்மாக்கள். கேட்டுத் தெரிந்து கொள்ளும் நிலை நமக்கில்லை - அந்த நிலையிலும் நாமில்லை. ஆனால் நம்மைப் படைத்தவனைப் புரிந்து கொண்டால் - அவனின் போதனைகளை அறிந்து கொண்டால் - மானிட வடிவில் அவ்வப்போது தோன்றி நமக்கெல்லாம் அவன் கூறியவற்றை கவனித்தால் - அவன் சிரிப்பின் காரணத்தை
ஊகிக்கலாம்.
ஊகம் என்று வந்து விட்டால் - ஊகிப்போம் என்று புறப்பட்டு விட்டால் - கற்பனை களைக்கும் வரை ஊகித்துக் கொண்டே போகலாம். அந்த பூரீரங்கநாதன் பாற்கடலில் பள்ளி கொண்டதற்கே அத்தனை அத்தனை காரணங்கள் ஊகிக்கப் பட்டிருக்கும் போது - பரமசிவன் சிரிக்கும்படியாக நாம் இங்கு நடாத்தும் திருவிளையாடல்கள் - கோமாளித்தனங்கள் பித்துக்குளித்தனங்கள் ஒன்றா? இரண்டா? ஊகிப்பதற்கு!
இருந்தாலும் ஊகிப்போம் அவற்றில் சிலவற்றை!
அடுத்த நொடியில் நமது இருதயம் துடிக்குமா? துடிக் காதா? என்பதற்கு எது வித உத்தரவாதமுமில்லாத போது - இந்த நொடியில் நாம் வெளியில் விட்ட மூச்சு அடுத்த தடவை உள்ளே வருமா? வராதா? என்பதற்கு எதுவித உத்தரவாதமு மில்லாத போது - இந்தக் கணத்தில் நாம் விாயில் போட்ட உணவு வயிற்றைச் சென்றடையுமா? சென்றடையாதா? என்பதற்கு எது வித உத்தரவாதமுமில்லாத போது - - - இந்த மனிதர்கள் - - - "அப்பனே! கைலைநாதா! எங்களைப் பொறுத்த வரையில் எல்லாமே சரியாகத் தான் இருக்கின்றன - எல்லாமே உத்தர வாதத்துடன் தான் இருக்கின்றன - அதைப்பற்றி நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நான் வாங்கிய இந்தக் கார் மட்டும் ஒழுங்காக வேலை செய்வதற்கு உத்தரவாதம் தா - மிகுதியை நாம் பார்த்துக் கொள்கிறோம்” - என்ற மனப்பாங் குடன் புதிதாக வாங்கிய காரின் திறப்பை குருக்களிடம் கொடுத்து - தீபாரதனை காட்டி - காருக்கு முன்னால் தேங்காய் உடைக்கும் தனது பக்தர்களையும் “கைலைநாதனின் ஆசீர் வாதம் கிடைத்துவிட்டது உங்களுக்கு - இனி ஒரு கவலை யுமில்லை” - என்று பக்தர்களுக்கு உறுதி வழங்கும் வேதியர் களையும் பார்த்துத் தான் சிரித்தானோ அந்தப் பரமசிவன்?
78

நிர்வாணம்
கடந்த பதினைந்து வருடங்களாக - உறவினர்களை நண்பர் களை பொது இடங்களில் சந்திக்கும் போதெல்லாம் - “என்ன இருந்தாலும் நமது நாடு மாதிரி ஒரு நாடும் அமையாது - சொந்த நாடு என்றாலே சொர்க்கம் தான் - இந்த நாட்டிற்கு வந்தது நாம் போன பிறவியில் செய்த பாவம் - யாழ்ப்பாணத்தில் ஒரு கஞ்சியைக் காய்ச்சிக் குடிப்பதில் உள்ள சுகம் இங்கு கிடைக்காது - ஊர் நிலைமைகள் மட்டும் சரியாக வந்தால் எப்படியாவது மூட்டை கட்டி விட வேண்டும்” - என்று வாய்க்கு வாய் - பேச்சுக்குப் பேச்சு கூறி வந்த நம்மில் பலர் - கடந்த சில மாதங்களாக - சமாதானப் பேச்சுகள் சாதகமாகத் திரும்பி யிருக்கும் இந்த வேளையில் - ராகத்தை மாற்றி - தாளத்தை மாற்றி - “என்னுடைய கடைசி மகள் இன்னும் ஆறு வருடத்தில் சோதனை எடுக்கப் போகிறாள் - அவளைக் குழப்பக் கூடாது” என்றும் - “வீட்டை இன்னும் நாலு வருடங்களுக்கு நல்ல விலைக்கு விற்க முடியாது - அது தான் கொஞ்சம் யோசனை யாக இருக்கிறது” என்றும் - “எனது மூத்த மகளின் பிரசவத் திற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்றன” என்றும் “எனது நாய் இன்னும் மூன்று மாதங்களில் குட்டி போடப் போகிறது” என்றும் பிதற்றித் திரியும் நம்மில் சிலரைப் பார்த்துத் தான் சிரித்தானோ அந்தப் பரமசிவன்?
பிறந்து வளர்ந்த நாட்டைத் துறந்து - நாடு நகரங்களைத் தாண்டி - சமுத்திரங்களைத் தாண்டி - ஆயிரமாயிரம் மைல் களுக்கப்பாலுள்ள அந்நிய நாடு ஒன்றில் வாழும் நாம் - அந்நியன் போட்ட கால அட்டவணையின்படி இயங்கும் புகையிரதத்தில் - பஸ்ஸில் பயணம் செய்து - அந்நியன் வகுத்த கால அட்ட வணையின்படி இயங்கும் அலுவலகங்களில் வேலை செய்து விட்டு - மலையில் வீட்டிற்கு வரும் வழியில் - அந்நியன் திட்ட மிட்ட கால அட்டவணையின்படி இயங்கும் பாடசாலைகளில் கற்கும் நம் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து - வயிறு புடைக்க உண்ட பின் கால் மேல் கால் போட்ட வண்ணம் - இரவு பத்து மணிக்கு பி.பி.ஸி தொலைக்காட்சியில் காலநிலை பற்றிய அறிவிப்புகள் முடிந்ததும் - தொலைபேசி யில் குருக்களை அழைத்து "ஐயா! இந்த முறை எங்கடை புது வருஷம் எப்ப ஐயா பிறக்குது” என்று கேட்கும் நமது கேள்வி யையும் - “சாவகச்சேரி பஞ்ஞாங்கத்தின்படி திங்கட்கிழமையும்
79

Page 42
டாக்டர் பூரீதரன்
- கொக்குவில் பஞ்சாங்கத்தின்படி செவ்வாய்கிழமையும் - எனது விஷேட கணிப்பின்படி இவை இரண்டுக்கும் நடுவிலும் நமது வருஷம் பிறக்கிறது” - என்று கூறும் குருக்களின் பதிலையும் நினைத்து நினைத்துச் சிரித்தானோ அந்தப் பரமசிவன்?
பிறந்ததிலிருந்து இறக்கும் வரை - காலையிலிருந்து மாலை வரை - ஒவ்வொரு நாளும் - ஒவ்வொரு பொழுதும் - வீட்டில் ஒரு வேடம் - அலுவலகத்தில் ஒரு வேடம் - அலுவலகு நண்ப னிடம் ஒரு வேடம் - நண்பியிடம் வேறொரு வேடம் - வீட்டில் மனைவியிடம் ஒரு வேடம் - பிள்ளைகளிடம் இன்னொரு வேடம் - இறைவனுக்கு ஒரு வேடம் - நமக்கு நாமே ஒவ்வொரு வேடம் - இப்படி இப்படியே - ஒத்திகை பாராமல் - வசனங்கள் எதுவும் மனப்பாடம் செய்யாமல் - ஆளுக்கேற்ப - இடத்திற் கேற்ப கச்சிதமாக நடித்து வெற்றிகரமாக வாழ்க்கை நடாத்தும் நாம் - யாரோ ஒரு கூத்தாடி - வயிற்றை நிரப்புவதற்காக - வேடம் போட்டு - வசனங்களை மனப்பாடம் செய்து - ஒத்திகைகள் பல பார்த்து - சினிமாவில் நடித்து அதி சிறந்த நடிகன் அல்லது நடிகையாகத் தெரிந்தெடுக்கப்பட்டதும் - தொலைக்காட்சியில் - நேரில் - அவர்களைப் பார்த்ததும் - 'ஆ' - என்று வாயைத் திறக்கும் நம்மைப் பார்த்துத் தான் சிரித்தானோ அந்தப் பரமசிவன்?
பிரித்தானிய அரசியாரின் தலையில் இருக்கும் கிரீடத்தில் எத்தனை வைரங்கள் இருக்கின்றன? அமெரிக்க ஜனாதிபதி யிடம் எத்தனை செருப்புகள் உள்ளன? தமிழகத்தின் முதல்வரின் காரின் நிறம் என்ன? இது போன்ற கேள்விகளைக் கேட்டு - அதி சிறந்த அறிவாளியைத் தேர்ந்தெடுக்கும் தொலைபேசி - வானொலி நிகழ்ச்சிகளைப் பார்த்து விட்டு - கேட்டு விட்டு - இது தான் அறிவு என்று எண்ணி - வென்றவர்களின் அறிவுத் திறமையை மெச்சி - அந்த அறிவாளியைப் போலவே நாமும் வர வேண்டும் - நமது பிள்ளைகளும் வர வேண்டும் என்று முட்டாள்தனமான முயற்சி எடுப்பவர்களைப் பார்த்துத் தான் சிரித்தானோ அந்தப் பரமசிவன்?
பதினெட்டு வயதில் க.பொ.த. (உயர்தரம்) பரீட்சையில் தோல்வியடைந்ததும் உனக்கு இனி வாழ்வே இல்லை - உனது பிறவியே வீணாகி விட்டது - என நண்பர்கள் - உற்றார்கள் -
80

நிர்வாணம்
உறவினர்கள் - ஆசிரியர்கள் - கூறியதை அப்படியே நம்பி - வாழ்க்கையில் விரக்தியடையும் மாணவர்கள். பரீட்சையில் சித்தியடையாத இப்படியொரு உதவாக்கரை மகனைப் பெற்று விட்டேனே - நாலு பேர் முகத்தில் இனி எப்படி முழிக்கப் போகிறேன் - சமூகத்தில் எப்படித் தலை நிமிர்ந்து நடக்கப் போகிறேன் என்று விசனப்பட்டு - கவலைப்பட்டு - மார்பு நோயால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அப்பாக்கள். இப்படியான மாணவர்களுக்கு - பரீட்சையில் தோல்வியடையும் மாணவர்களுக்கு - இனி எதிர்காலம் என்ன என்பதை திட்ட மிடும் அயலவர்கள் - ஊர்ப் பெரியவர்கள். இவர்களையெல் லாம் பார்த்துத் தான் சிரித்தானோ அந்தப் பரமசிவன்?
அவன் சிரித்த காரணங்களை ஊகிப்பதற்கு நாம் படும் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு அவனே அசரீரியாக ஒலிக்கிறான். கேட்கிறதா உங்களுக்கு?
“பக்தி என்ற பெயரில் - இறைவழிபாடு என்ற பெயரில் - தேச பக்தி என்ற போர்வையில் - சாத்திரங்கள் என்ற பெயரில் - கல்வி என்ற பெயரில் - கலை கலாச்சாரம் என்ற பெயரில் - நீங்கள் செய்யும் கோமாளித்தனங்களை - பித்துக்குளித்தனங் களை பார்த்து இன்று நான் மட்டுமே சிரித்தேன். ஆனால் இப்படியே நீங்கள் தொடர்ந்தால் - நாளை உங்களைப் பார்த்து நீங்கள் வளர்க்கும் நாயும் சிரிக்கும் - மயானத்தில் திரியும் பேயும் சிரிக்கும்”
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம். அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம். அது ஒரு சத்தியம்.
OOO
8

Page 43
ஆபத்தான அரைகுறை உண்மைகள்
பிராமணீயம், இந்து மதம் சொல்லும் - ஆதியும் அந்தமு மற்ற - உருவமும் அருவமுமற்ற - அணுவுக்குள் அணுவாயும் - அப்பாலுக்கு அப்பாலாயும் விளங்கும் - சுயம்புவான பிரம்மம் என்ற அந்தச் சிக்கலான சத்தியத்தை - அன்று. - அதாவது மொழிகள் வளர்ச்சியடையாத ஒரு காலத்தில் - எழுத்துக்கள் எதுவுமற்ற ஒரு காலத்தில் - பாமர மக்களுக்கு இலகுவில் புரிய வைப்பதற்காக - அன்று வாழ்ந்த மாமனிதர்களுக்கு ஒரு கற்பிக்கும் முறை தேவைப்பட்டது என்பதையும் - அதற்காகவே அவர்கள் புராணங்களையும் இதிகாசங்களையும் உருவாக்கி னார்கள் என்பதையும் - இதனால் தான் - நமது புராணங்களும் இதிகாசங்களும் கூறும் அத்தனை ஆயிரம் தெய்வங்களுக்கும் - அத்தனை ஆயிரம் தேவர்களுக்கும் பின்னணியில் இருப்பது பிரம்மம் என்ற ஒன்று மட்டுமே என்பதையும் இங்கு எடுத்துக் கூறாத மாமனிதர்களில்லை - விளக்காத சிந்தனையாளர்களில்லை.
அதே சமயம் - மொழிகள் வளர்ந்து விட்ட இந்தக் கால கட்டத்தில் - எழுத்துக்கள் பெருகிவிட்ட இந்தக் கால கட்டத்தில் - மக்களின் சிந்தனைத் திறன் வளர்ந்து விட்ட இந்தக் கால கட்டத்தில் - கற்பிக்கும் முறைகள் பெருகிவிட்ட இந்தக் கால கட்டத்தில் - இந்து மதம் கூறும் மாபெரும் தத்துவங்களை தந்திரமாக - வேண்டுமென்றே மறைத்து - புராணங்களை ஆதார மாக வைத்து - வித்தை காட்டும் திருவிழாக்களை உருவாக்கி - சுயநலத்திற்காக - சுயலாபத்திற்காக - இது தான் இந்து மதம் என மக்கள் மீது திணித்து - மதம் பற்றிய ஒரு முழுமையற்ற பார்வையை அவர்களுக்குள் உருவாக்கி - அவர்களின் அன்றாட வாழ்க்கையில் தேவையற்ற பல சிக்கல்களை ஏற்படுத்தும்
82

நிர்வாணம்
வர்த்தக மனப்பான்மைக்குப் பெயர் தான் பிராமணியம் என்பதை ஒவ்வொரு இந்துவும் இங்கு புரிந்து கொள்வது அவசியம்.
பிராமணியம் ஏற்படுத்திய இந்து மதம் பற்றிய நமது பார்வை ஒரு முழுமையற்ற பார்வை - என்ற இந்த முடிவு எந்த அளவுகோலால் அளந்து எடுக்கப்பட்டது? பிராமணியம் என்பது ஒரு வர்த்தக மனப்பான்மை - என்ற இந்தக் கருத்து எந்த அத்திவாரத்தின் மீது நிற்கிறது? பிராமணீயம் நமக்குள் ஏற்படுத்திய முழுமையற்ற பார்வை நமது அன்றாட வாழ்வில் தேவையற்ற பல சிக்கல்களை உருவாக்கியிருக்கிறது - என்ற இந்தப் பிரகடனம் எதை ஆதாரமாக வைத்து உருவாக்கப் பட்டது? என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில்தேட முயல் கிறது இந்த அலசல். அதற்கு அத்திவாரமாக அமைகிறது ஸென் கூறும் பின்வரும் அற்புதமான கதை ஒன்று.
ஒரு நாள் - மாபெரும் ஞானியான ஸென் குரு ஒருவர் - தனது மடாலயத்தில் அமர்ந்து சீடர்களுக்கு உபதேசித்துக் கொண்டிருந்த போது - வழிப்போக்கர் ஒருவர் அவசர அவசர மாக மடாலயத்தினுள் பிரவேசித்தார். குருவை வணங்கிய வழிப்போக்கர் - “குருவே - உங்களுக்கு என்னைத் தெரிந்திருக்க நியாயமில்லை - ஆனால் எனக்கு உங்களைத் தெரியும் - நான் மிகவும் அவசரமாக ஒரு இடத்திற்குப் போய்க் கொண்டிருக் கிறேன் - போகும் வழியில் உங்கள் மடாலயத்தைப் பார்த்தேன் - எனக்கு இப்பொழுது ஆறுதலாக அமர்ந்து பாடம் கேட்பதற்கு நேரமில்லை - இந்தக் குறுகிய நேரத்தில் - எனக்கு ஏதாவது ஒரு ஞானவார்த்தை - ஒன்றே ஒன்று மட்டும் கூறுங்கள் - அதை என் மனதில் அப்படியே பதித்து - அதன் படி ஒழுகுவேன்” என்றார். இதை மெளனமாகக் கேட்ட குரு - பின்வருமாறு கூறினார் - “என்னை அவசரப்படுத்த வேண்டாம் அப்பனே - அவசரத்தில் நான் சொல்லும் அந்த ஒரு சொல்லில் உண்மை காணாமல் போய் விடும் - அவசரத்தில் நான் கூறும் அந்த ஒரு வார்த்தை போது உண்மையை அழித்து விடுவதற்கு - ஆகவே என்னால் அவசரத்தில் எதவுமே கூற முடியாது”
வழிப்போக்கர் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
இந்த உண்மையை ஒரு மாமனிதர் பின்வருமாறு கூறு கிறார்: “இங்கு நமது சமயங்கிருஎல்லாம் அரைவாசி உண்மை
83

Page 44
டாக்டர் பூரீதரன்
களையே கூறுகின்றன - இந்த அரைவாசி உண்மைகள் முழுப் பொய்களை விட ஆபத்தானவை”
இந்த மாமனிதரின் கூற்றை விளக்குவதற்கு ஒரு நடை முறை உதாரணம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு - விநாயகர் பெருநாள் ஒன்றை முன்னிட்டு - பத்திரிகை ஒன்றில் வெளி யான கட்டுரையிலிருந்து தெரியப்பட்ட ஒரு சிறு பகுதி இது.
“முப்புலம் எரித்த சிவபெருமான் - தன்னை நினைக்காமல் இருந்ததற்காக அவரின் தேரின் அச்சைப் பொடிப் பொடி ஆக்கியவர் விநாயகர் எந்தக் காரியம் தொடங்கு முன்னும் விநாயகரை வழிபட்ட பின்னரே தொடங்க வேண்டும். தவறி னால் தடங்கல்களை உருவாக்கி காரியம் சித்தியடையாது தடுத்து விடுவார். உணவில் பேராசை உடையவர். எம்மிடத்தில் இருக்கும் நெற்பொரி போன்ற உணவைக் கொடுத்து விட்டு வணங்கினாலே போதும் - அதிக திருவருளைத் தருவார்.”
இந்து மதத்தின் அத்திவாரத்தைத் தெரியாத ஒரு மனிதனின் மனதில் - இங்கு புராணங்கள் இதிகாசங்கள் இயற்றப்பட்ட தன் காரணங்களைத் தெரியாத ஒரு மனிதனின் மனதில் - இந்து மதத்தின் சகல பரிமாணங்களையும் தெரிந்து கொள்ளச் சந்தர்ப்பங்கள் இல்லாத ஒரு மனிதனின் மனதில் - இந்தக் கதை பதிக்கும் முத்திரைகள் என்ன? இந்தக் கதை ஊகிக்க வைக்கும் ஊகங்கள் என்ன?
அதாவது - விநாயகர் என்பவர் ஒரு மாபெரும சண்டியன். தனக்குப் பணியாதவர்களை வன்முறையின் மூலம் பணிய வைப்பது இவருக்குக் கைவந்த ஒரு கலை. யார் யார் என் னென்ன காரியம் தொடங்குகிறார்கள்? அந்தக் காரியங்களைத் தொடங்கு முன் அவர்கள் தன்னை வழிபட்டார்களா? என்று சதா காலமும் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர இவருக்கு வேறு எந்த விதமான உருப்படியான தொழிலும் கிடையாது. அப்படி யாராவது வழிபடாது விட்டு விட்டால் அவர்களது காரியங்களைக் குழப்பி விடுவார். அதாவது - கப்பம் கொடுக்க மறுக்கும் வியாபாரிகளை அடித்துப் பணிய வைக்கும் ஒரு மூன்றாம் தர ரெளடிக்கும் இந்த விநாயகருக்கும் எந்த விதமான வித்தியாசமும் கிடையாது. அதே சமயம் - எவ்வளவு தான் ரெளடியானாலும் - சிறு பிள்ளையை நாம் மிட்டாயால்
84

நிர்வாணம்
மயக்குவது போல - இவரை உணவால் மயக்கி விடலாம் - ஏனெனில் அவர் ஒரு உணவுப் பிரியன் இன்னொரு வகையில் சொல்வதானால் - கேவலம் - ஒரு நெற்பொரிக்காக எந்த விதமான அநியாயத்தையும் செய்யத் தயங்காதவர்!
நிதானமாகச் சிந்திக்கும் நம்மில் ஒவ்வொருவருக்கும் - சுயமாகச் சிந்திக்கும் நம்மில் ஒவ்வொருவருக்கும் - அப்பட்ட மாகத் தெரியும் ஒரு விடயம் - தெரிய வேண்டிய ஒரு விடயம்: இது இந்து மதம் அல்ல - இது ஆன்மீகம் அல்ல - இது தெய்வ வழிபாடு அல்ல - அல்லவே அல்ல.
மாறாக - ஆண்டவன் பெயரைச் சொல்லி - இது ஒரு வகை மிரட்டல் - ஒரு வகை அச்சுறுத்தல் - ஒரு வகை எச்சரிக்கை. இவற்றின் மூலாதாரத்திற்குப் பெயர் தான் பிராமணியம். இந்த மிரட்டல் - இந்த அச்சுறுத்தல் - இந்த எச்சரிக்கை - நமக்குள் ஏற்படுத்தும் அறியாமை என்னும் மண்ணில் செழித்து வளர்வது தான் பிராமணியம் என்னும் அந்த ஆலமரம்.
பிராமணியம் என்னும் இந்த மனப்பான்மை - ஏதேதோ கதைகள் மூலம் - நமக்குள் உருவாக்கிய மதம் பற்றிய நமது முழுமையற்ற பார்வை - நம்மில் பலரை எப்படிச் சிந்திக்க வைத்திருக்கிறது? - நாம் எப்படிச் சிந்திக்கிறோம்? - என்று கேட்டால் - இதோ - இப்படித்தான்.
“தேரின் அச்சை உடைத்தவர் எனது காரின் பிஸ்டனையும் நிச்சயமாக உடைப்பார்’!
“சிவபெருமானுடனேயே மோதியவர் வடக்கு இலண்டன் மின்சாரப் பொறியியலாளராகிய என்னுடனும் நிச்சயமாக மோதுவார்’!
“நெற்பொரிக்கே மயங்குபவர் நெல் மூட்டையைக் கண்டால் விடவே மாட்டார்”
இப்படி நாம் சிந்திப்பதால் - இப்படித் தான் பிராமணியம் நம்மைச் சிந்திக்க வைத்திருப்பதால் - ஏற்பட்டிருக்கும் நடை முறை விளைவுகளை இங்கு ஒருவன் எழுதித் தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. இருந்த போதும் - என்னால் இப்பொழுது அதை எழுதவே முடியாது. காரணம் “அசிங்கத்தைப் பாராதே - அசிங்கத்தைக் கேளாதே - அசிங்கத்
85

Page 45
டாக்டர் பூரீதரன்
தைப் பேசாதே" - என்று கூறும் அந்தக் குரங்குப் பொம்மை மேசையின் மீதிருந்து முறைக்கிறது.
மதம் என்ற பெயரில் - தெய்வ வழிபாடு என்ற பெயரில் - ஆன்மீகம் என்ற பெயரில் - பிராமணியம் சந்தைப்படுத்தும் இது போன்ற விடயங்கள் நமக்குத் தருவது - நமக்குள் ஏற்படுத்துவது - மதத்தைப் பற்றிய ஒரு முழுமையற்ற பார்வை. நமக்குள் ஏற்பட்ட - ஏற்படுத்தப்பட்ட இந்த முழுமையற்ற பார்வையால் உருவாகிய நமது சிந்தனைகள் நமக்குத் தருவது - அர்த்தமற்ற அச்சங்கள் - ஆாரமற்ற பிரேமைகள் - தேவையற்ற பொருட் செலவு - அநாவசிய பணச்செலவு. அது மட்டுமல்ல - இந்த முழுமையற்ற பார்வையால் தான் - வழிபாடு என்ற பெயரில் - படைத்தவனுக்கு லஞ்சம் கொடுக்கிறோம் - படைத் தவனுடன் பேரம் பேசுகிறோம் - படைத்தவனுடன் பண்ட மாற்றுச் செய்கிறோம்.
இது வழிபாடு அல்ல - இது பக்தி அல்ல. இதனால் தான் அந்த மாமனிதர் சொன்னார்: “இங்கு நமது சமயங்கள் எல்லாம் அரைவாசி உண்மைகளையே கூறுகின்றன - இந்த அரைவாசி உண்மைகள் முழுப் பொய்களை விட ஆபத்தானவை"
இது ஆன்மீகம் அல்ல. இது தெய்வ வழிபாடு அல்ல. இதனால் தான் - அந்த ஸென் ஞானி சொன்னார்: “அவசரத்தில் நான் சொல்லும் அந்த ஒரு சொல்லில் உண்மை காணாமல் போய் விடும் - அவசரத்தில் நான் கூறும் அந்த ஒரு வார்த்தை போதும் உண்மையை அழித்து விடுவதற்கு”
இது இந்து மதம் அல்ல - இது சநாதன தர்மம் அல்ல. இதனால் தான் அந்தக் கவிஞர் பாடினார்: “அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது? அது - அவரவர் கடமைகளை வகுத்துச் சொன்னது. ஆசை வந்து வேதியரை ஆட்டி வைத்தது - அது தான் அள்ளியிட நெருப்பை இங்கே மூட்டி வைத்தது”
என்றோ - யாருக்காகவோ - ஏதேதோ காரணங்களுக்காக - இயற்றப்பட்ட புராணங்களை - கதைகளை - மதம் என்ற பெயரில் - ஆன்மீகம் என்ற பெயரில் - வழிபாடு என்ற பெயரில் - எத்தனை நாட்களுக்கு நமது ஆலயங்கள் சுமக்கப் போகின்றன? எத்தனை நாட்களுக்கு நமது ஆலயங்கள் திணிக்கப் போகின்றன?
86

நிர்வாணம்
எதற்காக நமது ஆலயங்களில் தன்னைத் தானே உணர வைக்கும் தியானம் பயிற்றுவிக்கப்படக் கூடாது? எதற்காக நமது ஆலயங்களில் புராணங்கள் - இதிகாசங்கள் இயற்றப் பட்டதன் உண்மைக் காரணம் மக்களுக்கு எடுத்துக் கூறப்படக் கூடாது? எதற்காக நமது ஆலயங்களில் சடங்குகள் என்பதே வெறும் சடங்குகள் தான் என்ற உண்மை எடுத்துக் கூறப்படக் கூடாது? எதற்காக நமது ஆலயங்களில் இந்து மதத்தின் ஆழமான தத்துவங்களை மக்களுக்கு விளக்க முயற்சிகள் எடுக்கப்படக் கூடாது? மொத்தத்தில் - எதற்காக நமது ஆலயங்களில் பிராமணியம் ஒதுக்கிவைக்கப்படக் கூடாது?
ஆலயங்களில் தர்மத்தைக் காப்பவர்கள் மட்டுமல்ல தர்மகர்த்தாக்கள். அதர்மத்தை ஒழிப்பவர்களும் தர்மகர்த் தாக்கள் தான்.
ஆயிரம் ஏழைகளுக்கு உணவு அளிப்பது - ஒருவனின் அறியாமையை நீக்குவது - இவை இரண்டுமே ஒன்று தான் - என்ற கருத்தை மனதார நம்பும் தர்மகர்த்தாக்கள் தோன்ற வேண்டும் நம்மிடையே. அவர்கள் உருவாக்கும் ஆலயங்கள் பெருக வேண்டும் நம்மிடையே.
அப்பொழுது - இங்கு - நாளெல்லாம் பெளர்ணமி பொழுதெல்லாம் பண்டிகை.
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம். அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம். அது ஒரு சத்தியம்.
OOC
87

Page 46
கறை படைந்த கல்வி
கில்வி கல்வியைக் கண்ணெனப் போற்றி - அதை நமக்கு வழங்கும் அந்தக் கலைமகளுக்கு ஆண்டு தோறும் விழா எடுத்து வழிபடும் ஒரு சமூகம் - - வாழும் நாட்டில் மூலை முடுக்கெல்லாம் கல்விக்கூடங்கள் அமைக்கும் ஒரு சமூகம் - - கல்விக்காக மாபெரும் தியாகங்கள் செய்யும் ஒரு சமூகம் - கல்விமான்கள் நிறைந்த ஒரு சமூகம் - - - இவையெல்லாம் நமது சமூகத்திற்கு நம்மால் - அந்நிய சமூகங்களினால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் - பதிக்கப்பட்ட முத்திரைகள்.
இந்தச் சான்றிதழ்கள் - இந்த முத்திரைகள் - இவை எல்லாமே சத்தியம் தான் என்பது போல ஆயிரமாயிரம் முது மொழிகள் நம்மிடையே. “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" - "இளமையில் கல்வி சிலையில் எழுத்து" - "தந்தையொடு கல்வி போம்”- “காலை எழுந்தவுடன் படிப்பு’ - “ஒதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்” - “கற்க கசடற கற்றவை கற்ற பின்” - - - அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்த முதுமொழிக்ள் வெறும் ஏட்டில் உள்ள எழுத்துக் கள் அல்ல என்பதற்கு ஆதாரம் நமது காதில் அன்றாடம் வந்து விழும் பிரகடனங்கள். “எனது வருமானத்தையெல்லாம் எனது பிள்ளைகளின் படிப்பிற்காகவே செலவழிக்கிறேன்” – “எதை விற்றாவது எனது மகனை ஒரு பட்டதாரியாக்குவதே எனது வாழ்க்கையின் இலட்சியம்”- “நான் ஊருக்குள் தலை நிமிர்ந்து நடப்பதானால் நீ கட்டாயம் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல வேண்டும்' ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கத் தவறாக பிரகடனங்கள்.
அதே சமயம் - இவ்வளவு சான்றிதழ்களுக்கு மத்தியில் - இவ்வளவு முதுமொழிகளுக்கு மத்தியில் - இவ்வளவு பிரகடனங்

நிர்வாணம்
களுக்கு மத்தியில் - அமைதியாக அமர்ந்து - கண்களைச் சற்று மூடி - நம்மை நாமே சிறிது’குடைந்தால் - எங்கோ விழுகிறது ஒரு பிசிறல் - எங்கோ அழுகிறது ஒரு நாதமற்ற தந்தி,
கல்வியைக் கண்ணெனப் போற்றும் - கலைமகளை வழிபடும் - கல்விமான்கள் நிறைந்திருக்கும் ஒரு சமூகத்தில் பெரும்பாலான தனி மனிதர்களின் வாழ்க்கை - ஒரு தெளிந்த நீரோடை போல பாய வேண்டும் - அவர்கள் எதற்குமே கலங்காத அந்த இமயத்தைப் போல வீற்றிருக்க வேண்டும் - அவர்களின் சித்தம் ஆடாமல் அசையாமல் ஒளிரும் ஒரு தீபம் போல துலங்க வேண்டும். காரணம் - அது தான் கல்வியின் சிறப்பு - அது தான் கல்விமான்களின் இயல்பு - அது தான் கலைமகள் வழங்கும் அருள்.
இது நமது விடயம் - நம்மில் பலர் சம்பந்தப்பட்ட விடயம் - இன்று நமது சந்ததி சம்பந்தப்படும் விடயம். ஒளிக்காமல் - மறைக்காமல் - பசப்பாமல் - நெஞ்சை நிமிர்த்தி - ஆண்மை யுடன் - மனம் திறந்து பேசுவோம்.
தெளிந்த நீரோடை போல சலனமற்றா பாய்கிறது நம்மில் பலரது வாழ்க்கை? காட்டாற்று வெள்ளம் போல குதித்து - கொப்பளித்து - அடித்து - அலை மோதி - கரைகளைத் தாண்டி வழிகிறது வாழ்க்கை.
எதற்குமே கலங்காத அந்த இமயத்தைப் போலவா வீற்றிருக் கிறோம் நம்மில் பலர்? காற்று அடிக்கும் போதெல்லாம் உருக்குலையும் மணல் குவியல் போல இருக்கிறது வாழ்க்கை.
ஆடாமல் அசையாமல் ஒளிரும் தீபம் போலவா துலங்கு கிறது நம்மில் பலரது சித்தம்? அகப்பட்டதையெல்லாம் வாரிச் சுருட்டும் காட்டுத் தீ போல அட்டகாசம் பண்ணுகிறது வாழ்க்கை, ஏன் இப்படி? எதற்காக இப்படி? எங்கு நடந்தது தவறு? அலசுகிறது இந்தக் கட்டுரை.
நாம் என்ன கற்றோம்? எப்பொழுது கற்றோம்? எதற்காகக் கற்றோம்? எது வேண்டிக் கற்றோம்? எந்தச் சூழ்நிலையில் கற்றோம்?
எட்டு வயதில் - துள்ளித் திரியும் பிராயத்தில் - "அறம் செய்ய விரும்பு’ - "ஆறுவது சினம்” - இரவு முழுவதும் மனப்
教

Page 47
டாக்டர் பூரீதரன்
பாடம் செய்து - அறமும் புரியாமல் - சினமும் புரியாமல் - ஒரு கிளியைப் போல ஒப்புவித்தோம். ஆனால் பரீட்சையில் நமக்கு அதி சிறந்த சித்தி.
பதின்மூன்று வயதில் - ஹார்மோன்கள் சுரக்க ஆரம் பிக்கும் வயதில் - “அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" - ஒரு தடவைக்கு பத்து தடவை வீட்டில் எழுதிய பின் - ஆதியையும் புரியாமல் - பகவானையும் புரியாமல் - பரீட்சை எழுதினோம். ஆனால் பரீட்சையில் நமக்கு அதி சிறந்த சித்தி,
பதினைந்து வயதில் - ஹார்மோன்கள் நம்மை செம்மை யாக ஆட்சி செய்த போது - க.பொ.த. (சாதாரணம்) பரீட்சைக் காக இந்து சமயம் கற்றோம்.“ஆணவம் - கன்மம் - மாயை'- என மலங்கள் மூவகைப்படும் என்றார் ஆசிரியர், “சலமிலன் பேர் சங்கரன்’ என்றார் ஆசிரியர். மலமும் புரியலில்லை - சலமும் புரியவில்லை. ஆனால் பரீட்சையில் நமக்கு அதி சிறந்த சித்தி.
க.பொ.த. (சாதாரணம்) வெற்றிகரமாகச் சித்தியெய்திய பின் - விஞ்ஞானம் படிக்கத் தேவையான திறமைச் சித்திகள் கிடைத்த பின் - யாருக்கு வேண்டும் ஆத்தி சூடி? எவனுக்கு வேண்டும் கொன்றை வேந்தன்? யார் அந்தத் திருவள்ளுவர்? எவன் அந்தச் சலனமற்ற சங்கரன்? இவர்கள் யாருமே சோறு போட மாட்டார்கள் - பரீட்சைகளுக்காக மட்டுமே இவர்கள் - புத்தியுள்ள எவனுமே - பிழைக்கத் தெரிந்த எவணுமே - இவை எதையுமே - க.பொ.த. (சாதாரணம்) சித்தியெய்திய பின் படிக்கக் கூடாது என்பது நமது ஊர்ப் பஞ்சாயத்தின் தீர்ப்பு. தீர்ப்பை மீறி - தொடர்ந்து படித்தவர்களுக்கு நமது சமூகம் வழங்கிய தண்டனைகள்: புத்தி குறைந்தவன் என்ற பட்டம் மாணவ னுக்கு - பிள்ளையை சரியாக வளர்க்கத் தெரியாதவர்கள் என்ற பட்டம் பெற்றோர்களுக்கு - பெண் கொடுக்க மறுப்பு - சீதனம் அற்ற திருமணம் - உறவு கொண்டாட மறுப்பு.
இதன் விளைவு: நம்மில் பலர் - தாவரவியல் படித்தோம் - விலங்கியல் படித்தோம் - கணிதம் படித்தோம் - இரசாயணம் படித்தோம் - பெளதீகம் படித்தோம் - சட்டம் கற்றோம் - தொழில் நுட்பம் கற்றோம்
இருபத்தி மூன்று வயதில் - பெற்றோர்கள் இட்ட பெயரை விட - அதற்குள் மறைந்திருக்கும் நம்மை விட - பல்கலைக்
90

நிர்வாணம்
கழகம் தந்த - நமது பெயருக்குப் பின்னால் இருக்கும் மூன்றெழுத் திலும் - நான்கெழுத்திலும் அதிக நம்பிக்கை வைத்து - நெஞ்சை நிமிர்த்தி வாழ்க்கையைத் தொடங்கினோம். பதவி கிடைத்தது - பணம் கிடைத்தது - பகட்டு கிடைத்தது - கார் கிடைத்தது - வீடு கிடைத்தது. வாழ்க்கையும் நகர்ந்தது.
இப்பொழுது வாழ்க்கை என்னும் சமுத்திரத்தின் நடுப் பகுதியில் வந்து நிற்கிறோம். நமது புத்திக்குப் புரியாத சமுத்திர ஆழம் - அந்த ஆழத்தையே ஆழ முற்படும் சுற்றிச் சுழலும் காற்று - அந்தக் காற்று சுமந்து வரும் பேய் போன்ற மழை - இடி - மின்னல் - மலை போல பொங்கும் அலைகள் - அதில் முட்டி மோதும் பல வித பிராணிகள்.
இப்பொழுது தான் வாழ்க்கை தனது சுயரூபத்தை நமக்குக் காட்டுகிறது - இது வரை நாம் பார்த்திராத கோரமான பரி மாணங்களை நமக்குக் காட்டுகிறது - நாம் இது வரை கேட்டி ராத பயங்கர ஒலிகளை எழுப்புகிறது.
புயலுக்கு அசையாத - மழைக்குச் சரியாத - மாடி மீது மாடி கட்டத் தெரிந்த கட்டிடப் பொறியியலாளர்களாகிய நம்மில் பலர் - நமது வாழ்க்கையில் சோதனை மேல் சோதனை வரும் போது - நொருங்கி விடுகிறோம் - சரிந்து விடுகிறோம். இப்பொழுது நாம் கற்ற கல்வி நமக்குக் கைகொடுக்கவில்லை.
லாவகமாக உடலைக் கீறி - வேண்டாத விருந்தாளி போல நோயாளியின் ஈரலில் வளரும் கட்டியை வெட்டியகற்றும் சத்திர சிகிச்சை நிபுணர்களாகிய நம்மில் பலர் - அன்றாட வாழ்வில் நமது மனதைக் குடையும் கவலைகளை - விரக்தி களை அகற்ற வழியறியாது - கையாளும் நுணுக்கம் புரியாமல் - துவண்டு போகிறோம் - துடித்துப் போகிறோம். இப்பொழுது நாம் கற்ற கல்வி நமக்குக் கைகொடுக்கவில்லை.
அதி சிறப்பாக வரவு - செலவு கணக்குப் போட்டு - சம்பளம் கொடுக்கும் ஸ்தாபனத்தின் நட்டத்தை லாபமாகவும் - லாபத்தை நட்டமாகவும் காட்டும் வல்லமை பெற்ற கணக்காளர்களாகிய நம்மில் பலர் - இறைவன் நமது வாழ்க்கையில் போடும் கணக்குகளை தீர்க்க வழி தெரியாது தடுமாறுகிறோம் - தத்தளிக்கிறோம். இப்பொழுது நாம் கற்ற கல்வி நமக்குக் கைகொடுக்கவில்லை.
91

Page 48
டாக்டர் பூரீதரன்
அந்த வீரத்துறவி விவேகானந்தர் அற்புதமாகக் கேட்டார் - படித்த நம்மையெல்லாம் பார்த்துத் தான் கேட்டார்: “ஒருவன் கற்கும் கல்வி அவனுக்குள் ஏற்கனவே இருக்கும் பூரணத் துவத்தை அவனுக்கு உணர்த்தவில்லையெனில்-ஒருமனிதனைத் தன்னைத் தானே அறிய வைக்கவில்லையெனில் - வாழ்க்கை யென்றால் என்னவென்று அவனுக்கு உணர்த்தவில்லையெனில் - அவனை வாழ்க்கைக்கு தயார்ப்படுத்த வில்லையெனில் - அது என்ன கல்வி?
நாம் கற்ற கல்வி நமக்குப் பட்டம் தந்தது - பதவி தந்தது - அந்தஸ்து தந்த்து - பணம் தந்தது - பகட்டு தந்தது - கார் தந்தது - வீடு தந்தது. அதே சமயம் - இது வாங்கினால் அது இனாம் என்பது போல - அவையெல்லாவற்றுடனும் சேர்த்து - வேறு ஏதேதோவெல்லாம் தந்தது.
புரியவில்லை? மனப் புழுக்கம் - மன வருத்தம் - இரத்த அழுத்தம் - இரத்தத்தில் சர்க்கரை - நரம்புத் தளர்ச்சி - தூக்க மற்ற இரவுகள் - மருந்துகள் - மாத்திரைகள். நாற்பது வயதில் மயானம் அழைக்கிறது. இப்பொழுது நாம் கற்ற கல்வி நமக்குக் கைகொடுக்கவில்லை. செய்வதறியாது - அர்ச்சனைக்குப் பதிலாக விசேட அபிசேகம் செய்கிறோம். கோவிலை இரண்டு முறைக்கு நான்கு முறை சுற்றுகிறோம். வரப்போகும் புரட்டாசி மாதத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் - சனியனை விரட்டு வதற்காக.
ஆத்மபோதத்தில் சங்கரர் சொல்கிறார் - படித்த நமக்குத் தான் சொல்கிறார். “உன்னைப்பற்றிய அறிவொன்றே - உனக்குள் இருக்கும் அந்தப் பூரணத்தை உணர்த்தும் அறிவொன்றே - உன்னைத் துன்பங்களிலிருந்து விடுவிக்கும்’
அப்படியானால் இங்கு நாம் என்ன கற்றோம்? எதற்காகக் கற்றோம்?
மனித வாழ்க்கைக்கு உதவாத - மனித வாழ்க்கையை மேம் படுத்தாத - மனிதனை யார் என்று அவனுக்கே உணர்த்தாத - வெறும் குப்பைகளை - பணத்திற்காக - பட்டத்திற்காக - பகட் டிற்காக - பதவிக்காக - காருக்காக - வீட்டிற்காகக் கற்றோம்.
அதே சமயம் - இவற்றின் சுயரூபம் தெரியாமல் - இவை யெல்லாம் போதாது - இன்னும் வேண்டும் - இன்னும் வேண்டும்
92

நிர்வாணம்
என்று கூறி - அன்றிலிருந்து இன்று வரை - ஒரு வேட்டை நாயைப் போல - எதையெதையோவெல்லாம் துரத்துகிறோம். மொத்தத் தில் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை நம்மில் பலரது வாழ்க்கை ஒரு அர்த்தமற்ற துரத்தல்.
யாரோ ஒரு மாமனிதர் சொன்னர்: “இறப்பு வரும் போது மனிதர்கள் இறப்பைப் பார்த்து பயப்படுவதில்லை - ஆனால் நான் இங்கு இன்னும் வாழவே ஆரம்பிக்கவில்லையே என்று தான் விசனப்படுகிறார்கள்’
இந்த அலசலின் முடிவு?
நாற்பது வயதில் நமக்கு மீண்டும் ஒரு கல்வி தேவை. அது நமது உடலின் நிலையாமையை விளக்கும் கல்வி - நமது மனதின் வினோதத்தை விளக்கும் கல்வி - நமது பிறப்பின் சூட்சுமத்தை விளக்கும் கல்வி - நமக்கு எதனால் துன்பங்கள் வருகின்றன - அவற்றை எவ்வாறு தடுக்கலாம் என்பதை விளக்கும் கல்வி - யாருடைய தயவுமின்றி என்னைச் சுயமாகச் சிந்திக்க வைக்கும் கல்வி - மொத்தத்தில் அது தான் அந்த அவதாரங்கள் கூறிய ஆண்மை தரும் கல்வி
ஐயோ ஐயையோ! இப்படியான கல்வியைக் கற்கச் சொல்லி நம்மையெல்லாம் நாற்பது வயதில் கோவணம் கட்டிய ஆண்டி யாக்கப் பார்க்கிறான் இந்த வடிகட்டிய முட்டாள்” வாசகர்கள் பலரின் குரலாக இது ஒலிக்கலாம்.
ஆனால் - கடை வழிக்கு வாராதது காதற்ற ஊசி மட்டு
மல்ல - கட்டிய கோவணமும் கூட
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம். அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம். அது ஒரு சத்தியம்.
OOO
93

Page 49
சூரன்கள் நடாத்தும் சூரன் போர்
பிராமணீயம் ஆண்டுகள் பல வாழ்ந்து - விழுதுகள் பல ஊன்றி விருத்தியாகி நிற்கும். ஒரு ஆலமரத்தைப் போல கடந்த இரண்டாயிரத்தி ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக செழித்து வளர்ந்து நிற்கும் பிராமணியம் என்னும் அந்த மாபெரும் ஆலமரத்தின் ஒராயிரம் விழுதுகளுள் ஒரு விழுதை விபரிக்க முயல்கிறது இந்த அலசல், அதற்கு அத்திவாரமாக அமைகிறது - நம்மில் பலருக்கும் தெரிந்த பின்வரும் ஒரு கதை.
பறவைகளை வேட்டையாடி வாழ்க்கை நடாத்தும் வேடனொருவன் - கானகத்தின் நடுவே தானியத்தைப் பரப்பி - அதன் மேல் வலையை விரித்து - அகப்படப்போகும் பறவை களுக்காக புதரில் மறைந்திருக்க - அந்த வழியே பறந்து வந்த புறாக்களின் கூட்டம் ஒன்று - தரையில் தெரிந்த தானியத்தால் கவரப்பட்டு தரையிறங்க முற்பட்ட போது - கூட்டத்திலிருந்த மூத்த புறா ஒன்று - விடயமறிந்து - அந்தத் தானியத்தைத் தீண்ட வேண்டாமென எச்சரிக்க - எச்சரிக்கையைப் பொருட்படுத் தாத புறாக் கூட்டம் தரையிறங்கி - தானியத்தை உண்ண முற்பட்ட போது - வலையில் வசமாகச் சிக்கிக் கொண்டு - தப்பிக்க வழியேதும் அறியாது திணறியபோது - மீண்டும் மூத்த புறாவின் ஆலோசனையைக் கேட்டு ஒரே நேரத்தில் சகல புறாக்களும் ஒன்றாக - வேடனின் வலையுடன் பறந்து - ஆபத்தி லிருந்து தப்பித்த கதை நமக்கெல்லாம் தெரிந்த - சிறு வயதில் கேட்ட ஒரு கதை.
இது ஒரு கதை - ஒரு கற்பனைக் கதை. எதற்காக இந்தக் கதை உருவாக்கப்பட்டது - இந்தக் கதையை உருவாக்கினவன் எதை நமக்குச் சொல்ல முயல்கிறான் என்று சிந்தித்தால் -
94

நிர்வாணம்
“மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்” - “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” - என்ற இரண்டு பொன்மொழிகளையும் படிப்பவர்கள் மனதில் பதிய வைப்பதற்காகவே இந்தக் கதை உருவாக்கப்பட்டது என்று புரிந்து கொள்வதில் சிரமம் எதுவும் இல்லை.
அதே சமயம் - இதே கருத்துக்களை - இதே பொன்பொழி களை - ஒராயிரம் வித்தியாசமான கதைகளின் மூலமும் - ஓராயிரம் வித்தியாசமான சம்பவங்களின் மூலமும் சொல்ல லாம் - சொல்லியிருக்க முடியும். உதாரணமாக - “மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்' - “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” - என்ற பொன்மொழிகளை விளக்கும் கதைகள் - நம்மிடம் ஏராளமாக இருக்கின்றன. ஈசாப்பு நீதிக்கதைகள் - இதோபதேசம் - பஞ்சதந்திரம் - பாட்டி சொன்ன கதைகள் - அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆகவே - ஒரு கதை என்ன வடிவத்தில் அமைக்கப் பட்டிருந்தாலும் - கதைகளைப் படிக்கும் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விடயம் ஒன்றே ஒன்று தான். அதாவது - கருத்துக் களைக் கூறத் தான் இங்கே கதைகள் உருவாகின்றன - கதா பாத்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. உருவாக்குபவனின் கற்பனைத் திறனைப் பொறுத்து - கேட்பவர்களின் தன்மை யைப் பொறுத்து - சொல்லப்படும் கால கட்டத்தைப் பொறுத்து - அது எந்த ரூபத்திலும் வடிவமைக்கப்படலாம் - எந்த ரூபத்திலும் சொல்லப்படலாம்.
ஆகவே - ஒரு கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கும் - அதில் வரும் சின்னங்களுக்கும் - அந்தக் கதை சொல்ல முன் வரும் கருத்துக்கும் எது வித நேரடி சம்பந்தமும் கிடையாது. வாசகர்களாகிய நாம் - கருத்தை எடுத்து விட்டுக் கதையை வீசி விட வேண்டுமே தவிர - கருத்தைக் கோட்டை விட்டு விட்டு - கதையைப் பற்றிக் கொண்டிருக்கக் கூடாது.
உதாரணமாக - அந்தப் புறாக்களின் கதையைப் படித்த பின் - அன்றாடம் பிக்கல் பிடுங்கல்களுடன் வாழும் ஒரு குடும்பம் - ஒற்றுமையாக வாழ வேண்டுமென்பதற்காக - ஆண்டு தோறும் புறாக்களுக்கு விழா எடுப்பதனால் குடும்பக்தில் ஒற்றுமையைத் தோற்றுவிக்க முடியாது.
95

Page 50
டாக்டர் பூரீதரன்
அதே போலவே - தான் பெற்ற பிள்ளைகள் தனது சொல்லைக் கேட்டு நடப்பதில்லை என்று அங்கலாய்க்கும் ஒரு தந்தை - வீட்டில் வேடனின் படத்தை வைத்துப் பூஜை செய்வதனால் பிள்ளைகளைத் தன் வழிக்குக் கொண்டு வந்து விட முடியாது. காரணம் - புறாவும் வேடனும் கதையில் ஒரு கருத்தைச் சொல்ல வந்த வெறும் கதாபாத்திரங்கள் - வெறும் சின்னங்கள் - வெறும் கற்பனைகள்.
இந்த இடத்தில் அழுத்திச் சொல்லப்பட வேண்டிய ஒரு விடயம்: ஒரு ச தையில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங் களுக்கும் - சின்னங்களுக்கும் - அந்தக் கதை சொல்ல முன் வரும் கருத்துக்கும் எது வித நேரடித் தொடர்பும் கிடையாது என்ற தத்துவம் - புனையப்பட்ட கற்பனைக் கதைகளுக்கு மட்டும் தான் பொருந்துமென்பதல்ல. அது நிஜங்களுக்கும் கூட கன கச்சிதமாகப் பொருந்தும்.
உதாரணமாக - எத்தனை எத்தனையோ பிறவிகளாக ஞானத்தைத் தேடி அலைந்த ஒரு ஜீவன் - இறுதியில் - சித்தார்த்தன் என்ற ராஜ குமாரனாக இங்கு பிறவியெடுத்து - ராஜபோகங்களைத் துறந்து - மனைவியைத் துறந்து - பிள்ளை யைத் துறந்து - இரவோடிரவாக அரண்மனையை விட்டு வெளி யேறி - காடு மேடெல்லாம் அலைந்து - ஒரு நாள் - அரச மரத் தடியில் அமர்ந்து தியானம் செய்த போது - ஞானமடைந்தது - நிர்வாணமடைந்தது - புத்தனாகியது.
இது புனையப்பட்ட கதையல்ல - உருவாகிய கற்பனை யல்ல. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிஜம்.
அதே சமயம் - புனையப்பட்ட அந்தக் கதை கூறும் வேடனுக்கும் - அதே கதை கூறும் “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற கருத்துக்கும் எவ்வாறு எது வித நேரடி சம்பந்தமும் கிடையாதோ - புனையப்பட்ட அந்தக் கதை கூறும் புறாக்களுக்கும் - அதே கதை கூறும் “மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்” என்ற கருத்துக்கும் எவ்வாறு எது வித நேரடி சம்பந்தமும் கிடையாதோ - அது போலவே - அப்படியே - இந்த நிஜ சம்பவத்திலும் - அரசமரத்திற்கும் ஞானத்திற்கும் எதுவித சம்பந்தமும் கிடையாது - போதி மரத்திற்கும் நிர்வாணத்திற்கும் எது வித சம்பந்தமும் கிடையாது.
96

நிர்வாணம்
காலம் கனிந்து வந்த போது - எப்பொழுதோ போட்டு முடித்த கணக்கு நிறைவேறிய போது - அந்தச் சித்தார்த்தன் போதி மரத்தடியில் புத்தனானான். அந்த நேரத்தில் - அந்தச் சித்தார்த்தன் எங்கே இருந்திருந்தாலும் - என்ன கருமம் ஆற்றிக் கொண்டிருந்தாலும் - அவன் புத்தனாகியிருப்பான். அது ஆறாகவும் இருந்திருக்கலாம் - அருவியாகவும் இருந்திருக் கலாம் - ஏன் - அவன் உறக்கத்தில் கூட இருந்திருக்கலாம்.
போதி மரம் ஒரு கருவி - வெறும் சின்னம். அவ்வளவு தான்.
இதனால் தான் - அரசமரத்தடியில் நாம் ஆண்டாண்டு காலம் தவமிருந்தாலும் நமக்கு ஞானம் கிட்டாது - போதி மரத்தடியில் வாழ்நாள் பூராவும் வாழ்க்கை நடத்தினாலும் நமக்கு ஞானம் கிட்டாது - போதி மரத்தை வீட்டில் வளர்த்து பூஜைக்கு மேல் பூஜை செய்தாலும் நமக்கு ஞானம் கிட்டாது. அது புத்தனுக்கு மட்டும் தான்.
இது வரை இந்தக் கட்டுரையில் ஆராயப்பட்ட விடயங்கள் - எடுக்கப்பட்ட முடிவுகள் - அதாவது - கதை - கதாபாத்திரங்கள் - சின்னங்கள் - கருத்து - இவையெல்லாமே வேறு வேறு விடயங்கள் என்ற தத்துவம் - நமது புராணங்களுக்கும் - அவை கூறும் கதைகளுக்கும் கூட கனகச்சிதமாகப் பொருந்தும் - பொருந்த வேண்டும். எந்தக் கதையை எடுத்துக் கொண்டாலும் எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் - கருத்து வேறு - சின்னம் வேறு - என்ற தத்துவம் பிசகின்றிப் பொருந்தும் - பொருந்த வேண்டும்.
உதாரணமாக - சூரன் என்னும் அரசுரனை முருகன் கொன்றதாக ஒரு புராணக் கதை. சூரன் என்னும் அசுரன் உண்மையில் இங்கு வாழ்ந்தானா? அவனைச் சூழ்ந்திருந்தவர் களுக்கு அவன் அளவிலாத் துன்பங்களை விளைவித்தானா? அவர்கள் முருகனிடம் இது பற்றி முறையிட்டார்களா? முருகன் சூரனைக் கொன்றானா? என்பது போன்ற கேள்விகளும் அவை தரும் பதில்களும் - அவை நிஜமானாலும் சரி - கதையானாலும் இன்று நமக்குப் பயனற்றவை. காரணம் - அவற்றால் இன்று நமக்கு எது வித பயனும் இல்லை. காரணம் - அந்த வேடனைப் போல - அந்தப் புறாக்களைப் போல - அந்தப் போதி மரத்தைப் போல - அவை எல்லாமே சின்னங்கள்.
97

Page 51
டாக்டர் பூரீதரன்
ஆனால் - செந்தில்நாதன் அரசு புரிவதாகக் கூறிக் கொண்டு - அந்த திருச்செந்தூரின் கடலோரத்தில் - பிராமணியம் ஆண்டு தோறும் அமர்க்களமாக சூரன் போர் நடாத்துகிறது.
இன்று நடக்கும் இந்தத் திருவிழாவிற்கும் அன்று நடந்த தாகக் கூறப்படும் அந்தச் சூரன் போருக்கும் என்ன சம்பந்தம்? எப்படி இது மதமாகும்? எப்படி இது ஆன்மீகமாகும்?
அபச்சாரம் அபச்சாரம் இப்படியெல்லாம் யாருமே கேட்கக் கூடாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அன்று ஒரே ஒரு சூரன் மட்டுமே இருந்தான். ஆனால் இன்று சூரன்கள் எல்லாம் சேர்ந்தே சூரன் போர் நடாத்துகிறார்கள்.
இது மதம் அல்ல - இது வழிபாடு அல்ல - இது ஆன்மீகம் அல்ல - இது பக்தி அல்ல - அல்லவே அல்ல.
மொழிகள் வளர்ச்சியடையாத ஒரு காலத்தில் - எழுத்துக்கள் எதுவுமற்ற ஒரு காலத்தில் - பாமர மக்களுக்காக இயற்றப் பட்ட புராணக் கதைகளை - அவை இயற்றப்பட்ட காரணங் களைத் தந்திரமாக மறைத்து - அவை இயற்றப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளைத் தந்திரமாக மறைத்து - அவை கூறும் கருத்துக் களை வேண்டுமென்றே மறைத்து - மக்களின் சிந்தனைத் திறன் வளர்ந்து விட்ட இந்தக் கால கட்டத்தில் - மக்களின் படிப் பறிவு வளர்ந்து விட்ட இந்தக் கால கட்டத்தில் - வெறும் கதை களை மட்டுமே பூதாகரமாகக் காட்டி - நாளுக்கொரு திருவிழா வாகவும் - பொழுதுக்கொரு பண்டிகையாக்வும் சுயலாபத்திற் காக - சுயநலத்திற்காக உருமாற்றம் செய்து -இது தான் இந்து மதம் என்று மக்கள் மீது திணித்த - திணிக்கும் வர்த்தக மனப் பான்மைக்குப் பெயர் தான் பிராமணியம்.
எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் போல - மதம் என்ற பெயரில் - வழிபாடு என்ற பெயரில் - பிராமணியம் சந்தைப் படுத்தும் இது போன்ற காலாவதியான விடயங்களை நாம் கடைப்பிடிக்க கடைப்பிடிக்க - நாளொரு கிளையும் பொழு தொரு விழுதுமாக - அமோகமாக வளர்ந்திருக்கிறது பிரா மணியம் என்னும் ஆலமரம்.
பணத்தைப் பெருக்குவதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று- அதிகம் சம்பாதிப்பது. இரண்டு - செலவைக் குறைப்பது. இது போலவே - அறிவு வளர்வதற்கும் இரண்டு வழிகள் உண்டு.
9R

நிர்வாணம்
ஒன்று - புதிய அறிவைத் தேடுவது. இரண்டு - ஏற்கனவே யிருக்கும் பிழையான அறிவைத் தூக்கி வீசுவது. Deconstruction என அழைக்கப்படும் இந்த இரண்டாவது முறை பல மாமனிதர்களால் சிபாரிசு செய்யப்பட்ட ஒரு விடயம்.
நமக்கு இன்று தேவை - இந்த இரண்டாவது முறை, மதம் என்ற பெயரில் - வழிபாடு என்ற பெயரில் - பிராமணியம் நமக்குள் புகுத்தியிருக்கும் குப்பைகளைத் தூக்கியெறிவதாலேயே - நம்மில் பலர் - இங்கே - இப்பொழுதே - ஞானமடைந்து விடுவார்கள்.
நம்மிடையே ஞானவான்கள் தோன்ற வேண்டுமென்பதற் காகத் தான் இங்கு நமக்கு ஒரு இந்து ஆலயம் தேவை. அந்த ஆலயத்தில் - பிராமணியம் என்னும் அதர்மத்தை ஒழித்து - ஆன்மீகம் என்னும் தர்மத்தை வளர்ப்பதற்கு ஒரு தர்மகர்த்தா தேவை. கிடைப்பாரா?
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம். அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம். அது ஒரு சத்தியம்.
OOO
99

Page 52
கானல் நீர் தான் கலாச்சாரம்
கிலாச்சாரம். புரிவது. போலத் தோன்றினாலும் புரிந்து கொள்ள முடியாத விடயம் - அறிவுக்கு எட்டினாலும் உணர் வுக்கும் அகப்படாத விடயம் - பிடித்து விடுவோம் என்று நினைத் தாலும் பிடிபடாது ஜாலம் காட்டும் விடயம் - கலாச்சாரம்.
இதனால் தான் - கண்ணிற்குள் விழுந்த தூசி உறுத்துவது போல - காதிற்குள் சென்ற வண்டு குடைவதுபோல - மூக்கிற்குள் புகுந்த பூச்சி அரிப்பது போல இன்று இலண்டனில் வாழும் நம்மவர்களில் பெரும்பாலானோரை குழப்புகிறது கலாச்சாரம் என்ற சொல்.
“அப்பனே! நல்லூர்க் கந்தா! எங்களது பிள்ளைகளுக்கு எமது கலாச்சாரம் புரியவில்லையே - நாம் பெற்ற பிள்ளை களுடன் நம்மாலேயே மனம் விட்டுப் பேச முடியவில்லையே” - என்று முகாரி இராகம் இசைக்கும் பெற்றோர்கள் ஒரு பக்கமும் “அரோஹரா! யாமிருக்கப் பயமேன்? கலாச்சாரம் புரியாத பிள்ளைகளுக்கு கலாச்சாரத்தைப் புரியவைப்பதற்காக கலை மகள் பெற்றெடுத்த கலாச்சாரத் தந்தைகள் நாங்கள். வார விடுமுறைகளில் நாம் நடாத்தும் கலை - கலாச்சார வகுப்பு களுக்கு உங்கள் பிள்ளைகளை எங்களிடம் அழைத்து வாருங்கள்” என்று அறைகூவல் விடுக்கும் கலாச்சாரத் தந்தைகள் மறுபக்கமுமாக என்று மேயில்லாதவாறு இன்று அல்லோல கல்லோலப்படுகிறது இலண்டன் மாநகரம்.
நமது முகாரி இராகம் மோஹனமாக மாற வேண்டு மெனில் - அவர்களின் அந்த அறை கூவல்களுக்கு நமக்கு அர்த்தம் புரியவேண்டுமெனில் - கும்பகர்ணன் போல தூங்கும் அந்தப் பகுத்தறிவை சற்று உலுப்ப வேண்டும்.
OO

நிர்வாணம்
கற்ற கல்வி கலாச்சாரத்திற்கு விளக்கம் தருகிறது.
ஒரு தனி மனிதனின் - ஒரு சமூகத்தின் - ஒரு இனத்தின் - கலாச்சாரம் என்பது - அந்த தனி மனிதன் - அந்தச் சமூகம் - அந்த இனம் - கால ஓட்டத்தில் தேர்ந்தெடுத்த ஒரு சில நம்பிக்கைகளின் ஒரு மூட்டை, கலாச்சாரம் தான் மனித வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கிறது. தாமாகவே மாட்டிக் கொண்ட கலாச்சாரக் கண்ணாடி யூடாகவே மனிதர்கள் வெளி உலகத்தைப் பார்க்கிறார்கள் - புரிந்து கொள்கிறார்கள்.
அதனால் தான் சீனன் பார்க்கும் உலகத்தைநான் பார்ப் பதில்லை. நான் பார்க்கும் உலகத்தை அந்த ஆங்கிலேயன் அறிவதில்லை.
நமது நம்பிக்கைகளினால் உருவாகிய இந்தக் கலாச்சார மூட்டை - நமது அன்றாட வாழ்வில் நாம் உண்ணும் உணவு - அணியும் உடை - பொழுது போக்கிற்காக விளையாடும் விளையாட்டு - கடைப்பிடிக்கும் சமயம் - கற்கும் கலைகள் - பேசும் - மொழிபடிக்கும் இலக்கியம் - என பல பல பரிமாணங் களில் பரிணமிக்கிறது - பிரதிபலிக்கிறது.
ஆஹா வரைவிலக்கணம் - அர்த்தம் - விளக்கம் எல்லாமே அருமை. ஆனால் நாம் தான் ஆப்பிழுத்த குரங்கு போல் - யாத்திரை சென்ற சுவாமி விவேகாநந்தர் வாரணாசி மந்தி களிடம் அகப்பட்டது போல மாட்டிக்கொண்டோம்.
ஒரு இனத்தின் கலாச்சாரம் அவர்கள் அன்றாடம் உண்ணும் உணவில் பரிணமிக்கும் - பரிணமிக்க வேண்டும் - என வாதிட் டால் - காலத்திற்கேற்ப - நாட்டிற்கேற்ப - சூழலுக்கேற்ப வாழ்க்கை முறைகளுக்கேற்ப - இங்கு - நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகள் நமது கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கவில்லை. - பிரதி பலிக்க முடியாது. அலுவலகத்தில் - பல இனத்து நண்பர்களுக்கு மத்தியில் - தோசையைப் பக்குவமாகப் பிய்த்து - சட்னியை அதற்குள் அடக்கி - குழம்பில் தோய்த்து - இது நமது இனத்தின் உன்னதமான ஒரு உணவு என பெருமையுடன் பறைசாற்றி - கெளரவமாக உண்பதற்கு நாம் தயாரில்லை.
ஒரு இனத்தின் கலாச்சாரம் அவர்கள் அன்றாடம் அணியும் ஆடைகளில் பரிணமிக்கும் பரிணமிக்க வேண்டும் - என வாதிட்டால் - காலநிலைக்கேற்ப - வாழும் சூழலுக்கேற்ப
Ol

Page 53
டாக்டர் பூரீதரன்
காலத்திற்கேற்ப - செய்யும் தொழிலுக்கேற்ப நாம் அணியும் உடைகள் நமது கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கவில்லை - பிரதிபலிக்க முடியாது. தெரு முனையில் இருக்கும் கடைக்கு மளிகைப்பொருட்கள் வாங்குவதற்காகப் போகும்போது கூட வேட்டி அணிந்து செல்வதற்கு நாம் தயாரில்லை.
ஒரு இனத்தின் கலாச்சாரம் அவர்கள் பொழுது போக்கிற் காக விளையாடும் விளையாட்டுக்களில் பிரதிபலிக்கும் - பிரதி பலிக்க வேண்டும் என வாதிட்டால் இங்கு-நாம் பார்க்கும் - ரசிக்கும் - விளையாடும் -விளையாட்டுகளுக்கும் நமது கலாச் சாரத்திற்கும் எதுவித சம்பந்தமுமில்லை. நம்மில் எவருமே நமது பிள்ளைகளுக்கு சடுகு விளையாட்டு சொல்லித்தர ஆயத்தமாக இல்லை. நம்மில் எவருமே நண்பர்களுடன் சேர்ந்து பூங்காவில் கபடி ஆட தயாராக இல்லை.
ஒரு இனத்தின் கலாச்சாரம் அவர்கள் கடைப்பிடிக்கும் சமயத்தில் பரிணமிக்கும் பரிணமிக்க வேண்டும் - என வாதிட்டால் - இலண்டனில் வாழும் நம்மில் பெரும்பாலா னோரின் வாழ்க்கைக்கும் சமயத்திற்கும் எதுவித தொடர்பும் கிடையாது. பலரது வீடுகளில் - ஒரு மூலையில் - மறைவாக - மறைக்கப்பட்டு - ஒருசாமி படம் தொங்குகிறது. நேரம் கிடைக்கும் போது அதற்கு ஒரு “ஹலோ” . சிறுசிறு பிரச் சனைகள் உருவாகும்போது அதற்கு ஒரு ஊதுபத்தி. பெரிய பிரச்சனைகள் வரும்போது படத்தை தவிர்த்து - பால் பழத்துடன் நேராக மேல் நீதி மன்றம். அங்கு - அர்ச்சனை - பிரசாரம் தட்சணை - அரோஹரா.
ஒரு இனத்தின் கலாச்சாரம் அவர்கள் பேசும் மொழியில் பரிணமிக்கும் - பரிணமிக்க வேண்டும் - என வாதிட்டால் - இங்கு - தமிழர்களுக்காக -- தமிழர்களால் - தமிழிலேயே வெளி வரும் வார - மாத பத்திரிகைகளில் பெரும்பாலனவைகளில் தமிழைவிட ஆங்கிலமே அதிகமாக உள்ளது. தமிழ் வகுப்பு களுக்கு உங்கள் பிள்ளைகளை அழைத்து வாருங்கள் என்ற விளம்பரம் கூட ஆங்கிலத்தில் தான் வெளி வருகிறது. தமிழர்கள் நடாத்தும் ஆண்டுவிழாக்கள் - நிதி திரட்டும் வைபவங்கள் - இங்கெல்லாம் பரவலாக ஒலிப்பது ஆங்கிலம்.
ஒரு இனத்தின் கலாச்சாரம் அவர்களின் கலைகளில் பிரதி பலிக்கும் - பிரதிபலிக்கவேண்டும் என வாதிட்டால் - இங்குள்ள
102

நிர்வாணம்
நம்மில் பலரது வாழ்க்கைக்கும் - கலைக்கும் எதுவித தொடர்பும் கிடையாது. பலருக்கு - நமது எந்த ஒரு கலையையும் மனப் பூர்வமாக ரசிக்கக் கூடத் தெரியாது. இலங்கையில் வாழ்ந்த போது - கலையாவது - கத்தரிக்காயாவது - போடா டியூஷனுக்கு - என்பது தான் நமது தேசிய கீதம்.
ஒரு இனத்தின் கலாச்சாரம் அவர்களின் இலக்கியங்களில் பிரதிபலிக்கும் - பிரதிபலிக்க வேண்டும் என வாதிட்டால் நம்மில் பலருக்கு இலக்கியமும் தெரியாது - இலக்கணமும் புரியாது. நாம் சிலப்பதிகாரம் படிக்கவில்லை - படிக்க அனுமதிக்கப்படவில்லை. கோவலனையும் மாதவியையும் பண்டிதர்களும் வித்துவான்களும் கவனித்துக்கொள்வார்கள் - நீ படிக்க வேண்டியது சோறுபோடும் விஞ்ஞானத்தை. நம்மில் பலருக்கு இது தான் சுப்ரபாதம்,
இந்த அலசல் நமக்கு என்ன சொல்கிறது.?
இலண்டனில் வாழும் நமது கலாச்சாரம் - நாம் உண்ணும் உணவில் - நாம் உடுக்கும் உடையில் - நமது விளையாட்டுக் களில் - நாம் கடைப்பிடிக்கும் சமயத்தில் - நாம் பேசும் மொழி யில் - நமது இலக்கியத்தில் - பிரதிபலிக்கவில்லையென்றால் - பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லையென்றால் - பிரதிபலிப் பதை நாம் விரும்பவில்லையென்றால்.--
சிந்திக்கத் தெரிந்த நம்மையெல்லாம் குடைய வேண்டிய ஒரு சில கேள்விகள்:
கலாச்சாரம் அழிந்து போகிறது - அது அழியக்கூடாது - அழிய விடக்கூடாது - என்று ஒலமிடும் நாம் - எந்த அளவுக்கு நமது சொந்த வாழ்க்கையில் - துணிவாக - பெருமையாக ஒளிக்காமல் -மறைக்காமல் - நமது கலாச்சாரச் சின்னங்களை சூடுவதற்கு தயாராக உள்ளோம்? தயாராக இல்லாவிடில் - எது வேண்டி நாம் ஓலமிடுகிறோம்? நமக்கு உண்மையில் என்ன தான் வேண்டும்? எப்படி வேண்டும்? என்ன வடிவத்தில் உருவத்தில் வேண்டும்?
இலண்டன் வாழ் தமிழ் மக்களின் கலை - கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கும் தவப்புதல்வர்கள் நாங்கள் என்று கூறிக் கொண்டு இலண்டனில் பவனி வரும் ஒரு சில கலாச்சாரத் தந்தைகள் இங்கு எதை வளர்க்கிறார்கள்? எதுவேண்டி வளர்க் கிறார்கள்? யாருக்காக வளர்க்கிறார்கள்?
103

Page 54
டாக்டர் பூரீதரன்
சுற்றிச் சுழலும் காற்றில் அகப்பட்ட சருகு போல அன்றாடம் அலையாமல் - ஒரு நிமிடம் வீட்டில் அமைதியாக அமர்ந்து- கண்களை மூடி - சிறிது நேரம் சிந்தித்தால் - சத்தியம் துல்லியமாகத் தெரிகிறது.
எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் என்பது போல - இந்தக் கலாச்சாரக் குழப்பத்தின் மத்தியில் - தெரிந்தே குழப்பும் ஒரு சிலரின் பைகள் நிறைகின்றன. அறியாமையினால் குழப்பும் பலரின் பைகள் காலியாகின்றன.
குழப்பும் சிலரின் வாழ்வில் - கை நிறையப் பணம் - புகழ் - மேடைப்பேச்சு - மாலை - பட்டங்கள் - பதவிகள் - விடுமுறைகள் - அந்தஸ்து.
குழம்பியவர்களின் வாழ்வில் - காலிப் பெட்டகங்கள் - வீட்டை மீள அடைவு வைத்தல் - கடன் தொல்லை - தூக்க மற்ற இரவுகள் - மனப்புழுக்கம் இரத்த அழுத்தம் - மருந்து மாத்திரைகள்.
இதற்கு முடிவு? இயற்கை சொல்கிறது.
வளர்வது தானாக வளரட்டும் - தேய்வது தானாகத் தேயட்டும். ஒன்றின் தேய்வில் தான் மற்றொன்று வளர்கிறது ஒன்றின் அழிவில் தான் மற்றொன்று பிறக்கிறது. இங்கு யாரும் எதையும் வளர்ப்பதில்லை - வளர்பிறை தானாகத்தான் வளர் கிறது - தேய்ப்பிறை தானாகத்தான் தேய்கிறது. விதை தானாகத் தான் முளைக்கிறது - விதையை அடக்கிய கனி தானகத்தான் விழுகிறது.
கலைக்குச் சோறுாட்டுகிறோம் - கலாச்சாரத்திற்கு பாலூட்டு கிறோம் என்று இங்கு வலம் வரும் ஒரு சிலரிடமிருந்து நாம் ஒதுங்கும் போது - நமது வாழ்வில் கிடைப்பவை:
நிம்மதியான தூக்கம் - கடனற்ற வாழ்க்கை-சீரான இரத்த அழுத்தம்-மருந்துமாத்திரைகளற்ற வாழ்க்கை.
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம். அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம். அது ஒரு சத்தியம்.
OOO
04

எண்ணப்படும் மோதகங்கள் - எழுதப்படும் வடைகள்
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் புத்தனின் புனித பாதங்கள் இந்தப் பூமியில் பதிந்திருந்த காலத்தில் - பின்வரும் சம்பவம் நிஜமாகவே நடந்ததாக நூல்கள்
குறிப்பிடுகின்றன.
அரசர்கள் - செல்வந்தர்கள் - பெரிய மனிதர்கள் - புத்தரைத் தரிசித்து அவரது ஆசீர்வாதம் பெற வரும்போது - புத்தருக்கும் அவரது சீடர்களுக்கும் அளிக்கும் ஆடம்பரமான காணிக்கை களைப் பார்த்து - தன்னால் அது போல எதுவுமே அந்த மகானுக்கு காணிக்கையாக அளிக்க முடியவில்லையே என்று நீண்ட நாட்களாக மனம் வருந்தினாள் அடுத்த வேளைச் சோற்றுக்கே வழி தெரியாத ஒரு ஏழை மூதாட்டி
நீண்ட நாட்கள் பொறுத்த பின் - இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் - புத்தருக்கு ஏதாவது ஒரு காணிக்கை வாங்க வேண்டும் என்பதற்காகவே பிச்சை எடுக்கப் புறப் பட்டாள் அந்த மூதாட்டி. ஆனால் நீண்ட நாட்கள் முயற்சித்த பின்னும் அவளின் கையில் மிஞ்சியது ஒரு சிறு நாணயம் மட்டுமே.
கையிலிருக்கும் நாணயத்துடன் எண்ணெய் வியாபாரி ஒருவனிடம் சிறிது எண்ணெய் வாங்கச் சென்றாள் மூதாட்டி, அவளின் கையிலிருந்த பணம் பற்றாதிருந்த போதும் புத்தருக்கு விளக்கேற்றுவதற்காக எண்ணெய் கேட்கிறாள் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் - அவளுக்கு சிறிதளவு எண்ணெய் கொடுத்தான் வியாபாரி
105

Page 55
டாக்டர் பூரீதரன்
பூரிக்கும் உள்ளத்துடன் புத்தரின் முன்னால் விளக்கேற்றிய மூதாட்டி மகானை கரம் கூப்பி வழிபட்டாள்:
"மகனே உனக்கு வழங்க இந்த ஏழையிடம் எதுவுமே இல்லை - இந்தச் சிறிய எண்ணெய் விளக்கைத் தவிர. இதை எனது காணிக்கையாக ஏற்று - அடுத்த பிறவியில் - உலகத் திலுள்ள மக்களை அவர்களது துன்பங்களிலிருந்து காப்பாற்றி - அவர்களைப் புனிதப்படுத்தி - அவர்களை அந்தப் பரமனுடன் இணைப்பதற்குத் தேவையான - என்னையே அறியும் அறிவை எனக்குக் கொடு”
மறுநாள் காலை. முன் தினம் பக்தர்களால் மகானின் சந்நிதியில் ஏற்றப்பட்ட விளக்குகளிலுள்ள எண்ணெய் எல்லாம் தீர்ந்து அவை அணைந்து விட்டன. ஆனால் மூதாட்டி ஏற்றிய விளக்கு மட்டும் அணையாமல் - சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல் - விளக்கிலிருந்த எண்ணெய் கூட குறையவில்லை.
இதை அவதானித்த புத்தரின் சீடனொருவன் விளக்கை ஊதி அணைக்க முற்பட்டான். அவனால் முடியவில்லை. தனது காவி வஸ்திரத்தால் அதன் சுடரை மூடினான். அவனால் விளக்கை அணைக்க முடியவில்லை. அதன் திரியை தனது விரல் களால் நசுக்கினான். அப்பொழுது கூட அவனால் விளக்கை அணைக்க முடியவில்லை.
இதை எல்லாம் மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்த புத்தர் கூறினார் “சீடனே உன்னால் அந்தச் சிறு விளக்கை அசைக்கக் கூட முடியாது - அப்புறம் அதை எப்படி அணைக்கப் போகிறார்? அணைப்பதை விட்டு விடு - அது உன்னால் முடியாது. உன்னால் மட்டுமல்ல - அது யாராலும் முடியாத காரியம். பிரபஞ்சத்திலுள்ள சமுத்திரங்களை எல்லாம் கொண்டு வந்து அந்த தீபத்தின் மீது ஊற்றினாலும் அதை அணைக்க முடியாது. ஏனெனில் அது உண்மையான பக்தியுடன் - சுயநலமற்ற பக்தியுடன் - மனித இனத்தின் நன்மை வேண்டி ஏற்றப்பட்டது. ஏற்றிய மனமும் - ஏற்றப்பட்ட காரணமும் - ஆண்டவனை எட்டி விட்டன”
அந்த மூதாட்டி எது வேண்டி வழிபட்டாளோ - அது அவளுக்கு அடுத்த பிறவியில் வழங்கப்பட்டதாகவும் - அந்தப்
106

நிர்வாணம்
பிறவியுடன் அவளின் ஸம்சார சாகரம் முடிவுற்றதாகவும் நூல்கள் கூறுகின்றன.
நூல்கள் கூறினாலும் சரி - கூறாவிட்டாலும் சரி - அவள் கேட்டது அவளுக்கு வழங்கப்பட்டிருக்கத் தான் வேண்டும் - அவளின் ஸம்சார சாகரம் அந்தப் பிறவியுடன் முடிக்கப் பட்டிருக்கத்தான் வேண்டும். ஏனெனில் - கீதையில் பரமன் சொன்னது நிழலல்ல. அது நிஜம். அந்த நிஜம் கூறுகிறது. -“எந்த உயிரையும் பகைக்காமல் - அவற்றிடம் நட்பும் கருணையும் உடையவனாய் - தான் என்பதையும் - தனதென்பதையும் நீக்கி - என்னிடம் உண்மையான பக்தி செலுத்துபவனை நான் ஸம்சாரக் கடலில் இருந்து தூக்கி விடுவேன்”
அன்றும் - இன்றும் - இல்லை மறை காய் போல வாழ்ந்த - வாழும் - உண்மையான தெய்வ பக்திக்கு சுயநலம் கிடையாது - அவநம்பிக்கை கிடையாது - சந்தேகம் கிடையாது. இந்தப் பக்திக்கு அலங்காரம் கிடையாது - ஆடம்பரம் கிடையாது - ஆர்ப்பாட்டம் கிடையாது.
ஆனால் - இன்று - இங்கு - பக்தி என்ற பெயரில் - வழிபாடு என்ற பெயரில் - இறை வணக்கம் என்ற பெயரில் - நம்மில் பெரும்பாலனோர் அன்றாடம் ஆடும் நாட்டியங்கள் நம்மை மேலும் மேலும் சம்ஸாரக் கடலினுள் அமுக்குமே தவிர - நம்மை அதிலிருந்து தூக்கி விட மாட்டாது. ஆடும் மனமும் - ஆடப்படும் காரணமும் பரமனை எட்ட முடியாது. காரணம்நாம் ஆடும் நாட்டிய மேடையைத் தாங்கி நிற்கும் தூண்கள் - அவநம்பிக்கை - சந்தேகம் - சுயநலம்.
இந்தத் தூண்கள் வெறும் நிழல்களல்ல - நிஜம் தான் என்பதை நடைமுறையில் விளக்கும் ஒரு உதாரணம்.
ஒரு சில வருடங்களுக்கு முன்பு - ஒரு நாள் காலை - உலகம் முழுவதும் பரவியது இந்தப் பரபரப்பான செய்தி - “பிள்ளையார் சிலைகள் பால் குடிக்கின்றன.
இதன் காரண - காரியங்களை ஆராய்வது நமக்குத் தேவை யற்ற விடயம். மனிதன் பிறக்கிறான் - பிறந்த மனிதன் இறக் கிறான். போட்ட விதை முவிைக்கிறது முளைத்த பயிர் கொடுக் கிறது. ஒரு மடமாதும் ஒருவனும் இணைகிறார்கள் -இன்ந்
O7

Page 56
டாக்டர் பூரீதரன்
தவர்கள் பிரிகிறார்கள். ஆராய்ந்து கொண்டா இருக்கிறோம் இவற்றின் காரண - காரியங்களை?
ஆனால் - அன்று - அந்தச் செய்தியைக் கேட்டதும் - யாருமே நான் அறிந்த வரையில் - நம்மில் எவருமே நீங்கள் அறிந்தவரையில் - “இது செய்தியாக வர இதில் என்ன அதிசயம் இருக்கிறது? ஆண்டவனை வழிபட்டு அன்றாடம் அவனுக்கு உணவு படைக்கிறோம் - காணிக்கை செலுத்து கிறோம். நாம் கொடுப்பதை ஆண்டவன் ஏற்றுக் கொள்கிறான். இதில் என்ன புதுமை இருக்கிறது” என்று நமது போக்கில் நம்முடைய வேலைகளைக் கவனிக்கவில்லை - நமது போக்கில் நம்முடைய அன்றாட காரியங்களை ஆற்றவில்லை.
மாறாக - எவ்வளவு சந்தேகங்கள் எழுந்தன நம்மில் பலருக்கு? இந்தச் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக கோவிலுக்கு சென்று பால் ஊட்டினோம் - அடுத்த வீட்டிற்குச் சென்று பால் ஊட்டினோம் - நம்முடைய வீட்டிலேயே பால் ஊட்டினோம். எத்தனை கேள்விகள் நம்மில் பலருக்கு? சிலை எப்படிப் பால் குடிக்கும்? கல் எப்படிப் பாலை உறிஞ்சும்? உறிஞ்சிய பால் எங்கே செல்கிறது?
யார் யாரிடமெல்லாமோ இதற்கு விளக்கம் வேறு கேட்டோம். வேதியர்களைக் கேட்டோம். விஞ்ஞானிகளைக் கேட்டோம் - பகுத்தறிவு வாதிகளைக் கேட்டோம் - அரை குறைகளைக் கேட்டோம். கேட்ட எல்லோரும் பதில் வேறு கூறினார்கள். செய்யும் தொழிலை மனதில் வைத்து - வரு மானத்தை மனதில் வைத்து - படித்த படிப்பை மனதில் வைத்து ஆளுக்கேற்ற படி - கேட்டவர்களின் அறியாமைக்கேற்ற படி - ஏதேதோவெல்லாம் சொன்னார்கள்!
அன்று நம் மனதில் எழுந்த சந்தேகங்கள் - நமது கேள்விகள் - இதற்கெல்லாம் நமக்குக் கிடைத்த விளக்கங்கள் - இவை எல்லாவற்றையும் - இன்று - அமைதியாக - நிதானமாக - துணிவாக நினைத்துப் பார்த்தால் - ஒன்று மட்டும் மிகத் தெளிவாகத் தெரிகிறது.
நம்மில் பலரது தெய்வ பக்தியின் அடிப்படை நம்பிக்கை அல்ல - அது அவநம்பிக்கை. நம்மில் பலரது தெய்வ பக்தியின் அத்திவாரம் தெளிவு அல்ல - அது சந்தேகம்.
8

நிர்வாணம்
“ஆண்டவனே உனக்கு நான் பால் தருகிறேன் - பழம் தருகிறேன் - எடுத்துக் கொள் அப்பனே” என்று நாம் வீட்டில் - ஆலயத்தில் அன்றாடம் படைக்கும் போது - ஆண்டவன் அதை ஒரு போதும் தொட மாட்டான் - எதையுமே எடுக்க மாட்டான் என்ற அடிப்படை நம்பிக்கையுடன் தான் படைக்கிறோம்.
இருபது வடையும் - நாற்பது மோதகமும் பிள்ளை யாருக்குப் படைத்தால் - எண்ணிக்கையில் குறைவுபடாமல் அவை எல்லாம் நமது இரவு உணவுக்காக அப்படியே இருக்கும் என்ற் நம்பிக்கையில் தான் படைக்கிறோம்.
நான் வணங்குவது கல்லை அல்ல - சிலையை அல்ல - என்றெல்லாம் பக்திப் பிரகடனம் செய்யும் நாம் - ஆலயத்தில் தெய்வத்தின் முன்னால் நிற்கும் போது நமது கண்களுக்குத் தெரிவது - நமது மனதின் அடித்தளத்திலிருப்பது தெய்வமல்ல - வெறும் கல்லும் சிலையும் தான். அதனால் தான் - அன்று - கொடுத்த பாலை ஆண்டவன் குடிக்கிறான் என்ற போது - “குடிக்கட்டுமே” என்று கூறாமல் - "அது எப்படிக் குடிக்கும்” என்று கேள்வி கேட்டோம் - குடிக்கிறதா என்று பார்ப்பதற்கு கொடுத்து வேறு பார்த்தோம்.
எவ்வளவு விந்தையான உயிரினங்கள் நாம் படைக்கிறோம் - எடுக்க மாட்டான் என்று தெரிந்து தான் படைக்கிறோம். எடுக்கிறான் என்று யாராவது கூறினால் - அது எப்படி நடக்கும் என்று கேள்வி கேட்கிறோம். அரோஹரா!
நமது பக்தியின் வேறொரு பரிமாணத்தையும் பாருங்க
“உனக்கு வேண்டியதைக் கேள்” என்று மகாராஜா கேட்ட போது - “படுக்கப் பாய் ஒன்று கொடுங்கள்” என்று யாசித்த வனைப் போல - “ஆண்டவன் தான் குடிக்கிறான்” என்று மனதார நம்பிய நம்மில் பலர் - பால் ஊட்டும் போது - பாரின் நன்மை வேண்டி ஊட்டவில்லை - பரணி உய்ய வேண்டுமென் பதற்காக ஊட்டவில்லை - பரமனை வாழ்த்தி ஊட்டவில்லை
மாறாக - நமக்கு மண் வேண்டி - நமக்குப் பெண் வேண்டி - நமக்குப் பொன் வேண்டி ஊட்டினோம். எப்படித் தூக்குவான் அவன் நம்மைச் ஸம்சார சாகரத்திலிருந்து?
இவன் பூமியில் பிறந்து - இத்தனை மூச்சுகள் விட்டு முடிந்ததும் - இவன் வாழ்க்கையும் இந்தப் பூமியில் முடிந்து
109

Page 57
டாக்டர் பூரீதரன்
விடும் என்று அவன் கருப்பையில் இருக்கும் போதே கணக்கு விதித்து - விதித்ததை நிறைவேற்றுவதற்காக - படைத்து - காத்து - அழித்து - ஒடுக்கி - அணுவுக்குள் அணுவாகவும் அப்பாலுக்கு அப்பாலாகாகவும் பிரபஞ்ச நடனம் ஆடும் அந்தப் பரமனிடம் வேண்டுவதற்கு என்ன இருக்கிறது? - அவனுக்குக் கொடுப் பதற்கு என்ன இருக்கிறது? - அவனிடம் பெறுவதற்கு என்ன இருக்கிறது? - என்ற மனப்பக்குவத்திற்குப் பெயர் தான் தெய்வ பக்தி - தெய்வ வழிபாடு.
இந்த மனப்பக்குவத்துடன் வாழ்க்கை என்னும் நதியில் சுகமாக மிதப்பவனுக்குப் பெயர் தான் ஆத்திகன்.
ஏனெனில் - ஆவதும் பரத்துளே அழிவதும் பரத்துளே - போவதும் பரத்துளே புகுவதும் பரத்துளே - தேவரும் பரத்துளே திசைகளும் பரத்துளே - யாவரும் பரத்துளே நானும் அப்பரத்துளே.
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம்.
அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம்.
அது ஒரு சத்தியம்.
OOO
O

எள்ளில் எழுந்தருளும் சனியன்
இது புரட்டாசி மாதம். இந்த மாதத்தில் மொத்தம் நாலு சனிக்கிழமைகள். எந்த வருடமானாலும் சரி - மிக ஜாக்கிரதை யாக - பயபக்தியாக - ஒழுங்காக 'அவன்’ நடந்து கொள்ளும் நாலு நாட்கள் இந்த புரட்டாசி மாதத்துச் சனிக்கிழமைகள் தான். காரணம் - இது சனி பகவானின் சனிக்கிழமைகள்.
அவன் அடிக்கடி கூறுவான்: “யாருடன் விளையாடி னாலும் சனியனுடன் மட்டும் விளையாடக்கூடாது - யார் கோவித்தாலும் பரவாயில்லை - சனியன் மட்டும் கோவிக்கக் கூடாது”. அதனால்தான் இந்தமாதத்தில் ஒவ்வொரு சனிக் கிழமையும் அவனது காலைக் குளியல் - உபவாசம்-கோவில் விஜயம் - எள்ளெண்ணெய் எரிப்பு- சனி பகவான் வணக்கம் -- ஆண்டுதோறும் தொடர்கிறது அவனது சனி வணக்கம்.
அவனது அகராதியில் சனி என்றால் துன்பம். இந்தத் துன்பத்தை அவனுக்குக் கொடுப்பவன் சனி பகவான். பார்ப் பதற்கே சகிக்காத கரிய உருவம். ஏழரைச் சனி - அட்டமத்துச் சனி - ஜன்மத்துச் சனி - மங்கு சனி - பொங்கு சனி - மரணச் சனி -- சனி பகவானுக்கும் அவனுக்கும் உள்ள தொடர்புகளின் கால அட்டவணைகள் - பரிமாணங்கள் ஆயிரம் ஆயிரம்.
சனிபகவானை - மகிழ்ச்சிப்படுத்துவதன் மூலம் - மனதைக் குளிர வைப்பதன் மூலம் - சனி கொடுக்கும் துன்பங்களைக் குறைத்துக் கொள்ளலாம் - துன்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பது அவனுக்கு யாரோ - என்றோ - கொடுத்த - ஊட்டிய நம்பிக்கை. ஆண்டுதோறும் தொடர்கிறது அவனது சனி வணக்கம்.

Page 58
டாகடா பூருதரன
பெயர் இல்லாத - முகம் தெரியாத - பொங்கிப் புரளும் வாழ்க்கை நதியில் அடித்துச் செல்லப்படும் அவனைப் பற்றிய ஒரு அலசல் - ஆராய்ச்சி இந்தக் கட்டுரை.
இன்பம் - துன்பம் என்ற இரண்டுமே மனித வாழ்க்கையின் அதி துல்லிய பரிமாணங்களாக இருந்த போதிலும் - இவை இரண்டிற்கிடையிலும் தான் மனித வாழ்க்கை அர்த்தம் பெறு கிறது என்றாலும் - இவை இரண்டுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றாலும் - துன்பங்களை மட்டும் அவன் விரும்பு வதில்லை - வாழ்க்கையின் அந்தப் பரிமாணத்தை தரிசிக்கவே அவன் விரும்புவதில்லை - அதன் பிடியில் அகப்படவே விரும்புவதில்லை.
எதற்காக இங்குமனிதனுக்கு துன்பங்கள்வருகின்றன? துன்பங்களை எவ்வாறு தவிர்த்துக் கொள்ளலாம்? துன்பங்கள் வராது எப்படித் தடுக்கலாம்? - என்ற கேள்விகள் இங்கு மனிதன் பரிணாமித்த நாளிலிருந்தே ஆரம்பமாகிவிட்ட கேள்விகள் - சந்ததி சந்ததியாகத் தொடரும் கேள்விகள் - காலம் காலமாக ஆராயப்பட்ட கேள்விகள்.
இதற்காகத் தான் அந்தச் சித்தார்த்தன் புத்தன் ஆனான் அந்த நரேந்திரன் சுவாமி விவேகாநந்தர் ஆனான் - அந்த வேங்கடராமன் ரமண மகா முனிவர் ஆனார். இந்தக் கேள்வி களுக்குவிடை தேட முயன்ற - தேடிய - இது போன்ற எண்ணற்ற தனி மனிதர்களின் - மாமனிதர்களின் முடிவே இன்றைய சமயங்களின் மூலாதாரம் - அத்திவாரம்.
மனித வாழ்க்கையைப் பற்றி - வாழ வேண்டிய முறையைப் பற்றி அந்த மாமனிதர்கள் கூறியவற்றை சற்று உற்று நோக்கினால் - அப்பொழுது மனதில் எழுகின்றன சில தவிர்க்க முடியாத கேள்விகள்:
சனிபகவான் தானாக வந்து அவனைப் பற்றிக் கொண் டாரா? அல்லது எங்கோ இருக்கும் சனி பகவானை அவன் தான் மகுடி ஊதி அழைத்தானா? சனி பகவான் என்பவர் அவனிலிருந்து விலகி எங்கோ இருக்கும் ஒரு சுயாதீனமான தனிமையா? அல்லது அவனே உருவாக்கி - அவனுக்குள்ளேயே குடிவைக்கும் அவனில் ஒரு பாகமா?
12

நாவாணம்
மதம் - சாதி- மொழி - இனம் - நாடு - இவை போன்ற வரம்பு களைத் தாண்டி - பிரபஞ்ச நியதி பேசும் வள்ளுவர் இதற்குப் பதில் கூறுகிறார்.
யாதனின் யாதனின் நீங்கியான் - நோதல் அதனின் அதனின் இலன்.
ஒருவன் இவ்வுலகில் எதில் எதில் இருந்து ஆசையை அறுக்கிறானோ - விலகிக் கொள்கிறானோ - அதனால் அதனால் வரும் துன்பங்களை அவன் அடைவதில்லை. இதையே வேறொரு விதமாகக் கூறுவதனால் - ஒருவன் இவ்வுலகில் எதில் எதில் ஆசை வைக்கிறானோ - ஒட்டிக் கொள்கிறானோ - அதனால் அதனால் வரும் துன்பங்களிலிருந்தும் அவன் தப்ப முடியாது.
இது திருவள்ளுவரின் பிரகடனம் மட்டுமல்ல. ஆசையே துன்பத்துக்குக் காரணமென்று நமக்குச் சொல்வதற்காகத் தான் அந்தச் சித்தார்த்தன் புத்தனானான் - ஆசை உள்ள மட்டும் துன்பங்களும் இருந்தே தீரும் என்று நமக்குப் போதிக்கத் தான் அந்த அரசன் ஆண்டியானன்.
நிர்வாணமடைந்த அந்த நிர்மலனின் போதனை இது: “காற்றே இல்லாத இடத்தில் அசையாது எரியும் இருக்கும் தீபம் போல - மனித சித்தம் சலனமற்று இருக்கும் பொழுது இவ்வுலகில் மனிதனுக்குத் துன்பங்களில்லை - துயரங்களில்லை ஆனால் சித்தம் அசையும் போது - கலங்கும் போது ஆசை பிறக்கிறது - ஆசை பிறந்ததும் துயரங்கள் தானாக வருகின்றன - துன்பங்கள் தானாக முளைக்கின்றன.
ஆசை இருக்கும் இடத்தில் எல்லாம் துன்பங்கள் இருக்கும் - துன்பங்களின் பிடியிலிருந்து விடுபட வேண்டுமெனில் ஆசை களைக் களைய வேண்டும் - என்று எந்த மாமனிதன் தான் இங்கு கூறவில்லை? சங்கரர் சொன்னார் - ரமணர் சொன்னார் - பரமஹம்சர் சொன்னார் - கண்ணன் சொன்னான்.
கேட்டானா அவன் யான் உனைத் தொடர்ந்து கிக்கெனப் பிடித்தேன் என்பது போல - யார் எது சொன்னாலும் ஆசை களை மட்டும் விட்டு விட அவன் இங்கு தயாராக இல்லை. எந்த ஒரு ஆசையையும் ஒதுக்கி விட அவன் தயாராக இல்லை. எந்த ஒரு ஆசையையும் தவிர்த்துக்கொள்ள அவன் தயாராக இல்லை. ஆனால் துன்பங்கள் மட்டும் அவனுக்கு வேண்டவே வேண்டாம்!
13

Page 59
டாக்டர் பூரீதரன்
அது எப்படி? இருக்கவே இருக்கிறது புரட்டாசி மாதத்துச் சனிக்கிழமைகள் - இருக்கவே இருக்கிறது எள்ளும் பொட்டலமும் - இருக்கவே இருக்கின்றன நவக்கிரகங்களுடன் பார்க்குமிடமெல்லாம் கோவில்கள். செய்கிறான் பிரதி வருடமும் சனி வழிபாடு எதற்காகக் கூறக்கூடாது அப்பழுக்கற்றபித்துக்குளி அவன் என்று?
அவனுக்கு உத்தியோகத்தில் ஆசை - உத்தியோகம் கிடைத்த பின் உயர் பதவியில் ஆசை. காதலியில் ஆசை - காதல் கிட்டிய பின் திருமணத்தில் ஆசை - திருமணம் முடிந்ததும் மாதவிகளில் ஆசை. இலண்டனில் வீடு வாங்க ஆசை - கிழக்கு இலண்டனில் வீடு வாங்கி பின் வடக்கு இலண்டனிலுள்ள வீடுகளில் ஆசை - கார் வாங்க ஆசை - ஜப்பான் கார் கிடைத்த பின் ஜேர்மன் காரில் ஆசை மகன் டாக்டராக ஆசை டாக்ட ராகிய பின் சத்திர சிகிச்சை நிபுணராக ஆசை இங்கு செல்ல ஆசை - அங்கு செல்ல ஆசை. இதை வாங்க ஆசை - அதை வாங்க ஆசை. எதிலும் ஆசை - எப்போதும் ஆசை. ஆனால் துன்பங்கள் மட்டும் அவனுக்கு வேண்டாம்! செய்கிறான் சனி வழிபாடு!
எதற்காகக் கூறக்கூடாது அப்பழுக்கற்ற பித்துக்குளி அவன் என்று? அவனது தேவைகள் என்ன?அவனது வருமானம் என்ன? அவனது உடல் நிலை என்ன? என்ற எதையுமே கருத்தில் கொள்ளாமல் - யாரோ ஒரு சிலரைப் பார்த்து - யாரோ ஒரு சிலருக்குக் காட்டுவதற்காக - தனக்குக் தேவையற்ற - தேவை கதிகமான பொருட்களை வங்கிக் கடன் மூலம் வாங்கிக் குவித்த பின் - வாங்கிய பொருட்களை அனுபவிக்க கூட நேர மில்லாமல் - வங்கிக் கடனை மாதா மாதம் அடைப்பதற்காக - இரவு பகல் பாராது வேலை செய்து கொண்டு - உண்டது பாதி உறங்கியது பாதியாக - உடல் சுகத்தைப் பறி கொடுத்து - மன சாந்தியைப் பறி கொடுத்து -தூக்கத்தைப் பறிகொடுத்து டாக்டர் கொடுத்த மாத்திரைகளை விழுங்கிக் கொண்டு - விழிகள் பிதுங்க - “சனியனே என்னைப் பிடிக்காதே’ என்று கூறி சனி வழிபாடு செய்கிறான்! எதற்காக கூறக்கூடாது அப்பழுக்கற்ற பித்துக்குளி அவன் என்று? இந்தப் பரீட்சையில் சித்தியானால் நல்ல காலம் - இல்லா விடில் கெட்ட காலம். இந்த உத்தியோகம் கிடைத்தால் நல்ல காலம் - இல்லாவிட்டால் கெட்ட காலம். இந்த வயதில்
14

நிர்வாணம்
திருமணம் நடந்தால் நல்ல காலம் - இல்லாவிட்டால் கெட்ட காலம். பிள்ளைகள் பிறந்தால் நல்ல காலம் - பிறக்காவிட்டால் கெட்ட காலம். எங்கோ பிறந்து - எப்படி எப்படியோ வாழ்ந்து - இன்று ஏதோ ஒரு இடத்தில் வாழும் அவன் - யாரோ - என்றோ - எதற்காகவோ உருவாக்கிய அளவு கோல்களால் - தனது இன்றைய வாழ்க்கையை அளந்துவிட்டு - "ஐயோ! ஐயையோ! என்க்குச் சனி பிடித்து விட்டது” என்றுகூறி சனி வழிபாடு செய்கிறான்! எதற்காக கூறக்கூடாது அப்பழுக்கற்ற பித்துக்குளிஅவன் என்று? அவனது வாழ்க்கையை அவனுக்கு வரும் துன்பங்களைச் சற்று உற்று நோக்கினால் அப்பொழுது புரிகிறது புத்தனின் - வள்ளுவனின் - சங்கரரின் பிரகடனம்.
பெரும்பாலான சமயங்களில் - சனியனை வரவழைத்து அவன் - சனியனை வளர்த்தது அவன் - சனியன் விலகிப் போகாது விலங்கு மாட்டி வைத்திருப்பதும் அவன்.
சுழையை எறிந்துவிட்டு கொட்டையைப் பற்றிக்கொள்வது - தலையை கோட்டை விட்டு விட்டு வாலை பிடிப்பது - சாத்திரத்தை மறந்து விட்டு சடங்குகள் மட்டும் செய்வது அவனுக்கு கை வந்த கலை.
அவதாரங்கள் - மாமனிதர்கள் - மகாமுனிவர்கள் சொன்ன உண்மைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு இன்று எள்ளுப் பொட்டலத்திற்குள் வாழ்க்கைக்கு வெளிச்சம் தேடுகிறான்.
ஒவ்வொரு ஆண்டிலும் பிறக்கும் புரட்டாசி மாதம் - அவனுக்கு அது விரயச் சனி, ஆனால்- எலிக்குத் திண்டாட்டம் - பூனைக்குக் கொண்டாட்டம். மானின் உயிர் - நரியின் விருந்து. பறவையின் சந்ததி - பாம்பின் உணவு. இயற்கை நியதி இது - கண் முன் பார்க்கிறோம்.
யார் இந்த அவன்? கண்ணை மூடினால் எத்தனை அவன்கள்! எத்தனை நரிகள்!
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம். அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம். அது ஒரு சத்தியம்.
COO
15

Page 60
விதைத்ததும் குப்பை - விளைந்ததும் குப்பை
“Dனமென்னும் நாடு அடங்கில் தாண்டவக் கோனே - முத்தி வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவக்கோனே” - பாடி யவர் நவசித்தருள் ஒருவரால் ஞான உபதேசம் பெற்று - சகல சித்திகளையும் இப்பிறவிலேயே பெற்று - அதை மக்களின் நலனுக்காக முற்று முழுதாகப் பிரயோகித்த இடைக்காட்டுச் சித்தர்,
அது எப்படி - கோவிலுக்குப் போகாமல் - தட்சணை கொடுக்காமல் - அர்ச்சனை பண்ணாமல் - அபிசேகம் செய் யாமல் - பிரசாதம் பெற்றுக் கொள்ளாமல் - மனத்தை மட்டும் அடக்கி முத்தி பெற முடியும்?
பல பல பரிமாணங்களில் பரிணாமித்து நிற்கும் சர்ச்சைக் குரிய மனித மனத்தின் ஒரே ஒரு பரிமாணத்தை மட்டும் - கடுகளவேயாகிய ஒரு பரிமாணத்தை மட்டும் காட்ட முயற்சிக் கிறது இந்தக் கட்டுரை. இந்தப் பரிமாணத்தைக் காட்டுவதற்கு எனக்கு இருக்கும் தகுதி - நானும் ஒரு மனிதர் என்பது மட்டுமே. அது போதுமே இதற்கு.
உயிர் - மனம் - உடல் - இவற்றின் சங்கமம் புவியில் வாழும் ஜீவராசிகள் - மனிதர்கள் உட்பட. இங்கிருக்கும் நம்மை இயக்கும் இந்த உயிரும் - அண்ட சராசரங்களை இயக்கி - அணுவுக்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் விளங்கும் - அங்கிருக்கும் அந்த உயிரும் வேறல்ல என்பதை நமக்கு எடுத்துரைக்கத் தான் இங்கு யோகிகள் தோன்றினார்கள் - மகாமுனிவர்கள் வாழ்ந்தார்கள் - அவதாரங்கள் அவதரித் தார்கள். அந்தப் பூரணத்திருந்து தான் இந்தப் பூரணம் தோன் றியது - அந்தப் பூரணத்திலிருந்து தோன்றிய இந்தப் பூரணமும்
16

நிர்வாணம்
ஒரு பூரணமே - என்பதை அறிந்து - உணர்ந்து - அனுபவித்து - துன்பங்களிலிருந்து விடுபட்டு - நித்திய ஆனந்தத்தில் நிலை கொள்வதே மனித ஜனனத்தின் அத்திவாரம் என்று கூறாத வேதங்களில்லை - சொல்லாத சாத்திரங்களில்லை - விளக்காத புராணங்களில்லை. இதற்காகத் தான் இங்கு பரிணாமம் நடந்தது - இதற்காகத் தான் மனிதன் பரிணாமத்தின் கடைசி வார்ப்பாக வார்க்கப்பட்டான்.
இந்த உண்மையை இப்பிறப்பிலேயே உணராமல் இறக்கும் மனிதன் மீண்டும் பிறப்பான். இதை உணரும் வரையில் ஜனனம் - மரணம் - ஜனனம் என்னும் ஸம்ஸார ஸாகரம் அவனது தலை விதி.
ஜனனத்திற்கும் மரணத்திற்கும் அப்பாற்பட்ட பூரணம் - ஆதியும் அந்தமும் அற்ற பூரணம் - காலத்திற்கும் நேரத்திற்கும் கட்டுப்படாத பூரணம் - நமக்குள்ளேயே இருக்கிறது என்பதை மனிதர்கள் உணர விடாது தடுப்பது மனித மனம்.
ஐம்புலன்களின் தொழிற்பாட்டால் உருவாகிய மனித மனம் தான் - பார்ப்பதற்கு நிறம் கொடுக்கிறது - கேட்பதற்கு அர்த்தம் கற்பிக்கிறது - உண்பதற்கு சுவை கொடுக்கிறது - காற்றிற்கு மணம் கொடுக்கிறது - உரசுவதற்கு வடிவம் கொடுக் கிறது - இருப்பதை இல்லாதது போலவும் - இல்லாததை இருப்பது போலவும் ஜாலம் காட்டுவது மனித மனம். தன்னைத் தானே - தனக்குள் இருப்பதை வெளியே பிரதிபலித்து - அவையெல் லாம் வெளியிலேயே இருப்பது போல நம்பச் செய்வது மனித மனம். நாம் பார்க்கும் உலகம் நமது மனத்தின் பிரதிபலிப்பு.
“மருண்டவன் கண்ணுக்கு ஆகாயமெல்லாம் பேய்” என்பது.மட்டும் தான் உண்மை என்பதல்ல. இங்கு மனிதர்கள்
0 .0 O طویسے எல்லோருமே மருண்டவர்கள் என்பதும் உண்மை தான்.
இதனால் தான் - மனத்தை ‘மாயப் பிசாசு’ என்றார்கள் யோகிகள். இதனால் தான் - “மனத்தை அடக்க வழி ஒன்றும் அறிகிலேன்” - என்று காலம் காலமாக ஒலமிட்டார்கள் சம்சார ஸாகரத்திலிருந்து விடுபட விரும்பியவர்கள். இதனால் தான் - “யோகம் வேண்டில் சித்தத்தின் விருத்திகளை அடக்கு” என்று சொன்னார் பதஞ்சலி.
7

Page 61
டாக்டர் பூரீதரன்
அன்றாடம் நாம் உண்ணும் உணவு நமது உடலை வளர்க் கிறது - உணவு சீராக இல்லாத போது உடல் வளர்ச்சி சரியாக அமைவதில்லை. இது நமக்குத் தெரியும். நாம் உண்ணும் உணவைப் பொறுத்துத் தான் நமது உடலமைப்பு உருவாகிறது - உணவு குறைபாடாக இருக்கும் போது சரியான உடலமைப்பு உருவாகுவதில்லை. இது நமக்குத் தெரியும். நமது உணவின் தராதரத்தைப் பொறுத்துத் தான் உடலின் ஆரோக்கியம் நிர்ண யிக்கப்படுகிறது - உணவு தரக்குறைவாக இருக்கும் போது உடலில் கோளாறுகள் தோன்றுகின்றன. இதுவும் நமக்குத் தெரியும்.
இது போலவே - இப்படியே - அன்றாடம் நாம் கண்ணால் பார்ப்பவையும் காதால் கேட்பவையும் தான் பிரதானமாக - மிகப் பிரதானமாக - மனித மனத்தை வளர்க்கின்றன. இவை தான் நமது மனதிற்கு உணவு. உள்ளே போகும் விடயங்களைப் பொறுத்துத் தான் மனிதனின் மனஅமைப்பு உருவாகிறது - உள்ளே செல்லும் விடயங்களின் தராதரம் தான் மனித மனத்தின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன.
இன்று நாம் காணும் கந்தையாக்களும் கந்தசாமிகளும் நேற்று அவர்கள் பார்த்ததன் - பார்க்க நேர்ந்ததன் - கேட்டதன் - கேட்க நேர்ந்ததன் விளைவுகள் நாளை நாம் பார்க்க இருக்கும் கந்தையாக்களும் கந்தசாமிகளும் அவர்கள் இன்று பார்க்கும் - கேட்கும் விடயங்களின் மொத்த விளைவுகள்.
இன்று - இங்கு - நாம் பெரும்பாலும் எதைப் பார்க்கிறோம் அன்றாடம்? எதைக் கேட்கிறோம் அன்றாடம்? பத்திரிகை படிக்கிறோம் - தொலைக்காட்சி பார்க்கிறோம் - கேட்கிறோம் - சினிமா பார்க்கிறோம் - வானொலி கேட்கிறோம்.
ஒரு சிறு கதை. ஒரு மாமனிதர் பத்திரிகை விற்கும் கடைக்கு மாதமொரு தடவை சென்று - படிப்பதற்காக விற்காக பழைய பத்திரிகைகள் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டு வாங்கிச் செல்வார். இதை நீண்ட காலமாக அவதானித்த கடைக்காரன் - “எதற்காக பழைய பத்திரிகைகளை படிக்கிறீர்கள்”? என்று கேட்டான். அதற்கு மாமனிதர் பதிலளித்தார் “திகதிகளும் பெயர்களும் தான் பத்திரிகைகளில் நாளுக்கு நாள் மாறுகிறதே தவிர எழுதப்படும் குப்பைகள் என்றுமே ஒரே மாதிரியாகத் தானே இருக்கின்றன - இதில் பழையது எது? புதியது எது?”
8

நிர்வாணம்
ஊரில் - உலகத்தில் நடப்பதை அறிகிறோம் - அறிவை வளர்க்கிறோம் என்ற பெயரில் மிகவும் பெருமையாக பத்திரிகை வாங்கிப் படிக்கிறோம். எதை அறிந்தோம்? அறிந்து என்ன கண்டோம்? எது வளர்ந்தது? வளர்த்து என்ன கண்டோம்? ஒன்றே ஒன்று மட்டும் நிச்சயமாகக் கிடைத்தது - பேய் போன்ற ஒரு மனது.
பாடு பட்டு பணம் சம்பாதித்து - சம்பாதித்தது போதாது என்று கடன் வேறு பட்டு - 32 அங்குல தொலைக்காட்சிச் சாதனத்தை வீட்டிற்கு வாங்கி வந்து - அதற்கு மேல் அழகாக கொலு வைக்கிறோம் அந்த குரங்குப் பொம்மையை. ‘தீய வற்றைப் பார்க்காதே - தீயவற்றைக் கேட்காதே - தீயவற்றைப் பேசாதே’ என்பதை சைகையால் உணர்த்தும் அந்தப் பொம்மை. எவ்வளவு பொருத்தமான இடம்.
இரவு ஏழு மணி - தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் களை கட்டுகின்றன. கலைத் தெய்வம் - கலா வித்தகி - நடிகை ஜிந்தாமணியுடன் ஒரு சிறப்புப் பேட்டி. அது என்ன இழவோ தெரியவில்லை - பேட்டி கொடுக்கும் நடிகைகளுக்கெல்லாம் - ஒருவர் தவறாது - தலை முடி அடிக்கொரு தடவை முகத்தில் விழுகிறது. அவர்களும் மோதிரம் அணிந்த விரல்களால் - அலங்காரங்கள் செய்த விரல்களால் லாவகமாக அதைப் பின் தள்ளி விடுகிறார்கள் - மீண்டும் விழும்படியாக,
“எப்படி உங்களுக்கு நடிப்புத் துறையில் ஈடுபாடு ஏற் பட்டது?’ சிறப்புப் பேட்டியில் கேட்கப்படும் முதல் கேள்வி. அவளது தொழிலே நடிப்பு - உண்மையான காரணத்தையா கூறப் போகிறாள்? தனக்கு ஐந்து வயதாக இருக்கும் போது கலைமகள் தனது கனவில் வந்து தன்னை நடிக்கும் படி ஆணையிட்டதாகவும் - அந்தப் புனிதத் தொண்டுக்காக இன்று தன்னை அர்ப்பணித்து விட்டதாகவும் பதில் வரும். மெய் சிலிர்க்கிறது நமக்கு!
பொது அறிவுப் போட்டி தொடங்குகிறது - கணைகள் தொடுக்கப்படுகின்றன. பிரித்தானிய மகாராணி வளர்க்கும் நாய்க்குட்டியின் வாலின் நீளமென்ன? கடந்த வருடம் சிறந்த நடிகையாகத் தெரிவு செய்யப்பட்ட நடிகையின் வீட்டில் எத்தனை தென்னை மரங்கள் இருக்கின்றன? தமிழக முதலமைச்
9

Page 62
டாக்டர் பூரீதரன்
சரின் தலை முடி எந்த ஆண்டில் நரைக்கத் தொடங்கியது? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்து - சிறந்த அறிவாளி என்ற பரிசு வாங்குபவரின் அறிவுத் திறமையை மெச்சி - இது போல நாமும் அறிவாளியாக வேண்டும் என்ற விடா முயற்சியில் கண்டதையும் கற்கிறோம் - பண்டிதனாவதற்காக, எவ்வளவு ஆரோக்கியமாக வளர்கிறது நமது மனது!
இந்த வருடத்தின் அதி சிறந்த படம் - அதி சிறந்த காதல் காவியம் - விருதுகள் பல பெற்ற படம் நண்பர்கள் கூறு கிறார்கள் - நாமும் செல்கிறோம். காதல் காவியத்தின் கதைச் சுருக்கம் இது.
பதினெட்டு வயது நிரம்பிய - சிந்திக்கவே ஆரம்பிக்காத - வாழ்க்கை என்றால் என்னவென்றே விளங்காத ஒரு யுவனும் - பருவமடைந்து ஒரு சில நாட்களேயான - ஒரு யுவதியும் - உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் இரசாயணம் விளங்காது - அதன் இரகசியம் புரியாது - ஒருவர் மீது ஒருவர் உந்தப்பட்டு - வீட்டைப் பகைத்து - நாட்டைப் பகைத்து - இரவோடிரவாக ஒடிப் போகிறார்கள். அழுத்தமான காதல் காவியம் இது! பரவசப்படுகிறோம் நாம்!
மொத்தத்தில் - நம்மைச் சுற்றிலும் - எங்கும் குப்பை - எதிலும் குப்பை - எல்லாமே குப்பை - பெரும்பாலான சமயங் களில். இதன் விளைவாக - நாம் பார்ப்பது குப்பை - கேட்பது குப்பை - சிந்திப்பது குப்பை - பெரும்பாலான சமயங்களில்,
நமது இத்தனை சீர்கேடுகளையும் பார்த்துவிட்டு - ஒரு தாய் சேயின் பசியறிந்து பாலூட்டுவது போல - நம்மைப் பார்த்து பரிதாபப்பட்டு - இரக்கப்பட்டு - “நீ புறத்தே பார்த்தது - கேட்டது போதும் - அது உனக்குத் தேவையில்லை - நன்மை விளைவிக்காது - உனது பார்வையை அகத்தே செலுத்தி - உன்னை அறிந்து - அதன் மூலம் என்னை அறிந்து ஆன்ம ஈடேற்றம் அடைவாயாக" என்று பரமன் ஐம்பது வயதில் நமது கண்பார்வையைக் குறைக்கிறான் - கேட்கும் சக்தியைக் குறைக்கிறான்.
புரிந்து கொண்டோமா நாம்? விட்டு விடுவோமா நாம்? கண்பார்வை குறைந்ததும் - கண்ணாடி அணிந்து கொண்டு - ‘ஸன்’ பத்திரிகையின் மூன்றாம் பக்கத்து அழகியின் அங்கங்களை
20

நிர்வானம்
முன்னை விட அதி மும்மரமாக ஆராய்ச்சி செய்து கொண்டி ருக்கிறோம். கேட்கும் சக்தி குன்றியதும் - கேட்பதற்கு துணை செய்யும் கருவியை காதில் மாட்டிக் கொண்டு அடுத்த வீட்டுச் சண்டையை மிக உன்னிப்பாகக் கேட்கிறோம்.
இப்படி நாம் வளர்த்த - வளர்ந்த மனம் நமக்குள் இருக்கும் போது எப்படிக் கிடைக்கும் நமது வாழ்வில் மகிழ்ச்சி? எப்படிக் கிடைக்கும் நமக்கு முத்தி? எப்படி முடியும் நமது சம்சார சாகரம்? இதன் விளைவு - மீண்டும் மீண்டும் தாயின் கருப்பை - மீண்டும் மீண்டும் பிறப்பு - மீண்டும் மீண்டும் துன்பம். பரம னால் கூட காப்பாற்ற முடியாது நம்மை.
அதே சமயம் - ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது - அறைக் கதவைத் தாளிட்டு - சுகாசனத்தில் அமர்ந்து - கண்களை மூடி - உள்ளே செல்லும் மூச்சையும் வெளியே வரும் மூச்சையும் நிதானமாக அவதானித்து - அந்த அவதானிப்பிலேயே மனத்தை மறந்து - ஒரு நிமிடம் மறந்து - ஒரு மணித்தியாலம் மறந்து - இருபத்தி நாலு மணி நேரமும் மறந்திருக்கத் தெரியும் போது - அந்த மறப்பில் நம்மை நாம் தரிசிக்கும் போது - அந்த ஆனந்தத்தில் திளைக்கும் போது - பரமனால் கூட தடுக்க முடியாது நமது முத்தியை.
காரணம் - அப்பொழுது நாம் பூரணம்.
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம். அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம். அது ஒரு சத்தியம்.
OOC
12

Page 63
அமர்க்களமான அரங்கேற்றங்கள் - அந்தரங்கமான அழுகைகள்
Tெனது பெயர் அபிராமி. இலங்கையில் பிறந்து - வளர்ந்து - படித்து - பட்டம் பெற்று - இருபது வருடங்களுக்கு முன் இலண்டனில் குடியேறி - இப்பொழுது பிரித்தானியப் பிரஜையாகிவிட்ட டாக்டர் ரவியின் ஒரே மகளான எனக்கு இப்பொழுது வயது பதினெட்டு. பல்கலைக்கழக அனுமதி கிடைத்து - அடுத்த மாதம் முதல் விடுதியில் தங்கியிருந்து உளவியல் படிப்பைத் தொடரச் செல்லும் நான் - பிறந்தது - வளர்ந்தது - படித்தது எல்லாமே இலண்டனில் தான்.
நான் சுயமாகச் சிந்திக்கத் தொடங்கிய நாளிலிருந்து என்னைச் சுற்றி நடக்கும் பல விடயங்கள் எனது மன மகிழ்ச் சியை இடையிடையே குறைத்திருந்தாலும் - கடந்த ஒரு சில மாதங்களில் நடந்த சில விடயங்கள் என்னை நிரந்தரமாகவே மகிழ்ச்சியற்றவளாக மாற்றி விட்டன.
கடந்த ஒரு மாத காலமாக ஒரு குற்ற உணர்வு என்னை வாட்டுகிறது. உணவை ருசித்துச் சாப்பிட முடியவில்லை - நிம்மதியான உறக்கம் இல்லை - யாரைப் பார்த்தாலும் கோப மாகவும் எரிச்சலாகவும் வேறு வருகிறது. யாரிடமும் இது பற்றிச் பேச முடியாது - பேசினாலும் அதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் உள்ளவர்களை இது வரை நான் சந்தித்ததில்லை. மன அழுத்தம் - மனப் புழுக்கம் தாங்க முடியாமல் - எனது மனதை உறுத்தும் அந்தச் சில விடயங்களை அப்படியே எழுத்தில் வடிக்கத் தீர்மானித்துள்ளேன் - அப்போதாவது எனது மனம் சுகமடையும் என்ற ஒரே நம்பிக்கையில், ஒரு உளவியல் மாணவி நான் - அது கற்றுத் தந்த பாடம் இது.
122

நிர்வாணம்
கடந்த மாதம் எனது வீணை அரங்கேற்றம் அதி பகட்டாக அதி ஆடம்பரமாக - அதி நவீன மண்டபத்தில் - அதி நவீன விளம்பர முறைகளுடன் - அதி கூடிய செலவில் நடந்து முடிந்தது. இதற்குச் செலவான பணத்தை அப்பா நிச்சயமாகத் தனது சேமிப்பிலிருந்து எடுத்திருக்க முடியாது - வங்கியில் தான் கடன் வாங்கியிருக்க வேண்டும். காரணம் - சேமிப்பால் சமாளிக்க முடியாத - சேமிப்புக்குக் கட்டுப்படாத - சேமிப்பைத் தாண்டும் செலவு அது.
ஆனால் - அன்று செலவான அந்தப் பணம் - எதற்குச் செலவு செய்கிறோம் - எது வேண்டிச் செலவு செய்கிறோம் என்று சிந்திக்காமல் அப்பா செலவு செய்த அந்தப் பணம் இன்று அப்பாவுக்கு மன அழுத்தத்தை - இரத்த அழுத்தத்தை - தூக்கமற்ற இரவுகளைக் கொடுப்பது மட்டும் அப்பட்டமான உண்மை. காரணம் - இப்பொழுது நேரம் இரவு பன்னிரண்டு மணி. அடுத்த அறையில் அப்பாவின் இருமல் சத்தம் கேட்கிறது. அவர் இன்னும் தூங்கவில்லை - தூக்கம் வருவதற்கு இன்னும் பல மணித்தியாலங்கள் இருக்கின்றன என்று அந்த இருமலின் சத்தத்தை வைத்தே என்னால் உறுதியாகக் கூற முடியும்.
அது எப்படி? நான் அப்பாவின் செல்லம் - அவரில் எனக்கு அளவு கடந்த பிரியம். அம்மா பார்க்கத் தவறிய அப்பாவின் பல பரிமாணங்கள் - அம்மா பார்த்திராத அப்பாவின் பல பரிமாணங்கள் எனக்குத் தெரியும் - எனக்குப் புரியும்.
பாவம் அப்பா. இலங்கை உருவாக்கிய - இலங்கையில் உருவாகிய மனஅமைப்பை மறக்கவும் முடியாமல் - மாற்றவும் முடியாமல் - அதே மன அமைப்புடன் இங்கிலாந்தில் வாழவும் முடியாமல் - வாழவும் விரும்பாமல் - அதே சமயம் இங்கிலாந்து உருவாக்கும் மன அமைப்பை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் - ஏற்காமல் வாழவும் முடியாமல் - அங்குமில்லாமல் - இங்கு மில்லாமல் தொங்கும் திரிசங்கு வாழ்க்கையில் ஏற்பட்ட மனப் பிராந்தியால் - ஏதோ ஒன்றை எதற்காகவோ பற்ற வேண்டும் என்பதற்காக - எதற்குப் பற்றுகிறோம் - எது வேண்டிப் பற்று கிறோம் என்ற தெளிவில்லாத நிலையில் - அப்பா இங்கு பற்றிய - பற்றிக் கொண்டிருக்கும் விடயங்கள் ஏராளம் - ஏராளம். அவற்றுள் ஒன்று தான் எனது வீணை.
23

Page 64
டாக்டர் பூரீதரன்
பாவம் அப்பா, படிப்பால் - பட்டத்தால் - பதவியால் வர்க்கப்படுத்தப்பட்ட ஒரு சமுதாய அமைப்பில் நீண்ட காலம் இலங்கையில் வாழ்ந்த அப்பாவிற்கு - டாக்டர் என்பதால் இந்த வர்க்க ஏணியின் உச்சியில் நின்று கொண்டு உற்றார் களின் - உறவினர்களின் - நண்பர்களின் கவனத்தை ஈர்த்து இலங்கையில் வாழ்ந்த அப்பாவிற்கு - இந்த வர்க்க பேதத் திலேயே வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்ட அப்பாவிற்கு - இங்கு - இங்கிலாந்தில் - இந்த வர்க்க பேதம் துல்லியமாகத் தெரியாத ஒரு சமூக அமைப்பில் - பத்தோடு பதினொன்றாக வாழப்பிடிக்காத காரணத்தால் - ஏதோ ஒரு வர்க்க பேதத்தை தானாகவே உருவாக்கி - அதன் மூலம் உற்றார்கள் - உறவினர் கள் - நண்பர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு அப்பா செய்த - செய்து கொண்டிருக்கும் விடயங்கள் ஏராளம் - ஏராளம். அவற்றுள் ஒன்று தான் எனது வீணை.
எப்படி நான் இதை எல்லாம் இவ்வளவு தெளிவாக - உறுதியாகக் கூறகிறேன் என்றால் எனது அப்பாவை எனக்கு நன்றாகத் தெரியும். அப்பாவுக்கு கர்நாடக சங்கீதத்தில் எது வித ஈடுபாடும் கிடையாது - அவருக்கு அதை ரசிக்கவும் தெரியாது - அதைப் புரிந்து கொள்ளவும் முடியாது - புரிந்து கொள்ள அவர் ஒரு போதும் முயற்சி எடுத்ததும் கிடையாது. நான் அப்பியாசம் செய்யும் போது ஒரு நாளாவது - ஒரு நிமிட மாவது நான் வாசிப்பதை அவர் காது கொடுத்துக் கேட்ட தில்லை - ரசித்ததில்லை - பாராட்டியதில்லை.
சங்கீதத்தில் எனது அப்பாவையும் மிஞ்சியவன் எனது அம்மா. “சுருதி சேர்க்கிறேன்” என்று சொன்னால் “அதை வாசித்து முடித்த பின் சேர்க்கலாம் - இப்பொழுது வாசி” என்று கூறும் ஞானம் அவளது ஞானம். "தாளம் பிழைக்கிறது” என்று கூறினால் “அது பிழைத்தால் பிழைக்கட்டு - நீ தொடர்ந்து வாசி” என்று கூறும் பாண்டித்தியம் அவளது பாண்டித்தியம்!
இவர்களுக்கு நடுவில் நான். உண்மையில் இந்த வீணையில் எனக்கு எது வித ஈடுபாடும் கிடையாது. அது சம்பந்தப்பட்ட எதுவுமே - அதன் வடிவம் - அது எழுப்பும் ஒலி - அதில் நான் வாசிக்கும் பாடங்கள் - அவற்றை எல்லாம் சொல்லிக் கொடுக் கும் அந்த ஆசிரியை - இவை எதுவுமே எனக்குப் பிடிக்காது.
124

நிர்வாணம்
எனது சிறிய அறையில் பெருமளவு இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் இந்தப் பொருளை மீண்டும் ஒரு முறை தொடும் எண்ணம் எனக்கு நிச்சயமாக இல்லை - இது சத்தியம். நான் இதைத் தொட்டது எனது அப்பாவிற்காக மட்டுமே - அப்பாவின் பாசத்திற்காக மட்டுமே - அவரின் பாசமான வேண்டுகோளுக்காக மட்டுமே. நான் வீணை படித்து - ஒரு அரங்கேற்றம் செய்ய வேண்டுமென்ற அப்பாவின் ஆசையைக் கடந்த மாதம் நிறைவேற்றி விட்டேன்.
அடுத்த அறையில் அப்பாவின் இருமல் சத்தம் கேட்கிறது - அம்மாவின் குறட்டைச் சத்தமும் கேட்கிறது. பாவம் அப்பா - எனது அரங்கேற்றத்திற்காக அவர் பட்ட பாடு!
எனக்கு உலக அரசியல் - அரசியல் குழப்பங்கள் மிகவும் பிடிக்கும் - விரும்பிப் படிப்பேன். ஆனால் - எனது அரங்கேற்றத் திற்கு கலைஞர்களை ஒழுங்கு செய்வதில் - அவர்களை ஒன்று சேர்ப்பதில் - ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை இப்பொழுது நினைத்துப் பார்க்கும் போது - நான் படித்த உலக அரசியல் குழப்பங்கள் வெறும் கடுகளவாகத் தோற்றமளிக்கின்றன. இவர் வாசித்தால் நான் வாசிக்க மாட்டேன் - அவர் அமரும் மேடையில் நான் அமர மாட்டேன் - இவருக்கு அது கொடுத் தால் எனக்கு இது கொடுக்க வேண்டும் - நான் வந்தால் இவரும் கட்டாயம் வர வேண்டும் - எத்தனை குழப்பங்கள் - எவ்வளவு சிறுமைகள் - எத்தனை அசிங்கங்கள்! இவர்களை சமாதானம் செய்து - இவர்களை ஒன்று சேர்ப்பதிலேயே எனது அப்பாவின் இரத்த அழுத்தம் இருபது மில்லி அளவுகளால் கூடியதை நான் அறிவேன்.
எனது அரங்கேற்றத்திற்கு யார் யாரோ எல்லாம் வந்திருந் தார்கள் - ஏதேதோ காரணங்களுக்காக எல்லாம் வந்திருந் தார்கள். துபாயில் வாங்கிய பொன்னாபரணங்களையும் இந்தியாவில் வாங்கிய பட்டுப் புடவையையும் அணிவதற்குச் சந்தர்ப்பம் பார்த்திருந்தவர்கள் - கடந்த வருடம் நடந்து முடிந்த தங்களின் பிள்ளைகளின் அரங்கேற்றத்துடன் எனது அரங்கேற்றத்தை ஒப்பிட வந்தவர்கள் - அடுத்த வருடம் நடை பெறவிருக்கும் அரங்கேற்றத்திற்காக இப்பொழுதே தயார் செய்து
"ண்டிருப்பவர்கள் - எனது அப்பாவின் மனம் கோணாமலிப்
25

Page 65
டாக்டர் பூரீதரன்
பதற்காக ஒரு மாலைப்பொழுது வீணாகிறதே என்ற மனச் சலிப்புடன் வந்தவர்கள் - எந்த வித செலவுமில்லாமல் நாலு பேரைப் பார்த்துப் பேசிவிட்டு வரலாம் என்று வந்தவர்கள் - இப்படி யார் யாரோ எல்லாம் வந்திருந்தார்கள் - ஏதேதேர் காரணங்களுக்காக எல்லாம் வந்திருந்தார்கள்
ஆனால் - சுத்தமான கர்நாடக சங்கீதத்தைக் கேட்க வேண்டும் - வீணை இசையை ரசிக்க வேண்டும் - அந்த இசையில் நம்மை மறக்க வேண்டும் என்று அரங்கேற்றத்திற்கு வந்தவர்களை என்னால் விரல் விட்டு எண்ண முடியும். காரணம் - சங்கராபரணத்தில் நான் சஞ்சாரம் செய்த இடத்தைப் பற்றி என்னிடம் யாருமே பேசவில்லை மோஹனமும் ஹம்சத்வனியும் இணையும் போது ஏற்பட்ட சுகத்தைப் பற்றி என்னிடம் யாருமே பேசவில்லை! காம்போதியில் தைவதத்தில் நான் செய்த குளறு படிகளைப் பற்றி என்னிடம் யாருமே பேசவில்லை!
அரங்கேற்றத்தின் முடிவில் பலர் என்னைப் பாராட்டி னார்கள். நான் ரசித்து - சுவைத்து - அனுபவித்து வாசித்ததாகப் பாராட்டினார்கள். அவர்களின் பாராட்டிலிருந்தே அவர்களை நான் புரிந்து கொண்டேன். காரணம் - நான் எதையுமே ரசித்து சுவைத்து - அனுபவித்து வாசிக்கவில்லை. எல்லாமே எனது ஆசிரியை எழுதிக் கொடுத்தது தான். இந்த இடத்தில் அசைக்க வேண்டும் - இந்த இடத்தில் கமகம் வேண்டும் - இந்த இடத்தில் சுரம் தெரிய வேண்டும் - எல்லாமே ஆசிரியையின் எழுத்து தான்.
அரங்கேற்றத்திற்கு இந்தியாவிலிருந்து விசேடமாக அழைக்கப்பட்ட பிரதம விருந்தினர் பேசினார் - உண்மை தெரியாமல் பேசினார் - உலகம் புரியாமல் பேசினார். எனது அப்பா போன்ற ஒரு சில மனிதர்களால் தான் கலை இன்னும் வாழ்கிறது என்று பேசினார். எனது அம்மா போன்ற ஒரு சில பெண்களால் தான் மேற்கு நாடுகளில் கலை வளர்கிறது என்று பேசினார். என்னைப் போன்ற ஒரு சில பிள்ளைகளால் தான் கலை தலைமுறை தலைமுறையாகக் காக்கப்படுகிறது என்று பேசினார்.
எனது அப்பா எதை வாழ வைத்தார் - எது வாழ்கிறது - எப்படி வாழ்கிறது - எனது அம்மா எதை வளர்த்தாள் - எது
26

நிர்வாணம்
வளர்கிறது - எப்படி வளர்கிறது - நான் எதைக் காத்தேன் - எதுவுமே எனக்குப் புரியவில்லை. எதற்காக எனது அப்பா இப்படி? எதற்காக எனது அம்மா இப்படி? - எதற்காக என்னைச் சுற்றியுள்ளவர்கள் இப்படி? எதுவுமே எனக்குப் புரியவில்லை.
ஆனால் - கடந்த ஒரு மாத காலமாக எனது மனதை
உறுத்திய சில விடயங்களை அப்படியே எழுதிக் கொட்டி விட்டதில் இப்பொழுது பரம திருப்தி - மனம் சுகமாக இருக் கிறது - மகிழ்ச்சியில் அது பாடுகிறது. அந்தப் பாட்டே என்னைத் தாலாட்டி - என்னை உறங்கத் தூண்டுகிறது. எனக்குத் தூக்கம் வருகிறது - நீண்ட நாட்களின் பின் சுகமாகத் தூங்கப் போகிறேன். அப்பாவின் இருமல் சத்தம் இன்னும் ஒயவில்லை.
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம்.
அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம்.
அது ஒரு சத்தியம்.
OOO

Page 66
பூனையைத் தேடும் தியானங்கள்
பிராமணர்கள். பிராமணியம். இவை இரண்டுமே இரு வேறு விடயங்கள். இங்கு நமது வாழ்க்கை சுயமாக - சுகமாக - சுதந்திரமாக அமையவேண்டுமெனில் - பிராமணர்களையும் பிராமணியத்தையும் சரியாக அடையாளம் கண்டு - பிராமணி யத்தை நமது வாழ்விலிருந்து ஒதுக்க வேண்டும் - என்ற மாமனிதர்களின் கருத்தைப் படித்தவுடனேயே - நம்மில் பெரும்பாலானோரினது மனதிலும் எழுந்த - எழும் தவிர்க்க முடியாத ஒரு கேள்வி:
“பிராமணியத்தை நமது வாழ்விலிருந்து ஒதுக்கி விட்டால் இங்கு யார் நாம் பண்ண வேண்டிய சடங்குகளை நடாத்தி வைப்பார்கள் - சடங்குகள் செய்யாவிட்டால் நமது வாழ்க்கை எப்படி உருப்படும்?”
நியாயமான கேள்வி - நியாயமான பயம். காரணம் - மகுடியை இசைத்து நாகத்தை ஆடவைக்கும் அந்தப் பாம்பாட்டியைப் போல - அனல் வீசும் தனது பார்வையால் வெள்ளாட்டை வெருள வைக்கும் அந்த வேங்கையைப் போல - தமது முந்தானை அசைவில் மாமன்னர்களையே மயங்க வைக்கும் அந்தத் தேவதாசிகளைப் போல - இங்கு சடங்குகளைக் காட்டி நம்மையெல்லாம் ஆட வைத்திருக்கிறது - வெருள வைத்திருக் கிறது - மயங்க வைத்திருக்கிறது பிராமணியம்.
இதன் விளைவு: உயிரைத் தாங்கும் ஊன் போல - நிலவைத் தாங்கும் வான் போல - அலையைத் தாங்கும் கடல் போல - சடங்குகளைத் தாங்குகிறது நமது சமூகம்.
ஐயகோ! ஆண்டவா! இங்கு தான் எத்தனை விதமான சடங்குகளெல்லாம் வெகு தந்திரமாக நமது வாழ்க்கையில்
28

நிர்வாணம்
புகுத்தப்பட்டிருக்கின்றன! அப்பனே! பழனியாண்டவா! இந்தச் சடங்குகளை நாம் செய்யத் தவறினால் - என்ன என்ன பாவங்கள் எல்லாம் நம்மைப் பிடித்துக் கொள்ளும் என்று எவ்வளவு தந்திரமாக நாம் மிரட்டப்பட்டிருக்கிறோம்!
இதன் விளைவு: பிறக்கு முன்னர் சடங்குகள் - பிறந்த பின்பும் சடங்குகள். வாழ்ந்தாலும் சடங்குகள் - வீழ்ந்தாலும் சடங்குகள். இறக்கு முன்னரும் சடங்குகள் - இறந்த பின்னரும் சடங்குகள். இது தவிர - நாய்க்கும் சடங்கு - நரிக்கும் சடங்கு. பேய்க்கும் சடங்கு - பிசாசிற்கும் சடங்கு. ஆட்டிற்கும் சடங்கு - மாட்டிற்கும் சடங்கு. துளசிக்கும் சடங்கு - துவரைக்கும் சடங்கு.
மொத்தத்தில் இங்கு நாம் வாழவில்லை - வாழ விடப்பட வில்லை. மாறாக - நமது வாழ்வே ஒரு சடங்கு - நமது வாழ்க்கையே ஒரு சடங்கு.
மதம் என்ற போர்வையில் உருவாகிய - திட்டமிட்டே உருவாக்கப்பட்ட - பெரும்பாலான இந்தச் சடங்குகள் நமது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்ன? - அந்தத் தாக்கங்கள் சடங்குகளை உருவாக்கியவர்களுக்கு வாரி வழங்கும் நன்மைகள் என்ன? - இந்தச் சடங்குகளை ஒதுக்கி - சுயமாக - சுதந்திரமாக - சுகமா வாழ்வது எப்படி? - என்பது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்க முயல்கிறது இந்தக் கட்டுரை. அதற்குத் துணை செய்கிறது பின்வரும் கதை.
முன்னொரு காலத்தில் - கிராமமொன்றின் எல்லையில் அமைந்திருந்த ஒரு சிறு குடிசையில் - தனது சீடர்களுடன் வாழ்ந்து வந்தார் ஒரு மாபெரும் ஞானி. தினமும் தனது நேரத்தை தியானம் செய்வதிலேயே பெரும்பாலும் கழித்து வந்த அந்த ஞானியின் குடிசையின் முன்னால் - ஒரு நாள் ஒரு பூனைக் குட்டி ஒன்று அநாதரவாகக் காணப்பட்டது. அதற்காகப் பரிதாபப்பட்ட ஞானி அன்றிலிருந்து அதற்கும் தனது குடிசையில் இடமளித்தார்.
ஒரு சில வாரங்களில் பின்னர் அந்தப் பூனைக்குட்டியால் ஞானிக்கு ஒரு சிறு சிக்கல். காரணம் - ஞானி ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் பொழுதெல்லாம் குடிசைக்குள் குறுக்கும் நெடுக்குமாக ஓடி விளையாடிய அந்தக் குட்டியின் விளை யாட்டால் ஞானியின் ஆழ்ந்த தியானம் பல தடவைகள் குழப்பப்பட்டது.
29

Page 67
டாக்டர் பூரீதரன்
தீர்க்கமாக யோசனை செய்த பின் ஒரு முடிவுக்கு வந்தார் ஞானி. ஒவ்வொரு நாளும் தியானத்தை ஆரம்பிக்கு முன்னர் - பூனைக்குட்டியை ஒரு சிறு கயிற்றால் குடிசை - யன்னலில் கட்டிய பின் தியானத்தை ஆரம்பித்தார் ஞானி. குட்டி சற்று வளர்ந்த பின் அதன் விளையாட்டுகள் ஒய்ந்த பின் - அந்தத் தண்டனையை நிறுத்தி விடலாம் என்பது ஞானியின் முடிவாக இருந்திருக்கலாம்!
ஞானி அதிகம் பேசாதவர். தான் செய்யும் காரியங்களுக்கு அநாவசியமாக சீடர்களுக்கு விளக்கமெதுவும் அளிக்காதவர். அதே சமயம் - சீடர்களுக்கும் துறவறம் புதிது. ஆழ்ந்த தியானத்தின் சூட்சுமங்கள் எதுவும் புரியாது. இதனால் - எதற்காக ஒவ்வொரு நாளும் ஞானி தியானம் செய்யு முன்னர் பூனைக்குட்டியைத் தேடிப் பிடித்து யன்னலில் கட்டுகிறார் என்ற விடயம் சீடர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்து வந்தது. வாய் திறந்து ஞானியிடம் கேட்கும் துணிவும் யாருக்கும் இல்லை.
ஒரு நாள் - அந்த ஞானி திடீரென இறந்து விட்டார். அவர் இறந்த ஒரு சில மணித்தியாலங்களில் அவர் வளர்த்த அந்தப் பூனைக்குட்டியும் இறந்து விட்டது.
ஒரு சில நாட்கள் துக்கமாக இருந்த சீடர்கள் மீண்டும் தங்களது வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்ப முனைந்த போது - பிரதம சீடன் மற்றவர்களுக்கு இவ்வாறு கூறினான் - “நமது குரு வகுத்த பாதையில் செல்வதில் தான் நமக்குப் பெருமை. ஆகவே - அவரது முறைப்படி தியானம் செய்ய நமக்கு ஒரு பூனைக்குட்டி தேவை - கிராமத்தினுள் சென்று எப்படி யாவது ஒரு பூனைக்குட்டி ஒன்றைப் பிடித்து வாருங்கள்”
பூனைக்குட்டி ஒன்றைத் தேடி கிராமத்தினுள் சென்ற சீடர்களுக்கு எவ்வளவு தேடியும் பூனைக்குட்டி ஒன்று கூடக் கிடைக்கவில்லை. மிகுந்த மன வருத்தத்தோடு அவர்கள் குடிசைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது அவர்களின் கண்ணில் ஒரு நாய்க்குட்டி தென்பட்டது. அதைப் பார்த்த சீடர்களில் ஒருவன் - இவ்வாறு சொன்னான்:
“நமது குரு நமக்குப் புகட்டிய அறிவை உபயோகித்து நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால் - ஏதாவது ஒரு மிருகத்தின் குட்டியைத் தான் யன்னலில் கட்ட வேண்டுமே தவிர அது பூனைக்குட்டியாகத் தான் இருக்க வேண்டிய அவசியமில்லை
130

நிர்வாணம்
என்று எனக்குத் தோன்றுகிறது. ஆகவே நாம் தியானம் பயில நமக்கு இந்த நாய்க்குட்டி ஒன்றே போதும்.”
மற்றவர்களும் அதை ஏகமனதாக ஆமோதித்தார்கள்.
பிரதம சீடனும் அவர்கள் கூறிய கருத்தை ஆதரித்து - அன்றிலிருந்து நாய்க்குட்டியை யன்னலில் கட்டிய பின் தியானத்தை ஆரம்பித்தார்கள் சீடர்கள்.
ஒரு சில வருடங்களின் பின் - “தியானம் செய்யும் முறை”- என்ற தலைப்பில் பிரதம சீடன் ஒரு நூல் எழுதினான். ஆஹா - ஒஹோ - என்று விற்பனையாகிய அந்த நூலிலிருந்து ஒரு சில வரிகள்:
“நீங்கள் தியானத்தை ஆரம்பிக்கு முன்னர் உங்களுக்கு அத்தியாவசியமாகத் தேவையான விடயங்கள் மூன்று: ஏதாவது ஒரு மிருகத்தின் குட்டி ஒன்று - ஒரு யன்னல் கம்பி - ஒரு கயிற்றுத் துண்டு. மிருகத்தின் குட்டி பூனைக்குட்டியாக விருந்தால் பலன் அதிகம். எனது குரு இந்த வழியில் தியானம் செய்தே நிர்வாணமடைந்தார். அதே சமயம் பூனைக்குட்டி கிடைக்காவிடில் கவலைப்பட வேண்டாம். வேறு ஏதாவது ஒரு மிருகத்தின் குட்டியானாலும் போதும். அப்படி உயிருள்ள மிருகக்குட்டி ஒன்று கிடைப்பது அரிதாகவிருந்தால் மரத்தால் செய்யப்பட்ட ஒரு மிருகப் பொம்மையை நீங்கள் உபயோகிக் கலாம். அதில் தப்பில்லை”
சிரிக்க முடிந்தால் சிரியுங்கள். மனம் திறந்து சிரியுங்கள். மனம் விட்டுச் சிரியுங்கள். உடல் குலுங்க - உள்ளம் மலர - நீங்கள் இப்பொழுது சிரிக்கும் இந்தச் சிரிப்பு நான் கூறிய கதையை நினைத்தல்ல.
மாறாக - இன்று - இங்கு - நமது வீடுகளில் பிராமணியம் நடத்தும் சடங்குகளை நினைத்து! அந்தச் சடங்குகளின் போது சாத்திர முறைகள் என்ற பெயரில் நமது வீடுகளில் கட்டப் படும் நாய்க்குட்டிகளை நினைத்து சடங்குகளுக்காகத் தேவைப் படும் பொருட்கள் என்ற பெயரில் பட்டியலில் போட்டுத் தரப்படும் அந்த நாய்க்குட்டிகளையும் பூனைக்குட்டிகளையும் நினைத்து!
கண்களை ஒரு நிமிடம் சற்று மூடி - இங்கு நமது வாழ்க்கையில் நடாத்தி வைக்கப்பட்ட எந்த ஒரு சடங்கைப்
13

Page 68
டாக்டர் பூரீதரன்
பற்றியும் - சுயமாக - சுதந்திரமாக - தன்மானத்துடன் இப்பொழுது சிந்தித்தால் - அதன் முடிவு - அரோஹரா! எத்தனை எத்தனை பூக்கள் நமது காதில் சொருகப்பட்டிருக்கின்றன! எத்தனை எத்தனை அல்வாக்கள் - அதுவும் திருநெல்வேலி அல்வாக்கள் - நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன! எத்தனை எத்தனை மாயா ஜால வித்தைகள் நமக்குக் காட்டப்பட்டிருக்கின்றன!
இதன் நடைமுறை விளைவு: இன்று நம்மில் பெரும் பாலானோர் நாய்க்குட்டிகளை யன்னலில் கட்டி விட்டு பய பக்தியுடன் தியானத்தில் அமர்ந்திருக்கிறோம்.
சுயநலத்திற்காக - சுயலாபத்திற்காக - சாத்திரம் என்ற பெயரில் - சம்பிரதாயம் என்ற பெயரில் - தெய்வ அனுக்கிரகம் என்ற பெயரில் - திட்டமிட்டே உருவாக்கப்பட்ட எத்தனை எத்தனையோ சடங்குகளை - ஒரு தனி மனிதனுக்கும் - ஒரு சமூகத்திற்கும் இன்று எவ்வித பலனையுமளிக்காத எத்தனை எத்தனையோ சம்பிரதாயங்களை - சடங்குகளை - சமயம் என்ற பெயரில் - சாத்திரம் என்ற பெயரில் - கேள்வியெதுவும் கேட் காமல் - கை கட்டி - சிரம் தாழ்த்தி செய்து கொண்டு - நமது இனத்தின் சுயமரியாதையை விற்றுக் கொண்டிருக்கிறோம் - நமது சுய சிந்தனையை இழந்து கொண்டிருக்கிறோம் - நமது தன்மானத்தை அடைவு வைத்துக் கொண்டிருக்கிறோம்
ஏன் நாம் இப்படி? எதற்காக நாம் இப்படி? “சுய சிந்தனையை இழப்பது தான் ஒரு இனத்தின் அஸ்தமனத்தின் ஆரம்பம்” என்று சொன்னார் ஒரு மாமனிதர். “யாருக்கும் அடி பணிய மாட்டோம்” என்று குரலெழுப்பி நாட்டின் சுதந்திரம் வேண்டிப் போராடும் நாம் எப்படி - எதற்காக - எப்பொழுது - நமது சுய புத்தியை - சுய சிந்தனையை அடைவு வைத்தோம்?
நாட்டை மீட்க முன் நம்மை மீட்க வேண்டாமோ? இது பற்றி எழுத - இது போலக் கேட்க என்ன தகுதியிருக் கிறது எனக்கு? “மனிதன்” என்ற ஒரு தகுதி போதாதோ இதற்கு?!
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம். அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம். அது ஒரு சத்தியம்.
C CO
132

அர்ச்சனை தட்டில் ஆசை முட்டைகள்
Uெழிபாட்டுத் தலங்களில் வர்த்தக மனப்பான்மையுடன் வலம் வரும் பிராமணியத்தின் பிரதிநிதிகளிடமிருந்து நாம் ஒதுங்கிக் கொண்டால் - இங்கு நமக்கு சுகமான - சுதந்திரமான - சுயமான ஒரு வாழ்க்கை அமையும் - என்ற மாமனிதர்களின் கருத்தைக் கேட்டதுமே - நம்மில் பெரும்பாலானோரினது மனதிலும் எழும் தவிர்க்க முடியாத ஒரு கேள்வி:
“பிராமணியத்தை நமது வாழ்விலிருந்து ஒதுக்கி விட்டால் யார் நமக்காக இங்கு கோவில்களில் அர்ச்சனைகள் செய் வார்கள் - அர்ச்சனைகள் செய்யாவிட்டால் எப்படி நமது வேண்டுதல்களுக்கு ஆண்டவன் செவி சாய்ப்பான்?”
எடுத்த எடுப்பில் நோக்கும் போது - நியாயமான கேள்வி தான் இது - நியாயமான பயம் தான் இது. ஆனால் - சிறிது உற்று நோக்கினால் - மேலெழுந்தவாரியான ஒரு கேள்வி இது - ஆதாரமற்ற ஒரு பயம் இது.
இந்தக் கேள்வியின் சகல பரிமாணங்களையும் ஆராய்ந்து - இந்தப் பயத்தின் சகல கோணங்களையும் அலசி - இந்தக் கேள்வியில் நியாயமில்லை - இந்தப் பயத்திலும் நியாயமில்ல்ை - என்று சொல்ல முயல்கிறது இந்தக் கட்டுரை. அதற்கு உதவி யாக - உலகம் போற்றும் வியட்னாமிய மகா ஞானி - Thich Nhat Hang - “gìumGöTib” Lịbụóì 6T(tpệu Peace Is Every Step Graöĩp நூலிருந்து ஒரு பகுதி கீழே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
“சபையோர்களே! நான் இப்பொழுது ஒரு தேஈடம் பழத்தை உங்களுக்குத் தந்தால் அதை நீங்கள் எவ்வளவு தூரம் ருசித்து - ரசித்து உண்கிறீர்கள் என்பது உங்களது தற்போதய மன அமைப்பில் தங்கியுள்ளது. எந்த வித கவலையோ அன்றி
133

Page 69
டாக்டர் பூரீதரன்
விரக்தியோ இல்லாமல் உங்களது மனம் தெளிவாக இருந்தால் அந்தப் பழத்தை நீங்கள் ரசித்து - ருசித்து உண்பீர்கள். மாறாக - உங்களது மனம் கோபத்தாலும் பயத்தாலும் பீடிக்கப்பட் டிருந்தால் அந்தப் பழத்தை உங்களால் ரசிக்கவோ ருசிக்கவோ முடியாது”
“ஒரு நாள் - தியானம் பழகுவதற்காக வந்துள்ள சிறுவர்கள் நிறைந்த சபையொன்றில் - ஒரு கூடை தோடம்பழத்தை வரவழைத்து - அங்குள்ள ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பழத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறினேன். கையிலுள்ள தோடம்பழத்தை உடனேயே உரித்து உண்ணாமல் - அதைக் கையில் ஏந்தி - சிறிது நேரம் அதை உற்று நோக்குமாறு கூறினேன் அவர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே - மெதுவாக - மெதுவாக - அதைத் தந்த - தோப்பில் நிற்கும் அந்தத் தோடை மரத்தை சிறிது நேரம் நினைக்குமாறு கூறினேன். அமைதியான வார்த்தைகள் மூலமான எனது வழிநடாத்தலின் மூலம் - மழையிலும் பனியிலும் வெய்யிலிலும் மரத்தில் நடன மாடிய அதன் பூக்களை அவர்கள் மனக்கண்ணில் பார்க்கு மாறு கூறினேன்.”
“பார்வையை மெதுவாக - மெதுவாக - விஸ்தரித்து - பூக்களின் இதழ்கள் உதிர்ந்து - பச்சை நிறத்தில் தென்பட்ட ஒரு சிறு தோடங்காயை மனக்கண்ணில் பார்க்குமாறு கூறினேன். மழையிலும் வெய்யிலிலும் காற்றிலும் பணியிலும் அந்தக் காய் வளர்வதைப் பார்க்கச் சொன்னேன். அந்தக் காய் கனிவதைப் பார்க்கச் சொன்னேன். அந்தக் கனி தான் இப்பொழுது உங்கள் கையிலிருக்கும் கனி என்று கூறினேன்.”
“அதன் பின்பு - மெதுவாக அதன் தோலை உரித்து - தோலை உரிக்கும் பொழுது அதிலிருந்து வெளிவரும் சுகந்தத் தையும் - கசியும் சாற்றையும் ரசித்தவாறே அதன் முதல் சுளையை வாயில் போட்டு மெதுவாக மெல்லுமாறு கூறினேன்.”
"அவர்கள் இப்பொழுது உண்பது ஒரு வெறும் தோடம் பழத்தையல்ல - பிரபஞ்சத்திலுள்ள சகலதும் - மண் - காற்று - வானம் - நீர் - தீ - எல்லாமே அதற்குள் அடக்கம் என்றும் கூறி முடித்தேன்.”
“சபையோர்களே! நீங்களும் இதைப் பரீட்சிக்கலாம். இப்படியான ஒரு மனஅமைப்புடன் - ஒரு மன ஒருமைப்
34

நிர்வாணம்
பாட்டுடன் நீங்கள் ஒரு பழத்தை உண்ணும் போது - வழமைக்கும் மாறாக நீங்கள் உண்ணும் அந்தப் பழம் மிகவும் ருசிக்கும் - அதை நீங்கள் மிகவும் ரசிப்பீர்கள் - அந்த ரசிப்பின் அத்திவாரத்தில் ஒரு அமைதியான சுகம் இருக்கும். அது ஒரு வகைத் தியானம்”
அபாரம் அற்புதம்! ஆனால் - அந்த மகா ஞானி கூறு வதைப் போல நாம் எந்தப் பழத்தையும் இது வரை உண்ட தில்லை. அப்படி எப்போதேனும் உண்டு - அந்தத் தியானத்தை ஒரு முறையேனும் தரிசித்திருந்தால் - அதன் சுகத்தை ஒரு முறையேனும் அனுபவித்திருந்தால் - அப்புறம் எதற்காக மாதா மாதம் வங்கிக் கடனை அடைப்பதற்காக இங்குள்ள அலுவலகங் களில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறோம்?!
நாம் உண்ணும் போது - நமது காது தொலைபேசியில் ஒரு கண் தொலைக்காட்சியில் - மறு கண் பத்திரிகையில் மனம் அலுவலகத்தில் - வாய் வாழைப்பழத்தில். இப்படி சின்னாபின்னப்பட்ட நமக்குப் பழமல்ல - அந்த அமுதம் கூட சுகத்தைத் தராது.
நமது சின்னாபின்னப்பட்ட இந்த மன அமைப்பும் அதன் தொழிற்பாடுகளும் - நாம் உணவு உண்ணும் விடயத்தில் மட்டும் தான் வெளியாகிறது என்பதல்ல. நாம் அன்றாடம் புரியும் எந்தக் காரியத்திலும் அவை பிரதிபலிக்கின்றன - ஊடுருவி நிற்கின்றன.
இங்கு நாம் மேலெழுந்தவாரியாக புரியும் எந்தக் காரியத் தையும் அந்த வியட்னாமிய ஞானி கூறியது போல நன்கு அலசி ஆராய்ந்தால் - நமது மனதை அந்தக் காரியத்திலேயே முற்று முழுதாகச் செலுத்தி அதன் சூட்சுமங்களைப் புரிந்து கொள்ள முயற்சித்தால் - இந்த முயற்சியின் போது நாம் எதிர்கொள்ளும் முடிவுகளை ஆண்மையுடன் நிறைவேற்ற நமக்குத் துணி விருந்தால் - அப்புறம் நமக்கு துன்பம் ஏது?! துயரம் ஏது?!
ஒரு சிறு உதாரணம். கோவிலில் - பிராமணியத்தின் பிரதி நிதி ஒருவரிடம் நமது பெயரையும் பிறந்த நட்சத்திரத்தையும் கூறி - நமது பெயருக்கு ஒரு அர்ச்சனை செய்யுமாறு விண்ணப் பிக்கிறோம். மந்திரம் - தீபாராதனை - பிரசாதம் - இப்படி ஏதேதோவெல்லாம் அர்ச்சனையின் பெறுமதிக்கேற்ப நமக்குக்
35

Page 70
டாக்டர் பூரீதரன்
காணிக்கையாகக் கிடைக்கின்றன. மகாபக்தர்கள் நாங்கள் என்ற மனப்போக்கில் வீடு திரும்புகிறோம்.
இந்தக் காரியத்தை - நாம் வழமையாக ஒரு தோடம் பழத்தை உண்பதைப் போல - மேலெழுந்தவாரியாகச் செய்து முடித்து விடுகிறோம். அதே சமயம் - அந்த வியட்னாமிய மகா ஞானி கூறியது போல - நமது மனத்தை சின்னாபின்னப்படுத் தாமல் - செய்யும் காரியத்திலேயே முற்று முழுதாகச் செலுத்தி - அதன் ஒவ்வொரு பரிமாணத்தையும் நன்கு ஆராய்ந்தால் - அந்த ஆண்டவனே கதறி அழும் அளவுக்கு நமது செய்கையில் எத்தனை எத்தனை அபஸ்வரங்கள் - எத்தனை எத்தனை பிசிறுகள் - எத்தனை எத்தனை தப்புத்தாளங்கள்
பார்ப்போம் அவற்றில் சிலவற்றை மட்டும் இப்பொழுது. ஆனால் - துணிவுடன் - ஆண்மையுடன் - மனச்சுத்தியுடன்.
முதலாவதாக - நமது கோவில் விஜயம் பொறுப்பற்ற - தொழில் எதுவும் இல்லாத - வருமானமெதுவுமற்ற - குடிகாரன் ஒருவன் - எது வித சிந்தனையுமின்றி - தனது இச்சைக்கேற்ப அடுக்கடுக்காகப் பிள்ளைகளைப் பெற்ற பின் - அவர்களின் அன்றாட ஜீவனத்திற்கு வழி எதுவும் செய்யாமல் - மது போதையில் ஊர் சுற்றித் திரியும் போது - பசித்த பிள்ளைகள் தந்தையைத் தட்டி - “அப்பா நாங்கள் உனது பிள்ளைகள் - எங்களது பசிக்கு நீ ஏதாவது வழி செய்ய வேண்டும்” - என்று கேட்பதற்கும் - “படைத்து விட்டால் மட்டும் போதுமா? என்னைக் கவனிக்க வேண்டாமா?” என்ற தோரணையில் கோவிலுக்குச் சென்று நமது பெயரையும் நட்சத்திரத்தையும் கூறி - இந்தப் பெயருக்கும் நட்சத்திரத்திற்கும் உரியவனைச் சிறிது கவனித்துக் கொள்ளுமாறு ஆண்டவனிடம் வேண்டு வதற்கும் எது வித வித்தியாசமுமில்லை ஒன்று ஒத்துக் கொள் வதற்கு நமக்கு ஒரு பக்குவம் வேண்டும்.
இரண்டாவதாக - நமது மன அமைப்பு. எங்கும் நிறைந் தவன் - எல்லாம் அறிபவன் - எல்லாம் வல்லவன் - என்பதெல் லாம் நம்மைப் பொறுத்த வரையில் யாரோ உளறிய வெறும் பம்மாத்துகள். நாம் அதை அறவே நம்புவதில்லை. காரணம் - நமது தாய் - ஒரு மனிதப் பிறவி - நமது பசியறிந்து - தேவை யறிந்து - நாம் எதுவும் கேட்காமலேயே - வேளாவேளைக்கு
136

நிர்வாணம்
நமக்குப் பாலூட்டியதை மறந்து விட்டு - பிரபஞ்சத்தின் தாயிடம் நமது பெயரையும் நாம் பிறந்த நட்சத்திரத்தையும் கூறி - நமது தேவைகளைக் கூறாவிட்டால் அவளுக்கு நம்மைப் பற்றி எதுவுமே தெரியாது என்ற அடிப்படையான மன அமைப்புடன் தான் இங்கு நமது கோவில் விஜயமும் அதைத் தொடரும் வேண்டுதல்களும் அமைகின்றன. ஆண்டவனை முற்று முழுதாக நம்புவன் பெயர் தான் ஆத்திகன் என்றால் - நாம் மாசு மறுவற்ற நாத்திகர்கள் என்று ஒத்துக் கொள்வதற்கு நமக்கு ஒரு துணிவு வேண்டும்.
மூன்றாவதாக - நமது அர்ச்சனை. பெரும்பாலான வளர்முக நாடுகளில் - ஒரு அரசாங்க அலுவலகத்தில் ஏதாவது ஒரு காரியம் ஆக வேண்டுமெனில் - அந்தக் காரியத்துடன் சம்பந்தப்பட்ட அத்தனை குமாஸ்தாக்களினது கைகளையும் குளிரவைக்காமல் எதுவுமே செய்ய முடியாது என்பது நம்மில் எல்லோருக்கும் தெரியும். குறைபட்ட மனித மனங்கள் - அவாவுடைய மனித மனங்கள் இந்தப் பண்டமாற்று முறைக்கு தவறின்றி வெற்றியைத் தரும். ஆனால் - “நீ எதை எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது - நீ எதைக் கொடுத்தாயோ அது இங்கிருந்தே கொடுக்கப்பட்டது” என்று பார்த்தனுக்கு கீதை சொன்னவன் சந்நிதியில் போய் நின்று கொண்டு - “அப்பனே! இது எனது பணம் - நான் உழைத்த பணம் - எனது பணத்தைக் கொண்டு நான் வாங்கிய அதி பெறுமதியான அர்ச்சனைச் சீட்டு இது - இதை எடுத்துக் கொண்டு வடக்கு இலண்டனில் நான் நான்காவது வீடு வாங்குவதற்கு எனக்கு நீ உதவி செய்ய வேண்டும்” என்று வேண்டுவதும் - அந்த வேண்டுதலுக்கு அவன் செவி சாய்ப்பான் என்று நம்புவதும் - அதை நம்பத் தூண்டுபவர்களும் - அரோஹரா! நமது இந்தப் பக்திப் பிரகடனத்தில் அந்த ஆண்டவன் அழுவது நமக்குக் கேட்பதில்லை.
நான்காவதாக - பிராமணீயத்தின் பிரதிநிதிகள். மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு பொருளை உற்பத்தி செய்யும் மாபெரும் ஸ்தாபனம் ஒன்று - தனி நபர்கள்
தங்களிடம் நேரடியாக அந்தப் பொருளை வாங்குவதைத் தவிர்ப்பதற்காக - பல ஏஜெண்டுகளை நியமிப்பது வழக்கம். அது ஒரு வகை வியாபார தந்திரம் - நிர்வாக செளகரியம்.
37

Page 71
டாக்டர் பூரீதரன்
ஆனால் - படைத்து - காத்து - அருளி - அழித்து - பிரபஞ்ச லீலை புரியும் அந்தப் பரமன் - தன்னை நாடுபவர்கள் - தன்னை அறிய அவாவுடையவர்கள் - பிராமணியம் என்னும் ஏஜென்டுகள் மூலமாகத் தான் வரவேண்டும் என்று ஒரு நிர்வாக விதியை விதித்து - அதற்காக விசேடமாக ஒரு இனத்தையும் இங்கு படைத்து - அன்றைய இலங்கைப் பிரதமர் பண்டாரநாயக்கா “சிங்களம் மட்டும்” சட்டத்தை அமுல்படுத்தியது போல - சமஸ்கிருதம் மட்டும் தான் எனக்குப் புரியும் என்று கூறிவிட்டு - கைலையில் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறான் என்று நாம் நம்பினால் - இப்படியான சிந்தனைகள் தெய்வ சாபத்தைத் தேடித்தரும் என்று நாம் நம்பினால் - நமது கழுத்துக்கு மேலிருக்கும் உறுப்பின் பெயர் தலையல்ல.
ஐந்தாவது - - ஆறாவது - - ஐயோ - 1 கதிர்காமக் கந்தனே! இதற்கும் மேல் என்னால் எழுத முடியவில்லை. இரத்த அழுத்தம் பாதுகாப்பின் எல்லையைத் தாண்டுகிறது.
இந்தக் கட்டுரை ஒன்று போதாது இங்கு நாம் ஏமாற்றப் படும் விதங்களை விபரிப்பதற்கு. இங்கு ஒரு பேனா போதாது நமக்குத் தரப்படும் அல்வாக்களை விபரிப்பதற்கு. இந்த ஒரு பிறவி போதாது இங்கு நமது காதில் வைக்கப்படும் பூக்களை எண்ணுவதற்கு.
பிராமணியம் போட்ட வட்டமல்ல இந்து மதம். பிராமணியம் கூறும் வழியல்ல தெய்வ வழிபாடு. பிராமணியம் சொல்லும் சடங்குகளல்ல ஆன்ம ஈடேற்றம்.
உண்மைகள் ஆரம்பத்தில் சுடும் - காலப்போக்கில் இனிக்கும். பொய்கள் ஆரம்பத்தில் இனிக்கும் - காலப் போக்கில் கசக்கும்.
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம். அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம். அது ஒரு சத்தியம்.
38

பணம் படைத்த ஏழைகள்
நிம்ே வாழும் உலகில் - மனிதனால் உருவாக்கப்பட்ட எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும்- அவற்றில் மூன்று விடயங்களின் சங்கமத்தை அவதானிக்கலாம். ஒன்று - அந்தப் பொருளை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட மூலப் பொருட்கள். இரண்டு அந்த மூலப்பொருட்களை ஒன்றாக இணைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பம். மூன்று -அந்தப் பொருளை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்ட்ட உருவாக்கியவனின் அறிவு.
ஒரு சிறு உதாரணம் - நாம் அன்றாடம் அமரும் ஒரு நவநாகரீக நாற்காலி. மனிதனால் உருவாக்கப்பட்ட இந்தப் பொருளை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட மூலப் பொருட்கள்: மரம் - ஆணி - வித விதமான துணி வகைகள் - பல வகையான பிளாஸ்டிக் - பல வகையான உலோகங்கள். இந்த மூலப்பொருட்களை ஒன்று சேர்ப்பதற்குப் பயன்படுத்தப் பட்ட தொழில்நுட்பம் அறவை இயந்திரங்கள் - கடைச்சல் இயந்திரங்கள் - வண்ணமடிக்கும் இயந்திரங்கள். இந்த நவ நாகரீக நாற்காலிக்குள் மறைந்திருப்பது ஒருதனிமனிதனின் அல்லது பல மனிதர்களின் அறிவு:இந்த மூன்று விடயங்களும் ஒன்று சேராவிடில் இங்கு எந்தப் பொருளும் உருவாகியிருக்க முடியாது.
தெரிந்தோ - தெரியாமலோ - இந்த உண்மையின் அடிப் படையில் இயங்கும் நமது அன்றாடச் செயல்பாடுகளுக்கு வேறு ஒரு உதாரணம் நாம். தாயகத்தில் வாழ்ந்திருந்த போது - வெளி நாட்டிலிருந்து வந்த நமது உறவினர் ஒருவர் நமக்குப் பரிசாகக் கொடுத்த அந்த அதி நவீன - விலை உயர்ந்த
39

Page 72
டாக்டர் பூரீதரன்
கடிகாரத்தில் ஒரு சிறுகோளாறு ஏற்பட்ட போது- நாம் அதை யாரிடம் எடுத்துச் சென்றோம்? கட்டிடப் பொறியியலாளர்? பல் வைத்தியர்? ஜோதிடர்? குருக்கள்? நிச்சயமாக இவர்கள் யாரிடமுமல்ல. அது மட்டுமல்ல - தெரு முனையில் ஒரு சிறிய மேசையின் முன்பு - "இங்கு கடிகாரம் பழுதுபார்க்கப்படும்” என்ற விளம்பரப் பலகையுடன் அமர்ந்திருக்கும்.அந்த முதியவ ரிடம் கூடவல்ல. மாறாக- அந்தக் கடிகாரத்தைப் பற்றி நன்கு அறிந்த - அதன் தொழில்நுட்பங்களை நன்கு உணர்ந்த ஒரு அதிநவீன ஸ்தாபனத்திற்கு எடுத்துச் சென்றோம். எதற்காக?
காரணம் - மனிதனால் உருவாக்கப்பட்ட எந்தப் பொரு ளிலும் கோளாறுகள் ஏற்படும்போது - அதைச் சரி செய்வதற்கு - அந்தப் பொருள் எதற்காக உருவாக்கப்பட்டது - அதை உரு வாக்கியவன் எதற்காக அதை உருவாக்கினான் - அது என்ன என்ன மூலப்பொருட்களால் ஆக்கப்பட்டிருக்கிறது - அந்த மூலப்பொருட்கள் எந்த தொழில்நுட்பத்தால் ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்ற அறிவு வேண்டும். உருவாக்கப் பட்ட பொருட்களின் சிக்கலான தன்மை அதிகரிக்க அதிகரிக்க - அதைச் சரி செய்வதற்கான அணிவும் அதிகரித்துக் கொண்டே போகிறது - அரியதாகிக் கொண்டே போகிறது. உதாரணமாக - ஆடிக்கெண்டிருக்கும் நாற்காலியின் ஒரு காலை சரி செய் வதற்கு தேவையான அறிவு வேறு - காரில் திடீரென ஏற்பட்ட அந்த விசித்திரமான சத்தத்தை சரி செய்வதற்கு தேவையான அறிவு வேறு.
இந்த உண்மையை நாம் உணர்ந்து கொண்டால் இதை மனதார ஏற்றுக் கொண்டால் கண்களைச் சற்று மூடி இதன் சூட்சுமங்களை நன்றாகப் புரிந்து கொண்டால் இப்பொழுது தெரியும் - தெரிய வேண்டும் அன்றாட வாழ்வில் நாம் புரியும் பித்துக்குளித்தனம். அது என்ன? பார்ப்போம்.
இது வரை நாம் பேசியது - ஆராய்ந்தது - மனிதன் உரு வாக்கிய உருவாக்கங்களைப் பற்றி மட்டுமே. ஆனால் - இந்தக் கட்டுரையை எழுதிய நானும் - இதைப்படிக்கும் நீங்களும் ஒரு அதிசய - ஒரு அற்ப - ஒரு அபூர்வ உருவாக்கங்கள். ஆனால் நிச்சயமாக நாம் மனிதனின் உருவாக்கங்களல்ல. அதே சமயம் - நாம் யாருடைய உருவாக்கங்கள் என்பதும் இங்கு நமது பிரச் சனையல்ல. ஆனால் - இங்கு மனிதனால் உருவாக்கப்பட்ட
40

நிர்வாணம்
எந்தப் பொருளையும்விட கோடானு கோடி சிக்கலான உரு வாக்கங்கள்தான் நானும் நீங்களும் என்பது எனக்கும் தெரியும் - உங்களுக்கும் புரியும்.
மனித உடல்! அந்த உடலை இயக்கும் மனம்! உடலையும் மனதையும் இயக்கும் அந்த உயிர்சக்தி இவற்றின் சங்கமத்தில் உருவாகிய நானும் நிங்களும்!
உலகைப் பார்ப்பதற்கு கண்கள் -அந்தக் கண்களைப் பாதுகாப்பதற்கு இமைகள்! உணவைச் சீரணிப்பதற்கு ஒரு அமைப்பு - அந்த அமைப்பு தன்னைத் தானே சீரணித்து விடாமலிருப்பதற்கு ஒரு தொழில்நுட்பம்! அடுத்தவனை வாழவைக்கும் மனித மனம் - அவனுக்கு குழி பறிக்கும் அதே மனம்! ஆகாயத்தில் பறப்பதும் மனித மனம் சாக்கடையில் குறிப்பதும் அதே மனம் புத்தனுக்குள் ஒரு உயிர் - புழுவுக் குள்ளும் அதே உயிர்!
மனிதனுடைய உருவாக்கங்களுக்கு அமைந்தஅந்த மூன்று தன்மைகளும் - இங்க நமக்கும் பொருந்தும் - பொருந்த வேண்டும். எத்தனை எத்தனை மூலப்பொருட்கள் நமக்குள்! எவ்வளவு தொழில்நுட்பம் நமக்குள்! எவ்வளவு அறிவு நம்மை வார்த்தவனுக்கு!
ஆனால் - நமக்கு இதில் எவ்வளவு தெரியும்? - புரியும்? எத்ற்காக வார்க்கப்பட்டோம்? எப்படி வார்க்கப்பட்டோம்? எது எது கொண்டு வார்க்கப்பட்டோம்? நமக்கு எதுவுமே தெரியாது.
அதே சமயம்- மனித உருவாக்கங்களுக்கு ஏற்படுவதைப் போல - நமது உடலிலும் கோளாறுகள் ஏற்படுவதுண்டு நமது மனிதிலும் கோளாறுகள் ஏற்படுவதுண்டு. அப்பொழுது இங்கு - நமது உடலை - மனித உடலை - நமது மனதை - மனித மனத்தை - யார் யாரோவெல்லாம் குடைகிறார்கள் - தோண்டு கிறார்கள் - குலைக்கிறார்கள்.
ஆனால் நாமோ - தாயகத்தில் பழுது போன அந்தக் கடிகாரத்தை பழுது பார்ப்பதற்கு எடுத்த கவனத்தைக்கூட இதற்காக எடுப்பதில்லை. “மனித உடலைப் பற்றி நமக்கு முற்றாகத்தெரியும்” என்று கூறுபவர்களுக்கு - “அது எப்படி
14

Page 73
டாக்டர் பூரீதரன்
அவர்களுக்கு முற்றாகத் தெரிய முடியும்” என்றுநாம் சிந்திப் பதில்லை. “மனித மனத்தைப் பற்றி நமக்கு முற்றாகப் புரியும்” என்று கூறுபவர்களுக்கு -"அது எப்படி அவர்களுக்கு முற்றாகப் புரியமுடியும்” என்று நாம் சிந்திப்பதில்லை.
இதன் நடைமுறை விளைவு? சாதாரண தலைவலிக்கு மருந்து அருந்த ஆரம்பித்து தலையையேபறி கொடுத்தவர் களையும் - தூக்கமற்ற இரவுகளுக்கு பரிகாரம் தேடிச் சென்று நிரந்தமாகவே தூங்கிப் போனவர்களையும் - நரம்புத் தளர்ச்சிக்கு வைத்தியம் பார்த்ததனால் நரம்பு மண்டலமே பாதிக்கப்பட்டவர்களையும் - நாம் சந்தித்திருக்கிறோம் - நாம் பார்த்திருக்கிறோம்.
எதற்காக இங்கு இப்படி நடக்கிறது?
இதற்கு ஒரே ஒரு பதில் தான் உண்டு. நம்மை வார்த்தவன் யாரோ. இந்த வார்ப்பின் சூட்சுமத்தை முற்றுமுழுதாகப் புரிந்து கொள்ளாமல் இங்கு இதைப் பழுது பார்க்கும் அரைகுறைகள் யார் யாரோ !
மனித வார்ப்பைப் பற்றிய புதிரை எப்படித் தான் விடுவிப்பது?
திறந்த கண்களுடன் இந்தப் புதிரை விடுவிக்க முடியாத படியால் தான் கண்களை மூடி இதை விடுவித்தார்கள் யோகிகள் - ஞானிகள் -முனிவர்கள்.
மனித உடலைப் பற்றி அதை இயக்கும் மனித மனதைப் பற்றி - இவை இரண்டையும் இயக்கும் உயிரைப் பற்றி - இவற்றை உருவாக்கிய மூலப்பொருட்களைப் பற்றி -இவை உருவாகிய விதம் பற்றி - இவை உருவாக்கப்பட்டதன் நோக்கம் பற்றி - இவற்றை உருவாக்கியவனைப் பற்றி இவற்றில் ஏற்படும் கோளாறுகள் பற்றி - இவற்றில் கோளாறுகள் ஏற்படும்போது அவற்றை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் பற்றி விளக்கமாக விஸ்தாரமாக - தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது: வேதத்தில் - வேதாந்தத்தில் - உபநிடதத்தில் கைவல்லியத்தில் - இன்னும் இது போன்ற எங்கெங்கல்லாமோ.
ஒரு சிறு உதாரணம். நான்கு 2 Lu வேதங்களின் ஒன்றான ஆயுர்வேதம் மனித உடலை விபரிப்பது போல இங்கு யாரும்
142

நிர்வாணம்
இது வரைமனித உடலை விபரித்து விடவில்லை. நமக்குள் உறைந்திருக்கும் -பஞ்ச பூதங்களை - திரி தோசங்களை - திரி குணங்களை- நமது பிரகிருதியை - ஆயுர்வேதம் விபரிப்பது போல இங்குயாரும் இது வரை விபரித்து விடவில்லை.
ஆனால் - ஆயுர்வேதம் என்றால் - நம்மில் பலருக்கு ஒரு சிரிப்பு - ஒரு வகை நகைப்பு - ஒருவித ஏளனம்! தாயகத்தில் நாம் வாழ்ந்திருந்த போது - யாராவது “எனது வியாதிக்கு நான் தமிழ்வைத்தியம் பார்க்கிறேன்” என்று நம்மிடம் கூறினால் - “வடி கட்டிய முட்டாள் இவன்” - “படிப்பறிவற்றவன்” - “இவனுக்கு ஏதோ மாற்ற முடியாத வியாதி போலிருக்கிறது" - இப்படித் தான் நமது சிந்தனை ஓடியது. யாராவது ஒரு தந்தை நம்மிடம் தனது மகன் "ஆயுர்வேதம்’ படிக்கிறான்” என்று கூறினால் - “படிப்பில் அவரது மகன் மகா முட்டாள் அவன் உருப்படவே மாட்டான்” என்பது நமது தீர்க்க தரிசனம்!
கழுத்துப்பட்டி அணிந்து- கருப்புக் கோர்ட்டு அணிந்து - வைத்தியம் பார்ப்பவகளுக்கு - உடலை எட்டாக வளைத்து "சலாம்” வைத்த நாம் - ஒரு தமிழ் வைத்தியரைப் பார்த்து வெறும் வணக்கம் கூடத் தெரிவிக்கவில்லை.
அது மட்டுமல்ல - வேதம் கூறுகிறது என்று கூறி - வேதத்தில் நம்பிக்கை வைத்து - அரோஹரா பாடி - ஆயிரத்தி எட்டு சங்காபிசேகம் செய்து - எனது இருதய நோயை மாற்றி விடு அப்பனே” என்று வழிபட்டு விட்டு - ஆங்கில வைத்திய ரிடம் செல்லும் நம்மில் பலருக்கு - அதே வேதம் கூறும் ஆயுர்வேதத்தில் நம்பிக்கை இல்லை - அந்த வேதம்படித்த வைத்தியரில் நம்பிக்கை இல்லை!
வேதம் கூறுகிறது என்றுகூறி -வேதத்தில் நம்பிக்கை வைத்து - அய்யப்பா பாடி - அங்கப்பிரதட்சணை செய்து - “எனது மகனுக்கு இலண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெற்றுக் கொடு அப்பனே” என்று வழிபடும் நம்மில் பலருக்கு - அதே வேதம் கூறும் ஆயுர்வேத வைத்தியராக நமது பிள்ளை உருவாகுவதில் உடன்பாடில்லை! என்ன லாஜிக் இது?! படைத்தவனையே குழப்பும் லாஜிக்!
அதேநேரம் - பாடுபட்டுத்தேடிய செல்வத்தை அனுபவிக் காமல் - அதை வீட்டிற்குள் பூட்டி வைத்து விட்டு - வீட்டிற்கு
43

Page 74
டாக்டர் பூரீதரன்
முன்னால் அமர்ந்து சொத்து மதிப்பீடு செய்து கொண்டிருந்த செல்வந்தனின் செல்வத்தை - கொல்லைப் புற வழியாக வந்த அடுத்தவன் திருடிச் செல்ல அவனிடமே சென்றுயாசித்த செல்வந்தனைப் போல -மேடை போட்டு - “சநாதன தர்மம் நமது மதம்”- “காலத்திற்கு அப்பாற்பட்டது நமது வேதங்கள்”- “முதலும் முடிவும் இல்லாதவை நமது சூத்திரங்கள்” என்று நாம் இரண்டை வேடம்போட்டு உதட்டளவில் மட்டும் பேசிக் கொண்டிருக்கும்போது - நமது செல்வங்கள் எல்லாம் திருட்டுப் போகின்றன கொல்லைப்புற வழியாக. இன்று திருடிய வனிடமே சென்றுயாசிக்கிறோம். நாம்.
ஒரு சிறு உதாரணம். உடலைப் பாதுகாக்க - அன்று தாயகத்தில் - கோவணம் அணிந்து யோகாசனம் பயில வெட்கப் பட்ட நாம் - இன்று - இங்கு - கால் சட்டை அணிந்து “Yoga’ பயில்கிறோம் - அதை பெருமையாக வேறு சொல்லித் திரிகி றோம். மனதைப் பாதுகாக்க இரண்டாயிரத்தி ஐந்நூறு ஆண்டு களுக்குமுன்னர் - புத்தன் சொன்ன தியானத்தை தரையில் அமர்ந்து அப்பியாசிக்க வெட்கப்பட்ட நாம் - இங்கு - நாற்காலியில் அமர்ந்து Meditation பயில்கிறோம் - அதை பெருமையாக வேறு சொல்லித் திரிகிறோம்.
“ஒரு நிமிடம் இப்படியே குழம்பிக் கொண்டிருந்தால் - இப்படியே குழப்பிக் கொண்டிருந்தால் - இதன் முடிவு தான் என்ன”? வாசகர்கள் பலரின் குரலாக இது ஒலிக்கலாம்.
ஆனால் - குழம்பாத மனங்கள் - குழப்பாத மனங்கள் தெளிவதில்லை. குழம்பியதால் தான் அன்று அந்தச் சித்தார்த்தன் புத்தனானான். ஆகவே - தயக்கமின்றிக் குழம்புவோம் - தயக்க மின்றிக் குழப்புவோம். தெளிவடைய வேண்டும் நாம் ஏதோ ஒரு பிறவியில் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும். போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம். அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம். அது ஒரு சத்தியம்.
O
44

காட்டில் வாழும் மனிதர்கள்
விஞ்ஞானம் என்பது - நமக்குப் புறத்தேயுள்ள - நாம் வாழும் உலகைப் பற்றிய அறிவு. மெஞ்ஞானம் என்பது - இந்த உலகில் வாழும் நம்மைப் பற்றிய - நமது அகத்தைப் பற்றிய அறிவு.
இவை இரண்டும் இரு வேறு விடயங்கள் போல நமக்குத் தோன்றினாலும் - மாமனிதர்களின் சிந்தனையில் இவை இரண்டும் வேறு வேறு விடயங்களல்ல. மாறாக மனித வாழ்க்கை என்ற ஒரே கோலின் இரு முனைகள். ஒன்று மனித வாழ்வின் புறத்தை விபரிக்கிறது -மற்றது மனித வாழ்வின் அகத்தை விபரிக்கிறது.
அதே சமயம் - இயற்கையின் ஒரு பரிமாணம் தான் - அதன் ஒரு அம்சம் தான் - அதன் ஒரு நிறம் தான் இங்கு மனிதர்களும் மனித வாழ்க்கையும். இங்கு இயற்கையின்றி நாமில்லை - நமது வாழ்க்கையில்லை. நாம் தான் இயற்கை - இயற்கை தான் நாம் நாம் தான் உலகம் - உலகம் தான் நாம். -
ஆனால் நாமோ - இயற்கையும் நாமும் இரு வேறு விடயங்கள் இயற்கையை வென்று நம்மால் வாழ முடியும் - இயற்கைக்கும் அப்பால் நம்மால் போக முடியும் - என்று நம்பு கிறோம் - அதன் பிரகாரம் கருமமாற்றுகிறோம். இதன் நடை முறை வினைவுகள் தான் இன்று நம்மிடையே காணப்படும் சீர்கேடுகள் - அவலங்கள் - அல்லல்கள்.
அது எப்படி? இந்த அலசல் பதில் தேட முயல்கிறது.
பல பல கோடி வருடங்களுக்கு முன்பு - நாம் வாழும்
இந்தக் கிரகத்தில் ஒரு கல அமைப்பாக ஜனனித்த முதல் உயிரினம் - அன்றிலிருந்து இன்று வரை - எதையோ நோக்கி -
45

Page 75
டாக்டர் பூரீதரன்
எதற்காகவோ பரிணாமித்துக் கொண்டேயிருக்கிறது என்பது பரிணாமத் தந்தை டார்வினின் கொள்கை. இது தான் உயிரியல் விஞ்ஞானம் கூறும்பரிணாமக் கொள்கை.
அதே சமயம் - உயிரினங்களுக்குள் உறைந்திருக்கும் ஜீவசக்தி - உயிரினங்களின் உடலையும் மனதையும் இயக்கும் அந்த ஜீவசக்தி - நான் இந்த உடல் அல்ல -நான் இந்த மனம் அல்ல - இயற்கையை இயக்கும் அந்தப் பிரபஞ்ச சக்தியும் - உயிரினங்களுக்குள் உறைந்திருக்கும் இந்த ஜீவசக்தியாகிய நானும் ஒன்றே என்பதை அறிந்து கொள்வதற்காக - இங்கு ஜனனித்த உயிரினங்கள் தங்களைத் தாங்களே - உடலால் - உள்ளத்தால் - தயார்படுத்தும் அந்தப் பாதைக்குப் பெயர் தான் பரிணாமம். மெஞ்ஞானிகளின் கூறும் பரிணாமம் இது.
ஆகவே - விஞ்ஞானத்திலும் சரி - மெஞ்ஞானத்திலும் சரி - பரிணாமம் என்பது ஒரு வளர்ச்சிப் பாதை - ஒரு முன்னேற்றப் பாதை - ஒரு சாதனைப் பாதை. இந்தப் பாதையில் விலங்கின் பின் - அவை தோன்றிய பின் - தோன்றியவன் மனிதன். காட்டில் வாழும் ஐந்தறியும் படைத்த அந்த விலங்குகளை விட நாட்டில் வாழும் ஆறறிவு படைத்த மனிதர்களாகிய நாம் பல விதங்களிலும் உயர்ந்தவர்கள் - பரிணாமித்தவர்கள். இதனால் தான் இங்கு நாம் அன்றாடம் பேசும் போது மிகச் சாதாரண மாக -“மிருகங்களைப் போல வாழாமல் மனிதனைப் போல வாழ வேண்டும்”- “கேவலம் - அவன் அன்று ஒரு மிருகத்தைப் போல நடந்து கொண்டான்” - “அவனது வாழ்க்கை மிருகத் திலும் கேவலமான ஒரு வாழ்க்கை” - என்ற வார்த்தைப் பிரயோகங்களை தயங்காமல் பிரயோகிக்கிறோம்.
ஆனால் - நடைமுறை அவதானத்தில் - அன்றாட அவதானத்தில் - இயற்கையோடு இயற்கையாக - இயற்கையே தாமாக - தாமே இயற்கையாக - காட்டில் வாழும் அந்த ஐந்தறிவு படைத்த ஜீவன்களுக்கு இல்லாத அவலங்கள் - துயரங்கள் - அல்லல்கள் - சீர்கேடுகள் - இங்கு நாட்டில் வாழும் ஆறறிவு படைத்த நமக்கு மட்டும் தான் உண்டு. இயற்கைக்கு புறம்பான - வெறும் செயற்கையாக அமைந்த நமது சிந்தனை முறைகளும் வாழ்க்கை முறைகளும் - உடல் ரீதியிலும் சரி - மன ரீதியிலும் சரி - இன்று வரை உலகில் ஜனனித்த எந்த உயிரினங்களுமே நேர் காணாத அவலங்களையும் அவஸ்தைகளையும் நமக்குத் தந்திருக்கின்றன.
146

நிர்வாணம்
முதலில் - வெறும் உடல் ரீதியில் - மண்ணோடு மண்ணாகப் போகும் இந்த உடல் ரிதியில் ஆன்மிகப் படிகளில் அது தாழ்ந்த நிலையில் இருப்பதாகக் கருதப்படும் இந்த உடல் ரீதியில் - விலங்குகளின் வாழ்க்கையையும் மனிதர்களின் வாழ்க்கையை யும் பற்றி சிறிது மனம் திறந்து பேசுவோம் - துணிவாகப் பேசுவோம்.
உடல் என்பதுமே - இங்கு தவிர்க்க முடியாமல் நம்மில் பலரது மனதில் எழும் விடயங்கள்) டாக்டர்கள் - வைத்திய சாலைகள் - வியாதிகள் - மருந்துகள். ஒரு மாமனிதர் சொன் னார் - ஒரு ஆழமான விடயத்தை - அர்த்தம் நிறைந்த விடயத்தை - அற்புதமாக சொன்னார் - அழகாகச் சொன்னார் - “இங்கு மனிதனே ஒரு வியாதியாக இருப்பதனால் தான் அவனுக்கு எண்ணற்ற வியாதிகள்”
எத்தனை எத்தனை வியாதிகள் இங்கு நமக்கு காலையில் ஒரு வியாதி - மாலையில் ஒரு வியாதி - நடுஇரவில் இன்னொரு வியாதி. கணவனுக்கு ஒரு வியாதி - மனைவிக்கு ஒரு வியாதி - பிள்ளைக்கு இன்னொரு வியாதி. இந்தக் கிராமத்திற்கொரு வியாதி - இந்த நாட்டிற்கொரு வியாதி - அந்த நகரத்திற்கொரு வியாதி. இது போதாதென்று - ஒவ்வொரு வருடமும் - ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளும் புதிய புதிய வியாதிகள். இந்த வியாதிகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் ஒரு புறம் - அவற்றை ஒழிப்பதற்கு மருந்துகள் மறு புறம்.
மனச் சுக்தியுடன் சிந்தித்தால் - இங்கு நம்மைச் சுற்றி இயங்கும் எண்ணற்ற வைத்தியசாலைகளும் - அவற்றில் பணி புரிவதற்காக டாக்டர்களை உருவாக்கும் எண்ணற்ற பல்கலைக் கழகங்களும் - அவர்கள் கூறும் மருந்துகளை மக்களுக்கு விற்கும் எண்ணற்ற மருந்துச் சாலைகளும் மனித இனத்தின் அறிவு வளர்ச்சியின் அடையாளங்களல்ல - மனித இனத்தின் நாகரீகத்தின் சின்னங்களல்ல - மனித இனத்தின் புத்திசாலித் தனத்தின் பிரசன்னங்களல்ல.
மாறாக - இவையெல்லாம் இயற்கையை மறந்து - வெறும் செயற்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனித இனத்தின் ஆரோக்கியமின்மையின் அடையாளங்கள் - வியாதிகளின்
பிரதிபலிப்புகள் - பலவீனத்தின் அடையாளங்கள்.
147

Page 76
டாக்டர் பூரீதரன்
அதே சமயம் - ஐந்தறிவு படைத்த அந்தமிருகங்கள் வாழும் காட்டில் இவை எதுவுமே இல்லை. வைத்தியசாலைகள் இல்லை - டாக்டர்கள் இல்லை - மருந்துச் சாலைகள் இல்லை. இதனால் - காட்டில் வாழும் எந்த மிருகமும் தூங்கச் செல் வதற்கு முன் தூக்க மாத்திரைகள் அருந்துவதில்லை - காலையில் எழுந்ததும் அவற்றின் இரத்த அழுத்தத்தை அளந்து பார்ப்ப தில்லை - இரை தேட உழைப்பதற்காக வைட்டமின் மாத்திரைகள் அருந்துவதில்லை - புணர்வதற்கு முன் தம்மை இசைப்பதற்கு மாத்திரைகள் அருந்துவதில்லை.
ஆனால் இவை எதையுமே அவை செய்யவில்லை என்ப தனால் - இவற்றை செய்வதற்கு அவற்றிற்கு அறிவு இல்லை என்பதனால் - ஆபிரிக்க காடுகளில் எதுவுமே நோயுற்ற மிருகங்களினால் நிரம்பி வழியவுமில்லை - அஸாம் காட்டில் எங்குமே நோய்வாய்ப்பட்டு எந்த மிருக இனமும் மடிந்து அழிந்துவிடவுமில்லை. மாறாக - எங்கு பார்த்தாலும் ஆரோக் கியம் தாண்டவமாடுகிறது - பலம் பரிணமிக்கிறது - அழகு பூத்துக் குலுங்குகிறது - கம்பீரம் ஜகத்ஜோதியாக ஜொலிக்கிறது வாழ்க்கை அழகாக - அற்புதமாக நடனமாடுகிறது.
ஆகவே - எப்படிப் பார்த்தாலும் - எந்தக் கோணத்தி லிருந்து பார்த்தாலும் - எந்த அளவுகோலால் அளந்து பார்த்தாலும் - உடல் ரீதியில் - நோயற்ற வாழ்க்கை ரீதியில் ஆரோக்கிய ரீதியில் நாட்டில் வாழும் ஆறறிவு படைத்த மனிதர்களை விட - நம்மை விட - காட்டில் வாழும் ஐந்தறிவு படைத்த மிருகங்கள் - மிகச் சிறப்பாக - மிக கோலாகலமாக - மிக உன்னதமாக மிக உற்சாகமாக வாழ்கின்றன.
ஆனால் - அதே சமயம் - பன்றியுடன் சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பது போல நம்முடன் உறவு வைத்து நாட்டில் வாழ முற்பட்டதால் தான் - பாவம் இங்கு சில நாய்களும் பூனைகளும் நாம் அமைத்த மிருக மருத்துவமனைகளில் வாடுகின்றன.
உடலுக்கு அடுத்த படியாக அமைவது மனம், மனித சமூகத்தில் மனோதத்துவ டாக்டர்களின் பங்கு என்ன? என்ற ஒருவரின் கேள்விக்கு ஒரு மாமனிதர் பதிலளித்தார்: “இந்த உலகில் வாழும் மனிதர்கள் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் ஒரு வகை பைத்தியங்கள் துந்தப் பைத்தியங்கள் எல்லாம்
48

நிர்வாணம்
சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பைத்தியங்கள். அதாவது சாதாரண பைத்தியங்கள். ஆனால் - இந்த அங்கீகரிப்பின் அளவுகோல்களை மீறி ஒருவன் இங்கு நடந்து கொண்டால் அவனைத் தான் நாம் பைத்தியம் என்கிறோம். அதாவது அவன் ஒரு - அசாதாரண பைத்தியம். இதன் அடிப்படையில் - இங்கு ஒரு மனோதத்துவ டாக்டரின் கடமை என்னவென்றால் இந்த அசாதாரண பைத்தியத்தை சமூகம் ஏற்றுக் கொள்ளும் படியான ஒரு சாதாரண பைத்தியமாக்குவதே"
எப்படி வேண்டுமானாலும் சிந்தியுங்கள் எந்தக் கோணத்திலிருந்து வேண்டுமானாலும் பாருங்கள். இயற்கை படைத்த - பரமன் வார்த்த - எந்த உயிரினங்களுக்குமே இல்லாத மனக் கவலைகள் - மனக் கோளாறுகள் - மன அழுத்தங்கள் மனப் புழுக்கங்கள் - மன வெறிகள் - இங்கு மனிதனுக்கு மட்டுமே உண்டு. இதை அழகாகக் கூறி கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர்:
பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலைக் கட்டி வைத்தவன் யாரடா? அது எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்த பின் சோறு போட்டவன் யாரடா? வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதிலும் வருந்தவில்லையே தாயடா மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா.
இங்கு மனிதன் ஒருவனால் மட்டுமே ஒரு விடயத்தைப் பற்றிக் கவலைப்பட்டு கவலைப்பட்டு பைத்தியமாக மாற முடியும். மனிதனுடைய இம்சையால் தான் சில விலங்குகளுக்கு பைத்தியம் பிடிக்கிறதே தவிர - சாதாரண நிலையில் காட்டில் வாழும் எந்த ஒரு விலங்கிற்கும் பைத்தியம் பிடிப்பதில்லை.
இங்கு மனிதன் ஒருவனால் மட்டுமே வாழ்க்கையில் சோகம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ள முடியும். பொதுவாக எந்த ஒரு விலங்கும் வாழப் பிடிக்காமல் விரக்தியால் தற்கொலை செய்து கொள்வதில்லை. −
இங்கு மனிதன் ஒருவனால் மட்டுமே அடுத்தவன் வாழ் வதைப் பொறுக்க முடியாமல் ஏற்படும் மனம் புழுக்கத்தால் தனக்குத் தானே வியாதிகளை உருவாக்கிக் கொள்ள முடியும். சிங்கம் மகிழ்ச்சியாக வாழ்கிறது என்பதனால் புலியின் இரத்த அழுத்தம் கூடியதாக நாம் படித்தது கிடையாது.
AQ

Page 77
டாக்டர் பூரீதரன்
இது மட்டுமல்ல - ஒழுங்கற்ற மனித மனதின் - வளர்ச்சி யற்ற மனித மனதின் - கட்டுப்பாடற்ற மனித மனதின் அடை யாளங்கள் தான் - அத்தியாவசியங்கள் தான் நம்மைச் சுற்றி யிருக்கும் நீதிமன்றங்கள் - சட்டங்கள் - சிறைச்சாலைகள் - சட்டத் தரணிகள் - காவல் துறையினர்.
மொத்தத்தில் "விலங்கின் பின் தோன்றியவர்கள் நாம்” என்று பெருமை பாடும் மனிதர்களின் வாழ்க்கை - உடல் ரீதியிலும் விலங்குகளை விடச் சிறப்பாக அமையவில்லை - மன ரீதியிலும் அவற்றை விடச் சிறப்பாக அமையவில்லை.
பரிணாமத்தில் - எப்படி சாத்தியமாகும் இது? எங்கு நடந்தது தவறு?
இயற்கையை அறிந்து - இயற்கையை உணர்ந்து - இயற்கை யுடன் இணைந்து இயற்கையுடன் சங்கமிப்பதற்காகவே நமக்கு பகுத்து அறியும் அறிவு தரப்பட்டது. இதற்காகவே இங்கு பரிணாமம் நிகழ்ந்தது. ஆனால் நாமோ - இயற்கைக்கு புறம்பானவர்கள் நாம் - இயற்கையை வென்றுவிட முடியும் நம்மால் - என்று பிதற்றிக் கொண்டு - அந்தப் பிதற்றலின் விளை வாக உருவாகிய செயற்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது வாழ்க்கையில் இங்கு எது தான் செயற்கை இல்லை? எங்கு தான் செயற்கை இல்லை? நமது பிறப்பு - கல்வி - உணவு - உடை - வழிபாடு - வாழ்க்கை - உணர்ச்சிகள் உறவுகள் - சடங்குகள் - சம்பிரதாயங்கள் - இறப்பு - இங்கு எது தான் செயற்கை இல்லை? எங்கு தான் செயற்கை இல்லை?
இயற்கையுடன் இணையாதது தான் இங்கு நமது சாபக் கேடு. செயற்கையாக வாழ்வது தான் இங்கு நமது சீர்கேடு களின் அத்திவாரம்.
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம். அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம். அது ஒரு சத்தியம்.
OCO
50

ஆஹா! எங்கும் சுகம் - எதிலும் சுகம்
குழந்தையிலிருந்து குமரன் வரை - போகியிலிருந்து யோகி வரை - பணக்காரனிலிருந்து பரதேசி வரை - ஆண் பெண் பேத மின்றி - ஜாதி மத பேதமின்றி - இங்கு பிறந்துவிட்ட ஒவ்வொரு ஜீவனும் நாடுவது சுகத்தையே. இங்கு நமது ஒவ்வொரு அசைவும் - ஒவ்வொரு முயற்சியும் - ஒவ்வொரு செயலும் - ஏதோ ஒரு சுகத்திற்காகவே. பட்டம் - பதவி - பணம் - பகட்டு - வீடு - வாகனம் - மனைவி - தாசி - அர்ச்சனை - அபிசேகம் - எல்லாமே ஏதோ ஒரு சுகத்திற்காகவே.
ஆனால் - நாம் கடந்த காலத்தில் தேடி அனுபவித்த இந்தச் சுகம் - இப்பொழுது தேடி அனுபவிக்கும் இந்தச் சுகம் - கடலில் தோன்றும் அலை போல - வானில் தோன்றும் மின்னல் போல - ஒரு நிமிடத்தில் - ஒரு சில மணித்தியாலங்களில் - ஒரு சில நாட்களில் மறைந்து விடுகிறது. இனித்தது கசக்கிறது. சுவைத்தது சுமையாகிறது. வேண்டியது வெறுப்பாகிறது.
“ஆஹா எவ்வளவு சுகமாக இருக்கிறது வாழ்க்கை - எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்க்கை - வாழ்க்கை என்றால் இதுவல்லவோ வாழ்க்கை” என்று நம்மில் யாருமே இங்கு தொடர்ந்து ஒரு சில நாட்களுக்கு மேல் கூறியபடியே - பாடியபடியே வாழ்ந்ததில்லை. எழுதித்தான் - படித்துத் தான் இந்த உண்மை நமக்குத் தெரிய வேண்டுமென்பதுமில்லை.
எதற்காக நாம் இங்கு தொடர்ந்து மகிழ்ச்சியாக இல்லை? - எதற்காக நாம் தேடி அடையும் சுகங்கள் எதுவுமே இங்கு ஒரு குறுகிய காலத்திற்கு மேல் நிலைத்து நிற்பதில்லை? - எதற்காக அன்றாடம் நாம் சலித்துக் கொள்கிறோம்?
5

Page 78
டாக்டர் பூரீதரன்
ஒரு சிறு உதாரணம் - ஒரு சிறு ஆய்வு - ஒரு சில பதில்கள்
ஒரு வாலிபனுக்கு ஒரு பெண்ணின் மீது ஆசை உரு வாகிறது - மோகம் ஏற்படுகிறது. காரணம் - அவனுக்கு அவளின் கண்களுக்குள் காவியம் தெரிகிறது - கருங் கூந்தலுக்குள் கார்மேகம் தெரிகிறது - அவளது சிரிப்பில் சங்கீதம் கேட்கிறது - “இவள் மட்டும். எனக்குக் கிடைத்து விட்டால் என் வாழ் நாள் எல்லாம் மகிழ்ச்சியே - என் ஆயுள் பூராவும் சுகமே” என்று வாலிபன் நம்புகிறான். இந்த நம்பிக்கை - இந்த ஆசை அவனது மனதில் எழுந்தவுடன் - மனத்தை முற்று முழுதாக ஆக்கிரமித்தவுடன் - அவளை எப்படியாவது அடைந்துவிட வேண்டுமென்பதற்காக - ஒரு நாயைப் போல - ஒரு பேயைப் போல - சகல விதமான முயற்சிகளையும் மேற்கொள்கிறான் அந்த வாலிபன்.
வீட்டிற்கேற்ப - சமூகத்திற்கேற்ப நாட்டிற்கேற்ப எத்தனை எத்தனையோ முயற்சிகள். நமக்குத் தெரியாத முயற்சிகளா? நாம் செய்யாத முயற்சிகளா? - படித்துத்தான் தெரிந்து கொள் வதற்கு!
காலம் செய்யும் கோலம் - பிரம்மன் எழுதிய எழுத்து - அவளும் அவனுக்குக் கிடைத்து விடுகிறாள். காதல் கனிந்து திருமணத்தில் முடிகிறது. “இந்த அழகி இன்று எனது மனைவி - ஆயுள் முழுவதும் எனது சொத்து - இது போதும் நான் காலம் முழுவதும் சுகமாகவிருப்பதற்கு” - சுகத்தால் பூரித்துப் போகிறான் வாலிபன்.
இப்பொழுது - இந்த நேரத்தில் - அந்த வாலிபன் அனுப விக்கும் சுகத்தை சற்று ஆராய்ந்தால் - எதனால் அவனுக்குச் சுகம் கிடைத்திருக்கிறது - எதை அவன் சுகம் என்று நம்பு கிறான் என்று ஆராய்ந்தால் - சுகம் நமக்குத் தரிசனம் கொடுக் கிறது தனது முற்று முழுதான பரிமாணங்களுடன்.
அந்தப் பெண் தனக்குக் கிடைக்க வேண்டுமென்று இவ்வளவு காலமாக அலை பாய்ந்த அந்த வாலிபனின் மனது - அந்தப் பெண்ணை எப்படியாவது அடைந்து விடவேண்டு மென்பதற்காக அந்த வாலிபனை ஏதேதோவெல்லாம் செய்யத் தூண்டிய அவனது மனது - அந்தப் பெண்ணை அடையு மட்டும் அமைதி கொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்த அவனது மனது - இப்பொழுது - இந்த - நேரத்தில் - இந்தக்
52

நிர்வாணம்
கணத்தில் சலனமற்ற கடல் போல அமைதியாகவிருக்கிறது அந்த வாலிபன் அடைந்த - அனுபவித்த - சுகம் என்பது அவனது மனம் சலனமற்று அமைதியடைந்ததால் ஏற்பட்ட சுகம் - அவனது மனதில் எழுந்த ஆசை அலையொன்று ஆடி ஆர்ப்பரித்த பின் தற்காலிகமாக அடங்கிப் போனதால் 6JpL/LL – dróLD.
உண்மையில் அந்தப் பெண் எந்தச் சுகத்தையும் கொண்டு வரவில்லை - அந்தப் பெண்ணும் சுகமும் பிரிக்க முடியாத இரு சுயாதீனங்கள் அல்ல - அந்தச் சுகத்திற்கும் அந்தப் பெண்ணுக்கும் எது வித தொடர்புமில்லை - இருக்க முடியாது.
காரணம் - சிறிது காலத்தில் அதே கண்களுக்குள் காவியத் திற்குப் பதிலாக கலகம் தெரியப்போகிறது - கூந்தலுக்குள் கருமேகத்திற்குப் பதிலாக வெண்மேகம் தெரியப்போகிறது - சிரிப்பில் சங்கீதத்திற்குப் பதிலாக தாரை - தப்பட்டை ஒலி கேட்கப்போகிறது.
ஆகவே - நாம் தேடி அனுபவிக்கும் எந்தச் சுகமும் - சுகம் என்று நாம் நம்பும் எந்தச் சுகமும் - நமது மனத்தின் ஒரு குறுகிய கால சலனமற்ற நிலையே தவிர - நமது மனத்தின் ஒரு குறுகிய கால ஆர்ப்பாட்டமற்ற நிலையே தவிர - நாம் தேடி அடைந்த பொருட்களிலிருந்து வருவதல்ல.
பட்டம் - பதவி - பணம் - பகட்டு - வீடு - வாகனம் - மனைவி - மக்கள் - தாசி - அர்ச்சனை - அபிசேகம் - இவை எதிலிருந்துமே அது வருவதில்லை. சுகம் என்பது மனித மனத்தின் - நமது மனத்தின் ஒரு நிலை - ஒரு பரிமாணம். அது நமக்குள்ளேயே இருந்தது - நம்மிலிருந்தே வருகிறது. வெளியே யிருந்து வரும் பொருட்களிலிருந்து வருவதல்ல - வர முடியாது
ஒரு சிறு கதை. சுடு காட்டிற்குச் சென்றது உணவு தேடி நாய் ஒன்று. எரிந்து - கருகி - வரண்டு போய் மரத்தடியில் கிடந்த ஒரு கூரிய எலும்புத் துண்டை வாயில் கவ்வி அதிமும் முரமாகக் கடிக்க ஆரம்பித்தது. கூரிய எலும்பு அதன் வாயில் ஏற்படுத்திய காயத்திலிருந்து கசிந்த குருதி அந்த எலும்புத் துண்டை ஈரமாக்கியது. அந்த நேரத்தில் தவறுதலாகக் கீழே விழுந்த எலும்பில் கண்ட குருதியை - தனது குருதி தான் என்று தெரியாமல் - தான் கடித்த எலும்பிலிருந்து தான் வருகிறது என்ற நினைவில் - மிக மகிழ்ச்சியுடன் நக்கிச் சுவைத்தது நாய்.
53

Page 79
டாக்டர் பூரீதரன்
எலும்பு வரண்டதும் மீண்டும் வாயிலெடுத்து அதிவேகமாகக் கடித்தது - தொடர்ந்து வரப்போகும் குருதிக்காக. இதை அற்புத மாக விளக்குகிறது குருவாசகக் கோவை,
வறட்டெலும்பு கவ்வித்தன் வாய்நனPபுண்ணாகப் பறட்டுப் பறட்டெனத்தன் பல்லாற் கறித்துமகிழ்ந் தென்புலோலின் சுவைவே றின்றெனவப் புண்ணிராற் புன்புலநாய் போற்றும் புகழ்ந்து.
பறட்டுப் பறட்டென எலும்பைக் கடித்த அந்த ஐந்தறிவு படைத்த ஜீவனுக்கும் - சுகம் வேண்டும் - மகிழ்ச்சி வேண்டும் என்பதற்காக எதை எதையோவெல்லாம் துரத்தோ துரத்தென்று துரத்தும் ஆறறிவு படைத்த நமக்கும் ஒற்றுமைகள் அதிகமா? - வேற்றுமைகள் அதிகமா? என்று சிந்தித்து - அந்தச் சிந்தனையி லிருந்து வெளிவரும் உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு நமக்கு ஒரு துணிவு வேண்டும் - ஒரு பக்குவம் வேண்டும்.
காலையிலிருந்து இரவு வரை உழைக்கிறோம். யாரோ ஒருவனின் மிரட்டலுக்குப் பயந்து - எவனோ ஒரு முட்டா ளுக்குப் பணிந்து - உத்தியோகம் புருசலட்சணம் என்று பிதற்றிக் கொண்டு - வாழ்நாளில் முக்கால்வாசி நேரத்தில் ஏதேதோ செய்து - யார் யாரையோவெல்லாம் வாழ வைக்கிறோம். எதற் காகச் செய்கிறோம்? ஏதேதோ வாங்குவதற்காக பணம் வேண்டிச் செய்கிறோம். எதற்காக இந்த ஏதேதோவெல்லாம் வாங்கு கிறோம்? அவை ஏதோ ஒரு சுகம் தருகின்றன - ஏதோ ஒரு மகிழ்ச்சி தருகின்றன என்று நம்புகிறோம்.
அடுத்தவன் வாங்கி விட்டான் என்பதற்காக - அடுத்த வனுக்குக் காட்ட வேண்டும் என்பதற்காக - அடுத்தவனை விட நாம் பெரியவனென்று நிரூபிப்பதற்காக - அடுத்தவனுக்கு ஒரு பாடம் படிப்பிப்பதற்காக - இவற்றிலிருந்தெல்லாம் சுகம் வேறு கிடைக்கிறது என்று நம்பி - எத்தனை எத்தனை தேவையற்ற பொருட்கள் - குப்பைகள் நமது வீட்டில்! எத்தனை நாட்கள் சுகம் தந்தன இவை எல்லாம்? இந்தப் குப்பைகளை எல்லாம் வாங்குவதற்காகத் தானே நாம் என்றோ ஒரு நாள் செக்கு மாடு போல சுற்றிச் சுற்றி வந்தோம்! இந்தக் குப்பைகளை இனியும் வாங்குவதற்காகத் தானே நாம் இன்று ஒரு பொதி மாடு போல பளு சுமக்கிறோம்!
154

நிர்வாணம்
அதே சமயம் - ஏதேதோ எல்லாம் இருந்தாலும் - எவ்வளவு சிரமப்பட்டு இவற்றை எல்லாம் வாங்கியிருந்தாலும் - நாம் தூங்குவது என்னவோ ஆறடி இடத்தில் தான் - உண்பது என்னவோ மூன்று வேளை உணவு தான் - உடுப்பது என்னவோ அந்தத் திரவியத்தை மறைப்பதற்குத் தான். எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டம்?
கண்களை மூடிச் சற்றுச் சிந்தித்தால் - நமது வீட்டி லிருக்கும் பெரும்பாலான பொருட்கள் நமது பித்துக்குளித் தனத்தின் பிரசன்னங்கள்.
எனக்கு இது தேவை தானா? - என்று கேட்காமல் நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளும் - யாரோ ஒருவனுடைய சொகுசு வாழ்க்கைக்கு அத்திவாரமிடுகின்றன.
இந்தப் பொருளை நான் எதற்காக வாங்க வேண்டும்? என்று கேட்காமல் நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளும் - யாரோ ஒருவனுடைய ஆடம்பரமான காருக்கு பெட்ரோல் வார்க்கின்றன.
இந்தப் பொருளால் எனக்கு உண்மையான சுகம் கிடைக் குமா? என்று கேட்காமல் நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளும் - யாரோ ஒருவனுடைய செல்லப் பிராணிக்குச் சோறுாட்டு கின்றன.
இவற்றிற்கும் - நாம் சுகத்திற்கும் ஒரு வித தொடர்பும் கிடையாது. இவை எல்லாம் இருந்தால் தான் - இவை எல்லாம் கிடைத்த பின்பு தான் நாம் சுகமாக இருப்போம் என்று எண்ணுவது நமது அறியாமை.
ஒரு சிறு கதை. ஒரு அழகான - அமைதியான கிராமத் தினூடாக தனது சொகுசு காரில் பிரயாணம் செய்த செல்வந்தர் ஒருவர் - ஒரு மரநிழலில் காரை சிறிது நேரம் நிறுத்தி விட்டு - சிறிது ஒய்வெடுப்பதற்காக வெளியே வந்தார். மரநிழலில் உற்சாகமாகப் பாடிக்கொண்டிருந்த ஒரு கிராமவாசிக்கும் செல்வந்தருக்குமிடையே நடந்த வார்த்தைப் பரிமாற்றம் இது:
“இன்று நீ வேலைக்குப் போகவில்லையா? செல்வந்தரின்
கேள்வி இது.
“எதற்காக வேலைக்குப் போக வேண்டும்”? கிராமவாசி.
155

Page 80
டாக்டர் பூரீதரன்
“என்ன இப்படிக் கேட்கிறாய் - வேலை செய்தால் தானே பணம் கிடைக்கும்”?
s • 9ኝ “எதற்காக எனக்குப் பணம்'?
“முட்டாள்தனமாகப் பேசுகிறாய் - பணம் இருந்தால் தான் வீடு வாங்கலாம் - கார் வாங்கலாம் - திருமணம் செய்ய லாம் - குடும்ப வாழ்க்கை நடத்தலாம்" - செல்வந்தர் பொறுமை யாக விளக்குகிறார்.
“எதற்காக ஒரு மனிதனுக்கு இவை எல்லாம்?” கிராம வாசியின் கேள்வி.
செல்வந்தருக்குக் கோபம் வந்து விட்டது. “வடி கட்டிய முட்டாளே! இவை எல்லாம் இருந்தால் தான் ஒரு மனிதன் வாழ்க்கையில் சுகமாக - மகிழ்ச்சியாக வாழலாம் - இது கூடவா தெரியவில்லை”?
கிராமவாசி அடக்கமாக பதிலளித்தான். “நான் இப்பொழுது மட்டுமல்ல - எப்பொழுதுமே மகிழ்ச்சியாக - சுகமாகத் தான் இருக்கிறேன். அப்புறம் எதற்காக நான் வேலைக்குச் சென்று - பணம் சம்பாதித்து - பங்களா வாங்கி - பொருட்கள் வாங்கி - அதன் பின்பு தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்?
நமது மனத்தை நாமே அறிந்து கொண்டால் - அதன் வினோதங்களைப் புரிந்து கொண்டால் - அதன் சித்து விளை யாட்டுக்களை விளங்கிக் கொண்டால் - நமக்கு இங்கு வறுமை யும் சுகம் - செல்வமும் சுகம். உறவும் சுகம் - பிரிவும் சுகம். வரவும் சுகம் - செலவும் சுகம். பிறப்பும் சுகம் - இறப்பும் சுகம்.
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம். அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம். அது ஒரு சத்தியம்.
OOC
156

ஆசாமிப் பக்தர்கள் - அட்டகாசமான பஜனைகள்
“அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலை நாட்டுவதற்காக நான் அவ்வப்போது பூமியில் ஜன்மம் எடுக்கிறேன்” பரமாத்மா கீதையில் கூறுகிறார்.
அதே சமயம் - தன்னைத் தானே அறிந்து கொள்வதற்காக பல பல பிறவிகள் எடுக்கும் மானிடர்கள் - தங்கள் பயணத்தை முடித்துக் கொள்ளும் தறுவாயில் - மகான்களாக - யோகிகளாக - ஞானிகளாக - சுவாமிகளாக - பூமியில் ஜன்மம் எடுப்பதுவு முண்டு என்று சாத்திரங்கள் பகர்கின்றன.
இப்படி எதுவுமே நடப்பதில்லையெனில் - இப்படி நடக்க முடியாதெனில் - இந்த உலகம் அந்தப் புத்தனை - சங்கராச்சாரி யாரை - பரமஹம்சரை - விவேகானந்தரை கண்டிருக்க முடியாது.
அது மட்டுமல்ல - எத்தனை எத்தனையோ பெயரிடப் படாத புத்தர்கள் - சங்கராச்சாரியார்கள் - பரமஹம்சர்கள் - விவேகானந்தர்கள் - இலை மறை காய்களாக எல்லாக் காலங் களிலும் - எல்லா இடங்களிலும் வாழ்ந்திருக்கிறார்கள்.
இன்று கூட நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ - எங்கெல்லாமோ மாகாத்மாக்கள் - பரமாத்மாக்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் - வாழ்ந்து கொண்டிருக்கத் தான் வேண்டும். இது இயற்கை நியதி.
“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” - என்ற குறிக்கோளுடனும் - “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” - என்ற கோட்பாட்டுடனும் வாழும் இந்தப் பரமாத்மாக்களை நாம் அணுக வேண்டும் - அவர்கள் மூலம் நாம் பயின்டைய வேண்டுமி
57

Page 81
டாக்டர் பூரீதரன்
அவர்களைப் பற்றிக் கொள்ள வேண்டும். அவர்கள் நம்மவர்கள் - நம்மை உருப்படுத்தப் பிறந்தவர்கள்.
ஆனால் இன்று - இங்கு - இவர்களைப் பற்றி - இவர்கள் போன்றவர்களைப்பற்றி ஏதேதோவெல்லாம் பேசப்படுகிறது - யார் யாரோவெல்லம் பேசுகிறார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதனால் - நம்மில் பெரும்பாலானோர் இன்று - இப்படியானவர்களை நெருங்கச் சற்றுத் தயங்குகி றோம் - சந்தேகப்படுகிறோம் - சிந்திக்கிறோம்.
இதனால் நமது மனம் - நடத்தை இரண்டுமே மாறியிருக் கின்றன.
நமது இந்த மாற்றத்திற்கு தனிப்பட்ட காரணங்கள் சில - பொதுவான காரணங்கள் பல.
அந்தப் பல காரணங்களுள் ஒரு காரணத்தை - பரவலாகப் பலரும் கூறும் ஒரு காரணத்தை - பலராலும் பரவலாகக் கேட்கப்பட்ட ஒரு காரணத்தை ஆராய்கிறது இந்த அலசல்.
தாயைப் பார்த்து அவளின் மகள் எவ்வாறு இருப்பாள் என்று ஊர் ஊகிப்பது போல - ஒருவனின் பழக்க வழக்கங் களைப் பார்த்து அவன் வளர்ந்த பின்னணியை நண்பர்கள் ஊகிப்பது போல - நோயாளியின் அறிகுறிகளைப் பார்த்து டாக்டர்கள் நோயை மதிப்பிடுவது போல - - ஒரு சுவாமி யாரின் பக்தர்களைப் பார்த்து அந்தச் சுவாமியாரை மக்கள் மதிப்பிடுவதுவும் தவிர்க்க முடியாத ஒரு விடயம் - தடுக்க முடி யாத ஒரு விடயம். காரணம் நாம் எல்லோருமே மனிதர்கள்.
அப்படியானால் அந்தப் போலிச் சாமியார்கள் -ஆசாமிகள்?
இந்த இடத்தில் - இந்தச் சந்தர்ப்பத்தில் - போலிச் சாமி யார்களைப் பற்றியோ - ஆசாமிகளைப் பற்றியோ பேசுவது - கேள்வி எழுப்புவது அநாகரீகம் - அநாவசியம் - அர்த்தமற்ற விடயம். ஏனெனில் - அசல் இருப்பதனால் தான் நகலே உரு வாகிறது. போலி உணவு - போலி உடை - போலி பல்கலைக் கழகங்கள் - போலி டாக்டர்கள் - போலி மருந்துகள் - போலி கோவில்கள் - போலி வேதியர்கள் - இப்படி எல்லாவற்றிலும் - எதிலுமே போலிகள் இருக்கும் போது போலிச் சாமியார்கள் இருப்பதில் தப்பு என்ன?
58

நிர்வாணம்
இன்று நம்மிடையே இலை மறை காயாக - வெள்ளிடை மலையாக வாழும் எத்தனை எத்தனையோ மகாத்மாக்களைப் பற்றி நமது மனதில் சந்தேகங்களும் தப்பிப்பிராயங்களும் உருவாகியிருப்பதற்கு ஒரு காரணம் நம்மிடையே உலவும் ஒரு சில போலிப் பக்தர்கள்.
யார் இந்தப் போலிப் பக்தர்கள்? உத்தியோகத்தில் - வியாபாரத்தில் கணிசமான வருமானம் உள்ள ஒரு சிலருக்கு - பணத்தினால் தங்கள் அன்றாட வாழ்க்கை முறைகளை சற்று வித்தியாசமாக மாற்றிக் கொண்டிருக்கும் ஒரு சிலருக்கு - படித்தவர்கள் நாங்கள் என்று நினைக்கும் ஒரு சிலருக்கு - ஒரு சில உத்தியோகங்கள் பார்க்கும் ஒரு சிலருக்கு - அவர்கள் வாழ்வில் ஒரு மாற்றம் - எதிலுமே ஒரு மாற்றம் தேவைப்படுகிறது.
சமூகத்தில் வாழும் சாதாரண மக்களை விட நாங்கள் சற்று வித்தியாசமானவர்கள் - சற்று உயர்ந்தவர்கள் - சற்றுப் படித்தவர்கள் என்று கூறிக்கொள்ள - காட்டிக் கொள்ள விரும்பும் இவர்களுக்கு இந்த நவீன விஞ்ஞான யுகத்தில் ஆயிர மாயிரம் வழிகள் உள்ளன. வாழும் இடம் - வாழும் வீடு - ஒட்டும் வாகனம் - கற்கும் கலைகள் - விளையாடும் விளையாட்டு - செல்லும் விடுமுறைகள் - அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆனால் - இந்த ஆண்டவன் விடயத்தில் மட்டும் வித்தி யாசமாக நடந்து கொள்ள இவர்களால் முடியாமலிருக்கிறது. மிக மிகச் சாதாரண மக்கள் என்று இவர்கள் கருதும் மக்களுடன் - சமூகத்தின் அடி மட்டத்தில் இருப்பதாக இவர்கள் கருதும் மக்களுடன் சேர்ந்து - அவர்களுள் ஒருவனாக கோவிலுக்குச் சென்று ஆண்டவனை வழிபடுவது இவர்களுக்கு ஒரு மாபெரும் பிரச்சனை - அதில் இவர்களுக்கு இஷ்டமில்லை.
இந்தக் குருக்கள் - அபிஷேகம் - அர்ச்சனை - புக்கை - பிரசாதம் - திருநீறு - இவையெல்லாம் இவர்களுக்கு உடன் பாடாக இல்லை. அவர்களின் பார்வையில் - இவையெல்லாம் அவர்களின் தராதரத்திற்கு - அந்தஸ்திற்கு - கெளரவத்திற்கு ஒத்து வராத ஒரு விடயம்.
ஆனால் அதே சமயம் ஆண்டவனுடனும் மோத முடியாது. நாளைக்கு வேலை போய் விட்டால் என்ன செய்வது? வியாபாரம் படுத்து விட்டால் எங்கு போவது?
159

Page 82
டாக்டர் பூரீதரன்
சிக்கெனப் பிடித்தேன் உன்னை - எங்கெழுந்தருளுவதினியே. நேரடியாகச் செல்கிறார்கள் சுவாமிமார்களிடம்.
யாரையுமே மறுப்பதில்லை மகாத்மாக்கள் - ஏற்றுக் கொள்கிறார்கள். நமது பக்தர்களுக்குப் பரம கொண்டாட்டம். ஒரே கல்லில் எத்தனையோ மாங்காய்கள் - அல்ல மாம்பழங்கள்!
கோவிலுக்குப் போக வேண்டிய அவசியமில்லை - ஆனால் ஆண்டவனால் தண்டிக்க முடியாது. சமுதாயத்தின் கீழ் மட்டத்தில் வாழ்பவர்களுடன் கலக்கத் தேவையில்லை. வித்தியாசமானவர்கள் நாங்கள் என்று உலகிற்கு காட்டலாம் - அத்தனையும் ஒரே கல்லில் விழுந்த மாம்பழங்கள்!
கண்ணுக்கு கவர்ச்சியாக நவநாகரீக உடை உடுத்தி - பல பல பூச்சுக்களிட்டு பொட்டிட்டு பூவணிந்து - பொன்னா பரணங்கள் புனைந்து - அலுங்காமல் குலுங்காமல் - அதீ நவீன காரில் ஏறி - கைத்தொலைபேசியில் சிநேகிதனை அழைத்து “வரும் வழியில் லட்டுப் பார்சலை நானே எடுத்து வருகிறேன்” என்றும் “வேலை காரணமாக புறப்பட தாமதமாகி விட்டது ஜிலேபியை நீங்களே எடுத்துக் கொண்டு வாருங்கள்” என்பது போன்ற பக்தி ததும்பும் உரையாடல்களுடன் சுவாமிஜிடம் அல்லது அவரின் பஜனைக்குச் செல்கிறோம் என்று கூறுவது சிலருக்கு - பலருக்கு மிகவும் பெருமைக்குரிய விடயம்.
இந்தச் சாமியாரின் பக்தர்கள் நாங்கள் -அந்தச் சாமி அம்மாவின் தொண்டர்கள் நாங்கள் - என்று கூறுவதும் - நான் வெள்ளிக்கிழமைகளில் மாமிசம் அருந்துவதில்லை - அது எனது சாமியாரின் பிறந்த நாள் என்று கூறுவதும் - நாங்கள் சனிக்கிழமைகளில் பஜனுக்குப் போகாமல் இரவு சாப்பிடுவதே யில்லை என்று கூறுவதும் சிலருக்கு - பலருக்கு ஒரு வகை சமூக
glig56iugi. It is a symbol of status.
பஜனை முடிந்ததும் - தரிசனம் முடிந்ததும் - அருளுரை முடிந்ததும் - இந்தப் போலிப் பக்தர்களிடமிருந்து நாம் கேட்க முடியாத சம்பாஷணைகள்:
“தியானம் செய்யும் போது அலை பாயும் மனதை எவ்வாறு அடக்குவது?
“அடுத்தடுத்து கிளம்பும் ஆசை அலைகளுக்கு எவ்வாறு அணை கட்டுவது?
60

நிர்வாணம்
“கோபம் ஏற்படும் போது அதை சாந்தமாக மாற்றுவது எப்படி”?
யாருக்குத் தேவை இது எல்லாம்?
ஆனால் அதே சமயம் - பஜனை முடிந்ததும் - தரிசனம்
முடிந்ததும் - அருளுரை முடிந்ததும் - இந்கப் போலிப் பக்தர் களிடமிருந்து நாம் நிச்சயமாக கேட்கக் கூடிய சம்பாஷணைகள்:
“சரோஜா போட்டிருந்த அட்டியலைப் பார்த்தீரே? இந்த முறை சுவாமியைத் தரிசிக்க இந்தியர்விற்குப் போகும் பொழுது டுபாயில் வாங்கினதாம்”
“தயவு செய்து கொஞ்சம் திரும்பி ரவியைப் பாருங்கோ - பிரசாதம் எல்லாம் காருக்கு கொண்டு போறார்- வீட்டிலை சமைக்கிறதில்லைப் போல இருக்கிறது - அடுத்த தடவை ஆள் வைத்து பிரசாதம் விநியோகிக்க வேண்டும்”
"உதயனால் எப்படி இந்த வாகனம் வாங்க முடிந்தது? அவர் செய்யும் வியாபாரத்திற்கு இப்படியான வாகனத்தை இன்னும் இரண்டு ஜன்மங்களுக்கு நினைத்துக் கூடப் பார்க்க முடியாதே! அடுத்த முறை பஜனைக்கு வரும் பொழுது சிறிது நெருங்கிப் பழகித் தெரிந்து கொள்ள வேண்டும்”
“நாளை இரவு எனக்கு டெலிபொன் பண்ணவும் - எப்படி யாவது அந்த வியாபார ஒப்பந்தத்தை உங்களுக்கே வாங்கிக் கொடுக்கிறேன். ஆனால் இதற்காக என்னை நீங்கள் கொஞ்சம் கவனிக்க வேண்டும்”
இந்தப் பக்தர்களிடம் பக்தி இல்லை - பகட்டு மட்டுமே உண்டு. வெள்ளை உள்ளம் இல்லை - வேஷம் மட்டுமே உண்டு. இவர்களுக்கு சுயதரிசனத்தில் அக்கறையில்லை - சுய விளம் பரத்திலேயே அக்கறை.
இப்படியான போலிப் பக்தர்களால் தான் - இவர்களின்
செய்கைகளினால் தான் - நமது சமூகத்தில் பலர் சுவாமிமார் களை வெறுக்கிறார்கள் - அவர்களால் பயனடையாது போகி றார்கள் - அவர்களைப் பற்ற மறுக்கிறார்கள்.
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம்.
அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம்.
அது ஒரு சத்தியம்.
COO
6

Page 83
மாயையின் மறுபெயர் மன இறுக்கம்
(Dன இறுக்கம்! இன்று - இங்கு - இதன் செல்லப் பெயர் டென்ஷன்.
அருந்திய உணவு சீரணிக்கவில்லை - காரணம் மன இறுக்கம்! இரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருக்கிறது - காரணம் மன இறுக்கம்! சிறுநீரில் சீனியில் அளவு கூடியிருக் கிறது - காரணம் மன இறுக்கம்! இரவில் தூக்கம் வரவில்லை - காரணம் மன இறுக்கம்! உடல் படுக்கையறையில் இச்சைக் கேற்ப இசையவில்லை - காரணம் மன இறுக்கம்! இப்படியாக - எதற்கெடுத்தாலும் மன இறுக்கம் - எல்லாவற்றிற்கும் மன இறுக்கம்!
எப்படி இந்த வியாதி நம்மைப் பற்றியது? எதற்காகப் பற்றியது? எப்படி இதன் பிடியிலிருந்து விடுபடுவது?
நமக்கு மிகவும் பழகிப் போன - நமது சமூகத்தில் பொது வாகக் காணக்கூடிய ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தின் மன அமைப்பை உதாரணமாக ஆராய்ந்து இந்தக் கேள்வி களுக்குப் பதில் தேட முயல்கிறது இந்த அலசல்,
கந்தசாமி ஒரு டாக்டர். அவருக்கென சொந்தமாக மூன்று அறைகள் கொண்ட வீடு ஒன்று உண்டு. ஆனால் - கந்தசாமிக்கு தனது தற்போதைய பட்டம் கொடுத்த பதவியில் - தான் ஒரு சாதாரண டாக்டர் என்று கூறிக்கொள்வதில் - தான் ஒரு சாதாரண டாக்டராகவே தொடர்ந்து வாழ்வதில் இஷ்ட மில்லை. காரணம் - அவர் மேலும் படித்து ஒரு சத்திர சிகிச்சை நிபுணராக வர விரும்புகிறார். அது மட்டுமல்ல. அந்தப் பதவி கிடைத்ததும் - தனது மூன்று அறைகள் கொண்ட வீட்டை
62

நிர்வாணம்
விற்று விட்டு - ஆறு அறைகள் கொண்ட வீடு ஒன்று வாங்க வேண்டும் என்பதும் கந்தசாமியின் நீண்ட நாளைய ஆசை.
இந்த உதாரணத்தில் - கந்தசாமியின் தற்போதைய டாக்டர் பதவியும் - அவரது மூன்று அறைகள் கொண்ட வீடும் - இன்று அவர் கண்ட முன்னால் தெரியும் நிஜங்கள் - இன்று அவரை அனுபவிக்க அனுமதிக்கும் யதார்த்தங்கள் - அவரது நிகழ் காலத்தின் பரிமாணங்கள்.
ஆனால் - கந்தசாமிக்கு தனது இந்த நிகழ்காலத்தில் திருப்தியில்லை - இந்த நிகழ்காலத்தில் ஒரு முழுமையை அவரால் காண முடியவில்லை - இந்த நிகழ்காலத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு அதை அனுபவிக்க அவர் ஆயத்தமாகவில்லை.
அதே சமயம் - கந்தசாமிக்கு மட்டுமே புரியும் ஏதேதோ காரணங்களுக்காக - அவர் சபலப்படும் அந்த சத்திர சிகிச்சை நிபுணர் பதவியும் - அவர் அடைய விரும்பும் அந்த ஆறு அறைகள் கொண்ட வீடும் - ஒரு வருங்காலத்தின் பரி மாணங்கள் - நிஜங்களல்லாத வெறும் கற்பனைகள் - வெறும் நிழல்கள். இந்த நிழல்கள் நிஜமாகலாம் - அல்லது நிழல் களாகவே மறைந்து விடலாம். காரணம் - கற்பனைகள் யாவுமே பிறக்கப் போகும் ஒரு காலத்தில் உருவாகக்கூடிய வெறும் சாத்தியக்கூறுகள் மட்டுமே.
ஆனால் - கந்தசாமி இவற்றைப் பற்றியெல்லாம் சிந்திப்ப தில்லை - அப்படிச் சிந்திப்பதை அவரது மனமும் அவர் வாழும் சமூகமும் ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் - தூரத்தே தெரியும் அந்த சத்திர சிகிச்சை நிபுணர் பதவியை நோக்கி - தொலைவில் தெரியும் அந்த ஆறு அறைகள் கொண்ட வீட்டை நோக்கி - அவற்றை எப்படியாகிலும் அடைந்து விடவேண்டு மென்பதற்காக ஓட ஆரம்பிக்கிறார் கந்தசாமி. ஒட்டமோ ஒட்டம் - அப்படி ஒரு ஒட்டம் படைத்தவனே பார்த்திராத ஒரு ஒட்டம்!
அதே சமயம் - ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் கந்தசாமி - தான் ஒட ஆரம்பிக்கும் பொழுதே விதைத்து விட்டார் மன இறுக்கம் என்ற அந்த விருட்சத்தின் விதையை.
மன இறுக்கத்தைப் பற்றி ஒரு மாமனிதர் சொல்கிறார்: “நம்மில் எவருக்குமே - நாம் நாமாக இருப்பதில் - நம்மை
63

Page 84
flas ழநதரன
நாமாகவே பார்த்து மகிழ்வதில் - நம்மை நாமாகவோ ஏற்றுக் கொள்வதில் இஷ்டமில்லை. அது மட்டுமல்ல. நம்மில் எவருக்குமே - நம்மிடம் இருக்கும் பொருட்களில் - அந்தப் பொருட்களை அப்படியே ஏற்றுக் கொள்வதில் - அந்தப் பொருட்களை அப்படியே அனுபவிப்பதில் இஷ்டமில்லை.
நினைவு தெரிந்த நாள் முதல் - நாம் யாராகவோ - எவராகவோ மாறவே விரும்புகிறோம் - மாறுவதற்காக முயற்சி செய்த வண்ணமே இருக்கிறோம். நினைவு தெரிந்த நாள் முதல் நாம் நம்மிடம் இன்று இல்லாதவற்றை - ஏதோ ஒரு காரணத் திற்காகத் தேடிய வண்ணமே - தேடி அடைந்து விட வேண்டு மென்பதற்காக முயற்சி செய்த வண்ணமே இருக்கிறோம்.
இப்பொழுது இருக்கும் நமக்கும் - வருங்காலத்தில் நாம் உருவெடுப்பதற்கு விரும்பும் தோற்றத்திற்கும் உள்ள இடை வெளியே மன இறுக்கம். அதாவது - நமது நிகழ்காலத்திற்கும் நாம் விரும்பும் வருங்காலத்திற்கும் உள்ள இடைவெளியே மன இறுக்கம். அடைய விரும்பும் விடயம் பெரிதாக பெரிதாக இடை வெளியும் அதிகமாகி - மன இறுக்கமும் அதிகமாகிறது.
அதே சமயம் - அடைய விரும்பும் விடயம் சிறிதாக சிறிதாக இடைவெளியும் சிறிதாகி - மன இறுக்கமும் குறைகிறது. இடைவெளியே இல்லாத போது - நம்மை நாமாகவே ஏற்றுக் கொள்ளும் போது - நமது நிகழ்காலத்தில் திருப்தியடையும் போது மன இறுக்கம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகிறது.
அறைக் கதவைச் சற்றத் தாளிட்டு - அமைதியாக அமர்ந்து சிறிது நேரம் சிந்தித்தால் - எத்தனை எத்தனை ஓட்டங்கள் நமது வாழ்வில் எத்தனை எத்தனை துரத்தல்கள் நமது வாழ்வில்! நினைவு தெரிந்த நாளிலிருந்து எதற்கெதற்காகவெல்லாம் ஒடினோம் எதையெதையெல்லாம் துரத்தினோம்!
கல்வியைத் துரத்தினோம் - பல்கலைக்கழகத்தைத் துரத்தினோம் - பட்டத்தைத் துரத்தினோம் - பதவியைத் துரத்தினோம். காதலின் பின்னால் ஓடினோம் - கல்யாணத்தின் பின்னால் ஒடினோம் - காரின் பின்னால் ஒடினோம் - வீட்டின் பின்னால் ஓடினோம்.
அதே சமயம் - எதை நோக்கி ஓடினோமோ - எதைத் துரத்தினோமோ - அந்த இலக்கை அடைந்ததும் - அது கிடைத்
64

நிர்வாணம்
ததும் - வாழ்க்கையில் அத்துடன் நின்று விடவில்லை நமது ஓட்டம் ஒரு சிறு ஓய்வு மீண்டும் ஆரம்பமாகிறது நமது ஓட்டம்!
நமது இந்த ஓட்டங்களுக்கு - நமது இந்தத் துரத்தல் களுக்கு தூபமிடும் எத்தனை எத்தனையோ கீதோபதேசங்கள் நம்மிடையே!
“மனிதனாகப் பிறந்தவன் தனது வாழ்நாளில் எதையாவது சாதிக்க வேண்டும்” - "எதிர் நீச்சல் போட்டு வாழ்க்கையில் வெற்றிகளை ஈட்ட வேண்டும்” - “கண்டதே காட்சி கொண் டதே கோலம் என்று வாழாமல் ஒரு குறிக்கோளுடன் வாழ வேண்டும் - இப்படியான கீதோபதேசங்கள் நமக்கொன்றும் புதியவையல்ல.
இவற்றையெல்லாம் கேட்டுத் தான் நாம் ஓட ஆரம்பித் தோம் - இவற்றையெல்லாம் கேட்டுத் தான் நாம் துரத்த ஆரம்பித்தோம். சாதிக்கிறோம் என்ற பெயரில் - சாதனைகள் புரிகிறோம் என் பெயரில் - நாம் நிகழ்காலத்தை மறந்து - நிகழ்காலத்தை அனுபவிக்காமல் - எங்கோ தெரியும் - எதையெதையெல்லாமோ நோக்கி ஓடுகிறோம்.
“நான் வாழும் உலகம் - என்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் - எனது வீடு - எனது பொருட்கள் - எல்லாமே மிக அற்புதமாக இருக்கின்றன - மிக அழகாக இருக்கின்றன - வாழ்க்கையென் றால் இதுவல்லவோ வாழ்க்கை - இது தவிர வேறு எதுவுமே எனக்குத் தேவையில்லை” - நம்மில் யாருமே - என்றுமே - இப்படிக் கூறியதில்லை - கூறியிருந்தாலும் மனதைத் தொட்டுக் கூறவில்லை.
நமக்கு துரத்தல் தான் முக்கியம் - ஒட்டம் தான் முக்கியம் - தேடுதல் தான் முக்கியம். அதனால் தான் - கண்ணாடியில் தெரியும் நமது திருமுகத்தில் பதிந்திருக்கும் - ஒவ்வொரு கோடும் நமது ஒரு துரத்தலின் மறுவடிவம் - ஒவ்வொரு ரேகையும் ஒரு ஒட்டத்தின் பிரதிபலிப்பு - ஒவ்வொரு சுருக்கமும் ஒரு தேடுதலின் தளும்பு.
ஒரு வேட்டை நாயைப் போல - சில சமயங்களில் அதிலும் கேவலமாக - நிகழ்காலத்தை மறந்து - இன்று கண்முன்னால் இருப்பதை அனுபவிக்காமல் - இன்று கண்முன்னால் தெரிவ
165

Page 85
டாக்டர் பூரீதரன்
துடன் திருப்தியடையாமல் - வாழ்நாள் முழுவதும் எதை எதையோ துரத்திக் கொண்டிருக்கும் நம்மை - திடீரென ஒரு நாள் வழிமறிக்கிறான் எருமைக்கடாவில் கயிற்றுடன் வலம் வரும் ஒரு கரிய நிறத்தவன்.
புரியவில்லை! அவன் தான் யமதர்மன் வழிமறித்ததுமல் லாமல் “தம்பி! செளக்கியமா” என்று சுகம் வேறு விசாரிக் கிறான்! அவ்வளவு தான்! அவனது நிழல் நம்மில் பட்டதுமே - இது வரை நன்றாக இருந்த உடல் நோய்வாய்ப்பட்டு கட்டிலில் படுத்து விடுகிறது. மாரடைப்பு - சிறுநீரகக் கோளாறு - ஈரல் கோளாறு - இவற்றில் ஏதோவொன்று!
இப்பொழுது - "ஐயோ ஐயையோ” என்று கதறுகிறோம் - “குய்யோ முறையோ’ என்று கூச்சலிடுகிறோம் - “நாம் இது வரை வாழவேயில்லை என்று கூக்குரலிடுகிறோம் - அங்கலாய்க் கிறோம்.
நாம் இதுவரை ஒடிக்கொண்டேயிருந்ததனால் கவனிக்க மறந்த நம்மைச் சுற்றியுள்ள உலகம் - மனிதர்கள் - வீடு - பொருட்கள் - எல்லாமே இப்பொழுது அற்புதமாக காட்சி தருகின்றன. ஆனால் - இவற்றில் எதையுமே இப்பொழுது அனுபவிக்க முடியாதவாறு பயணத் திகதி குறிக்கப்பட்டு விட்டது. கட்டிலில் படுத்திருந்து தாரை தாரையாகக் கண்ணிர் வடிக்கிறோம்.
இந்த நிலையிலிருக்கும் நம்மைப் பார்த்து ஒரு மாமனிதர் அழகாக - அற்புதமாக பின்வருமாறு கூறுகிறார்:
“மனித வாழ்க்கையில் சாதிப்பதற்கென்று எதுவுமே இல்லை. ஏனெனில் - சரியாக வாழ்வது மட்டுமே இங்கு ஒரு சாதனை எங்கோ இருக்கும் - எதையோ அடைவதற்கு வாழ்க்கை ஒரு கருவி அல்ல. வாழ்க்கையே ஒரு அடைதல் தான். வானில் பறக்கும் அந்தப் பறவை - காற்றில் ஆடும் அந்த ரோஜா - கிழக்கில் உதிக்கும் அந்தக் கதிரவன் - இரவில் மின்னும் அந்த விண்மீன்கள் - கூடிக் குலவும் அந்தக் காதலர்கள் - நிர்வாண மாக விளையாடும் அந்தக் குழந்தை - இவையெல்லாம் எதையும் சாதிக்கவில்லை. அது தான் உலகம் - அது தான் இயற்கை, பொங்கிப் புரளும் அந்த இயற்கைச் சக்தியின் வெவ்வேறு வடிவங்கள் - வெவ்வேறு வெளிப்பாடுகள்
66

நிர்வாணம்
வெவ்வேறு பரிமாணங்கள். அதில் மனிதர்களும் ஒரு பரிமாணம். அதை அவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்”
மாமனிதர்களின் கூற்றுப்படி - மனிதனாகப் பிறந்தவனுக்கு இங்கு ஒரே ஒரு குறிக்கோள் தான் உண்டு. அது தான் - இந்த ஊனுக்குள் ஒழிந்திருக்கும் அந்த உண்மையைத் தரிசிப்பது. மனிதனாகப் பிறந்தவன் இங்கு ஒரே ஒரு சாதனை மட்டும் தான் புரியலாம். அது தான் - மீண்டும் பிறக்காமலிருப்பதற்கேற்ற சூத்திரத்தை விளங்கிக் கொள்வது.
இது தவிர - சாதனைகள் என்று நமது சமூகம் சொல்வது - குறிக்கோள் என்று நம்மைச் சுற்றியுள்ளவர்கள் சொல்வது - எதிர் நீச்சல் என்று நாம் கற்ற பொருளாதாரக் கல்வி சொல்வது - எல்லாமே நம்மை வேட்டை நாய்களாக்கும் வெறும் குப்பைகள்.
இது பற்றி மனச்சுத்தியுடன் சிந்தித்தால் - ஆண்மையுடன் சிந்தித்தால் - அப்போது நமக்குத் தெரிவது,
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம். அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம். அது ஒரு சத்தியம்.
OOO
67

Page 86
உறைக்க வைக்கும் உண்மைகள்
இ ந்த நூலின் ஒரு சில அத்தியாயங்களில் இதுவரை எடுத்து அலசப்பட்ட பிராமணியம் பற்றிய பரிமாணங்கள் - பக்கங் களை நிரப்புவதற்காக எழுதப்பட்ட வெறும் வார்த்தை ஜாலங் களோ அல்லது அர்த்தமற்ற கற்பனைகளைச் சுமக்கும் வெறும் வெற்று வேட்டுக்களோவல்ல. மாறாக - அவை இரத்தமும் சதையும் உள்ள யதார்த்தங்கள் என்பதையும் - நாடியும் நரம்பும் உள்ள சத்தியங்கள் என்பதையும் நேரடியாகவே உறுதிப் படுத்துகிறது இலண்டனில் வார நாட்களில் இலவசமாக விநியோகமாகும் ‘Metro என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்த செய்தி ஒன்று.
இந்தப் பத்திரிகையில் 22 - 05-2003 அன்று - “மன மகிழ்ச்சி யின் இரகசியம் பெளத்தர்களிடம் உள்ளது” - என்ற தலைப்பில் வெளியான ஒரு செய்தியின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது.
“ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி எப்படி ஏற்படு கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக - சமீபத்தில் Wisconsin பல்கலைக்கழகத்தில் ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டது. ஆராய்ச்சியின் முடிவில் - இந்த ஆராய்ச்சிக்குப் பொறுப்பாகவிருந்த பேராசிரியர் Richard Davidson பத்திரிகை யாளர்களுக்குப் பின்வருமாறு கூறியுள்ளார்:
பெளத்த மதத்தை பயபக்தியுடன் கடைப்பிடிப்பவர்கள் - தங்களைத் தாங்களே அறிந்து கொள்ள வேண்டுமென்பதற் காக - தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை ஆழ்ந்த தியானத்தில் செலவிடுகிறார்கள். நான் நடாத்திய விஞ்ஞானப் பரிசோதனையில் - தினசரி தியானம் புரியும் பெளத்தர்கள் பலர் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டார்கள். ஆராய்ச்சியின்
168

நிர்வாணம்
முடிவுகள் அதிசயிக்க வைக்கும் முடிவுகளைத் தருவதாக அமைந்துள்ளன.
ஒரு மனிதனின் மகிழ்ச்சி - அவனுக்குள்ளேயே - அவனின் நெற்றியின் பின்னாலேயே இருக்கிறது. இடது மூளையின் ஒரு குறிப்பிட்ட சோனையே அவனின் மகிழ்ச்சியே நிர்ணயிக்கிறது. ஒரு மனிதனின் மனமகிழ்ச்சியை நிர்ணயிக்கும் இடது மூளையின் அந்தக் குறிப்பிட்ட சோணை - ஆழ்ந்த தியானம் செய்யும் பெளத்தர் களின் மூளையில் நன்கு விருத்தியடைந்துள்ளது. மேலும் - அது எந்நேரமும் சுறுசுறுப்பாக வேலை செய்த படியும் உள்ளது.
பெளத்த குரு தலாய் லாமா போன்றவர்களின் வழியைப் பின்பற்றும் பல பெளத்தர்கள் உண்மையிலேயே மகிழ்ச்சி யாகத் தான் இருக்கிறார்கள் என்று இப்பொழுது விஞ்ஞான பூர்வமாக என்னால் கூற முடியும். அது மட்டுமல்ல. திபெத்து நாட்டைச் சேர்ந்த பெளத்தர்களின் இந்த மகிழ்ச்சி அவர்களது பரம்பரை இயல்புகளால் ஏற்பட்டதல்ல. மாறாக அவர்களின் தியானத்தாலேயே அது உருவாகிறது.
அதே சமயம் - சாதாரண மக்களைப் பாதிக்கும் - கோபம் - ஆத்திரம் - போன்ற எதிர்மறையான உணர்வுகள் தியானம் செய்பவர்களைப் பாதிப்பதில்லை. விஞ்ஞானம் இதுவரை கண்டு பிடித்துள்ள எந்த மருந்தாலும் மனிதனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியாது. அது பெளத்தர்கள் கடைப்பிடிக்கும் தியானத்தால் மட்டுமே சாத்தியமாகும்.”
இந்தச் செய்தி வெளியான தினத்தன்றும் அதைத் தொடர்ந்த ஒரு சில தினங்களிலும் - அலுவலகத்தில் ஒரே ஆர்ப்பாட்டம். பெளத்த மதத்தைப் பற்றிய நூல்களை வாங்கு வதற்கு முயற்சி எடுப்பவர்கள் ஒரு புறம் - தியானத்தைப் பற்றிய ஒலித்தட்டுக்களை விற்பனை செய்யும் ஸ்தாபனங்களை தொலைபேசியில் அழைப்பவர்கள் ஒரு புறம் - “நான் ஒரு பெளத்தனல்ல - இந்து” என்று சொன்னதும் முகத்தைச் சுருக்கியவர்கள் ஒரு புறம் - ஒரு சில மதங்களை இழிவாகப் பேசியவர்கள் ஒரு புறம் - அலுவலகமே அதிர்ந்து விட்டது.
நான் எழுதித்தான் இப்படிப்பட்ட ஒரு காட்சியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதல்ல.
இப்பொழுது பத்திரிகைச் செய்திக்கு வருவோம். பெளத்த மதம் ஒரு உன்னதமான தர்மம் என்பதிலேயோ - அல்லது அது
69

Page 87
டாக்டர் பூரீதரன்
தியானத்தை வலியுறுத்தும் ஒரு அற்புதமான மார்க்கம் என்பதி லேயோ - அல்லது அதை உலகுக்கு வழங்கியவன் ஒரு அற்புத அவதாரம் என்பதிலேயோ - சுய சிந்தனையுள்ள எந்த மனித னுக்கும் இங்கு எவ்வித சந்தேகமுமில்லை - இருக்கவும் முடியாது - அதற்கு அவசியமுமில்லை. இந்தக் கட்டுரையும் அது பற்றி இங்கு பேசப்போவதில்லை.
அதே சமயம் - இந்தச் செய்தியைப் படிக்கும் வேற்று மதங்களைச் சேர்ந்தவர்களின் மனதில் - ஏன் நம்மவர்கள் பலரின் மனதிலேயே - எடுத்த எடுப்பிலேயே உருவாகும் முதல் எண்ணம் என்னவெனில் - தியானம் என்னும் அந்த உன்னத விடயம் பெளத்த மதத்தில் மட்டும் தான் உண்டு - பெளத்த மதம் மட்டும் தான் இங்கு தியானத்தை உபதேசிக்கிறது - பெளத்தர்கள் மட்டும் தான் இங்கு தியானம் புரிகிறார்கள்.
இந்த எண்ணத்தை உறுதிப்படுத்துவது போலவே அந்த விஞ்ஞான ஆராய்ச்சியை மேற்கொண்ட பேராசிரியரும் பத்திரிகையாளர்களுடன் பேசியிருக்கிறார்.
ஆனால் - இது உண்மையல்ல. சித்தார்த்தன் என்ற அந்த ராஜகுமாரன் இந்தப் பூமியில் பிறக்கு முன்னரே - அவன் போகங் களைத் துறந்து போதி மரத்தடியில் நிர்வாணமடையு முன்னரே - நிர்வாணமடைந்த அந்த மகான் பெளத்த மதத்தை இங்கு ஸ்தாபிக்க முன்னரே - தியானம் என்ற அந்த அற்புதம் இங்கு தெரிந்திருந்தது - போதிக்கப்பட்டது - கடைப்பிடிக்கப்பட்டது.
வேதம் - உபநிட்தம் - வேதாந்தம் - சித்தாந்தம்- பதஞ்சலி - திருமூலர் - பகவத் கீதை - சிவவாக்கியர் - பாம்பாட்டிச் சித்தர் - தாயுமானவர் - சங்கராச்சாரியார் - ரமணர் - விவேகானந்தர் - இப்படியாக - நமது மதத்தில் எங்கு பார்த்தாலும் தியானம் உண்டு - எதைப் புரட்டினாலும் தியானம் உண்டு - யாரைப் படித்தாலும் தியானம் உண்டு. இதில் சந்தேகமே வேண்டாம். தியானத்தை பெளத்தத்தின் முதுகெலும்பாக்கிய புத்தனுக்கே இது தெரியும்.
உண்மை இப்படியிருக்கையில் - அந்தப் பத்திரிகைச் செய்தி சுட்டிக் காட்டுவது போல - எதற்காக இங்கு தியானம் என்றவுடன் பெளத்தம் மட்டும் தான் பலரின் கவனத்திற்கு வருகிறது? எதற்காக இங்கு பலர் தியானம் என்றவுடன் பெளத்த மத குருமார்களை மட்டும் தான் நாடுகிறார்கள்?
70

நிர்வானம்
எதற்காக அவர்கள் மனமகிழ்ச்சி என்றவுடன் திபெத்திய நாட்டு தலாப் லாமாவை குறிப்பிடுகிறார்கள்? எதற்காக மன மகிழ்ச்சியைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் ஒருவர் பெளத்தர்களை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தினார்?
எதற்காக இப்படி? ஏன் இப்படி? நாம் கேட்க வேண்டிய கேள்விகள்.
விளக்கு பிரகாசமாக எரிந்தால் விட்டில்கள் நிச்சயமாக வருமென்றால் - இங்கு இந்து மதம் என்ற விளக்கு எரிய வில்லையா அதை நாடி மனித விட்டில்கள் வருவதற்கு? பழம் பழுத்தால் வெளவால்கள் கண்டிப்பாக வருமென்றால் - இங்கு இந்து மதம் என்ற பழம் பழுத்திருக்கவில்லையா மனித வெளவால்கள் அதை நாடி வருவதற்கு?
மலர் மலர்ந்தால் வண்டு தவறாது வருமென்றால் - இங்கு இந்து மதம் என்ற மலர் மலர்ந்திருக்கவில்லையா மனித வண்டுகள் அதை நாடி வருவதற்கு?
எதற்காக இப்படி? ஏன் இப்படி? நாம் கேட்க வேண்டிய கேள்விகள்.
பிராமணியம் பற்றி அலசப்பட்ட கடந்த ஒவ்வொரு கட்டுரையும் இதற்கான பதில்களைத் தான் போர்வைகளற்ற நிர்வாணங்களாக வாசகர்களுக்குக் காட்டியது. மீண்டும் மீண்டும் சொல்லப்படும் போது ஒரு பொய் உண்மையாகிறது என்று நம்பினான் ஹிட்லர். ஆனால் - இந்தக் கட்டுரையில் எழுதப்படுபவை - கடந்த கட்டுரைகளில் ஏற்கனவே எழுதப் பட்டு - இப்பொழுது மீண்டும் மீண்டும் கூறப்படும் உண்மைகள்.
“இந்து மதத்தைப் போல ஒரு மாபெரும் மதத்தினுள் - உலகம் வியக்கும் தத்துவங்கள் ஆயிரம் இருந்தும் - மனச்சாந்தி கொடுக்கும் உபதேசங்கள் ஆயிரம் இருந்தும் - வாழ்க்கைக்கு வழி காட்டும் பாதைகள் ஆயிரம் இருந்தும் - சுயலாபத்திற்காக - சுயநலத்திற்காக - திரிக்கப்பட்ட சடங்குகளையும் - வித்தை காட்டு திருவிழாக்களையும் மட்டுமே நம்மைச் சுற்றியுள்ள பல பல காரணிகள் - தெரிந்தே தெரிவு செய்து நம்மீது திணித்த தனால் - திணிப்பதனால் - இந்து மதத்தைப் பற்றிய நம்மில் பலரது பார்வையும் ஒரு முழுமையற்ற பார்வையே - ஒரு தப்பான பார்வையே’ ஏற்கனவே கூறப்பட்ட விடயம்.
எதற்காக இந்து மதம் என்ற விளக்கைத் தேடி விட்டில்கள் வரவில்லை? அகத்தே மாசில்லாத போது இது புரியும்.
7

Page 88
டாக்டர் பூரீதரன்
“பெளதீக விஞ்ஞானிகளுக்கு உபதேசிக்கும் இந்த மாபெரும் மதத்தைப் பற்றி - ஆழ்ந்து படிப்பவர்களை அதிசயிக்க வைக்கும் இந்த உன்னத மதத்தைப் பற்றி - புத்தி ஜீவிகளைப் பிரமிக்க வைக்கும் இந்த அற்புத மதத்தைப் பற்றி - அந்த மதத்தையே கடைப்பிடிக்கும் நம்மில் பலருக்குத் தெரிந்ததெல் லாம் - அன்றாடம் நாம் பார்ப்பதெல்லாம் - ஒராயிரம் தெய்வங்கள் - ஒராயிரம் வழிபாட்டு முறைகள் - ஓராயிரம் சடங்குகள் - ஒராயிரம் பயமுறுத்தல்கள் - ஓராயிரம் சாந்திகள் - ஒராயிரம் பரிகாரங்கள்!” ஏற்கனவே கூறப்பட்ட விடயம்.
எதற்காக இந்து மதம் என்ற மலரைத் தேடி வண்டுகள் வரவில்லை? அகத்தே மாசில்லாத போது இது புரியும்.
“மொழிகள் வளர்ந்து விட்ட இந்தக் கால கட்டத்தில் - எழுத்துக்கள் பெருகி விட்ட இந்தக் கால கட்டத்தில் - மக்களின் சிந்தனைத் திறன் வளர்ந்து விட்ட இந்தக் கால கட்டத்தில் - கற்பிக்கும் முறைகள் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் - இந்து மதம் கூறும் மாபெரும் தத்துவங்களை தந்திரமாக - வேண்டுமென்றே மறைத்து - புராணங்களை ஆதாரமாக வைத்து வித்தை காட்டும் திருவிழாக்களை உருவாக்கி - சுயநலத்திற்காக - சுயலாபத்திற்காக - இது தான் இந்து மதம் என தொடர்ந்து மக்கள் மீது திணித்து - மக்கள் மனதில் அறியாமையை வளர்த்து - மதம் பற்றிய முழுமையற்ற பார்வைகளை அவர்களுக்குள் உருவாக்கி - அந்த அறியாமையில் தன்னை வளர்க்கும் ஒரு வர்த்தக மனப்பான்மைக்குப் பெயர் தான் பிராமணியம்” ஏற்கனவே கூறப்பட்ட விடயம்.
எதற்காக இந்து மதம் என்ற பழத்தை நாடிப் பறவைகள் வரவில்லை? அகத்தே மாசில்லாத போது இது புரியும்.
“வளர்ந்து விட்ட ஒரு மாணவனை - கைவிரல்களை மடித்துத் தான் நீ வாழ்க்கை முழுவதும் இலக்கங்களைக் கூட்ட வேண்டும் - கைவிரல்களை விரித்துத் தான் நீ வாழ்க்கை முழு வதும் இலக்கங்களைக் கழிக்க வேண்டும் என்று சொல்லி அடம் பிடிக்கும் ஒரு கணக்கு ஆசிரியரை - பக்குவம் வாய்ந்த மாணவன் எவ்வாறு விலக்கி வைக்க வேண்டுமோ - எவ்வாறு அவரை விட்டு விலகிக் கொள்ள வேண்டுமோ - அது போலவே - அப்படியே - உண்மைகளை மறைப்பதற்காக - புராணங் களையும் இதிகாசங்களையும் உண்மை போல நம்மீது திணிக்கும் பிராமணியத்திலிருந்தும் நாம் விலகிக் கொள்ள வேண்டும் - அந்த மனப்பான்மை உள்ளவர்களை விலக்கி வைக்க வேண்டும்.” ஏற்கனவே அலசப்பட்ட விடயம்.
72

நிர்வாணம்
அப்படி நாம் விலகும் போது - அப்படி நாம் விலக்கும் போது - இங்கு இந்து மதம் என்ற விளக்கை நாடி வரும் விட்டில்களும் கோடி
“ஆலயங்கள் செயல்பட வேண்டும் நம்மிடையே. ஆனால் - அவை பிராமணியம் செயல்படாத ஆலயங்களாக அமைய வேண்டும். ஆலயங்கள் பெருக வேண்டும் நம்மிடையே. ஆனால் - அவை மக்களின் அறியாமையைப் பெருக்காத ஆலயங்களாக அமைய வேண்டும். ஆலயங்கள் வளர வேண்டும் நம்மிடையே. ஆனால் - அவை இந்து மதம் கூறும் உயர்வான தத்துவங்களை மக்களிடமிருந்து மறைக்காத இடமாக வளர வேண்டும்” ஏற்கனவே அலசப்பட்ட விடயம்.
அப்படியான ஆலயங்கள் பெருகும் போது - இங்கு இந்து மதம் என்ற மலரை நாடி வரும் வண்டுகளும் கோடி.
“எதற்காக நமது ஆலயங்களில் தன்னைத் தானே உணர வைக்கும் தியானம் பயிற்றுவிக்கப்படக் கூடாது? எதற்காக நமது ஆலயங்களில் புராணங்கள் - இதிகாசங்கள் இயற்றப் பட்டதன் உண்மைக் காரணம் மக்களுக்கு எடுத்துக் கூறப்படக் கூடாது? எதற்காக நமது ஆலயங்களில் சடங்குகள் என்பதே வெறும் சடங்குகள் தான் என்ற உண்மை எடுத்துக் கூறப்படக் கூடாது? எதற்காக நமது ஆலயங்களில் இந்து மதத்தின் ஆழமான தத்துவங்களை மக்களுக்கு விளக்க முயற்சிகள் எடுக்கப்படக் கூடாது? மொத்தத்தில் - எதற்காக நமது ஆலயங் களில் பிராமணியம் ஒதுக்கிவைக்கப்படக் கூடாது?’ ஏற்கனவே அலசப்பட்ட விடயம்.
அப்படியாக பிராமணியம் ஒதுக்கி வைக்கப்படும் போது - இங்கு இந்து மதம் என்ற பழத்தை நாடி வரும் வெளவால்களும் கோடி
“சநாதனதர்மம் என்னும் பாற்கடலில் விழுந்த பிராமணியம் என்னும் நஞ்சினால் அந்தப் பாற்கடல் இன்று பரிதவிக்கிறது’ இந்த வசனம் மட்டுமே எனது - கருத்து மாமனிதர்களுடையது.
ஆடைகள் எதுவுமற்ற நிர்வாணம் இது. போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம். அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம். அது ஒரு சத்தியம்.
OOO
173

Page 89
கலாச்சாரம் தந்த உடன்கட்டைகள்
திருமணம். அக்கினி சாட்சியாக - முப்பது முக்கோடி தேவர்கள் சாட்சியாக - ஊர் உலகம் சாட்சியாக - அம்மி மிதித்து - அருந்ததி காட்டி - உறவினர்கள் வாழ்த்த நண்பர்கள் வாழ்த்த - வேதியர்கள் மந்திரம் ஒலிக்க - மங்கலத் தாலி கட்டப் படும் திருமண வைபவம் - நமது சமூகத்தால்- நமது இனத்தால் - மிக உயர்வாகப் பேசப்படும் ஒரு விடயம் - மிக உயர்வாக மதிக்கப்படும் ஒரு விடயம்.
அதனால் தான் - இதை இன்று யாரும் குறைவாகப் பேசு வதை - இன்றைய கால கட்டத்தில் இங்கு இது அமுல் நடத்தப் படும் முறைகளைப் பற்றிக் கேள்வி எழுப்புவதை - இதனால் இன்று ஏற்படும் நடைமுறை விளைவுகளைப் பற்றிச் சுட்டிக் காட்டுவதை - நமது சமூகத்தில் பெரும்பாலானோர் அங்கீகரிப் பதில்லை - ஆதரிப்பதில்லை.
ஆனால் - இங்குள்ள பலருக்கு - அல்லது ஒரு சிலருக்கு - இன்று திருமணம் என்பது அவர்களின் வாழ்வில் ஏற்படும் சூரிய உதயமா? அல்லது அஸ்தமனமா? என்று விவாதிப்பதற்கு நமது பட்டிமன்றங்களுக்கு முதிர்ச்சி போதாது.
நமது பெண்களில் பலர் - அல்லது ஒரு சிலர் - அன்று பெற்றோர்களுடன் வாழ்ந்த போது மகிழ்ச்சியாக இருந்தார் களா? அல்லது இன்று கணவனுடன் வாழும் போது மகிழ்ச்சி யாக இருக்கிறார்களா? என்று விவாதிப்பதற்கு நமது கலாச் சாரம் இடம் கொடுக்காது.
நமது பெண்களில் பலர் - அல்லது ஒரு சிலர் - திருமணத்தின் பின் சுதந்திரமாக வாழ அனுமதிக்கப்பட்டார்களா? அல்லது
74

நிர்வாணம்
திருமணம் அவர்களின் சுதந்திரத்தைக் கட்டிப் போட்டதா? என்று விவாதிப்பது நம்மவர்களுக்கு தரக்குறைவாகத் தோன்றுகிறது.
அதனால் தான் - ரோம் நகரம் தீப்பற்றி எரியும் போது பிடில் வாசித்த நீரோ மன்னனைப் போல - காலத்திற்கு ஒவ்வாத - இன்றைய சமூகத்திற்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத - இன்றைய தனி மனிதனுக்குத் தேவையற்ற எத்தனை எத்தனையோ அற்பமான விடயங்களை - செத்த பாம்பைத் துள்ளித் துள்ளி அடிப்பவனைப் போல - படித்தவர்கள் என்று நமது சமூகம் கருதுபவர்கள் இன்றைய பட்டிமன்றங்களில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அறிவு வளர்கிறது - புத்தி சீராகிறது - என்று நினைத்து புத்தியை பேதலிக்க வைக்கும் இந்தப் பட்டிமன்றங்களை நம்மவர்களில் பெரும்பாலானோரும் ரசித்து அனுபவிக் கிறார்கள். ரசிகர்கள் ஏக மனதாக ஆதரிக்கிறார்கள் என்பதை காரணமாக காட்டி வானொலி - தொலைக்காட்சிகளிலும் இத்தகைய செல்லரித்த விவாதங்கள் மீண்டும் மீண்டும் தொடர்கின்றன.
ஒரு விடயத்தின் - ஒரு கொள்கையின் - ஒரு தத்துவத்தின்
சகல பரிமாணங்களையும் - சகல தோற்றங்களையும் - பல பல கோணங்களில் - பல பல நோக்கங்களுடன் ஆராய்ந்து - மக்களுக்கு அறிவூட்டுவதே - மக்களைச் சிந்திக்க வைப்பதே பட்டிமன்றங்களின் குறிக்கோள் என்றால் - இன்று நமது பட்டிமன்றங்களில் விவாதிக்கப்பட வேண்டிய மிக முக்கிய மாக ஒரு விடயம் தமது திருமணங்கள் - அவை இங்கு அமுல் நடத்தப்படும் முறைகள் - அதனால் தனிமனிதர்களுக்கு ஏற்படும் அவலங்கள்.
அதே சமயம் - இது நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு விடய மென்றால் - இது நாகரீகமில்லையென்றால் - பட்டிமன்ற விவாதங்கள் வேண்டாம் - பகிரங்க கருத்துப் பரிமாறல் வேண்டாம். ஆனால் - அந்தரங்க கருத்துப் பரிமாறல் கூட நம்மிடையே இல்லையே!
நமது சமூகத்தில் இன்று நடைபெறும் பல திருமணங் களை தொடர்பாக நாம் தரிசிக்கத் தயங்கும் - கச்சிதமாக மூடி
75

Page 90
டாகடா பூருதரன
மறைக்கும் - ஒப்புக் கொள்வதற்கு வெட்கப்படும் - விவாதிப் பதற்குப் பயப்படும் ஒரு சில நடைமுறை விடயங்களை ஆராய் கிறது இந்த அலசல்,
ஆலாபனை எதுவுமின்றி - பட்டென்று சொல்வதானால் - நமது கலாச்சாரத்தின் சிகரம் என்று நாம் எல்லோரும் தயங்காமல் பெருமை கொண்டாடும் திருமணம் என்பது இங்கு பலரின் வாழ்க்கையில் ஒரு மாபெரும் ஏலம். பல பல வியாபார ஒப்பந்தங்கள் ஒன்றுள் ஒன்று பின்னிப் பிணைந்த சிக்கலான ஒரு வகை ஏலம். இந்த ஏலத்தை கச்சிதமாக மூடி மறைக்க - நாகரீகமாக நாம் இங்கு பாவிக்கும் ஒரு சொல் தான் - கலாச்சாரம்.
வீட்டிற்கு விளக்கேற்ற வருபவள் - குலம் வாழ வைப்பவள் - புகுந்த வீட்டின் பெயர் விளங்க வைப்பவள் என்றெல்லாம் வாய் நிறைய தமிழ்க் கலாச்சாரம் பேசும் பெற்றோர்களாகிய நாம் - “திருமண வயதை எட்டி விட்ட நமது மகனுக்கு ஒரு கண்ணகியைத் தேடி வாருங்கள் - ஒரு சீதையைத் தேடி வாருங் கள் - ஒரு குல விளக்கைத் தேடி வாருங்கள்” என்று உறவினர் களிடம் - கல்யாணத் தரகர்களிடம் விண்ணப்பிப்பதில்லை.
மாறாக - “எனது மகனின் கல்வித் தகைமைகள் இவை - அவன் வாங்கிய பட்டங்கள் இவை - அவன் பார்க்கும் உத்தியோகம் இது - அவன் அமரும் நாற்காலி இது - இன்றைய சந்தையில் இவற்றின் பெறுமதி இது - இந்த விலை கொடுக்கக் கூடிய பெண்களைப் பெற்றவர்களைத் தேடிப் பிடியுங்கள் - குணம் அப்படி இப்படி இருந்தாலும் பரவாயில்லை - நாளடைவில் சரியாகி விடும்”- இப்படித்தான் ஆரம்பமாகிறது ஏலம். இந்த ஏலத்தின் எதிர்பார்ப்பு பணம். இந்த ஏலத்தின் அத்திவாரம் பணம்.
இப்படி ஏலத்தை ஆரம்பிப்பவர்களுக்குச் சற்றும் சளைத்தவர்களல்ல இங்கு ஏலம் கேட்பவர்களும்! திருமண வயதை எட்டி விட்ட ஒரு பெண்ணுக்கு ஒரு வாழ்க்கைத் துணைவனைத் தேடும் பெற்றோர்களில் பெரும்பாலானோர் - ஒரு நல்ல மனிதனை - ஒரு சிறந்த குணவானை - ஒரு உன்னத மான கனவானைத் தேடுவதில்லை.
அது என்னவோ தெரியவில்லை - இங்கு பெண்ணைப்
பெற்றவர்களின் கண்களுக்கு டாக்டர்கள் மட்டும் தான் நல்ல
76

நிர்வாணம்
மனிதர்கள் - பொறியியலாளர்கள் மட்டும் தான் நல்ல குணவான்கள் - கணக்காளர்கள் மட்டும் தான் சிறந்த கனவான்கள். இவர்களில் யாராவது ஒருவரை கணவனாக அடையவள் மட்டுமே வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியுமென்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
கல்யாணத் தரகரின் - உறவினர்களின் - நண்பர்களின் - சாத்திரிமார்களின் - சாமர்த்தியத்தைப் பொறுத்து - சொல்லும் பொய்களின் பரிமாணங்களைப் பொறுத்து - போடும் வேடங் களின் அளவைப் பொறுத்து இங்கு ஏலங்கள் வெற்றியா கின்றன அல்லது தோல்வியாகின்றன.
வெற்றியில் முடிந்த ஏலங்களைத் தொடர்கின்றன வியாபார ஒப்பந்தங்கள் இரு குடும்பத்தினரிடையே.
மங்கலக்கயிறு - மாங்கல்ய பாக்கியம் - மூன்று முடிச்சு - இப்படி ஏதேதோ விடயங்களுடனெல்லாம் தொடர்புள்ள அந்தக் கலாச்சாரச் சின்னம் செய்யப்பட வேண்டிய தங்கத்தின் பெறுமதிக்கு ஒரு ஒப்பந்தம் - ஆடை அலங்காரங்களுக்கு ஒரு ஒப்பந்தம் - கல்யாணம் நடைபெற வேண்டிய இடத்திற்கு ஒரு ஒப்பந்தம் - அதற்கு வரவேண்டிய விருந்தினர்களுக்கு ஒரு ஒப்பந்தம் - பரிமாற வேண்டிய உணவுக்கு ஒரு ஒப்பந்தம் - அதை சமைப்பது யார் என்று ஒரு ஒப்பந்தம்.
நெஞ்சை நிமிர்த்தி ஆண்மையுடன் ஆராய்வதானால் இந்த எல்லா ஒப்பந்தங்களுமே - கலாச்சாரம் என்ற பெயரில் - முன்னோர்கள் வகுத்த வழி என்ற பெயரில் - தமிழர் பண்பாடு என்ற பெயரில் நடாத்தப்படும் சுயநலம் நிறைந்த வெறும் சுரண்டல்கள் - சுயலாபம் நிறைந்த சிக்கலான வியாபார ஒப்பந்தங்கள்.
இந்த ஏலத்தின் - இந்த வியாபார ஒப்பந்தங்களின் பலிக் கடாக்கள் இரு உயிரினங்கள்.
எங்கோ பிறந்து - எப்படியோ வளர்ந்த ஒரு ஆணையும் - ஏதோ நினைத்து - எதையெதையோ எதிர்பார்த்து வளர்ந்த ஒரு பெண்ணையும் - சமூகம் என்று சொல்லவும் நாலு பேர்கள் - பட்டம் - பதவி - பணம் - அந்தஸ்து - குடும்ப கெளரவம் - என்று அதைச் சொல்லி இதைச் சொல்லி - கல்யாணம் என்ற
177

Page 91
டாக்டர் பூரீதரன்
பெயரில் ஊரைக் கூட்டி அம்மியை மிதிக்க வைத்து - அருந்ததி யைக் காட்டி - திருமணம் செய்து வைத்து - நடாத்துங்கள் இல்லறத்தை என்று அனுப்புகிறார்கள்.
முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். இத்தனை கோணல்களையும் தாண்டி வந்து வாழ்க்கை நடாத்தும் இருவரின் வாழ்க்கை எப்படி இருக்கும்? எப்படி முடியும்? சித்தர் கூறுகிறார்:
“நாப்பிளக்கப் பொய்யுரைத்து - நவநிதியம் தேடி
நலன் ஒன்றும் அறியாத நாரியரை கூடி பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போல பொல பொலென கலகலென புதல்வர் களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் - கைவிடவும் மாட்டீர் கவர் பிளந்த மரத்தினுள் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பிழுத்த குரங்கு போல அகப்பட்டீர் - அகப்பட்டீர்
கிடந்துழல அகப்பட்டீரே”
ஒவ்வொரு இளைஞனும் படிக்க வேண்டிய - ஒவ்வொரு யுவதியும் படிக்க வேண்டிய - உண்மையை கூறும் - சத்தியத் தைப் பறை சாற்றும் இது போன்ற எத்தனை எத்தனையோ பாடல்களை கச்சிதமாக ஒதுக்கி வைத்து விட்டோம் செத்த வீடுகளில் பாடுவதற்காக மட்டும் - சுடலை ஞானம் பேசு வதற்காக மட்டும்.
சமூகவிதிகள் - மதக் கோட்பாடுகள் - கலாச்சாரச் சடங்குகள் என்பவற்றின் பெயரால் முன்னொரு காலத்தில் நம்மிடையே நிலவி வந்த காட்டுமிராண்டித்தனமான காரி யங்கள் - பைத்தியக்காரத்தனமான செய்கைகள் - முட்டாள் தனமான போக்குகள் ஏராளம் ஏராளம். அவற்றுள் ஒன்று உடன்கட்டை ஏறுதல்
ஆனால் - திருமணம் என்ற பெயரில் - ஏதேதோ கூறி - ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் - உனக்கு இவள் தான் என்றும் - இவளுக்கு நீ தான் என்றும் ஊரைக் கூட்டிச் சேர்த்து வைத்த பின் - பிடித்ததோ பிடிக்கவில்லையோ - ஊருக்குப் பயந்து
78

நிர்வாணம்
உலகத்திற்குப் பயந்து - தங்கள் சொந்த ஆசை அபிலாசை களை மறந்து விட்டு - வள்ளுவர் கூறிய இல்லறம் நடாத்து கிறோம் என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு - தொடரவும் முடியாமல் - முறிக்கவும் முடியாமல் - செக்கு மாடுகள் போல இங்கு பலர் - அல்லது ஒரு சிலர் அனுபவிக்கும் ஆயுட்கால இம்சைகளை விடவா சில நிமிடங்களே நிலைக்கும் உடன்கட்டை காட்டுமிராண்டித்தனம்.
திருமண வைபவங்களுக்கு மட்டும் ஒரு போதுமே செல்லாத - திருமணத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் - ஒரு நாள் தனது நண்பரிடம் மனம் திறந்து கூறினார். “நான் எனது தலையில் மண்ணை வாரிக் கொட்டியது போதாதென்று - இன்னொருவனும் வாரிக்கொட்டுவதை பார்த்து வாழ்த்து வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
முடிவாக ஒரு விடயம் பலர் அங்கீகரிப்பதனால் மட்டும் - பலர் ஆதரிப்பதனால் மட்டும் ஒரு விடயம் இங்கு சரியாகி விடுவதுமில்லை. யாருமே அங்கீகரிக்கவில்லை என்பதனால் மட்டும் - யாருமே ஆதரிப்பதில்லை என்பதனால் மட்டும் இங்கு ஒரு விடயம் பிழையாகி விடுவதுமில்லை.
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம். அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம். அது ஒரு சத்தியம்.
COO
79

Page 92
மரணம் என்னும் ஜனனம்
(Dரணம். மனித மனத்திற்குப் புரியாத இந்தப் புதிரைப் பற்றி - மனித புத்திக்கு விளங்காத இந்த வினோதத்தைப் பற்றி - பகுத்தறிவால் பகுத்து அறிய முடியாத இந்தச் சம்பவம் பற்றி - ஒரு மாமனிதர் அழகாக - அற்புதமாக - ஆழமாக கூறியுள்ளார்:
“பிணம் என்று நீங்கள் பெயரிட்டு - பயந்து - ஒதுங்கி - ஒதுக்கி வைத்து ஆர்ப்பரிக்கும் அந்த விடயம் - இப்பொழுதே - இங்கேயே - உங்களுடனேயே - உங்களுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருப்பதனால் தான் - உங்களது மரணம் - நாளைய தினம் - இந்த இரண்டில் எது முதலில் வரும் என்பது உங்களில் யாருக்குமே தெரியாது”
நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு சத்தியம் நமது மரணம். உலகின் எந்த மூலையில் நாம் வாழ்ந்தாலும் - எப்படி வாழ்ந்தாலும் - தவறாது நம்மைக் குறி பார்த்துக் கொண்டி ருக்கும் ஒரு சத்தியம் நமது மரணம். எந்த வித முன்னறி வித்தலுமின்றி திடீரென ஒரு நாள் நம்மைப் பற்றிக் கொள்ளப் போகும் ஒரு சத்தியம் நமது மரணம்.
என்றோ ஒரு நாள் - ஏதோ ஒரு நேரம் - மரணம் நம்மையும் பற்றிக் கொள்ளும் என்பது தான் நிஜம் என்று நமக்குத் தெரிந்திருந்தும் - என்றோ ஒரு நாளின் பின்பு - ஏதோ ஒரு நேரத்தின் பின்பு - நாம் இந்த உலகில் வாழ்ந்து கொண் டிருக்க மாட்டோம் என்பது தான் நிஜம் என்று நமக்குத் தெரிந்திருந்தும் - இது பற்றி தீர்க்கமாகச் சிந்திக்க - விளக்க மாக அறிந்து கொள்ள - நண்பர்களுடன் கலந்துரையாட நாம் தயாராக இல்லை.
80

நிர்வாணம்
நடக்க முடியாத பல விடயங்கள் பற்றி அலாதியாக கற்பனை செய்யும் நாம் - என்றோ நடக்கப் போகும் பல விடயங்கள் பற்றி தீர்க்கமாகச் சிந்திக்கும் நாம் - அடுத்த நொடியில் கூடச் சம்பவிக்கக் கூடிய ஒரு யதார்த்தத்தைப் பற்றிச் சிந்திப்பதை - பேசுவதை - நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு விடய மாக - அபசகுணமாக - ஒதுக்கித் தள்ளுகிறோம். நமது பயணமும் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதை - நமது அன்றாட சிந்தனை - சொல் - செயல் - எதுவுமே எந்த வகை யிலும் பிரதிபலிப்பதாக இல்லை.
நமது உறவினர் - நமது நண்பர் - நமக்கு வேண்டியவர் - யாராவது ஒருவர் இறந்து விட்டால் - வேர்த்து விரைக்க ஓடிச் சென்று - விழிகளில் கண்ணிர் சொரிய - செய்தவதறியாது வாழ்வின் அத்திவாரமே ஆட்டம் கண்ட நிலையில் - கவலையில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினரின் மத்தியில் அமர்ந்து கொண்டு - கட்டிலில் கிடக்கும் அந்தப் பிணத்தைப் பற்றி - நாளை பிணமாகப் போகும் நாம் பேசும் பேச்சுக்கள் - நமது செவியில் விழும் பேச்சுக்கள் - உலகின் அதி சிறந்த நகைச்சுவைக் துணுக்குகள்!
“எனக்கு அப்பவே தெரியும் - இந்த சிகரெட் தான் மனிதனுக்கு வினையாகப் போய் விட்டது” - என்பவர் வலது புறம்! “ஊர் மாதிரி இல்லாமல் இந்த நாட்டிலை சாப்பிடுகிற சாப்பாட்டை அளந்து கவனமாகச் சாப்பிட வேண்டும். இதைக் கவனிக்காமல் கண்டபடி சாப்பிட்டு அநியாயமாகப் போய்ச் சேர்ந்து விட்டார்" - என்பவர் இடது புறம்!
“பேரனின் கல்யாண விடயத்தால் ஏற்பட்ட கவலை தான் இவருக்கு யமனாக மாறிவிட்டது” - என்பவர் முன்புறம்!
“காணி - பூமி எல்லாம் கடைசி மகனுக்குத்தான் என்று நினைக்கிறேன்” - என்பவர் பின்புறம்!
எத்தனை எத்தனை பிரகடனங்கள்! எத்தனை எத்தனை சான்றிதழ்கள்! எத்தனை எத்தனை அனுமானங்கள்! அது மட்டுமல்ல. கண்களை - காதுகளைச் சற்று விரித்தால் - ஒரு பிணத்தை மையமாக வைத்து - எத்தனை எத்தனை பேரங்கள்! எத்தனை எத்தனை சுயவிளம்பரங்கள் - எத்தனை எத்தனை நடிப்புகள்!
8

Page 93
டாக்டர் பூரீதரன்
ஒரு நிமிடம் கண்களை மூடிச் சற்றுச் சிந்தித்தால் - அங்கு நாம் கேட்பவற்றில் - பார்ப்பவற்றில் - நடப்பவற்றில் - பெரும் பாலான விடயங்கள் காலம் காலமாகத் தொடரும் நமது முதிர்ச்சி யின்மையின் வெளிப்பாடுகள் - அறியாமையின் அறிவித்தல்கள் - அநாகரீகத்தின் அறிகுறிகள்!
அதே சமயம் - எப்படி எப்படியெல்லாமோ ஆர்ப் பரிக்கும் நம்மைப் பார்த்து - நடனமாடும் நம்மைப் பார்த்து - இயற்கை கூறாமல் கூறும் கீதை இது:
“புத்திரா என்றோ ஒரு நாள் - ஏதோ ஒரு நேரம் - மரணத்தை எதிர்பார்த்து நீயும் கட்டிலில் படுத்திருப்பாய். அப்பொழுது - உனது இச்சைக்கு ஏற்ப வாழ்க்கை முழுவதும் ஆடி அசைந்த அங்கங்களை - நீ எவ்வளவு முயற்சி எடுத்தாலும் அசைக்க முடியாது. உன்னைக் கேட்காமலே - உனக்குத் தெரியாமலே - இது வரை காலமும் தானாகவே உள்ளே சென்று வெளியே வந்த மூச்சு - நீ எவ்வளவு முயற்சி எடுத்தும் உள்ளே செல்லவும் வெளியே வரவும் சிரமப்படும். ஆயிரம் யானைகள் ஒன்றாக சேர்ந்து உனது நெஞ்சை அமுக்குவது போல இருக்கும். ஏதேதோ பேச வேண்டும் போல இருக்கும் - ஆனால் உன்னால் பேச முடியாது. சொற்கள் நாக்கில் பிடி படாது ஜாலம் காட்டும். பார்வை மங்கிக் கொண்டே செல்லும். அருகிலிருப்பவர்கள் பேசுவது கேட்காது. கேட்டாலும் கேட்கும் விடயங்களுக்கு அர்த்தம் விளங்காது. கண்களி லிருந்து தாரை தாரையாக கண்ணிர் வடியும். உனக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று உனக்கே புரியாமல் பயத்தால் மலம் போகும் - சலம் போகும்”
இயற்சை கூறிய இந்த நிலையிலிருக்கும் ஒரு மனிதனின் மாயமான பரிமாணங்களைப் பாடுகிறார் சொரூபானந்தர்:
நானாயிருந்ததெங்கே?நான் அபிமானித்ததெங்கே? வானாள மண்ணாள வாஞ்சையெங்கே? ஞானகுரு தேசிகனாரெங்கே? சிவா சிவா முக்தி எங்கே? பேசிடத்தான் வாய் எங்கே பிள்ளாய்? இந்தப் பாடலைப் படிக்கும் நமது மனம் - சிறிதளவாவது பண்பட்டிருந்தால் - சிறிதளவாவது முதிர்ச்சியடைந்திருந்தால் -
82

நிர்வாணம்
அப்பொழுது இந்தப் பாட்டு நமக்குப் பின்வருமாறு ஒலிக்கும்
ஒலிக்க வேண்டும்:
நானாயிருந்ததெங்கே? நான் அபிமானித்ததெங்கே? ஜேர்மன் கார் எங்கே? காருக்கு செய்த பூஜை எங்கே?
வடக்கு இலண்டன் வீடெங்கே? வீட்டிற்கு வாங்கிய காப்புறுதி எங்கே?
கொலஸ்ட்ரோல் இல்லாத உணவு எங்கே? அதை அருந்தச் சொன்ன டாக்டர் எங்கே?
எழுதி வைத்த எழுத்தின் பிரகாரம் - போட்டு முடித்த கணக்கின் பிரகாரம் - வெளியே சென்ற மூச்சு மீண்டும் உள்ளே வராத அந்தக் கணத்தில் - காய்ந்த இலை கிளையை விட்டு விலகுவது போல - பழுத்த பழம் மரத்தை விட்டு விலகுவது போல - உடலை விட்டு உயிர் விலகிச் செல்லும் போது நம்முடன் கூட வருவது நமது கர்ம பலன்கள் மட்டுமே.
கர்ம பலன்கள்! அது என்ன?
ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காரணம் உண்டு - ஒவ்வொரு தாக்கத்திற்கும் ஒரு எதிர்த்தாக்கம் உண்டு - ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்ற மாற்ற முடியாத பிரபஞ்ச விதியிலிருந்து பிறந்தது தான் கர்மபலன் என்னும் தத்துவம். சிந்தனையால் - சொல்லால் - செயலால் - நாம் எது நினைத்தாலும் - எது செய்தாலும் - அது எவ்வளவு சிறிய பரிமாணமுடையதாகவிருந்தாலும் - அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு பலன் உண்டு - ஒரு எதிர் விளைவு உண்டு.
நம்மிலிருந்து உதிக்கும் ஒவ்வொரு சிந்தனையும் - நாம் புரியும் ஒவ்வொரு செயலும் - ஒரு கர்ப்பிணி பிள்ளையைச் சுமப்பது போல - அதன் விளைவுகளைச் சுமந்தபடியே உதய மாகிறது. உரிய கால நேரத்தில் ஒரு கர்ப்பிணிக்கு பிரசவம் சம்ப விப்பது போல - சரியான நேரத்தில் - சரியான காலத்தில் - நமது கர்மங்களும் அவற்றின் விளைவுகளைப் பிரசவிக்கின்றன.
சில விளைவுகள் குறுகிய காலத்தில் - இந்தப் பிறவி யிலேயே பிரசவமாகின்றன - சில விளைவுகள் காலம் கடந்து நம்மை அடுத்த பிறவியிலும் தொடர்கின்றன. ஆனால் - நமது
83

Page 94
டாக்டர் பூநீதரன்
எந்தச் சிந்தனையும் - எந்தச் செயலும் அவற்றின் விளைவு களைத் தராமல் மட்டும் மறைவதேயில்லை. உலகப் பொருட்கள் அழிவது போல - கர்மமும் அதன் பலன்களும் அழிவதில்லை. உலகப் பொருட்கள் செயலற்றுப் போவது போல - கர்மமும் அதன் பலன்களும் செயலற்றுப் போவதில்லை. காலத்தால் - பஞ்ச பூதங்களால் அழிக்க முடியாதது கர்மமும் அதன் விளைவு களும். விளைவுகளைத் தருமட்டும் கர்மம் அழிவதில்லை. இயற்கை போட்ட சட்டம் இது.
மாமனிதர்களின் பார்வையில் - இந்தக் கர்ம பலன்கள் தான் நம்மைப் பிறக்க வைத்தன - நம்மை வாழ வைக்கின்றன - நம்மை இறக்க வைக்கின்றன - நம்மை மீண்டும் பிறக்க வைக்கப் போகின்றன. அதனால் தான் அவர்கள் கூறினார்கள் “உனது இன்றைய வாழ்க்கையைப் பார் - அது உனது கடந்த கால கர்மங்களைக் கூறும். உனது இன்றைய கருமங்களைப் பார் - அது உனது நாளைய வாழ்க்கையைக் கூறும்"
இதை நம்பலாமா? நம்பலாம். இதை யாராவது பார்த்திருக் கிறார்களா? பார்த்திருக்கிறார்கள்.
இரண்டாயிரத்தி ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு - போகி யாகப் பிறந்து - போதி மரத்தடியில் யோகியாக மாறியவன் இதைப் பார்த்தான் - தெளிவாகப் பார்த்தான். அந்த மகான் நிர்வாணமடைந்த அன்றைய தினம் - அன்றைய இரவு - தான் அடைந்த அனுபவத்தை பின்வருமாறு கூறுகிறார்:
“--நான் கடந்து வந்த எத்தனை எத்தனையோ பிறவிகள் எனது நினைவுக்கு வந்தன. ஒன்று - இரண்டு - மூன்று - நான்கு - ஐந்து - - - ஐம்பது - நூறு - ஆயிரம் என எத்தனை எத்தனையோ கால கட்டங்களில் எத்தனை எத்தனையோ பிறவிகள் எனக்கு. எனது இந்த ஒவ்வொரு பிறவியையும் நான் மிகத் துல்லியமாக நினைவு கூர்ந்தேன். ஒவ்வொரு பிறவியிலும் எனது ஜனனம் எங்கு சம்பவித்தது - அந்தப் பிறவியில் எனது பெயர் என்ன - எனது பெற்றோர்களின் பெயர்கள் என்ன - அவர்களின் குடும்ப வரலாறு என்ன - எல்லாமே துல்லியமாகத் தெரிந்தன. ஒவ்வொரு பிறவியிலும் எனது சுகமான வாழ்க்கை - துக்கமான வாழ்க்கை - எனது மரணம் - நான் மீண்டும் மீண்டும் பிறவி யெடுத்து - எல்லாமே துல்லியமாகத் தெரிந்தன. அது மட்டு
184

நிர்வாணம்
மல்ல - மனிதக் கண்களுக்கு புலப்படாத - தெரியாத - வேறு பல விடயங்களையும் பார்த்தேன். பிரபஞ்சத்தில் உயிர்கள் தோன்றுவதைப் பார்த்தேன் - வாழ்வதைப் பார்த்தேன் - அவற்றின் மரணத்தைப் பார்த்தேன். ஒவ்வொரு உயிரினமும் செய்த கர்மத்தின் பிரகாரம் - அவற்றிற்கு வாழ்வு அமைவதைப் பார்த்தேன். ஒவ்வொரு உயிரினமும் செய்த கர்மத்தின் பிரகாரம் - அவற்றின் மறுபிறப்பு அமைவதையும் பார்த்தேன்’
புத்தன் மட்டுமா பார்த்தான்? பகிர்ந்தான்? “பேத கன்மத்தால் வந்த பிராரத்துவம் நானாவாகும் -
ஆதலால் விவகாரங்கள் அவரவர்க்கானவாகும்” - சொன்னவர் தாண்டவ முனிவர்.
“பல மிருகமாக - பறவையாக - பாம்பாக - எல்லாப் பிறப்பும் பிறந்திழைத்தேன்” - சொல்வது சிவபுராணம்.
எனது உடலும் ஒருநாள் என்னைச் சுற்றியுள்ளவர்களால் பிணம் என்று அழைக்கப்பட்டு - மயானத்தில் எரிக்கப்படும் போது- என்னுடன் கூடவருவது எனது கர்மபலன்கள் மட்டுமேஇந்த உண்மை நமது மனதில் அழுத்தமாகப் பதிந்தால் - இந்த உண்மையை நாம் அடிக்கடி நினைவு கூர்ந்தால் - அப்பொழுது - கூட இருப்பவனுக்குக் குழி பறிக்க மனம் தூண்டாது - அடுத்தவன் வாழ்க்கையை கெடுப்பதற்கு மனம் தூண்டாது - ஊரை ஏமாற்றிப் பிழைப்பதற்கு மனம் தூண்டாது - வேடம் போட்டு ஏமாற்றுவதற்கு மனம் தூண்டாது.
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம். அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம். அது ஒரு சத்தியம்.
OOO
85

Page 95
பதினாறும் பெற்ற பனங்காட்டு நரிகள்
UெTர நாட்களில் இலண்டனில் இலவசமாக விநியோக மாகும் Metro என்ற ஆங்கிலப் பத்திரிகையில் 22-05-2003 வெளியான - “மனமகிழ்ச்சியின் இரகசியம் பெளத்தர்களிடம் உள்ளது” - என்ற ஒரு செய்தியின் சுருக்கம் கீழே தரப்படுகிறது.
“ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி எப்படி ஏற்படுகிறது? - என்பதை அறிந்து கொள்வதற்காக - சமீபத்தில் Wisconsin பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சிக்குப் பொறுப்பாகவிருந்த பேராசிரியர் Richard Davidson - ஆராய்ச்சியின் முடிவில் பத்திரிகையாளர்களுக்குப் பின்வருமாறு கூறியுள்ளார்:
பெளத்த மதத்தை பயபக்தியுடன் கடைப்பிடிப்பவர்கள் - தங்களைத் தாங்களே அறிந்து கொள்ள வேண்டுமென்ப தற்காக - தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை ஆழ்ந்த தியானத்தில் செலவிடுவதால் - நான் நடாத்திய விஞ்ஞானப் பரிசோதனையில் - தினசரி தியானம் புரியும் பெளத்தர்கள் பலர் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டார்கள். ஆராய்ச்சியின் முடிவுகள் அதிசயிக்க வைக்கும் முடிவுகளைத் தருவதாக அமைந்துள்ளன.
ஒரு மனிதனின் மகிழ்ச்சி - அவனுக்குள்ளேயே - அவனின் நெற்றியின் பின்னாலேயே இருக்கிறது. இடது மூளையின் ஒரு குறிப்பிட்ட சோனையே அவனின் மகிழ்ச்சியை நிர்ணயிக் கிறது. ஒரு மனிதனின் மனமகிழ்ச்சியை நிர்ணயிக்கும் இடது மூளையின் அந்தக் குறிப்பிட்ட சோணை - ஆழ்ந்த தியானம் செய்யும் பெளத்தர்களின் மூளையில் நன்கு விருத்தியடைந்
86

நிர்வாணம்
துள்ளது. மேலும் - அது எந்நேரமும் சுறுசுறுப்பாக வேலை செய்த படியும் உள்ளது.
பெளத்த குரு தலாய் லாமா போன்றவர்களின் வழியைப் பின்பற்றும் பல பெளத்தர்கள் உண்மையிலேயே மகிழ்ச்சி யாகத் தான் இருக்கிறார்கள் என்று இப்பொழுது விஞ்ஞான பூர்வமாக என்னால் கூற முடியும். அது மட்டுமல்ல. திபெத்து நாட்டைச் சேர்ந்த பெளத்தர்களின் இந்த மகிழ்ச்சி அவர்களது பரம்பரை இயல்புகளால் ஏற்பட்டதல்ல. மாறாக அவர்களின் தியானத்தாலேயே அது உருவாகிறது.
அதே சமயம் - சாதாரண மக்களைப் பாதிக்கும் - கோபம் ஆத்திரம் - போன்ற எதிர்மறையான உணர்வுகள் தியானம் செய்பவர்களைப் பாதிப்பதில்லை. விஞ்ஞானம் இதுவரை கண்டு பிடித்துள்ள எந்த மருந்தாலும் மனிதனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியாது. அது பெளத்தர்கள் கடைப்பிடிக்கும் தியானத்தால் மட்டுமே சாத்தியமாகும்”
இலண்டன் வாசகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் செய்தியின் ஒரு பரிமாணத்தை அலசுகிறது இந்தக் கட்டுரை.
“ஒரு மனிதனின் மகிழ்ச்சி - அவனுக்குள்ளேயே - அவனின் நெற்றியின் பின்னாலேயே இருக்கிறது. இடது மூளையின் ஒரு குறிப்பிட்ட சோணையே ஒரு மனிதனின் மகிழ்ச்சியை நிர்ண யிக்கிறது” என்று விஞ்ஞான பூர்வமாக இப்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது
இதை வேறொரு விதமாகக் கூறுவதானால் - மனிதன் தேடும் மகிழ்ச்சி என்பது வெளியிலிருந்து அவனுக்குக் கிடைப் பதில்லை. மாறாக - அவனுக்குள்ளேயே - அவனது மூளையின் ஒரு பாகத்தாலேயே அது அவனுக்கு அளிக்கப்படுகிறது.
அதாவது - பல பல வருடங்களாகப் படித்து - ஆராய்ச் சிகள் பல பல செய்து - பல பல நூல்களை எழுதி - பேராசிரியர் என்று பட்டம் வாங்கிய ஒருவர் - விஞ்ஞானி - அறிவாளி என்று சமூகத்தில் பலராலும் இங்கு மதிக்கப்படும் ஒருவர் - அதி சிறந்த பதவியில் அமர்ந்து - அதிகம் சம்பாதிக்கும் ஒருவர் - எவ்வளவோ பணத்தை செலவு செய்து - யார் யாருடைய
187

Page 96
டாக்டர் பூரீதரன்
நேரத்தையோவெல்லாம் உபயோகித்து - ஒரு மிகப் பெரிய ஆராய்ச்சியை வடிவமைத்து - நடாத்தி - இறுதியில் அதன் முடிவுகளை உலகிற்குச் சொல்லியிருக்கிறார்.
அது என்னவெனில் - இங்கு மனிதன் தேடும் மகிழ்ச்சி என்பது வெளியிலிருந்து அவனுக்குக் கிடைப்பதில்லை. மாறாக - அவனுக்குள்ளேயே - அவனது மூளையின் ஒரு பாகத்தாலேயே அது அவனுக்கு அளிக்கப்படுகிறது.
அபாரமான கண்டுபிடிப்பு அற்புதமான கண்டுபிடிப்பு! அதிசயமான கண்டுபிடிப்பு என்று இதைப் பலரும் பாராட்டிக் கொண்டிருக்கும் அதே வேளையில் - நம்மில் பலரின் மனதில் தவிர்க்க முடியாமல் மிதந்து வரும் அந்தக் கிராமத்திய முதுமொழியையும் நாம் அலட்சியம் செய்து விட முடியாது:
"பத்துப் பிள்ளைகளைப் பெற்றெடுத்த தாயொருவளைப் பார்த்து ஒரே ஒரு பிள்ளையை மட்டும் பெற்றவள் ஒருவள் முனகிக் காட்டினாளாம்”
எதற்காக இப்பொழுது இந்த முதுமொழி?
அந்தப் பேராசிரியரின் கண்டுபிடிப்புகளைப் போல - ஒன்றல்ல - இரண்டல்ல - பத்துக் கோடிக்கும் ம்ேலான கண்டு பிடிப்புகளை உள்ளடக்கிய ஒரு மாபெரும் மெஞ்ஞானத்தை - மதத்தை - அத்திவாரமாகப் பெற்ற நமக்கு - விஞ்ஞானியான அந்தப் பேராசிரியரின் முனகலைக் கேட்கச் சகிக்கவில்லை.
இங்கு மனிதன் தேடும் மகிழ்ச்சி என்பது வெளியிலிருந்து அவனுக்குக் கிடைப்பதில்லை. மாறாக - அவனுக்குள்ளேயே - அவனின் நெற்றியின் பின்னாலேயே அது இருக்கிறது என்ற விடயத்தை நமக்கு இங்கு யார் யாரோவெல்லாம் - கல் தோன்று முன்னரே - மண் தோன்று முன்னரே - மிகவும் சாதாரண மாகவும் - மிகவும் தத்ரூபமாகவும் கூறிவைத்து விட்டுச் சென்று விட்டார்கள்.
உதாரணமாக - ஆனந்தம் வெளியேயில்லை - அது நமக்குள்ளேயே இருக்கிறது என்பதை தாயுமானவர் இவ்வாறு கூறுகிறார்:
தன்னிலையே நில்லு தானே
தனிச் சச்சிதானந்தம் ஆம்
88

நிர்வாணம்
மகிழ்ச்சியை தனக்குள்ளேயே கண்ட சிவவாக்கியர் இவ்வாறு கூறுகிறார்:
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்ட பின் என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே.
தியானம் என்னும் தூக்கம் தருவது அற்புதமான சுகம் என்பதை பத்திரகிரியார் இவ்வாறு உணர்த்துகிறார்:
ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?
ஒருவனுக்குள்ளேயே சுகம் இருப்பதை மறைமுகமாக விளக்குகிறார் பாரதியார்:
தன்னை யறிந்தின்பமுற வெண்ணிலாவே - ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே.
உயர்ந்த தியானத்தின் போது - நான் என்ற உணர்வு அடங்கி - இந்திரியங்கள் செயல்படாது - உள்ளத்தில் ஓங்கார ஒளிமயம் தோன்றுவதை பாடுகிறார் திருமூலர்:
ஊமை யெழுத்தோடு பேசும் எழுத்துறில் ஆமை யகத்தனில் அஞ்சும் அடங்கிடும் ஒமய மற்றது வுள்ளொளி பெற்றது நாமய மற்றது நாமறியோமே
தியானமற்ற நிலையை விட தியானம் தரும் சுகம் அதிக மானது என்பதை குதம்பைச் சித்தர் இவ்வாறு பாடுகிறார்:
நித்திரை கெட்டு நினைவோடிருப் போர்க்கு முத்திரை ஏதுக்கடி - குதம்பாய் முத்திரை ஏதுக்கடி?
நமது மனம் கட்டுப்படும் போது நமக்கு முடிவிலாச் சுகம் என்பதை இடைக்காட்டுச் சித்தர் இவ்வாறு கூறுகிறார்:
மனமெனும் மாடு அடங்கில் தாண்டவக் கோனே - முக்தி வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவக்கோனே.
ஆர்ப்பரிக்கும் அலை கடலினுள் கால் வைக்கத் தகுதி யற்ற ஒரு சிறு பிள்ளை - கரையில் நின்று சங்கு - சிப்பி பொதுக்கு
189

Page 97
டாக்டர் பூரீதரன்
வதைப் போல - இந்து மதம் என்னும் ஆழம் காண முடியாத அந்த மாபெரும் சமுத்திரத்தினுள் முற்று முழுதாகக் கால் பதிக்க வசதியில்லாமையினால் - கரையில் நின்று கொண்டு நான் பொறுக்கிய சங்கு - சிப்பிகளே நீங்கள் மேலே படித்த மாமனிதர்களின் தத்துவங்கள்.
அது மட்டுமல்ல - நான் என்றோ பொறுக்கிய - இன்றும் பொறுக்கிக் கொண்டிருக்கும் இந்தச் சங்கு - சிப்பிகள் தான் அந்தப் பேராசிரியர் இன்று கூறும் விடயங்கள் - என்றோ - ஏற்கனவே - நமது மெஞ்ஞானிகளால் ஆராய்ந்து முடிக்கப் பட்ட விடயங்கள் என்றும் எனக்கு எடுத்துக் காட்டின. அதனால் தான் இந்த நூலில் நீங்கள் இதுவரை படித்த பல கட்டுரைகள் பின்வருமாறு கூறின:
சுகம் என்று நாம் நம்பும் எந்தச் சுகமும் - நாம் தேடி அனுபவிக்கும் எந்தச் சுகமும் - நமது மனதின் ஒரு குறுகிய கால சலனமற்ற நிலையே தவிர - நாம் தேடி அடைந்த பொருட் களிலிருந்து வருவதல்ல. சுகம் என்பது மனித மனதின் - நமது மனதின் ஒரு நிலை - ஒரு பரிமாணம். அது நமக்குள்ளேயே இருந்தது - நம்மிலிருந்தே வருகிறது. வெளியேயிருந்து வரும் பொருட்களிலிருந்து வருவதல்ல - வர முடியாது.
அடுத்தவன் வாங்கி விட்டான் என்பதற்காக - அடுத்த வனுக்குக் காட்ட வேண்டும் என்பதற்காக - அடுத்தவனை விட நாம் பெரியவனென்று நிரூபிப்பதற்காக - அடுத்தவனுக்குப் பாடம் படிப்பிப்பதற்காக - இவற்றிலிருந்தெல்லாம் சுகம் வேறு கிடைக்கிறது என்று நம்பி எத்தனை எத்தனை தேவை யற்ற குப்பைகள் நமது வீட்டில் எத்தனை நாட்கள் சுகம் தந்தன. இவை எல்லாம்? இவற்றிற்கும் - நமது சுகத்திற்கும் ஒரு வித தொடர்பும் கிடையாது.
ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது - அறைக்கதவைத் தாளிட்டு - சுகாசனத்தில் அமர்ந்து - கண்களை மூடி - உள்ளே செல்லும் மூச்சையும் வெளியே வரும் மூச்சையும் நிதானமாக அவதானித்து - அந்த அவதானிப்பிலேயே மனதை மறந்து - ஒரு நிமிடம் மறந்து - ஒரு மணித்தியாலம் மறந்து - இருபத்தி நாலு மணி நேரமும் மறந்திருக்கத் தெரியும் போது - அந்த
90

நிர்வாணம்
மறப்பில் நம்மை நாமே தரிசிக்கும் போது - அந்த ஆனந்தத்தில் திளைக்கும் போது - பரமனால் கூட தடுக்க முடியாது நமது முக்தியை. காரணம் - அப்பொழுது நாம் பூரணம்.
மனிதர்களின் பிரச்சனைகளை - துன்பங்களை விஞ்ஞானம் என்றுமே தீர்த்ததில்லை - தீர்க்கவும் முடியாது. பணமில்லாத வர்கள் பண்டமாற்றுச் செய்வதைப் போல - ஒரு பிரச்சனையை இன்னொரு பிரச்சனையாக மாற்ற முடியுமே தவிர - பழைய பிரச்சனைக்குப் பதிலாக புதிதாக ஒரு பிரச்சனையை உருவாக்க முடியுமே தவிர - பிரச்சனைகளே இல்லாத உலகத்தை விஞ்ஞானத் தால் உருவாக்க முடியாது. ஒரு சமூகத்திற்கு - ஒரு நாட்டிற்கு - நாம் வாழும் உலகிற்கு விமோசனம் அளிப்பவர்கள் மெய் ஞானிகள் - விஞ்ஞானிகளல்ல.
ஏற்கனவே இந்த நூலில் கூறப்பட்ட இது போன்ற கருத்துக்களை - இப்பொழுது மீண்டும் படித்த பின் - அந்தப் பேராசிரியரின் முனகல் ஸ்வரமா? அல்லது அபஸ்வரமா? தாளமா? அல்லது தப்புத்தாளமா?
போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம், அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம் ஒரு புனிதம். அது ஒரு சத்தியம்.
O
19

Page 98
நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள்
இந்நூல் உருவாக எனக்குக் கைகொடுத்து உதவியவர்கள்
எழுத்தாளர் - இங்கிலாந்து பாராளுமன்ற ஒரே ஒரு தமிழ் வேட்பாளர் - பிரபல ‘சொலிசிற்றர் என்ற பெருமைகளுக்கு உரியவராக லண்டனில் திகழும் என் இனிய நண்பன் சி. செல்வராஜா (செல்வராஜா அன் கோ),
லண்டன் ஈஸ்ற்ஹாம் நகரில் நிமிர்ந்து நிற்கும் லக்சுமி ஜூவலர்ஸ் உரிமையாளரான என் உடன் பிறவாத அன்புத்தம்பி திரு ஆகியோர். இவர்களுக்கு என் இதயத்து நன்றிகள்!
ஈ.கே. ராஜகோபால் (உரிமையாளர், புதினம் வெளியீடு)


Page 99

அமரர் வித்துவான்கந.