கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையில் தமிழ் பேசும் பெண்கள்: சமூகமும் பண்பாடும்

Page 1


Page 2


Page 3

இலங்கையில் தமிழ் பேசும் பெண்கள் = சழுகழும் பண்பாடும்
ஆய்வரங்கக் கட்டுரைகள் - 1999
ølaJafaffb:
பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை
அமைச்சு
வடக்கு - கிழக்கு மாகாணம்,
திருகோணமலை,

Page 4
இலங்கையில் தமிழ் பேசும் பெண்கள்
- சமுகமும் பண்பாரும்
(ஆய்வரங்கக் கட்டுரைகள் - 1999)
வெளியீடு : பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,
கல்வி, பண்பாட்டலுவல்கள்,
விளையாட்டுத்துறை அமைச்சு,
திருகோணமலை. முதற்பதிப்பு : 2000 ஒக்டோபர்.
பக்கங்கள் : V + 1 02
பிரதிகள் : S00
அட்டைய்படம் : ச. அ. அருள்பாஸ்கரன் அச்சுய் பதிப்பு : பதிப்பகத் திணைக்களம் , வ.கி.மா.
ILANKAYIL TAMIL PESUM PENKAL
SAMUGAMUM PANPADUM
( Collection of Seminar Essayes 1999)
Published by: Department of Cultural Affairs,
Ministry of Education, Cultural Affairs & Sports, N.E.P., Trincomalee.
First Edison : , 2000 October
Pages : v + 102
Copies : SOO
Cover Design: S. A. Arulpaskaran.
Printed by : Printing Dept., N.E.P.

முன்னுரை
பெண்கள் தொடர்பாக இன்று பல வேறுபட்ட சிந்தனைகள் தோன்றிவரும் காலம் இது. கீழைத்தேசங்கள் கொலோனித்துவப் பிடிக்குள் வந்த பின்னால் எழுந்த விதேசிய எதிப்புப் போராட்டங்கள் தவிர்க்க முடியாமல் தமக்குள், தமது சமூகங்களுக்குள் நிலவிய அடிமைத்தனங்களுக்கும் எதிராகப் போராட வேண்டிய தேவை உரு வாகிற்று. சாதீய எதிர்ப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு என இது பலபட விரிந்தது. இந்தியாவில் தமிழகத்தில் பாரதியார் பெண்ணடிமைத்த னத்திற்கு எதிராக இவ்வாறு குரல் கொடுத்தார். 'பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டின் மண்ணடிமை தீருவது முயற் கொம்பே' இக்கூற்றின்படி பெண்ணடிமை முற்றாகத் தீராத நிலை மையே காணப்படுவதால் மண்ணடிமை கொலோனித்தவப் பிடிதளர்ந்த நாடுகளிலும் நீங்கவில்லை. இலங்கையிலும் நிலைமை இதுவே தான.
இதனைக் கருத்திற் கொண்டு கடந்த ஆண்டு (1999இல்) நடைபெற்ற தமிழ் இலக்கியவிழாக் கருத்தரங்கு இருநாள் அமர் வாக “பெண்கள் தொடர்பானதாகவே” அமைந்தது. இதில் ஈழம், தமிழகம் சார்ந்த பெண்அறிஞர்கள், பெண்ணியவாதிகள் பலர் கலந்து கொண்டு கருத்தாடல்களிலும் கலந்து கொண்டனர். இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் ஒவ்வொரு வருடமும் போலவே இம்முறையும் நூல் வடி வில் கொண்டு வரப்படுகின்றன. கருத்தரங்குகள் பல நாட்டில் நடை பெற்றாலும் அத்தோடு அவை காற்றில் போய்விடுவதே மரபு. ஆனால் எமது அமைச்சு அக்கறையோடு மேற்கொள்ளும் கருத்தரங்குகளின் மதிப்பு வாய்ந்த கருத்துக்களை ஆவணப்படுத்துகின்றதோடு கருத்த ரங்குகளில் கலந்து கொள்ளாதவரையும் இது எட்டுதற்கு வழி செய்யும்.
இந்நூலை பெண்கள் சங்கங்களினைச் சார்ந்ததோர், பெண் ணுரிமை, பெண்விடுதலை குறித்த ஆர்வலர்கள் பெற்றுப் பயனடை தல் வேண்டும். இது குறித்த விமர்சனங்களை முன்வைத்து விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும். பெண்ணுரிமை என்பது வெறும் விவாதப் பொருளாக மட்டும் மாறிவிடாமல் இருக்க அது சார்ந்த ஈடுபாடு விடுதலைதவறிக்கெட்ட தேசத்துப் பெண்களிடம் உருவாக வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன்.
க. பரமேஸ்வரன்
செயலாளர், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளுையாட்டுத்துறை அமைச்சு,
噁 變 தமிழ்ச் 8. DITEs.T600TLD,
திருகோணமலை.

Page 5
வெளியீட்டுரை
எமது அமைச்சினால் நடத்தப்பெற்ற ஆய்வரங்கங்களில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் அடுத்த வருடம் நிகழும் தமிழ் இலக்கிய விழாக்களில் வெளியிடப்படும் ஒரு நல்ல மரபு எம்மால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடரில் இந்நூல் வெளியீடு மூன்றா வது ஆய்வரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு. இது பெண்கள் சம்மந்த மானது. முதலிரண்டும் தமிழ்மொழி அமுலாக்கல் என்ற தளத்தில் அமைய மூன்றாவது எமது இனத்தின் மிக முக்கிய கூறாக பல்வேறு பாதிப்புக்களுக்குள்ளாகின்ற பெண்கள் தொடர்பாக அமைந்தது.எனவே எமது சமூகம் சார்ந்த பிரச்சினையை மையமாகக் கொண்ட மைந்தது.
இது சார்ந்த ஆய்வரங்கின் கட்டுரைகள் இம்முறையும் தடங்கல் இன்றி வெளிவர எமது இப்போதைய செயலாளரும் மிகுந்த ஒத்துழைப்பு வழங்குவது குறிப்பிடத்தக்கது. இவரதும் எமது சக பண்பாட்டுத்துறை அவலுவலர்களதும் ஒத்துழைப்பிலும் மேலும் மேலும் இத்துறையில் நாம் புதியன முயல வழிபிறக்கும் எனக்கூறி இந்தப் புதிய வெளியீட்டையும் மக்கள் மத்தியில் சமர்ப்பிப்பதில் மகிழ்வெய்துகின்றோம். இந்த வெளியீட்டைக் கொணர்வதில் ஒத்து ழைத்த சகலருக்கும் கட்டுரை ஆசிரியர்களுக்கும், பதிப்பகத் திணைக் களத்தினருக்கும் எமது நன்றிகள்.
எஸ். எதிர்மன்னசிங்கம்,
உதவிய் பணிப்பாளர், பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,
வடக்கு - கிழக்கு மாகாணம்,
திருகோணமலை.

01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
13.
பொருளடக்கம்
தற்கால அரசியல் சமூக நெருக்கழகளும் பெண்களும்
- சரோஜா சிவச்சந்திரன்
பெண்கள் அமைய்யாதல், அடையாளம் தொடர்பான பிரச்சினைகள்
- பவளராணி கணேசலிங்கநாத்ண் பாடப் புத்தகங்களில் பால் வாதம்
- புவனா தண்டாயுதபாணி
சட்டமும் பெண்களும்
- கமலினிகணேசன்
இலங்கை முஸ்லிம் சட்டங்களும் பெண்ணுரிமை விவாதங்களும்
- சுல்பிகா ஆதம்
பண்பாட்டுய் பெறுமானங்கள் பண்பாட்டு மாற்றம்
- பத்மினிசிதம்பரநாதன் பெண்ணிலைவாத விமர்சனக் கண்ணோட்டம்
- செல்வி திருச்சந்திரன் பெண்களும் அபிவிருத்தியும், அனுபவங்கள் பிரச்சினைகள்
- மனோன்மணியற்குணம் தகவல் தொடர்பு சாதனங்களில் கருத்துநிலை
- அம்மன்கிளிமுருகதாளம்
பெண்கள் அமைப்பாதல் சவால்களும், சாத்தியய்பாடுகளும்
- ஒளவை விக்னேஸ்வரன்
பண்பாட்டுச் செயல்பாட்ருத்தளமும் பெண்களும்
- அ.மங்கை
பெண்களின் கலாசார செயல்வாதம்
- வாசுகிஜெயப்சங்கர்
இலங்கையில் தமிழ் பேசும் பெண்களிடையே பெண்நிலை இயக்கம் ஆரம்பகாலச் சிந்தனைகளும் செயற்பாடுகளும்
-பேராசிரியை சித்திரலேகா மெளனகுரு

Page 6

தற்கால சமூக நெருக்கடிகளும் GLIGUõi
சரோஜா சிவச்சந்திரன்
உலகளாவிய ரீதியில் பெண்கள் பிரச்சினைகள், அவர்கள் உரிமைப் போராட்டங்கள், பெண்களுக்கெதிராகக் காட்டப்படும் வன்முறை கள், மனித உரிமை மீறல்கள் இவற்றை முன்னுரிமைப்படுத்தி சர்வதேச சமுதாயத்தின் கவனத்திற்கு வைத்த - பெருமை ஐ.நா. முன்னெடுத்து நடத்திய நான்கு உலக மகளிர் மாநாட்டுக்கு உரியது. (1975 - 1995) ஆயினும் நாடுகளின் உள்நாட்டு சமூக பொருளாதார, அரசியல் நிலைப்பாடுகளில் பெண்கள் பாரதூரமான மாற்றங்களை, பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்களா என்பது இன்றும் கேள்விக்குறிகளாகவே உள்ளது. இக்கால கட்டத்தில் 'இலங்கையில் தமிழ்ப் பெண்கள் சமூகமும் பண்பாடும்” என்ற கனமான ஓர் கருத்தரங்கு நடத்தப்படுவது - சிறுபான்மை யினராக வாழ்ந்து வரும் தமிழ்ப் பெண்கள் பற்றிய சிக்கல்களை, பிரச்சினை களை ஆராய்வதற்கான ஓர் முக்கிய களமாகவும், எமக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பமாகவும் கருதுகின்றேன். அதுவும் தமிழ் மொழியில் நடத்தப்படுவது, கருத்தரங்கிற்கு மேலும் மெருகூட்டுவதாக உள்ளது. ஆய்வின் முடிவுகள் நூலுருவில் மட்டுமன்றி, சமூக அரசியல் பொருளாதார நிலைகளில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் வழிவகை களைக் கண்டறிந்து, அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வனவாகவும் அமைய வேண்டும்.
இன்றைய சமூக நிலைப்பாடுகளின் விழுமியங்கள், திட்டங்கள், சமுக இணைப்பு, தனித்துவம் என்பன சீர்குலைந்து, மனித உறவுகள், தொடர்புகளுக்கு மேலாக பொருளாதார சிந்தனைகள் முக்கியம் பெற்று வருகின்றன. பொருளாதார முன்னுரிமைப் பட்டியலில் கலை, இலக்கியம், கவிதை, சங்கீதம், நடனம் போன்ற கலாசார படிமங்கள் இறுதி நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. ‘மனித அன்பு” என்ற பொக்கிஷத்தை அடைவதற்கான வழிகள் குறுகிச் செல்கின்றன.
விஞ்ஞான தொழிநுட்ப சாதனைகளின் வளர்ச்சியோடு 2000 ஆம் ஆண்டை அண்மித்துக் கொண்டிருக்கும் மக்கள், சமத்துவமான உலகைக் கட்டியெழுப்ப முடியாத நிலையிலேயே உள்ளனர். ஆண், பெண், வறியோர், செல்வந்தர், இளையோர், முதியோர், நகர, கிராம வேறுபாடுகள் - இவ்வேறுபாடுகளைப் போக்க மகளிர் இயக்கங்களின் எண்ணிலடங்கா முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமத்துவத்திற்காக, அடிமைத்தனத்தை எதிர்த்து மகளிர் சமூக பொருளாதார முன்னேற்றத்தை, சமூக அந்தஸ்தை நிலைநாட்ட, அரசியல் ஜனநாயகத்தைப் பேண, சுற்றுப்புற சூழலைப் பாதுகாக்க, கல்வி, சிறுவர், முதியோர் நலன்களைப் பேண, சட்ட ஒழுங்கை நிலைநாட்ட, பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டிக்க, பெண்கள் மனித உரிமைக்காக இப்படி பல முன்னேற்ற நடவடிக்கைகளை செயற் படுத்திய போதும், பலநாடுகளில் பெண்கள் வாழ்நிலைகள் மோசமாக உள்ளதை அறியக் கூடியதாக உள்ளது.

Page 7
நம் சமூக அமைப்பில் தமிழ்ப் பெண்கள் வகிக்கும் நிலை யாது? நம் சமூக தொழிற்பாட்டில் பெண்களின் பங்கு என்ன? இந்நிலைகளின் படிமுறையை தெளிவாக அறிவதன் மூலமே தமிழ் சமூகப் பெண்களின் வாழ்வியற் பரிமாணங்களை அறியமுடியும்.
தமிழ்ப் பெண்கள் இன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்து வந்த போதிலும் தமிழ்ப் பாரம்பரியத்தை மையமாகக் கொண்ட தமிழ்ப் பிரதேசம் வாழ் பெண்களை ஆதாரமாகக் கொண்டு அவர்களது சமூக, அரசியல் பரிமாண நிலைகளை விளக்குவது பொருத்தமாக அமையும்,
ஆயுதப் போராட்டம், மோதல்கள், இன முரண்பாடுகளால் தமிழினம் இன்று குழம்பிய நிலையில் உள்ளது. தமிழர் பிரச்சினைகள் காலத்துக்குக் காலம் புதிய வடிவம் பெற்ற போதும், அவற்றிற்கான தடைகள் மாறாம லேயே உள்ளன. இலங்கையின் சமூக, கலாசார அரசியல் நிலைகளில் சமமான உரிமைகளை வென்றெடுப்பது என்பது - அரசியல் தளத்தில் காலா காலம் பல பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், பாரம்பரியம், படிப்பறிவு, தனித்துவ கலாசாரம், வாழ்வியல் முறைகளைக் கட்டிவளர்த்த தமிழ் சமுதாயம் இன்று தோட்டாக்கள், குண்டுகள், ஷெல்கள், கண்ணி வெடிகளுக்கு இவற்றை தொலைத்துவிட்ட நிலையிலுள்ளது. -
தமிழர் அரசியல் போராட்டம் பல கட்டங்களில் பல நிலைகளைத் தாண்டி எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் கண்டுள்ளது. ஆயினும் இன்றுள்ளது போல் எக்காலத்திலும் வீழ்ச்சி கண்டதில்லை. அரசியல் தலை வர்கள் கொல்லப்படுதல், இராணுவம், ஏனைய ஆயுதக் குழுக்கள் கொல்லப் படுதல், இடம்பெயர்வு, இனக்கலவரங்கள் இவை யாவும், தமிழர் பாரம்பரிய பிரதேசத்தில் தமிழர் எண்ணிக்கையை குறைத்துக் கொள்வதாக உள்ளது. தொடர்ந்து வரும் போரின் காரணமாக தமிழர் தலைமுறையே அழிக்கப்படும் அபாயம் நெருங்கி வருகின்றது. தமிழரின் கலாசார விழுமியங்கள் அழிக்கப் பட்டு வன்முறை, உளவியல் தாக்கங்களினால் ஓர் தலைமுறையே சின்னாபின்னப்படும் அபாயம் உள்ளது.
இடப்பெயர்வு காரணமாக வெளிநாடுகளில் தங்கி அகதி நிலையில் வாழும் தமிழர் இரண்டாந்தர அகதிகளாக வாழும் நிலை உருவாகியுள்ளது. இக்கால கட்டத்தில் தமிழ்ப் பெண்கள் மத்தியில் சமுக பொருளாதார அரசியல் மாற்றங்கள். மெதுவாக ஏற்பட்டு வருவதை காணக் கூடியதாக இருந்த போதும் 15 வருட காலமாக தொடர்ந்து வரும் போரின் விளைவுகளினால் பெரிதளவு பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்ப் பெண்களே. இவர்களது சமூக வாழ்வியல் அம்சங்கள் யாவற்றிலும் போரின் அனர்த்தங் களைக் காணமுடிகின்றது. பெண்களின் வாழ்வியல் முறைமைகளில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், யாழ்ப்பாண சமூக அமைப்பின் ஆணாதிக்க இறுக்க கட்டமைப்புக்கள் ஆண், பெண் சமனற்ற நிலையைத் தொடர்ந்து பேணக் காரணமாக அமைகின்றது. பெண்ணியற் சிந்தனைகளின் கணிசமான தாக்கங்கள் பெண்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த போதிலும் ஆண் பெண் சமத்துவம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறமுடியாது. தமிழ் சமூக அமைப்பின் உறவுமுறைகள், சாதியமைப்பிலான படிநிலைகள், பழக்க வழக்கங்கள், உடைமைகள் பேணல், திருமணச் சடங்கு முறைகள், சீதனம் வழங்கல் என்பன இச்சமத்துவத் தன்மையை மேலும் வலுவடையச் செய்கின்றன. இது சுலபமாக மாற்றக்கூடியதல்ல. இவ்வேறுபாடு. அரசியல் திட்டங்களிலும் செயற்பட்டு வருவது வருந்தத்தக்க விடயமாகும். தமிழர் பாரம்பரிய பிரதேசத்தில் நடந்து வரும் போர் நடவடிக்கைத் தாக்கங்களினால் பெண்

களது குடும்ப உறவு முறைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆண்கள், சகோத ரர்கள் போன்றோரது இழப்புக்கள், உழைக்கும் உழைப்பாளிகளை இழப்ப தனால் பெண்களின் பொருளாதார நிலை மேலும் மோசமானதாக உள்ளது. உழைப்பாளிகளாக மாறமுற்படும் (கணவனை இழந்த) பெண்கள் சொத் துரிமை இன்மை, ஆணாதிக்கக் கட்டுக் கோப்புகளினால் அவதிப்படும் நிலை உள்ளது.
போரின் இழப்புக்களின் மீளளிப்பு என்பது பொருளாதார உற்பத் தியின் மீதுதான் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. வீடு கட்டுதல் மீளக் குடியமர்த்தல், சுகாதார வசதிகள் என்பனவற்றிலே புனர்வாழ்வுப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. பெண்களது தனியான பிரச்சினைகள் மேலோட்ட மாகவே கவனிக்கப்படும் நிலை அவர்களது சமூக நிலையினை மேலும் மோசமாக்கியுள்ளது.
குடும்ப அமைப்பு சமுதாயத்தின் முக்கிய அலகு. தமிழ்ப் பெண்கள் வாழ்வில் இவ்வமைப்பு நிலையில் பல மாற்றங்கள் - போர் காரணமாக கணவன், பிள்ளைகள் இழந்த நிலை - பொருளாதாரம், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல், மனித உரிமைகள் மீறல், பாலியல் துன்புறுத்தல்களுக்கு அஞ்சி வெளிநாடுகளுக்கு குடும்ப அங்கத்தவர்கள் - அகதிகளாக சென்று வாழும் நிலை, ஆண்கள், இளம் வாலிபர்கள் இவ்வாறு அதிகமான இடம்செல்வதனால், பெண்களின் திருமண வயது உயர்தல் என்பன பல மாற்றங்களை உள்ளடக்கியதான நிகழ்வுகளாகும்.
தமிழ்ப் பெண்களின் சமூகநிலை
தமிழ்ப் பெண்களின் சமூக நிலை, பாதுகாப்பற்ற, தனிமைப் படுத்தப்பட்ட உணர்வை வளர்ப்பதாக உள்ளது. காலாகாலமாக, ஆண்களின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து வந்த பெண்கள் இன்று ஆண்களின் உழைப்பு, துணை அற்ற நிலைகளில் அப்பொறுப்புக்களை தாமாகவே சுமக்கின்ற நிலைகசூத்தள்ளப்பட்டுள்ளனர். சமுகத்தில் நிலவிவரும் பலாத்கார செயற் பாடுகள், இராணுவ அட்டுழியங்கள் போன்றவை பெண்கள் தனித்து வாழும் இந்நிலைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. இராணுவ சோதனைகள் என்ற பெயரில் இரவுவேளைகளில் உட்புகும் இராணுவத்தினர் என்ன செய்கின்றார்களோ என்ற ஏக்கம். தன்னையோ, தனது வளர்ந்த பிள்ளை களையோ பாதுகாக்க முடியாத ஏக்கத்திலும், பயத்திலும் வாழும் பெண்கள், உடல், உளத்தாக்கங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அடிக்கடி நிகழும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இவற்றை உறுதிப்படுத்துவனவாக அமைந்துள்ளன. இதனால் தமது பெண் பிள்ளைகளை விரைவாகத் திருமண பந்தத்துள் தள்ளிவிடும் தாய்மார்கள், இதனால் திருமண உறவுகளின் நெருக்கம் விரிசலாக மாறி இளம் வயதிலேயே மண நீக்கத்தை பெற்றுவிட முயற்சிக்கும் பெண்கள் இன்று பெருகி வருகின்றனர். இவர்களுடைய வறுமைநிலை இன்று சமூகத்திற்கு ஓர் அச்சுறுத்தலாகவே அமைந்து விட்டது.
மேலும் ஏராளமான ஆண்கள் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டதன் காரணமாக, திருமணமாகவுள்ள பெண்களுக்கு தகுதியான ஆண்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது. இதனால் திருமண வயதைக் கடந்த பல பெண்கள் தனிமையாக வாழ்வதும், சமூக வளர்ச்சியை, ஒன்றிணைப்பை பாதிப்பதாக அமைந்துள்ளது.

Page 8
ஆண்களில் பலர் வெளிநாடுகளில் வாழ்வதனால் திருமணத்திற்காக பெண்கள் தனியாக வெளிநாடுகளுக்கு அனுப்பி, அந்நாடுகளில் திருமணங் களை நடத்தி வைக்கும் முறைமையும் ஓர் புதிய சமூக ஒழுங்காக இடம்பெற்று வருகின்றது. "சீதனம்" இன்றும் பெண்கள் சமூக அந்தஸ்தில் முக்கிய இடம் வகித்துவரும் அம்சமாகவே உள்ளது. இதனை ஒழிப்பதற்காக எடுக்கப்படும் பல முயற்சிகளில் பெண்கள் அமைப்புக்கள் தோல்வி அடைந்துள்ளதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
போரின் தாக்கங்கள் ஒரு புறமும் உலக பொருளாதார மாற்றங்கள் குறிப்பாக அமைப்பு ரீதியான பொருளாதார மாற்றங்கள் ஆண்களுக்கு சமமாகப் பெண்களும் பயனாளிகளாக மாறக்கூடிய மாற்றுருவாக்கத்தை ஏற்படுத்த வகை செய்துள்ளது.
பால் ரீதியான எழுச்சி மனித முன்னேற்றத்தின் பிரதான அம்சமாகி உள்ளது. பெண்கள் வலுவாக்கம் பெறாதவர்களாவும் உற்பத்தித் துறையில் பங்கு கொள்ளாதவர்களாகவும் காணப்பட்ட நிலைமாறி அபிவிருத்தியில் பிரதான பணியுள் இவர்கள் பங்காளிகளாக வகை செய்யப்பட்டுள்ளது. ஆயினும் பெண்கள் தமது ஆற்றல்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் சமமானதாக ஏற்படுத்தப்படவில்லை.
6) IgGOID
பெருமளவில் பெண்களின் வறுமை நிலை ஏற்றுக் கொள்ளப்பட்ட போதிலும், பொருளாதார வசதி குன்றிய பெண்கள் வசதி குன்றிய நிலையிலேயே உள்ளனர். போரினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மேலும் இவர்களுக்கு சுமைகளைக் கொடுத்துள்ளது. அநீதி, சமத்துவமின்மை என்ற பிடிக்குள் அகப்பட்ட இப்பெண்கள், சமூக, பொருளாதார, அரசியல், கலாசார பாதிப்புக்களால் கூடுதலாகப் பாதிப்படைகின்றனர். பொருளாதாரப் பாதுகாப் பின்மை, குடும்ப அங்கத்தவர்கள் தொகை, குடும்ப வன்முறைகள் போன் றன காரணமாக இப்பெண்களுக்கு அபிவிருத்திதிட்டங்களில் கூடிய பங்களிப்பு தேவைப்படுகின்றது. போர் காரணமாக உடைமைகள் இழந்து, தமது பொருளாதார முயற்சிகளை, வருமானத்தின் மூலாதாரங்களை இழந்த பெண்கள் அரசின் நிவாரண உதவிகளுடன் தமது வாழ்நாளைக் கழிக்கும் நிலை, வறுமையின் மீளமுடியாத நிலையினைக் காட்டுகின்றது.
பாலியல் பலாத்காரம், வன்முறைகள்
வறுமைநிலையில் வாழும் பெண்கள் மேலும் குடும்ப வன்முறைகள், பாலியல் பலாத்காரங்களுக்கு இலக்காகின்றனர். பெண்களுக்கு எதிரான இவ்வன்முறைகள் பொதுவாக மறைக்கப்பட்டு, ஓர் குற்றம் என்ற உணர்வே இல்லாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
தமிழ்ப் பெண்களது அரசியல் ஆர்வம் வரலாற்றுக் காலத்தில் இருந்து ஆரம்பமாகியதெனினும், தற்கால அரசியல் குழப்ப நிலைமைகள், நெருக்கடிகள் காரணமாக இவ்வார்வம் குன்றி வருகின்றது. அடிக்கடி நிகழும் அரசியல் கொலைகள், மேலும் தமிழ்ப் பெண்கள் அரசியல் தலையீட்டை ஓர் கேள்விக்குறியாக்கியுள்ளது. நடந்து முடிந்த நான்கு உலகப் பெண்கள் மாநாடுகளில் எடுக்கப்பட்ட செயற்றிட்ட முடிவுகள், தீர்மானங்கள், பெண்கள் மத்தியில் கணிசமான அளவு விழிப்புணர்வைத் தூண்டியுள்ளது என்பது உண்மை. ஆனால் பல நாடுகளில் உள்நாட்டு யுத்தங்களில் சிக்கிய

பெண்கள் பலாத்காரம் போன்ற வன்முறைகளைச் சந்திப்பதோடு, பெண் களின் மனித உரிமைகள் கேள்விக்குறிகளாகியுள்ளன. பெண்கள் அமைப் புக்களது அரசியல் வேகம், பங்களிப்பு என்பன மந்தகதியிலேயே உள்ளது. இதனால் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றோடு, செயற்றிட்டங்களில் பெண்களுக்கு அளிக்கப்படும் முன்னு ரிமைகள் யாவும் பின்தள்ளப்படுகின்றன.
பெண்கள் முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களோ அன்றி பலாத்காரம், வன்முறைகள் நிகழ்வுகளோ இடம்பெறும் போது, வறுமை’, “அறியாமை” என்ற இரண்டு பதங்களும் அவற்றை நியாயப்படுத்த பிரயோகிக்கப்படுகின்றது. உதாரணமாக பாகிஸ்தானில் மதத்தின் பெயரால் பெண்களுக்கான தண்டனை (Honour Killing) கெளரவ மரண தண்டனை என வழங்கப்படுகின்றது. இவற்றை ஓர் “கொலை” (Crime) என எவரும் ஒத்துக்கொள்வதில்லை. கலாசார முறைமைகள், மரபுகள் போன்ற பெண் களுக்கான ஒழுக்க வரையறைகளை சீர்செய்யும் சமூக ஒழுங்குகளும், உரிமைகளும், சட்ட நியதிகளும், புறத்தொதுங்கி நிற்காது இணைக்கப்பட வேண்டும். பெண்கள் 'பழமைஞானம்' உடையவர்கள் (Traditional Wisdom) அவற்றைப் பேண வேண்டும் என்பதும் ஓர் பாரம்பரிய சமூக ஒழுங்கு.
சிந்தனைகளை மீளவரைவு செய்தல்
பெண்கள் பெரும்பாலும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் பயனாளி களாகவோ அன்றிப் பங்குதாரர்களாகவோ என்றுமே கருதப்படுவதில்லை. எப்போதும் பாதிக்கப்பட்ட பிரிவினராகவே காட்டப்படுகின்றனர். ஆகவே அபி விருத்தியில் பங்காளிகளாவது எப்படி இச்சமத்துவத்தை முன்னெடுத்துச் செல் வது எப்படி?
தமிழ்ப் பெண்களின் இறுக்கமான சமூக அமைப்பின் கட்டமைப்பில் முன்னேற்றத்திற்கான பலபடிகள் இன்றும் மறைக்கப்பட்ட, பேசப்படாத விடயங் களாகவே உள. உரிமைகள் அதிகாரம் என்பவற்றைப் பெற்றுக் கொள்வது என்பது துரிதமானஅரசியல்-பிரவேசத்தை உள்ளடக்கியுள்ளது.இன்றைய 56) கட்டத்தில் அரசியல்கூட தனியார் சொத்தாக மாறிவரும் போக்குக் காணப்படு கின்றது. ஆகவே பெண்களின் பலம், ஆளுமை என்பன இவற்றை முறியடிக் கும் பக்குவநிலையை எட்ட வேண்டும். போரின் தாக்கங்களை, வன்முறை களைச் சந்திக்கும் நாம், போரை எதிர்க்க, போர் நடவடிக்கைகளைக் கண்டிக்கத் தயங்குகின்றோம். ஆயதங்களுக்காக அரசு செலவிடும் பெரும் தொகைப் பணத்தை அபிவிருத்திகளுக்காக செலவிடும்படி கேட்பதற்குத் தயங்குகின்றோம். இராணுவத்தின் நீண்டகால நினைப்பைத் தட்டிக்கேட்கத் தயங்குகின்றோம். பலாத்காரங்களை மறைக்கப் பழகிக் கொண்டோம். அப்படியாயின், உரிமைகளை நாம் எப்படிப் பெற்றுக் கொள்ளலாம். பேண் கள் விழிப்படைய வேண்டும். பெண்கள் அமைப்புகள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். அதுவே. பெண்களின் எதிர்காலப் பலமாக அமையும்.

Page 9
bluaitiEil é IailliúLIIIritiú, é IamLIIIIIE:Ith
6gTLILIITED LJểffenGLEGG
பவளராணி கணேசலிங்கநாதன்
இன்று பெண்கள் சகல விடயங்களிலும் ஆக்க பூர்வமாகச் சிந்தித் துச் செயற்படக் கூடிய வல்லமையைப் பெறவும், சமூக பொருளாதார அரசியல், சுதந்திரமானவர்களாக ஆவதற்கும் சமத்துவமான, சமாதான, சமூகமொன்றை உருவாக்கவும் அமைப்பாதல் அவசியமாக உள்ளது.
நமது சமூகத்தின் சகல மட்டங்களிலும் புரையோடிப் போயிருக்கும் பிரச்சினைகளுள் பெண்களுக்கெதிரான பிரச்சினைகள் முக்கியமானதாகப் படுகின்றன. இதற்குக் காரணம் சமூகத்தில் பெண் பற்றிய கருத்துருவமா கும். பெண் குழந்தை பெற்றுத் தருபவள், வீட்டு வேலைகளுக்கு உரிய வள், ஆணைவிட அந்தஸ்த்தில் குறைந்தவள், மென்மையானவள், கற்புப் பறிபோகக்கூடியவள், அடக்கத்தைப் பேண வேண்டியவள், அன்பு, பொறுமை என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டியவள், ஆண்களுக்காகப் படைக்கப்பட் டவள் என்பன போன்ற எண்ணங்கள் ஆண்களின் மனதில் எழுவதாகும்.
இப்பாரபட்சம் நீக்கப்பட வேண்டியது அவசியமாகும். இத்தடைகளை நீக்க ஒவ்வொரு பெண்ணும் போராட வேண்டியவளாக உள்ளாள். இந்நிலை மையில் பெண்களின் பிரச்சினைகள் கண்டறியப்பட்டு, பெண்களுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டு, அவர்கள் ஊக்குவிக்கப்பட தனியான பெண்கள் அமைப்புகள் மூலம்தான் அது முடியும். உலகின் பல்வேறு பாகங்களிலும் பல இடங்களிலும் பல அமைப்புக்கள் காணப்பட்ட போதும் பெண்களுக்கு முக்கிய இடம் வழங்கப்படவில்லை.
இன்றைய பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளாவன, குடும்ப வன்முறைகள், யுத்த சூழல் சார்ந்த வன்முறைகள், உளரீதியாகப் பாதிக்கப் படல், தற்கொலை, மரணம், அங்கவீனம், காயங்களுக்குள்ளாதல், கைது செய்யப்படல், காணாமற் போதல், குடும்ப அங்கத்தவரின் இழப்பு காரண மாக கூடுதலான பொறுப்புக்களைச் சுமத்தல், வேலையின்மை, வறுமை, கீழுழைப்பு, பாலியல் வல்லுறவு, கல்வி கற்க முடியாதநிலை, சுகாதார நிலை, மோசமாக இருத்தல், தாம்பத்தியம், இன்பம் அனுபவிப்பதில் வேறுபாடு, போன்ற பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இப்பிரச்சினைகளை எப்படித் தீர்க்கலாம்? என்ற விடயத்தில் அனேக பெண்களுக்கு ஆர்வம் இருந்தாலும் வழிகாட்டுவதற்கு எவரும் முன்வர மறுக்கின்றனர். இதனால் அனேக பெண்கள் வெளியுலகத் தொடர்பு இன்றி வெளியுலகம் தெரியாமல் வாழ்கின்றனர்.
சங்க இலக்கியய் பெண்கள்
சங்க இலக்கியத்தில் பெண்கள் உரிமை வாழ்வு வாழ்வதற்கான எத்தனையோ சான்றுகளைப் பார்க்க முடியும். அக்கால சமூக வாழ்க்கை யிலும் ஆண்களுக்கு நிகரானவர்களாகவே பெண்கள் மதிக்கப்பட்டு வந்து இருக்கிறார்கள். தொல்காப்பியம் இதற்குச் சான்று பகர்கின்றது. களவியல், கற்பியல் மூலம் எடுத்துக் காட்டப்படுகின்றது. கற்புடையவர்களாகவும் கடமைப் புவலர்களாகவும், பொறுப்புடையவர்களாகவும் வீரம் நிறைந்தவர் களாகவும் சங்க இலக்கியத்தில் பேசப்படுகின்றது.

பெண்கள் அடிமைத்தனம் இடைக்காலத்தில் புகுந்துள்ள தீமைகளுள் ஒன்று. ஆணின் சுயநலம் பெண் அடிமையினை நிலைநிறுத்தி உள்ளது. ஆணுக்கு அடிமையாகவே பெண் வாழ்தல் வேண்டும் என்னும் சமூதாயப் பழக்கம் பெண்கள் பற்றிய மரபு ரீதியான கருத்து நிலைகளை எமது இலக்கிய பாரம்பரியம் உருவாக்கியது.
இதிகாச காலத்துப் பெண்கள்
பெண்களை அடிமை போல ஆண்கள் நடத்தி வந்த சம்பவங்கள்.
பஞ்ச பாண்டவர்கள் பாஞ்சாலியை வைத்துச் சூதாடினார்கள். சூதாட்டப் பொருளாகப் பயண்படுத்தியிருக்கிறார்கள்.
9 பாஞ்சாலி துகிலுரியப்பட்ட வேளையில் கணவன்மார் ஐவர் இருந்த
போதும் அவள் வேண்டியது - கிருஷ்ணபரமார்த்தனர்.
0 சீதையை இராவணன் கவர்ந்து சென்று பின் மீட்டுவந்தவேளையில் சீதை யைச் சந்தேகித்த இராமன் அவள் தன்கற்பை நிருபிக்க தீக்குளித்து வரச் சொன்னான். பெண்ணை ஒரு பொருளாகவும் அடிமை போலவும் ஆண் மக்கள் நடத்தியிருக்கிறார்கள் என்பதற்கு இவை சில எடுத்துக் காட்டுகளாகும்.
இன்றைய பெண்கள்
பால் பகுப்பு, ஆண்மை. பெண்மை, எனப் பகுக்கப்படுகின்றது. இந்த ஆண்மைக்கும், பெண்மைக்கும் சில பண்புகள் காணப்படுகின்றன. சமூக அந்தஸ்து அவர்களிடம் எதிர்பார்க்கப்படுகின்ற கடமைகள் சமூகத்தில் அவர்களது பங்கு என்பவற்றை வரையறுத்து பால் எனக் கூறப்படுகிறது. இந்த அடிப்படையில் பெண்ணினம் புறக்கணிப்புக்குட்படுத்தப்பட்ட சந்தர்ப்பங் கள் ஏராளம். இலக்கியங்களில் கூட பெண் எழுத்தாளர்களின் இலக்கியம் புறக்கணிக்கப்பட்டும், விலக்கப்பட்டும்.கவனிக்கப்படாமலும் இருந்தன. ஒளவை யார் ஆண்டாள் பாடல்கள், சமயப் பாடல்கள், சம்பந்தமானவை என்ற தகுதிப்பாடு காரணமாக பேணப்பட்டது. 20ஆம் நூற்றாண்டு கூட ஒருமுறை எழுதப்பட்டு அச்சில் வந்தவை. மறுபதிப்பு செய்யாது மறைந்துவிட்டன. பெண் எழுத்தாளர்களின் ஆக்கங்கள் மறைக்கப்பட்டன. (நிவேதினி 1999)
இலங்கையில் ஆரம்ப காலங்களில் அதாவது 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நோக்கும் பொழுது பெண்கல்வி, சமசம்பளம், பெண்கள் வாக்குரிமை மனைவியரை அடித்தலுக் கான தண்டனை சமூக சீர்திருத்தம், ஆகிய பிரச்சினைகளிலிருந்து நிவர்த்தி களை மேற்கொள்ள உழைத்த உத்வேகமுள்ள பெண்கள் அன்று இருந்த னர். 1904இல் மேரிரட்ணம் யுவதிகள் நட்புறவுச் சங்கத்தை நிறுவினார். அதே வருடம் இலங்கைப் பெண்கள் சங்கத்தையும் ஆரம்பித்தார். இச்சங்கம் குழந்தைப் பராமரிப்பு. கல்வி, என்பவற்றில் விருத்திகளை உள்ளுர்ப் பெண் களுக்கு அறிமுகப்படுத்தியது. 1909இல் தமிழ் பெண்கள் சங்கத்தை ஆரம்பித் தார். இச்சங்கம் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. பெண்கள் உரிமைகள் பற்றிய உரையாடல் இடம்பெற்றது. மேரி ரட்ணம் இதுபற்றி தமது நாட்குறிப் பில் புகழ்ந்தாள். இலங்கையில் பெண்கள் உரிமைபற்றிய முதலாவது நிகழ்ச்சி இதுவாகும். (டாக்டர் மேரிரட்ணம் 1993) இச்சங்கம் தனது வேலைத்திட்டமாக கொட்டாஞ்சேனையில் வறிய தமிழ்ப் பிள்ளைகளுக்கு ஒரு பாடசாலை அமைத்தல் மேற்கொண்டது. இவர் சுகாதாரம், சிறுவர்

Page 10
பராமரிப்பு, சத்துணவு பற்றிய அறிவு குடும்பத் திட்டமிடல் ஆகியவற்றையும் முன்னேற்றவும் உழைத்தார். இதனால் வாழ்க்கைத்தரம் முன்னேற்ற கரமாகியது. இலங்கையில் முதலாவதுகட்ட பெண்நிலை வாதத்தில் பிரிக்க முடியாத அங்கமாக மேரி ரட்ணம் விளங்கினார்.
பெண் விடுதலை என்றதும் அது ஆண்களுக்கு எதிரானது எனக் கருதுகின்றனர். குடும்பம், சமூகம் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்ற எத்தகைய ஒழுக்க விதிகளுக்கும் உட்படாத வாழ்க்கை நோக்கமே, பெண் விடுதலை எனக் கருதுகின்றனர்.
பாரதியின் பெண் விடுதலைக் கருத்துக்கள், பெண்களின் நிலை மையை முன்னேற்றுதல் அவர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தல் ஆகிய பின்னணியில் தோன்றியவையாகும். சமுதாயத்தில் பெண்கள் ஆண் களைவிடத் தாழ்வானவர்கள் என்கின்ற நிலையினை மாற்றி அமைப்ப தையே பெண்கள் தங்களுடைய தலையாய குறிக்கோளாக் கொள்ள வேண் டும். பெண்களுக்கான எந்த அமைப்பும் இந்தக் குறிக்கோளை நிறைவேற்று கின்ற திசையிலேயே செயல்படவேண்டும் அப்படிச்செயற்படாவிட்டால் இம்மாதிரியான சங்கங்கள் பெண்ணின் சமுதாய அந்தஸ்தினை உயர்த்து வதற்கு பயன்படப்போவதில்லை.(பெண்களேமுன்னேற வேண்டாமா? பக்கம்72)
பெண்கள் இல்லத்துகுரியவர்கள் என்பது காலம்காலமாகப் பேணப் பட்டு வருகின்ற கோட்பாடாகும்.வெளியில் சென்று உழைத்து வருபவன்ஆண். அவன் கொண்டுவரும் பொருளை வைத்து குடும்பத்தை நிர்வகிப்பவள் பெண் ணாக இருக்கிறாள். மகளாய், மனைவியாய், சகோதரியாய், தாயாய் நின்று ஆற்றும் பணியே சிறப்பானவையாக காலம்காலமாகப் பேணப்பட்டு வருகின் றது. ஆண்களுக்கு கீழ்ப்படிதலே பெண்ணுக்கு சிறப்பானது என்ற மரபுவழி வரும் கோட்பாடும் பெண்கள் அமைப்பு ஆதலுக்கு தடைகளாகி விடுகின்றன.
பாரம்பரிய வழக்கில் பெண்ணுக்கு விதிகள் எழுதப்பட்டன. பெண் இப்படித்தான் வாழவேண்டும் என்னும் வரையறை காணப்பட்டது. தனக்கென விருப்பு, வெறுப்புக்களை கொண்ட தனிமனுஷியாக இல்லாது குடும்பத்துக் காக குடும்ப கெளரவத்துக்காக வாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்டாள். பெண் களின் விருப்போ, தேவையோ, அபிப்பிராயங்களோ கருத்தில் எடுக்கப்படுவ தில்லை;
தாம்பத்திய இன்பத்தை அனுபவிப்பதிலே கூட ஆணின் இன்பம்தான் முதன்யைாகக் கருதப்பட்டு வருகின்றதே தவிர பெண்ணும் இன்பத்தை அனுபவிக்க உரித்து உடையவள் என்கிற எண்ணம் ஏற்படாமலேயே இருந்து வந்திருக்கிறது. பெண்கள் ஆண்களைத் திருப்திப்படுத்துவதோடு தங்களின் இன்ப எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டியவர்களாக இருப்பார்கள்.
இத்தகைய மரபு வழியான சமூக நம்பிக்கைகளை உடைத்து பெண் கள் அமைப்புகள்ை உருவாக்கி வெளியே வருதல் கஷ்டமான காரியமாக உள்ளது. இன்று பெண்கள் அனுபவித்து வரும் துன்பங்கள் இன்னல்கள் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களாகவும் கைவிடப்பட்டவர் களாகவும் அனாதரவானவர்களாகவும் திடீரெனக் குடும்ப பாரத்தைச் சுமப்ப வர்களாவும் காணப்படுகின்றனர். சீதனக் கொடுமைகள், கணவன், மனைவி புரிந்துணர்வின்மை, பெண்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை கள், பெண் குழந்தைகளின் மீதான துஷ்பிரயோகம், பெண் உரிமை மறுக்கப்படல் ஆகிய மனிதஉரிமைகளற்ற செயலில் இருந்து மீளுவதற்கு பெண்கள் தமக்கென ஓர் அமைப்பை உருவாக்குதல் அவசிய மாகக் காணப்படுகிறது. அதனால் பெண்கள் நிறுவனங்களின் தோற்றமும் அண்மைக்
காலங்களில் அதிகரித்துக் காணப்படுகின்றது.

கிராமப்புற சாதாரண பெண்களின் மனதில் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி உருவாக்கிய லங்கா மஹிலசமிதி 1948 இல் 125 கிளைகளையும் 6000 அங்கத்தவர்களையும் கொண்டு காணப்பட்டது. 1959இல் 1400 கிளை களையும் 150,000 அங்கத்தவர்களையும் கொண்டிருந்தது. 1982இல் 2664 கிளைகளைக் கொண்ட இதுவே இலங்கையில் மிகப் பெரிய பெண்கள் அமைப்பாகும்.
விவாகரத்துரிமை
சட்டத்தளவில் அளிக்கப்பட்ட உரிமை இது. கணவன் மனைவியை உடல் ரீதியாகவும் துன்புறுத்தலாம். விவாகரத்துச் செய்யும் உரிமை பெரும் பாலும் ஒரு கணவனுக்கே அளிக்கப்படுகின்றது. பெண் ஒருத்தி விவாகரத்தை வேண்டி நின்றால் உற்றார். உறவினர் நண்பர் என்ற உறவு முறைகளில் சமுதாயம் அவளை விடமாட்டாது. விவாகரத்துச் செய்தல் சமுதாயத்தில் அந்தஸ்துக் குறைந்துவிடும் என்ற காரணத்தைக் காட்டி அவளை அவ்வல் லல் வாழ்க்கையைத் தொடரச் செய்கின்றது சமூகம். இதனால் வாழ்நாள் எல்லாம் பெண் கஷ்டப்படுகின்றாள். விதவைகளும் விவாகரத்துச் செய்யப் பட்ட பெண்களும் வாழாவெட்டிகளாக வாழ்வு இழந்தவர்களாகக் கணிக்கப் படுவதை சமுதாய ரீதியில் பெண்கள் அமைப்புக்கள் கண்டிக்க வேண்டும்.
கணவன் இல்லாத காரணத்தால் மங்களச் சடங்குகளில் கலந்து கொள்ளும் உரிமை மறுக்கப்படல், வெள்ளைச்சேலை அணிதல், பொட்டு வைத்தல் தடைசெய்யப்படல் போன்ற ஒழுங்கு முறைகள் கலாசார ரீதியாக விதவைகள் மீதான வன்முறைகளாகும்.
அடுத்துப் பெண் உரிமைக்கான அடிப்படைப் பிரச்சினைகளில் ஒன்று வரதட்சணை அல்லது சீதனம் என்பதாகும். வரதட்சணையின் கொடுமை காரணமாகப் பல பெண்கள் கன்னியா கவே காலம் கழிக்க வேண்டியுள்ளது. கலியான சந்ததையிலே ஆண்களின் தராதரத்துக்கேற்ப சீதனம் பேரம் பேசப்படுகின்றது. இப்பிரச்சினையால் பெரும் பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள், பத்திரிகைகள் சான்று பகர்கின்றன. (தினமுரசு 98 ஜூன்)
பெண்களுக்கெதிராக வீட்டில் இடம்பெறும் வன்முறைகளில் பெரும் பாலானவை கணவர், தகப்பன், சகோதரன் ஆகியோராலேயே மேற்கொள்ளப் படுகின்றன. உடல் ரீதியில், பாலியல் ரீதியில் என விரிந்து செல்லும் வன் முறைகள் எடுத்துக் கூற முடியாக அளவுக்கு வளர்ந்து செல்கின்றன. 1998 சித்திரை தொடக்கம் ஆனி வரையிலான காலத்தில் தொடர்பூடகங்களில் வெளியான செய்தியை நோக்கும் போழுது 19 தாக்குதல் சம்பவங்களில் 50 வீத சம்பவங்கள் கணவனால் மனைவி மீது மேற்கொள்ளப்பட்ட சம்பவங் களாக உள்ளன. ஏனைய தாக்குதல்கள் தகப்பன், மகன், மைத்துனர், சிறியதாய் ஆகியோரினால் மேற்கொள்ளப்படுகின்றன. பொல்லுகள், இரும்புக் கம்பிகள் ஆகியவையும் உபயோகிக்கப்படும் தன்மையினால் பெரும்பாலான சம்பவங்களில் உடற்காயங்கள் ஏற்படுகின்றன. பல சம்பவங்களின் போது பாதிக்கப்பட்ட பெண்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருக்கின்றனர். (ஆதாரம் ஐ.நா. 50ஆவது ஆண்டு மனித உரிமை பிரகடன துண்டுப்பிரசுரம்)
தற்கொலை செய்பவர்களில் 90 வீதமானவர்கள் பெண்களே எனப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கல்வியறிவின்மை, பொருளாதார வசதி ussiroud, தனித்தியங்கும் வல்லமை அற்றிருத்தல் போன்றவையே தற்கொலைக்குக் காரணங்களாகும். இந்த நிலையில் பெண்களுக்கு வலு வூட்டல் அவசியம். இவ்வடையாளங்களை மனதிற் கொண்டு பெண்கள் அமைப்பாதல் முக்கியமாக உள்ளது.

Page 11
கிராமங்களிலும், நகரங்களிலும் அதிகரித்து வரும் மதுபாவனைக் கலாசாரத்தினால் பாதிக்கப்படுவது பெண்களே. வறிய குடும்பங்களில் கண்மூடித்தனமான ஆண்களின் மதுபாவனை குடும்பப் பெண்களை மிகவும் மோசமாகப் பாதிக்கின்றன. அதனால் முழுக்குடும்பச் சுமையும் பெண்களே சுமக்கும் நிலைமையும் காணப்படுகின்றன.
தெருக்களிலும், போக்குவரத்துப் பேருந்துகளிலும், அலுவலகங்கள். வைத்தியசாலைகள் போன்ற பொதுஇடங்களிலும் பெண்கள் மீதான பாலியல் இம்சைகள் இடம்பெற்று வருகின்றன. இவை செய்தியிடப்படுவது குறைவு. இது பற்றிய சட்டரீதியான வழக்குகள் விசாரிக்கப்படுவது. மிக், மிகச் சொற் பமே. இவை தவிர்க்கமுடியாதவை என பெரும்பாலான பெண்கள் கருதி தமக்கு ஏற்படும் கஷ்டங்களைச் சகித்துக் கொண்டு போகும் அளவுக்கு இது வளர்ந்துள்ளது. இந்நிலையில் இவற்றை வெளிக்கொணர அமைப்பாதல் அவசியமாக உள்ளது. (இது விடயமாக 1995ஆம் ஆண்டு தண்டனைக் கோவைச் சட்டத் திருத்தத்தில் பாலியல் இம்சைகள் உள்ளடக்கப்பட்டது.)
பாலியல் வன்முறைகள் பற்றி பத்திரிகையில் வெளிவந்த சம்பவங் களை நோக்கினால் 87 சம்பவங்கள் மூன்று மாதங்களில் நடந்துள்ளது. இவற்றில் 54 சம்பவங்கள் இளம் பெண்களின் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் இவற்றில் தாக்கப்பட்ட பெண்களில் இரண்டு மூன்று வயதுக் குழந்தைகளும் அடங்குவர். 8 வழக்குகளில் தந்தையே குற்றவாளி யாகக் காணப்படுகின்றான். இரு வழக்குகளில் இரு பிக்குமார்கள் குற்றவாளி யாகக் காணப்பட்டனர். (ஆதாரம் பத்திரிகைச் செய்தி) 11 சம்பவங்கள் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவங்களாக விபரிக்கப்பட்டுள்ளன.
வடக்கு-கிழக்கு பிரதேசத்தில் 1996-97 ஒரு வருட காலத்தில் ஆயுதப் படையிரால் யுத்தப் பிரதேசத்தில் புரியப்பட்ட 150 பாலியல் வல்லுறவுச் சம்ப வங்கள் வெளிவந்துள்ளதைக் காணலாம். 18வயதுக் கிருஷாந்தி குமாரசாமி, பாலியல் கொலை வழக்கு பிரபலம் பெற்ற்து. தாயார், சகோதரன், உறவினர் இராணுவத்தாற் கொலையுண்டனர். இது ஒரு யுத்தக்குற்றம் என் அங்கீகரிக்க வேண்டுமெனவும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் வேண்டுமெனவும் கோரி பெண்கள் உரிமை நிறுவனங் களும் குரல் கொடுத்ததால் கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான கோணேஸ்வரியின் மரணம், தாருகி செல்வராஜா என்ற யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி ஒருத்தி பாடசாலைக்குச் செல்கின்ற வேளை 9 இராணுவ வீரர்களால் பாலியல் வல்லுறவுக்குள்ளானாள். ஊமைப் பெண்ணான 28 வயதான செல்வராணி மீசாலையில் சோதனைச் சாவடியொன்றில் பல இராணுவ வீரர்களால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டாள். திருகோண மலை குமரபுரத்தில் இராணுவ வீரர்கள் தம்மேல் நிகழ்ந்த தாக்குதலினால் வெளியேறிய போது பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட் டனர். பாடசாலை ஆசிரியர் சிறுமி மீது பெண்களுக்கெதிராக மேற்கொள் ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறும் செயல் களே. இப்பிரச்சினைகளை இனங்கண்டு இவற்றில் இருந்து பெண்களைக் காப்பாற்றுவதற்கு அமைப்பாதல் அவசியமாகும். ; :
மேலும் பெண்கள் அநேகமானோர் குடும்ப அங்கத்தவர்கள் இழப்புக் காரணமாகவும் வேலையின்மையினாலும் வறுமையாலும் கீழுழைப்பாலும் கல்விகற்க வசதியின்மை ஆகிய பிரச்சினைகளாலும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் செல்ல இடம் இன்றியும் பிரச்சினைகளில் இருந்து விலகிப்போக
10

வழிவகையில்லாது திண்டாடுகின்றனர். இந்நிலையில் பெண்களைப் பிரச்சி னைகளில் இருந்து விடுவிக்க பெண்கள் அமைப்பாதல் அவசியமாகின்றது.
மேற்குலகில் பெண்களுக்கு சட்டத்தின் மூலம் ஒரு பாதுகாப்பு நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கில் சட்டமும் சம்பிரதாயங்களும் பெண் களின் முன்னேற்றத்திற்குத் தடையாகவே இருக்கின்றன. மேற்கூறப்பட்ட தடைகளை நீக்கப் பெண்களுக்கு உரத்த குரல்கள் எழுந்து கொண்டிருக் கின்றன. பெண் விரிவுரையாளர் ஒருவரை முத்தமிட முயற்சித்த பேராதனைப் பல்கலைக்கழக காவலாளியின் கைது, நோயாளிப் பெண்னை இம்சித்த வைத்தியசாலை ஊழியர், பொது வாகனத்தில் சேஷ்டை புரிந்த நபரைக் கண்ட நீதவான் ரூபா 5000 பிணையில் விடுதலை செய்தமை, கணவனைத் தேடும் முயற்சியில் ஈடுபட்ட பெண் சட்டத்தரணியின் உதவியை நாட அச்சட்டத்தரணி அப்பெண்ணை பாலியல் வன்முறைக்கு முயற்சித்ததால் பெண் பொலிஸாரிடம் முறையீடு ஆண்களின் இத்தகைய பெண் உரிமை மீறல்களை சகித்துக் கொண்டு இருக்க முடியாது. பெண்களின் இப்பிரச் சினைகளை இனங்கண்டு பெண்கள் உரிமைக்குரல் எழுப்ப அமைப்பாதல் அவசியமாக உள்ளது.
பெண்களுக்கெதிரான இத்தகைய வன்முறைகளில் இருந்து பாதுகாப் பதற்கு பின்வரும் தீர்வுத் திட்டங்களைக் கடைப்பிடித்தல் சிறந்தது.
குற்றம் செய்த ஆண்களுக்கு கடும் தண்டனை வழங்கல். சட்டத்தையும் நீதியையும் கடைப்பிடித்தல், கல்வித் திட்டத்தில் பெண்ணியல் என்ற பாடத்தைப் புகுத்தல். ஆண்,பெண் பாரபட்சம்காட்டாது பாடசாலைகளில் சமஉரிமை வழங்கல். கல்வியில் பின் தங்கிய நிலையில் உள்ள பெண்களை ஊக்குவிக்க முறைசாராக் கல்வியைத் தீவிரப்படுத்தல். பெண்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரித்தல். வீடு-பிள்ளை பராமரிப் பில் ஆண்களின் பங்கைக் கூட்டல், சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்தல். வன்முறைகளுக்குள்ளான பெண்களுக்கு புனர்வாழ்வளித்தல். பெண்களுக்கான உளவள ஆலோசனை வழங்கல். சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் வன்முறைகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல். 9 அத்துடன் பெண் கல்வி, வேலை போன்றவற்றிற்குத் தன்னை தயார் படுத்தத் தேவையான நிதிவசதிகளை ஊக்குவிப்புக்களை வழங்கல். சட்ட சமூக கலாசார கருத்துரீதியாகப் பெண்கள் அந்தஸ்தை உறுதிப் படுத்தும் நடவடிக்கைகளை எடுத்தல்
ரஷ்யாவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்வித்திலும் வேற் றுமை கிடையாது. இருபாலாரும் சமமானவராகவே கருதப்படுகிறார்கள் என ரஷ்ய சட்டம் கூறுகிறது.
நோர்வேயில் 1968 தலைமுறையினர் என அழைக்கப்படும் அக்காலகட்டத்தினரின் குறிப்பாகப் பெண்களின் போராட்டத்தின் விளைவாக பல பெண் சமத்துவச் சட்ட விதிகள் எழுதப்பட்டுள்ளன.
கனடாவில் 19ஆம் நூற்றாண்டிலேயே ஒன்ராரியோவைச் சேர்ந்த
பெண்கள் பெண் விடுதலை, சம உரிமை ஆகியவற்றுக்காகத் தீவிரமாகப் போராட்த் தொடங்கினர். எகஸ்டஸ்ஸ்ரோவ், மரபுகளை எதிர்த்துப் பெண்கள்
11

Page 12
தன்னிறைவும் சுதந்திரமும் உள்ளவர்களாக இயங்க வேண்டும். எனக் குறிப்பிட்டார். (றொபேட் 1979)
இன்று பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினை பற்றி உலகளாவிய ரீதியில் மாநாடுகள் கூடி குரல் எழுப்பப்படுகின்றது. 1995 பீஜிங் பெண்கள் மாநாடு ‘பெண்களுக்கான நிலைமைகளில் மாற்றம் கொண்டு வரும் நோக் கமாக நடத்தப்பட்டது. இதில் பெண்களை அமைப்பாக்கல் என்ற கருத்தரங் கில் விதவைகளை ஒரு நிறுவனத்தில் வைத்துப் பராமரிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது. இந்தியாவில் இவ்வாறான நிறுவன மயப்படுத்தல்கள் ஒரு பெண்ணுக்கு “விதவை”, “அநாதை”. “மனநோயாளி” என முத்திரை குத்தி விடுவதையும் பின்னர் இந்த முத்திரை களில் இருந்து விடுபட்டுச் சாதாரண நீரோட்டத்தில் இணைய முடியாமல், இப்பெண்கள் தவிப்பதையும் பற்றி கூறக்கூடியதாக இருந்தது. உதாரணமாக எமது பிரதேசத்தில் தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் நிறுவன அமைப்பாக்கத்தில் வளர்க்கப்படும் பெண் அநாதைப் பிள்ளைகள் நல்ல சமயச் சூழலில் கல்வி கற்பிக்கப்படுவதை எடுத்துக் கூறினேன். (கோகிலா மகேந்திரன்) எனக் குறிப்பிட்டதில் இருந்து விதவைப் பெண்களின் அபிவிருத் தியில் நாட்டங் கொண்டு முன்னேற்ற முடியும் என்பதைக் கூறி உதாரணமாக திருகோணமலை மகளிர் நலன்புரி மன்றத்தின் அமைப் பாக்கமும் எதிர் நோக்கிய பிரச்சினையும் இன்றைய நிலையும் என்பது பற்றி சிறிது நோக்குவோம்.
1983 இல் அடிக்கடி ஏற்பட்ட இனக்கலவரங்களால் அடிபட்டுச் செயலிழந்து மனம் நொந்த, உயிர் இழந்த தமிழினத்தின் அலையுமோசை யுடன் விதவைகளாக்கப்பட்ட பெண்களின் வேதனைக்குரல், வீடிழந்து சொந்த பந்தங்களைப் பறிகொடுத்த, தாய்க்குலத்தின் அழுகுரல், தாய், தந்தையரை இழந்து தத்தளித்த குழந்தைகளின் ஒலங்கள் யாவும் இனங்காணப்பட்டு இத்தகைய அவலநிலையைப் போக்க ஆக்கமும் ஊக்கமும் உள்ள பலரை அங்கத்தவராகக் கொண்டு உருவாக்கப்பட்டதே தி/மகளிர் நலன்புரி சங்கம்.
ஆரம்பத்தில் இடவசதி கிடையாமையால் இல்லங்களில் பொருட் களைச் சேகரிப்பதும் வேதனையுள்ள பெண்களின் சோகக் கதைகளைக் கேட்டு ஆவன செய்வதுமாக இச்சங்கத்தின் கடமை காணப்பட்டது. இச்சங் கத்தின் விடாமுயற்சியால் பலதரப்பட்ட சர்வதேச ஸ்தாபனங்கள் உதவ முன்வந்தது. இன, மத வேறுபாடின்றி அல்லலுற்ற அனைவருக்கும் சேவை வழங்கப்பட்டது.
விதவைப் பெண்களுக்கு உதவுவதே பொது விதியாக இருந்தாலும் கடுமையாகப் பாதிப்புற்ற ஒரு சில பெண்களுக்கும் உதவி செய்யப்படு கின்றது. ஐயாயிரம் பெண்கள் விதவைகளாகி உள்ளனர். அவர்களில் 90 வீதத்திற்கு மேற்பட்டோர் 30 வயதிற்கு உட்பட்டவர்கள். கணவனை இழந்து நிர்க்கதியான நிலையில் உள்ள இந்த இளம் விதவைகளை வாழ்விக்க வேண்டும் என்ற பெருமனத்துடன் திருகோணமலை மகளிர் நலன்புரிச் சங்கம் 1985 இல் உருவாக்கப்பட்டது.
இளைப்பாறிய ஆசிரியர்களைக் கொண்டே உருவாக்கப்பட்ட இந்த அரச சார்பற்ற நிறுவனம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பெண்களைச் சந்தித்து தன்னாலான உதவிகளை வழங்கி வருகின்றது. தையற் பயிற்சியும், தையல் இயந்திரத்தையும் வழங்கி சுயவேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. உதவி நிவாரணப்பணம் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.
2

ஐநூறுக்கு மேற்பட்ட விதவைகள் மரண அத்தாட்சிப் பத்திரங்களைப் பெற உதவிகள் வழங்கியுள்ளது. அதன் மூலம் பெண்கள் சமுதாயத்தில் மதிப்பு டனும் கெளரவத்துடனும் வாழ இச்சங்கம் வகை செய்கிறது. w . ..»
பெண்ணுக்கு கல்வி வேண்டும். பெண்ணுக்கு உத்தியோகம் பார்ப் பதற்குச் சந்தர்ப்பம் கொடுக்கப்படல் வேண்டும் என்பது ஐக்கிய நாடுகளி னால் பிரகடணப்படுத்தப்பட்டு பல நாட்டு அரசாங்கங்களினால் அங்கீகரிக் கப்பட்டு பெண் செய்தியகம், பெண்களுக்கோர் அமைச்சு என்ற அளவுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டுவிட்டது. பெண் விடுதலையை இலங்கையில் உள்ள மகளிர் சங்கங்கள் ஏற்றுக் கொண்டு நாடுபூராகவும் கிராமமட்டத்தில் சிறப்பாக பெண்ணின் நலனில் அக்கறை கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்த பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு அமைப்புகள் புதிதுபுதிதாக உருவாக்கப்பட்டு பெண்ணிலையை மேலோங்கச் செய்து வருகின்றது.
சட்டம் பிரச்சினையைத் தற்காலிகமாக மட்டுமே தீர்க்கும். சுமூக மாற்றமே நிரந்தரமாய் பிரச்சினைகளைத் தீர்க்கும். சமூகமாற்றத்தை ஏற்படுத்த பிரச்சினைகள் இனங்காணப்பட்டு அமைப்பாதல் அவசியம் வேண்டப்படும் ஒன்றாகும்.
முடிவாகப் பெண்களைப் பொறுத்தவரையில் பல பிரச்சினைகள் உண்டென்பது விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். இதை விளங்கிக் கொள் வதன் மூலம்தான் பிரச்சினை இனங்காணப்பட்டு பெண்களை இனப்பிரச்சினை யில் இருந்து விடுவிப்பதற்கான ஒரு அமைப்பை ஏற்படுத்தி இவ்வமைப்புக்கள் மூலமாக போராடி பெண்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும். CD
உசாத்துணை நூல்கள்
9 நிவேதினி பெண்நிலைவாத சஞ்சிகை 1.2.3
பெண்கள் ஆய்வு நிறுவனம் 1995 9 பெண் - சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம். 0 டாக்டர் மேரி ரட்ணம் சமூக விஞ்ஞான சங்கம் 8 1993தமிழ்பெண் சமூதாயம் வீரகேசரி 29-08-1999
• பெண்களுக்கெதிரான வன்முறை எதிர்ப்புவாரம் 50ஆவது ஆண்டு நிறைவு 9 பீஜிங் பெண்கள் மாநாடு 1995 துண்டு பிரசுரம்.
• பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும் 1995
- டாக்டர் முத்துச்சிதம்பரம் தமிழ் புத்தகசாலை, சென்னை. 9 பெண்கள் நீங்கள் முன்னேற வேண்டாமா?
- பி.சி. கணேசன் றி இந்து பப்பிளிகேசன் 1992 சர்வதேச பெண்கள் தினம் 1998 - திருகோணமலை மகளிர் நலன்புரிச் சங்கம்.
3

Page 13
பாடப்புத்தகங்களில் பால் வாதம்
திருமதி புவனா தண்டாயுதபாணி
முன்னின்றருளளிர் செய் முறையாயப் புனனவதற்கு என்னின்றருள் செய் எலி வாகனப் பிள்ளையப் சொற் குற்றமொடு பொருட் குற்றம் சோர்தரும் எக் குற்றமும் வாராமற் கா.
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்.
''பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டும் அறிவினால் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி’
எனக்குரல் கொடுத்தான் இருபதாம் நூற்றான்டின் இணையற்ற கவிபாரதி. சமுதாய மறுமலர்ச்சிக்காக புரட்சி செய்த லெனின் ‘சமுதாய மாற்றமென்பது பெண் விடுதலை இல்லாமல் சாத்தியம் இல்லை என அறிவுறுத்தி பெண் களை விழிப்புக்குள்ளாக்கினான். ஆம் பறவை ஒன்றின் இரு சிறகுகளும் சரியாகச் செயல்பட்டால்தான், பறவையும் பறக்கமுடியும். அல்லது வீழ்ந்து மாளும். இதேநிலைதான் இன்றைய சமுதாயமும். சமுதாயம் என்னும் சக்கரம் சரியாக ஓட வேண்டின் குடும்பம் என்னும் ஆண், பெண் சக்கரம் இரண்டும் சரியாக அமைய வேண்டும். இச்சமுதாயத்தின் நற்பிரசையை உரு வாக்கும் சாதனம் இன்றைய பாடநூல், இப்பாடநூல்களில் இச்சமத்துவம் பேணப்படுகின்றதா என்பதை ஆய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
மக்கள் மனதின் பிரதிபலிப்பே மொழி என மொழியாளர்கள் கூறியுள் ளனர். மன எண்ணத்தை, உணர்வை பிறருக்கு உணர்த்துவதற்காகப் பயன் படும் இம்மொழியானது சிந்தனையைச் (கிளறாமல் இல்லை)இச்சிந்தனையே இன்னும் பாடநூல்களில் பால்வாதம் பற்றிய ஆய்வை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான இப்பால் பாகுபாட்டினை நாம் தமிழ் இலக்கிய வரலாற் றின் கால அடிப்படையில் ஆராய்வது சாலப்பொருத்தமானதாகும்.
தமிழ் இல்கிய வரலாற்றின் ஆரம்பகாலமாகப் போற்றப்படும் காலம் சங்க காலமாகும். எனினும் எமக்குக் கிடைக்கும் பழம்பெரும் நூலாகத் தொல்காப்பியம் என்ற இலக்கண நூல் அமைந்துள்ளது. இத்தொல்காப் பியத்தின் பொருளாதிகாரம் தால்காப்பியரின் இலக்கியத் திறனையும், வழ்க்கைப் பாங்கையும் சித்தரிக்கின்றது. தொல்காப்பியத்தில்,
'அச்சமும் நாணும் மடனும் முந்துறும் நிச்சமும் பெண்பாற்குரிய’ (தொல்காப்பியம் 96)
'நானும் மடனும் பெண்மைய ஆகலின்” “காற்பும் காமமும் நாற்பால் அமுக்கமும்'
4.

மெல்லியல் பொறையும் நிறையும். a « o a su v n s « a 4 a o கிழ வோள் மாண்புகள் (தொல்காப்பியம் - 750)
என இவையே பெண்கள் இடத்து இருக்கவேண்டிய நற்குணங்கள் எனக் கூறியுள்ளான். இன்றும் பெண்களின் நிலை இதேதான். நல்லதொரு பெண்ணானால் அவள் குனிந்த தலை நிமிராது சத்தமாகப் பேசாது, பெரிதாகச் சிரிக்காமல் இருப்பாள் என இன்றைய சமுதாயமும் கருதுகின்றது. படித்த ஆண்கள் தொடக்கம் சாதாரண பாமர மக்கள் வரை உள்ள ஒவ்வொருவரிலும் இந்த எண்ணமே நிலவுகின்றது. ஆனால் இன்றைய சமுதாய அமைப்பிற்கு இது எந்தளவுக்குப் பொருந்தும் என்பது பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
'பெருமையும் அறிவும் ஆடு உ மேன’ (தொல்காப்பியம் 95)
எனும் சூத்திரம் ஆண்களுக்கு பெருமையும் அறிவும் இலக்கணம் எனவும் வீரம் அவர்களுக்கு பெருமை எனவும் கூறுகின்றது. இவ் ஆண்களுக்கு கற்பு ஒரு பண்பாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இவர்கள் காமக்கிளத்தியர், பரத்தையர் எனப் பல பெண்களோடு தொடர்பு கொள்ள லாம் அது மட்டுமல்ல மனைவியானவள் தன் கணவனின் காமக்கிளத்தியை அன்பு காட்டி நடக்க வேண்டும். காமக்கிளத்தியின் பெருமைகளைப் பேசி கணவனை சந்தேகிப்பதில் ஆழ்த்த வேண்டும் இதனையே,
அவன் சோர்வு காத்தல் கடன்என படுதலின்(தொல்காப்பியம் 33).
என்ற சூத்திரம் விளக்குகின்றது. இதை நோக்குகின்ற போது ஆண் மகன் தழுவும் பரத்தை ஒழுக்கம் தொல்காப்பியர் கால சமுதாயத்திலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்திருக்கின்றது. எனவே தொல்காப்பியர் காலத்தில் சமுதா யத்தில் பெண்களுக்கு எவ்வளவுக்கு இறுக்கமான வரையறுக்கப்பட்ட சட்டங் கள் இருந்தன என்பதை அறியமுடிகின்றது. அன்றைய சமூதாயத்தில் பெண் வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டதுடன் குடும்பம் நடத்துவது மட்டுமே அவர்களின் கடமையாகவும் இருந்தது. சமுதாயத்தில் வேறுஇடம் அவளுக்கு வழங்கப்படவில்லை. எனவே பெண்ணினம் என்ன நிலையில் இருந்தது என்பதை தொல்காப்பியம் வாயிலாக அறியலாம். அதுவே இன்றைய எமது உயர்தர மாணவர்களுக்கான பாடநூலாக இருப்பதால் பால்வாத உணர்வுகள் காலம் காலமாக் கடத்தப்பட்டு வருவதைக் காணமுடிகிறது. இலக்கிய வரலாற்றிலே பொற்காலம் என அழைக்கப்படும் இந்தச் சங்ககாலத்தில் மக்கள் மனநிறைவுடன் வாழ்ந்தார்கள். அகமும் புறமும் சரிசமமான ஒழுக் கங்கள் காதல் வாழ்க்கை வலியுறுத்தப்பட்டு இருப்பதால் பெண்ணுக்குச் சமஉரிமை இருந்திருக்கிறது என்றும் எண்ணத் தோன்று கின்றது. இல்லற வாழ்வின் ஒளியாக பெண் தோற்றப்பட்டதை ஜங்குறுநூறு என்ற நூல் எடுத்து இயம்புகின்றது. இன்றும் மார்பகங்களை அறுத்து எறிவேன் எனச் சபதம் செய்த வீரத் தாயரையும் மார்பில் அம்புபட்டுவீரச் சாவைத் தழுவிய கணவனைக் கண்டு பெருமை கொண்ட மனைவியையும் கூட புறநாநூறு எடுத்துக் கூறுகின்றது. அத்துடன் நாட்டுப்பப்ற்று வீரம் போன்ற உணர்வு களுடன் வாழந்த பெண்களையும் ஒளவையார் போன்ற பெண் புலவர்களையும் கொண்ட பெருமை மிக்க சமுதாயம் எனவும் சித்திரிக்கப்படுகின்றது. ஆனால் அதேநேரம் இப்பண்புகளில் பெண்கள் எவ்வாறான மனநிலைகளில் வாழ்ந்தனர் என்பதும் சிந்திக்க வேண்டியது அவ்சியம். இதைவிட சமுதாயத் தில் வரையறுக்கப்பட்ட சட்டதிட்டங்களுடன்
15

Page 14
உரிமை அற்று வாழ்ந்தார்கள். ஆணுக்குரிய சமமான உரிமையை அவள் பெற்றிருக்கவில்லை. சட்டத்தின் முன் சமமாக மதிக்கப்படவுமில்லை. ஆணின் ஆசைகளையும் தேவைகளையும் நிறைவேற்றும் ஒரு இயந்திரமாகவே பெண் வருணிக்கப்பட்டாள்.
ஆண் மகன் ஒருவரன் பல பெண்களை நாடுதல் அன்று சமுதா யத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருவரன் முறையாக இருந்தது. ஆனால் அவ்வாறு நடந்து கொள்ளும் பெண்கள் பரத்தையர் என அழைக்கபட்டனர். அக்குலப் பெண்கள் சமுதாயத்தில் கேவலமாகக் கருத்தப்பட்டனர். ஆனால் பெண்களை நாடும் ஒரு ஆண் சமுதாயக் கணிப்பில் என்றும் குறைவாகக் கருதப்படவில்லை. இங்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருந்த நீதி எத்தகை யது என்பதை அறிந்து கொள்ளலாம். எனினும் விலை மகளிர் அல்லாத குல மகளிர் இப்பரத்தை பெண்களால் நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்ந்தாா கள். ஆணின் பரத்தை பெண்களால் ஒழுக்கத்தால் பெண்களின் வாழ்க்கை சின்னாபின்னப்படுத்தப்பட்டதையும் காணமுடிகின்றது. இவ்வாறு பரத்தை ஒழுக் கத்தால் மனமுடைந்து வாழ்வின் இன்பத்தை இழந்த தலைவியின் நிலையை
- P - - - - - - 'அணை மென் தோள் யாம் வாட அமர்துணை புணர்த்து கோடு எளில் அகல் அள்குல் கொடி அன்ன நீ முலை முழ்கிப்'.
என்ற பாடல் காட்டுகிறது. ஒரு ஆண் எத்தனை பரத்தையர் களையும் நாடலாம். ஆனால் பெண் கணவனையே கண் கண்ட தெய்வமாக போற்ற வேண்டும். இவற்றைவிட உடன் கட்டை ஏறல் கணவன் இறந்தபின் உணவு வகைகளை ஒறுத்தல், மொட்டை அடித்தல் போன்ற நடைமுறை களும் இருந்து வந்தன. இவ்வாறு நோக்குகின்ற போது சங்ககால இலக்கி யங்களில் பெண் அடிமையாகவும் வரையறைக்குட்பட்ட ஒரு வாழ்க்கைக்குள் நடத்தப்பட்டாள். ஆண் ஆதிக்க சமுதாயத்தில் இரண்டாம் குடிமகளாக கணவனின் தேவைகளை நிறைவேற்றுபவளாக சமுதாய நீதி, சமுதாய அழுத்தம், சமுதாய சடங்கு என்ற பொறுப்புக்களை தலையில் சுமந்து சுதந்திரம் அற்றவளாக வாழ்ந்ததையே மேற் கூறப்பட்ட இலக்கியங்களின் மூலம் அறியலாம். எனவே இக்கருத்துக்களே இன்றைய பாட நூல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏன்பதை உணரமுடிகிறது. அதை அடுத் துள்ள அறநூல் காலம் என அழைக்கப்படும் சங்கமருவிய காலத்தில் எழுந்த நூல்களில் முதல் முக்கிய நூலாக திருக்குறள் திகழ்கிறது.
மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கங்களை வற்புறுத்தும் நூல் திருக்குறள் என அழைக்கப்பட்டபோதும் அங்கு 'அன்' ஆன்” விகுதி களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. “அள், ஆள்’ விகுதி கள் கவனிக்கப்படவில்லை. சமுதாயஅமைப்பின் அடிப்படையில் பெண்ணினத்துக்கு முதன்மை அளிக்கப்படவில்லை. என்பதையே இப்போக்குக் காட்டுகின்றது.
“தெய்வம் தொழா அள் கொழு நற்தொழு தெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை"
என்ற வெண்பாவில் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட ஒரு சட்ட விதியை காணமுடிகிறது. சங்க இலக்கியுங்களில் பெண்களுக்கு விடுக்கப்பட்ட விருந் தோம்பல் பண்பைக் கூட இக்காலம் ஆண்களுக்குரிய தாக்கிக் கொண்டனர். இதனையே,
6

"வருவிருந்து னவகலும் ஓம்புவாள். என்ற குறளில் கூறுகின் றார். பெண்களுக்காக வழங்கப்பட்ட வாழ்க்கைத் துணை நலத்திலும் கூட பெண்களை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைக்கின்றார். “பெண் வழிச் சேரல்” என்ற அதிகாரத்தில் கூட பெண்ணை இழிவுபடுத்தும் வகையில் இடம்பெறும்.
'மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினை விழைவார் வேண்டாப் பொருளும் அதி (அதிகாரம் 91) பாடல் 901.
'இல்லானை அஞ்சுவான் அஞ்சும்மற்று எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல் (அதிகாரம் - 91) பாடல் 905.
என்ற குறள்கள் மூலம் குறிப்பிடப்படுகின்றது. (வினாவில் மகளிர் இதையே
á
'பயன் தூக்கிய பண்புரைக்கும் பணியில் மகளிர் நயன்தூக்கி நள்ளவிடல் (அதிகாரம் 92) பாடல் 972.
“பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் எதில் பணத்தழி இயற்று.
என அதிகாரமும் இவ்வாறான பெண்பற்றிய இழிவு நிலையையே சித்திரிக்கின்றது.)
எனவே இவ்வாறு நோக்குகின்ற போது அன்றும் சமுதாயத்தில் இடம்பெற்ற பெண் அடக்குமுறையே திருக்குறளிலும் காணப்படுகின்றது. இத்தகைய கருத்துக்ளைக் கொண்ட திருக்குறளில் சில அதிகாரங்கள் இன்று 10ஆம் தரத்தில் இருந்து உயர்தர வகுப்புக்கள் வரை இடம்பெற்றுள் ளன. இனி இக்கால இரு காப்பியங்கள் என சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டிலும் அதன் ஆதிக்கமே மேலோங்கிக் காணப்படுகின்றது.“காற்சிலம்பு விற்ற கோவலன்” பரத்தையொழுக்கம் மேற்கொண்ட கோவலன் எந்த இடத்திலும் இழித்துக் கூறப்படவில்லை. மாதவியுடன் வாழ்ந்து பொருளை இழந்த கணவனுக்கு கண்ணகி தன் சிலம்பை கழற்றிக் கொடுக்கின்றாள். இதேசெயலை கண்ணகி செய்திருந்தால் இளங்கோவடிகள் கண்ணகியைப் பரத்தை எனப் பாடியிருப்பார். கணவனின் துன்பத்தைப் போக்கியபடியாலேயே இங்கு கண்ணகி கற்புள்ளவள் என போற்றுகின்றது.
மணிமேகலையின் வரலாற்றைக் கூறும் காப்பியத்தின் மணிமேக லையை சீத்தலைச் சாத்தனார் எந்த ஒரு இடத்திலும் போற்றிப்பாடவில்லை. மாதவியிடம் இருந்த சிறந்த சமுதாயப் பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஏனெனில் அவள் துறவறம் மேற்கொண்டமையே காரண LDTGötb.
அதில்கூட திறமை உள்ள பெண்ணாக மாதவியைச் சித்தரிக்க மறுக்கிறார். இக்கால திரிகடுகம் என்ற நூலில்
'நல் விருந்தோம்பலில் நட்டாளும் வைகலும் இவ் புறம் செய்தலின் ஈன்ற தாய் - தொல்குடியின் மக்கட் பெறின் மனை கிழத்தி Gâlögg, Figuig, கட்புடையாள் பூண்ட கடன்.
17

Page 15
எனப்பெண்ணை மக்களைப் பெறும் இயந்திரமாகவும், குடும்பத் தைப் பேணும் குருவிக் கூடாகவும் சித்தரித்துக் காட்டுகிறார்.
ஆசாரக் கோவை என்ற ஒழுக்கம் சித்திக்கும் நூலில் கல்வி பற்றிக் கூறுகின்றார். ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்வி அவசியம். இக்கல்வி அறிவே ஆற்றல் மிகுந்த சமுதாயத்தை உருவாக்கும் எனக் கூறப்பட்டு இருந்தாலும்,
“சன்றாள் மகள் தம் உடன் பிறந்தாள் ஆயினும் சான்றார் தமித்த உறை யடிக்க அய்ம் புலனும் தாங்கிற் கரிதாகவான்’
என ஆண் பெண் இருவரும் எவ்வாறு இருப்பினும் சேர்ந்து பழகும் நிலையைக் கண்டிக்கிறது. எனவே ஒழுக்கம் கூறும் சங்கமருவிய காலத்தில் ஆண், பெண் சமத்துவம் பேணப் படாதது மட்டுமன்றி பெண்களை அடிமையாகவே காட்டும் நிலையே இருந்தது.
அதை அடுத்து வருகின்ற பல்லவர் கால 'பக்தி” இலக்கியங்களி லும் பெண்ணிலைவாதம் பேணப்படுவதை நாலாயிரதிவ்விய பிரபந்தம் வாயிலாக அறியலாம். திருமங்கை ஆழ்வார், நம் ஆழ்வார், தொண்டரடிப் பொடி ஆழ்வார் போன்றோர் இறைவன் திருவடியே அன்றி இவ்வரத்தைப் பெரிதாக எண்ணவில்லை. இவர்கள் பாடல்களில் பெண்மை தவிர்க்கப்படுகின் றது. இக்காலத்துக் காரைக்கால் அம்மையார் புராணத்தில்கூட புனிதவதியார் பக்தி உள்ள பெண்ணாக பக்திக்கு இலக்கணமாகப் பாராட்டப்பட்ட போதும் அவர் இல்லறப் பண்பில் இருந்து தவறியதாக உரை நடை ஆசிரியர்களால் எடுத்தக்காட்டப்படுகிறார். பக்திக்கு எடுத்துக்காட்டாக மாணவர்களுக்கு இந்த நூலை பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொண்ட போதும் சிவன் அடியார்க்கு மாம்பழம் அளித்தமை கணவனிலும் மேலான பக்தி ஆகிய பண்புகளைக் கொண்டு அவள் இல்லறப் பண்பில் இருந்து தவறியதாகக் காட்டப்படுகிறது. ஆனால் தன் மனைவியை நினைக்காமல் நாவில் ஏற்பட்ட சுவையினால் எனக்கே தா ன்ன மனைவியை பற்றி சிந்திக்காமல் கேட்ட பரமதத்தனைப் பற்றி எதுவும் கூறவில்லை. பெண்ணை புறக்கணிக்கும் ஒரு நூலாகவே காணப்படுகின்றது. இங்கு அறிவு, பக்தி மற்றும் உயர்பண்புகளைக் கொண்ட புனிதவதியை ஒரு சாதாரண பெண்ணாகக் காட்டும் வகையில் அவரை ஒரு ஆணுக்குக் கீழ்பட்டவர் என்றே காட்டப்பட்டுள்ளது. இது பாடநூலில் இடம்பெற வேண்டுமா? சோழர் காலக் காப்பியம் சீவக சிந்தாமணி இக்கதாநாயகன் சீவகன் எட்டுப் பெண்களை மணந்தான் ஆனால் இவன் தன்னிகரில்லாத் தலைவனாகச் சித்தரிக்கப்படுகிறான். இங்கே பரத்தையர் ஒழுக்கமும் இடம்பெறுகின்றது. ஆண்களின் பலதாரமணம் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. நந்தக்கோன் என்னும் தந்தை சீவகனிடம் 'போதார் புனைக் கோல் குட்டு உன் அடிநிலை” என்று தன் மகளைச் சீவகனுக்கு மேம்பாடே முதன்மையடைகின்றது. எனவே சீவக சிந்தாமணியில் இடம்பெறும் பலதாரமணம் பரத்தையர் ஒழுக்கம் போன்ற பலவற்றை நோக்கும் போது ஆண் இச்சைப்படியே பெண் நடாத்தப்பட்டிருக்கின்றாள்.
பெண்மைக்குப் புது மெருகு கொடுத்துப் புதுமைப் பெண்படைத்த பராதியாரால் கூடப் புகழப்பட்ட கம்பனின் இராமாயாணத்தில்கூட பெண் ணிலைவாதம் இகழ்ந்துரைக்கப்பட்டுள்ளது. இன்று மாணவர்களுக்குள்ள ஒரு பிரதான பாட நூலாக உள்ள கம்பராமாயணம், இரசனை மிக்க ஒரு காவியம்தான் இதிகாசங்களில் ஒன்றான இதில் ‘கற்பு'என்ற கட்டுப்பாட்டி னுடாக சீதையைச் சிறந்த பெண்ணாகச் சித்தரித்துக்காட்டுகின்றார். இதனை,
8

'நிறையில் நீங்கிய மகளிர் நீர்மையும். 'கண்டன் கற்பினுக்கு அணியை. "பொற்பினின்றன பொலிவு பொய்யில. 'கற்பு நிறை காலமாரியே. & a e o di - ‘‘கொண்டானோ கற்பிலா குலமகளை. kr * s - '*. --* * * '''.........---...---...---...------ கற்பெனும் பேரது ஒன்று களி நடம் “பொறை இருந்தாந்தி யென்.. . . . . . . . . . . . - - - - - - ‘'சிறையிருந்தேன் என புனிதன் தீண்டுமோ.
என்ற அடிகள் எல்லாம் கற்பு என்ற கட்டுப்பாட்டிற்குள் வைத்தே சீதையைச் சித்திரித்துள்ளது. உயிரைக்காட்டிலும் “கற்பு’ பெரிதாகப் மதிக்கப்பட்டது. அசோகவனத்தில் தனியாக இருந்த சீதையின் கற்பின் மீது சந்தேகப்பட்ட இராமனின் உணர்வை முதன்மைப்படுத்திய கம்பராமாயணம் கல்லாக இருந்த அகலிகையைப் பெண்ணாக்கியதுடன் சீதையைப் பிரிந்து தனியாக வாழ்ந்த உணர்வுகளைப் பற்றியோ அவனுடைய நடத்தைபற்றியோ கம்பன் காட்டியிருக்கின்றாரா இதைவிட இராமனை நினைத்து உடல் மெலிந்து உயிர் ஊசல் ஆட அனுமானால் மீட்கப்பட்ட சீதை இராமனைக் கண்டதும் அவன் அடி மீது வணங்கி சந்தோஷப்படுகிறாள். இந்த நிலையில் இராமன் சீதையின் உள்ளத்தை அறியாமல் இருப்பதைவிட இறப்பதே மேல் எனக்கூறி அவள் மனதைக் குழப்புகின்றான். இந்நிலையில் சீதை தீக்குழித் துத்தான் கற்பை நிலைநாட்டும் ஒரு துர்ப்பாக்கிய நிலையிலேயே ஜனகமகா ராஜனின் மகள் சீதை காட்டப்பட்டிருக்கின்றாள். “வண்ணானின் மொழி கேட்டு வனம் விடுத்த சீதை தனை.
இன்னும் குரங்குகள் காடுகளில் தேடிக்கொண்டு இருக்கின்றன.இங்கே கற்பு என்ற கட்டுப்பாட்டை சீதை மேல் திணித்து அவளை எவ்வளது துன்பத் திற்கு உள்ளாக்குகின்றார்கள். இராமனின் ஆண் ஆதிக்கத்தன்மை சீதையை நெருப்பினில் இறக்குகின்றதைவிடவேறு கொடுமையும் வேண்டுமோ?
கம்பராமாயணத்தில் இடம்பெறுகின்ற'சுந்தரகாண்டம் காட்சிப் படலத் தில் ஒரு பெண்ணின் அக உறுப்பான கொங்கை அப்பட்டமாக பாலியலில் வக்கிரத்தைத் தூண்டும்வகையில் வர்ணிக்கப்படுகின்றது. அவற்றை பின்வரும் பாடல்கள் மூலம் எமது மாணவர்களுக்கு கற்பிக்கும் நிலையே உள்ளது.
கம்பராமாயணம் - சந்தரகாண்டம் காட்சிப்படலம்,
தழைத்த பொன்முலைத் தடங்கடந்த போய்த்தாள (வளர்ந்த தேமல் படர்ந்த முலையகளாகிய மலைகளைத் தாண்டி அருவி பாய்வது போல கண்ணிர் சொரிகிறாள்.)
2. இராவணன் அசோகவனத்துக்குள் பிரவேசிக்கும் காட்சி.
". தேவகுல மாந்த்ரும், இயக்கமாதரும் புடைசூழ வரும்
காட்சி (83 பாடல்) w V
"குங்குமக் கொம்மைக் குவிமுலை கனிவாய்க் கோகுலம் தரும்” (குங்குமம் அணிந்த பருத்தகுவிந்த முலைகளையுமுடைய)
9

Page 16
3. 85 unt L6).
‘கருங்கடைக்கண் மின் இடை செவ்வாய் குவிமுலை பனைத்தோள் விங்குதேர் அல்குலார் தாங்கி”
4. 102 UITL6)
நோற் கின்றார்களும், நுண் பொரு நுண்ணதின் பார்க்கின்றாரும் பெறும் பயன் பார்த்தி மேல் வார்குன்றா முலை என் சொல்.
இராவணன் சீதையை நோக்கிக் கூறுதல். “கச்சுக்குள் அடங்காத பெருந்தனங்களை யுடையாள்"
கொங்கையை வர்ணிக்கும் இச்செய்யுள்கள் விரச உணர்வினை ஏற்படுத்துகின்றன. ஏன் இராமன் கூட அனுமானிடம் சீதையின் அடையாளங் களை எடுத்துக் கூறும் இடத்திலும் கூட அவளுடைய கை, கால் அமைவு களைப் பற்றிச் சொல்லி அனுப்பி இருக்கலாம். ஆனால் அல் குல் இனம், வயிறு, வயிற்று மடிப்பு ஆகிய அங்க அடையாளங்களைக் குறிப்பிட்டுக் கம்பன் வர்ணித்துள்ளான். இவ்வாறான அங்க வர்ணனைகளை எப்பாட நூல்களிலாயினும் இடம்பெறுதல் தவிர்க்க வேண்டும்.
சிற்றிலக்கியங்கள் ஆகிய பிரபந்தங்களில் கூடப் பெண் மதிப்பிழந்து ஆணின் அடிமையாகவும், அவனின் உடமையாகவும், கவர்ச்சிப் பொருளாக வும் காணும் பெண்ணாகவும் காட்டப்படுகின்றாள். ஆண்கள் தவறு செய்தால் அதைப் பெண் மன்னிக்கிறாள். அதைப் பெண்ணின் இயல்பு என்று கலிங்கத்து பரணி கூறுகின்றது.
"பேணங் கொளுநர் பிழைகளெல்லாம் பிரிந்த பொழுது நினைத்து அவரை காணும் பொழுது மறைந்திருப்பீர் களப் பெண் பொற் கூடாம் திரனே"
இங்கே ஆண் செய்த தவறுகளைப் பெண் தவறென மன்னித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறானதொருநிலை ஆணுக்கு எடுத்துக் கூறப்பட வில்லை. இன்னும் பரத்தையர் ஒழுக்கத்தினை. 'தனக்குரிய எண் கொங்கை தான் பயந்த” என்ற பாடல் விளக்குகின்றது. இதே போன்று கணவன் இறந்தால் பெண்கள் அணிகலன்களைத் துறந்து உடலை தழுவும் வளக்கமும் இடம் பெற்றதை “கந்தை திருமறையோன” என்ற பாடல் விளக்குகிறது. பெண்ணின் அங்க வர்ணனை நாயக்கர் காலத்திலும் இடம் பெறாமல் இல்லை. எனவே நாயக்கர் கால சமுதாயத்தில் கூட பெண் காமப் பொருளாகவும் காட்சிப் பொருளாகவும் அடிமையாகவும் அடக்கி ஒடுக்கப்பட்ட தன்மையையே காணமுடிகின்றது. எனவே பெண்ணினம் இங்கு புறக்கணிக்கப் பட்ட இக்குறள் கூறுகின்றது.
“காதென்று முக்கென்று கண்ணென்று காட்டி கண்ணெதிரே மாதென்று சொல்ல வருமாயை தனை மறலிவிட்ட தூதென்ற எண்ணம்.
20

எனமாயை என்று மறலி என்றும் கூறுகின்றார். பெண்ணாகி வந்த மாயப் பிசாசு தன்னைப் பிடித்துக் கண்ணால் வெட்டி முலையால் மயக்கியதாகவும் பாடுகிறார். 'மணி, பெண், பொன் ஆசை மயக்கத்திலே விழுந்து கணர்கெட்ட மாடதுபோல் கலங்கினேனே’ என்று ஆசையில் மூழ்கியதால் கரையேற முடியாது என பாடி இருப்பது பெண்ணை ஆசைப் பொருளாக பாவிக்கும் பாண்மையைக் காட்டுகின்றது. சித்தர்களும் கவிஞர் களைப் போல் பெண்களை கவர்ச்சிப் பொருளாகவோ அழகுப் பொருளா கவோ பாடாது விட்டாலும் பெண் அழகில் தாங்கள் சிக்கிவிடக் கூடாது என்ற நோக்கில்பாடி இருப்பதும் பெண்கள் மீது கொண்ட கவர்ச்சியையே காட்டுகின்றது.
இனி உரைநடை இலக்கியங்களை நோக்குகின்றபோதும் பால் பாகு பாட்டுவாதம் காணப்படாமல் இல்லை. தமிழக பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான அமரர் ஆர்.சண்முகசுந்தரத்தால் எழுதப்பட்ட நாவலான நாகம் மாளில் சாதாரண விவசாயக் குடும்பம் ஒன்றின் வாழ்க்கை முறை, அவர் களின் பழக்கவழக்கம் என்பவற்றை உரையுடன் பிரதேச மண்வாசனையுடன் சித்தரிக்கப்படுகிறது. இந்த நாவலில் இடம்பெறும் பிரதான பாத்திரமான நாகம்மாள் ஒரு விதவை இவள் வாழ்வில் தனக்குரிய உரிமையைத் தானே தீர்மானிப்பவள். சுயாதீனமாக வாழ விரும்புபவள். திடநம்பிக்கை உடைய வள். எனினும் இப்பெண் விதவை என்ற காரணத்தால் சமுதாயம் அவளை விபரீதக்கண் கொண்டு நோக்குகின்றது. நாவலின் எந்த இடத்திலாவது அவள் தனக்குரிய மென்மையில் இருந்து மாறவில்லை. அண்ணனுக்குப் பின் அவனின் தம்பி சின்னப்பன் குடும்பத்தைச் சிதற விடாமல் காப்பாற்றுகின் றான். இந்நிலையில் நாகம்மாளையும் சின்னப்பனையும் பற்றிய தவறான நோக்கில் பார்க்கும் சமூதாயத்தில் பெண் எவ்வாறு நிம்மதியாக வாழமுடி யும். இங்கு விதவை என்றால் பூவிழந்து, பொட்டிழந்து பிற ஆண்களுடன் பேசாமல் ஒதுங்கி வாழவேண்டும் என்றே சமுதாயம் விரும்புகின்றது. இந்நாவலில் கூட விதவை என்ற காரணத்தாலேயே தவறுகள் எதுவும் செய்யாத ஒரு அப்பாவிப் பெண் நாகம்மாளை அவ்வாறு இந்தச் சமுகம் எதிர்பார்க்கின்றது. எனவே பெண்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அவர்களுக் கென்றே ஆண்களால் விதிக்கப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகள் போன்று நாகம்மாள் சரித்திரத்தில் இடம்பெறுவாள். ஒரு கிராமியப் பெண் இக்கதை யைப் படிக்கின்ற போது கிராமியப் பெண்ணென்றால் அவளுக்கென்று சில பண்புகளைக் கொண்டிருக்க வேண்டுமெனச் சிந்திப்பதையே நாம் காண் கின்றோம். கணவனின் நண்பனை உபசரித்தால் குற்றமா? இந்த உபசரிப்புப் பண்பினால் கணவனும் அதேநேரம் உபசரிக்கப்பட்ட நண்பனும் கூட அவளை தப்பாக நினைக்கின்றார்கள். இங்கேயும் பெண்களிலும் நகர்புறப் பெண்ணுக் கோர் கட்டுப்பாடு. கிராமப்புறப் பெண்களுக்கு இன்னொரு கட்டுப்பாடு என்ற அமைப்பில் பெண்ணினம் ஏதோ ஒரு வகையில் கட்டுப்பட்டு இருக்கின்றது. இவ்வாறன பாடநூல்களினாலேயே சமுதாயத்தில் இன்றும் பெண் அடிமை யைச் சிந்திக்கும் ஆண்கள் இருக்கிறார்கள். சிந்திப்பது மட்டுமல்ல செயற்பாட்டிலும் கூட இத்தகைய பாடநூல்களின் தாக்கத்தினாலேயே இன்றைய சமுதாயத்தில் பால்பாகுபட்டு வாதத்தில் “பெண்’ என்பவள் ஆணுக்குத் குறைந்தவள் என்ற உணர்வு வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.
இலக்கண அமைப்பில் கூட இப்பால்வாதத்தினைக் காணமுடிகின் றது. கவிஞன், புலவன் என்ற ஆண்பால் பதங்களைக் கற்கும் சிறார்கள் கவிபாட பெண்பாவலர் இல்லையா என்ற வினாவை கேட்கிறார்கள். ஏனெனில் இப்பதங்களுக்கு பெண்பால் பதங்கள் இல்லை. இதே போன்று கிழவன் என்ற ஆண்பால் பதத்துக்கு கிழவி என்றபால் உண்டு. இலக்கியங்
21

Page 17
களில் கிழவன் என்று வயது சென்ற ஆணைக் குறிப்பிடுவது இல்லை. ஆண்டு 10 - 11இன் தமிழ் மொழியும் இலக்கியமும் பாடநூலில் அல் - ஹாஜ் மமு உவைஸ் அவர்களது நிலையும், நியாயமும் என்ற கட்டுரையில் இருந்து இடம்பெற்ற ஒன்றுக்கு ஆயிரம் ஆயிரம் என்ற கதைப் பகுதியில் வருகின்ற பெண்பாத்திரம் கிழவி என்ற சொல்லால் வளர்க்கப்பட்டு செல்கிறது. ஆனால் இதேகிழவியில் கணவன் கிழவன் என்ற பதத்தால் அழைக்கப்படவில்லை. அவளது கணவன் காட்டப்படுகிறார். எனவே இவ்வேறுபாட்டினால் ஆணுக்கு மரியாதையையும் பெண்ணுக்கு அவமரியா தையையும் கொடுப்பதைக் காணமுடிகிறது. Ο
22

சட்டமும் பெண்களும்
கமலினி கணேசன்
அறிமுகம்
சிட்டமானது பெண்களது வாழ்வினை வடிவமைக்கின்ற ஒரு பிரதான காரணியாக அமைகின்றது. சட்டவாக்கம், நீதிமன்றத்தில் இடம்பெறுகின்ற வழிகாட்டல் முறைகள், தீர்ப்புக்கள், பிறந்த இடம், சமயம், வழமைகள் எனப் பல விடயங்களை இங்கு சட்டம் என்னும் தலைப்பின் கீழ் அடங்குபனவாக, பெண்களுடைய வாழ்வுடன் இணைந்த விடயங்களாகத் தொழிற்படுகின்றன. சட்டத்தினூடாகப் பெண்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டிய வர்களாக இருக்கின்றனர். அவ்வகையில் பெண்களின் சமூக இருப்பினைத் தீர்மானிக்கும் ஒரு பிரதான சமூக நிறுவனமாகச் சட்டம் தொழிற்படுகின்றது.
சட்டத்தினுடைய சமூகவியலை பெண்நிலை நோக்கில் அணுகுவது இக்கட்டுரையின் நோக்கமாகும். சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் அங்கத்தவர்கள் எனும் வகையில் கிழக்கு மாகாணத்தில் பெண்களுடைய பிரச்சினைகளுக்கும் சட்டத்திற்குமான தொடர்பு எம்மால் உணரப்படுகின்ற ஒரு விடயமாக அமைந்துள்ளது. அத்தகையதொரு கருத்துச் சார்ந்ததான தேடலும் சிந்தனையுமே இக்கட்டுரையை எழுதத் தூண்டின எனக் கூறலாம்.
பரந்த ஒரு வகுப்பில் பிரசாஉரிமை, தேசியம் போன்ற விடயங்களில் பெண்களின் சட்டம் தொடர்பான பிரச்சினைகள் அணுகப்பட வேண்டிய வையாக அமைகின்றன. இவைதவிர கல்வி, சுகாதாரம், தொழில், மனித உரிமைகள், வன்முறை, பாலியல்வன்முறை என்ற பல வடிவங்களில் சட்டம் தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
சட்டமானது சமூகமாற்றத்திற்கான ஒரு ஊக்கியாகத் தொழிற்படக் கூடியது. (அல்லாத போது சமூகமாற்றத்திற்கான தடையாகத் தொழிற்படும்) இலங்கையிலும் பல கீழைத்தேய நாடுகளிலும் 70களிற்கு முன்னால், அத்தகைய கருத்துச் சார்ந்த ಶೌಕಿಳ್ನಗೆ வெளிப்படையாகவும் பரவலா கவும் முன்வைக்கப்படவில்லை. அதாவிது சட்டத்தினைப் பெண்களுக்கு வெளியே இயந்திரமாக ஏற்றுக்கொள்ளும் போக்கிலிருந்து விடுபட்டு அதனை சமூக மாற்றத்தின் ஊக்கியாக பெண்கள் பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனை பரவலாக 70களிற்குப் பின்னால் தீவிரம் அடையத் தொடங்கியது. இக்கால கட்டத்திற்கு முன்னர் பெண்கள் அல்லாதவர்கள் பெண்நிலை நோக்கத்திற்குப் புறம்பாக சட்டங்களை இயற்றியும் மாற்றியமைத்தும் வந்துள் ளனர். 70களின் பின்னால் பெண்நிலை இயக்கங்களைச் சேர்ந்தவர் கள் சட்டம் தொடர்பான மாற்றங்களையிட்டு தீவிரமாகச் சிந்திக்கவும் செயற் படவும் தொடங்கினர். இத்தகைய மாற்றங்கள் பெண்களுக்கான ஐ.நா. தசாப்தத்தினை ஒட்டியதாகவே ஏற்படத் தொடங்கின.
70-90கள் வரையான காலப்பகுதி முன்னைய காலப் பகுதியுடன் ஒப்பிடும் போது சட்டங்கள் தொடர்பாக பல மாற்றங்களைக் கொண்டு வந்த
23

Page 18
தொன்றாகக் கொள்ளப்படலாம். பெண்களிற்கான ஐ.நா. தசாப்தம், அதனைத் தொடர்நது வந்த நைரோபி உலகமாநாடு ஆகியவற்றின் காரணமாக உரு வாக்கப்பட்ட சர்வதேச சட்டங்களை ஏற்க வேண்டிய சூழ்நிலைக்கு அரசுகள் தள்ளப்பட்டமையால் இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டன. பெண்களுக்கெதி ரான வன்முறை 1993இல் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. மாநாட்டில் பிரதான விடயமாக பெண்நிலை இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்டது. இதன் பிரகாரம் பெண்களிற்கெதிரான வன்முறையை ஒழிக்கும் பிரகடனம் ஒன்று ஐ.நாவினால் பிறப்பிக்கப்பட்டது. பெண்களிற்கெதிரான வன்செயலைக் கவனிப்பதற்கு அறிககையாளர் ஒருவர் 94இல் நியமிக்கப்பட்டார். 1995இல் பீஜிங்கில் நடத்தப்பட்ட ஐ.நா. மாநாட்டில் பெண்களிற்கெதிரான வன்முறை கள் செயற்பாடுகளிற்குரிய அட்டவணையில் முக்கிய மானதொரு விடயமாக் கப்பட்டது.1995ஆம் ஆண்டில் நூற்றாண்டு காலமாக இருந்து வந்த பாலியல் வன்முறை தொடர்பான சட்டம் திருத்தப்பட்டு பாலியல் வன்முறை சார்ந்த குற்றங்களிற்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் வாய்ப்பு உருவாக்கப் பட்டது. அதாவது இப்போது பாலியல்வன்முறைக்கு (Rape) குற்றவியல் சட்டத்தின் கீழ் தீர்வுகாண வாய்ப்பு உண்டு. பாலியல் வன்முறைக்குற்றம் புரிந்தவரிற்கு ஆயுட்தண்டனை அல்லது மரணதண்டனை வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திருத்தங்களின் பின்னால் பாலியல் வன்முறையை நிரூபிப்பதற்கு உடற்காயங்களை ஆதாரம் காட்ட வேண்டும் எனும் முறை இல்லாதொழிக்கப்பட்டது.
பெண்களிற்கெதிரான எல்லாவித அநீதிகளையும் அகற்றும் பிரகட னம் (CEDAW) பெண்களுக்கான ஐ.நா. தசாப்தத்தை ஒட்டி உருவாக்கப்பட்ட தாகும். 1979ஆம் ஆண்டில் இப்பிரகடனத்தில் இலங்கையும் கையெழுத்திட் டது. 1993இல் CEDAW இன் முடிவுகள் அடிப்படையாகக் கொண்ட பெண்கள் பட்டயத்தை அரசு அங்கீகரித்தது. பெண்கள் சாசனத்தை நிறைவேற்றுமுக மாக தேசிய மகளிர் ஆணைக்குழு தாபிப்பதற்கான சட்டமூலம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இவற்றிற்கிணங்க கொழும்பில் உள்ள பொலீஸ் நிலையங்களில் பெண்களினதும் குழந்தைகளினதும் பிரச்சினைகளைக் கவனிப்பதற்கு விசேட பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. மகளிர் பணியகம் சிறிய அளவில் இலவச சட்ட உதவிகளைச் செய்து வருகின்றது.
பிள்ளைகளின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தைப் பெறுவதற்கு பெண் களிற்கு இருந்த தடைகள் நீக்கப்பட்டமை, ஓய்வூதியக் கொடுப்பனவை பெண்களிற்குரியதாக்கியமை கணவன் காணாமல் போகும் சந்தர்ப்பத்தில் அதற்கான அத்தாட்சிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளமை ஆகியவை நேர்நிலையாக நோக்கப்படக் கூடிய மாற்றங்களாகும்.
சட்டத்ததை எடுத்துக் கொள்ளும் போது, கிராமப்புற பெண்களின தும் நகரப்புற பெண்களினதும் பிரச்சினைகள் வித்தியாசமானவையாக உள்ளன. கிராமப்புறப் பெண்கள் கூடுதலாகத் தமது வீட்டு வேலைகளில் மூழ்கியுள்ளனர். கூலிவேலைக்குச் சென்றாலும் அவை முறைமை சாராத வேலைகளாக இருக்கின்றன. அதாவது நியாயமான நிலையான வருமானம், பேரம் பேசக்கூடிய வாய்ப்பு, விடுமுறை நாட்கள், பிரசவலிவு போன்றவற்று டன் தொடர்புபட்ட நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்புக்களில் அவர்கள் வேலை செய்வதில்லை. இவ்வாறான முறைமை சாராத வேலைகளாக இவை இருப்பதால் வேலை தொடர்பான உத்தரவாதமும் கிடைப்பதில்லை. மேலும் இவ்வேலைகள் பருவகாலம் சார்ந்தவையாக உள்ளன. அவர்களின் தொழில் முறையான நிர்வாகம் சட்ட ரீதியாக நெறிப்படுத்தப்படவில்லை.
24

இக்காரணங்கிளினால் வேலைக்குச் செல்லும் பெண்களின் அந்தஸ் தில் உயர்வு காணப்படுவதில்லை. ஆனால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவன அமைப்பில் வேலைக்குச் செல்லும் பெண்கள், படித்த பெண்கள், ஆகியோ ருக்கு வேலை, படிப்பு, குடும்பம் எனப் பல தளங்கள் உண்டு. இவ்வாறு கிராமப்புறங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களாயினும் வேலைக்குச் செல்லாத பெண்களாயினும் அவர்கள் குடும்பம் வீடு எனும் குறுகிய வட்டத் தினுள் மூழ்கி விடுகின்றர். இவர்களைத் திடீரெனக் கணவன் கைவிடும் போது அல்லது துரோகம் இழைக்கும் போது வன்முறைக்குட்படுத்தப்படும் போது, கணவன் இறக்கும் போது, காணாமற்போகும் போது எனப் பல சந்தர்ப்பங்களில் சட்ட உதவியைநாட வேண்டியவர்களாகின்றனர். விவாக ரத்து சொத்துரிமை, வன்முறை, பாலியல்வன்முறை தொடர்பான பிரச்சினை கள் தலைதூக்கும் போது சட்டம் அவர்களுடைய வாழ்வை பாதிக்கும் ஒரு பிரதான விடயமாகின்றது.
இனப்பிரச்சினை காரணமாக, இடம்பெயர்தல், பொருளாதாரப் பிரச்சி னைகள், வேலையின்மை எனப்பல காரணங்களினால், இன்றைய சூழ்நிலை யில் இந்த மாற்றங்கள் மிகவும் மேலோட்டமான தளத்தில் நின்று நோக்கும் போது நேர்நிலையாக நோக்கப்படக்கூடியன. மாற்றங்களைப்பற்றிச் சிந்திக் கும் போது ஒரு சில படிக்கற்களாக அவை கொள்ளப்படக் கூடியன. பரந்த அடிப்படையில் நோக்கும் போது இவ்வாறான மாற்றங்களில் பல சிக்கல்கள் உள்ளன. அத்துடன் இன்னும் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங் கள் பல
666.
இந்த மாற்றங்கள் அமுல்படுத்தலில் பலவீனமாக உள்ளன. பலமாற் றங்கள் எல்லோரையும் அல்லது எல்லாப் பிரதேசங்களையும் வந்தடைவ தில்லை. குறிப்பாக எமது பிரதேசங்களில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்ச னைகளைக் கருத்திற் கொள்ளும் இடத்து சட்டமானது அவற்றிற்குத் தீர்வு வழங்கும் கருவியாகத் தொழிற்படுவதில்லை என்பதை அறியலாம். சட்டத் தினை பெண்ணிலை நோக்கில் மாற்றியமைப்பதில் அரசும் ஏனைய சட்டம் சார்ந்த நிறுவனங்களும் தீவிரங்காட்டாமல் நிர்ப்பந்தங்களின் பெயரில் மாற்றங்களை ஏற்பதினாலேயே இந்நிலை ஏற்படுகின்றது. கருத்தியல் மாற்ற மொன்று ஏற்படாதவரை சட்டத்திற்கும் பெண்களிற்குமான இடைவெளி அதிக ரித்துச் செல்லும்.
பெண்களுடைய நிலைமை மோசமானதாக உள்ளது. இச்சூழ் நிலையானது சிந்திக்கவும் செயற்படவும் வேண்டிய பல புதிய தளத்தை உருவாக்கியுள்ளது.
கிராமங்களில் வன்முறை, பாலியல்வன்முறை, பாலியல் தொல்லை, சிறுவர் பாலியல் வன்முறை எனப்பல விடயங்கள் அதிகரித்து வரும் போக்கி னைக் காட்டுகின்றன. இடப்பெயர்வு, வேலையில்லாப் பிரச்சினை, பொருளா தாரப் பின்னடைவு ஆகியவற்றுடன் தொடர்புடையதாக விபச்சாரமானது தீவிரமடைந்து வருகின்ற பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பெண் தலை மைத்துவக் குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன. வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் யுத்த சூழலில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு புதிய பரிமாணம் ஒன்று உண்டு. அரசியல் ரீதியாக, இனத்துவ ரீதியாக, வர்க்க ரீதியாகப் பலம்வாய்ந்தவர்கள் பெண்களை வன்முறைக்கு உட்படுத் தக்கூடிய சூழலில் பிரச்சினைகளுககுத் தீர்வுகாணல் என்பதும் பல பிரச்சினைகளை உள்ளடக்கியதொரு விடயமாகும். இவ்வாறான பிரச்சனை களுக்குத் தீர்வு காணல் என்பது இன்றைய பெண்ணிலை இயக்கங்கள் முன்னாலுள்ள ஒரு சவாலாகும்.
25

Page 19
இவ்வாறாக ஒரு புறத்தில் சட்டம் தொடர்பாக சர்வதேச ரீதியாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக அரசுகள் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கடப்பாட்டிற்குத் தள்ளப்படுவதால் குறிப்பிட்டுக் கூறக் கூடிய ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்ற போதும் மறுபுறத்தில் மேற்கூறியவாறான ஒரு சமூகசூழ்நிலையானது இத்தகைய மாற்றங்கள் போதாதவையாக இருக் கின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள்
ஐ.நாவின் பெண்கள் தசாப்தம் அதன்பின்னர் நடத்தப்பட்ட நைரோபி உலக மாநாடு, அதனுடாக முன்வைக்கப்பட்ட நைரோபி முன்னோக்கும் உத்திகள் என்பவற்றின் விளைவாக உலகளாவியரீதியில் அரசுகள் பெண்கள் தொடர்பான சட்டங்களை மாற்றி அமைப்பதற்கு உடன்படத் தொடங்கின. இவை பெண்ணிலைவாத வரலாற்றில் நேர்நிலையாகக் கொள்ளப்பட வேண்டியவை எனினும் இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டாலும் அவற்றை அமுல்படுத்துவதற்கான செயற்பாடுகள் எதனையும் அரசு மேற்கொள்ளாதிருப் பதனையும் அவை செயற்படுத்தப்படும் முறைகளும், செயற்ப்படுத்துவதில் உள்ள சிக்கல்களையும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.
சர்வதேச நியமங்களை உருவாக்குதல் என்பது நாடுகளை அவற் றைப் பின்பற்றவும் நடைமுறைப்படுத்தவும் தூண்டுவதற்கு ஏதுவாக அமை கின்றது. நைரோபி உலகமா நாடானது பாலியல் நியாயங்கள் பற்றிய சர்வதேச நியமங்களை ஒவ்வொரு நாடும் தனது சட்டத்தில் இணைத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. நைரோபி முன்னோக்கும் உத்திகளும் (NLF) இவற்றை வலியுறுத்தின.
பெண்களிற்கெதிரான வன்செயல்கள் அதிகரித்து வருவதை இம் மாநாடு எடுத்துக் காட்டியதுடன் அவற்றிற்கான காரணங்களையும் எடுத்துக் கூறியது. பெண்களின் கெளரவத்தை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது. இதன் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களை முன்னர் பார்த்தோம்.
இலங்கைச் சூழலில் பல ஏற்பாடுகள் கையொப்பம் இடும் அளவுடன் நின்று விடுகின்றன. சர்வதேச ஒப்பந்தங்களை கடைப்பிடிப்பதை சர்வதேச அமைப்புக்கள் கட்டாயமாக்கவில்லை. அத்துடன் சர்வதேச நியமங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதைக் கண்காணிப்பதற்கான சர்வதேச நடை முறைகள் பலமற்றதாக இருக்கின்றன. இலங்கையில் சர்வதேச உடன் படிக்கைகளை அங்கீகரிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள் ளதால் இவ்விடயம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதில்லை என்பது ஒரு பிரச்சினையாகும். பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதில்லை என்னும் விடயம் இன்னொரு பரிமாணத்தை உள்ளடக்கியது. பொதுவாக பாராளுமன் றத்தில் விவாதிக்கப்படுகின்ற விடயங்கள் பத்திரிகை வாயிலாக பொது சனத்தை வந்தடைகின்றன. பொதுசனம் இவ்வாறு குறிப்பிட்ட விடயத்தை ஓரளவிற்கு அறிந்து கொள்ளவும் விவாதிக்கவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. ஆனால் பராளுமன்றத்தில் விவாதிக்கப்படாத மாற்றங்கள் நிர்வாகிகள் மட்டத்தில் அடங்கிப் போய்விடுகின்றன.
சர்வதேச நியமங்களை ஏற்று நடப்பதிலுள்ள மற்றைய பிரச்சினை என்னவெனில் நாட்டில் நிலவும் பண்பாடு தொடர்பான பல்தன்மையை எவ்வாறு பேணலாம் என்ற வினாச் சார்ந்ததாகும். இது இலங்கை போன்ற நாடுகளில் சட்டம் தொடர்பாக உள்ள பிரச்சினையாகவும் கொள்ளப்படக்
26

கூடியது. காலனித்துவ காலத்திற்கு முன்னால் அல்லது சட்டம் எனும் சொல் நவீனகருத்தில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னால், இவ்விடயம் தொடர் பாக வழமைகள் காணப்பட்டன. அங்கு பிரதேச, சமய, சாதி வட்டார அம்சங்கள் பேணப்பட்டன. உதாரணமாக கிழக்கில் முக்குவச் சட்டம், யாழ்ப்பாணத்தில் தேச வழமைச்சட்டம், முஸ்லிம்களுக்கான சட்டம், கண்டிச் சட்டம் என்பனவாக அவை அமைந்திருந்தன. காலனித்துவ அரசுகள் பண்பாட்டுப் பல்தன்மையைப் பேணுமுகமாகவும் சுதேசியரின் எதிர்ப்பைச் சம்பாதிக்காது இருப்பதற்கும் இவற்றை ஏற்றுக் கொண்டு சட்டத்தினை அமுல்ப்படுத்தி மாற்றங்களைச் செய்து வந்தன. இன்றைக்கும் தேசவழமைச் சட்டம், முஸ்லிம்களுக்கான சட்டம், கண்டிச் சிங்களவரிற்கான சட்டம் ஆகியவற்றின் பிரயோகம் காணப்படுகின்றன. பொதுச்சட்டம் அறிமுகப்படுத்தப் பட்டாலும் இவற்றின் பிரயோகம் காணப்படுகின்றன. இச்சட்டங்களின் பல கூறுகள் பெண்களிற்குப் பாதகமாக அமைந்திருப்பினும் பண்பாட்டுப்பல்தன் மையைப் பேண வேண்டிய காரணத்தினால் இவை மாற்றப்படாமல் உள்ளன. உள்ளுர்ச் சட்டங்கள் அல்லது சமயச் சட்டங்கள் வரலாற்று ரீதியாகப் பல்வேறுபட்ட குழுக்களை ஒரங்கட்டுவதாகவே அமைந்திருந்தன. அவ்வகை யில் பெண்களை ஒரங்கட்டும் வகையிலும் இச்சட்டங்கள் அமைகின்றன. இவற்றிற்கு நல்ல உதாரணமாக இந்தியாவில் (Sati), உடன் கட்டை ஏறுதல் என்பதைக் குறிப்பிடலாம்.
எனினும் வழமையைப் பின்பற்றுவதா இல்லையா எனும் விடயம் விவாதத்திற்குரியதாக அமைவதாக பெண்ணிலைவாதிகள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். உதாரணமாக தாய்வழிச் சமூகங்களில் வழமை என்பது பெண்களிற்குச்சார்பாக இருப்பதால் அவற்றை மாற்றக்கூடாது என வாதிடு வோரைக் கூறலாம். இவ்விடயம் பிறிதான ஒரு நீண்ட விவாதமாகையால் அவற்றிற்கு இக்கட்டுரையில் இடமளிக்க முடியாதுள்ளது.
அவ்வகையில் தேசவழமைச் சட்டத்தையும் கண்டியச் சட்டத்தையும் அவற்றினுடைய வரலாற்றினூடாக எடுத்தாராயும் போது, காலனித்துவ காலத்தில் செய்யப்பட்ட மாற்றங்களிற் பல பால்நிலை பாரபட்சத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை அறியக்கூடியதாக உள்ளது. எனினும் சமய, இன. பண்பாட்டு நியமனங்களை மாற்ற முடியாது எனச் சொல்லிக் கொண்டு பால்நிலை பாரபட்சத்தை நீக்க சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கை களை எடுக்காதிருக்க முடியாது.
சர்வதேச நியமங்களாவன அனுபவங்களை 9|19thu60)LuIITöds கொண்டு ஆய்வுகள் புள்ளிவிபரங்கள் ஊடாக கருத்தரங்குகளினூடாக மீளாய்வு செய்யப்பட்டு உருவாக்கப்படுகின்ற்ன. அவை சமூகத்தில் பால் நிலை நியாயத்தை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்படுகின்றன. பெண் நில்ை நோக்கில் அவை அங்கீகரிக்கப்பட வேண்டியவையாக உள்ளன. இலங்கை போன்ற நாடுகளில் சர்வதேச நியமங்களின் உலகப் பொதுவான தன்மைக்கும் பண்பாட்டுப் பல் தன்மைக்கும் முரண்பாடுகள் எழுவதுண்டு. இம்முரண்பாடுகள் சர்வதேச நியமங்களை அமுல்படுத்துவதற்கு முட்டுக் கட்டையாக அமைகின்றன.
சர்வதேச நியமங்களை உள்ளூர் சட்டத் தொகுதியினுள் அடக்கு வதற்கு எடுக்கப்படும் நடைமுறைகளும் சர்வதேச சட்டங்களின் அமுல் நடத் தலை பாதிக்கின்றன. சர்வதேச சட்டங்களிற்கு இணங்க புதிதாகச் சட்டங்கள் இயற்றப்படுவதில்லை. இந்நியமங்கள் ஏற்கனவே உள்ள தேசிய சட்டத்திலும் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. மாறாக இவை நிர்வாக நடவடிக்கைகளா
27

Page 20
கவே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமையையும் சர்வதேசச் சட்டத் தினை அமுல்படுத்துதல் தொடர்பான பிரச்சினையாக உள்ளது.
இவைதவிர சர்வதேச சட்டங்களை ஏற்று நடத்தல் என்பது நிறுவன ரீதியான பலமாற்றங்களை உள்ளடக்கியது என்பதையும் இவற்றிற்குச் சமாந் தரமான விழுமியங்களில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்ற கருத்தையும் அரசு தனது செயற்பாடுகளில் தீவிரமாக வெளிக்காட்டா திருப்பதும் இங்கு பிரச்சினையாக உள்ளது.
இலங்கை சட்டவாக்கத்திலும் நீதித்துறையிலும்பெண்கள்: பெண்ணிலை நோக்கில் பிரச்சினைகளை ஆராய்தல்
1972 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இலங்கையின் முதலாவது குடி யரசு அரசியலமைப்பு சாசனத்தில் பெண்ணுரிமை தொடர்பாக கொண்டிருந்த கருத்தியல் நேர்நிலையானதாக அமையவில்லை. அன்றிலிருந்து இன்று வரை பலமாற்றங்கள் ஏற்பட்டுவரினும் கருத்தியல் ரீதியாக மாற்றம் ஏற்பட வில்லை. அவ்வகையில் இலங்கையின் சட்டவாக்கத்திலும், அமுல்படுத்த லிலும் பெண்கள் எனும் விடயத்தை எடுத்துக் கொள்ளும் போது பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் சிலவற்றை ஆராய்வது பொருத்தமானதாக உள்ளது. இவற்றினூடாக இலங்கை அரசு எவ்வகையில் ஆண் தலைமைத் துவ சமூக கருத்தியலை வெளிப்படுத்துகின்றது என்பதை அறியலாம்.
இலங்கையின் பிரசாஉரிமைச் சட்டமானது ஆண் ஒருவர் வெளி நாட்டவரைத் திருமணஞ் செய்யும் போது தொடர்ந்து இலங்கையராக இருக்கக் கூடிய தகுதியையும் பெண் ஒருவர் வெளிநாட்டவரைத் திருமணஞ் செய்யும் போது இலங்கையர் எனும் தகுதியை இழக்கும் சூழ்நிலையும் எற்படுத்துகின்றது.
இலங்கைச் சட்டவாக்கமானது கண்டிச் சிங்களவர், யாழ்ப்பாணத் தவர், முஸ்லிம்கள் ஆகியோருக்கு தமது பண்பாட்டின் வழமைகளைப் பின்பற்றும் உரிமையை வழங்கியுள்ளது. அதனால் இலங்கை முழுவதற்கு மான ஒரு சட்டம் என்ற விடயத்தில் பல சிக்கல்கள் உள்ளன. இவ்வாறான தொரு நிலைமை பெண்களின் சூழ்நிலைகளில் பிரச்சினைகளை ஏற்படுத்து கின்றது. ஒரு பெண் தான் மணந்து கொள்ளும் ஆணின் சமூகத்தில் வழமை யைப் பின்பற்ற வேண்டியவளாக உள்ளாள். உதாரணமாக யாழ்ப்பான சமூகத்தைச் சேராத ஒரு பெண் யாழ்ப்பாணத்து ஆணைத் திருமணஞ் செய்யும் போது தேச வழமைச் சட்டம் அவளுக்குரியதாகின்றது.
அரசுதவிர ஏனைய சட்டத்துடன் தொடர்புடைய நிறுவனங்களும் இவ்வாறான கருத்தியலை வெளிப்படுத்துவதை இவ்விடயத்தில் அவதானிக்க லாம். தேசவழமைச் சட்டத்தில் அல்லது கண்டியச் சட்டத்தில் விடயங்கள் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கும் முறையில் வியாக்கியானப்படுகின்றன. ஏனெனில் பொதுச் சட்டத்தில் உள்ள விடயங்களைக் கணக்கில் எடுப்பதா என்னும் பிரச்சினையில், நீதிபதி பொதுச் சட்டத்தைக் கவனத்தில் எடுக்கும் வாய்ப் பிருப்பினும் நடைமுறையில் அவர்கள் வழமைச்சட்டம் சார்ந்த தீர்ப்புகளை வழங்குகின்றனர்.
உதாரணமாக தேசவழமைச் சட்டத்திற்கிணங்க ஒரு யாழ்ப்பாணத்து தமிழ்ப்பெண் தன் கணவனின் ஒப்புதலின்றிக் கொடுக்கல் வாங்கல் செய்ய முடியாதென்ற அபிப்பிராயத்தை வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் ஏற்படுத்தி யுள்ளதை அவதானிக்கலாம். பொதுச் சட்டத்திற்கிணங்க அப்பெண் அவ்வாறு
28

செய்யமுடியும் எனினும் நீதிபதிகள் இதனைத் தெரிவுக் கொள்கையாகப் பயன்படுத்தவில்லை.
இவ்விடயத்தில் சட்டவாக்கத்திலும் நடைமுறையிலும் பிரச்சினைகள் எழுகின்றன. இவ்விருநிலைமைகளிலும் தந்தைவழிச் சமூகத்தின் கருத்தியல் வெளிப்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இதைவிட ஒரு முஸ்லீம் அல்லாதவர் முஸ்லீம் அல்லாத பெண்ணை மணந்ததன் பின்னால் முஸ்லீ மாக மாறினால் அப்பெண்ணும் முஸ்லீம்களுடைய சட்டத்தைப் பின்பற்ற வேண்டியுள்ளது. அதுபோல சட்டத்தில் பல இடங்களில் குடும்பத்தின் தலை மைப் பொறுப்பு இன்னமும் ஆண்களுக்குரியதாகவே வரையறுக்கப்படுகின் றது. பெற்றார் பிள்ளைகள் உறவுபற்றிய உரோமன் டச்சுச் சட்டத்திற்கு உட் படுகிறது. இங்கு தந்தைக்கு முதலிடம் வழங்கும் போக்கு காணப்படுகின்றது.
சட்டத்திற்குப் புறம்பாக பிறந்த பிள்ளைகளுக்கும் தனியாகவுள்ள பெண்ணுக்கும் உரோமன் டச்சுச் சட்டம் பல கட்டுப்பாடுகளை விதிக்கின்றது. மேலும் கணவனை இழந்த பெண்களிற் பெற்றாரிற்குரிய உரிமைகளைச் சட்டம் மறுக்கின்றது. யுத்தத்தினால் ஆண்கள் இறப்பது, காணாமல்போவது, பிறநாடுகளிற்குச் செல்வது போன்ற பல காரணங்களினாலும் கணவன் மனைவியையும் பிள்ளைகளையும் கைவிட்டுச் செல்வதினாலும் பெண்கள் குடும்பத் தலைமைத்துவத்தை எடுத்துவரும் போக்கு அதிகரித்துவரினும் சட்டத்தில் இவ்விடயம் மாறப் பெறாமல் உள்ளது.
வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்துக்குட்பட்ட ஒரு வீட்டில் குடியிருந்த கணவனால் கைவிடப்பட்ட மனைவி தாம் கணவன் மனைவியாக வாழ்ந்த வீட்டில் தொடர்ந்து குடியிருக்கும் உரிமையை பெண் இழக்கின்றாள்.
1972ஆம் ஆண்டு காணிச் சீர்திருத்தச் சட்டத்திற்கமைய காணி உடைமைக்கு உச்சவரம்பு விதிக்கப்பட்ட போது கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் சொந்தமான காணிகளும் ஒரே அலகாகவே கணிக்கப்பட்டது. அவ்வாறு உடமைக்கு உச்சவரம்பு விதிக்கும் கொள்கை மூலமாகக் காணி களைப் பகிர்ந்தளிப்பதைத் தூண்டியபோது உச்சவரம்பு வரை காணியை முற்றாகக் கணவனே வைத்திருக்க இடமளிக்கப்பட்டதால் பெண்களுடைய உரிமைதானாக இழக்கப்பட்டது.
இலங்கைச் சட்டத்திற்கிணங்கக் கருகலைப்புச் செய்வது குற்றமாகக் கருதப்படுகின்றது. பாலியல் வன்முறையினால் அல்லது தகாத பாலியல் உறவினால் உருவாக்கப்பட்ட கரு எனும் சந்தர்ப்பத்தில்கூட கருக்கலைப் பிற்கு சட்டத்தில் இடமில்லை. தாயினுடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக மட்டும் கருக்கலைப்பு செய்ய இடமுண்டு. கருக்கலைப்புத் தொடர்பான சட்டத் திருத்தங்கள் முஸ்லிம்களிடமிருந்தும் கிறிஸ்தவர்களிடமிருந்தும் வரும் எதிர்ப்பினால் மேற்கொள்ளப்படாதிருக்கின்றன.
சமசம்பள முறைமை அறிமுகப்படுத்தப்பட்டாலும் பெண்களுடைய வேலையின் தன்மை காரன்மாக அவர்கள் ஆண்களைவிடக் குறைவான சம்பளம் எடுக்கின்றனர். இலங்கையில் பால்நிலை பாரபட்சத்திற்கு எதிரான சட்டமானது தனியார் தொழில் நிறுவனங்களிற்குச் செல்லுபடியாகாதது. இவ்வாறானதொரு நிலையில் தந்தைவழி சமுகத்திற்கான வரைவிலக்கண மானது முதலாளித்துவத்துடன் இணைத்துச் சிந்திக்கப்பட வேண்டிய தொன்றாகின்றது. கணவனால் புரியப்பட்ட பாலியல்வன்முறைக்கு இலங்கைச்
சட்டத்தில் இடமில்லை.
29

Page 21
முஸ்லீம்களின் சட்டத்திற்கமைய (ஷாஃபி) மணமகளின் ஒப்புதல் திருமணத்திற்குத் தேவையில்லை மாறாக பாதுகாவலரின் ஒப்புதல் தேவைப் படுகின்றது.
பாலியல் வன்முறையை நிரூபிப்பதற்கான சாட்சியை பெண்களே தேடவேண்டியவர்களாக உள்ளனர்.
உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் மைனர் பிள்ளைகளின் வருமானங் களையும் ஆதனங்களையும் தந்தைக்குரியவையாகக் கணிக்க இடமுண்டு. அதுபோல் திருமணமான பெண் பராயமடையாத தனது பிள்ளைக்காக வழக்குத் தாக்கல் செய்ய முடியாதுள்ளது. முஸ்லிம்களுடைய தனியார் சட்டத்தின் கீழ் பரம்பரைச்சொத்து, சொத்துரிமை ஆகிய விடயங்களில் பெண்கள் பாரபட்சமாக நடாத்தப்படுகின்றனர் என்ற கருத்தை முஸ்லிம் பெண்கள் அமைப்புக்கள் சுட்டிக் காட்டியுள்ளன. அத்துடன் முஸ்லிம் பெண் ஒருவள் தனது கணவர் சட்டபூர்வமாகப் பல பெண்களைத் திருமணம் செய்வதை சகித்துக் கொள்ளவேண்டியுள்ளது. இவ்வாறு பல விடயங்களில் முஸ்லீம் பெண்களின் சட்டரீதியான அந்தஸ்து குறைந்த ஒரு நிலையில் உள்ளது.
நீதிமன்ற வழக்குகளில் பாலியல் வன்முறைக்கு பெண்கள் சரியாக உடையணியாமல் விடுவதே காரணம் என்ற கருத்துப்பட நீதிபதிகளே தீர்ப்புக் கூறும் சந்தர்ப்பங்களின் போது எடுத்துரைத்துள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது. இப்படிப் பல விடயங்களில் இலங்கையின் சட்டவாக்க மும் நீதித்துறையும் ஒரு தந்தைவழிச் சமூகத்திற்குரிய கருத்தியலை வெளிப்படுத்து வதை அவதானிக்கலாம்.
பெண்நிலைசார்ந்த சட்ட நடைமுறைகள் ஏற்படுத்துவதில் பெண்கள் நிறுவனங்கள் காட்டும் அக்கறை
பெண்கள் தமது உரிமைகளுக்குச் சட்டப்பாதுகாப்பைப் பெறுவதற்கு வழக்குரைஞரின் உதவியைப் பெறும் வசதி அத்தியாவசியம், வன்முறைச் செயல்களிற்கு ஆளாகும் பெண்களில் பலர் வறியவர்களாக இருப்பதால் சட்ட வசதியைப் பெறமுடிவதில்லை. அத்துடன் சட்ட நடைமுறைகள் பல ஆண்டுகள் நீண்டு செல்வது சட்ட நிவாரணம் பெறும் சந்தர்ப்பத்திற்கு தடையாக உள்ளது. நிவாரணம் கிடைத்தாலும் உரிய பலாபலன்கள் கிடைப் பதில்லை. இலங்கையில் சில பெண்கள் அமைப்புக்கள் அக்கறை காட்டியுள் ளன. (WIN) Women in Need எனும் நிறுவனம் 1987இல் வன்முறைக்கு உட்படும் பெண்களுக்கு உதவுவதை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப் பட்டது. பெண்களிற்கு ஆலோசனை கூறுதல், பாதுகாப்புக் கொடுத்தல் ஆகியவற்றை செய்து வருகின்றது.
1986ஆம் ஆண்டில் கண்டியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பெண்கள் அபிவிருத்தி நிலையம் பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை ஆகியவற் றிற்கு ஆளாகுபவர்களிற்கு உதவியும் பராமரிப்பும் வழங்குகின்றது. 1992இல்
30

ஆரம்பிக்கப்பட்ட குடும்ப சேவை நிலையம் சமுகப் பொருளாதார உதவி யையும் பாலியல் வன்முறைக்காளானோரிற்கு உளநல சிகிச்சை தேவைப் படுமிடத்து அவற்றை வழங்குகிறது. சட்ட அறிவை வளர்ப்பதற்கான திட்டம் ஒன்றை இலங்கைப் பெண் வழக்குரைஞர்கள் சங்கம் 1986இல் ஆரம்பித்தது. பெண்கள் ஆராய்ச்சி நிலையமும் இவ்வகை பெண் வழக்குரைஞர் சங்கமும் இணைந்து பெண்களிடையே சட்ட அறிவை வளர்க்கும் திட்டம் ஒன்றை 1987இல் ஆரம்பித்தனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான வழக்குரைஞர், சர்வோதய இயக்கம் ஆகியவை இலவச சட்ட ஆலோசனையை வழங்குகின்றன. அண்மைக்காலத்தில் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் ஒரு பயிற்சித்திட்டம் ஒன்றை நடாத்தியது. அரசு நிதியுதவி வழங்கும் சட்ட உதவிக் கமிஷன் சிறு அளவில் சட்ட உதவி வழங்குகின்றது. பெண்கள் பணியகமும் சிறு அளவில் உதவித் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. பெண்கள் தொடர்பு சாதன கூட்டமைப்பு பெண்கள் உரிமைகள் கண்காணிப்பு எனும் கருத்தில் பெண்களிற்கு எதிரான வன்முறை களை ஆவணப்படுத்தி வருகிறது. பெண் வழக்கறிஞர்கள், பெண்நிலைவாதி கள், பெண் பத்திரிகையாளர்கள் எனப்பலர் அக்கறை காட்டி வருகின்றனர். இவ்வாறு சட்ட உதவி வழங்கல், உளநலசிகிச்சை அளித்தல் எனும் பல்வேறு செயற்பாடுகளை பெண்கள் நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆற்றி வருகின்றன. எனினும் இத்தகைய உதவிகள் எமது பிரதேசங்களை வந்தடைவது குறைவாகவே உள்ளன. அத்தகையதொரு செயற்பாட்டில் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் சிறிய அளவில் ஈடுபட்டு வருகின்றது.
சூ.பெ.அ.தி. அனுபவம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் சட்டம் தொடர்பாக எதிர்நோக்கும் சில பிரச்சினைகளை இங்கு உதாரணங்களினுடாக எடுத்தா ராய்வது இங்கு பொருத்தமானதாக இருக்கும். இவை சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் அனுபவத்தினூடாக பிரச்சினைகளாக உணரப் பட்டவையாகும்.
சூ.பெ.ஆ.தி. சட்ட உதவித்திட்டத்தினை 97ஆம் ஆண்டிலிருந்து அமுல்படுத்தி வருகின்றது. சட்டத்தின் உதவியுடன் சட்டம் சம்பந்தமான ஆலோசனைகளை வழங்குதல், உடனடிப் பொருளாதார உதவிகளை வழங்கல், பொலிஸில் முறைப்பாடு செய்ய உதவுதல், அவசர தேவையின் போது தங்குமிட வசதிகளை ஏற்படுத்தல், அவசர தேவையின் போது உளநல சிகிச்சைக்கான ஏற்பாடு செய்தல், பொது வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டு மருத்துவ உதவிகளை வழங்குவதற்கான ஆவன செய்தல், நீதிமன்ற குடும்ப ஆலோசனைக் குழுவுடன் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறல், தகவல்களை ஆவணப்படுத்தல், சட்ட சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்பாடு செய்தல் போன்றவை சட்ட உதவித்திட்டத்தின் செயற்பாடுகளாகும். பெண்கள் விரும்பும் பட்சத்தில் இவ்வுதவிகள் மேற் கொள்ளப்படுகின்றன. கடந்த காலங்களுடன். ஒப்பிடும் போது தற்போது பெண்கள் தாமே முன்வந்து உதவிநாடி முறைப்பாடு செய்து வழக்குத் தாக்கல் செய்யும் போக்கு காணப்படுகின்றதாயினும் இவ்வுதவிகளை நடாத்தியிருப்போர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. உதவியை நாடியோரில் பலர் வழக்குத் தாக்கல் செய்யவில்லை. உதவி நாடுவதாலும்
3

Page 22
வழக்குத் தாக்கல் செய்வதாலும் ஏற்படும் அச்சுறுத்தல், பய உணர்வு, நம்பிக்கையீனம் என்பன இவற்றிற்குச் சில காரணங்களாகும். தவிர வன் முறைகள், பாலியல் வன்முறைகள் என்பன தனிப்பட்ட வாழ்வுடன் தொடர்புடைய விடயங்களாகக் கருதப்படுகின்றன. இவ்வாறான கருத்தியலில் இருந்து விடுபடுவதற்கான விழுமிய மாற்றம் சமூகத்தில் ஏற்படாமையும் இவற்றிற்குத் தடையாக உள்ளன. வன்முறைகள் தொடர்பாக, தனிப்பட்ட நிலைமை ஆகிய இரண்டு தளங்களிற்கிடையேயான முரண்பட்ட நிலைமை பிரச்சினைக்குரியதொன்றாகக் காணப்படுகின்றது.
97, 98, 99 என்ற மூன்றாண்டு காலப்பகுதியில் 55 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இனப்பிரச்சினை காரணமாக எழுந்த போர்ச் சூழலில் ஆயுத பலமுடையவர்கள் பெண்களை வன்முறைக்குட்படுத்தக் கூடிய சூழல் இலகு வாக்கப்படுவதுடன் அவ்வாறான அதிகாரம் காரணமாக தீர்வுகள் காண்ப தற்கான சந்தர்ப்பங்கள் முற்றுமுழுதாக அடைக்கப்பட்டு விடுகின்றன. இவ்வா றான போர்ச் சூழலில் ஆயுத பலத்திற்கெதிராக போராடக்கூடிய உத்திகள் தேவையானவையாக உள்ளன. குறிப்பாக அச்சுறுத்தல் என்பதும் சாட்சிகள் தேவையாக இருத்தல் என்பதும் போர்ச் சூழலில் பிரச்சினைகளாக உள்ளன.
மட்டக்களப்புச் சூழலில் கிராமங்களில் திருமணம் செய்த ஆண்கள் அவ்விடயத்தை மறைத்து மீண்டும் மீண்டும் திருமணம் செய்யும் போக்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இவ்வாறு திருமணம் செய்தவர்களை ஒருவிதமான கொடுப்பனவும் செய்யாது கைவிட்டுச் செல்கின்றனர். பாதிக்கப் பட்ட பெண்கள் விவாகரத்திற்காகவும் தாபரிப்பிற்காகவும் நீதிமன்றத்துக்கு அலைய வேண்டியதாக உள்ளது. தவிர இவ்வாறான வழக்குகள் குடும்ப வன்முறையுடன் இணைந்தனவாகக் காணப்படுகின்றன.
குடும்ப வன்முறை தொடர்பான தெளிவான விளக்கம் எமது சட்டத்தில் இல்லாதுள்ளது. பெண்கள் குடும்ப வன்முறை தொடர்பாக உடனடி நிவாரணங்கள் பலவற்றை வேண்டியுள்ளனர். அதற்கான வழிமுறை கள் சட்டத்தில் இல்லை. உதாரணமாக வன்முறைக்குட்படுத்தப்பட்டவரின் வன்முறைக்கான சூழலை மாற்றியமைப்பதற்கான வழிவகைகள் குறைவாக உள்ளன. குறிப்பாக வன்முறைச் சூழலில் இருந்து குழந்தைகளை அப்புறப் படுத்த முடியாதுள்ளது.
தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் 29 வழக்குகள் தாபரிப்பு வழக்குகள், மூன்று வழக்குகள் விவாகரத்து வழக்குகள், நான்கு வழக்குகள் சிறுவர் பாலியல் வன்முறை வழக்குகள், மூன்று வழக்குகள் கொலை வழக்குகள், நான்கு கொலை முயற்சி வழக்குகள் ஆறு பாலியல் வன்முறை வழக்குகள்.
எண்ணிக்கையின் அடிப்படையில் தாபரிப்பு வழக்குகளே கூடுதலாகத் தாக்கல் செய்யப்படுகின்றன. தாபரிப்புத் தொடர்பாக இருக்கின்ற வாதப்பிரதி வாதங்களை இவ்விடத்தில் கருத்தில் எடுப்பது எமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தினடிப்படையில் முடியாது உள்ளது. இருக்கின்ற சமூக நிலைமையின் தன்மை, கல்வியறிவின்மை, நிரந்தர வருமானமின்மை, குறைந்த வயதில் திருமணம் செய்தல் ஆகிய காரணங்களினால் கணவனால் கைவிடப்படும் போது தாபரிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. திருமணங்கள் கிராமப்புறங்களில் பதிவுத் திருமணமாக நடைபெறாததால் திருமணத்தின் சட்டபூர்வத் தன்மையை நிரூபிப்பது கடினமாக உள்ளது. தாப்ரிப்பு. விவாக ரத்து வழக்குகளில் இது ஒரு பிரச்சினையாக எழுகின்றது. மேலும் நீதிமன்
32

றத்தினால் பிறப்பிக்கப்படும் பிடியாணையை வழக்குத் தாக்கல் செய்த பெண்ணிடம் கொடுத்து விடுகின்றனர். இவ்வாறு சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பிடியாணையைக் கொடுத்துவிடுவதால் பல பிரச்சினைகளை அவர்கள் எதிர் நோக்குகின்றனர்.
நீதிமன்றத்தினால் தீர்க்கப்படும் தாபரிப்புப் பணத்தின் தொகையும் போதுமானதாக இல்லை. பொதுவாகப் பிள்ளைக்கு 300/- எனும் வகையி லேயே தீர்ப்பு வழங்கப்படுகின்றது. வழக்குகள் பொதுவாக இழுபறிப்படுவ துண்டு. இதனால் பெண்கள் வருடக்கணக்காக நீதிமன்றத்துக்கு அலைய வேண்டியநிலை ஏற்படுகின்றது. அவை தாபரிப்பு தொடர்பாக இருக்கின்ற ஒரு சில பிரச்சினைகளாகும்.
மேலும் வன்முறைகள், பாலியல்வன்முறை, கொலை போன்ற வழக்குகளில் குற்றஞ் சாட்டப்பட்டவர்களை பிணையில்விடும் வழமை காணப் படுகின்றது. இவ்வாறு பிணையில் விடுவிப்பதால் முறைப்பாடு செய்தவர்களும் சாட்சியம் அளித்தவர்களும் அச்சுறுத்தப்படுகின்றனர். கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மூன்று மாதப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நான்கு வயதுச் சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய தகப்பனார் நான்கு மாதங்களில் விடுதலை செய்யப்பட்டதுடன் சிறுமி இப்போது அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். படையினரால் புரியப்பட்ட பாலியல் வன்முறை வழக்கில் அடையாள அணிவகுப்பில் பிரச்சினை மூடிமறைக்கப்பட்டுள்ளது. அதிருப்தி தெரிவிக்கப்படுகின்றது. குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் வழங்கப் பட்டதால் பல வழக்குகள் தாக்கல் செய்யப்படாது விடப்பட்டுள்ளன. ஒரு வழக்கில் வன்முறைக்குட்பட்ட பெண்ணின் சகோதரன் காரணமின்றி கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் ஒரு சில தாபரிப்பு வழக்கு களைத் தவிர ஏனைய வழக்குகள் யாவும் தீர்ப்பு வழங்கப்படாமல் இழுபறிப் படும் நிலையில் உள்ளன. இவ்வாறான காரணங்களினால் பெண்கள் சட்ட நடவடிக்கை தொடர்பாக நம்பிக்கையினம் கொண்டுள்ளனர்.
பெண்நிலை நோக்கில் சட்டங்களைத் திருத்த முடியாதுள்ளமை, சட்ட அமுலாக்கல் நிலைமைகளை உடனடியாக ஏற்படுத்த முடியாதிருப்ப தால், பெண்நிலை நோக்குடனான வழக்கறிஞர் இன்மை, இனப்பிரச்சினை, சமூகவிழுமியங்களில் மாற்றம் ஏற்படாமை ஆகியவை இவ்வாறான இழுபறி நிலைக்கும் நம்பிக்கையினத்திற்கும் பிரதான காரணங்களாகும்.
நைரோபி முன் நோக்கும் யுத்திகளில் இலங்கை அரசு கையெழுத் திட்டதின் பிரகாரம் பெண்கள் தொடர்பான சட்டங்களை ஏற்படுத்துதல், அமுலாக்கல் சட்டத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் மாற்றங்களை ஏற்படுத்துதல், காப்பகத்தினை உருவாக்குதல், உளநல சிகிச்சை ஆலோசனை வழங்குதல் போன்றவற்றை மேற்கொள்ள அரசு கடப்பட்டுள்ள தாயினும் அவ்வாறாக எதுவும் நடைபெறுவதில்லை. பெண்கள் நிறுவனங் களே அத்தகைய வசதிகளைச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. இத்திட்டங்கள் ஆரம்பநிலையில் இருப்பதால் உடனடியாக கூடுதல் செயற் பாடுகளை ஆற்றமுடியாதுள்ளது. பெண்நிலை நோக்குடைய சட்டத்தரணிகள் உளநலச் சிகிச்சையாளர்கள், எமது பிரதேசங்களில் இல்லாமை என்பது நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளாகும்.
33

Page 23
фрцp6lроорт
சட்டத்தினைத் திருத்துதல் சட்ட அமுலாக்க நடைமுறைகளை திருத்துதல், சட்டம் தொடர்பான விழிப்புணர்வை பெண்கள் மத்தியில் ஏற்படுத்துதல், சமூக விழுமியங்களில் மாற்றங்களை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களில் பெண்கள் நிறுவனங்களினூடாக பெண்நிலைச் சிந்தனையின் தாக்கமும் செயல்வாதமும் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் நேர்நிலை யாக ஏற்பட்டுவரினும் பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைக் கருத்திற் கொள்ளும் போது பெண்கள் நிறுவனங்கள் பெண்நிலை இயக்கம் என்பன அணுக வேண்டிய பிரச்சினைகள் இன்னும் பலவாக உள்ளன. அவற்றைப் பெண்கள நிறுவனங்கள் எதிர்காலத் திட்டமிடலில் சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
உடனடிச் செயற்பாடுகளிற்கான சில கருத்துக்கள்
வழக்குகள் தாக்கல் செய்வதில், நடாத்துவதில், தீர்ப்புக்கள் வழங்கு வதில் தாமதத்தைத் தவிர்ப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்தல். சர்வதேச சட்டங்களை சட்டமூலமாகத் தயாரித்தல் '' ..
பால்நிலைப் பாரபட்சத்தை வெளிப்படுத்தும் சட்டங்களை மாற்றிய மைத்தல்.
சட்டத்தை அமுல்படுத்தும் நீதிபதிகள், பொலிஸ் போன்ற நிறுவனங் களை பெண்ணிலை நோக்கில் வளர்த்தெடுத்தல்.
• பெண்களிற்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தல் காப்பகம் போன்ற வற்றை அரசு நிதிப்படுத்தி முறைமையாக்குதல்.
9 பெண்களிற்கெதிரான வன்முறையை பாரதூரமான பிரச்சினையாகவும் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினையாகவும் எல்லா மட்டங்களிலும் இனம்காணல்.
O வன்முறைச் சூழலில் இருந்து பாதிக்கப்பட் பெண் வெளி யேறுவதற் கான சட்டநடைமுறைகளைச் சட்டத்திலும் நடைமுறையிலும் ஏற்படுத்தல் அவ்வாறான சந்தர்ப்பத்திற்கும் நட்டஈட்டிற்கும் சிவில் சட்டத் தில் இடமளிக்கும் அதேவேளை குற்றவியல் சட்டத்தை குடும்ப வன்முறை தொடர்பாகவும் ஏற்படுத்தல். Ο
உசாத்துணை நூல்கள்
1. Savitri Gunesekera Realising Gender Equality Through Law:
Sri Lanka's Experience in the Post Nairobi Decade in Facts of Charge Women in Sri Lanka 1986-1995, CENWOR July 1995.
2. Kumudini Samuvel, Women's Rights Watch year Report 1999,
The Women and Media Collective 999.
3. Article 15, Equality before the Law and civil matters, Sri Lanka Shadow Report on the UN Convention on the Elimination of AU Forms of Discrimination against women Sri Lanka Women’s NGO Forum 1999.
4. Article 16, Equality in Marriage and Family Law. SriLanka Shadow
Report on the UN Congention on the Elimination of AU forms of Discri mination against Women, Sri Lanka Women NGO Forum 1999.
34

சாவித்திரி குணசேகர ஐ.நாவின் பெண்கள் தசாப்தம் இலங்கைப் பெண்களின் சட்டபூர்வ அந்தஸ்தில் ஏற்படுத்திய தாக்கம். பெண்களுக் கான ஐக்கியநாடுகள் தசாப்தம் இலங்கையிலுள்ள பெண்களின்முன்னேற் றமும் சாதனைகளும் பெண்களுக்கான ஆராய்ச்சி நிலையம் 1985.
பெண்களுக்கான சட்டவியல் பகுதி 1, பகுதி 2 விளக்கம், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்.
Women and the law, Report of a Workshop held in 1990 CENWOR series No. 23.
Creating legal Awareness among Women Report of a Workshop held in 1988 SerieS NO. 9 CEN WOR.
35

Page 24
இலங்கை முஸ்லிம் சட்டங்களும் பெண்ணுரிமை விவாதங்களும்
சுல்பிகா ஆதம்
இலங்கை முஸ்லிம் சட்டம் தொடர்பான விடயத்திற்குச் செல்வதற்கு முன் ‘முஸ்லிம் சட்டம்” என நான் வரையறுப்பதற்கான காரணத்தையும் “இஸ்லாமிய சட்டம்” என்பதை நான் 'முஸ்லிம் சட்டம்” என்பதிலிருந்து எவ்வாறு வேறுபடுத்திக் காண்கிறேன் என்பதையும் இங்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியமுள்ளது.
தொடர்ச்சியாக எனது கட்டுரையில் முஸ்லிம் சட்டம் என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. அதாவது முஸ்லிம் சட்டம் என்பது இஸ்லாம் சமயத் தைப் பின்பற்றுகின்ற முஸ்லிம் மக்களினால் உருவாக்கப்பட்டுள்ள சட்ட ஏற் பாடுகளைக் குறிப்பிடுகின்றது. சமய நியமங்களுடன் இணைந்து இம்மக் களின் ஆட்சியான கருத்தியல்கள், வழக்கு, சம்பிரதாயம், நியமங்கள் போன் றனவும் இச்சட்டத்தில் பங்களிப்புச் செய்கின்றன. இதனாலேயே இம்முஸ்லிம் சட்டங்கள் இடத்திற்கிடம் வேறுபடுகின்றன.
மறுதலையாக இஸ்லாமிய சட்டம் என்பது குர்ஆனை அடிப்படை யாகக் கொண்ட சட்ட ஏற்பாடுகளாகும். இவை நீதி, கருணை, பின்னணி ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த குர்ஆனிய சட்டங்களாகும். எனவே முஸ்லிம் சட்டங்களும் இஸ்லாமியச் சட்டங்களும் ஒரே மாதிரியாக அமை யாமல் இருப்பதை நாம் காணலாம். இஸ்லாமியச் சட்டங்கள் மாற்ற முடியா தவை. குர்ஆனில் அல்லாஹற்வினால் எடுத்துரைக்கப்பட்டவை.
இலங்கையில் குடும்ப விவகாரங்கள் தொடர்பாக இரு வகையான சட்டங்கள் காணப்படுகின்றன.
1. பொதுச் சட்ட ஏற்பாடுகள்
2. தனியாள் சட்ட மூலங்கள்
பொது சட்டத்திலுள்ள குடும்பம் விடயங்கள் தொடர்பான ஏற்பாடு களை, தனியாள் சட்ட மூலங்களுக்குள் அடங்காத குழுக்கள் மாத்திரமே பயன்படுத்தமுடியும். அதாவது தனியாள் சட்டமூலங்கள் குறித்த குழுக் களுக்காக வரையப்பட்டனவாகும். உதாரணமாக கண்டியச் சட்டமூலம் கண்டியச் சிங்களவர்களுக்காகவும் முஸ்லிம் தனியாள் சட்டமூலம் இலங்கை முஸ்லிம்களுக்காகவும் தேசவழமைச் சட்ட மூலம் யாழ்ப்பாண பாரம்பரிய இலங்கைத் தமிழர்களுக்காகவும் உருவாக்கப்பட்டதாகும். இக்குழுக்களைத் தவிர்ந்த ஏனையோர் பொதுச்சட்ட ஏற்பாடுகளைப் பயன்படுத்த முடியும்.
இலங்கையில் தனியாள் சட்ட மூலங்கள் யாவும் பின்வரும் அம்சங் களின் அடிப்படையில் அமைந்தவையாகும்.
36

(அ) சமய விடயங்கள் / கட்டளைகள் (ஆ) நீண்டகால வழக்குகள் / பழக்க வழக்கங்கள் (இ) சம்பிரதாயங்கள், பண்பாடுகள், விழுமியங்கள்.
இஸ்லாம் மதத்தினை பின்பற்றுபவர்கள் குடும்ப விவகாரங்களுக்காக முஸ்லிம் தனியாள் சட்ட மூலத்தினால் ஆளப்படுகின்றனர். இலங்கைச் சட்ட வழக்கின் பிரகாரம், தனியாள் சட்டமூலங்கள், பொது சட்ட ஏற்பாடுகளை மீறிச் செயற்படும் அதிகாரம் கொண்டவையாகும்.
இலங்கை முஸ்லிம் தளியாள் சட்டமூலம் பிரதானமாக பின்வரும் குடும்ப விவகாரங்களை உள்ளடக்குகின்றது.
1. திருமணம்
(அ) திருமண வயது
(ஆ) பாதுகாவலர் / பாதுகாப்புரிமை (இ) பாதுகாவலரின் விருப்பு (ஈ) திருமணம் தொடர்பாகதடை செய்யப்பட்ட விடயங்கள்.
1. எண்ணிக்கை 2. வயது 3. தடை செய்யப்பட்டவர்கள் 4. ஏனைய
(உ) திருமணப் பதிவு
(ஊ) திருமண அறிவித்தல்
(61) பதிவுக்குரிய கையொப்பதாரர்களும் பதிவுப் பத்திர
விடயங்களும்
2. விவாகரத்து
விவாகரத்து அடிப்படைகள் ({9ھ)
(ஆ) விவாகரத்து வகைகள்
(@) விவாகரத்துச் செயன்முறைகள்
(FF) விவாகரத்தின்போது கணக்குத்தீர்த்தலும் திருமணத்தினைக் கலைத்தலும்
3. பராமரிப்பு
(9) மனைவிக்கான பராமரிப்பு (ஆ) பிள்ளைகளுக்கான பராமரிப்பு
(g) விவாகரத்தின் போது பராமரிப்பு
(FF) பிள்ளையின் பாதுகாப்பும் பாதுகாப்புரிமையும்
4. வாரிசுரிமை
(அ) வாரிசுரிமைக்கான ஏற்பாடுகள் (ஆ) முதுசத்தில் ஆண், பெண்ணுக்குள்ள பங்கு
இணைப்பு 1 இலுள்ள அட்டவணை இலங்கை முஸ்லிம் விவாகம், விவாகரத்து சட்டத்தி லுள்ள ஏற்பாடுகளினதும் பொதுச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளினதும் ஒப்பீட்டைக் காட்டுகின்றது. இச்சட்ட வாய்ப்புக்களை பயன்படுத்துவதில் பின்வரும் பிரச்சினைகள் இனங்காணப்படுகின்றன.
37.

Page 25
1. சட்டமில்லாமை 2. சட்ட நடைமுறைக்கான நுட்பங்கள் (கட்டாயநிலை - தண்டனை பதிவுகள் பற்றிய எழுத்துமூல ஆதாரங்களின்மை) இல்லாமை. 3. அநீதியான சட்டங்கள் உள்ளமை அவை குர்ஆனிய சட்டங்களுக்கு முற்றிலும் முரணாயிருக்கின்றமை. 4. பக்க சார்பான விளக்கவுரைகள் காணப்படுகின்றமை. 5. சடடச் செயன்முறைக்கூடாகச் செல்வதிலுள்ள சிக்கல்கள்.
பின்வரும் விடயங்கள் தொடர்பாகவே இப்பிரச்சினைகள் எழுகின்றன.
திருமணத்தின் போது வயது. பாதுகாவலரின் சம்மதம்.
பெண்ணின் சம்மதம். பலதார மணத்திற்கான நிபந்தனைகள் திருமணம். விவாகரத்து - நிபந்தனைகள்
மஹர் - வெகுமதி
பராமரிப்பு நஷ்டஈடும்
வாரிசுரிமை
முஸ்லிம் விவாகம், விவாகரத்து சட்ட மூலத்திலுள்ள ஏற்பாடுகளும் அது தொடர்பான பெண்ணுரிமை விவாதங்களும்
தனியாள் சட்டமூலங்களில் சில சமய அடிப்படைகளைக் கொண் டன. இதனைக் காரணமாகக் காட்டி சட்டமூலத்திலுள்ள நீதியற்ற விடயங் களைக் கூட, சமயத்திற்குப் புறம்பான அல்லது எதிராகவே குறிப்பிடுகின்ற விடயங்களைக் கூடக் கேள்விக்குட்படுத்த முடியாத நிலையுண்டு எனினும் குடும்ப விடயங்களில் ஏற்படும் பிரச்சினைகளையே அதிகம் பாதிப்புக்குட் படுத்துவதால் நடைமுறையில் பெண்களே அவற்றைக் கேள்விக்குட்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகியுள்ளனர்.
இலங்கை முஸ்லிம் தனியாள் சட்டமூலத்திலுள்ள ஏற்பாடுகளிலுள்ள குறைபாடுகளையும் அதனை நிவர்த்தி செய்வதற்காக வேறுபல முஸ்லிம் நாடுகளில் இடம்பெற்றுள்ள குர் ஆனிய சட்ட அடிப்படையிலான முற்போக்கு சட்டங்கள் சிலவற்றையும் பார்ப்போம்.
(1) விவாகம்: (அ) திருமணத்தின் போது வயது:
1. முஸ்லிம் விவாகம், விவாகரத்துச் சட்டமூலத்தின் பிரகாரம் திருமணத்தின் போது பெண் பிள்ளை 12 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். ஆண்பிள்ளைக்கு வயதெல்லை இல்லை. மேலும் 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட பிள்ளையை பாதுகாவலர் விரும்புமிடத்து அப்பிரதேச காதியின் அனுமதியுடன திருமணம் முடித்துக் கொள்ளலாம்.
2. பொதுச் சட்டமும், சர்வதேச மனித உரிமை ஏற்பாடுகளும், 16 வயதினை சிறுவர் வயதெல்லையாகக் கணிப்பிடுகின்றது. எனவே இவ்விடயம் பால்ய திருமணம் என்ற விடயத்தின் கீழ் கேள்விக் குட்படுத்தப்பட வேண்டியுள்ளது. மேலும் முதிர்ச்சி வயது இலங்கை யின் எல்லாப் பிரஜைகளுக்கும் 18 ஆகும். அதற்கு கீழ்ப்பட்டோர்
38

3.
தீர்மானம் மேற்கொள்ள முடியாதவர்களா தலால் திருமணம் செய்யமுடியாது. ஆனால் முஸ்லிம் விவாகம், விவாகரத்து சட்டமூலத்தின் பிரகாரம், பால்ய 1 முதிர்ச்சி என்ற நிலையில்லை.
இலங்கையில் 12 வயதிற்குக் கீழ்பட்ட பெண் பிள்ளைகளின் திருமணமோ அல்லது ஆண் பிள்ளைகளின் மிகக் குறைந்த வயதுத் திருமணமோ பெருமளவில் இடம்பெறாத போதிலும் சட்டப் பாதுகாப்பின் கீழ் ஒருவருக்கு சிறுவர் உரிமைகளை மீறு வதற்கான சந்தர்ப்பத்தினையும் சட்ட துஷ்பிரயோகம் செய்வதற் கான சந்தர்ப்பத்தையும் வழங்குகின்றது. அவ்வாறான சம்பவங் கள் இடம் பெற்று உள்ளன.
மேலும் முஸ்லிம் விவாகம்.விவாகரத்து சட்டமூலத்தின் இவ்வேறு பாடு குறித்து முன்வைக்கப்படுகின்ற இஸ்லாமிய சட்ட அடிப் படையிலான வாதமும், நம்பகமானதும், தகுதியானதுமல்ல. குர்ஆன் கூறுகிறது. “வயது முதிர்ச்சியடைந்தவுடன் உங்கள் குழந்தை களை திருமணம் முடித்துக் கொடுங்கள்’. அதாவது முதிர்ச்சி வயது என்று இங்கு குறிப்பிடப்படுகின்றதே தவிர குறிப்பிட்ட வயது குறிப்பிடப்படவில்லை. அத்துடன் முதிர்ச்சி வயது என்பதற்கான விளக்கம், குடும்ப தாபனத்தினுள், ஓர் ஆண், அல்லது பெண், தமக்குரிய பல்வேறு பாத்திரங்கள், பொறுப்புக்களை ஏற்று நடாத்து வதற்காக முதிர்ச்சி எனக் கொள்ளப்படுவதே மிகப் பொருத்தமான தாகும். எனவே சுகாதார, உடல்நல, சமூக அறிவு முதிர்ச்சி நிலை களைக் கருத்திற் கொண்டதாக இவ்வயதெல்லை தீர்மானிக்கப் படலாம். என்பதையே இக்குர்ஆனிய வசனம் எடுத்துரைக்கின்றது என்பது வெள்ளிடை மலையாகும். இந்த விளக்கத்தின் அடிப்படை யில் அநேக முஸ்லிம் நாடுகள் சட்ட வாய்ப்புக்களை ஏற்படுத்தி யிருப்பதையும் காணலாம். ஆண், பெண் இருபாலாருக்கும் 18 வயது முதிர்ச்சி வயதாகக் கொள் ளப்படுகின்றது.
உதாரணம்: சவூதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான், மலேசியா,
பங்களாதேஷ். போன்றன.
(ஆ) பாதுகாவலரின் சம்மதம்:
1.
இலங்கை முஸ்லிம் சட்டப்படி எந்த வயதினராயினும் சரி எல்லா முஸ்லிம் பெண்களும் தமது பாதுகாவலரிடம் திருமணத்திற்கு முன் அனுமதி பெறல் வேண்டும். இங்கு வயது முதிர்ச்சி என்பது கருத்திற் கொள்ளப்படவில்லை. பாதுகாவலரின் சம்மதம் இல்லா விட்டால் திருமணம் சட்ட ரீதியானதல்ல. மேலும் தகுதியானதும் அல்ல. மேலும் ஆண் பாதுகாவலர் மட்டுமே ஏற்றுக் கொள்ளப் படும். அவர்கள் எந்த வயதினராகவும் இருக்கலாம். அதாவது திருமணம் முடிக்காத அல்லது விதவையான அல்லது விவாகரத்துப் பெற்ற எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் அதாவது பாதுகாவலர் எந்த வயதினராயினும் அவர் எந்த நிலையில் இருந்தாலும் அவருக்கும் கீழ்நிலை அந்தஸ்துடையவராகவே கணிக்கப்படுகின்றனர். இந்தச் சட்டப்படியான பாதுகாவலர், வயதில் இளையவராகவோ அல்லது ஒரு போதுமே பெண்ணைப் பராமரிக்காதவராகவோ அல்லது சமூக, பொருளாதார ரீதியாக குறித்த பெண்ணின் பராமரிப்பின் கீழ் உள்ள வராகவோ இருக்கவும் கூடும். சாபிர் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்
39

Page 26
கும் பாதுகாவலரின் சம்மதம் எந்நிலையிலும் கட்டாயம் ஆகும். ஹனபிர் பெண்களைப் பொறுத்தவரை கன்னித் தன்மையில்லாத அதாவது விதவை அல்லது விவாகரத்துப் பெற்றவர் போன்றவர் களுக்கு பாதுகாவலர் சம்மதம் அவசியமற்றதாகும். இங்கு சட்ட அடிப்படை இரு வேறுபட்ட நிலையிலுள்ளதைக் காணலாம்.
(இ) பெண்ணின் சம்மதம்:
1. இலங்கை முஸ்லிம் தனியாள் சட்டமூலம், திருமணச் சடங்கின்முன் மணமக ளின் சம்மதம் பெறப்படல் வேண்டும் எனக் குறிப்பிடுகின்ற போதி லும் சம்மதத்தினை உறுதிப்படுத்துகின்ற கையொப்பம் பெறப்படுதல் MMDAஇன் கீழ் அவசியமானது.எனக் கொள்ளப்பட வில்லை. பதிவுப்பத்திரத்தில் அதற்கான இடம் ஒதுக்கப்படவுமில்லை. இந்த விடயம் குறித்த குர்ஆனிய சட்டம் மிகத் தெளிவானது. ‘திருமணத் திற்கான சம்மதம் பெறப்படல் வேண்டும்.”சம்மதம் பெற்றுக் கொள்ளப்பட்டதற்கான சான்று எழுத்து மூலம் இருக்கும் போது மட்டுமே நம்பத்தகுந்த ஆதாரமாக அமையும் என்பது புத்திஜீவிகள் எவராலும் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றே யாகும். மேலும் குர்ஆன் திருமணம் என்பதை இரு தனி மனிதர்களிடை யிலான சமூக ஒப்பந்தம் என்று கூறி உள்ளது. இது ஒரு தலைப்பட் சமான முடிவாக அமைய முடியாது. இருவரின் இணக்கப்பாட்டின் பேரிலேயே ஒப்பந்தம் இடம்பெறல் வேண்டும். இணக்கப்பாட்டிற்கான ஆதாரமாக கையொப்பங்கள் கொள்ளப்படல் வேண்டும்.
2. தான் சம்பந்தப்படாத ஒப்பந்தம் ஒன்று பெண்ணின் மீது திணிக்கப் படுவதன் மூலம் பெண்ணின் உயிரியல் இருப்பு மறுக்கப்படுவதுடன் கண்ணியமும் புறக்கணிக்கப்படுவதாகவும் அமைகின்றது.
3. உலகில் பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் கையொப்பமிடுதல் சம்மதத்திற்கான கட்டாயமான சாட்சியாகக் கருதப்பட்டு பெறப்படு கின்றது. மேலும் ஈரான் போன்ற நாடுகளில் திருமணப்பதிவு (உடன் படிக்கை பத்திரம்) ஏறக்குறைய 17 பக்கங்களைக் கொண்டது. குடும்ப விடயம் தொடர்பான பல அம்சங்கள் அதில் உள்ளடக் கப்பட்டுள்ளன. குழந்தை பராமரிப்பு மனைவியின் பராமரிப்பு, விவா கரத்து இடம்பெறுமிடத்து கணக்கு வழக்குகளைத் தீர்த்துக் கொள் ளல் போன்ற விடயங்களுடன், மணமகளால் முன்வைக்கப்படக்கூடிய மஹர் தொடர்பான கோரிக்கைகளுக்கும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் மணமகனும், மணமகளும் கைச்சாத்திடுதல் வேண்டும். குர்ஆனிய ஏற்பாட்டிற்கிணங்கவே இந்தச் சட்ட ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன.
(ஈ) பல்தார மணத்தின் மீதான நிபந்தனைகள்
முஸ்லிம் தனியாள் சட்ட மூலம் ஒரே நேரத்தில் நான்கு மனைவிமாரை திருமணம் முடிக்க ஒரு ஆணுக்கு அனுமதியளிக்கிறது. 5ஆவது திருமணம் பிழையானதாகவும் தகுதியற்றதாகவும் கொள்ளப்படும் ஆணுக்குள்ள ஒரே ஒரு கட்டுப்பாடு. அவர் அல்லது அவரது மனைவி வகிக்கும் பிரதேசக் காதியாருக்கு (குடும்ப நீதிபதி) அறிவித்தல் கொடுத்தல் வேண்டும். மேலும் திருமணம் முடித்த எல்லா மனைவிமாரதும் சம்மதம் பெறப்படுதலும் வேண்டும். (வாய்மொழியாகவும் இருக்கலாம்) மனைவியின் அல்லது மனைவிமாரின் சம்மதம் இல்லாமல் மணமுடிக்கும் ஒருவருக்கு யாது நிகழும்
40

என்பது பற்றி எதுவும் சட்டமூலத்தில் இல்லை. இதன் காரணமாக நடைமுறையில் சம்மதம் பெறுதலும் அறிவித்தல் கொடுத்தலும் இடம்பெறுவ தில்லை. அவை முக்கியமான விடயங்களாகக் கொள்ளப்படுவதுமில்லை. சட்டத்தில் சம்மதம் பெறாமைக்கான விடயங்களாகக் கொள்ளப்படுவது மில்லை. சட்டத்தில் சம்மதம் பெறாமைக்கான தண்டனை அல்லது கட்டுப்பாடு எதுவுமில்லாமையே இதற்குக் காரணமாகும்.
1. இது தொடர்பான குர்ஆனிய சட்டம் மிகத் தெளிவானது. அதன் பிரகாரம் பல்தார மணத்திற்கான உரிமை நிபந்தனையுடன் கூடியது. அதாவது மணமுடிக்கும் மனைவிமாரை சமத்துவமாகவும் நீதியாகவும் நடத்தமுடியும் என்ற நிபந்தனைக்குட்படும் பட்சத்திலேயே இவ்வுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதாவது மணமுடிக்க விரும்பும் ஆண், பெண் களை சமத்துவமாகவும் நீதியாகவும் நடத்துவதற்குரிய பொருளாதார, உடல், உள ரீதியான தகுதிப்பாட்டை நிரூபிக்கும் பட்சத்தில்மாத்தி ரமே பல்தார மணமுடிப்பதற்கான உரிமையுடையவராகிறார். இந்நிபந் தனைகள் முஸ்லிம் தனியாள் சட்டமூலத்தில் வலியுறுத்தப்படவு மில்லை. அதற்கான ஏற்பாடுகள், தண்டனைகள், கட்டுப்பாடுகள் எதுவும் எடுத்துரைக்கப்பவுமில்லை. இது ஆண்களுக்குச் சாதகமாக உரிமைகளை அத்துமீறி எடுத்துக் கொள்வதையும் பெண்களுக்குப் பாதகமாக நிபந்தனைகளைக் கைவிட்டு மறைக்கப்பட்டு விடுவதையும் மிகத் தெளிவாகக்காட்டுகிறது.
2. பல்தாரத்திற்கான நிபந்தனை நீதியாகவும் சமத்துவமாகவும் பரா மரிப்புச் செய்வதற்காக தனது தகுதிப்பாட்டை நிரூபிப்பதாகும். உலகின் பல்வேறு நாடுகளில் இது குறித்த நீதிமன்றக் கட்டளை அவசியப்படுத்தப்படுகின்றது. உடல், உள, பொருளாதார ரீதியான தகுதிப்பாடு குறித்து நீதிமன்றம் அளிக்கும் சான்றிதழ்கள் உள்ள போது மாத்திரமே பல்தாரம் மணமுடிக்கும் அனுமதி வழங்கப்படு கின்றது. மலேசியா, ஈரான், எகிப்து போன்ற நாடுகளில் இவை மிகத் தெளிவாக சட்ட மூலத்தில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
மேலும் சில நாடுகள், பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் பின்தங்கிய நாடுகளில் மிகப் பெரும்பாலானவர்களுக்கு இந்நிபந் தனையை நிறைவு செய்ய முடியாத நிலையுள்ளதால், சட்டத்தில் பல்தார மணத்திற்கான ஏற்பாடுகூட தேவையற்றது என சட்டவாக் கல் குழுக்கள் அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளன. (உதாரணமாக பங்களாதேஷ்)
(11) விவாகரத்து
அ. விவாக வகைகள்/நிலைமைகளும் அதன் செயன் முறைகளும்
சட்டமூலத்தினை மேலோட்டமாகப் பார்க்குமிடத்து விவாகரத்துப் பெறுவ தற்கான, அதனைத் தொடக்குவதற்கான உரிமை ஆண், பெண் இரு பாலருக்கும் உண்டு. எனினும் சட்டத்தின் பிரகாரம் ஆண்கள் எந்தக் காரண மும் கூறாமலே விவாகரத்துப் பெறும் உரிமையும் பெண்கள் காரணம் கூறி அதனை இரு சாட்சிகள் மூலம் நிரூபித்தே விவாகரத்துப் பெறும் உரிமையும் கொண்டுள்ளனர். இது மிகவும் ஒருதலைப்பட்சமான ஏற்பாடாகும். இதனை நியாயப்படுத்த குர்ஆனிய ஏற்பாடு இது எனக் கூறப்படுகின்றது.
4.

Page 27
இவ்விடயத்தைத் தெளிவாக விளங்கிக்கொள்ள குர்ஆனிய ஏற்பாடு குறித்துப் UT T’JG3LuTub.
குர்ஆனிய ஏற்பாட்டின் பிரகாரம் பல வகையான விவாகரத்து
(1)
(2)
(3)
(4)
(5)
முறைகள் உள்ளன
தலாக் - விவாகரத்துமுறை
ஆண்கள் காரணம் கூறாமலே விவாகரத்துப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை. ஒருதலைப்பட்சமாக இடம்பெறுமிடத்து நஷ்டஈடு வழங்குதல் வேண்டும்.
பஸாஹற் - விவாகரத்து முறை
பெண்கள் காரணம்கூறி விவாகரத்துப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை.
முபாரத் - விவாகரத்துமுறை இரு பிரிவினருக்கும் விவாகம் திருப்தியில்லாத போது கணவன்-மனைவி இரு பிரிவினரும் விரும்பிக் கோரும் விவாகரத்து முபாரக் எனப்படும்.
குலாஹ் - விவாகரத்து முறை பிழைகள் இல்லாத போதும், மனைவி திருமண வாழ்க்கையில் திருப்தி யில்லாத போது நஷ்டஈடு கொடுத்து தானே விவாகரத்துப் பெறக் கூடிய உரிமையாகும்.
தலாக் - ஏ - தவ்பித் - விவாகரத்து முறை வாக்களிக்கப்பட்ட விவாகரத்து உரிமை காரணமின்றி விவாகரத்துச் செய்கின்ற, தலாக் விவாகரத்து உரிமையை கணவன் மனைவிக்கு அளிக்க முடியும். திருமணத்தின் போது அல்லது அதற்குப் பின் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அவை மீறப்படும் பட்சத்தில் விவாகரத்துப் பெறுகின்ற உரிமையை மனைவிக்குக் கணவன் வாக்களிக்கலாம்.
முஸ்லிம் தனியாள் சட்டமூலம் இவைகளில் குறிப்பிட்ட சிலதைத் தெரிவு செய்துள்ளது. அவ்வாறு செய்யப்பட்ட முறைகளில் சிக்கலான செயன் முறைகளைக் கொண்டவை பெண்களுக்கு தெரியப்பட்டுள்ளது. அதே வேளையில் மிகஇலகுவாக விவாகரத்தினைப் பெறுகின்றமுறைகள் ஆண் களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவ்வாறன் இலகுவான முறையைத் தெரிவு செய்யப்படுமிடத்து பெண்ணுக்கு ஏற்படக்கூடிய பாரபட்ச நிலைமையைக் கருத்திற் கொண்டு குர்ஆனில் கூறப்பட்டுள்ள ஏனைய விடயங்கள் கவனத்திற் கொள்ளப்படாமலே விடப்பட்டுள்ளது.
முஸ்லிம் தனியாள் சட்டமூலம் பெண்கள் ஆரம்பிக்கக் கூடிய முறையாக பஸாஹற் முறை விவாகரத்தையும் ஆண்கள் ஆரம்பிக்கக்கூடிய முறை யாக தலாக் முறையையும் கொண்டுள்ளது.தலாக் முறையில் கணவன் காரணம் கூறாமலே விவாகரத்தை 3 மாத கால இடை வெளியில் பெறக்கூடிய வாய்ப்புண்டு. இவ்வாறு நிகழும் போது மேலும் பெண் தனது எதிர்ப்பை அல்லது அது தொடர்பான கருத்தினை முன்வைப் பதற்கான சட்ட வாய்ப்புக்கள் எதுவும் இல்லை.
பஸாஹற் முறையில் விவாகரத்தினைப் பெறுகின்ற பெண் காரணம் காட்டுதல் வேண்டும். மேலும் அக்காரணங்கள் சாட்சிகளால் நிரூபிக்கப்
42

படல் வேண்டும். நடைமுறையில் மிக நெருங்கிய உறவினர்களின் சாட்சி யங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையும் இல்லை. மேலும், அந்நிலை காரணமாக அந்தரங்கமான பல விடயங்களை வெளிப்படுத்த வேண்டிய இக்கட்டான சட்டம் பெண்களுக்கு மட்டுமே ஏற்படுகின்றது.
4. முஸ்லிம் தனியாள் சட்டமூலத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் குடும்ப நீதிபதியாக ஆண் முஸ்லிம் ஒருவரே இருக்கமுடியும். இவ்வாறானநிலை மையில் அந்நிய ஆணின் முன்னிலையில் தங்களது அந்தரங்கங்களை வெளிப்படுத்தவேண்டிய இக்கட்டானநிலை பெண்களுக்கே ஏற்படுகின்றது.
5. விவாகரத்து செயன்முறைகள் பல இருந்த போதும் பெண்களுக்குச் சாதகமான செயன்முறைகள் தவிர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக வாக் களிக்கப்பட்ட தலாக்குரிமை சட்டத்தில் தவிர்க்கப்பட்டுள்ளமை பெண் களுக்கு எதிரான பாரபட்சமாகவே கொள்ள வேண்டியுள்ளது.
(11) விவாகரத்தின் போது கொடுக்கல் வாங்கல்களின் கணக்குத் தீர்த்தல்கள்
(அ) மஹர் வெகுமதி
திருமணத்தின் போது கணவனால் மனைவிக்கு கொடுக்கப்பட வேண்டிய பணம், பொருள் ஆகியவற்றைக் குறிக்கும். முஸ்லிம் சட்டமூலத்தின் பிரகாரம் திருமண முறிவுக்குப் பின் எந்த நேரத்திலும் ஏற்க்னவே மஹர் செலுத்தப்படாமல் இருந்தால் அதனைக் கோரும் உரிமை பெண்ணுக்குண்டு. மூன்று வருட காலத்தினுள் இது செலுத்தப்பட்ல் வேண்டும். * . . . . .
1. சட்டத்திலுள்ள இவ்வேற்பாட்டைச் செயற்படுத்துவதற்கான செயன்
முறைகள் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
2. குர்ஆனிய சட்டப்பிரகாரம் மஹர்' என்பது பெண்ணினால் முன் வைக்கப்படுகின்ற கோரிக்கையாக அமையும். இது பணம், பொருள், சேவையாக அமைய முடியும். திருமணத்தின் போது இது வழங்கப் படல் வேண்டும். அல்லது திருமணத்தின் பின் எந்த நேரத்திலும் அதனைக் கோர முடியும்.
பெண்ணினால் முன்வைக்கப்படுவதற்கான எந்தச் சட்ட ஏற்பாடுகளும் இலங்கை முஸ்லிம் தனியாள் சட்ட மூலத்தில் இல்லை. உலகில் பல்வேறு முஸ்லிம் நாடுகளில் இதற்காக சிறந்த பல ஏற்பாடுகள் உள்ளன. குறிப்பாக ஈரானிலுள்ள திருமணப்பதிவு பத்திரத்தில் இதற் காக தனிப் பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவை திருமணத்தின் போது இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆணும், பெண்ணும் கையொப்ப மிடுகின்றனர். திருமண முறிவின் போது இவை மீளப் பெறப்படுவதற்கு இச் செயன்முறை இலகுவானதாக அமைகின்றது.
(III) பராமரிப்பு
1. முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் திருமணத்தின் போது மனைவி, பிள்ளைகளுக்கான பராமரிப்புக் கடமை கணவனைச் சேருகின்றது எனக் கூறுகின்றது. விவாகரத்தின் பின் பெண் பிள்ளை
43

Page 28
யின் பராமரிப்பு திருமணம் முடிக்கும் வரையும் ஆண் பிள்ளை முதிர்வு வயதினை அடையும் வரையும் எனக் குறிப்பிடுகின் றது.ஆனால், ஏனைய சட்டங்களைப் போலல்லாது முஸ்லிம் சட்டம், குடும்பம் நீதிமன்றத்திற்கு பராமரிப்பு விடயம் குறித்து கணவனுக்கு கட்டளையிடும் அதிகாரம் உண்டா என்பது பற்றிக் குறிப்பிட வில்லை. எனவே பெண்கள் காதியின் விருப்பிலும், கருணையிலும், நீதியான தீர்ப்புக்களுக்கு தங்க வேண்டியவர்களாயுள்ளனர். உண் மையில் சட்டப்பிரகாரம் காதி இ குறித்துத் தீர்மானிக்கவும் முடியாது என எழுத்து மூலம் அறிவிக்குமிடத்து பெண் மாவட்ட நீதிமன்றத்திற்கு முறைப்பாடு செய்யலாம். இது மிக நீண்ட செயன்முறைகளையும், செலவுகளையும் கொண்டதால் பெண்கள் அதனையும் அடைய முடியாதுள்ளனர்.
பராமரிப்புக்கான அளவை தீர்மானிப்பதற்கான எந்த நியமங்களும் சட்டத்தில் இல்லை. இதனால் காதி தீர்மானிக்கும் தொகை சில வேளைகளில் கேலிக்கிடமானதாகவும் யதார்த்தத்தில் பெறுமானமற்ற தாகவும் அமைகின்றது.
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டப்பிரகாரம், திருமணக் காலத் தின் போது பராமரிப்பு கணவனைச் சாருகின்றது. பல ஆண்டுகள் கைவிடப்பட்ட மனைவிகூட கைவிடப்பட்டதாக பராமரிப்பு வழக்குத் தாக்கல் செய்யும் நாளிலிருந்தே (விவாகரத்துவரை) செலவு பெறும் தகுதியுடையவராகின்றார். இதன் காரணமாக மனைவி வழக்குத் தாக்கல் செய்வதை அறிந்ததும், அக்கணவன் விவாகரத்து வழக் கினை உடன் பதிவுசெய்யும் நிலை அநேகமாக இடம்பெறுகின்றது. இதன் பின் பராமரிப்பு வழக்கு என்றசொல்லுக்கே இடமில்லாமல் போய்விடுகின்றது. இதனைத் தவிர்ப்பதற்கான நுட்பமும் கைவிடப் பட்ட கால அளவு பரிசீலிக்கப்பட்டு நிரூபிக்கப்படுகின்ற பட்சத்தில் பராமரிப்பு தொகையை அறவிடுவதற்கான ஏற்பாடுகளும் முஸ்லிம் சட்டத்தில் இல்லை. இவ்வாறான ஏற்பாடுகள் பொதுச் சட்டத்தி லும் ஏனைய முஸ்லிம் நாடுகளின் பராமரிப்புச் சட்டங்களிலும் காணப்படுகின்றன.
இலங்கை முஸ்லிம் சட்டப் பிரகாரம், விவாகரத்துப் பெற்றபின் இத்தாக் காலத்திற்கான பராமரிப்பும் பெண்ணுக்கு வழங்கப்பட வேண்டும். இது குர்ஆனிய ஏற்பாடுமாகும். இதற்கு எதிராகவே இவ்வாறான விடயம் ஒன்று உண்டு என்பதே பெண்களுக்கு ஒரு போதும் தெரியப்படுத்தப்படுவதுமில்லை. அவ்வாறு பெண்கள் கோரு மிடத்தும் இத்தாக் காலம் 2 கிழமை எனக் கூறப்படுகின்றது. இது இப்பராமரிப்புத் தொகையை செலுத்துவதற்கான நிர்ப்பந்தத்தில் இருந்து கணவனை விடுவிப்பதற்காகவே இடம்பெறுகின்றது. சட்டத்தி லும் இக்காலத்தின் அளவும் செலவும் கட்டாயப்படுத்துவதற்கான, நுட்பங்கள் எதுவும் இல்லை. இக்காலம் உண்மையில் குர்ஆனிய சட்டப்படி 3 மாதமாகவும் இக்காலத்திற்கான பராமரிப்புத் தொகை முழுமுதலாக செலுத்தப் படக்கூடியதாகவும் அத்தொகையை பெண் ணினால் தீர்மானிக்கப்படக் கூடியதாகவும் உள்ளது. இந்த ஏற்பாடு எல்லா முஸ்லிம் நாடுகளிலும் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப படுகின்றது. ஏனெனில், இஸ்லாமிய அனுஷ்டானமும் இதில் இணைந்திருக்கின்றது. எனினும், குர்ஆனுக்கும் எதிராக இவ்வனுஷ் டானம் கணவன்மாருக்கு சாதகமாக கைவிடப்படுவதைக் காணலாம்.
44

5. ஈரான் போன்ற நாடுகளிலுள்ள சட்டங்கள் இவ்விடயம் தொடர்பாக மிகவும் அக்கறையுடையதாகவுள்ளது. குர்ஆனிய சட்டமூலத்தின் பிரகாரம் திருமண வாழ்வில் கணவனால் நிறைவேற்றப்பட்டிருக்கும் குடும்ப வேலை அளவைத் (கணவனது பராமரிப்பு, வீட்டு வேலை கள், குழந்தைகள் பராமரிப்பு - போன்றன) தீர்மானித்து அதற்கு ஏற்றவாறான தொகையை நஷ்டஈடாகச் செலுத்தும்படி நீதிமன்றம் கட்டளையிடலாம். மேலும் ஒரு தலைப்பட்சமாக விவாகரத்துப் பெறப்படுமிடத்து (ஈரான், மலேசியா, எகிப்து, சவூதி அரேபியா போன்ற நாடுகளில்) குறிப்பிட்டளவு நஷ்டஈட்டுத் தொகை (மத்தாஹ்) வழங்கப்பட வேண்டும். ஈரானில் இரு வருடத்திற்கான பராமரிப்புத் தொகையும் சவூதி அரேபியா இரண்டரை லட்சம் றியாலும் மலேசியா நீதிமன்றத் தீர்மானமுமாக இத்தொகை அமைகின்றது.
6. குர்ஆனிய ஏற்பாட்டின் படியான மஹர் தொகையை பெண்ணினால் தீர்மானிக்கப்பட்டு பெண்ணுக்கு வழங்கப்படல் வேண்டும். எந்த நேரத்திலும் பெண் கோரலாம். உண்மையில் விவாகரத்தின் பின்னுள்ள வாழ்க்கைக்கான ஓர் உத்தரவாதமாக பெண் இதனை பயன்படுத்தக் கூடிய நிலை இதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கைச் சட்ட நிலைமை எந்தவித வாய்ப்பின்னயும் கொண்டதாக இல்லை. அதாவது சட்டம் மஹர் என்பதை சரியாக வரையறுக் கவில்லை. திருமணமுடிவின் போது மஹர் மீளப் பெறப்படலாம் எனக் குறிப்பிடுகின்ற போதும், இலங்கை நடைமுறைப்பிரகாரம் இது கணவனால் தீர்மானிக்கப்பட்ட மிகச் சிறிய தொகைப் பணமாக அமைகின்றதால் இந்த விடயத்தின் அர்த்தமே இல்லாமல் போய்விடு கின்றது.
(IV) வாரிசுரிமை
இலங்கை முஸ்லிம் சட்டப் பிரகாரம் வாரிசுரிமை மரண சாசனம் எழுதப்படாதவிடத்து ஆண்:பெண் - 2:1 என்ற விகிதமாக அமையும். இது உண்மையில் குர்ஆனிய ஏற்பாடேயாயினும் சொத்துத் தொடர்பான ஏனைய குர்ஆனிய ஏற்பாடுகள் குறிப்பாக பராமரித்தல், மஹர் கொடுத்தல், மஹர் எடுத்தல் என்ற விடயங்கள் சரியாக இடம்பெறாத பட்சத்தில் பெண்களுக்கு இது பாரபட்சமாக அமையும்.
மேற்கூறிய விடயங்களை கூர்ந்து ஆராயும் போது சில உண்மைகள் தெளிவாகின்றன.
(1) குர்ஆனிய ஏற்பாடுகள், சர்வதேச மனிதஉரிமை நியமங்களுக்குச் சமமான சிலவேளை அவற்றை விடவும் பலமான நியாயங்களை யுடையனவாக உள்ளன. எனினும் அவை முஸ்லிம்களால் (சட்ட வரைஞர்களால்) முஸ்லிம் பெண்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.
45

Page 29
இலங்கை விவாக, விவாகரத்து சட்டமூலம் பின்வரும் குறைபாடுகளைக் கொண்டுள்ளது.
1. பெண்களின் விடயங்களைக் கையாள்வதற்கான நியாயமான,
ஏற்பாடுகளைக் கொண்டதாக அமைக்கப்படவில்லை.
2. இருக்கின்ற சில ஏற்பாடுகளும் கூட, சரியான நடைமுறைப்படுத்து
வதற்கான நுட்பங்களையும் கொண்டதாக இல்லை.
3. நடைமுறைப்படுத்துவதற்கான / கட்டளையிடுவதற்கான அதிகாரம்
வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளில்லை.
4. முற்றுமுழுதாக பெண்களுக்கும் குர்ஆனுக்கும் எதிரான அல்லது மிகப் பாரபட்சமான சில ஏற்பாடுகளையும் சட்டமூலம் கொண்டுள் ளது.
ஏனைய குர்ஆனிய ஏற்பாட்டின்படியும் முஸ்லிம் நாடுகளிலுள்ள சட்ட ஏற்பாடுகள், அவற்றின் அனுபவங்களின் படியும் இவை மாற்றியமைக்கப்பட
வேண்டிய கடப்பாடு முஸ்லிம் அறிவாளருக்குண்டு. இந்த வகையில் பின்வரும் விடயங்கள் மீது கூடிய கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
1. திருமண வயது 2. திருமண ஒப்பந்தத்திற்கான விரிவான ஏற்பாடுகளும், பெண்ணின்
விருப்பினைப் பதிவு செய்தலும் 3. மஹர் குறித்த வரைவிலக்கணம் 4. பலதார மணத்திற்கான நிபந்தனைகளும், தண்டனைகளும் 5. பராமரிப்பு ஏற்பாட்டை நடைமுறை செய்வதான அதிகாரமும்
நுட்பங்களும். 6. விவாகரத்தின் வகைகள், சாட்சியங்கள் குறித்த நீதியான
ஏற்பாடுகள், 7. பெண் குடும்ப நீதிபதிகளின் நியமனம் 8. விவாகரத்தின் போது நஷ்ட ஈட்டுக்கான ஏற்பாடுகள்.
Ο
46

LIDžLITIGů GugOTETá856ň - LImüIIILGIonsklöst
பெண்கள் வலுய்பெறு பட்டறைகளின் ஓர் அனுபவ வெளிப்பாடு
பத்மினி சிதம்பரநாதன்
இன்று உலகம் ஒரு கிராமமாக (Golbal Vallage) மாறி வருகின் றது. 3ஆம் உலக நாடுகளின் முக்கிய மூலதனமாக மனித வளம் விளங்கு கின்றது. அபிவிருத்தி பற்றிய எண்ணக் கருக்கள் வளர்ச்சி அடைந்து வரும் இக்கால கட்டத்தில் ஐ.நா. தாபனம் மனிதவள மேம்பாடே அபிவிருத்தி என்று கருதுகின்றது. மனித மூலதனம் (Human Capital) மனிதவள அபிவிருத்தி (Human Resource Development) GuT6ip Qg5TsorT6Tirs6fair sppéopol) யும் அபிவிருத்தியையும் மேம்படுத்துகின்ற வழிமுறைகள் முகாமைத்துவத்தில் கடந்த ஒரு தசாப்த காலத்தில் அதிகம் பேசப்படுகின்றன. தொழிலாளர் களின் ஆற்றல் விருத்தியே வெற்றிக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகின்றது. எமது நாட்டிலும் சென்ற வருடமானது (1998) வினைத்திறன் ஆண்டு (Year of Productivity) எனப் பிரகடனப்படுத்தப்பட்டது. 2000ஆம் ஆண்டை இன்னும் இரு மாதங்களில் எட்ட இருக்கும் நாம் கணனியுகத்தில் பிரவேசித்துள்ளோம்.
இந்த சமாச்சாரம் ஒரு புறம் இருக்க, உலகில் பாதிமனித வளமாகப் பெண்கள் வளம் விளங்குகின்றது.
“ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அங்கு. வாழும் பெண்களின் சமூகநிலையைக் கொண்டே கணிப்பிட வேண்டும் என ‘சாள்ஸ் பூரியர்” கருதுகின்றார். இலங்கையின் கல்வி அறிவு வீதத்தை எடுத்துக் கொண்டால் மிக உயர்வானது. அதாவது 86.9% அதில் ஆண்கள் 90% மாகவும் Guairs of 83.8% LDITs6 b d 6ft 66ers. (90/91 Dept. of Census & Statistics) உயர்கல்வியில் அதிகளவு பெண்கள் ஈடுபடுகின்றனர். உயர்ந்த உத்தி யோகங்களையும் கணிசமாளவு பெண்கள் வகிக்கின்றனர். இந்த உயர் உத்தியோகங்களும், உயர்கல்வியும் வெறும் பொருள்ாதாரத் தேவையை நிறைவு செய்வதாக மட்டுமே இருக்கின்றதொழிய அவர்களின் மனதில் ஒன்றுமே நடக்கவில்லை. அதாவது மனப்பாங்கு மாற்றத்திற்கு அவர்கள் பெற்ற கல்வி உதவவில்லை.
இதற்கு ஒரு எடுத்துக் காட்டைப் பார்ப்போம். ஆயின் விஞ்ஞானம் தொழில் நுட்பம் தொடர்பாக பெண்கள் பங்கு பற்றி ஆய்வு செய்த “Cenwor’ பெண்களின் இத்துறையிலான பயன் விளைவு பற்றி அளப்பதற்கு 2 பிரதான மூலப்பிரமாணங்களை முன் வைத்தனர்.
47

Page 30
1. வெளியிட்ட ஆய்வுகளின் எண்ணிக்கை 2. பெறப்பட்ட ஆய்வு உதவி (Research Grants) (1983 வரை செய்த
திட்டங்கள்)
இதன்படி . . . -
1. 30க்கும் மேற்ப்ட்ட வெளியீடுகளைச் செய்க. பெண் விஞ்ஞானிகள்
எவருமே இருக்கவில்லை. 2. பொதுவாகவே பெண் விஞ்ஞானிகள் ஒப்பீட்டடிப்படையில் மிகக் குறைவாகவே விஞ்ஞான ஆய்வுகள் செய்து வெளியிட்டுள்ளனர். 3. பெரும்பாலான பெண் விஞ்ஞானிகள் (61.2%)ஒரு வேலைத்திட்டம்
உதவி பெறவில்லை. O ஆகவே தொழில் வாய்ப்புக்கள் பெண்களைப் பொறுத்தவரை வெறும் பொருளாதாரத் தேவையை நிறைவு செய்வதாக மட்டுமே இருக்கின்றது. ஆகவே வேலை கொடுப்போரும் உயர்தொழில் வாய்ப்புக்களில் பெண் களை ஈடுபடுத்த விரும்புகிறார்கள் இல்லை. வேலை விண்ணப்பப்படிவத்தில் ஆணா பெண்ணா என்று கேட்கும் நிலை இன்று வரை தொடர்கின்றது. ஆகவே மனம்முழுவதும் வீட்டில் இருக்க உடம்பு மட்டும் தொழில் உலகில் இருக்குமேயானால் பயன் விளைவு (Productivity) மிகக்குறைவாகவே இருக்கும் இதேநிலை தொடர்ந்து செல்லுமாயின் உலகின் பாதி மனிதவளம் முழுவதும் முடங்கிக்கிடக்கும் ஆபத்தான நிலை தொடர்ந்து செல்லும் சிக்கல் மிகுந்த சமகால உலகை எதிர்கொள்ளும் திராணி அற்றவர்களாகி விடுவோம்.
இதற்கான காரணம் என்ன என்று பார்க்கும் போது இன்றைக்கு நாம் பண்பாடு என்றும் பண்பாட்டுப் பெறுமானங்கள் என்றும் நினைத்துக் கொண்டி ருக்கும் நினைப்புகள்தான் காரணமாகின்றன. தடையாகின்றன. சமூகத்தின் நினைப்பே மாற வேண்டியுள்ளது. ஒரு பண்பாட்டு மாற்றத்தை சமகால உலகு கோருகின்றது. அப்படியாயின் இன்றைக்கு பண்பாடு என்று எங்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருப்பவை எவை? எவ்வகையில் ஆழமாகப் பதிந்திருக்கின்றன? என்ற கேள்விகளுக்கும் விடை காண வேண்டும். சிமோன் தே போவர் என்பார். (Simon de Beauvoir) “ஒருவர் பெண்ணாகப் பிறப்ப தில்லை பெண்ணாக ஆக்கப்படுகின்றார்” எனக் கூறுகின்றார்
எம்மோடுதன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பெண் ஒருவர் குறிப் பிடும் போது, நான் ஒரு சிறு குழந்தையாக இருக்கும் போது ‘கைவீசம்மா கைவீசு’ சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு” என்று கையைத் தூக்க, காலைத் தூக்க, துள்ள ஒடப்பபழக்கியவர்கள் காலப்போக்கில் தளர்வான நிலையில் காலை மேலே தூக்கிப் போட்டபடி கதிரையில் இருந்தால் 'நீ பொம்பிளைப் பிள்ளையல்லவா? இப்படி இருக்கலாமா? என்று கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர். முன்னரைப்போல மரங்களில் ஏற, ஒட்டுக்கு மேல் ஏற ‘'நீ பொம்பிளைப்பிள்ளையல்லவா’ என அடிக்கடி ஞாபகப்படுத்து கின்றனர். என்று குறிபிட்டார். பண்பாட்டுப் பெறுமானங்கள் என்று தாம் கருதும் விரும்பும் நியமங்களின்படி எம்மை வழக்கப்படுத்தி விட்டனர். அடிக்க அடிக்க அம்மியும் நகராதோ? அப்படியாக அவளின் தளர்வான செயற்பாடு (Free Actions) படிப்படியாக குறைந்து எந்த நேரமும் மற்றவர்கள் பற்றி பயந்து கொண்டு விழிப்பாக (Concious) இருக்கப் பழக்கிவிட்டனர்.
0. Nirmala R. Amarasuriya, Facets of change Women in Sri Lanka 1986-95, Cenwor, 1995, P.145
48

“மனுஸ்மிருதி” பெண்களுக்குரிய ஒரே சடங்கு அல்லது தியாகம் என்ன வெனில் கணவனுக்குப் பணிசெய்தல், கணவன் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்தல், குழந்தை பெறல். (குறிப்பாக ஆண் குழந்தை) வீட்டு அலுவல்களைக் கவனித்தல், வீட்டில் உள்ள ஏனையோரை உபசரித்தல், சமைத்தல், பரிமாறல் விருந்தினரை உபசரித்தல், மகிழ்ச்சியாய் இருத்தல் 9ே என குறிப்பிடுகின்றது. இவ்வாறு தான் பெண் சமையல், சாப்பாடு பாலியல் என்ற மூன்றுக்குமாய் வளர்க்கப்படுகின்றாள். இதுமட்டுமல்ல மனைவி அழகாகவும் கவர்ச்சியாக மட்டுமே கணவன்மாருக்கு தெரிய வேண்டும். ஏனவே ‘மனுஸ்மிருதி”, “திருமணமான கிருகஸ்தன் தன் மனைவியுடன் ஒரு பாத்திரத்தில் உணவு உட்கொள்ளலாகாது. மனைவி உணவு அருந்தும் போதும், இருமும் போதும், கொட்டாவி விடும்போதும், தன் இஷ்டப்படி உட்கார்ந்து கொண்டு இருக்கும் போதும், கணவன் பார்க்கக் கூடாது மற்றும் தன் மனைவி மையிட்டுக் கொள்ளும் பொழுதும், எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் பொழுதும், குளிக்கும் பொழுதும். மேல் வஸ்திரம் இல்லாத போதும், பிரசவிக்கும் போதும், கணவன் பக்கத்தில் போகக்கூடாது” எனக் குறிப்பிடுகின்றது. இங்கு அவள் வளர்க்கப்படும் விதம் முழுமை யாகப் பாலியல் தேவைக்கே என்பது தெளிவாகத் தெரிகின்றது. அவளது வாழ்வில் தன் இஸ்டப்படி வாழ்தல் என்ற நினைப்புக்கே இடம் கிடையாது.
இந்த வாழ்க்கை முறையானது அவளுடைய பிஞ்சு மனதை தெரிந்தோ தெரியாமலோ அவர்களின் நியமங்களுக்குப் பொருத்தப்பாடு அடைய வைத்து விடுகின்றது. அவர்களுக்கு நடைபெறும் சாமத்தியச் சடங்குடன் இந்த நியமங்கள் நிலையான இடத்தைப் பெற்றுவிடுகின்றன. மனிதவாழ்வில் சடங்குகளுக்கெனத் தனியான இடம் உண்டு. சடங்குகளுக்குரிய வலிமை என்னவெனில் யாவரையும் அதில் பங்குபெற வைத்துவிடும். ஒன்றுபட வைத்து விடும்.
இதுவரை சிறுபிள்ளையாக ஒடித்திரிந்தவள். துள்ளி விளையாடியவள் திடீரென அவளுடன் விளையாடிய சிறுவர்கள், சிறுவர்களாகவே இருக்க, இவள் மட்டும் அவர்களில் இருந்து பிரிக்கப்பட்டு “நீ பழைய சிறுபிள்ளை அல்ல” பெரிய பிள்ளையாகி விட்டாய் என்று அவளை ஒரு தனி அறையில் தனி இடத்தில் இருத்தி அவளுக்குரிய (பெரிய பிள்ளைக்குரிய) பண்பாட்டு நியமங்கள்ை அவளுக்கு ஊட்டத் தொடங்குவர். இவ்வாறு பூப்படைந்த பெண்ணுக்கு சடங்கு செய்வதன் உள்நோக்கம் பெண்ணை உளவியல் ரீதியில் பக்குவப்படுத்துவதற்கே அல்லது மாற்றுவதற்கே.
பெண்களுடன் நடத்திய களப் பயிற்சிகளின் போது பூப்படைதல் சடங்கு பற்றி பல தகவல்களை அறிய முடிந்தது. அவர்கள் தமது அனுபவங்களைப் பகிரும் வேளையில் “நாம் பருவம் அடைந்த செய்தியை எப்படிச் சொல்வது என்று பயந்தோம். பயத்தால் காய்ச்சல் வந்தது. பழைய மாதிரி ஓடி ஆடித் திரிய ஏலாதே வெளியில் போக ஏலாதே’ என்று கவலையாக இருந்தது. ஆம்பிளைப் பிள்ளையாகப் பிறந்திருக்கலாமே என்று கவலைப்பட்டோம் என்றனர்.
இன்னொரு பெண் "ஆம்பிளையஸ் இருக்கிற கதிரையில இருக்க அம்மா விடமாட்டா, ஒருநாள் இருக்கப்போக அம்மா பேசிப்போட்டா. அதுக்கு நான் கவலைப்பட அப்பா எனக்கெண்டு புறம்பாக ஒரு கதிரை எடுத்துத் தந்தார். இப்படி என்னை வேறுபடுத்திப் பார்க்கிறது.' எனக்கு கவலையாக இருந்தது.” என்றார்.
(2) Meena A. Kelkar, Subordination of Woman A New Perspective, New Delhi, 1995, P.39.
49

Page 31
இன்னொரு பெண், "பருவம் அடைந்தவுடன் தனி அறைக்குள் விடு வினம். என்மனம் கவலையில் போய் மூலைக்குள் இருக்கச் சொல்லும்.”
இன்னொருவள் பள்ளிக்கூடத்தில் எங்கட வகுப்பு பெடியங்கள் ரீச்சரிட்டைப் போய் தங்கடை கதிரையிலை நாங்கள் இருக்கக் கூடாதாம் எண்டு சொல்லுவினம். இருந்தால் தாங்கள் ஒரு பேப்பரால் துடைச்சுப் போட்டு அல்லது ஊதிப் போட்டு இருப்பினம். அந்த நேரம் எங்கட மனம் வேதனைப்படும். எங்களைத் தாழ்வாக எண்ணத் தூண்டும்” எனக் குறிப்பிட் L.
எல்லாப் பெண்களுமே பருவமடைதலை இவ்வாறுதான் நோக்கினர் என்று கூறமுடியாது. கணிசமான பெண்கள் இதை மிக விருப்பத்துடன் எதிர் பார்க்கின்றனர் என்பதையும் களப்பயிற்சிகளில் அறிய முடிந்தது. அதாவது ஒரு பெண் சொல்லும் போது “நாம் இது பற்றி நிறையவே கற்பனை பண்ணி இருக்கிறோம் படம் எடுக்கிறது. வீடியோ எடுக்கிறது. பலகாரம் சுடுகிறது. புதுச் சீலைசட்டை வாங்கிறது. நகை வாங்கிறது, காட் (Card) அடிக்கிறது, சிநேகிதரைச் சடங்குக்குக் கூப்பிடுறது. என்னை வடிவாக வெளிக்கிடுத்து கிறது. பள்ளிக்கு அல்பம் (Album) கொண்டு போறது. பள்ளிக்கு ரொபி (Treat) கொண்டு போறது என்று நிறையக் கற்பனை பண்ணி இருக்கிறோம் என்று அவர்கள் கூறியதன் வாயிலாக இதனை
அறியலாம்.
ஒரு பெண் பூப்படைந்த பின்பாடசாலைக்குப் போக ஆறு மாதம் சென்றதாம், ஏனெனில் சாமத்தியச் சடங்கு செய்து வீடியோ எடுத்தால்தான் பாடசாலைக்குப் போவேன் என்று அவள் அடம் பிடித்ததாகவும் பெற்றோரிடம் சடங்கு செய்ய காசு உடன் ஆயத்தம் இல்லை எனவே ஆறு மாதம் சென்றே சடங்கு செய்தனராம். இது அவள் விருப்பத்துடன் ஈடுபடுதலைக் காட்டுகின்றது.
பருவம் அடைந்த செய்தி அறிந்ததும் முதன் முதல் முழுகவார்க்கப்படும் சடங்குகள் அனைத்துமே குறியீட்டுத் தன்மை வாய்ந்தவை. இங்கு முழுக வார்த்தல் என்பது அவளது சிறுபிள்ளைத் தனத்திற்கு முழுக்குப் போடுவதை குறியீடாகக் கொண்டது. தொடர்ந்து 7-13 நாட்கள் வரை (இது இடத்துக் கிடம் வேறுபடும்) தனி இடத்திலோ அறையிலோ ஓய்வாக படுத்திருக்கும்படி வைக்கப்படுவர். முழுமையான தளர்நிலை வளர்நிலை? ஒய்வு இங்கு வழங்கப்படுகின்றது. மேற்பக்கத்தில் வெள்ளை கட்டப்பட்டிருக்கும். இது அப்பெண்ணைத் தொடர்ச்சியாக அச்சடங்கு பற்றிய நினைப்பில் திகழ வைக்கும். இது தவத்தை ஒத்த மோனநிலை என்று கூடச் சொல்லலாம். சிற்பக் கலைஞன் ஒருவன் எவ்வாறு தனி இட்த்தே அமைதியான சூழலிலே கட்டுப்பாடாய் இருந்து தியானத்தின் மூலம் தான் வடிக்கப்போகும் சிற்பத்தை உள்ளத்தால் உள் வாங்குவது போன்ற ஒரு உளச் செயற்பாட்டுக்குரிய நிலை இந்நாட்களில் பெற்றாரும் உற்றாரும் வந்து
"நீ சின்னப் பிள்ளை இல்லை" ‘'நீ குமர்ப்பிள்ளை' ‘'நீ இன்னொருவருக்கு வாழ்க்கைப்படப் போறவ” ‘இனி எல்லாம் ஒரு மட்டாக இருக்க வேணும்’
50

என்று அடிக்கடி சொல்லி அவளைப் பிரித்துக் காட்டுவர். உடப்பூரில் பெண் பூப்படைந்தவுடன் குடும்பத்தார் ஒப்பாரி வைத்து அழும் வழக்கம் இருந்தது. பிள்ளை தன் குடும்பத்தை விட்டு இன்னொருவனுக்கு வாழ்க்கைப் பட்டு வேறிடத்துக்குப் போய்விடுவாள் என்பதே காரணம். இதனாலேயே விக்ரர்ரேணர் (Victor Turner) என்பார் பருவம் அடைதல் என்பது இன்னொரு வாழ்க்கைக்கான தொடக்கம் (முந்திய வாழ்வின் சாவு) எனக் கூறுகின்றார்.
அவள் துடக்குக் காக்கும் காலத்தில் வரும் உறவினர்கள், சுற்றத்தார் அநேகமாக வயது வந்தவர்களாகவே இருப்பர். பெண்களுடன் நடத்திய களப்பயிற்சிகளின் போது இப்படியாக வருபவர்கள் சொல்வது. கதைப்பது பற்றி அறியும் போது "நீ இனிக் கவனமாக நடக்க வேணும், இனி வடிவாகச் சமைக்கப்பழக வேணும், இல்லாட்டி வாறவனிட்டை உதை வேண்ட வேண்டி வரும். நீ வடிவாகச் சமைத்துக் குடுத்து அன்பாப் பழகாட்டி அவன் வேற பொம்பளையோட போயிடுவான் பொடியங்களோடே இனி முகம் பார்த்துக் கதைக்காதை” என்று இவ்வாறு அன்புடனும் அக்கறையுடனும் போதிக்கும் போதனைகள் மிகத் தளர் நிலையில் தனி அறையில் இருக்கும் பெண்ணிடம் வேறு சிந்தனையே ஏற்படாதவாறு அவள் மனதில் ஆழமாகப் பதிகிறது. இது ஓர் ஆழ்ந்த உளவியற் செயற்பாடு. இத்தாக்கமான செயற்பாட்டின் விளை வாக அப்பெண்ணை அந்த இடத்தில் இருந்து வெளியே கொண்டு வரும் போது இன்னொரு பெண்ணாகக் கொண்டு வர முடிகிறது. இந்த இன்னொரு பெண்ணாக அவளை உருமாற்றும் காலம்தான் அவளது உச்சமான காலம்.
இந்த நிலையில் அவளுக்கு “குமர்ப்பிள்ளை’ என்ற புதிய தகுதி அளிக்கப்பட்டு பெரிய சடங்கான “பூப்புனித நீராட்டு விழா” நடைபெறும் மாமன், மாமி மற்றும் உறவுகள் வந்து பால் அறுகு வைத்து நீராட்டி அவள் இன்னொரு குழந்தையை பெற்றெடுக்கும் தகுதியைப் பெற்றுவிட்டாள் என்பதை ஊருக்கு உலகுக்கு அறிவிக்கும்.
அவள் இதுவரை அணியாத சேலை முதன் முதல் அவளுக்கு அணிவிக் கப்படும். இதுவும் குறியீடாகப் பல செய்திகள் சொல்லும் உள்ளாடை (உட்சட்டை) கூட அன்றுதான் முதன் முதல் அணிவாள் என்பது முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டும். அவளது உடை அலங்காரம் தலையலங்காரம் எல்லாம் மணப்பெண்ணை அலங்கரிப்பது போன்று அமைந்திருக்கும்.
அவளின் புதிய தகுதிக்கான வலிமை வாய்ந்த அப்பெரும் சடங்கானது எதைப் போன்றது எனின் ஊறுகாய் தயாரிப்பதற்காக வாய் ஒடுங்கிய சாடிக்குள் தேசிக்காய்களை கூறு கூறாக வெட்டி நிறைய உப்பு மஞ்சள் முதலிய சரக்குகளை இட்டு நன்கு வெய்யிலில் பல நாட்கள் காயவிட்டு பின்பு மேலும் தேசிக்காய்ப் புளி பிழிந்துவிட்டு நீண்ட நாட்களாகச் சாடியில் ஊறவிடுவர். எவ்வளவு கூடிய நாட்கள் தேசிக்காய் ஊறுகின்றதோ அவ்வள வுக்கு அது சுவையாக இருக்கும். அது போல பூப்படைந்த காலத்தில் ஒரு தனி அறையில் ஒதுக்கமாக வைத்து அங்கு நடைபெறும் பல படிமுறை களுக்கூடாக அவளை இன்னொரு பெண்ணாக உருமாற்றுகின்றனர்.
களப்பயிற்சிகளின் போது இந்நீராட்டுச் சடங்கின் பின் தங்களில் வந்த மாற்றங்களைப் பின் வருமாறு குறிப்பிட்டனர்.
‘'நீண்டநாட்கள் வீட்டில் இருந்ததால் வெளியில் போகக் கூச்சமாக இருந்தது
அயலவர்கள் நாங்கள் போகும் போது எட்டிப்பார்த்தால் வெட்கமாக இருந்தது”
5

Page 32
'உடம்பிலும் மாற்றம் ஏற்பட்டு இருப்பதால் வெட்கமாக இருக்கும்”
'சடங்கு அன்று சேலை உடுத்திய பின் மனம் சொல்லும் நான் பெரிய பெண் என்று”
‘நான் பழைய மாதிரித் துள்ளிக் கொண்டு திரிந்தா அவளின்ர நெஞ்சைப் பார் ஆட்டம் என்று பகிடி பண்ணுவினம் என்று பயம். மற்றப் பெண்களைப் பகிடி பண்ணும் போது பார்த்திருக்கின்றோம்.”
“முன்பு சாப்பிட்ட கோப்பை கழுவமாட்டன். இப்போது அம்மா நீ பெரிய பிள்ளைதானே கழுவு என்று சொல்லிப்போடுவா நானே கழுவுகின்றேன்.”
w
‘அம்மா கோயிலுக்குப் போகும் போது எனக்குச் சமைக்கக் காட்டித் தந்திட்டு போவா. இப்ப சமைக்கிறேன்.”
'முந்தி மாதிரி அப்பா எங்களோடை கதைக்கமாட்டார். நாங்களும் கேட்டதுக்கு மட்டும் மறுமொழி சொல்லுவோம்.” அடக்கமாக இருந்தாற்தான் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நல்ல பிள்ளை என்று சொல்லுவினமாம். அதனால் எங்களின் மனம் அடங்கி யிருப்பதை விரும்பும் அதனால் அமைதியாக இருக்கிறோம்”
“இப்ப அம்மா தனது ஸ்ரையிலை (Style) குறைத்துவிட்டா. எங்களைக் கோயிலுக்குப் கூட்டிப் போவது என்றால் நல்ல உடுப்பு, நகை எல்லாம் விசேசமாய் இருக்கும்.”
“எல்லாமே எங்களுக்குச் சொல்லித்தான் தெரிவதில்லை. நாங்களா கவே வீட்டுக்குரிய பெண்ணாக வாழப் பக்குவப்பட்டு விட்டோம்”
என்று இவ்வாறு குறிப்பிட்டனர். இவ்வாறாகப் பெண்களை மாற்றி எடுக்கும் சடங்குகளில் அவள் விருப்பத்துடன் ஈடுபடுதல் என்பது மிகவும் முக்கியமானது. எவ்வளவு விருப்பத்துடன் ஈடுபடுகின்றார்களோ அவ்வளவுக்கு ஆழமாகவும் மாற்றமும் நடைபெறும். இச்சடங்குகளின் போது மிக விருப்பத்துடன் ஈடுபட்ட பெண் ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை பரிமாறும் போது தனக்கு அம்மா வைப் போல வீடு அலங்கரிக்க, சமைக்க, வடிவான உடுப்புகள் போட விருப்பமாய் இருந்தது. அடிக்கடி தலை வாருவேன், வடிவாகப் பொட்டு வைப் பேன், அம்மா செய்வது போல காலை எழும்பி குளித்து பெரிய பொட்டு வைத்து அம்மா போன்று வேன்ல செய்ய விருப்பம். அம்மாவின் வீட்டுச் சட்டைபோட விருப்பம். அம்மா எனக்கென்று கட்டுப்பாடு வைக்காமலே நான் அப்பிடி நடப்பன். வெளியில் போய்வர அதிகம் விருப்பம் இல்லை. வீட்டில் உள்ள வேலைகளைச் செய்யவே நேரம் காணாது. சமூக சேவையில் விருப் பம் இல்லை. எந்தநேரமும் வீட்டுச் சிந்தனையாகத்தான் இருக்கும். வீட்டை அடிக்கடி கூட்டித் துடைப்பேன். என்னை கவனித்துப் போட்டு எனது ஒன்றுவிட்ட அண்ணா சொல்லுவார். 'இவளுக்கு கல்யாணம் முடிக்கேக்கை ஒரு லொறி தும்புத்தடியும், விளக்குமாறும்தான் சீதனமாககக் கொடுக்க வேணும்”
அப்படியாயின் இச்சடங்கு முறைகளில் விருப்பத்துடன் ஈடுபடாத பெண் களுக்கு என்ன நடந்தது. என்று பார்த்தால் ஒரு பெண்.
‘அந்த நாட்களில் நான் கட்டுப்பாடாய் இருக்கவில்லை. காட்ஸ்(Cards)
விளையாடினேன். ஒய்வாகப் படுத்திருப்பது குறைவு என்னை வடிவாகப் பராமரிக்கவில்லையாம் என்று அம்மம்மா எங்கட அம்மாவைப் பேசுவா.
52

நான் நடக்கும் போது அம்மம்மா சொல்லுவா மெல்லமாக நடக்கச் சொல்லி. நான் அப்படி நடக்கவில்லை. முன்னரைப் போலவே ஓரளவு துடிப்பாய் இருக்கிறேன். நான் அப்பாவோடை பழைய மாதிரியே கதைக்கிறேன் என்றாலும் சமூகம் பற்றி எனக்கும் பயம் இருக்கு” எனக் குறிப்பிட்டார். சடங்கு முறைக்கு முற்றிலுமே உட்படாத பெண்கள் மிகமிக அரிது. எனினும் அவ்வாறான ஒரு சில பெண்களை அவதானித்த போது. ' ... .
அவர்கள் மிகவும் துடிப்பாக இருக்கின்றனர். பருவம் அடையும் முன் இருந்த நிலையிலேயே இருக்கின்றனர்.
எனினும் சமூகத்தின் அதிர்வு அவர்களின் துடினத்தை மழுங்கச் செய்ய முனைகின்றது அவர்களுக்கான எந்த ஆதரவும் சமூகத் தில் இருந்து கிடைப்பதில்லை.
அவர்களின் தொழில்சார் வாழ்க்கையும் வீட்டு வாழ்க்கையும் அதிகம் குழம்புவதில்லை.
தொழில் ரீதியாகவும் பல சாதனைகளைப் புரிந்திருக்கின்றனர்.
சிக்கலான சமூக நியமங்களைக் கொண்டிருக்கவில்லை.
இவர்களின் இப்படியான மனப்பாங்குக்குக் காரணம் யாது என்று பார்க்கும் போது w
வீடுகளில் அவர்களின் வெளிப்பாட்டிற்கு பூரண சுதந்திரம் 3(b.b5560) D. சமூக நியமங்களை பிள்ளைகளின் விருப்பம் இன்றிப் பெற்றோர் திணிக்காமை. கலவன் பாடசாலைகளில் கல்வி பெற்றமை. பாடசாலை விடுதி வாழ்க்கை. சிறுவயதில் இருந்தே துடிப்பாய் இருந்தமை. பருவம் அடைந்தவேளையில் உளவியல் மாற்றம் பற்றி அறிவு பூர்வமாகத் தெளிவாக விளக்கப்பட்டமை.
போன்றவையாகும். எனவே பண்பாடு என்னும் பெயரில் நம்மிடையே நிலவி வரும் வலிமையான சடங்குமுறையானது, தான் கருதும் நியமங்களுக்கு ஏற்றவகையில் தயார்ப்படுத்துகின்றது. இதில் உள்ள வலிமைத் தன்மையை இன்றைய எமது தேவைக்குரிய வகையில் மாற்றுவதே இன்று நாம் செய்ய வேண்டிய பெரும் பணியாகும்.
பெண்களுக்கென நாம் நடாத்திய களப் பயிற்சிகளில் இவ்வாறான மாற்றுச் சடங்கினை நாம் பரீட்சித்துப் பார்த்துள்ளோம். இதன் மூலம் ஒரு பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எம்மிடையே தோன்றியுள்ளது. இதுவரை காலமும் வாழ்க்கை என்றால் வெறும் சோறும் கூறையும் பாலியல் இன்பமும் தான் என்று எண்ணிக் கொண்டிருப்போருக்கு அது வாழ்க்கை என்ற புத்தகத்தின் ஒரு பக்கம் மட்டும் தான் என்பதை உணர்த்தி அவர்களுக்கு தெளிவான இலக்கையும் அதற்குரிய பாதையையும் அவர்களே தேடிக் கண்டுபிடிக்க வைக்கமுடியும் என்ற நம்பிக்கை எம்மிடம் உண்டு. இத்தகைய மாற்றுச் சடங்குகளில் 15-20 பெண்களைக் கொண்ட குழுக்களை ஈடுபடுத்திய அனுபவத்தில் மூன்று படிகள் முக்கிய இடம்பெறு வதைக் காணலாம். இச்சடங்குகளில் உண்மையான உணர்ச்சியுடன் வாழ்ந்து பார்த்தலின் போது கலந்து கொள்பவர்களின் ஆழமான உணர்ச்சிப் பகிர்வு ஏற்படுகின்றது. எனவே இச்சடங்குகள் இடம்பெறுவதற்குப் பொருத்தமான களத்தைத் தெரிதல் என்பது மிகவும் அடிப்படையானது. சமூகத்தின்
53

Page 33
வேண்டத்தகாத செயற்பாடுகளால் அஞ்சி வாழும் இப்பெண்களை அப்படி யான சமூகத்தில் இருந்து பிரித்து எடுத்து (அதற்காக மனிதர் வாழாத பாலைவனத்துக்குப் போதல் என்பதல்ல வீட்டுத் தொல்லைகள் பொறுப் புக்கள் என்பவற்றில் இருந்து மனதளவிலும் விலகி மற்றவர் பற்றிய பயமின்றி வாழ்வதற்காக) பிறிதோர் பொருத்தமான இடத்தில் குறிபிட்ட காலம் வாழச் செய்தல் முக்கியம் பெறுகின்றது. இது ஒரு பிரித்தற் சடங்கு எனக் கொள்ள லாம். இங்கு வாழ்வதற்கு வேண்டிய இதமான சூழல், அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள் என்பவற்றை தமக்கு ஏற்ற வகையில் ஒழுங்குபடுத்துவர். இவ்வாறு தமக்கு ஏற்ற இடமாக அதைமாற்றி அமைத்தல் மூலம் தமக்கும் அக்களத்துக்குமான உறவை ஏற்படுத்துவர்.
இவ்வாறு தமக்குரிய இடத்தை தாமே ஒழுங்குபடுத்திய பின் அவர்கள் பெளதீகரீதியிலும் உளவியல் ரீதியிலும் அதாவது பயத்தால் இறுகிப் போயிருக்கும் முகங்களைப் பயத்தில் இருந்து விடுபடச் செய்தல் மூலம் தளர்வாக்கல் கை, கால்களை அசைய, ஆட விடாமல் வைத்துப் பேணிய தால் வழங்காமல் இருந்த உடலை வழங்கச் செய்தல் போன்றவற்றின் மூலம் தளர்வாக்கப்படுவர். இவ்வாறான சடங்குகளின் பின் இடம்பெறும் அனுபவப் பகிர்வின் போது தங்களுக்கு நடந்த மாற்றங்களை அவர்களே இனங்காண முடிந்ததை அறிந்து கொண்டோம். சமூகத்தின் கேள்விக் கணை களால் அஞ்சி ஒடுங்கிப் போய் இருக்கும் அவர்கள் தாம் இக்களப் பயிற் சிக்கு வரும்போது பயந்து கொண்டு வந்ததாகவும் பயிற்சியாளர்கள் சொல்லு கின்றவற்றை எல்லாம் நான் கெட்டித்தனமாகச் செய்வேனோ? கெட்டிக்காரி என்று பெயர் எடுப்பேனோ? கேட்கும் கேள்விகளுக்குச் சரியான விடை சொல்லுவேனோ? எங்களை அனுப்பி வைத்த அமைப்புக்கு பேரெடுத்துக் கொடுப்பேனோ? என்று பயந்து வந்ததாகவும் ஆனால் இங்கு வந்து பார்த்தால் பயமில்லாது இருந்ததாகவும் கூச்சம் குறைந்திருப்பதாகவும் தாம் இப்படி முந்திக் கதைப்பதில்லை என்றும் இப்போ பயமில்லாமல் கதைக்க முடிவதாகவும் கூறினார்.
தமக்கு ஆடல், பாடல், என்றால் சரியான விருப்பம் என்றும், வீட்டில் மற்றவர்களுக்கு முன்னுக்கு பாட வெட்கம் உரத்துப்பாடப் பயம் அதனால் மெல்லமாக முணுமுணுத்துப் பாடுவதாகவும் வீட்டில் இதுவரை காலமும் ஒருக்காலும் ஆடவில்லை என்றும் இங்கு தன்னையே தான் நுள்ளிப் பார்த்த தாகவும் நான் தானா இப்படி ஆடினேன்? என்றும் குறிப்பிட்டனர்.
இத்தகைய சடங்குகளில் பங்குபற்றிய பெண் தான் ஆடலில் ஈடுபடும் போது மற்றப் பெண்களைப் பார்த்ததாகவும் அவர்களும் என்னைப் போல மிகவும் சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டு அனுபவித்து ஆடியதா கவும், இவர்களுக்கு ஆடலில் இவ்வளவு ஆசை இருந்திருக்கு இவ்வளவு நாளும் இதை உள்ளுக்கு அடக்கி வைச்சிருந்திருக்கினமே என்று நினைக்க ஆச்சரியமாகவும் கவலையாகவும் இருந்ததாகக் குறிப்பிட்டார்.
இன்னொரு பெண் தனக்கு பாடுவதென்றால் சரியான விருப்பம் என்றும், பாட்டுக்களைச் சற்றுப் பெரிதாகப் போட்டுக் கேட்பது தனக்குச் சரியான விருப்பம் என்றும் வீட்டில் காலையில் போட ஏலாது. அப்பா, அக்கா வேலைக்குப் போக வேண்டும். அவர்களைக் குழப்ப ஏலாது. மத்தியானம் சாப்பிட்ட பின் ஒய்வாய் இருக்கும் போது போட்டால் அக்கா இரண்டு மணிக்கு வேலையால் வந்து தான் வந்தகளை இளைப்பாற வேணுமாம் என்று நிப்பாட்டி பிளக்கையும் கழற்றிவிடுவா. பின்னேரம் போட்டால் அப்பா
54

வந்து கோட்வயர் (Code Wire) எல்லாவற்றையும் பிடுங்கி எடுத்துக் கொண்டு போய் கந்தோரில் வைத்துவிட்டார். வீட்டில் இவற்றுக்கான சூழல் இல்லை. இங்கு வந்து நான் பாடி, ஆடியதால் எனது மனம், உடம்பு எல்லாம் இலேசாக இருக்கின்றது என்றார்.
மேலும் அவர்களின் அகரீதியான விடுபாட்டுக்காக அதாவது பெண்ணாய் குறிப்பாக தமிழ்ப் பெண்ணாய்ப் பிறந்தால் ஆழ் மனதில் தாங்க முடியாத சோகங்கள், இழப்புக்கள், காயங்கள், விரத்திகளைச் சுமக்க முடியாமல் சுமந்து பாரப்பட்டிருக்கும் மனங்களை நம்பிக்கை உறவு என்ற கைகொடுத்து தமது விருப்பப்படி, ஆசைப்படி நடக்க விடுதல் மூலம் அவர்களது பாரங்களை இறக்குதலும் சடங்கின் முக்கியமான அம்சமாகும்.
இத்தகைய சந்தர்ப்பங்களில் தனது கணவனுக்கு தனது தாய்க்குக்கூட வெளிப்படுத்தாத பல விடயங்களை வெளிப்படுத்தினர். இதனால் தமது மனம் சரியான இலேசாக இருப்பதாக உணர்ந்தனர். இப்பயிற்சிக் காலம் ஒரு கோயில் போலத் தென்படுவதாகப்பலர்குறிப்பிட்டனர். தாங்கள் கோயிலில் போய் தங்களது மனப் பாரத்தைக் கொட்டுவதாகவும் அதேபோல இதுவும் ஒரு கோயிலாக இருப்பதோடு இங்கு தங்களுக்குப் பதிலும் கிடைப்பதாகவும் கூறினார்.
இவ்வாறு பாரங்களை இறக்கியதன் பின் இலேசான மனிதராய் பறப்புக் குத் தயாராவர். அவர்கள் மாறியதனை அவர்கள் முகங்களே காட்டும் இந்த முகங்களில் தோன்றும் மலர்ச்சி, ஒளி, அவர்களின் செயற்பாடு என்பவற்றின் மூலம் நாம் அதனைக் கண்டுள்ளோம்.
இந்த இலேசாகிய மனங்களுக்கு, தெளிந்த மனங்களுக்கு இன்றைய சமூகத்திற்கு பொருத்தமான இலக்கையும் குறிக்கோள்களையும் கண்டு அடைவதற்கு வழிதிறத்தல் அதாவது இன்றைய சமூகத்திற்கு வேண்டிய மனிதர்களாய் அவர்களைச் சேர்த்து எடுத்தல் ஆகிய சேர்ப்புச் சடங்கு அடுத்தநடவடிக்கையாகும். இங்கு அனைவரது பங்குபற்றலோடு கூடிய நீண்ட கலந்துரையாடல்கள் முக்கிய இடம்பெறும். இதற்கு முன்பு இத்தகைய நீண்ட கலந்துரையாடல்களில் அவர்கள் மனம் செல்வதில்லை. மனவெளிப்பாட்டி லேயே அதிக நாட்டம் கொண்டிருந்தனர். காலப் போக்கில் ஆழ்ந்த கலந்து ரையாடலில் நாட்டம் உருவாயிற்று இங்கு அவர்களின் உண்மையான வெளிப்பாடோடு கூடிய முழுமையான பங்குபற்றலின் மூலம் தமது எதிர்காலம் பற்றியும் இலக்குப் பற்றியும் குறிக்கோள்கள் பற்றியும் கண்டு அமைத்துக் கொள்ளும் ஆற்றலை அடைவர்.
அனுபவப் பகிர்வின் போது ஒரு பெண் தான் இப்பயிற்சிக் காலத்தில் வாழ்ந்த ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு யுகம் போன்ற நீண்ட அனுபவத் தைத் தந்தது என்றும் நீண்ட காலத்தில் அறிய வேண்டிய விடயங்களை குறுகிய காலத்தில் அறிந்து கொள்ள முடிந்ததாகவும் தன்னைப் பற்றி நிறையக் கண்டு கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
இவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலம் சேர்ந்து வாழ்ந் தாலும் தமது மனப் பாரங்களைக் கொட்டி ஆறியதாலும் கிடைத்த உறவின் பலத்தாலும் நம்பிக்கையும் துணிவும் உள்ள புதிய மனிதராய் புதிய குழுவாக உருவாகின்றனர். இப்புதிய உத்வேகத்துடன் எதையும் சாதிக்கும் பலம் பொருந்திய இக் குழுக்கள் ஆங்காங்கே இன்றைய சமூகத்துக்கு வேண்டிய அதிர்வை ஏற்படுத்தும் மாதிரிக் குழுக்களாய் அமையும். Ο
55

Page 34
Blumilianabuliţă alinitrală haitamill:Lisi LonilöGTjTueith jibenLunGlsi நொறுங்குண்ட இதயம்: ஒரு ßsOTTLIGų
செல்வி திருச்சந்திரன்
சிமூகவியல், மானிடவியல் மனோதத்துவம் போன்றவற்றால் முன்வைக் கப்பட்ட பல கோட்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கிய பெண்நிலைவாதம் இலக்கிய விமர்சனத்துறையில் பல புதிய கோணங்களைப் புகுத்த முற்பட் டுள்ளது. இவை ஆங்கில மொழிகளில் பல வாதப்பிரதி வாதங்களைத் தோற்றுவித்திருக்கின்றன. பெண் அடிமைத்தனத்தை புரிந்துகொள்ள,விளங்கிக் கொள்ள முன்வைக்கப்பட்ட காரணங்களைப்போல அக்காரணங்களை அடிப் படையாகக் கொண்டும் கொள்ளாமலும் பெண் என்ற நிலையை, அதில் ஏற்பட்ட இயல்பை, தன்மையை, முன்வைத்து பல வாதங்கள் முன்வைக் கப்பட்டுள்ளன. ஆனாலும் அவை முன்னெடுத்துச் செல்லும் வாதங்களின் மையம் என்று ஒன்றை நாம் இனங்காணலாம். பெண்ணின் எழுத்துக்கள் படைப்புக்கள் ஆண்களின் எழுத்துக்கள் படைப்புகளில் இருந்து கதைப் பொருள், உரு, உருவகிக்கப்பட்ட தன்மை,மொழி, அதைக் கையாளும்விதம், உணர்ச்சிகளின் வெளிப்பாடு, கதைப்புலம் போன்ற வற்றிலிருந்து வேறுபடு கிறதா? என்ற கேள்வியே அந்தமையம். விடை ஆம் என்று கொடுக்கப்பட்டு அதற்குரிய காரணகாரியத் தொடர்புகளை அவர்கள் முன்வைக்கின்றனர்.
எலைன் ஷோவால்ற்றர் (Elain Showalter) அலிஸியா ஒஸ்றிக்கர் (Alicia Ostriker) 3T6öpT d6öGu (Sanra Gilbert) 5Tuggs 6ö56)ITä, (Gayatri Spivak) போன்றோர் இவ்விவாதங்களுக்குப் பெரும்பங்களித்துள்ளனர். வித்தி யாசமான படிமங்கள், வித்தியாசமான படைப்புகள், ரசானுபவம் என்ற ரீதியில் வித்தியாசங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலத்தின் பிரதிபலிப் பாக பெண்களின் எழுத்துக்களும் வித்தியாசமானவை என்று விவாதிப்பதில் அவர்களுக்கு ஏதும் கஷ்டமிருப்பதாகத் தெரியவில்லை.
இலக்கியம் வர்க்கரீதியில், சாதித்துவ ரீதியில் வித்தியாசப்படும். அவை பிரதிநிதித்துவப்படுத்துவதும் குறியீட்டுணர்தல்களும் வெவ்வேறு உணர்ச்சி களை வெளிப்படுத்தும். இதற்கு முக்கிய அடித்தளம் அவரவரது வேறுபட்ட வித்தியாசமான அனுபவங்களே. இங்கு அனுபவங்கள் என்பது ஒரு மிக முக்கிய அடிமட்ட அடித்தள காரணியாகின்றது. இதுவே இப்பொழுது தலித்தியம் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டோர் ப்ற்றிய ஆய்வுகள் (Subaltern Studies) என்ற பல சமூக இலக்கிய மரபுகளைத் தோற்றுவித்துள்ளது. (My Fair lady) (S6) 6T6060&st (36 bp656 (Eliza Dolittle) s 600Tfré fuguó) stil களின் வெளிப்பாடு. அதன் மொழிப் பிரயோகம், பாடும் அத்தொனி இவற்றிற்கு ஒரு சிறு உதாரணம்.
Quoiris)606. Tg5ds assib605Gybó (Acadamic Women's Studies) பல்கலைக்கழகங்களின் வேறு அறிவுபூர்வ இயக்கங்களுடனும் தொடர்பு கொண்ட காலத்தில் தோன்றாத இவ்விலக்கிய கோட்பாடுகளும் விமர்சனங் assistib (Literary theory, Criticisms) list6tfig516 (35TGirp567.
56

ஆண் சார்ந்த கருத்துக்களும், கருத்தியலும் ஆண்களது இலக்கியத்தில் மட்டும் தான் தோன்றும், வெளிவரும் என்பது சரியல்ல. அவற்றை உள்வாங்கிய பெண்களும் கூட சமூக ஏற்புடைத்துக்காகவும், அவற்றை நம்பி அவை சரி என்ற ரீதியிலும் இலக்கியம் படைக்கலாம். அவர்களது கற்பனை யிலுங்கூட ஆண் முதன்மை மேலாதிக்கங்கள்தான் உருவாகலாம். ஆனால் அவற்றை அவர்கள் வெளிப்படுத்தும் பொழுது அவை மரபிலக்கியங்களா கவே இருக்கும். அப்படி ஒரு சமூக ஏற்பிற்காக எழுத முற்படாத பெண்கள் புனை பெயரிலும் ஆண்கள் பெயரிலுமே எழுதுகிறார்கள். ஒரு சிலரே துணிவுடன் மரபுவழி கருத்தியல்களை நிராகரித்து ஆணாதிக்க நிலை களைக் கேள்விக்குள்ளாக்கிறார்கள்.
இங்கு Showalter கூறும் ஒரு கருத்தை நாம் ஆராய முற்படலாம். பெண்களது எழுத்துக்கள் அவர்களது ஒடுக்கப்பட்ட நிலைமைகளை, அவர் களது பால்நிலையின் தன்மைகளை வெளிப்படுத்துகின்றன என்பது அவர் வாதம். இதை வலியுறுத்தும் Gilbert இதற்கும் அப்பால் சென்று இலக்கிய வடிவமும் பாத்திரப்படைப்பின் பாங்கும் பெண்நிலையின் பிரதிபலிப் புக்களே என்றார். பெண்ணை, அவளது பால்நிலையை மையமாக வைத்து செய்யப்படும் விமர்சனத்தை Gyno Criticism என்று கூறுவர். இதைவிளக்க பெண்களது உடல்நிலை (Biological) மொழியின்தன்மை (Linguistics) உள வியல்பாங்கு (உள்ளம் சென்ற வழியே மொழியும் சென்று பிறக்கு மாகையால்) போன்ற மூன்றையும் கூறி இவற்றின் வெளிப்பாடு எப்படி கலாசாரத்தை மையமாக் கொண்டிருக்கிறது என்பதையும் முன்வைத்து பெண்ணை மேற்கூறியவற்றால் உருவாக்கப்பட் பெண்ணை, மையமாக வைத்து எழுந்த விமர்சனக் கோட்பாடுதான் பெண்மைய விமர்சனம் என்று கூறுகிறார். இது பெண்நிலைவாத விமர்சனத்திலிருந்து வேறுபட்டது (Feminist Criticism) ஆண், பெண் இருபாலாரது இலக்கியங்களில் தெறிக்கும், தொனிக் கும் ஆணாதிக்க சிந்தனை போக்குகள், பதங்கள் போன்றவற்றை இனங் காணுவது தான் பெண்நிலை விமர்சனம் இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது. பிரான்ஸ் நாட்டு பெண்நிலைவாதிகள் லூயி இரிகாரி (Louis rigary) ஜஉலியா கிறிஸ்தவா (Julia Kristeva) போன்றோர் மொழிக்களித்த முக்கியக்துவம் அதிகாரம், ஆண் ஆதிக்கம், வர்க்க ஆதிக்கம் போன்ற எல்லா அதிகாரங்களின் பிரதிபலிப்பாகவும் அவற்றை நியாயப்படுத்துபவை யாகவும் இருப்பது மொழியின் மாயாஜாலமே என்பது ஒரு முக்கியமான வாதம். இவர்களால் மொழிக்கு அளிக்கப்பட்ட அதிஉன்னதமான நிலை. அமெரிக்க ஆங்கில பெண்நிலைவாதிகளால் ஒரளவே ஏற்றுக்கொள்ளப்பட் டுள்ளது. இவ்விவாதங்கள் வேண்டாத அளவிற்கு நீண்டும் போயின.
இந்த விவாதங்களின் தார்ப்பரியங்களை முற்றாக நிராகரிக்காமல் இதில் சிலவற்றில் உண்மை உளது என்பதே எனது வாதம். Subjectivity என்று ஆங்கிலத்தில் கூறப்படும். உள்ளார்ந்த பெண்ணிலைநோக்கு பெண் களின் ஆக்கங்களில் ஒரு இலக்கியப் பண்பாக ஏன் மரபாகக்கூட தோன்று கின்றது என்பது ஓரளவிற்கு உண்மையே. இந்த உள்ளார்ந்த தன்நிலை உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளுக்கு ஒரு மதிப்பிற் குறைந்தது என்ற ஒரு அர்த்தப்பாடுமுண்டு. தர்க்க ரீதியில் நியாயப்படுத்தப்படாது, மாயையைப் போன்றது. வெளி உலக நடப்புக்களுடன் தொடர்பற்றது. உணரலாமே ஒழிய பரீட்சித்து நிருபிக்க முடியாது அனுபவிப்போரின் மனது மட்டுமே அறியக் கூடியது என்று பல கோணங்களில் அது விமர்சிக்கப்படுவது மரபாகி இருந் தது. தன்நிலைநோக்கு உணர்ச்சிகள், புறநிலைப்பாடுகள் என்ற பிரிவுகள் இயல்பாகவே ஆண், பெண் என்ற பால்நிலைப் பிரிவுக்குள் அடங்கி ஒன்று
57

Page 35
மற்றதின் மேலானது. ஆண் தர்க்கரீதியாக பேசுபவன் பெண் உணர்ச்சி ரீதியாக அழுது புலம்புவாள் என்ற ஒரு கோட்பாட்டையும் உருவாக்கி யுள்ளது. இதில் ஆணைப் போல பெண்ணும் தர்க்கரீதியாக வெளிப்பாடு செய்பவள் என்று விவாதிப்பதில் அர்த்தமில்லை. இந்த உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு மகத் துவம் கொடுக்க வேண்டும். மதிப்பளிக்கப்பட வேண்டும். பெண்ணின் அநுபவம் வித்தியாசமானதால் அவளின் இலக்கிய கலாசார வெளிப்பாடு களும் வித்தியாசமானதாக இருக்கும். அதுவே சிலவேளைகள் எதிர்ப்புக் கலாசாரத்தை வேண்டுவதாக, எதிர்ப்புக் குரலாகவும் வெளிப்படலாம். ஆண்டாள், காரைக்கால் அம்மையார், மீரா, அக்காமகாதேவி போன்றோரின் படைப்புக்களில் தன்னிலை உணர்ச்சிகள் கரைபுரண்டோடுவதும் உள்ளார்ந்த எதிர்ப்புக்களையும் அவை கொண்டிருந்தன என்பதும் முறுக்கமுடியாத உண்மை அவர்களது அனுபவங்கள் அப்படிப்பட்டன.
அதேபோன்று, தஸ்லிமா நஸ்ரீன், கமலா தாஸ் போன்றோரின் அதிதீவிர மறுப்பு ஒலிகளையும் அவ்வாறே நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அடக்குமுறைக்கும் ஒடுக்கப்பட்ட கலாசாரத்துக்கும் உட்படாத ஒளவையாரின் குரல் வேறானதாக இருக்கிறது. அரசியலையும், காதலையும், ஆண்மையை யும் வீரத்தையும், சுதந்திர காதலையும் வெளிப்படுத்தும் ஒளவை வித்தியாசமானவர். ஆண்களின் தோழமையைக் கொண்டு ஆனால் திருமணப் பந்தத்திலிடுபடாத அவளது அனுபவங்கள் வித்தியாசமானவை. இவை எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஒற்றுமை இவர்கள் தனிமனுஷி களாக இருந்தது. இருப்பது என்பதும் ஒரு முக்கிய விடயம். கணவரின் அதிகாரம், பிள்ளைகளின் அலைக்ககழிப்பு இல்லாத சுதந்திரமான போக்கு இவர்களை வித்தியாசமானதாக்கியது. 36 (Djilgin- மணமாகியபின் ‘சர்வமங்களங்கள்’ பொருந்திய பெண் எழுத்தாளர், எழுதுவதை விடுத்து வீட்டு வேலைகளின் “தர்மங்களை’ ஏற்கத் தொடங்கிவிட்டனர் என்பது பிரத்தியட்சம்ான உண்மை.
போர்க்காலங்களின் வன்முறைகளை நீதிமறுப்புக்களையும் கொடுரங் களையும் எழுத்தில் வடித்த சிவரமணி, செல்வி, ஒளவை போன்றோரின் கவிதைகள் சமகால ஆண்களின் கவிதைகளிலும் வித்தியாசமானவை, இங்கு பெண்களின் உணர்ச்சி அலைகள் பாசத்தைக் கொட்ட மட்டும் வெளிப்பட வில்லை. நீதி கேட்டு அராஜகங்களை தட்டிக்கேட்டு மானிட நியாயங்களைக் குழி தோண்டிப் புதைத்தவர்களைச் சாடி நிற்கின்றன. இங்கு தன்னிலை உணர்ச்சி புறநிலைப்பாடு என்ற ரீதியில் உணர்ச்சிகளைப் பிரித்து பங்கு போட்டு வாதாடுவது எவ்வளவுக்குச் சரியானது என்ற கேள்வி எழும்புகிறது. ஆனாலும் அனுப்வ வெளிப்பாடுகளை உள்ளுணர்ச்சிகளினூடாக வெளிப் படுத்துவதில் பெண்களது இலக்கியத்தில் வேறுபாடுகளைக் காணலாமோ என்பதே கேள்வியாக இருக்க வேண்டும்.
அடுத்ததாக பெருமிலக்கியங்களில்கூட தடுக்கமுடியாமல் பெண் நிலைச் சிந்தனைக்கோடுகள் அடங்கிய கதாபாத்திரப்படைப்புகள் மரபுவழிக் கவிதை களின் எச்சசொச்சங்களாகப் புகுந்துவிட்டன. அவற்றிற்குப் போதிய முக்கியத் துவம் இலக்கிய விமர்சகர்களால் கொடுக்கப்படவில்லை. அல்லி ராணியின் சுதந்திரம் அடங்காப்பிடாரித்தனமாக விமர்சிக்கப்பட்டது.அம்பிகை அம்பாலிகை கதையும் இப்படியே. மகாபாரத்தில் சிகண்டியாக மாறி பீஷ்மரை பெண் கடத்தியதற்காகப் பழிவாங்கி அவளைக் கொல்லுதல் போன்ற இடைக் கதைகள் இவற்றுக்குச் சான்று. இவை முக்கியத்துவம் பெறவில்லை. இவை எதிர் கலாசார பெண்நிலைவாதச் சிந்தனைப்பாற்படும். இது பெண்
58

நிலைவாத விமர்சனத்தில் அடங்கும் பீஷ்மரின் பெண் கடத்தல் அக்கால ராஜதர்மம் என்று விளக்கப்பட்டது. அப்படியாயின் சிகண்டியின் உருவாக்கம் ஏன் தோன்றியது. அது ராஜதர்மத்திற்கு எதிரானதா?
ஷோ அல்ற்றர் (Showalter) Female Canon என்று பெண்ணிலக்கியப் பகுப்பு ஒன்றை நாம் உருவாக்கலாமா என்பது என்னைப் பொறுத்தவரையில் கேள்விக்குறியே. வர்க்க. சாதிய, இனத்துவ ரீதியில் பிரிவுபட்டிருக்கும் பெண் களது இலக்கியப் படைப்புக்கள் பாடல்கள் ஒன்றிலிருந்து வேறுபட்டிருக்கும். அவை அவ்வக்குழு ஆண்களின் இலக்கியத்தையும் அனுபவரீதியில் ஒத்திருக் கும். அதேநேரம் குழு இருப்பு நிலைகளைத் தாண்டிய பால்நிலைக் குறியீடு களையும் அர்த்தப்பாடுகளையும் அவை கொண்டிருக்கலாம்.
மேலே கூறிய எனது கருத்துக்களை வைத்து இலங்கையில் முதலாவது பெண் நாவலாசிரியரின் நொறுங்குண்ட இதயம் என்ற நாவலை ஒரு மதிப்பீடு செய்யமுற்படுகின்றேன். இங்கு முதலில் இரு விடயங்களைக் கூற வேண்டும் முறைசார் பெண்கல்வி தமிழ் சமுதாயத்தில் கிறிஸ்தவத்துடன்தான் தொடங்கியது. அமெரிக்கன் மிஷனரிமாரின் மதமாற்றத்துக்கு தேவைப்பட்ட கல்வியறிவு ஆணையும் பெண்ணையும் வெவ்வேறாக மதிக்கவில்லை.
மங்களம்மா ஒரு கிறிஸ்தவப் பெண் இரண்டாவதாக அவர் பாடசாலை சென்று கல்வி கற்றதற்கான சான்றுகள் இல்லை. பெரும்பாலும் வீட்டிலேயே தன் கல்வியைக் கற்றுள்ளார். அவரது வர்க்கநிலை இங்கு முக்கியத்துவப் படுத்தப்பட வேண்டும். அவர் கலாநிதி ஐசாக் தம்பையாவின் மனைவியா கவும் ஜே. டபிள்யூ. பாப்குமாரகுலசிங்க "முதலியாரின்" மகளாகவுமிருந்தது ஏனைய பல சமுதாய சலுகைகளை அவருக்கு அளித்தது. இவற்றின் பரிமாணங்கள் எவ்வாறு முக்கியமானதோ அவ்வளவுக்கு அவை அவரது நாவல்களிலும் பரிமளித்துள்ளது.
1914 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்நாவல்களுக்குப் பின் 1938ஆம் ஆண்டு அரியமலர் என்றொரு நாவலை இவர் உதயதாரகை என்னும் இதழில் தொடர்ந்து எழுதி வந்தார். ஆனாலும் இது தொடர்ந்து எழுதப்பட்டு முடிவு பெறவில்லை. அவர் அனுபவக்களஞ்சியம் என்று ஒரு தொகுத்த கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டதாகத் தெரிகிறது. இதுவும் எனக்குக் கிடைக்கவில்லை. நொறுங்குண்ட இதயம் என்பது விவிலிய மதத்தில் எடுத் தாளப்பட்ட ஒரு சொற்பதம் என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் இலங்கையில் பெண்ணால் எழுதப்பட்ட நாவல்களில் இது முதலாவது நாவலாக இருக்கும் என்பது எனது எண்ணம். சிங்களப் பெண்ணால் எழுதப் பட்ட முதல் நாவல் 1922ஆம் ஆண்டிற்குரியது.
வரலாற்றுக் குறிப்புக்கள் சிலவற்றைத் தந்து செல்லும் இந்நாவல் ஆசிரியரின் சமுதாய விழிப்புணர்ச்சியை ஆங்காங்கே காட்டிச் செல்கின்றது. கதாநாயகியின் தகப்பன் காலனித்துவ ஆட்சி வரம்புகளுக்கு இணங்க மறுத்ததால் அரசாங்க சேவையில் இருந்து நீக்கப்படல், கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றப்பட்டமை, யாழ்ப்பாண மத்திய தரவர்க்கம் ஆங்கிலத்தைத் தங்களுடைய சமூக மேம்பாட்டுக்கும் ஏற்றத்திற்கும் ஒரு காரணியாக இனங் கண்டு அதை தீவிரமாகக் கற்பதற்குக் கடல் கடந்து கல்கத்தா நகருக்குச் சென்றமை, அசைவியக்கமற்ற யாழ்ப்பாணத்துக் கமத்தொழிலில் தங்கி உள்ள பொருளாதாரம், கேரளத்து புகையிலை வியாபாரிகளில் தங்கி நின்ற புகையிலை வியாபாரம், சாதிக்குள்ளேயே நடக்கும் திருமணம், சீதனவழக் கம், சொத்துரிமை போன்ற செய்திகள் வரலாற்றுப் பாங்குள்ளனவாக
59

Page 36
ஆங்காங்கே தெறிக்கின்றன. இவை ஆசிரியர் சமூகப் பாங்குகளை தீவிரமாக அவதானித்துள்ளார் என்பதற்கு சான்று பகர்கின்றது. வெளிநடப்புக்களில் அவருக்குள்ள ஈடுபாடும் இதனால் வெளிவருகிறது. குடும்பம், கணவன், குழந்தைகுட்டி, மனையியல் என்ற வட்டத்துக்குள் இவர் முடங்கியிருந்த தன்னிலை உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளல்ல இவை.
ஆண்நிலைச் சிந்தனைக் கூறுகள் சிலவற்றை ஆண்தலைமைத்துவ முறையின் வெளிப்பாடுகளாக ஆசிரியர் கூறிச் செல்கிறார். இவை பழமொழி களாக சில இடங்களில் வெளிவருகின்றன. ஆண் பாத்திரங்களே இதைக் கூறுகிறார்கள். தனது மகனின் காதலை நிராகரிக்கும் தந்தைபெண்களுக்கு சுதந்திரம் உண்டா என்ற கேள்வியை எழுப்பி, சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்று விடை பகர்கிறார்.
ஆடு நினைத்த இடத்திலா பட்டியடைக்கிறது? என்கிறார்.
“பெண்ணுக் கொரு மூச்சா? வெட்கமான வார்த்தையை வெளியில் விடாதேயும்" . . - “பெண்புத்தி கேட்பாரிற் பேதையாரில்லை”
என்கிறார். இங்கு ஒரு விளக்கம் தேவைப்படுகின்றது என்று நினைக்கிறேன் இது ஆண் கதாபாத்திரப் படைப்புக்கு ஏதுவாக உகந்ததாக அவர்களின் குணச்சித்திரத்தைப் வெளிப்படுத்தும் முகமாகவே கூறப்படுகின்றன என்றே நாம் கொள்ள வேண்டும்.பெண்கள் வாயிலாக இவை இந்நாவலில் வெளிக் காட்டப்படவில்லை. ஆசிரியரின் அடிமட்ட அடித்தள கருவும், பெண் கதாபாத் திரப் படைப்புக்களும் இப்பழமொழிகள் இயம்பும் கருத்தியலிலும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகவில்லை என்பதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
பொன்மணியின் கதாபாத்திரப் படைப்பு சமூகவரையறைகளை மீறியதா
கவும் பெண்களுக்கென வகுக்கப்பட்ட குணாதிசயங்களை மீறியதாகவும் இருப்பது சற்றே வியப்பைத் தருவதாகவும் இருக்கிறது. ஆளுமை, தன்னம் பிக்கை, கருத்துச்சுதந்திரம், மற்றையோரில் தங்கி நில்லாமை, நேர்மை, தனக்குச் சரி என்று பட்டதைச் செயற்படுத்தும் திண்மை போன்ற பாரதியின் புதுமைப் பெண் இலக்கணத்துக்குள் இவை அடங்குவதாக இருக்கிறது. பெற்றோரிடம் தனக்கு என்று தான் தெரிவு செய்த மணாளனையே வரிக்க வேண்டும் என்று வாதிடும் பொழுதும் உண்மைக்கும். சத்தியத்திற்குமே நான் கட்டுப்படுவேன். காதலனுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் கட்டாயமாக உங்களுக்காக மீறமாட்டேன் என்று கூறும் பொழுது தற்கால சினிமா கதாநாயகிகளைப் போல அழுது கண்ணீர் வடித்துக் கதறவில்லை அவள். அவளது அபிலாசைகளை மீறி அவளுக்கென்று ஒரு கணவனைப் பெற்றோர் தேடிய பொழுது அவள் வீட்டைவிட்டு, பெற்றோரை விட்டு விலகி தன் காதலனுடன் சென்று விடுகிறாள். இங்கு காதல் உணர்ச்சிகளுக்கும் அப்பால் அவள் சத்தியத்தையே கடைப்பிடிக்கின்றாள் என்ற அர்த்தம் தொனிக்க கதாசிரியர் தன் பெண் கதாபாத்திரத்தை படைத்திருப்பது கவனிக்கத்தக்கது. காதலனுடன் அவளது உறவிலும் வாழ்க்கை முறையிலும் கூட தன் உணர்வு மிக்க தன் இருப்பையும் தனக்கென்று ஆசைகளும் குறிக்கோள் களும் உண்டு என்று அவள் திட்டவட்டமாக தெரிவிக்கிறாள். அறிவு, திண்மை, நேர்மை போன்ற ஞானச் செருக்குடன் தன்னை இனங்காண வைக்கிறாள். அவள் காதலனுக்கு எழுதும் கடிதத்தில் தானே சில விடயங்களை டிவு செய்கிறாள். அதன் மொழி தர்க்கத்துடன் நியாயத்துடன் ளிர்கிறது. அவற்றைச் சரி என்று காதலனும் ஏற்றுக் கோள்கின்றான் அநேகமாக இங்கு உணர்ச்சிக் குழப்பங்கள், அறியாமை பேதமை போன்றன இல்லை. மத்திய தர தமிழ் கலாசாரச் சூழலில் இப்படி ஒரு பெண் கதாபாத்திரப் படைப்பு எப்படித் தோன்றியது.
60

பொன்மணியின் குணஇயல்பிற்கு ஒரு உதாரணம்:
உலகம் என்னைப்பற்றி நன்மையாகப் பேசிக்கொள்ளுமென்பது ஐயமான காரியம். சிலருக்கு எனது செய்கை மிகவும் கூடாததாகத் தோன்றக் கூடும். ஆனால் நான் என்னுடைய மனதிற்கு நிதி என்று கண்டதைச் செய்தேன்.
கணவனால் துன்புறுத்தப்படும் தன்தோழி கண்மணியை துன்பவாழ்வை விடுத்து, கணவனைவிட்டு விலகி, அவளது பெற்றோரைச் சென்றடையும்படி ஆலோசனை கூறிப் பின் வற்புறுத்துகிறாள். இவளைப்போல ஆளுமையும் செயற்பாட்டுத்திறனும் இல்லாது ஊசலாடும் கண்மணிக்கு இத்தகைய வற்புறுத்தல் தேவைப்படுகிறது.
வீடு, குடும்பம், மணவாழ்வு போன்ற புனிதங்கள் இவ்விரு பெண்களாலும் கேள்விக்குறியாக்கப்பட்டுவிட்டன. 1914ஆம் ஆண்டில் இதுநடந்தது. என்பதை நாம் சற்று ஆழமாக அவதானிக்க வேண்டும்.
அன்பாக, பண்பாக, கீழ்ப்படிவாக, வாய்பேசாது, தன்சுதந்திர உணர்வு களை அடைவு வைத்து, கணவனுக்காகத் தன்னை தாரைவார்த்துக் கொண் டிருக்கும் கண்மணி என்ற கதாபாத்திரம் கூட குடும்பம் கணவன் என்ற பந்தத்தில் இருந்தும், வன்முறையில் இருந்தும், பொருந்தாத திருமணத்தில் இருந்தும் விலகுகிறது. குட்டக்குட்ட குனிய மறுக்கிறாள். தன் தாய், தந்தையரிடம் தன் குழந்தைகளைக் கூட விட்டு விட்டுச் சென்று விடுகிறாள். முன்னையவளைப் போல அதிகம்கதைக்காமல், ஆரவாரமில்லாமல் திடமான முடிவுடன் தன்னுடைய பிரயாணத்தை இரகசியமாக நிறைவேற்றுகின்றாள். அவள் குழந்தைகளை விட்டுச் செல்வதும்கூட ஒரு செய்தியைத் தருகின்றது. குழந்தைகள் தாய்மைக்கு மட்டும்தான் பொறுப்புக்கள் அல்ல. அவளது இரகசியமாக வெளியேற்றத் திட்டத்திற்கு குழந்தைகள் இடையூறாக இருக்க லாம். அவளது பெற்றோரும் அண்ணனும் அவளைத் தங்கள் வீட்டில் வரவேற்கிறார்கள். அன்புடன் உபசரிக்கின்றார்கள். கணவனை விட்டு விலகிய தற்கும் குழந்தைகளை விட்டு வந்ததற்கும் அவளுக்கு கணவன், தாய்மை, வீடு, குடும்பம் என்பனவற்றின் மேன்மைபற்றி உபதேசம் செய்ய யாரும் முன் வரவில்லை. . . . .
இந்நாவலின் ஏனைய பெண்பாத்திரப் படைப்புக்கள் கூட சற்று வித்தியா சமானவை. கண்மணியின் கணவன் வீட்டுப் பெண்கள் அவள் கணவனிடம் குற்றங்கண்டு கண்மணிக்கு ஆறுதல் கூறி ஆலோசனை நல்குபவர்களாகவே இருக்கிறார்கள். கணவனின் தாய் மிகவும் மனம்நொந்து தனது மகனைக் கண்டித்து மருமகளை அணைப்பவளாக இருக்கிறாள். கண்மணிக்கு கணவன் அடிக்கும் போழுது கண்மணிக்கு ஆறுதல் மட்டுமே அவளால் கூறக் கூடியதாக இருக்கிறது. ஆனால் வயதில் குறைந்த கணவனின் ஒன்றுவிட்ட சகோதரியான தங்கம்மா கண்மணிக்கு சகல உதவிகளையும் செய்பவளா கவும் இறுதியில் கண்மணி வீட்டைவிட்டு வெளியேறித் தனது பெற்றோரிடம் செல்லும்படி ஆலோசனை நல்கி சகல ஆயத்தங்களையும் செய்கிறாள். அவளின் கூற்றாக ஒரு அபூர்வவாசகம்.
'கண்மணி நீ எதுக்காய் இவ்வளது பாடுகளையும் இக்கட்டுக் களையும் அனுபவித்துக் கொண்டு இங்கேயிருக்கின்றாய் என்று தெரிய வில்லை. உனது புருஷன் உன்னை எப்போதாவது விட்டுக்குப் போக உத்தரவளிப்பாரென்று நீ எண்ணியிருப்பது வீண். இந்த வாழ்வு இனிப் போதுமென்று வெறுத்துத்தள்ளி" உன் சிவன் தப்ப கோட்டு முலமாய் பிரிந்து உன் தாய், சகோதரரிடம் ஓடிப்போ. இங்லிசு இராச்சிய மென்னத்
6.

Page 37
திருக்கிறது? நிதியைச் செலுத்தவல்லவா? தெய்வ கட்டளைக்கமைந்து அவர் வழிகாட்டும் வரைக்கும் பொறுமையாய்ச் சகிப்பேனென்று சொல்லு வது புத்தியினம்.கோட்டுமுலமாய்ப் பிரிந்து கொள்வதேன்.உனக்கு விருப்ப மில்லை?நீ சம்மதங் கொடுக்கக்கூடுமானால் இந்தநிமிஷம் உன் தமைய னால் அதற்கேற்ற ஒழுங்குகள் செய்து உன்னை மீட்டுக் கொள்ளுவார்”
'கண்மணி நிற்கும் நிலை மிகப் புத்தியீனமாதென்று ஆர்தான் சொல்வார்கள்? புருஷனுக்கிடையிலும் மனைவிக்கிடையிலுஞ் சில வேளைகளிற் பின்னிதங்கள், பேதம், முரண்பாடு உண்டாகும் வழக்க முண்டு. ஆனால் உனக்குக் கிடைத்த நிலைபரத்தைப் போலொன்றை நான் இதுவரைக்கும் காணவில்லை. இப்படி மோசமாய்ப் புருஷனால் வேண்டா வெறுப்பாய் நடத்தப்பட்டு தாங்கக் கூடாத துயரத்தை அனுப விக்கும் பெண்னை நான் கண்டதுமில்லை. உன்னைப் போல் மடைத் தனமாய் தன்னைப் புருஷனுக்கொப்படைத்தவள் எங்கேயினுமுண்டா?
மங்களநாயகம் தம்பையாவின் பெண் கதாபாத்திரப்படைப்பு வித்தியாச மானவை. தர்க்கரீதியாகப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திண்மை உடை யவர்களாக இருப்பது பெண்கள் உணர்ச்சி ரீதியில் எண்ணுபவர்கள் செயலாற்றுபவர்கள் என்ற கருதுகோளை உடைக்கிறது. அடுத்ததாக ஒரு மத்தியதர யாழ்ப்பாண தமிழ் சமூக விழுமியங்கள் என்று கருதப்பட்ட குடும்பம், வீடு, தாம்பத்தியம், கணவன், குழந்தை பராமரிப்பு, தாய்மை போன்ற சில கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. இவை காலத்தை வென்ற கருத்துக்கள் காலத்தை மீறிய கருத்துக்கள். இந்த விழுமியங்கள் பெண்ணுக்கு எதிராகச் செயற்படும் பொழுது அவற்றை நாம் நிராகரிக்கலாம். அவற்றுக்குள்ளளேயே அமுங்கி பெண்ணின் சுயவிருப்பை, தன் மானத்தை இழக்கத் தேவையில்லை என்பது கதாசிரியரின் ஆணித்தரமான கருத்து.
இவ்விமர்சனத்தில் இறுதியில் நாம் எழுப்பும் கேள்வி இது ஒரு பிரசார நாவலா என்பதே? கதாநாயகியும் கணவனதும் குடும்பத்தவர் அனைவரும் இறுதியில் கிறிஸ்தவ மதத்தவராகிறார்கள். பாதிரியாரின் வருகை, அவரது போதனை, துக்கம் களைதல் போன்றன இந்து சமயப் போதனைகளைச் சொல்லாமல் சொல்லி கிறிஸ்தவ மதத்தின் மேன்மையை எடுத்துச் சொல்கிறதா? அப்படிச் செய்வது பெருங் குற்றமா இதனால் நாவலின் தரம் குறைத்து மதிப்பிடப்பட வேண்டுமா இவைகளைக் கேள்விகளாகவே நிறுத்திக் கொள்கின்றேன். Ο உசாத்துணை நூல்கள் o Gilbert Sandra 1979. The Mad women in the Attic, Susan Gilbert Susan
Gubar, Yale University press. New Haven, O Gilbert, Sandra 1986. “Feminist Criticism in the University” in an Interview in Gerald Graff Criticism in the University, North Western University press, Evanston. Ostriker, Alicia 1986. Stealing the Language, Beacon press. Boston. o Showalter, Elain 1979. “Towards a Feminist poetics' in Women Writing
and Writing about Women. Ed. M.Jacobus Croom Helm, London. O Showalter, Elain. 1981, “Feninist Criticism in the Wilderness' Critical
linquiry, winter. O Showalter Elain 1992. “Feminism and literature, Literary Theory today.
Ed. by Peter Collier and Helga Geyer Ryan.
62

LGUõb, ിഖിജ്യ அனுபவங்களும் பிரச்சினைகளும்
மனோன்மணி பற்குணம்
அபிவிருத்தி என்னும் எண்ணக்கரு மனிதவளத்தினது தேவை களிலும், அபிலாசைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினைக் குறித்து நிற்கின்றது. இங்கு பெண்களும் அபிவிருத்தியும் என்னும் போது அபிவிருத்தி யில் பெண்களை ஒன்றிணைத்தல் என்னும் கருத்தாக்கத்தினைத் தருகின் றது. அவ்வாறு ஒன்றிணையும் போது அவர்களின் பங்களிப்பும் அனுபவங்கள், பிரச்சினைகள் ஊடாக எவ்வாறு அபிவிருத்தியை முன்னெடுத் துச் செல்கின்ற னர் என்பது பற்றியும் ஆராயப்பட வேண்டியது அவசியமாகும். ஆகவே இலங்கையில் வாழ்கின்ற பெண்கள் தேசிய பிரதேச மட்டங்களில் தமது பாரிய பங்களிப்பினைச் செய்வோராக மாறி வருகின்றமை அவர்களின் மனிதவள அபிவிருத்தியினையே தெளிவுபடுத்துகின்றது எனலாம்.
வரலாற்றுநோக்கில்
மனித குலத்தின் தொன்மையான வரலாற்று ஆதாரங்களை நோக்கும் போது பெண்களும், அபிவிருத்தியும் என்னும் கருதுகோளை சிந்திப்பதாயின் உணவு சேகரிப்பு, உற்பத்தி என்பவற்றில் பெண்களே முன்னணியில் திகழ்ந்த தாகக் கருதக்கூடியதாக உள்ளது. பெண்கள் தமது சூழலில் கிடைக்கும் கிழங்கு, கனிவகை, மரக்கறி வகைகளைச் சேகரித்து தமது மக்களின் பசியைப் போக்குகின்றனர். ஆண்கள் வேட்டையாடச் சென்ற போதிலும் சில வேளைகளில் வெறுங்கையுடனே திரும்புவதுண்டு. இக்காலம் பால் நிலைப் பட்ட வேலைப் பகிர்வினைக் கொண்ட காலம் என ஒரிஸ் ரவ்ரன் மேசன், அலெக்ஷாண்டர், கோல்டன், வெய்சேர் என்போர் வலியுறுத்திக் கூறியுள்ள 6.
காலப் போக்கில் பெண்களும், சிறு பிராணிகளை வேட்டையாடத் தொடங்கியதன் விளைவு - கால்நடை வளர்ப்புக்கு வழிவகுத்தது. கால்நடை வளர்ப்பு விவசாயத்தில் ஈடுபட வைத்தது. கிழங்குகள் கிண்டப் பயன்பட்ட தடி கலப்பைக்கு முன்னோடியாக அமைந்தது. இவ்வாறு பெண்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழில் பாரிய விவசாய புரட்சியாக மட்டுமல்லாது மனித நாகரீக வளர்ச்சியின் ஒரு மைல் கல்லாகவும் அமைந்தது எனலாம்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் வழிகாட்டி யாக அன்று பெண்கள் விளங்கியிருக்கிறார்கள். நெருப்பின் பயன்பாடு பல்வேறு வகையான உணவுகள் தயாரித்தமை, மூலிகைகளைப் பயன்படுத்தி நோயைக் கட்டுப்படுத்தியமை, கொள்கலன் உருவாக்கியமை என்பன முக்கிய கண்டுபிடிப்புக்களாகும். இவையாவும் மிருக நிலையிலிருந்து ஆதிமனிதனை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் சென்றது என்பதனை சமூக வியலாளரும் ஏற்றுக் கொள்வர்.
63

Page 38
தல்ைமைத்துவம் கைமாறல்
இந்நிலைமைகள் யாவும் தாய்வழிச் சமூக அமைப்பின் தோற்றுவாய்க் குக் காரணமாக அமைந்திருந்தன. தாயே தன் பிள்ளைகள் உள்ளிட்ட குழுவிற்கு முழுமுதற் பொருளாக விளங்கினாள். இந்நிலைமை மாற்றம் பெறத் தொடங்கியது. மந்தைவளர்ப்பு, பயிர்ச்செய்கை போன்றவற்றில் ஆண் ஈடுபடத் தொடங்கியதோடு பலமும் உறுதியும் வாய்ந்த ஆயுதங் களைப் பயன்படுத்தத் தொடங்கினான். இதன் காரணமாக பலமும், தற்துணிவும் கைவரப் பெற்றான். அவனது தலைமையில் ‘குடும்பம்” என்னும் அலகு உதயமாகத் தொடங்கியது. உடலியற்கை விதியும் அவனது எழுச்சிக்கு உறுதுணையாக அமைந்தது. பெண்களே முதன்மை வாய்ந்த தொழிலாளி, விவசாயி, மருத்துவர், கலைஞர், ஆய்வாளர், சமூக கலாசார பாரம்பரியங்களைக் கட்டியாள்வோராக இருந்த நிலைமாறி, ஆண்களின் ஆளுமைக்குக் கீழ் உள்ளிர்ப்புச் செய்யப்படுகின்றனர். முன்னர் விஞ்ஞான கூடமாக மருத்துவமனையாக - சமூகசேவை நிலையமாக விளங்கிய பெண் ணின் உறைவிடம், சாதாரண குடிசையின் சமையற்கூடமாக மாறியமை கவலை தரும் சமூக வரலாற்று நிகழ்வாகும். இந்நிலைமையிலேயே தந்தை வழிச் சமூக அமைப்பு உருவாகியது.
அபிவிருத்தியை நோக்கிய பெண்களின் நீண்ட தூரப் பயணத்தில் காலத்திற்குக் காலம் பல்வேறு இடறுகட்டைகளும், சுடரொளிகளும் தோன்ற லாயின. இவை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உலகின் பல பாகங்களிலும் உள்ள பெண்களுக்குப் பொதுவான அனுபவங்களாக அமைந்தன. பெண் களுக்கு எதிரான வன்முறை என்பது காலம் காலமாகத் தொடர்ந்து எல்லாச் சமுதாயங்களிலும் காணப்படும் ஒரு குற்றச் செயலாகும். அபிவிருத்திப் பாதையில் பால் ரீதியான வன்முறை எந்தளவிற்குத் தடைகளை ஏற்படுத்து கின்றது என்பதனை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டிய சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சமூக பொருளாதார அபிவிருத்தியில் பெண்களின் பங்களிப்புத் தொடர்பான சர்ச்சைக்குரிய தேவையை உணர்த்து வதில் ஐக்கிய நாடுகள் சபையின் “பெண்களுக்கான பத்தாண்டுகள்’ உதவி புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் கால் நூற்றாண்டுகளாக முயற்சிகளின் பின்னும் அபிவிருத்தித் திட்டங்களினதும், கொள்கைத் திட்டங் களினதும் மிகச்சிறு பயனை மட்டுமே பெண்கள் பெறுபவர்களாக உள்ளனர். வேலைவாய்ப்பிலும், கல்வியிலும், சுகாதார வசதிகளும், அரசாங்கத்திலும் பெண்களுக்குச் சாதகமற்ற நிலைமை காணப்படுவதை பல்வேறு ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன. ஆண்களுக்குச் சமனானஇடத்தை பெண்கள் பெற்றுக் கொண்ட எந்த நாடும் உலகில் இல்லை என உறுதியாகக் கூறக்கூடிய வகையில் நிலைமைகள் காணப்படுகின்றன. இவை யாவும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவோ அல்லது மனித உரிமை மீறல்களாகவோ கருத வேண்டியுள்ளது.
பொருளாதார விருத்தி பற்றி நோக்குகின்ற பொழுது இன்றைய கால கட்டத்திலும் இலங்கையில் பெண்களின் அபிவிருத்திக்கான பங்களிப்புப் பெறுமதி வாய்ந்ததாக உள்ளது. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் மாதராண்டாகப் பிரகடணப்படுத்தப்பட்ட 1975ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்திய வேளையில் இலங்கையிலும் அதன் எதிரொலியை காணக்கூடியதாக இருந்தது. ஆணுக்கும். பெண்ணுக் கும் இடையிலான சமத்துவம், விசேடமாக 2ஆவது அபிவிருத்தி தசாப்தத்தில் மேம்பாட்டைத் தொடக்கியது. சமபெறுமதியுடைய வேலைக்கு சமசம்பளம்
64

பெறவும் சம நிபந்தனைகளும் சம வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறவும் பூரண பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடவும் ஆன அனைத்து உரிமைகளும் உறுதி செய்யப்பட்டன. இதன் காரணமாக அபிவிருத்தி என்னும் வியூகத்தினுள் பெண்களும் நுழைந்து சாதனைகள் புரியத்தக்க சூழ்நிலைகள் உருவாகத் தொடங்கின.
கல்விசார் வேலைவாய்ப்புக்களை எடுத்துப் பார்க்கையிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதைச் சில கணக்கெடுப்புக்கள் தெளிவாக்கு கின்றன. பல்கலைக்கழக அனுமதியில் 1942இல் 10.1 வீதமாக இருந்த பெண் கள் தொகை 1972இல் 42.3 வீதமாக அதிகரித்ததோடு தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் போக்கினைக் காணலாம். தொழில்நுட்பத்துறையிலும் பெண்களுக்கு ஈடுபாடு ஏற்பட்டபோதிலும் பொது கல்வித்துறையுடன் ஒப்பிடும் போது அங்கு அவர்களின் பங்கு குறைவாகவே உள்ளது.
அண்மைக்கால தொழில்சார் அபிவிருத்தியை எடுத்துக் கொண்டால் 1972 - 73இல் தேசிய பயிற்சியாளர் திட்டம் ஏற்படுத்தப்பட்ட போதிலும், சில தொழில்துறைகள் ஆண்களுக்கு மட்டுமே உரியனவாகக் கருதப்படுகின்றன. நெசவு, தையல், பன்னவேலை, கைப்பணிப் பொருட்கள் செய்தல் போன்றவை பிரத்தியேமாக பெண்களுக்கு உரியனவாகக் கருதப்படுகின்றன. எனினும் இளைஞர் குடியேற்றத் திட்டங்கள் பெண்களுக்கு விவசாயத்துறை யில் முதனிலை வேலை வாய்ப்புக்கள் வழங்கியுள்ளன. பிராந்திய அபிவிருத் திச் சபைகளின் திட்டங்களில் உடை தயாரிப்பு, கிராமியக் கைத்தொழில் பணிகளிலும் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண்கள், தொழில்நுட்ப, தொழில் நுணுக்கத் துறைகளிலும் வேலை வாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்ட முக்கிய காரணியாக விளங்குவது இவர்கள் போதிய தொழிற்திறன் பயிற்சிகள் பெறப் பின்நிற்பதே ஆகும். இதன் காரணமாகவே ஒரு சில தொழில்களில் குவிமையப்படுத்தப் பட்டுள்ளனர். கல்வித் தகைமையினால் பெற்ற வாய்ப்புக்களினாலே அவர் களுக்குச் சில தொழில் வாய்ப்புக்கள் கிட்டியுள்ளன. அதற்கு உதாரணமாக ஆசிரியத்துவம், மருத்துவம் ஆகிய தொழிற்துறைகளைக் குறிப்பிடலாம்.
இன்று இலங்கையில் காணப்படும் அரசசார்புள்ள, அரசசார்பற்ற பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ள பெண்கள் பொருளாதார விருத்திக்கும் பெரும் பங்களிப்பைச் செய்கின்ற போதிலும் பல்வேறு வகைப்பட்ட இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக இரவு நேர் வேலைகளில் ஈடுபடுதல் பாரிய பிரச்சினையாக உள்ளது. இதனால் குடும்ப ரீதியிலான சிக்கல்கள் ஏற்படுவதோடு வேலைத் தளங்களிலே பாலியல் வன்முறைக்கு உட்படுவதையும் இதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் திரானியற்ற நிலைமைகளும், வறுமை காரணமாக வேறுவழியின்றி தொடர்ந்து அங்கு வேலை பார்க்கும் துரதிர்ஷ்ட நிலைமைகளும் யதார்த்தங் களாகி அறியக்கிடக்கின்றன. இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் காணப்பட்டமை பெண்கள் பதட்ட நிலைமையுடன் தொழில் பார்க்க வேண்டிய நிலையைச் சிருஷ்டிக்கின்றது. சில நிறுவனங்களைப் பொறுத்தவரை இவ்வகை ஊழல்கள் யாவும் மூடுமந்திரங்களாகவே உள்ளன.
இலங்கையின் தமிழ் பேசும் பிரதேசங்களின் கிராமிய சூழலில் பெண் களின் வாழ்க்கைமுறை தனித்துவமானது. பெண் அதிகாலையில் எழுந்து வீட்டில் உள்ள வேலைகளை முடித்துக் கொண்டு வெளியே வயலிலோ, தோட்டத்திலோ வேலை செய்யப் புறப்படுவாள். வேலை முடித்துத் திரும்பி வரும்போது தமது குடும்பத்தினருக்கும், கால்நடைகளுக்கும் உணவு
65

Page 39
வழங்குவதற்கான ஆயத்தங்களுடன் அவள் வருவாள். இரவு உணவையும் அவளே தயாரித்து அனைவருக்கும் பரிமாறுவாள். வீட்டுத் தோட்டங்களும் அவளே செய்வாள். வீட்டில் உள்ள அனைவருக்கும் வேண்டிய தேவை களையும் அவளே கவனிப்பாள். எனினும் இவை யாவும் நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியில் அடக்கப்படுவதில்லை. அபிவிருத்தி என்னும் விருட்சத் தின் வேர்கள் இவைகளே என்பதை எவரும் உணருவதாகவும் தெரிய வில்லை. சமுகவியலாளரும் பொருளியலாளரும் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்து தம்மையே தேயிலைப் பயிருக்கு உரமாக்கிவரும் பெண்கள் நிலை எல்லோர் கவனத்தையும் ஈர்ப்ப தாகவுள்ளது. நாட்டின் அந்நியச் செலாவணியை அதிகம் ஈட்டித்தரும் தேயிலை உற்பத்தியிலும் பல பாலியல் பாகுபாடுகள் இருந்து கொண்டே வருகின்றன. அவர்களுக்கு வழங்கப்படும் வேலையில் சமத்துவம் இன்மைக்கு முக்கிய காரணங்களாக அமைபவை:
1. தொழிற்பாகுபப்பு: பாலியல்அடிப்படையில் அமைந்துள்ள இத்தொழிற் பகுப்பு சம்பளம், பதவி, உயர்வு, வேலை நேரம் என்ப வற்றில் ஆதிக்கம் செலுத்துகின்றது.
2. அவர்களின் பேச்சுக்கு எவ்வித மதிப்பும் அளிக்கப்படாமை.
4. அவர்களின் தொழிற்சக்தியைச் சுரண்டும் மனப்போக்குகள்.
நாட்டின் மூலாதார பயிர்ச் செய்கையாக விளங்கும் - தேயிலைத் தோட் டங்களில் வேலை செய்யும் பெண்கள் மட்டுமல்லாது அவர்களின் பிள்ளை களின் வாழ்வும் இருளில் மூழ்கின்றமை இன்று நிதர்சனமாக உள்ளது. இந்நிலைமைக்குக் காரணம் தொழிலதிபர்களின் சமூகப் பிரக்ஞையற்ற நோக்கும் ஆணாதிக்கப் போக்குக்களுமே ஆகும்.
இலங்கையின் போர்க்காலச் சூழ்நிலையின் அடிப்படையில் பெண் தலை மைத்துவ குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இவை பெண் களுக்கென்று வகுக்கப்பட்ட பாரம்பரிய பண்பாட்டு வடிவமைப்புடையவனாய் ஆனால் தந்தை அல்லது கணவனின் இறப்பால் ஏற்பட்ட குடும்ப அமைப்புக் களாகும். இளம் பெண்கள் 'விதவை என்னும் கோலத்துடன் தலைமைத்து வத்தை மேற்கொள்ளும் போது பல்வேறு துன்ப நிலைகளுக்கு ஆளாகின்ற னர். அவர்களுக்குப் பலமானதொரு பொருளாதாரப் பின்னணி தேவைப்படுகின் றது. சமூகசேவா சங்கங்களும், நலன்புரிச் சங்கங்களும் அதனைக் கவனத் தில் கொண்டு சில பாரம்பரிய வேலை வாய்ப்புக்களை வழங்குகின்றன. ஆனால் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் அவர்களின் தேவைகளை நிறைவு செய்யப் போதுமானதென்றோ அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவக் கூடியதென்றோ கூறமுடியுமா? அபிவிருத்தியில் பெண்களை ஒன்றிணைக்க வேண்டும் எனக் கருதுவோர் அதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ் பேசும் பெண்கள் பலர் இன்று தமது குடும்பத்தின் வறிய நிலை யைப் போக்குவதற்காக வேலை வாய்ப்பினை நாடி மத்திய கிழக்கு நாடு களுக்குச் செல்கின்றனர். பொருள்தேட இவர்கள் செல்வதனால் அவர் களுடைய பிள்ளைகளின் உள்ளங்களிலே கவலைகள் மண்டிப்போய்ப் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வறுமைக் கோட்டுக்குள் வாடும் இவர்கள் பொருள் தேடச் செல்வதனால் பிள்ளைகளின் எதிர்காலம் குழிதோண்டிப்
66

புதைக்கப்படுகின்றது. சிலவேளைகளில் கணவன் வேறு புகலிடம் தேட, திரும்பி வந்து பார்க்கும் வேளையில் அவள் தலையில் பேரிடி விழுவதையும் நிதர்சனமாகக் காண்கின்றோம். இவ்வாறாக அபிவிருத்தியை நோக்கிய சில பயணங்கள் எதிர்பாராத விளைவுகளைத் தருகின்றன.
மேல் நாடுகளில் இருப்பது போன்று விமானிகளாகவும், விஞ்ஞானிகளா கவும் விண்வெளிச் சாதனையாளர்களாகவும் இல்லாவிட்டாலும் குறிக்கப்பட்ட விகிதமான பெண்கள் சிலர் மேல் நிலை உத்தியோகங்களில் உள்ளீர்ப்புச் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவம், பொறியியல், நிர்வாகம், அரசியல், கல்வி ஆகிய துறையில் அவர்கள் பதவி வகிக்கின்ற போதிலும் ஒப்பீட்டளவில் சிறுபான்மையினராகவே உள்ளனர்.
சமூக அபிவிருத்தியில் பெண்கள் நிலைபற்றிப் பேசுகின்ற பொழுது சமூகஞ்சார் அபிவிருத்தி அதன் கூறான குடும்பத்தில் இருந்தே ஆரம்பமாகின் றது. குழந்தையைப் பிறப்பித்தல், பராமரித்தல் வளர்த்தல், வயோதிபர்களை பராமரித்தல், கணவனை உபசரித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் பெண்ணி டமிருந்தே எதிர்பார்க்கப்படுகின்றது. மனிதஇன மறுஉற்பத்தி பெண்களது இயற்கை நியதியாகவே கருதப்படுகின்றது. இவையாவற்றையும் தனக்கு உரிமையாக்கி அவளது பாலியலையும் தனது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்த ஆண், சிலவேளைகளில் ஆதிக்கவாதியாகின்றான். எதிர்காலச் சமூகச் சிற்பிகளை உருவாக்கும் பெண்களின் பங்களிப்பு எத்தகையது என்பதை அவர்கள் உணர்வதில்லை. சமயங்கள் இலக்கியங்கள் சார்ந்த சமூக விழுமியக் கோட்பாடுகளால் கவரப்பட்ட பெண்களால் இவையாவற்ரை யும் உள்ளன்புடன் ஏற்றுக்கொள்ளப் பழகிக் கொண்டனர்.ஆனால் இத்தகைய அன்பைப் பெண்ணின் பலவீனமாக ஆண்கள் கருதுவர்களாயின் பெண்கள் அடிமை நிலைக்குத் தள்ளப்படுவர்.
வடக்குக் - கிழக்குப் பகுதிகளில் வாழும் சேவை மனப்பான்மையும் நேர வசதியும் கொண்ட பெண்கள் சிலர் தமது பிரதேசத்தின் அபிவிருத்திக்குப் பல பங்களிப்புக்களைச் செய்து வருகின்றனர். தொண்டர் நிறுவனங்கள், பாராளு மன்ற உறுப்பினர்கள், மாநகரசபை முதல்வர்கள் போன்றோரின் உதவியுடன் வீதிகள் திருத்துதல், நூல் நிலைய வளங்களைப் பெறுதல், வறிய பிள்ளை களின் கல்வி வளர்ச்சிக்கு இலவசமாக உபகரணங்களைப் பெறுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பொது மக்களுக்கு உதவுகின்ற னர். சிரமதானப் பணிகளில் ஈடுபட்டு வயோதிப இல்லங்கள், அகதி முகாம் கள், அநாதை இல்லங்களுக்கும் தம்மாலியன்ற சேவைகளைச் செய்கின்றனர். இத்துடன் பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பல்வேறு அமைப் புக்களுடனும் தம்மை இணைத்துக் கொண்டு செயற்படுகின்றனர். இவை யாவும் சமூக அபிவிருத்திக்கு வழிகோலுகின்றன.
நோயற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கும் சுகாதாரப் பழக்கவழக்கங்களை நடைமுறைப்படுத்துவதில் பெண்களின்பங்கு அளவற்றது. ஒரு நாட்டின் அபிவிருத்தியின் பிரதான குறிகாட்டியாக விளங்கும் பெளதீக வாழ்க்கைப் பண்புச் சுட்டெண் அதிகரிப்புக்கு பின்னணியில் நின்று உதவுபவளும் அவளே. ஊட்டச்சத்தும் சுகாதார சேவைகளும், எழுத்தறிவு விருத்தியும் பெண்களா லேயே சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றை அவர்கள் செவ்வனவே செய்வதற்கு பாதுகாப்பான வாழ்க்கை, போதிய ஒய்வு, கணிப்பு என்பன தேவைப்படுகின்றன. பெரும்பாலான குடும்பங்களின் இத்தேவைகள் கவனிக்கப் படுவதில்லை.
இலங்கையில் பெண்களின் அரசியல்துறைப் பங்களிப்பினை நோக்கும் போது இத்துறையில் பெண்களின் - குறிப்பாகத் தமிழ் பேசும் பெண்களின்
67

Page 40
பங்களிப்பும் பிரதிநிதித்துவ விகிதாசாரம் குறைந்தே காணப்படுகின்றது. எனினும் இலங்கையின் ஆட்சி இறைமை இதுவரை மூன்று தடவைகள் பெண்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. வேறு சில பெண்கள் அமைச்சரவையிலும் பதவிகள் வகித்து அமைச்சு விவகாரங்களிலும் பங்காற்றி
d666.
நேசம் - சரவணமுத்து
இலங்கையில் 1929இல் டொனமூர் ஆணைக்குழுவினர் தமது சிபார்சு களை வெளியிட முன்னர் தேசியத் தலைவர்களுடன் பெண்களின் வாக்குரிமை பற்றிக் கலந்துரையாடிய போது சேர். பொன். இராமநாதன் போன்றோரே. அவர்களுக்கு வாக்குரிமை அவசியமில்லையென வாதிட்டனர். எனினும் ஆணைக்குழுவினர் தற்றுணியின் பேரில் வாக்குரிமை வழங்கத் தீர்மானித் தனர். அன்றைய பத்திரிகைகள் கூடப் பெண்களுக்கு வாக்குரிமையாற்றல் இல்லையென வாதிட்டன. அவ்வாறு குடும்பக் கருமங்களை விடுத்து அரச கருமங்களில் ஈடுபடுவோர். 'பொதுமகளிர்” எனவும் அழைக்கப்பட்டனர். பெண்களுக்கு முதல்முதலில் வாக்குரிமை வழங்கிய நாடு நியூசிலாந்து. 1918ஆம் ஆண்டு இவ்வாக்குரிமை வழங்கப்பட்ட அதேவேளையில் இங்கிலாந் திலும் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுப் பின்னர் 1928ஆம் ஆண்டிலேயே வயதெல்லை 21 ஆகக் குறைக்கப்பட்டது. ஏனைய உள்நாட்டு நிலைமைகளுடன் ஒப்பிடும் போது இலங்கைப் பெண் களுக்கு இலகுவில் வாக்குரிமை கிடைத்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
இவ்வாறான சர்வசன வாக்குரிமை 1931இல் பெண்கள் பிரயோகிப்பதற்கு முன்பாக 1928இல் பெண்கள் வாக்குரிமைச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. திருமதி ஈ.ஆர். தம்பிமுத்துவும், திருமதி நல்லம்மாவும் இதில் அங்கத்துவம் வகித்தனர். பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதன் மூலம் குழந்தை பிறப்புவீதம், வீடமைப்பு, சுகாதாரம், குழந்தைசார் நலம் மருத்துவம், கர்ப்பிணி களுக்கான துறைகளில் வளர்ச்சி ஏற்படும் என அவர்கள் வாதிட் டனர். இவர்களுடைய முயற்சி வாக்குரிமைக்கு வழி வகுத்திருக்கலாம். இவ்வாக்குரிமையின் வயதெல்லை 21இலிருந்து 18ஆக குறைக்கப்பட்ட நாடு களுள் இலங்கையும் ஒன்று. எனினும் அரசியலில் ஈடுபடுவதை குடும்ப அமைப்புக்கள் வரவேற்பது குறைவு. இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பமாக 1960ஆம் ஆண்டுத் தேர்தலைக் குறிப்பிடலாம். பெண் பிரதமர் தெரிவு செய்யப்பட்டதோடு போட்டியிட்ட ஐந்து பெண்களுள் நால்வர் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களுள் விமலா விஜயவர்த்தனா சுகாதார அமைச் சராகத் தெரிவு செய்யப்பட்டார். தென்னாசியாவிலே அமைச்சர் பதவிக்கு வந்த முதலாவது பெண் இவரேயாவார். அவ்வாறே உலகின் முதலாவது பெண் பிரதமராக ரீமாவோ பண்டாரநாயக்கா 1960ஜூலை 21ஆம் திகதி பதவியேற் றார். இரண்டாவது தடவையும் பிரதமரானதோடு பின்னர் எதிர்க்கட்சித் தலைவி யாகவும் பதவிபெற்றார். இதனைத் தொடர்ந்து பொத்துவில் தொகுதியில் ரங்கநாயகி பத்மநாதன் பாராளுமன்றத்தில் பிரவேசித்தமை குறிப்பிடத்தக்கது. எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் சுனேத்திரா ரணசிங்க என்பவரின் அரசியல் பிரவேசம் குறிப்பிடத்தக்கது. இவர் மகளிர் விவகார அமைச்சராகவும் கல்விச்சேவைகள் அமைச்சராகவும் நியமனம் பெற்றார். இவருக்குப் பின்னர் ரேணுகா ஹேரத் சுகாதார மகளிர் விவகார அமைச்சராகப் பதவியேற்றார். ரங்கநாயகி மத்மநாதன் மட்டக்களப்பு மாவட்ட அமைச்சராகவும் தெரிவு செய்யப்பட்டார். 1994இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இரண்டாவது பெண் பிரதமராக சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டதோடு ஜனாதிபதியாகவும் விளங்கி வருகின்றார்.
68

கலை, கலாசாரத்தின் பின்னணியில் ஆராய்கின்ற பொழுது கலை, கலாசாரத்துறை என்றவுடன் பெண்களின் பங்களிப்புக் கூடிக் காணப்படுகின் றது. தமிழ் இலக்கியங்களில் பெண் கதாபாத்திரங்கள் ஊடாக சமூக ழுமியங்கள் உயிரோட்டம் பெறுவதையும் அவர்களின் ஆடை அலங்காரங் களின் வர்ணங்களும், பழக்கவழக்க முறைகளும், எடுத்துப் பேசப்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது. இலக்கியங்களில் பெண்கள் பற்றிய சித்திரிப்பு, மனப்பாங்கு மாற்றங்களைத் தோற்றுவிப்பனவாக அமைகின்றன. எனவே கலாசாரத்தின் பெறுமானங்களைக் கூடுதலாக பெண் கதாபாத்திரங்கள் ஊடாகவே பார்க்கின்றோம். இலங்கையுட்படப் பொதுவாக எல்லா நாடுகளுக் கும் இது பொதுவான நிலையாகும்.
அழகியலுணர்வில் பொதுவாக ஆண்களைவிட பெண்கள் அதிக அக்கறை கொண்டவர்கள். ஆதலின் அழகியற்கலைகளிலும் அவர்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம், திறமை என்பன கூடிக்காணப்படுகின்றன. இத்துறை களைக் கற்றுத்தெளியக்கூடிய பொறுமையும், பொறுப்புணர்ச்சியும் பெண்களி டம் அதிகமாகக் காணப்படுகின்றது. சங்கீதம், நடனம் போன்ற துறைகளில் உலகளாவிய ரீதியில்பெயர் சொல்லத்தக்க பெண்கள் இலங்கையில் உருவாகவில்லை. எனினும் எண்ணிக்கையில் பெண்களின் பங்களிப்பு அதிக மாகக் காணப்படுகின்றது. ஒவியம், நாடகம், ஆகிய துறைகளில் பெண் களைவிட ஆண்களே அதிகம் ஈடுபாடு கொண்டிருப்பதைக் காணலாம். சில சோபிகத் துறைகளில் வேண்டுமாயின் முழுநேரப் பங்களிப்பும் தேவைப்படுகின் றது. உதாரணம் நாடகத்துறை. நாடகத்துறையில் ஒரு சில பெண்கள் மட்டுமே ஈடுபடக் காரணம் நமது சமூகத்தின் கண்ணோட்டத்தில் பெண்கள் மட்டும் ஆண்களுடன் இணைந்து மேடைகளில் நடிப்பதை வரவேற்பவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது. கூட்டுக்கலைவடிவமான நாடகத் தினை எல்லோரும் விரும்பிப்பார்க்கிறார்கள். ஆனால் பார்வையாளர்களாக வருவதை விரும்பவில்லை. பொதுவாகப் பெற்றோரோ கணவனோ இதனை அங்கீகரிப்பதும் இல்லை.
ஆயினும் இன்று பல்கலைக்கழகங்களில் நாடகமும் ஒரு பாடநெறியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு கற்பிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஆண், பெண் வேறுபாடு கருதாது நாடகத்தினை ஒரு ஆக்கபூர்வமான கலையெனக் கொண்டு எல்லோரும் பங்கேற்று நடிக்கின்றனர். இவ்வாறே ஒவியத்துறையும் பெண்களைக் கவரத்தக்க பாடப் புலமாகிப் பெண்களாலும் வளர்க்கப்பட்டு வருவதனை நாம் இன்று காண்கின்றோம்.
பொதுவாக இலங்கையின் நகரப்புறங்களைவிட கிராமப் புறங்களிலே தனித்துவமான கலாசார அம்சங்களைக் காண்க்கூடியதாகவுள்ளது. கலப்பற்ற நிலையில் கட்டியெழுப்பப்படும் கலாசார சூழலின் மையச்சக்கரமாகப் பெண் களே விளங்கி வருகின்றனர். ஆன்மீகத் துறையிலும் பெண்கள் முதுமைக் காலத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இவையாவும் பெண்களின் பன்முகப்பட்ட அபிவிருத்தி நிலைமைகளை எடுத்துக் காட்டுகின்றன. இந்நிலை யிலே பெண்கள் அபிவிருத்திக்கென 1997இல் தனியான அமைச்சு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளமை நல்லதோர் விழிப்புணர்வைக் காட்டுகின்றது.
எனவே பெண்கள் அபிவிருத்தி என்னும் பொது முதலில் அவர்கள் தமது இயல்பாற்றல், ஆற்றல் கொள்ளளவு, நம்பிக்கை, நன்மதிப்பு என்பவற்றைத் தமமுள் கொண்டிருத்தல் அவசியம். அத்தகைய புத்திஜீவிகள் ஏனைய பெண் கள் மத்தியில் கீழிறங்கி வந்து, தமது சேவையால் ஏனையோரையும் வளப்படுத்த வேண்டும். பெண் எழுத்தாளர்கள் துணிச்சலான படைப்
9

Page 41
பாளிகளாக மாறி யதார்த்த நிலைமைகளை வெளிக் கொணர்தல் வேண்டும். சகலதுறை சார்ந்த வாய்ப்புக்களுக்கும் பெண்களுக்கான ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தல் வேண்டும். இவ்வாறு பெண்கள் அபிவிருத்தியில் ஒன்றிணைந்து கொண்டால் - ஒழுக்கசீலமுள்ள சமுதாயம் உருவாகவும் அபிவிருத்தியில் மேம்பாடடையவும் பெண்களின் பணியும், பங்களிப்பும் அவசியம் என்பது எல்லோருக்கும் புலனாகும். Ο
உசாத்துணை நூல்கள்
1. பெண்களும் தொடர்பு ஊடகங்களும் (கருத்தரங்கு கட்டுரைகளின்
தொகுப்பு) நிவேதினி மலர் 2, இதழ் 1 சித்திரை - 1995, பெண் நிலைச் சிந்தனைகள் - சித்திரலேகா மெளனகுரு. பெண்ணடிமை தீர - செ. கணேசலிங்கம்.
டாக்டர் மேரி ரட்ணம் - குமாரி - ஜயவர்த்தனா.
பெண்களுக்கெதிரான வன்முறை அபிவிருத்திக்கு ஒர் தடை றொக்சானா காரியோ.
7.
சூரியா வெளியீடு - பெண்' சஞ்சிகைகள். 8. பெண்ணின் குரல் - டிசம்பர் 1997 இதழ் 16.
70

O Gå digungkilaliði
அம்மன்கிளி முருகதாஸ்
ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழுமிந்த நாட்டிலே என்று 100 ஆண்டுகளின் முன்னால் குரல் கொடுத்தவன் தொடர்புசாதனத் துறையைச் சேர்ந்த பாரதி. 100 ஆண்டுகள் கழிந்த பின் இத்தகவல் தொடர்புச் சாதனங்களில் பெண் பற்றி கருத்து நிலை எவ்வாறு அமைகின் றது என்று திரும்பிப் பார்க்கின்றோம். பாரதியின் காலத்தைவிட பெண்ணின் நிலை இன்று மாற்றம் கண்டிருக்கிறது. அவளது பாத்திரம் (Role) மாறியிருக் கிறது. ஆனால் கருத்து நிலையில் அடிப்படை மாற்றம் ஏற்படவில்லை. இன்று பெண்கள் குடும்பத்துக்கு உழைப்பவராகவும் ஆண்களுக்குரியவள் எனப் பாரம்பரியமாகக் கருதப்பட்ட வேளைகளில் (மேசன், தச்சுவேலை, பொருளியல் மற்றும் அரசியல், பொலீஸார், போராளிகள்) ஈடுபடுபவராகவும் குடும்பத்திலும் வேலைத்தலங்களிலும் தீர்மானம் எடுத்தலில் பங்குகொள்பவ ராகவும் உள்ளனர். எனினும் கடந்த காலத்தில் பெண்களுக்கென விதிக்கப்பட்ட மனப்பதிவுகளுடனும் கருத்து நிலைகளுடனுமே தொடர்புச் சாதனங்கள் பெண்ணைக் காட்டுகின்றன. இது யதார்த்தத்துக்கு முரணான ஒன்றாகும்.
இன்றைய நிலையில் இலங்கைத் தொடர்பு சாதனங்களில் தமிழ் பேசும் பெண்கள் பற்றிய கருத்துநிலை பற்றி நோக்கும் போது இலங்கைத் தமிழ் பேசும் பெண்கள் பற்றிய சில அம்சங்களை மனங்கொள்ள வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முந்திய சமூகம் அல்ல இன்றைய இலங்கைச் சமூகம். நாட்டுக்கு உள்ளேயும் நாட்டுக்கு வெளியேயும் அகதிகளாய்ப்பரந்திருக்கும் சமூகம் இச்சமூகம். பாதிப் பெண்களையும் உள்ளடக்கியது. இனக் கலவரங் கள் மதக் கலவரங்கள், வட கிழக்குப் பிரதேசங்களில் நடைபெறும் யுத்த நிலவரம் என்பன எல்லாம் இடப்பெயர்வுகளையும் உயிரிழப்புக்களையும் பொருளாதார இழப்புக்களையும் கொலைகளையும், பாலியல் வல்லுறவுகளை யும் சிறுவர் துஷபிரயோகங்களையும் சர்வசாதாரணமாக்கியுள்ளன.
/
இந்நிலைமையானது பெண்களை அதிக்ம் பாதித்துள்ளது. வாழ்வின் சகல கஷ்டங்களையும் முறியடித்து எதிர் நீச்சல் போடும் நிலைக்குப் பெண்களை மாறவைத்துள்ளது. இந்த நிலையில் “மஞ்சள் குங்குமமணிந்து, மல்லிகைப்பூச்சூடி வேலைக்குச் சென்ற கணவன் வரும்வரை வீட்டு வேலை களைக் கவனித்து வாசலில் காத்திருக்க முடியாது இந்தப் பெண் வேலைக்குச் சென்ற கணவன் உயிரோடு வீட்டுக்குத் திரும்புவானா, படிக்கச் சென்ற பிள்ளைகள் திரும்புவார்களா என வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வாழும் சூழல் கணவனை / தந்தையை / பிள்ளைகளை இழந்த நிலையில் வாசல் தாண்டி, காணாமற்போன கணவனைத் தேடி, உழைக்கப் போன மகனைத் தேடி, பள்ளிக்குப் போன மகளைத் தேடி இன்னும் சொல்லப் போனால் ஆண்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாத, வேலைக்குச் செல்ல முடியாத அரசியல் சூழலில் உழைப்பைத் தேடி பெண் வெளியேறிவிட்டாள். இந்த சமூகத்தின் இடர்பாடுகளை அறிந்து சேலை செய்யப் புறப்பட்டுவிட்டாள். நாடு கடந்து, கண்டம் கடந்து, படிக்க, உழைக்க, திருமணத்துக்கு என முகமறியா நாடுகளுக்குப் பயணமாகி விட்டாள்.
71

Page 42
இந்த யதார்த்தங்களை மனதில் கொண்டுதான் தகவல் தொடர்புச் சாதனங்களில் பெண்கள் பற்றிய கருத்துநிலையை ஆராய்தல் வேண்டும்.
இலங்கையின் பிரதான தொடர்புச் சாதனங்களாக விளங்குவன பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்றன ஆகும். இன்றைய சூழலில் இணையமும் சேர்ந்து விட்டது. எனினும் இந்த இணையம் (Internet) பற்றி இங்கு சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
இலங்கையின் தொடர்புச் சாதனங்கள் பற்றிக் கூறும்போது சில விடயங் களைக் கருத்தில் கொள்ளல் வேண்டும். இவையாவும் அரசாங்கத்தின் தணிக்கைச் சூழலுக்கு அகப்பட்டுள்ளன. இந்த நிலையானது. தொடர்புச் சாதனங்களில் பேச வேண்டிய விடயங்களைப் பேசாது பேசத் தேவையில் லாத அல்லது தங்களைப் பிரச்சினைக்குள் மாட்டிவிடாத பழைய பாரம்பரிய கதைகளை அல்லது கற்பனைக் கதைகளைப் பேசவைத்திருக்கிறது.
அத்துடன் இலங்கையின் தொடர்புச் சாதனங்கள் செல்லுமிடங்கள், செல்லாத இடங்கள் பற்றிய விடயம் பற்றியும் நோக்க வேண்டும். கொழும் பில் வெளிவரும் பத்திரிகைகள் இராணுவக்கட்டுப்பாடற்ற பிரதேசங்களில் கிடைப்பதில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வெளியாகும் பத்திரிகைகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் கிடைப்பதில்லை. வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றை இயக்குவதற்கான மின்சார பற்றறி வகைகள் இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசங்களில் கிடைப்பதில்லை.
அடுத்து தொடர்பு ஊடகங்கள் யாருடைய கையில் என்பது பற்றியும் நோக்க வேண்டும். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், தினத்தபால், தினகரன் ஆகியன அரசின் கட்டுப்பாட்டினுள் ளனவாகும். எனவே நிகழ்ச்சிகள் அரச சார்பினவையாக இருக்கும் என்பது வெளிப்படை. இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளில் விடுதலைப் புலிகளின் பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி, வீடியோக் காட்சிகள் என்பன தொடர்பு சாதனங்களாக உள்ளன. அவற்றைப் பெற்றுக் கொள்வது மிகவும் கடினமானதாகும்.
தமிழ் மக்களுக்குக் கிடைக்கும் பத்திரிகைகள், சஞ்சிகைகள்.
பத்திரிகைகள் : தினகரன், வீரகேசரி, தினக்குரல்,
உதயன் (நாளாந்தம்) தினமுரசு, மித்திரன் (வாராந்தம்) சரிநிகர் (மாதமிருமுறை)
சஞ்சிகைகள் : மல்லிகை, களம், நந்தலாலா, தீர்த்தக்கரை,
மூன்றாவது மனிதன், சுதந்திரப் பறவைகள் மற்றும் சில.
பெண்ணிய சஞ்சிகைள்: பெண், நிவேதினி, நங்கை, பெண்ணின் குரல்.
செய்தி மடல்கள்: பெண்கள் செய்திமடல், பிரவாகினி.
72

வானொலி: இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.
சக்தி எவ்.எம். சூரியன் எவ்.எம். சுவர்ண ஒலி. புலிகளின் குரல்.
வானொலியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சேவையே இலங்கை எங்கும் கேட்கக் கூடியது. சக்தி, சுவர்ண ஒலி என்பன மிக அண்மையிலே பரவலாக்கப்பட்டுள்ளன.
தொலைக்காட்சி: சக்தி ரி.வி.
சுவர்ணவாகினியுடன் வேறும் பல.
தொலைக்காட்சிச் சேவைகளில் சக்தி ரி.வி. சுவர்ணவாகினி என்பன அண்மைக் காலத்திலேயே இலங்கை முழுவதும் பரவலாக்கப்பட்டன.
பத்திரிகைகள் அரசியல் நிகழ்வுகள், சமூகச் செய்திகள், விமர்சனங் கள், சமயக் கட்டுரைகள், அறிவியற் கட்டுரைகள், சினிமாப் பகுதிகள், விளம்பரங்கள் என்பனவற்றைக் கொண்டுள்ளன. வார இதழ்களிலே பெண்கள் பகுதி பெரும்பாலும் இடம்பெறுகின்றது.
வானொலியை நோக்கின் தேசிய சேவை, சமய நிகழ்ச்சிகள், கல்விச் சேவைகள் போன்றவற்றை உள்ளடக்கியது. வர்த்தக சேவை முற்றிலும் சினிமா மையப்பட்டது. ஆனந்த ராகங்கள், பொங்கும் பூம்புனல், என்விருப்பம், நீங்கள் கேட்டவை, மகளிர் கேட்டவை, இன்றைய நேயர், ஜோடிக்குரல், தேனிசைத் தென்றல், இரவின் மடியில் எனப் பெயரிடப்பட் டாலும் அவை அனைத்தும் சினிமாப் பாடல்களை ஒலிபரப்பும் நிகழ்ச்சிகளே ஆகும். சக்தி எவ். எம்., சூரியன் எவ். எம். எல்லாம் சினிமா மையப்பட்ட நிகழ்ச்சிகளையே கொடுக்கின்றன. புலிகளின் குரல் வானொலிச் சேவை புலிகளின் போராட்டங்களை பற்றிய செய்திகளை வழங்குகின்றன. அதனை செவிமடுக்க முடியாத சூழல் இருப்பதால் அந்நிகழ்ச்சிகள் பற்றி கூறமுடியா திருக்கிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இலங்கை ரூபஹாகினிக் கூட்டுத் தாபனம் பெரும்பாலும் சிங்கள மொழியில் தனது நிகழ்ச்சிகளை அமைத்துள் ளது. வாரம் ஒருமுறை / மாதம் ஒரு முறை நிகழும் நிகழ்ச்சிகளும் மற்றும் செய்திகளும் மட்டுமே தமிழில் அமைவன. (வண்ணச்சோலை, சுருதிலயம், பாவராக தாளம், கலை அரங்கம், சில நேர்காணல்கள் மத நிகழ்ச்சிகள் மற்றும் சில நாடகங்கள்.)
சக்தி ரி.வி. சுவர்ணவாஹினி ஆகிய இரண்டும் முற்றிலும் சினிமாப் படங்களையும் சினிமாப்படங்களின் காட்சிகளையும், விளம்பரங்களையும் அடிப்படையாகக் கொண்டு இயங்குபவை அவற்றில் ஒளிபரப்பப்படும் தமிழ் நாடகங்கள் தென்னிந்திய தொலைக்காட்சி சேவைக;டாக ஒளிபரப்பப்படு பவை. (சன் ரி.வி./ராஜ் ரி.வி.)
பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் நிகழ்ச்சி களும் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று தொடர்பானவையாகக் காணப்படுவதால் இவை மூன்றையும் ஒருசேர நோக்கி பெண்கள் பற்றிய கருத்து நிலை இவற்றில் எவ்வாறு அமைகின்றது எனப் பார்ப்போம்.
73

Page 43
ஏற்கனவே கூறியபடியும் இக்கருத்தரங்கில் நடந்த உரையாடல்களின் படியும் இலங்கைத் தமிழ் பேசும் பெண்ணின் பாத்திரம் தற்போது மாறி யுள்ளது என்பது தெளிவாகின்றது. எனினும் இம்மாற்றங்கள் தொடர்புச் சாதனங்களில் பிரதி பலிக்கின்றனவா? என வினாவின் இல்லை என்றே கூறலாம். .MM
கட்டுரையின் நேர அளவு கருதி இத்தொடர்புசாதனங்களில் பெண் களை மையப்படுத்திய அல்லது பெண்கள் முக்கியம் பெறும் நிகழ்ச்சிகள் இங்கு கருத்தில் கொள்ளப்படுகின்றன.
பத்திரிகைகளின் இதழ்களிலே பெண்களின் பகுதி பெரும்பாலும் இடம்பெறுகின்றது. வானொலியில் பூவும்பொட்டும், மங்கையர் மஞ்சரி, கோதையர் கோலம், முஸ்லிம் மாதர் மஞ்சரி (இ.ஒ.கூ.) வளையோசை (சக்தி) என்பன பெண்களுக்கானவை.
தினக்குரல், வீரகேசரி, தினமுரசு, மித்திரன் ஆகிய பத்திரிகைகள் பெண்கள் பகுதிகளை தமது வார இதழ்களில் வெளியிடுகின்றன.
தினக்குரல் - இவள்
வீரகேசரி - மங்கையர் சங்கமம் / முன்பு குங்கும சங்கமம்.
சகோதரி.
மித்திரன் - எங்கள் பக்கம் முன்பு அம்மணியார்க்கு மட்டும்
தினமுரசு - லேடிஸ் பெண்.
தினக்குரல், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் வரும் பெண்கள் பக்கங்களின் பாரம்பரிய சிந்தனையையும், நவசிந்தனையையும் இணைத்து வெளியிடும் போக்கு அண்மைக் காலங்களில் காணப்படுகின்றது. பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பெண்கள் நிறுவனங்கள் பற்றிய செய்திகளுடன் பெண்நிலை வாதிகளுடனான பேட்டிகள் வெளியிடப்படுகின்றன. அதேசமயம் சமையல் குறிப்புக்கள், அழகு போன்ற விடயங்களும் சேர்க்கப்படுகின்றன. பெண்ணைத் தாயாக, மனைவியாக, நல்ல “இல்லாளாக” நோக்கும் பல கட்டுரைகளும் வெளிவருகின்றன. பெண்ணின் சுய அலங்காரம் பற்றிய கட்டுரைகள் இவற்றில் இடம்பெறுவதை அதிகம் அவதானிக்கலாம்.
தினமுரசு தனது பெண்கள் பகுதியை விளம்பரத்துக்கு உரியதாகவே வெளியிடுகின்றது. லேடீஸ் ஸ்பெஸலின் தலைப்புக்களாக புடைவை எடுப்பது, புருவ அழகு, நக அழகு, முடியலங்காரம், மருதாணியிடல், உருவத்திற் கேற்ற சேலை, பரிசுத்திட்டம், தங்கமாலை பரிசுத்திட்டம் என்பனவும் தினமுரசினால் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த நிலையானது பெண்களை அழகுக்கு உரியவராகவும் நகை விரும்பிகளாகவும் சமையல் விரும்பிகளா கவும் காணுவதையே காட்டுகின்றது. பெண்களின் பிரச்சினைகள் விழிப் புணர்வு பற்றிய பிரக்ஞையின்மையை இது காட்டுகின்றது.
இந்த இடத்தில் சரிநிகர் பத்திரிகை வித்தியாசமான தளத்தைக் கொண்டிருப்பதை நோக்க வேண்டும். பெண்களுக்கென தனியான பகுதி ஒதுக்கப்படாமல் பெண்கள் பற்றிய பல காத்திரமான விடயங்களை சரிநிகள் வெளியிடுகின்றது.
74

கலாசாரமும் பெண்ணிலை வாதமும் மே, ஜூன் 91
பெண்களும் மனித உரிமையும் ஏப்பிரல், மே 91 யுத்தமும் பெண்களும் டிசம்பர் - ஜனவரி 90 பெண்களும் குடும்ப உறவுகளும் டிசம்பர் 14 95,
ஜனவரி 10 96 திரைப்படத்தின் தாக்கம் ஜனவரி 28 -
பெப்ரவரி 5
பெண்ணின் வாழ்நிலையும் பெப்ரவரி 20 - மார்ச் 5 வெளிநாட்டுப் பணிப் பெண்கள் ஜூலை 22 - 4 - 99
ஆண் மேலாதிக்கத்துக்குத் துணை போகும் நீதிமன்றங்கள். போர்க் கருவியாக பாலியில் வல்லுறவு.
எனப் பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்டுள்ளன. அவற்றுடன் பெண்நிலைவாதிகளுடனான நேர்காணல்கள் (சுனில் அபயசேகர, குமதினி சாமுவேல்) இடம்பெற்றுள்ளதுடன் சிறுகதைஞர், பெண் கவிஞர் பற்றிய கட்டுரைகளும் சிங்களப் பெண்ணிலைவாதிகளின் நூல்கள் பற்றிய அறிமுகத் தையும் காணலாம்.
அத்துடன் பெண்ணிலை வாதத்துக்கு முரணான நிகழ்ச்சிகள் பற்றிய விமர்சனங்களும் காணப்படுகின்றன. உதாரணமாக சக்தி ரி.வி. பிரிமியர் டின் மீன் விளம்பரம் என் பெண்டாட்டி இல்லாட்டித் திண்டாட்டம் இல்லை என்ற வாசகம் பற்றிய விமர்சனம் (ஜூலை, ஓகஸ்ட் 22-09-1999) கொழும்பு இந்து மகளிர் புதிய கலாசாரத்தை நோக்கி (குஷபுவின் நிகழ்ச்சி பற்றிய விமர்சனம்) போன்றவற்றைக் கூறலாம். அத்துடன் உலகளாவிய சூழலில் பெண்கள் நிலை இலங்கையில் போராட்ட சூழலில் பெண்களின் நிலை (ராதிகா குமாரசாமின் கட்டுரை தொடர்ப்பான விவாதங்கள்) என்பன இடம் பெற்றுள்ளன.
இந்த வகையில் இலங்கைப் பத்திரிகை உலகில் பெண்ணியம் தொடர்பான பிரக்ஞையுடன் காத்திரமான விடயங்களை பிரதிபலிப்பதாக சரிநிகர் அமைகின்றது.
உண்மையில் பெண்களுக்கென தனியான பக்கம் ஒதுக்கி புடைவை எடுப்பது பற்றியும் சமையல் பற்றியும் வெளியிடுவதை விடுத்து பெண்களின் பிரதான பிரச்சினைகளை வெளியிடுவது இனிவரும் சமூகத்திற்குச் செய்ய வேண்டிய தொண்டாகவிருக்கும்.
தொலைக்காட்சியில் ரூபவாஹினியில் அண்மைக் காலத்தில் பெண் கள் பிரச்சின்னகள் விவாதிக்கப்படுவதை காணமுடிகிறது. ஆனால் அண்மைக் காலங்களில் "உதயதரிசனம்’ மூலமாக நடைபெறும் பெண்கள் பற்றிய உரையாடல்கள் பெண்கள் பற்றிய பிற்போக்குச் சிந்தனையின் வெளிப்பாடாக அமைவதைக் காணலாம். ஒரு நிகழ்ச்சியில் (பார்வதி கந்தசாமியைப் பேட்டி
75

Page 44
கண்ட நிகழ்ச்சிகள்) பேட்டி கண்டவர் பெண்களின் ஆடைகள் பற்றியும் தலை மயிர் வெட்டுவது பற்றியும், அதிகமாகப் பேசிக் கொண்டிருந்தார். அத்துடன் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்குக் காரணம் பெண்களின் உடைகளே எனவும் குற்றம் சாட்டினார். இன்னொரு நிகழ்ச்சியில் (கேமா சர்மா கம்பன் கழகத் தலைவர் சிவசங்கர்) ஆகியோரைப் பேட்டி காணும் நிகழ்ச்சியில் பேட்டி கண்டவர் உட்பட மூன்று பேரும் பெண்கள் பற்றிய முட்டாள் தனமான பிற்போக்குச் சிந்தனையை முன் வைத்தனர். கேமா சர்மா பெண்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெறும்போதே குழந்ைைதகளில் அன்பில்லாதவராகி விடுகின்றனர். குழந்தைகளுக்கு பால் கொடுப்பதில்லை. என்றெல்லாம் குற்றம் சாட்டினார். உண்மையில் கிராமப் புறங்களுக்கும் யுத்தப் பிரதேசங்களுக்கும் வந்து பெண்களின் நிலைமையைப் பார்த்து அறிந்து பேச வேண்டும். பெற்ற பிள்ளைக்கு உணவு கொடுக்க முடியாமல் பிள்ளை பிறந்த 5ஆம் நாளே புல்லுவெட்டச் சென்ற பெண்களை நாம் அறிவோம். பெற்ற குழந்தைக்குச் சோறு போட முடியாமல் தனது 5ஆவது குழந்தையை கருச்சிதைவு செய்யப் போய் இறந்த பெண்களை நாம் அறிவோம். கனவுலகில் நின்று நாம் இப்போது பெண்களைப் பற்றிப் பேசமுடியாது.
ரூபவாஹினியில் பெண்கள் பிரச்சினைகள் பற்றி நல்ல நிகழ்ச்சி களை ஒளிபரப்ப வேண்டும் எனில் பெண்ணியம் பற்றிய தெளிவுள்ள பிரச்சி னையில் விசுவாசமுள்ள ஒருவரையே பேட்டி காண்பவராக தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்த கதையாக மாறும், மாறிவிட்டது.
விளம்பரங்கள்
இந்த விளம்பரங்கள் பெண்ணை வீட்டுக்கு உரியவளாக அழகை விரும்புவளாக, பட்டுச் சேலைக்கும் தங்கமாலைக்கும் ஆசைப்படுபவளாகவே சித்திரிக்கின்றன. அதற்கு மேலாக அவளின் பங்களிப்பு சித்திரிக்கப்படுவ தில்லை. பெரும்பாலும் நகைமாளிகை விளம்பரங்கள் போன்றவற்றுக்கு பெண்ணே பயன்படுத்தப்படுகிறாள். இலங்கைத் தொடர்புச் சாதனங்களில் மகி நூடில்ஸ், அரலிய ரின்மீன், நெஸ்ரமோல்ட், உஜாலா சொட்டு நீலம், நெஸ்கபே, நின்ஜா, மற்றும் மோட்டின் நுளம்புச் சுருள்கள் போன்றவற்றின் விளம்பரங்களுக்குப் பெண்களே பயன்படுத்தப்படுகின்றனர். சமையல், துணி துவைத்தல் போன்றவை பெண்களுக்குரியனவாகக் கருதப்படுகின்றன. அவளே பரிமாறுபவளாக (அல்லி பப்படம், கீல்ஸ் தயாரிப்புக்கள்) துணி துவைப்பவளாக (சன்லைட், உஜாலா சொட்டு நீலம்) பாத்திரம் கழுவுபவ ளாக (விம்) சித்திரிக்கப்பட்டு பாரம்பரிய வேலைகள் அவளுக்கே என வலியுறுத்தும் தன்மை காணப்படுகின்றது.
சில விளம்பரங்களில் அவ்வப் பொருள்களை வாங்கிப் பாவிக்கும் ஆண்களின் அழகைப் பெண்கள் விரும்புகின்றார்கள் எனக் காட்டப்படுகின் றது. பெனின்சுலாசேட், சிக்னல் பற்பசை, பிளக்நைற் ஆகியவற்றின் விளம்பரங்கள் அவ்வாறானவையே. உதாரணமாக சிக்கல் பற்பசை பாவித்த ஒரு ஆணின் பல்லழகைக் கண்டு பெண் வழியில் கம்பியில் அடிபட்டுச் சுழல்வது போன்ற விளம்பரத்தைக் கூறலாம்.
76

நகைமாளிகைக்கான விளம்பரங்களில் குறிப்பிடப்பட வேண்டியது முத்துக்கருப்பன் செட்டியார், ஜெயநித்தியகல்யாணி ஜூவலர்ஸ் ஆகியவற்றுக் கான விளம்பரங்களில் வரும் நகையணிந்த பெண்களின் மார்புப்புறம் பாலியல் கவர்ச்சியாக காண்பிக்கப்படுவதையும் அவதானிக்க முடியும்.
'பொன்மாலைப் பொழுதில்” வரும் டெவோன் கிச்சின் சிங் ற்கும் பெண்களே விளம்பரப் பொருளாக உள்ளனர். அத்துடன் தொலைக்காட்சியில் வரும் சினிமா விளம்பரங்கள் பாடல் காட்சிகள், பத்திரிகைகளின் சினிமாப் பக்கங்கள் (தினமுரசு, தினக்குரல், வீரகேசரி, மித்திரன்) பெண்ணின் மார்பை யும் தொடையையும் வெளிப்படுத்தி வாசகர்களைக் கவரும் உத்தியாகப் பயன்படுத்தப்படுகின்றன. உண்மையில் சினிமாப்பக்கங்களின்வரும் பெண் வெறும் பாலியல் நுகர்வுப் பொருள்களாகவே காட்டப்படுகின்றனர் என்பதை அவதானிக்க முடிகிறது. A.
இந்த விளம்பரங்கள் வெறும் முதலாளித்துவத் தேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. பெண்நிலைவாதிகள் இந்நிறுவனங்களில் மாற்றம் செய்ய முடியாமல் இருப்பதற்கு முதலாளித்து ஆண்மேலாதிக்க சமூகமே காரணமாகும்.
அடுத்து சினிமா எவ்வகையில் பெண் பற்றிய பழைய சம்பிரதாயங் களைக் கட்டிக்காக்கிறது என்பதை ஆராய்வோம். சினிமா தியேட்டர் களினூடாக, மினிசினிமாக்கள் ஊடாக, தொலைக்காட்சியூடாக மக்களைச் சென்றடைகின்றது. சினிமாவில் பிரதான அம்சமான பாடல்கள், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றினுடாக வெளியிடப்படுகின்றன. இந்தத் திரைப் படங்களும், பாடல்களும் பெண்ணைப் பாரம்பரியக் கருத்து நிலையிலேயே சித்திரிக்கின்றன. அம்மா, தங்கை என உயர்த்திப் பேசும் அதே படங்களி லேயே யாரோ ஒரு பெண்ணை காடையர் / வில்லன்கள் விட்டுத் துரத்தி பாலியல்வல்லுறவு கொள்ளும் காட்சிகள் சேலை அவிழ்க்கப்பட்ட நிலையில் கதாநாயகிகள் உள்ளாடைகளுடன் நிற்கும் காட்சிகள் கதாநாயகன் கண்ணாடி யன்னலுடாகக் குதித்துக் காப்பாற்றும் காட்சிகள் மிகைப்படுத்தப் பட்ட நிலையில் காட்டப்படுகின்றன. அல்லது கதாநாயகன் ஒரு பெண்ணைக் கட்டிப்பிடித்தபடி சண்டையிடும் காட்சிகள் / பெண்ணைக் கட்டிப் போட்ட நிலையில் கதாநாயகன் சண்டையிடும் காட்சிகள் காட்டப்படுகின்றன. பாடல் காட்சிகளும் அரைகுறை ஆடைகளுடன் கதாநாயகியும் துணை நடிகைகளும் ஆடும் காட்சிகளும் அங்க அசைவுகளும் வெறுமனே பாலியற் கவர்ச்சிப் பொருள்களாகவே பெண்களைக் காட்டுகின்றன.
சற்று வித்தியாசமான பெண்களைப் பாத்திரமாக்கிய அரங்கேற்றம் போன்ற படங்கள் பெண் தன்னை விபசாரத்துக்கு உள்ளாக்கி உழைத்துக் கொடுக்க உறவினர்கள் கொடுத்த உயர்ந்த கதையையும் அவள் கவனிப்பாரற்றுப் போன கதையையும் காட்டி அனுதாபம் தேடியதையே தவிர அவளுக்கு வாழ்வளித்த கதைகளல்ல. மன்னன் போன்ற திரைப்படங்களை யும் இதில் கவனிக்க வேண்டும் படித்தவள், வீம்புமிக்கவளாகக் காட்டப்பட்ட கதாநாயகி கதாநாயகனுக்கு அடிபணிந்து தான் செய்த வேலையை விட்டு சமையற் காரியமும் செய்யும் தன்மையைக் காணலாம். தற்போது ஓடிக்கொண்டிருக்கிற 'படையப்பா'வை நான் உதாரணம் காட்ட முடியும். கதாநாயகன் வீரனாக, கடவுளாக, எல்லோருக்கும் நல்லவனாக ‘என்வழி தனிவழி” என்று பறைசாற்றுபவனாக சித்திரித்த போதும் பெண் அடங்காப் பிடாரியாக பேராசைமிக்கவளாக, சூழ்ச்சிக்காரியாக சித்திரிக்கப்பட்டுள்ளதைக் காணமுடியும். கதாநாயனின் வீரத்தைக் கூறப் பெண்கள் பயன்படுத்தப்படும்
77

Page 45
மரபு தொடர்வதையே இது காட்டுகின்றது. சில திரைப்படங்கள் பாலியல் வல்லுறவை நியாயப்படுத்தி பாலியல்வல்லுறவு கொண்டவனுக்கே பெண்ணை மணம் செய்து வைப்பதையும் காட்டுகின்றன. அத்துடன் பாலியல் வல்லுறவு பெண்களுக்கெதிரான வன்முறைகள் என்பன ஆண்களின் இயல்பான குணம் தான் என அழுத்திக் கூறுகின்றன. இந்த நிலைமை சமூகத்தை சீரழிக்கும் என்பதில் ஐயமில்லை.
இணையம் பற்றி அதிகம் எடுத்துரைக்க முடியாவிடினும் இணையத் தில் வெளியிட்ட ‘மனிதனின் கூர்ப்பு' பற்றிய படம் ஒன்று தினக்குரலில் (08-10-99)வெளியிடப்பட்டிருந்ததைப் பார்த்திருக்கக்கூடும். மனித பரிணாமத்தில் குரங்கிலிருந்து ஆண் மனிதனாக வளர்ச்சியடைந்து கணனியைக் கையாண்டு இயக்குவதாகவும் இந்த மாற்றங்கள் நடக்கும் வரை பெண்மாறாமல் தொடர்ந்து குரங்காகவே இருப்பதையும் இப்படம் வெளியிட்டிருந்தது. இந்தப் படம் தமிழ் பெண்கள் பற்றியது மட்டுமல்ல, உலகளாவிய பெண்கள் சமுதாயம் பற்றிய தாகும். இந்தப் பெண்ணினைத்தான் (மாறாத பெண்) இந்த வளர்ச்சி பெற்ற மனிதன் மணமுடித்து தன் சந்ததியைப் பெருக்கி னானோ? என்று கேட்கவேண்டியுள்ளது.
இந்த இடத்தில் இலங்கையில் வெளியிடப்படும் பெண்கள் சஞ்சிகை கள் பற்றிக் கூற வேண்டும். பெண்கள் சஞ்சிகைகள் பெண்கள் நிறுவனங் களால் வெளியிடப்படுவதால் மிகவும் காத்திரமான பங்கை ஆற்றுகின்றன. இச்சஞ்சிகைகள் ஏனைய தொடர்பு சாதனங்களைப்போல் மிக அதிகமாக மக்கனைச் சென்றடைவதில்லை. எனினும் பெண்ணினத்தை கருத்தியல் ரீதியாக வரித்துக் கொண்டமையால் பெண்கள் பற்றிய பல விடயங்களை வரலாற்று ரீதியாக இலக்கிய ரீதியாக வெளியிடுகின்றன. இவ்வகையில் பெண், பெண்ணிணி குரல், நிவேதினி, நங்கை என்பவற்றின் பங்களிப்பு மிகமுக்கியமானதும் குறிப்பிடத்தக்கதுமான தாகும்.
பெண்ணை வீட்டுக்கு உரியவளாக, ஆணுக்கு அடங்கியவளாக நினைக்கும் சமூகம் ரசிக்கின்ற சினிமாக்களும், விளம்பரங்களும் பெண் களைப் பாலியில் பண்டமாக்கப்படுகின்றவையாகவே உள்ளன என்பதையும் குறிப்பிட வேண்டும். ரசனை மட்டமாக இருக்கும் போது தொடர்புச் சாதனங் கள் அதனை தமக்குச் சாதகமாக்கி விடுகின்றன.
பெண்கள் பற்றிய கருத்துநிலை சரியாக மாறும் சமூகத்துக்குப் பொருத்தமாகச் சித்திரிக்கப்பட வேண்டுமெனில் தொடர்புச் சாதனங்களில் பெண்ணிலைவாதிகளின் செல்வாக்கு இருத்தல் வேண்டும். அத்துடன் பெண்பற்றிய மோசமான விளம்பரங்கள் மற்றும் படங்கள், பாடல் காட்சி களைக் கண்காணிப்பு செய்வதற்காக ஒரு அவதானிப்புக்குழு அமைக்கப்பட வேண்டும். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து பயன் இல்லை. O
78

hlutnitöEf éMmloÚLInghed = fEuntdöEllh,
சாத்தியப்பாடுகளும்
ஒளவை விக்னேஸ்வரன்
விடுதலைக்கு மகளிர் எல்லாம் வேட்கை கொண்டனம் என்று தொடங்கும் பாரதியின் வரிகள் பெண்கள் அமைப்பாதல் குறித்த சிந்தனைகளை தமிழ்க் கவிதைகளில் அறிமுகப்படுத் திய வரிகள் எனலாம். பெண்கள் அமைப்பாதல் குறித்த சிந்தனைகள் மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்தவரை ஏகாதிபத்தியங்களிடமிருந்துதான் அவர்களது விடுதலைப் போராட்டங்களின் எழுச்சியுடன் ஆரம்பமாகிறது என்கிறார் குமாரி ஜெயவர்த்தன. தேசிய விடுதலைக்கான மக்களது எழுச்சிக்கும் பலமான எதிர்ப்புக்கும் தடையாக இருந்த அடிமைச்சிந்தனைக்கும் உள்ளூர் ஒடுக்குமுறையாளர்களுக் கும் எதிரான போராட்டத்தில் பெண் கல்வியும், பெண் விடுதலையும் முக்கியமான பங்கை வகிக்கின்றன. இந்திய தேசிய விடுதலைக்கு 'அடிமைச்சிறுமதி’யானின்றும் விடுபட்ட சுதந்திரவேட்கை கொண்ட ஒருபுதிய சமூதாயத்தின் உருவாக் கத்திற்கு விடுதலை பெற்ற புதுமைப் பெண்ணின் அவசியம் ஆழமாக உணரப்பட்டது. பாரதியை இந்திய தேசிய விடுத லைப் போராட்டத்தின் தத்துவத்தின் போக்கினை பிரதிநிதித் துவப்படுத்திய தீட்சண்யம்மிக்க ஒருகுரலாக எடுத்துக் கொண் டால் பெண்களின் அமைப்பாதல் குறித்த சிந்தனைக்கும், தேசிய அரசியல் போராட்டத்துக்குமுள்ள உறவு பற்றி புரிந்து கொள்ள இலகுவானதாகும்.
நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் இந்தியாவில் நடந்த அள வுக்கு பரவலான எழுச்சிகரமானதாக இருக்கவில்லை எனினும் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆழமான தாக் கங்கள் இலங்கையிலும் பிரதிபலிக்கத் தவறவில்லை. இலங் கையில் 20ஆம் நூற்றாண்டில் ஆரம்ப தசாப்தங்களில் வளர்ந்து வந்த பெண்களின் கல்வியானது அவர்களையும், தேசிய அரசியல் இயக்கங்களில் இணைய வைத்தது. பெண் களுக்கு வாக்குரிமைகோரும் இயக்கங்கள் வளர ஆரம் பித்தன. இந்த நோக்கத்திற்காக பல பெண்கள் அன்றைய தேசிய தொழிற்சங்க தலைவர்களின் மனைவிமார்கள் போன் றோரைக் கொண்ட ஒரு அமைப்பு 1927இல் உருவாக்கப் J. இவர்கள் பெண்களின் வாக்குரிமைக்கானڑgا۔Lلا
79

Page 46
1:3.
1:4.
பிரசாரங்களில் ஈடுபட்டனர். அனைத்துப் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்குமாறு கோரி அவர்கள் டொனமூர் கமிசன் முன் சாட்சியளித்தனர். 1931இல் 21 வயதுக்கு மேற்பட்ட வளர்ந்த பெண்களுக்கான வாக்குரிமையைப் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து பல பெண்கள் அமைப்புக்கள் உரு வாகத் தொடங்கின. பெண்விடுதலை தொடர்பான கருத்துக் களும் பெண்களால் முன்வைக்கப்படத் தொடங்கின. ஆயி னும் அவர்களது பிரதான கவனம் சமூக நடவடிக்கைகளி லேயே குவிந்திருந்தன. 1944இல் உருவான அகில இலங்கை பெண்கள் சம்மேளனம் பல பொருளாதார அரசி யல் மற்றும் சட்டக் கோரிக்கைகளை முன் வைத்தும் பல கூட்டங்களை நடத்தியது. கல்வி, வாக்குரிமை, அரசியல், சமத்துவம் போன்ற விடயங்களை இந்த மத்தியதர வர்க்கப் பெண்கள் அமைப்பு முன் வைத்து தனது போராட்டங்களை நடத்தியது.
இதேவேளை தொழிற்சங்கங்களில் பெண்கள் அமைப்பாதல் செயல்முறையும் நடந்தது. 1923இல் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தில் பெண் தொழிற்சாலை தொழிலாளர் களும் பங்கு பற்றினர். ஏ.ஈ.குணசிங்க தலைமையில் நடை பெற்ற இந்த வேலை நிறுத்தத்தில் பின் நடந்த இவர்களது ஒவ்வொரு வேலை நிறுத்தம், மேதின ஊர்வலங்கள் மற்றும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில் பாண்ட் வாத்தியம் வாசிக்கும் பெண் தொழிலாளர்கள் அணி ஒன்று கம்பீரமாக அணிவகுத் துச் செல்வது ஒரு அம்சமாக இருந்து வந்தது. பின்னாளில் இவர் தொழிற்கட்சியை உருவாக்கிய போது அக்கட்சியில் பல பெண்கள் தீவிர உறுப்பினர்களாக இருந்தனர். 1948இல் ஐக்கிய பெண்கள் முன்னணி என்ற பெயரில் ஒரு இடதுசாரிப் பெண்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது. சோசலிசத்தை இலக் காகவும், பெண்கள் மீதான எல்லா வகையான பாரபட்சங் களையும் இல்லாதொழிப்பதை நோக்கமாகவும் கொண்டு இந்த அமைப்பு உருவானது. அவர்கள் அரச நிர்வாக சேவைக்கு பெண்கள் தெரிவு செய்யப்படாமை, சேரிப்புற மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தல் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற பல்வேறு விடயங்களில் பங்கு பற்றி போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலைமை தொடர்ந்து மிக அண்மைக்காலம் வரை நீடித்தது. பொதுவாக எல்லா அரசியல் கட்சிகளும் தமக்கென தனியானதொரு பெண்கள் அணியைக் கொண்டவையாக இயங்கி வந்தன. தமிழரசுக் கட்சியிடம் கூட தமிழ் மகளிர் பேரவை என்ற அமைப்பு இருந்து வந்தது. பிற்காலத்தில் உருவான விடுதலை இயக்கங்களிடையேயும் கூட இத்தகைய பெண்கள் அமைப்புகள் இருந்தன. பிரதான நோக்கங்களாக அவையவை சார்ந்துள்ள அரசியல், தொழிற்சங்க அணிகளின் நோக்கங்களுக்கு அமைய அவற்றுள் பெண்களது சமத்துவம்,
80

1:5.
சமவாய்ப்பு என்பவற்றுக்காக குரல் கொடுப்பது பெண்கள் அணியின் சிறப்பான நோக்கங்களாக அமைந்திருந்தன. இவ்வாறான அமைப்புகளில் பொதுவாக எவையும் தத்தம் அமைப் புக்களின் அரசியல் நடைமுறைத் தேவைகளுக்கு அப்பாற்பட்ட அளவுக்கு பெண்களின் தனித்துவம் பற்றி பெண் அடையாளம் பற்றிய பிரக்ஞைகளை கொண்டிருந்ததாக தெரியவில்லை. (விதிவிலக்குகள் இருக்கக்கூடும்)
"பெண்விடுதலை’ என்ற சொற்பதம் குறிக்கும் அர்த்தம் பாரதி காலகட்டத்திலிருந்து பலவாறாக வளர்ந்து வந்துவிட்டது. 80களில் பெண்ணிய சிந்தனைகள் தமிழ்ச் சூழலில் உரத்த சிந்தனைக் குரியனவாக எழுந்தபோது இந்த வளர்ச்சி தெளி வாகத் தெரிந்தது. பெண்கள் மீதான சமூக ஒடுக்கு முறை களின் பால்ரீதியான தன்மை, பால்ரீதியான வேலைப்
பிரிவினை பெண் மீது சுமத்தப்படும் கலாசாரப் பழு மற்றும்
இரட்டைச்சுமை போன்ற முன்பு விவாதிக்கப்படாத பல விடயங்களை விவாதிக்கின்ற காலகட்டமாக இக்கட்டம் இருந் தது. இது ஒரு 'பெண்விடுதலை’ என்பதை அரசியல் தேவைப் பாடு என்ற மட்டத்துக்கும் அப்பால் சென்று பெண் என்ற அடையாளம் குறித்த விவாதத்திற்கு இட்டுச் சென்றது. குடும் பத்தில் பெண் ணின் பாத்திரம் அவளுக்கு உள்ள அந்தஸ்து வழங்கப்படும் அங்கீகாரம்என்பன இக்காலகட்டத்தின் பிரதான சிந்தனைகளாக இருந்தன.
ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இத்தகைய சிந்தனைகளின் தாக் கம் விடுதலை இயக்க பெண்கள் அமைப்புகளுள் ஆழமாக வேரூன்றியதாகத் தெரியவில்லை. பெண்கள் ஆய்வு வட்டம், பூரணி பெண்கள் நிலையம் போன்ற அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் நடத்தப்படும் அமைப்புக்களி டையே இந்தக் கருத்துக்களும் சிந்தனைகளும் விவாதிக்கப் படுகின்ற விடயங்களாக உள்ளன எனலாம். பால்நிலை சார்ந்து சிந்திக்கின்ற ஒரு சிந்தனைப் போக்காக வந்துள்ள இந்தச் சிந்தனை இன்று சகல அரசியல், சமூக, கலாசார, பண்பாட்டு நிகழ்வுகள் குறித்தும் ஒரு மீள்பார்வையை கோரி நிற்கிறது. ஆணாதிக்க சமூக சிந்தனை முறையை சமூக அமைப்பை கேள்விக்குட்படுத்தப்படுகின்ற இப்போக்கு திரும்ப வும் துரதிர்ஷ்ட வசமாக ஒரு பரந்துபட்ட அமைப்பாக இல்லா மல் சிறுசிறு குழுவளவிலான அமைப்புகளால் முன்னெடுக் கப்படும் ஒன்றாகவே இருந்து வருகிறது. ஒரு புறத்தில் சமூக
அரசியல் போராட்டங்களில் தீவிரமும்,அக்கறையும் கொண்டு
செயற்படும் அமைப்புகளிடையே இத்தகைய சிந்தனையின் தாக்கம் குறைவாகவே இருக்கும். அதேவேளை இத்தகைய சிந்தனைகளை கொண்ட அமைப்புகளின் சமூக அரசியல் செயற்பாட்டுத்தளம் மிகவும் குறைவாகவே உள்ளது. இத்த கைய பிளவுண்ட ஒரு நிலை பெண்கள் அமைப்பாதல் குறித்த சவாலாக இன்று நம்முன் உள்ளது எனலாம்.
8

Page 47
2:1.
2:2.
2:3.
இன்று நிலவும் சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டு வாழ்வியல் சூழலில் பெண்ணுக்குள்ள பாத்திரம் என்ன? இலங்கை உலகிலேயே முதன்முதலாக ஒரு பெண் பிரதமரை உருவாக்கிய நாடு என்பதோ பல ஆசிய, ஆபிரிக்க நாடு களுடன் ஒப்பிடுகையில் மிகவும் முன்னதாகவே பெண்களுக்கு வாக்குரிமையைக் கொண்ட நாடு என்பதோ, கல்வி அறிவு மட்டம், வேலைவாய்ப்புப் போன்ற சகல விடயங்களிலும் இலங்கையில் பெண்களின் நிலை மேம்பட்டு இருக்கிறது என்பதோ இலங்கையில் அதுவும் குறிப்பாக தமிழ்ப் பெண் ணின் பாத்திரத்தை சமஉரிமை பெற்ற பெண்களாக மாற்றி விட்டது எனக் குறிப்பிடமுடியாது. அரசியல், சமூக, கலாசார, பண்பாட்டு அம்சங்கள் அனைத்திலும் பெண் இரண்டாம்தரப் பிரசையாகவே நடத்தப்படுகின்றாள். வர்க்கம், சாதி, மதம், இனம் எல்லாவற்றையும் கடந்த ஒரு அம்சமாகவே இந்த விடயம் இருக்கின்றது. வெவ்வேறு விதமான அவ்வப் பிரிவு களுக்குரிய விசேட ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிறார்கள் என்ற போதும் இவை அனைத்துக்கும் பொதுவாக பால்நிலை சார்ந்த ஒடுக்கு முறைக்குப் பெண் உள்ளாகி வருகிறாள். உயர்சாதி மேட்டுக்குடிப் பெண் ஒருவருக்கும் சாதாரண உழைக்கும் பெண்களுக்குமிடையில் வர்க்க வேறுபாடுகளைக் கடந்து பொதுவாக பால்நிலைப்பட்ட ஒடுக்குமுறை இருப்பதை தெரிந்து கொள்ள முடியும். ஆயினும் இவ்வர்க்க சாதி, மத, இன ஒடுக்கு முறைகளின் அரசியல் தீவிரத்தன்மையும் காத்தி ரமும் பால்ரீதியான ஒடுக்கு முறைகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து விடக்கூடும் என்பதற்காக அவை இல்லை என்று கொள்ளமுடியாது.
அண்மைக்காலமாக எமது நாட்டு செய்திப் பத்திரிகைகளில் கட்டாயம் இடம்பிடிக்கின்ற செய்திகளாக பெண்கள் மீதான வல்லுறவு சம்பவங்கள் இருக்கின்றன. வீட்டில் வேலை பார்க் கும் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள், பாடசாலை மாணவிகள். சமூகத்தின் உயர்மட்ட உறுப் பினர்கள் மத்தியிலும்கூட இத்தகைய வன்முறைகள் இடம் பெறுகின்றன. இன, மத, சாதி, வர்க்க பேதமின்றி இவை தொடர்கின்றன. இதற்கான அடிப்படையாக பால்நில்ை அசமத் துவமே இருந்து வருகிறது. பால்நிலை அடிப்படையான இந்த ஒடுக்குமுறை மெல்லிய துன்புறுத்தலில் தொடங்கி படுகொலை வரை பல்வேறு மட்டங்களில் நடைபெறுகின்றன.
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கான மோதல் பெண்கள்மீதான ஒடுக்குமுறையை புதிய பரிமாணங் களுக்கு இட்டுச்சென்றுள்ளது. தடுப்பு அரண்களில் பாலியல் இம்சைக்குள்ளாவது, துன்புறுத்தப்படுவது, வல்லுறவுக்குள் ளாக்கப்படுவது கொல்லப்படுவது போன்ற நேரடியான செயற் பாடுகள், பெற்றோர் அல்லது கணவர், பிள்ளை என்று குடும் பங்களுள் பொறுப்பாக இருந்தோர் கொல்லப்படுவதன்
82

2:4.
2:5.
காரணமாக குடும்பச் சுமைக்கு எதிர்பாராமல் உள்ளாக்கப் படுதல்பொருளாதார வாய்ப்போ வேறு வசதிகளோ பாது காப்போ அற்ற நெருக்கடியான அச்சம் தருகின்ற ஒரு வாழ் வுக்கு திடீரென தள்ளப்படுதல் போன்றவை இப்போதுள்ள புதிய பரிமாணங்கள். வடக்கு கிழக்கில் அதிலும் குறிப்பாகக் கிழக்கில் பெருமளவுக்கு கணவரை இழந்த பெண்களைக் குடும்பத் தலைவராக கொண்ட குடும்பங்கள் அதிகமாகின றன. இந்தப் பெண்கள் பொருளாதார நெருக்கடி பாதுகாப்பு நெருக்கடிக்கு மேலாக ஆணாதிக்க சமூக,கலாசார பண்பாட்டு அம்சங்களாகவும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.
இத்தகைய ஒரு சூழலில் பால்ரீதியான காலங்காலமாக தொடரும் ஒடுக்கு முறையைவிட உடனடியான பாதுகாப்பு, அமைதி, சமாதானம் போன்றவற்றை தரக்கூடியசெயற்பாட்டில் பெண்களையும் பங்குபற்றத் தூண்டுகிறது. அன்னையர் முன் னணி அமைப்பு முதல் காணாமற்போனவர்களின் பெற்றோர் சங்கம்வரை பல்வேறு அமைப்புக்களில் பெண்கள் அமைப் பாதல் தவிர்க்கமுடியாததாக உருவாகி இருந்தமை வரலாறு. இத்தகைய அமைப்புகள் அரசியல் ரீதியிலும் சரி நடைமுறை யிலும் சரி பால்நிலை சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட அமைப்புக்களாக இல்லை. ஆயினும் பெண்கள் இத்தகைய அமைப்புக்களில் அமைப்பாதலும் அவசியமாகிறது.
வடக்கு கிழக்கில் குறிப்பிடக் கூடியளவு பெண்கள் இயக்கங் களில் மகளிர் படைப் பிரிவுகளில் சேர்ந்திருக்கிறார்கள். இந்நிலைகூட பால் நிலைப்பட்ட சிந்தனையைவிட அரசியல் நெருக்கடியின் தவிர்க்க முடியாத தன்மையின் காரணமான ஒரு விளைவு என்று சொல்லலாம். இனரீதியான ஒடுக்கு முறை இனவிடுதலை அமைப்புக்களிலும் மதரீதியான ஒடுக்கு முறை மத அமைப்புக்களிலும் பெண்கள் இணைவதை ஊக்குவிக்கின்றன. இந்த வகையில் தமிழ்ப் பெண்கள் அமைப்பாகும் சாத்தியப்பாடுகளை பின்வரும் 4 பிரிவுகளுள் அடக்க முடியும் என நினைக்கிறேன்.
01. இன ஒடுக்குமுறை காரணமாக அரசியற் செயற்பாட்டில்
ஈடுபடும் உணர்வுநிலை பெற்றவர்கள் இணைதல்,
02. யுத்த சூழ்நிலையிலும் கூடஅடிப்படை ஜனநாயகம், பாது காப்பு, உத்தரவாதம் அன்றாட தேவைகளைப் பெற்றுக் கொள்ளல் என்ற காரணமாக அரசியல்ரீதியான செயற் பாட்டுணர்வுள்ளவர்கள் இணைதல்.
03. தீவிர அரசியல் சமூக பொருளாதார அக்கறையும் எதிர்ப் புணர்வும் கொண்ட ஆனால் சமூக சேவை மனப்பாங்
83

Page 48
2:6.
குடையவர்கள் சமூகநல தொண்டர் அமைப்புகளாக இணைதல்,
- உதவி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் .
03. யுத்தச் சூழலில் மற்றும் நெருக்கடிகளுக்கு நேரடியாக முகம் கொடுக்காத பிரதேசங்களில் உள்ளவர்களின் மத்தியில் LT 6ð நிலை சார்ந்த பெண்கள் அமைப்புக்கள்.
- எவ்ரிசற்
இந்நான்கு வகைகளுக்குள்ளும் அடக்கமுடியாத வேறு அமைப்புக்கள் தமிழ்ச் சூழலில் தொழிற்பட்டு வருவதாகத் தெரியவில்லை. இந்த நான்கு அம்சங்களில் மூன்றாம் நான் காம் பிரிவுகளில் பெரும்பாலும் மத்தியதர கீழ் மத்தியதர வர்க்க, புத்திஜீவிப் பெண்கள் பங்குபற்றுவதை அவதானிக் கலாம். இவர்களின் சிந்தனைமட்டத்தில் பெண்நிலைக் கருத் துக்கள் குறித்த வாத விவாதங்களில் ஈடுபடுகின்ற பத்திரிகை களுக்கு எழுதுகின்ற பல்கலைக்கழகங்களில் படிக்கின்ற படிப்பிக்கின்ற பெண்கள் பெருமளவுக்கு உள்ளனர். அரசசார் பற்ற நிறுவனங்களது நிதி உதவிகளைப் பயன்படுத்தி பத்திரிகை வெளியிடல் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபடல் போன்ற விடங்களில் இவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
பெண்கள் அமைப்பாதலுக்கான சாத்தியப்பாடுகள் எப்போதும் நாட்டின் பிரதான அரசியல் போக்கின் பாதிப்புக்கு உட்பட்டே இருந்து வந்திருக்கிறது. இன, மத, வர்க்க, சாதி முரண்பாடு களில் இது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நாட்டின் பிரதான அரசியல் போக்காகச் செயற்படுகிறதோ அந்தப் போக்கு பிற அனைத்தின் மீதும் செல்வாக்குச் செலுத்துவது தவிர்க்க முடியாதது. இன்றைய சூழலில் இன ரீதியான ஒடுக்குதலும்
அதற்கெதிரான போராட்டமும் என்ற போக்கு பிரதான போக்
காக இருப்பதால் பிற அனைத்துப் போக்குகளும் அதற்கு உள்ளடங்கலாகி நிற்கின்றன. இதனால் இவை அனைத்தும் முக்கியத்துவம் குறைந்தவை அல்ல. ஆயினும் பிரதான தன்மையை இன ஒடுக்குதலே கொண்டுள்ளது. எனவே தவிர்க்கமுடியாமல் பெண்கள் மத்தியிலான அமைப்பாதலும் கூட தமிழ்ப் பெண்கள் என்ற ஒரு நிலை உருவாதலை
தவிர்க்கமுடியாதுள்ளது. நான் மேலே குறிப்பிட்ட நான்கு
சாத்தியப்பாடுகளில் நான்காவது தவிர்ந்த ஏனைய மூன்றும் நேரடியாக தமிழ்ச் சூழ லுக்கு மட்டும் உரிய சாத்தியப்பாடு களாகும். நான்காவதில் பிற இனத்தவர்கள் கூட சேர்ந்து இயங்கக் கூடிய வாய்ப்பு உண்டு. ஆயினும் இனப்பிரச்சினை குறித்த அரசியல் ஒருமைப்பாடு இருப் பினும்கூட அதுகுறித்த புரிதல்களில் இடைவெளிகளை அவதானிக்க முடியும்.
84

3: 1.
3:2.
3:3
இந்த நிலையில் பெண்கள் பால்நிலை அடிப்படையில் அமைப்பாதல் என்பது ஒரு முக்கியமான சவாலை எதிர்நோக் குகின்றது. அதாவது பெண்ணியல் சிந்தனைகளை அடிப்படை யாகக் கொண்ட பரவலான ஒரு சக்கி வாய்ந்த பெண்கள் அமைப்பு சாத்தியமா? என்பது ஒரு சவாலாகும்.
தேசிய இனப்பிரச்சினை காரணமாகப் பிளவுண்டி ருக்கும் நாட்டில் எப்படி இனவழி அரசியல் சமூக இயக்கங் கள் உருவாவது தவிர்க்கமுடியாததோ அவ்வாறே இனரீதியில் அடையாளப்படுத்தும் பெண்கள் அமைப்பு உருவாதலும் தவிர்க்கமுடியாதது.
தமிழ், சிங்கள, முஸ்லிம் இனங்களை சேர்ந்த பொது வான ஒரு பெண்கள் அமைப்பின் உருவாக்கம் பெண்நிலைச் சிந்தனை அடியான செயற்பாட்டளவில் பெரியஅளவில் சாத் தியமானதாகத் தெரியவில்லை. தமிழ், சிங்கள, முஸ்லிம் உறுப்பினர்களைக் கொண்ட பல்வேறு பெண்கள் அமைப்புக் கள் கூட்டாக சில நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என்ற போதும் அவை தனியான தனித்துவமான அமைப்புகளாக இருத்தலையே விரும்புவதை அவதானிக்கலாம்.
தமிழ்ச் சூழலில் கூட முழுத் தமிழ்ச் சூழலுக்கும் பொதுவான பெண்ணிலைச் சிந்தனை அடிப்படையிலான ஒரு தனிப்பட்ட பெண்கள் அமைப்பு சாத்தியமாக முடியும் என்று தோன்ற வில்லை. அவர்களது வாழ்பிரதேசம், அவர்கள் எதிர்கொள் ளும் பிரச்சினைகள் என்பவற்றைப் பொறுத்து தொழிலாளர் அமைப்புகள், சிவில் உரிமை மற்றும் ஜனநாயக உரிமைக் கான அமைப்புகள் போன்றவற்றில் பெண்கள் அமைப்பாத லைக் காணலாம். மத்தியதரப் புதிதிஜீவிப் பெண்களால் உரு வாக்கப்பட்டுள்ள பெண்கள் அமைப்புகளில் கவனக் குறிப்பு கள் பெரிதும் ஆணாதிக்க மொழி, கலை, கலாசார, பண்பாட் டலுவல்களில் பெண் இழிவுபடுத்தலை அம்பலத்துக்கு கொண்டுவரல் போன்ற விடயங்களிலேயே உள்ளன. இவர் களின் செயற்பாட்டுத் தளங்களாக கலை, கலாசார, பண் பாட்டு நடவடிக்கைகளே அமைகின்றன. இவ்விதத்திலேயும் கூட இனரீதியான தனித்துவத்தைப் பேணும் போக்கையே காணமுடிகிறது.
மொத்தத்தில் நாடளாவிய பெண்கள் அமைப்பு என்பது இன, மத வர்க்கங்களை மீறிச்சாத்தியப்படும் என்று தோன்ற வில்லை. ஆயினும் அத்தகைய ஒரு பெண்கள் அமைப்பு உருவாவதற்கான அடிப்படைகளை பெண்நிலைச் சிந்தனை கள் உருவாக்கியுள்ளன. இவ்வாறான அமைப்பு ஒன்று பால், இன, சாதி நிலைகளுக்கு அப்பாலான பெண் ஒழுங்கு முறைக்காகக் குரல் எழுப்பும் பல்வேறு பெண்கள் அமைப்புக்
85

Page 49
3:4.
களின் ஐக்கிய முன்னணியாக மட்டுமே அமைய முடியும் தொழிலாளர் அமைப்பு முதல் கலாசார, பண்பாட்டு தளங் களில் உழைக்கும் பெண்கள் வரையிலான பல்வேறு அமைப்புகளுக்கும் இடையே ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன் னணி உருவாக்கப்படுவது பெண்ணிலைச் சிந்தனை எல்லா மட்டங்களிலும் பலம்பெற அவசியமானதாகும்.
இன்றைய நிலையில் பெண்நிலைவாதிகளுக்கு முன்னுள்ள பிரதான சவாலாக இதை நோக்கலாம் ஒரு பெண்கள் ஐக்கிய முன்னணியைக் கட்டுவதும், கட்டும் நோக்கத்தை திறந்த மனதுடன் ஒப்புக் கொள்வதும் பல பெண்கள் அமைப்புக்களில் இருப்பதை அங்கீகரிப்பதாகும். பெண்கள் அமைப்புகள் பலநூறு குழுக்களாக இருப்பதற்கான நியாயப் பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியவை.
அரசியல் ரீதியில் ஒத்துப்போக முடியாதவர்கள் கூட ஐக்கியப் பட்டு பெண்ணிலை அடிப்படையில் ஒன்றிணைவதற்கான முயற்சியில் ஈடுபட முடியுமானால் ’பெண்விடுதலை’ சமத் துவம் என்பன அடையப்படக்கூடிய சவால்கள் என்பதில் ஐயமில்லை. அரசியலில் முரண்பட்ட முகாம்களைச் சேர்ந்த வர்கள் என்ற போதும் பெண்நிலை அடிப்படையில் தமக்குள் ஐக்கியம் சாத்தியம் என்பதை உணர்ந்து செயற்படல் இத்த கைய ஒரு ஐக்கிய முன்னணியின் தோற்றத்திற்கு வசதியளிக் கும் என நம்புகின்றேன். ஏற்கனவே வடக்கு-கிழக்கில் நடை பெறும் யுத்தத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் கொழும்பில் பெண்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தமை இத்தகைய ஒரு அமைப்புக்கான சாத்தியத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று சொல்ல முடியும்.
O
86

umium:Gá hlautium:Gð gengi பெண்களும்
es). Diapas
சமூக, பொருளாதார, அரசியல் செயல்பாட்டுத்தளங்கள் குறித்த ஆய்வுகளும், கருத்துக்களும் விவாதிக்கப்படும் அளவிற்கு பண்பாட்டுச் செயற்பாட்டுத் தளம் முதன்மை பெறுவதில்லை. பெரும்பாலும் பண்பாட்டுச் செயல்பாடுகள் முன் குறித்த பணிகளுக்குத் "துணைபோவதாகவே கணிக் கப்படுகின்றன. சிலசமயம், சமூக அரசியல் , களத்தின் ஒத்துஊதிகளாகவே பண்பாட்டுத்தளம் தொழிற்படுகின்றது. சனநாயக போர்ாட்டங்களின் வரலாற் றுச் சூழலைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, பண்பாட்டுச் செயல்பாடு களற்ற சமூக - அரசியல் செயல்பாடு வேரற்றதாகவும் சமூக - அரசியல் புரிதலற்ற பண்பாட்டுச் செயல்பாடுகள் வலிமையற்றதாகவும் இருந்ததை இருப்பதை நாம் உணர்கிறோம். அதிலும் பெண் - நிலை சார்ந்த பண்பாட்டுச் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கையில் சிக்கல் இன்னும் ஆழ மாகிறது. பண்பாடு பெண்சார்புடையதாக இயங்குகின்றதா? பண்பாட்டு வெளிப்பாடுகளுக்கும் பெண்களுக்குமான தொடர்பு நேசமானதா?. முரணா னதா? பெண்களுக்கான பண்பாட்டு உரிமைகள் யாவை? அனைத்துப் பெண்களுக்குமான பண்பாடுசாத்தியமா? பெண்களது பண்பாடு, பாலியல்பு மட்டுமே சார்ந்ததா? பெண்ணின் உடல் - சொல்லப்போனால் எந்த உடலும் - பாலியல் கூறுகள் அடிப்படையால் மட்டும் இயங்க இயலுமா? வரலாற்றால் கட்டமைக்கப்படும் உடலின் தன்மையை வரையறுப்பது எவையெவை?
இக்கேள்விக்கான பதில்கள் நாம் பல தளங்களில் விவாதித்துக் கொண்டிருப்பவைதாம். பருண்மையான விதத்தில் இங்கு, இன்று நிலவும் பண்பாடு காலனியத்திற்கு பிற்பட்ட, வெள்ளை ஆதிக்க, ஆண் மையை பண்பாடுதான் என் நாம் அறிவோம். படிநிலைத்தன்மைய அங்கிகரித்தல், பாலினம் சார்ந்த வேலைப் பிரிவினையை நிலை நிறுத்துதல் பாரபட்ச மதிப்பீடுகளை ஆண் - பெண் மீது திணித்தல் போன்றவை இதன் பொதுக் கூறுகள். இதே பண்பாட்டின் வார்ப்புக்களாகத்தான் பெண்களும் வள்ர்க்கப்படு கின்றோம் என்பதையும் நாம்' கணக்கில் 'கொள்ள வேண்டும்:ஒருபுறம் பிற்போக்கான்' போக்குகளைக் கொண்டுள்ள பண்பாட்டுத்தளம் மறுபுறம் ப்ாதுகாப்பு நிற்ைந்த வளையமாக உ படுவதும் இதனால்தான்."தாய்மை குடும்பம் ஆண் - பெண் உடலுறவு, கற்பொழுக்கம் குறித்த மதிப்பீகள் நம்மில் பலருக்கும் "பழகிப்போன்'மீர்பார்ந்த சிந்தனைக்ளாகப் படிந்து போயிருப்பதும் இதனால் தான். : ۲", .. '.' .. '' .. ' ' { , ή , *°. %° , £°. ;
ஒரே நேரத்தில் பண்பாம்டுப்பு:பெட்டகமாகும் பூெண், பண்புரட்டு அச்சுறுத்தலாகவும் அமைவதும் இதனால்தான். இந்தப்:பின்னணியில்தான் பண்பாட்டுச் செயற்பாட்டை:அணுக வேண்டியுள்ளது. அதிலும்; நெருக்கம் நிறைந்த அரசியல் சூழலில் பண்பாட்டுச் செயற்பாடுகளின் அரசியல்:சார்பு நுண்ணிடிமுறையில் அணுகப்படி:வேண்டியதாகிறது.
37

Page 50
ஆர்ஜென்டினாவில் 97
கள்ை 5tf
ாது. தாய்மையை பண்பாட்டு
சமூக அங்கீகாரம் பெற்ற குறியீட்டுக் களத்தில் நின்று கொண்தேர்சியல் போர்ாட்டத்தில் கலகக்குரல் எழுப்பிய வரலாறு இலங்கையிலும் நடந்திருக்கிறது. அன்னையர் முன்னணி நடத்திய போராட்டங்கள் தாய்மையை அரசியல் அரங்கில் கொண்டு வந்ததும் இந்தப் பின்னணியில்தான். ஆர்ஜென்டீனா போராட்டத்திவில் பங்கேற்ற பெண்ணின் கூறறாக,
“இருபது பேருக்கு சமைப்பது ஒருவருக்கு சமைப்பதைப் போலத்தானே. எங்களுக்கு சேர்ந்து சாப்பிடப்பிடிக்கும். இது எங்கள் போராட்டத்தின் போர்க்குணத்தின் ஒரு பகுதிதான்”
என்று சொல்லப்படும் போது சமையல், பண்பாட்டுப் போராட்டத்தின் ஒருபகுதி யாகிறது. தனது மகனுக்குப் பரிமாறும் உணவை அவனது நண்பர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் போதும் நேரங்கெட்ட நேரத்தில் மகளோ! மகனோ வரும் போது சோறுாட்டும் போதும் அந்த மரபார்ந்த செயல்பாடு போராட்ட வடிவ மாகிறது. அரசியல் ஈடுபாடு செயலூக்கம் போன்றவை இவற்றிலிருந்தே தொடங்குகிறது எனலாம். இந்த எடுத்துக்காட்டுக்களை வைத்துக் கொண்டு மரபுத்தளைகளையே போராட்ட வெளிப்பாடாக வியாக்கியானம் செய்வதாக நினைக்க வேண்டாம். இந்த மரபுத்தன்மைகளை புரிந்து கொண்டு அவற்றின் கூறுகளையூஅரசியலாக்குவதும் அரசியல் செயற்பாடுதான்.இத்தகைய அரசியற் பங்கேற்பு இல்லாத எவரும் இன்று இந்தத் தீவில் இல்லை எனக் கூறலாம்.
சாவுச் சடங்குகளை போராட்ட களமாக்கிய ஆபிரிக்க விடுதலைப் போராட்டங்களைப் போலவே வீடுகளிலும், வீதிகளிலும் நிகழும் சாவுகள்/ கொலைகள், அவற்றுக்குச் செய்யப்படும் / செய்யப்படாத சடங்குகள் ஓங்கி யெழும்/ அடக்கப்படும் அழுகையும் ஒப்பாரியும் நமது பண்பாட்டு வெளிப் பாடாகின்றன.
பண்பாட்டுச் செயற்பாடுகள் எப்போதோ எங்கோ நாம் ஒன்றி ணைந்து வெளிப்படுத்தும் கவி நிகழ்ச்சியாக மாத்திரம் பார்க்கப்படாமல் நமது அன்றாட வாழ்வின் புரிதலுக்குள் ஒரு அம்சமாக மாற வேண்டும் என்பதே இந்த விளக்கத்தின் மையம், ஆனால் எந்தச் செயல்பாடும் தெரிவின் அடிப்படையில் சமூக அரசியல் பெறுமானத்தின் புரிதலோடு செய்யப்பட வேண்டும். 'பாவை’ என்றும், 'பூவை” என்றும் வர்ணிக்கப்பட்ட பெண்களது உடை, அலங்காரம் இத்தியாதிகள் நமது பண்பாட்டுச் சின்னங் களாகக் கருதப்படுகின்றன. இவற்றைப் பழக்கத்தின் காரணமாகப் பின்பற்று வது கண்மூடித் தனம், பிடித்தத்தின் காரணமாக பின்பற்றுவது ரசனை, அதிகார எதிர்ப்பாகக் காட்டுவது பண்பாட்டுப் போராட்டம். எங்கு “பர்தா'வை பெண்மீது திணித்து இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தமது மத அடையாளத் தைக் காப்பாற்றிப் கொள்ளுகிறார்களோ, அங்கு பர்தாவைக் களைவது பெண்ணிய அடையளமாகிறது. அதே "பர்தாவை’க் காரணமாக்கிக் கொண்டுத் தெலுங்கானாப் போராட்டத்தில் பெண்கள் தகவலாளிகளாகவும், ஆயுதம்' கடத்துபவராகவும் செயல்பட்டபோது "பர்தா” போராட்ட அடையா ளமாகிறது' அதேநிலைதான் ' இன்று இலங்கையில் வாழும் 'தமிழ்ப் பெண்களின் பூவிற்கும், ப்ொட்டிற்கும், புடைவைக்கும் நேர்ந்துள்ளது. இனக் காழ்ப்பை 'உமிழுவதற்கு இவற்றைப் 'பயன்படுத்தும் போது, இந்த அடையாளங்களை ஏற்பது போராட்டமாகிறது. இவற்றை வைத்தே மரபுத்
88
 
 
 
 
 
 
 
 
 
 
 

தளைகளைப் பூட்டும்போது, அவற்றை களைவது போராட்டமாகிறது. வேறுவிதமாகச் சொன்னால் வகைமாதிரிப் பிம்பங்களுக்கான குறியீடுகளின் அலமாரிகளாக நமது உடலும் நமது தோற்றப் புனைவுகளும் இருப்பதை நாம் கேள்வி கேட்பது அவசியமாகிறது.
யோனி ஆதிக்கத்தின் வெறித்தனத்திற்கு பலியாவதன் அரசியலை கலாவின் கோணேசுவரிகள் கவிதை பேசியது இந்த அடிப்டையில்தான் நாளைய சந்ததிகளும் தவிர்க்கக்கூடாதென.
‘வெடிவைத்தே சிதறடியுங்கள் ஒவ்வொரு துண்டுகளையும் கூட்டி அள்ளிப் புதையுங்கள் இனிமேல் எம்மினம் தளிர்விட முடியாதபடி”
என்று மண்வாரிப் போடும் சாபக் குரலாகக் கவிதை வெடிக்கும் போது பெண் உறுப்பு பொதிந்து வைத்துள்ள அரசியல் வன்மை புலனாகிறது.
`சிங்களச் சகோதரிகளே!” எனத் தொடரும் அக்கவிதை சிங்கள இனத்தைச் சேர்ந்த பெண்களைத் தம்மோடு ஒரே நேரத்தில் வேறுபடுத்தியும், ஒன்றுபடுத்தியும் பார்ப்பதையும் நாம் காணலாம். அவள் சகோதரி தான்! அவளது யோனிக்கும் இதேகதிதான், ஆனால் அவள் `சிங்கள’ சகோதரி. ஆனால் ‘'இப்போது’ வேலையில்லை. இதில் பெண்ணின் உடலுக்கான அரசியல் தேசியத்துக்கான அரசியலும் ஒருங்கே வெளிப்படுகின்றது.
அம்ரிதா சாச்சி தனது “அடையாள அரசியல்’ என்ற கட்டுரையில்,
"தந்தை ஆதிக்க சமூகத்தில், ஒடுக்கப்படும் பெண்ணாக இருக்கும் நிலை காரணமாக நாம் தன்னியல்பாக இனம்சாராத, வர்க்கம் சாராத அடையாளத்தை நோக்கிச் செலுத்தப்படுவதில்லை. நமது சமூகத்தில் இனம் சார்ந்த, தந்தை ஆதிக்க அடையாளங்களுக்கான பருண்மையான அடிப்டை இருக்கிறது. எனவே மாற்று நிலைப்பட்ட இனம்சாராத அடையாளங்கள் சமூகத்தில் ஒரு சக்தியாக விளங்க வேண்டுமெனில் அவற்றுக்கும் பருண்மை யான அடிப்படை தேவை.”
என்று குறிப்பிடுவார். எனவே இன, மத, மொழி அடையாளம் தவிர்ந்த பாலின அடையாளம் சாத்தியமும் இல்லை. அது பெரும் புரட்சிக் குரியதும் இல்லை. பெண்ணிய கருத்தாடல்கள் உலக அளவில் பலவகைப் பெண்ணியங்கள் இருப்பதை வலியுறுத்தி வருகின்றன. பின் நவீனத்துவ சிந்தனை முன்வைக்கும் மிதக்கும் குறியீடுகள் அரசியல் தளத்தில் நமது பண்பாட்டுச் செயல்பாட்டுத் தெரிவுகளை இயங்கியல் நோக்கில் புரிந்து கொள்ள உதவலாம். எனவே, பெண்ணியம் தன்ன்ைச் சுற்றிலும் உள்ள சமூக ஊடாட்டங்களோடு தன்னை இணைத்துக் கொள்ளாமல் தனித்தியங்க இயலாது. ஆனால் சுற்றிலும் உள்ள அமைப்புகள் தந்தையாதிக்கக் கட்டமைப்பில் செயல்படும் சூழலில், பெண்ணியம் தன்னாட்சியோடு இயங்கு வதும் அவசியமாகிறது. இந்தப் பிணைவு சமூக அரசியல் தளத்தில் உள்ள முக்கிய கூறுகளை இலங்கைச் சூழலில் தேசியம் - பெண்ணிலை நோக்கில் மறுபரிசீலனை செய்ய வழிவகுக்கும் என நம்பலாம். தேசீயம் சார்ந்த போராட்டம் பெண்களது பங்கேற்பு மூலம் எந்த வகையிலும் குணாம்ச ரீதியான மாற்றம் பெற்றுள்ளது எனப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. பெண்கள் எண்ணிக்கையளவில் இடம்பெறுகின்ற காரணத்தாலேயே எந்தப் போராட்ட மும் பெண் மையச்சிந்தனைய்ை பெறும் என்ற உறுதிக்கு இடமில்லை. உலக அளவில் போராட்டங்கள் வலுப்பெற்ற காலத்தில் பெண்கள்
89

Page 51
\ ' .. / நிலையிலிருந்து விடுபட்டு வேறு 'ஒருஉலகில் உலாவுவதும் பிறகு இந்நிலை மாறியதும் மீண்டும் தமது மரப்புத் தள்ைகளுக்குள் மாட்ட்ப்படுவதையும் நாம்தொடர்ந்து சந்தித்து வருகின்றோம். இன்றைக்கு பல்வேறுமாற்றங்களைச் சந்தித்து வரும் சமூகத்தில் நமது வெளிப்பாட்டுக்கான பண்பாட்டுத் தளங்களைக் கண்டெடுப்பது அவசியமா
கிறது
*: Š ነ
ஒப்பாரி சாவீட்டுச் சடங்காக மட்டும் இல்லாது யுத்த காலத்தின் ஒலமாக வெளிப்படும் போது தனி மனித இருப்பும் ஓர் இனத்தின் இருப்பும் ஒரு காலத்தின் இருப்பும் கேள்விக்கு ஆளாகிறது. 'சூரியா” பெண்கள் அமைப்புக்காக மட்டுநகர் கண்ணகிகள் என்ற நிகழ்வை உருவாக்கிய அனுபவம் அதனை வெளிக்கொணர்ந்தது. அதில் பங்கேற்றவர்கள் குறிப்பாக பெண்கள் - அதனை நிகழ்த்துதலாகச் செய்ய இயலாமல் போனதை இன்றைய காலத்தின் நெருக்கடியாகக் காணவேண்டியுள்ளது. மட்டக்களப்பு பகுதியில் செய்யப்படும் கண்ணகி குளுத்தி வழிபாட்டை இன்றைக்கு ஆண்கள் காணாமல்போகும் / இறந்து போகும் குடும்பத்தினரின் நிலை மையை வெளிக்காட்டப் பயன்படுத்தினோம். பெண்கள் அனுமதிக்கப்படாத சடங்காக இருந்த குளுத்தியை மேடையில் கொண்டு வந்தோம். அது எழும்பிய ஐயங்களும் மனவேலிகளும் எத்தனையெத்தனை?
இந்த அனுபவம் பண்பாட்டு வெளிப்பாடுகள், அவை பயன்படுத்தும் குறியீடுகள், அவை நம்மில் பதிய வைக்கும் பிம்பங்கள், அவற்றைக் குறித்த நமது புரிதல்கள் குறித்து பல கேள்விகளைக் கிளப்புகிறது. அதிலும், சாதீயம், மதம் சார்ந்து இயங்கும் சமூகங்களில் அவற்றின் பண்பாட்டுக் கூறுகளைக் கட்டுடைப்பது அவசியமாகிறது.பெண்ணியம் சார்ந்த பண்பாட்டுத் தளம் அதனைச் செய்யாது போனால் நெருக்கடிச் சூழல் மாறியதும் பெண்கள் மீண்டும் பண்பாட்டு மையநீரோட்டத்தின் காப்பாளர்களாக வரிக்கப்படுவார்கள். இந்தியச் சூழலில் இந்துமதப் பேரினவாதம் முன் வைக்கும் பண்பாட்டுக் குறியீடுகள் பெண்களை மேலதிகமாக மையப்படுத்து வதை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
நமது வேர்களிலிருந்து கிளைபரப்பி, வான்முட்ட உயரும் விருட் சங்களாக பெண்ணிய பார்வையில் பண்பாட்டுக் குறியீடுகள் உருவாவது இங்கு அவசியமாகிறது. அந்த வகையில் தமிழில் மதமும், அரசும் கட்டிதட்டிப் போகாது இருந்த காலத்தில் தோன்றிய சங்ககாலப் பனுவல்கள் பெரும் உத்வேகம் ஊட்டுகின்றன. அதேசமயம், சங்க காலத்தை புனைவு மறுஉருவாக்கம் செய்வதிலும் ஆபத்து உள்ளது.
இங்கு குறியீடுகளை உருவாக்குவதிலும், விமரிசனப்பாங்கோடு கூடிய திறந்த பனுவல்களைக் கட்டமைப்பது இன்றைய தேவையாகிறது. இந்த முயற்சி சமூக, 'அரசியல் தளத்தைச் செறிவாக்குவதுடன் புதிய
சிந்தனை உள்ந்றையும் வழங்கும் என்பதில்"ஐ
ர்ே)
 
 
 
 
 
 

blumstöelfast beundrIII blfudbeunhib
6uпатаЁ ஜெய்சங்கள்
ஒரு சமூகம் / சமூகக் குழுவானது வாழும்முறை, அதாவது அவர்களது உணவுப் பழக்கவழக்கங்கள், உடை, வாழிடம், அவர்கள் தமது ஒய்வைக் கழிக்கும் முறைகள், தொடர்பாடல் முறைகள், கலைகள், நம்பிக்கை கள், அரசியல் போன்றவற்றிலுள்ள தனித்துவம் அவர்களது கலாசாரம் எனப்படும்.
ஒவ்வொரு சமூகக் குழுவும் வாழும் புவியியற் பிரதேசத்தின் இயல்புகளை அடிப்படையாகக் கொண்டிருப்பினும், அவற்றுக்கு மேலாக அதிகாரத்தில் உள்ளவர்களால் அவர்களது தேவைகளுக்கு ஏற்பவும் வடிவமைக்கப்படுகிறது. இத்தகைய வடிவமைப்புக்கு. இதுதான் கலாசாரம் என்று கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்கு கலாசாரச் செயற்பாடுகள் உதவுகிறது. s
இவ்வாறு ஒரு கருத்தியலை நிலை நிறுத்துவதற்கான அல்லது மாற்றுவதற்கான நோக்கத்தைக் கொண்டு முன்னெடுக்கும் செயற்பாடுகள் கலாசார செயல்வாதமாக அமையும்.
இந்தப் பின்னணியிலேயே பெண்கள் தமது சமத்துவத்திற்காக பெண்நிலைவாத நோக்கில் முன்னெடுக்கும் செயற்பாடுகள். இவை எவ்வாறு செயல்வாதமாக முன்னெடுக்கப்படுகிறது என்பவற்றை நோக்கலாம்.
அதிகாரத்தில்உள்ளவர்களால் கலாசாரம் தீர்மானிக்கப்பட அதிகார மற்றவர்கள் வேறுயாராலோ தீர்மானிக்கப்பட்ட கலாசாரத்தை / வாழ்க்கை முறையைத் தமதாக ஏற்றுக்கொண்டு வாழவேண்டி ஏற்படுகின்றது. இந்த நிலையே பெண்களுக்கும் ஏற்படுகிறது.
ஆணாதிக்க சமூகங்களால் உருவாக்கப்பட்ட பெண்கள் பற்றிய கருத்துருவாக்கம் அவர்களை வீடு,குடும்பம் என்கின்ற அமைப்புக்குள் கட்டுப் படுத்தி பெண்களை ஆண்களது வம்சத்தை விருத்தி செய்யும் கருவிகளாகக் காட்டுகிறது. பெண்கள் பொதுவாழ்விலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு, ஆண்கள் பொது வாழ்வில் ஈடுபடுவதற்கு ஒத்தாசை புரிவோராகக் காட்டு கிறது. ஆனால் சமூகத்தில் ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கலாசார செயல்வாதமானது முக்கியமாகப் பொது வாழ்விற்குரியதாகவே அமைகிறது.
கலாசார செயல்வாதமானது கூடிய நேரத்தையும், அவதானத்தையும் வேண்டி நிற்பது மேற்கூறப்பட்ட சமூகக்கட்டுமானத்துள் வாழும் பெண்கள் முழுநேரத்தையும், அவதானத்தையும் இன்னொருவரைப் பராமரிப்பதற்கு செல விடுவதால், தனக்குத் தேவையான வகையில் கலாசாரச் செயல்வாத மொன்றை முன்னெடுப்பதிலிருந்து கட்டுப்படுத்தப்படுகின்றாள்.
மேலும், ஏற்கனவே உள்ள செயற்பாட்டு தளங்கள் ஆதிக்கத்தி
லுள்ளவர்களது கைகளிலிருப்பதாலும், பெண்கள் தமது செயற்பாடுகளை விரித்துக் கொள்வதிலிருந்து கட்டுப்படுத்தப்படுகின்றனர்.
91

Page 52
பெண்களது எண்ணங்கள், உணர்வுகள், செயற்பாடுகள், மனித வாழ்வை அவள் எவ்வாறு வடிவமைக்க விரும்புகிறாள் என்பதெல்லாம் வெளிப்படுத்த முடியாதவனவாகப் போகின்றன.
ஒரு சமூகம் அல்லது சமூகக் குழுவினது கலாசாரம் எனும் பொழுது. அக்குழுவுள் அடங்கும் பெண்களதும், ஆண்களதும் கலாசாரத்தைச் சேர்த்தே குறிப்பிடுகிறது எனினும், உண்மையில் அங்கு ஆண்களுடைய கலாசாரம் வேறாகவும், பெண்களுடைய கலாசாரம் வேறாகவும் இருக்கிறது.
இந்த வெளியினுள் “பெண்ணுடைய கலாசாரம்” என்று வரையறுக் கப்பட்ட வெளியினுள் பெண்கள் தமது கருத்துக்களைப் பலவிதமான செயல்வாதமாக முன்வைக்கின்றனர். இது தனிநபராகவோ, குழுவாகவோ இடம்பெறுகிறது. உதாரணமாக தொடர்ச்சியான மெல்லிய முணுமுணுப்பு களில் தொடங்கி, ஒப்பாரியாகி, கவியாகப் பாடலாகத் தமது கருத்துக்களை, எதிர்ப்புக் குரலைப் பெண்கள் வெளிப்படுத்துகின்றனர். அதிலும், அடக் கப்படும் சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் பொருளாதாரத் தேட்டத்துக்காக வீடு என்ற கட்டுமானத்திலிருந்து ஓரளவு வெளியேறக்கூடியதாக இருப்பதால் கூடியளவு தமது குரலை வெளிப்படுத்தக் கூடியதாகின்றனர். மேலும் பொதுவான செயற்பாட்டுத் தளங்களில் செயற்பட தடுக்கப்படினும் பெண்கள் தமக்கு பிரச்சினையாகவுள்ள விடயங்கள் பற்றித் தொடர்ச்சியாகப் பிரக்ஞை யுடன் இருத்தல், அவை பற்றித் தமக்குள் பேசுதல் என்பதுகூட பெண்களின் கலாசார செயல்பாட்டுவாதமாகவே கொள்ள வேண்டியது. இது வர்க்க, மத, இன ரீதியான அடக்குமுறைகளுக்கு எதிரானதாகவோ பெண் என்ற வகையில் ஆணாதிக்கத்திற்கு எதிரானதாகவோ அமையலாம்.
ஆயினும் சமூகத்திலுள்ள பெண்களை இரண்டாம்பட்சப் பிரசைகளாக நோக்கும் கருத்துருவாக்கத்தை மாற்றுவதற்கும், ஆணாதிக்கத்திற்கு எதிராக வும் தெளிவான செயல்வாதம் முன்னெடுக்கப்படுவது பெண் நிலைவாத ஒரு இயக்கமாக செயற்படுவதுடனேயே ஆரம்பிக்கிறது.
கலாசாரச் செயல்வாதம் எனும்பொழுது பொதுவாக அழகியல்சார்ந்த கலைவடிவங்களோடு செயற்படுதல் என்றே விளங்கிக் கொள்ளப்படுகின்றது எனினும், ஒரு சமூகத்தின் கலாசாரம் எனக் கூறப்படும் அத்தனை விடயங் கள் சார்ந்தும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் காலாசார செயற்பாடு களாக அமையும். இச்செயற்பாடுகள் ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவ தனையோ அல்லது ஏற்கனவே உள்ள கருத்துருவாக்கத்தை மாற்றுவத னையோ நோக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் பொழுது கலாசார செயல்வாதமாகிறது.
ஏற்கனவே பெண்கள் தனியாகவோ, குழுவாகவோ தமது கருத்துக் களை வெளிப்படுத்துவதற்காக முன்னெடுத்த செயல்பாடுகளை அடையாளம் காணுதல் எழுதப்பட்டவரலாறுகள், ஐதீகங்கள், கட்டுக்கதைகள் போன்ற வற்றை மீள்வாசிப்பு செய்தல் மூலம் பெண்ணைப் பற்றிய கருத்துருவாக்கக் கட்டுக்குள் இருந்து மறைக்கப்பட்ட பெண்களின் கலாசார செயல்வாதங்களை
வெளிப்படுத்தல் என்பதிலிருந்து இது ஆரம்பிக்கிறது.
பெளத்த சங்கத்தில் பெண்களும் பிக்குணிகளாக இணக்கக் கோரி கெளதமருடன் வாதிட்ட கெளதமி, இரண்டு குறுநில மன்னர்களிடையே போர்மூண்டு, மக்களுக்கு ஏற்படக்கூடிய அழிவைத் தடுக்கத் தனியாகத் தூது சென்ற ஒளவை, தம்மைக் கட்டுப்படுத்தும் கீழ்த்தரமான ஆணாதிக்க சிந்தனைகளுக்கெதிராக ஒப்பாரி, கவி போன்றவற்றை நாட்டாரியல்
92

பாடல்களில் தம் கருத்தை முன்வைத்த பெண்கள் போன்றவற்றை இங்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
இன்னும் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்கனவே கட்டப் பட்டுள்ள வரையறைகளை மீறி தமது சுயாதீனமான சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் வெளிப்படுத்தும் பெண்கள் ஒவ்வொருவரது செயற்பாடு களுமே,ஏற்கனவே உள்ள கருத்துருவாக்கத்தை மாற்றுவதில் பெண் சுயாதீன மானவள் என்ற கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் பங்குவகிப்பதால், இவை ஒவ்வொன்றுமே பெண்களது கலாசாரச் செயல்வாதமாகக் கொள்ளப்
படும்.
மேலும் குடும்பம் என்ற அமைப்புக்கு வெளியே பெண்ணின் பிரசன் னத்தை நிச்சயப்படுத்துவதற்காக, சமூகத்தனங்கள் அனைத்திலும் பெண்கள் ஈடுபடுவதற்கான இடத்தைப் பெறுவதும் ஊக்குவிப்பதும் பெண்ணிலை நோக்கிலான முக்கிய செயல்வாதமாகிறது. உதாரணமாக கல்வித்துறையை எடுப்பின் அனைத்துப் பெண்களும் கல்வி அறிவைப் பெற உரிமையுடையவர் களாகவும், தமக்கு எத்தகைய கல்வித்துறை வேண்டும் என்பது பற்றி தீர்மானமெடுக்கக் கூடியவர்களாகவும், சமூகத்தின் கல்விசார் சிந்தனையோட் டத்தினை தீர்மானிப்பதிலும் பங்கெடுப்பவர்களாக இருக்கக்கூடிய வகை யிலான செயல்பாடுகள் முன்னெடுக்கப்படல். அரசியல்துறையிலும், நாட்டின் அரசியலமைப்பைத் தீர்மானிப்பது, நேரடியாக அரசியலில் ஈடுபடல் போன்ற வற்றில் பெண்களின் பங்களிப்பை சமப்படுத்தல் என்பவற்றைக் கூறலாம். இதேபோன்று சமயம், கலை, பொருளாதாரம், இலக்கியம், தொடர்பூடகம் எனப் பல்வேறுபட்ட சகல கலாசாரச் செயல்பாட்டுத் தளங்களிலும் ஏற்கனவே உள்ள பெண்களின் ஈடுபாட்டைக் கட்டுப்படுத்தும் கருத்துருவாக்கத்தை மாற்றுவதற்காகத் திட்டமிட்டு செயற்படல் என்பதும் பெண்களின் கலாசாரச் செயல்வாதமாகவே அமைகிறது.
ஆண்கள் மட்டுமே செய்யமுடியும் எனக் கருதப்படும் அபிவிருத்தி வேலைகள், தீர்மானமெடுத்தல், ஒழுங்கமைத்தல், அணிதிரளல் போன்ற செயற்பாடுகளில் பெண்கள் ஈடுபடுவதுடன் இவற்றை வெற்றிகரமாக முன் னெடுப்பதன் மூலம் இன்று அநேகமான பெண்ணிலைவாத இயக்கங்கள் மேற் கூறிய கருத்துருவாக்கத்தை மாற்றலாமென நம்புகின்றனர்.
இன்று எமது நாட்டில் நிலவும் போர்ச்சூழல் ஆண்களின் இயங்கு நிலையில் ஏற்படுத்தியுள்ள தடைகளும், பெண்கள் “வீடு” என்ற கட்டமைப்புக்குள் மட்டும் இருந்துவிட முடியாத சூழ்நிலைகளும், பெண்களின் பங்களிப்பிற்கான தேவையும் இவ்வகையில் பெண்கள் செயற்படுவதற்கு அனு கூலமான நிலைமையைத் தோற்றுவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பல்வேறு செயற்பாட்டுத் தளங்களிலும் யார் பங்கெடுக்கலா மெனப் பார்க்கும் பொழுது இது ஒரு "வலு’ சம்பந்தமான உறவுநிலையா கவே காணப்படுகிறது. அதிகமான வளங்கள், அதாவது அறிவு, சொத்து, தொடர்பாடல் போன்றவற்றை வைத்திருப்பவர்களே வலுப்பெற்றவர்களாக அதிகமான கலாசாரச் செயற்பாட்டுத்தளங்களில் இயங்குபவர்களாக, கருத் துருவாக்கங்களை ஏற்படுத்துபவர்களாக இருக்கின்றனர். இதை மறுபக்க மாகவும் பார்க்கலாம். அதாவது கலாசாரச் செயற்பாட்டுத் தளங்களில் வெற்றிகரமாக இயங்குதல், கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தல் வலுவாக கருதப்படலாம்.
93

Page 53
எனவே இத்தகைய வலு சம்பந்தப்பட்ட உறவுநிலையை விளக்கிக் கொண்டு அது சார்ந்த பெண்கள் வலுப்பெறச் செய்தல் முக்கியமான செயல் வாதமாகிறது. V
இங்கு தொடர்பூடகங்களின் செயற்பாடுகள் முக்கியமானவை. தொடர் பூடகங்களில் “பெண்” பற்றிய பாரம்பரியக் கருத்துருவாக்கம் தொடர்ந்து செய்யப்பட்டுக் கொண்டிருக்க, அதேஉஊடகங்களிலேயே இவ்ற்றை மாற்றுவதற் கான விமர்சனங்கள், கலந்துரையாடல்களுடன், பெண்மைப்படுத்தப்பட்ட கருத்துருவாக்க ஆக்கங்களை வெளிப்படுத்துதல் முக்கியமான செயல்வாத LDITépg).
அத்துடன் பெண்ணிலைவாத நோக்கிலான கருத்தியலைக் கொண்ட தனித்த செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இவை ஏற்கனவே உள்ள தொடர்பூடகங்களான பத்திரிகை, சஞ்சிகை, குறும்படம், திரைப்படம், நாடகம், தொலைக்காட்சி நாடகம் ஏனைய கலைவடிவங்கள் போன்ற வடிவங்களிலேயே அமைகின்றன.
எனினும் இத்தொடர்பூடகங்களின் உருவாக்கத்திலும் உருவாக்கதுக் கான காரணத்திலும் ஆதிக்கம் / ஆணாதிக்கத்துக்கான கூறுகள் இருக்கத் தான் செய்யும். எனவே, மாற்றுத் தொடர்பூடக வடிவங்கள் பற்றிய தேடலும் அவசியமாகிறது.
இங்கு பெண்கள் தமது விடுதலைக்காக, அடக்குமுறைகெதிராக ஒரு செயல்வாதத்தை முன்னெடுக்கும் பொழுது ஏனைய சகல அடக்குமுறை களையும் எதிர்கிறார்கள் என்பதை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு பெண்கள் தங்களைப்பற்றி ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள கருத்துருவாக்கத்தை மாற்றுவதற்கான செயல்பாடுகளுடனேயே ஆண்கள் பற்றி ஏற்கனவே உள்ள கருத்துருவாக்கத்தை மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு செயற்பட வேண்டி ஏற்படுகின்றது. அதாவது ஆண்களும் குடும்பம் / வீடு சார்ந்த பராமரிப்பு வேலைகள், பெண்களுக்கென வரையறுக்கப்பட்ட வேலைகளில் ஈடுபட முடியும் என்ற கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதும் பெண்நிலை நோக்கில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயல்வாதமாகிறது.
இதுவரை ஆண்களின் பார்வையில் வடிவமைக்கப்பட்ட உலகி லிருந்து மாற்றான பெண்களது கருத்துக்களும், அவர்கள் இந்த உலகை, மானுட வாழ்வை எவ்வாறு வடிவமைக்க விரும்புகிறார்கள் என்ற நோக்கும் இணைந்த இருபக்கப் பார்வையுள்ள ஒரு க்லாசாரத்தை நோக்கியதாகவே பெண்களது செயல்வாதம் விரிவடைந்து செல்லும். Ο
94

GarŘIGIOSullsi) gudy Guaith GluCrassflamLGu
Guardiana Suisib = ஆரம்பகாலச் சிந்தனைகளும் செயற்பாடுகளும்
பேராசிரியை சித்திரலேகா மெளனகுரு
தமிழ் பேசும் பெண்கள் மத்தியில் பெண்ணிலைச் சிந்தனை களும் செயற்பாடுகளும் மிகச் சமீப காலத்திலேயே உருப்பெற்றன எனப் பலர் கருதுகின்றனர். குறிப்பாக எழுபதாம் ஆண்டுகளில் இருந்துதான் இதனைக் காணலாம் எனவும், படித்த மத்தியதரவர்க்கத்துப் பெண்கள் தமது மேனாட்டுக் கல்விச் செல்வாக்கினாலும் தொடர்பினாலுமே இத்தகைய பெண்கள் அமைப்புக்களை உருவாக்கினர் என்றும் பலர் கூறுகின்றனர். இதனால் பெண்கள் இயக்கமென்பது குறுகியகால வரலாற்றைடையது எனவும் கூறப்படுகின்றது.
இத்தகைய ஒரு கருத்து உருவாவதற்கு இரு காரணங்கள் உள்ளன.
முதலாவது, தகவல்கள் தெரியாமை அல்லது பெண்களின் செயற் பாடுகள் பற்றிய ஆவணங்களும் தகவல்களும் சேகரிக்கப்படாமை. அத்துடன் அவை பாதுகாக்கப்டாமை.
இரண்டாவது பெண்கள் இயக்கம் என்பதை வரையறை செய்வதி லுள்ள பிரச்சினைகள்.
இவற்றுள் இரண்டாவது மிக முக்கியமானதாகும். ஏனெனில் சமூக இயக்கங்களுள் ஒன்றான பெண்கள் இயக்கத்தைச் சரியானபடி விளங்கிக் கொண்டு வரையறை செய்தால்தான் அந்த அடிப்படையில் அது தொடர்பான தகவல்களைத் திரட்டுவதும் விபரங்களைச் சேகரிப்பதும் முடியும்.
சமூக இயக்கங்களின் ஒரு முக்கிய தன்மையை அல்பேட்டோ மெலுசி எனும் ஆய்வாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இயக்கங்கள், வெளித் தெரியாத கண்ணுக்குப் புலப்படாத வலைப்பின்னல் அமைப்புக் களைக் கொண்டனவாகவும், சிறு குழுக்களாக இயங்குபனவாகவும் காணப்படும் என்கிறார் அவர். இத்தகைய அமைப்புக்கள் அன்றாட வாழ்வின் விதிகளைப் பற்றி வினாவெழுப்புவனவாக அமையும். அத்துடன் ஒரு அலைபோல உள்ளடங்கியும் சில சமயம் மிகுந்த வெளிப்படையான அசைவு கொண்டும் காணப்படும். இச்சமூக இயக்கங்கள் கண்ணுக்குப் புலப்படாமலும் சிலசமயம் வெளித்தெரிந்தும் செயற்படும்.
95

Page 54
மேலும் சமூக இயக்கங்கள் அசையாது நிற்பவை அல்ல அவற்றைப் பற்றி ஆராயும் போது பின்வரும் விடயங்கள் கணக்கில் எடுக்கப்பட வேண்டும். அவை மனிதரது அன்றாட வாழ்வுடன் தொடர்பு டையனவாகும். பொதுவாக மனிதரது பிரச்சினைகளுடன் அரசு போன்ற நிறுவனங்களுடனும் (எப்போதுமே அல்ல) அவை தொடர்ந்து எதிர்வினை புரிவனவாகவும் உள்ளன.
அத்துடன் இந்நிறுவனங்களுடன் சமூக இயக்கங்கள் எடுத்தும் கொடுத்தும் உரையாடல்களை நடத்துவனவாகவும், சிலசமயம் எதிர் நிலையில் இயங்குவனவாகவும் சில சமயம் சமரஸத்துக்கு வருபவை யாகவும் உள்ளன. இவ்வியக்கங்களில் ஈடுபடுவோர் ஒடுக்குமுறை பற்றிய விளக்கமுடையவராகவும் வினாவெழுப்புபவராகவும் உள்ளனர்.
பெண்கள் இயக்கங்களும் என்றுமே ஒரே மாதிரியாக இயங்கி யவையல்ல. எனவே பெண்கள் இயக்கத்தை சுருக்கமாக வரையறுப்பது மிகமிகக் கடினமானது. எனது கருத்தில் பெண்கள் இயக்கம் என்பதை, பெண்கள், தனியாகவோ, கூட்டாகவோ, குழுவாகவோ, அமைப்புக்களா கவோ, பிரக்ஞைபூர்வமாகவோ, அல்லது பிரக்ஞைபூர்வமற்றோ தம்மீதான ஒடுக்கு முறையை அகற்றுவதற்காக ஈடுபடுகின்ற செயற்பாடுகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகும். பெண்களின் தாழ்த்தப்பட்ட நிலைகுறித்த விளக்கத்துடன் அதனை அகற்று வதற்காகவும் அத்துடன் ஆதிக்க முறைமைக்கு சாவல் விடுவதாகவும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறுவிதமான கோரிக்கைகளை இந்த இயக்கங்கள் முன்வைக்கும்.
எனவே பெண்கள் தமக்கு முன்னாலுள்ள தடைகள் குறித்தும் தம்மைக் கட்டுப்படுத்தும் ஒடுக்குமுறைகள் குறித்தும் எவ்வாறு இயங்கு கின்றார்கள் என்பதும் அவர்களால் எவ்வாறு செயற்பட முடிகிறது என்பதை யும் கணக்கில் எடுத்தே பெண்கள் இயக்கத்தையும் அதன் வரலாற்றையும் கட்டமைக்க முடியும்.
இவ்வகையில் தனிநபர்களாகவோ குழுக்களாகவோ தம்மைச் சுற்றியுள்ள கட்டுப்பாடுகளை அகற்றும் முயற்சியில் தமது கருத்துக்களை யும் உணர்வுகளையும் சுதந்திரமாக வெளிப்படுத்துவதிலும் ஈடுபடும் பெண்கள், பெண்களின் செயற்பாடுகள் யாவற்றையும் பெண்கள் இயக்கத்தின் பகுதிகளாகவே இனங்கான வேண்டியுள்ளது. இத்தகைய செயல்கள் இலக்கிய ஆக்க மாகவோ, தனிப்பட்ட ஒரு செயலாகவோ, ஒரு கூற்றாகவோ எவ்வாறாயினும் அமையலாம். பெண்கள் தமது சிந்தனையையும் எதிர்ப்புணர்வையும் எத்தகைய வடிவத்தில் வெளிப் படுத்தினாலும் அவை யாவற்றையும் சேர்த்துத்தான் பெண்கள் இயக்கம் என்ற ஒன்றாக நாம் அடையாளம் காணவும் வரையறை செய்யவும் முடிகிறது. இவ்வாறு செய்வதன் மூலமே சமூகத்தில் ஓரங்கட்டப் பட்டிருக்கும் பெண்களின் செயற்பாடுகளுக்கு நாம் அங்கீகாரமளிக்க (Մուդպլb.
பல சந்தர்ப்பங்களில் பெண்கள் இயக்கங்களை வரையரை செய்வ தற்கு ஆண் தலைமை கொண்ட கட்டிறுக்கமான இயக்கங்களின் வகைமாதிரி களைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாகப் பலர் இருபதாம் நூற்றாண்டுக்கு முன்னரான பெண்கள் இயக்கங்களை, தற்காலத்து
96

சமூகச் செயல்வாதத்தின் அளவு கோலைப் பயன்படுத்தி ஆராய முற்படுகின்றனர். இது பொருத்தமல்ல; உண்மையில் பெண்களது எதிாப் புணர்வும் செயல் வாதமும் அவை தோற்றம் பெற்ற சமூக வலராற்றுச் சூழலில் சார்த்திப் பார்க்கப்பட வேண்டும்.
பெண்கள் இயக்கத்தை ஏனைய அரசியல் கட்சிகள் போலவோ, இனம், தேசம், வர்க்கம், ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகின்ற இயக்கங்கள் போலவோ, நிறுவனரீதியான இயக்கங்களாகவோ வரை யறை செய்வதுசரியா என்ற கேள்வி எழுகின்றது. பல நூறு அங்கத்தவர் களுடன், ஒரு தலைமைப்பீடத்துடன், நிறுவன மயப்பட்ட அமைப்புடன் உள்ள ஒரு இயக்கமாக வரையறை செய்து பெண்கள் இயக்க வரலாற் றைத்தேட முற்படுவது சரியாகாது. ஏனெனில் பெண்களுக்குச் சமூகத் திலுள்ள அந்தஸ்து நிலை, அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், அவர்கள் அணிதிரள்வதிலுள்ள பிரச்சினைகள் என்பவை ஆண்கள் பெரும்பான்மையாக அங்கம் வகிக்கும் அல்லது தலைமை தாங்கும் அமைப்புக்களிலிருந்து வேறுபட்டவையாகும். பெண்கள் இயங்கும் முறையே வேறுபட்டது.
இத்தகையதொரு 69(5 விளக்கத்தின் அடிப்படையில்தான் இலங்கையில் தமிழ் பேசும் பெண்களின் செயல்வாதம், அவர்களின் இயக்கம், அவற்றின் தோற்றம், வளர்ச்சி தொடர்பான தகவல்களை சேகரிக்கவும் ஒழுங்க மைக்கவும் முடியும்,
இந்த அடிப்படையில் நோக்கும் போது இலங்கையில் பெண்நிலைச் சிந்தனைகள் இந்த நூற்றான்டின் ஆரம்பத்தில் இருந்தே உருவானமையைக் காணலாம். பெண்கள் தனிப்படவும் குழுவாகவும் பெண்களின் கல்வி, அரசியல், சமூக உரிமைகள் பற்றி எழுதியும் செயற்பட்டும் வந்துள்ளனர். சமூக சீர்திருத்தம், சமூக நலவுரிமை சார்ந்த இயக்கங்களிலும் சோசலிஸ இயக்கங்களிலும் இப்பெண்கள் இயங்கினர். சமூகசீர்திருத்தவாதிகளாவும் எழுத்தாளர் களாகவும் பத்திரிகையாளர்களாகவும்,ஆசிரியர்களாவும் இவர்கள் விளங்கினர்.
இவர்களுள் மங்களம்மாள் மாசிலாமணி என்பவர் மிகவும் முக்கியமானவர். 1920ஆம் ஆண்டளவில் ( யாழ்ப்பாணத்து வண்ணார் பண்ணையில் ‘பெண்கள் சேவா சங்கம்’ என்ற ஒரு அமைப்பை இவர் நிறுவியதாக அறிய முடிகிறது.
மங்களம்மா பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் செயற் பட்டு தன்னுடைய கருத்துக்களை வலியுறுத்தி வந்தார். அக்காலத்தில் பெண்கள் தொடர்பாக இரு விடயங்கள் சர்ச்சைக்குரியனவாக விளங்கின. ஒன்று பெண் களது கல்வி உரிமை, மற்றது பெண்களது அரசியல் உரிமை.
இவ்விருவிடயங்கள் தொடர்பாகவும் மங்களம்மாள் ஆணித்தர மான கருத்துக்களைக் கொண்டிருந்தார்.
97

Page 55
இதேகாலகட்டத்தில் இலங்கையில் தமிழ் சமூகத்தின் தலைவர் கள் எனக் கருதப்பட்டவர்களும் அரசியல் சமூக அதிகாரம் பெற்றிருந்த வர்களும் பெண்கள், மரபு ரீதியாகத் தமக்களிக்கப்பட்ட வீடுசார் கடமை களை நிறை வேற்றி தாய், மனைவி என்ற பாத்திரங்களில் செயற்பட் டாற் போதும் என்றும் கூறினார். இலங்கைத் தேசிய காங்கிரசின் தலை வராக இருந்த சேர். பொன். இராமநாதன் பெண்களுக்கு வாக்குரிமை அவசியமற்றது எனக் கருதினார். குடும்பத்தின் நல்லிணக்கத்தையும் அமைதியையும் அது குலைத்துவிடும் எனவும் பெண்கள் சுதந்திரக் கருத்துடையவர்களாக இருப்பதற்கு இடம் கொடுத்தால் அவர்கள் தமது கணவர்களுடன் முரண்பட நேரிடும் எனவும் இது விரும்பத்தகாதது எனவும் குறிப்பிட்டார். இத்தகை கருத்துக்களையே யாழ்ப்பாணத்தி லிருந்து வெளிவந்த அன்றைய முக்கிய பத்திரிகைகளும் பிரதிபலித்தன. குறிப்பாகப் பெண்களது வாக்குரிமை தொடர்பான விவாதங்கள் ஆரம்பித்தபோது இத்தகைய கருத்துக்கள் வெளிவந்தன. 1927ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த டொனமூர் கொமிஷன் தேர்தலில் வாக்க ளிக்கும் உரிமையைப் பொதுமக்கள் மட்டத்தில் விரிவுபடுத்துமுகமாக இலங்கையரின் அபிப்பிராயத்தைக் கோரியபோது அதற்கு எதிராக யாழ்ப்பாணத்து உயர் சமூகத்திடமிருந்து எதிர்ப்புக்கிளம்பியது. வாக் குரிமை பெண்களுக்கு அவசியம் என்பதை வற்புறுத்திய பெண்கள், தேசிய மட்டத்தில் “பெண்கள் வாக்குரிமைச் சங்கம்” என்ற ஒரு அமைப்பை நிறுவினர். பெண்களது இத்தகைய செயல்வாதத்துக்கு எதிராக,சமூகப் பழமைவாதத்தை வற்புறுத்தும் வகையில் இந்துசாதனம் எனும் பத்திரிகை ஆசிரியர் தலையங்கமொன்றை எழுதியது. அதில் பின்வருமாறு குறிப்பிட்டது.
‘சென்ற வருடம் இலங்கைக்கு வந்த அரசியல் விசாரணைச் சங்கத்தார் இங்கு செய்யத்தக்க அரசியற் திருத்தங்களுள் சட்டநிரூபண சபை போன்ற சபைகட்கு பிரதிநிதிகளைத் தெரிவுசெய்தனுப்பும் விசயத்தில் பெண்களுடைய சம்மதத்தைச் பெற்றாலும் ஒன்றெனக் கூறி விட்டனர். ஆனால் விசாரணைச் சபையார் தாமாக இதனைக் கூறினாரல் லர். கொழும்பிலேயுள்ள ஆண்தன்மை பூண்ட தன்னிஷ்டப் பெண் ஜன்மங்கள் சிலர் கேள்விக்கிசைந்தே விசாரணைச்சபையாரும் பெண் ணென்றால் பேயுமிரங்குமென்னும் பழமொழிப்படி உடன்பட்டுவிட்டார்கள் இத்திருத்தம் எங்கள் சமயம், சாதி, தேசம், பழக்கவழக்கம், கொள்கை கள் என்று சொல்லப்படுவன எல்லாவற்றிற்கும் முழுமாறானதாகும். பெண் தன்னெண்ணத்திற்கு நடந்து கொள்ளுதல் சைவநன்மக்களுள் எக்காலத்திலுமில்லை. கற்பெனப்படுவது சொற்றிறம்பாமையென்ற பிரகாரம் நாயகனுடைய சொற்படி ஒழுக வேண்டிய பெண் அவன் சொல்லை மீறி இருமனப்படுவாளேல் அவள் செல்வத்தோடு கூடியவளா யினுமென், பேரழகோடு கூடியவளாயினுமென், கல்வியறிவு வாக்குச் சாதூரியத்தோடு கூடியவளாயினுமென் அவள் பொது மகளாவாள். மேலும் பறங்கியர், ஒல்லாந்தர் முதலாம் அந்நிய சமயத்தினர் இந்த இலங்கையைப் பரிபாலித்த போது சமய நிஷ்டுரம் செய்தனரேயன்றி இந்த விதமாக எங்கள் சாதிக்கட்டுப்பாட்டையழித்து இங்குள்ள பெண் களை பொதுக் கருமங்களிற் பிரவேசிக்கச் செய்து பொது மகளிராக்கி விடவில்லை. பெண்களுக்கும் ஆண் களுக்குமிடையே பேதமில்லையென் னும் கொள்கை பூண்ட மேலைத் தேசத்தவர்களாகிய விசாரணைச் சங்கத்தார் தங்களைப் போல எங்களையும் தங்கள் பெண்களைப் போல
98

எங்கள் பெண்களையும் மதித்து தீமைக்கும் கலகத்திற்கும் சாதி,சமய மகத்துங்களையும் է 1605լքա சீர்திருத்தத்தையும் கெடுத்தற்கும் ஏதுவாயுள்ள இந்தக் போலிச் சுவாதீனத்தை ஏற்றுச் கொள்ளச் சொன்னால் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பது கட்டுப் பாடாகுமா?” (இந்து சாதனம் 08-11-1928).
இத்தகைய ஒரு நிலையில் எத்தகைய ஒரு விட்டுக் கொடுப்பு மின்றி பெண்களுக்கு அரசியலுரிமை வேண்டும் என்ற கருத்துப் பட ஆணித்தரமாக வலியுறுத்தினார் மங்களம்மாள்.அவரது கருத்தக்கள் இந்துசாதனம் ஆங்கிலப் பதிப்பில் கடிதரூபத்தில் வெளிவந்திருந்தது. அதில் ஒரு பகுதியைக் கீழே தருகிறேன்.
‘உலகம் முழுவதும் பெண்கள் தமது நிலையை உணர்ந்து தமது சுதந்திரத்துக்காகப் போராடத் தொடங்கிவிட்டனர். இந்தியாவில் பெண்கள் வாக்களிப்பதற்கு மாத்திரமன்றி முனிசிபல்கவுண்சில், சட்டசபை போன்றவற்றுக்கான தேர்தல்களுக்கு வேட்பாளர் ஆவதற்கும் உரித்து டையவர்கள். அத்தகைய உரிமைகள் அவர்களுக்கு இலகுவில் கிடைத்துவிடவில்லை. அவர்கள் தாமே உரிமைகளுக்காகப் போராடியுள் ளனர். எமது உரிமைகளைதாமாக எமக்கு எவரும் வழங்கப்போவ தில்லை.நாம் ஆண்களுடன் சமஉரிமை பெறவேண்டும். வாக்களிப் பதற்கு மாத்திரமல்ல, சட்டசபைப் பிரதிநிதிகளாகத் தேர்தெடுக்கப்படும் உரிமையும் எமக்குத் தேவையானது. சுருக்கமாகக் கூறின் இப்போது நிலவும் அசமத்துவநிலை நீக்கப்பட்டு இலங்கைப் பெண்கள் ஆண் களுடன் சமத்துவமான அரசியல் உரிமைகளைப் பெறவேண்டும்.”
இத்தகைய கருத்தைப் பகிரங்கமாகக் கூறியது ஒரு பெண் நிலைச் செயல்வாதம் அன்றி வேறு என்ன? சேர் பொன்.இராமநாதன் போன்றோர் பெண்களது சமூகப்பங்களிப்பை மறுத்து பெண்களுக்கு வீடே உலகம் என்ற கருத்தை வற்புறுத்தியதற்கு மாறாக மங்களம்பாள், பெண்கள் விவாகம் செய்யாமல் சமூகப்பணி செய்வது பற்றியும் குறிப்பிட்டார்.
“பெண்களுக்கு விவாகம் ஒன்றே முடிந்த முடிவு எனக் கருதக்கூடாது. பெண்கள் கன்னிகளாக இருந்து கடவுட் பணியோ சமுதாய சேவையோ செய்ய முடியும்’ எனவும் எழுதினார்.
பெண்களுடைய ஆளுமையும் ஆற்றலும் தனியே வீட்டுக்குள் முடங்கிவிடாது அவை பொதுதளத்தில் செயற்பட வேண்டும். என்பதை யும் பெண்ணுடைய சுயநிர்ணய உரிமையையும் இவ்வாறு வற்புறுத்தி னார் மங்களம்பாள். அவர் உருவாக்கிய தமிழ்மகள் எனும் சஞ்சிகை யின் இலட்சிய வாசகமாக ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்ற வசனத் தைப் பயன்படுத்தியமையின் நோக்கம் மேலே கூறிய அவரது கருத்துக்களைச் சேர்த்துப் பார்க்கும் போது ஆழமாக விளங்குகிறது.
பெண்கள் இயக்கத்தின் ஆரம்பகாலச் செயற்பாட்டுக்கு உதாரண
மாகவே மங்களம்மாளின் கருத்துக்களையும், அவரது பத்திரிகைச் செயற்பாட்டையும் இங்கு குறிப்பிட்டேன்.
99

Page 56
மங்களம்மாளின் சமகாலத்தவரான இன்னோர் முக்கிய பெண் மணி மீனாட்சியம்மாள் நடேசையராவார். தமிழ்நாடு தஞ்சாவூரைச் சேர்ந்த இவர் இளமைக் காலத்தில் இலங்கை வந்தார். மலைநாட்டின் முதலாவது தொழிற்சங்கத்தை நிறுவியவரான நடேசையரை மணமுடித்த மீனாட்சியம்மாள். மலையக மக்களுக்கான சேவையிலேயே தனது வாழ் நாளைக் கழித்தார்.
மங்களம்மாளைப் போலவே மீனாட்சியம்மாளும் எழுத்தாளரா வார். இவர் பத்திரிகைத்துறையிலும் ஈடுபட்டவர்.நடேசையர் வெளியிட்ட தேசபக்தன் எனும் பத்திரிகையில் தேவையானபோது தலையங்கங் களும் கட்டுரைகளும் எழுதினார். அத்துடன் இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை என்ற தமது பாடல் தொகுப்பொன்றையும் 1940ஆம் ஆண்டு வெளியிட்டார்.
மீனாட்சியம்மாள் தேசபக்தன் பத்திரிகையில் ‘ஸ்திரிகள் பக்கம் என ஒரு பகுதியை ஆரம்பித்தார். இது 1928ஆம் ஆண்டு முற்பகுதியி லிருந்து ஆரம்பமாயிற்று. பெண்கள் சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்ற்ை வற்புறுத்திய மீனாட்சியம்மாள் பெண்கல்வி முன்னேற்றம், பெண்கள் தொடர்பான சட்டச் சீர்திருத்தங்கள் ஆகியவை குறித்து இப்பக்கத்தில் அடிக்கடி எழுதினார். பெண்களது சுதந்திரம், முன்னேற்றம் பற்றிப் பேசி யும் எழுதியும் வந்தால் மாத்திரம் போதாது. நடைமுறையில் இவற்றைப் பிரதிபலிக்கும் செயல்களைக் கடைப் பிடிக்க வேண்டும் என இவர் அடித்துக் கூறினார்.
‘ஸ்திரீகள் முன்னேற்றமடைய வேண்டுமெனப் பலபேர்கள் எழுத்து மூலமாயும், வெறும் பேச்சாகவும் பேசுகிறார்களே தவிர கையாள்வது கிடையாது. சில மகான்களும் பிரசங்க மேடைகளில் நின்று பெண்களுக்குக் கல்வி வேண்டும், சுதந்திரம் வேண்டும், அவர்கள் முன்னேற்றமடையாவிட்டால் தேசம் முன்னேற்றமடையாது என்று வாயால் பேசுகிறார்கள். அவர்கள் வீட்டில் அம்மாளுக்கோ கோஷா திட்டம். இவ்வாறு விபரம் அறிந்தவர்கள் நிலைமையே மோசமாயிருந்தால் அதிகம் படிப்பறிவில்லாத ஆடவர் தங்கள் மனைவி மார்களை எப்படி நடத்துவார்கள்? பெண்மக்களில் சிலர் பெண்கள் முன்னேற்றத்திற்காக ஈடுபடுகிறதே தவிர அனுகூலங்கள் ஏற்படுவது அரிதாக இருக்கிறது’ (தேசபக்தன் 18-06-1928) என எழுதினார் அவர்.
இக்காலத்தில் நிகழ்ந்த பெண்கள் வாக்குரிமை இயக்கத்திற்கும் மீனாட்சியம்பாள் ஆதரவு அளித்தார். பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தில் அங்கம் வகிக்காவிடினும் பெண்களது வாக்குரிமை தொடர்பாக அக்காலத் தில் நிகழ்ந்த விவாதங்களில் இவர் பங்கெடுத்தார். இக்கட்டுரையின் முற்பகு தியில் குறிப்பிட்டது போல இக்காலப் பிரமுகர்கள் பலர் பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பது பாரதூரமான தவறு என்ற கருத்துக்கொண்டிருந்தனர்.
மீனாட்சியம்மாள் தேசபக்தனில் எழுதிய கட்டுரை யொன்றில் சேர். பொன். இராமநாதனின் இத்தகைய பிற்போக்கான நிலைப்பாடு குறித்துக் கண்டனம் செய்தார்.
100

‘டொனமூர் கமிஷன் முன் இலங்கைப் பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்க வேண்டும் என வற்புறுத்தி கனம் நடேசையரும் சிறிமான் பெரிசுந்தரம் முதலியோரும் சாட்சியம் கொடுத்துள்ளனர். ஆனால் சேர். பொன்னம்பலம் இராமநாதனைப் போன்றவர்கள் குறுகிய நோக்குடன் பெண்களுக்குச் சமஉரிமை கொடுக்கக்கூடாதென்ற விஷய மானது பொதுமக்களுக்கு ஆச்சரியமாகத்தானிருக்கும். இந்தியாவைவிட முற்போக்கடைந்திருப்பதாகப் பாவிக்கும் இலங்கையில் ஸ்திரிகளுக்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாதென்றால் இலங்கை எவ்விதத்தில் முற்போக் கடைந்திருக்கின்றது? சமீபத்தில் சேர். ஜெகதீஸ் சந்திரபோஸ் கல்கத்தா பெண்கள் விடுதிச்சாலையைத் திறந்து வைக்கையில் “பெண்கள் ஆண் களுக்கு அடிமைகள் என்ற எண்ணத்தை விட்டுவிட வேண்டும். ஆண் களும் பெண்களும் முன்றேற்றமடைவதற்குப் பெண்கள் வழிகாட்டி களாக இருக்க வேண்டும். பெண்கள் அத்தகையதொரு நோக்கம் கொண்டு உலக வாழ்க்கையில் இறங்குவார்களென நம்புகின்றோம்” என்றார். இப்பொன்மொழிகளை சேர். இராமநாதன் போன்றோர் கவனிப் பார்களாயின் அவர்களது நிலைமாறினாலும் மாறலாம். உலக சரித்தி ரத்தில் பெண்களின் உதவியின்றி விடுதலைபெற்ற நாடுஏதேனும் இருப்ப தாக நமக்குத் தெரியவில்லை. சேர்.இராமநாதன் போன்றோருக்கு இலங் கையில் பெண்கள் பொதுசன சேவையில் ஈடுபடக்கூடாதென்றால் ஒரு பெண்கூட எக்காலத்திலும் வெளியில் வரக்கூடாதென்று ஒரு சட்டம் நிரந் தரமாக ஏற்படுத்த முயற்சித்தல் மேலாகும்.” (தேசபக்தன் 13-04-1928)
மங்களம்மாள், மீனாட்சியம்மாள் ஆகியோர்தவிர டாக்டர் நல்லம்மா சத்திய வாகீஸ்வர ஐயர், நேசம் சரவணமுத்து, திருமதி ஈ.ஆர். தம்பிமுத்து, அன்னம்மா முத்தையா, பரமேஸ்வரி கந்தையா, நோபிள் ராஜசிங்கம் போன் றோர் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைக் காலத்தில் அரசியல் முன்றேற்றத்திற்காக உழைத்த பெண்களிற் சிலராவர்.
நேசம் சரவணமுத்து இலங்கைச் சட்டசபைக்கு முதல் முதல் நியமிக்கப்பட்ட பெண். 1931ஆம் ஆண்டு முதல் 1947 வரை இவர் கொழும்பு வடக்கிற்கான அங்கத்தவராயிருந்தார். இவர் சட்டசபை அங்கத்தவராகப் பணிபுரிந்த காலத்தில் வறிய மக்கள், பெண்கள் தொடர்பான சட்டத் திருத்தங்களுக்காக வாதாடினார். விதவைகள், அநாதைகள் ஆகியோருக்கு ஆதரவுப் பணம் வழங்கப்பட வேண்டும் எனத் தீவிரமாகக் கோரினார். #ffဝှို திருமணமானதும் சேவையி லிருந்து கட்டாயமாக ஓய்வுபெற வேண்டும் என்ற பிரேரணை சட்ட சபைக்கு வந்தபோது அதற்கு எதிராக வாதாடினார். இப்பிரேரணை இறுதியில் நீக்கப்பட்டது.
பெண்கள் வாக்குரிமைச் சங்கம் நிறுவப்பட்ட போது நல்லம்மா சத்திய வாகீஸ்வர ஐயர், திருமதி ஈ.ஆர். தம்பிமுத்து போன்றோர் அதில் தீவிரமாகப் பணியாற்றினர். மட்டக்களப்பைச் சேர்ந்த திருமதி தம்பிமுத்து இச்சங்கத்தின் உபதலைவர்களுள் ராகத் தெரிவு செய்யப்பட்டார். பெண்கள் வாக்குரிமைச் சங்கம் 蠶 Franchise Union 6T6irg) பெயரையும் அவரே பிரேரித்ததாக அறியமுடிகிறது.
101

Page 57
தமிழ் பேசும் பெண்களதுஇயக்கம் ஒன்றின் வரலாற்றைக் கட்ட மைக்கும் முயற்சியில் ஈடுபடும் போது மேலே கூறய தகவல்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தத்தமது சமூக அரசியற் பின்னணியில், அக்காலகட்டத்து பிரச்சி னைகளை எதிர்கொண்டு இப்பெண்கள் இயங்கினர். தனிநபர்களாகவும் சில சமயம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டும் இவர்கள் செயற் பட்டனர். எவ்வாறாயினும் தனிநபர்கள் இயக்கத்தின் அங்கத்த வர்களே பெண்கள் இயக்கம் என்பது தனிநபரான பெண்களையும் கூட்டான செயற்பாடுகளையும், தனித்த குரல்களையும் உரத்த சிந்தனைகளை யும் தழுவியே செல்கிறது.
இதேகாலகட்டத்தில் பெண்களது கல்வி உரிமைக்காக உழைத்த ஆசிரியைகள், அதிபர்கள் போன்றோருடைய முயற்சிகளும் முக்கிய மானவை. இலங்கையில் பரவலாக இத்தகைய ஆசிரியர்களைக் காண முடியும். இவர்களது செயல்பாடுகள், கருத்துகள் பற்றிய விபரங்கள் திரட்டப்படுவது பெண்கள் வரலாற்றை எழுதுவதற்கு மேலும் உதவும்.
வரலாற்றில் வெளித்தெரிகின்றவையும் ஒழுங்கமைக்கப்பட்டவையு மான பெண்கள் அமைப்புக்களை இலங்கையில் தமிழ்பேசும் மக்களி டையே எழுபதாம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து காணலாம். பெண்களது விடுதலை பற்றிய தெளிவான நோக்கங்களுடன் உருவான இவற்றைப் பிரக்ஞைபூர்வமான பெண்நிலை அமைப்புக்கள் என்று கூறலாம். சுயாதீன மான அமைப்பு களாகவும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையிலிருந்து எழும் வெவ்வேறு பிரச்சினைகள் பற்றிய அக்கறை செலுத்துவனவாகவும் இவை செயற்பட்டன / செயற்படுகின்றன. h
இவ்வகையில் தமிழ் பேசும் பெண்கள் இயக்கத்தின் வரலாற்றை யும் செயல்வாதத்தையும் அடையாளம் காணவும் அதனைக் கட்டமைக் கவும் எமது பெண்நிலை ஆய்வாளர்கள் தீவிரமாக முயலுதல் வேண்டும். Ο
02


Page 58


Page 59
பெனர்கள்
ஏட்டையும் பெண்கள் எண்ணி இருந்தவர் u வீட்டுக்குள்ளே பெண்
விந்தை மனிதர் த6ை
கற்பு நிலையென்று .ெ கட்சிக்கும் அஃது பெ வற்புறுத்தப் பெண்6ை வழக்கத்தைத் தள்ளி
பட்டங்கள் ஆழ்வதும் பாரினில் பெண்கள் ந. எட்டும் அறிவினில் ஆ
இளப்பில்லைக் கானெ
வேதம் படைக்கவும்) வேண்டி வந்தோமென சாதம் படைக்கவும் 6
சாதி படைக்கவும் செ
காதலனொருவனைக் காரியம் யாவினும் கை மாதரறங்கள் பழமை6
மாட்சிபெறச் செய்து

ர் விருதலை
தொடுவது தமையென்று ாய்ந்து விட்டார் ணைப் பூட்டி வைப்போமென்ற
ஸ் கவிழ்ந்தார்.
சால்ல வந்தார், இரு ாதுவில் வைப்போம் ணக் கட்டிக் கொடுக்கும் * மிதித்தடுவோம்.
சட்டங்கள் செய்வதும் டத்த வந்தோம் ணுக்கு இங்கேபெண் னன்று கும்மியடி.
நீதிகள் செய்யவும் iறு கும்மியடி செய்தடுவோம் தெய்வச் ய்திடுவோம்.
கைப்பிடித்தே, அவன் 5கொடுத்து யைக் காட்டிலும்
வாழ்வமடி.
- LITUg -