கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண் நிலைச் சிந்தனைகள்

Page 1


Page 2

பெண்நிலைச் சிந்தனைகள்
சித்திரலேகா மெளனகுரு
பெண்கள் கல்வி ஆய்வு நிலையம் கொழும்பு

Page 3
FENNA CHINTANAKAL (Feminist Perspectives) A Collection of articles of Women and Society by Sitralega Mau naguru. Published by Woman Education Research Centre 17A, Park Avenue, Colombon5.
1993.
Publication no: 38/T/9
سس.2H. -%5)t ، ஓவியம் : அருந்ததி சபாநாதன் அட்டை வவலீகரா அட்வடைசிங், கொழும்பு - 3, ?/ச்சு ஜெஸ்கொம் அச்சகம், மட்டக்களப்பு.

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கிஇவ் வையம் தழைக்குமாம்.
சுப்பிரமணிய பாரதியார்.

Page 4
உள்ளே
பதிப்புரை
முன்னுரை பெண்நிலைவாதம் வெற்றுக்கோஷமா ?
பாலடிப்படையில் அமைந்த தொழிற்பாகுபாடு வீட்டு வேலையும் பெண்களும் பெண்களுக்கு எதிரான வன்முறை - பலாத்காரம் இலங்கையில் இனத்துவமும் பெண்களும் தொடர்பியல் ஆய்வுகளும் பெண்நிலை வாதமும் அபிவிருத்தியும் பெண்களும் - ஒரு மீள்பார்வை
மீனாட்சியம்மாள் நடேசையர்
iii
wi
29
39
51
71
88

பதிப்புரை
18ம் நூற்றாண்டில் ஐரோப் பாவில் தோன்றிய பெண்ணுரி மைக் கருத்துக்களும், விவாதங் களும் ஒரே நாட்டுக்கோ ஒரே கண்டத்துக்கோ ஏகபோகமாக் உரித்தானவையல்ல பல்வேறு நாடுகளில் பல்வேறு காலகட் ட்ங்களில் அந்தந்தநாட்டு சூழல் களுக்கேற்றவாறு அந்நாட்டுச் சூழல்களால் உந்தப்பட்டு அவை எழுந்தன. பொருளாதார சமூக கலாசாரப் பண்புகளையும் சட்ட ரீதியாக எழுந்த கோட்பாடுக ளையும் அவை கேள்விக்குள் ளாக்கின. சைமன் டி பூவரின் பிரான்ஸியப் பெண்நிலைவாதம்

Page 5
முன்னுரை
கடந்த சில ஆண்டுகளில் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளி லும் நான் எழுதிய சில கட்டு ரைகளின் தொகுதியாக இந்நூல் வெளிவருகிறது. இவற்றில் சில வற்றை விரிவாக்கியும் திருத்தி யும் உள்ளேன். இக்கட்டுரைக்ள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டனவாயினும் இன்று இவற்றை ஒன்றுசேர்த்து நோக் கும் போது ஒரு பொதுமைப் பாட்டையும் இணைப்பையும் காண் முடிகிறது.
இக்கட்டுரைகள் பிரசுரமாகிய காலப்பகுதி முக்கியமானது

vii
இலங்கைத் தமிழ்ப் பெண்களிடையே அவர்களது சமூக இருப்பு, அந்தஸ்து முதலியவை குறித்து தீவிரமான வினாக்கள் இக்காலத்தில் தோன்றத் தொடங்கியிருந்தன. சமூகத்தின் பல்வேறு தளங்களில் பெண்கள் எதிர்நோக் கும் கட்டுப்பாடுகள் வரையறைகள் குறித்த விழிப்புனர் வும், விமர்சனங்களும் உருவாகின. பெண்நிலை வாதம், பெண்விடுதலை பற்றிய சிந்தனைகளும் ஆர்வமும் பரவ லாகத் தொடங்கியிருந்தன. இச்சிந்தனைகளுக்கும் செயற் பாடுகளுக்கும் வரவேற்பிருந்த அதேவேளை, சமூகத்தின் பிற்போக்காளரிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வெளிப் பட்டது. பெண்விடுதலை, பெண்நிலைவாதம் பற்றிய திரிபுபட்ட, சிலசமயம் அவதூறான கருத்துகளும் கூறப் பட்டன. இத்தகைய பிழ்ையான கருத்துகளுக்கு வெவ் வேறு தளங்களில் பதில் அளிக்க வேண்டிய தேவை எமது பெண்நிலைவாதிகளுக்கு ஏற்பட்டது. உதாரணமாக இத்தொகுப்பில் இடம்பெறும் "பெண்நிலைவாதம் - வெற் றுக் கோவுமா?’ என்ற கட்டுரை 1989 ஆம் ஆண்டு, இத் தகைய திரிபுபட்ட, எதிர்மறையான கருத்துகளுக்குப் பதிலளிக்குமுகமாகவே எழுதப்பட்டது. இது போலவே இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் அகர னத்தும் பெண்கள் பற்றிச் சமூகத்தில் பொதுவாக நிலவும் கருத்து நிலையை மறுபரிசீலனைச் செய்வனவாகவும் பெண்நிலை நோக்கில் மாற்றுக் கருத்துகளை முன்வைப்பனவாகவும் அமைகின் றன. இந்த அம்சமே இக்கட்டுரைகளிடையே காணப்படும் பொதுத் தன்மையும் இணைப்புமாகும்.
இச்சந்தர்ப்பத்தில் ஒரு கருத்துக்கூறத் தோன்றுகிறது. இன்றைய நவீன ஆய்வுத் துறைகளில் முக்கியமானதொன் றாகப் பெண்நிலை வாதம் வளர்ந்துள்ளது; வெவ்வேறு வகைப்பட்ட சிந்தனைப் போக்குகளும், விவாதங்களும் இத்துறையில் மேற்கிளம்பியுள்ளன. இத்தகைய விவாதங் கள் பெண் இயக்கங்களின் செயற்பாடுகளுக்கு விளக்கம் அளிக்கவும், வழிகாட்டவும் வல்லன. இவை தமிழில் ஒரளவேனும் வெளிவரவேண்டியது அவசியமாகும். அத்

Page 6
ν
அக்ககுத்துக்களின் ஒரு அம்சம் : அச்சமும், நாணமும் தாய் களுக்கு உகந்தன என்பது பாரதியாரின் வாக்கு. "பெண் ஏன் அடிமையாகிறாள்?" என்பது பெரியாரின் கேள்வி. சீனா, துருக்கி போன்ற நாடுகளில் எழுந்த பெண்ணுரி மைக் கருத்துக்கள் பலகாலம் மறைவாகவே ஒரு சிலரால் பேசி விவாதிக்கப்பட்டன. ஆக இது, ஒரு புதிய வாதம் அல்ல ஆனாலும், பெண்ணுரிமை என்பது பெண்நிலை வாதமாகப் பரிணமித்தது. (Feminisun). பெண்நிலைவா தம் என்பது தற்போது பல வாதப் பிரதிவாதங்களைத் தன்னுள் அடக்கி ஒரு 'அறிவுவாதக் கண்ண்ோட்டத்துள் இன்று பார்க்கப்படுகிறது. பெண் தாய், பெண் தாரம், பெண் தொழிலாளி, வெகுசனத்தொடரியூடங்களில் பெண் ணினப் பிரதிபலிப்பு, பெண்ணின் பாலியுல்பு (Sexuality) உற்பத்தி முறையால் தாக்கப்படும் பெண்மை என்பது போன்ற பல நோக்குகளில் பெண் அலசப்படுகிறாள்.
அதுவுமில்லாமல் இவ்வளவு காலமாக ஏற்கப்பட்டு வந்த சமூக விஞ்ஞானக் கோட்பாடுகளையும் வாதங்களை யும் அதன் தாற்பரியங்களையும் தகர்க்குமாறு பெண் நிலைவாதக் கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளைத் தோற்று வித்துள்ளன. சித்திரலேகா மெளனகுருவின் இக்கட்டுரைத் தொகுப்பு பல விளக்கங்களைத் தருகின்றது. எம்மைச் சிந்திக்க வைக்கிறது. பல்வேறு காலங்களில் பல சஞ்சிகை களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்த காத்திரமான கருத்துக்களைக்கூறும் கட்டுரைகளை ஒர் ஒழுங்கு அமைதி யுடன் இப்புத்தக வடிவில் எமக்குத் தருகிறார்.
இதில் ஒரு கருத்துத் தொடர்ச்சியும், பல்வேறு கோணங்களிலிருந்து பெண்ணை நோக்கும் ஒரு குறிப்பும் தொனிப்பதை நாம் காணலாம். ஆறு மாதங்களுக்கு முன் வெளிவரவேண்டிய இந்நூல் சில அசம்பாவிதங்களி னால் தடைப்பட்டுக் காலதாமதம் ஆகிவிட்டது. பெண் நிலைவாதத்தைச் சரியாக விளங்கிக்கொள்ளாது அதைக் கொச்சைப்படுத்தி எள்ளிநகையாடுவோர் பலர் உளர். அது

. Μ
ஒரு பொருத்தாவாதம் என்றும், பெண்களின் உரிமைக் குரல் சமுதாயத்தைச் சீரழிக்கும் என்று கூறும் சிலரும் உளர். அதை உணர்ந்தும் உணராமலும் ஒரு சிலர். அதை உணராது ஒரு உரிமைக் கோரிக்கையாக விளங்கி அதைக் கடைப்பிடிக்கும் பலர். அதைப் பிழையாக விளங்கிக்கொண் டோர் இன்னும் பலர். ஆக இவர்களுக்கெல்லாம் இப் படிப்பட்ட ஒரு புத்தகம் தேவை. அந்த ரீதியில் சித்திர லேகாவின் இச்சிறு நூல் ஒரு சமூதாயத் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இதனைப் பிரசுரிப்பதில் பெண்கள் கல்வி ஆய்வு நிலையம் ஒரு சமுதாயப் பணியை நிறைவு செய்கிறது.
பணிப்பாளர், செல்வி திருச்சந்திரன் பெண்கள் கல்வி ஆய்வு நிலையம், 17, பார்க் அவனியூ,
கொழும்பு - 5.
மார்கழி 92,

Page 7
viii
துடன் தமிழ்ச் சமூகத்தில் பெண்கள், பெண்கள் வரலாறு, இன்றுள்ள பிரச்சனைகள் முதலியவை குறித்து பெண் நிலை நோக்கில் இலங்கையில் நூல்கள் வெளிவருவது லிகக் குறைவாகவே உள்ளது. இத்துறையில் ஆர்வமுடைய ஸ்தாபனங்களும் தனிப்பட்ட பெண்களும் இத் 'தத்துவ வறுமை" மாறுவதற்கு உழைக்க வேண்டும்.
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு தேவைகளுக் காக எழுதப்பட்டதால் நூலிற் காணப்படும் கட்டுரைகளி டையே அமைப்பிலும்,மொழிநடையிலும் ஒருமைத்தன்மை இல்லாமலிருக்கலாம். ள் னினும் கட்டுரைகளுள் இழை யோடும் கருத்துநிலையில் ஒருமைப்பாடு உள்ளது. எமது சமூகத்தில் பெண்நிலை குறித்து அக்கறையுடையோரின் சிந்தனையை இவை தூண்டும் என நம்புகிறேன்.
தமிழ், சிங்களம் ஆகிய சுய மொழிகளில் அதிகளவு நூல்களையும் பிரசுரங்களையும் வெளியிடுவதன் மூலம் எமது சமூகத்தினரிடையே பெண்நிலைவாதம் பற்றிய அறிவைப் பரவலாக்கமுடியும். இதனை உணர்ந்து சுய மொழிகளில் இத்தகைய நூல்களை வெளியிடுவதை ஒரு திட்டமாகவே கடைப்பிடித்து வருகின்றனர் பெண்கள் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தினர், இந்நூல்ை வெளியிடுவ தற்காக இவர்கட்கு நன்றி கூறுவதுடன் இப்பணி தொடர வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்.
கொழும்பு சித்திரலேகா மெளனகுரு 5-I 1 - 1992.

பெண்நிலைவாதம் வெற்றுக்கோஷமா?
பெண்நிலைவாதம், பெண் விடுதலை ஆகிய தொடர்கள், இன்று எம் மத்தியில் பழக்க மான பரவலான சொற்தொடர் களாகிவிட்டன. அரசியல்வாதி கள் முதல் சமூக சீர்திருத்தம் பேசுவோர் வரை இத்தொடர் கள் பலராலும் பல்வேறு தேவை களுக்காகப் பயன்படுத்தப்படு கின்றன. இது மாத்திரமின்றிப் பெண் விடுதலை குறித்து வெவ் வேறு கருத்துக்களையும் சில சமயம் ஒன்றிலிருந்து ஒன்று முற் றிலும் மாறுபட்ட கருத்துக் களையும் கேட்க முடிகிறது. பெண் விடுதலையை முற்றிலும்

Page 8
பெண் நிலைச் சிந்தனைகள் / 2
ஆதரிப்பதைக் காணும் அதேவேளையில் இக்கருத்தினை மூர்க்கத்தனமாக எதிர்ப்பவரையும் காணமுடிகிறது. பெண் விடுதலைக் கோஷங்கள் எமது சமூகத்திற்குப் பொருத்த மற்றவை, பெண் அடக்குமுறை, ஆண் மேலாதிக்கம் ஆகி யவை எமது சமூகத்தில் நிலவவில்லை, ஏனைய சமூகங் களுடன் ஒப்பிடும்போது எமது சமூகத்தில் பெண்களின் நிலை திருப்திகரமானது முதலிய கருத்துகளூடாகவும் இவ் எதிர்ப்பு வெளிப்படுகிறது.
இவற்றை நோக்கும்போது பெண் விடுதலை என்ற சொற்தொடரும், பெண்நிலைவாதக் கருத்துகளும் அவற் றுக்குரிய சரியான அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்பட வில்லை என்பது தெரிகிறது. இப்புரிதலின்மைக்கு சமூகம் பற்றிய மேலோட்டமான சிந்தனையும், சுயதிருப்தி மனப் பான்மையும் காரணங்களாகும். அதே சமயம், பெண் அடக்குமுறை என்பது யாது? அது எவ்வகையிற் செயற் படுகிறது? எமது சமுகத்தில் அதன் பெளதீக, கருத்து p5606) yuqúLugo-56ir (Material and ideological base) யாவை? என்பவை குறித்த விளக்கங்கள் பரவலாகாத நிலையும் இப்புரிதலின்மைக்கு இன்னோர் காரணமாகும். எனவே இவ்விடயம் குறித்து ஆழமாகச் சிந்திப்பதும் தெளிவதும் பெண்நிலைவாதத்தின் அடிப்படைக் கருத்துக் களைப் பரவலாக்குவதும் அத்தியாவசியமானதாகும். . . . . . . . .
எமது சமூகத்தில் பெண்களின் நிலை முன்னேற்றகர மானது என வாதிடுவோர், தமது கருத்துக்கு ஆதார மாகக் காட்டும் காரணம் பெண்களின் கல்வி நிலைமை யாகும். பெண்கள் ஆண்களுடன் சமமாகக் கல்வி பயிலு சின்றனர்" நாட்டின் சில பகுதிகளில் ஆண்களைவிட அதி களவான பெண்கள் கல்வி கற்கின்றனர் என அவர்கள் கூறுகின்றனர். பெண் சம உரிமையின் தீர்மானமான அளவுகோலாக இதனை அவர்கள் கருதுகின்றனர்.
ஆனால் இன்று இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் பல்

3 / சித்திரலேகா மெளனகுரு
கலைக்கழகத்தில்கூட ஆண்களிலும் அதிகளவான பெண்கள் கல்வி கற்பது என்பது சூழ்நிலைகளின் நிர்ப்பந்தங்களி னால் தவிர, சமூகத்தின் தேர்வினால் அல்ல என்பது எமது அரசியல், சமூக நெருக்கடிகளைப் புரிந்துகொள் வோர்க்குப் புலப்படுவதாகும். கல்வி வேலைபார்ப்பது என்பது, சமூக த் தி ல் நிலவும் ஆண்மேலாதிக்கக் கருத்து நிலையை எவ்விதத்திலும் மாற்றியமைக்கவில்லை.
இந்தக் கருத்துநிலை என்னும் அம்சம் பெண் அடக்கு முறையில் முக்கியபங்கு வகிக்கிறது. பெண் உழைத்தா லும், பெரும் பதவிகள் வகித்தாலும் அவளது அந்தஸ்து நிலை மாறுவதில்லை. பெண் என்ற அவளது பால் யதார்த்தம் வெவ்வேறு வகைகளில் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம் பத்திலிருந்தே தமிழ்ப் பெண்களிடையே மத்தியதர, உயர் வர்க்கத் கவர் மட்டத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற் பட்டுள்ளது கல்வி, வேலை வாய்ப்பு, சட்டரீதியான அந் தஸ்து என்பவற்றில் இந்த முன்னேற்றகரமான மாற்றம் ஏற்பட்டது. எனினும் பெண்கள் பற்றிய சமூகத்தின் அபிப் பிராயத்தில் பெருமளவு மாற்றம் ஏற்படவில்லை.
இன்னும் பெண்கள், ஆண்களுக்குக் கீழ்ப்படிவு உடைய வர்களாகவும், ஆணைச்சார்ந்து வாழ வேண்டியவர்களாக வுமே கருதப்படுகின்றனர். மனைவி, தாய் ஆகியவையே பெண்ணுக்குரிய இயல்பான பாத்திரங்களாகக் கொள்ளப் படுகின்றன. இந்தப் பாத்திரங்கள்தான் எமது சமூகத்தில் ஒரு பெண்ணின் இருப்பை உறுதி செய்கின்றன. இந்த நிலை இன்னும் தொடர்வதால்தான் எவ்வளவு கல்வி கற் பினும் வெளியில் போய் வேலை செய்யினும், பெண் களது இந்நிலைமை, ஸ்தாபனங்களில் அவர்களால் பிரதி நிதித் துப்படுத்தப் படுவதில்லை. அரசியல் ஸ்தாபனங் களிலோ, அறிவியல் நிலையங்களிலோ, இலக்கியச் சங்கங் களிலோ பெண்களின் பிரசன்னமும், செயற்பாடும் மிக மிக அரிதாக இருப்பது ஏன்? பெரும்பான்மையினராக

Page 9
பெண் நிலைச் சிந்தனைகள் | 4
இருந்தும் சிறுபான்மையினராகவே வெளித் தெரியும் இந் நிலை, ஆண் பெண் என்ற பாலடிப்படையின் பாரபட்சத் தினதும் பெண் இரண்டாந்தரப் பிரஜையாகக் கருதப்படு வதினதும் வெளிப்பாடாகும்.
ஆண், பெண்ணுக்கிடையே நிலவும் அசமத்துவமானது வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றது. இது பொரு ளாதார ரீதியில் சமத்துவமின்மையாக - உழைப்புக்குச் சம ஊதியம் இல்லாமை, பெண்கள் செய்யும் சில வேலை களுக்கு பொருளாதாரப் பெறுமானம் அளிக்கப்படாமை " காணப்படுகிறது. உற்பத்தியிலும், சந்ததி உற்பத்தியிலும் ஒருங்கே பெண்கள் ஈடுபடுவதால் ஏற்படும் இரட்டைச் சுமையும் இச்சமத்துவமின்மையின் இன்னோர் அம்சி மாகும். அத்துடன் கலாசாரத் தளத்தில் பெண்களது தாழ்த்தப்பட்ட நிலையின் வெளிப்பாடு - பெண்களுக்குச் சமயம் அளிக்கும் குறைவான அந்தஸ்து இதில் ஒன்றாகும். ஒரு பக்கத்தில் பெண் தெய்வம், சக்தி தத்துவம் ஆகியவை பேசப்படினும், சமயச் சடங்குகளை நடத்தும் அதிகாரம், புனிதத்தன்மை ஆகியவை அற்றவராகவே பெண்கள் கரு தப்படுகின்றனர். இந்து சமயத்தில் மாத்திரமல்லாது ஏனைய சமயங்களிலும் இந்நிலைமை காணப்படுகிறது. மேலும் இரு இனத்தின் அல்லது நாட்டின் தனித்துவத் தையும், கலாசாரக் கூறுகள் சிலவற்றையும் பேணுபவ ராவும், அவற்றைத் தமது நடவடிக்கைகள் மூலம் வெளிக் காட்டுபவராகவும் பெண்களை நிர்ப்பந்தித்தல் இக்கலா சார அடக்குமுறையின் இன்னோர் அம்சமாகும். உதா ரணமாக, ஒரு இனத்தினது அடையாளத்தை உடைஅலங்காரம் ஆகியவற்றின் மூலம் தெரியப்படுத்தும் பொறுப்பு தனியே பெண்களுடையது எனவே சமூகம் கருதுகிறது. மேலும் கலாசாரப் பெறுமானங்களை ஆண் மீறுவது பற்றி எவரும் பெரிதாகக் கணிப்பதில்லை. ஆனால் அவற்றுக்கு மிகவும் இயைந்து பெண் நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இவற்றிலிருந்து விலகும் தவறும் பெண் சமூகத்தின் அவச் சொல்லுக்கும், பழிப்

5 / சித்திரலேகா மெளனகுரு
புரைக்கும் ஆளாகிறாள். இத்தகைய பெண் அடக்குமுறை அம்சங்கள் யாவும் தமிழ்ச் சமூகத்தில் தொடர்ந்து நிலவு வதை தமிழ்ச் சமூகத்திற்குப் பெண் நிலைவாதம் பொருத்த மற்றது என்போர் கவனத்தில் கொள்வதில்லை.
இது தவிர பெண்களுக்கெதிரான வன்செயல்கள் பற்றி பலரும் பேசவே தயங்குகின்றனர். பொது இடங்களிற் பெண்களைத் தொந்தரவு செய்வதிலிருந்து இராணுவப் பலாத்காரம் வரை இவ்வன்செயல்கள் பல்வகையின. சமூ கம், இக்குற்றம் புரிந்தோரைக் கண்டிப்பதை விடுத்து குற் றத்துக்கு இலக்கான பெண்களையே கண்டிப்பதையும் அவ மதிப்பதையும் காணலாம். பெண்ணுடைய அடக்கமின்மை யாலும், பிழையாலும்தான் இத்தகைய சம்பவங்கள் நடக் கின்றன என்று, வெவ்வேறு சந்தர்ப்பங்களிற் பலர் கூறக் கேட்டிருக்கிறேன். குற்றத்திற்கு இலக்கான பெண்களும் இந்தகைய கருத்துக்களால் பாதிக்கப்பட்டு தம்மீதே குற்ற உணர்வு கொண்டு மன அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர். இத்துடன் தனித் தனிக் குடும்பங்களுக்குள் நடக்கும் விவ காரங்களாகச் சில வன்முறைகள் மூடிமறைக்கப்படுகின் றன. பெண் பிள்ளைகளையும் மனைவியரையும் ஏசுதல், அடித்தல் போன்றன. இவை. பெண்களும் இவைபற்றி வெளியே கூறுவதில்லை பிறருக்குத் தெரியவந்தால் தமது கெளரவம், குடும்ப கெளரவம் ஆகியவை பாதிக்கப்படும் என இவர்கள் கருதுகின்றனர். காலாதிகாலமாகக் கற் பிக்கப்பட்டு வந்த பொறுமை, அடக்கம் என்ற குணாம் சங்களால் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளுக்குள்ளேயே வெந்து குமையும் பெண்கள் அனேகம். இத் 'தனிப்பட்ட விவகா ரங்கள்' பெண் அடக்குமுறையின் அம்சங்களாகும். இவை சமூக அரசியல் நிலைகளின் பிரதிபலிப்புகள்தாம். இவை யாவற்றையும் கருத்தில் கொண்டே 'அக விஷயங்களும் gurguaio 5 rsir'' (Persona1 is Political) 6Tgir up gir Gavir கத்தை நவீன பெண் நிலைவாதம் முன்வைக்கிறது.
சமூகத்தில் கல்வி அறிவின் அதிகரிப்பினாலும், கிரா

Page 10
பெண் நிலைச் சிந்தனைகள் / 6
மங்கள் நகரங்களாக வளர்ச்சியடைவதாலும் பெண் அடக்குமுறையின் அம்சங்கள் தளர்ந்து மறைந்து போய் விடும் எனச் சிலர் கருதுகின்றனர். கல்வி முன்னேற்றமும் நகர வாழ்க்கையின் சில அம்சங்களும் பெண்கள் தொடர் பான சில கட்டுப்பெட்டி அபிப்பிராயங்களைத் தளர வைத்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் இவற்றால், பெண்களுடைய இரண்டாந்தர நிலையில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என்பதற் குச் சர்வதேச அனுபவங்கள் சான்று பகருகின்றன. கல்வி யறிவினால் முன்னேற்றமும் நகரங்களும் அதிகரித்துள்ள மேற்கு நாடுகளில், பால் ரீதியான வேலைப் பாகுபாடு மறைந்துவிடவில்லை. பெண்களுக்கு எதிரான வன்முறை கள் குறைந்துவிடவில்லை. மாறாக இவை அதிகரித்துள் ளன. மேற்கு நாடுகளின் அபிவிருத்தி முறையை (Dewelopment model) முன்னுதாரணமாகக் கொள்ளும்போது, இதனை நாம் கவனத்திற் கொள்ளவேண்டும்.
பெண்களது உழைப்புச் சக்தி சுரண்டப்படுதல், பெண் களது அடக்குமுறை ஆகியன இன்று முதலாளித்துவ விருத் தியுடனும் ஆண் மேலாதிக்க முறைமையுடனும் பின்னிப் பிணைந்துள்ளன. உலக சந்தையில் பெண்கள் மலிவான உழைப்புச் சக்தியாகப் பயன்படுத்தப்படுகின்றனர். இலங் கைப் பெண்கள் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு எத் தகைய வேலைப்பாதுகாப்புமற்று வேலையாட்களாகச் செல்வதும், சுதந்திர வர்த்தக வலயத்தில் எத்தகைய தொழிற்சங்க உரிமைகளுமற்று கொழிலாளர்களாக இருப் பதும், இதற்கு உதாரணங்களாகும். தமிழ்ப் பெண்கள் இந்நிலைமைகளில் இருந்து தப்பியுள்ளனர் என்று சிலர் வாதிடலாம். அரசியல் நெருக்கடிகளினாலும், இராணுவ வன்முறைகளாலும் ஆண்கள் தொகை குறைந்துபோக முன்னரிலும் அதிகளவான பெண்கள் குடும்பத்தின் பிர தான உழைப்பாளராக மாறியுள்ள எமது சூழல், பெண் களின்மீது எத்தகைய சுமைகளை ஏற்றப் போகின்றதோ?

7 / சித்திரலேகா மெளனகுரு
பொருளாதாரம், பால் ஆகியவற்றின் அடிப்படையில் அசமத்துவம் நிலவுகின்ற சமூகத்தில், ஒடுக்குமுறையும் சுரண்டலும் சட்டத்தினால் மாத்திரம் அகற்றிவிடக் கூடிய சமூகத்தீமைகளல்ல என்பதை யாவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். எனவேதான் பெண்கள் இயக்கம் என்பது சம உரிமைகளுக்கான ஜனநாயகப் போராட்டமாக மாத்திர மல்லாது, விேரமான சமூக மாற்றத்திற்குரிய போராட்ட யாகவும் அமைகிறது. ஆனால் அதேசமயம் சோசலிச 2.htத்தி முறை நிலவும் சமூகங்களிற் கூட தொடர்ந்து கதிர்க்கப்படாவிடின் ஆண் மேலாதிக்க முறை தொடரும் கன்பதை சமகால அனுபவங்கள் புலப்படுத்துகின்றன. இதனாலேயே சம உரிமைகளுக்கு மேலாக பெண் அடக்கு முறையின் பல்வேறு பகுதிகளான அரசு, சமயம், திரு மணம், குடும்பம் ஆகியன பற்றி நவீன பெண்நிலை வாதி கள் வினாவெழுப்பியுள்ளனர். சுருக்கமாகக் கூறின் வாழ் வின் சகல பகுதிகளிலும் காணப்படும் பெண் அடக்கு முறை பற்றிய கூர்மையான விழிப்புணர்வும், விட்டுக் கொடுக்காத போராட்டங்களும் எத்தகைய சமூக பொரு ளாதார அமைப்பிலும் தொடர்ந்தாலன்றி, பெண் விடு தலையின் முழுப் பரிமாணத்தையும் நாம் எட்டி விடுதல் (Մ) գ. Այ " Ֆ] •

Page 11
பாலடிப்படையில் அமைந்த தொழிற்பாகுபாடு
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நிலவுகின்ற தொழிற் பாகுபாடே பால் அடிப்படை யில் அமைந்த தொழிற்பாகு untG (Sexual division of Labour) என அழைக்கப்படுகின் றது. அதாவது குறிப்பிட்ட சில தொழில்கள் பெண்ணுக்கு உரி யவை எனவும் ஆணுக்குரியவை எனவும் வகுக்கப்பட்டிருப்பதா கும். குழந்தையைப் பிறப்பித் தல், பராமரித்து வளர்த்தல், வீட்டுடன் தொடர்பான வேலை கள் போன்றவை பெண்ணுக்கு உரியனவாகவும் வீட்டுக்கு வெளி யிலான வேலைகளும், வரு

9 / சித்திரலேகா மெளனகுரு
வாயை ஈட்டுகின்ற வேறு தொழில்களும் ஆணுக்கு உரி யனிவாகவும் கருதப்படுகின்றன.
இத்தகைய பாகுபாடு சமமான அந்தஸ்துடைய சமூக அங்கத்தவர்கள் இடையே அமைந்திருப்பின் அது பிரச் சினைக்குரியதாகாது. ஆனால் இத்தகைய பாகுபாடு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான அசமத்துவ உற வுடனும், பெண்களது தாழ்த்தப்பட்ட நிலையுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. அத்துடன் பொருள் உற்பத்தியிலும், மனித இன மறு உற்பத்தியிலும் பெண் களது பங்கானது அவர்களது "இயற்கையின் ஒரு விளை வாகவே கூறப்படுகிறது. பெண்களது உழைப்பினை மனித செயற்பாடு என்பதாக அல்லாமல் அவர்களது உடலியற் கையின் தவிர்க்கமுடியாத விளைவு என்ற கண்ணோட்டம் மேலே கூறிய இப்பாகுபாட்டின் முக்கிய அம்சமாகும்.
இந்நிலையானது இன்று ஏறத்தாழ சகல நாடுகளிலும், சகல இன மக்களிடையேயும், சகல கலாச்சாரங்களிலும் தெளிவாகக் காணக்கூடியதாகும். எனினும் மிகமிகச் சில விதிவிலக்குகள் இருப்பதையும் மனங்கொள்ள வேண்டும்." அத்துடன் இப்பாகுபாடு உறுதியான வடிவில் கருத்து நிலை யிலும் (Ideology) செறிந்து காணப்படுகிறது. இப்பாகு பாடே மனித வாழ்க்கைக்கு உகந்தது, இயல்பானது" சிறந்தது என இக்கருத்துநிலை கூறுகின்றது.
மனித உழைப்பு பற்றி தற்போது பலராலும் கைக் கொள்ளப்படும் கருத்தாக்கம் எமது பரிசீலனைக்கு உரிய தாகும். உற்பத்தித் திறன்மிக்க உழைப்பு என்பது ஆணுக்கு உரியது என்பதே இக்கருத்தாக்கம் ஆகும். இதை இன்னும் சற்று விளக்கமாகக் கூறினால் உபரி உற்பத்தியை அல்லது மிகையை உருவாக்கக்கூடிய உழைப்பே உற்பத்தித் திறனு டைய உண்ழப்பு எனக் கருதப்படுகிறது. ஏனைய உழைப் புக்கள் 'உழைப்பாக'க் கருதப்படுவதில்லை. பெண்ணி னது வீடு சார்ந்த தொழில்களும் உழைப்பும், கடமைகள்,

Page 12
பெண் நிலைச் சிந்தனைகள் / 10
அல்லது "நடவடிக்கைகள்" என்றே கருதப்படுகின்றன: உழைப்பு பற்றிய இக்கருத்தாக்கம் ஆண்களும் பென்களும் தமக்கிடையே சில தொழில்களைப் பகிர்ந்து கொண்டுள் ளனர் என்று கூறுவது மாத்திரமல்லாது இப்பாகுபாட் டுக்கு அடிப்படையாகக் காணப்படும் ஆண் பெண் அச மத்துவ உறவுநிலை, பெண்ணின் மீதான ஆணின் ஆதிக் கம், சுரண்டல் ஆகியவற்றை மறைத்தும் விடுகிறது. ஆணி னது உழைப்பு அல்லது தொழில், உணர்வு பூர்வமான பகுத்தறிவு சார்ந்த திட்டமிட்ட உற்பத்தித் தன்மை வாய்ந்தது. இதுவே மனித உழைப்பாகும். பெண்ணினது உழைப்பு அவளது உடலியற்கையுடன் தொடர்புடையது. ஆகவே அது இயற்கையான நடவடிக்கை என்பதும் அதில் எத்தகைய உற்பத்தித் தன்மையும் இல்லை என்பதும் இக்கருத்தாக்கத்தின் மூலம் பெறப்படுவனவாகும்.
தொழி நிற் பாகு பாட் டி னை உடலியற்கையுடன் தொடர்பு படுத்துவதால் அது சாஸ்வதமானது, மாற்ற முடியாதது, என்ற முடிவு பெறப்படுகிறது. இத்தகைய கருத்தாக்கம் உயிரியல் விதிவாதத்தினின்று (Biologica/ Determinism) தோற்றம் பெற்றதாகும். இத்தகைய உயி ரியல் விதிவாதம் 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளின் பெரும் அறிஞர்கள், உளவியலாளர்கள், தத்துவாதிகள் ஆகியோ ரிற் பெரும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது.2 நவீன உள வியலின் தந்தை எனப்படும் சிக்மண்ட் பிராய்ட் "உடலி யல் மனிதரது விதியாகும்" (Anotomy is Destiny) என்ற கருத்துப்படக் கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது.
இத்தகை பாகுபாடும் அது பற்றி நிலவும் கருத்து களும் பெண்ணினது தாழ்த்தப்பட்ட நிலைமையுடனும் ஆண் பெண்களுக்கிடையிலான அசமத்துவ அதிகார உற வுடனும் தொடர்புடையனவாதலால், இவைபற்றிய ஆய் வுகள் பெண்கள் இயக்கங்களிடையே முக்கியம் பெறுகின் றன. பெண்களது விடுதலைக்காகவும், உயர்வுக்காகவும் உழைக்கும் இயக்கங்களாலும், தனிப்பட்ட பெண்களாலும்

11 / சித்திரலேகா மெளனகுரு
பால் அடிப்படையிலான தொழிற்பாகுபாடு பற்றிய வினாக்கள் எழுப்பப்படுகின்றன. இவ்வினாக்களின் பய னாக பெண்களது உழைப்பு தொடர்பான பல புதிய தக வல்களும். புதிய கருத்துக்களும் வெளிவந்துள்ளன.
இத்தகவல்கள், கருத்துக்கள் ஆகியவற்றின் உதவி யுடன் இப்பாகுபாட்டின் தன்மையையும், அது ஏன் ஆண் பெண்களுக்கிடையிலான அசமத்துவ உறவுடன் தொடர்பு கொண்டது என்பதையும் விளங்கிக்கொள்ளலாம். இவ் விளக்கம் பெண்களது முன்னேற்றத்தில் ஆர்வமுடையோ ருக்கு அத்தியாவசியமானதாகும். ஏனெனில் பெண்களது விடுதலை, உயர்ச்சி, முன்னேற்றம் ஆகியவை குறித்து கருத்துக்களை முன்வைக்கும் போதும், திட்டங்கள் தீட் டும்போதும் இவ்விளக்கம் பக்கபலமாய் அமையும்.
இவ்விடத்தில் சில வினாக்கள் எழுவது தவிர்க்க முடி யாததாகும்.
1. பால் அடிப்படையிலான தொழிற் பாகுபாட்டுக் கும், ஆண் பெண்ணுக்கிடையில் நிலவும் அசமத் துவ உறவுக்கும் இடையில் எத்தகைய தொடர்பு உள்ளது? அதன் அம்சங்கள் யாவை? 2. மேலாதிக்க உறவுமுறையைத் தொடர்ந்து நிலை நிறுத்துவதற்கு இப்பாகுபாடு எவ்வாறு உதவு கின்றது? 3. இப்பாகுபாட்டிலும் அது சார்ந்த கருத்துகளிலும் செயல் முறைகளிலும் எத்தகைய மாற்றம் தேவை?
இவ்வினாக்களுக்கு ஓரளவுக்காவது சரியான, உண்மை யான விடையைக் கண்டுவிட்டால் பெண் விடுதலைக்கான தெளிவான கருத்துக்களையும் திட்டங்களையும் உருவாக் குதல் முடியும். இவற்றில் முதலாவது வினா மனித உழைப்பின் ஆதிநிலை பற்றிய விளக்கத்துக்கு எம்மை இட்டுச் செல்கின்றது.

Page 13
பெண் நிலைச் சிந்தனைகள் / 12
மனித உழைப்பின் ஆதி நிலை:
உழைப்பு என்பது ஆரம்ப நிலையில் மனித பயன் பாட்டுக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்வதாக அமைந்திருந்தது. மனித தேவைகளுக்காக இயற்கைப் பொருட்களை பெற்றுக்கொள்ள இது ஏதுவானது. இது தன்னிச்சையான செயற்பாடு அல்லாமல் மனி தரின் உணர்வுபூர்வமான செயற்பாடாக அமைந்தது. மனிதருக்கும் இயற்கைக்கும் இடையிலான இப்பரஸ்பரச் செயற்பாட்டுக்கு உதவும் உற்பத்திக் கருவியாக அவர் களது உடலே அமைந்தது. ஆனால் மனித உடல் தனியே கருவி மாத்திரமன்று. அது மனித தேவைகளைத் திருப்தியாகப் பெறுகின்ற இலக்குமாகும். அதாவது மணி தர் தமது உடலை, பொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்துவது மாத்திரம் அல்ல. அப்பொருட்களை நுகர்வதன் மூலம் தம்மை வாழவைத்தும் கொள்கின்றனர்.
இவ்வாறு உற்பத்தி செய்யும்போது மனிதர் - ஆணும் பெண்ணும் இயற்கையை எவ்வாறு வேறு வேறு வகை களில் கையாளுகின்றனர் என்பதை உணர்தல் வேண்டும்.
பெண் தனது உடலையே உற்பத்தித்தன்மை வாய்ந்த தாக உணர்கிறாள். அவளது மூளை, கைகள் மாத்திர மல்ல, கருப்பை, மார்பகங்கள் ஆகியனவையும் உற்பத் தித்திறன் வாய்ந்தனவாகும். பெண் குழந்தைகளைப் பெறு வது மாத்திரமல்ல, அவர்களது உணவான பாலையும் தருபவள். பெண்கள் தமது சொந்த உடல், அதன் பயன் பற்றிய அறிவைப் பெற்றிருந்தனர். இதனால் குழந்தை களைப் பெறுவது அவர்களது உணர்வுபூர்வமான சமூகச் செயலாக அமைந்தது. இவ்விடத்தில் ஒன்று குறிப்பிட லாம். இன்னும்கூட, பெண்ணினது குழந்தையைப் பெறும் தன்மை உழைப்பு எனக் கருதப்படாமல், ஏனைய மிருக - பாலூட்டிகளுடையதைப் போல வெறும் உடலியற் செயற் பாடு என்றே நோக்குவது பெரும் குறைபாடாகும். பெண்

13 / சித்திரலேகா மெளனகுரு
விடுதலைக்குரிய பாதையில் இது ஒரு இடறுகட்டையாக வும் அமைந்துள்ளது.8
பெண்கள் காலப்போக்கில் தமது உடலின் ஏற்படும் மாற்றங்களை அவதானித்து தமது உடல்பற்றிய அறி வைப் பெற்றிருந்தனர். மாதவிடாய், கருப்பம், குழந்தைப் பேறு போன்றவை பற்றிய அனுபவ ரீதியான அறிவை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு அவர் கள் கையளித்தனர். இன்னொரு வகையிற் கூறினால் பெண்கள் தமது உடலியற்கையின் சிறைக்கைதிகளாக, அது குறித்துக் கையாலாகாதவர்களாக அவர்கள் இருக்க வில்லை. ஆனால் தமது உடலியற்கையை கையாளும் திறனை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளாவது பெற் நிருந்தனர். உதாரணமாக பண்டையப் பெண்கள் மத்தியில் பிறப்புக் கட்டுப்பாடு தொடர்பாகக் கைக் கொள்ளப்பட்ட நடைமுறைகளைக் கூறலாம்.* அதுபோல பால் சுரப்பினை அதிகரிக்கவோ, கட்டுப்படுத்தவோ கிரா மியப் பெண்கள் கையாளும் வழிமுறைகளைக் குறிப்பிட
GD
பெண்களும் உற்பத்தியும்
புதிய உயிர்களை உற்பத்தி செய்யும் பெண்களின் திறனானது, அவர்கள் ஏனைய உற்பத்தியிலும் ஈடுபட வழிசமைத்தது. குழந்தையைப் பிரசவித்துப் பாலூட்டும் தாய், தொடர்ந்து தனக்கும் குழந்தைக்குமான உணவை
உற்பத்தி செய்ய வேண்டியவளானாள். இதனாலேயே பெண்கள் நாளாந்தம் தேவையான உணவை அளிப்பவர் களாக செயற்பட்டார்கள். இதனை இயற்கையாகக்
கிடைப்பவற்றை விதைகள், கிழங்கு, பழம், மீன், சிறு பிராணிகள் - பெறுக்கிச் சேகரிப்பதன்மூலம் பெற்றுக் கொண்டனர். மனித குலத்தினது ஆரம்ப உழைப்பு மேற் கூறியவை போன்ற பொருட்களை கூட்டாகச் சேர்ந்து சேகரிப்பதாக அமைந்தது. இதில் முன்னணி வகித்தவர் கள் பெண்களேயாவர்.

Page 14
பெண் நிலைச் சிந்தனைகள் / 14
தேடிச் சேகரிக்கும் இவ்வுழைப்பானது பயிர்கள், தானி யங்கள் பற்றி அனுபவரீதியான அறிவை அளித்தது. இதுவே உலகின் ஆரம்பகால தானிய உற்பத்தியாளராக, விவசாயிகளாகப் பெண்களை ஆக்கியது. பெண்களே விவ சாய உற்பத்திக்குத் தேவையான முதலாவது கருவியை - நிலத்தைக் கிளறும் சிறு தடியாலான கருவியையும் கண்டு பிடித்தனர். உணவுப் பயிர்களைத் திட்டமிட்டு விளைவிக் கும் இந்நிலையால் உபரி உற்பத்தி சாத்தியமானது. மனித தேவைக்கு மேலாக தானியம் - உணவு உற்பத்தியாகிற்று. இதனைப் பெண்களின் உழைப்பு சாத்தியமாக்கிற்று. புதிய கற்காலத்தில் இத்தகைய மாற்றம் நடந்ததாக மானுட வியல் அறிஞர்கள் கூறுவர்.5 மிகப் பழைய தமிழ் இலக் கியங்களான சங்கப் பாடல்கள் தானிய உற்பத்தியுடன் பெண்களுக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததைக் கூறு வதை இங்கு கட்டுதல் வேண்டும்.8
எனவே பெண்கள் வெறுமனே சேகரித்து நுகர்பவர் களாக மாத்திரம் அன்றி நுகர்பொருட்களை உற்பத்தி செய்பவராகவும் - வளர்ப்பவராகவும் செயற்பட்டனர்.
ஆண்களும் உற்பத்தியும்
இக்காலகட்டத்தில் ஆண்கள் என்ன செய்துகொண் டிருந்தனர் என்பது அடுத்த வினாவாகும். ஆண்களும் பெண்களுடன் சேர்ந்து உணவு சேகரிக்கும் பணியில் ஈடு பட்டிருந்தனர். ஆனால் வரலாற்றுப் போக்கில் நீண்ட காலத்தின்பின் கண்டுபிடித்த கூரான ஆயுதங்கள் மிருகங் களைக் கொன்று வேட்டையாடும் தொழில்நுட்பத்தை மனிதருக்கு அளித்தன. பெண் பயிர்ச்செய்கையில் ஈடு பட்டு அதில் விசேட திறன்களையும் அறிவையும் வளர்த் துக்கொண்டிருந்தபோது ஆண் வேட்டையாடுகின்ற திற னில் தேர்ச்சி பெறத் தொடங்கினான்.
ஆனால் வேட் டை யாடும் தொழிலால் மனித தேவைக்கு வேண்டிய உணவினை முற்றிலும் பூர்த்திசெய்ய

15 / சித்திரலேகா மெளனகுரு
முடியவில்லை என்பது இன்று நிறுவப்பட்ட உண்மையா கும். மனித குலத்தின் தேவையை மரக்கறி உணவே நீண்டகாலம் பூர்த்தி செய்தது. ஏர் உழவு கண்டு பிடிக்கப் படும் வரை, இத்தானிய உணவை உற்பத்தி செய்பவர் களாகப் பெண்களே விளங்கினர்.
சிறு பறவைகளையும், சிறுநீ்லுக்குகளையும் உணவுத் தேவைக்காக வேட்டையாடப்ங். ஆயுதங்கள் காலம் செல்லச்செல்ல போரில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களாக மாறின. இந்த ஆயுதங்கள் ஒரு மக்கட் கூட்டத்தார் இன் னொரு மக்கள் கூட்டத்தினரை ஆக்கிரமிக்கப் பயன்படும் கருவிகளாயின. இவை ஆண்களினது உடைமைகளாகவிருந் தன என்பது முக்கியமானதாகும். இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தியே, தனது கூட்டத்தினரல்லாதவரையும், எதிரிகளையும், தமது கூட்டத்துள் உழைப்போராகிய பெண்களையும் ஆண்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத் திருப்பது சாத்தியமாகியது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான அசமத்துவ உறவின் தோற்றம்:
இத்தகைய ஒரு வளர்ச்சிப் போக்கில் தான் பெண் ஆணினது அதிகாரத்துக்கு உட்பட்டவளாக மாறினாள். ஆதியில் இருபாலாரிடையேயும் இருந்த ஒருவகைப் புரா தன சமத்துவ உறவு மாறி அசமத்துவ உறவு உருவாகி யது. இத்துடன் ஆண் ஆயுதபலத்தால் அபகரித்த செல் வங்கள் (உ-ம்) தானியங்கள், மந்தைகள், மனித அடி மைகள் ஆகியனவும் ஆணினது அதிகார பலத்தை மேலும் உயர்த்தின. போரில் கைப்பற்றப்பட்டோரில் ஆண்களைக் கொன்றுவிட்டு, வென்றோர் தம்முடன் பெண்களை எடுத் துச் சென்றனர். வேலையாட்களாகவும், புதிய வேலை யாட்களை உருவாக்குபவர்களாகவும் இப்பெண்கள் பயன் பட்டனர். சங்ககால இலக்கியங்களில் வர்ணிக்கப்படும் போர்களின் மூலம் பெறப்பட்ட பெண்கள் கொண்டி மகளிர்" எனக் குறிப்பிடப்படுவது கவனிக்கத்தக்கது.

Page 15
பெண் நிலைச் சிந்தனை / 16
ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான அசமத்துவ உறவு எப்போது ஏன் தோன்றியது என்பதற்கு மேற்கூறிய விளக்கத்தினைவிட ஆராய்ச்சியாளர்கள் வேறு விளக்கங் களையும் அளித்துள்ளனர். அவற்றினையும் இவ்விடத்தில் குறிப்பிடுதல் பொருந்தும்.
1. ஒரு சாரார், பெண்ணினது உடலியற்கை அவளை அவளது இருப்பிடத்துடன் கட்டுப்படுத்தியது எனவும் குழந்தை பிரசவம், வளர்ப்பு போன்றவை அவளை வேறு உழைப்பில் ஈடுபட முடியாமல் செய்தது என்றும் கூறியுள் ளனர். மேலும் இக்கருத்துப்படி பெண்களது உடலியல் இயற்கையாக விதித்த கட்டுப்பாடு காரணமாக அவர் களைப் பராமரிக்கும் பொறுப்பு ஆண்கள் கடமையாகிற்று என்பர். உடல் வலுவும், உற்பத்தித் திறனைப் பெருக்கும் வாய்ப்புகளும் கொண்ட ஆண், சமூகத்தினதும் குடும்பத் தினதும் தலைவனாக வளர்ந்தான் எனவும் கூறுவர். ஆண்மை, பெண்மை ஆகிய இயற்கையான உளவியல் அமைப்பும் இதற்குப் பங்காற்றியது என்பர். உயிரியல் விதிவாத அடிப்படையிலமைந்த விளக்கம் இது எனலாம்.
2. இன்னோர் சாரார், குறிப்பாக பிரடரிக் ஏங்கல்ஸ் போன்றோர் ஆதிகாலத்தில் சமூக உற்பத்தியில் பெண் பெற்றிருந்த முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்வர். உண் மையில் ஏங்கல்ஸ் எழுதிய குடும்பம், தனிச் சொத்துடமை, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலே முதன்முதல் பெண்களது மறைக்கப்பட்டிருந்த வரலாற்றுப் பங்களிப் பினை மிக அழுத்தமாக எடுத்துக்கூறியது. ஆணுக் கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட வேலைப் பிரி வினையே உலகின் முதலாவது வர்க்கப் பிரிவினை என்று ஏங்கல்ஸ் கூறியுள்ளார். ஆணின் அதிகாரத்துக்கு பெண் அடங்கி உட்படும் நிலை பெண்ணின் வரலாற்றுத் தோல்வி என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் இந்த அசமத்துவிே கம், ஆதிக்கம் எப்படி உண்டாகியது? அதனைச் சாதித் தது என்ன? என்பது பற்றி அவர் திருப்தியான விடை

17 / சித்திரலேகா மெளனகுரு
அளிக்கவில்லை. மந்தை வளர்ப்பினால் பெறப்பட்ட உபரி உற்பத்திக்கு உடைமையாளனாக ஆண் அமைந்தான். இது தனிச் சொத்துடமைக்கு ஆரம்ப நிலையாகியது. இதன் அடிப்படையில் தனிக் குடும்ப அமைப்பு உருவாகி யது. இவையிரண்டுடனும் ஆணினது அதிகாரமும் பெண் ணினது தாழ்த்தப்பட்ட நிலையும் பிணைந்திருந்தது என் கிறார் அவர்.
மேற்கூறிய இருகருத்துகளுள் முதலாவது சாராரது கருத்து விஞ்ஞானபூர்வமான ஆய்வு முறைக்கும் உண்மைக் கும் முரணானது ஆகும். உண்மையில் வரலாற்றுச் சான் றுகள், ஆதியில் பெண் உற்பத்தியில் பெற்ற முக்கிய இடத்தினைத் தெளிவுறுத்துகின்றன. எனவே பெண் அவ ளது இருப்பிடத்தில், அவளது உடலியற்கை காரணமாகக் கட்டுப்பட நேர்ந்தது என்பது தவறானதாகும். மேலும் ஆண்மை, பெண்மை என்பவையும் இயற்கையாக அமைந் தவை அல்ல. அவை வரலாற்றுச் செய்முறைக்கூடாக உரு வானவையாகும். எனவே முதலாவது கருத்து தவறானது ஆகும். ر
இரண்டாவது கருத்து (ஏங்கல்சின் கருத்து) தொழிற் பாகுபாட்டினையும் உற்பத்தியையும், ஆண், பெண் அச மத்துவத்தையும் தொடர்புபடுத்த முயல்கிறது. ஆனால் வேறு சில தவறுகள் உள்ளன. அதாவது உபரியின் தோற் றம் மந்தை வளர்ப்பின் பயன் என்கிறார் ஏங்கல்ஸ். ஆனால் அது சிறு பயிர்ச்செய்கைக் காலத்திலும் அதற்கு முன்னர் சேகரித்து உண்ணும் காலகட்டத்திலும் இருந் திருக்கிறது என்பதற்குச் சான்றுகள் இன்று உள.7 அப்படி பானால் முந்தைய காலகட்டங்களில் உபரி இருந்தும் தோன்றாத அசமத்துவ உறவு மந்தை வளர்ப்புக் கால க்ட்டத்தில் மாத்திரம் ஏன் தோன்றுகிறது என்ற வினா கீழுகிறது.
ஆயுத வளர்ச்சி மந்தை வளர்ப்புக் கட்டத்தில் ஒரு

Page 16
பெண் நிலைச் சிந்தனைகள் / 18
வாறு அதிகரித்தமை இதற்கான காரணமாகும் என்பதே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.
இவ்வாறு பெண்மீது ஆண் பெற்ற அதிகாரமானது பல்வேறு வழிகளில் கிளைவிட்டது. பெண்ணினது சமூக உற்பத்தியைத் தனக்கு உரிமையாக்குதல் மாத்திரமின்றி அவளது பாலியலையும் (Sexuality) தனது கட்டுப்பாட் டுக்குள் வைத்திருக்கவேண்டிய தேவை ஆணுக்கு ஏற்பட் டது. இந்த காலகட்டத்தில்தான் ஆண் முதன்ம்ை பெறும் தந்தை வழிச் சமூக அமைப்பு (Patriarchal Society) உரு வாகியது. ஒரு புருஷ - ஒரு தார மணக்குடும்பம் இத் தந்தை வழிச் சமூக அமைப்பின் ஆதார அடிப்படை அல காக அமைந்தது. இதனையொட்டியே பெண்ணினது கட மைகள் வீட்டுக்குரியன எனக் கட்டிறுக்கமாக வரையறுக் கப்பட்டன. அவள் வீட்டுக்கு வெளியில் செய்யும் வேலை கள் கூடப் பெரியளவில் மதிக்கப்படவில்லை. கற்பு போன்ற விழுமியங்கள் உருவாகின. அடங்கிப் போகின்ற மெல்லி யல்புள்ள பெண்மைக் குணம், சமயங்கள் மூலமும் இலக் கியங்கள் மூலமும் இலட்சியமயப்படுத்தப்பட்டது.
பெண்களின் உற்பத்தியும் சமூகக் குழுக்களின் தோற்றமும்
பெண்கள் சமூக உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்த னர் என முன்னர் கூறப்பட்டது. அதே சமயம் அவர்கள் முதன்முதல் சமூக உறவுகளை ஸ்தாபித்தவர்கள் என்ப தும் குறிப்பிடத்தக்கதாகும். தமது உணவுக்காகவே வேட் டையாடியும் சேகரித்தும் செயற்பட்ட வயது வந்த ஆண் கள் போலன்றி பெண்கள் தமது குழந்தைகளது உணவுக் காகவும் முயற்சி செய்யவேண்டியிருந்தது. இந்த நிலைமை, தாய்மாருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவை - முதலாவது சமூக உறவினை ஸ்தாபிக்கும் பண்பைப் பெண் களுக்கு அளித்தது. தாய் - பிள்ளைகள் சேர்ந்த குழுக் களே முதலாவது சமூக அலகுகளாகும் என்பதைப் பல ஆராய்ச்சியாளரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த அலகு

19 / சித்திரலேகா மெளனகுரு
கள் தனியே நுகர்கின்ற அலகுகளாக அன்றி உற்பத்தி செய்கின்ற அலகுகளாகவும் அமைந்தன. அன்னையரும் பிள்ளைகளும் உணவுப் பொருட்களைச் சேகரிப்பேரராக வும், மண்வெட்டியைப் பயன்படுத்தும் ஆரம்பகாலப்டியிர்ச் செய்கையாளராகவும் விளங்கினர். வளர்ந்த ஆண்கள், இத்தகைய ஆரம்பகால தாய் முதன்மைச் சமூகங்களில் (Matricentric) தற்காலிகமாகவும், அவற்றின் விள்ம்பி லுமே செயலாற்றினர் என்பதைப் பல ஆராய்ச்சியாளர் களும் எடுத்துக்காட்டியுள்ளனர்.8 நாம் பிறந்த சமூக் அல் குகளைத் தவிர ஏனையவற்றுடன் ஆண்கள் நிரந்தரமான உறவை வளர்த்துக்கொள்வதில்லை. (இந்தியாவின் கேர ளப் பகுதியில் மிகச் சமீப காலம்வரை நாயர் குடும்பங் களில் இந்நடைமுறையிருந்தது. பெண் தனது பிறந்த வீட் டிலேயே நிரந்தரமாக வசிப்பாள். அவளது சகோதரிகளும் சகோதரர்களும் அங்கேயே இருப்பர். கணவன், 'வந்து போகிறவனாகவே' இருப்பான். அவன் அவனது பிறந்த அலகின் நிரந்தர அங்கததினன். இதுபோலவே இலங்கை யில் மட்டக்களப்பிலும் தற்காலத்தில் வழக்கிறந்துவோன குடிமுறை விளங்குகிறது. பெற்றோர், சகோதரர், 'பிள் ளைகள் என அங்கத்தினர் உள்ள குழுவில் வாரிசு முறை யும் தாய்வழியாகவே தொடரும். மன உறவினால் இக் குழுவுள் வந்துசேரும் ஆண் தொடர்ந்து தனது தாயின் குழுவிற்கு உரியவனாகவே இருப்பான்.)
இத்தகைய ஆரம்பகாலச் சமூக அலகுகளில் வளர்ந்த உற்பத்திச் சக்திகளாவன தொழில்நுட்பத்திறன் வாய்ந் தனவாக மாத்திரமன்றி மனிதக் கூட்டுறவிற்கான கொள். ளளவினையும் அதிகரித்துக் கொண்டன. எதிர்காலம் பற். றித் திட்டமிடும் திறன், எதிர்காலத்தை எதிர்நோக்குதல், ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொள்ளல், பழைய அனு பவங்களிலிருந்து கற்றல், அறிவை ஒரு தலைமுறையில் இருந்து இன்னோர் தலைமுறைக்கு அளித்தல் முக்சியமான தாய் அமைந்தன. இதுவே வரலாற்றை ஆக்குவதர்யும் இருந்தது. .

Page 17
20 / பெண் நிலைச் சிந்தனைகள்
ஆண்களும் பெண்களும் ஈடுபட்ட வெவ்வேறு உற்பத் தித்துறைகளும், ஆயுதங்களின் உடமையால் ஆண்கள் பெற்ற மேலாதிக்கமும் பால் அடிப்படையிலான தொழிற் பாகுபாடு எல்லாச் சமூகங்களிலும் நிலைபெறுவதற்குக் காரணமாகின, அத்துடன் பெண்களுடைய தொழில்கள் பொருளாதார நன்மை வாய்ந்தவையல்ல என்றும் அவை இரண்டாம் பட்சமான உழைப்பே என்றும் கருத்துகள் வலுப்பட இவை வழிவகுத்தன.
தற்காலத்தில் தொழிற்பாகுபாடு
இன்று சகல நாடுகளிலும். விவசாய உற்பத்தியில் பெண்ணுடைய உழைப்பே பெரும்பங்கு வகிக்கின்ற நாடு களிலும்கூட மேற்கூறிய கருத்தே வலுப் பெற்றுள்ளது: இக்கருத்தே கருத்து நிலை ஏற்புடமை கொண்டதாகவும் அதிகாரத்தில் உள்ள அமைப்பினாலும் வர்க்கத்தினாலும் பிரசாரம் செய்யப்படுவதாகவும் உள்ளது.
* இன்று குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் உணவு உற்பத்தித் துறையில் பெண்கள் அதிகளவு உழைக்கின்ற னர், உலகநாடுகளின் உணவுத்தேவையில் சுமார் 40% பெண் களின் உழைப்பு மூலமே பெறப்படுகிறது. அத்துடன் அவர் கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்களை, சந்தைக்கு அன்றி குடும்ப அலகின் நுகர்ச்சிக்குரிய பொருட் 665) arruyth (Subsistence Production) dibu.5 s Gartisairp னர். ஆனால் இவ்வுழைப்பானது அவ்வந் நாடுகளின் கணக் கெடுப்புக்களிலோ புள்ளிவிபரங்களிலோ பிரதிபலிப்பு தில்லை. உணவுற்பத்தியாளர்களும் விவசாயிகளும் தொடர்ந்தும் ஆண்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர். இது பெண்களை நுகர்வோராத மாத்திரமே காண்கின்ற கருத்துடன் தொடர்புடையது.
முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த நாடுகளில் குடும்ப அலகு ஒரு நுகர் அலகாகவே (Consumption Unit) பெரும் பாலும் செயற்படுகிறது. ஆனால் முதலாளித்துவம், இயந்

21 / சித்திரலேகா மெளனகுரு
திரத் தொழில்நுட்பம், முற்றுமுழுதான பணப் பொருளா தாரம் போன்றவை கூர்மையாக அபிவிருத்தியடையாத நாடுகளில் குடும்பம் நுகர் அலகாக மாத்திரமன்றி உற் பத்தி அலகாகவும் செயற்படுகிறது. அங்கு குடும்ப அங்கத் தவர்கள் யாவரும் - பிள்ளைகள், வயது முதிர்ந்தோர் உட் பட - ஏதோ ஒருவகையில் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இந்த உண்மைநிலை மேற்கூறிய கருத்தாக்கத்தினால் மறைக்கப்படுகிறது. குடும்பம் உற்பத்தி அலகாகவும் செயலாற்றுகிறது; அதன் அங்கமான பெண்ணும் அவ்வுற் பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறாள் என்பது குடும்பத்தின் பொருளாதார நடவடிக்கைகள், ஆண், பெண்ணினது உழைப்பு போன்றவை பற்றிய ஆய்வுகளின் பின்னணியாக அமைதல் வேண்டும். இத்தகைய நோக்கு நிலையே பெண் ணுக்குத் தேவையான அளவு முக்கியத்துவம் அளிப்பதற்கு அடிப்படையாக அமையத்தக்கது.
மேலும் வீட்டு வேலைகள் உழைப்பு அல்ல என்று கரு தப்படுவதும் தவறானதாகும். மனித உழைப்பு பற்றிய கருத்தாக்கத்தில் காணப்படும் ஆண் சாய்வு பற்றி முன்ன ரேயே குறிப்பிட்டேன். இக்கருத்தாக்கம் ஏற்கனவே குறிப் பிடப்பட்டதுபோல குழந்தைப்பேறு, குழந்தை வளர்ப்பு போன்றவற்றை பெண்ணினது உடலியற்கையின் விளைவா கவே காணுகின்றது அன்றி உணர்வுடைய மனிதச் செயற்பா டாக அல்ல. பெண்ணுக்கு கருப்பை என்ற உறுப்பு இருப் பதால் அவள் தன்பாட்டுக்கு குழந்தைகளைப் பிரசவிக் கிறாள் என்பதே இக்கருத்தாக்கத்தின் அடிப்படையாகும். ஆனால் குழந்தைப் பேறு தன்னுணர்வுடைய மனித செயற் பாடு என ஏற்கனவே கூறப்பட்டது. அத்துடன் அது ஏனைய உற்பத்திகள் யாவற்றுக்கும் அடிப்படையான மனித வலுவைத் தோற்றுவிக்கும் உழைப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.9 இவ்வாறு மனித உழைப்பு பற்றிய நோக்கு நிலை விரிவுபட்டால் குடும்ப அலகின் உற்பத்தி முக்கியத்துவம் மேலும் விளக்கம் பெறும்.
இது மாத்திரமன்றி இன்றைய முதலாளித்துவ சமூ

Page 18
பெண் நிலைச் சிந்தனைகள் / 22
கத்தில், இச்சமூக அமைப்பை நிலை நிறுத்துவதற்குரிய விழுமியங்களை உள்வாங்குபவர்களாக பிள்ளைகளை சமூக உருவாக்கம் செய்யும் (Socialization) சக்தியாகவும் பெண் விளங்குகிறாள். பிள்ளை வளர்ப்பு என்பது தனியே அதன் உடல் வளர்ச்சி மாத்திரம் அன்று பிள்ளையின் கருத்துக்கள் விழுமியங்கள் என்பவற்றை நடைமுறையிலுள்ள சமூகத் துக்கு இசைவாக உருவாக்குவதில் பெண்ணின் பங்கு வலு வானது. இவ்வகையில் பல்வேறு நன்மைகளையும் இலா பங்களையும் இன்றுள்ள் சமூக அமைப்புக்குப் பெண்ணின் உழைப்பு நல்குகின்றது. இந்நிலைமையைத் தொடர்ந்து பேணுவதன் மூலமே வர்க்க, பால் அசமத்துவம் நிலவும் இச்சமூக அமைப்பை நிலைநிறுத்தமுடியும் என்பது இவ் வமைப்பில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நன்கு தெரி ԱվԼ0.
குடும்பத்தின் பிரதான உழைப்பாளி ஆண்டி பெண்" ܓ மனைவி என்ற பாத்திரம் மாத்திரமே" (Male Bread Winner and Female House-Wife Model) Grsirp scodigy இன்று பெரும்பாலான சமூக பொருளாதார ஆய்வுகளுக் கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கும் பின்னணியாக உள் ளது. உதாரணமாக இலங்கையில் அபிவிருத்தித் திட்டங் களில் அநேக சமூகநல நன்மைகள் "குடும்பத் தலைவ னுக்கே" - ஆணாக உள்ள பிரதான உழைப்பாளிக்கே வழங் கப்படுகின்றன. கணவன் இல்லாது இருந்தால் மட்டுமே பெண்கள் இந்த உரிமைகளை அனுபவிக்கத் தகுதியுடைய வர்கள் ஆவார்கள். கணவன் குடும்பத்தில் இருந்து வில கினால் அல்லது விவாகரத்துப் பெற்றால் இந்த நன்மை களும் அவனுடன் நீங்கிவிடுகின்றன. சமூக நலன்புரித் திட் டங்களிலும் ஆணே குடும்பத் தலைவனாக ஏற்றுக்கொள் ளப்படுகின்றான். இதன் விளைவாக ஆண்கள் பல சந் தர்ப்பங்களில் பெண்கள் பெறாத உரிமைகளுக்கு உரித் தாகின்றனர். பெண், தானே குடும்பத்தின் பிரதான உழைப்பாளி என்பதை நிரூபித்தால் மாத்திரமே இந்த நன்மைகள் பெண்களுக்கு உரித்தாகும். பெண்களே பெரு

23 / சித்திரலேகா மெளனகுரு
:மளவில் தொழில் புரியும் சுதந்திர வர்த்தக வலயம், 'பெருந்தோட்டங்கள், தனியே பெண்களின் தலைமையைக் கொண்ட குடும்பங்கள் ஆகிய நிலைமைகளைக் கொண்ட இலங்கையில் குடும்பப் பொருளாதாரத்தில் பெண்கள் இரண்டாம் பட்ச நிலையே வகிக்கின்றனர் என்று சமூக நலப் பகுதியினர் கருதுவது பொருத்தமற்றதாகும்
Uco "ஆண் குடும்பத்தின் பிரதான உழைப்பாளி என்ற கருத்தின் அடிப்படையிலேயே குடும்ப வேதனம் (Family Wage) என்ற முறை உருவாகியது. அதாவது ஆணையே குடும்பத் தலைவனாகக் கருதி அவனும் அவனது மனைவி மக்களும் வாழ்க்கையை நடத்துவதற்குப் போதுமான சுலியை ஆணுக்குக் கொடுப்பதாகும். இதனால் பெண் உற்பத்தியில் ஈடுபடும்போது, குடும்பத்தில் மேலதிக வரு மானத்திற்கே அவள் உழைப்பதாகக் கருதி, சமனான வேலைகளின்போதும் குறைந்தளவு கூலியே வழங்கப்படு கிறது. (இதுவே ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் சம னற்ற ஊதியம் வழங்கும் நிலையை உருவாக்கியது. இலங்கை உட்படப் பல மூன்றாம் உலக நாடுகளில் 25%- 40% வரையிலான குடும்பங்கள் பெண்ணின் உழைப்பி லேயே தங்கியிருப்பனவாகவோ பெண்ணின் தலைமையைக் கொண்டனவாகவோ உள்ளன. இவர்களுட் பெரும்பாலான பெண்கள் மிக்க வறுமையான நிலையில் வாழ்கின்றனர். இவர்கள் செய்யும் இதாழில்களுக்குக் குறைவான கூலியே வழங்கவும் படுகிறது. இவர்கள் முதலாளித்துவ, ஆண்வழித் தீர்மானங்களைக் கொண்ட வேலைத்தலங்களில் சமனற்ற கூலி பெறுதலுக்கும், ஏனைய பாரபட்சமான நடைமுறை கட்கும் உட்படுகின்றனர். 1984ம் ஆண்டுவரை இலங்கை யின் தேயிலைத் தோட்டங்களில் இச் சமனற்ற சம்பளம் பெரும் பிரச்சனையாக இருந்தது. அத்துடன் பல்வேறு குடிசைக் கைத் தொழில், விவசாய வேலைகளிலும் பெண் கள் ஆண்களைவிடக் குறைந்த ஊதியம் பெறும் நிலை மையை இன்று காணலாம்.
மேற்கூறிய இந்நோக்கு நிலையானது இன்னொரு

Page 19
பெண் நிலைச் சிந்தனைகள் / 24
நடைமுறைக்கும் எம்மை இட்டுச் செல்கிறது. அதாவது தொழில்கள் தரும்போது ஆண்களுக்கே முதலிடம் கொடுக் கப்படுவதாகும். தவிர்க்க முடியாத தேவைகள் ஏற்படும் போதே பெண்கள் தொழில் செய்வதற்காகச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.10 குறிப்பாக யுத்த காலங்களில் ஆண்கள் செய்த தொழில்களிற் பெண்கள் ஈடுபடுவது ஊக்குவிக்கப்படுகிறது. இலங்கைத் தமிழ்ப் பகுதிகளை உதாரணமாகக் கூறலாம். ஆண்களின் இறப்பு, காணாமற் போதல், இளைஞர் இயக்கங்களிற் சேருதல் வெளிநாட் டுக்குப் புலம் பெயர்தல் போன்ற காரணங்களால் ஆண் கள் நாட்டுப் பொருளாதாரத்தில் பங்கேற்பது குறைவான போது பெண்கள் எந்தத் தொழிலிலும் ஈடுபடுவதற்கு தடையிருக்கவில்லை. இரண்டாம் உலகப் போரின்போதும் மேற்கு ஐரோப்பாவில் இந்நிலையே காணப்பட்டது. ஆனால் போர் முடிவுற்றபின் போர் முனையிலிருந்து ஆண்கள் திரும்பிய பின்னர் சிக்கல் ஏற்பட்டது. இந்த ஆண்களுக்குத் தொழில் தேவைப்பட்டது. எனவே பெண் கள் தொழிற்சாலைகளில் இருந்து நீக்கப்பட்டார்கள். வேலைகளை ஆண்களுக்கு விட்டுக்கொடுக்கும்படி அரசாங் கத்தாலும், சமய நிறுவனங்களாலும் அறிவுறுத்தப்பட் டார்கள். பெண்கள் இல்லத்தை நன்கு பரிபாலிக்க வேண் டும்; அதுவே சிறந்த வாழ்க்கை நிலைமையைத் தரும் எனப் பிரசாரம் செய்யப்பட்டது. மனையியற் கல்வி பெரும் இயக்கமாக இக்காலத்தில் உருவாகி வளரத் தொடங்கியது. பெண் - மனைவி (House Wife) என்ற நோக்கு நிலையே இம்மனையியற் கல்வியின் அடிப்படை யாக அமைந்தது. மத்திய தர வர்க்கத்துப் பெண்களின் கருத்து நிலையை உருவாக்குவதில் இது பெரும் பங்கு வகித்தது. அழகிய அடக்கமான கணவனையும் குழந்தை களையும் நன்கு பராமரிக்கிற, வீட்டை அலங்காரமாகவும் பளபளவென்று சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருக் கின்ற மனைவி' என்ற கருத்துருவே இப்பெண்களுடைய இலட்சியமாக வடிவமைக்கப்பட்டது. மேற்கு ஐரோப்பா வில் உருவான இக்கருத்துரு எமது நாட்டிலும் நன்கு பர வியது. இலக்கியங்கள், திரைப்படங்கள் இதனை பிரபலப் படுத்திப் பிரசாரம் செய்தன. கணவன் வேலைத் தலத்தி

25 / சித்திரலேகா மெளனகுரு
லிருந்து திரும்பும்போது வீட்டு வேலைகளை எல்லாம் கன கச்சிதமாக முடித்துவிட்டுத் தன்னை அலங்கரித்து தேனீர்க் கோப்பையுடன் காத்திருக்கும் மனைவி பற்றிய பிம்பம் இவற்றில் இடம் பெற்றது.
இத்தகைய கருத்துருவாக்கங்கள் பெண்ணினது சுதந் திரமான நிலையை மறுதலித்தன. பெண்ணை ஆணிற் தங்கி வாழ்பவளாகவே கருதின. ஆணும் பெண்ணும் இவற்றினால் நன்கு பாதிக்கப்பட்டனர். இவற்றை உள் வாங்கினர். தம்மைப் புரவலர் - இரவலர் நிலைமையிற் கண்டனர். ஆணுக்கும் பெண்ணிற்கும் இடையிலான அதி காரவைப்பு முறை பொருந்திய உறவினை இது மேலும் நிலைநிறுத்துவதாக அமைகிறது.
இதுவரை மேலே கூறிய விடயங்கள் பால் அடிப்படை யிலமைந்த தொழிற்பாகுபாட்டின் பல்வேறு அம்சங்கள் பற்றினவாகும். அதாவத்பிாகுபாடு எத்தகையது? இது பற்றி நிலவுகின்ற கருத்துகள் யாவை? ஆண் - பெண் ணுக்கிடையிலான சமனற்ற உறவுக்கு இது எவ்வாறு வழி வகுத்தது? தற்காலத்தில் இது எத்தகைய பரிமாணம் பெற்றுள்ளது? ஆண் பெண் சமனற்ற உறவையும் பெண் ணினது தாழ்த்தப்பட்ட நிலையையும் மேலும் இறுக்கமாக நிலை நிறுத்துவதற்கு இது எவ்வாறு பயன்படுகிறது? ஆகிய விடயங்கள் இங்கு சுட்டிக்காட்டப்பட்டன.
மாற்றுத் திட்டங்கள் என்ன?
பெண்கள் முன்னேற்றத்திலும் சமத்துவத்திலும் ஆர்வ முடையோர் என்ற வகையில் மேற்கூறியவை தொடர் பாகச் செய்யப்படவேண்டியவை யாவை என்பது இப்போது எமக்கு முன்னுள்ள வினாவாகும்.
பெண்ணினது உழைப்பு உற்பத்தி பற்றிய ஆக்கபூர்வ மான கருத்து மாற்றத்தைப் பரப்புதல் வேண்டும். அதா வது உபரிப்பெறுமதியை நல்கும் ஆணினது வீட்டுக்கு வெளி

Page 20
பெண் நிலைச் சித்தனைகள் / 26
யிலான உழைப்பே சமூக ரீதியான உற்பத்தித்திறன் வாய்ந்த உழைப்பு என்ற கருத்திற்குப் பதிலாக பெண் களின் உழைப்பு பற்றிய மாற்றுக் கருத்து முன்வைக்கப் பட வேண்டும். அதாவது பயன் பெறுமதி (Use Values) வாய்ந்த பெண்ணினது வீட்டு உழைப்பும் உற்பத்தித்திறன் வாய்ந்தது என்பது உணரப்படவேண்டும். அத்துடன் வீட்டு உழைப்பு தவிர பெண் ஈடுபடும் ஏனைய உழைப்புத்துறை கள் இரண்டாம் பட்சமானவையாகக் கருதப்படாது அவற் றின் பயன், அங்கீகாரம் பெறுதல் வேண்டும்.
இதனை அரசாங்கமும், சட்ட நிறுவனங்களும், அபி விருத்தித் திட்டமிடுவோரும் தமது கொ ள் கை களி ல் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இதன்மூலம் சமூகநலத் திட்டங்கள், அபிவிருத் தித் திட்டங்கள் என்பவை பெண்ணினுடைய உற்பத்தித் திறன், உழைப்பு, பொருளாதார முக்கியத்துவம் என்ப வற்றையும் கருத்தில் கொண்டு வகுக்கப்படும் சாத்தியப் பாடு ஏற்படலாம்,
அடிக்குறிப்புகள் :
1. இன்றும் உலகின் பல்வேறு பகுதிகளிற் காணப் படும் ஆதிவாசிகள் மத்தியில் ஆண் பெண்களி டையே கட்டிறுக்கமான வேலைப் பிரிவினை இல்லை என்பதைப் பல மானுடவியல் ஆய்வாளர் களும் எடுத்துக்காட்டியுள்ளனர். அத்துடன் பெண் களின் உழைப்பினைக் குறைத்து மதிப்பிடும் வழக் கமும் இவர்களிடையே இல்லை. பார்க்கவும் - Reiter. R. Toward an Anthropology of Women 1975.
2. இந்த உயிரியல் விதிவாதம், அதிகாரம், அந்தஸ்து உடையவர்கள் தமது நிலையினை மேலும் பலப் படுத்தப் பயன்பட்டுள்ளது. பெண்கள், கறுப்பின

27 / சித்திரலேகா மெளனகுரு
மக்கள் முதலியோரை அடக்கி வைத்திருப்பதற் கான தத்துவ ஆதாரமாக இதனை அவர்கள் பயன்படுத்தினர்.
3. பெண்ணினது உடலின் உற்பத்தித் திறனை மிரு கங்களது கருவளம்போல நோக்குவதானது இன் றைய சனத்தொகைத் திட்டமிடுவோரின் கருத் துக்கு அடிப்படையாக உள்ளது. இது தந்தைவழி விழுமியங்களின் அடிப்படையில் விளங்கிக்கொள் ளப்பட வேண்டும்.
4. பிறப்புக் கட்டுப்பாடு, தாய்ப்பால் சுரப்பு என்பன பற்றிய அறிவும் நடைமுறைகளும் பண்டைக் காலப் பெண்களிடையே காணப்பட்டன என்பதை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பார்க்கவும். Fisher. Elizebeth, Women's Creation, 1979.
5. விபரங்களுக்குப் பார்க்கவும்:
i) Chattopadhyaya. D. Lokayata - A study in Ancient Indian Materialism, 1973. ii) Childe Gordon, What Happened in History,
1976. iii) Reed. Evlyn, Women's Evolution, 1975.
6. சங்கப் பாடல்களை ஆதாரமாக வைத்து நோக் கும்போது தானியங்களில் வரகு முக்கியம் பெற் றிருந்ததை அறியலாம். தினையைப் பறவைகளிட மிருந்து காப்பதில் பெண்கள் அதிக பங்கெடுத்த னர். 'தினை ஒம்பியும் கிளி கடிந்தும்" பணி யாற்றும் பெண்களை குறிஞ்சித் திணைப் பாடல் களில் காணலாம். தினைப்புனக் காவல் என்பது வெறும் இலக்கிய மரபாக மாத்திரம் அன்றி அன் றாட வாழ்நிலையுடன் தொடர்புடையதாயிருந் தது. சங்க இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு

Page 21
பெண் நிலைச் சிந்தனைகள் / 28
O.
அக்காலப் பெண்களின் நிலையை அறிவதற்கான ஆயவுகளை பெண்நிலைவாத நோக்கின் அடிப் படையில் மேற்கொள்வது சுவையான தகவல் களுக்கு எம்மை இட்டுச் செல்லக்கூடும்.
ஈரான், துருக்கி, ஆகிய நாடுகளில் சமீபத்தில் மே ற் கொள் ள ப் பட்ட அகழ்வாராய்ச்சிகள் பொறுக்கிச் சேகரிக்கும் காலத்திலேயே, உபரி சாத்தியமாயிருந்தது என்பதைத் தெரிவிக்கின் poor. Fisher. Elizebeth, Guofibulg. DT 6).
பார்க்கவும்: i) Briffault. R., The Mothers,
1952. ii) Thompson. J., Studies in Ancient Greek Society: The Pre-Historic Ageon. 1965.
iii) Reed. Evlyn. G3LDjib Luq. 576iv .
குழந்தைப் பேறு சமூகரீதியாக அத்தியாவசிய மான ஒரு உழைப்பு என்ற கருத்து பல பெண் நிலைவாத பொருளியல் ஆராய்ச்சியாளர்களா லும் முன்வைக்கப்பட்டுள்ளது. உழைப்பு பற்றிய
பெண்நிலைவாத கருத்தாக்கம் இது எனலாம்.
urti šias ayiii. Mies. Maria, Patriarchy and Capital Accumulation at World Scale. 1986.
இது மாத்திரமன்றி குறிப்பிட்ட் சில தொழில் களில் பெண்களை மாத்திரமே வேலைக்கு அமர்த் தும் முறை தற்போது பரவலாகியுள்ளது. ஆடைத் தயாரிப்பு, எலக்ரோனிக் பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றில் பெருமளவு பெண் தொழிலாளர் கள் உள்ளனர். உலகின் சுதந்திர வர்த்தக வல யங்களில் பெண்களே பெரும்பான்மையான தொழிலாளர் ஆவர்.

வீட்டு வேலையும்
பெண்களும்
*எனது மனைவி வேலைக்குச் செல்வதில்லை!"
அப்படியாயின் உலகம் ஓயாமல் சுழல்வதற்காய் உழைப்பவர் யார்? சமையல் செய்வதும் துணிகளைத் தோய்ப்பதும் தண்ணிர் சுமப்பதும் யார்? குழந்தைப் பராமரிப்பும் நோயாளர் கவனிப்பும் எவரது வேலை ?
எவர் வேலை செய்வதனால் ஆண்
மது அருந்தவும் நண்பர்களுடன் புகை பிடிக்கவும் $FIL-l-Till - 6nylib
முடிகிறது.

Page 22
பெண் நிலைச் சிந்தனைகள் / 30
ஆண்மகன் ஒருவன் வேலை செய்யவும் ஊதியம் பெறவும் உதவும் சக்தியை அளிப்பது எவரது வேலை?
எவரது உழைப்பு
கண்ணில் படாதது? எவரது உழைப்பு
காதில் விழாதது? சம்பளம் குறைந்ததும் சம்பளம் அற்றதும் எவரது உழைப்பு? எவரது உழைப்பு கணிக்கப்படாதது?
- அம்ருதா பிரீதம்.
வீடு சார்ந்த வேலைகள் அனைத்தும் பெண்களுடை யவை என்ற கருத்து நெடுங்காலமாகவே நிலவுவதாகும். இது எமது சமூகத்தில் மாத்திரமல்லாமல் பொதுவாகவே உலகம் முழுவதிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்தாகவும் நடைமுறையாகவும் உள்ளது. பெண்ணுக்குரிய இயற்கை யான கடமைகள் எனக் கருதப்படும் இவ்வீட்டு வேலை களில் பெறுமதி வாய்ந்த உழைப்புச் சக்தி அடங்கியுள் ளது என்பதும் அது கணிக்கப்படவேண்டியது என வலி யுறுத்துவதும் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வீட்டு வேலைகளில் சமையல், துணி தோய்த்தல், குழந்தை பெறுதலும் பராமரிப்பும், வயோதிபர்களையும் நோயாளர்களையும் கவனித்தல் போன்றன அடங்கும். வீட்டுக்கு வெளியே வேலை செய்து ஊதியம் பெறும் பெண்ணுக்கும் பொதுவான கடமைகளாகவே இவை கரு தப்படுகின்றன. இக் கடமைகளில் இருந்து பெண்கள் தவறுவது எவராலும் விரும்பப்படுவதில்லை. வீடு சார்ந்த இவ்வேலைகள் பெண்ணுக்கு இயற்கையாகதே உரியவை என்ற கருத்தினாலேயே, 'பெண் வீட்டுக்கு வெளியே

31 / சித்திரலேகா மெளனகுரு
வேலைக்குச் செல்வது பொருத்தமா? பொருத்தமற்றதா? என்ற விவாதங்கள் இன்றும் எம்மத்தியில் நடைபெறுகின் றன.
எனினும் இன்றைய பொருளாதார நெருக்கடியும் நிர்ப்பந்தங்களும், ஒரு குடும்பத்தில் வேலை செய்ய இயலு மாணவர் அனைவரையும் ஆண், பெண் என்ற பால் வேறு பாடின்றி தொழில் செய்ய வேண்டிய நிலைமைக்கு உள் ளாக்குகின்றன.
இவ்வாறு வீட்டுக்கு வெளியே தொழில் செய்வது பெண்களுக்கு நடைமுறை வழக்கமாகிவிட்ட போதிலும், வீட்டு வேலை பற்றிய கருத்து நிலையில் மாற்றம் பெரி தளவு ஏற்படவில்லை) இன்றும், பெண்களுடைய கட மையே வீடு சார்ந்த வேலைகள் என்ற கருத்தே பெரும் பான்மையினோரது கருத்தாக உள்ளது. இதனால் வீட்டு வேலைகள் உழைப்பாகக் கருதப்படுவதில்லை. இக்கருத்து, சட்ட ரீதியாகவும் நிறுவன ரீதியாகவும்கூட உறுதிப்படுத் தப்பட்டுள்ளது. இதனாலேயே உத்தியோகபூர்வமான கணக்கெடுப்புக்கள், புள்ளி விபரங்கள், அறிக்கைகள் போன்றவற்றிலும் வீட்டு வேலை செய்யும் பெண்களும், வீட்டிலேயே வேறு வருமானங்களை ஈட்டித்தரும் கோழி வளர்ப்பு, தோட்ட வேலை போன்றவற்றில் ஈடுபடும் பெண்களும் வேலையற்றவர்களாகவே கணிக்கப்படுகிறார் கள். பொருளாதார ஆய்வுகளிலும்கூட மேற்கூறிய வேலை களில் ஈடுபடும் பெண்களது உழைப்பு கணிக்கப்படுவ நில்லை. சில பொருளியலாளர்கள், சமையல், விறகு சேக ரித்தல், தண்ணிர் எடுத்தல், குழந்தைப் பரரடிரிப்பு போன்றவற்றை வேலை அல்ல என்றும், அவர் குச் செலவிடும் நேரம் ஓய்வுநேரம் போன்றது எனவும் குறிப் பிடுகிறார்கள்.
ஆனால் வீட்டு வேலைகள் உண்மையில் பெண்ணின் உழைப்பே எனவும் வீட்டுக்கு வெளியிலும் வேலை செய்

Page 23
பெண் நிலைச் சிந்தனைகள் / 32
யும் பெண் இருவகையான வேலைகளைச் செய்கிறாள் எனவும், இதனால் அவள் "இரட்டைச் சுமைக்கு உள்ளா கிறாள் எனவும், இந்த நிலையை மாற்றுவதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் இன்று உலகெங்கிலும் பெண்கள் இயக்கங்கள் குரல் கொடுக்கின் நறன.
பெண்ணுடைய் வீட்டு வேலைகள் குறித்து செய்யப் பட்ட சில ஆராய்ச்சிகள் ஆச்சரியகரமான விபரங்களைத் தருகின்றன. உருக்குத் தொழில் போன்ற கடின கைத் தொழில் வேலைகளில் ஈடுபடும் தொழிலாளி இழக்கும் உடற்சக்தியை வீட்டுவேலைகளின்போது பெண் இழப்பதை இவ் விபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்விபரங்களுட் சில பின்வருமாறு :
பாத்திரங்கள் கழுவுதல், சமைத்தல், துணிகளை மினுக்குதல் போன்றவற்றுக்கு ஒரு நிமிடத்துக்கு இழக்கும் கலோரிகள் 2 - 3:
வீடு கூட்டுதல். படுக்கையைத் துப்பரவாக்கல், விரித் தல் என்பவற்றுக்கு 3 - 4.
கையினால் சலவை செய்தல், நிலத்தை மினுக்குதல் போன்றவற்றுக்கு 4 - 5.
துணிகளை அலசுதல், பிழிதல், நிலத்தைக் கழுவுதல் போன்றவற்றுக்கு 5 - 6.
இவ் விபரங்கள் மேற்கு நாடுகளில் பெறப்பட்டவை. அங்கு நவீன உபகரணங்களால் வீட்டு வேலைகள் இலகு வாக்கப்பட்டுள்ளன. தன்னியக்கக் கலங்களும் அழுத்தக் கலங்களும் அங்கு சர்வசாதாரணமாகப் பாவனையில் உள் ளன. சமையல் செய்வதற்கு மின்சாரமும், இயற்கை வாயு வும் எரிபொருளாகப் பயன்படுகின்றன. இத்தகைய வசதி கள் இருந்தும் கூட, உடலுழைப்புச் சுலபமாக்கப்பட்டிருந் தும் கூட, ஆலைத் தொழில்களில் இழக்கும் உடற்சக்தியை வீட்டுவேலை செய்யும்போது பெண்கள் இழப்பதை மேற் கூறிய விபரங்கள் தெரிவிக்கின்றன.

33 / சித்திரலேகா மெளனகுரு
எமது நாட்டிலோ பெரும்பாலான பெண்கள் அடுப் பூகித்தான் சமைக்கின்றனர். சமையலும், ஏனைய வீட்டு வேலைகளும் கடினமான உடலுழைப்பாகவே உள்ளன. அம்மியில் அரைத்தல், இடித்தல் போன்ற வேலைகளில் இழக்கும் சக்தி மிக அதிகமாகும். எமது நாட்டில் வீட்டு வேலைகளின் போது இழக்கும் கலோரிப் பெறுமானம் பற்றி ஆராய்ச்சி செய்தால், மேற்கூறிய கலோரி இழப்பைவிட அதிகளவாக எமது நாட்டுப் பெண்கள் இழப்பது தெரிய வரலாம். பெண்ணின் இயற்கையான கடமை என்றும், இலேசான வேலை என்றும், வேலையே அல்ல என்றும் கருதப்படும் இவ்வீட்டு வேலைகளில் பெண்கள் எவ்வளவு சக்தியை இழக்கிறார்கள் என்பது இவ்விபரங்களைப் பார்க் கும்போது விளங்கும்.
இத்தகை வீட்டு வேலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு ஒருபோதும் ஒய்வு கிடைப்பதில்லை. தொழிற்சாலை களிலோ, அலுவலகங்களிலோ வேலை செய்பவர்கள் நாளுக்கு எட்டு மணிநேரமே வேலை செய்கின்றனர். மேல திக தேரம் வேலை செய்தால் மேலதிக ஊதியம் கிடைக் கும். இது தவிர வாராந்த விடுமுறைகள், பொது விடு முறை தினங்கள் அவர்களுக்கு உள்ளன.
வீட்டில் வேலைசெய்யும் பெண்ணுக்கோ இவ்விடு முறைகள் எதுவுமே இல்லை. அவளது வேலை நேரமும் மிக நீண்டதே. மூன்று நேரச் சமையல், குழந்தை பரா மரிப்பு, வீட்டினைச் சுத்தமாக்கல், தையல் வேலை ஆகி யவை அவளது முழு நேரத்தையும் விழுங்கிவிடுகின்றன. வெளியில் சென்று உழைக்கும் பெண், வீடு திரும்பியபின் வீட்டு வேலைகளில் ஈடுபடுகின்றாள். விடுமுறை தினங் களிலோ அவளுக்கு மேலதிக வீட்டு வேலைகள் காத்திருக் கும். ஆனால் உழைக்கும் ஆணுக்கோ வேறுவிதமான சலு கைகள் தரப்படுகின்றன. உழைப்பவன் என்பதனால் மேல திக கவனிப்பும், விசேட உணவும் அவனுக்குக் கிடைக் கின்றன. ஆணும் பெண்ணும் சேர்ந்து உழைக்கும் குடும்ப

Page 24
பெண் நிலைச் சிந்தனைகள் / 34
மாயின் வேலையிலிருந்து வீடு திரும்பியபின் கணவன் ஒய் வெடுக்கிறான்; நண்பர்களுடன் நேரத்தைக் கழிக்கிறான்; வேறு வகையான பொழுதுபோக்குகளில் ஈடுபடுகிறான். ஆனால் உழைக்கும் பெண்ணுக்கோ அவள் உழைப்பவள். ஒய்வெடுக்கட்டும், உ ண வ ரு ந் தட்டும் என்று எவரும் சொல்வதில்லை. வீட்டுக்குத் திரும்பிய பின் கணவன் ஒய் வெடுக்க அவள் வீட்டு வேலைகளில் ஓயாது உழல்கிறாள்.
பெல்ஜியம், பல்கேரியா, செக்கோஸ்லவேகியா, பிரான்ஸ், ஜேர்மனி, ஹங்கேரி, போலந்து, ஐக்கிய அமெ ரிக்கா, ரஷ்யா, யூகோஸ்லாவியா, பெரு முதலிய வெவ் வேறு சமூக முறைமைகளையுடைய பனிரெண்டு நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின் படி வீட்டுக்கு வெளியில் வேலை செய்யும் பெண்கள் வீட்டு வேலைகளில் ஒரு வாரத்திற்கு 35 மணிநேரம் ஈடுபடுகிறாள். வெளியில் வேலை செய்யாத பெண்ணோ 50 மணி நேரத்தை வீட்டு வேலைகளிற் செலவழிக்கிறாள். இந்தியாவில் பெறப்பட்ட விபரங்கள், 50 வருட வாழ்க்கைக் காலத்தையுடைய பெண் 833 வரு டங்களை அல்லது தனது வாழ்க்கையில் 16, 86 வீதத்தைச் சமையலறையில் செலவிடுவதைத் தெரிவிக்கின்றன. இந்தி யாவின் நிலைமையைக் கொண்ட இலங்கைப் பெண்களுக் கும் இது பொருந்தும். ஆனால் இக்கணக்கெடுப்பு, சமை யலுக்கு முன்பு செய்யும் ஆயத்தங்களையோ பின்னர் செய் யும் கழுவுதல் போன்ற வேலைகளையோ உட்படுத்த வில்லை. அது மட்டுமன்றி ஏனைய வீட்டு வேலைகளை யும் சேர்த்துக்கொள்ளவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
பழைய கூட்டுக் குடும்பங்களில் வேலைகள் பங்கிடப் பட்டன. பெற்றோருடனும், உறவினருடனும் குடும்பமாக வசிக்கும்போது வீட்டுவேலைகளை ஏனைய பெண் அங்கத் தவர்களும் பங்கிட்டுக் கொண்டனர். ஆனால் நவீன காலத்தில், ஒ ர ல குக் குடும்பங்களில் பெண்ணுடைய வேலைப்பளு அதிகரித்துள்ளது. மேலோட்டமாக நோக்கும் போது, ஓரலகுக் குடும்பங்களில் குடும்பத்து அங்கத்தவர்

35 / சித்திரலேகா மெளனகுரு
தொகை குறைவாக இருப்பதனால் வேலைகளும் குறை வது போலத் தென்படலாம். ஆனால் உண்மையில் தனி ஆளாகவே வீட்டு வேலையையும், வீட்டுப் பொறுப்பையும் தாங்கும் நிலை பெண்ணுடைய உடல் உளச் சுமையை அதிகரிக்கிறது. கூட்டுக் குடும்பங்களில், கிராமங்களில் ஒரு வர் வேலை செய்யும் நேரத்தைவிட நகரத்துத் தனிக் குடும்பங்களில் வேலை நேரம் அதிகரித்துள்ளமை இதனை விளக்குவதாகும். மிகச் சிறுபான்மையான ஓரலகுக் குடும் பங்களில் கணவன் வீட்டு வேலைகளிற் சிலவற்றைச் செய் கிறான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இது ஆணு லுடைய கடமை எனக் கருதப்படுவதில்லை. பெண்ணுக்கு இரங்கி "உதவி செய்தல்” என்ற கருத்தே காணப்படுகிறது. வீட்டு வேலையும் பெறுமதியுள்ள உழைப்பு என்பதும் அது ஆண் பெண் இருவராலும் பங்கிடப்படவேண்டும் என் பதும் இன்னும் முற்றாக உணர்ந்து ஏற்றுக்கொள்ளப் படவோ, செயற்படுத்தப்படவோ இல்லை. இந்நிலைமை பெண்ணினுடைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையா சுவே உள்ளது.
வீட்டு வேலைகள் பெண்ணுடைய ஆக்கத் திறமை யையோ, ஆளுமையையோ வளர்ப்பதில்லை. மாறாக அவை அவளைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி வீடு என்ற குறுகிய எல்லைக்குள் அடக்கி வைக்கின்றன. "அற்ப வீட்டு வேலை அவளை நசுக்குகின்றது; கழுத்தை நெரிக்கின்றது; சோர்வை ஏற்படுத்துகின்றது; இழிவுபடுத் துகின்றது; சமையலறையுடனும் குழந்தை வளர்ப்புடனும் அவளைத் தளையிடுகின்றது. அவளது உழைப்பைக் காட்டு மிராண்டித்தனமான முறையில் விளைபயனற்றதாக்கிச் சலிப்பேற்படுத்துகிறது. தனது நேரமெல்லாவற்றையும் பெண், சோர்வே ற்படுத்தும், ஒடுக்கும் உற்சாகமற்ற வீட்டு வேலைகளில் வீணடிக்கிறாள். இந்த நச்சரிக்கும் வீட்டு வேலைகளுக்கு எதிரான முழு மூச்சான போராட் டம் எங்கு எப்பொழுது தொடங்கப்படுகிறதோ, அங்கு தான், அப்போதுதான் மாதர்களின் மெய்யான விடுதலை

Page 25
பெண் நிலைச் சிந்தனைகள் / 36
தொடங்கும் என்று லெனினும் பெண் விடுதலை பற்றிப் பேசும்போது குறிப்பிட்டார்.
'ஓயாமல் நச்சரிக்கும் வீட்டு வேலைகள்' பெண் களின் ஒய்வு நேரங்களை விழுங்கிவிடுகின்றன. ஒய்வு நேரமே ஒரு சமூகத்தின் உண்மையான செல்வமாகும். ஒருவர் தமது ஆளுமையை வளர்க்கவும், ஆக்கத்திறனை விருத்தி செய்யவும், தனிமனித சமூகத் தொடர்புகளைப் பேணவும் ஒய்வுநேரம் பயன்படும். ஆனால் வேலைப்பளு வின் அதிகரிப்பினால் பெண் தனது ஒய்வுநேரங்களை இழந்துவிடுகிறாள். இதனால் பெரும்பாலான பெண்கள் தமது திறமைகளை விருத்தி செய்யாமலும் ஆெ க்காட் டாமலும் வீட்டோடு அடங்கி விடுகின்றனர். இந்ங்கையில் அவர்களது தனிமனித முன்னேற்றமும், சமூக முன்னேற்ற மும் சமூக முன்னேற்றமும் சாத்தியமாவது எவ்வாறு?
வரலாற்று ரீதியாக நோக்கினால் பெண் முன்பு வீட்டு வேலைகளில் மாத்திரமன்றி ஏனைய வேலைகளிலும் ஈடு பட்டமை தெரியவரும். இன்றும்கூட கிராமங்களில் பெண் கள் வீட்டு வேலைகளிலும் வெளியே விவசாய வேலை களிலும் ஈடுபடுகின்றனர். ஆனால் இவர்கள் பிரதான விவ சாயிகளாகக் கருதப்படுவதில்லை. முதலாளித்துவமும் பணப் பொருளாதாரமும் வளர்ச்சியடைய, பெண்கள் அதிகளவு பங்குபற்றிய விவசாயம், விற்பனை போன்றவை ஆண்களுக்குரிய தொழில்களாக மாறின. அதாவது பன மாக ஊதியம் பெறும் தொழில்கள் ஆண்களுக்குரியவை யாக மாறின. பண ஊதியம் தராத வீட்டு வேலைகள் பெண்ணுக்கே உரிய கடமைகள் என்ற கருத்து தொடர்ந்து இறுக்கமானதாய் உள்ளது.
இன்று, நாட்டின் அபிவிருத்தியில் பெண்களின் பங்கு பற்றி முன்னெப்போதும் இல்லாத வகையில் பேசப்படு கிறது. பெண்களின் திறமை வீட்டுக்குள் அடங்கிவிடாது வெளியிலும் பயன்படவேண்டும் எனப் பலரும் மீண்டும்

37 / சித்திரலேகா மெளனகுரு
மீண்டும் வற்புறுத்துகின்றனர். ஆனால் பெண்ணினது வீட்டுப்பளு குறித்து எவரும் பேசுவதில்லை. ஆண் பெண் சமத்துவம் பேசுகின்ற பெண்கள் இயக்கங்கள், பெண் நிலைவாதிகள் தவிர வேறு எவரும் பெண்ணின் இரட் டைச் சுமை பற்றி அக்கறைப்படுவதில்லை. ஆண்கள் வீட்டுவேலைகளிற் பங்கெடுக்க வேண்டும் எனவும் கோருவ தில்லை. ஆண் பெண் அசமத்துவத்தை ஏற்றுக்கொள்வ தாக சமூகக் கருத்துநிலை தொடர்ந்திருக்கும் வரை இந் நிலையில் பெரியளவு மாற்றம் ஏற்படப்போவதில்லை. இக்கருத்துநிலையை மாற்றுவதில் பெண் நிலைவாத இயக் கங்களின் விட்டுக்கொடுக்காத தொடர்ச்சியான போராட் டங்கள் மிகுந்த பங்காற்றமுடியும். ஆனால் அதுவரையில் பெண்களது வீட்டு வேலைச் சுமையைக் குறைக்கவல்ல திட்டங்களையும் சேவைகளையும் ஏற்படுத்துமாறு அர சாங்கத்தையும் ஏனைய நிறுவனங்களையும் பெண்கள் இயக்கங்கள் வற்புறுத்தலாம்.
பல துறைகளில் பெண்களின் உழைப்பு அதிகளவு பயன்படுகிறது. ஆனால் அவர்களின் ஆர்வம், தனிப்பட்ட திறமைகள் என்பவை கவனிக்கப்படாமல் மலிவான உழைப் புச் சக்தியின் இருப்பிடமாகவே அவர்கள் கருதப்படுகின் றனர். பெண்ணின் குடும்பப் பொறுப்பைச் சுலபமாக்கு வது தனிப்பட்ட பிரச்சினையாகவே கருதப்படுகிறது. சமீப காலத்தில் பெண்கள் இயக்கங்கள் இவற்றில் அக்கறை காட்டிய போதும் தொழிற்சங்கங்களோ அரசியல் கட்சி களோ இவற்றைச் சிறிதளவாவது கவனத்தில் கொள்ள வில்லை.
எமது நாட்டில் இரு பெரிய தொழிற்துறைகளில் பெண்களின் உழைப்புச்சக்தி பெருமளவில் பயன்படுகிறது. இவை பெருந்தோட்டத்துறை, சுதந்திர வர்த்தக வலயம் ஆகியவையாகும். இலங்கையின் தேயிலைத் தோட்டத் தொழிலாளரில் பாதிக்கு மேற்பட்டோர் பெண்களே. தேயிலைக் கொழுந்து ஒடிக்கும் வேலையில் 90% பெண்

Page 26
பெண் நிலைச் சிந்தனைகள் / 38
களாவர். சுதந்திர வர்த்தக வலயத்துத் தொழிற்சாலை களில் வேலை செய்வோரில் 86% பெண்களாவர். இப் பெண் தொழிலாளிகளே இலங்கையின் தொழிலாளி வர்க் கத்தில் மிகவும் ஒடுக்கவும் சுரண்டவும் படுவோர். போதிய கூலியின்மை, கடுமையான வேலை, மோசமான வேலை நிலைமைகள், போதிய விடுமுறை இல்லாமை போன்ற வற்றால் பாதிக்கப்படும் இவர்கள் மேலதிக வீட்டுழியத் தாலும் நசுக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு ஏனைய மத்தியதர வர்க்கத்துப் பெண் களைப்போல வேலைக்காரரை வைத்திருப்பதற்கோ, நவீன உபகரணங்களைப் பயன்படுத்தவோ வசதியில்லை. இந்நிலையில் தேலைச் சுமையினால் இவர்கள் மேலும் மேலும் தாக்கமுறுகின்றனர். குழந்தை பெறுதல், குழந்தை பராமரிப்பு ஆகியனவும் பெண்களுடைய தனிப்பட்ட பிரச் சினையாகவே கருதப்படுகின்றன. ஆனால் பெண் தொழி லாளர் குழந்தை பெறுவதென்பது இன்னோர் தலை முறைத் தொழிலாளரை உற்பத்தி செய்வதாகும். ஆனால் இதனை எவருமே சமூகக் கடமையாகக் கொள்வதில்லை. சர்வதேச தொழில் ஸ்தாபனம் தாய்மாருக்கு 12 வார கால பிரசவ விடுமுறையைச் சி பார்சு செய்துள்ளது. ஆனால் பெரும்பாலான நாடுகள் இதனைக் கடைப்பிடிப்ப தில்லை. இலங்கையில் முதலிரு பிரசவங்களுக்கே 12 வார கால வீவு வழங்கப்படுகிறது. அத்துடன் எமது நாட்டில் குழந்தை பராமரிப்பு நிலையங்கள் மிக மிகக் குறைவே. இருப்பவையும் செம்மையாக இயங்குவதில்லை.
இந்நிலையில் தேசிய பொருளாதார வளர்ச்சியில் பெண்கள் சிறந்த பங்காற்ற வேண்டுமென எதிர்பார்ப்பது எவ்வாறு? அத்துடன் கடமை என்றும் இலேசான வேலை என்றும், உழைப்புச் சக்தி அற்றவை எனவும் கருதப்படும் வீட்டு வேலைகள் பெண்களை நிரந்தர வேலையாட்களாக ஆக்கிவிடுவதையும் உணரவேண்டும். எனவேதான் பெண் களின் இரட்டைச் சுமையைத் தளர்த்தும் வகையில் சமூக நிறுவனங்களும் அரசாங்கமும் முயலுதல் வேண்டும்.

பெண்களுக்கு எதிரான வன்முறை - பலாத்காரம்
பெண்களுக்கெதிரான வன் முறையின் ஒரு மோசமான வடி வம் பலாத்காரம் ஆகும். தனி நபர்கள் தனிப்பட்ட காரணத் திற்காக பெண்களுச்கு இக் குற்றத்தை இழைக்கின்றனர். இதே சமயம் சமூகத்தில் முக்கிய மான ஒரு அடக்குமுறைத் தந் திரோபாயமாகவும் இது கையா ளப்பட்டு வந்துள்ளது. தனிப் பட்ட ஒரு நபரையோ, சமூகத் தையோ பழிவாங்குவது, அவ மானப்படுத்துவது, பயமுறுத்து வது ஆகியவற்றுக்கும் பெண் களைப் பலாத்காரம் செய்தல் பயன்பட்டுள்ளது. போர்கள்,

Page 27
பெண் நிலைச் சிந்தனைகள் / 40
படையெடுப்புகள், சாதி, இன வன்செயல்கள் ஆகியவற் றின்போதும் பலாத்காரத்திற்குப் பெண்கள் அதிக அள வில் பலியாகின்றனர். அமெரிக்க - வியட்நாம் யுத்தம், பங் களாதேஷில் பாகிஸ்தானின் படையெடுப்பு, லெபனான் உள்நாட்டு யுத்தம் போன்றவை இதற்கு உதாரணங்களா கும். இலங்கையில் தமிழருக்கு எதிரான இனவன்செயல் களின்போதும், இராணுவ அத்துமீறல்களின்போதும் பெண் களுக்கெதிரான இவ்வன்முறை அதிக அளவில் நிகழ்ந்துள் ளது ; நிகழ்கிறது.
எத்தகைய சந்தர்ப்பத்தில் பலாத்காரம் நடைபெற் றாலும் அதனைத் தனிப்பட்ட அவமானமாகவும் மானக் கேடாகவும் எமது சமூகம் நோக்குகிறது. இவ்விடயம் பற்றி பலதரத்திலுள்ள பெண்களுடனும் உரையாடிய போது அவர்களிற் பெரும்பாலோர் இதனைப் பெண்ணின் வாழ்நாள் முழுவதும் மறையாத வடுவாகவும் தனிப்பட்ட அவமானமாகவும் கருதியதை உணர முடிந்தது. ஒரு தாய் கூறினாள்: "எனது மகளுக்கு மட்டும் இப்படி நடந்தால் நானே அவளைக் கிணற்றில் தள்ளிவிடுவேன்".
எத்தகைய நிலைமைகளில் பலாத்காரம் நடைபெற் றாலும் அது பற்றித் தகவல் தருவதற்கு எவரும் இலகு வில் முன்வருவதில்லை. தாமாகவே முன்வந்து முறைப்பாடு செய்த பெண்களைப் பற்றிப் பலரும் இழிவாகப் பேசிய தையும், அவர்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத் தியதையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவதானிக்க முடிந் தது. பெண்களுக்கு எதிரான இவ்வன்செயலுக்குப் பெண் கள்ே காரணம் என்றுகூடச் சிலர் வாதிடுகின்றனர். பெண் களே தமது நடவடிக்கைகளால் இராணுவத்தினரையோ, ஆண்களையோ பலாத்காரத்திற்குத் தூண்டுகின்றனர் என்பதும் ஒரு குற்றச்சாட்டாகும். குறிப்பிட்ட ஒரு பலாத் காரச் சம்பவத்தின்போது பெண் முறைப்படி ஆடை அணிந் திருக்கவில்லை; அதனாலேயே அப்படி நடந்தது என்றும் சிலர் கூறினர்.

41 / சித்திரலேகா மெளனகுரு
பலாத்காரம் தொடர்பான எமது சமூகக் கருத்தோட் டங்களையும் அபிப்பிராயங்களையும் நோக்கும்போது நாம் பின்வரும் போக்குகளைக் காணலாம்.
1. ஒரு பெண் பலாத்காரப்படுத்தப்படின் அது அவளது குற்றமேயாகும். ஏனெனில் அவளே தனது நடத் தையால் ஆணை இச் செயலுக்குத் தூண்டுகிறாள்.
2. பலாத்காரம் பெரும்பாலும் பின்தங்கிய சமூகத்தி னர் மத்தியிலும், இராணுவ பொலிஸ் ஒடுக்கு முறைகளின் போதுமே நிகழ்வதாகும்.
3. பெண் அங்கீகாரம் அளிக்காமல் பலாத்காரம் நடை பெற முடியாது (எமது சமூகத்தில் நீண்டகாலமாக நிலவிய இக்கருத்து கடந்த சுமார் பத்துவருடங் களில் தமிழ்ச் சமூகம் அனுபவித்த இனவன் செயல் கள், இராணுவ அடக்குமுறைகள் ஆகியவற்றினால் சற்று மாறியுள்ளது.) w
4. பலாத்காரத்திற்கு உள்ளான பெண் "கற்பிழந்த
வள்"
இவற்றை நோக்கும்போது பலாத்காரம் பற்றிய இக் கருத்துகள் ஆண் முதன்மைச் சமூகத்தின் கருத்துநிலை யின் அடிப்படையில் அமைந்துள்ளமை தெளிவாகும். இத னால் குற்றத்திற்கு இலக்காகிய பெண்ணையே குற்றவாளி யாகக் காணும் நிலை உருவாகியுள்ளது. பலாத்காரத் திற்கு உள்ளான பெண் திருமணமாகாத பெண்ணாயின் அவளது திருமண வாய்ப்புகள் மிகக் குறைகின்றன. திரு மணமான பெண்ணானால் கணவன் மனைவி உறவில் நெருக்கடி ஏற்படுகிறது.
இந்த நிலை பற்றி அனுதாபத்துடன் சிந்தித்த கிலர், இராணுவ நடவடிக்கைகள், இனவன்செயல்கள் முதலிய வற்றின்போது பலாத்காரத்திற்கு உள்ளான பெண்களை தியாக சிந்தனையுடன் மணந்து கொள்ள ஆண்கள் முன்

Page 28
பெண் நிலைச் சிந்தனைகள் / 42
வரவேண்டும் என்று கூறினர். (இக்குறிப்பிட்ட சந்தர்ப்பங் கள் தவிர்ந்த ஏனைய பலாத்காரங்கள் வழமை போலவே பெண்ணுடைய குற்றமாக இம்" "முற்போக்கர்களால்" கரு தப்பட்டது இங்கு கவனிக்கத்தக்கது)
இவற்றை நோக்கும்போது உணர்ச்சி பொதிந்த இந்த விடயம் பற்றித் தீர ஆலோசிப்பதும் மேற்கூறிய கருத்துக் களின் சரி பிழை பற்றி ஆராய்வதும் இவ்விடயம் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாகச் சரியான நிலைப்பாடு எடுப்பதும் அவசியமானதாகும்.
இதற்கு முன்னர் ஒரு விடயத்தை அழுத்தமாகக் குறிப் பிட விரும்புகின்றேன். இராணுவத்தினர் தமிழ்ப் பெண் களைப் பலாத்காரம் செய்யத் தொடங்கிய பின்னரே பல ரும் இதுபற்றிப் பேசத் தொடங்கியுள்ளனர். ஆனால் இதற்கு முன்னரே எத்தனையோ பெண்கள் இக்கு ற்றத் திற்கு இரையாகியுள்ளனர். பெரும்பாலும் இந்நிலை பகி ரங்கமாகப் பேசப்படவோ எதிர்க்கப்படவோ இல்லை. எமது சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்செயல்களின் மிக மோசமான வடிவமாக இது நிலவி வந்துள்ளது. பலாத்கார வழக்குகளும் பெண்கடத்து வழக்குகளும் நாம் அறியாதவையல்ல. வீதிகளிற் பெண்களிடம் சேட்டை புரி வது; தகாத வார்த்தைகளைப் பேசுவது என்பவற்றி லிருந்து, அபலைகளான பெண்களைப் பலாத்காரம் புரி வது வரையிலான பல்வேறு வன்செயல்கள் எமது சமூகத் திற்குள்ளேயே நிகழ்வதை எவராலும் மறுக்கமுடியாது. பெண்கள் மெளனமாக இந்த இம்சைகட்கு உட்பட்டே வந்துள்ளனர்.
இவ்வாறு கூறுவது இராணுவத்தினரின் செயலை நியா யப்படுத்தவல்ல; மாறாக பெண்களுக்கு எதிரான வன் செயலாகப் பலாத்காரம் எப்போதும் நிகழ்ந்து வந்துள் ளது என்பதை வலியுறுத்தவும், அவ்வாறு நிகழ்ந்தாலும் இது எதிர்க்கப்படவோ, பெண்களுக்கெதிரான வன்செயல்

43 / சித்திரலேகா மெளனகுரு
எனக் கூறப்படவோ இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட வும் ஆகும்.
எவ்வாறாயினும் இன்று இந்த விடயம் பல்வேறு கார ணங்களால் அரசியற் பரிமாணத்தைப் பெற்று விட்டதா லும், மனித உரிமை மீறல்களில் ஒன்றாகக் கணிக்கப்படு வதாலும், பெண்கள் அமைப்புகள் இதுபற்றி எதிர்ப்புக் குரல் காட்டத் தொடங்கியதாலும் இது பற்றிய தெளி வான சிந்தனை அவசியமாகிறது. இதற்கு மேலாக எமது சமூகத்தில் நிலவும் பெண்னொடுக்குமுறைக் கருத்துகளால் வழிநடத்தப்படும் பெண்கள் பலாத்காரத்திற்கு உள்ளா கும்போது, தாம் "கற்பிழந்து விட்டதாக உண்மையாகவே எண்ணித் தமது உயிரை மாய்த்துக்கொள்ளமுனைவதாலும் தாழ்வுச் சிக்கலுக்கு ஆளாவதாலும் பலாத்காரம் கற்பு" ஆகியவை பற்றிய உண்மையைச் சமூகத்திற்குக் குறிப்பாகப் பெண்களுக்குத் தெளிவுறுத்துவது அவசியம்.
தந்தை வழிச் சமூகத்தினதும், ஆண் மேலாதிக்கத்தி னதும், ஒரு புருஷ மண முறையினதும், தத்துவார்த்தக் கோட்பாடாகவே "கற்பு’ என்ற கருத்துருவம் தமிழ்ச் சமூகத்தில் தோற்றம் பெற்றது என்பது சமூக வரலாறு எமக்குத் தரும் செய்தியாகும். சமூகவியல், மானுடவியல் அறிவினையும் ஆராய்ச்சியையும் மனிதகுல நாகரிக வளர்ச் சியைப் புரிந்துகொள்ளப் பிரயோகிக்கும்போது இந்த விளக் கம் ஏற்படுகிறது. தமிழ்ச் சமூகத்தில் மாத்திரமல்ல, ஐரோப்பிய நாடுகளிலும் அரச குலத்தினர், பிரபு வர்க் கத்தினர் மிக இறுக்கமான கற்புக் கோட்பாடுகளுக்குள் பெண்களை உட்படுத்தியுள்ளனர். இன்று நிலவும் ஒரு புருஷ மண முறை வரலாற்றின் ஒரு கட்டத்தில் உருவா னதே தவிர அது என்றென்றைக்கும் நிரந்தரமான வடிவ மாக இருக்கவில்லை. மனித வரலாற்றை எடுத்து நோக் கும்போது பலவிதமான மண முறைகளும், குடும்ப வடிவங் களும் நிலவியதைக் காணலாம். ஆண்கள் - பெண்களுக் கிடையே வரையறையற்ற புணர்ச்சி நிலவிய ஆதிக்கட்

Page 29
பெண் நிலைச் சிந்தனைகள் / 44
டத்திலிருந்து இரத்த உறவுக் குடும்பம், குழு மணக்குடும் பம் இணை மணக் குடும்பம் என்று பல கட்டங்களைக் கடந்த பின்னர்தான் ஒரு புருஷ மணக் குடும்பம் உரு வாகியது. கரு புருஷ மணக்குடும்பம் உருவாக முன் னர் நிலவிய குடும்ப வடிவங்களில் ஆண் ஒரு பெண் மீது தனது முழு அதிகாரத்தை நிலைநாட்டவோ அல்லது தனது சொத்துக்கு உரிமையாகப் போகும் வாரிசு பற்றி நிச்சயம் கொள்வதற்கோ இடமிருக்கவில்லை. தனிச் சொத் துரிமையும் ஆண் ஆதிக்கமும் வளர்ந்ததுடன் இந்த அம்சங் கள் தேவையாகின. ஒரு புருஷ மண முறை இதற்கான வாய்ப்பை அளித்தது. எனவே ஒரு புருஷ மணம், ஆண், பெண்ணினது பாலியலை முற்றுமாகக் கட்டுப்படுத்துத லுக்கு இடமளித்ததுடன் கற்பு போன்ற கருத்துக்கள் சிறப் பிக்கப்பட்டு இலட்சியமாக்கப்படவும் வழிவகுத்தது. இந்த மேன்மைப்படுத்தப்பட்ட இலட்சியங்களுக்குப் பின்னால் ஆண்களின் அப்பட்டமான ஆதிக்க உணர்வுதான் உள்ளது. ஒரு புருஷ மணமுறை குறித்து பிரடரிக் ஏங்கல்ஸ் தமது குடும்பம், தனிச்சொத்துடமை அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் பின்வருமாறு கூறினார்: "அது ஆணின் மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டது; அதன் தெளிவான நோக்கம் விவாதத்திற்கிடமில்லாத தந்தை முறையுள்ள குழந்தைகளைப் பெறுவதுதான். இயற்கை யான நிலமைகளை அடிப்படையாகக் கொள்ளாமல் பொருளாதார நிலமைகளை - அதாவது ஆதிகால, இயற் கையாக வளர்ந்த பொதுச் சொத்தின் மீது தனியுடமை வெற்றி பெற்றிருந்த நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்த முதல் குடும்ப வடிவம் அது".
எனவே, ஒரு புருஷ மண முறையினதும் அதனுடன் தொடர்புபட்ட "கற்பு" என்ற கோட்பாட்டினதும் தோற் றம் இவ்வாறுதான் அமைந்தது. இங்கு மீண்டும் ஏங்கல் ஸின் வாசகங்கள் நினைவுகூரத்தக்கவை:
"ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சமரசமாகி ஒரு தாரமண முறை (ஒரு புருஷ மண முறை)

43 / சித்திரலேகா மெளனகுரு
வரலாற்றில் தோற்றம் பெறவில்லை. மண முறையின் உச்ச வடிவம் அது என்பது போகட்டும். அதற்கு மாறாக ஒருபால் மற்றொரு பாலை அடிமைப்படுத்தியதாக அது தோற்றமளிக்கிறது. ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய காலங்களில் அறவே அறிந்திராத இருபால் சச்சரவு குறித்து விடுத்த பிரகடனமாகவே அது தோற்றமளிக்கி sogi . . . . . . அடிமை முறையுடனும் தனிச் சொத்துடனும் சேர்ந்தாற் போலவே அது ஒரு சகாப்தத்தை துவக்கி வைக்கிறது.
பெண்களது பாலியலை ஆண்கள் கட்டுப்படுத்துவதற் கும் அதிகாரம் செய்வதற்கும் உதவும் ஒரு கருத்துப்படி வமாகவே கற்பு தோற்றம் பெறுகிறது. செயற்படுகின்
玄
றது. கற்பு நிலையை இரு கட்சிக்கும் போம் என்று மேடைகளிற் பாடினாலும்க்'ரே stவில் விசுவாசமின்றி இருக்கும் உரிமை இப்போதிக்க்ட் ஆணிடமே இருக்கிறது. ஆனால் பெண்ணோ சுயவிருப்ப மின்றி ஆணினது பலாத்காரத்திற்கு ஆளானால் கூட மோசமாகத் தண்டனை பெறுகிறாள். இலக்கியங்களும் இந்த அநீதியான, ஒருதலைப்பட்சமான ஆதிக்கத்தை மேன்மைப்படுத்துவனவாகும். சீதையைத் தீக்குளிக்கும்படி இராமன் ஆணையிட்டதும் அகலிக்ையைக் கெளதமர் கல் லாக்கியதும் இந்த அடிப்படையிற்தான்.
எனவே இவற்றைத் தொகுத்து நோக்கும்போது தமது வாரிசுகளின் தந்தைமையை உறுதி செய்ய ஆணாதிக்கச் சமூகம் வளர்த்த கோட்பாடே கற்பு என்பது தெளிவா கும். எனவே பலாத்காரம் செய்யப்பட்டால்கூட தாம் "கெட்டுப் போன வர்கள்' என நினைத்துக் குற்ற உணர் வுக்கும் அவமானத்திற்கும் உள்ளாவதைப் பெண்கள் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
கற்பு பற்றிய இந்த விளக்கத்துடன், பலாத்காரம் பெண்களுக்கு எதிரான ஒரு மோசமான வன்செயல் என்ற

Page 30
பெண் நிலைச் சிந்தனைகள் / 46
அடிப்படையில் நோக்கும்போது 'மானப்பங்கப்படுத்தப் பட்ட பெண்களைத் திருமணம் செய்வது முற்போக்கான தும் தியாகம் பொதிந்ததுமான செயல் என்ற கருத்தும் வலுவிழந்து போகிறது. பலாத்காரத்திற்கு உள்ளான பெண் குறைவுற்றவள், ‘கற்பிழந்தவள்’ என்ற அபிப்பிரா யமே இத்தகைய பெண்களைத் திருமணம் செய்யும் ஆண் களைத் தியாகிகள் அந்தஸ்திற்கு உயர்த்துவதாகும். (வித வைகளைத் திருமணம் செய்வதும் "தியாகச் செயல்களில் ஒன்றாகக் கணிக்கப்படுவதும் இவ்விடத்தில் சுட்டப்பட வேண்டியதாகும். கன்னிமை, கற்பு ஆகிய கருத்தாக்கங் களுக்கும் பலாத்காரத்திற்கும் உள்ளானோர், விதவைகள் ஆகியோரின் திருமணவாய்ப்புக் குறைவுக்கும் இடையே உள்ள தொடர்பும் இங்கு அவதானிக்கத்தக்கது) ஆனால் கற்பு" என்ற கருத்தாக்கத்தின் உள்ளர்த்தத்தை விளங் கிக் கொண்டால் பலாத்காரப்படுத்தப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்தல் "தியாகம்’ என்பதற்கும் எத்தகைய அடிப்படையுமில்லாது போகிறது. மேலும் "தியாகம்" என்ற இக்கருத்து ஆணைப் பாதுகாவலன் என்ற பெருமை யுடையவனாகவும், பெண்ணைப் பலமற்றவள், இரக்கத் திற்குரியவள் என்ற பாரம்பரியமான, சமத்துவமற்ற பாத் திரங்களையே உறுதி செய்வதையும் பெண்கள் உணர வேண்டும்.
எமது கலாசாரத்திலும், பெண்களின் உளவியலிலும் பலாத்காரம் பற்றிய பயம் நன்கு வேரூன்றியுள்ளது. ஒரு பெண் தனியே பிரயாணம் செய்யவும், இரவு நேரங்களில் நடமாடவும் தயங்குவதற்கு பலாத்காரம் பற்றிய இந்தப் பயமே காரணமாகும். பெண்ணுடைய நடமாட்டம் இத னால் கட்டுப்படுத்தப்படுகிறது. காலாதிகாலமாக ஆணை அடக்கி ஆள்பவனாகவும், பெண்ணை அதிகாரத்திற்கு உட்படுபவளாகவும் சித்திரித்த கலாசாரத்தால் வழிநடத் தப்பட்ட பெண் நிரந்தரமாகவே பலாத்காரம் பற்றிய பயத்துடன் வாழ்கிறாள். இது ஆணைப் பாலியல் பசி வாய்ந்த ஒருவனாகவும், பெண்ணை அதன் இரையாகவும்

47 / சித்திரலேகா மெளனகுரு
பார்க்கும், மனிதத்தன்மையை மறுதலிக்கும் ஒரு கண் னோட்டமாகும். ஆனால் இதனையே எமது சாஸ்திரங் களும், இலக்கியங்களும் நவீன திரைப்படங்களும் எடுத்துப் பேசுகின்றன. இக்கருத்தினை அறிஞர்கள் உளவியலாளர் எனக் கூறப்படுவோரும் நியாயப்படுத்துவதே விசனிக்கத் தக்கது. சிக்மண்ட் பிரய்ட் போன்ற பிரபலமான மேலைத் தேச உளவியலாளரும் வலிமையுள்ள இயல்பாகவே ஆதிக் கத் தன்மையுள்ள ஆண்மை பற்றியும், அதிகாரத்திற்கு உட்படும் பெண்மை பற்றியும் கூறியுள்ளார். பலாத் காரத்தை மறைமுகமாக நியாயப்படுத்துவதற்கு வழிவகுக் கும் இக்கருத்து வேறாக ஆராயப்பட வேண்டியதாகும்.
பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஒன்று எனப் பலாத்காரத்தைக் கருதுவோர் திறந்த மனதுடனும் பரந்த அடிப்படையிலும் இதனை அணுக வேண்டும். பலாத்கா ரம் என்று கொள்ளப்படவேண்டியது எது என்பது இச் சமயத்தில் ஒரு முக்கிய வினாவாகும்.
பெண்ணினது சுயவிருப்பம் இன்றி எந்த ஆணாவது (அவன் கணவனாகவும் இருக்கலாம்) பெண்ணைத் தனது இச்சைக்குட்படுத்தல் பலாத்காரமாகும். ஏனெனில் பெண்னை நிர்ப்பந்திப்பதும், அவளது மனித உரிமையை மீறுவதும் இம்சிப்பதும் உடற்துன்புறுத்தலும் தான் பலாத்காரத்தின் பிரதான அம்சங்கள். இவற்றின் அடிப்படையில்தான் எது பலாத்காரம் என்பதை நிர்ணயிக்க வேண்டும். இத்தகைய செயல் எத்தகைய சூழ்நிலையில், எத்தகைய உறவுமுறைக் குள் நிகழ்ந்தாலும் அது பெண்ணுக்கெதிரான வன்செய லாகவே கருதப்படவேண்டும். இத்துடன் இன்னோர் விட யமும் இங்கு முக்கியமானது. பெண்ணினது சம்மதம் அற்ற உடலுறவு மாத்திரமல்ல ஏனைய பாலுணர்வு நோக்க முள்ள உடற் துன்புறுத்தல்களும் கூட பலாத்காரமே ஆகும். ஆனால் எமது சட்டங்கள் பெண்ணின் சுயவிருப்பமற்றதும், அந்நிய ஆண் ஒருவனால் பலத்தின் பேரில் மேற்கொள் ளப்படுவதுமான உடலுறவையே Rape எனக் குறிப்பிடு

Page 31
பெண் நிலைச் சிந்தனைகள்/ 48
கின்றன. மண உறவுள் நிகழும் இத்தகைய துன்புறுத்தலை எவரும் இவ்வாறு கருத்துநிலைப்படுத்துவதில்லை. சட்ட மும் இதற்கு இடம் கொடுப்பதில்லை.
குடும்பத்திற்குள் நிகழும் பெண்களுக்கு எதிரான வன் முறைகள் மனைவியரை அடித்தல், கணவன் மனைவியை உடலுறவுக்காக நிர்ப்பந்தித்தல் முதலியவையாகும். ஆனால் எவருமே இது குறித்துக் கருத்துச் செலுத்துவ தில்லை. பெண்களும் மண உறவிநிகழும் இத்தகைய வன் முறைகளை வன்முறைகளாகக் கருதுவதில்லை. தமக்கென அமைந்த வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாகவே அவர்கள் இதனைக் காண்கின்றனர்.
அந்நிய ஆண் ஒருவனால் மேற்கொள்ளப்படும் நிர்ப் பந்தமான உடலுறவுதான் பலாத்காரம் என்ற கருத்தை எமது தமிழ்ச் சமூகம் சமீபகாலங்களிலும் வற்புறுத்தி யுள்ளது.
ஒரு சமயம் யாழ்ப்பாணக்குடாநாட்டின் ஒரு குறிப் பிட்ட பகுதியில் நிகழ்ந்த இராணுவத்தினரின் வன்செயல் களின் போது பெண் கள் பலாத்காரப்படுத்தப்பட்டது தொடர்பாக அப்பகுதியின் முக்கியஸ்தர் ஒருவருடன் கதைக்கவேண்டி ஏற்பட்டது. அப்போது அவர் ** அங்கு கற்பழித்தல் அதிகம் நடைபெறவில்தை, பெண்கள் உடற் துன்புறுத்தல்களுக்கே ஆளானார்கள்" என்று கூறினார். பலாத்காரம் பற்றிய, சமூகத்தினதும் சட்டத்தினதும் கருத்தையே அவரது கூற்று குறிக்கிறது. ஆனால் பலாத் காரம் என்பது நிர்ப்பந்தமான உடலுறவு மாத்திரமல்ல, பாலுறவு நோக்கமுள்ள உடற் துன்புறுத்துகள் யாவுமே என எமது கருத்தைத் திருத்திக்கொள்ளுதல் வேண்டும்.
பலாத்காரம் தொடர்பாக இன்று எம்மிடையே வழங்கிவரும் சட்டம் மிகப் பழையதாகும்; சுமார் நூறு வருடங்களாக எந்தத் திருத்தத்திற்கும் உட்படாதது

49 சித்திரலேகா மெளனகுரு
அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளில் பலாத்காரம் தொடர்பாக ஏற்பட்ட சட்டத்திருத்தங்கள் எதும் இங்கு ஏற்படவில்லை. இச்சட் டத்தினை இங்கு இயற்றிய பிரிட்டிஷார் தமது நாட்டில் எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்திய பின்னருங்கூட நாம் அவற்றை அப்படியே கைக்கொள்கிறோம் என்பதும், இச்சட்டம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கப் போது மானது என எமது வழக்கறிஞர்கள் வாதிடுவதும் நகைப் புக்கிடமானது.
இச்சட்டங்கள் குற்றம் புரிந்த ஆனைத் தண்டிக்கவும் பெண்ணுக்கு நீதிவழங்கவும் வல்லமை உடையனவா? இன் றைய எமது சட்டங்களில் உள்ள மூன்று முக்கிய அம்சங் கள் :
(1) பலாத்காரத்திற்கு சாட்சிகள் கேட்பது. இது பற் றிச் சட்டங்கள் தெளிவாகக் கூறாவிடினும் நீதி மன்ற வழக்குகளிற் சாட்சிகள் கேட்பது தடை முறையாக உள்ளது. இது மிக அநீதியானதாகும். ஏனெனில் பலாத்காரம் பொது இடத்தில் நடப்ப தில்லை. குற்றத்திற்கு இரையானவரை மேலும் பலமற்ற நிலைக்கு இது தள்ளுகிறது.
(2) பலாத்காரத்திற்குத் தான் உடந்தை இல்லை என் பதைப் பெண் நிரூபிக்கும் தேவை, பலாத்காரத் திற்கு இரையான பெண்ணை மேலும் இம்சிப்ப தாகும். பலாத்கார முயற்சியின்போது அதனை வன்மையாக எதிர்க்க வேண்டாம் அதனால் உயி ராபத்து ஏற்படலாம் என வைத்தியர்களும் பொலி ஸாரும் பெண்களை எச்சரிக்கின்றனர். ஆனால் நீதிமன்றமோ பெண் உடந்தை இல்லை என்பதை நிரூபிக்கும்படி கேட்கிறது. தம்மைப் பலாத்காரம் புரிந்தவன் தண்டிக்கப்பட வேண்டும் எனப் பெண் கள் விரும்பினால், தமது உயிராபத்தைப் பொருட்

Page 32
பெண் நிலைச் சிந்தனைகள் / 50
(3)
படுத்தாது அதனை எதிர்க்க வேண்டும் என இது நிர்ப்பந்திக்கிறது.
பெண்ணின் கடந்தகால பாலியல் வாழ்க்கை, அவள் திருமணமாகாத கன்னியா? பிறழ்ச்சியான பாலுறவுகளில் ஈடுபட்டவளா என்பன போன்ற கேள்விகளும் நீதிமன்றங்களில் எழுப்பப்படுவதற்கு இச்சட்டங்கள் இடமளிக்கின்றன. (ஒழுக்கமற்ற பெண் பலாத்காரம் செய்யப்பட முடியாதவள் எனச் சமூகம் கருதுகிறது!)
இந்த அம்சங்களை நோக்கும்போது இவை, பலாத் காரம் புரிந்த ஆணைத் தண்டிக்க வலுவற்றவனவாகவும் பலாத்காரத்தினால் பெண் அடைந்த உள, உடல் இம்சை களுக்கு மேலாகப் பெண்ணைத் துன்புறுத்துவனவாகவும் அமைகின்றது.
எனவே பலாத்காரம் பற்றிப் பேசுபவர்களும், மனம் குமுறுபவர்களும் அவ்வன்செயல் பற்றிய விளக்கத்தைப் பின்வரும் முறைகளில் அமைத்துக்கொள்ளலாம்.
1.
2
பெண்ணைப் பலாத்காரம் செய்தல் எவரால் மேற் கொள்ளப்பட்டாலும், அது கண்டிக்கப்படவேண்டி யதும் தண்டனைக்குரியதுமாகும். நிர்ப்பந்தமான பாலுறவு நோக்கமுள்ள சகல உடற் துன்புறுத்தல்களும் பலாத்காரமே. பெண்ணுக்குச் சார்பான வகையிலும், குற்றம் புரிந்த வரை இலகுவில் தண்டிக்கும் வலுவுடையதாகவும் சட்டத்திருத்தங்களுக்காக கோரிக்கைகளை முன் வைத்தல் வேண்டும். பலாத்காரத்திற்குள்ளான பெண்கள் தாம் "கற் பிழந்து விட்டதாகக் குற்ற உணர்வுக்கும் அவமான உணர்வுக்கும் உள்ளாகாமல், இவ்வன்முறைக்கு எதி ரான உணர்வை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

இலங்கையில் இனத்துவமும்
பெண்களும்
மூன்றாம் உலகநாடுகள் பல வற்றில் இன்று இனத்துவம் (Ethnicity) CD (pi Su gyps யற் சக்தியாக வளர்ச்சியடைந் துள்ளது. காலனரித்துவம், ஏகா திபத்தியம் ஆகியவற்றுக்கு எதி ரான போராட்டங்களுடன் இந்த அம்சம் முக்கியம் பெறத் தொடங்குவதை வரலாறு எமக் குக் காட்டுகிறது. ஏனெனில் ஒரு இனத்துவக் குழுவானது (Ethnic group) 5607 g/ dts is திரம், இறைமை ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது தனது கலாசார மரபுகளுக்கும், தனித்தன்மைகளுக்கும் அதிக

Page 33
பெண் நிலைச் சிந்தனைகள் / 52
முக்கியத்துவமளிக்கத் தொடங்குகிறது. தனது இனப் பெரு மையையும் மகோன்னதத்தையும் அதுபற்றி வழங்கும் ஐதீ கங்கள் மூலம் வற்புறுத்துகிறது. இனத்துவத் தனித்தன் மையை சில குறிப்பிட்ட விழுமியங்கள், குறியீடுகள், வழக் கங்கள் ஆகியவற்றின்மூலம் எடுத்துக்காட்டுகிறது. சுதேசிய/ விதேசிய கலாசாரம் பற்றி அதிகளவு வாதப்பிரதிவாதங் கள் இக்காலகட்டத்தில் நடைபெறுகின்றன.
இனத்துவம் பற்றிய விவாதங்களில் பெண்கள் பற்றிய கருத்துகள் முக்கிய இடம் வகிக்கின்றன. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இனக்குழுவின் அங்கத்தவர்களை மறு உற்பத்தி செய்யக்கூடிய அதாவது குழந்தைகளைப் பிரசவிக்கக்கூடிய அவர்களது உயிரியல் தன்மையானது முதற்காரணமாக உள்ளது. குழந்தைகளைப் பெறுவது மாத்திரமன்றி அவர்களை வளர்க்கும் செயன்முறையின் ஊடாக குறிப்பிட்ட இனக்குழுவின் கலாசாரத் தனித்தன் மைகள் எனக் கருதப்படும் வழக்கங்களையும் மரபுகளை யும் அடுத்த தலைமுறையினருக்குக் கையளிப்பவர்களாக வும் அவர்கள் கருதப்படுகின்றனர். இதனால் இளம் சந் ததியினருக்குத் தமது இனத்துவம், சமயம் பற்றிய அடை யாள உணர்வுகளை ஏற்படுத்தி கலாச்சாரத்தை ԼՐ Այl உற்பத்தி செய்பவர்களாகவும் அவர்கள் கொள்ளப்படுகின் றனர். இவ்வாறு குழந்தைகளைப் பிறப்பித்தல், வளர்த் தல் ஆகிய இரு அம்சங்களும் இனக் குழுவினதும் அதன் கலாசாரத்தினதும், உற்பத்தியாளராகவும், மறுஉற்பத்தி யாளராகவும் விளங்கும் நிலையும் மேலும் சில எதிர்பார்ப் புகளை பெண்களிற் சுமத்துகிறது. அவர்கள் தமது இனத் துவத் தனித்தன்மைகளை வேறுபடுத்திக் காட்டும் வண் ணம் குறிப்பிட்ட வகை ஆடை அலங்காரம், நடத்தை ஆகியவற்றைப் பேணவேண்டுமென எதிர்பார்க்கப்படு கிறது. சுருக்கமாகக் கூறினால் இனத்துவ அடையாளங் களைப் பேணுவோராக (Ethnic makers) அவர்கள் கருதப் படுகின்றனர். மேற்கூறிய காரணங்களால் பெண்கள் கருத்துநிலையிலும் குறியீட்டு நிலையிலும் இனக்குழுவின்

53 / சித்திரலேகா மெளனகுரு
காப்பாளர்களாகவும் அதன் கலாசார மரபுகளின் ஆறாத் தொடர்ச்சிக்கு அடிப்படைப் பங்காற்றுபவர்களாகவும் கொள்ளப்படுகின்றனர். இத்தகைய கருத்தாக்கங்களே பெண்களை இனத்துவம் பற்றிய விவாதங்களின் மையத் தில் நிறுத்துகின்றன
பெண்கள் இத்தகைய இனத்துவ/தேசிய மட்டத்தி லான விவாதங்களில் இடம் பெறும் முறையினை பெண் நிலைவாத ஆய்வாளர்கள் பின்வருமாறு வசைசாசுே பகுத்துள்ளனர்."
அ) இனக் குழுக்களது அங்கத்தவர்களை மறு உற்
பத்தி செய்வோர்.
ஆ) இனக்குழுக்கள், தேசிய இனம் ஆகியவற்றின் கருத்து நிலையை மறு உற்பத்தி செய்வதிலும் கலாசார அம்சங்களை ஒரு தலைமுறையிலிருந்து இன்னோர் தலைமுறைக்குக் கையளிப்பதிலும் பிரதான பங்கு வகிப்போர். இனத்துவ தேசிய அடையாளங்களையும் வே பாடுகளையும் எடுத்துக்காட்டுவோர். s
3)
ஈ) தேசிய, பொருளாதார, அரசியல், இராணுவத்
துறைகளின் பங்குபற்றுவோர்.
இலங்கையில் பெண்கள், இனத்துவம், தேசியம் தொடர்பான கருத்துப் போக்குகளையும், தகவல்களை யும் புரிந்துகொள்வதற்கு மேற்கண்ட கோட்பாட்டு, விளக் கம் உதவி புரியும்.
காலனித்துவ காலகட்டத்தில் குறிப்பாக, பிரித்தா னிய ஆட்சிக்காலத்தில் இலங்கை மக்களின் தேசிய உணர் வானது சமய, சமூக மறுமலர்ச்சி, சீர்திருத்த இயக்கங் கள் மூலமே வெளிப்பட்டத பெளத்த, சைவ சமய மறு மலர்ச்சி இயக்கங்கள் கிறிஸ்தவ மதப் பரம்பலுக்கும், மேற்கு நாட்டுக் கலாசார அம்சங்களுக்கும் எதிராகச் செயற்

Page 34
பெண் நிலைச் சிந்தனைகள் / 34
படத் தொடங்கின. கிறிஸ்தவ மதமும், கலாசாரமும் சுதேசிகளிடையே விரும்பத்தகாத தாக்கங்களை ஏற்படுத் தும்; சுதேச சமயம், கலாசாரம் ஆகியவற்றின் சிறப்பை இவை குலைத்துவிடும் என இந்த மறுமலர்ச்சி இயக்கங் களின் முக்கியஸ்தர்கள் கருதினர். இந்நிலையில் தேசியத் தின் அரசியலானது பாரம்பரியமானது யாவற்றையும் உயர்ந்தது, சிறந்தது எனக் கூறியது. இத்தகைய பாது காப்பு மனோபாவமானது, அன்னிய கலாசார எதிர்ப் புணர்வு முழு அளவிலான தேசியவாதமாக வளர்வதற்குக் குந்தகமாய் அமைந்தது. இதுபற்றிக் குமாரி ஜெயவர்த் தனா பின்வருமாறு குறிப்பிட்டார்.
**இந்த எதிர்ப்புணர்வு முழு அளவிலான தேசியவாத மாகவோ விடுதலை இயக்கமாகவோ வளரவில்லை. அது. சமூகத்தின் மத, பண்பாட்டு எதிர்ப்பின் எல் லைக்குள்ளேயே நின்றுவிட்டது மாத்திரமன்றி பின் னர் இனவாதமாகவும் சீரழிந்தது"2
இவ்வாறு மத, பண்பாட்டு எதிர்ப்பின எல்லைக்குள் தன்னைக் குறுக்கிக்கொண்ட தேசியவாதம் பெண்கள் பற்றியும் எதிர்மறையான கருத்துக்களையே வெளிப்படுத் தியது. அவர்கள் பாரம்பரியத்தோடு ஒத்து ஒழுகவேண் டியவர்களாகவும், அதிலிருந்து விலகியோர் வெறுக்கத்தக் கோராகவும் கருதப்பட்டனர். இவ்வகையில் பெண்கள் பற்றிய கருத்துகள் இரு சந்தர்ப்பங்களில் வெளியிடப் பட்டன.
1) ஒரு குறிப்பிட்ட இனத்துவ அல்லது சமயக் குழுவி னரின் ஒழுக்கமுறைமை, நடத்தை ஆகியவை பற் றிப் பேசும்போது விசேடமாகப் பெண்கள் ஒழுக வேண்டிய முறை, கடைப்பிடிக்கவேண்டிய விதிகள் கூறப்பட்டன.
2) அன்னிய மதம், கலாசாரம் ஆகியவை ஏற்படுத்தும்

55 / சித்திரலேகா மெளனகுரு
தீமைகள் பற்றிக் கூறும்போது இவற்றால் செல் வாக்குற்ற பெண்களின் இயல்பு விபரிக்கப்பட்டது: இவர்கள் கேலிக்குரியவர்களாகவும், அன்னியப்பட்ட வர்களாகவும் சித்தரிக்கப்பட்டனர்.
>19ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் யாழ்ப் பாணத்தில் ஆரம்பமான சைவப் பாதுகாப்பு/மறுமலர்ச்சி இயக்கத்தின் முதன்மையாளரான ஆறுமுகநாவலர் பெண் கள் பற்றித் தெரிவித்த கருத்துகள் மிகுந்த பாரம்பரிய மானவையாகும். சைவ சமயத்தை அதன் சாஸ்திர, பிர மாண நூல்களின் வழி நின்று பாதுகாக்க முற்பட்ட நாவ லர் பெண்கள் பற்றியும் பழைய தர்மசாஸ்திரங்களில் கூறப்பட்டவற்றையுமே எதிரொலிக்கிறார். சிறு பிள் ளைகளிலிருந்து வயது முதிர்ந்தவர்கள் வரை கைக்கொள்ள வேண்டிய ஆசாரங்களைத் தொகுத்துக் கூறும் அவரது பால பாட நூல்களில் இக்கருத்துக்கள் காணப்படுகின்றன.
'பெண்களுக்கு விவாகமே உபநயனமாகும். கணவனுக் குப் பணிவிடை செய்தலே குரு வழிபாடாகும். சமை யல் முதலிய வீட்டு வேலைகளே அக்னிகாரியமாகும்'3
** பெண்கள் இளமைப் பருவத்திலே பிதாவினாலும், யெளவனத்திலே கணவனாலும், மூப்பிலே புத்திரரி னாலும் காக்கத்தக்கவர்; ஆகையால் ஒருபோதும் பெண்கள் சுவாதீனரல்லர். தகப்பன், கணவன், பிள் ளைகள் இவர்கள் இல்லாமல் தனித்திருக்க விரும்பும் பெண், பிறந்த குலம், புகுந்த குலம் இரண்டுக்கும் வசையை உண்டாக்கிவிடுவாள்.4
பெண்கள் ஆண்களைத் தமது வாழ்க்கையின் எல்லாக் கட்டத்திலும் சார்ந்திருக்க வேண்டியவர்கள் என்பதும் ஆண்களுக்குப் பணிசெய்து கிடப்பதே அவர்கள் கடன் என்பதுமே மேலுள்ள வாசகங்களில் அறுதியிட்டுக் கூறப் படுவதாகும். மேலும் கணவரை இழந்த பெண்கள் மீண் டும் திருமணம் செய்வதற்கு அருகதையுடையவர் அல்லர்

Page 35
பெண் நிலைச் சிந்தனைகள் / 58
என்றும் அவர்கள் எத்தகைய மங்கல காரியத்திற்கும் தகாதவர்கள் எனவும் கூறுகிறார்.
"விவாகஞ் செய்யப்படும் கன்னிகை. தனக்கு இளையா ளாயும், முன்னொருவராலும் விவாகஞ் செய்யப் படாதவளாயும். இருத்தல் வேண்டும்'9
இன்னொரு கட்டுரையில் சைவருடைய போசனப் பந்தி யைப் பார்த்தற்கு உரியரல்லாதவர் யார் எனக் கூறும் போது அவ்வரிசையில் கைம்பெண்களை விவாகம் செய் தோர், கைம்பெண்களுடைய பிள்ளைகள் ஆகியோரையும் அடக்குகிறார்.8
நான் மேலே எடுத்துக்காட்டிய நாவலரது வசனத்தில் அவரது மொழிக் கையாளுகை கவனத்திற்குரியது. நான் காம் பாலபாடத்தில், திருமணம் பற்றிய கருத்துக்களைக் கூறும்போதே ' விவாகஞ் செய்யப்படும் கன்னிகை." என்று கூறுகிறார். திருமணத்தில் ஆணையும் பெண்ணை யும் சம பங்குதாரராக அன்றி ஆணால் திருமணம் செய் யப்படும் நிலையிலுள்ளவளாகப் பெண்ணைக் கருதுவதே இத்தகைய மொழிக் கையாளுகையினுாடாகப் பெறப்படு கிறது. செயப்பாட்டுவினை முறையிலமைந்த இந்த வசனம் ஆண் அதிகாரத்தையும் புலப்படுத்துவதாகும்.
மரபு ரீதியான சமூக அமைப்புக்கும் அதன் தலை மைத்துவத்திற்கும் குந்தகம் ஏற்படாத வகையிலும் அவற்றை நிலைநிறுத்தும் வகையிலுமே தமது கருத்துக் களையும் நடவடிக்கைகளையும் அமைத்துக்கொண்ட நாவ லர் பெண்கள் பற்றிய பாரம்பரியமான விதிகளையே திரும்பிக் கூறியமை வியப்பன்று.
எனினும் நாவலரது காலத்திற்குப் பின்னால் தமிழ ரிடையே தேசியக் கருத்துக்களையும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்ப முயன்ற சிலரும் பெண்களைப்

57 / சித்திரலேகா மெளனகுரு
பற்றிய பிற்போக்குத்தனமான கருத்துக்களையே கூறி யிருப்பதைக் காணலாம்.
இவர்களில் ஒருவர் பாவலர் துரையப்பாபிள்ளை. இவர் யாழ்ப்பாணத்திலிருந்து பிரசுரமாகிய "உதயதாரகை”, "Morning Star' பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணிபுரிந் தவர். யாழ்ப்பாணம், தெல்லிப்பழையின் மஹாஜனக் கல் லூரி என்ற பெயரில் ஒரு இந்துக்கல்லூரியை நிறுவியவர். கல்வியாளர் எனவும் சமூக சீர்திருத்தவாதி எனவும் புகழ் பெற்றவர். சாதி ஒழிப்பு, மதுவிலக்கு, கல்வி கைத்தொழில் முன்னேற்றம் போன்றவை பற்றி ஆணித்தரமான கருத் துகளைத் தெரிவித்தவர். கல்வி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நவீன மாற்றங்கள் இலங்கையிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் ஏற்படவேண்டும் என்று கருதியவர். இவரது "யாழ்ப்பாண சுவதேசக் கும்மி”, “எங்கள் தேச நிலை" ஆகிய பாடல்கள் மேற்கூறிய கருத்துகளைத் தெரி விப்பனவாகும்.
எனினும் துரையப்பாபிள்ளை, மேனாட்டு நாகரிகத் தால் பெண்கள் கவரப்படுவது குறித்து விசனமுற்றார். அவர்கள் தமது சுதேசிய முறையிலமைந்த அழகிய ஆடை அலங்கார முறைகளைக் கைவிட்டு அன்னிய முறைகளைக் கைக்கொள்வதைக் கேலி செய்தார்.
கொண்டைக்குப் பூச்சூடும்
காலம் போச்சு - நாடாக்
கொண்டு குழல் முடியும்
காலமாச்சு . .
பெண்கள் சப்பாத்துள்
நொண்டி வரக் காலமாச்சு"
"நாண மட மச்சம் பயிர்ப்பென வான்றோர் நவிலுமரும் லட்சணங்கள் சற்றும் பூண்டிலராய்ச் சில நவீன ஸ்திரீகள்
புரிசெயல் கேளடி சங்கமின்னே'

Page 36
பெண் நிலைச் சிந்தனைகள் / 58
என்றும் தமது ' எங்கள் தேச நிலை" என்ற பாடலிற் குறிப் பிட்டார்.
தமது சொந்த இனத்துவ அடையாளங்களையும் தனித்தன்மைகளையும் பிரதிபலிக்கவேண்டிய பெண்கள் அவற்றைக் கைவிடும்போது கடுங்கண்டனத்திற்கு உள்ளா கின்றனர்; கேலி செய்யப்படுகின்றனர். இந்தக் கேலித் தொனியையே துரையப்பாபிள்ளையின் பாடலிலும் காண லாம். இத்தகைய பெண்களை சமூகத்திலிருந்து விலகிய வர்களாகவும் "வேற்றாள்" (The Other) எனவும் இவர் கள் கருதினர். இத்தகைய பெண்கள் பற்றிய சித்திரம் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த நாவல் களிலும் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளி வந்த 'இந்து சாதனம்' பத்திரிகையில் ஆசிரியராகப் பணி புரிந்த ம. வே. திருஞான சம்பந்தம்பிள்ளை அப்பத்திரி கையில் தனது நாவல்கள் சிலவற்றைத் தொடராக வெளி யிட்டார். 'உலகம் பலவிதக் கதைகள்' என்ற தலைப்பில் தொடராக வெளிவந்த இந்த நாவல்களிலும் ‘வேற்றா ளான பெண்களைக் காணலாம்.
இருபதாம் நூற்றாண்டின் தென் ஆசிய நாடுகளில் உருவாகிய சமூக சீர்திருத்த இயக்கங்களின் ஒரு முக்கிய குறிக்கோளாய் அமைந்தது பெண் கல்வியாகும். பெண் கள் கல்வி கற்க வேண்டிய அவசியம் குறித்து பல ஆண் சீர்திருத்தவாதிகளும் ஆர்வம் காட்டினர். ஆனால் பெண் களுக்கு எத்தகைய கல்வி புகட்டப்படவேண்டும் என்பதில் வெவ்வேறு கருத்துக்கள் காணப்பட்டன.
இலங்கைத் தேசியவாதிகள், பெண் கல்வியானது அவர்களைச் சிறந்த மனைவியராகவும், தாய்மார் ஆகவும் ஆக்கும் அளவிற்கு அமைந்திருக்க வேண்டும் எனக் கருதி னர். வீட்டு நிர்வாகம், தையல், அழகுக் கலைகள் ஆகிய வற்றில் தேர்ச்சியும், சைவ சமய இலக்கியங்கள் சாஸ்தி ரங்கள் ஆகியவற்றில் அறிவும் அளிக்கக்கூடிய கல்வியே

59 / சித்திரலேகா மெளனகுரு
அவர்களுக்குப் புகட்டப்படவேண்டும் எனக் கூறினார். பாவலர் துரையப்பாபிள்ளை, பெண்களுக்கு ** எம். ஏ., பீ. ஏ. பட்டம் உதவாது" என்று கூறினார். அளவுக் கதிகமான கல்வியால் பெண்கள் நோயாளராகிறார்கள் என்றும் வாதித்தார்.
யாழ்ப்பாண மக்களின் பிரதிநிதியாக இலங்கைச் சட்ட சபையில் அங்கத்துவம் வகித்த பொன்னம்பலம் இராம நாதனும் பெண்கள் கல்வியில் அக்கறை கொண்டிருந்தார். ஆனால் அவரும் துரையப்பாபிள்ளை போலவே பெண் களுக்கு "மட்டுப்படுத்தப்பட்ட கல்வியே தேவை என்று கருதினார். தனது கருத்தைச் செயலாக்குவதற்காக 1913 ஆம் ஆண்டு இராமநாதன் இந்துப் பெண்கள் கல்லூரியை மருதனாமடத்தில் நிறுவினார். கிறிஸ்தவ மிசனரிமாரே பெண்கள் கல்வியில் அதிகம் ஊக்கம் காட்டி கல்வி மூலமும் பெண்களைக் கிறிஸ்தவராக்குவதற்கு ஒரு மாற்று முயற்சி யாகவே இராமநாதன் இப்பாடசாலையை அமைத்தார். இக்கல்லூரியில் கற்கும் "பெண்கள் எல்லாவகையிலுடி சிறந்த இந்துக்களாக வளர வேண்டும்; இது அவர்களைச் இந்து தர்மத்தின்படி ஒழுகக்கூடிய சிறந்த மனைவியராக வும் தாயராகவும் ஆக்கும்'8 என அவர் கருதினார். சமய அடிப்படையில் பெண் கல்வி அமையவேண்டும் என்பதில் உறுதியுடையவராயிருந்த இராமநாதன், பெண் விடுதலை என்ற கருத்தாக்கத்தையே நிராகரித்தார். '"சமூகத்தில் பெண்களது பாத்திரம் பற்றிய நவீன கருத்தாக்கத்துடன் அவர் முரண்பட்டார். பெண்ணுக்குத் தகுதிவாய்ந்த இடம் இல்லமே ஒழிய ஆணுக்காக அமைந்த போட்டி நிலவுகின்ற வெளி உலகமல்ல’’9 என்பதில் நம்பிக்கை உடையவராய் இருந்தார். இதன் அடிப்படையிலேயே அவரது பெண் கல்வி பற்றிய கருத்துகளை விளங்குதல் வேண்டும்.
1920களின் பிற்கூற்றில் சர்வசன வாக்குரிமை பற்றிய விவாதங்கள் சட்டசபையில் நடைபெற்றபோது பெண் களுக்கு வாக்குரிமை அளிப்பதை ராமநாதன் எதிர்த்தார்.

Page 37
பெண் நிலைச் சிந்தனைகள் | 60
பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பது குடும்பத்தில் நிலவும் இணக்கத்தையும் அமைதியையும் குலைத்துவிடும் என அவர் வாதிட்டார்.
மேற்கண்டவாறு காலனித்துவ காலகட்டத்தில் சமய மறுமலர்ச்சியாளர்களும், தேசியவாதிகளும் பெண்கள் பற்றி ஆங்காங்கு கூறிய கருத்துக்களைத் தொகுத்து நோக்கும் போது அவர்களது கருத்துநிலை இனத்துவப் பின்னணி யில் அமைந்திருப்பதைக் காணலாம். சமய பண்பாட்டு பாரம்பரியத்திற்கு இணங்கப் பெண்கள் நடக்க வேண்டு மெனவும் அவற்றைப் பேணுவதில் பங்காற்ற வேண்டு மெனவும் எதிர்பார்க்கப்பட்டது. இலங்கையில் தமிழரி டையே காணப்படும் இக்கருத்து நிலையை சிங்கள மக்க ளிடமும் அவதானிக்கலாம். பெளத்த மறுமலர்ச்சி இயக் கம் முன் வைத்த பெளத்த சிங்களப் பெண்மை பற்றிய உருவாக்கம் அவர்களது இனப் பெருமை பற்றிய கருத் தாக்கத்துடன் இணைந்திருந்தது.19 இவ்விடத்தில் ஒரு விடயம் குறிப்பிடத்தக்கது. அதாவது அயல் நாடான இந் தியாவில் இதே காலகட்டத்தில் சமய, பண்பாட்டு அடிப் படையில் பெண்கள் பற்றிய கருத்துகள் தெரிவிக்கப்பட்ட போதும் பெண்கள் முன்னேற்றம், விடுதலை குறித்து மிக முற்போக்கான கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இந்தியத் தேசியவாதிகள் பலர் "பெண்களின் விடுதலை" என்ற கருத்தாக்கத்தையே கையாண்டனர். ஆனால் இலங்கை யில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்து தேசியவாதிகள் எவ ரும் "பெண் விடுதலை" என்ற சொற்தொடரையே கையா ளாமை கவனிக்கத்தக்கது. இந்திய தேசியவாதத்திற்கும் இலங்கைத் தேசியவாதத்திற்கும் இடையில் காணப்படும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுள் இது ஒன்று ஆகும்.
இலங்கையில் இனத்துவ ரீதியான அரசியல் காலனித் துவ காலகட்டத்திலேயே தோற்றம் பெற்றதாயினும்

6 1 / சித்திரலேகா மெளனகுரு
இக்காலகட்டத்தின் பின்னரே இனத்துவ முரண்பாடுகள் துரிதமாக வளர்ச்சி அடைந்தன. சிங்கள தமிழ் மக்களி டையே இனப்பகைமை கூர்மையடைந்தது. தமிழர் தம்மை மொழி அடிப்படையில் ஒரு இனமாக அடையாளம் காணத் தொடங்கினர். 1950களின் பிற்பகுதியிலிருந்து வலு வடைந்த தமிழ்மொழி உரிமைக் கோரிக்கைகளும் போராட் டங்களும் தமிழர் அரசியல் வரலாற்றில் முக்கியம் பெற். றன. தமிழ் மொழிக்கு பாதகமாக ஆக்கப்பட்ட சட்டங் களை எதிர்த்து தமிழரசுக்கட்சி போன்ற அரசியற் கட்சி கள் நடத்திய போராட்டங்களின்போது பெண்கள் எவ் வாறு நோக்கப்பட்டனர்? இக்காலத்து அரசியல் விவாதங் களில் பெண்கள் எவ்வாறு உருவமைக்கப்பட்டனர் என்பது சுவையான விடயமாகும். VA
தமிழ்மொழிக்கு சிங்கள மொழியுடன் சமத்துவ அந் தஸ்து சோரி நடத்தப்பட்ட கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவற்றில் பெண்கள் பங்குபற்றினர். ஆண் அரசியற் தலைவர்களும் பெண் பேச்சாளர்களையும், பாடகிகளை யும் தமது மேடைகளிற் பயன்படுத்தி கூட்டங்களுக்கு வருகை தருவோர் எண்ணிக்கையைப் பெருக்குவதில் கவ னம் செலுத்தினர். இக்காலத்தில் தமிழரசுக் கட்சியிலும் அதன் மாதர் மகா நாடுகளிலும் முன்னணியில் நின்ற பெண்கள் அக்கட்சியில் பிரமுகர்களின் உறவினர்களாகவே இருந்தனர். இவர்கள் ஆண் அரசியல் வாதிகளின் துணைப் பாத்திரங்களையே (Supportive இple) வகித்தனர்.
இத்தகைய துணைப் பாத்திரமே தமது பங்களிப்பு எனப் பெண்களும் ஏற்றுக்கொண்டனர். இதன் ஒரு விரி வாக்கமே இக்காலத்தில் பிரபலம் பெற்ற "தாய்" என்ற படிமம் ஆகும். அரசியலில் ஈடுபடும் ஆண்களைத் தாய் போன்ற ஆதரவுடன் பேணுபவராகவும், மொழியுரிமைக் காகப் போராடும் புதல்வர்களைப் பாதுகாப்பவர்களாக வும் பெண்களது 'தாய்' என்ற இப்பாத்திரம் சித்தரிக்கப் பட்டது. தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களுள் ஒருவரான

Page 38
பெண் நிலைச் சிந்தனைகள் / 62
வன்னியசிங்கத்தின் மனைவியான கோமதி பற்றி பிற் காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாதர் கிளை யின் தலைவியாகப் பணிபுரிந்த மங்கையர்க்கரசி அமிர்த லிங்கம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
*"தன் வீட்டையே ஒர் பாசறையாக்கி, இரவுபகல் வரு பவர்க்கு அரசியல் விளக்கமும் கொடுத்து அருமையான உணவும் படைத்து, தமிழினத்தின் ஒப்பற்ற தலைவ னாக விளங்கிய வன்னியசிங்கத்திற்கு வலதுகரமாகத் திகழ்ந்தவர் கோமதியவர்கள். இதை இன்றைய இல் லத் தலைவிகள் உணரவில்லையே' இக்கூற்று தமிழரசுக் கட்சியின் அரசியலில் ஈடுபட்ட பெண் களுக்குத் தமது தாய் பாத்திரம் பற்றியிருந்த கருத்தை எடுத்துக் காட்டுகிறது.
இது மாத்திரமன்று; பண்டைய இலக்கியங்கள், காவி யங்கள் ஆகியவற்றில் இடம்பெறும் பாத்திரங்கள் மறு உடு வாக்கம் பெற்றன. பேச்சிலும் எழுத்திலும் இப்பாத்திரங் கள் பற்றிய விபரணங்கள் இடம்பெற்றன. குறிப்பாக சங்கத் தமிழ் இலக்கியமான புறநானூற்றில் இடம்பெறும் பெண் பாத்திரங்கள் சில இலட்சியப் பாத்திரங்களாகப் போற்றப் பட்டன. தம் புதல் வரைப் போருக்குப் பெருமிதத்துடன் அனுப்பிவைத்த அன்னையரின் பாத்திரங்கள் இவை. போரில் புதல்வர் பகைவருக்குப் புறமுதுகிட்டு ஓடாது வீரத்துடன் எதிர்த்து நின்று இறந்தால் அதனால் மகிழ்ச் சியும் பெருமையும் அடைந்தவர் இந்த அன்னையர்கள். இந்த வீரயுக இலக்கியப் பெண்களை தமிழ்ப் பெண்கள் தமது இலட்சிய பாத்திரங்களாகக் கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டது. இவர்கள் "வீரத் தாயர்' என்ற தொட ரினால் குறிக்கப்பட்டனர். "புறநானூற்றுப் பெண்கள்" என்பதும் வீரத்தாயர் என்பதும் ஒரு பொருள் இரு
தொடர்களாகப் பயன்பட்டன.
தமிழ் மொழி உரிமை காப்பதற்கான வலுவையும், போராட்ட வீரத்தையும் பெண்கள் தமது புதல்வர்களுக்கு

63 / சித்திரலேகா மெளனகுரு
ஊட்ட வேண்டும் என்பதே இந்த இலக்கிய பாத்திரங்கள் பற்றிய புகழுரைகளின் அடிப்படைச் செய்தியாகும்.
புறநானூற்றுப் பெண் பாத்திரங்கள் போல அடிக்கடி எடுத்துக்கூறப்பட்ட இன்னோர் இலக்கியப் பாத்திரம் சிலப் பதிகாரத்துக் கண்ணகியாகும். ஆராய்ந்து பாராது அநீதி யாகத் தனது கணவனைக் கொலைபுரிந்த அரசனுக்கு உண்மையை நிலைநாட்டிய அஞ்சாமை அவளது சிறப் பியல்பாக எடுத்துக்காட்டப்பட்டது. பாண்டிய அரசனின் அநீதியை எதிர்க்கப் புறப்பட்ட கண்ணகி போல சிங்கள் அரசின் அநீதியைப் பெண்கள் எதிர்க்கவேண்டும் என்பதே இதனூடு கூறப்படும் செய்தியாகும்.
அக்காலத்தில் நிகழ்ந்த ஊர்வலங்கள், சத்தியாக்கிர கங்கள், மறியற் போராட்டங்கள் ஆகியவற்றில் பங்கு பற்றிய பெண்கள் மேற்கூறிய இலக்கியப் பாத்திரங்களு டன் ஒப்பிடப்பட்டனர். தமிழரசுக்கட்சி, தமிழர் விடுத லைக் கூட்டணி ஆகியவற்றின் பத்திரிகைகள், சிறப்பு மலர்கள் முதலியவற்றில் வெளியான புகைப்படங்களின் தலைப்புகள் இப்பாத்திர உருவாக்கங்களை புலப்படுத்து கின்றன:
'அநீதியை அழிக்க மைந்தரை அனுப்பியது அன்றைய தாய்க்குலம்! அதையே அழிக்க மைந்தரோடு தாமு மாக அணிதிரண்டது இன்றைய தாய்க்குலம்." "புதிய புறநானூறு படைத்திடும் வீரமாதர் ஊர்வலம்" "தாம் பெற்றெடுத்த கண்மணிகள் நல்வாழ்வில் இருள் சூழவிடோம் என வெஞ்சினம் பூண்டு போராடுகின்ற தாய்க்குலத்தின் ஒர் பகுதி." "பாண்டியரசின் அநீதி கண்டு கிளர்ந்தெழுந்தாள் சிலப் பதிகார யுகத்தில் கண்ணகி அன்று. சிங்களவரசின் அநீதி கண்டு அதிர்ந்தெழுந்தாள் செல்வநாயக யுகத் தில் ஆயிரம் கன்னியர் இன்று. '12
*வீரத்தாய்' என்கிற படிமம் பல்வேறு அர்த்தங்களில்

Page 39
பெண் நிலைச் சிந்தனைகள் / 64
பல்வேறு தேவைகளுக்குப் பயன்படக்கூடியது. மொழி, இனம், நாடு ஆகியவற்றைப் பாதுகாக்கும் வீரப் புதல்வரை பெறும் "உயிரியல் தாய்" என்ற அர்த்தம் தொனிக்கும் அதே சமயம் வீரத்தை ஊட்டுபவள், அஞ்சாது உரிமைப் போருக் காகப் பிள்ளைகளை உற்சாகப்படுத்துபவள். தேவையான போது தானே நேரடியாகப் போராடக்கூடியவள் ஆகிய கருத்துச் சாயைகளும் இப்படிமத்தில் அடங்கியுள்ளன. சுருக்கமாகச் சொன்னால் பெண் - தாய் - படைப்பவள், காப்பவள் என்ற மரபுரீதியான கருத்தே இப்பாத்திரங்க ளூடும் புலப்படுகிறது.
1970களிலிருந்து தமிழ் மக்களது அரசியலில் தனி நாட்டுக் கோரிக்கை வலுவடைந்தது. பாராளுமன்ற முறை மையை நிராகரித்த இளைஞர் இயக் கங்கள் தனி நாடொன்றை நிறுவுவதற்காக ஆ யு த ப் போராட்ட முறையை கைக்கொண்டன. இந்த இளைஞர் இயக்கங் களில் ஆண்களுடன் இளம் பெண்களும் பங்குகொள்ளத் தொடங்கினர். ஆரம்பத்தில் இவர்கள் தாம் சார்ந்திருக் கும் இயக்கங்களுக்கான நிதி சேகரிப்பு, பிரசாரம், செய் திப் பரிமாற்றம் போன்ற பணிகளிலேயே ஈடுபடுத்தப்பட்
டனர்.
காலப்போக்கில் போராட்டத்துக்கு அதிகளவான இளைஞர்களின் பங்களிப்பு தேவைப்பட்டபோது பெண் களை இயக்கத்தின் சகல துறைகளுக்கும் - ஆயுதப் பயிற்சி பெறுதல் உட்படச் சேர்த்துக்கொள்ள வேண்டியதாயிற்று. இக்காலத்தில்தான் தேசிய விடுதலைப் போராட்டங்களில் பெண்களின் பங்கு பற்றிய கருத்தாக்கமும் இளைஞர் இயக்கங்களுக்கிடையே பிரபலம் பெற்றது. லத்தீன் அமெ ரிக்க, ஆபிரிக்க நாடுகளின் தேசிய விடுதலைப் போராட் டங்களில் பெண்கள் பங்குபற்றியமை பற்றிய கருத்துகள் கூறப்பட்டன. இந்தப் பொருள் பற்றிக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன; கட்டுரைகள் எழுதப்பட்டன.
ஆனால் சமூகத்தில் பெண்கள் தொடர்பாக பாரம்

6i5 / சித்திரலேகா மெளனகுரு
பரியமான ஆணாதிக்கக் கருத்து நிலையே நிலவிற்று ஆண் பெண்ணுக்கிடையிலான அசமத்துவ உறவுகளை உறு திப்படுத்துகின்ற, பெண்ணுக்குரிய இடம் குடும்பமும் வீடும் என்று கூறுகின்ற இந்தக் கருத்துநிலை பெண்களின் சமூக அரசியல் பங்களிப்புக்குக் குந்தகமாக அமைந்தது. இத னாலேயே இதற்கு மாற்றாக பெண் விடுதலை என்ற கருத்தாக்கத்தைப் பரவலாக்கவேண்டி ஏற்பட்டது. பெண் விடுதலையும் தேசிய விடுதலையும் ஒன்றையொன்று சார்ந் தவை என்ற கருத்துப் பரவலானது.
இந்தச் சந்தர்ப்பத்தில் பெண்களை அன்னையராக, இனத்தின் உரிமையைக் காக்கப் போராடுகின்ற புதல்வரின் அன்னையராக மாத்திரம் உருவகித்தல் போதுமானதாய் இருக்கவில்லை. பெண் தானே போராளிப் பாத்திரம் தாங்க வேண்டியவளானாள். எனவே "வீரத்தாய்" என்ற மட்டுப்படுத்தப்பட்ட நிலையினைவிட விரிவுபடுத்தப்பட்ட ஒரு படிமம் தேவைப்பட்டது. அது, சகல துறைகளிலும் ஆணுடன் சமபங்கு வகிக்கின்ற, போராடுகின்ற புதிய பெண்ணின் படிமத்தைத் தோற்றுவித்தது.
இளைஞர் இயக்கங்களின் பெண்கள் பிரிவுகளுக்கும், அவற்றின் அங்கத்தவர்களுக்கும் மாத்திரமன்றி, இக்காலத் தின் பெண் விடுதலை பேசிய ஏனைய சுயாதீனமான பெண்கள் அமைப்புகளுக்கும் தமது கருத்துகளை மேலும் விரிவுபடுத்தவும் பரவலாக்கவும் இப்புதிய படிமம் பயன் பட்டது. ஆணுடன் சம அந்தஸ்துடைய, சமூகத்தின் சகல துறைகளிலும் பங்களிக்கிற, கல்வி அறிவில் முன்னேறிய பெண்ணாக இப்புதுமைப் பெண்ணின் சித்திரம் உருவாக் கப்பட்டது. பெண் விடுதலையை இலட்சியமாகக் கொண்ட அனைவரினதும் எதிர்பார்ப்புகளினது வடிவமாக இச்சித்தி ரம் அமைந்தது.
எனினும் இனத்துவ அடிப்படையில் அமைந்த இயக் கங்களினதும், அவற்றின் பெண்கள் அமைப்புகளினதும்

Page 40
பெண் நிலைச் சிந்தனைகள் / 68
கருத்துநிலையில் பெண்ணுடைய தாய் என்ற பாத்திரம் தொடர்ந்து காணப்பட்டது. ஒரு கையில் குழந்தைன்யயும் இன்னோர் கையில் ஆயுதத்தையும் ஏந்திய பெண்ணின் படிமம் இவர்களிடையே பிரபலமானதாக இருந்தது. இவ் வகையில் இனத்தின் பாதுகாப்புக்காகப் போரிடுபவளாக வும், போராடுவதற்கு மேலும் அவ்வினத்தின் அங்கத்தவர் களைப் பிறப்பிப்பவளாகவும், இனத்தின் பலம் குன்றா வண்ணம் அங்கத்தவர்களின் எண்ணிக்கையைப் பெருக்கு பவளாகவும் பெண் கருதப்பட்டாள். இனத்துவ அரசிய லில் இது இன்றுவரை தொடர்ந்திருக்கிற கருத்துநிலை யாகும்.
மேலே எடுத்துக் காட்டிய புதுமைப் பெண் என்ற கருத்தாக்கத்திற்கு அதனை ஏற்றுக்கொள்ளாத பிற்போக் குச் சக்திகளிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பையும் இச்சந் தர்ப்பத்தில் குறிப்பிடுதல் வேண்டும். தமிழ் இளைஞரது ஆயுதப் போராட்ட குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மாத் திரமல்லாது ஏனையோரும் பெண் விடுதலை என்ற கருத் தாக்கத்தால் கவரப்பட்டனர். அத்துடன் 80ஆம் ஆண்டு களிலிருந்து குறிப்பாக இலங்கையின் வடபகுதியில் நிலவிய போர் நிலைமையும் அது அன்றாட வாழ்வில் ஏற்படுத்திய நெருக்கடிகளும் மக்களது நடத்தைகளில் மாறுதலை ஏற் படுத்தின. முன்னரிலும் அதிகளவான பெண்கள் வெளி வாழ்க்கையில் பங்காற்றினர். மரபு, பாரம்பரியம் என்ற காரணம் காட்டி பெண்களது வெளிநடமாட்டத்தையோ, செயற்பாடுகளையோ தடுக்க முடியவில்லை. யாழ்ப்பாணத் தின் தெருக்களில் பெண்களின் பிரசன்னம் திடீரென அதி கரித்தது.
இந்நிலையில் இதனை விரும்பாத சக்திகளிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பு பெண்களைக் கட்டுப்படுத்துவதையும் அவர்களில் மீண்டும் தமது அதிகாரத்தை நிலைநாட்டுவ தையும் நோக்கமாகக் கொண்டது. இதற்குக் சிறந்த ஒரு உதாரனம் 1985ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பெண்களுக்கு

67 / சித்திரலேகா மெளனகுரு
எச்சரிக்கை என்ற தலைப்பில் நன்மை விரும்பித் தமிழ் மக்கள் எனக் கையெழுத்திட்டு யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் வினியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம் ஆகும். பெண்களது ஆடைகள், அவர்களது நடமாட்டம் முதலியவை தொடர்பான கட்டுப்பாடுகளை விதித்த இத் துண்டுப் பிரசுரத்தின் சில கட்டளைகள் பின்வருமாறு:
""வயது வந்த பெண்கள், முழுப்பாவாடை அணிய
வேண்டும்.""
**கண்டவர்களுடன் சைக்கிளில் செல்லக்கூடாது."
**தேவையில்லாமல் கண்ட இடங்களில் காணும் பெண்
களுக்கு அடி கொடுக்கப்படும். "19
இப்பிரசுரத்திற்குப் பரவலாக எதிர்ப்பையும், கண்ட னங்களையும் பெண்கள் அமைப்புகள் வெளியிட்டன. பெண்கள் - விரோத, சமூக - விரோதக் கருத்துக்களை இப்பிரசுரம் தெரிவிக்கிறது எனக் குற்றம்சாட்டின. எனி னும் ஒரு பெண்கள் அமைப்பு இப்பிரசுரத்தை கண்டித்த அதேவேளை இனத்துவத் தனித்தன்மைகளைப் பேணும் வகையில் பெண்கள் தமது உடை, அலங்காரங்களிலும், நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டது. பெண்களது நடை உடை பாவனைகளில் ஏற்படும் மாற்றங்கள் தமிழரது கலாசாரத் தனித்தன்மை களில் மாற்றம் ஏற்படுத்தும் எனவும், தேசிய விடுதலைப் போராட்டத்தை இது அர்த்தமற்றதாக்கும் எனவும் பொருள்பட தனது கருத்துரையில் கூறியது.14
மேற்கூறியவற்றைத் தொகுத்து நோக்கும்போது ஒன்று புலனாகிறது. அதாவது காலனித்துவ காலகட்டத்திலும் சரி அதற்குப் பின்னரும் சரி இனத்துவத்தின் அடிப்படை யில் அமையும் அரசியல் பெண்களைச் சில குறிப்பிட்ட பண்புகள் பங்குகள் உடையவர்களாக நோக்குகின்றது என்பதாகும். காலனித்துவ காலகட்டத்தில் தேசியவாதத் தின் குறை வளர்ச்சி நிலைமை சமூகத்தில் அடிப்படை

Page 41
பெண் நிலைச் சிந்தனைகள் / 68
οαι έέ, س ک سیس «
யான நவீன மாறுதல்களை ஏற்றுக்கொள்ளத்தயங்கியதன் ஒரு விளைவாகவே பெண்கள் தொடர்பான புதிய மாற் றங்களையும் மறுதலித்தது. பிற்காலத்தில் தமிழ்ப் பகுதி களில் தேசிய விடுதலைப் போராட்டம் என்ற கருத்தாக் கத்தை முன்வைத்து இயங்கிய அரசியல் அமைப்புகளும் பெண்கள் தொடர்பான முற்போக்கான கருத்துக்களைக் கொண்டிருப்பதாகத் தென்பட்டபோதிலும் அடிப்படையில் இனக்குழுவின் அங்கத் கவர்களையும் அதன் கலாசாரத் தையும் மறு உற்பத்தி செய்வோராகவே கருதின.
இனத்துவ அடையாளத்தை வற்புறுத்துவதானது பெண்ணைப் பொறுத்தவரை அவளது பாரம்பரிய பாத் திரத்தையே வற்புறுத்துவதாக அமையும். அதாவது பெண் னினது வீடு, குடும்பம் சார்ந்த கடமைகளுக்கு முக்கியத் துவம் அளித்து "மனைவி', 'தாய்" ஆகிய பாத்திரங்க ளைப் பேணுவதன் மூலம் அவளை ஒரு குறிப்பிட்ட எல் லைக்குள் அடக்கி வைத்திருக்கலாம் . இது நவீன சமூகத் தில் பெண்ணினது தாழ்த்தப்பட்ட நிலையை மேலும் உறுதி செய்வதாகும். அத்துடன் மரபு ரீதியான விழுமியங்களை யும் கலாசார அம்சங்களையும் தாங்குபவளாகவும், அவற் றைப் பேணிப் பாதுகாப்பவளாகவும் பெண்ணை நோக்கு தல் இதற்கு இன்னோர் வகையில் பங்களிக்கிறது. இதே சமயம் ஒடுக்கப்படும் இனம் என்ற வகையில் குறிப்பிட்ட இனத்தைச்சார்ந்த பெண்கள் தம்மை ஒரு விசேஷமான ஒரு பிரிவினராக உணர்கிறார்கள். அவர்கள் அனுபவிக்கும் அரசியல், பொருளாதார அடக்குமுறைகள், இராணுவ வன்முறைகள் ஆகியவை தாம் "பெண்கள்' மாத்திரம் அல்ல; குறிப்பிட்ட இனத்துப் பெண்கள், ஒடுக்கப்படும் இனத்தைச் சேர்ந்த பெண்கள் என்ற உணர்வையும் ஏற் படுத்துகிறது. இந்த உணர்வினைப் பொதுவாக இலங்கைத் தமிழ்ப் பெண்களிடையே காணலாம். குறுகிய தேசியவாத அலைகளால் அவர்கள் ஈர்க்கப்படுவதற்கும், தம்மைக் கட்டுப்படுத்துகின்ற, தாழ்த்தப்பட்ட நிலையை உறுதி

89 / சித்திரலேகா மெளனகுரு
செய்கின்ற ஜதீகங்கள், விழுமியங்கள் ஆகியவற்றை இறுக்க மாகப் பற்றிப் பிடிப்பதற்கும் இது காரணமாகிறது.
நவீன இலங்கைச் சமூகத்தில் பால், வர்க்கம், இனத் துவம் தொடர்பான பிரச்சனைகள் பற்றி ஆராய்வதற்கும் இவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிவ தற்கும் முயலும்போது இதுவரை மேலே கூறிய விபரங் களைக் கவனத்தில் கொள்வதும் புரிந்துகொள்வதும் அவ சியமானதாகும்.
அடிக்குறிப்புகள்
1. Yuvala Davis . N and Anthias, F. 'introduction' Womin - Nation - State, London, 1989, Luá:
2. ஜெயவர்தனா குமாரி "19ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியிலும் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இலங்கையில் நிலவிய வர்க்க, இன உணர்வின் சில அம்சங்கள்" இலங்கையில் இனத்துவமும் சமூக மாற் றமும் (தமிழ் மொழி பெயர்ப்பு) கொழும்பு, 1985, பக் 153.
3. நாவலர் ஆறுமுக. பாலபாடம் - நான்காம் புத்தகம்,
சென்னை, 1969, பக்: 80.
மேற்படி, பக்: 115. 5. மேற்படி, பக்: 85.
6. கைலாசபிள்ளை த. (தொகுப்பாசிரியர்) ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டு, சென்னை, 1954, Luis : il 20.
7. துரையப்பாபிள்ளை தெ. "" எங்கள் தேச நிலை"
சிந்தனைச் சோலை, யாழ்ப்பாணம் .
8. Vythilingam, Sri Ponnampalam Ramanathan,
1971, பக் 555.

Page 42
பெண் நிலைச் சிந்தனைகள்/ 70
மேற்படி, பக்: 556,
* பெளத்த சிங்களப் பெண்மை" என்ற கருத்தாக் கம், பெளத்த சமய மறுமலர்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டமை குறித்து குமாரி ஜயவர்தனா பின்வரும் கட்டுரையில் விரிவாக ஆராய்ந்துள்ளார்.
Jayawardena Kumari "Some aspects of religious,
11.
12.
1 3.
4.
Cultural identity and the construction of Sinhala Buddist womanhood' Religion and conflict in South Asia (ed) Dong Allen (Forth comming) அமிர்தலிங்கம் - மங்கையர்க்கரசி. தமிழரசுக்கட்சி வெள்ளிவிழா மலர், 1974, பக் 76. மேற்படி மலர். பெண்களுக்கு எச்சரிக்கை (துண்டுப் பிரசுரம்) யாழ்ப்பாணம், செப்டம்பர், 1983 . "முகமூடிகள் கிழிகின்றன" சுதந்திரப் பறவைகள், யாழ்ப்பாணம், மார்ச், 1986.

தொடர்பியல்
ஆய்வுகளும் பெண்நிலைவாதமும்
சமீபகாலமாக, பல்வேறு ஆய்வுத் துறைகளும் பெண் நிலைவாதத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டுப் பல புதிய பரிமாணங் களையும் புதிய போக்குகளை யும் உருவாக்கி வருகின்றன. மேற்குலகில் பெண்நிலைவாதம் க ல் விக் குரிய ஆய்வியலாகப் (Feminist Studies) Lift 6007 57565 தும் இதற்கு ஒரு முக்கிய கார ணமாய் அமைந்தது. சர்வதேச ரீதியில் வெவ்வேறு ஆய்வுத் துறைகளில் ஏற்பட்ட இத்தாக் கத்தினைச் சிறப்பாக எழுப தாம் ஆண்டுகளின் ஆரம்பத்தி லிருந்து காணலாம். பொருளி

Page 43
பெண் நிலைச் சிந்தனைகள் / 72
யல், மானுடவியல், வரலாறு அபிவிருத்திக்கல்வி, இலக் கிய விமர்சனம் முதலியன பெண்நிலைவாதக் கருத்து நிலையின் செல்வாக்கிற்குட்பட்டுப் புதிய போக்குகளை உருவாக்கிய ஆய்வுத் துறைகளிற் குறிப்பிடக்கூடியனவா கும். இவற்றுடன் கூட வெகுஜனத் தொடர்பு ஊடகங்கள் (Mass Communication Media) Libou G5IT Lift Sugi) ஆய்வும் முக்கிய இடம் பெறுகிறது. பெண்நிலைவாதத்தின் செல்வாக்கினால் தொடர்பியலில் ஏற்பட்ட புதிய ஆய்வு போக்குகளின் அறிமுகமாக இக்கட்டுரை அமையும்.
சமூகத்தில் கருத்துநிலையை (Ideology) உருவாக்குவ திலும் பிரதிபலிப்பதிலும் பரப்புவதிலும் வெகுஜனத் தொடர்புச் சாதனங்கள் மிக முக்கியபங்கு வகிக்கின்றன. இத்தொடர்புச் சாதனங்கள் (தொலைக் காட்கி, வானொலி திரைப்படம், பத்திரிகைகள்) சமூக யதார்த் கத்தைப் பிரதி பலிக்கும் சாதனங்களாகவே தொழிற்படுகின்றன என்ற கருத்தே பலராலும் கூறப்பட்டு வந்துள்ளது. ஆனால் எதை எவ்வாறு மக்களுக்கு அளிப்பது என்பதைத் தெரிவு செய்தே வழங்குவதால் #வை, சமூக பதார், ஆத்த்தின் செல்வாக்குச் செலுத்துவனவாகவும் உள்ளன என் n சருத்து இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. தெரிவுசெய்யும் நிலையினால் சில குறிப்பிட்ட கருத்துகளும் செய்திகளும் மாத்திரமே எடுத்துக்கூறப்படுகின்றன. விழுமியங்கள், நடத்தைக் கோலங்கள் முதலியவை தேர்வுசெய்யப்படுகின் றன. இதனால் சமூகயதார்த்தத்தை-சமூகத்தில்-உள்ளத்தை *பிரதிபலிக்கும் அதேநேரம் சமூகம் எவ்வாறு இருக்கவேண் டும் என்பது குறித்த கருத்து நிலையும் உருவாக்கப்படுகின் றது, எனவேதான் தொடர்புச் சாதனங்களுக்கும் சமூக யதார்த்தத்துக்குமிடையே பரஸ்பர-இருவழி உறவு- உண்டு என்பது கவனத்திற்கொள்ள வேண்டியதாகும்.
செய்திகளையும், கருத்துக் களையும் வெகுஜனத் தொடர்புச் சாதனங்களுக்கூடாக அளிப்பது விரல்விட்டு எண்ணக் கூடிய ஒருசிலரின் அதிகாரத்திலேயே தங்கியுள்

73 / சித்திரலேகா மெளனகுரு
ளது. உதாரணமாக, செய்திகள் தகவல்கள் ஆகியவற்றைப் பரப்புவதில் சர்வதேச ரீதியில் ஐம்பெரும் முகவர் நிலை யங்களே முன்னணியில் உள்ளன. இவை யுனைட்டட்பிரஸ் இன்ரநேசனல், அசோசியற்பிரஸ், றொயிற்றர்ஸ், டாஸ் ஏஜென்சி பிரான்ஸ் பிரஸ் என்பனவாகும். மூன்றாம் உலக நாடுகளில் வினியோகிக்கப்படும் 90%க்கு மேலான செய்தி களை இவை கட்டுப்படுத்துகின்றன. ஆனால் இவற்றில் ஒன்றாவது இந்த நாடுகளைச் சேர்ந்தது அல்ல. மாறாக வளர்ச்சியடைந்த மேற்கு நாடுகளையும் வல்லரசுகளையும் சார்ந்தனவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய மட் டங்களிலும் பிரதான பத்திரிகைகள் அதிகாரமும் செல் வாக்கும் உள்ள சிறு குழுவினரின் கையிலுள்ளன. தொலைக் காட்சி, வானொலி என்பனவும் அரசு அல்லது ஆட்சியி லுள்ள கட்சியினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அதிகா ரம், அந்தஸ்து ஆகியவை உள்ள சிறு குழுவினர் பரந்த மக்கட் கூட்டத்தினருக்கு தகவல்கள், விழுமியங்கள், கருத் துக்கள், நடத்தைமுறைகள் ஆகியவற்றை தேர்வு செய்து அளிக்கின்றனர் என்பதும் இத்தேர்வு அக்குழுவினரின் கருத்துநிலையைப் பொறுத்து அமைகின்றது என்பதும் இதனாற் பெறப்படுகின்றன. இவ்வகையில் பெண்கள் பற்றி வெகுஜனத் தொடர்புச் சாதனங்களில் வெளியாகும் தகவல்களும் பிம்பங்களும் கருத்து நிலைகளும்கூட அதி காரத்தில் உள்ள சிறு (ஆண்) குழுவினரால் கட்டுப்படுத் தப்படுகின்றன.
பெண்களின் முன்னேற்றம். அபிவிருத்தி ஆகியவை குறித்து அக்கறையுடன் திட்டங்களையும் செயற்பாடுகளை யும் வகுக்கும் சர்வதேச ஸ்தாபனங்கள் உட்பட தொடர் பியல் ஆய்வாளர்கள் பலர் இன்றைய வெகுஜன தொடர் புச் சாதனங்களின் பால் ரீதியான பாரபட்ச நோக்கு (Sexism) பற்றிக் குற்றம் சாட்டியுள்ளனர். ஆண்களில் தங்கியிருப்போராகவும், அவர்களுக்கு ஆதரவான இரண் டாம் தரப் பாத்திரங்களாகவுமே பெண்களை இச்சாதனங் கள் சித்திரிப்பதை இவர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். (Gallahar M. 1 981 , Bhasin. K: 1984).

Page 44
பெண் நிலைச் சிந்தனைகள் | 74
தொடர்புச் சாதனங்களில் வெளிப்படும் இப்பாரபட்ச நோக்கானது தொடர்பியல் பற்றிய புதிய ஆய்வுகளுக்குப் பெண்நிலைவாதிகளை இட்டுச்சென்றது. பெண்நிலைவா தத்தின் அடிப்படை கருதுகோள்கள் சிலவற்றால் இந்த ஆய்வுகள் வழிநடத்தப்பட்டன. கலாசாரம், பண்பாடு, கருத்துநிலை ஆகியவற்றின் உருவாக்கம், மறு உருவாக் கம் ஆகியவை பற்றிய ஆய்வுகளும் இத்துடன் இணைந்தன. குறிப்பாக அன்ரானியோ கிராம்ஸ்கி, றேமன்ட் வில்லி யம்ஸ், அல்துரஸர் போன்றோரது’கருத்துநிலை பற்றிய ஆய்வுகளைப் பெண்நிலைவாத நோக்கில் தொடர்பியலை ஆராய்ந்தோர் பயன்படுத்திப் புதிய ஆய்வு பரப்புகளைத் தோற்றுவித்தனர்.
தொடர்புச் சாதனங்களின் உள்ளடக்கம் பற்றிய ஆய்வு (Content analysis) இவற்றில் முக்கியமானதொன்றாகும். தொடர்புச் சாதனங்களில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறான சமூக பிம்பத் தையே உருவாக்கிக் காட்டுகின்றன. தொழில் அம்சங்கள், நடத்தைக் கோலங்கள், ஆளுமைப் போக்குகள் என்பன தொடர்பாக இந்த வேறுபாடுகளை இவை அழுத்திக் காட்டுகின்றன.
இது சர்வதேச ரீதியில் காணக்கூடிய ஒரு அம்சமாகும். குடும்பம், வீடு, குழந்தை வளர்ப்பு, பொழுதுபோக்கு அம் சங்கள் ஆகியவற்றுடன் மாத்திரம் பெண்களைத் தொடர்பு படுத்திச் சித்தரிக்கின்றன. செய்திகளில் மிகக் குறைந் தளவு காட்டப்படும் பெண்கள் கூட, முக்கியத்துவம் வாய்ந்த ஆண்களின் துணைப் பாத்திரங்களாக (உ-ம் ஜனா திபதியின் மனைவி, செயலாளர், பூச்செண்டு அளித்து வர வேற்கும் பெண்மணி) பாரம்பரிய பாத்திரங்களிலேயே பெரு மளவு காட்டப்படுகின்றன. தொடர் ஊடகங்களின் இத் தகைய சித்ரிப்புக்கள் ஆண் பெண்ணுக்கிடையிலான அச மத்துவ உறவுகளையும், நிலைமைகளையும் பேணுவ்திலும் அவற்றிற்குத் தொடர்ந்து ஏற்புடமை அளிப்பதிலும் அதிக

75 / சித்திரலேகா மெளனகுரு
பங்கு வகிக்கின்றன. ஆணைப் பிரதானமாகவும் பெண்ணை ஆணிலிருந்து வேறுபட்ட "வேற்றாள்" (The other)? ஆக வும் கருதும் நோக்கு நிலையே மேற்கூறிய எல்லைப்படுத் தப்பட்ட பாத்திரங்களில் பெண்ணைக் கட்டுப்படுத்துவ தற்குக் காரணமாகும் எனக் கருதப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் உணவு விவசாயப் பிரிவு (FAO) பெண்களும் விவசாயமும்’ என்ற தலைப் பில் ஒரு அறிக்கையை (1985) வெளியிட்டுள்ளது. உலக உணவு உற்பத்தியில் பெண்களின் பெரும் பங்கு பற்றி அது பின்வருமாறு குறிப்பிடுகிறது.
'உலகத்தின் மொத்த உழைப்பு நேரத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெண்களுடையதாகும். கிராமப் பகுதி களைச் சார்ந்த பெண்கள் உலகின் மொத்த உணவில் சுமார் ஐம்பது வீதத்தை உற்பத்தி செய்கின்றனர்.
*நடுதல், களையெடுத்தல், பசளையிடல், அறுவடை போன்ற பயிர்ச்செய்கையின் சகல அம்சங்களிலும் அவர் கள் பங்கு கொள்கின்றனர். சில பிரதேசங்களில் அவர்கள் விளைவிப்பவற்றை அவர்களே சந்தைப்படுத்தவும் செய் கின்றனர். அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகள் சில வற்றின் கிராமப் புறங்களில் சுமார் அரைவாசிக் குடும்பங் களின் பிரதான உழைப்பாளிகளாகவும் தலைவர்களாக வும் பெண்கள் விளங்குகின்றனர்."
ஆனால் இத்தகைய சமூக யதார்த்தம் வெகுஜனத் தொடர்புச் சாதனங்களின் நிகழ்ச்சிகளிற் பிரதிபலிப்ப தில்லை. 'இத்தகைய சமூக யதார்த்தம் எமது வெகுஜனத் தொடர்பு சாதனங்களில் இடம்பெறுவதில்லை என்று கூறு வதற்குப் பெரிய ஆராய்ச்சி அவசியமில்லை. வெகுஜனத் தொடர்பு ஊடகங்களில் சித்தரிக்கப்படுகின்ற பெரும்பா லான தொழிலாளரும் விவசாயிகளும் ஆண்களாகவே உள் ளனர். இத்தகைய பாரபட்சமும் திரிபுபட்ட நோக்கும்

Page 45
பெண் நிலைச் சிந்தனைகள் / 76
தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றின் பிரபல்யமான நிகழ்ச்சிகளில் மாத்திரமின்றி கல்வி நிகழ்ச்சிகளும் அபி 6(Digit G5IT Liflunt Lái) (Development Communication media) நிகழ்ச்சிகளிலும்கூட இடம்பெறுவது கவலைக்குரி u5'' (Bhasin. K: 1984: 10)
மார்கிரட் கலகார் (1981)" மட்டெலாற் (1982) ஆகி யோரது தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, திரைப் படம் முதலிய ஊடகங்கள் பற்றிய உள்ளடக்க ஆய்வுகள் சர்வதேச ரீதியில நடத்தப்பெற்றனவாகும். மார்கிரட் கலகாரின் ஆய்வு சோஷலிச நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளில் தொடர்வு ஊடகங்களின் நிகழ்ச்சிகள் பெண் களைச் சில குறிப்பிட்ட வகைப் பாத்திரங்களில் சித்தரிப் பதை எடுத்துக்காட்டியது.
இவ்வாறு ஏற்கனவே வரையறுக்கப்பட்ட இந்தப் பாத் திரச் சித்தரிப்புக்கள் இந்த நிகழ்ச்சிகளை நுகர்கின்ற தனிப் பட்ட பெண்களில் சமூகக் கருத்துக்களையும் தம்மைப் பற்றி அவர்கள் உருவாக்கும் பிம்பங்களையும் அவர்களது வாழ்க்கை இலட்சியங்களையும் வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. பெண்களது 'தாழ்த்தப்பட்ட" நிலையானது அவர்களது "இயற்கைப்பணி" என்ற கருத் துருவினால் திரையிட்டு மறைக்கப்பட்டுள்ளது. இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவனவாகவே வெகுஜனத் தொடர்ச்புச் சாதனங்கள் அமைகின்றன என இந்த உள் ளடக்க ஆய்வுகள் குற்றம்சாட்டுகின்றன.
urta a urteritaréyo வானொலி கேட்போரிலும் இவை ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய ஆய்வுகளும் மேற் கூறிய கருத்துக்களுக்ஆெதாரமாய் அமைகின்றன. (Fine M. G: 1981) பெரும்பாலும் அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்போரை ஆதாரமாய்க் கொண்டே இத்தகைய ஆய்வுகள் நடந்துள்ளன. (Bபerkel - Rothfuss with Mayes : 1981). மூன்றாம் உலக நாடுகளில் இத்த

77 y சித்திரலேகா மெளனகுரு
கைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் ஆகி யன எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி மிகக் குறைந்தளவு ஆய்வே நடைபெற்றுள்ளது. குறிப்பாக எண்பதாம் ஆண்டுகளிலிருந்தே இத்தகைய ஆய் வுப்போக்கு இந்நாடுகளில் ஆரம்பித்தது. இந்த ஆய்வு களின் பயனாக "மாற்றுத்தொடர்பியல்" (Atternative Communication) முறைகளைப் பெண்கள் ஸ்தாபனங்கள் கைக்கொள்ள வேண்டுமெனவும் இம்முயற்சிகள் மூலமே பெண் பற்றிய புதிய முற்போக்கான கருத்துக்களை முன் வைக்கலாம் எனவும் கருதப்பட்டது. இது குறித்துத் தனி நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் வெளியாகின. (Bhasiரி K. 8 Agarwal. B; 1984, Karl M. : 1981.
வெகுஜனத் தொடர்புச் சாதனங்களுக்கும் கருத்து நிலைக்குமிடையிலான பரஸ்பர தொடர்பு பற்றிக் கூறு வோர் கருத்துநிலை உருவாக்கத்தின் கட்டுப்பாடு பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டனர். பெண்களது பங்களிப்பும் பிரதி நிதித்துவமும் வெகுஜனத் தொடர்புச் சாதன நிறுவனங் களிற் போதிய அளவு இல்லாமை, அவர்கள் பற்றிய திரிபு படுத்தப்பட்ட பிம்பங்களையும் தகவல்களையும் இவை வெளியிடுவதற்குக் காரணமாய் உள்ளது என்பது மேற்படி ஆய்வுகளின் அடிப்படைக் கருதுகோளாய் அமைந்துள்ளது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் தொடர்பு ஊட கங்களின் உரிமையாளராகப் பெண்கள் எவரும் இல்லா திருக்கும் நிலைமையை இவை வெளிக்காட்டின. (Clement W - 1977) வானொலியிலும் பத்திரிகையிலும் நிகழ்ச்சி களைத் தயாரிப்பவர்களாக அதிக பெண்கள் இல்லாத நிலையானது மேற்குறிப்பிட்ட ஒருதலைப்பட்சமான சித் திரிப்புக்களுக்கு மேலும் வழிவகுக்கின்றது என்பதையும் இத்தகைய ஆய்வுகள் எடுத்துக்கூறின (Crean, S : 1987) கனடாவின் ஒலிபரப்புத் துறையின் முகாமைத்துவப் பிரி வில் 185% ஆன பெண்களே பணிபுரிகின்றனர் எனவும் இதனால் திட்டமிடல், தீர்மானமெடுத்தல் ஆகியவற்றில் குறைந்தளவு பங்கே அவர்களுக்கு உண்டு எனவும் மேற்

Page 46
பெண் நிலைச் சிந்தனைகள் / 78
படி ஆய்வு தெரிவிக்கின்றது. இது தவிர்க்கமுடியாதபடி கனேடிய வானொலி நிகழ்ச்சிகளின் உள்ளடக்கத்தைப் பாதிக்கிறது. (மேலது:19)
இலங்கையிலும் வெகுஜனத் தொடர்புச் சாதனங்களும் பெண்களும் குறித்துச் சில அறிமுக ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. இலங்கைப் பெண்கள் பணியகம், பல் கலைக்கழக பெண்கள் சம்மேளனம் ஆகியவை இவ்விடயம் தொடர்பான ஆய்வுகளையும் பயிற்சி முகாம்களையும் ஒழுங்குசெய்தன. பெண்கள் பணியகம் 1980ஆம் ஆண்டும் பல்கலைக்கழக பெண்கள் சம்மேளனம் 85ஆம் ஆண்டும் இத்தகைய கருத்தரங்குகளை நடாத்தின. இவை தவிர ஹேமா குணதிலக என்பவர் இவ்விடயம் சம்பந்தமான ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்கிறார். (Gunatilake Hema: 1979, 1980, 1985) இவரது ஒரு ஆய்வு, தொடர் புச் சாதன நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் எண் ணிக்கை பற்றிய கணக்கெடுப்பொன்றையும் உள்ளடக்கி யது. (குணதிலக. ஹேமா : 1985 242). இதன்படி"இந்த நிறுவனங்களில் உத்தியோகஸ்தர்களை தெரிவுசெய்வதில் ஆண், பெண் என்ற பாகுபாடு பேணப்படாவிடினும், தீர் மானம் எடுக்கும் நிர்வாகத் துறைகளிலும் தொழிநுட்பத் துறைகளிலும் பெண்களின் பங்கு மிகக் குறைவாக உள் ளமை பெறப்படுகிறது. முகாமைத்துவப் பதவிகளைப் பொறுத்தவரை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பெண் கள் 20% ஆகவும், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் 17% ஆகவும் உள்ளனர். லேக்ஹவுஸ் பத்திரிகை ஸ்தாப னம், வீரகேசரி ஸ்தாபனம் ஆகியவற்றில் இத்தகைய பத விகளில் ஒரு பெண்கூட இல்லாமை குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர், தயாரிப்பாளர் பதவிகளில் பெண்கள் மிகச் சிறுபான்மையினராகவே உள்ளனர். பெண்நிலைவாதக் கருத்துடைய பெண்களை அதிகளவு இப்பதவிகளில் அமர்த் துவதின் மூலம் வெகுஜன தொடர்புச்சாதன நிகழ்ச்சிகளில் வெளிப்படும் பெண் பற்றிய பாரபட்ச உள்ளடக்கத்தி னைச் சிறிதளவாவது மாற்றுதல் முடியும் என இந்த ஆய்வு கள் வாதிடுகின்றன.

79 / சித்திரலேகா மெளனகுரு
தமிழில் தொடர்பியல் ஆய்வுத் துறை இன்னும் குறை
வளர்ச்சி நிலையிலேயே உள்ளது. எனினும் தொடர்பியல் சாதனங்கள் வெகு வேகமாக வளர்ச்சியடைந்து வருகின் றன. இது சர்வதேச வளர்ச்சியுடன் ஒட்டியதே. இந்நிலை யில் தமிழில் முயலப்படவேண்டிய தொடர்பியல் ஆய்வு கள் இதுவரை மேலே கடுத்தப்பட்டி , ஆழ்வுப் புேரக்கு
களையும் மனங்கொள்ளுதல் அவசியமாகும்:
:*.7 7.7, tey
அடிக்குறிப்புகள்
1.
அன்ரானியோ கிராம்ஸ்கி அ றி மு கப் ப்டுத்திய
மேலாண்மை (Haqemony), லூயிஸ் அல் துரஸர் முன் வைத்த கருத்துநிலை அரசுயந்திரம் (ideological State Appratus) போன்ற கருத்தாக்கங்களின் பின்னணியில் சமூகத்தில் பெண்களின் தாழ்த்தப்பட்ட நிலையைத் தொடர்ந்து பேணுவதில் தொடர்புச் சாதனங்கள் வலிமை மிகு கருவிகளாகச் செயற்படுகின்றன என
இவ் ஆாய்வுகள் கூறுகின்றன. மேற்படி கருத்தாக்கங்
கள் பற்றிய விரிவான விளக்கத்திற்கு பார்க்கவும் - Althusser. L: 1971: Gramsci A; 1971.
SF34 tort øst i Leo.. Nuri (Simone de Beauvoir) Gr657 so
பிரெஞ்சு பெண் எழுத்தாளர் முதன்முதல் “வேற்றாள்"
(The Other) என்ற இந்தக் கருத்தாக்கத்தை அறி முகப்படுத்தினார். பெண்களின் தாழ்த்தப்பட்ட நிலை குறித்த இவரது ஆய்வானது, ஆண்கள், பெண்களைத் தம்மிலிருந்து அடிப்படையில் வேறானவர்களாகக் கருதுகின்றனர் என்ற எடுகோளின் அடிப்படையில் அமைந்தது. இதனாலேயே அவரது பிரபலமான நூலி னது தலைப்பு இரண்டாவது பால் - (Second Sex) எனவும் அமைந்தது. சிமோன், டீ. பூவர் வேற்றாள் என்ற இக்கருத்தாக்கத்தைப் பின்வருமாறு சுருக்கிக் கூறினார். 'முழுநிறைவான மனித வகை ஒன்று இருக்

Page 47
பெண் நிலைச் சிந்தனைகள் / 80
கிறது. அதுதான் ஆண் இனம். இவ்வகையில் மானு படம் என்பது ஆண்தான். மனிதன் (ஆண்) பெண்ணை அவளாக அன்றி அவனுக்குச் சார்பு நிலைப்படுத்தியே வரையறுக்கிறான். அவள் ஒரு சுயாதீனமான மனித ஜீவியாகக் கருதப்படவில்லை. ஆண் தான் முழுமுதல் (Subject). அவன்தான் முழுநிறைவான வன். அவள் 9g 9õ6vTsait - "Go õpitcit" (de Beauvoir. Simone (1953) The Secound Sex Newyork) gg56ðir eyp av ub L90JG597 Guorrysolu96ù Le Deuxieme Sex était p 5606ult பில் வெளியானது.
உசாத்துணை நூல்கள்
1.
Althussar. L. (1971 ) Lenin and Philosophy and other Essays, London.
Bhasin. K. and Agarwal B. (1984) Women, Development and media: Arnalysis and Alterna - tives, Delhi.
Bjerke Rothfuss with Mayes S. (1981) Soap Opera Veiwing: The Cultivation effect Journal of Communication, 3 l:3.
Clement. W. 1975) The Canadian Corperate Elite, Toronto.
Crean. S. (1987) Piecing the Picture together;
woman and the Media in Canada' Canadian woman Studies, 8: .
Gallahar: M. (1981) Unequal Opportunitis: The case of woman and the media; Unesco.
Gramscia A. (1971) Selections for the Prison note books of Antonia Gramsci, New York.

1 O.
11.
12.
81 / சித்திரலேகா மெளனகுரு
Gunatilake. H. (1981) '''Women in creative Arts and Mass media' Status of woman, Univesity of Colombo.
(1979) 'The depiction of woman in the Media: Myth and Reality' seminar on women and media. Asia Pacibic institute for Brodcasting Development Kualalampur.
(1985) மகளிரும் தொடர்பு ஊடகங்களும் பெண் களுக்கான ஐக்கிய நாடுகள் தசாப்தம்: இலங்கையினுள் பெண்களின் முன்னேற்றமும் சாதனைகளும், பெண் ஆராட்சி நிலையம், கொழும்பு. Fine, M. G. (1981) o Soap opera conversations: The Talk that binds' Journal of Communications 3:3.
Matte lart M. 1982 Women and the Cultural i ndustry, Media culture and Society, 4.

Page 48
அபிவிருத்தியும் பெண்களும் - ஒரு மீள்பார்வை
அபிவிருத்தியில் பெண்கள், அபிவிருத்தியும் பெண்களும், பெண்களின் அபிவிருத்தி என வெவ்வேறுபட்ட அர்த்தச்சாயை களுடைய தொடர்கள், இன்று எம் மத்தியில் பரவலாக வழங்கி வருகின்றன; அபிவிருத்தியில் பெண்களை ஒன்றிணைக்கவேண் டும் என்ற கருத்தாக்கத்துடன் பெண்களுக்கான வெவ் வேறு நிகழ்ச்சித் திட்டங்கள், தேசிய ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் உருவாக்கப்படுகின்றன.
இலங்கையின் வட - கிழக் குப் பகுதிகளில், கடந்த சுமார்

83 / சித்திரலேகா மெளனகுரு
பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் போர்ச் சம்பவங் கள், மக்களது வாழ்க்கையில் ஏற்படுத்திய அழிவுகளைச் சீராக்க, புன ர மை ப் பு, புனர் நிர்மாண வேலைகள் அரசாங்கத்தினாலும் அரசு சார்பற்ற நிறுவனங்களாலும் மேற்கொள்ளப்படுகின்றன. முன்னெப்போதும் இல்லாத வாறு பெண்களுக்கான திட்டங்கள், பெண்களுக்கு வருமா னம் அளிக்கும் தொழில் வாய்ப்புகள் என்பன குறித்துப் பேசப்படுகிறது. இத்தகைய பின்னணியிலேயே, பெண் களும் அபிவிருத்தியும் என்ற தொடர் இன்று எம் மத்தி யில் பிரபலம் அடைந்து வருகிறது. (கடந்த பத்துப் பதி னைந்து ஆண்டுகளாக, பல மூன்றாம் உலகநாடுகளில் அரச,
அரசசார்பற்ற நிறுவனங்கள் பெண்களும் அபிவிருத்தியும் பற்றி அதிகம் பேசின என்பது, இங்கு குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் அபிவிருத்தியும் பெண்களும், அல்லது அபிவிருத்தியில் பெண்கள் என்ற இப்பொதுக் கருத்தாக் கத் தினை நாம் நோக்க வேண் டி யு ள் ள து. இதற்கு " அபிவிருத்தி என்ற கருத்தாக்கம் பற்றிய சில பொதுக் குறிப்புக்களைக் கூறுதல் வேண்டும்.
" அபிவிருத்தி" என்ற கருத்தாக்கம் அறிமுகப்படுத்தப் பட்டு, அது பொருளாதார சமூகக் கொள்கைகளில் பிரயோகிக்கப்படத் தொடங்கியும், மூன்று தசாப்தங்கள் ஆகிவிட்டன. முதலாவது அபிவிருத்தித் தசாப்தத்தில் உலகின் மொத்த சர்வதேசிய உற்பத்தி ஒரு மில்லியன் டொலரால் அதிகரித்தது. அதில் 80% பங்கினை கைத் தொழில் மயமாகிய நாடுகள் பெற்றுக்கொண்டன. அறுப தாம் ஆண்டுகளின் இறுதியில், வளர்முக நாடுகள் பல வற்றின் மொத்த தேசிய உற்பத்தி 5% ஆல் அதிகரித் திருந்தது. எனினும் அதேசமயம் வேலையின்மை, சனத் தொகைப் பெருக்கம், மக்களது வருமானத்திற்கிடையே வேறுபாடுகள் என்பன அதிகரித்தன. எனவே மொத்தத் தேசிய உற்பத்தி அதிகரித்தும் கூட மக்களது அடிப் படைத் தேவைகள் பூரணப்படுத்தப்படவில்லை என்பதும்

Page 49
பெண் நிலைச் சிந்தனைகள் / 84
அது பெரிய அளவு பிரச்சனையாக உள்ளது என்பதும் தெரியவந்தது. (உண்மையில், பாரம்பரிய "அபிவிருத்தி வகை மாதிரி" என்பது சர்வதேச சந்தை முறையில் வளர் முக நாடுகளை ஒன்றிணைப்பதையே கருதியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது)
இதனால் அபிவிருத்தித் திட்டமிடல் நிபு ன ர் க ள் இன்னோர், கவர்ச்சிகரமான அபிவிருத்திக் கொள்கையை உ ரு வாக்க வேண்டியிருந்தது. "அடிப்படை மனிதத் தேவை", "வறியவர்களிலும் வறியவரது தேவைகளைப் பூர்த்திசெய்தல்", சமத்துவத்துடனான வளர்ச்சி" போன்ற சுலோகங்களைக் கொண்ட புதிய அபிவிருத்திக் கருத்தாக் கம் ஒன்று தோற்றம் பெற்றது.
வளர்ந்துவரும் நாடுகளில் பல முற்போக்கான இயக் கங்களும் ஸ்தாபனங்களும் மேற்கூறிய அபிவிருத்திக் கோட் பாடு குறித்து, விமர்சனங்களை முன்வைத்தன. உலகின் மூலவளங்களில் கணிசமான அளவு பங்கு, தாராள வணிக முறைகள், சர்வதேசிய மட்டத்தில் தீர்மானம் மேற் கொள்ளலில் அதிக உரிமை, ஆகியவற்றை அவை கோரின. ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளோ, தமது பொருளா தார நடைமுறைகளில் எத்தகைய மாற்றத்தையும் ஏற் படுத்துவது பற்றிய தேவையை ஏற்றுக் கொள்ளாமல் வளர்முக நாடுகளின் அபிவிருத்தி பற்றிப்பேசின.
1960களிலும் 70களிலும் 'அபிவிருத்தி தொடர்பான நிகழ்ச்சிகளிலும், திட்டங்களிலும் பங்குபற்றிய பெண்கள், பொதுவாகப் பெண்களுக்குரிய பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கினர். அபிவிருத்தி பற்றிய அறிவுரீதியான கருத் துப்பரிமாறல்களின் போது, இவர்கள் ஒதுக்கப்பட்டனர். 1970களின் ஆரம்பத்தில் பல ஐரோப்பிய, வட அமெரிக்கப் பெண்கள் "அபிவிருத்தியில் பெண்களை ஒன்றிணைத்தல்" என்ற புதிய கருத்தாக்கத்தை முன்வைத்தனர். உண்மை யில் இதுவரை கால அபிவிருத்திக் கோட்பாடு பெண்கள்

85 f சித்திரலேகா மெளனகுரு
குறித்துக் கவனமெடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம் öFTLLş-Germri.
1975 ஆம் ஆண்டு பிரகடனம் செய்யப்பட்ட சர்வ தேசப் பெண்கள் தசாப்தத்துடன், புதிய நிலை தோற்றம் பெற்றது. பெண்களது பொருளாதாரப் பங்கேற்றல் குறித்து சர்வதேசிய, தேசிய மட்டங்களில் கதைக்கப்பட் டது. கல்வி, தொழிற்பயிற்சி ஆகியன அபிவிருத்திச் செயல்முறையில் பெண்களை ஒன்றிணைப்பதற்கான முன் நிபந்தனைகளாகக் கருதப்பட்டன: தீர்மானம் செய்யும் மட்டங்களில் பெண் களை ச் சேர்த்துக் கொள்ளுதல், பெண்கள் தொடர்பான நிகழ்ச்சித்திட்டங்களுக்கு நிதி அளித்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கருதப் . لقي مساسا لا
இலங்கையில் கடந்த பத்தாண்டுகளில், மேற்கூறிய கருத்துகள் பிரபலம் பெற்றன. 1978 ஆம் ஆண்டு பெண் கள் பணியகம் 83 ஆம் ஆண்டு பெண்கள் விவகார அமைச்சு நிறுவப்பட்டமை என்பன, இதன் அரசுமட்டத் திலான வெளிப்பாடுகளாகும்.
பெண்கள் தொடர்பான அபிவிருத்தி என்பது பெண் களுக்குத் தொழிற்திறன் அளித்தல், தொழில் வாய்ப்புகள் அளித்தல் ஆகியனவாகவே நோக்கப்படுகிறது. கோழி வ ள ர் ப் பிலிருந்து விவசாய வேலைகள் வரை பயிற்சி அளிப்பதாகவும், பெண்கள் வருமானம் ஈட்டத்தக்க தொழில்களில் ஈடுபட உதவி புரிவதாகவுமே அபிவிருத்தி நிறுவனங்களின் பணிகள் அமைகின்றன. சமூக த் தி ல் பெண்ணுடைய இரண்டாம் பட்ச நிலமைபற்றிய ஆழ மான விளக்கமோ, அதை மாற்றுவதற்கான அரசியல் நோக்கோ அபிவிருத்தித் திட்டமிடுவோரிடையே இல்லை.
இன்று பெண்களுக்காக ஆரம்பிக்கப்படும் திட்டங் களை எடுத்து நோக்கும் போது தையல், பன்னவேலை,

Page 50
பெண் நிலைச் சிந்தனைகள் / 86
கோழி வளர்ப்பு போன்ற பாரம்பரிய வேலைகளை உள் ளடக்கியனவாகவே அவை அமைகின்றன. இத்தகைய பாரம்பரிய வேலைப் பயிற்சிகள் நவீன சமூகத்தின் தேவை களுக்கு எவ்வளவு தூரம் ஈடு கொடுக்க வ ல் ல வை என்றோ, பெண்களது முன்னேற்றத்திற்கு இவை எவ் வாறு உதவும் என்றோ இத்திட்டங்களை அமைப்போர் ஆராய்வதில்லை.
பெண்கள் தமக்கு சுயவருமானம் தரும் தொழில் களில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது. ஆனால் பெண்ணு டைய சுயாதீனமான வளர்ச்சிக்கும் இத்திட்டங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்தே, நாம் க வன ம் செலுத்தல் வேண்டும். இத்தகைய திட்டங்கள் எவ்வளவு வருமானத்தை ஈட்டவல்லன? இதனால் பெண்கள் எத் தகைய நன்மை பெறுகின்றனர்.? இதனால் பெண்களது இரண்டாந்தர நிலையில் எத்தகைய மாற்றம் ஏற்பட்டுள் ளது? இவை யாவும் பெண்ணை எவ்வளவு தூரம் சுயாதீ னமானவள் ஆக்கும்? என்பன அபிவிருத்தித் திட்டங்க ளைக் கைக்கொள்ள முனையும்போது நாம் எதிர்கொள்ள வேண்டிய வினாக்களாகும்.
இவ்விடத்தில் இன்னைான்றையும் கூறவேண்டும். வளர் மூக நாடுகளில் பெரும்பாலான பெண்கள் (ஆண்களும் கூட) கிராமங்களில் வசிப்பவர்கள். உலகில் 60% - 90% விவசாயத் தொழிலாளர் பெண்களாக உள்ளனர். உல கின் மொத்த உணவு உற்பத்தியில் 44% த்தினை பெண் கள் உற்பத்தி செய்கின்றனர். இவ்வாறு உற்பத்தியில் பங்குபற்றியும்கூட, பெண்கள் ஏன் தொடர்ந்தும் சமூகத் தில் தாழ்த்தப்பட்ட நிலையிலேயே உள்ளனர்?
அபிவிருத்தியில் பெண்களை ஒன்றிணைக்கவேண்டும் என்று கருதுவோர், வர்க்க / பால் அசமத்துவம் நிலவும் சமூக அமைப்புப் பற்றி, எத்தகைய வினாச் சளையும் எழுப்புவதில்லை. இத்தகைய அசமத்துவ சமூகத்தில்,

87 / சித்திரலேகா மெளனகுரு
அமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தாமல் பெண் களின் அபிவிருத்தி சாத்தியமன்று என்பதை உணரவும் இல்லை. இந்நிலையில் பாரம்பரியமான 'அபிவிருத்திக்" Gast Luitgagisth (Mainstream Derelopment Theory) ஆண் முதன்மை நோக்கின் அடிப்படையிலேயே நெறிப் படுத்தப்பட்டுள்ளன. என்பதை, உணர்ந்து கொள்ள வேண்டும். தந்தை வழிச் சமூக அமைப்பு என்ற சட்டத் திற்குள் மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும் திட்டமும் பெண்களுக்கு முழு மை யான அபிவிருத்தியை வழங்க (Մ)ւգԱյITֆl.
எனவே அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபாடுள்ள பெண்களும், பெண்களின் முன்னேற்றத்தில் ஈடுபாடுள்ள ஆண்களும், நிறுவனங்களும் மேற்கூறிய "அபிவிருத்திக் குறைபாடுகள்’ குறித்து விழிப்பாக இருத்தல் வேண்டும். பெண்களது இரண்டாம் பட்ச, தாழ்த்தப்பட்ட நிலையை முற்றாக நீக்கவல்ல திட்வங்களிலும் செயற்பாடுகளிலும் ஈடுபடல் வேண்டும்.

Page 51
மீனாட்சியம்மாள் நடேசையர்
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் அர சியல் சமூக, தொழிற்சங்க இயக் கங்களில் பெண்கள் பங்களித் தமை பற்றிய தகவல்கள் சமீப காலமாகப் பெண் ஆய்வாளர் களாலும் பெண்கள் இயக்கங் களாலும் சிரத்தையுடன் எடுத் துக் காட்டப்பட்டும் அழுத்திக் கூறப்பட்டும் வருகின்றன. இந்த நூற்றாண்டின் மூன்றாம் தசாப் தத்தில் தோன்றிய பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தில் அங்கம் வகித்த பெண்மணிகள், ஏகாதி பத்திய எதிர்ப்பு இயக்கமான *சூரியமல்" இயக்கத்தில் முன்ன

89 / சித்திரலேகா மெளனகுரு
ணியில் நின்ற பெண்கள் தொழிற்சங்கங்களில் அங்கம் வகித்தோர், சமூக சேவையில் ஈடுபட்டோர், கல்வியாளர் போன்றோர் பற்றிய தகவல்கள் தற்போது வரலாற்றின் மேல்மட்டத்திற்கு வந்துள்ளன. கல்விகற்ற, சேவை மனப் பான்மை கொண்ட மத்தியதர வர்க்கத்துப் பெண்கள் பற்றிய விபரங்கள் மாத்திரமன்றி பொன்கினஹாமி, மைமூன் போன்ற தொழிலாள வர்க்கப் பெண்கள் பற்றிய விபரங்களும் பெண்நிலை வாத வரலாற்றாசிரியர்களால் வெளிக்கொணரப்படடுள்ளன.
மலைநாட்டுத் தொழிற்சங்கப் பணி களி ல் பங்கு கொண்டவரும் எழுத்தாளருமாகிய மீனாட்சியம்மாள் நடே சையர் இவ்வாறு வரலாற்றில் இடம்பெறுகின்ற பெண் களில் ஒருவராவார். மலையகத்தில் முதலாவது தொழிற் சங்கத்தைத் தோற்றுவித்தவராகிய கோ. நடேசையர் அவர் களது மனைவியான மீனாட்சியம்மாள், கணவருடன் சேர்ந்து தொழிற்சங்கத்தினை உருவாக்குவதிலும் தொழி லாளரிடை விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தீவிரமாக ஈடுபட்டவர். இது பற்றிய தகவல்கள் சில தற்போது கிடைத்துள்ளன. "இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை’ என்ற தலைப்பில் மீனாட்சியம்மாள் எழுதிய பாடல்களின் தொகுப்பொன்றும் கிடைத்துள்ளது. இவை மீனாட்சியம்மாளது அரசியல் தொழிற்சங்க ஈடுபாட்டை எடுத்துக் காட்டுவனவாகும்.
மீனாட்சியம்மாளது பணி பற்றிக் கூறமுன்னர், வர லாற்றியலும் பெண்களும் பற்றிச் சில முக்கியமான விட யங்களைச் சுட்டுதல் இவ்விடத்தில் பொருத்தமாக அமை யும் என எண்ணுகிறேன்.
இதுவரை காலம் நிலைநிறுத்தப்பட்டுள்ள மரபு ரீதி யான வரலாற்றியலில் பெண்கள் மிகக் குறைந்தளவான அக்கறையையே பெற்றுள்ளனர். வ ர லா ற் றி ல் பெண் களைத்தேடுவோரை முதலில் எதிர் கொள்ளும் மிகப்

Page 52
பெண் நிலைச் சிந்தனைகள் / 90
பெரும் சவால் பெண்கள் பற்றிய செய்திகள் வெளிப் படையாக இல்லாதிருப்பதாகும். இந்நிலைமையானது வர லாறு பற்றிய விமர்சனத்திற்கு எம்மை இட்டுச் செல்கிறது. பாரம்பரியமான வரலாற்றியலானது அரசகுலம், ஆட்சி யாளர், இராணுவம், போர் ஆகியவற்றுக்கு முக்கியத் துவமளித்து இவை பற்றிய செய்திகள் அடங்கிய துறை களை வரலாற்றின் முக்கிய துறைகளாகக் கொள்வதாகும். இவை மாத்திரம்தானா வரலாறு? மனித இனத்தினது அனுபவங்களின் முழுத்தொகுதியும் ஏன் வரலாற்றில் பதி வாகவில்லை? அல்லது ஏன் இதை வரலாறு என்று கொள்ள வில்லை என்பன முக்கியமான வினாக்களாகும்.
மனித இனத்தின் வளர்ச்சி பற்றிய கதை பெரும் பாலும் ஆணினது குரலூடாகவே கூறப்பட்டு வந்துள்ளது. அத்துடன் ஆணையே வரலாற்றின் பிரதான இயக்கு சக்தி யாகக் கொள்வதால் பெண்ணுடைய சமூகப் பங்களிப்போ பாத்திரமோ இவ்வரலாற்றியலில் முக்கியம் பெறவில்லை.
வரலாற்றாசிரியர் பெண்கள் பற்றிய அதிகளவு அக் கறை காட்டாமைக்கோ, சமூக மாற்றத்தில் அவர்கள் பங்குபற்றினர் என்பதை ஏற்றுக் கொள்ளாமைக்கோ இன் னோர் காரணமும் உண்டு. அதாவது பெண்கள் , மாற்றத் றத்திற்குட்படாதவர்கள் என்ற சமூகக்கருத்து நிலையும், அதனால் சமூக வளர்ச்சியுடன் பெண்களைத் தொடர்பு படுத்தி நோக்காமையும் ஆகும். சுருங்கக்கூறின் வரலாற்றி யலில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஆண்நோக்கு நிலை வரலாற்றில் பெண்கள் இடம்பெறாமல் போனமைக்குரிய முக்கிய காரணமாகும்.
பெண்கள் வ ர லா ற் றை க் கட்டியெழுப்புவதற்குத் தேவையான போதுமான மூலாதாரங்கள் இல்லையெனவும் ஒரு குறை கூறப்படுகிறது. இது உண்மையன்று. இம்மூலா தாரங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதே உண்மையாகும். குறிப்பாகப் பாரம்பரியமான வரலாற்றி

91 / சித்திரலேகா மெளனகுரு
யல், உத்தியோகபூர்வமான எழுத்தாதாரங்களையே முக் கியமானவையாகக் கருதுகிறது. ஆனால் இந்த ஆதாரங் கள் அதிகாரத்திலுள்ள வர்க்கம், பால், இனம் ஆகியவை பற்றிய தகவல்களையே அதிகளவு உள்ளடக்கியிருக்கும் என்பதும் அதனால் இந்த ஆதாரங்கள் ஒருபக்கச் சார் புடையவை என்பதையும் எவரும் கருத்தில் கொள்வ தில்லை. எனவே இத்தகைய மூலதாரங்களில் பெண்களின் வரலாற்றுக்கான தகவல்களை முழுமையாகப் பெற முடி
Usorg .
பெண்களது வரலாற்றை கண்டுபிடிப்பதற்கு இன் னோர் வகையான சான்றுகளை நாம் நாடுதல் வேண்டும். தனிப்பட்டவர்களது நாளேடுகள், கடிதங்கள், கடைச் சிட்டைகள் போன்றவை அரிய குறிப்புகளை தரலாம், எழுத்தறிவு அதிகமற்ற பெண்கள் திரளினரைக் கொண்ட எமது சமூகங்கள் போன்றவற்றில் வாய்மொழி இலக்கி யங்கள், செவிவழிச் செய் தி க ள் பல தகவல்களைப் பொதிந்து வைத்திருக்கும் பொக்கிஷங்களாக உள்ளன. புனைவிலிருந்து உண்மையைப் பிரித்தறியும் விஞ்ஞானபூர்வ மான் முறையியல், இத்தகைய இலக்கியங்களிலிருந்து பல அரிய தகவல்களை பெறுவதற்கு வழிகாட்டலாம். எனவே பாரம்பரியமான மூலாதாரங்களை மாத்திரமன்றி ஏனைய வகையான மூலாதாரங்கள் பக்கம் கவனத்தைத் திருப்பல் வேண்டும்.
வரலாற்றியலில் புதிய திருப்பம்
வரலாற்றியலில் பெண்களைப் பற்றிய அக்கறையின் மையானது 1960களில் சற்றுக் குன்றத் தொடங்கியது. இக்காலம் தொடக்கம் உலகெங்கும் அலையெறிந்த பெண் நிலைவாதச் சிந்தனைகளும் பெண்நிலைவாத இயக்கங்களும் பல்வேறு ஆய்வுத்துறைக்ளிலும் முக்கிய துறைகளிலும் செல் வாக்குச்செலுத்தின. சமீபகாலங்களில் வரலாற்றில் பெண் கள் பற்றிய ஆர்வம் தளிர் விட்டமைக்கு இது முக்கிய கார ணமாக அமைந்தது. அத்துடன் வரலாற்றில் கிளைவிட்ட

Page 53
பெண் நிலைச் சிந்தனைகள் / 92
வேறு போக்குகளும் இதற்கு உதவின. இக்காலத்தில் சமூக வரலாறு என்னும் ஓர் துறையும் வளர்ச்சியடைந்தது. குறிப்பாக இங்கிலாந்தைச் சேர்ந்த மனிதாயத மார்க்ஸிஸ் ஆய்வாளர்களான ஈ. பி. தொம்சன், எரிக்கொப்ஸ்வேம். ரேமண்ட் வில்லியம்ஸ் முதலானோரின் கருத்துக்களால் சமூக வரலாறு விரிவடைந்தது. இவர்கள் வரலாற்றில் விவசாயிகள், தொழிலாளர்கள் மாணவர்கள் பெண்கள் போன்ற சமூகக் குழுவினரின் அனுபவங்களும் சேர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தினர். வரலாறு என் பது போர்த் தந்திரோபாயம், போர், ஆட்சித்திறன் ஆகியவற்றின் விபரத்தொகுப்பு மாத்திரமல்ல எனவும் இவர்கள் வற்புறுத்தினர். இத்துடன் வரலாற்றியல் சமூக வியல் மானுடவியல் ஆகியவற்றின் செல்வாக்கையும் பெற் றது. இவ்வாறு வெவ்வேறு ஆய்வுத்துறைகளின்செல்வாக்கும் தொழிலாளர், இளைஞர், பெண்கள் இயக்கங்களின் பாதிப் பும் வரலாற்றுக்கு விரிவான நோக்குநிலை அடிப்படை ஒன்றினை அளித்தது. இவ்வாறு கடந்த மூன்று தசாப் தங்களாக வளரத்தொடங்கிய சமூக வரலாறானது பெண் கள் பற்றிய ஆய்வியலில் எழும் பல்வேறு வினாக்களுக்கு கல்விசார் ஏற்புடைமையை அளித்தது.
பெண்களது வரலாற்றில் முக்கியத்துவம்
பெண்களது குறித்த சமூகத்தினது பாரம்பரியமான கருத்தோட்டத்தை மாற்றும் பணியில் பெண்கள் பற்றிய வரலாற்றாய்வு முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த காலத் தில் சமூக வளர்ச்சிக்குப் பெண்கள் எவ்வாறு பங்களித்த னர். அதன் முக்கியத்துவம் யாது என்பது பற்றிய தகவல் கள் இக்கருத்தோட்டத்தை மாற்றுவதில் முக்கியமானவை யாகும். எனினும் இது இலகுவானதன்று. ஏனைய வர லாற்று ஆய்வுகள் போலவே இதுவும் மெதுவாகவே நடை பெறுகின்றது. மூலாதாரங்களைப் பெறுவதிலுள்ள சிரமம், ஆராய்ச்சிக்கு அவசியமான நிதானம் ஆகியவற்றால் இது மேலும் மெதுவாகவே நடைபெறுகிறது. இத்துடன் பெண் கள் வரலாற்றுக்கு ஆதாரமான மூலங்கள் பாரம்பரிய

93 / சித்திரலேகா மெளனகுரு
மூலங்களிலிருந்து வேறுபட்டவை. அவை அட்டவனைப் படுத்தப்படாதவை, பிரசுரிக்கப்படாதவை; குறிப்பாக செவிவழி மரபுச் செய்திகள், கதைகள், நாட்டார்பாடல் கள் என்பவற்றை வரலாற்றாய்வாளர்கள் தேடிப்பெற வேண்டியுள்ளது. தனிப்பட்டவர்களின் நூல்நிலையங்களுக் குள் புழுதிபடிந்துபோன கையெழுத்துப் பிரதிகளைப் படிக்கவேண்டியுள்ளது. மேலும் நேர்முகப் பேட்டிகளிலும் ஈடுபட வேண்டியுள்ளது. இவை பொதுவாக நீண்ட நேர உரையாடல்களாக அமைவன. இந்நிலையில் ஆராய்ச்சி யாளரே சான்றுகளைத் தேடித் தொகுத்தல், அவற்றை வியாக்கியானம் செய்தல் ஆகிய சகலபணிகளையும் ஒன் றாக ஆற்றவேண்டியுள்ளது. இது பெண்கள் வரலாற்றைக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் ஆய்வாளர்களை எதிர் நோக் கும் மிகப்பெரும் பிரச்சனையாகவும் உள்ளது.
மீனாட்சியம்மாள் பற்றிய விபரங்களை இலங்கைத் தொழிலாளரின் வரலாற்றாய்வூடாகவே அறிய முடிந்தது. குறிப்பாக மலைநாட்டுத் தொழிற்சங்க வரலாறு பற்றிய ஆய்வுகளினூடாகவே இவர் பற்றிய தகவல்களும் மேற் கிளம்பின. குறிப்பாக கலாநிதி குமாரி ஜயவர்த்தன அவர் களது இலங்கைத் தொழிற்சங்க ஆய்வுத் தேட்டங்களின் போது மீனாட்சியம்மாள் பற்றிய சில தகவல்களும் அவர் எழுதிய பாடல்களின் தொகுப்போன்றும் கிடைக் கப் பெற்றன. ጎ
குமாரி ஜயவர்த்தன, றேச்சல்கூரியன் போன்ற பெண் ஆய்வாளர்கள் தாம் மலையகப் பெண்களது வரலாற்றுப் பங்களிப்பு தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தினர் என்பது இங்கு முக்கியமாகக் குறிப்பிடத்தக்கதாகும்.
இவை யாவற்றையும் தொகுத் து நோக்கும்போது மீனாட்சியம்மாளது சமூக அரசியல் ஈடுபாடு, செயற்பாடு கள் பற்றிய ஒரு சித்திரத்தை உருவகிக்க முடிகிறது.
மீனாட்சியம்மாள் மலையகத்தின் முதலாவது தொழிற்

Page 54
பெண் நிலைச் சிந்தனைகள் / 94
சங்கத்தை 1931ம் ஆண்டு நிறுவிய நடேசையர் அவர் களது மனைவியார் ஆவார். 1915ல் முதன் முதலில் இலங்கை வந்த போதிலும் 1920ம் ஆண் டி லி ரு ந் தே தொடர்ச்சியாக இங்கு வாழவும் தமது தொழிற்சங்கப் பணிகளில் தீவிரமாக ஈடுபடவும் ஆரம்பித்தார். ஆரம் பத்தில் ஏ. ஈ. குணசிங்கவுடன் சேர்ந்து இயங்கிய நடே சைய்யர் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து தனியேமலையகத் தொழிலாளரை அமைப்பாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டார், ஹட்டனில் இதற்காக ஓர் அலு வலகத்தை அமைத்து செயற்படத் தொடங்கிய காலத் திலிருந்துதான் மீனாட்சியம்மாளும் அவருடன் சேர்ந்து பணியாற்றியமையை அறிய முடிகிறது. மீனாட்சியம்மாள் நடேசையரது சொந்த ஊரான தஞ்சாவூரைச் சேர்ந்தவர். அத்துடன் அவரது உறவினருமாவர். நடேசையர் 1920ல் இலங்கை வத்ததன் பின்னரே மீனாட்சியம்மாள் இங்கு வந்து மலையகத்தில் வாழத் தொடங்கினார்.
இச்காலத்தில் மலை நாட்டுத் தொழிலாளர் நிலைமை மிக மோசமானதாய் அமைந்திருந்தது. அரை அடிமை நிலையில் தொழிலாளர் வாழ்ந்தனர். கோட்டங்களில் கங் காணி முறை போன்றவை அவர்கள் அதிகளவில் சுரண்டப் படுவதற்கும் ஒடுக்கப்படுவதற்கும் காரணமாகின. பெண் தொழிலாளர் நிலைமை ஏனைய தொழிலாளர் நிலை மையைவிட மோசமானதாய் காணப்பட்டது. ஒ டு க் கு முறைச் சட்டங்களுக்கு தமது எதிர்ப்பை எந்த விதத்திலா வது தெரிவிப்போருக்கு தண்டனை வழங்கப்பட்டன. இத் தொடர்பில் பல பெண்களும் கூடக் கடூழிய சிறைத் தண்டனை பெற்றனர்.
இத்தகைய நிலைமைகளின் மத்தியிலேயே சத்தியா கீஸ் வர ஐயர் நடேசையர் ஆகியோர் மலைநாட்டுத் தொழி லாளரை அமைப்பாக்கும் பணியில் ஈடுபட்டனர். நடேசைய ரால் பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டன. தனது பிரசுர வேலைகளுக்காக ஹட்டனில் கணேஷ் பிரஸ் என்னும் ஓர்

95 / சித்திரலேகா மெளனகுரு
அச்சகத்தையும் நிறுவியிருந்தார். இவ்விருவருடனும் அவர் களது மனைவியார் இருவரும் சேர்ந்து பணிபுரிந்தனர். வைத்தியராகவிருந்த தி ரு ம தி சத்தியவாகீஸ்வர ஐயர் தோட்டத்தொழிலாளர்களிடையே சேவை புரிந்தார். மீனாட்சியம்மாள் பத்திரிகைத் துறையில் ஈடுபட்டது மாத்திரமன்றி தொழிலாளரிடையே விழிப்புணர்வை ஏற் படுத்துவதில் மிகுந்த தீவிரமாக ஈடுபட்டார். சிறந்த பாட கியாகத் திகழ்ந்த மீனாட்சியம்மாளின் பாடல்களைக் கேட் பதற்காக மக்கள், கூட்டங்களுக்குப் பெருந்திரளாகச் சமூக மளித்தனர். 1931ம் ஆண்டு முதலாவது மலையகத்தொழிற் சங்கம் நிறுவப்பட்டதன் பின்னர் அதில் அங்கத்தவர்களை சேர்ப்பதில் மீனாட்சியம்மாள் அதிக ஆர்வம் காட்டினார். மலையகத்துத் தொழிலாளரின் துயரங்களை விபரிப்பதாக ஷம் இவற்றை நீக்குவதற்குரிய செயல்களில் ஒன்றிணைந்து ஈடுபடுமாறு தூண்டுவதாகவும் இ வ ர து பாடல் க ள் அமைந்தன.
வெறுமனே பொழுதுபோக்கிற்காகவோ மக்களைக் கவர்வதற்காகவோ அவர் பாடவில்ல. தமது கருத்துக் களைப் பரப்புதற்குரிய சாதனமாக அவர் இசையை கை யாண்டார். தாம் பாடிய பாடல்களையும் தாமே இயற் றினார். "இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை" என்ற தலைப்பில் 1940ம் ஆண்டு வெளியிடப்பட்ட அவரது பாடல் தொகுப்புக்கு அவர் எழுதியுள்ள முன்னுரை கவ னத்தைக் கவர்வதாகும்.
"இலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமை வரவர மிகவும் மோசமாகிக் கொண்டே வருகிறது. இலங்கை வாழ் இந்திய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்க ள து உரிமைகளை நிலைநாட்டுவதற்காகத் தீவிர மு டன் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. அத் தகைய பிரசாரம் பாட்டுகள் மூலமாகச் செய்யப்படின் அதிக பலனளிக்கும். இதை முன்னிட்டே இன்று இலங்கை வாழ்

Page 55
பெண்நிலைச் சிந்தனைகள் / 96
இந்தியர்களின் நிலைமையைப் பர்ட்டுகளின் மூலம் எடுத் துக்கூற முன்வந்துள்ளேன். இந்தியர்களைத் தாக்கத்தில் ஆழ்ந்துவிடாது தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற் குத் தீவிரமாகப் போராடும்படி அவர்களை இப்பாட்டுக் கள் தட்டியெழுப்ப வேண்டுமென்பதே எனது அவா."
இத்தகைய ஈடுபாட்டினாலும் ஆர்வத்தினாலும் அவர் யாத்த இப்பாடல்கள் அவரது அரசியல் உணர்வையும் இசையில் இருந்த ஈடுபாட்டையும் ஒருசேரக் காட்டுவன
வாகும்.
இத்தொகுதியில் ஒன்பது பாடல்கள் அடங்கியுள்ளன. 'இந்தியர்களிடர்தனையே யியமபுமிந்தப் பாசுரம்' என நூலின் காப்பு வெண்பாவில் இச்சிறு பிரசுரம் பற்றி அவர் குறிப்பிடுகிறார். முதலாவது பாடல் பாரததேவிக்கு வணக்கம் செய்து கொள்கைப் பிரகடனம் ஒன்றை மேற் கொள்வதாகும். விவசாயம், குடிசைக் கைத்தொழில் போன்றவற்றிலீடுபட்டு சுயதேவைப் பூர்த்தியடைதல், ஏழைகளின் துயர் போக்குதல் ஆகியவை முக்கிய இலட்சி யங்களாகக் கூறப்படுகின்றன.
'பொதுஜன வாழ்க்கையே புனித வாழ்க்கை" என வும் "உடல் பொருள் ஆவியை உலகுக்களிப்பதே உண் மையான தியாகம்' என்றும் கூறும் மீனாட்சியம்மாள், காந்தியக் கொள்கைகளையே தமது ஆதர்ஷமாகக் கருது கிறார்.
இந்கியர்கள் ஒன்றுபட்டு தமது உரிமைகளைப் பாது காக்க வேண்டும் என்ற வற்புறுத்தல் மீனாட்சியம்மாளின் பாடல்களின் அடிச்சரடாக ஒலிக்கிறது.
'பாய்க்கப்பல் ஏறியே வந்தோம் - அந்நாள் பலபேர்கள் உயிரினையிடைவழி தந்தோம் தாய் நாடென்றெண்ணியிருந்தோம் - அவர்கள் தகாத செய்கையைக் கண்டு மனமிகநொந்தோம்

97 / சித்திரலேகா மெளனகுரு
'அஞ்சா தெதித்துமே நின்று - நமக்கிங்கே" அதிக சுதந்திரம் தரவேண்டு மென்று நெஞ்சிலுரத்துடன் நின்று போராடிட நேயரே வருகுவீர் திடத்துடனின்று" என அறைகூவுகின்றார் மீனாட்சியம்மாள்.
இவ்வாறு இந்தியர்களின் உரிமையை மீன்ாட்சியம் மாள் வற்புறுத்தியதற்கு அக்காலத்தில் ஒரு அரசியல் பின்னணி இருந்தது. இந்தியர்களுக்கு எதிரான உணர்வு இந்த நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து இலங்கையரி டையே பல மட்டங்களிலும் காணப்பட்டது. இக்காலத் தில் நாட்டிலேற்பட்ட பொருளாதார மந்தநிலை இத் தகைய இந்திய எதிப்புணர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. பொருளாதார நெரு க் க டி க ட் கு முகம் கொடுக்க வேண்டிய காலகட்டங்களில் ஒரு நாட்டிலுள்ன பெரும்பான்மையினம் சிறுபான்மை இனத் தி னை இந். நெருக்கடிக்குக் காரணமாகக் கருதுவதும் அதற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதும் அடிக்கடி நடைபெறுவதாகும். இலங்கையில் இது இடைக்கிடை நடைபெற்றுள்ளது,
உலகப் போரினால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை இலங்கையையும் பாதித்தது. வாழ்க்கைச் செலவு அதிகரித்தது. கைத்தொழில் விவசாயப் பொருட்களின் உற்பத்திச் செலவு அதிகரித்தது. இலங்கையில் 1931 ம் வருடமளவில் சுமார் 700,000 இந்தியத் தொழிலாளர்கள் இருந்தனர். இவர்கள் கொழும்பில் புகையிரதப் பகுதி, துறைமுகம், தொழிற்சாலை போன்ற இடங்களிலும் மலைநாட்டுப் பெருந்தோட்டங்களிலும் வேலை செய் தோராவர். பொருளாதார மந்த நிலையால் பல தொழி லாளர்கள் வேலை நீக்கப்பட்டபோது, தமக்குக் கிடைக் கக்கூடிய வேலை வாய்ப்புக்களை இந்தியர் அபகரித்துக் கொள்கின்றனர் எனக் கூறப்பட்டது. இந்திய எதிர்ப் புணர்வு உருவாகியது. இது ஏ. ஈ. குணகிங்காவைத் தலைவராகக் கொண்டிருந்த இலங்கை தொழிற்சங்கத்தி

Page 56
பெண் நிலைச் சிந்தனைகள் / 98
லும் பல எதிரொலிகளைக் கிளப்பியது சங்கத்தின் உப தலைவராகப் பதவிவகித்த நடேசையர் வெளியேற்றப் பட்டமைக்கும் இது காரணமாகியது:
இத்தகைய இந்திய எதிர்ப்புப் பின்னணியில் தான், ‘இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலமை" என்ற தொகுப்பில் இடம்பெறும் பாடல்களை விளக்குதல் வேண் டும். இக்காலத்தில் இந்தியர்களின் இலங்கை வருகை கட்டுப்படுத்தப்பட வேண்டும். இலங்கையின் பாரம்பரிய பிரஜைகளுக்கே யாவற்றிலும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன:
"இந்தியர் இலங்கையில் இருக்கக் கூடாதாம். அவர்க்கேற்ற சுதந்திரம் கொடுக்கக் கூடாதாம்"
'வேலையில்லை லங்கையர்க்கு
என்று சொல்லுவீர். வேடிக்கைதான் வெறுவாய்க்கு அவல் போல் மெல்லுவீர்'
என்றெல்லாம் அக்காலத்தில் காணப்பட்ட கருத்துக்கள் பற்றிக்கூறிய மீனாட்சியம்மாள், இந்தியர்கள் இலங்கையை வளமாக்க உழைத்த கதையையும் கூறுகிறார்.
நூறு வருஷ ந் தொட்டு லங்கையிலே நேர்மையாய் வேலை செய்தும் பாருங்கோ நன்றி கெட்ட மனிதரின் பட்சபாதச் செயலை' **ஆறாயிரம் பேர்கள் லங்கைதனில் வந்ததுமே

99 / சித்திரலேகா மெளனகுரு
அன்றாடம் கூலிபெற்று நேராக வேலைதான் செய்து வந்தாரிந்த நேர்மையைக் கண்டிருந்தும் போராடி யவரோடு வேலையை விட்டுமே போவென்று தள்ளிப்போ மாறாகப் பேசிடும் லங்கையர்கள் தங்களின் மனப்பான்மை யறிவீர்களே
P
இந்தப் பாடல்களை நோக்கும் போது மீனாட்சியம் மாள் தமது காலத்தின் நாட்டு நடப்புக் குறித்து மிக விழிப்புடன் இருந்தார் என்பதும், இவை குறித்த திட்ட வட்டமான அரசியல் அபிப்பிராயங்களைக் கொண்டிருந் தார் என்பதும் தெரிகிறது.
மீனாட்சியம்மாள் பொதுக் கூட்டங்களில் பாடல்கள் பாடி தொழிலாளரிடையே விழிப்புணர்வை தட்டியெழுப் பியது மாத்திரமன்றி எழுத்துத் துறையிலும் ஈடுபட்டிருந் தார். இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலமை எனும் பிரசுரத்தின் அட்டையில் மீனாட்சியம்மாளின் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. மூக்குக் கண்ணாடியும் கையில் கடிகாரமும் அணிந்து எழுதும் நிலையில் அமைந்த இப்புகைப்படம், காத்திரமான அவரது ஆளுமையைப் பிரதிபலிக்கிறது. நடேசையர் வெளியிட்ட பத்திரிகைகளில் மீனாட்சியம்மாள் தேவையானபோது தலையங்கங்களும் கட்டு ரை களும் எழுதினாரென நடேசையர் பற்றி ஆராய்ந்த சாரல் நாடன் குறிப்பிடுகிறார். ஆனால் அவ ரது எழுத்துக்கள் சரியானபடி இனங்கண்டு அட்டவ னைப் படுத்தப்படவில்லை.
மீனாட்சியம்மாள் பற்றிய இக்குறிப்பு ஒர் அறிமுகம் மாத்திரமே. இலங்கையில் பெண்கள் வரலாற்றைக் கண்டு பிடிக்க ஆர்வம் கொண்டுள்ள ஆராய்ச்சியாளர் மீனாட் சியம்மாள் பற்றிய தகவல்களைத் தேடுவதில் ஈடுபடல் வேண்டும்.

Page 57


Page 58