கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையில் இனக் குழும அரசியல்

Page 1


Page 2

இலங்கையில் இனக்குழும அரசியல்
சி.அ. யோதிலிங்கம் (C) நல்லாயன் கன்னியர் மடம் கொட்டாஞ்சேனை
கொழும்பு - 13.
15.08.2000
LäGSLb - IX + 64
“மூன்றாவது மனிதன்” வெளியீட்டகம்
விலை - 100/-
ஏக விநியோகஸ்தர் பூபாலசிங்கம் புத்தகசாலை 340, செட்டியார் தெரு, கொழும்பு - 11

Page 3
மலையக மக்களின்
உரிமைகளுக்காக; போராடி உயிர் நீத்த அனைத்து மலையக தியாகிகளுக்கும்
இந்நூல் சமர்ப்பணம்.

(1)
பொருளடக்கம்.
சுதந்திரத்திற்கு பின்வந்த இலங்கையின் அரசியல் யாப்புகளும், இனப்பிரச்சினையும்.
(அ) அறிமுகம்.
(ஆ) சோல்பரி அரசியல் யாப்பு இ) முதலாவது குடியரசு அரசியல் யாப்பு (ஈ) இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு
(உ) முடிவுரை.
இலங்கை இந்திய உறவுகள்.
(அ) அறிமுகம். (ஆ) 1948 - 1956 காலகட்டம். (இ) 1956 - 1965 காலகட்டம். (ஈ) 1965 - 1970 காலகட்டம், (உ) 1970 - 1977 காலகட்டம். (GI) 1977 - 1989 ST60s Lib. (6T) 1989 - 1994 SIT6)& Lib. (ஏ) 1994க்குப் பின்னர். (ஐ) இலங்கை இந்திய உறவுகளின் எதிர்காலம்.

Page 4
அணிந்துரை
இலங்கைத் தமிழரின் அரசியல் பிரச்சினைகள் முனைப்புக் கொண்டுள்ள இக்காலத்தில் அவை பற்றிய பொதுவாசிப்புநிலைப்பட்ட, அன்றேல் பொதுக்கருத்தாடல் நிலைப்பட்ட, முனைப்பு இல்லையென்றே கூறவேண்டும். இந்நிலை சவுக்கியமான அரசியல் வாத விவாதத்திற்கும், தீர்வுகளை நோக்கிய செயற்பாடுகளுக்கும் உகந்தது அல்ல. அரசியல் நிலைமை பற்றி உணர்மையான அலசல்களே பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குவதற்கு உதவும். இத்தகைய ஒரு மரபு இன்று நம்மிடையே இல்லை. இப்பணியை வளர்த்தெடுப்பது அவசியமாகும். அதற்கு நல்ல பின்புல அறிவுள்ள, ஆய்வாளர்களின் பிரச்சினைகளை நோக்கிய, அரசியல் அலசல்கள் முக்கியமானவையாகும். அத்தகைய எழுத்துக்கள் இலங்கையைப் பொறுத்தவரையில் வாரப் பத்திரிகைகளில் வருவனவற்றைத் தவிர இல்லையென்றே கூறலாம்.
இந்தக்குறையை நீக்கும்முறையில் நம்மிடையே தொழிற்படும் ஆய்வாளர்களில் அரசறிவியல் புலமைகொண்டு ஆய்வு செய்யும் ஆய்வாளர் மிகச்சிலரே. அந்த மிகச்சிலருள் சி.அ. யோதிலிங்கமும் ஒருவராவார். அவரை அவரது மாணவ காலத்திலிருந்தே அறிவேன். மாணவனாக இருக்கும் போதே தெளிவான அரசியல் நோக்கு கொண்டிருந்தவர். முதற்பட்டத்தின் பின்னர் பெற்றுக்கொண்ட புலமைத் தேட்டத்தையும், அனுபவ ஈட்டத்தையும் களமாகக்கொண்டு நுண்மாண் நுழைபுலம் மிக்க அரசியல் விமர்சனங்களை செய்து வருகின்றார்.
இவருடைய கருத்தாழமும், நோக்கும், உண்மையும், கொண்ட எழுத்துக்கள் மூலம் இலங்கையின் யாப்புக்கள் நிலைப்பட்ட குறைபாடுகளை நாம் நன்கு அறிவோம். இந்த நூலில் வரும் கட்டுரைகள் இன்று இலங்கை எதிர் கொள்ளும் அரசியல் பிரச்சினைகள் பற்றிய தமிழ் நிலைப்பாடுகளை நன்கு எடுத்துக்காட்டுகின்றன. உண்மையில் இந்நூலை வாசிப்பதென்பது அரசியல் போதகத்தை (POLITICAL EDUCATION) பெற்றுக்கொள்வதாகும்.
யோதிலிங்கத்தின் பணி மேலும் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்.
பேராசியர் கா. சிவத்தம்பி
ஓய்வுநிலைப் பேராசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்
| v ]

பதிப்புரை
நிகழ்காலத்தில் மிகப் பொருத்தமான ஒரு அரசியற் சூழலிலேயே இந்நூல் பதிப்பிக்கப்படுகின்றது. இந் நூலின், இந் நூலாசிரியரின் அரசியற் பார்வைகளை மீண்டும் ஒரு முறை வரலாறு நமக்கு நிரூபிக்கின்ற மிக மோசமான அரசியல் சந்தர்ப்பமும் சூழ்நிலையுமே இக்காலமாகும்.
சமகால அரசியலில் இனப்பிரச்சினைத் தீர்வில் - அரசியலமைப்பு சீர்திருத்தங்கள், புதிய அரசியலமைப்புத் திட்டம், இலங்கை - இந்திய உறவுகள் தொடர்பாக மிகவும் அதிக வாதப் பிரதிவாதங்களும் கருத்தாடல்களும் காய் நகர்த்தல்களும் நடைபெற்று இறுதித் தருணத்தில் சிறுபான்மையினரை புதிய அரசியலமைப்பின் ஊடாக மரணக் குழிக்குள் போட்டு மூடும் கட்டத்தை நெருங்கியுள்ளது.
புதிய அரசியலமைப்பு கருத்தாடல்களில் சிறுபான்மை மக்களான, தமிழ் - முஸ்லிம் மக்களை சிங்கள பெளத்த தேசிய ஆதிக்கத்திற்குள் தொடர்ந்து வைத்திருப்பதற்கான வெளிப்பாடுகளின் மிக உச்சங்கள் அழுத்தி தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் இந்த நாட்டின் இரண்டாம் தரப் பிரஜைகள்தான் என உரத்து அரசியல் அமைப்பில் எழுதிவைக்கும் நிலை இன்றும் தொடர்கிறது."
தமிழர்களின் ஆயுதப் போராட்ட அரசியலின் தீவிர எழுச்சி,இந்தியாவின் பாத்திரத்தை மீண்டும் தனது மேலாதிக்க நலத்தின் அடிப்படையில் இலங்கை இனப்பிரச்சினையுடன் சம்பந்தப்படுத்தியுள்ளது.
இனப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட இவ்விரணிடு முக்கிய அம்சங்களையும் இந்நூலில் விரிவாக நண்பர் - சி.அ. யோதிலிங்கம் தனது அரசியல் பார்வையின் 96ILTS வெளிப்படுத்தியுள்ளார். அவரின் சிந்தனைகளை ஒரு பன்முகப்பட்ட வாசிப்புத் தளத்திற்கு கொண்டு செல்லும் பணியை மூன்றாவது மனிதன் வெளியீட்டகம் செய்திருக்கின்றது.
பதிப்பாளர்.
எம். பெளளர் மூன்றாவது மனிதன வெளியிட்டகம்,

Page 5
முனனுரை இலங்கையின் இனக்குழும அரசியலைப் பொறுத்தவரை இருவிடயங்கள் மிகமுக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. ஒன்று இலங்கையின் அரசியல் யாப்புக்கள், மற்றயது இலங்கை இந்திய உறவுகள் இலங்கையில் காலனித்துவ ஆட்சியின் போது பல்வேறு பணிபாட்டுத் தளங்களை கொண்ட பிரதேசங்கள் ஒற்றையாட்சியின் கீழ் இணைக்கப்பட்டமையும் பின்னர் படிப்படியாக அவ்வொற்றையாட்சியின் அதிகாரம் சுதேசிகளுக்கு கைமாற்றப்பட்டமையும் அரசியல் யாப்புகளினூடாக நடந்தேறியுள்ளன. ஒற்றையாட்சி அமைப்பை 1833ல் அறிமுகப்படுத்தப்பட்ட கோல்புறூக் அரசியல் சீர்த்திருத்தம் ஆரம்பித்து வைக்க அவ்வொற்றையாட்சி அதிகாரத்தை சுதேசிகள் என்ற போர்வையில் சிங்கள பெரும்பான்மை இனத்தவரிடம் கையளிக்கும் கைங்காரியத்தை 1947ல் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி அரசியல் யாப்பு முழுமையாக நிறைவேற்றி வைத்தது. யாப்பு வழி அரசியல் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து யாப்பின் உள்ளார்த்தமாக பல்லினத்தன்மை என்பது கவனத்தில் எடுக்கப்பட வில்லை. வெளிப்புறமாக பல்லினத்தன்மையை பேணுவதற்கு சில ஒட்டு வேலைகள் மட்டுமே நடைபெற்றன. யாப்பு வழி அதிகாரங்கள் படிப்படியாக சுதேசிகளுக்கு கையளிக்கப்பட்ட போது மேலேழுந்த வாரியாக ஒட்டப்பட்ட ஒட்டுக்கள் எல்லாம் பேரினவாத பெரும் தீக்கு முன்னால் நிற்க முடியாமல் கழன்று கழன்று விழுந்தன. 1972ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட முதலாவது குடியரசு யாப்புடன் ஒட்டுக்களுக்கே இடமில்லாது போய்விட்டது. இதுதான் ஒடுக்கப்பட்ட இனக்குழுமங்களைப் பொறுத்தவரை இலங்கையின் யாப்பு வரலாறு. தற்போது மீண்டும் புறநெருக்கடிகள் காரணமாக ஒட்டுக்கள் போடுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. உள்ளார்த்தமாக பல்லினத் தன்மையைப் பேணுவதற்கான முயற்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. மத்திய அரசில் பல்லினத் தன்மையை பேணாத நடவடிக்கைகளெல்லாம் ஒட்டுநடவடிக்கை தானே!
உண்மையில் தமிழர்கள் இலங்கையர்களாகவும், தமிழர்களாகவும் வாழ விரும்பினர். ஆனால் பேரினவாதம் தமிழர்களாக மட்டும் வாழ் என நிர்ப்பந்திக்கின்றது. இனக்குழும அரசியலில் அடுத்து முக்கியத்துவம் பெறுவது இலங்கை - இந்திய உறவுகளாகும். இவ்வுறவுகளின் ஏற்ற, இறக்கங்களுக்கேற்பவே இனக்குழும அரசியலும் ஏறி, இறங்குகின்றது.
இந்தியா தனது பிராந்திய வல்லரசு தன்மையின் நலன்களில் இருந்தே இலங்கையின்
- VIII

இனக்குழும அரசியலை அணுகிவருகின்றது. இது எல்லோருக்கும் தெரிந்த வெளிப்படை உண்மை. ஆரம்பத்தில் இலங்கை வாழ் இந்திய வம்சாவழி மக்களின் பிரச்சனைகளை பயன்படுத்தி வந்தது. பின்னர் இலங்கை தமிழர்களின் பிரச்சனையை பயன்படுத்தி வருகின்றது. தற்போது நேரடியாக தலையைக் காட்டுவதை குறைத்தாலும் தன்னை மீறி போகாதவாறு பார்த்துக்கொண்டிருக்கிறது.
இந்தியாவின் இப்போக்கு தொடருமா? என்பது சந்தேகமே. எதிர் காலத்தில் இலங்கையில் உள்ள ஒடுக்கப்பட்ட இனக்குழுமங்களின் நலன்களில் இருந்து இலங்கை இந்திய உறவுகளை பேணவேண்டிய நிர்பந்தங்கள் இந்தியாவுக்கு ஏற்படலாம்.
இந்நூாலில் உள்ள முதலாவது கட்டுரை சுதந்திரத்திற்கு பின் வந்த இலங்கையின் அரசியல் யாப்புக்களும் இனப்பிரச்சனைகளும் என்ற தலைப்பில் வருகின்றது. இக்கட்டுரை செம்பாட்டான் என்ற பெயரில் சரிநிகரில் தொடர் கட்டுரையாக வெளிவந்தது. இதனை நூலுருவில் கொணிடுவர வேணடும் என பலரும் வற்புறுத்தியமையினாலேயே அதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன்.
இலங்கை இந்திய உறவுகள் எனும் இரண்டாவது கட்டுரை பண்டார நாயக்க சர்வதேச கல்வி நிலையத்தில் சர்வதேச விவகார பட்ட பின்னிலை டிப்ளோமா கட்கை நெறிக்கு நான் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரையின் ஒரு பகுதியாகும். அங்கு, “இந்திய வம்சா வழி மக்களின் பிரச்சனைகள் இலங்கை இந்திய உறவில் ஏற்படுத்திய தாக்கம்” என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து இருந்தேன். இலங்கை இந்திய உறவுகள் என்னும் இக்கட்டுரை பின்னர் மேலும் சில விடயங்கள் சேர்க்கப்பட்டு வீரகேசரியின் திங்கள் இணைப்பான இளங்கதிரில் தொடர்ச்சியாக வெளிவந்தது. அரசறிவியலை ஒரு பாடமாக கற்கும் கா.பொ.உயர் தர மற்றும் பல்கலைக் கழக உள்வாரி, வெளிவாரி பட்டதாரி மாணவர்களுக்கு இக்கட்டுரை பெரிதும் பயன்படும் என்றே நம்புகின்றேன்.
எனது கட்டுரைகளை பிரசுரித்த வீரகேசரிக்கும், சரிநிகருக்கும் எனது நன்றிகள். குறிப்பாக வீரகேசரி ஆசிரிய பீடத்தை சேர்ந்த பிரபாகரன், நிக்சன் ஆகியோருக்கும் சரிநிகர் ஆசிரிய பீடத்தை சேர்ந்த எஸ்.கே. விக்னேஸ்வரன், சிவகுமார் ஆகியோர்களுக்கும் நன்றிகள். சரிநிகருக்கு என்றும் நான் கடமைப்பட்டவன். என்னை அரசியல் கட்டுரைகள் எழுதுவதற்கு பயிற்சி அளித்ததே சரிநிகர் தான். ஒரு குறிக்கப்பட்ட காலம்வரை ஆசிரியபீடத்திலும் ஒருவனாக இருந்து செயற்பட்டேன். அக்காலம் மிகவும் மகிழ்ச்சிக்குரியது. எனது கட்டுரைகளை பிரதியாக்கம் செய்வதில் எனது மாணவிகளான செல்வி சுபதர்ஷனி சிலுவைமுத்து, செல்வி கவிதா செல்வரத்தினம் ஆகியோர் பங்களித்துள்ளனர். அவர்களுக்கும் எனது நன்றிகள்.
VIII -

Page 6
இன்நூலுக்கு நல்லதொரு அணிந்துரையை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஒய்வு நிலைப்பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் தந்துள்ளார். ஒரு தந்தையை போல் என் மீது அன்பு செலுத்தி எனக்கு வழிகாட்டி வருகின்றார். இந்நூலிலுள்ள பல சொற்பதங்களை மாற்றி எழுதுவதற்கும் அவர் உதவியுள்ளார். குறிப்பாக “இனக்குழும அரசியல்" என்ற சொற்பதம் அவரின் ஆலோசனையின் பெயரில் முன்வைக்கப்பட்ட சொற்பதமே. ஒரு பவ்விய உணர்வுடன் அவருக்கு நன்றி கூறுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
மலையார் மக்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு சுமார் இருபது வருட வரலாற்றை உடையது. 1977ம் ஆண்டு இன அழிப்பு நடவடிக்கைகளினால் அகதிகளாகி வன்னியில் LORDG)was மக்களின் ஒரு பகுதியினர் குடியேறிய போது அவர்களை குடியமர்த்தும் பணிகளில் நானும் ஒரு தொண்டனாக செயற்பட்டேன். ஒரு குடியேற்றத்திட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை பொறுப்பாளனாகவும் இருந்திருக்கின்றேன். அன்றிலிருந்து தொடர்பு வளர்ந்து வருகின்றது. கொழும்பில் ஆசிரிய தொழிலில் ஈடுபட்ட பொழுது எனது மாணவர்களின் பெரும்பான்மையாக இருந்தவர்கள் இந்திய வம்சாவழி மாணவர்களே!
மலையக மக்களைப்பற்றிய கட்டுரைகளை எழுதுவதற்கு சரிநிகர் எனக்கு களம் அமைத்து தந்தது. தற்போதும் எழுதிவருகின்றேன். அவர்களுடைய பிரச்சினைகள் தொடர்பான தொடர்ச்சியான தேடல்களிலும் ஈடுபட்டுள்ளேன். மலையக மக்களை பொருத்தவரை அவர்களுக்கு வெளியே நிற்க நான் விரும்பவில்லை. அவர்களில் ஒருவனாக நின்று அவர்களின் பிரச்சினைகளையும் அபிலாசைகளையும் தேடவே விரும்புகின்றேன். மிக்க உணர்வுடன் இன்நூலினை கோவிந்தன் தொடக்கம் சிவனு லஷ்மணன் வரை மலையக மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு காணிக்கையாக்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இறுதியாக இந்நூல் வெளிவருவதற்கு பிரதான காரணமாக இருந்தவர் “மூன்றாவது மனிதன்” சஞ்சிகையின் ஆசிரியரும் எனது நண்பருமான எம்.பெளஸர் ஆவார். நூலுக்கென ஒரு அருமையான அட்டைப்படத்தையும் தெரிவுசெய்துள்ளார். அவருக்கும் மூன்றாவது மனிதன் வெளியீட்டகத்திற்கும் எனது நன்றிகள்
“சந்திரா” சிஅயோதிலிங்கம்
குப்பிழான நல்லாயன கணினியர்மடம்
ஏழாலை கொட்டாஞ்சேனை
கொழும்பு 13
IX

சுதந்திரத்திற்கு பின்வந்த இலங்கையின் அரசியல்
யாப்புகளும்; இனப் பிரச்சினையும்.
அறிமுகம்.
இலங்கை சுதந்திரமடைந்து 52 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒவ்வொரு சுதந்திர தின விழாவும் தமிழ் மக்களுக்கு துக்க தினமாகவே உள்ளது. வடக்கு - கிழக்கில் தமிழரசுக்கட்சியும்; தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஆதிக்கம் செலுத்திய காலங்களில் சுதந்திரதினம் கரிநாளாகவே கொண்டாடப்பட்டது. தமிழரசுக் கட்சியின் ஏடான சுதந்திரன் இக்கரி நாளைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதுவது வழமையானதாகும். இன்று அவ்வாறான நிகழ்வுகள் இல்லாவிட்டாலும்; பாதுகாப்புக் கெடுபிடிகளினால் சுதந்திர தினத்தன்று தமிழ் மக்கள் தாமாக வீடுகளுக்குள் அடை பட்டுக் கொள்கின்றனர். வீடுகளிலும் அவர்கள் நிம்மதியாக இருக்கவிடாது சோதனை, தேடுதல் கெடுபிடிகள் போன்ற இம்சைகளுக்குமுகம் கொடுக்க வேண்டியுள்ளனர். முன்பு தமிழ் மக்கள் தாமாகத் துக்க தினம் கொண்டாடிய நிலைமை போய் தற்போது அரசாங்கம் கொண்டாட வைக்கின்றது.
இலங்கைக்கு கிடைத்த சுதந்திரம் உண்மையில் அனைத்து மக்களுக்குமுரிய சுதந்திரமல்ல. மாறாக சிங்கள மக்களுக்குரிய சுதந்திரமே இதனையே சுதந்திர தினவிழா தொடர்பில் தமிழ் மக்கள் படும் அல்லல்கள் எடுத்துக் காட்டுகின்றன. இது ஒரு பொதுப்படையான கருத்துத்தான். சுதந்திரத்தின் இனரீதியான அம்சத்தைக் காட்டவே இவ்வாறு குறிப்பிடுகின்றேன். மற்றப்படி 1943ல் கிடைத்த சுதந்திரம் அனைத்து சிங்கள மக்களுக்கும் கிடைத்த சுதந்திரம் என்று சொல்வது சரியானதல்ல. ஒருவகையில் இதை சிங்கள பெளத்தத்திற்கான சுதந்திரம் என்று சொல்வதே பொருத்தமானது. சிங்கள பெளத்த இனவாத வளர்ச்சிக்கு வழிகோலியது இச் சுதந்திரம் என்று சொல்லலாம். உண்மையில் சுதந்திரத்தின் பின்னரே தமிழ் மக்கள் மோசமாக ஒடுக்கப்படத் தொடங்கினர். இதனால்தான் இந்த சுதந்திரம் பேரினவாத சக்திகள் தமிழ் மக்களை ஒடுக்குவதற்குப் பெற்றுக் கொண்ட அனுமதிப்பத்திரம் (லைசன்ஸ்) என்று குறிப்பிடப்படுகின்றது.
சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின் வரலாறு என்பதே தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்ட வரலாறுதான். இவ் ஒடுக்கு முறைகள் பாதி சுதந்திரம் கிடைத்த டொனமூர் அரசியல் திட்டத் (1931)துடனேயே ஆரம்பித்துவிட்டன. எனினும் 1948ல் கிடைத்த முழுமையான சுதந்திரம் பேரினவாத சக்திகள் தமிழ் மக்களை ஒடுக்குவதற்கான சகல கதவுகளையும் திறந்து விட்டது. இலங்கை ஆட்சி முறை அரசியல் யாப்பிற்கு உட்பட்ட ஆட்சிமுறை என்ற வகையில் ஒடுக்கு முறைகள் அனைத்தும் அரசியல் யாப்புகளின் மூலம் கிடைக்கப்பெற்ற அதிகாரங்களைக் கொண்டே மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் இவ் ஒடுக்குமுறைகளுக்கு சுதந்திரத்திற்குப் பின்னரான அரசியல் யாப்புகளின் பங்கு எவ்வாறு இருந்தது? அவ்வதிகாரங்களைக் கொண்டு பேரினவாத சக்திகள் தமிழ் மக்களை எவ்வாறு ஒடுக்கினர் என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
S. w இலங்கையில் இனக்குழம 9s dui 65

Page 7
அரசியல் யாப்புகளின் வளர்ச்சியும் அதிகார
கைப்பற்றலும்.
நவீன ஆட்சி முறையில் அரசியல் யாப்புகளினூடாகவே அரசாங்கத்தின் அதிகாரங்கள்
பெறப்பட்டு பிரயோகிக்கப்படுகின்றன. மக்களின் அரசியல் அபிலாசைகளும் அரசியல் யாப்புகளினூடாகவே வெளிப்படுத்தப்படுகின்றன.
இலங்கையில் பிரித்தானியரிடமிருந்து இலங்கையர்களுக்கு அரசியல் அதிகார கைமாற்றம் அரசியல் யாப்பு மாற்றங்களினூடாகவே மேற்கொள்ளப்பட்டது. 1833ல் அறிமுகப்படுத்தப்பட்ட கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் இதனை முதன் முதலாக தொடக்கி வைத்தது. அச் சீர்திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட சட்ட சபையில் இலங்கையருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டதன் மூலம் இது தொடக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து குறு மக்கலம் சீர்திருத்தம் (1912) மானிங் சீர்திருத்தம் (1921) மானிங்-டிவன்சையர் சீர்திருத்தம் (1924) என்பவற்றினூடாக சட்டசபையில் இலங்கையரின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டதோடு அதிகாரக் கையளிப்பிலும் சிறுசிறு முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. தொடர்ந்து 1931 டொனமூர் அரசியல் திட்டத்துடன் "பாதிச் சுதந்திரமும்" 1947 சோல்பரி அரசியல் திட்டத்துடன் "முழுச் சுதந்திரமும்” வழங்கப்பட்டன.
இவ்வாறு அரசியல் யாப்புகளினூடாக அரசியல் கைமாற்றங்கள் நடைபெற்ற போது இலங்கையின் பல்லினத் தன்மை கவனத்திலெடுக்கப்பட்டு சமத்துவமாக இணைக்கப்பட்ட கூட்டிடம் அதிகாரங்கள் கையளிக்கப்படவில்லை. மாறாக எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பான்மையாக உள்ளனர் என்ற ஒரே ஒருகாரணத்திற்காக சிங்கள இனத்திடமே அதிகாரங்கள் கையளிக்கப்பட்டன. இதனை டொனமூர் அரசியல் திட்டத்திலேயே தெளிவாக அடையாளம் காணக்கூடியதாக இருந்தபோதும் சுதந்திரத்தின் பின்னரான அரசியல் யாப்புகளிலேயே இதன் முழுமையை தரிசிக்க முடிந்தது.
சுதந்திரத்தின் பின்னர் அரசியல் யாப்பு.
சுதந்திரத்தின் பின்னரான அரசியல் யாப்புகளாக சோல்பரி அரசியல் யாப்பு (1947) முதலாவது குடியரசு அரசியல் யாப்பு (1972) இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு (1948) என்பன கொள்ளப்படுகின்றன. சோல்பரி அரசியல் யாப்புசுதந்திரத்திற்கு சற்று முன்னர் உருவாக்கப்பட்ட போதும் சுதந்திர இலங்கையின் அரசியல் யாப்பாக இதுவே ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் சுதந்திரத்தின் பின்னரான யாப்பாகவே இதனையும் கொள்ளுதல் வேண்டும். சுதந்திரம் பெற்ற ஏனைய நாடுகளைப் போல புதிய யாப்புகள் எவற்றையும் சுதந்திர இலங்கை உருவாக்கவில்லை.
சோல்பரி யாப்பு (1947-1972)
இவ் யாப்பின் மூலமே பிரித்தானிய மாதிரியிலான ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சிமுறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனூடாக “பெரும்பான்மை மக்களின் விருப்பிலான அரசு” என்ற எண்ணக்கரு இலங்கை அரசியலில் புகுத்தப்பட்டது. இலங்கையைப் பொறுத்தவரை பெரும்பான்மை மக்களின் அரசு என்பது “சிங்கள மக்களின் அரசு’ என்ற அர்த்தத்தினையே
இலங்கையில் இனக்குழும அரசியல் 2.

கொண்டிருந்தது. இதன் மூலம் ஏனைய இனங்களின் அரசியல் அபிலாசைகள் புறக்கணிக்கப்படுவதற்கு அரசியல் அமைப்பு ரீதியாகவே வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
பெரும்பான்மை இனத்தினை வழிநடாத்தும் அரசியல் சிந்தனையாக பெளத்த சிங்கள பேரினவாத சிந்தனையே நிலவியமையால் அரசும் இச் சிந்தனையை செயற்படுத்தும் அரசாக மாறியது. அரசின் செயற்பாட்டு நிறுவனங்களான சட்டத்துறை நிர்வாகத்துறை, நீதித்துறை என்பன மிக விரைவாகவே பேரினவாத சிந்தனை கொண்ட நிறுவனங்களாக மாறின. யாப்பு ரீதியாக அரசியல் அதிகாரங்கள் இந்நிறுவனங்களுக்கு கிடைத்ததைத் தொடர்ந்து அவை மேலும் மேலும் பேரினவாத சிந்தனைகளினால் இறுகிச் செல்லும் நிலை வளர்ச்சியடைந்தது. தமிழர்களினதும் இந்திய அரசினதும் வேண்டுகோள்களினால் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட சிறுபான்மையோர் காப்பீடுகள் பேரினவாத அலைக்கு முன்னால் நின்று பிடிக்க முடியாமல் மூலையில் ஒதுங்கிக் கொண்டன. தமது பேரினவாத விஸ்தரிப்புக்கு அரசியல் யாப்பு இருந்த போதும் பேரினவாத சக்திகள் அதனை மீறியும் நடைமுறையில் செயற்பட்டன.
சோல்பரி அரசியல் யாப்பில் சட்டத்துறை.
சோல்பரி அரசியல் யாப்பில் சட்டத்துறையாக மக்கள் பிரதிநிதிகள் சபை,செனற் சபை என்ற இருசபைகளைக் கொண்ட பாராளுமன்றம் விளங்கியது. இதில் மக்கள் பிரதிநிதிகள் சபையே சட்ட ஆக்கத்தினைப் பொறுத்தவரை அதிகாரம் கொண்ட சபையாக விளங்கியது. இது 101 உறுப்பினர்களைக் கொண்டது. இதில் 95 பேர் தேர்தல் தொகுதிகளில் இருந்து ஐந்து வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் பொதுத் தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். மீதி 6 பேர் சிறுபான்மை இனங்களிலிருந்து மகாதேசாதிபதியினால் நியமிக்கப்பட்டனர்.
தேர்தல் தொகுதிகளை காலத்திற்குகாலம் உருவாக்கப்படும் தொகுதி நிர்ணய ஆணைக்குழு தீர்மானித்தது. இவற்றைத் தீர்மானிக்கும் போது 75,000 மக்களுக்கு ஒரு பிரதிநிதி அல்லது 1000 சதுர மைலுக்கு ஒரு பிரதிநிதி என்ற வகையில் தீர்மானிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. பல இனங்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பல அங்கத்தவர் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. இதன் படி ஆரம்பத்தில் கொழும்பு மத்திமூன்று அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டதோடு,கொழும்பு தெற்கு, பதுளை, பலாங்கொடை என்பன இரட்டை அங்கத்தவர் தொகுதிகளாக ஆக்கப்பட்டன. ஆனால் நடைமுறையில் பல இடங்களில் தமிழ் மக்களின் பிரதேசங்களை ஊடறுத்து தொகுதிகளின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டன. உதாரணமாக கொழும்பு மத்தி அங்கு வாழும் மூன்று இன மக்களும் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் வகையில் மூன்று அங்கத்தவர் தொகுதியாக மாற்றப்பட்டது. ஆனால் சோல்பரி அரசியல் திட்ட காலம் முழுவதும் ஒரு தமிழ்ப் பிரதிநிதி கூட அங்கிருந்து தெரிவு செய்யப்படவில்லை காரணம், அங்கு தமிழ்ப் பிரதேசம் இரு கூறாக்கப்பட்டு எல்லை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கொழும்பு மத்தி தேர்தல் தொகுதியின் எல்லையாக கொச்சிக்கடையையும், செல்லமஹால் தியேட்டர் சந்தியையும் இணைக்கும் ஜம்பட்டா வீதியே நிர்ணயிக்கப்பட்டது. இதனால் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கொட்டாஞ்சேனை பிரதேசம் கொழும்பு மத்தி தேர்தல் தொகுதியிலிருந்து தவிர்க்கப்பட்டது.
இலங்கையில் இனக்குழும அரசியல் لستيا

Page 8
வெள்ளவத்தைப் பகுதி தமிழர்களை உள்ளடக்கிய கொழும்பு தெற்கு தேர்தல் தொகுதியிலும் இதுவே நடைபெற்றது. அங்கிருந்தும் தமிழர் எவரும் தெரிவு செய்யப்படவில்லை. இப் போக்கு தமிழ் மக்கள் பிரதிநிதித்துவத்தினை வெகுவாகக் குறைத்தது. 1947 தேர்தலில் வடக்கு கிழக்கிலிருந்து 12 தமிழரும் மலையகத்திலிருந்து 7 தமிழருமாக 19 தமிழரே தெரிவுசெய்யப்பட்டனர்.
பேரினவாத சக்திகளுக்கு இக்குறைவான எண்ணிக்கை கூட கண்ணைக்குத்தியது. தொடர்ந்து வந்த காலங்களில் தமிழர் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. இந் நடவடிக்கைகள் மூன்று வகைகளில் மேற்கொள்ளப்பட்டன. முதலாவது வகையின் படி மலையக மக்களுக்கு எதிராக பிரஜாவுரிமைச் சட்டமும், வாக்குரிமைச் சட்டமும் கொண்டு வரப்பட்டு அவர்களின் பிரதிநித்துவம் அனைத்தும் பறிக்கப்பட்டன. சுதந்திரம் கிடைத்து ஒரு சில மாதங்களிலேயே இது மேற்கொள்ளப்பட்டது.
இரண்டாவது வகையின் படி தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு அவற்றில் சிங்களத் தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. அம்பாறை தேர்தல் தொகுதி 1959ம் ஆண்டும், சேருவில தேர்தல் தொகுதி 1977இலும் உருவாக்கப்பட்டன.
மூன்றாவது வகையின் படி தேர்தல் தொகுதிச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போது புதிய சிங்கள தேர்தல் தொகுதிகள் அதிகளவில் உருவாக்கப்பட்டன. 1959ம் ஆண்டு தேர்தல் தொகுதி சீர்திருத்தம் மேற் கொள்ளப்பட்டு பிரதிநிதிகளின் எண்ணிக்கை 151 ஆக அதிகரிக்கப்பட்டபோது சிங்களப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு தமிழ்ப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.
நியமன உறுப்பினர்கள்.
தேர்தலின் மூலம் போதிய பிரதிநிதித்துவத்தை பெறாத சிறுபான்மை இனங்களுக்கு பிரதிநிதித்துவத்தினை வழங்கும் முகமாகவே நியமன உறுப்பினர் முறை கொண்டு வரப்பட்டது. ஆரம்பத்தில் இதன் மூலம் சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டாலும் பிற் காலத்தில் அரசியலமைப்பு ஏற்பாடுகளை மீறி பெரும்பான்மை இனத்தவர்களும் இதன் மூலம் நியமிக்கப்படும் நிலை தோன்றியது. 1956 - 1960 காலப்பகுதிக்குNHA.M. கருணாரத்னவும்: 1960 -1965 காலப்பகுதிக்கு L.A. அபயரத்னாவும், 1970 - 1977 காலப்பகுதிக்கு MD.S. ஜெயவர்தனா S.S. குணத்திலக்கா என்பவர்களும் இவ்வாறு பெரும்பான்மை இனத்திலிருந்து நியமிக்கப்பட்டனர். (1972 முதலாவது குடியரசு அரசியல் யாப்பு மூலம் நியமன உறுப்பினர் முறை நீக்கப்பட்டாலும் பழைய உறுப்பினர்கள் தொடர்ந்திருந்தனர்)
வடக்கு - கிழக்கு தமிழர்களில் இருந்து 1970-1977 காலப்பகுதிக்கு மாத்திரம் M.C. சுப்பிரமணியம், செல்லையா குமாரசூரியர் ஆகிய இருவர் தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் உண்மையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக செயற்படவில்லை. மாறாக அரசின் பொம்மைகளாகவே செயற்பட்டனர். தமிழ்ப் பிரதிநிதிகளும் தங்களோடு உள்ளனர் எனக்காட்டவே இவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களைக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிரான செயல்களே முடுக்கி விடப்பட்டன. 1972 ஆண்டு முதலாவது குடியரசு அரசியல் யாப்பினை முழுச் சமூகமும் நிராகரித்த போது இவர்கள் இருவரும் அதனை ஆதரித்தனர். உண்மையில் தமிழ் நியமன
இலங்கையில் இனக்குழும அரசியல் 4

உறுப்பினர்கள் அன்று தொடக்கம் இன்றுவரை தமிழர் உரிமைகளைக் காட்டிக் கொடுப்பதற்கே பயன்படுத்தப்பட்டனர். குமாரசூரியரிலிருந்து இன்று தேசியப்பட்டியல் நியமன உறுப்பினர் லக்ஸ்மன் கதிர்காமர் வரை இதுவே தொடர்கின்றது.
செனற்சபை
பாராளுமன்றத்தின் 2வது சபையாக செனற் சபை விளங்கியது. இச் சபை தமிழர்களுக்கு போதிய பிரதிநிதித்துவத்தையும் பாதுகாப்பையும் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த வகையில் சிறுபான்மையோர் காப்பீடுகளில் ஒன்றாகவும் கருதப்பட்டது. ஆனால் நடைமுறையில் இது போதிய பிரதிநிதித்துவத்தையும் வழங்கவில்லை. பாதுகாப்பையும் வழங்கவில்லை.
இச்சபையில் 30 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். இவர்களில் 15 பேர் மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டனர். மிகுதி 15 பேர் பிரதமரின் சிபாரிசின் பேரில் மகாதேசாதிபதியினால் நியமிக்கப்பட்டனர்.
1947ஆம் செனற் சபையின் ஆரம்ப காலத்தில் எஸ். நடேசன், ஈ.எம்.பி. நாகநாதன் என்பவர்களும் 1951இல் பி. நாகலிங்கமும் வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்து மக்கள் பிரதிநிதிகள் சபையினால் தெரிவு செய்யப்பட்டனர். d. குமாரசுவாமி, சிற்றம்பலம் கார்டினன் முதலியார், ஏ.பி. ராஜேந்திரா, எஸ்.ஆர். கனகநாயகம் என்போர் பிரதமரின் சிபாரிசின் பேரில் நியமிக்கப்பட்டனர். முதலாம் அரசாங்க காலத்தில் தமிழர்களின் ஆதரவு ஆட்சியிலிருந்த ஐதேகவினருக்கு தேவையாக இருந்தமையினாலேயே ஓரளவு அங்கத்துவம் கிடைத்தது. பின் வந்த காலங்களில் இது வெகுவாகக் குறைந்தது.
1952 தொடக்கம் 1956 காலப்பகுதியில் கந்தையா வைத்தியநாதனும் 1956 - 1960 காலப்பகுதியில் ஜீ நல்லையாவும், 1601 - 1965 காலப்பகுதியில் கமாணிக்கமும் 1965 - 1970 காலப்பகுதியில் ஜேநீதிராஜா, எஸ்.நடராஜா என்போரும் பிரதிநிதிகள் சபையினால் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மக்கள் பிரதிநிதிகள் சபையில் அங்கம் வகித்த தமிழரசு கட்சி உறுப்பினர்களினால் தெரிவு செய்யப்பட்டவர்களாவர்.
முதலாம் அரசாங்கக் காலத்தின் பின்னர்; நியமனம் என்ற வகையில் எஸ். பரராஜசிங்கம் (1954) முதிருச்செல்வம் (1965), ஆர். ஜேசுதாசன் (1965) என்போர் மட்டும் நியமிக்கப்பட்டனர்.
மேற்கூறிய வகையில் பார்க்கும் போது பிரதிநிதித்துவம் என்ற வகையில் செனற்சபையில் போதிய பிரதிநிதித்துவத்தைதமிழர்களுக்கு வழங்கவில்லை என்றே கூறவேண்டும். பாதுகாப்பை பொறுத்தவரையிலும் கூட இது தமிழர்களுக்கு உதவவில்லை. தமிழர்களுக்கு எதிரான பிரஜாவுரிமைச் சட்டம் (1948) பாராளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டம் (1949), தனிச் சிங்களச் சட்டம் (1956), சிறிமா சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டம் (1967) என்பன கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டபோது இச்சபையும் தனது சம்மதத்தை வழங்கியது. சாராம்சத்தில் இச்சபையும்
பேரினவாதமயப் படுத்தப்பட்ட சபையாகவே காணப்பட்டது.
5 இலங்கையில் இனக்குழும அரசியல்

Page 9
சட்டவுருவாக்கம்
சட்டவுருவாக்கத்தின் போது சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் உருவாக்கப்படக் கூடாது என்பதற்காகவே அரசியலமைப்பில்,29ஆவது பிரிவு எனும் ஒரு பகுதி சேர்க்கப்பட்டது. இதன்படி ஒரு இனத்தையோ, மொழியையோ, மதத்தையோ, பாதிக்கின்ற சட்டங்களை பாராளுமன்றம் இயற்றக் கூடாது என்றும் அவ்வாறு இயற்றினால் மகாதேசாதிபதி அதற்கு கையெழுத்திட மறுக்கலாம் எனவும் கூறப்பட்டது.
ஆதனால் நடைமுறையில் இவ்வேற்பாடுகள் தூக்கி வீசப்பட்டன. இது அமுலிலிருக்கத்தக்கதாகவே தமிழர்களுக்கு எதிராக முன்னர் கூறப்பட்ட சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மகா தேசாதிபதியும் மறுப்பேதுமின்றி கையொப்பமிட்டார். இது பற்றி நீதிமன்றத்துக்குமுறையிட்டபோதும் அவை எவையும் வெற்றியைத் தரவில்லை. இது விடயத்தில் நீதிமன்றங்கள் எவ்வாறு நடந்து கொண்டன என்பதை பின்னர் விரிவாகப் பார்ப்போம்.
சோல்பரி யாப்பில் நிர்வாகத் துறை
சோல்பரி யாப்பின் படி பிரதமர் தலைமையிலான மந்திரிசபை நிர்வாகத்திற்கு பொறுப்பாக இருந்தது. மந்திரிமாரை நியமித்தல்,நீக்குதல், மாற்றுதல், மந்திரிமார்களுக்குரிய அமைச்சுக்களை என்பவற்றில் பிரதமரே பூரண அதிகாரம் வாய்ந்தவராக விளங்கினார். தமிழர்களையும் மந்திரி சபையில் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் அரசியல் அமைப்பில் சேர்க்கவில்லை. பிரதமர் விரும்பினால் சேர்க்கலாம் விருப்பமில்லா விட்டால் விடலாம் என்ற நிலையே இருந்தது.
முதலாம் அரசாங்கக் காலத்தில் பிரதான தமிழ்க் கட்சியாக அப்போது விளங்கிய அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களும் முக்கியமான சுயேட்சை உறுப்பினர்களும் அரசாங்கத்தில் சேர்ந்தமையினால், கணிசமானளவு தமிழர்கள் மந்திரிசபையில் சேர்க்கப்பட்டிருந்தனர். சிற்றம்பலம் தபால் தந்தி அமைச்சராகவும் சிசுந்தரலிங்கம் வர்த்தக அமைச்சராகவும் ஜிஜி பொன்னம்பலம் கைத்தொழில் மீன் பிடி அமைச்சராகவும் இவ்வாறு சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்களில் சி. சுந்தரலிங்கம் பிரஜாவுரிமைச் சட்டம் தொடர்பாக அரசாங்கத்துடன் முரண்பட்டபடியால் ஒரு வருடத்திலேயே இராஜினாமாச் செய்தார். ஏனையவர்களில் ஜி.ஜி பொன்னம்பலம் இரண்டாம் அரசாங்கக் காலத்திலும் பதவியைத் தொடர்ந்தார். இவரது காலத்திலேயே காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை என்பன உருவாக்கப்பட்டன.
1952 தொடக்கம் 1956 காலப்பகுதியில் ஜிஜி பொன்னம்பலம் கைத்தொழில், மீன்பிடி அமைச்சராகவும் ஜீநல்லையா தபால் தந்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். எனினும் இவர்கள் இருவரும் 1952-1953 காலப்பகுதியில் இராஜிநாமா செய்தனர். தொடர்ந்து 1953இல் பிரதமராக கொத்தலாவல பொறுப்பேற்றபோது எஸ்.நடேசன் தபால் தந்தி அமைச்சராகவும், சேர் கந்தையா வைத்தியநாதன் வீடமைப்பு சமூக சேவைகள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். 1956 ஐதேக தனிச் சிங்கள சட்டத்தை ஏற்றுக்கொண்டமையினால் இவர்கள் இருவரும் ஐதேகவிலிருந்து விலகியதோடு அமைச்சர் பதவியையும் இராஜினாமா செய்தனர்.
இலங்கையில் இனக்குழும அரசியல் 6

1956-1965 காலப்பகுதியில் பூரீல.சு.க. ஆட்சியிலிருந்தது. இக்காலத்தில் ஒரு தமிழராவது மந்திரி சபையில் சேர்க்கப்படவில்லை. தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தம்முடன் சேராவிட்டால் நியமன உறுப்பினர் மூலமோ, செனற் சபையின் மூலமோ சிலரைத் தெரிவு செய்து மந்திரி பதவிகளை வழங்கியிருக்கலாம். அரசாங்கம் விருப்பமற்று இருந்தமையினால் இதனை மேற்கொள்ளவில்லை.
1965-1968 காலப்பகுதியில் தமிழரசுக் கட்சி அரசாங்கத்துடன் சேர்ந்திருந்தமையினால் மு. திருச்செல்வத்திற்கு மட்டும் உள்ளுராட்சி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 1970-1977 காலப்பகுதியில் செல்லையா குமாரசூரியருக்கு தபால் தந்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அமைச்சர் பதவிகளை வழங்கும்போது கூட ஜி.ஜி பொன்னம்பலத்திற்கு பின்னர் தமிழ்ப் பகுதிகளை அபிவிருத்தி செய்யக் கூடிய முக்கிய அமைச்சுப் பதவிகளை வழங்குவதை ஆட்சியாளர்கள் தவிர்த்துக்கொண்டனர். அமைச்சர்களாக இருந்தவர்களில் கூட ஜி.ஜி. பொன்னம்பலம், முதிருச்செல்வம் என்போர் மட்டுமே தமக்குப் பின்னால் கட்சியினதும் மக்களினதும் பலம் இருந்தமையினால் சுயாதீனமாக தொழிற் பட்டனர். ஏனையவர்கள் அரசாங்கக் கட்சியின் உறுப்பினர்களாக இருந்தமையினால் சுயாதீனமாக செயற்படவில்லை. அரசாங்கத்தின் வெறும் பொம்மைகளாகவே செயற்பட்டனர்.
மந்திரிசபைப் பதவிகள் ஒருபுறமிருக்க நிர்வாகத்துறையின் கட்டமைப்பு அனைத்தும் இவ் அரசியல் திட்ட காலத்தில் பேரினவாதமயப்படுத்தப்பட்டன. இது அமைச்சுக்கள்,திணைக்களங்கள் அரசாங்க செயலகங்கள் என்ற வகையில் தொடர்ந்தது. இதனால் முழு நிர்வாக இயந்திரமும் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை முடுக்கிவிட்டன. விவசாய அமைச்சு தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை முடுக்கிவிட்டது. விளைவு டொனமூர்திட்ட காலத்தில் மெதுவாக நடைபெற்று வந்த குடியேற்றத் திட்டங்கள் சுதந்திரத்தின் பின்னர் விரைவாக செயற்பட்டன. திருகோணமலையில் அல்லை, கந்தளாய், மொறவேவாத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. வவுனியாவில் பாவற்குள குடியேற்றத் திட்டம் உருவாக்கப்பட்டது.
தமிழ் பிரதேசங்களில் சிங்கள நிர்வாக மாவட்டங்களை உருவாக்கும் முயற்சி நடைபெற்றது. இதன் நிமித்தம் 1959 இல் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு தெற்கு பிரதேசம் பிரிக்கப்பட்டு அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்திலும் தமிழ் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருந்தபோதும் சிங்கள குடியேற்ற மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அம்பாறையே அம் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது. மாவட்ட அரச அலுவலகங்கள் அனைத்தும் சிங்கள மொழியில் மட்டும் மேற்கொள்ளப்பட்டன.
அரசவேலை வாய்ப்புக்களை பொறுத்தவரை இனரீதியான பாரபட்சம் காட்டக் கூடாது என்பதற்காக சோல்பரி அரசியல் யாப்பில் அரசாங்க சேவை ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. சிறுபான்மையோர் காப்பீடாகவும் இது கருதப்பட்டது. 1956ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர் அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்கான விதிகள் மூலைக்குள் தள்ளப்பட்டன. வேலை வாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு சிங்களவர்கள் அதிகளவில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
7 Soros இனக்குழும அரசியல்

Page 10
பல சந்தர்ப்பங்களில் அரசியலமைப்புச் சட்டம் மாத்திரமல்ல பாராளுமன்ற சட்டங்களும் காற்றில் பறந்தன. உதாரணமாக 1958ஆம் ஆண்டு தமிழ் மொழி உபயோகச் சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும் நடைமுறையில் இதனை செயற்படுத்துவதற்கான முயற்சிகளில் நிர்வாகத்துறை ஊக்கமெதனையும் மேற்கொள்ளவில்லை.
சோல்பரி யாப்பில் நீதித்துறை
சட்டத்துறையும் நிர்வாகத்துறையும் மக்களுக்கு தீங்கிழைக்கின்ற போது தடுத்து நிறுத்தும் நிறுவனமாகவே ஒருநாட்டின் நீதித்துறை தொழிற்பட வேண்டும்.
இலங்கையைப் பொறுத்தவரை இது தலைகீழாக இருந்தது. நீதித்துறையும் பேரினவாத மயப்பட்டிருந்ததால் இதிலிருந்தும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
விசாரணைகளின் போது சட்ட ஏற்பாடுகளுக்கு விளக்கம் அளிக்கும் பொறுப்பு நீதிமன்றங்களிடமிருந்தது. இங்கு இலங்கை நீதிமன்றங்கள் ஒருபோதும் தமிழர்களுக்கு சார்பாக நடந்து கொள்ளவில்லை. இதுபற்றி ஒருதடவை நீலன் திருச்செல்வம்"சட்டங்களுக்கு விளக்கம் அளிப்பதில் இலங்கை நீதிமன்றங்கள் தமிழர்களுக்கு சார்பாக நடந்து கொள்வதில்லை” என குற்றம் சாட்டியிருந்தார்.
உதாரணத்திற்கு தனிச் சிங்கள சட்டம் சம்பந்தமான வழக்கினை குறிப்பிடலாம். தனிச்சிங்களச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட கோடீஸ்வரன் என்னும் எழுதுவினைஞர் யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அரசியலமைப்பின் 29 ஆவது பிரிவினை மீறியதாக தனிச் சிங்களச் சட்டம் இருப்பதனால் அது செல்லுபடியற்ற சட்டம் என்று வாதிடப்பட்டது. வாதத்தினை ஏற்றுக்கொண்டநீதிபதி கோடீஸ்வரனுக்கு சார்பாகத் தீர்ப்பு வழங்கினார். அரசாங்கம் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கினை மேன் முறையீடு செய்தது. அங்கு அரசாங்கத்திற்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டது. மக்களினால் உருவாக்கப்பட்ட பாராளுமன்றம் மக்களின் நிர்வாக நடவடிக்கைகளுக்குத் தேவையான சட்டங்களை உருவாக்கும் உரிமையை உடையது என்றே அங்கு அரசதரப்பினால் வாதிடப்பட்டது. இறுதியில் வழக்கு பிரித்தானிய கோமறைக் கழகத்திற்கு சென்றது. அங்கு திரும்பவும் கோடீஸ்வரனுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்ட போது அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டது. அது விடயத்தில் சிறுபான்மையினரின் காப்பீடாக கருதப்பட்ட கோமறைக் கழகமும் போதிய பாதுகாப்பினை தமிழ் மக்களுக்கு கொடுக்கவில்லை.
எனவே மேற்கூறியவைகளைக் கொண்டு பார்க்கும் போது சுதந்திரத்தின் பின்னரான முதலாவது அரசியல் யாப்பே தமிழ் மக்களை ஒடுக்குவதற்கான வழிகளை திறந்துவிட்டது என தெளிவாக பார்க்க முடிகிறது. இதற்குப் பின்னர் வந்த அரசியல் யாப்புகள் இரண்டும் மேற்கொண்ட பணி தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு சோல்பரி அரசியல் யாப்பில் பெயரளவில் காணப்பட்ட தடைகளையும் நீக்கியதோடு மேலும் மேலும் ஒடுக்குவதற்கும் அவற்றிற்கு அரசியல் யாப்பு அந்தஸ்துகளை வழங்குவதற்கும் வழிவகைகளை தேடிக் கண்டுபிடித்தமை தான்.
இலங்கையில் இனக்குழும அரசியல் ー[ ]

1972 முதலாவது குடியரசு அரசியலமைப்பு.
1972 ஆம் ஆண்டு மே 22ம் திகதி சிறிமா அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு அமுலுக்கு வந்த நாள். இலங்கை அரசியலில் தமிழ் மக்களுக்கு மரண சாசனம் எழுதிய நாள் அது
தமிழர் விடுதலைக் கூட்டணிஇதை ஒட்டி மூன்று தினங்கள் துக்கதினமாக அனுஷ்டிக்கும்படி மக்களை வேண்டிக் கொண்டது. இதன் நிமித்தம் தமிழ் பிரதேச வீதிகள், நகரங்கள், பாடசாலைகள், அலுவலகங்கள் எல்லாம் ஆளரவமற்று வெறிச்சோடிக் கிடந்தன. படையினரின் வாகனங்கள் மட்டும் ஆங்காங்கே சென்று கொண்டிருந்தன.
கறுப்புக் கொடிகள் வீதிகளுக்கு மேலாகப் பறந்து கொண்டிருந்தன. அக் காட்சி தமிழ் மக்களின் வாழ்வும் இருளில் தான் உள்ளது என்பதை வெளிக்காட்டியது.
மக்கள் அனைவர் மத்தியிலும் எதிர்காலம் பற்றிய சோகம் ஆத்திரமாக கொந்தளித்துக் கொண்டிருந்தது. இந்த அரசியலில் இனிமேல் வாழமுடியாது தனிநாடுதான் ஒரேயொரு தீர்வு என இளைஞர்கள் தங்களுக்குள் சபதமெடுத்துக் கொண்டனர்.
1970ம் ஆண்டு தேர்தலில் சிறிமா தலைமையிலான் சிறீலங்கா சுதந்திரக் கட்சிஇடதுசாரிக் கட்சிகள் கூட்டணி முதன் முதலாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கைப்பற்றியது. இதன் மூலம் சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமல் எக்கட்சியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறமுடியாது என்ற சோல்பரியின் எதிர்பார்ப்பு பொய்யாகியது.
இப்பெருவெற்றிபேரினவாதிகளை உஷாராக்கிவிட்டது. புதிய அரசியல் திட்டம் மூலம் தமது பேரினவாத அபிலாசைகளை முழுமையாக்க அவர்கள் முனைந்தனர். இடையில் 1971ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சி அவர்களைச் சிறிது தடுத்தாலும் 1972இல் அவர்கள் தமது முயற்சிகளில் வெற்றியடைந்தனர்.
அரசியல் திட்டத்தினை உருவாக்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் அனைவரும் அரசியல் நிர்ணய சபையாக கொழும்பு நவரங்கஹல மண்டபத்தில் கூட்டப்பட்டனர். இக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சி தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்து வழங்குதல், மதசார்பற்ற அரசாக இலங்கை அரசைப் பிரகடனப்படுத்துதல், அனைவருக்கும் பிரஜாவுரிமை வழங்குதல் என்பவற்றை தமது தரப்புப் பிரேரணைகளாக முன்வைத்தது. இவை ஆலோசனைக்கு கூட எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்கப்பட்டன. தமிழரசுக் கட்சி அரசியல் நிர்ணய சபையை பகிஷ்கரித்து வெளியேறியது.
"இரு மொழி ஒரு நாடு” பிரச்சாரகர் கொல்வின் ஆர். டி. சில்வா அரசியல் திட்ட வரைவுக்குழுவின் தலைவரானார். இவரது தலைமையில் வரையப்பட்ட பேரினவாத அரசியல் திட்டமே 1972 மே 22 இல் அமுலுக்கு வந்தது.
நோக்கம்: இவ் அரசியல் திட்டத்தினை உருவாக்கியவர்களின் நோக்கம் மிகவும் தெளிவாக இருந்தது. ベ சோல்பரிஅரசியல் திட்டம் பேரினவாத அபிலாசைகளை செயற்படுத்துவதற்கான அடிப்படைகளை
9 இலங்கையில் இனக்குழம orrétt

Page 11
வழங்கியிருந்தது. அதற்கேற்ற வகையிலேயே சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை என்பன உருவாக்கப்பட்டிருந்தன. புதிய அரசியல் திட்டத்தினை உருவாக்கியவர்கள் அதனை முழுமையாக்கவே முனைந்தனர். இந்த வகையில் முழுமையாக்குவதற்கு தடையாக சோல்பரி அரசியல் திட்டத்தில் உள்ள ஏற்பாடுகளை நீக்குவதும், பேரினவாத அரசைப்பலப்படுத்தும் வகையில் புதிய விடயங்களைச் சேர்ப்பதுவுமே இவர்களின் நோக்கமாக இருந்தது.
சோல்பரி அரசியல் திட்ட ஏற்பாடுகளை நீக்குதல்
சோல்பரி அரசியல் திட்டத்தில் தமிழ் மக்களின் காப்பீடுகளாக அரசியலமைப்பின் 29வது பிரிவு, செனற் சபை, நியமன உறுப்பினர்கள்,கோமறைக் கழகம், அரசாங்க சேவை நீதிச் சேவை ஆணைக்குழுக்கள் என்பன கருதப்பட்டன. இவை நடைமுறையில் காப்பீடுகளாக இல்லாதபோதும் பெயரளவிலாவது காப்பீடுகளாக இருந்ததோடு தமிழ் மக்கள் தங்கள் பக்க நியாயங்களை பிரச்சாரப்படுத்துவதற்கு உதவியாகவும் அமைந்தன. இந்த வகையில் அரசியலமைப்பின் 29வது பிரிவு, கோமறைக் கழகம், அரசாங்க சேவை, நீதிச் சேவை ஆணைக்குழுக்கள் என்பன பெரிதும் துணை புரிந்தன. தமிழரசுக் கட்சியின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கும் இவை வலு சேர்ப்பனவாக அமைந்திருந்தன. சர்வதேச ரீதியில் தமிழ் மக்களின் பிரச்சாரம் எட்டுவதற்கும் வழிவகுத்தன.
இவை அனைத்தும் புதிய அரசியல் திட்டத்தில் நீக்கப்பட்டன. பாராளுமன்ற சட்டங்களை மறு பரிசீலனை செய்யும் வகையில் நீதிமன்றங்களுக்கு இருந்த நீதிப்புனராய்வு அதிகாரமும் அடியோடு நீக்கப்பட்டது. இப்பிரச்சினைகள் நீதிமன்றத்திற்கு வந்தால் கூட தமிழர்கள் அதனை ஒரு பிரச்சாரமாக பயன்படுத்துவார்களென பேரினவாதிகள் பயந்திருந்ததேஇந்நீக்கத்திற்கான காரணம்
எனினும் இவற்றை நீக்குவதற்கு அவர்கள் வெளிப்படையாகக் கூறிய காரணம் பெரிதும் வேடிக்கையானது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சட்டநிறுவனத்துக்கு மேலாக வேறு ஒன்றும் இருக்கக் கூடாது என்பதே அக் காரணமாகும். அவ்வாறு இருப்பது மக்களாட்சி கோட்பாட்டிற்கு எதிரானது என்பது அவர்களின் நியாயமாக இருந்தது. இங்கு அவர்கள் மக்கள் எனக் கருதியது சிங்கள மக்களையே ஒழிய ஏனைய இனத்தவர்களையல்ல.
பேரினவாத அபிலாசைகளை முழுமையாக்கும் வகையில் புதிய விடயங்களைச் சேர்த்தல்
இந்த நோக்கத்தில் முதன்மையானது சிங்கள மொழி சம்பந்தமான ஏற்பாடுகளாகும். இதன் மூலம் சிங்கள மொழி அரச கரும மொழி என்பதற்கு "அரசியலமைப்பு அந்தஸ்து" கொடுக்கப்பட்டது. 1956ல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டத்தின் மூலம் சிங்கள மொழி அரசகரும மொழியாக மாற்றப்பட்டாலும் அது பாராளுமன்ற சட்டமாக இருந்ததே தவிர அரசியலமைப்புச் சட்ட அந்தஸ்தினைப் பெற்றிருக்கவில்லை. எப்போதும் பாராளுமன்ற சட்டம் அரசியலமைப்பின் சட்டத்தினை விட அந்தஸ்து குறைந்தது ஆகும். பாராளுமன்ற சட்டங்களை சாதாரண பெரும்பான்மையுடன் மாற்றலாம் ஆனால் அரசியலமைப்புச் சட்டங்களை அவ்வாறு
மாற்ற முடியாது. (Qရor@fယံ இனக்குழும அரசியல் 10

அரசியல் திட்டத்தின் 7ம் பிரிவு இதுபற்றி கூறும் போது “இலங்கையின் அரசகரும மொழி 1956ம் ஆண்டில் 33ம் இலக்க அரசகரும மொழிச் சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளவாறு சிங்கள மொழியாதல் வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை தமிழ் மொழியின் உபயோகம் 1958ம் ஆண்டில் 28ம் இலக்க தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற்கு இணங்க இருத்தல் வேண்டுமெனவும் கூறப்பட்டது. எனினும் இவை அரசியலமைப்பின் ஒரு ஏற்பாடாக பொருள் கொள்ளக் கூடாது என்றும் துணை நிலை சட்டமாகவே ஏற்றுக் கொள்ள வேண்டுமெனவும் மேலும் கூறப்பட்டிருந்தது. இந்நிலை சிங்கள மொழி அரச கரும மொழி என்பதற்கு அரசியல் திட்ட அந்தஸ்து கொடுக்க விரும்பிய ஆட்சியாளர்கள் தமிழ் மொழியின் உபயோகத்திற்குக் கூட அரசியல் திட்ட அந்தஸ்து கொடுக்க விரும்பாமையையே காட்டியது.
இங்கு தமிழ் மொழியின் உபயோகம் கூட வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குள்ளேயே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு வெளியே வாழும் தமிழ் பேசும் மக்கள், தமிழ் மொழியில் தமது அரசகருமங்களை ஆற்றக் கூடிய நிலை இருக்கவில்லை. இவ்விடங்களில் சாதாரண கிராம சேவையாளர்களிடம் நடைபெறும் அலுவல்கள் தொடக்கம், பொலிஸ் நிலையம், உதவி அரச அதிபர் அலுவலகம், அரசாங்க அதிபர் அலுவலகம் போன்ற அனைத்திலும் கருமங்கள் தனிச் சிங்களத்திலேயே நடைபெற்றன.
வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை அவர்களில் பொரும்பாலானவர்களுக்கு சிங்கள மொழியைப் பேசமுடியுமே தவிர எழுத வாசிக்கத் தெரியாது. இந் நிலையில் சிங்கள மொழியில் தமது கருமங்களை நிறைவேற்ற அவர்கள் பெருமளவு அல்லல்பட வேண்டியவர்களாக இருந்தனர். அமைச்சுக்கள், திணைக்களங்கள் என்பவற்றின் நிலை பற்றிக் கூறவே தேவையில்லை. அவை முழுமையாகவே சிங்கள மயமாக்கப்பட்டிருந்தன.
வடக்கு கிழக்கில் கூட வடக்கில் மட்டுமே தமிழ் மொழியின் உபயோகம் ஓரளவு முன்னேற்றகரமாக இருந்தது. அங்கும் வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்கு உதவி அரசாங்க அதிபர் அலுவலகம் சிங்களத்திலேயே நடைபெற்றது. கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தமிழ் மொழியின் உபயோகம் ஓரளவு அமுலிலிருந்தது. அம்பாறை மாவட்டத்தில் முழுமையாக சிங்கள மொழியிலேயே அரச கரும செயற்பாடுகள் நடைபெற்றன. திருமலை மாவட்டத்திலும் பெரும்பாலான இடங்களில் இந்நிலையே தொடர்ந்தது.
மேலும் நடைமுறையிலுள்ள துணை நிலைச் சட்டங்கள் அனைத்தும் சிங்களத்திலும் தமிழ் மொழிபெயர்ப்பிலும் உடனடியாக வெளியிடப்படல் வேண்டும் எனவும் அதனை தேசிய அரசுப் பேரவை ஏற்றுக் கொண்ட பின்னர் சிங்கள மொழியில் உருவாக்கப்பட்ட வற்றை மட்டும் சட்டமாகக் கொள்ளுதல் வேண்டும் எனவும் ஏனையவற்றை மொழிபெயர்ப்பாக கொள்ளுதல் வேண்டுமென்றும் கூறப்பட்டது. மூலச் சட்டங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் கூட சிங்களத்திலுள்ள சட்டங்களே மேலானதாகக் கருதப்படும் எனவும் கூறப்பட்டது.
இங்கும் தமிழ் மொழிக்கு சட்ட அந்தஸ்து இல்லாமல் மொழிபெயர்ப்பு அந்தஸ்தே
11 இலங்கையில் இனக்குழும அரசியல்

Page 12
கொடுக்கப்பட்டது. இவை நடைமுறையில் பயன் குறைந்தவை. ஏனெனில் சட்டப் பிணக்குகள் தோன்றும் போது மொழிபெயர்ப்பிலுள்ள சட்டங்கள் வலுகுறைந்தவையாகவே கருதப்படுகின்றன.
மொழி சம்பந்தமான ஏற்பாடுகளில் மூன்றாவது நீதிமன்ற மொழிசம்பந்தமானது. இதன்படி "நீதியை நிர்வகிப்பதற்கு சட்டத்தினால் தத்துவமளிக்கப்பட்டுள்ள நீதிமன்றங்கள், நியாய சபைகள், ஏனைய நீதி நிறுவனங்கள், 1958ம் ஆண்டின் 10ம் இலக்க இணக்க சபைகள் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட இணக்க சபைகள் ஆகிய அனைத்தினதும் மொழியாக இலங்கை முழுவதிலும் சிங்கள மொழி இருத்தல் வேண்டும் எனவும் இதன்படி வழக்குரைகள், நடவடிக்கைகள், தீர்ப்புகள், கட்டளைகள், நீதிமுறைச் செயல்கள், சட்டநிர்வாகச் செயல்கள் என்பவற்றின் பதிவேடுகள் அனைத்தும் சிங்கள மொழியாக இருத்தல் வேண்டும் எனவும் வருங்காலத்தில் உருவாக்கப்படும் எந்த நீதிநிறுவனங்களுக்கும் மேற்கூறிய ஏற்பாடுகள் பொருத்தமுடையவையாக இருத்தல் வேண்டும்” எனவும் கூறப்பட்டது.
மேற்கூறிய நிறுவனங்கள் தொடர்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் முஸ்லிம்கள் தொடர்பான காதி நீதி மன்றங்களிலும், வழக்குரைகள், விண்ணப்பங்கள், பிரேரணைகள், மனுக்கள் என்பனவற்றை தமிழில் சமர்ப்பிக்கலாம் எனவும் நடவடிக்கைகளில் தமிழில் பங்குபற்றலாம் எனவும் கூறப்பட்டது. இத்தகைய எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பதிவேடுகளின் பொருட்டு சிங்கள மொழிபெயர்ப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டது.
இங்கு தமிழ் மொழிக்கு நீதிமன்ற மொழி அந்தஸ்து கொடுக்காத அதே வேளை வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் பேசும் மக்கள் தமது நீதிமன்ற நடவடிக்கைகளை தமிழில் நடாத்த முடியாத நிலையும் ஏற்பட்டது. வடக்கு கிழக்கில் கூட கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் இம்முறை பின்பற்றப்பட்டது. ஏனைய இரு மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் சிங்கள மொழியிலேயே நீதிமன்ற கருமங்கள் நடைபெற்றன.
மதம
இவ் அரசியல் திட்டத்தின் மூலம் முதன் முதலாக பெளத்த மதம் அரச மதமாக்கப்பட்டது. அரசியல் திட்டத்தின் 6ம் பிரிவு பெளத்தமதம் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
“இலங்கைக்குடியரசு பௌத்த மதத்திற்குமுதன்மைத்தானம் வழங்குதல் வேண்டும். ஏனைய மதங்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கின்ற அதேவேளை பெளத்த மதத்தைப் பாதுகாத்தலும், பேணிவளர்த்தலும் அரசின் கடமையாதல் வேண்டும்”
இங்கு பல மதங்கள் வாழும் நாட்டில் பெளத்த மதத்திற்கு மட்டுமே முதன்மை இடம் வழங்க வேண்டும் எனக் கூறியதுமல்லாமல் அரசு, பெளத்த மதத்தினை மட்டுமே பேணிப் பாதுகாக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. அதே வேளை ஏனைய மதங்களுக்கு அதன் மத உரிமைகளுக்கு மட்டுமே உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே தனிச் சிங்களச் சட்டத்தின் மூலம் இலங்கையின் பன்மொழித் தன்மை நிராகரிக்கப்பட்டிருந்தது. இவ் ஏற்பாட்டின் மூலம் இலங்கையின் பன் மதத்தன்மையும்
இலங்கையில் இனக்குழும அரசியல் - 12

நிராகரிக்கப்பட்டிருந்தது. முடிவாக சகல விடயங்களையும் “சிங்கள பெளத்த' என்ற ஒற்றை பரிமாணத்தின் மூலம் நோக்குகின்ற நிலை தோற்றம் பெற்றது.
அரசாங்க சேவை, நீதிச்சேவை
அரசாங்க சேவை; நீதிச் சேவை என்பனவற்றில் நியமனம், இடமாற்றம், பதவியுயர்வு, பதவி நீக்கம் போன்றவற்றை மேற்கொள்வதற்காக சோல்பரி அரசியல் திட்டத்தில் அரசாங்க சேவை ஆணைக் குழு, நீதிச் சேவை ஆணைக்குழு என்பன உருவாக்கப்பட்டிருந்தன. இச்சேவைகளில் இன, மத, மொழி, அரசியல் ரீதியான பாரபட்சங்கள் காட்டக் கூடாது என்பதற்காகவும் இச் சேவைகளை அரசியல் அழுத்தங்களிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதற்காகவுமே இவ் ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
புதிய அரசியல் திட்டம் இப்பொறுப்புக்கள் அனைத்தையும் அமைச்சரவையின் மீது பொறுப்பாக்கியது. இது விடயத்தில் அமைச்சரவைக்கு ஆலோசனை கூறுவதற்காக மாத்திரம் அரச சேவை ஆலோசனைச் சபை, அரசசேவை ஒழுங்காற்றுச்சபை, நீதிச் சேவை ஆலோசனைச் சபை, நீதிச் சேவை ஒழுக்காற்றுச்சபை என்கின்ற சபைகள் உருவாக்கப்பட்டிருந்தன.
பேரினவாத மயப்படுத்தப்பட்ட அவர்களையே பெரும்பான்மையாகக் கொண்ட அமைச்சரவையிடம் இப்பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டமையானது அவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதைக் கூறித் தெரிய வேண்டியதில்லை. இதைப்பற்றி அரசியல் திட்ட பிரயோகத்தின் கீழ் விரிவாகப் பார்ப்போம்.
அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும்
இலங்கையின் அரசியல் திட்ட வரலாற்றில் "அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும்” என்ற பகுதி இவ் அரசியல் திட்டத்தின் மூலமே முதன்முதலாக சேர்க்கப்பட்டிருந்தது. மக்களின் பல்வேறு உரிமைகள் அடங்கிய ஒன்பது ஏற்பாடுகள் இதில் அடங்கியிருந்தன.
இவ் அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் இலங்கை பிரஜைகளுக்கு மட்டுமென மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலை அன்று நாடற்றவர்களாக இருந்தஇலட்சக்கணக்கான இந்திய வம்சாவழி மக்கள் இவற்றின் பயன்பாட்டினைப் பெறுவதிலிருந்தும் தடுத்திருந்தன.
மேலும் இவ் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரங்களையும் பிரயோகிக்கும் போதும் செயற்படுத்தும்போதும் தேசிய ஐக்கியம், ஒருமைப்பாடு,தேசிய பாதுகாப்பு,தேசிய பொருளாதாரம், பொது மக்கள் பாதுகாப்பு, பொதுமக்கள் சுகாதாரம், பொது மக்கள் ஒழுங்கு, பொதுமக்கள் ஒழுக்கம், அரச கொள்கை கோட்பாடுகளுக்கு பயன்கொடுத்தல், என்பவற்றின் நன்மை கருதி அவசரகால சட்டம் மூலம் கட்டுப்படுத்தப்படலாம் எனவும் கூறப்பட்டது.
உண்மையில் இப்பகுதியில் கூறப்பட்ட சில விடயங்கள் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பானதாக இருந்தபோதும் குறிப்பாகக் கைதுசெய்தல்; அரசவேலைவாய்ப்புகளில் இனரீதியான பாரபட்சம் காட்டக் கூடாது என்பன இருந்தபோதும் அடிப்படை உரிமைகள் தொடர்பான மட்டுப்பாடுகள் அவற்றைத் தடைசெய்திருந்தன. a
13. இலங்கையில் இனக்குழும அரசியல்

Page 13
இவ் அரசியல் திட்டக்காலம் முழுவதும் அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தமையினால் தமிழ் மக்கள் இவ் விடயங்களில் அசையவே முடியாதநிலையில் இருந்தனர். இவற்றைப் பின்னர் பார்ப்போம்.
அரசியலமைப்பும் பிரயோகமும்
பேரினவாதிகள் தமது அரசியல் அபிலாசைகளை தீர்த்துக்கொள்வதற்காக அரசியலமைப்பின் பிரயோகத்திலேயே எப்போதும் கவனமாக உள்ளனர். இதனைப் பொறுத்தவரை அவர்கள் நான்கு அணுகுமுறைகளை மேற்கொண்டனர்.
1. அரசியலமைப்பு ஏற்படுத்திக் கொடுத்த வழிமுறைகளினூடாக தமது அபிலாஷைகளைத்
தீர்ப்பது 2. அரசியலமைப்பு வழி கொடுக்காத சந்தர்ப்பங்களில் அதில் உள்ள ஒட்டைகளினூடாக
அபிலாஷைகளைத் தீர்ப்பது 3. அரசியலமைப்பு ஏற்பாடுகளின் ஒட்டைகளும் சரிவராதபோது அரசியலமைப்பினை
மீறி அபிலாஷைகளைத் தீர்ப்பது
4 அரசியலமைப்பில் சிறுபான்மையோர் நலன் காக்கும் ஏற்பாடுகள் ஏதாவது இருப்பின்
பேரினவாத அரசஇயந்திரத்தினைக் கொண்டு அதனை நடைமுறையில் செயற்படவிடாது தடுப்பது என்பவையாகும்.
இவற்றில் முதலாவதைத் தவிர்ந்த ஏனையவை பெருமளவில் நிர்வாகத் துறையிலேயே மேற்கொள்ளப்பட்டன. ஏனெனில் சட்ட நீதித் துறைகளில் இவை கேள்விக்குள்ளாக்கப் படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமானதாகும். ஒப்பீட்டு ரீதியில் நிர்வாகத் துறையில் இவை கேள்விக்குள்ளாக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அரிதாகும்.
சட்டத்துறையில் அரசியலமைப்பின் பிரயோகம்.
பேரினவாத மேலாதிக்கத்தினை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பிலேயே போதுமானளவு இருந்துள்ளமையினால்; அதற்காகப் புதிய சட்டங்களை சட்டத்துறைக்கு நிறைவேற்றவேண்டியதேவை அரசுக்குஇருக்கவில்லை. அவர்களுக்குஇருந்த ஒரே ஒரு பிரச்சினை அரசியலமைப்பின் அடிப்படை உரிமைப் பகுதியில் இருந்த சில ஏற்பாடுகள் தான் அன்றைய காலகட்ட சூழ்நிலைகளும் இப்பிரச்சினைகளை கூர்மைப்படுத்தியிருந்தன.
1970ஆம் ஆண்டுகொண்டுவரப்பட்ட தரப்படுத்தல், 1972ஆம் ஆண்டு பேரினவாத அரசியல் திட்டம் என்பன தமிழ் மக்களை அரசிலிருந்து விலக்கி தனி நாட்டுப் போராட்டத்தினை முன்னெடுக்கும் படி தூண்டின. குறிப்பாக தமிழ் இளைஞர்கள், அரசியல் ரீதியான போராட்டங்களுக்கு அப்பால், ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடத் தொடங்கினர். அரசியல் போராட்டம் 1970இல் உருவாக்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவை, 1973இல் உருவாக்கப்பட்ட தமிழ் இளைஞர் பேரவை என்பவற்றினூடாகவும் ஆயுதப் போராட்டங்கள்,தமிழ் மாணவர் பேரவை, 1974இல் உருவாக்கப்பட்ட புலிகள் இயக்கம், 1975இல் உருவாக்கப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கம் என்பவற்றினூடாகவும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இலங்கையில் இனக்குழும அரசியல் - 14

இதனைத் தடுக்க வேண்டுமாயின் அடிப்படை உரிமைகளுக்கான மட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும். அதற்கு ஒரே வழி அவசரகால சட்டங்களை உருவாக்குவதுதான். அரசியலமைப்பிலேயே இதற்கான வழிமுறைகள் இருந்தமையினால், அதனூடு அவசரகாலச் சட்டங்களை அரசின் சட்டத்துறையான தேசிய அரசுப் பேரவை உருவாக்கியது அடிப்படை உரிமை ஏற்பாடுகள் எல்லாம் இவ்வரசியல் திட்டக் காலப்பகுதி முழுவதும் கிடப்பில் போடப்பட்டது. நூற்றுக் கணக்கான தமிழ் இளைஞர்கள் வகை தொகையின்றிக் கைது செய்யப்பட்டு பல ஆண்டுக்கணக்காக சிறையில் வைக்கப்பட்டனர். சித்திரவதையும் செய்யப்பட்டனர்.
நிர்வாகத்துறையில் அரசியலமைப்பின் பிரயோகம்
நிர்வாகத்துறையின் பிரயோகம் தொடர்பான பிரதான விடயமாக இருந்தது குடியேற்றங்களை பலப்படுத்துதல் ஆகும். இங்கு பலப்படுத்துதல் என்பதில் அரசியல் ரீதியிலான பலப்படுத்துதல் என்பதே முக்கிய இடத்தினை வகித்திருந்தது. ஏற்கனவே அம்பாறை மாவட்டத்தில் அம்பாறைத் தொகுதியின் உருவாக்கமும், மாவட்டத்தின் தலைப்பட்டினமாக அம்பாறை நகரம் உருவாக்கப்பட்டமையும், நிர்வாகச் செயற்பாடுகள் அனைத்தும் சிங்கள மொழியில் மேற்கொள்ளப்பட்டமையும், பேரினவாதிகளுக்கு பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. இம் முறை திருமலை மாவட்டத்தில் அதற்கான செயல் திட்டங்களை திட்டமிட்டு மேற்கொள்ள ஆரம்பித்தனர். அரசியல் திட்டத்திலுள்ள ஓட்டைகளும் பேரினமயப்படுத்தப்பட்டநிர்வாகத்துறையும் இவர்களது பணிகளை இலகுவாக்கியிருந்தது.
திருமலையில் சிங்கள குடியேற்றப் பகுதிகளில் பல உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. அவ்விடங்களில் எல்லாம் சிங்கள மொழியில் அரச கருமங்கள் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமலை மாவட்ட அரசாங்க அதிபராகவும் ஒரு சிங்களவரை நியமித்து அவரது ஒத்தாசையும் பெறப்பட்டது. முப்படைகளோடுபொலிஸ் படைகளும் பெளத்த மத நிறுவனங்களும் இவர்களின் சிங்கள மயமாக்கத்திற்குத் துணை நின்றன. மலையகத்திலும் கொழும்பிலும்; 100 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்கள் வாழ்ந்தும் அவர்களுக்கு ஒரு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகூட உருவாக்கப்படவில்லை. ஆனால் கிழக்கிலும் வவுனியாவிலும் சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு ஒரு சில ஆண்டுகளிலேயே இவை உருவாக்கப்பட்டிருந்தன. பின் வந்த காலங்களில் இவ்வுதவி அரசாங்க அதிபர் பிரிவினை மையமாக வைத்துப் பிரதேசசபைகள் உருவாக்கப்பட்டமையானது குடியேற்றத்திட்டங்களை மேலும் மேலும் பலப்படுத்தியது.
இவை எல்லாவற்றையும் மேலும் பலப்படுத்தும் வகையில் சிங்களக் குடியேற்றங்களை இணைத்து சேருவில எனும் ஒரு சிங்களத் தொகுதியும் உருவாக்கப்பட்டது. இதற்காக மூதூர், இரட்டை அங்கத்தவர் தொகுதியானது ஒற்றை அங்கத்துவ தொகுதியாக மாற்றப்பட்டது. இதனூடு மூதூர் தொகுதியின் தமிழ் பிரதிநித்துவமும் பறிக்கப்பட்டது. மூதூர் தொகுதியிலுள்ள 17,339 தமிழ் வாக்காளர்களும் சேருவில தொகுதியிலுள்ள 8,595 தமிழ் வாக்காளர்களும் தமது பிரதிநிதித்துவத்தை இழந்தனர். அதுவரை திருமலை மாவட்டத்தில் இரண்டு தமிழ் பிரதிநிதிகளும் ஒரு முஸ்லிம் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகும் நிலை மாறி திருமலை தொகுதியிலிருந்து மாத்திரம் ஒரு தமிழ் பிரதிநிதி தெரிவுசெய்யப்படும் நிலை தோற்றம் பெற்றது.
is இலங்கையில் இனக்குழும அரசியல்

Page 14
இதில் மிகவும் கவலைக்குரிய விடயம், இத்தொகுதி மாற்றத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியும் துணை போனதுதான். அவர்கள் அம்பாறைமாவட்டத்தில் தமக்கு ஒரு தமிழ் பிரதிநித்துவம் தந்தால் திருகோணமலை மாவட்டத்தில் சிங்களப்பிரதிநிதித்துவத்தினை எதிர்க்கப்போவதில்லை என அரசிடம கூறியிருந்தனர். அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் கோருவது நியாயம் தான் அதற்காகத்திருமலையில் சிங்களத்தொகுதி உருவாவதை எவ்வகையில் விட்டுக் கொடுக்கமுடியும்?
குடியேற்றத்திட்டம் தொடர்பாக அரசியல் அமைப்புச் சட்ட ஏற்பாடுகளோ, துணை நிர்வாக சட்டஏற்பாடுகளோ இல்லாமையே இது தொடர்பான விடயங்களில் இவர்களது நடவடிக்கைகளை சுலபமாக்கியிருந்தது. இல்லாவிட்டால் அது தொடர்பான எதிர்ப்புகளும் பிரச்சினைகளும் இவர்களது நடவடிக்கைகளை கொஞ்சமாவது கடினப்படுத்தியிருக்கும். இது விடயத்தில் இருந்தது அமைச்சரவைக்கு இருந்த மேலான நிர்வாக அதிகாரமே இவ்வதிகாரத்தைப் பயன்படுததி விவசாய அமைச்சும் பொது நிர்வாக அமைச்சும் பாரிய எதிர்ப்புக்கள் எதுவும் இல்லாமலேயே இவற்றைச் சீராகச் செய்து முடித்தன.
மேலும் தேர்தற் தொகுதி சீர்திருத்தத்தின் போது தேசிய அரசுப் பேரவையின் பிரதிநிதித்துவம் 151இலிருந்து168ஆக அதிகரிக்கப்பட்டது. இதன்போது சிங்கள பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்ட அளவுக்குதமிழ் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவில்லை. தமிழ் பிரதிநிதித்துவம் என்ற வகையில் வட பகுதியில் முல்லைத்தீவு தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டதோடு அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள்; தமது பிரதிநிதியை தெரிவுசெய்யும் வகையில் பொத்துவில் தொகுதிஇரட்டை அங்கத்துவ தொகுதியாக மாற்றப்பட்டது. மூதூரில் ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தை இழந்ததையும் பார்க்கும் போது ஒரு பிரதிநிதித்துவத்தால் மட்டுமே வடக்குகிழக்குதமிழ் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டது. விகிதாசாரப்படி பார்த்தால் கூட வடக்குகிழக்குதமிழ்மக்களுக்கு 21 பிரதிநிதித்துவம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 19 பிரதிநித்துவமே கிடைத்தது.
கல்வி
கல்வியில் தரப்படுத்தல் முறை கொண்டுவரப்பட்டது. இதன்படி பல்கலைக்கழக விஞ்ஞான பீடங்களுக்கு தமிழ் மொழிமூல மாணவர்கள் கூடுதலான புள்ளியும், சிங்கள மொழிமூலமான மாணவர்கள் குறைந்த புள்ளியையும் எடுக்க வேண்டுமெனக் கூறப்பட்டது. அரசியல் யாப்பு அமைச்சரவையினூடாக கல்வி அமைச்சருக்குக் கொடுத்த அதிகாரங்களைக் கொண்டே இவை மேற்கொள்ளப்பட்டன.
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இனரீதியான பாரபட்சத்தினை தடுப்பதற்கு அரசாங்க சேவை ஆணைக் குழுவோ நீதிச் சேவை ஆணைக் குழுவோ இருக்கவில்லை. இவ்வதிகாரங்கள் அனைத்தும் அமைச்சரவையின் மீது பொறுப்பாக்கியதனால் பேரினவாத அமைச்சரவை தான்தோன்றித்தனமாக செயற்பட்டது. தமிழ் மொழி மூலம் மட்டும் செயற்படக் கூடிய ஆசிரியர் தொழில் தவிர்ந்த ஏனைய தொழிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். ஆசிரியர் தொழில்களில் கூட தமிழ்ப் பகுதியில் இருக்கும் அரசாங்கக் கட்சி அமைப்பாளர்களுக்கு லஞ்சமாகப் பணம் கொடுத்தே எடுக்க வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் பத்தாயிரமாக இருந்த இப்பணத்தொகை பின்னர் முப்பதாயிரம் நாற்பதினாயிரம் என வளர்ந்திருந்தது.
இலங்கையில் இனக்குழும அரசியல் - 16

இக்காலப்பகுதியில் ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களில் ஒருவராவது பணம் கொடுக்காமல் பெற்றது கிடையாது. செல்லையாகுமாரசூரியர் தபால் அமைச்சராக இருந்தமையினால், தபால் திணைக்களங்களில் சிலநடுமட்ட-கீழ் மட்டவேலைகளும் தமிழர்களுக்குக் கிடைத்தன. ஆனால் இவற்றையும் லஞ்சமாகப் பணம் கொடுத்தே பெற வேண்டியிருந்தது.
வேலை வாய்ப்பு விடயத்தில் அரசியல் யாப்போ, துணை நிலைச் சட்டங்களோ, எவ்வெவ் முறைகளில் ஆட்கள் சேர்க்கப்பட வேண்டுமென எவற்றையும் குறிப்பிடவில்லை. அரசியல் யாப்பில் அடிப்படை உரிமைகள் ஏற்பாடுகள் பகுதியில் மட்டும் வேலை வாய்ப்பின் போது இனரீதியான பாரபட்சம் காட்டக் கூடாது எனக் கூறப்பட்டது. ஆனால் தொடர்ச்சியான அவசர நிலைச் சட்டங்களினால் அடிப்படை உரிமைகள் வலுவிழந்த நிலையில் இருந்தமையினாலும் அடிப்படை உரிமைகள் மீறல் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி அரசியலமைப்பு எதுவும் கூறாமையினாலும்; இதனையிட்டு பரிகார நடவடிக்கைகள் எவற்றையும் தமிழர்களால் மேற்கொள்ள முடியவில்லை.
வேலை வாய்ப்புக்கு புறம்பாக தமிழ் பிரதேச அபிவிருத்தி என்பதும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது. இக்காலத்தில் அபிவிருத்தி என்ற பெயரில் தமிழ்ப் பிரதேசத்தில் ஏதாவது நடந்த தென்றால் தபால் அமைச்சர் செல்லையா குமாரசூரியர் திறந்து வைத்த ஒரு சில உப தபாலகங்கள் மட்டும் தான்.
தமிழ்மொழியின் உபயோகம் பற்றி துணை நிலைச் சட்டங்கள் கூறியபோதும், நடைமுறையில் அவற்றை செயல்படுத்துவதில் நிர்வாகத்துறை ஆர்வமெதனையும் காட்டவில்லை. இவற்றுக்கு மாறாக தமிழ்ப் பகுதிகளில் சிங்களத் திணிப்பிலேயே அரசு அதிக ஆர்வம் காட்டியது. அரச திணைக்களங்களிலிருந்து தமிழர்களுக்கு வரும் கடிதங்கள் கூடதனிச்சிங்களத்திலேயே வந்தன.
நீதித்துறையில் அரசியல் யாப்பின் பிரயோகம்
சிறுபான்மையோர் விடயத்தில் சோல்பரியாப்பில் நீதித்துறைசங்கடப்படவேண்டியிருந்ததைப் போல இவ்வரசியல் யாப்பில் சங்கடப்படவேண்டிய நிலை இருக்கவில்லை. அரசியலமைப்பின் 29ஆவது பிரிவும், நீதித்துறையின் நீதிப்புனராய்வு அதிகாரமும் இவ்வரசியலமைப்பில் நீக்கப்பட்ட்மையே இதற்குக் காரணமாகும். இதனால் குறிப்பிட்ட சட்டமோ அல்லது அரசின் நடவடிக்கைகளோ 29ஆவது பிரிவுக்கு எதிரானதோ அல்லது ஆதரவானதோ எனக் கூறுகின்ற அவசியம் நீதித்துறைக்கு இருக்கவில்லை.
அடிப்படை உரிமைகள் பகுதியிலுள்ள விடயங்கள் மட்டும் குறிப்பாக கைதுசெய்தல்,வேலை வாய்ப்பில் இனப்பாரபட்சம் காட்டக்கூடாது என்கின்ற விடயங்கள் மட்டும் சில சங்கடங்களைக் கொடுக்கக் கூடியதாக இருந்தது. அதனையும் அவசரகாலநிலைக்குரிய மட்டுப்பாடுகள் தவிர்க்கச் செய்திருந்தன.
அவசரகால நிலைச் சட்டங்களின் துணையினால் தமிழ் இளைஞர்கள் நூற்றுக் கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டபோதும் சித்திரவதை செய்யப்பட்டபோதும் நீதித்துறை மெளனமாக இருந்தது.
7 இலங்கையில் இனக்குழும அரசியல்

Page 15
இறுதியாக சோல்பரி அரசியலமைப்பு:இலங்கையில் பேரினமயமாக்கலுக்கான அடிப்படைகளை உருவாக்கியிருந்தது. 1972 அரசியல் திட்டம் அதில் பேரினமயமாக்கலுக்கு இருந்த தடையாக இருந்த காரணிகளை அகற்றியதோடு பேரினமயமாக்கலை மேலும் பலப்படுத்தும் வகையில் பல ஏற்பாடுகளைச் சேர்த்து அதனை முழுமையாக்கியிருந்தது. இதனையே புதிய அரசியல் திட்டம் அறிமுகப்படுத்திய போது வீரகேசரி ஆசிரியர் தலையங்கம் “சோல்பரி தொடக்கி வைத்ததை கொல்வின் முடித்து வைத்தார்” எனக் குறிப்பிட்டிருந்தது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் அரசியல் திட்ட வழிமுறைகளுடு போராடக் கூடிய சகல வழிகளும் இவ்வரசியல் திட்டத்தின் மூலம் அடைக்கப்பட்டன. அவர்கள் இலங்கையின் மைய அரசியலிலிருந்து முழுமையாகவே அந்நியப்படுத்தப்பட்டனர். இலங்கை அரசில் தமக்கு எவ்வித உரிமையும் இல்லையென தூக்கி வீசப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் தனி நாட்டுப் போராட்டத்தை முன்னெடுக்க ஆரம்பித்தனர். ஆயுதப் போராட்டம் மூர்க்கமாக எழுச்சியடைய ஆரம்பித்தது.
இந்நிலையில் இறுதியாக கொண்டு வரப்பட்ட 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு மேற்கொண்ட பணி சகல முனைகளிலும் எழுச்சியடைந்து வந்த தமிழர்களது போராட்டத்தையும் அவர்களது இருப்பையும் அழிக்க முற்பட்டதுதான். சுதந்திரத்துக்குப் பின்னரான அரசியல் யாப்புகள் பேரினமயமாக்கலுக்கான அடிப்படைகளை உருவாக்கல்; தடைகளை அகற்றுதலும் பலப்படுத்தலும், எதிர்ப்புக்களை அழித்தல் என்ற வகையிலேயே வளர்ந்து சென்றன.
S. / அரசியல் திட்டம் கொண்டு வரப்பட்ட சூழலில் அதனை எதிர்த்து தமிழி கட்சிகளின் நிலைப்பாடுகள், போராட்டங்கள் என்பவை குறித்து அன்றைய சுதந்திரன் பத்திரிகையில் கோவை மகேசன் எழுதிய பத்தியிலிருந்து சில பகுதிகள்.
.இந்நாட்டுத் தமிழினத்தின் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸ் கட்சியும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளான சுயாட்சிக் கழகமும், ஈழத்தமிழ் ஒற்றுமை முன்னணி ஆகிய நான்கு கட்சிகளும் ஒருங்கிணைந்து புதிய அரசியல் திட்டத்தை நிராகரித்துள்ளதால் புதிய அரசியல் திட்டத்தை இந்நாட்டின் இரண்டாவது பெரிய இனமான தமிழினம் ஏற்றுக்கொண்டு விட்டதாக ஆட்சியாளர்கள் வெளியுலகத்துக்கு இனிமேல் எடுத்துக் கூறி ஏமாற்றிட முடியாது.
.ஈழத் தமிழர்கள் புதிய அரசியல் திட்டத்தை முற்றாக நிராகரித்து விட்டார்கள். முழு மூச்சுடன் அதை எதிர்க்கிறார்கள் என்ற உண்மையை உலகத்தின் கண்களிலிருந்து இனி மறைத்து விட முடியாது. .தமிழினத்தை புதைகுழிக்குள் அனுப்பும் இந்தப் புதிய அரசியல் திட்டம் இத்திங்கள் 22ஆம் நாள் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாக ஆட்சியாளர்கள் அறிவித்துவிட்டார்கள். தமிழ் தேசிய இனத்தின் ஒன்றுபட்ட எதிர்ப்புக்கு கொஞ்சம் கூடச் செவிசாய்க்க மறுத்துவிட்டார்கள். அவசரகாலச் சட்டத்தின் துணையுடன் புதிய அரசியல் திட்டம் நடைமுறைக்கு வரப்போகிறது இன்னும் தினங்களில். (சுதந்திரன்- 14-05-72)
للر
இலங்கையில் இனக்குழும அரசியல் is

( குடியரசு நாள் தமிழர் குடியழித்த நாள் N
.தமிழினத்தின் தனிப்பெரும் விடுதலைப் பாசறையான தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரசும், மலையகத் தமிழ் தொழிலாளர்களின் பேரியக்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் ஒரே குரலில்-ஒரே கூட்டணியில் இணைந்து புதிய அரசியல் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்திவருகின்றன.
.புதிய அரசியல் திட்டம் நடைமுறைக்கு வரும்நாள்-ஈழத்தமிழ் தேசிய இனத்தின் தூக்குக் கயிறு உருவாக்கப்படும் துயர் தோய்ந்த நாள். அந்நாளில் நமக்கு எதுவித குதூகலமோ, கொண்டாட்டமோ, கேளிக்கைகளோ எதுவுமே வேண்டாம். ஈழத்தமிழகமெங்கும் சோகமும், அமைதியும் நிறைந்து இழவு வீடாக காட்சிதரட்டும்.
மே.22 ஆம் நாள் தமிழ் ஈழமெங்கணும் உயர்த்தப்படும் கருங்கொடிகள் இறக்கப்படாமல் தொடர்ந்து பறந்துகொண்டிருக்கட்டும். நமது உணர்ச்சியை அவை பிரதிபலிக்கட்டும். கறுப்புக் கொடியேற்றுவதால் பொலிசாரினதும், இராணுவத்தினரதும் இம்சைக்குள்ளாக வேண்டியேற்படுமானால், நிறைந்த மகிழ்வுடன் அந்த இம்சையைத் தாங்கிக் கொள்வோம்.
.எத்தனை தடை ஏற்படினும் எத்தனை துன்பம் நேரிட்டாலும் அரசியல் சட்ட எதிர்ப்புக் கூட்டத்தை யாழ் நகரில் நடத்தியே தீருவது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் நடவடிக்கைக் குழு முடிவுசெய்திருக்கிறது. அந்தக் கூட்டத்திலேயே புதிய அரசியல் சட்டத்துக்கு பாடை கட்டப்படவிருக்கிறது.
சிங்கள மக்கள் மீது நமக்கு வெறுப்பில்லை நம்மை அடிமைகளாக்கி அழித்தொழிக்க கொண்டுவரப்படும் புதிய அரசியல் திட்டத்தையே எதிர்க்கிறோம் என்பதையும் இந்நேரத்தில் தெளிவுபடுத்துகிறோம். (சுதந்திரன் 21-05-72) ノ
N
།༽
( கருமையிலாழ்ந்தது தமிழீழம்
.இந்நாள் குடியரசு நாளாம். கூறுகின்றனர் கோலேந்திகள். கோலாகலமாக விழாவெடுக்கின்றனர். இன்றைய நாள் சிங்கள நாடு விழாவெடுக்கிறது. குதூகலங் கொள்கின்றனர்நாட்டின் ஓர் பகுதியிலே, ஆனால் மற்றோர் பகுதியிலே குமுறிடும் இதயங்களை கொந்தளிக்கும் உள்ளங்களை கொதித்தெழுந்திடும் நெஞ்சங்களையன்றோ காண்கிறோம்.
.வேலைக்குப் புறப்படும் காளையிடம், வேலை என்ன அத்தான் வேலையின்று. கோலத் தமிழ் மொழிக்குகொள்ளிசொருகிடும் நாளில், வேலை நமக்கு விடுதலைப் படைக்கு அணி சேர்ப்பதே இதோ கருங்கொடி நேற்றே தைத்து வைத்துவிட்டேன். ஏற்றுங்கள் இல்லத்தின் மீது என்று வேல்விழியாள் இடும் ஆணைகேட்டு செயல்படும் இளந் தமிழ்க் காளையரைக் காண்கின்றேன்.
19 இலங்கையில் இனக்குழும அரசியல்

Page 16
γ . நாடே ஓர் சிறைச்சாலையாக இருந்திடும்போதுநான்கு சுவர்களுக்குள் இருந்திடும் இந்தச்) சிறை எம்மை என்ன செய்திடும். மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமைமாட்ட நினைத்திடும் சிறைச்சாலை என்று எழுச்சிப் பண்ணிசைத்தபடி சிறைச்சாலைக்குள் சிரித்தபடி இருந்திடும் முத்துக்குமாரசாமி, பிரான்சிஸ், மனோகரன் போன்ற ஏராளமான இளைஞர்களைக் காண்கின்றேன். குடியரசு எதிர்ப்பு நாளில் சிறை சென்றிடும் வாய்ப்புப் பெற்ற இளைய தலைமுறையினரைப் பாராட்டுகின்றேன். அவர்களின் வீரத்துக்கும் தியாகத்துக்கும் தலைவணங்குகின்றேன்.
.குடியரசு நாளில் தமிழர் குடியின் கரிநாள்-ஈழம் தந்த புரட்சிப் புலவன், என் இனிய நண்பன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்; தனது அரசாங்க வேலையை உதறித் தள்ளியதன் மூலம் ஈழத் தமிழர்களின் விடுதலை இயக்க வரலாற்றில் ஒரு புதிய சாதனையை தியாக வரலாற்றை எழுதிவிட்டார். (சுதந்திரன் 28-05-72) 一ノ
மே 22, 23, 24 ஆகிய மூன்று நாட்களிலும் தமிழ் ஈழத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது இதற்கு முன் என்றுமே கண்டிராத அளவில்; தமிழ் குலத்து காளையரின் எழுச்சி கண்டேன்.
தமிழ் மக்களின் உணர்வை கொஞ்சமும் மதிக்காது அலட்சியம் செய்துவிட்டு புதிய அரசியல் திட்டத்துக்கு கையெழுத்திட்ட மாட்டின், அருளம்பலம், தியாகராசா, இராசன், குமாரசூரியர், சுப்பிரமணியம் ஆகிய அறுவரும் ஈழத்தமிழினத்தின் யுதாஸ்காரியோத்துக்கள், எட்டப்பர்கள், இனத்துரோகிகள் என்று இன்றுள்ளோர் மட்டுமல்ல, எதிர்கால பரம்பரை முழுவதுமே காறியுமிழப்போகிறது. கருவிலிருக்கும் தமிழ்க் குழந்தைகூடஇவர்களைப் பார்த்து இன்று சபித்துக் கொண்டேயிருக்கும் என்பதில் ஐயமில்லை.
. டொனமூர்திட்டத்தை ஆதரிக்க தம்பிமுத்து என்ற ஒரு துரோகிமட்டுமே இருந்தான். சோல்பரிஅரசியல் திட்டத்தை ஆதரித்திட இராசகுலேந்திரன் என்றதுரோகிமட்டுமே கிடைத்தான் ஆனால் தமிழருக்கு முழுக்க முழுக்க குழிபறித்துள்ள புதிய அரசியல் சட்டத்தை ஆதரித்திட ஆறு துரோகிகள் இருந்திருக்கிறார்கள் என்பதை எண்ணும்போது தமிழர் இரத்தக் கண்ணிர் للر )72-06-04 வேண்டும். (சுதந்திரன் 5ܬ݁ܳܬ݂uܘܢ
இலங்கையில் இனக்குழும அரசியல் 20

1978 இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு
இலங்கையின் அரசியல் யாப்பு வரலாற்றில் பேரினமயமாக்கலுக்கான ஆரம்பங்கள் 1921மானிங் சீர்திருத்தத்துடனேயே துளிர்விடத் தொடங்கியிருந்தன. அச் சீர்திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறையே இதன் தொடக்கப் புள்ளியாக விளங்கியது. தொடர்ந்து வந்த டொனமூர் சீர்திருத்தங்கள்; இவை விரிவாக்குவதற்கான வழிகளைத் திறந்து விட்டன.
எனினும் பேரினயமாக்கலுக்கான கட்டுப்படாத அடிப்படைகளை சோல்பரி அரசியல் திட்டமே வழங்கியிருந்தது. இதற்கு முன்னைய யாப்புகள் சுதந்திரத்திற்கு முன்னரான யாப்புகளாக இருந்தமையினால் பிரித்தானிய ஆட்சியாளரின் கட்டுப்பாடுகளையும் மீறிபேரினமயமாக்கலுக்கான அடிப்படைகளை இயல்பாகக் கொடுக்கக் கூடியதாக இருக்கவில்லை. சோல்பரியாப்பு சுதந்திரத்தின் பின்னரான யாப்பாகவும் இருந்தமையினால் இயல்பாகவே அதற்கான அடிப்படைகளைப் பெற்றுக் கொடுத்தது.
இச்சோல்பரியாப்பு சுதந்திரத்திற்குமுன்னரான யாப்பாகஇருந்தமையினால், தமிழர்களினதும் இந்திய அரசினதும் நிர்ப்பந்தங்கள் காரணமாக சிறுபான்மையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சேர்க்க வேண்டிய நிலைக்கு யாப்பினை உருவாக்கியவர்கள் தள்ளப்பட்டனர். விளைவு சிறுபான்மையோர் காப்பீடுகள் என்றவகையில் சில பகுதிகள் அரசியல் யாப்பில் சேர்க்கப்பட்டன. அரசியல் யாப்பின் 29ஆவது பிரிவு இதன் முக்கிய ஏற்பாடாக விளங்கியது.
இக் காப்பீடுகள் பெயரளவு காப்பீடுகளாக இருந்தபோதும் ஒரு முழுமையான பேரினமயமாக்கலுக்குத் தடையாக விளங்கின. இவற்றை மீற முற்பட்டபோதெல்லாம் தமிழரசுக் கட்சி பாரியளவு பிரச்சாரத்தினை மேற்கொண்டது மட்டுமல்லாமல் மக்களை இணைத்து போராட்டங்களையும் நடாத்தியது.
1956ஆம் ஆண்டுகாலிமுகத்திடல் சத்தியாக்கிரகப் போராட்டம்; 1957 திருமலை யாத்திரை, 1961ஆம் ஆண்டு தமிழ்ப் பிரதேசம் தழுவிய சத்தியாக்கிரகப் போராட்டம்; கோமறைக் கழகம் வரை சென்ற கோடீஸ்வரன் வழக்கு என்பன போராட்டங்களிலும் பிரச்சாரங்களிலும் முக்கிய இடங்களை வகித்தன.
இப் போராட்டங்களும் பிரச்சாரங்களும் தமிழர் போராட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்ததோடு சிங்கள ஆட்சியாளர்களுக்கு அரசியல் யாப்பையே மீறிய ஆட்சியாளர்கள் என்ற அவப்பெயரையும் பெற்றுக் கொடுத்தது. அதனால் இதனை நீக்க வேண்டும் என்பதில் பேரினவாதிகள் குறியாக இருந்தனர்.
1972 அரசியல் திட்டம் யாப்பு வழியில் இருந்த மேற்கூறிய தடைகளை நீக்கியதோடு தான் மேற்கொள்ளும் அனைத்துப் பேரினமயமாக்கல் நடவடிக்கைகளையும் யாப்பு வழிமுறைகளினூடு செய்வதற்கான வழிகளைத் திறந்து விட்டது. இதனூடு பேரினமயமாக்கலை முழுமையாக்கும் கைங்கரியத்தினை செய்து முடித்தது.
2. இலங்கையில் இனக்குழும அரசியல்

Page 17
இப்பேரினவாதமுழுமையாக்கல் தமிழ் மக்களை மைய அரசியலிலிருந்து அந்நியமாக்கியது. அவர்கள் தனிநாட்டுப் போராட்டத்தினை முன்னெடுக்க ஆரம்பித்தனர். தமிழ் மாணவர் பேரவை; தமிழ் இளைஞர் பேரவை, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்; தமிழ் ஈழ விடுதலை இயக்கம்; போன்ற இளைஞர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அமைப்புக்கள் அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கின. ஈற்றில் தமிழர்களின் மிதவாத அமைப்பான தமிழர் விடுதலைக் கூட்டணி 1976இல் வட்டுக்கோட்டையில் நடாத்திய முதலாவது மாநாட்டில் தமிழ் ஈழப் பிரகடனத்தை ஒரு தீர்மானமாக எடுத்தது. தொடர்ந்து 1977 தேர்தலை தமிழ் ஈழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பாக பிரகடனம் செய்தது. இத்தேர்தலில் வடக்குகிழக்கில் 19 தமிழ்த் தொகுதிகளில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியதன் மூலம் மக்களிடமிருந்து தமிழ் ஈழத்துக்கான அங்கீகாரத்தினையும் பெற்றுக் கொண்டது. இவ்வாறு சகல முனைகளிலும் தனிநாட்டுப் போராட்டம் வளர்ச்சியடைந்து வந்த ஒரு நிலையில் அதனை அடக்க வேண்டிய நிலைக்கு சிங்கள அரசு பேரினவாதிகளால் கட்டாயப்படுத்தப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தேர்தலில் தமக்குக் கிடைத்த ஆறில் ஐந்து பெரும்பான்மையைப் பயன்படுத்தி இக்கட்டாயத்தைப் பூர்த்திசெய்யும் வகையில் புதிய அரசியல் திட்டத்தை உருவாக்க முனைந்தது.
1978செப்டம்பர் 7ஆந்திகதி புதிய யாப்பு அமுலுக்கு வந்தது. இதன் பிரதான நோக்கங்களாக எழுச்சியடைந்து வரும் தனிநாட்டுப் போராட்டத்திற்கான அடிப்படைகளை அகற்றுவதும் அதனை அடக்குவதும் என்பதே அமைந்திருந்தது.
இவ் அடிப்படைகளை அகற்றல்; அடக்குதல் என்பன பேரினமயமாக்கலை அரசியல் யாப்பில் மேலும் வலுப்படுத்துதலும்; அதனை நீக்குவதை கடினப்படுத்துதலும்; வடக்குகிழக்கு இணைய முடியாத வகையில் கிழக்கை சிங்களமயப்படுத்துதல்; ஈவிரக்கமற்ற சட்டங்களை உருவாக்கி தமிழரது போராட்டங்களை நசுக்குதல், என்கின்ற மூன்று வழிமுறைகளினூடாகவே மேற்
கொள்ளப்பட்டன.
1972 அரசியல் யாப்பில் பேரின மயமாக்கல் முழுமை பெற்றிருந்தாலும் எதிர்கால நிர்ப்பந்தங்களினால் இவை மாற்றங்களுக்கு உள்ளாகக் கூடும் என்ற அச்சம் பேரினவாதிகளிடையே நிலவியிருந்தது. அதனை நீக்கும் வகையிலேயே இதற்குரிய ஏற்பாடுகளை 1978 அரசியல் யாப்பில் சேர்த்திருந்தனர்.
வலுப்படுத்துதல் என்ற வகையில் இரண்டு பிரதான அம்சங்கள் யாப்பில் சேர்க்கப்பட்டன. ஒன்று பேரினவாதத்தினை யாப்பு ரீதியாக வலுப்படுத்தும் வகையிலான விடயங்களை அரசியல் யாப்பில் சேர்த்தல். இரண்டாவது; அவ் வலுவான விடயங்களை திருத்துவதை கடினமாக்கல் என்பவையே அவை இரண்டுமாகும்.
வலுப்படுத்துதல் என்ற வகையில் முதலாவதாக இலங்கைக் குடியரசு ஒரு ஒற்றையாட்சி அரசு
ஆகும் எனக் கூறப்பட்டது. இதன் மூலம் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கும் அதிகாரத்தினைப் பங்கிடக் கூடிய வகையிலான கூட்டாட்சி அரசு அமைதல் என்பது தடுக்கப்பட்டது.
இலங்கையில் இனக்குழும அரசியல் 22

இரண்டாவதாக அரசின் இறைமை மக்களுக்குரியதாகும் எனக் கூறப்பட்டது. இதன் அர்த்தம் இறைமை என்னும் ஆட்சி செய்யும் அதிகாரம் பெரும்பான்மை மக்களாகிய சிங்கள மக்களிடம் உள்ளது என்பதாகும். இவ் இறைமைகளின் பிரயோகம் பின்வருமாறு இருக்கும் எனவும் கூறப்பட்டது.
“மக்களது சட்டமாக்கற் தத்துவம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தினாலும் மக்கள் தீர்ப்பொன்றின் போதுமக்களினாலும் பிரயோகப்படுத்தப்படுதல் வேண்டும்.
இதன் அர்த்தம் சட்ட ஆக்க அதிகாரம் சிங்கள உறுப்பினர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாராளுமன்றத்திடமும் மக்கள் தீர்ப்பு என்ற வகையில் பெரும்பான்மை மக்களாக சிங்கள மக்கள் இருப்பதால் அவர்களிடமும் இருக்கும் என்பதாகும்.
அதேவேளை அரசியல் யாப்பின் 76ஆவது பிரிவில் இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
1. “பாராளுமன்றம் அதன் சட்டமாக்கற் தத்துவத்தை துறத்தலோ எந்த விதத்திலும் பாராதீனப்பத்துதலோ ஆகாது என்பதுடன் ஏதேனும் சட்டமாக்கற் தத்துவம் கொண்ட ஏதேனும் அதிகாரத்தை நிறுவுவதலுமாகாது”
இவ் ஏற்பாடுகள் எதிர்காலத்தில் சட்ட ஆக்க அதிகாரத்தில் தமிழ் மக்கள் பங்கீட்டினை பெற்றுக் கொள்வதைத் தடுக்கின்றது. குறைந்த பட்சம் கூட்டாட்சி என்ற வகையிலாவது இனப்பிரச்சினைக்குத்தீர்வு வரும்போது தனதுதாயகத்தின் சட்ட ஆக்க அதிகாரம் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும். இவ் ஏற்பாடு அதனை இல்லாமல் செய்கின்றது.
2. "இலங்கையின் பாதுகாப்பு உள்ளிட்ட மக்களது ஆட்சித்துறைத்தத்துவம் மக்களால் தெரிவுசெய்யப்படும் குடியரசின் ஜனாதிபதியால் பிரயோகப்படுத்தல் வேண்டும்’
இங்கு 75வீதத்திற்கு மேல் பெரும்பான்மை இனத்தவர் உள்ள நாட்டில் சிறுபான்மை இனத்தவர் எவரும் ஜனாதிபதியாக வர முடியாது.
எனவே நிர்வாக அதிகாரம் சிங்கள மக்களிடம் உள்ளது என்பதே இவற்றின் அர்த்தமாக உள்ளது.
மேலும் மக்களின் நீதிமுறைத்தத்துவமானது பாராளுமன்றத்தினாலும் பாராளுமன்றத்தினால் உருவாக்கப்பட்ட நீதிமன்றங்களினாலும் அரசியல் யாப்பினால் அங்கீகரிக்கப்பட்ட நீதிமன்றங்களினாலும் மேற்கொள்ளப்படும்.
இங்கு பாராளுமன்றமும் அரசியல் யாப்பும் பேரின ஆதிக்கம் உள்ளதாக இருப்பதால் அதன் மூலம் உருவாக்கப்பட்ட நீதிமன்றங்களிலும் அவ் ஆதிக்கமே மேலோங்கி உள்ளது. இந்த வகையில் நீதி அதிகாரமும் சிங்கள மக்களிடமே கொடுக்கப்பட்டுள்ளது.
23 இலங்கையில் இனக்குழும அரசியல்

Page 18
3 பேரினவாத குறியீடுகளுக்கு அரசியல் யாப்பு அந்தஸ்து கொடுத்தல் என்ற விடயம் அமைந்தது. இதன்படி பேரின குறியீடுகளுடன் உருவாக்கப்பட்ட தேசியக் கொடி, தேசிய கீதம், தேசிய தினம், அரச இலட்சினை என்பவற்றிற்கு அரசியல் யாப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டது.
அரசியல் யாப்பின் 6,7,8,9ஆம் பிரிவுகள் இதுபற்றி குறிப்பிடுகின்றன. 6ஆம் பிரிவு இலங்கை குடியரசின் தேசியக் கொடி சிங்கக் கொடியாக இருத்தல் வேண்டும். 7ஆம் பிரிவு இலங்கைக் குடியரசின் தேசிய கீதம்"ரீலங்கா தாயே" என்பதாக இருத்தல் வேண்டும் 8ஆம் பிரிவு இலங்கைக் குடியரசின் தேசிய தினம் பெப்ரவரி 4ஆம் திகதியாக இருத்தல் வேண்டும். 9ஆம் பிரிவு அரச மதம் பற்றிக் குறிப்பிடுகின்றது. 1972ஆம் ஆண்டு அரசியல் திட்டத்தைப் போலவே இவ் அரசியல் திட்டத்திலும் பெளத்தத்திற்கு முதன்மை ஸ்தானம் வழங்கப்பட்டது. அந்த யாப்பில் உள்ளதுபோலவே ஏனைய மதங்களின் சுதந்திரங்கள் பேணப்படுகின்ற அதேவேளை பெளத்த மதத்தினை பேணி வளர்த்தலும் பாதுகாத்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும் எனவும் கூறப்பட்டது.
யாப்பு திருத்தங்களை கடினப்படுத்துதல்.
யாப்பிலுள்ள ஏற்பாடுகளை விட அதனைத் திருத்துவதிலுள்ள கடினமான வழிமுறைகளே ஏற்பாடுகளை மேலும் வலுவுள்ளதாக மாற்றின. அதன்படி இலங்கைக் குடியரசின் இறைமை சம்பந்தமான ஏற்பாடுகளை மாற்றுதல்; இலங்கைக் குடியரசின் தேசிய கீதத்தினை மாற்றுதல்; இலங்கைக் குடியரசின் தேசிய தினத்தினை மாற்றுதல்; பெளத்தமதத்திற்கு வழங்கப்பட்ட முதன்மை ஸ்தானத்தை மாற்றுதல் போன்றவற்றை திருத்த வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு தேவைப்படுவதோடு மக்கள் தீர்ப்பு ஒன்றின் மூலம் மக்களின் சம்மதமும் அவசியம் எனக் கூறப்பட்டது.
பேரினமயப்பட்ட பாராளுமன்றமும் பேரினமயப்பட்ட சிங்கள மக்களும் இருக்கும் போது இத்திருத்த முறை நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று என்பது இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியதே. அரசியல் யாப்பினை உருவாக்கியவர்களின் எண்ணமும் அதுதான். எந்தக் காலத்திலும் பல்லினத்தன்மை கொண்ட யாப்பிற்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள்.
இக்கடித்தன்மை இனப்பிரச்சினைக்கான தீர்வினைத் தட்டிக் கழிப்பதற்கும் காலம் கடத்துவதற்கும் உதவியிருந்தது என்றே கூற வேண்டும். தமிழர் போராட்டங்கள் சர்வதேச ரீதியாக பிரபல்யமடைந்து பல பக்கங்களில் இருந்து பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி அழுத்தங்கள் வரும் போது அதை தட்டிக் கழிப்பதற்கும் காலம் தாழ்த்துவதற்கும் இவையே உதவியிருந்தன.
இலங்கையில் இனக்குழம அரசியல் 24

பிரச்சினையைத் தீருங்கள் என அழுத்தங்கள் வரும் போதெல்லாம் ஆட்சியாளர்கள் கூறுகின்ற பதில் இதுதான்."எம்மால் தனித்து மட்டும் இதனைத்திருத்தமுடியாது பாராளுமன்றத்தில் சகலரது ஆதரவும் தேவை. அத்தோடு மக்களின் ஆதரவும் தேவை. அதற்கான முயற்சிகளையே நாம் செய்து வருகின்றோம்.”
பிரேமதாசா ஜனாதிபதியாக இருந்தகாலத்தில் தமிழ்க் கட்சிகள் பிரச்சினையைத் தீர்க்கும் படி அவரை வற்புறுத்தியபோது அதற்கு அவர் கூறிய பதில்.
“பாராளுமன்றத்தில் எனக்குமூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை இதனால் தனித்து என்னால் தீர்வினைக் கொண்டுவரமுடியாது. வேண்டுமானால் வட்டமேசை மாநாட்டைக் கூட்டுகிறேன் அதில் சகல கட்சிகளும் ஒரு உடன்பாட்டுக்கு வரட்டும்” என்பதாகும்.
திருத்துவதில் கடினமாக இருந்த மேற்கூறிய விடயங்களை விட மேலும் சில விடயங்கள் பேரினமயமாக்கலை கெட்டியாக்கியிருந்தன. இதனைத் திருத்துவதற்கு பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டுபெரும்பான்மை தேவை. ஆனால் மக்கள் தீர்ப்பு தேவையில்லை. அவை எவை எவ்வாறு இருந்தன என்பதைப் பார்ப்போம்.
சுதந்திரத்திற்குப் பின்னரான அரசியல் யாப்புகளில் 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பானது எழுச்சியடைந்து வந்த தமிழர் போராட்டத்தினை நசுக்குவதை இலக்காகக் கொண்டிருந்தது. இதற்கேற்ற வகையில் யாப்பில் பேரினவாதத்தன்மைகளை மேலும் வலுப்படுத்துதல்,கிழக்கினை சிங்கள மயப்படுத்துதல் போராட்டத்தை நசுக்குதல் என்பவற்றினை வியூகங்களாகக் கொண்டிருந்தது. மேற்கூறியவற்றை செயற்படுத்தும் விதத்தில் பேரினக் குறியீடுகளை யாப்பில் சேர்த்தல், அதனைத்திருத்துவதைக் கடினமாக்கல் என்பதையும் ஜனாதிபதிஅரசாங்கமுறை, மக்கள் தீர்ப்பு, மொழி சம்பந்தமான ஏற்பாடுகள், விகிதாசாரப் பிரதிநிதித்துவம், 6வது திருத்தச் சட்டம் என்பவற்றையும் யாப்பில் சேர்த்ததன் மூலம் தனது இலக்குகளை அடைய முயற்சிகள் எடுக்கப்பட்டது.
ஜனாதிபதி அரசாங்க முறை
ஜனாதிபதிஅரசாங்க முறையில் ஜனாதிபதித் தேர்தல் முறையும் ஜனாதிபதியிடம் இருக்கும் வரம்பற்ற அதிகாரங்களுமே பிரதான விடயங்களாக விளங்கின. ஜனாதிபதித் தேர்தல் ஒரு சிறுபான்மை இனத்தவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படமுடியாத வகையிலேயே கட்டமைக்கப்பட்டது. நாடு முழுவதிலும் உள்ள வாக்காளரினாலேயே ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டார். சிங்கள மக்களில் இருந்துசெல்வாக்கான பலர் போட்டியிடும் போதுவாக்குகள் பிரிந்தால் சிறுபான்மை இனத்தவர் ஒருவர் ஜனாதிபதியாக வந்துவிடுவார் என்பதற்காகவே தேர்ந்தெடுக்கப்படுபவர் 50 வீதத்திற்கு மேலான வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என விதிக்கப்பட்டது எவரும் 50 வீதமான வாக்குகளைப் பெற்றுக் கொள்ளாவிடின் முதல் இரு நிலையில் உள்ளவர்களைத் தவிர ஏனையவர்கள் வாக்குக் கணிப்பீட்டிலிருந்து விலக்கப்பட்டனர். விலக்கப்பட்டவர்களுக்கு வாக்குகள் அளித்தோரின் 2ஆம், 3ஆம் விருப்பு வாக்குகள் முதல் இருவருக்கும் இருக்குமாயின் அவை அவர்களின் வாக்குகளுடன் சேர்த்து எண்ணப்பட்டன. இதன் பின்னர் யார் அதிகளவிலான வாக்குகளைப் பெறுகின்றாரோ அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் எனக் கூறப்பட்டது.
25 - მიondთიrტჩიწ இனக்குழும அரசியல்

Page 19
பொதுவாகவே 75 வீதத்திற்குமேல் சிங்கள மக்களைக் கொண்ட ஒருநாட்டில் ஜனாதிபதியாக ஒருசிறுபான்மை இனத்தவர் வருவது மிகக் கடினமானது 50 வீதத்திற்குமேற்பட்ட பெரும்பான்மை என்பது இதனை மேலும் கடினமாக்கியுள்ளது. எனினும் கடும் போட்டி நிலவுமிடத்து சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் கூட சிறுபான்மை இனங்களின் வாக்குகளில் தங்கியிருக்கக் கூடிய ஒருநிலை இத் தேர்தல் முறையில் உள்ளது. இதனைப் பயன்படுத்தி சிறுபான்மை இனத்தவர்கள் பேரம் பேசும் கைங்கரியத்தை மேற்கொள்ளலாம். பல்வேறு பாதகமான அம்சங்களிலும் இதனை ஒரு சிறு சாதகமான அம்சமாகக் கொள்ளலாம். ஆனால் தற்போது பேரினவாதிகள் இதனையும் மாற்றி ஜனாதிபதி, பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அடுத்த பிரதான விடயம் ஜனாதிபதியிடம் இருக்கும் வரம்பற்ற அதிகாரங்களாகும். இதனைப் பயன்படுத்தி அவர் தமிழர்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளைச் சுயமாகவே எடுக்கலாம். இதுவரை பதவி வகித்த ஜனாதிபதிகள் அவ்வாறு எடுத்தும் உள்ளனர். முன்புள்ள முறையாயின் பிரதமர் பாராளுமன்றத்தில் அதற்கான அங்கீகாரத்தைப் பெறவேண்டும். அங்கீகாரத்தைப் பெறுவது சுலபமாயினும் கூட அங்குள்ள சிறுபான்மை இனத்துப் பிரதிநிதிகள் அதனைப் பெரும் விவாதமாக்கி பிரச்சாரம் செய்யும் போது அது பல வெளி அழுத்தங்களைக் கொண்டுவரப்பார்க்கும்.
தற்போது அப்பிரச்சினைகள் எதுவுமே இல்லை. ஜனாதிபதி மிகச் சுலபமாகவே தன்னுடைய கருமங்களை ஆற்றக்கூடியவராக உள்ளார்.
மக்கள் தீர்ப்பு
மக்கள் தீர்ப்பு என்னும் விடயம் இவ் அரசியல் யாப்பிலேயே முதன் முதலாகச் சேர்க்கப்பட்டது. இதன்படி ஜனாதிபதி அமைச்சரவை சான்றுரை அளித்துள்ள ஒரு விடயத்தை அல்லது பாராளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட ஒரு விடயம் நாட்டுநலனுக்கு அவசியமானது என தான் கருதும் யாதாயினும் விடயத்தை மக்கள் தீர்ப்பிற்கு விடலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இதனைக் கொண்டு மக்கள் தீர்ப்பு என்ற பெயரில் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. இவ்வாறானதொரு நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்றாலும் எதிர்காலத்தில் நடைபெறமுடியாது என உறுதியாகக் கூறமுடியாது அரசு தனக்குத் தேவையான விடயங்களை பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் நிறைவேற்றக் கூடிய பெரும்பான்மை இருந்தாலும் வெளி அழுத்தங்களிலிருந்து நீங்கி பேரினமயமாக்கலுக்கான சட்டங்களை உருவாக்குவதற்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்.
எல்லாவற்றிலும் மேலாக இதிலுள்ள அபாயகரமான தன்மை ஒரு பல்லினத் தன்மைக்குத் தடையாக யாப்பில் உள்ள ஒற்றையாட்சி அரசு:இறைமை, தேசியக் கொடி; தேசியகீதம்; பெளத்த மதம் அரசமதம் என்கின்ற விடயங்களை மாற்றுவதற்கு மக்கள் ர்ப்பு வேண்டும் என்பதாகும். பேரின சிந்தனையால் ஆதிக்கத்திற்குள்ளான மக்களிடமிருந்து இதற்கு சாதகமான தீர்ப்பு வரும் என கனவிலும் எதிர்பார்க்க முடியாது. உண்மையில் இவை எல்லாவற்றிலும் தொக்கிநிற்கின்ற பிரதான விடயம் என்னவென்றால் “அரசியல் யாப்ப வழி முறைகளினூடாக ஒருபோதும்
இலங்கையில் இனக்குழும அரசியல் 26

இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது” என்பதுதான். ஒடுக்கும் வழிகள் இலகுவானதாகவும் தீர்க்கும் வழிகள் கஷ்டமானதாகவும் இருப்பதையே இங்கு காண முடிகிறது.
மொழி சம்பந்தமான ஏற்பாடுகள்
மொழியைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் நாட்டின் அரசகரும மொழியாக சிங்கள மொழி இருக்கும் எனக் கூறப்பட்டது. பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி அரசியல் யாப்பில் கொண்டுவரப்பட்ட 16வது திருத்தத்தின் மூலம் சிங்களமும்; தமிழும் இந்நாட்டின் அரசகரும மொழிகளாக இருக்கும் எனவும் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும் எனவும் கூறப்பட்டது.
இதன் அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியிலும் ஏனைய இடங்களில் சிங்கள மொழியிலும் நிர்வாகத்தினை நடாத்தலாம் எனக் கூறப்பட்டது. அதேவேளை ஏதேனும் உதவி அரசாங்க அதிபர் மட்டத்தில் ஒரு மொழியைப் பேசுவோர் கூடுதலாக வசிப்பின் அவர்களின் மொழியையும் இருமொழிபேசுவோரும் கூடுதலாக வசிப்பின் இருமொழிகளையும் நிர்வாக மொழியாகப் பயன்படுத்துமாறு ஜனாதிபதி பணிக்கலாம் எனவும் கூறப்பட்டது.
இவ் ஏற்பாடு கிழக்கிலும் வவுனியாவிலும் சிங்களக் குடியேற்றங்களை கவனத்தில் கொண்டே உருவாக்கப்பட்டது. சிங்களக் குடியேற்றங்கள் உள்ள உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் ஏற்கனவே சிங்களத்தில் கருமங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன. இவ் ஏற்பாடுகள் செய்த பணி அவற்றிற்கு அரசியல் யாப்பு அந்தஸ்துக்களை பெற்றுக் கொடுத்து எதிர் கேள்விகளை இல்லாமல் செய்ததுதான்.
மேலும் இவ் இருமொழிகளில் ஏதாவது ஒன்றில் நிர்வாகம் நடைபெற்றாலும் தமிழில் அல்லது சிங்களத்தில் அல்லது ஆங்கிலத்தில் செய்திகளை தொடர்புகளைப் பெறுவதற்கும்; அலுவலர்களுடன் தொடர்பு கொள்வதற்கும்; தனது அலுவல்களை கொண்டு நடாத்துவதற்கும் சகல பிரஜைகளுக்கும் உரிமை உண்டு எனக் கூறப்பட்டது. ஆனால் நடைமுறையில் இத்தேவை தமிழ் மொழி பேசுவோருக்கே அதிகமானதாக இருந்த போதும் போதியளவு செயற்படுத்தப்படவில்லை. இதனைப் பின்னர் விரிவாகப் பார்ப்போம்.
விகிதாசார்ப் பிரதிநிதித்துவம்
விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையும் இவ்வரசியல் யாப்பிலேயே முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் 196 பேர் தேர்தல் மாவட்டங்களில் நடைபெறும் விகிதாசாரத் தேர்தல் முறையின்படி தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் 29 பேர்நாடு தழுவிய ரீதியில் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்திற்கு இணங்க தேசியப்பட்டியலில் இருந்து நியமிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டிருந்தது.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை இரண்டு வழிகளில் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு
27 இலங்கையில் இனக்குழும அரசியல்

Page 20
தீங்கிழைத்தது. ஒன்று பாராளுமன்றத்தில் தனியொருகட்சிமூன்றில் இரண்டு பெரும்பான்மையை வளரவிடாது தடுத்தல் ஆகும். இதன் மூலம் மக்கள் தீர்ப்பு கோரப்படாத யாப்பு திருத்தங்களைக் கூட தமிழ் மக்களின் நலன்களிலிருந்து மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. வெளி நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டாலும் அதனை இலகுவாகத் தட்டிக் கழிக்கும் சூழலையும் அரசுக்கு இது பெற்றுக் கொடுத்தது.
இரண்டாவது; கிழக்கின் சிங்கள மயமாக்கலுக்கு இது உதவி புரிந்ததோடு தமிழர்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கையை குறைத்தமையும் ஆகும்.
இத்தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் 1977 தேர்தலில் சிங்களவர்களுக்கு கிழக்கில் இரண்டு பிரதிநிதித்துவமே கிடைத்தது. சேருவல தொகுதி அம்பாறைத் தொகுதி என்பவற்றில் இருந்தே அவ்விரண்டு பிரதிநிதித்துவமும் கிடைத்தன. அதுவும் 1970 தேர்தலில் அம்பாறை தொகுதியில் இருந்து மாத்திரம் ஒரு பிரதிநிதித்துவம் கிடைத்தது. 1960க்கு முன்னர் ஒரு பிரதிநிதித்துவமே இல்லை. ஆனால் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் 1989 தேர்தலில் 4 பிரதிநிதித்துவமும் 1994 தேர்தலில் 6 பிரதிநிதித்துவமும் கிடைத்துள்ளது. அதுவும் வன்னி மாவட்டத்தில் கிடைத்த ஒரு பிரதிநிதித்துவத்தையும் சேர்த்தால் வடக்குகிழக்கில் 7 பிரதிநித்துவம் அவர்களுக்குக் கிடைத்துள்ளது. இதனை அட்டவணை தெளிவாகக் காட்டுகிறது.
ஆனால் மறு பக்கத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் கிழக்கின் மொத்த பிரதிநிதித்துவ எண்ணிக்கை அதிகரித்தபோதுகூட குறைந்து வருகின்ற நிலையையே அவதானிக்க முடிகின்றது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்படுத்துவதற்கு முன்னர் 1977 தேர்தலில் தமிழர்களுக்கு 5 பிரதிநிதித்துவம் கிடைத்தது. ஆனால் 1994 தேர்தலில் 4 பிரதிநிதித்துவமே கிடைத்தது. அதுவும் புதிய தேர்தல் அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் கிழக்கின் மொத்த பிரதிநிதித்துவம் 12 ஆக இருந்தபோது தமிழர்களுக்கு 5 பிரதிநிதித்துவம் கிடைத்தது. தற்போது மொத்த எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கப்பட்டநிலையில் 4 பிரதிநிதித்துவமே கிடைத்துள்ளது.
இப்பிரதிநிதித்துவ வீழ்ச்சி வடக்குகிழக்குதமிழர்களின் மொத்த பிரதிநிதித்துவத்திலும் பாரிய வீழ்ச்சியினை உருவாக்கியுள்ளது. வீதாசாரப்படி பார்த்தால் கூட தற்போது தமிழர்களுக்கு 28 பிரதிநிதித்துவம் கிடைத்திருத்தல் வேண்டும். ஆனால் அரசின் தேசியப் பட்டியல் உறுப்பினரான லக்ஸ்மன் கதிர்காமரைச் சேர்த்தாலும் கூட 19 பிரதிநிதித்துவமே தற்போது கிடைத்துள்ளது.
கிழக்கு தமிழ் பிரதிநிதித்துவம்
ஆண்டு 1947 1952, 1956, 1960 1965, 1970 1977 1989 1995
மொத்த பிரதிநிதித்துவம் 07| 0 07| 10| 10| 10| 12 15 15
சிங்களப் பிரதிநிதித்துவம் - area O1 01 01 O2 04 06
தமிழ்ப் பிரதிநிதித்துவம் 03 04 03 05 04 05 05 06 04
இலங்கையில் இனக்குழும அரசியல் 2s
 

கிழக்கில் மேற்கண்டவாறு சிங்களப் பிரதிநிதித்துவம் வளர்ச்சியடைவதற்கும்; தமிழ்ப் பிரதிநிதித்துவம் வீழ்ச்சியடைவதற்கும் சிங்களக் குடியேற்றங்கள் பிரதான காரணங்களாக இருந்தன. எனினும் அதற்கு மேலாக மாவட்ட எல்லைகளை வெட்டி ஒட்டும் நடவடிக்கைகளும் இதில் பிரதான பாத்திரத்தை வகித்திருந்தது. இதன் மூலம் செயற்கையாகவே சிங்கள வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இது பற்றி அரசியல் யாப்பின் பிரயோகத்தின் கீழ் விரிவாகப் பார்ப்போம்.
கிழக்கில் சிங்களப் பிரதிநிதித்துவத்தின் வளர்ச்சி சிங்களக் குடியேற்றங்களுக்கு ஒரு அரசியல் அந்தஸ்தினைப் பெற்றுக் கொடுத்தது. இதனூடு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்ற நிலை மாற்றப்பட்டு ஓர் பல்லினப் பிரதேசம் என்ற எண்ணக்கருவும் திட்டமிட்டுக் கட்டி வளர்க்கப்பட்டது.
6வது திருத்தச் சட்டம்
தமிழர்களது விடுதலைப் போராட்டம் உச்சநிலையில் வளர்ந்து வந்த ஒரு காலப் பகுதியிலேயே 1983 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 8ஆந் திகதி அரசியலமைப்புக்கு 6வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது இதன் நோக்கம் சட்டப் பயமுறுத்தல் மூலம் தமிழ் மக்களை தனிநாட்டுப் போராட்டத்திலிருந்து விலக்கி வைப்பதாகும். இதன்படி தனி நாட்டுக்கான போராட்டத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவதுடன் அவர்களது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் எனக் கூறப்பட்டது.
அரசியல் யாப்பின் 157.அ பிரிவு இது பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
(1) இலங்கையில் ஆள்புலத்துக்குள்ளாக தனி அரசொன்றுதாபிக்கப்படுவதற்கு
ஆளெவரும் இலங்கைக்கு அல்லது இலங்கைக்குள் வெளியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு அளித்தல், ஆக்கமளித்தல்,ஊக்குவித்தல், நிதியுதவுதல், ஊக்கமளித்தல் அல்லது பரிந்துரைத்தல் ஆகாது.
(2) அரசியற் கட்சி அல்லது வேறு கழகம் அல்லது ஒழுங்கமைப்பு எதுவும் இலங்கையின்
ஆள்புலத்துக்குள்ளாகத் தனி அரசொன்றினைத்தாபித்தல் தனது இலக்குகளில் அல்லது குறிக்கோள்களில் ஒன்றாகக் கொண்டிருத்தலாகாது.
(3) மேற்கூறிய ஏற்பாடுகளை மீறிச் செயலாற்றுகின்ற ஆளெவரும் மேற்முறையீட்டு
நீதிமன்ற விசாரணையின் மூலம் குற்றவாளியாக காணப்படுமிடத்து.
(அ) 7 ஆண்டுகட்குமேற்படாத காலப்பகுதிக்கு குடியியற் தகுதியீனத்திற்கு உட்பட்டவராதல்
வேண்டும்.
(ஆ) சீவனத்திற்கு அவசியமான ஆதனங்கள் தவிர்ந்த அவரது அசையும், அசையா
ஆதனங்களை இழத்தல் வேண்டும்.
29 இலங்கையில் இனக்குழும அரசியல்

Page 21
(இ) 7 ஆண்டுகட்குமேற்படாத காலப்பகுதிக்கு குடியியல் உரிமைகளுக்கு உரித்துடையவராக
முடியாது. இங்கு குடியியல் உரிமைகள் என்பது
1) வெளிநாட்டுக் கடவுச்சீட்டொன்றைபெறுவதற்கான உரிமை, 2) பகிரங்கப்பரீட்சை எதற்கும் தேற்றுவதற்கான உரிமை 3) அசைவற்ற ஆதனம் எதனையும் சொந்தத்தில் வைத்திருப்பதற்கான உரிமை, 4) உயர் தொழில் அல்லது வியாபாரத்தில் ஈடுபடுவதை பதிவுசெய்வதற்கான உரிமை, (ஈ) பாராளுமன்ற உறுப்பினராக இருப்பின் அப் பதவியினின்றும் நீங்குதல் வேண்டும்.
சத்தியப்பிரமாணம் எடுத்தல்
மேலும் 6வது திருத்தத்தில் உள்ள இன்னோர் முக்கியமான அம்சம் சத்தியப்பிரமாணம் எடுத்தல் ஆகும். இதன்படி அரச அலுவலர், கூட்டுத்தாபன அலுவலர் சட்டத்தரணிகள், பாராளுமன்ற, மாகாண சபை, உள்ளுராட்சிசபை என்பவற்றின் உறுப்பினர்கள் பிரிவினைக்கு ஆதரவாக இருக்க மாட்டேன் என சத்தியப்பிரமாணம் எடுத்தல் வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் நான்காவது அட்டவணையிலுள்ள சத்தியப்பிரமாண வாசகம் பின்வருமாறு அமைந்திருந்தது.
er
usual ஆகிய நான் இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியலமைப்பை உறுதியாகப் போற்றிக் காப்பேன் என்றும் இலங்கையின் ஆள்புலத்துக்குள்ளாகத் தனி அரசொன்று தாபிக்கப் படுவதற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலேயோ ஆதரவு அளிக்கவோ, நிதி உதவவோ, ஊக்குவிக்கவோ, பரிந்துரைக்கவோ மாட்டேன் என்றும் பயபக்தியுடன் வெளிப்படுத்தி உறுதிசெய்கிறேன், சத்தியம் செய்கிறேன்.”
இச் சத்தியப்பிரமாணத்தை பதவியில் இருப்பவர்கள் இத்திருத்தம் அமுலுக்கு வந்த ஒரு மாதகாலப்பகுதிக்குள்ளும் புதிதாக பதவிஏற்பவர் பதவியினை ஏற்கும்போதும் செய்து கொள்ளல் வேண்டும் இல்லாவிடில் பதவியை இழந்தவர்களாக அவர்கள் கருதப்படுவார்கள் எனவும் கூறப்பட்டது.
தமிழர்களது அடிப்படை உரிமைகளையே மறுதலித்த இந்த 6வது திருத்தச் சட்டம் தமிழர்களது பகிரங்க அரசியலை இல்லாமல் செய்தது. அரச உத்தியோகத்தர்கள்; சட்டத்தரணிகள் என்போர் பகிரங்கமாக தனிநாட்டுப் பிரச்சாரம் செய்வதிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். தமிழ்த்தொடர்பு சாதனங்கள் தனிநாட்டுக்கு ஆதரவாக எழுதுவதை நிறுத்திக் கொண்டன. பல்கலைக்கழக தமிழ் அறிவுஜீவிகளும் மெல்ல ஒதுங்கிக் கொண்டனர்.
இலங்கையில் இனக்குழும அரசியல் 30

எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் அமைப்புகளை தலைமறைவாகப் போகும்படி இவை நிர்ப்பந்தித்தன. இதில் மிகப் பெரிய நட்டம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கே ஏற்பட்டது. அவர்கள் தனிநாட்டுக்கு எதிராக சத்தியப்பிரமாணம் செய்ய முடியாது தமிழ்நாட்டிற்கு பயணமாகினர்.
பின்னர் அவர்கள் திரும்பி வந்து இவ் ஏற்பாடுகளின் கீழ் தற்போது சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர் என்பது அவர்களது பிந்திய வரலாறு
ஆனாலும் அரசு எதிர்பார்த்ததுபோல இத் திருத்தம் அரசுக்கு பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுக்கவில்லை. மாறாக போராட்டம் மேலும்; மேலும் உக்கிரமடையத் தொடங்கியது. தமிழ் மக்களின் மேல் தட்டு அணி சற்று பின்வாங்கினாலும் ஏனைய அணிகள் திரளாக போராட்டத்தில் இணைந்து கொண்டன. போராட்டம் தனது பாதையில் அடுத்த கட்டத்தினை தாண்டத் தொடங்கியது.
1978ம் ஆண்டு அரசியல் திட்டம் தமிழ் மக்களின் போராட்ட எழுச்சியை அடக்குவதை நோக்கமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது என முன்னர் பார்த்தோம். இவ் அடக்குமுறைகளையும் எதிர்த்து போராட்டம் முன்னே பாய்ந்தது. 1983 இனக்கலவரம் இப்பாய்ச்சலில் ஒரு ஜெட் வேகத்தினை உருவாக்கியது. பல இயக்கங்கள் வளர்ச்சியுற ஆரம்பித்தன. கல்வி கற்றுக் கொண்டிருந்த பல மாணவர்கள் இயக்கங்களில் சேர ஆரம்பித்தனர். யாழ்ப்பாணத்தில் பல கல்லூரிகளில் உயர்தர வகுப்புக்கள் எல்லாம் வெறிச்சோடிக் கிடந்தன. கல்லூரி விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் மாணவிகள் பலர் இரவோடு இரவாக விடுதிகளில் இருந்து வெளியேறி இயக்கங்களில் சேரத் தொடங்கினர். கொழும்பு பாடசாலைகளில் இருந்து கூட மாணவர்கள் தலைமறைவாயினர்.
1977இல் ஐதேக அரசாங்கம் பதவியேற்ற காலம் தொடக்கம் இலங்கைஇந்திய உறவுகளும் சீராக இருக்கவில்லை. இப்பிராந்தியத்தின் புவிசார் அரசியலை மீறி இலங்கை அரசு அமெரிக்காவுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தமையும்; அமெரிக்க நலன்கள் இலங்கையில் பேணப்பட்டமையும், இந்தியாவுக்கு சினத்தையூட்டியது. விளைவு இந்திய அரசு தனது நலன்களைப் பிரதானமாகக் கொண்டு தமிழர் போராட்டத்தினைப் பயன்படுத்தத் தொடங்கியது.
இயக்கங்கள் அனைத்தும் இந்தியாவை பின் தளமாகப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் வைத்து அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் வழங்கப்பட்டதோடு குறிப்பிட்டளவு ஆயுதங்களும் கையளிக்கப்பட்டன. இதன் பின்னர் இந்திய உளவுப் பிரிவான “றோ' விற்கு இலங்கைப் பிரச்சினையை கையாளுவதே பிரதான பணியாகிவிட்டது.
மறுபக்கத்தில் தமிழர் போராட்டத்தினை பணயமாக வைத்து இந்திய அரசு:இலங்கை அரசுடன் பேரம் பேசலில் தொடர்ச்சியாக ஈடுபட்டது. இலங்கை அரசு பல்வேறு சுத்துமாத்துக்களை
செய்தபோதும் இறுதியில்அவையெல்லாம் முடியாதநிலையில் இந்திய அரசுக்கு பணிந்தது. இந்திய நலனைப் பேணக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட இலங்கைஇந்திய ஒப்பந்தத்திற்கு அது
சம்மதத்தினை அளித்தது.
இலங்கை-இந்திய ஒப்பந்தம் 1987ம் ஆண்டு யூலை மாதம் 29ம் திகதி கைச்சாத்திடப்பட்டது,
3 இலங்கையில் இனக்குழும அரசியல்

Page 22
இதன் மூலம் தனது நலனில் வெற்றிவாகையைச் சூடிக்கொண்ட இந்திய அரசு பெயருக்கு ஒரு நன்றிக்கடனாக தமிழர்களுக்கு மாகாண அரசாங்க முறையை ஒப்பந்தத்தில் சிபாரிசு செய்தது.
ஒப்பந்தத்தின் பிரகாரம்; 1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி அரசியலமைப்புக்கு கொண்டு வரப்பட்ட 13வது திருத்தத்தின் படி இலங்கையில் மாகாணசபை அரசாங்க முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வரசாங்க முறையை இலங்கை அரசு வழங்கியது என்பதை விட இந்திய அரசு தமிழர்களுக்கு வழங்கிய பிச்சை என்றே கூற வேண்டும். இந்திய அரசு இல்லாவிட்டால் இப் பிச்சையும் கிடைத்திருக்க மாட்டாது என்பதே உண்மை நிலை
தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள்; இதுவரைகால அவர்களின் போராட்டஇழப்புகள் என்பவற்றுடன் ஒப்பிடும் போது மாகாணி சபை அரசாங்க முறைதமிழர்களைப் பொறுத்தவரை யானைப் பசிக்கு சோளப் பொரி வழங்கியது போலவே இருந்தது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை; அவற்றைப் பிரயோகிக்கக் கூடிய அதிகாரங்கள்; அவ்வதிகாரங்களுக்கான பாதுகாப்பு: தமிழர் தாயகம் என்கின்ற விடயங்களில் மாகாண அரசாங்க முறை மிகப் பலவீனமான
நிலையையே கொண்டிருந்தது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு இலங்கை அரசகட்டமைப்புக்குள் அமையவேண்டுமென்றால், அது எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக 1949ம் ஆண்டு தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்ட போதே தந்தை செல்வா தனது கருத்தினை முன்வைத்திருந்தார். சுயநிர்ணயமுடைய இருசமஷ்டி அரசுகள்; அவை இரண்டையும் இணைத்த மத்திய அரசு என்பதே அவருடைய கொள்கையாக இருந்தது. இதன் அடிப்படையில் இலங்கையில் சிங்கள அரசு:தமிழரசு என்கின்ற இரு சுயநிர்ணயமுடைய சமஷ்டி அரசுகள் உருவாக்கப்படவேண்டும் என்றும்; மத்திய அரசு அவை இரண்டையும் இணைத்ததாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மாகாண அரசாங்க முறை இவை எவற்றையும் கவனத்தில் கொள்ளவில்லை என்றே கூற வேண்டும். இங்கு பேரின ஆதிக்கத்திற்கு பங்கம் ஏற்படாத வகையில் தீர்வினை முன்வைத்தல் வேண்டும் என்பதிலேயே கூடிய கவனம் செலுத்தப்பட்டது.
மாகாண சபைகளின் அமைப்புமுறை இவ் அரசாங்கமுறையின்படி இலங்கையில் உள்ள எல்லா மாகாணங்களிலும் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. வடக்குகிழக்கு மாகாணங்கள் மட்டும் தற்காலிகமாக இணைக்கப்பட்டு ஒரு சபையாக இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. சபை இயங்கத்தொடங்கி ஒரு வருடத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தி இணைப்பின் எதிர்கால நிலை தீாமானிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.
இங்குநாட்டில் உள்ளது இனப்பிரச்சினை என்பது மறைக்கப்பட்டு நிர்வாகப் பிரச்சினையே உள்ளது போல; எல்லா மாகாணங்களிலும் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. இனப்பிரச்சினைதான் பிரதான பிரச்சினையானால் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் அல்லவா அதிகாரங்கள் பங்கிடப்பட்டிருக்க வேண்டும். இந்த வகையில் தமிழர் பிரதேசங்கள் ஒன்றாக வரையறுக்கப்பட்டு அதற்கும் சிங்களப் பிரதேசங்கள் ஒன்றாக வரையறுக்கப் பட்டு அதற்கும் அதிகாரங்கள் பங்கிடப்பட்டிருக்க வேண்டும். அவை நடைபெறவில்லை.
இலங்கையில் இனக்குழும அரசியல் 32

மறுபக்கத்தில்; வடக்குகிழக்கு இணைப்பு கூட தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளது என்றே கூறப்பட்டுள்ளது. வடக்குகிழக்கு தமிழ் மக்கள் இணைந்து தானே போராடினார்கள். 1977 தேர்தலில் இணைந்து தானே தமிழ் ஈழத்துக்கான அங்கீகாரத்தினை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கினார்கள். அவையெல்லாம் இருக்க இணைப்பை நிலை நிறுத்த கிழக்கில் மட்டும் ஏன் சர்வஜன வாக்கெடுப்பைக் கோர வேண்டும். இவ்வாறு கோருபவர்கள் வடக்கு கிழக்கு மக்கள்; சிங்கள அரசுடன் இணைந்திருக்க விரும்புகின்றார்களா? இல்லையா? என ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த தயாராக உள்ளார்களா? இங்கே அவர்களது கவனம் முழுவதும் தமிழ் தாயகத்தைக் கூறு போடுவதிலேயே தங்கியிருந்தது.
மாகாண சபைகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள்
அதிகாரங்களைப் பொறுத்தவரை சுயநிர்ணயமுடைய அதிகாரங்களையே தமிழ் மக்கள் கோரியிருந்தார்கள். இவ்வதிகாரங்கள் தமது தாயகத்தின் அனைத்து விடயங்களிலும் அதிகாரங்களைப் பிரயோகிக்கக் கூடியதாக இருந்திருக்கவேண்டும். குறிப்பாக காணி, பாதுகாப்பு பொருளாதார நடவடிக்கைகள்; மற்றும் மக்கள் நலன் பேணும் நடவடிக்கைகள் என்பவற்றில் முழுமையான அதிகாரம் இருந்திருக்க வேண்டும். இவை எவையும் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. அதிகாரங்களை போதியளவு கொடுக்காமல் இருத்தல்; கொடுத்தவற்றிலும் பிடிகளை வைத்திருத்தல்; கொடுத்தவற்றை நடைமுறையில் நிறைவேற்றாது விடுதல் என்பதே இங்கு அதிகளவில் உள்ளது.
காணி
அரசியல் யாப்பின் பின்னிணைப்பு (2) காணி காணிக் குடியேற்றம் பற்றி குறிப்பிட்டுள்ளது. இதன்படி அரச காணிகள் அனைத்தும் மத்திய அரசுக்கு உரித்துடையதாக இருக்கும். இந்தவகையில் மாகாணங்களிலுள்ள காணிகளை மத்திய அரசு தனது விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தலாம். இது விடயத்தில் மத்திய அரசு மாகாண சபையுடன் கலந்தாலோசிக்க வேண்டும் எனக் கூறியபோதும் அது கட்டாயப்படுத்தப்படவில்லை.
மேலும் ஒரு பிரஜைக்கு அல்லது ஒரு அமைப்பிற்கு காணிகளை கையளித்தல் கூட ஜனாதிபதியால் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
காணிக்குடியேற்றங்கள் தொடர்பில் அதற்கான செயற்திட்டங்கள் தயாரிக்கும் பொறுப்பு மத்திய அரசிடம் இருக்கும் என்றும் செயற்திட்டங்களின் நிர்வாகமும் முகாமையும் மத்திய அரசினால் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசிடம் இவ்வதிகாரங்கள் இருக்குமானால் அது எவ்வாறு நடந்துகொள்ளும் என்பதை கூறித் தெரியவேண்டும் என்பதில்லை.
மேலும் குடியேற்றங்களுக்கு ஆட்களைத் தெரிவு செய்யும் போது தேசிய இன விகிதாசாரத்தின் படி மேற்கொள்ளப்படும் என்றும் முதலில் மாவட்டத்தில் உள்ள காணியற்றோருக்கும் பின்னர்
33 இலங்கையில் இனக்குழும அரசியல்

Page 23
மாகாணத்திலுள்ள காணியற்றோருக்கும் அவை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இங்கு தேசிய இன விகிதம் என்பது ஒருபோதும் தமிழர்களுக்கு சார்பாக இருக்கப் போவதில்லை. இதன்படி பார்த்தால் தமிழர் பிரதேசத்தில் கூட74 வீத சிங்களவர்குடியேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட மாவட்டத்தின் இன வீதாசாரத்தைக் கூட கவனத்தில் எடுக்க தயாரில்லை என்பதே இங்கு தெரிகின்றது.
இது விடயத்தில் 1965இல் கைச்சாத்திட்ட டட்லி செல்வா ஒப்பந்தம் இதைவிட தெளிவாக உள்ளது என்றே கூற வேண்டும்.
டட்லி-செல்வா ஒப்பந்தம் குடியேற்றம் தொடர்பாக வடக்குகிழக்கு மாகாணங்களில் கீ ழ்வரும் விடயங்கள் முதன்மையாக கவனிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.
அ) முதலாவதாக; வடக்குகிழக்கு மாகாணங்களிலுள்ள காணிகள் அம்மாகாணங்களில்
உள்ள காணியற்றவர்களுக்கே முதலில் வழங்கப்பட வேண்டும்.
ஆ) இரண்டாவதாக, வடக்குகிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ்பேசும் மக்களுக்கே
வழங்கப்படல் வேண்டும்.
இ) மூன்றாவதாக இலங்கையில் உள்ள ஏனைய பகுதிகளில் உள்ள தமிழ் பேசும்
இனத்தவர்களுக்கே முதலிடம் கொடுத்து ஏனையவர்களுக்கும் வழங்கலாம்.
பாதுகாப்பு
பாதுகாப்பு விடயத்தில் மாகாணத்துக்கென மாகாண பொலிஸ் பிரிவு ஒன்று அமைக்கப்படும் என்றும்; இதற்கு மாகாண முதலமைச்சரின் ஆலோசனையின் பெயரில் பொலிஸ்மா அதிகாரினால் நியமிக்கப்பட்ட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொறுப்பாக இருப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.
பொலிஸ் பிரிவில், தேசியப் பொலிஸ் பிரிவில் இருந்து கடமை வழிஅனுப்பப்பட்ட பல்வேறு தர பொலிஸ் உத்தியோகத்தர்களும், மாகாணத்தில் திரட்டப்பட்ட பல்வேறு தரபொலிஸ் உத்தியோகத்தர்களும் அங்கம் வகிப்பர் என்றும் கூறப்பட்டுள்ளது. மாகாணப் பொலிஸ் பிரிவுக்கான நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக மாகாண பொலிஸ் ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்படும் என்றும் இவ்வாணைக்குழுவில் மாகாணத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதியின் ஆலோசனையுடன் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் ஒருவர், மாகாண முதலமைச்சரினால் நியமிக்கப்படும் ஒருவர் உட்பட மூவர் அங்கம் வகிப்பர் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் மாகாண பொலிசுக்கான சுடுபடைக்கலங்கள், வெடிமருந்துகள் வேறு சாதனங்கள் என்பவற்றின் தன்மை, வகை, அளவு என்பன பற்றி மாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் கலந்தாலோசனையின் பின்னர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் இனக்குழும அரசியல் 34

இங்கு மாகாணப் பொலிஸ் பிரிவு உட்பட அனைத்துப் பொலிஸ் பிரிவினதும் பயிற்சிக்கு மத்திய அரசே பொறுப்பாக இருக்கும் எனவும் கூறப்பட்டது.
மேலும்; மாகாணப் பொலிஸ் பிரிவு முழுமையாக மாகாண அரசின் அதிகாரத்திற்குள் இல்லாத நிலை தெளிவாக உள்ளது. மாகாண பொலிஸ் தலைவரான பிரதிப் பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு வழங்கப்படவில்லை. அவரின் ஆலோசனை மட்டும் பெறப்படும் என கூறப்பட்டுள்ளது. மாகாண ஆட்திரட்டலை மேற்கொள்ளும் மாகாண பொலிஸ் ஆணைக்குழுவிலும் மத்திய அரசின் கையே மேலோங்கியுள்ளது. அங்கு முதலமைச்சரால் நியமிக்கப்பட்டவர் ஒருவரேயாவார். ஏனைய இருவரும் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்களாக உள்ளனர். அதைவிட மாகாண பொலிஸ் பிரிவில் தேசிய பொலிஸ் பிரிவிலிருந்து கடமை வழி அனுப்பப்பட்டவர்களும் உள்ளனர். ஏன் இது விடயத்தில் அனைவரையும் மாகாண மட்டத்தில் திரட்டக் கூடாது என்பதற்கு பதில் இல்லை.
மேலும் படைக்கலங்கள் பற்றியும் பயிற்சி பற்றியும் தீர்மானங்களை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் அதிகாரங்களும் மாகாண அரசுக்கு வழங்கப்படவில்லை. அவை மத்திய அரசின் கைகளிலேயே உள்ளன.
எனவே நுணுக்கமாகப் பார்க்கும் போது தமிழ் மக்களின் பாதுகாப்பு அதிகாரத்தை தமிழ் மக்களினால் தேர்ந்தெடுத்த சக்திகளிடம் கொடுக்க அரசு தயாரில்லை என்பதையே இது காட்டுகிறது. அதாவது பிரதான அழுத்தி; மத்திய அரசிடம் இருக்க வேண்டும் என்பதிலேயே கவனமாக உள்ளது. இங்கு மத்திய அரசு என்பது பேரினமயப்பட்ட சிங்கள அரசே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு மத்திய அரசின் மேலாதிக்க நிலை மாகாண பொலிஸ் பிரிவில் இருந்தும் மாகாண சபை அறிமுகமாகி இன்று 11வருடங்கள் ஆன பின்னரும் கூட மாகாண பொலிஸ் பிரிவு உருவாக்கப்படவில்லை. இருக்கின்ற சொற்ப அதிகாரங்களே தனக்கு ஆபத்தாகி விடலாம் என அரசு கருதுகின்றமையே இதற்குக் காரணமாகும். மாகாண அரசாங்கத்திற்கு காவலனாக இருந்த இந்திய அரசு கூட இதில் போதியளவு அக்கறைகாட்டவில்லை. இந்திய இராணுவம் இங்கிருந்தபோது உருவாக்கப்பட்டதொண்டர் பொலிஸ் பிரிவோடு தனது கடமைகளை அதுமுடித்துக் கொண்டது. இந்திய இராணுவம் சென்றவுடன் அதுவும் இல்லாமல் போய் விட்டது.
கைத்தொழில் இலங்கை முழுவதிலும் கைத்தொழில் பற்றிய தேசியக் கொள்கையை உருவாக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்கும். மாகாண சபைகள் அத்தேசியக் கொள்கைக்கு ஏற்ப மாகாண மட்டத்தில் கைத்தொழில் திட்டங்களை உருவாக்கலாம் எனக் கூறப்பட்டது.
இதன் உண்மையான அர்த்தம் மத்திய அரசின் கருத்தின் படி தான் மாகாணசபைகள்; திட்டங்களை உருவாக்கலாமே தவிர சுயாதீனமாக மாகாண சபை எதனையும் உருவாக்கி விடமுடியாது என்பதாகும். மத்திய அரசின் கைத்தொழில் பற்றிய தேசியக் கொள்கை இடைத்தர கீழ் மட்ட, கைத்தொழில் திட்டங்களை உருவாக்குவதற்கே மாகாண அரசுகளுக்கு அனுமதியை
35 இலங்கையில் இனக்குழும அரசியல்

Page 24
வழங்கியுள்ளது. பாரிய கைத்தொழில் நிறுவனங்களை மாகாண சபை உருவாக்கவும் முடியாது. தற்போது வடக்கு-கிழக்கில் செயற்படும் பாரிய கைத்தொழில் நிலையங்களைப் பொறுப்பேற்கவும் முடியாது
உண்மையில் வடக்குகிழக்கில் தற்போது இருக்கும் பாரிய தொழிற்சாலைகளான சீமெந்து தொழிற்சாலை (காங்கேசன்துறை): இரசாயனத் தொழிற்சாலை (பரந்தன்); காகிதத் தொழிற்சாலை (வாழைச் சேனை); இல்மனைற் தொழிற்சாலை (புல்மோட்டை) என்பன அதிகளவு வருமானத்தினைத் தரும் தொழிற்சாலைகளாகும். இதில் சீமெந்து தொழிற்சாலை: இரசாயனத் தொழிற்சாலை என்பன தற்போது இயங்குவதில்லை) இவ்வருமானங்கள் எல்லாம் மத்திய அரசிற்கே போய் விடுகின்றன. மேலும் மாகாண எல்லைக்குள் கண்டுபிடிக்கப்படுகின்ற கணிப் பொருட்களும் மத்திய அரசிற்கு உரியது என்றே கூறப்படுகின்றது.
தமிழ் மக்களின் அபிவிருத்திக்கு உதவப் போகின்ற அவர்களின் சொத்துக்களை அவர்களுக்கே பயன்படுத்த அனுமதி மறுப்பதை எந்த வகையில் நியாயமாகக் கொள்ள முடியும். இவையல்லாமல் தமிழ் மக்களின் மாகாண அரசு எந்த வகையில் நிதியீட்டத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அமெரிக்கா, கனடா அரசியல் யாப்பகளில் கைத்தொழில் தொடர்பான அதிகாரங்கள் மாநில அரசுகளிடமே வழங்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து பாராளுமன்றச் சட்டத்தினால், ஆக்கப்பட்ட தேசிய பெருந்தெருக்கள்; புகையிரத சேவைகள்; நீர்வழி, ஆகாயவழிப் போக்குவரத்து; கடல்; தரை, ஆகாய பயணிகள் போக்குவரத்து என்பன மத்திய அரசின் அதிகாரங்களுக்குட்பட்டவையாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
தேசியப் பெருந்தெருக்கள் எவை என்பது பற்றி யாப்பில் வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. பாராளுமன்றமே அதனைத்தீர்மானிக்கும் என மட்டும் கூறப்பட்டது தெருக்களைப் பொறுத்தவரை A, B, C, D, E என ஐந்து வகைத் தரங்களைக் கொண்ட தெருக்கள் இலங்கையில் உள்ளன. இவற்றில் மாகாண சபை செயற்படத் தொடங்கிய காலத்தில் A, B தெருக்கள் மட்டுமே தேசிய பெருந்தெருக்கள் என நடைமுறையில் கருதப்பட்டது. இதனால் C, D, E தெருக்களைப் பொறுப்பெடுக்கும் வகையில் சொற்ப காலம் பதவியில் இருந்த வடக்குகிழக்கு மாகாண சபை சட்டத்தினை நிறைவேற்றியது. ஆனால் சிறிது காலத்திலேயே பாராளுமன்றம் A,B தெருக்களோடு C தெருக்களும் பெருந்தெருக்கள் என்ற வகைக்குள் அடங்கும் என ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. இதன் பின்னர் D, E தெருக்கள் என அழைக்கப்படுகின்ற குச்சு ஒழுங்கைகள் மட்டுமே மாகாண சபைகளின் அதிகாரத்தில் விடப்பட்டன.
இது விடயத்தில் எத்தகைய தெருக்களாக இருந்தாலும் சரி மாகாண எல்லைக்குள் உள்ள தெருக்களை; ஏன் மாகாண அரசாங்கத்தின் அதிகாரத்திற்குள் விடக் கூடாது என்பதற்கான மறுப்பு நியாயங்கள் அரசதரப்பிலிருந்து இதுவரை வரவில்லை. அமெரிக்கா; சுவிஸ், கனடா மட்டுமல்ல; இந்தியாவில் கூட அம் மாநிலத்தின் எல்லைக்கு உட்பட்ட தெருக்கள் பற்றிய அதிகாரம் மாநில அரசுகளிடமே விடப்பட்டுள்ளன.
இலங்கையில் இனக்குழும அரசியல் 36

புகையிரதச் சேவைகள் பற்றிய விடயங்கள் அனைத்தும் மத்திய அரசாங்கத்திடம் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. புகையிரத சேவை அதிகளவிலான வருமானத்தினைத் தரக்கூடிய துறை என்ற வகையில் மாகாண எல்லைக்குள்ளான புகையிரத போக்குவரத்து அதன் பாதைகள் பற்றிய அதிகாரத்தினை ஏன் மாகாண அரசுக்கு விடக்கூடாது. இதனூடாக மாகாண சபை தனக்கான வருமானத்தினைக் கூட பெற்றுக் கொள்ள முடியுமல்லவா?
ஏனைய தரைப் போக்குவரத்து அதிகாரம் கூட முழுமையாக மாகாண சபைகளுக்கு வழங்கப்படவில்லை. இதில் எவ்வளவுதூரம் மாகாண சபை அதிகாரத்தினைப் பிரயோகிக்கலாம் என்பது தொடர்பாக பாராளுமன்றம் ஒரு சட்டத்தினை இயற்றிக் கொடுக்க வேண்டும் என்றே கூறப்பட்டது. எனினும் பேச்சு வார்த்தைகளின் போது உள்ளுர் போக்குவரத்துக்கள் இந்தியாவில் உள்ளதுபோல மாகாண அரசிடம் இருக்கும். இந்த வகையில் CTB என அழைக்கப்படுகின்ற இலங்கைப் போக்குவரத்துச் சபை, மாகாண அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகவே இருக்கும் எனக் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் அதனைப் பொறுப்பெடுப்பதற்கான சட்டத்தினையும் வடக்குகிழக்கு மாகாண சபை நிறைவேற்றியது. ஆனால் சொற்ப காலத்ததிலேயே பாராளுமன்றம் வேறோர் சட்டத்தினை இயற்றி அவ் உரிமையை இல்லாமல் செய்தது.
இவ்விடயத்தில் தமிழக அரசு; பல போக்குவரத்துக் கழகங்களை பல்வேறு மாவட்டங்களிலும் நிறுவி திறம்படச் செயற்படுத்தி வரும் முறை எமக்கும் உதாரணமாகக் கூடியது.
கடல் வழியான கப்பல் போக்குவரத்து விமானப் போக்குவரத்து என்பனவும் மத்திய அரசிடம் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இது விடயத்திலும் மாகாண எல்லைக்குள்ளான போக்குவரத்துக்கள் மாகாண அரசிடத்திலேயே வழங்கப்பட்டிருக்க வேண்டும். வடக்குகிழக்கு மாகாணங்கள் நீண்ட கடல் பரப்பினைக் கொண்டிருப்பதனால் மக்களிடையேயான உறவுகளுக்கும் பொருளாதார அபிவிருத்திகளுக்கும் தமிழ் மக்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட கடற்போக்குவரத்து மிக மிக அவசியமானதாகும். இதே போல நீண்ட நிலப் பரப்பினைக் கொண்டுள்ளமையினால் ஆகாயப் போக்குவரத்தும் அவசியமாக உள்ளது.
மீன் பிடித்தொழிலும் கடல்வளமும்
மீன்பிடித்தொழில் உட்பட கடல் வளம் பற்றிய அதிகாரங்கள் மத்திய அரசிற்கு உரியது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழர் தாயகத்தின் நீண்ட கடற்பரப்பில் தமிழ் மக்களுக்கான அதிகாரம் இல்லாமல் போகின்றது. தமிழ் மக்களின் பொருளாதார உயிர் நாடி விவசாயமும் கடற்றொழிலுமே ஆகும். கடற் தொழில் தொடர்பான அதிகாரத்தினைப் பெற்றுக் கொள்ளாமல் எவ்வாறுதான் தமிழ் மக்களின் பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்ய முடியும்.
மேலும் துறைமுகங்கள் பற்றிய அதிகாரங்களும் மத்திய அரசிடமேயுள்ளது. இதில் சர்வதேச போக்குவரத்து; சர்வதேச வர்த்தகம் தவிர்ந்த ஏனைய மாகாண எல்லைக்கு உட்பட்ட துறைமுகங்களை ஏன் மாகாண சபைகளுக்கு கொடுக்க முடியாது.
கைத்தொழில், போக்குவரத்து கடற்றொழில், துறைமுகங்கள் சம்பந்தமான ஏற்பாடுகளை
37 இலங்கையில் இனக்குழும அரசியல்

Page 25
நுணுக்கமாகப் பார்க்கின்ற போது அதில் தமிழ் மக்களுக்கு அதிகாரங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது. இதனூடு பொருளாதார ரீதியாக, தமிழ் மக்கள் சுயாதீனம் பெற்றுவிடக் கூடாது என்பதில் பேரினவாதிகள் கொண்டுள்ள கவனத்தை அறிய
முடிகிறது.
தமிழ் மக்கள் எப்போதும் தங்கள் தயவில் இருக்க வேண்டும் என்பதே பேரினவாதிகளின் எண்ணம். அதிகளவிலான சுயாதீனம் பேரினவாத அபிலாசைகளுக்கு பங்கமாக வந்துவிடலாம் என அவர்கள் கருதுகின்றனர்.
கல்வி
கல்வியைப் பொறுத்தவரை தேசியப் பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்; தொழில்நுட்பக் கல்லூரிகள்; ஆசிரிய கலாசாலைகள் கல்விக் கல்லூரிகள் என்பன மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்டதாக இருக்கும். ஏனைய கனிஷ்ட இடைநிலைப் பாடசாலைகளே மாகாண அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அத்தோடு பாடத் திட்டத்தினை தீர்மானித்தல் பரீட்சை வினாக்களைத் தீர்மானித்தல் என்பனவும் மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருக்கும் எனவும் கூறப்பட்டது.
வடக்கு-கிழக்கின் தேசியக் கல்லூரிகளில் பெரும்பாலானவை அரசினால் உருவாக்கப்பட்டவையல்ல. இந்து மத நிறுவனங்களினாலும் கிறிஸ்தவ மிஸரிகளினாலும் உருவாக்கப்பட்டவையே அவையாகும். அவற்றின் வளர்ச்சியிலும் அரசாங்கத்தின் பங்கை விட தமிழ் மக்களின் பங்கே அதிகமாகும். மாகாண அரசாங்கத்தின் கீழ் அவை வராததினால் அவைகளின் தொடர்ச்சியான வளர்ச்சி தடைப்படுகின்றது. பேரினமயப்பட்ட மத்திய அரசு இதற்கு பெரிதாக உதவப் போவதில்லை. ஒரு தேசியக் கல்லூரியின் அதிபர் "தேசிய பாடசாலையாக நாம் இருப்பதனால் மாகாண அரசாங்கத்திலிருந்து கிடைக்கக் கூடிய வளங்களை இழந்துவிட்டோம்; ஆசிரியர் பற்றாக்குறையைக் கூட எம்மால் தீர்க்க முடியவில்லை” என குறைப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகங்கள் தமிழ்ப் பகுதிகளுக்கு வந்திராத ஒரு காலத்தில்; தமிழ்ப் பகுதிகளின் அறிவெழுச்சி சின்னமாகவும் பல்வேறு துறைகளில் தமிழ் மக்களின்று வழிகாட்டியாகவும் இத் தேசியக் கல்லூரிகளே திகழ்ந்தன என்பதை எவரும் மறுக்க முடியாது.
பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரையிலும் அதன் அதிகாரம் மத்திய அரசிடம் இருப்பதனால் தொடர்ந்து வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகளைக் காண முடியவில்லை. பல்கலைக்கழகம் என்பது வெறுமனே பட்டதாரிகளை உருவாக்கும் உற்பத்திக் கூடமல்ல. மாறாக ஒரு பிரதேசத்தின் அனைத்து அபிவிருத்திக்குமான வழிகாட்டியும் அதுதான். புதிய அபிவிருத்தி மாதிரிகளை உற்பத்தி செய்யும் பரிசோதனைக் கூடமும் அதுதான். இந்த வகையில் தமிழ் மக்களின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக அது இருக்கின்றபோது மட்டுமே தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய பணிகளை அதனால் மேற்கொள்ள முடியும். பல் கலைக்கழகங் களின் பெளதீக வளங்களையும் அபிவிருத்தி செய்ய முடியும்.
இலங்கையில் இனக்குழும அரசியல் 38

மேலும் கல்வியில் சமத்துவம் நிலவுகின்றது என அரசு ஆர்ப்பரித்து கூறுகின்ற போதும்; பல கற்கைப் பீடங்கள் தமிழ்ப் பகுதிப் பல்கலைக்கழகங்களில் இல்லை. பொறியியல், சட்டம், பல் மருத்துவம், மிருக மருத்துவம் போன்ற பீடங்கள் இல்லை. இவை எமது பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்படவில்லை. கடற் தொழில் பீடம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் பல்கலைக்கழக அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும். இந்தியாவில் ஒருசில பல்கலைக்கழகங்களை விட ஏனைய பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மாநில அரசுகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக பெளதீக அபிவிருத்தியைப் பொறுத்தவரையும் கூட தமிழ்ப் பிரதேசப் பல்கலைக்கழகங்கள் புறக்கணிக்கப்பட்டே வருகின்றன. ருகுணு பல்கலைக்கழகமும் கிழக்குப் பல்கலைக்கழகமும் ஒரே வருட காலத்தில் உருவாக்கப்பட்டபோதும் வளர்ச்சியைப் பொறுத்தவரை மலைக்கும்; மடுவுக்கும் உள்ள வித்தியாசமே உள்ளது.
பாடத்திட்டங்களை உருவாக்குவதிலும் மாகாண அரசாங்கங்களுக்கு அதிகாரம் இல்லாததன் அபாயகரமான விளைவை கண் முன்னே காண முடிகிறது. இன்றைய நிலையில் மத்திய அரசினால் பொய்யுரைகளுடன் புனையப்பட்ட பாடத்திட்டங்களையே தமிழ் மாணவர்களும் கற்க வேண்டி ஏற்பட்டுள்ளது. ஒரு நல்ல உதாரணம் தற்போதைய வரலாற்றுப் பாடத்திட்டம்; அதில் தமிழ் மக்களின் வரலாறு புறக்கணிக்கப்பட்டு சிங்கள மக்களின் வரலாறு மட்டுமே இலங்கையின் வரலாறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
அரசியல் யாப்புச் சட்டங்கள் வெறுமனே எழுத்தில் இருந்து விட்டால் அதனால் எவ்வித விளைவும் ஏற்படப் போவதில்லை. நடைமுறையில் அது பிரயோகிக்கப்படும் போதே பல்வேறு விளைவுகளை அடையாளம் காணமுடியும் இலங்கையில் பேரின ஆதிக்கத்தையும்; அதன் விழிப்பு நிலையையும் யாப்பின் பிரயோகத்தை அவதானிக்கும்போதே தெளிவாகக் கண்டுகொள்ள முடியும்
இலங்கையில் பேரினவாதிகள் இச்செயற்பாட்டிற்கு இரு நடைமுறைகளைப் பின்பற்றினர். பேரினமயமாக்கலை புகுத்துவதற்க்கு ஒரு வித நடைமுறையையும் தமிழர் நல செயற்பாடுகளை தடுப்பதற்கு இன்னோர் வித நடைமுறைகளையும் பின்பற்றினர். பேரினமயமாக்கலை புகுத்துவதற்கு பின்பற்றப்பட்டவையாவன.
l, பேரினமயமாக்கலுக்கான அம்சங்களை யாப்பில் சேர்த்தல், 2. யாப்பு ஏற்பாடுகள் போதாமல் இருக்கும் போது பாராளுமன்றத்தினூடு அதற்கான
சட்டங்களை உருவாக்குதல். 3. சட்டங்களிலுள்ள ஒட்டைகளைப் பயன்படுத்திபேரினமயமாக்கலை மேற்கொள்ளுதல். 4. சட்டங்கள்; ஒட்டைகள் என்பன சரிவராத போது அவற்றையெல்லாம் மீறி பேரின
மயமாக்கலை மேற்கொள்ளுதல்.
தமிழர்களது தொடர்ச்சியான போராட்டங்களினால் ஏற்பட்ட உள்; வெளி நிர்ப்பந்தங்கள் அரசினருக்கு தமிழர் நல ஏற்பாடுகளை யாப்பில் சேர்க்க வேண்டிய நிலையை உருவாக்கியது. எனினும் இவை நடைமுறையில் பயனளிக்காத வகையில் மற்றோர் நடைமுறையை பின்பற்றினர் 960)6).JW T660T.
39 இலங்கையில் இனக்குழும அரசியல்

Page 26
1, நடைமுறையில் அதிக பயன் தரக்கூடிய விடயங்களை யாப்பில் சேர்க்காது விடல்.
யாப்பிலுள்ள ஏற்பாடுகளில் மைய அரசு பிடிகளை வைத்திருப்பதன் மூலம்
நடைமுறையில் செயற்படவிடாது தடுத்தல்,
3. யாப்பு ஏற்பாடுகளை பேரினமயப்படுத்தப்பட்ட நிர்வாகத்துறை நடைமுறையில்
செயற்படுத்தாது விடுதல்.
4 தமிழ்த் தரப்பு தானாக அதற்கு முயற்சி செய்யும் போது அதனைச் செயற்படுத்த
விடாது முட்டுக் கட்டை போடுதல்.
2.
மேற்கூறிய இருவித நடைமுறைகளின் பின்புலத்திலேயே நாம் 1978ம் ஆண்டு யாப்பின் பிரயோகத்தினை அவதானித்துக் கொள்ள வேண்டும்.
சட்டத்துறையில் யாப்பின் பிரயோகம்
இத்தொடரில் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல இக்காலத்தில் பேரினவாதிகள் எதிர்நோக்கிய பிரதான பிரச்சினை வளர்ந்து வந்த தமிழர்களின் விடுதலைப் போராட்டமே. இதனால் இக்காலத்தில் சட்டத்துறையின் பிரதான பணியும் விடுதலைப் போராட்டத்தை நசுக்கக் கூடிய சட்டங்களை உருவாக்கிக் கொடுப்பதாகவே இருந்தது.
இவ்விடயத்தைப் பொறுத்த வரை அவசரகாலச் சட்டங்களை உருவாக்கும் ஏற்பாடுகள் காணப்பட்ட போதும் அவை பல போதாமைகளைக் கொண்டிருந்தன. மூன்று மாத காலத்திற்கு ஒரு தடவை புதுப்பிக்க வேண்டி இருந்தமையும்; அவை முழு நாட்டிற்கும் பொதுவாக இருந்தமையும் அப்போதாமைகளில் பிரதானமானவையாக விளங்கின.
ஒவ்வொரு தடவை புதுப்பிப்பதற்கான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறுகின்றபோதும் அவை பல உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்களை கொடுக்ககூடியனவாக இருந்தன. அதேவேளை ஏற்பாடுகள் முழுநாட்டிற்கும் பொதுவானதாக இருந்த போது சிங்கள மக்களும் அதனால் பாதிக்கப்படக் கூடிய நிலை ஏற்பட்டது. இது ஆட்சியாளர்களின் இருப்புக்கே அச்சத்தைத் தரக்கூடியதாகவும் இருந்தது.
இதனால் தமிழ் மக்களை மட்டும் பாதிக்கக் கூடியதாகவும் அவர்களது போராட்டத்தினை நசுக்கும் வல்லமை கொண்டதும் நிரந்தரமானதுமான புதிய சட்டங்களை உருவாக்க முன்வந்தனர். யாப்பு ரீதியாக தமக்குக் கிடைத்த பாராளுமன்ற அதிகாரத்தைக் கொண்டே அச் சட்டங்களை உருவாக்க முன்வந்தனர். அவற்றுள் முக்கியமானது புலித்தடைச் சட்டமும்; பயங்கரவாதத் தடைச் சட்டமும் ஆகும்.
இதில் புலித்தடைச் சட்டம் 1978ம் ஆண்டு ஆவணி மாதம் 19ம் திகதி கொண்டு வரப்பட்டது. 1978 சித்திரை 25இல் புலிகள் இயக்கம் தம்மை பகிரங்கமாக வெளிப்படுத்தியதைத் தொடர்ந்தே இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. புலிகளின் பிரகடனப்படுத்தும் கடிதம் அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின் எதிர்கட்சித்தலைவருக்கான காரியாலயத்திலிருந்து தட்டச்சு செய்யப்பட்டது என்பது சுவாரஷ்யமான விடயம். இச்சட்டம் பின்னர் பிரேமதாசா காலத்தில்
இலங்கையில் இனக்குழும அரசியல் 40

நீக்கப்பட்டு தற்போது சந்திரிகா காலத்தில் திரும்பவும் கொண்டு வரப்பட்டுள்ளது. 1978ம் ஆண்டின் 16ம் இலக்கச் சட்டம் என இது அழைக்கப்பட்டது.
இச்சட்டம் பற்றிய ஏற்பாடுகள் தற்போது பத்திரிகைகளில் விபரமாக வந்துள்ளமையினால், அவற்றை விபரிக்க வேண்டிய அவசியமில்லை. இச்சட்டத்தின் மூலம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஏற்பட்ட இழப்பு பகிரங்க அரசியல் நடவடிக்கைகளுக்கும் ஆயுத அரசியல் நடவடிக்கைகளுக்கும் இடையிலான இணைப்பு இல்லாமல் செய்யப்பட்டது தான். இதற்குப் பின்னர் பகிரங்க அரசியலை மேற்கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி அதனைக் குறைத்துக் கொண்டு சமரச அரசியலை நோக்கி நகரத் தொடங்கியது. தொடர்ந்து 1983ல் யாப்புத்திருத்தமான 6வது திருத்தச் சட்டத்துடன் அதுதளத்தினை விட்டு தமிழகத்திற்கும் நகரத்தொடங்கியது. பகிரங்க அரசியலில் ஈடுபட்ட தமிழ்ச் சமூக மேல் தட்டு அணியினரும் சற்று விலகத் தொடங்கினர்.
இரண்டாவது சட்டம் பயங்கரவாதச் சட்டமாகும். இது 1979ல் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் தமிழ் மக்களை ஈனத்தனமாக நசுக்குவதாக இருந்தது. இச்சட்டத்தின் கீழ் பொலிஸாருக்கு அளவு கடந்த அதிகாரங்கள் கொடுக்கப்பட்டன. வருடக்கணக்கில் சிறைவைத்து சித்திரவதை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. சந்தேக நபர்கள் என்ற போர்வையில் தமிழ் இளைஞர்களை கைது செய்து கொலை செய்யும் உரிமையும் வழங்கப்பட்டது. கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை உறவினர்களுக்கு காட்டாமலேயே படையினர் அழிப்பதற்கும்
அனுமதி வழங்கப்பட்டது.
சட்டம் கொண்டு வரப்பட்டு ஒருசில தினங்களுக்குள்ளேயே நவாலியைச் சேர்ந்த இன்பம் எனும் இளைஞரும் அவரது மைத்துனராக செல்வரத்தினம் என்னும் ஒரு பிள்ளையின் தந்தையும் ஒரே இரவில் கோரமாகக் கொலை செய்யப்பட்டு பண்ணைக் கடற்கரையில் வீசப்பட்டனர். பரமேஸ்வரன்; ராஜேஸ்வரன் என்னும் இரு சகோதரர்களும்; பாலா என்னும் இளைஞரும் காணாமல் போயினர். சுற்றிவளைப்புகள் கைதுகள் என்பன தமிழ்ப் பகுதி எங்கும் தொடர்ந்தன. இப்பிரச்சினைகளை கையாளவென பாதுகாப்பு அமைச்சுக்கு புறம்பாக லலித் அத்துலத் முதலி தலைமையில் “தேசிய பந்தோபஸ்து அமைச்சு” எனும் தனியான அமைச்சும் உருவாக்கப்பட்டது. நவீன முறையில் விசாரணை செய்யவும் சித்திரவதை செய்யவும் என பூசா முகாம் திறக்கப்பட்டது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு
அங்கு அடைக்கப்பட்டனர்.
இவ்வொடுக்கு முறையின் தொடர்ச்சியாகவே 1983ல் திட்டமிட்ட இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. இன்று பாஸ்கெடுபிடி வரை அது தொடர்கின்றது.
நிர்வாகத்துறையில் யாப்பின் பிரயோகம்.
நிர்வாகத்துறையில் யாப்பின் பிரயோகம் அனைத்தும் தமிழர் போராட்டத்தின் அரசியல் அடிப்படைகளை இல்லாமல் செய்வதையே இலக்காகக் கொண்டிருந்தது. இவற்றில் குடியேற்றமே பிரதான விடயமாக இருந்தது.
4
இலங்கையில் இனக்குழும

Page 27
இந்தத் தடவை குடியேற்ற விடயத்தில் பேரினவாதிகள் மிகவும் இலக்கோடு செயற்பட்டனர். தமிழ் மக்களின் பிரதேசங்களை அபகரிப்பதற்கும் புறம்பாக தாயகத் தொடர்ச்சியை சிதைக்கும் வகையில் வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடைப்பட்ட பகுதியில் குடியேற்றங்களை மேற்கொள்வதிலேயே அக்கறை செலுத்தினர். இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் இடையேயான மணலாற்றுப் பகுதியில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். போராளிகள் வடக்குக் கிழக்கிற்கான போக்குவரத்திற்கு தரைப்பாதையை நம்பியிருந்த சமயம் அதனை முறியடிக்கும் வகையிலேயே இக்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு வெலிஓயா என பெயரும் இடப்பட்டது.
இக்குடியேற்றத்திற்காக தமிழர்களுக்கு சொந்தமான நெடுங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குள் அடங்கிய கென்ற் பண்ணை; டொலர் பண்ணை என்பனவும் அபகரிக்கப்பட்டன. இப்பண்ணைகளில் 1977 இன அழிப்பில் அகதிகளான இந்திய வம்சாவழித் தமிழர்கள் குடியேற்றப்பட்டிருந்தனர். தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம்; மனித முன்னேற்றநடுநிலையம்; காந்தீயம், போன்ற நிறுவனங்கள் அவ் அகதிகள் குடியேற்றத்திற்கு இலட்சக் கணக்கில் செலவு செய்து குடியிருப்புகளையும்; விவசாயத் தோட்டங்களையும் அமைத்திருந்தன. இவையெல்லாம் அபகரிக்கப்பட்டதோடு அவர்களும் அவ்விடத்தினைவிட்டு துரத்தப்பட்டனர். அவ்விடங்களில் சாதாரண சிங்கள மக்கள் குடியிருக்க அஞ்சியதால் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட கிரிமினல்களே அங்கு குடியேற்றப்பட்டனர்.
மலையக மக்களின் தலைவரான தொண்டமானும் செல்லச்சாமியும் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தபோது இவை நடைபெற்றன என்பது தான் துரதிஷ்டமான விடயம். அவர்களும் பெயருக்கு சில கண்டன அறிக்கைகளோடு தமது செயற்பாட்டினை நிறுத்திக் கொண்டனர். தமது பதவி சுகத்திற்காக இதற்கு மேல் அழுத்தங்களைக் கொடுக்க அவர்கள் விரும்பவில்லை.
இக் குடியேற்றத்திற்கு அனுராதபுரம் மாவட்டத்துடன் போக்குவரத்து செய்யக்கூடியதாக வீதிகள் உருவாக்கப்பட்டன. குடியேற்றத்தின் நலன்களைக் கவனிப்பதற்கான அலுவலகமும் அனுராதபுரம் மாவட்ட அரச செயலகத்தில் உருவாக்கப்பட்டது. சிவில் அதிகாரிகளோடு இராணுவ அதிகாரிகளும் இதன் செயற்பாடுகளுக்கென நியமிக்கப்பட்டனர். இப்பிரதேசத்தினை “வெலிஓயா” மாவட்டம் என்ற பெயரில் தனி மாவட்டமாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
குடியேற்றங்களுடன் தொடர்புடைய இன்னொரு விடயம் மாவட்ட சனத்தொகை வீதாசாரத்தை மாற்றும் வகையில் வெட்டி ஒட்டும் நடவடிக்கையாகும். யாப்பின் படி தேர்தல்; விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் படி நடைபெறுவதால் இவ்வெட்டி ஒட்டல் நடவடிக்கைகள் மூலம் மாவட்ட சனத்தொகை விகிதாசாரத்தினை மாற்றி தேர்தல் மூலம் அரசியல் அதிகாரத்தினை கைப்பற்றுவதே இதன் பிரதான நோக்கமாகும். இவ்வாறான மாற்றத்தினால் விகிதாசார அடிப்படையில் பாராளுமன்றத்தில் அதிக அங்கத்துவம் கிடைப்பதோடு போனஸ் ஆசனமும் அவர்களின் கைக்கு சென்று விடும் நிலை இருந்தது.
திருமலை மாவட்டத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் இதற்கான நடவடிக்கைகள் அதிக
இலங்கையில் இனக்குழும அரசியல் 42

அளவில் மேற்கொள்ளப்பட்டன. அனுராதபுர மாவட்டத்துடன் இணைந்து இருந்த சில உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் திருமலை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. சில கிராம சேவையாளர் பிரிவுகளும் இணைக்கப்பட்டன. இதில் முக்கிய விடயம் இணைக்கப்பட்ட இப்பிரதேசங்கள் நிர்வாக செயற்பாடுகளுக்கு அனுராதபுர மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தன. தேர்தல் நடவடிக்கைகளுக்கு மாத்திரம் திருமலை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தில் முன்னர் மொனறாகலை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்த பதியத்தலாவ, மகா ஓயா எனும் இரு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. இதன் மூலம் செயற்கையாக அம்பாறை மாவட்டத்தின் சனத்தொகை விகிதாசாரம் மாற்றப்பட்டு மூன்றாம் நிலையில் இருந்த சிங்கள மக்கள் முதலாம் நிலைக்குக் கொண்டு வரப்பட்டனர்.
இதனால் அம்மாவட்டங்களின் பிரதிநிதித்துவ விகிதாசாரம் எவ்வாறு மாற்றப்பட்டு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் வீழ்ச்சியடைந்தது என்பது பற்றி முன்னைய பகுதிகளில் விபரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இவ்வாறான வெட்டி ஒட்டல்களுக்கு யாப்பில் உள்ள ஒட்டைகளே பேரினவாதிகளுக்கு பெரிதும் பயன்பட்டன.
நிர்வாகத் துறையில் யாப்பின் பிரயோகத்தின் அடுத்த பிரதான விடயம் உள்ளுராட்சிச் சபைகளை குறிப்பாக பிரதேச சபைகளை அமைத்தலாகும். இவ்வதிகாரம் யாப்பு ரீதியாக அமைச்சரவைக்குரியது. ஆனால் பாராளுமன்றச் சட்டப்படி பொதுநிர்வாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருக்கு இவ்வதிகாரம் கொடுக்கப்பட்டது.
1980ஆண்டுச் சட்டப்படி; பிரதேசசபைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பிரதேசசபைகளை
அமைக்கும் அதிகாரமும் அமைச்சருக்கு வழங்கப்பட்டது. இதன்படி முன்னர் உதவி அரசாங்க அதிபர் பிரிவு இருந்தஇடமெல்லாம் பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டன.
வடக்கு கிழக்கில்; சிங்கள குடியேற்றங்களில் அமைக்கப்பட்ட உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலெல்லாம் பிரதேசசபைகள் அமைக்கப்பட்டன. தேவையான இடங்களில் புதிய பிரதேச சபைகளும் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் சிங்கள குடியேற்றங்களில் சிறிய பகுதிகளில் கூட அரசியல் தலைமைத்துவம் உருவாக்கப்பட்டது. சில இடங்களில் மிகச் சிறிய மக்கள் தொகையைக் கொண்ட குடியேற்றங்களுக்கும் கூட அப்பகுதிகள் வரையறுக்கப்பட்டு பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டன.
உதாரணமாக, திருகோணமலை மாவட்டத்தில் கோமரங்கடவல பிரதேச சபை 4,076 வாக்காளர்களையும், மொரவேவ பிரதேசசபை 2,242 வாக்காளர்களையும், பதவிசிறிபுரபிரதேச சபை 1023 வாக்காளர்களையும், சேருவல பிரதேச சபை 10,981 வாக்காளர்களையும் கொண்டிருந்தது. இதேபோல் அம்பாறை மாவட்டத்தில் பதியத்தலாவ, மஹாஒயா, நாமல் ஓயா, லகுகல பிரதேசசபைகள் 10,000 க்குகுறைவான வாக்காளர்களையே கொண்டிருந்தன. இவ்வாறு மிகச் சிறியதொகையினருக்குகூட பிரதேசசபைகள் உருவாக்கப்பட்டபோதும் பல பிரதேசங்களில் தமிழ் மக்கள் செறிவாக இருந்தும் அவர்களுக்கென தனியான பிரதேச சபைகள் உருவாக்கப்படவில்லை. உதாரணமாக மூதூர் பிரதேசத்தில் 25,560 தமிழ் மக்கள் வாழ்கின்ற
43 Soroeta, இனக்குழும அரசியல்

Page 28
அம்பாறை மாவட்டம் மொத்த சபைகள்-16
இனங்கள் சனத்தொகை கிடைக்க வேண்டிய கிடைத்த சபைகள்
வீதம் சபைகள்
தமிழர் 20.05 03 02 சிங்களவர் 37.64 06 08 முஸ்லிம்கள் 41.53 07 06
திருமலை மாவட்டம் மொத்த சபைகள்-11
இனங்கள் சனத்தொகை கிடைக்க வேண்டிய கிடைத்த சபைகள்
வீதம் சபைகள் தமிழர் 36.41 04 O1 சிங்களவர் 33.62 04 07 முஸ்லிம்கள் 28.97 03 03
(இங்கு உள்ளுராட்சி சபைகளில் நகர சபைகளும் பிரதேச சபைகளும் மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது)
போதும்; அவர்களுக்கென ஒரு பிரதேச சபை அங்கு உருவாக்கப்படவில்லை. திருமலை மாவட்டத்திலுள்ள 10 பிரதேசசபைகளில் ஒன்று கூடதற்போது தமிழர்களுடைய பிரதேசசபையாக இல்லை. திருமலை நகரசபை மட்டும் தான் தமிழர்களுக்குரியதாக உள்ளது. அம்பாறை மாவட்டத்திலும் திருக்கோவில்; ஆலையடிவேம்பு பிரதேசசபைகள் மட்டும் தமிழருக்குரிய பிரதேச சபைகளாக உள்ளன. விகிதாசாரப்படி பார்த்தால் கூடதிருமலை மாவட்டத்தில் நான்கு உள்ளுராட்சி சபைகளும்; அம்பாறைமாவட்டத்தில் மூன்று உள்ளுராட்சிசபைகளும் தமிழருக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் திருமலையில் ஒன்றும்; அம்பாறையில் இரண்டுமே தமிழருக்குக் கிடைத்தன. இதனை அட்டவணைகள் தெளிவாகக் காட்டுகின்றன.
வடக்கு கிழக்கிற்கு வெளியே தமிழர்களுக்கென குறிப்பாக மலையக தமிழர்களுக்கென பல பிரதேச சபைகளை உருவாக்கக் கூடிய நிலை இருந்தும் அரசு அதற்கென எதுவித முயற்சியும் எடுக்கவில்லை. நுவரேலியா மாவட்டத்தில் மட்டும் மலையக தமிழர்களை பெரும்பான்மையாகக் கொண்டுநுவரேலியா, அம்பேகமுவ பிரதேசசபைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அங்குள்ள நகரப் பகுதிகள் தமிழர் கைகளுக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காக சிங்களப் பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. நுவரேலியா மாநகர சபையிலும்; தலவாக்கல; ஹட்டன் நகர சபைகளிலும் இதுவே நடைபெற்றுள்ளது. 50 வருடத்திற்கு உட்பட்ட வரலாறு கொண்ட சிங்கள குடியேற்றங்களுக்கு பிரதேச சபைகள் அமைக்கலாம் என்றால் 150 வருடங்களுக்கு மேற்பட்ட
இலங்கையில் இனக்குழும அரசியல் 44

வரலாறு கொண்ட மலையகப் பிரதேசங்களுக்கு ஏன் பிரதேச சபைகளை அமைக்கக் கூடாது என்பதற்கு பேரின ஆட்சியாளர்களிடமிருந்து பதில் இல்லை. இங்கே தான் பேரின மயப்பட்ட நிர்வாகத் துறை தமிழ் மக்களுக்கு ஒரு மாதிரியும்; சிங்கள மக்களுக்கு இன்னோர் மாதிரியும் செயற்படுவதை தெளிவாகப் பார்க்க முடிகின்றது.
இவையெல்லாவற்றிற்கும் அப்பால் திருமலை மாவட்டத்தில் உள்ள ஒரேயொருநகரசபையான திருமலைநகரசபையைக் கூடசுயாதீனத்தோடு இயங்கவிடாமல் அரசபடைகள் தடுத்துவருகின்றன. திருமலை நகர சபையால் லட்சக்கணக்கான ரூபா செலவு செய்து உருவாக்கப்பட்ட சந்தையை திறப்பதற்கு பேரினப் படைகள் இன்னமும் முட்டுக்கட்டையாக நிற்கின்றன.
தமிழ் மொழி அமுலாக்கம்
16வது திருத்தச் சட்டத்தின் மூலம்; தமிழ் மொழி அரச கரும மொழியாக அமுலாக்கப்பட்ட போதும் நடைமுறையில் அதனை செயற்படுத்துவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் இறங்கவில்லை. இதற்கென உருவாக்கப்பட்ட அரச கரும மொழி ஆணைக்குழு கூட வெறும் கண் துடைப்பாகவே உள்ளது. ஏற்கனவே நான் கூறியது போல யாப்பில் குறிப்பிட்டதைக் கூட
பேரின நிர்வாகத் துறை நடைமுறைப்படுத்துவதில் முட்டுக் கட்டையே போட்டு வருகின்றது.
தென்னிலங்கையில் அமுலாக்கம் செய்யப்படாதது ஒரு புறமிருக்க வடகிழக்கில் கூட மந்த நிலையே காணப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் 62.03 வீதமாக இருந்தும் கூட அம்பாறை மாவட்ட செயலக அலுவல்கள் அனைத்தும் சிங்களத்திலேயே நடைபெறுகின்றன.
ஆனால் மறுபக்கத்தில் சிங்கள குடியேற்றங்கள் உள்ள உதவி அரசாங்க அதிபர் அலுவலகங்களிலும்; பிரதேச சபைகளிலும் சிங்கள அமுலாக்கம் எந்தவித தடையும் இல்லாமல் நடைபெறுகின்றது. தமிழ்ப் பகுதிகளில் சிங்கள மொழி அமுலாக்கம் என்றால் துள்ளி எழுந்து எதிர்த்துச் செயல்படுகின்ற அரசும் நிர்வாகத் துறையும் தமிழ் மொழி அமுலாக்கல் என்றால் அலட்சியமாக இருந்து விடுகின்றது.
வேலைவாய்ப்புகள் தமிழ் மக்களுக்கான அரச வேலைவாய்ப்புகள் மிக அருகியே வருகின்றன. பிரேமதாசா காலத்தில் வேலைவாய்ப்பில் இன விகிதாசாரம் பேணப்படும் என கூறப்பட்டு சிறிது காலம் பொது நிர்வாகத் துறையின் சில பகுதிகளில் பின்பற்றப்பட்டும் வந்தது. படைகள் வெளியுறவுத் துறை என்பவற்றில் அதுவுமில்லை. அதைவிட பதவி உயர்வுகளில் இன விகிதாசாரம் இல்லை என்றே கூறப்பட்டது.
இருப்பினும்; இந்நிலை கூட நீண்டநாள் நீடிக்கவில்லை. இப்போது மீண்டும் பழைய குருடி கதவைத்திறவென்ற நிலைதான். அண்மையில்; அரச நிர்வாக சேவைக்கும்; சுங்க அத்தியட்சகர் பதவிகளுக்கும் நியமனம் வழங்கப்பட்டபோதும்; இவ் விகிதாசாரம் காற்றில் பறக்க விடப்பட்டது. இதில் மிக கவலைக்குரிய விடயம்; பல தகைமையுள்ள இந்திய வம்சாவழியினர் நியமிக்கப்படக்
45 இலங்கையில் இனக்குழம அரசியல்

Page 29
கூடிய நிலை இருந்தும் ஒருவரும் தெரிவுசெய்யப்படாததுதான். இதனைத்தட்டிக் கேட்க அரசைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் தொண்டமானுக்கோ அல்லது தமிழ்க் கட்சிகளுக்கோ கூட முடியவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டமான விடயம்.
வடக்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தல்
1990ல் வடக்கு கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்ட பின்னர் இதுவரை தேர்தல் நடக்கவில்லை. அதற்கு அரசு கூறும் காரணம் அங்கு அதற்கான சூழ்நிலை இல்லை என்பதுதான். 1990க்குப் பின்னர் பாராளுமன்றத் தேர்தலும்; ஜனாதிபதித் தேர்தலும்; உள்ளுராட்சித் தேர்தலும் வடக்கு கிழக்கில் நடத்தலாமென்றால் ஏன் வடக்குக் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடாத்த (ypaq, W/srl?
உண்மையில் வடக்குக் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை அரசு நடாத்த விரும்பவில்லை. தேர்தலை நடாத்தினால் 13வது திருத்தச் சட்டத்திலுள்ள அதிகாரங்களை மாகாணசபைக்கு வழங்க வேண்டி வரும். குறிப்பாக மாகாண பொலிஸ் சேவையை உருவாக்க வேண்டி வரும். இவற்றை வழங்காவிட்டால்; வெளி அழுத்தங்களை சந்திக்க வேண்டி வரும். இவைகளை அரசு விரும்பவில்லை. இதைவிட வடக்குக் கிழக்கு இணைப்பினையும்; காலப்போக்கில் நிரந்தரமாக அங்கீகரிக்க வேண்டி வரும். அதனையும் விரும்பவில்லை. இதற்காகவே மாகாண சபைத் தேர்தல்களை தொடர்ச்சியாக தள்ளிப் போட்டுக்கொண்டு வருகின்றது. எதிர்வரும் காலங்களில் ஏனைய மாகாண சபைகளின் தேர்தல் நடைபெற்றாலும் வடக்குக் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடாத்தும் நோக்கம் இல்லை என அரசு ஏற்கனவே கூறிவிட்டது. அற்ப சொற்ப அதிகாரமுள்ள மாகாண சபையைக் கூட கொடுக்க தயாரில்லை என்பதையே இது காட்டுகின்றது.
நீதித்துறையில் யாப்பின் பிரயோகம்
தமிழர் மீதான நீதித்துறையின் சவால்களுக்கு பயங்கரவாதத்தடைச் சட்டமும், அவசரகாலச்
சட்டமுமே துணையாக உள்ளன. சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டவர்களையும்; சந்தேகத்தின் பேரில் வீதிகளில் கைது செய்யப்பட்டவர்களையும் நீண்டநாள் சிறையில் வைத்திருப்பதற்கான அனுமதியினை நீதிமன்றங்கள் வழங்குகின்றன. பின்னர் அவர்கள் சம்பந்தமான வழக்குகளை நீண்டநாட்களுக்கு எடுக்காமல் கிடப்பில் போடுகின்றன. சாதாரண கைதுகளுக்கும் பிணைப் பணம் ஐயாயிரம்; பத்தாயிரம் என அறவிடப்படுகின்றது. பின்னர் அதனை திருப்பிக் கொடுப்பதில் இழுத்தடிப்பு செய்யப்படுகின்றது. சிலர் ஆறு ஏழு வருடங்கள் கழிந்த பின்னரும் கூட பிணைப்பணத்தினை பெற முடியாத நிலையில் உள்ளனர். எனக்குத் தெரிந்த நண்பன் ஒருவன் வங்கி அதிகாரியாக வேலை செய்வதற்கான பல்வேறு அடையாளங்களைக் காட்டியும் 1994ல் கண்டியில் கைது செய்யப்பட்டு இருவாரம் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் ஐயாயிரம் ரூபா பிணையில் விடப்பட்டபோதும் இன்றுவரை அப்பிணைப் பணம் திருப்பிக் கொடுக்கப்படவில்லை.
இலங்கையில் இனக்குழும ogét 46

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வந்தவர்களிடம் புலிகளுக்கு பவுணி கொடுத்தமைக்காகவும், பங்கர் வெட்ட உதவி செய்தமைக்காகவும் கூட தண்டனை வழங்கப்படுகின்றது. அங்குள்ளவர்கள் இவற்றை கட்டாயம் செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உள்ளது என்பது நீதிபதிகளுக்கு தெரிந்தும் கூட தண்டனை வழங்கப்படுகின்றது.
இதைவிட பொலிஸார் அடித்து சித்திரவதை செய்து பெற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைக் கூட பிரதான சாட்சியாகக் கருதி தண்டனை வழங்கும் நிலையும் உள்ளது.
உண்மையில் இது தொடர்பாக உள்ள சட்டங்களின் நிலை பற்றியும்; நீதிபதிகளின் நிலை பற்றியும் கருத்துத் தெரிவித்த முன்னைய சட்டத்தரணியும் தற்போதைய மன்னார் மாவட்ட நீதிபதியுமாகிய இளஞ்செழியன், இச்சட்டங்களுக்குமுன்னால் எம்மால் எதுவும் செய்ய முடியாது என குறிப்பிட்டார்”நாம் இது தொடர்பான வழக்குகளில் கொஞ்சமாவது வெற்றிபெறுகின்றோம் என்றால் அதிலுள்ள ஒட்டைகளை பயன்படுத்தியே” என்றும் குறிப்பிட்டார்.
இது விடயத்தில் கூட சிங்கள நீதிபதிகளினதும் தமிழ் நீதிபதிகளினதும் அணுகுமுறைகள் வேறாகவே உள்ளது. சாதாரண கைதுகளின் போது சிங்கள நீதிபதிகள் காவலில் வைக்கமுற்படும் போது தமிழ்நீதிபதிகள் விடுதலை செய்கின்ற நிலையே பொதுவாக உள்ளது. தமிழ் நீதிபதிகள் தமிழ் மக்களின் உண்மைநிலையை உணர்வுரீதியாக உணர்ந்தமையே இதற்குக் காரணமாகும்.
கொழும்புநீதிமன்றம் ஒன்றில் நீதிபதியாக இருந்த நீதியரசர் விக்னேஸ்வரன்; கொழும்பில் கைதுசெய்யப்பட்டு தன்னிடம் கொண்டு வரப்பட்ட ஒரு தமிழர் இளைஞனைப் பார்த்து'தம்பி உண்மையைச் சொல் எந்த ஏஜென்சியிடம் காசு கொடுத்து விட்டு நிற்கின்றாய்” என்றார். தொடர்ந்துநான் விட்டு விடுகின்றேன் இனிமேல் மாட்டுப்படாததே' என்றார்.
மறுபக்கத்தில்; தமிழ் நீதிபதிகளினால் விடுதலை செய்யப்பட்டவர்களைக் கூட படையினர் ஏற்க மறுத்து திரும்ப சிறையில் அடைக்கும் நிலையும் உள்ளது. 1998இல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்றதவமணிதேவி என்னும் பெண்; கொழும்பில் வாங்கிய பையில் கந்தளாய்; கொத்மலை நீர்த்தேக்கங்களின் படமும்; விகாரமகாதேவி பூங்காவின் படமும் பொறிக்கப்பட்டடிருந்தமைக்காக யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவரை மல்லாகம் நீதிபதிதிருநாவுக்கரசு விடுதலை செய்தபோதும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவரை பிணையில் விட முடியாது எனக் கூறி காங்கேசன் துறை பயங்கரவாத தடுப்பு பொலிஸ் அதிகாரி மீண்டும் கைதுசெய்து அநுராதபுரம் சிறையில் அடைத்துள்ளார்.
ஆனால் அரச படைகளுக்கு எதிரான வழக்குகள் வரும் போது சிங்கள நீதிபதிகள் அதனை கிடப்பில் போடும் அல்லது தள்ளுபடி செய்யும் நிலையே காணப்படுகின்றது. ஏரிகளில் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட தமிழ் இளைஞர்களின் வழக்குகளிலும் இந்நிலையே காணப்பட்டது.
47- இலங்கையில் இனக்குழும அரசியல்

Page 30
(pl46|60) )
இதுவரையான இக்கட்டுரையில் சுதந்திரத்திற்கு முற்பட்ட யாப்புகளில் காணப்படுகின்ற பேரினத்தன்மைகளைப் பற்றிவிபரித்திருந்தேன். இவ் யாப்பு வரலாறு எமக்கு காட்டுகின்ற உண்மை; சிங்கள யாப்பிற்குள் தமிழ் மக்களின் நலன்களைத் தேட முடியாது என்பதே ஆகும்.
இது தொடர்பாக, இந்த கட்டுரையை முழுமையாக வாசித்த நண்பன் ஒருவன் என்னிடம் கூறியதை உங்களுக்குத் தருகின்றேன்.
“மச்சான் பேரின யாப்பிற்குள் தமிழ் மக்களின் நலனைத்தேடுவதை இனிமேல் விட்டுவிடு”என்றான். "ஏன்” என்றேன். “நீஇவ்வாறு தேடுகின்றபோது அதற்குள் ஏதோ இருக்கின்றது என்ற மாயையை அது மக்களுக்குக் கொடுத்துவிடும்” என்றான். “அப்போ மாற்று வழி என்றேன். “தமிழ் மக்கள் தங்களுக்குரிய யாப்பினை தாங்களே உருவாக்கிக் கொள்வதுதான்” என்றான். நண்பனின் கருத்தினை வாசகர்களிடம் விட்டுவிட்டு இந்தத் கட்டுரையை முடித்துக் கொள்கின்றேன்.
4s
இலங்கையில் இனக்குழும அரசியல்

இலங்கை இந்திய உறவுகள் அறிமுகம்.
இந்திய 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி சுதந்திரமடைந்தது. இலங்கை 1948 பெப்ரவரி 4ம் திகதி சுதந்திரமடைந்த போதும் 1947 சோல்பரி அரசியல் திட்டத்தின் மூலம் டொமினியன் அந்தஸ்தை உடைய ஒரு நாடாக மாறியது. இதனால் இவ்விரு நாடுகளும் தங்களுக்கான வெளிநாட்டுக் கொள்கையையும் உருவாக்க முனைந்தன. இந்திய வெளிநாட்டுக் கொள்கையை நிர்ணயிப்பதில் நேரு, கிருஷ்ணமேனன் போன்றவர்களும் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையை நிர்ணயிப்பதில் டீஎஸ்சேனநாயக்கா,சோல்பரி பிரபு, ஐவர்ஜெனிங்ஸ் ஆகியோரும் முக்கியமானவர்களாக விளங்கினர். சுதந்திர இந்தியாவின் ஆட்சித் தலைவர்கள் பிரித்தானியாவிலிருந்து விலகியவர்களாகவும் சுதந்திர இலங்கையின் ஆட்சியாளர்கள் பிரித்தானியாவுடன் கூட நெருக்கமானவர்களாகவும் காணப்பட்டனர்.
இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் போது பாதுகாப்பு என்பதில் முக்கிய கவனம் செலுத்தியது. இது தொடர்பில் பிரித்தானிய இந்தியாவில் பிரித்தானியர் பின்பற்றிய பாதுகாப்புக் கொள்கையையே இந்தியாவும் பின்பற்ற முனைந்தது.
பிரித்தானியா இந்தியாவில் அதன் பாதுகாப்புக் கொள்கையைப் பற்றி"பணிக்கர்’விளக்குகையில்
பின்வருமாறு கூறினார்: “பிரிட்டிஷ் ஆதிக்கமானது இந்தியாவைப் பாதுகாப்பதற்கென சமுத்திரத் திட்டமெனவும்; கண்டத் திட்டமெனவும் இரு திட்டங்களைக் கொண்டிருந்தது. அவை 3 அம்சங்களை உள்ளடக்கியிருந்தது.
(1) இந்தியாவின் வடமேற்குப் பகுதியைப் பாதுகாத்தல். (2) இந்தியத் துணைக் கண்டத்தை சூழவுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை
வெளி வல்லரசுகளிடம் விழ விடாது தடுத்தல். (3) இந்து சமுத்திரத்தின் மீதும் அதனைச் சூழவுள்ள பகுதிகளின் மீதும் ஆதிக்கம்
செலுத்துதல்.
இதில் இரண்டாவது அம்சத்திலேயே இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கையும் முக்கியமானதாக இருந்தது. இலங்கையில் காலூன்றும் இந்திய எதிர்ப்புச் சக்திகளால் இந்தியாவுக்கு எப்போதும் இலங்கை அபாயமாக இருந்தது. பிரித்தானியா இந்தியாவில் இலங்கையும் பிரித்தானியாவுக்கு உட்பட்ட ஒரு நாடாக இருந்ததினால் அவர்களுக்கு அபாயமாக இருக்கவில்லை. ஆனால் சுதந்திர இந்தியாவில் இலங்கை இந்தியாவின் ஆதிக்கத்திற்கு உட்படாத பகுதியாக இருந்ததினால் அபாயத்தை எதிர்நோக்கியிருந்தது. இதனால் இந்தியச் சுதந்திரத்திற்கு முன்னரே இந்தியத்தலைவர்கள் இலங்கையை இந்தியாவுடன் இணைக்க வேண்டும். பொதுவான பாதுகாப்புக் கொள்கை இருக்க வேண்டும் என்ற வகையில் கருத்துக்களைத் தெரிவித்தனர். உதாரணமாக"இந்தியசமஷ்டி அரசியல் அமைப்பில் இலங்கையும் ஒரு சுயாதிக்கமுள்ள பகுதியாக நிலவலாம்” என 1945 நேருவும்; “இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை இந்தியாவுடன்
49 இலங்கையில் இனக்குழும அரசியல்

Page 31
இணைக்கப்படல் வேண்டும்” என அதே ஆண்டு பணிக்கரும் 1949ல் “இலங்கை விரும்பினாலென்ன விரும்பாவிட்டாலென்ன இந்திய சமஷ்டி அமைப்பில் இணைய வேண்டும்” என வைத்தியாவும்; “இந்தியாவுக்கு விரோதமான நாடுகளுடன் இலங்கை உறவு கொள்ளக் கூடாது" என்றும் "இரு நாடுகளுக்கும் பொதுவான பாதுகாப்புக் கொள்கையையே இருக்க வேண்டும்" என பட்டாபி சீதாராமையாவும் குறிப்பிட்டனர். இதனால் இலங்கையிலிருந்து அபாயநிலை தோன்றிய போதெல்லாம் இலங்கைஇந்திய உறவுகள் சீரற்றதாகவும் அபாயநிலை தோன்றாத காலங்களில் சீரானதாகவும் இருப்பதை அவதானிக்கலாம்.
இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் நாம் இரு பிரதான அம்சங்களை அவதானிக்கலாம்.
(1) மேலைத் தேசசார்பு அல்லது சார்பின்மை, (2) இந்திய எதிர்ப்பு அல்லது நட்பு இலங்கை மேலைத் தேசசார்பின்மையைக் கடைப்பிடித்தபோது சோசலிஷ நாடுகளுடன் உறவை வளர்த்திருந்தது. ஆனால் அது இலங்கையின் வெளியுறவுக் கொள்கைப் போக்கில் ஆதிக்கம் செலுத்தும் அம்சமாக இடம்பெறவில்லை. அதேவேளை இலங்கை மேலைத்தேச சார்பினைக் கடைப்பிடித்த போது அச்சார்பு என்பது ஆதிக்கம் வகிக்கும் அம்சமாக அல்லது நிர்ணயிக்கக் கூடிய அம்சமாகக் காணப்பட்டது. இதேபோல் இந்திய நட்பு என்பதைக் கடைப்பிடித்த போது இலங்கைஇந்திய உறவுகள் சீராகக் காணப்பட்டன. இருநாடுகளுக்கிடையிலான பிரச்சினைகளும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்ப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டு சிலவற்றில் வெற்றியும் காணப்பட்டன. ஆனால் நட்பின்மை என்பதை இலங்கை கடைப்பிடித்த போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் சீர்குலைந்ததோடு நாடுகளுக்கிடையேயான பிரச்சினைகளும் கூர்மையடைந்து புதிய புதிய வடிவங்களை எடுக்கத் தலைப்பட்டன. இதனைச் சுதந்திரத்திற்குப் பின்பட்ட இலங்கைஇந்திய உறவுகளை நோக்கும் போது தெளிவாக அவதானிக்கலாம்.
இந்தவகையில் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட இலங்கைஇந்திய உறவுகளைப் பின்வரும் கால கட்டங்களாகப் பிரித்து நோக்குவது இலகுவானதாகும்.
(1) 1948 - 1956 SF6)5LL). (2) 1956 - 1965 காலகட்டம், (3) 1965 - 1970 assro)st Li), (4) 1970 - 1977 5/76)5(Lib. (5) 1977 - 198985s,60s, LL). (6) 1989 - 1994 gÍT6UglLú0. (1) 1994க்குப் பின்னர்
1948 - 1956 காலகட்டம். 1947ம் ஆண்டு சோல்பரி அரசியல் திட்டத்தின் கீழ் நடைபெற்ற தேர்தல் மூலம் டீ.எஸ். சேனாநாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தது. 1948ம் ஆண்டு
இலங்கையில் இனக்குழும அரசியல் so

இலங்கை சுதந்திரமடைந்தபோது பழைய பாராளுமன்றம் கலைக்கப்படாமல் அதுவே தொடர்ந்தும் இருந்தது. 1947ல் தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியே தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தது. டீஎஸ் சேனாநாயக்காவே தொடர்ந்து சுதந்திர இலங்கையின் பிரதமராகவும் இருந்தார். இதனால் சுதந்திர இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையை வகுக்க வேண்டிய பொறுப்பிலும் ஐக்கிய தேசியக் கட்சியும்; டீஎஸ். சேனாநாயக்காவும் ஈடுபடவேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் டீஎஸ். சேனாநாயக்காவின் பிரதம ஆலோசகர்களாக சோல்பரி பிரபுவும், ஐவர்ஜெனிங்சும் தொழிற்பட்டனர். டீ.எஸ்.சேனாநாயக்கா பிரித்தானிய சார்பானவராகவும்; அவர்கள் மீது நம்பிக்கை கொண்டவராகவும் காணப்பட்டார். இதனால் அவரால் வகுக்கப்பட்ட கொள்கையும் பிரித்தானிய சார்புள்ளதாகக் காணப்பட்டது. இச் சார்புத் தன்மையினாலேயே பிரித்தானிய படைத்தளங்கள் இலங்கையில் இருப்பதற்கும் அனுமதிகொடுக்கப்பட்டது. இலங்கையில் இப் பிரித்தானிய சார்புத் தன்மை இந்தியாவின் பஞ்சசீலக் கொள்கைக்கு முரணானதாகக் காணப் பட்டது. இந்திய வெளியுறவுக் கொள்கையின் பிரதான அம்சமான பஞ்சசீலக் கொள்கை ஏகாதிபத்திய எதிர்ப்பு நிறவாத எதிர்ப்பு:இனவாத எதிர்ப்பு:குடியேற்றவாத எதிர்ப்பு:தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவு என்பதாக இருந்தது. ஓர் ஏகாதிபத்திய நாடான பிரித்தானியாவுடன் இலங்கை சார்ந்திருத்தல் இந்தியாவின் பஞ்சசீலக் கொள்கைக்கும்; அணிசேராமைக் கொள்கைக்கும் முரணானதாகக் காணப்பட்டது. எனவே இக் காலகட்டத்தில் இலங்கைஇந்திய உறவுகள் சீரானதாக இருக்கவில்லை. இச் சீரின்மைக்கு இலங்கை அரசின் பிரித்தானிய சார்பு முக்கிய காரணியாகத் தொழிற்பட்டது. இச் சார்புநிலையின் உச்சநிலையாக பிரித்தானிய படைத்தளங்கள் இலங்கையில் இருந்தமையும் பிரித்தானியாவோடு பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டமையும்; இந்திய இராஜதந்திரிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியதோடு இலங்கை மீது அவநம்பிக்கையையும் உருவாக்கியது. ஒரு வகையில் இந்தியா தொடர்பான பயமே இலங்கையை பிரித்தானியாவோடு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வைத்தது. 1953ல் சேர் ஜோன். கொத்தலாவல “என்று இலங்கை பிரிட்டனின் பாதுகாப்பிலிருந்து தன்னை விலக்கிக் கொள்கின்றதோ அன்றே இந்தியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு விடும்” எனக் கூறியமை இதனையே தெளிவாக்குகின்றது.
இக் காரணியை விட இலங்கை இந்திய வம்சாவழியினர் தொடர்பாக இலங்கையின் நடவடிக்கைகளும் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளைச் சீர்குலைத்தன. 1947ம் ஆண்டு நேரு- டீஎஸ். சேனாநாயக்கா ஒப்பந்தத்திற்கு முரணாக இலங்கையின் குடியுரிமைச் சட்டங்களை உருவாக்கியமையும், பெரும்பான்மையான இந்தியர்கள் குடியுரிமை பெறுவதிலிருந்து தவிர்க்கின்ற நடவடிக்கையை இலங்கை மேற்கொண்டமையும் இந்தியாவிற்கு இலங்கை மீதான அதிருப்தியை ஏற்படுத்தியது. இவ்வதிருப்தியின் வெளிப்பாடாகவே இந்திய வம்சாவழியினர் தொடர்பாக இக் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நேரு கொத்தலாவலை ஒப்பந்தம் என்பன
வெற்றிபெறவில்லை.
மேலும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையில் காஷ்மீர் பிரச்சினை தொடர்பான 1947 1948 போரின் போது இலங்கை நடுநிலைமை வகிப்பதாகக் கூறிக் கொண்டாலும்; சேர். ஜோன். கொத்தலாவலை வெளிப்படையாகப் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடந்துகொண்டமையும், 1954ல் கொழும்பில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பிரதமர்கள் மகாநாட்டில் கொத்தலாவலை நேருவின் கருத்துக்களை நிராகரித்த சம்பவங்களும் இரு நாடுகளினதும்
s இலங்கையில் இனக்குழும அரசியல்

Page 32
உறவுகளை மேலும் சீர்குலைத்தன. மொத்தத்தில் இக் காலப்பகுதியில் இலங்கை, இந்தியா தொடர்பாக ஓர் எதிர்ப்புநிலையையே எடுத்திருந்தது.
இக்காலகட்டத்தில் பதவி வகித்த பிரதமர்களான டீஎஸ். சேனநாயக்கா; டட்லி சேனாநாயக்கா; சேர்.ஜோன். கொத்தலாவல என்பவர்களில் சேர் ஜோன்,கொத்தலாவலையே தீவிர இந்திய எதிர்ப்பாளராகக் காணப்பட்டார்.
1956 - 1965 ST605 LL).
1965ம் ஆண்டு பொதுத் தேர்தல் மூலம் 9 ஆண்டுகளாகத் தொடந்து ஆட்சியிலிருந்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி தோற்கடிக்கப்பட்டு எஸ்.டபிள்யூஆர்.டீ பண்டாரநாயக்கா தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி பதவிக்கு வந்தது. பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வந்ததும் அது இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையைப் பல மாற்றங்களுக்கு உள்ளாக்கியது. அவர் ஐக்கிய தேசியக் கட்சி கொண்டிருந்த இந்திய எதிர்ப்பு கம்யூனிச எதிர்ப்பு: பிரித்தானிய சார்பு நிலை என்பவற்றை மாற்றினார். இலங்கையின் புவிசார் அரசியற் போக்கைச் சரிவரப் புரிந்து கொண்ட அவர் அதனை ஏற்று இந்தியாவுடன் நல்லுறவையே பேணினார். இந்தியா பின்பற்றிய வெளிநாட்டுக் கொள்கையைத் தானும் பின்பற்றினார். நேருவின் அணிசேராமைக் கொள்கையினதும், பஞ்சசீலக் கொள்கையினதும் பிரதான ஆதரவாளராகவும் விளங்கினார். சர்வதேசப் பிரச்சினைகளில் இந்தியாவின் கருத்தையே பிரதிபலித்தார். இதனால் அவரது ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே சுமுகமான உறவுகளே நிலவியிருந்தன. தான் பதவிக்கு வந்ததும் பிரித்தானிய படைத் தளங்களை இலங்கையிலிருந்து நீக்கியதன் மூலம் இந்தியாவின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். “நேருவின் அடிவருடி” என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜே.ஆர். ஜெயவர்தனா அவர்கள் கூறுகின்ற அளவுக்கு உறவு நெருக்கமானதாக இருந்தது. இந்நெருக்கத்தின் மூலம் இந்தியா, இலங்கையைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் என்ற அச்சஉணர்வையும் பண்டாரநாயக்காபோக்கியிருந்தார். இவ்வச்ச உணர்வை 1952 இலே தவறானது எனப் பண்டாரநாயக்கா கண்டித்துமிருந்தார்."இந்தியா போன்ற ஒருநாடு இலங்கையைத் தன்னுடன் இணைக்குமென்பது சரியான அறிவுள்ள எந்த மனிதனும் கற்பனை செய்ய மாட்டான்” என்றார்.
இவ்வாறு உறவுகளை வளர்த்துக்கொண்டாலும் இலங்கையின் தனித்துவத்தைப் பேணுவதிலும் அவர் அக்கறையாக இருந்தார். எந்தவொரு கட்டத்திலும் இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையைச் செய்கின்ற அளவுக்கு அவர் செல்லவில்லை.
1959ம் ஆண்டு பண்டாரநாயக்கா அகால மரணமடைந்ததன் பின்னர் சிறிது காலம் டபிள்யூதகநாயக்கா பிரதமராக இருந்தாலும்; இலங்கை - இந்திய உறவில் எதுவித மாற்றமும் நடைபெறவில்லை. பின்னர் 1960ஆம் ஆண்டு ஜுலையில் திருமதிசிறீமாவோ பண்டாரநாயக்கா பதவியேற்றபின்னரும் அவர் வெளியுறவுத் தொடர்பில் பண்டாரநாயக்காவின் கொள்கைகளையே பின்பற்றியதால் இரு நாடுகளுக்கும் இடையில் சுமுகமான நிலையே காணப்பட்டது. எனினும் சிறீமாவோ பண்டாரநாயக்கா சீனாவுடன் நெருங்கிய உறவை வளர்த்தபடியால் 1962இல் சீனா ,
இலங்கையில் இனக்குழும அரசியல் 52

இந்திய யுத்தம் நடைபெற்ற போது ஒரு பக்கமும் சாராது நடுநிலைமையைக் கடைப்பிடித்தார். இந்நிலைமை இலங்கை தொடர்பில் இந்தியாவுக்குச் சந்தேகத்தைக் கொடுத்தது. இந்த யுத்தத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும்; தமிழரசுக் கட்சியும் சீனாவைக் கண்டி த்திருந்தன. இச் சந்தேகம் இருந்த போதும் இந்தியா சுமுகமான நட்புறவையே பேணியது. சிறீமாவோவின் நடுநிலைமைப் போக்கு இந்தியாவுடன் உறவுகளைப் பேணினாலும் அது தனித்துவமான கொள்கைகளைக் கொண்டுள்ளது என்பதையே காட்டியது. பூரீலங்கா சுதந்திரக் கட்சியினரையும்; சிறீமாவோவையும் பொறுத்தவரை கம்யூனிச நாடுகளுடனும்; இந்தியாவுடனும் சுமுகமாக உறவுகளைப் பேணுவதையே விரும்பியிருந்தனர். இவ்விருநாடுகளும் யுத்தத்தில் ஈடுபடுவதை விரும்பவில்லை. இதனாலேயே யுத்தத்தை நிறுத்திசமாதானம் செய்கின்ற முயற்சிகளிலும் சிறீமாவோ ஈடுபட்டிருந்தார். 1964ல் இலங்கையும் இந்தியாவும் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த இந்திய வம்சாவழியினர் பிரச்சினை தொடர்பாக ஒப்பந்தத்தையும் செய்து கொண்டது. சிறீமா சாஸ்திரி ஒப்பந்தம் என அழைக்கப்படுகின்றஇவ்வொப்பந்தத்தின் மூலம் இந்தியா இலங்கைக்குவிட்டுக் கொடுத்துள்ளது என்று இந்திய அரசியல் வாதிகளால் குற்றஞ்சாட்டப்பட்டபோதும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அன்றைய காலகட்டம் இந்திய - பாகிஸ்தானிய யுத்த சூழல் நிலவப்பெற்ற காலகட்டமாக இருந்தமையினால் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்வதன் மூலம் இலங்கையுடன் நட்புறவைப் பேண வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இருந்ததாகவும் கூறப்படுகின்றது. உண்மையில் அக்காலகட்டத்தில் இலங்கை - சீனா உறவுகள் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில் எல்லா முனைகளிலிருந்தும் எதிர்ப்புக்களைச் சம்பாதிக்க இந்தியா விரும்பவில்லை. இந்தியா - பாகிஸ்தானியப் பிரச்சினையில் இலங்கை-பாகிஸ்தான் சார்பானதாக இருக்கக்கூடாது என்பதிலும் இந்தியா கவனமாகவே இருந்தது. மொத்தத்தில் இக்காலகட்டத்தில் இந்திய - சீன யுத்தத்தில் இலங்கையின் நிலை தொடர்பான சில கசப்புக்களைத் தவிர இலங்கை-இந்திய உறவுகள் சுமுகமானதாகவே காணப்பட்டன.
1965 - 1970 காலகட்டம்.
இக்கால கட்டம் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போன்ற ஏழு கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து அரசாங்கத்தை அமைத்த காலகட்டமாகும். இக் காலகட்டத்தில் அரசாங்கம் மேற்குத் தேசத்தைச் சார்ந்த கொள்கையைப் பின்பற்றினாலும் இந்தியாவுடனான உறவுகளிலும் ஒரு மோதல் நிலை இருக்கவில்லை. 1964ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தும் முயற்சியும் இக்காலகட்டத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. இந்திய அரசாங்கமும் அதற்குக் கூடிய வகையில் ஒத்துழைப்புக் கொடுத்த நிலையே காணப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தைப் பொறுத்த வரை இந்தியா; தனக்கு எதிரான கொள்கையை இலங்கை பின்பற்றாத வரை இலங்கையுடன் சுமுகமான உறவுகளைப் பேண விரும்பியது. மாறாகத் தனக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றுமானால் ஏதாவது புற நிர்ப்பந்தங்களைக் கொடுத்து தனது வழிக்கு இலங்கையைக் கொண்டு வரும் முயற்சிகளிலேயே ஈடுபட்டது. ஏனெனில் பொதுவாக இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலங்களில் வெளி வல்லரசுகள் தென்னாசியப் பிராந்தியத்திற்குள் நுழையக்கூடிய நிலை இருந்தது. ஆனால் இக் காலகட்டத்தில் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம்
53 இலங்கையில் இனக்குழும அரசியல்

Page 33
இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையோ; எதிரான கொள்கையையோ பின்பற்றாததால் இந்தியாவும் சுமுகமான உறவுகளையே பேணியது. இலங்கைக்கு இந்தியா தொடர்பில் ஏதாவது தப்பெண்ணங்கள் தோன்றினாலுங் கூட அதனை விரைவாகத் தீர்த்து வைக்கவே இந்தியா விரும்பியது. உதாரணமாக 1967 காலப்பகுதியில் இந்திய மாநிலத் தேர்தலில் தமிழ் நாட்டில் சி.என். அண்ணாத்துரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றியைப் பெற்றிருந்தது. இது இலங்கையிலிருந்த சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒர் அச்சத்தைக் கொடுத்திருந்தது. இதை உணர்ந்திருந்த இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி1968ல் இலங்கை அரசுக்கு ஓர் செய்தியை அனுப்பியிருந்தார். அச்செய்தியில் தமிழ்நாட்டின் பிரதான அமைப்பாக இருந்த "நாம் தமிழர்” இயக்கத்துடன் நாம் எந்த வகையிலும் தொடர்புபட மாட்டோம் என உறுதி அளித்திருந்தார். இந்த “நாம் தமிழர் இயக்கம்” திராவிட முன்னேற்றக் கழகத்தினரால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.
1970 - 1977 ST60SLL).
1970ம் ஆண்டு தேர்தலில் முதன் முதலாகழரீலங்கா சுதந்திரக் கட்சிதன்லமையிலான ஐக்கிய முன்னணி பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மைப் பலத்தைப் பெற்று அரசாங்கத்த்ை அமைத்தது. இவ்வரசாங்கத்தின் ஆரம்ப காலப்பகுதியே அதற்குப் பிரச்சினையாக அமைந்தது. காரணம் 1971ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியாகும். இக்கிளர்ச்சி சீனச் சார்புக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி மக்கள் விடுதலை முன்னணி என்னும் அமைப்பை உருவாக்கிய றோகண விஜேவீரா தலைமையில் நடைபெற்றது. இக் கிளர்ச்சியை அடக்குவதற்கு இலங்கை திண்டாடி இந்தியாவிடம் உதவி கோரிய போது இந்தியா படை உதவியையும்; கப்பல் படை ரோந்துப் படகுச் சேவையையும் கொடுத்து கிளர்ச்சியை அடக்குவதற்கு உதவியது. இந்திய அரசினால் அனுப்பப்பட்ட 500 விமானப்படை வீரர்கள் கிளர்ச்சியாளர்கள் தங்கியிருந்த சிங்கராஜ வனத்தில் குண்டுகளை வீசி கிளர்ச்சியாளர்களை அடக்கும் பணியில் ஈடுபட்டனர். அதேவேளை இலங்கையின் கடற் பிராந்தியமும் இந்தியக் கடற்படையால் பாதுகாத்துக் கொடுக்கப்பட்டது. இந்தியா இவ்வுதவியின் மூலம் இலங்கை - இந்திய நல்லுறவைப் பேணியதோடு என்றைக்கும் தனக்குச் சார்பான கொள்கைகளைப் பின்பற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியைப் பாதுகாத்தல்; இப்பிராந்தியத்தில் சீனாவின் ஊடுருவலைத் தடுத்தல்; இந்திய எதிர்ப்பினைப் பிரதான கொள்கையாகக் கொண்டிருக்கும் ஜேவிபி கிளர்ச்சியை அடக்குதல் என்பவற்றில் வெற்றி கணடது.
1971 டிசம்பரில் மேற்குப் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் கிழக்குப் பாகிஸ்தானை ஒடுக்குவதற்காகத் தமது இராணுவத்தை இலங்கை ஆகாய வழியாகக் கொண்டு செல்வதற்கு இலங்கை அனுமதி அளித்திருந்தது. இதனை இந்தியா பலமாகக் கண்டித்தது. உடனடியாக அதனை நிறுத்தும்படி கோரிய பின் இலங்கை நிறுத்தியது. தொடர்ந்து யுத்தம் 1971 டிசம்பர் மாதம் இந்திய - பாகிஸ்தானிய யுத்தம் மூலம் பங்களாதேஷ் உருவாகி அது ஒருநாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட போதும் 1972 டிசம்பர் வரை இலங்கை அந்நாட்டை அங்கீகரிக்கவில்லை. பங்களாதேஷ் பிரச்சினை
இலங்கையில் இனக்குழும அரசியல் 54

தொடர்பில் இலங்கையின் இவ்வாறான போக்குகள் இந்தியாவுக்கு அதிருப்தியை கொடுத்திருந்தது. எனினும் ஏனைய விடயங்களில் இலங்கை விரோதமாக அமையாததினால் இந்தியா அதனைப் பெரிதாக எடுக்காமல் சுமுகமான உறவையே வளர்த்தது. 1972ல் இந்து சமுத்திரப் பிராந்தியத்தைச் சமாதானப் பிராந்தியமாக்க வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டநாள் விருப்பத்தை இலங்கை .என்.ஓ. வில் பிரேரித்துத் தீர்மானமாகவும் நிறைவேற்றியது. 1974ல் இந்தியா “பொக்காரா'அணுகுண்டுப் பரிசோதனையை மேற்கொண்டது. இந்தியாவின் இந்நடவடிக்கை இந்து சமுத்திரப் பிராந்தியத்தை அணுத்தொல்லைகள் அற்றதாக மாற்றுதல் என்பதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என இலங்கை கண்டித்தது. இதனைப் பாகிஸ்தானும் ஏற்றுக்கொண்டு இந்தியாவைக் கண்டித்தது. இருப்பினும் இலங்கை இந்திய உறவுகள் சுமுகமாகப் பேணப்பட்டது. இலங்கை இதே ஆண்டு இந்தியாவுடன் இந்திய வம்சாவழியினர் தொடர்பாகவும்; கச்சதீவு தொடர்பாகவும் ஒப்பந்தங்களைச் செய்து வெற்றியும் கண்டு கொண்டது.
இக்காலகட்டத்தில் இன்னோர் முக்கிய பிரச்சினையும் இலங்கையில் வளர்ந்திருந்தது. அதுவே இலங்கையின் இனப்பிரச்சினையாகும். இப்பிரச்சினை இக்காலகட்டத்தில் மிகக் கூடிய அளவில் கூர்மையடைந்திருந்தது. அரசியலமைப்பு ரீதியாக தமிழ் மக்களின் நலன்களைப் பேணும் வகையில் இருந்த ஏற்பாடுகள் புதிய அரசியல் திட்டம் மூலம் நீக்கப்பட்டன. உயர் கல்வியில் தமிழ்பேசும் மாணவர்களைப் பாதிக்கக்கூடியதரப்படுத்தல் முறைகொண்டுவரப்பட்டது. அரசாங்க உத்தியோகங்களில் பாரபட்சம் காட்டப்பட்டது. இவ்வொடுக்குமுறைகளை எதிர்ப்பதற்காகத் தமிழ் பேசும் கட்சிகள் ஒன்று சேர்ந்து தமிழர் விடுதலைக்கூட்டணி என்கின்ற அமைப்பு உருவாக்கப்பட்டு 1976 இனப் பிரச்சினைக்குத் தீர்வாக தனிநாட்டுக் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. தமிழ் இளைஞர்களுக்கு எதிரான பொலிஸ் நடவடிக்கைகளும் தீவிரமாக்கப்பட்டன. இருந்தும் இனப் பிரச்சினை 1977க்குப் பின்னரைப் போல இலங்கை இந்திய உறவில் ஒருமுக்கிய விடயமாகக் கருதப்படவில்லை. இலங்கையில் ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சிக்காலத்தில் இந்தியா, இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் அக்கறை கொள்ளாத நிலையே காணப்பட்டது.
எனவே முழுமையாக இக் காலகட்டத்தை நோக்கும் போது இடைக்கிடை சில கசப்பான சம்பவங்கள் காணப்பட்ட போதும் இலங்கை இந்திய அரசுகளுக்கிடையே சுமுகமான நிலையே காணப்பட்டது. இதற்குப் பிரதான காரணம் இரு நாடுகளினதும் வெளியுறவுக் கொள்கையில் ஒருமைப்பாடு இருந்தமையே ஆகும்.
1977 - 1989 ST60SLL).
இக்காலப்பகுதியில் மூன்று ஆண்டுகள் இலங்கை இந்திய உறவுகள் சீரான நிலையில் காணப்பட்டாலும் 1980ற்குப் பின்னர் மோசமான நிலையையே அடைந்தன. இம்மோசமான நிலைக்குப் பிரதான காரணமாக விளங்கியது இலங்கையின் இனப் பிரச்சினையாகும். முதல் மூன்று ஆண்டுகளிலும் 1977-1980 வரை இந்தியாவில் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சி புரிந்தது. இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி 1977 இலிருந்து 1989வரை ஆட்சி புரிந்து வந்தது. இவ்விருகட்சிகளும் அமெரிக்கா சார்புடைய கட்சிகளாக இருந்தமையால் இலங்கை
55 இலங்கையில் இனக்குழும அரசியல்

Page 34
இந்தியா உறவிலும் சீரான நிலைமை இருந்தது. 1978ல் இலங்கையின் சுதந்திர தின விழாவில் பிரதம விருந்தினராக இந்தியப் பிரதமர் கலந்து கொள்கின்ற அளவிற்குச் சுமுகமாக இருந்தது. 1977ல் இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரம் இலங்கை-இந்திய உறவில் தாக்கம் செலுத்தக் கூடிய காரணியாக இருந்த போதிலும் தாக்கம் செலுத்தவில்லை. இந்திய, இலங்கை அரசுடன் சுமுகமான உறவைப் பேண விரும்பிய படியால் இதில் அக்கறை செலுத்தவில்லை. இலங்கை இனப் பிரச்சினை, இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை என்றே இந்தியா கருதியது. இலங்கைத் தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையையும் இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பில் 1978ல் இலங்கையின் சுதந்திர தின விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் பேசுகையில் “இலங்கையின் இனப்பிரச்சினை அதன் உள்நாட்டுப் பிரச்சினை என்றும்; தமிழீழக் கோரிக்கை கைவிடப்பட வேண்டும் என்றும் கூறினார்.
1980ல் திரும்பவும் இந்திராகாந்தி பதவிக்கு வந்ததோடு இலங்கை - இந்திய உறவுகள் சீர் குலையத்தொடங்கின. ஐக்கிய தேசியக் கட்சியின் அமெரிக்கா சார்ந்த கொள்கையை இந்திராகாந்தி அங்கீகரிக்கவில்லை. இலங்கை 1981 மேயில் அமெரிக்கா சார்பான ஆசியான் கூட்டமைப்பில் சேருவதற்கு விண்ணப்பித்தமை இந்தியாவுக்கு மேலும் கசப்பை ஏற்படுத்தியது. இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கை, அந்நியக் கம்பணிகளின் வருகை என்பனவும் கசப்புக்கு காரணமாக இருந்தன. இத்தகைய சூழலில் 1983இல் இலங்கையில் இனக் கலவரம் நடைபெற்றது. நூற்றுக் கணக்கான தமிழர்கள் இறந்ததோடு கோடிக்கணக்கான தமிழர்களின் சொத்துக்களும் நாசமடைந்தன. இக் கலவரம் தமிழ்நாட்டில் பாரிய பாதிப்பையும் எழுச்சியையும் உருவாக்கியது. இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால் எழுப்பப்பட்டன. இந்திய அரசாங்கம் இதனைப் பயன்படுத்தி இலங்கை விடயங்களில் தலையிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இக் கலவரம் தொடர்பாக இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு தமிழ் இளைஞர் குழுக்களுக்கு ஆயுதங்களையும்; பயிற்சியையும் கொடுத்து இந்தியாவைப் பின் தளமாகப் பயன்படுத்துவதற்கும் உதவியது. அத்தோடு தன்னுடைய பிரச்சார இயந்திரங்களினூடாக சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்களிலும் ஈடுபட்டது. இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியா இரு அணுகுமுறைகளைக் கையாண்டது. தமிழ் இளைஞர்களுக்குப் பயிற்சி; மற்றும் ஆயுத உதவி, பிரச்சாரம் என்பவற்றை வழங்கி ஊக்குவித்தல்; இலங்கை அரசுடன் சமரசப் பேச்சுக்களில் ஈடுபடல்; என்பதே இவ்விரு அணுகுமுறைகளாகும். முதலாவது அணுகுமுறையைப் பயன்படுத்தி இலங்கையைத் தனக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளல் என்பதே இந்தியாவின் நோக்கமாக இருந்தது. அதே வேளை இலங்கையும் இப்பிரச்சினை தொடர்பில் இரு வழிமுறைகளைக் கையாண்டது. தமிழ் விடுதலைக் குழுக்களைத் தோற்கடிக்கும் தன்னை இராணுவ ரீதியில் தயார் படுத்துதல்; இந்தியாவை உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடாது செய்வதற்கு ஏற்ற வகையில் வெளிநாடுகளுடன் உறவுகளை வளர்த்தல் என்பதே இவ்விரு அணுகுமுறைகளாகும். இதனை அமுலாக்கும் வகையில் இஸ்ரேலிய மொசாட், தென்னாபிரிக்கா; பிரிட்டிஷ் கூலிப்படை, எஸ்.ஏ.எஸ். என்பவற்றுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவற்றின் நேரடி இராணுவ ஆலோசனைகளையும்; ஆயுத உதவிகளையும் பெற்றுக்கொண்டது. அத்துடன் இந்தியாவுடன் முரண்படக் கூடிய ஆசிய நாடுகளான சீனா, பாகிஸ்தான் என்பவற்றுடன் கூடிய உறவையும் வளர்த்தது. ஜேஆர். நேரடியாகப் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்து உறவினை வளர்த்திருந்தார்.
இலங்கையில் இனக்குழும அரசியல் se

இவ்வாறு இலங்கை அரசு திட்டங்களை தீட்டிய போதும் இலங்கை அரசு வெற்றி பெற முடியவில்லை. இலங்கையின் புவியியல் சார் அரசியல் நிலையும்; சர்வதேச ரீதியில் இந்தியாவின் செல்வாக்கும் இலங்கையை வெற்றிபெற முடியாதவாறு தடுத்து இந்தியாவுக்குப் பணிய வேண்டிய நிலையை ஏற்படுத்தியது. இந்தியாவின் சமரசமுயற்சிக்குப் பணிந்து இலங்கை 1984 ஜனவரி 10ல் சர்வகட்சி மகாநாட்டை நடாத்தியது. இனப் பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட இணைப்பு"சீ’ பற்றி ஆலோசனை செய்யவும் முன்வந்தது. அதுவும் சரிவராமற் போக 1985 இல் திம்பு பேச்சு வார்த்தைக்கும் முன்வந்தது.
இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் அவர் இலங்கை தொடர்பான தீவிரமான போக்கையே கடைப்பிடித்திருந்தார். அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் தனது விசேட தூதுவராக பார்த்தசாரதியை இலங்கையுடன் பேச்சுவார்த்தையில ஈடுபட வைத்தார். இந்தியா இலங்கைக்கு விட்டுக்கொடுப்புக்களைச் செய்யக் கூடாது என்பதும்; தனது ஸ்திரத் தன்மையையும்; விட்டுக் கொடுப்பற்ற உறுதியையும்; வெளிப்படுத்திக் கொண்டு இந்தியாவின் திட்டப்படி இலங்கையை நடக்கச் செய்ய வேண்டும் என்பதுமே பார்த்த சாரதியின் கொள்கையாக இருந்தது. 1984ல் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டதும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ராஜீவ் காந்தி இந்திராவைப் போலவே இலங்கையோடு தீவிரமான போக்கைக் கடைப்பிடிக்காமல் மென்மையான போக்கையே கடைப்பிடித்தார். பார்த்தசாரதியை ராஜதந்திர வேலைகளிலிருந்து விலக்குமாறு இலங்கை கேட்ட போது அதனை ஏற்று அதற்குப் பதிலாக மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கின்ற ரொமேஸ் பண்டாரியை நியமித்தார். இதனால் இந்திராகாந்தி காலத்தில் இருந்த கடுமையான நிலை சற்றுக் குறைந்து ஓரளவு சுமுகமான நிலை காணப்பட்டது. இச் சுமுகமான நிலையும் சர்வகட்சி மாநாடு; திம்பு பேச்சு வார்த்தை என்பவற்றை நடாத்துவதை இலகுபடுத்தி இருந்தது.
சர்வகட்சி மகாநாடு திம்புப் பேச்சுவார்த்தைகள் என்பன தோல்வி அடைந்து அரசு மீண்டும் இராணுவத் தீர்வை நோக்கித் தீவிரமாக இருந்தபோது இந்தியா-இலங்கை உறவுகள் மீண்டும் சீரற்ற நிலையை அடைந்தன. தமிழ் இயக்கங்களுக்கு எதிரான தாக்குதலில் இலங்கை வெற்றி பெற்றுவிட்டால் எதிர்காலத்தில் இலங்கை தான் நினைத்த மாதிரி இந்தியாவிற்கு எதிராக நடந்துகொள்ளக் கூடும் என இந்தியா கருதியது. அதைவிட தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வரும் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டி வரும் என்றும் கருதியது. தமிழ்நாட்டில் அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த எம்.ஜி.ஆர்.அரசு; மத்திய அரசாங்கத்தை ஆதரித்த அரசாங்கமாக இருந்தமையினால் அதனைத் திருப்திப்படுத்த வேண்டிய அவசியமும் இந்திய மத்திய அரசுக்கு இருந்தது. இக்காரணங்களினால் இலங்கை அரசைப் பணிய வைக்கும் நோக்கில் 1987 ஏப்பிரல் மாதத்தில் யாழ்ப்பாணத்தில் உணவுப் பொட்டலங்களைப் போட்டது. பின்னர் இலங்கையைச் சமரசத்திற்கு இணங்க வைத்து 1987 ஜூலை 29ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தையும் கைச்சாத்திட்டுக் கொண்டது. இந்திய அமைதி காக்கும் படையும் இலங்கைக்கு வந்து சேர்ந்தது.
இவ்விலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் இந்தியாவின் நலன்களே கூடுதலாகப் பேணப்பட்டன.
ஒப்பந்தம் தொடர்பில் இரு தலைவர்களும் பரிமாற்றிக் கொண்ட கடிதத்தில் அந்நிய இராணுவத்தினர், உளவுப் பிரிவினர் என்பவர்களை இலங்கை - இந்திய உறவைப் பாதிக்கக்
s இலங்கையில் இனக்குழும அரசியல்

Page 35
கூடிய செயல்களில் ஈடுபடவிடாது தடுத்தல்; திருகோணமலைத் துறைமுகத்தையும்; ஏனைய துறைமுகங்களையும் வேறு நாடுகள் பயன்படுத்த விடாது தடுத்தல், அந்நிய ஒலிபரப்பு நிறுவனத்தால் இந்தியா பாதிக்கப்படாது பாதுகாத்தல், திருகோண மலை எண்ணெய்க் கிடங்குகளைக் கூட்டாகப் பயன்படுத்துதல், என்பதில் இலங்கை இணங்கிக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
1989 - 1994 5T605LLLb.
1989ல் இலங்கையின் ஜனாதிபதியாக ஆர். பிரேமதாசா பதவியேற்றார். இவர் தீவிர இந்திய எதிர்ப்பாளராக விளங்கினார். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தையும் கடுமையாக எதிர்த்திருந்தார். பதவி ஏற்றதும் இந்திய இராணுவத்தை இலங்கையிலிருந்து வெளியேறும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு ராஜீவ் தலைமையிலான இந்திய அரசு இணங்காததால், இந்திய இராணுவத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி புலிகளுக்கு ஆயுதங்களையும் நிதி உதவிகளையும் வழங்கினார். இவரது இத்தகைய செயற்பாடு இந்தியாவிற்கு சீற்றத்தை ஏற்படுத்தியதுமல்லால் இலங்கை - இந்திய உறவையும் மோசமாக பாதித்தது.
1990ல் இந்தியாவில் ஆட்சிமாற்றம் நடைபெற்றது. தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றதைத் தொடர்ந்து தேசிய முன்னணியின் சார்பில் விபி சிங் பிரதமராக பதவியேற்றார். அவர் இலங்கையுடன் நல்லுறவைப் பேணும் வகையில் இந்திய இராணுவத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார். இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் அழுத்தம் கொடுப்பதையும் குறைத்துக் கொண்டார். இதனால் இலங்கைஇந்திய உறவுகள் சீரான நிலைக்குவரத்தொடங்கியது. தொடர்ந்து காங்கிரசின் ஆதரவில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட சந்திரசேகர் காலத்திலும் இந்நிலை தொடர்ந்தது.
1991ல் புலிகளினால் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார். இக் கொலையுடன் இலங்கையின் இனப்பிரச்சினையில் தலையிடுவதிலிருந்து இந்தியா முற்றாகவே விலகிக் கொண்டது. 1991 தேர்தலின் பின்னர் பதவியேற்ற நரசிம்மராவ் அரசாங்கமும் ஓரளவு சுமுகமான உறவினை இலங்கையுடன் பேணியது. 1993ல்பிரேமதாசாகொலை செய்யப்பட்டுடிபி விஜயதுங்க பதவியேற்ற போதும் இந்நிலை தொடர்ந்தது.
1990களின் ஆரம்பத்தில் உலகரீதியாக ஏற்பட்ட மாற்றமும் இலங்கை - இந்திய உறவின் சமுகநிலைக்கு உதவியது. சோவியத் யூனியன் சிதைவடைந்து பனிப்போர்முடிவுக்கு வந்தமையே அம்மாற்றமாகும். இதன் பின்னர் அமெரிக்க - இந்திய உறவுகளும் சீரடையத் தொடங்கின. இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் வளர்ச்சியினால் அமெரிக்காவும் பாகிஸ்தானுடனான தனது உறவினைக் குறைத்து இந்தியாவுடனான உற்வுகளை வளர்த்துக் கொள்வதிலேயே அதிகம் அக்கறை காட்டியது. இத்தகைய போக்கினால் ஐதேகட்சியின் பாரம்பரிய அமெரிக்க சார்பு நிலைப்பாடு இந்தியாவிற்கு பெரிய உறுத்தலாக அமையவில்லை.
இலங்கையில் இனக்குழும அரசியல் ss

மறுபக்கத்தில் ராஜீவின் கொலைக்குப் பின்னர் இனப் பிரச்சினை தொடர்பாக இலங்கையுடன் முரண்பட்டுக் கொள்ள வேண்டிய தேவையும் இந்தியாவுக்கு இருக்கவில்லை. தமிழ்நாட்டிலிருந்து அதற்கான அழுத்தங்களும் இந்திய மத்திய அரசுக்கு வரவில்லை. இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழி மக்களின் தலைவர்கள் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்திருந்தமையால் அவர்களின் பிரச்சினை தொடர்பாக இலங்கையுடன் முரண்பட வேண்டிய தேவையும் இருக்கவில்லை. உண்மையில் இலங்கையின் உள்நாட்டுக் காரணிகள் என்ற வகையில் இலங்கையின் இனப்பிரச்சினையும் இந்திய வம்சாவழி மக்களின் பிரச்சினையுமே இலங்கைஇந்திய உறவுகளில் தாக்கத்தை செலுத்தி வந்தன.
உண்மையில் 90களின் ஆரம்பத்தில் இருந்து உள்நாட்டு காரணிகளோ வெளிக்காரணிகளோ இலங்கை-இந்திய உறவினைச் சீர்குலைக்கக் கூடிய நிலைக்கு வளராததினால் இருநாடுகளிலும் யார் ஆட்சி செய்தாலும் இலங்கை - இந்திய உறவுகள் சுமூகமாக செல்லும் போக்கினையே காணக்கூடியதாக இருந்தது.
1994க்குப் பின்னர்.
1994ம் ஆண்டு தேர்தலின் பின்னர் இலங்கையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பொதுஜன முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்தது. அரசறிவியல் புத்திஜீவியான சந்திரிக்கா ஜனாதிபதியாக பதவியேற்றார். அவர் மாறிவரும் உலக சூழ்நிலைகளையும் தென்னாசிய சூழ்நிலைகளையும் நன்கு அவதானித்ததால் அதற்கேற்ற வகையிலேயே வெளிநாட்டுக் கொள்கையை வகுத்துக் கொண்டார்.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பாரம்பரிய பொருளாதாரக் கொள்கையை கைவிட்டு வளர்ந்து வரும் உலகமயமாக்கலுக்கேற்ப ஐ தே. க. அறிமுகப்படுத்திய திறந்த பொருளாதாரக் கொள்கையையே முன்னெடுக்கத் தலைப்பட்டார். இலங்கையில் திறந்த பொருளாதாரத்தின் வளர்ச்சி அமெரிக்காவிலும் மேலைத்தேய நாடுகளிலும் தங்கியிருந்தமையினால் அந்நாடுகளுடன் உறவுகளை மேலும் வளர்த்துக் கொள்ள முற்பட்டார். அதேவேளை இந்தியாவுடனும் 90களில் சுமூக நிலையில் இருந்தாலும் அபிவிருத்தியடையாமல் இருந்த உறவுகளை அபிவிருத்தி செய்ய முற்பட்டார். அமெரிக்க-இந்திய உறவு சீராக இருந்தமையினால் இலங்கையின் அமெரிக்க சார்பு நிலை இலங்கை - இந்திய உறவுகளில் 80 களைப் போல பாதிப்புக்கள் எவற்றையும் ஏற்படுத்தவில்லை.
இந்தியாவில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது இலங்கைத் தமிழர்களுக்கு சார்பான சக்திகளும் ஆட்சியில் பங்கேற்றதனால் மீண்டும் இனப்பிரச்சினையில் இந்தியா தமிழர்களுக்கு சார்பான நிலையை எடுக்குமா? என்ற அச்சம் இலங்கைக்கு இருந்தது. இதனால் இந்தியாவிற்கு மேலும் சில விட்டுக்கொடுப்புகளை செய்து உறவினைப் பலப்படுத்த முன்வந்தது. இலங்கைக்கு பாதகமாக இருந்த போதும் இலங்கை - இந்திய வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுக் கொண்டது. அதுவும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நாளில் இந்திய உற்பத்தியாளர்கள் பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததனால் இந்திய அரசாங்கம் கைச்சாத்திடத் தயங்கிய போது
59 இலங்கையில் இனக்குழும அரசியல்

Page 36
இலங்கை ஜனாதிபதி மேலும் பல விட்டுக் கொடுப்புக்களைச் செய்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.
இந்திய அணுக்குண்டு பரிசோதனையை அண்மையில் மேற்கொண்டபோது உலகநாடுகள் காரசாரமாக எதிர்த்தபோதும் இலங்கை இந்தியாவை ஆதரித்தது. ஆனால் இதே போன்றதொரு அணுகுண்டுப் பரிசோதனையை 1974ல் இந்தியா மேற்கொண்ட போது இலங்கை அப்போது காரசாரமாக எதிர்த்திருந்தது. அப்போது இலங்கையின் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா, e இந்தியாவின் அணுகுண்டுப் பரிசோதனை இந்து சமுத்திரப் பிராந்தியத்தை அணுத் தொல்லைகள் அற்றதாக மாற்றுதல் என்ற கொள்கையில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது” எனக் கண்டித்திருந்தார்.
இவ்வாறு இந்தியாவுடன் எந்தவித முரண்பாடும் கொள்ளக் கூடாது என்பதில் இலங்கை கவனமாக இருந்தபோதும், அண்மையில் நடைபெற்ற கார்கில் போர் மட்டும் இதற்கு சற்று விதிவிலக்காக இருந்தது. இப் போரில் பெரும்பாலான உலகநாடுகள் பாகிஸ்தானைக் கண்டித்த போதும் இலங்கை நடுநிலை வகித்திருந்தது. பாரம்பரியமாகவே இலங்கையுடன் மிகுந்த நட்புக் கொண்ட நாடாகவும்; இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இலங்கைக்கு பாரிய உதவிகளைச் செய்கின்ற நாடாகவும் பாகிஸ்தான் விளங்குகின்றமையால் அதனைப் பகைத்துக்கொள்ள இலங்கை விரும்பவில்லை. இதைவிட பாகிஸ்தானுக்கு எதிராக செயற்பட்டு உள்நாட்டில் அரசாங்கத்திற்கு ஆதரவு தரும் முஸ்லீம் மக்களையும் பகைத்துக்கொள்ள இலங்கை விரும்பவில்லை.
உண்மையில் இலங்கையின் உள்நாட்டு யுத்தமே இவற்றையெல்லாம் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகித்திருந்தது. இந்தியா புலிகளுக்கு சார்பான நிலையை எடுக்கக் கூடாது; பாகிஸ்தான் யுத்த உதவிகளை தொடர்ந்து வழங்க வேண்டும். இலங்கை முஸ்லீம்கள் புலிகள் பக்கம் போகக் கூடாது என்கின்ற விடயங்களே இச்செயற்பாடுகளில் பெரும் செல்வாக்கினை செலுத்தியிருந்தன. இதன் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்பவே இலங்கையும் செயற்பாடுகளை நகர்த்தியது.
எனவே சுதநத்திரத்திற்குப் பிற்பட்ட கால இந்தியர் தொடர்பில் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை நோக்கும்போது ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் வெளியுறவுகள் சீரானதாக அமையவில்லை. இதற்கு அக்கட்சி பின்பற்றிய மேலைத்தேச சார்பான வெளிநாட்டுக் கொள்கையும்; இலங்கையின் இனப்பிரச்சினையுமே பிரதான காரணமாக இருந்தது. இதன் அடிப்படையில் இந்திய அரசின் கொள்கையை மீறியும் இவ்வரசினால் நடந்து கொள்ள முடியவில்லை. அதற்கான பிரதான காரணியாக புவிசார் அரசியலே அமைந்திருந்தது. இலங்கை மேலைத் தேசம் சார்பானதாக இருந்தபோதிலும் இலங்கை-இந்தியப் பிரச்சினைகளில் மேலைத் தேசங்கள் இலங்கைக்குச் சார்பானதாக நின்று இந்தியாவின் பகையைப் பெற்றுக்கொள்ள அவை விரும்பவில்லை. இந்திய பெரிய நாடாக இருந்ததினால் இந்தியாவில் மேற்குத் தேசங்களின் நலன்கள் பல இருந்தன. அந்நலன்கள் இலங்கையிலிருந்து கிடைக்கின்ற நலன்களிலும் பார்க்க அதிகமானதாக இருந்தன. அதனால் அவற்றை இழக்க அவை விரும்பவில்லை. இந்தியாவில் இந்திரா
இலங்கையில் இனக்குழும அரசியல் 60

காங்கிரஸ் தவிர்ந்த வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்த போதும் இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலும் சுமுகமான நிலைமைகள் காணப்பட்டன.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் இந்தியா பின்பற்றிய வெளிநாட்டுக் கொள்கையையே அதிகளவில் இலங்கையும் பின்பற்றி இருந்தது. அதனால் இரு அரசுகளுக்குமிடையில் சுமுகமான நிலை காணப்பட்டது. சிறீலங்கா சுதந்திரக் கட்சி இந்தியா சார்பான கொள்கையைப் பின்பற்றினாலும் இந்தியாவுக்கு முழுமையாகப் பணிந்து விடாது தனித்துவமான நிலையையும் எடுத்திருந்தது. தான் எடுத்தமுடிவுகள் இந்தியாவின் நலன்களுக்கு முரணாக இருந்தாலும் அது விட்டுக் கொடுக்க முன்வரவில்லை. இந்திய - சீன யுத்தத்தில் நடுநிலையாக இருந்தமை, இந்திய - பாகிஸ்தானிய யுத்தத்தில் நடுநிலையாக இருந்தமை, ஒரு வருடமாக பங்களாதேஷ் அரசை அங்கீகரிக்காமல் இருந்தமை; இந்தியாவின் அணுப் பரிசோதனையைக் கண்டித்தமை என்பன இதனையே காட்டுகின்றன. இவை இந்தியாவுக்குக் கசப்பானதாக இருந்தபோதும்; ஏனைய விடயங்களில் குறிப்பாக அணிசேராக் கொள்கை, பஞ்சசீலக் கொள்கை, இந்து சமுத்திரத்தைச் சமாதானப் பிராந்தியமாக்கல்; என்பவற்றில் இந்தியாவோடு ஒருமித்த கருத்தினைக் கொண்டுள்ளதால் இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை விட சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியையே இந்தியா விரும்பியது. இதனால் அதன் ஆட்சிக் காலத்தில் இலங்கையோடு சுமுகமான நிலைமையைப் பேணி அதனைப் பாதுகாக்கவே இந்தியா முயற்சித்தது.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் சுமுகநிலை இல்லாமல் இருந்தாலும் 1956-1977வரை இலங்கை - இந்திய உறவுகள் பாரியளவு பாதிப்படையாமல் சுமுக நிலையிலேயே இருந்தன. 1956இற்கு முன்னரும் 1977இற்குப் பின்னருமே சீர்குலைந்தநிலையை அடைந்தன. 1956இற்கு முன்னரான நிலைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிரமான பிரித்தானிய சார்பும் 1977இற்குப் பின்னரான நிலைக்கு இலங்கையின் இனப்பிரச்சினையும் பிரதான காரணங்களாக அமைந்தன.
எனினும் 90களில் இவையெல்லாம் மாற்றமடையத் தொடங்கின. பனிப்போர் முடிவுக்கு வந்ததினாலும் இந்திய-அமெரிக்க உறவுகள் வளர்ச்சியடையத் தொடங்கியதனாலும் இலங்கைஅமெரிக்க சார்பு இலங்கை - இந்திய உறவினைப் பாதிக்கவில்லை. அதேவேளை இலங்கையின் இனப்பிரச்சினையும் இலங்கை - இந்திய உறவுகளில் பாதிப்பு செலுத்தும் நிலை மாறிவிட்டது.
எனவே தற்போதைக்கு இலங்கை-இந்திய உறவுகளில் பாதிப்பு ஏற்படக் கூடிய நிலை இல்லை என்றே கூறலாம்.
இலங்கை இந்திய உறவுகளின் எதிர்காலம்.
இலங்கை - இந்திய உறவுகளின் எதிர்காலம் தற்போது இருப்பது போல தொடர்ந்தும்
இருக்குமென உறுதியாக கூற முடியாது. உலகளவிலும் பிராந்திய அளவிலும் உள்நாட்டளவிலும் ஏற்படும் மாற்றங்களே அவற்றைத் i ர்மானிக்கக் கூடியதாக இருக்கும்.
61 இலங்கையில் இனக்குழும அரசியல்

Page 37
உலக அளவில் உலக மயமாக்கல் என்பது ஒரு பொதுப்போக்காக வளர்ச்சியடைந்து வருகின்றது. இதனால் உலகம் ஒரு கிராமமாக சுருங்குகின்ற நிலையும் அக்கிராமத்திற்கு அமெரிக்கா தலைமையேற்கின்ற நிலையும் தவிர்க்க முடியாதவாறு ஏற்பட்டுள்ளது.
உலகமயமாக்கல் செயற்பாடுகள் இந்தியாவிலும் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரலாம். திறந்த பொருளாதார முறைமைக்கு துரிதமாக மாறும்படி பல்வேறு முனைகளிலும் அதற்கு நிர்ப்பந்தங்கள் வரலாம். தற்போதே அதற்கான அடையாளங்கள் தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டன. எனினும் இம்மாற்றத்தின் துரிதப்போக்கு நிர்ப்பந்த சக்திகளின் அழுத்தத்திலும் உலகமயமாக்கலுக்கு எதிரான சக்திகள் உள்நாட்டில் அடக்கப்படுவதிலும் தங்கியுள்ளது.
திறந்த பொருளாதார முறைமை இந்தியாவில் வளர வளர அமெரிக்காவின் பிடிகள் அங்கு சகல நிலைகளிலும் இறுக்கமாவது தவிர்க்க முடியாதது. இந்நிலை முழுமையாகும் போது இலங்கையின் அமெரிக்க சார்பு நிலை இலங்கை - இந்திய உறவுகளில் பாதிப்பு செலுத்துவது அறவே இல்லாமல் போகலாம். இலங்கையில் இனிமேல் எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் அமெரிக்க சார்புநிலையை இல்லாமல் செய்ய முடியாது.
இலங்கையின் இனப்பிரச்சினை இன்று இலங்கை அரசமைப்புக்குள் தீர்வு காண முடியாத வகையில் பிரிவினையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. புலிகளின் அண்மைக்கால போர் முனை வெற்றிகள் இதனை மேலும் துரிதப்படுத்தியுள்ளது. பிரிவினை என்ற நிகழ்வு ஏற்படுமானால் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினை போல தமிழ் ஈழம் - சிறீலங்கா எல்லைப் பிரச்சினை நீண்டகாலத்திற்கு தொடரலாம். எல்லைகளில் பதட்டநிலை தொடர்ச்சியாக இடம் பெறலாம். இருநாடுகள் என்று வந்த பின் தமிழ் ஈழம், தமிழ்நாடு தொடர்பு வளர வளர இவ் எல்லைப் பிரச்சினை இலங்கை இந்திய உறவுகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தும் சக்தியாக மாறலாம். இந்திய மத்திய அரசில் தமிழ் நாட்டின் ஆதிக்கம் தொடர்ந்தும் நிலை பெறக் கூடிய நிலை இருப்பதனால் மத்திய அரசு தமிழ் நாட்டின் அபிலாசைகளைப் புறக்கணித்து செயற்பட முடியாது.
இன்னோர் பக்கத்தில் சிங்கள வீரவிதான போன்ற தீவிரவாத அமைப்புகளின் வளர்ச்சி இலங்கை வாழ் இந்திய வம்சாவழி மக்களுக்கு பாரிய அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றது. இலங்கையின் இனப்பிரச்சினை பிரிவினை என்ற நிலைக்கு செல்லுமானால் இவ் அச்சுறுத்தல் மேலும் மேலும் அதிகரிக்கலாம். இது தாக்குதல் என்ற கட்டத்திற்கு வளரும் போது இந்தியாவால் மெளனமாக இருக்க முடியாது. தமது வழித்தோன்றல்களை பாதுகாக்க வேண்டுமென்ற குரல்கள் இந்தியாவின் சகல முனைகளிலிருந்தும் எழுச்சியடையலாம். அப்போது இனப்பிரச்சினையில் மெளனமாக இருப்பது போல இந்திய வம்சாவழி மக்களின் பிரச்சினையிலும் மெளனமாக இருக்க முடியாத நிலை ஏற்படும். இந்நிலை இலங்கை - இந்திய உறவுகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தும்.
பிராந்திய மட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் பிரச்சினை இப்போதைக்குதீர்வினை எட்டக்கூடிய அறிகுறி எதனையும் காணவில்லை. மாறாக இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் கரங்களே
இலங்கையில் இனக்குழும அரசியல் 62.

பாகிஸ்தானில் கையோங்கி வருகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், காஷ்மீர் என்பவற்றை இணைத்து ஒரு அகன்ற இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவதும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் கனவாக உள்ளது. இதனால் இந்திய-பாகிஸ்தான் உறவுகள் தொடர்ந்தும் முறுகலாக செல்வதற்கான வாய்ப்புகளே உள்ளன. இந்நிலையில் இலங்கையின் தொடர்ச்சியான பாகிஸ்தான் ஆதரவு நிலை இந்தியாவுக்கு அதிருப்தியை தரக் கூடியதாக மாறலாம். இந்திய உறவுக்காக பாகிஸ்தானை கைவிடக்கூடிய நிலையில் இலங்கை ஒரு போதும் இருக்கமாட்டாது. இலங்கை பிரிவினைக்கு உட்படுமானால் தமிழ் ஈழம் இந்தியாவுடனும்; சிறீலங்கா பாகிஸ்தானுடனும் நெருங்கிய உறவினைக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்களே உள்ளன.
மொத்தத்தில் இலங்கை - இந்திய உறவுகளில் பெரும் பாதிப்பினை செலுத்தக் கூடிய காரணிகளாக எதிர்காலத்தில் இலங்கையின் இனப்பிரச்சினையும் இந்திய வம்சாவழி மக்களின் பிரச்சினையும் இந்திய-பாகிஸ்தான் முரண்பாடுகளுமே இருக்கப் போகின்றன.
63 இலங்கையில் இனக்குழும அரசியல்

Page 38
(1)
(2) (3)
(4) (S) () (7) (8) (9)
(l)
(2)
(3)
(4)
(5)
(6)
உசாத்துணை நூல்கள்
நித்தியானந்தன் வி. (1989) “இலங்கை அரசியற் பொருளாதாரம் வர்க்க இனத்துவ நிலைப்பாடுகள்’ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். குலரத்தினம் க. சி. (1960) “நோத்முதல் கோபல்லவ வரை” யாழ்ப்பாணம். யோதிலிங்கம் சி. அ. (1999) “இலங்கையின் அரசியல் யாப்புக்கள்” குமரன் புத்தக இல்லம். கொழும்பு. அரசாங்க வெளியீடு (1912) “இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பு பாராளுமன்ற செயலகம் (1988) “இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சி (1974) “வெள்ளி விழாமலர்” யாழ்ப்பாணம். சபாரத்தினம். த. (1998) “தந்தை செல்வா' தினகரன் (வாரமலர்) சிவராசா அ. (1989) “இலங்கை அரசியல்” கைதடி, உதயன், விஜயன் (1983) “இந்து சமுத்திரப் பிராந்தியமும் இலங்கையின் இனப்பிரச்சினையும்”
சென்னை.
s
உசாத்துணை நூல்கள் (ஆங்கிலம்)
SILVA K.M. De (1977) “A TALE OF THREE CONSTITUTIONS”
SILVA. K. M. De (1973) “THE HISTORY AND POLITICS OF THE TRANSFER OF POWER'
CLUDOWYCK. E. F. “THE MODERN HISTORY OF CEYLON
CHOPRA SURENDRA (1983) "STUDIES IN INDIANS FOREIGN POLICY AMIRISTAN.
KODIKARA. SHELTON. U (1982) “FOREIGN POLICY OF SRILANKA' A THIRD WORLD PROSPECTIVE - CHANAKEY PUBLICATION, DELHI.
VIJAYA KUMAR (1986) INDIAN AND SRILANKACHINA RELATIONS. (1948 - 1984) NEW DELHI.
ളുi്ഞെക് இனக்குழும அரசியல் 64


Page 39
திரு. சி. அ. யோதிை ஆண்டுகளுக்கும் மேல கொட்டாஞ்சேனை நல் மடத்தில் அரசறிவிய வருகின்றார். சில க பல்கலைக் கழகத்தில் அ நேர விரிவுரையாளராக யுள்ள இவர் அனுபவம்
யாழ்ப்பாணம் - குப் மாகக் கொண்ட இவ பல்கலைக் கழகத்தில் அர கலைமாணிப் பட்டத்திை சர்வதேச கற்கை நெறிக நாயக்கா நிலையத்தில் 8 களில் பட்டப் பின்படிப்பு பெற்றவர். கூடவே மகர நிலையத்தின் கல்வியியல டிப்ளோமாவையும் பெற்று வீரகேசரி, தினக்குரல், ச பத்திரிகைகளில் அரசறி நிறையவே எழுதிவருபவர் சமூகவியலும் ஆர்வத்துட ஈடுபடும் இவரின் ‘இலங் யாப்புகள்’ எனும் நூல் ஏற் யுள்ளது.
செ. சக் B.A.(HONS) uusTyp,

லிங்கம் கடந்த பத்து )ாக கொழும்பு - லாயன் கன்னியர் லைப் போதித்து ாலம் கொழும் பு ரசறிவியல் பகுதி வும் கடமையாற்றி மிக்க ஆசிரியர்.
பிளானைப் பிறப்பிட பர் யாழ்ப்பாணப் சறிவியலில் சிறப்புக் னயும் கொழும்பு - ளுக்கான பண்டார Fர்வதேச விவகாரங்
டிப்ளோமாவையும் ரகம தேசிய கல்வி லில் பட்டப் பின்படிப்பு |ள்ள யோதிலிங்கம் ரிநிகர் போன்ற பல வியல் தொடர்பாக ர். அரசறிவியலிலும் ன் பல ஆய்வுகளில் கையின் அரசியல் )கனவே வெளியாகி
திதரன் DIP - IN - INT (BCIS)