கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மஹிந்தவின் சிந்தனை

Page 1

РУД“.

Page 2

இலங்கையை வெற்றியடையச் செய்வோம்
ஜனாதிபதித் தேர்தல் 2005
மஹிந்தவின் சிந்தனை
புதியதோர் இலங்கை

Page 3

முப்பத்தேழு வருட கால அரசியல் பயணத்தில் என்னுடன் கைகோர்த்து வந்த ஆயிரக்கணக்கான நாட்டு மக்களின் அபிப்பிராயங்கள் மற்றும் பிரேரணைகளினுாடாக கட்டியெழுப்பப்படும் “மஹிந்தவின் சிந்தனை” எனது நாட்டிலுள்ள வணக்கத்திற்குரிய மதகுரு மார்களுக்கும், தாய்தந்தையர்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் மற்றும் சிறுவர்களுக்கும் உளப்பூர்வமாகச் சமர்ப்பிக்கின்றேன்.
گدليج خانلامی
“ இம்மரங்கள், செடிகொடிகள், இத்தரணி உங்களுடையதாகும்.
எனினும் இவை அனைத்தும் உங்களுடைய மட்டுமல்ல, உங்களது எதிர்கால சந்ததியினருக்கும் பாதுகாக்கப்பட வேண்டும். ஆட்சியாளன் எனப்படுபவன் உங்கள் பிள்ளைகளின் உரித்துரிமையில் உரிமையாளன் அல்ல, தற்காலிக பொறுப்பாளனே ஆவான்.”

Page 4

உள்ளடக்கம்
ஒழுக்க விழுமியமுள்ள சமூகமொன்றை நோக்கி அன்பு நிறைந்த குடும்பம் குடும்பத்தின் வாழ்க்கைப் பளுவைக் குறைத்துக் கொள்வதற்கு குடும்பத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு "சமுள்த்தி" வேலைத்திட்டம் "ஜனசெவன" வேலைத்திட்டம் சுபீட்சமுள்ள கிராமம் எமது நாட்டை நாம் வளப்படுத்துவோம்
பிரிக்கப்படாத நாடு இணக்கப்பாடு - கெளரவமான சமாதானம்
நாட்டைக் காத்தல் நிறைவான சமூகம் - நிலையான அபிவிருத்தி 'வயலுக்கு அருணோதயம்" நாட்டை உயர்வடையச் செய்யும் புதிய கண்டுபிடிப்புகள் பசுமை நிரம்பிய நாடொன்று எரிபொருள் கொள்கை நிலையான போக்குவரத்து அமைப்பு நீலவானத்தையும் நீலப்பெருங் கடலையும் வெற்றிகொள்வோம் விஞ்ஞானமும் தொழினுட்பமும் சுகாதார வளங்களைப் பாதுகாப்போம் அறிவையும் ஞானத்தையும் ஊட்டுதல் சுனாமியிலிருந்து மீண்டும் எழுச்சி பெறுவோம் பிரதேச அபிவிருத்தி வேலைத்திட்டம் கலையுலக மறுமலர்ச்சி ஆரோக்கியம் நிறைந்த நாடு மக்கள் கருத்துக்கு முதலிடம்
19
21
23
25
28
31
36
39
43
54
60
62
63
66
67
69
72.
77
78
88
92
93

Page 5

ஒடுக்க விடுமியடுள்ள சமுகமொன்றை நோக்கி
சிறந்த பண்புள்ள பிரஜையொருவர்
மனிதன் பெளதிக ரீதியில் மட்டுமல்லாமல் ஆன்மீக ரீதியிலும் மீட்சிபெறுவதற்காக மனிதனுக்கு மதநம்பிக்கை போன்றே அறிவுஞானத்தையும் பெற்றுகொடுக்க வேண்டும். ஆகையால் இதற்காகப் பெற்றோர், புத்திரர்கள், புத்திரிகள், கணவன் - மனைவி, குரு-சீடர், சேவை வழங்குநர்-ஊழியர், நிருவாகி-நிருவகிக்கப்படுவோர் போன்ற சகலரையும் ஒன்றிணைத்து சிறந்த பயனுள்ள நிலைக்கு உள்ளாக்கி குரோதங்களை அகற்றுதல் எனது குறிக்கோளாகும்.
சகல சமயங்களையும் சார்ந்த குழந்தைகள் அவரவர்களது சமயங்களுக்கு இயைபாகத் தார்மீகக் கல்வியை பெற்றுக்கொள்வதைக் கண்டுகொள்வது எனது அபிலாஷையாகும்.
போதைக்கு முற்றுப்புள்ளி
சட்டம்,பொலிஸ் மற்றும் சமூக நிறுவனங்களை ஒன்றிணைத்து, எமது சிறுவர் பரம்பரையை நாசமாக்கும் போதைப்பொருள் பழக்கத்தை மூன்று ஆண்டுக்குள் முழுமையாக ஒழித்துக் கட்ட நான் உறுதி பூண்டுள்ளேன். விஷ மதுவுக்கு எதிராக தொண்டர் நிறுவனங்கள், சமய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பாடசாலைச் சிறுவர்கள் ஆகியோரினால் நடாத்தப்படும் அறிவுபூட்டல் மற்றும் கல்விசார் வேலைத்திட்டங்களுக்காக அரசாங்கத்தின் நிதி உதவியைப் பெற்று கொடுப்பேன். பொது இடங்களில் புகைத்தலையும் மது அருந்தலையும் தடை செய்ய நடவடிக்கை எடுப்பேன். Ꭹ
பொது இடங்களில் புகைத்தலையும் மது அருந்துதலையும் தடை செய்ய நடவடிக்கை எடுப்பேன்.
மதுபானம், போதைப்பொருள் மற்றும் சிகரட் ஆகியவற்றிற்கு அடிமைகளாகியுள்ளோர்களை அவற்றிலிருந்து மீட்டுக் கொள்வதற்காகத் தற்போது அவற்றுக்காக நிலையங்களை நடாத்திக்கொண்டுவரும் தொண்டர் நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் உதவியை வழங்குவேன். மேலும், இக்குறிக்கோளை நோக்கி அரசாங்கத்தினால் நாடு பூராவும் உறுதிப்படுத்தப்படும் வகையில் முன்மாதிரியான மத்திய நிலையங்களை அமைப்பேன்.
மஹிந்தவின் s. ::::::::::: : “ ...;
சிந்தனை 88;&;. 7

Page 6
சிறுவர் துஷ்பிரயோகம், பெண்கள் கற்பழிக்கப்படல், பாதாளக் குழுவினரின் குற்றமிழைப்புகள், திட்டமிட்ட குற்றமிழைப்புகள் என்பனவற்றை ஒழித்துக்கட்டுவேன். இதற்காக சட்டரீதியான கட்டமைப்பை மீளமைப்பேன். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையை மேலும் வலுவூட்டுவேன்.
பொது இடங்களில் புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் என்பனவற்றை தடைசெய்ய நடவடிக்கை எடுப்பேன்.
இலங்கையின் வீதிச் சட்டங்களை மீறுதலும் இதன் காரணமாகவே அளவிடமுடியாத உயிர் மற்றும் சொத்துக்கள் அழிந்து போவதும் எமது நாளாந்த அனுபவமொன்றாக உள்ளது. இத்தகைய துரதிருஸ்டவசமாக நிலைமைகளை முழுமையாகவே முடிவுக்குக் கொண்டுவருதல் அத்தியாவசியமான விடயமொன்றாகவுள்ளதுடன் இதற்காக எந்தவொரு சக்திக்கும் அடிபணியாத வகையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான உரிய நடவடிக்கை எடுப்பேன்.
அன்பு நிறைந்த குடும்பம் தாய்க்கு முதலிடம்
சமூக இணைப்பின் சக்தி எமது குடும்பமாகும். அங்கு முதலிடம் தாய்க்கேயாகும். சமூகத்தை மிகவும் இனிமையான இடமாக மாற்றுவதாயின் குடும்பத்தில் ஒவ்வொருவருக்குமிடையே உள்ள இணைப்பை மிகவும் நெருக்கமுடையதாகவும் சிநேகயூர்வமானதாகவும் அமைத்துக் கொள்ள வேண்டும். குடும்ப அங்கத்தவர்கள் பொருளாதார ரீதியில் கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகியிருத்தல் அவ்வாறான சிநேகயூர்வமான ஒன்றிணைப்பை ஏற்படுத்துவதில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது எனது நம்பிக்கையாகும். ஆகையால் குடும்பத்தின் அங்கத்தவர்கள் ஒவ்வொருவரினதும் கஷ்டங்களையும் துன்பங்களையும் இல்லாதொழிப்பதற்கும் குடும்பப் பொருளாதார ரீதியில் வலுவூட்டப்படுவதற்காகவும் நான் தெளிவான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்துள்ளேன்.
மஹிந்தவி 8 | ਸੰਨ
 
 

0 கப்ப்பினித் தாய்மார்களுக்கான உதவித்திட்டம்
தங்களுக்குத் தேவையான போஷாக்கைப் பெற்றுக்கொள்ள முடியாமலுள்ள சகல கள்ப்பினித் தாய்மர்களுக்கும் தேவையான உணவுப் பொருட்கள் அடங்கிய போஷாக்குப் பொதி இலவசமாக வழங்குவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். அவ்வாறான சகல தாய்மார்களுக்கும் தேவையான மருத்துவ நிலையங்கள், ஆலோசனைகள் மற்றும் மருத்துவச் சேவைகளை ஊர் ஊராகப் பெற்றுக் கொடுப்பதற்கும் வேலைத்திட்டமொன்றைச் செயற்படுத்துவேன்.
முதல் ஐந்து வருட கால வேலைத்திட்டம்
சகலவிதமான நன்மைகளையும் பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு பிள்ளைகளின் மலரும் காலத்தை அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்குப் பிள்ளைகளுக்காகப் புதிய அமைச்சொன்றை உருவாக்குவேன்.
பிறந்ததுதொட்டு ஐந்து வருடங்கள்வரை சிறுவர்களுக்குப் பால் கொள்வவுை செய்வதற்காக மாதமொன்றுக்கு 200/- விதம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
நாடுபூராகவுமுள்ள சகல பாலர் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் அனைத்தையும் ஒரேவிதமான சர்வதேச தரத்திற்குக் கொண்டுவருவதற்கும் இதற்காகப் பாலர் பாடசாலை நிருவாகிகளுக்குத் தேவையான பயிற்சி, தொழிநுட்பம் மற்றும் நிதி வசதிகள் மாதாந்தம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.
ஆரம்ப வயதிலேயே பின்னடைவுக்குள்ளாகும் எமது சிறுவர்களுக்கு விசேட கல்வி முறைமையொன்றை ஆரம்பிப்பேன்.
நாடு பூராகவுமுள்ள சிறுவர் விடுதிகளின் முகாமைத்துவத்தை ஒழுங்குபடுத்துவதற்காக நடவடிக்கை எடுப்பதுடன் தற்போது சிறுவர் விடுதிகளிலுள்ள சிறுவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பணத் தொகையை இருமடங்காக்குவேன்.
மஹிந்ஜின் இ | 9
சிந்தனை

Page 7
"யொவுன் திரிய" வேலைத்திட்டம் (இளைஞர் ஊக்குவிப்புத்திட்டம்)
2001 - 2003 ஆம் ஆண்டுகளில் ஐ.தே.க. அரசாங்கத்தின் காலப்பகுதியில் எந்தவொரு பட்டதாரிக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படாமல் நீடித்த வேலையற்றோர் வரிசையொன்றிலிருந்த 42,000 பட்டதாரிகளுக்குத் தொழில் வழங்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு மேலதிகமாக 2006 ஆம் ஆண்டில் மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன்.
தற்போது அரசாங்க சேவையிலுள்ள சுமார் 33,000 வெற்றிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும். அமைய மற்றும் தற்காலிக அடிப்படையில் சேவையில் அமர்த்தப்பட்டுள்ள சகலருக்கும் நிரந்தர நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுப்பேன்.
இதுவரையிலும் அரசாங்க துறையில் தங்களது பட்டப்படிப்பிற்கு பொருத்தமில்லாத தொழில்புரியும் பட்டதாரிகளுக்கு பட்டதாரிச் சேவைகளைத் தாபித்து சமஅளவிலான சம்பளம் வழங்குவதற்கு தேவையான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப் படுத்துவேன்.
தற்போது அரசாங்கப் பாடசாலைகளில் சேவையாற்றும் சகல தொண்டர் ஆசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
நான் தொழிற்பயிற்சி அமைச்சராக இருந்தகாலத்தில் "வாழ்க்கைக்கோர் திறமை திறமைக்கோர் தொழில் எனும் கருப்பொருளின் கீழ் நாட்டின் தொழிற் பயிற்சியை ஒழுங்குமுறைப்படுத்தினேன். இவ்வேலைத்திட்டம் மேலும் பரவலாக்கப்பட்டு திறமையின் குறைபாடு காரணமாக எதிர்பார்ப்புகளை இழந்த இளைஞர்களுக்கு நவீன தொழினுட்பம் கலந்த உள்ளூர்ச் சந்தைகளுக்கு மட்டுமல்லாது சர்வதேச தேவைகளுக்கும் சிறந்த முறையில் இயைபுள்ளதான திறமைகளைப் பெற்றுக்கொடுப்பேன். "யொவுன் திரிய" என அழைக்கப்படும் அவ்வேலைத்திட்டத்தினூடாக 2006 ஆம் ஆண்டில் 50,000 பேர்களுக்கும் 2007 ஆம் ஆண்டில் மேலும் 50,000 பேர்களுக்கும் கூடிய சம்பளத்துடனான வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பேன்.
சிந்தனை
மஹிந்தவின்
 
 
 
 

கைகளுக்கு ஆற்றல்
தற்போது மேசன்மார்கள், தச்சுத் தொழிலாளர்கள் மின்பொறியியலாளர் மற்றும் குழாய் பொருத்துநர்கள் போன்ற தொழினுட்பத்துறைகளில் பயிற்சி பெறும் சுமார் 100,000 பேர்களுக்குத் தாம் பயிற்சி பெற்ற துறையிலேயே தொழில்புரிவதற்குத் தேவையான உபகரணங்கள் உட்பட ஏனைய வசதிகளையும் வழங்குவதற்கு வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவேன்.
எமது புதிய பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்படும் துரித அபிவிருத்தி காரணமாக சரியான முகாமைத்துவத்தின் கீழ் வளர்ச்சியடையும் அரசாங்கத்துறை, தனியப்துறை மற்றும் சுயதொழில் முயற்சிகள் ஊடாக ஏற்படும் தொழில்வாய்ப்புகளுக்கு மேலதிகமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளும் சேர்ந்ததாக 2400,000 தொழில் வாய்ப்புகளை எதிர்வரும் 06 வருட காலத்தில் உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
வருமானம் சம்பாதிப்பவர்களுக்கு
ஊழியர்களின் எண்ணிக்கையைக் கவனத்திற் கொள்ளும்போது கூடுதலானோர் தனியார் துறையில் சேவையாற்றுகின்றனர். எனினும், உங்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானது அரசாங்க சேவை என்பதை நான் அறிவேன். ஆகையால் எனது சேவைக் காலத்தினுள் தான் ஒருபோதும் அரசாங்க சேவையை துண்டிக்கமாட்டேன். அவ்வாறே தனியார்துறை சம்பந்தமாக உள்ள உங்களது எண்ணங்களும் மாறுதலை அடையவேண்டுமென்பது எனது நம்பிக்கையாகும். இந்த இரு துறைகளிலும் எமது மக்களுக்கு வினைத்திறனானதும் சிநேக
பூர்வமானதுமான Gಆ6061à6f வழங்கப்படுவதையே செய்ய வேண்டியுள்ளது. இங்கு தனியார்துறை ஏற்கனவே முன்னணியில் இருக்கின்றதாகையால் அரசாங்கத்துறையின் விளைபயன்கள்,
வினைத்திறன் மற்றும் சிநேகயூர்வமான தன்மை என்பனவற்றை உயர்வடையச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பது எமது கடமையாகும். இதற்காக முதலாவதாக அரசாங்க சேவையில் கண்ணியத்தையும் சுதந்திரத்தையும் மீண்டும் ஏற்படுத்துவதற்கு நான்
நடவடிக்கை எடுப்பேன்.
மஹிந்தவின் "A சிந்தனை
11|擎’ -:

Page 8
அரசாங்கத் துறை
2005 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தினால் நடை முறைப்படுத்தப்பட்ட சம்பள அதிகரிப்பின் எஞ்சிய பகுதியை 2006 ஜனவரி மாதம் தொடக்கம் உங்களுக்கு பெற்றுக் கொடுப்பேன்.
இதற்கு மேலதிகமாக அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவைத் தாங்கிக் கொள்ளத்தக்கதாக பூர்வாங்க கொடுப்பனவாக மாதாந்தம் ஆயிரம் ரூபா கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். அதிகரிக்கும் சகல வாழ்க்கைச் செலவுப் புள்ளிகளுக்கும் ரூபா 2.50 வீதம் கணக்கிட்டு ஆறு மாதத்திற்கு ஒருதடவை மேற்குறித்த ஆயிரம் ரூபாவுடன் சேர்ப்பேன்.
படையினர் மற்றும் பொலிஸ் சேவை உட்பட்டதாக அரசாங்கத் துறையில் சகல பணியாளர்களுக்கும் 2005 ஆம் ஆண்டில் பெற்றுக்கொள்ளப்படாத லீவுகளுக்காக நாள் ஒன்றுக்கு இரண்டு மடங்கு வீதம் பதில் கொடுப்பனவாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன். அரசாங்க ஊழியர் ஒருவர் தகப்பனாகும்போது மூன்று நாட்கள் விசேட விடுமுறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன். செயற்றிறனை அடிப்படையாகக் கொண்ட புதிய ஊக்குவிப்புக் கொடுப்பனவு முறையொன்றை அறிமுகம் செய்வேன். குடும்பங்களிலுள்ள அங்கத்தவர்களையும் உள்ளடக்கக் கூடிய வகையில் அரசாங்கப் பணியாளர்களுக்கு புதிய சுகாதாரக் காப்புறுதித் திட்டமொன்று பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
பகுதி அரசாங்க அனுசரணையுள்ள நிறுவனங்கள் கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளிலுள்ள உத்தியோகத்தர்களுக்கு எமது அரசாங்கங்களினால் இதற்கு முந்திய சந்தர்ப்பங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தீர்வை வரியில்லாமல் வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் மீண்டும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
மஹிந்தவின் சிந்தனை
 
 
 

9 தற்பொழுது அரசாங்கப் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஐந்து வருட சம்பள வீடமைப்புக் கடன் முறைமையை தற்போது அவ்வாறான திட்டங்கள் இல்லாத அரசாங்க கூட்டுத்தாபனங்களுக்கும் பெற்றுக் கொடுப்பேன். கடன் பணத்தின் அளவைத் தற்போது உள்ள உச்ச அளவான ரூபா 20 இலட்சம் தொடக்கம் 30 இலட்சம் வரை அதிகரிப்பதுடன் காலப்பகுதி 05 வருடத்தில் இருந்து 07 வருடங்கள் வரை நீடிப்பேன்.
9 அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதியம் சம்பந்தமாக அண்மைக் காலங்களில் செய்யப்பட்ட சகல திருத்தங்களும் நீக்கப்பட்டு இதுவரையில் அரசாங்க சேவையில் ஈடுபட்டுள்ள சகலருக்கும் எதிர்காலத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ள சகலருக்கும் ஓய்வூதியம் பெற்றுக்கொள்ள இருக்கும் உரிமையை உறுதி செய்வேன்.
0 ஊழியர்கள் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் மூலம் அதன் உறுப்பினர்களின் வசதிக்காக நிபுணத்துவ மருத்துவசேவையை உள்ளடக்கிய மருத்துவசாலை ஒன்றை ஆரம்பிப்பேன்.
O 1980 ஜூலை வேலை நிறுத்தம் செய்தவர்களில் இதுவரை தீர்வு காணப்படாத பிரச்சனைகளுக்குத் தீர்வு காணத் துரித நடவடிக்கை எடுப்பேன்.
தனிப்த் துறை
0 பல வருடங்களாகச் சரியான வரி செலுத்தி எமது நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்த வரிசெலுத்துவோருக்கு விசேட வெகுமதியொன்றை கொடுக்க நான் உத்தேசித்துள்ளேன். இதற்காக வருடமொன்றுக்குக் குறைந்த அளவு 250,000/- என்பதற்கு அமைவாக 05 வருடங்களில் வருமானவரி செலுத்தியுள்ள 巴Fö6D ஆள்வரி செலுத்துவோருக்குத் தீர்வையில்லாமல் வாகனம் இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரமொன்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
9 தனியார்துறைப் பணியாளர்களுக்காக ஊழியர்கள் சேமலாப நிதியம், அரசாங்க மற்றும் தனியார்துறை வங்கிகளை ஒன்றிணைத்து குறைந்த வட்டிக்கு வீடமைப்புக் கடன் வழங்குவதற்கு வேலைத்திட்டமொன்று தயாரிப்பேன்.
மஹிந்தவின் ళ్ల சிந்தனை వ్లో

Page 9
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேசிய பொருளாதாரத்தின் பாதுகாப்புக்காக வெளிநாடுகளில் தொழில்புரியும் எமது சகோதர, சகோதரிகள் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புகளை நான் பெரிதும் பாராட்டுகின்றேன். அவர்களினதும் அவர்களது குடும்பத்தினரிதும் பாதுகாப்பு மற்றும் நலனோம்பல் என்பனவற்றுக்காக நாம் இதுவரை பின்பற்றியுள்ள செயல்முறைகளில் நிலவும் தடைகளை நிவர்த்திசெய்து அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நாட்டுக்கும் உயர் பிரதிபலன்கள் கிடைக்கக்கூடியவாறு புதிய ஒழுங்குமுறையொன்றை தயாரிப்பேன். அதன் பிரகாரம்; 9 ஏற்கனவே வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடுகளின் பிரகாரம், 2006 ஆம் ஆண்டில் மாத்திரம் கொரியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் 100,000 தொழில்கள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். அடுத்த ஆண்டுகளில் இத்தொகையை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கு அந்தந்த நாடுகளுடன் புதிதாக இணக்கப்பாடுகளை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பேன். வீட்டுப் பணிப்பெண்களுக்குப் பதிலாக தாதி, கப்பற் துறை மற்றும் கணனி போன்ற துறைகளுக்காகக் கூடுதலாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன். 9 வெளிநாடுகளில் சேவையாற்றியபின் திரும்பி வருவோர்களுக்காக வழங்கப்படும் தீர்வைவரியற்ற கொடுப்பனவை 5,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரை உயர்த்துவேன். அவ்வாறே நாட்டுக்கு வந்து முதல் 06 மாத காலத்துள் அதனை பயன்படுத்தக்கூடிய வகையில் சட்டங்களில் திருத்தம் செய்வேன். 9 அரசாங்க மற்றும் தனியார் வங்கிகள் மூலம் 30% அரசாங்கத்தின் பங்களிப்புடன் விசேட வீடமைப்புக் கடன் திட்டமொன்றை அறிமுகஞ் செய்வேன். 0 தொழில் புரிவதற்காக வெளிநாடு செல்வோர்களுக்கு அதற்காக செலவாகும் ஆரம்பச் செலவை சரிகட்டிக்கொள்ளத் தேவையான வங்கிக் கடன் வசதிகளைப் பெற்றுக்கொடுக்க உரிய வேலைத்திட்டமொன்றை தயாரிப்பேன்.
*::: 3: . ... : : மஹிந்தவின் 14 | ရွှံ့နှံ့အပေါ်ဓါး၊
 
 
 

0 வெளிநாட்டுத் தொழில்புரிவோர்களின் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளுக்காக dŝJTLD மட்டத்தில் நலன்புரி கருத்திட்டமொன்று ஆரம்பிப்பேன். 0 வெளிநாடுகளில் சேவைபுரியும் பெண்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்துவேன். 0 வெளிநாடுகளில் தொழில்களுக்குச் செல்ல உத்தேசிக்கும் இளைஞர், யுவதிகளை பிரதேச செயலாளர் அலுவலக மட்டத்தில் பதிவு செய்து அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன். 9 ஐரோப்பிய நாடுகளில் தாதிச்சேவைகளுக்காக பெருமளவிலான தேவை உண்டு. அத் தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு தாதிமார்கள், தாதிஉத்தியோகத்தர்களை பயிற்றுவிக்க ஆங்கில மொழியில் கற்பிக்கும் புதிய தாதிமார் கல்லூரியொன்று அமைக்கப்படும். 9 வெளிநாடுகளில் பணிபுரிபவர்களை முன்னிட்டு ஓய்வூதிய
முறையொன்றை அறிமுகம் செய்துவைப்பேன்.
பெண்களாகிய உங்களுக்கு "திரிய காந்தா" வேலைத்திட்டம்
த் b
எமது குடும்பத்தினதும் சமூகத்தினதும் அடிப்படை பெண்களேயாகும். வீடுகளில் சமாதானத்தை நிலைநாட்டுபவர், பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்பவர் குடும்பத்தை நடாத்துபவர் யாவும் பெண்களே. ஆகையால் பெண்களுக்கு சக்தியூட்டல் என்பது சமூகத்தையே சக்தியூட்டுதலாகும். "திரிய காந்தா" வேலைத்திட்டம் இதற்காகவேயாகும்.
தற்பொழுது ஏற்றுமதி வணிகத்தில் பிரபல்யம் அடைந்துள்ள பிரதான வியாபார நிறுவனங்களை சம்பந்தப்படுத்தி விசேடமான சுயதொழில். கருத்திட்டமொன்றை ஆரம்பிப்பேன். இதன்கீழ் கிராமமொன்றிலிருந்து தெரிவு செய்யப்படும் 10 பெண்களுக்கு முதலாவது ஆண்டிலேயே புதிதாக வருமான வழிகளை பெற்றுக் கொடுப்பேன். வெளிநாட்டுச் சந்தைக்குத் தேவையான கைத்தறி ஆடைவகைகள், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் கைப்பணிப்பொருட்கள் உங்களது வீடுகளிலேயிருந்து உற்பத்தி செய்து வருமானத்தை ஈட்டிக்
மஹிந்தவின்
சிந்தனை

Page 10
கொள்வதற்கும் அதன்மூலம் பிறருக்குச் கையேந்தாத பொருளாதார சுதந்திரத்துடன் வாழ்க்கை நடாத்துவதற்கான முறையொன்றை தயாரிப்பேன்.
ஏற்கனவே சிறிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களும், எனினும் பிணைவைப்பதற்கு முடியாமல் இருப்பதன் காரணமாக வங்கிக்கடன் பெற்றுக்கொள்ள இயலாமல் தவிப்பவர்களுமான உங்களுக்குப் புதிதாக அறிமுகஞ் செய்யப்படும், "லங்கா புத்திர" வங்கிச்சேவையொன்றின் ஊடாக அரசாங்கத் தலையீட்டுடன் கடன் பெற்றுக்கொடுக்கும் முறையொன்றை அறிமுகம் செய்வேன்.
இம்சைகளுக்கும் மனஅழுத்தங்களுக்கும் ஆளாகியுள்ள எமது பெண்களை அவற்றிலிருந்து மீட்டுக் கொள்வதற்காக "காந்த பிலிசரன" வேலைத்திட்டத்தை நாடுபூராவும் செயற்படுத்துவேன். சுனாமியினாலும் யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டவர்கள் மீது விசேட கவனம் செலுத்துவேன்.
பெண்கள் இம்சைக்குட்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கும் ஏற்கனவே இவ்வாறு இம்சைக்குட்படுத்தப்பட்டுள்ள பெண்களை அவற்றிலிருந்து மீட்டுக் கொள்வதற்கும் தேவையான ஆலோசனைகள், வழிகாட்டல் மற்றும் பாதுகாப்பு வழங்குவதற்காக தகுதியான தாபனரீதியான கட்டமைப்பொன்றை தயாரிப்பேன்.
சம்பளம், சொத்துரிமை, பொது நிறுவனங்களில் பணிபுரிதல் அரசாங்க சேவை மற்றும் வரப்பிரசாதங்களைப் பெறல், போன்ற சகல துறைகளிலும் பெண்களுக்கும் ஆண்களுக்குமிடையே எந்தவொரு வேறுபாடும் இல்லாமல் இருக்கும் வகையில் சட்டதிட்டங்கள் தயாரித்து சமத்துவம் மற்றும் நியாயம் என்பவற்றை அனுபவிக்கக்கூடிய வகையில் எமது நாட்டின் பெண்களுக்கு சகல வழிகளையும் திறந்து கொடுப்பேன்.
ஏற்கனவே நடைமுறையிலுள்ள பெண்கள் உரிமைகளை பாதுகாக்கும் சட்டதிட்டங்களை உள்ளடக்கியுள்ளதாக பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் விஞ்ஞாபனமொன்றை ஒருவருடகாலத்துள் தயாரிப்பதுடன் அதற்கு மிகவும் சக்தியுள்ளதும் அதிகாரம் கொண்டதுமான
16
2) மஹிந்தவின்
சிந்தனை
 
 
 
 

கருத்தொன்றை சேர்த்துக்கொள்வதற்கு தற்போது பெண்களின் உரிமைகள் சம்பந்தமாகத் ஏற்படுத்தப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும் அரசசார்பற்ற அமைப்புகளுக்கும் அழைப்பு விடுப்பேன்.
மாகாணசபைகளிலும் உள்ளுராட்சி நிறுவனங்களிலும் வேட்பாளர் பட்டியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்த பட்சம் 25% வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
"சிரேஷ்ட பிரஜைகளுக்கு கெளரவம்" வேலைத்திட்டம்
தங்களது வாழ்க்கையை பிள்ளைகளுக்காகவும் நாட்டுக்காகவும் அர்ப்பணித்த சிரேஷ்ட பிரஜைகளை தனிமைப்படுத்த நான் இடமளிக்கமாட்டேன்.
அரசாங்கப் பணியாளர்களின் சம்பள அதிகரிப்புகளுக்கு சமமாக ஓய்வூதியத்தையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
தற்போது ஓய்வூதியம் பெறும் சகல சேவைக் குழுவினர்களிடையே நிலவும் வேறுபாடுகளை அகற்றி ஓய்வூதியத் திட்டத்தை திருத்தம் செய்வேன்.
கனியர்வை குறைந்தவர்களுக்கு தேவையான மூக்குக் கண்ணாடிகளை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
அரசாங்கப் போக்குவரத்துச் சேவைகளில் 70 வயதிற்குமேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்காக 50% கட்டணக்குறைப்பொன்றைத் திட்டமிடுவேன்.
வருடத்திற்கொருமுறை சமய வழிபாடொன்றுக்காக இந்த சிரேஷ்ட பிரஜைகளுக்கு இலவசமான புகையிரத அனுமதிச்சீட்டு வழங்குவேன்.
சகல வழிகளிலும் துணையின்றி இருக்கும் எமது சிரேஷ்ட பிரஜைகளுக்காக அரசாங்கம் சாராத அமைப்புகள் மற்றும் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் முதியோர் இல்லத் தொகுதியொன்று அமைக்கப்படும்.
தற்போது எந்தவொரு ஓய்வூதியத்திற்கும் அல்லது ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் உரிமைபெறாத விவசாய, மீன்பிடி, முச்சக்கரவண்டிச் சாரதிகள், சிறு வியாபாரம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்.
மஹிந்தவின் ॐ:°:
சிந்தனை 17

Page 11
-
வெற்றியடையச்
""
எனினும் தொழில் வழங்குநரால் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபைக்கு உதவுதொகை செலுத்தாத சகல சுய தொழில் செய்வேர்களுக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன்களை பெற்றுக்கொடுப்பேன்.
வலதுகுறைந்த நிலைமைகளுக்குள்ளான பிரஜைகள்
இரு கண்கள் இருந்தும் பார்வையில்லாத, காதுகளிருந்தும் கேட்காத, கைகால்கள் இருந்தும் எதற்கும் பயன்படுத்த முடியாத, உடல் ரீதியாகவும் மனோரீதியாகவும் பாதிப்புக்குட்பட்டுள்ள உங்களை சமுகத்தில் எந்தவொரு வேறுபாடுமின்றி கெளரவமான பிரஜைகளாக நான் ஏற்றுக்கொள்வேன்.
எந்தவொரு வருமானத்திற்கும் உரித்தில்லாத அங்கவிர்ைகளாகவுள்ள ஆட்கள் உள்ள குடும்பத்திற்கு மாதமொன்றுக்கு 3,000 ரூபா பெற்றுக் கெடுப்பேன்.
தற்போது குருடர், ஊமை, செவிடர்களாகச் சமூகத்தில் வேறுபடுத்தி நடாத்தப்பட்டுவரும் பாடசாலைகளுக்குப் பதிலாக அரசாங்கத்தின் பிரபல்யமான பாடசாலைகளில் அவற்றுக்காக ஒதுக்கப்பட்ட பிரிவொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன். இதனூடாக அங்கவீனர்களாகவுள்ள பிரஜைகள் சமூகத்தில் வேறுபட்ட குழுவினர் என்ற எண்ணத்தை இல்லாமலாக்குவதற்கு முடியுமென நான் நம்புகிறேன்.
பாதுகாப்பேதுமில்லாமல் இருக்கும் உங்களுக்காக அரசாங்கத்தினால் "பாதுகாப்பு இல்லம்" அமைப்பேன். நீங்கள் அங்கவீனர்களாகவுள்ள சனத்தொகையில் ஒருபோதும் பாடசாலைக் கல்வியை பெற்றுக்கொள்ளாத பிரிவை சார்ந்தவர்களாக இருப்பினும் நீங்கள் நல்லதொரு தொழிலில் ஈடுபடுவதற்கு தேவையான தொழில்பயிற்சி வழங்குவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்.
பணியாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்குக் கூடுதலாகவுள்ள
நிறுவனங்களில் சேவைபுரிவோரில் 3% உங்களுக்காக ஒதுக்குவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்.
பொதுக்கட்டிடங்களில் அங்கவீனர்களுக்காக புதிய பிரவேச வழியொன்றை ஏற்படுத்துவேன்.
எங்களுக்காக உறுப்புகளை இழந்து வலது குறைந்த சகல போர்வீரர்களுக்கும் 03 வருடத்திற்குள் வீடொன்றைப் பெற்றுக் கொடுப்பேன்.
18 மஹிந்தவின்
சிந்தனை
 
 

அவர்களுக்கு முதலிடம் கிடைக்கக்கூடிய சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களை ஏற்பாடு செய்வேன்.
போர் வீரர்களின் ஓய்வுபூதியம் சம்பந்தமாக நிலவும் 556) பிரச்சினைகளையும் உடனடியாக தீர்த்து வைப்பேன்.
வலதுகுறைந்த நிலைக்குள்ளானோர்களுக்கு சிறுநீரகம் பொருத்துதல், இருதயச் சத்திரசிகிச்சை போன்றவற்றுக்கு தற்போது ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 50% இற்குப் பதிலாக 100% த்தையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். வலது குறைந்தோர்களின் உரிமைகள் தொடர்பான சட்டவரைவுக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கை எடுப்பேன்.
குடும்பத்தின் வாழ்க்கைப் பளுவைக் குறைத்துக் கொள்வதற்கு
வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்குத் தேவையான முக்கியமான காரணியென்னவெனில் தனிநபரின் வருமான மட்டத்தை உயர்வடையச் செய்வதாகும். இந்த வெளியீடு முழுவதிலும் சமர்ப்பிக்கப்படும் சகல விடயங்களும் மையமாக கொண்டுள்ள விடயம் தனிநபரினதும் குடும்பத்தினதும் வருமானத்தை உயர்வடையச் செய்யும் கருத்திட்டங்கள் மீதானதாகும். எனினும் அவற்றின் பெறுபேறுகளை அனுபவிக்க ஓரளவு காலம் செலவாகும் என்பதை நான் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன். அதுவரை தனிநபரின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினையை வெற்றி கொள்வதற்காக வேலைத்திட்டமொன்றைச் செயற்படுத்த நான் உத்தேசித்துள்ளேன்.
1. பிள்ளைகளுக்கு 05 வயது வரை பால் கொள்வனவு செய்வதற்கு,
மாதம் ஒன்றுக்கு 200 ரூபா மானியமொன்றைப் பெற்று கொடுப்பேன்.
2. அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவை பொறுத்துக் கொள்வதற்காக ஆரம்பக் கொடுப்பனவாக அரசாங்கப் பணியாளர்களுக்கு ரூபா 1000 செலுத்தவும் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு புள்ளியொன்றுக்கு ரூபாய் 2.50வீதம் செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.
மஹிந்தவின் g 19

Page 12
குடும்பத்தின் வாழ்க்கைப் பளுவைக் குறைத்துக் கொள்வதற்காக, i. குறைந்த அளவிலான நீர்ப்பாவனைக் குழுவினர்க்கு
மாதமொன்றுக்கு ரூபா 20 கழிவொன்றும்,
i. குறைந்த மாதாந்த மின் பாவனையுள்ள குழுவினர்களுக்கு
மாதமொன்றுக்கு ரூபா 30 கழிவொன்றும்,
i. மின்சார வசதிகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் வீடுகளுக்கு மாதமொன்றுக்கு 2 லீற்றர் மண்ணெண்ணெய் நிவாரண உதவியொன்றும் 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் அமுலாகும் விதத்தில் பெற்று கொடுப்பேன்.
குறைந்த செலவிலான எரிபொருள் உற்பத்தி முறையொன்றை பாவிப்பதன் ஊடாகவும், மின்சாரம், மசகெண்ணெய் மற்றும் நீர் விநியோகிக்கும் 9 J3 நிறுவனங்களை வினைத்திறமை கொண்டதாக ஆக்குவதன் மூலமும், இச் சேவைகளை பொதுமக்களுக்கு கட்டுப்படியாகிற விலை மட்டத்தில் நீண்டகாலத்திற்கு நடாத்திச் செல்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்குப் பொதியொன்று இலவசமாக வழங்குவேன்.
பிள்ளைகளின் மதியபோசனத்திற்காக ஒரு வேளைச் சோறு இலவசமாக வழங்குவேன்.
புதிய இலங்கை கூ.மொ.வி. தாபனங்களை ஆரம்பித்து நாடு பூராகவும் வியாபாரத் தலங்கள் திறக்கப்பட்டு அரிசி, சீனி, பருப்பு, பால்மா, கறிச்சரக்கு, தேங்காய் எண்ணெய் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். இதனூடாகச் சகல வறிய குடும்பங்களுக்கும் வாரமொன்றுக்கு போதுமான அரிசி, கருவடு, மரக்கறி அடங்கிய உணவுப் பொதியொன்றை சலுகை விலையில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை
எடுப்பேன்.
மஹிந்தவின் சிந்தனை
 
 
 

7. அரிசி, மரக்கறி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்வனவு செய்வதற்கும் பாவனையாளர்களுக்குச் சலுகை விலையில் விற்பனை செய்வதற்கும் அரசாங்கம் போட்டியாக தலையீடு செய்யும். இதற்காக நெல் கொள்வனவுச் சபையையும், புதிய இலங்கை கூ.மொ.வி. தாபனத்தையும் கூட்டுறவு வலையமைப்பையும் பயனுள்ள வகையில் இணைத்து கொள்வேன்.
8. பரவலாகப் பாவனை செய்யப்படும் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்தல் தனியர் துறைக்கு மாத்திரம் வரையறுக்கப்படாமல் அரசாங்கமும் அதில் வினைத்திறனுடன் தலையிடுவதற்கு எற்பாடு செய்வேன். பாவனையாளர்களுக்குக் கஷ்டமான சந்தர்ப்பங்களில் இலகுவாகவும் தட்டுப்பாடில்லாமலும் அப்பொருட்களை பெற்றுக் கொள்ள வகை செய்வேன்.
9. சகல உர வகைகளின் விலைகளையும் 50 கிலோ பொதியொன்றுக்கு 350 ரூபா வரை குறைப்பேன். இதனால் உற்பத்திச் செலவு குறைக்கப்படல் மற்றும் உற்பத்தி அதிகரித்தல் ஆகியவற்றினால் அரிசி, மரக்கறி, பழவகைகள் உட்பட்டதாக உள்ளூர் உற்பத்திகளின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
குடும்பத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு "சடுர்த்தி" வேலைத்திட்டம்
குடும்பத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு எம்மால் ஆரம்பிக்கப்பட்ட "சமுர்த்தி" திட்டத்தினால் இதுவரையிலும் ஈட்டிக்கொள்ளப்பட்ட வெற்றிகள் சம்பந்தமாக நான் சந்தோசமடைகிறேன். ஆகையால் நான் மேலும் சமுர்த்தித் திட்டம் தொடர்பாக நம்பிக்கை வைத்துள்ளதுடன் அதற்கு புது மெருகூட்டி வறுமையை ஒழிப்பதற்காக மக்களுக்கு பலமூட்டக்கூடியதாக வேலைத்திட்டமொன்றை மேலும் வலுவூட்டுவேன்.
மஹிந்தவின்
சிந்தனை

Page 13
சமுத்தி நிவாரணம்
22
சமுர்த்தி பயன் பெறுவேயின் மாதாந்த வருமானத்தை 5,000 ரூபவரை அதிகரித்துக்கொள்ளக்கூடிய வகையிலான கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவேன். அதன் பொருட்டு வரவு செலவுத் திட்டத்தில் 300 கோடி ரூபா முதலீடு ஒன்றை ஒதுக்குவேன். சமுள்த்தி நிவாரண உதவி பெற்றுக் கொள்ள தகுதியிருந்தும் பல்வேறு காரணங்களினால் அந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளோர்களை புதிதாக சமுர்த்தி வேலைத்திட்டத்தில் இணைத்துக் கொள்வேன். சமுர்த்திக் கொடுப்பனவை 50% தினால் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
முதியோர், வலதுகுறைந்தோர் குடும்பங்களுக்கு 3000 ரூபா மாதாந்தக் கொடுப்பனவாக வழங்கப்படும். சகல சமுள்த்தி குடும்பங்களினதும் மரணமொன்றின் போது கிடைக்கும் 5000 ரூபாக் கொடுப்பனவை 10,000 ரூபா வரை அதிகரிக்கப்படும்.
குழந்தைப்பேற்றின் போது வழங்கப்படும் ரூபா 2,500க்குப் பதிலாக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 5000 ரூபாவை வழங்குவேன்.
சமுத்தி நிவாரணம் பெறும் குடும்பங்களை வலுவூட்டுவதற்காக 100,000 ரூபாய் கடன் தொகையொன்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன். சமுர்த்தி பயன்பெறுவோர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் காப்புறுதியின் கீழ் குடும்பத்தலைவன் மரணமடைந்தால் அல்லது அங்கவீனமுற்றால் 250,000 ரூபா பெற்றுக் கொடுப்பதன் மூலம் குடும்பத்தின் வருமானம் உறுதிப்படுத்திக் கொள்ளப்படும். சமுர்த்தி பயன்பெறும் குடும்பத்தில் பிள்ளைகளுக்காக வழங்கப்படும் புலமைப் பரிசில் கொடுப்பனவு 50% இனால் அதிகரிக்கப்படும்
சமுர்த்தி வங்கி, கடன் உதவி மற்றும் காப்புறுதி, கிராம மலர்ச்சி மற்றும் மக்கள் மலர்ச்சி போன்ற வேலைத்திட்டங்கள் விரைவாகவும் முறையாகவும் மேலும் நடைமுறைப்படுத்தப்படும்.
-) மஹிந்தவின்
சிந்தனை
 
 
 
 

0 சமுர்த்தி வேலைத்திட்டத்திற்கு சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளோர்களின் விவசாய மற்றும் கால்நடை உற்பத்திகளை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்வதற்கு திட்டமொன்று தயாரிக்கப்படும்.
சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை தீர்த்தல்
9 சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர்களின் ஓய்வூதியம் உட்பட்டதாக ஏனைய பிரச்சினைகளையும் கண்டறிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும்.
0 ஏனைய அரசாங்க ஊழியர்களுக்குப் போன்றே சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் வீடமைப்புக் கடன் வழங்க நடவடிக்கை எடுப்பேன்.
0 மோட்டார் சைக்கிள்கள் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தை
03 மாத காலத்துள் பூர்த்தி செய்வேன்.
"ஜனசெவன"
இலங்கையில் சகல குடும்பங்களும் சொந்தமான வீடொன்றைக் கொண்டிருக்கும் குடும்பமாக விளங்கவேண்டுமென்பது எனது உறுதியான நம்பிக்கையாகும். குறித்த உண்ணதமான குறிக்கோளை அடைந்து கொள்வதற்காக,
O வீடு அமைப்பதற்காக 100,000 கணித்துண்டுகளைப் பெற்றுக்
கொடுப்பேன்.
9 கொழும்பு மற்றும் அண்மித்த பிரதேசங்களில் அரசாங்க ஊழியர்களுக்காக 04 தொடர்மாடி வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவேன். 9 கொழும்பு நகரத்தில் குடிசைகள் மற்றும் முறையற்ற வீடுகளில் வசிக்கும் மக்களுக்காக 65,000 புதிய வீடுகள் அமைக்கப்படும். 0 முதலாம் 05 வருடங்களில் வட்டியை மட்டும் செலுத்தும் முறை கொண்ட வீடமைப்புக் கடன் திட்டமொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
மஹிந்தவின் ஃ. '' '' ":| SSDSSSSSSSSeSSrSSS SS00S0SS భ| 23

Page 14
9 ஒவ்வொரு கிராமத்திலும் வருடமொன்றுக்கு 25 வீடுகள் வீதம்
நிர்மாணிக்கப்படும்.
9 நடுத்தர வகுப்பினர்களுக்கு சகாய விலையில் தொடர்மாடி
வீடுகள் அமைக்கப்படும்.
9 வெளிநாட்டில் வேலை செய்வேர்களுக்காக அரசாங்கத்தினால் 30% பங்களிப்பை வழங்கும் வீடமைப்புத் திட்டமொன்று தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
குறைந்த வருமானம் பெறும் "நகர ஜனாவாச" நகர்ப்புறக் குடியிருப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வீடுகளை அமைப்பதற்கு வழங்கப்பட்ட 02 பேர்ச் காணித் துண்டின் பூரண உரிமையை அங்கு இப்போது பதிவாகியிருப்போருக்கு வழங்குவேன். இதற்கான முத்திரைக் கட்டணம் அல்லது உரித்துறுதிக் கட்டணம் அறவிடப்படி மாட்டாது.
நகர தொடர்மாடி வீடுகள் உட்பட்டதாக அரசாங்க வீடமைப்புத் திட்டங்களில் குடியிருப்பாளர்களுக்கு அவ்வீடுகளின் உரித்துரிமையை வழங்குவேன்.
தியவர, தியவர விசிறி, ஜன உதான, கம் உதான ஆகிய பல்வேறு பெயர்களினால் அமைக்கப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டுள்ள வீடமைப்புக் கடன் மற்றும் வட்டி நீக்கப்பட்டு அவ்வீடுகளின் உரித்துரிமையை வழங்குவேன்.
மஹிந்தவின் சிந்தனை
 
 
 

சுபீட்சடுள்ள கிராமமொன்று கிராம எழுச்சி
எனது வாழ்க்கை குரக்கன் சேனையிலிருந்து சுழன்று வந்த கிராமிய மணத்திலேயே வளர்ச்சியடைந்தது. அதனாலேயே மகிழ்ச்சி, இனிமை மற்றும் செளந்தர்யம் நிறைந்த கிராமம் சம்பந்தமாக நான் காணும் கனவை "கிராம எழுச்சி" ஆக யதார்த்தமாக்குவேன். கடந்த பல தசாப்தங்களில் எமது கண்முன்னே வீழ்ச்சியடைந்த கிராமங்களுக்கு புனர்வாழ்வளிப்பேன்.
இதற்காக புதிய நிருவாகக் கட்டமைப்பான (ஜனசபா) "மக்கள் சபை" யொன்று ஏற்படுத்துவேன். பெளத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களின் குருமார்கள் உட்பட்டதாக இச்சபை அமையும். கிராமத்தின் சகல சமூக நிறுவனங்களின் தலைவர்களும் பிரதேச சபைகளின் மக்கள் பிரதிநிதிகளும் கிராமத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் அதில் சேர்த்துக் கொள்ளப்படுவர். இதன் ஊடாக கிராமத்தில் முன்னேற்றத்திற்காக கிராமத்துக்குரிய தீர்மானங்களை எடுப்பதற்கு வாய்ப்புக் கிட்டும்.
கிராமத்தில் உள்ள கீழ் மட்ட அரசாங்கப் பணியாளர்களும் கிராமத்தின் ஏனைய சமூக நிறுவனங்களும் ஒரே இடத்திற்கு ஒன்றுகூட்டப்படும் "மக்கள் சபை செயலகம்" முறையொன்றை அறிமுகஞ் செய்து கிராமத்துக்கு வழங்கப்படும் அரசாங்க (85് ഞഖbങ്ങണ வினைத்திறனுடையதாக ஆக்குவதற்குரிய வேலைத்திட்டமொன்றை அறிமுகஞ் செய்வேன். சர்வதேச அறிவை கிராமத்துக்குக் கொண்டுவருதல், கிராமத்தின் அறிவை உலகத்துடன் பரிமாறிக் கொள்ளல் மற்றும் சேவைகளை வினைத்திறனாகப் பெற்றுக் கொள்வதை நோக்கமாகக் கொண்டு நிறுவப்படும் "நென சல" மத்திய நிலையமும் "ஈ" மின்னியல் நூலகமும் இந்த மக்கள் சபை செயலகத்துடன் தொடர்புபடுத்தப்படும்.
0 மின்சாரமில்லாத சகல கிராமத்துக்கும் மின்சாரம். 0 சகல கிராமத்திற்கும் பொதுத் தொலைபேசிச் சேவை.
தடையில்லாத குடிநீள்வசதி.
25

Page 15
8 l' ;: 3.
O பயிர்ச்செய்கை நிலங்களுக்கு பாசன நீர். 0 "மக நெகும" ஊடாக கிராமங்களுக்கான பிரவேச வழிகள்.
உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி. 0 மனித வள மற்றும் பெளதிக வளங்களினால் நிறைந்த கிராமப்
T (F6O)6) 0 கிராமத்தை ஆரோக்கியமானதாக்கிப் பாதுகாத்துக் கொள்ளும்
சுகாதார நிலையம். 0 சகாய விலையில் பொருட்களைப் பெற்றுக் கொள்ள கூட்டுறவு கடைகளைக் கொண்ட கடைத்தெரு. - நெற் களஞ்சியசாலை, உர களஞ்சியசாலை மற்றும் நெல் குற்றும் ஆலைகள். "வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் தொழிற்சாலை" சிறுவர் பூங்காக்களை உள்ளடக்கியதான பாலர் பாடசாலை. சனசமூக நிலையங்களுக்கு அண்மித்ததாக விளையாட்டுத் திடல். அழகான "வன பியச" பொது மயானம்.
இவை அனைத்தும் கிராம எழுச்சிக்கான பொதுக் கருத்தை சாத்தியப்படுத்தும்.
ஐந்து வருட காலத்தினுள் சகல கிராமத்திலும் 125 புதிய வீடுகள் கட்டுவிப்பேன். அவற்றுள் 25 வீடுகள் முதலாவது வருடத்திலேயே பூர்த்தி செய்யப்படும். இதன் மூலம் கிராமத்திலேயே மணல், செங்கற்கள் கைத்தொழிலையும், மேசன் வேலை, தச்சுவேலை போன்ற சேவைகளையும் சுயமாகவே அபிவிருத்தி செய்வதற்கும், புதிய தொழில்களை உருவாக்குவதற்கும் உத்தேசித்துள்ளேன்.
(56) கிராமத்திலும் சிறு கைத்தொழில் கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும். எமது பழமைவாய்ந்த கைத்தொழிலொன்றாகிய பித்தளைத் தொழில், இரும்புத்தொழில் அரக்குத் தொழில், புடைவை நெய்தல், பண்பாய்த்தொழில், என்பவற்றுக்கு மேலதிகமாக விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி செய்தல், மட்பாண்டவேலை,
26 A மஹிந்தவின் X
ந்தனை
 
 
 
 
 

சாய வேலை, உணவு உற்பத்தி, சேவைகள் உற்பத்தி போன்ற பல்வேறு கைத்தொழில்கள் அந்தந்தக் கிராமத்துக்கே உரிய செயற்றிறன்களின் பிரகாரம் அபிவிருத்தி செய்வேன். இவ்வாறான ஒரு கருத்திட்டத்திற்கு 100,000 ரூபாய் வீதம் வழங்குவேன்.
விவசாயக் கிராமங்களில் விவசாயக் குடும்பமொன்றுக்கு தெல் களஞ்சியமொன்று நிப்மானித்துக் கொள்வற்காக 10,000 ரூபா வீதம் வழங்கி, வீட்டிலேயே நெல்லை களஞ்சியப்படுத்துவதற்காக வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பேன். இதன் மூலம் நெற் களஞ்சியக் குறைபாட்டை நிவர்த்தி செய்து கொள்ளக் கூடியதாகவிருக்கும்.
அதே போன்று, சகல விவசாயக் கிராமங்களுக்கும் தேவையானவாறு கிராமிய நெற் களஞ்சியமொன்றும் நெல் குற்றும் ஆலையொன்றும் உணவுக் களஞ்சியமொன்றும் ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.
பிள்ளைகளின் பாடசாலைகளை மூடிவிடுவதற்குப் பதிலாக அவற்றை சக்தியுள்ளவைகளாகக் கட்டியெழுப்புவேன். குடிப்பழக்கம், சூது ஆகியவற்றினால் நாசமாகும் கிராமிய வாழ்க்கையை மீட்பதற்காக பிக்குமார்களினதும் சமய தலைவர்களினதும் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பேன். அதே போன்று கிராமத்தின் மரத் தேவைக்காக d 60 கிராமத்துக்கும் மேட்டுநில பாசனநீர் பிரதேசங்களும் உள்ளடக்கப்படும் வகையில் 660T su Jag " கருத்திட்டமொன்றும் ஏற்படுத்துவேன். இவ்வாறு என்னால் பிரேரிக்கப்படும் "கிராமம் யதார்த்தமாகுதல் அக்கருத்திட்டத் திற்காக சரியான முகாமைத்துவமொன்று உரித்தாவதன் மூலமேயாகும். இதற்காக அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் கிராமம் என்பவற்றை ஒன்றிணைப்பதற்கு விசேடமாகப் பயிற்று விக்கப்பட்ட
臀颗
பட்டதாரியொருவரின் (് ഞഖങ്ങu b6) கிராமத்திற்கும்
வழங்குவதற்கும், குறித்த மக்கள் சபை செயலகம் மற்றும் ஜனாதிபதிச் செயலகத்திற்கிடையே நேரடியான தொடர்பை ஏற்படுத்துவதற்கும் நான் உத்தேசித்துள்ளேன். அவ்வாறே "நென சல" கிராம மக்களை உலகத்தாருடன் சேர்த்துக் கொண்டு பரந்த கிராமிய எண்ணக் கருவையும் அர்த்தமுள்ளதாக்குமென நான் நம்புகிறேன்.
மஹிந்தவின்
சிந்தனை 27

Page 16
எமது நாட்டை நாம் வளப்படுத்துவோம்
எமது நாட்டின் சுதந்திரமே உன்னதமானதாகும். நான் எந்த பிரிவினையையும் அனுமதிக்கமாட்டேன். எமது நாட்டு மக்களின் ஜனநாயக உணர்வை எவரும் அழிப்பதற்கு நான் இடந்தரமாட்டேன். எமது நாடானது மெத்தா, கருணா முதித்தா, உபேக்கா மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அதன் அத்திவாரமானது மானிடர்கள் மீது கருணை காட்டுவதில் மட்டுமன்றி சகல விலங்குகள் மற்றும் உயிர்கள், இலைகள், மரங்கள் மற்றும் முழுப் பூகோளத்திற்கும் பரந்துள்ளது. எனது நோக்கம் பல்வேறு காரணங்களின் நிமித்தம் துன்பமடைந்தவர்களை ஒத்திசையப்பண்ணி ஓர் சீர்மையான தேசிய குறிக்கோளை அடைவதை நோக்காகக்கொண்டுள்ளதாகும். எனது எதிர்பார்ப்பு என்னவெனில் சகல இன, சமய அடையாளங்களை மதிப்பதுவும் எவருக்கும் எதிராகப் பலாத்காரத்தைப் பிரயோகிக்காமலிருப்பதுவும் தனிநபர் மற்றும் சமூக சுதந்திரத்தையும் பாதுகாக்கும் புதுமையான சமூகமொன்றை உருவாக்குவதுமாகும்.
தப்மீக நாடு
சமயங்களிலிருந்து எம்மை தூரத்தில் வைத்த எமது ஆட்சியாளர்களில் சிலரின் பங்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் நிமித்தம் கடந்த காலத்தில் 'தஹம் திவயின' என அழைக்கப்பட்டதும் தார்மீக தீவு' என்ற பொருளைக் கொண்டதுமான எமது நாடானது குற்ற அலையினால் மூழ்கடிக்கப்பட்டிருந்தது. இப்போக்கிலிருந்து விலகிச் செல்வதன் பொருட்டு மக்கள் கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், விகாரைகளுடன் நெருக்கமான இணைப்புகளை உருவாக்க வேண்டுமென நான் ஆலோசனை வழங்குகின்றேன். இக்குறிக்கோள்களை எய்துவதன் பொருட்டு நான் பின்வருவனவற்றை நடைமுறைப்படுத்துவேன்.
அரசியலமைப்பின் நியதிகளின் பிரகாரம் பெளத்த மதத்திற்கு வழங்கப்பட்ட முன்னுரிமை பலப்படுத்தப்படுகின்ற அதேவேளையில் இந்து, இஸ்லாம், கத்தோலிக்க, கிறித்தவ மதங்களும் அதே சமமான நிலையில் வைக்கப்படும்.
28
சிந்தனை
மஹிந்தவின் 狱
 
 

சமயங்களுக்கிடையிலான அதியுயர் மன்றமொன்று நாட்டில் எழும் எந்த முக்கியமான நெருக்கடி நிலைமைகளிலும் மகா சங்கத்தினர் முதலிட்ட சமயப் பெரியார்களின் ஆலோசனையை இந்நாட்டுத் தலைவர் நாடக்கூடிய வகையில் இயலச் செய்வதன் பொருட்டு நிறுவப்படும்.
இலங்கையில் உள்நாட்டு அல்லது வெளிநாட்டுப் பெளத்த துறவிகளுக்கு பெளத்தசமயக் கல்வியை வழங்கக்கூடிய பெளத்தசமயக் குருமார் பல்கலைக்கழகமொன்று நிறுவப்படும்.
வெவ்வேறு சமயங்களின் சமய அறிவை வழங்குகின்ற சமய பாடசாலைகளின் சகல தொண்டர் ஆசிரியர்களுக்கும் கொடுப்பனவு ஒன்று வழங்கப்படுவதை இயலுமாக்குவதன் பொருட்டு திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும்.
பிரிவெனாக்களுடன் இணைக்கப்பட்டுள்ள சகல மாணவர்களுக்கும் அரசாங்கத்தினால் ஏற்கனவே வழங்கப்படும் 1000/= ரூபாவைக் கொண்ட ஏற்பாடு 2,000/= ரூபாவாக அதிகரிக்கப்படும்.
சமய வழிபாட்டிடங்களை மையமாகக் கொண்டதாக நெனசல (அறிவகம்) மையங்கள் நிறுவப்படும்.
பெரும் பொருளாதார சிரமத்திற்கு முகம்கொடுத்துள்ள மத வழிபாட்டுத்தலங்களைப் பராமரிப்பதற்கு விசேட செயற்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும்.
பிரித்தானியர்களுட்ைய ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட வழக்கொழிந்த பெளத்த அறக்கொடைச் சட்டத்திற்குப் பதிலாக பெளத்த ஆலயங்களுக்குச் சொந்தமான சொத்துக்களுடன் தொடர்புடைய தற்போதைய நிருவாக விடயங்களைக் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளக்கூடிய பொருத்தமான விடயங்களை உள்ளடக்கி ஓர் புதிய நியதிச்சட்டமானது அறிமுகப்படுத்தப்படும்.
சுனாமியால் அல்லது போராட்டங்களினால் அழிக்கப்பட்ட பெளத்த, கத்தோலிக்க, இஸ்லாம் அல்லது இந்துசமயங்களுக்குச் சொந்தமான சகல வழிபாட்டு இடங்களையும் துரிதமாகத் திருத்தியமைக்க
நடவடிக்கை எடுப்பேன்.
மஹிந்தவின் . . . சீந்தனைட . -- 29

Page 17
இந்தியாவிற்குச் சுற்றுலாவில் செல்லும் பெளத்தர்களுக்கும் ஹஜ்ஜுக்குச் செல்லும் முஸ்லிம்களுக்கும் புனித பூமியை தரிசிக்கச் செல்லும் கத்தோலிக்கர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் பாதுகாப்பு மற்றும் ஆகக் குறைந்த வசதிகளாவது வழங்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதன் பொருட்டு ஒழுங்கொன்று அறிமுகப்படுத்தப்படும். மடு தேவாலயத்தின் மனையிடம் ஓர் விசேடமான தலமாகப் பிரகடணப்படுத்தப்படு மென்பதுடன் அது கத்தோலிக்க திருச்சபையின் மேற்பார்வையின் கீழ் ஆண்டு முழுவதும் பேணிவைத்திருக்கப்படும். இதன் மூலம் இப்பிரதேசத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சட்டவிரோத காடழிப்பைக் குறைப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் யாத்திரிகர்களின் நன்மைக்காக இப்பிரதேசத்தில் 500 வீடுகளையும் கட்டியெழுப்பப்படும். இப்பிரதேசமானது ஓர் பரந்த அபிவிருத்தித் திட்டத்திற்கு அமைவாக அபிவிருத்தி செய்யப்படுமென்பதுடன் இப்பிரதேசத்தின் கெளரவமும் புனிதமும் பேணப்பட பிற வசதிகளும் சேவைகளும் கூட வழங்கப்படும்.
தலவில, தேவத்த, வஹகோட்டை, ஹினிதும, மாத்தறை போன்ற கத்தோலிக்க வழிபாட்டு இடங்களுக்கு தேவையான வசதிகள் அமைக்கப்படும். தங்களுடைய சமயத்தைப் பின்பற்றுவதற்கான இந்துக்களின் உரிமை பலப்படுத்தப்படுமென்பதுடன் இத்தொடர்பில் வேண்டப்படும் எந்த அரசாங்க தலையீடும் தயக்கமின்றி மேற்கொள்ளப்படும். தொல்பொருள் பெறுமதியுள்ள இந்து வழிபாட்டுத் தலங்கள் பேணப்படுவதையும் தேசிய வழிபாட்டுத் தலங்களாக அவை பிரகடனப்படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்நாட்டிலுள்ள சகல இந்துப் பாடசாலைகளுக்கும் வேண்டப்படும் வளங்களையும் நிதி உதவியையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்லாமிய திருமணப் பதிவாளர்களுக்கும் மரண விசாரணை அதிகாரிகளுக்குமான ஏற்கனவேயுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்படும் இடங்களில் புது நியமனங்கள் வழங்கப்படும்.
மஹிந்தவின் 30 | 44
 
 

மதரீதியான இறுதிச்சடங்குகளை மேற்கொள்ளும்போது சட்ட ரீதியாக எழக்கூடிய சிக்கல்களை மட்டுப்படுத்திக் கொள்வதற்குத்தேவையான சட்டப் பின்புலம் உருவாக்கப்படும்.
"கடந்த காலப் பெருமைகள் எதிர்காலத்திற்கும்"
இலங்கையிலுள்ள சகல சரித்திர மற்றும் தேசிய உரிமைகள் பாதுகாக்கப்பட்டு எதிர்காலப் பரம்பரையினருக்கு வழங்குதல் அரசாங்கத்தின் முக்கிய கடமையொன்றாக கருதுகின்றேன்.
"உரும அருண" செயற்றிட்டத்திற்கு அமைய சரித்திர மற்றும் தொல்பொருள் நிலையங்கள் 10,000 பாதுகாக்கப்படும். பழைய கால உரிமைகளாகவுள்ள தொல்பொருள்களை நாசப்படுத்துதல், விற்பனைசெய்தல் அல்லது கொள்வனவு செய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவோர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்குச் சட்டம் இயற்றுவேன்
பிரிக்கப்படாத நாடு - பெரும்பான்மையோரின்
mi (b6IJ6)III). I80I dIDIYBI8)II)
வடக்கு கிழக்கு போராட்டம் மீது புதிதாகச் சிந்திப்பதற்கும் ஓர் தீர்வை உருவாக்குவதற்கு புதியதோர் அணுகுமுறையைக்கான நான் உறுதி பூண்டுள்ளேன். கடந்த 5T6) மோதல்களிலும் சமாதான பேச்சுவார்த்தைகளிலும் இப்பிரச்சினை அதன் விளைவுகளை , வடக்கிற்கும் கிழக்கிற்கும் மாத்திரம் மட்டுப்படுத்தாமல் இந்நாடு முழுவதற்கும் பரவலாக்கி ஓர் படிப்படியான உக்கிர நிலை அடையும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அது ஓர் பிராந்தியப் பிரச்சினையாகவும் சர்வதேசப் பிரச்சினையாகவும் வந்துள்ளது. இதன் விளைவாக இந்த விடயமானது வெளித்தலையீடுகள் காரணமாக வெளித் தலையீடுகள் காரணமாக பிரச்சினை மேலும் சிக்கலாகியுள்ளது.
குறிப்பாக கடந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமானது எதிர்காலம் பற்றிய தொலைநோக்கற்ற குறுகிய நோக்கத்தைக்
மஹிந்தவின்
சிந்தனை L

Page 18
கொண்ட, துரிதமாகச் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையான போர் நிறுத்த உடன்படிக்கை செய்ததன் விளைவாக பல பிரச்சனைகள் எழுந்துள்ளன.
வடக்கில் எஞ்சியிருந்த சனநாயக நிறுவனங்கள் மேலும் அழிந்தன. கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மேலும் இழிவுபடுத்தப்பட்டு அமைதியற்றவர்களாகியுள்ளனர். பாதுகாப்புப் படைகள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன. எமது மக்களின் சம்மதத்தைப் பெறாமல் வெளிநாடுகளில் பல்வேறு புரிந்துணர்வுகள் எய்தப்பட்டுள்ளன. அத்தகைய இணக்கப்பாடுகளை மக்கள் மீது திணிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த இணக்கப்பாடுகளிலிருந்து விலகியிருந்தனர்.
தோல்வியடைந்த பாதையை அது தோல்வியடைந்த இடத்திலிருந்து தொடர்ந்து மேற்கொள்வதற்கு சிலர் தற்போது முயற்சி செய்கின்றனர். இந்த முயற்சியானது நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்தமாட்டா தென்பதுடன் அதற்குப் பதிலாக சனநாயகத்தை மதிக்கின்ற தற்போது ஆயுதங்களை தரிக்காதவர்கள் கூட ஆயுதங்களை நாடும் நிலைக்குத் தள்ளிவிடும்.
கடந்த காலத்தில் இத்தொடர்பில் எடுக்கப்பட்ட Ց Ֆ6Ն) நடவடிக்கைகளினதும் சாதகங்களையும் பாதகங்களையும் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு நான் புதிய பாதையொன்றைப் பின்பற்றுவதற்கு நான் உத்தேசிக்கின்றேன். அத்தகைய பாதையைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படை பிரிக்கப்படாத நாடு - பெரும்பான்மையேர்கள் இணக்கப்பாடு - கெளரவமான சமாதானம்' என்பதாகவிருக்கும்.
நான் பதவியேற்றவுடன் பாராளுமன்றத்தில் பிரதிநித்துவப்படுத்தப்படும்
சகல சனநாயகக் கட்சிகளுடனும் மேலே குறிப்பிட்ட கொள்கை அடிப்படையில் நான் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவேன்.
பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத அரசியல் கட்சிகளுடனும் கூட நான் இதைப் போன்ற கலந்துரையாடல்களைச்
மஹிந்தவின்
32 சிந்தனை
 
 
 
 

மேற்கொள்ள தொடங்குவேன். நான் குறிப்பாக மகா சங்கத்தினருடனும் பிற சமயப் பெரியார்களுடனும் சிவில் அமைப்புக்களுடனும் குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலுமுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள அமைப்புக்களுடனும் கலந்துரையாடல்களைச் செய்வேன்.
அத்தகைய உரையாடல்களை நான் மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்வேன். தீர்வுகளுடனுள்ள விடயங்களும் தீர்வுகள் காணப்படமுடியாமலிருந்த விடயங்களும் தனித்தனியாகக் கண்டறியப்படுமென்பதுடன் தீர்வு காணப்படாத விடயங்கள் தொடர்பில் தேசிய இணக்கப்பாடு ஒன்றை எய்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அத்தகைய தேசிய இணக்கப்பாடானது இலங்கையின் இறைமையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்பையும் மக்களுடைய தேசிய அடையாளத்தையும் அவர்களுக்கிடையே அமைதியான ஒருமைப்பாட்டு வாழ்வையும் பேணவேண்டுமென்பதே எனது நம்பிக்கையாகும்.
மரபுவழித் தாயக்ம், சுயநிர்ணய உரிமை போன்ற சித்தாந்தங்களில் சிறைபடாமல் சகல பிரஜைகளினதும் ஆற்றல் ஆகக்கூடிய முறையில் வழுவடையும் அமைதியான அரசியல் தீவொன்றை ஏற்படுத்துவது எனது பிரதான நோக்கமாகும். நாட்டின் பிரஜைகளுக்கே அதிகாரத்தை பரவலாக்க நான் விரும்புகிறேன். வலுவான பிரஜை ஒருவரை தோற்றுவிப்பதன் மூலம் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு கிட்டுமென நான் நம்புகின்றேன். இந்த முறையில் மக்கள் மேலாண்மையின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு மதிப்பளித்துக் கொண்டு எனது தனிக்கருத்துக்கு பதிலாக பெரும்பான்மையின் கருத்துடன் இணங்குவேன்.
தேசிய இணக்கப்பாடெடான்றுக்கு வந்தவுடன் அதை சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் மக்களிடம் சமர்ப்பிப்பேன். மேலே குறிப்பிட்ட முறை இடம்பெறும் வேளையில் சனநாயக முறைக்குள் இன்னும் சேராமலிருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் நான் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவேன். இதன் பொருட்டு நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரைச் சந்திக்க உத்தேசித்துள்ளேன். d 6) சனநாயக அமைப்புகளுடனும் எய்தப்பெற்ற தேசிய இசைவு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன் பகிரங்கமாக முன்வைக்கப்படும்.
மஹிந்தவின்
சிந்தனை 33

Page 19
இந்த முறையில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படுமென்பதுடன் அவர்களுடைய பிரதிநிதித்துவமும் உறுதிப்படுத்தப்படும்.
திட்டமற்ற, எதிர்கால தொலைநோக்கற்ற அல்லது காலக் கட்டுக்கோப்பையும் கொண்டிராத ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினால் (2002-2004) நடாத்தப்பட்ட கலந்துரையாடல் கெளரவமான தீர்வொன்றை எய்துவதற்கு பயன்படாமை ஊர்ஜிதமாகியுள்ளதால் வித்தியாசமானவொரு பாதையில் இதை அணுகத் தீர்மானித்துள்ளேன். குறித்தவொரு காலக்கட்டுக்கோப்பையும் நிகழ்ச்சி நிரலொன்றையும் தமிழீழ விடுதலைப்புலிகள் முன் சமர்ப்பிப்பேன்.
பிரிவினைக் கைவிடுதல்
படைக்கலங்களை கைவிடுதல்
சனநாயக முறையை எய்துதல்
இறுதித் தீர்வு
நடைமுறைப்படுத்தல்
ஆகிய அனைத்தையும் பற்றிய திறந்த நிகழ்ச்சி நிரல்
ஒன்றுக்கு அவர்களின் இணக்கப்பாட்டைப் பெற நடவடிக்கை
எடுக்கப்படும்.
1977ஆம் ஆண்டில் அதிகாரத்திற்கு வந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற குறுகியகால வெளிநாட்டுக் கொள்கையின் விளைவாக இந்த விடயம் மீது தேவையற்ற வெளிநாட்டுத் தலையீடு கொண்டுவரப்பட்டுள்ளதென்பதே எனது நம்பிக்கையாகும். இதன் விளைவாக சிந்தப்பட்ட இரத்தத்திற்கு அளவு இல்லை. அது கடந்தகாலச் சம்பவமாகும். தற்போதுகூட தேவையற்ற வெளிநாட்டு அழுத்தத்துடன் இலங்கை மீது பளுவைச் சுமத்த ஐ.தே.க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தலையீடுகளை சமநிலைப்படுத்த நடவடிக்கைகளை எடுப்பேன்.
இத்தொடர்பில் ஓர் முன்னுரிமை அடிப்படையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படும். பிராந்திய பாதுகாப்பு மற்றும் சமாதானம் தொடர்பில் நான் இந்தியாவுடன் உடன்படிக்கையொன்றைச் செய்வேன்.
மஹிந்தவின்
 
 
 

எமது நாட்டிற்குப் பலவழிகளிலும் உதவி புரிந்த சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடனும் ஓர் ஆசிய பிராந்திய ஆதரவுப் பொறிமுறையை ஏற்படுத்திக்கொள்வேன்.
இந்த புதிய அணுகுமுறையில் தற்போது சமாதான கூட்டுத் தலைமைத்துவ நாடுகளாகவுள்ள ஐக்கிய அமெரிக்க இராச்சியம், ஐரோப்பிய யூனியன், ஜப்பான், நோர்வே ஆகியவற்றுடனும் கூட நான் திறந்த கலந்துரையாடலை மேற்கொள்ளுவேன்.
இக்கலந்துரையாடல்களும் உடன்படிக்கைகளும் வெற்றியடையுமிடத்து ஓர் புதிய அரசியல் யாப்பை வரைவதற்கு ஓர் அரசியலமைப்பு நிர்ணய சபையை நியமிப்பேன். எதிர்க்கட்சியின் பிரதிநித்துவமும் இச்சபைக்கு பெற்றுக்கொள்ளப்படும். இப்புதிய தீர்ப்பைப் பெறுவதற்காக அரசியல் யாப்பு மக்கள் முன் வைக்கப்படும். இது பெரும்பான்மையினால் நிறைவேற்றப்படுமிடத்து அது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும்.
எனது பொது அபிவிருத்தித் திட்டத்துடன் கூடுதலாக இக் கலந்துரையாடல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதே வேளையில் வடக்கிலும் கிழக்கிலும் விசேட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நான் உத்தேசித்துள்ளேன்.
எந்த பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கும் இடமளிக்காத விதத்தில் போர் நிறுத்த உடன்படிக்கையை மீளத் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் போர் நிறுத்தக் கண்காணிப்புப் பொறிமுறை திருத்தியமைக்கப்பட்டு தேவையான நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்படும். இத்தொடர்பில் பிராந்திய ஆதரவையும் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இடம்பெயர்ந்தவர்களை எவ்வித பாரபட்சமுமின்றி அவர்களுடைய கிராமங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு ஓர் புறம்பான அதிகாரசபை நிறுவப்படும். மீளக்குடியமர்த்தப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரம்பத்தில் 150,000 வும் பின்னர் நிரந்தர வீடமைக்க 250,000 ரூபாவும் வழங்குவேன். அதற்கு தொண்டர் நிறுவனங்களினதும் வெளிநாட்டு நன்கொடைகளினதும் உதவி பயன்படுத்தப்படும்.
சிந்தனை
மஹிந்தவின் 3 | - )

Page 20
சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தங்களுக்கு ஆளானவர்களின் பிரதேசங்களில் பரந்த தேசிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளேன். அதன்போது வடக்கு கிழக்கு மாகாணங்களை சுனாமி நிவாரண பொது கட்டமைப்பு (பீ-டொம்ஸ்) போன்றதொன்றை நடைமுறைப்படுத்தாமல் வடக்கு கிழக்கு மாகாணங்களை மீளக்கட்டியெழுப்பும் பணிகளுக்கு பிரதேசத்தின் மக்கள் உறுப்பினர்களினதும் நேரடிக் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த (ஐய லங்கா) வேலைத்திட்டத்தை சிங்கள, தமிழ்,முஸ்லிம் சகலரினதும் தலைமையில் நடைமுறைப்படுத்துவேன்.
நாட்டைக் காத்தல் தேசியப் பாதுகாப்பும் பாதுகாப்புச் சேவையும்
நாட்டின் இறைமையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கக் கூடிய வகையில் புதிய தேசிய பாதுகாப்புக் கொள்கையொன்றை நான் அறிமுகஞ் செய்வேன்.
படைவீரர்களின் மனோதைரியத்தை அதிகரிக்கும் வகையில் சிறந்த பயிற்சி அபிமானம் மற்றும் ஒழுக்க விழுமியத்தைக் கொண்ட தேசிய பாதுகாப்புப் படையொன்றைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சட்ட மற்றும் செயற்பாட்டுச் செயன்முறைப் பாடநெறியொன்றும் உட்பட்டதாகப் புதிய தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகமொன்றை அமைப்பேன்.
அரசாங்க சேவையில் ஏனைய தொழில்களில் போன்று அல்லாமல் பாதுகாப்புப் படையில் படையினர் ம்ற்றும் உத்தியோகபூர்வமற்ற தரங்களில் கட்டாய ஓய்வுபெறும் சேவைக் காலம் 22 வருடங்களாகும். ஆகையால் அக்காலத்தைப் பூர்த்திசெய்து ஓய்வுபெறும்போது பூரணமான ஓய்வூதி உரிமையை வழங்குவேன்.
பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் வீட்டு வசதிகளை அளிப்பதற்காக ரணவிரு கிராம அமைப்பொன்றின் கீழ் 50,000 வீடுகளை விரைவில் நிப்மானிப்பேன்.
மஹிந்தவின் சிந்தனை
36
 
 
 
 

முப்படை பணியாளர்களுக்கு வீட்டு வாடகையை அறவிடுதல், ஓய்வூதியப் பணிக்கொடைகள் உட்பட்டதாக கருத்திட்ட ரீதியானதும் நலனோம்பல் ரீதியிலுமான பிரச்சனைகளைத் தீர்வுசெய்வதற்குச் சிபாரிசுகளைச் சமர்ப்பிப்பதற்காக முழுமையான அதிகாரம் கொண்ட குழுவொன்றை நியமிப்பேன். முப்படையிலுமுள்ள பணியாளர்களுக்கு வாகனம் ஒன்று அல்லது மோட்டப் சைக்கிளொன்று கொள்வனவுசெய்வதற்காக நீண்டகால கடன் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பேன்.
இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் போன்ற நாடுகளுடன் பயங்கரவாதத்திற்கு எதிரான தகவல்கள், அறிவு, பயிற்சி என்பனவற்றைப் பரிமாற்றம் செய்துகொள்ள ஒன்றிணைந்த செயன்முறையொன்றுக்கு வருவேன்.
பொது மக்கள் பாதுகாப்பு, நீதித்துறை மற்றும் சட்டம்
சகல பிரஜைகளுக்கும் அடிப்படை உரிமைகள் தவிர்க்கப்படுவதை தடுக்கும் முறையில் நடவடிக்கை எடுப்பதற்கும் அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது அவசரமாகவும் குறைந்த செலவிலும் உதவிகளைப் பெற்றுக்கொடுக்க நீதிமன்ற நடைமுறையொன்றை அறிமுகஞ்செய்வேன்.
சட்டத்தின் முன் சகல பிரஜைகளும் சமமாகக் கவனிக்கப்படுவதை உறுதிப்படுத்த குறைந்த வருமானம் பெறும் நாட்டு மக்களுக்கு இலவசமாக வழக்கறிஞர்களின் உதவியைப் பெற்றுக்கொடுக்கத் தேவையான பொறிமுறையொன்றை ஏற்படுத்துவேன்.
வழக்கு நடவடிக்கைகள் நீண்டகாலமாக பின்போடப்படுவதனால் சட்டம் நிலைநாட்டப் படுதல் தாமதிப்பதைத் தடுப்பதற்காக சிவில் மற்றும் குற்றவியல் விதிக்கோவையைத் திருத்தம் செய்து புதியதொரு சட்டக் கொள்கையொன்றை அறிமுகஞ்செய்வேன்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை பன்முகப்படுத்துவேன்.
சிறைச்சாலை நிர்வாகம் பரவலான மீளமைப்புக்கு உட்படுத்தப்பட்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் தொழில் மற்றும் ஏனைய பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பேன்.

Page 21
அதேபோன்று சிறையிலிடப்பட்டுள்ளோர் விடுவிக்கப்படும்போது சமூகத்துடன் இணைந்து கொள்ளக்கூடிய வகையில் புதிய வேலைத்திட்டமொன்றை அறிமுகஞ்செய்வேன்.
ஆட்பதிவுத் திணைக்களத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் முறைப்படி கணனி மயப்படுத்தப்பட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் cCSO LT6 அட்டைகள் வழங்க வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பேன். இங்குள்ள வாழ்க்கைத் தரவு தகவல்கள் அரசாங்கத்தின் ஏனைய திணைக்களங்களுக்கும் வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். இந்த வேலைகளை வினைத்திறனாக்கப்படுவதனூடாகத் தோட்டப் பகுதிப் பிரஜைகளுக்கும் வடக்கு-கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களும் எதிர்கொள்ள வேண்டியுள்ள கஷ்டங்கள் நீங்கும்.
பொலிஸ் சேவை குற்றங்களைக் கண்டுபிடித்தல், ஆய்வுசெய்தல் மற்றும் சட்டத்தையும் சமாதானத்தையும் பாதுகாத்தல், தனிநபரையும் சொத்துகளையும் பாதுகாத்தல் என்பனவற்றை நோக்காகக் கொண்டு பொலிஸ் திணைக்களம் நவீனமயப்படுத்தப்படுவதுடன் பொலிஸ் சேவையை பொது மக்களுக்கு சிநேகயூர்வமானதாகவும் பக்கச் சார்பற்ற சேவையொன்றாகவும் அமைப்பேன்.
பொலிஸ் உத்தியோகத்தர் அனைவருக்கும் தேவையான பயிற்சி மற்றும் நவீன தொழினுட்ப அறிவு என்பனவற்றைப் பெற்றுகொடுப்பேன். ஆய்வு நடவடிக்கைகள் உரிய முறையில் செய்யப்படுவதற்கு வழக்கறிஞர், கணக்காய்வாளர், கணக்காளர், கணனி மற்றும் ஏனைய தொழினுட்ப உத்தியோகத்தர்களின் உதவியை நேரடியாகப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
பொலிஸ் ஆணைக்குழுவிலுள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்து ஆட்சேர்ப்பு, பதவியுயர்வு மற்றும் இடமாற்றம் என்பன நியாயமானதாகவும் விரைவாகவும் நிறைவேற்றப்பட ஏற்பாடு செய்வேன்.
140 வருடங்களுக்கும் மேலாகப் பழமைவாய்ந்த பொலிஸ் கட்டளைச் சட்டத்தை பொலிஸ் சேவையின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் திருத்தம் செய்வேன்.
மஹிந்தவின்
38 சிந்தனை
 
 

பொலில் உத்தியோகத்தர்கள் வாகனங்கள் மற்றும் மோட்டர் சைக்கிள்களை கொள்வனவு செய்வதற்கும் நீண்டகால கடன் பெற்றுக் கொடுப்பேன்.
பொலிஸ் உபசேவை உத்தியோகத்தர்களை நிரந்தரப் பொலிஸ் சேவைக்கு உள்ளிப்புச் செய்ய நடவடிக்கை எடுப்பேன்.
ஊர்காவல் படை உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை தீர்க்குமுகாக அவற்றைக் கண்டறிவதற்குக் குழுவொன்றை நியமிப்பேன்.
நிறைவான சமுகம் - நிலையான அபிவிடுத்தி தேசிய பொருளாதார கொள்கையொன்று
உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் விதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பை பயனுள்ளதாக பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் சுதந்திர பொருளாதாரத்தின் சாதனை வடிவத்தை உள்ளுருடன் இணைத்து நவீன மயப்படுத்தப்பட்டதும் சமத்துவமானதுமான தேசிய பொருளாதாரக் கொள்கை யொன்றைப் பின்பற்றுவேன்.
அவ்வாறான கொள்கையொன்றினூடாக வருடமொன்றுக்கு 8% பொருளாதார வளர்ச்சி ஒன்றை எதிர்வரும் 06 வருட காலத்துள் ஈட்டிக்கொள்வதற்கு உத்தேசித்துள்ளேன். அவ்வளர்ச்சியின் பெறுபேறுகளை நாட்டின் பொதுமக்களுக்கு, குறிப்பாக எமது சமூகத்தின் சரிபாதியாகவுள்ள குறைந்த வருமானம் பெறுவோருக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள் வெளிநாட்டுச் சந்தையை வெற்றிகொள்ள கூடிய வகையில் தமது தொழில் முயற்சிகளை அபிவிருத்தி செய்து கொள்ள தேவையான மூலதனம், தொழிநுட்பம் மற்றும் அறிவு என்பனவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பேன்.
தேசிய வளங்கள் மற்றும் உபாயஉத்திகள் ரீதியான முக்கியமான நிதி, சக்திவளம் மற்றும் போக்குவரத்துத் துறைகளின் அரச உரிமைகளை உள்ளவாறே
மஹிந்தவின் స్టళ్లపిళ్ల "ந்ேதனை

Page 22
செயற்படுத்துவதுடன் அத்தகைய எந்தவொரு வளமோ அல்லது அரசாங்க நிறுவனமோ தனியப் மயப்படுத்தப்படமாட்டா.
பொதுவளங்களின் உண்மையான உரிமையாளர்களாகிய பொது மக்களின் உரிமை வளர்ச்சியடையக் கூடிய வகையில் தாபன மற்றும் வளங்கள் முகாமைத்துவம் செய்தல் அரசாங்க பொறுப்பாளர்களின் பொறுப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொதுப் பொறுப்புகள் சட்டமொன்று சமர்ப்பிக்கப்படும். அதனூடாக பொதுச் சொத்துக்களின் உரிமை, அரசியற் தலையீடு இல்லாமை மற்றும் தொழில் ரீதியானதும் சுதந்திரமானதுமான முகாமைத்துவத்தை உறுதிப்படுத்தி அரசாங்கத் துறையை வினைத்திறன் உள்ளதாகச் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
9 அனைத்துப் பொருளாதாரச் செயற்பாடுகள்
அரசாங்கச் செலவினங்கள் மற்றும் வரவுசெலவு பற்றாக்குறையைக் குறைத்தல் ஆகியன மட்டும் சிறந்த நிதி முகாமைத்துவத்தின் இலட்சணமாகக் கவனத்திற்கொள்ள முடியாது. அங்கு முக்கியமான இலட்சணம் என்னவெனில் அரசாங்கச் செலவினங்கள் அத்தியாவசியப் பொருளாதார முன்னுரிமைத் துறைகளில் ஈடுபடுத்தலும் அச்செலவினங்களினால் உச்சப் பெறுபேறுகளைத் தேசியப் பொருளதாரத்திற்குப் பெற்றுக் கொடுத்தலுமாகும். நான் கொள்கையை நடைமுறைப் படுத்துவேன்.
வினைத்திறனான ᎶᏪᎭ6Ꭰ6Ꭷil60Ꭲ முகாமைத்துவத்தினூடாக வரவுசெலவுப் பற்றாக்குறையை சமாளிக்கக்கூடிய மட்டம் வரையில் குறைக்கப்படும். அரசாங்கச் செலவினங்கள் தொடர்ச்சியாக ஆய்வுக்குள்ளாக்கப்படும்.
இதுவரை அமைச்சுகளுக்காக வரவுசெலவுத் திட்டத்தில் ஏற்பாடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதானது செலவுத் தலைப்புகளின் பிரகாரம் உள்ள கொடுப்பனவுகளுக்கு
மாத்திரமேயாகும். எனினும் எதிர்வரும் ஆண்டு தொடக்கம்
‘’’’့်မွို, န္တိ மஹிந்தவின் 40 சிந்தனை
 
 

உற்பத்திச் செயலாற்றுகை இலக்கையும் அடிப்படையாகக் கொண்டு ஒதுக்கீடுகளை வழங்க நடவடிக்கை எடுப்பேன்.
அமைச்சுகளுக்கு வரவுசெலவு ஒதுக்கீடுகள் வழங்கப்படும்போது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நிச்சயிக்கப்பட்ட நூற்றுவீதமொன்று ஒதுக்கப்படும்.
வரி அமைப்பை மிகவும் இலகுவானதாக்குவதற்கும் வினைத்திறனானதாக்குவதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.
9 வங்கி நிதியம் மற்றும் காப்புறுதிச் சேவை
தேசிய தொழில் முயற்சி வங்கியின் கீழ் "லங்கா புத்திர" எனும் பெயரில் புதிய வங்கிச் சேவையொன்று அறிமுகம் செய்யப்படும். இதன்கீழ் உள்ளூர் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் தங்களது தொழில் முயற்சிகளைச் சர்வதேச மட்டம்வரை மேலோங்கச் செய்துகொள்ளத் தேவையான நிதி வசதிகள் வழங்கப்படும்.
மேலும் விவசாய மக்களின் மேம்பாட்டிற்காக விவசாய வங்கியொன்றை ஆரம்பிப்பேன்.
குறைந்த வருமானம் பெறுவோர்களுக்காக எளிதில் வீடமைப்புக் கடன் வழங்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறையிலுள்ள வங்கிக் கட்டமைப்புகளினூடாகத் தயாரிப்பேன்.
சணச மற்றும் சமுர்த்தி வங்கி அமைப்புகளை மிகவும் வலுவுள்ளதாக்குவேன். இதன் மூலம் கிராமியப் பொருளாதாரத்தை எழுச்சிபெறச் செய்வதற்கு உரிய நிதியுதவிகளைப் பெற்றுக்கொடுப்பேன்.
புதிய கடன் பாதுகாப்புக் காப்புறுதித் திட்டமொன்று அறிமுகம் செய்யப்படும்.
உள்ளுர் தொழில் முயற்சியாளர்களுக்கு கொழும்புப் பங்குச் சந்தையில் தமது கம்பனிகளை நிரலிடுவதற்கு ஊக்குவித்தல்
மஹிந்தவின் SSSCSCSSSSCSCSSSSLSSSSSCSCSS স্থ சிந்தனை 41

Page 23
மற்றும் ஆலோசனைகள் வழங்கல் ஆகியவற்றுடன் எதின்வரும் 06 வருட காலத்தில் புதிய நிரலிடப்பட்ட எண்ணிக்கையை 40 வீதத்தினால் அதிகரிக்கச் செய்ய நடவடிக்கை எடுப்பேன்.
வியாபாரம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள்
தேசிய பொருளாதாரத்தின் பிரபலமான காரணியொன்றாக கருதப்படும் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் எதிர்நோக்கும் நிதி மற்றும் 6ᎫᏛᏛlIII பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன்.
அங்காடி வியாபாரிகள் தொடக்கம் உயர்மட்ட மொத்த வியாபாரிகள் வரையிலானோருக்கு நாளாந்தக் கடன், பொறுப்புக் கடன் போன்ற சலுகைக் கடன் திட்டங்களை அரசாங்கத்தின் தலையீட்டினூடாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
இலங்கையில் கூட்டுறவு முறையை மீண்டும் பலப்படுத்தி துகள்வோருக்கு நியாயமான விலைக்குப் பொருட்களை வழங்குதல் எனது குறிக்கோளாகும். இதற்காக இலங்கையில் கூட்டுறவு சம்பந்தமாக நிலவும் கொள்கைகளை மீள்பரிசீலிப்பேன்.
அவ்வாறே சகல கூட்டுறவு சங்கங்களையும் அரசியல் அடிமைத் தளையிலிருந்து விடுவித்து மக்கள் நிருவாகத்துக்கு வழிசெய்வதுடன், எமது "கிராம எழுச்சி" வேலைத்திட்டத்தின் கீழ் நவீனமயப்படுத்தப்பட்ட கூட்டுறவு வியாபார நிலையமொன்றை ஒவ்வொரு ஊரிலும் அமைப்பேன்.
புதிய இலங்கை கூ.மொ.வி. தாபனம், நெல் சந்தைப்படுத்தும் சபை, பழவகைகள் மற்றும் மரக்கறி விற்பனை நிலையம் போன்ற அரசாங்க நிறுவனங்களை நிறுவுவதற்கும், அவற்றைப் பலப்படுத்தி மிகவும் இலாபகரமானதும் வினைத்திறன் மிக்கதுமான சேவையொன்றைப் பொது மக்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
மஹிந்தவின் சிந்தனை
 
 
 
 

'வயலுக்கு அடுணோதயம்"
விவசாயக் கொள்கை
நீர்ப் பற்றாக்குறை, காணிப் பற்றாக்குறை, பயிர்கள் பாழடைவதனால் விளைச்சலை விற்பனை செய்துகொள்ள முடியாமையினால் எமது விவசாயிகள் அடையும் துன்பங்கள் அளவிட முடியாதவையாகும். அவர்கள் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் நான் நன்கு அறிவேன். கொழும்பில் சொகுசு வீடுகளில் இருந்துகொண்டு விவசாயியை "மொட்" ஆக்க முயற்சி செய்யும், எனினும் விவசாயியை உண்மையாகவே இயலாமைக்குட்படுத்தி கட்டுப்போட்ட, குறுகிய
நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிகளைவிடவும் மாற்றமான 9تک|g00kg முறையொன்று விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்த்துவைப்பதற்கு தேவையாகவுள்ளது.
9 வயலுக்கு நீர்
நீள் வளமானது எமது நாட்டின் பிரதானமான வளங்களில் ஒன்றாகும். இப்பெறுமதிவாய்ந்த வளத்தின் உரிமை இந்நாட்டின் பொது மக்களுக்கு உரித்துடையதாகவிருத்தல் வேண்டும். நான் இதனை உறுதிப்படுத்துவேன்.
தேசிய நீர்ப்பாசன திட்டமொன்றை உங்களுக்கு சமர்ப்பிக்க நான் உத்தேசித்துள்ளேன். இதன்மூலம் பிரதான நதிகள், பிரதேசத்திலுள்ள குளங்கள், வாவிகள் மற்றும் கிராமப் புறங்களிலுள்ள நீரூற்றுகள் தொடர்புபடுத்தப்படுவதுடன், தெற்கில் போன்றே வடக்கிலும் மேற்கில் போன்றே கிழக்கிலும் காய்ந்த நிலங்களை செழிப்படையச் செய்தல் இதனுடாக மேற்கொள்ளப்படும்.
"பத்தாயிரம் குளங்கள்" கருத்திட்டத்தைப் பூர்த்திசெய்தல் போன்றே மொறகஹகந்த, உமாஓய, வடமத்திய பெரிய கால்வாய், தெதுறுஒயா, மெனிக் கங்கை, ரம்புக்கன்ஒயா, யான்ஒயா, ஹெடஒயா,
மஹிந்தவின்
சீந்தனை 43

Page 24
கிரமஜயா மற்றும் ஊரவ போன்ற பல்வகைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் எனது எதிர்பார்ப்பாகும்.
9 பரிச்செய்கைக்கு காணிகள்
எமது சிறிய நாட்டின் முக்கியமான பிரச்சினைகளிடையே காணிகள் சம்பந்தமான பிரச்சினைக்கே முதலிடம் கிடைக்கின்றது. அவ்வாறே, செய்கை பண்ணக்கூடிய காணிகள் தரிசு நிலமாவதும் பாரம்பரிய மரபுகள் மற்றும் கடினமான நிபந்தனைகள் காரணமாக இலங்கை மக்கள் விவசாயச் செய்கையிலிருந்து தூரமாவதும் எம்மிடையே தோன்றியுள்ள பாரிய சவாலாகும். இதனை வெற்றி கொள்வதற்கு நான் திடசங்கற்பம் பூண்டுள்ளேன். இதற்காகத் தேசிய கொள்கையொன்றைத் தயாரிப்பேன்.
இதன் கீழ் பயிர்ச்செய்கைக்காகக் காணிகள் இன்றித் தவிக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் காணித் துண்ைடுகளை வழங்க நான் நடவடிக்கை எடுப்பேன்.
விவசாயக் குடியிருப்புகள் மற்றம் மகாவலி திட்டங்களின் வருங்கால சந்ததி விவசாயிகளுக்கும் காணிகளைப் பெற்றுக் கொடுப்பேன்.
விவசாயிக்கு அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள விவசாயக் காணிகளின் உரித்துரிமையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான சட்டங்கள் தயாரிக்கப்படும்.
நெல் மற்றும் உணவுப் பயிர்ச்செய்கை
அணைக்கட்டில் கை கழுவி வேட்புமனுவில் கைச்சாத்திட்ட டீ.ஏ. ராஜபக்ஷவின் புத்திரனாகிய எனக்கு வயல், சூட்டுக்களம், கட்டைப் பயிர், அணைக்கட்டு ஆகியவை புதியனவல்ல. வீடொன்று, கை டிராக்டர் ஒன்று மற்றும் தமக்கென்றே நெற்களஞ்சியம் ஒன்று கொண்ட சுயசக்தி கொண்ட விவசாயக் குடும்பமொன்று பற்றிய இனிய கனவை நனவாக்கிக் கொள்வதற்கு 40 ஆண்டுகளாக நான் ஏங்கி நின்றேன். அக்கனவை நனவாக்குவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என நான் எண்ணுகின்றேன். ዲ
44 ந்தனை
மஹிந்தவின் د لا
 
 
 

9 விதை உற்பத்தி
உணவுப் பயிர் உற்பத்திக்கான செலவினங்ளில் விதைகளுக்குச் செலவாகும் கணிசமான பகுதியைக் குறைத்துக்கொள்வதற்கும் உள்நாட்டு விதை உற்பத்தியை வலுவுட்டுவதற்குமான நோக்குடன் போட்டி அடிப்படையில் விதைகளை நாட்டிலேயே உற்பத்திசெய்யும் ஒழுங்குமுறையான வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பேன்.
இதற்காக விதை ஆராய்ச்சிப் பண்ணைகள் போன்றே அரசாங்கத்தின் விதை உற்பத்தி பைைனயையும் அபிவிருத்திசெய்ய நடவடிக்கை எடுப்பேன்.
«O D. Ji
விவசாயத் தொழிலிலும் பெருந்தோட்டக் கைத்தொழிலிலும் உற்பத்தியை உயர்வடையச் செய்யும் நோக்குடன் சகல இரசாயனப் பசளை வகைகளுக்கும் 50 கிலோ பொதியொன்றை 350/- இற்கு வழங்குவேன்.
இதற்கு மேலதிகமாக இரசாயன பாவனையின்றி பயிர்ச்செய்கை பண்ணுவதற்கு ஊக்கமூட்டுவதற்காக அரசாங்கத்தினால் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படுவதுடன் இதற்காக ஊக்கங்காட்டும் விவசாயிகளுக்கு நிதியுதவி பெற்றுக்கொடுப்பேன்.
நீண்டகாலமாக விவசாயிகளுக்குக் குறைந்த விலைக்கு உரத்தை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் புதிய உரக் கைத்தொழில் நிலையமொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பேன்.
கூட்டுறவுச் சங்கங்ளினூடாக விவசாயிகளுக்கு அத்தியாவசியமான கிருமிநாசினிகள், களைகொல்லிகளை இலகுவாகவும் குறைந்த விலைக்கும் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பேன்.
மஹிந்தவின் - : . .

Page 25
()
விவசாயத் தொழினுட்பமும் நிதி வளங்களும்
விவசாய உபகரணங்கள் மற்றும் டிராக்டர்களைச் சலுகையுடனான கூடிய வாடகைக்கு பெற்றுக்கொடுக்க விவசாயச் சங்கங்களுக்குத் தேவையான மூலதன சக்தியை வழங்குவேன்.
கை டிராக்டர் மற்றும் ஏனைய விவசாய உபகரணங்களுக்கான வரிகள் அனைத்தும் நீக்கப்படும்.
எதிர்வரும் பெரும்போகத்திற்காகச் சகல விவசாயிகளுக்கும் தாம் விரும்பிய வகையிலான மண்வெட்டிகளை இலவசமாக வழங்குவேன்.
பயிர்ச்செய்கைப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம் என்பனவற்றை ஒழுங்குமுறைப்படுத்தி அவற்றின் பெறுபேறுகளை விரைவில் விவசாய மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
மீளச் செலுத்த முடியாதிருக்கும் விவசாய கடன்கள் ரத்துச் செய்யப்படும்.
விவசாயப் போதனைகள்
விவசாயக் கல்லூரிகள் மீண்டும் புத்துயிர் அளிக்கப்படுவதுடன் பல்கலைக்கழக மட்டத்திலான விவசாயக் கல்விப் பீடங்களையும் வலுவுள்ளதாக்குவேன்.
உள்ளூர், வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற விவசாய நிபுணர்களின் உதவிகளை GbJL2lLJT 85 விவசாயிகளுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் விவசாயிகள் தொழினுட்பத்தில் அறிவூட்டப்படுவதற்குத் தேவையான பயிற்சியையும் வெளிநாட்டுப் புலமைப் பரிசில்களையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
பல்கலைக்கழகங்களை இணைத்துக்கொண்டு உயிரியல் தொழினுட்பக் கருத்திட்டங்களை நாடு பூராவும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
46
மஹிந்தவின்
சிந்தனை
 
 
 

9 கொள்வனவு செய்தலும் களஞ்சியப்படுத்தலும்
நெல் கொள்வனவிற்காகவும் அரிசியைச் சந்தைப்படுத்து வதற்காவும் நெல் விற்பனைச் சபையை மீளமைப்பேன்.
அடுத்த பெரும்போகம் தொடக்கம் ஒரு கிலோ நெல்லின் உறுதிப்படுத்திய விலை பெரிய நெல்லுக்காக 16.50 சதம் வரையும் சிவப்பு நெல் மற்றும் சம்ப நெல் ஆகியவற்றுக்காக 17.50 சதம் வரையும் அதிகரிக்கப்படும்.
"தரிசான வயல்களை மீண்டும் வயல்நிலமாக்குதல்" வேலைத்திட்டத்தின் கீழ் ஈரவலயத்திலுள்ள நெற்செய்கையை மேம்படுத்துவதற்கு விசேட வேலைத் திட்டமென்றை ஆரம்பிப்பேன். இந்த வேலைத்திட்டத்தைப் பயன்படுத்தித் தேசிய அரிசி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
விவசாயத் திணைக்களத்தினதும் வர்த்தக அமைச்சினதும் ஒன்றிணைப்புச் செயற்பாட்டின் மூலம் ஒரு இலட்சம் மெட்றிக் தொன் தொகையை நெல்லையும் அரிசியையும் இருப்பில் நடவடிக்கை எடுப்பேன்.
தற்போது செயற்படாமலிருக்கும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் குற்றும் ஆலைகளை மீளப் புத்துயிர் அளிப்பதற்கு 100 இலட்சம் வரையிலான குறைந்த வட்டிக் கடன் வசதிகளைப் பெற்றுக்கொடுப்பேன்.
மேலும், உள்ளூர் அரிசிச் சந்தையைப் பிரதேசமயமாக்குவதற்கு "அரிசி பதனிடும் கிராமம்" கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவேன்.
பாடசாலைச் சிறுவர்களுக்கான பகலுணவுக்காக எமது விவசாயிகளின் அரிசி, தானியம் மற்றும் மரக்கறிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
அரிசியைக் கொண்டு உற்பத்திசெய்யப்படும் ஏனைய உணவு வகைகளை நுகர்வோரை மேலும் ஊக்குவிப்பேன். இதனூடாக
மஹிந்தவின்
சிந்தனை .ே

Page 26
48
நெல் விவசாயிக்கு நியாயமான விலை கிடைப்பதுடன் ஆரோக்கியமான எதிர்காலப் பரம்பரையொன்றும் தேசிய
பொருளாதாரத்திற்கு கூடிய வளர்ச்சியொன்றும் ஏற்படும் என
நான் நம்புகின்றேன்.
ஏனைய பயிர்கள்
உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் மிளகாய் போன்ற பயிர்கள் விளைச்சல் அறுவடை செய்யும் சந்தர்ப்பங்களில் அவற்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதைத் தடைசெய்வேன்.
சர்வதேச தரங்களுக்கு இயைபாக வாழை இனங்களை இனங்காண்பதும் ஏற்றுமதிக்காக வெளிநாட்டுச் சந்தையையும் திறந்து கொடுப்பேன்.
பழவகைகள் மற்றும் மரக்கறிகளின் அறுவடைக்குப் பின்னான சேதங்களை குறைப்பதற்காக அவற்றை நீண்டகாலம் பாதுகாப்பதற்காக புதிய தொழினுட்பங்களையும் கூடிய பெறுமதிகொண்ட "உணவுச் சேமிப்பகம்" அமைக்க கருத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பேன்.
"பிரதேச ரீதியிலான விநியோக நிலையம்" ஆரம்பிக்கப்பட்டு அவற்றில் மரக்கறி மற்றும் பழவகைகளை நீண்டகாலம் பாதுகாத்து வைப்பதற்காக சகல வசதிகளையும் கொண்ட குளிரூட்டிய அறைகள் அமைக்கப்படும்.
எமது மரக்கறிகள், பழங்கள் மற்றும் வாசனைப் பொருட்கள் முதலியவற்றை விமான மற்றும் கப்பற் சேவைகள் மூலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
"வெற்றிலை ஒளி" வேலைத்திட்டத்தின் கீழ் வெற்றிலை உற்பத்தியை மேம்படுத்தி பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளின் வெற்றிலைச் சந்தை கோட்டாவினால் பயன்பெறக் கூடியதாக இலங்கை வெற்றிலை விவசாயிகளுக்குச் சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
மஹிந்தவின் சிந்தனை
 
 

பரம்பரையாக சேனைப் பயிர்ச்செய்கையினல் வாழ்க்கை நடாத்தும் விவசாயிகளுக்கு தடைகளின்றித் தமது செய்கைகளைத் தொடர்வதற்குக் காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பேன்.
விவசாயிகளுக்கு மேலும் பயன்கிடைக்கும் வகையில் விவசாய மக்கள் அபிவிருத்தி சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
பயிர்ச் செய்கைக்கு மறுமலர்ச்சி
தேயிலை, தென்னை, இறப்பர் போன்ற பயிர்ச் செய்கைகள் எமது பொருளாதாரத்தின் இதயமாகவுள்ளது. ஆகையால் அப்பயிர்ச்செய்கைகளின் எதிர்கால அபிவிருத்திக்காக வேண்டிய நடவடிக்கை எடுப்பேன்.
களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களில் தாழ்ப்பிரதேசத் தேயிலைச் செய்கையை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்திற்குச் சொந்தமான எல்.ஆர்.சீ. மற்றும் ஜனவசம ஆகியவற்றுக்குச் சொந்தமான கணிகளிலிருந்து ஒரு ஏக்கள் வீதம் அது பற்றி ஊக்கமுடையவர்களுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
சிறிய தேயிலைத் தோட்டங்களிலிருந்து கிடைக்கப்பெறும் "செஸ் வரி" பணத்தின் பெறுபேறுகளை மீண்டும் அத்தோட்டங்களுக்கே பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். இதற்கு மேலதிகமாக மீள் பரிச்செய்கைக்காகவும் புதிய பயிர்ச்செய்கைக்காகவும் வழங்கப்படும் நிவாரண உதவியை 25% ஆல் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன்.
கறுப்புத் தேயிலை ஏற்றுமதிக்குப் பதிலாகப் பெறுமதி கூட்டப்பட்ட தேயிலையை கூடுதலாக உற்பத்திசெய்வதற்கு தனியப் துறையினருக்குத் தேவையான மூலதன வசதிகள் மற்றும் அறிவை வழங்க ஏற்பாடு செய்வேன்.
கார்பனிக் தேயிலை மற்றும் அதிவிசேட தேயிலை வர்க்கங்களை உற்பத்திசெய்வதற்காக தோட்டச் செய்கையாளர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளை வழங்குவேன்.
மஹிந்தவின்
சிந்தனை 49.

Page 27
மூடப்பட்டுள்ள மற்றும் மூடப்பட வேண்டிய நிலைமையை எதிர்கொண்டுள்ள தேயிலைத் தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்தத் தேவைான நிதி வசதிகளையும் வரிச் சலுகைகளையும் வழங்குவேன்.
பிரதானமான தென்னை முக்கோணத்திற்கு மேலதிகமாக தெற்கு கிழக்கு மற்றும் கரையோரப் பிரதேசங்கள் சப்ந்த தென்னைச் செய்கையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
பிரதானமான தென்னங்காணிகளைப் பாதுகாப்பதற்கும் தென்னைச் செய்கையின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் புதிய தென்னை இனங்களையும் செய்கை முறைகளையும் அறிமுகஞ்செய்யவும் நடவடிக்கை எடுப்பேன்.
சொட்டு நீள் தொழினுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தென்னைச் செய்கைக்குத் தேவையான நிதி உதவிகளை வழங்குவேன்.
உடைக்கப்பட்ட தேங்காய்களுக்காகப் புதிய சந்தையொன்றை விருத்திசெய்வதற்கு வேலைத்திட்டமொன்றை அறிமுகஞ்செய்வேன்.
தேங்காய் எண்ணெய் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
தென்னை மீளச் செய்கைக்காக வழங்கப்படும் நிவாரண உதவிப் பணம் செலவுகளுக்கேற்ற வகையில் வருடாந்தம் அதிகரிக்கப்படும்.
ஈரவலயத்திற்கு மட்டும் வரையறுக்கப்படாமல் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளவாறு மொனராகலை, வெள்ளவாய போன்ற பிரதேசங்களிலும் இறப்பர் செய்கையை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். இறப்பர் சார்ந்த கைத்தொழில்களுக்கு நிதி மற்றும் தொழினுட்ப உதவிகளைக் குறைவின்றிப் பெற்றுக்கொடுப்பதுடன் சர்வதேச சந்தைகளைக் கண்டறிவதற்கும் உதவியளிப்பேன்.
இறப்பர் மீளச் செய்கை பண்ணுவதற்கான நிவாரண உதவி ஹெக்டயர் ஒன்றுக்கு 106,000 ரூபா வரை அதிகரிக்கப்படும்.
சர்வதேச கறுவா தேவையின் 70% ஆனவை இலங்கை கறுவா விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனினும் தேசிய
50 சிந்தனை
மஹிந்தவின்
 
 

பொருளாதார உற்பத்தியில் கறுவாவுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படாமை துக்ககரமானதாகும். ஆகையால் கறுவாக் கைத்தொழிலுக்குப் புதிய தொழினுட்பத்தை அறிமுகஞ்செய்வதற்கும் வெளிநாட்டு வியாபாரத்திற்காகத் தற்போதுள்ள கஷ்டங்களை நீக்குவதற்கும் நான் நடவடிக்கை எடுப்பேன்.
வாசனைப் பொருட்கள் மற்றும் ஏனைய சிறிய ஏற்றுமதிப் பயிர்கள் ஆரம்ப உற்பத்தியாக ஏற்றுமதிக்குப் பதிலாக அவை பெறுமதி கூட்டப்பட்ட பொருட்களாக ஏற்றுமதி செய்தவற்குத் தனியள் துறையினருக்கு ஊக்குவிப்புகளை அளிப்பேன்.
சீனிக்காகக் கரும்புச் செய்கையை மேலும் சிறு தோட்டச் செய்கையாளர்களிடையே அறிமுகஞ்செய்வேன். நமது நாட்டின் சீனிச் சுயதேவையைப் பூர்த்திசெய்தவற்காக, மூடப்பட்டுள்ள ஹிங்குரானை, கந்தளாய் சீனித் தொழிற்சாலைகள் மீளப் புத்துயிர் அளிக்கப்படும்.
பால் பொங்குதல் - பால் உற்பத்திக் கைத்தொழில்
எமது நாட்டின் பால் தேவையின் 15% அளவிலான சிறிய தொகை மட்டுமே உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்தத் துரதிஷ்டவசமான நிலைமையிலிருந்து நாம் உடனடியாக மீட்சிபெற வேண்டும். இறக்குமதிசெய்யப்படும் பால்மாவுக்குச் சலுகைகளை வழங்கி, வெளிநாட்டுக் கம்பனிகளைப் பயன்பெறச் செய்வதற்குப் பதிலாக மீண்டும் பால் பொங்கும் நாடொன்றை நோக்கி நாம் செல்ல வேண்டும்.
இதற்காக பால் உற்பத்தியாளர்களை சக்தியூட்டுவதற்கும் கால்நடைக் கைத்தொழிலை உயர்வடையச் செய்வதற்கும் விசேட கவனம் செலுத்துவேன். கிராமங்களில் விவசாயக் குடும்பங்களுக்கு இனவிருத்தி செய்யப்பட்ட பசுக்களைச் சகாயக் கடன் அடிப்படையில் பெற்றுக்கெடுப்பேன். நடுத்தர அளவிலான கால்நடைப் பண்ணைகளை ஏற்படுத்தத் தேவையான காணிகள், நீர், உபகரணங்கள் மற்றும் தொழினுட்பங்களை உள்நாட்டுத் தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பேன்.
மஹிந்துவின் 51
சிந்தனை

Page 28
பல் நுகள்வையும் விற்பனையுைம் ஊக்குவிப்பேன். அரசாங்கத்தின் சகல வைத்தியசாலைகளுக்கு அருகாமையிலும் UT 6ü விற்பனை நிலையங்கள் ஆரம்பிக்கப்படும். யு.எச்.டி. தொழினுட்பத்தைப் பயன்படுத்தி பாற் கைத்தொழில் நிலையங்களை குருனாகல், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் நிறுவுவேன்.
பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லீட்டர் பலுக்கு ரூபா 25 ஐ ஜனவரி மாதம் தொடக்கம் அமுலாக்கும் விதத்தில் பெற்றுக்கெடுப்பேன். தற்போது சந்தை விலையின் 40% வீதம் மட்டுமே உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்கின்றது. நூற்றுவீதத்தை 03 வருடங்களுக்குள் 60% வரை முறையாக உயர்வடையச் செய்வதன் pബb பால் உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்கப்பெறும் விலை முறையில் பா 35 வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
உள்ளூர் பாலினால் உற்பத்தி செய்யப்படும் பாற்கட்டி, யோகட், ஐஸ்கிறீம் மற்றும் ஏனைய உணவுகளுக்காக நாடு பூராவிலும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகளுக்கு சலுகைகளைப் பெற்றுக்கொடுப்பேன்.
கடல் அலைகளை வெற்றி கொள்ளும் மீன்பிடியாளப் எம்மைச் சுற்றியுள்ள கடல் வளங்களின் உச்சப் பயனைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் இன்னமும் தகுதியற்றவர்களாகவுள்ளோம். இந்நிலைமைகளை வெற்றிகொண்டு ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடுகள் மீன்பிடிக் கைத்தொழிலில் ஈட்டிக்கொண்டுள்ள பாரிய முன்னேற்றத்தை இலங்கைக்கும் பெற்றுக்கொடுப்பதற்காகப் புதிதாகச் சிந்திப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் நான் திடசங்கற்பம் பூண்டுள்ளேன். நான் அமைச்சராகவிருந்தபோது இக்குறிக்கோளை வெற்றிகொள்வதற்காக சமுத்திர பல்கலைக்கழகமொன்றைத் தாபித்தேன்.
என்னால் ஆரம்பிக்கப்பட்ட கடலோரப் பாதுகாப்புப் படை மேலும் வலுவூட்டப்பட்டு எமது நாட்டின் கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கு
மஹிந்தவின்
52 சிந்தனை
 
 

நடவடிக்கை எடுப்பேன். இவ்வளங்களினால் உயர் பயனைப் பெற்றுக்கொள்வதற்குத் தேசிய உற்பத்தியை விருத்திசெய்வதற்கும், வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.
இந்துசமுத்திரத்தில் இலங்கையைச் சுற்றிவரவுள்ள ஆழ்கடலில் காணப்படும் செழிப்பான மீன்வளங்களிலிருந்து விளைச்சலைப் பெற்றுக்கொள்ள முன்னுரிமை வழங்குவேன். இதற்காக நீண்டதுரத்திலுள்ள கடல் வளங்களைத் தேடிச்செல்லக் கூடிய 50 டிரோலர் வள்ளங்களை பயன்படுத்த நான் நடவடிக்கை எடுப்பேன்.
இதற்கு மேலதிகமாக நாடு பூராவும் விரிந்துசெல்லக் கூடியவாறு மீன்பிடியாளர்களுக்குச் சலுகைத் திட்டமொன்றின் கீழ் 03 வருட காலத்துள் 500 பல்தினக் கப்பல்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
மீனவர்கள் இழந்த வலைகளையும் மற்றும் ஏனைய உபகரணங்களையும் சலுகைத் திட்டங்களின் கீழ் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பேன்.
கடற்கரையோரமாக மீன்பிடித் துறைமுகங்களையும் 100 நங்கூர நிலையங்களையும் மேம்படுத்துவேன்.
மீன்பிடியாளர்களுக்கு எரிபொருள் சலுகையொன்று 2006 ஜனவரி தொடக்கம் வழங்குவேன்.
நவீன தொழினுட்பம் கொண்ட மீன்பிடிக் கப்பல்களையும் ஏனைய உபகரணங்களையும் மீன்பிடியாளர்களுக்குச் சலுகை விலையில் பெற்றுக்கொடுப்பதற்கு, உற்பத்தியாளர்களுக்கும் தனியார் துறையினருக்கும் தேவையான சகல ஊக்குவிப்புகளையும் வழங்குவேன்.
புதிதாக மீளமைக்கப்பட்ட குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் நன்னீர் மீன் வளர்ப்பை விருத்தி செய்வதற்காகவும் சிறு நீர்நிலைகளில் மீன் வளர்ப்பையும் வலைக்கூடுகளில் மீன் வளர்ப்பையும் விஸ்தரிப்பேன்.
உப்புநீர் மற்றும் நன்னீர் இறால் செய்கைக்கு 10 வலயங்களில் 150 புதிய பண்ணைகளை அமைப்பதற்காகக் காணிகள், மூலதனம், அறிவு மற்றும் தொழினுட்பத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
மஹிந்தவின்
சிந்தனை

Page 29
மீன்பிடித் துறைமுகங்களுக்கும் நங்கூர நிலையங்களுக்கும் அருகில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் மீன் பதனிடும் மற்றும் பொதியிடும் கைத்தெழில்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பேன்.
அலங்கார மீன் வளர்ப்பை ஊக்குவிப்பேன். எமது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அலங்கார மீன் கைத்தொழிலாளர்களுக்குச் சர்வதேச சந்தையை வெற்றிகொள்ளத் தேவையான தொழினுட்பம், சந்தை, தகவல்கள் மற்றும் ஊக்குவிப்புகளை அரச தலையீட்டுடன் பெற்றுக்கொடுப்பேன்.
இலங்கை அரசாங்கத்தின் அனுமதியில்லாமல் வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்கள் இலங்கைக்குரிய கடற் பிரதேசத்தில் மீன்பிடித்தலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். அபாயகரமான உத்திகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
அழிந்துபோன மீன்பிடி வள்ளங்கள், வலை, உபகரணங்கள் மற்றும் அழிந்துபோன மீனவர் வீடுகள் அனைத்தையும் 03 மாதங்களுக்குள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
நாட்டை உயர்வடையச் செய்யும் புதிய கண்டுபிடிப்புகள்
கைத்தொழில் அபிவிருத்தி நாங்கள் சுதந்திரமடையும்போது எங்களுடன் சமமான அல்லது குறைவான அளவில் அபிவிருத்தியடைந்திருந்த சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளில் நீண்டதூரம் பாய்ந்து முன்னேறிச் சென்றுள்ளதுடன் இன்று உலகில் பொருளாதாரத்தில் பலசாலிகளாகியுள்ளனர். இலங்கை பொருளாதாரத்தில் பின்னணியில் நிற்பதற்கு முக்கியமான காரணம் எமக்கு நிச்சயிக்கப்பட்ட குறிக்கோளொன்று அல்லது வேலைத்திட்டமொன்று இல்லாமையாகும். இதனைத் தெளிவாகத் தெரிந்துகொண்ட நான் குறிப்பிட்ட சவால்களை வெற்றிகொள்வதற்குக் கீழ்க் காணும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவேன்.
மஹிந்தவின் 54 சிந்தனை ঃঃ
 
 

|
9 12 புதிய முதலீட்டு வலயங்களை நிர்மாணித்து அதற்குச் சமமாக 12 சிறிய நகரங்களை மாநகரங்களாக மாற்றி மேம்படுத்துவேன்.
0 சகல பிரதேசச் செயலக பிரிவுகளிலும் பாரிய அளவிலான கைத்தொழில்கள் உருவாகும் விதத்தில் 300 புதிய கைத்தொழில்கள் அமைப்பதுடன் அவற்றுள் 500 இலட்சம் ரூபாவுக்குக் கூடுதலான முதலீட்டுக்கான 05 வருடகால வரிச் சலுகையொன்றை வழங்குவேன்.
அவ்வாறே சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு உள்ளுர் மூலப் பொருட்களின் 75%ஐ விடக் கூடுதலாக பயன்படுத்தும் கைத்தொழில்களுக்கு 05 வருட வரிச் சலுகைக் காலம் வழங்குவேன்.
இரத்தினக் கற்கள் மற்றும் பீங்கான் களிமண் கைத்தொழில்களில் போன்றே டொலமைற், கிரபைற், இல்மனைட் போன்ற கனிய வளங்களுக்கும் பெறுமதி சேர்க்கப்பட்ட கைத்தொழில்களை ஆரம்பிப்பேன்.
இரத்தினக்கல் கைத்தொழிலுக்காகவே வேறாக்கப்பட்ட முதலீடுகளை விருத்திசெய்யும் வலயம் ஒன்றை இரத்தினபுரி மாவட்டத்தில் அமைப்பேன்.
இலங்கையில் பெறுமதிவாய்ந்த வளமாகவுள்ள இரத்தினக்கல் கைத்தொழிலினால் உச்சப் பயனைப் பெற்றுக்கொள்ளப் பரந்தளவிலான வேலைத்திட்டமொன்ற்ை நடைமுறைப் படுத்துவேன். இந்த வலயத்துள் இரத்தினக்கல் வெட்டுதல், பட்டைதீட்டுதல் மற்றும் வடிவமைத்தல் என்பவற்றுக்குத் தேவையான வசதிகள் வழங்கப்படுவதுடன் அந்தந்தத் துறையின் முன்னேற்றத்துக்குத் தேவையான பயிற்சி வழங்குவதற்கான நிலையமொன்றையும் தாபிப்பேன்.
தற்போது பல்கலைக்கழகங்களிலும் தொழினுட்பக் கல்லூரிகளிலும் நடாத்தப்பட்டு வரும் எந்திரவியல் மற்றும் முகாமைத்துவம் சம்பந்தமான சகல பாடநெறிகளையும் கடுகதி கைத்தொழில் அபிவிருத்திக்கான வசதிகளை வழங்கக்கூடிய வகையில் நவீனமயப்படுத்தி அபிவிருத்தி செய்வேன்.
மஹிந்தவின் . .
சிந்தனை ■。 w 55

Page 30
செய்வோம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே செய்யப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை பயனுள்ள வகையில் பயன்படுத்தி உள்ளுர்க் கைத்தொழிலை உயர்வடையச் செய்வதற்கு உத்தேசித்துள்ளேன்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்கள்
எமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை உருவாக்குதல் எனது எதிர்பார்ப்பாகும். அந்தத் தொழில்களைத் தேசிய மட்டத்தில் பரவலாக்குவதற்கும் சர்வதேச மட்டத்தில் விஸ்தரிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.
இதற்காகச் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி அதிகாரசபையொன்றை அமைப்பேன்.
இவ்வணுகுமுறையை அபிவிருத்தி செய்வதற்காக "லங்கா புத்திர" வங்கிச் சேவையொன்று ஆரம்பிக்கப்படும். இதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களுக்குத் தொழினுட்ப அபிவிருத்தி நிதியமொன்றையும் தாபிப்பதற்கு எண்ணியுள்ளேன்.
பல்கலைக்கழகங்கள் உட்பட்டதாக ஏனைய நிறுவனங்களினால் உற்பத்தித் துறைக்கு அறிமுகஞ்செய்யப்பட்டுள்ள "பேடன்ட்" அனுமதிப்பத்திரம் கொண்ட புதிய கண்டுபிடிப்புகளை உள்ளுர் தொழில் முயற்சியாளர்களுக்கு அறிமுகஞ்செய்ய நடவடிக்கை எடுப்பேன். ஒவ்வொரு வருடத்திலும் தெரிவுசெய்யப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக் கருத்திட்டங்களை சர்வதேச சந்தைக்குள் போட்டி போடக்கூடிய மட்டம்வரை விஸ்தர்ப்பதற்கு அரசாங்க உதவியாக 50 கோடி பாய்களை ஒதுக்குவேன்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி வங்கியின் "லங்கா
புத்திர" கருத்திட்டத்தினூடாக இத்தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட கடன் உதவிகளை வழங்குவேன்.
மஹிந்தவின் 影
56 சிந்தனை
 
 
 
 

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களுக்குத் தேவையான மூலப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது விசேட துறைகளுக்காக தீர்வையற்ற வகையில் இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குவேன்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களுக்குப் புதிய தொழினுட்பங்களைப் பெற்றுக்கொண்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக 05 வருட கால வரிச் சலுகை வழங்குவேன்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் மனித வளங்களை மேம்படுத்துவதில் அந்தப் பணியாளர்களுக்காக வழங்கப்படும் தொழிற்பயிற்சிப் பாடநெறிகள் சம்பந்தமாக அரசாங்கத்தின் உதவியையும் நிதி உதவியையும் பெற்றுக்கொடுப்பேன்.
ஆடைத் கைத்தொழில்
கோட்டா முறை முடிவடைவதன் காரணமாக சவால்களை நோக்கும் ஆடைக் கைத்தொழிலை நாம் பாதுகாப்போம். புதிய வெளிநாட்டுச் சந்தையைக் கண்டறிவதன் மூலம் நாட்டினுள்ளேயே சந்தையைப் பரவலாக்கி உற்பத்தித் திறனை 6TLDg அறிமுகத்திற்குச் சேர்ப்பதனூடாக எமது ஆடைகளை மேலும் உலகம் பூராவும் விளம்பரப்படுத்துதல் எனது நோக்கமாகும். இதற்காக மேலும் தேவையான வழிகாட்டல்களையும் சக்தியையும் வழங்குவேன். தற்போத காலாவதியாகியுள்ள அமெரிக்க சலுகை கோட்டை முறையை மீண்டும் பெற்றெடுக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆடை ஏற்றுமதியாளர்களின் சேர்க்கப்பட்ட பெறுமதியை அதிகரித்துக் கொள்வதற்காக புடைவை வகைகள் பதனிடும் மூன்று வலயங்கள் அமைக்கப்படும்.
ஏற்றுமதி அபிவிருத்தி வலயம் சார்ந்த பிரதேசங்களிலும் பிரதான ஆடைத் தயாரிப்புப் பிரதேசங்களில் சுகாதார மற்றும் வதிவிட வசதிகளைத் தனியார் துறையினரின் பங்களிப்புடன் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
மஹிந்ஜி 57
சிந்தனை

Page 31
கைத்தறிப் புடைவை வகைகள் உற்பத்தி அடங்கலாகக் கைத்தொழிற்றுறையை மீண்டும் வலுவூட்டுவதற்குத் தேவையான நிதி, தொழினுட்பம் மற்றும் சந்தைவாய்ப்பு என்பவற்றுக்கு உதவி வழங்குவேன்.
நிர்மாணிப்புகள்
இலங்கையின் நிர்மாணிப்புத் துறையில் தற்போது எதிர்கொண்டுள்ள முக்கியமான தடையாக உள்ளவை முதலீட்டுப் பற்றாக்குறை, அரச முதலீட்டின் மந்தகதி போன்றவையும் வெளிநாட்டு நிர்மாணக்
கம்பனிகளின் போட்டித் தன்மையுமாகும். இச்சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்காக உள்ளூர் நிர்மாணிப்புத் துறைக்கு 6(3.5 L அனுசரணை வழங்கும் வேலைத்திட்டமொன்று
நடைமுறைப்படுத்தப்படும். சகல அரசாங்க ஒப்பந்தங்களுக்கும் உள்ளுர்க் கம்பனிகளுக்கு முதலிடம் வழங்கப்படும்.
"லங்கா புத்திர" வங்கிச் சேவையினூடாக நிர்மாணிப்பு பாதுகாப்பு நிதியம் வலுவுட்டப்படும். கைத்தொழிலாளர்களுக்குத் தேவையான மூலதனத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நிப்மானிப்புகளுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதற்குமான விசேட கடன் திட்டமொன்று அறிமுகஞ் செய்யப்படும்.
நிர்மாணக் கைத்தொழில் பயிற்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் அதிகார சபையாக அமைக்கப்படும். மணல், கல் மற்றும் பலகை போன்ற நிர்மாணப் பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்திசெய்தவற்காக சுற்றாடலுக்கு இயைபான பொருட்களையும் தொழினுட்பங்கள்ையும் அறிமுகஞ்செய்ய ஊக்குவிக்கப்படும். கடல் மணலைச் சுத்தஞ்செய்து பாவித்தல், பலகைகளுக்காக வர்த்தகக் காட்டுச் செய்கை, மாற்றுக் கட்டிடப் பொருட்கள் அறிமுகஞ்செய்யப்படுதல் அவற்றுள் முக்கியமானதாகும். மரம் இறக்குமதி செய்வதற்காக தீர்வைவரிச் சலுகை வழங்கப்படும்.
முன்பொருத்தப்பட்ட கட்டிடங்கள், உயர்தரத்திலான பொருட்களைப் பாவித்தல், புதிய தொழினுட்ப உத்திகள் போன்ற நவீன மற்றும் பிரபல
மஹிந்தவின் 58 சிந்தனை »क्षं
 
 

நிர்மாணிப்பு சிற்ப முறைகளினூடாக நிர்மாணிப்புத் துறையை விரைவாக முன்கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பேன். தொழினுட்பம் மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவற்றை விருத்தி செய்வதற்காக வெளிக்கள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை அரசாங்கத் துறை உதவியுடன் நடைமுறைப்படுத்துவேன்.
உள்நாட்டு நிர்மாணிப்புத் துறைக்காக இயன்றவரை உள்ளூர் மூலப் பொருட்களையும் உற்பத்திகளையும் பாவிப்பதற்காக ஊக்குவிப்பு வழங்குவேன். அரசாங்கத் துறைக் கொள்வனவு ஒழுங்குவிதிகளில் நிலவும் குறைபாடுகள் காரணமாக தங்களால், நிர்மாணிக்கப்படும் கட்டமைப்புகளுக்காகப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும்போது நிர்மாணக் கம்பனிகள் முகங் கொடுக்கும் பிரச்சினைகளை நிவர்த்திசெய்ய உடனடி நடவடிக்கை எடுப்பேன்.
சுற்றுலாத் துறை
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலாத் துறையினால் பெற்றுக்கொள்ளக் கூடிய பங்களிப்பு பாரிய அளவிலானதாகும். எனினும் நாட்டின் இயற்கை மற்றும் மனித வளங்கள் திட்டமிடப்பட்டு இக்கைத்தொழிலுக்குப் பயன்படுத்தப்படுவதை இதுவரை காணக்கூடியதாக இல்லை. மக்கள் நடமாட்டத்திற்குப் பதிலாகச் சுற்றாடலுக்கு இயைபான நிலையான சுற்றுலாக் கைத்தொழிலொன்றை ஏற்படுத்துதல் எனது உத்தேசமாகும்.
இலங்கையில் சுற்றாடல் மற்றும் கலாசாரக் கவர்ச்சிகளில் உச்சப் பயனைப் பெற்றுக் கொள்வதற்காகத் தற்போதுள்ள திட்டங்களை “எதிர்வரும் 05 வருட காலத்துள் அதியுயர் தரத்திற்குக் கொண்டுவருவதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரிப்பேன்.
2010 ஆம் ஆண்டாகும்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 1,500,000 பேரை இலங்கைக்கு வருவிப்பதனை இலக்காகக் கொண்டு அதனை அடைவதற்காக வர்த்தகத் திட்டமொன்றைத் தயாரிப்பேன். இதற்காக ஏற்கனவே சுற்றுலாப் பயணிகள் வரும் நாடுகளுக்கு
மஹிந்தவின் 59

Page 32
மேலதிகமாக இந்தியா, சீனா, மத்திய கிழக்கு மற்றும் ரஷ்யா சுற்றுலாப் பயணிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மேலதிக சுற்றுலாப் UUJ60of b6ft தொகையை ஏற்றுக்கொள்வதற்குத் தேவையான ஹோட்டல் கைத்தொழில் உட்பட்டதாக எனைய உட்கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவையான அபிவிருத்தி மூலதன உதவிகளைப் பெற்றுக்கொடுப்பேன்.
சுற்றுலாத் துறைசார்ந்த முறையான k மதிப்பீடொன்றுக்கு உட்படுத்தப்படாத வழிகாட்டிகளுக்கு உரிய முறையில் பயிற்சிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அவர்களை சுற்றுலாச் சபையில் பதிவுசெய்தவதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.
ஹம்பாந்தோட்டை, கல்பிட்டி, அறுகம்பே உட்பட்டதாக சுற்றுலாக் கைத்தொழிலுக்காகக் கவர்ச்சியான பிரதேசங்களில் அக்கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன். பேரை வாவி சுற்று, ஒல்லாந்துக் கால்வாய்ப் பிரதேசங்களைச் சுற்றுலாக் கைத்தொழிலுக்கு முன்னுரிமை வழங்கக்கூடியதாக அபிவிருத்தி செய்வேன்.
பசுமை நிரம்பிய நாடொன்று
சுற்றாடல் பாதுகாப்புக்கான நிலையான செயல்முறை
புத்த பிரானின் சீடரான மிஹிந்து தேரர் இந்நாட்டிற்கு வருகைதந்தபோது அரசனாகிய தேவநம்பியதீசனுக்கு வழங்கிய உபதேசமானது, பேரரசே! நீங்கள் இந்த மண்ணின் நிர்வாகியல்ல; பொறுப்பாளியேயாவீர் என்பதாகும். இந்த நோக்கின்மீது நடவடிக்கை எடுப்பின் இன்று எமது உலகிலுள்ள வளங்களின் குறைபாடு மற்றும் சுற்றாடற் பாதிப்புகள், அதன் பெறுபேறாக நாம் முகஞ்கொடுக்கும் வரட்சி, வெள்ளப்பெருக்கு மற்றும் இயற்கையான ஆபத்துகளுக்கும் முகஞ்கொடுக்காமல் இருந்திருக்க முடியும்.
மஹிந்தவின் 60 சிந்தனை
 
 

எனது எதிர்பார்ப்பானது இந்த நாட்டு மண்மீது மிருகங்கள் மற்றும் மரம், (ଗଏଁly, கொடிகளுடன் இணைந்த நிலையான அபிவிருத்தியொன்றை ஏற்படுத்துவதாகும். இதன்மூலம் எமது எதிர்காலச் சந்ததியினரும் பசுமையான உரிமைகளை அனுபவிக்க இடமளிப்போம்.
எமது ஓர் உலக உரிமையாகவுள்ளது உயிரியல் பல்வகைப்படுத்தலாகும். இதனை வெளிநாட்டவர்கள் கைப்பற்றிக் கொள்ள இடமளிக்கமாட்டேன். எமது கடல் வளங்கள், நீர், நீர்வாழ் உயிரினங்கள், வன மற்றும் இயற்கை வளங்களின் உரிமையை அரசாங்க உரிமையாகப் பேணுவேன். மலைநாடு, மேட்டுநிலங்கள் மற்றும் நீர்ப் பாதுகாப்புப் பிரதேசங்களில் எமக்கே உரிமையான தாவரங்களைக் கொண்ட காடு வளர்ப்பு வேலைத்திட்டமொன்றை "ஹரித பியல" எனும் பெயரில் செயற்படுத்துவேன்.
மிருகவதையானது மனிதத் தன்மைக்குச் செய்யப்படும் கெடுதல் ஒன்றாகவே நான் கருதுவேன். ஆகையால் மிருகவதையைத் தடுப்பதற்காக நிலவுகின்ற காலங்கடந்த சட்டதிட்டங்களை விரைவில் திருத்தஞ்செய்யப் பிரேரிப்பேன்.
நாட்டின் மரத் தேவைகளுக்காக வர்த்தக மரச் செய்கையை உயர்வடையச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பேன்.
நகரத்திலுள்ள கழிவுப் பொருள் அகற்றும் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக உடனடி வேலைத்திட்டமொன்று ஆரம்பிப்பேன். அவற்றைக் கொண்டு கொம்போஸ்ட் பசளை தயாரிப்பதற்காகப் பிரதேச ரீதியில் கழிவுப் பொருள் முகாமைத்துவ அமைப்பை எதிர்வரும் 06 வருட காலத்துள் நிறுவ நடவடிக்கை எடுப்பேன்.
பொலித்தின் பாவனையை படிப்படியாக ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் அதற்குப் பதிலாக மாற்று முறையொன்று அறிமுகஞ்செய்யப்படும். சுற்றாடல் அபிவிருத்தி சம்பந்தமான ծ Ց56Ն) அரசாங்க நிறுவனங்களையும் சுற்றாடல் அமைச்சின் கீழ் கொண்டுவருவேன்.
மஹிந்தவின் --- Y சீந்தனை 3. 61

Page 33
எரிபொடுள் கொள்கை
அரசியல் மற்றும் ஏனைய நிர்ப்பந்தங்களினால் எமது சக்தி வளத் துறை சின்னாபின்னப் பட்டுள்ளது. உலகச் சந்தையில் அதிகரித்துவரும் எரிபொருள் விலையின் தாக்கத்தினால் எமது வறிய மக்களையும் நாட்டின் பொருளாதாரத்தையும் மீட்டுக்கொள்வதும் சக்தி வளங்கள் ഖ്യpfങ്ങബ நாட்டின் தேவைகளுக்கேற்ப உயர்வடையச்செய்வதும் எனது பிரதான குறிக்கோள்களில் ஒன்றாகும். நாட்டின் சக்தி வளங்களின் பாதுகாப்புக்கும் சக்தி மற்றும் மின்வலுவின் பராமரிப்புக்கும் உயர் முக்கியத்துவம் அளிக்கப்படும். மக்களின் சமூகப் பிரச்சினைகள் சுற்றாடல் பாதிப்பு போன்ற சகலவற்றையும் கவனத்திற் கொண்டு நிலக்கரி உள்பட அனல்மின் உற்பத்தி நிலையமும் நீர்மின்சார உற்பத்தி நிலையமும் மின்சாரசபையின் உற்பத்தித் திட்டத்தின் பிரகாரம் விரைவில் நிர்மாணிக்கப்படும்.
மொறகொல்ல, உமாஒய, கின்கங்கை, புறோட்லன்ட்ஸ் ஆகிய நீர்மின்சாரத் திட்டங்கள் நான்கும் எதிர்வரும் 06 வருடங்களுள் பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுப்பேன்.
நாட்டின் உலர் வலயத்தை அடிப்படையாகக் கொண்டு மர எரிபொருள்களைக் கிராமியக் கைத்தொழில்களிலொன்றாக ஆரம்பிப்பேன். ஏற்கனவே வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ள வளிச்சக்தி, சூரிய சக்தி ஆகியவற்றினால் மின்கம்பிகள் கொண்டுசெல்ல முடியாதுள்ள மிகவும் கஷ்டமான கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை "எல்லோருக்கும் மின்சாரம்" எனும் கருத்திட்டத்தின் கீழ் ஆரம்பிப்பேன்.
மின்சாரசபையை தனியார்மயப்படுத்த மாட்டேன். பணியாளர்களின் செயற்திறனை உயர்வடையச் செய்வதற்காக தொழிற்சங்கங்கள் உட்பட்டதாக சகல தரப்பினர்களினதும் இணக்கப்பாட்டுடன் புதிய முகாமைத்துவ ஒழுங்கு முறையொன்றை அறிமுகம் செய்வேன்.
மஹிந்தவின்
 
 
 
 

நான் எண்ைணெய்க் கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்த மாட்டேன். பணியாளரின் செயற்திறனை உயர்த்துவதற்காக புதிய முகாமைத்துவ முறையொன்றை அறிமுகஞ்செய்வேன். புதிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் களஞ்சியத் தொகுதியொன்று ஹம்பாந்தோட்டையில் நிறுவுவேன்.
இலங்கையில் எண்ணெய் வளங்கள் பற்றி எனது நிர்வாக காலத்திலேயே ஆராய்ச்சி செய்து அதன் பிரதிபலனை எமது மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பேன்.
நிலையான போக்குவரத்து அமைப்பு
எதிர்வரும் 06 வருட காலத்துள் இந்த நாட்டில் மக்களுக்கு சிறந்ததொரு போக்குவரத்து சேவையை வழங்குவதே எனது குறிக்கோளாகும். இதற்காக போக்குவரத்து பணியாளர்களினதும், பிரயாணிகளினதும், போக்குவரத்து தொழில் செய்வோர்களினதும், பஸ் உரிமையாளர்கள் உட்படப் போக்குவரத்துச் சேவை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளினதும் சமுகமளிப்புடன் போக்குவரத்து சம்பந்தமாக நிலையான தேசிய கொள்கையொன்றைக் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
அங்கு, பொதுப் போக்குவரத்துக்கு முதலிடம் பெற்றுக்கொடுப்பதற்கும், சிறிய வாகனங்கள் மற்றும் பெரிய வாகனங்கள் போன்றே பிரயாணிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு வீதிப்போக்குவரத்திலிருந்து புகையிரதப் போக்குவரத்துக்குக் கூடிய கவனம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
துரப் பயணங்களுக்கான புகையிரதக் கட்டணங்களை 15% இனால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
புகையிரத அபிவிருத்தித் தசாப்தமொன்றை ஏற்படுத்துவேன். அந்தத் தசாப்தத்தினுள் மொத்த உள்ளூர் உற்பத்தியின் அரைவீதத்திற்குக் குறையாத வருடாந்த மூலதனமொன்றை புகையிரத அபிவிருத்திக்காக
8. и மஹிந்தவின் 63

Page 34
வழங்குவேன். களனிப் பள்ளத்தாக்கு புகையிரதப் பாதையை இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய ஊடாக ஹம்பாந்தோட்டை வரையும் கரையோரப் புகையிரப் பாதையைக் கதிர்காமம் வரையிலும் நீடிப்பதன் மூலம் அபிவிருத்தி செய்வேன். குருனாகல்- தம்புள்ள-ஹபரண புதிய புகையிரதப் பாதையொன்றும் அமைப்பேன். அத்துடன் கண்டி-கம்பளைகடுகண்ணாவைப் புகையிரத முக்கோணமும் உட்பட்டதான மலைநாட்டுப் புகையிரதப் பாதையையும் மேம்படுத்துவேன்.
கொழும்பு-காலி, கொழும்பு-சிலாபம் மற்றும் கொழும்பு-அநுராதபுரம் புகையிரதப் பாதையை மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் சென்றடையக்கூடியதாக இரட்டைப் பாதையாக மாற்றியமைப்பேன். கொழும்பு-கட்டுநாயக்காவுக்கிடையே விமான நிலையத்தை ஒன்றிணைக்கும் புகையிரதச் சேவையொன்று அறிமுகஞ்செய்யப்படுவதுடன் மிஹிந்தலை வரை புகையிரதச் சேவையையும் மேம்படுத்துவேன்.
யாழ்ப்பான தீபகற்பம் வரை வடக்கு புகையிரதப் பாதையையும் மன்னப் புகையிரதப் பாதையையும் மீளமைப்பதற்கு நான் உத்தேசித்துள்ளேன். மட்டக்களப்புகதிர்காமத்தை ஒன்றிணைக்கும் புகையிரதப் பாதையொன்றை அமைப்பதற்குரிய சாத்தியங்களைக் கண்டறிவேன்.
மிகவும் கஷ்டப்பட்டு இ.போ.ச.வை மீண்டும் அமைப்பதற்கு எம்மால் முடிந்துள்ளது. 03 வருடத்துள் 5000 பஸ் வணடிகள் புதிதாக வழங்கி இ.போ.ச.வை வலுவூட்டுவேன்.
தனியார் பஸ் சேவை முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டுமென்பது எனது நம்பிக்கை. இங்கு ஆரம்ப நடவடிக்கையாக தனிபப் பல் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுடன் புதிய பேச்சுவர்த்தையொன்றை உடனடியாக ஆரம்பிப்பேன்.
பஸ்-புகையிரதம் ஒன்றிணைந்த சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவை மீளமைப்பதனூடாக பஸ் சேவை நேரஅட்டவணை, பிரயாணிகள் பாதுகாப்பு, கிராமிய சேவை, பாடசாலைச் சேவை மற்றும் இரவுநேரச் சேவை என்பனவற்றை ஒழுங்குமுறைப்படுத்துவேன். 烈
64 சிந்தனை
 
 

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள கொழும்பு-கட்டுநாயக்கா, கொழும்புமாத்தறை அதிவேக பாதைகளையும் வெளிச் சுற்றுவட்டப் பாதையையும் விரைவில் பூர்த்திசெய்வேன். இதுவரையில் திட்டமிடப்பட்டுள்ள கொழும்பு-யாழ்ப்பாணம் உட்பட்டதாக ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள ஏனைய அதிவேக பாதைக் கருத்திட்டங்கள் கூடிய விரைவில் ஆரம்பிக்கப்படும். புதிய அதிவேக பாதைக் கருத்திட்டங்கள் கவனத்திற் கொள்ளப்படுவதானது புகையிரதச் சேவையின் ஒப்புரவான நன்மையையும் கவனத்திற் கொண்டாகும்.
கொழும்பு வீதி நெரிசல்களைக் குறைப்பதற்கும் புகையிரதக் குறுக்குப் பாதை விபத்துகளைக் குறைப்பதற்கும் 20 மேம்பாலங்களை 03 வருடத்துள் abotsfielhi.
ஒல்லாந்தர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டவைகளும் தற்போது நிலவுகின்றவைகளுமான óFö6l) வாய்க்கால் வழிகளையும் போக்குவரத்துக்காக பயன்படுத்தல் சம்பந்தமாகவும் நகரப் பிரதேசங்களில் சைக்கிளோட்டத்திற்கான பாதைகளையும் ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.
பொதுப் போக்குவரத்துச் சேவைகளாகிய புகைபிரதம், பஸ், முச்சக்கரவண்டி என்பனவற்றிற்குச் சலுகை விலையில் எரிபொருளை வழங்குவதற்குத் தேவையான திட்டமொன்றைச் சகலரினதும் இணக்கப்பாட்டுடன் தயாரிப்பேன். முச்சக்கரவண்டி தேசிய போக்குவரத்தில் ஆற்றும் சேவையைப் பாராட்டுவதுடன் அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை நிவர்த்திசெய்வதற்கு உடனடி வேலைத்திட்டமொன்றையும் பெற்றுக் கொடுப்பேன்.
மஹிந்தவின்
ஹி சிந்தனை - 65

Page 35
நீலவானத்தையும் நீலப்பெடுங் கடலையும் வெற்றிகொள்வோம் கடல் மற்றும் விமானச் சேவைகள்
நமது நாட்டை மீண்டும் ஆசியாவின் பட்டுப் பாதையின் மாணிக்கமாக மாற்றுவதற்கு உறுதி கொண்டுள்ளேன். நமது நாட்டின் சிறப்பான பூகோள அமைப்பைப் பயன்படுத்தி கிழக்கையும் மேற்கையும் ஒன்றிணைக்கும் கடல், வான், வர்த்தக மற்றும் வியாபார கேந்திரத் தளமாக முன்னேற்றுவேன்.
கொழும்பு தெற்கு துறைமுகம் மற்றும் ஒலுவில் துறைமுக நிப்மானிப்பு வேலைகளை முடிவுறுத்துவேன். காலி மற்றும் திருகோணமலைத் துறைமுகங்களையும் விருத்திசெய்வேன். திருகோணமலைத் துறைமுகத்தைக் கேந்திரமாகக் கொண்ட தொழினுட்ப மற்றும் சுற்றுலா வலயமொன்றை அமைப்பதற்கும் உத்தேசித்துள்ளேன். காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறைத் துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்வேன்.
ஹம்பாந்தோட்டையை முழுமையான இடைநிலைத் துறைமுகமொன்றாக நிப்மானிப்பேன். சர்வதேசக் கப்பல்களுக்குத் தேவையான எரிபொருள், தயாரிக்கப்பட்ட உணவு, மருந்து மற்றும் ஏனைய சேவைகளை வழங்குவதற்காக ஹம்பாந்தோட்டையிலிருந்து எம்பிலிப்பிட்டிய வரையுள்ள பிரதேசங்களைக் காப்பளிக்கும் வகையில் பொருளாதார வலயமொன்றை அமைப்பேன்.
இலங்கைக் கொடியின் கீழ்க் கப்பல்களைப் பதிவுசெய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன். கடற்றொழில் செய்வோருக்கு கடற்பயிற்சிப் கல்லூரியொன்றை அமைப்பேன். வர்த்தகக் கப்பற்றுறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க ஒழுங்குமுறையான வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பேன்.
இரண்டாவது சர்வதேச விமானநிலையமொன்றை அமைப்பதற்கும் திட்டமிடுவேன். கொக்கல, ஹிங்குரக்கொட, சீகிரிய, அநுராதபுர ஆகிய உள்ளூர் விமானநிலையங்களை அபிவிருத்தி செய்வேன்.
மஹிந்தவின் 66 -- சிந்தனை
 
 
 

விஞ்ஞானடும் தொழினுட்படும்
விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பத் துறையின் குறைந்த அபிவிருத்தியே எமது நாடு பொருளாதார ரீதியில் பின்தங்கியமைக்கான காரணமாகும். பிந்திய காலப்பகுதி பூராவும் மேம்படுத்தப்பட்டதொழினுட்ப உற்பத்திகளை இறக்குமதிசெய்து நாம் பழக்கப்பட்டுள்ளோம். உள்ளூர் ரீதியில் தொழினுட்ப மேம்பாட்டுக்காக வழங்கப்பட்ட முன்னுரிமை சம்பந்தமாக எமக்குத் திருப்தியடைய முடியாது. எதிர்வரும் 06 வருடத்துள் விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பத் துறையில் தனித்துவமான அபிவிருத்தியினை அடைவதே எனது எதிர்பார்ப்பாகும்.
விஞ்ஞானக் கல்வியை கிராமம்-நகரம், வறியோர்-செல்வந்தர் ஆகிய எல்லைகளைத் தகள்த்து எல்லோருக்கும் &LDLDI&bå கிடைக்கக்கூடியதாக என்னை நான் அர்ப்பணிப்பேன்.
மொத்த உள்ளூர் உற்பத்தியில் குறைந்தளவு ஒரு வீதத்தையாவது விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பத் துறைகளின் புதிய கண்டுபிடிப்புகளுக்காக ஒதுக்குவேன். அந்தப் புதிய கண்டுபிடிப்புத் தொழில் முயற்சியாளர்களுக்கும் நுகள்வோருக்கும் ஒரேவிதமாகப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பேன்.
விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பத்தைக் கிராமத்துக்குக் கொண்டுசெல்வதற்கு "விதாதா" மற்றும் "நெனசல" வேலைத்திட்டத்தை வலுவுடன் முன்னெடுத்துச் செல்வேன்.
தகவல் தொழினுட்பம்
ஆசியாவுக்கு அறிவை வழங்கிய கேந்திர ஸ்தானமாகவிருந்த சென்றகால உரிமைகளையும் உயர்தரத்தையும் திறன்களையும் கொண்ட மனித வளங்களினால் நிறைந்த தற்கால உரிமையுமுள்ள இலங்கை நவீன உலகிலும் விரைவில் தொழினுட்ப அபிவிருத்தியை அடைவதற்குத் தேவையான ஆரம்ப காரணிகளைக் கொண்டுள்ளதென்பது எனது நம்பிக்கையாகும். ஆகையால் இந்நாட்டில் தகவல்கள் மற்றும் தொடர்பாடல் துறையில் அவ்வாறான
மஹிந்தவின் 67
சிந்தனை

Page 36
- செய்வோம்
வெற்றியடையச்
விரைவான அபிவிருத்தியொன்றுக்காகத் தேவைப்படும் கொள்கை ரீதியானவைகளும் சட்டபூர்வமானவைகளுமான மூல உபாயங்களையும் மற்றும் நிறுவன ரீதியான பின்னணியையும் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
"நெனசல" வேலைத்திட்டத்தின் கீழ் சகல கிரமங்களுக்கும் கணனி மற்றும் இணையத் தள வசதிகளை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
இலத்திரனியல் வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவேன்.
மின்தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழினுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கையில் பொதுநிர்வாகக் கட்டமைப்பினூடாக வழங்கப்படும் சேவைகளை வினைத்திறனான முறையிலும் விரைவாகவும் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவேன்.
மின் தொலைத் தொடர்புச் சேவைகளையும் தகவல் தொடர்பாடல் சேவைகளையும் நாடுபூராவும் விளம்பரப்படுத்தத் தேவையான நாடளாவிய அடிப்படை வசதிகள் வலைப்பின்னல் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
சில காலமாகக் குறைபாடொன்றாகவிருந்த புள்ளிவிவர தரவுகள் அமைப்பு, அவசர ஆபத்துச்சேவை அமைப்பு மற்றும் பூகோள மாறுதல்கள் பற்றிய தகவல்கள் தொகுதி என்பனவற்றைக் கட்டியெழுப்ப உடனடியாகச் செயற்படுவேன்.
எல்லாக் கிராமங்களுக்கும் போதியளவு தொலைபேசி வசதிகள் அமைக்கப்படுவதுடன் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கிராமியத் தொலைத்தொடப்படல் நிலையங்கள் அமைத்து அவற்றினூடாக இணையத் தள வசதிகள் உட்பட்டதாக ஏனைய பல்மொழித் தொடர்பாடல் வசதிகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அபிவிருத்தியடைந்த ஆசிய நாடுகளுடன் இணைந்து வன்பொருள் (Hardware) மற்றும் மென்பொருள் (Software) உற்பத்திசெய்யும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் முயற்சிகளைக் கிராமிய
மட்டத்திற்குக் கொண்டுசெல்வேன். R
மஹிந்தவின் 68 சிந்தனை
 
 
 

தற்போதுள்ள தகவல் தொழினுட்ப வசதிகளை 03 வருடத்துள் 20% தொடக்கம் 60% 6ᎧᎫ60Ꭷj உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்.
மின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழினுட்பத் துறைகளுக்குரிய பயிற்றப்பட்டோர்களுக்கு சர்வதேச ரீதியில் தொழில்வாய்ப்புகள் நிலவுகின்றமையினால் இலங்கையிலுள்ள இளைஞர், யுவதிகளை அவற்றுக்காகப் பயிற்றுவிக்கத் தேவையான மத்திய நிலையங்கள் புதிதாக ஆரம்பிக்கப்படும்.
இலங்கை ஆசிய தகவல் தொலைத்தொடர்பு இணையங்களை வலய மத்திய நிலையமொன்றாக மேம்படுத்துவதற்கும் எண்ணியுள்ளேன்.
சுகாதார வளங்களைப் பாதுகாப்போம்
"ஆரோக்கிய நிழல்' வேலைத்திட்டம்
சுதந்திரமான சுகாதாரச் சேவையைப் பாதுகாப்பது எனது பொறுப்பாகவுள்ளதுடன் உயர்வு-தாழ்வு பேதங்களின்றிச் சகலருக்கும் சிறந்த சுகாதாரச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள இருக்கும் உரிமையை உறுதிப்படுத்துவது எனது கடமையாகும்.
வரவுசெலவுத் திட்டத்தினால் செய்யப்படும் ஏற்பாடுகள் உடனடியாக அமுலாக்கப்படும் விதத்தில் அதிகரிக்கப்படுவதனூடாக அரசாங்கத் துறை சுகாதாரச் சேவைகளை போதுமான அளவிலும் தரமுள்ளதாகவும் விருத்திசெய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
நோய்களைத் தடுக்கும் வேலைத்திட்டத்திற்கு நோய் நிவாரண வேலைத்திட்டத்திற்குச் சமமான முக்கியத்துவம் வழங்கப்படுவதுடன், அதன் ஆரம்ப கட்டமாக நோய்களைத் தடுப்பதற்கான நிறுவன அமைப்பை ஒரே நிறுவனத்துக்குள் ஒன்றிணைத்து வேறொரு செலவுத் தலைப்பின் கீழ் சுகாதார அமைச்சில் நிறுவுவேன்.
ந்கவின் மஹிந்தவின் 69
சிந்தனை

Page 37
போலியோ, மலேரியா, டெங்கு மற்றும் விசர்நாய்க்கடி நோய் என்பனவற்றை முழுமையாக அகற்றுவதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவேன்.
புற்றுநோய்த் தடுப்புக்காகத் தற்போது நடைமுறையிலுள்ள அரசாங்கத் துறை வேலைத்திட்டங்களை மிகவும் வலுவுள்ளதாக்குவேன்.
எய்ட்ஸ் நோயானது எதிர்காலத்தில் நாம் எதிர்நோக்கவுள்ள பயங்கரமான ஆபத்தொன்றாக இனங் காணப்பட்டு, அந்த நோயிலிருந்து எமது நாட்டின் இளம் சந்ததியினரையும் நாட்டையும் பாதுகாத்துக் கொள்வதற்காக உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்.
இலங்கையின் தற்போதைய வைத்தியர்/நோயாளர் விகிதாசாரம் எந்த வகையிலும் போதுமானதாக இல்லையென்பது எனது எண்ணமாகும். விசேடமாகக் கிராமியச் சுகாதாரத் தேவைகளை திருப்திப்படுத்தக் கூடியவகையில் கூடுதலான வைத்தியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் வசதிகளை விஸ்தரிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.
சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள சேனக பிபிலை மருந்தாக்கல் கொள்கையை மீண்டும் செயற்படுத்துவேன். அரசாங்க மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் மீண்டும் புத்துயிர் அளிக்கப்படுவதனூடாக இலங்கையில் கூடுதலாக பாவனையிலுள்ள மருந்து வகைகளை உள்ளுரிலேயே உற்பத்திசெய்துகொள்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
தற்போது நாட்டிலுள்ள நிபுணத்துவ வைத்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குப் புலமைப்பரிசில்களை வழங்க நடவடிக்கை எடுப்பேன்.
வைத்தியர்களுக்குத் தேவைான தங்குமிட வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் வைத்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.
70
சிந்தனை
 
 

சுதேச வைத்தியம்
உலகிற்கே பெருமையுடன் சமர்ப்பிக்கப்படக் கூடிய சிறந்த உள்நாட்டு வைத்திய முறையொன்று எம்மிடம் உள்ளது. இந்த அறிவைப் பாதுகாப்பதும் உலகத்துக்குப் பகிர்ந்தளிப்பதும் சரித்திர ரீதியாக எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பாக நான் கருதுகின்றேன்.
சிங்கள வைத்தியம், ஆயுர்வேதம், பூனானி வைத்திய முறைகள், ஹோமியோபதி மற்றும் சீன அக்கிபங்வர் சிகிச்சை போன்ற சகல வைத்திய முறைகளுக்கும் தேவையான உரிய கெளரவத்தையும் உரிய இடத்தைம் பெற்றுக்கொடுப்பேன்.
தேசிய சுகாதாரக் கொள்கையினுள் ஆயுர்வேதத்தின் விடயப் பொறுப்பு சம்பந்தமாக ஜனாதிபதி Qở t]]6u)600ÎuÎl6öI விதப்புரைககள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் பிரேரிக்கப்பட்ட புதிய ஆயுர்வேதச் சட்டம் மற்றும் ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் சட்டமூலமொன்று விரைவில் சட்டமாக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
உள்நாட்டு வைத்தியர்களுக்குத் தேவையான பற்றாக்குறையாகவுள்ள மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு உரிய வசதிகளை ஏற்பாடு செய்வேன்.
dog.) தனியார் ஆயுர்வேத வைத்தியசாலைகள் மற்றும் வெளிநாட்டவருக்கான ஆயுர்வேத சேவைகள் வழங்கும் நிறுவனம் என்பனவற்றை ஆயுர்வேதத் திணைக்களத்தில் பதிவு செய்வதற்குத் தேவையான சட்டரீதியான ஏற்பாடுகளைக் கவனிப்பேன்.
மஹிந்தவின் 71
சிந்தனை

Page 38
அறிவையும் ஞானத்தையும் ஊட்டுதல் தேசியக் கல்வி வேலைத்திட்டம் இலவச கல்விக்காக எமது பிள்ளைகளுக்குள்ள உரிமையை எந்த வகையிலும் இல்லாதொழிக்கமாட்டேன். மாணவர்களின் மனதை வெல்லும் பாடவிதானமொன்றை தயாரித்து மொழியை சிறந்த முறையில் கற்றறிந்த ஆசிரியர் குழாமொன்றை ஏற்படுத்திச் சகல சிங்களப் பிள்ளைகளுக்குத் தமிழ் மொழியையும் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட சகல பிள்ளைகளுக்கும் சிங்கள மொழியையும் கற்பிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். இதன் பின்னர் எந்தவொரு தினத்திலும் எமது பிள்ளைகளுக்கு பசியோடு எழுத்தைக் கற்க நான் இடமளிக்கமாட்டேன். சகல பாடசாலைச் சிறுவர்களுக்கும் பகலுவுைக்காக ஒருநேரச் சோறு வழங்குவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். நாடு பூராவுமுள்ள சகல மகா வித்தியாலயங்கள் மற்றும் மத்திய மகா வித்தியாலயங்க ளுக்குத் தேவையான உயர்தர விஞ்ஞானகூடம், சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் கற்பிக்கும் அமைப்பைக் கொண்ட மொழி நிலையம், கணனி நிலையம், நூலகம், விளையாட்டகம் உட்பட்டதாகச் சகல வசதிகளையும் பெற்றுக்கொண்டு பூரணமான பாடசாலைகளாக அவற்றை உயர்நிலைக்குக் கொண்டு வருவேன். இதனிடையே பிரதேசச் செயலாளப் பிரிவொன்றுக்கு ஒன்று வீதம் TTTTTCLLLLLTLLLLSS S 000 LL SYTccTT TLSCT LL CTccTT மேம்படுத்துவேன். "விஸ்வ கம்மானய" கோட்பாட்டினால் பாரதூர இடர்களை எதிர்கொண்டுள்ள எமது சந்ததியினரை அதிலிருந்து காக்க ஆங்கில மொழியை அவர்களுக்குக் கற்பிப்பது தேசியத் தேவையாகும். எனவே, ஆங்கில மொழியறிவை வளர்க்க ஆகக்கூடிய இடத்தை அளிப்பேன். இலங்கையின் சகல குழந்தைகளும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக்க எதிர்வரும் பத்தாண்டுக்குள் அணிவகுக்கப்படும். முழுமையான தமிழ் மொழி மூலமான இரண்டு பாடசாலைகள் கொழும்புக்கும் முஸ்லிம் ஆண்கள் பாடசாலையென்று கண்டிக்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
: :. . . . . . ... மஹிந்தவின் 72 '...' ... | 44
 
 
 

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தூரப் பிரதேசங்களிலிருந்து நகரப் பாடசாலைகளுக்கு வரும் பிள்ளைகள் முகங்கொடுக்கும் கஷ்டங்களை நான் அறிந்துள்ளேன். சமுர்த்தி வேலைத்திட்டங்களுக்குட்படும் அவ்வாறான பிள்ளைகளுக்காக "மாணவ நிழல்" கருத்திட்டத்தின் கீழ் இலவசமாக தங்குமிட வசதிகள் பெற்றுக் கொடுப்பேன். நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி போன்ற அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை நாட்டின் சகல கிராமியப் பாடசாலைகளுக்கும் பெற்றுக்கெடுக்க நடவடிக்கை எடுப்பேன். பாடசாலை பஸ் சேவையை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு பாடசாலைச் சிறுவர்களை இலக்காகக் கொண்ட புகையிரதச் சேவையொன்றை தாபிப்பதற்கு புகையிரத, பஸ் ஒன்றிணைந்த பாடசாலைப் போக்குவரத்துச் சேவையை அறிமுகஞ்செய்ய நடவடிக்கை எடுப்பேன். எந்தவொரு தீடீர் அனர்த்தங்களின்போதும் பாதிக்கப்படுவதும் பலியாவதும் சிறுவர்களேயாவர். ஆகையால் தேசிய ஆபத்துகள் முகாமைத்துவச் சபையின் ஒத்துழைப்புடன் வாகன விபத்து, தீப்பற்றுதல், வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் சுனாமி போன்ற தீடீர் ஆபத்துகளுக்கு முகங்கொடுத்தல் சம்பந்தமாக அறிவு மற்றும் செய்முறைப் பயிற்சி பற்றிய அறிவை மாணவர்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்றை சகல பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்துவேன். தேசிய விழாக்கள் இடம்பெறும் மாதங்களில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடாத்தப் படுவதனால் பிள்ளைகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் மற்றும் பரீட்சை நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கும் ஏற்படும் சிரமங்களைத் தவிர்ப்பதற்காக அப்பரீட்சைகளை வேறோர் மாதத்தில் நடாத்துவதற்குத் தேவையான
நடவடிக்கை எடுப்பேன். பல தசாப்தங்களினூடாக உருவாகியுள்ள அரசியல் அடிப்படைமீது கல்வித் துறை பிணக்குகளை முடிவுறுத்தும் ஒரு படிநிலையாக கல்வி நிருவாக சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும்போது தகைமைகளைப் பூர்த்திசெய்துள்ள ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படல் அத்தியாவசியமாக்கப்படும்.
மஹிந்தவின் ష్రన్లో
சிந்தனை 線
73

Page 39
ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு சமூக, தொழில் ரீதியான கெளரவத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். ஆசிரியர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் உயர்கல்வி பெறும் சந்தர்ப்பங்களை வழங்குதல் தொடர்பாகப் புலமைப்பரிசில் முறையொன்றை அறிமுகஞ் செய்வேன். இளம் பாடசாலை அதிபர்களுக்குத் தேவையான உள்நாட்டு, வெளிநாட்டு பயிற்சிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். 1961 ஆம் ஆண்டு பாடசாலைகள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்ட சட்டத்தின் ஏற்பாடுகளை அவ்வாறே பேணுவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
"எல்லோருக்கும் பல்கலைக்கழகம்" வேலைத்திட்டம் உயர்தரம் சித்தியடைந்துள்ள பெருந்தொகையானோர்களில் சர்வகலாசாலை அனுமதி கிடைப்பது மிகச் சிலருக்கேயாகும். எவ்வாறாயினும் உயர்தரம் சித்தியடையும் சகல இளைஞர், யுவதிகளுக்கும் உயர்கல்வி பெறும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டியுள்ளதுடன் நான் அச்சவாலை ஏற்றுக்கொள்கிறேன். அதன் முதல் படிநிலையாகப் புதிய பல்கலைக்கழகப் பாடநெறி ஆரம்பிக்கப்படுதல் மற்றும் பல்கலைக்கழக வசதிகள் பரவலாக்கப்படுதல் என்பனவற்றினூடாகப் பல்கலைக் கழகங்களுக்கு உள்ளிப்புச் செய்யப்படும் மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். திறந்த பல்கலைக்கழகக் கல்லூரிக் கல்வியை ஒழுங்குமுறைப் படுத்திப் பரவலாக்குவதற்குத் தேவையான வசதிகளையும் ஒதுக்கீடுகளையும் வழங்குவேன். 1a
தொடர்பாடல் தொழினுட்பங்களைப் பயன்படுத்தித் தொலை வேலைத்திட்ட முறையொன்றை அறிமுகஞ்செய்ய நடவடிக்கை எடுப்பேன். கொழும்புக்கு வெளியில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களைப் பிரதேசப் பல்கலைக்கழக கிராமமாக அபிவிருத்திசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதனூடாகப் பல்கலைக்கழகச் சமூகத்தின் தேவைகள் பூரணப்படுத்தப்படக்கூடியவாறு அதனைப் சுற்றியுள்ள பிரதேசங்கள் அபிவிருத்திசெய்யப்படும்.
மஹிந்தவின்
74 சிந்தனை
 
 
 
 
 

பல்கலைக்கழக மாணவர்களின் மாதாந்த மகாபெல புலமைப்பரிசில் கொடுப்பனவு மற்றும் மாவைப்களுக்கான உதவியை ரூபா 500 இனால் அதிகரிப்பேன். சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பல்கலைக்கழகக் கல்வி பெறும்வேளையிலேயே அரசாங்க மற்றும் தனியார் துறைகளிலுள்ள நிறுவனங்களில் செயன்முறைப் பயிற்சியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன். சகல பல்கலைக்கழக மாவை, மாணவிகளுக்கும் தங்குமிட வசதிகள் வழங்கக்கூடிய வகையில் புதிய வேலைத்திட்டமென்றை நான் செயற்படுத்துவேன். விசேடமான திறமையுள்ள பல்கலைக்கழக மாணவியர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்கப்படும் புலமைப்பரிசில்களின் எண்ணிக்கையை இருமடங்காக்குவேன். சகல பல்கலைக்கழக மாணவர்களும் தங்களது விருப்பப்படி சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பதற்குரிய உரிமையை உறுதிப்படுத்துவதுடன் சிங்களம், தமிழ், ஆங்கிலம் மற்றும் பிரதான வெளிநாட்டு மொழிகளைக் கற்பதற்குத் தேவையான சகல வசதிகளையும் கொண்ட மொழிக் கற்கை நிலையத்தைச் சகல பல்கலைக் கழகங்களிலும் அமைப்பேன். பல்கலைக்கழக போதனாசிரியப் குழுவின் உறுப்பினர்கள் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் நிச்சயிக்கப்பட்ட வேலைத்திட்டமொன்றின் கீழ்ச் சகல பல்கலைக்கழகப் போதனாசிரியர்களுக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டப்பின் படிப்புப்
பாடநெறிப் பின்பற்றுவதற்கு சந்தர்ப்பமளித்தல் எனது குறிக்கோளாகும். பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களில் நிகழ்த்தப்படும் புதிய ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும் தேசிய அபிவிருத்திக்கு வழங்கப்படும் பங்களிப்புகளுக்கான பரிசில்கள் மற்றும் கெளரவம் வழங்கும் முறையொன்று அறிமுகம் செய்யப்படும். அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் இணைந்த நிறுவனங்களில் ஆராய்ச்சிக்கான சந்தர்ப்பங்கள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளில் பல்கலைக்கழகப் போதனாசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முதலிடம் வழங்குவேன். பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக ஆராய்ச்சி அபிவிருத்தி நிதியங்களை ஏற்படுத்துவேன்.
சிந்தனை

Page 40
"வாழ்க்கைத்திறன்" வேலைத்திட்டம்
புதிய ஆய்வுகளின்படி மாறிவரும் தேசிய உள்நாட்டு, வெளிநாட்டு தொழிற் சந்தைகளில் மனிதவளத் தேவைகளுக்கு அமைவாகும் விதத்தில் சகல தொழில்களினதும் மதிப்பை உறுதிப்படுத்தும் வகையில் அந்தந்தத் தொழிலுக்குரிய சர்வதேச மட்டத்திலான அறிவையும் பயிற்சியையும் பெற்றுக்கொடுக்க மூன்றாம்நிலைக் கல்வி வசதிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
சாதாரண தரம் வரையில் மட்டும். கல்வி பயின்ற மாணவர்களுக்கு சுற்றுலாக் கைத்தொழில், இலத்திரனியல் துறை சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் மற்றும் கட்டிடத் தொழினுட்பம் போன்ற துறைகளில் நிபுணத்துவ டிப்ளோமாப் பாடநெறியை அறிமுகஞ்செய்வேன்.
பாடசாலைவிட்டு விலகிய இளைஞர் சமூகத்துக்குத் தற்போது அரசாங்கத் துறையில் நிலவும் ஒழுங்குமுறையான பயிற்சிச் சந்தர்ப்பங்களின் எண்ணிக்கையை வருடாந்தம் 60,000 தொடக்கம் 100,000 வரை விஸ்தரிப்பதற்குத் தற்போதுள்ள தொழினுட்பக் கல்லூரிகளை நவீனமயப்படுத்தி அவற்றுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதுடன் தற்போது தொழினுட்பக் கல்லூரிகள் இல்லாத பிரதேசங்களுக்குப் புதிய தொழினுட்பக் கல்லூரிகளும் ஆரம்பிக்கப்படும். தொழிற்பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கையை 200 லிருந்து 300 வரை அதிகரிப்பதற்கு 100 புதிய நிறுவனங்களை நிறுவுவேன்.
முறைசாராத்துறை சீவனோபாய வாய்ப்புக்கள் 100,000 வீதம் வருடாந்தம் பெற்றுத்தர இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் நாடளாவிய முறையில் 500 சனசமுகக் கல்லூரிகளை ஒழுங்கு செய்வேன்.
வெளிநாட்டுத் தொழிலை இலக்காகக் கொண்ட தேசிய தொழினுட்பக் கல்வி நிறுவனமொன்றை அமைப்பேன்.
மஹிந்தவின் சிந்தனை প্ল
 
 

சுனாமியிலிருந்து மீண்டும் எடுச்சி பெறுவோம் "ஜ லங்கா" வேலைத்திட்டம் சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புதல் மந்தகதியில் செயற்படுவதற்கான காரணத்தை நன்கு அறிந்துள்ள நான் அந்த எல்லைகளைத் தாண்டி வெற்றிகொண்டு விரைவாக இவை அனைத்தையும் நாளதுவரையிலாக்குவதற்கான "ஜய லங்கா" வேலைத்திட்டத்தைச் சமர்ப்பிக்கின்றேன். சுனாமி அனர்த்தத்திற்கும் பாதிப்புகளுக்கும் உட்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட நிவாரண உதவிகளினால் அவர்களது சீவனோபாய வழிகளை உரிய நிலைக்குக் கொண்டுவரும் வரை தற்காலிகச் சமூகப் பாதுகாப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவேன். 100 மீற்றர் எல்லைக்குள் புதிய நிர்மாணிப்புகள் சம்பந்தமாக சகல கட்சிகளையும் கொண்ட பாராளுமன்றத் தெரிவுச் சபையின் சிபாரிசுகளின் பிரகாரம் வீடுகள், தொழில் நிலையங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்கள் என்பனவற்றை நிர்மாணிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வேன். இலங்கையில் சகல பிரதேசங்களிலும் சுனாமியால் பெற்றேங்களையும் பாதுகாவலர்களையும் இழந்துள்ள சிறுவப்களின் செலவினங்களை மேற்கொள்வதற்காக 50 கோடி விசேட நிதியமொன்றை அமைப்பேன். சுனாமியால் பாதிக்கப்பட்ட தொல்பொருளியல் நிலையங்கள் மற்றும் சமய வழிபாட்டுத் தலங்களை ஒரு வருடத்துள் மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பேன். இதற்குரிய சமயத் தலைவர்களிடமிருந்தும் தொண்டர் நிறுவனங்களிடமிருந்தும் தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற்றுக்கொள்வேன். அழிவுக்குள்ளான சகல வள்ளத் துறைமுகங்கள் மற்றும் மீன்பிடித் துறைமுகங்கள் என்பனவற்றை மீண்டும் கட்டியெழுப்பத் துரிதமாக நடவடிக்கை எடுப்பேன். பிறப்புச்சான்றிதழ், அடையாள அட்டை, காணி உறுதி காணாமல் போயுள்ள சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் என்பன உட்பட்டதான அழிந்துபோன சகல ஆவணங்களையும் தாமதமின்றி மீண்டும் வழங்குவதற்கும் காணி உரித்துரிமைகளைத் தீர்வு செய்வதற்கும் சகல அதிகாரங்களையும் கொண்ட பிரிவு மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்படும்.
மஹிந்தவின் స్టళ్ల
சீந்தனை 77 3. אין

Page 41
பிரதேச அபிவிடுத்தி வேலைத்திட்டம் தேசிய ரீதியில் முன்வைக்கப்பட்டுள்ள பொது வேலைத்திட்டங்களுக்கு மேலதிகமாக ஒவ்வொரு பிரதேசத்தையும் இலக்காகக் கொண்ட விசேட வேலைத்திட்டங்கள் பல திட்டமிடப்பட்டுள்ளன. பனந்தோப்புகளுக்கு அப்பல் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நீண்டுசென்ற சண்டை, சச்சரவுகளும் இந்து சமுத்திரத்தில் திடீரெனத் திரண்டு வந்த கொடிய சுனாமிப் பேரலைகளும் வடக்கு-கிழக்கு மாகாணங்களிலுள்ள உங்களது சீவியம் பாதிக்கப்பட்டுள்ளமை பற்றி நான் அறிவேன். எந்தவொரு இனவாத, மதவாத ரீதியிலான குறுகிய மனப்பாங்கிற்கும் ஆட்படாமல் நிறைவான மனிதாபிமானத்துடன் நான் உங்களைப் பார்க்கின்றேன். மிகவும் கஷ்டமான நிபந்தனைகளின் கீழ் வாழ்க்கைக்காகப் போராடும் உங்களது அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். பாரத நாட்டின் சிரேட்ட தலைவரான ஜவஹர்லால் நேரு அவர்கள் கூறியவாறு, உங்கள் அனைவரதும் கண்களிலுள்ள கண்ணீரைத் துடைப்பதற்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கின்றேன். அதற்கான ஆரம்பமாகப் பின்வரும் பிரேரணைகளை உங்கள் முன் வைக்கின்றேன். யுத்தத்தினால் அழிந்துபோன வீடுகளையும் அதனாலேயே சிதைந்துபோன வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்பும் நோக்குடன் விசேட நிதியமொன்றை ஏற்படுத்துவேன். இதன் மூலம் 80,000 குடும்பங்களுக்கு அழிந்துபோன வீடுகளையும் சீவனோபாய வழிகளையும் முதலாவது வருடத்தில் பெற்றுக்கொடுக்க உத்தேசித்துள்ளேன். அதன் ஒரு பகுதி நிவாரண உதவியாகவும் மற்றைய பகுதியை வட்டியில்லாக் கடனாகவும் பெற்றுக் கொடுக்க நான் தீர்மானித்துள்ளேன். உயப் பாதுகாப்பு வலம் காரணமாக வீடுகளை விட்டுச் செல்ல நேர்ந்த குடும்பங்களுக்குத் தற்காலிகக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன். இடம்பெயர்ந்தவர்கள் அனைவரையும் தத்தமது சொந்த இடங்களில் மீளவும் உடனடியாக குடியேற்றுதல்.
 
 
 

வடக்குப் பிரதேசத்தில் மக்களின் பயன்பட்டிற்காக யாழ்பாணம் மற்றும் மன்னப் புகையிரதப் பாதை மீள நிர்மயிைக்கப்படும். பிரதேசத்தில் சகல நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமியப் பாதைகள் சகலதையும் விசேடமான "சாலை எழுச்சி" (மக நெகும) கருத்திட்டமொன்றின் மூலம் அமைத்து முடிப்பேன். முற்றாக அழிந்துபோன அல்லது பாதி அழிந்துபோன சகல சுகாதார வசதிகளையும் எதிர்காலத் தேவைக்கேற்றவாறு மீண்டும் கட்டியெழுப்புவேன். அவ்வாறே, மருத்துவம் மற்றும் ஏனைய பணியாளர் குறைபாடுகளை அகற்றுவதற்குத் தீவிர வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவேன். அழிந்துபோன அல்லது மேம்படுத்தப்படாத சகல பாடசாலைக் கட்டிடங்களையும் உயர் தரத்திற்கேற்ப உரிய நிலைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். ஒரு வருட காலத்துள் வடக்குப் பிரதேசத்தில் பற்றக்குறையாகவுள்ள சகல ஆசிரியர் வெற்றிடங்களையும் நிரப்புவேன். அழிந்துபோன சகல வளாகங்களையும் மீண்டும் கட்டியெழுப்புதல் உட்பட்டதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கான சகல பெளதிக வசதிகளையும் வழங்குவதற்கும் கல்விப் பாடநெறிகளை நவீன முறையுடன் பரவலாக்குவதற்கும் நடவடிக்கை எடுப்பேன். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு மனித வள அபிவிருத்திக் கருத்திட்டம் ஒன்றை நிர்மாணிக்குமாறு வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுப்பேன். இதற்குத் தேவையான சகல வளங்களையும் நிதி வசதிகளையும் வழங்கும் பொறுப்பும் நான் நிறைவேற்றுவேன். வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை மீண்டும் குடியமர்த்தவேன். மீன்பிடி நடவடிக்கைக்கு மீண்டும் புத்துயிர் கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை மேலும் பரவலாக்க நடவடிக்கை எடுக்கப்படும். விசேடமாக மீன் பதனிடல் மற்றும் பொதியிடல் தொழிற்சாலையொன்றை வட மாகாணத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
மஹிந்தவின் MOX சிந்தனை 79

Page 42
வடக்கின் இதயமாகிய விவசாயிகளுக்கு நிதி மற்றும் விவசாய உபகரணங்களை வழங்குவதற்கும் அவர்களது விளைச்சலுக்கு உயர்ந்த விலையொன்றை வழங்குவதற்கும் என்னால் அறிமுகஞ்செய்யப்படும் தேசிய பொருளாதாரக் கொள்கையூடாக நடவடிக்கை எடுக்கப்படும். அழிந்துபோன பனை, தென்னை மற்றும் கஜு செய்கைகளை புனர்நிர்மாணம் செய்வதற்காக முன்னுரிமை வழங்குவேன். இப்பிரதேசங்களில் மண்ணின் உப்புத் தன்மையைக் குறைத்து விவசாய நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்த விசேட கருத்திட்டமொன்று சர்வதேச உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும். பூமியைப் போன்றே பிரதேசத்தின் உயிரியல் சக்திகளையும் பல்வகைத் தன்மையையும் பாதுகாப்பதற்காக சுற்றாடல் அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை நடைமுறைப் படுத்துவேன். - வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் குடிநீர்த் தேவைக்காவும் பயிர்ச்
செய்கைக்காகவும் நீரைப் பெற்றுக் கொடுக்கும் மாவட்டக் கருத்திட்டம் உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
சக்தி வளத் தேவைகள் மற்றும் தொடர்பாடல் சேவைகளைத் தீவிர வேலைத் திட்டமொன்றின் மூலம் பூரணப்படுத்த நடவடிக்கை எடுப்பேன். பிரதேசத்திலுள்ள நிறுவனங்களின் விடயப் பொறுப்பை மிகவும் பயனுள்ளதாக நிறைவேற்றுவதற்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பெற்றுக் கொடுக்கப்படும்.
தேசிய கூட்டுறவுத் துறை வலுவூட்டப்படுவதற்கான வேலைத்திட்டமொன்றின் பிரகாரம் வடக்கு-கிழக்குப் பிரதேசங்களிலுள்ள கூட்டுறவு அமைப்புகளை வலுவூட்ட நடவடிக்கை எடுப்பேன். பிரதேசத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு மூன்றாம்நிலைப் பயிற்சி வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும். யுத்தத்தினாலும் சுனாமியினாலும் அழிந்துபோன சகல கோவில்கள், பள்ளிகள் மற்றும் பெளத்த கோவில்கள் என்பன மிக விரைவில் மீண்டும் புனரமைக்கப்படுவதுடன் அவ்விடங்களில் 866)T(3 TJ நிலையங்கள் மற்றும் சமய நடவடிக்கைகளுக்கான நிர்மாணிப்புகள்
மஹிந்தவின் சிந்தனை
80
 
 
 
 
 

தேவைப்படின் அவைகளுக்கான நிதி வளங்களும் ஒதுக்கீடு செய்யப்படும்.
கிழக்கு மாகாண எழுச்சி இனப் பல்வகைமை, பூகோள மற்றும் கலாசார காரணங்களின் நிமித்தம் கிழக்கு மகாண மக்கள் அவர்களுக்கேயுரிய குறித்த பிரச்சினைகள் தொகுதியொன்றை உடையவர்களாகவிருக்கின்றனர் என்பதை நான் ஒத்துக்கொள்கின்றேன். எனவே இந்த விடயங்களைத் தீர்வு செய்வதற்காக எனது அரசாங்கத்தின் கீழ் ஓர் விசேட நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்படும். பாதுகாப்பின்மை பற்றிய அவர்களுடைய பயத்தை நீக்குவதற்கான தேவையை அதிமுக்கியமான விடயமாக நான் கருதுகின்றேன். எந்த இனத் தொகுதியும் பிறிதொரு இனத்தொகுதியின் பணயக் கைதியாகப் பாவிக்கப்படலாகாது என்பதை நான் ஒத்துக்கொள்கின்றேன். எனவே பாதுகாப்பு பயமுறுத்தப்படாமலிருப்பதை நான் உறுதிப்படுத்துவேன். இந் நோக்குடன் படைக்கலந்தாங்கிய படைகள், பொலிசு மற்றும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர் விசேட அதிரடிப்படை மற்றும் மக்கள் அமைப்புக்களைக்கொண்ட ஆகியோர்களைக் கொண்ட ஓர் புதிய பாதுகாப்பு வலையமைப்பை நான் உருவாக்குவேன். முஸ்லிம் மக்களை தனித்துவமான இனமாக ஏற்பதோடு எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர்களது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவேன். முஸ்லிம் சமூகத்திற்கு 6)h(35 L கவனம் செலுத்துவதுடன் இத்துடன் கூடுதலாக அப்பிரதேசத்தின் சிங்கள, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் கவனமம் செலுத்துவேன். அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் மக்கள் பல்வேறு நிருவாக விடயங்களுக்காக திருகோணமலை மாகாண மைய நிலையத்திற்கு நீண்ட தூரம் பிரயாணம் செய்துகொண்டு வரவேண்டிய பாரிய கவர் டத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த 56O)6)6OLD6Ou சுலபமாக்குவதற்கர்க மேலதிக அலுவலகமொன்று அம்பாறையில் திறக்கப்படும். கிழக்கு மாகாணத்திலுள்ள காணி தொடர்பிலான விடயங்களைத் தீர்வு செய்வதன் பொருட்டு நிகழ்ச்சித் திட்டமொன்றும் (n -
நடைமுறைப்படுத்தப்படும்.
சிந்தனை

Page 43
விவசாய ஏற்றுமதி வலயங்கள் அம்பாறையில் நிறுவப்படும். இப்பிரதேசத்திலுள்ள சகல நீர்ப்பாசனக் கட்டமைப்புகளையும் புதுப்பிப்பதற்கும்கூட நடவடிக்கை எடுக்கப்படும். திருகோணமலை-மட்டக்களப்பு நெடுஞ்சாலை {p(p6OLDuJTöb அபிவிருத்தி செய்யப்படும். பாணமவையும் மொனறாகலவையும் இணைக்கும் புதிய வீதியொன்று திறக்கப்படும். இப்பிரதேசத்தில் பெரிய நெடுஞ்சாலைகளின் அபிவிருத்திக்காவும் நிகழ்ச்சித் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும். திருகோணமலை- மட்டக்களப்பு புகைவண்டிப் பாதைகள் அபிவிருத்தி செய்யப்படும். ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கல்முனை, வாழைச்சேனை பட்டினங்களும் கூட அபிவிருத்தி செய்யப்படும். இப்பிரதேசத்திலுள்ள தொல்பொருளியல் அக்கறையுடைய சகல இடங்களும் பேணப்படும் அதே வேளையில் சமய வழிபாட்டுத் தலங்கள் ஓர் புறம்பான நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும்.
கால்நடை வளர்ப்பை உருவாக்குவதற்கு ஓர் விசேட நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்படும். 0 புதிய மீன்பிடிக் கருத்திட்டங்களும்கூட
நடைமுறைப்படுத்தப்படும். 0 ஓர் சுற்றுலா அபிவிருத்தி வலயம் பிரகடனப்படுத்தப்படும்.
புதிய ஆடைத் தொழிற்சாலைகள் புதிதாகத் திறக்கப்படும். முஸ்லிம் பாடசாலைகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் வேண்டப்படும் பெளதீத வளங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். சுனாமி அனர்த்தத்தினால் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் கிழக்கு மாகாண முஸ்லிம்களாவர். அவர்களுக்காக விசேட புனரமைப்பு நிகழ்ச்சித்திட்டமொன்று தேவை என்பதை நான் அறிவேன். இதற்காக
மஹிந்தவின் சிந்தனை
 
 
 

மாகாண அரசியல் தலைமைத்துவம் தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் பிரதேசத்தின் அரச நிறுவனங்களினதும் சமுக அமைப்புக்களினதும் பங்குபற்றுதலுடன் உடனடியாக ஓர் புனரமைப்பு நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
செங்கடகலவின் புத்துயிரளிப்பு 9 செங்கடகல பிராந்தியத்திலுள்ள குறித்த வளங்களை உபயோகித்து கைத்தொழில்களை அபிவிருத்தி செய்வதற்கான நிதி வசதிகள் லங்கா புத்திர வங்கிச் சேவையினால் வழங்கப்படும். 0 மலைநாட்டு மக்களின் காணியின்மையைத் தீர்வு செய்வதற்காக ஓர் முன்னுரிமை அடிப்படை மீது காணியில்லாதவர்களுக்கு அரசாங்க காணி பராதீனப்படுத்தப்படும். 9 லங்கா புத்திர வங்கியின் கீழ் பராம்பரிய கண்டி கைத்தொழில்
அபிவிருத்தி செய்யப்படும். 0 புதிய தொழினுட்பத்துடன் மாதிரி எல்லைக் கிராமத் திட்டமொன்று கொத்மலை- திகன- உக்குவெல்ல பிராந்தியத்தில் தாபிக்கப்பட்டுள்ள பொருளாதார வலயத்தில் அறிமுகப்படுத்தப்படும். 9 நுவரேலியா மாவட்டத்தைச் சுற்றியுள்ள சூழலில் விசேட சூழல்
பேணல் கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்.
"றுகுணுவிற்கு விடிவு"
0 காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் உல்லாசப் பிரயாண நிலையங்களாக விசேடமாக சூழிட உல்லாசப் பிரயாண நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்படும்.
0 தெற்கு நெடுஞ்சாலையின் நிருமாணம் துரிதப்படுத்தப்படும். மாத்தறை - அம்பாந்தோட்டை, அம்பாந்தோட்டை - வீரவில, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களைத் தொடுக்கும் புதிய பிரதான வீதியின் நிருமாணத்தையும் வீதிகளை இணைக்கும் நிருமாண வேலையையும் நான் துரிதப்படுத்துவேன்.
மஹிந்தவின் '8'', '88',: °: [... 83

Page 44
0 காலி, அம்பாந்தோட்டைத் துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு இந்த இடங்கள் வர்த்தக நகரங்களாக மாற்றப்படும். மீன்படி துறைமுகங்களையும் நங்கூரத் தானங்கள், சந்தை மற்றும் மீன் தகரத்திலடைத்தல் தொழிற்சாலைகள் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்.
"ராஜரட்டயின் புத்துயிரளிப்பு"
O அனுராதபுரம், பொலநறுவை மாவட்டங்களிலுள்ள கிராமங்களில் ராஜரட்ட நவோதய என அழைக்கப்படும் துரிதப்படுத்திய நிகழ்ச்சித் திட்டமானது "கம நக்மா" (கிராமிய எழுச்சி), "மகாநாகும" (வீதி நிருமாணம்)- நிகழ்ச்சித் திட்டங்கள் மூலமாக மேலும் பலப்படுத்தப்படும்.
9 அனுராதபுரத்திலும் பொலநறுவையிலுமுள்ள சமயத் தலங்களைப் பேணுவதற்கும் யாத்திரிகர்களுக்குத் தேவைப்படும் போக்குவரத்து, தங்குமிடவசதி மற்றம் பிற வசிதகளையும் வழங்குவதற்கும் நான் நடவடிக்கை எடுப்பேன்.
வடமேற்கின் புத்துயிரளிப்பு
9 பண்டுவாஸ்நுவர தம்பதெனிய, யாப்பஹ"வ, குருநாகல் ஆகிய பிரதேசங்களால் எல்லையிடப்படும் கலாசார சதுக்கத்தை புனரமைப்பதற்கும் பேணுவதற்கும் நான் நடவடிக்கை எடுப்பேன்.
ததுறு ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தை நான் துரிதமாக நடைமுறைப்படுத்துவேன்.
வெல்லஸ்ஸவை எழுச்சி பெறச் செய்வோம் ஊவாவெல்லச பிராந்தியமே ஆகக் கூடுதலான அளவில் அபிவிருத்தியடையாததும் 6) JO)6OLD பெருமளவில் நிலவும் ஆரோக்கியமில்லாத மாவட்டமாகவுள்ளது. புயுதமு வெல்லசவின்கீழ் அபிவிருத்திக் குறியிலக்குகள் அடுத்த 6 ஆண்டுகளுக்குள் வழங்கப்படுவதை இயலச் செய்வதன் பொருட்டு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டம் துரிதப்படுத்தப்படுவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்.
மஹிந்தவின்
84 சிந்தனை
 
 
 

இப்பிராந்தியத்தில் கல்வி வசதிகளைத் தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்கள் பதவியணியிலுள்ள வெற்றிடங்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதன் பொருட்டு இப்பிரதேசத்திலுள்ள ஆசிரியர்களின் வெற்றிடங்கள் நிரப்பப்படும். ஊவாவெல்லச பல்கலைக்கழகத்தின் நிருமான வேலை துரிதமாகப் பூர்த்திசெய்யப்படும். வெல்லசவின் பெருமையுடைய பாரம்பரியத்திற்கு புத்துயிரளிப்பதற்கும் கூட நான் நடவடிக்கை எடுப்பேன்.
இப்பிரதேசத்திலுள்ள சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு ஊவா மாகாணசபையின் உதவியுடன் நடவடிக்கை எடுப்பேன். கடந்த காலத்தில் ஊவா வெல்லச இந்நாட்டின் அதிசிறந்த செழிப்பான பிரதேசமாகவிருந்தது கடந்தகாலப் புகழுக்கு புத்துயிரளிப்பதற்காக இப்பிரதேசத்தில் நீர்ப்பாசன முறைமையை புனரமைப்பதன் பொருட்டு நிகழ்ச்சித்திட்டமொன்று ஆரம்பிக்கப்படும். உமா ஓயாவின் அபிவிருத்தியானது முன்னுரிமை அடிப்படையொன்றில் மேற்கொள்ளப்படும். விசேட கருத்திட்டமானது எலுமிச்சை, தோடை மரங்களின் பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்வதற்கு தொடங்கப்படும். சந்தைப்படுத்தல் பிரச்சினையை நிவர்த்தி செய்வதன் பொருட்டு பழங்களை பதனிடுவதற்காக தொழிற்சாலையொன்று நிறுவப்படும். மிளகுப் பயிர்ச்செய்கைக் காரர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையைத் தீர்வுசெய்வதன் பொருட்டு புறம்பான நிகழ்ச்சித் திட்டமொன்று அரம்பிக்கப்படும்.
பெருந்தோட்ட பிரதேசத்திற்கு புத்துயிரளித்தல் தோட்டத் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் நான் காணித்துண்ைடொன்றை சொந்தமாக வழங்குவேன். தோட்டத் தொழிலாளர்களும் ஏனைய சமூகத்தவர்களைப் போலவே சொத்துக்களைச் சொந்தமாகக் கொண்டு சொந்தக்காலில் நிற்கும் depdblost 85 எழுந்து நிற்க நான் நடவடிக்கைகளை ஏற்படுத்தித் தருவேன். 2004ம் ஆண்டில் அதிகாரத்துக்கு வந்த அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்ட மூன்றாண்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு பரந்துபட்ட அதிகாரங்களைக் கொண்ட தோட்ட
சிந்தனை

Page 45
உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி அதிகார சபையென்று நிறுவய்டும். பெருந்தோட்டப் பகுதி மக்களின் குடியிருப்புத்தொகுதிகளுக்கு பிரவேசிக்கத்தக்கதாக தோட்டப் பகுதிகளிலுள்ள சகல வீதிகளும் அபிவிருத்தி செய்யப்பட்டு பொதுப்பாதைகளாக பிரகடனப்படுத்தப்படும். பெருந்தோட்டப் பகுதிகளில் 6)uj6T அறைகளில் வாழும் குடியிருப்பாளர்களுக்கு குறித்த லயன் தொகுதி அமைந்திருக்கும் காணித்துண்டின் உரிமையை இலவசமாக வழங்கும் எமது அரசின் கொள்கைத்திட்டத்திற்கேற்ப குறித்த காணிகளை காணி உறுதிக்கான கட்டணங்கள், முத்திரைத்தீர்வைகள் இல்லாமல் இலவசமாகவே உரித்தாக்கிக் கொடுக்கப்படும். லயன் தொகுதிகளுக்கு புறம்பாக தற்காலிக குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு "ஜனசெவன" (மக்கள் நிழல்) விசேட செயற்திட்டத்தின் மூலம் தனியான வீடுகள் சொந்தமாக்கிக் கொடுக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 50,000 வீட்டுத் தொகுதிகள் அமைப்பது இலக்காகக் கொள்ளப்படும். தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 7 பேர்ச்சஸ் கான 20 வருடங்களின் பின்பு அவர்களுக்கு உரித்தாகும் நடைமுறையை இரத்துச் செய்து குறித்த காணித்துண்டுகளின் உறுதியை அவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன். பெருந்தோட்டப் பகுதிக் குடும்பங்களுக்கு கோதுமை மாவு வழங்கும் விசேட மானியமொன்று வழங்க நான் நடவடிக்கை எடுப்பேன். தோட்டப் பகுதிகளில் பின்தங்கிய நிலையில் இருக்கும் 400 பாடசாலைகளை உடனடியாக மேம்படுத்த நான் நடவடிக்கை எடுப்பதுடன், தோட்டப் பகுதிகளில் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தலா ©Փ பாடசாலை வீதம் நவீனமான தேசியப் பாடசாலைகள் நிறுவப்படும். பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தற்காக தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த படித்த இளைளஞர், யுவதிகளிலிருந்து 3000 பேருக்கு உடனடியாக ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுவதுடன், தோட்டப்பகுதி மக்களின் பிள்ளைகளுக்கு ஆசிரியர் பயிற்சி வழங்கும் பொருட்டு சிறீபாத கல்விக் கல்லூரி சகல வசதிகளையும்கொண்ட ஓர் முழுமையான ஆசிரியர் கல்விக் கல்லூரியாக மாற்றப்படும்.
86 சிந்தனை
 
 
 

பெருந்தோட்ட பகுதி மக்கள் தமது தாய்மொழியில் அப்பிரதேசங்களில் அமைந்துள்ள அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதில் நிலவும் கஸ்டங்களை நிவர்த்தி செய்வதன் பொருட்டு க.பொ.த. (சாத) பரீட்சையில் சித்தியடைந்த 2500 இளைஞர் யுவதிகள் சமூக அபிவிருத்தித் தொடர்பாடல் உதவியாளர்களாக நியமிக்கப்படுவர்கள்.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துடன் இணைந்ததான விவசாய மற்றும் கால்நடை வளர்ப்புத் தொடர்பான பீடம் ஹட்டன் நகரை மையமாகக் கொண்டு நிறுவப்படும்.
பெருந்தோட்டப் பகுதியின் சுகாதார வசதிகளை ஏனைய நகரப்புறப் பிரதேசங்களில் நிலவும் தேசிய சுகாதார வசதிகளுக்கு ஒப்பான மட்டத்திற்கு மேம்படுத்துவதற்காக தோட்டப் பகுதி மக்களுக்காக இப்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படும் மருத்துவமனை, கிளினிக், மருந்து நிலையங்கள் உட்பட சுகாதார வசதிகளை அரசாங்க சுகாதார உத்தியோகத்தர்களைக் கொர்ைடதாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்.
தோட்டப்பகுதி மக்களுக்கு தபால் விநியோகம் செய்வது தொடர்பாக ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நிலவும் நடைமுறையை உடனடியாக மாற்றியமைத்து, நாளாந்தம் வீட்டுக்கே தபால்களை விநியோகிப்பதற்கான செயற்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும்.
"நெனசல" (அறிவகம்) செயற்திட்டம் மூலமாக தோட்டப்பகுதி இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்க நடவடிக்கை எடுப்பேன்.
தோட்டப் பகுதிகளின் நீர்வளப் பாதுகாப்பு மற்றும் மண்ணரிப்பைத் தடுப்பதற்காக தோட்டப்பகுதி மக்களின் பங்களிப்புடனான "துருபியச" செயற்திட்டம் முன்னெடுக்கப்படும்.
கலாசார மத்திய நிலையங்கள் (மையங்கள்) மற்றும் அபிவிருத்தி மையங்களில் இப்போதைக்கு நிலவும் குறைபாடுகளை முழுமையாக நிவர்த்தி செய்து, அவற்றை தோட்டப்பகுதி மக்களின் நன்மைக்காக மேலும் மேம்படுத்துவேன்.
மஹிந்தவின் 3 சிந்தனை 87

Page 46
நோர்வூட்டு விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டரங்கு என்பன விளையாட்டுத்துறை அமைச்சின் வழிகாட்டலின் கீழ் சர்வதேச கால்பந்து, கரப்பந்து, பாட்மிண்டன், மெய்வல்லுனர் போட்டிகளை நடத்தக்கூடியதான மட்டத்துக்கு அபிவிருத்தி செய்யப்படும். "ஜனபுபுதுவ" (மக்கள் மலர்ச்சி) அபிவிருத்தித் திட்டத்துடன் இணைந்ததாக தோட்டப்பகுதி மக்களுக்காக அரம்பிக்கப்பட்ட "பிரஜா சக்தி" (மக்கள் சக்தி) நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தோட்டப்புற இளைஞர், யுவதிகள் சிறிய மட்ட முயற்சியாளர்களாக பயிற்றுவிக்க நடவடிக்கை வண்டுக்கப்படும்.
கலையுலக மறுமலர்ச்சி ᏧᏂ60su, ᏧᏂᏛᏓPIᏧᎠ] ᏮlIIᏧᏛ}50I எமது பாரம்பரிய கலை கலாசார உரிமைகளை பாதுகாத்து, கலை, கலாசார உருமங்களை உயரிய அம்சமாக தேசிய வட்டத்துள் அறிமுகப்படுத்தி மக்களின் வாழ்வின் மனோதத்துவ முன்னேற்றத்துக்கு வழிசமைத்தல், அவர்களின் வாழ்வியல் தத்துவ சமுதாயத்தை உருவாக்கும் நோக்குடன் உயர் கலாசார வாழ்க்கை முறையை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கான தேசிய கலாசார கொள்கையை அறிமுகப்படுத்துவேன். சங்கீதம், கலை மற்றும் கலாசார படைப்புக்கள் கொள்ளையிடுதல் பாதுகாப்பு, அவற்றின் உரிமைகளை உரியவர்களுக்கு சேரும் வண்ணம் அதன் பாதுகாப்பு சட்ட முலங்களை திருத்தி அமைப்பேன். எவ்வித அரசியல் பாகுபாடின்றிதேசிய ஊடகங்களின் சமபங்களிப்பினை எல்லா கலைஞர்களும் பெறும் வண்ணம் திருத்தியமைக்கப்படும். சர்வதேச மட்டத்திலான சினிமா, நாடக பயிற்சி பாடசாலை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன். கலை கலாசார விழுமியங்களை பேணி வளர்த்த கலைஞர்கள் நலிந்த நிலையில் தமது கலை கலாசார செயல்களில் ஓய்வுறும் நிலை ஏற்படும் போது அவர்களுக்கான ஓய்வூதிய சுகாதார காப்புறுதி திட்டங்களை அறிமுகப்படுத்துவேன்.
3:...
மஹிந்தவின்
சிந்தனை
 
 
 
 
 
 

கலைஞர்களுக்கான தேசிய நிதியமொன்றை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் 1. பரம்பரை கலை கலாசார செயற்கலைஞர்களுக்கான பாதுகாப்பு
நிதி வழங்கும் செயற்திட்டத்தை வகுப்பேன். 2. கலைஞர்களின் பெயர் பட்டியலை ஏற்படுத்த செயற்திட்டத்தை
வழிவகுப்பேன்.
கலைஞர்களுக்கான வீடமைப்புத்திட்டத்தை உருவாக்குவேன் - கொழும்பு சர்வதேச திரைப்பட விழா என்ற தொனிப்பொருளில் திரைப்படவிழாவை கோலாகலமாக நடத்தவதற்கு ஏற்பாடு செய்வேன்.
- தேசிய திரைப்பட தொழிலை முன்னேற்றுவதற்காக சர்வதேச திரைப்படப் பயிற்சி பாசறைகளுக்கு சமுகமளிக்க திரைப்பட நாடக கலைஞர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் செயற்திட்டத்தை வகுக்க நடவடிக்கை எடுப்பேன். - டவர் மண்டபம் மற்றும் ஏனைய கலா மண்டபங்களை நவீன
மயப்படுத்த ஆவண செய்வேன்.
மொழியும் கலாசாரமும்
1. மனிதனால் நிர்மாணிக்கப்பட்ட உயர் ஊடகம் மொழியாகும். மொழி என்பது ஒரு சொத்தாகும். அதை சரியாக வழிப்படுத்துவதன் முலம் ஊடக செயற்திறனை விரிவுபடுத்தலாம். இலங்கையின் உரித்தான சிங்கள தமிழ் மொழிகளுக்கு பல்லாயிர வருட சரித்திரமும் செழுமையும் பிரபல்யமும் கிட்டியுள்ளன. அதேபோன்று இன்றைய கலாசார ஊடகத்துள் சிங்கள தமிழ் மொழிகள் பிரபல்யம் பெற்றுள்ளன. இவற்றைகருத்திற்கொண்டு சிங்கள் தமிழ் மொழிகளின் முன்னேற்றத்திற்கு வழிசமைப்பேன். அரசகரும மொழிக்கொள்கையை கண்டிப்பாககடைப்பிடிப்பேன்.
3. நவீன கணனி யுகத்திற்கு ஏற்றாற்போல் தமிழ் சிங்கள கணனி மொழித்திறன் விடயங்களை விருத்தி செய்வதற்காக தேவைப்படும் அகராதிகள் மற்றும் கலை களஞ்சியங்களை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன்.
மஹிந்தவின்
சிந்தனை --- 专 89

Page 47
4. சிங்கள தமிழ் மொழிகளுக்காக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறியீட்டு (Unicodes) முறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பேன்.
5. ஆங்கில மொழியை ஒரு சாராருக்கு மட்டும் மட்டுப்படாமல் பலருக்கும் பாவனைக்குட்படுத்தப்படும் பொருட்டு, கல்விக்கும் ஊடகத்துறைக்கும் தேவையான நவீன மாற்றங்களை ஏற்படுத்துவேன்.
6. புத்தகம் பத்திரிகை வாசிக்கும் உயர் சமுதாயத்தை உருவாக்க நலமான நூல்கயைம் ஏடுகளையும் உருவாக்க உதவுவதற்கும் வெளிநாட்டு &b6DITJ TIJ மற்றும் LubU6) பொருட்ஞானடக்கமுள்ளவெளியீடுகளை மொழிபெயர்ப்பதற்கும், கணனி மற்றும் இலத்திரனியல் செயற்பாடுகளைய முன்னேற்றுவதற்கும் விசேட கவனம் செலுத்துவேன்.
7. ஊடகத்துறையில் பாவனையிலுள்ள மொழித்திறனை உயர்மட்டத்தில் ஏற்படுத்துவதற்காக மொழி வல்லுனர்களின் சேவையைப் பெற்று அதன் மூலமாக அரச மற்றும் தனிப்பட்ட ஊடகங்கங்களுக்கு பொருத்தமான மொழித்தரங்களை தனிப்பட்ட வல்லமையை சீர்படுத்துவதற்கான உத்திகளை அறிமுகப்படுத்துவேன்.
தகவல்களும் ஊடகங்களும் சரியான தகவல்களைப் பெறுவதற்கான மக்களின் உரிமைகளை ஏற்றுக்கொண்டு எமது ஊடகங்களின் கொள்கையானது இந்நாட்டின் சமூக, கலாசார, பொருளாதார, அபிவிருத்திக் குறிக்கோள்களை அடைவதன் பொருட்டு ஊடகங்களின் பரந்த பங்குபற்றுதலைப் பெற்றுக்கொள்வதாகவிருந்தது. அரச ஊடகங்கள் இதை அடைவதற்காகச் சுதந்திரமானவைகளாகவும் பொறுப்பானவை களாகவும் இருப்பதன் மூலம் சிறந்த உதாரணமாகவிருப்பதாக படிப்படியாக தரமுயர்த்தப்படுமென்பதுடன் அரச ஊடகங்கள் அரசியல் சாராதவைகளாக்கப்படும். விரிவான உசாவுகை முறைக்குப் பின்னரும் தனியார் மற்றும் அரச ஊடகங்களின் பங்குபற்றுதலுடன் ஊடகங்களின் பங்குபற்றுதலுடன் ஊடகங்கள் ஓர் குழப்பமான முறையில் இலங்கையின் பெருமையையும்
மஹிந்தவின் சிந்தனை
 
 
 

தனித்துவத்தையும் கலாசாரத்தையும் பாதகமான முறையில் பாதிக்கப்படக்கூடியதாகவும் வளர்ச்சியடைந்துகொண்டிருக்கும் உளவளர்ச்சியையும் சமூக குறியிலக்குகளையும் உபயோகிக்கப்பட மாட்டாவென்பதை உறுதிப்படுத்துவதன் பொருட்டு ஊடக ஒழுக்க விதிக்கோவையொன்று உருவாக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரச மற்றும் தனியார் ஊடகங்களில் பணியாற்றும் கூடுதலான எண்ணிக்கையில் ஆக்கபூர்வமான பத்திரிகையாளர்களுக்கு வெளிநாட்டுப் புலமைப் பரிசில்களை கிடைக்கச் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஊடக ஆளணியினர்களின் திறன்களுக்கு வருடாந்த அங்கீகாரம் வழங்குவதற்கு முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும். ஓர் அரச வெகுமதியளித்தல் வைபவமொன்று ஊடகத்துறையிலுள்ள திறன்களை அங்கீகரிப்பதன் பொருட்டு ஒழுங்கு செய்யப்படும். தங்களுடைய சொந்த வீடுகளை கட்டியெழுப்புவதற்கு ஊடகப் பணியாளர்களுக்கு வசதிகள் வழங்கப்படுகின்றவேளையில் ஓய்வு பெற்ற 2D6lIL Gb ஆளணியினர்களின் நன்மைக்காக ஓர் ஓய்வுபெறல் பணிக்கொடைத் திட்டமானது அறிமுகப்படுத்தப்படும். ஊடகவியலாளனின் வாழ்க்கைதரத்தை உயர்த்துவதன் மூலமே ஊடகச் சுதந்திரத்தை உண்மையிலேயே ஏற்படுத்தமுடியும். இல்லாவிட்டால் ஊடகயவியலாளன் மற்றொருவனின் கையாளாக மாறிவிடுவான். எனவே, சுதந்திர ஊடகவியலாளனாக செயற்படுவதற்காக எல்லா ஊடகவியலாளர்களுக்கும் தீர்வையற்ற கணனி இயந்திரங்களைப் பெற்றுத்தருவேன்.
எல்லா ஊடகவியலாளர்களுக்கும் தீர்வையற்ற மோட்டார் பைசிக்கள்களை பெற்றுத்தருவேன். எல்லா இலத்திரனியல் அச்சக ஊடகவியலாளர், பிரதான செயற்திட்டவியலாளர்களுக்கும் தீர்வையற்ற வாகனத்தைப் பெற்றுத்தருவேன்.
ஊடகவியலாளர்களுடைய எல்லாவிதமான குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யும் வண்ணம் ஒம்புட்ஸ்மன் ஒருவரை நியமிப்பேன்.
மஹிந்தவின்
சிந்தனை 91

Page 48
ஆரோக்கியம் நிறைந்த நாடு விளையாட்டுக்கள் ஆரோக்கியமான பிரஜைகளை உருவாக்குவதற்கும் இலங்கை விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளையும் சர்வதேச விளையாட்டு அரங்கிற்குள் எடுப்பதற்குமாக ஓர் நிலைபேறுடைய விளையாட்டு, பெளதீகக் கல்வித் தேசியக் கொள்கையானது அறிமுகப்படுத்தப்படும். சகல விளையாட்டுத் துறைகளுக்கும் ஓர் நியாயப்படுத்தக்கூடிய படி வருடந்தோறும் வழங்கப்படும். ஏற்கனவேயுள்ள விளையாட்டுக் கல்விக்கழகங்களை மேம்படுத்தும் நோக்குடன் ஓர் தேசிய விளையாட்டுக் கல்விக் கழகத்தை நிறுவுவதற்கும் சர்வதேச பேர் பெற்ற விளையாட்டு வீரர்களையும் வீராங்கனைகளையும் பயிற்சியளிப்பவர்களையும் நடுவர்களையும் உருவாக்குவத்றகும் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியளிக்கக்கூடிய விளையாட்டுத்துறைக் கல்லூரியொன்று நுவரேலியாவில் நிறுவப்படும். விளையாட்டை ஓர் பட்டப் பாடமாக அங்கீகரிப்பதற்கு களனிய பல்கலைக்கழகத்தில் 2005 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட முனைவுகள் விளையாட்டு முயற்சி மீதான ஆராய்ச்சிப் பகுதியொன்றை தொடக்கத்தில் ஆரம்பிப்பதன் மூலமும் பின்னர் விளையாட்டுகள், பெளதீகக் கல்வி மீது பல்கலைக்கழகப் பீடமொன்றைத் தொடங்குவதன் மூலமும் பரந்துபட்ட தாக்கப்படும். சர்வதேச பேர் பெற்றுள்ள சகல விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் 25,000/= ரூபாவைக் கொண்ட ஆகக் குறைந்த மாதாந்தப்படியொன்று வழங்கப்படுவதற்கும் வாசிப்பு பொருட்களையும் பிற தேவைப்பாடுகளையும் வழங்கு வதற்குமான திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும். கிராமிய பிரதேசங்களிலுள்ள குறிப்பிடத்தக்க திறமைகளையுடைய விளையாட்டு வீரர்களையும் வீராங்கனைகளையும் கண்டறிந்து அவர்களுடைய திறமைகளைச் சர்வதேச தரங்களுக்கு கொண்டுவருவதன் பொருட்டு 'கிரீடா சக்தி' என்ற பெயரையுடைய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும்.
 
 
 

பிரதேச மட்டங்களில் விளையாட்டுச் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு உதவியளிப்பதன் பொருட்டு அவர்களுடைய சேவைகளை ஓர் திறமையான விதத்தில் பெறும் நோக்குடன் அவர்களினால் எதிர்பார்க்கப்படும் போக்குவரத்து கஷ்டங்களை ஆகக்
குறைப்பதன் பொருட்டு பிரதேசச் செயலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள சகல விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கும் மோட்டார் சைக்கிளொன்றைக் கொள்வனவு செய்வதற்கு
கொடுப்பனவொன்று வழங்கப்படும். சகல மாவட்டங்களுக்கும் ஓர் உள்ளக விளையாட்டு அரங்கையும் நீச்சல் தடாகத்தையும் உள்ளடக்கி சகல வசதிகளுடனுமான விளையாட்டுக் கட்டடத் தொகுதிகள் வழங்கப்படும்.
மக்கள் கடுத்திற்கு முதலிடம் அரசியல் மறுசீரமைப்பு
1. பொதுஜன பிரதிநிதித்துவத்தையும் உறுதியான அரசாங்கத்தையும் உண்டுபண்ணுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தும் வண்ணம் தேர்தல் விதிகளை மாற்றுவதற்காக பிரேரிப்பேன். 2. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து நாட்டின் ஏனை பிரச்சினைகளை தீர்வுகாணும் முகமாக எல்லோருடைய சம்மதத்துடன் ஒரு முடிவை அறிமுகப்படுத்துவேன். அதுவரை நிறைவேற்று ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு பதில் கூறும் விதத்தில் அரச சாசனத்தை மாற்றியமைப்பேன். 3. பாராளுமன்றில் ஜனாதிபதியின் பொறுப்பை உறுதிப்படுத்தும்
வண்ணம் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பேன். 4. பாராளுமன்ற ஆளும் எதிர்கட்சி அங்கத்தவர்கள் அரசியல் செயற்திட்டங்களில் திட்டவட்டமாக செயற்படும் பொருட்டு
அமைச்சு காரிய கமிட்டிகளின் ஒப்புடைமைய்ை மேம்படுத்துவேன். 5. ஐக்கிய நாடுகள் சாசனம், சர்வதேச மற்றும்
இணக்கப்பாடுகளுக்கு அமைய சகல இலங்கையருக்கும் சமுகக் கலாசார அரசியல் பொருளாதார குடியுரிமைச்செயல்களில் எவ்வித மாற்றமுமின்றி சமநிலைத்திட்டத்தை பாதுகாக்க அரச சாசனத்தில் மாற்றத்தை உள்ளடக்குவேன்.
மஹிந்தவின் 93
சிந்தனை

Page 49
அணிசேரா சுதந்திர வெளிநாட்டுக் கொள்கை
நான் அணிசேரா சுதந்திர முன்னேற்ற கொள்கையை அனுமதிப்பவனாவேன். அரசியல் பாதுகாப்பு பொருளாதார வணிக மற்றும் கலாசார விழுமியங்களை பொறுத்து, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா
முன்னிலைப்படுத்தி செயற்படுவேன். ஐக்கிய நாடுகள் அமைப்பு போன்று ஏனைய சர்வதேச சேவைகள் மேலும் ஜனநாயக முறைப்படி அமைதல் உசிதம் என நம்பி அதற்கேற்ப நாம் செயற்படுவோம். ஊழல்களுக்கு எதிராக சர்வதேச செயற்திட்டத்தை இலங்கையினுள் கட்டுத்திட்டமாக செயற்படுத்துவது எனது நோக்கமாகும். வெளிநாட்டு ஸ்தாபனங்கள் இலங்கையுடன் ஏற்படுத்தும் கொடுக்கல் வாங்கல்களில் ஏற்படும் ஊழல்களில் குற்றவாளியாகும் பட்சத்தில் சர்வதேச சட்டப்பிரகாரம் செயற்பட எமக்கு ஏதுவாகும்.
இலங்கையின் உண்மையான விளையாட்டுச் சரித்திரம் எமது பொருளியல் தேவைகள் எமது கலாசார உரிமைகள் பற்றிய உணர்வுள்ள வெளிவிவகார சேவையை ஏற்படுத்துவேன். உலகம் பூராவும் ஏற்படுத்தப்படும் புதிய படைப்புக்கள் புதிய சித்தாந்தங்கள் பற்றிய விபரங்கள் உடனுக்குடன் எமக்குக் கிடைக்கப்பெறவும் அதுபோல் எமது புதிய படைப்புக்கள் புதிய சித்தாந்தங்களை நோக்கிச் செல்ல சர்வதேச ஆய்வு மையங்கள், தொழில்நுட்ப அமைச்சின் அனுசரணையுடன் அமைப்பேன். பூகற்ப வெப்ப அதிகரிப்பினை கொண்டுவரவும் பூமியும் காலநிலை சீதோசன நிலை மற்றும் மாற்றங்களை மட்டுப்படுத்த முழு உலக நாடுகளும் ஒரு உடன்பாட்டுக்குள் வரவேண்டும் என நான் நம்புகின்றேன். அதன்பொருட்டு ஏற்படுத்தப்பட்ட சமநிலை உடன்பாட்டை செயற்படுத்த 2-606o முழுவதும் உள்ள சூழல்வியலாளர்களுக்கு எனது ஒத்துழைப்பு வழங்கப்படும்.
மஹிந்தவின்
94 சிந்தனை
 
 
 

கொள்கை மீளாய்வுச் சபை எல்லாத் தேர்தல்களின் போதும் வேட்பாளர்கள் கற்பனை உறுதிமொழிகளை மக்கள் மத்தியில் விடுகிறார்கள். அந்த உறுதி மொழிகளின் நம்பிக்கையில் மக்கள் அவர்களை பதவியில் அமர்த்துகிறார்கள். எனினும் அந்த அரசியல்வாதிகள் அவ்வுறுதி மொழிகளை மறந்துவிடுகிறார்கள். கைவிடப்பட்ட உறுதிமொழி அரசியலை முடிவுக்குக் கொண்டுவர நான் கீழ்வரும் நடைமுறைகளை எடுக்கவுள்ளேன். 9 நான் கொள்கை மீளாய்வுச் சபை என்ற பெயரில் முற்றுமுழுதாக எனது கண்காணிப்பின் கீழ் முழு அதிகாரமுள்ள ஆணைக்குழு ஒன்றை அமைப்பேன். அதன் அங்கத்தவர்களாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த புத்திஜீவிகளை நியமிப்பேன்.
e இக்கொள்கைப் பிரகடனத்தில் அடங்கிய வேலைத்திட்டங்களை இந்த ஆணைக்குழுவினால் 6 ஆண்டுகளுக்கொருமுறை உரிய திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களைத் தயாரித்த பின்னர் அத்திட்டங்களை நடைமுறைப்படுத்த அவை பல்வேறு அமைச்சுக்களுக்குப் பொறுப்பளிக்கப்படும்.
e அவ்வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வருடாந்த இலக்குகளை நிர்ணயித்தல் மற்றும் வருடாந்த முன்னேற்றத்தைப் பரிசீலித்து, பின்னடைவுகளைப் பற்றி அறிந்துப் பரிகாரம் காண்பதும் இந்த ஆணைக்குழுவின் கடப்பாடாகும்.
e சகல அமைச்சுக்களும் தத்தமது இலக்கையும், இலக்கு மற்றும் முன்னேற்றத்துக்கு இடையில் யாதேனும் வித்தியாசம் இருப்பின் அதற்கான காரணங்களையும் விளக்கும் வருடாந்த அறிக்கையொன்றை இவ்வாணைக்குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் உறுதி மொழிகளை நடைமுறைப்படுத்துகின்ற வருடாந்த முன்னேற்றத்தைக் காட்டும் முன்னேற்ற அறிக்கை ஆணைக்குழுவினால் வெளியிடப்படும்.
மஹிந்தவின்
"ਮੌਸ਼ਨo - 95

Page 50
මහින්ද රාජපකෂ மஹிந்த ராஜபக்ஷ Mahinda Rajapaksha
 
 
 


Page 51
உங்கள் அனைவரினதும் மனிதனைக் கட்டியெழுப்பி குடும்பத்தைக் கட்டியெழுப் கிராமத்தைக் கட்டியெழுப்பு நாட்டைக் கட்டியெழுப்பி 2
"மஹிந்தவின் சிந்தனை 67 எனது வேலைத்திட்டத்தைச்
எனது கனவு சுதந்திரமான பசுமை நிறைந்த நாடாகும். களஞ்சியங்கள் முழுமையா ஓர் தார்மீக மனிதன் ஆவா
சிங்கள, தமிழ் முஸ்லிம், ! சகலரும் இலங்கைத் தாயி எதிர்பார்ப்புகளினால் ஒளி எம்மை நோக்கிப் பார்வை நான் அறிவேன்.
அந்த எதிர்பார்ப்பு
யதார்த்தமாக்கப்பட கூடிய அந்த நம்பிக்கை என்னிடம் அச்சமின்றி நான் அதனை
சவால்களை எதிர்கொள்வே இலங்கை மாதாவுக்கு
சுபிட்சமான எதிர்காலமொ? நாமெல்லோரும் ஒன்றினை
மஹிந்த ராஜபக்
| Kapila Disanayaka of Weeraketiya, printed and published th

எண்ணங்களை ஒன்று சேர்த்து குடும்பத்தைக் காப்பதற்கும் பி கிராமத்தைக் காப்பதற்கும் ரி நாட்டைக் காப்பதற்கும் உலகத்தை வெல்வதற்கும்.
னும் பெயர் கொண்ட சமர்ப்பித்துள்ளேன்.
தேசமாகும்.
க நிரம்பிய நாளையாகும். T60s.
பறங்கியர்
விடும் இரு கண்களினால்
செலுத்தப்படுவதனை
தாக இருக்கும்.
உண்டு. நிறைவேற்றுவேன்.
J FT LÈ)!
ண்றைப் பரிசளிப்பதற்கு எந்து நடை போடுவோம்!
iର2 X
is at Print & Print Graphics (Pvt) Ltd, of Maligawatta Colombo 10.