கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பல்லின சமூகத்தில் சனநாயகம்

Page 1


Page 2

பல்லின சமூகத்தில் சனநாயகம்
டொனால்ட் எல். ஹரோவிட்ஸ்
தமிழாக்கம் Lm. Bidarri
ufUmfflur எஸ். அன்ரனி நோபேட் புவியியல்துறை கொழும்புப் பல்கலைக்கழகம்
பொதுசனக் கல்வி நிகழ்ச்சித்திட்டம் Imin räpou5sh 1995

Page 3

PALLINA SAMUGATHIL SANANAYAKAM
(Democracy in a Plural Society)
Donald L. Horowitz
Translated by: M. Karunanithy Edited by : S. Antony Norbert
First Published 1995
© Copy Right : Marga Institute
Type Setting: Unique Graphics,Wellawatte,Colombo - 6. Printing : Unie Arts (Pvt) Ltd., Colombo - 13.
Please address inquiries and orders to:
Newton Fernando Assoc. Director Communication / Publication Division Marga Institute P.O.BOX 601 61, Isipathana Mawatha, Colombo - 5, Sri Lanka. r ཡོད། ADVISORY COMMITTEE
Godfrey Gunatilleke Shelton Wanasinghe Newton Fernando S. Antony Norbert P.P.M. Gunatilleke Sarath Madduma
الكم. ܝܢܠ
This Series of Publication has the Financial Support of the Canadian International Development Agency (CIDA).

Page 4

பொருளடக்கம்
முன்னுரை 5
பகுதி 1
பிரிவுபட்ட சமூகங்களில் சனநாயகம் 11
1. தொடக்க நிலைத்தடைகள் 14 2. சமுதாயத்தின் எல்லைகளைக் குறைத்தல் 18 3. சேர்த்தலும் விலக்குதலும் 21 4. சனநாயக நிறுவனங்களும்
சனநாயகரீதியற்ற விளைவுகளும் 25 5. சனநாயகரீதியான மீள் மத்தியஸ்தம் 31 6. இணங்கிச் செல்லும் நிறுவனங்களை உருவாக்கல் 31
பகுதி III
சனநாயகச் செயல் முறையின் பிரச்சினைகள்
1 சனநாயகச் செயல் முறைக்கான தகுதிவிதிகள் 43
1. வினைத்திறன்மிக்க பங்குபற்றல் 44 2. உறுதியான நிலையில் வாக்குச் சமத்துவம் 44 3. தெளிவான விளக்கம் 47 4. நிகழ்ச்சிநிரலின் கட்டுப்பாடு 49 5. சம சந்தர்ப்பம் ஏன்? 52 6. கோட்பாட்டிலுள்ள பிரச்சினைகள் M 54
11 பெரும்பான்மை ஆட்சியும் சனநாயகச் செயல்முறையும்
1. ஆரம்பநிலைகள் 59 2. பெரும்பான்மை ஆட்சிக்கான நான்கு நியாயப்படுத்தல்கள் 63
(1) சுயநிர்ணயத்தை உச்சப்படுத்தல் 63 (II) நியாயமான கோரிக்கைகளின் அவசிய
விளைவான பெரும்பான்மை ஆட்சி 65

Page 5
(III) பெரும்பர்லும் சரியான தீர்மானங்களை மேற்கொள்ளல் (IV) பயன்பாட்டை மிகுதிப்படுத்தல்
3. கடினத் தன்மைகள்
(I)
இரண்டு மேற்பட்ட மாற்றுவழிகள்
(11) வட்டத்தன்மையான பெரும்பான்மைகள் (III) நிகழ்ச்சிநிரலைக் கட்டுப்படுத்தல் (IV) எல்லைப் பிரச்சினை (V) உண்மையுலக சனநாயக ஆட்சியின் தேய்வு
(VI) பெரும்பான்மையாட்சி சராசரிப்
பயன்பாட்டை மிகுதிப்படுத்துமா?
(VI) பிரச்சினைகள் தொடர்பான நடுநிலைமை
I சிறந்த மாற்றுவழியொன்று உண்டா?
5
. மிகச்சிறந்த பெரும்பான்மை
வரையறுக்கப்பட்ட சனநாயக ஆட்சி ஒரளவு பாதுகாப்பு . பெரும்பான்மை வல்லாட்சி
எதிர் சிறுபான்மை வல்லாட்சி
. சனநாயக நாடுகளில் பெரும்பான்மை ஆட்சி
சனநாயகக் கோட்பாட்டிலும் பார்க்க,
சனநாயக நடைமுறையில் பெரும்பான்மை
ஆட்சியின் மதிப்பு குறைவாக இருப்பது ஏன்?
69 71
73
74 76 77 78 81
84 86
88
88 89 91
92 93
99

முன்னுரை
சனநாயகத்தின் இயல்பும் கருத்தும் பற்றித் தொடர்ச்சியான ஐந்து நூல்களை வெளியிடுவதற்கான மார்க்கா நிறுவகத்தின் முயற்சியில் இவ் வெளியீடு மூன்றாவதாகும். தகுதிவாய்ந்த படைப்புக்களைக் கொண்ட நூல்கள் அல்லது அவற்றில் சில அத்தியாயங்களின் மொழிபெயர்ப்பைக் கொண்டதாக இத் தொடர்கள் அமைந்திருக்கும். பிரசைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சனநாயக சமூகத்தின் பிரதான அம்சங்களைக் கற் றுணர்ந்த ஆய்வுகளாக இக் கட்டுரைகள் விளங்குகின்றன. ஆரோக்கியமான சனநாயகம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதை விரிவாகவும், அது நிலைத்து நிற்பதற்குத் தேவையான பெறுமானங்களைச் சுட்டிக் காட்டுவதாகவும் இக் கட்டுரைகள் உள்ளன. ஏனைய மனித நிறுவனங்கள் போன்று ஒரு சனநாயக முறைமையும் தன்னுள் குறைபாடுகளைக் கொண்டுள்ளதெனினும் இன்றும் இது ஒரு சிறந்த அரசாங்க அமைப்பாக உள்ளது என்பதில் பரந்தளவான உடன்பாடு காணப்படுகின்றது. இத்தொடரில் வரவிருக்கும் ஐந்து நூல்கள் சனநாயகம் ஏன் இந்த அதிஉயர்நிலையைக் கொண்டுள்ளதென்பதை விளக்குகின்றதுடன் சனநாயக முறைமையின் சில சர்ச்சைக்குரிய பிரச்சினைகளையும் ஆராய்வதாக உள்ளது.
இன்று உலகின் பல பாகங்களிலும் செயற்பட்டு வரும் சனநாயக முறைமைகளானது ஒரே தன்மையுடையவை அல்ல. நிறைவேற்று விடயங்களிலும், அரசாங்கத்தின் செயற்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட சட்டவாக்கக் கருவிகளிலும் குறிப்பிடத்தக்க பல்வகைத்தன்மை காணப்படுகின்றது. பொதுவாக அவை அவற்றைப் பகிர்ந்து கொள்கின்றன என்பது அடிப்படையான தத்துவம் என்பதுடன் அதிலிருந்தே ஏனைய பொது அம்சங்களும் பெறப்படுகின்றது. மக்கள் தமது அரசாங்கத்தைத் தெரிவு செய்யத் தன்னாதிக்கமுடையவர்கள் என்பது தத்துவமாகும். இத் தொடரில் வெளியிடப்படும் ஐந்து நூல்களும் எல்லாச் சனநாயகங்களுக்கும் பொதுவான அத்தியாவசியமான கூறுகளை விளக்குகின்றதுடன் பல்வேறு சமூகங்களின் தேவைக்குப் பொருந்தும் வகையில் பல்வேறு அமைப்புக்களைப் பரீட்சிக்கவும் முற்படுகின்றது.
இத் தொகுதியின் முதலாவது வெளியீட்டில், ஒரு சுருக்கமான விளக்கம் தரப்படுகின்றது. சனநாயக செயற்பாடுகளின் வழிகளும், வெவ்வேறுபட்ட பகுதிகளின் சனநாயக முறைமையும் எவ்வாறு இடைத்தொடர்புகளைக் கொண்டுள்ளதென்பதையும், ஒன்றுக்கொன்று எவ்வாறு ஆதரவளிக் கின்றது என்பதையும் இதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அடிப்படை உரிமைகள் மற்றும் சில வேறுபாடு கொண்ட மனிதப் பெறுமானங்களையுடைய ஏனைய அம்சங்கள் தொடர்பாக எல்லாச் சனநாயகச் செயற்பாடுகளும், அமைப்பும் (ஒழுங்கான முறையில்
5

Page 6
அரசாங்கங்களைத் தெரிவுசெய்தலும், பெரும்பான்மையோர் ஆட்சியையும் கொண்ட) எவ்வாறு காணப்படுகின்றதென்பதை இது விளக்குகின்றது. இத்தகைய அகப் பெறுமானங்களும், உரிமைகளும் பிரிக்க முடியாத சாரமாகவும் , சனநாயகத்தின் மையமாகவும் விளங்குகின்றது. இவையில்லாமல் உண்மையான சனநாயகம் இருக்க முடியாது. இலங்கையில் கடந்த இருபது வருட அனுபவமானது தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் அல்லது சனநாயக ஆர்வமானது உண்மையான சனநாயக சமுதாயத்தை நிலை நிறுத்துவதற்குப் போதியதாக இருக்கவில்லை என்பதை வெளிக்காட்டுகின்றது. சக்திவாய்ந்த பெரும்பான்மை ஒன்று சனநாயகரீதியில் தெரிவு செய்யப்பட்டாலும், சனநாயக ரீதியான எதிர்க்கட்சியை அழிப்பதற்கும், ஒடுக்குவதற்கும் சனநாயக ரீதியற்ற வழிகளைப் பயன்படுத்த முற்பட்டது. இவ் அணுகுமுறையானது எதிர்கட்சியாக இருப்பதற்கு அதன் உரிமையை மறுப்பதாக உள்ளது.
ஒரு எதிர்க்கட்சி எப்பொழுது நாட்டின் பெரும் பகுதி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கின்றது. மறுவகையில் எதிர்க்கட்சி மக்களின் முடிவை ஏற்றுக்கொள்ளவும், சனநாயக முறைமையின் சட்டத்துக்குள் இயங்கவும் தயாராக இல்லை. கிடைக்கக்கூடிய எல்லாச் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி, நாட்டுக்கு ஒரு நிலையான ஆட்சியைக் கொடுக்கத் தெரிவு செய்யப்பட்ட கட்சிக்குப் பிரச்சினையை ஏற்படுத்தவும் முயற்சிக்கின்றது. இத்தகைய பலவீனங்களிற் சில ஒரு சனநாயக முறைமையின் உள்ளார்ந்த குறைபாடாகும். ஆனால் இலங்கையில் சனநாயக முறைமையின் பயனுறுதிவாய்ந்த செயற்பாட்டைத் திரிபுபடுத்தும் வகையில் முனைப்பானவையாகவும் அவை விளங்குகின்றன.
பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுபவர்கள் சலுகைகள், அனுகூலங்களைத் தமக்குரியதாக ஆக்கிக் கொள்கின்றனர். அதிக பெரும்பான்மையுடன் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்கள் வழங்கப்பட்ட அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்பவர்களாகவும் தன்னிச்சையாக நடந்து கொள்பவர்களாகவும் காணப்படுகின்றனர். சனநாயகத்தில் பெரும்பான்மையினரின் ஆட்சி என்னும் கருத்தியலானது எப்பொழுதும் சிறுபான்மையினரின் உரிமைகளை மறுக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரச்சினைகளில் எல்லாச் சனநாயக முறைமைகளும் தொடர்ச்சியான போராட்டத்தைக் கொண்டிருப்பதுடன் தவறுகளைத் திருத்துவதற்கு வழிகளைத் தேடுவனவாகவும் உள்ளன. அவைகள் நிறுவனங்களையும் அமைப்புகளையும் ஸ்தாபிக்கவும், வடிவமைக்கவும் முயலுவதுடன் அவற்றின் மூலம் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்கள் மிகவும் பயன்படக்கூடிய முறையில், அவர்களை அதிகாரத்துக்குத் தெரிவு செய்த மக்களுக்குப் பதில் சொல்லக் கூடியதாகவும் மாறுகின்றது. மார்கா நிறுவனத்தின் இவ் வெளியீட்டில் இத்தகைய முக்கிய விடயங்களும், பிரச்சினைகளும் ஆராயப்படுகின்றதுடன் அவை எவ்வாறு சனநாயக
6

முறைமைகளுடன் தொடர்புபடுகின்றதென்பதையும் உசாவுகின்றது. அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பும் உறுதியும் சனநாயக முறைமையின் அடிப்படையாக இன்று தோற்றம் பெற்று வருகின்றது.
இரண்டாவது வெளியீடு சனநாயக முறைமையின் கீழ் விருத்திபெற்ற பல்வேறு அரசாங்க அமைப்புக்களை ஆராய்கின்றது. சனாதிபதி மற்றும் பாராளுமன்ற முறைமை ஆகிய இரு முக்கிய வடிவங்களில் ஐக்கிய அமெரிக்கா முன்னையதற்கும் ஐக்கிய இராச்சியம் பின்னையதற்கும் சிறந்த எடுத்துக்காட்டாகத் தரப்படுகின்றது. தேர்தல் முறைமையில் காணப்படும் வித்தியாசமான வேறுபாடுகளை ஆராய்ந்து, இப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கொடுக்க அவை எவ்வாறு முனைகின்றன என்பதையும் ஆராய்கின்றது. தேர்தற் செய்முறைகள் வேறுபாடு கொண்டவை. அவை நன்மைகளையும், தீமைகளையும் கொண்டிருக்கின்றன. உதாரணமாக இத்தாலி விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையைக் கொண்டுள்ளது. பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவே ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஐக்கிய இராச்சியத்தில் தற்போது காணப்படும் பிரதேச ரீதியான தேர்தல் தொகுதி முறைகளும் சர்ச்சைக்குரிய தொன்றாகவே உள்ளன. தேசிய அடிப்படையில் பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, விகிதாசாரமின்றிக் குறிப்பிட்ட எண்ணிக்கையான ஆசனங்கள் வெற்றிபெறும் கட்சிக்குக் கொடுக்கப்படுகின்றது. இலங்கை இத்தகைய பிரச்சினையை விகிதாசாரப் பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு கொண்டிருந்தது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமை இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும், இது வாக்காளனுக்கும், அவனது பிரதிநிதிக்கும் இடையில் காணப்படுகின்ற தொடர்பைத் தடைசெய்கின்றது என்ற காரணத்தினால் குறை கூறப்பட்டு வருகின்றது. இத் தொடர்பானது தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர் தெளிவாக அடையாளம் செய்யப்பட்ட தொகுதி ஒன்றில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும்போது மிகவும் இறுக்கமாக இருக்கும். ஜேர்மனியில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையும், தொகுதிப் பிரதிநிதித்துவமும் இணைந்த வகையிலான இரு முறைகளின் கலப்பைக்கொண்ட முறை காணப்படுகின்றது. அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்காக வாதாடுபவர்கள் இம்மாதிரியை இலங்கைக்குப் பொருத்தமுடையதாகக் கூறுகின்றனர்.
மூன்றாவது வெளியீடான சனநாயகச் சிந்தனைகள் என்ற நூல் தெரிந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைக் கொண்டிருப்பதுடன் அது கிரேக்க நகர அரசிலிருந்து நவீன காலம் வரையுள்ள பிரபல்யமான மெய்யியலாளர்களினதும் அரசியல் சிந்தனையாளர்களினதும் எழுத்துக்களில் பிரதிபலிக்கப்பட்ட சனநாயக கருத்துருவத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிய தேடலாகவும் அமைகின்றது.

Page 7
நாலாவதாக வெளிவரும் “பல்லின சமூகத்தில் சனநாயகம்” என்னும் இந்நூலானது இலங்கையின் சனநாயகத்துக்கு முக்கியமான பல்லின, பண்பாட்டுச் சமுதாயங்களில் நிலையான செயற்பாட்டைக் கொண்டிருப்பதற்கான சனநாயக முறைமைக்கு அவசியமான பெரும்பான்மை ஆட்சியினரின் பிரச்சினை, நிறுவன மற்றும் பொறிமுறை தொடர்பான விடயங்களை எடுத்துரைக்கின்றது. உள்ளூர்ச் சமூகத்தின் பங்கு, பிரசைகள், நிறுவனங்கள் கொண்டிருக்கக் கூடிய பங்காற்றல் பற்றிய கட்டுரைகளை இது உள்ளடக்கியுள்ளது. பிரசைகளின் சனநாயகப் பங்களிப்பானது அவர்களது வாக்குகளை அளிக்கும் உரிமையுடன் மாத்திரம் இணைந்திருக்கவில்லை. ஆட்சி முறைமை, தேசியக் கொள்கை தொடர்பான முக்கிய விடயங்களில் நிலையான பொதுக் கலந்துரையாடல்கள் அவசியம். தேசியக் கொள்கைகளினை வடிவ மைப்பது தொடர்பான பொதுவிடங்களைக் கொண்ட கலந்துரையாடலில் அரசு சார்பற்ற நிறுவனங்களின் கூட்டுப் பங்களிப்பு அவசியமானது. எனவே சனநாயகச் செயற்பாட்டைப் பாதுகாத்தலும், விருத்திசெய்தலும் என்பது பிரசைகள், அரசியல் கட்சிகள், அரசு என்பதன் கூட்டான கடமையாகும். இந்நாட்டின் உண்மையான சனநாயக நிறுவனங்களைப் பேணுவதற்கும் கட்டியெழுப்பவும் தேவையான பிரதான முயற்சிகளைப் பொதுமக்கள் விளங்கிக் கொள்வதற்கு இவை தொடர்பான வெளியீடுகள் பெரிதும் உதவும் என மார்கா நிறுவகம் உறுதியாக நம்புகின்றது.
கொட்பிரே குணதிலக
மார்கா நிறுவகம்.

பல்லின சமூகத்தில்
சனநாயகம்
பகுதி 1 : பிரிவுபட்ட சமூகங்களில் சனநாயகம் பகுதி I : சனநாயகச் செயல்முறையின்
பிரச்சினைகள்
தமிழாக்கம் மா. கருணாநிதி
விரிவுரையாளர் சமூக விஞ்ஞானக் கல்வித்துறை கொழும்புப் பல்லைக்கழகம்
பொதுசனக் கல்வி நிகழ்ச்சித்திட்டம் மார்கா நிறுவக வெளியீடு

Page 8

பிரிவுபட்ட சமூகங்களில்
சனநாயகம்
டொனால்ட் எல். ஹரோவிட்ஸ்
சனநாயகமயப்படுத்தல் ஓர் உலகளாவிய இயக்கமாக இருப்பினும் அது ஆரம்பித்த இடத்தில் வெற்றியடையவில்லை. சில சர்வாதிகார அல்லது ஓரளவு சனநாயக அரசுகள் சனநாயக இயக்கத்தின் கவனத்துக்குட்படாது விடப்படலாம். ஏனையவை ஆரம்பத்திலேயே இவ் இயக்கத்தைத் தடைசெய்யலாமெனினும் காலப்போக்கில் சில மாற்றங்களைப் பெற்றுச் சனநாயக வழியிலே செல்லவும் முடியும். எனினும், சனநாயகமயப் படுத்தலுக்கும் சனநாயகம் தோல்வியடைவதற்கும் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் சக்திவாய்ந்த மக்கள் குழுக்களின் எதிர்ப்பு, அல்லது இராணுவத்துறை அறிவுடையோர் குழாம், சமூக அல்லது கலாசார அம்சங்களின் சாதகமற்றநிலைமை மற்றும் ஒழுங்கற்ற நிறுவனங்கள் போன்றவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம், பல ஆசிய, ஆபிரிக்க நாடுகள், கிழக்கு ஐரோப்பியநாடுகள், முன்னைய சோவியத்ஒன்றியம் போன்றவற்றில் சனநாயகமயப்படுத்தல் தோல்வியடைந்தமைக்கு இனத்துவப் பிணக்குகளே பிரதான காரணமாகும்.
சனநாயகம் என்பது சேர்த்தல் மற்றும் விலக்குதல், அதிகாரத்தைப் பெறுதல் , சேர்த்தலுடன் இணைந்துள்ள சலுகைகள் மற்றும் விலக்குதலுடன் தொடர்பான தண்டனை பற்றியது. கூடுதலாகப் பிரிந்துபோன சமூகங்களில் இனத்தனித்துவமானது சேர்த்துக்கொள்ளப்பட வேண்டியவர்கள் யார் அல்லது விலக்கப்படவேண்டியவர்கள் யார் என்னும் விடயத்தில் தெளிவான எல்லைகளைத் தீர்மானிக்கிறது. இவ் எல்லைகள் மாற்றப்பட முடியாதவையாயின் இதனுள் அடங்குபவர்களும் அடங்காதவர்களும் நிரந்தரமாகக் கணிக்கப்படுவர். இனத்துவ அரசியலில் சேர்த்தலானது முக்கிய சாதனங்களையும் சாதனப் பொருட்கள் அல்லாதவற்றையும் பங்கீடு செய்தலையும் பாதிக்கலாம். பல்வேறு இனக் குழுக்களின் கெளரவத்தைப் பேணுதல், ஒரு குழுவினரிலும் பார்க்க இன்னொரு குழுவினரின் தனித்துவத்தை மேலாக மதித்தல் போன்றவற்றையும் பாதிக்கலாம். பிரிவுபட்ட சமூகங்களில் சமுதாயத்துடன் இணைந்து அரசாங்கத்துடன் சேர்தலும், சமுதாயத்திலிருந்து விலகுவதால் அரசாங்கத்திலிருந்து விலகுதலும் என்ற போக்கு மீண்டும் மீண்டும் நிலவுகிறது.
இனரீதியாகப் பிரிவுபட்ட சமூகங்களில் எதிரணியினர் ஒழுங்காக நடத்தப்படுகின்றனர் என்னும் சனநாயகப் பிரச்சினைக்குச் சிறப்பான
11

Page 9
விளக்கமொன்றுண்டு. அரசாங்கத்தை எதிர்த்தல் என்பது எப்பொழுதும் நல்லெண்ணங்களை எதிர்த்தல் என உணர்வுபூர்வமாக வர்ணிக்கப் படுகிறது. இதனால் இனஅடிப்படையில் அமைக்கப்பட்ட எதிர்க்கட்சி இலகுவில் ஆபத்துமிக்க எதிரியாக மாறிவிடுகிறது. வரலாற்றுரீதியான எதிரிகள் அரசின் தனித்துவத்தை நடைமுறையில் எப்பொழுதும் ஏற்றுக்கொள்வதில்லை. அரசின் சீர்குலைவுக்கு எதிர்க்கட்சியினர் களமமைப்பார்கள் அல்லது தாம் சேர்ந்துள்ள குழுவினருக்காகச் செயற்படுவார்கள்.
சர்வாதிகார ஆட்சியிலே இனத்துவ உறவுகள் முன்னேற்றமடையும்போது, சனநாயக ஆட்சிக்கேற்ற சாதகநிலைமைகள் தோன்ற இடமுண்டு. தாய்லாந்தில் சீனருக்கும் தாய்மக்களுக்கும் இடையே நிலவும் உறவும், தாய்வானில் தாய்வானியர்க்கும் பெரு நிலத்தினருக்கும் (Main landers) இடையே நிலவிய பகைமையும், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் காணப்பட்ட குழப்பங்களும் இவ்வாறானவையே. பல தசாப்தங்களின் பின்னர் அத்தகைய பிரச்சினைகள், பிணக்குகள் என்ற மட்டத்துக்குக் குறைந்தபோது பிரிந்துபோன சமூகங்களாக வாழ்ந்த காலத்திலும் பார்க்கக் கலப்புத் திருமணங்கள் அதிகரித்தன. இத்தகைய மாற்றங்கள் இரு நாடுகளிலும் சனநாயக மயப்படுத்தலுக்கு வழிகோலின. ஏனெனில் ஒரு சமூகம்பற்றி இன்னொரு சமூகம் கொண்டிந்த பயம் இதனால் குறைந்தது. மறுபக்கத்தில் ஆபிரிக்க நாடுகள் பல பிரிந்த நிலையிற் காணப்பட்டன. ஆபிரிக்கக் கண்டம் முழுவதிலும் உறுதியான சனநாயகத்தை உருவாக்க இனரீதியான பிரிவுகள் தடையாக உள்ளன எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரையில் இனத்துவ வேறுபாடுகள் குறைவாகக் காணப்படும் நாடுகளில் சனநாயகம் முன்னேற்றமடைந்தும் (ஹங்கேரி, செக் குடியரசு, போலந்து), வேறுபாடுகள் கூடுதலாகக் காணப்படும் நாடுகளில் மெதுவான அல்லது வளர்ச்சியற்ற நிலையிலும் உள்ளது. (சிலவாக்கியா, பல்கேரியா, ருமேனியா முன்னைய யூகோசிலாவாக்கியா). முதலாவது குழுவில் அடங்கும் நாடுகள் வளம்மிக்கவை; ஓரளவுக்குச் சனநாயக மரபுகளைக் கொண்டவை. அத்துடன் மேற்கு நாடுகளுடன் நெருங்கிய உறவையும் பேணிவந்தன. இரண்டாவது குழு நாடுகளுக்கிடையே இனத்துவப் பிணக்குகளுக்கும் சனநாயகம் சாரா விருத்திக்குமிடையேயுள்ள தொடர்பு நேரடியாகக் காணப்பட்டது. சேர்பியா, குரோஷியா மற்றும் பொஸ்னியா போன்ற நாடுகளிலுள்ள முன்னைநாள் கம்யூனிஸ்ட்டுகள் இனத்துவ மோதல்களைப் பயன்படுத்தி, இனரீதியாகப் பிரிவுபட்ட ஆட்சிகளுக்கு ஆதரவு நல்குகின்றனர். அவர்களின் சர்வாதிகாரப்போக்கும் நன்கு அறிந்து கொள்ளப்பட்ட ஒரு விடயமே. முன்னாள் கம்யூனிஸ்டான விளாத்திமிர் மெக்கியரின் தீவிர மேற்பார்வைக்குட்பட்ட சிலாவாக்கிய ஆட்சியை குரோஷியாவிலும் சேர்பியாவிலும் நிலவிய ஆட்சி முறையுடன் ஒப்பிட
12

முடியாதாயினும் அது செய்திக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் அரசியலமைப்பு நீதிமன்றத்தினைத் தடுத்துவைக்கவும், நாட்டின் தென்பகுதியில் வாழ்ந்த ஹங்கேரியரின் மொழியுரிமையைக் கட்டுப்படுத்தவும் முயன்றமை குறிப்பிடத்தக்கது. ருமேனியாவில் நிலவிய சனநாயக இயக்கம் பல இனங்கள் வாழும் ரான்சில்வேனியாவின் அதிதீவிரத் தூண்டுதலைப் பெற்றமையால் விரைவில் குறுகிய ருமேனிய தேசியவாதமாக மாற்றப்பட்டது. இடையிடையே அந்நியர்மீது வெறுப்பும் உண்டானது. இவர்கள் குறிப்பாக ஹங்கேரியச் சிறுபான்மையினருக்குப் பயந்தனர். மற்றும் முன்னாள் கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் பங்கேற்கவும் சாதகமாக இருந்தது. பல்கேரியக் கம்யூனிச எதிர்ப்பாளர் பலர் துருக்கியச் சிறுபான்மையினரையிட்டு (ஏனைய முஸ்லீம்களையும்) அச்சங் கொண்டமையால், துருக்கியக் கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து உறுதியான தொரு அரசாங்கத்தை உருவாக்க முடியவில்லை. அரசாங்கம் நம்பிக்கையை இழந்தபோது முன்னைய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதுடன் துருக்கியருக்கு எதிராகக் குழப்பங்களைத் துTண்டிவிட்டன. நிருவாகத்திலும் செய்திகளிலும் நிலவிவந்த குறைகளைக் கட்டுப்படுத்தினர். ஏனைய நாடுகளைப்போல கிழக்கு ஐரோப்பாவிலும் இனத்துவப் பிணக்கு சர்வாதிகாரப் போக்கினை அடைந்தது.
இனப் பிணக்குகள் சனநாயகமயப்படுத்தலைத் தொடக்கி வைத்தலிலும், அதன் நடைமுறைகளிலும் இடர்ப்பாடுகளைத் தோற்றுவிக்குமெனப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அவ்விடர்களின் இயல்பு அமைப்புரீதியாக இடம்பெற்றிருக்கும் அளவைப் பொறுத்தனவேயொழிய அவை நல்லெண்ணத்தினைக் கட்டுப்படுத்தவில்லை என்பதும் இனங்காணப்பட்டுள்ளது. சனநாயகமயப்படுத்தல் அதன் ஆரம்பக் கட்டங்களிலும் , அந்நிலையைக் கடந்தபின்னரும் தடைகளை அனுபவித்துள்ளன. நேரடியான அல்லது மறைமுகமான இனப்பிணக்குகள் பல்வேறு வழியிலும் சர்வாதிகாரப் போக்குக்குச் சாதகமாக உள்ளன. அத்துடன் சனநாயகமானது சிறுபான்மையினரை ஒதுக்கிப் பெரும்பான்மையினராட்சிக்கு வழிகோலும் அல்லது பெரும்பான்மை யினரை ஒதுக்கிச் சிறுபான்மையினராட்சிக்கு வழிகோலும். இவற்றுள் எவற்றையும் செய்ய முடியாததென்றோ அல்லது விதிப்படிபொருத்தமான முடிவாக இருக்குமென்றோ கூறப்படவில்லை (எச் செயலையும் செய்யலாம்). கூடுதலான பிரிவினைக்குட்பட்ட சமூகங்களும் சனநாயக சார்புடையவை. ஆனால் பல்லின சனநாயக ஆட்சியின் தோற்றத்துக்குச் சாதகமான நிறுவனங்களை உருவாக்குதல் கடினமானது என்பதற்கும் சாதகமான காரணங்கள் உள்ளன.
பிரச்சினைகள் எவையென எடுத்துக்காட்டப்படுவதற்குமுன், அமைப்பின்
ஓர் அந்தத்தில் கூடுதலாகப் பிரிவுபட்ட சமூகங்கள் உள்ளனவென்றும் மறு
அந்தத்தில் நெகிழ்வான சமூகங்கள் உள்ளனவென்றும் தெளிவுபடுத்துதல்
13

Page 10
நல்லது. நெகிழ்வான சமூகங்கள் நீண்டகாலம் தொடர்பைப் பேணுபவை, அவற்றின் வழித்தோன்றல்கள் பொதுமக்களுடன் கலந்து வாழ்கின்றனர். (ஐக்கிய அமெரிக்காவிலும், பிரான்சிலும் உள்ள குடியேற்றவாசிகள் போல) அல்லது அவர்களிடையே நிலவும் தொடர்புகள் ஒப்பீட்டளவில் குறைந்தமட்டப் பிணக்குகளையே கொண்டுள்ளன. (பிரித்தானியாவிலுள்ள ஆங்கிலேயர், வேல்ஸ், ஸ்கொட்லாந்தினர் மற்றும் ஐரிஸ்காரரும் அவுஸ்திரேலியரும்) இடைநடுவில் கடும் பிரிவினைப் போக்குடைய சமூகங்கள் உள்ளன. இங்கே இனக்குழுக்கள் உறுதியான அரசியல் எதிர்பார்ப்புகளுடன் கூடியவையாகக் காணப்படும், குழு அடிப்படையில் தொடர்புகளை மேற்கொள்ளும். ஆயினும் இனப்பிணக்குகள் உருவாகச் சாதகமான பல காரணங்களும் இருக்கும். இவ்வாறான நாடுகளில் வரலாற்றுரீதியான பல புறக்காரணிகள் உள்நாட்டில் ஒன்றிணைப்புக்கு வழிகோலியுள்ளன. ஏனைய பிரிவினைக் காரணிகள் (சமயம், சமூக வகுப்பு பிரதேச நோக்கு) கவனத்தை ஈர்க்குமுகமாக இனத்துவத்துடன் போட்டியிடுகின்றன. அவை கட்சிமுறைமையின் மூலம் வெளிப்படுத்தப் பட்டுள்ளன. ஏனைய பிரிவினைக் காரணிகளுடன் தொடர்புடைய வகையில் இன அடிப்படை விவகாரங்கள், கட்சிகள் என்பன தோற்றம் பெற்றுள்ளன. ஆகவே கட்சிமுறை அரசியல் இனத்துவப் பிணக்கின் உண்மைப் பிரதிபலிப்பாக இல்லை எனலாம். இவ்வகையான நாடுகளுக்கு உதாரணமாக சுவிற் சலாந்து, கனடா, பெல்ஜியம் என்பன விளங்குகின்றன. இவையாவும் சமஷ்டியரசுகள் . இவ்வாறு அமைப்புரீதியாக முன்னேறிய நாடுகளுடன் கூடுதலாகப் பிரிவுபட்ட சமூகங்களான வட அயர்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளை ஒப்பிடுதல் கடினமானது. இந்நாடுகளில் காணப்படும் பிறப்படிப்படைத் தனித்துவம் என்ற விவகாரம் ஏனையவற்றுடன் ஒத்துச்செல்லவில்லை. பிறநாடுகளில் புறச்சக்திகள் நடுநிலையானவை அல்லது ஒன்றிணைக்கப்பட முடியாதவை. அத்துடன் கட்சிகள் இனரீதியான பிரிவினையை வெளிப்படுத்துகின்றன. இவ்வாறான நாடுகளிலே சனநாயகத்தை நடைமுறைப்படுத்தல் எப்பொழுதும் கடினமானதாகவே இருக்கும்.
1. தொடக்கநிலைத் தடைகள்
சனநாயக மயமாக்கல் தொடங்கு முன்னர் அதனைப் பழைய அரசாங்கமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அதனை மாற்றவேண்டும். அது தோற்கடிக்கப்பட்டால் வெற்றி கொண்டவர்கள் சனநாயக மரபிலே ஒன்றிணைந்து ஏற்றுக்கொள்ளவேண்டும். மிகக்கூடியளவு பிரிவுபட்ட சமூகங்களில் இந்நிலைமைகள் காணப்படமாட்டா. இச்சமூகங்களில் காணப்படும் இனப்பிரச்சினைநிகழ்காலநிலைமையை ஏற்றுக்கொண்டுள்ள ஒரு தலைமைத்துவத்துடன் இணைந்து சனநாயக மயமாக்கலுக்கான வாய்ப்புகளை வழங்குமாறு அத்தலைமைத்துவத்துடன் இணைந்து
14

கோரும் . தலைமைத்துவத்தை எதிர்ப்பவர்கள் கூட அப்போதைய நிலைமைக்குப் பதிலாக வேறு பாதகமான சூழ்நிலை தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகளை உணர்வர். இவ்வாறான பாதகமான நிலைமைகள் சில சனநாயகமயப்படுத்தலினால் துரிதப்படுத்தப்படலாம். மறுபுறம் ஓர் இனம் சார்ந்த அரசாங்கம் மாற்றத்தை எதிர்க்கக் கூடும். ஏனெனில் சனநாயகத்தை வளர்க்கக் கூடிய சீர்திருத்தங்கள் பிற இனக்குழுவினர் ஆட்சியதிகாரத்தைப் பெறும் வாய்ப்பினை வழங்கிவிடக் கூடும். இனக்கிளர்ச்சியின் விளைவாக ஒரு புதியமாற்றம் ஏற்பட்டால் சனநாயகம் கைவிடப்படும் நிலையும் ஏற்படலாம். ஏனெனில் சில இனக்குழுவினர் சனநாயக ஆட்சியின் விளைவாக நன்மைகளைப் பெற்றுவிடுவர் எனப் பிற இனக்குழுவினர் நினைக்கலாம்.
தொடர்ந்து சனநாயக மயமாக்கத்துக்காகப் போராடிய இயக்கங்கள் தென்கிழக்காசியாவிலுள்ள ஓரளவு சனநாயகத்தன்மை வாய்ந்த அல்லது ஓரளவு சர்வாதிகாரத்தன்மை வாய்ந்த நாடுகளைவிட்டு விலகி நின்றன. தாய்லாந்து, பர்மா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் சனநாயகத்தை நோக்கி எழுந்த பொதுமக்கள் இயக்கங்களைப் போன்று மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் எழவில்லை. இவற்றில் மலேசியாவில் ஒரளவுக்குக் கூடுதலான சனநாயகம் காணப்பட்டது. சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் குறைந்தளவு சனநாயகம் காணப்பட்டது. இந்நாடுகளின் அரசாங்கங்கள் ஓர் இனக் குழுவினருக்குச் சார்பானவையாயினும் அங்கு சேர்த்தல், விலக்குதல் என்னும் பிரச்சினையைச் சரியாக இனங்காண முடியாமலுள்ளது. இந்நிலையில் அரசாங்கங்கள் மேலதிக சனநாயக மயப்படுத்தலை உறுதியாக எதிர்க்கும். சனநாயகமயமாக்கல் இயக்கமானது சர்வதேசரீதியாக உச்சக்கட்டத்தை எய்தியபோது கூட மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் காணப்பட்டிருக்கவில்லை. இது மாற்றத்தைத் தவிர்த்துக் கொள்வதற்கு அரசாங்கத்துக்கு இருந்த வலிமையைக் காட்டுவதுடன் இனக்குழுக்கள் ஓரளவு திருப்தியுடன் (இனவிலக்கல் மோசமான நிலைமையை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்ற பொருளில்) வாழ்ந்த நிலைமையும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
மிகக் கூடுதலாக விலகிப்போன ஆட்சிமுறைகள் மாற்றங்களைத் தடைசெய்ய வேண்டுமாயின் அவை துரிதமாகச் செயற்படவேண்டும். இனரீதியாக விலக்கப்பட்ட அரசாங்கங்கள் பொதுவாக இரு பிரிவுகளாக உள்ளன. இவற்றுள் ஒன்றான * இரு கூறாக்கப்பட்ட ஆட்சியமைப்பு முறையில் ஏறக்குறைய அரைவாசி அல்லது அதற்கு மேற்பட்ட பங்கு அரசாட்சியாக இருக்கும். சிறுபான்மையினர் முன்னணி வகிக்கும் ஆட்சியமைப்பில் ஆட்சிக்கான அடித்தளம் குறுகியதாக இருக்கும். குறிப்பாகப் போட்டியடிப்படையில் அமைந்த பொதுத்தேர்தலின் பின் அவ்வாறு இருக்கும். ஆகவே ஒன்று அல்லது இரண்டு சிறு குழுக்கள் பெரும்பான்மையினரை ஆளும் . இவை இரண்டிலும் இனத்துக்கு
15

Page 11
எதிரானவர்கள் ஆட்சிக்கு வரக்கூடிய மாற்றங்கள் ஏற்பட்டால் அவை பொதுவாக எதிர்ப்புக்குள்ளாகும்.
இரு கூறாக்கப்பட்ட ஆட்சியமைப்புமுறையில் நிலவிய பொதுத்தேர்தல்கள் கசப்பான அனுபவங்களையே தந்துள்ளன. இன எதிரணியினர் அவற்றில் வெற்றி பெற்றிருப்பார்கள். அதன்படி மீண்டும் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. வட பிராந்திய ஆட்சிமுறைக்குட்பட்ட ரோகோ (Togo), கொங்கோ (Congo) குடியரசுகள் இராணுவப் புரட்சியின் பின் பதவிக்கு வந்தபோது பொதுத்தேர்தலின் இனரீதியான பலாபலன்களை மாற்றியமைத்துள்ளன. எந்தவொரு ஆட்சிமுறையும் சனநாயக செயல்முறைக்கு இடமளிக்க விருப்பம் கொண்டிருக்கவில்லை. இதன் விளைவாக இவை இரண்டும் செயல்முறைகளைத் தகர்த்தெறிந்தன.
மிகக்குறுகிய அடிப்படைகளைக் கொண்ட ஆட்சிமுறை விட்டுக்கொடா முறைகளைப் பயன்படுத்த விரும்புகின்றன. உதாரணம் சாய்ரேஇவையும் சனநாயக மயப்படுத்தலைத் தடைசெய்யக் கூடும். ஏனைய பலநாடுகள் இச் செயல்முறைகளை விரும்பியணுகிக் கையாண்டன. கென்யாவில் கெலென்ஜின் (Kalenjin) இனத்தவர் முன்னணி வகித்த சிறுபான்மையினர் அரசாங்கம் இறுதியில் மேற்கு நாடுகளின் வலியுறுத்தல்களுக்குட்பட்டுப் பலகட்சித் தேர்தலொன்றை நடத்தியது. ஆனால் சனாதிபதியாகப் பதவிவகித்த “டானியல் அராப் மொய்"(Daniel arap moi) அச்சுறுத்தல், கலகம் ஆகிய இரண்டும் கலந்த முறையைப் பயன்படுத்தியதுடன், எதிர்க்கட்சியினரிடையே இனப் பிரிவினையை ஏற்படுத்திப் பாராளுமன்றப் பெரும்பான்மையையும் சனாதிபதிப் பதவியையும் வென்றெடுக்க முயன்றார். பிரதானமாக, தான் சார்ந்த குழு மற்றும் ஏனைய சிறுஇனக் குழுக்களிடமிருந்து வாக்குகளின் பன்மைத்தன்மையைப் பெற்று அவ்வாறு செய்ய முற்பட்டார். இதன் விளைவாக இரண்டு பெரும்பான்மைக் குழுக்கள் (Kikuyu and Luo) ஆட்சியிலிருந்து தவிர்க்கப்பட்டன. அதுபோல கமரூன் சனாதிபதி போல் பியா (Paul Biya), பெற்றி (Beti), பூலு (Bulu) ஆகியோரின் ஆதரவுடன் ஆட்சிக்குத் தலைமை தாங்கினார். ஏனையவரின் எதிர்ப்புக்குள்ளானார். இன அடிப்படையில் பிரிவுபட்ட எதிர்க்கட்சிகள் மூலம் நன்மையடைந்தார். பிரதான கட்சியினால் தேர்தல் பகிஷ்கரிக்கப்பட்டது. பியாவுடன் கூட்டுச்சேர்ந்து அமைக்கப்பட்ட சட்டசபையில் அவருடைய கட்சி முன்னணி வகித்ததுடன் சனாதிபதித் தேர்தலில் பலரதும் ஆதரவைப் பெற்றார். அதன்பின்னர் அவர் பிரதான எதிர்க்கட்சியைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தார். ஆகவே குறுகிய நோக்கம் கொண்ட சர்வாதிகார அரசாங்கம் ஆட்சியினைத் தொடர்ந்தது. கானாவில் நிகழ்த்தப்பட்ட போலியான தேர்தலில் இராணுவ ஆட்சியாளரான ஜெரிரோலிங்ஸ் (Jery Rawlings) சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அவர் சார்ந்த ஈவ் (Ewe) இனத்தினர் முன்னணி வகித்த பிரதேசத்தில் 93 சதவீதமானவர்கள் அவருக்குவாக்களித்து ஆதரவு நல்கிய வேளையில் அசாந்தியில் (Ashant)
16

மூன்றிலொரு பங்கிலும் குறைவாகவே வாக்களிக்கப்பட்டது. இவை முன்னைய விரிசல்களுக்கு மீண்டும் புத்துயிரளித்தது.
இத்தகைய செயற்பாடு எல்லா இடங்களிலும் பின்பற்றப்படவில்லை. பெனின், சாம்பியா ஆகிய நாடுகளிலுள்ள குறுகிய ஆட்சிகளைச் சுதந்திரமாகத் தேர்தலை நடத்துமாறு மக்கள் வலியுறுத்தினர். அதில் அவர்கள் தோற்றனர். எவ்வாறாயினும் இவை விதிவிலக்கான விடயங்கள். மற்றும் நாங்கள் பார்ப்பதுபோல, அவர்கள் வகுத்தவழி பல்லின சனநாயகத்துக்குரிய பண்புகளைக் கொண்டன எனக் கூற முடியாது.
பல பாரிய ஆயுதமேந்திய போராட்டங்கள் இன அடிப்படை ஆட்சிக்கு எதிரானவை. அவை இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளாதபோதும் எதிர் நடவடிக்கைகளைத் தூண்டியுள்ளன. இவை சனநாயகத்துக்கான வாய்ப்புக்களை உறுதிப்படுத்துவதற்குப் பதிலாக குறைத்துள்ளன. இலங்கைக்கும் சூடானுக்கும் இவை மிகவும் பொருத்தமானது. பர்மாவில் நடைபெற்ற சிறுபான்மையினர் கிளர்ச்சிகள், சனநாயகமயப்படுத்தலுக்கு ஆட்சியாளர் அஞ்சுதற்குப் பிரதான காரணமாகும். கிளர்ச்சியாளர் வெற்றிபெற்றால் அல்லது சில சலுகைகளையேனும் பெற்றிருந்தால், இவற்றின் விளைவும் சனநாயகவாதிகளுக்கு ஏமாற்றமாக இருக்கலாம். லைபீரியாவிலும் சோமாலியாவிலும் கிளர்ச்சியாளரின் வெற்றி மேலும் இனக் கலவரங்களையும் போர்களையும் உண்டாக்கின. சிம்பாப்வேயில்,
தேசாபிமான முன்னணியின் (Patriotic Front) வெற்றி சுதந்திரத்துக்கு வழிவகுத்ததாயினும் பின்னர் ஹொபேர் முகாபேயின் ஆட்சி, யோசுவா நிக்கோமாவின் என்டிபிள் (Ndeble) எதிர்க்கட்சிக்கெதிராக, நிக்கோமா ஒரு கட்சி அரசினை ஏற்றுச் சரணடையும் வரை போர் நடைபெற்றது. ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் சட்டப்படியில்லா விட்டாலும் நடைமுறையின்படி வடக்கில் தாஜிக் (Tajik) மற்றும் உஸ்பெக் (Uzbek) அரசுகளையும் தெற்கில் புஸ்ரன் (Pushtun) அரசினையும் உருவாக்கியது. அவற்றுள் எவையும் சனநாயகச் சார்புடையனவாக இருக்கவில்லை. இதனையொத்த விளைவே தாஜிசிஸ்தானிலும் நிலவலாம். இங்கு இனரீதியாக வேறுபடுத்தப்பட்ட சக்திகள் சோவியத் யூனியனின் சீர்குலைவின் பின்னர் போரிலீடுபட்டு வருகின்றன. சனநாயக நிறுவனங்களை உருவாக்குவதற்கு கிளர்ச்சிகள் சாதகமானதாக இருக்க முடியாது.
மிக உன்னத நிலைமைகளிற் கூட, போர்முனைகளில் சர்வாதிகார ஆட்சியாளர் தோல்வியடைந்தாலும் வெற்றிபெற்ற கிளர்ச்சிக்காரர் பிரிவுபட்ட சமூகத்தில் சனநாயகத்தை உருவாக்கலாம் என்பது பொருளாகாது. அவ்வாறான சாதக நிலைமைகள் எதியோப்பியாவில் இடம்பெற்றிருந்தன. பொறுமை, சனநாயக சார்பு என்பன சான்றாக இருந்தன. பிரதான மூன்று கிளர்ச்சிக் குழுக்களில் இரண்டான ரிக்ரேயன்களும், ஒரோமோக்களும், மூன்றாவது எறிரேயன்கள்
17

Page 12
தனிநாடொன்றுக்கு உரித்துடையவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டன. ஏனையோருக்கு அடிஸ் அபாபாவிலிருந்த புதிய ஆட்சியாளர் சனநாயக ஆட்சிமுறையைக் கொண்ட எதியோப்பியாவை உருவாக்கினர். எஞ்சியுள்ள இனக்குழுக்களுக்கு இதுவே கணிசமான தன்னாதிக்கத்தை வழங்கும் எனக் கருதினர். பின்னர் ஒரோமாக்கள் தமது சகபாடிகளான ரிக்ரேயன்கள் மீது குற்றஞ்சுமத்தி 1992ஆம் ஆண்டில் பிராந்தியப் பொதுத்தேர்தலில் சூழ்ச்சியைக் கையாண்டது. இதனால் ஒரோமாக்கள் இனக்குழு நாட்டில் புதிய கிளர்ச்சியைத் தொடங்கியது. அவர்கள் தேர்தலிலிருந்து பின்வாங்கினர். ரிக்ரேயன்களாலும் அவர்களது கூட்டுக்கட்சிகளாலும் 90 வீதமான ஆசனங்கள் வெல்லப்பட்டன. ஆயுதப்படையில் முன்னிலை வகித்த ரிக்ரேயன்களால் பரவலான கிளர்ச்சியின்மூலம் எதியோப்பியா வெற்றி கொள்ளப்பட்டது. ஆயினும் ஒப்பீட்டளவில் சிறுபான்மையினராட்சியே நிலவியது. இங்கே அவதானித்தது போன்று ஒரு விளைவினைக் கிளர்ச்சியின்றியே அடைய முடியும்.
2. சமுதாயத்தின் எல்லைகளைக் குறைத்தல்
புதிய நிறுவனங்களை உருவாக்கி அவற்றை நடைமுறையில் கொண்டுவந்தபோது சேர்த்தல் மற்றும் தவிர்த்தல் என்ற பிரச்சினைகள் மறைந்து விடவில்லை. இத்தகைய சந்தர்ப்பங்களில், அரசியல் சமுதாயத்தின் எண்ணக்கருத்து புதிய ஆட்சியின் நிறுவனங்களிலே சில குழுக்களின் பங்குபற்றலைக் கட்டுப்படுத்தும்.
சனநாயகரீதியான விருத்தியின் முரண்பாடுகளில் ஒன்று எதிர்காலம் திட்டமிடப்படுவதுபோல கடந்தகால கடுஞ்சோதனைகளும் பலவந்தமாகத் தலையிடுகின்றன. இந்தத்துறையில் புதிதாகத் தொடங்குதல் என்ற விடயத்துக்கு இடமில்லை. இன உறவுகளைப் பொறுத்தவரையில் சமுதாயம் பற்றிய தவறான எண்ணக்கருவுக்கு வரலாறு வழிவகுக்கிறது. இதற்கு உரித்துடையவர் யார் என்ற வினாவை எடுத்துக்கொள்ளும்போது இதற்கான விடை வழக்கமாக, முதலில் இங்கு வர யார் நினைத்தார்களோ அவர்களைச் சார்வதாக அமையும். ஆரம்பத்தில் வந்த மூதாதையர்களைப் பற்றிச் சிந்திப்பவர்கள் அரசியல்ரீதியான முன்னுரிமையைக் கோரலாம்.
அவ்வாறே, குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தை அது இன்னொன்றின் அயற்பிரதேசம் என்பதிலும் பார்க்க, “உலகின்" பகுதி எனக் கோருவது பொதுவானது. இதிலுள்ள சிக்கல் என்னவெனில், 'உலகத்தில் வாழ்பவர்களாக இனங்காணப்பட்டவர்களின் பிராந்தியம் அங்கு இடம்பெற்றிருந்தால் அவர்களுக்கு முன்னுரிமையுண்டு. ஏனைய வர்களுக்கு இல்லை.
18

இவ்வாறான உரிமைக் கோரிக்கை ஆசியா முழுவதிலும் உண்டு. இலங்கைத் தமிழர்கள் தென்னிந்தியாவுக்குச் சொந்தமானவர்கள். வங்காளிகள் சட்டத்துக்கு முரணாக அசாமில் வாழ்கின்றனர். தென் கிழக்காசியாவிலுள்ள சீனரும் குடியேறியவர்களே. பர்மாவில் வாழும் அரகானிய முஸ்லீம்கள் உண்மையிலே வங்காளதேசத்தவர்கள். கராச்சியிலுள்ள மொகாஜிர்ஸ் இந்துக்களல்லர். கிழக்கு ஐரோப்பாவில் நிலவும் உரிமைப்பிரச்சினை வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடையது. ஹங்கேரியரும், துருக்கியரும் ஏனைய முஸ்லீம்களுமாகிய இரு பெரும் சிறுபான்மையினர் ஹப்ஸ்பேர்க் அல்லது ஒட்டோமன் பரம்பரையின் தற்கால எச்சங்களாகக் கருதப்படுவர்களால் பல நூற்றாண்டு காலமாக ஒடுக்கப்பட்டவர்கள். இப்பொழுது இவர்களை விலக்கும் வகையில் சினமடைந்துள்ளார்கள். முன்னைய சோவியத் ஒன்றியம் உரிமைப் போராட்டத்தில் சற்று மாறுபட்ட வடிவத்தைப் பெற்றுள்ளது. சிலாவியக் குடியரசுகள் அல்லாதவற்றில் குடியேறிய ரஷ்யர்கள் மாத்திரமன்றி ஏனைய சிலாவியரும் இகழ்ச்சிக்குரிய, சர்வாதிகார ஆட்சியின் குடிகளாக இனங்காணப்பட்டனர். ஆனால் இதனுள் அடங்கும் சில பிரதேசங்களில் வாழும் பெரும்பான்மையினர் ரூவழியாவுக்கு வெளியே வாழ்கின்றனர். ஏனெனில் சோவியத் ஆட்சியினால் வகுக்கப்பட்ட பிராந்திய எல்லைகள் ரஷ்யர்களால் நிலையான எல்லைகளாகக் கருதப்படவில்லை. எனவே அவை மாற்றத்துக்குட்படுபவை. இதன் விளைவாக சமுதாயத்திலிருந்து ரஷ்யர்களை ஒதுக்கிவிடும் மல்டோவியர் , கசாக்கியர் மற்றும் எஸ்தோனியரின் முயற்சிகள் ரஷ்யாவின் பிராந்திய பிரிப்பு முயற்சியுடன் ஒத்துச்செல்லலாம்.
மல்டோவாவில் ரோமானியமொழிபேசுவோரில் மூன்றிலிரண்டு பங்குக்குக் குறைந்தவர்கள் தமது மொழியே புதிய குடியரசின் அரச கருமமொழியெனப் பிரகடனம் செய்தனர். குறிப்பாக, திரான்ஸ் டினிஸ்டரிலுள்ள (Trans - Dnister) ரஷ்யர்கள், காகஸ் (Gagauz) மற்றும் உக்கிரேனிய சிறுபான்மையினர் மல்டோவா மால்தோனியருக்குரியது என்றே விளங்கிக் கொண்டனர். 1940இல் மல்டோவாவின் பெரும்பகுதி ஸ்ராலினால் ரோமானியாவிலிருந்து பிரிக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்துடன் சேர்க்கப்பட்டது. ஆனால் திரான்ஸ்-டினிஸ்ரர் 1940க்கு முன்னால் ரோமானியப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. பதிலாக அது உக்ரேனியனிலிருந்து பிரிக்கப்பட்டிருந்தது. இங்கே வாழ்ந்த ரஷ்ய மக்களில் பலர் 1940இன் பின்னரே இங்கு குடியேறினர். ரோமானிய மொழிபேசுவோருக்கு சிலாவியக் குடியேற்றம் தெரிவிக்கும் பாடம் என்னவெனில் சட்டரீதியற்ற குடியேறிகள் என்னும் உரிமையே. திரான் டினெஸ்ரேனியன்களைப் பொறுத்தவரையில் 1940இல் சட்டரீதியற்ற வகையில் இரு நாடுகளையும் இணைத்தமை அவர்களுடைய பிரதேசம் மல்டோவாவுக்குச் சொந்தமானதல்ல என்பதாலாகும். தாமே முதலில் வந்தவர்கள் எனப் பாராட்டப்பட்ட உரிமை முற்றாகவே நிராகரிக்கப்பட்டது.
19

Page 13
சமுதாயத்தின் இவ்வாறான சமூகம் மற்றும் பிராந்திய எல்லைகள் பற்றிய அடிப்படை விவகாரங்கள் புதிய சனநாயகங்களை நிறுவும்போது மேலெழுகின்றன. தாய்வானின் ஆட்சியில், பெருநில அரசாங்கம் வேறு இடத்தில் உள்ளது எனச் சற்றுக் கடுமையாகச் சிந்திக்கப்படுமானால், தாய்வானியர் அதனை ஆள்வது சட்டமுரணானது. அவ்வாறாயின் மறுபுறத்தில் இப்பிரதான நாட்டினர் இடைக்காலத்திற்குரியவர் எனக் கருதப்பட்டால் அவர்கள் அதிகாரத்தில் தொடர்ந்தும் பங்குபற்றுவது பிரச்சினைக்குரியதாக இருக்கும். லிதுவேனியருக்கும் போலர்களுக்கும் இடையே கசாக்ஸ்தானில் வாழும் கசாக்கியருக்கும் ரஷ்யருக்குமிடையே அல்லது ஜோர்ஜியாவிலுள்ள ஜோர்ஜியருக்கும் ஆப்காசியருக்கும் மற்றும் ஒசிசியர்க்குமிடையே இவ்வாறான பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வில்லை. முன்னைய சோவியத்தின் எல்லைப்புறங்களிலுள்ள ஐரோப்பிய, மத்திய ஆசிய மற்றும் சைபீரியக் குடியரசுகளுக்கான ரஷ்யரின் குடிப்பெயர்வு அவர்களைச் சமுதாயத்தின் முழுமையான அங்கத்தினராகக் கணிப்பதற்குப் பல அடிப்படை அளவீடுகளை மேற்கொள்ளச் செய்தது. துவாவில் உண்டான கலவரம், யாக்கூசியாவில் குடியிருப்புக் கட்டுப் பாடுகள், ராட்டார்சானில் வாக்களிப்பு, பல குடியரசுகளில் கட்டுப்படுத்தப் பட்ட குடியுரிமை ஆகியவையெல்லாம் இதன்பாற்படும். பெருமளவுக்கு ரஷ்ய சிறுபான்மையினரைக் கொண்ட லாத்வியாவிலும் எஸ்தோனியா விலும் இருந்து ரஷ்யக்குடிகள் திருப்பியனுப்பப்பட வேண்டுமென்றே சுதந்திரகால அபிப்பிராயம் எடுத்துக்காட்டியது. எஸ்தோனியாவில் அதன் குடியுரிமைச் சட்டம் 42 சதவீத மக்களின் வாக்குரிமையை இல்லாமற் செய்தது.
அரசியல் ரீதியான சமுதாய எல்லை என்ற விவகாரம் மூன்று பிரச்சினைகளுக்கு விடையளிக்க வேண்டிய தேவையை வெளிப்படையாகத் தெரிவிக்கிறது. ஒரு குடிமகன் யார்? குடிமக்களிடையே யாருக்கு என்ன சிறப்புரிமையுண்டு? யாருடைய நியமங்கள் மற்றும் நடைமுறைகள் அரசுடன் இணைந்து செல்கின்றன? குடியுரிமைக்கான அனுமதிக்கு அப்பால், ஏனைய குழுக்களிலும் பார்க்க ஒரு குழுவினுக்குக் கல்வி நிறுவனங்கள், சிவில்சேவை, அல்லது ஆயுதப்படைகளில் சேர வழங்கப்படும் விசேட சலுகைகள் பற்றிய பிரச்சினையும் உண்டு. உரிமைப் போட்டியுள்ள இடத்தில் விசேட சலுகை அரசியல் முன்னுரிமைக்கான குறிகாட்டியாக விளங்கும். அத்துடன் மொழிச்சட்டமானது ஜோர்ஜியாவில் அரசகரும மொழியாக ஜோர்ஜிய மொழியையும் அல்லது கசாக்ஸ்தானின் அரசகரும மொழியாக கசாக் மொழியையும் ஆக்குதல் மொழிப்போட்டியைத் தவிர்க்கின்றது. அத்துடன் புராதன பண்புக்குரிய எண்ணக் கருத்துக் களையும் பிரதிபலிக்கின்றன. ஜோர்ஜியாவைப் பொறுத்தமட்டில் ஜோர்ஜியர்களா அல்லது ஆப்காசியர்களா இப்பிரதேசத்துக்கு முதலில் வந்தவர்கள் என்ற நீண்டகாலப் பிரச்சினையின் விளைவு இதுவாகும். அத்துடன் ஜோர்ஜியாவுக்கு 1801ஆம் ஆண்டின் பின்னர் வந்த குழுக்கள் யாவும் குறிப்பாக ஒசெரியர்களும் அசாரிஸ்களும் வெளியேற்றப்பட வேண்டியவர்களாவர்.
20

ஜோர்ஜியர் பற்றிய விடயம் இனத்துவப் பிணக்குக்கும் சர்வாதிகார ஆட்சிக்கும் இடையேயுள்ள தொடர்புகள் சிலவற்றைத் தெளிவுபடுத்துகின்றன. பின்னைய சோவியத் ஆட்சிமுறை சிறுபான்மையினரை விலக்கும் கொள்கையை உருவாக்குவதில் சிக்கலுக்குள் அகப்பட்டுக் கொண்டதுடன் சர்வாதிகார ஆட்சியாகவும் மாறியது. இனவிலகல் பற்றிய அதிதீவிர நிலைக்கு சட்டரீதியான அமைப் பொன்று தேவைப் பட்டதாயினும் அவை சனநாயகக் கோட்பாடுகளுக்குத் தீங்கு விளைவிப்பனவாயமைந்தன. பிரதிநிதித்துவம் பற்றிய ஒரேவிதமான எண்ணக்கருத்துகளைப் பிரயோகிப்பதற்கு அவை சாதகமற்ற நிலைமைகளைத் தோற்றுவிக்கின்றன அல்லது விடயங்களை ஒரேவகையில் நோக்குதற்கும் தடையாகவுள்ளன. மேலும் விலக்கப்பட்ட குழுக்கள் சட்டத்துக்கு முரணான வழியில் எதிர்ப்புத் தெரிவித்தால், சட்டங்களும் ஒழுங்குவிதிகளும் தன்னிச்சையான கைதுகளுக்கும் , தேடுதல்களுக்கும், வழக்கெதுவும் தொடராமல் தடுத்து வைப்பதற்கும், கருத்துச் சுதந்திரக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளன. இனரீதியாகத் தீவிரப்போக்குடைய அரசியல் தலைவர்களும் இன மிதவாதத்துக்குச் சார்பானவர்களாக இருந்து சர்வாதிகார நடவடிக்கைகளுக்குத் துணைபோகின்றனர். இனத்துவப் பிணக்குகள் இவ்வாறு சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலுகின்றன.
3. சேர்த்தலும் விலக்குதலும்
கூடுதலாகப் பிரிவுபட்ட சமூகங்களில் சனநாயக மயப்படுத்தும் செயல்முறைகளை ஆரம்பித்த பின்னரும் சனநாயகரீதியிலான பல் இன சமுதாயத்தை உருவாக்குதலுக்குப் பல தடைகள் இருந்து வருகின்றன. இவ்வாறான தன்மைகள் அச் சமூகத்தின் பழைமைத்தன்மையிலிருந்து தோன்றியவையாக இருக்கமுடியாது. பதிலாக இவை இனரீதியாகப் பிரிவுபட்ட சமூகங்களில் மென்மேலும் சேர்த்தலாகிய ஆட்சி யமைப்பொழுங்கொன்றைப் பேணும்பொழுது தோன்றும் பிரச்சினை களிலிருந்து எழலாம். மரபினடிப்படையில் குழுஅடிப்படை முன்னுரிமைக் கோரிக்கைகள் ஆபிரிக்காவில் சிறிதளவாக உள்ளன. ஆனாலும் இனச் சேர்த்தல் மற்றும் விலக்குதலுடன், இணைந்த பல பிரச்சினைகளுக்கும் உட்படுகின்றன.
ஆபிரிக்காவில் சனநாயக மயப்படுத்தலில் வெற்றியடைந்தநாடு என்ற வகையில் சாம்பியா பெரிதும் மதிக்கப்படுகிறது. ஏனெனில் அங்கு பதவி வகித்த சனாதிபதி கென்னத் கவுண்டா, எவ்வித ஏமாற்றுகளுமற்ற சுதந்திரமான பொதுத்தேர்தலை நடத்துவதற்கு முன்வந்ததுடன் அவர் தோற்றபோது எவ்வித எதிர்ப்புமின்றி விட்டுக் கொடுத்தார் . எவ்வாறாயினும் இத்தகைய மதிப்பீடுகள் புகழ்ந்து பேசுமளவுக்கு
21

Page 14
ஆட்சியிலிருந்து விலகிச் சென்ற அல்லது புதிதாக ஆட்சிக்கு வந்த அரசாங்கம் எதுவும் பெரும்பான்மைக் குழுக்களையும் சேர்த்து வைத்திருக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கவில்லை. உண்மையிலே புதிதாக வந்த ஆட்சியும் விலக்குதல் (exclusion) என்ற செயல்முறையை மீண்டும் தொடர்ந்தது; அது முன்னைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படைகளைச் சுருக்கிக்கொண்டது.
1991ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் வெற்றியடைந்த பிரெடெரிக் சிலுபா (Frederick Chiluba) வைப் போன்று கவுண்டாவும் கட்சியின் தலைவர் என்றவகையில் பல இனத்தவரதும் ஆதரவுடன் அதிகாரத்தைப் பெற்றார். ஆறு பிரதான குழுக்களில் எவையும் ஐந்தில் ஒரு பங்குக்கு மேலான சனத்தொகையைக் கொண்டிருக்கவில்லை. ஈலா (Ia), தொங்கா (Tonga) என்ற தென்பகுதிக் குழுக்களே எதிர்கட்சிக்கு ஆதரவு வழங்கின.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், வெற்றியானது இனத்துவப் போராட்டமொன்றின் தொடக்கத்தைக் குறித்து நிற்கின்றது. இப் போராட்டத்தைக் குழுத்தலைவர்கள் புதிய கட்சியின் ஆதிக்கத்துக்காக வலியுறுத்திநின்றார்கள். அவர்கள் தோற்கடிக்கப்பட்டபோது பல் லினக் கட்சியிலிருந்து விலகிக் கொண்டார்கள்.
சுதந்திரத்தின் பின்னர் உடனடியாக ஆளுங்கட்சிக்குள் இனப்பூசல்கள் தோன்றின. கட்சித்தேர்தலில் அவர்கள் தோல்வியடைந்தபின் லோசி (Lozi) தலைவர்கள் எதிர் கட்சியில் சேர்ந்து கொண்டனர். இச்சந்தர்ப்பத்தில், கட்சித் தலைமைத்துவத்தில் பெம்பா (Bemba) குழுவினர் அதிகளவில் பிரதிநிதித்துவம் செய்வதைத் தடுக்கும் நடவடிக்கைகளைக் கவுண்டா மேற்கொண்டார். அதிருப்தியடைந்த பெம்பா சுதந்திரப் போராட்டத்தில் தாமே முன்னணி வகித்தவர்கள் எனக்கொண்டு ஒரு கட்சியை ஆரம்பித்தார். எதிர்க் கட்சி வளர்ச்சியடைந்தபோது ஆளுங்கட்சியினரின் இனநோக்குக் குறுகியது. கவுண்டாவின் ஆட்சிக்கு, தனிக் கட்சி அரசினைப் பிரகடனப்படுத்தும் வரையில் தேர்தல் அச்சுறுத்தல்கள் இருந்தன. அவருடைய கட்சியின் குறுகிய அடிப்படைகளையும் அது மறைத்துக்கொண்டது. பின்னர் கிழக்கிலுள்ள நியன்ஜா (Nyanja) வுடன் இணைந்து கொண்டது. ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களின் பின்னர், பொதுத்தேர்தல் நடந்தபோது கிழக்கு மாகாணத்திலுள்ள சகல தொகுதிகளிலும் கவுண்டா வெற்றியடைந்தார். எனினும் ஏனைய இடங்களில் சிறிதளவே கிடைத்தன. ஏனைய இடங்களில் எல்லாம் பலகட்சி சனநாயக இயக்கம் (MMD) பெருவெற்றியடைந்தது.
ஒரு வருடத்துக்கு மேற்பட்ட காலத்தின் பின்னர் இவ் வட்டச்செயல் மீண்டும் ஆரம்பித்தது. அரசாங்க மற்றும் கட்சி நியமனங்களில் பெம்பா
22

நியாயமற்றளவில் இடங்களைப் பெற்றுக்கொண்டார் எனக் கருத்துக்கள் எழுப்பப்பட்டன. ஒரு லோசி அமைச்சரும் பெம்பா அமைச்சரும் பதவிநீக்கம் செய்யப்பட்டனர். இன்னொரு லோசி அமைச்சரும் செல்வாக்கு மிகுந்த ஈலா அமைச்சரும் இராஜினாமாச் செய்து கொண்டனர். ஒரு புதிய பெம்பா, பின்னணிக்கட்சி உருவாக்கப்பட்டது. பல பிராந்தியங்கள் அரசுக்கு எதிராக இயங்கத்தொடங்கின. 1993ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அரசு அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியது. இது கவுண்டா குடும்பத்தினர் ஈடுபட்ட சம்பவமொன்றை அடிப்படையாகக் கொண்டு விதிக்கப்பட்டது. முன்னைய பரந்த அடிப்படை கொண்ட எதிர்க்கட்சியானது கவுண்டாவின் சிறுபான்மை முன்னணிச் சர்வாதிகார ஆட்சியை மீண்டும் கொண்டுவர வழிவகுத்தது.
1991இல் நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது பலகட்சிச் சனநாயக இயக்கம் கவுண்டாவுக்கு ஆதரவு நல்கியமை ஓர் உறுதியற்ற செயலாயினும் குடியேற்றவாத ஆட்சிக்குக் கவுண்டா வழங்கிய ஆதரவு பிரித்தானியர் சென்ற பின்னர் நீண்டகாலம் நிலவவில்லை. ஒவ்வொரு விடயத்திலும் வெற்றியே இனப்போராட்டத்தின் ஆரம்பத்தைக் குறித்து நின்றது. குழுத் தலைவர்கள் புதிய ஆட்சியின் மேலாண்மைக் காகப் போராடினராயினும் பல்லினக் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டனர். இவ்வாறான கட்சிகள் சிறுபான்மையினர் ஆதரவைப் பெற்று சுதந்திரத்துக்குப் பின்னர் இடம்பெற்ற போராட்டங்களின் பின்னர் எதிர் கட்சியினரைப் புறக்கணித்து தனிக் கட்சி அரசொன்றைப் பிரகடனப்படுத்தினர். ஆனால் சிறுபான்மையினர் கைகளிலே அதிகாரத்தை ஒப்படைத்தது. அவை பொதுத்தேர்தல்கள் தொடர்ந்து நடைபெற இடமளிக்கவில்லை. இந்நிலை சாம்பியாவுக்கு மட்டும் உரியதன்று. கென்யா, கமரூன், உகண்டா, சாட், ஐவரிக்கோஸ்ட், கயானா, மோரிரானியா, சியராலியோன் போன்ற நாடுகளுக்கும் பொருந்தும். இந்நாடுகள் ஒவ்வொன்றிலும் தனிக்கட்சி முறை இனத்துவ மேலாண்மைக்கு முகமூடியாக விளங்கியது. சாம்பியாவின் நிலைமைகள் தற்பொழுது, முன்னர்போல இருப்பதற்கு அதே படைகளும் அதே செயற்பாடுகளும் நடைமுறையிலுள்ளமையே காரணமாகும். புதிய தேர்தல்கள் நடைபெற்றமையால் அவை ஏன் மாற்றத்துக்குட்பட வேண்டும்?
சேர்த்தலும் விலக்குதலுமாகிய வட்டச் செயற்பாட்டின் மூலம் பெறப்பட்டவை யாதெனில் அவை மாறும் சந்தர்ப்பங்கள் என்பதாகும். குடியேற்றவாத ஆட்சி, அல்லது கவுண்டாவின் ஆட்சி அல்லது மொய் ஆட்சி இனரீதியாக விலக்கப்பட்டதுடன் சனநாயக சார்பற்றது என்ற முடிவுக்கு வருதல் கடினமானதல்ல. மொய் இனத்தினர் கென்யாவில் வெற்றியடைந்தது போல அல்லது பியா இனத்தினர் கமரூனில் வெற்றியடைந்தது போல எதிர்ப்பவர்கள் யாவரும் தேர்தலில் ஒன்றுபடுவார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. எதிரிகள் கூட இணைந்து கொள்வர். ஏனெனில் அவர்களுடைய வேறுபாடுகள்
23

Page 15
யாவும் ஒத்தவையல்ல. யார் ஆட்சியாளர் என்பதைத் தீர்மானிக்கும் போதுதான் அவை பொருத்தமானவையாக இருக்கும். அச்சந்தர்ப்பத்தில் கைவிடப்பட்ட குழு பற்றிய பிரச்சினை தோன்றும். நியன்யா இனத்தினர் நன்கு கற்றவர் என்பதால் ஆளும் தகுதியையுடையவர். முன்னைய ஆட்சியை அகற்றுவதற்கும் பெம்பா இனத்தவர் பொறுப்பாக இருந்தனர். லோசி இனத்தினர் சுதந்திரத்தின்போது தமக்கு வழங்கப்பட்ட பிரதேச சுயாட்சியை ஏற்க மறுத்தார்கள். இவ்வாறான ஒவ்வொரு கோரிக்கையும் ஏனையவற்றிலிருந்து ஒரு எதிர்ப்புணர்ச்சியுள்ள விடையையே தருகின்றன.
பொதுத்தேர்தலிலே, ஒரு கட்சி நாலில் மூன்று பங்கு அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றால், 1991இல் சாம்பியாவில் கட்சி செய்ததுபோல பகிர்தல் பற்றிய பிரச்சினையை எதிர்நோக்க வேண்டும் என்பது இப்பொழுது நன்கு விளங்கக் கூடியதாகவுள்ளது. அதிகமான ஆதரவாளர் இதற்கு இருப்பர் - அல்லது பழைய ஆட்சிக்கு அநேக எதிரிகள் இருப்பர் - அவர்களால் சிலர் விரைவில் நம்பிக்கை இழப்பர். ஆனால் அரசியலமைதியின்மை ஒருமுறை ஆரம்பிக்கும் போது கவுண்டாவும் ஏனையோரும் குறுகிய சிறுபான்மை ஆட்சி என்பதிலும் பார்க்கக் குறைந்த பெரும்பான்மை ஆட்சி என்று பழி சுமத்தப்பட்டும் அவர்களால் ஏன் தடுத்த நிறுத்த முடியவில்லை?
இதற்கான விடை என்னவெனில், சில ஆட்சியை ஒரு கட்டத்தில் நிறுத்தும்போது, ஏறக்குறைய அரைவாசி இனக்குழுக்கள் மிகுதி அரைவாசிக்கு எதிராகச் சதிசெய்கின்றன. இவ்வாறான அரசுகளிலேயே குழுக்கள் மத்தியில் தோன்றும் இனஉறவுகள் தெற்குக்கு எதிராக வடக்கில் பிளவுகளைத் தோற்றுவிக்கிறன. அல்லது முஸ்லீம்களுக்கு எதிராக கிறிஸ்தவர்களும், முக்கியமான குழுவொன்று ஏனையவற்றுக்கு எதிராகவும் உதாரணமாக மொபோச்சி (Mbochi) குழுவினர் கொங்கோவிலுள்ள லாறியினருக்கு (Lari) எதிராகவும், ரொகோவில் கப்ராய் (Kabrai) குழுவினர் ஈவி (BWe) குழுவினர்க்கு எதிராகவும் செயற்படுவதைக் குறிப்பிடலாம். இந்நாடுகளிலுள்ள வெளிப்படையான உறவுகள் அல்லது வேறுபாடுகள் பிளவுகளைத் தோற்றுவிக்கும்போது அவை கடுமையான ஒருமுகப்படுதலையும் பிணக்கையும் உருவாக்குகிறது. இத்தகைய ஒருமுகப்படுத்தல் பொதுவாகத் தேர்தலில் குறுகிய வெற்றியைக் கொடுக்கும். இச்சந்தர்ப்பத்தில் அரசிலுள்ள அரைவாசிப்பங்கினர் தாம் தவிர்க்கப்பட்டுள்ளதாக உணர்வர். இதன்விளைவாக இராணுவம் அழைக்கப்படுகிறது. நைஜீரிய அரசியலின் மேலோட்டமான வரலாறு இதுவே. இது 1966இல் ஒரு சதிப்புரட்சிக்கும் 1967 தொடக்கம் 1970 வரை பியாவ்ரா (Biafra) போருக்கும் வழிவகுத்தது. ஆனால் இத்தகைய பிரிந்து போகும் இனஉறவுகள் மற்றும் வேறுபாடுகள் எப்பொழுதும் நிகழ்பவையல்ல. பின்னர் இவை சிறுபான்மையினர் ஆட்சியைச் சார்ந்து செல்வதைத் தடுத்தலும் கடினமானது. இத்தகைய நிலை சாம்பியாவிலும்
24

கமரூனிலும் நிலவியிருந்தது. ஒருகட்சி அரசு அல்லது ஏனைய வழிமுறையின் மூலம் ஆட்சியாளர் தம்மை வெளிப்படுத்தும்போது அவர்களால் மீண்டும் சுதந்திரமான முறையில் மக்களைச் சந்திக்க முடியாது. ஒர் ஆட்சியின் குறுகிய நோக்கு பெருமளவுக்குக் கூறு கூறாகச் செல்வதற்குச் சாதகமாக இருக்கும். ஆகவே படிப்படியாக விலக்கி வைக்கப்பட்ட பெரும்பான்மைக் குழுக்கள் ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்த வேண்டிய தேவையை உணர்வர். உகண்டாவில் இடிஅமீன் ஆட்சிக்கு நடந்ததும் இதுவே. சிரியாவில் ஹபீஸ் அல்-அசாத்துக்கு எதிராகவும் இடையிடையே இவ்வாறு நடைபெற்றது.
சனநாயக அடிப்படைத் தேர்தல்கள் இனத்தவிர்ப்பைத் தோற்றுவிக்கும் போது அங்கே சனநாயக முறையற்ற பிரதிபலன்களையும் எதிர்பார்க்கலாம். பெனினில், சாம்பியாவைப் போல மீண்டும் சனநாயக மயமாக்கத்துக் கான மாதிரி என்றவகையில் வற்புறுத்தல்கள் இடம்பெற்றன. 1991இல் நடைபெற்ற பொதுத்தேர்தல்கள் மூவகை இனப்புரட்சியை உருவாக்கியன. இது சுதந்திரத்தின் பின்னரும் தெளிவாக இடம்பெற்றது. பிரதான சனாதிபதி வேட்பாளர் மூவரும் தமது சொந்தப் பிராந்தியங்களில் முதலாவது சுற்றுவட்டத்தில் 70 சதவீதத்துக்கும் 80 சதவீதத்துக்கும் இடைப்பட்ட வாக்குகளைப் பெற்றனர். இவை பிரான்சியப் பாணியிலே வடக்குத் தெற்குப் போராட்டத்தினுள் அடக்கப்பட்டன. இத்தேர்தலிலே வெற்றிபெற்ற வேட்பாளர் ஏறக்குறைய 90 சதவீதமான தென்பகுதி வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். தோல்வியடைந்த வேட்பாளர் 94 சதவீதமான வடபிரதேச வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். ஒரு வருடத்தின் பின்னர், வடக்கில் மேலாண்மைபெற்ற படைகள் சதிப்புரட்சியொன்றை மேற்கொண்டதுடன் பின்னர் கலகத்திலும் ஈடுபட்டன. இவ்வாறான செயல் ஒரு தசாப்தத்திற்கு முன்னரும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இறுதியில், விலக்கப்பட்ட தென் பிராந்திய அரசாங்கம் பதவிக்கு வந்தது. ஆபிரிக்காவில் நிலவும் இராணுவ ஆட்சியின் அளவு தொகுதிவாரி அரசியலில் காணப்பட்ட இனத்துவத் தோல்வியின் விளைவு என்பது ஒரு மிகையான கணிப்பீடாக இருக்க முடியாது. தற்பொழுது நிகழும் தேர்தல்கள் கூட முன்னைய தோல்விகளை ஈடுசெய்யும் எனக் கூறமுடியாது.
4. சனநாயக நிறுவனங்களும் சனநாயகரீதியற்ற
விளைவுகளும்
சிறந்த உதாரணமாக விளங்கும் பெனினின் சனாதிபதிப் பதவிப்
போட்டிகள், அரசியல் நிறுவனங்களும் சட்டங்களும், இனரீதியான
பலாபலன்களில் முக்கிய வேறுபாடுகளை ஏற்படுத்தலாம் என எடுத்துக்காட்டுகின்றன. பெனின் போட்டி ஓர் இருமுனைப் போட்டியை
25

Page 16
மும்முனைப் போட்டியாக மாற்றியது. நைஜீரியாவின் முதற்குடியரசின் சமஷ்டியாட்சி வடக்குத் தெற்கு விரிசல்களுக்கு உதவியது. இரண்டாவது குடியரசில் நிலவிய வேறுபட்ட முறையிலமைந்த சமஷ்டி அமைப்புமுறை அதே பலாபலன்களுக்குச் சாதகமாக இருக்கவில்லை. தனியியல்புடன் கூடிய நிலைமைகளின் கீழ் மலேசியாவின் முரண்பட்ட கூறுகளைக்கொண்ட தொகுதிகள் பல்லினக் கூட்டாட்சியின் தோற்றத்துக்கு முன்னின்று உதவியது. இலங்கையினுடைய ஓரினத்தொகுதிகள் சிங்களவர் ஆட்சியை உருவாக்கியது. அது எந்தக் காரணமுமின்றி தமிழர்களைச் சேர்த்துக் கொண்டது. கருத்துநிலையில் பல நிறுவனங்கள் சனநாயகத்துடன் போரிடுகின்றன. ஆனால் அவற்றில் எல்லாம் பல்லின இணைப்புக்குச் சாதகமானவையல்ல. வழமையான சனநாயக ஆட்சிக்கு என இயற்றப்பட்ட சட்டங்கள் இனவிலக்கல் பற்றியோ அல்லது அவற்றைப் பேணுதல் பற்றியோ எதனையும் செய்யவில்லை. அவ்வாறான சட்டங்கள் இனப்பிரிவினைகள் அதிகளவில் இல்லாத சந்தர்ப்பங்களில் கூடுதலாகச் செயற்படலாம் . ஆகவே அரசியல் ரீதியான இணைப்புகள் நெகிழ்வுடையதாக அமையும். அத்துடன் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மைகள் உருவாக்கப்படலாம். அல்லது உருவாக்கப்படாமல் விடப்படலாம். பிரிவினைகள் சாதகமாகவும் அதனால் நிலையானதாகவும் இருந்தால் அதே சட்டங்கள் வேறுவகையில் செயற்படலாம். அவ்வாறான சமுதாயங்களில் அரசியல் கட்சிகள் இனரீதியாக அமைதல் பொதுவாகவுள்ளது. வாக்காளர், கட்சிகள் மற்றும் தேர்தல் முடிவுகள் என்பவற்றிடையே காணப்படும் ஐந்து விடயங்களைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது அவையாவும் சுதந்திரமான, நேர்மையான தேர்தலின் போதே இடம்பெறுகின்றன.
1. ஒரு தொகுதி வாக்காளர் ஒரு கட்சியை மட்டும் பிரதிநிதித்துவம் செய்வதுடன் பெரும்பான்மை வாக்குகளையும் கொண்டிருந்தால், பாராளுமன்ற அமைப்பு முறையிலே அக்கட்சி பெரும்பாலான ஆசனங்களைப் பெறலாம். ஆட்சியில் மாற்றங்களைச் செய்யும் முறையில் சாதகமான நிலைமைகளுக்குச் சச்சரவுச் சட்டங்கள் வழிகோலினால், சிறுபான்மையினர் தமது நிலைமை பற்றிய வாதத்துக்கு ஒருநாள் மட்டும் காத்திருக்கவேண்டும். அத்துடன் முடிவுகளையும் மாற்றியமைக்கலாம். பெரும்பான்மையினரும் சிறுபான்மையினரும் நெகிழ்வுடையவர் என்பதற்குப் பதிலாக இறுக்க நிலையைக் கடைப்பிடித்தால் அவை ஒவ்வொன்றும் பிறப்படிப்படையில் சிந்திக்கப்பட்டு, உறவுகள் பேணப்பட வேண்டும். அவர்களின் விருப்பங்கள் குழு அடிப்படையில் பகிரப்பட மாட்டாது. இரண்டு விளைவுகள் இங்கே எடுத்துக் காட்டப்படுகின்றன. குழு அடிப்படையில் செல்லும் கட்சிகளை ஒழுங்குபடுத்துவது கடினமாகும். பிரிவுபட்டநிலையில் காணப்படும் இயல்பில் மாற்றங்களைச் செய்வதும் சாத்திய மற்றது. சனநாயத்தின் பெரும்பான்மை ஆட்சி என்ற விடயம்
26

சிறுபான்மையினரை விலக்குதல் என்னும் விடயமாக விரைவில் மாற்றமுறும். இன அடிப்படையில் பிரிவுபட்ட சமூகங்களில், பெரும்பான்மையினர் ஆட்சி மட்டும் ஒரு தீர்வாக இருக்கமுடியாது. இது ஒரு பிரச்சினையாகும். ஏனெனில் இந்நிலைப்பாடு
வெளிப்படையாக மேலாண்மைக்கு இடமளிக்கும்.
அடுத்து மிக நுணுக்கமான விடயமொன்று பரிசீலனை செய்யப்படுகின்றது. இது முன்னர் கூறப்பட்ட பிரச்சினையின் இன்னொரு சிக்கலான வடிவமாகும். மூன்று கட்சிகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவற்றுள் இரண்டு கட்சிகள் ஒவ்வொன்றும் முறையே 40 சதவீதமான ஆதரவையும், ஒன்று 20 சதவீத ஆதரவையும் கொண்டன. 20 சதவீதமான ஆதரவுடைய கட்சியில் பிளவு ஏற்பட்டு, அதில் பிரதான பிரிவு 40 சதவீத ஆதரவுகொண்ட கட்சிகளுள் ஒன்றுடன் சேர்ந்து அரசாங்கத்தை அமைக்கிறது. எதிர்வுகூறக்கூடிய அதிகாரங்களின் தொடர்பு காரணமாக சிறிய பங்காளிகள் இழிநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆகவே பெரிய கட்சி தனியே ஆட்சியை நடத்தலாம். இப்பொழுது மிகுதி யானவற்றில் ஒரு சிறுபான்மைக் கட்சி ஆட்சிசெலுத்தும் . இவ்வாறான உறுதியற்ற ஒரு நிலைமையில் புதிய தேர்தல்கள் வித்தியாசமான வெளித்தோற்றமொன்றை உருவாக்கலாம். இக்கட்சிகள் இனக்குழுக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதால் அதன் அங்கத்தவர்கள் இனக்குழுவைச் சேராத கட்சிகளுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள். அவ்வாறான விடயத்தில் சிறுபான்மையினராட்சி நீடித்துநிற்கக் கூடியது என்பதை நிரூபிக்கலாம்.
அளித்த வாக்குகளுக்கும் , வெல்லப்பட்ட ஆசனங்களுக்கும் இடையேயுள்ள எந்த வேறுபாடுகளும் இதுவரையில் கவனத்திற் கொள்ளப்படவில்லை. முதலாம், இரண்டாம் பிரச்சினைகள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தால் பாதிக்கப்படுவதில்லை. வெல்லப்பட்ட ஆசனங்கள் கட்சியின் பலத்துக்கு விகிதசமமானது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஓர் ஆங்கில, அமெரிக்கத் தேர்தல் முறைமையின் பன்மைத்தன்மையில் ஒர் அபேட்சகர் வெற்றிபெறும் எத் தொகுதியிலும் பெருந் தொகையான வாக்குகளைப் பெறுவார். அது 50 சதவீதத்திலும் பார்க்கக் குறைவாக இருந்தாலும் கூட அத்தகைய நிலையுண்டு. மொத்தவாக்குகளில் அரைவாசிக்குக் குறைவாக உள்ள வேளையிலும் இத்தகைய அமைப்பின்கீழ் ஒன்றுசேர்ந்து இலகுவில் பெரும்பான்மையாகலாம். மார்கிரட்தட்சருடைய ரொரீஸ் மும்முறை பாராளுமன்றப் பெரும்பான்மையுடன் தெரிவுசெய்யப்பட்ட வேளையிலும் மொத்த வாக்குகளில் 44 சதவீதத்துக்கு மேல் பெறவில்லை. பிரித்தானியப் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற நியாயமான வழிமுறைகளைப்பற்றி நாம் சிந்திக்கலாம்.
27

Page 17
ஆனால் , இம் முறைமையின் கீழ் பாராளுமன்றத்தில் கவனிக்கப்படாத சனநாயகரீதியான மாற்றுவழிகளின் சாத்தியக் கூறுகள் பற்றி எவரும் சிந்திப்பதில்லை. பிரித்தானியா ஒர் இனரீதியாகப் பிரிவுபட்ட சமூகமாக இருந்தால் பழைமைவாதிகள், தொழிற் கட்சியினர் மற்றும் தாராண்மை சனநாயகவாதிகள் ஒவ்வொருவரும் தனி இனக்குழுவொன்றைப் பிரதிநிதித்துவம் செய்வார்களாயினும் சிறுபான்மையினம் ஒன்றின் நிரந்தரமான கொடுங்கோன்மைச் செயலை எளிதில் நம்பக்கூடியதாகவும் இருக்கிறது.
இப்பொழுது, முதலாவது விடயம் இனரீதியான பிரிவுகளில் பெருமளவுக்கு ஈடுபாடுகாட்டுமாயின் பெரும்பான்மையினரைச் சேர்த்துக்கொள்ளும், சிறுபான்மையினரை விலக்கிக்கொள்ளும். சிறுபான்மையினர் ஆட்சி பற்றிய இரு விடயங்களும் 20 சதவீதக்குழுவினரிடையே நிலவிய பிரிவினையின் விளைவாக ஏற்பட்ட சிதைவுகளாகும். தேர்தல் முறைமையை இவ்வாறே வாக்குகளாகவும் ஆசனங்களாகவும் மாற்றமுடிகிறது. மற்றும் தேர்தல் முறைமைச்சீர்கேடுகள் அகற்றப்படுமாயின் (உதாரணமாக விகிதாசாரப் பிரதிநிதித்துவம்) மூன்றாவது பிரச்சினை இரண்டாவது பிரச்சினையினின்றும் இலகுவில் வேறுபட்டதாக இருக்கும். எனினும் அது இன்னும் ஒரு பிரச்சினையாகவே இருக்கும்.
உருச்சிதைவுக்கான மூலகங்கள் இன்னும் இரண்டு உள்ளன. அவை சிறுபான்மையினராட்சியைச் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களின் விளைவாக உருவாக்கலாம். இவற்றுள் சமஷ்டி ஒரு சாத்தியமான வழிமுறையாகும். மற்றையது கூட்டுச்சேர்தல்மூலம் தோன்றுகிறது.
ஒரு சமஷ்டி அமைப்பில் 3 அரசுகள் அல்லது மாகாணங்கள் உள்ளன என்றும், அவற்றுள் ஒன்று ஏனைய இரண்டிலும் பார்க்க பெரியது என்றும் , ஆகவே சனத்தொகை ஏனைய இரண்டினதும் சனத்தொகைக்குச் சமமானது எனவும் எடுத்துக்கொள்வோம். மிகப்பெரிய அரசில் உள்ள பெரிய குழு வாக்காளர் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினைக் கொண்டுள்ளது. இது நாட்டின் மொத்தவாக்காளர் தொகையில் மூன்றிலொரு பங்காகும். ஆகவே நாடு என்ற ரீதியாக அதிகாரப் பரவலாக்கம் இருக்க முடியாது. மிகப்பெரிய அரசிலுள்ள மிகப்பெரிய குழு அரசியலில் மேலாண்மை வகிக்கும். அங்கே சிறுபான்மையினரை அடிப்படையாகக் கொண்ட எதிர்க்கட்சிகளின் வளர்ச்சி தடுத்து நிறுத்தப்படும். அவை அரசைக் கட்டுப்படுத்தும் என்பதிலும் நம்பிக்கையில்லை. தேசிய மட்டத்திலான தேர்தலில், பாரிய அரசின் வாக்குகள், பிரதேச
28

அடிப்படைக் கட்சியொன்றுக்குப் பாராளுமன்ற ஆசனங்களில் 50 சதவீதமானவற்றைப் பெறப் போதுமானது. ஆகவே அந்தக்கட்சி அரசாங்கமொன்றை அமைக்கப் போதிய நிலைமைகளைப் பெற்றிருக்கும் எனக் கூறலாம். இவ்வாறே ஒரு பிரதேச அடிப்படைப் பெரும்பான்மை (தேசிய ரீதியில் சிறுபான்மை) தனது உள்ளூர் அரசைக் கருவியாகக் கொண்டு சிறுபான்மையினராட்சிக்கு உதவுகிறது.
கூட்டு அரசியலும் சிறுபான்மையினர் ஆட்சியைத் தோற்றுவிக்கலாம். பல இனக்குழுக்கள் தமது வாக்குகளை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகளுக்கிடையே பகிர்ந்து கொள்வதாக எடுத்துக் கொள்வோம். அவை ஒவ்வொன்றும் அந்தக் குழுவையே பிரதிநிதித்துவம் செய்கிறது எனவும் கொள்வோம். அவற்றுள் ஒரு குழு ஏனையவற்றிலும் பார்க்கப் பெரியது. அது மொத்தச் சனத்தொகையில் அரைப்பங்கினைக் கொண்டுள்ளது. அத்துடன் அது தனது வாக்குகளை இரு கட்சிகளுக்கிடையே இரண்டுக்கு ஒன்று என்னும் விகிதத்தில் பங்கிடுகிறது. மறு குழுக்கள் தமது வாக்குகளை ஏனைய பல கட்சிகளிடையே பங்கிடுகின்றன. ஆகவே பெரியகட்சி பெரிய குழுவினரின் வாக்குகளில் மூன்றில் இரண்டைப் பெறுகிறது. இது மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளில் மூன்றிலொன்றாகும். இக்கட்சி கூட்டரசாங்கத்தில் பிரதான கட்சியாக மாறுவதுடன் ஏனைய குழுக்களிலிருந்து ஆகக்குறைந்தது ஒரு கட்சியையேனும் சேர்த்துக்கொள்கிறது. ஏனைய கட்சிகள் யாவும் எதிர்க்கட்சியாக இருக்கும். கூட்டில் மேலாண்மை செலுத்துவதன் மூலம் பிரதான கட்சி அதனுடைய குழுவின் மூன்றிலிரண்டு பங்கு ஆதரவுடன் நாட்டை ஆளமுடியும். பன்மைத்தேர்தல் முறைமையில் மூன்றிலொருபங்கு வாக்குகளுடன் மூன்றிலொரு பங்குக்கு மேற்பட்ட ஆசனங்களைப் பெற முடியும். அவை அக்கட்சி ஏற்கனவே பெற்றுக்கொண்ட சாதகமான நிலைமையை ஓரளவுக்கு உறுதிசெய்கிறது. இவற்றுள் எவையும் இன அடிப்படையைக் கொண்டிருந்தாலொழிய கண்புருவத்தை உயர்த்த முடியாது. அத்துடன் கூட்டின் கொள்கைரீதியான பயன்களும் அதனுடைய குழுவைச் சார்ந்து காணப்படும்.
இவற்றுள் எத்தகைய சாத்தியக் கூறுகளும் கருதுகோள் அடிப்படையில் காணப்படவில்லை. இவை ஒவ்வொன்றும் சில பல்லின சமுதாயத்தின் அரசியலை நுட்பமாக விளக்கிக் காட்டுகின்றன. கட்சி எல்லைகளின் உறுதிமாறாநிலைமைகளிலிருந்து சனநாயக அடிப்படைப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இருந்தாலும் சிலகுழுக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றன. இத்தகைய தோற்றப்பாட்டினால் உருவாக்கப்பட்ட சில தவிர்ப்புகள் ஏனையவற்றிலும் பார்க்க, கூடிய அதிர்ச்சியைத் தரவல்லன. பெரும்பான்மையினர்
29

Page 18
நிரந்தரமாகச் சிறுபான்மையினரை விலக்கிவிட்டால், (இலங்கையில் திரும்பத் திரும்பச் செய்தமை போல) தவிர்த்தல் என்பது இறுதியில் பாரியளவு குழப்பங்களை உண்டாக்கும் என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. சிறுபான்மையினர் அல்லது பன்மைச் சமுதாயங்கள் பெரும்பான்மையினரை விலக்கி விட்டால், அல்லது பன்மைநிலையை அல்லது ஏனைய சிறுபான்மையினரை விலக்கினால் கூட (நைஜீரியாவில் நிலவிய சமச்சீரற்ற சமஷ்டி காரணமாக இடம்பெற்றதுபோல்) விளைவுகள் ஏறக்குறைய உறுதியற் றனவாகவே இருக்கும். ஆயினும் சிறுபான்மையினர் அல்லது பன்மைநிலையினர் கூட்டமைப்பில் ஏனைய பல குழுக்களிடையே உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தலில் உண்டாகும் விரிசல்களைச் சமாளித்துக் கொள்ளுமானால் (மலேசியாவில் மலே கட்சியைப் போல) அதன் விளைவு முழுமையான தவிர்த்தலாக இருக்கமுடியாது. ஓர் ஒழுங்கு முறையற்ற இந்நிலை அவ்வமைப்பு முறைக்கு மேல் கடுமையான பற்றுதியைப் பிறப்பிக்கிறது.
இத்தகைய விளக்கங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் பெறப்பட்ட முடிவுகள் நடைமுறை சனநாயகத்துடன் இணைந்து செல்கின்றன. இவ் விளைவுகள் குடிசனவியலுடன் “விளையாட்டின் விதிகள்” இடைத்தாக்கம் கொள்ளும் கலைத்தன்மை போன்றது. சனநாயகத்தின் நடைமுறை சார்ந்த தூய எண்ணக் கருக்கள் இன அடிப்படையில் பிரிந்துபோன ஆட்சி அமைப்பொழுங்குக்குப்போதாதாகையால், நடைமுறைக் குற்றமற்றதாக இருக்கும். தவிர்ப்பும் நிறைவுபெறும் , அத்தகைய சமூகங்களில், விளையாட்டின் விதிகள் நல்லமுறையில் தொழிற்படுவதற்கு ஏற்றமுறையில் அவற்றை மாற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. இருப்பினும் இவை இலகுவானவையன்று.
இவ்வாறான சமூகங்கள் சரிவர இயங்குவதற்கு உதவும் வகையில் சில விதிகளை மாற்றிக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. இதனால் சேர்த்தலை வளர்த்துக்கொள்ள முடியும். ஆயினும் இது இலகுவானதல்ல. சனநாயகம் என்பது போட்டியிடுதல் மற்றும் பங்குகொள்வதற்கான உண்மையான சாத்தியக்கூறுகள் என நாம் கொள்ள முடியும் . எவ்வாறாயினும் ஒன்றுமட்டும் தெளிவானது. ஒவ்வொருவரும் திட்டவட்டமான சில பற்றுறுதிகளைக் கொண்டிருப்பதனால்தான் பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை விலக்கி வைக்கின்றனர். சிறுபான்மையினரும் பெரும்பான்மையினரை ஒதுக்கி வாழ்கின்றனர். எனவே கூடுதலாகப் பிரிவுபட்ட சமூகங்களில் இடம்பெறும் சனநாயகம் இரண்டு பிரச்சினைகளை மட்டும் எதிர்நோக்குகின்றது. அவை பெரும்பான்மையினர் ஆட்சியும் சிறுபான்மையினராட்சியும் ஆகும். ஆயினும் இவ்விரு பிரச்சினைகளும் பெரிய இடத்தைப் பிடிக்கின்றன.
30

5. சனநாயகரீதியான மீளர்மத்தியஸ்தம்
பிரிவுபட்ட சமுதாயத்தில் சனநாயகத்தின்தோல்வி, உறுதியான ஆட்சியின் போதாத்தன்மை, சேர்த்தலினால் உண்டாகும் தோல் விக்கான பின்னணிகளைக் கண்காணிக்கும் நிறுவனங்கள் ஆகியன ஒன்றையொன்று கைமாற்ற விரும்புகின்றன. இறுதியாக எல்லோரும் சாம்பியாவில் நியன்ஜாவின் ஆட்சிக்குப் (பிரதியீடாக) பதிலாக பெம்பா மேலாண்மை ஆட்சியைக் கொண்டு வந்தால், பொதுத்தேர்தலை நடத்துவதன் நோக்கம் என்ன? இரண்டும் குறுகியவை. பெனினில் வடபிராந்தியத்தில் ஒரு தென் பிராந்திய ஆட்சியானது அரசின் மறு அரைவாசியை உள்ளடக்கவில்லை.
இப்பிரச்சினைக்கான விடை அரசியலிலிருந்து இனத்துவத்தை அகற்றுதலாகும். இதனுடைய எடுகோள் என்னவெனில், வகுப்பு அல்லது கருத்தியல் என்பது அரசியல் அணியில் நேர்மையானதாக இருத்தல்வேண்டும். அல்லது அந்த இனத்துவமானது அரசியல் ஆரோக்கியத்துக்கு நஞ்சுபோல அமையும். இத்தகைய போக்கின் அண்மைக்கால உதாரணமாக, நைஜீரிய இராணுவ அதிகாரிகள் இரண்டு கட்சிகளுக்கு மட்டும் அனுமதிவழங்க எடுத்த தீர்மானத்தைக் கூறலாம். அவற்றுள் ஒன்று சோசலிச சனநாயகக் கட்சி. மற்றையது கன்சவர்டிவ் கட்சி. இவையிரண்டும் அரசியல் ஆணையின்படி பல்லினக்கட்சிகளாகும். இத்தீர்வின் செயற்கைத்தன்மை, அதனுடைய மேற்கோள்வாசகமாக, இனத்துவமானது சட்டரீதியான அரசியல் தொழிற்பாடுகளை நிறைவேற்றுவதில்லை. அத்துடன், அவ்வாறான சக்திவாய்ந்த ஒன்றிணைப்பு அரசியல் செயற்பாடாக இலகுவில் எழுதப்படமுடியும். அவையாவும் புத்திசாலித் தனமற்றவை எனவும் கூறலாம். பிரிவுபட்ட சமூகங்களில் இனரீதியான ஒன்றிணைப்பு பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கிறது. அவ்வாறே நம்பிக்கையின் மூலாதாரமாகவும் பரஸ்பரம் உதவி நல்குவதாகவும், அந்நியர் ஒருவருடைய விருப்பத்தை அசட்டை செய்வதிலிருந்து பாதுகாப்பு வழங்குவதாகவும் அமைகிறது. பிரிவுபட்ட சமூகங்களில் சமுதாயம் என்ற வகையில் உருவாகும் இனக்குழு உணர்வு, ஏனையவர்களுடன் அவற்றின் போட்டி என்பன அவ்வாறான முழுச் சமுதாயத்தையும் இணைத்து, இனஅடிப்படைக் கட்சியை அமைக்க வலுவான தூண்டுதலையும் அளிக்கிறது.
ஏனையவர்களைப் பொறுத்தவரையில் இதற்கான விடை, இனச்சேர்ப்புப் பற்றிய நியமங்களை விருத்திசெய்தல். விகிதாசாரப் பங்கீட்டு விதிகளைப் பின்பற்றித் தனிப்பெருங் கூட்டினை வெளிப்படையாகத் தெரிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் மற்றும் கூட்டுத் தீர்மானக்குழு அடிப்படை வாக்குகளுக்கு இடமளித்தல் என்பனவாகும். இந்தத் தீர்விலேயுள்ள பல குறைபாடுகளுக்கு மத்தியில், இனரீதியான தீர்வுகளை நீக்குதல் என்ற
31

Page 19
ஒன்றும் இடம் பெறுகிறது. அதிகார பூர்வமாக இனப்பிணக்குகளில் கலந்து கொள்வோருக்கு அவர்களுடைய பிணக்குகளை ஒதுக்கிவிடுமாறு
இனத்துவச் சேர்க்கைகள் பிரிவுபட்ட சமூகம் ஒன்றில் ஒரு பாதுகாப்பு உணர்வை வழங்குகின்றது. அத்துடன் நம்பிக்கையின் ஊற்றிடமொன்றை, நிச்சயத்தன்மையை, பரஸ்பர உதவியை மற்றும் ஒருவரின் நலன்கள் அந்நியரால் அலட்சியப்படுத்தப்படுவதற்கு எதிரான பாதுகாப்பையும் இவை வழங்குகின்றன.
ஆலோசனை கூறுகிறது. இது அதனுடைய எதிரணியினருக்கு நன்மையளிக்கும் வகையில் செய்யப்படுகிறது என ஏன் ஒரு கட்சி சிந்திக்கிறது என்பது விளங்கவில்லை. மேலும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய பாரிய கூட்டு, பகிர்வு என்ற பிரச்சினை தோன்றுகிறது. இத்தகைய தீர்மான ஆட்சியின்கீழ் எல்லோரும் சேர்த்துக்கொள்ளப் பட்டால், பகிர்வுப் பங்குகள் நிலையானவையாக இருந்தால், மற்றும் சிறுபான்மையினர் எதிர்க்கட்சியினராக இருந்து எவ்வித செல்வாக்கற்ற வர்களாகவும் இருந்தால் அது ஒரு குரலாகவன்றி ஒரு இரத்து அதிகாரமாகக் கருதப்படும். ஆகவே வெற்றியின் வெகுமதி என்ன? நாம் பார்த்ததுபோல, அதிகளவு சேர்த்தலுக்குள்ளான பல்லின அரசாங்கத்தின் பொதுத்தேர்தல் (சாம்பியாவில் காணப்பட்டது போல) சேர்த்தலும் விலக்குதலும் பற்றிய புதிய போராட்டத்தின் நிகழ்வையே குறித்து நிற்கும். இவ்வாறான போராட்டத்தின் மீண்டுவரும் தன்மை, இத்தகைய தீர்மானவாட்சி மேற்கொள்ளப்படமாட்டாது என்றும் இதனிலும் மேலாக, அவ்வாறு மேற்கொள்ளப்பட்டால் அவை நிலைத்து நிற்க மாட்டாதென்பதையும் எடுத்துக் காட்டுகின்றன. இங்கு எடுத்துக்காட்டப் படவேண்டிய விடயம் என்னவெனில் எதிர்க்கட்சியிலுள்ளோர் யாவரும் அரசாங்கத்துக்கு வெளியேயுள்ளனரேயொழிய சமுதாயத்துக்கு வெளியேயல்ல. இங்கே தேவைப்படுகின்ற மறுவிடயம், அரசாங்கத்துக்கு
வெளியே எவரும் விடப்படமாட்டார்கள் என்பதுமாகும்.
சாம்பியாவின் MMD கட்சியைப்போன்ற பல்லினக்கட்சிகள் கூடுதலாகப் பிரிவுபட்ட சமூகங்கள், இனங்களுக்கிடையிலான கூட்டு என்பவற்றைத் தனிக்கூறுகளாகப் பிரிக்க எண்ணியமை குறிப்பிடக்கூடிய விடயமாகும். ஆனால், அவை அவ்வாறு உருவாக்கப்பட்டால், எல்லோரையும் சேர்த்துக்கொள்ளும் கூட்டுக்கள், பிரிவுபட்ட சமூகங்களில் நீடித்திருக்கும் எனவும் கூறமுடியாது. இன்னும் இரண்டு வகைகள் சாத்தியமானவை. அத்துடன் அவற்றை எவ்வாறு பேணலாம் எனச் சிந்திப்பதும் பெறுமதிவாய்ந்தது. அவை இரண்டும் பொதுத்தேர்தலுக்கு முன்னர் உடன்பாட்டுக்கு வருகின்றன.
32

முதலாவது விடயம் மலேசியாவை உதாரணமாகக் கொண்டு விளக்கப்படுகிறது. மலேசியாவின் பல்லினக் கூட்டானது பல்லினக் கட்சிகளால் உருவாக்கப்பட்டமையால், கூட்டமைப்பின் உடன்பாடுகளை அவை எதிர்க்கின்றன. சகல குழுக்களையும் சார்ந்த சில அங்கத்தவர்கள் கூட்டமைப்பில் இடம்பெறுகின்றார்கள். ஆனால் அது ஒரு பெரும் கூட்டன்று. இக் கூட்டு சுதந்திரத்துக்கு முன்னர் 1950களில் உருவாக்கப்பட்டது. மலேசியருக்கும் மலேசியரல்லாதோருக்குமிடையில் 50-50 என்ற விகிதத்தில் பிரிவு நிலவிய காலத்தில் தேர்தலில் நிச்சயமற்றதன்மையும் உருவானது. இக் கூட்டு இன்றி, எதிர்வரும் மாநகரசபைத் தேர்தலில் மலாய் கட்சி வெற்றிபெறும் என்பதும் சந்தேகமானது. அதனுள் சீனருடைய வாக்குகள் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டபின் கூடுதலாக இருந்தன. சுதந்திரத்தின் பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் இவ்வாறான நிலைமை காணப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேர்தலடிப்படை ஊக்குவிப்புகள் கூட்டின் மூலவேராக இருந்தன. ஆகவே கூட்டு என்பது நிரந்தரமானதாகக் கருதப்பட்டிருந்ததுடன், வேட்பாளரும் அமைதியாகச் செயற்பட்டனர். ஆகவே மலாயர், மற்றும் மலாயரல்லாதவர்களின் வாக்குகள் மூலம் எல்லா தொகுதிகளிலும் அவர்கள் நன்மையடைந்தனர். ஆகவே ஒரு குழுவைச் சார்ந்த வாக்காளர் இன்னொரு குழுவின் வேட்பாளருக்கு வாக்களிக்கத் தூண்டப்படுவார்கள். இருப்பினும் கூட்டு என்பது உடன்பாட்டிலேயே தங்கியுள்ளது.
ஆரம்பக்கட்டங்களில், மலாய்க் கட்சிகள், சீனருடைய குடியுரிமை சட்டரீதியற்றது என்ற காரணத்தால், அவர்களுடன் உடன்பாட்டுக்கு வருதலை எதிர்த்தார்கள். மறுபக்கத்தில் மலாயரல்லாதவரின் கட்சிகள், சகல மக்களுக்கும் முழுமையான சுதந்திரம் என்பதை விட வேறெதனையும் எதிர்த்தனர். கூட்டிணைவுக்குள் பலம் வாய்ந்திருந்த மலாயர் தமது தொன்மை நிலைபற்றி உரிமை கோரலாம். மற்றும் மலாய் வாக்காளரில் பெருந்தொகையானோர் கூட்டிணைவுக்கு ஆதரவு நல்கினர். இவர்கள் மலாயரின் பக்கம் சார்ந்தே விளைவுகளைச் சீர்தூக்கிப்பார்த்தனர். குறிப்பாக 1970களின் பின்னர் இந்தநிலை காணப்பட்டது. உண்மையில் விளையாட்டின் விதிகள் (தேர்தல்தொகுதி எல்லைகளை வரையறை செய்தல்) கூட மலாய் பங்காளிகளின் அதிகாரத்துக்குப் பெரிதும் உட்பட்டிருந்தது. ஆகவே கூட்டிணைவில் மலாயரல்லாதவரின் அதிகாரம் குறைவாக இருந்தது. எவ்வாறாயினும் கூட்டிணைவு பூரணமான விலக்கலுக்கு எதிரான உத்தரவாதமாக அமைந்துள்ளது.
இந்திய மாநிலமான கேரளத்தில் கூட கூட்டிணைவு முறைமை
தனிப்போக்கான சூழ்நிலையில் தோற்றம் பெற்றது. அத்துடன்
இனக்கோடல்களாலும் பாதிக்கப்பட்டது. கேரளத்தில் அரசில்ரீதியாகச்
செல்வாக்குமிக்க நான்கு பிரதான குழுக்கள் உள்ளன. கிறிஸ்தவர்கள்,
நாயர்கள் (உயர்குல இந்துக்கள்), ஈழவர் (தாழ்குல இந்துக்கள்) 33

Page 20
முஸ்லீம்கள். 1950களிலும் 1960களிலும் ஒன்று அல்லது இரண்டு குழுக்கள் மட்டும் அரசினை ஆளமுடியாது என்பது தெளிவாயிற்று. படிப்படியாக, இவ்வரசு கூட்டிணைவுமுறைக்கு உட்பட்டது. சகல பிரதான குழுக்களும் கூடிய அல்லது குறைந்த அளவிலேனும் சில உறுப்பினர்களைச் சேர்த்திருந்தது. இருப்பினும் சகல குழுக்களும் உடனடியாக அல்லது பின்னர் அதிகாரத்தைப் பிரயோகித்தன. ஆயினும் இது ஒரு பெரிய கூட்டிணைவு அல்ல. அங்கு எப்பொழுதும் சக்திவாய்ந்த எதிர்க்கட்சி இருந்தது. ஒரு குழுவிலிருந்து பிரிந்துபோன இன்னொரு குழுவினர் அல்லது ஒரு தலைவர் கூட்டிணைப்பொன்றினால் வழங்கப்பட்டவற்றைப் பொறுத்து அதிருப்திகொண்டிருந்தனர். இவர்கள் மாற்றுக் கூட்டிணைப்பு ஒன்றிற்கு ஆதரவு வழங்கலாம். இவை குழுக்களின் விருப்பங்களை வேறுவகையில் கருதமுற்படலாம். தொகுதிகளிலே முரண்பாடுகளின் வேறுபடும் அளவைப் பொறுத்து, இன அடிப்படையிலே கூட்டிணைப்பு வேட்பாளருக்கு ஆதரவுதரும் வகையில் வாக்குகள் ஒன்றுதிரட்டப் படுகின்றன.
ஒவ்வொரு கூட்டிணைப்பினதும் நிகழ்ச்சியும் உடன்பாடாக இருந்தாலும் அவற்றின் உண்மையான வடிவம் அதில் பங்குபற்றுவோரிலேயே தங்கியிருக்கும். ஆனால் கூடுதலாகப் பிரிவுபட்ட சமூகத்தில் தவிர்த்தல் அல்லது விலக்குதல் நிரந்தரமானதாக இருப்பதில்லை. கூட்டிணைப்பு நெகிழ்வுடையதாக இருக்கும். மேலும் கூட்டிணைவின் நிலைப்பு, இனக்குழுக்களிடையே பிளவுகளையும் உண்டாக்கும். எனவே ஒரு பிரிவு இன்னொரு கூட்டுடன் இணைந்துகொள்ளும்; மறுபிரிவு மறுகூட்டுடன் சேர்ந்துகொள்ளும். நெகிழ்வுத்தன்மை மேலும் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தும். ஒரு நாட்டில் ஒவ்வொரு வகையான இனக் குழப்பங்களுடன் சிக்கல்களும் அதிகரிக்கின்றபோது கேரளம் அதற்கு விதிவிலக்காகவுள்ளது.
கேரளத்தில் நிலவும் விதிவிலக்கான இயல்புகளுக்கு பிணக்குகள் அல்லது கசப்பான விவகாரங்கள் காரணமன்று. பின்தங்கிய ஈழவர் சமுதாயம் நாயர்களுக்கு எதிரான நீண்டகால மனக்குறைகளைக் கொண்டுள்ளது. இந்துக்களும் முஸ்லீம்களும் ஒருவருக்கொருவர் பயந்து வாழ்கின்றனர். மற்றும் இவ்விரு பிரிவினரும் கிறிஸ்தவர்களின் அதிகாரத்துக்குப் பயந்த வர்கள். கிறிஸ்தவர்கள் நாயர்களின் மேலாண்மையைச் சந்தேகிக்கின்றனர். கேரளாவின் கூட்டிணைப்பு சமநிலைப்படுத்தப்பட்ட பிணக்கிலிருந்து உருவானது என்பதற்குப் பதிலாக கூட்டிணைப்பு முரண்பாடுகளைச் சமநிலைப்படுத்துகிறது எனலாம்.
கேரளத்தின் கூட்டிணைப்பு வளர்ச்சிக்கு ஆதரவாக நான்குநிலைமைகளைக் குறிப்பிடலாம்:
(1) அரசினுடைய பல்முனைப்படுத்தப்பட்டநெகிழ்ச்சித்தன்மையானது, ஒருவகைக் கூட்டிணைவு தவிர்க்கப்பட முடியாதது எனத் தெளிவுபடுத்தியது.
34

(2)
(3)
(4)
இக் கூட்டிணைவானது தேர்தலுக்கு முன்னர் உடன்படிக்கைகளை உருவாக்கியது. அதனால் அவை இலகுவாக இயங்கவும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யவும் இயலுகிறது. இதன் காரணமாக, மலேசியாவில் காணப்பட்டதுபோன்று ஒரு குழுவினைச் சேர்ந்த வாக்காளர் இன்னொரு குழுவின் வேட்பாளருக்கு வாக்களிக்கத் துரண் டப்படுகிறார்கள் . இனரீதியான விவகாரங்களில் உடன்பாடுகள் ஏற்பட்டால் மாத்திரம் இது நிகழும் எனக் கூறலாம்.
மலாயர் முன்னுரிமை கோரிய சந்தர்ப்பங்களில் , இன அடிப்படையிலேயே அவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது. கட்சி பற்றிய அபிப்பிராயத்தை இது மூன்று கூறாக்கியது. (மலாயர், மலாயரல்லாதவர், இரண்டுக்கும் இடைப்பட்டோர்) கேரளத்தில் எந்தவொரு குழுவினரும் இன்னொன்றிலும் பார்க்கத் தொன்மை வாய்ந்தவர் என உரிமைகோர முடியாது. இதன் பயனாக நம்பிக்கையிழந்த உரிமைக்கோரிக்கையாளர் எதிர்க்கட்சியின் பக்கம் இருப்பதிலும் பார்க்கக் கூட்டிணைப்பில் சேரலாம் . இன வேறுபாடுகளால் வரக்கூடிய ஆபத்துக்களை இவை குறைத்துக் கொள்கின்றன. அரசாங்கத்தில் உண்டாகும் மாற்றம் மிகவிரைவில் வேறொரு இனக்குழுவினை அதிகாரத்துக்குக் கொண்டுவரலாம்.
ஆரம்பத்தில் ஏற்படுத்தப்பட்ட கூட்டிணைப்புகள் இந்தியாவின் தேசிய அடிப்படையிலான கட்சிகளுடன் சேர்ந்திருந்தன. அவை இனச்சார்பற்றவை. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி இனக்குழுக்கள் மாநில மட்டத்தில் கட்சிகளை அமைத்துக் கொண்டன. ஆயினும் தலைவர்கள் சிலர் தேசியமட்டத்திலான கட்சிகளிலும் சேர்ந்து கொண்டனர். கேரளத்தில் இனரீதியான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு உடன்பாடு மற்றும் கூட்டிணைப் புக்கான செயற்பாடுகளை ஆரம்பித்த வேளையில் அது இனரீதியல்லாத அம்சங்களைத் தொடக்கத்தில் கொண்டிருக்க வில்லை. எனவே கேரள மாநிலத்தின் அரசியல் அதற்கேயுரிய சாதகமான முறையில் வளர்ச்சியடைந்திருக்கலாம் என்பதும் ஆச்சரியத்துக்குரியது.
6. இணங்கிச்செல்லும் நிறுவனங்களை உருவாக்குதல்
மலேசியாவிலும் கேரளத்திலும் கூட்டிணைப்புகளை உருவாக்குவதில் தனிச்சிறப்பான இயல்புகள் முக்கிய பங்கினை வகித்தன. கூடுதலாகப் பிரிவுபட்ட சமூகங்களில் இவ்வகையான சில இணங்கிச்செல்லும் நிறுவனங்கள் காணப்படுவது ஆச்சரியத்துக்குரியதன்று. இனங்களுக் கிடையே இணங்கிச் செல்லுவதற்குரிய உக்குவிப்புகளைக் கட்டியெழுப்பத்
35

Page 21
தேர்தல் தொகுதியமைப்புமுறை எப்படி இருக்கவேண்டும்? இரு பிரிவாகப் பிரிந்து போவதைத் தடுக்கவும் பல்முனைவு நெகிழ்ச்சித்தன்மையைக் குறைக்கவும் ஏற்றவகையில் சமஷ்டி அரசு எவ்விதம் உருவாக்கப்பட வேண்டும் என நாம் அறியாதவர்களல்லர். பல்முனைவு நெகிழ்ச்சித்தன்மை நிலவும்போது அவற்றைப் பாதுகாப்பதற்குரிய வழிமுறைகளையும் காணலாம் . அரசியல் ரீதியான ஊக்குவிப்புகளை வழங்குவதில் அரசியல்வாதிகள் குறிப்பிடத்தக்கவர்கள். கூட்டிணைப்புத் தேர்தலுக்கு முன்னர் வாக்களிப்பு நிகழுமாயின் பிரிவுபட்ட சமூகங்களின் தேவையை அறிந்தால், அவற்றுக்கான வழிகளையும் அறியலாம். ஆனால் இணங்கிச்செல்லும் நிறுவனங்களின் முன்னேற்றத்துக்கு வினைத் திறன் மிக்க திட்டமிடல் அவசியமானது. மலேசியாவிலும் கேரளத்திலுமுள்ள இனரீதியான கட்சிகள் உடன்பாட்டுக்கு வருவதற்கு உகந்த பலமிக்க அரசியல் ஊக்குவிப்புகளைப் பெற்றிருந்தமையும் தற்செயலானவையே. ஏனைய இடங்களில், இனங்களுக்கிடையிலான இணங்கிச்செல்லலை மேம்படுத்துவதற்கு, சிறுபான்மையினரின் இரத்ததிகாரம், அரசியலடிப்படை ஊக்குவிப்புகள் அல்லது அதிகாரங்களை வேறாக்கல் அல்லது இனரீதியான முறையீடுகளைச் செய்யும் கட்சிகள் தடைசெய்யப்பட்டமை ஆகிய முயற்சிகள் எடுக்கப்பட்டன. இத்தகைய ஆலோசனைகளின் மேலோட்டமான அடிப்படைகள் அரசியல்வாதிகளின் நடைமுறை விருப்பங்களை நிலைநாட்ட அல்லது தவறானவற்றை இனங்காணுவதற்குப் போதாது. அவை படிப்படியாகத் தோல்விகளையே ஏற்படுத்தும். −
புதிய சனநாயக ஆட்சிகளில், அரசியல் யாப்பினை உருவாக்குவோர் முன்னைய இனரீதியான முறிவுகளுக்குச் சாதகமாக இருந்த நிறுவனங்களுக்கு அல்லது முன்னைய குடியேற்றவாத ஆட்சியாளரின் நிறுவனங்களுக்கு, உயிரூட்ட அல்லது மேற்குநாடுகளில் வெற்றிகரமாக இயங்கும் பிரதான சனநாயக ஆட்சியைப் பேண முயன்றனர். பிரான்சிய அமைப்பு முறையை ஆதரிக்கும் அரசுகள் பிரான்சிய நிறுவனங்களைப் பாவனை செய்ய முயன்றன. ஆங்கில முறையைப் பின்பற்றிய அரசுகள் பிரித்தானிய நிறுவனங்களைப் பாவனைசெய்ய முயன்றன. ஐக்கிய அமெரிக்காவிலிருந்துவந்த வர்த்தகர்கள் ஆபிரிக்கருக்கும் ஆசியருக்கும், கிழக்கு ஐரோப்பியருக்கும் ஏற்கனவே எழுதப்பட்ட அரசியலமைப்புச் சம்பந்தமான சட்டவிதிக் கூறுகளை விற்பனை செய்தனர். தாம் நிறுவிய சனநாயக அமைப்பிலும் பார்க்க அமெரிக்கச் சனநாயக முறையை வடிவமைப்பதிலேயே இவர்கள் ஆர்வங் காட்டினர். தற்பொழுது சனநாயகமயப்படுத்தலின் புதிய அலை காரணமாக, இனங்களுக்கிடையே இணங்கிச் செல்லுதலுக்கான அரசியலமைப்புத் திட்டமிடலின் பிரதான சந்தர்ப்பம் இழக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதனால் ஏற்படும் விளைவுகளையும் எல்லோரும் அவதானிக்கலாம். இவை ஐக்கிய அமெரிக்காவுக்கும் பொதுவாக மேற்குலக நாடுகளுக்கும் அவற்றின் வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள முக்கிய தோல்வியாகும்.
36

அத்தகைய நடைமுறைகள் இலகுவானவை எனக் கூறுவதற்கில்லை. அரசாங்க மற்றும் தொகுதிவாரியான இணக்கத்தைப் பேணுவது பிரதான அம்சமாக இருந்தால் அவை அரசியல்வாதிகள் வேறுவழியில் நடந்து கொள்வதற்கு ஊக்கங்கொடுக்கின்றன. ஆயினும் இதன் பலாபலனை அடைவதில் பல தடைகளும் உள்ளன.
பிணக்குகளைக் குறைக்கும் நுட்பங்களைப் பொறுத்தவரையில் ஒரு இணக்கமான தீர்வுத் தொகுதியோ அல்லது மேலதிகமான தீர்வுத்தொகுதியோ தேவைப்படுகிறது. அவ்வாறான தீர்வுத்தொகுதி இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை ஏற்படுத்தும் ஊக்கக் கருவிகளையும், வாக்குகளைத் திரட்டத் தேவையான தேர்தலுக்கு முன்னைய கூட்டுக்களை ஏற்படுத்த உதவக்கூடிய தேர்தல் முறைகளைக் கொண்டனவாகவும் இருத்தல்வேண்டும். பலநாடுகளில் சமஷ்டி ஆட்சிக்கு அல்லது பிரதேச சுயாட்சிக்கான சட்ட உடன்பாடுகள் உள்ளன. கொள்கைகளுடன் இணைந்து பிரதேச அடிப்படையில் செறிவாக உள்ள குழுக்களுக்கு அதன் மையப்பகுதியில் ஒரு பலம்வாய்ந்த கம்பம்போல விளங்கி அதிகாரப் பரவலாக்கம் பிரிவினைவாதத்தை தடைசெய்ய உதவமுடியும். திறன்மிகுந்த பிராந்திய பிரிவினை பல்முனைப்பு நெகிழ்ச்சித்தன்மையைப் பாதுகாக்கும் வேளை அது நிலைத்திருப்பதுடன் இருகூறாதலையும் தடுக்கலாம். மற்றும் பிரதேச அலகுகளுக்கிடையே பொதுத்தொகுதி ஒன்றையும் உண்டாக்கலாம். இது அரசியல்வாதிகள் முக்கிய இடத்தை வகிப்பதற்கு முன்னர் , சமரசமுயற்சிகளை மேற்கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறது.
இவ்வாறான புதிய அம்சங்கள் யாவற்றையும் போதியளவு கூட்டிணைவுகளுடன் அறிமுகம் செய்வது கடினமானது. அவை தமக்கேயுரிய விளைவுகள் சிலவற்றைக் கொண்டவை. தேர்தல்தொகுதி முறைமையை மீளாய்வு செய்வதற்குப் பல மாற்றுவழிகள் உள்ளன. அவை விகிதாசார அடிப்படையில் ஆசனங்களுக்குவாக்களிக்கும் நோக்கங்களுக்கு
நடைமுறை வடிவில் அமைக்கப்பட்ட இணக்கப்பாட்டு விதிகள் அரசியல் வாதிகளினால், அவற்றை ஆதரிப்பதில் தங்களுடைய சுயநலன் தொடர்பான நன்மை ஏதும் இல்லாதபோது பொரும்பாலும் புறக்கணிக்கப்பட்டு அல்லது நிராகரிக்கப்பட்டே வந்துள்ளன.
முன்னுரிமை வழங்குகின்றன. அல்லது பிரதிநிதித்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. அல்லது அரசாங்கத்தின் நீடிப்புக்கு ஆணை வழங்குகின்றன. இவை பெறுமதிமிக்க நோக்கங்களாக இல்லாவிட்டால், கூடுதலாகப் பிரிந்துபோன சமூகங்களில், அவை வாழ்க்கைக்காப்பு நோக்கங்களாக அமைந்து இனங்களுக்கிடையே
37

Page 22
நடுநிலைப்போக்கை உருவாக்கும். திட்டமிடுவோர் நடைமுறையிலுள்ள ஊக் குவிப்புகளை உதாசீனம் செய்யும் நிலையை அவற்றை நடைமுறைப்படுத்தும் அரசியல்வாதிகள் எதிர்நோக்கும் ஆபத்தும் உண்டு. அத்துடன் நடத்தைக்குத் தேவையானவற்றை"மேற்கொள்வதற்குப் பதிலாக, சிறியளவிலேயே இடம்பெறும், அவை ஊக்குவிப்புகளை உறுதியாகப் பின்பற்றுவதாக இருக்காது. கட்டுப்பாடுகள் என்னும் வடிவத்தில் சமரச விதிகளை முன்வைக்கும்போது, அவை அடிக்கடி உதாசீனம் செய்யப்படுகின்றன. அல்லது அவற்றுக்கு ஆதரவளிக்கும் சுயவிருப்பமற்ற அரசியல்வாதிகளால் அவை நிலைகுலைக்கப்படுகின்றன. மேலும் ஒரு மகாநாட்டின் மூலம் கூட்டிணைவு அங்கீகரிக்கப்படும்போது, போட்டியிடுவோர் உடன்பாடுபற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவர். இவ் உடன்பாடு பல சிறப்புகளைக் கொண்டது. ஆனால் நோக்கத்தை உள்ளடக்குதல் மற்றும் விளைவுகளின் கூட்டு என்பன வழக்கமாக அவற்றிடையே இருப்பதில்லை. ஆகவே அவற்றை மேற்கொள்ளவேண்டிய தேவைக்கும் செயற்பாடுகளுக்குமிடையே பொதுவாகத் தொடர்புகள் காணப்படுவதில்லை.
இணங்கிச் செல்லுதலின் சாதக நிலைமைகளைக் காண்பதற்கு அல்லது காணத்துTண்டுவதற்குரிய சந்தர்ப்பங்கள் அரசியல் தலைவர்களுக்கு உண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்கள் 1978 இல் நைஜீரியாவில் இடம்பெற்றுள்ளன. அப்பொழுது மக்கள் தலைவர்கள் எந்த நிறுவனங்கள் இராணுவ ஆட்சியை மீளக்கொண்டு வரும்போது அதனை அகற்றுவதற்கு உதவியுள்ளன என ஆலோசித்தனர். அழிவுதரும் உள்நாட்டு யுத்தமொன்றினால் துரத்தப்பட்டுள்ளனர். இதே நிகழ்வு மீண்டும் ஏற்படுமானால், பாதிக்கப்படுபவர்கள் யார் என அவர்கள் அறியார். அவர்கள் ஜோன் ரோவல்சின் அறியாமை என்னும் முகத்திரையை அணிந்தவர் போல நடந்து கொண்டார்கள். இத்தகைய பாங்கு சில உணர்வு பூர்வமான புத்தாக்கங்களுக்குச் சாதகமாக உள்ளது. சோவியத் அல்லது ஆபிரிக்கா, அல்லது ஆசியநாடுகளின் தனிக்கட்சி அல்லது இராணுவ ஆட்சி என்பவற்றின் மூலம் பெறப்பட்ட கசப்பான அனுபவங்களின் பின்னர், சில நாடுகளில் மீளவும் சனநாயகமயப்படுத்தல் சம்பந்தமாக, சில தலைவர்கள் அதனை ஒத்த பாங்கினைப் பின்பற்றுவதற்குத் தூண்டப்பட்டிருக்கலாம். அத்துடன் அவற்றினை மிகக் கவனமான முறையில் இனங்கண்டு அதற்கான நிவாரணத்தை உருவாக்கியிருக்கலாம். அந்நிலை கடந்துவிட்டது. தற்பொழுதுள்ளது போல, பல நாடுகள் தமது முன்னைய அனுபவங்களின் படி நடக்க முற்படுகின்றன.
1979இல் நைஜீரியா சிவிலியன் ஆட்சிக்குத்திரும்பியபோது, சுதந்திரத்தின்
போது சனநாயகத்தை நடைமுறைப்படுத்தியமைக்குக் காட்டப்பட்ட
எதிர்ப்பிலும் பார்க்க, இப்பொழுது தடைகள் கூடுதலாகக் காணப்பட்டன
என்பது தெளிவாக இருந்தது. அவர்களுடைய ஆரம்பகால இனத்துவப்
38

பிணக்குகள், உள்நாட்டு யுத்தம் , மற்றும் சர்வாதிகார ஆட்சி என்பவற்றிலிருந்து பாரிய பேராசையுள்ள இராணுவம் தோன்றியது. சனநாயக அடிப்படையில் சமரசம் செய்யும் நிறுவனங்களை முதலில் நிறுவுதல் சாதகமாக இருந்திருக்கும். ஏனைய இடங்களுக்கும் இவை பொருந்தக் கூடியவையே. ஒரு முறை தோல்வியடைந்தால் மறுமுறை அவை விடயங்களைக் கடினமாக்கும். இருமுறை தோல்வி அடைந்தால் அவை மறுமுறை பிரச்சினைக்குரியவையாகிவிடும். பல்வேறு நாடுகளும் விரைவில் இத்தகைய நிலைக்கு உட்படும். ஒரு நாட்டில் திட்டமிடல் சனநாயகரீதியாகவும் பல்லினம் சார்ந்ததாகவும் இருக்கவேண்டும் என்பதுடன் அவை நேரகாலத்துடன் செய்யப்பட வேண்டும் எனவும்
வலியுறுத்தப்படுகிறது.
米米米米米米
39

Page 23

பல்லின சமூகத்தில்
சனநாயகம்
பகுதி II
சனநாயகச் செயல்முறையின் பிரச்சினைகள்
பொதுசனக் கல்வி நிகழ்ச்சித்திட்டம்
மார்கா நிறுவகம்

Page 24

சனநாயகச் செயல்முறையின் பிரச்சினைகள்
சனநாயகச் செயல்முறைக்கான தகுதி விதிகள்
அரசியல் ஒழுங்கொன்றை ஏற்படுத்தச் சிலர் விரும்புவர். சனநாயகரீதியான அரசியல் ஒழுங்கினை எடுத்துக்காட்டும் எடுகோள்கள் இவர்களைப் பொறுத்தமட்டில் தகுதியுடையவை. இவ் எடுகோள்கள் தகுதியானவை என்பதால் சனநாயக ஒழுங்கொன்றை மேற்கொள்ள அவர்கள் விரும்புகின்றனர் என முடிவெடுக்கலாம். அத்துடன் இச்செயல்முறைகள் மூலமாகவே பொதுமக்கள் தாம் அடையவேண்டிய சிலதகுதிவிதிகள் (criteria) பற்றிய தீர்மானத்துக்கு வருகின்றனர். சில தகுதிவிதிகளை அடைவதற்கான தீர்மானங்கள் எனக் கூறும்போது, ஒருவர் எடுகோளில் நம்பிக்கை கொண்டால், அத் தகுதிவிதிகளை அவர் விரும்பி ஏற்கின்றார் என உறுதியாகக் கூறலாம் . மறுதலையாக தகுதிவிதிகளை மறுக்கவேண்டின் எடுகோள்களில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ மறுக்கவேண்டும்.
ஐந்து தகுதிவிதிகள் தகுதிவாய்ந்தவை. எதாவதொரு ஸ்தாபனத்தில் எந்த நடைமுறையை மதிப்பீடு செய்ய வேண்டும் என நாம் நினைக்கிறோமோ அந்நடைமுறைக்கு எடுகோள் பொருந்தும் . எதாவதொரு செயல்முறை அவற்றைப் பூரணமாக நிறைவு செய்தால் அது உண்மையான சனநாயகச் செயல்முறையாக இருக்கும். அத்துடன் அரசாங்கமும் பூரணமாக சனநாயக அரசாங்கமாக விளங்கும். பூரண சனநாயகச் செயல்முறையோ அல்லது பூரண சனநாயக அரசாங்கமோ உண்மையில் நிலைத்திருக்க முடியாது. அவை உண்மைக்குப் புறம்பான மனித சாத்தியங்கள் பற்றிய கருத்துக்களை வெளியிடுகின்றன; அவை ஒப்பிடப்படவேண்டியவை. தகுதிவிதிகள் உண்மையிலேயே திருப்திகரமாக இல்லாவிட்டாலும் அவை உண்மையுலக இயல்புத் தன்மையைத் தெரிவிப்பதில் பயனுடையவை. மதிப்பீட்டில் காணப்பட்ட தீர்ப்புக்கான ஆதாரங்களையெல்லாம் அவை இயல்பாக நீக்கிவிடுவதில்லை. உதாரணமாக, தகுதிவிதி எந்தவொரு குறிப்பான நடவடிக்கையையும் குறிப்பிடவில்லையாயின், பெரும்பான்மையாட்சிபோன்று, அக் குறிப்பிட்ட நடவடிக்கைக்கான தகுதிவிதிகளிலிருந்து நேரடியாக எதனையும் பிரித்தெடுக்க முடியாது. தீர்ப்புகள் குறிப்பான வரலாற்றுநிலைமைகளைக் கவனத்திற்கொள்ள வேண்டும். அச் சந்தர்ப்பத்தில் சனநாயகரீதியான
43

Page 25
கூட்டு விருத்தியடைகிறது. ஆயினும் சனநாயகக் கொள்கையானது ஏனைய கொள்கைகளைப் போல உறுதியான சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றிலும் பூரணமான தெளிவான விடைகளைக் கொடுக்க முடியாது. எனவே மாற்று ஆலோசனைகளுக்கிடையே தெரிவினை மேற்கொள்ள வேண்டும்.
எமது எடுகோள்களுடன் ஒத்துச்செல்லும் தகுதிவிதி எது? சனநாயகச் செயற்பாடுகளின் சிறப்பம்சங்களுடன் ஒத்துச்செல்லும் அம்சங்கள் எவை? என அறிதல் வேண்டும்.
1. வினைத்திறன்மிக்க பங்குபற்றல்
கூட்டுத்தீர்மானங்களை மேற்கொள்ளல் என்னும் செயல்முறையில் மக்கள், இறுதிவிளைவு பற்றிய தமது விருப்பங்களை எடுத்துக்காட்டுவதற்குப் போதியளவு சந்தர்ப்பம் மற்றும் சமசந்தர்ப்பம் வேண்டுமென விரும்புகின்றனர். நிகழ்ச்சிநிரல் பற்றிய வினாக்களை எழுப்பவும் ஒரு விளைவுக்கான காரணத்தை விளக்கிக் கூறவும் அவர்களுக்குப் போதியளவு சமசந்தர்ப்பம் கட்டாயமாக இருக்க வேண்டும். வினைத்திறன்மிக்க பங்குபற்றலுக்கான போதியளவு சந்தர்ப்பம் ஒரு பிரசைக்கு மறுக்கப்பட்டால் அதன் பொருள் அவர்களுடைய விருப்பங்கள் பற்றித் தெரியாது அல்லது அவை தவறாகப் பதிந்துகொள்ளப்பட்டுள்ளன என்பதாகும். ஆயினும் அவை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அவர்களுடைய விருப்பங்கள் கவனத்திற் கொள்ளப்படவில்லையானால், அவர்களுடைய ஆர்வம் பற்றிய சமகணிப்புக் கோட்பாடும் மறுக்கப்படுகிறது.
2. உறுதியான நிலையில் வாக்குச் சமத்துவம்
கூட்டுத்தீர்மானங்களை மேற்கொள்ளத் தீர்மானித்த கட்டங்களில் ஒவ்வொரு பிரசையும் தமது தெரிவை எடுத்துக்காட்டுவதற்கு சம சந்தர்ப்பம் உறுதிசெய்யப்பட வேண்டும். அது இன்னொரு பிரசையின் தெரிவுக்குச் சமனானதாகக் கணிக்கப்படவேண்டும். உறுதியான நிலையில் முடிவுகளைத் தீர்மானிப்பதற்கு இத்தகைய தெரிவுகள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.இத் தெரிவுகள் எல்லாம், வாக்களித்தல் என்றே கருதப்படுகின்றது. இத்தகைய தகுதிவிதிகள் யாவும் உறுதியானநிலையில் வாக்களிப்புச் சமத்துவம் அவசியம் என்பதைக் குறிப்பிடுகிறது எனலாம்.
இத்தகைய வேண்டுகோளைப் போல வெளிப்படையான சில விடயங்கள் சனநாயகக் கொள்கைக்கும் நடைமுறைக்கும் முக்கிய ஆதாரமாகக் கிரேக்கர் காலத்திலிருந்து வந்துள்ளன. இதற்கான நியாயம் என்ன அடிப்படையில்
44

உருவாகிறது? நடைமுறைத்தீர்ப்பின்படி தீர்மானக்கட்டத்தில் உள்ள வாக்களிப்புச் சமத்துவமானது மக்களுடைய உள்ளார்ந்த சமத்துவத்துக்குப் போதிய பாதுகாப்பை வழங்கவும், தனிப்பட்ட சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கும் இன்றியமையாதது. இவையின்றிப் பிரசைகள் தமது தீர்மானங்களின் மீது உள்ளார்ந்த சமத்துவமின்மைகளின் எல்லையற்ற பின்னடைவை எதிர்நோக்குவர். அரசியல் சமத்துவம் போல, இதற்கு மேன்முறையீடு இல்லை. அவர்களுடைய விருப்பங்களுக்குச் சமகணிப்புக் கொடுக்கலாம் எனத் தீர்மானிக்க முடியும். ஏனைய விடயங்களிற் காணப்படும் சமநிலையின்மை போன்று, மனிதர்கள் சிலர் தமது விருப்பங்களில் விசேட கவனம் செலுத்துவது போல சாதக நிலையும் ஏனையோருக்குப் பாதகநிலையும் ஏற்படலாம். ஆகவே தீர்மானக் கட்டத்தில் வாக்களிப்புச் சமத்துவத்துக்கான தேவை யில்லாவிட்டாலும் வாக்குகளில் காணப்படும் சமத்துவமின்மை விருப்பங்களின் சமகணிப்பு என்னும் கோட்பாட்டை மீறுவதாக அமையும்.
தீர்மானக்கட்டத்தில் வாக்களிப்புச் சமத்துவத்துக்கான தகுதிவிதிகள் குறிப்பிடப்படவில்லை. அதன் செயற்படு கட்டத்தில் வாக்களிப்புச் சமத்துவம் அவசியமில்லை. சில மனிதரின் விருப்பத்துக்குச் சமகணிப்புக் கொடுக்கப்பட வேண்டும் என ஆரம்பத்தில் அவர்களுடைய வாக்குப் பலத்தைக் கவனமாகப் பரிசீலிப்பதன் மூலம் பொதுமக்கள் தீர்மானித்துக் கொள்ளலாம். அதே அடிப்படையில் சில தீர்மானங்களைப் பொதுமக்களும் பகிர்ந்துகொள்ளலாம் . ஆயினும் அங்கு வாக்குகள் சமமாகக் கணிக்கப்படுவதில்லை. வரலாற்றுரீதியாக, இத்தகைய ஒழுங்குமுறைகள் சனநாயகநாடுகளில் காணப்பட்டதுபோல, விசேடமானவையாக இருக்கக்கூடும். ஆனால் அவை தகுதிவிதிகளை மீறக்கூடாது. தகுதிவிதிகள் மீறப்படக் கூடியவையாயினும் பொதுமக்கள் தமது நோக்கங்களை அடைவதில் தோல்விகண்டால் அல்லது கூட்டுத் தீர்மானங்கள் மீதான கட்டுப்பாடுகளை இழக்கும் வகையில் அவர்கள் பயமுறுத்தப்பட்டால், அவ்வாறான ஒழுங்குகளை மாற்றும் சுதந்திரம் பொதுமக்களுக்கு இல்லை.
மேலும் தகுதிவிதிகள் குறிப்பிட்ட வாக்களிப்பு முறையொன்றை அல்லது பொதுத்தேர்தலைக்குறிப்பிடுவதில்லை. பிரசைகள் தமது தெரிவுகள் பற்றிக் கூறுவதற்குச் சம சந்தர்ப்பம் உடையவர் என்பதை வாக்குகள் அல்லது வாக்காளர் எழுமாற்றாகத் தெரிவு செய்யப்படுவதன் மூலமே திருப்திப் படுத்த முடியும். இல்லாவிடில் சம வாக்களிப்பு என்பது ஒவ்வொரு பிரசையும் வாக்காளர் தொகை சமமாகவுள்ள மாவட்டங்களில் அல்லது வாழ்விடங்களில் வாக்குச் சமத்துவத்துக்கு உரிமையுடையர் என்பது பொருளாகுமா? விகிதாசாரப் பிரதிநிதித்துவம் அங்கு நன்முறையில் செயற்பட முடியும். பிரசைகள் எவ்வளவு தூரம் திறமையான முறையில் தமது தெரிவுகளைச் செய்கின்றனர் என்பதுடன், என்னென்ன விசேட நடைமுறைகள், விதிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற மேலதிக
45

Page 26
வினாக்களும் நடைமுறைத் தீர்ப்புக்களை எதிர்பார்த்திருக்கின்றன. தகுதிவிதிகளைச் சிறந்த முறையில் எதிர்கொள்ளும் நடைமுறைகளைத் தெரிவுசெய்தல் நல்லது. நன்கு விரும்பப்படும் நல்ல நடைமுறைகள் முன்மொழியப்பட்ட சகல நடைமுறைகளும் சில வழிகளிலே குறைபாடுடையவையாக இருந்தாலும் கூடாத நடைமுறைகளிலும் பார்க்க வாய்ப்பானதாகக் காணப்படும்.
இறுதியாக, தகுதிவிதிகள் பற்றிய தீர்மானங்களுக்காகப் பெரும் பான்மையாட்சி என்னுங் கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டியிருப்பதால் அவை எப்பொழுதும் கூட்டிணைப்பை வெளிப்படையாக எதிர்ப்பதில்லை. பெரும்பான்மை ஆட்சியை மட்டுமே அவை எதிர்க்கின்றன. அத்துடன் இதற்கான மாற்றுவழிகள் ஏனைய தகுதிவிதிகளின் படி மதிப்பீடு செய்யப்படவேண்டும். இத் தகுதிவிதிகளை நியாயப்படுத்தும் விருப்பங்கள் பற்றிய சமகணிப்புக் கோட்பாடும் அதுபோன்ற கோட்பாடுகளும் மற்றும் எடுகோள்களும் உட்பட மதிப்பிடப்பட வேண்டும். மற்றும் தகுதி விதிகளுக்குப் பொருத்தமான முடிவுகள் பின்பற்றப்பட வேண்டும். பெரும்பான்மையாட்சி ஒரு சிறந்த முடிவாக இருந்தால் அது பயன்படவேண்டும். பெரும்பான்மையாட்சி என்பதினால் தெரிவிக்கப்பட்ட பிரச்சினை மற்றும் அதற்கான மாற்றுவழி என்பன முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்றாகும். அதற்குப் பூரணமான திருப்திதரக் கூடிய முடிவுகள் இன்னும் காணப்படவில்லை. பொதுவான அல்லது குறிப்பான சந்தர்ப்பங்களில் வாக்களிப்புச் சமத்துவ தகுதிவிதிகளை நன்முறையில் எதிர்கொள்ளும் தீர்மான ஆட்சி எதுவெனத் தீர்ப்பளித்தலில் ஒரு மனிதன் வாக்களிப்புச் சமத்துவத்துக்கு உட்பட்ட பின் தொடர்ந்து அதற்கு உடன்படாதிருந்தால் அது ஒரு பிரச்சினையாக இருக்கும்.
இது வரலாற்றுடன் இணைந்ததாகும். வினைத்திறன்மிக்க, பங்குபற்றல் தகுதிவிதிகளையும், வாக்களிக்கும் சமத்துவத்தையும் திருப்திப்படுத்த ஏதாயினும் ஓர் அரசாங்கம் தன்னையே ஆட்சிசெய்யும் சனநாயகச் செயன்முறையைக் கொண்டு அமைவுபெறலாம். சில முக்கிய வேறுபாடுகளுக்கு இடமளிக்கும் வகையில் அத்தகையதொரு கூட்டிணைப்புக் குறுகிய நோக்கங்களைக் கொண்ட சனநாயகச் செயல்முறைகளால் ஆளப்படுமென கூறப்படுகின்றது. ஒருமுழுமைவாய்ந்த சனநாயகச் செயன்முறையிலும் பார்க்க இச்செயல்முறை குறுகியதாக இருந்தாலும் இரண்டு தகுதிவிதிகளும் சாத்தியமான நடைமுறைகள் பலவற்றை மதிப்பிட எமக்கு உதவுகிறது. ஒரு தகுதிவிதியின்படி சிறந்தது அல்லது இன்னொன்றின்படி கூடாதது என்னும் விடயங்களில் அவை தீர்மானிக்கப்பட முடியாதவையாக இருக்கும். மேலும் யாதாயினும் ஒரு மதிப்பீடு குறிப்பிட்ட சந்தர்ப்பம், பொதுப்போக்கு, மற்றும் மனித நடத்தை அல்லது செயல் ஒழுங்குபற்றிப் பெயரளவில் மேலதிகத் தீர்ப்புக்களை எதிர்பார்த்திருக்கும். இதனால் தகுதிவிதிகள் பொருளற்றவை என்பது கருத்தல்ல. இருந்தாலும் , கடும் விவாதமொன்று இங்கு முன்
46

வைக்கப்படவில்லை. எழுமாற்றடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பிரசைகளால் மேற்கொள்ளப்படும் தீர்மானத்துக்கான ஒழுங்குகள் நடைமுறையிலும் பார்க்கத் தகுதிவிதிகளைத் திருப்திப்படுத்தும் இதன்மூலம் ஒரு பிரசை ஏனையவர் எல்லோருக்குமாகக் கூட்டுத் தீர்மானங்களை எடுக்கிறார். அல்லது ஒரு வாக்களிக்கும் திட்டமானது, அதன் தீர்மானக் கட்டத்தில் சில பிரசைகளுக்குப் பத்து வாக்குகளையும், ஏனையவருக்கு ஒரு வாக்கையேனும் வழங்காமலிருப்பதிலும் பார்க்க ஒவ்வொரு பிரசைக்கும் ஒரு வாக்கு என வழங்குதல் நன்மை தரும். ஆயினும் இவ்வாறான மாற்றுவழிகள் பற்றிய தீர்ப்புகள் கடுமையான வாதங்களினால் தாக்குதலுக்கு உட்படாத முடிவுகளைப் பின்பற்றும்.
3. தெளிவான விளக்கம்
ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டது போன்று, பொது மக்களின் வாழ்க்கைமுறை, கூட்டமைப்பு மற்றும் எல்லைகள் பற்றிய தீர்ப்புகள் பெருமளவுக்குச் சச்சரவு தருபவை. ஆகவே ஒருவர் மிக இலேசான முறையில், குறிப்பிட்ட தீர்மானத்தை மேற்கொள்ளும் தகுதியுடையவர் என்ற வகையில் அத் தீர்ப்புக்குச் சவால்விடலாம். இந்த எதிர்ப்பு பாதுகாவலன் என்ற முறையில் சனநாயகத்துக்கும் சவாலாக உருவாகலாம். இங்கே கவனத்திற் கொள்ளப்பட இருப்பது இரண்டாவது எதிர்ப்பாக இருக்கக்கூடிய ஒரு விடயமாகும்.
நான் உடன்படுகிறேன் என ஓர் எதிர்ப்பாளன் கூறலாம். பிரசைகள் எல்லோரும் தகுதியில் சமமானவர்கள். அவர்களுள் எவரும் அல்லது ஏனைய உறுப்பினர் மத்தியில் அல்லது உறுப்பினரல்லாதவர் மத்தியில் எவரும் பொதுமக்களுக்குப் பதிலாகத் தீர்மானங்களை மேற்கொள்வதற்குத் தகுதியுடையவர்கள் என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். இருந்தாலும், நான் நினைக்கிறேன் பிரசைகள் எல்லோரும் நன்கு தகுதிபெற்றவர் அல்லர். அவர்கள் தவறுகள் விடக்கூடும். அவர்கள் தேர்ந்தெடுத்த முடிவுகளைக் கூட, தெளிவான விளக்கம் பெறும்போது மறுப்பார்கள். பின்னர் சில நடைமுறை ஒழுங்குகள் மூலம் பிரசைகள் தம்மைத் தாமே ஆளமுற்படுவர். அவை குறுகிய சனநாயகச் செயல்முறைத் தகுதிவிதிகளின்படி திருப்திதரலாம். ஆயினும் பல வேறுபட்ட நடைமுறைகளும் தகுதிவிதியைத் திருப்தி செய்வதாக இருக்கலாம். இவற்றுட் சில, தெளிவான விளக்கம் பெற்ற மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். அவை சிறந்த தீர்மானங்களை மேற்கொள்ளவும் உதவும். இவை உண்மையிலேயே தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நல்ல நடைமுறைகளாக விளங்கும்.
தெளிவான விளக்கம் சனநாயகத்தைப் பொறுத்தமட்டில் எதனையும் செய்வதற்கில்லை. இது முட்டாள்தனமானது. ஏனெனில் சனநாயகம்
47

Page 27
வழக்கமாக ஓர் அமைப்பு முறையாகக் கருதப்படுகிறது. அது மக்களால் ஆளப்படுகிறது. எனவே மக்கள் எதனை விரும்புகின்றனரோ அதனைப் பெற்றுக் கொள்வர். அல்லது பாதுகாவலன் என்ற மாற்று முறையிலும் பார்க்க அவர்கள் நம்புபவையே சிறந்தவை. இதனுள் சிறந்தவை எவையெனக் கற்றோர் குழாம் தீர்மானிக்கும். எவை தேவையென அறிவதற்கு அல்லது எவை சிறந்தவை என அறிவதற்கு மக்கள் ஐயம் தெளியவேண்டும் . சனநாயகத்தை ஆதரிப்பதற்கு இவற்றினை ஓரளவுக்கேனும் உறுதியாக அங்கீகரிக்க வேண்டும். அத்துடன் நன்கு அறிந்த, தெளிவான விளக்கம் பெற்ற மக்களுக்குக் கல்வி மற்றும் பொதுவான கலந்துரையாடல் போல இது ஒரு வழிமுறையாக எடுத்துக்காட்டப்பட்டது. இதற்கான எதிர்ப்பும் வரலாற்று ரீதியாகத் தவறானது.
மூன்றாவது தகுதிவிதியைச் சேர்த்துக் கொள்வதன்மூலம் சனநாயகச் செயல்முறையென்னும் பொருளை விரிவாக விளக்க முடியும். சொல் சார்ந்த முறையிலன்றி வேறுவழியிலே தகுதிவிதி பற்றி எவ்வாறு கூறுவது எனத் தெரியவில்லை. சொல்சார் தகுதிவிதிகள் கருத்தாழம் மிக்கவை; பக்கச்சார்பற்றவை. எவ்வாறாயினும் தெளிவான விளக்கம் கொண்ட தகுதிவிதியை இங்கு வடிவமைக்க முடியும்.
ஒவ்வொரு பிரசையும் தாம் தீர்மானம் மேற்கொள்ளவேண்டிய விடயத்தைத் தெரிவுசெய்யவும் (அத்தீர்மானத்துக்கு அவசியமேற்படும் காலப்பகுதியில்) அவற்றை மதிப்பீடு செய்யவும் போதிய அளவு சம சந்தர்ப்பம் உடையவர். அவை பிரசைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யத்தக்கதாக இருத்தல் வேண்டும்.
இத்தகைய தகுதிவிதிகள், அவற்றின் நன்மை தீமைகளுக்கு இயைய பிரசைகள் விளக்கம் பெற வேண்டிய சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப, ஒருவரின் விருப்பத்தின்படி அல்லது அவ்விருப்பத்திற்கான கொள்கையின் எதிர்பார்த்த விளைவுகளின்படி, ஒருவருக்காகவன்றி, ஏனைய மக்களுக்காகவும், பிரசைகள் என்ற வகையில் அவனுடைய நன்மை அல்லது விருப்பம் பொது நன்மையை அல்லது பொது விரும்பத்தைக் கவனத்திற் கொள்ள வேண்டும் என்ற வகையில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டியவற்றுக்கான மாற்று நடவடிக்கைகள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். இவ்விடயங்கள் பற்றிய விளக்கத்தைப் பெற வேண்டிய சந்தர்ப்பம் பிரசைகளுக்கு இருக்க வேண்டும். தகுதிவிதிகள் தெளிவற்றன வாயினும் நிறுவன அமைப்பு எப்படி இருக்கவேண்டுமெனத் தீர்மானிக்கும் வழிகாட்டல்களை வழங்குகின்றன. ஆயினும் இத் தகுதிவிதிகள் நடைமுறைகளை விளங்கிக்கொள்வதைக் கடினமாக்குகின்றன. நடவடிக்கைகள் பற்றிய தெளிவைப் பெறும் தகவல்களைத் தடுத்து விடுகின்றன. எனவே அவை வெவ்வேறான தீர்மானங்களை மேற்கொள்ளப் பிரசைகளை வழிநடத்துகின்றன. இதனால் பிரசைகள் சிலர் முக்கிய
48

தகவல்கள் பெற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது அல்லது எவ்வித கலந்துரையாடலுமின்றித் தீர்மானம் மேற்கொள்ளும் வழியாக ஒரு தீர்மான நிரல் முன்வைக்கப்படவேண்டும். இவை இலகுவான விடயங்கள் போலத் தோன்றலாம். ஆனால் பெரும் அரசியல் முறைமைகள் நல்ல நடைமுறைகளை விடக் கூடாத நடைமுறைகளின்படியே நடந்து கொள்கின்றன.
4. நிகழ்ச்சி நிரலின் கட்டுப்பாடு
ஓர் அமைப்பு மூன்று தகுதிவிதிகளையும் திருப்திப்படுத்த முடியுமானால், அதனை ஒரு முழுமையான நடைமுறை சார்ந்த சனநாயகமாகக் கருதவேண்டும் . அதனுடைய மக்களைக் கருத்திற் கொண்டு செயற்பாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இத் தகுதிவிதிகளைச் சரியாகத் திருப்தி செய்யக் கூடிய அமைப்பொன்று இல்லாத வேளையில், சனநாயக நோக்கில், சாத்தியமாகக் கூடிய சிறந்த அரசியல் தொகுதி என்ற வகையில் தகுதிவிதிகளைப் பற்றித் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அவை எவ்வாறு தகுதிவிதிகளைப் பூர்த்தி செய்கின்றன என்பதைப் பொறுத்து நல்ல, தீய பண்புகளையும், அது சனநாயகத்தன்மையுடையது அல்லது இல்லையா என்பதையும் கணிக்கலாம் . "செயற்பாடுகளுக்கு மதிப்பளித்தும்", மக்களுடன் தொடர்பாகவும் இத்தொகுதி சனநாயகச் செயன்முறைகளின் மூலம் முழுமையாக ஆளப்படுவதற்கு இம் மூன்று தகுதிவிதிகளும் பூரணமற்றவை எனக் கூறுகின்றது. இவ் விரு துணைவாசகங்களும் கட்டுப்பாடுகளுக்கான சாத்தியக்கூறுகளைச் சுட்டிக்காட்டுகின்றன. சனநாயக அடிப்படையிலான தீர்மானம் மேற்கொள்ளல் செயற்பாடுகள் குறுகிய நிகழ்ச்சி நிரலுடன் மட்டுப்படுத்தப்படுகின்றன அல்லது பெருமளவுக்கு மக்களைத் தவிர்த்து வருகின்றன அல்லது இரண்டையும் செய்கின்றன. பொதுமக்கள் பொருத்தமான வகையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றும் நிகழ்ச்சி நிரலிலின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர் எனத் தீர்மானிக்கப் பொருத்தமான மேலதிக நியமங்கள் வேண்டும்.
நான்காவது தகுதிவிதியொன்று அவசியமானது எனத் தெளிவாகப் பார்ப்பதற்கு, மசிடோனியாவின் பிலிப்பு, செரோனியா என்னுமிடத்தில் ஏதேனியரைத் தோற்கடித்த வேளையில், இராணுவம் மற்றும் வெளிநாட்டுக்கொள்கை பற்றிய தீர்மானங்களை மேற்கொள்ள, ஏதேனிய அதிகாரசபைக்கு இடமளிக்கவில்லை. பொதுமக்கள் பல்வேறு விடயங்கள் பற்றித் தீர்மானிக்க வருடத்தில் நாற்பது தடவைகள் கூடினர். ஆயினும் மிகமுக்கியமான விடயங்களைப் பொறுத்து மெளனம் சாதித்தன்ர். உள்ளூர் விடயங்களைப் பொறுத்தமட்டில் சனநாயகரீதியாக முன்புபோல இருந்தனர். ஆனால் வெளிநாட்டு மற்றும் இராணுவ விவகாரங்களில் பிலிப்பும் அவருடைய பிள்ளைகளும் ஏதேனியரை வரிசைப்படிமுறை
49

Page 28
ஒழுங்கின் அடிப்படையிலேயே நடத்தினர். ஆகவே ஏதென்சில் நிலவிய சனநாயகம் முழுமையானது அல்லது முன்புபோல சனநாயகரீதியானது என நாம் கூறுவது பொருந்துமா?
இவ்விடயத்தினைப் புறக்கட்டுப்பாடுகள் நாடகத்தன்மை வாய்ந்த முறையில் எடுத்துக் காட்டுகின்றனவாயினும், செயற்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டியவர்கள் பிரசைகளின் ஒரு சில அங்கத்தவர்களே. நாம் மேலே கலந்துரையாடிய மூன்று தகுதிவிதிகளும் இடம்பெற்றுள்ள ஒரு நாட்டினைச் சிந்தித்துப் பார்த்தால் அங்கு மக்கள் தீர்மானிக்க வேண்டிய விடயங்களுக்கு எவ்வித வரையறைகளும் இல்லை. அவர்கள் கூட்டாகத் தீர்மானம் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகளும் பூரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளன. சனநாயகத்துக்கு முரணான இயக்கமொன்று ஆட்சியைக் கைப்பற்றுகிறது எனக் கொண்டால் அந்நாட்டு மக்களின் சனநாயக உணர்வுகளை ஏமாற்றும் நோக்கில் புதிய ஆட்சியாளர் பழைய அரசியலமைப்பை அவ்வாறே மதிக்கின்றனர். ஆயினும் ஒரு விடயத்தில் அவர்கள் திருத்தம் மேற்கொள்கின்றனர். இதன்பின்னர், மக்கள் தமது பழைய சனநாயக அரசியல் அமைப்புக்களை ஒரு சில விடயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தலாம் என்பது ஓர் உள்ளகப் பிரச்சினையாகும். - போக்குவரத்துக் கட்டுப்பாடு, வீதிப்பராமரிப்பு, வாழிடங்களை வலயப்படுத்தல் போன்றவை இத்தகையவற்றுள் சில. ஆட்சியாளர்கள் ஏனையவற்றைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். புதிய அமைப்பானது முதல் மூன்று தகுதிவிதிகளையும் முறையாக அடைந்திருந்தாலுங்கூட "அதனுடைய செயற்பாங்கு முழுமையான சனநாயகரீதியானது” என்பதற்கு அது ஒரு போலியான சனநாயகமாக இருக்கவேண்டும். இத்தகைய சனநாயகத்தின் நிகழ்ச்சி நிரலில் ஆட்சியாளர் முக்கியமெனக் கருதிச் சேர்த்துக்கொண்ட விடயங்களை விட வேறு விடயங்களைப் பிரசைகளினால் சனநாயக ரீதியாகத் தீர்மானிக்க முடியவில்லை. நிகழ்ச்சி நிரலின் மீது சனநாயகரீதியற்ற ஆட்சியாளரது கட்டுப்பாடுகள் ஆரவாரமற்றனவாகவும் மிக நுணுக்கமாகவும் இருக்கும். உதாரணமாக, சில நாடுகளில் இராணுவத் தலைவர்கள் பெயரளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்களின் கட்டுப்பாட்டில் இருப்பர். ஆயினும் இராணுவத்தினரின் விருப்பிற்கு அமையத் தமது தீர்மானங்களை மேற்கொள்ளாவிட்டால் தாம் பதவியிலிருந்து நீக்கப்படுவர் என்பதையும் அவர்கள் அறிவர்.
இத்தகைய கணிப்புகள் நான்காவது தகுதிவிதியொன்றை முன்வைக்கிறது. இது நிகழ்ச்சிநிரல் மீது பொதுமக்களின் முடிவே இறுதிக்கட்டுப்பாடாக விளங்கும். நிகழ்ச்சி நிரலில் விடயங்கள் எப்படி இடம்பெற வேண்டும் எனத் தீர்மானிக்கும் பரவலான சந்தர்ப்பம் பொதுமக்களுக்கு இருக்க வேண்டும். இவை சனநாயக செயல்முறை வழியாகவே தீர்மானிக்கப்பட வேண்டும்.
50

இறுதிக்கட்டுப்பாடு பற்றிய தகுதிவிதியானது ஒரு சனநாயக ஆட்சியில் மக்கள் கூற்றே இறுதியானது அல்லது அவர்கள் இறைமை யுடையவர்களாக இருத்தல் வேண்டும் எனக் கருதுகிறது. இவ்வாறான தகுதிவிதியையும், மற்றும் ஏனைய மூன்றினையும் திருப்தி செய்யும் ஓர் அமைப்பே, அதனுடைய மக்களைப் பொறுத்த வரையில் முழுமையான சனநாயகச் செயல் முறையைக் கொண்டது எனக் கருதப்பட முடியும்.
இத் தகுதிவிதிகளின் படி ஒவ்வொரு விடயத்திலும் ஒவ்வொரு தீர்மானம் எடுக்கப்படவேண்டியதில்லை என மக்கள் தீர்மானித்தாலும் கூட, அதற்குப் பதிலாகச் சில விடயங்களில் சில தீர்மானங்களை, கட்டமைப்பொழுங்கில் நீதிபதிகள் அல்லது நிருவாகிகள் மேற்கொள்ளக் கூடிய முழுமையான சனநாயக செயன்முறைகளை ஒர் அரசியலமைப்பு கொண்டிருத்தல் வேண்டும். எந்தவொரு விடயம் பற்றியும் தீர்மானம் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு பொதுமக்களுக்கு இருக்கும் வரையில் தகுதிவிதி பூர்த்தி செய்யப்பட்டதாகக் கருதப்படும். இவ்வகையில் இங்கு முன்வைக்கப் பட்டுள்ள சனநாயக செயல்முறைக்கான தகுதிவிதிகள் தீர்மானம் மேற்கொள்ளலைப் பரவலாக்கியுள்ளது. இது "சமுதாய ஒப்பந்தத்தில் ரூசோவினால் சனநாயகத்துக்கு வழங்கப்பட்ட தனிப்போக்குடைய வரைவிலக்கணத்திலும் பார்க்க ஏற்கத்தக்கது. ஏனெனில் சனநாயகத்தில் அதிகார ஒப்படைப்பு ஏற்கத்தக்கதல்ல என வலியுறுத்தியுள்ளார். "கடவுளின் மக்களாக இருந்தாலே சனநாயகமுறையில் ஆட்சி செய்யப்படும்”. அத்தகைய முழுநிறைவான அரசாங்கம் மனிதனுக்குப் பொருந்தாது” (ரூசோ, 1978).
ஆகவே இறுதிக்கட்டுப்பாடு பற்றிய தகுதிவிதி ஒரு தீர்மானத்துடன் இணைந்துள்ள முழுப் பிரச்சினைகள் பற்றியும் தீர்மானிக்கும் தகுதி பிரசைகளுக்கு இல்லை என்ற தீர்ப்பை வழங்கவில்லை. பின்வரும் விடயங்களைப் பொறுத்துப் பொதுமக்கள் தீர்மானம் மேற்கொள்ளும் தகுதியுடையவர்கள் என அது முன்மொழிகிறது.
(1) இணைந்த தீர்மானங்கள் தேவைப்படும் அல்லது தேவையற்ற
விடயங்கள்.
(2) அவற்றுள்ளே எந்தவிடயங்களைப் பற்றிப் பொதுமக்கள்
தீர்மானிக்கலாம்.
(8) எந்த அடிப்படையில் பொதுமக்கள் அதிகாரத்தை ஒப்படைக்கலாம்.
தகுதிவிதி பொருத்தமானது என்பதை ஏற்றுக்கொள்ளத் தமது தகுதி மற்றும் எல்லைகள் பற்றிய தீர்ப்புகளை வழங்க மக்களே சிறந்தவர் என்பதை ஏற்க வேண்டும். இதன் மூலம், சிலவிடயங்கள் பொதுமக்களுக்கு எட்டாத நிலையில் வைக்கப்பட வேண்டும் எனக் கூறலாம். (பொதுமக்கள் அத்தகைய விடயங்களில் ஈடுபடுதல் தடுக்கப்பட வேண்டும்) இத்தகைய விடயங்கள் பற்றிய தீர்ப்பை எடுக்கத் தகுதியற்றவர் எனவும் கூறலாம்.
51

Page 29
அதிகாரப்பகிர்வு என்பது, அதிகாரத்தை மாற்றி விடும் செயல்முறை அது மக்களால் மீளப் பெறப்பட வேண்டும் என நான் கருதுகிறேன். செயற்பாட்டு ரீதியாக, அதிகாரப் பகிர்வு மற்றும் பராதீனப்படுத்தல் ஆகியவற்றுக் கிடையேயுள்ள எல்லைகள் எப்பொழுதும் நிச்சயமானவையாக இருப்பதில்லை. மேலும் இறுதிச் செயற்பாடு, சனநாயக செயல்முறைக்கு அப்பாலுள்ள சில தலைவர்களால் மறைமுகமாக கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை தீர்மானிப்பதில் உள்ள நடைமுறைப் பிரச்சினைகளும் உள்ளன. (முன்னர் கொடுத்த உதாரணத்திலுள்ள இராணுவத்தினர் போல) இவை கட்டுப்பாட்டின் ஒழிவுமறைவான இயல்பினால் சிக்கலடைந்துள்ளன. ஆயினும் இவற்றை நடைமுறையில் கொண்டுவருவதும் கடினமானது. அதிகாரப்பகிர்வுக்கும் பராதீனப்படுத்தலுக்கும் இடையேயுள்ள கொள்கை வேறுபாடு முக்கியமானதல்ல. முழுமையான சனநாயக செயற்பாடு கொண்ட ஒர்அமைப்பில், அதிகாரப் பகிர்வு பற்றிய தீர்மானத்தை சனநாயக நடைமுறைகளுக்கு ஏற்பவே எடுக்க வேண்டும். ஆனால், இறுதிச் செயற்பாடுகளின் மீதான கட்டுப்பாடுகள், இறுதிக்கட்டுப்பாடு பற்றிய தகுதிவிதியை தெளிவாக மீறும் (சனநாயக செயல்முறைக்கு அப்பாலுள்ள தலைவர்களின் பொருத்தப்பாடு) அத்துடன் மக்களிடையே காணப்படும் சமமான தகுதிபற்றிய நிலைமைகளுடன் தீர்ப்பு முரண்பட்டிருக்கும்.
இறுதிக் கட்டுபாடு பற்றிய தகுதிவிதி மக்களைப் பொறுத்தவரையில், முழுமையான சனநாயக செயல்முறைக்கான தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. சகல உறுப்பினரும் சம தகுதியுடையவர் என தீர்மானிக்கப்பட்டால், மற்றும் முன்னர் எடுத்துக் கூறப்பட்ட ஏனைய நிபந்தனைகள் அவர்களிடையே காணப்படுகின்றன எனின் இத்தகைய நடைமுறைகளுக்கு ஏற்ப மக்கள், பிரசைகள் நான்கு தகுதிவிதிகளுக்கு இயைய மதிப்பிட வேண்டிய கூட்டுத் தீர்மானங்களை மேற்கொள்வர் எனக் கூறலாம்.
5. சம சந்தர்ப்பம் ஏன்?
பிரசைகள் அல்லது மக்கள் குறிப்பிட்ட வழியிலே செயற்படுவதற்கு போதியளவு சமசந்தர்ப்பம் அவசியமெனத் தகுதிவிதிகள் குறிப்பிடுகின்றன. இந்த ஒழுங்கிற்கு இரு வகையான எதிர்ப்புகள் உடனடியாக உருவாகும். முதலாவதாக "சம சந்தர்ப்பங்கள்” முறைசார் அல்லது சட்டரீதியான வேண்டுகோள் மட்டத்துக்குக் குறைக்கப்படலாம். அவை முக்கிய வேறுபாடுகளைக் கவனிக்கவில்லை. உதாரணமாக, P என்ற பிரசை வறியவன். R என்ற பிரசை செல்வந்தன். P யும் R உம் கூட்டுத் தீர்மானமொன்றை மேற்கொள்வதிலே பங்குகொள்ள "சம சந்தர்ப்பம்" உடையவர்கள். அவ்வாறு செய்வதற்கு இருவரும் சட்டரீதியாக உரித்துடையவர்கள். ஆனால் பணவசதி, தகவல், நிறுவனம், காலம்
52

மற்றும் ஏனைய அரசியல் வளங்கள் என்பவற்றைப் பயன்படுத்தும் வாய்ப்பு P யிலும் பார்க்க R க்குக் கூடுதலாக இருப்பதால் P யிலும் R கூடுதலாகப் பங்குபற்றும் சாத்தியக்கூறும் உண்டு. எனவே தீர்மானங்களில் R இன் செல்வாக்கு P யிலும் பார்க்கக் கூடுதலாக இருக்கும்
செல்வாக்கு என்பது வளத்தின் ஒரு தொழிற்பாடு என்ற வழக்கமான உண்மையின் அடிப்படையிலும் மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் வளங்களும் சமமாகப் பகிரப்படவில்லை. இது விடயத்தைத் தவறவிட்டுள்ளது. "சமசந்தர்ப்பம்” என்பதன் பொருள் “சம சந்தர்ப்பமே”. ஆனால் உதாரணத்தின் மூலம் காட்டப்படுவது என்னவெனில், P இனதும் R இனதும் பங்குகொள்ளும் சந்தர்ப்பங்கள் சமமற்றவை எனத் தீர்மானிக்கப்பட்டவை. ஆகவே சம சந்தர்ப்பம் என்ற கருத்துக்கான விளக்கம் எப்பொழுதும் பலவீனமானதாக உள்ளது. அதன் பொருளை முழுமையானதாகப் பார்க்கும் பொழுது, அது அசாதாரணமாகக் கோருவது என்னவெனில், சனநாயகச் செயல்முறைகளுக்கான தகுதிவிதிகள், சனநாயக அரசுகள் பலவற்றில் இருக்கும் நடவடிக்கைகள் பலவற்றை நிறுவனமயப்படுத்த மக்கள் ஈடுபாடுகாட்ட வேண்டும் என்பதாகும்.
இரண்டாவது மறுப்பும் இவ்வாறனதே அவசியமான சிலவற்றைச் செய்வதற்கான சந்தர்ப்பம் என்பது, செய்யக் கூடாததைத் தெரிவு செய்தலைக் கருதலாம். சனநாயக செயல்முறை விரும்பத் தகுந்தது எனில், தகுதிவிதிகள் கடமைகளையும், சந்தர்ப்பங்களையும் குறிப்பிடவேண்டியது அவசியமில்லை. பிரசைகளின் கடமைகளானது, பங்குகொள்ளல், வாக்களித்தல், தகவலை அறிந்திருத்தல் என்பனவாகும். பொதுமக்களின் கடமை, நிகழ்ச்சிநிரல் எவ்வாறு தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதாகும்? சனநாயக செயல்முறைகள் இத்தகைய கடமைகளைக் கருதவில்லை. அவை ஒழுக்கம் சார்ந்த கடமைகளாகும். அவை கட்டுப்பாடுகள் உரிமைகள் மற்றும் சந்தர்ப்பங்கள் என்பவற்றுக்கு மத்தியிலேயே இடம் பெறுகின்றன. அவை பிரசைகளைச் சனநாயக ஒழுங்குக்கு முரணாக நிற்கச் செய்யும். சனநாயக செயல்முறைத் தகுதிவிதிகளால் எடுத்துக் காட்டப்பட்ட அரசியல் கடப்பாடுகளை நிறைவுசெய்ய வேண்டியதில்லை எனக் கூறினால் அது எப்பொழுதும் தவறாகாது. இவை தனிப்பட்ட சுதந்திரம், சுயதீர்மானத்துக்கான சுதந்திரம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த சுதந்திரம் என்பவற்றுடன் அடங்குகின்றன. இவை ஒரு பிரசை எவ்வாறு தமது அரசியல் சார்ந்த கடப்பாடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்குரிய தெரிவுகளை மேற்கொள்ளச் சுதந்திரம் உண்டு என உறுதி செய்ய வேண்டும்.
53

Page 30
6. கோட்பாட்டில் உள்ள பிரச்சினைகள்
சனநாயக செயல்முறைக் கொள்கைபற்றி இங்கு விபரிக்கப்பட்டவை போதுமானவை. ஆயினும் அடிப்படையில் அவை பூரணமற்றவை. கொள்கையின் முக்கிய எடுகோள்களில் பல, எவ்வித பரிசீலனைக்கும் உட்படாமல் ஏற்றுக்கொள்ளப்படலாம் எனினும் அது விவாதத்துக் குரியது. கொள்கையின் சிக்கல்களும் தெளிவற்றவை. முக்கியமான சிக்கல்கள் ஒன்றுடனொன்று போட்டியிடுகின்றதுடன் வாதிடவும் படுகின்றன.
சனநாயகச் செயல்முறை பற்றிய கொள்கைகளில் மிக முக்கியமான பிரச்சினைகளே இங்கு எடுக்கப்பட்டுள்ள்ன. இத்தகைய பிரச்சினைகள் பலவற்றுள் திட்டவட்டமான முடிவுகள் இல்லாவிட்டாலும், தற்பொழுது சாத்தியமாகக் கூடிய ஏற்றுக்கொள்ளத்தக்க முடிவுகளை எடுக்க முயற்சிக்கலாம். அவையாவன:
(1) வலிமைமிக்க சமத்துவக் கோட்பாட்டுக்கான வாதம் முடிவுகளுக்கு ஆதரவு நல்குவது போல, சட்டத்துக்கு உட்படும் ஒவ்வொருவரும் மக்கள் என்றவகையில் அடக்கப்பட வேண்டும். ஒவ்வொருவரும்? என்பது பொருந்தாது. உதாரணமாக தனிப்பட்ட சுதந்திரம் என்பது சிறுவர்களன்றி வளர்ந்தோருக்கே பொருந்தும். ஏதென்ஸ்நாட்டு சனநாயக ஆட்சி மக்கள் என்ற வகையில் வளர்ந்தோரில் சிறுபான்மையினரை மட்டும் அடக்கியிருந்தது. கடந்த நூற்றாண்டில் பெரும்பாலான சனநாயக ஆட்சிகள் பெண்களின் வாக்குரிமை நீக்கப்பட வேண்டும் என்பதால் மக்களிலிருந்து பெண்கள் தவிர்க்கப்பட்டிருந்தனர்.
பெரும்பாலான நாடுகளில் இந்நூற்றாண்டிலேயே பெண்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர். இன்னும் சில நாடுகளில் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரே இது கிடைத்துள்ளது. உண்மையிலேயே, இந்நூற்றாண்டு வரையில், சனநாயகக் கொள்கைகளும் நடைமுறைகளும் வளர்ந்தோர் எல்லோரும் உரிமையென்ற அடிப்படையில் மக்களாகக் கருதப்பட வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டதா? மக்களில் அடக்கப்பட வேண்டியவர் யார் எனில் ஒரு தீர்ப்பாகுமா? அதற்குப் பொதுவான தீர்ப்புச் சாத்தியமாகாது என வரலாறும் கலாசாரமும் பக்கச்சார்பான மற்றும் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளன. சனநாயகக் கொள்கையும் நடைமுறையும் இத்தகைய முடிவுக்குத் தொடர்ந்து ஆதரவு நல்கினாலும், அது தவறானது.
(2) சனநாயக செயல்முறைக்கான தகுதிவிதிகள் இங்கு விபரிக்கப்பட்டது போன்று தீர்மான ஆட்சி எதனையும் குறிப்பிடவில்லை.
54

(3)
(4)
வரலாற்றுரீதியாக, சனநாயக செயல்முறைக்கு பொருத்தமான தீர்மான ஆட்சி என வழக்கமாக விபரிக்கப்படுவது பெரும்பான்மை ஆட்சியாகும். ஆயினும் “பெரும்பான்மை’ என்னும் சொல், தனியான, நன்கு வரையறை செய்யப்பட்ட தீர்மான ஆட்சியைக் கருதவில்லை. இது இயல்தகு சட்டத்தொகுதியையே குறிக்கும். பெரும்பான்மை வாக்குகளைப் பெறுமொன்று மாற்றாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற முறையில் சட்டத்திலிருந்து விலகியுள்ளது. இந்தத் தொகை 50 சதவீதத்திலும் குறைவாக இருந்தாலுங் கூட, ஏனையவற்றுக்கு 50 சதவீதமும் மேலும் ஒன்றும் தேவை. இவ்வாறான எண்சார்ந்த விதிகள் யாவும் உள்ளார்ந்த பாதிப்புக்களைக் கொண்டிருக்கின்றன. இத்தகைய வட்டத் தன்மையில் பெரும்பான்மை விருப்பங்கள் நிச்சயமாக உருவாக்கப்பட முடியாது. இத்தகைய பிரச்சினைகள் தீர்க்கப் பட்டாலும் கூட, யாதாயினும் பெரும்பான்மைக் கோட்பாட்டை
ஏற்க வேண்டியது ஏன்? என்ற வினா எஞ்சியிருக்கும்.
சாதாரண பிரசையொருவர் தேவையான அறிவு மற்றும் நல்லொழுக்கம் என்பவற்றில் குன்றியிருப்பதன் காரணமாக, எந்தவொரு செயலின் மூலமும் பொதுநன்மைகளை அடைதல் சாத்தியமாகாதுஎனக் கூறுகின்றது. ஆயினும் சனநாயக ஆட்சியை ஆதரிப்போர், பொது நன்மைகளை அடையவென உறுதிப்படுத்தும் செயல்முறைகள் போதியனவல்ல என வாதிடுகின்றனர். (பொது விருப்பு, எல்லோருக்கும் நன்மை முதலியன). தற்சார்பு சனநாயகம் என்பதனால் சிலசமயங்களில் கருதப்படுவது யாதெனில், தீர்மானங்கள் பெறப்பட்ட வழிமுறையிலும் பார்க்க, தீர்மானங்களின் தற்சார்பு விளைவுகளான நேர்மை அல்லது சரியானதன்மைக்கு முன்னுரிமை வழங்குதலாகும். ஒரு சொல்சார் வெளிப்பாட்டில், தற்காப்பு, நேர்மை நடைமுறைசார்ந்த நேர்மைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் நடைமுறை உரிமைகள் மீது தற்சார்பு உரிமைகள் முன்னுரிமை செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது. முன்னுரிமை பற்றிய இப்பிரச்சினையில் விவகாரங்களைத் தெரிந்தெடுத்தல் சற்றுத் தந்திரமானது.
சனநாயக செயல்முறை ஒரு வழிமுறையாக இருந்தால், அதன்
மூலம் மக்கள் தொகுதியினர் சிலர் ஆளப்படுவதைக் குறிக்கும். சனநாயக செயல்முறைகளைக் கவனிக்கப் பொருத்தமான மக்கள் தொகுதியைக் கொண்டிருப்பது என்ன? யாதாயினுமொரு மக்கள் தொகுதியினர் சனநாயக செயல்முறைகளுக்கு உரித்துடையவரா? சுருங்கக் கூறின், சனநாயகம் என்பது மக்களாட்சியாக இருந்தால், மக்கள் என்பதனால் குறிக்கப்படுவது யாது? சனநாயகக் கொள்கைகள் நடைமுறைகள் பற்றி ஒருவர் அறியாமையில் வினாவைத் தொடுப்பதிலும் பார்க்க, கூடியளவு இடைத்தாக்கம்
55

Page 31
(5)
(6)
உடையவராக இருந்தால் முழுமையான ஆட்சியில் எவ்வித பிரச்சினைகளும் இல்லாமலிருக்கலாம்.
தீர்மான ஆட்சி பற்றிய பிரச்சினை எடுத்துக் காட்டுவது போல, சனநாயக செயல் முறை உண்மையுலகில் எப்படியோ மெய்யாக்கப்பட வேண்டும். உண்மையான நடைமுறைகள், நிறுவனங்கள், கூட்டுகள், அரசுகள் மற்றும் அவை போன்றவை. மேற்குலகின் சனநாயக ஆட்சியின் நீண்ட கால வரலாற்றில் சனநாயகக் கருத்துக்கள் புதிய இரண்டு வெவ்வேறு வகையான அரசியல் முறைமைகளுக்குப் பிரயோகிக்கப்பட்டன. (நகர அரசு, நாட்டு அரசு) இவை அளவில் வித்தியாசமானவை. இவை வெவ்வேறான அரசியல் நிறுவனங்களை விருத்தி செய்தன. அவ்வாறாயின் சனநாயக செயல்முறைகளுக்கு தனித்தன்மை வாய்ந்த நிறுவனத்தொகுதி அவசியமானது எனக் குறிப்பிடலாமா? அல்லது நிறுவனரீதியான தேவைகள் சமுதாயத்தின் அளவுக்கேற்ப அல்லது காரணிகளுக்கேற்ப வேறுபடுமா?
தவிர்க்க முடியாதவாறு சனநாயகக் கருத்துக்களை உண்மையுலகுக்கு எப்பொழுதாவது பிரயோகிக்கும்பொழுது உண்மையான சனநாயக ஆட்சி அதன் கருத்தியல் நிலையிலிருந்து குறிப்பிட்டளவில் குறைந்தே காணப்படும். உதாரணமாக ஏற்கனவே உருவாக்கப்பட்ட சனநாயகச் செயல்முறைக்கான தகுதிவிதிகளை முழுமையாக அடைய முடியாது; அதனை அடைவது சாத்திய முமல்ல. ஆகவே ஓரளவு திருப்தியடையக் கூடிய பருமட்டான நிலையை (போதியளவு திருப்தி) அடைந்தால் நியாயமான அளவில் சனநாயகம் ஓர் உண்மையான அமைப்பாகக் கருதப்படும். சனநாயகத்துக்கான அடிப்படை எல்லை பற்றிய பிரச்சினை சொல் சார்ந்த விடயமாகும். உதாரணமாக நாம் சனநாயக அரசாங்க மொன்றைப் பின்பற்றும் கடப்பாடுடையவர்களாக இருந்தால் அக்கடப்பாடு பற்றிய தீர்ப்புக்கு வர அடிப்படை எல்லை இன்றியமையாதது எனலாம்.
சனநாயக ஆட்சியின் தொடக்கநிலை பல புதிய நாடுகளால் அடையப்பட்டுள்ளன. அரசியல் நிறுவனத் தொகுதிகள் சில, இதற்குச் சான்றாக உள்ளன. இவையாவும் ஒன்று சேர்ந்து, இந்நாடுகளின் அரசியல் முறைமைகளை சகல சனநாயக ஆட்சிகள், 18 ஆம் நூற்றாண்டுக்கு முந்திய குடியரசுகள் மற்றும் தற்கால உலகின் சனநாயகம்சாரா ஆட்சிமுறை யாவற்றிலுமிருந்து தம்மை வேறுபடுத்துகின்றன. அவர்களின் ஆட்சி முறைமையை அரசியல், நிறுவன, ஒழுக்கரீதியாக வேறுபடுத்தலாம். இவ்வாட்சி பலராட்சி (Polyarchy)எனப்படும். ஒருநாட்டில் பலராட்சிதோன்றுவதற்கும், அது தொடர்ந்து நிலவுவதற்கும் உரிய நிபந்தனைகள் எவை -
56

(7)
(8)
(9)
மறுதலையாக, என்ன நிலைமைகள் காணப்படாததினால் இந்த நவீன சனநாயகத்தின் உள்ளார்ந்த தன்மையை அடையும்
முயற்சிகளில் குறைவு காணப்படுகின்றது.
பலராட்சியின் மூலம் தொடக்கநிலை அடையப்பட்டாலும் அது சனநாயக ஆட்சியின் கருத்துநிலையிலிருந்து குறைவுபடும் பொழுது, சனநாயக ஆட்சிக்கும் பலராட்சிக்கும் இடையேயுள்ள இடைவெளியைக் குறைத்தல் சாத்தியமாகுமா? அவ்வாறு சாத்தியமாயின் அது விரும்பத்தகுந்ததாக இருக்குமா? சனநாய கத்துக்கான வழியிலே இன்னொரு தொடக்கநிலை உருவாக்கப் படலாமா? சனநாயக சிந்தனையில் உருவான கற்பனைக் கோட்பாடு (Utopianism) பற்றிய சக்திவாய்ந்த கருத்து இதற்கு ஆம் என விடையளிக்கத் தூண்டுதலளிக்கிறது. ஆயினும் இதற்கு முரணான கருத்தும் நவீன சிந்தனையில் உண்டு. இத்தகைய ஆட்சிமுறை சிலராட்சி (Oligarchy) எனப்படும். இது சனநாயகமயப் படுத்தலுக்கான சாத்தியக் கூறுகளை மேலும் கட்டுப்படுத்துகிறது.
சனநாயக செயல்முறைகளை நாட்டு அரசுக்குப் பிரயோகிக்கும் முயற்சியின் விளைவாக, சனநாயக ஆட்சியின் அளவுத்திட்டத்தில் மாறுதல்கள் ஏற்பட்டன. இவை சனநாயக நாடுகளின் அரசியல் வாழ்க்கையைத் தனியார் மற்றும் குழுக்கள் மத்தியில் காணப்படும் கருத்துக்களிலும் இலக்குகளிலும் முரண்பாடுகளுடன் கூடிய போட்டியை உருவாக்கியது. அவ்வாறாயின் அரசியல் ஒழுக்கம், பொதுநன்மை என்ற பழைய கருத்தின் விதி என்ன?
இறுதியாக, இந்நிலையற்ற உலகில் கட்டுப்பாடுகளும் சாத்தியக் கூறுகளும் அடிக்கடி மாறிச் செல்கின்றன. சனநாயகத்தின் நிலையிடமாக விளங்கிய நகர அரசுகளை, தேச அரசுகள் ஒதுக்கி, வைத்துள்ள வேளையில் , சனநாயக மயப்படுத்தலின் கட்டுப்பாடுகள், சாத்தியக் கூறுகள் பற்றி கூறக்கூடியவை என்ன? மற்றும் சனநாயக அரசாங்கங்கள் அல்லாதவற்றின் தற்போதைய நிலையென்ன? அவை தொடர்ந்தும் உலகின் பல நாடுகளிலும் நிலைபெற முடியுமா? சனநாயக ஆட்சி நிலவாத அரசியலமைப்புகளை நாம் எவ்வாறு கருதலாம் . அவை பலராட்சியின் தொடக்கநிலைகளைக் கூட அடைந்துவிடவில்லை.
米米米米米
57

Page 32
I
பெரும்பான்மை ஆட்சியும் சனநாயகச்
செயல்முறையும்
சனநாயகச் செயல்முறைக் கொள்கைகளுக்கு ஏற்ப கூட்டாகத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் என்ன விதி பின்பற்றப்பட வேண்டும், அவை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற பிரச்சினையையும் ஏனையவற்றையும் இங்கு எடுத்துக்காட்டலாம்.
1.
சனநாயக செயல்முறையானது பெரும்பான்மைக் கோட்பாட்டைப் பரவலாகப் பயன்படுத்துகிறதா? புகழ்வாய்ந்த குடியரசுகளை அல்லது சனநாயக அரசுகளை ஆதரிப்பவர்கள் பெரும்பான்மை ஆட்சியைப் பாதுகாத்துள்ளனர். லொக்கும் (locke), ரூசோவும் (RouSSeau) ஒப்பந்தக் காலத்தில் இதனை ஏகமானதாக விபரித்துள்ளார்கள். அதற்கிணங்க அரசு உருவாக்கப்பட்டு பெரும்பான்மையாட்சியும் நிலவியது. தற்கால எழுத்தாளர்கள் (சனநாயக ஆட்சியை விமர்சிப்போரும், ஆதரிப்போரும்) சனநாயக ஆட்சியென்பதன் பொருள் அல்லது அதற்குத் தேவையானது பெரும்பான்மை ஆட்சியே என்கின்றனர். (உதாரணம்; ஸ்பிற்ஸ் 1984).
உண்மையிலே, சனநாயக ஆட்சியானது பலவீனமுற்ற நிலையில் பெரும்பான்மை ஆட்சியை வேண்டிநிற்கிறது என ஒவ்வொருவரும் கருதினாலும், அப்பெரும்பான்மை ஒரு சட்டத்தை ஏற்றுக்கொள்ள அவசியமானது எனலாம். ஆனால், பெரும்பான்மை ஆட்சியின் சாதாரண ஆதரவாளர்கள் அதனைச் சற்றுப் பலம்வாய்ந்த பொருளில் எடுத்தாள்கின்றனர், இந்நிலையில் பெரும்பான்மை ஆட்சி என்பதன் பொருள் பெரும்பான்மையினர் ஆதரவு இருந்தால் மட்டும் போதாது, அது ஒரு சட்டத்தை இயற்றப் போதுமான தாகவும் இருத்தல் வேண்டும். இத்தகைய பலம்வாய்ந்த பொருளில் பெரும்பான்மையாட்சி பல சிக்கலான பிரச்சினைகளை எதிர்நோக்கினாலும் அவற்றுக்குப் பூரண திருப்திதரும் தீர்வுகள் இன்னும் காணப்படவில்லை.
பலம்வாய்ந்த கருத்தில் பெரும்பான்மை ஆட்சி திருப்திகரமாக இல்லாவிட்டால், அதற்குத் தெளிவான மீயுயர் மாற்று வழி ஒன்று
உள்ளதா? சகல கூட்டுத் தீர்மானங்களுக்கும் தேவையான ஒரு
58

சாத்தியக்கூற்றையே லொக்கும் ரூசோவும் அவசியமெனக் கருதினர். அதுவே கருத்து வேறுபாடின்மையாகும். கடுமையான பெரும்பான்மை ஆட்சிக்கும் கருத்து வேறுபாடின்மைக்குமிடையே முடிவில்லாத சாத்தியக் கூறுகள் பல உள்ளன. (மூன்றில் இரண்டு, நான்கில் மூன்று பங்கு). ஆயினும் எதிர்பாராத விதமாக கடுமையான பெரும்பான்மையாட்சிக்கான சகல மாற்றுவழிகளும் கடும் எதிர்ப்புக்குள்ளாயின.
3. பூரண திருப்திவாய்ந்த ஆட்சியொன்று இல்லையாயின், சனநாயக ஆட்சிச் செயல்முறை சாத்திய மாகாதா? அவ்வாறாயின் , பெரும்பான்மை ஆட்சி மற்றும் அதற்கான மாற்றுவழிகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்று வழியொன்றுண்டா?
4. இறுதியாக, சனநாயக ஆட்சிக்கு ஆதரவு நல்குவோர் நடைமுறையில் மேற்கொள்ளும் சட்டம் என்ன? உதாரணமாக, அதனுடைய பிரச்சினைகளுக்குப் பெரும்பான்மையாட்சி தரமான தீர்வாக விளங்க முடியுமா?
பெரும்பான்மை ஆட்சி பற்றிய வலிமைமிக்க கருத்துகளை முன்வைப்பதன் மூலம் விடைகளைத் தேட முடியும் . அதன் பின்னர் பிரதான மறுப்புரைகளையும் மாற்றுவழிகளையும் கருத்தில் கொள்ளலாம்.
1. ஆரம்ப நிலைகள்
பெரும்பான்மைவாதி: சனநாயக ஆட்சிச் செயல்முறைகளுக்கு பெரும்பான்மை ஆட்சி அவசியம் என நான் ஏன் நம்புகிறேன் என எடுத்துக்காட்டுமுன், சில எடுகோள்கள் பற்றி விளக்க முற்படுகின்றேன். அவை தொடர்பான பிரச்சினைகள் எவையும் இல்லையென்றும் நான் நம்புகின்றேன். நன்கு வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் மக்கள் உள்ளனர் என எடுத்துக் கொள்வோம். அவர்கள் அரசியல் சமத்துவம் உடையவர்கள்; சனநாயகச் செயல் முறைகளில் ஈடுபாடுடையவர்கள். அவர்களுக்குக் கூட்டாகத் தீர்மானம் எடுக்க வேண்டிய தேவையுண்டு. இது வரையில் பிரச்சினைகள் ஏதுமுண்டா?
திறனாய்வாளன்: இல்லை. நீர் எடுகோள்களை மேற்கொண்டதனால், சனநாயகச் செயல்முறைகளை நியாயப்படுத்த அவற்றைப் பயன்படுத்தலாம்.
பெரும்பான்மைவாதி : அதனை நான் நன்கறிவேன். சனநாயகச் செயல் முறைக்குச் சில தீர்மான ஆட்சி அல்லது வித்தியாசமான பல ஆட்சிகள்
59

Page 33
அவசியம் என்னும் கருத்தில் நீர் உடன்படுவீர் என நான் நம்புகிறேன். தீர்மானம் மேற்கொள்ளல் இறுதிக் கட்டத்தையடையும் போதும், சகலதும் சம பலமுள்ள வாக்குகள் எனக் கணிக்கும் போதும், எத்தகைய மாற்றுவழி பின்பற்றப்பட வேண்டும் என எடுத்துக்காட்ட ஓர் ஆட்சி அவசியமாகும்.
திறனாய்வாளன்: நிச்சயமாக நீர் சொல்வது எனக்குப் புரிகிறது.
பெரும்பான்மைவாதி: சனநாயக ஆட்சிச் செயல்முறைகளில் ஈடுபாடுகாட்டும் மக்கள் மத்தியில் ஒரு பொருத்தமான தீர்மான ஆட்சியானது, அத்தகைய செயல் முறைகள் பற்றிய தகுதிவிதிகளையும் எடுகோள்களையும் கொண்டிருக்க வேண்டும் என்பதை நீர்
ஏற்றுக்கொள்கிறீர்.
திறனாய்வாளன்: ஆம்.
பெரும்பான்மைவாதி: எந்தவிதமான தீர்மான ஆட்சியை மேற் கொண்டாலும் அதனை வலியுறுத்துவது நியாயமானதாக இருக்குமா? அது தீர்மானிக்கப்பட வேண்டும். இங்கு தீர்மானம் என்பதனர் மூலம் நான் கருதுவது யாதெனில் , சில விளைவுகள் உறுதியாகத் தெரிவு செய்யப்படுகிறது என்பதாகும்.
திறனாய்வாளன்: தீர்மானங்களுக்கான தேவைகள் யாவும் எனக்கு நியாயமானவையாகத் தெரிகின்றன. ஒரு நல்ல தீர்மானவாட்சி நடை முறைப்படுத்தப்படக் கூடியது அல்லது இலகுவானது என நானும் எடுத்துக் கூறுகின்றேன்? அத்துடன் அவை பங்குபற்றுவோரால் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதாகவும் இருத்தல் வேண்டும்.
பெரும்பான்மைவாதி: சனநாயக ரீதியான தீர்மானங்களை மேற்கொள்வதற்குச் சிறந்த ஆட்சி எது என்ற எனது பிரச்சினைக்குள் நீரும் நுழைந்துள்ளிர் என்பதை நான் ஏற்கின்றேன். பலமான கருத்தினடிப்படையில் சிறந்த தீர்மான ஆட்சிக்கும் பெரும்பான்மை யாட்சியே நல்லது என நான் எடுத்துக்காட்ட விரும்பியுள்ளேன். உண்மையில் தீர்மான ஆட்சி மட்டுமே சனநாயக செயல்முறைகளுடன் பூரணமாக இணங்கிச் செல்கிறது.
திறனாய்வாளன்: உமது விளக்கங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
பெரும்பான்மைவாதி: நான் ஓர் அவதானத்துடன் ஆரம்பிக்கிறேன். அது
நீர் அழைப்பதுபோல "விளக்கமன்று"; ஆனால் கோட்பாட்டுக்குச் சில
ஆதரவைக் கொடுக்கிறது. சனநாயகச் செயல்முறையில் ஈடுபாடுகாட்டும்
எந்த மக்களும் பெரும்பான்மை ஆட்சிக்கு உணர்வுபூர்வமாக வேண்டுகோள்
விடுப்பர். அது ஏன் என விளக்குகிறேன். பங்குகொள்வோர்
60

ஒவ்வொருவரும் ஏனைய வரை அரசியல் பங்காளிகள் எனக் கருதுவாராயின், (எந்த ஒருவரும் ஏனையவரிலும் பார்க்க அரசியல்ரீதியாக முன்னுரிமையுள்ளவரல்லர் எனத் திடமாக அவர்கள் நம்புவாரெனில்) பெரும்பான்மையாட்சி பற்றிய நலிந்த விளக்கம் அவர்களின் விருப்பத்துக் குரியதாக இருக்கும். அவர்களிடையேயுள்ள சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் மீது செல்வாக்குச் செலுத்த இடமளிக்கக் கூடாது. ஆனால், முன்னுரையாகக் கூறப்பட்டவற்றை அவர்கள் ஏற்றுக் கொண்டால், வலிமையான விளக்கத்துக்குக் கட்டுப்பட்டவர்களாவர்.
திறனாய்வாளன்: நலிந்த விளக்கம் தர்க்கரீதியாக வலிமையான விளக்கத்தைக் குறிப்பாகச் சுட்டுவதில்லை ஏன்?
பெரும்பான்மைவாதி; ஏனில்லை? பெரும்பான்மையினர் மீது சிறுபான்மையினர் செல்வாக்குச் செலுத்த இடமளிப்பது தவறானால், சிறுபான்மையினர் பெரும்பான்மையினரைத் தடுப்பதும் தவறாகுமல்லவா! ஆகவே ஒரு பலம்வாய்ந்த விளக்கம் இல்லாவிட்டால் இதுவே நிகழும். ஒரு கணநேரம் இதனைச் சிந்தித்துப் பாருங்கள். ஒரு சிறுபான்மை, பெரும்பான்மையினர் தீர்மானத்தின் மீது எப்பொழுதும் வீட்டோ அதிகாரத்தைப் பிரயோகிக்குமானால், அதன்நடை முறைசார்ந்த விளைவு சிறுபான்மையினர் ஆட்சியாக இருக்கும் இல்லையா? சில குழுவின் உறுப்பினர்கள் ஒரு தடவை தம்மை அரசியல் சமத்துவமுடையவர்களாகக் காண்பார்களானால், அவர்கள் சனநாயகச் செயல் முறை மூலம் தம்மை ஆள முற்படுவர். அப்பொழுது பெரும்பான்மை ஆட்சியின் வலிமையான விளக்கம் மிகப்பொருத்தமானதாகவும், அதற்குரிய மாற்றுவழிகள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவும் காணப்படும். w
திறனாய்வாளன்: ஒருவேளை உங்களுடைய சூழ்நிலையில் இவை நம்பத்தகுந்தவையாக இருக்குமாயினும் அதனை நான் மிகக் கடுமையானதெனக் கருதவில்லை. இவற்றுக்குப் பல மாற்று நடவடிக்கைகளை என்னால் கூறமுடியும். அவை உமது வாதத்தைப் பயனற்றதாக்கிவிடும்.
பெரும்பான்மைவாதி: நான் எடுத்துக்கூறியது ஒரு கடுமையான விளக்கமல்ல எனவும் அறிவேன். ஆயினும் தம்மிடையே அரசியல் சமத்துவத்தைக் காணும் மக்கள் பெரும்பான்மை ஆட்சியை அனுபவிப்பர் என்பது எனக்குச் சாதகமாகவுள்ளது என்ற உள்ளுணர்வை வலியுறுத்தவே இதனை எடுத்துக்காட்டினேன். ஏனைய விடயங்களுக்கும் மத்தியில், ஏற்றுக்கொள்ளல் என்னும் பிரச்சினை பற்றி இது விளக்குகிறது. இதனையே சனநாயக ஆட்சிக்கு நல்லதொரு தகுதி விதியாக நீர் எடுத்துக் காட்டியுள்ளிர். இத்தகைய பொருத்தப்பாடு பற்றிய உள்ளுணர்வை நியாயமானதாகக் காட்டமுடியுமா என நீர் கேட்கின்றீர் என்பது எனக்கு விளங்குகிறது.
61

Page 34
திறனாய்வாளன்: உண்மையாக,
பெரும்பான்மைந்ேதி: இதற்கான விடை‘ஆம்’ என்பதே. நாம் நியாயமான பல எடுகோள்களை ஏற்றுக் கொள்கிறோம். உண்மையிலே, பெரும்பான்மை ஆட்சியை ஆகக் குறைந்தது நான்கு வித்தியாசமான வழியிலே நியாயமானதென நிரூபிக்கலாம்.
திறனாய்வாளன்: ஒன்று போதுமானது.
பெரும்பான்மைவாதி. அதனை நான் வரவேற்கிறேன். நான் மனதில் கொண்டிருக்கும் நான்கு நியாயங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான எடுகோள்களில் தங்கியிருக்கின்றன. அவை நான்கினையும் விளக்க விரும்புகிறேன்.
திறனாய்வாளன்: நல்லது. நீண்ட காலத்துக்கு முன்பு, மிகத்தெளிவான ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளனவென நான் கற்றுள்ளேன். ஒருவேளை என்னால் மறுக்கமுடியாத ஒன்றினை நீங்கள் எடுத்துக் காட்டலாம்.
பெரும்பான்மைவாதி: நானும் அவ்வாறே கருகிறேன். முதலாவதாக, ஒரு ஆரம்ப எடுகோளை ஏற்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். பெரும்பான்மை ஆட்சிக்கான எனது வாதங்களைத் தேடுவதில், கூட்டுத் தீர்மானத்துக்கான நிகழ்ச்சிநிரலில் உள்ள விடயங்களுக்கு மக்கள் நேரடியாக வாக்களிப்பர் என்ற எடுகோள்களுடன் ஆரம்பித்தல் வசதியாக இருக்கும். ஒவ்வொரு விடயத்திற்கும் இரண்டு மாற்று வழிகளே மக்கள் முன் உள்ளன என்பதை எடுகோளாகக் கொள்ள விரும்புகிறேன். தொடக்கத்தில் அத்தகைய எடுகோள்களுக்கு இடமளிப்பதன் மூலம் எமது வாதத்திற்குத் தடையாக இருக்கும் சில சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
திறனாய்வாளனர்: இரண்டு எடுகோள்களும், சனநாயக அரசியலின் உண்மை உலகை இலகுவாக எடுத்துக் காட்டுமாயினும் உண்மையுலகம் பற்றிய பிரச்சினையைக் குறைக்கும் எடுகோள்களை உருவாக்குவது பயனுடையது என நான் அறிகின்றேன். சில சந்தர்ப்பங்களில் நாம் உண்மையுலக அனுபவங்களுக்கும் திரும்ப வேண்டும் என வலியுறுத்துகிறேன். நீர் நன்கு அறிந்தது போல, உண்மையுலகில் இரண்டு நூற்றாண்டுகள் இடம்பெற்ற சனநாயக ஆட்சியானது பிரதிநிதித்துவ அரசாங்கங்களுக்கு சனநாயக செயல்முறைகளைப் பிரயோகிக்க முயன்றுள்ளது. உண்மையுலகின் வாக்காளர்களும் சட்டங்களை ஆக்குவோரும் இரண்டுக்கு மேற்பட்ட மாற்று வழிகள் இருக்குமிடங்களிலேயே அடிக்கடி பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
பெரும்பான்மைவாதி: நான் அதனை மறுக்கவில்லை. ஆயினும் சற்று எளிமையான முறையில் உண்மையுலகுடன் நாம் ஆரம்பித்தால் அவ்வாறான சிக்கல்களை புத்திசாலித்தனமாகக் கவனிக்கலாம்.
62

2. பெரும்பான்மை ஆட்சிக்கான நான்கு நியாயப்படுத்தல்கள்
(i) சுயநிர்ணயத்தை உச்சப்படுத்தல்
பெரும்பான்மைவாதி: பெரும்பான்மை ஆட்சியானது கூட்டுத் தீர்மானங்களில் மக்கள் பலரின் சுய-நிர்ணயப் பிரயோகத்தை உச்சநிலைக்குக் கொண்டு செல்லும். குறிப்பிட்ட அரசியல் தொகுதியின் எல்லைகளை நோக்கும்போது, சில விடயங்கள் பற்றிக் கூட்டுத் தீர்மானங்களை எடுக்கவேண்டிய தேவையும், பெரும்பான்மை ஆட்சியின் வலிமையான கோட்பாடுகளும் , பெருந்தொகையான பிரசைகள் தமக்கெனத் தேர்ந்தெடுத்த சட்டங்களின் கீழ் வாழலாம் என்பதை உறுதிசெய்கின்றன. குறைந்த ஒரு பெரும்பான்மையின் மூலம் ஒரு சட்டம் உருவாக்கப்பட்டால், அச் சட்டத்தைத் தெரிவு செய்தவர்கள் மாற்று வழிகளைத் தெரிவு செய்த பிரசைகள் தொகையிலும் குறைவாக இருக்கவேண்டும். அதுபோலவே, ஒரு சட்டத்தை மேற்கொள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பெரும்பான்மை தேவைப்படுமானால், (60 சதவீதம் எனக்கொள்வோம்) 40 சதவீதமான சிறுபான்மையினர், (சக ஒருவாக்கு) விருப்பத்துக்குரிய மாற்றுவழியை மேற்கொள்வதிலிருந்து 60 சதவீத பெரும்பான்மையினை (ஒரு வாக்குக் குறைய) தடைசெய்யலாம். இதன் விளைவாக சிறுபான்மையினர் விரும்பிய மாற்றுவழி பெரும்பான்மையினர் மீது திணிக்கப்படலாம்.
திறனாய்வாளனர்: உங்களுடைய வாதத்தினை நான் மறுக்கவில்லை. ஆனால் நானும் இரண்டு குறிப்புக்களைக் கூற விரும்புகிறேன். முதலாவது தற்பொழுது நீங்கள் முன்வைத்த நியாயவிளக்கமானது, சுயநிர்ணயத்தின் மூலம் தெரிவிக்கப்பட்ட சுதந்திரமான கூட்டுத் தீர்மானங்களில் மிகுதியாக இருக்க வேண்டும் என்னும் எடுகோளில் தங்கியுள்ளது. இத்தகைய வாதம் கூடியளவுக்குக் கருத்தியல் ரீதியானது. ஒரு மெய்யியலாளரைத் தவிர ஏனையோரால் இதனை அறிய முடியாது. பெரும்பான்மை ஆட்சியை விளங்கிக்கொண்டு ஏற்றுக்கொள்வதற்கு மக்கள், ரூசோவை அல்லது இம்மானுவல் கான்ரை விளங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது எனக் கூறுகிறீர்களா?
பெரும்பான்மைவாதி அவ்வாறில்லை. எனது நியாயவிளக்கம் கருத்தியல்ரீதியானதாகத் தெரிந்தாலும், பெரும்பான்மை ஆட்சியைப் பற்றிய மக்கள் சிந்தனை அவ்வாறேயுள்ளது. சாதாரண பிரசை ஒருவர் இன்னொரு பிரசைக்கு இவ்வாறு கூறுவர் என நான் இலகுவாகக் கற்பனை செய்து பார்க்க முடியும்.
இவ்விடயத்தில் நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும். எம்முள் சிலர் ஒரு
தெரிவை விரும்பமாட்டார். இன்னும் சிலர் மாற்றத்தை விரும்பமாட்டார்.
எம்மால் முடிந்தளவுக்கு எல்லோரும் ஏற்கக்கூடிய முடிவுக்கு வரவேண்டும். 63

Page 35
அல்லது அதில் தவறினால் எமக்கு முன் வைக்கப்பட்டுள்ள மாற்று வழி பற்றி ஒருமைபாட்டுக்கு வரவேண்டும். ஆகவே, இப்பொழுது எம்முன் வைக்கப்பட்டுள்ள இரண்டு மாற்று வழிகளிடையே தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும். தீர்மானம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் எங்களுள் சிலர் அதனை ஏற்கப் போவதில்லை; எப்படியாயினும் அதற்கு நாம் கட்டுப்பட்டாக வேண்டும். ஆகவே பெரும்பான்மையை அதன்வழியே விட்டுவிடலாம். பின்னர், நாம் விரும்பிய சட்டத்திலும் பார்க்கச் சிறுபான்மையினர் விரும்பிய சட்டத்தின் படியே எம்மில் பலர் வாழவேண்டும். இதுவே நாம் செய்ய வேண்டிய சரியான விடயம் இல்லையா?
திறனாய்வாளனர். இந்த வாதம் பலருக்கும் எவ்வாறு ஏற்புடையதாகும் எனக் காணலாம். ஆகவே எனது இரண்டாவது குறிப்பைக் கூற விரும்புகிறேன். எனது கருத்துப்பரிமாறலின் ஆரம்பத்தில், சில கூட்டுத்தீர்மானங்கள் அவசியமாக இருந்தன; அக் கூட்டுக்கான எல்லைகள் நிரந்தரமானவை எனக் கருதியமைக்கு நான் உடன்படுகிறேன். அந்த எடுகோள்கள் ஒவ்வொன்றும், எல்லைப் பிரச்சினையென அழைக்கப் 'படுவனவற்றுடன் மறைத்து வைக்கப்படலாம். ஆகவே கூட்டுத் தீர்மானங்கள் பற்றிய எடுகோள், கூட்டுத்தீர்மானங்கள் தேவைப்படும் விடயங்களுக்கும், அது தேவையற்ற விடயங்களுக்குமிடையே ஓர் எல்லையை முன்மொழிகின்றது. கூட்டுக்கான எல்லைகள் நிரந்தரமானவை என்ற எடுகோள் பல்வேறு எல்லைகள் கொண்ட கூட்டு அலகை மறுக்கின்றது. (சிறிய, கூடியளவுக்கு உள்ளூர்மயமானவை ஒரேவகை யானவை எனக் கூறலாம். அல்லது பாரிய, பல்வேறு தன்மைகொண்டதாக
இருத்தல் நல்லதாக அமையும்.)
பெரும்பான்மைவாதி: சனநாயகக் கொள்கை மற்றும் நடைமுறைகள் பற்றிய பிரச்சினைகளை ஒரேநேரத்தில் கவனத்திற்கொண்டால், நாம் மற்றைய அம்சங்களைக் கவனத்திற்கொள்ள முடியாது. இவ் எல்லை பற்றிய பிரச்சினையைப் பின்னர் எடுத்துக்கொள்ள முடியாதா?
திறனாய்வாளனர்: நானும் அவ்வாறே விரும்புகிறேன்.
பெரும்பான்மைவாதி. அதேவேளையில், ஒரு சங்கத்தின் உறுப்பினர், தமது முடிவை அடைவதற்குக் கூட்டுத் தீர்மானம் தேவையானால், ஒரு சனநாயக அலகுக்கான எல்லையை உள்ளது போல எடுத்துக் கொண்டால் அதனை நீர் ஏற்றுக்கொள்வீரா அல்லது இல்லையா? அப்பொழுது பெரும்பான்மை ஆட்சிக்கு உயர்மட்டச் சுயநிர்ணயம் தேவைப்படுகிறது.
திறனாய்வாளனர்: ஆம், நான் தற்பொழுது எனது விடயத்தை விட்டு, பின்னர் அதற்கு வரவிரும்புகிறேன்.
64

பெரும்பான்மைவாதி; உமது விரும்பம் போல செய்யலாம். ஆனால் நீர் முன் வைத்த பிரச்சினைகளைப் பெரும்பான்மை ஆட்சிப் பிரச்சினைகளிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.
திறனாய்வாளனர்: ஒருவேளை, நான் இப்பிரச்சினைகள் ஒன்றையொன்று சார்ந்தவையெனக் காண்கிறேன். இது நீங்கள் செய்வதிலும் பார்க்கக் கூடுதலாக இருக்கலாம்.
(i) நியாயமான கோரிக்கைகளின் அவசிய விளைவான
பெரும்பான்மை ஆட்சி.
பெரும்பான்மைவாதி: எனது இரண்டாவது நியாய விளக்கம் முதலாவதுடன் ஒரளவுக்கு ஒத்துச்செல்கிறது. ஆனால் அவ் வாதம் சற்று விரிவானதும் கடுமையானதுமாகும். மேலோட்டமாகக் கூறினால், ஒரு சனநாயக அமைப்பில், தீர்மான ஆட்சியை அமைக்க விரும்பின் அந்த நான்கு தகுதிவிதிகளையும் நீர் ஏற்றுக்கொணர்டால், தர்க்கரீதியாக பெரும்பான்மை ஆட்சிக்கோட்பாட்டுக்கும் நீர் உடன்படுகின்றீர். அத்துடன் அக்கோட்பாடு மட்டும், அத்தகைய தகுதிவிதிகளைத் திருப்திசெய்ய முடியும். இதனை மிக இலகுவான, நேரான மற்றும் கடுமையான முறையில் கென்னத் மே (Kunneth May) என்னும் கணிதவியலாளன் 1952 இல் விளக்கியுள்ளார். நான் அவருடைய வாதத்தைச் சுருக்கமாகக் கூற விரும்புகிறேன்.
திறனாய்வாளனர்: தயவுசெய்து கூறுங்கள்.
பெரும்பான்மைவாதி: முதலாவதாக, சனநாயக அடிப்படையிலான தீர்மான ஆட்சி தீர்மானிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும் என நாம் முன்னர் ஏற்றுக் கொண்டுள்ளோம். பொதுமக்கள் இரண்டு மாற்றுவழிகளுக்கு உட்பட நேர்ந்தால், அவை X உம் Y உம் என - இத் தீர்மான ஆட்சியானது மூன்றில் ஒரு விளைவுக்கு நிச்சயமாக வழிகோலும். ஒன்றில் X தெரிவு செய்யப்படலாம் அல்லதுY தெரிவு செய்யப்படலாம். அல்லது இரண்டும் தெரிவு செய்யப்படாமல் விடப்படலாம். இரண்டாவதாக ஒரு சனநாயக அடிப்படையிலான தீர்மான ஆட்சி, ஒரு வாக்காளரைவிடஇன்னொருவருக்குச்சலுகை வழங்கக்கூடாது. இதனைப் பெயர் மறைவு நிலைக்கான (Anonymity) வேண்டுகோள் என அழைக்கலாம். இதன் விளைவு குறிப்பிட்ட ஒரு மனிதனின் சார்பிலோ அல்லது மாற்று வழியை எதிர்ப்பதிலோ தங்கியிருக்கக் கூடாது.
திறனாய்வாளனர்:பெயர் மறைவுநிலை என அவர் அழைப்பதும் சனநாயக செயல்முறையின் தகுதிவிதியொன்றினால் எடுத்துக் காட்டப்படுகிறது.
65

Page 36
(வாக்களிப்புச் சமத்துவம்) - இது பூரணத்துவம் மிக்க நியாயமான எடுகோளாகும்; மூன்றாவது வேண்டுகோள்?
பெரும்பான்மைவாதி. மாற்று வழிமுறைகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் வாக்களிப்பு நடை முறைகளும் நடுநிலையானதாக இருத்தல் வேண்டும். அதாவது, ஒரு மாற்றுவழியிலும் பார்க்க இன்னொரு மாற்றுவழிக்குச் சாதகமாக அல்லது பாதமாக இருக்கக் கூடாது. நிகழ்ச்சிநிரலில் இரண்டு மாற்று வழிகள் இருந்தால் (A யும், B யும்) தீர்மான ஆட்சி இவற்றுள் எதற்கும் பக்கச்சார்பாக நடந்துகொள்ளக் கூடாது. உதாரணமாக Aபுதிய கொள்கையொன்றை மேற்கொள்வதற்கான பிரேரணையாகவும்;B அங்கு ஏற்கனவேயுள்ள கொள்கை எனவும் எடுத்துக் கொள்வோம். இதற்கான மாற்றுவழி முறையென்னவெனில், நடைமுறையிலுள்ளதை சில வழிகளிலே மாற்றுதல் அல்லது அதனைப் பேணல் என இருக்கும். தீர்மான ஆட்சியானது உத்தேச மாற்றத்துக்கோ அல்லது நடைமுறையில் உள்ளதற்கோ சாதக நிலைமைகளை உருவாக்கக் கூடாது என
நடுவுநிலமை எதிர்பார்க்கிறது.
திறனாய்வாளன்: நடைமுறையில் உள்ளவற்றிக்குச் சாதகமான தன்மை காட்டப்பட வேண்டும் எனக் கூறுகிறது.
பெரும்பான்மைவாதி. நடை முறையிலுள்ளவற்றுக்குப் பல உள்ளீடான சாதக நிலைமைகள் உள்ளன. அதற்குப் பக்கச்சார்பான தீர்மான ஆட்சியின் மேலதிக சாதகத்தன்மை அவசியமில்லை. இருப்பினும் அக்கருத்து மிக முக்கியமானது. அதனைப்பற்றித் தொடர்ந்து கூற விரும்புகிறேன். பிள்ளைகள் சுரங்கங்களிலும் தொழிற்சாலைகளிலும் வேலைசெய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது ஒரு காலத்தில் எல்லா நாடுகளிலும் முக்கிய விடயமாகப் பேசப்பட்டு, இப்பொழுது சனநாயகரீதியாக மாறியுள்ளது. அவ்வாறு வேலை செய்ய அனுமதிக்கப்படும்போது, வறுமையே அதனைச் செய்யத் துரண்டுகிறது. சுரங்கங்களிலும் தொழிற்சாலைகளிலும் பிள்ளைகள் வேலை செய்வதைத் தடுப்பதற்குச் சார்பாக அல்லது எதிராக வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் எனச் சர்வசன வாக்கெடுப்பு கோரப்பட்டுள்ளது எனவும் எடுத்துக் கொள்வோம். (சர்வசன வாக்கெடுப்பு நடைபெறும் போது, பிரதிநிதித்துவம் என்ற பிரச்சினையை ஒரு புறம் வைப்பதை நீங்கள் அவதானிக்கலாம்.) பிள்ளைத்தொழிலாளர்கள் A யைத் தடைசெய்ய அழைப்பு விடலாம். இங்கு A க்கு எதிராக வாக்களித்தல் என்பது B க்கு வாக்களித்தலைக் கருதும் . அதுவே நடைமுறையாகும். பிள்ளைத் தொழிலாளரை நீக்கவேண்டுமாயின் A க்கு ஆதரவு நல்லவேண்டும். அதனை நீக்க விருப்பமில்லையாயின் B க்கு ஆதரவு நல்க வேண்டும். அதன் பொருள் என்னவெனில் பிள்ளைத் தொழிலாளர் தொடர்ந்தும் இருக்க இடமளித்தலாகும். ஒரு தீர்மான ஆட்சியானது நடைமுறையிலுள்ளது மாற்றமடைய ஏன் சாதமாக இருக்கவேண்டும் என நான் உம்மைக்
66

கேட்கிறேன். அதாவது, பிள்ளைத் தொழிலாளர் நீக்கப்படுதலுக்குப் பதிலாக அதற்குச் சாதகமாக இருத்தல். ஒரு நாட்டின் அரசியலமைப்பு சுரங்கம் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளரை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் எவற்றையும் கொண்டிருக்கவில்லையெனில், மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் மூலமாகவன்றி சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ளலாம். ஆகவே, தற்பொழுது 66 சதவீதமான வாக்காளர் பிள்ளைத்தொழிலாளரை நீக்க வேண்டும் என்பதற்கு ஆதரவளித்தால், 34 சதவீதமானோர் அதனை எதிர்க்கின்றனர். எனவே பிள்ளைத் தொழிலாளரை நீக்கமுடியாது. நடைமுறையில் உள்ளதை நீக்க முடியாது என்பதற்கு உறுதியான காரணம் ஏதும் உண்டா?
திறனாய்வாளன்: பிள்ளைத் தொழிலாளர் என்னும் உதாரணத்தைத் தெரிவதன் மூலம் முன்னெடுத்துச் செல்லக் கூடிய வாதமொன்றை நீங்கள் சமாளித்துள்ளீர்கள். ஆயினும் சில சந்தர்ப்பங்களில் சில விடயங்களை, வலியுறுத்தும் வகையில் சிறுபான்மைக்கு நியாயவிளக்கம் கொடுக்கலாம். அங்கு நிகழ்காலப் போக்கை எதிர்க்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. மற்றும் ஆயத்தத்துக்கு தடைக் காப்புச் செய்யப்பட வேண்டும் . நடுநிலைமையென்னும் தகுதிவிதியானது இத்தகைய விடயங்களைக் கவனிக்கும் விஷேட தீர்மான ஆட்சியை மேற்கொள்வதைத் தடைசெய்ய வேண்டியதும் அவசியமா? அவ்வாறாயின், நடுவுநிலை நல்லதொரு தகுதிவிதியாக இருக்கமுடியும் என நான் ஏற்கவில்லை. ஆயினும் எனது கருத்துக்களை ஒருபுறம் வைத்து, உங்கள் வாதத்தைத் தொடருமாறு கேட்கிறேன்.
பெரும்பான்மைவாதி. நன்றி. எனது இறுதி எடுகோள் உமது கவனத்தை ஈர்த்திருக்கலாம். அது சற்றுப் போலித்தன்மை வாய்ந்தது. அது எவ்வித உணர்வையும் தராது. ஒரு தீர்மான ஆட்சி, சாதகமான பதிலிறுப்புடையதாக இருக்கவேண்டும். அதன் மூலம் அவர் கருதியது பின்வருமாறு: பொதுமக்களில் ஒருவர் A க்கும் B க்குமிடையே வித்தியாசத்தை அறியாதவராக இருக்கிறார். அவர்கள் ஒருவர்மீது இன்னொருவருக்குச் சலுகை காட்ட முடியாது. எனவே ஒரு பிரசை A யிலும் பார்க்க B யை விரும்புவார். அதேநேரம் B லும் பார்க்க A யை விரும்புவோர் எவரும் இல்லை. தற்பொழுது தீர்மான ஆட்சியானது A யின் தெரிவுக்கே வழிகோலும் என நிச்சயமாகக் கூறலாம்.
திறனாய்வாளன்: அந்த எடுகோளுக்கான தேவையை நான் உணரவில்லை.
பெரும்பான்மைவாதி: இங்கே சில உள்ளுணர்வுச் சக்திகளைப் பற்றிக்
கூறமுடியும். ஒரு தீர்மான ஆட்சி என்னால் முன்னர் எடுத்துரைக்கப்பட்ட
மூன்று தகுதி விதிகளையும் நிறைவு செய்கிறது என எடுத்துக்கொள்வோம்.
அது மக்களைப் பொறுத்தவரையில் நடுநிலையானது என்பது முடிவாகும்
(மேயினுடைய பெயர் மறைவுநிலை பற்றிய தகுதிவிதி). அத்துடன்
w 67

Page 37
பிரச்சினைகளைப் பொறுத்தவரையிலும் நடுநிலையானது. அத்துடன், பெரும்பான்மையோராலன்றிச் சிறுபான்மையினர் விரும்பிய மாற்று வழிக்கே கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என அது குறிப்பிடுகிறது. அல்லது சற்றுத்தெளிவற்ற இன்னொரு விடயத்தை எடுத்துக்கொள்வோம். A மேற்கொள்ளப்படுகிறது அல்லது B மேற்கொள்ளப்படுகிறது என்பதில் எவரும் அக்கறை காட்டவில்லை எனக் கொள்வோம். அவ்வாறாயின் ஒரு நாணயத்தைச் சுண்டுவதன் மூலமே எத்தகைய தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என மக்கள் தெரிவு செய்வர். ஆனால், றொபின்சன் என்னும் ஒரு பிரசை B யிலும் பார்க்க A யே சிறந்தது எனத் தீர்மானித்தால், அவருடைய தெரிவு அளவுத்திட்டத்தில் முன்னணியில் இருக்கும் என்பது சாதாரணமானது. றொபின்சன் செய்ததை எவரும் கவனிக்கவில்லை. B யிலும் பார்க்க A யை பின்பற்றியது வேறு எவரையும் பாதிக்கவில்லை. எனவே பின்பற்றப்படக் கூடாது. முன்னைய வாதத்திற்கு நாம் திரும்பிச் செல்வோமாயின், சுயநிர்ணயம் மிகுதிப்படுத்தப்படவேண்டும். பயன் நெறிமுறைக் கோட்பாட்டாளர் நோக்கில், ஒருவர் இவ் விளைவுகளை யிட்டு அதிகம் திருப்தியடைவார். எவரும் திருப்தியடையாமலிருக்க வேண்டியதில்லை. ஆகவே நியாயபூர்வமாக A யே தெரிவுசெய்யப்பட வேண்டும் எனக் கூறப்படுகிறது.
திறனாய்வாளனர்: அவ் வழியில் கூறுங்கள் ! நான் அதனை ஏற்றுக்கொள்கிறேன்.
பெரும்பான்மைவாதி. நன்று. நீர் அதனையும் ஏனைய மூன்று தகுதி விதிகளையும் நியாயமானவையென ஏற்றுக்கொண்டால், பின்னர், ஒரு தீர்மான ஆட்சி மட்டும் நான்கு தகுதி விதிகளையும் பூர்த்திசெய்யும் என மே விளக்கமளித்தார். நான் முன்னர் கூறியதுபோல, தனிச்சிறப்பு வாய்ந்த தீர்மானஆட்சி என்பது பெரும்பான்மை ஆட்சியின் வலிமையான விளக்கமே தவிர வேறு ஒன்றுமில்லை. மேற்கோள் வாசகம் ஒவ்வொன்றும் நியாயமானவையாகக் காணப்படும் பொழுது, எல்லாவற்றிலும் பார்க்க, சனநாயக செயல் முறையில் ஒருவர் ஈடுபாடு காட்டுவாராயின், மேயின் விளக்கம் காரணத்துடன் கூடிய நியாய விளக்கத்தைத் தருகிறது எனலாம். மற்றும் ஒருவருடைய அறிவாற்றல் சக்தி என்பன வலிமையான அமைப்புடைய பெரும்பான்மையாட்சியை மேற்கொள்ள உதவும்.
திறனாய்வாளன்: நடுவுநிலைமை பற்றிய எடுகோளுடன், சகல பிரச்சினைகள் தொடர்பாகவும் எனது கருத்துக்களை நான் எடுத்துக் காட்டியுள்ளேன். அன்றேல் வாதம் கவர்ச்சிகரமானதாக இருக்கும். இத்துடன் இன்னும் பல இருக்கலாம் என நம்புகிறேன்.
68

(i) பெரும்பாலும் சரியான தீர்மானங்களை மேற்கொள்ளல்
பெரும்பான்மைவாதி. ஆம் . பெரும்பான்மை ஆட்சிக்கான எனது மூன்றாவது நியாய விளக்கம் சில நிலைமைகளின் கீழ், ஏனையவற்றைப் போல சரியான தீர்மானங்களுக்கு வழிகாட்டும். நீர் ஞாபகப்படுத்தியது போல, இது அரிஸ்டோட்டிலின் கருத்தாகும். பல்வேறுபட்ட மக்களின் ஒன்றுசேர்க்கப்பட்ட தீர்ப்புகள் மொத்தத்தில் புத்திசாலித்தனமானவை. ஒன்று அல்லது ஒரு சிலரின் தீர்ப்புகளிலும் பார்க்கக் குறைந்த அளவிலான தவறுகளையே அவை கொண்டிருக்கும். அவ்வாறான சில கருத்துகள் பொதுவானவை என்று நான் நினைக்கிறேன். உண்மையிலே இவற்றின் சில பகுதிகளை மில் என்பவருடைய கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் என்னும் விடயத்தில் காணலாம்.
திறனாய்வாளன் : உண்மையென்பது பெரும்பான்மையோரால் தீர்மானிக்கப்பட்ட உண்மையென நீர் கூறுகின்றீரா?
பெரும்பான்மைவாதி. அவ்வாறில்லை. நான் கூறுவது என்னவெனில், சில நிலமைகளின் கீழ் நாம் சேர்த்துக் கொள்பவை உண்மையாக அல்லது சரியானதாக இருக்கலாம். அல்லது அவற்றுள் பெரும்பான்மை, சான்று பூர்வமான தீர்ப்புடன் இணைந்திருந்தால் அது உண்மையாக அல்லது சரியானதாக இருக்கலாம்.
திறனாய்வாளன்: நீங்கள் எடுத்துக்காட்டிய தகுதிப்படுத்துபவற்றை நாம் உற்று நோக்கினால், - “சில நிலைமைகளின் கீழ்” - அவை அருவருக்கத்தக்கவை என்பதை நிரூபிக்கக் கூடும்.
பெரும்பான்மைவாதி. எனது வாதம்பற்றி நான் விளக்கமளிப்பதற்கு, 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்சிய மெய்யியலாளரும் கணிதவியலாளருமான மாக்குயிஸ் டி கொண்டோசட் (Marquis de Condorcet) என் பாருடைய விளக்கமொன்றைப் பயன்படுத்த விரும்புகின்றேன். சில சந்தர்ப்பங்களிலே, பிரசை ஒருவருடைய தெரிவு சரியாகவோ அல்லது தவறாகவோ இருக்கலாம். யூரர் குழுவிலுள்ள உறுப்பினர் ஒருவர் தீர்மானித்தாலும் தீர்மானிக்காவிட்டாலும் எதிராளி குற்றச் செயலுக்குத் தண்டனை பெறவேண்டும். அவ்வாறான பல தீர்மானங்களில் சில சமயங்களில் ஒவ்வொரு பிரசையும் சரியாக இருக்கலாம் அல்லது தவறாக இருக்கலாம். எப்பொழுதும் ஒரு பிரசை சரியான தெரிவை மேற்கொள்ள முடியாது. ஆகவே சரியான தெரிவொன்றைப் பெரும்பான்மையினர் மேற்கொள்வதற்குள்ள சாத்தியக் கூறுகள் சிறுபான்மையினரின் சாத்தியக் கூறுகளிலும் பார்க்கப்பெரிதாக இருக்கும். அதன் விளைவாக, பெரும்பான்மையினரின் தீர்ப்பு (சிறுபான்மை யினருடையதல்ல) நிகழ இடமுண்டு. இல்லையா?
69

Page 38
திறனாய்வாளான்: அவ்வாறே நானும் கருதுகிறேன். ஒரேயொரு மாற்றுவழி பெரும்பான்மை ஆட்சியா அல்லது சிறுபான்மை ஆட்சியா என்பதுதான்.
பெரும்பான்மைவாதி. நல்லது. கொன்டோசட் எடுத்துக்காட்டியது இன்னும் சற்று ஆர்வம் தருவதாக உள்ளது. பெரும்பான்மையானவர்கள் சரி என்பதற்கான சாத்திய கூறுகள், அது பெரிதாக இருந்தால் படிப்படியாக அதிகரிக்கும். அங்கத்தினர் ஒவ்வொருவரும் சரியாக இருப்பதற்கான சாத்தியங்கள் சந்தர்ப்பங்களிலும் பார்க்கச் சற்று நன்றாக இருக்கும். அது 0.51 எனக் கூறலாம். ஆகவே 100 பேருள்ள ஒரு குழுவில் 51 பெரும்பான்மைக்கான சாத்தியக்கூறு சரியெனில் 0.52 ஆயின் நியாயமானது. ஆனால் பெரும்பான்மை 55 ஆக அதிகரிக்கும்பொழுது, சரியாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகளும் ஏறக்குறைய 0.60 ஆக உயரும். பெரும்பான்மை 60 ஆக இருக்க, சரியாக இருப்பதற்கான சாத்தியக்கூறு ஏறக்குறைய 70 சதவீதமாக இருக்க வேண்டும். அவ்வாறே தனிப்பட்ட பிரசையொருவரின் சரியானதன்மைக்குரிய சாத்தியக்கூறு உயர்ந்து செல்லுமானால், சிறிய அளவிலாயினுஞ் சரி, பெரும்பான்மை சரி என்பதற்கான சாத்தியக் கூறுகளும் உயர்ந்து செல்லும். நான் கொடுத்த உதாரணத்திலும் அதே ஆரம்பநிலையைக் காணலாம். 100 பேர் கொண்ட ஒரு குழுவில், ஒவ்வொரு உறுப்பினரும் சரியாக இருப்பதற்குரிய சந்தர்ப்பம் 0.51 மட்டுமே. பெரும்பான்மை சரியான தீர்ப்பை எடுக்கக்கூடிய சாத்தியக் கூறு 0.52 மாத்திரமே. ஆனால் ஓர் உறுப்பினர் சரியாக இருப்பதற்கான சந்தர்ப்பம் 0.55. ஆகவே பெரும்பான்மையினர் சரியாக இருப்பதற்கான சாத்தியக்கூறு 0.60 ஆக இருக்கும்.
திறனாய்வாளன்: கெட்டிக்காரன்! கொண்டோசட் காட்டியவற்றில், அதி பெரும்பான்மையை வலியுறுத்த வேண்டியது அவசியமில்லையா-மூன்றில் இரண்டு பங்கினரின் ஆட்சி அல்லது ஓர் ஏகமனதான ஆட்சி.
பெரும்பான்மைவாதி. இல்லை, இக்காரணத்திற்கு பெரும்பான்மை சரியென்பதற்கான சாத்தியக்கூறுகள் பெரிதாக இருந்தால், அது பெரிதாக இருக்கும். சிறுபான்மையினர் அளவு சிறிதாக இருந்தால் சரியென்பதற் கான சாத்தியக்கூறும் குறைவாக இருக்கும். அதி பெரும்பான்மையை வேண்டிநிற்கும் ஒர் ஆட்சியினால் கருதப்படுவது பெரும்பான்மையைச் சிறுபான்மை தடுக்கலாம் என்பதாகும். ஆனால் அதி பெரும்பான்மை கூடுதலாகவுள்ள ஆட்சி சிறிய சிறுபான்மை மீது வீட்டோவைப் பிரயோகிக்கப் போதுமானது. ஆகவே அதனுடைய தீர்ப்பை நடைமுறைப்படுத்தலாம். ஆனால் சிறுபான்மை சிறியதாக இருந்து சாத்தியக் கூறு பெரிதாக இருத்தல் தவறானது.
திறனாய்வாளன் : உங்களது முழுமையானவாதம் தெளிவற்ற எடுகோளிலேயே தங்கியுள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம்.
70

அதாவது ஒரு சராசரி வாக்காளன் பெருமளவுக்குத் தவறிலும் பார்க்கச் சரியாகவேயுள்ளான். அவ் எடுகோளை நான் மறுத்தால், உங்கள் விளக்கம் எதிர்திசையிலேயே செல்லும். கடும்பெரும்பான்மைக்குப்பதிலாக, அதியுயர்பெரும்பான்மை ஆட்சி ஏற்படலாம். அத்துடன், நான் சரியான முறையில் ஞாபகப்படுத்தினேனாயின், இரண்டுக்கு மேற்பட்ட மாற்று வழிகள் இருந்தால், பெரும்பான்மை வாக்களிப்புப் பிரச்சினைக்கு உட்பட நேரிடும் எனக் கொண்டோசட் எடுத்துக்காட்ட முற்பட்டிருந்தார். நாம் உண்மையிலே அப்பிரச்சினைகளை வெற்றி கொள்ள வேண்டும்.
(iv) பயன்பாட்டை மிகுதிப்படுத்துதல்
பெரும்பான்மைவாதி: நான் எனது நான்காவது நியாய விளக்கத்தை, செலவும் பயனும் பற்றிய எடுகோள்களின் அடிப்படையில் பயன்பாட்டுவாதக் கருத்தை முன்வைக்க விரும்பியுள்ளேன்.
நாம் ஆரம்பத்தில் உடன்பாடு காட்டிய எளிமையான எடுகோள்களை (அதாவது, சட்டங்களுக்கு ஏற்ப மக்கள் நேரடியாக வாக்களிப்பர்) பேணுகின்றோம். இப்பொழுது, பெரும்பான்மையினரின் ஆதரவு கிடைத்த பிரேரணைகளையும் எடுத்துக்கொள்வோம் . அப் பிரேரணைகள் மேற்கொள்ளப்பட்டால், ஒவ்வொரு பெரும்பான்மைப் பிரசையும் ஆகக் குறைந்தது அநேக நன்மைகளைப் (அல்லது பயன்பாடு, அல்லது திருப்தி, அல்லது எவையுமில்லை) பெறுவர். அதுபோல சிறுபான்மைப் பிரசைகள் ஒவ்வொருவரும் இழந்து கொள்வர். இந்த எடுகோளின்படி, சகல பிரசைகள் மத்தியிலும் பெரும்பான்மை ஆட்சியானது சராசரி நன்மைகளை மிகுதிப்படுத்தும்.
திறனாய்வாளன்: உமது எடுகோள் தரப்பட்டுள்ளது, உமது முடிவும் வெளிப்படையாக பின்தொடரும். உமது எடுகோள்களின் தகுதி எப்பொழுதும் வெளிப்படையாக இல்லை.
பெரும்பான்மைவாதி: நான் அதனை ஏற்றுக் கொள்கிறேன். ஒரு அசாதாரண விடயத்தை அடிப்படையாகக் கொண்டு எனது கருத்தை முன்வைக்க விரும்புகிறேன். பெரும்பான்மை உறுப்பினர் ஒவ்வொருவரும் அடையும் தேறிய நன்மைகளும், சிறுபான்மை உறுப்பினரின் தேறிய இழப்புகளும் சமமாக இருக்கும். அது ஒர் அலகுத் திருப்தி மட்டுமே. 100 பொதுமக்களில் 51 பிரசைகள் ஒரு சட்டத்தை ஆதரித்தால் 49 பேர் அதனை எதிர்ப்பர். பெரும்பான்மைக் கோட்பாட்டின் கீழ் கிடைக்கும் தேறிய நன்மை இரண்டு அலகுத் திருப்தியாக இருக்கும் எனக் கூறலாம். எந்தவொரு மாற்றுத்தீர்மானமும் அவ்வாறு செய்ய முடியாது. இவ்விடயம் பற்றி மேலும் எடுத்துரைக்கலாம். இத்தொகுதியின் எல்லைகள் மாற்றப்பட முடியாதவையென எடுகோள் கொண்டால், அசாதாரண விடயத்தில்
71

Page 39
பெரும்பான்மையினரில் அல்லது சிறுபான்மையினரில் உள்ள அதே பிரசை சகல பிரச்சினைகளுக்குமான தீர்மானங்களை பெரும்பான்மை ஆட்சியின் மூலமே மேற்கொண்டால் அதுவே ஒவ்வொரு மாற்று வழிக்கும் மேலானதாக இருக்கும். கொலை, மற்றும் நேர்மையீனம் போன்ற அரசியல் முறைமை நிரந்தரமான சிறுபான்மையினரிடம் காணப்படும். குறிப்பிட்ட அத்தொகுதிக்கான எல்லைகள் பெரும்பான்மையாட்சிக்கு மாற்றாக இருந்தால் அது தீமையாகவே விளங்கும்.
திறனாய்வாளன்: நாம் மீண்டும் எல்லை பற்றிய பிரச்சினைக்கு வந்துள்ளோம். இப்பிரச்சினையை நாம் நன்கு எதிர்கொள்ள வேண்டும்.
பெரும்பான்மைவாதி. நான் உடன்படுகிறேன். ஆனால், மீண்டும் ஒரு முறை அதனைக் கவனிக்க வேண்டும். ஒரு நிரந்தரச் சிறுபான்மை அதனுடைய சுதந்திர சனநாயக அமைப்பை உருவாக்குமானால், மற்றும், எனது எடுகோளான சார்பளவு நன்மைகளும் இழப்புகளும் தகுதி வாய்ந்தனவாக இருந்தால், புதிய அமைப்புக்கான சிறந்த தீர்மான
ஆட்சியாக, பெரும்பான்மைக் கோட்பாடே விளங்கும் எனக் கூறலாம்.
திறனாய்வாளன் : ஆம் ! உமது எடுகோள் பக்கச்சார்பானதாகத் தோன்றுகிறது. ஒருவர் எப்பொழுதும் அதனை எப்படி அறிவார். என்னைப் போன்றே நீரும் உணருகிறீர். அதாவது, சார்பளவிலான திருப்தியை நாம் உண்மையிலே அளவிட முடியாது. உமது திருப்தி பற்றிய அலகுகள் - பழைய பயன்நெறிக்கோட்பாட்டாளரின் பிரசித்திவாய்ந்த பயன்பாடுகள் யாவும் போலியானவை.
பெரும்பான்மைவாதி. அவ்வாறு இருக்கலாம். இருப்பினும், சார்பளவிலான செலவுகள் மற்றும் நன்மைகள் பற்றிய தீர்ப்புகளை நாம் எப்பொழுதும் மேற்கொள்ள வேண்டும். நான் நினைக்கிறேன், நாம் ஒரு தீர்ப்புக்கு வரும் போது பெரும்பாலான நேரங்களில், அவை நன்மையை நாடியனவாகவேயுள்ளன. எமது தீர்ப்புகள் முக்கியமாக பயனுடைமை சார்ந்ததாகவே இருக்கும். நாம் நன்கறிந்த பிரச்சினைகளுக்குப் பதிலாக, செலவுகள் மற்றும் நன்மைகள் பற்றிய மேலோட்டமான கணிப்பைப் பெறவே நாம் முயல்கிறோம். பிரச்சினைகள் நன்கு தெரிந்தமையினால், அவற்றைப் பற்றித் தீர்மானிக்கவும் முடியாது. ஆகவே ஒரு கொள்கையானது, பெரும்பாலான மக்களுக்கு இழப்பிலும் பார்க்க நன்மை தருவதாக இருந்தாலே அதனை மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலான மக்களுக்கு நன்மையிலும் பார்க்க இழப்புக் கூடவாக இருந்தால் அதனை ஏற்கக்கூடாது. அத்தகைய தீர்ப்புகளை ஒரு தத்துவவியலாளரால் அல்லது சமூகத்தெரிவுக் கொள்கையாளர்களால் ஏற்கச் செய்வது மிக இலகுவாக இருக்கலாம். ஆனால், பயன்பாடு அல்லது திருப்தியை எவ்வாறு அளவிடலாம் என அவர்களால் கூறமுடியாது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மென்மையான மற்றும் போலியான தீர்ப்புகளுக்கு 72

எவ்வித மாற்றுவழிகளும் எம்மிடம் இருப்பதில்லை. பெரும்பான்மை ஆட்சி பற்றிய எனது முன்னைய நியாய விளக்கத்தை நோக்கினால், இவ்வாறான கடினமான தீர்ப்புகளை மேற்கொள்வதில் சிறுபான்மையிலும் பார்க்கப் பெரும்பான்மையே மிகச்சரியானது என நான் நினைக்கிறேன்.
திறனாய்வாளன்: ஒருவேளை அவ்வாறிருக்கலாம். உமது பயனுடைமைக் கொள்கை பற்றிய விளக்கம் ஏனையவற்றிலும் பார்க்க நலிந்தது போல எனக்குத் தெரிகிறது. அது ஏன் என நான் விளக்கமளிக்க விரும்புகிறேன்.
பெரும்பான்மைவாதி: நீர் அவ்வாறு செய்யுமுன், இன்னொரு விடயத்தை நான் குறிப்பிட வேண்டியுள்ளது. பெரும்பான்மை ஆட்சிக்கான பயனுடைமைவாத நியாயவிளக்கமானது இரண்டாவது எடுகோளின் மூலம் கணிசமான அளவு பலமூட்டப்பட்டுள்ளது. ஒரு விடயத்திலே தோல்வியடையும் ஒரு பிரசை இன்னொரு விடயத்திலே வெற்றிபெறலாம் என்ற நியாயமான எதிர்பார்ப்புகளுடன் இருப்பான். வேறு வார்த்தையில் கூறுவதானால், நிரந்தரமான பெரும்பான்மையும் இல்லை. நிரந்தரமான சிறுபான்மையும் இல்லை. சுருங்கக் கூறின், ஒவ்வொரு பிரச்சினை சம்பந்தமாகவும், பெரும்பான்மையினரில் உள்ள குறிப்பிட்ட பிரசைக்கு உள்ள சந்தர்ப்பமானது, சட்டத்தை ஆதரிக்கும் பெரும்பான்மையினரில் உள்ள பிரசையின் விகிதாசாரத்துக்குச் சமனாகும் எனக் கருதலாம். உதாரணமாக 60 சதவீதமான பிரசைகள் சட்டத்துக்கு ஆதரவாக உள்ளனர் எனின், பெரும்பான்மையில் உள்ள பிரசைகளுக்கு பத்துக்கு ஆறு என்ற விகிதத்தில் சந்தர்ப்பம் உண்டு. ஆகவே குறிப்பிட்ட பிரச்சினையை வென்றெடுப்பதற்கான சந்தர்ப்பம் ஒவ்வொரு பிரசைக்கும் உண்டு. அக்கறையும், சாத்தியக்கூறும் பெரிதாக இருந்தால் மாதிரிப் பிரசை வெல்லக்கூடிய பக்கத்திலேயே இருப்பான். ஆகவே, சராசரிப் பெரும்பான்மை ஏறக்குறைய 75 சதவீதமாக இருந்தால், ஒரு பிரசை நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மைக்கு வாக்களிக்க முடியும்.
நன்மையும் இழப்புகளும் பற்றிய முதலாவது எடுகோளில் , பயனுடைமைவாதியின் கண்ணோட்டத்தில் , ஒரு குறிப்பிட்ட பிரச்சினையின் விளைவுபற்றி நன்மைகளை உறுதி செய்வதில் பெரும்பான்மை ஆட்சிக்கு மாற்று வழியில்லை எனலாம். இரண்டாவது எடுகோள் தகுதியுடையதாக இருந்தால், சகல பிரச்சினைகளுக்குமான விளைவின் நன்மைகளை சராசரி பிரசைக்கு வழங்கக் கூடிய மாற்று
வழிகளும் இல்லை.
3. கடினத் தன்மைகள்
திறனாய்வாளன்: பெரும்பான்மை ஆட்சிக்கான உமது நியாய விளக்கம் யாவும் குறிப்பிட்ட எடுகோள்களிலேயே தங்கியுள்ளன. அந்த
73

Page 40
எடுகோள்களை நீர் முழுமையாக ஏற்றுக்கொண்டால் பெரும்பான்மை ஆட்சியே சிறந்தது என்றும் அதற்கேற்ற நல்ல மாற்றுமுறை ஒன்று இல்லையென்றும் முடிவெடுக்கலாம். சுருங்கக் கூறின், சனநாயக செயல் முறையானது, பெரும்பான்மை ஆட்சி என்னும் கோட்பாட்டை வலியுறுத்துகிறது எனலாம். ஆனால் கலந்துரையாடலில் நான் சுட்டிக்காட்டியது போல, முக்கியமான எடுகோள்கள் யாவும் கடும் எதிர்ப்புக்குள்ளாகும் என நம்புகிறேன்.
பெரும்பான்மைவாதி. நீர் எதனைப் பற்றிக் கூறுகின்றீர்?
திறனாய்வாளன்: சில எளிமையான எடுகோள்கள் பயன்பாடுடையவை என்ற விடயத்தில் உடன்பட்டாலும் நடைமுறையுலகின் சனநாயக வாழ்வில் உருவாகும் சிக்கல்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
பெரும்பான்மைவாதி. நிச்சயமாக, உண்மை அரசியல் வாழ்வில் பெரும் ‘பான்மைக் கோட்பாடு ஏற்கப்பட முடியாதது என நினைத்தால் அதனை
நான் நிராகரிக்கிறேன்.
(i) இரண்டுக்கு மேற்பட்ட மாற்று வழிகள்:
திறனாய்வாளன்: நல்லது. பொது மக்களுக்கு இரண்டு மாற்று வழிகளே உண்டு என்ற உமது எடுகோள் உண்மையல்ல என்பது வெளிப்படையானது. ஆயினும் பிரசைகள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாற்று வழிகளுக்கு வாக்களிக்கும் போது, பெரும்பான்மை ஆட்சிக் கோட்பாடு பல இடர்களைச் சந்திக்க நேரிடும். அக் கோட்பாடு எப்பொழுதும் வாய்ப்பானதாகவும் இருக்க முடியாது.
பெரும்பான்மை ஆட்சிக்குத் தேவையானவை இரண்டு மாற்று வழிகளுடன் மட்டும் இருக்கும் என்பது தெளிவானது. பெருந் தொகையான வாக்காளர் ஆதரவு நல்கும் மாற்று வழிகள் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் வாக்காளார் A,B,C என்ற மூன்று மாற்று வழிகளை எதிர்கொள்கின்றனர் என எடுப்போம். அப்பொழுது வாக்காளர் ஒவ்வொருவரும் தாம் விரும்பியவாறு மாற்று வழிகளை வரிசைப்படுத்துவர். இப்பொழுது பல்வேறு வாக்காளரும் மாற்று வழிகளை வரிசைப்படுத்திய முறையைக் கொண்டு பெரும்பான்மைக் கோட்பாட்டைப் பல்வேறு வழிகளிலே விளக்கலாம்.
தனிப்பெரும்பான்மை வாக்காளர்களால் ஒரு மாற்று வழி முதலாவதாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது என்ற இலகுவான விடயத்தை எடுப்போம். அவ்வாறாயின் பெரும்பான்மைக் கோட்பாட்டின்படி, விரும்பிய மாற்று வழியை மேற்கொள்ளலாம். தெளிவான உதாரணம் ஒன்று இங்கே தரப்படுகிறது:
74

@(。
I III III
மாற்று வழி A C B
வரிசை நிலை B B C C A A
வாக்குகள் 55 25 20
55 வாக்காளர் A யை முதலாவதாக வரிசைப்படுத்தியுள்னர். இது தனிப்பெரும்பான்மையாகும். மாற்றுவழி A ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இது பெரும்பான்மையாட்சிக்கான ஒர் அழகான விளக்கமாகும்.
ஆனால், தனிப்பெரும்பான்மையுடன் கூடியதாக முதலாவது மாற்று வழியை எவரும் தெரிவு செய்யாவிட்டால் நாம் என்ன கூறலாம்? உதாரணமாக, குழு 1, 40 வாக்குகளையும்; குழு II, 35 வாக்குகளையும் குழு III, 25 வாக்குகளையும் கொண்டுள்ளது.
(5(g
I III III
மாற்று வழி A C B வரிசை நிலை B B C C A A
வாக்குகள் 40 35 25
பெரும்பான்மைவாதி; இவ்விடயத்தில் சாத்தியமாகக் கூடிய ஒரு தீர்வாக, “பெரும்பான்மையை" வரையறை செய்வதற்கு, கொண்டோசட்டின் தகுதி விதியைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு சோடி மாற்று வழிகளுக்கும் கிடைத்த வாக்குகளை அடிப்படையாகக்கொண்டு, அவற்றிடையே வெற்றி பெறும் மாற்றுவழியைத் தீர்மானிக்கலாம். உமது உதாரணத்தில் A க்கு எதிராக B, B க்கு எதிராக C, Cக்கு எதிராக A என ஒழுங்குபடுத்தலாம். இத் தீர்மான விதியை உமது உதாரணத்தில் பிரயோகித்தால், B ஆனது C யை 65-35 (குழு 1 உம், Iஉம் குழு II க்கு எதிராக) ஆலும், B ஆனது A யை 60-40 ஆலும் (குழு Iஉம், குழு III குழு 1 க்கு எதிராக) வெற்றி பெறும். மூன்றாவது சோடி வாக்களிப்பில், C ஆனது A யை 60-40 வாக்குகளால் வெல்லும். ஆகவேB ஆனது Aயையும் Cயையும், Cயானது A யையும் வெல்லும். கொன்டோசட் தகுதிவிதியின்படி B வெற்றி பெற்றவராவார்.
75

Page 41
(i) வட்டத்தன்மையான பெரும்பான்மைகள்
திறனாய்வாளனர்:கொண்டோசட் உம்மைப் பிரச்சினையிலிருந்து வெளியே எடுத்து விட்டார். மிக ஆழமான பிரச்சினைகுக் குழியிலிருந்து உம்மை அவரால் மீட்க முடியாது. சில சந்தர்ப்பங்களில், வாக்காளரின் வரிசைப் படுத்தல்கள், பொதுமக்கள் கொன்டோசட்டின் தகுதிவிதிகளைப் பிரயோகிக்க இடமளிப்பதில்லை. அவை தனிப் பெரும்பான்மை பற்றி அதிக தூரம் வலியுறுத்தவில்லை. இதோ ஒர் உதாரணம்.
@j(ሀ9
I III III
மாற்று வழி A C B வரிசை நிலை B A C C B A
வாக்குகள் 40 30 30
இவ்விடயத்தில் A யானது B யை வெல்லும் 70-80 (குழு 1உம், குழு IIஉம் குழு III க்கு எதிராக) B யானது C யை வெல்லும் 70-80 (குழு 1 உம், III உம், குழு IIக்கு எதிராக); மற்றும் C ஆனது Aயை வெல்லும் 60-40 (குழு Iஉம்,Iஉம், குழுக்கு எதிராக) இப்பொழுது நாம் வட்டத்தன்மைவாய்ந்த பெரும்பான்மையை எதிர்கொள்கிறோம். இதனை கொன்டோசட்டும் விபரித்துள்ளார். சனநாயகக் கொள்கை மற்றும் நடை முறைகளிலே இத்தகைய இடைவினைத் தாக்கம் கொண்ட பிரச்சினைகள் , அதிகளவிலான கவனத்தைப் பெற்றுள்ளன என "கென்னத் அரோ" (Kenneth Arrow) 1951ஆம் ஆண்டிலிருந்து எடுத்துக் காட்டியுள்ளார். அரோவினுடைய பிரசித்தி வாய்ந்த "அசாத்தியத் தேற்றம்” எடுத்துக் காட்டுவது என்னவெனில் ஏனைய விடயங்களை எடுத்துக் கூறுவதற்கு ஒரு மனிதனுக்கு இடமளிக்காவிட்டால், வட்டத் தன்மையான பெரும்பான்மைக்கு தீர்வு இல்லை. அது ஏனைய பல நியாயமான எடுகோள்களில் ஆகக் குறைந்தது ஒன்றையேனும் மீறாது. எனது அறிவுக்கு எட்டியவரையில், அரோவின் எடுகோள்கள் எவற்றையும் நியாயமற்றவை அல்லது அவ் எடுகோள்களுடன் இணைந்துள்ள வட்டத்தன்மையான பெரும்பான்மைகளுக்கு ஒரு தீர்வைக் கண்டுள்ளது என கூறுவதற்கு எவரும் முன்வரவில்லை. ஆகவே சர்வாதிகாரத்துக்குப் பதிலாக பெரும்பான்மை ஆட்சியை ஏற்க நீர் ஆயத்தமாக இல்லாவிட்டால், பெரும்பான்மை வட்டத்துக்குரிய பாதையை வகுக்கமுடியாது.
பெரும்பான்மைவாதி; நன்று. பெருந்தொகையான வாக்காளரால் விரும்பப்படும் மாற்றுவழியை மேற்கொள்வதற்குத் தேவையான
76

பெரும்பான்மைக் கோட்பாட்டை விளக்குவதற்கு ஒரு சாத்தியமான தீர்வு இருக்க வேண்டும். இதனை அமெரிக்க நாட்டவர் "பன்மைத் தன்மை” (Plurality) எனவும் பிரித்தானியர் “சார்புப் பெரும்பான்மை” (Relative Majority) எனவும் அழைப்பர். பன்மைத் தன்மை அல்லது சார்புப் பெரும்பான்மை ஏற்கக்கூடியதாக இருந்தால், உமது கடைசி உதாரணத்தில், A முதலாவதாக வரிசைப்படுத்தப் பட்டிருப்பதால் அதுவே மேற்கொள்ளப்பட வேண்டும்.
திறனாய்வாளன்; ஆனால், எனது உதாரணம் காட்டுவது போல, மற்றும் எமது பொது அனுபவத்திலிருந்து நாம் எல்லோரும் அறிவது போல, வாக்காளரில் பன்மைத்தன்மை சிறுபான்மை வாக்காளராகவும் இருக்கலாம். இவ்விடயத்தை வலியுறுத்துவதற்கு, பெரும்பான்மைக் கோட்பாடானது தனது வழியில் செல்வதற்கு சிறுபான்மை தேவைப்படுகிறது என்பது என்னுள் சுயமுரண்பாட்டைத் தோற்று விக்கிறது. ஆகவே சிறுபான்மை இல்லாவிட்டால் பெரும்பான்மை ஆட்சியை இனங்காண்பது எவ்வாறு?
is
(i) நிகழ்ச்சி நிரலைக் கட்டுப்படுத்தல்
திறனாய்வாளன்: வட்டத்தன்மை வாக்களிப்புசனநாயகச் செயல்முறையில் இன்னொரு பிரச்சினையைத் தோற்றுவிக்கிறது. நிகழ்ச்சி நிரல் மீதான கட்டுப்பாடு அதன் விளைவுகளைக் கையாளப் பயன்படுத்தலாம். நான் கடைசியாகக் கூறிய உதாரணத்திலிருந்து மக்கள் மாற்று வழிகளுக்கு வாக்களித்த விதம் வெற்றிக்குரியவரை எழுந்தமானதாகத் தீர்மானிக்கும். மாற்று வழிகளுள் ஒன்றை புத்திசாலித்தனமாக ஆதரித்தல் நிகழ்ச்சிநிரலைக் கட்டுப்படுத்தும். இது ஓர் கூட்டத்தில் தலைமை வகிப்பவரைப் போல இருக்கும். தலைவர் A வெற்றிபெற வேண்டும் என விரும்புகிறார் எனக் கொள்வோம். அவர் முதலிலேB க்கும் Cக்கும் இடையே வாக்களிப்பை நடத்துமாறு கோருவார். B 70-80 என்ற அடிப்படையில் வெல்வார். பின்னர் B க்கும் எஞ்சியிருக்கும் மாற்றுவழியான A க்குமிடையே வாக்களிக்கக் கோரலாம். இந்தத் தடவை A 70-30 என்ற அளவில் B யை வெல்வார். பின்னர் A வென்றுள்ளது என அவர் அறிவிப்பார். தலைவர் ஒருவர் நிகழ்ச்சிநிரலை இவ்வாறு கையாள்வதன் மூலம் ஏனைய இரண்டு மாற்றுவழிகளுக்கும் வெற்றியைப் பெற்றுக்கொடுக்கலாம். இச்செயல் இறுதிக் கட்டுபாட்டின் தகுதிவிதியை மலினப்படுத்தவில்லையா?
பெரும்பான்மைவாதி: இல்லை. நிகழ்ச்சிநிரல் எவ்வாறு தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சந்தர்ப்பம் பிரசைகளுக்கு இருக்கவேண்டும் என்றே தகுதிவிதி எதிர்பார்க்கிறது. அவர்கள் தீர்மானிக்கலாம். உதாரணமாக, பன்மைத்தன்மை வாக்குகள் மூலம்
77

Page 42
வாக்களிப்பு நடைபெறும்போது அவ்விடயம் சிலவேளையில் குலுக்கல் மூலம் அல்லது ஏனைய வேறு முறை மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும். அவை நியாயமானதாகவும் நடுநிலையானதாகவும் இருக்க வேண்டும்.
(iv) எல்லைப் பிரச்சினை
திறனாய்வாளன்: நான் முன்பு எடுத்துக்காட்டிய இரண்டு எல்லைப் பிரச்சினைகளையும் இப்பொழுது நோக்குவோம். அவற்றுள் ஒன்று கூட்டாகத் தீர்மானிக்கப்பட்ட விடயங்களுக்கும் அவ்வாறல்லாதவற்றிக்கும் இடையேயுள்ள எல்லை என்பது உமக்கு நினைவிருக்கலாம். கூட்டுத் தீர்மானத்துக்கான எல்லை ஏனையவை கூட்டு அலகுக் கான எல்லைகளோடு இணைந்துள்ளன. கூட்டுத் தீர்மானத்துக்கான எல்லைகளைக் கருத்திற் கொள்ளும்போது, அதாவது உமது முதலாவது நியாயவிளக்கத்தின் அடிப்படையில், ஒரு கூட்டுத் தீர்மானத்தை முன்வைப்பதிலும் பார்க்க, ஒரு தனியாள் அல்லது குழுவைச் சிலவிடயங்கள் பற்றிச் சுதந்திரமாகத் தீர்மானிக்க விட்டால், சில சமயங்களிலே சுயநிர்ணயத்தை மிகுதிப்படுத்தல் சாத்தியமாகாமல் போகலாம்.
பெரும்பான்மைவாதி: குறிப்பிட்ட விடயத்தைக் கூட்டாகவோ அல்லது எதேச்சையாகவோ தீர்மானிக்க வேண்டும் என்பதிலும் கூட்டுத்தீர்மானம் அவசியமாகிறது. அவ்வாறில்லாவிட்டால், அது பொதுப்பிரச்சினையாக மாறும் போது அவசியமாகிறது. எந்தவொரு விடயத்துக்கும் கூட்டுத்தீர்மானம் அவசியமில்லையென நீர் கருதினாலொழிய நாம் உடன்பாடுகொண்டஎடுகோள் தகுதியானது எனலாம். எவ் விடயத்திற்கும் கூட்டுத்தீர்மானம் அவசியமில்லையெனில், சனநாயகச் செயல்முறைகளும் எமக்கு அவசியமில்லை.
திறனாய்வாளன்: நான் உமது கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஒரு சனநாயக ஆட்சியில் அதன் அங்கத்தவர்களிடையே, சனநாயகக் கூட்டிணைப்புக்கான சுயநிர்ணயத்தை மிகுதிப்படுத்த அவர்களுடைய கூட்டுத்தீர்மானத்துக்கு திருப்திகரமானதொரு கோட்பாட்டை மேற்கொள்வது மிக அவசியமானது.
பெரும்பான்மைவாதி. அதனை நான் முழுமையாக ஏற்கிறேன். அலகுகளின் எல்லைப் பிரச்சினையை பெரும்பான்மைக் கோட்பாட்டில் இடம் பெறும் பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லையென நான் எண்ணுகிறேன். பொதுவாக அவை சனநாயகக் கொள்கையையும் நடை முறையையும் சார்ந்தவை எனக் கருதலாம்.
திறனாய்வாளன்: அதனைக் கண்டறிவதற்குப்பிரச்சினையைப் பரிசீலனை செய்து பார்ப்போம் . சனநாயக செயல்முறைகளைப் போலவே
78

பெரும்பான்மைக் கோட்பாடும் ஒர் அரசியல் அலகு இருப்பதாகக் கருதுகிறது அதனுள் பிரசை அமைப்பு ஒன்று கூட்டுத்தீர்மானத்திற்கு கட்டாயம் வரவேண்டும். குறிப்பிட்ட அலகைச் சூழவுள்ள எல்லைகள் பற்றிய நியாயமான விளக்கத்தை பெரும்பான்மை ஆட்சியென்னும் கருத்து வழங்கும் என்பதில் ஒன்றுமில்லை. பெரும்பான்மை ஆட்சியினாலே தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் எனக் கூற வேண்டியதில்லை. (கூறவும் முடியாது) இவ்வினாவுக்கு எந்தச் சனநாயக அலகின் பெரும்பான்மை? என்பது விடையாக அமையும்.
பெரும்பான்மைவாதி: உண்மை. இக்கருத்து பெரும்பான்மை ஆட்சிக்கான நியாயவிளக்கத்தை எப்படித் தரும் என என்னால் கூறமுடியாது.
திறனாய்வாளன் : ஒரு நாடு சனநாயக செயல்முறைகள் மூலம் ஆளப்படுகிறது. கூட்டுத்தீர்மானங்களை மேற்கொள்ள பெரும்பான்மைக் கோட்பாட்டைப் பின்பற்றுகிறது. மற்றும் அது நிரந்தரமான பெரும்பான் மையையும், நிரந்தரமான சிறுபான்மையையும் கொண்டிருக்கிறது. ஆகவே ஒரு குழுவினர் எப்பொழுதும் வெற்றி பெறுவர். ஒரு குழுவினர் எப்பொழுதும் தோல்வியடைவர். நிரந்தரப் பெரும்பான்மை 60 சதவீதம் எனவும் நிரந்தரச் சிறுபான்மை 40 சதவீதம் எனவும் எடுத்துக்கொள்வோம். ஆகவே 60 சதவீதமான பிரசைகள் தாம் தேர்ந்தெடுத்த சட்டங்களின் படியும், 40 சதவீதத்தினர் தாம் விரும்பாத சட்டங்களின் கீழும் வாழ்கின்றனர். இவர்கள் மீது பெரும்பான்மையினர் சட்டங்களைத் திணிக்கின்றனர். இது சுயநிர்ணயத்தை மிகுதிப்படுத்தும் செயல் முறையென அழைக்கமுடியாது. அதற்குப் பதிலாக, பெரும்பான்மை யினருக்குச் சுய நிர்ணயமாகவும் சிறுபான்மையினருக்கு வெளிவாரி நிர்ணயமாகவும் அதாவது பெரும்பான்மையினர் ஆதிக்கம் என்றே அழைக்கலாம். இரு குழுக்களும் இரண்டு அரசியல் கூட்டுக்களின் அடிப்படையில் பிளவுபட்டிருந்தால் சுயநிர்ணயம் மிகுதிப்படுத்தப் பட்டிருக்கலாமா? இப்பொழுது ஒவ்வொரு குழுவிலும் உள்ளோர் தம்மிடையே தாம் விரும்பிய சட்டங்களுக்கு இயைய உடன்படுவார்கள். ஒவ்வொருவரும் தமக்கெனத் தெரிவு செய்த சட்டங்களுக்கேற்ப வாழ்வார்கள். அதேவேளையில், ஏனையவர்களால் சுமத்தப்படும் சட்டங்களின்முன் கீழ்ப்படிந்து நடக்கவேண்டுமென்ற கடப்பாடு அவர்களுக்கு இல்லை.
பெரும்பான்மைவாதி: உமது இந்த விடை சரியானதொன்றே. ஆகவே ஒரு கூட்டுக்குப் பதிலாக இப்பொழுது இரண்டு உள்ளதென எடுத்துக்கொள்வோம். ஆனால் தயவுசெய்து இம்மாற்றத்தின் விளைவினைக் கவனித்துக் கொள்ளவும். ஒவ்வொரு கூட்டிலும் உள்ள பிரசைகள் தாம் ஏற்கனவே அனுபவித்த பிரச்சினைகளுக்கே முகங்கொடுக்கின்றனர். தம்மை ஆள்வதற்கு, இப்பொழுது எத்தகைய தீர்மான ஆட்சியை மேற்கொள்வதில் நீர் நம்பிக்கை கொண்டுள்ளீர்? 79

Page 43
இயல்பாக, ஒரு கட்டுக்கதை சார்ந்த முடிவை நீர் வெளிப்படுத்த விரும்பினால், அவ்வலகு ஒவ்வொன்றிலும் பூரண இசைவு நிலவும் எனின் அதற்கு விடை அவசியமில்லை. ஆயினும், அரசியல் மற்றும் அரசுகளில் சனநாயக செயல் முறைக்கான தேவையும் இல்லாமற் போய்விடும். என்னால் எடுத்துக் கூறப்படும் எடுகோள்கள் உண்மை உலகுக்குப் பொருந்தாது என்பதை நீர் வெளிப்படுத்தியுள்ளீர். இங்கு நான் எடுத்துக்காட்ட முற்படுவது என்னவெனில், எந்தவொரு சனநாயக அலகிலும் பூரண ஒருமைப்பாடு இல்லை என்பதாகும். வேறு வழியில் கூறினால், எந்தவொரு உண்மைச்சனநாயக அலகிலும் கூட்டுத்தீர்மானம் பற்றிய விடயத்தில், பெரும்பான்மையாட்சியின் மூலமே சுயநிர்ணயம் மிகுதிப்படுத்தப்படும் எனலாம்.
திறனாய்வாளன்: நான் வாதிடுவது என்னவெனில், குறிப்பிட்ட சில அரசியல் அலகுகளிலே சிறுபான்மை, பெரும்பான்மை ஆட்சியை நிராகரித்துவிடலாம். அதற்குப் பதிலாக, அவ் வலகை மாற்றி யமைப்பதனை வலியுறுத்தும் சில விடயங்களிலே ஒரேஇன அலகுகளுக்கு தீர்மானங்களைப் பன்முகப்படுத்துவதன் மூலமும், பூரண சுதந்திரத்தைப் பெறுவதன்மூலமும் இவற்றைப் பெறலாம். உண்மையிலே எனது வாதத்தினைப் பொதுமைப்படுத்த விரும்புகிறேன். யாதாயினும் ஒரு தொகை மக்கள் மத்தியில, சனநாயக செயல்முறை விருப்புடையதாக இருந்தால், சனநாயக செயல்முறையின் பெறுமானங்களை அடைவதற்கு அலகின் எல்லைகளை மாற்றியமைக்கலாம்.
பெரும்பான்மைவாதி: உமது கருத்தினை ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளேன். ஏனைய அம்சங்களிலும் பார்க்க ஒரு சனநாயக விழுமியத்துக்கு உதவும் அரசியல் அலகுக்குக் கட்டுப்பட்டால், அச்சிறந்த அலகுக்கு இணையான ஏனைய விடயங்கள் தெரிவு செய்யப்படவேண்டும். உண்மையுலகில், விடயங்கள் ஒன்றுக்கொன்று சமனற்றவை. மற்றும் எல்லைப் பிரச்சினையும் இலகுவில் தீர்த்து வைக்கப்படவில்லை. ஆனால் பெரும்பான்மை ஆட்சி என்னும் பிரச்சினையை அலகுகளின் எல்ல்ை பற்றிய பிரச்சினையின்றும் வேறுபடுத்த முடியாதா? சிறந்த அமைப்பு அலகு என நாம் கருதுபவற்றில் கூட சனநாயக விழுமியங்களை எய்துதல் மிகக் கடினமானது; சிக்கலானது. அவற்றை ஏற்படுத்த வேண்டிய நீதி நியாயமானது. சனநாயக கோட்பாடுகளுக்கு அப்பாலும் விரிவான கலந்துரையாடலின் அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது. ஆயினும் நான் இவ் விடயத்தை வலியுறுத்த விரும்புகிறேன். கொடுக்கப்பட்டுள்ள ஒரு தற்காலிக அலகொன்றிலே, அவ்வலகின் உறுப்பினரிடையே பெரும்பான்மைக் கோட்பாடு, அதற்கான ஏனைய மாற்று வழிகளிலும் பார்க்கச் சிறந்த சனநாயகரீதியான தீர்மான ஆட்சியை வழங்குகிறது.
80

(V) உண்மையுலகில் சனநாயக ஆட்சியின் தேய்வு
திறனாய்வாளன்: இன்னொரு எடுகோளைப் பார்ப்போம். பெரும்பான்மை ஆட்சிக்கான நியாயமான ஒரு விளக்கத்தினை, பிரதிநிதித்துவத்தைக் கவனத்திற்கொள்ளாமல் மேற்கொள்ள முடியாது என நம்புகிறேன். இக் கலந்துரையாடலை இலகுபடுத்தும் பொருட்டு, அதற்கு இடமளிக்க விரும்புகிறேன். இவை சிக்கல் தன்மைகளையும் பிரதிநிதித்துவத்தையும் கவனத்திற்கு எடுக்காமல் விட உதவும். பெரும்பான்மை ஆட்சியானது, பிரதிநிதித்துவ முறைக்கு விளக்கமளிக்க முடியாவிடில், நவீன உலகுடன் வரையறுக்கப்பட்ட தொடர்புகளை மட்டுமே அது கொண்டிருக்க முடியும்.
பெரும்பான்மைவாதி: நீர் கூறியவற்றை நான் மறுக்கவில்லை. உண்மையான, நேர்மையான வாதத்தை முன்வைக்க விரும்பினால், பயன்நிறைந்த சனநாயகக் கூட்டினை நாம் கருத்திற்கொள்ள வேண்டும். அவ்வமைப்பினும் மக்கள் கூடிச் சட்டப்படி நேரடியாக வாக்களிக்கலாம். இன்றைய உலகில் நேரடிச் சனநாயக ஆட்சியானது விதிவிலக்கானது. நவீன சனநாயக ஆட்சியுடன் பெரும்பான்மைக் கோட்பாடு தொடர்புடையதாக இருக்க வேண்டுமாயின், அதனைப் பிரதிநிதித்துவ சனநாயக ஆட்சியுடன் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும். ஆனால் அவ்வாறான ஒரு கஷ்டமான நிலையை நாம் ஏன் உருவாக்க வேண்டும்.
திறனாய்வாளன் ; ஆயினும் பிரதிநிதித்துவம் பற்றி எவையும் கூறப்படவில்லையா? பிரதிநிதித்துவமானது பெரும்பான்மையாட்சியைக் கடுமையாக நலிவுபடுத்தவில்லையா?
பெரும்பான்மைவாதி. நலிவுபடுத்தல் என்பதனால் நீர் கருதுவது யாது?
திறனாய்வாளன்: உண்மையுலகில் உள்ள பல நிபந்தனைகள் பொதுவாகப் பெரும்பான்மை விருப்புக்களைச் சட்டமாகவும் நிருவாகமாகவும் மாற்றுவதினை நலிவுபடுத்தியுள்ளன. உண்மையுலகில் பெரும்பான்மை ஆட்சி பற்றிப் பேசும்போது, நீர் மனதிற் கொண்டுள்ள பெரும்பான்மை என்பது என்ன? - பிரசைகளில் பெரும்பான்மையினரா, அல்லது வாக்காளரில் பெரும்பான்மையிரா, அல்லது சட்டமியற்றுவோரில் பெரும்பான்மையினரா? நேரடி சனநாயக ஆட்சி அமைப்பில் கூட, பெரும்பாலான மக்கள் பங்குபற்ற்ாமல் விட்டால், பெரும்பான்மை ஆட்சி நலிவுறும் . உதாரணமாக, எனக்கு நன்கு பரீட்சயமுள்ள புதிய இங்கிலாந்தின் நகரக்கூட்டங்களில், சிறுபான்மையினருள் சில பிரசைகளே கூட்டங்களுக்கு வருகின்றனர். உண்மையிலே அவர்கள் ஏனையவர்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர் எனக் கூற முடியாது. ஏதேனியச் சனநாயக ஆட்சியைப் போலவே கூட்டங்களுக்கு எவ்வளவு மக்கள் வருகின்றனர் என உறுதியுடன் கூற முடியாது. அல்லது அவர்கள் எவ்வளவுக்கு மற்றையேரைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர் எனவும் கூறமுடியாது. நேரடி சனநாயகத்தை வலியுறுத்தும் சிலர், பாரிய அமைப்புகளில் 81

Page 44
கூட்டங்களுக்குச் சர்வ சன வாக்கெடுப்பு பிரதியீடாக அமையுமென வாதிடுகின்றனர். ஆனால் சிறுபான்மையினரின் கருவியென்ற வகையில் சர்வசன வாக்கெடுப்பு தந்திரமான செயலாகும். நாம் நவீன பிரதிநித்துவ முறைபற்றிக் கவனிப்போமானால், ஐக்கிய அமெரிக்காவில் உள்ள சிலவற்றைப்போல 50 சத வீதத்தின் கீழ் உள்ளவை இடைக்கால காங்கிரசுக்குரிய தேர்தல்களாக உள்ளன. தேர்தல் தொகுதி சார்ந்த விளைவுகளும் உயர்வாக உள்ள சந்தர்ப்பங்களிலும் பெரும்பான்மையான வாக்காளர், சட்டமியற்றுவோரில் சிறுபான்மையினருடன் ஒருங்கி விடலாம். அதனிலும் மேலாக, சிறுபான்மையான வாக்காளர் சில சமயங்களில் பெரும்பாலான ஆசனங்களை வென்றுவிடலாம்.
பெரும்பான்மைவாதி. அதனை நான் அறிவேன். ஆனால் தேர்தல் தொகுதி அமைப்பு முறையை, தேர்தல் தொகுதிப் பெரும்பான்மையே, சட்டசபைப் பெரும்பான்மையாக மாறக்கூடியவாறு உறுதிசெய்யும் வகையில் வடிவமைக்கப்படலாம் . அதிஷ்டவசமாக, ஒரு சனநாயக நாடு. பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்க அரசுகள், கனடா, அவுஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளிலுள்ளது போன்று அதிகளவு குறைபாடுகளுள்ள தேர்தல்தொகுதிமுறையைப் பின்பற்ற வேண்டிய தில்லை. அந்த நாடுகளில் தேர்தல் தொகுதி முறை சாதகமானது. அத்துடன் வித்தியாசமானது. சிறுபான்மையான வாக்காளரின் பிரதிநிதிகள் பெரும்பாலான ஆசனங்களை வெல்ல வாய்ப்பு உண்டு. இது நியாயமானது. ஏனெனில், ஆங்கிலமொழி பேசும் நாடுகளின் தேர்தல் தொகுதியமைப்பிலுள்ள இத்தகைய குறைபாடுகள் காரணமாக, ஏறக் குறைய ஏனைய சகல சனநாயக நாடுகளும் விகிதாசாரப் பிரதிநித்துவ முறையை மேற்கொள்கின்றன. இவை பொதுவாக தேர்தல் தொகுதி மற்றும் சட்ட சபைப் பெரும்பான்மைகளிடையே இணக்கத்தை உருவாக்குகின்றன.
திறனாய்வாளன்; ஆனால், விகிதாசாரப் பிரதிநித்துவத்தின் கீழும், பாராளுமன்றத்திலுள்ள மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முக்கியமான கட்சிகள், பெரும்பாலான உறுப்பினரின் ஆதரவுடன் மந்திரி சபையை அமைக்கும் செயல்முறை பூரணமாக, பொதுத்தேர்தல் மூலமே தீர்மானிக்கப்படுகிறது. உண்மையிலே, ஆட்சியிலுள்ள கூட்டாட்சி, பொதுத் தேர்தலுக்கும் புதிய அமைப்புக்கும் இடையே வீழ்ச்சியடையலாம். பழைய அமைப்பிலிருந்து வித்தியாசப்படும் ஒன்று புதியதொரு தேர்தல் இன்றியே தமது இடத்தை வகிக்க முடியும். அதுவும் பெரும்பான்மை ஆட்சியின் நலிந்த அம்சமென்றே கூறமுடியும்.
பெரும்பான்மைவாதி: நான் உடன்படுகின்றேன். ஆனால் பெரும்பான்மைக் கோட்பாடு ஒரு முக்கியமான தகுதிவிதி என்பதற்கு எதிராக, ஒரு அரசாங்கத்தின் சட்ட பூர்வமான நிலையை நாம் தீர்மானிக்கலாம். அது படிப்படியாக உருவாக்கப்படும் என்றில்லையா?
82

திறனாய்வாளன்: அது ஒரு தகுதிவிதி என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் அதனை நாம் பிரயோகிக்கும்போது, உண்மையுலக நடை முறையில், பல சனநாயக நாடுகள் கருத்துநிலைச் சிந்தனையில் குறைபாடுடையனவாக உள்ளன. மற்றும் பெரும்பான்மைக் கோட்பாடும் நடை முறையில் நலிவடைந்துள்ளது. இது பிரதிநிதித்துவத்தால் மட்டுமன்றி மேலும் பல காரணங்களால் நலிவு படுத்தப்படலாம். அவை உண்மையுலகில் அரசியல் சமத்துவத்தையும் கருத்தொருமைப்பாட்டையும் தடைசெய்கின்றன.
பெரும்பான்மைவாதி. நாம் முன்னர் நன்றாக அறிந்த ஒரு விடயம் பற்றியே நீர் கூறுகின்றீர். உண்மையுலகில், சனநாயக ஆட்சிச் செயல்முறைக்கு அண்மித்த ஒரு விடயத்தை அடைதல் மிகவும் கடினமானது. அத்துடன் சில சமயங்களில் இடமும் மற்றும் நிபந்தனைகளும் அசாத்தியமானவை. ஆனால், அதனை நாம் அடையக்கூடிய அளவுக்கு, பெரும்பான்மைக் கோட்பாடு நடை முறையில் நவிவுற்றாலும் அதுவே மிகச் சிறந்த தீர்மான ஆட்சியாகும்.
திறனாய்வாளன்: இக்கருத்தைப் பொறுத்தமட்டில் பெரும்பான்மை யாட்சியே சிறந்த தீர்மான ஆட்சியாகும் என நாம் நம்பினாலும் ஒரு கருத்தியல் சார்ந்த சனநாயகத்தில் பெரும்பான்மை ஆட்சி நடை முறையில் நலிவுபெறுமளவுக்கு நியாய விளக்கத்தின் மெலிவும் நடை முறைக்கு வரும். சில நிபந்தனைகளுக்கு அமைய, பெரும்பான்மையாட்சி நலிவு பெறலாம். அதற்கு ஒரு மாற்று வழியையும் நாம் விரும்பலாம்.
பெரும்பான்மைவாதி; உமது கருத்தில் உள்ளது என்ன?
திறனாய்வாளன்: குறிப்பாக எவையும் இல்லை. ஆனால், ஒர் உண்மை நிலையிலிருந்து அதனை எடுத்துக்கூற விரும்புகிறேன். சனநாயக நாடுகளிலுள்ள அரசாங்கம் சார்பான தீர்மானங்கள் அல்லாதவை அநேகமாக, பெரும்பான்மையாட்சிக்கான சந்தர்ப்பங்களாக இருப்ப தில்லை. ஆனால் சிறுபான்மையினர் ஆட்சியில் அவ்வாறிருக்கலாம்.
பெரும்பான்மைவாதி: உண்மையான சனநாயக ஆட்சிகள் எல்லாம் சிறுபான்மையினர் முதன்மை வகிக்கும் அமைப்புகள் என நீர் இப்பொழுது ஏற்றுக்கொள்கிறீரா? காட்டானோ மொஸ்கா, வில்பிரட் பரட்ரோ, றொபேட் மைக்கல், வி.ஐ.லெனின் போன்ற எழுத்தாளர்களும் ஏனைய பல "பூர்ஷ்வா’ (Bourgeois) விமர்சகர்களாலும் சனநாயகம் போது மானதென ஏற்கப்பட்டுள்ளது? அவ்வாறாயின், நீர் ஆச்சரியப்படலாம். பெரும்பான்மைக் கோட்பாடுடன் நாம் ஓரளவுக்கு உடன்படவில்லை யெனவும் நான் அறிவேன். ஆனால் இதுவரையில் உமது கருத்தின்படி நியாயமான சனநாயக ஆட்சியை உண்மையலகில் அடைவது சாத்தியமானது என நான் கூறவில்லை.
83

Page 45
திறனாய்வாளன் : சற்றுப்பொறுங்கள். இல்லை. எனது கருத்தில் சிறுபான்மையினர் ஆதிக்கம் பற்றிய கருத்துக்கள், நீர் இப்பொழுது கூறிய மக்களைப் போல, நவீன சனநாயக ஆட்சி நிலவும் நாடுகளிலுள்ள அரசாங்கத்தின் இயல்பினைத் தவறாக விளக்குகின்றன. நான் கருதுவது சற்று வித்தியாசமானது. அரசாங்கத்தின் தீர்மானங்களைப் பற்றி சற்றுக் குறிப்பாகப் பரிசீலனை செய்தால், அவை பெரும்பான்மையினரின் தீர்மானங்கள் என்று சரியாக எப்பொழுதும் விபரிக்க முடியாது. அவை சிறுபான்மையினரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் என்றோ அல்லது சிறுபான்மையினரின் சிறுபான்மைக் கூட்டாட்சி என்றோ அநேகமாக விபரிக்கப்படுகிறது. சிறுபான்மையினர் ஆதிக்கம் பற்றிய கொள்கையில், ஆதிக்கம் பெற்ற சிறுபான்மை சகல பிரதான தீர்மானங்களிலும் ஏறக்குறைய ஒன்றாக இருக்கின்றன. சிறுபான்மையினர் ஆட்சி பற்றிய அமைப்பில், சிறுபான்மை அல்லது சிறுபான்மைக் கூட்டு என்பன அவற்றின் அமைப்பில், விருப்பத்தில், ஒரு தீர்மானத்திலிருந்து இன்னொரு வகைத் தீர்மானம் குறிப்பிடத்தக்களவில் வேறுபடும்.
பெரும்பான்மைவாதி: சில சனநாயக நாடுகளிலே, தீர்மானம் மேற்கொள்ளலில், சிறுபான்மையினர் ஆட்சி ஒரு சரியான செயற்தன்மை வாய்ந்த, விளக்கமாக இருக்கலாம். ஆனால் “சிறுபான்மையினர் ஆட்சி” அமைப்பு “பெரும்பான்மை ஆட்சி” அமைப்பிலும் பார்க்க, குறைந்தது எனத் தீர்மானிக்க முடியாது. சிறுபான்மையினர் ஆட்சி என உம்மால் அழைக்கப்பட்டது உண்மையில் இரண்டாவது சிறந்த ஆட்சியாக இருக்கும் இல்லையா?
திறனாய்வாளன்: அது அவசியமில்லை. அவர்கள் பெரும்பான்மைவாத அமைப்பின்கீழ் உள்ளதிலும் பார்க்க, அதி கூடியளவுக்கு, அநேகமான கொள்கைகளை, அநேக மக்கள் அடைந்து கொள்வதற்கு இடமளிக்கும். அது சுயநிர்ணயத்தை மிகுதிப்படுத்தும் அளவுக்கு, சராசரியான பயன்பாடும், நேர்மையும் கடுமையான பெரும்பான்மையாட்சியின் கீழ் சாத்தியமாகும்.
பெரும்பான்மைவாதி. அவ்வாறு இருக்காது. அவை செயற்தன்மை வாய்ந்த சூழலில் தங்கியிருக்கும். சரியா?
திறனாய்வாளன்: சில சந்தர்ப்பங்களில் பெரும்பான்மை ஆட்சியிலும் பார்க்க, சிறுபான்மையினர் ஆட்சி நன்றாக இருந்தால், பெரும்பான்மை ஆட்சியே எப்பொழுதும் சிறந்தது என நாம் கூற முடியாது இல்லையா?
(vi) பெரும்பான்மையாட்சி சராசரிப் பயன்பாட்டை மிகுதிப்படுத்துமா?
திறனாய்வாளன்: கூட்டுத் தீர்மானங்களின் மூலமாக சராசரி தேறிய நன்மைகளை மிகுதிப்படுத்தும் ஒரு வழியாகப் பெரும்பான்மை ஆட்சி
84

பற்றிய உமது நியாய விளக்கத்தைப் பயன்படுத்தலாம். அல்லது சராசரித் திருப்தி, பயன்பாடு அல்லது நீர் விரும்பிய யாதாயினும் ஒரு சொல்.
பெரும்பான்மைவாதி: தேறிய நன்மைகள் அவற்றைச் செய்யும்.
திறனாய்வாளன் : உமது விடயத்தில் , A என்ற மாற்றுவழி மேற்கொள்ளப்பட்டால், பெரும்பான்மையினரில் உள்ள நபரின் சராசரி தேறிய நன்மைகள், சிறுபான்மையினரிலுள்ள உறுப்பினரின் சராசரித் தேறிய நன்மைகளுக்கு ஆகக்குறைந்தது சமனாக இருக்கும். A நிராகரிக்கப்பட்டால் மேற்கொள்ளப்படும் இவ் எடுகோள் பக்கச் சார்புடையதாக எனக்குத் தோன்றுகிறது. அது பின்பற்றப்படவில்லை யானால், பெரும்பான்மை ஆட்சிக்கு உத்தரவாதமில்லை. பின்னர், ஒவ்வொருவருக்குமான தேறிய நன்மைகளைக் கருத்திற்கொண்டே பெரும்பான்மையானது கொள்கைகளைத் தீர்மானிக்கும். அவ்வாறாயின், ஒரு பெரும்பான்மை நடுநிலையை அது ஒத்திருக்காது.
பெரும்பான்மைவாதி. ஆனால் உமது நடுநிலைச்சார்பும், சனநாயக செயல் முறைகளுடன் தொடர்பு கொள்ளாது, சில வகையான பாதுகாப்புப் பணியைச் செய்கிறது. பெரும்பான்மை ஆட்சிக்குரிய மாற்று வழியாக நீர் அதனையா எடுத்துக் கூறுகின்றீர்?
திறனாய்வாளன்: நான் ஒரு மாற்றுவழியை முன்மொழியவில்லை. பெரும்பான்மை ஆட்சிக்கான உமது பயனுடைமைவாத நியாய விளக்கம் மிகுந்த குறைபாடுடையது என விளக்கவே நடுநிலைச் சார்பினைப் பயன்படுத்தினேன். சிறுபான்மையினரின் விருப்பங்களுக்குச் சமமான கணிப்பைப் பெரும்பான்மையினர் கொடுக்கத் தவறுமிடத்து, அதனையும் சேர்த்துக் கொள்வேன். அவ்வாறாயின் அது கோட்பாட்டினை மீறுகிறது. அதன் மீதே சனநாயக செயல்முறையின் சட்ட வாட்சி, பெரும்பான்மை ஆட்சி ஆகிய இரண்டும் தங்கியிருக்கும்.
பெரும்பான்மைவாதி: குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில், பெரும்பான்மை ஆட்சியானது நீர் விபரித்தது போல அமையாது.
திறனாய்வாளன்: நானும் அவ்வாறு சந்தேகங்கொள்ளவில்லை. ஆனால், அது விடையாகவும் அமையாது. சில குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு ஏற்பவே பெரும்பான்மைக்கோட்பாட்டுக்குநியாய விளக்கம் கொடுக்கப்பட வேண்டுமாயின், இத்தகைய நிபந்தனைகள் பெரும்பான்மை ஆட்சிச் செயல முறைகளை மறுத்தால் அதற்கு விளக்கங் காடுக்க முடியாது. பெரும்பான்மையானது, தெரிவுசெய்யும் விளைவுகள் பயனுடைமைவாதத் தகுதி விதிகளைத் திருப்தி செய்யும் எனப் பெரும்பான்மைக் கோட்பாடு உறுதிசெய்யும் என்றும் கூறமுடியாது. உமது எடுகோளடிப்படையிலான நிபந்தனைகளை அமைப்பு கொண்டிருக்காதபோது, பெரும்பான்மை
85

Page 46
ஆட்சி அவசியம் என்பதை நீர் நியாயப்படுத்த முடியாது அல்லது பயனுடைமைவாத தகுதிவிதிகளால் மதிக்கப்பட்ட பொருத்தமான விளைவுகளுக்கு அவை போதுமென்றும் கூற முடியாது. உம்மால் குறிப்பிட்ட நிபந்தனைகள் தற்பொழுதுள்ளன என நீர் குறிப்பிடப் போவதில்லை. இல்லையா?
பெரும்பான்மைவாதி. நிச்சயமாக இல்லை.
(wi) பிரச்சினைகள் தொடர்பான நடுநிலைமை
திறனாய்வாளன்: இறுதியாக, “மே”யினுடைய பெரும்பான்மை ஆட்சி பற்றிய வாதத்தில் முக்கியமாய் அமைந்த பிரச்சினைகள் பற்றிய நடுநிலைமை சம்பந்தமான எடுகோள் பற்றி ஒரு வினாவை எழுப்ப விரும்புகிறேன். நடுநிலைமை பற்றிய பிரச்சினை நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்ததொன்று. அநேகமான சனநாயக நாடுகளிலே, தீர்மானம் மேற்கொள்ளும் செயலானது சகல பிரச்சினைகள் சம்பந்தமாகவும் நடுநிலையாக இருப்பதில்லை. உதாரணமாக அரசியலமைப்புத் திருத்தங்களைக் கூறலாம். இன்னொரு உதாரணமாக, சமஷ்டி அமைப்புகளில், அரசுகள், மாகாணங்கள் அல்லது கன்டோன்கள் (Cantons) கொண்டிருக்கும் அமைப்புகளைச் சாதாரண பெரும்பான்மை ஆட்சியினால் நீக்கிவிட முடியாது. இன்னொன்று சனநாயக நாடுகள் சிலவற்றில், முக்கியமான மத சார்பான, மொழி சார்பான அல்லது பிரதேச உப கலாசாரம் சார்பான பிரச்சினைகள் பெரும்பான்மை ஆட்சியினால் தீர்மானிக்கப்பட முடியாமல் உள்ளன. உண்மையிலே, அரசியல்யாப்பு அடிப்படையிலும் சரி, அல்லது ஒப்பந்த மூலமாயினும் சரி, ஒவ்வொரு உப கலாசாரமும் அதன் முக்கியமான விழுமியங்கள் அல்லது விருப்பங்கள் சம்பந்தமான விடயங்களில் ரத்து அதிகாரத்தைப் பிரயோகிக்க உரிமையுடையவர். சுருங்கக் கூறின், சனநாயக நாடுகள் பற்றிய ஒர் ஒப்பீட்டு ஆய்வானது, சகல பிரச்சினைகள் மீதும் பெரும்பான்மை ஆட்சியின் பாதிப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவேயுள்ளது எனத் தெரிவிக்கின்றது.
பெரும்பான்மைவாதி; சில நாடுகளில் சனநாயக ஆட்சிச் செயல்முறைகளில் எவ்வாறு முழுமையான ஈடுபாடு காட்டுகின்றன என்பதை எடுத்துக் காட்டுகிறது. *
திறனாய்வாளன்: உமது விடை மிகவும் இலகுவானது. பெரும்பான்மை
ஆட்சியைப் பற்றிப் பலர் கருதுவதுபோல, மக்கள், பெரும்பான்மை
ஆட்சியில் ஈடுபாடு காட்டாமலிருந்தால் சனநாயக ஆட்சிச்
செயல்முறைகளிலும் ஈடுபாடுகாட்ட மாட்டார்கள் என நீரும் கருதுகின்றீர்.
அதனை ஏற்றுக்கொள்வீர் என நான் நம்புகிறேன். சனநாயக நாடுகள் 86

சிலவற்றிலே, பெரும்பான்மை ஆட்சி பற்றிய நோக்கு கட்டுப்படுத்தப் பட்டிருக்குமானால், பெரும்பான்மைவாத சனநாயக ஆட்சிகளில் உள்ளது போல, அரசியல் சமத்துவம் மற்றும் சனநாயகரீதியான கருத்துக்களில் முழுமையான ஈடுபாடு காணப்படும். மற்றும் சனநாக ஆட்சியை உமது வரைவிலக்கணரீதியான தீட்டுக் கல்லாகப் பயன்படுத்தாவிட்டால், பெரும்பான்மைவாத நாடுகளிலுள்ள நிறுவனங்கள் சனநாயக ஆட்சிச் செயல் முறைகளை அநேக பெரும்பான்மைவாத நாடுகளில் உள்ளது போன்ற அரசியல் நிறுவனங்களைப் போன்று முழுமையாக எய்தும் என்பதை நீர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பெரும்பான்மை ஆட்சியைப் பற்றித் திறனாய்வாளன் எடுத்துக் காட்டிய குறைபாடுகள் பெரும்பான்மைவாதிகளின் கருத்துக்குப் பெரும்சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. அதாவது சனநாயக செயல்முறைகள் சகல கூட்டுத் தீர்மானங்களுக்கும் பெரும்பான்மை ஆட்சியை நிச்சயமாக எதிர்பார்க்கிறது எனக் கூறுகின்றன. ஆயினும் சில அளவிட முடியாத சான்றுகளிலிருந்து பெரும்பான்மை ஆட்சி பூரணத்துவமற்றது என்றும் கூறப்படுகிறது. (ஒருவேளை இது உயர்மட்டத்தில் பூரணமற்றதாக இருக்கலாம்) இவ் ஆட்சியானது மாற்று வழிமுறையின் மூலம் கூட்டுத்தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு நேரடியாக நாம் வரமுடியாது. அத்தகைய முடிவுக்கு வருமுன்னர், பொதுவாக ஒரு மீயுயர் மாற்று வழியொன்றை நாம் காண முடியுமா என அறிய வேண்டும். பெரும்பான்மை ஆட்சிக்கான மாற்று வழிகளும் பெருங் குறைபாடுடையனவே.
米米米米米
87

Page 47
III
சிறந்த மாற்றுவழியொன்று உண்டா?
பெரும்பான்மைவாதிக்கும் திறனாய்வாளனுக்குமிடையே நடைபெற்ற கலந்துரையாடலில் பெரும்பான்மையாட்சி முறையில் உள்ளதெனச் சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகளுக்குத் தெளிவான, சிறந்த மற்றும் சனநாய ஆட்சியின் விழுமியங்கள், ஒழுக்கம் சார்ந்த எடுகோடுகளுடன் இணங்கிச் செல்லக்கூடிய மாற்று வழிமுறையைக் காண்பது சாத்தியமானதா?
1. மிகச் சிறந்த பெரும்பான்மை
தீர்மான ஆட்சிக்குரிய ஓர் உத்தேசத் தீர்வாக, கூட்டாகக் கொாள்கைகளை உருவாக்க அதிகூடிய பெரும்பான்மை அத்தியாவசியமெனக் கூறலாம். நடைமுறையில் திறனாய்வாளன் சுட்டிக்காட்டியது போல, அவை சனநாயக ஆட்சி நிலவும் நாடுகளில் பொதுவாக நிலவுகின்றதுடன், அசாதாரண நிலைமைகளைப் பொறுத்தமட்டில் ஏகோபித்த தன்மையும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொருவரும் ஒரு கொள்கையை அங்கீகரிப்பார்களேயானால், அக்கொள்கையை மேற்கொள்ளவேண்டும். இங்கே எடுத்துக் காட்டவேண்டிய இன்னொரு அம்சம் என்னவெனில், ஒவ்வொருவரும் அங்கீகரித்தால் மட்டுமே ஒரு கொள்கையை நடை முறைப்படுத்தலாம். ஒரு கொள்கைக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் எவருக்கும் வீட்டோ அதிகாரத்தைப் பிரயோகிப்பதன் மூலம் நடை முறையிலுள்ள ஏகோபித்த ஆட்சி சாத்தியமற்ற நிலையை உருவாக்கலாம். ஏலவே கவனத்திற்கொண்டு பின்னர் மறுத்தொதுக்கிய அராஜகம் என்னும் விடயத்தை மீண்டும் இங்கே கலந்துரையாடுவது அவசியமற்றது. ஏகோபித்த தன்மையிலும் பார்க்கச் சற்று குறைந்த ஆனால் சாதாரண பெரும்பான்மையிலும் பார்க்கச் சற்றுக் கூடிய ஆட்சியின் மூலம் எதிர்பார்க்கப்படுவது என்ன? ரூசோ எடுத்துக் காட்டியதுபோல அத்தகைய ஒர் ஆட்சியைக் காணமுடியாது. தீர்மானம் மேற்கொள்ளப்படவேண்டிய ஒரு விடயத்தின் முக்கிய இயல்புக்கும் அதன் துரிதத் தன்மைக்குமிடையே சமநிலை காணப்படவேண்டும். இவற்றுக்கு இடைப்பட்ட உபரிப் பெரும்பான்மைகள் யாவும் பல எதிர்ப்புகளுக்கு உள்ளாகின்றன. முதலாவதாக, பெரும்பான்மைத் தீர்மானமொன்றுக்குச்சிறுபான்மையினர் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்த இடமளித்தால் அவை சுய தீர்மானங்களைச் செயற்படுத்தக்கூடிய பிரசைகளின், எண்ணிக்கையைக் குறைக்கும் எனப் பெரும்பான்மைவாதி சுட்டிக் காட்டியுள்ளார். இரண்டாவது, வாக்களிப்போடு தொடர்பான பிரச்சினைகளுடன்
88

ஏகோபித்ததன்மை இணைந்திருக்கும் என்பதில் குறைகள் எவையும் இருக்க முடியாது. மூன்றாவதாக, உபரிப்பெரும்பான்மையின் தேவைகள் நடை முறையில் காணப்படுவனவற்றுக்குச் சலுகை வழங்கும் என்பதுடன் அவை பெரும்பான்மையினரால் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிரான நீதியீனங்களையும் பாதுகாக்க முற்படும் எனலாம்.
இறுதியாகக் கூறப்பட்ட விளைவினை உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள விரும்பினால், சில நிலைமைகளின் கீழ் 64 சதவீதம் அல்லது அதற்கு மேலான பெரும்பான்மையை எதிர்பார்த்திருக்கும் ஆட்சியானது வாக்களிக்கும் வட்டத்துடன் இணைந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதுடன் “வெற்றியீட்டுபவர் எப்பொழுதும் நிலைத்துநிற்பார்”எனவும் உறுதிசெய்கிறது. ஆயினும் இவ்வாறான தேவைகள் ஏற்படுமிடத்து, நடைமுறையில் உள்ளவற்றைப் பின்பற்ற வேண்டும் என மரபுபேணுவோருக்கு வேண்டுகோள் விடுக்கலாம். சிலவகைப்பட்ட தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதைச் சட்டங்கள் தடுத்தால், ஏனையோருக்கும் இவை சாத்தியமானதே. நடைமுறையில் உள்ளவற்றுக்கு உயர்மட்டச் சலுகை வழங்குதல், ஒழுக்கஞ் சார்ந்த தீர்ப்புகள் வழங்கப்படுதலைத் தடுக்கும் எனவும் கூறலாம். இதனை அனுபவவாயிலாகக் கூறுவதானால், பல சனநாயக ஆட்சி நிலவும் நாடுகளிலும், இணைப்புகளிலும் ஒழுக்கரீதியான உணர்வுகளையும் கொள்கை இலக்குகளையும் மேற் கொள்வதைப் பொதுவாகத் தடுத்து விடும்.
ஆகவே, இவ்விடயத்துக்கான தீர்வாக, பெரும்பான்மை ஆட்சியின் சாதகமான அம்சங்களை அதிகூடிய பெரும்பான்மையின் சாத்தியத் தன்மைகளுடன் முதலும் இறுதியுமான புகலிடமாகப் பெரும்பான்மை யாட்சியைப் பயன்படுத்தி இணைக்கலாம். சில விடயங்களைப் பொறுத்தமட்டில் அதிகூடிய பெரும்பான்மை அவசியமானது என்பதை அதன் உறுப்பினர்கள் பெரும்பான்மையின் மூலமாக முன்கூட்டியே தீர்மானிக்கலாம். இத்தகையவை சில பாரிய விளைவுகளை உண்டாக்கக்கூடிய விஷேட பிரச்சினைகளையும் உள்ளடக்கலாம். உதாரணமாக, மொழி அல்லது சமய ரீதியான வேற்றுமைகளைக் குறிப்பிடலாம். இவற்றைத் தடுக்க வேண்டுமெனில், வாக்களிப்பு வட்டத்தில் இவை தடுத்துவைக்கப்படவேண்டும். ஆயினும் எத்தகைய விவகாரங்களுக்கு அதிகூடியபெரும்பான்மை அவசியமென்பதையும் பெரும்பான்மையாட்சியே தீர்மானிக்க வேண்டும்.
2. வரையறுக்கப்பட்ட சனநாயக ஆட்சி
சுயமான மட்டுப்படுத்துகை நிலவாதபோது, சனநாயக ஆட்சிச் செயல் முறைகள் பிழைத்திருக்க முடியாது என்பது வெளிப்படை, அதாவது
89

Page 48
சிலவகையான தீர்மானங்களை மேற்கொள்வதிலே கட்டுப்பாடு இல்லாவிட்டால், அவற்றின் சுயநிலைப்புக்குத் தேவையான நிபந்தனைகள் அழிந்துவிடாது. ஆயினும் திருப்திகரமான தீர்மான ஆட்சியைத் தேடுவதிலுள்ள அசாதாரண கஷ்டங்கள், சனநாயக ஆட்சிச் செயல்முறை பற்றிய சில விமர்சனங்கள், கட்டுப்பாடுகளைப் பற்றி எடுத்துக் கூறவேண்டும் . அவை சுய மட்டுப்பாடுகளுக்குள் தேவையான
செயல்முறைகளுக்கு அப்பாலும் அதிகதுTரம் சென்று விடுகின்றன.
இத்தகைய தோரணையில் வில்லியம் றிக்கர் (William Ricker) என்ற சமூகத் தெரிவுக்கொள்கை பற்றிப் பயிலும் மாணவன், கூட்டுத் தீர்மானத்துக்கு ஏதுவான ஆட்சியொன்றில்லை அது பக்கச் சார்பான அல்லது பயனற்ற விளைவுகளைத் தராது எனக் கூறுகின்றார் (Ricker 1982). இக் கூற்றின்படி சாதகமல்லாதவற்றையும் உண்மையில் சாத்தியமாகாதவற்றையும் ஓர் அரசியல்முறைமையை அடையும் பொருட்டு மறுத்துரைக்கலாம்; இவையாவும் சனநாயக ஆட்சிச் செயல்முறைகளைத் திருப்தி செய்ய வேண்டும். அல்லது அவருடைய சொல்லாட்சியின்படி பிரபல்யம் பெற விரும்பும் சனநாயகம் (Populistdemocracy) என இருத்தல் வேண்டும். சாத்தியமாகக் கூடியது என்ன? அல்லது அவருடைய விருப்பத்துக்குரிய கருத்து என்ன என்பன அதிக தூரம் மட்டுப்படுத்தப்பட்ட குறிக்கோளாகவேயுள்ளது. இவ்வாறான அமைப்பு போதியளவுக்குச் சனநாயகரீதியாக அமைந்து, கால அடிப்படையில் வரும் தேர்தலின் மூலம் , தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் தமது உத்தியோக பூர்வமான செயல்களை நிறைவேற்றத் தவறும் வேளையில், அவர்களை நீக்க உதவும் வகையில் பிரசைகள் வாக்களிக்கக்கூடிய ஓர் அமைப்பானது கூடியளவுக்குச் சனநாயகரீதியாக அமைதல் வேண்டும். றிக் கரின் கருத்தின் படி ஒரு சனநாயக அமைப்பு இவ்வாறு மட்டுப்படுத்தப்படுதல் சனநாயகரீதியான கருத்திலே, அசாத்தியமான இலக்குகளை அல்லது பொது மக்களுடைய விருப்பத்தைப் பிரதிபலிப்பனவற்றை அரசாங்கம் அடையாவிட்டாலும் கூட அடிப்படை விழுமியங்களை எடுத்துக்காட்ட அவை உதவுகின்றன.
சனநாயக ஆட்சிச் செயல்முறையின் உண்மைத்தன்மை பற்றிய ஒரு கடினமான விளக்கம் கூட பாரியதொகுதிகளுக்கு பொருந்துமாயினும் பாரிய சனநாயக ஆட்சியின் விழுமியங்கள் றிக்கருடைய வாதத்தின்படி அவற்றுக்குச் சார்பாகவேயுள்ளன. ஆயினும் அவருடைய வாதம் பாரிய பல பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றன. முதலாவதாக திறனாய்வாளன் சுட்டிக்காட்டியவாறு, அவருடைய தாராள சனநாயக ஆட்சியானது, பிரபல்யம் பெறவிரும்பும் சனநாயக ஆட்சி எதிர்நோக்கும் கஷ்டங்களைத் தவிர்த்துக்கொள்ள முடியாது. அவருடைய சமூகத் தேர்வுபற்றிய மயக்கம் தரும் விமர்சனங்கள் தெளிவாக இருந்தால், பிரசைகள் ஒரு தேர்தல் மூலம் அலுவலகங்களில் இருந்து உத்தியோகத்தர்களை நீக்கிவிடவாக்களித்தல் மற்றும் விளைவுகள் என்பதினால் கருதப்படுவது யாது எனத் தீர்மானிக்கப்
90

போதிய பின்னணி வழங்கப்படுவதில்லை. இரண்டாவதாக, சனநாயக இணைப்புகளிலே வாக்களிப்பு வட்டம் எந்தளவுக்கு உண்மைப் பிரச்சினையாகவுள்ளது என்பதும் தெளிவற்றது. சமூகக் கொள்கை யாளர்கள் இவை பற்றிக் கூறும்போது, றிக்கரும் ஏனையோரும் வாக்களிப்பு வட்டம் பற்றிக் கூறியவை சற்று மிகைப்படுத்தப்பட்டவை எனத் தெரிவிக்கின்றனர்.
3. ஓரளவு பாதுகாப்பு
வாக்களிப்பு விதிகளிலுள்ள கஷடங்கள் காரணமாக, சனநாயக செயல்முறைகளை விமர்சிப்போர், சட்டங்களை ஆக்குதற்கான சட்ட மன்றங்களின் ஆற்றல் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள மீயுயர் நீதிமன்றம் போன்ற தேர்ந்தெடுக்கப்படாத ஒரளவு பாதுகாப்பைக்கொண்ட அமைப்பிலும் பார்க்க குறைந்தவை என வாதிடுகின்றனர். ஆகவே தான் றிக்கரும், பாறி வெயின்காஸ்ட்டும் (Riker and Barry Weingast) ஐக்கிய அமெரிக்க அரசிலுள்ள மீயுயர் நீதிமன்றமானது காங்கிரசிலிருந்து பொருளாதார உரிமைகள் குறிப்பாக சொத்துகள் பற்றிய உரிமைகள் என்ற விடயங்களில் வேறுபடவேண்டும் என்ற வாதத்தை மறுக்கின்றனர். அவர்களுடைய கருத்தை விமர்சிப்போர் வாதிடுவதாவது “சகல விதமான உரிமைகள் தொடர்பான சட்ட சபைத் தீர்மானங்களின் நீதிமன்றப் பரிசீலனைகள்" பற்றிய ஒரு முழுமையான கண்ணோட்டத்தைத் தருகின்றன. ஆயினும் அதிகாரக்குழு நீதிமன்றத்திலே ஒருபுறம் ஒரளவு பாதுகாப்பை வழங்கியும் மறுபுறம் அதனை அகற்றியும் விடுகின்றன.
நீதிமன்றத்தின் பரிசீலனை, நீதிபதிகள் சட்டசபை கூறுகின்ற நியாயங்களுக்கு மாற்றாகத் தமது நியாயத்தைச் சமர்ப்பிக்க இடமளிக்கின்றது. இவ்வாறான நீதிமன்றப் பரிசீலனை பொருளாதார உரிமைகள் பாதுகாக்கப்படாதநிலை, அவை எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும் என்ற பிரச்சினையைச் சட்டத்துறையிலிருந்து நீதித்துறைக்கு மாற்றவே உதவுகின்றது. அதாவது நீதிமன்றப்பரிசீலனை, உரிமைகளைப் பாதுகாக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில்லை.
பூரண ஆதரவு கிடைக்குமிடத்து, பெரும்பான்மைக்கோட்பாட்டுக்கு ஓரளவு பாதுகாப்புநிலை உள்ளது. ஒரு மாற்றுவழியாக விளங்கும் போது அது இரண்டு குறைபாடுகளினால் பாதிப்புக்குட்படுகிறது. (அ) பாதுகாவலனுடைய அதிகாரத்துக்கு அதிகளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவ் வரையறைக்குள் அவர்களுடைய அதிகாரம் பல்வேறு எதிர்ப்புகளுக்குள்ளாகின்றதுடன் பாதுகாப்பு நிலையை நிராகரிக்கும் வலுவுள்ள பின்னணியையும் வழங்கும். (ஆ) நியாயமற்ற எடுகோள்கள் இரண்டினுள் ஒன்றை ஏற்கத் தயாராக இல்லாவிட்டால் முழுமையான பாதுகாப்பு நிலையைப்போல ஒரளவு பாதுகாப்பு நிலையும் பெரும்
91

Page 49
பான்மையாட்சியின் கஷ்டங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. ஒன்றில் பாதுகாவலரின் எண்ணிக்கை ஒன்றாகக் குறைக்கப்படவேண்டும் அல்லது எப்பொழுதும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். மேலான ஞான ஒழுக்கத்தின்படி ஒருவர் ஆளும் தகுதியைப் பெறுகின்றார் என எடுத்துக் கொள்வோமாயின், எடுகோள்களிலும் பார்க்க ஒழுக்கம் கூடியளவு நியாயமற்றதாகக் காணப்பட்டால் அங்கு சிறுபான்மையே தகுதி பெறும் . வரலாற்றுப் பதிவுகளின் மூலம் இவையிரண்டும் நியாயத்திற்குப் புறம்பானவையெனத் தெரிவிக்கப்பட்டால், அவற்றை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எப்பொழுதும் ஏற்றுக்கொள்வர் எனலாம். ஆயினும் ஒரு நீதிமன்றம் நீதிபதிகள் பலரைக் கொண்டிருந்தால், அவர்கள் தாம் விரும்பியதுபோன்று உடன்படாதிருந்தால் அங்கு தீர்மான ஆட்சியொன்று இன்றியமையாததாய் இருக்கும். வாக்களிப்பின் மூலமாக உடன்படாமைக்கு முடிவு காணப்பட்டால் மற்றும் நீதிபதிகளின் வாக்குகள் சமமான முறையில் கணிக்கப்பட்டால் பெரும்பான்மையாட்சியின் சகல பிரச்சினைகளும் அவற்றின் மாற்று வழிகளும் நுண்பாக நிலையில் இடம்பெறும் எனக் கூறலாம்.
4. பெரும்பான்மை வல்லாட்சி எதிர் சிறுபான்மை வல்லாட்சி
பெரும்பான்மைவாத அமைப்புகளைப் பாதுகாப்பவர்கள் சில சமயங்களில் பெரும்பான்மை வல்லாட்சியை அச்சத்துடன் நோக்கும்போது சிறுபான்மையினர் உரிமைகள் பாதிக்கப்படுவதற்கும் சிறிதளவில் இடமளிக்கின்றனர். இத்தகையவை வழக்கமாக இரண்டாவது மாயைத் தோற்றத்தினால் (சிறுபான்மை வல்லாட்சி) சுட்டிக்காட்டுபவற்றைக் கவனிக்கத் தவறிவிடுகின்றன. ஆயினும் பெரும்பான்மைவாதச் சனநாயக அமைப்பு, சகல பிரசைகளினதும் அடிப்படை அரசியல் உரிமைகளுக்கு அப்பால் , அரசியலமைப்பு வாயிலாக சிறுபான்மையினரின் உரிமைகளுக்கும் சலுகைகளுக்கும் உத்தரவாதம் கொடுக்கவில்லை. ஆகவே பெரும்பான்மைவாதம் சாரா சனநாயக ஒழுங்கமைப்புகளால் சிறுபான்மையினரின் பாதுகாக்கப்பட்ட நிலைமையை பெரும்பான்மை யினருக்குப் பாதிப்புத்தரும் வகையில் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது. பெரும்பான்மை ஆட்சி நிலவும் நாடுகளில் சகல பிரசைகளதும் அடிப்படை சனநாயக உரிமைகளைப் பாதுகாக்கப் பிரசைகளில் பெரும்பாலானோர் காட்டும் ஈடுபாடுகள், தம்முடன் வாழும் பிரசைகளுக்கு மதிப்பளித்தல், சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதால் உண்டாகும் பாதக விளைவுகளைத் தவிர்த்தல் என்பவற்றிலும் பார்க்கச் சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாத்தல் சக்திமிக்கதாகக் காணப்படமாட்டாது. ஆகவே பெரும்பான்மைவாத அமைப்புச் சாராத சனநாயக நாடுகளில் சிறுபான்மையினரின் துஷ்பிரயோகத்துக்கு எதிராகப் பெரும்பான்மையினரைப் பாதுகாத்தலானது பெரும்பான்மையினர் மேற்கொள்ளும் தீர்மானங்களைத் தாம் விரும்பாதபோது,
92

சிறுபான்மையினர் வீட்டோவைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களைத் துஷ்பிரயோகம் செய்வதிலிருந்து பாதுகாத்தலிலும் பார்க்க வலுவற்றது எனலாம். இந்த வாதம் குறிப்பிடுவது யாதெனில், சிறுபான்மையினர் உரிமைகளில் பெரும்பான்மையினர் உண்டாக்கும் அச்சுறுத்தல்களைத் தடைசெய்யும் வகையில் மட்டுமே சிறுபான்மையினர் தமது வீட்டோவைப் பாதகமான முறையில் பயன்படுத்தலாம் என்பதாகும். ஆயினும் பெரும்பான்மையினர் மீது அல்லது இன்னொரு சிறுபான்மையினர்மீது பாதகமான முறையில் தமது வீட்டோவை நேரடியான பாதிப்புத்தரும் வகையில் (பெரும்பான்மைவாதிக்கும் திறனாய்வாளனுக்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுத்துக் காட்டப்பட்டதுபோன்று) பயன் படுத்துதல் தவறானது.
ஆகவே, பெரும்பான்மைவாதி அல்லது பெரும்பான்மை வாதம் சாரா ஒழுங்குகளால், நியாயத்தை உறுதிசெய்ய முடியாது. அவர்களது பரிந்துரைக்குப் பதிலாக, பெரும்பான்மை ஆட்சியோ அன்றேல் பல்வேறுவிதமான பெரும்பான்மை சாரா ஒழுங்குகளோ கூட்டுத் தீர்மானங்களுக்கு வரக்கூடிய சிறந்தவொரு முறையை எடுத்துக்காட்டக் கூடும்.
5. சனநாயக நாடுகளில் பெரும்பான்மை ஆட்சி
பெரும்பான்மை ஆட்சியானது அதற்குரிய மாற்று முறைகளிலும் பார்க்க உயர்ந்தது அல்லது குறைந்தது என உறுதியாகக் கூறக் கூடிய கொள்கைச் சான்றுகள் எவையும் இல்லாதவிடத்து, ஓர் அமைப்பிலுள்ள உறுப்பினர்கள் சனநாயகரீதியான கருத்துக்களில் ஈடுபாடு காட்டி, தீர்மான ஆட்சி பற்றிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணலாம் எனில் ஆச்சரியமாக இருக்கும். சனநாயக அடிப்படை நிறுவனங்கள் பற்றிய மேலோட்டமான அவதானங்கள் இம் முடிவினை உறுதிசெய்வதாக இருக்கலாம் அவை பல வித்தியாசமான நடை முறைகளைப் பின்பற்றுவதையும் காணலாம்.
இத்தகைய முடிவினை வெளிப்படுத்தும் சான்றுகளில் ஒன்றாக 21 நாடுகளில் உள்ள பெரும்பான்மைவாத அரசாங்கங்களின் அமைப்புப் பற்றிய ஆரென்ட் லெஜ்பாட் (ArendLijphart)என்பவருடைய பகுப்பாய்வு அமைகின்றது. இந்நாடுகள் யாவும் இரண்டாம் உலகப்போர் தொடக்கம் தொடர்ந்து சனநாயக நாடுகளாக இருந்து வருகின்றன. லெஜ் கூறும் சனநாயக ஆட்சியானது, பிரதானமாக பலராட்சியைப் போன்றது. இந்நாடுகள் யாவற்றையும் "நிலையான பலராட்சி" நாடுகள் என குறிப்பிடலாம்.
லெஜ்பாட்சனநாயக ஆட்சி மாதிரிகளை வேறுபடுத்தியுள்ளார் இவற்றின் "வெஸ்ட்மினிஸ்ரர் மாதிரி" யானது பெரிய பிரித்தானிய பாராளுமன்ற
93

Page 50
முறைமையின் இலட்சியவாத விளக்கங்களின் மூலம் பெறப்பட்டது. அடுத்தது சுவிற்சலாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் காணப்படும் இணக்க மாதிரி (consensus model) ஆகும். இணக்கம் என்பதன் மூலம் லெஜ் பாட் ஏகோபித்த தன்மையைக் கருதவில்லை. இந்நாடுகளின் தீர்மானம் மேற்கொள்ளும் முறையானது, அவருடைய இணக்க மாதிரிக்குப் பொருந்துவதாக உள்ளது. ஆயினும் அதன் பெரும் பகுதி ஏகோபித்த மறுப்புகளுக்கு இடமளிக்கவில்லை. ஒழுங்கமைப்புகள் சகல அதிகூடிய பெரும்பான்மையாட்சிகள் போல இருந்தாலும், சில பிரச்சினைகளைப் பொறுத்த மட்டில் நடை முறையில் உள்ளவற்றிற்குச் சலுகை காட்டும் எனக் கூறலாம். ஆகவே “வெஸ்ட்மினிஸ்ரர் மாதிரியின் சாரம் பெரும்பான்மையாக” இருக்கும்போது மாதிரியின் வழிகாட்டல் கோட்பாடுகள் நாட்டிலுள்ள பிரதான சமூகக் குழுக்களின் வெளிப்படையான
அனுமதியைப் பெறலாம்.
இவ்விபரங்கள் யாவும் தெளிவானவை. உதாரணமாக பெரும்பான்மை வாதமானது உறுதியான பலராட்சிக்குரிய தகுதி விதியாக இருந்தால், கொள்கையடிப்படையில், அமைச்சரவை அமைப்புள்ள நாடுகளில் உள்ள அமைச்சரவைகள் பெரும்பான்மைக் கட்சியின் அல்லது கட்சிக் கூட்டுகளின் உறுப்பினர்களையே கொண்டிருக்க வேண்டுமென எதிர்பார்ப்பர். சிறுபான்மைக் கட்சிகளின் உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்வதற்கு, அவர்களுடைய வாக்குகள் சட்டங்களை ஏற்றுக்கொள்வதற்கு அவசியமில்லையெனக் கூறுதல் இணைப்பு வாதத்தின் தனி முறைக் கோரிக்கையாக இருக்கும். ஆயினும் 8 நாடுகளில் மாத்திரம் வெற்றிக்கான அளவு 85 சதவீதமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறே வலுவான பெரும்பான்மை அமைப்பொன்றில், இரண்டாவது அமைப்புசற்று உணர்வு பூர்வமானது. உண்மையிலே ஒவ்வொரு அமைப்பும் ஒழுக்கரீதியாக இன்னொன்றினைப் போன்றுள்ளது. ஸ்கன்டிநேவிய நாடுகள் தேவைக்கு மேற்பட்ட இரண்டாவது சபையை நீக்கியுள்ளன.
நவீன சனநாயஆட்சி நிறுவனங்களின் காவலர்களாக விளங்கும் வெஸ்ட்மினிஸ்ரர் மாதிரியைப் பின்பற்றுவோர், பெரும்பான்மை ஆட்சிக்கு இரு கட்சி அமைப்பு முறை அவசியமெனக் கருதுகின்றனர். பெரும்பான்மை வாக்குகளைப் பெறும் ஒரு கட்சி, ஆளும் தகுதியைப் பெறுகையில் மறு சிறுபான்மைக்கட்சி எதிர்க்கட்சியாக விளங்கும். ஆயினும் இரு கட்சிமுறை அருகிவரும் வேளையில், இன்று நியூசிலாந்தும் ஐக்கிய அமெரிக்க அரசுகளும் மட்டும் அத்தகைய பண்புடையனவாகவுள்ளன. (ஐக்கிய அமெரிக்க அரசுகளின் பிரிந்துபோன கட்சிகள் தூய வெஸ்ட்மினிஸ்ரர் மாதிரியின் மத்தியமயப்படுத்தப்பட்ட கட்சிகளிலிருந்து தூர விலகி யுள்ளன). இரு கட்சிமுறையின் தாயகமான பிரித்தானியாவில் கூட இன்று அது இல்லை. (அட்டவணை 1).
94

அட்டவணை 1: உறுதியான பலராட்சிகளில் பெரும்பான்மைவாத மற்றும் பெரும்பான்மைவாதம் சாரா அமைப்புகள்
நாடுகளின் எண்ணிக்கை
பெரும்பான்மை கலப்பு இணக்கம்
அமைச்சரவைகளின் அளவு
ஆகக்குறைந்த வெற்றியின் அளவு 8 சதவீதத்திலும் கூடுதலாக இருத்தல்
85 சதவீதம் அல்லது அதனிலும் குறைவாக
அளவுகூடிய அமைச்சரவைகள்
தனியவையும் ஈரவையும்
-கொண்ட பாராளுமன்றங்கள்
தனியவை கலப்பின
FFT6)6)
கட்சி முறைமைகள்
இரு கட்சி இரண்டிலும் கூட ஆனால் மூன்றிலும் குறைய மூன்று அல்லது மேல்
பிரிந்துபோகும் பிணக்கு களுடன் தொடர்புடைய பிரச்சினைகளின் பரிமாண எண்ணிக்கை
முக்கியத்துவம் வகிக்கும் ஒரு பிரச்சினை
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிரச்சினைகள்
17
தேர்தல்தொகுதி முறைமை
பன்மைத்தன்மையும் பெரும்பான்மை
முறைமையும் ஓரளவு விகிதாசாரம் விகிதாசாரப் பிரதிநிதித்துவம்
ஒற்றையான அல்லது சமஷ்டி முறைமைகள்
ஒற்றை சமஷ்டி
நீதிமுறைப் பரிசீலனை மற்றும் சிறுபான்மை இரத்து அதிகாரம்
Saurce: Lijphart (1984)
நீதிமுறைப் பரிசிலைனையும் சிறுபான்மை இரத்து அதிகாரமும் இல்லை சிறுபான்மை இரத்து அதிகாரம் ஆனால் நீதிமுறைப் பரிசீலனை இல்லை மேற்கூறப்பட்ட
இரண்டும்
95

Page 51
பெரும்பான்மையாட்சி முறையின் ஆதரவாளர்கள், கட்சிகளிடையே தோன்றும் முரண்பாடுகள் ஒரே வகையான பிரச்சினையின் அடிப்படையிலே தோன்றுகின்றன எனக் (சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள்) கருதுகின்றனர். இவை அரசியல் சார்ந்த நோக்கில் வாக்காளர்களை ஒரே இடத்திலேயே நிலைத்திருக்கச் செய்கிறது. ஒரு பொதுத்தேர்தலின் முடிவு, ஒரு தொகுதியிலுள்ள பெரும்பான்மையையும் சிறுபான்மையையும் சரியாக இனங்காணுமாயின், அது ஒரு பெரும்பான்மை அரசாங்கத்தையும், சிறுபான்மை எதிர்க்கட்சியையும் பாராளுமன்றத்தில் உருவாக்கும். மேலும் ஒரு கொள்கை மாற்று முறையினால், உருவாக்கப்பட்ட பிரேரணைக்கு ஒருவர் சார்பாக அல்லது எதிராக வாக்களிக்க வேண்டிய சந்தர்ப்பத்தில், இரண்டு மாற்றுவழிகளுக்கு மேற்பட உள்ள நிலைமைகளுக்கு முகங்கொடுக்கும் போது பெரும்பான்மை ஆட்சியின் குறைபாடுகள் தவிர்க்கப்படுகின்றன. முரணாக, அரசியலில் தீவிரப்போக்குடையோர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விவகாரங்களில் உடன்படாமல் இருந்தால் சமூக பொருளாதார விடயங்கள் மற்றும் சமய சம்பந்தமான பிரச்சினைகளில், ஒரு பிரச்சினையின் மீதான பெரும்பான்மை இன்னொரு பிரச்சினை மீதான பெரும்பான்மையிலிருந்து அதன் அமைப்பில்வேறுபடும் எனலாம். பாராளுமன்றப் பெரும்பான்மையை உருவாக்குதல் தொடர்ந்துவரும் பல்வேறு பிரச்சினைகளில் அதனைப் பேணும் ஆற்றலுக்குத் தலைவர்கள் தாமாகவே கூட்டுகளையும் இணக்கத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறது. அதன் விளைவு சகல பிரதான கட்சிகளும் கூட்டிணைதலாக இருக்கலாம். அவ்வாறாயின் பெரும்பான்மைவாத வெஸ்ட்மினிஸ்ரர் மாதிரி என்பது இணக்க முறைமைக்கு வழியமைத்துக் கொடுப்பதாகவும் இருக்கலாம். லெஜ் பாட்டின் அளவீடுகளின்படி ஐந்து நாடுகளின் பலராட்சி அரசாங்கத்தில் மட்டுமே தனிப்பிரச்சினைப் பரிமாணங்களினால் ஏற்படும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.
வெஸ்ட்மினிஸ்ரர் மாதிரியானது ஒரு பன்மைத்தன்மை அல்லது பெரும்பான்மைத் தேர்தல் முறைமையை உடையதாக இருந்தபோதிலும், (தனியங்கத்தவர் மாவட்டங்களில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி யடையும் அபேட்சகருக்கே பாராளுமன்ற ஆசனம் கிடைக்கும்) இத்தகைய தோற்றப்பாடு பெரும்பான்மைவாதத்துக்கான அவசியத் தேவையென் பதிலும் பார்க்க, ஆங்கிலம் பேசும் நாடுகளின் வரலாற்றுரீதியான தனித்தன்மையெனக் கூறலாம். இவை எப்பொழுதும் விவாதத்துக்கு உட்படுவதாயினும் வெஸ்ட்மினிஸ்ரர் அடிப்படையிலான தேர்தல் தொகுதி ஒழுங்குமுறைகள் இரண்டு கட்சிகளுக்குச் சார்பாக இருக்கின்ற போதிலும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ அமைப்பு பல கட்சி முறைமையைத் தோற்றுவிக்கிறது. இரண்டு கட்சிகளும் இரண்டு மாற்றுவழிகளையே மக்கள்முன் வைக்கின்றன. அவையாவன பெரும்பான்மைக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் பெரும்பான்மையும், எதிர்க்கட்சியினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் சிறுபான்மையுமே அவையாகும்.
96

வெற்றி பெறும் கட்சி வெகுமதியாக, தாம் பெற்ற வாக்கு வீதத்திலும் பார்க்கக் கூடுதலான ஆசனங்களை வழங்குதல் மூலம் வெஸ்ட்மினிஸ்ரர் ஒழுங்கமைப்பு பெரும்பான்மைக் கட்சி அமைச்சரவைக்கு உதவுகிறது. இந்த அமைச்சரவை மிகக் குறைந்தளவிலேனும் பெரும்பாலான வாக்காளர் ஆதரித்த கொள்கைகளை மேற்கொள்வதில் ஆற்றல்மிக்கதாக விளக்கும். இத்தகைய வாதங்கள் அவற்றின் தகுதியில் சந்தேகத்தைத் தந்தாலும், ஆங்கில மொழி பேசும் நாடுகளுக்கு வெளியே விகிதாசாரப் பிரதிநிதித்துவமே நியமமாக உள்ளது என்பதே உண்மையாகும். விகிதா சாரப் பிரதிநிதித்துவமும் பலகட்சியமைப்பு முறையும் ஒன்றிணைந்து செல்லவே விரும்புகின்றன. விகிதாசாரப் பிரதிநிதித்துவம் நிலவும் நாடுகளில் தேர்தல் தொகுதிகள் துண்டாடப்பட்டுள்ளன. ஒரு தனிக்கட்சி பெரும்பான்மை ஆசனங்களை வெல்லுதல் அரிதாக இருக்கும். தேர்தல் தொகுதிகளில் குறைந்த பெரும்பான்மை வாக்குகளே கிடைக்கும். கூட்டமைச்சரவையே ஆட்சி செலுத்தும். அத்துடன் உறுதியான கூட்டு ஒற்றுமை உருவாக்கப்பட்டு கட்டியெழுப்பப்படுவதை எதிர்பார்த்திருக்கும்.
சிலநாடுகளிலுள்ள அரசியல் ஸ்தாபனங்கள் பெரும்பான்மை ஆட்சியை வேறு வழிமுறைகளிலே தடைசெய்கிறன. சமஷ்டி ஆட்சிநிலவும் நாடுகளில் சிறுபான்மையினர் செறிந்து வாழும் மாநிலங்களில் அல்லது மாகாணங்களில் தேசியப் பெரும்பான்மை எப்பொழுதும் இடம் பெறாது. இன்று சமஷ்டி அமைப்பு முறை ஆறு நாடுகளில் மட்டுமே நிலவி யிருந்தாலும் இவை பழமை வாய்ந்த உறுதியான பலராட்சியமைப்பையும் கொண்டுள்ளன. பெரும்பான்மையினர் எடுத்த தீர்மானங்களின்மீது பல்வேறுவகையிலே சிறுபான்மையினர் வீட்டோவை பிரயோகிக்கின்றனர். சனநாயக ஆட்சி நிலவும் பல நாடுகளில் உள்ள அரசியலமைப்பு, சிறுபான்மையினர் தீர்ப்புகளை மீளாய்வு செய்வதன் மூலமே கொள்கைமீது விட்டோவைப் பிரயோகிக்க இடமளிக்கிறது. இவை உயர்நீதி மன்றங்களால், அரசியலமைப்புக்கு முரணாகவுள்ள சட்டங்களை ஒருபுறம் தள்ளிவைக்க இடமளிக்கலாம் அல்லது உடன்பாடுகள், புரிந்துணர்வுகள் மூலம் சிலவகையான கூட்டுக்களை உருவாக்கலாம். அல்லது சில சமயங்களில் இவை இரண்டின் மூலமும் ஏற்படலாம்.
பெரும்பான்மை அரசாங்கத்தின் நோக்கங்கள் மீது ஏற்படும் பல்வேறு கட்டுப்பாடுகள் (வரையறைகள்) பொதுவான சர்வசன வாக்குரிமை மேற்கொள்ளப்படும் வேளையில் மீறப்படலாம். ஆனால் தேசியமட்டத்தில் நடைபெறும் சர்வசன வாக்குரிமை சுவிற்சலாந்திற்கேயுரிய இயல்பாகும். ஏனைய இடங்களில் இது அருமையாக இருக்கும் அல்லது இடம் பெறாமல் இருக்கும். (அட்டவணை-2).
பெரும்பாலான பலராட்சி அமைப்புகள் பெரும்பான்மை முறைமையை மேற்கொள்வதில்லை. லெஜ்பாட் என்பவரால் பகுப்பாய்வு செய்யப்பட்ட
21 நாடுகளில் 6 அல்லது அதனிலும் குறைந்தளவான நாடுகளே
97

Page 52
அட்டவணை - 2: தேசியரீதியான சர்வசன வாக்கெடுப்பு (1945 - 80)
சர்வசன வாக்கெடுப்புகளின் எண்ணிக்கை
நாடுகளின் எண்ணிக்கை
169 20-169 10-19 2-9 1. 0
(சுவிற்சலாந்து)
1. 0 3 5 4 9
முழுமையான பெரும்பான்மை முறைமையைக் கொண்டனவாக
விளங்குகின்றன. ஏனைய மேலதிகமான ஆறு நாடுகளும் பெரும்பான்மை - சமஷ்டி நாடுகளாகும். அதாவது தேசியரீதியான பெரும்பான்மை சமஷ்டி முறைமையினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஏனையவை யாவும் பெரும்பான்மை என்பதிலும் பார்க்க இணைப்புத்தன்மை கொண்டதாகக்
காணப்படும். (அட்டவணை 3).
அட்டவணை - 3: லெஜ் பாட்டின் வகைப்படுத்தலில் 21 நாடுகள்
பெரும்பான்மை
நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம் அயர்லாந்து லக்சம் பேர்க் சுவீடன் நோர்வே
பெரும்பான்மை - சமஷ்டி
ஐக்கிய இராச்சியம்
56
ஜேர்மனி
ஆஸ்திரியா
யப்பான்
இணைப்பு - ஒற்றைத்தன்மை
இஸ்ரேல்
டென்மார்க்
பின்லாந்து
பிரான்ஸ் (நான்காம் குடியரசு)
ஐஸ்லாந்து
98

இணைப்புத்தன்மை
சுவிற்சலாந்து பெல்ஜியம் நெதர்லாந்து இத்தாலி பிரான்ஸ் (ஐந்தாம் குடியரசு),
Source : Lijphart (1984), 216
6. சனநாயகக் கோட்பாட்டிலும் பார்க்க சனநாயக நடை முறையில் பெரும்பான்மை ஆட்சியின் மதிப்பு குறைவாக இருப்பது ஏன்?
வரையறுக்கப்பட்டபெரும்பான்மையாட்சியும் இணக்கத் தன்மை கொண்ட அமைப்பும் தற்கால சனநாயக நாடுகளின் பெரும்பான்மை முறைமையில் செலுத்தும் மேலாதிக்கத்தை எவ்வாறு கணிக்கலாம்?
திருப்தியளிக்கக் கூடிய வகையில், இதனைப் பற்றி வாதிடுவதாயின் பெரும்பான்மை முறைமை நிலவும் நாடுகளில் உள்ள மக்களிலும் பார்க்க, பெரும்பான்மை முறைமைசாராத நாடுகளிலுள்ள மக்கள் குறைந்தளவிலேயே சனநாயகக் கருத்துகளில் ஈடுபாடு காட்டுகின்றனர். இதனைப் பற்றி ஒர் ஒப்பீட்டு ஆய்வு செய்யப்படுவது அவசியமானது. இதுவரையில் எவரும் இத்தகைய ஆய்வினை மேற்கொள்ளவில்லை. அவ்வாறே சனநாயக செயல்முறைக்கான தேவையென்ற வகையில் பெரும்பான்மை வாதத்துக்குத் திட்ட வட்டமான வரைவிலக்கணம் இல்லாவிட்டால், அதனை எடுத்துக் காட்டுவதற்கு உறுதியான பெரும்பான்மை சாராத பலராட்சி நிலவும் அரசியல் முறைமைகளில் கடும்பெரும்பான்மை நிலவும் நாடுகளிலும் பார்க்க சனநாயக இயல்பு குறைவாகக் காண்ப்படும். அங்கேயும் ஒப்பீட்டுப் பகுப்பாய்வு அவசியமானது. ஆயினும் அது நடைபெறவில்லை. மேலோட்டமாகச் செய்யப்படும் ஒப்பீடுகள் பயன்தராது.
திறனாய்வாளனுக்கும் பெரும்பான்மைவாதிக்குமிடையே இடம்பெற்ற உரையாடல் மூலம் பெருமளவுக்குத் திருப்திகரமான விளக்கம் முன்வைக்கப்பட்டுள்ளது. திறனாய்வாளன் எடுத்துக்காட்டியது போல, சில நிபந்தனைகளின்படி பெரும்பான்மைக்கோட்பாட்டுக்கு வழங்கப்பட்ட நியாய விளக்கம் தோல்வியடைந்துள்ளது. இவ்வாறான நிலைமைகளில், சனநாயக செயல்முறை பெரும்பான்மை ஆட்சிக்குரிய மாற்று வழிகளைத் தவிர்த்து விடுவதில்லை. சனநாயக ஆட்சிச் செயல் முறைகளில் மக்கள் ஈடுபாடுகாட்டும் பொழுது, சகல கூட்டுத் தீர்மானங்களையும் மேற்
99

Page 53
கொள்ளப் பெரும்பான்மையாட்சியைப் பின்பற்றவேண்டும் என நியாயங் கூறுவாராயின் அவை பெரும்பான்மை ஆட்சிக்குக் கட்டுப்பாடு விதிக்கும் அல்லது இணக்க ஒழுங்குமுறையை நோக்கி நகரும். நிபந்தனைகளின் கீழ் கூட்டுத்தீர்மானம் மேற்கொள்ளப்படுகிறது என்பதைப் பொறுத்தே இவை அமையும். இத்தகைய நிலைமைகள் மாற்றம் பெற்றால், முன்னைய சூழ்நிலையில் பொருத்தமானதெனக் காணப்பட்ட ஒழுங்குகள் கடும்பெரும்பான்மை அமைப்பைச் சார்ந்து அல்லது பெரும்பான்மை சாரா அமைப்பைச் சார்ந்து ஒரே திசையில் அல்லது மறுதிசையில் திருத்தியமைக்கப்படலாம். அரசியல் முரண்பாடுகள் தேசிய ஒற்றுமைக்கு ஆபத்தாக விளங்கும்போது, உதாரணமாக, அரசியல் தலைவர்கள் கூட்டு ஒழுங்கமைப்புகள் மூலம் பெரும்பான்மை நடைமுறைகளை மாற்றியமைக்க முற்படலாம். முக்கியமான உப கலாசாரங்கள் அனைத்திலும் அவை வீட்டோவை உறுதி செய்கின்றன. முரண்பாடுகள் தணிக்கப்படும்போது இத்தகைய கூட்டு ஒழுங்கமைப்புகள். குறைந்தளவிலான ஒற்றுமையையும் கூடிய பெரும்பான்மை முறைமையையும் உருவாக்கலாம். முதலாம் உலக யுத்தம் தொடக்கம் 1980கள் வரை நெதர்லாந்தின் மேலோட்டமான வரலாறு இதுவாகவே இருந்தது.
ஒரு நாட்டிலே பெரும்பான்மை நடைமுறைகளுக்குச் சாதகமாகவுள்ள பிரதான நிபந்தனைகள் பின்வருமாறு:
(1) ஒரு நாட்டில் வாழும் மக்கள் ஒரு சீரான பண்புடையவர்களாக இருந்தால், அவை அரசியல் சார்ந்த மனப்பாங்குகளிலும் வலிமையான பிணைப்புகளைக் கொண்டவர்களாக இருந்தால் அரசியலுக்கு ஆதரவளிக்கும் பெரும்பான்மை சிறுபான்மையினர் மீது பாதிப்பையும் ஏற்படுத்தலாம். அங்கு பெரும்பான்மையாட்சி பற்றிய உடன்பாடும் நிலைபெறும். ஒரு நாட்டிலுள்ள மக்கள் கூடியளவுக்கு ஒரே சீரான இயல்புடையவராக இருந்தால், எந்தவொரு பெரும்பான்மையும், தமது சொந்த அங்கத்தவர் களுக்கும் சமாந்தரமான பாதிப்பை ஏற்படுத்தாமல் சிறுபான்மை யினருக்குப் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. ரூசோவின் எடுகோள் ஒன்று, பொது நன்மை பற்றிய கூட்டுத் தீர்மானங்களைப் பெரும்பான்மைக்கு ஒப்படைக்க இடமளித்துள்ளது.
(2) அரசியல் சிறுபான்மையிலுள்ள உறுப்பினர்களிடையே எதிர்பார்ப்புகள் பலம் வாய்ந்தாக இருக்கும்போது அவர்கள் நாளைய பெரும்பான்மையில் இடம்பெறுவார்கள். அதுவே அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெரும்பான்மையாட்சியாகவும் இருக்கும். எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால், சிறுபான்மை வீட்டோ போன்ற விசேட உத்தரவாதங்கள் அவசியமென உணர்வார்கள். தாம் பெரும்பான்மையாட்சியில் பங்குகொள்வோர் என்ற வகையில், இவ்வாறானவையெல்லாம் எதிர்காலத்திற்கான இடையூறுகள் என்றே கருதுவர்.
100

இறுதியாக, முதல் இரண்டு அல்லது ஏனைய காரணிகளின்படி , மேற்கொள்ளப்படும் கூட்டுத்தீர்மானம். அவர்களுடைய வாழ்க்கையின் அடிப்படைக் கூறுகளுக்கு சமயம், மொழி, பொருளாதாரப் பாதுகாப்பு அல்லது ஏனைய விடயங்களுக்கு ஆபத்தானவையாக இல்லையென நம்பிக்கை கொள்வார்களாயின், பெரும் ஆதரவைப் பெறும் எனலாம்.
மறுதலையாக, இந்நிபந்தனைகளில் ஒன்று அல்லது இரண்டு இடம்பெறாவிட்டால், சில குழுவினர் பெரும்பான்மை ஆட்சியை எதிர்ப்பதுடன், பெரும்பான்மையினர் தீர்மானங்களுக்கான சட்ட அடிப்படைகளுக்கும் மறுப்புத் தெரிவிப்பர். உலகிலுள்ள பல நாடுகள் இவ்வாறான நிபந்தனையைக் கொண்டிருக்கவில்லை (ஏனையோர் சனநாயக ஆட்சிக்கு ஆதரவாக இருப்பர்). ஏனைய பல காரணிகளுக்கு மத்தியில் பல நாடுகள் ஏன் சனநாயக் ஆட்சி நிலவும் நாடுகளாகஇல்லை என்பதற்கும் இதுவே காரணமாக இருக்க முடியும். ஆனால், சனநாயக, அல்லது பலராட்சி நிறுவனங்கள், நிபந்தனைகள் இங்கு எடுத்துக் காட்டப்பட்ட பெரும்பான்மைவாதத்துக்குச் சாதகமாக இருந்தால் அவை நலிவை ஏற்படுத்தும். இத்தகைய சனநாயக ஆட்சி நிலவும் நாடுகளில், பல்வகைப்பட்ட பெரும்பான்மை வாதம் மற்றும் இணக்கத்துக்கான உடன்பாடுகள் யாவும் கூட்டுத்தீர்மானத்துக்குச் சாதகமாக இருந்தால் கடும்பெரும்பான்மை வாதம் மறுக்கப்படும்.
இந் நிபந்தனைகள் மூலம் எடுத்துக் காட்டப்பட்டவை யாதெனில், பொதுவான ஏற்புடைமைகளும், பெரும்பான்மையின் சட்ட பூர்வமான விடயங்களும் நிராகரிக்கப்படுகின்றன. அப்பொழுது சனநாயகவாதிகள் பெரும்பான்மை வாதத்துக்கான வரையறைகளை மேற்கொள்ள விரும்புவர். அவ்வாறு செய்வதைக் கட்டாயப்படுத்தினால் சனநாயக செயல்முறைகளுக்கான வேண்டுகோளை மீட்க வேண்டிய அவசியம் உண்டாகும். இவை பொருத்தமில்லாதவையாகத் தோன்றுகின்றன.
பெரும்பான்மை ஆட்சி பற்றி நாம் கண்டு கொண்டவை பின்வருமாறு. சனநாயக செயல் முறைகள் மூலம் ஆளப்படும் அமைப்பில், கூட்டுத்தீர்மானம் மேற்கொள்வது எவ்வாறு எனக் குறிப்பிடும் தனியாட்சி முறை பற்றிய தேடுதல் தோல்வி அடைந்துள்ளதாகக் காணப்பட்டுள்ளது. அத்தகைய ஆட்சி முறையையும் காணமுடியாது.
மறுபுறத்தில் பெரும்பான்மை ஆட்சியில் நிலவும் குறைபாடுகளையும் ஒதுக்கி வைக்கமுடியாது. சனநாயக ஆட்சியானது பெரும்பாலும் பெரும்பான்மை ஆட்சியையே விரும்புகிறது என்றும் நாம் கூறமுடியும். ஆயினும் பெரும்பான்மையாட்சிக்கு மேலானதாக விளங்கக் கூடிய சில மாற்று முறைகளை இனங் காண்பதிலும் நேர்மையாக இருக்க வேண்டும். அல்லது சனநாயக ஆட்சிச் செயல்முறைகளோடும் அவற்றின் பெறுமானங்களோடும் உடன்பாடு காணவேண்டும். பெரும்பான்மை
101

Page 54
ஆட்சிமுறைக்குரிய மாற்றுவழிகள் சகலதும் குறைகள் நிறைந்தனவாகவே
உள்ளன.
ஆகவே நாம் பொருத்தமான ஒரு முடிவுக்கு வருவதாயின் , கூட்டுத் தீர்மானங்களை மேற்கொள்வதற்கேற்ற ஆட்சியை , சூழ்நிலைகளைச் சரியாக ஆராய்ந்த பின்னரே முடிவு செய்ய முடியும். அதன் பின்னரே தீர்மானங்களை எடுக்க வேண்டும். இத்தகைய முடிவு பல்வேறு சனநாயக ஆட்சி நிலவும் நாடுகளிலுள்ள உண்மையான அனுபவங்களுடன் ஒத்துச் செல்கின்றன. இந்நாடுகளில் வாழும் மக்கள் பல்வேறுவகையான ஆட்சிமுறைகளையும் நடைமுறைகளையும் பின்பற்றுகின்றனர்.
பெரும்பான்மை ஆட்சியை ஏற்றல் அல்லது மறுத்தலில் சனநாயக நாடுகளில் வாழும் மக்கள் சனநாயக செயல்முறைகளை அல்லது விழுமியங்களை மீற வேண்டுமென்பது அவசியமில்லை. பல்வேறுபட்ட நிலைமைகளில், பல்வேறுபட்ட ஆட்சி முறையின் கீழ் கூட்டுத் தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய வகையில் சனநாயக ஆட்சிச் செயல் முறைகள் பொருத்தமாக மேற்கொள்ளப்படலாம்.
米米米米米米
102


Page 55

ARTS (PVI) LTD. T.P. 3301.95