கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலையக மாணிக்கங்கள்

Page 1


Page 2


Page 3

D6O6) மாணிக்கங்கள்
තුකොරවී DURAV
35, ரீ இரட்ணசோதி சரவணமுத்து மாவத்தை, கொழும்பு - 13. தொலைபேசி : 331596

Page 4
மலையக மாணிக்கங்கள்
டு அந்தனிஜீவா
முதற்பதிப்பு : GefÜLubLust 1998
வெளியீடு : துரைவி பதிப்பகம்
அச்சிட்டோர் . யுனி ஆர்ட்ஸ், கொழும்பு 13.
Malayaga Manikkangal
(CAnthony Jeeva
P.O Box32, Kandy.
First Edition : Sep.1998
Published By : DuraiviPublication Colombo - 13.
Printed by : Unie Arts (Pvt) Ltd., Colombo - 13.
Price : RS. 65
ISBN 955-9084-05-4

öFIDr:LJ6Mrið
என் பிறப்பிற்குக் காரணமான பெற்றோர்களுக்கும்
என் சிறப்பிற்குக் காரணமான தண்ைவியாருக்கும்
மலையக மாணிக்கங்கள்

Page 5
நூலாசிரியரின் ஏனைய நூல்கள்
1. ஈழத்தின் தமிழ் நாடகம் (1981)
2. அன்னை இந்திரா (1985) 3. காந்தி நடேசய்யர் (1990)
4. சுவாமி விபுலாநந்தர் (1992)
5. The Hill Country in Sri Lanka Tamil Literature (1995)
6. மலையகமும் இலக்கியமும் (1995)
". இவர்கள் வித்தியாசமானவர்கள் (அச்சில்)
(பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடு)
மலையக மாணிக்கங்கள்
 
 

பதிப்புரை
மலையக மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த முன்னோடிகளைப்பற்றிய "மலையக மாணிக்கங்கள்” நூல் துரைவி பதிப்பகத்தின் ஏழாவது வெளியீடாக வெளிவருகிறது.
மலையக கலைஇலக்கிய வளர்ச்சிக்காக பெரும்பணியாற்றிவரும் "கொழுந்து" சஞ்சிகையின் ஆசிரியரான அந்தனிஜீவா எழுதிய “மலையக மாணிக்கங்கள்” என்ற நூல் அவசியம் வெளிவர வேண்டும் என நான் விரும்பினேன். காரணம் இந்த மலையக மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த உன்னதமான பெரியார்களைப்பற்றிய தகவல்களை நம்வர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணமே இதனை ஆச்சில் கொண்டுவர வேண்டும் என தூண்டியது.
சிறுகதை, குறுநாவல், ஆய்வுக்கட்டுரைகள், கவிதை என ஆறு நூல்களை வெளியிட்டு துரைவி பதிப்பகத்தின் ஏழாவது வெளியீடாக வெளிவரும் "மலையக மாணிக்கங்கள்” ஒரு வரலாற்று ஆவணமாக திகழப்போகின்றது. படித்து பாதுகாக்கப்படும் அரிய நூலாக விளங்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
மலையக கலைஇலக்கிய செயற்பாட்டாளரான அந்தனிஜிவாவின் பாராட்டு விழாவின் பொழுது இந்நூல் வெளியிடப்படுவது ஒரு முக்கிய நிகழ்வாகும். எமது வெளியீடுகளை ஆதரிக்கும் உங்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
துரைவிஸ்வநாதன்
கொழும்பு - 13. 27.08.1998
அந்தனிஜிவா

Page 6
மலையக கலை இலக்கிய செயற்பாட்டாளரான அந்தனிஜீவாவின் சேவை நலன் பாராட்டு விழா 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் திகதி கண்டி திருத்துவக் கல்லூரி மண்டபத்தில்
நடைபெற்ற பொழுது.
கலாசார அமைச்சர் மாண்புமிகு லக்ஷ்மன் ஜெயகொடி அவர்களால் மலையக மாணிக்கங்கள் நூல்
வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
அந்தனிஜிவா
 
 

என்னுரை
இதயத்திலிருந்து.
தேயிலைக் காடுகளிலும் LD606) Cupa (656fylf தேயிலைக்கு பசுமையும் தேநீருக்கு சாயத்தையும் தந்த மக்கள் கொட்டும் பனியிலும் அட்டை கடியிலும் அடிமைகளாக வாய் பேச முடியாத ஊமைகளாக விடியலுக்கு முன் உழைப்பிற்கு சென்று இருள் கவிந்த பின்னர் திரும்புகின்ற இழிந்த நிலையில் ஏதும் பேச முடியாத ஏமாளிகளாக இலங்கையின் தேயிலை காடுகளில் இந்திய மண்ணின் மைந்தர்கள் காட்டையும் மேட்டையும் சீர்படுத்தி பசுமை பூத்துக்குலுங்கும் சித்திர சோலைகளாக, பொன் கொழிக்கும் பூமியாக மாற்றியவர்களின் வாழ்வில் ஒளியில்லை. வஞ்சிக்கப்பட்டவர்களாக திக்கற்றவர்களாக, துன்பக் கேணியில் சோகப்பெருந் துயருடன் வாழ்ந்தார்கள்
LD606)us DIT60iisassiss6ir

Page 7
இந்த இழிநிலை தொடர்ந்தது ஒன்றல்ல, இரண்டல்ல. நூறு ஆண்டுகளாக இவர்களுக்காக எவருமே குரல் கொடுக்கவில்லை. இந்த மக்கள் உழைப்பிற்காக கொண்டு வரப்பட்ட நூறு ஆண்டுகளுக்கு பின்னரே ஓங்கி ஒலித்தது ஒரு குரல்! உரிமைக்காக முழக்கமிட்டது. இலங்கை வாழ். இந்திய வம்சாவளியினரின் உரிமைக்காக யுகக்குயிலாக கூவியது! அந்த யுகக் குயில் தான் தமிழகத்தின் தஞ்சை மனன் தந்த “தேச பக்தன்” கோ. நடேசய்யர் அந்த மாபெரும் மனிதர் தான் மலையக மக்களின் வாழ்வில், வரலாற்றில் புதிய வரலாறு படைத்தவர். அந்த யுகப்புரட்சியாளருடன் உயிர்த்துணையாக செயல்பட்டவர் திருமதி மீனாட்சி அம்மையார். இந்த ஒடுக்கப்பட்ட உழைப்பாளர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த மலையக மாணிக்கங்கள் இவர்கள்! இந்த இருவரின் செயற்பாட்டில் இன்னும் சிலர். வெளிச்சத்திற்கு வந்தார்கள் அந்த மாணிக்கங்களில் ஒருவர் பெரியார் பெரி சுந்தரம்! ஏனைய மாணிக்கங்கள் தான் சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்ந்த
。 劃 அந்தனிஜிவா
 

தேசிகர் இராமானுஜம்! திவான் பகதூர் ஜ. எக்ஸ் பெரைரா! துணிவுமிகுந்த ஜோர்ஜ் ஆர். மோத்தா! ,மலை நாட்டுக் காந்தி கே. இராஜலிங்கம்! தொழிற்சங்கத்தலைவர் ஏ. அஸிஸ், தொழிலாளர்களின் தளபதி வி. கே. வெள்ளையன் ஆங்கிலத்தில் எழுதி எங்களை அகிலம் முழுவதும் அறியச்செய்த அஞ்சாநெஞ்சன் சோமசுற்தரம் மக்கள் கவிமணி சி வி வேலுப்பிள்ளை கல்விக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த அசோகா பி டி. ராஜன். இத்தகைய மனித மாணிக்கங்களைப் பற்றி இன்றைய தலைமுை தெரிந்திருக்க வாய்ப் ಏನ್ಲಾ. மலையக மாணிக்கங்களuண
இவர்கள்
ഥങ്ങള്ക്കബ്ദt,
மறக்கவும் படுகிறார்கள்.
இத்தகைய உன்னத புருஷர்களைப்பற்றி இருபது ஆண்டுகளுக்கு மேலாக எழுதியும் பேசியும் வருகிறேன். ஓரிருவரைப்பற்றி வானொலியிலும், தொலைக்காட்சியிலும் உரையாற்றியுள்ளேன். இந்த அறியப்படாதவர்கள் அனைவரும் அறியப்பட வேண்டும் என்கிற அவா, இது போன்று மலையக மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தவர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
LD606)us LDIT60filisabilib6i g

Page 8
இந்த நூலில் இடம் பெறுபவர்கள் அனைவரும் இன்று நம்மிடையே இல்லை. மறைந்த மகத்தான மனித மாணிக்கங்களைப் பற்றித்தான் எழுதியுள்ளேன். மறைந்த மலையக முன்னோடிகள் சிலர் இந்நூலில் இடம் பெறாமல் போயிருக்கலாம். அதற்கு காரணம் அவர்களைப் பற்றிய போதிய தகவல்கள் எனக்கு கிடைக்கவில்லை. நீண்ட நாள் கனவாக நெஞ்சில் நிறு பூத்த நெருப்பாக கனன்றது. இந்த முன்னோடிகளைப் பற்றிய தகவல்களை இன்றைய இளைய தலைமுறையினர்க்கு புத்தக வடிவில் தரவேண்டும் என்கிற ஆசையும், ஆர்வமும் இரண்டாண்டுகளுக்கு மேலாக என்னைத் துாண்டிற்று. ஒரு நாள் தற்செயலாக திரு. துரை. விஸ்வநாதன் அவர்களுடன் மலையாக இலக்கிய முயற்சிகள் பற்றி உரையாடிய பொழுது புத்தக வடிவில் தயாரித்திருந்த "மலையக மானிக்கங்கள்” நூலை வாசிப்பதற்கு கொடுத்தேன். இது ஒரு வரலாற்று ஆவணம்" இதனை வெளியிட வேண்டும் என்றார். துரைவி பதிப்பக முலம். வெளியிடுவதாக உறுதி கூறினார். எனது இலக்கியப் பணிகளை ஊக்குவித்தும், உற்சாகப்படுத்தியும் வரும் இலக்கிய நெஞ்சம் துரை விஸ்வநாதன் இதனை வெளியிடுவதன் மூலம் ஒரு வரலாற்றுப்பணியை செய்துள்ளார்
மலையக மாணிக்கங்கள்
 
 

நன்றி செலுத்தும் இந்நூலில் உள்ள கட்டுரைகளை தினகரன், வீரகேசரி குன்றின்குரல் ஆகியவற்றின் பிரசுரித்த பத்திரிகை ஆசிரியர்களுக்கும் இந்நூலை சிறப்புற அச்சிட்டு தந்த யுனி ஆட்ஸ் அச்சகத்தினருக்கும் எங்களின் பணி தொடர உதவும் அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.
அந்தனி ஜீவா த. பெ. 32, கண்டி
அந்தனிஜிவா

Page 9
உள்ளடக்கம்.
திருமதி மீனாட்சி அம்மையார் தேசபக்தன் கோ. நடேசய்யர் பெரியார் பெரி. சுந்தரம் தேசிகள் இராமானுஜம் திவான் பகதூர் ஐ. எக்ஸ். பெரேய்ரா ஜோர்ஜ் ஆர். மோத்தா மலைநாட்டுக் காந்தி ராஜலிங்கம் தளபதி வி. கே வெள்ளையன் மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளை தொழிற் சங்கத் தலைவர் ஏ. அஸிஸ் அஞ்சாநெஞ்சன் சோமசுந்தரம் அசோகா பி. டி. ராஜன்
பக்கம்
13
17
25
29
34
37
45
50
56
61
65
மலையக மாணிக்கங்கள்
12
 

திருமதி மீனாட்சி அம்மாள்
இலங்கைத் திருநாட்டின் புகழ் பூத்த பெண்மணிகளில் ஒருவர் திருமதி மீனாட்சி அம்மையார். மலையகத்தின் முதல் தொழிற் சங்க அமைப்பை தோற்றுவித்தவரும் இலங்கையின் மூத்த பத்திரிகையாளருமான கோ. நடேசய்யரின் துணைவியாவார். திருமதி மீனாட்சி அம்மாள் தனது கணவருடன் இணைந்து தொழிற் சங்க பத்திரிகை, சமுதாயப் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
திருமதி மீனாட்சி அம்மாள் தனது கணவரான கோ. நடேசய்யருடன் 1920 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தார். தனது கணவரின் இலட்சியப் பணிகளில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
இவரைப் பற்றி மலையகப் படைப்பாளியும் ஆய்வாளருமான சாரல் நாடன் தனது “தேசபக்தன் கோ. நடேசய்யர்” என்ற நூலில் நடேசய்யரின் சக்தியாக விளங்கியவர் அவரின் மனைவியான மீனாட்சி அம்மையார் ஆவார். தோட்டம் தோட்டமாகச் சென்று அய்யருக்குத் துணையாக நின்று கருமங்கள் ஆற்றியவர் மீனாட்சி அம்மையாரே. அய்யரின் முன்கோபத்துக்கு ஈடுகொடுத்து அவரது முரட்டு சுபாவத்தைக் கரை புரண்டோடாது கட்டிக்காத்து காட்டாறாக புரள விடாது தடுத்து நிறுத்தி தடைகளைத் தகர்த்தெறியும் சக்தியாக உருவாக்கியவர் மீனாட்சி அம்மையாரே ஆவார்.
மலையக மாணிக்கங்கள்

Page 10
மலைநாட்டின் மூலைமுடுக்குகள், தோட்டத்து எல்லைகள், பஸ்தரிப்பு நிலையங்கள், மக்கள் கூடும் சந்தைகள் என்றெல்லாம் இருவரும் இணைந்து நின்று மலையக தோட்டத் தொழிலாளர்களுடன் தொடர்பு கொண்டனர்.
"சட்டமிருக்குது ஏட்டிலே நம்முள் சக்தியிருக்குது கூட்டிலே பட்டமிருக்கு வஞ்சத்திலே வெள்ளைப் பவர் உருகுது நெஞ்சத்திலே வேலையிருக்குது நாட்டிலே உங்கள் வினையிருக்குது வீட்டிலே.”
என்று மீனாட்சி அம்மாள் பாடிய “தொழிலாளர் சட்டக்கும்மி’ யில் மெய்மறக்காதவர் யாருமில்லை.
மகாகவி பாரதியாரின் பாடல்களை மலையகமெங்கும் பரப்பிய பெருமைக்குரியவர்கள் அய்யரும் அவருடைய துணைவியாருமான மீனாட்சி அம்மையாருமாகும். மகாகவி பாரதியாரின் எழுச்சிமிகு தேசிய பாடல்களை கோ. நடேசய்யர் துண்டுப் பிரசுரமாக அச்சிட்டு தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் விநியோகித்தபோது அந்தப் பாடல்களை தனது இனிமையான குரலால் மீனாட்சி அம்மையார் பாடுவார்.
அதன் பிறகு கோ. நடேசய்யர் பிரசங்கம் செய்வார். இவர்கள் மீது பேரபிமானம் வைத்திருந்த தொழிலாளர்கள் தங்கள் தோட்டங்களில் பயிரிட்ட காய்கறிகளை இவர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவார்கள்.
திருமதி மீனாட்சி அம்மையார் பாடுவதில் மாத்திரம் அல்ல, பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர். இவர் எழுதிய பாடல் தொகுப்பு ‘இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை என்ற தலைப்பில் 1947இல் வெளிவந்துள்ளது.
அந்தனிஜீவா
 
 

கோ. நடேசய்யர் நடத்திய ‘தேச பக்தன்' பத்திரிகை 1929ஆம் ஆண்டு தினசரியாக வெளிவர ஆரம்பித்தது. பிரதம ஆசிரியர் நடேசய்யராக இருந்தாலும் அய்யர் தொழிற் சங்கப் பணிக்காக அடிக்கடி வெளியூர் சென்று விடுவதால் ‘தேசபக்தன் பத்திரிகை அச்சிடும் பொறுப்பை மீனாட்சி அம்மாள் ஏற்றார். ‘பிரதம ஆசிரியரும் சொந்தக்காரருமாகிய கெளரவ நடேசய்யருக்காக அன்னாரின் மனைவி முரீமதி கோ. ந. மீனாட்சியம்மாளால் அச்சிட்டு பிரசுரிக்கப்படுகிறது என்ற குறிப்புடன் பத்திரிகை தினசரி வெளியாகியது.
‘தேசபக்தன் பத்திரிகையில் மீனாட்சி அம்மாள் நிறைய எழுதினார். அய்யர் வெளியூர் சென்ற வேளையில் ஆசிரியத் தலையங்கங்களை அவரே எழுதினார். ‘ஸ்திரி பக்கம்' என்று பெண்களுக்காக பத்திரிகையில் ஒரு பக்கம் அவரே பொறுப்பாக இருந்தார் 25.01.1929ஆம் திகதி தேசபக்தனில் அவர் நடத்திய பெண்களுக்கான பகுதியில் “பெண்களும் பத்திரிகைகளும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.
“இலங்கையில் இந்தியர்களுக்கு அநீதிகள் இழைக்கப் படுமானால் அந்த அநீதிக்கு எதிராகப் போராடும் போராளிகளின் முன் வரிசையில் திருமதி மீனாட்சி அம்மையாரைக் காணலாம்” என கலாநிதி என். எம். பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இந்தியர்களை ஆதரித்து அவர்களின் உரிமைக்காக 1939ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி பம்பலபிட்டி கதிரேசன் கோவில் முன்றலில் ஒரு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கோ. நடேசய்யர், ஜி. ஜி. பொன்னம்பலம், ஏ. அஸிஸ், ஐ. எக்ஸ், பெரைரா ஆகியோருடன் மீனாட்சி அம்மாள் கலந்து கொண்டு காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இது பற்றி மறுநாள் வெளிவந்த ‘வீரகேசரி’ பத்திரிகையில் செய்தி இடம் பெற்றுள்ளது.
தோட்டத் தொழிலாளர்கள் படும் துன்பத்தைக் கண்டு தோட்டத்துரையான வெள்ளையரான பிரஸ்கேர்டிலை நாடு கடத்த அரசாங்கம் முயற்சித்த பொழுது அதற்கு எதிராகக் குரல் கொடுத்த
மலையக மாணிக்கங்கள்

Page 11
இடதுசாரி தலைவர்களுடன் இணைந்து கோ. நடேசய்யரும் அவரது துணைவியரான மீனாட்சி அம்மாளும் குரல் கொடுத்தனர். பிரஸ்கிேர்டில் சம்பந்தமாக கொழும்பு கோல்பேஸ் திடலில் நடந்த கூட்டத்தில் மீனாட்சி அம்மாள் கலந்து கொண்டு பேசினார். இதனை சமசமாஜக் கட்சியினர் ஒழுங்கு செய்திருந்தனர்.
மீனாட்சி அம்மாள் எழுதுவதிலும் பேசுவதிலும் மட்டும் வல்லவராக விளங்கவில்லை. எதனையும் செயல்படுத்துவதிலும் தீவிரமாக இருந்துள்ளார். அச்சுக்கூடங்களில் ஆண்களே செய்து வந்த அச்சுக்கோர்க்கும் பணியினை பெண்களுக்கு பயிற்றுவித்து தேசபக்தன் பத்திரிகையில் அச்சுக் கோர்ப்பாளராக பெண்களை பணிபுரிய வைத்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் பாடல்களில் அதிக ஈடுபாடு கொண்ட மீனாட்சி அம்மாள் பாரதியார் கனவு கண்ட புமைப்பெண்ணாக வாழ்ந்து காட்டியுள்ளார்.
மலையகப் பெண்களின் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்த மீனாட்சி அம்மாளை சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8 ஆம் திகதியில் மலையக மக்கள் நினைவுகூர வேண்டியது கட்டாய 35L60)LDuJIT(g5b.
8.3.1995 வீரகேசரி
மலையக மாணிக்கங்கள்
 
 

2
عصعصعصعد
தேசபக்தன் கோ. நடேசய்யர்
தேயிலைக் காடுகளிலும், மலை முகடுகளிலும் தேயிலைக்கு பசுமையையும், தேநீருக்கு சாயத்தையும் தந்த மக்கள் கொட்டும் பனியிலும், அட்டைக்கடியிலும் அடிமைகளாக வாய் பேச முடியாத ஊமைகளாக விடியலுக்கு முன் உழைப்பிற்குச் சென்று, இருள் கவிழ்ந்த பின்னர் வீட்டிற்குத் திரும்புகின்ற இழிந்த நிலையில் ஏமாளிகளாக, இலங்கையின் மலை சூழ்ந்த தேயிலைக் காடுகளில, இந்திய மண்ணின் மைந்தர்கள்.
காட்டையும் மேட்டையும், சீர்படுத்தி, பசுமை பூத்துக் குலுங்கும் சித்திரச்சோலைகளக இரத்த வியர்வைகளைச் சிந்தி பொன்கொழிக்கும் பூமியாக மாற்றியவர்களின் வாழ்வில். ஒளியில்லை. வஞ்சிக்கப்பட்ட நிலையில், திக்கற்றவர்களாக துன்பக்கேணியில் பெரும் துயரத்துடன் வாழ்ந்தார்கள்.
இந்த இழிநிலை தொடர்ந்தது ஒன்றல்ல. இரண்டல்ல. நூறு ஆண்டுகளாக, இந்ந மக்கள் இங்கு வந்து குடியேறிய நூற்றாண்டுகளுக்குப் பின்னரே, அதாவது 1932 ஆம் ஆண்டிலேதான் பெருந்தோட்டத்துறையில் * முதல் தொழிற் சங்கம் உ துை.
இருபதாம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் தோட்டத் தொழிலாளருக்காக ஒன்றும் செய்யப்படவில்லை. அப்பொழுது இந்த மக்களுக்காகச் சட்டசபையில் ஒரு குரல் ஒலித்தது. அந்த குரலுக்குரியவார் கோ. நடேசய்யராவர்.

Page 12
கோ. நடேசய்யர் மிகப்பெரிய செயல் வீரர். இந்த நாட்டின் தொழிற் சங்க வரலாற்றிலும் பத்திரிகை வெளியிட்டுத்துறையிலும் அரசியல் வாழ்விலும், மலையக இலக்கிய வளர்ச்சிக்குக் கணிசமான பங்களிப்பைச் செய்தவர்.
இலங்கையில் வாழ்ந்த இந்தியத் தமிழருக்காக மட்டுமன்றி சமுதாய உணர்வோடு நலிவுற்ற மக்கள் அனைவருக்காகவும் குரல் எழுப்பிய பெருமகன் கோ. நடேசய்யர்.
மலையக மக்களின் முன்னேற்றத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்த கோ. நடேசய்யர் வரலாற்றுப் புகழ்மிக்க தஞ்சாவூரில் 1891 ஆம் ஆண்டு பிறந்தவர் தென்னிந்திய பிராமணரான இவர் தஞ்சாவூரில் அரசாங்க உத்தியோகத்தராக இருந்துவிட்டு பின்னர், பத்திரிகை ஒன்றில் பணியாற்றிய பொழுது, தென்னிந்திய வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவில் கலந்து கொள்ள 1919ஆம் ஆண்டு கொழும்பு வந்தார்.
இலங்கைக்கு வருகை தந்த கோ. நடேசய்யர் மலை சூழ்ந்த தேயிலை தோட்டங்கள் வாழ்கின்ற இந்தியத் தொழிலாளர்களின் நிலைமையை நேரில் கண்டறிய விரும்பினார். அந்தக் காலத்தில் தோட்டங்களில் வெள்ளைத்துரைமார்களின் ராஜ்யம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
தோட்டங்களுக்கு வெளியார் யாரும் செல்லமுடியாத சூழ்நிலை. புடவை வியாபாரிகள் மாத்திரம் செல்வது வழக்கம். நடேசய்யர் புடவை வியாபாரியாக மாறினார். வியாபாரிகளுடன் சேர்ந்து தோட்டங்களுக்குச் சென்றார். துன்பக்கேணியில் தம் மக்கள் படும் துன்ப துயரங்களை நேரில் கண்டறிந்தார். இந்தியா திரும்பியதும் இலங்கையில் தோட்டத்தொழிலாளர்களுக்காக இழைக்கப்படும் அநீதிகளை ஒரு சிறு பிரசுரமாக அச்சிட்டு விநியோகித்தார். தஞ்சாவூர் காங்கிரஸ் கமிட்டியிடம் தனத பிரசுரத்தையும் விளக்கமான அறிக்கையையும் சமர்ப்பித்தார். இந்திய மக்களின் மீட்சிக்காக செயல்பட வேண்டும் என திட்டமிட்டார். மீண்டும் 1920 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தார்.
இலங்கைக்கு வருகை தந்த நடேசய்யர் கொழும்பு நகரில் இந்தியர்களோடு சேர்ந்து இயங்க ஆரம்பித்தார். இலங்கை தேசிய
மலையக மாணிக்கங்கள்
 
 

காங்கிரஸ் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக இருந்த டாக்டர் ரட்ணம், அருளானந்தம் அகியோரை வெளியீட்டாளராகக் கொண்ட ‘தேசநேசன் பத்திரிகை ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். ‘சிட்டிசன்' என்ற ஆங்கில பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும் செயல்பட்டார்.
கோ. நடேசய்யர் வெறும் பத்திரிகை ஆசிரியராக மட்டும் இருக்க விரும்பவில்லை. தொழிற் சங்கவாதியான ஏ. ஈ. குணசிங்கவுடன் இணைந்து தொழிற் சங்க பணிகளில் ஈடுபட்டார். தமிழகத்தில் திரு. வி. க. வின் தொழிற் சங்கப் பணிகளைப் பற்றி அறிந்திருந்த நடேசய்யர் தொழிற் சங்கப் பணிகளில் அக்கறையும் ஆர்வமும் காட்டினார்.
1928 ஆம் ஆண்டு குணசிங்காவின் இந்திய எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக நடேசய்யர் அவரை விட்டு விலகினார். தோட்டத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களைக் கண்டு ஆத்திரமடைந்தார். அவர்களின் உரிமைக்காகப் போராட, அவர்கள் அனைவரையும் ஓரணியில் திரட்ட “அகில இலங்கை இந்தியத் தோட்டத் தொழிலாளர் சங்கம்” என்ற அமைப்பை ஏற்படுத்தினார். தனது செயற்பாடுகள் அனைத்தையும் தோட்டத் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணிக்கத் தீர்மானித்தார். அதனால் அட்டனில் தலைமை அலுவலகத்தை மாற்றிக் கொண்டார்.
நடேசய்யரின் பத்திரிகை, தொழிற் சங்கப் பணிகளுக்கு அவருடன் இருந்து செயல்பட்டவர் அவரது துணைவியாரான திருமதி மீனாட்சி அம்மையாராகும். தோட்டத் தொழிலாளர்களிடையே மகாகவி பாரதியாரின் பாடல்களை மீனாட்சி அம்மையார் இனிமையான குரலில் பாட நடேசய்யர் தொழிலாளர்கள் விழிப்புணர்ச்சி பெறும் வண்ணம் உணர்ச்சிகரமான சொற்பொழிவுகளை நிகழ்த்துவார்.
மலையக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஸ்தாபன அமைப்புக்களை ஏற்படுத்துவதில் நடேசய்யர் ஆர்வம் கொண்டார். மக்களுக்குத் தன்னைச் சரியாக அறிமுகப்படுத்திக் கொள்ள “வெற்றி உனதே” “நீ மயங்குவதேன்” “தொழிலாளர் அந்தரப்பிழைப்பு" போன்ற நூலகளை எழுதினார்.
மலையக மாணிக்கங்கள் 19.

Page 13
வருடக்கணக்காகத் தலைமைக் கங்காணி முறைக்கும் குறிப்பிட்ட தோட்டத் தொழிலாளியை பரம்பரை பரம்பரையாக அடிமையாக்கும் துண்டு முறைக்கும் எதிராக நடேசய்யர் போர்க்கொடி உயர்த்தத் தொடங்கினார். தோட்டத் தொழிலாளர்களின் மத்தியில் நடேசய்யரின் செல்வாக்கு பரவியது. 1931ஆம் ஆண்டு மே தினத்தில் அட்டன் நகரில் நடத்திய மே திக் கூட்டத்தில் 5000 தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள். அந்தக் கூட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தி “தொழிலாளர்களின் உரிமைகளும், கடமைகளும்” என்ற பிரசுரத்தை ஆயிரக்கணக்கில் அவர்களிடையே விநியோகித்தார்.
1936 இல் நடந்த அரசாங்க சபைத் தேர்தலில் நடேசய்யர் போட்டியிட்டு மகத்தான வெற்றியைப் பெற்றார். நடேசய்யருக்கு எதிராக ஏராளமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அரசாங்கத்தின் முக்கியஸ்தரும், தோட்டத்துரைமார்ளும் அவர்களின் கையாட்களான கங்காணிமார்களும் செயல்பட்டனர். ஆனால் நடேசய்யர் தொழிலாளர்களின் பலத்தில் மாத்திரம் நம்பிக்கை வைத்து வெற்றிபெற்றார்.
இத்தேர்தலில் இடதுசாரித் தலைவர்களான டாக்டர் என். எம். பெரேரா, பிலிப் குணவர்த்தன ஆகிய இருவரும் முதன் முறையாக அரசாங்க சபைக்குத் தெரிவானார்கள். தோட்டத் தொழிலாளர்களின் முன்னேற்றத்திலும் நலனிலும் அக்கறை கொண்ட இடதுசாரித் தலைவர்களான இவர்களுடன் சட்ட சபையில் நடேசய்யர் இணைந்து செயல்பட்டார்.
அப்பொழுது அமைச்சராக இருந்த எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா நடேசய்யரின் விவாதத் திறமைக்கும் அரசியல் விவேகத்திற்கும் தீர்க்கதரிசனமான கருத்துக்களுக்கும் மதிப்பளித்தார்.
ஆறு ஆண்டுகள் சட்ட நிரூபண சபையிலும் (1925 - 1931) அதன் பின்னர் பதினொரு ஆண்டுகள் சட்ட சபையிலும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் பிரதிநிதித்துவம் செய்தார். கோ. நடேசய்யர். சட்ட சபையில் அவர் நிகழ்த்திய பேச்சுக்கள் ஒவ்வொன்றும் வரலாற்றுச் சிறப்புக்குரியது.
அந்தனிஜீவா
 
 

“கடல் கடந்த வெளிநாடுகளில் குடியேறிய இந்தியர்களின் தொகை 25 லட்சமாகும். இதில் 90 சதவிகிதத்தினர் தமிழர்களாவர். இவர்கள் பல பாகங்களிலும் குடியேறினார்கள். அவர்கள் குரல் காட்டில் அழுகின்ற கதறலாக அமைந்திருக்கிறது. இலங்கையில் 1871 ல் குடிசன மதிப்பின்படி 12 சத விகிதத்தினர் இலங்கையில் பிறந்தவர்கள். 1921 ல் 21 சதவீதமாகவும் 1941 இல் 80 சதவீதமாகவும் இது அதிகரித்துள்ளது. இப்புள்ளி விபரங்கள் உங்களிடத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தோட்டத்துக்குப் பிரட்டுக்களம் போய் நின்று இலங்கையில் பிறந்தவர்களை நான் கணக்கெடுத்திருக்கின்றேன்” என முழங்கினார் நடேசய்யர்.
இந்திய மக்களைப்பற்றி நடேசய்யர் நாளுமன்றத்தில் 1941 இல் எதைச் சொன்னாரோ அந்த அடிப்படையில் பின்னர் பல ஒப்பந்தங்கள் ஏற்பட்டன.
இது மாத்திரமல்ல இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனையில் அமைய வேண்டும் எனத் தீவிரமாக வாதாடி வெற்றிக்கண்டார். சட்ட சபையில் நடேசய்யர் ஆற்றிய பேச்சுக்களும், மேற்கொண்ட நடவடிக்கைகளும் ஆணித்தரமானவை. பெரிய கங்காணிமார் முறையை ஒழித்துக்கட்டத் தீர்மானம் கொண்டு வந்ததும் இவரே. நடேசய்யர் பத்திரிகையையும் மேடையையும் தனக்கே உரித்தான ஆயுதமாகப் பயன்படுத்தினார் தோட்டம் தோட்டமாகச் சென்று மகாகவி பாரதியார் பாடல்களைத் துண்டுப் பிரசுரமாக அச்சிட்டு பரப்பினார்.
நடேசய்யரின் பத்திரிகைப் பணி போற்றுதலுக்குரியது. ‘எனக்குச் சட்ட சபை பெரிதல்ல; பத்திரிகைதான் பெரிது. நான் சட்ட சபைக்குப் போய் செய்யக்கூடிய நன்மைகளைவிட பன்மடங்கு அதிக நன்மை பத்திரிகையால் ஏற்படுத்தக்கூடும்” இவ்வாறு நடேசய்யர் ஆசிரியராக இருந்த “தேச பக்தன்” இதழொன்றில் குறிப்பிடுகிறார். நடேசய்யரின் ஒவ்வொரு எழுத்தும் தொழிலாளர் பற்றியதாகவெ இருக்கும். தொழிலாளர் “தேசபக்தன்” பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவி செய்ததன் நினைவாகத் தனது அச்சகத்துக்கு “தொழிலாளர் அச்சகம்’ எனப் பெயர் கொடுத்தார்.
மலையக மாணிக்கங்கள்

Page 14
தேசநேசன் (1921) தேசபக்தன் (1924) தொழிலாளி (1929) தோட்டத்தொழிலாளி (1947) உரிமைப்போர், சுதந்திரப்போர், வீரன், சுதந்திரன் என்று தமிழிலும், சிட்டிசன் (1922) ஃபோர்வர்ட் (1926) இந்தியன் ஒபீனியன் (1936) இந்தியன் எஸ்டேட் லேபர் (1929) என்று ஆங்கிலத்திலும் வெளிவந்த பத்திரிகை அனைத்திற்கும் நடேசய்யர் ஆசிரியராக இருந்து நடத்தியுள்ளார்.
‘தேசபக்தன் நடேசய்யரின் சொந்த பத்திரிகை. பெயரையும்
புகழையும் தேடித் தந்த பத்திரிகை. அதன் முதல் ஆசிரியத் தலையங்கத்தில்.
தேசபக்தன் ஒருவருக்கும் விரோதியல்ல, ஆனால் பொய்யனுக்கு விரோதி, ஆக்கிரமகாரனுக்கு விரோதி, வேஷக்காரருக்கு விரோதி, அது போலவே தேசபக்தனும் உண்மை நாடி நிற்பான். சாதி மத வித்தியாசம் பாரான். உண்மையான சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் பொது ஜனங்களுக்கு உண்டாக உழைப்பான் என்று எழுதினார்.
தேசபக்தன் பத்திரிகையில் மகாகவி பாரதியாரைப் பற்றி ஆசிரியத் தலையங்கங்கள் எழுதினார். அவரது கவிதா ஆற்றல் பற்றி சாமானியர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் பல கட்டுரைகள்
எழுதினார்.
“சாதி மதங்கள் பாரோம் - உயர் ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின் வேதியராயின் ஒன்றே - அன்றி வேறு குலத்தினராயினும் - ஒன்றே” என்ற கவிதை வரிகளையும் “தாயின் மணிக்கொடி பாளிர் - அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வார்”
என்ற கவிதை வரிகளையும் “தேசபக்கதன்” பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கத்தின் மேல் பிரசுரித்து, பாரதியாரின் கவிதை
அந்தனிஜீவா 22
 

வரிகளைத் தனக்கு பின் வந்த பத்திரிகையாளர்களையும் சஞ்சிகையாளர்களையும் தங்களின் ஆசிரியத் தலையங்கத்தின் மேல் பிரசுரிக்க நடேசய்யர் வழி காட்டியாக இருந்துள்ளார்.
நடேசய்யர் பத்திரிகை வெளியிட்டதுடன் நூல்களையும் எழுதிப் பிரசுரித்தார். தமிழில் மாத்திரமின்றி ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டார் தோட்ட முதலாளிமார்கள் முதலாளிகளின் கைக்கூலிகளான கங்காணிமார் எப்படி அவர்களின் உழைப்பை உறிஞ்சுகிறார்கள் என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டு உண்மையை எடுத்துக்காட்ட "தோட்ட முதலாளிகளின் ராஜ்யம்” (Planter Raj) என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.
நடேசய்யரின் ஆங்கில நூலைக்கண்டு தோட்டத் துரைமார்களான வெள்ளையர்கள் அச்சங் கொண்டனர். அந்நூலின் ஆயிரக் கணக்கான பிரதிகளை வாங்கி தீயிட்டு கொளுத்தினார்கள், இலங்கை, இந்தியா, இங்கிலாந்து அரசாங்கங்களில் இந்நூல் பரப்பரப்பை ஊட்டியது.
1929 இல் “தொழிலாளர்களின் சட்டப் புத்தகம்” என்ற நூலை வெளியிட்டார். இந்த நூல் தொழிலாளர்களுக்குப் பல விதங்களிலும் நன்மை விளைவித்தது. இந்தச் சட்டப் புத்தகத்தின் பிரதிகளை பெரும் அளவில் தோட்ட துரைமார்களின் கை ஆட்களான கங்காணிமார் பணம் கொடுத்து வாங்கி பதுக்கி வைத்தனர். இதனை அறிந்த நடேசய்யர் அந்த நூலின் முக்கிய பகுதிகளை “தொழிலாளர்களின் கடமைகளும் உரிமைகளும்” என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரங்களாக அச்சிட்டு நேரடியாகத் தோட்டங்களுக்குச் சென்று வழங்கினார்.
நடேசய்யரின் எழுத்தாற்றலையும் ஆக்க இலக்கியத் திறமையையும் அவரது உழுத்துக்கள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. அவர் எழுதி வெளியிட்ட நூல்களையும், ஆசிரியராக இருந்த பத்திரிகைகளையும், சட்ட சபை உரைகளையும் பார்த்தால் அவரின் இமாலய சாதனைகளையும் புரிந்து கொள்ளலாம்.
இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரின் உரிமைக்காகப் போராட மலைநாட்டில் குடியேறி ஆக்க இலக்கிய முயற்சிகள் படைத்து
மலையக மாணிக்கங்கள் 23.

Page 15
‘மலையக இலக்கியம்” என்ற தனித்துவம் மிக்க இலக்கியம் உருவாகுவதற்குப் பாதை அமைத்துக் கொடுத்தும், அந்தப் பாதையில் நடந்து சென்றும் மலையக ஆக்க இலக்கியத்தின் முதல்வராக திகழ்கின்றார்.
இத்தகைய பெருன்மக்கும் சிறப்புக்கும் உரிய மானுடம் பாடிய வானம்பாடியான நடேசய்யர் தமிழரசுக் கழகத் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் வேண்டுகோளின் பேரில் “சுதந்திரன்' தினசரியின் ஆசிரிய பீடத்தில் அமர்ந்து மீண்டும் கனல்கக்கும் தனது எழுத்தாற்றலைப் பயன்படுத்திய வேளையில்.
1947ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதி தனது ஐம்பத்தாறாவது வயதில் நடேசய்யர் அமரரானார். அவரது இறுதிச் சடங்குகளைத் தமிழ் மக்களின் மதிப்புக்குரிய எஸ். ஜே. வி. செல்வநாயகமே முன்னின்று நடத்தினார்.
கோ. நடேசய்யர் என்ற தனிமனிதனின் சாதனை இந்திய வம்சாவளியினரின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமையும். இலங்கை வாழ் இந்தியத் தமிழர்கள். நடேசய்யரை தங்களை வாழ்விக்க வந்த மகானாக கருதினார்கள். இலங்கையின் மகாத்மாவாகா வழிப்பட்டனர். ‘காந்தி நடேசய்யர்' என அன்புடன் @ങ്ങgഴ്ച,ങ്ങി.
மலைமுகடுகளிலும், தேயிலைக்காடுகளிலும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த மனித ஜீவன்களைப்பற்றி முதன் முதல் குரல் கொடுத்த மனித மாணிக்கமான கோ. நடேசய்யர் என்ற பெயர் ‘மலையகம் என்ற சொல் இருக்கும் வரையில் நிலைத்திருக்கும்.
(தமிழகத்தில் மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் திரு. இரா. சிவலிங்கம் தலைமையில் கோத்தகிரியில் நடத்திய ‘காந்தி நடேசய்யர்” நூல் வெளியீட்டு விழாவில் (1990) நூலாசிரியர் நிகழ்த்திய உரை.)
Eva
Life&yoggiG
 
 

3
பெரியார் பெரி. சுந்தரம்
மலையக மக்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்த தலைவர்களில் கல்வி துறைகளிலும் பொது வாழ்க்கையிலும் உன்னத ஸ்தானத்தினைப் பெற்று மதிப்புக்குரிய மனிதராக போற்றப்பட்டவர் பெரியார் பெரி. சுந்தரம்.
இத்தகைய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராகத் திகழ்ந்த பெரி. சுந்தரம் தமது ஆறாவது வயதில் நெல்லி மலைத் தோட்டத்திலிருந்த பாட்டனாரின் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக்கல்வியைப் பயின்றார். பின்னர் தனது பதினான்காவது வயதில் கண்டியில் புகழ்பெற்ற கல்விக்கூடமான திரித்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.
அதன் பின்னர் சென். தோமஸ் கல்லூரியில் கல்வியை முடித்துக் கொண்டு சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். இலண்டன் கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்திலுள்ள எம்மானுவேல் கல்லூரியிலும் பின் கிறேஸ் இன் சட்டக் கல்லூரியிலும் தனது சட்டப் படிப்பைத் தொடர்வதற்காகத் தமது இருபதாவது வயதில் இங்கிலாந்து சென்றார். தமது இருபத்திமூன்றாவது வயதில் கல்வியிலும், சட்டத்துறையிலும் பட்டங்களைப் பெற்றார்.
மலையக மாணிக்கங்கள்

Page 16
இலங்கை மத்திய பிரதேசத்தின் மலைநாட்டில் இருந்து வந்த இளைஞன், கேம்பிறிட்ஜ் இந்திய் மாணவர் சங்கம், கேம்பிறிட்ஜ் இலங்கை மாணவர் சங்கம் ஆகியவற்றின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். எம்மானுவேல் சட்டக் கழகத்தின் உபதலைவராகவும் செயல்பட்டார்,
பெரியார் பெரி. சுந்தரம் இலண்டனில் இருந்து பொழுது அங்கு மகாத்மா காந்தியைச் சந்தித்தார். மகாத்மா காந்தியுடன் இலங்கையில் வாழ்கின்ற இந்தியர்களைப் பற்றி நீண்ட நேரம் உரையாடினார். தாழ்த்தப்பட்ட அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக பாடுபடும் படி மகாத்மா அறிவுரை வழங்கினார்.
இலங்கையில் வாழ்கின்ற இந்திய மக்களுக்காக, உழைப்புக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ள தோட்ட மக்களுக்காகப் பாடுபட வேண்டும். அவர்களின் முன்னேற்றத்திற்காகத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்ற இலட்சிய எண்ணங்களைத் தன் இதயத்தில் பதிய வைத்தக் கொண்டு 1916ஆம் ஆண்டு பெரி. சுந்தரம் இலங்கை திரும்பினார்.
இவர் நாடு திரும்பிய காலகட்டம் இங்கு பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலம் வெள்ளையர்களின் அதிகாரம் அதிகமாகவே காணப்பட்டது. புகைவண்டியின் முதல் வகுப்பு பெட்டிகள், பெரிய ஓட்டல்கள் வெள்ளைக் காரர்களின் உபயோகத்திற்கு மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்தன. இதனை எதிர்ப்பது. என. பெரி. சுந்தரம் முடிவு செய்தார்.
புகைவண்டியில் பெரி. சுந்தரம் முதல் வகுப்பில் பிரயாணம் செய்யத் தொடங்கினார். அந்தக் காலங்களில் ஒரு பிரயாணிக்கு முதல் வகுப்பு டிக்கட் வழங்குவது என்பது ஸ்டேசன் மாஸ்டரின் விருப்பத்தைப் பொறுத்தது. ஒரு முறை புகைவண்டியில் பெரி. சுந்தரம் தன் நண்பர்களுடன் பிரயாணம் செய்துகொண்டிருந்தார். தோட்டத்துரை யொருவர் அவர்களுடைய பெட்டிக்குள் நுழைந்து பெரி. சுந்தரத்தை வெளியேறுமாறு கட்டளையிட்டார். ஆனால் பெரி. சுந்தரம் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. ஸ்டேசன் மாஸ்டரும் மற்ற
அந்தனிஜீவா
 
 

அதிகாரிகளும் அடுத்திேெபெட்டிக்குப் போகுமாறு அவரிடம் கெஞ்சினார்கள்.
ஆனால் பெரி. சுந்தரம் வழக்கம் போல் துணிவுடன் “நாங்கள் குஷ்ட ரோகிகள் அல்ல, அந் க்கார கனவான் குஷ்ட ரோகியாக இருந்தால் போகும்படி கூறுங்கள்” என்றார். தோட்டத்துரை அவமானத்துடன் தலையைக் குனிந்தவாறு வேறு பெட்டிக்குச் சென்றார்.
1916 ஆம் வருடத்திலிருந்து பெரி. சுந்தரம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு காட்டினார். பின்னர் மலையக மக்களின் குடி உரிமைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினர். இலங்கை தேசிய காங்கிரஸை ஸ்தாபித்தவர்களில் இவரும் ஒருவர். இலங்கை தொழிலாளர் சேம நல சங்கத்தை ஸ்தாபித்து அதன் செயலாளராக
EL60LDuumibbsorrir.
“மலைநாட்டு மக்களுக்கென மத்திய ஸ்தாபனம் ஒன்றை நிறுவ வேண்டும் என முதன் முதலாச் சிந்தித்தவர் பெரி. சுந்தரம் தான். அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளின் பலனாக இந்திய மத்திய சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. காலஞ்சென்ற திரு. ஐ. எக்ஸ். பெரேய்ரா அதன் முதல் தலைவராக இருந்தார். இதற்கிடையில் பெரி. சுந்தரம் நாடெங்கும் பிரசித்தி பெற்றுவிட்டார். தோட்டங்களில் இருந்து வந்த படித்த வாலிபர்கள் அவரைச் குழ்ந்து கொண்டனர். “அவரை முதன் முதலாகப் பின்பற்றியவர்களில் திரு. கே ராஜலிங்கம், திரு. எஸ். சோமசுந்தரம், திரு. இராமானுஜம், திரு. வைத்திலிங்கம் ஆகியோரும் நானும் குறிப்பிடத்தக்கவர்கள் திரு. தொண்டமான் பின்னர்தான் வந்தார். ஆசிரியர், இலட்சியத்தையும் ஒரு குறிக்கோளையும் அவர்களுக்கு அளித்தார். அவர்கள் மலைநாட்டுப் பகுதிகளில் சமூக அபிவிருத்தி ஸ்தாபனங்களை அமைத்து மக்களை பெரி. சுந்தரத்தின் பக்கம் ஈர்த்தனர்” என்று மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளை கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
முதலாவது அரசாங்க சபைத் தேர்தலில் பெரி. சுந்தரம் அட்டன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொழிலாளர் கைத்தொழில்
vn மலையக மாணிக்கங்கள் 27

Page 17
அமைச்சரானார். தொழிலாளர் நன்மையைக்கருதி நல்ல பல சட்ட திட்டங்களைக் கொண்டு வந்தார். மலையக கல்வி வளர்ச்சிக்காகக் காத்திரமான கருத்துக்களைத் தெரிவித்தார். இந்தியாவுக்குச் சென்ற முதலாவது வர்த்தகத் துர்துக் குழுவுக்கு அரசாங்க அமைச்சர் என்ற முறையில் தலைமை வகித்தார். மலையக மக்களின் நல்வாழ்வுக்காக அயராது உழைத்த பெரியார் பெரி. சுந்தரம் 1956 இல் அமரரானார். மொழி இன பேதங்களை மறந்து அனைவரும் இவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
இவருடைய இறுதி மரியாதையின்போது பிரதம நீதிபதி திரு. தல்கொடயிட்டிய கூறியதாவது “பொது வாழ்க்கைத்துறையில் அவர் எடுத்துக் கொண்ட பங்குக்காகவே மகக்ள் அவரை என்றென்றும் தம் நினைவிற் கொள்வார்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக நடந்த போராட்டத்தில் சேர். ஜேம்ஸ் பிரிஸ், சேர். பொன்னம்பலம் இராமநாதன், ஆகியோருடன் முன்னணியில் திகழ்ந்தார்” என்றார்.
இலங்கை இந்தியக் காங்கிரஸ் அமைக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் வளர்ச்சியில் அக்கறை காட்டினார். இரண்டு தடவைகள் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது நூற்றாண்டு பிறந்த தினத்தில் (1992) இலங்கை அரசு இவருக்கு முத்திரை வெளியிட்டு கெளரவித்தது.
பொது வாழ்விலும், சட்டத் துறையிலும் புகழ் பெற்று விளங்கிய பெரியார் பெரி. சுந்தரம் மலையகத்துத் தலைவர்களில் மிக முக்கியமானவர். இவரையும் கோ. நடேசய்யரையும் அரசு தேசிய வீரர்களாக ஏற்றுக்கொண்டுள்ளது. இவரது வரலாறு தனி நூலாக வெளிவர வேண்டும்.
இன்றைய இலங்கையில் புகழ் பூத்த வழக்கறிஞர்களில் ஒருவர் பெரியார் பெரி. சுந்தரத்தின் மைந்தரான ஜெயா-பெரி சுந்தரம். தொழிலாளர் காங்கிரஸில் உபதலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
ஜூலை 1998 குன்றின்குரல்
அந்தனிஜீவா
 
 

4.
مصمتمتع
தேசிகள் இராமானுஜம்
மலையகத்தின் தலைநகரில் ஒன்றான கண்டி மாநகரில் மாநகரசபை ஆட்சி மன்றத்தேர்தலில் 1943இல் வெற்றிவாகை சூடிய தேசிகள் இராமானுஜம் அவர்கள் துணை மேயராக உதவி நகர பிதா என்ற அந்தஸ்தில் மக்களின் இதயங்களில் மகத்தான ஓர் இடத்தைப் பெற்றிருந்தார்.
மலையக மாணிக்கங்களில் ஒருவராகிய தேசிகர் இராமானுஜம் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்துள்ளார். 1947ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தலில், சிங்கள வாக்காளர்கள் பெரும்பான்மையினராக வாழும் அளுத்நுவர தொகுதியில் போட்டியிட்டு ஆறு சிங்கள வேட்பாளர்களை கட்டுப்பணத்தை இழக்கச்செய்து வெற்றிவாகை சூடினார். இந்திய துவேஷம் தலைவிரித்தாடிய இந்தக் காலகட்டத்தில் சிங்கள இனத்தவர்கள் பெரும்பான்மை யினத்தவராக வாழ்ந்த அளுத்துவர தொகுதியில் இன மத மொழி பேதமின்றி இராமானுஜம் வெற்றியீட்டியது அவரின் சேவைக்குக் கிடைத்த வெற்றியாகும்.
இந்திய வம்சாவளி மக்களின் தலைவராகத் திகழ்ந்த இராமானுஜம் 1910 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி தமிழ் நாட்டில் நாகபட்டினத்திற்கு அருகாமையிலுள்ள பிரதாப இராமநாதபுரம் என்ற

Page 18
கிராமத்தில் கிருஷ்ண தேசிகருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தார். தன் சகோதரனின் உதவியால் எஸ். எஸ். எல். சி. வரை படித்துவிட்டு சென்னையில் இருந்த டாட்டா அச்சகத்தில் பகுதி நேர ஊழியராகச் சேர்த்து பணியாற்றினார்.
அந்தக் காலகட்டத்தில் தமிழ் பேரறிஞரும், தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபட்டவரும்ான திரு. வி. கல்யாணசுந்தர முதலியாரிடம் பழகும் வாய்ப்பு இராமானுஜத்திற்கு ஏற்பட்டது. திரு வி. கவின் உறவு இராமானுஜம் அவர்களின் இளமை வாழ்வில் புதிய உற்சாகத்தையும் புதுமை எண்ணங்களையும் ஏற்படுத்தியது. பொது வாழ்வில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது. திரு. வி. க. நடத்தி வந்த ‘நவசக்தி” பத்திரிகைக்கு கட்டுரைகள் எழுதுவதும், ஆங்கில கட்டுரைகளை மொழிப் பெயர்ப்பதிலும் ஈடுபட்டார்.
இந்தச் சமயத்தில் கொழும்பில் கோ. நடேசய்யர் நடத்திய
தேசபக்கதன் தினசரிக்கு ஓர் உதவி ஆசிரியர் தேவையாக இருந்து.
திரு. வி. க. அவர்களின் சிபாரிசுடன் அப்பதவியை ஏற்றுக்கொள்ள தனது 19வது வயதில் இராமானுஜம் இலங்கை வந்தார்.
1931 ஆம் ஆண்டு பத்திரிகைத்துறையை விட்டு கண்டி தர்மராஜா கல்லூரியின் தமிழ் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். அத்துடன் சிறிது காலம் நீதி மன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.
1936ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் விருப்பப்படி இலங்கைக்கு வருகை தந்த பாரதப் பிரதமர் றி ஜவஹர்லால் நேரு இந்த நாட்டில் வாழும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரின் ஸ்தாபன இயக்கங்களை ஒன்றுபடுத்தி "இலங்கை இந்திய காங்கிரஸ்” என்ற ஸ்தாபன இயக்கங்களை ஒன்றுபடுத்தி ‘இலங்கை இந்திய காங்கிரஸ்” என்ற ஸ்தாபன அமைப்புக்கு வழிவகுத்தார். இந்த இலங்கை இந்திய காங்கிரசின் வளர்ச்சிக்கு இராமானுஜம் ஆரம்பம் முதல் தனது வாழ்நாளின் இறுதி வரை உழைத்தார்.
அந்தனிஜீவா 30

1940 களில் கண்டி மாநகரில் இருந்த இந்திய வம்சாவளியினரை ஒன்று திரட்டும் நடவடிக்கையாக கண்டி நகராட்சி மன்ற உழியர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கென ஒரு சங்கத்தை அமைத்தார். அந்தச் சங்கத்தின் தலைமைப் பதவியை ஏற்று அந்த மக்களுக்காக அயராது உழைத்தார்.
மக்களுகக்குப் பணியாற்ற வேண்டுமென்றால் அவர்களுக்கு ஒரு பத்திரிகை தேவை என்பதனை உணர்ந்தார். சொந்தமாக ஓர் அச்சகத்தை உருவாக்கி “ஜனநேசன்" என்ற பெயரில் வாரப் பத்திரிகை ஒன்றை தொழிலாளர் நலன் காக்கும் உரிமைக்குரலாக வெளியிட்டார்.
1943 ஆம் ஆண்டு நடைபெற்ற கண்டி மாநகராட்சி மன்ற தேர்தலில் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதியில் நின்று எளிதில் வெற்றி பெற்றார். 1943 இல் இருந்து 1957 வரை நகராட்சி மன்ற அங்கத்தவராக இருந்ததுமல்லாமல் 1956 ஆம் ஆண்டு முதல் துணை மேயராகவும் இருந்து சேவை செய்துள்ளார்.
மலையக மக்களுக்கு முதன்முதலில் உரிமை முழக்கம் செய்த கோ. நடேசய்யரின் தொடர்பு காரணமாகத் தோட்டத் தொழிலாளர்களின் அவல வாழ்வை இல்லாதொழிக்க, அவர்களை ஒன்று திரட்டி ஒரே இயக்கமாகச் செயல்பட வேண்டும் என முடிவு செய்தார். அதன் காரணமாக கண்டி மாவட்டத்திலுள்ள தோட்டத் தொழிலாளர்களை இலங்கை இந்தியன் காங்கிரஸில் இணைத்து அவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தார்.
1945 இல் சென்னை சென்று சரோஜினி அம்மையாரை வாழ்க்கைத் துணைவியாகத் திருமணம் செய்து நாடு திரும்பினார். டாக்டரான திருமதி சரோஜினி இராமானுஜம் கண்டியில் தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தினார். வசதியற்ற ஏழைகளுக்கு இலவசமாகக் கூட வைத்தியம் செய்துள்ளார். தனது கணவரின் பொது வாழ்க்கைச் சேவைக்குப் பெரிதும் உதவியாகக் கைகொடுத்து நின்றார்.
இராமானுஜம் தம்பதிகளுக்கு ஜெயப்பிரகாஷ், அருணா, பிரதாப், மோகன் என்ற நான்கு வாரிசுகள் உள்ளனர். இராமானுஜத்தின்
மலையக மாணிக்கங்கள் 31

Page 19
இரண்டாவது மகனான திரு. பிரதாய் இராமானுஜம் வெளிநாடு சென்று உயர் கல்வி கற்று இன்று அரசாங்கத்தில் உயர் அதிகாரியாக அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றுகிறார்.
இலங்கை இந்திய காங்கிரஸாக இருந்த பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக மாறிய ஸ்தாபனத்தின் வளர்ச்சியில் இராமானுஜம் பெரும் பங்கு கொண்டு உழைத்தார். இராமானுஜம் அவர்களின் அழ்ந்த அரசியல் அனுபவமும் தெளிந்த சிந்தனையும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றது. 1958ஆம் ஆண்டு மத்திய நிர்வாகக் குழுவில் அரசியல் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதே ஆண்டில் 1958 இல் ஜெனிவாவில் கூடிய ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான சர்வதேச தொழிலாளர் நிறுவன (1.L.O) மகாநாட்டிற்கு இலங்கை தொழிலாளர் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். 1962 லும் சர்வதேச தொழிலாளர் மகாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பு இராமானுஜத்திற்கே கிடைத்தது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இப்பொழுது வெளியிடும் காங்கிரஸ் பத்திரிகையின் ஆரம்ப கர்த்தா இராமானுஜம் அவர்களே. 1958 ஆம் ஆண்டு காங்கிரஸ்' பத்திரிகையை மாத வெளியீடாக வெளியிட்டார். இராமானுஜத்தின் திறமை, ஆற்றல், அனுபவம் காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் பல இவரைத் தேடி வந்தன.
1958 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள *யுனெஸ்கோ’ திட்டத்தின் கீழ் துர கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர் கல்வி சம்பந்தமாக அனுப்பப்பட்ட காங்கிரஸ் தூதுக்குழுவிற்கு இராமானுஜம் தலைமை தாங்கி மலேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தார். 1960 இல் சர்வதேச தொழிலாளர் நிறுவனம் அளித்த உபகாரக் கல்வித் திட்டத்தின் மூலம் பிரிட்டனுக்கும் சுவீடனுக்கும் சென்று அங்குள்ள தொழிலாளர்களின் கல்வி நிலைமையை நான்கு மாதங்கள் தங்கி கற்று வந்தார்.
அந்தனிஜீவா 32.

இராமானுஜம் அவர்களின் மதிநுட்பத்தையும், திறமையையும், சேவா மனப்பான்மையையும் கண்ட சர்வதேச தொழிற் சங்க சம்மேளனம் 1962 இல் அவரைத் தங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்து மோரிஸ்தீவு, எதியோப்பியா ஆகிய நாடுகளில் தொழிற் சங்க வளர்ச்சிக்காக பணியாற்ற அனுப்பி வைத்தது. அத்தடன் ஆசியப்பிராந்தியப் பிரதிநிதியாகத் சிங்கப்பூரில் பணியாற்றும் பெரும் பணியை அவருக்களித்து கெளரவித்தது.
இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரின் இதயங் கவர்ந்த இராமானுஜம் 4.6.68 அன்று சிங்கப்பூரில் காலமானார். இராமானுஜம் அவர்களின் பூதவுடல் சிங்கப்பூரிலிருந்து 6.6.68 இலங்கை கொண்டு வரப்பட்டு கண்டியில் பேராதனை வீதியிலிருந்த அவர் இல்லத்தில் பொது மக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. அன்று மாலை பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணிர் அஞ்சலியுடன் கண்டி மாநகர வீதியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மகியாவை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மலையக மக்களுக்காக பெரும் பணியாற்றிய இராமானுஜத்தின் இறுதி ஊர்வலத்தின்போது கலந்த மக்கள் வெள்ளத்திலிருந்து, அவரது பொதுச்சேவையும், தொழிலாளர்களின் நன்மைக்காக அவர் ஆற்றிய கடமை உணர்வும் வெளிப்பட்டது. இன்று நம்மிடையே இராமானுஜம் இல்லாவிட்டாலும் மலையக மாணிக்கங்களில் ஒருவராக அவர் நாமம் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்.
ஒக்டோபர் 1988 குன்றின்குரல்
மலையக மாணிக்கங்கள்

Page 20
5
திவான் பகதூர் ஐ. எக்ஸ். பெரைரா
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்காகவும், மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நன்மைக்காகவும் அயராது உழைத்த பெரியவர்களில் மிக முக்கியமானவர் திவான் பகதூர் ஐ. எக்ஸ். பெரைரா. இவரின் நூறாவது பிறந்த தினத்தையொட்டி இலங்கை அரசு, முத்திரை வெளியிட்டு கெளரவித்துள்ளது.
இந்நாட்டு அரசியலிலும், சமூகத் தொண்டிலும், சமயப் பணிகளிலும், முன்னின்று உழைத்த பெருமகன் ஐ. எக்ஸ். பெரைரா.
"திவான் பகதுர் என கெளரவிக்கப்பட்டு அன்புடன் அழைக்கப்பட்ட ஐ. எக்ஸ். பெரேய்ரா 1888 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி தூத்துக்குடியில் பிறந்தார். இக்னேனியஸ் சேவியர் பெரைரா என்பதே இவரது முழுப்பெயராகும். தென்பாண்டி நாட்டில் முத்துக்குளித்துறையில் முதல் இடம் வகிக்கும் தூத்துக்குடியே இவரது முன்னோர்களின் இருப்பிடமாகும்.
இவரது தந்தையார் கொழும்பில் வர்த்தகராக இருந்த காரணத்தால் இவர் கொழும்பில் உயர் கல்லூரி ஒன்றில் கல்வி கற்றார். இவரது பதினெட்டு வயதில் தந்தையாரின் மறைவு காரணமாக அவரது வர்த்தக நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றார். வர்த்தகத் துறையில் தனது திறமையையும் ஆர்வத்தையும் காட்டினார்.
■ அந்தனிஜீவா 34

இதனால் இந்திய சமூகத்தின் மத்தியில் பெயர் சொல்லக்கூடிய பிரமுகராகச் சுடர்விட்டுப் பிரகாசித்தார்.
இந்திய சமூகத்தின் வளர்ச்சியிலும் அவர்களின் முன்னேற்றத்திலும் அக்கறைக் காட்டிய ஐ. எஸ். பெரைரா சமூதாயப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டினார். தனது சமூகமான பரத குலத்தினரிடையே ஒற்றுமையும் ஐக்கியமும் ஏற்பட கொழும்பு மாநகரில் பரத குல சங்கத்தை அங்குரார்ப்பணம் செய்தார். அதன் மூலம் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டினார். ஏழை மாணவர்களுக்கு இலவசமாகப் பாடசாலைப் புத்தகங்களையும் உபகரணங்களையும் வழங்கினார். ஏழைச் சிறுவர்களின் பராமரிப்புக்காக அனாதை இல்லமொன்றை நிறுவ முன்னின்று உழைத்தார்.
திவான் பகதூர் ஐ. எக்ஸ் , பெரைரா இலங்கை மலைப்பிரதேசங்களில் தேயிலைக் காடுகளில் துன்பங்களை அனுபவிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் நிலை கண்டு கலங்கினார். அவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என உறுதி பூண்டார் அதற்காக அரசியல் களத்தில் குதித்தார்.
அகில இலங்கையிலும் இந்தியர்களுக்காகச் சட்டச் சபையில் ஒதுக்கப்பட்டிருந்த இரண்டு ஆசனங்களுக்குப் போட்டியிட்டார். இவருடன் போட்டியிட்டவர்கள் முகம்மது சுல்தான், கோ. நடேசய்யர், என். பி. சார்ள்ஸ், டாக்டர் டேவிட் ரஸ்டம்ஜி இந்தத் தேர்தலில் திவான் பகதூர் ஐ. எக்ஸ். பெரைராவுக்கு வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டொனமூர் அறிக்கையின்படி 1931 இல் ஏற்படுத்தப்பட்ட அரசாங்க சபையில் இந்தியத் தமிழ் மக்களின் பிரதிநிதியாக ஐ. எக்ஸ். பெரைரா நியமனம் பெற்றார். இப்பதவியை இவர் 1947 ஆம் ஆண்டு வரை வகித்து வந்தார். இக்காலப் பகுதியில் இவர் அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார். எனினும் சோல்பரி ஆணைக்குழு அறிக்கையை துணிவுடன் எதிர்த்து வாக்களித்துள்ளார்.
மலையக மாணிக்கங்கள் 35

Page 21
இலங்கை வாழ் இந்தியர்களுக்கு பிரஜா உரிமை வழங்குவது தொடர்பாக நிதான உணர்வுடன் செயல்பட்டார். இந்திய பாக்கிஸ்தானிய சட்டம் அமுலாக்கப்பட்ட பொழுது பெரும்பாலான இந்தியர்கள் அதனை ஒத்துக்கொள்ளவில்லை. அச்சட்டத்தைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தனர்.
ஆனால் ஐ. எக்ஸ். பெரைரா அதி விவேகத்துடன் அச்சட்டத்தை ஆதரித்தார். பிரஜாவுரிமைக்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு இந்தியர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.
மலைச் சிகரங்களைப் போல, மலையக தோட்டத் தொழிலாளர்கள் கல்வி அறிவில் உயர வேண்டும். ஏனைய சமூகங்களோடு சரி சமமாக வாழ வேண்டும் என்று எண்ணி செயல்பட்ட திவான் பகதூர் ஐ. எக்ஸ். பெரைரா மலையக தொழிற் சங்கத் தந்தை என்று அழைக்கப்படும் கோ. நடேசய்யரின் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் பெற்றுள்ளார், என்பது குறிப்பிடதக்கது.
GlgÜLLDLuft 1988 குன்றின்குரல்
அந்தனிஜீவா
 
 

ஜோர்ஜ் ஆர். மோத்தா
தொழிற் சங்க மேதை என்று எல்லோராலும் விரும்பி அழைக்கப்பட்ட திரு. மோத்தா மறைந்து விட்டாலும், அவர் மலைநாட்டு மக்களுக்காகச் செய்த மாபெரும் சேவைகள் மலைநாட்டு மக்களின் இதயத்தை விட்டு என்றும் மறையாது.
அமரர் மோத்தா தம் வாழ் நாளில் உழைப்பாளிகளின் உரிமைக் குரலாக சுடர் விட்டுப் பிரகாசித்தார். தொண்டு செய்ய வேண்டும், தொழிலாளர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு தொண்டு செய்ய முன் வந்தவர் திரு. மோத்தா. அதனால்தான் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தும் தன் சொத்து சுகங்களை உதறி எறிந்து விட்டு, உழைப்பாளர் வர்க்கத்திற்காக உழைக்க முன்வந்தார்.
திரு. மோத்தா தென் இந்திய வர்த்தக குடும்பத்தில் 1892 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி தூத்துக்குடியில் பிறந்தவர். வறுமை என்பதை என்னவென்று அறியாத வசதிமிக்க குடும்பத்தில் பிறந்து. கல்வி கற்று வழக்கறிஞராகப் பட்டம் பெற்றார். வழக்கறிஞசர்கள் தங்கள் வாழ்க்கை வசதிக்காக அநீதியின் பக்கம் சாய்வதைக் கண்டார். ஏழை மக்களுக்காக நீதிக்குப் போராடும் நேர்மை மிக்க போராளியானார். உழைப்பாளர்கள் உரிமையுடன் இவரைத் தேடி வந்தார்கள். இதனால் வழக்கறிஞரான திரு. மோத்தா நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
மலையக மானிக்கங்கள்

Page 22
மத்திய மாகாணம் என்றழைக்கப்படும் மலையகத்தின் பல இடங்களுக்குச் சென்றார். துன்பக்கேணியில் அல்லலுறும் ஏழை இந்தியனைக் கண்டார். உழைப்பைத் தவிர வேறு ஒன்றுமறியாத அந்த வாயில்லாப் பூச்சிகளின் துன்ப் துயரங்களை நேரில் கண்டார். தொழிலாளராகப் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக அந்த மனித ஜீவன்கள் கொட்டும் பனியிலும் அட்டைக் கடியிலும் வாழ்வோடு போரடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைக் கண்டு இதயம் வெந்தது. இந்த மக்களின் உரிமைக்காகப் போராட வேண்டும் என்று உறுதி பூண்டார். தொழிற் சங்கத்தில் இணைந்து தனது தொண்டை தொடங்கினார்.
கம்பளையில் கூடிய இலங்கை இந்தியக் காங்கிரஸின் முதலாவது மகாநாட்டில் திரு. மோத்தா கலந்து கொண்டார். அங்கு திரண்டிருந்த ஆயிர்க்கணக்கான தொழிலாளர்கள் மத்தியில் ‘உழைக்கும்
ழிலாளர் இன்னும் ஊமையாய் உறங்கிக் கொண்டிருக்காதீர்கள். ஆமையைப் போல் அமைதியாக அடங்கி வாழ்ந்தீர்களானால், உருத்தெரியாமல் ஒழிந்து விடப்படுவீர்கள் என முழங்கினார். உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களின் உள்ளத்தில் உரிமை வித்தை விதைத்தார்.
இலங்கை இந்திய காங்கிரஸின் இணைச் செயலாளர்களில் ஒருவராக சில வருடங்கள் கடமையாற்றினார். இவரின் பதவிக் காலத்திலேயே இலங்கை இந்திய காங்கிரஸ் பல அரிய சாதனைகளைச் செய்துள்ளது. தொழிற் சங்க வாழ்க்கைக்குத் தங்களை அர்ப்பணித்த இளைஞர்களுக்கு திரு. மோத்தா வழிகாட்டினார். அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்தும் ஆசானாகவும் விளங்கினார்.
“தொழிலாளர்களின் உரிமைகளை வெறுமனே கேட்டு பெற முடியாது”. அதனைப் போராடித்தான் வென்றெடுக்க வேண்டும். என்ற கொள்கையில் உறுதியானவர் திரு. மோத்தா. இதற்கு ஓர் உதாரணத்தை இங்கு எடுத்துக் காட்டுவது மிக முக்கியமானது.
அந்தனிஜீவா 38
 

இலங்கை இந்தியர் காங்கிரஸ் அனுஷ்டித்த பிரஜாவுரிமைப் பகிஷ்காரத்தைக் கைவிடுவதா. இல்லையா என்று ஒரு நாள் மாலைவேளை திரு. மோத்தாவின் இல்லத்தில் இலங்கை இந்தியன் காங்கிரஸ் பிரமுகர்கள் கூடி ஆராய்ந்தனர். திரு. பெரி. சுந்தரம் அவர்கள் “பிரஜா உரிமைப் பகிஷ்காரத்தை கைவிடுவது நல்லது” என அபிப்பிராயம் தெரிவித்தார். இதைக் கேட்ட திரு. மோத்தா ஆத்திர மிகுதியால் “ஆட்சி பீடத்திற்கு நல்லதோர் பாடம் கற்பிப்போம், பகிஷ்காரம் தொடர்ந்து செய்வோம் அல்லது இந்த முயற்சியிலே செத்து மடிவோம்” என உணர்ச்சியுடன் குறிப்பிட்டார். அத்துடன் உரிமைப் போர் நடத்தாமல் எந்த இனமும் விடுதலை பெற்றதில்லை என சரித்திர ஆதாரங்களை எடுத்துக் காட்டினார்.
திரு. மோத்தா வெறும் சொல் வீரராக மட்டும் இருந்து விடவில்லை. செயல் வீரராகவும் இருந்தார். பிரஜா உரிமை பகிஷ்காரத்தை கைவிட வேண்டும் என்ற கொள்கையைக் கடைசிவரை தனியாக நின்று எதிர்த்துப் போராடிய தீரர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்தாரென்றால், அது திரு. மோத்தா தான் என்பதில் ஐயமில்லை. நேர்மையையும் நீதிக்குத் தலை வணங்கும் பண்பையும் கொண்ட அவரின் துணிவை, அரசியல் எதிரிகள்கூடப் போற்றிப் புகழ்வது உண்டு.
நீதியும், நேர்மையும், தன்னம்பிக்கையும் கொண்ட செயல் வீரர் திரு. மோத்தா 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் திகதி காலை 11 மணிக்கு மார்பு வலியால் பாதிக்கப்பட்டவர், அன்று மாலை அமரரானார். தொழிலாளர்களின் துயர் துடைத்த தோழனாகவும், தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்ந்த திரு. மோத்தாவை ஆண்டுதோறும் நினைவுகூர வேண்டியது மலையகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு தொழிலாளியின் கடமையாகும்.
ஆகஸ்ட் 1988 குன்றின்குரல்
மலையக மாணிக்கங்கள்

Page 23
7
மலைநாட்டுக் காந்தி ராஜலிங்கம்
இலங்கையில் சிறிது காலம் இருந்து பழக்கப்பட்டவர்களின் முன்னாள் கடவுள் தோன்றி “உனக்கு இலங்கையில் ஒரு தேயிலைத் தோட்டமும் அதன் நடுவில் ஒரு பங்களாவும் வேண்டுமா? அல்லது சொர்க்கலோகத்தில் இடம் வேண்டுமா?’ என்று கேட்டால், "சொர்க்கலோகத்தில் இடம் வேண்டாம் இலங்கையில் ஒரு தேயிலைத் தோட்டமே போதும் என்றுதான் பெரும்பாலும் பதில் கிடைக்கும்.
தீனர்களின் தொண்டரான ரீ. கே. இராஜலிங்கம் அவர்களிடம் அதே கேள்வியைக் கேட்டால், “எனக்குச் சொர்க்கமும் வேண்டாம், தேயிலைத் தோட்டமும் வேண்டாம், தேயிலை, றப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் பாக்கியம் கிடைத்தால் போதும்” என்று கணமும் தயங்காமல் பதில் சொல்வார். தமிழ் நாட்டிலிருந்து இலங்கைத் தோட்டங்களில் வேலை செய்யச் சென்றவர்களின் மூன்றாவது தலைமுறையில் பிறந்தவர் றி. கே. இராஜலிங்கம். இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய கடுமையான சட்டத்தின்படி பார்த்தாலும், பூரி இராஜலிங்கம் இலங்கை நாட்டில் வம்சாவளிப் பிரஜை என்ற உரிமையைப் பெறுகின்றார். சிங்களவர்களுக்கு எல்லா விதத்திலும் சமமான சகல உரிமைகளும் அவருக்குண்டு. கல்வி கேள்வியும் பேச்சுத் திறனும் தீட்சண்யமான அறிவும் படைத்தவராதலால் இலங்கை சர்க்காரோடு ஒத்துழைக்க மனங் கொண்டால் பெரிய பதவிகளையும் உத்தியோகங்களையும் பெறலாம். அத்தகைய சுயநலப் பாதையில் அவர் செல்ல விரும்பவில்லை.
அந்தனிஜிவா 40
 

இவ்வாறு 1950ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் திகதி “கல்கி" இதழில் காலஞ்சென்ற பேனா மன்னர் கல்கி, அமரர் கே. இராஜலிங்கம் பற்றி முன்பக்கத்தில் அவரின் திருவுருவப்படத்தை அட்டைப்படமாகப் பிரசுரித்து ‘தீனர்களின் தொண்டர்” என்று ஆசிரிய்த் தலையங்கமே தீட்டியுள்ளார். அந்த ஆசிரியத் தலையங்கத்தின் சில வரிகளையே மேலே படித்தீர்கள்.
மலையக மக்களால் மாத்திரமின்றி தமிழ் பேசும் அனைவராலும்
மலைநாட்டுக் காந்தி” என்று அன்புடன் அழைக்கப்பட்ட பெரியார்
கே. இராஜலிங்கம் அமரராகி இந்த பெப்ரவரி மாதம் 11ஆம் திகதியில் இருபத்தைந்து ஆண்டுகளாகின்றன.
இன்றுள்ள மலையத்தின் இளைய தலைமுறைக்கு மலைநாட்டுக் காந்தி இராஜலிங்கம் என்று ஒருவரைத் தெரியுமா? என்று கேட்டால் அவர்கள் வியப்புடன் எம்மைப் பார்ப்பார்கள்.
மலையக மக்களுக்காக முதன்முதல் தொழிற் சங்கம் அமைத்தவரும் இலங்கைப் பத்திரிகைத் துறையின் முன்னோடியுமான கோ. நடேசய்யர் முதல் மலையக மக்களின் விடிவுக்காகப் போராடிய பலரை முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளை பேனாச் சித்திரங்களாகத் தினகரன் வாரமஞ்சரியில் தொடர் கட்டுரையாக எழுதியுள்ளார்.
அந்தக் கட்டுரைகளை யாராவது நூல் வடிவில் வெளியிட்டால் மலையகத் தலைவர்களைப் பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வாய்ப்பேற்படும்.
மலையகத்தில் சக்தி வாய்ந்த தொழிற் சங்கங்கள் மலையகத் தலைவர்களைப் பற்றி நூல்களை வெளியிடலாம்.
நானும் நண்பர் சாரல் நாடனும் மலையகத் தலைவர்கள் பற்றிய கட்டுரைகளைத் தேடி வைத்துள்ளோம்.
LD606)us LDIT60this Britis6it 4f

Page 24
மீண்டும். எனது சிந்தனை மலைநாட்டுக் காந்தி இராஜலிங்கம் பற்றிய நினைவுகளை இரை மீட்கின்றது.
நினைவுகள் சிறகடிக்கின்றன.
மலைநாட்டுக் காந்தி இராஜலிங்கத்தின் வாழ்க்கையை இன்றைய இளைஞர்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.
தான் வாழ்ந்த காலம் முழுவதையும் மலையக மக்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்த உத்தம தலைவர்தான் அமரர் கே. இராஜலிங்கம்.
அதனால்தான் அவர் மறைவுக்குப் பின்னர். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அனுதாபத் தீர்மானத்தின் போது அமைச்சர் தொண்டமான் பேசுகையில், ‘காலஞ்சென்ற இராஜலிங்கம் அவர்கள் பாராளுமன்ற அங்கத்தவராக மாத்திரம் இருக்கவில்லை. தலை சிறந்த தொழிற் சங்கவாதியாகவும் விளங்கினார். கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாக நானும் அவரும் ஒரே நோக்கத்துடன் ஒரே ஸ்தாபனத்தின் கீழ் சகாக்களாக இருந்து பணியாற்றி வந்துள்ளோம்.
“திரு. இராஜலிங்கம் அவர்கள் உண்மையில் எளிய ஆடம்பரமற்ற வாழ்க்கை வாழ்ந்து மற்றவர்களுக்கு தாம் எந்த வகையிலும் குறைந்தவரல்லர் என்பதைக் காண்பித்து இருக்கிறார். அவர் பிரமச்சாரியாக வாழ்ந்தார். குடித்தல் புகைத்தலின்றி வாழ்ந்தவர். இப்படியாக பல வழிகளிலும் அவர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவே இருந்தார். அவர் வாழ்க்கைக்குப் பணம் தேவையில்லாமல் போய்விட்டது. சாதாரண தொழிலாளி போல் அவர் வாழ்ந்து காண்பித்தார். அவள் மனவுறுதி உள்ளவராக இருந்தார்" என்று அமரர் இராஜலிங்கம் பற்றி மிகச் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார்.
வடபகுதியைச் சேர்ந்த கல்விமானும் ஊர்காவற்றுறை உறுப்பினருமான திரு. வி. ஏ. கந்தையா அஞ்சலி உரையின் போது, தன்னலமற்ற சேவையிலிடுபட்ட பெரியார்களில் இவரும் ஒருவர் என்று சொன்னால் மிகையாகாது. சொல்ல முடியாதளவு இன்னல்களுக்குள் அகப்பட்டு அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் இந்தியத் தோட்ட
அந்தனிஜீவா
 
 

தொழிலாளர்களுக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணம் செய்த தியாகி இவர்.
“இலங்கையில் பிறந்து, இலங்கையில் வளர்ந்து, இலங்கையில் மடியும் மக்கள் நாடற்ற மக்கள், உரிமையற்ற மக்கள், வாக்குரிமையர்
மக்கள் என்பதை அவர் உணர்ந்து திடுக்கிட்டார்.
“காந்தியடிகள் எப்படித் தம் சீவியத்தை நடத்தினாரோ அந்த வழியில் தமது வாழ்க்கையை நடத்தத் தெண்டித்த பெரியார். இவர். சரஸ்வதி வித்தியாசாலை என்னும் பள்ளிக்கூடத்தைத் தாமாகவே ஸ்தாபித்து கல்வியறிவு இல்லாதிருந்த மலைநாட்டுக் குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கான வசதிகளைச் செய்து கொடுத்தாா” என்றார்.
மற்றும் அமரர் இராஜலிங்கத்தைப் பற்றிய சிறப்பினை திரு. பீட்டர் கெனமன், சி. பி. டி. சில்வா, ஜனாப் எம். எச். எம். நெய்னா மரிக்கார் ஆகியோர் எடுத்துரைத்தனர்.
மலைநாட்டுக் காந்தி என்றழைக்கப்பட்ட கே. இராஜலிங்கம் புசல்லாவையிலுள்ள சங்குவாரித் தோட்டத்தில் பிறந்தார். ஆரம்பக் ஸ்வியைத் தோட்டப் பாடசா பிலம் பின்னர் கம் impromis) கண்டி சென் அந்தனிசிலும் கல்வியைத் தொடர்ந்து கற்று முடித்தார்.
அவர் தனது ஆரம்ப காலக் கல்வி கற்றதைப் பற்றி ஒருமுறை குறிப்பிடுகையில், 'அதிகாலை நான்கு மணிக்கே நான் எழும்புவேன். ஏதோ தின்றுவிட்டு வண்டிக் கூடாரத்துக்குப் பின்னால் ஏழு மைல் நடந்தே செல்வேன். நடந்து கொண்டே பாடங்களைப் படிப்பேன். மாலையில் வெகு நேரத்துக்குப் பின்னரே நான் விடுவந்து வயிறார உணவருந்துவது வழக்கம்.
1927 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி இலங்கைக்கு வந்தார். அவருடைய வருகை இராஜலிங்கத்தின் இதயத்தில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது. "மக்களின் சேவையே மகேசன் சேவை” எனக் கருதினார். தம் வாழ்க்கையை மக்கள் சேவைக்கென அர்ப்பணித்தார்.
சில நண்பர்களுடன் இணைந்து “இலங்கை இந்திய வாலிபர் த்தார். அதன் ம் சூரிய மல் என்ற இயக்கத்திலும் ** -- - - - گ --- : பங்குபற்றினார்.
மலையக மாணிக்கங்கள்

Page 25
LDé6Tĝ5DT காந்தியைப் போன்ற எளிமையான வாழ்க்கையே இராஜலிங்கம் மேற்கொண்டார். தோட்டம் தோட்டமாகக் கால்நடையாகவே சென்றார். கல்வி மூலம்தான் இருண்ட மலையக சமூகத்தில் ஒளியேற்படும் என்று நம்பினார்.
மலையக சமூகத்தின் கல்வி வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு புசல்லாவப் பகுதியில் சரஸ்வதி வித்தியாலயத்தை நிறுவினார். வாலிய சமாஜம் ஒன்றையும் அமைத்தார். அவற்றின் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.
சரஸ்வதி பாடசாலையின் வளர்ச்சி நிதிக்காக, பாடசாலைக்கு நிதி திரட்டவதற்காக அவர் மேற்கொண்ட யாத்திரைகளில் இரவை எங்கு கழிப்பது, பகலில் உணவு எங்கு கிடைக்கும் என்பன பற்றிக் கவலையின்றி அலைந்தார். தலவாக்கொல்லையிலிருந்து குஞ்சுபொரி தோட்டத்திற்கு 47 மைல் துாரம் கால்நடையாகவே இரவு பகலென்று பாராது நடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1947 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் பிரவேசித்தார். பாராளுமன்றத்தில் இருந்த பொழுது தோட்டத் தொழிலாளர்களின் ஜீவாதார உரிமைகளைப் பற்றித் தாம் தயாரித்த மகஜரைச் சமர்ப்பிப்பதற்காக ஜெனிவாவில் உள்ள சர்வதேச தொழிற் சங்க சம்மேளனத்திற்குச் சென்றார். 1949 ஆம் ஆண்டு ஆசிய விவசாயக் கமிட்டியின் ஆலோசகராக அவரை சர்வதேச தொழில் ஸ்தாபனம் நியமித்தது.
மலையகத் தலைவர்களில் தனக்கென வாழாத அரும்பெரும் தலைவர் அமரர் இராஜலிங்கம். இவரது நினைவாக சரஸ்வதி வித்தியாலயம் தலைநிமிர்ந்து நிற்கிறது. மலையக சமூகத்தில் ஒவ்வொருவரும் மலைநாட்டுக் காந்தி அமரர் இராஜலிங்கத்தை நினைத்துப் பார்க்க வேண்டும்.
(தினகரன் வாரமஞ்சரியில் “நினைத்துப்பார்க்கிறேன்” என்ற தலைப்பில் 14.02.88இல் எழுதப்பட்டது.)
அந்தனிஜிவா
 
 

8
தளபதி வி. கே. வெள்ளையன்
மலையக மக்களின் ஆரம்ப கால வரலாற்றை ஆராய்ந்தால் இவர்கள் பல்வேறு வகைகளில் தொடக்கத்திலிருந்தே வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளார்கள். இவர்களுக்கு விடுதலை என்றால் என்ன என்பதை அறியத் தரும் வாய்ப்புகளை பிரிட்டிஷ் காலணி ஆட்சி மறுத்து வந்தது. தனிப்பட்ட சுயநலக்காரர்களாலும் சந்தர்ப்பவாதிகளாலும் காலத்துக்குக்காலம் இவர்கள் ஏமாற்றப்பட்டு வரலாயினர். இத்தகுசூழ் நிலையில் அரசியல் கட்சிகள் தலை எடுத்தன. அவற்றினால் தொழிற் சங்கங்களும் பிறக்கத் தொடங்கின.
இந்த தொழிற் சங்க இயக்கங்களில் மலையகத்து பாட்டாளி மக்களைப் பற்றி அவர்களின் துன்ப தயரங்களைப் பற்றி படித்த மலையக வாலிபர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள்.
மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு விடிவு வேண்டு மென்றால் அந்த உழைக்கும் மக்களிடையே பிறந்த ஒருவனே அந்த மக்களை தரைமை தாங்கி வழி நடத்த வேண்டும் என கனவு கண்ட இளைஞர்தான் வி. கே. வெள்ளையன். தனது சிந்தனையில் பிறந்த கனவை தான் வாழும் காலத்திலேயே நனவாக்கிக் காட்டி, தான் வழிகாட்டி நடத்திய தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவனையே தலைமை தாங்க வைத்தார்.
V மலையக மாணிக்கங்கள் 45

Page 26
தொழிற் சங்க வரலாற்றிலே புரட்சிகரமான மாற்றத்தை மலையகத்தில் தோற்றுவித்த பெருமை தொழிலாளர்களிடையே விடிவெள்ளியாகத் திகழ்ந்த வி. கே. வெள்ளையனையே சேரும்.
இவர் ப்ொகவந்தலாவ முத்துலட்சுமி தோட்டத்தில் பெரிய கங்காணி, பெருமாயி தம்பதியின் இரண்டாவது மகனாக 1918 ஆம் ஆண்டு வி. கே. வெள்ளைய்ன் பிறந்தார்.
ஆரம்ப கல்வியைத் தோட்டப் பாடசாலையிலும், பொகவந்தலாவ சென். மேரிஸ் பாடசாலையிலும் கல்வி கற்று பின்னர் கண்டி திரித்துவ கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி பயின்றார். 1939 ஆம் ஆண்டு கணடி திரித்துவக் கல்லூரி ரகள் விளையாட்டுக் குழுத் தலைவனாகக் கடமையாற்றியுள்ளார்.
கல்லூரியிலிருந்து வெளியேறியவுடன் பல உத்தியோகங்கள் அவரை நாடி வந்தன. அவரோடு சில மாணவர்கள் தோட்டத் துரைமார்களாகவும் கம்பனி இயக்குனர்களாகவும் உத்தியோகம் வகித்தார்கள். ஆனால் இவர் உத்தியோகங்களை உதறித் தள்ளியதோடுதான் எந்தச் சமூகத்தில் பிறந்தாரோ அந்தச் சமூகத்தில் தொண்டாற்ற வேண்டும் என்று உறுதி பூண்டார்.
1941 ஆம் ஆண்டு சிறிது காலம் பொகவந்தலாவ நகரில் கூட்டுறவுக் கடையில் பணியாற்றிய வி. கே. வெள்ளையன் 1942 ஆம் ஆண்டில் தொழிற் சங்கப் பணியில் தீவிரமாக ஈடுபடலானார்.
அட்டன் மாநகரில் தொழிலாளர் மத்தியில் இவர் கடுமையாக உழைத்ததன் காரணமாக அட்டன் மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார். தொடர்ந்து மத்திய கமிட்டியில் பொதுச்செயலாளராகப் பணியாற்றி வநதாா.
தொழிற் சங்கப் பணிகளில் இவர் காட்டிய தீவிரம் பலரை வியக்க வைத்தது. தொழிலாளர்களுடன் இரண்டறக்கலந்து பழகினார்.
அpலeழஜீeரப V0

அவர்களைத் தனக்கே உரித்தான ‘ஐஸெ என்று அன்புடன் அழைத்து வந்தார். தொழிலாளர் வாழ்வில் புதிய புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இல்லற வாழ்வில் நாட்டமின்றி பிரம்மச்சாரியாகவே தன் வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
1950 ஆம் ஆண்டில் டிக்கோயா வனராஜா தோட்ட விசாரனையின் போது தோட்டத்துறை சென். கிளாயருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாகத் தோட்டத்துரைமார் சங்கம் வெள்ளை11னை எந்த பேச்சு வார்த்தையிலும் அனுமதிப்பதில்லை எனத் தீர்மானித்தது. இந்தத் தீர்மானத்தை எதிர்த்து அட்டன் மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். தொழிலாளர்களின் சகதி வெள்ளையணுக்கு வெற்றியைத் தேடித் தந்தது.
1950 ஆண்டு சலங்கண்டி தோட்டம் கைமாறும்போது அங்குள்ள தொழிலாளர்களுக்கு சேவைக் காலப் பணம் வழங்க வேண்டும் அல்லது கடந்தகால சேவையைப் புதிய முதலாளி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முதன் முதலாகப் போராட்டம் நடத்தினார். இப் போராட்டத்தில் தோல்வி ஏற்பட்டதால் அங்குள்ள தொழிலாளருக்கு உடனடியாக வேறு தோட்டங்களில் வேலை வாய்ப்புத் தேடிக் கொடுத்தார்.
1949 க்கு முன்னர் தோட்டத் தொழிலாளர் வானொலி உபயோகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் வானொலி உபயோகிக்க அனுமதி கோரி பொகவந்தலாவ கொட்டியாக்கொல தோட்டத்தில் போராட்டம் நடத்தி வெற்றி வெற்றார். அந்தக் காலகட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் தோட்டங்களுக்குக் காரில் செல்ல முடியாதிருந்த தடையையும் இவரே தகர்த்தெறிந்தார்.
1955 ஆம் ஆண்டு பொகவந்தலாவ செம்பியன் தோட்டத்தில் கொழுந்தெடுக்கும் பெண்களின் தேயிலை இறாத்தல் நிர்ணயிக்க வேண்டும் எனப் பெரும் போராட்டம் நடத்தினார். இதன் மூலமே அட்டன் மாநிலத்தில் ஒரு நாள் சம்பளத்திற்கு 23 இறாத்தல்
Yረ மலையக மாணிக்கங்கள் 47

Page 27
கொழுந்தும் அதற்கு மேல் எடுக்கும் ஒவ்வோர் இறாத்தலுக்கும் சதக்காசு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வென்றெடுத்தார்.
1956 ஆம் ஆண்டு மடுள்கெல கிளாப்பொக்கை தோட்டத்தில் கொழுந்து இறாத்தல் நிர்ணயிக்க 60,000 தொழிலாளர் நடத்திய போராட்டத்திற்கு வி. கே. வெள்ளையன் தலைமை தாங்கி வெற்றியை தேடிக் கொடுத்தார்.
தொழிலாளர்களின் தோழனாகவும், அவர்களின் அபிமானத்தையும் பெற்றவனான வி. கே. வெள்ளையன் 1955 முதல் 1960 வரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராகக் கடமையாற்றினார். 1956 இல் காசல் ரீ நீர்த்தேக்கத்தின் காரணமாக நிர்க்கதியாக விடப்பட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படுவதோடு அந்த முதலாளிக்குச் சொந்தமான வேறு தோட்டத்தில் அவர்களைக் குடியமர்த்தப்பட வேண்டும் என்று வழக்கு நடத்தி வெற்றியும் கண்டார்.
1955 இல் சர்வதேச தொழிற் சங்க சம்மேளன கூட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் பிரதிநிதியாகக் கலந்து கொன்டுள்ளார். மற்றும் சோவியத் ரஷ்யா, டென்மார்க், நோர்வே, இஸ்ரவேல் போன்ற நாடுகளில் தொழிற் சங்க மகாநாடுகளில் கலந்து கொண்டுள்ளார். 1960 இல் மலேசியா, சிங்கப்பூர், ஸ்வீடன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் நடைபெற்ற தொழிற் சங்க மகாநாடுகளில் பங்குபற்றியதோடு ஜெர்மனியில் பொன் நகரில் நடைபெற்ற I.C. F.T. U. மகாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார். 1963 இல் போலந்து, நோர்வே, டென்மார்க் நாடுகளில் நடைபெற்ற தொழிற் சங்க மகாநாடுகளில் பங்குபற்றினார்.
தொழிற் சங்கத்தில் தொழிலாளர்களின் பங்கைவிட வெளியார்களின் ஆதிக்கம் வேரூன்றியதன் காரணமாகவும் தொழிலாளர் வர்க்கத்தை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்லப் போதிய திட்டங்கள் இல்லாத காரணத்தாலும் தொழிற் சங்கம் தொழிலாளர் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்பது வி. கே.
* அந்தனிஜீவா 48

வெள்ளையன் நீண்ட நாள் கண்ட கனவாகும். அதனை நனவாக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விட்டு வெளியேறினார்.
1965 ஆம் ஆண்டு உலகத் தொழிலாளர்களின் தினமான மே தினத்தன்று தொழிலாளர் தேசிய சங்கத்தை தொழிலாளி தலைமையில் அட்டனில் ஸ்தாபித்தார். தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பள முறை ஒழிக்கப்பட்டு மாத சம்பளம் வழங்கப்பட வேண்டும் என முதன் முதல் குரல் எழுப்பியவர் வி. கே. வெள்ளையன்.
உழைத்து களைத்து ஓய்ந்துபோன காலத்தில் தொழிலாளர்கள் மற்றவர்களின் தயவில் வாழாது அவர்களின் இறுதி காலத்தை அமைதியாகக் கழிக்க சேவைக்கால பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்ததோடு நில்லாமல், தொழில் நீதி மன்றத்தில் பல வழக்குகளையும் தாக்கல் செய்து வெற்றியீட்டிக் கொடுத்தார்.
தொழிலாளர் வர்க்கத்திற்கு அரிய பல பணிகளைச் செய்து அவர்களிடையே விடி வெள்ளியாக திகழ்ந்து வி. கே. வெள்ளையன் 1971 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமரரானார். அவரின் நாமம் மலையக மக்களிடையே விடிவெள்ளியாக என்றும் திகழும்.
ஜின் 1988 குன்றின்குரல்
மலையக மாணிக்கங்கள்

Page 28
9)
மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளை
மலையக இல்க்கிய முன்னோடிகளில் ஒருவரும், மலையக மக்கள் கவிமணி எனப் பாராட்டி கெளரவிக்கப்பட்டவருமான அமரர் சி. வி. வேலுப்பிள்ளை அவர்களை ஒரு கவிஞராகவும், தொழிற் சங்கவாதியாகவும் பலர் அறிந்து வைத்துள்ளனர்.
மக்கள் கவிமணி சி. வி. ஒரு கவிஞர், ஏழுத்தாளர், தொழிற் சங்கவாதி, தலவாக்கொல்லை பாராளுமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்தவர். இத்தனைக்கும் மேலாக மக்களை நேசித்த மனிதாபிமானியாக, மானுடம் பாடிய வானம்பாடியாகத் திகழ்ந்தவர்.
மக்கள் கவிமணியான சி. வி. வேலுப்பிள்ளை தன் வாழ்நாள் முழுவதும் மரணம் அவரை அரவணைத்துக் கொள்ளும் வரை ஒரு முழுநேரத் தொழிற் சங்கவாதியாகப் பணியாற்றிக் கொண்டு சலசலப்பில்லாமல் தன் இலக்கியப் பணியை ஒரு ஞானத்தவம் போல இயற்றி வந்தவர். இளமைக்காலம் முதல் அமரராகும் வரை அவரது வாழ்வும் எழுத்தும் இரண்டறக்கலந்தே வந்துள்ளது.
1930 களுக்குப் பின் மலையகத்தில் ஒரு மாற்றம் ஏற்படத் தொடங்கியது. 1940 களுக்குப் பின் அந்த மாற்றத்தில் ஒரு வேகம் ஏற்படத் தொடங்கியது. இதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். சி. வி.
அந்தனிஜிவா
 
 

தமிழகத்தில் ‘மணிக்கொடி சகாப்தம் உதயமாயற்று. அது மலையகத்தையும் எட்டிப் பார்க்கத் தவறவில்லை. ஈழத்து இலக்கிய உலகில் இந்த மணிக்கொடி ஒரு மறுமலர்ச்சிக் குழுவை உருவாக்கியதைப் போல, மலையகத்தில் ஒரு கோஷ்டி உருவாகாவிட்டாலும் சி. வி. போன்றவர்கள் தனிநபர்களாகச் செயற்பட்டுள்ளதை வரலாறு சுட்டிகாட்டுகின்றது.
மலையக இலக்கிய வளர்ச்சிக்கு சி. வி. க்கு முன்னர் ஒரு சிலர் உந்து சக்திகளாக இருந்தாலும் சி. வி. ஆரம்பமுதல் தனது எழுதும் கை சக்தி இழக்கும் வரை மலையகத்தை நேசித்தது மாத்திரமன்றி அதன் வளர்ச்சியில் பெரிதும் அக்கறைகாட்டி வந்தார். அன்னார் வாழ்வும் எழுத்தும் இரண்டறக் கலந்திருந்தது. அவருடன் இரு தசாப்தங்களாக மிக நெருங்கிப் பழகியவன் என்ற வகையில் அவருடைய இலக்கியப் பங்களிப்பை இன்றைய இளைய தலைமுறையினருக்குக் கோடிட்டுக் காட்ட வேண்டியது எனது &L60)LDu IIT(35b.
மலையக மக்களிடையே ஓர் எழுச்சிக்கு வித்திட்ட பெருமை இலங்கையின் தமிழ் தினசரி ஒன்றின் ஆசிரியரான கோ. நடேசய்யரைத்தான் சாரும். தென்னிந்திய பிராமணரான கோ. நடேசய்யர் பத்திரிகை ஒன்றில் பணியாற்றி அப்பத்திரிகைக்கு சந்தா திரட்ட 1919 ஆம் ஆண்டு இலங்கை வந்தார். மீண்டும் 1920 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை வந்து ‘தேசநேசன்' என்ற தமிழ் தினசரியின் ஆசிரியரானார். 1925 ஆம் ஆண்டு முதல் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நலனிலும் நடவடிக்கையிலும் அக்கறை காட்டினார்.
இவர் மலையகப் பகுதிகளுக்குச் சென்று தோட்டம் தோட்டமாகச் சஞ்சரித்து மகாகவி பாரதியாரின் தெசிய உணர்வைத் தூண்டும் பாடல்களை தன் மனைவியாரின் இனிய குரல் மூலம் பாடவைத்து, அவர்களிடையே ஒற்றுமையுணர்வூட்டும் பிரசாரங்களைச் செய்தார். அத்துடன் பாரதியாரின் பாடல்களை துண்டுப் பிரசுரங்களாக அச்சிட்டுப் பரப்பினார்.
மலையக மாணிக்கங்கள்

Page 29
1940 களுக்குப் பின் மலைநாட்டில் கல்வி எல்லோருக்கும் உரித்தாயிற்று. கல்வியின் காரணமாக மலையகத்தில் மாற்றமும் மறுமலர்ச்சியும். ஏற்பட்டது. மகாகவி பாரதி, தாகூர், சரோஜினி தேவி ஆகியோரின் கவிதா சக்தியால் கவரப்பட்டு சி. வி. கவிதையின் மூலம் தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார். நடேசய்யர். பணிகளும் அவருக்கு உந்து சக்தியாக அமைந்தது.
மக்கள் கவிமணி சி. வி. வட்டகொட அருகிலுள்ள மடக்கும்புர தோட்டத்தில் 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் திகதி பிறந்தார். ஆரம்பத்தில் அவர் தோட்டப் பாடசாலையில் கல்வி கற்று பின்னர் அவர் அட்டனிலும் நுவரெலியாவிலும் கொழும்பு நாலாந்தக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.
அட்டன் மிஷனரி பாடசாலையில் கல்வி கற்கும் பொழுது அதிபராக இருந்த ஸ்டீபன் ஜோசப் ஒரு எமுக்காளர். இயற்கையிலேயே சி. வி. க்கு இருந்த எழுத்தாற்றலைக் கண்டு ஊக்குவித்தவர் அவர். சி. வி. நாலாந்தாக் கல்லூரியில் கல்வி கற்கும் பொழுது பாரத கவியரசர் தாகூர் இலங்கைக்கு வருகை தந்தார். அப்பொழுது பாரத கவியரசர் தாகூர் இலங்கைக்கு வருகை தந்தார். அப்பொழுது தனது முதல் கவிதை நாடகமான 'விஸ்வ மாஜினி யை அச்சிட்டு அவரிடம் கொடுத்து ஆசி பெற்றார்.
கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறிய இளைஞரான சி. வி. யின் நினைவில் மலையக மக்களைப் பற்றிய சிந்தனை எழுந்தது. இந்த சமூகம் இப்படி ஒதுக்கப்படுவதற்கு என்ன காரணம் என சிந்தித்தார். இந்தச் சமூகத்தில் ஒரு மாற்றமும் மறுமலர்ச்சியும் ஏற்பட வேண்டுமானால் கல்விதான் அதற்குத் தகுந்த ஆயுதம் எனக் கண்பார். 1935 ஆம் ஆண்டில் கவியரசர் தாகூரின் பெயரில் பூண்டுலோயாவில் கல்வி கூடம் ஒன்றை அமைத்தார். பின்னர் தனது பிறந்த ஊரான வட்டகொடையில் மகாகவி பாரதியின் பெயரில் பாரதி இளைஞர் சங்கம் ஒன்றை அமைத்தார். சில காலத்திற்குப் பின்னர் பொருளாதார நெருக்கடி காரணமfக நுவரெலியாவிலுள்ள காமினி வித்தியாலயத்தில் ஓர் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார்.
■ அந்தனிஜீவா 52

ஆசியரியராகப் பணியாற்றிய காலத்தில் இளமையின் கோலத்தால் காதல் கவிதைகளை நிறைய எழுதினார். அதனைத் தன் நெஞ்சுக்கு நெருக்கமான நண்பரான ஸ்டேசன் மாஸ்டரிடம் காட்டிய பொழுது, அந்த எழுத்துக்களைப் படித்துவிட்டு சொன்ன கருத்துக்கள் காரணமாக தனது எழுத்துக்கள்தான் வாழ்கின்ற சமூகத்திற்குப் பயன்பட வேண்டும் என்று காதல் கவிதைகளை கிழித்து எறிந்துவிட்டு தனது மக்கள் படும் துன்ப துயரங்களை எழுத ஆர்வம் கொண்டார்.
சி. வி. தனது சமூகம் ஒடுக்கப்படும் நிலை கண்டு, அவர்களின் பிரச்சினைகளில் ஒரு பார்வையாளனாக இருக்காமல் அதில் பங்காளியாக வேண்டும் என்ற எண்ணத்தில் 1947 இல் மலையக மக்களின் தலவாக்கொல்லை பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் இலங்கை இந்திய காங்கிரஸின் செயலாளராகவும் பணியாற்றினார். இதுவே பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக மாற்றப்பட்டது. 1955ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விட்டு வெளியேறி வி. கே. வெள்ளையனுடன் இணைந்து தொழிலாளர் தெசிய சங்கத்தை ஸ்தாபித்தார். இதன் நிர்வாகச் செயலாளராக 1984 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி தனது இறுதி மூச்சு விடும் வரை பணியாற்றினார். -
“புழுதிப் படுகையில் புதைந்த என் மக்களை போற்றும் இரங்கற் புகழ் மொழி இல்லை பழுதிலா அவர்க்கோர் கல்லறை இல்லை பரிந்தவர் நினைவு நாள் பகருவாரில்லை’
இவ்வாறு தான் வாழ்ந்த சமுதாயமான மலையக மக்களைப் பற்றிய சோகப் பெருமூச்சுகளையும் வாழ்வின் அவலங்களையும் எடுத்துக்கூறும் 'இலங்கையின் தேயிலைத் தோட்டத்திலே’ என்ற கவிதைப் படைப்புதான். இதனை ஆங்கிலத்தில் எழுதியதால் தனது
மலையக மாணிக்கங்கள் 53

Page 30
மக்களைப் பற்றிய துயரங்களை உலகறியச் செய்தார். மற்றும் இந்த மக்களைப் பற்றி ‘உழைக்கப் பிறந்தவர்கள் என்ற நடைச்சித்திரங்களை ஆங்கிலத்தில் எழுதினார். இது மாத்திரமல்ல தினகரன், வீரகேசரி ஆகிய தேசிய பத்திரிகையில் ‘வாழ்வற்ற வாழ்வு' 'எல்லைப்புறம், ‘பார்வதி', 'வீடற்றவன்', ‘இனிபடமாட்டேன்' ஆகிய நாவல்களைத் தொடராக எழுதினார். கடைசி மூன்று நாவல்களும் இவரால் தமிழில் எழுதப்பட்டவை.
சி. வி. இறுதியாக எழுதிய நாவல் ‘இனிப் படமாட்டேன். இந்நாவலின் முன்னுரையில் தமிழகத்து இலக்கிய விமர்சகரான திரு. சிதம்பர ரகுநாதன் ‘அவரது கதைகளில் நாம் உண்மையான வாழ்க்கையை காணமுடிகிறது. நறுக்குத் தெறிந்தாற் போன்று சுருக்கமான வாக்கியங்களில் சற்றேனும் உணர்ச்சி பெருக்கு உள்ளாகாமல் உள்ளதை உள்ளவாறு கூறும் உத்தி அவரது கதைகளில் அலாதியான சிறப்பாகும். என்கிறார்.
மலையக நாட்டார் பாடல்களில் சி. வி. க்கு பெரு விருப்பு. நாட்டார் பாடல்களை வரலாற்று ரீதியாக ஆராய வேண்டும்; அப்படி ஆராய்ந்தால் வரலாற்றுத் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். மலையக நாட்டுப்பாடல்களைத் திரட்டி மலைநாட்டு மக்கள் பாடல்கள் என்ற தலைப்பில் நூலாகத் தந்துள்ளார்.
இந்த நாட்டுப் பாடல்கள் தொகுதியில் மலையகத்திற்கு உழைப்பதற்காக ஆட் கூட்டி வந்த வரலாற்றை. கண்டி சீமைக்கு ஆட் கூட்டி வந்த பொழுது பிறந்த பாடல்கள் கூறுகிறது. ஒப்பாரிப் பாடல்கள், வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களை பிரதிப்பலிக்கும் காதல் பாடல் முதற் கொண்டு கடவுள் வழிபாடு வரை பல்வேறு வகைப் பாடல்கள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
* பாலைவனத்தின் மலைப் பிராந்தியத்தின் கனிச் சுரங்கங்களிலிருந்து, எனது தேச மக்கள் படும் துன்பங்களை ஏற்று, சுரங்கச் செல்வங்களைச் சேகரித்து வருகிறார்கள். எங்களுடைய தேசத்தின் மக்களைப் போல் உலகின் எந்தப் பகுதி மக்களும்
亚9| III.3y.99giG

கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கேள்விபட்டதில்லை. என அவர்களுக்காக புரட்சி கீதம் இசைத்தான் சிலி நாட்டுக் கவிஞன் பாப்லோ நெருடா. அதைப் போலவே தோட்டத் தொழில்ாள்களுக்கே பாடினார்.சி.வி.
மக்கள் கவிமணி சி. வி. பேனாவை ஆயுதமாகக் கொண்டு மலையக மக்களின் துன்பங்களை தம் வாழ்வோடு இனைத்துக் கொண்டு எழுதினார். அதனால் தான் அவர் மலையக மக்கள் கவிமணியப்ாக விளங்குகிறார்.
நவம்பர்1988 குன்றின்குரல்
மலையக மாணிக்கங்கள் E 55

Page 31
O
தொழிற் சங்கத் தலைவர் அஸிஸ்
மலையகத் தொழிற்சங்க வரலாற்றில் தொழிற்சங்கத்தலைவர் அஸிஸ் அவர்களுக்குத் தனித்துவமான ஓர்இடமுண்டு.
இலங்கைவாழ் இந்தியர்கள் ஒன்றுபட்டு ஒரனியில் திரண்டெழுந்து அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் எனத் தீவிரமாகச் செயல்பட்டவர்களில் மிக முக்கியமான தொழிற்சங்கத்தலைவர் அஸிஸ் அவர்களாவர்.
இலங்கையில் தொழிற்சங்க முன்னோடிகளில் ஒருவரான எ. ஈ. குணசிங்க போன்றவர்கள் இந்தியர்களுக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பொழுது, இந்தியர்களின் நலன்நாடும் இயக்கங்கள் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும் என முன்னின்று செயல்பட்டவர்களில் தொழிற்சங்கத்தலைவர் அஸிஸ் முக்கியமானவர்.
இதனையே, இந்தியவம்சாவளியினர் ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற கருத்தையே இந்தியத் தலைவர்களில் ஒருவரான பண்டிட் ஜவஹர்லால் நேருவும் வலியுறுத்தினார். இதன் விளைவே இலங்கை இந்தியன் காங்கிரஸ்.
கொழும்பிலும், ஏனைய பகுதிகளிலும் இயங்கிய இந்தியர் நலன் நாடும் அமைம்புகள் தலைநகரில் ஒன்றுகூடின. இதன் ஆரம்ப
அந்தனிஜீவா E56

அங்கத்தவர்களாக திருவாளர்கள் பெரி. சுந்தரம் ஆர். மேத்தா, கே. இராஜலிங்கம், அஸிஸ், லெட்சுமணன் செட்டியார், வள்ளியப்ப செட்டியார், பதுளை ஞான பண்டிதன், போன்றவர்கள் இந்தியர்களின் நலனுக்காக ஒன்று கூடினார்கள்.
1939 ஆம் ஆண்டு இலங்கை இந்தியன் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இந்திய காங்கிரஸ் மகாசபையின் ஏகப்பிரதிநிதியாக பண்டிட் ஜவஹர்லால் நேரு இலங்கை வந்தார். இலங்கை இந்தியன் காங்கிரஸ் தலைவராக திரு. லெட்சுமணன் செட்டியாரும், செயலாளராக ஜனாப் அஸ்ஸிம் தெரிவு செய்யப்பட்டார்கள்.
இலங்கைக்கு வருகை தந்த இந்தியக் காங்கிரசின் பிரதிநிதி நேரு அஸாஸ் அவர்களுடன் டி. எஸ். சேனநாயக்கா அவர்களை சந்தித்து இந்தியர்களின் விடயமாக உரையாடினார், பின்னர் தனது நண்பரான எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்காவையும் சந்தித்தார். இடது சாரி போக்கு நேருவுக்கு முற்போக்கு எண்ணங்களைக் கொண்டிருந்த அஸ்ஸ் உற்ற நண்பராக விளங்கினார்.
1939 க்கு பின்னர் இலங்கை இந்தியன் காங்கிரஸ் வேகமாக வளர்ச்சி பெற்று வந்தது. இதன் முதல் மாநாட்டை 1940 இல் கம்பளை மாநகரில் நடத்தியது. அம்மாநாட்டில் திரு. எஸ். தொண்டமான் வரவேற்வுக்குழுத் தலைவராக அறிமுகமானார்.
தொழிற்சங்கத் தலைவரான அஸ்ஸ் அவர்கள் தன் வாழ்வின் பெரும் பகுதியை தோட்டத்தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காகவும்,
அவர்களின் உரிமையை வென்றெடுக்கவும் செலவழித்துள்ளார்.
தொழிற்சங்கத்தலைவரான அஸிஸ் அவர்கள் இந்தியாவில் வசதியான வர்த்தக குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தவர் படிப்பில் மிகவும் கெட்டிக்காரராகத் திகழ்ந்த அளிஸ் கராச்சியில் தனது உயர்கல்வியை மேற்கொண்டார் பின்னர் பட்டப்படிப்பிற்காக பம்பாய் பல்கலைக்கழகத்தில் வர்த்தகவியல் பட்டதாரியானர்.
| 直 மலையக மாணிக்கங்கள் 57.

Page 32
பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் மாணவத்தலைவராகத் திகழ்ந்தார். மாணவர் கவுன்சிலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாணவத்தலைவராக விளங்கிய அளிஸ் பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிராகப் பேசி வந்தார். அவர் இளமையிலிருந்தே ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவே இருந்துவந்துள்ளார். இதனால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். இவருக்கு சிறை அனுபவம் மாணவப் பருவத்திலேயே கிடைத்தது. பின்னர் குடும்பத்தவர்களின் விருப்பத்தின் படி இலங்கை வந்தார். இலங்கையில் வர்த்தகத் துறையிலிடுபட்டிருந்த தந்தையாருக்கு உதவியாக இருந்தார்.
அப்பொழுது பொது விவகாரங்களில் அக்கறைகாட்டினார். அடிக்கடி பொதுநூல் நிலையம் சென்று தனது அறிவை விசாலித்துக் கொண்டார். பினி னர் இலங்கை இந்திய காங்கிரஸில் சேர்ந்து செயல்படத்தொடங்கினார். தோட்டத் தொழிலாளர்களின் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு செயல்படத் தொடங்கினார். அவர்களின் உரிமைக்காக நடைபெற்ற வேலை நிறுத்தப்போராட்டங்களில் நேரடியாகவே பங்குபற்றினார்
மலையகத்தின் முக்கிய தொலிற்சங்கத் தலைவரானார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து பிரிவுபட்ட ஜனநாயக தொழிலாளர் காங்கிரசின் தலைவராகத் தான் மரணிக்கும் வரை செயல்பட்டார்.
தொழிற்சங்க தலைவராகத் திகழ்ந்த அஸஸ் அவர்களின் தொழிற்சங்கப் போராட்டங்களில் பல சுவையான சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
1952 ஆம் ஆண்டு எட்டியாந்தோட்டை அல்கொல்லைத் தோட்டத்தில் பெண்தொழிலாளர்கள் கண்ணாடி வளையல் அணிந்து தேயிலைக்கொழுந்து பறிக்கக்கூடாது என வெள்ளைக்கார தோட்டத்துரை பீரீடி என்பவர் தொழிலாளர்களுக்கு கட்டளையிட்டார்.
தொழிற்சங்கத்தலைவரான அஸிஸிடம் முறையிட்டார்கள் “பெண்கள் வளையல் அணிவதை தடுக்க நிர்வாகத்திற்கு என்ன
அந்தனிஜீவா 58
 

அதிகாரம் இருக்கிறது? என தோட்ட நிர்வாகத்திற்கு எதிராகத் தோட்டத்தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்ய வைத்தார் போராட்டம் மலையகமெங்கும் பரவிவிடும் என்ற பயத்தின் காரணமாக நிர்வாகம் பெண்களின் கோரிக்கைக்கு இணங்கியது. தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருந்தால் நிர்வாகம் ஒன்று செய்யமுடியாது என அஸிஸ் அடிக்கடி கூறுவார். இந்தப் போராட்டம் பெற்றிபெற கே. ஜி. எஸ். நா. நாவலப்பிட்டி சுப்பையா போன்றவர்கள் முன்னின்று செயல்பட்டார்கள் தொழிற்சங்கத்தலைவர் அஸிஸ் பல போராட்டங்களைக் கண்டவள் நேரிடையாகவே அந்தப் போராட்டங்களில் பங்கு பற்றியவர். மஸ்கெலியா தொகுதி நாடாளுமன்றப்பிரதிநிதியாக அஸிஸ் இருந்த பொழுது தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை உரிமைக்காக உரிமை முழுக்கம் செய்துள்ளார்.
1970 ஆம் ஆண்டு பிரதமர் திருமதி யூரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் கூட்டரசாங்கத்தில் அஸிஸ் அவர்கள் நாடாளுமன்றத்தில் நியமனப் பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டார்.
தொழிற்சங்கத்தலைவர் அஸிஸ் அவர்கள் தேசபக்தன் கோ. நடேசய்யர் அவர்களை பெரிதும் மதித்தவர். மலையக கலை இலக்கியப் பேரவை 1987 ஆம் ஆண்டு கண்டியில் கோ. நடேசய்யர் பற்றிய முழு நாள் கருத்தரங்கு ஒன்றை நடத்திய பொழுது அதில் கலந்துகொள்ளவிருந்த அஸிஸ் அவசரமாக வெளிநாடு சென்ற காரணத்தால் நடேசய்யர் பற்றிய குறிப்பு ஒன்றை ஆங்கிலத்தில் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். கருத்தரங்கில் வாசிக்க அவர் அனுப்பிய குறிப்பு வாசிக்கப்பட்டு பின்னர் எழுத்தாளர் சாரல் நாடனின் மொழிபெயர்ப்பில் “குன்றின் குரல்" சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டது.
"திரு. கோ. நடேசய்யர் தோட்டத் தொழிற்சங்க வளர்ச்சிக்கு முன்னோடி மட்டுமல்லாது அவர் அதன் தந்தையும் ஆவார். அமைப்புகளின்றி, குரலெழுப்பும் சக்தியும் இன்றி வாழ்ந்த இந்திய வம்சாவளியினருக்கு ஓர் அமைப்பை கொடுத்து குரலெழுப்பும்
மலையக மாணிக்கங்கள் 59

Page 33
சக்தியையும் கொடுத்தவர் அவரே ஆவார்.
இலங்கை இந்தியன் காங்கிரஸ் இலங்கை இந்திய காங்கிரஸ்
லேபர் யூனியன் என்பவை உருவாவதற்கு முன்னரே உருவானது
நடேசய்யரின் தொழிற் சங்க அமைப்பு.
பின் தள்ளப்பட்டு இலங்கையில் வாழ்ந்த பரந்து பட்ட உழைப்பாளர் குரல் எழுப்பவும் அணிபடுத்தவும் சீர்படுத்தவும் அவ்வமைப்பு உதவிற்று. இவ்வாறு தனது முன்னோடியான நடேசய்யர் பற்றி தொழிற் சங்கத்தலைவர் அஸிஸ் குறிப்பிடுகின்றார்.
தொழிற்சங்கத்தலைவரான அஸிஸ் அவர்கள் 1990 ஆம் ஆண்டு ஏப்பிரல் 29 ஆம் திகதி அமரரனார்.
தோட்டத் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காகப் பெருந் தொண்டாற்றிய தொழிற் சங்கத்தலைவரான அஸிஸ் அவர்கள் என்றும் நினைவு கூரப்படவேண்டியவர்கள் என்றும் அவர் ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவே வாழ்ந்தவர். இதனால் இடது சாரித் தலைவர்கள் கூட அவரைப் பெரிதும் மதித்தனர்.
| அந்தனிஜிவா 60

1.
است.
1.
அஞ்சாநெஞ்சன் சோமசுந்தரம்
மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் விடிவுக்காகவும், அவர்களின் உரிமைப் போராட்டங்களிலும் முன்னின்று உரிமை முழக்கம் செய்தவர்களில் மிக முக்கிய மலையக மக்கள் தலைவர்களில் ஒருவர் அஞ்சாநெஞ்சன் சோமசுந்தரம். மலையக மக்களின் வரலாற்றில் இவரது பெயர் நிச்சயமாக இடம்பெறவேண்டும்.
மலையக மக்களின் விடிவுக்கும் முன்னேற்றத்திற்கும் கல்விதான் அருமருந்து என எண்ணி செயல்பட்டவர்களில் ஒருவர். கலகா பகுதியில் தெல்தோட்டையைச் சேர்ந்த சங்கரன் குடும்பத்தினர். சங்கரின் அருமை மைந்தன் தான் அஞ்சாநெஞ்சன் சோமசுந்தரம்.
கண்டி மாநகரில் உள்ள பல அறிவாளிகளை உருவாக்கிய கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்வி கற்ற சோமசுந்தரம் கல்லூரியில் கல்வி கற்கும் இளைஞராக இருக்கும் போதே தந்தையார் சங்கரன் காலமானார். இவரின் தாயார் கற்பகத்தம்மாள் மகனை எப்படியும் உயர் கல்வி கற்க வைக்க வேண்டும் என திடசங்கற்பம் பூண்டார்.
தாயும் தந்தையுமாக தன் மைந்தன் சோமசுந்தரத்தை வளர்த்தார் திருமதி கற்பகத்தம்மாள், அம்மாவின் ஆணைப்படியே தன் உயர்கல்வியை பல்கலைக்கழக புகுமுக வகுப்புவரை தொடர்ந்தார் பின்னர் சட்டக்கல்லூரியில் சில ஆண்டுகள் சட்டம் பயின்றார்.
|_ UeOpenOfTnTP Duenay PPLIFK:Peyi 2.

Page 34
பொது வாழ்கையிலும் சமூக முன்னேற்றத்திலும் பெரிதும் ஈடுபாடுகொண்டிருந்த சோமசுந்தரத்தைநண்பர்கள் “சோமா” என்றே அன்புடன் அழைத்தார்கள். கண்டி மாநகரில் தன்னைப்போல் பொதுவாழ்க்கையில் அக்கறை கொண்டிருந்த இளைஞர்களுடன் இணைந்து "போஸ் சங்கம்" என்ற அமைப்பை நிறுவினார். இலங்கையும் இந்தியாவும் பிரிடிஸ்ஸாரிடமிருந்து விடுதலை பெற வேண்டும் எனவும் மற்றும் வேறு பல சமூக பணிகளிலும் ஈடுபட்டனர்.
இந்த போஸ் சங்க பணிகளில் சோமா மிகவும் ஈடுபாட்டுடன் உழைத்தார். இரண்டு ஆண்டுகள் இந்த இயக்கத்தில் தீவிரமாக உழைத்தார். பின்னர், கருத்துவேற்றுமை காரணமாக அதிலிருந்து விலகி "பேராதனை வாலிபர் சங்கம்” என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.
அக்காலத்தில் தோட்டத்தொழிலாளர்களின் தினசரி சம்பளம் 36 சதம். இதில் தோட்டப் பிரிவுகளை மூன்று பிரிவுகளாக்கி வைத்திருந்தனர். மலைப்பிரதேசம், மத்திய பிரதேசம், தாழ்ந்த பிரதேசம் இம் மூன்று பிராந்தியங்களுக்கும் வெவ்வேறான சம்பள வித்தியாசங்கள் இவர்களுக்காக நியமிக்கப்பட்ட சம்பள சபைகள் விசித்திரமானவைகள் முதலாளிகளின் பிரதிநிதிகள் இருவர், தொழிலாளர்களின் பிரதிநிதிகளாக இரு பெரிய கங்காணிமார்கள். அச்சபைக்கு தலைவர் LDITEs.T60T seguy mooT 356 fruD6' 6jg6 (Government Agent) பெரும்பாலும் சம்பளசபை தலைவர் முதலாளிமார்களுக்கு சாதகமாக வாக்களிப்பது வழக்கம். முதலாளி மார்களுக்கு விரோதமாக வாக்களிக்க தொழிலாளர்களின் பிரதிநிதிகளாக இருந்த கங்காணிமார்கள் தயங்குவார்கள்.
இந்நிலைக்கண்டு ஆத்திரங்கொண்டார் அஞ்சாநெஞ்சன் சோமசுந்தரம். “சோமா' வை தலைவராகக் கொண்ட தூதுக்குழுவினர் மாத்தளை முதல் மாத்தறை வ்ரையில் பகுதிவாரியாக செயலாற்றிய சம்பள சபைகளின் முன் மகஜர்களை சமர்பித்து சாட்சியங்களை கூறி வாதடியதன் காரணமாக 32 சதமாக இருந்த சம்பளத்தை 42 சதமாக உயர்த்தியது.
அந்தனிஜீவா 62
 

ஆரம்பகாலங்களில் தொழிற்சங்கங்கள் கூட தோட்டங்களுக்கு சென்று கூட்டம் வைக்கமுடியாத கூழ்நிலை இருந்தது. "தோட்ட சொந்தகாரர்களின் அனுமதியில்லாமல் உள்ளே பிரவேசிப்பவர்கள் "தண்டனைக்குள்ளாவார்கள்” என்ற எழுத்துக்கள் கொண்ட பலகைகள் தோட்ட வாயிலில் தொங்க விடப்பட்டிருக்கும்.
இதனை தோட்டத் தொழிலாளர்களுக்கோ அவர்களின் நலனில் அக்கறை உள்ள தொழிற்சங்கவாதிகளோ தொடர்புகொள்ள முடியாதிருந்தது. "தோட்டதுரை மார் ராஜ்யமே” தோட்டத்திலிருந்து வந்தது.
இந்நிலைக்கு முற்றுப்புள்ளிவைக்க சமசமாதஜக்கட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கிய லங்கா தேரட்டத் தொழிலாளர் சங்கம் தோட்டத்தினுள் பிரவேசித்து கூட்டம் நடத்தும் போராட்டத்தை முதன் முதலாக ஆரம்பித்தது.அவர்களின் போராட்டத்திற்கு இலங்கை இந்தியன் காங்கிரசின் பூரண ஒத்துழைப்பை அஞ்சாநெஞ்சன் சோமசுந்தரம் வழங்க ஏற்பாடுசெய்தார்.
இதனால் முல்லோயா தோட்டத்தில் பொலிஸ் சார்ஜண்ட் சுரவீர என்பவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு கோவிந்தன் என்ற தொழிலாளி பலியானான். கோவிந்தனை சுட்டது அநீதியென சமசமாஜக்கட்சி போராடியது நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இதற்கு உதவியாக சோமசுந்தரம் அவரது தோழர்களும் சாட்சியங்களை தேடிக் கொடுத்தனர். இறுதியில் கோவிந்தனை பொலிஸ் சுட்டது தவறு என தீர்ப்பு வழங்கப்பட்டது. இது சோமாவுக்கு கிடைத்த பெரிய வெற்றியாகும்.
பொலிஸ் சார்ஜண்டின் துப்பாக்கிக்குப் பலியான கோவிந்தனின் தாயையும் மனைவியையும் தோட்டத்திலிருந்து வெளியே கொண்டு வரும் பொறுப்பை சோமா ஏற்றுக்கொண்டு அவர்களை வெளியேற்றயிருக்கா விட்டால் பொலிஸாரும் தோட்ட நிர்வாகமும் இவர்கள் இருவருடைய சாட்சியங்களை கலைத்திருக்க முடியும்.
மலையக மாணிக்கங்கள்

Page 35
1941 ஆம் ஆண்டு பெரியார் பெரி. சுந்தரம் காங்கிரஸ் தலைவராக இருந்த பொழுது திரு. ஜி. ஆர். மோத்தாவுடன் இணைக்காரியதரிசியாக திரு. சோமசுந்தரம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1950 ஆம் ஆண்டு மீண்டும் இ. தொ. கா பொதுச் காரியதரிசியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1953 ஆம் ஆண்டில் இலங்கை தொழிலாளர் பிரதிநிதியாக ஜெனிவாவில் சர்வதேச தொழிற்சங்க மாநாட்டிற்கு சென்றார். பின்னர் சர்வதேச சுதந்திர தொழிற்சங்க சம்மேளனத்தின் உலக மகாநாட்டிற்கு இலங்கை பிரதிநிதியாக டுனீஸ்லியாவிற்கு சென்றார். தொழிலாளர்களின் பிரச்சினைகளை அங்கு எடுத்து காட்டின்ார்.
1952 ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகவாசலில் இலங்கை வாழ் இந்தியர்களின் வாக்குரிமை பறிமுதல் செய்யப்பட்டதை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்த தலைவர்களில் அஞ்சாநெஞ்சன் சோமசுந்தரமும் ஒருவர். பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரசிலிருந்து ஒதுங்கியிருந்த சோமசுந்தரம் பின்ன்ர் தமிழகம் சென்று தன் சொந்தக் கிராமத்தில் வாழ்ந்தார். 1989 இல் சுகவீனமுற்று காலமானார்.
அஞ்சாநெஞ்சன் தோட்டத் தொழிலாளர்களுக்காகவும், இந்திய வம்சாவளியினரின் முன்னேற்றத்திற்காகவும் ஆற்றிய பணிகளை நினைவு கூர வேண்டியது அவசியமாகும்.
அந்தனிஜீவா
 
 

1|2)
அசோகா பி. டி. ராஜன்
பிறப்பும், இறப்பும் இயற்கையின் நியதி. பிறப்பவர்கள் அனைவரும் இறப்பவர்களே. ஆனால் பிறப்பிற்கும், இறப்பிற்கும் உள்ள இடைக்காலத்தில் வாழும் வாழ்க்கையே மனிதனை மறக்க முடியாத மா மனிதர்களாக மாற்றியிருக்கிறது.
அதனால் தான் ருஷ்ய இலக்கிய மேதை மெக்ஸிம் கோர்க்கி “மனிதன் எத்தகைய அற்புதமானவன்” என்றான்.
அத்தகைய அற்புதமான மனிதர்கள் தங்களின் தன்னலமற்ற வாழ்க்கையாலும் செய்த பணிகளாலும் நமது நெஞ்சங்களிலும், நினைவுகளிலும் நீக்கமற நிறைந்து இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவர்தான் பெரியார் பி. டி. ராஜன்.
“தோன்றிற் புகழோடு தோன்றுக, அதிலார் தோன்றலிற் தோன்றாமை நன்று”
என்றார் குறள் தந்த பெருந்தகை வள்ளுவர். அத்தகைய குறளுக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்த மா மனிதர் தான் பெரியார் பி. டி. ராஜன்.
மலையக மாணிக்கங்கள்

Page 36
பெரியார் பி. டி. ராஜன் அவர்கள் இன்று நம்மோடு இல்லை. கண்டி மாநகரில் கல்வி பணியாற்றிய பெரியார் பி. டி. ராஜன் அமரராகி நான்கு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனாலும் அவரின் வாழ்வும் பணியும் நம்முன் விரிந்து நிற்கின்றது.
பெரியார் பி. டி. ராஜன் பற்றி நான் நினைவு கூறும் பொழுது அவரின் பணிகளில் கல்விப் பணியே தலையாய பணியாக எண்ணிப் பெருமைப்படத் தோன்றுகிறது.
பெரியார் பி. டி. ராஜன் அவர்கள் கல்விப் பணியினை இரைமீட்டிப் பார்ப்பதற்கு முன்னர் அன்றைய காலகட்டத்தை நமது மனக்கண்ணில் கொண்டு வருவது கடமையாகும். அப்போதுான் அவரது கல்விப் பணியினை எடைபோட முடியும். அதற்கு வரலாற்றையும் சிறிது புரட்டிப்பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.
பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக இங்கு வருகை தந்த எம் முன்னோர்களான மலையக சமூகத்தின் வரலாற்று பின்னணியையும் சிறிது பார்க்க வேண்டும்.
1830 களில் தொடங்கிய கோப்பி பயிர்செய்கையுடன் மலையக மக்களின் வருகை ஆரம்பமானது.
அதன் பின்னர் தேயிலைப் பயிர்ச்செய்கையின் போது பெருந்தொகையான மக்கள் இங்கு கொண்டு வரப்பட்டுக் குடியமர்த்தப்பட்டார்கள்.
இந்தியாவிலிருந்து இங்கு புலம் பெயர்ந்து வந்த மக்கள் நாட்டில் பல பிரச்சினைகளை அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருந்தது. ஆசை வார்த்தைகளை நம்பி வந்த அவர்களின் வாழ்வு மலைகள் சூழ்ந்த இருண்ட கானகத்தில் வாழ்வைத் தொடங்கினார்கள். பிரித்தானிய தோட்டத் துரைமார்கள் இந்திய குடியேற்றத்தை ஆரம்பித்த காலத்தில் இலவச நிலம், இலவச வீடு, வைத்திய வசதி போன்ற நன்மைகளைத் தருவதாகக் கூறி ஏமாற்றி இங்கு ஆள் கூட்டி வந்தார்கள். இவர்களின்
|黜」 அந்தனிஜிவா E66

குழந்தைகளின் கல்வி வசதி பெறுவது தடைப்பட்டு வந்தது. இந்த மக்கள் கல்வி அறிவற்றவர்களாக இருந்ததால் எளிதில் ஏமாற்ற முடிந்தது. ஆகவே இவர்களுக்கு கல்வி அறிவு ஊட்டுவது பற்றி எவரும் கவலைப்படவில்லை.
ஒரு ஞாயிற்றுக்கிழமை ஒரு கோப்பித் தொட்டத்தில் கோப்பி சேகரிப்பு நிலையத்திலிருந்து இரைச்சல் கேட்ட பொழுது தோட்டத்துரையும், அவருடன் இருந்த கிறிஸ்தவ பாதிரியாரும் சென்று பார்த்த பொழுது சில தொழிலாளர்கள் ஒன்று கூடி தமிழில் பைபிள் வாசிப்பதைக் கண்டார்களாம். அதன் பின்னரே தொழிலாளர்கள் மத்தியில் படித்தவர்கள் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இக்கண்டு பிடிப்பின் காரணமாக ஆரம்பத்தில் சில கிறிஸ்தவ ஆரம்ப பள்ளிக்கூடங்களும் 1906 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒற்றை ஆசிரியர் தோட்டப் பாடசாலைகளும் உருவாகின.
மலையகத்தில் 1930க்கு பின்னரே ஒர் விழிப்புணர்வு ஏற்பட்டது. அந்த முப்பதுகளில்தான் பெரியார் பி. டி. ராஜனின் வருகை நிகழ்கிறது.
1933 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி இந்திய நாட்டிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார். ஓர் இருபது வயது இளைஞனின் நெஞ்சுறுதி மிக்க துணிச்சல், நேர்மை, கைகளில் ஓர் 0ொக்கி விளையாடும் மட்டை இவைதான் அவனுடைய அணிக்கலன்களாக அவனோடு வந்தவை.
முப்பதுகளில் கண்டி மாநகரில் திருநெல்வேலி மாவட்டத்தினரே ஆசிரியர்களாக இருந்தனர்.
கண்டி திரித்துவக் கல்லூரி திரு. பிரேசர் தலைமையில் கல்வி புகட்டுவதை ஒரு தெய்வத் திருப்பணியாகக் கருதி செயல்பட்டது. இவரின் கல்விப் பணியைப் பற்றி பண்டிதர் ஜவகர்லால் நேரு தம் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
சென். அந்தனிஸ் கல்லூரியில் அதிபராக ஐரிஸ் நாட்டைச் சேர்ந்தவரான வண. ஹைட் விளங்கினார்.
மலையக மாணிக்கங்கள் 67

Page 37
அந்தக் காலக் கட்டத்தில் பெளத்த மத விழிப்புணர்வு தோன்றிய காலம் நாட்டின் கிறிஸ்தவக் கல்லூரிக்கெதிராகப் பெளத்த கல்லூரிகள் தொடங்கப்பட்டன. கண்டியில் தர்மராஜா கல்லூரியும் கொழும்பில் அனந்தா கல்லூரியும் தோன்றின. சிறிது வசதி படைத்தவர்களின் பிள்ளைகள் இந்தக் கல்லூரிகளில் கல்வி கற்கக் கூடிய வாய்ப்பிருந்தது.
அம்பிட்டிய ஆங்கில கல்லூரி செமனேரி என்று மக்களால் அழைக்கப்பட்ட கல்லூரி தோட்ட பிள்ளைகளினதும், ஏழை விவசாயிகளினதும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை அளித்தது. வண. தந்தை பெரவட்ஸ், இயேசு திருச்சபையைச் சேர்ந்த ஜெய்கட் ஆகியோர் தன்னலங்கருதாது பணி புரிந்த மகான்கள்.
இவர்களின் கல்விப் பணி ராஜனை பெரிதும் கவர்ந்தது. எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தன்னலங்கருதாது அவர்களின் சேவை மனப்பான்மை இவர் மனதில் பசுமையாகப் பதிந்தது.
இதே காலகட்டத்தில் சுவாமி சிவானந்தாவாகப் பிற்காலத்தில் மாற்றமடைந்த ஜே. டி. ராஜூ சென். அந்தனிஸ் கல்லூரியிலும், திரித்துவக் கல்லூாயில் சுந்தரமணியும், தர்மராஜா கல்லூரியில் கணபதிப்பிள்ளையும் கல்விபோதிப்பதில் குறிப்பிடத் தகுந்தவர்களாகத் திகழ்ந்தனர்.
இந்த மூவரில் கல்வி கற்பிக்கும் ஆற்றலை நெருக்கமாக பார்க்கும் வாய்ப்பு கிட்டியது நமது ராஜனுக்கு, காரணம் ஆசிரியர் சுந்தரமணியின் அருமைத் தம்பியார்தான் பெரியார் பி. டி. ராஜன்.
இந்த காலகட்டத்தில் இலங்கைக்கு வந்தவர் தேசிகர் இராமானுஜம். கண்டி மாநகரில் பிற கல்லூரிகளில் பயிலும் தமிழ் மாணவர்களுக்காக மாணவர் விடுதியை ஆக்கினார். ஆங்கிலத்திலும், தமிழ் மொழியிலும் வல்லவரான இராமானுஜம், அவரது சகோதரர் டி. சாரநாதன் ஆகியோர் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தையும், தாகூர், பாரதியார் போன்ற இலக்கிய மேதைகளின் கவிதா ஆற்றலையும் எடுத்துக் கூறுவார்கள்.
அந்தனிஜீவா 68

தோட்டத் தொழிலாளர்களின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள இராமானுஜம் இலங்கை இந்தியன் காங்கிரஸின் முக்கியஸ்தர்களில் ஒருவர். பின்னர் அளுத்துவர பாராளுமன்றத்தின் பிரதிநிதியாகவும் மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இவரது அண்ணனான டி. சாரநாதன் இவர் தமிழகத்தில் சுயமரியாதை இயக்கத் தந்தை பெரியாரின் குடியரசு பத்திரிகையில் பணியாற்றியவர். தமிழிலும் - ஆங்கிலத்திலும் எழுதவும் பேசவும் வல்லவர். மலையக மக்களுக்காக முதன்முதலாகத் தொழிற் சங்க அமைப்பை உருவாக்கிய தேசபக்தன் கோ. நடேசய்யரின் அழைப்பிற்கிணங்க இங்கு வந்தவர். அய்யரின் பத்திரிகைப் பணிக்கு துணையாக இருந்தவர்.
இராமானுஜம் சகோதரர்களுடன் இராஜனுக்கு தொடர்பு இருந்தது. இவர்கள் மூவரும் மலையக மக்களின் முன்னேற்றம் பற்றிக் கலந்துரையாடுவார்கள். ஆனால் ராஜன் தொழிற் சங்க துறையிலோ அரசியலிலோ ஆர்வம் காட்டாமல் கல்வி துறையில்தான் தன் கவனத்தைச் செலுத்தினார். ராஜனின் சிந்தனையில் மலையக மக்களைப் பற்றிய எண்ணங்கள். குழ்ந்தன.
கல்வி அறிவிலும், கல்வி வாய்ப்பிலும் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் மலையக மகக்ள். உரிமை பறிக்கப்பட்ட பொழுது பாராமுகமாகவும், கொடுமைகள் இழைக்கப்பட்டபொழுது செயலாற்றவும் இந்த மக்கள் எல்லாத் துறைகளிலும் ஒதுக்கப்பட்டவர்களாக அல்லல்படுபவர்களாக கல்விதுறையிலும் தீண்டப்படாதவர்களாக திகழ்கிறார்கள். இவர்களின் கல்வி அறியாமையை போக்க வேண்டும் என பல நாட்கள் சிந்தித்தார்.
அதற்கு முன்னர் கண்டி மாநகர மக்களிடையே தன்னைச் சிறப்பாக அறிமுகப்படுத்திக் கொண்டார்.
போல் தியாகராஜன் என்ற தனது பெயரை அந்த நாளில் புகழ் பெற்ற ஜஸ்டிஸ் கட்சியின் அமைச்சராகவும் இருந்த சேர். பி. டி.
LD606)uids DIT60lds-Erikseir 69

Page 38
ராஜன் என்ற பெயரை ஒட்டி தம் பெயரையும் எல்லோர் நாவிலும் எளிதில் நுழையும் வண்ணம் பி. டி. ராஜனாக மாற்றிக் கொண்டார்.
கண்டி மாநகரில் ஹொக்கி விளையாட்டு அறிமுகமாயிராத அந்தக் காலகட்டத்தில் ஹொக்கி விளையாட்டை அவர்களுக்குப் போதிப்பதற்காக 1934 இல் ஹொக்கி கிளப் என்ற அமைப்பை உருவாக்கி ஹொக்கி விளையாட்டைச் சிறப்பான முறையில் விளையாடியும், பயிற்சி அளித்தும் இளைஞர்கள் மத்தியில் வழிகாட்டும் கலங்கரை விளக்காகத் திகழ்ந்தார். மலையக சமூகத்தில் வசதி படைத்தவர்களின் குழந்தைகளைப் போல, வசதியற்ற குழந்தைகளும் படித்து முன்னேற முன்னோடியாக மலையக மாணவர்களின் நலன் கருதி தங்கும் விடுதி ஒன்றைத் தலைநகரான கண்டியில் அமைக்க உறுதிபூண்டார்.
1935 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் திகதி இந்திய மாணவர் ஹாஸ்டல் கண்டி என்ற பெயரில் ஒரு மாணவர் விடுதி நிறுவப்பட்டது. தோட்ட உரிமையாளளர் ஒருவரின் புதல்வரான ஆர். கோவிந்தசாமி, ஒடிட்டர் கே. இராமையா, அட்டன் வழக்கறிஞராக இருந்த அழகமுத்துவின் தந்தையாரான கருப்பையா கங்காணி ஆகியயோர் ஆரம்ப பணிகளுக்குத் துணையாக நின்றனர்.
இந்த இந்திய மாணவர் விடுதியை இன்று கண்டி மாநகரில் புகழ் பெற்றுத் திகழும் அசோகா மாணவர் ஹாஸ்டல், அசோகா வித்தியாலயம் ஆகியவற்றின் முன்னோடியாகும்.
ஆரம்பத்தில் ஒன்பது மாணவர்கள் விடுதியில் சேர்ந்தனர். இதற்காக ராஜன் சோர்ந்து விடவில்லை. எந்த இலட்சியத்திற்காக அந்த மாணவர் விடுதியை ஆரம்பித்தாரோ அந்தப் பணியினை தொடர்ந்தார். ஆரம்பத்தில் பல பிரச்சனைகள் அவர் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இந்தப் பிரச்சனைகளுக்குரிய காரணம் ஆரம்ப கால மாணவர்கள் கல்வி அறிவற்ற ஒரு சமூகத்திலிருந்து வந்திருந்ததால், அவர்கள் சாதி சமய வேறுபாடுகளில் வளர்ந்தவர்களாதலால் அவர்களை ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக அரவணைத்துக் கூட்டு குடும்பமாக
அந்தனிஜீவா to
 

வழிநடத்திச் செல்வது ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. அந்தப் பாரச்சிலுவையைத் தானே சுமந்தார்.
இவர்களிடையே காணப்பட்ட வேற்றுமைகளை வேரோடுகளைய விரும்பினார். அதற்கு திட்டமிட்டு செயல்பட்டார். இதற்காக இந்த மாணவர்களின் முன்னேற்றத்திற்காகத் தன்னை அர்ப்பணித்தார்.
இதனைப் பற்றிப் பிற்காலத்தில் பெரியார் ராஜனே குறிப்பிடும் போது எனது சலியாத உழைப்பினால் அப்பிரச்சனைகளை வேருடன் களைந்தேன். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியையும் மூலதனமாகக் கொண்டு நான் இதனை தொடங்கியதால் ஆபிஸ் பையன் வேலை முதற் கொண்டு முகாமையாளர் பொறுப்பு வரை நானே ஏற்க வேண்டியிருந்தது. மாணவர்களை நல்வழிப்படுத்த, சமூக சமய தேசிய ஒற்றுமையை வளர்க்க, மாணவர்களின் வாழ்க்கை வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு இந்த ஹாஸ்டல் செயல்பட சுதந்திர, சமத்துவ, சகோதரத்துவ கொள்கைகள் பரப்பப்பட்டன. நமது புராதன ஆசாரங்களான சமூக வாழ்க்கைக் கல்வி, அறிவு, நாகரீகம், தேசசேவை ஆகிய பல துறைகளிலும் புத்துயிரலிக்க இந்த ஹாஸ்டலின் வாயிலாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. “கடமை முன் - இன்பம் பின்’ என்ற தாரக மந்திரப்படி காலை 5.30 முதல் இரவு 9.30 வரை கடமைகள் ஆற்றப்பட்டன. தகுந்த சூழ்நிலையில் அளிக்கப்பட்ட தேகப்பயிற்சி, மனப்பயிற்சி ஒழுக்கப் பயிற்சி, சமயப் பயிற்சி போன்றவை மாணவர்களை நல்வழிப்படுத்தின' என்று தெரிவித்துள்ளார்.
பெரியார் பி. டி. ராஜனின் நிர்வாகத்தில் நடைபெற்ற மாணவர் விடுதி வெறும் கற்களாக இருந்த மாணவர்களைப் பட்டைத் தீட்டி வைர கற்களாக மாற்றம் பெறும் பணியைச் செய்தது. மாணவர்களின் அறிவை விருத்தி செய்ய வாசிகசாலை, காலை, மாலை, கூட்டு கடவுள் வழிபாடு, மாலையில் அனைவருக்கும் விளையாட்டுப் பயிற்சி சான்றோர்களை அழைத்து நல்போதனை மிக்க உரைகளை நிகழ்த்தச் செய்தல். எல்லாப் பயிற்சிகளிலும் மாணவர்கள் ஈடுபடவேண்டும் அல்லது கண்டிப்பும், தண்டனையும் வழங்கப்பட்டது. இதனால்
மலையக மாணிக்கங்கள் 71

Page 39
மாணவர்கள் சாதி சமய பேதமற்ற சமூகமாக உருவாகினார்கள். மகாகவி பாரதி சொன்னானே!
எல்லோரும் ஓர் குலம்! எல்லோரும் ஓர் இனம்! எல்லோரும் ஓர் நிறை! எல்லோரும் ஓர் விலை!
அந்த மகாகவியின் கனவைப் பெரியார் ராஜன் தனது மாணவர் விடுதி மூலம் நனவாக்கினார். மாணவர்கள் மத்தியில் சாதி சமய பேதமற்ற சமதர்ம ஒருமைப்பாடு நிலவியது.
மாணவர்களுக்கு வெறும் ஏட்டுக் கல்வியைப் புகட்டாமல், அவர்களின் அறிவை விருத்தி செய்ய நல்லதோர் வாசிகசாலை நிறுவியிருந்தார்.
இந்தக் காலகட்டத்தில் 1937 ஆம் ஆண்டு முதல் கிங்ஸ்வுட் கல்லூரியிலும் 1940 ஆம் ஆண்டு முதல் புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரியிலும் பகுதி நேர ஆசிரியராக நியமனம் பெற்றிருந்தார். இவ்விரு கல்லூரிகளின் தொடர்பு பி. டி. ராஜன் அவர்கட்கு இருந்த காரணத்தினால் தனது விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களைக் கண்டியிலிருந்த சிறந்த கல்லுரிகளில் சேர்க்க வாய்ப்பாக இருந்தது. ராஜன் கண்டிப்பும், அவரது நிர்வாகத்தில் இயங்கிய விடுதியிலிருந்த மாணவர்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காரணமாக ராஜனின் சிபார் சில் வரும் மாணவர்களைக் கல்லூரிகள் விரும்பி ஏற்றுக்கொண்டன.
கண்டி மாவட்டத்தில் இயங்கிய கல்லூரிகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் பெரியார் பி. டி. ராஜனை பெரிதம் மதித்தார்கள். இதுபற்றி அவரே ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடும் பொழுது ‘நான் கல்லூரியில் கடமையாற்றும் பொழுது கடமையுணர்ச்சியுள்ள ஆசிரியனாகவும், சேவை மனப்பான்மையிலும், வாழ்க்கை நெறிமுறையிலும் ஓர் இலட்சிய வாதியாகவும் இருக்க முயற்சித்தேன். ஓரளவு வெற்றியும் கண்டேன்.
_அந்தனிஜீவா 72

ஆகையினாலே ஆசிரியர் வட்டாரத்தில் எனக்குப் பெருமதிப்புக் கிடைத்தது. எனவே, கண்டி வட்டாரத்திலுள்ள பல கல்வி நிலையங்களில் எனது அனுபவங்களையும் போதனைகளையும் கேட்க மாணவர்களும் ஆசிரியர்களும் பெரிதும் விரும்பினார்கள். இதனால் இலக்கிய அறிவு வட்டாரத்தில் நமது ஹாஸ்டலுக்கு நல்ல பெயர் கிடைத்தது என்றார்
அது மாத்திரம் அல்ல ஹொக்கி விளையாட்டு வீரராகத் திகழ்நத பெரியார் பி. டி. ராஜன் 1938 இல் கண்டி மாவட்ட ஹொக்கிச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்ட போது, கண்டிப் பகுதியில் ஹொக்கி விளையாட்டை அறிமுகப்படுத்திய திருவாளர் ராஜன் ஸ்தாபக அங்கத்தவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். இச்சங்கத்தின் ஆதரவுடன் கண்டியில் உள்ள பல ஸ்தாபனங்களும் விளையாட்டுக் கழகங்களும் ஹொக்கி விளையாட்டை ஆரம்பித்தன. அவை பெரியார் ராஜனின் உதவியை நாடின. ஹொக்கி விளையாட்டின் சட்டதிட்டங்களை முறையாகத் தெரிந்து வைத்திருந்த பெரியார் ராஜனை மத்தியஸ்தராக அழைத்தனர். கட்டுப்பாடும் ஒழுக்கம், நேர்மைமிக்க மத்தியஸ்தராக விளங்கியதால் விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் மத்தியல் இவரது நாமம் பிரசித்தி பெற்றது. அத்துடன் அவரது அசோகா மாணவர் விடுதி ஹொக்கி விளையாட்டு கோஷ்டியும் பலபோட்டிகளில் கலந்து பெயரையும் புகழையும் தேடிக்கொடுத்தது.
ஆரம்ப முதல் இந்திய மாணவர்கள் ஹாஸ்டல் என இயங்கி வந்த நிறுவனம் தேசிய நன்மைக்கேற்ப 1951 இல் அசோகா மாணவர் ஹாஸ்டல் என்று புதுப்பெயர் பூண்டது. இந்தப் பெயரைச் சூட்டியது வேறுயாருமல்ல. இந்திய அரச ராஜதந்திரமிக்க சாணக்கிய மேதையாகத் திகழ்ந்த ராஜாஜி என்று அன்போடு அழைக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் கவர்னர் ஜெனரல் அமரர் சி. இராஜகோபாலாச்சாரியர் ஆகும். அம்மேதை அசோகா மாணவர் விடுதியிலும் அதன் முன்னேற்றத்திலும் பெரிதும் அக்கறைகாட்டிப் பல அறிவுரைகளும் கடிதம் மூலம் உத்வேகமூட்டியுள்ளார்.
ஆரம்ப முதல் இந்தியமாணவர் ஹாஸ்டல் என இயங்கி வந்த நிறுவனம் தேசிய நன்மைக்கேற்ப 1951இல் அசோகா மாணவர்
மலையக மாணிக்கங்கள் 73

Page 40
ஹாஸ்டல் என்று புதுப்பெயர் பூண்டது. இந்த பெயரை சூட்டியது வேறுயாருமல்ல. இந்திய அரச ராஜதந்திரமிக்க சாணக்கிய மேதையாக திகழ்ந்த ராஜாஜி என்று அன்போடு அழைக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் கவர்னர் ஜெனரல் அமரர் சி. இராஜகோபாலாச்சாரியர் ஆகும். அம்மேதை அசொகமானவர் விடுதியிலும் அதன் முன்னேற்றத்திலும் பெரிதும் அக்கறைகாட்டி பல அறிவுரைகளும் கடிதம் மூலம் உத்வேகமுட்டியுள்ளார்.
1960 களில் அசோகா மாணவர் விடுதி வெள்ளி விழாக் கண்டது. வெள்ளி விழா என்பது வெறுமனே விழாவாக காற்றில் கைவீசிய கதையாக மட்டுமில்லாமல் வெள்ளிவிழா மண்டபமும் நிர்மாணிக்கப்பட்டது. வெள்ளி விழா வைபவத்திற்கு இலங்கையின் கல்வி மேதை வில்மட் பெரேரா அவர்கள் தலைமைதாங்கிச் சிறப்பித்தார்கள்.
1955இல் பெரியார் ராஜன் கண்டி அசோகா வித்தியாலயத்தை ஆரம்பித்தார். அன்றுமுதல் இன்று வரை மலையகத்தின் தலைநகரில் கண்டி அசோகா வித்தியாலயம் தனித்துவம் மிக்கதாகத் தலை நிமிர்ந்து நிற்கின்றது. இதற்கு முக்கிய காரணம் பெரியார் ராஜனின் தீட்சண்யமான பார்வையும், தீர்க்கதரிசனமான நோக்கமுமாகும். இந்த அசோகா கல்வி நிறுவனம் மாணவர்களை வெறுமனே கல்வி மாத்திரம் கற்கும் மாணவர்களாக அவர்களை உருவாக்குவதில்லை, நாட்டின் நற்பிரஜைகளாகவே அவர்களை நெறிப்படுத்துகின்றது.
அசோகா வித்தியாலயத்தின் முன்னேற்றத்திலும், வளர்ச்சியிலும் அக்கறை கொண்டு செயல்படும் கல்லூரி முதல்வர் திரு. செ. நடராசா அவர்கள் பெரியார் ராஜன் கண்டெடுத்த நல்முத்து. அவரது பாசறையில் பயிற்சி பெற்றவர். அவரது அடியொற்றி கல்விப் பணிகளை ஆற்றி வருகின்றார்.
அது மாத்திரமல்ல பெரியார் ராஜனின் மைந்தர்களும் தந்தையின் அடியொற்றி அவரது கல்விப் பணியைத் தொடர்ந்து வருவது வரலாற்றுச் சிறப்புக்குரிய செயலாகும். பெரியார் ராஜன் தன்னலம்
அந்தனிஜீவா
 
 

கருதாத பணிகளைக் கெளரவிக்கும் முகமாக அரசினர் அவருக்கு சமாதான நீதவான் பட்டம் வழங்கிக் கெளரவித்தனர். கண்டி மாநகர சபை அவருக்குப் தேனீர் விருந்துபசாரம் செய்து தன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டது. மலையக தலைநகரில் கல்விப் பணியாற்றிய பெரியவரை கொழும்பு தலைநகருக்கு அழைத்து பாராட்டி கெணரவித்து தன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டது கொழும்பு கலைச் சங்கம்.
பெரியார் ராஜன் வாழ்வின் தலையாய பணியாக உயர்ந்து நிற்பது அவரது கல்விப் பணியாகும். அதற்குச் சான்றாக இன்றும் உயிர்த் துடிப்புடன் இயங்கிக் கொண்டிருப்பது அசோகா கல்வி நிறுவனமாகும். அதனால் இனிமேல் பெரியார் பி. டி. ராஜனை ஆசோகா ராஜன் என்றழைப்பதுவே நாம் அவருக்குச் செய்யும் மரியாதையாகும்.
பெரியார். ராஜன் கல்வி வளர்ச்சிக்கு மாத்திரம் அன்றி கலை, இலக்கிய வளர்ச்சிக்கும் தன்னால் இயன்ற பங்கினைச் செய்துள்ளார். தமிழகத்தில் இலக்கியத் துறையில் ஒரு மாற்றத்தினையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்திய “மணிக்கொடி’ என்ற இலக்கிய இதழ் மணிக்கொடி சஞ்சிகை மலர்ந்த புமைபித்தன் கு. பா. ரா. பிச்சமூர்த்தி போன்றவர்களே இலக்கிய வளர்ச்சியின் அடிநாதமாகத் திகழ்ந்தார்.
அதேபோல மலையகத்தின் ‘மணிக்கொடி’ என இன்று இலக்கிய ஆய்வாளர்களால் குறிப்பிடுகின்ற மலைமுரசு’ என்ற சஞ்சிகையை பெரியார் ராஜனின் அன்புக்குரிய மாணவரான க. ப. சிவம் நடத்திய பொழுது அந்தச் சஞ்சிகையின் வளர்ச்சிக்கு அறிவுரைகளை வழங்கியும், ஆலோசனைகளையும் வழங்கி ஒத்துழைப்பையும் நல்கியவர் நமது ராஜன்.
மலைமுரசு சஞ்சிகையே மலையக இலக்கிய வளர்ச்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்துள்ளது. அதில் எழுதிய சாரல்நாடன் தெளிவத்தை ஜோசப் போன்றவர்களே இன்று இலக்கிய உலகில் சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றனர். இது மாத்திரமல்ல, மலையக
மலையக மாணிக்கங்கள்

Page 41
கவிஞர்கள் கவிதைத் தொகுப்பான “குறிஞ்சிப் பூ” தொகுதியை ஈழக்குமார் தொகுத்து வெளியிட்ட பொழுது இதற்கும் ராஜனின் கணிசமான பங்களிப்பு இருந்துள்ளது.
ராஜன் இல்லாத மலையக ஹாஸ்டல் கட்டடங்கள் நெற்றியில் திலகமிடாத பெண்ணாகக் காட்சியளிக்கின்றது.
அசோகா ராஜன் என்று நாம் அன்போடு குறிப்பிடும் பெரியார் ராஜனின் இத்தகைய சிறப்புக்கு எல்லாம் என்ன காரணம்? ராஜனின் வெற்றியின் ரகசியம் என்ன? அது எத்தகையது. இதுதான் கவிஞர் குறிப்பிட்டாரே.
மனைவி அமை தெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
என்று ஒரு ஆணின் வெற்றிக்கு எல்லாம் பின்னணி ஓர் பெண் இருப்பாள் என்று. ஓர் ஆங்கில அறிஞன் குறிப்பிட்டுள்ளார். அது எத்தகைய உண்மை என்பதனை ராஜனை அறிந்தவர்களுக்குத் தெரியும் புரியும்.
அவரது வெற்றிக் கெல்லாம் உந்து சக்தியாகவும் உறுதுணையாகவும் விளங்கிய அவரது துணைவியார் திருமதி புஸ்பம் ராஜன் அவர்கள்.
அவர் ராஜனின் பணிகள் அனைத்திலும் இரண்டறக்கலந்து இருந்தார். வள்ளுவர் வாசுகி போல் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை ஒவ்வொருவருடைய வாழ்விற்கும் வழிகாட்டியாகும்.
இாைஜனின் வாழ்க்கையும் அவரது பணியினையும் நினைவு
கூறும் பொழுது நாம் அன்னை புஷ்யம் இராஜனையும் நினைக்க (3660õigugö 560)6puu 560)LDu Tgb.
அறுபதுகளில் அசோகா ஹொஸ்டலில் வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு சிறப்புரையாற்ற டாக்டர் சேர். சி. பி. இராமசாமி ஐயர் வருகை தந்த
அந்தனிஜீவா
 
 

அங்கு திரண்டிருந்த மக்களைக் கண்டதும் இராஜனின் செல்வாக்கை உணர்ந்து அவரைச் சமூகப் பணிகளிலும் இரு மொழிப்பேசும் மக்களிடையே செளஜன்யத்தையும் ஏற்படுத்திச் சீர்திருத்தப் பணிகளிலும் ஈடுபடும்படி வற்புறுத்தினார்.
கல்விப் பணியே கண்ணெனக் கருதிய இராஜன் அதன்பின்னர் சமூக சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டார்.
அதன் பிரதிபலிப்புதான் மலைநாட்டு நல்வாலிபர் சங்கம். அதன் ஸ்தாபக அங்கத்தவர்களில் ஒருவர் ராஜன்.
1962 இல் 3 நாட்கள் நடைபெற்ற மலையக கலைவிழா பின்னர் கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்ற மலையக எழுத்தாளர் சந்திப்பு. இப்படி அவரது பணிகள்.
கடைசியாக அசோகா இராஜனைப் பற்றி ஒரிரு வார்த்தைகள்
அவர் பழகுவதில் நண்பர் பாதுகாப்பதில் தந்தை பராமரிப்பதில் தாய் வாழ்த்துவதில் குழந்தை வணங்குவதில் தெய்வம்
(1992 ஆண்டு அசோகா வித்தியாலயத்தில் அதிபர் செ. நடராஜா தலைமையில் நடைபெற்ற பெரியார் பி. டி. ராஜனின் நினைவுத் தின பேருரை.)
மலையக மாணிக்கங்கள்

Page 42
கலகக்காரனான ஒரு கலைஞன்
செ. யோகநாதன்
பல ஆண்டுகளின் முன்னே தமிழகத்தில் இலக்கியக் கருத்தரங்கொன்று நடை பெற்றுக் கொண்டிருந்தது. கருத்தரங்கில் பேசியவர்களது உரை முடிந்ததும், பங்கு பற்றியோரின் அபிப்பிராயங்கள் கேட்கப்பட்டன. அப்போது இளைஞர் ஒருவர் மேடைக்குச் சென்றார். தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு, இலங்கை மலையகம் செய்துள்ள, செய்கின்ற பங்களிப்பை விரிவாகவும், தெளிவாகவும், கொஞ்சம் ஆக்ரோஷமாகவும் பேசினார், நடேசய்யர் என்ற அர்ப்பணிப்பான மனிதரின் அரசியல்,பத்திரிகைப்பங்களிப்பைப் பற்றிக் கூறி விட்டு, "இவை யாவற்றையும் தெரிந்து கொள்ளாமல், தமிழ்ப் பண்பாட்டு, எழுத்துப்பங்களிப்புக்களைப் பற்றி நீங்கள் எப்படி அதிகார பூர்வமாகப் பேச முடியும்?” என்று கேட்டார். எல்லாரது மனவெளியிலும் அந்தக் கேள்வி ஒரு கட்டு விரலாக வியாபித்து நின்றது. இதை அங்கு நிலவிய பிசிறற்ற மெளனம் சத்தமிட்டுக் கூறியது.
நான் திகைத்துப் போய் விட்டேன், கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து, "நீங்கள் யார்?" என்று கேட்டார்.
“என் பேர் அந்தனி ஜீவா நான் இலங்கையிலிருந்து வந்த எழுத்தாளர்" என்றார் இளைஞர்.
ஏற்கனவே அந்தனி ஜீவாவைப் பற்றி நான் அறிந்திருத்தாலும் முதன் முதலில் அப்போது தான் நான் நேரில் சந்தித்துப் பேசினேன்.
அந்தனிஜிவா
 
 

அந்த நட்பு மேலும் மேலும் நெருக்கமான தோழமையாகப் பரிணமித்தது.
மலையகத்து கலை இலக்கியப் பண்பாட்டுப் போக்குகளை மேன்மைப்படுத்த வேண்டும், பிரசாரப்படுத்த வேண்டுமென்பதில் அந்தனி ஜீவவுக்கு மிகுந்த ஆர்வம், அதை முரட்டுத்தனமான ஆர்வமென்றுகூடச் சொல்லலாம்.
மலையகத்தின் விழிப்புணர்வு, அரசியல் மாற்றம், கலாசாரச் செழுமை என்பனவற்றை வெளிப்படுத்திய பெருமக்களை உரிய முறையில் எல்லாரும் அறியவேண்டுமென்பதில் அந்தனிஜீவாமிகுந்த ஆர்வம் கொண்டு இயங்குபவர். அவர் எழுதியிருக்கும் நூல்கள், நடத்திவரும் சஞ்சிகைகள் என்பன இந்தக் குரலையே அடிநாதமாகக் கொண்டவை. இதைப்பட்டியலிட்டுநிரூபிப்பதற்கான அவசியமில்லை.
மாணவப் பருவம் லலித கலைகளிலும், பத்திரிகைகளை நடத்துவதிலும் கழிந்து போயிற்று அந்தனி ஜீவாவுக்கு. வளரிளம் பருவம், திரைப்படம், நாடகம் என விரிவு கண்டது. இடது சாரி அடித்தளத்தில், இந்த மேற் கட்டுமானங்கன் செம்மை பெற்றன. ஒன்றோடொன்று தொட்டு அமைத்துக் கொண்டன.
இந்திய வம்சா வழியினரான அந்தனி ஜீவா கொழும்பில் வாழ்ந்ததால் ஈழத்துக் கலை இலக்கியச் சுழற்சிகளுக்குள்ளும் தன்னை ஆட்படுத்திக் கொண்டவர். மலையகத் தொழிற்ச்சங்க இயக்கத்தில் சில காலம் ஜீவாவின் உழைப்பும், சுறுசுறுப்பான செயற்பாடும் நிகழ்ந்திருப்பதை அறிய முடிகிறது. இது நீடித்திருக்குமாயின் ஜீவாவின் படைப்பாற்றல் அழுத்தமும் வலிவும் கொண்டதாய் மாறியிருக்கும். மலையகப் படைப்பிலக்கியத்தின் வலுவானதூண்களில் ஒன்றாக இவரது பெயர் சொல்லப்பட்டிருக்கும். அதற்கான காலம் இன்னமும் போய் விடவில்லை. கோப உணர்வை, ஒடுக்கு முறைகளுக்கு எதிராகக் கொண்டிருக்கும் இந்தக் கலகக்காரக் கலைஞனிடம்.
மலையக மாணிக்கங்கள்

Page 43
அந்தனி ஜீவா மலையக இலக்கிய, பண்பாட்டு வளர்ச்சியில் கொண்டிருக்கும் அத்யந்த தேசத்தையும் மதிப்பையும் நான் என் அனுபவரீதியாக அறிந்திருக்கின்றேன்.இந்தநூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள் தொகுதிகளை நான்தொகுக்கும் முயற்சியில் எனக்கு அருந்துணை புரிந்தவர், மலையகப் படைப்புக்களை தேடித் தேடிச் சேகரித்து எனக்கு அனுப்பி வைத்தவர். அதற்காக தனது நேரத்தில் ஒரு பகுதியையே முதன்மைப்படுத்திஇயக்கியவர்.இதைஈழத்தமிழ்ப் படைப்புலகம் என்றென்றும் நன்றியோடு நினைவில் வைத்திருக்கும்.
மலையகப் படைப்பிலக்கியம். ஈழத்து ஆக்கங்ளில் வீரியமான பாத்திரம் வகிக்கும் இயல்பினைக் கொண்டது என்ற கருதுகோள் இப்போது உண்மையாகிவருகிறது. பிளவுபட்டிருந்தஅரசியல் தளமும் தன் மக்களின் நலனை முதன்மைப்படுத்தி ஒருமையும் வலிமையும் அடையத் தொடங்கியிருக்கிறது. இந்தத் தள இயல்பினால் மேற் கட்டுமானங்கள் மேலும் வலிவும் வனப்பும் பொலிவும் பெறும். இவ்வேளையிலே தான் கலை இலக்கியப் படைப்பாளிகளின் அர்ப்பணிப்பான உழைப்பும் வேண்டப்படுகிறது.
இதற்கு முன்னுதாரணமாகப் படைப்பாளிகள், வழிகாட்டிகளை இப்போதுமேன்மைப்படுத்தவேண்டும்.இந்தப்பணியில் அந்தனிஜிவா ஈடுபட்டிருப்பது பெரிதும் வரவேற்க்கத்தக்கது மட்டுமல்ல, இளந் தலைமுறைக்கு ஆதர்சனமான நெறிப்பாடுமாகும்.
தம்மை, தமது பலத்தை அறிந்திடாத மக்களாய் இருந்த மக்கள் தம் வலுவினை அறிந்து விட்டனர் மலையகத்தில், அவர்களின் அருஞ்செல்வங்களில், அவர்தம் நாட்டார் இலக்கியமும் ஒன்று. இந்த வேரில் தொட்டு வளர்ந்ததே அவர்தம் ஏனைய கலைகள். வாய்மொழி இலக்கியமும், எழுத்தாக்கங்களும் ஒன்றை ஒன்று பின்னி இணைந்து மேலும் ஓங்கி வளரும் கால கட்டத்தில் வாழ்கின்ற மலையகப் படைப்பாளிகளுக்கு சமுதாயத்உணர்வும், படைப்பு வேகமும் மேலும் அவசியப்படுகிறது. இதை அந்தனி ஜீவா போன்றோர் உணர்ந்து செயற்பட காலம் கட்டளை இட்டிருக்கின்றது.
அந்தனிஜிவா
 
 

மக்களிடமிருந்து கற்று, அதைச் செம்மைப்படுத்தி மக்களுக்கே திருப்பிக் கொடுத்தல் என்ற அற்புதமான வழிகாட்டலே எம்மை நெறிப்படுத்துவது, இந்த நெறியையே அந்தனி ஜீவாவும் கைக்கொண்டு வருவதை நான் நன்கு அறிவேன்.இதனால் நான் ஒரு துறையிலே காலுான்றாமல், பல திசைகளைத் தொட்டு நிற்கும் ஜீவாவால், கலை இலக்கியத்துறையில்பேர் சொல்லிநிற்க இயல்கிறது, செயற்பட முடிகின்றது.
படைப்பாளி என்பவன்சிலபலவீனங்கள் கொண்டவன் என்றொரு கருத்து நிலவுகிறது. இது முற்றிலும் தவறானது. ஸ்டாலின் கூறியது போல, படைப்பாளி சமுதாயத்தின் பொறியியலாளன் அவன் முன்னுதாரணமானவன்” அந்தனி ஜிவா பொறியியலாளனாக சமுதாயப்பணிக்கு தன்னைப் புடம் போட்டுக்கொள்ள வேண்டும், படைப்பாளனாக.
ஐம்பது வயதைத்தொட்டுவிட்ட அந்தனிஜிவாவின் அனுபவசாரம், கலை இலக்கியத்துறைக்குநிறைய ஆக்கங்களைத் தந்திடும் விரிந்த பரப்பைக் கொண்டது.இதை எண்ணி, செயற்பாடுவகுத்துநிதானமாக அந்தனிஜிவா செயற்பட்டு அருஞ்செல்வங்களை எமது கலை இலக்கியத்துறைக்குத் தரவேண்டுமென்பது எனது விருப்பம், ஆசை, தமிழின் தேவை.
5.998
மலையக மாணிக்கங்கள்

Page 44
‘துரைவி" வெளியீடுகள்
1 மலையகச் சிறுகதைகள் 33 மலையக எழுத்தாளர்களின் கதைகள்
2 உழைக்கப் பிறந்தவர்கள் 55 எழுத்தாளர்களின் மலையகக் கதைகள்
3 பாலாயி தெளிவத்தை ஜோசப் மூன்று குறுநாவல்கள்
4 மலையகம் வளர்த்த தமிழ் சாரல் நாடனின் கட்டுரைகள்
5. சக்தி பாலையாவின் கவிதைகள்
சக்தி பாலையா
6 ஒரு வித்தியாசமான விளம்பரம் (சின்னஞ்சிறு கதைகள்) ரூபராணி ஜோசப்
7 மலையக மாணிக்கங்கள் (மலையக முன்னோடிகளின் பன்னிருவரைப் பற்றிய நூல்)
அந்தனிஜீவா 82
 


Page 45


Page 46


Page 47