கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புராதன இலங்கையின் தமிழ் சிங்கள உறவுகள்

Page 1
புராதன SG)(EJGO)45. தமிழ் சிங் உறவுகள்
 


Page 2


Page 3

புராதன இலங்கையின் தமிழ் சிங்கள உறவுகள்
லயனல் சரத்

Page 4
SINHALATAM, RELATONS IN ANCIENT SRI LANKA
Written by : ONE SARATH
Translated by : MiSS FRAMSYA FAROOK
(Translator - Presidential Office)
Supervised by : M. PONNAMBALAM
Financial Assistance by : SRI LANKA CANADA DEVELOPMENT FUND
Published & Distributed by : CENTRE FOR ETHNICHARMONY,
PEACE & COMMUNICATION 407/23G, Samagi Mawatha, Udahamulla,
Nugegoda. Telephone : 823101
Typesetting & Printed by . S. Ranjakumar
Page Setters 113, Ginthupitiya Street, Colombo 13. Telephone: 074 610391
ISBN 955-8472-02-6
පැරණි ලක්දිව සිංහල ෙදමළ සබඳතා PURATHANA LANGAIN SINHALA TAML URAWUKAL
Öõa : ලයනල් ඝරත් ტზ8}&გეფს)dშ. : Óტნჭ(შ) ლ))CÓtზი) (ენ0Qგ8}(წ
ජනාධිපති කාර්යාලයේ සහය පරිවර්තක අධීක්ෂණය : එම් ලපාන්නම්බලමි මුලzධාර : ශ්‍රී ලoකා කැනඩා සංවර්ධන අරමුදල ප්‍රකාශනය සහ බෙදා හැරීම : ඉංග් 2. ජනවාර්ගික හා සන්නිවේදනය පිළිබඳ සංවිධානය
4O7/23 G සමගි මාවත, උඩහමුල්ල, නූගේගොඩ. v දුරකතනය : 8231N1 පරිගණක අක්ෂර සංගයාජනය සහ මුද්‍රණය : එස්. රංජකුමාරි
ජෙෆ් සොටර්ස්, 113 පින්තුටිටිය පාර, කොළඹ 13.
දුරකතනය : O74 610391

புராதன இலங்கையின் தமிழ் சிங்கள உறவுகள்
ஆசிரியர் லயனல் சரத்
மொழிபெயர்ப்பு செல்வி. றம்சியா பாரூக்
(ஐனாதிபதி காரியாலய மொழிபெயர்ப்பாளர்)
மேற்பார்வை மு. பொன்னம்பலம்
நிதி உதவி : இலங்கை கனடா அபிவிருத்தி நிதியம்
வெளியீடும் விநியோகமும் : இனத்துவ தொடர்பியல் அமைப்பு
407/23ப, சமகி மாவத்தை உதகமுல்லை நுகேகொடை தொலைபேசி: 8233101
ஒளி அச்சுப் பதிவும் அச்சிடலும் : எஸ். ரஞ்சகுமார் பேஜ் செட்டர்ஸ் 113, ஜிந்துப்பிட்டி வீதி, கொழும்பு 13. தொலைபேசி: 074 610391
இலங்கைத் தேசிய நூலகம் - வெளியீடுகளில் உள்ள பட்டியற் தரவு
சரத், லயனல்
புராதன இலங்கையின் தமிழ் - சிங்கள உறவுகள் = ஆ(ே ලක්දිව සිංහල දෙමළ සබඳතා / couéoré ඊrgජ් ; බLongංඛu in its iL} றம்சியா பாறுக் - நுகேகொட “சவி” வெளியிட்டாளர்கள , 2000 tf. 2i.ס ; 100 .Jן
ISBN 955-84.72-02-6 6.a6) : (b. 70/-
i. 305.891413 g.g.f.21 i. தலைப்பு
1. பாறுக், றம்சியா மொழி 2. இலங்கை - இன உறவுகள் 3. இலங்கை - சரித்திரம்

Page 5
šGITấð •••• • • • • • • •
இனங்களுக்கிடையே நிலவுகின்ற பிணக்குகளை முடிவுறச் செய்து ஐக்கிய இலங்கையொன்றைக் கட்டியெழுப்பி சமாதானம் மற்றும் சுபீட்சம் நிலைபெறச் செய்வதை நோக்கமாகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்படும் மானிட நேயமிக்க அனைவருக்கும் - இந்நூல்
சமர்ப்பணமாகட்டும் . . .
அனுமதிப் பத்திரம் தொடர் இல - கபுகு / 2 15985
1952ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29ஆந் திகதி பிரசுரிக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் வர்த்தமானியில் வெளியாகிய இணைப்பு மொழி, சுயமொழி, இரண்டாம் மொழி மற்றும் ஆங்கில பாடசாலை கள் தொடர்பான அரசியலமைப்பின் 19 / ஏ பந்தியின் கீழ் கல்விப் பணிப்பாளர் நாயகம் அவர்களினால் பாடசாலை நூலகப் புத்தகமாக அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
கல்வி உயர்கல்வி அமைச்சு, எம். எச். குமாரப்பெரும "இசுருபாய' செயலாளர்
பத்தரமுல்ல கல்விப்புத்தக வெளியீடு 23-12-1997 மதியுரைக் குழு

O O முற்குறிப்பு புராதன இலங்கையின் தமிழ்-சிங்கள உறவுகள் என்ற இந்நூல் தமிழ் வாசகர்களுக்கு ஒரு 'புதிய உலகைத் திறந்து வைக்கின்றது.
இலங்கையின் இனக் குழுமப் போராட்டம், இரு தேசிய இனங்களினதும் ஆழ்மனங்களிலே படிந்து, ஒருவரைப் பற்றிய மற்றையவரின் புரிந்துணர்வை மழுங்கடிக்க வைக்கும் அரசியல் மட்டச் செல்நெறிகள் மேலோங்கி நிற்கும் இவ்வேளையில் சிங்கள மக்களிடையே, தமிழ்-சிங்கள உறவை ஆக்க பூர்வமாகவும் நேர்சீராகவும் நோக்கும் அறிஞர்கள், புத்திஜீவிகள், வாசகர்கள், உள்ளனர் என்பதை இந்நூல் சுட்டுகின்றது. 1996இல் எழுதப்பட்டு 1998இல் இரண்டாம் பதிப்புக் காணும் அளவுக்கு இந்த நூலுக்கு ஒரு வாசக வரவேற்பு இருக்கின்றது எனும் உண்மை இலங்கையில் நீதியானதும், நல்லதுமான ஒரு தீர்வு வரும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளவர்களுக்கு ஊக்கம் தரும் தகவலாகும்.
சிங்கள மக்களிடையே அரசியல் அபிப்பிராயத்தை ஊடகங்களிற் சில எடுக்கும் கண்ணோட்டத்திலிருந்து விலகி, வரலாற்று உண்மையை வலியுறுத் திச் செல்லும் பாங்கு இந்நூலின் மிகப்பெரிய பலமாகும்.
திரு. லயனல் சரத் போற்றப்படவேண்டியவர். இவரது நூலின் முக்கிய சிறப்பு, இந்நூல், பாரம்பரியமாகத் தமிழ் விரோதத்துக்கு மேற்கோள் காட்டப்பெறும் வரலாற்று மூலங்களையே உண்மையினை வெளிப்படுத்துவதற்கான தடயங்களாகக் கொள்கின்ற மையே.
பேராசிரியர் பரணவிதானவின் எழுத்துக்களைக் கொண்டே தமிழ் - சிங்கள உறவின் அந்நியோன்னியத் தன்மையை நிறுவியுள்ளார்.
கல்வெட்டுக்கள் பற்றிய குறிப்புக்கள் சிலவே எனினும் இடம் பெறு கின்றன.
அரசியல் வரலாற்று நிலைப்பாட்டையே ஆசிரியர் பிரதானப்படுத்து கிறார்.
சிங்கள - தமிழ் இனத்துவ ஒற்றுமையை புழக்கப் பண்பாட்டுத் தளத் திலும் காணலாம்.
திரு. லயனல் சரத் பாராட்டுக்குரியவர். தமிழ் மக்களை சக நாட்டினர் என்ற உணர்வுடன் சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதை இந்நூல் வலியுறுத்துகின்றது.
திரு லயனல் சரத் மேற்கொண்டுள்ள இம்முயற்சியை வேறு பல ஆய்வாளர்களும் மேற்கொண்டுள்ளனர். பேராசிரியர்கள் சிறீவீர, லியன கமகே, லெஸ்லி குணவர்த்தன, சுதர்சன் செனவிரத்ன, குமாரி ஜயவர்த்தன போன்றோர் முக்கியமானவர்கள்.
திரு லயனல் சரத்தின் இம்முயற்சியினை வெளியிட்டு வைக்கும் சர்வோதய நிறுவனத்துக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
பேராசிரியர் கா. சிவத்தம்பி

Page 6
O முனனுரை
சிங்கள தமிழ் உறவுகள் இலங்கை வரலாற்றின் ஆரம்ப காலந்தொட்டு நிலவி வருகின்றன. இது ஒருவகைச் சுவாரஸ்யமான கதையாகும். சிங்களவர்களும், தமிழர்களும் சிலவேளைகளில் பகைவர்களாக போரிட்டுக் கொள்கின்றனர். பின்னர் நண்பர்களாக உறவாடுகின்றனர். தென்னிந்தியா வின் சேர, சோழ, பாண்டிய இராச்சியங்கள் தங்களுக்கிடையே போரிட்டுக் கொள்ளும் வேளைகளில், சிங்களவர்கள் ஒரு சாராருக்கு உதவி வழங்கு வதற்காக இந்தியா செல்வதுண்டு. இவ்வாறே, இலங்கையின் அரச குடும்பங்களுக்கிடையே பிணக்குகள் தலை தூக்கிய வேளைகளில் ஒரு பக்கத்தினருக்கு உதவி வழங்குவதற்காக தமிழர்கள் இலங்கை வருவ துண்டு. சமயரீதியிலும் இவ்வாறே செயற்பட்டனர். மதப்பிரிவுகள் காரண மாக குழப்பங்கள் உருவாகிய வேளைகளில் சிங்கள பிக்குமார்கள், தமிழ் பிக்குமார்களின் உதவியை நாடி தென்னிந்தியாவில் சென்று தஞ்ச மடைந்தனர். இலங்கையின் சிங்கள பெளத்த அறநெறி ஏடுகளை வாசித்து பாளி மொழிக்கும், தமிழ் மொழிக்கும் மொழிபெயர்த்து எடுத்துச் செல்வதற் காக தமிழ் பிக்குமார்கள் இங்கு வந்துள்ளனர். பின்னர் இலங்கையில் சாசனம் வீழ்ச்சியுற்று காணப்பட்ட சமயங்களில், அறநெறிஏடுகளை புதிதாக எழுதுவதற்கும் தமிழ் பிக்குமார்கள் இங்கு வந்துள்ளனர். ஆயினும் நட்புறவுகளுக்கமைய கட்டியெழுப்பப்பட்ட கலாசாரம் வளம்பெற்று விளங்கியது போன்ற நன்மை பயக்கும் விடயங்கள் பற்றி அரிதாகவே வாசிக்கவும், காதாரக் கேட்கவும் கிடைக்கின்ற போதிலும், இவ்விரு இனங் களுக்குமிடையே நிகழ்ந்த சண்டை சச்சரவுகள் பற்றி பெருமளவில் பேசப் படுகின்றன. வட இந்தியாவில் பெளத்த மதம் அழிந்து போகும் நிலையில், அதைப் பேணிக்காத்தவர்கள் தென்னிந்திய பிக்குமார்களும், இலங்கை பிக்குமார்களுமாவர் என்பது வெள்ளிடைமலை.
புராதனக் கதைகளில் வரும் வர்ணனை அலங்காரங்களை தவிர்த்து விடயங்களை நுணுக்கமாக ஆராயும் போது அவற்றில் எடுத்துக் காட்டப் பட்டுள்ளவாறு, தமிழ் சிங்கள மக்களிடையே உக்கிரமான பகைமை நிலவியது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கூற்றாகும். போர்வீரர்கள் பற்றி மனதிலெழும் உருவகங்களை எடுத்துக்காட்டி சம்பிரதாயபூர்வமாக முன் வைக்கப்படும் சில விடயங்கள் பற்றி மீண்டும் மீண்டும் ஆராய்ந்து பார்ப்பதிலிருந்து சமூக முன்னேற்றம் மேலோங்க வழி வகுக்கலாம். இதன் காரணமாகவே சிங்கள மக்களின் புராதன பழங்கதைகளை ஆதாரமாகக் கொண்டு இந்த ஆய்வினை மேற்கொள்கிறேன்.
883, சாலாவை வீதி, லயனல் சரத் மீரிஹான, நுகேகொடை.
Vi

C헌리判}헌정s)
\\GłÇ999? IICJI „_
qimiș șusố mỗış9 ĝĒ Ģ Ģ uonto,resoos@@Íış909 uralo.
ĝoŭ gooor0909 g国g』コ』gug
/
5mon的역r城常u田 1七––3) ugi mbung9In !\》 A 회제min「子sosoïsynsg)uo ‘o j \ IĘĪĢĒLÀ (Qushof)que-Insynspuseq108-11099ơi gioon கிகிஐயமிழ- - - -ரமhழியெடி
ფIII91%უ))ტე)II%iu-eg)
@ມມ໌ກີ້ມລົງ $3 படி09$9விடி ஆ
ப99ங்ாழிடியமடூம96யமh
Voơ91ğıQ9Ġ Inĝĝiế

Page 7

புராதன இலங்கையின் தமிழ் சிங்கள உறவுகள்
ஆரம்பம்
வடஇந்தியாவிலிருந்து இலங்கையில் வந்து குடியேறிய ஆரிய இனத் தொகுதிகளிலிருந்தே சிங்கள இனம் உருவாகியது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். போதி மாதவன் வாழ்ந்த காலத்திலிருந்தே முதல் குழுவினரின் வருகை இடம்பெற்றுள்ளது எனக் கூறுகின்ற புராதனக் கதைகளில் இக்குழுவினர் பெளத்தர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்க வில்லை. இவர்களிடம் பண்டுகாபய மன்னரின் காலத்தில் நிலவிய சமண சமய (நிகண்டு) வழிபாடுகளே நிலவின. இவ்வழிபாடு பற்றி மகா வம்சத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டுகாபய மன்னர் தான் எந்த வொரு மத வழிபாடுகளையும் பின்பற்றவில்லையாயினும் நாட்டு மக்களின் மத வழிபாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு நல்கினார்.
இலங்கையில் குடியேற்றங்களை அமைத்துக்கொண்ட சிங்களவர்கள் இங்கு குடியேறிய சுமார் 300 ஆண்டுகளின் பின்னரே புத்த மதத்தை தழுவி தங்களை பகிரங்கமாக பெளத்தர்களாக இனங்காட்டிக் கொண்டனர்.
கிறிஸ்து வருடம் ஆரம்பமாவதற்கு சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் வட இந்தியாவில் போரில் நாட்டம்கொண்ட அசோகன் எனும் மன்னரொருவர் வசித்து வந்தார். ஆரம்பத்தில் இவ்வரசர் தனது யுத்த பலத்தினைக் கொண்டு பேரரசொன்றை நிறுவினார். பின்னர் அஹிம்சை வழிப்பட்ட பெளத்தராக மாறிய அசோக மன்னர் குடிமக்களுக்கிடையே பெளத்த மதத்தைப் பரப்பினார். அதன் பின்னர் தமது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட சுயாதீன அரசுகளுக்கும் பெளத்த மத தூதர்களை அனுப்பும் இயக்கமொன்றை ஆரம்பித்தார். அக்காலத்தில் இலங்கையில் ஆட்சி புரிந்த திஸ்ஸ எனும் மன்னர், பிரபலமாகியிருந்த அசோகப் பேரரசருக்கு முத்து, இரத்தினங்களை அன்பினை வெளிப்படுத்தும் வகையில் பரிசாக அனுப்பினார். பரிசில்களை ஏற்றுக்கொண்ட அசோக மன்னர் தான் உபயோகப்படுத்திய ‘தேவாநம் பிரிய' எனும் அரச குலப் பெயரில் அபிஷேகம் செய்து கொள்ளும்படியும், பெளத்த மதத்தை தழுவும்படியும் செய்தி அனுப்பினார். அதன்பின்னர் மதத் தூதராக அர்ஹத் மஹிந்த மகாதேரர் அவர்கள் இலங்கைக்கு வந்து திஸ்ஸ மன்னரை பெளத்தராக மாற்றினார். மன்னரைப் பின்பற்றிய நாட்டு மக்களும் பெளத்த மதத்தைத் தழுவினர். பூரீ மகா போதி மரம் நடுகை செய்யப்பட்ட அன் றையஅரச தலைநகராகிய பொலனறுவை இவர்களது புனித ஸ்தலமாக விளங்கியது. அதன் பின்னர் தேவநம்பிய திஸ்ஸ மன்னர் நாட்டின் பல பாகங்களிலும் அரச மர நடுகையுடன், பெளத்த மத மத்திய நிலையங்க ளையும் நிறுவி, இலங்கையை ஐக்கிய பெளத்த அரசாக மாற்றினார். நாட்டின் தெற்கே வசித்து வந்த கதிர்காமத்து சத்திரியர்களும், வடக்கே வசித்து வந்த திவங்க பிராமணர்களும் இதற்கு உடன்பட்டனர். இவ்
1

Page 8
விடயத்திற்கு அர்ஹத் மஹிந்த மகா தேரர் அவர்கள் தனது பூரண ஆதரவை நல்கியதுடன், இலங்கையில் பிக்கு சாசனம் ஒன்றையும் நிறுவி புத்த தர்மத்தைப் போதிக்கும் கடப்பாட்டினை பிக்குமார்களிம் ஒப்படைத்தார்.
அசோக மன்னர் தனது பெளத்தப் பேரரசில் இணைத்துக் கொண்ட ஏனைய சில நாடுகளைப் பற்றியும் மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள இந்நாடுகளில் மகிச மண்டலமும் அதாவது தற்போதைய மைசூரும் ஒன்றாகும். இப்பிரதேசம் தென்னிந்தியாவின் கேரளத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. உல்லாசப் பயணமொன்றை மேற்கொண்ட சீனாவைச் சேர்ந்த கியுங் சியேங் என்ற பிக்கு அவர்கள் கி.பி. 629-645ற்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் சுற்றுலாவை மேற்கொண்டபோது, தமிழ் தேசத்திற்கு தான் வந்தது பற்றி தனது பயணக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இலங்கையில் சிங்களவர்கள் பெளத்த மதத்தை தழுவிய காலத்திலேயே தென்னிந்தியாவில் தமிழ் மக்களும் பெளத்த மதத்தை தழுவியுள்ளார்கள் எனவும் தமிழ் நாட்டின் தலைநகரான காஞ்சிபுரத்தில் (தற்போதைய சென்னைக்கு சிலமைல்கள் தொலைவில்) சுமார் 80 விஹாரைகளை தான் கண்ணுற்றதாகவும், தேரவாத பிக்குமார்கள் 10 ஆயிரம் பேர் அங்கு வந்தருளியிருந்ததாகவும், அசோக மன்னரினால் போதி மாதவனின் பாதம் பதிந்த சகல இடங்களிலும் துபிகள் எழுப்பப்பட்டிருந்ததாகவும், நூறடி உயரமான தூபியொன்றினை தான் கண்ணுற்றதாகவும், தான் கண்டும் கேட்டும் அறிந்தும் தெரிந்துகொண்ட விடயங்களை ஆதாரமாகக் கொண்டு கியுங்சியேங் தேரர் குறிப்பிட் டுள்ளார். இது தொடர்பான மேலதிக விபரங்களை பின்னர் காண்போம். பெளத்த மதத்திற்கு முதலிடமளித்து சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் திஸ்ஸ மன்னரினால் கட்டி யெழுப்பப்பட்ட இவ்வரசு, மன்னரது பட்டத்து ராணியின் கீழ்த்தரமானதொரு செயலினால் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கவில்லை. தந்தைக்குப் பின்னர் மைந்தனுக்கு அரசினை உரித்தாக்கிக் கொள்ளும் நோக்கத்துடன். மன்னரின் சகோதரருக்கு நஞ்சூட்டி கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்தார். ஆயினும் சூழ்ச்சி குறி தவறி ராணியின் மைந்தனே நஞ்சூட்டி கொலை செய்யப்பட்டான். இதனால் ஏற்பட்ட பிளவுகள் காரணமாக மகாநாகன் எனும் மன்னரின் சகோதரர், தனக்குச் சார்பாக செயற்பட்ட படையொன்றுடன் நாட்டின் தென்கிழக்குப் பிரதேசத்திற்குப் போய் தனியொரு அரசை அமைத்துக் கொண்டார். இக் காரணங்களினால் தேவநம்பியதீச மன்னரின் காலத்திற்குப் பின்னர் தோற்றம் பெற்ற அநுராதபுர இராச்சியம் மிகவும் சீர்குலைந்து காணப் பட்டது. இம்மன்னரது பெருமுயற்சியின் காரணமாக அரசத்தலைவர் களாகிய உந்நதிய - மகாசிவ - சூரதிஸ்ஸ போன்ற சிங்கள மன்னர்கள், நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் எந்தவொரு தொடர்புகளையும் வைத்திருக்காமல், அநுராதபுரத்துடன் மட்டும் தொடர்புகளை வரையறுத்துக் கொண்டிருந்தனர்.

2. தமிழர்களின் ஆரம்ப வருகை
சிங்கள இனம் தோன்றுவதற்கு மூலகாரணமாவிருந்த ஆரியர்கள் வட இந்தியாவின் வடமேற்கிலிருந்தும், தென்கிழக்கிலிருந்தும் இலங்கைக்கு வந்துள்ளார்கள் என்பது வரலாற்று ஆசிரியர்களின் கூற்றாகும். இவர்களில் ஒரு பிரிவினர் இலங்கையின் வடமேற்கிலும், மற்றைய பிரிவினர் தென் கிழக்கிலும் குடியேற்றங்களை அமைத்துக்கொண்டதாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. இதன் பின்னர் சுமார் 300 வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக சேனன் - குத்திகன எனும் இரு தமிழ்த் தலைவர்கள் இலங்கைக்கு வந்து, அச்சமயத்தில் அநுராதபுரத்தை ஆட்சி புரிந்து கொண்டிருந்த சூரதிஸ்ஸ எனும் மன்னரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி யதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் எப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பற்றியோ, சேனையொன்றைத் திரட்டி வந்தது பற்றியோ "மகாவம்சத்' திலோ, ‘தீப வம்சத்திலோ குறிப்பிடப்படவில்லை. குதிரை வியாபார நோக்கமாக வந்த இவ்விருவர் பற்றிய மேலதிக தகவல் எதுவும் வம்சக் கதைகளில்கூடக் குறிப்பிடப்படவில்லை. ஆயினும், சேனன் - குத்திகன் ஆகிய இருவரும் தென்னிந்தியாவின் தமிழ் பிரதேசங்களிலிருந்து வரவில்லை என்பதும், ஆரம்பத்தில் இந்நாட்டிற்கு வந்த சிங்கள மக்கள் கூட்டத்தினரின் தாய்நாடாக விளங்கிய வடமேற்கு இந்தியாவிலிருந்தே இவர்கள் வந்தனர் என்பதும் புகழ்பெற்ற வரலாற்றாசிரியரான செனரத் பரணவிதான அவர்களின் கருத்தாகும். தற்போதும்கூட பாகிஸ்தானில் தமிழினப் பிரிவுகள் நிலவுவதாகவும், அவர்கள் திராவிடமொழிக்குடும்ப மொழியொன்றைப் பயன்படுத்துவதாகவும், அப்பிரதேசம் குதிரைகளுக்காக பிரசித்தம் பெற்றுள்ளதாகவும் இதற்குச் சான்றுகளாக எடுத்துரைக்கப் படுகின்றன. இந்து நதிப் பகுதியின் முகத்துவாரப் பிரதேசத்தில் ஆரியச் செல்வாக்கு நிலவியமையால் சேனன் - குத்திகன் எனும் ஆரியர் களுக்கேயுரிய பெயர்களை அவர்கள் உபயோகித்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. தென்னிந்தியாவின் திராவிட பிரதேசம் குதிரைகளுக்காக பிரசித்தி பெற்றிருக்க வில்லையென்பதையும் பேராசிரியர் பரணவிதான அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார். இந்நாட்டில் தமிழர்களும், சிங்களவர்களும் நண்பர்களாகவோ, எதிரிகளாகவோ அறிமுகமாவதற்கு முன்னிருந்தே இவர்கள் ஒருவரையொருவர் அறியாதவர்களாக இருந்திருக்க நியாய மில்லை. கல்வெட்டு யுக கலாசாரங்கள் உருவாக முன்னர் இங்கு வாழ்ந்த சிங்களவர்களாலும், தமிழர்களாலும் இந்நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட, மொழியுட்பட்ட உயர்ந்த கலாசாரங்கள் பற்பல பிரமாணங்களில் நமது கலாசாரத்தில் கலந்திருக்கின்றன என்பது புலமை வாய்ந்த வரலாற் றாசிரியரான பேராசிரியர் பரணவிதான அவர்களின் கருத்தாகும். *
சேனன் - குத்திகன் ஆகிய தமிழ் மன்னர்கள் இருவரும் இருபத்து இரண்டு வருடங்கள் நீதியாக நேர்மையாக நாட்டை ஆட்சி புரிந்ததாக
2. இலங்கைப் பல்கலைக்கழகத்தின் இலங்கை வரலாறு - ஆரியக்குடியேற்றங்கள்
3

Page 9
மகாவம்சத்தினைப் போன்று தீபவம்சத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விரு மன்னர்களுக்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவின்றிக் கிடைத்துள்ளமை இதிலிருந்து புலனாகின்றது. நெடுங்காலமாக நிலவி வந்த வழக்கமொன்றான சிங்கள அரச குடும்பத்தைச் சேர்ந்த அங்கத்தவ ரொருவரை எவ்வாறு இலகுவில் அவர்களால் துரத்திவிட முடிந்தது என்பது வியப்புக்குரியதே. அக்காலத்தில் அநுராதபுரத்தில் சிலவேளை தமிழ் மக்கள் வசித்திருக்கலாம். வட இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக சிங்களவர்கள் இலங்கைக்கு வருவதை விடவும் தென்னிந்தியாவிலிருந்து தமிழர்கள் இலங்கைக்கு வருவது எளிதாயிருந்தது. அக்காலத்தில் அநுராதபுர இராச் சியத்தில் இவர்கள் வசித்திருந்தால் தமிழர்கள் - சிங்களவர்கள் எனும் பேதங்களின்றி சமாதானமாக வசித்து இருப்பார்கள். அத்துடன் முதலில் வந்தது யார் என்ற கேள்வி எழுந்திருக்காது. சேனன் - குத்திகன் ஆகிய இவ்விரு தமிழ் மன்னர்களினதும் ஆட்சிக் காலத்தில் பூரீ மகா விஹாரையை பிரதிநிதித்துவப்படுத்தும் பெளத்த புனிதஸ்தலம் அநுராதபுரத்தில் அமைந் திருந்தது. இங்கு பிக்குமார்களும் இருந்தார்கள். இப்பிக்குமார்களுடன் தமிழ் மன்னர்கள் எவ்வித பிணக்குகளில் ஈடுபடவோ, பெளத்த தேவஸ்தானங் களுக்கு எவ்வித பாதிப்புகள் நிகழ்ந்திருக்கவோ இல்லை. அக்காலத்தில் வசித்த தமிழ் மக்களும் பெளத்த மதத்தை தழுவியிருந்தமைக்கான சான்று கள் இருக்கின்றன. இவை பற்றி பிறகு ஆராய்வோம்.
3. இந்தியாவின் தமிழர் அரசர்கள்
சேனன் - குத்திகன் ஆகிய இருவரைப்பற்றி பேராசிரியர் பரணவிதான அவர்கள் முன்வைத்துள்ள கருத்துக்கள் வாசிப்பவர்களை சங்கடத்துக் குள்ளாக்கும் என்பதில் கிஞ்சித்தேனும் சந்தேகமில்லை. ஏனெனில், பண்டைய வரலாற்று யுகத்திலிருந்தே இலங்கையை ஆக்கிரமித்த அனைத்து வெளிநாட்டவர்களும் தென்னிந்தியாவைச் சேர்ந்த தமிழர்களே என்பது மரபுரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுவது வழக்கமாகும். ஆகவே, பண்டைய தென்னிந்திய தமிழ் அரசுகளின் பூகோள அமைப்பினை அவதானிப்பதன் மூலம் இச்சிக்கலை விடுவித்துக்கொள்ளல் வேண்டும். அத்துடன் அவ்வரசுகளின் தற்போதைய அரசியல் நிலைகளையும் ஐயம் திரிபற விளங்கிக் கொள்ளல் சிறந்தது.
தர்மாசோக மன்னரின் ஆட்சியின்போது தென்னிந்தியாவின் தென் முனையில் தமிழ் மக்கள் வசித்து வந்தமை பற்றி பேராசிரியர் தனது ஆய்வுக் கட்டுரையொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, பண்டைக் காலத்திலிருந்தே சிங்களத் தீவு மூன்று இராச் சியங்களாக பிரிக்கப்பட்டிருந்ததைப் போன்றே தமிழ் நாடும் சேர, சோழ, பாண்டிய எனும் மூன்று இராச்சியங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. இம்மூன்று இராச்சியங்களையும் ஒன்றிணைத்து தமிழ் மொழியில், மூன்று தமிழ் நாடுகள் எனும் கருத்தை தரும் ‘முத்தமிழ் தேசம்’ என வழங்கப்படுகின்றது.
4.

இம்மூன்று அரசுகளிலும் இலங்கைக்கு மிக அண்மையில் பாண்டிய நாடு எனும் வைகை, தாமிரபரணி நதிகளை அண்மித்த பிரதேசம் அமைந் துள்ளது. *
சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, கேரள புத்திர, தம்பபன்னி ஆகிய இராச்சியங்கள் தனது ஆதிக்கத்துக்குட்பட்டிருந்தது என அசோக மன்னர் கல்வெட்டொன்றில் குறிப்பிட்டிருந்ததாக வல்பொல ராகுல தேரர் அவர்கள் நவின்றுள்ளார்கள்.
காவேரி நதியைச் சுற்றி அதன் இருமருங்கும் வடக்கிலும் தெற்கிலும் பரந்து கிழக்கை நோக்கி பண்டைய சோழ நாடு அமைந்திருந்தது. பாண்டிய நாடு வைகை, தாமிரபரணி ஆகிய இரு நதிகளுக்கும் அண்மையில் அமைந்திருந்தது. இவ்விரு நதிகளும் இலங்கையை நோக்கி வடமேற்குப் பக்கமாக கடலிற்கு நேர் எதிராக தென்னிந்தியாவின் தென்கிழக்குப் பக்க மாக கடலில் கலக்கின்றன. கேரள புத்திர என்பது தற்போதைய கேரளத் தையே குறித்து நிற்கிறது. இப்பிரதேசம் தென்னிந்தியாவின் மேற்குப் பகுதியாகிய மலபார் நதிக் கரையோரமாக அமைந்துள்ளது. அசோகப் பேரரசரின் மடலொன்றில், தம்பபன்னி என இலங்கையே குறிப்பிடப்பட் டுள்ளது என்பதில் கிஞ்சித்தேனும் சந்தேகமில்லை. பாண்டிய நாட்டின் தாமிரபரணி நதியின் செல்வாக்குக் காரணமாகவே இலங்கைக்கு இப்பெயர் வழங்கப்பட்டது என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள். சத்திய புத்திர எனப்படும் பிரதேசம் இன்னதென்று உறுதியாகக் குறிப்பிடப் படவில்லையாயினும், தற்போதைய கேரளத்தின் வடபகுதி என ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
மொழிகள் என நோக்கும்போது தெலுங்கு, கன்னடம், தமிழ், மலை யாளம் போன்ற திராவிடமொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி வகைகள் இங்கு வழங்குகின்றன. பொதுவாக இம்மொழிகளை பயன்படுத்துகின்ற அனைவரும் திராவிடர்கள் என அழைக்கப்படுகின்றனர். கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளுக்கு இடையே அமைந்திருந்த ஆந்திர தேசத்தில் தெலுங்கு மொழி வழக்கிலிருந்தது. அத்துடன் கிருஷ்ணா நதியின் கிளை யொன்றாகிய துங்கபத்திரா நதியின் தெற்கே அமைந்துள்ள, வனவாசி என பண்டைக்காலத்தில் அழைக்கப்பட்ட தற்போதைய கர்நாடக மாநிலத்தில் கன்னடமொழி வழக்கிலிருந்தது.
தமிழ் என அழைக்கப்பட்ட மூன்று அரசுகளில் சோழ, பாண்டிய எனும் இவ்விரு இராச்சியங்களிலும் தமிழ்மொழியே பெருவழக்கிலிருந்தது. இவ்விரு இராச்சியங்களும் தற்போதைய தமிழ் நாட்டில் அடங்குகின்றன. ஆரம்ப நூற்றாண்டுகளில் கேரளம் சேர நாடாக விளங்கியது. இங்கு வசித்த மக்கள் பிரயோகித்த மலையாள மொழி திராவிட பிரிவைச் சார்ந்திருப்பினும் தமிழ் மொழியிலிருந்து வேறுபட்டே காணப்படுகிறது. 3 - கட்டுரைத்தொடர் 1 மடல் 1 4- இலங்கை பெளத்த மதத்தின் வரலாறு
5

Page 10
பல தடவைகள் இவ்விராச்சியங்கள் மூன்றும் இராஷ்டிரகூடர்கள், பாமானியர்கள் (முஸ்லிம்கள்), சாப்தவாகனர்கள், களப்பிரர்கள் போன்ற அன்னிய நாட்டு ஆட்சியாளர்களின் கீழ் இயங்கின எனலாம். சில ஆட்சி யாளர்கள் தமிழ் இராச்சியங்களை தமது ஆதிக்கத்துக்குட்படுத்தியது மட்டுமல்லாது, இலங்கைக்கு அத்துமீறிப் பிரவேசித்த சந்தர்ப்பங்களும் ஏராளம். இம்மூன்று இராச்சியங்களும் சுயாதீனமாக இயங்கிய சந்தர்ப் பங்களில் தமிழ் தலைவர்களையே அரசர்களாகக் கொண்டிருந்தன. உதார ணமாக, சோழ நாட்டில் கரிகாலன், சேர நாட்டில் செங்குட்டுவன், பாண்டிய நாட்டில் நெடுஞ்செழியன் போன்றோர் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் புகழ் பெற்ற மன்னர்களாகத் திகழ்ந்தனர். தமிழ் மன்னர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கிடையே போரிட்டுக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் சிலர் இலங்7ை மன்னரின் உதவியைப் பெற்றுக் கொண்டனர். உதவி வழங்கிய அணியி:ா தோல்வியைத் தழுவிய வேளைகளில், மற்றைய அணியினர் இலங்கை யைத் தாக்கிய சந்தர்ப்பங்களையும் வரலாறு கோடிட்டுக் காட்டுகின்றது. எனவே, இலங்கையின் சிங்கள அரச குடும்பங்களுக்கும் தென்னிந்திய தமிழ் அரச குடும்பங்களுக்கும் இடையே நேச உறவுகளைப் போன்று பகை யுறவுகளும் நிலவின.
இலங்கையில் தமிழ்க் குடியிருப்புகள் ஏற்படுவதற்கு மூன்று தமிழ் இராச்சியங்களினதும் பங்களிப்பும், இலங்கை இந்தியாவிற்கு மிக அண்மை யில் அமைந்திருந்ததும், பண்டைய தமிழ் சிங்கள உறவுகளும் காரணமாக அமைந்தன எனலாம். பூகோள ரீதியாகவும் இலங்கையும் தென்னிந்தியாவும் நீரிணையொன்றினால் பிரிக்கப்பட்டிருப்பதன் காரணமாக இலங்கையின் வடக்கே வாழும் தமிழ் மக்கள் உள்ளத்தில் சுயாதீனமான எண்ணக் கருத் துக்கள் மேலெழுந்தன. அவர்கள் தம்மை இலங்கையர் என இனங் காட்டிக் கொண்டதோடு சிங்கள மக்களுடன் ஒத்துழைப்புடன் கூடிய நட்புறவையும் ஏற்படுத்திக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
4. எல்லாள மன்னரின் கதைச்சுருக்கம்
எல்லாள மன்னர் அநுராதபுரி இராச்சியத்தை ஆக்கிரமித்த நிகழ்ச்சி யை இலங்கையில் தமிழர்களின் இரண்டாவது ஆக்கிரமிப்பு என வம்சக் கதைகள் உணர்த்தி நிற்கின்றன. இம்மன்னர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாகவோ, ஆக்கிரமிக்கும் நோக்குடன் படையொன்றைத் திரட்டி வந்ததாகவோ தீபவம்சத்திலோ, "மகாவம்சத்திலோ குறிப்பிடப் படவில்லை. இம்மன்னர் ‘எலேல சிங்கன்’ என்னும் பெயர் கொண்ட, கடல் மார்க்கமாக வியாபாரத்தை மேற்கொண்ட ஒருவராக இருக்கலாம் என தனது கட்டுரையொன்றில் செனரத் பரணவிதான அவர்கள் தெரிவித்திருக்கிறார். இலங்கையில் குடியேற்றங்களை அமைத்துக்கொண்ட ஆரம்ப காலச் சிங்களவர்களும், ஏனைய பிரதான பிரிவினரும் வணிகர் கூட்டமாக வந்தவர்கள் என்பது வரலாற்றாசிரியர்களது ஒருமித்த கருத்தாக இருப்பத 6

னால், எல்லாள மன்னரது வருகையும் இவ்வாறே நிகழ்ந்திருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை. பெரும் சனத்திரளுடன் வந்துள்ள எல்லாள மன்னர் சோழ நாட்டைச் சேர்ந்தவர் என்றும், அந்நாட்டின் தலைவராக விளங்கியவர் என்றும், வணிக கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்றும் அரச தர்மங்களுக்கமைய அதி சிறப்பாக ஆட்சி புரிந்துள்ளார் என்றும் முக்கிய மான பண்டைய இருபெரும் வம்சக்கதைகளிலும் ஒரே மாதிரியாக கூறப் பட்டுள்ளது.
எல்லாள மன்னரது ஆட்சிச் சிறப்பையும், அவரது சீரிய நல்லொ ழுக்கம் பற்றியும் மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளவற்றிலிருந்து ஒரு பகுதி பின்வருமாறு:-
நேரிய நீதி வழுவாத எல்லாளன் என்னும் தமிழ் மன்னர் ஆட்சி புரியும் நோக்கத்துடன் சோழ நாட்டிலிருந்து இங்கு வந்து அசேலன் எனும் மன்னரி டமிருந்து அரசைக் கைப்பற்றி 44 வருடங்கள் ஆட்சி புரிந்தார். மன்னர் தீர்ப்பு வழங்கும் வேளை பகைவர்களிடமும் நடுநிலையாக நடந்து கொண்டார். தமது கட்டிலின் மேற்பக்கமாக ஆராய்ச்சி மணியொன்றைத் தொங்கவிட்டு மிக நீண்டதொரு கயிறு ஒன்றினால் அரச மாளிகை வாயிலுடன் அதை இணைத்திருந்தார். இம்மன்னர் சம்பிரதாய விழுமியங்களுக்கு பாதுகாப்பளித்து சிகிரியாவிற்கு சென்று பிக்குமார் களிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பி வருகையில் வண்டியின் ஒருபகுதி மோதியதன் காரணமாக, சைத்தியத்தின் ஒரு பகுதி சிதைவுற்றது. அமைச்சர்கள், 'மன்னரே, உங்களால் எமது சைத்தியத்தின் ஒருபகுதி சிதைந்துவிட்டது' என்று கூறினார்கள். அதற்கு மன்னரவர்கள் சக்கரத் தினால் தனது தலையை கொய்துவிடும்படி பகன்றார். மாமன்னரே, “எமது போதகர் ஒருபோதும் பிறரைத் துன்புறுத்துவதை விரும்பமாட்டார். எனவே, சைத்தியத்தை புதுப்பித்து, அளியுங்கள் என அமைச்சர்கள் அவருக்கு கூறினார். அங்கு பதினைந்து சுண்ணாம்புக் கற்களை (சுத்தப் படுத்தி) வைப்பதற்கு பதினைந்தாயிரம் பொற்காசுகளை வழங்கினார். ஒரு முதியவர் நெற்கதிர்களை வெய்யிலில் பரப்பிய வேளையில் அடை மழை பொழிந்து நெற்கதிர்கள் நனைந்தன. அப்போது அம்முதியவர் ஓடிச் சென்று அந்த ஆராய்ச்சி மணியை அடித்தார். முதியவரை அனுப்பிய மன்னரவர்கள் அறவழிகளில் ஈடுபடுவது உரிய காலத்தில் மழையைப் பெற்றுக் கொள்வதற்காக" என்னும் துணைவியின் கூற்றை ஏற்று விரதமிருந்தார். மழை பொழியச் செய்யும் கடவுளிடம் பகற்காலங்களில் மழை பெய்யா திருக்கும்படி வேண்டித் தொழுதார். இதிலிருந்து பகலில் மழை பெய்வ தில்லை. மழை வாரந்தோறும் நடு இரவில் பொழிந்தது.
இது ஒரு விந்தையான கதையாகும். எனினும், மகாவம்சத்தின் ஆசிரியர் இவ்வாறான கதையொன்றினை முன்வைப்பது, ‘நேரிய நீதி வழுவாத, சீரிய நல்லொழுக்கமுடைய ஒருவரே எல்லாள மன்னர் என்ப
6 - மகாவம்சம் பக்.21, 13-33 இடைப்பட்ட செய்யுள்
7

Page 11
தனை பறைசாற்றுவதற்கேயாகும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மேலே கூறப்பட்ட விபரங்களுக்கமைய, மிகிந்தலை கேத்திரகிரியில் வந்தருளிய பிக்குமார்களுக்கு தானம் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தமை புலனாகின்றது. தான் பயணஞ்செய்த தேர் தவறுதலாக ஒரு தூபியில் மோதி, அதன் பகுதியொன்று சிதைவுறவே, அதற்கு நட்ட ஈடாக ஒரு செங்கல்லுக்கு ஈடாக பத்தாயிரம் பொன் நாணயம் வீதம் செலுத்தி அத்தூபியை புனரமைத்தமை குறிப்பிடத்தக்கது. இத் தவறுக்காக மன்னருக்கெதிராக வெகுண்டெழுந்தவர்கள் அவரது மந்திரிமார்களே. எல்லாள மன்னரது மந்திரிசபையிலே பெளத்த மதத்தைச் சார்ந்த தலைவர் கள் இருந்தமையையும், அவர்களது மதியுரைகளுக்கு மதிப்பளித்து மன்னர் செயற்பட்டுள்ளார் என்பதுவும் இதிலிருந்து எமக்குப் புலனாகின்றது. விரதமிருந்து மழையைப் பெற்றுக் கொள்ளுமளவிற்கு இம்மன்னர் தார்மீக வாதியாக இருந்துள்ளார். இலங்கையில் விரதமிருக்கும் பழக்கத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை எல்லாள மன்னரையே சாரும் என்பது வெள்ளிடை மலை.
துட்டகைமுனு மன்னரைப்பற்றி மகாவம்சத்தில் ஆசிரியர் எவ்வாறு அறிமுகம் செய்துள்ளார் என்பதை ஆராய்ந்து பார்த்தல் அவசியம். துட்டகைமுனு தாயின் கருவில் உருவாகியிருக்கும் வேளையில், விகார மாதேவிக்கு ஏற்பட்ட மசக்கை அபூர்வமானது. எல்லாள மன்னரது இராட்சத போர்வீரனின் கழுத்தை வாளினால் துண்டித்து அவ்வாளில் தோய்ந் திருக்கும் இரத்தத்தை தண்ணிரால் கழுவி, அந்த நீரை துண்டாடிய அந்தத் தலையின் மீது அமர்ந்து அருந்த வேண்டும் என்ற தனது ஆதங்கத்தை விகாரமாதேவி தீர்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது. துட்டகைமுனு போன்ற போரில் நாட்டம் கொண்ட போராளியொருவனுக்கு இச்செயல் பெரியளவு இழுக்காயிராது. எனினும் நாட்டின் உயர் மதிப்பிற்குரிய பெளத்த மங்கையொருத்திக்கு இவ்வளவு கீழ்த்தரமான சிந்தனை எவ்வாறு உரு வாகியது என்பது வியப்புக்குரியது. நேரிய அறவழிகளில் செயல்படுவது முட்டாள்தனமான பயந்த செயலாகவும், கொடூரத்தை வீரமாகவும் கருதிக் கொள்ளும் அநாகரிகமான கருத்துக்ளை மக்கள் மத்தியில் பரப்புவது மகா வம்ச ஆசிரியரது நோக்கமாக இருந்திருக்கலாம் என்பது புலனாகின்றது.
அநுராதபுர இராச்சியத்தில் தொடர்ந்து 44 வருடங்கள் எல்லாள மன்னருக்கு அதிசிறப்பாக ஆட்சி செய்ய முடிந்தமைக்கான காரணம், அங்கு வசித்து வந்த மக்களனைவரும் மன்னருடன் தோழமையுடனும், ஒற்றுமை யுடனும் நெருங்கி உறவாடியமையாகும் என்பதில் இருவேறு கருத்துக் கிடமில்லை. இக்காலகட்டத்தில் உருகுணை இராச்சியத்தில் சொல் லொணாப் பூசல்கள் இடம்பெற்றன. ஆரம்பத்தில் துட்டகைமுனு இள வரசன் தனது மாமனாராகிய கிரி அபயவுடன் சச்சரவுகளை ஏற்படுத்திக் கொண்டது மட்டுமல்லாது தந்தையுடனும் பகைத்துக்கொண்டார். காவந் திஸ்ஸ மன்னர் மரணிக்கும் வரையில் மாநகருக்குள் வராது தலைமறைவாகி
8

யிருந்தார். பின்னர், தம்பியாகிய திஸ்ஸ இளவரசருடனும் போர் புரிந்தார். இக்காலத்தில் மகாவலி நதியின் எல்லையை காவல் புரிந்த தீகாபயன் என்னும் இளவரசனும் துட்டகைமுனுவுக்கு எதிராக எல்லாள மன்னரின் பக்கம் சார்ந்திருந்தார். துட்டகைமுனு பிறப்பதற்கு முன்னர் காவந்திஸ்ஸ மன்னரின் பட்டத்து ராணியொருத்திக்கு பிறந்த குமாரனே இந்த தீகாபன். எல்லாள மன்னரது பிரதான வீரர்களிடையே மலையினை யொத்த புயங்களையுடைய மித்திரன் எனும் வீராதிவீரனொருவனும் இருந்தார். அவர் துட்டகைமுனுவின் பத்துப் பெருவீரர்களில் ஒருவராகிய நந்திமித்திரனின் மாமனாராகும். அப்போதைய அநுராதபுரி இராச்சியத்தில் தமிழர்கள், சிங்களவர்கள் என்ற பாகுபாடின்றி மக்கள் வாழ்ந்து வந்துள் ளார்கள் என்பதும், எல்லாள மன்னரது படையிலும் கூட தமிழர்களும், சிங்களவர்களும் இடம்பெற்றிருந்தார்கள் என்பதுவும் தெளிவாகின்றது.
எல்லாள மன்னரின் ஆட்சியின் கீழ் இயங்கிய இராசரட்டை, வளம் பொருந்தியதாக இருந்தமைக்கான சான்றுகள் பலவுள. அக்கால அநுராதபுரி இராச்சியத்தில் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட உயர்ரக புடவை வகைகளும், நறுமணங் கமழும் பொருட்களும் குவிந்திருந்தன. காவந் திஸ்ஸ மன்னரின் போர்வீரர்களில் ஒருவரான நிமிலன் மிகிந்தலைக்கு அண்மையிலுள்ள தொரமடலாகமையை நோக்கி செல்லும் வேளையில், அநுராதபுர நகரத்தில் சந்தை விற்பனை நிலையங்களில் வாசனைப் பொருட்களையும், குண்டலினி என்னும் பிராமணரிடமிருந்து பூரண வர்த்தனம்’ எனும் புடவை வகைகளையும் வாங்கிச் சென்றதாக மகாவம்சம் கூறுகிறது. அப்பயணத்தின்போது நிமிலன் பூரீ மகா விகாரையையும் தூபா ராமையையும் தொழுது வணங்கிச் சென்றதாக மகாவம்சம் கூறுகிறது. எல்லாள மன்னரது ஆட்சியின் கீழ் இப்புனித ஸ்தலங்கள் உரிய முறை யில் பாதுகாக்கப்பட்டிருந்தமை இதிலிருந்து புலனாகிறது. இம்மன்னர் பெளத்த மதத்திற்கோ, சிங்கள இனத்தினருக்கோ எதிராக செயல்பட்டதாக எவ்விதக் குற்றச்சாட்டுகளும் வம்சக் கதைகளில் குறிப்பிடப்படவில்லை. ஆயினும், தமிழர்கள் சைத்தியங்களுக்கு விளைவிக்கின்ற கொடுமைகளை தாங்க முடியாது நந்திமித்திரன் எனும் போர்வீரன் அநுராதபுரத்தைவிட்டு ஓடிச் சென்றதாக மகாவம்சம் கூறுகிறது. தானறியாது தவறுதலாக சைத்தியத் திற்கு நிகழ்ந்த பாதிப்பிற்கு தன் சுயவிருப்பின் பேரிலே தண்டனையைப் பெற்றுக் கொள்ள முன்வந்த எல்லாள மன்னரோ, அவரது பெளத்த அமைச்சர்களோ ஏனைய தமிழர்கள் சைத்தியங்களுக்கு நிந்தனை செய்வ தற்கு இடமளித்துவிட்டு வாளாவிருந்திருப்பார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கூற்றாகும். இது உருகுணையில் வசிக்கின்ற பெளத்த மக்களை எல்லாள மன்னருக்கெதிராக அணி திரள வைப்பதற்காக துட்டகைமுனு வால் கோர்த்துக் கட்டப்பட்ட கட்டுக்கதையாகும். துட்டகைமுனு மன்னர் யுத்தத்தை ஆரம்பித்த நோக்கம், "எதிரிகளை முறியடித்து சிங்களத் தலைமைத்துவத்தை நிலை நிறுத்துவதே போன்ற யுத்த கோஷங்களை முன் வைத்ததாகவேனும் வம்சக் கதைகள் கூறவில்லை. புத்த சாசனத்தை
9

Page 12
மிளிரச் செய்வதே முக்கிய நோக்கமாக இருந்தது. மக்கள் செல்வாக்கினை பெற்றுக்கொள்வதில் பிக்குமார்களுக்கு இருந்த பலத்தினை உரிய முறை யில் பயன்படுத்திக் கொள்வதற்கு துட்டகைமுனு மன்னர் முயசித்துள் ளமை புலனாகின்றது. இவ்விராச்சியத்தில் எல்லாள மன்னருக்கு சார்பாக தமிழ் மக்களும் சிங்கள மக்களும் நெருங்கி உறவாடும்போது, சிங்கள தேசியவாத யுத்த கோஷ மொன்றை முன்வைப்பது பயனற்ற செயல் என துட்டகைமுனு மன்னருக்குத் தோன்றியிருக்கலாம். துட்டகைமுனு மன்னரின் மாமனாரொருவர் உருகுணையில் பிரதான பிக்குவாக இருந்தார். இவர் அநுராதபுர பிரதான பெளத்த மத்திய நிலையம் பற்றி விசேட கவனஞ் செலுத்தினார்.
இரு மன்னர்களினதும் மாண்புகளை சித்திரிக்கும் வகையில் எல்லாள - துட்டகைமுனு யுத்தத்தின் இறுதி முடிவு அமைந்திருந்தது. துட்டகைமுனு தாயின் கருவில் தரித்திருந்த காலத்திலேயே - எல்லாளன் மாமன்னராக விளங்கினார். ஆகவே, இந்த யுத்தத்தின் போது எல்லாள மன்னர் முதிர்ச்சி யடைந்தும், துட்டகைமுனு இளமையுடனும் காணப்பட்டனர். யுத்தத்தின் இறுதிக்காலத்தில் திடகாத்திரமான துட்டகைமுனு எல்லாள மன்னரை துவந்த யுத்தமொன்றிற்கு அறை கூவினார். இச் சவாலினை ஏற்காது விடுவது அரச தர்மங்களுக்கு முரணானது என எண்ணிய எல்லாள மன்னர் இளைஞனான துட்டகைமுனுவுடன் துவந்த யுத்தம் செய்தார். யுத்தம் தொடர்ந்து இடைவிடாது நடைபெறவே எல்லாள மன்னர் சரிந்து வீழ்ந்தார். துட்டகைமுனு, வயோதிப மன்னரது உடலிற்கு இறுதி அஞ்சலி செலுத்தி, கண்ணியமாக நல்லடக்கம் செய்வித்தது மட்டுமல்லாது எல்லாள மன்னரது பெயரில் சிலையொன்று எழுப்பி நாட்டு மக்களுக்கு மரியாதை செலுத்து மாறு ஆணையிட்டார்.
இந்த யுத்தத்தில் தமிழர்கள் கண்மூடித்தனமாக கொல்லப்பட வில்லை. மாறாக, தரைப்படை, காலாட்படை, யானைப்படை, குதிரைப் படை ஆகிய நாற்படைகளையும் அழிப்பதற்காகவே இச்சமர் மூண்டது. இச்சமரில் 21870 யானைகளும், 65610 குதிரைகளும் உயிரிழந்ததுடன் 21870 யுத்த வாகனங்கள் சிதைவுற்றன. 109350' போர்வீரர்கள் மாண்டனர். அசோக மன்னர் கலிங்க யுத்தத்தின்போது போர்வீரர்களின் இழப்பினை எண்ணி வருந்தியது போன்றே துட்டகைமுனு மன்னரும் போர்வீரர்களை கொலை செய்ய நேரிட்டதை எண்ணி மிகவும் மனம் வருந்தினார். அப்போது அநுராதபுரத்தில் வசித்த தமிழ் மக்களுக்கோ, போர்வீரர்களது மனைவி மக்களுக்கோ துட்டகைமுனு மன்னரின் பக்கத் தினரால் எவ்வித துன்புறுத்தல்களும் நிகழவில்லை. ஆயினும் மகாவம்சம் எழுதப்பட்டு சுமார் 800 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்ட "பூஜா வலியில் எல்லாளன் எனும் தமிழ் மன்னர் நாடு பூராகவுள்ள விகாரை களையும், சாசனங்களையும் சிதைத்தழித்து ஆட்சி செய்ததாக குறிப்பிடப்
7 - மகாபாரதம் - கமலா சுப்பிரமணியம் பக்.749
10

பட்டுள்ளது. மகாவம்சம் எழுதப்பட்ட சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்ட ‘இராஜவலி' யிலும், எல்லாள மன்னர் அநுராதபுர நகரில் இரண்டாவது பேதிஸ்ஸ மன்னரினால் கட்டப்பட்ட தாதுகோபங் களை சிதைத்தழித்து அதர்மமான முறையில் ஆட்சி புரிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விரு கூற்றுக்களும் மகாவம்சத்தின் கூற்றுக்கு மிகவும் முரணானவை. எல்லாள மன்னர் மிகிந்தலையில் வசித்த பிக்குமார் களுக்கு தானம் வழங்கியமையைக் குறிப்பிட்டுள்ள மகாவம்ச ஆசிரியர் அம்மன்னரினால் சாசனங்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் நிகழ்ந்திருந்தால் அதனைக் குறிப்பிடாமல் இருப்பதற்கு நியாயமில்லை. 'இராஜவலிய எனும் நூலை எழுதிய பிரபலமடையாத எழுத்தாளர் இதற்கு முன்னர் எழுதப்பட்ட மகாவம்சத்தை வாசித்திருக்கவில்லையென்பது புலனாகின் றது. எனினும், ‘பூஜாவலியை எழுதிய மயூரபாத ஆசிர அதிபதியாகிய புத்தமித்திரர் அவர்கள் அவ்வாறன்று. எனினும் இவரும்கூட எல்லாள மன்னர் விகாரையை அழித்தொழித்து சாசனங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியதாக எழுதியிருப்பதுதான் வியப்புக்குரிய விடயம். இவர் வாழ்ந்த காலத்திற்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் மாகன்' எனும் கலிங்க நாட்டு மன்னர் மலேசியாவிலிருந்து தென்னிந்தியாவினூடாக இலங்கைக்கு வந்து விகாரைகளை சிதைத்த நிகழ்ச்சியினால் கோபமுற் றிருந்தமையே இதற்கான காரணமாகும். யாரோ செய்த குற்றத்தின் பழியை எல்லாள மன்னர் மீதும், அவரது படையினர் மீதும் சுமத்தியிருப்பது மா பெரும் வரலாற்றுத் தவறாகும். 'பூஜாவலி"யின் ஆசிரியர் எல்லாள மன்னரின் படையினரின் எண்ணிக்கை பத்து இலட்சத்து இருபது ஆயிரம் எனக் கூறியிருக்கிறார். இலங்கையின் தற்போதைய தரைப்படையில் கூட இவ்வளவு தொகையினர் இல்லை என்பது உறுதி. அன்று பத்து இலட்சம் தமிழர்களைக் கொண்ட படையொன்று எல்லாள மன்னரிடம் இருந் திருந்தால் அவர்களது குடும்பத்தினருடன் நோக்குமிடத்து முப்பது நாற்பது இலட்சம் தமிழ் மக்கள் அநுராதபுரி இராச்சியத்தில் வசித்திருக்க வேண்டும். எனவே, ‘பூஜாவலி"யிலோ, 'இராஜவலியிலோ எல்லாள - துட்டகைமுனு யுத்தம் பற்றி முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவையாகும். ஆனால் இவற்றுக்கிணங்கவே நிகழ் காலத்தவர்கள் எல்லாள மன்னரையும், எல்லாள - துட்டகைமுனு யுத்தம் பற்றியும் தவறான கண்ணோட்டத்தில் நோக்குகின்றனர். அன்று துட்ட கைமுனு மன்னர் தனது அரசை வியாபித்து, சம்பிரதாய விழுமியங்களுக் கமைய செல்வாக்குப் பெற்றிருந்த பிரதான பெளத்த சமய மத்திய நிலையங்களை தனது அதிகாரத்திற்குக் கீழ் கொண்டு வருவதற்காக போரிட்டாரே தவிர இந்த யுத்தம் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கு மிடையில் நடந்த இனவாத யுத்தமொன்றல்ல.
9 - கி. வ. 1500 ற்கு பின்னர் 10- கி.வ 1236
11

Page 13
5. வலகம்பா மன்னரின் காலத்தின் பின்னர்
தமிழர்களின் ஆக்கிரமிப்பு பற்றி கூறப்படுகின்ற பிறிதொரு நிகழ்வாக வலகம்பா அரசுரிமை பெற்ற (கி.பி. 103-102) காலகட்டத்தினை குறிப் பிடலாம். இதுபற்றி மகாவம்சத்திலும், இதற்கு முன்னர் எழுதப்பட்ட பாளி விளக்கவுரைகளிலும் இருவேறு வகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பேராசிரியர் செனரத் பரணவிதான அவர்கள் கூறியுள்ளார்கள். வலகம்பா மன்னர் அரச பதவியேற்ற சமயம், அவருக்கெதிராக உருகுணையிலிருந்து தீசன் எனும் பிராமணத் தமிழ் இளைஞரொருவர் படையொன்றினைத் திரட்டி வந்ததுடன், தமிழ் நாட்டிலிருந்து ஏழு சேனாதிபதிகள் படைகளைத் திரட்டி வந்துள்ளதாகவும் மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளது. எது எவ்வாறா யினும் உருகுணையிலிருந்து வந்த தீசன் எனும் பிராமண இளைஞன் பெளத்த சமயத்தின் விரோதியாக பாளி மொழிக் கதைகளில் சித்திரிக்கப் பட்டுள்ளான். தமிழ் சேனாதிபதியொருவர் போதி மாதவனின் 'புனித அஸ்தி கலசத்தை எடுத்துச் சென்றுள்ளதாகவும் மகாவம்சம் கூறுகிறது. இதிலிருந்து தமிழ் தலைவர்களுக்கு மத்தியிலும் பெளத்தர்கள் இருந்துள் ளார்கள் என்பது புலனாகின்றது. பேராசிரியரவர்கள் இவ்விரு கூற்றுக் களையும் ஆதாரமாக வைத்து கருத்தொன்றை முன்வைக்கின்றார். அதாவது, தீசன் என்னும் பிராமணனை அரசராகக் கொண்டு புலகஸ்தன், பாகியன், பனைய மாறன், பிள்ளை மாறன், தாதிகன் போன்ற தமிழ் தலைவர்கள் (கி.பி 102-87) வரை 14 வருடங்கள் ஆட்சி செய்திருக்கலாம் என கூறுகிறார். இக்கால எல்லை பூராகவும் வலகம்பா மன்னர் காடுகளில் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து காலத்தைக் கடத்தியுள்ளார். தீச பிராமணனின் ஆட்சியின்போது 'பெமினிதியாசாயா" எனும் பெரும் பஞ்சம் நிலவியதுடன், பெளத்த சமயத்தின் விரோதிகளான சமணர்களின் (நிகண்டு) பலம் பெருகி, பெளத்த சாசனத்திற்கு பேரழிவுகள் நிகழ்ந்த தாகவும் கூறப்படுகிறது. இவ்வேளையில், அநுராதபுரத்தில் அமைந்துள்ள தூபராமாவையும், மகாதூபத்தையும் கைவிட்டு பெளத்த பிக்குமார்கள் பாது காப்பினை நாடி இந்தியாவிற்குச் சென்றதாக வல்பொல ராகுல தேரர் அவர்களும் கலாநிதி திரு. அதிகாரி அவர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர்.' இவ்வாறு இந்நாட்டிலிருந்து சென்ற பிக்குமார்களுக்கு அடைக்கலமளித்து, விருந்துபசாரங்களையும் வழங்கியவர்கள் ஆந்திர தேசத்து மக்களே. அக் காலத்தில் இத்தேசத்தில் பெளத்த சமயத்தின் வளர்ச்சி மேலோங்கி யிருந்தது. இதற்கு முன்னர் எல்லாள மன்னரது ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக உருகுணையிலிருந்து துட்டகைமுனு மன்னர் வந்த பாதையூடாக வந்த தீசன் என்னும் பிராமணன் தொடர்புகளை வைத்திருந்த தமிழ்த் தலை வர்களின் பெயர்களை நோக்குகையில், அவர்கள் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகின்றது. பனையமாறன், பிள்ளைமாறன்
11- இலங்கையின் புத்த சமயத்தின் வரலாறு என்ற நூலின் 6வது பக்கம் , பண்டை
இலங்கையின் பெளத்த வரலாறு என்ற நூலின் 4 பக்கம் (சிங்கள நூல்)
12

போன்ற பெயர்களின் இறுதியில் வரும் 'மாறன்’ என்னும் ஒலியினை வைத்து அவ்வாறு முடிபு செய்யலாம். அரசியல் கலகங்கள் நிகழ்ந்த போதிலும்கூட சமயரீதியாக தமிழ் சிங்கள பிக்குமார்களுக்கிடையில் சுமுகமானதொரு நட்புணர்வு நிலவி வந்துள்ளமைக்கு பெமினி தியாசாயா பஞ்சக் காலத்தில் கிடைத்த ஒத்துழைப்புக்கள் சான்று பகர்கின்றன.
கிறிஸ்து வருட ஆரம்பத்தில் இலங்கையின் சிங்கள மன்னர்கள் பல வழிகளில் தென்னிந்திய இராச்சியங்களுடன் தொடர்புகளை வைத்தி ருந்தமை நன்கு புலனாகின்றது. மகாதாதிகன் மகாநாகன் எனும் மன்னர் (கி.பி 9-21) தமிழ் இளவரசியொருத்தரை பட்டத்து ராணியாக்கிக் கொண்டார். சில காலங்களின் பின்னர் இலம்பகர்ண கோத்திரத்தாருடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்ட இலநாக மன்னர் தமிழ் நாட்டுக்குச் சென்று துணைப்படையொன்றை அழைத்து வந்த பின்னரே அரசபதவியை பெற்றுக் கொள்ள முடிந்தது. இம்மன்னனின் மைந்தனாகிய சந்திரமுக சிவகுமாரனின் ராணியும் தமிழ் இளவரசியொருவரே ஆகும். நீலன் என்னும் மாவீரனின் சாகசங்கள் பற்றி கூறப்படுகின்ற புகழ்பெற்ற கதையுடன் தொடர்புடைய முதலாவது கஜபாகு மன்னர் தென்னிந்தியாவின் தமிழ் தேச மொன்றான சேர நாட்டுடன் நேச உறவுகளை வைத்திருந்தார். அக் காலத்தில் செங்குட்டுவன் எனும் சேர நாட்டு அரசன் மற்றொரு தமிழ் அர சொன்றாகிய சோழ நாட்டுடன் பகமை கொண்டிருந்தார். இலங்கை யிலிருந்து சோழ நாட்டுக்கு சிறை பிடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணியில் சிங்கள மன்னருக்கு செங்குட்டுவன் தனது பூரண ஆதரவினை நல்கினார். இதுமட்டுமன்றி, அந்நாட்டின் கற்புக்கரசியான கண்ணகியெனும் பத்தினிதேவியின் பெயரில் ஆலயம் ஒன்று கட்டி யெழுப்பி, அர்ப்பணிக்கும் வைபவத்தில் சிங்கள மன்னர் கலந்து சிறப் பித்துள்ளார். இலங்கையில் பத்தினிதேவி வழிபாட்டை அறிமுகப்படுத் தியவரும் கஜவாகு மன்னரேயாவார். இவ்வேளையில் கண்ணகியின் காற்சிலம்பை இலங்கைக்கு கொண்டு வந்ததாகவும் புராணக் கதைகள் மூலம் தெரிய வருகிறது. வோகாரிக திஸ்ஸன் எனும் மன்னரின் ஆட்சிக் காலத்தில் அவரது தம்பியாகிய லமெனி வம்சத்தைச் சேர்ந்த அபயநாகன் என்பவர் (கி.பி.231)இல் தமிழ் துணைப்படையொன்றின் உதவியுடன் அரசைக் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.* முதலாவது லமெனி வம்சத்தின் அரைஇறுதியில் (கி.பி. 406-428) ஆட்சி புரிந்த மகாநாம எனும் மன்னரும் தமிழ் இளவரசியொருத்தியை மணமுடித்திருந்தமை பற்றி மகாவம்சத்தின் எட்டாவது அத்தியாயத்தின் ஆரம்பத்திலே கூறப்பட் டுள்ளது.
யுத்தம் செய்து வெற்றியீட்டியதன் மூலமாக பாண்டியன் என்பவருக்கு ஆட்சியைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. இதன் காரணமாக இவர் தமிழ் படையொன்றுடன் வந்திருக்கலாம். அக்காலத்தில் இங்கு வசித்த தமிழ் 12- மகாவம்சத்தின் 36வது அத்தியாயத்தின் 49-51வரையிலான செய்யுள்கள்
13

Page 14
மக்கள் மாத்திரமன்றி, சிங்கள மக்களும் ஒன்றிணைந்து கொள்ளைக் காரனான களப்பிரனை வெற்றி கொள்வதற்கு பாண்டிய மன்னருக்கு ஒத்துழைப்பு நல்கியுள்ளார்கள் என்பது தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளக் கூடியதே."
பாண்டிய மன்னரின் ஆட்சிக் காலத்தின் போது சிங்கள அரச குலத் தைச் சார்ந்த இளவரசனான தாதுசேனன் பிரபலம் பெற்றிருக்கவில்லை. இவர் மாமனாராகிய திக்சிய செனவியா பரிவேனா மகாதேரர் அவர்களின் வழிநடத்தலின் கீழ் செயல்பட்டார். இத்தேரர் தனது மருமகனை பாதுகாக்கு முகமாக துறவு பூணச் செய்திருந்தார். அரசகுலத்தைச் சேர்ந்த இவர்களை பாண்டிய மன்னர் கண்காணிப்பதை அறிந்தவுடன் அநுராதபுரத்திலிருந்து வெகுதொலைவில் சென்று வசிக்கலாயினர்.
பாண்டிய மன்னர் ஐந்து ஆண்டுகளின்பின்னர் இறக்கவே அவரது புதல்வனாகிய பாரிந்தன் மன்னராக நேரிட்டது. இத்தமிழ் மன்னன் ஆட்சி புரிந்து மூன்று மாதங்களில் இறந்து விடவே, இளைய சகோதரனான இளம் பாரிந்தனுக்கு அப்பதவி உரித்தாயிற்று. இளைய பாரிந்தன் சுமார் 16 வருடங்கள் அநுராதபுரத்தில் ஆட்சி புரிந்து வந்தார். இச்சந்தர்ப்பத்தில் சிங்களத் தலைவர்களின் உதவியுடன் படையொன்றைத் திரட்டிய தாது சேனன் இளைய பாரிந்தனுக்கு எதிராக போரிட்டாராயினும் வெற்றியீட்ட முடியவில்லை. பின்னர் இளைய பாரிந்தன் மரணிக்கவே திரிதரனுக்கு அரச பதவி உரித்தாயிற்று. தாதுசேனன் மேற்கொண்ட போரில் திரிதரன் இறக்க நேரிட்டபோதிலும் தாதுசேனனுக்கு அரசபதவியை கைப்பற்ற முடிய வில்லை. திரதரனுக்கு பின்னர் தாதியன் எனும் தமிழ் இளைஞனே அரச பதவி ஏற்றான். தனது போராட்டத்தைக் கைவிடாது முழுமூச்சாக முன் னெடுத்துச்சென்ற தாதுசேனன் மூன்றாண்டுகளின் பின்னர் தாதியனை கொலை செய்தார். இவ்வேளையிலும் துரதிருஷ்டவசமாக அரச பதவியைக் கைப்பற்ற முடியவில்லை. ஏனெனில், தாதியனின் பின்னர் பிதியன் என்னும் தமிழ் இளைஞரொருவருக்கே அரசபதவி உரித்துடைத்தாயிற்று. ஏழுமாதங் களின் பின்னர் பிதிய மன்னருடனும் போர் தொடுத்து தோல்வியுறச் செய்து அவர் மடிந்த பின்னரே தாதுசேனனுக்கு தனது நோக்கத்தை நிறைவேற்ற முடிந்தது. இவ்வேளையில், தமிழ் இராஜ குடும்பத்தில் இன்னுமொரு முடிக்குரிய இளவரசர் இல்லாதிருந்திருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை. இச்சந்தர்ப்பத்தில் துட்டகைமுனு - எல்லாள யுத்தத்தினைப் போன்று புத்த சாசனத்தை பாதுகாத்துக்கொள்ளும் யுத்த கோஷங்கள் எதனையும் தாதுசேன மன்னர் முன்வைத்திருக்கவில்லை. ஆயினும் தனது மாமனா
13 - தென்னிந்தியத் தமிழர்களுக்கும் பெரும் தொல்லையாக விளங்கிய களப்பிரர்கள் பூரீ விஜய அரசிற்குட்பட்டிருந்த மலையாளத் தீவின் கிராதேச எல்லைக்கு அருகே தமலி எனும் பிரதேசத்தில் வசித்த கூட்டத்தினர் என பரணவிதான அவர்கள் தனது கட்டுரைத் தொடர் இன் முதலாவது கட்டுரையின் திருத்தமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
14

ராகிய மகாதேரர் அவர்களினதும் இதர தேரர்களினதும் பூரண ஆதரவு கிடைத்திருக்கும் என்பதில் கிஞ்சித்தேனும் சந்தேகமில்லை. எது எவ்வாறா யினும் பாண்டியனால் தோற்றம் பெற்ற இத்தமிழ் அரச பரம்பரையினரும் பெளத்தர்களே என்பது புலனாகின்றது. இக்கால கட்டத்தில் தென்னிந்தியா விலும் பெளத்த மதம் பரவியிருந்தமைபற்றி மகாவம்சத்தில் உறுதியாககக் கூறப்படவில்லையாயினும், இளைய பாரிந்தன் பாவ புண்ணியச் செயல் களில் ஈடுபட்டிருந்ததாக கூறப்பட்டிருக்கிறது. அக்காலத்துடன் தொடர்பு டைய பல கல்வெட்டுகளில் இருந்து இத்தமிழ் மன்னர்கள் பெளத்தர்கள் என்று உணர்ந்து கொள்ள முடிகிறது. புகழ் பெற்ற வரலாற்றாசிரியரான சீ. டபிள்யூ. நிக்கலஸ் அவர்கள், ‘கல்வெட்டுகள் இரண்டில் இத்தமிழ் ஆட்சியாளர்கள் பெளத்த ஆசிரமங்களுக்கு வழங்கிய நன்கொடைகள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது" என்கிறார். அதிலொன்று பாரிந்தனாலும், மற்றையது இளைய பாரிந்தனாலும் எழுதப்பட்டிருக்கிறது. கதிர்காம கிரிவிகாரையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டொன்றில் ஐந்தாவது தமிழ் மன்னனாகிய தாதியன் பெளத்த விகாரையொன்றுக்கு வழங்கிய நன்கொடை பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதிலிருந்து இம்மன்னர்களது ஆட்சி உருகுணை வரை வியாபித்திருந்தமை புலனாகின்றது.
இளைய பாரிந்தனின் அரசியாகிய சபாஇராஜினி சுமார் பத்து ஏக்கர் வயல் நிலம் மற்றும் ஆடை அணிகலன் உட்பட இன்னும் பெறுமதி வாய்ந்த பொருட்களை தானமாக வழங்கியுள்ளமை பற்றி அநுராதபுரத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஓலைச்சுவடியொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மன்னர்கள் சிங்கள மொழியில் எழுதியிருப்பது இங்கு காணக்கூடிய இன்னு மொரு சிறப்பம்சமாகும். இக்கல்வெட்டிலிருந்து ஓரிரு வரிகளை உங்களது பார்வைக்காகத் தருகின்றோம்.
"සිඩම් මපුරුමු බුදදාස ළපර්ශදව ම හරප් අපයභට බිසොව රෙජන තිථි මහ"
இளைய பாரிந்தனின் பெயர் லபரிதேவன் என்றும், "அபயகட" என்பதன் தமிழ் உச்சரிப்பு வடிவம் ‘அபயகட என்றும், மன்னரின் பெயருக்கு முன்னால் ‘புத்தஸ’ எனக் குறிக்கப்படுவது 'புத்ததாஸ’ எனும் அரச குலப்பெயராகும் எனவும் கூறப்படுகின்றது. இம்மன்னர்கள் பெளத்தர்கள் அல்லாதவிடத்து இப்பெயர்கள் சூட்டப்பட்டிருக்க நியாயமில்லை. - இன்னொரு முக்கிய விடயம் யாதெனில், பெளத்தர்களாக தோற்றம் பெற்றிருந்த இம்மன்னர்கள் சிங்கள அரசகுல வழக்கங்களுக்கேற்ப, சகோதரரிடமிருந்து சகோதரிக்கும், அதன் பின்னர் மூத்த சகோதரரின் புதல்வருக்கும் அரசுரிமை வாரிசுகளாகும் வழக்கத்தை இவர்களும் கொண்டிருந்தனர். இத்தமிழ் மன்னர்கள் புகழ் பெற்ற அரசகுலத்தைச் சேர்ந்
14- Concise Histroy of Ceylon - Chapter VH
15

Page 15
தவர்கள் என்பதுடன், அவர்களது நோக்கம் சிங்களவர்களை அடக்கியாண்ட களப்பிரனை (கதிர்கள்வனை) தோல்வியுறச் செய்தல் வேண்டும் என்பதே யாகும்.
7. பரஸ்பர மத்தியஸ்தம்
தாதுசேனனின் காலத்தின் பின்னர் (கி.பி 477) தோற்றம் பெறுகின்ற சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கிடையில் அரசுரிமை பற்றிய சர்ச்சைகள் எழுந்த பல சந்தர்ப்பங்களில் தமிழ், சிங்கள இராஜவம்சத்தினரின் பரஸ்பர மத்தியஸ்த செயற்பாடுகள் மூலம் அவற்றைத் தீர்த்துக்கொண்டதாக அறிய முடிகின்றது. நீர்ப்பாசன, கைத்தொழில் துறைகளை விருத்தி செய்தமை யுடன், மகா விகாரை பிரிவினருக்கும் அபயகிரி பிரிவினருக்கும் 18 விகாரைகள் கட்டிக் கொடுத்தது மட்டுமல்லாமல், மக்கள் நலன் கருதி அளப்பரிய சேவையாற்றிய தாதுசேன மாமன்னருக்கு நிகரெனக் கொள் வதற்கு இலங்கையில் வேறு அரசரெவரும் இல்லையெனத் துணிந்து கூறலாம். சிங்கள மக்கள் போற்றிப் பெருமை கொள்ளுமளவிற்கு உன்னத சேவைகள் புரிந்த தாதுசேன மன்னர் அம் மக்களது மனங்களில் சாகாவரம் பெற்று இன்றும்கூட நிலைத்து நிற்கின்றார் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு கீர்த்தி மிக்க இம்மன்னர், அவரது புதல்வனொருவனாகிய காசியப்பனால் முதலில் சிறையிலிடப்பட்டு, பின்னர் அவரது பிரசித்தி வாய்ந்த குளக் கட்டில் நிறுத்தப்பட்டு, உயிருடன் களிமண்ணால் மூடப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இவ்வாறான பரிதாபகரமான உள்ளத்தை உருக்கும் நிகழ்ச் சியை கேட்கும்போது இதயமே வெடித்து விடும்போல ஒரு வேதனை!
அநாதையாக்கப்பட்ட உயர்குடி கைதியாகிய இவரை கொலை செய் வதற்கு அழைத்துச் செல்லும் வழியில், இவருடன் முன்னர் உறவாடிய மகா தேரர் ஒருவர் இதனைக் கண்ணுற்றுள்ளார். இது பகிரங்கமாக நடைபெற்ற ஒரு கொலையென்பது இதிலிருந்து தெளிவாகின்றது. இவ்வாறான தீர்க்கமான ஒரு சந்தர்ப்பத்தில் கூட நாட்டிலுள்ள எந்தவொரு பிக்குவோ ஆட்சியாளரோ மாபெரும் வரலாற்றுக் குற்றமாகிய இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு முன்வரவில்லை. இது தொடர்பாக பொதுமக்கள் வாளாவிருந்தனர். பண்டைய காலத்தில் பொதுமக்களின் விருப்பு வெறுப்புக்களோ, அவர்களது கருத்துக்களோ அரசியலில் செல்வாக்குச் செலுத்தாமையால், பொதுமக்களின் மெளனம் நியாயமானதே. ஆயினும் பிக்குமார்களின் மெளனம் புரியாத புதிராகவிருக்கின்றது. தாதுசேன மன்னர் பிக்குமார்களினது ஆதரவுடனேயே முடி சூட்டினார் என்பது இங்கு குறிப் பிடத்தக்கது. இரு மதப் (நிகாய) பிரிவுகளுக்கும் மிக உயரிய சலுகைகளை தாதுசேன மன்னர் வழங்கியிருந்தார். ஆயினும், அநாதையாக தனித்து விடப் பட்ட இம்மன்னரைக் காப்பாற்றுவதற்கு எவரும் முன் வராமை கவலைக்
குரிய விடயமாகும். மகாவம்ச ஆசிரியரே இந் நிகழ்வினை 'விதியின் சதி”
16

என உரைத்து விதியைச் சாடி விடயத்திலிருந்து நழுவுகிறார். நாட்டின் ஏனைய ஆட்சியாளர்களின் மெளனத்திற்கு, அரச குலங்களுக்கிடையே நிலவிய மோதல்கள் காரணமாகவிருக்கலாம். தாதுசேன மன்னர் மெளரிய வம்சத்தைச் சேர்ந்தவர். மெளரிய வம்சத்தினர் சிம்மாசனத்தில் வீற்றிருக்க, இலம்பகர்ண வம்சத்தினர் உயர்பதவிகளை வகிப்பது அக்கால வழக்கு. பிறிதொரு வம்சத்தைச் சார்ந்த தந்தை மகன் பிணக்குகளில் தலையிடு வதன் மூலம் எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய சலுகைகளை நாம் ஏன் இழக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் அவர்கள் இவ்விடயத்தில் மூக்கை நுழைக்காமல் இருந்திருக்கலாம்.
தாதுசேன மன்னனின் இரண்டாவது மகனாகிய முகலன் என்பவர் இச் சச்சரவுகள் ஆரம்பித்தவுடனேயே தென்னிந்திய தமிழ் இராச்சியம் ஒன்று க்கு தப்பியோடியுள்ளான் என்பதில் சந்தேகத்துக்கிடமில்லை. பதினாறு வருடங்கள் கழித்து அவன் வந்ததன் பின்னர், பலம் பொருந்திய சேனாதி பதிகள் பன்னிருவரின் ஆதரவும் அவனுக்குக் கிடைத்தது. முகலன் தந்தையை கொலை செய்த பழியைத் தீர்த்துக்கொள்வதையும் தனக்குரித் தாக வேண்டிய அரசுரிமையை பெற்றுக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்டு சேனையொன்றுடன் தாய்நாடு திரும்பினான். காசியப்பனுடன் போரிட்டு வெற்றிவாகை சூடினன். தாதுசேன மன்னனுக்கு ஆதரவு செலுத்தக்கூடிய மக்கள் தென்னிந்தியாவிலும் இருந்துள்ளார்கள் என்பது இதிலிருந்து புலனாகின்றது. இக்காலகட்டங்களில் தமிழ் இராச்சியங்களில் மகாயான, தேரவாத ஆகிய இருபிரிவினதும் பெளத்த நிறுவனங்கள் காணப் பட்டன. எவ்வித பாரபட்சமுமின்றி இரு மதப் (நிகாய) பிரிவினருக்கும் உயர்வாக மதிப்பளித்தது மட்டுமன்றி நீர்ப்பாசனத் துறையிலும் அளப்பரிய சேவைகள் புரிந்து புகழினை ஈட்டிய தாதுசேன மன்னரைப் பற்றி தென் னிந்திய மக்கள் அறியாதிருக்க நியாயமில்லை. இவ்வாறான மன்னரொரு வருக்கு நிகழ்ந்த துரோகச் செயலைக் கேள்வியுற்ற அம்மக்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
8. அகம்படி சேனைகள்
இதன்பிறகு தோற்றம் பெறுகின்ற ஆறாம் ஏழாம் நூற்றாண்டுகளில் தமிழ், சிங்கள மக்களிடையே நிலவிய உறவுகள் புதுக்கோணத்தில் அமைந் திருந்தன. தென்னிந்தியத் தமிழர்கள் இலங்கை மன்னர்களின் அழைப்பின் பேரில் அவர்களுக்கு ஒத்தாசை புரியும் நோக்கத்துடன் இங்கு வந்து யுத்தம் புரிய நேர்ந்ததேயன்றி, அவர்களின் சுயவிருப்பின் பேரில் யுத்தம் புரிய வர வில்லை என்பது நன்கு புலனாகின்றது. அதாவது இலங்கையின் ஆட்சி யதிகாரம் தொடர்பாக அடிக்கடி சண்டையிட்டுக்கொண்ட அரசர்கள் தென்னிந்தியாவை நாடிச் சென்று குறிப்பிட்ட சில அரசர்களின் அனுமதி யுடன் கூலிப்படைகளை இலங்கைக்கு அழைத்து வந்தனர். ‘அகம்படி சேனைகள்’ என அழைக்கப்பட்ட இவர்களுக்கு தங்குமிட வசதியுடன் கூடிய
17

Page 16
பாதுகாப்பும் வழங்கப்பட்டது. இவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் மன்னர் ஆணைப்படி யுத்தம் புரியத் தயாராக இருந்தனர். முக்கியத்துவம் பெற்ற வீரர்களும் இப்படையில் அடங்கியிருந்தனர். அத்துடன் சிங்களத் தலைவர் களும் தமிழ்ப் படைகளில் சேனாதிபதிகளாக கடமை புரிந்தனர். இவர்கள் எச்சந்தர்ப்பத்திலேனும் தனக்கெதிராக போர்க்கொடி தூக்குவார்கள் எனக் கருதிய சிங்கள மன்னர்கள் தமிழ் சேனாதிபதிகளிடமே அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். அக்காலத்தில் சிங்கள அதிகாரிகள் சிலர் மன்னருக்கு எதிராகவும், தேசத் துரோகியாகவும் செயற்பட்டது மட்டுமல்லாமல், தென் னிந்தியத் தமிழ் மன்னர்களிடம் அடைக்கலம் புகுந்தும், உருகுணைப் பிர தேசத்திற்குச் சென்று உள்நாட்டுப்பூசல்களில் ஈடுபட்டும் வந்தமை யினால் மன்னரது அச்சம் நியாயமானதே.
இது தொடர்பாக, இரண்டாவது தாதோதிஸ்ஸன், நாலாவது அக்க போதி ஆகிய இரு மன்னர்களினதும் ஆட்சி சிறப்புப் பெறுகின்றது. இருபத் தைந்து வருடங்கள் ஆட்சி புரிந்த இவ்விரு மன்னர்களது அரசவையில் தமிழ் சேனாதிபதிகளே முக்கிய பதவிகளை வகித்தனர். பொத்தக்குட்டன் என்பவர் அக்கபோதி மன்னரின் முதலமைச்சரும் ஆலோசகருமாக இருந்தது டன், பொத்த சாத்தன், மகாகந்தன் ஆகிய இருவர் மன்னரின் முக்கிய
சுபீட்சமும் நிலவியதுடன் சமயரீதியிலும் வளர்ச்சி காணப்பட்டது.
சூளவம்சத்தில் கூறப்பட்டுள்ளவாறு இத்தமிழ் மன்னர்கள் இருவரும் பெளத்த மதத்தவர்களாவர். பொத்தகுட்டன் 'மாடம்பிய" எனும் பிரிவெனா வை கட்டுவித்தார். அபே வெவ எனும் வாவி உட்பட வேலைக் காரர்களையும் புக்ககல்ல எனும் ஊரையும், நித்திலவீதி எனும் ஊரையும் இப்பிரிவெனாவிற்கு காணிக்கையாக வழங்கினார். அத்துடன் கப்புறு பிரிவேனாவிலும் குருந்தப்பிள்ளை பிரிவெனாவிலும் மாடிக்கட்டங்களை நிர்மாணித்தார். இவ்வாறு சூளவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு தனவந்தர் வெவ்வேறு இடங்களில் விகாரைகள் கட்டுவதற்காக மூன்று கிராமங்களை தேர்ந்தெடுத்தார். பொத்தசாத்தன் எனும் மதிநுட்ப முடைய சேனாதிபதி ஜேதவன விகாரையில் மன்னரின் பெயரில் பிரிவெனா ஒன்றை கட்டி முடித்தார். மகாகந்தன் எனும் தமிழ் தலைவரும் தனது பெயரில் பிரிவெனா ஒன்றைக் கட்டியெழுப்பினார்.
நாலாவது அக்கபோதி மன்னரின் மரணத்திற்குப் பிற்பாடு, தத்தன் மற்றும் இரண்டாவது கத்ததத்தன் ஆகிய சிங்கள அரச குலத்தைச் சேர்ந்த இருவரும் ஒழுங்குவரிசைப்படி அரசர்களாக முடிசூடினர். பொத்தக்குட்டன் இவர்களது முதலமைச்சராக விளங்கினார்.
இத்தமிழ் தலைவர்கள் விகாரைகளுக்கு வழங்கிய நன்கொடைகளை உற்று நோக்குகையில், இவர்கள் மாபெரும் நிலச் சொந்தக்காரர்கள் என்பது புலனாகின்றது. இக்கிராமங்களில் சாதாரண போர்வீரர்களும் வசித்துள்ள
18

தாக நம்ப முடிகிறது. முந்நூறு ஆண்டுகள் தொடர்ந்து நிலவிய இச்செயற் பாடு காரணமாக அவர்களிற் சிலர், சிங்களவர்களாக மாறினர். பின்னர் மாணவம்மன் (கி.பி 684) எனும் இளவரசன் தென்னிந்தியாவிலிருந்து படை யெடுத்து வந்த வேளையில், சிங்கள இனத்தைச் சேர்ந்த கத்ததத்தனுக்காக உயிரைத் துச்சமென மதித்து அவர்கள் போர் புரிய முன்வந்தனர். மான வம்மனின் படையும், பொத்தக்குட்டனின் தலைமையிலான சிங்கள - தமிழ் நேசப் படையும் கடும் போர் புரிந்தன. இச்சமரில், சிங்கள மன்னரான கத்த தத்தன் இறக்க நேரிட்டதுடன் முதலமைச்சரான பொத்த குட்டன் தற் கொலை செய்துகொண்டான்.?
இலங்கைமீது மேற்கொள்ளப்பட்ட மிகப் பிரதானமான ஆக்கிரமிப்பாக கி.பி. 1017இல் சோழர்கள் இலங்கையில் அத்துமீறிப் பிரவேசித்தமையை வரலாறு கோடிட்டுக் காட்டுகிறது. சிங்கள மன்னர்களும் இந்நிகழ்வுக்கு ஒரளவு பொறுப்பாளிகளாவார். ஏனெனில், தென்னிந்தியத் தமிழ் இராச்சி யங்களுக்கிடயே நிலவிய பிணக்கொன்றில் இலங்கை தலையிட்டமையே இதற்கு மூலகாரணமாகும். அதாவது, சோழ நாட்டின் இரண்டாவது பராந்தகன் எனும் மன்னர், பிறிதொரு தமிழ் இராச்சியமான பாண்டிய நாட்டை ஆக்கிரமித்த சந்தர்ப்பத்தில், அப்போது இலங்கையை ஆண்ட நாலாவது காசியப்ப மன்னர் (914-23) பாண்டிய மன்னருக்கு இலங்கை யிலிருந்து துணைப்படையொன்றை அனுப்பி உதவினார். துரதிருஷ்ட வசமாக சிங்களப் படையும் பாண்டிய மன்னரின் படையும் தோல்வியுறவே, பாண்டிய மன்னரான இராஜசிங்கன் தனது அரச ஆபரணங்கள் சகிதம் இலங்கையில் அடைக்கலம் புகுந்தார். அப்பொழுது இலங்கையை ஆட்சி புரிந்த தப்புல்ல மன்னர் மீண்டும் துணைப்படை யொன்றை அனுப்ப முயற்சித்த போதும், சேனாதிபதிகள் அதற்கு உடன்பட மறுத்தனர். பின்னர் இராஜசிங்க மன்னர் அரச ஆபரணங்களை இலங்கை மன்னரிடம் ஒப்படைத்து விட்டு பிறிதொரு தமிழ் இராச்சியமான கேரள இராச்சியத்தில் அடைக்கலம் புகுந்தார். வெற்றிவாகை சூடிய சோழ மன்னர் ஆபரணங் களை தன்னிடம் ஒப்படைக்கும்படி தூது அனுப்பியிருந்த போதும் சிங்கள மன்னர் அதற்கு உடன்பட மறுத்துவிட்டார். சோழ மன்னர் இலங்கையை ஆக்கிரமித்ததற்கு இதுவே மூல காரணமாகும். இதன் பின்னர் ஏற்பட்ட தமிழ் - சிங்கள பிணக்குகளுக்கு பூகோள அமைப்பும், அரசர்ளுக்கிடையே நிலவிய பூசல்களும் காரணமாய் அமைந்தன.
15 - மகாவம்சத்தின் 44 அதிகாரத்தின் 19-24 செய்யுள்
16- இந்தச் சமரில் மாணவம்மன் சார்பில் போர் புரிந்தவர்கள் பல்லவ மன்னனிடமிருந்து பெற்ற துணைப்படையினரேயாகும். இந்நாட்டில் இருந்து அவர்களுக்கெதிராக போரை மேற்கொண்ட பொத்தக்குட்டன் எனும் தமிழ் சேனாதிபதியும் பல்லவ வம்சத்தை சார்ந்தவன் என பேராசிரியர் செனரத் பரணவிதான அவர்கள் கூறி யுள்ளார். பொத்தன் என்பதின் தமிழ் வடிவம் பல்லவ என்பதாகும். அப்படியாயின் பொத்த சாத்தன் என்பவரும் பல்லவ இனத்தைச் சார்ந்தவராகும்.
19

Page 17
சோழர்களை விரட்டியடித்து இந்நாட்டை விடுவித்துக்கொண்ட பெருமை முதலாவது விஜயபாகு மன்னரையே சாரும். அந்நிய ஆக்கிரமிப் பாளர்களை விரட்டுவதை நோக்கமாகக் கொண்டிருந்த இம்மன்னர் விசேட மான உத்தியொன்றைக் கையாண்டார். அதாவது, சோழ சாம்ராச்சியத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற ஏனைய இராச்சியங்களுடன் ஒத்து ழைப்புடன் கூடிய நல்லுறவுகளை ஏற்படுத்திக் கொண்டார். பண்டைய காலத்தில் பிரதான அரசியல் காரணிகளாக அரசகுல விவாகங்களும், சமய ரீதியிலான உறவுகளும் செல்வாக்குச் செலுத்தின.
விஜயபாகு மன்னர் 1042 -1046 வரையில் உருகுணையில் ஆட்சி புரிந்த அயோத்தியைச் சேர்ந்த ஜகதிபாலன் என்பவரின் புதல்வியான லீலாவதி என்பவரை முதலாவதாக மணமுடித்தார். லீலாவதியும் அவரது தாயாரும் சோழர்களின் சிறைக்கைதியாகவிருந்து இரகசியமாக இலங்கை க்கு தப்பியோடி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. விஜயபாகு மன்னரின் இளைய சகோதரிக்கு சோழ அரச குடும்பங்களிலிருந்து வந்த திருமணப்பேச்சகளையெல்லாம் நிராகரித்து, பாண்டிய இளவரசரொரு வருக்கே மணமுடித்து வைத்தார். தூதர்களை பரிசில்களுடன் அனுப்பி, கன்னட மன்னருடனும் நட்புறவை ஏற்படுத்திக்கொண்டார். சோழர்களுக் கெதிராக மேற்கொண்ட கலகத்திற்கு உறதுணையாகவிருந்து ஆதரவை நல்கிய பூரீ விஜய எனும் மலேய இனத்தைச் சேர்ந்த அரசருடனான நட்புறவை அவரது அரச குலத்தைச் சேர்ந்த திரிலோக சுந்தரி எனும் மங்கையை இரண்டாவது மனைவியாக மணமுடித்ததன் மூலம் மென் மேலும் வலுப்படுத்திக்கொண்டார். அத்துடன் சமயரீதியிலும் பல சேவை களைச் செய்தார். கலவரச் சூழ்நிலை காரணமாக சங்க சாசனங்கள் முற்றாக அழிந்து போனதால் மீண்டும் புதிதாக ஸ்தாபிக்க வேண்டியதாயிற்று. ஆதலால், புரூணை நாட்டிற்கு தூதுவர்களை அனுப்பி பிக்குமார்களைத் தருவித்து சங்க சாசனங்களை புதுப்பித்து அளித்தார். அநுராதபுர பூரீ மகா போதி மரத்துக்கும், பிக்குமார்களுக்கும் இதற்கு முன்னர் போதிய மதிப் பளிக் கப்படவில்லை என்பதை விஜயபாகு மன்னர் தனது விடுதலைப் போரர்ட் டத்தின் மூலம் அறிந்திருந்தார். இதுவரையில் கவனம் செலுத்தப்படாத நிலையிலிருந்த கண்ணியத்துக்குரிய இரு பொருள்களை சிறப்புத்தன்மை வாய்ந்ததாக மாற்றுவதற்கு சிந்தித்துள்ளார் என்பதும் தெளிவாகின்றது. இதற்கமைய முதலில் சமணல மலையின் உச்சியில் அமைந்துள்ள பூரீ பாத எனும் ஸ்தலத்தின்மீது பொதுமக்கள் விசேட கவனம் செலுத்தக்கூடியவாறு கூடிய கவனம் செலுத்தப்பட்டது. இம்மலை உச்சி பிற்காலங்களில் ஏனைய சமயத்தவர்களும் தத்தமது சமயங்களுடன் ஒப்பிட்டுக்கொள்ள முன் வந்தமை பிரசித்தி பெற்றதொன்றாகும். இதன் பின்னர் பூரீ தலதா தந்த தாது (புத்த பெருமானின் புனிதப் பல் அடங்கிய பேழை) விசேடமான மாளிகை யொன்றை கட்டி அதனுள் வைக்கப்பட்டது. தலதா தாது (புனிதப் பல்)
17 - Concise History of Ceylon
2O

நாட்டுக்கு மிக அத்தியாவசியமான ஒன்று என்ற உணர்வை ஏற்படுத்து முகமாக விசேட காவலும் அங்கு ஏற்படுத்தப்பட்டது. தலதா மாளிகையை பாதுகாக்கும் பணி தமிழ் அகம்படி சேனையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பாதுகாப்பினை வேளக்காரப் படையினா ஏற்றுக்கொண்டுள்ளமையை பொலனறுவையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஓலைச்சுவடியொன்றின் மூலம் தெளிவாக அறிந்துகொள்ள முடிகின்றது. இவ்வேளக்காரப் படை பற்றி சீ டபிள்யூ நிக்கலஸ் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள். தமிழ்ப் போர்வீரர்களைக் கொண்ட விஜயபாகுவின் வேளக்காரப் படையினர் சோழ ஆக்கிரமிப்புக்கு எதிராக குழப்பம் செய்ய மறுத்தமை யிலிருந்து அப்படையிலும் சோழர்கள் இருந்துள்ளமை புலனாகின்றது. சோழர்களுக்கு எதிராக பெரும் யுத்தமொன்றை மேற்கொண்ட பின்னரும் கூட விஜயபாகு மன்னர் சோழ நாட்டைச் சேர்ந்த கூலிப்படையினரை தமது மெய்ப்பாது காவலர்களாக வைத்திருந்தமை விசேடமாகக் குறிப்பிடத் தக்கதாகும். *
சோழ மன்னர் திருமண பந்தமொன்றை ஏற்படுத்தி சிங்கள மன்ன ருடன் மீண்டும் தோழமையை வளர்த்துக்கொள்ள முயற்சித்த போதிலும், பாண்டிய மன்னர்களுடனேயே விஜயபாகு மன்னர் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார். இவ்விரு தமிழ் இராச்சியங்களிடையேயும் தீராத பகை மூண்டிருந்தது. சோழ நாட்டு ஆக்கிரமிப்புக்கெதிராக சிங்கள மன்னரையும் தூண்டிவிட்டவர் பாண்டிய மன்னராகவும் இருக்கலாம். நீண்ட காலமாக யுத்தத்திற்கே தம்மை அர்ப்பணித்த படையொன்று மீண்டும் அந்நாட்டு டன் யுத்தம் புரிய பின்வாங்குவது இயற்கை. பெரும்பாலும் சிங்கள சேனாதிபதிகள் நெறிமுறைகளுக்கு மதிப்பளிக்காது அரசரைக் கொலை செய்து சிம்மாசனத்தைக் கைப்பற்றியமை, எதிரிகளாக மாறி தனியரசுகளை அமைத்துக்கொண்டமை, ஏனைய பிரதேசங்களில் பயங்கரவாத நட வடிக்கைகளை ஏற்படுத்தியமை ஆகிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிக் கோவைகளிலும் அவதானம் செலுத்தியிருப்பார். வேளக்கார கூலிப்படையில் சோழ நாட்டைச் சேர்ந்த தமிழ் வீரர்களைத் தவிர்த்து, ஏனைய தமிழ் இராச்சியங்களைச் சேர்ந்த தமிழ் வீரர்களை மட்டும் உள் ளடக்கக்கூடிய விதத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு விஜய பாகு மன்னர் பிற்காலத்தில் ஒழுங்குமுறைகளை வகுத்திருக்கலாம். எவ்வாறாயினும் தமிழ் கூலிப்படையினரிடம் அதிக நம்பிக்கை வைத்திருந் ததிலிருந்து விஜயபாகு மன்னர் இன மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட சிந் தனையுடையவர் என்பது தெளிவாகின்றது. ஒப்படைக்கப்பட்ட காரியத்தை மிகத் திறமையாக நிறைவேற்றக்கூடியவர்கள் வேளக்காரப்படையினர் என்பது உறுதியாகின்றது. எல்லாள மன்னருக்கெதிராக துட்டகைமுனு மன்னரால் வழிநடத்தப்பட்ட படையினர் அநுராதபுரத்தினுள்ளேயே இரு
18 - EZ Vol II - 1985 P.242 19- Concise History of Ceylon Pl97
21

Page 18
பிரிவாகப் பிரிந்து தங்களுக்குள்ளேயே போரிட்டுக்கொண்டது பற்றி மகா வம்சத்திலும் கூறப்பட்டுள்ளது. வேளக்காரப்படையினர் தங்களுக்குள் பிளவுபட நேர்ந்தது விஜயபாகு மன்னருக்கு எதிராகவன்று. அநாவசியtoான யுத்தமொன்றில் ஈடுபடுவதற்கு விரும்பாமையேயாகும் என்பது இதனுடன் ஒப்பிட்டு நோக்குகையில் புலனாகின்றது.
அன்று தலதா தாது (புனிதப் பல்) அரசடமையாகப் போற்றப்பட்ட தால் பிற்காலத்தில் இதற்கு உயர்ந்த அரசியல் முக்கியத்துவம் அளிக்கப் பட்டது. பிக்குமார்கள் குழுக்களாகப் பிரிந்து ஆட்சியாளர்களின் கைப் பொம்மையாக மாறிய போலித்தன்மை, அவர்களது முக்கியத்துவம் வீழ்ச்சி யடையும் சந்தர்ப்பங்கள் உருவாகும் நிலமைகள் போன்றவை மத்தியில் இப்புனிதத் தாது மிகவும் பலம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆதலால் விசு வாசத்துக்குரியவர்களிடம் இதன் பாதுகாப்பை ஒப்படைக்கும் பணி மன்னரையே சார்ந்திருந்தது. விஜயபாகு மன்னர் தமிழ் கூலிப்படை யினரிடம் இதனை ஒப்படைத்ததற்கு இங்கு வசித்த தமிழ் மக்களின் நன் மதிப்பை பெற்றுக்கொள்வது நோக்கமாக இருக்கலாம்.
வேளக்காரர்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை கடமை யுணர்வுடன் செய்ததாக செப்பேடுகளில் எழுதப்பட்ட சத்தியப்பிரமாணம் மன்னரினால் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதுடன் ஒலைச்சுவடியொன்றி லும் இதுபற்றி பொறிக்கப்பட்டுள்ளது. வடமொழியும் சிங்களமும் கலந்த தொரு மொழியமைப்பிலே இது எழுதப்பட்டுள்ளது. விஜயபாகு மன்னர் காலமாகும்போது தமிழ்மொழி அரச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டி ருந்ததுடன் தமிழும் சிங்களமும் பரஸ்பரம் சொற்களை பரிமாறிக் கொள்ளக் கூடியதொரு நிலமை இருந்தமை இதிலிருந்து புலனாகின்றது. அக்காலத் தில் அரசமட்டத்திலும் தமிழ் மொழியில் எழுதக்கூடிய வழக்கம் இருந்த தென்பது விஜயபாகு மன்னரின் சில சாசனங்களிலிருந்து உறுதி யாகின்றது. ஒரு சாசனத்தின் ஆரம்பத்தில் ‘தமிழ் பதிவாளரது புத்தகத்தில் கையொப்பமிட்டு வழங்குகிறேன்" என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரச அலுவல்களை தமிழில் மேற்கொள்ளக்கூடியவர்களும் இருந்துள்ளமை இதிலிருந்து புலனாகின்றது.
வேளக்கார மடல்களின் முதல், கடை, இடை ஆகிய பலவிடங்களில் போதிமாதவன் பற்றியும், மும்மணிகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் ஐந்தாவது வரியின் இரண்டாவது பந்தி நமோ புத்தா எனத் தொடங்குகிறது. தலதா மாளிகையைப் பாதுகாக்கும் புனித பணிக்கு ஒத்துழைத்த ஒப்பந்தத்தை மீறுவதோ அவ்வாறு செய்வதற்கு தூண்டு வதோ மாபெரும் பாவம் எனவும் குற்றம் புரிபவர்களுக்கு நரகமே உரித் துடையது எனவும் இறுதியில் குறிப்பிடப்படுகின்றது. தமிழ் வேளக்காரப் படையில் சில பெளத்த சேனாதிபதிகளும், போர்வீரர்களும் இருந்துள்ளமை இதிலிருந்து தெளிவாகின்றது. தலதா மாளிகையைச் சுற்றி வர ஏனைய பல புனித ஸ்தலங்கள் வேளக்காரர்களால் கட்டப்பட்டமையும் குறிப்பிடப்
22

பட்டுள்ளது. தற்போது தலதா மாளிகையைச் சுற்றி தேவாலயங்கள் இருப்பது போன்று, அன்றும் தமிழ் மக்களுக்காக தேவாலயங்கள் கட்டப் பட்டிருந்தமை புலனாகின்றது. இதுபற்றி கல்வெட்டின் 3-4 வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றிலிருந்து தெரியவருகின்றது.
9. மகா பராக்கிரமபாகு
விஜயபாகு மன்னர் நீடித்து நிலை பெறக்கூடியவாறு உருவாக்கிய வெளிநாட்டு உறவுகள் நன்மை பயப்பன போன்றே தீமை பயப்பனவாயும் அமைந்தமை பற்றி இம்மன்னரது காலத்தின் பின்னர் வருகின்ற வரலாற்றுக் கதைகளில் இருந்து அறிய முடிகின்றது.
அக்காலத்தில் ருஹ"ணு ரட்ட, மாயா ரட்ட, பிகிட்டி ரட்ட எனும் முப்பிரதேசங்களுக்கும் அதிகாரம் பரவலாக்கப்பட்டிருந்தது. மாமன்னர் பிகிட்டி ரட்டயின் அரசராகவும் இராச்சியம் முழுவதற்கும் தலைவராகவும் விளங்கினார். மாயா ரட்டையை ஆட்சி புரிந்தவருக்கு யுவராஜ பதவி உரித் தாகியது போன்றே மாமன்னர் பதவியும் அவரிடமே பின்னர் ஒப்படைக் கப்பட்டது. ருஹ"ணு ரட்டையில் ஆட்சி புரிந்தவர் இளவரசராக விளங் கினார். ருஹ"ணுரட்டயின் இளவரசர் மாமன்னர் பதவியை பெற்றுக் கொள் வதற்கு முன்னர் மாயா ரட்டயின் ஆட்சியாளராக (மாஆ) பதவி வகித்திருத் தல் வேண்டும்.
அரசுரிமை மன்னரிற்குப் பின்னர் அவரது சகோதரருக்கு உரித்தாக வேண்டும். சகோதரரொருவர் இல்லாதவிடத்து மூத்த மகனுக்கு உரித் தாகும். இளைய சகோதரர் ஒருவர் இருப்பின் அவர் காத்திருப்போர் பட்டி யலில் காத்திருத்தல் வேண்டும்.
முதலாவது விஜயபாகு மன்னருக்கு வீரபாகு எனும் மூத்த சகோதர ரொருவரும், ஜயபாகு எனும் இளைய சகோதரரொருவரும், மித்தா எனும் சகோதரியும் இருந்தனர். சகோதரியை பாண்டியநாட்டு தமிழ் இளவரச ரொருவருக்கு மணமுடித்துக் கொடுத்துள்ளமை பற்றி முன்னர் குறிப்பிடப் பட்டுள்ளது. மித்தாவிற்கு மானாபரன், கீர்த்தி பூரீ மேகன், பூரீ வல்லபன் எனும் மூன்று புதல்வர்கள் இருந்தனர். இவர்கள் பிதா வழியில் தமிழர் களாகவே நோக்கப்படுகின்றனர். அத்துடன் விஜயபாகு மன்னர் கலிங்க நாட்டு துணைவி மூலம் விக்கிரமபாகு எனும் புதல்வரொருவரை பெற்றி ருந்தார்.
முதலாவது விஜயபாகு மன்னர் ஒழுங்குமுறை வழுவாது மூத்த சகோதரர் வீரபாகுவிற்கு மாயாரட்டயின் ஆட்சியுடன் யுவராஜ பதவியையும் வழங்கினார். இளைய சகோதரரான ஜயபாகுவிற்கு இளவரசர் பதவியும் ருஹ"ணுரட்டயையும் வழங்கினார். இதற்கிடையில் வீரபாகு மரணிக்கவே ஜயபாகுவிடம் மாயாரட்டயும் யுவராஜ பதவியும் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் முறைப்படி திரிலோகசுந்தரியின் மகனான விக்கிரம
23

Page 19
பாகுவுக்கு ருஹ"ணுரட்டயின் ஆட்சியும் இளவரசுப் பதவியும் உரித் தாகியது. இச்சமயத்தில் மித்தாவும் அவரது புதல்வர்களும் தலைநகராகிய பொலனறுவையிலிருந்து ஆட்சி புரிந்த மாமன்னரிடம் தங்கியிருந்து வாழ்ந்தனர்.
இதற்கிடையில் மகா விஜயபாகு மன்னர் மரணிக்க நேரிடவே, மித்தா மிகச் சாதுரியமாகச் செயற்பட்டு அக்காலத்திலிருந்த பிரதானிகளினதும், வனவாசி மதப்பிரிவின் (நிகாய) பிக்குமார்களினதும் ஒத்துழைப்புடன் ஜயபாகுவிடம் மாமன்னர் பதவியை ஒப்படைத்து, தனது மூத்த புதல்வரான மானாபரனுக்கு மாயா ரட்டையையும், யுவராஜ பதவியையும் பெற்றுக் கொள்ள வழிவகை செய்தார். தந்தையின் மரணச் செய்திருஹஸுணை யில் ஆட்சி செய்த தனயனான விக்கிரமபாகு இளவரசருக்கு அறிவிக்கப்பட வில்லை. இது முற்றிலும் ஒழுங்குமுறைகளைப் புறக்கணித்த ஒரு செய லாகும். இந்நிகழ்வு பல எதிர்விளைவுகள் ஏற்பட வழி கோலியது.
இந்நிகழ்ச்சியை செவியுற்றவுடனேயே தந்தையைப்போன்று போரில் சூரனாகிய விக்கிரமபாகு இளவரசர் சேனையொன்றுடன் வந்து பொல னறுவையை ஆட்சி செய்த ஜயபாகுவையும், மித்தாவின் புதல்வர்களையும் விரட்டியடித்து, அபிஷேகம் பெறாது தானே மாமன்னராக அரியணை ஏறினார். ஜயபாகு பெயரளவில் மாமன்னராக யுவராஜனாகிய மானாபரனின் பாதுகாப்பில் மாயா ரட்டயில் வசித்து வந்தார். மித்தாவின் ஏனைய புதல்வர்களான இரு தமிழ் இளவரசர்களும் ருஹ"ணுரட்டயை தொலஸ் தகஸ் ரட்ட, அட்டதகஸ் ரட்ட என இரண்டாகப் பிரித்துக்கொண்டு ஆட்சி செய்தனர். சில நாட்களின் பின்னர் ஜயபாகுவும், மித்தாவும் மரணித்து விட்டார்கள். பிரசித்தி பெற்ற பராக்கிரமபாகு மானாபரனின் மூன்றாவது பிள்ளையாகும். மானாபரனின் முதலிரண்டு பிள்ளைகளும் பெண்மக்களே. மானாபரனின் மனைவியாகிய இரத்தினாவலி ஆண்மகவொன்று இல்லாத கவலையில், கடவுளிடம் அழுது புலம்பி தொழுது வணங்கி தவமிருந்து வேண்டியதன் பயனாக பராக்கிரமபாகு பிறந்தார். இது பற்றிய நீண்டதொரு விபரம் மகாவம்சத்தில் தரப்பட்டுள்ளது. மகா விஜயபாகுவின் புதல்வனும் இரத்தினாவலியின் சகோதரருமாகிய விக்கிரமபாகுவிடம் தோல்வியுற்றி ருந்த மானாபரன் விக்கிரமபாகுவிற்கு சிறந்ததொரு பாடமொன்றைப் புகட்டுவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து முடியாமற் போகவே விரக்தி யுடன் காலங் கழித்து வந்தார். தனது பாண்டிய தமிழ் வம்சத்தினரின் அதிகாரத்தை மேலோங்கச் செய்வதே மானாபரனின் ஒரே நோக்கமாக இருந்தது. மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்குரிய ஆண்மகவொன்று பெற்றெடுக்காமையால் துயரமடைந்து ராணியையும் கைவிட்டுவிட்டு அரச அலுவல்களை மந்திரி மார்களிடம் ஒப்படைத்துவிட்டு தெய்வ சந்நிதானம் ஒன்றைச் சென்ற டைந்தார். இவ்வாறு ஆறேழு மாதங்கள் கழிந்ததன் பின்னர் ஒருநாள் இரவு கடவுள் கனவில் தோன்றி தனக்கு ஆண் மகவொன்று பிறப்பதாக நன்
24

மாராயங் கூறியதை உணர்ந்த மானாபரன் மீண்டும் மாளிகைக்கு வந்தார். பின்னர் அரசி கர்ப்பமுற்று பராக்கிரமபாகு எனும் ஆண்மகவொன்றைப் பெற்றெடுத்தாள். *
இளவரசரான மானாபரன் பற்றிய கதையொன்றினை வரலாற்றாசிரி யரான சீ. டபிள்யூ நிக்கலஸ் அவர்கள் கல்வெட்டொன்றை ஆதாரமாகக் கொண்டு ஆதாரத்துடன் பின்வருமாறு முன்வைக்கிறார்.
முதலாம் ஜயபாகு மன்னர், ஆண்ட எட்டாவது வருடத்தைச் சேர்ந்த கல்வெட்டொன்று நிக்கவரெட்டியவிற்கு அண்மையில் கண்டெடுக் கப்பட்டுள்ளது. வீரப்பெருமாள் எனும் பாண்டிய இளவரசரின் மனைவியும், சோழ மன்னரின் (முதலாம் குலோதுங்கனின்) மகளுமாகிய இளவரசியினால் வழங்கப்பட்ட நன்கொடையொன்றைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வீரப்பெருமாள் எனக் குறிப்பிடப்படுவது முதலாம் விஜயபாகு மன்னரின் சகோதரியாகிய மித்தா இளவரசிக்கும் பாண்டிய இளவரசருக்கும் பிறந்த, யுவராஜ பதவியடைந்தபின் வீரபாகு எனும் பெயரில் பிரபலமடைந்திருந்த மூத்த புதல்வராகிய மானபரனையேயாகும். முதலாம் விஜயபாகு மன்னரின் காலத்தில் நிகழ்ந்திருக்கக்கூடும் என நம்பப்படுகின்ற இவ்விவாகம் விஜய பாகு மன்னரின் காலத்தின் பின்னர் நிகழ்ந்திருக்கிறது என்று உறுதியாக கூறவதற்குரிய சான்றுகள் பல உள. இவ்விவாகம் நடைபெற்றதன் மூலம் சோழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே நிகழ்ந்த சண்டைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன எனக் குறிப்பிடப்படுகிறது. * இச்சிலாசாசனம் நிக்கவரெட்டியவுக்கு அருகாமையில் புதுமத்தாவ எனும் கிராமத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகும்.* பழந்தமிழில் எழுதப் பட்டிருந்த இக்கல்வெட்டை வாசித்து அதன் பொருளை மட்டும் செனரத் பரணவிதான அவர்கள் முன்வைத்துள்ளார்கள். மகாபராக்கிரமபாகுவின் தந்தையும் தென்பகுதியை ஆட்சி புரிந்தவருமான மானாபரண இளவரசர் சுந்தரமல்லியாழ்வார்’ என்ற சோழநாட்டு மங்கையொருத்தியை இரண்டாவது மனைவியாக மணமுடித்திருந்தார். பெளத்த பிக்குமார்களின் பூரண ஒத்துழைப்புடன் தனது பாண்டிய அரச பரம்பரையினரை இலங்கை யில் வைத்திருப்பதற்கான மார்க்கமாக மானாபரண இளவரசர் தனது பழைய கோபதாபங்களை எல்லாம் மறந்து சோழநாட்டின் ஒத்துழைப்பையும் இதற்கு பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் இவ்விவாக தொடர்பை ஏற் படுத்திக் கொண்டிருக்கலாம் என தொடர்ந்தும் மகாவம்சத்தில் கூறப் பட்டிருக்கிறது.
எவ்வாறாயினும் மகாவம்சத்தில் மகா பராக்கிரமபாகுவின் பிறப்பு மற்றும் இளமை பற்றிக் கூறப்படுகின்ற விபரங்கள் மூலம் தமிழ் - சிங்கள கலாசார தொடர்புகள் எடுத்துரைக்கப்படுகின்றன. கர்ப்பமுற்ற இளவரசிக் *- மகாவம்சம் - அதிகாரம் 02இன் 5-39 வரையிலான செய்யுள்கள்
20 - இலங்கை பல்கலைக்கழக வரலாறு 11 - மகாபராக்கிரமபாகு 21- Ez 1 1 1 p 308-312
25

Page 20
காக மன்னரவர்கள் பிக்குமார்களை அழைத்து பிரித் சமய நிகழ்ச்சிகளையும் நடத்தி, துறவு பூண்ட பிராமணர்களுக்காக தந்தேவி விகாரையின் தாது கோபத்தை புனர்நிர்மாணம் செய்வித்தார். இவ்வாறு பெளத்த சமய பழக்க வழக்கங்களை நிகழ்த்தியதுடன், இந்து சமய பழக்க வழக்கங்களுக்கே முதலிடம் அளிக்கப்பட்டது. வேதம் ஒதக்கூடிய அந்தணர்களை அழைத்து சுபமுகூர்த்தத்தில் பூசைகளை நடத்தியதுடன் நகரவாசிகள் வாழை மரத் தோரணங்களை அமைத்து அலங்கரித்தனர். வேதத்தில் உரைக்கப்பட் டுள்ளவாறு மகவொன்றின் பிறப்புக்கருமங்கள் அனைத்துக்குமுரிய சடங்கு களை நிறைவு செய்து, மீண்டும் அந்தணர்களையும் அங்க லட்சணம் கூறுபவர்களையும் வரவழைத்து மகவின் அங்க லட்சணங்களை கூறும்படி கட்டளையிட்டார். இவ்வாறு கூறப்படுகின்ற விதத்தில் பிறவிக் கருமங் களுக்கமைய பராக்கிரமபாகுவின் பிறப்பு தொடர்பாக 4 சடங்குகள் கொண் டாடப்பட்டன. அவை வருமாறு:
1. ஆயுள் 2. அறிவுப் பெருக்கம் 3. பாலூட்டுதல் 4. பெயர் சூட்டுதல் ஆகிய சடங்குகளாகும்.
மகாபராக்கிரமபாகு மன்னர் இலங்கேசுவரராக முடிசூடிய பின்னரும் தமிழ் - சிங்கள கலாச்சார உறவுகளை முன்னெடுத்துச் சென்றுள்ளார். அவர், பிராமணர்களைக்கொண்டு சாந்திக் கருமங்களைச் செய்வதற்கு அரண் மனையொன்றையும். மந்திரங்களை ஒதும்பொருட்டு மனதைக் கொள்ளை கொள்ளும் மாளிகை ஒன்றையும் கட்டினார். (ம.வ. 73-71), அத்துடன் உடைந்திருந்த 75 தேவாலயங்களை உருகுணு ரட்டயில் புனர்நிர்மாணம் செய்ததாகவும், 24 தேவாலயங்களை உருகுணுரட்டயில் கட்டுவித்த தாகவும் மகாவம்சம் கூறகிறது. புத்தசாசனத்தின் உறுதிப்பாட்டினை நிலை நாட்டவே இவ்வாறு செயல்பட்டுள்ளார். சிதைந்து அழிந்தபோன பழமை வாய்ந்த அனைத்த பெளத்த கட்டிடங்களையும் புனர்நிர்மாணம் செய்த பராக்கிரமபாகு மன்னர் சங்க சாசனத்தையும் புனர் நிர்மாணம் செய்தார்.
பிறப்பால் தமிழ் அரச குலத்தவராகிய பராக்கிரமபாகு மன்னர் உன்னத மான ஒரு சிங்கள மனிதரைப்போன்று, சிங்கள மக்களின் கெளரவத்திற்கு பாத்திரமாகியுள்ளார். அதேவேளை இம்மன்னர் தமிழர்களின் விரோதியென பிழையான கருத்தொன்று நிலவுகின்றது. பராக்கிரமபாகு மன்னர் தனது சேனாதிபதி தலைமையில் சிங்களப் படையொன்றினை பாண்டிநாட்டிற்கு அனுப்பி பயங்கர யுத்தமொன்றினை மேற்கொண்டமையே இவ்வாறு கூறு
வம்சத்தில் இரு அத்தியாயங்கள் பூராகவும் சொல்லப்பட்டுள்ளது. 'தமிழர்களைக் கொன்று குவித்து (தெமழு மரா) என்னும் வசனம் வரை
இந்த யுத்தத்திற்கான காரணத்தை நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்கையில், இது தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களால் மேற்கொள்ளப்பட்ட யுத்தம் என்பது பிழையான கருத்தென்பது தெளிவாகின்றது.
26

பாண்டிய நாட்டு தமிழ் மன்னர்களுக்கும் சோழ நாட்டு தமிழ் மன்னர் களுக்குமிடையே நிகழ்ந்த யுத்தத்தில், குலசேகரம் எனும் சோழ மன்னர் பாண்டிய மன்னரைக் கொலை செய்து மதுரையைக் கைப்பற்றினார். இந்தச் செய்தியை கேள்வியுற்ற பராக்கிரமபாகு மன்னர் தனது வம்ச உறவுகள் காரணமாக பாண்டிய இராச்சியத்தின் உதவிக்காக இலங்கையிலிருந்து சிங்களச் சேனையொன்றை அனுப்பினார். (ம.வ.87-88 செய்யுள்கள்) மதுரையிலிருந்து சோழ மன்னரை விரட்டியடித்து மீண்டும் பாண்டியரின் ஆட்சியை நிலைபெறச் செய்வதே பராக்கிரமபாகுவின் நோக்கமாக இருந்தது. இக்கொடிய யுத்தத்தில் சிங்களப் படையினர் வெற்றிவாகை சூடினர். முன்னர் சோழ மன்னரினால் கொலை செய்யப்பட்ட பாண்டிய மன்னரின் மகனான வீரபாண்டியனை மதுரையின் மன்னராக முடி சூட்டினார்.(ம.வ. செய்யுள் 77-5) பின்னர் மல்லவ சக்கரவர்த்தி மல்லவ ராயர், பாலையூர் நாடாள்வார் போன்ற இலம்பகர்ண கோத்திரத்தைச் சேர்ந் தவர்கள் வீரபாண்டிய இளவரசரின் அபிஷேக சடங்கினை கொண்டாடினர் (ம.வ. அத்தியாயம் 77ன் 25-31 செய்யுள்). தென்னிந்தியாவுக்கு படை
பாகு மன்லர் தமது உறவுமுறையான பாண்டிய இளவரசரொருவரை மீண்டும் மன்னராக முடிசூட வைப்பதற்கு முயற்சித்துள்ளார் என்பது தெளிவாகின்றது.
10. கலிங்க யுகம்
இலங்கை வரலாற்றில் மிகச் சிக்கல் நிறைந்த காலமாக இக்காலம் கணிக்கப்படுகின்றது. இதன் ஆரம்ப ஐம்பது வருடங்களும் கலிங்கயுகம் எனக் கூறப்படுகின்றது. இந்த யுகமும் இதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வு களும் இலங்கை வரலாற்றுப் பாதையை முற்றுமுழுதாக வேறொரு புதுக் கோணத்தில் திசை திருப்பின. இந்த யுகத்தின் செயற்பாடுகள் சிங்கள Lக்களை அளவு கடந்து கோபமூட்டுபவைகளாக இருந்தன. தீராத பகை யாக மேலெழும் இக்கோபம் தமிழ் மக்கள் மீதே திரும்புகின்றது. சமகால நிகழ்வுகள் இதற்கு சான்று பகர்கின்றன. இக்காலம் மாகனின் பயங்கர யுகம் எனவும் அழைக்கப்படுகின்றது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதனிலை நூல்களான மகாவம்சத்திலும், பூஜாவலியிலும் இந்த விசேட நிகழ்வைப்பற்றி பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.
இலங்கை மக்களின் ஏதோவொரு கொடிய பாவத்தின் காரணமாக மாகன் எனும் கலிங்க நாட்டு மன்னர் இருபத்திநான்காயிரம் மல்லப் படை யுடன் இலங்கையில் வந்திறங்கி கந்தவார நகரிலிருந்த பாண்டிய மன்னரின் கண்களிரண்டையும் பிடுங்கி எறிந்து, உலக சாசனத்தையும் அழித்து, ஆயிரக் கணக்கான தாதுகோபங்களை உடைத்து, பிக்குமார்களின் ஆசிரமங் களையும், நிறுவனங்களையும் பெருந்தொகையான தமிழர்களுக்கு தங்கு
27

Page 21
மிடமாக வழங்கி, இலங்கையின் குலமகளிரின் கற்பை சூறையாடி, இலங்கை யில் மூடநம்பிக்கைகளை ஏற்படுத்தி, சுகதேகிகளின் கைகால்களை வெட்டி, இலங்கையை தீப்பிழம்பாக மாற்றி, கிராமந்தோறும் உள்ள தமிழர் களைக் கொண்டு 19 வருடங்கள் பலாத்காரமாக ஆட்சி புரிந்தார். (பூஜா வலி)* எனக் கூறப்படுகிறது.
இலங்கை மக்களின் பயங்கரமானதும் மிகக் கொடுமையானதுமான பாவமொன்றின் காரணமாக. . . மூட நம்பிக்கைகள் கலந்த தீய செயல் களில் ஊறிய தானங்களையொத்த புண்ணிய கருமங்கள் எனும் காடு, சிறுகாடு பற்றியெரியும்போது பரவும் . . . காட்டுத்தீயினை ஒத்த கலிங்க நாட்டைச் சேர்ந்த கலிங்க வம்சத்தில் பிறந்த மாகன் எனும் நேர்மையற்ற மன்னரொருவர் இருபத்தினான்காயிரம் படைகளுடன் இலங்கையில் வந்திறங்கினார். . . தீய கருத்துக்களைக் கொண்ட இராட்சத வீரர்களை யொத்த தமிழ் வீரர்கள் உலகத்தையும் சாசனத்தையும் அளித்தனர்.*
மகாவம்சத்தில் தொடர்ந்தும் கூறப்படுகின்ற விபரத்துக்கமைய கலிங்க நாட்டைச் சேர்ந்த மாகனின் கொடிய வீரர்கள் மக்களின் ஆடையணி களை அபகரித்து, கை கால்களை வெட்டி, பணத்தைக் கொள்ளையடித்து, சிலைகளைச் சிதைத்து, சைத்தியங்களை அழித்து, விகாரைகளை தமது தங்குமிடமாகக்கொண்டு, பிரசித்தி பெற்ற பெறுமதிமிக்க ஏடுகளை கட்டு களில் இருந்து கட்டவிழ்த்து எரித்து . இவ்வாறான தீச்செயல்களைப் புரிந்துள்ளார்கள்.
இச்சமயம் பொலனறுவையை ஆண்ட பராக்கிரமபாகு பாண்டிய மன்னரின் கண்களிரண்டையும் பிடுங்கி குருடாக்கிவிட்டு, மாகன் அரசனா னான். சிங்களவர்களின் வயல், நிலம், காணி, வீடு வாசல்களை கேரளத் தினருக்கு வழங்கினான். விகாரைகளையும், பிரிவெனாக்களையும் மாத்திரமன்றி, தேவாலயங்களையும் யுத்த வீரர்கள் தங்குமிடமாக மாற்றி னான்.
மாகனைப் போன்று அழிவுகளை ஏற்படுத்திய பிறிதொரு ஆக்கிர மிப்பாளன் இதுவரையில் உருவாகவில்லை என முன்னைய நூல்களில் கூறப்பட்டுள்ளது. தற்கால மொழியில் கூறுவதானால் மாகன் மகாகொடிய பயங்கரவாதி. மாகன் தென்னிந்தியாவைச் சேர்ந்த தமிழன் என அநேகர் நம்புகின்றனர். இது விமர்சனத்துக்குரிய பிழையான கருத்தாகும் என்பது மகாவம்சத்தின் வாசகமொன்றை ஆராயும்போது தெளிவாகின்றது.
மாகன் கலிங்க வம்சத்தைச் சேர்ந்த காரணத்தால், அவன் தமிழனாக இருக்க வேண்டும் என்பது நியாயமானதன்று. மாகன் கலிங்க நாட்டைச் சேர்ந்தவனே. இங்கே குறிப்பிடப்படுகின்ற கலிங்கநாடு தமிழ் இராச்சிய மொன்றன்று. அசோக மன்னரின் ஆட்சியின் போது இந்தியாவில் இருந்த கலிங்க நாடு இது அல்ல என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். 22 - பூஜாவலிய 34வது செய்யுள் 23- மகாவம்சத்தின் 80 அதிகாரத்தின் 54-50, 70 செய்யுள்
28

மாகன் இலங்கைக்கு வந்து பராக்கிரம என்னும் பாண்டிய மன்னனின் கண் களைப் பிடுங்கி எறிந்தான். இந்த மன்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிய நாட்டுப் படையொன்றுடன் இலங்கைக்கு வந்து ஆட்சியைப் பெற்றுக்கொண்ட தமிழ் இளவரசரொருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாகன் தனது வீரர்கள் தங்குமிடமாக விகாரைக் கட்டிடங்களை மட்டுமன்றி, தேவாலயங்களையும் பயன்படுத்தினான். அக்காலத்தில் இலங்கையில் நிலவிய பெளத்த மதத்தின்மீது குரோதத்துடனும், தமிழ் மக்கள் போற்றிப் புகழ்ந்த சைவ சமயத்திற்கு விரோதியாகவும் செயல்பட்டுள்ளான். சமய நூல்களை கட்டுக்களில் இருந்து அவிழ்த்து வீசிய நிகழ்ச்சியிலிருந்து இலங்கையில் நிலவிய சமய போதனைகளுக்கு எதிராக செயற்பட்டுள்ளான் என்பது தெளிவாகின்றது. மாகனின் ஆக்கிரமிப்பை தமிழ் மக்களின் ஆக்கிரமிப்பாக துணிந்து கூறபவர்கள், மகாவம்சத்தின் எண்பத்தியோராவது அத்தியாயத்தினை வாசித்திருக்கவில்லையென்பது புலனாகின்றது. அவ்வத்தியாயத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
‘தேரர்களுக்கிடையே வாகிஸவராதி மகாதேரர் ஒருவர், அலைகள் மேலெழுந்து ஆர்ப்பரிக்கும் பெருங்கடலைக் கடந்து, சாசனங்களை அழித்த தாகக் கூறப்படுகின்ற தமிழர்களின் நாடான சோழ, பாண்டிய நாடுகளுக்கு இலங்கையிலிருந்து பாதுகாப்பினை நாடிச் சென்றுள்ளார். பின்னர், கருணையுள்ளம் கொண்ட விஜயபாகு நரேந்திரன் எனும் மன்னர் சேனாதிபதிகளை அனுப்பி அத்தேரர் அடிகளாரை மீண்டும் இலங்கைக்கு வரவழைத்தார்.*
இலங்கை சிங்கள பிக்குமார்கள் 'அலைகள் பயங்கரமாக வந்து மோதுகின்ற சமுத்திரங்களைக் கடந்து உலகத்தையும், சாசனங்களையும் அழித்தாக கூறப்படுகின்ற தமிழர்களின் நாட்டிற்கே பாதுகாப்பினை நாடிச் சென்றுள்ளார்கள். இது ஏளனத்துக்குரிய நிகழ்ச்சியொன்றாகும். அதுமட்டு மல்ல, இலங்கையை மாகன் ஆட்சி புரிந்த பத்தொன்பது வருடங்களும் இப்பிக்குமார்கள் தமிழர்களின் பராமரிப்பின்கீழ் தங்கி வாழ்ந்துள்ளார்கள்.
நிலைமை இவ்வாறிருக்கும்போது, இதன் உண்மைகளை ஆராய்ந்து பார்த்தல் அறிவார்ந்த ஒரு செயலாகும். மாகன் என்பவன் யார்? எந்த நாட்டி லிருந்து வந்தான்? இது பற்றி பிரசித்தி பெற்ற வரலாற்றாசிரியரொருவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
பராக்கிரமபாகு பாண்டிய மன்னர் ஆட்சி செய்த மூன்றாம் ஆண்டா கிய 1214இல் கலிங்க நாட்டைச் சேர்ந்த மாகன் 24,000 பேரைக் கொண்ட மலேயர் இனச் சேனையொன்றுடன் இலங்கைக்கு வந்திறங்கினான். காமசுகல்லிகானுயோகத்தில் ஈடுபட்டிருந்த தந்திரயான பெளத்த மதம் பரவியிருந்த மலேசியாவின் தென்பகுதியும், சுமாத்திராவும் மாகனின் தாய் நாடாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.*
24 - மகாவம்சம் 81 அதிகாரம் 20-23 வரையிலான செய்யுள்கள்
29

Page 22
தவறான பாரம்பரிய கொள்கைகளில் மூழ்கியிருப்பவர்கள் இக்கதை யினை இவ்வாறு உள்ளவாறு ஏற்றுக்கொள்வதற்கு ஒருபோதும் முன்வர மாட்டார்கள் என்பது நிச்சயம். ஆயினும் உண்மை நிலை இதுவேயாகும். காலஞ்சென்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளரான பேராசிரியர் செனரத் பரணவிதான அவர்களின் ஆய்வுகளில் கூறப்பட்டுள்ள தகவல்களை உற்று நோக்கும்போது யதார்த்த நிலையினை தெளிவாக உணர்ந்துகொள்ள முடிகின்றது. பேராசிரியரவர்களின் 'கட்டுரைத்தொடர் 1 (லிபிமாலா 1) இல் பிரசுரமாகியுள்ள "இரண்டாம் இந்தியக் காலம் (2 தம்பதெனி அவதிய) மற்றும் 'ஏழு பெளத்த இராச்சியங்களாக நிலவிய சுவர்ணத்துவீபம்’ (7 பெளத்த ராஜயக்வ பெவதி ஸ்வர்ணதீபய’ ஆகிய தலைப்புக்களிலான கட்டுரைகளில் இதுபற்றி தெளிவாக உரைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் பரணவிதான அவர்கள் தனது பிறிதொரு கட்டுரையொன்றின் மூலமும் மாகன் பண்டைய இந்தியாவின் கலிங்கநாட்டைச் சேர்ந்தவனல்லன் எனவும், மலேசிய குடாநாட்டில் அதாவது சுமாத்திரா, ஜாவா நாடுகள் உள்ளடங்கிய சுவர்ணதீபமெனும் பூரீ விஜய இராச்சியத்திலிருந்தே வந்துள்ளான் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார். அக்காலத்தில் ஆட்சி புரிந்த சைத்திரியர்கள் தந்திரயான பெளத்தமதத்தை பயிற்றுவித்தனர்.* இவர்கள் தேரவாதத்திற்கு முற்றிலும் முரணான ‘மந்திர தந்திர கொடுவினைகள்' அடங்கிய பெளத்த மதத்தையே பின்பற்றினர். இதன் காரணமாகவே இலங்கை விகாரைகளிலிருந்த பனையோலை ஏடுகளையும் அறநெறி நூல் களையும் எரித்துள்ளனர். சில காலத்திற்கு முன்னர், அபயகிரி மதப் பிரிவின ருக்கும் தேரவாத மகாவிகாரை மதப்பிரிவினருக்கும் இடையே கருத்து மோதல்கள் நிலவிய சமயங்களில், சிங்கள மன்னர்கள் தங்களுக்கு மிக நெருங்கிய பிக்குமார்களின் ஆலோசனைகளுக்கிணங்க எதிர்த் தரப்பு மதப் பிரிவினரின் சமயநூல்களையும் சைத்தியங்களையும் தீயிட்டுக் கொளுத் தியது மாத்திரமின்றி, பிக்குமார்களை சித்திரவதை செய்து நாடு கடத்தி அக்கிரமச் செயல்களைப் புரிந்தனர். இவ்வாறு அன்று தங்களது சாசனங்களை பாதுகாத்துக்கொண்டது போல், மாகனும் தாம் பின்பற்றிய தந்திரயான பெளத்த மதத்தை பாதுகாத்து, வளர்ச்சி அடையச் செய்வதை நோக்கமாகக் கொண்டு அப்போது இலங்கையில் நிலவிய சாசனங்களை அழித்திருக்கலாம். ‘நாம் கேரளதேச வீரர்கள்’ என்ற பெருமிதத்துடன் நாட்டை ஆண்டதாகக் கூறப்படுகின்ற கூற்று இன்னுமின்னும் சந்தேகங் களை வலுப்படுத்தியுள்ளது. இக்கூற்றை மூன்று விதமாக நோக்கலாம். அதாவது “மலாக்கா என்ற நாடு ‘மலேய தீபம்’ என அழைக்கப்பட்டது. கேரள தேசத்தின் மொழி மலையாளம்’ எனும் திராவிட மொழிப் பிரிவுக்கு உட்பட்ட ஒரு மொழியாகும். எனவே மாகனுடன் வந்த ‘மலே வீரர்களை மலையாளம் எனக் குழப்பிக்கொண்டு வம்சக்கதை நூலாசிரியர்கள்
25 - d. Laity. 58,356)6.ii) - Concise History Of Ceylon - Cha 3 p. 244 26 - கட்டுரைத் தொடர் 1 - சுவர்ணத்துவீபம் - பேராசிரியர் பரணவிதான அவர்கள்
30

அவர்களை கேரள தேசத்தவர்கள் என முதலில் குழப்பியடித்துள்ளார்கள். மாகனுடன் வந்த படையினர், நாட்டின் வடபகுதியினூடாக, இலங்கைக்கு வந்துள்ளமை இரண்டாவது சிக்கலாக அமைகின்றது. இவர்கள் முதன் முதலில் தென்னிந்தியாவிற்குள் புகுந்து அதனூடாக இலங்கைக்கு வந்துள்ளமை புலனாகின்றது. வரலாறுதோறும் இலங்கைக்கு அத்துமீறிப் பிரவேசித்த அனைத்து ஆக்கிரமிப்பாளர்களும் இவ்வாறே வந்துள்ளனர். இதன் காரணமாக, மாகனையும், படையினரையும் தமிழ் நாட்டிலிருந்து வந்த தமிழர்களாக அனைத்து சந்தர்ப்பங்களிலும் தவறாக கருதிக் கொள்ளப்பட்டிருக்கிறது. இவ்விரு காரணங்களைத் தவிர, மாகனின் படையில் தமிழ் வேளக்காரப் படையினரும் அடங்கியிருந்தமையால் கூடுதலாக அவ்வாறு கருதுவதற்கு வசதியாக இருந்ததென்பதும் உண்மையே. இலங்கையின் சிங்கள மன்னர்கள் தென்னிந்திய வேளக்காரப் படையினரைத் தருவித்து சிங்கள மக்களையும், பெளத்த மதத்தையும் பேணிப் பாதுகாத்துள்ளார்கள் என மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளது. இதனுடன் ஒப்பு நோக்கையில், மலேசியாவிலிருந்து வந்த பெளத்த மதத்தைச் சார்ந்த ஜா இனத்தைச் சேர்ந்த மன்னனொருவரால் நிகழ்ந்த கொடுமையினை தென்னிந்தியத் தமிழ் இராச்சியங்களின் மீது சுமத்துவது மாபெரும் தவறாகும். உண்மையில் எடுத்துரைக்கப்படவேண்டியது என்ன வெனில், பயங்கரம் வாய்ந்த காலகட்டமொன்றில் பெளத்த சமயத்துக்கும், பிக்குமார்களுக்கும் பாதுகாப்பினை நல்கிய தமிழ் இராச்சியங்களுக்கு தங்களது மனப்பூர்வமான நன்றியறிதலை தெரிவிப்பதாகும்.
11. வட இராச்சியம்
நாட்டின் வடமுனையிலிருந்து தென்முனைவரை பூகோள அமைப் பிற்கிணங்க, பிரதேச ஆட்சியாளர்களின் கீழ் பரவலாக்கப்பட்டு இயங்கிய ஆட்சி அதிகாரத்தில் மாகனின் வீழ்ச்சிக்குப் பின்னர் மாபெரும் மாற்றம் நிகழ்ந்தது. பொலனறுவையிலிருந்தும், இராச ரட்டயிலிருந்தும் துரத்தப் பட்ட மாகனும் ‘மலே’ப்படையினரும் நாட்டின் வடமுனையில் போய் தங்கினார்கள். இதற்கப்பால் அவர்களைத் துரத்துவதற்கு முயற்சி எடுக்கப் படவில்லை. இக்காலத்தில் சிறிது சிறிதாக பலவிதமாக தமிழ் மக்கள் வந்து குடியேறிய நிலமை காணப்பட்டது. இதனைப் பின்வருமாறு பரணவிதான அவர்கள் கூறுகின்றார்கள்.
'ஈழத்திருநாட்டின் வடமுனையில் யாழ்ப்பாணம் மற்றும் அண்மித்த பிரதேசங்களில் பராக்கிரமபாகு மன்னரின் ஆட்சிக்குட்பட்ட நிலைமை காணக் கிடைக்கவில்லை; ஆயினும், இப்பிரதேசத்தில் தமிழர்கள் செறிந்து காணப்பட்டதால் இதற்கண்மித்த காலங்களில் தமிழ் இராச்சியம் ஒன்று இங்கு அமைக்கப்பட்டது. ஆயினும் இது எவ்வாறு நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கு உறுதியான சான்றுகள் எதுவுமில்லை.'
31

Page 23
தோல்வியைத் தழுவிச் சென்ற மாகன் தனது சேனைகளுடன் சில காலம் யாழ்ப்பாணத்தில் இருந்துள்ளமை புலனாகின்றது. இவ்வாறே 'சந்திரபானு' எனும் ஆக்கிரமிப்பாளன் பற்றியும் கூறப்படுகின்றது. சந்திரபானு மாகனின் மகன் என்பதும், தனது தந்தைக்கு ஒத்தாசை செய்வ தற்காகவே இலங்கை வந்தான் என்பதும் பரணவிதான அவர்களது கருத்தாகும். பேராசிரியரவர்களின் கட்டுரைத்தொடர் 1 இன் 'இந்திய காலம்’ (தம்பதெனிய யுகம்) எனும் ஆய்வுக் கட்டுரையில் முன் வைக்கப் படுகின்ற திருத்தத்திற்கமைய, மாகன் எனும் தீய, பயங்கர ஆட்சியாளன் பற்றிய முக்கியமான உறவுமுறையொன்றும் வெளியாகின்றது. அதாவது, சிங்கள மக்களின் பேரன்புக்குரிய கீர்த்திபூரீநிஸங்கமல்ல மன்னரின் பேரன் - அதாவது அவரது புதல்வியின் மகனே மாகன்! சுருங்கக் கூறின், வடக்கே வாழ்ந்த தமிழ் மக்களின் மனங்களில் தனி இராச்சியமொன்றுக்கான எண்ணக் கருத்துக்களை ஊட்டி அவற்றைப் பரிணமிக்கச் செய்வதற்கு கலிங்க வம்சத்தைச் சேர்ந்த ஜா மன்னர்கள் உறுதுணை புரிந்துள்ளார்கள் என்பதில் ஐயமில்லை. அத்துடன் சுதேச தன்மை ஒன்றினைப் பெற்றிராத கீர்த்தி பூரீ நிஸங்கமல்ல மன்னர் தமது பரம்பரை பற்றிக் கூறும் போது மலேசிய தேசத்தை தவிர்த்துக் கூறியுள்ளார். அத்துடன் நிஸங்கமல்ல மன்னர், தான் கலிங்க நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த விஜயன் என்னும் மன்னரின் பரம்பரையிலிருந்து தோற்றம் பெற்ற வம்சத்தினைச் சேர்ந்தவ ரென்றும், தான் பாண்டிய பரம்பரையிலிருந்து தோற்றம் பெற்ற மகா பராக்கிரமபாகுவின் மருமகன் எனவும் இருவேறு விதமாக வெவ்வேறு சிலாசாசனங்கள் இரண்டில் குறிப்பிட்டுள்ளார். அக்காலத்தில் பாண்டிய அரச குலத்தவர்கள் தொடர்பாக சிங்கள அரச குலத்தவர்களிடம் நிலவிய கெளரவம் காரணமாக அவ்வாறு எழுதியிருக்கலாம். தனது பிறப்பு பற்றிய குறைகளை மறைத்துக்கொண்டு தேசியவாத சிந்தனையொன்றினை ஏற்பதன்மூலம் தனது நிலையை பாதுகாத்துக் கொள்வதற்கு மாகனின் பாட்டனாராகிய கீர்த்தி பூரீ நிஸங்கமல்ல மன்னர் மேற்கொண்ட முயற்சி தற்கால வரலாற்றாசிரியர்களின் ஏளனத்துக்குரியதாகவிருப்பினும், அன்றைய சூழ்நிலைகளுக்கேற்ப அவரது பாதுகாப்பிற்கு வடிகாலாக அமைந்திருந்தது எனலாம். பாண்டியத் தமிழர்கள் பற்றி சிங்களவர்கள் கொண்டிருந்த அபிமானத்தை பறை சாற்றும் சான்றாக "காவிய சூளாமணி (கவ் சிலுமின) எனும் உயர்ந்த காவியமொன்றை எழுதிய மன்னர், தான் பாண்டிய அரச பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதை பெருமிதத்துடன் கூறிக் கொள்வதை உதாரணமாகக் கூறலாம்.
12. கோட்டை யுகம்
ஆறாம் பராக்கிரமபாகு மன்னர் கோட்டையை ஆட்சி புரியும் வேளை
யில் (கி. பி. 1412) யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு வடக்குப்
27 - கட்டுரைத் தொடர் 1 - பரணவிதான - இந்தியக் காலம் (தவதெனி யுகய)
32

பிரதேசத்தை ஆரியச் சக்கரவர்த்தி ஒருவரே ஆட்சி புரிந்து வந்தார். வட இந்தியாவுடன் தொடர்புடைய ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனக் கூறப்படுகின்ற இவ்வரசர், இலங்கையின் தெற்கேயும் தனது அதிகாரத்தைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இதன் காரணமாக வடக்கே வாழ்ந்த தமிழ் மக்களுக்கும் தெற்கே வாழ்ந்த சிங்கள மக்களுக்குமிடையிலான தொடர்புகளில் விரிசல்கள் உருவாகின. மீண்டும் நாட்டில் ஒரே ஆட்சியின் கீழ் அனைத்து மக்களும் வாழ வேண்டுமாயின் அந்நிய நாட்டு அரசனான ஆரியச் சக்கரவர்த்தியை விரட்டுதல் வேண்டும். வடக்கே வாழ்ந்த தமிழ் மக்களும் இவ்வரசரிடமிருந்து விடுதலை பெறுவதற்காக பூரண விருப்பத்துடன் இருந்திருக்கலாம்.
ஆறாம் பராக்கிரமபாகு மன்னர் சிங்கள மக்களிடையே 'சபுமல் குமாரயா" எனும் பெயரால் பிரசித்தி பெற்றிருந்த சம்பத் பெருமாள் அல்லது செண்பகப் பெருமாள் எனும் தளபதியின் உதவியைப் பெற்றுக்கொண்டே ஆரியச் சக்கரவர்த்தியின் ஆட்சியைக் கவிழ்க்க முடிந்தது. மாக யுகத்தில் (கி.பி.1215) பிரதான இராச்சியத்திலிருந்து பிரிந்து சென்று தனியொரு பிரிவாக இயங்கிய வடக்குப் பிரதேசம் இரு நூற்றாண்டுகளாக சிறப்பான தொரு பின்னணியின் கீழ் வளர்ச்சி கண்டிருந்தது. ஆறாம் நூற்றாண்டி லிருந்தே சைவ சமயம் அங்கு வாழ்ந்த மக்களிடையே செல்வாக்கு பெற்றி ருந்தது. ஆதலால் வடக்குப் பிரதேச மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தலைவர் ஒருவரை அங்கு அனுப்புவது உசிதமானது என தனது இராஜ தந்திரத்துடன் சிந்தித்து, யாழ்ப்பாண ஆக்கிரமிப்பை சபுமல் குமாரனிடம் ஒப்படைக்க பராக்கிரமபாகு மன்னர் தீர்மானித்தார்.* பராக்கிரமபாகு மன்னரின் அப்போதைய தமிழ்ப் படைத்தளபதியாகிய பனிக்கலவன் என்பவரின் புதல்வனே இந்த சபுமல் குமாரன். சபுமல்லின் தாயார் சிங்களப் பெண்மணியொருவராகும்.* சிறுபராயம் தொட்டு அரண்மனையில் வாழ்ந்து வந்தமையால் சபுமல் விசுவாசம் மிகுந்தவராகவும், வீரம் பொருந்திய படைத் தளபதியாகவும் திகழ்ந்தார். யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுத்துச் சென்ற சபுமல் குமாரனின் படையில் தமிழ், சிங்கள, துலு, மலல ஆகிய இன வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். வடக்கே வசித்த மக்கள் இப்படையினருக்கு எதிராக செயற்படவில்லை. ஆரியச் சக்கரவர்த்தி ராஜபுத்திர படையொன்றின் துணையுடன் யாழ்ப்பாணத்தை அடக்கியாண்டதாக கருதப்படுகின்றதெனில், சபுமல் தமிழர்களுக் கெதிராகவன்றி, ராஜபுத்திரர்களுக்கு எதிராகவே யுத்தம் புரிந்துள்ளார் எனக் கொள்ள வேண்டும். பராக்கிரமபாகு மன்னருக்கு புதல்வர் எவரும்
28 - ஜயவர்த்தனபுரி இராச்சியத்தில் பலம்பொருந்திய சேனாதிபதியாகிய சபுமல், சைவ சமயத்தைச் சேர்ந்தவர் என்பது தெளிவாகின்றது. இக்காலத்தில் கோட்டை இராச்சியத்தில் சிவன் கோவிலும், கந்தசாமி கோவிலும் சபுமல் குமாரனின் குடும்பத்தினர்களின் தூண்டுதல் காரணமாக கட்டப்பட்டிருக்கலாம். இக்கோயில் கள் பற்றி தொட்டகமுவ ராகுல தேரரவர்களால் எழுதப்பட்ட "செலகினி சந்தேச எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
33

Page 24
இருக்கவில்லை என சில வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆதலால் சிங்கள மொழியில் லோகமாதா என்றும் தமிழ் மொழியில் உலகு டையதேவி என்றும் விளங்கிய தனது மகளின் புதல்வனுக்கே தனக்குப் பிறகு அரசராகும் உரிமையை ஒப்படைக்க முடிவு செய்திருந்தார். பராக்கிரம பாகு மன்னரின் மகளை நன்னூர் துணையாழ்வார் எனும் தமிழ் இளவரச ரொருவரே மண முடித்திருந்தார். பராக்கிரமபாகு மன்னருக்குப் பின்னர் அரச வாரிசாக, உலகுடைய தேவிக்கும் நன்னூர் துணையாழ்வாருக்கும் ஓர் ஆண்மகவு பிறக்க வேண்டுமென கோரி தொடகமுவை பூரீ ராகுல சங்கராஜ தேரர் அவர்கள் ‘செலலிகினி சந்தேசிய (பூவை விடு தூது) எனும் காவிய நூலை எழுதி இறைவனிடம் இறைஞ்சியுள்ளார். இவ்வாறு பெற்ற மகவு ஜயவீர பராக்கிரமபாகு ஆகும். இக்காலகட்டத்தில் வீரதீரச் செயலில் நிபுணத்துவம் பெற்றிருந்த, அரண் மனையிலேயே வளர்ந்து வந்த, பனிக்கலவனின் மகனுக்கு யாழ்ப்பாண இராச்சியத்தை ஒப்படைத்து எதிர் காலத்தில் உருவாகக்கூடிய சிக்கல்களை தீர்க்குமுகமாகவே சபுமல் குமாரனை யாழ்ப்பாணத்தை வெற்றி கொள்வதற்கு அனுப்பியதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும் சபுமல் அல்லது சம்பத் பெருமாள் யாழ்ப்பாணத்தை வெற்றி கொண்டார். அங்கு வசித்த மக்கள் தமது இனத்தைச் சேர்ந்த சம்பத் பெருமாளின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். ஆரியச் சக்கரவர்த்தி யின் ஆட்சி முடிவடையவே, கோட்டை மன்னரின் குடைக்கீழ் சபுமல் குமாரரின் தலைமையின் கீழ் யாழ்ப்பாணத்தில் ஆட்சி நிலவியது. இவ் வாட்சி கோட்டையில் இயங்கிய அரச சபை போன்று தனியொரு அரசவை யாக இயங்கியது. நல்லூர் கந்தசாமி கோவிலில் இடம்பெறுகிற சுப கருமங் களில் இன்றும்கூட சம்பத்பெருமாளை போற்றிப் புகழ்ந்து துதிப் பாடல்கள் பாடப்படுவதாக அறியப்படுகிறது. இத்தலைவரை, சிங்கள மக்கள் தமது இனத்தைச் சேர்ந்த ஒரு வீரராக கெளரவத்துடன் நினைவு கூருகின்றனர். இத் தலைவரை ஒரு தமிழர் என அழைப்பதை அவர்கள் முற்று முழுதாக வெறுக்கின்றனர். இவரது வீர தீரச் செயல்கள் பற்றிய அபிமானம் சிங்கள மக்களிடையே எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என இதிலிருந்து அறியலாம்.
ஆறாவது பராக்கிரமபாகு மன்னரின் மரணத்திற்குப் பின்னர் (கி. பி. 1467) கோட்டையின் பிரதான மன்னராக, தமிழினத்தைச் சேர்ந்த நன்னூர் துணைாழ்வாரின் புதல்வர் இரண்டாம் ஜயபாகு என்ற பெயரில் மன்னராக
29 - போர்த்துக்கேய நாட்டைச் சேர்ந்த வரலாற்றாசிரியரான கெளடோ அவர்கள் சபுமல் தமிழ் இளவரசரொருவர் எனக் கூறியுள்ளார். செனரத் பரணவிதான அவர்களும் ஆறாம் புவனேகபாகுவின் தெதிகம சிலாசனம் தொடர்பாக எழுதிய விமர்சனத்தில் கெளடோ அவர்களின் கூற்று ஏற்றுக்கொள்ளக்கூடியது எனச் சுட்டிக்காட்டியுள்ளார். ஆறாம் புவனேகபாகு இளவரசன் பராக்கிரமபாகுவின் புதல்வன் எனின், இவருக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட புரட்சியை சிங்களப்புரட்சி என முக்கியத் துவம் அளித்து காட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
34

முடி சூடுவதற்கு பூரீ ராகுல தேரர் அவர்களும் பூரண ஒத்துழைப்பு வழங்கி யிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் இதனால் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த சபுமல் குமாரன் திருப்தியடையவில்லை. மாறாக, தமிழ் சேனையொன்றைத் திரட்டி வந்து கோட்டை மன்னருடன் போர் தொடுத்து, அம்மன்னர் மடிந்து விடவே (கி.பி. 1469) இல் ஆறாம் புவனேகபாகு எனும் அரசகுல நாமத்தில் முடி சூடினார்.
இவ்வாறு சபுமல் கோட்டை இராச்சியத்தின் தலைவராக பொறுப் பேற்றதைக் கண்ணுற்று அக்காலத்தில் வாழ்ந்த சில சிங்களத் தலைவர்கள் எரிச்சலுற்றனர். கோட்டை இராச்சியத்திலிருந்து பிரிந்து வேறொரு இராச் சியத்தை அமைத்துக்கொள்வது இவர்களது ஒரே நோக்கமாக இருந்துள் ளது. ஆகாயக் குதிரையின் மேலேறி யாழ் குடாநாட்டை வெற்றி கொண்ட புகழ்மிகு சபுமல் குமாரர்மீது பொறாமை கொண்ட அக்கூட்டத்தினர் சிங்கள கிளர்ச்சியொன்றை ஆரம்பித்தனர். இக்கிளர்ச்சிக்கு தலைமை வகித்து, பஸ்துன் கோரலே களனிதொல பூரீ ஜயவர்தனபுர பிரதிராஜ தேரரும், கூரகம தேரரும் செயல்பட்டனர். 'இராஜவலி'யில் இக்கிளர்ச்சி ‘சிங்களப் புரட்சி (சிங்கள பெரலிய) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.° ‘சிங்கள சங்கே என தெதிகம சிலாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகள் பற்றியோ, சபுமல் குமாரன் யாழ்ப்பாணத்தை வெற்றிகொண்டு, நீதி வழுவாது ஆட்சி புரிந்தமை பற்றியோ மகாவம்சத்தில் குறிப்பிடப்படவில்லை. சதரகோரளை யினரும் ஆறாம் புவனேகபாகு மன்னருக்கு எதிராக கிளர்ச்சி ஒன்றினை மேற்கொண்ட போதிலும், பலம் பொருந்திய வீரராகிய இம்மன்னர் இக் கிளர்ச்சிகளை நசுக்குவதற்குரிய வல்லமை பெற்றிருந்தார். யாழ்ப்பாணத் தில் பக்கச்சார்புடன் செயல்படக்கூடிய நிலமைகள் தொடர்ந்தும் நிலவின. ஆயினும் புவனேகபாகுவின் மரணத்துக்குப் பிறகு, சிங்களப் பிரதேசங் களில் சுயாதீனமான சில சிற்றரசுகள் தோன்றின. இதற்கிடையில் யாழ்ப் பாணத்திலும் தமிழ் அரசர்களின் கீழ் சுயாதீன ஆட்சி மீண்டும் தலை தூக்கியது. அக்காலத்து சிங்களத் தலைவர்கள் ஆறாம் புவனேக பாகுவிற்கெதிராக இனவாதக் கண்ணோட்டத்திலான கலகமொன்றை நடத்தியமையே இதற்கு ஏதுவாயமைந்தது எனலாம். இக் கிளர்ச்சியின் பின்னர் புவனேகபாகு (சபுமல்) தான் ஆறாம் பராக்கிரமபாகுவின் புதல்வன் என உணர்த்தக்கூடிய வகையிலான கூற்றுக்கள் சிலாசாசனங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கூற்றினை நிஸங்கமல்ல மன்னர், சிங்கள மக்கள் மனங்களை கவரும்முகமாக விஜய மன்னருக்கும் மகாபராக்கிரம பாகு மன்னருக்குமிடையில் வம்சத் தொடர்புகளை கூறியதுடன் ஒப்பிடலாம். சமகால காவியங்களான செலிகினி சந்தேசய (பூவை விடு தூது), கோகில சந்தேசய (குயில் விடு தூது) ஆகிய இரு காவியங்களிலும்
30 - இராஜவலி - பீ. குணசேகர வாசல முதலி அவர்கள் எழுதிய 49ம் பக்கம் 31 - EZVol II - 278 கட்டுரையின் நோக்கம் இக்கிளர்ச்சிக்கு காரணமான சதர கோரளை
வாசிகளுக்க மன்னிப்பு வழங்க வேண்டுமென எடுத்துரைப்பதாகும்.
35

Page 25
சபுமல், ஆறாம் பராக்கிரமபாகு மன்னரின் அரசுரிமை வாரிசாக கருதப் பட்டா ரேயன்றி மகனாகி விட முடியாது. ஏனெனில் சபுமல் ஆறாம் பராக்கிரமபாகுவின் மகன் என்றால் அவரது மகளான உலகுடைய தேவியின் மூலம் அரச வாரிசாக பேரனொருவனை பெற்றெடுக்க வேண்டுமென, தொடகமுவ ராகுல தேரரவர்கள் ‘செலலிகினி சந்தேசய" (பூவைவிடுதூது) காவியத்தை எழுத நேர்ந்திருக்காதல்லவா?
13. கலாச்சார உறவுகள்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலவிய தமிழ் - சிங்கள உறவுகள் மூலம் பல்வேறு வகையான கலாசார முன்னேற்றங்கள் காணப்பட்டன. அதாவது, சமயம், மொழி, இலக்கியம், சமூகம் ஆகிய துறைகளில் வளர்ச்சி காணப்பட்டது. தமிழ் இராச்சியங்களுக்கும் இலங்கை க்கும் இடையிலான தொடர்புகளும், இனரீதியிலான தமிழ் சிங்கள ஒத் துழைப்புகளும் கலாசார வளர்ச்சிக்கு ஏணிப்படியாக அமைந்துள்ளன.
தென்னிந்தியத் தமிழ் இராச்சியங்களும் இலங்கையும் கிறிஸ்து வருடத்திலிருந்து பல நூற்றாண்டுகளாக ஒரே சமயப்பிரிவுகளை பின்பற்றி யுள்ளமைக்கான சான்றுகள் உள. இலங்கையர்களான தமிழர்களும், சிங்களவர்களும் இந்தியாவிலுள்ள தமிழர்களும் ஒரே காலகட்டத்திலேயே பெளத்த மதத்தை தழுவியுள்ளனர். இலங்கைக்கு புத்தபெருமான் மும் முறைகள் வந்தருளியமை பற்றியும், அசோகப் பேரரசரின் வழிநடத்தல் மூலம் அர்ஹத் மகிந்த தேரர் அவர்களினால் புத்தசாசனம் அமைக்கப் பட்டமை பற்றியும் மகாவம்சத்திலும், தீபவம்சத்திலும் ஏனைய இலக்கிய ஏடுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கி. பி. 629 இல் இந்திய சமய ஸ்தலங்களை பார்வையிடும் பொருட்டு சுற்றுலாவொன்றினை மேற் கொண்ட கியுங்சியேங் என்ற சீன தேச பிக்கு ஒருவர், தமிழ் பிரதேசங் களிலும் புத்த பெருமான் அங்கு வந்தருளியுள்ளமை பற்றிய பாரம்பரிய நம்பிக்கைகள் நிலவுவதாகவும், அசோக மன்னரினால் கட்டப்பட்ட கங்கா ராம உட்பட ஏனைய சைத்தியங்களின் இடிபாடுகளையும் தான் பார்வை யிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த கியுங்சியேங் என்ற பிக்கு அவர்கள், கி. பி 629 - 645 இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் சுற்றலா ஒன்றினை மேற் கொண்டிருந்தார். அப்போது அவர் ஆந்திர, சோழ இராச்சியங்களுக்கும், தெற்கே அமைந்துள்ள தமிழ் நாட்டிற்கும் சென்றுள்ளார். இது பாண்டிய நாடாகவும் இருக்கலாம்.
தமிழர்களும் சிங்களவர்களும் ஆரம்ப காலத்தில் பெளத்தர்களாக இருந்துள்ளமை பற்றி சமகால குகைக் கல்வெட்டுக்கள் சான்று பகர் கின்றன. அன்று, அசோக எழுத்து என வழங்கப்பட்ட பிராகிருத எழுத்துக் களிலே தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளும் கலந்திருந்தன.
இலங்கைப் பல்கலைக்கழகத்தின் இலங்கை வரலாறு எனும் நூலிற்கு
36

தமிழ் மொழி பற்றிய கட்டுரையொன்றினை முன்வைக்கும் எஸ். நடேசன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது எஞ்சியுள்ள மிகப் பழமை வாய்ந்த தமிழ் மடல்கள் தென்னிந்தியாவின் பல குகைகளில் காணப்படுகின்றன. கி.பி மூன்றாவது நூற்றாண்டில் இக்குகைகளில் பெளத்த பிக்குமார்கள் வசித்துள்ளமை புலனாகின்றது. இக்குகைக் கடிதங்கள் ஒன்றில் ஈழத் திருநாட்டிலிருந்து வந்த குடும்பத் தலைவன் ஒருவனைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது கண்டு பெருமைப்படுதல் வேண்டும்.* V−
"இலங்கையில் பெளத்த மதத்தை பரப்புவதற்கு உறுதுணையாக இருந்த மகிந்த மகாதேரர் அவர்கள் தென்னிந்தியாவில் அறநெறிப் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்ததான நம்பிக்கை பிற்காலத்தில் அந்நாடு களில் நிலவியதாக செனரத் பரணவிதான அவர்கள் நவின்றுள்ளார்கள்.°
வரலாற்றாசிரியரான நீலகண்ட சாஸ்திரி அவர்கள், பெளத்த வரலாற் றில் கூறப்படுகின்ற (கிஜ்ஜகுட பர்வதய) கழுகுமலை தென்னிந்தியாவில் அமைந்துள்ளதெனவும், பிராகிருத எழுத்துக்களிலான கடிதங்களைக் கொண்ட பிரதேசத்தின் ஓரிடம் கலிங்குமலை என அழைக்கப்படுவதாகவும், கலிங்குமலை என்பது பெளத்த மதத்தின் பிரதான தலமொன்றாகிய ’கிருத்தகுட' என்பதன் தமிழ் வடிவம் எனவும் குறிப்பிட்டுள்ளார்."
மேலே கூறப்பட்ட தென்னிந்தியக் குகைக் கடிதங்கள் குறிப்பிட்ட அதே சமகாலத்தில்; இலங்கையில் வசித்த தமிழ் வியாபாரத் தலைவர் களினால் பெளத்த பிக்குமார்களுக்கு வழங்கப்பட்ட குகைகளில் பிராகிருத எழுத்துக்களில் எழுதப்பட்ட மூன்று குறிப்புக்களைக் கண்டெடுத்து ள்ளனர். இதில், இரண்டாம் நூற்றாண்டுக்குரியது எனக் கொள்ளப்படுகின்ற சிலாசனமொன்று அநுராதபுரியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ் வர்த்தகரொருவரைக் கொண்ட தமிழ் வகுப்பினர் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. ஏனைய இரு சிலாசனங்களும் வவுனியா மாவட்டத்தின் பெரிய புளியங்குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.*
ஒரு சிலாசாசனத்தில், தமிழ் வர்த்தகரொருவரான இல்லத் தலைவ னான விசாகன் என்பவரால் சீராக்கப்பட்ட குகை எனவும், மற்றைய சிலா சாசனத்தில், தமிழ் குடும்பத் தலைவனான விசாகன் என்பவனால் கட்டப் பட்ட மாடிப்படிகள் எனவும் தற்கால மொழியில் பொருள்படுகின்றன. தமிழ் மக்களின் தலைவராக விசாகன் என்பவர் விளங்கியுள்ளார் என்பது தெளி வாகின்றது. இக்குகைகள் சீராக்கப்பட்டு பெளத்த பிக்குமார்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
32 -இலங்கை வரலாறு - இலங்கை பல்கலைக்கழகம் ii அத்தியாயம் மனித
வர்க்கத்தினரும் மொழியும்
33 - கட்டுரைத்தொடர் 1 - முதலாவது கட்டுரை
34 - தென்னிந்திய வரலாறு - நீலகண்ட சாஸ்திரி அவர்கள் - V அதிகாரம்
35 - EZVol
37

Page 26
பிரசித்தி பெற்ற 'வல்லிபுரம் ரன்சன்னச எழுதப்பட்ட காலத்திற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே இச்சிலாசாசனங்கள் எழுதப்பட் டுள்ளன. ஆதலால் மேலே கூறப்பட்ட தலைவர்கள் பெளத்தர்கள் என்பது பற்றி ஆச்சரியப்படவேண்டியதில்லை. இக்காலத்தில், தென்னிந்திய தமிழ் இராச்சியங்களில் பெளத்த சமயம் செல்வாக்குப் பெற்றிருந்தது. பிற்காலத் தில் வட இந்தியாவிலிருந்து வந்த கூட்டத்தினராலேயே தமிழ் மக்கள் இந்து சமயத்திற்கு கவர்ந்திழுக்கப்பட்டனர். எல்லாள மன்னரின் அரசவையில் பெளத்த அமைச்சர்கள் இடம்பெற்றிருந்ததுடன் சிங்களவர்களும், தமிழர் களும் கலந்து செயற்பட்டனர்.
14. பிக்குமார்களிடையே நிலவிய உறவுகள்
பெளத்த சமயம் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு பரவிய மையால், பெளத்த சமயம் பற்றிப் பேசப்படுகின்ற அனைத்துச் சந்தர்ப்பங் களிலும் இந்நாட்டு மக்கள் மனதில் புத்தகாயா சாகாவரம் பெற்ற மிளிர் கின்றது. இதற்கமைய இச்சமய உறவுகள் சாக்கிய மதத்தினருக்கும், சிங்கள இனத்தவருக்கும் மட்டுமே உரியதாக வரையறுக்கப்பட்டிருப்பது தவறான எண்ணக் கருத்தாகும். இலங்கையில் புத்த சாசனம் நீடித்து நிலைக்க, தென்னிந்திய தமிழ் பெளத்தர்ககளுடன் ஏற்படுத்திக்கொண்ட உறவுகளே உறுதுணை புரிந்த வழிவகைகளில் பிரதானமானது என்பது கண்கூடு. ஆயினும், இதுபற்றி சிறிதளவே கவனம் செலுத்தப்படுகின்றது. அரச ஆதரவுடனும், ஆதரவின்றியும் சிங்கள பிக்குமார்களும், தமிழ் பிக்கு மார்களும் புத்த சாசனத்தையும் சங்கசாசனத்தையும் பாதுகாத்தளித்து மிளிரச்செய்வதற்கு ஒன்றுபட்டுழைத்தார்கள். வட இந்தியாவில் பிராமண அதிகாரம் மேலோங்கியும் பெளத்த சமயம் வீழ்ச்சியுற்றும் காணப்பட்ட சமயம், பெளத்த மதத்தினை வலுவுறச் செய்வதற்கு தமிழ் பெளத்த பிக்கு மார்களே உறுதுணை புரிந்தார்கள். இலங்கையில் நிலவிய தேரவாத, மகாயான போன்ற பெளத்த பீடங்களுடன் தொடர்புடைய சமயப்பிரிவுகள் தமிழ் பிரதேசங்களிலும் காணப்பட்டன. இலங்கையில் காணப்பட்ட பெளத்த நூல்களுக்கு பாளிமொழியில் விளக்கவுரைகள் எழுதிய, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த, தெலுங்கு மொழியில் தேர்ச்சிபெற்ற புத்தகோச தேரரவர்கள் சிங்கள பிக்குமார்களின் உதவியுடன், சிங்கள மொழியிலான பெளத்த அறநெறி நூல்களை பாளி மொழிக்கு மொழிபெயர்த்துள்ளமை பிரசித்தி வாய்ந்ததாகும். இத்தேரர் சிங்கள மொழியில் புலமை பெற்றிருந் தது போன்று சிங்கள தேரர்களும் தெலுங்கு மொழியில் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தனர் என ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இத்தேரர்களினால் பாளிமொழியிற்கு மொழிபெயர்க்கப்பட்ட அறநெறி ஏடுகள் தமிழ் நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தமையினால் பிற்காலத்தில் மாகனின் தொல்லையினால் அறநெறி ஏடுகள் அழித்தொழிக்கப்பட்ட வேளை இந்தியாவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த அவ்வேடுகளின் பிரதி
38

களைக் கொண்டு வந்ததன் மூலம் இலங்கையில் சாசனத்தின் புனிதத் தன்மையை பேண முடிந்தது. தென்னிந்திய தமிழ் பிரசேங்களில் வசித்து தேவபோதிசத்துவ விருதினைப் பெற்ற ஆரிய தேவத் தேரர் சிங்களவர் என கூறப்படுகிறது.
இலங்கை வாழ் சிங்கள பிக்குமார்களுக்கும் தென்னிந்திய தமிழ் பிக்கு மார்களுக்குமிடையில் ஆரம்ப உறவு வலகம்பா மன்னரின் காலத்திலேயே நிலவியது. இச்சந்தர்ப்பத்தில் இலங்கை பிக்குமார்கள் முதன்முதலாக மகாவிகாரைப் பிரிவினர் என்றும் அபயகிரிவிகாரைப் பிரிவினர் என்றும் இரு கூட்டங்களாக பிரிந்து செயற்படலாயினர். ஆரம்ப காலத்தில் தனிப்பட்ட பிரச்சினையாக உருவெடுத்த பிரிவினை காலப்போக்கில் தத்துவ கொள்கையடிப்படையில் இயங்கலாயிற்று. இதற்கமைய மகாவிகாரையினர் தேரவாதிகள் எனவும் அபயகிரி விகாரையினர் தர்மரிஷி அல்லது வைத்துல்யவாதிகள் எனவும் அழைக்கப்பட்டனர். பெவினிதியாசாயா எனும் பஞ்சம் நிலவிய சமயம் சிங்கள பிக்குமார்கள் தென்னிந்திய ஆந்திர தேசத்திற்கு வந்தருளியுள்ளனர். இப்பிக்குமார்களில் சிலர் இலங்கைக்கு திரும்பிவரும்போது அங்கு பரவலாக நிலவிய மகாயான கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வந்தபோது அபயகிரி பிரிவினர் மூலம் வரவேற்கப் பட்டனர்.
பிக்குமார்களிடையே நிலவிய இச்சங்க பேதங்கள் பிற்காலத்தில் மிகப் பயங்கரமான விளைவுகள் ஏற்படுவதற்கு வழிகோலியது என்பது கண்கூடு. மகாவிகாரை பிக்குமார்கள் மகாயான கொள்கைகளை முற்றுமுழுதாக எதிர்த்தனர். ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தங்களுக்கு சார்பாக செயற்படக் கூடிய மன்னர்களின் உதவியுடன் எதிர்த்தரப்பின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி, அவர்களைத் துன்புறுத்தி இருபிரிவினரும் செயல்பட்ட தால் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகினர். நிலமையை சீர்படுத்த முனைந்த மன்னர்களும் தண்டிக்கப்பட்டனர். கனிராசானுதிஸ்ஸ மன்னர் (கி.பி 31-34) மிகிந்தலையில் வைத்து இரு பிரிவினரது கருத்துமோதல்களுக்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்து தீர்ப்பளிக்க முற்பட்ட வேளை, பாதிக்கப் பட்ட பிரிவினர் மன்னரை கொலை செய்வதற்கு சூழ்ச்சிகள் மேற்கொண்ட துடன் சம்பந்தப்பட்ட அறுபத்தொன்பது பிக்குமார்களை மலையுச்சியிலி ருந்து கீழே தள்ளிய நிகழ்ச்சி பற்றிய விபரங்களை மகாவம்சத்தின் வாயிலாக அறிய முடிகின்றது.* பின்னர் (கி.பி. 253 - 266)இல் கெளதபாய மன்னர் மகாவிகாரை பிக்குமார்களின் அனுசரணையின்படி அபயகிரி பிரிவினரின் அறநெறி ஏடுகளை எரித்து, அறுபத்தொன்பது பிக்குமார்களை நாட்டி லிருந்து துரத்தியடித்தார்." துன்புறுத்தல்களுக்கு ஆளான சிங்கள பிக்கு மார்கள் சமய அனாதைகளாக்கப்பட்டு சோழ நாட்டில் தஞ்சம் புகுந்தனர். பின்னர் மகாசேன மன்னர் அபயகிரி பிரிவினர்பக்கம் சார்ந்து மகாவிகாரை யினரின் கட்டிடங்களை சிதைத்து அழித்தது மட்டுமன்றி, இப் பிக்குமார் களுக்கு தானம் வழங்கவதும் தடுக்கப்பட்டது. பிக்குமார்களின்
39

Page 27
பொறுமையின்மை காரணமாகவும், கருத்துமோதல்கள் நிகழ்ந்தமையாலும் பழமை வாய்ந்த பல அரிய சமய அறநெறி ஏடுகளையும் பெளத்த கட்டிடங் களையும் அழித்தது மட்டுமன்றி, பிக்குமார்களின் அரிய பல உயிர்களையும் இழக்க நேர்ந்தது.
இக்காலகட்டத்தில், தென்னிந்தியாவில் தேரவாத பிக்குகளைப் போன்று வைத்துல்யவாத பிக்குமார்களும் ஏனைய சமய பீடங்களை ஏற்றுக் கொண்ட பிக்குமார்களும் வசித்துள்ளனர். கியுங் சியேங் பிக்கு அவர்கள் இந்தியாவில் சுற்றுலாவை மேற்கொண்டபோது, தமிழ் நாட்டின் காஞ்சி புரத்தில் பத்தாயிரம் தேரவாத பிக்குமார்கள் உட்பட ஆந்திர மாநிலத்தில் மூவாயிரம் பிக்குமார்கள் வந்தருளியதாகவும், நூற்றுக்கணக்கான விகாரை களையும், பத்து ஆச்சிரமங்களையும் தான் கண்ணுற்றதாகவும் தனது பயணக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். கி.பி ஆறாம் நூற்றாண்டளவில் தமிழ் நாட்டில் சைவசமயம் பரவியிருந்தது. இக்காலத்தில் இலங்கையின் வடக்கே வசித்த மக்களும் சைவசமயத்தை தழுவியுள்ளதாக சில மூலநூல்களில் கூறப்படுகின்றது.
இலங்கையில் ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்கள் பெளத்த சமயத்திற்கு மதிப்பளித்ததைப்போன்று சிங்கள மன்னர்களும் சைவசமய சித்தாந்தங் களுக்கு பெருமதிப்பளித்தனர். இரண்டாவது பண்டித பராக்கிரமபாகு மன்னரின் அரசவையிலிருந்த தேனுவர் பெருமாள் என்றழைக்கப்படும் போசராசன் கல்வியறிவில் சிறந்து விளங்கிய பிராமணரொருவராகும். இவர் சரசோதிமாலை’ எனும் காவியத்தை எழுதியதுடன் மன்னரின் தலைமை யில் அதை அரங்கேற்றியதாகவும் கூறப்படுகின்றது.*
இலங்கையின் பிக்குமார்களிடையே நிலவிய பிணக்குகள் காரணமாக நாடுகடத்தப்பட்டும், பஞ்சம், யுத்தம் நிலவிய காலங்களில் அனாதை களாக்கப்பட்டும் உதவி நாடிச் சென்ற சிங்கள பிக்குமார்களுக்கு தமிழ் பிக்குமார்கள் உட்பட சமயப்பற்றுள்ள ஆண், பெண் இருபாலாரும் உதவி நல்கி, பணிவிடை புரிந்து பேணிப் பாதுகாத்தனர்.
இவ்வாறு ஆறாவது நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வந்தருளியுள்ள பிக்குமார் கூட்டமொன்றை கியுங் சியேங் தேரர் சந்தித்துள்ளார்.
அக்கமகா பண்டிதரான பொலவத்த புத்தத்த தேரரவர்களினால் மொழி பெயர்க்கப்பட்ட கியுங் சியேங் பிரயாண தொடரில் பின்வருமாறு குறிப்பிடப்படுள்ளது.
காஞ்சிபுரம் என்பது சிங்கள தீவிற்கு செல்வதற்கு கப்பல் ஏறுகின்ற குடாவிற்கு அண்மையில் அமைந்துள்ளது. இங்கிருந்து மூன்று தினங்களில்
36 - மகாவம்சம் - 35வது அத்தியாயம் 10-13 இடைப்பட்ட செய்யுள்கள்
37 - மகாவம்சம் - 36வது அத்தியாயம் 111-113 இடைப்பட்ட செய்யுள்கள்
38- வேதியல் ஆசிய சங்கத்தின் இலங்கைப் பிரிவின் சஞ்சிகையின் மி. அலகின்
(JCBRAS)
40

அங்கு செல்ல முடியும் எனக் கூறப்பட்டிருக்கின்ற போதிலும் . . . இங்கிருந்து சிங்களவர்களான போதிமேகஷ்வர, அபய தக்ஸ்ட்ரே எனும் மகாதேரர் இருவரும் முன்னூறு பிக்குமார்களும் காஞ்சிபுரத்திற்கு வந்தருளி யுள்ளனர். சீன நாட்டைச் சேர்ந்த தேரரவர்கள் அக்கூட்டத்தினரை நோக்கி. a a தாங்களனைவரும் இங்கு வந்தருளிய காரணத்தைப் பகருங்கள் எனக் கூறினார். அதற்கு சிங்கள தேரர்கள், தமது மன்னர் இறந்ததாகவும், நாட்டு மக்கள் பஞ்சத்தால் துன்புறுவதாகவும், இந்திய நாடு சுபீட்சத்துடன் விளங்குவதாலும், பெளத்த சமயத் தலங்கள் நிறைந்து காணப்படுவதாலும் தாம் இங்கு வந்ததாக பகன்றனர்.°
துறவு பூண்ட தமிழ் பண்டிதர்கள் இலங்கையில் புத்த சாசனத்தை புனருத்தாரணம் செய்வதற்கு உறுதுணையாய் நின்று ஒத்தாசை புரிந்துள்ளனர். துறவு பூண்ட சிங்கள பண்டிதரொருவரான மெதஉயன் கொட விமலகீர்த்தி தேரரவர்கள், தனது “சாசனவம்ச பிரதீப எனும் நூலில் இதுபற்றிய தெளிவான சான்றுகளை முன்வைத்துள்ளார். இத்தேரருக்கு நன்றி செலுத்துமுகமாக அந்நூலிலிருந்து ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது. ஆறாம் நூற்றாண்டு காலத்திலிருந்தே சோழ பிக்குமார்கள் இலங்கை க்கு படிப்படியாக வந்துள்ளனர். தென்னிந்தியக் காலத்திலும் இலங்கையில் கல்வியில் சிறந்து விளங்கிய பிக்குமார்கள் இருந்துள்ள போதிலும், இவர் களைவிட மதிநுட்பமும், சீலமும் கொண்டவர்களாக சோழ பிக்குமார்கள் விளங்கியமையும், அன்று இலங்கையில் நிலவிய பிக்குமார்கள் பற்றாக் குறையும் சோழநாட்டிலிருந்து பிக்குமார்களை வரவழைக்க காரணமாக இருக்கலாம். மாகனின் கொடூரச் செயல்களைச் சிந்தித்துப் பார்க்கையில், இலங்கையில் பிக்குமார்களின் எண்ணிக்கைக் குறைவு பற்றி வியப்படைய முடிவதில்லை. பராக்கிரமபாகு மன்னர் சோழ நாட்டிலிருந்து பிக்குமார்களை மட்டுமல்ல அரிய பல நூல்களையும் தருவித்ததாக வரலாறு வாயிலாக அறிய முடிகின்றது. இந்நூல்களில் ஏராளமான மகாயான நூல்கள் இருந் தமையால் (விசூதிமார்க்க சன்ய) இந்நூல்கள் பயனுள்ளவையாக அமைந் தன. சோழ பிக்குமார்கள் இரு சாசனங்களை (வனவாசி - கிராமவாசி) ஒற் றுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது. புத்தப்பிய மகாதேரர் சோழ நாட்டிலிருந்து வந்தருளியதாகவும் நம்பப்படுகிறது."
அநுராதபுர காலத்தில், பிக்கு சங்கத்தினரின் பிளவுகள் தொடர்பாக மன்னர்கள் ஒருபக்கம் சார்நது மற்றைய பக்கத்தினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையே பின்பற்றினர். மற்றைய பிரிவினரின் காணிகளை அபகரித்து, தான் சார்ந்திருந்த பிரிவினருக்கு வழங்கினர். அன்று, முழு நாட்டினதும் காணிச் சொந்தக்காரனாக மன்னனே திகழ்ந்த மையால் தான் நினைப்பதை சாதிக்க வல்லவராகவும் விளங்கினார். ஆயினும் சில மன்னர்கள் மூன்று மதப்பிரிவினரிடையேயும் எவ்வித பக்கச் சார்புமின்றி ஒரேவிதமாகச் செயல்பட்டனர். பொலனறுவை. தம்பதெனிய, 39 - கியூங் சியேங் பிரயாணத் தொடர்- தர்ம அதிகாரம்
41

Page 28
காலங்களில் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் சிறு மாற்றம் நிகழ்ந்தது. இதன் பின்னர் மதப்பிரிவுகளை ஒன்றிணைக்கும் செயற்பாடுகளே காணப் பட்டன. இக்காலத்தில், கிராமவாசி - வனவாசி எனும் வேறுபட்ட மதப் பிரிவுகள், தமது புதுக்கொள்கைகளை நிலை நிறுத்துவதற்கு சோழ பிக்குமார்களின் ஒத்தழைப்பினை பெற்றுக்கொண்டுள்ளதாக அறிய முடி கின்றது.
ஆறாவது நூற்றாண்டில் சோழ பிக்குமார்கள் இலங்கைக்கு வந்த ருளியதுடன், இங்கு நிலவிய மிகச் சரியான அறநெறி நூல்களை கற்றறிந்து, இந்நூல்களை பாளி மொழியில் மொழி பெயர்த்து தென்னிந்தியாவிற்கு எடுத்துச் சென்றனர். அநுராதபுர காலத்தின் பிற்பாடு இலங்கை புத்த சாசனத்தில் பெருவீழ்ச்சி காணப்பட்டது. ஆயினும் தென்னிந்திய தமிழ் பிக்குமார்கள் தேரவாத, மகாயான நூல்கள் உட்பட ஏனைய அறநெறி ஏடு களையும் போற்றிப் பாதுகாத்தனர். இப்பிக்குமார்கள் எதிர்க்கருத்துக்களை நடுநிலை நின்று ஆராய்ந்து பார்த்து செயல்பட்டுள்ளார்கள் என்பது புலனா கின்றது. இந்நிலமைகள் காரணமாகவே தம்பதெனிய காலத்தில் (பதின் மூன்றாம் நூற்றாண்டில்) அறநெறி ஏடுகளையும், சமய அறிவில் சிறந்து விளங்கிய பிக்குமார்களையும் சோழ நாட்டிலிருந்து தருவித்து இரண்டா வது பண்டித பராக்கிரமபாகு மன்னர் புத்தசாசனத்தின் புனர்வாழ்விற்கு புத்தூக்கமளித்துள்ளார். இது பற்றி மகாவம்சத்தைப்போல பூஜாவலியிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மன்னரவர்கள், பல அறிஞர்களை சோழநாட்டிற்கு அனுப்பி சிறந்த சீலமுள்ள, பண்பாடுகளைப் போற்றுகின்ற மூன்றுபிடகங்களையும் மனனஞ் செய்த புகழ்பெற்ற பிக்குமார்களை வரவழைத்து, இலங்கையில் இரு சாசனங்களையும் ஒன்றிணைத்ததாக மகாவம்சத்தில் கூறப்பட்டுள் ளது. 4.
அதர்ம செயல்களைப் புரிந்து நீண்ட காலம் கட்டுப்பாடின்றி ஒழுக்க நெறி தவறி வாழ்ந்தவர்களைத் தவிர்த்து, சாசனத்தின் வளர்ச்சிக்காகவும், சாசனத்தின் புனிதத்தன்ைைய பேணுவதற்காகவும் மீண்டும் சோழ நாட்டிற்கு காணிக்கைகளை அனுப்பி பிக்குமார்களை இலங்கைக்கு வர வழைத்து இரு சாசனங்களையும் ஒன்றிணைத்தாகவும், இலங்கையில் சமய அறிவுள்ள தேரர்கள் போதாமையாலும், சமய நெறி ஏடுகள் எழுதி முடிக்கப் படாமையாலும் இந்தியாவிலிருந்து சமய நெறி ஏடுகளைத் தருவித்து நூற்றுக் கணக்கான தேரர்களுக்கு சமய அறிவு புகட்டி போதிமாதவனுக்கு பார்யாப்தி பூசை செய்ததாகவும்* பூஜாவலி வாயிலாக அறிய முடிகின்றது. இச்சமயம் பராக்கிரமபாகு மன்னர், ஒழுக்கநெறி தவறி, கட்டுப் பாடின்றி வாழ்ந்த பிக்குமார்களின் சீவர ஆடைகளை களைந்து, அவர்களை நீக்கி, புத்தசாசனத்தை தூய்மைப்படுத்தியதாக கூறப்படுவது ஒரு பண்பு 40 - சாசனவம்ச பிரதீப - இந்தியக் காலம் - 24வது அதிகாரம் 41 - மகாவம்சம் - 84வது செய்யுள் 10-11
42

ள்ள செயலேயாகும். எனினும் இச்செயற்பாடு நீண்டகால பாதகமான விளைவுகளுக்கு வித்திட்டது என நம்பப்படுகின்றது. இச்செயற்பாடு காரணமாக, தான்தோன்றித்தனமான செயல்களில் ஈடுபட்ட சில சிங்கள பிக்குகளின் மனங்களில், மூன்று பீடங்களையும் கரைகண்ட நல்லொழுக்க நற்பண்புகளையுடைய தமிழ்ப் பிக்குமார்கள் மீது இயல்பாகவே பகை யுணர்வுகள் உருவாகின. எது எவ்வாறாயினும், அன்று துறவு பூண்ட தமிழ் அறிஞர்கள் இலங்கை வந்தருளியிருக்காதுவிடின், இன்று சிங்கள பெளத்த சமயத்தை கண்ணுறுவதற்கும் வாய்ப்பே இல்லாது போயிருக்கும்.
தமிழ் பிக்குமார்கள், இலங்கையில் பெளத்த இலக்கியம் வளம் பெறு வதற்கு உறுதுணை புரிந்துள்ளமை பற்றி வரலாறு சான்று பகர்கின்றது. இலங்கையுடன் உறவுகளை மேற்கொண்ட தமிழ் துறவுபூண்ட அறிஞர்கள் பற்றியும், அங்குள்ள பெளத்த மத்திய நிலையங்கள்பற்றியும் பண்டித மெதவுயன்கொட விமலகீர்த்தி தேரர்கள் தனது ஆராய்ச்சி நூலின் (சாசன வம்ச பிரதீபய) பதினான்காவது அதிகாரத்தில் 'அநுராதபுர காலம் - உரை மொழி பெயர்ப்பின் துணைநூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
புத்தகோச மகாதேரரவர்கள் இந்தியாவின் மயூரபட்டினம் எனும் பகுதி யைச் சேர்ந்தவர். தர்மபாலன், புத்ததத்தன், ஆனந்தன், காசியப்பன் சோழியன், சாரிபுத்தன், புத்தப்பியன், வேதகன், அனுருத்தன், தர்மகீர்த்தி, அனோமதஸ்ஸன், சுமங்கலன், வீதாகமை ஆகிய புகழ் மிகு தேரர்கள் அனை வரும் தென்னைந்தியாவைச் சோந்தவர்களாவர். இவர்கள் பாளி மொழியில் சிறந்த தேர்ச்சியுள்ளவர்கள். இலங்கைக் கல்விமான்கள் வலுவிழந்து காணப் பட்டபோது கல்விமான்கள் வரவழைக்கப்பட்டதும் தென்னிந்தியாவிலிருந் தேயாகும். காவேரிப்பூம்பட்டினம், பூதமண்டலம், புத்தமண்டலம் சங்க மண்டலம், போதிமண்டலம், திருவிதுறைக் கோயில், கும்பகோணம், திரு வலஞ்சுழி, பட்டிச்சரம், பொன்பட்டி, புத்தகுடி, உறையூர், பெருஞ்சேரி, கோட்டப்பட்டி, மயூரபட்டினம், நாகபட்டினம் ஆகிய நகரங்களில் பெளத்த விகாரைகள் காணப்பட்டன.
மேலே குறிப்பிடப்பட்ட தேரர்களின் பெயர்கள் தமிழ், சிங்கள மொழி களுக்குரியன அல்ல. பாளி மொழிச் சொற்களான இவை தற்சமயம் சிங்கள மொழியில் வழங்குபவையாகும். துறவு பூணும் வேளை, பாளிமொழி நாமமொன்று சூட்டப்பெற்றிருத்தல்வேண்டும் என்பது பெளத்த சம்பிரதாய மாகும். அவ்வாறே பண்டைய மன்னர்களும் தமது சொந்தப்பெயருக்குப் பதிலாக அரச குலப் பெயர்களை உபயோகித்து வந்துள்ளனர். மாயா துன்னையின் புதல்வன் டிகிரி பண்டார (சீதவாக்க) இராஜசிங்கன் என்றும், கண்ணுச்சாமி என்னும் தமிழ் இளவரசன் பூரீ விக்கிரம ராஜசிங்கன் என்றும் தமிழ் மன்னர்கள் உபயோகித்த 'இராஜசிங்கன் என்னும் பெயரை உப யோகித்துள்ளனர்.
41 - மகாவம்சம் - 84ஆவது செய்யுள் 10-11 42 - பூஜாவலி - 34வது அதிகாரம்
43

Page 29
இப்பாளி நாமங்களை கருத்திற்கொண்டு, சாசன வரலாற்றில் பெயர் பதிக்கப்பட்டுள்ள பிக்குமார்கள் அனைவரும் சிங்கள பிக்குமார்கள் என ஒரு சிலர் தவறாக கருதுவதுடன் வேறு சில இனவாதிகளும் இவர்களை சிங்கள பிக்குமார்கள் என நினைத்து ஏமாற்றமடைந்துள்ளமை புலனாகின்றது. *வினய வினிஷ்சய’ என்ற நூலை எழுதிய புத்தத்ததேரர் அவர்களும், உரை எழுதுவதில் வல்லவரான புத்தகோஷ தேரருடன் ஒப்பிடுகையில், இரண்டாம் இடத்தில் வைத்து நோக்கக்கூடியவரான தர்மபால தேரரவர் களும் தமிழ்நாட்டிலிருந்து வந்தருளிய நல்லறிஞர்கள்“ என்பது கண்கூடு. தென்னிந்தியாவின் தற்போதைய மதுரைக்கு தென் கரையோரமாக அமைந்துள்ள நாகபட்டினம் அக்காலத்தில் பிரசித்திபெற்ற பெளத்த மத்திய நிலையங்களில் முதலிடம்பெற்று விளங்கியது. இது 'நற்குணங்களை ஏனைய நாடுகளுக்கு பரப்பிய எனும் பொருளைத் தரும் ‘சத்தம்மாவ தரட்டான” எனும் அடைமொழியில் வழங்கப்பட்டது. இங்கு அசோக மன்னரி னால் கட்டப்பட்ட விகாரையொன்றும் இருந்ததாக கூறப்படுகின்றது. இக் கூற்றை பேராசிரியர் பரணவிதான அவர்களுக்கேயுரிய மொழிநடையில் கூறுவதெனில், பண்டைக் காலத்திலிருந்தே நாக பட்டினம் பெளத்த சமய புனித ஸ்தலமாக பிரசித்தி பெற்று விளங்கியதுடன் புத்ததர்மத்தை மேற் குலக நாடுகளுக்கு பரவச்செய்வதற்கு இங்கு வசித்த பெளத்தர்கள் பெருமுயற்சி செய்துள்ளதாக உணர முடிகின்றது.*
மாபெரும் அறிவாளிகளான இத்தமிழ் பிக்குமார்களில் ஒரு சிலர் பாளி மொழியில் அறநெறி ஏடுகளை எழுதியதுடன் சிங்களமொழியில் நூல்கள் எழுதுவதற்கு ஊக்கமும் ஒத்துழைப்பும் வழங்கியுள்ளமைக்கான சிறந்த எடுத்துக்காட்டாக, ஐநூற்றுஐம்பது ஜாதகக் கதைகளைக் குறிப்பிடலாம். பாளிமொழியில் அமைந்த இந்நூலை சோழிய பிக்கு அவர்கள் நான்காவது பராக்கிரமபாகு மன்னருக்கு தொகுத்துக் கூற மன்னர் சிங்கள மொழியில் எழுதியதாக வழங்கப்படுகிறது. சோழிய பிக்கு அவர்களின் தலைமையின் கீழ் கல்விமான்களான பிக்குமார்கள் குழுவொன்று இக் காரியத்தில் ஈடு பட்டிருந்ததாக சில அறிஞர்கள் கருதுகின்றனர். இவ் விடயம் மகா வம்சத்தில் பின்வருமாறு முன்வைக்கப்பட்டுள்ளது.
'அம்மன்னர், சோழ நாட்டிலிருந்து வந்த பல்வேறு மொழிகளிலும் புலமைபெற்ற, தர்க்கம், சமயம் ஆகியவற்றைக் கற்றறிந்த சிறந்த ஒழுக்க முடைய மகாதேரர் ஒருவரை இராசகுரு பதவியில் அமர்த்தி அத்தேரரிட மிருந்து எப்பொழுதுமே ஜாதகக் கதைகளையும் அவற்றின் பொருளையும் கேட்டறிந்து அதன் பின்னர் நன்மை பயக்கும் ஐந்நூற்றி ஐம்பது ஜாதகக் கதைகளை பாளி மொழியிலிருந்து சிங்கள மொழிக்கு படிப்படியாக மொழி பெயர்த்து மூன்று பீடகங்களையும் கற்றறிந்த மகாதேரர்கள் குழுமிய அவை மத்தியில் வாசிக்கச் செய்து தூய்மைப்பட எழுதி இலங்கை முழுவதும் விநியோகம் செய்தார்." 43 - பரணவிதான அவர்கள் - கட்டுரைத்தொடர் -1-14 நாகபட்டினம் 43 - பரணவிதான - கட்டுரை மஞ்சரி -1-14 நாகபட்டினம்
44

மன்னரவர்கள். வீதாகமையில் பிரிவெனா ஒன்றையும்; போதி மாதவனின் படிவ இல்லம் அடங்கப் பெற்ற மாண்புமிகு பூரீகனானந்த என்ற ழைக்கப்படும் விகாரையொன்றையும் தனது நல்லாசானாக விளங்கிய சோழ நாட்டு மகாதேரருக்காக கட்டுவித்து பூசை செய்ததாக மகாவம்சம் வாயிலாக அறிய முடிகின்றது."
ஜாதகக் கதைகளை தொகுத்தளிக்கும் வேளை நாலாவது பராக் கிரமபாகு தனக்கு ஒத்தாசை வழங்கியவர் சோழியபிக்கு என்பதை வெளி யிடவில்லை. ஆயினும் காயசக்தி என அழைக்கப்பட்ட இச்சோழிய பிக்குவே ஒத்தாசை வழங்கியவர் என்பது அறிஞர்கள் கருத்தாகும். அத்துடன் அன்றைய காலத்தில், வீதாகமை பூரீ கனானந்த பிரிவெனாவின் அதிபதியாக திகழ்ந்தவர் இத்தமிழ் மகாதேரரேயாவர்.
தமிழ் நாட்டில் பல்லவ அரச குலத்தர்களின் செல்வாக்கு மேலோங்கி விளங்கிய காலகட்டத்தில் பெருவளர்ச்சி கண்டிருந்த படிம அழகுக் கலைகள், இலங்கை அழகுக்கலைகளில் பெருந்தாக்கம் செலுத்தியதாக சில அறிஞர்கள் கருதுகின்றனர். நாலாவது அக்கபோதி மன்னர் காலமுதல் மாணவர்ம மன்னரின் இறுதிக் காலம் வரையிலான (கி.பி. 667-718) காலப் பகுதியில் இத்தாக்கம் அதிகரித்திருந்தது. அதாவது, அக்கபோதி மன்னரின் முதமைச்சர்களாயிருந்த பொத்தகுட்டன், பொத்தசாத்தன் ஆகிய இரு தமிழர்களும் பல்லவ வம்சத்தினர் என்பதும் மாணவர்ம்ம மன்னர் நீண்ட காலமாக தமிழரசனின் அரண்மனையில் வளர்ந்து வந்தமையினால் அவரிடம் பல்லவ வாடை நிறைந்து காணப்பட்டதும் இத்தாக்கத்திற்கு காரணிகளாய் அமைந்து எனலாம். மாத்தளை மாவட்டத்தின் நாலந்த கெடிகே மற்றும் இசுருமுனி மலை ஆகிய பிரதேசங்களில் முன்னர் கண்டெ டுக்கப்பட்ட படிமங்கள் பல்லவ அழகுக் கலைகளுடன் நெருங்கிய தொடர்புள்ளவையாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இக்காலத்தில் இவ் விரு நாட்டு சிற்பக் கலைஞர்களிடையே நிலவிய அன்னியோன்னய உறவு கள் எனும் தலைப்பில் இது பற்றிய கட்டுரையொன்றை பேராசியர் பரணவிதான அவர்கள் தனது ஆய்வுநூலில் முன்வைத்துள்ளார்.
நாலாவது பராக்கிரமபாகு மன்னரின் காலத்தில் நிலவிய சிங்கள தமிழ் உறவுகள், இலக்கிய ரீதியில் முதன்மை பெற்று விளங்குகின்றது. தொடகமுவை விஜயபாகு பிரிவெனா அதிபதியாகிய பிரசித்தி வாய்ந்த பூரீ ராகுல மகாதேவர் மற்றும் 'குயில்விடு தூது’ (கோகில சன்தேசய) எனும் காவியத்தை எழுதிய இருகல் குலதிலக்கா பிரிவெனாதிபதி ஆகிய இருவரும் தமிழ் மொழியில் சிறந்த புலமை பெற்ற விற்பன்னர்களாவர். பூரீ ராகுல தேரரவர்களின் பிரிவெனாவில் கற்பிக்கப்பட்ட பாடங்களில் வட மொழி, மகதம், சிங்களம், தமிழ், கவிதை போன்றவைகளும் அடங்கியிருந் ததாக சமகால காவியமான 'கிளிவிடுதூது (கிரா சன்தேசய) நூலில் குறிப்
44 - மகாவம்சம் 90 அதிகாரம் - 80-84 செய்யுள்கள் மற்றும் 98-101 செய்யுள்கள்
45

Page 30
பிடப்பட்டுள்ளது. இக்காலத்தில் நாட்டின் பலபாகங்களில் தமிழ் கவிஞர்கள் வசித்துள்ளதாக அறிய முடிகின்றது . சிவன் கோயில் தமிழ் கவிஞர்கள் தேவஸ்தோத்திரங்களைப் பாடியதாக புறாவிடு தூது (பரவி சன்தேசய) எனும் காவிய நூலிலும், பையாகலை விகாரையில் தமிழ் பெண் கவிஞர்கள் வசித்ததாக குயில்விடுதூது (227செய்யுள்) என்னும் காவியத்திலும் குறிப் பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசர்கள் வரிசையில் இறுதி மன்னருக்கு முன்னர் ஆட்சி புரிந்த இராஜாதிஇராஜசிங்கன் எனும் நாயக்கர் வம்ச மன்னரை இது சம்பந்தமாக சிறந்த உதாரணமாக எடுத்துக் காட்டலாம். போதிசத்துவரின் கதையை ஆதாரமாக கொண்டு அசதூர்ச ஜாதக காவியம் எனும் கவிதை நூலை எழுதியவர் இராஜாதி ராஜசிங்க மன்னரேயாவர். (ம.வ110 அதிகாரம் -12-14 செய்யுள்கள்) ஆட்சியின் இறுதிக்காலத்தில் தான் முகங்கொடுக்க நேர்ந்த இக்கட்டான சூழ்நிலைகள் காரணமாக குரூமானவராக மாறிய இம் மன்னரால், கண்டி தலதா மாளிகை கட்டிடத்தொடருடன் இணைந்ததாக கட்டப்பட்ட பத்திருப்புவின் கலையம்சங்களை நோக்கும்போது இம்மன்னர் எவ்வளவு தூரம் கலையுணர்வு மிக்கவர் என்பது சொல்லாமல் புரிகின்றது. எட்டுக்கோணங்களில் அமைந்து, கண்கவர் காட்சி தரும் இவ்வழகு மண்டபம், சிங்கள பெளத்தர்களின் அன்பிற்கும் கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் பாத்திரமாய் திகழ்கின்றது. நாட்டு மக்கள் முன்னிலையில் மன்னர் தோன்றுவதற்கென அமைக்கப்பட்ட இம்மண்டபத்தில் வெளி நாட்டுத் தூதுர்கள் மன்னரைச் சந்திப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. தமிழ் மொழியில் மன்னரை ‘பதி எனவும் அழைப்பதுண்டு. இருப்பு என்பது இருக்கும் ஆசனம்" என்பதாகும். எனவே மன்னர் அமரும் ஆசனம் 'பத்திரிப்பு' என வழங்கப்பட்டது.
15. பின்னுரை
தமிழர்களும், சிங்களவர்களும் அன்னியோன்னியமாக உறவாடுதல், வேறுபட்ட இரு இனத்தவராக செயற்படுதல், தனிப்பட்டரீயில் இனத் துவத்தை போற்றி மதிப்பளித்தல் ஆகிய மூன்று சிறப்பியல்புகளும் தமிழ் - சிங்கள உறவுகளில் காணக் கிடைக்கின்றன.
இவ்விடயங்களை ஆராய முற்பட முன்னர் அக்காலத்தில் இலங்கை யில் நிலவிய அரசியல் முறைமைகள தெளிவுற அறிந்திருத்தல் அவசியம். அன்றைய காலத்தில் ஆட்சியாளரை தெரிவு செய்வதிலோ, அவரிடம் அதிகாரத்தை ஒப்படைக்கும் செயற்பாடுகளிலோ தற்காலத்தைப் போன்று பொதுமக்கணிள் பங்களிப்பு இடம்பெற்றிருக்கவில்லை. அரச பதவி, அர்ப் பணிப்புடன் செயற்பட்ட அரசகுல வாரிசுகளுக்கே உரித்தாகியது. ஏனையோர் ஆயுதமேந்தி, பயங்கரவாத செயல்களைப் புரிந்து, முடி சூடிய சந்தர்ப்பங்களை வரலாறு கோடிட்டுக் காட்டுகின்றது. மெளரிய வம்சம் இலம்பகர்ண வம்சம், சந்திர வம்சம், சூரியவம்சம் ஆகிய இராசகுல
46

வம்சங்கள் பெயர் பெற்று விளங்கின. இந்திய அரச குலத்தவர்களான சந்திர, சூரிய வம்சத்தினருடன் உறவாடுவதும், அவ்வுறவுகளில் தங்களை இணைத்து உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதையும் எண்ணி அன்று வாழ்ந்த சிங்கள மக்கள் பெருமிதங்கொண்டனர்.
புராதன இலங்கையின் ஆட்சி முறையை நோக்குமிடத்து, நாட்டின் அனைத்து நிலமும் மாமன்னரின் சொத்தாகவே கருதப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. இச்சொத்துக்களை கண்காணிப்பதற்காக பிராந்திய ஆட்சியாளர்கள் நியமிக்கப்பட்டதுடன், இக்காணிகளில் வசித்த பொது மக்கள் தாம் உற்பத்தி செய்தவற்றிலிருந்து பிராந்திய ஆட்சியாளர்களுக்கும் ஒரு தொகை வழங்கவேண்டியிருந்தது. பிராந்திய ஆட்சியாளர்கள், அதிலிருந்து தாம் சீவியம் நடத்தியதுடன், அதில் பாதியை மன்னருக்கு செலுத்தி தம் கீழ்ப்படிவை பறைசாற்றினர். இவ்வாறு கீழ்ப்படிய மறுக்கும் பட்சத்தில், மாமன்னர் படையொன்றை அனுப்பி பிராந்திய ஆட்சியாளரை கொலை செய்து அல்லது துரத்தியடித்த பின்னர் தனக்கு பக்கச்சார்பாக செயற்படக்கூடிய ஒருவரை அப்பதவியில் அமர்த்துவது அக்கால வழக்கம். தற்காலத்தைப்போன்று, பிரதேச அபிவிருத்திக்கு என நிதி ஒதுக்கீடு செய்யப்படாது, அனைத்து பிராந்திய அரசுகளும் அக்காலத்தில் சுயமாகவே இயங்கவேண்டியிருந்தது. அத்துடன், உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகத் தினால் அறவிடப்படும் வரி மாமன்னரைச் சென்றடையும் நிலை காணப் பட்டது. விகாரைகளினதும், தேவாலயங்களினதும் பராமரிப்புக்கென காணிகள் மானியமாக வழங்கப்பட்டு இக்காணிகளில் வசிப்பவர்கள் விகாரைகளிலும், தேவாலயங்களிலும் சேவகம் செய்யுமாறு பணிக்கப் பட்டனர்.
16. தமிழ் மக்களின் குடியேற்றங்கள்
கிறிஸ்துவிக்குப் பின்னர் இரண்டாம் நூற்றாண்டில் அதாவது இற்றைக்கு இரண்டாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்னர், பிராமி எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட சிலாசாசனம் வாயிலாக அநுராதபுரி இராச்சியத்தின் வடக்கே அமைந்துள்ள பிரதேசத்தில் (வவுனியா மாவட்டத் தில்) தமிழ் மக்கள் குடியேற்றங்களை அமைத்திருந்தமை பற்றி அறிய முடிகின்றது. வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களால் மட்டுமின்றி, உள்நாட்டு அரச வம்சத்தினராலும் படிப்படியாக வரவழைக்கப்பட்ட தமிழ் படைவீரர் களே இலங்கையின் வடக்கே தமிழர்கள் பெரும்பான்மையாக குடியேற்றங் களை அமைக்க காரணியாய் அமைந்தனரென்பதும், ஆரம்ப காலந் தொட்டே சிங்கள மக்களும் இங்கு வசித்து வந்துள்ளனரென்பதும் நன்கு புலனாகின்றது.
இதுபற்றி வசப மன்னரின் காலத்தில் எழுதப்பட்டதெனக் கருதப் படுகின்ற, பிரசித்திபெற்ற 'வல்லிபுர தங்க ஒலைச்சுவடியில் (வல்லிபுர ரன்சன்னஸ்) காணப்படும் பின்வரும் வரிகள் உறுதி செய்கின்றன.
47

Page 31
'மாமன்னர்
அதாவது - வசப மன்னரின் காலத்தில், நாகதீபத்தை ஆட்சி செய்த "இசுகிரி எனம் அமைச்சர் பியகுதிஸ்ஸ விகாரையை கட்டியதாக கூறப் படுகிறது.*
இங்கு நாகதீபம் எனக் குறிக்கப்படுவது யாழ்ப்பாணம் ஆகும். இங்கு "இசுகிரி’ எனும் அமைச்சரொருவர் பிரதேச ஆட்சியாளராக விளங்கி மையால் இக்காலத்தில் வசித்த மக்கள் பெளத்தர் என்பது உண்மை யாயினும், இவர்கள் அனைவரும், ஏன் இசுகிரி எனும் அமைச்சரும்கூட சிங்களவரே என அறுதியிட்டுக் கூறமுடியாது. ஏனெனில், இசு' என்ற பதம் பிராமணர்களைக் குறிக்கும் ரிடி எனப் பொருள்படும். 'கிர' என்பது கிரி எனப்படும். வலகம்பா மன்னர் தமிழர்களுடன் போரிட்டு தோல்வியடைந்து ஒட்டம் பிடித்த வேளை ‘கரிய நிற சிங்களவன்' தப்பியோடுவதாக கூறி நிந்தனை செய்தவர் 'கிரி எனும் சமணர் (நிர்வாணத் துறவி) ஒருவரே. இவர் தமிழ்த் தோற்றம் கொண்டிருப்பாராயின் 'வல்லிபுரம் ஓலைச்சுவடியில் கூறப்படுகின்ற கிரி அவ்வாறிருக்கக் கூடும். இசுகிரி வசப மன்னரின் சார்பில் பிரதேச ஆட்சியாளராக விளங்கியவரெனினும், அவரும் ஒரு சிங்களவரே என்பது நிச்சயமல்ல. சிலவேளை தமிழ் பெளத்த ஆட்சியாள ராகவும் இருக்கலாம். ஆறாவது பராக்கிரமபாகு மன்னருக்காக சபுமல் எனும் தமிழ் இளவரசர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி ஆட்சி புரிந்தமையை இவ் வேளையில் நினைவில் நிறுத்துவது முக்கியமாகும். எது எவ்வாறாயினும் இவை எமது அனுமானங்கள் மட்டுமே. மேலதிக தேடல்களை வரலாற்றா சிரியர்களிடம் விட்டுவிடுவோம்.
வடக்கில் பிராந்திய ஆட்சியாளர்கள் இருந்துள்ளமைக்கான ஆதாரங் களை பின்னைய காலங்களிலும் காணமுடியும். கி.பி. 772-777 உத்தர பிரதேசத்தில் (வட பகுதியில்) பிரதேச ஆட்சியாளர்கள் வரிசெலுத்துவதை நிறுத்தியதாகவும், பிரதான இராச்சியத்தில் நிலவிய சிக்கலான நிலைமை கள் காரணமாக வட பகுதி ஆட்சியாளர்கள் சுயாதீனமாக செயற்பட்ட தாகவும் மகாவம்சம் வாயிலாக அறிய முடியும். *
சிங்கள மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் இன்றுபோல் புராதன காலத்திலும் குடியேற்றங்களை அமைத்து வசித்து வந்துள்ளமை பற்றி கல்வெட்டுக்கள் வாயிலாக அறிய முடிகின்றது. முதலாம் விஜயபாகு மன்னரின் காலத்தில் தமிழ் கிரந்த அட்சரங்களால் எழுதப்பட்ட 'வேளக்கார
45 - இந்தத் தங்க ஒலைச்சுவடி வல்பொலராகுல தேரருக்கு கிடைத்து அவரது பாதுகாப் பிலிருந்ததாக பிரசித்தி பெற்றிருந்தது. காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசா அவர்கள், இந்த சுவடியை இலங்கை தேசிய நூதனசாலையில் காட்சிக்காக வைத்து மதிப்பளித்தாராயினும் தற்போது இச் சுவடியின் முகவரியைக் கூட தேட முடியாதுள்ளது.
48

சிலாசனம் பொலனறுவையில் அமைந்துள்ளது. இம்மன்னரின் நாற் பத்திரண்டாம் வருடத்தில் (கி. பி. 1152) எழுதப்பட்ட தமிழ் சிலாசனம் மற்றும் இரண்டாவது பராக்கிரமபாகு காலத்தில் எழுதப்பட்ட தமிழ் சிலாசனம் ஆகியவை பற்றி மெதவுங்கொட விமலகீர்த்தி தேரரவர்கள் தனது சிலாசன தொகுப்பின் ஐந்தாவது பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.
முதலாவது கல்வெட்டு கிழக்கு மாகாண திருகோணமலை மாவட் டத்தின் 'பாலமோட்டை' எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில், நாகச்சானி எனும் தமிழ்ப் பிராமண மங்கையொருத்தி காலஞ்சென்ற தன் கணவனின் நினைவாக, பூரீ விஜயராசஈஸ்வர கோயிலுக்கு பெருந் தொகை யான தங்க ஆபரணங்களை தானமாக வழங்கியமை பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது.
இரண்டாவது கல்வெட்டு, தம்பதெனிய காலத்தில் பராக்கிரமபாகு மன்னரின் ஆணைப்படி தெவுந்துறை தேவாலய பொறுப்பாளிகளான பன்னிரண்டு அந்தணர்களுக்கு நாயிமனை என்னும் ஊரை ஒப்படைப்பது தொடர்பாக எழுதப்பட்டுள்ளது. இதன் முதல்பகுதி தமிழிலும், கடைசிப் பகுதி சமஸ்கிருத சுலோகங்களிலும் அமைந்துள்ளது. தமிழ் வாக்கியம் இது நிலையீட்டிக் கொடுத்தவர் சுவர்க்கமோட்சம்" அதாவது இதனை கண் ணியப்படுத்தி, போற்றுகின்ற மக்கள் அனைவருக்கும் சகல செளபாக் கியங்களும், சுவர்க்க மோட்சமும் கிட்டுவதாக என நிறைவு பெறுகின்றது, சிங்கள மன்னரொருவர் தமிழ்மொழியில் எழுதிய கல்வெட்டாக இதனைக் குறிப்பிடலாம்.
தம்பதெனிய பராக்கிரமபாகு மன்னர், இந்த தேவாலயத்திற்கு பூசையொன்றிற்காக சென்றதாக மகாவம்சம் வாயிலாக அறிய முடிகின்றது. அதாவது 'அந்த உயர்ந்த நகரத்திற்குச் சென்று அங்கிருந்த அரச மாளிகையை இந்திரனுடையதைப் போன்று நன்கு சீர்திருத்தஞ் செய்து சகல வளங்களும் நிறைந்த வீடாக மாற்றினார்.”** என தொடர்கிறது. இவ்வாறு யுத்தம் புரிவதற்காக வந்து தோல்வியைத் தழுவிய தமிழ்ப் படை வீரர்களை விகாரைகளில் அடிமைகளாக வைத்திருந்தமை பற்றியும் வரலாறு வாயிலாக அறிய முடிகின்றது. பராக்கிரமபாகு மன்னர் தென் னிந்தியாவுக்கு யுத்தம் புரியச் சென்ற வேளை சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ் கைதிகளைக் கொண்டு பொலன்னறுவையில் 'தமிழ் மகா சாயா கட்டுவிக்க உதவியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் வங்கநாசிகதிஸ்ஸ மன்னரின் காலத்தில் (கி.பி 109-112) சோழ மன்னரொருவர் இலங்கை வந்து பன்னிரண்டாயிரம் சிங்களவர்களை சிறைப் பிடித்துச் சென்றதாகவும், பின்னர் முதலாவது விஜயபாகு மன்னர் சென்று அவர்களை மீட்டு வந்தது டன் நட்டஈடாக இருமடங்கு அதாவது இருபத்திநாலாயிரம் தமிழர்களை
46 - மகாவம்சம் - 48 வது அதிகாரம் - 84-95 செய்யுள்கள் 47 - மெதவுங்கொட விமலகீர்த்தி மகாதேரரவர்களின் சிலாசன தொகுப்பின் ஐந்தாவது
பகுதி - அச்சிடப்பட்ட புத்தகத்தின் 296ம் பக்கம்
49

Page 32
பிடித்து வந்து பல பிரதேசங்களின் பிரதேசஆட்சியாளர்களிடம் ஒப்படைத்த தாகவும் 'இராஜவலி'யில் கூறப்பட்டுள்ளது. இக்கூற்றினை விமர்சனத் திற்குட்படுத்தும் சில வரலாற்றாசிரியர்கள் அக்காலத்தில் காவேரி நதியில் நீர்ப்பாசன அலுவல்கள் பாரியளவில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அத் துறையில் நிபுணத்துவம் பெற்ற சிங்களவர்கள் தொழில்நிமித்தம் அங்கு சென்றதாகவும் கருதுகின்றனர். வங்கநாசிகதிஸ்ஸ மன்னர் எவ்வளவு பலவீனமுள்ளவராயினும் யுத்தமொன்றின் மூலம் பன்னிரண்டாயிரம் சிங்க ளவர்களை சிறைப் பிடித்துச் சென்றதாகக் கூறப்படும் கூற்றினை ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது.
எவ்வாயினும் மேலே கூறப்பட்டவைகளை நோக்குமிடத்து, கவனத்திற் கொள்ளக்கூடியளவு தமிழர்கள் வடக்குப் பிரதேசத்திற்கு வெளியேயும் வசித்துள்ளமை புலனாவதுடன், இவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்ற கேள்வியும் எழுகின்றது. காலத்தின் கோலத்தினால் இவர்களனைவரும் பெரும்பான்மை சிங்களவர்களின் சிங்கள தேசியவாத சிந்தனையின் தாக்கத்தால் சிங்களவர்களாக மாறியிருப்பர் என்பது இலகு வான பதிலாக அமைகிறது. வட பிராந்தியத்தில் அப்போது வசித்து வந்த சிங்களப் பெரும்பான்மை பெளத்த மக்களுக்கு என்ன நிகழ்ந்திருக்கும் எனும் இன்னுமொரு கேள்வி மேலெழுகிறது. அன்று வசித்த சிங்கள வர்களில் சிலர் அப்பிரதேங்களில் நிலவிய காலநிலை சீர்கேடுகள் மற்றும் பூகோள நிலைமைகளுக்கேற்ப வசதி வாய்ப்புக்கள் காணப்பட்ட பிரதேசங் களை நாடிச் சென்றதுடன், எஞ்சியுள்ளவர்கள் தமிழ் தேசியவாத சிந்தனை களின் தாக்கத்தால் தமிழர்களாக மாறியிருப்பர் என பெளத்த பிக்குமார்கள் உட்பட சில அறிஞர்கள் ஏற்கெனவே ஆராய்ந்தறிந்துள்ளனர். பின்னைய காலங்களில் அதாவது ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டு களில் இந்திய தமிழ் மக்கள் இந்து சமயத்தின் செல்வாக்குக்கு உட்பட்டது பற்றியும் அந்நீரோட்டம் இலங்கையின் வடக்குவரை அடித்துச் செல்லப் பட்டது பற்றியும் சொல்லப்படுகிறது. இதன்பின்னர் மாகன் போன்ற மலேய அரசர்களின் ஆக்கிரமிப்புக்களால் வருகையுற்ற மலே மக்களும் வடக்கில் வசித்து வந்த மக்களுடன் இரண்டறக் கலந்து விட்டனர். சிங்களப் பிர தேசத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பின்னர் மாகன் வடக்கே வேறொரு ஆட்சிப் பிரிவை ஸ்தாபித்ததன் விளைவாக பெளத்த சமயத்தினூடே ஒரே அலகாக - சிங்களப் பெரும்பான்மையின்ருடன் ஒற்றுமையுடன் உறவாடிய தமிழ் மக்கள் சுயாதீனமாக செயற்படலாயினர். வரலாற்றுக் காலத்தில் சிங்கள பெரும்பான்மையினருடன் வசித்து, ஒட்டி உறவாடிய தமிழ் மக்கள் சிங்கள பெளத்த கலாச்சாரத்தையும், தமிழ் பெரும்பான்மையினருடன் வசித்து ஒட்டி உறவாடிய சிங்களவர்கள் தமிழ் இந்து கலாசாரத்தையும் போற்றிப் பெருமதிப்பளித்தனர். இத்துடன் அவரவர்களின் தூரவிலகல் காரணமாக சுயாதீன பொருளாதார அமைப்பொன்று மேலெழுந்து ஐரோப் பியர்கள் இந்நாட்டில் அத்துமீறிப் பிரவேசிக்கும் நிலை உருவாகியது. 48 - மகாவம்சம் - 85 வது அதிகாரம் - 87-88 செய்யுள்கள்
50

சிங்கள மக்களுடனே ஊறிப்போன தமிழர்களும், தமிழர்களிடையே ஊறிப்போன சிங்களவர்களும் தத்தமது பூர்வீக இனத்துவத்தை மீண்டும் திரும்பிப் பார்ப்பதற்கு முயற்சிக்க மாட்டார்கள்.*
தத்தமது மொழியை அடிப்படையாக வைத்தே, சிங்களவர், தமிழர் என தங்களை வேறு பிரித்துக்காட்ட முற்படுகிறபோதும், கலாசார ரீதியில் ஒன்றுபட்டே காணப்படுகின்றனர். ஒவ்வொரு இனங்களிடையேயும் வம்சம், குலம், கோத்திரம் போன்றவற்றைக் காணக்கூடியதாகவுள்ளது, புராதன இலங்கையில் மெளரிய, இலம்பகர்ண, பாண்டிய, கலிங்க, போன்ற அரச வம்சத்தினரும், படிப்படியாக இந்நாட்டை ஆக்கிரமித்த பற்பல இனத்தவர்களும் இங்கு நிலவிய சிங்கள மொழியை பேசினர். பின்னர் தங்களை சிங்களவர்களாக அவர்கள் காட்டிக் கொண்டனர். தமிழ் மக்களின் தற்போதைய நிலையும் அவ்வாறானதே. சோழ, பாண்டிய, பல்லவ, கலிங்க ஆகிய அரச வம்சத்தினரும் பற்பல குலங்களைச் சேர்ந்தவர்களும் தமிழ் மொழியை பேசியதுடன் அவர்கள் அனைவரும் தமிழர்களாகவே கணிக்கப் பட்டனர். தமிழ் பேசும் மக்களிடம் “ஜா” என சாதாரணமாக அழைக்கப் படுகின்ற மலேய பூர்வீகத்தைக் கொண்ட மக்களும் இருந்தனர். இவர்கள் தனியொரு இனமென தங்களைக் கருதும் வேளைகளில் மதத்தையே முன்னிலைப்படுத்துகின்றனர். ஆரம்பத்தில் சிங்கள இனத்தவர்களாக இருந்த மக்கள் பின்னர் தமிழ் மக்களாகவும், ஆரம்பத்தில் தமிழர்களாக இருந்த மக்கள் பின்னர் சிங்களவர்களாகவும் மாறியுள்ளனர். இதனை விளங்கிக் கொண்டால் சிங்கள இரத்தம், தமிழ் இரத்தம் என்ற சொற்களை பாவிப்பது கூட மிகவும் அர்த்தமற்ற செயலாகும் என்பது புரியும்.
கோட்டைக் காலத்தின் பின்னர் தோற்றம் பெறுகின்ற சீதாவாக்கை இராச்சிய காலத்தின்போது சிங்கள பண்டிதர்களிடையே தமிழ்மொழி பெரும் வரவேற்பைப் பெற்றுத் திகழ்ந்தது. இன்று சிங்கள மக்கள் மத்தியில் ஆங்கில மொழிக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் அன்று தமிழுக்கு வழங்கப்பட்டது. அக்காலத்தில் அரசவையில் வீற்றிருந்த உயரதிகாரிகளில் சிலர் தமிழ் மொழியை உபயோகித்ததும், சர்வதேச அறிவியல் விடயங்களை பரிமாறிக்கொள்வதற்கு தமிழ் மொழியை நாடியதுமே இம்முக்கியத்துவத் திற்குக் காரணம் என்பது சந்தேகத்துக்கிடமின்றித் தெரிகின்றது. ஒருசிலர் ஆங்கிலமொழி தெரியாதவர்களை இன்று படிப்பறிவற்றவர் எனக் கூறு வதைப்போல, அன்று தமிழ்மொழி தெரியாதவர்கள் முட்டாள்களாக கருதப் பட்டனர். சுபாசித எனும் காவியத்தை எழுதிய அகலியவன்ன முக வெடிதுமா அவர்கள், தனது நூலில் 'பிரபல்யம் பெற்ற பழைய முனிவர்க ளின் வாயால் மனதைக் கவரும் தமிழ், வடமொழி பாளி ஆகிய மொழி களைக் கற்காத அறிவு குறைந்த மக்களுக்கு புகழ்பெற்ற நீதிசாஸ்திரீம் உள்ள சொற்களின் பொருளின் வண்ணம் சிங்கள மொழியில் சுருக்கமாக செய்யுள் வடிவத்தில் (ஐந்தாவது செய்யுளில்) கூறியது இதனாலேயாகும்.
49- தேசியவாதம் உருவாவதற்கு மூலகாரணமர்ய் அமைவது மொழி என்பது கண்கூடு. மானிடர்களிடையே நிலவும் சமூக தடைக்கல்லாக மொழியையே சமூகவிய லாளர்கள் கருதுகின்றனர்.
51

Page 33
எனக் கூறியுள்ளார். தற்காலத்தில் சில சிங்களவர்கள் ஆங்கிலமொழியைக் கலந்து உரையாடுவதை பெருமைக்குரியதாக கருதுவதைப் போன்று அன்றைய காலத்தில் தமிழ்மொழியைக் கலந்து பேசுவதன்மூலம் தமது உயர்நிலையை வெளிப்படுத்தினர். இக்காரணங்களால் பெருந்தொகை யான தமிழ் சொற்கள் சிங்கள பேச்சு மொழியில் கலந்ததுடன், எழுத்து மொழியிலும் அவை செல்வாக்குச் செலுத்தின. ஐந்நூற்று ஐம்பது ஜாதகம், உம்மங்க ஜாதகம் ஆகிய நூல்களில் சிங்கள அமைப்பில் அமைந்த தமிழ் வசனங்கள் காணப்படுகின்றன. சிங்கள, தமிழ் பகைமைகளை உக்கிரமாக உருவகித்துக் காட்டுகின்ற வரலாற்று நூலான 'இராஜவலி'யில் கூட முற்றுமுழுதாக தமிழ் சிங்கள கலப்பு மொழி பாவிக்கப்பட்டுள்ளதை உதாரணம் காட்டலாம். தமிழர்களும் சிங்களவர்களும் தத்தமது கலாசாரங்களை பரஸ்பரம் போற்றி தொடர்ந்தும் மதிப்பளிக்கும் பண்பு காணப்படுவது, அவர்களின் புராதன உறவுகளின் அடிப்படை சிதறாது பேணப்பட்டுள்ளமையினாலாகும். ஆறாம் பராக்கிரமபாகு மன்னர் காலந் தொட்டு சிங்கள மக்கள் தமிழ் மக்களது கடவுள்களை போற்றி வழி பட்டுள்ளனர். கோட்டை பூரீஜயவர்த்தனபுர தலதா மாளிகை பற்றி வர்ணிக் கும் 'பூவைவிடு தூது (செலகினி சந்தேசய) எனும் நூலில், "மகாசேனன் எனும் தேவ அரசனின் மாளிகை தென்படுகிறது" எனக் கோட்டை முருகன் கோயில் பற்றியும், ‘சிவன் கோயிலின் அழகுத் தோற்றம்’ என சிவன் கோயில் பற்றியும் கூறப்பட்டுள்ளது. 'அன்னம் விடு தூது (திசர சந்தேசய) எனும் நூலில் கிருஷ்ணன் கோயிலுக்கு அருகே காணபட்ட கணபதி கோயில் பற்றியும், தெற்கேயிருந்து வரும் பாதையருகே தென்படும் விநாயகர் ஆலயம், காளியம்மன் ஆகிய பல கோயில்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. ஆறாம் பராக்கிரமபாகு மன்னரின் காலத்திற்கு முன்னர் கட்டப்பட்டதாகக் கூறப்படும் சிலாபத்தில் அமைந்துள்ள முன்னேஸ்வரம் கோயில் இன்றும் கூட சிங்கள பெளத்த மக்களின் கண்ணியத்துக்குப் பாத்திரமாகத் திகழ் கின்றது. இம்மன்னரின் காலத்தில் எழுதப்பட்ட 'குயில்விடுதூது’ (கோகில சந்தேசய) எனும் காவிய நூலின் 186வது செய்யுளில் இக்கோயில் பற்றி கூறப்பட்டுள்ளது. சிங்கள பெளத்த மக்கள் கதிர்காமக் கடவுளின் பக்தர்கள். என்பது பிரசித்தி பெற்றதாகும். இன்றும் ஏராளமான பெளத்த புனித ஸ்தலங்களுடன் இணைந்து "தேவாலய" என அழைக்கப்படும் கோயில்கள் காணப்படுகின்றன. அவ்வாலயங்களில் நேர்த்திகள்,காணிக்கைகள் செலுத் தப்படுவதுடன், பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் மேற்கொள்ளப்படு கின்றன.
அண்மைக்காலங்களில் தமிழ் இனத்தவர்களும் சிங்கள பெளத்த கலாசாரத்தைப் போற்றி பெருமதிப்பளித்துள்ளமை பற்றி விளக்குகின்ற சிறந்த உதாரண புருஷராக கலாயோகி ஆனந்தக் குமாரசுவாமி அவர்களை குறிப்பிடலாம். சிங்கள அறிஞர்கள் மேற்கொண்ட சேவைகளுக்கு சற்றும் சளைக்காத வகையில் தாமும் சிங்களக் கலைகளின் புகழை நிலை நாட்டு வதற்கு அவர் அரும்பாடு பட்டார். யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் பிரதேசத் தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவ்வறிஞர் வெளிநாட்டில் வசித்து வந்தார்.
52

"சமகால சிங்களக் கலைகள்' எனம் நூலின் மூலம் சிங்களக் கலாசாரத்தின் கீர்த்தியை உலகறியப் பறை சாற்றினார். இந்நல்லறிஞர் தாம் எழுதிய ‘புத்த படிமத்தின் தோற்றம்' எனும் நூலின் மூலம் புத்தர் சிலை, கிரேக்க படிமக் கலையின் தழுவலன்று என்றும், அது கீழைத்தேய சுயாதீன வடிவமைப்பில் அமைந்துள்ளது என்றும் நிறுவினார். 1920 ஆம் தசாப்தத்தில், தாய்மொழி மூலம் கல்வியைப் பெறவேண்டும் என ஆணித்தரமாக எடுத்துரைத்த இப்பெரியார், இலங்கையில் பல்கலைக் கழகம் ஒன்று அமைய வேண்டும்’ என்று கூறி மக்கள் மனங்களை விழிப்படையச் செய்ய அரும்பாடு பட்டார். இதுவரை எழுதப்பட்டுள்ள நூல்களில் சிங்களக் கலைகள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கின்ற ஒரேயொரு நூலாக "சமகாலச் சிங்களக் கலைகள்’ எனும் இவரது நூலைக் குறிப்பிடலாம். இந்நூலின் மூலம், மேலைத்தேய பண்பாடு களின் வியாபார நோக்கம் காரணமாக சுதேச கலைகள் வீழ்ச்சியடைந்துள் ளமை பற்றி இவர் முன்வைத்துள்ள கருத்துக்களை சிங்கள அறிஞர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.°
சிங்கள இனத்தவர்களாகிய கல்விமான்கள் பலரும் தமிழ் கலாசாரத் தினை ஆராய்ந்து மதிப்பளிப்பதற்கு முனைந்துள்ளமை புலனாகின்றது. பேராசிரியர் செனரத் பரணவிதான அவர்கள் புராதன தமிழ்மொழியில் அமைந்த சிலாசாசனங்களை வாசித்தறிந்ததன் மூலம் இலங்கைத் தமிழர் களின் கடந்தகால வரலாற்றை ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். பண்டிதர் டபிள்யூ. எப். குணவர்தனா வாசல முதலி அவர்கள், சிங்களமொழியானது தமிழ் மொழியின் மூலம் வளம் பெற்று விளங்குகிறது எனக் கூறியுள்ள துடன், தான் எழுதிய ‘குயில்விடு தூது’ (கோகில சந்தேசய) எனும் காவியத்தின் மூலம், தமிழ் மக்களின் பிறப்பிடம், வணக்க வழிபாடுகள் பற்றியும் வர்ணித்துக் கூறியுள்ளார். இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய இலங்கைப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான எம். எச். பீற்றர் சில்வா அவர்கள், சிங்கள தமிழ் சிங்கள இலக்கியங்களிடயே நிலவிய நெருங்கிய உறவுகள் பற்றியும் இவ்வணிந்துரையில் தெளிவாக எடுத் துரைத்துள்ளார். இவ்விடயங்களை உற்றுநோக்கும்போது வரலாற்றுக் காலத்திலிருந்து நிலவிய தமிழ் சிங்கள உறவுகளை எந்தச் சக்தியாலும் முறித்து விட முடியாது என்பது தெளிவாகின்றது. சிங்கள கலாசார பொருளாதார அமைப்பு சுதந்திரமாக வளர்ச்சியடையும் அதேவேளை, தமிழ் கலாசார பொருளாதார அமைப்பும் சுயாதீனமாக வளர்ச்சிப்பாதையை நோக்கிப் பயணம் செய்வது இந்த நட்புறவுகள் மென்மேலும் வலுப்பெற ஏதுவாகின்றது. தமது தேசியவாதத்தின் அடிப்படையில் சிந்திப்பதைத் தவிர்த்து, பரஸ்பர நல்லிணக்கத்துடன் சனநாயக அமைப்பொன்றில் தங்களை இணைத்துக்கொள்வதன் மூலம் நட்புறவுகளை வலுப்படுத்தி நீடுநிலைக்கச் செய்யலாம் என்பது வெள்ளிடைமலை.
50 - சிங்கள அகராதி - எஸ். ஜி. அமரசிங்கா - 439ம் பக்கம்
53

Page 34
ஒரே ஒரு நாட்டிலே. "வேடனொருவன் முயலொன்றினை வேட்டையாட நினைத்து பலாப் பிசினால் செய்யப்பட்ட வெருளி யொன்றை சேனையொன்றில் வைத்தான். அங்கு சென்ற முயல் இவ்வெருளியோடு சண்டையிட்டது. மேலே துள்ளிப் பாய்ந்து வெருளியின் இடது கன்னத்தில் அறைந் தவுடன் அறைந்த கை ஒட்டிக் கொண்டது. அடுத்து, இடது கையால் வலது கன்னத்தை அறையவே அந்தக் கையும் ஒட்டிக் கொண்டது. பின்னர், இரு கால்களாலும் உதைக்கவே கால்களும் ஒட்டிக்கொண்டன. இனவாதப் போராட்டங்களும் இவ்வாறானவையே. ‘ஒருவர், தமது மதத்தின்மீது கொண்ட பற்று, அபிமானம் ஆகியவை காரணமாக தனது மதத்தை கண்ணியப்படுத்தி, ஏனைய மதங்களை நிந்திப்பாராயின், அவர் தமது மதத்துக்கே சேதத்தை உண்டுபண்ணியதற்கு சமமான செயலைச் செய்கிறார் எனவும், ஒற்றுமையே உன்னதமானது என வும் தர்மாசோக மன்னர் தனது பன்னிரண்டாவது சிலா சாசனத்தின் மூலம் கூறி வைத்ததும் இதனாலேயாகும்"
- லயனல் சரத் -
54


Page 35
லயனல் ਲਨੂੰ இலங்கை வரலாற்றை சிறப்புப் பாடமாகப் பயின்ற பட்டதாரி. அவர் ஒரு நாட்டுச் பெருமை போராலும், பொருதலாலும் ஏற்படுவதல்ல மாறக ஆக்கரீதியான செயலே அதைத் தருவதாகு நினைப்பவர். இலங்கையில் தமிழர் சிங்களவரிடை யுத்தங்கள் நடைபெற்றுள்ளன. சிங்கள அரச குடு ளிடையே நடைபெற்றுள்ளன. ஏன் பெளத்த குருட யேயும் இது நடைபெற்றுள்ளது. இதனால் பல
தேவாலயங்கள், விகாரைகள் அழிக்கப்பட்டுள்ளன ஆனால் நாம் இவற்றை விடுத்து எப்போதும் சி யுத்தங்களையும் குறிப்பாக ராணுவ படையெடுப்பு ஒருபோதும் தமிழர்களாலோ, சிங்களவர்களாலோ குறிப்பாக சமயத்துறையில் மேற்கொள்ளப்பட்ட அ
லயனல் சரத் அவர்கள் ஆசிரியராக, அதிபராக 8 அரசாங்க ஊரியர்களின் உரிமைகளுக்காகப் ே யிலிருந்து இடைநிறுத்தப்பட்டு, தனது வேலைை பற்றி அதிகமாக எழுதுபவர். அத்தோடு இ6 எழுத்தாளராகவும் சிங்கள மக்களிடையே பிரபல
இவர் இளமைக் காலத்தில் தமிழ் பேசும் மக்கள் அவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்: தமிழ் அரச ஊழியர்கள் நண்பர்களாக உள்ள சமூகத்துக்குமுரிய தேசிய அடையாளம் பேணப்ப இவர் இனப்பிரச்சினையின் தீர்வுக்கும், சமாதா
வடக்கில் பருத்தித்துறையிலிருந்து தெற்கில் தெவ வேண்டும் எனப் பெரிதும் விரும்புபவர்.
 

ங்களவர் தமிழரிடையே நடைபெற்ற க்களைப் பற்றியுமே பேசியுள்ளோம். நாம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளை,
பிவிருத்திகளைப் பேசியதில்லை.
கல்வி அதிகாரியாக கடமையாற்றியவர். பாராடியவர். அதனால் தனது வேலை ப இழந்தவர். குறிப்பாக இவர் அரசியல் வர் நாவலாசிரியராகவும், சிறுகதை 彗爵
வாழும் பகுதிகளெங்கும் சென்றவர். தவர். இவருக்கு ஏராளமான தமிழர்கள், னர். இவர் எப்பொழுதும் ஒவ்வொரு டவேண்டும் என நம்புபவர். னத்திற்குமாக உழைப்பவர். அதனால் ன்துரை வரை அன்பும் அமைதியும் நிலவ
ISBN 955-84.72-02-6