கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சனநாயக சிந்தனைகள்

Page 1
சனநாயகம் பற்றிய தொகு
 

Immriñra6Ir
ព្រោបាយ வெளியீடு

Page 2

சனநாயகச் சிந்தனைகள்
தமிழாக்கம் வை. நவரட்னம் தை. தனராஜ்
usiumffur எஸ். அன்ரனி நோபேட் புவியியல்துறை கொழும்புப் பல்கலைக்கழகம்
பொதுசனக் கல்வி நிகழ்ச்சித்திட்டம் Innrirðir fisuGuðrún
1995

Page 3

SANANAYAKA CHINTHANAIKAL
(Democratic Ideas)
Translated by: Y. Navaratnam & T. Thanaraj Edited by : S. Antony Norbert
First Published 1995
C) Copy Right : Marga Institute
Type Setting: UniqueTypesetters,Wellawatte,Colombo - 6. Printing : Unie Arts (Pvt) Ltd., Colombo - 13.
Please address inquiries and orders to:
Newton Fernando Assoc. Director Communication / Publication Division Marga Institute P.O.BOX 601 61, Isipathana Mawatha, Colombo - 5, Sri Lanka.
/*
ADVISORY COMMITTEE
Godfrey Gunatilleke Shelton Wanasinghe Newton Fernando S. Antony Norbert
P.P.M. Gunatilleke Sarath Madduma
اسے ܓܠ
This Series of Publication has the Financial Support of the Canadian International Development Agency (CIDA).

Page 4

பொருளGந்கம்
முன்னுரை
பகுதி1
ஏதென்சின் பெரிக்கிள்சும் சனநாயகத்தின் பிறப்பும்
1 அறிமுகம் I எண்ணத்தோற்றம் I கதாநாயகன் IV பெரிக்கிள்சின் நிழல்
பகுதி II
சோதனைக்களத்தில் முதலாளித்துவ சனநாயகம்
1 தொக்வில்லும் மில்லும்
சனநாயகம் எதிர் முதலாளித்துவம் ஒரு குறுகிய கால நட்புறவு அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும்
தொக்வில்லின் வாழ்க்கை பிரபுத்துவம் எதிர் சனநாயகம் எதேச்சாதிகாரமா அல்லது சுதந்திரமா சுதந்திரத்திற்கெதிரான பயமுறுத்தல்கள் ரொக்வில்லைப் பற்றி மில் வாழ்க்கை ஒரு சிறந்த கருத்தரங்கு அரசியல் பொருளாதாரத் தத்துவங்கள் நல்ல பண்புள்ள அதிகாரி முடிவுரை
லஸ்கியும் லாஸ்வெல்லும்
ஒரு புதிய உலகம் அனுபவத்தின் அரசியல் நல்வாழ்வு அரசியலின் இலக்கணம்
11
11 23 41 56
77
77
77 78
80 83 86 88 90 93 94 96 99
101
101 102 105 O6

Page 5
நெருக்கடி நிலையில் சனநாயகம் 109 அமெரிக்காவின் உறுதிமொழியும் செயலாற்றுகையும் 113
அகவயத்தன்மையும் அரசும் 114 அழுத்தமும் கற்பனை மயக்கமும் 116 கற்றறிவாளரும் பொதுமக்களும் 118 ஆளுமையும் அதிகாரமும் 120 முடிவுரை 122
1 சும்பீற்றரும் ஹயெக்கும் 125
வியன்னாவிலிருந்து சவால் 125 புத்தாக்கமும் முயற்சியாளனும் 128 உயர்குடியினரும் பூர்ஷ்வா சமூகமும் 130 மாக்சிசக் கோட்பாடும் சோசலிச அரசியலும் 133 முதலாளித்துவம் தொடந்திருக்க முடியுமா? 134 சோசலிசம் இயங்க முடியுமா? 136 அடிமைத்தனத்தை நோக்கி 139 சுதந்திரத்தின் யாப்பு 143 முடிவுரை 146
IV கால்பிறைய்த்தும் குறோஸ்லாந்தும் 147
மரபுரீதியான மெய்யறிவைப் புரியவைத்தல் 147 செல்வந்தச் சமூகம் 149 புதிய கைத்தொழில் அரசு 152 பொருளாதாரமும் பொதுசன நோக்கும் 155 மத்தியின் இடது 1.59 சோசலிசத்தின் எதிர்காலம் 160 வளர்ச்சியை நோக்கி 164
முடிவுரை 165

முன்னுரை
சனநாயகத்தின் இயல்பும் கருத்தும் பற்றித் தொடர்ச்சியான ஐந்து நூல்களை வெளியிடுவதற்கான மார்க்கா நிறுவகத்தின் முயற்சியில் இவ் வெளியீடு மூன்றாவதாகும். தகுதிவாய்ந்த படைப்புக்களைக் கொண்ட நூல்கள் அல்லது அவற்றில் சில அத்தியாயங்களின் மொழிபெயர்ப்பைக் கொண்டதாக இத் தொடர்கள் அமைந்திருக்கும். பிரசைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சனநாயக சமூகத்தின் பிரதான அம்சங்களைக் கற்றுணர்ந்த ஆய்வுகளாக இக் கட்டுரைகள் விளங்குகின்றன. ஆரோக்கியமான சனநாயகம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதை விரிவாகவும், அது நிலைத்துநிற்பதற்குத்தேவையான பெறுமானங்களைச் சுட்டிக் காட்டுவதாகவும் இக் கட்டுரைகள் உள்ளன. ஏனைய மனித நிறுவனங்கள் போன்று ஒரு சனநாயக முறைமையும் தன்னுள் குறைபாடுகளைக் கொண்டுள்ளதெனினும் இன்றும் இது ஒரு சிறந்த அரசாங்க அமைப்பாக உள்ளது என்பதில் பரந்தளவான உடன்பாடு காணப்படுகின்றது. இத் தொடரில் வரவிருக்கும் ஐந்து புத்தகங்கள் சனநாயகம் ஏன் இந்த அதிஉயர்நிலையைக் கொண்டுள்ளதென்பதை விளக்குகின்றதுடன் சனநாயக முறைமையின் சில சர்ச்சைக்குரிய பிரச்சினைகளையும் ஆராய்வதாக உள்ளது.
இன்று உலகின் பல பாகங்களிலும் செயற்பட்டு வரும் சனநாயக முறைமைகளானது ஒரே தன்மையுடையவை அல்ல. நிறைவேற்று விடயங்களிலும், அரசாங்கத்தின் செயற்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட சட்டவாக்கக் கருவிகளிலும் குறிப்பிடத்தக்க பல்வகைத்தன்மை காணப்படுகின்றது. பொதுவாக அவை அவற்றைப் பகிர்ந்துகொள்கின்றன என்பது அடிப்படையான தத்துவம் என்பதுடன் அதிலிருந்தே ஏனைய பொது அம்சங்களும் பெறப்படுகின்றது. மக்கள் தமது அரசாங்கத்தைத் தெரிவு செய்யத் தன்னாதிக்கமுடையவர்கள் என்பது தத்துவமாகும். இத் தொடரில் வெளியிடப்படும் ஐந்து நூல்களும் எல்லாச் சனநாயகங்களுக்கும் பொதுவான அத்தியாவசியமான கூறுகளை விளக்குகின்றதுடன் பல்வேறு சமூகங்களின் தேவைக்குப் பொருந்தும் வகையில் பல்வேறு அமைப்புக்களைப் பரீட்சிக்கவும் முற்படுகின்றது.
இத் தொகுதியின் முதலாவது வெளியீட்டில், ஒரு சுருக்கமான விளக்கம் தரப்படுகின்றது. சனநாயக செயற்பாடுகளின் வழிகளும், வெவ்வேறுபட்ட பகுதிகளின் சனநாயக முறைமையும் எவ்வாறு இடைத்தொடர்புகளைக் கொண்டுள்ளதென்பதையும் , ஒன்றுக்கொன்று எவ்வாறு ஆதரவளிக்கின்றது என்பதையும் இதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அடிப்படை உரிமைகள் மற்றும் சில வேறுபாடு கொண்ட மனிதப் பெறுமானங்களையுடைய ஏனைய அம்சங்கள் தொடர்பாக எல்லாச் சனநாயகச் செயற்பாடுகளும், அமைப்பும் (ஒழுங்கான முறையில்
5

Page 6
அரசாங்கங்களைத் தெரிவுசெய்தலும், பெரும்பான்மையோர் ஆட்சியையும் கொண்ட) எவ்வாறு காணப்படுகின்றதென்பதை இது விளக்குகின்றது. இத்தகைய அகப் பெறுமானங்களும், உரிமைகளும் பிரிக்கமுடியாத சாரமாகவும் , சனநாயகத்தின் மையமாகவும் விளங்குகின்றது. இவையில்லாமல் உண்மையான சனநாயகம் இருக்க முடியாது. இலங்கையில் கடந்த இருபது வருட அனுபவமானது தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் அல்லது சனநாயக ஆர்வமானது உண்மையான சனநாயக சமுதாயத்தை நிலை நிறுத்துவதற்குப் போதியதாக இருக்கவில்லை என்பதை வெளிக்காட்டுகின்றது. சக்திவாய்ந்த பெரும்பான்மை ஒன்று சனநாயகரீதியில் தெரிவு செய்யப்பட்டாலும், சனநாயக ரீதியான எதிர்கட்சியை அழிப்பதற்கும், ஒடுக்குவதற்கும் சனநாயக ரீதியற்ற வழிகளைப் பயன்படுத்த முற்பட்டது. இவ் அணுகுமுறையானது எதிர்கட்சியாக இருப்பதற்கு அதன் உரிமையை மறுப்பதாக உட்ளளது.
ஒரு எதிர் கட்சி எப்பொழுது நாட்டின் பெரும்பகுதி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கின்றது. மறுவகையில் எதிர்கட்சி மக்களின் முடிவை ஏற்றுக்கொள்ளவும் , சனநாயகமுறைமையின் சட்டத்துக்குள் இயங்கவும் தயாராக இல்லை. கிடைக்கக்கூடிய எல்லாச் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி, நாட்டுக்கு ஒரு நிலையான ஆட்சியைக் கொடுக்கத் தெரிவுசெய்யப்பட்ட கட்சிக்குப் பிரச்சினையை ஏற்படுத்தவும் முயற்சிக்கின்றது. இத்தகைய பலவீனங்களிற் சில ஒரு சனநாயக முறைமையின் உள்ளார்ந்த குறைபாடாகும். ஆனால் இலங்கையில் சனநாயக முறைமையின் பயனுறுதிவாய்ந்த செயற்பாட்டைத் திரிவுபடுத்தும் வகையில் முனைப்பானவையாகவும் அவை விளங்குகின்றன.
பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுபவர்கள் சலுகைகள், அனுகூலங்களைத் தமக்குரியதாக ஆக்கிக் கொள்கின்றனர். அதிக பெரும்பான்மையுடன் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்கள் வழங்கப்பட்ட அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்பவர்களாகவும் தன்னிச்சையாக நடந்து கொள்பவர்களாகவும் காணப்படுகின்றனர். சனநாயகத்தில் பெரும்பான்மையினரின் ஆட்சி என்னும் கருத்தியலானது எப்பொழுதும் சிறுபான்மையினரின் உரிமைகளை மறுக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரச்சினைகளில் எல்லாச் சனநாயக முறைமைகளும் தொடர்ச்சியான போராட்டத்தைக் கொண்டிருப்பதுடன் தவறுகளைத் திருத்துவதற்கு வழிகளைத் தேடுவனவாகவும் உள்ளன. அவைகள் நிறுவனங்களையும் அமைப்புகளையும் ஸ்தாபிக்கவும், வடிவமைக்கவும் முயலுவதுடன் அவற்றின் மூலம் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்கள் மிகவும் பயன்படக்கூடிய முறையில், அவர்களை அதிகாரத்துக்குத் தெரிவு செய்த மக்களுக்குப் பதில் சொல்லக் கூடியதாகவும் மாறுகின்றது. மார்க்கா நிறுவனத்தின் இவ் வெளியீட்டில் இத்தகைய முக்கிய விடயங்களும், பிரச்சினைகளும் ஆராயப்படுகின்றதுடன் அவை எவ்வாறு சனநாயக
6

முறைமைகளுடன் தொடர்புபடுகின்றதென்பதையும் உசாவுகின்றது. அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பும் உறுதியும் சனநாயக முறைமையின் அடிப்படையாக இன்று தோற்றம் பெற்று வருகின்றது.
இரண்டாவது வெளியீடு சனநாயக முறைமையின் கீழ் விருத்திபெற்ற பல்வேறு அரசாங்க அமைப்புக்களை ஆராய்கின்றது. சனாதிபதி மற்றும் பாராளுமன்ற முறைமை ஆகிய இரு முக்கிய வடிவங்களில் ஐக்கிய அமெரிக்கா முன்னையதற்கும் ஐக்கிய இராச்சியம் பின்னையதற்கும் சிறந்த எடுத்துக்காட்டாகத் தரப்படுகின்றது. தேர்தல் முறைமையில் காணப்படும் வித்தியாசமான வேறுபாடுகளை ஆராய்ந்து, இப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கொடுக்க அவை எவ்வாறு முனைகின்றன என்பதையும் ஆராய்கின்றது. தேர்தற் செய்முறைகள் வேறுபாடு கொண்டவை. அவை நன்மைகளையும், தீமைகளையும் கொண்டிருக்கின்றன. உதாரணமாக இத்தாலி விகிதாசாரப்பிரதிநிதித்துவ முறையைக் கொண்டுள்ளது. பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவே ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஐக்கிய இராச்சியத்தில் தற்போது காணப்படும் பிரதேச ரீதியான தேர்தல் தொகுதி முறைகளும் சர்ச்சைக்குரிய தொன்றாகவே உள்ளன. தேசிய அடிப்படையில் பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, விகிதாசாரமின்றிக் குறிப்பிட்ட எண்ணிக்கையான ஆசனங்கள் வெற்றிபெறும் கட்சிக்குக் கொடுக்கப்படுகின்றது. இலங்கை இத்தகைய பிரச்சினையை விகிதாசாரப் பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு கொண்டிருந்தது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமை இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும், இது வாக்காளனுக்கும், அவனது பிரதிநிதிக்கும் இடையில் காணப்படுகின்ற தொடர்பைத் தடைசெய்கின்றது என்ற காரணத்தினால் குறை கூறப்பட்டு வருகின்றது. இத் தொடர்பானது தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர் தெளிவாக அடையானம் செய்யப்பட்ட தொகுதி ஒன்றில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும்போது மிகவும் இறுக்கமாக இருக்கும். ஜேர்மனியில் விகிதாசாரப்பிரதிநிதித்துவ முறைமையும், தொகுதிப் பிரதிநிதித்துவமும் இணைந்த வகையிலான இரு முறைகளின் கலப்பைக் கொண்ட முறை காணப்படுகின்றது. அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கு வாதாடுபவர்கள் இம்மாதிரியை இலங்கைக்குப் பொருத்தமுடையதாகக் கூறுகின்றனர்.
மூன்றாவது சனநாயகச் சிந்தனைகள் என்ற இம் மூன்றாவது வெளியீடு தெரிந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைக் கொண்டிருப்பதுடன் அது கிரேக்க நகர அரசிலிருந்து நவீன காலம் வரைப்பட்ட பிரபல்யமான மெய்யியலாளர்களினதும் அரசியல் சிந்தனையாளர்களினதும் எழுத்துக்களில் பிரதிபலிக்கப்பட்ட சனநாயக கருத்துருவத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிய தேடலாகவும் அமைகின்றது.

Page 7
நாலாவது தொகுதியானது இலங்கையின் சனநாயகத்துக்கு முக்கியமான பல்லின, பண்பாட்டுச் சமுதாயங்களில் நிலையான செயற்பாட்டைக் கொண்டிருப்பதற்கான சனநாயக முறைமைக்கு அவசியமான பெரும்பான்மை ஆட்சியினரின் பிரச்சினை, நிறுவன மற்றும் பொறிமுறை தொடர்பான விடயங்களை எடுத்துரைக்கின்றது. உள்ளூர்ச் சமூகத்தின் பங்கு, பிரசைகள், நிறுவனங்கள் கொண்டிருக்கக் கூடிய பங்காற்றல் பற்றிய கட்டுரைகளை அது உள்ளடக்கும். பிரசைகளின் சனநாயகப் பங்களிப்பானது அவர்களது வாக்குகளை அளிக்கும் உரிமையுடன் மாத்திரம் இணைந்திருக்கவில்லை. ஆட்சி முறைமை, தேசியக் கொள்கை தொடர்பான முக்கிய விடயங்களில் நிலையான பொதுக் கலந்துரையாடல்கள் அவசியம். தேசியக்கொள்கைகளினை வடிவமைப்பது தொடர்பான பொதுவிடங்களைக் கொண்ட கலந்துரையாடலில் அரசு சார்பற்ற நிறுவனங்களின் கூட்டுப் பங்களிப்பு அவசியமானது. எனவே சனநாயகச் செயற்பாட்டைப் பாதுகாத்தலும், விருத்திசெய்தலும் என்பது பிரசைகள், அரசியல் கட்சிகள், அரசு என்பதன் கூட்டான கடமையாகும். இந்நாட்டின் உண்மையான சனநாயக நிறுவனங்களைப் பேணுவதற்கும் கட்டியெழுப்பவும் தேவையான பிரதான முயற்சிகளைப் பொதுமக்கள் விளங்கிக் கொள்வதற்கு இவை தொடர்பான வெளியீடுகள் பெரிதும் உதவும் என மார்க்கா நிறுவகம் உறுதியாக நம்புகின்றது.
கொட்பிரே குணதிலக
மார்க்கா நிறுவகம்.

பகுதி 1 ஏதென்ஸ்சின் பெரிக்கிள்சும் சனநாயத்தின் பிறப்பும்
தமிழாக்கம்
உ. நவரத்தினம் செயற்றிட்ட அதிகாரி தொலைக் கல்வித்துறை தேசியக் கல்வி நிறுவகம், மகரகம
பொதுசனக்கல்வி நிகழ்ச்சித்திட்டம் மார்கா நிறுவக வெளியீடு

Page 8

ஏதென்ஸ்சின் பெரிக்கிள்கம் சனநாயத்தின் பிறப்பும்
அறிமுகம்
கிறிஸ்துவுக்கு 500 ஆம் ஆண்டுக்குமுன்னர் இருந்த பத்தாண்டு காலத்தில் உலகத்தின் முதலாவது சனநாயக யாப்பை ஏதென்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் தயாரித்துக் கொடுத்தார்கள். அரை நூற்றாண்டுக்குப் பின்னர் இத்தகைய புதுவிதமான ஆட்சிமுறையை அதனுடைய புராதன அமைப்புக்குப் பெரிக்கிள்சின் சீர்திருத்தங்களால் எடுத்துச் செல்லப் பட்டது. பெரிக்கிள்சினால் உருவாக்கப்பட்ட ஏதென்சில்தான் கிரேக்கரின் பெரும் சாதனைகள் படைக்கப்பட்டன. உலகத்தின் ஏனைய பகுதிகள் தொடர்ந்து ஏகாதிபத்தியமும், கடும் அதிகாரவர்க்கமும் கொண்ட சமூகங்களாக இருந்த போது ஏதென்சிலுள்ள சனநாயகமுறை நவீன காலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பூர்வீக, வயது வந்த ஆண்களுக்கு மட்டுப்படுத்தப்படிருந்தாலும், ஏதென்சின் குடியுரிமை செல்வம், வகுப்பு பேதமின்றி நாட்டில் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானத்திலும் அவர்களுக்கு முழுமையாகவும் சுறுசுறுப்பாகவும் பங்குபற்ற உரிமை வழங்கப்பட்டது. பெண்கள், குழந்தைகள், நாட்டில் தங்கியுள்ள அந்நியர்கள், அடிமைகள் போன்றோரை அரசியல் வாழ்க்கையிலிருந்து ஏதேனியர்கள் விலக்கியுள்ளார்கள். ஆனால் அவர்கள் உருவாக்கிய அரசியல் சமூகத்திற்குட்பட்ட சமத்துவக் கொள்கையானது பிரான்சின் மறுமலர்ச்சிக் காலத்தில் பெருகிய உலகளாவிய நவீன மனித சமத்துவ எண்ணத்திற்கு வித்திட்டது.
உலகின் முதலாவது சனநாயக அமைப்பானது அமெரிக்க, பிரெஞ்சுப் புரட்சிகளின் போது அரசியல் முரண்பாடுகளை மையமாகக் கொண்டிருந்தது. 18 ஆம் நூற்றாண்டு தொடக்கம் அடுத்த சில ஆண்டுகளுக்குக் கூடிய ஆர்வத்தைத் தூண்டியது. ஆதிகாலக் கிரேக்கரின் வரலாற்றில் அப்போதைய ஏகாதிபத்தியவாதிகள் பிரபல்யமான அரசாங்கங்களுக்கு எதிராக விவாதித்தனர். இதனால் சனநாயக வாதிகள் வரலாற்றுக்கு மறுவிளக்கம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். சமீப காலத்தில் கிழக்கு ஐரோப்பா பூராகவும் நிராகரிக்கப்பட்ட கொடுங்கோல் கம்யூனிஸ்ட் ஆட்சிமுறையும் அதன் விளைவாக சனநாயக ஆட்சிமுறையை மாற்றியமைக்கப் பரந்தளவிலான கோரிக்கையும், பெறப்பட்ட சனநாயக வெற்றியும் ஒரு நிரந்தரமானது என்ற எண்ணத்தைப் பல அவதானிகள் மத்தியில் ஏற்படுத்தியது. சனநாயக அரசை நிலை நாட்டவிரும்பும் அநேக நாடுகளுக்கு இத்தகைய சனநாயகக் கொள்கைகளில் எதுவித
11

Page 9
அனுபவமும் இல்லை. சிலருக்கு மட்டும் புரியும் இத்தகைய ஓர் அமைப்பு முறையை உருவாக்கிப்பேணுவது எவ்வளவு கடினமானது என்பதுவும் அதேவேளை சனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கத் தவறியமையால் சனநாயகத்திற்கான நுண்ணறிவான தார்மீக ஆதரவை வழங்க முடியாத நிலையில் நவீன சனநாயகவாதிகள் இருக்கிறார்கள்.
எங்கள் காலத்தில் சனநாயகமானது மனித அனுபவம் என்ற வானத்தில் பூத்திருக்கும் மிகவும் அரிதானதும் மென்மையானதுமான மலர்களாகும். சனநாயகமானது ஏதென்சில் இரு நூற்றாண்டு காலத்துக்கு மட்டுமே நிலவியது. இதனைவிடக் குறைந்த காலப்பகுதியில் சிறிய கிரேக்க நாடுகளிலும் நிலவியது. இது மேற்கு உலகில் மீண்டும் தோன்றியபோது அது பரந்தளவில், ஆனால் ஆழமற்றதாகக் காணப்பட்டது. பிரான்சிய, அமெரிக்கப் புரட்சிகளிலான சனநாயகம் கிரேக்க நாட்டை விடத் தாராளமாகக் குடியுரிமையை வழங்கியது. இறுதியில் குழந்தைகளை மட்டுமே அரசியலில் பங்கு கொள்வதைத் தவிர்த்தது.
ஏதென்சிலும் , அமெரிக்காவிலும் மட்டுமே இதுவரை காலமும் சனநாயகமானது இருநூறு ஆண்டுகளுக்கு நிலைத் திருந்தது. ஏகாதிபத்தியமும், கொடுங்கோல் ஆட்சிமுறையும் ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்திருந்தன. ஒரு வம்சாவழி அல்லது ஒரு கொடுங்கோல் ஆட்சிமுறை ஆட்சியிலிருந்து அகற்றப்படும். ஆனால் அதற்குப் பதிலாக ஒரு அராஜக ஆட்சிமுறை ஆட்சி ஏறும். இது ஒரு விதமான அதிகார சமூகத்தை உருவாக்கும். நம்பிக்கையுள்ளவர்கள் (optimists) “சனநாயகமானது ஒரு தவிர்க்கமுடியாத இறுதியான மனித சமூக அமைப்பாகும்" என்ற கருத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் வரலாற்று ரீதியில் நோக்கும் போது இன்றுவரை அது ஒரு விதிவிலக்காக இருக்கின்றது.
இந்த உண்மையை விளங்கினால் சனநாயகமானது மனிதனுடைய இயற்கையான கொள்கை என்றும், கொடுங்கோல் ஆட்சியையும் பிற்போக்கான ஆட்சிமுறையையும் நீக்கினால் இதனை நிலைநாட்டி வெற்றிபெறலாம் என்ற எண்ணம் உடையவரைச் சற்றுச் சிந்திக்க வைக்கின்றது. வரலாற்றிலே வெற்றி பெற்ற சில சனநாயக நாடுகளை ஆராய்ந்தால் அவை செழிப்புடன் இருக்க மூன்று நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் (1) சிறந்த நிறுவனங்களைக் கொண்டிருத்தல் (2) சனநாயகக் கொள்கைகளைச் சிறந்த முறையில் விளங்கியுள்ள பிரசைகளை அல்லது சனநாயக வழிமுறைகளுடன் இணைந்ததான பண்புகளை விருத்திசெய்தல் (3) உயர்தரத்திலான தலைமைத்துவத்தைக் கொண்டிருத்தல். சில இக்கட்டான வேளைகளில் இந்த மூன்றாவது நிபந்தனை அதிமுக்கியமாக இருக்கும். இது ஏனைய இரு நிபந்தன்ைகளிலிருக்கும் குறைபாடுகளை ஈடு செய்யக் கூடும்.
12

பெரிக்கிள்ஸ் சனநாயகத்தைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அதைக் கண்டுபிடித்த அரைநூற்றாண்டுகளுக்குப்பின்னர்தான் அதன் தலைமைக்கு வந்தார். அப்பொழுது சனநாயகம் வலிமைமிக்க அமைப்பாக இருந்தது. அவர் அதனை மட்டுப் படுத்தப்பட்ட சனநாயக அமைப்பிலிருந்து ஒரு முழுமையான, நம்பிக்கையூட்டக் கூடிய பிரபல்யமான அரசாக மாற்றியமைப்பதில் ஒரு பிரதான பங்கை ஏற்றார். பெரிக்கிள்சின் பங்களிப்பு எவ்வாறு ஒரு புதிய பலமற்ற சனநாயகம் ஒரு சிறந்த முதிர்ச்சியுள்ள அமைப்பாக உருவாகலாம் என்பதனை எடுத்துக்காட்டுகிறது.
கிறிஸ்த்துவுக்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு பெரிக்கிள்ஸ்சின் தலைமையின் கீழ் ஏதென்ஸ் அடைந்த சாதனைகளை மனித வரலாற்றின் சில சகாப்தங்களால் மாத்திரம் தான் ஒப்பிட முடியும். 2,50,000 சனத்தொகையைக் கொண்ட பெரிக்கிள்ஸின் ஏதென்ஸ் வாசிகள் படைத்த இலக்கியம், சிற்பவேலை, கட்டிடவேலை ஆகியன இன்று உலகிலேயே மற்றவர்கள் பின்பற்றக் கூடியதும் உற்சாகமளிக்கக் கூடியதும், ஆச்சரியப்படக் கூடியதுமான ஆக்கங்களாகத் திகழ்கின்றன. மிகச் சிறந்த முறையில் பிறர்சாதிக்க முடியாத அளவுக்கு ஏதென்ஸ் வாசி ஒருவர் வரலாற்றை எழுத்து மூலம் படைத்துள்ளார். மிகவும் விறுவிறுப்பான சுயஆக்கங்களைக் கொண்ட விஞ்ஞான ஊகங்களையுடைய வீடாக ஏதென்ஸ் திகழ்ந்தது. மேலும் அரசியல் ஊகங்களுக்கும் , முரண்பாடுகளுக்கும் மக்கள் முழுமையான பங்குகொள்ளக் கூடிய ஈடு இணையற்ற இருப்பிடமாக அது விளங்கியது.
வொல்ரயர் (voltaire) என்பவர் பெரிக்கிள்சின் ஏதென்சை (Periclean Athens) ஒப்பிட்டு, அது பெருமை உடைய, மிகவும் மகிழ்ச்சியான காலப்பகுதிகளைக் கொண்ட நான்கு சமூகங்களில் ஒன்றானது என வர்ணித்தார். இந்த நான்கு மகிழ்ச்சிகரமான யுகங்களும் கலையினை ஈடிணையற்ற நிலைக்குக் கொண்டுவந்தன. அத்துடன் மனித மனத்தின் பெருமைக்குரிய காலப்பகுதியாகவும் கொள்ளப்படுகின்றது. இவை வருங்காலச் சந்ததியினருக்கு உதாரணங்களாகத் திகழ்கின்றன. ஏனைய மூன்று காலப்பகுதிகளாவன. (1) சீசரினதும் அகஸ்தஸ்சினதும் ரோமாபுரி (2) 15 ஆம் நூற்றாண்டு மறுமலர்ச்சிக் காலப்பகுதியிலுள்ள இத்தாலி, (3) 14 ஆம் லூயி மன்னரின் கீழ் உள்ள பிரான்ஸ். முதலாம் எலிசபெத்தின் காலப்பகுதியிலிருந்த இங்கிலாந்தை இந்தப்பட்டியலில் சேர்க்கலாம். ஆனால் இந் நூற்றாண்டுக்கு முன்னர் இந்த 5 காலப்பகுதிகளுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு வேறொரு காலப்பகுதியும் இருக்கவில்லை,
கிரேக்கர்களின் அனுபவங்களை விஒத் 岛d岛#斋 அதற்கு
முன்னரும், பின்னரும் வியத்தக்க ஆள்வுக்குத் தோன்றிய டினித
வர்க்கங்களுடனும், சமூகங்களுடனும் ஒப்பிட
மெசப்பத்தேமியா, பலஸ்தீன - சிரியா, இந்தியரசீனீபோன்றச்ஆர்ம்ப
நாகரிகங்களும், பின்னர் தோன்றிய தெற்கு ஐதரமற்றும் அமெரிக்க 13

Page 10
நாகரிகங்களும் கிரேக்க நாகரிகங்களிலிருந்து திட்டவட்டமான முறையில் வேறுபட்டிருந்தாலும் தங்களுக்கிடையில் அடிப்படை அம்சங்களில் ஒத்திருந்தன. அவை அரசர்களாலும், மதகுருக்களினாலும் ஆதிக்கம் செய்யப்பட்ட நகர்ப்புற மையங்களைச் சூழ்ந்துள்ள மிகவும் அபிவிருத்தியடைந்துள்ள சிக்கலான சமூக அமைப்புக் களைக் கொண்டிருந்தன. அவர்களிற் பலர் சிக்கலான எழுத்து முறையினை விருத்தி செய்துள்ளார்கள். ஆனால் தொழில் ரீதியாக ஒரு சிறு வர்க்கத்தினரே இதில் பாண்டித்தியம் பெறக் கூடியதாக இருந்தது. அவர்களிடம் பணித்துறை ஆட்சி அமைப்பின் உதவியுடன் பரந்த பகுதிகளில் ஆட்சி செய்யக்கூடிய வலிமைமிக்க, மையப்படுத்தப்பட்ட முடியாட்சி முறையிலான அரசாங்கங்கள் இருந்தன.
இந்த அமைப்பிலிருந்து ஹெலனிக் நாகரிகம் (Helenic Civilization) பெருமளவு வேறுபட்டுக் காணப்பட்டது. மைசீனியன் பண்பாட்டின் தோல்வியிலிருந்து. கி.பி 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இது தோன்றிற்று. எகிப்து, அண்மைய கிழக்கின் செல்வாக்கினால் வறுமையுடன் கூடிய மிகவும் பின் தங்கிய கலாசாரத்தினால் ஆரம்பிக்கப்பட்டது. நகரங்கள் நீக்கப்பட்டு அவற்றுக்குப் பதிலாகச் சிறிய விவசாயக் கிராமங்கள் தோன்றின. வர்த்தகம் முற்றுப்பெற்றது. கிரேக்கர்களுக்கும் மற்ற மக்களுக்கிடையேயும் மாத்திரமின்றி கிரேக்கர்களுக்கிடையேயும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது. மூன்று நுாற்றாண்டுகளுக்கு எழுத்துக்கலை மறைந்திருந்தது. ஹெலனிய நாகரிகத்தின் சிறிய தொகையுள்ள, வறுமையுள்ள, தனித்துவமான, கல்வியறிவற்ற மக்களைக் கொண்டிருந்தது. இம் மக்கள் வெளியுலகுடன் துண்டிக்கப்பட்டது மாத்திரமின்றித் தங்களது சமூகத்தைத் தாங்கள் அபிவிருத்தி செய்யும் படி தனித்து விடப்பட்டனர்.
கி.மு 1050 - கி.மு 750 வரைப்பட்ட மூன்று நூற்றாண்டுகளாகக் கிரேக்கர் தமது சாதனைகளுக்கு அத்திவாரமிட்டனர். அயலிலுள்ள குடும்பங்களும், உறவினரும், ஆதிக்குடிகளும் வெளிப்பகைவர்களிடமிருந்து தம்மைப் பாதுகாக்கவும் தங்களுக்கிடையே சமானத்தை ஏற்படுத்தவும் ஒன்று சேர்ந்தார்கள். தங்களுடைய புதிய வாழ்க்கை முறைக்கு அவர்கள் ஏற்படுத்திய அமைப்பானது பொலிஸ் (Polis) என்ற கிரேக்க நாட்டு நகர அரசாகும். இவற்றில் நூற்றுக்கணக்கானவை இருந்தன. ஒவ்வொன்றும் தமது மக்களிடமிருந்து ஒருவித விசுவாசத்தையும் பிணைப்பையும் பெற்றது. இதனால் தங்களுடைய சொந்த பொலிஸ்சைக் கலைத்து, சிந்திக்க முடியாத அளவுக்குப் பெரிய அமைப்புக்களை உருவாக்கினார்கள். இதன் விளைவாக ஒரு வலிமைமிக்க, பன்முகமான, போட்டி மனப்பான்மையுள்ள, சில சமயங்களில் குழப்பமுள்ள உலகம் தோன்றிற்று. இதனால் கூடிய வினைத்திறனும், வெற்றியும் தான் உயர்வாக மதிக்கப்பட்டது. இந்தப் போட்டி மனப்பான்மையே மேற்கத்தைய நாகரிகத்தில்பொலிஸ் வரலாற்றில் கிரேக்க வாழ்க்கை, வழமைக்கு மாறாக
14

ஒரு முன்னுரிமையை வகித்தது. இது இலக்கியம், கலை ஆகியவற்றில் அசாதாரணமான சாதனைகளை உருவாக்கியது. இங்கே போட்டிக் கலைஞர்களையும் கவிஞர்களையும் ஊக்குவித்தது.
மைசீனியன் உலகத்துடன் அரசர்கள் நீக்கப்பட்டு பொலிஸ் மக்களாட்சியானது. கிரேக்கர்கள் வறியவர்களாக இருந்தமையால் அவர்களிடையே செல்வவேறுபாடு குறைவாகக் காணப்பட்டது. கிழக்கு நாட்டு நாகரிகங்கள் போலன்றி வகுப்பு வேறுபாடுகள் குறைவாகவே காணப்பட்டது. 700 ஆண்டுகளுக்குப் பின் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய யுத்த முறை மேலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. குதிரைகளை வாங்கி வளர்க்கும் ஆற்றலுள்ள சில செல்வந்தர்களின் கையில் இருந்த நாட்டைப் பாதுகாக்கும் பிரதான பொறுப்பினை அது நீக்கியது. அப்பொறுப்பினைச் சாதாரண விவசாயிக்கு வழங்கியது. இதேவேளை இராணுவ அமைப்பிலே ஏற்பட்ட மாற்றம் மக்களிடையே ஒரு பொதுவான முயற்சியினை வலியுறுத்தியது. கிரேக்க இராணுவம் சம்பளம் வழங்கப்படாத மக்கள் - போர்வீரர்களால் அமைக்கப்பட்டது. இம்மக்கள் - போர்வீரர்கள் (citizenSoldiers) தங்களுடைய வயல்களுக்குத் திரும்பினார்கள். தனித்துவமாக நின்று பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்வதால் முக்கிய அரசியல் தீர்மானங்களை எடுக்கும் போது தங்களுடைய பங்களிப்பையும் ஏற்கும்படி வேண்டினார்கள். இந்த வகையில் சனத்தொகையின் பெரும் பகுதியினர், அரசியல் கட்டுப்பாட்டைத்தங்களிடையே பகிர்ந்துகொண்டார்கள். இதனால் அரசியல் வாழ்க்கையில் பங்குபற்றுவது பெரும் மதிப்பாகக் கருதப்பட்டது.
இத்தகைய அரசாங்கங்களுக்கு அதிகார வர்க்கம் தேவைப்படவில்லை. இதற்குக் காரணம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அளவுக்கு அங்கே பரந்த அளவிலான நிலங்கள் இருக்கவில்லை. அத்துடன் அதிகாரவர்க்கத்துக்குச் சாதகமாக இருக்கப் பொருளாதார நிலை மிதமிஞ்சியதாக இருக்கவில்லை. அநேக மாநிலங்கள் ஒழுங்கான வரியை விதிக்கவில்லை, மதகுருமார் என்றரீதியில் பிரத்தியேகமான பிரிவினர் இருக்கவில்லை. மறுபிறப்புப் பற்றிக் கரிசனை இல்லை. இத்தகைய பலதரப்பட்ட, வலிமைமிக்க, மதச்சார்பற்ற சுதந்திரமான சூழ்நிலையில் முதன் முதலாக உதயமானது இயற்கை மெய்யியல். நவீன இயற்கை விஞ்ஞானம், மெய்யியல் ஆகியவற்றின் வேராக கருதப்படும் அவதானம் நியாயப்படுத்தல் ஆகியவற்றின் அடைப்படையில் இது அமைந்துள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தனது சுதந்திரத்தையும் முக்கியத்துவத்தையும் இழந்த ஏகியன் கடல் (Aegean Sea) எல்லையில் அமைந்துள்ள சிறிய நாட்டின் தலைவருடைய செயற்பாடுஎமது நவீனகால அரசியல் அனுபவத்திற்கு மேலும் அறிவூட்டிப் பிரகாசிக்கச் செய்கின்றது என்பது நடைமுறைச் சாத்தியமற்றது போல் தோன்றுகிறது. ஆனால் எமது காலத்தில் எமது வாழ்நாட்களை அரசியல் சாணக்கியம், யுத்தம் ஆகியவற்றிற்கு அர்ப்பணிப்பவர்கள் பெரிக்கிள்சினதும் அவரது
15

Page 11
சமகாலத்தவர்களதும் அனுபவங்களைச் சிந்திக்கும் போது அவற்றின் நடைமுறைச் செயற்பாடுகள் பெறுமதிமிக்கவை என்ற நம்பிக்கை கொண்டவர்களாகக் காணப்படுகின்றார்கள். பெலோபொனேசியன் யுத்தம் (peloponnesian war) Luftbóluu fiq-GL6ůvf6ðr (Thucydides) 6 urtGargógpš குறிப்புக்கு இப் பொழுதுதான் அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது. இந்த வரலாற்றுக் குறிப்பிலிருந்தே சர்வதேச தொடர்புகள் பற்றிய கொள்கைகளை அரசியல் விஞ்ஞானிகள் பெற்றுள்ளார்கள். வரலாற்றுத்துறையினரும், அரசியல் விஞ்ஞானிகளும் ஏதேனியர்கள், ஸ்பாட்டன்கள் ஆகியோர் பற்றியும் உலகிலே இவர்களுடைய முரணான போக்குப் பற்றியும் கலந்துரையாடத் தொடர்ந்து கூடி வருகின்றார்கள். சர்வதேச தொடர்பினைப் பற்றியோ யுத்த வரலாறு பற்றியோ எந்தப் பல்கலைக் கழகப்பயிற்சி நெறியும் இந்த யுத்தத்தைப் புறக்கணிக்காது. ஹாவாட்டிலுள்ள கென்னடி அரசியல் இராணுவ கல்விக் கூடங்களிலும் இந்தப் பாடம் நிலையான பாடமாகும். செயல்திறன்மிக்க உத்தியோகஸ்தர்களுக்குறோட்திவிலுள்ள நியூபோட்நகரின் கல்லூரியில் (Naval War College) தொழில் வழங்குவது பற்றி அறிவிக்கும் போது துசிடிடெஸ்சின் பெலோப்பொனேசியன் யுத்தம் பற்றிய ஒரு பிரதி வழங்கப்படுகின்றது. இது "தந்திரோபாயமும் கொள்கையும்" என்ற பாடநெறியிலுள்ள முதலாவது விடயமாகும்.
மனிதர்களிடையே ஒர் அசாதாரண போக்கையுடைய பெரிக்கிள்ஸ், தான் வாழ்ந்த காலத்தில் தன்னுடைய முத்திரையினைப் பதித்து நாட்டின் வரலாற்றினையே மாற்றியமைத்தார். ஒருபெரும் சனநாயகத்தின் வழிநடத்தும் தலைவனாக இருந்தார். இத்தகைய சனநாயக நாடானது வரலாற்றிலே தனக்குரிய பங்கினை நன்கு உணர்ந்தது. அதி உன்னத யாப்பினையும், வாழ்க்கை முறையினையும் கொண்டதாக விளங்கியது. முன்னர் இல்லாதபடி செல்வத்தையும் செழிப்பையும் வழங்கக்கூடிய நன்கு வரிவடைந்துவரும் பொருளாதாரத்தை உடையதாக விளங்கியது. மேலும் இத்தகைய செல்வமும், சர்வதேசப் பொறுப்புணர்ச்சியும் அதற்கு ஒரு சிறந்த இராணுவக் கடற்படையினை வழங்கிற்று. இத்தகைய சனநாயக நாடானது முற்றிலும் வித்தியாசமான யாப்பினை உடைய, எதிர்ப்புத் தெரிவிக்கின்ற நாட்டினை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இத்தகைய எதிர்ப்புக் கொள்கையையுடைய நாடானது தனது அபிலாஷைகளுக்கும் பாதுகாப்பிற்கும் ஏதேனியரின் சக்தியையும் சிறந்த வாழ்க்கை முறையையும் ஒரு பெரும் தொல்லையாகக் கருதியது. பெரிக்கிள்சின் வாழ்க்கையும் அவனது சனநாயக அமைப்பும் எமது காலத்தில் இருக்கும் சுந்திர நாட்டுப் பிரசைகளுக்கு ஒருபடிப்பினையாக அமைகின்றது.
பெரிக்கிள்ஸ் எதுவித சொந்த சொத்தையும் கொண்டிருக்கவில்லை. சனநாயகக் குடியரசின் பிரசையாக இருந்து இராணுவத் தலைவர்களில் ஒருவனாக இருந்தானே தவிர வேறொரு உயர்பதவியும் வகிக்கவில்லை. இராணுவத்தையோ, அல்லது காவல் படையையோ தன்னுடைய
16

கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை, மக்கள் சபையின் அங்கீகாரம் இன்றிப் பொதுப்பணம் எதுவும் செலவு செய்ய முடியாது.
நவீன சனநாயக நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சனாதிபதிகள், பிரதம மந்திரிகள் போலல்லாது நம்பிக்கை வைக்கக் கூடிய, நன்கு அமைக்கப்பட்டநிலையான அரசியல் கட்சிமுறை இருக்கவில்லை. ஆண்டு தோறும் தேர்தலில் நின்ற மக்களால் பரிசீலிக்கப்பட்ட அரசியற் சவால்களை எதிர்த்து மீண்டும் தெரிவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. தன்னிடம் கையளிக்கப்பட்ட பலதரப்பட்ட பொறுப்புக்களும் அவற்றை நேரடியாகக் கையாண்ட முறையிலும் ஏனைய தலைவர்களிலிருந்து பெரிக்கிள்ஸ் வேறுபட்டார். எலிஸபெத் லூயிஸ், நமது காலத்தில் வாழ்ந்த பெரும் தலைவர்களாகிய பிராங்லின் டி ரூஸ்வெல்ட், வின்சன் சேர்ச்சில் ஆகியோர் தமது இராணுவப்படைகளுக்குப் பொறுப்பதிகாரிகளாக இருந்தனர். ஆனால் பெரிக்கிள்ஸ் சீசர், அகஸ்டஸ் போன்றோர் மாதிரி யுத்தத்தின் போது இராணுவ கடற்படைகளுக்குத் தலைமை தாங்கினார். மேலும் அவர் அரசியல் யாப்பின் புனரமைப்பாளராக இருந்து ஏதெனியன் சனநாயகத்தை விரிவாக்கி ஒரு நிறைவான அமைப்பாக மாற்றினார், ஒரு துTதுவராக இருந்து பொது உடன்பாடுகளையும் , இரகசிய உடன்படிக்கைகளையும் செய்ததுடன் அவரது நகரத்தின் மேன்மையை உயர்த்தப்பாடுபட்டார். தன்னுடைய சேவைக் காலம்பூராகவும் நிகரில்லாத அளவுக்கு மிகவும் கெட்டித்தனமான முறையில் பொது நிதியினைக்
கையாண்டார்.
அகஸ்டஸ், லொறொன்சோ டிமெடிசி, எலிஸபெத் ஆகியவர்களைப் போல் பெரிக்கிள்ஸ் பரந்தளவில் நுண்கலை மற்றும் மதி நுட்பமான செயற்பாடுகளுக்கும் உதவி செய்து ஊக்குவித்தார். மக்கள் அதிசயிக்கும் வகையில் ஆலயங்களினாலும், சிலைகளினாலும் ஏதென்ஸ் நகரத்தின் உட்பகுதிகளை ஆழகுபடுத்தினார். தானே கட்டிட நிபுணர்களையும், சிற்பிகளையும் தேர்ந்தெடுத்து அவர்கள் செய்த வேலைகளுக்குரிய கூலியினையும் தேடிக் கொடுத்தார். அவர் ஆஸ்ஷைலஸ் (Aeschylus) சின் சோகமான முடிவினைக் கொண்ட பேர்சியன்ஸ்சைத் (persians) தயாரித்தார். மேலும் சோபோகிள்ஸ்(Sophocles) என்பவரின் நண்பராகவும் இருந்தார். அத்துடன் அவரது காலத்தில் வாழ்ந்து பார்த்தினோனுக்குப் (parthenon) பெருந்திட்டம் வகுத்த பிஹிடியஸ்சும் (phidias) அவனுடைய நண்பராவர். மேலும் வரலாற்றின் தந்தையாகிய ஹெரடோட்டஸ் (Herodotus) உடனும் நட்புக்கொண்டிருந்தார். ஓய்வுநேரங்களில் அவரது காலத்தில் வாழ்ந்த சினோ (Zeno), அனக்ஸ்சகோரஸ் (Anaxagores), புரோட்டாகோரஸ் (protagoras) போன்ற மெய்யியல் ஆசான்களுடன் ஒய்வுநேரங்களில் கலந்துரையாடி தர்க்கத்தில் ஈடுபட்டார். கலைத் துறையில் அவருக்கு இருக்கும் நாட்டமும், சிந்தனையாளர்களுக்கு அவர் கொடுத்த ஊக்கமும் முழுக் கிரேக்க உலகத்திலுமிருந்தும் ஆக்கவேலைச் செயற்றிறனுள்ள விற்பன்னர்களை அவரை நோக்கி ஈர்த்தது.
17

Page 12
ஏதென்சின் தோல்லுக்குப் பின் பல நூற்றாண்டு காலத்திற்குப் பின்னும் அவர்களின்சாதனைகளைக் கண்டு வியப்படையலாம். எந்தச் சுதந்திரமான சனநாயக அமைப்பும்சந்தித்த பிரச்சினைகளை பெரிக்கிள்ஸ்சும்சந்தித்தார். நாட்டின் சுபீட்சத்துக்கு எவ்வாறு மக்களைத்தியாகம் செய்ய நிர்ப்பந்திக்க முடியும், கொடுங்கோல் ஆட்சியாளர்களும், சர்வாதிகாரிகளும் வெளிநாட்டுத்தொடர்பிலும், கட்டாயப்படுத்தலிலும் தங்கியிருந்தார்கள். ஸ்பாட்டா போன்ற மிகச்சில அதிகாரத்தைப் பயன்படுத்தும் அமைப்புக்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கை முறையினைக் கைவிடச் செய்வதற்கு மக்கள் மத்தியில் ஒரு விருப்பத்தை உண்டுபண்ணலாம். ஆனால் சனநாயக நாடுகள் அத்தகைய முறைகளைக் கையாளமுடியாது. அதற்குப் பதிலாக சனநாயகத் தலைமைத்துவமானது ஒரு சுதந்திரமான பொதுக் கல்வி முறைமையுடன் சம்பந்தப்பட்டது. தங்களுடைய சொந்த நலன்கள் சமூகத்தின் நலன்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பதனை ஏதேனியன்சுக்கு உணர்த்தாவிட்டால் தாங்கள் பாதுகாப்புடனும் சுபீட்சத்துடனும் இருக்க முடியாது என்று கருதினார். அத்துடன் தன்னுடைய நாட்டின் பெருமையினால்தான் சாதாரண மக்களும் பெருமையடையலாம். ஏதென்சுக்காகத் தான் செய்த, பெற்ற அனைத்தும் அத்தகைய கல்வியின் அங்கமாகவே இருந்தது. ஒரு புது விதமான சமூகத்தையும், ஒரு புதுவிதமான பிரசையையும் வலுக்கட்டாயமாகவன்றி அல்லது பயங்கரவாதமுறையைக் கையாளாமல் தன்னுடைய எண்ணத்தின் வலிமையாலும், தனது ஆளுமைப்பலத்தினாலும் உருவாக்கமுனைந்தார்.
பண்டைய ஏதென் நாட்டில் திறந்த வெளிகளில் வாய்த்தர்க்கம் மூலம் கொள்கைகளைத்தீர்மானித்தார்கள். பொதுமக்கள் மத்தியில்பேச்சு வன்மை பிரதானமாகிறது. பெரிக்கிள்ஸ் அவர்கள் காலத்தில் ஒருசிறந்தபேச்சாளன் என்பது மக்கள் கருத்தாகும். பிரபல்யமான மல்யுத்த வீரனும், மிகவும் ஆற்றல் படைத்தவனுமான பெரிகிள்ஸ்சின் அரசியல் எதிரி அவனின் ஆற்றல் பற்றிக் குறிப்பிடும் போது "எப்போதாவது நான் அவனை எறியும் போது, தான் எறியப்படவில்லை என்று விவாதித்து, அவன் விழுந்ததைப் பார்த்த மக்களையே சமாதானப்படுத்தும் ஆற்றல் உள்ளவன்” என்கிறார். (plutarch, pericles 8.4)
அநேக சனநாயக அரசியல்வாதிகள் மக்களுக்குநல்ல செய்திகளை மட்டும் கூறி அல்லது அவர்களுடைய தேசத்தின் செயற்பாட்டில் ஒருதாக்கத்தை உண்டு பண்ணுவதினால் சனநாயக நாட்டில் வசிக்கும் மக்கள் இதனைக் கருத்திற் கொண்டு உண்மை நிலையைப் புரிந்து அதனை எதிர்கொள்ள வேண்டும். நான்கு முறை ஆட்சியிலிருந்தாலும் பிராங்ளின் ரூஷ்வெல்ட் மக்களுடைய சவால்களை எதிர்கொண்டார். எமது காலத்தில் வாழ்ந்த மிகச்சிறந்த பெரிக்கிளின் தலைவராகிய வின்ஸ்ரன் சர்ச்சிலும் (Winston Churchil) தன்னுடைய அரசியல் துணிவுக்கு ஏற்ற பலனை அனுபவித்தார். ஆனால் யுத்தகாலத்தில் பிரதம மந்திரியாக இருந்தபோது விஷேட பாதுகாப்பும் நீடிக்கப்பட்ட ஆட்சியும் வழங்கப்பட்டது. மறுபக்கத்தில்
18

பார்க்கப்போனால் பெரிக்கிள்ஸ்சின் ஆட்சியானது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வருட ஆட்சி முறையில் அமர்வதாக இருந்தது. அத்துடன் பொதுமக்கள் அபிப்பிராயத்தின்மூலம் குறைந்தளவு பத்துத் தடவையாவது அந்த ஆண்டு ஆட்சியில் மீண்டும் அமர்ந்தாலும் மக்களைப் பற்றி அவதூறாகப் பேச மறுத்தார்.இருந்தாலும் சந்தர்ப்பம் வரும் போது உண்மை நிலையை அவர்களுக்கு விபரித்து எவ்வாறு அத்தகைய ஆழ்நிலையில் ஈடுகொடுக்க வேண்டும் என்று புத்துமதி கூறினார். தங்களுடைய பீதிகள், குறுகிய சுயநலன்களுக்கு மேலாக எழுதும் படி தூண்டியதுடன் அவ்வாறு செய்ய ஊக்கமும் அளித்தார்.
ஏனைய சனநாயகத் தலைவர்களைப் போல் பெரிக்கிள்ஸ்சும் கொடூரமான அரசியலில் ஈடுபட்டு எல்லாவிதமான தாக்குதலுக்கும் ஆளானார். வருடம் பூராகவும் அரசியல் ஆசனத்தில் இருக்கும் போது உள்நாட்டு அரசியல் பிரச்சினைகளையும் வெளிநாட்டுப் போரையும் எதிர் கொண்டார், உள்நாட்டுப் பகைவர்கள் அவரை ஒருபக்கம் கொடுங்கோல் ஆட்சிபுரிபவர் என்றும் மறுபக்கம் கிளர்ச்சித் தலைவர் என்றும் குற்றம் சாட்டினார்கள். நகைச் சுவைப் புலவர்கள் பொது அரங்குகளில் அவரைத் தாக்கி வசைபாடினார்கள். அவரின் தலையின் அமைப்பையும், அவர் காதலித்த பெண்ணையும் நகையாடிக் கேலி செய்தார்கள். தன்காதலி, நண்பர்கள், சகாக்கள் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டார். தன்னுடைய காதலியைத் திருப்திப்படுத்த யுத்தத்தைத் தொடுத்தாகவும், மக்கள் மேல் கோழைத்தனமான தந்திரோபாயங்களை ஏற்படுத்தினார் எனவும் குற்றம் சாட்டப்பட்டார்.
எல்லாத் தடைகளையும் வெற்றிகரமாகத் தாண்டி வந்தாலும் பெரிக்கிள்ஸ்சின் வாழ்வு ஒருசோகமான திருப்பத்தை அடைந்தது. இறுதிக் காலத்தில் தான் வாழ்நாள் பூராகவும் செய்த வேலைகளின் பெறுமதியில் அவருக்கு ஐயப்பாடு ஏற்பட்டது. பயங்கரமான ஒரு போரில் ஏதென்ஸ் ஈடுபட்டபோது மக்களை அதில் பங்கேற்றுக் கொள்ளும்படி கூறினார். அச்சமயம் கொள்ளை நோய் ஏற்பட்டு மக்கள் தொகையில்
மூன்றிலொன்றைப் பலியெடுத்தது. தங்கள் துன்பங்கள் எல்லாவற்றுக்கும் பெரிக்கிள்ஸ் தான் காரணம் என்று கருதி அவரைப் பதவியிலிருந்து இறக்கினார்கள். எனவே சனநாயகத்துக்கு எதிரான வகையில் செயற்பட்ட பிளேட்டோ (plato) பெரிக்கிள்ஸ்சைப் பதவிநீக்கம் செய்தார். "தாங்கள் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட போதும் தாங்கள் பெரிக்கிள்ஸ்சுக்கு வெட்கக் கேடான தண்டனை எதுவும் விதிக்கவில்லை. ஆனால் அவர் தமது வாழ்க்கையின் இறுதிக் கட்டததில் தங்களைப் புனிதமாகவும், நல்லவர்களாகவும் ஆக்கியபோது அவரைமோசடிக்காரனாகக்குற்றம்சாட்டித் தூக்கிலிட எத்தனித்தார்கள்; அவரைப் போக்கிரி என நினைத்தார்கள்" எனப் பிளேட்டோ கூறினார்.
பெரிக்கிள்ஸ் பற்றியும், அவர் வழிநடத்திவந்த சனநாயகம் பற்றியும் பின்னவரின் கூற்றுக்கள் மெருகூட்டுவதுபோல் அமைந்து இருந்தது.
19

Page 13
பிளேட்டோவின் பெரிக்கிள்ஸ் பற்றிய மதிப்பீடு உண்மையில், பெரிக்கிள்சின் மரணத்துக்குப் பின்னர் முக்கியமாக ஏதென்ஸ் யுத்தத்தில் தோல்வி கன்டபின்னர் இரு சம்பவங்களும் வெறும் தோல்வி என்று சுலபமாகக் கருதக் கூடியதாக இருந்தது. ஏதேனியர்கள் தங்கள் சாம்ராஜ்யத்துடன் செல்வத்தையும், அதிகாரத்தையும் இழந்தார்கள். சிறிது காலத்திற்குள் தங்கள் சனநாயகத்தையும், சுதந்திரத்தையும் இழந்தார்கள். இருந்தபோதும் போரின் தோல்வியும், சாம்ராஜ்யத்தின் இழப்பும் பெரிக்கிள்ஸ்சின் முயற்சிக்குத் தோல்வி என்று கருதமுடியாது. அவரே இவ்வாறு நடைபெறும் என்று முன் கூட்டியே ஊகித்திருந்தார். யுத்தத்தின் இருண்ட காலத்தில் ஏதேனியர்களுக்கு யுத்தவிளைவினால் சோர்வடைய வேண்டாம் என்று அவரே கூறியுள்ளார்.
நாங்கள் எப்போதாவது விட்டுக் கொடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டிருப்போமானால் (ஏனென்றால் வளர்ந்து உயர்நிலைக்கு வந்த எந்தப்பொருளும் சிதைந்துபோகும்) எங்களது உயர்ந்த நிலைபற்றி ஞாபகம் தொடர்ந்து பிற்காலத்திலும் நிலைத்து நிற்கும். அதாவது நாங்கள் எல்லாக் கிரேக்கர்களையும் விடக் கூடுதலான கிரேக்கர் மேல் ஆட்சி செலுத்தி வந்தோம். அதாவது நாங்கள் கூட்டாகவோ அல்லது தனிமையாகவோ எதிரிகளுக்கு எதிராகப் பெரும் யுத்தங்கள் தொடுத்தோம். நாங்கள் வாழ்ந்த நகரமே புனைதிறன் வாய்ந்த நகரமாகவும் மிகப் பெரியதாகவும் இருந்தது. (2. 64. 3).
சனநாயகத்தில் காணப்படும் நம்பமுடியாத அம்சம் என்ன வெனில் அது சுதந்திரமாகவும், தங்களிலேயே தங்கியிருக்கக் கூடியதாகவும், சுய ஆட்சியுடையதாகவும் உள்ள குடிமக்களை உருவாக்கி அம் மக்கள் மேல் தங்கியிருக்கக்கூடியதாகவும் அமையவேண்டும். இப்படியான அமைப்பின் வெற்றிக்கு அசாதாரணமான தலைமைத்துவம் தேவைப்படுகின்றது. சமனற்ற பயிற்சி, அறிவு ஞானமுன்ள மக்களுக்குநாட்டின் ஆட்சிமுறையில் சமசந்தர்ப்பத்தை அது வழங்குகின்றது. மேலும் அது பெரும் பான்மையினருக்கு அதிகாரத்தை வழங்குகின்றது. இவ் அதிகாரங்கள் கல்வி கற்றவர்களைப் பொறுத்தமட்டில் குறைவாகவே உள்ளது. மேலும் அது பல கட்சிகளுக்கும், பிரிவினருக்கும் சுதந்திரமான ஆட்சிப்பொறுப்பை வழங்கி அதனால் ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும் வழிவகுக்கின்றது. முற்காலத்தில் சனநாயகத்தை "ஏற்றுக்கொள்ளத்தக்க மடைத்தனம்” (acknowledged foolishness) என்று கேலியாக விமர்சித்தார்கள். நவீன உலகில் சனநாயகம் திறனற்ற, பிரயோசனமற்ற, வலிமையற்ற, தகுதியற்ற ஓர் அமைப்பாகவும் வர்ணிக்கப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டில் கடினமான காலங்களிலும், ஆபத்தான வேளைகளிலும் மக்கள் நம்பிக்கை இழந்து தங்களுடைய சனநாயகத்தை இடதுசாரிகளினதும், வலதுசாரிகளினதும் கொடிய ஆதிக்கத்திற்குள் போக விட்டுவிட்டார்கள். ஜேர்மனியினுடைய வைமார் குடியரசு (Weimer
20

Republic) பாரிய பொருளாதார மந்தத்துக்குப்பலியாகிவிட்டது. இதற்குக் காரணம் சனநாயக அமைப்புக்கள் வேரூன்றப் போதிய நேரமின்மையே ஆகும். அத்துடன் அந்நாட்டு மக்களும் நெருக்கடியான காலகட்டங்களில் தங்கள் சனநாயகத்துக்குப் போராட விசுவாசம் அற்றவர்களாகவும் காணப்பட்டார்கள். அதாவது அவர்கள் கருத்தளவிலேயே தமது சனநாயகக் குடியரசுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள். ஆனால் இதய பூர்மாக அதனை மனதில் கொள்ளவில்லை. வைமார் சனநாயகம் தோல்வியடையப் பிரதான காரணம் யாதெனில் ஒரு சனநாயக நாட்டுக்குத் தேவையான நல்ல எதிர்காலத்தைக் காட்டக் கூடிய விழிப்புணர்ச்சியற்ற தலைவர்கள் இன்மையேயாகும்.
ஒரு தேசியவாதிக்குத் தேவையான நற்பண்புகள் எவை என்பதையும் பெரிக்கிள்ஸின் சொந்தக் குறிப்பிலிருந்து பெற்று துகிடிடெஸ் அறிவித்துள்ளார்.
"எதைச் செய்யவேண்டும் என்பதை முன் கூட்டியே அறிந்திருக்கவேண்டும். அத்துடன் அதனைப்பற்றிப்பிறருக்கு விளக்கத் தெரிந்திருக்க வேண்டும். தனது நாட்டில் பற்று வைத்திருக்கவேண்டும். ஊழல் அற்றவராக இருக்கவேண்டும். உலகிலே உருவாகிக்கொண்டிருக்கும் சிறிய சனநாயக நாட்டுத் தலைவர்களுக்கு இந்த நற்பண்புகள் தேவைப்படுகின்றன. மக்கள் மத்தியில் தேசப்பற்றினைப் பதியச்செய்தல், நாட்டின் யாப்பில் உற்சாகத்தை உண்டுபண்ணுதல் போன்ற கடுமையான பொறுப்புக்கள் அவர்களிடம் உண்டு. இது அவர்களை ஆபத்துக்களை ஏற்றுக் கொள்ளவும், தவிர்க்க முடியாத நெருக்கடிகளை எதிர் கொள்ளவும், தேவையேற்படும் போது தியாகங்களைச் செய்யவும் உதவுகின்றது. அதேவேளை மக்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும், கோபம், ஆசைகளை மட்டுப்படுத்தவும் மக்களை அமைதியாக இருக்க
வற்புறுத்தவும் உதவுகின்றது".
மக்களுக்கு வாழ்க்கை நெறிகளைக் கற்பிக்கவும் அவ்வாறு கற்பிப்பதற்கு வேண்டிய ஆற்றல் உடையவராக இருப்பதற்கு சனநாயகத் தலைவர் ஒருவரின் கடமைப்பாடு என்ன என்பதை உணர்த்தியது பெரிக்கிள்ஸ்சின் மதிநுட்பமாகும். உண்மையிலேயே அவர்களுடைய கொள்கைகள் ஏதேனியர்களுக்குச் செழிப்பையும் , சாம்ராஜ்யத்துக்குப் பல நன்மைகளையும் கொண்டு வந்தன. தனது நகரத்தின் மிகவும் தாழ்ந்த நிலையிலுள்ள குடிமக்களுக்கு சொந்தக் கெளரவம், புகழ், அவர்களின் தேவைகளை நிறைவேறச் செய்தல் போன்றவற்றைச்சாதாரண முயற்சிகள் மூலம் பெறுவதற்குரிய சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்ற நோக்குடையவராகக் காணப்பட்டார். இந்த எண்ணத்தை மக்கள் மத்தியில் பரப்பத் தனது ஆற்றலையும் செல்வாக்கையும் பயன்படுத்தினார்.
21

Page 14
எமது காலத்தில் சனநாயக நாடுகள் சிறப்படைய வேண்டுமாக இருந்தால் பொருளாதாரச் செழிப்பை வழங்குவதுடன் அதற்கு மேலாகவும் வழங்க வேண்டும். மக்கள் எந்தவிதமான கருத்தியலுக்கும் குற்றம் காட்டுகின்றவர்களாக இருந்தால் இந்நாட்டு மக்களின் தலைவர்களின் கடமைகள் எளிதாக இருக்காது. பெரிக்கிள்ஸ் மாதிரி இத்தலைவர்கள் தம்மக்களுக்கு ஆன்மீக, பொருள் விடயங்களில் திருப்தி வழங்கவேண்டும். இதனால் வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சவால்களைக் கூட்டாக எதிர் கொள்ளத் தமது சனநாயத்தில் நம்பிக்கை பெறுவார்கள்.
ஒரு யாப்பினைக் கொண்ட குடியரசு, சனநாயக பொதுவாழ்வில் பெரிக்கிள்சின் காலத்தில் வாழ்ந்த ஏதேனியர்கள் கொண்டிருந்த பகுத்தறிவு வாய்ந்த பல்லின அணுகுமுறை, அரசியல் சுதந்திரத்திற்கு அவர்களின் கடமைப்பாடு, சுய உரிமை முதலியன பண்டைய காலம் தொட்டு வந்த எந்தப் பண்பாட்டையும் விட எமது காலத்திலிருந்த விழுமியங்களுடன் ஒத்திருக்கின்றது. அதனாலேதான் பெரிக்கிளியன் காலத்து ஏதேனியர்கள் எங்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் எங்களுக்கிடையிலுள்ள ஒற்றுமையிலிருந்து அதிகம் கற்கவேண்டியிருந்தாலும் அதேவேளை எங்களுக்கிடையிலிருக்கும் வேற்றுமைகளிலும் அதிகம் கற்க வேண்டியிருக்கின்றது. ஏதேனியர்கள் எம்மைப்போல் செல்வத்தையும், உலோகாயிதப் பொருட்களையும் மதித்து வந்தாலும் பொருளாதார வாழ்வும் அந்தஸ்தும் சமூக சேவையை விடக் குறைந்தளவு புனிதமானது எனக் கருதினார்கள். தனிநபர் கெளரவத்தை அவர்கள் முதன் முதலில் அடையாளம் கண்டாலும் ஓர் ஒழுங்கான சமூக வாழ்வில் கலந்து கொள்வது, தங்களது ஆன்மீக தேவைகளைப் பூர்த்திசெய்வது போன்றன பற்றிச் சிந்தித்துப் பார்க்கவும் இல்லை. பெரிக்கிள்சின் சாதனைகளையும் அவருடைய நகரத்தையும் விளங்கிக்கொள்வதற்கு இந்த முக்கியமான வேறுபாடுகளை உணர்ந்து அவற்றைப் பணிவுடன் கற்றறிய வேண்டும். அவர்கள் பழமைவாதிகளாக இருந்தாலும் நாங்கள் மறந்துபோன அல்லது தெரியாமல் விட்ட, அவர்களால் நம்பப்பட்ட விடயங்களை அறிந்திருக்க வேண்டும். எங்களைவிட அவர்கள் புத்திசாலிகள் என்பதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
22

I எண்ணத் தோற்றம் (VISIONARY)
அரசியல்வாதிகளும் தேசியவாதிகளும் தங்கள் முழுக்கவனத்தையும் உடனடியாக இருக்கும் பிரச்சனைகளில் ஈடுபடுத்தினார்கள். ஆனால் பெரிகிள் சின் நீண்ட நாள் அரசியல் தலைமைத்துவம் அவரின் குறிக்கோள்களை அதற்கப்பாலும் இட்டுச் சென்றது. சொல்லிலும் செயலிலும் பெரிக்கிள்ஸ் உலக நிலைமைகளை அவ்வாறே ஏற்றுக் கொள்ளாமல் மனதில் உதயமாகின்ற எண்ணத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முயற்சி எடுக்கும் மிகவும் அரிதான மனிதர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். எதுவித ஐயப்பாடும் இல்லாமல் பெரிக்கிள்ஸ் தனது நகரின் மேன்மைக்கு சிந்தனைரீதியான செயல்வடிவம் கொடுக்க எத்தனித்தார். மனிதனுடைய வலிமைமிக்க ஆழ்ந்த உணர்வுகள், புகழ், அழியாமை, முழுமையாக நிறைவேற்றும் சந்தர்ப்பங்கள் என்பன மிகப்பெரிய அரசியல் சமூகத்தினை உருவாக்க முடியும் என்று கண்டார். சட்ட, அரசியல் சமத்துவம் என்ற அடிப்படையிலே ஒரு சனநாயக நாட்டின் மக்கள் இதைப் பெற முடியும் என்று பெரிக்கிள்ஸ் நம்பினார். அதே வேளை இதுவரை காலமும் தெரிந்திராத ஒரு வாழ்க்கைத் தரத்தை உருவாக்க உத்தேசித்தார். அதாவது அது ஒருவருடைய தனி விருப்பங்களைத் தேடிச் செல்ல அனுமதிக்கும் அதே வேளையில் தங்களுடைய விருப்பங்களை நகரத்தின் சேவைக்கு அர்ப்பணித்து உயர்ந்த குறிக்கோள்களை அடைய வழி வகுக்கின்றது.
முன்னர் மனித வாழ்வு பற்றிய இரு கருத்துக்கள் நிலவி வந்தன. பழைய அதிகார வர்க்கத்தினரின் கருத்து ஹோமரின் (Homer) இதிகாசக் கவிதைகளிலிருந்து பெறப்பட்டது. இது நூறு ஆண்டுகளுக்கு கிரேக்க சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தியது. ஸ்பாட்டாவினால் வழங்கப்பட்ட புதிய கருத்து ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் உருப்பெற்றது. ஆனால் உடனடியாகப் பலரின் சிந்தனையை ஈர்த்துப் பல நூற்றாண்டுகளுக்குக் கிரேக்கரின் கவனத்தைக் கவர்ந்தது. இவை இரண்டும், பெரிக்கிள்ஸ் சமர்ப்பித்த புதிய எண்ணக்கருவுக்குப் பெரும் சவாலாக விளங்கின. முன்னைய கருத்தைத் தன்னுடைய சொந்தத் தேவைக்கு மாற்றியமைத்ததுடன் பிந்தியதைத் தான் ஏதென்சில் அறிமுகப்படுத்திய புதிய சமூகத்திற்கு குறைவானது என்று நிராகரித்தார்.
நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வந்த ஓர் அமைப்பினைமுடிவுக்கு கொண்டுவருவதே பெரிக்கிள்சின்நோக்கம். இந்த நீண்டகால அமைப்பின் மூலம் இதுவரை காலமும் குடும்பம், சுற்றத்தார் இனம் போன்ற அடிப்படையில் இருந்த ஒரு சமூகத்தின் மூலம் இனத்துவேஷத்தினை திணிக்க எத்தனித்தது. பழைய ஒழுக்க மரபு ஹோமரின் இதிகாசங்களிலிருந்து வந்தது. இங்கே மதிப்புமிக்க விழுமியங்கள் வீரர்களுடையதாகும். ஆச்சிலஸ் (Archiles) தேசத்துக்காகவோ,
23

Page 15
இனத்துக்காகவோ ட்றோயில் (Troy) யுத்தம் புரியவில்லை. தன்னுடைய சொந்த நோக்கத்திற்காகவே யுத்தம் புரிந்தார். அதாவது கைப்பற்றப்பட்ட நகரங்களிலிருந்து பொருட்களைப் பெறுவதற்கும் "அறிற்றே" (arete) என்று ஹோமரினால் வர்ணிக்கப்பட்ட சிறப்புமிக்க வீரத்தை எடுத்துக்காட்டவும், இத்தகைய எடுத்துக்காட்டு மூலம் புகழை அடையவும் எண்ணினார். இதனால் ஹோமர் போன்ற கவிஞர்களால் இவருடைய பெரும் புகழினை சந்ததி சந்ததியாகப் பாடிவருவதால் இவருடைய பெயர் அழியாத இடத்தைப் பெறும். இலியட் என்ற நாடகத்தின் ஆரம்பக்காட்சியிலே அகாமெம் னொனின் (Agamemnon) பிடிவாதப் போக்கினால் ஆச்சிலஸ்சின் புகழும், கெளரவமும் மழுங்கப் பெற்ற போது ஆச்சிலஸ் யுத்தத்திலிருந்து விடை பெற்றுத் தனது கூடாரத்தில் படுத்திருந்தார். அதே வேளை நஷ்டத்தை விளைவிக்கக் கூடிய தோல்விகளைக் கிரேக்கர்கள் சந்தித்தார்கள்.
கிரேக்கர்கள் மனிதன் ஒரு அற்பமான படைப்பு என்பதை நம்பவில்லை. பிரபஞ்சத்தில் மனிதன் ஒரு தூசு என்றும் அவனின் இறப்பு கவனத்திற்கு எடுக்கத் தேவையில்லை என்பதனை நம்பவில்லை. அதற்குப் பதிலாக மனிதன் கடவுளின் அதே சாதியெனவும் அசாதாரணமான வகையில் சாதிக்கக் கூடியவன் என்றும் நம்பினார்கள். மரணம் ஒரு வரப்பிரசாதம், வேதனையும் சிதைவுமுற்ற வாழ்க்கையிலிருந்து சுவர்க்கத்திற்கு செல்லுதல் என்பதையும் நம்பவில்லை. மரணம்தான் முடிவு. அதற்கப்பால், அமைதியும் இருளுமே. எனவே ஹோமரின் நற்பண்புகளும் விழுமியங்களும், உலகளாவியவையும் ஒவ்வொருவருக்கும் சொந்தமானவை. துணிவு, பலம் இராணுவப்பலம் மெய்பிக்கவல்ல தந்திரம், அழகு, செல்வம் ஆகியன ஹோமரின் அறிற்றே (Arete) க்கு உதாரணங்களாகும். இவை எல்லாம் நன்மை, அதிர்ஷ்டம், சந்தோஷமான மனிதன் ஆகியவற்றின் சிறந்த தன்மைகளாகும். இவற்றில் சில முயற்சிகளினால் பெறப்பட்டன; ஏனையவை விதியின் பரிசில்கள்.
எட்டாம் நூற்றாண்டு கால அளவில்பொலிஸ் தோன்றியபோது அவற்றின் தேவைகள் பண்டைய வீரப் பண்பாட்டுடன் முரண்பட்டு காணப்பட்டது. அரசியல் சமூகமாகவும் தனித்துவமான அமைப்பாகவும் இருந்த பொலிஸ் அதே அமைப்புடைய சமூகங்களுடன் போட்டியிட்டதினால் அடிக்கடி போர் மூண்டது. இதிலிருந்து தப்பிச் செழிப்பாக இருக்கத் தனது குடிமக்களிடமிருந்து பயபக்தி, தியாகம் என்பனவற்றை எதிர்பார்த்தது. வரலாற்றிலே முதல்முறையாக ஓர்உண்மையான அரசியல்வாழ்க்கையைப் பொலிஸ் தோற்றுவித்தது.
அநேகமானவை பொலிஸ் அதிகாரவர்க்கம் அல்லது சிலராட்சிக்குரிய
அரசாங்கங்களை வைத்திருந்தது. அரச சபைகளிலே விவாதிக்கப்பட்டு
முடிவெடுக்கப்பட்ட சட்டங்களால் ஆளப்பட்டன. இச்சட்டங்கள் தங்களுக்கு
மத்தியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சபைகளாலும் நீதிபதிகளாலும்
24

நடைமுறைப்படுத்தப்படடன. மக்களால் அமைக்கப்பட்ட நீதிமன்றங்களால் சட்டத்திற்கு ஏற்றவாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. அநேக கிரேக்க நகரங்களைப் போல் பழைய ஏதென்சில் ஒரு பக்கம் சுதந்திரமனிதர், மறுபக்கம் ஓர் அடிமை என்ற அடிப்படையிலேயே அரசியலில் பங்குபற்றினார்கள். அரசியல் வாழ்க்கை மறுக்கப்பட்ட கிரேக்கர்கள் அந்த இழப்பை உணர்ந்தார்கள். மைதிலீனியன் கவிஞன் "அல்கேயியஸ்”நாடு கடத்தப்பட்டபோது அவன் முறையிட்ட இழப்பு அவனது வீடும் வயலுமல்ல. ஆனால் அவனது அரசியல் வாழ்க்கையையே நல்ல அழகாக பொதுமக்கள் மத்தியில் பேசுவதற்குக் கிடைத்த சந்தர்ப்பம் பொலிசினால் வழங்கப்பட்ட பரிசாகும்.
மேற்குறிப்பிட்ட நன்மைகளுக்கப்பால் பொலிசின் ஆரம்ப வீரர்களின் நாகரிக வாழ்வுக்குப் பொலிஸ் அவசியமாகத் தேவைப்பட்டது எனக்காட்டுவதற்கு எத்தனித்தார்கள். இதனால் உயர்ந்த தியாகம் அவர்களைச் சார்ந்ததாகும். ஆறாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்து ஏதேனியன் சட்டம் இயற்றுகிறவரான "சொலொன்” அநீதி, பிரிவினை, குழப்பம் ஆகியவற்றிக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு சிறந்த ஒரு பொலிஸ் ஆட்சியென வாதாடினார். ஆனால் இந்த முக்கியமான நன்மைகள் எல்லோருடைய ஆன்மீகத் தேவைகளையும் கவரவில்லை. மெய்வல்லுனர் போட்டிகளில் இந்த செல்வம்மிக்க அதிகாரிகள் வெற்றியீட்டிய போது கவிதைவடிவில் தங்கள் ஞாபகங்களைப் பேணுவதற்கு “பின்டர்” (Pindar) போன்ற கவிஞர்களுக்குப் பணம் கொடுத்தார்கள். பிரசித்தி பெற்ற கட்டடக்கலைஞர்கள், சிற்பிகளினால் அமைக்கப்பட்ட பொது ஞாபகச் சின்னங்களுக்கு உதவி செய்தார்கள். அவர்களில் செல்வமிக் கவர்கள் தங்களுடைய பெயர்களுக்கு அர்பணிக்கப்பட்ட தெய்வங்களுக்கு ஆலயங்களும் அமைக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் அநேக குடிமக்களுக்கு, சனநாயகமற்ற மாநிலங்களிலும் கூட இத்தகைய சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை.
சாதாரண மனிதன் எவ்வாறு கிளியோசை (Kl eos) அடைய முடியும். இதற்கு ஹெரடோட்டஸ் உவமையாக உண்மையாகவும், வரலாற்று ரீதியாக ஐயப்பாடாக இருக்கும் கதையொன்றைச் சொல்கின்றார். அக்கதையில் இருந்து சொலொன் சில விடைகளைத் தந்தார். லிடியன் (Lydian) ஆட்சியாளனான குறோசஸ் (Croesus) என்ற உலகிலே எல்லோரையும் விடச்செல்வமிக்க பணக்காரன் தனது பெயரை விடையாக எதிர்பார்த்துக்கொண்டு ஏதேனியன் ஞானியை "உலகிலேயே சந்தோஷமான நிலையில் இருக்கும் மனிதர் யார்” என்று கேட்டார். “ஏதென்சிலுள்ள ரெல்லஸ்" (Tellus of Athens) என சோலொன் பதிலளித்தார். இப்பெயரை குறோசஸ்சோ அல்லது ஏதென்ஸ்க்கு வெளியே உள்ள வேறொருவரோ கேட்டதிலை. குறோசஸ் ஏன் என்று கேட்டபொழுது அதற்கு சொலொனின் பதில் பின்வருமாறு அமைந்தது.
25

Page 16
செல்வச் செழிப்புடன் வாழ்ந்த ரெல்லஸ் உன்னதமான பிள்ளைகளுக்குத் தந்தையாக வாழ்ந்தார். எல்லாம் பிள்ளைகளுக்கும் பிள்ளைகள் பிறந்து அவர்கள் எல்லோரும் வளர்ந்து வருவதைக் கண்டார். செழிப்பான வாழ்க்கை வாழ்ந்த பின்னர் புகழ்ச்சியுடன் இறந்தார். எலியுசிஸ் (Eleusis) என்ற இடத்திலே ஏதேனியர்களுக் கிடையேயும் அய்லவர்களுக்கிடையேயும் நடந்த போரில் தனது சக குடிமக்களுக்கு உதவிபுரிந்து பகைவர்களை முற்றாக அழித்து மிகுந்தஉத்தமமான நிலையில் உயிர்நீத்தார். அவர் விழுந்து இறந்த அதே இடத்தில் பொதுமக்கள் மத்தியில் அடக்கம் செய்யப்பட்டார். (வழக்கமாக மரதனில் (Marathan) இறந்தவர்களுக்குத் தான் இதே மாதிரியான விஷேட கெளரவம் வழங்கப்பட்டது)
இக்கதை கிரேக்கப் பண்புகளைப்பற்றிக் கூறுகின்றது. சந்தோஷம் என்பது சாதாரணமான வசதிகள், நல்ல ஆரோக்கிய நிலை, நீண்ட ஆயுள், நற்பண்புகள் உள்ள குழந்தைகள் என்பதில் தங்கியுள்ளது. ஆனால் ஹெரடோட்டசின் கதையிலும் இத்தகைய புகழானது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் பெரிய சாதனை புரியக்கூடிய ஆற்றலும் சந்தர்ப்பமும் உடைய தனிநபர்களுக்கே உரித்தாகும். ஒரு சாதாரணமான குடிமகன் தன்னுடைய ஆன்மீக தேவைகளைத் திருப்திப்படுத்த பொலிசை நாடமாட்டான். தன்னுடைய சுயநலத்தையும் குடும்ப நலத்தையும் நாடிச் செல்வதில் காணும் திருப்தி ஒவ்வொரு மனிதரையும் சார்ந்தது.
பொலிஸின் இந்த அடிப்படைப் பிரச்சனையை இன்றும் கூர்மையான முறையில் ஸ்பார்ட்டாவைச்சேர்ந்த மக்கள் எதிர்கொண்டார்கள். இவர்கள் பெலோப் போனிசின் முழுச் சனத்தொகையில் மிகச் சிறிய சிறுபான்மையினராக இருந்ததுடன் லகோனியா (Laconia), மெசெனியா (Messenia) போன்ற பிரதேசங்களை ஆண்டுவந்தார்கள். விவசாயம், பால் பதனிடல், வியாபாரம், கைவினை, கைத்தொழில் போன்ற எல்லாப் பொருளாதார நடவடிக்கைகளும் உட்பட தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் வழங்கிவந்த சாதாரண வழி முறைகளையும் கைவிட்டார்கள். வர்த்தகத்திற்கும் தங்களுக்கு தேவையான எதனையும் தயாரிக்க ஸ்பாட்டானியர் லகோனியாவில் சுதந்திர சமூகங்களாக வாழ்ந்து வந்த பெரியோகோய் மக்களில் தங்கியிருந்தார்கள். இச்சுதந்திரமாக வாழ்ந்து வந்த குடிமக்கள் வெளிநாட்டுக் கொள்கையின் கட்டுப்பாட்டினை ஸ்பாட்டானியருக்கு வழங்கி ஸ்பாட்டனியரின் கட்டளைக்குக் கீழ் இராணுவத்தில் சேவை புரிந்தார்கள். தங்களுடைய உணவுக்குஸ்பாட்டானியர் ஹெலொட்ஸ் (helots) இல் தங்கியிருந்தார்கள். அடிமைகளாக இருந்த இவர்கள் ஸ்பாட்டானியரின்சனத்தொகையுடன் ஒப்பிடும்போது ஏழுக்குஒன்று என்ற விகிதத்தில் அவர்களை விட கூடுதலாக இருந்தார்கள். இவர்கள் தங்கள் எஜமானர்களை மிகவும் இழிவாக
26

வெறுத்தார்கள். நான்காம் நூற்றாண்டு எழுத்தாளர் “சினொபொன்” (Xenophon)கூற்றுப்படி இவர்கள் தங்கள் எஜமானர்களைச் சந்தோஷமாக அவிக்காமலே (raw) சாப்பிட்டிருப்பார்கள் (Helenica3.36). காலத்திற்கு காலம் ஹெலொட்ஸ் ஸ்பாட்டானியரை அழிப்பதற்காக அச்சுறுத்திக் கொண்டு புரட்சியில் இறங்குவார்கள்.
இந்த அச்சுறுத்தலைச் சமாளிக்க ஸ்பாட்டானியர்கள் தங்களுடைய பொலிசை இராணுவக் கூடமாகவும் இராணுவப் பாசறையாவும் மாற்றித் தங்கள் வாழ்க்ைைகயில் சந்தோஷத்தைக் கைவிட்டுத் தங்களை முழுமையாகத் தேசத்திற்கு அர்ப்பணித்தார்கள். பொலிஸ்க்கு மேல் அவர்களுக்கு இருக்கும் விசுவாசம், பக்தியினை எதுவும் தடை செய்ய முடியாது. ஆகவே அவர்கள் மறைவாகச்செய்யும் காரியங்களை நிராகரித்து ஸ்பாட்டானிய வகுப்பினரின் மேல் ஒரு கடுமையான பொருளாதாரச் சமத்துவத்தை நடைமுறைப்படுத்தி, குடும்பசுதந்திரத்தை, பிள்ளைகளுக்கு மேல் அவர்களுக்கு இருக்கும் கட்டுப்பாட்டினை நீக்கித் தனிநபர் குறிக்கோள்களைத் தேசத்தின் குறிக்கோள்களுக்கான கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்தார்கள். அவர்கள் பணம், கலை, விஞ்ஞானங்கள், மெய்யியல், நுண்கலையில் பெறும் சந்தோஷம், பொதுவாக மனப்போக்கு ஆகியவற்றினை மக்களிடமிருந்து விலக்கி வைத்தார்கள். இவை பொலிஸ்சிடமிருக்கும் விசுவாசத்தினை ஈர்த்தெடுத்துத் தனித்துவத்தை நிலைநாட்டும் என்னும் காரணத்தினால் அவ்வாறு செய்தார்கள். அவர்களுடைய தேசியக் கவிஞர் றைரேயஸ் (Tyrtaeus) விசேடமாக ஹோமரின் விழுமியங்களை நிராகரித்து அதற்குப் பதிலாக அறற்றேக்கு ஒரு தனிவரைவிலக்கணத்தை மாற்றியமைத்தார்கள். ஸ்பாட்டாவுக்காகப் போரிடும் அணியில் பயமில்லாமல் துணிந்து நின்றார்கள்.
ஸ்பாட்டன் வாழ்க்கைமுறைவேறு கிரேக்கர்களையும் கவர்ந்தது. ஆனால் எவராவது அந்த முறையினை மேற்கொள்ளவில்லை. சிமொன் (Cimon) தனது வாழ் நாள் பூராகவும் ஸ்பாட்டானியரின் பொலிஸ்சை புகழ்ந்து இயன்றளவு ஏதென்சில் மற்றவர்கள் பின்பற்றம் வகையில் அதை எல்லோருக்கும் காண்பித்தார். இவ்பியால்ரஸ் (Ephialtes), பெரிக்கிள்ஸ் ஆகியோருக்குக் கீழ் இருந்து ஏதேனியரின் சனநாயகத்தை விரிவாக்கும் விடயத்தில் எற்படும் முரண்பாட்டினை சிமொனின் ஆதரவாளர்கள் புதிய சனநாய ஆட்சியுடன் ஒப்பிட்டார்கள் என்பதை நாங்கள் நிச்சயமாக கூறலாம். ஸ்பாட்டாவின் முறைமையானது அதிகாரவர்க்கத்தில் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தது. இவ் இளைஞர்கள் விளையாட்டரங்கில்சோக்கிரடிஸ் உடன்உரையாடினார்கள். பிளேட்டோ போன்ற மெய்யியலாளர் தங்கள் யூதோப்பியன் (Utopians) ஆட்சிமுறைகளை ஸ்பாட்டாவில் உருவாக்கியபோது தங்களுடைய யாப்பானது ஏதேனியரின் சனநாயகத்துக்கு மாறனது என்று கருதும் அளவுக்கு ஒரு பாரம்பரியத்தைக் கட்டி எழுப்பினார்கள்.
27

Page 17
ஒரு பிரத்தியேகமானதும் தனித்துவமானதுமான சூழ்நிலையில் ஸ்பாட்டாவுக்குக் கொண்டு வரப்பட்ட வேண்டப்பட்டதுமான வாழ்க்கை முறையினை உண்மையில் வேறெவரும் அமைக்க மாட்டார்கள். இந்த வாழ்க்கை முறை பிறந்த போது அது திறந்த சனநாயக சமூகமாக ஏதென்ஸ் மாறிய போது இருந்த சமூக அமைப்புடன் ஒத்திருந்தது. ஏதெனியரைப் பொறுத்தமட்டில் ஹோமர் பாடிய தனி, குடும்ப பண்புகள் முக்கியமாகவும் கவர்ச்சியானதாகவும் தொடர்ந்திருந்தது. அவ்வாறு இருந்தும் அவர்களின் பொலிசுக்கு பேஷியாவின் படையெடுப்பு சவாலை சந்திக்கும் கடமைப்பாடும் விசுவாசமும் தேவைப்பட்டது. ஆனால் பயங்கரமான புரட்சிகளுக்குத் தொடர்ச்சியாக பயப்படாத சுதந்திரமான சனநாயக மக்களுக்கு தங்களுடைய சொந்த வேலைகளை சமூகத்தின் தேவைகளுக்காக நிரந்தரமாக பணிய வைக்க வேண்டும் என சொல்ல முடியாது. தேவையான விசுவாசத்தைப் பெறுவதற்கு நகரம் அல்லது அதன் தலைவர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள் போன்றோர் நகரத்தின் தேவைகள் மக்களின் தேவைகளுடன் ஒத்துப் போகின்றது என்பதைக் காண்பிக்க வேண்டும். அதாவது ஒருவருடைய சொந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு நாடு தேவைப்படுகிறது. பெரிக்கிள்சின் பெருமையை விளக்க சிறந்த அத்தாட்சியாதெனில் நாட்டினதும் மக்களினதும் அபிலாஷைகள் ஒன்றின் மேல் ஒன்று தங்கியுள்ளது என்பதனை விளக்கும் ஆற்றலிலே தங்கியுள்ளது.
ஒரு சுதந்திர சமூகத்திலுள்ள ஒரு பிரசை நான் ஏன் எனது நாட்டுக்காக எனது வாழ்வினை அர்ப்பணிக்க வேண்டும் என்று கேட்பதற்கு உரிமை உள்ளவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுடைய அடிப்படை யானதும் மிகவும் அவசியமானதுமான கடமைப்பாடு யாதெனில் தனது சொந்த நாட்டுக்கு இராணுவச் சேவை புரிவதற்கு விருப்பம் இருக்க வேண்டும். அப்படி இருந்தும் ஹோமெரிக் (Homeric) பரம்பரையில் வளர்ந்து வந்த ஓர் ஏதேனியன்தான் எவ்வாறு கிலோசை அடையமுடியும்; அதனால் எப்படி அழிவில்லாத நிலையைப் பெறச் சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற கேள்விகளைக் கேட்கக் கூடும். இந்த வினாக்களுக்கெல்லாம் பெரிக்கிள்சிஸ் விடைகளை ஐந்து ஆண்டு நடந்த பெலோபொனேசியன் போரின் முடிவில், இறப்பதற்கு இரு ஆண்டுக்ளுக்கு முன் 431 - 30 காலத்தில் மரண வைபவத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவில் காணலாம். ஏதேனியன் சனநாயகத்திற்கே தனித்துவமான இத்தகைய அமைதியான ஞாபகார்த்த நிகழ்ச்சிகள் அரசியல் பரிமாணம் உடையது. காரணப் பேச்சாளர் ஆனவர் தீர்ப்புகள் வழங்குவதில் நியாயமாகவும் ஒழுக்கத்தில் முன்னிலையிலும் இருக்கும் மனிதன் என்ற அடிப்படையில் பொலிஸினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்ஆவர் (Thucydides 2.34.6). மேலும் தான் நெறிப்படுத்திய சாமியன் யுத்ததின்போது பெரிக்கிள்ஸ் மரணச் சொற்பொழிவை ஆற்றினார். பெலோபொனேசியன் யுத்தத்தின் முதல் ஆண்டில் பெரிக்கிள்ஸ் எதுவித பங்கும் ஏற்கவில்லை. ஒரு பொதுமேடையில் பேச்சாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அது
28

அவருடைய நிலை, மதிப்பு, அரசியலாற்றல் ஆகியவற்றிற்கு வழங்கப்பட்ட கெளரவமாகும்.
யுத்த காலத்தில் வழங்கப்பட்ட பெரிக்கிள்சின் மரணச்சொற்பொழிவானது அது சில காலங்களுக்குத் தொடரப் போவதை எடுத்துக் காட்டியது. இறந்தவர்களை போற்றுவதை விட மிகமுக்கியமாக இருக்கும் அவரின் சொற்பொழிவின் நோக்கமானது ஏன் தங்களுடைய உயிர்களைத்தியாகம் செய்யும் உரிமை உள்ளவர்களாக இருந்தார்கள் எனவும் இன்று இருப்பவர்கள் அவ்வாறே செய்ய வேண்டும் என்பதையும் விளக்கியது. இந்த அடிப்படையில் உற்றுநோக்குவோமானால் அவருடைய சொற்பொழிவு1863ஆம் ஆண்டுகெற்றிஸ்பேக்கில் (Gettysburg)ஆபிரகாம் லிங்கன் ஆற்றிய உரையை ஒத்ததாகும். தான் கடைப்பிடிக்கும் கொள்கையின் பெருமைக்கு எதிராக கேட்கப்பட்ட அதே கேள்விகளுக்கு மிகத் திறமையாக, அதே சமயம் மிகுந்த துணிவுடன் லிங்கன் பதிலளித்தார். "அமெரிக்கா என்ற புதிய தேசம் சுதந்திரததில் உருவாக்கப்பட்டு, எல்லா மக்களும் சமன் என்ற கோட்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. வெற்றி என்பது "சுதந்திரத்தின் புதிய பிறப்பாகும்". அததுடன் "மக்களின் அரசாங்கம், மக்களால் ஆன அரசாங்கம், மக்களுக்கான அரசாங்கம்" பூமியில் இருந்து அழிந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். போரிலே உயிர்நீத்த போர்வீரர்களின் நோக்கம் யாதெனில் யாப்பையும் வாழ்க்கை முறையினையும் பேணுவதாகும். இதையே முழுமையாக பெரிக்கிள்ஸ் செய்தார். அவ்வாறு செய்யும் போது ஏதென்ஸ்க்குத் தனது கனவினைச் சமர்ப்பித்தார். அத்துடன் ஏதென்ஸ் அதன் தனித்துவ யாப்பும், அதன் வாழ்க்கை முறையும் எத்தகைய குடிமக்களை உருவாக்கும் என்று கனவு கண்டார். அந்த யாப்பு ஸ்பாட்டானியரின் வாழ்க்கை முறையினைத் தெளிவாகக் காட்டியது. இந்த வாழ்க்கை முறையினைக் கிரேக்கர்கள் ரசித்தார்கள். ஆனால் இந்த வாழ்க்கை முறையினைத் தான் காட்டிய ஏதென்ஸ்சுக்குக் குறைவானது என்று பெரிக்கிள்ஸ் கருதினார்.
முதலில் அவர் சொன்னார், "எந்த நடைமுறைகள் மூலம் நாங்கள் தற்போதைய நிலைக்கு வந்துள்ளோம்" என்று அவர் முதலில் குறிப்பிட்டார். எந்த அரசியல் யாப்பின் மூலம், வாழ்க்கைமுறை மூலம் எங்கள் நகரம் உயர்நிலை அடைந்தது. இதற்குப் பொறுப்பாகவுள்ள நிறுவனங்கள் எதென்ஸ்சிலேயே முழுமையாக உருவாக்கப்பட்டன.அவை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்தன. உண்மையில் இந்நிறுவனங்கள் சனநாயக செயற்பாடுடையவை. ஆனால் அது எதைக் குறிக்கின்றதென்பதற்குப் பெரிக்கிள் சின் விளக்கம் யாதெனில் சனநாயகத்தின் பகைவர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்கங்களை வாதிட்டு நிராகரித்தன.இத்தகைய எதிரியைச் சார்ந்த விளக்கங்களானது சமத்துவத்திற்கும் அதன் மிதமிஞ்சிய கடமைப்பாட்டுக்கும் அலுவலகங்களில் பெருமளவில் பகிர்ந்தளித்தலில் உள்ள மடைமைத்தனத்தைப் பற்றி முறையிடுதல், அரசஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் உள்ள தீமைகள்
29

Page 18
சனநாயகக் கொள்கையில் இருக்கும் குறைபாடுகள் முதலியவற்றை வலியுறுத்துதல் என்பதாகக் காணப்பட்டன.
சனநாயகமானது அநீதியான முறையில் "சமமானவற்றைச் சமமான தரத்திலும் சமனற்ற தரத்திலும் இருப்பவர்களுக்குப் பகிர்ந்தளிக்கின்றது" என்பதை பிளேட்டோ வலியுறுத்தினார். பின்னர் அரிஸ்டோட்டில் சனநாயங்களில் நீதியானது "கணித சமத்துவத்தை ரசித்து மகிழ்வது என்றும் திறன் அடிப்படையில் விகிதாசார சமத்துவத்தை ரசித்து மகிழ்வது அல்ல” என்றும் கோரினார். ஒரு நெறிதவறிய தனியாள்வாதத்தை சுதந்திரமென்றும் ஆனால் அது உண்மையில் துஷ்பிரயோகமும், நீதி நியமங்களில்லாதது என்றும் சனநாயகத்தின் விமர்சனங்களில் சுட்டிக்காட்டியுள்ளார்கள். பிரசைகள் மத்தியில் சீரான நல்லொழுக்கம் இல்லை என்பது பற்றியும் முறையிட்டார்கள். இப்பிரசைகள் பல செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டு எதிலும் உருப்படியானதைச் செய்யவில்லை என்றும் அவர்களுடைய இராணுவ ஆற்றலானது எதிர்விளைவுகளைத் தரக்கூடியன என்றும் முறையிட்டார்கள். ஏதேனியரின் யாப்பானது தோல்வியில் முடிந்தது என்று விமர்சகர்கள் அவதானித்தார்கள். இதற்குக் காரணம் ஸ்பாட்டானியர் யாப்புச் செய்தமாதிரி ஏதேனியரின் யாப்பானது தனது பிரசைகளின் மேல் பொதுமுத்திரை பதிக்கவில்லை என்பதாகும். பிளேட்டோவின் அவதானிப்பின்படி ஏதேனியரின் சனநாயகத்தினால் வழங்கப்பட்ட சுதந்திரமானது மக்களுக்கு மகிழ்ச்சிகரமானது எனத் தோன்றினாலும் தனது சொந்தக் கணிப்பின்படி அது சிநேகிதமற்றதாக இருந்தது. சனநாயமானது "ஒரு ஏற்றுக் கொள்ளக்கூடிய தன்னாட்டு முறையான சமூகம். அதில் பல தன்மைகள் காணப்படுவதுடன் மக்கள் எல்லாரும் சமமான மட்டத்தில் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? எல்லோரையும் சமமாக கணிக்கின்றது" ஆகும்.
மனிதன் இன்பங்களை நாளுக்குநாள் அனுப்பவித்துவாழ்ந்து வருகிறான். சில வேளை மதுவில் மூழ்கி இசையை ரசிக்கின்றான். பின்பு நீரை அருந்தி உடல் மெலிகின்றான். பினினர் உடற்பயிற்சியில் ஈடுபடுகிறான். சில வேளை சோம்பித திரிந்து எதிலும் அக்கறைகாட்டாமல் அலைகின்றான். பின்பு ஒருதத்துவ ஞானியின் வாழ்க்கை வாழ்கிறான். அடிக்கடி அரசியலில் ஈடுபடுகிறான். பின்னர் எழுந்து நின்று தலையில் என்ன தோன்றுகின்றதோ அதை சொல்கிறதும் செய்கிறதுமாகஇருக்கிறான். யாராவதுபோர்வீரரைக்கண்டால் தானும் அந்ததி திசையில் செல்வான். அல்லது வியாபாரத்திலுள்ளவர்களைக் கண்டால் அதேமாதிரித தானும் செய்வான். அவனுடைய வாழ்க்கையில் சட்டமோ
ஒழுங்கோ இல்லை. இந்தஒழுங்கற்றகுழப்பமான வாழ்வினைச் சந்தோஷம், இன்பம், சுதந்திரம் என்று குறிப்பிட்டு அந்த alysis) Gstaairpmsby (Republic 561 c).
30

பிளேட்டோவும் அரிஸ்ரோட்டிலும் பெரிக்கிள் சின் மரணத்திற்கு நெடுங்காலத்திற்குப்பின்னர் எழுதினார்கள். அவர்களின் இந்த விபரிப்புகள் எதுவித ஐயப்பாடும் இல்லாமல் உண்மையான ஏதேனியன் சனநாயகத்திற்கு எந்தக் காலத்திற்கும் பொருந்த முடியாததாக அமைகின்றது. ஆனால் அவை சமகாலவிமர்சனங்களைப் பிரதிபலிக்கக் கூடியதாக உள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தைப் பெரிக்கிள்ஸ் பயன்படுத்தித் தான் மனதில் வைத்திருந்ததைத்தான் நகரம் எதிர் கொண்டது என்பதைக் காண்பித்தார். பெரிக்கிள்சின் மரணச் சொற்பொழிவுகளில் எடுத்துக் காட்டியவை உயர்ந்த இலட்சியங்களைக் கொண்ட உருவங்களும் நிகழ்வுகளுமாகும். இவை பின்னர் ஏதேனியரின் சமூகத்தில் இருண்ட கவர்ச்சியற்ற பகுதியைக் காண்பிக்கும். ஆனால் மரணச்சொற்பொழிவுகள் தங்கள் தற்கால முயற்சிகளை நியாயப்படுத்தி ஏதென்ஸ் மக்களை ஊக்குவிக்கும் நோக்குடையதாகவே அமைந்துள்ளது. யுத்தம் புரிவதற்காக எடுத்த தீர்மானமும் கடும் அரசியல் தாக்கத்துக்கு மத்தியில் பெரிக்கிள்ஸ் எடுத்த யுத்த தந்திரமும் தாங்கள் தொடுத்த யுத்தத்தை நியாயப்படுத்துவதற்கே எனலாம்.
போட்டி, மேன்மை அல்லது திறன், அழியாத புகழ் போன்றவற்றை வலியுறுத்திய வீர மரபின் சவாலினை மரணச் சொற்பொழிவுகளின் ஒரு பகுதி சந்தித்தது. இந்த உயர்வர்க்க விழுமியங்களைக் கொண்ட தங்களுடைய வலிமைமிக்க கவர்ச்சியினை கிரேக்கர்கள் ஒருபோதும் இழந்ததில்லை. பெரிக்கிள்ஸ் இவற்றை ஏதேனியரின் சனநாயத்திற்குச் சொந்தமானதென உரிமை கொண்டாடினார். சனநாயகமானது தனது முதுகினை திறமையின் பக்கம் திருப்பியது என்றும் எல்லாவற்றையும் கீழ்மட்டத்திற்கு தள்ளிவிட்டது என்ற கருத்துக்களையும் நிராகரித்தார். அதற்குப் பதிலாக அது திறமைக்கும் கெளரவத்திற்கும் போட்டியினை ஏற்படுத்தி மற்ற யாப்புகளிலும் சமூகங்களிலும் உள்ள தற்செயலான தடைகளையும் நீக்கியது. சமகால விமர்சகர்களின் முக்கிய குற்றச்சாட்டாகிய அரசு சேவைக்கு பணம் ஒதுக்குதல், சம்பளம் வழங்குதல் பற்றி நேரடியாக எதுவும் பெரிக்கிள்ஸ் கூறவில்லை. இவை எல்லாம் அரசியல் வாழ்வில் பங்குபற்றி பொலிசுக்குச் சேவை செய்வதில் உள்ள எல்லோருடைய வினைத்திறனையும் வெளிக் கொண்டு வருவதக்குரிய ஒரே மார்க்கமாகும்.
எங்கள் நகரம் சனநாயக நகரம் என்று அழைக்கப்படுவதற்குக் காரணம் ஒரு சிலராலன்றிப் பலரால் ஆட்சி செய்யப் படுவதாலேயே ஆகும். பிரத்தியேக சர்ச்சைகளைப்பொறுத்த வரையில் சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம். ஆனால் அது பொது மக்கள் கெளரவமாக இருந்தால் அவனுடைய வர்க்க அடிப்படையில் இல்லாமல் அவனுடைய நல்ல பண்பும் அவனுடைய திறமையும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு மனிதனும் விரும்பப்படுகிறான். எவனாவது தன்னுடைய
31

Page 19
நகரததறிகு நன்மை செய்ய வேணி டும் எனறு நினைத்திருந்தால் அந்த எண்ணம் நிறைவேறுவதற்குக் காரணம் வறுமையும் அவனுடைய எளிய ஆரம்பமுமாகும் (Thucydides 2.37.1).
வறியவர்கள் சுதந்திரமில்லாமல் இருப்பதற்கு காரணம் அவர்களின் வறுமை அவர்களுக்கு ஓய்வு நேரத்தை மறுக்கின்றது என்றும் இதனால் பொது வாழ்வில் கலந்து கொள்ளச் சந்தர்ப்பம் அவர்களுக்கு இல்லை என்றும் அதிகாரவர்க்கத்தினர் நம்பினார்கள். பெரிக்கிள்சினால் ஏதென்சில் பொதுவான செழிப்பு, அரசசேவையினருக்குச் சம்பளம் வழங்குதல் போன்றனவும் மற்றும் மானியங்களை விடச் சாதாரண மனிதனுக்கு ஓரளவுக்கு ஓய்வு வழங்கினார். எனவே பெரிக்கிள்ஸ் பொதுவாழ்வினை இவ்வாறு குறிப்பிடுகிறார் “பொதுவாழ்வினை நாங்கள் சுதந்திர மக்களாக நடத்தி வருகிறோம்" ஒருவர் தன்னுடைய பொருளியல் நோக்கத்தை நாடிச் செல்வதைப் பொறுத்து அரசியலில் கலந்து கொள்வதைப் பணக்காரனுக்கோ ஏழைக்கோ தடை விதிப்பதில்லை.
அதே மக்கள் தங்களுடைய சொந்த பிரத்தியேகமான வியாபாரங்களிலும் அரசியல் விடயங்களிலும் கூடுதலான கரிசனை உடையவர்களாக இருக்கிறார்கள். தங்களுடைய கவனத்தைத் தங்களுடைய சொந்த விடயங்களுக்குத் திருப்பினால் அரசியல் அபிப்பிராயங்கள் அற்றவர்கள் என்று கருதமுடியாது. அரசியலில் ஈடுபாடு இல்லாத ஒருவரைத் தன்னுடைய சொந்த விடயத்தில் கவனத்தைச் செலுத்துபவர் என்று கருதாமல் அவர் ஒரு பிரயோசமில்லாதவர் என்று நாங்கள் மட்டும் கருதுகிறோம். பொதுமேடையில் தோன்றும் வினாக்களுக்கு நாங்களே தீர்மானம் எடுக்கிறோம். அத்துடன் அவற்றைப் பற்றி ஒரு தீர்மான விளக்கத்திற்கும் வருகின்றோம்.
எனவே ஏதேனியர்களின் சனநாயகத்தைப் பற்றி பெரிக்கிள்ஸ் கூறுவது யாதெனில் அது எல்லாக் குடிமக்களையும் அரசியல் வாழ்வில் பங்குபற்றும் படி வேண்டியதுடன் அதன் மூலம் தங்களுடைய தலையெழுத்தினைக் கட்டுப்படுத்தி ஓர் உன்னத நிலைக்கு உயர்த்துகின்றது. மேலும் பெரிக்கிள்ஸ் தன்னுடைய நகர மக்களுக்கு ஓர் அதிகாரவர்க்கத் தன்மையினைக் கோருகிறார். இதனைப் பின்வருமாறு விளக்குகிறார். "நாங்கள் எங்களுடைய உன்னதமான நிலையில் மற்றவர்களிடமிருந்து வேறுபாடுள்ளவர்களாக இருக்கிறோம். காரணம் நாங்கள் பிறரிடம் இருந்து உதவிகளைப் பெறாமல் பிறருக்குச் சேவை செய்தே நண்பர்களை ஈர்க்கின்றோம்". இறுதியாக ஏதென்ஸ் குடிமக்களுக்குக் கிடைக்கும் பலதரப்பட்ட வசதிகளில் பெரிக்கிள்ஸ் களியாட்டம் புரிகிறார். இது புளூட்டோவுக்கு வெறுப்பை உருவாக்கின்றது. ஆனால் இது அதிகாரவர்கத்திலுள்ளவர்களின் தன்மைகளில் ஒன்று என்பதை ஞாபத்தில் வைத்திருக்க வேண்டும்.
32

கிரேக்க நாட்டில் உன்னத நிலையில் உள்ளவர்கள் எல்லாவற்றையும் பொழுது போக்காகக் கொண்டு வாழ்பவர்கள், பல விதமான கைவினையிலும் , இசை, மெய் வல்லுனர் ப் போட்டி, யுத்தம் , முதலியவற்றிலும் ஆற்றலுள்ளவர்கள். ஆனால் தொழில் ரீதியாக ஒன்றிலும் முழு மனத்துடன் ஈடுபடுவதில்லை. புளுட்டோவின் கருத்தாகிய ஒவ்வொரு மனிதனும் தனக்குப்பொருத்தமானவற்றையே செய்ய வேண்டும் என்பதனையே ஏதென்ஸ் வாழ் மக்களும் செய்வார்கள் என்று பெரிக்கிள்ஸ் விபரித்துள்ளார்.
இந்த அதிகாரவர்க்கத்தினரின் நற்பண்புகளினால் வழங்கப்பட்ட வெகுமதிகள் இதிகாச வீரர்களினால் நாடப்பட்ட அதே நற்பண்புகளாகும். பெருமை, அதிகாரம், கெளரவம், புகழ் பெரிக்கிள்சைப் பொறுத்த மட்டில் இந்தப் பரிசுகளைப் பெறுவதற்கு ஏதென்சும் போட்டியாளர்களாவார். ஆனால் இவை எல்லாம் சனநாயக ஏதென்சின் மக்களால், மக்களுக்காக வெற்றிகொள்ளப்பட்டன. இந்தக் கூட்டுச் சாதனையின் உயர்கரத்தினை வலியுறுத்த தயங்குவதில்லை. இதன் புகழினை உறுதிசெய்ய ஓர் இதிகாச கவிஞர் தேவை என்பதனை நிராகரிக்கின்றார்.
எங்களுடைய அதிகாரம் பற்றி நாங்கள் பெரும் சாட்சியங்களை வழங்கியுள்ளோம், இதற்கு இல்லை என்று கூறமுடியாது. நாங்கள் இன்றும் வருங்காலததிலும் அதிசயமான பொருட்களாகவே இருக்கிறோம். எங்களைப் புகழ்வதற்கு எங்களுக்கு ஒரு ஹோமர் தேவையில்லை. அல்லது அற்ப நேரததிற்கு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வேறொருவரின் சொற்கள் தேவையில்லை. ஆனால் உண்மை. அவர்களுடைய கூற்றுகள் நம்பிக்கையற்ற னவாகிவிடும். இதறகு மாறாக ஒவவொரு கடலையும், நிலததையும் எங்களுடைய துணிவுக்கு ஒரு வாசலாக வர நிர்ப்பந்தித துள்ளோம். அததுடன் எல்லா இடங்களிலும் எங்கள் பகைவாகளுக்கு நாங்கள் செய்த தீங்குகளுக்கும் எங்கள் நணிபர்களுக்கு நாங்கள் செய்த நன்மைகளுக்கும் ஞாபகச் சின்னங்கள் அமைத்துள்ளோம். (2.41.4)
அதிஉயர்ந்த பரிசு யாதெனில் முன்னர் இதிகாச வீரர்களுக்கென்றே ஒதுக்கிவைத்த ஒரு வித அழிவில்லாத பரிசானது தற்போது தங்கள்நகருக்கு சேவை செய்து உயிர்நீத்த ஏதேனியப் போர் வீரர்களுக்கு வழங்கப்படுகின்றது. பெரிக்கிள்ஸ் இந்தப் பரிசினை உயிருடன் இருப்பவர்கள் பெறவேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுள்ளார்.
பொது நன்மைக்காகத தங்கள் உயிரைக் கொடுதது புகழ்ச்சியைப் பெற்றார்கள். இப்புகழ்ச்சிக்குக் காலம் போகப் போக வயது ஏறிக் கொண்டு செல்லாது. அத்துடன் எல்லாச்
33

Page 20
சமாதிகளிலும் பார்க்க மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளது இவர்களின் சமாதியே. மேலும் இப்புகழ் என்றும் அழியாமல் மனதில் இருந்து, சரியான சந்தர்ப்பத்தில் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருக்கும் போதும் உற்சாகத்தைக் கொடுக்கும். காரணம் முழு உலகமும் புகழ் பெற்றவர்களுக்குப் புதைகுழியாகும். சமாதியில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகமானது தமது சொந்த நாட்டில் மாததிரமல்ல தங்களுக்குச் சொந்தமில்லாத நாடுகளிலும் ஒவ்வொரு வருடைய மனத்திலும் நிலைத்திருக்கும். ஆகவே நீங்கள் இதைப் பின்பற்ற வேண்டும். சந்தோஷத்திற்கு சுதந்திரம் வேண்டும். சுதந்திரத்திற்குத் துணிவு வேண்டும். யுத்த ஆபத்துக்களிலிருந்து பின் வாங்க வேண்டாம். (2.43.2-4)
இதற்கு முன்னர் நல்ல நிலையில் இருந்த சிலருக்கு ஒதுக்கப்பட்டிருந்த நன்மைகளை சனநாயக ஏதென்சிலுள்ள எல்லா மக்களுக்கும் கிடைக்கும் என்று காண்பித்த வீரமரபின் சவால்களைப் பெரிக்கிள்ஸ் சந்தித்தார். ஏதேனியர்களின் சனநாயகமானது மரபு வழியிலுள்ள திறமையை உட்சாகப்படுத்தி அதற்குப் பரிசாக வெற்றிப்புகழின் அழியாத தன்மையை வழங்கும்.
சனநாயகத்துக்கு உடனடியான சவால் ஸ்பாட்டாவிடமிருந்து வந்தது. ஸ்பாட்டாவின் இராணுவ பலம் கிரேக்கர் மத்தியில் உள்ள மரபுவழியாக வந்த தலைமைத்துவம், கிரேக்க குடிமக்களால் எடுத்துக்காட்டிய ஒழுக்கம், பொதுமக்கள் மேல் வைத்திருக்கும் அபிமானம் ஆகிய நற்பண்புகள் ஒளியையும், திறமையும் தோற்றுவித்தது. இதனை நவீனகாலத்துக் கல்விமான்கள் "ஸ்பாட்டன் கானல் நீர்" என்று அழைத்துள்ளனர். இந்தச் சவாலினை பெரிக்கிள்ஸ் சந்திக்க வேண்டியதாயிற்று. மரணச் சொற்பொழிவின் பெரும்பகுதி ஸ்பாட்டாவுடன் நேரடியாக ஒப்பிடுவதாக அமைந்துள்ளது. ஒரு சிலர் மாத்திரமல்லாமல் பலர் ஆட்சி செய்வதால் ஏதென்ஸ் ஒரு சனநாயகம் என்று அழைக்கப்படுகின்றது. ஸ்பாட்டாவில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் மேல் ஆதிக்கம் செய்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். ஸ்பாவழியேற் வகுப்பைச் சேர்ந்த எல்லோரும் "ஹொமொய்யோ" என்று அழைக்கப்பட்டிருந்தாலும் அரசர்களுக்கு விஷேட சலுகைகள் இருந்தன. அத்துடன் மற்றவர்களிலிருந்து வேறுபட்ட உயர்வகுப்பினைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். ஏதென்ஸ்சில் சட்டத்திற்கு முன் எல்லாப் பிரசைகளும் சமமாகும். பொதுவாழ்வில் பங்குபற்றுவதற்கு சொத்து என்ற அடிப்படைத் தகைமையை ஸ்பாட்டா நடைமுறைக்குக் கொண்டுவந்தது. இதன்படி எந்த ஏதேனியனும் யூரர்களாகவோ அல்லது சபையில் அமரவோ முடியும். அத்துடன் தமது வாக்கினைச் செலுத்திச் சபையிலே பேசலாம்.
ஏதேனியர்கள் சிந்தனை, நிதானம், கலந்துரையாடல் ஆகியவற்றைப் பொக்கிஷமாக மதித்தார்கள். அதேசமயம் ஸ்பாட்டானியர்கள்
34

சுருக்கமாகவும், சாதுரியமாக நியாயப்படுத்தலிலும் அவநம்பிக்கைக்கும் பெயர் போனவர்கள். ஆனால் பெரிக்கிள்ஸ் விவாதம் புரிதல், கலந்துரையாடலில் தனது சனநாயக நகருக்கு இருக்கும் விருப்பத்தினைப் புகழ்கின்றார். எல்லாமக்களுக்கும் இருக்கின்ற பேச்சுச் சுதந்திரம் தான் பெரிக்கிள்சின் சனநாயகத்தின் அடையாளமாகும். இச்சுதந்திரம் பிறருக்கு ஒரு கேலிக்குறியாக இருந்தது. அரசியல் மரபு வழியாக வந்தவர்கள் அல்லது ஒழுங்காகக் கல்விக்கூடங்களில் கற்றவர்களே பேச வேண்டும் என்ற கூற்று அதிகாரவர்க்கத்தினால் சிந்திக்கப்பட்டது மாத்திரமல்லாது ஸ்பாட்டாவின் அபிமானிகளும் தீர்மானத்தை விவாதம் இல்லாமல் ஏற்றுக் கொண்டனர். ஸ்பாட்டானியர் செயலில் நம்பிக்கை வைத்தார்கள், சொல்லில் அல்ல. பெரிக்கிள்ஸ் வித்தியாசமான கருத்தைக் கொண்டிருந்தார்.
செயல்களுக்குச் சொற்கள் தடைகள் அல்ல, ஆனால் செயல்களில் இறங்குவதற்கு நேரம் வருவதற்கு முன் கலந்துரையாடல்களில் இருந்து அறிவுறுததல்களைப் பெறாமல் விட்டோமானால் ஆபத்து வரும். இந்த வகையிலும் நாங்கள் மற்றவர்களை விட மேலானவர்கள். என்ன விடயத்தை மேற்கொண்டாலும் நாங்கள் துணிவுள்ளவர்கள் அதே வேளையில் எவ்விடயத்தையும் மேற்கொள்ள முன் நாங்கள் மிகவும் கவனமாகச் சிந்தித்துத் தான் காரியத்தில்
இறங்குவோம் . மற்றவர்களைப் பொறுதத மட்டில் அறியாமைதான் அவர்களுக்குத துணிவைக் கொண்டு வருகின்றது, சிந்தனைதான் அவர்களுக்குத் தயக்கத்தை ஏற்படுத்துகின்றது. மிகவும் தெளிவாக இன்பங்கள், சம்பந்தப்பட்ட பயங்கரங்கள் ஆகிய இரண்டினையும் நன்றாகப் புரிந்தும் அதன் விளைவாக ஆபத்திலிருந்து மிகுந்த துணிவுடன் திரும்பி ஓடாதவர்கள் பற்றிச் சீர்துக்கிப் பார்த்தல் சரியானதே. (2. 40, 3)
இங்கே ஏதென்ஸ்சின் எதிர்காலத்திற்கு ஒரு முக்கியமான அம்சத்தினை இனங்கண்டுகொண்டார். நியாயமும் விவேகமும் ஏதென்சின் கடமைப்பாடு. வீரமான குறிக்கோள்களை அடைய எண்ணங்கள் தடையாக இருப்பதில்லை. உண்மையில் இது அவர்களுக்கு ஒரு முதல் நிபந்தனையாகும். அதாவது அவரின் வரைவிலக்கணத்தின்படி துணிவுடன் செயல்களில் இறங்கிய ஆத்திரமுற்ற வீரர்கள் ஆபத்தைப்பற்றிச் சிந்திக்காதவர்கள். துணிந்தவர்கள் அல்லர். மனதால் உணரக்கூடிய ஆபத்துக்களைச் சந்திக்கும் போது தான் அதனைத் துணிவு என்று கூற முடியும். பொலிஸ்சில் இருக்கும் மனிதர்களிலிருந்து இது தான் எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்பாட்டாவின் பெரும் புகழ் அதனுடைய அசாதாரண இராணுவச் சாதனைகளில்தான் தங்கியுள்ளது. இவை எல்லாவற்றுக்கும் அதனுடைய சமயப்பற்று, அதனுடைய ஒரே விதமான
35

Page 21
சிந்தனை, கடுமையான பயிற்சி முறை, வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் புகுத்தப்பட்ட கடுமையான ஒழுங்கு முறை, ஸ்பாட்டவின் தன்னலமற்ற பழக்கவழக்கங்கள் என்பன காரணமாகும். இனொபோன் (Xenophon) என்பவர் ஸ்பாட்டாவில் அந்தரங்கம் அல்லது ஒதுங்கிய நிலை காணப்படவில்லை என்பதை உதாரணத்துடன் தருகின்றார்.
மற்ற நகரங்களில் ஒருவர், தான் ஒரு கோழை என்று காண்பித்தாராயின் அவருக்குரிய தண்டனையாக அவரைக் கோழை என்று அழைப்பர்கள். . . ஆனால் ஸ்பாட்டாவில் ஒரு கோழையுடன் சாப்பிடவோ மல்யுத்தம் புரியவோ எவரும் வெட்கப்படுவார்கள். . தெருக்களில் மற்றவர்களுக்கு வழி விட வேண்டும். . அவர் தன்னுடைய திருமணம் செய்யாத சகோதரிகளுக்கு உதவி செய்து அவர்கள் ஏன் இன்னும் கன்னியர்களாக இருக்கிறார்கள் என்று விளக்க வேண்டும். அடுப்படியில் அவர் மனைவி இல்லாமல் இருக்க வேண்டும். . நல்ல கண்ணியம் உள்ளவர் போல் ஆடம்பரமாக உலாவி வரமுடியாது. அவ்வாறு உலாவி வருவாரானால் அவரிலும் பார்க்க உயர்ந்த தரத்தில் இருப்பவர்களால் தாக்கப்படுவார். இத்தகைய கெளரவமற்ற வெட்கக்கேடான வாழ்வு வாழி வதை விட மரணம் விரும்பத்தக்கது (ஸ்பாட்டானியரின் அரசியலமைப்பு 9.4-6)
இதற்கு மாறாக ஏதேனியர் ஆட்சியில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் காணப்படுகின்றதென்பதைப் பெரிகிள்ஸ் சுட்டிக்காட்டுகின்றார். இதனால் தனித்துவம், தனிமை, பொதுமக்கள் கண்காணிப்பில் இருந்து விடுபடுதல் போன்றவற்றிக்குப் போதிய வசதிகள் உண்டு. “சுதந்திரமனிதராகப் பொதுஇடங்களில் நாங்கள் உலாவி வருவது மாத்திரமன்றி எங்கள் நாளாந்தக் கருமங்களில் ஈடுபடும் பொழுது ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்ப்பதில்லை. தமக்கு விருப்பமானதை எமது அயலவர் செய்தாலும் எங்களுக்கு கோபம் ஏற்படுவதில்லை. அத்துடன் அவர்களை நாங்கள் முறைத்துப் பார்ப்பதுமில்லை. அப்பார்வை தீங்கற்றதாக இருந்தாலும் அது ஒரு பரிதாபமான காட்சியே. இத்தகைய சகிப்புத்தன்மையிருந்தும் கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை முறையில் ஒருவர் சட்டத்தை அவமதிக்கவோ அல்லது ஒழுக்கக்கேடாக நடக்கவோ முடியாது. ஸ்பாட்டானியர்கள் பயபக்திக்கும் சட்டத்தை மதிப்பதற்கும் பேர்போனவர்கள். அத்துடன் சட்டத்திற்குக் கண்மூடித்தனமாகப் பணிந்து நடத்தல் அவர்களுடைய பெரும் இராணுவப் பலத்திற்கு காரணங்கள் என்று கருதப்பட்டது. இத்தகையகெளரவத்தை விமர்சிப்பவர்கள் சனநாயக ஒழுக்கச் சட்டம் அற்ற ஓர் அமைப்பு என்று கருதுகின்றார்கள். ஸ்பாட்டானியர்கள் மேற் கொண்ட சட்டத்திற்குப் பணிவதை விடச் சட்டத்திற்கு இதை விடக் கூடிய பணிவு வேண்டும் என பெரிக்கிள்ஸ்
36

கோரினார். பிரத்தியேகமாக ஆட்சியாளரின் வசதிக்கேற்ப அவர்கள் ஒர் எழுத்து ஒழுக்க நெறியைப் பின்பற்றினார்கள். அதேவேளை ஏதேனியர்கள் ஒரு பரந்த நியாயமான எதுவித குறைவுமில்லாத சட்டத்தின் கோட்பாட்டிற்கு மதிப்புக் கொடுத்தார்கள்.
எங்களுடைய சொந்த வாழ்க்கையில் நாங்கள் விட்டுக் கொடுக்கிற மனப்பான்மையுடன் நடப்பதாலும் வெளியே பொதுமக்கள் விடயங்களில் சட்டத்திற்கு மதிப்புக் கொடுப்பதாலும் நாங்கள் சட்டத்தை மீறுவதில்லை. பதவியில் உள்ளவர்களையும், சட்டங்களையும் நாங்கள் மதிக்கின்றோம். முக்கியமாக நசுக்கப்பட்டுவரும் மக்களின் பாதுகாப்பிற்குக் கொண்டு வரப்பட்டஎழுதாத சட்டங்களை வெட்கக்கேடான முறையில மீறுவதையும் குறிப்பிடத்தான் வேண்டும். (2. 37. 3)
ஸ்பாட்டாவின் பயிற்சிமுறைகளின் கடுமையான போக்கும், உலகத்துடன் தொடர்பற்ற அதன் அந்தரங்கச் செயற்பாடுகளும் ஏதேனியர்களின் சனநாயகத்தை விடச் சிறந்த போர்வீரர்களை உருவாக்குகிறார்கள் என்பதைப் பெரிக்கிள்ஸ் ஏற்றுக்கொள்ளவில்லை.
எங்களுடைய இராணுவப் பொறுப்புக்களை எவ்வாறு தயார் செய்கிறோம் என்பதில் எங்களுக்கும் எங்கள் எதிரிகளுக்குமிடையில் பின்வரும் வேறுபாடுகள் உள்ளன. எங்கள் நகரத்தை எல்லோருக்கும் திறந்து விடுகிறோம். எங்களுடைய விடயங்களை அறிந்து எமது பகைவருக்கு அறிவித்துவிடுவான் என்ற பயத்தினால் நாங்கள் எவரையும் எமது நாட்டினுள் பிரவேசிப்பதைத் தடுப்பதில்லை. அதற்குப் பதிலாக எங்கள் நம்பிக்கையை இரகசிய ஆயுதங்களில் வைக்காமல், செயலில் இறங்க அழைப்பு வரும் போது நம்பிக்கையை எமது துணிவில் வைக்கின்றோம். எமது கல்வி முறையும் வித்தியாசமானது. சிறு பிள்ளைகளாக இருக்கும் போதும் ஸ்பாட்டானியர்கள் கடும் பயிற்சிகள் மூலம் துணிவைப் பெறுகிறார்கள். ஆனால் நாங்கள் கட்டுப்பாடற்ற வாழ்க்கை வாழ்ந்து அதே ஆபத்துக்களைச் சந்திக்கத் தயாராக இல்லை. ஆகவே சட்ட அமுலாக்கங்கள் மூலம் கடும் பயிற்சி மேற்கொள்ளும் வாழ்க்கையைவிட எமது இயற்கையான கட்டுப்பாடற்ற, ஆறுதலான வாழ்க்கைமுறை மூலம் ஆபத்துக்களைச் சந்திக்கத் தயாராகிறோமென்றால் நன்மை எமக்கே. எதிர்காலத்தில் ஆபத்துக்கள் வரும் எனறு கருதி நாங்கள் அதற்கு முன்னரே ஆயுத்தங்கள் செய்து களைத்துப் போவதில்லை. அவ்வாறு ஆபத்துக்கள் வந்தாலும் பயிற்சி எடுத்தவர்களை விட நாங்கள் வீரத்தில் குறைந்தவர்கள் அல்லர் என்பதைக் காண்பிப்போம். இந்த வகையில் எங்கள் நகரம் பாராட்டுக்குரியது. (2. 39)
37

Page 22
பெரிக்கிள்சினால் சிந்திக்கப்பட்ட அநேக நல்ல தன்மைகள், பண்புகள் இராணுவச் சிறப்புப்பற்றியதாகும். இதை யுத்த காலத்தில் போராடிக் கொண்டிருக்கும் வீரர்களுக்கு உற்சாகம் ஏற்படுத்துவதற்கே தனது சொற்பொழிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஏதென்சுக்கான பெரிக்கிள்சின் ஆரம்ப சிந்தனையாதெனில் நிலையான சமாதானத்தை எதிர்பார்ப்பதே அவருடைய யுத்த தந்திர கணிப்பின்படி ஏதென்ஸ் சாம்ராஜ்யம் நகரத்தின் தேவைகளைச் சமாளிப்பதற்குப் பரந்து விசாலமாகவுள்ளது. இச்சாம்ராஜ்யத்தை விரிவாக்க முயற்சி எடுப்பது தேவையற்றது மாத்திரமல்ல தற்போது இருப்பவற்றுக்கும் ஆபத்தானது ஆகும். 430 இல் அவருடைய இறுதியான பேச்சு ஏதேனியர்களைத் தொடர்ந்து போர்புரியத் தூண்டுவதற்காக இருந்தாலும், "நல்ல செல்வச் செழிப்புடன் இருந்து விரும்பியதைத் தேர்ந்தெடுப்பவர்கள் யுத்தத்திற்கு போவது மடைத்தனமனானது” (2.61.1)
அந்த உணர்வுடன் அவருடைய செயல்கள் முழுமையாக நிலைத் திருப்பதால் அவருடைய நேர்மையைப் பற்றிச் சந்தேகப்படுவதற்குக் காரணமில்லை. பேசியாவுடன் சமாதானம், ஸ்பாட்டாவுடன் சமாதானம், முக்கியமாக அதனுடைய மத்தியஸ்த ஷரத்து, இத்தாலியிலுள்ள பன்ஹெலனிக் காலனி, ஏகாதிபத்திய நிர்வாகத்தின் உறுதியான மிதமான கொள்கை முதலியன எல்லாம் அந்தத் திசையைச் சுட்டிக்காட்டுகின்றன. பெரிக்கிள்ஸ் மேற்கொள்ள இருந்த பேரார்வமுள்ள கட்டிட நிகழ்ச்சித்திட்டங்கள் ஏதேனியர்களின் சாதனைகளுக்கு முடிசூட்டுவதாக அமைந்தன. போர் மூண்டதனால் படியால் அத்திட்டம் பூர்த்தியடையவில்லை. சமாதானம் நிறைந்த கம்பீரமுள்ள சனநாயக அரசை அனுமதிப்பதே பெரிகிள்ஸ்சின் எண்ணமாக இருந்தது என்பதில் சிறு சந்தேகமும் இல்லை.
அந்த எண்ணம் எப்பொழுதும் கொந்தளிப்பும் யுத்தமும் சூழ்ந்த கிரேக்க அனுபவத்திற்கு எதிராகச் சென்றன. பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியான யுத்தத்தின் பின் ஏதென்ஸ் சமாதானத்துடன் வாழமுடியும் என்று பெரிக்கிள்ஸ் ஏன் சிந்தித்தார்? இந்த வினாவுக்குரிய விடையை ஏதென்ஸ்சின் பலத்தில் காணக்கூடியதாகவுள்ளது. ஏதென்ஸ்சின் கடற்படை கடலில் ஆதிக்கம் செலுத்தியது. அதனுடைய கடற்படைப் ‘பாதுகாப்பினை அத்துமீறிப்பிரவேசிக்க முடியாது. நகரமும், துறைமுகமும் பாதுகாப்புச் சுவர்களினால் எல்லையிடப்பட்டது. பாதுகாப்புக்குத் தேவையான விநியோகப் பொருட்களுக்குரிய நிதியும் உறுதியாக்கப்பட்ட ஏதென்ஸ் முன் எப்பொழுதுமில்லாத அளவுக்குத் தகுந்த பாதுகாப்புடையதாக அமைந்துள்ளது. அடுத்தடுத்த தோல்விகள் ஏதேனியர்களின் கடற்படைப் பலத்திற்குச் சவால் விடமுடியாது என்ற பாடத்தைப் பாரசீகர்களுக்குப் புகட்டியுள்ளது. தரைச் சண்டையில் ஈடுபட மறுத்தமையால் ஸ்பாட்டாவுக்கும் அதனுடன் கூட சேர்ந்தவர்களுக்கும் வெற்றியில் எந்தவித நம்பிக்கையும் இருக்கவில்லை. இந்த உண்மை
38

எல்லோருக்கும் புரிந்துள்ளது. இதனால் அதுவே யுத்தம் ஆரம்பிப்பதைத் தடுக்கும். கிரேக்க நாட்டின் வரலாற்றிலே முதன் முறையாக நிலையான சமாதான எதிர்பார்ப்புடன் வருங்காலத்தைத் திட்டமிட்டு வழிநடத்திச் செல்லமுடியும்.
இந்த எதிர்பார்ப்பினை வரவேற்கும் அதே வேளை பிரச்சனை ஒன்றையும் சந்தித்தது. கிரேக்க ஹோமர்காலம் தொட்டு புகழுக்கான தாகம் யுத்தத்தில் புரியும் வீர சாகசத்தில் தங்கியுள்ளது. சமாதான உலகில் இவற்றின் இடத்தை எது பிடிக்கும்? இதற்குரிய விடையின் ஒரு பகுதி வெறெங்குமில்லாத ஒரு வாழ்க்கைத் தன்மையில் தங்கியுள்ளது. சந்தோஷத்தையும் செழிப்பையும் கொண்டுவருகிற பல விதமான செயற்பாடுகள் மனதிற்கு சந்தோஷமும் தைரியமும் புத்திசாலிகளுக்கு உற்சாகம், ஆன்மாவுக்குப் பெருமையும் தரக்கூடியது. யுத்தத்தின் புகழுக்குப் பிரதியீடானது ஒவ்வொரு ஏதேனியர்களின் அரசியல் கடமையினர் ஈடுபாட்டில் தங்கியுள்ளது. இவை அவனுடைய சுதந்திரத்திற்கும், முக்கியத்துவத்திற்கும் சாட்சிகளாக அமைந்துள்ளன. ஆகவே இது அவனுக்குப்பெருமையைத் தேடித்தரவல்லது. நீதிமன்றத்தில் நீதிபதிக்குத் தனது அபிப்பிராயத்தை தெரிவிக்கும் குழுவில் சேவைபுரியும் (ury) சபையில் வாக்கினைச் செலுத்துவதற்கு, அல்லது ஒரு பதவிக்கு நியமிக்கப்படும் மிகவும் வறுமையில் இருக்கும் ஒரு ஏதேனியன் பொலிசுக் காகத் தன்னுடைய புத்தியையும் அனுபவத்தையும் பயன்படுத்தும் படி அழைக்கப்பட்டுள்ளார். இத்தகைய பொதுப் பொறுப்பதிகாரங்களில் பங்கேற்பதால் தனது ஆற்றலை அபிவிருத்தி செய்து மனிதாபிமான நிலைக்கு அவனை இட்டு செல்கின்றது. யுத்தமானாலும் சரி, சமாதானமானாலும் சரி ஏதேனியன் மக்கள்நகரத்தின் புகழில் பங்கேற்க அனுமதிக்கும் பொறுப்புக்களை ஏற்பதில் ஆர்வம் காட்டினார்கள். அதனால் தான் பெரும் யுத்தம் வந்தபோது அவர்களிடம் இருந்த இந்த மித மிஞ்சிய பங்களிப்பைப் பெரிக்கிள்ஸ் எதிர்பார்க்க கூடியதாக இருந்தது.
நீங்கள் ஒவ்வெ ாருநாளும் நாட்டின் பலத்தைப் பார்த்து அதன் காதலர்களாக (elastai) வேண்டும். நாட்டின் பெருமையைப் புரிந்தீர்களானால் அப்பெருமையைப் பெற்றுத்தந்தவர்கள் துணிவுள்ளவர்கள் எனவும் கெளரவமானவர்கள் எனவும் கருதுங்கள். அவர்கள் தருணம் வரும்போது நாட்டுக்கு என்ன தேவை என்பதைத் தெரிந்தவர்கள். ஏதாவது முயற்சியில் தோல்வி கண்டால் தங்கள் வீடும், தமது நகரத்திற்கு மறுக்கப்படுவதை தடுப்பதற்குத் துணிந்து தமது நாட்டுக்கு மிகவும் அழகான காணிக்கையை வழங்கினார்கள். அதாவது பொது நன்மைக்காக தங்கள் உயிரையே கொடுத்தார்கள். (2.43. 1 - 2)
39

Page 23
யுத்தத்தின் இருண்ட வேளையின் போது. மக்களுக்கு தாங்கள் தமது நகரத்தின் மேல் அன்பு வைத்திருப்பது சரியென்றும், நாட்டுக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்ய வேண்டும் என்றும் நினைவூட்டியபோது அவர்களுடைய ஆர்வத்தைப் பெரிக்கிள்ஸ் அறியக்கூடியதாக இருந்தது. இந்த ஆர்வமும் தனித்துவமான முறையில் உயர்ந்ததும் இதனைப் பேணி மேலும் உயர்த்துவதால் சாதாரண மனிதன் அதன் புகழில் பங்கேற்றுப் புகழினையும் அழிவில்லாத தன்மையையும் அடையமுடியும்.
பெரிக்கிள்ஸ் சில சொற்பொழிவுகளில் பெரிக்கிள்ஸ் சம்ராஜ்யத்தைப் பற்றியும் அதன் இராணுவ புகழைப்பற்றியும் பேசினார். இவை நிச்சயமாக தனக்கும் ஏதேனியர்களுக்கும் முக்கியமான பண்புகளாகும். யுத்தத்தைத் தன்னுடைய ஒரு பாடமாகக் கொண்டு துகிடிடஸ் செய்திகளாக வெளியிட்டமையாலும் பெரிக்கிள்சின் சொற்பொழிவுகள் எமக்குக் கிடைக்க கூடியதாக இருக்கின்றது. பெரிக்கிள்சின் அகச்சிந்தனைகளும், அவருடைய ஏனைய சொற்பொழிவுகளும் எமக்குக் கிடைக்கக் கூடியதாக இருந்தால் ஏதென்சின் அமைதியில் பெருமை அடைந்திருப்பார். அவருடைய அரசியல் திட்டம் எல்லா ஏதேனிய மக்களையும் அரசியலில் பங்கு பற்றி அவர்களையும் அவர்களுடைய பொலிசையும் தங்களுடைய தலையெழுத்தினை வழிநடத்த உதவி செய்து சுதந்திர மனிதராக இருப்பதற்கு அனுமதிக்கின்றது. மனிதனுடைய ஆற்றல்களும் ஆசைகளும் சமூகவாழ்வில் பங்குபற்றுவதன் மூலம் உயர்ந்த மட்டத்தில் நிறைவுசெய்ய முடியும் என அவர் நம்பினார். 2500 வருடங்களின் பின்னரும் நாட்டுக்காக விசுவாசத்துடன் எடுத்த பெரும் முயற்சிகளுக்கு அவரை நினைவு கூருகின்றோம்.
40

கதாநாயகன் (Hero)
பெரிக்கிள்சின் வாழ்க்கையில் இறுதி இரு ஆண்டுகளிலும் தொடர்ச்சியான அரசியல், சொந்த அழிவுகளால் பாதிக்கப்பட்டார். இதனை “அதிஷ்டத்தின் தலைகீழான நிலை" என்று நூறு ஆண்டுகளுக்குப் பின் அரிஸ்டோட்டில் டயோனிசஸ் (Dionysus) அரங்கில் சித்தரித்த துக்கத்தை சந்தித்த கதாநாயகர்களுடன் தொடர்புபடுத்தினார். அவருடைய இறுதிச் சொற்பொழிவிலே சிறந்த கொள்கை, அதன் சிறப்பினை மற்றவர்களுக்கு வலியுறுத்தல், தன்னுடைய தேசப்பற்று தன்னுடைய நேர்மையான நிலை ஆகியவற்றைத் தீர்மானித்தலில் தனக்கு இருக்கிற ஆற்றல் மற்றவர்களுக்குக் குறைவானது அல்ல என்று பிரகடனப்படுத்தினார். இருந்தும் அவருடைய கொள்கைகள் சில காலங்களுக்கு நிராகரிக்கப்பட்டன. அவர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். வழக்குத் தொடரப்பட்டு, லஞ்சம் வாங்கியதற்காக குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஏதேனியர்களில் முதன்மையாகத் திகழ்ந்தவர், “பேச்சிலும், செயலிலும் மிகவும் சிறந்தவர்,” தன்னுடைய செல்வாக்கை இழந்து அவமானத்துடன் வாழ்ந்து, தன்னுடைய நகரத்தின் தூரதிஷ்டங்களுக்குப் பொறுப்பானவர் என்றும் குற்றம் சுமத்தப்பட்டவர். அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு குறுகிய காலப் பதவி அமர்வின் போது இந்த அடிப்படை நிலைமையை மாற்றவில்லை.
அவருடைய அந்தரங்க, சொந்த ஆத்திரம் பயங்கரமானது. யுத்தத்திற்கு முன்னரும் அவருடைய மூத்த மகன் சந்திப்பஸ் (Xanthippus) இடமிருந்து முரண்பட்டபோது அவர் வேதனையை அனுபவித்தார். அத்துடன் தனது மகனால் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்ட சங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரின் முதலாவது திருமணத்தின் மூலம் பெற்ற இரு ஆண் பிள்ளைகளும் தன்னுடைய சட்டபூர்வமான வாரிசுகள் என்று சந்தோஷத்தில் இருந்தார். ஆனால் இரு மகன்மாரும், சகோதரியும் மற்றும் உற்றாரும் நண்பர்களும் கொள்ளை (Plague) நோயினால் இறந்து போனார்கள். இந்தக் கஷ்டங்களுக்கு மத்தியில் தன்னுடைய வழமையான அமைதியான போக்கினைக் கடைப்பிடிக்க முயற்சித்தார். ஆனால் தன்னுடைய இரண்டாவது மகனின் சமாதிமேல் மலர் வளையம் சாத்தும்போது முன்னொரு போதும் இல்லாதபடி வாய்விட்டழுது கண்ணிர் சிந்தினார். அந்த ஆண்டிலேயே பெருமைமிக்க உயர்ந்த தலைவர் அல்போசியாவுக்குப் (Aposia) பிறந்த தனது சட்டபூர்வமான மகனுக்கு குடியுரிமை வழங்குவதற்குத் தான் இருபது வருடங்களுக்கு முன் கொண்டு வந்த குடியுரிமைச் சட்டத்தில் விதிவிலக்கு அளிக்கும்படி ஏதேனியன் மக்களைக்கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். பெரிக்கிள்சின் இல்லத்தைத் தாக்கிய தூரதிஷ்டம் அவருடைய கர்வம், பிடிவாதம் ஆகியவற்றிக்குக் கிடைத்த தண்டனை என்று ஏதேனியர்கள் கருதினார்கள் என்று புளுட்டாச் கூறுகிறார். (Pericles 37.5) அவர் தண்டனையை அனுபவித்துவிட்டார்
41

Page 24
என்று நினைத்து அவருடைய மகனுக்கு விதிவிலிக்கு அளித்து நாட்டுப் பிரசையாக மாற அனுமதித்தார்கள்.
பெரிக்கிள் சின் மோசமான பின்னடைவு யாதெனில் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த தனது நாட்டின் நிலையாகும். செழிப்பான, பலம்மிக்க, வளர்ச்சியையும், தன்னம்பிக்கையுமுள்ள நகரமானது, மிகவும் பரிதாபமான முறையில் யுத்தத்தினாலும் வியாதிகளினாலும் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதனுடைய செல்வம் மிகவும் விரைவாகக் குறைந்து கொண்டு சென்றது. சனத்தொகையும் திடீரெனக் குறைந்தது. அவர்களுடைய வலிமையும் தன்னம்பிக்கையும் குறைந்தது. இதனால் அவர்கள் எதிரிகளிடம் இருந்து சமாதானத்தை வேண்டினார்கள். ஏதேனியன் கூட்டுச் சேர்க் கையின் நற்பெயரும் மோசமாகக் கறைபடுத்தப்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன் அவருடைய அரசியல் எதிரிகளுக்கு எதிராகக் கொடியவர் மாதிரி நடந்தார் என பெரிக்கிள்ஸ் மேல் குற்றம் சுமத்தினார்கள். இதனை பெரிக்கிள்ஸ் வன்மையாக எதிர்த்தார். ஆனால் அவருடைய வாழ்க்கையின் கடைசிக் காலங்களில் ஏதென்ஸ் சாம்ராஜ்யத்தில் கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றது என ஏற்றுக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். இந்தக் கொடுங்கோல் ஆட்சிமுறையை ஏற்றுக்கொள்வது சுலபமானதாகும். அதேவேளை இதைக் கைவிடுவதும் மிகவும் ஆபத்தானது. ஸ்பாட்டானியர் ஏதேனியர்களின் சாம்ராஜ்யத்தைப் பொதுவாக விரும்பவில்லை. இதனால் யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் அவர்கள் தங்கள் தலைமையின் கீழ் கிரேக்கர்களை மரியாதையுடன் நடத்த முடியாதெனக் காண்பித்தார்கள். அவர்களுடைய சுலோகம் “கிரேக்கர்களிடமிருந்து விடுதலையாகும்”
பெரிக்கிள்ஸ் ஆற்றிய மரணச் சொற்பொழிவின் போது பெரிய சனநாயக சாம்ராஜ்யத்தைப் பற்றிய உயரிய எண்ணத்தை யுத்தமும் கொள்ளை நோயும் கூடத் தாக்கின. அப்பொழுது ஏதேனியர்களுக்குச் சட்டத்தில் இருக்கும் விசுவாசத்தைப் பற்றி மிகைபடக்கூறினார். “அதன் மேல் எங்களுக்கு மரியாதை இருப்பதால் நாங்கள் சட்டத்தை மீறிநடப்பதில்லை.” நாங்கள் பதவியிலுள்ளவர்களையும் சட்டத்தையும் மதித்து முக்கியமாகத் தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்பிற்குக் கொண்டு வரப்பட்ட சட்டத்தை மதிக்கிறோம். யுத்தத்தில் உயிர்நீத்த போர் வீரர்களின் தந்தைமாருக்குத் தங்கள் பிள்ளைகளால் பெற்ற பெருமையில் ஆறுதலடையும்படி வேண்டினார். ஆனால் கொள்ளை நோய் ஏதென்சின் நாகரீக வெளித்தோற்றத்தைக் கிழித்தெறிந்து பாரம்பரியத்திற்கும் நம்பிக்கை களுக்கும் இருந்த மரியாதையை அழித்து விட்டது.
கெளரவம் என்று எதைக் கருதுகிறோமோ அதைத் தனக்கு மறுப்பதற்கு எவரும் ஆவலாய் இருக்க மாட்டார்கள். ஆனால் உடனடியாகக் கிடைக்கும் மகிழ்ச்சி, அதை அடைவதற்கு உதவியவை எல்லாம் கெளரவமானதாகவும், துரிதமானதாகவும் கருதப்பட்டது. ஆண்டவன் மேல் இருக்கும் பயம்,
42

மனிதனால் அமைக்கப்பட்ட சட்டங்கள் எல்லாம் எவரையும் கட்டுப்படுத்த முடியாது. ஒருபக்கம் பார்க்கப் போனால் இதே போன்றன எல்லாம் அழிந்து போகின்றன. அவை பயபக்தி உள்ளனவாக இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன எல்லாம் ஒரே மாதிரியானவை என்று கருதினார்கள். மறுபக்கத்தில் ஒருவராவது விசாரிக்கப்பட்டுத்தான் செய்த குற்றங்களுக்கு உரிய தண்டனையை அனுபவிக்கும் வரையும் வாழலாம் என்று எதிர்பார்க்கவில்லை. (2.53.4 -4)
இந்தச் சட்டமற்ற தன்மையும், எதிலும் நம்பிக்கையற்ற போக்கையும் பார்க்க வேதனையாக இருந்திருக்கும். யுத்த அழிவுகளும் நோயும் ஏதேனியர்களை அவநம்பிக்கையற்றவர்களாக மாற்றியது. யுத்தத்திற்கு முன்பே அவர் உயர்வாக மதித்து வந்த தெளிவான எண்ணங்களும் மனோபாவமும் நிராகரிக்கப்படுகின்ற ஆரம்பக் கட்டத்தையும் பெரிக்கிள்ஸ் பார்த்திருப்பாரானால் தன்னுடைய அறிவாளி சகாக்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி அவர்களை நாடு கடத்துவதற்கு நிர்பந்திக்கப்பட்டார். மரணச் சொற்பொழிவுகளில் நிறுவனங்கள் பழக்க வழக்கங்கள் என்பவற்றை கடவுள் பற்றி குறிப்பிடாமல் புகழ்ந்திருக்கிறார். அவ்வாறு இருந்தும் அனக்சாகோரஸ் (Anaxagoras), புரோட்டாகோரஸ் (Protagoras) ஆகியோரின் மாணவன் தன்னுடைய மக்கள் விவேகம், நியாயம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த புத்திமதிகளை விட்டு விலகித் தீர்க்கதரிசிகள், சோதிடர்கள் போன்றவர்களுக்கே கூடுதலாகச் செவி சாய்த்தார்கள் என்றார்.
பெரிக்கிள்சின் இறுதிக் கணிப்பின்படி இத்தகையதுக்ககரமான பின்னடைவு இறுதிவரை அவர் மனதில் உறுத்தியது. பெரிக்கிள்ஸ் மரணப்படுக்கையில் இருந்த போது இக்காட்சியைப் புளுட்டாச் விவரித்தார். ஏதென்சின் சிறந்த மனிதர்களும் அவருடைய உற்ற நண்பர்களும் பெரிக்கிள்சின் அறையில் கூடி பெரிக்கிள்சின் உயர்ந்த பண்புகளையும் அவருக்கிருந்த அதிகாரத்தைப்பற்றியும் உரையாடிக்கொண்டிருந்தார்கள். அவர் ஒரு தளபதியாக இருந்தபோது அவர் ஈட்டிய ஒன்பது வெற்றிகளைப் பற்றியும் நினைவு கூர்ந்தார்கள். உண்மையில் அவர் அதிஷ்டவசமாகவும் தன்னுடைய சொந்த ஆற்றலின் விளைவாகவும் மற்றவர்களிலிருந்து அடைந்த இந்த வெற்றிகளைப் போற்றுவதை வியப்புடன் தெரிவித்தார். அதற்குப் பதிலாக உயர்நிலையை அடைவதற்குக் காரணமாக இருந்த சிறந்த அம்சங்களையே போற்றி இருக்க வேண்டும். "இப்பொழுது உயிருடன் இருக்கும் எந்த ஏதேனியனும் என்னால் துக்கங்கொண்டாடும் ஆடைகளை அணியவில்லை" (Pericles 38.8)
எங்களுக்கு அறிவிக்கப்பட்ட பெரிக்கிள்சின் வலியுறுத்திக் கூறிய இறுதி வார்த்தைகள் மற்ற ஏதேனியர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்த மாதிரி அதைக் கேட்ட ஏனையோருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியது. போர் மூளுவதற்கு அவருடைய கொள்கை காரணமாக இருந்தது எனவும்,
43

Page 25
கொள்ளை நோயின் தீவிரத்திற்கு அவருடைய யுத்த தந்திரத்திற்கும் சம்பந்தம் உண்டு எனவும் அவருடைய நண்பர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. அவருக்கு எதிராக நன்றியற்ற வகையில் குற்றம் சுமத்தப்பட்டதினால் ஏற்பட்ட வடுவானது எவ்வளவு ஆழமாக அவர் மனதில் பதிந்திருந்தது என்பதினை அவரின் இறுதி வாக்கியங்கள் எடுத்துக்காட்டின.
425ஆம் ஆண்டு வசந்த காலத்தில் சோபொகிள்ஸ் “ஒடிபஸ் றைரானஸ்” (Oedipus Tyrannus) என்ற பெரும் சோகம் தழுவிய நாடகத்தைச் சமர்ப்பித்தார். அந்த நாடகத்தினைக் கவனமாக வாசித்தால் ஏதேனியர் பார்வையார்கள் அரங்கில் இருந்து நாடகத்தைப் பார்க்கும் போது தெபிஸ் (Thebes) கதையில் பிரதிபலித்திருப்பதையும் தெபிசின் தூரதிஸ்டமான அரசினையும் பார்த்திருக்கக் கூடும் என்பதையும் எடுத்துக் காட்டும்.
நாடகம் ஆரம்பமாகும் பொழுது அந்த நகரம் பயங்கரமான கொள்ளை நோயினால் அவதியுறுவதைக் காண்பிக்கின்றது. “காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட தெய்வமாகிய வெறுக்கத்தக்க கொள்ளை நோயானது எங்களுக்கு மேலாய் வந்து நகரத்தை வேட்டையாடி தெபிசின் வீடுகளை வெற்றிடங்களாக்குகின்றன. மரணத்தில் கருமை நிறமாகக் கடவுள், புலம்பல் அழுகையினால் செழிப்படைகின்றது.” (27 - 30) ஒடிபஸ்சின் சகாப்தம் கொள்ளை நோயைப் பற்றிக் குறிப்பிடவில்லை. சொபிகிள்ஸ் இன் கொள்ளை நோயைப் பற்றிய புது விளக்கமாகும். கொள்ளை நோயிற்கு காரணம் அப்போலோ அல்ல. ஆனால் போர்த்தெய்வமாகிய எயர்ஸ் (Ares) ஆகும். ஆகவே கொள்ளை நோய் யுத்தத்தினாலேயே தோன்றியது. இந்தக் கதையிலுள்ள புதுவிளக்கத்தினை ஏதேனிய பார்வையாளர்கள் பார்த்திருக்கத் தவறியிருக்க மாட்டார்கள். கொள்ளை நோய் முதலில் தோன்றிய போது தங்கள் நகரத்தின் தலைவராக இருந்த மனிதரின் உருவத்தை ஒடிபஸ் இல் அடையாளம் காண அதிக நேரம் எடுத்திருக்காது. துசிடிடெஸ் பெரிக்கிள்ஸ்சை “முதன் மனிதன்” என்று அழைப்பது போல ஒடிபஸ்சை “மனிதர்களில் முதல் மனிதன்” என்று மதகுரு மாய அழைக்கிறார். (1.33)
டெல்பியிலிருந்து (Delphi) வரும் தேவவாக்கிலிருந்து கிறியொன் ஒரு விடையுடன் வருகிறார். கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நகரத்திலிருந்து இந்த நோயை அழிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? "இந்த நாட்டை எது மாசுபடுத்தியதோ அதை விரட்டும்படி மிகத் தெளிவாகக் கட்டளையிட்டார்."...ஒடிபஸ் வினாவினால், “எங்களுடைய துரதிஷ்டத்தின் தன்மை யாது”? அதிலிருந்து எங்களை எவ்வாறு விடுவிக்க முடியும் - அதற்கு என்ன செய்யலாம்? கிறியொன் பதிலளிக்கிறார். 'நாடுகடத்தப்பட வேண்டும் அல்லது இரத்தத்திற்கு இரத்தமாகப் பதிலளிக்க வேண்டும். இந்த நகரத்தில் கொள்ளை - புயலைக் கொண்டு வந்த மாசுபடுத்தலுக்குக் காரணம் ஒடிபஸ் என்று
44

எல்லோருக்கும் தெரியும். ஆகவே அவர்தான் நாடுகடத்தப்படவேண்டும். பொதுக் கருத்தின்படி பெரிக்கிள்சும் ஒரு கொலை தொடர்பாக நகரத்தில் கொண்டுவரப்பட்ட மாசுவின் சாபத்திற்கு உட்பட்டவராவர். “இந்தச் சாபத்தை பெரிக்கிள்சிலிருந்து ஏதேனியர்கள் விரட்டுவார்களானால்” தாங்கள் யுத்தத்தைத் தவிர்ப்பார்கள் என ஸ்பாட்டானியர் முன்வந்தார்கள். (Thucydides1.126.3) ஆனால் ஏதேனியர் மறுத்துள்ளார்கள். பெரிக்கிள்ஸ், ஒடிபஸ் போல் தன்னுடைய நகரத்தின் தலைவராக இருந்தார். யுத்த - தெய்வமும் ஏதென்ஸ்சில் கொள்ளை நோயைக் கொண்டு வந்தது.
ஒடியசின் இன்னொரு பண்பு ஏதேனிய சபையினரை பெரிக்கிள்ஸ் பற்றி சிந்திக்கச் செய்தது. ரைறானஸ் என்ற பட்டம் தெபிசின் ஆட்சியாளருக்கும் , அவர்களுடைய அரசியல் வலிமைக்கும் இராஜ்யத்திற்கும் நாடகத்தில் பதினான்கு தடவை பிரயோகிக்கப்பட்டது. ஐந்தாம் நூற்றாண்டு ஏதென்ஸ்சில் இச் சொற்கள் பல கருத்துக்களைக் கொண்டிருந்தன. சில சமயம் நடுநிலைமையான கருத்துப்பட எளிமையாக "அரசன்” “இராஜ்யம்" என்று பயன்படுத்தப்பட்டது. இவ்வாறே அநேக தடவை சொபொகிள்சின் நாடகங்களில் இது பயன்படுத்தப்பட்டன. சொபொகிள்ஸின் மற்ற நாடகங்களில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள், சிலர் ஒடிபஸ்சை விட இந்த எதிர்மறை விபரிப்புக்குக் கூடுதலாக தகுதியுள்ளவர்களாக இருக்கிறார்கள். இருந்தாலும் ஒடிபஸ்சின் ரைறானசில் அடிக்கடி வருவது போலல்லாமல் அந்தப் பதவி அரிதாகக் காணப்படுகிறது. சொபொகிள்ஸ், ஒடிபஸ் அதிகாரத்தின் விஷேட தன்மையை வெளிப்படையாக வலியுறுத்த எத்தனித்தார். ஒரு ரைறானஸ் உண்மையில் ஒரு விஷேடமான அரசனாவான். ஒரு சட்டபூர்வமாக ஆட்சியேறிய அரசனைப் போலல்லாமல் அவர் வழக்கத்திற்கு மாறான வழியில் சிம்மாசனம் ஏறினான். வழமையில் ரைறானஸ் என்பவர் வன்செயல்மூலம் ஆட்சியை அபகரித்தார். உதாரணமாக கொலை, சதிப்புரட்சி, அல்லது பொதுவான புரட்சி, அபகரிப்பு மூலம் ஆட்சியேறியவர்கள். வழமையாக நல்ல ஆட்சியாளர்கள, அவர்களை மக்கள் விரும்பினார்கள். ஆனால் ரைறானஸ் இரண்டாவது, மூன்றாவது பரம்பரையில் சீர்குலைந்து ஒரு கொடிய எதேச்சாதிகாரமுள்ள ஆட்சியாக மாறியது. இது நவீன காலத்தில் வழங்கப்படுகின்ற கொடுங்கோல் என்ற கருத்திற்குப் பொருந்துகின்றது.
ஒடிபஸ் முதலாம் பரம்பரையினராக இருந்தார். காரணம், அவர் அசாதாரண வழிகளில் ஆட்சிக்கு வந்தார். தன்னுடைய மதிநுட்பத்தைப் பயன்படுத்தி ஆரம்ப கொள்ளை நோயிலிருந்து தெபீசைக் காப்பாற்றினார். அன்று தொட்டு அவர் மற்றவர்கள் பின்பற்றக் கூடிய, எல்லோராலும் விரும்பத்தக்க அரசனாக இருந்தார். ஆகவே அவரோ அவருடைய மக்களோ அவை ரைறானஸ் என்று நடுநிலைமையான கருத்துப்படவோ அல்லது மரியாதைக்குரிய கருத்துப்பட அழைக்கத் தயங்கினார்கள். இதில் பரிதாபத்திற்குரிய வஞ்சகப் புகழ்ச்சி யாதெனில் தனக்கும் தெரியாமல்
45

Page 26
தேபன்ஸ்க்கும் (Thebans) தெரியாமல் ஆனால் பார்வையாளருக்கு நன்றாகத் தெரிகிற அளவுக்கு மறை கருத்துப்பட அவரும் ஒரு ரைறானஸ் ஆவார். அவர் மிகவும் மோசமான வன்செயல் நடவடிக்கை மூலம் ஆட்சியில் அமர்ந்தார். பல ஆண்டுகளுக்கு முன் தெருவாக்குவாதத்தில் ஒரு முன்பின் தெரியாத ஒருவரைக் கொலை செய்தார். கொலை செய்யப்பட்டவர் தெபீஸ் அரசனும் தன்னுடைய சொந்தத் தகப்பனாருமாவார். பின்னர் அவர் தெபீசுக்கு வந்து புதிரைத் தீர்த்து ஆட்சியைக் கைப்பற்றினார். அந்த நாடகத்தின் முக்கிய அம்சம் கொடுங்கோலின் இருண்ட பக்கத்தைக் கவிதையில் பாடிக்காட்டுகின்றது.
உண்மையில் பெரிக்கிள்ஸ் கொடுங்கோல் அரசனில்லை. ஆனால் அவருடைய பகைவர்கள் அவர் அவ்வாறானவர் என எடுத்துக் காட்டியுள்ளார்கள். அவரை விரும்புகிறவர்களும் ஏதேனியர்களில் அவருடைய நிலை தனித்துவமான உயர் நிலையிலுள்ளது என்று கூறினார்கள். ஆயிரக்கணக்கான ஏதேனியர்கள், நகைச்சுவை கவிஞர் கிறேற்றினஸ் (Cratinus) பெரிக்கிள்சை மிகப்பெரிய கொடுங்கோலன் என்று கூறுவதை அரங்கில் கேட்டுள்ளார்கள். பல வருடங்களாக அரசியல் எதிரிகள் அவரை பெசிஸ்றேற்றஸ் உடன் ஒப்பிட்டார்கள். பெசிஸ்றேற்றஸ் (Peisistratus) ஏதென்சில் ஒரு கொடுங்கோலை இதற்கு முந்திய நூற்றாண்டில் அமைத்தது போல் பெரிக்கிள்ஸ்சும் அமைக்க முற்பட்டார் என குற்றம் சுமத்தினார்கள். ஒரு பெரும் விவாதத்தின் போது விமர்சனங்கள் டெலியன் லீக்கை (Delian League) கொடுங்கோலாக மாற்றியதாகக் குற்றம் சுமத்தினார்கள். துசிடிடஸ், பெரிக்கிள்சின் கீழுள்ள ஏதென்சைப் “பெயரளவில் ஒரு சனநாயகம் ஆனால் உண்மையில் முதல் குடிமக்களாலான அரசாங்கமாகும்" (2,65,9) எனக் குறிப்பிடுகிறார். சொபொகிளின் ஒடிபஸ் நாடகத்தின் முதல் பகுதியில் இவ்வாறான ஒரு தலைவரை ஒத்திருக்கிறாரே தவிர ஒரு கர்வம் மிகுந்த, வன்செயல்புரியும் கொடுங்கோல் புரிபவன் அல்லர், அவர் நிராயுதமற்ற, பாதுகாப்பற்ற சட்டத்தை மதிக்கின்ற ஒருவராவர். திறந்த மனத்துடன் உரையாடலில் இரகசியத்தை நிராகரிக்கின்றார். அத்துடன் பிறரின் புத்திமதிகளைக் கேட்கின்றார். பேனாட் நொக்ஸ் கூறியது போல "ஆட்சியின் கீழ் தெபிஸ் ஒரு கொடுங்கோல் ஆட்சி புரிபவராக இருக்கலாம், ஆனால் அது முதல் குடிமக்களால் ஆளப்படும் சனநாயகம் போல் ஒத்திருக்கின்றது. ஏதேனிய சபையினர் இந்த ஒற்றுமையைத் தவறவிட்டிருக்க மாட்டார்கள்.
இந்த ஒப்பிடுதல சரியென்று சொல்ல முடியாது. ஓர் அடிப்படை அமைப்பின் தற்காலிகமான ஒற்றுமை என்று “நொக்ஸ்" (Knox) கூறுவது சரியாகும். இந்த அமைப்பு ஒடிபஸ்சை ஏதெனியன் என்ற தனிநபருடன் ஒப்பிடாது ஏதென்ஸ்சுடனேயே ஒப்பிடப்படுகிறது. இங்கே ஒடிபஸ்சின் குணத்தைப்பற்றி அவருடைய விபரிப்புத் தரப்பட்டுள்ளது.
அவர் ஒரு பெரிய மனிதர், அனுபவமிக்க விரைவாகத் துணிந்து நடவடிக்கையில் ஈடுபடும் மனிதன், எல்லாவற்றையும் சிந்தித்தபின் தான்
46

செயலில் இறங்குவார். ஒளிரக்கூடிய மதிநுட்பம் உடையவர், தொடர்சியாக வெற்றியீட்டித்தரும் அவருடைய செயல்கள் ஒரு பெரும் தன்நம்பிக்கையைத் தோற்றுவிக்கும். ஆனால் அது எப்பொழுதும் ஒரு பொது நம்பிக்கைக்கே இட்டுச் செல்லும். அவர் மக்களின் மேல் அன்பு செலுத்தி மக்களால் அன்பு செலுத்தப்படும் ஒரு தனித்துவமான ஓர் ஆட்சியாளர். ஆனால் தன்னுடைய வெற்றிகளினால் எழும் பெருமைகளையும் உயர் மட்டத்தில் தனக்கு எதிராகத் தொடரப்படும் சதியைப்பற்றிய சந்தேகத்தையும் அவர் உணர்வார். பயங்கரமான கட்டுப்படுத்தமுடியாத கோபம் அவருக்கு வரக்கூடும். ஆனால் இது ஆத்திரமூட்டும் வேளைகளின் போதுதான் உண்டாகும். அதே வேளை அதிருப்தியோடும் பெரும் சிரமத்தோடும் மக்களிடமிருந்து தான் தனிமையாக்கப்பட்டுள்ளதைக் கண்டால் கோபத்தைத் தவிர்ப்பார். ஒடிபஸ்சைப் பற்றிய இந்த விபரம் சிறு மாற்றங்களோடு ஏதேனிய மக்களுக்கும் பொருந்தும். பழைய பதிவுகளின் படி பெரிக்கிள்ஸ் பெருமை, சந்தேகம், கட்டுப்படுத்த முடியாத கோபம் போன்ற நிலைக்கு ஆளானான் என்பதற்கு ஒருவித குறிப்பும் இல்லை. அதற்கு மாறாக தன்னுடைய சாந்தம், கெளரவம், உயர்ந்த நன்நடத்தை போன்றவற்றிக்கு பேர் போனவர் . பொதுமக்கள் மத்தியில் மனஎழுச்சிகளுக்கு இடம் கொடாமல் கட்டுப்படுத்தும் தன்மை உடையவர். அரங்கில் இருந்த ஏதேனிய சபையினர் நாடகத்தின் கதாபாத்திரத்திற்கும் அண்மையில் மறைந்த தங்கள் தலைவருக்கும் இடையே பல ஒற்றுமைகளை அவதானித்து அதைப்பற்றிக் குறிப்பிட்டார்கள்.
எங்களைப் பொறுத்தமட்டில் பெரிக்கிள்ஸ்க்கும் அவருடைய சிறப்புமிக்க தொழிலுக்குமிடையே காணும் ஒற்றுமை மேலும் பெரிக்கிள்சைப் பற்றி ஆழமாக விளங்கிக் கொள்ளக் கூடியதாகவுள்ளது. பெரிக்கிள்ஸ்க்கும் ஒடிபசுக்கும் இடையே காணும் ஒற்றுமை வேற்றுமையைப் பற்றி நேரடியாகக் காணுவதை விட்டுவிட்டு சொபொகிள்ஸ் தன்னுடைய படைப்புகளில் காண்பித்த சோகமே உருவான கதாநாயகர்களின் பொது அமைப்புடன் அவருடைய வாழ்க்கையையும் ஒழுக்கத்தையும் அளவிடுவோம். சொபொகிள்சின் கதாநாயகனின் தன்மையைப் பற்றி அறிவதற்கு எங்களுக்கு சிறந்த வழிகாட்டி பேனாட் நொக்ஸ் ஆகும். அவர் "கடவுளின் ஆதரவு இல்லாமல் மனித எதிர்ப்புக்கு முன்னால் தன்னுடைய தனித்துவத் தன்மை, தன்னுடைய எண்ணம் ஆகியவற்றில் உதயமாகும் தீர்மானங்களை எடுப்பார். அதன்பின் கண்மூடித்தனமாக, கொடூரமான வகையிலும், வீரத்துடனும் தன்னுடைய சொந்த அழிவையும் பார்க்காமல் அந்தத் தீர்மானங்களைப் பேணுவார்".
சொபொகிள்சின் கவலை சூழ்ந்த உலகின் கதாநாயகனின் அம்சங்களைப் பற்றி நொக்ஸ் விபரிக்கிறார். "அவருடைய நிலைத்திருக்கும் ஆறு நாடகங்களில் கதாநாயகன் தவிர்க்க முடியாத ஆபத்தை எதிர் கொள்வதையோ அல்லது ஓர் உடன்பாட்டுக்கு வருவதற்குமிடையில் எதை ஏற்பது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். உடன்பாட்டுக்கு வந்தால்
47

Page 27
தன்னைப்பற்றிச் சொந்த எண்ணத்துக்கு தன்னுடைய உரிமைகள், தன்னுடைய கடமைகள், ஆகியவற்றிக்கு துரோகம் செய்வதாகும். இதனால் உடன்பாட்டுக்கு வருவதற்கு மாறாகத் தீர்மானம் எடுத்தார். அந்தத் தீர்மானம் சிநேகிதரின் ஆலோசனை, அச்சுறுத்தல், நிர்ப்பந்தப்படுத்தல் ஆகியவற்றால் தீவிரமடைந்தது. ஆனால் விட்டுக்கொடுக்காமல் தனக்கு விசுவாசமாக இருந்தார்.
போருக்கு முன் தோன்றிய பிரச்சினை தொடக்கம் அவரின் இறப்பு வரைக்கும் பெரிக்கிள் சின் இத்தகைய குணாதிசயங்களைக் காண்கின்றோம். அவர் மேற்கொண்டநிதானமான நடவடிக்கைகள் மிகவும் சாத்தியமானவற்றிக்கு இடையில் உள்ள உடன்பாடுகளாகும். ஆனால் தன்னுடைய குறிக்கோள்களை அடையச் சிறந்த வழிகள் அவை என்பது அவருடைய கணக்கெடுப்புகளாகும். அவருடைய விமர்சனங்களுடனும் பகைவர்களுடன் அவர் வைத்திருக்கும் தொடர்புகளுக்கும் இடையே உடன்படிக்கை ஒன்றும் இல்லை. ஏதேனியர் "கோசைறா" (Corcyra) விலிருந்து விலகி இருந்ததால் சமாதானத்தையும் சிநேகத்தையும் வழங்க நிபந்தனை விதித்த கொறிந்தீனியருக்கு (Corinthians) அவர் வலியுறுத்தியதாவது, முப்பது ஆண்டு சமாதானத்திற்கு கீழ் ஏதென்சின் உரிமை மூலம் ஒரு நடுநிலை வகிப்பவர் முன்னிலையில் ஓர் ஒப்பந்தத்தை உண்டாக்குதல். அவர்கள் சமாதானப் பத்திரத்திற்குப் பணிந்து எல்லாப் பிரச்சினைகளையும் மத்தியஸ்தத்திற்கு வழங்கும்படி பெரிக்கிள்ஸ் வேண்டினார். இவ்விரண்டு நிலைகளிலும் குற்றத்தைக் குறைக்கின்ற சந்தர்ப்பங்கள் இருந்தன. இச் சந்தர்ப்பங்கள் குறைந்த விளக்கத்தைக் கோரியிருக்க கூடும். ஆனால் பெரிக்கிள்ஸ் ஒரு உடன்படிக்கைக்கும் வரவில்லை.
சொபொகிளின் கதாநாயகன் தான் எடுக்கும் தீர்மானங்களில் உறுதியாக இருப்பார். நொக்ஸ் இவரை கொலொனசின் ஒடிபஸ்க்கு ஒப்பிடுகிறார். ஒடிபஸ்சை வடக்கிலுள்ள ஒரு கடல் முனையாகவும், எல்லா மூலைகளில் இருந்தும் புயல் அலைகள் அதன் மீது மோதுவதாகவும் மேலும் ஒப்பிடுகிறார். இந்தப் பிடிவாதமுள்ள கதாபாத்திரத்தை அடிக்கடி தனது சொற்பொழிவுகளில் குறிப்பிடுகிறார். போருக்கு ஆதரவாக அவர் கூறுவதாவது, "முன்னர் மாதிரி உங்களுக்கு அதே மாதிரியான புத்திமதியைக் கூறவேண்டும். உங்களில் யாராவது நிர்ப்பந்திக்கப்பட்டால் பொதுத் தீர்மானங்களுக்கு நீங்கள் ஆதரவு வழங்க வேண்டும் என நான் வேண்டுகிறேன்." (Thucydides.140.1) நாங்கள் ஓர் அற்ப விடயத் திற்காகவே யுத்தத்திற்குப் போகிறோம். அத்துடன் உங்கள் மனதில் நீங்கள் ஓர் அற்ப விடயத்திற்காகவே யுத்ததிற்குப் போனோம் என்ற குறை இருக்கக் கூடாது. (1.140-5) "நீங்கள் தெரிந்திருக்க வேண்டியது யாதெனில் யுத்தத்திற்குப் போவது அவசியமாகும்" எங்களுடைய தந்தையர்கள் பெரிய சாதனையைப் புரிந்தார்கள். "அவர்கள் காட்டிய முன்மாதிரிகைக்குக் குறைவாகச் செயற்படக்கூடாது. நாங்கள் எல்லா
48

வழிகளிலும் எதிரியை எதிர் கொள்ள வேண்டும். அத்துடன் வருங்கால
சந்ததியினருக்கு எவ்விதத்திலும் குறைவில்லாத அதிகாரத்தை வழங்க வேண்டும்." (1.144-4)
430 இல் அவரின் இறுதியானதாக எதிர்பார்த்த சொற்பொழிவு அதே தொனியைப் பிரதிபலித்தன. தன்னுடைய அரசியல் எதிரிகளுக்கு சவால்விட்டுப் பேசும் போது பின்வருமாறு குறிப்பிட்டார். "இந்த மாதிரியான தவறான வழிகளில் செல்லும் குடிமக்களின் பின்னால் செல்ல வேண்டாம். அத்துடன் எனக்கு எதிராகப் பகை கொள்ள வேண்டாம்” “தவிர்க்க முடியாதவை என்ற எண்ணத்துடன் பகைவர்களிடமிருந்து துன்பங்களைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்” (2.64.1 - 2) “இரண்டையும் அடைந்து கொள்வதுடன் (எதிர்காலத்தில் கெளரவமும் தற்காலத்தில் அவமானத்தைத் தவிர்ப்பதையும்), ஸ்பாட்டானியருடன் ஒரு சமாதானப் பேச்சை நடத்துவதற்கு எவரையும் அனுப்ப வேண்டாம்." (2.64.6)
சொபொகிள்ஸ்சின் சோக நாடகங்களில் கதாநாயகனின் உறுதிப்பாடு முறையீடுகளாலும் சவாலுக்கும் சோதனைகளுக்கும் உள்ளாகின்றன. கதாநாயகனை நிர்ப்பந்தத்திற்கு உட்படுத்தி அவருடைய மனதை மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டன. மற்றவர்களின் மதிநுட்பத்தை ஏற்று அவர்களால் கற்பிக்கப்பட வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டப்பட்டார். ஆனால் உண்மையான வீரன் இவற்றினைக் கேட்க மறுக்கிறான். பெரிக்கிள்சைப் பொறுத்தமட்டில் யுத்தத்திற்கு முன்னரும் யுத்தம் நடைபெறும் போதும் இவ்வாறுதான், 423இல் ஸ்பாட்டானியரின் இறுதி நிபந்தனையின் பின் சமாதானத்தை விரும்பிய ஏதேனியர்கள் "மெகாரியன் டிகிறி"யை (MagarianDecree) மையமாக வைத்து சபையில் ஒரு விவாதம் நடத்தினார்கள். மெகாரியன் டிகிறியை வாபஸ் பெறுவதால் யுத்தத்தைத் தவிர்க்கலாம் என்று இவர்கள் கருதினார்கள். இந்த விவாதத்தில் பெரிக்கிள்சின் பகுதிதான் பதியப்பட்டுள்ளது. ஆனால் அவரின் விமர்சகர்கள் அவரை மீண்டும் சிந்திக்கும்படியும் அவரின் முறையை மாற்றும்படியும்வேண்டினார்கள். ஆனால்பெரிக்கிள்ஸ் அதனை வீரத்துடன் எதிர்த்தார். "ஏதென்ஸ் மக்களே, நான் எப்பொழுதும் ஒரே தீர்மானத்துடன் இருப்பேன். அதாவது ஸ்பாட்டானியருக்கு விட்டுக் கொடுப்பதில்லை. போபில்ஸ்சின் கதாநாயகர்கள் மாதிரித் தன்னைப் பலவீனமான மனமும், மனஉறுதியும் கொண்டவர்களிடமிருந்து வெறுப்புடன் பிரித்துவைப்பார்கள்". யுத்தம்புரிவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட போது இருந்த அதே சுபாவம் யுத்தம் புரியும் போது இருப்பதில்லை என்பது எனக்குத் தெரியும். அதாவது மாறும் நிகழ்வுளுக்கு ஏற்றவாறு மனதை மாற்றிக்கொள்வதுடன், முன்னர் வழங்கிய அதே புத்திமதியையும் வழங்க வேண்டும். உங்களில் யாராவது நிர்ப்பந்திக்கப்பட்டால் பொதுத் தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டாம்.
49

Page 28
யுத்தத்தின் முதல் ஆண்டின்போது ஏதென்சிலுள்ள ஆக்கிரமிப்பாளர்கள் தீவிரமாகக் கேள்விகளால் தாக்கப்பட்டனர். பெரிக்கிள்சை யுத்த தந்திரத்தைக் கைவிட்டுத் தங்களை பெலோபோனசின் ராணுவத்திற்கு எதிராக இட்டுச் செல்லும்படி வேண்டினார்கள். மற்றவர்களையும் அவர்கள் வற்புறுத்துவார்கள் என்ற அச்சத்தால் அவர்களின் கூற்றுக்கு செவிமடுக்கவில்லை. எனவே சபையின் கூட்டங்களை நடத்த அனுமதிக்கவில்லை. 430இல் கொள்ளை நோயின் மத்தியில் சமாதானத்தை விரும்பும் பகுதியினர்தான் யுத்தத்தைத் தொடர வேண்டும் என்ற பெரிக்கிள்சின் உறுதிக்கு எதிராகக் குரல் எழுப்பினார்கள். முன்னர் கொடுத்த அதே விடையைத்தான் விட்டுக்கொடுக்க முடியாத நிலையில் கொடுத்தார். "என்னைப் பொறுத்த மட்டில் நானே ஒரே மாதிரியானவன். நான் எந்தச்சவால்களுக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன். நீங்கள் தான் மாறிவிட்டீர்கள்.” (2.61.2) ஏதேனியர்களுக்கு அவர் கூறியதாவது, தூரதிஷ்டங்களுக்கு விட்டுக்கொடுக்காமல் நடந்த படியால் மனித வர்க்கத்திலேயே ஏதேன்சுக்குப் பெரும் புகழ் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். விட்டுக் கொடுப்பதைவிட பகைவருடன் யுத்தம் புரிந்து இறப்பது என்று சிந்தித்த மக்களைப் புகழ்ந்து மரணச் சொற்பொழிவில் கூறிய மாதிரி குறிப்பிடார். (2.42.4)
வைராக்கியமுள்ள தனிநபருக்கு இருக்கிற சுதந்திர வேட்கையிலிருந்து பெரிக்கிள்ஸ் எள்ளளவும் விலகவில்லை. இதுவே இறுதியில் துன்பத்தைத் தழுவுகின்ற வீரர்களுக்குரிய சிறப்பம்சமாகும். "அவர்கள் எவராலும் ஆளப்படமாட்டார்கள். அவர் மேல் ஒருவரும் அதிகாரம் செலுத்த முடியாது. அவர்கள் சுதந்திரமானவர்கள்" பெரிக்கிள்சின் இறுதிக் காலங்களில் இந்த குணாதிசயங்கள் அவருக்கு மிகவும் பொருந்துவதாகும். மெகாரியன் டிகிறி நிலைத்துநிற்க ஏதேனியரைத் தூண்டுவதற்காக பெரிக்கிள்ஸ் சுதந்திரம், அடிமை என்ற அதே பதங்களையே பயன்படுத்துகிறார்.
இப்பொழுதே இந்தக்கணத்திலே எந்த ஆபத்தும் வருவதற்கு முன்னர் உங்கள் மனதைதி திடமாக்கிக் கொள்ளுங்கள். நாங்கள் போருக்குப் போக உததேசிததோமானால் சிறிதாகவோ பெரிதாகவோ இருக்கும் எந்த சாக்குப் போக்குகளுக்கும் இடமளிக்காமல், பயத்திற்கு இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும். சட்ட பூர்வமான ஒரு தீர்வை நாடமுனர் சம தரத்தில் இருப்பவர்கள் பெரிய அளவிலோ சிறிய அளவிலோ தமது அயலார் மேல் கோரிக்கை விடுத்தால் அது அடிமையாவதற்குச் சமனாகும். (1.141.1)
திருத்த முடியாத தன்மையுடையவர்களுடன் எதுவித தொடர்புகளும் இருக்கக்கூடாது"தன்னிலிருக்கும் குறையாகிய விட்டுக்கொடுக்க முடியாத தன்மையை அறிவதற்குக் காலம்தான் வழி வகுக்கும். மிகவும் அவதானமாகவும் நிதானத்துடன் கட்டுப்பாட்டுடனும் செயல்படும்
50

தேசத்தலைவனாகிய பெரிக்கிள்சில் இந்தத் தன்மை இருப்பதைக் காண்பது எமக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும். 457இல் பொகோசியாவைக் கைப்பற்ற வேண்டாம் என்று தொமிடஸ்சை வற்புறுத்தியவர் இதே மனிதர்தான். மிகவும் முக்கியமான கருத்தினை சபையில் குறிப்பிட்டார். "நீங்கள் பெரிக்கிள்சினால் நிர்பந்திக்கப்படாவிட்டால் எல்லா ஆலோசனை களையும் விட சாமர்த்தியமுள்ளவரின் வருகைக்காக காத்திருங்கள்” (Plutarch. Pericles 18.2). 4336ăT GODFGSLUTT LIIT (Sybota) Gurt (báš5' 56ăT பெரிக்கிள்ஸ் அதே மனிதராக இருக்கவில்லை. கொரிநாத்துடனான (Corinath) சச்சரவு விரிவடைந்து பெரும் யுத்தம் ஆரம்பமாவதற்கு முன் தான் விரைவாகவும் முழுமூச்சாகவும் செயற்பட வேண்டும் என்று உறுதியாக நம்பினார். 432இல் ஸ்பாட்டானியர் யுத்தத்திற்கு வாக்களித்தபோது யுத்தத்தைத் தவிர்க்க முடியாது என்றும் காலம் மிகவும் பயங்கர பகைவனானது என்றும் நிச்சயமாக நம்பினார். 457இல் அவர் இளமையாகவே இருந்தார். ஆனால் யுத்தம் மூண்ட போது அவருக்கு அறுபது வயது. காலம் அவருக்கு எதிராக இருந்தது. ஒரே ஒரு தந்திரம் தான் வெற்றியைக் கொண்டுவரமுடியும் என்றும் தானே அதைப் புகுத்தி வழிநடத்த வேண்டும் என நம்பினார். ஒவ்வொரு வருடமும் போகப் போக எதிர்கொள்வதற்குப் பலாக்காரத்தைப் பிரயோகிப்பதிலுள்ள பிரயோசன மின்மை பற்றிக் கூறி அவர்களைத் திருப்திப்படுத்துவது, நகரத்தையும் சாம்ராஜ்யத்தையும் பேணி நிலையான சமாதானத்தை நிலைநாட்டுவது போன்றன ஏதென்சின் வலிமைக்கு அச்சுறுத்தலாக அமைந்தன. அநேக ஏதேனியர்கள் பெரிக்கிள்சை அவர் எடுத்த பயங்கர நடவடிக்கையைத் தாமதிக்கும்படி வேண்டினார்கள்.
மெகெரியன் டிகிறியை வாபஸ் பண்ணும்படியும் கேட்டார்கள். ஆனால் பெரிக்கிள்ஸ் தான் ஏதென்சின் தலைவிதியை வழிநடத்தும் போது யுத்தம் வரவேண்டும் என்ற திடநம்பிக்கையுடன் இருந்தார். எனவே யுத்தம் வந்தது. அதனுடன் எதைப் பாதுகாக்க முயற்சி எடுத்தாரோ அது யுத்தத்துடன் அழிந்தது.
ஆனால் வீரர்கள் காத்திருப்பதில்லை. காலமும் அவர்களை மாற்றுவதில்லை. ஒடிபஸ் ரைறானஸ்சின் (OedipuSTyrannus) இறுதியில் "கதாநாயகன் ஆரம்பத்திலிருந்த மாதிரி அதே கர்வத்துடன் இருந்து கிரியோனுக்கு வேண்டுதல்களை வழங்கினார். இந்த வேண்டுதல்கள் கட்டளைகள், நிபந்தனைகளை நிராகரித்தல், தான் விரும்பிய வழிமுறைகளை வலியுறுத்தல் போன்றவைகளாக அமைந்தன. நாடகத்தின் இறுதியில் தேப்ஸ்சின் ரைறானஸ் ஆக அவர் இப்பொழுது இல்லை என்பதனையும் அவருக்கு ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. இதே குணங்களை மரணப்படுக்கையில் பெரிக்கிள்ஸ் காண்பித்தார். அவருடைய நண்பர்கள் அவரின் இராணுவச் சாதனைகளைப் போற்றினார்கள். ஆனால் அவர் அவர்களைக் கண்டித்த தன்னுடைய சாதனைகளைப் போற்றுவதற்குப் பதிலாக எதனைப் போற்ற வேண்டும்
51

Page 29
என்று கூறினார். “இப்பொழுது உயிருள்ள எந்த ஏதேனியனும் எனக்காகக் கறுப்பு ஆடை அணியவில்லை" என்ற அவருடைய கட்டாயப்படுத்தல் அவருடைய ஆளும் திறமையைக் காட்டுகின்றது. தாமதிக்கக் கூடாது என்று அவர் கட்டளை இட்ட போர்களில் பல ஏதேனியர்கள் இறந்து போனார்கள். ஆயிரக்கணக்கானோர் கொள்ளை நோயினால் இறந்து கொண்டிருந்தார்கள். மீண்டும் கொள்ளை நோய் பரவினால் இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறப்பார்கள். யுத்தம் முடிவுக்கு வருமுன் இன்னும் பலர் போரில் இறந்து போவார்கள். அவர் மரணப்படுக்கையில் இறந்து கொண்டிருக்கும் போது ஏதென்சின் எல்லாப் பகுதியிலும் மக்கள் அவருடைய தேசத்தை வழிநடத்துகின்ற தன்மை, இராஜதந்திரம் போன்றன தோல்வியுற்றதற்காக அவரைக் குற்றம் சாட்டினார்கள். ஆனால் பெரிக்கிள்ஸ் ஒரு பிழையையும் விடவில்லை. ஒரு குற்றச்சாட்டையும் ஏற்கவில்லை. பெரிக்கிள்ஸ் ஏதேனியர்களுக்கு கூறியதாவது ஞாபகமிருக்கட்டும்.
"எல்லா மனித வர்க்கங்களிலும் எதென்சிற்குத்தான் பெரும் புகழ் உண்டு. காரணம் துரதிஷ்டங்களுக்கு ஒரு போதும் விட்டுக் கொடுக்கவில்லை. ஆனால் யுத்தத்தில் வேறு எந்தப் பொலிஸ்சை யும் விட உயிர்களையும் முயற்சிகளையும் செலவிட்டு எமது காலம் வரை நிலவியதிலும் பார்க்கப் பெரும் ஆதிக்கத்தைப் பெற்றது. இந்த ஆதிக்கத்தின் ஞாபகம் (ஒரு காலத்தில் இதைவிட்டுக்கொடுத்தாலும்) எங்களுக்குப்பினர்னர் வருபவர்களுக்கு எப்பொதும் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும்.”
சொபொகிளினின் சோகம் இதுதான். நொக்ஸ் சுட்டிக்காட்டுவது போல் ஏதென்சின் சோகமான தன்மையினைக் காணக்கூடியதாகவுள்ளது. “சொபொகிளின் கதாநாயகன் காதல் கொள்வது மாதிரி” இந்தக் கூற்றினை பெரிக்கிள்ஸ்தான் கூறினார். அவருடைய மனம், உத்வேகம், குணம் எல்லாம் இக்கூற்றுக்குப் பின்னால் இருந்தன. ஏதென்சுக்குப் பதிலாக அவருடைய பெயரை வைத்தோமானால் இக் கூற்றுப் பொருத்தமாகவும் உண்மையாகவும் இருக்கும். பெரிக்கிள்ஸ் தனது நாடு மாதிரி ஒரு சோகம் நிறைந்த கதாநாயகனாக இருந்தார்.
ஏதென்ஸ்சும் பெரிக்கிள்சும் அவருடைய சிறப்பான அம்சங்களின் கறைபடிந்த தன்மையால் பாழாக்கப்பட்டன. உயிர் நிலைக்குக் கொண்டு வந்த அவர்களுடைய முயற்சியும் வைராக்கியமும் அழிவில் மூழ்கியது. பெரிக்கிள்சின் பலம் தனித்துவம் நியாயத்திலும், விவேகத்திலும் முக்கியமாகத் தன்னிலும் இருந்த அசாதாரண நம்பிக்கையில் தங்கியிருந்தது. இந்த நம்பிக்கை ஒடிபஸ்க்குச் செய்ததுபோல் அவரையும் அவரதுநகரத்தையும் முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு உயர்த்திக் கொண்டுசென்றது. எவ்வாறாயினும் பெரிக்கிள்சின் இறுதிக் காலங்களில்
52

நியாயத்தின் மேல் இருந்த விடாப்பிடியான தன்மை அவரின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது. அவருடைய போக்கினால் நண்பர்களையும் சகாக்களையும் இழக்கச் செய்து பெரும் அரசியல் சங்கட நிலையை எற்படுத்தியது. யுத்தம் ஆரம்பமான போது அதே சக்திகள் இவருக்கு எதிராகச் செயற்பட்டன. முக்கியமாகக் கொள்ளை நோய் பரவிய போது, தேவவாக்குகளைப் புறக்கணித்த சமயத்திற்குப் புறம்பான இவரது போக்கு வீழ்ச்சிக்குக் காரணமாய் இருந்தது. சாதாரணமான ஏதேனியர்கள் அவருக்கு இருந்த நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளவில்லை. நியாயத்தில் அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை. பெரிக்கிள்ஸ் இகழ்ச்சி செய்து புறக் கணித்த இயற்கைக்கு மேலானவற்றிலும் பகுத்தறிவற்றவர்களிடமிருந்தும் அவர்களுக்கு ஆறுதலும் உத்தரவாதமும்
தேவைப்பட்டது.
நியாயத்தில் அவருக்கு இருந்த நம்பிக்கை இன்னொரு வகையில் அவரைக் கைவிட்டது. மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற அவருடைய நிதானமான இராஜதந்திரம் குறி தவறியது. எதிரியின் பாசறையில் நியாயத்தை விடப் பயமும் கெளரவமும் கூடுதலான சக்திவாய்ந்ததாக இருந்தது. எதிரியைச் சமாதான வழிக்குக் கொண்டுவரக் கூடியதான அவருடைய தந்திரம் வெற்றியைக் கொண்டு வருவதில் மிகவும் பலவீனமாக இருந்தது. ஆனால் அது எதிரியின் கோபத்தை அதிகரித்து வைராக்கியத்தைத் துரிதப்படுத்தியது. யுத்த தந்திரத்தில் விவேகமான கணிப்புகளை விட மனளழுச்சியும் மனஉறுதியும் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன என இவையெல்லாம் காட்டுகின்றன. பெரிக்கிள்ஸ் மிகவும் மோசமாகத் தப்புக்கணக்குப் போட்டார். மனித மனதின் கட்டுப்பாட்டுக்கு அப்பாலும் சில சக்திகள் உள்ளன. இந்த உண்மையைக் கவலையுடன் அறிந்தார். இருந்தும் யுத்தம் மூளுவதற்கு முன்னர் இதனைத் தன்னுடைய மன உறுதியால் உதாசீனம் செய்தார். எங்களுடைய கணிப்புகளுக்கு மாறாக ஏதாவது நடந்தால் நாங்கள் இது தற்செயலாக நடந்தது என்று குறிப்பிட்டுப் பழக்கப்பட்டுள்ளோம் (Thucidides 1.141.2). யுத்தம் மூண்ட போது தன்னுடைய துரதிருஷ்டியானது ஒரு எல்லைக்குட்பட்டது என்று வெறுப்புடன் கூறினார். எனக்கு எதிராகக் கோபப்படாமல் தவறான பாதையில் செல்ல வேண்டாம். . . . . காரணம் பகைவர் தாங்கள் எதை நிச்சய மாகச் செய்யப்போகின்றோம் என்று கருதினார்களோ அதையே செய்துள்ளார்கள். எங்களுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்தது இந்தக் கொள்ளை நோய் பரவியதாகும். (2.64) ஆனால் பெரிக்கிள்ஸ்சின் கணிப்புக்கு வெளியே பல முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. துன்பத்தில் மூழ்கிய ஏனைய வீரர்கள் மாதிரி அவரும் இதனை ஏற்க மறுத்துவிட்டார். எல்லா உண்மைகளையும் அறியாமல் தலைவர்களின் தவறுகளிலிருந்து சுலபமாகக் குறைகளைக் கண்டுபிடிக்கலாம். பெரிக்கிள்சின் கணிப்பானது சரியானதிலிருந்து தூரத்திற்குச் செல்லவில்லை. ஸ்பாட்டாவில் அரசியல் நிலைமையை நன்றாக அறிந்திருந்தார். அத்துடன் அவருடைய தந்திரம்
53

Page 30
வெற்றிக்கு அண்மித்தது. கொள்ளை நோய் பரவியிராவிட்டால் அவருடைய குறையுள்ள இராணுவயுக்தி வெற்றியடைந்திருக்கக் கூடும்.
எதிரியை எதிர்ப்பதில் இருக்கும் உறுதியான தன்மையைப் பொறுத்தமட்டில் வின்சன்ட் சர்ச்சில் (Winston Churchil) பொகிகிள்ஸ்க்குக் குறைந்தவர் அல்லர். நாட்டின் நிலைமை மோசமாக இருந்த போது சர்ச்சில் பதவியேற்று சொற்பொழிவு ஆற்றிய போது பெரிக்கிள்சின் பேச்சுத் திறன் மாதிரி விட்டுக் கொடுக்காத வகையில் சொற்பொழிவாற்றினார்.
“எனக்கு என்னுள் பூரண நம்பிக்கையுண்டு. எல்லோரும் தங்களுடைய கடமைகளைச் செய்தால், ஒரு விடயமாவது கவனிக்கப்படாத நிலையில் விடப்படாமல் செய்ய வேண்டிய முறையில் சிறந்த ஒழுங்குளைச் செய்தால் மீண்டும் நாங்கள் நிரூபித்துக் காட்டலாம். எங்களால் எமது வீடாகிய தீவினைக் காப்பாற்றி, யுத்தமாகிய புயலை விரட்டிக்கொடுங்கோல் என்ற தொல்லையினை அகற்றலாம் என்று........ முடிவு காணும் வரைக்கும் நாம் செல்லுவோம். பிரானர்ஸ் நாட்டுடன் போர் புரிவோம். மிகுந்த நம்பிக்கையுடன் விமானப்படையினைப் பலப்படுத்தி யுத்தம் புரிவோம். தரையிறங்கும் தளங்களில் போர் புரிவோம். வயல்களில், தெருக்களில், மலைகளில் போர் புரிவோம். ஒரு போதும் சரணடைய மாட்டோம்.”
இருந்தும் இங்கிலாந்து மயிரிழையில் போரில் தோல்வியுறும் நிலையில் இருந்து தப்பியது. இல்லாவிட்டால் நாடு ஜேர்மனியின் படையெடுப்பாலும் குடியேற்றத்தினாலும் அல்லற்படும் நிலைக்கு வந்திருக்கும். ஹிட்லரும் கோரிங்கும் நகரங்களுக்கு மேல் குண்டு பொழிய விமானங்களை உபயோகிப்பதற்குப் பதிலாக விமானங்கள் இறங்கும் பகுதிகளையும் தரை வசதிகளையும் தொடர்ந்து குண்டு பொழிந்திருந்தால் ஜேர்மன் பிரித்தானியாவை யுத்தத்தில் வென்று, ஆகாய கட்டுப்பாட்டில் அவர்களின் வெற்றி தவிர்க்க முடியாதாக இருந்திருக்கும். அவ்வாறாயின், சர்ச்சிலின் திடமான உறுதி - பிரான்சின் வீழ்ச்சியின் பின் நியாயமான சமாதான திட்டத்தை ஏற்க மறுத்தல், கீழ்ப்படிய மறுக்கும் தன்மை ஆகியவற்றால் தனது மக்களைக் கீழ்நிலைக்குக் கொண்டு வந்தார்.
பெரிக்கிள்சைப் பற்றிய அத்தகைய கருத்தினையே எமது ஆராய்ச்சி வேண்டுகின்றது. அவரின் மதிநுட்பத்தில் அவருக்கு இருக்கும் நம்பிக்கையும் , ஒரு சிறந்த உலகினை உருவாக்க அவருடைய நியாயப்படுத்தும் ஆற்றலும், மனிதனின் ஆற்றலுக்கு அப்பால் சென்றது. அத்தகைய மனித சக்திக்கு மேலான நம்பிக்கையானது வீர சுபாவத்தின் ஒரு அம்சமாகும் . இது சோகமுடிவைத் தழுவும் வீரனைப் பயங்கரமானவராகவும் உயர்ந்தவராகவும் மாற்றும் என்பதற்கு விளக்கமாகும். பெரிக்கிள்சின் உயர்ந்த நிலை அவனுடைய வீர
54

சுபாவத்திற்கு அப்பால் சென்றது. ஏதென்சுக்கு அழிவில்லாத தன்மையைப் பெரிக்கிள்ஸ் கோருவது சரியானதே. நகரத்தின் அழிவில்லாத புகழுக்கு உண்மையான காரணம் ஒரு நல்ல சமூகமும் ஒரு நல்ல குடிமக்களுமாகும். இது ஒரு சுதந்திர மக்களின் எண்ணமாகும். சுதந்திர சமூகத்தின் அங்கத்தவர்களாக இருந்து தங்களுடைய உயர்ந்த அபிலாஷைகளையும் ஆற்றல்களையும் அடைந்து அரசாளுவதிலும் அரசாளப்படுவதிலும் பங்கேற்றுப் பொதுவானதும் முக்கியமானதுமான தீர்மானங்களை எடுத்தார். பெரிக்கிள்சின் எண்ணம் மதிநுட்பத்திற்கும் இயற்கையான ஆற்றலுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது. இவை இரண்டிற்கும் பொதுமக்கள் மத்தியில் கெளரவம் வழங்குவதில் அவர் சங்கடமான நிலைக்குத் தள்ளப்படவில்லை. அந்த எண்ணம் பொதுமக்களின் கல்விக்கும், மனதில் உற்சாகத்தை ஏற்படுத்துவதற்கும் கலைகளை ஒரு பெரிய சக்தியாக விருப்புடன் மனதில் வைத்தது. அது சமத்துவத்தைத் தேசத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதை (ஸ்பாட்டாவிலுள்ளது போல) நிராகரித்து சமத்துவத்திற்கும், சுதந்திரத்திற்குமிடையே இருந்த இழுபறி நிலையை நீக்கியது. சமத்துவத்திற்கும் கெளரவத்திற்கும் பாதையானது சந்தர்ப்பத்தின் சுதந்திரம் என்பதை வலியுறுத்தியது. ஒரு சனநாயத்தை அடைவதற்கான அத்தகைய எண்ணமானது வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் கீழ் நிலைக்குத் தள்ளுவதற்கு அல்ல மாறாகத் தனி நபரினதும் தேசத்தினதும் மேன்மையை அடைவதற்காகும் அது மக்களின் பங்கேற்பினையும் தியாகத்தினையும் கோரியது. அதே வேளை அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் தனியார் செயற்பாடுகளுக்கும் இடம் கொடுக்கின்றது. சந்தோஷத்திற்கான பாதையில் செல்வதற்கு ஒவ்வொரு குடிமகனின் உரிமையை அது அங்கீகரித்தது. அதே வேளை அது தன்னுடைய சக - குடிமகனையும் சமூகத்தினதும் தேவைகளை மதிக்கும்படி வேண்டியது. இந்த எண்ணம் காலத்தால் அளவிடமுடியாது. அத்துடன் அரசியல் சுதந்திரத்தால் தோன்றும் பிரச்சினைகளில் அல்லலுறும் மனித சமூகங்கள் இருக்கும் வரை அந்த எண்ணம் தொடர்ந்து உற்சாகமளித்துப் போதித்துக் கொண்டிருக்கும்.
55

Page 31
IV பெரிக்கிள்சின் நிழல் (The shadow of Pericles)
“உயர்ந்த மனிதர்களுக்கு இரு உயிர்களுண்டு என்று மிகவும் பொருத்தமாகக் கூறப்பட்டுள்ளது," ஒன்று அவர்கள் பூமியில் பணிசெய்து கொண்டிருக்கையில் தோன்றுகின்றது, மற்றது அவர்கள் இறக்கும் தினத்திலிருந்து ஆரம்பித்து அவர்களுடைய கருத்துக்களும் எண்ணங்களும் தொடர்ந்து சக்தியாக இருக்கும் வரைக்கும் தொடரும். பெரிகிள்ஸ்சைப் பொறுத்தமட்டில் இது உண்மையாக இருந்தது. அநேக உயர்ந்த தலைவர்களைப் போல் ஒருவராலும் நிரப்பமுடியாத அளவுக்கு ஒரு பயங்கரமான வெற்றிடத்தை விட்டுச் சென்றார். ஏதேனியரின் அரசியல் விரைவாக முன்னர் இருந்த எதிரிகளின் நிலைமைக்குப் பின் சென்றது. இதற்கு காரணம் ஏதென்ஸ்சிலுள்ள முன்னணித்தலைவர்கள் பெரிக்கிள்ஸ் விட்டுவிட்டுச் சென்ற அந்தஸ்திற்குப் போட்டி போட்டமையே. அவருடைய தனித்துவமான திறன் அற்றவர்களாக சனநாயக அமைப்பில் காணும் போட்டிகளில் வாக்காளர்களைத் திருப்திப்படுத்தவும் அவர்களைப் பொய்யாகப் புகழவும் புது வழி முறைகளைக் கண்டு தங்களுக்கிடையே போட்டியிட்டார்கள்.
பெரிக்கிள்ஸ்சுக்குப் பின்னர் வந்தவர்களைத் துசிடிடஸ் (Thucydides) தோல்வியைத் தழுவினவர்களாகக் கணித்தார்கள். யுத்தம் தோல்வியடைந்தமைக்கு அவர்களின் தலைமைப்பிடத்தில் உள்ள குறையே எனக் குற்றம் சாட்டினார். அவர்களுடைய அந்தரங்கக் குறிக்கோள்களும் சொந்த அவாவுமே பெரிக்கிள்ஸ் கையாண்ட சுதந்திரத்தைக் கைவிடப்பண்ணியது. அது மாத்திரமல்ல, ஏதேனியரின் மார்க்கத்திற்கு மாறாகவுள்ள கொள்கைகளைத் தேர்ந்தெடுத்தார்கள் : “இந்தக் கொள்கைகள் வெற்றியீட்டினால் தனிநபர்களுக்கு மட்டும் புகழையும் நன்மையையும் கொண்டுவந்திருக்கும் . . ஆனால் அவை தோல்வியடைந்ததால் யுத்தத்தில் ஈடுபட்டமாதிரி முழு மாநிலத்திற்கும் தீங்கு விளைவித்தது. (ThucydideS2.65.7) துசிடிடஸ்சின் அந்தக் கணிப்பு கடுமையானது, ஏன் என்றால் பெரிக்கிள்சின் இடத்தில் அமர்ந்தவர்கள் இயலாத தன்மையிலுள்ள ஒரு நிலையில் வாரிசாகினார்கள், அத்துடன் சிலர் ஏதென்ஸ்க்கு எது சிறந்தது, எந்தக் கொள்கைகளைச் சரியென்று கருதினார்களோ அதைக் கடைப்பிடித்தார்கள். அந்த வேளை ஒருவராவது தலைமைத்துவதற்குத் தேவையான தன்மைகள் அற்றவர்களாக இருந்தார்கள். பெரிக்கிள்ஸ் இருந்த மாதிரி "முதல் குடிமகன்” என்ற நிலைக்கு வருவதற்கு வேண்டிய நற்பண்புகள், அனுபவம் ஒருவருக்கேனும் இருக்கவில்லை. எவ்வாறாயினும் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வழிகளில் பெரிக்கிள்ஸ்சின் தன்மைகளைப் பின்பற்றுவதற்கு முயற்சி எடுத்தார்கள்.
56

பெரிக்கிள்சின் மரணத்திற்குப் பின் மிக முக்கிய அரசியல் வாதியாக இருந்தவர் நிசியாஸ் (Nicias) ஆவர். அவர் பெரிக்கிள்ஸ்க்குச் சமமான நிலையில் தளப்தியாகச் சேவையாற்றி அவரின் அங்கியைச் சுவீகரித்தார். காரணம் பெரிக்கிள்சின் யுத்த தந்திரத்தை உறுதியாக கடைப்பிடித்தார். இதற்காக இன்னும் கூடுதலான ஆக்கிரமிப்புள்ள யுத்த தந்திரத்தை ஆதரித்தவரும் பெரிக்கிள்சைத் தாக்கியதைப்போல் தன்னையும் தாக்கிய கிலியோனின் (Cleon) பகையைச் சம்பாதித்தார். உயர்நிலையில் இருந்த மனிதரின் தோற்றமும், தன்வயப்படுத்தக் கூடிய தன்மையும் அற்ற நிசியாஸ் (Nicias) பெரிக்கிள்ஸ்சின் நடையைப் பின்பற்ற எத்தனித்தார். தங்களுக்கிடையேயுள்ள ஒற்றுமைகளின் கவனத்தையிர்ப்பதற்கும், பிரத்தியேக வாழ்க்கையில் ஒதுங்கியிருக்கவும் கேளிக்கைகளையும், பொது வைபவங்களையும் , சம்பாஷனைகளையும் விலக்கவும் தன்னாலானவற்றறைச் செய்தார். பெரிக்கிள்ஸ் மாதிரி தளபதியாக இருக்கும் போதும் ஏதேனியன் சபையில் சேவை புரியும் போதும் நிசியாஸ் உத்தியோக வேலைகளில் தன்னை மூழ்கடித்தார். தன்னுடைய வீட்டு வாசலில் தன்னுடைய நண்பர்களைச் சேவைக்கு அமர்த்தி, தான் அவ்வேளை முக்கிய பொதுவிடயத்தில் மூழ்கி இருப்பதாகவும் தன்னை மன்னிக்கும்படி தன்னை நாடி வந்தோர்களுக்குக் கூறும்படியும் பணித்தார். (Plutarch, Nicias 5:2). அத்துடன் பொது மக்கள் தொடர்பு விற்பன்னர் ஒருவரையும் நியமித்தார். புலூட்டாச் (Plutarch) இந்த விற்பன்னரை பிரதானமான சக விசனகரமானவர் என்றும் தன்னைச் சுற்றி ஒரு கெளரவமும் மரியாதையும் கொண்ட போர்வை அணிகிறார் என்றும் அழைத்தார். நிசியாஸ் நாட்டுக்குச் சேவை செய்யும் பொருட்டு ஒரு கடினமான வாழ்க்கையை நடத்துகிறார் என்ற கதைகளைப் பரப்ப ஹிரோ (Hiero) என்ற ஒருவர் நியமிக்கப்பட்டார்.
அவர் குளித்துக் கொண்டிருந்தாலென்ன சாப்பிட்டுக் கொண்டிருந்தாலென்ன ஏதாவது பொதுக் காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார். பொது நன்மைகளைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருப்பதால் அவர் சொந்த அலுவல்களைப் புறக்கணிக்கின்றார். நடுநிசி வரை கடும் வேலையில் ஈடுபட்டுக்கொணி டிருப்பார் . இதனாலேயே அவர் தேகாரோக்கியம் குன்றியநிலையிலும் தன்னுடைய நண்பர்கள் மேல் பொறுமையாகவும் அன்பாகவும் பழகுவதில்லை. மேலும் இக்காரணத்திற்காகத்தன்னுடைய நண்பர்களையும் பணத்தையும் இழந்தார். மற்றவர்கள் பொது இடங்களில் உல்லாசமாக இருந்து பொதுஉடமைகளைத் தன்வசமாக்கிச் செல்வந்தர்களையும் நண்பர்களையும் தங்களுடன் சேர்த்துக் கொள்கிறார்கள் (5.3.4)
இது உண்மையில் பெரிக்கிள்சின் உயரிய போக்கினைக் கேலி செய்வதாக இருக்கின்றது. தனக்கு முன்னர் பதவிவகுத்தவரின் தூரதிருஷ்டியோ
57

Page 32
தன்வயப்படுத்தும் தன்மையோ தனக்கு இல்லை என்பதனை நிசியாஸ் விரைவில் காண்பித்தார். ஆனால் நிசியாஸ் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் தேசபக்தனாகவும் எந்தவித ஊழலில் சம்பந்தப்படாமலும் இருந்தார். பெரிக்கிள்சுக்குப் பின் பதினான்கு வருடங்களாக ஏதென்சில் பெரும் சக்தியாக இருந்தார்.
அதிசயிக்கப்படுகிறமாதிரி பெரிக்கிள்சின் நிழல் கிலியோனிலும் ஒரு தாக்கத்தை உண்டுபண்ணியது. கிலியோன் பெரிக்கிள்சையும் அவருடைய கொள்கைகளையும் வன்மையாகத் தாக்கியவர். அநேகமாக எல்லா வகைகளிலும் கிலியோன் பெரிக்கிள்சுக்கு எதிரும் புதிருமாக இருந்தார். பெரிக்கிள்ஸ் நிதானத்துடன் செயல்பட்டபோது கிலியோன் “மிகவும் வன்மையானவர்” என விவரிக்கப்பட்டார் (Thucydides 3.36.6). நட்பு நாடுகளுடனும், நகரத்தின் யுத்த குறிக்கோளுடனும் பெரிக்கிள்ஸ் நிதானபோக்கினை விரும்பினார். கிளியோன் அடக்கி ஆள முடியாத நேச நாடுகளுடன் கடும்போக்கினைக் கடைப்பிடிப்பதை ஆதரித்தார். அத்துடன் யுத்தக் குறிக்கோள்களை எந்தக் கஷ்டங்கள் வந்தாலும் அடைதல் என்ற போக்குடையவர். முக்கிய வினாக்களைக் கலந்துரையாடல், புதுக் கருத்துக்களை வரவேற்றல் ஆகியனவற்றை வரவேற்பதை பெரிக்கிள்ஸ் வரவேற்றார். நீண்ட விவாதங்களில் கலந்து கொள்வதில் ஏதேனியர்களுக்கு இருந்த விருப்பத்தையும் பல கருத்துக்களுக்குச் செவிமடுப்பதையும், புது வாக்குவாதங்களினால் வற்புறுத்தும் போது மனதை மாற்றிக்கொள்வதையும் கிளியோன் கண்டித்தார்.
கீழ்த்தரமான செயல்களுக்குப் பேர்போன கிளர்ச்சித் தலைவர் கிளியோன் பெரிக்கிள்சின் தலைமைத்துவம் போல் பதவிவகுக்க விரும்பினார். பெரும்பான்மையினர் தவறுவிட்டார்கள் என்று கருதினால் அவர்களின் கூற்றுக்களை மறந்து அவர்களைத் தண்டித்தும் விடுவார். ஒரு சந்தர்ப்பத்தில் அவர் தன்னுடைய சொற்பொழிவைப் பின்வருமாறு ஆரம்பித்தார். “முன்னர் மாதிரி அதே கருத்தினை நான் மேற் கொள்கின்றேன்” இதே வார்த்தைகளைப் போர் ஆரம்பிக்கு முன் பெரும்பான்மையினரை எதிர்த்துப் பேசியுள்ளார். அதே சொற்பொழிவில் பெரிக்கிள்ஸ் முன்னர் பல சந்தர்ப்பங்களில் செய்தமாதிரி தங்களுடைய கஷடங்களுக்கு ஏதேனியர் தான் பொறுப்பு என்று கிளியோன் குற்றஞ்சாட்டினார். பெரிக்கிள்சின் குறிக்கோள்களுக்கு மாறானவற்றை நாடும் பொழுது அவர் பெரிக்கிள்சின்போக்கினையும் நடைமுறையினையும் கெட்டித்தனமாகப் பயன்படுத்தினார்
பெரிக்கிள் சின் மாணவனாகிய அல்சிபியாடஸ்சும் (Alcibiades) பெருந்தலைவரின் வீட்டில் வளர்ந்து அவரின் செல்வாக்கைப் பெற்றவர். அவ்விளைஞனின் ஆற்றல், மனோநிலை, தகப்பனின் பெருமை முதலியன அவனை அரசியல், இராணுவத்துறைகளில் இட்டுச் சென்றிருக்கும். அவனுக்குப் பாதுகாவலரின் உதாரணம் வழிகாட்டியாக இருந்திருக்கும் என்பதற்குப் பல சாட்சிகள் உண்டு. ஏதென்சில் மிகவும்
58

செல்வாக்குள்ளவராக இருந்தபோது அல்சிபியடஸ்சின் குறிக்கோளும் அவனுடைய நண்பர்கள் கொடுத்த உற்சாகமும் அவனைச் சாதாரணமாக ஒரு துறையை மட்டும் ஏற்றுக் கொள்ளச் செய்யவில்லை, ஆனால் தன்னுடைய பாதுகாவலனால் பெற்ற சாதனைகளுக்குச் சவாலான ஒன்றினை ஏற்கவைத்தது.
பெரிக்கிள்ஸ்மாதிரி முப்பது வயதின் ஆரம்பப் பகுதிகளில் தளபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுத் தனது துறையினை வீறுநடையுடன் ஆரம்பித்தார். கிளியோனின் மரணத்திற்குப்பின் ஸ்பாட்டானியருடன் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழமுடியும் என்ற நிசியாஸ்சின் கொள்கையை எதிர்த்த அணிக்குத் தலைவரானார். இதற்குமாறாக ஏதென்ஸ், ஆகோஸ் (Argos), பிலோபொனேசஸ்சில் (Peoloponnesus) உள்ள ஸ்பாட்டாவின் ஏனைய எதிரிகளுடன் கூட்டு அமைத்துத் தன்னுடைய திட்டத்தைக் கொண்டு சென்றார். முதலாவது பிலோபொனேசஸ்சில் பெரிக்கிள்ஸ் கடைப்பிடித்த திட்டத்திற்குச் சமமான ஒரு திட்டத்தைப் பின்பற்றினார். இத்திட்டமானது யுத்தத்தில் ஸ்பாட்டாவை தோல்வியடையச் செய்கிற அளவுக்கு நெருங்கியது. ஆனால் 418 இல் மான்ரினியா (Mantinea) யுத்தத்தில் அது தோல்வியைத் தழுவியது.
அல்சிபியாடஸ், நிசியஸ் அல்லது வேறு எந்த ஏதேனியர்களுக்கோ ஒரு பின்னடைவு ஏற்பட்டாலும் அவருடைய கொள்கையை எடுத்துச் செல்ல வேண்டிய அரசியல் ஆதரவு இல்லாததே இத் தோல்விக்கு காரணமாக இருந்தது. ஒரு கொள்கையையோ அல்லது இன்னொரு கொள்கையையோ கடைப்பிடித்துச் செல்வதற்கு நிதானமாகவும் உறுதியாகவும் மக்களை ஒன்றுபடுத்தி வழிநடத்திச் செல்வதற்கு ஏதென்சுக்கு அவசியம் ஒரு பெரிக்கிள்ஸ் தேவைப்பட்டது. ஒரு சமார்த்தியமுள்ள வலிமைமிக்க தலைமைத்துவம் இல்லாமல் முரட்டுத்தனமான, அழிவுப்பாதைக்குள், குறிக்கோள் இல்லாமல் தடுமாறியது. மெலோஸ் (Melos) தீவுவாசிகளின் அவல நிலையை உதாரணமாக எடுத்துக் கொண்டால் அவர்கள் இது வரை காலம் ஏதேனியரிடமிருந்தும் அவர்களுடைய கூட்டுச்சேர்ந்த நாடுகளிலிருந்தும் விலகி வாழ்ந்தார்கள். அறுபது ஆண்டுகளாக ஏதேனியர்கள் அவர்களை அவ்வாறு வாழவிட்டார்கள். ஏதேனியரின் கொள்கைகளை மாற்றுவதற்கு அவசியத் தேவை ஏற்படவில்லை. ஆனால் 416 இல் அவர்களுக்கு ஏற்பட்ட விரக்தியின் காரணமாக மெலோசை ஏதேனியன் சாம்ராச்சியத்துடன் சேரும்படி கட்டளை இட்டார்கள். மெலோஸ் மறுத்தபோது ஏதேனியர்கள் அவர்களின் தீவைக் கைப்பற்றினார்கள். இறுதியாக மெலியன்ஸ் சரணடைந்த போது வெற்றிக்களிப்பில் இருந்த ஏதேனியர்கள் எல்லா ஆண்களையும் கொலை செய்து எல்லாப் பெண்களையும் பிள்ளைகளையும் அடிமைத் தொழிலுக்கு விற்றார்கள். இதுவே ஏதேனியர்கள் செய்த மிகவும் மோசமான கொடுமையாகும். இந்தச் செய்கை பல சகாப்தங்களுக்கு அவர்கள் மனதை உறுத்தி அவர்களுடைய நல்ல பெயருக்குக் களங்கத்தை
59

Page 33
ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய செயல்களில் அவர்கள் பெரிக்கிள்சின் காலத்தில் கூட ஈடுபடவில்லை. அவர்களுடைய ஆதிக்கத்தையும், வாழ்வையும் மோசமான கிளர்ச்சிகள் அச்சுறுத்திய போதும் கூட இப்படி நடக்கவில்லை.
அடுத்த ஆண்டு நிசியஸ் மேல் ஆதிக்கம் செலுத்தும் முகமாகத் தொலைவிலுள்ள செல்வமிக்க தீவாகிய சிசிலியைத் (Sicily) தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அல்சிபியாடஸ் ஒரு படை எடுப்பிற்குத் திட்டமிட்டார். இந்த மாதிரியான துணிகர முயற்சிகளைப் பெரிக்கிள்ஸ் தொடர்ந்து எதிர்த்தார். நிசியாசும் இதை எதிர்த்தார். ஆனால் இந்த திட்டத்தைக் கவிழ்க்க எடுத்த முயற்சி, முன்னர் திட்டமிட்ட இராணுவத்தை விடத் துரிதமானதும் எண்ணிக்கையில் கூடுதலாகவும் உண்டாக்கியது. இதன் விளைவு ஒரு பெரும் அழிவில் முடிந்தது. தேசத் துரோகம் செய்த குற்றத்திற்காக அல்சிபியாடஸ் மேல் வழக்குத் தொடரப்பட்டுக் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டது. 413 இல் ஸ்பாட்டாவிற்கு நாடு கடத்தப்பட்ட நிசியஸ் இறந்துவிட்டர். அவருடன் ஆயிரக்கணக்கான ஏதேனியர்களும் கூட்டுச் சேர்ந்த படையினரும் இறந்து போனார்கள். அநேகமான ஏதேனிய கப்பல்கள் சிசிலியன் கடலிலுள் மூழ்கின. நாட்டின் திறைசேரியும் (Treasury) காலியாக்கப்பட்டது. ஏதேனியர்கள் பலமாகத் தாக்கப்பட்டவர்களாகக் காணப்பட்டார்கள். அவர்களுடன் கூட்டுச் சேர்ந்தவர்களும் கிளர்ச்சியில் இறங்கினார்கள். ஸ்பாட்டானியர் சுலபமானதும், தவிர்க்க முடியாது வெற்றி கிடைக்கும் எனத் திடமாக நம்பினார்கள். நடுநிலைவகுத்தவர்களும் இந்த குழப்ப நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கப் பார்த்தார்கள்.
இந்த மோசமான வேளையில் பெரிக்கிள்சின் நினைவும் அவருடைய செல்வாக்கும் தங்கள் மத்தியில் நிலவுகின்றது என்பதைக் காண்பித்தார்கள். பெரிக்கிள்சுக்கே உரித்தான உண்மையான நம்பிக்கையூட்டக் கூடிய அரசியல் தலைமைத்துவம் அவசியம் என்பதை உணர்ந்து பிரபல்யமான தலைவர் இல்லாதபோது வழிகாட்டலுக்கும், நிலையான ஆட்சிக்கும் ஒரு புது வழிமுறையை உண்டாக்கினார்கள்."புரோபுலோ" என்ற பதவியை வகித்துச் சேவை செய்ய வயது மூத்தவர்களைக் கொண்ட சபை ஒன்றினைத் தெரிவு செய்ய வாக்களித்தார்கள். இச் சபையானது நிலைமைக்கு ஏற்றவாறு நடைமுறையில் இருக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக ஆலோசனை வழங்கவும் சட்டங்களை இயற்றவும் செயற்படுகின்றது. (Thucydidis, 8.13). சில பழைய எழுத்தாளர்களும் தற்கால அறிஞர்களும் இந்த வழிமுறையானது சனநாயகத்திலிருந்து விலகிச் செல்வதாகக் கண்டார்கள். இதற்குக் காரணம் வயதுக்கு மூத்த நாற்பது உறுப்பினர்களைக் கொண்ட சபையானது சனநாயக சபையின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தது. ஆனால் அந்தக் கருத்து தவறானது. ஒரு அவசரத் தேவையின் நிமித்தம் இந்தச் சபையானது சுதந்திரமாகவும் எதுவித நிர்ப்பந்தமும் இல்லாமல் ஒர் ஆலோசனைச் சபையினைத் தெரிவு செய்தது.
60

இந்த நாற்பது நபர்களில் ஹக்னொன் (Hagnon), சொபொகிள்ஸ் (Sophocles) ஆகிய இருவரினது பெயர்களுமே தெரியக்கூடியதாக இருக்கிறது. ஆனால் இவ்விருவரும் பொதுமக்கள் மனதில் பெரிக்கிள்சுடன் நெருக்கமான தொடர்புள்ளவர்களாக இருந்ததுடன் ஹக்னொன் பெரிக்கிள்சுடன் தளபதியாக சாமோஸ்சில் (Samos) 440இலும், ஏனைய அரங்குகளில் 430இலும், 429இலும், குறைந்தது மூன்ற முறையாவது சேவைசெய்திருந்தார். 438இல் அரசியல் பகைவர்களின் தாக்குதலிலிருந்து பெரிக்கிள்சைப் பாதுகாப்பதில் பிரதம பங்கினை வகித்தார். அத்துடன் 437இல் முக்கியமான அம்பிபொலிஸ் (Amphipolis) காலனியின் ஸ்தாபகராகச் சேவையாற்றினார். சாமியன் (Samian) யுத்தத்தின்போது பெரிக்கிள்சுக்காக ஒரு சிக்கலானதும் சமார்த்தியமானதுமான ஒரு தூது கோஷ்டியை சொபொகிள்ஸ் கொண்டுசென்றார். அவர் பெரிக்கிள்ஸ்சுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் என்று தெரிய வந்தது. வெளிப்படையாக ஏதேனியர் முதியோர்களைக் கொண்ட ஆலோசனைச் சபைக்குப் பல பழைய பெரிக்கிளியர்களை நியமித்தார்கள்.
துசிடிடெஸ் பெரிக்கிள்சுக்குப் பிந்திய ஏதென்சின் அபிமானியாக இருக்கவில்லை. 413இன் ஏதெனியரின் முயற்சிகளைப் போற்றுவது அதிருப்திக்குரியதாகுமா. “டெமொஸ் சின் போக்குப் போல அவ்வேளைக்குரிய பீதியின்போது அவர்கள் ஒழுக்கத்துடன் எதையும் செய்யத் தயாராக இருந்தார்கள்". (8.1.4). உண்மையில் இந்த ஆபத்தான நிலையின் போது ஏதேனியரின் சனநாயகத்தின் போக்கு பெரிக்கிளியனின்போக்குபோல்தெட்டத்தெளிவாக இருந்தது. யுத்தத்தின் முதலாவது ஆண்டின்போது திடமான கொள்கையில் மனகிளர்ச்சிகள் தலையிடும் என பெரிக்கிள்ஸ் அஞ்சினார். சபையின் கூட்டங்களைத் தடுத்து சனநாயத்தைக் கட்டுப்படுத்தத் தன்னுடைய சொந்த அதிகாரத்தைப் பயன்படுத்தினார். இப்பொழுது முற்றாக பெரிக்கிளின் போக்கில் துணிவுடனும் கட்டுப்பாட்டுடனும், புத்திசாலித்தனத்துடனும், சிக்கனத்துடனும் செயற்படும் ஏதேனியன் சபையானது இந்த மரபில் வந்த மதிப்பும், நம்பிக்கையும் உள்ள சபைக்கு என்றுமில்லாத அளவு அதிகாரங்களை வழங்கித்தன்மேல் தன்னிச்சையாக ஒரு கட்டுப்பாட்டினை வைத்தார்கள். பொதுவரிப்பணத்தைப் பொறுத்த மட்டில் நேர்மையாக நடந்தார்கள் என்றும் எடுத்துக் காட்டினார்கள். நிலைமை வழிவிட்டது போல் விட்டுக் கொடாமல் அதற்குப் பதிலாக எடுக்கக் கூடிய இடங்களில் இருந்து மரமும் பணமும் பெற்று ஒரு கப்பல் படையினைத் தயார் செய்து தங்களுடன் கூட்டுச்சேர்ந்தவர்களின் பாதுகாப்பினையும் பார்த்து பொதுச் செலவினங்களைக் குறைத்தார்கள் (8.1.8).
"புரோபுலோ"வின் கீழ் ஏதேனியர்கள் வியக்கத்தக்க விதத்தில் முன்னுக்கு வந்தார்கள். அவர்களின் கூட்டுச் சேர்க்கையிலுள்ள புரட்சிக்காரர்களை அடக்கிக் கடலிலிருந்து பெலொபொனேசியன் கடற்படையை விரட்டினார்கள். ஸ்பாட்டானியரின் பக்கம் பேசியரின் தலையீடு
61

Page 34
பகைவரின் நியாயத்திற்குப் புத்துயிர் அளித்தது. கிரேட் கிங்கின் (Great king) ஆதரவுடன் பெலொபொனெசியனுக்கு எதிராகச் செயற்பட ஏதென்ஸ்க்கு ஒரு சந்தர்ப்பமும் இல்லை. அதேவேளை அல்சிபியாடெஸ் ஸ்பாற்றாவில் மரண தண்டனையிலிருந்து தப்பிஓடி திஸ்சாபேர்னஸ்க்கு (Tissaphernes) சொந்த ஆலோசகராகச் சேவையாற்றினார். இவர் பேசியாவின் மாகாணத்தலைவராக இருந்து ஸ்பாட்டாவுடன் புதிய ஒப்பந்தத்தைப் பேசிமுடித்தார் அல்சிபியடெஸ் ஏதென்ஸ்க்குத் திரும்ப ஆவலாக இருந்தார். சனநாயகம் தொடர்ந்து இருக்கும்போது அவரால் நாட்டுக்குத் திரும்பமுடியாது. காரணம் அவருக்குக்கெதிரான பல கொலைக் குற்றச்சாட்டுக்கள் இருந்தன. ஏஜியர்களினால் ஏதேனியர்களுடன் பேரம் பேசி சனநாயகம் தூக்கி எறியப்பட்டால் ஏதேனியர் பக்கத்திற்கு திஸ்சாபேர்னசையும் பேசியர்களையும் கொண்டு வரச் சபதம் போட்டார். அவருடைய வருகையைத் தேசாபிமானிகளும், நண்பர்களும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தார்கள். இதன் விளைவாக 411 இன் சதிப்புரட்சியும், நானுாறின் ஆட்சி உருவாக்கமும் ஏதென்சில் உள்ள சனநாயக அரசாங்கத்திற்கான இந்த நூற்றாண்டின் முதலாவது குறுக்கீடாகும்.
இந்த "நானுாற்றின்" பிரதான பிரிவினர் தாங்கள் உண்மையான ஆட்சியாளர்கள் என்றும் சனநாயகத்தை வெறுப்பவர்கள் என்றும் விரைவில் காண்பித்தார்கள். அவர்கள் கொலைகளையும் சனநாயகவாதிகளுக்கும் நிதானபோக்கினைக் கடைப்பிடிப்பவர்களுக்கும் எதிராகக் கொலை, ஆள்மாறாட்டம் கொண்ட ஓர் ஆட்சியை ஆரம்பித்தார்கள். அத்துடன் நிதானபோக்கினைக் கடைப்பிடிப்பவர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபோது அவர்கள் நகரை ஸ்பாட்டானியருக்கு காட்டிக் கொடுக்கிற அளவுக்கு வந்தார்கள், சதிப்புரட்சி நடந்து நான்கு மாதங்களுக்குப் பின்தான் இந்த நானூறுக்கும் பதிலாக ஒரு பரந்த அரசாங்கம் அமைத்து ஒரு வருடத்தினுள் முழுச் சனநாயகமுறையும் நிலைநாட்டப்பட்டது. இவ்வாறு நிலைநாட்டப்பட்ட சனநாயகம் ஒரு பெரிய தலைவர்களையும் தோற்றுவிக்காமல் பல தவறுகளைச் செய்து இறுதியில் பெலொபொனேசியன் யுத்தத்தில் தோல்வி கண்டது. எப்படியாயினும் அதனுடைய சாதனை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடியதாகவும் அதனுடைய துணிவும் உறுதியும் போற்றத்தக்கதும் அத்துடன் உண்மையில் அது வெற்றியீட்டும் அளவுக்குச் செயல்பட்டது. அதனைப் பற்றிய துசிடிடெஸ் இன் கணிப்பு அதற்கு கொடுக்கும் மதிப்பாகும்.
அவர்களின் சிசிலி தோல்விக்குப்பின்னர் தங்களுடைய அநேக கடற்படையினரையும் தங்களுடைய மற்றய படையினரில் ஏனையோரையும் இழந்து ஏதென்ஸ்சில் பிளவையும் ஏற்படுத்தினார்கள். எவ்வாறாயினும் தொடர்ந்து பதது வருடங்களுக்கு முன்னைய பகைவர்களுக்கும் தங்களுடன் சேர்ந்த சிலியன்களுக்கும், அநேக கூட்டுச்சேர்ந்தவர்களுக்கும்
62

எதிராகவும் மாத்திரமன்றி ஒரு கடற்படை அமைப்பதற்கு பெலொபொனேசியருக்குப் பணம் கொடுத்த "கிரேட்கிங்'கின் மகன் சைனாஸ் க்கு எதிராகவும் செயல்பட்டார்கள். தங்களுடைய சொந்தப் பிரச்சினைகளால் தங்களுக்குள்ளே மோதி அழிந்து போகும் வரை விட்டுக் கொடுக்கவில்லை. (2.65-12-13).
தன்னுடைய முன்னைய யுத்த தந்திரத்தின்படி நடந்திருந்தார்களேயானால் ஏதேனியர்கள் யுத்தத்தை எளிதில் வென்றிருப்பார்கள் என்ற பெரிக்கிள்சின் கூற்றினை ஆதரிக்கும் முகமாக துசிடிடெஸ் இந்தக் கூற்றினை வெளியிட்டார். தங்களுடைய தலைவரை இழந்த பின்னரும் ஏதேனியன் சனநாயகம் காட்டிய அசாதாரண உறுதியையும் துணிவினையும் போற்றிய பெரும் வரலாற்றாசிரியரின் கருத்தினை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்குப் பதிலாக சனநாயகத்தைப் பற்றிய அவரின் எண்ணத்தில் அவர்களுக்கு இருந்த பக்தியினை மிகவும் இருண்ட காலங்களிலும் அதனை விடாமல் கடைப்பிடித்தமையையும் கண்டு வியந்தோம். அந்தப் பக்தியானது தோல்விக்குப் பின் ஏதேனியர்களுக்குத் தங்களுடைய சாம்ராஜ்யமும், தங்கள் சுய ஆட்சியும், தங்களுடைய சனநாயகமும் கிடைக்காத போதும் அசைக்க முடியாமல் இருந்தது.
404 இல் தோல்வியடைந்து அல்லலுற்ற ஏதேனியர்களுக்கு எதிராக சரணடைவதற்காகக் கடும் நிபந்தனைகளை ஸ்பாட்டானியர் விதித்தார்கள். பாதுகாப்புச்சுவர்கள் உடைந்தன. தோல்வியடைந்தவர்கள் கூட்டு சேர்ந்தவர்களையும் , கடற்படையினையும் கைவிடும்படி நிர்பந்திக்கப்பட்டார்கள். நகரின் பாதுகாப்புச் சுவர்கள் உடைந்தன. ஏதேனியர்கள் தங்கள் வெளிநாட்டுக் கொள்கையின் கட்டுப்பாட்டினை இழந்தார்கள். இதற்கு காரணம் தங்கள் நகரம் பெலொபொனேசியன் அமைப்பில் அங்கத்தவராக வந்து ஸ்பாட்டானியர் எங்கே அழைத்துச் சென்றாலும் அவர்களைப் பின் தொடர்வோம் எனச் சத்தியம் செய்ததேயாகும். இதன் பின் ஸ்பாட்டானியர் பலமிக்க ஒரு பொம்மை அரசாங்கத்தை நடத்தினார்கள். அவர்களின் கொடுமையான ஆட்சி அவர்களுக்கு "முப்பது கொடுங்கோல் ஆட்சியாளர்" என்ற பெயரைப் பெற்றுத்தந்தது. புதிய அரசாங்கம் இன்னுமொரு பயங்கரமான ஆட்சியை நடத்தியது. இதன் மூலம் பரவலான முறையில் பொருட்களையும் உடமைகளையும் கைப்பற்றுதல், சட்டத்திற்குட்பட்ட கொலைகள், சனநாயக தலைவர்கள் போல் அரசியல் காரணங்களுக்காக முதலில் மேற்படி நடவடிக்கைகளை எடுத்துப்பின்னர் இலாபத்திற்காக செல்வந்தர் மேலும், இறுதியில் நிதானமாகச் செயல்படுகிறவர்கள் மேலும், இந்தக் கொடுமைகளை முறைப்பாடு செய்கின்ற தங்கள் அங்கத்தவர்கள் மேலும் நடவடிக்கை எடுத்தார்கள். பகைமையும் எதிர்ப்பும் கூடியபோது தங்களுடைய குடிமக்களிடமிருந்து தங்களைப் பாதுகாப்பதற்காக ஸ்பாட்டான் படைப்பிரிவை அழைக்க வேண்டி இருந்தது.
63

Page 35
முன்னைய ஏதேனியரின் சாம்ராஜ்யத்தைத் தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவந்த பின் கிரேக்க உலகில் தமது ஆதிக்கத்தைச் செலுத்தினார்கள். அவர்கள் இறுதியாகச் சுற்றிவளைத்து எல்லா இடத்திலும் சனநாயத்தை நசுக்கி அதற்குப் பதிலாகப் பலம் பொருந்திய தங்களால் அமைக்கப்பட்ட அரசாங்கங்களை அமைத்தார்கள். ஏதேன்ஸ் ஆக்கிரமிக்கப்பட்ட ஒர் இடமாகும். அங்கே சனநாயக அனுதாபங்களில் சந்தேகப்படுவதே பதவி இறக்கத்தையும் மரணத்தையும் தோற்றுவிக்கும். பெரிக்கிள் சின் ஒளியானது மீண்டும் ஒருமுறை முற்றாக அணைந்துள்ளது. இந்த இருண்ட காலங்களில் ஏதேனியர்கள் பெரிக்கிளியன் அச்சிலே உருவான ஒரு தலைவரைக் கண்டார்கள். அவன்தான் லைகஸ் (Lycus) இன் மகன் திராசிபியூலஸ் (Thrasybulus). ஏதென்சைக் காப்பாற்றி, யுத்தத்தை வெல்வதற்கு அல்சிபியடெஸ் (Alcibiades) என்பவரைக் கொண்டுவர விரும்பினார் லைகஸ், 411 சதிகாரர்களும் தங்களுடைய சதிப்புரட்சியை சமோஸ்க்குப்பரப்பமுற்பட்டபோது ஏதேனிய கடற்படையின் தலைவனாக இருந்த திராசிபுயூலஸ் தலைவராக இருந்து சனநாயக எதிர்ப்புக்கு எதிராக வழிநடத்திவெற்றியீட்டினார். நானூறு பேரை வெற்றியீட்டிநிதானமான ஆட்சியின் கீழும் அதன் பின்னர் முழுமையாக மீட்கப்பட்ட சனநாயகத்திற்கு கீழும் ஏதேனிய கடற்படையின் தலைவராக இருந்து மிகத்திறமையாகச் சேவைபுரிந்து யுத்தத்தில் மிகப்பெரிய கடற்படை வெற்றியினையும் ஈட்டினார். பெரிக்கிளியன் சனநாயத்தின் குழந்தையாகவும், கடமையுடன் ஏதேனியரின் சாம்ராஜ்யத்திற்கு விசுவாசமாக இருக்கும் மரபுவழியான கல்வியையும் பயின்றார். இந்த இலட்சியங்களை வாழ் நாள்பூராகவும் கடைப்பிடித்தார்.
ஸ்பாட்டானியரின் வெற்றிக்குப்பின் ஏதேனியர்கள் 1940 இல் பிரான்ஸ் நாட்டவர் எதிர்கொண்ட அதே மாதிரியான நிகழ்வினைச் சந்தித்தார்கள். அநேக பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் தோல்விகளையும் ஜெர்மனியர் குடியேறியதையும் தங்களால் இயன்றளவு ஏற்றுத் தங்களுடைய வாழ்க்கையை தங்களால் இயன்றளவு சாதாரணமாகத் தொடர்ந்தார்கள். ஏனையோர் சிறு தொகையாக இருந்து சாள்ஸ் டி கோல் இன் கீழ் சுதந்திரத்திற்காகச் செயல்பட உடனே தீர்மானித்து பிரித்தானியாவில் ஒரு தளத்தையும் ஆதரவையும் நாடினார்கள். திராசிபியூலஸ்ஏதேனியருக்கு டிகோலாக இருந்தார். அவர் தெப்ஸ்க்கு ஒடினார். தெப்ஸ் முன்னர் ஏதென்ஸ் க்கு பகைவர்களாக இருந்தது. ஆனால் இப்பொழுது ஸ்பாட்டாவிலிருந்து விலக்கப்பட்டது. அங்கே தப்பி ஓடிய ஏதேனிய சனநாயகவாதிகளும் தேசாபிமானிகளும் அவருக்கு பின்னால் சென்று ஒரு சிறு இராணுவத்தை அமைத்தனர். முப்பது கொண்ட படையினர் புரட்சியாளர்களை அழிக்க முடியாமல் போன போது இன்னும் ஏதேனியர்கள் ஓடிப் போய் எதிர்ப்பணியில் சேர்ந்தனர். இறுதியாக திராசிபியூலஸ் அணியாகச் சென்று பிரேயியஸ்சைப் (Piraeus) பிடித்து ஸ்பாட்டானியரின் படையுடன் யுத்தம் புரியத் துணையாக இருந்தார். ஸ்பாட்டானியர் ஏதேன்சைக் கைவிட முடிவெடுத்தார்கள். 403 இல்
64

திரேசிபியூலஸ்சும் அவருடைய ஆட்களும் முழுமையாகச் சனநாயத்தை நிலைநாட்டினார்கள். ஏதேனியர்கள் அவர்களைக் கெளரவிக்கும் முகமாகப் பொதுமயானத்தில் பெரிக்கிள்சின் சமாதிக்கு அருகில் அவரை அடக்கம் செய்தார்கள். முப்பதினால் செய்யப்பட்டவன்செயல்களால் கோபமடைந்த அநேக குடிமக்கள் குற்றம் புரிந்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர் களையும் அவர்களுடன் சேர்ந்து இச் செயல்களில் ஈடுபட்டவர்களையும் தண்டிக்க விரும்பினார்கள். அது வழக்குகளையும் தூக்குத் தண்டனையையும் நாடுகடத்துதலையும் கொண்டு வந்திருக்கும். அநேக கிரேக்க மாநிலங்களில் சனநாயத்தை அழித்த யுத்தத்தினாலும் குழுக்களின் மோதலினாலும் ஏதேன்ஸ் பிளவுபட்டிருக்கம். இதற்குப் பதிலாக திரேசிபியூலஸ் ஏனைய நிதானத்துடன் பழகுபவர்களுடன் சேர்ந்து ஒரு சில மோசமான குற்றங்களைச் செய்பவர்களைத்தவிர மற்றவர்களுக்கு ஒரு மன்னிப்பு வழங்க எத்தனித்தார். புதிதாக நிலைநாட்டப்பட்ட சனநாயகம் நிதானமான, மனதை அடக்கிக் கொள்ளக் கூடிய கொள்கையினை இறுக்கமாகப் பற்றியது. இதனால் பின்னர் அரிஸ்டோட்டிலிடமிருந்து அசாதாரண புகழ் கிடைத்தது: “முன்னைய கஷ்டங்களுக்கு ஏதேனிய சனநாயகவாதிகளின் உட்படையான அல்லது வெளிப்படையான எதிர்த்தாக்கம் யாதெனில் முன்னர் எந்த மக்களாலும் எடுத்துக் காட்டாத மிகத் திறமையானதும் மிக உயர்ந்ததுமான தேசியத்தலைவரைப் போன்றதாகும், " அவர்கள் பொது மன்னிப்பு அறிவித்து அதன்படி நடந்தது மாத்திரமல்லாமல் சனநாயகவாதிகளுக்கு எதிராகப் போரிட "முப்பதும் கடனாகப் பெற்ற பணத்தினை ஸ்பாட்டானியருக்கு திருப்பி கொடுப்பதற்குப் பணம் திரட்டினார்கள். "காரணம் மீண்டும் அமைதியை நிலைநாட்ட இதுதான் சிறந்த வழியென அவர்கள் எண்ணினார்கள். மற்ற நகரங்களில் சனநாயகவாதிகள் ஆட்சிக்கு வந்தால் தங்களுடைய பணத்தைச் செலவிட எண்ணம் இல்லாமல் அதற்கு மாறாமல் தங்களுடைய எதிரிகளின் நிலத்தைக் கைப்பற்றி மீண்டும் பகிர்ந்து அளித்தார்கள்” 403இன் சனநாயகவாதிகளின்நிதானமான போக்கினால் பல்வேறு வகுப்பினர்களுக்கிடையில் இருந்த வேறுபாடு நீங்கி வெற்றிகரமாக ஒன்று கூடினார்கள், பலவேறு பிரிவினர்களும் ஒன்றுகூடி நான்காம் நூற்றாண்டு முடிவு வரை எதுவித யுத்தமோ சதிப்புரட்சியோ இல்லாதபடி ஏதெனியனின் சனநாயகம் செழிப்பாக இருந்தது. எனவே பெரிக்கிள்ஸ் என்ற உணர்வு வெற்றியடைந்தது. சனநாயகத்தை நிலைநாட்டிய அரை நூற்றாண்டுக் குப்பின் நிதானமான ஏதேனிய சனநாயகவாதிகள் அவரையும் அவருடைய சாதனைகளையும் மிகவும் உயர்வாகப் பாராட்டினார்கள். சொலொன் (Solon), கிலெயிஸ்தீன்ஸ், தெமிஸ் ரோகில்ஸ் (Themistocles) உடன் அவரும் ஏதென்ஸ்சின் சனநாயத்தையும் பெருமையையும் கொண்டு வந்தார். அவர் ஊழலற்றவராக இருந்தார், ஒரு சிறந்த அரசியல் தலைவர், சிறந்த பேச்சாளர், ஞாபகச் சின்னங்களாலும் பல்வேறு விதமான வேறு ஆடம்பரப் பொருட்களால் நகரை அலங்கரித்தார். இன்றும் ஏதென்ஸ்சுக்கு வருபவர்கள் கிரேக்க நாட்டை மட்டும் அல்லாமல் முழு உலகத்தையும்
65

Page 36
ஆளுவது பெறுமதிக்குரியதாகும் என நம்பினார்கள் (socrates Antidosis 234). இருபதாம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டு காலத்தில் பெரிக்கிள்ஸ்சின் சேவைகளையும் ஏதேனிய சனநாயகத்தையும் உற்சாகமாக ஆமோதிப்பது ஒரு சிறப்பு அம்சமாகும். சனநாயகத்தின் நற்பண்புகளில்நம்பிக்கையானது வரலாற்றில் முன் எப்பொழுதுமில்லாதபடி பரவலாக இருந்தது. ஆதிகாலத்தில் ஆரம்பமான சனநாயத்திற்கும் அதனை எதிர்ப்பவர்களுக்குமிடையே இருந்த விவாதம் முடிவுக்கு வந்துவிட்டது எனச் சிலர் விவாதித்தார்கள். அறிக்கையைக் கண்ணோட்டமாகப் பார்த்தால் இன்னும் நிதானமான முடிவினைத் தரும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகச் சனநாயகத்திற்குப் பல சக்திவாய்ந்த பகைவர்களும் சில நண்பர்களும் இருந்தார்கள். பெரிக்கிள்சின் காலத்திற்குப் பின் வந்த நூற்றாண்டில் ஆழ்ந்த சிந்தனையாளர்கள் சனநாயகத்தைக் கண்டித்து அதனுடைய மீளமுடியாத குறைபாடுகளுக்கு ஏதென்ஸ் ஒரு காட்சியாகும் என உதாரணம் காட்டினார்கள். அநேக பழைய எழுத்தாளர்கள் அதனுடைய தலைவர்களைச் சுயலாபம் கருதும் கிளர்ச்சித் தலைவர்கள் என்றும், பொது நன்மையினை அழிப்பவர்கள் என்றும் எடுத்துக் காட்டினார்கள். அவர்கள் சனநாயகத்தை நிலையற்றது என்றும் கலகக்காரக் கூட்டத்திற்கும் வர்க்கப்பிரிவினை வாதிகளுக்கும் இடையே ஏற்படும் பெரும் அழிவினை ஏற்படுத்தும் போராட்டம் என்றும் அழைத்தார்கள். இங்கே வசதியற்ற நிலையில் இருக்கும் பெரும்பான்மையினர் வசதியுள்ள சிறுபான்மையினரை நசுக்கினார்கள். தனிநபர்களுடைய உரிமைகளில் அக்கறையின்மை, அதனுடைய நிலையற்றதன்மை யுத்தத்தைத் தவிர்க்க முடியாத நிலைக்கு இட்டுச் சென்றது. அதன்பின் எதேச்சாதிகாரத்துக்கும், கொடுங்கோல் ஆட்சிக்கும் இட்டுச் சென்றது. பிளேட்டோ நேரடியாகப் பெரிக்கிள்சைத் தாக்கிச் சனநாயக அரசியல்வாதிகளைப் புகழ்வதற்கு ஏதேனியர்களைக் குற்றம் சாட்டினார்.
மக்கள் கூறுகிறார்கள் தாங்கள் நகரததைப் பெருமைக் குரியதாக்கி விட்டோம் என்று, ஆனால் முன்னைய தலைவர்களால் நகரம் அழுகிவிட்டது. இதற்குக் காரணம் நகரத்தைத துறைமுகங்களாலும் இறங்குதுறைகளாலும் சுவர்களாலும், வருமானம் போன்ற அபத்தங்களாலும் நிரப்பிவிட்டார்கள். அத்துடன்நிதானத்திற்கும் நீதிக்கும் இடம் விடவில்லை, அததுடன் நோய் போன்ற பிரச்சினைகள் வரும்போது மக்கள் அவவேளை இருந்த ஆலோசகர்களைக் குற்றம் கூறி தெமிஸ்டொக்கிள்ஸ் (Themistocles), சிமொன் பெரிக்கிள்ஸ் போன்றோரைக் கரகோஷம் எழுப்பிப் போற்றுவார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் தான் குழப்பங்களுக்குக் காரணகர்ததாவாக இருக்கிறார்கள். (Gorgias 518-519a).
66

இந்த பகைமையான நிலைமை எதிர்ப்பில்லாமல் தொடர்ந்து பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து மேற்கத்தய சிந்தனையில் அதிகாரம் பெற்றது. மறுமலர்ச்சிக் காலம் தொட்டு அறிவு புகட்டும் காலம் ஊடாக பிளேட்டோவின் விமர்சனத்தை தழுவினார்கள். காரணம் அது அவர்களுக்கு நன்மை பயக்கக் கூடியதாக இருந்தது. அரசர்கள், பிரபுக்கள் உயர்வர்க்கத்தினரை ஆதரிக்கும் நடுத்தரமானவர்கள் ஒழுங்கற்ற கும்பலுக்கு அதிகாரத்தை வழங்குவதால் ஏற்படும் விளைவுகளுக்கு அஞ்சினார்கள். சாதாரண மனிதனின் ஆட்சியின்கீழ் பண்பானது தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படும் என்று பயந்தார்கள். கோயில்களின் சமயத்தலைவர்கால அதிகாரத்திற்கும் பிரபலமான அரசாங்கத்திற்கு மிடையில் ஒத்துப்போகின்ற தன்மையினை முன்பேயே அறிந்தார்கள். அரசருக்குரியதும் அதிகாரவர்க்கத்திற்குரியதுமான ஐரோப்பாவில் எல்லாச் சக்திகளும் நிறுவனங்களும் சனநாயகம் என்ற கோட்பாட்டுக்கு விரோதிகளாக இருந்து பெரிக்கிள்சின் ஆட்சிக்குக்கீழ் ஏதென்ஸ் மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியது என்ற கருத்தினை ஏற்றார்கள்.
அறிவு புகட்டும் காலம் தொட்டுப் பிரெஞ்சுப் புரட்சிக்காலம் ஊடாகப் பயங்கர விவாதங்கள் கிரேக்கரின் அனுபவங்கள் சனநாயகத்தை ஆதரிப்பவர்களுக்கெதிராகத் தாக்கத்தினை விளைவிக்கக் கூடியதாகத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருத்து மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் பரவலாகவும் இருந்தது. இதனால் உலகிலே மிகுந்த வெற்றியை அளித்த நிலையான சனநாயகத்தை அமெரிக்க யாப்பின் மேல் நிகழ்ந்த விவாதங்களுக்கு உதாரணமாகக் காட்டினார்கள். அலெக்சான்டர் ஹமில்ரன் பெரிக்கிள்சின் போக்கினை ஒரு தூய்மையான சனநாயகத்தில் ஒரு பிரபலமான தலைவரினால் எவ்வாறு அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்குக் கிடைத்த சந்தர்ப்பம் சாதகமாக இருந்ததென்பதை உதாரணமாகக் காண்பித்தார்.
"இந்த வர்க்கததைச் சேர்ந்த மனிதர்கள், அவர்கள் அரசர்களின் ஆதரவைப் பெற்றால் என்ன, பொதுமக்களின் ஆதரவைப் பெற்றல் என்ன பல சந்தர்ப்பங்களில் தங்களிடம் இருந்த நம்பிக்கையைத் துஸ்பிரயோகம் செய்து சில பொது நோக்குக்காகச் செயல்படுகிறமாதிரி சாக்குப்போக்குச் செய்து தேசிய அமைதியைத் தங்களுடைய சொந்த நன்மைக்கும் சுய திருப்திக்கும் தியாகம் செய்யவில்லை."
புகழ்பெற்ற பெரிக்கிள்ஸ் மனக்கசப்புற்ற விலைமாது போல் தனது நாட்டு மக்களின் இரத்தம், செல்வம் ஆகியவற்றை உதாசீனம் செய்து சாம்னியரின் (Samnians)நகரைத் தாக்கி, தோற்கடித்து அழித்தார். அதேமனிதன் மனத்தாங்கலால் துாண்டப்பட்டு அந்தப் பிரபல்யமான அழிவைத்தந்த யுத்தத்திற்குக் காரணமாகவும் இருந்தார்.
67

Page 37
ஜேம்ஸ் மடிசனும் (James Madison) பிளேற்டோவின் பழைய ஏதேன்ஸ் பற்றிய கருத்தினைக் கூறினார். “இத்தகைய சனநாயகங்கள் எப்பொழுதும் குழப்பங்களும் சண்டைகளும் நிறைந்தனவாக இருந்தன. அவை சொந்தப் பாதுகாப்பிற்கும் சொத்துக்களின் உரிமைகளுக்கும் ஒத்துப்போக
முடியாதனவாகக் காணப்பட்டன.
பெரிக்கிளியன் ஏதென்ஸ் பற்றிய உண்மைகள் நாங்கள் பார்த்தமாதிரி வித்தியாசமாக இருந்தன. பெரிக்கிள்சின் ஏதென்ஸ் தன்மையைப் பற்றி பிளேட்டோவின் தாக்குதல் பரிகாசம் செய்வதுபோல் இருந்தது. ஏதேனிய மக்கள் தங்களுடைய தலைவர்கள் அதிகாரத்தைப் பலவந்தமாக கைப்பற்றுதலை விரும்பவில்லை. தங்களுடைய சனநாயகத்திலுள்ள மிகவும் வலுவான மக்களை நீக்கித் தண்டிப்பதற்கு மெதுவாகச் செயற்படவில்லை. அவர்கள் தங்களுடைய சனநாயகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து வந்த அச்சுறுத்தலை எதிர்கொண்டார்கள். முப்பது ஆண்டு காலமாக இருந்த பெலொப்பொனேசியன் யுத்தத்தினால் ஏற்பட்ட பயங்கரங்கள், இராணுவத் தோல்வி, அந்நியர்களின் ஆக்கிரமிப்பு, சதிப்புரட்சி போன்றவற்றினுTடாக ஏதேனியமக்கள் ஒரு நல்ல சமூகத்திலுள்ள வாழ்க்கையையும் பிரபலமான அரசாங்கத்தின் நிலைத்து இருத்தலுக்குப் பொறுப்புக்கும் கட்டுப்பாட்டுக்குமிடையே உள்ள இணைப்பு அவசியமானது என்று காண்பித்தார்கள்.
ஏதேனியப் பெரும்பான்மையினர் பணக்காரரைச் சுரண்டிப், பகைவர்கள் மேல் பழிக்குப்பழி நடவடிக்கை எடுப்பது எவ்வளவு சுலபமானதாக இருந்திருக்கும் என்பதினைச் சிந்திக்கும் போது இந்தக் கட்டுப்பாடு எவ்வாறு பிரசித்தமானது என்பதினை அறிகிறோம். சுலபமாகச் சொல்லப்போனால் சனநாயக எண்ணத்தை அவர்கள் தழுவினார்கள். அவர்களின் அனுபவம் இதன் பெறுமதியை நிரூபித்துள்ளது. சுரண்டப்பட்ட மக்களைப் பணக்காரர்கள் சதியினால் ஆண்டார்கள் என்ற சம்பிர தாயங்களும் சட்டங்களும் ஏதென்ஸ்சில் நிலவியன என்பதனை அவர்கள் சிந்திக்கவில்லை. இதற்குப் பதிலாக பணக்காரர்களுக்கு எதிராக ஏழை எளியவர்களுக்கு அடிப்படைப் பாதுகாப்பானது சட்டத்திற்கு மதிப்பளிப்பதும் பணிந்து நடப்பதுமே என நம்பினார்கள். அத்துடன் பிரபலமான அரசாங்கமே சுதந்திரத்தையும் கெளரவத்தையும், பொது மக்களுக்குச் சுயமரியாதையையும் வழங்க முடியும் என நம்பினார்கள். சட்டத்தை அவமதித்தலே கொடுங்கோலுக்கு வழிவகுக்கும் என நம்பினார்கள்” ஒரு சனநாயகத்தில் சட்டமே மக்களையும் தேசத்தின் யாப்பினையும் பாதுகாக்கும் அதே வேளை கொடிய ஆட்சியாளரும், தான்தோன்றித்தனமாக நடப்பவரும் தங்களுடைய பாதுகாப்பிற்கு பாதுகாப்பாளர்களில் தங்கியுள்ளனர். 403இனை சனநாயகப்படி புதுப்பித்த பின்னர் ஒரு பேச்சாாளர் ஒரு மரணச் சடங்கின்போது மிகவும் அழகாக சட்டத்தின் மீது ஏதேனியரின் விசுவாசம் பற்றி விபரித்தார். இது முன்னர் பெரிக்கிள்ஸ்சின் சொற்பொழிவினை ஞாபகமூட்டியது.
68

அவர் சொன்னார் முன்னர் ஏதேனியர்தான் முதன்முதலாக ஒரு சனநாயத்தை அமைத்தார்கள்.
யாவரினதும் சுதந்திரமே அமைதியின் பெலமிக்க மூலகாரணம் என்று நம்பி, தங்களின் பரிமாறப்பட்ட ஆபததுக்களிலிருந்து எழுந்த நம்பிக்கையை ஒருவரோடொருவர் பகிர்வதால் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் சுதந்திரம் இருந்தது. அவர்கள் சட்டத்தைப் பயன்படுத்தி நல்லவர்களைக் கெளரவித்து தீயவர்களைத் தண்டித்தார்கள். கொடிய விலங்குகளின் வாழ்க்கை முறைதான் ஒருவரையொருவர் பலாத்காரம் பிரயோகித்து வாழுதல் என்பதை நம்பினார்கள். ஆனால் மக்கள் நீதியை சட்டத்தின்படி தீர்மானிக்கவேண்டும், நியாயம் கூறித திருப்திப்படுதத வேண்டும் , இவை இரணர் டினையும் சட்டத்திற்கு அடிபணிந்து செயல்படுத்த வேண்டும் என்றும் bibi sot Triassir (Lysias, Funeral Oration 17-19).
பத்தொன்பதாம் நூற்றாண்டில் நவீன சனநாயகம் ஐக்கிய அமெரிக்கா விலும் பிரித்தானியாவிலும் வேர் ஊன்ற ஆரம்பமானபோது ஏதேனியன் சனநாயகத்திற்கு மிகவும் சாதகமாக அமைந்தது. சனநாயகத்தின் பிரித்தானிய நண்பர்கள் பெரிக்கிளியன் ஏதேனியரின் யாப்பினையும் ஏதேனியரின் சனநாயக வாழ்க்கை முறையினையும் மீண்டும் எடுத்துக் கொண்டாடினார்கள். 1846க்கும் 1856க்கும் இடைப்பட்ட காலத்தில் ஜோர்ஜ் குரோட்டின் (George Grote) பன்னிரண்டு அத்தியாயம் கொண்ட "கிரேக்க வரலாற்றின்” பிரசுரம் பெரிக்கிளியன் ஏதேன்சைப் பற்றிய விளக்கத்தினை மாற்றியமைத்தது. பிரித்தானியா முழுமையான சனநாயகத்தை நோக்கி நகர்ந்தபோது குரோட் விளக்கம் தெரிவித்தது போன்று ஏதென்ஸ் ஒரு பின்பற்ற வேண்டிய மாதிரி அமைப்பாகவும் ஊக்கமளிக்கக் கூடியதாகவும் இருந்தது. கல்வி அறிவுடைய ஆங்கிலேயர்கள் ஐந்தாம் நூற்றான்டில் ஏதேனியரைப்பற்றி விரும்பத்தக்க அறிவைப் பெறக்கூடிய நிலைக்கு உயர்த்தப்பட்டார்கள்.
முதலாம் உலகமகாயுத்தத்தின் போது இலண்டன் பஸ்களில் பெரிக்கிள்சின் மரணச் சொற்பொழிவின் பகுதிகள் பொறிக்கப்பட்டிருந்தன. இந்தச் சொற்பொழிவுகளின் பகுதிகளைத் தேர்ந்தெடுத்த மக்கள் ஸ்பாட்டானியருக்கு எதிராக ஏதேனியர்களை உஷாராக நிற்கும்படி பெரிக்கிள்ஸ் வேண்டியபோது கூறிய சொற்கள் தற்காலத்தாராள யுத்ததில் ஈடுபட்ட வர்த்தகச் சனநாயத்திற்குப் பொருந்தக் கூடியதாக உள்ளது என நம்பினார்கள். ஒவ்வொரு ஏதேனியனும் தன்னுடைய சமூகத்திற்குத் தேவையான தியாகங்களைச் செய்ய வேண்டும் என்ற பெரிக்கிள்சின் அழைப்பு பிரித்தானிய மக்களுக்கும் பொருந்தக் கூடியதாகவுள்ளது. சமத்துவம், சட்டத்திற்கு மதிப்பளித்தல், பேச்சுச் சுதந்திரம், அரசியலில் பங்கேற்றல் நல்லவை மேலும் அழகின்மேலும் அன்பும் அதேவேளை
69

Page 38
அதிகாரமும் புகழும் போன்றன சாதாரண மக்களினால் கவரப்பட வேண்டும் என எதிர்பார்த்தார்கள்.
1915 இல் ஒரு பிரபல்யமான பிரித்தானிய பண்டைய நூல் கற்றறிந்த அறிஞர் பின்வருமாறு கூறும் போது இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டார்.
கிரேக்கரின் எண்ணங்களும் கிரேக்கரின் உற்சாகமும் இன்று எங்களுக்கு உதவக்கூடியதாகவுள்ளது. அது தற்காலக் கடமைகளைச் சந்திப்பதற்கு மாத்திரமல்ல சனநாயம், குடி உரிமை, சுதந்திரம், சட்டம் போன்றவற்றினதும் கருத்தினை ஆழமாகவும் பரவலாகவும் செய்வதற்கும் உதவுகின்றது.
அந்தக்காலம் தொட்டுச் சனநாயக ஏதென்ஸ் பொதுவாகச் செழிப்புற்றது. ஆனால் நவீன சனநாயமானது ஆயுத ஆக்கிரமிப்பாலும் கருத்துச் சவால்களாலும் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளது. 1930இல் ஏற்பட்ட பெரும் மந்தநிலை அதனைத் தொடர்ந்து சர்வாதிகார அரசின் தோற்றமும் நாசிகளின் சர்வாதிகாரமும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் எதிர்பார்ப்பு களைக் கேலிக்கூத்தாகியது போலத் தோன்றியது. அந்த எதிர்பார்ப்பு யாதெனில் சனநாயகமானது பகுத்தறிவையும் , செழிப்பினையும் சுயாட்சியையும் நோக்கி இயற்கையான முன்னேற்றமும் காரணமாக வெற்றியீட்டும். சில காலத்திற்குப் பிரபல்யமான அரசாங்கம் உலகின் பல பகுதிகளிலிருந்து மறையக்கூடும் என்றும் கொடுங்கோன்மைக்கு வழிவிடும் போல் தோன்றும் இந்நிலை நவீன தொழில்நுட்ப உற்பத்திகளினாலாகும்.
2ஆம் உலக மகாயுத்தமானது ஒரு விதமான எதேச்சாதிகாரத்தை அழித்தது. ஆனால் இன்னொரு வகையானது பூமியின் பெரும்பகுதியை இறுகப் பற்றிக்கொண்டது. மேற்கத்தைய சனநாயகங்கள் இந்தச் சவால் களைச் சந்தித்தது. பல மேற்கத்தைய அறிஞர்கள் பிளேட்டோவினால் சனநாயகத்தின் மேல் தொடுத்த தாக்குதலைப் புதுப்பித்தனர். ஆனால் அவர்களின் குற்றச்சாட்டுக்கள் வெவ்வேறு கோணங்களிலிருந்து தோன்றின. பிளேட்டோவும் அதிகார அரசாட்சி புரிபவர்களும், அதிகார வர்க்கத்தினரும் இந்த வழியைப் பின்தொடர்ந்து சமத்துவத்திற்கு மிகையான கவனம் செலுத்திய பெரிக்கிளியரின் சனநாயகத்தைக் குற்றம் சாட்டினார்கள். இருபதாம் நூற்றாண்டு விமர்சகர்கள் அதனுடைய சமனில்லாத தன்மையினைப்பற்றி முறைப்பாடு செய்தனர். முக்கியமாக ஒரு சுதந்திர சமூதாயத்தில் சமனற்ற செல்வப் பரம்பல் தவிர்க்க முடியாதது. சமனற்ற முறையில் பொதுவுடைமை, பொதுவுடைமை அல்லாத உலகில் மாக்சியவாதிகள் மத்திய வர்க்க சனநாயகத்தை உண்மையில் ஒரு நசுக்கலும் சுரண்டலும் கொண்ட அமைப்பென ஏளனம் செய்தார்கள். சனநாயகமானது அது வேரூன்றிய நாடுகளில் நல்லதாக இருக்கக்கூடும். ஆனால் அது உண்மையில் உலகின் ஏனைய பகுதிகளுக்குப் பொருத்தமற்ற ஒரு மேற்கத்திய கருத்தாகும்
70

எனக் கருத்துத் தெரிவித்தார்கள். 1989 ஆம் ஆண்டில் பொதுவுடைமை உலகில் கிளம்பிய கிளர்ச்சி வரைக்கும் பல மேற்கத்திய அறிவாளிகள் அரசியல் சுதந்திரத்தையும் சனநாயகத்தையும் பொருளியல் சமத்துவம் என்ற பெயரில் கைவிட்டு மன்னிப்பளித்தது மாத்திரமல்லாமல் அரசாங்கங்களையும் புகழ்ந்தன.
அரசியல் சமத்துவமே ஏதேனிய சனநாயத்தின் முக்கிய அம்சமாகும். ஆனால் பொருளியல் சமத்துவம் நாங்கள் பார்த்தது போல பெரிக்கிள்சின் காலத்திற்கு முன்பும் பின்பும் சனநாயகத் திட்டத்தில் இருக்கவில்லை. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏதேனிய விவசாயிகள் நிலத்தை மீளப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் ஆற்றிகா (Attica) நிலத்தையும் தரவேண்டும் என்றும் கோரினார்கள். ஆனால் இந்தக் கோரிக்கை வழங்கப்படவுமில்லை, புதுப்பிக்கப்படவும் இல்லை. மற்ற மாநிலங்களில் சமூகப் புரட்சிகளின் அனுபவங்கள் சட்டத்திற்கு முன் சமத்துவம் சொத்துரிமையில் சமத்துவமில்லை, செழிப்பு, சுதந்திரம், பாதுகாப்பு முதலியன ஒரே ஒரு கொள்கையுடன் ஒத்துப்போகக் கூடியது என்று காட்டியது. ஏதேனியர்களைப் பொறுத்தமட்டில் சமூக நீதியானது பொருளாதார மட்டுப்படுத்தல் அல்ல. ஏதேனிய சனநாயகம் எதைக் கோரியதென்றால் சந்தர்ப்பத்தில் சமத்துவம் , இது ஆற்றல் உள்ளவர்களுக்கே பொருத்தமானது. ஆனால் திறமைக்கும் பெரும் ஆற்றலுக்கும் வெகுமதி அளிக்க வேண்டுமென நம்பினார். அழிவுகளுக்கும் செழிப்புக்கும் வறுமைக்கும் ஊடாகவும் ஏதேனியர்கள் இந்தக் கொள்கைகளுக்குப் பணிந்து நடந்தார்கள். பழைய விமர்சகர்களும் நவீன விமர்சகர்களும் ஒரு பொதுக் கருத்தினைப் பகிர்ந்து கொண்டார்கள். இரு பகுதியினரும் சாதாரண மனிதனில் நம்பிக்கை வைக்கவும் உயர்ந்த குறிக்கோளை நோக்கிசெல்லும்போது அவனுடைய சுய ஆட்சிஉரிமையை மேவியும் நடந்தார்கள். பிளேட்டோவைப் பொறுத்த மட்டில் அது ஆன்மீக மாற்றமில்லாத அறிவினால் ஆட்சிபுரியும் மெய்யியலாளர் குழுவைக் கொண்ட அரசாங்கம் என்று கருதினார். மாக்சிச கொள்கைப்படி அது சுரண்டலில்லாத முழுச் சுதந்திரமும் சமத்துவமும் கொண்ட அமைப்பாகும். அதனுடைய வெளித்தோற்றப்படி அது தொழிலாளரின் ஆட்சியாகும். உண்மையில் லெனின், மாவோ, காஸ்ட்ரோ போன்றவர்களால் வழி நடத்திச் சென்ற சிறிய சர்வாதிகாரப் புரட்சிகர முன்னணிப் படையாகும். அது சோவியத்யூனியன், கம்யூனிஸ்ட் சீனா, கியூபாவினால் ஆளப்பட்டது. சனநாயகத்தின் விமர்சகர்களின் இருசார்பினர்களும் தனிநபர் சுதந்திரமும், சுய-அரசாட்சியும் உண்மையான நீதியான சமூகத்தை அமைப்பதற்கு போதாது என நம்பினார்கள். அத்துடன் சரியான குறிக்கோள் எது எனவும் அதனை எவ்வாறு அடையலாம் எனவும் ஒரு சிறு வகுப்பினருக்கு மட்டுமே தெரியும்.
சனநாயத்திற்குச் சார்பாக உள்ளோர் அரசாங்கத்திற்கு ஒரு முறைமை அல்லது விஞ்ஞானம் உண்டு என்பதனை மறுக்கிறார்கள். இது சில கல்வி
71

Page 39
கற்றோருக்குத்தான் தெரியும் அல்லது தெரியக்கூடியதாகும். நல்ல அரசாங்கமும் நல்ல சமூகத்தை அடைதல் என்பதில் எல்லாக் குடிமக்களும் கலந்து கொள்ள வேண்டுமென எல்லோரும் நம்பினார்கள். தனிநபர் சுதந்திரம், சட்டத்திற்கு முன் சமத்துவம், சம சந்தர்ப்பம் வாக்களிக்க உரிமை, பதவி வகிக்க உரிமை முதலிய சனநாயகக் கூறுகள் உயரிய நிலையை அடைவதற்கு மனித கெளரவத்திற்கும் செழிப்பிற்கும் சமூக நல நிலையும் சுதந்திரமும் சுயாட்சியும் கொண்ட வாழ்க்கைக்குத் தேவையான மனிதத் தன்மைகளைப் பயன்படுத்துதல் தேவைப்படுகின்றது. எனவே அரசியல் பொருளியல் அல்ல அதற்கு அடிப்படையானது. சனநாயகமும் பொருளியல் சுதந்திரமும் வேறெந்த முறையையும்விட செழிப்பைக்
கொண்டு வரும் என்ற அத்தாட்சி பலமாக உண்டு. எந்த ஒரு அரசியல் முறையும் செழிப்பை உறுதிபண்ண முடியாது ஆனால் ஒரு சனநாயக முறையானது தேவையானவற்றின் ஒரு பகுதியினை மட்டும் வழங்கக்கூடும்.
பெரிக்கிள்ஸ் காலத்தில் ஏதேனியர்களின் கதை சனநாயகத்தை உண்டாக்கி அதைப் பேணுவதற்கு உயர்தரத்திலுள்ள தலைமைத்துவம் தேவைப்படுகிறது என்பதே. பரீட்சித்துப் பார்த்தபோது தேவையான பக்தி, ஞானம் போன்றவற்தைக் கொண்டு ஏதேனியர்கள் நடந்து கொண்டார்கள். இதற்கு காரணம் மிகவும் நல்ல முறையில் அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திய பெரிக்கிள்சின் சனநாயக எண்ணத்தினாலும் உதாரணத்தினாலும் அவர்கள் உந்தப்பட்டார்கள். இந்த எண்ணம் அரசியல் சமூகத்தினால் தனிநபரை உயர்த்தியது. அது தேசத்தின் வாய்ப்பினையும் அதிகாரத்தினையும் கட்டுப்படுத்திய அதேவேளை தனிநபர் சுதந்திரம், தனிமை, மனித கெளரவம் முதலியனவற்றிக்குப் போதிய இடவசதி விட்டது. அது பழைய ஸ்பாட்டாவினாலும் நவீன பொதுவுடமையினாலும் தொடரப்பட்ட மட்டுப்படுத்துகிற கொள்கையினை நிராகரித்தது. இதற்கு உரிமைகளைக் கட்டுப்படுத்துதல் அவசியமாகும். திறமைக்குப் பரிசு கொடுப்பதால் தனிநபர் சாதனைகளையும் ஊக்குவித்து, அதனால் வாழ்க்கையானது இனிமையாகவும், எல்லோருக்கும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்றது. இதற்கு மேலால் பெரிக்கிள்ஸ் ஏதேனியர் களுக்குத் தங்களுடைய சொந்தக் தேவைகளுக்கு ஏதென்ஸ் போன்ற சமூகமே தேவைப்படுகின்றதென்று சமாதானப்படுதினார். எனவே அத்தகைய சமூகத்தினைப் பாதுகாப்பதற்கு உயிரைப் பொருட்படுத்தாது அதற்காகத் தியாகங்கள் செய்து அதனைப் பேணுவதற்குத் தங்களின் மன எழுச்சிகளையும் விருப்பங்களையும் கட்டுப்படுத்தினார்கள்.
எமது காலத்தில் தோன்றுகின்ற புதிய சனநாயக நாடுகள் திடமற்றனவாகவும் பல சோதனைகளைச் சந்திப்பனவாகவும் இருக்கின்றன. பலமிக்க சனநாயக மரபுகளில் சிலர்தான் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதேவேளை மோசமானநிலையிலுள்ள பொருளாதார நிபந்தனைகளால் எல்லோரும் பாதிப்படைகிறார்கள். தற்போது பலர்
72

நீண்ட காலமாக நசுக்கப்பட்டுவரும் இனப் பிரிவினைகளைச் சந்திக்கிறார்கள். இவை தேவைபடுகின்ற ஒற்றுமையையும் சமாதானத் தையும் அச்சுறுத்துகின்றன. உலகின் செழிப்பான சுதந்திர தேசங்களின் நற்பெயரும் உதாரணமாக நவீன தொழில்நுட்பத்தால் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நினைக்க முடியாத அளவுக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களை உயர்த்தியுள்ளது. புதிதாகத் தோன்றிய சுதந்திர நாடுகள் சனநாயகத்தைச் சடத்துவ நல் வாழ்வுக்கும் , சமனாகச் செல்வத்தைப் பகிர்ந்தளித்தலுக்கும் குறுக்கான பாதை எனப்பார்த்தார்களே யானால் அவர்கள் மோசமாக ஏமாற்றம் அடைந்திருப்பார்கள். இதனால் சனநாயகமும் தோல்வி அடையும். வெற்றிக்கான, வருங்காலத்திற்கான ஒரு நல்ல திட்டம் தேவை. இது அவர்களை நல்ல காலத்திற்கூடாகவும், கூடாத காலத்திற்கூடாகவும் தாக்குப்பிடிப்பதற்கு வலுவுள்ளதாக இருக்கவேண்டும்.
சனநாயகம் ஒன்றே ஒவ்வொரு நபரின் கெளரவத்தையும் சுயாட்சியையும் மதிக்கின்றது என்பதை அறிய வேண்டும். சனநாயகத்தைப் பேணுவதற்கு ஒவ்வொரு நபரும் தன்னுடைய நல்வாழ்வானது முழுச் சமூகத்தின் நல்வாழ்வுடன் தொடர்புள்ளது என்பதனை அறிய வேண்டும்.
இந்தப் புதிய நம்பிக்கையைச் சமூகத்தில் நிலைநாட்டுவது கஷ்டமாக இருக்கும். ஆகவே புதிய சனநாயக நாடுகளுக்குப் பெரிக்கிள்ஸ் போன்ற தலைவர்கள் வேண்டும். அத்தலைவர்கள் உண்மையான சனநாயகத்தின் போக்கும், குறிக்கோளும் மக்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்த வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிய வேண்டும். அதேவேளை உயர்நிலையிலுள்ள வர்களின் மீது கீழ்நிலையிலுள்ளவர்கள் கொண்டிருக்கும் பொறாமையைத் திருப்திப்படுத்துவதற்குக் கீழ் இறக்குவது கொடுங்கோலின்ஒர் அம்சமாகும். தனிநபர் சுதந்திரம், சுயமாக ஆளும் அரசாங்கம், சட்டத்திற்கு முன்னால் சமத்துவம் போன்றனஉயர்ந்த தரத்தில் உள்ளன என்பதை விளங்கங்கூடிய தலைவர்கள் தேவை. அத்துடன் இந்த அரசியல் நிறுவனங்கள் ஒரு நல்ல ஆட்சிக்கும் எல்லோருக்கும் நல்ல வாழ்வுக்கும் தேவை என்பதனைத் தங்களுடைய பொறுமை இழந்த மக்களுக்கு வற்புறுத்திக் கூறக்கூடிய ஆற்றல் உள்ள தலைவர்கள் தேவை.
இத்தகைய குறிக்கோளும் இத்தகைய தலைவர்களையும் எங்கள் காலத்தில் காணமுடியாது. சனநாயகத்தின் மெல்லிய தளிர்கள், நசுக்கி அழுத்தும் கடினமான தரையூடாகப் பிரித்துக் கொண்டு வருவதை உலகம் வியப்புடன் பார்க்கின்றது. யாராவது இத்தளிர்கள் செழிப்பாக வளர்வதற்கு உதவ விரும்பினால் ஏதென்ஸ்சின் பெரிக்கிள்சினதும், பல தடைகளுக்கு மத்தியில் சனநாயகம் வெற்றியடைந்த அவருடைய நகரத்தினதும் கதையினை உற்சாகம் ஏற்படுத்துவதற்காகவும் அறிவுறுத்தலுக்காகவும் வாசிப்பதற்குப் பதிலாக அத்தளிர்களுக்கு மோசமானவற்றையே செய்யாதிருப்பார்கள்.
73

Page 40

பகுதி 11
சோதனைக் களத்தில் முதலாளித்துவ சனநாயகம்
தமிழாக்கம்
தை. தனராஜ் செயற்றிட்ட அதிகாரி கல்வி முகாமைத்துவ அபிவிருத்தித்துறை தேசியக் கல்வி நிறுவகம், மகரகம
பொதுசனக்கல்வி நிகழ்ச்சித்திட்டம் மார்கா நிறுவக வெளியீடு

Page 41

சோதனைக்களத்தில்
முதலாளித்துவ சனநாயகம்
I ரொக்வில்லும் மில்லும் (Tocqueville and Mill)
சனநாயகம் எதிர் முதலாளித்துவம்
ரொக்வில்லின் "அமெரிக்காவில் சனநாயகம்" (Democracy in America) என்னும் நூலும் மில்லின் “சுதந்திரம் பற்றி” (On Liberty) என்னும் கட்டுரையும் சனநாயகத்தின் சிறப்பு அல்லது தனிமனிதனின் முக்கியத்துவம் பற்றி பேசுபவர்களுக்கு, மேற்கோள் காட்டுவதற்கு மிக வசதியான ஆதாரங்களாகும். எனினும் ரொக்வில்லின் அமெரிக்க ஆய்வை நாம் இங்கிலாந்து பிரான்ஸ் ஆகியவை தொடர்பாக அவர் கொண்டிருந்த அபிப்பிராயங்களின் அடிப்படையிலேயே நோக்குதல் வேண்டும். மில் எழுதிய “சுதந்திரம் பற்றி" என்னும் நூலினை, பிரதிநிதித்துவ சனநாயகம் மற்றும் அரசியற் பொருளாதாரம் பற்றிய அவரது ஏனைய நூல்களுடன் சேர்த்தே நோக்கப்படவேண்டும்.
இவ் இருவரது ஆக்கங்களும் அரசியல் மற்றும் சமூக அபாயங்களைப் பற்றிய ஓர் உணர்வின் வெளிப்பாடாகும். எனினும் இருவரும் வேறுபட்ட பயமுறுத்தல்களையே உணர்ந்தனர். சனநாயகப் புரட்சி என்பது தடுக்க முடியாத ஒரு பேரலை என எண்ணிய ரொக்வில் சனநாயகத்தின் தேவையை இனங்கண்டார். கைத்தொழில்சார்ந்த முதலாளித்துவம் கட்டுப்படுத்தப் படாத வரையில் இவ்வாறான நிலை ஏற்படும் என்பதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு மாறாகக் கைத்தொழில்சார் முதலாளித்துவம் நின்று நிலைக்கும் என மில் மிக அமைதியுடன் ஏற்றுக் கொண்டார். எனினும் வர்த்தக பூர்ஷ்வா உலகம் பொது அபிப்பிராயத்தைத் தனி உரிமை ஆக்கிக்கொள்வதையும், மற்றும் தொழிலாளவர்க்கத்தைத் தனது விழுமியங்களுக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொள்வதையும் தடுக்க வேண்டுமென விரும்பினார். முதலாளித்துவத்தை நாகரீகமாக்குவதே அவரது திட்டமாக இருந்தது. எனவே இந்த உத்தியானது நகர்சார் சனநாயகத்தின் (Urban Democracy) மீது மிகக் கடுமையான வரையறைகளைத் தவிர்க்க முடியாததாக்கியது. இதனை மிக எளிதாகக்கூறுவதாயின் கைத்தொழில் சார் முதலாளித்துவம் சமூகத்தில்
77

Page 42
ஒரு பாரிய சக்தியாக உருவாகாவிட்டால் மாத்திரமே சனநாயகத்தை நாகரீகமுடையதாக்க முடியுமென ரொக்வில் எண்ணினார். சனநாயகம் வரையறை செய்யப்பட்டால் மாத்திரமே கைத்தொழில் சார் முதலாளித்துவத்தை நாகரீகமாக்க முடியும் என மில் நம்பினார்.
ஒரு குறுகியகால நட்புறவு
அலெக்சிடீரொக்வில் நோர்மன் பிரபுத்துவத்தின் வழி வந்தவர். "ஜோன் ஸ்ருவட் மில்” ஒரு ஸ்கொட்லாந்து சப்பாத்து தைப்பவனுடைய பேரனாவார். இவர்கள் இருவரும் ஒரு குறுகிய காலத்தில் நண்பர்களாக இருந்தனர். வர்க்கம், தேசியம் ஆகிய எல்லைகளைக் கடந்து விளங்கிய இந்த நட்புறவு உண்மையில் ஆச்சரியப்படத்தக்கதாகும். மில்லின் சகபாடியும், பின்னர் மனைவியுமான ஹரியட் ரெயிலர் ரொக்வில் பற்றிப் பின்வருமாறு கூறினார். ரொக்வில் பிரபுத்துவ வகுப்பில் ஒரு குறிப்பிடத்தக்க உதாரணமாவார். பலவீனமான ஒழுக்கநிலை, குறுகிய அறிவுநிலை, பயந்த சுபாவம் ஆகியவற்றை அவர் கொண்டிருந்தார். ஆனால் மில் மத்திய வகுப்பு மனப்பாங்குகளிலிருந்து விடுபட்டிருந்தார். 1840ஆம் ஆண்டு மே 11ஆம் திகதி அவர் ரொக்வில்லுக்குப் பின்வருமாறு எழுதினார்:
"நீங்கள் அரசியல் தததுவததின் தோற்றததையே மாற்றியமைத்து விட்டீர்கள். நவீன சமூகத்தின் போக்குகள், அப்போக்குகளுக்கான காரணம், குறிப்பிட்ட அரசியல், சமூக வடிவங்களின் தாக்கங்கள் ஆகியவை தொடர்பான விவாதத்துக்குப் பரிமாணத்தையும் அர்த்தத்தையும் வழங்கியுள்ளீர்கள். உங்களுக்கு முன்னர் யாரும் இதனைச் செய்ததில்லை. இவை பற்றிய முன்னைய வாதப்பிரதி வாதங்கள் இன்று குழந்தைத்தனமாகத் தோன்றுகின்றன." (Mayer 1954: 328-9)
1830களின் பிற்பகுதியிலிருந்து1840 களின் பிற்பகுதிவரை ரொக்வில்லும் மில்லும் வழமையாகக் கடிதங்களைப் பரிமாறிக்கொண்டனர். இவ்வழக்கம் திடீரென முடிந்தமைக்கு ரொக்வில் மீது ஹரியட் கொண்டிருந்த வெறுப்பு சிலவேளை காரணமாக இருந்திருக்கலாம். 1850 களின்பிற்பகுதியில்தான் இக்கடிதத் தொடர்பு திரும்பவும் ஆரம்பித்தது. (Pappe 1964:221 - 2)
உண்மையில் ரொக்வில்லும் மில்லும் பல விடயங்களில் பொதுவான கருத்தினைக் கொண்டிருந்தனர். இருவருமே பிரான்ஸ் நாட்டின்மீது தீவிர ஆர்வம் கொண்டிருந்தனர். ரொக்வில் லூயி பிலிப்பின் காலத்தில் பிரதிநிதிகள் சபையில் பணி புரிந்தார். இரண்டாம் குடியரசின் பொழுது ஒரு குறுகிய காலத்திற்கு வெளிநாட்டமைச்சராகப் பணி புரிந்தார். 1865 ஆம் ஆண்டு மில் பாராளுமன்றத்தில் லிபரல் கட்சியின் சார்பாக
78

நுழைந்தார். அக்காலத்தில் அயர்லாந்து நிலச்சீர்திருத்தம், குடியேற்றவாத விடயங்கள் பற்றி அவர் உரையாற்றினார்.
இவ்விரண்டு மனிதர்களும் ஒரே தலைமுறையினர். ரொக்வில் 1805 ஆம் ஆண்டிலும் மில் அதற்கு அடுத்த ஆண்டிலும் பிறந்தனர். இருவரும் சனநாயகத்தில் தனிமனிதனின் முக்கியத்துவம் பற்றியும் ஒரு நிலையான நாகரீக வாழ்வுக்குச் சனநாயகத்தின் தேவை பற்றியும் ஒரே விதமான கருத்தைக் கொண்டிருந்தனர். அவர்களுடைய பகுப்பாய்வுகள் தனிச்சிறப்பும், செல்வாக்கும் கொண்டு காணப்பட்டன. மில்லும் ரொக்வில்லும் வினோதமானவர்கள். இருவருமே தமக்குரிய சமூக வகுப்பிலிருந்து விடுபட்டிருந்தனர். ரொக்வில்லின் குடும்பத்தினர் பிரெஞ்சுப்புரட்சியின் போது அரசுக்கு விசுவாசமாக இருந்தனர். அவரது தாத்தாவும் பாட்டியும் 'கில்லட்டின் கத்திக்கு பலியாகினர். பெற்றோர் மயிரிழையில் தப்பித்தனர். அலெக்ஸி தனது இருபத்தைந்தாவது வயதில் சொந்தப் பிரச்சினைகளுக்கு ஆளாகினார். 1830 இன் ‘யூலைநாட்களின்’ (July days) நீதிபதியாக இருந்த அவர் பூர்பன்களை நிராகரித்து லூயி பிலிப்பின் பூர்ஷ்வா குடியாட்சிக்கு விசுவாசம் தெரிவித்தார். ரொக்வில் இக்கஷ்டமான தீர்மானத்தை உணர்ச்சிகளுக்கு அப்பால், அறிவுநிலையில் நின்று எடுத்தார். புதிய அரசாங்கம், எல்லாரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் அரசியல் யாப்பை உருவாக்கும் என்று அவர் நம்பினார். இவ்விடயத்தில் தாம் ஒரு பிரபுத்துவ வழியில் வந்தவரெனினும் லூயி பிலிப்பின் ஆதரவாளர்களின் வர்த்தகத் தன்மை ஆகியவற்றை ஒதுக்கினார்.
இதற்கு மாறாக மில்லின் தந்தையான ஜேம்ஸ் பிரபுத்துவ ஆட்சியை வெறுத்தார். பத்திரிகைத் துறை வாயிலாகப் பொதுவாழ்வில் பிரவேசித்த அவர் புத்தகங்களையும் எழுதினார். பின்னர்லண்டனிலிருந்த கிழக்கிந்தியக் கம்பனியில் பணியாற்றினார். ஜேம்ஸ் மில் தனது மகனுக்கு மிகவும் ஆழமான அறிவுப்பயிற்சியைத் தானே வழங்கினார். மூன்றுவயதில் கிரேக்க மொழியும், எட்டு வயதில் லத்தீனையும், பின்னர் அளவையியலையும் அவர் தனது மகனுக்குக் கற்பித்ததோடு இந்தியா இல்லத்தில் (IndiaHouse) ஒரு வேலையும் வாங்கிக் கொடுத்தார். இங்கு அவர் 85 வருடம் ஓர் அதிகாரியாகப் பணியாற்றினார். அக்காலத்தில் லண்டனில் வாழ்ந்த தீவிரவாத அறிவு ஜீவிகளின் வட்டத்துக்குள் ஜோன் தனது தந்தையின் மூலமாக நுழைந்தார். டேவிட் றிக்காடோ (David Ricardo), ஜெரமி பெந்தாம் (JeremyBentham) ஆகியோருடன் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. பயன்பாட்டு வாதிகளின் கருத்தைப் பரப்புவதில் அவர் தீவிர ஆர்வம் காட்டினார். ரொக்வில்லைப் போலவே ஜோனுக்கும் தனது இருப்து வயதுகளில் சொந்தப் பிரச்சினை ஏற்பட்டது. ரொக்வில் உணர்ச்சிகளை வெல்லத் தனது அறிவைப் பயன்படுத்தினார். ஆனால் இதற்கு மாறாக மில் தனது தொட்டில் காலம் முதல் பழக்கப்பட்டுவந்த அறிவாட்சிக்கு எதிராக ஆழ்ந்த உணர்வுகளுக்கு உட்பட்டிருந்தார். 1826-27 பனிக்காலத்தின்போதுமில் விரக்திக்கும் வெறுப்புக்கும் உட்பட்டிருந்தார்.
79

Page 43
இக்காலத்தில் அவரது குழுவின் பெந்தாம் எழுதிய "Rationale of Judicial Evidence' என்னும் 5 தொகுதி கொண்ட நூலைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்நேரத்தில் அவர் வாசித்த நினைவுக்குறிப்புகள் கொண்ட ஒரு நூலில் ஒரு பந்தி அவரைக் கண்கலங்கச் செய்தது. அப்போது அவர் தனது உணர்வுகள் இன்னும் சாகவில்லை என்பதை உணர்ந்து மகிழ்ந்தார். இந்த அனுபவத்துக்குப்பின்னர் ஒரு கவிதையை அர்த்தமற்ற களிப்பு எனக் கருதும் ஜெரமி பெந்தாமின்கொச்சையான மகிழ்ச்சி, வேதனை கோட்பாடு அவருக்கு அதிருப்தி அளித்தது. அவர் வேட்ஸ்வேத்தின் கவிதைகளை வாசிக்கத் தொடங்கினார். 1829 இல் தனது விவாத சங்கத்திலிருந்து விலகியதோடு பெந்தாமின் பயன்பாட்டுவாதத்தைப் (Utilitarianism) பகிரங்கமாகவே எதிர்த்தார்.
இவ்வாறான வித்தியாசமான வழிகளில் இவ்விரண்டு சிந்தனையாளர்களும் தமது வளர்ப்பின் காரணமாகத் தம்மீது சுமத்தப்பட்ட சிந்தனைக் கட்டுப்பாடுகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டனர். மேற்கத்தைய தாராளவாத மரபுகளின் அடிப்படையில் இவ்விருவரும் சனநாயகப் பிரச்சினை’ பற்றிய ஆய்வுகளுக்கு இரண்டு மாதிரிகளை முன்வைத்தனர். முதலாளித்துவம் இப்பிரச்சினையின் ஒரு பகுதியாகும் என்பதைப் பின்னர் பார்ப்போம்.
அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் ரொக்வில்லின் வாழ்க்கை
ரொக்வில் தனது இளவயதில் தனது நண்பர் ஒருவருக்குப் பின்வருமாறு எழுதினார்: “இன்னொரு நபரின் கடவுச்சீட்டில் இங்கிலாந்துக்குள் நுழையும் ஓர் ஆர்ப்பாட்டமான திட்டம் உள்ளது. சில வேளை நான் கைது செய்யப்படலாம். ஆனால் அதில் தான் அந்த ஆர்ப்பாட்டமே s-Éláluysir6T5." (Tocgueville to Louis de Kergorlay 1824; Tocqueville 1985:31). இவ்வாறான ஆர்வத்தின் காரணமாகவே அவர் ஏழு வருடங்களின் பின்னர் தனது நண்பர் குஸ்டாவ் டி போமன்ட் (Gustave de Beaumont) அவர்களுடன் அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு நியூயோர்க்கில் சில நாட்களைக் கழித்தபின்னர் எல்லைப்புறத்துக்குச் சென்றார். அவரது அமெரிக்க விஜயத்துக்கு உத்தியோகரீதியான காரணம் அமெரிக்க குற்றவியல் மன்றங்களைப்பற்றி ஆய்வு செய்வதாக இருந்தது. எனவே கள்ளத்தனமான ஆவணங்கள் இன்றியே ரொக்வில்லும் அவரது நண்பர் போமன்டும் பிரான்ஸின் புதிய அரசின் பிரதிநிதிகளாகவே அமெரிக்காவை அடைந்தனர். இதைப்பற்றி ரொக்வில் எழுதும் போது: நீதிமன்ற முறை ஒரு பொய்யான காரணம், நான் அதனை ஒரு asLoyol"LTasû LIT695G56öT . . . (Tocqueville to kergorlay, 1835; Furet 1984:227).
சைன்ரா பீவி (Sainte-Beuve) கூறுவதைப்போல ரொக்வில் 'தான் எதனையும் கற்பதற்கு முன்னரேயே சிந்திக்கத் தொடங்கினார்’ (Lerner 80

1968xli) எனினும் அமெரிக்காவைப் பற்றிய சிந்தனை 1831க்கு முன்னர் அவர் உள்ளத்தில் இருக்கவில்லை. அமெரிக்க விஜயத்தைப் பற்றிய எண்ணம் அவர் புறப்படுவதற்கு இருவாரங்களுக்கு முன்னர் போமன்டு எழுதிய கடிதத்தின் வாயிலாகவே வெளிப்பட்டது. அமெரிக்காவைப் பற்றிய தீவிர சிந்தனை பயணம் முற்றுப் பெற்றதன் பின்னர்தான் உருவெடுத்தது. (Furet 1984).
1831லும் அதன் பின்னரும் ரொக்வில்லின் சிந்தனையை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த விடயம் அமெரிக்கா அல்ல, அங்கு நிலவிய சனநாயக சமூக முறைமையேயாகும். சனநாயகத்தினை எதேச்சாதிகாரத்தை எதிர்க்கும் சில கோஷங்களாகவோ அல்லது கோட்பாடுகளாகவோ அல்லாமல் அதனை ஒரு செயற்படு சமூகமாகவே அவர் கண்டார்.
இதற்கு ஐரோப்பா உதாரணங்களை வழங்கவில்லை. சமகாலத் தாராளவாதிகள் 1789 இல் பிரான்சும், 1688 இல் இங்கிலாந்தும் எதேச்சாதிகார அரசுகளைத் தூக்கி எறிந்துவிட்டன என எண்ணினார்கள். எனினும் இவ்விரு சமூகங்களுமே ஒரு துTய சனநாயகத்திற்கு உதாரணமாக இருக்கவில்லை. பிரான்சின் விடயத்தில் சனநாயகக் கோட்பாட்டின் நிறுவன வெளிப்பாடுகள் சமூக முறையின் மீதான புரட்சிகர வன்முறை விளைவுகளுடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்திருந்தன. இங்கிலாந்து விடயத்தில் சனநாயக மனப்பாங்குகளும் பிரபுத்துவ மனப்பாங்குகளும் மொண்டஸ்கியூ கூறுவதைப் போலக் கலந்திருந்தன. ரொக்வில்லின் உள்ளத்தில் அமெரிக்காவானது ஐரோப்பிய தாராண்மை வாதம் எதிர் நோக்கும் ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு விடய ஆய்வாகப் பரிணமித்தது. அமெரிக்க சனநாயகம் பிரபுத்துவ சாயலையோ அல்லது பிரான்ஸ் அனுபவித்த வன்முறையையோ கொண்டிருக்கவில்லை. அமெரிக்க சனநாயகம் ஐரோப்பிய சமூகங்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய ஒரு சிந்தனை வழியை வழங்கியது. ரொக்வில் 1836 இல் மில்லுக்குப் பின்வருமாறு எழுதினார்: அமெரிக்கா எனக்கு ஒரு சட்டகம் மாத்திரமே, சனநாயகம்தான் எனது கருப்பொருள்” (Tocqueville to Mill,1836; Tocqueville 1954: 315).
ரொக்வில் 1831 இல் நியூயோக்கிற்கு வந்து சேர்ந்தார். அப்போதைய சனாதிபதியாக அண்ட்ரூ ஜக்சன் இருந்தார். சுதந்திரப்போர் பற்றிய நினைவுகள் இன்னும் உயிர்ப்பாகவே இருந்தன. ஒரு வெகுசன உத்வேகம் வளரத்தொடங்கியிருந்தது. இதனை உயர் குடியினர் சிலர் எதிர்த்தனர். இதனைப் பொஸ்டன், பால்டிமோர் முதலிய இடங்களில் உயர் குடியினருடன் விருந்துண்ணும் பொழுது ரொக்வில் அவதானித்தார். இப்புதிய இயக்கத்தின் பண்புகளை அறிய ரொக்வில் ஆர்வம் கொண்டார். அடுத்த ஒன்பது மாதங்களுக்குள் ரொக்வில் வடமேல் எல்லைப் பிரதேசத்திற்கும், கனேடிய எல்லைக்கும் விஜயங்களை மேற்கொண்டார். பின்னர் நியூ இங்கிலாந்து, நியூ ஓர்லியன்ஸ், ஒகியோ
81

Page 44
ஆகிய இடங்களுக்கும் பயணம் செய்தார். இப்பயணங்களின் பொழுது அவர் சட்டத்தரணிகள், இராஜதந்திரிகள், சமயக் குருமார், அரசியல் வாதிகள் போன்றோருடன் மட்டுமல்லாது வங்கி, கல்வி, இலக்கியம், பெருந்தோட்டம் , சிறைச்சாலை முதலிய துறைகளுடன் தொடர்புடையோருடனும் அளவளாவிக் குறிப்புகளைத் திரட்டினார்.
1832 இல் ரொக்வில் ஐரோப்பாவிற்குத் திரும்பினார். இக்காலகட்டத்தில் அவர் தான் எழுதிய அமெரிக்காவில் சனநாயகம் (Democracy in America) என்னும் நூலுக்கான மூலவிடயங்களைச் சேர்த்திருந்தார். இந்நூலின் முதலாவது பகுதி 1835 லும் இரண்டாவது பகுதி1840 லும் வெளிவந்தன. முதலாவது பகுதியை முடிக்குமுன் இங்கிலாந்துக்கு ஒரு குறுகிய கால விஜயமென்றை மேற்கொண்டார். அவர் ஓர் ஆங்கிலப் பெண்ணுடன் நட்புக் கொண்டிருந்தார். அப்பெண்மணியே பின்னர் இவரது மனைவியானார். எனினும் அவரது இப்பயணத்திற்குக் கல்வி சார்ந்த நோக்கங்களும் இருந்தன. தமது அமெரிக்க விஜயத்தின் இறுதியில் ரொக்வில் பின்வருமாறு குறிப்பிட்டார்:
ஆங்கில இனத்தின் விசேட பண்புகளைப பற்றி அமெரிக்கா ஒரு பூரணமான தோற்றத்தைத் தருகிறது. அமெரிக்கன் என்பவன் சுதந்திரமாக விடப்பட்ட ஆங்கிலேயனாவான். அவனது ஆர்வம் கொழுந்து விட்டு எரிகின்றது. விடாப்பிடிததனமும் , சுயநலமும் , பெருமையும் , பகுத்தறிவும், விடாமுயற்சியும் கொண்ட அவன் பணத்தின் மேல் மிகவும் மரியாதையுடையவன்" (Tocqueville1959;177)
“சுதந்திரமாக விடப்பட்டவன்" என்பதனால் ரொக்வில் கருதியது போல் பிரபுத்துவச் செல்வாக்குக்கு உட்பட்டது என்பதல்ல. ஆங்கிலேயரின் பண்புகளில்உண்மையில் சிறந்த பரோபகாரமான பெருமைமிக்க அம்சங்கள் இருந்தன. ரொக்வில்லின் மூதாதையரின் இல்லம் துறைமுகத்துக்கு அண்மையிலேயே இருந்தது. அங்கிருந்துதான்1066 ஆம் ஆண்டுவில்லியம் நோர்மன் படையெடுத்துச் சென்று இங்கிலாந்தை வெற்றிகொண்டு ஒரு மானியமுறை சார்ந்த அரச வம்சத்தை நிலை நிறுத்தினான். எனவே இங்கிலாந்தின் பிரபுத்துவப்பெருமைகள் என்பவை உண்மையில் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவை.
1833ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ரொக்வில் இங்கிலாந்தில் ஐந்து வாரங்கள் தங்கியிருந்தார். அந்நேரத்தில் ஆங்கில அரசியலை அதற்கு முந்திய வருடம் கொண்டுவரப்பட்ட சீர்திருத்த சட்டத்தின் பின்னணியில் அவதானிக்கும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது. இக்காலப் பகுதியில் வெலிங்டன் பிரபு பிரபுக்கள் சபையில் திறமையில்லாமல் உரையாற்றியதையும் அதே நேரத்தில் ஒரு தொழிலாளி போலந்தின் சுதந்திரத்திற்கு ஆதரவாக மிகத் திறமையுடன் உரையாற்றியதையும்
82

கண்டார். லண்டன் நகரத்தில் நடந்த ஒரு பாராளுமன்றத் தேர்தலைக் கண்ணுற்றார். ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தார். சலிஸ்பரியில் நீதவான் மன்றத்தில் அமர்ந்து நடைமுறைகளை அவதானித்தார். ஒரு சீர்திருத்தவாதியையும் சந்தித்தார்.
இரண்டு வருடங்களின் பின்னர் ரொக்வில் ஒரு நீண்ட விஜயத்தை மேற்கொண்டார். (1835 மே- செப்ரெம்பர் வரை). இம்முறை கைத்தொழில் நகரங்களான பர்மிங்காம், மான்செஸ்டர், லிவர்பூல் ஆகியவற்றுக்கு விஜயம் செய்தார். இந்த இரண்டாவது விஜயத்தின் போது அரசியல் மத்திய மயப்படுத்தல் பற்றி ஜோன் ஸ்ரூவேட் மில்லுடன் அவர் கலந்துரை யாடினார். இக்காலத்தில் ரொக்வில்லை லண்டனில் பலரும் நன்றாக அறிந்திருந்தனர். லண்டன் அரசியல் வட்டாரங்களில் அவர் கலந்து கொண்டார். தேர்தல்களில் இலஞ்ச ஊழல் பற்றிப் பொதுமக்கள் சபையின் தெரிவுக்குழு ஒன்றிலும் அவர் சாட்சியமளித்தார். அமெரிக்காவிலும் இந்தியாவிலும் ரொக்வில்லின் அவதானிப்புகள் அவரது நோக்குகளின் இரு அம்சங்களுக்கு உதவியாக இருந்தன. முதலாவது பிரபுத்துவத் திலிருந்து சனநாயகம் நோக்கிய உலகளாவிய மாற்றம். இரண்டாவது சனநாயக சமூகங்கள் எதிர்காலத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய போக்குகள்.
பிரபுத்துவம் எதிர் சனநாயகம்
ரொக்வில்லின் கருத்துப்படி ஒரு பிரபுத்துவ சமூகத்தில் ஆளும் வகுப்பினர் தம்மைப்பற்றியும் மனிதனைப்பற்றியும் உயர்வான எண்ணங்களைக் கொண்டிருப்பர். பிரபுத்துவம் மிக உயர்வான மகிழ்ச்சியைக் கற்பனை செய்து மிகவும் ஆர்வம் நிறைந்த இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டது. இத்தகைய சமுதாயங்களில் விஞ்ஞானிகள் ‘உண்மையின் மீது அழியாக் காதல்" கொண்டிருந்தனர். (Tocqueville 1968:592-3) ஒர் அரசாங்கத்தினுள் பிரபுத்துவம் “தனக்குத்தானே எஜமான்' ஆகும். அது தற்காலிக உணர்வுகளுக்குஇடம் கொடுப்பதில்லை. நீண்டகாலத்திட்டங்களின்மூலம் அதனை அடைவதற்கு சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்துநிற்கும். உலகத்தின் தலைவிதியைத் தீர்மானித்த ரோம அரசிலிருந்து ஆங்கில அரசுவரை அவை பிரபுத்துவத்தாலேயே கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இவ்வாறு கூறும் ரொக்வில் சிறிது சுயமதிப்பு தொனிக்கக் கூறுகிறார்: "அதைப்பற்றி ஒருவர் எவ்வாறு ஆச்சரியப்படமுடியும்? அவரது பார்வையில் 'பிரபுத்துவம் உறுதியும் ஞானமும் கொண்டது, அது என்றும் அழிவதில்லை. ’ (283-4) துTரதிஷ்டவசமாக பிரபுத்துவத்தின் இத்தன்மையினை நிலைநிறுத்திய சட்ட, பொருளாதார சலுகைகள் "மகத்தான சனநாயகப் புரட்சிக்கு முன்னால் நிலைக்க முடியவில்லை. பிரபுத்துவத்தின் அடிப்படையானது சமமின்மை, உறுதிநிலை, உயர் இலட்சியங்கள் எனில், சனநாயகத்தின் அடிப்படை சமத்துவம் ,
83

Page 45
தனிமனிதத்துவம் , அமைதியின்மை மற்றும் சராசரித் தன்மை (mediocrity) என்பவையாகும்.
சமத்துவக் கோட்பாடு சகலவிடயங்களிலும் தாக்கம் செலுத்துகிறது. சமூக வர்க்கங்கள், ஆண் பெண், பெற்றார் பிள்ளைகள், எசமான் வேலைக்காரன் எனப் பல்வேறு பிரிவுகளிலும் சமத்துவக்கோட்பாடு அதன் தாக்கத்தைச் செலுத்துகிறது. ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதனுக்குச் சமமானவனென்று சனநாயகம் கூறுகிறது. ஒரு தனிமனித உணர்வு வளர்ச்சியடையும் பொழுது அதனுடன் சேர்ந்து உளவியல் ரீதியான தனிமைப்படுத்தலும் ஏற்படுகிறது. தன்னை மையமாகக் கொண்ட, தன்னில் தானே தங்கியுள்ள தனிமனிதன் “தனக்குள் தானே' அடைபடும் அபாயத்தை எதிர்நோக்குகிறான். ஆனால் ஒரு சிலரை மாத்திரமே தனது நண்பர்களாகவும் விருந்தாளிகளாகவும் ஏற்றுக் கொள் வான். சமத்துவத்தின் இன்னொரு விளைவு அமைதியின்மையாகும். மக்கள் தமக்குப் “பொருத்தமான இடம் இருப்பதனை மறந்து விடுவர். அவாவிற்கு வரையறை கிடையாது. தனிமனிதன் தன்னால் அடைய முடியாதது என்பதைத் தெரிந்து கொண்டே பூரண இன்பத்தைத் தேடிக் கொண்டிருக்கிறான் (693). சனநாயகத்தில் மகிழ்ச்சியென்பது பலநூறு சிறு சிறு தேவைகளை அடைவதைக் குறிக்கின்றது. இத்திருப்தியானது ஒருவகை மேம்பட்ட பொருள்முதல் வாதத்துக்கு இட்டுச் செல்கிறது. இந்நிலைமையானது ஆன்மாக்களை மலினப்படுத்துவதில்லை. ஆனால் செயற்பாடுகளை இளகவைக்கிறது (688). சனநாயக சமூகங்களின் பிரசைகள் ஒரு பாரிய பொது மனனழுச்சிகளுக்குப் பதிலாக (836) தமது தனிப்பட்ட விரக்தியின் உறுத்தலை அனுபவிப்பர். ஒரு சனநாயக சமூகத்தில் சாதாரண மக்களின் பொதுக்கல்வி மட்டம் பிரபுத்துவ சமூகத்தைவிட உயர்வானது. ஆனால் சிந்தனை வளம் உயர்ந்ததல்ல. நடைமுறைத் தன்மையும் , ஆயத்தநிலையும் போற்றப்படுகின்றன. பயனுள்ள புத்தாக்கங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.
ஆனால் அடிப்படை அறிவுப்புரட்சிகள் மிக அரிதானவை. வழிமுறைகள் மதிக்கப்படுகின்றன. ஆனால் அதற்கு அடிப்படையான கோட்பாடு அசட்டை செய்யப்படுகிறது. கலைகளுக்குப்பதிலாகக் கைப்பணிப்பொருள் போற்றப்படுகிறது. ஆங்கில மொழியானது உயர்ந்த வகையில் பயன்படுத்தப்படுவதில்லை. ஊசலாடும் சிந்தனைகள் தமது ஊசலாட்டத்திற்குப் பாமர மொழியையே வாய்ப்பானதாகக் கொள்கின்றன (619) . ஒரு சனநாயகத்தில் அரசியல் விவகாரங்களானது, அனுபவமின்மை, வழு நிறைந்த நோக்கு மற்றும் வரையறுக்கப்பட்ட தூரதிருஷ்டி ஆகியவற்றினால் பாதிக்கப்படுகின்றன. அதிர்ஷ்டவசமாக அமெரிக்க சனநாயகத்துக்கு தவறுகள், பிழைகள் விடவும் அவற்றிலிருந்து பாடம் படிக்கவும் இயலக்கூடியதாகவுள்ளது. ரொக்வில்லின் பார்வையில் அமெரிக்க சனநாயகத்தில் அரசியல்வாதிகளின் நலன்கள் பொதுநலனுக்கு விரோதமாக இருக்கவில்லை.
84

ரொக்வில்லின் நோக்கில் இங்கிலாந்து பிரபுத்துவ சனநாயகக் கோட்பாடுகளின் கலவையாகும்: "இங்கிலாந்தில் ஏழைகள் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இரண்டு உரிமைகள் உண்டு. முதலாவது செல்வந்தர்களைப் போல அதே சட்டங்களுக்குத் தலை வணங்குதல். இரண்டாவது செல்வத்தைத் தேடமுடியுமெனின் செல்வந்தருக்கீடாகச் சமத்துவத்தையும் பெறமுடியும். ஆனால் இந்த இரண்டு உரிமைகளும் உணர்மையென்பதை விட வெளித தோற்றமேயாகும். ஏனெனில் தனக்காகவும் தனது பிள்ளைகளின் நன்மைக்காகவும் செல்வததைத தேடிக்கொள்ளப் பிரதான வழியாகச் சட்டங்களை
ஆக்குபவனும் செல்வந்தனே. (Tocqueville, 1958:911).
ரொக்வில் ஆங்கிலேய சமூக ஏற்பாடுகளைப்பற்றி ஆச்சரியப்பட்டதோடு அவற்றினால் கவரப்படவும் செய்தார். ஆங்கிலேய சமூக ஏற்பாடுகளைச் சமுத்திரத்துக்கு மேலாக “நூறு அடியில் தொங்க விடப்பட்டிருக்கும் ஓர் ஆடுகின்ற கயிற்றுப்பாலத்துக்கு அவர் ஒப்பிட்டார் (74).
இம்முறை இயங்குவதற்கு அனுபவமும் திறனும் அதிஷ்டமும் தேவைப்பட்டன. ஆங்கிலேயப் பிரபுத்துவம்-1789ற்கு முன்னதான அதனுடைய பிரெஞ்சுச் சகபாடியைப் போலல்லாது, அரசியல் ரீதியாக உயிர்ப்பும் ஒப்பீட்டளவில் திறந்த தன்மையும் கொண்டிருந்தது. இது பிறப்பில் அன்றி செல்வத்திலேயே தங்கியிருந்தது. அதற்குத் திட்டவட்டமான எல்லைகள் இருக்கவில்லை. எனவே அது ஒரு தெளிவான இலக்காகவும் இருக்கவில்லை. பிரபுத்துவ சலுகைகள் சட்டரீதியாகத் தாக்கப்பட்டன. ஆனால் அது சமூக மனப்பாங்குகள் மற்றும் நடத்தைகள் மீது கொண்டிருந்த செல்வாக்கின் காரணமாகப் பாதுகாக்கப்பட்டது. ஒரு சமத்துவ சனநாயகச் சமூக முறைக்கு ஈடான ஒரு சமூக அமைப்பு பர்மிங்காமில் காணப்பட்டது. இந்நகரம் ஒரு சில பெரிய கைத்தொழில் உடைமையாளர்களையும் கொண்டிருந்தது. ஐக்கிய அமெரிக்காவைப் போலவே உள்ளுர்ப் பற்றும் அமைதியற்ற இயக்கமும் ஒரு வித அமுக்கத்திற்கு உள்ளாகியிருந்தது. பர்மிங்காமில் ரொக்வில்லுக்குப் பின்வருமாறு கூறப்பட்டது. "ஒவ்வொருவரும் செல்வத்தைத் தேட இங்கு உழைக்கிறார்கள், தேடிய பின்னர் அதனை அனுபவிப்பதற்காக வேறொங்கோ செல்கிறார்கள்." ரொக்வில் தனது தினக்குறிப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். "இந்த மக்களுக்குத் தமக்கென ஒரு நிமிடத்தையேனும் ஒதுக்க முடியவில்லை. அவர்கள் இன்று மாலை பணக்காரராகி நாளை செத்துப் போய்விடவேண்டும் என்பதைப் போல உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் பொதுவாகப் புத்திசாலியானவர்கள். ஆனால் அவர்களது புத்திசாலித்தனம் அமெரிக்கப்பாணியில் இருக்கிறது." (Tocqueville 1958:94). அவரோடு பயணஞ்செய்த குஸ்டாவ் டி போமன்ட் பின்வருமாறு குறிப்பிட்டார்: இது முகொழுக்அமெரிக்கலு: 85

Page 46
(Drescher 1964a :64). ரொக்வில்லுக்கு பர்மிங்காமானது அமெரிக்க எல்லையிலிருந்த ஒகியோவை நினைவூட்டியிருக்கலாம். நான்கு வருடத்துக்கு முன்னர் ரொக்வில் பின்வருமாறு எழுதினார்: ஒகியோவிற்கு ஒவ்வொருவரும் பணந்தேடவே வருகிறார்கள். அங்கு ஒருவரும் பிறக்கவுமில்லை, அங்கு இருப்பதற்கு ஒருவராவது விரும்பவுமில்லை, முழுச் சமூகமும் ஒரு கைத்தொழிலாகும். (Tocqueville 1950 262).
எதேச்சாதிகாரமா அல்லது சுதந்திரமா?
இங்கிலாந்தைப் போலல்லாது ஐக்கிய அமெரிக்காவில் சனநாயகமானது பெரும் வெற்றியை ஈட்டியது. இவ்விடயமானது சனநாயக சமூகங்களின் எதிர்காலத்தைப் பற்றிரொக்வில்லை ஆய்வதற்குத்தூண்டிய ஒரு வாய்ப்பே எதேச்சாதிகாரத்தின் நன்மையாகும். அதன்படி பிரசைகள் சிந்திக்க வேண்டியதில்லை. வாழ்க்கைப்பிரச்சினைகளுமில்லை. (Tocqueville 1968 898). இதன்படி மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சமத்துவம் கொண்டவர்கள். ஆனால் சுதந்திரமற்றவர்கள்.
மற்ற வாய்ப்பானது எதேச்சாதிகாரத்துக்கு அல்லாது சுதந்திரத்துக்கு இட்டுச் செல்லுதலாகும் . சனநாயகத்துக்கெதிரான தவறான மனப்பாங்குகள் அகற்றப்படவேண்டுமெனில் இது தவிர்க்க முடியாத இணைப்பாக இருக்க வேண்டும். முடியாட்சியாளர் பிரபுக்கள் மற்றும் ஏனைய சலுகை பெற்ற வகுப்பினரைத் தாக்கிச் சுதந்திரத்தை ஸ்தாபிதம் செய்வதே ஐரோப்பிய பாங்கு. இது அராஜகத்துக்கும் பின்னர் எதேச்சாதிகாரத்துக்கும் இட்டுச் செல்லும் அபாயத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது. எனினும் "அதிகாரத்தின் செல்வாக்கைக் குறைக்கும்” இன்னும் ஒரு வழியுமுண்டு.
‘அதிகாரத்தைப் பல இடங்களில் பிரித்து வைப்பதன் மூலம்’ (Tocqueville, 1968; 86) மத்திய அரசிக் அல்லது ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை வசதிகளைக் குறைக்க முடியும். இதன் மூலம் சமூகத்துக்கு மிகவும் பயனான சமூகப் பயன்பாடுகளைப் பாதுகாக்க முடியும். இதுவே அமெரிக்க அணுகுமுறையாகும். 1831 இல் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் ரொக்வில்லுக்குப்பின்வருமாறு கூறினார்: “மசாசூசெட்ஸ் மாநிலம் சிறுசிறு குடியரசுகளின் தொகுப்பாகும். அரசனுக்குப்பதிலாக நாங்கள் மக்களின் பெயரைப் போட்டுள்ளோம். அதைவிட வேறொன்றும் மாறிவிடவில்லை.” (Tocqueville 1959:51).
'அமெரிக்கர்கள் சமத்துவத்தின் வழியாகப் பிறந்த தனி நபர்வாதத்தை, சுதந்திரத்தைக் கொண்டு எப்படிப் போராடினார்கள்’ என்பதற்கு நியூஇங்கிலாந்து நகரம் நல்ல உதாரணமாகும். உள்ளுர் சமூகத்தின் அலுவல்கள் யாவும் மக்களால் தெரிவுசெய்யப்பட்டபொது அலுவலர்களால்
86

நடாத்தப்படுகின்றன. கவுண்டி மற்றும் மாநில அரசுகளிலும் இதே கோட் பாடுதான் பின்பற்றப்படுகிறது. ஒவ்வொருவரும் சமூகத்தின் பங்காளிகள் என்ற நிலையிலிருப்பதால் இந்த முறை நன்கு செயற்படுகிறது.
மக்களின் அபிப் பிராயத்தை இருநிறுவனங்கள் உருவாக்கி வெளிப்படுத்துகின்றன. இவற்றில் ஒன்றாகப் பத்திரிகைகள் நாட்டின் நாலாபுறங்களிலும் அரசியலைப் பரப்புகின்றன. அவற்றின் கண்கள் எப்போதும் மூடுவதில்லை. பகிரங்க அலுவலர்கள் "அபிப்பிராயம் என்னும் நீதிமன்றத்தின் முன்னால் எப்போதும் நிறுத்தப்படுகின்றனர். பத்திரிகைகள் பொதுசன அபிப்பிராயத்தை நேர் செய்கின்றன. பல பத்திரிகைகளும் ஒரே அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கும் போது அதன் வலிமை அதிகரித்து சரியான முடிவு ஏற்பட வழிவகுக்கிறது. இரண்டாவது நிறுவனம் அரசியல் கூட்டுகளாகும். ஐரோப்பாவில் இத்தகைய சங்கங்கள் சதிசெய்யும் படையாக விளங்க, அமெரிக்காவில் இவை அமைதியான ஒழுங்கமைப்புகளாக உள்ளன. விவாதங்கள் மூலம் இவை பொதுசன ஆதரவைப் பெறுகின்றன.
உள்ளுர் தேசபக்தியானது அரசியல் ஆர்வம் நாடு முழுவதும் வேகமாகப் பரவுவதைத் தடைசெய்கிறது. இத்தகைய அரசியல் ஆர்வம் மாநில ஆர்வத்துடன் மோதுகிறது. இந்நிலையைச் சமஷ்டி யாப்பு மேலும் பலப்படுத்துகிறது. தேர்தல்கள் அடிக்கடி நடந்தன. பொதுநிர்வாகம் முறையாக நடக்கவில்லை. அதில் செலவினமும் ஊழலும் மலிந்திருந்தன. எனினும் மக்களின் அரசியல் ஈடுபாடு நன்மை அளிப்பதாகவே இருந்தது. கிளர்ச்சியும் ஒழுங்குமுறையும் நிறைந்த அமெரிக்கத் தனத்தையே அரசியலும் பிரதிபலித்தது. அமெரிக்கர்கள் தமது தொழில்கள், வீடுகள், அபிப்பிராயங்கள் மற்றும் ரசனைகள் ஆகியவற்றை எப்போதும் மாற்றிக் கொண்டிருப்பவர்கள். எனினும் உறுதியான மதச்சார்பு நம்பிக்கை, தன்னில் தங்கியிருத்தல், அயலவரை மதிக்கும் பண்பு ஆகியவற்றையும் கொண்ட ஓர் உயரிய ஒழுக்கக் கோவையை மேம்படுத்தியிருந்தது.
அமெரிக்கர்களின் சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றுக்கிடையிலான சமநிலை காலனித்துவ வரலாற்று அடிப்படையில் ஊன்றியிருந்தது. ஆரம்பக் குடியேற்றவாதிகள் தமது மதங்களை மட்டுமல்லாது ஒரு மத்திய வகுப்புச் சனநாயக சுதந்திரத்தையும் கொண்டிருந்தனர். ஆரம்ப குடியேற்றவாதி ஒரு சாதாரண விவசாயி அல்ல, அவன் ஒரு நாகரீக மனிதன். புதிய உலகுக்குள் அவன் தனது பைபிள், கோடரி மற்றும் புதினப்பத்திரிகையுடன் பிரவேசித்தான். தேசிய அரசியல் கட்டமைப்பு உருவாகுவதற்கு முன்னரே உள்ளுர் அரசியல் ஒழுங்கு உருவாகிவிட்டது. அங்கிருந்த நிலமானது சோம்பேறிகளான நிலப்பிரபுக்களைத் தாங்கும் அளவுக்குச் செழிப்பானதாக இருக்கவில்லை. எனவே பல பகுதிகளில் சிறுநிலச் சொந்தக்காரர்களின் கூட்டம் உருவாகியது. பெரும் பணக்கார வகுப்பினர்களும் சிறிதுகாலம் இருந்தனர். அவர்களே அமெரிக்கப்
87

Page 47
புரட்சிக்கான சிறந்த தலைவர்களை வழங்கினர். ஆனால் புரட்சிக்குப் பின்னர் சொத்துரிமைச் சட்டங்கள் மாற்றப்பட்டன. எனவே பெருநில உடமை ஒழிக்கப்பட்டது.
சுதந்திரத்துக்கு எதிரான பயமுறுத்தல்கள்
சுதந்திரத்துக் கெதிரான பயமுறுத்தல்களில் மிகவும் குறிப்பானதான இனரீதியான வன்முறை ஐக்கிய அமெரிக்காவிலும் காணப்படுகிறது. அத்துடன் சகல நவீன சனநாயகங்களிலும் உருவாகக்கூடிய இன்னொரு ஆபத்தான பெரும்பான்மை அபிப்பிராயம் எப்பொழுதும் சரியானது என்பதையும் அமெரிக்கா காட்டி நிற்கிறது. பெரும்பான்மை சரியான தென்னும் கருத்து சிறப்பானதல்ல. அது உண்மையில் சிந்தனையைப் பெரும்பான்மையினர் வேலி போட்டு அடைத்து வைப்பதற்குச் சரியானதாகும். ஐரோப்பிய ஆட்சியாளரைப்போல இவ்விடயத்தில் மக்களையும் திருப்தி செய்யவேண்டியிருக்கிறது. பெரும்பான்மையினரின் சகல வல்லமை என்பது அராஜகத்துக்கும் அநியாயத்துக்கும் வழி விடுகிறது. ரொக்வில் கூறுவதைப்போல இந்நிலையைச் சமப்படுத்தக் கூடிய சக்தியானது அமெரிக்காவில் சட்டத்தொழிலில் காணப்படுகிறது. அமெரிக்க சட்டவல்லுனர்கள் பழமைவாதிகள், மரபுகளைப் பேணுபவர்கள். உண்மையில் அவர்கள் இரகசியமாகச் சனநாயகத்துக்கு விரோத மானவர்கள். அமெரிக்கப் பிரபுத்துவம் சட்ட மன்றங்களில் காணப்படுகின்றது. நீதித்துறையின் செல்வாக்கு யூரி முறையின் ஊடாகவே கையாளப்படுகிறது. இம்முறையானது மக்களின் ஆட்சியை ஸ்தாபிப்பதற்கும் அதனை எவ்வாறு செயற்படுத்துவது என்பதை அவர்களுக்குக் கற்பிப்பதற்கும் காத்திரமானது.
சனநாயகத்தில் உள்ளார்ந்திருக்கும் ஆபத்துக்களைப்பற்றிரொக்வில் தனது அமெரிக்க சனநாயகம் எனும் நூலின் இரண்டு பகுதிகளும் வெளி வந்த ஐந்தாண்டு இடைவெளியில் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினார். இவ்விரண்டு தொகுதிகளுக்கிடையில் உள்ளடத்திலும் நோக்கிலும் ஆகக்குறைந்தது மூன்ற வேறுபாடுகள் காணப்படுகின்றன.
முதற்றொகுதியில் மக்கள் அமைதியற்றவர்களாகவும் மாறிக்கொண்டிருப் பவர்களாகவும் சமூக இசைவாக்கமுள்ளவர்களாகவும் சித்தரிக்கப்பட்டனர். அடுத்த தொகுதியில் 1830களின் பிற்பகுதியில் ரொக்வில்லுக்கேற்பட்ட பிரெஞ்சு அரசியலனுபவம் காரணமாக மக்கள் சித்தரிக்கப்படுகின்றனர். அடுத்தது அமெரிக்க சனநாயகத்தின் பன்முகப்படுத்தப்பட்ட அமைச்சூர்த் தனமானதாக அரசாங்கம் வர்ணிக்கப்பட்டது. அடுத்த தொகுதியில் பிரான்சிய அனுபவம் காரணமாக இரக்கமற்ற மத்தியமயப்படுத்தப்பட்ட அதிகார சக்தியாகக் காட்டப்படுகிறது. இக்கருத்து அவரது இரண்டாவது G5IT@55u T6T The old Regime and the Revolution (1955) 6T6örgyi JT65s)
88

அழுத்தமாகக் கூறப்படுகிறது. மூன்றாவதாக ரொக்வில்லின் கருத்துப்படி சமூக மாற்றமானது பல விடயங்களில் அதிகளவு சமத்துவமின்மையை உருவாக்குகிறது. கைத்தொழிலாக்கமே இதற்குக் காரணமாகும்.
இங்கிலாந்து கண்ட கைத் தொழிலாக்கம் போன்றதொன்றை அமெரிக்காவும் காணுமாயின் அங்கு நின்று பிடிக்காது எனத் ரொக்வில் கூறுகிறார். இங்கிலாந்தில் மான்செஸ்ரர் நகரத்தில் தாம் கண்ட காட்சியை அவர்பின் வருமாறு வருணிக்கிறார்.
"முப்பது அல்லது நாற்பது தொழிற்சாலைகள் குன்றுகளுக்கிடையில் உயர்ந்து நின்றன. அவைகளின் கோபுரங்கள் ஐந்து மாடிகளின் உயரத தைவிட உயர்ந்திருந்தன. ஏழைகளின் பரிதாபமான வாழ்விடங்கள் அங்குமிங்குமாகச் சிதறிக் கிடந்தன. பயிரிடப்படாத நிலம் இத்தொழிற்சாலைகளைச் சுற்றிப்பரந்து கிடந்தது. ஆனால் அவற்றில் இயற்கை எழிலின் கவர்ச்சி இருக்கவில்லை. ஒரு நகரத்திலிருக்கவேண்டிய வசதி அங்கு காணப்படவில்லை. கைத்தொழிற் பாவனைக்காக நிலம் வழங்கப்பட்டு விட்டது. பாதைகள் ஒழுங்கற்றுக்கிடந்தன. மக்களின் செயற்பாடுகள் இலாபத்தை நோக்கியே இருந்தன. வாழ்க்கையின் நல்ல விடயங்களுக்கு அங்கு இடமிருக்கவில்லை." (Tocqueville 1958: 106)
ரொக்வில் மான்செஸ்ரரில் உலைகளின் சத்தத்தையும் நீராவியின் ஓசையையும் கேட்டார். பெரும் தைத்தொழில் மயமாக்கமும் பெரும் நகரங்களும் சமத்துவத்துக்கும் சுதந்திரத்துக்கும் பெரும் பயமுறுத்தல்களாகும். தொழிற்சாலையில் முதலாளி ஒரு பெரும் சாம்ராஜ்யத்தின் நிர்வாகியாக மாறிக்கொண்டிருந்தான். தொழிலாளியோ அடிமையாக மாறிக் கொண்டிருந்தான். அமெரிக்காவில் நிரந்தரமான சமத்துவமின்மையும் பிரபுத்துவமும் வந்து சேருமெனில் அது கைத் தொழிலாக்கத்தினுடாகவே நுழையும்.
சனநாயகக் குடியரசுகளுக்குப் பெரிய நகரங்களே உண்மையான ஆபத்து என ரொக்வில் கருதினார். இந்நகரங்களின் காரணமாகவே சனநாயகம் அழியும் என அவர் எதிர்வு கூறினார். இதனைத் தடுக்க வேண்டுமெனில் அரசாங்கங்கள் ஒர் ஆயுதந்தரித்த படையை உருவாக்க வேண்டும். இப்படையானது தேசிய பெரும்பான்மையினருக்கு அடங்கியிருக்க வேண்டும் . உண்மையில் பாரிய கைத் தொழில் நகரத்தின் சனத்தொகையானது சனநாயக அமைப்புக்குள் இயங்குவதிலுள்ள பிரச்சனைக்குக் கூறிய தீர்வு உண்மையில் ஒரு தீர்வேயல்ல. 1831 ஆம் ஆண்டு ஒரு நியூ இங்கிலாந்து வாசி ரொக்வில்லுக்கு பின்வருமாறு கூறினார். “எம்மைப் போன்ற ஒரு முழுமையான சனநாயக நாட்டிற்குக்
89

Page 48
கைத்தொழிலாக்கம் பாரதூரமானதாகும். இங்கிலாந்திலும் பிரான்சிலும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்காகப், பொலிஸ் இருக்கிறது. ஆனால் எம்மைப் பொறுத்தவரையில் மக்களுக்கு அப்பால் என்ன சக்தி உள்ளது." ரொக்வில் பின்வருமாறு பதில் கூறினார். “பெரும்பான்மையினர் சில வேளைகளில் ஒழுங்கீனத்தையும் அநியாயத்தையும் வேண்டிநின்றால் உங்களது அரசாங்கத்தின் அடிப்படையாக அமையப் போவது எது?” உண்மையில் ரொக்வில்லின் சனநாயக மாதிரி சமாதானம், சமத்துவம், சுதந்திரம் உள்ளூராட்சி ஆகியவற்றின் கலவை - உலகம் முழுதும் ஒரு பெரிய கைத்தொழில் நகரமாக மாறுகின்ற எண்ணத்துடன் பொருந்தவில்லை.
ரொக்வில்லைப் பற்றி மில்
மலர்ந்து விரிகின்ற சனநாயகப் புரட்சியின் தாக்கத்தைக் கண்டுபிடிப்பதில் ரொக்வில் ஈடுபட்டிருந்தார். சனநாயகம் தவிர்க்க முடியாதது. அதே நேரத்தில் மகிழ்ச்சி நிரம்பியதல்ல. சனநாயகத்தைப் பொறுத்துக் கொள்ள என்ன செய்யப்படல் வேண்டுமென அவர் வினவினார். அவரது அமெரிக்கப் பயணமும், 1848ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியும் சில நம்பிக்கைகளை ஏற்படுத்திய போதிலும் இறுதியாக ரொக்வில் ஒரு துயரமான தனிமை நிலையை அடைந்திருந்தார். (Mayer 1968XX). இதற்கு மாறாக சமூக, உள வளங்கள் ஒரு நாகரீக சமூகத்தை உருவாக்க எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என மில் சிந்தித்தார். ‘நாகரீகமான’ என்பது பொருளாதார அபிவிருத்தி என மில் அர்த்தம் கொள்ளவில்லை. பூரணத்துவம், மகிழ்ச்சி, புத்திசாலித்தனம், மேம்பாடு முதலியவற்றை அவர் நாகரீகம் எனக் கருதினார். அத்தகைய சமூகத்தில் சமத்துவம் என்பது ஒரு விழுமியம். அதேநேரத்தில் அதே அளவுக்கு முக்கியமான விழுமியங்களான சுதந்திரம், பன்முகத்தன்மை, தனித்துவம் ஆகியவற்றுடன் அது சமநிலைப்படுத்தப்பட வேண்டும். இத்தகைய சமநிலையை சமூகத்தின் சகல மட்டங்களிலும் பணி பார்ந்த, புத்திசாலித்தனமானவர்கள் மேற்கொள்வர். ஜோன் ஸ்டூவர்ட் மில் போன்றோரின் கருத்துக்கள் இத்தகையோரை இப்பணியினைச் செய்ய உற்சாகப்படுத்தும்.
மில்லைப் பொறுத்தவரை அவரது இலட்சியத்தை நோக்கிய செயற்பாடுகளின் வரையறைகள் சனநாயகப் புரட்சியினால் நிச்சயிக்கப்படவில்லை. மில்லின் கருத்துக்கள்ரொக்வில்லின் கருத்துக்களை விடக் குறைந்த சர்வதேசத் தன்மையையும் கூடுதலாக மாற்றக் கூடியதன்மையையும் கொண்டிருந்தன. பிரதான தடைகள் அரசியல் பொருளாதார விதிகள் மற்றும் மக்களின் கல்வி மட்டம் ஆகியவற்றிலிருந்தே வந்தன. இவ்விரண்டு விடயங்கள் தொடர்பாகவும் மில் ஆய்வு செய்தார். மில் “அரசியல் பொருளாதாரத் தத்துவங்கள்” (Principles of Political Economy) என்னும் தனது நூலைத் தனது சொந்தச் செலவிலேயே
90

மலிவுப் பதிப்பாக வெளியிட்டார். 1848இல் முதல் பதிப்பு வெளிவந்ததைத் தொடர்ந்து அவரது காலத்திலேயே ஐந்து பதிப்புகள் வெளிவந்தன.
தனது காலத்தில் மில் "மிகப்பெரிய பொருளியல் அறிஞராக மதிக்கப்பட்டார். உழைக்கும் வர்க்கத்தினர்க்கான முதியோர் கல்வி இயக்கத்தினிடையே அவருக்கு நிறைந்த செல்வாக்கு இருந்தது. அவரது நூல்கள் பல நூல்நிலையங்களிலும் காணப்பட்டன. எனினும், அவர் பொதுமக்கள் அபிப்பிராயத்தைப் பற்றி அவ்வளவாகக் கவலை கொள்ளவில்லை. இதன் காரணமாக அவரது புகழ் மேலும் அதிகரித்தது. 1865இல் அவர் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார். அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் அவருக்கு ஒரு சவால் ஏற்பட்டது. அதாவது அவர் "ஆங்கிலேய உழைக்கும் வர்க்கம் பொய் கூற வெட்கப்பட்டாலும் அவர்கள் பொதுவாகப் பொய்க்காரர்கள் தானி' என எழுதினாரா என்பதை ஒத்துக்கொள்ளவேண்டியிருந்தது. அவர் ஒத்துக்கொண்ட போது கூட்டம் முழுதும் கைதட்டல் நீண்ட நேரம் எதிரொலித்தது என அவர் தனது சுய சரிதையில் பின்னர் குறிப்பிட்டார். (Mill 1873:284)
"அமெரிக்காவில் சனநாயகம்” என்னும் நூலினைப் பற்றிய மில்லின் பதிப்புரையில் மில்லுக்கும் ரொக்வில்லுக்குமிடையிலான கருத்து வேற்றுமைகள் வெளிப்பட்டன. மில், ரொக்வில்லின் முறையியலை முற்று முழுதாக ஏற்றுக்கொண்டார். உய்த்தறிமுறை, தொகுத்தறிமுறை ஆகிய இரண்டும் இணைந்த ஓர் ஒப்பீட்டு முறையாக ரொக்வில்லின் முறை அமைந்திருந்தது. மில்லின் "அளவையியல் முறைமை” (System ofLogic) (1844) என்னும் நூலில் இம்முறைகள் விரிவாக ஆராயப்பட்டிருக்கின்றன. ரொக்வில் ஆதரித்த உள்ளூர் உப - பாராளுமன்ற முறைகளையும் மில் ஆதரித்தார். எனினும் ரொக்வில்லுடன் மில் மூன்று விடயங்களில் முரண்பட்டார். முதலாவது ரொக்வில்லின் சில பொதுமைப்படுத்தலின் நடைமுறைத்தன்மையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டாவது முக்கியமான சில விடயங்களில் ரொக்வில்லின் தர்க்கமுறை பற்றி மில் கேள்வி எழுப்பினார். இறுதியாகச் சனநாயக வளர்ச்சிக்கு அமெரிக்க சமூகத்தை விட இங்கிலாந்து சமூகம் வாய்ப்பானது என மில் கருதினார்.
ரொக்வில் எண்ணியதுபோல சனநாயகப் போக்கு அவ்வளவு பலமானதாக இருக்கவில்லை. அவர் எதிர்பார்த்த சமத்துவத்துக்கான தாகம் இங்கிலாந்தில் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அமெரிக்க அரசாங்கத்தினது குறுகிய பார்வை சனநாயக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கவில்லை. இங்கு காணப்பட்ட இதே நிலைமைகள் 18ஆம் நுாற்றாண்டின் சனநாயகமற்ற சமூகங்களான பிரான்சிலும் இங்கிலாந்திலும் கூடக் காணப்பட்டன. எனினும் ஐக்கிய அமெரிக்காவின் விசேட தன்மை என்னவெனின் அங்கு அரசாங்கம் மிகவும் அத்தியாவசியமாக இருக்கவில்லை. அமெரிக்க சமுதாயம் ஆட்சியாளரின் துஷ்பிரயோகங்கட்கு உட்பட்டிருக்கவில்லை. எனவே அமெரிக்க சமுதாயத்திற்கு மேற்பார்வையாளர் எவரும் தேவைப்படவில்லை.
91

Page 49
ரொக்வில் ‘சனநாயகத்தின் விளைவுகளுக்கும்’ ‘நாகரீகத்தின் விளைவுகளுக்கும் இடையே வேறுபாட்டை அறியாமற் தடுமாறிப் போயிருந்தாரென மில் கூறினார். நாகரீகத்தின் விளைவு என்பது ரொக்வில்லைப் பொறுத்தவரை வர்த்தக வளர்ச்சியும் தேசிய வளங்களின் வளர்ச்சியுமாக இருந்தது. சமத்துவத்தை நோக்கிய மனப்பாங்கு வர்த்தகமயப்படுத்தலின் ஒரு விளைவாகும். ரொக்வில்லைக் கவர்ந்த அமெரிக்க வாழ்வின் உயிரோட்டம் வர்த்தக வளர்ச்சியின் ஒரு விளைவே தவிர சமத்துவத்தின் காரணமாக ஏற்பட்ட விளைவல்ல என மில் வாதிட்டார்.
தன்னுடைய வாதத்தை விளக்குவதற்கு இரண்டு விடயங்களை மில் குறிப்பிட்டார். முதலாவது கனடாவில் வாழ்ந்த பிரெஞ்சுக்காரர்கள் வர்த்தக வளர்ச்சியில்லாமலே சமூக சமத்துவத்தை வெளிப்படுத்தினர். இரண்டாவது இங்கிலாந்தின் ஒரு சமனற்ற சமூகத்தில் வர்த்தக நாகரீகத்தின் வளர்ச்சி காட்டப்பட்டது. உண்மையில் அமெரிக்க மக்கள் பொதுவாக நமது மத்திய வகுப்பினரேயாவர் என மில் கூறினார்.
இங்கிலாந்தில் பொதுசன அபிப்பிராயத்தை மத்திய“வகுப்பினரே உருவமைத்தனர். மறுதலையாகப் பொதுசன அபிப்பிராயத்துக்கு முன்னே தனிநபர்கள் முக்கியமற்றவர்களாக இருந்தனர். பெரும்பான்மை மக்களின் சர்வ வல்லமை என்பது ரொக்வில் குறிப்பிட்டதைப் போல சமூக சமத்துவத்தினால் ஏற்படவில்லை. மாறாக சனத்தொகைப் பருமன் காரணமாக ஏற்பட்டது. உண்மையில் அமெரிக்காவில் காணப்படக்கூடிய சனநாயகத் தன்மைகள், பல வகுப்புப் பேதங்கள் நிறைந்த பூர்ஷாவா இங்கிலாந்திலும் காணப்படுகின்றது. மில்லின் கருத்துப்படி இங்கிலாந்து அமெரிக்காவைப் போல அல்லாது வித்தியாசமான சமூக அமைப்பைக் கொண்டிருப்பது நல்ல அம்சமே. உதாரணமாக ஓய்வை அனுபவிக்கும் ஒரு வகுப்பும், கல்வியிற் சிறந்த ஒரு வகுப்பினரும் (மில் உட்பட) இங்கிலாந்தில் இருப்பது நன்மையான அம்சமே, சமூகத்தில் மேலெழும் வர்த்தக மனப்போக்கினைக் கட்டுப்படுத்துவதற்கு இவ்விரண்டு சமூக வகுப்புகளும் உறுதியாக்கப்பட வேண்டுமென அவர் விரும்பினார்.
எனினும் உண்மையில் நாகரீகமடைந்த ஒரு வர்த்தகச் சமூகத்தில் அறிவாளிகளும் கனவான்களும் மட்டுமல்ல, விவசாய வகுப்பினரும் தேவையாகும். இங்கு மில் குறிப்பிட்ட விவசாய வகுப்பினர் அமெரிக்க வர்த்தக விவசாய வகுப்பினரையல்ல; மில் எதிர்பார்த்த விவசாய வகுப்பினர் தமது பிரதேசத்திலும், தொழிலிலும் , மக்களிலும் ஒட்டுறவு கொண்ட விவசாய வகுப்பினரையேயாகும். நகர மக்களின் செல்வாக்கை சமநிலைப்படுத்துவதற்கு கிராம மக்கள் அவசியமாகும். அதாவது கிராமிய மக்களுக்கும் நகர வர்த்தகர்களுக்கும் இடையில் ஏற்படும் அரசியல் பிணக்குகள் (தானியச் சட்டம் போன்றது) தவிர்க்கப்பட வேண்டும். எனவே கிராமியப் புறத்தில் அறிவு வளர்ச்சியையும், நகர்ப்புற வர்த்தக
92

மனப்பான்மையில் கட்டுப்பாட்டையும் ஏற்படுத்தும் ஒரு கல்வி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
சுருக்கமாகக் கூறவேண்டுமெனில் ரொக்வில்லின் கருத்துப்படி வர்த்தக முதலாளித்துவம் பெரும்பான்மையின் எதேச்சாதிகாரம், தனிநபர் ஒதுக்கநிலை ஆகியவை சனநாயக சமத்துவத்தின் விளைவுகளாகும். அமெரிக்காவில் பெரும்பான்மை அபிப்பிராயம் சட்டத்தொழிலின் செல்வாக்கில் சமநிலைப்படுத்தப்பட்டது; அதேபோல தனிமனித தனிமையும் உள்ளூர் ஆட்சி பங்குபற்றலின் மூலம் குறைக்கப்படுகிறது எனக் கூறினார். இங்கிலாந்து கூடிய சமத்துவம் , சனநாயகமும் ‘அமெரிக்கத்தனமும்’ கொண்டதாக மாறிவிடும் என அவர் எதிர்வு
கூறினார்.
இதற்கு எதிராக மில் மத்தியவகுப்பு அபிப்பிராயத்தின் கொடுமையும், தனிமனிதத்துவத்தின் நசுக்கலும் வர்த்தகப் போக்கின் விளைவுகளே தவிர சமத்துவத்துக்குச் சார்பான மனப்பான்மையின் விளைவுகள் அல்ல எனக் கருதினார். இங்கிலாந்தில் மத்திய வகுப்பு அபிப்பிராயம் கிராமிய மக்களாலும் ஓய்வு பெற்ற வகுப்பினர், மற்றும் கற்றறிந்த வகுப்பினர் ஆகியோரால் கட்டுப்படுத்தக் கூடியது. வேறு வார்த்தைகளில் கூறினால், சமனற்ற வகுப்புக் கட்டமைப்புக் கொண்ட ஒரு சமூகத்தில் கலாசார வேற்றுமைகளை ஓர் ஆரோக்கியமான சமநிலையைப் பேணப் பயன் படுத்த முடியும். இங்கிலாந்தில் மத்திய வகுப்பினரின் பருமன் வேகமாக வளர்ச்சியுற்ற போதும் அது பிரபுத்துவ வகுப்பினர்க்குச் சவாலாக இன்னும் உருப்பெறவில்லை என மில் நம்பினார். உண்மையில் கற்றறிந்தோர் வகுப்பினரை உயர்த்துவது மில்லின் ஆர்வமாகவுமிருந்தது.
வாழ்க்கை - ஒரு சிறந்த கருத்தரங்கு
1840இல் ரொக்வில் பற்றியதன் விமரிசனத்தை எழுதி முடித்த வேளையில் மில் தனது அறிவுத்தேடலில் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டார். இக்காலகட்டத்தில் அவர் தோமஸ், கார்லைல், வில்லியம் வேர்ட்ஸ்வேத், சாமுவெல் டெய்லர் சோல்ரிஜ் ஆகியோரில் மிகவும் ஆர்வம் காட்டினார். கற்பனை, சுயமதிப்பு, உள்ளுணர்வு போன்றவற்றில் அவர் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். கற்றறிந்தோர் வகுப்பினரின் சமூக முக்கியத் துவத்தை அவர் ஏற்றுக்கொண்டார். அத்துடன் வரலாற்றையும் கற்க முனைந்தார். பின்னர் அவர் ஒகுஸ்ரா கொம்டே மற்றும் செயின்ட் áGudr6flu6ör6ño (Auguste Comte & the Saint Simonians) gé)Guu T6»TuqLb கற்க முனைந்தார். சமூக மாற்றத்தை முழுமையாக அணுகும் அவர்களது கருத்தை முதலில் ஏற்றுக்கொண்டாலும் அவர்களது சமயவெறியை அவர் வெறுத்தார். 1851இல் அவர் ஹரியட் டெயிலரை மணம் செய்தார். அவரது பெண்ணிலைவாதம், உழைப்போர் கூட்டுறவு இயக்கம் ஆகியவை
93

Page 50
மில்லில் செல்வாக்குச் செலுத்தின. இக்காலகட்டத்தில் தான் முன்வைக்கும் ஒரு நாகரீகமிக்க சமூகத்தின் வரம்புகள், அதற்கான தர்க்கத்தின் படிமுறைகள், அதற்கு அடிப்படையான அரசியற் பொருளாதாரக் கோட்பாடுகள் ஆகியவற்றைப்பற்றிய ஒரு தெளிவைப் பெற்றுக்
கொண்டார்.
மில்லின் இலட்சிய சமூகம் ஒரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் ஒரு சிறந்த கருத்தரங்கு போன்றது. ஓர் அறிவு நிறைந்த புத்திசாலித்தனமான ஒரு தலைமையின் கீழ் ஒத்துழைப்பையும், சுய அபிவிருத்தியையும் எதிர்பார்த்தது. மில் தேவையற்ற கட்டுப்பாடுகளைச் சுமத்தும் சட்டங்களைக் கொள்கையடிப்படையில் வெறுத்தார். அது வற்புறுத்திப் பெறப்பட்ட ஏற்றுக்கொள்ளலே தவிர உண்மையாகவும் சுதந்திரமாகவும் வழங்கப்பட்ட சம்மதமல்ல. மக்களின் ஒழுக்கவியல் மற்றும் அறிவார்ந்த கல்வி வளர்ச்சிக்கு அரசியற் சமூகச் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. இதனுடைய பொருள் உழைக்கும் வர்க்கத்துக்குக் கூடிய ஓய்வையும் ஓய்வெடுக்கும் வர்க்கத்துக்கு மேலும் பொறுப்புக்களையும் வழங்குவதாகும்.
அரசியற் பொருளாதாரத் தத்துவங்கள்
பெந்தாம், றிக்காடோ, மல்தூஸ் ஆகியோரது மரபுசார்ந்த அரசியற் பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே மில்லும் தனது சமகால முதலாளித்துவம் பற்றிய பகுப்பாய்வையும் மேற்கொண்டார். இந்த ஆரம்பங்களினை அடிப்படையாகக் கொண்டு அவர் சீர்திருத்தங்கள் பற்றிச் சில தீவிர முடிவுகளுக்கு வந்தார். மனித அடிமைத்தனத்தைப்பொருளாதார ஒடுக்கலாக்குவதற்கும் தனிமனித உழைப்புக்கான ஊழியத்தைக் கூட்டுவதற்கும் இச் சீர்திருத்தங்கள் தேவைப்பட்டன. எனினும் மில்லின் தீவிரவாதம் மல்தூஸின் கருத்துக்களால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ‘போராடுவதே மனிதனது தலைவிதி' என்பதை மில் ஏற்றுக்கொள்ள மறுத்தார். ஒருவரை ஒருவர் நசுக்குதலும் போட்டியும் பொறாமையும்தான் இன்றைய சமூக வாழ்வின் முறைமை என்ற கருத்தை மில் வெறுத்தார். எனினும் இத்தகைய நிலைமையைத் திருத்தியமைக்கும் எவ்வித முயற்சியும் மூலதனம், ஊழியம் ஆகியவற்றைக் கவனத்திற் கொள்ளவேண்டுமென அவர் கருதினார்.
தோமஸ் மல்துஸைப் போலவே மில்லும் அளவுக்கு மிஞ்சிய சனத்தொகை பொருளாதார வளர்ச்சியின் நன்மைகளை மழுங்கடித்துவிடும் என்று நம்பினார். எனினும் கல்வி, சமூகச்சீர்திருத்தம் ஆகியவற்றின் மூலம் மல்தூஸின் பொறியிலிருந்து தப்பிக்க முடியும் என மில் கருதினார். மூலதனத்தின் சேர்க்கை இலாப விகிதத்தைக் குறைக்கும் என்ற டேவிட் றிக்கார்டோவின் கருத்தையும் மில் ஏற்றுக்கொண்டார். எனினும்
94

இதனையும் அவர் மாற்றியமைத்தார். இலாபம் குறைவடைதலானது ஒர் 'அசைவற்ற நிலையை ஏற்படுத்தினால் அது இன்றைய நிலையில் ஏற்படும் ஓர் ஒட்டுமொத்தமான அபிவிருத்தியேயாகும் என மில் றிக்கார்டோவின் கருத்தை மாற்றியமைத்தார். மில்லின் பார்வையில் பொருளாதார வளர்ச்சி என்பது பொய்மையாகும்.
மில் தனியார் சொத்துடைமையை எதிர்க்கவில்லை. தனிநபர்களின் உழைப்பின் பலனை உறுதிசெய்யக்கூடிய ஒரு சொத்துடைமை முறைமையின் பெறுமதியை மில் நன்கு உணர்ந்திருந்தார். எனினும் மக்கள் பிறருடைய உழைப்பின் காரணமாக சொத்துக்களைச் சேர்த்துக் கொள்வதை அவர் எதிர்த்தார். அதாவது கூட்டுறவாளர், சிற்றுடைமை யாளர்கள் ஆதரித்த அதேவேளையில் சொத்துடைமைச் சட்டங்களை அவர் எதிர்த்தார். பாரம்பரிய சொத்துக்களைப் பரம்பரை பரம்பரையாகக்
கையளிக்கும் முறையைத் தடைசெய்யும் தீவிர சமூகச் சீர்திருத்தங்களை
மில் ஆதரித்தார்.
சமூக அமைப்புகள் தொடர்பான ஆய்வுகளுக்கு இக்கருத்து வழிவகுக்கிறது. செல்வத்தின் உற்பத்தி இறுக்கமான சட்டங்களுக்கு உட்படினும் செல்வத்தைப் பகிர்வு செய்தல் மனித நிறுவனங்களைச் சார்ந்ததே. அதாவது செல்வத்தை உற்பத்தி செய்தவுடன் மனிதர்கள் தனியாகவோ கூட்டாகவோ தாம் விரும்பியவாறு எதனையும் செய்து கொள்ள முடிகிறது என மில் கருதினார். கைத்தொழில் நிறுவனங்களைப் பொறுத்தவரையில் மில்லின் இக்கருத்து மிகவும் முக்கியமானது.
மில் உழைப்பாளர்களும், முதலாளிகளும் கூடிய பங்காளர்களாவதையும் உழைப்பாளர்களின் சங்கங்களையும் ஆதரித்தார். கூட்டுறவுத் துறையில் ஈடுபட்ட றொபர்ட் ஓவனின் (Robert Owen) யூதோப்பியன் சமூகங்களை (Etopian Communities) ஏற்றுக்கொண்டார். உழைக்கும் வர்க்கத்தினர் கூடிய அரசியல் அந்தஸ்து பெற்று வருகையில் சொத்துக்களையும் உற்பத்திகளையும் சமமாகப் பிரித்தல் சாத்தியமாக அமைந்தது. உழைக்கும் வர்க்கத்தினர் இப்பொழுது பொது வாழ்வின் அங்கமாகினர். பொது நலனைத் தமது நலனாகக் கருதுவதற்கு அவர்களைப் பயிற்றுவிக்கக் கூடியதாக இருந்தது. கூட்டுச் சேர்வதில் ஏற்படும் நாகரீகத் தன்மை காரணமாக நீதி மற்றும் சமத்துவ உணர்வுகளை அவர்களிடம் வளர்க்கக் கூடியதாக இருந்தது. இத்தகைய சமூகப் பரிசோதனைகளில் இரண்டு அம்சங்கள் இருந்தன. ஒன்று 'ஒவ்வொருவரும் கல்வி பெற வேண்டும். மற்றதுசனத்தொகைப்பருமன் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்பதாகும்.
நிலப்பிரபுத்துவத்தின் சமூகப் பெறுமானம் பற்றி ரொக்வில்லைவிட மில் நம்பிக்கையுற்றிருந்தார். அரசியற்பொருளாதாரக்கோட்பாடுகளின் ஐந்து அத்தியாயங்களைக் கிராமிய வகுப்பினர்க்கு அதாவது சிற்றுடைமை விவசாயிகளுக்கே அர்ப்பணம் செய்திருந்தார். புத்தெழுச்சி இயக்கத்
95
藏

Page 51
திடமிருந்தே மில் இச்சிந்தனைகளைப் பெற்றார். கம்பர்லாந்து, வெஸ்ட்மோர்லாந்து ஆகிய இடங்களில் வாழ்ந்த, சுதந்திர உணர்வும், பொதுநலமும் கொண்ட சிற்றுடைமையாளர்களே வேர்ட்ஸ்வேர்த் கூறிய “விவசாயிகளாவர்”. இங்கிலாந்தின் கிராமப்புறங்கள் அனைத்திலும் நடைமுறைப்படுத்தக்கூடிய மாதிரியை இவர்கள் வழங்கக்கூடியவர்களாக இருந்தனர்.
மில் சிறிய அளவிலான சோசலிசப் பரிசோதனைகளில் நாட்டங் கொண்டிருந்தார். அதே நேரத்தில் சமூக நடத்தைகளை ஒழுங்கமைக்கச் சந்தைப் பொறிமுறையில் தங்கியிருக்க விரும்பினார். வெளிவாரிக் காரணங்களினால் தனிநபர் தெரிவுகளைச் சந்தைப் பொறிமுறை வழங்க முடியாதவிடத்து அரச தலையீட்டை அவர் ஏற்றுக்கொண்டார். ஏழை நிவாரணம் அத்தகைய நியாயமான தலையீடாகும். அத்துடன் பொதுசன வசதிகளில் போட்டித்தன்மை நடைமுறைச் சாத்தியமாகாத நிலையில் அரச தலையீட்டை அவர் ஆதரித்தார். மக்களிடையே அறியாமையை அகற்ற அறிவுபரப்பும் முயற்சியில் அரசு ஈடுபடவேண்டுமென மில் கூறினார். இதனால் பிழையான தெரிவுகளைச் செய்வதிலிருந்து மக்கள் தப்பிக்க முடியும். மில்லைப் பொறுத்தவரையில் அரசாங்கத்தின் கல்விச் செயற்பாடு மிகவும் முக்கியமானது. உதாரணமாக அரசாங்கம் பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி செய்வதை மில் மிகவும் விரும்பினார்.
நல்ல பண்புள்ள அதிகாரி
சனநாயகம் பற்றிய மில்லின் சிந்தனைகளில் இரண்டு சிக்கல்கள் பரந்திருந்தன. இவையிரண்டும் ஒன்றுடனொன்று தொடர்புபட்டவை. முதலாவது, மில் சிறந்த சிந்தனையாளர்களின் செல்வாக்கை மக்களிடையே மேம்படுத்த வேண்டுமென விரும்பினார். இச் செல்வாக்கினை வினைத்திறனுடன் பயன்படுத்தும் ஊடகம் மத்திய அதிகாரமாகும். 1861இல் பிரசுரிக்கப்பட்ட “பிரநிதித்துவ அரசாங்கத்தின் கவனங்கள்" (Considerationson Representative Government)steirgúbsogs Gosprusso மில் பின்வருமாறு எழுதினார்:
"...பொதுமக்களைப் பொது விவகாரங்களில் மறைமுகமாகப் பயிற்றுவிப்பதுபற்றி. ஓர் அரசாங்கம் வேறு யாரேனும் செய்யக்கூடியவொன்றைத தானே செய்தல் வேண்டும். அல்லது மற்றவர்களுக்கு எப்படிச் செய்வதெனக் காட்டித்தர வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் அது ஆசிரியர் இல்லாத ஒரு பாடசாலைக்குச் சமமாகும்".
96

இன்னொரு பிரச்சினை என்னவெனில் மத்திய அதிகாரமானது மத்திய விழுமியங்களின் ஆதரவாளர்களினால் தாக்கப்படலாம். கற்றறிவாளர் வகுப்பின் சக்தி, பெரும்பான்மைப் பலத்தினால் சட்டத்தின் உதவியுடன் தகர்க்கப்படலாம். “சுதந்திரத்தைப் பற்றி” என்னும் நூலில் மில் தனிநபர் வாதத்திற்கு எதிராகத் தனிநபர்த் தன்மைக்கு ஆதரவாக வாதிட்டார். தனிநபர் வாதம் (individualism) என்பது பொதுசன அபிப்பிராயத்தை நசுக்கும் ஒரு பூர்ஷாவா மனப்பாங்காகும். தனிநபர்த்தன்மை என்பது படைப்பாற்றல் மிக்க சுய அபிவிருத்தியாகும்.
மில் பொதுமக்களின் வித்தியாசமாக இருக்கும் உரிமையைப் பாதுகாக்க வேண்டுமெனக் கூறினார். ஒரு தனிநபரின் நடத்தை ஏனையோரின் நலன்களுக்குக் குந்தகம் விளைவிக்கும்போது மட்டுமே சட்டநடவடிக் கைகள் எடுக்கப்பட வேண்டுமென அவர் வாதிட்டார். வேறு சந்தர்ப்பங்களில் ஒருவரது சிந்தனையை அல்லது நடத்தையை மாற்றியமைக்க அவரை இணங்கச் செய்யலாம். இந்த அணுகுமுறை அறிவு நிறைந்த புத்தூக்கவாதிகளைப் பாதுகாப்பதோடு அவர்களுக்குத் தமது அயலவருடன் அறிவூட்டும் முகமாக வாதம் புரிவதற்கும் வாய்ப்பளித்தது. சுதந்திரத்தைப் பற்றிய தனது நூலில் மில் இதுபற்றி நிறையவே கூறுகிறார். மில்லின் இரண்டாவது பிரச்சினை பிரதிநிதித்துவ அரசாங்கம் தொடர்பானது. ஒருபுறம் உழைக்கும் வர்க்கத்தினர் பொதுவிவகாரங்களில் தீவிரமாக ஈடுபடவேண்டுமெனமில் எதிர்பார்த்தார். இதன் மூலம் தனிநபர் மற்றும் சமூகத்தின் நோக்கங்கள் விழுமியங்கள் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள முடியும். மறுபுறத்தில் உழைக்கும் வர்க்கத்தின்போதிய அறிவைப்பெறாமலேயே அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டால் என்னவாகும் எனவும் அவர் சிந்தித்தார்.
'மிகச்சிறந்த அரசாங்க முறை" என்பது தனது இறைமையை "முழுச் சமூகத்திலிருந்தும் பெற்று"தனது பிரசைகளைப் பொதுச் செயற்பாடுகள் எதிலேனும் நேரடியாக ஈடுபடுத்தவும் வேண்டும்" என்பதை மில் ஏற்றுக்கொண்டார். எனினும் பிரித்தானியப் பாராளுமன்றம் அறியாமை மற்றும் இயலாமையினால் நிரம்பி இருக்கின்றதென்றும் அது சமூகத்தின் பொது நலன்களைச் சாராத தனிப்பட்ட நலன்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுள்ளதென்றும் கூறினார்.
சர்வசன வாக்குரிமை பற்றிய ஜெரமி பெந்தாமின் தீர்ப்பை மில் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒவ்வொரு பிரசைக்கும் வாக்குரிமை இல்லாவிட்டால் முடி, மதம், பிரபுத்துவம் ஆகியோர் அரசாங்கத்தைத் தமக்கு அடிப்படுத்தி விடுவர் என்பதே ஜெரமி பெந்தாமின் கருத்து. ஒவ்வொரு பிரசைக்கும் ஒரு வாக்கு என்னும் ஏற்பாடு ஆகக் கூடிய கொள்கையினருக்கு ஆகக் கூடிய சந்தோசத்தை வழங்கும். சகலருக்கும் வாக்குரிமை, என்னும் கருத்து மில்லுக்குப் பயத்தை ஏற்படுத்தியது. ஆகக்கூடிய எண்ணிக்கையினர்’ சிறுபான்மையினர்களுக்குக் குறிப்பாகப்
97

Page 52
புத்திஜீவிகளுக்குப் பெருந்தொல்லையை ஏற்படுத்துவர் என மில் நம்பினார். இதற்கு அவரது தீர்வு கல்வியறிவுள்ள , பொறுப்பு நிறைந்த பகுதியினரே முழுச் சமூகத்தின் நலன்கைளயும் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதாகும். அதேவேளை இக்குழுவினர் தமது பருமனைப் பெருப்பித்துக் கொள்ளச் சிரமத்துடன் உழைக்க வேண்டும் எனவும் மில் கூறினார்.
ரொக்வில்லின் கருத்து எப்படியிருந்த போதும் பிரபுத்துவ வகுப்பினர்க்குச் சலுகை பெற்ற வகுப்பில் இணைந்து கொள்ள உரிமை கிடையாது. வரலாற்றில் குறிப்பிடத்தக்க பிரபுத்துவ அரசாங்கங்கள் என்பவை உண்மையில் பொதுத்துறை அதிகாரிகளைக் கொண்ட பிரபுத்துவமே. அதாவது பணித்துறை ஆட்சி (Bureaucracy) யாகும். மில்லைப் பொறுத்தவரை சனநாயகம் மற்றும் பிரபுத்துவம் ஆகியவற்றுக்கு இடையிலான ரொக்வில்லின் வேறுபாடு தேவையற்றதாகும். இத்தகைய வித்தியாசம் உண்மையில் ஒரு பிரதிநிதித்துவ அரசாங்கத்துக்கும் பணித்துறை ஆட்சிக்குமிடையில் செய்யப்பட வேண்டும். மில்லைப் பொறுத்தவரையில் பணித்துறை ஆட்சி அவரைக் கவர்ந்தது. குறிப்பாக ரோமன் சாம்ராஜ்யத்தின் வெற்றி இதன் காரணமாகும். எனினும் மிகவும் சிறந்த பூரணமான பணித்துறை ஆட்சியும் கூடப் பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் முன் குறைவானதே. எனினும் இங்கிலாந்து விடயம் இங்கு பொருத்தமானதல்ல. அரசாங்கம் செய்வதற்குத் திறன் வேண்டும்.
பெரும்பான்மை வகுப்பினர் அளவுக்கதிகமான அதிகாரத்தைப் பெறுதல் பலவகையான ஏற்பாடுகளின் மூலம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் கல்வி அறிவு நிறைந்த சிறுபான்மையினர் தெரிவு செய்யப்படுவதற்கு வாய்ப்பு ஏற்படும். எழுத வாசிக்கத் தெரியாதோருக்கு வாக்குரிமை வழங்கப்படமாட்டாது. வரி இறுப்போர் அல்லாதோருக்கு வாக்குரிமையோ அல்லது ஏழை நிவாரணமோ வழங்கப்படமாட்டாது. நன்கு படித்தோருக்கு மேலதிக வாக்குகள் வழங்கப்படும். இதற்காக ஒக்ஸ்போர்ட், கேம்பிரிஜ் பல்கலைக் கழகங்களினால் உருவாக்கப்பட்ட ஒரு பரீட்சை பயன்படுத்தப்படலாம். வாக்குரிமை அளிப்பதும் கூடப் பொதுமக்களின் பார்வைக்கும் விமர்சனத்துக்கும் உட்படுத்தப்படவேண்டும். இரகசிய வாக்கெடுப்புமுறை சிறந்ததல்ல. இறுதியாகப் பிரதிநிதிகள் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய தேர்தற்கால வாக்குறுதிகளை ஊக்குவிக்கக் கூடாது.
மேலே குறிப்பிட்டவற்றிலிருந்து பொது விவகாரங்களில் புத்திசாலித்தனம் நிறைந்த அறிவாளிகளின் முக்கியத்துவம் இனங்காணப்படும். இத்தகைய கருத்து சகல மனிதர்களும் சமமானவர்கள் (வெள்ளைத் தோலிருந்தால்) என்னும் அமெரிக்கக் கருத்துக்கு முரணானதாகும். மில்லின் கருத்துப்படி இப்படியான அமெரிக்கக் கருத்து அமெரிக்க பண்புகளின் பொருத்தமற்ற அம்சங்களோடு தொடர்புடையதாகும். உண்மையில் கல்வி மற்றும் சமூகப் பொறுப்புடைமை ஆகியவற்றின் அடிப்படையில் சமத்துவமின்மையை நிறுவ மில் மிகவும் பாடுபட்டார்.
98

முடிவுரை
ரொக்வில்லின் கருத்துப்படி சமத்துவமென்பது சனநாயகப் புரட்சியின் அடிப்படை அம்சமாகும். தனிமனித வாதத்தின் அடிப்படையில் இத்தகைய கருத்து மத்தியமயப்படுத்தப்பட்ட எதேச்சாதிகாரத்துக்கு இட்டுச் செல்லக்கூடியது. எனினும் அமெரிக்கக் குடியரசின் உள்ளூர் நிறுவனங்களில் ரொக்வில் எதிர்காலத்துக்கான ஒரு மாற்று ஏற்பாட்டைக் கண்டார். எனினும் இது முழுமையானதெனக் கூறிவிட முடியாது. இருந்த போதிலும் மத்தியதரமான சனநாயகம், சனநாயக எதேச்சாதிகாரத்தைவிட மேலானது. முன்பு குறிப்பிட்டது போல உற்பத்திக் கைத்தொழிலும், பெரிய நகரங்களும் இருக்கும் வரை இத்தீர்வானது பொருத்தமான தாகவே இருக்கும். மில்லின் கருத்துப்படி சராசரித்தன்மை அல்லது சாதாரணத்தன்மை என்பது பொருளாதார வளர்ச்சிப் போக்கில் மத்திய வகுப்பு செல்வாக்கு வளர்ச்சியின் ஒரு விளைவாகும். எனினும் பெரும்பான்மை அராஜகம் என்பது குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தின் வருமானமும் அரசியல் அதிகாரமும் அதிகரிக்கும்பொழுது ஓர் ஆபத்தாகவே அமையும். சராசரித்தன்மையும் எதேச்சாதிகாரமும் மாற்றீடுகளல்ல. இவை இரண்டும் இணைக்கப்பட வேண்டும்.
இவ்வாறான சூழ்நிலையில் மில், ரொக்வில் இங்கிலாந்து விடயத்தில் எண்ணியதைப் போல சிறந்த தலைமைத்துவத்துக்கு பிரபுத்துவத்தைத் தெரிவு செய்யவில்லை. மாறாக சமூகத்தின் அதிகாரம் கற்றறிவாளர் குழுவிடம் கையளிக்கப்படல் வேண்டும் என அவர் கருதினார். முதலாளித்துவம் - அதன் நகர கைத்தொழில் மற்றும் விவசாய அம்சங்கள் - மனித கட்டுப்பாட்டுக்கு ஆட்படுத்தப்படவேண்டும். கைத்தொழில்களைச் சமூகத்தின் சொத்துக்களாகக் கொள்ளல், விவசாய சொத்துடைமை வளர்ச்சி போன்றவை சமூகத்தில் பொறுப்புடைமையை வளர்க்கும். பெருஞ்சொத்துக்களை ஒரு சிலர் திரட்டி வைத்திருத்தல் தடுக்கப்பட வேண்டும் . பலவித அபிப் பிராயங்களும் அவை தொடர்பான வாதப்பிரதிவாதங்களும் வளர்க்கப்படவேண்டும். இதற்கு அடிப்படையாகத் தேசிய கல்வி நிலை உயர்த்தப்பட வேண்டும். இதன்மூலம் சராசரித் தன்மையான மத்திய வகுப்புக் கலாசாரப் பயமுறுத்தலை எதிர்க்க முடியும். அத்துடன் சனநாயகப்புரட்சி மெதுவாக ஆனால் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லப்படல் வேண்டும். இவ்விரண்டு விடயங்களையும் பற்றி மில் விளக்கமாகக் கூறுகிறார்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது மில்லின் உள்ளூராட்சிச்சபைகளுக்கான ஆதரவு ரொக்வில் நியூ இங்கிலாந்து நகரக் கூட்டங்களுக்கு அளித்த ஆதரவைப் போன்றுள்ளது. ஆனால் உண்மையில் முதலாளித்துவ சனநாயத்தின் மீதான இருவேறு பார்வைகளை அவை காட்டுகின்றன. மில் மத்திய அதிகாரம் உள்ளூர் அதிகாரத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்க
99

Page 53
வேண்டுமென அவாவுகிறார். ரொக்வில் அமெரிக்க உள்ளூராட்சி மன்றங்களை ஒரு “பங்காளர் கூட்டம்’ போன்றே காண்கிறார். ஆனால் மில் ஆங்கிலேய உள்ளூராட்சி மன்றங்களைத் தனது பிரசைகளுக்குப் பொதுக்கல்வியூட்டும் பாடசாலைகளாகக் காண்கிறார்.
மில்லின் “பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் கவனங்கள்” வெளிவருவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னரே ரொக்வில் இறந்து விட்டார். அல்லது மில்லின் நூலைப் பற்றிய அவரது விமர்சனம் மிகவும் சுவையுள்ளதாக இருந்திருக்கும். சிலவேளை அவர் தனது "அமெரிக்காவில் சனநாயகம்” என்ற நூலில் தன்னால் எழுதப்பட்ட பின்வரும் வாசகங்களைத் திருப்பிப் பார்த்திருப்பாரா?
உலகில் எதேச்சாதிகாரம் தோன்றக் கூடிய பல்வேறு புதிய புதிய சூழ்நிலைகளை நான் கற்பனை செய்ய முயல்கிறேன் . முதலில் எண்ணிறந்த தம்மில் சமத்துவம் கொண்ட மக்கள் தமது ஆதம திருப்திக்காக இன்பததைத தேடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். இத்தகைய மக்களுக்கு மேலாக அவர்களது நலன்பேணும், பாதுகாக்கும் ஒரு மாபெரும் சக்தி உள்ளது. அச்சக்தியானது முழுமையும், சிறப்பும், ஒழுங்கும், உறுதியும் பொருந்தியது. அச்சக்தியானது இம்மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிறது; அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்கிறது; கைத்தொழிலகளை வழிப்படுத்துகிறது; அவர்களது வழிவழியான சொத்துகளைப் பிரித்துக் கொள்ள உதவுகிறது. . மத்தியமயப்படுத்தல் மக்களின் இறைமையுடன் இங்கு ஒன்றிணைக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவர்கள் ஆறுதலாக இருக்க முடிகிறது. அவர்கள் தம்மால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாடசாலையின் ஆசிரியரின் கீழிருக்கும் மாணவர்களைப் போல அமைதி கொள்ள (pLqapsi'. (Tocqueville 1968:898 - 9)
100

I
லஸ்கியும் லாஸ்வெல்லும் (Laski and Lasswell)
ஒரு புதிய உலகம்
முதலாம் உலகயுத்தம் 19ஆம் நூற்றாண்டின் தாராண்மைவாதக் கொள்கையின் இரு அம்சங்களான சமாதானம், செழிப்பு ஆகியவற்றுக்கான கருவியாகத் தலையிடாமை (Laissez-Faire) யைப் பயன்படுத்தல் மற்றும் மனித குலத்தின் அறிவார்த்தம் (Rationality) ஆகிய இரு அம்சங்களைத் தகர்த்தது.ஆஸ்திரிய-ஹங்கேரிய சாம்ராஜ்யத்தின் உடைவு, மற்றும் முடியாட்சி ஜேர்மனியின் தோல்வி ஆகியவற்றைத் தொடர்ந்து மத்திய ஐரோப்பா பல தேசிய இனங்களும் பல்வேறு சித்தாந்தங்களும், வகுப்புகளும் கொண்ட ஒரு கலவையாக மாறியது. இதன் முக்கிய விளைவுகளில் ஒன்று ஆங்கிலக் கால்வாயையும், அத்திலாந்திக் சமுத்திரத்தையும் கடந்த ஐரோப்பிய புத்திஜீவிகளின் வெளியேற்றமாகும். சிக்மன் பிராய்ட் உட்படப் பலரது புதிய கருத்துக்களை அவர்கள் இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் கொண்டு சென்றனர். அந்நேரத்தில் ஒரளவு செல்வாக்கிழந்துவிட்ட கருத்தான சர்வதேசிய மனித பகுத்தறிவுடைமையுடன் நின்று பிடிக்கக் கூடிய ஒரு புதிய, சக்திமிக்க மனித மாதிரியைப் பிராய்ட் வழங்கியிருந்தார்.
1917ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியும் பாரிய விளைவுகளைக் கொண்டிருந்தது. உதாரணமாக அரச அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்ட வேகமாக மாறிவரும் ஒரு நவீன சமூகத்துக்கு ரஷ்யா உதாரணமாகத் திகழ்ந்தது. அரச கட்டுப்பாடு பெரியவர்த்தகத்தின் கட்டுப்பாட்டுக்கு ஒரு மாற்றீடாக விளங்கியது. ரஷ்யப் புரட்சியானது, பிரெஞ்சுப் புரட்சி டொம்பெய்ன், ரூஸோ ஆகியோருக்கு வழங்கிய மதிப்பைக் கார்ல் மார்க்சுக்கு வழங்கியது. ஒரு பழைய முறைமையை தூக்கியெறிந்து ஒரு புதிய அமைப்பை உருவாக்கும் வல்லமை கொண்டதாக கார்ல் மார்க்சின்
சித்தாந்தம் கெளரவத்தைப் பெற்றது.
1917 முதலாளித்துவ சனநாயகம் பற்றிய வாதத்தை மாற்றியமைத்தது. 19ஆம் நூற்றாண்டு முழுவதும் அமெரிக்க அனுபவங்கள் செல்வாக்குச் செலுத்தின. ஐரோப்பிய தாராண்மைவாத மரபுகள் பிரபுத்துவ அதிகாரம் கொண்டிருந்த சமூகங்களில் வளர்ச்சியடைந்திருந்தது. 20ஆம் நூற்றாண்டில் ரஷ்ய அனுபவங்கள் செல்வாக்குச் செலுத்தின. இதனை அமெரிக்க வர்த்தக உலகம் கவலையுடன் அவதானித்தது. ரஷ்யா
101

Page 54
உடைந்து சிதறவேண்டுமென இவர்கள் ஆவல் கொண்டிருந்தனர். அமெரிக்க சிவில் யுத்தத்தின் போது தெற்குப் பிரிந்து செல்வதைப் பிரித்தானிய பிரபுத்துவம் மகிழ்ச்சியுடன் வரவேற்றதைப்போல இவர்களும் ரஷ்யா சிதறுவதை வரவேற்கக் காத்திருந்தனர்.
இவ்வத்தியாயத்தில் நாம் ஆய்வு செய்யப் போகின்ற இரு மனிதர்களும் பிறைஸ், வெப்லன், ஹொப்சன் ஆகியோர் வளர்ந்த உலகத்திலும் வேறுபட்ட இன்னொரு உலகத்தை விளங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. முதலாளித்துவ சனநாயகம் பற்றிய இவர்களின் வேறுபட்ட அணுகுமுறைகள் 1920களிலும் 1930களிலும் உருப்பெற்றன. இவ்வத்தியாயத்தில் அமெரிக்காவும், பிரித்தானியாவும் இடைவழியில்’ நின்றன. சர்வதேச ரீதியாகப் பிரித்தானிய பிரபுத்துவம் வீழ்ச்சியடையத் தொடங்கிய போதிலும் பிரித்தானிய சமுதாயத்தில் பிரபுத்துவ செல்வாக்கு முற்றாக அழிந்துவிடவில்லை. இக்காலத்தில் அமெரிக்கா, பொருளாதார ரீதியான பெருவளர்ச்சியைப் பெற்றிருந்தபோதிலும் அமெரிக்கா இன்னும் தனது உலகளாவிய நடிபங்கினைப் பெற்றிருக்கவில்லை.
9 goushug556öT 9 Jérusi (The Politics of Experience)
ஹரோல்ட் லஸ்கியும் ஹரோல்ட் லாஸ்வெல்லும் முறையே 1893, 1902 ஆகிய ஆண்டுகளில் பிறந்தனர். போருக்குப் முந்திய காலத்தில் இருவருக்குமே ஆங்கிலோ-அமெரிக்க தாராண்மைவாதத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. சிக்காக்கோவில் லாஸ்வெல்லின் ஆசிரியராக இருந்த அரசியல் அறிஞரான சார்ள்ஸ் ஈ. மரியம் (Charles B. Merriam), ஜேம்ஸ் பிரைஸ் (James Bryce) என்பவரை மிகவும் மதித்தார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் லஸ்கிக்கு வரலாற்றைப் பிஷரும் (HAL. Fisher) யாப்புச் சட்டத்தை டைசியும் (HVDicey) கற்பித்தனர். பிரைஸின் நண்பர்களான இவர்களே அவரின் சுயசரிதையையும் எழுதினர். லஸ்கி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 1916 முதல் 1920 வரை கற்பித்தார். அமெரிக்காவில் அமெரிக்க உயர்நீதிமன்ற நீதிபதியின் ஒலிவர் வென்டல் Gap Tibsh) (Oliver Wendell Holmes) 6TQg55T6Ti sutsilir 65 LD6ir (Walter Lippman) ஆகியோர் அவருக்கு நண்பர்களாயிருந்தனர். லிப்மன், கிரஹாம் வலாஸ் (Wallas) என்பவரின் மாணவராவார். கிரஹாம் வலாஸ் லண்டன் பொருளாதார, அரசியல் விஞ்ஞானக் கல்லூரியில் பேராசிரியராவார். 1926இல் அவரது மரணத்தைத் தொடர்ந்து லஸ்கி அப்பதவியை ஏற்று 1950இல் தனது மறைவு வரை பணியாற்றினார்.
லஸ்கி தீவிர கருத்துக்களைக் கொண்டிருந்தார். 1919இல் பொஸ்டனில் வேலைநிறுத்தம் செய்த பொலிஸாருக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டமையினால் அவருக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தகராறு ஏற்பட்டது. பின்னர் பிரித்தானிய தொழிற்கட்சி இதழான “டெய்லி
102

ஹரல்ட்"க்கு (Daily Herald) எழுதியதுடன் 1926இல் நடந்த பிரித்தானிய பொதுவேலை நிறுத்தத்திலும் தீவிர பங்கேற்றார். லஸ்கி 1919ஆம் ஆண்டின் தொழிற்கட்சி அரசாங்கத்தின் ஆலோசகராகச் செயற்பட்டார். அத்துடன் பல்வேறு குழுக்களிலும் சபைகளிலும் பதவிவகித்தார். 1945இல் தொழிற்கட்சியின் தலைவராகப் பணியாற்றினார்.
லாஸ்வெல் 1920களில் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தார். அக்காலத்தில் சமூகவியலாளரான றொபர்ட் பார்க் (Robert Park) அரசியல் விஞ்ஞானத்தில் நடத்தைவாத இயக்கத்தின் தந்தையான சார்ள்ஸ் ஈ. மிரியம் ஆகியோரின் செல்வாக்குக்கு ஆட்பட்டிருந்தார். லாஸ்வெல் 1938வரை சிக்காக்கோவில் கற்பித்தலில் ஈடுபட்டிருந்தார். அவ்வாண்டு யேல் பல்கலைக் கழகத்தில் சட்டம், அரசியல் விஞ்ஞானப் பேராசிரியராகப் பதவியேற்றார்.
லாஸ்வெல், லஸ்கி மீது பெருமதிப்புக் கொண்டிருந்தார். லஸ்கி தனது கட்டுரைகள் , நூல்கள் முதலியவற்றின் ஊடாக சமகாலப் பிரச்சினைகளையும் கொள்கைகளையும் ஆய்வு செய்ததுடன் தமது கூர்மையான மதிநுட்பம், வாதத்திறமை காரணமாக பலரது இதயத்தைத் தொட்டார் என லாஸ்வெல் எழுதினார். லஸ்கியும் லாஸ்வெல்லும் சனநாயகமானது நிறைவடையாமலிருப்பதோடு, ஆபத்திலும் சிக்குப்பட்டிருப்பதாகக் கருதினர். பகுத்தறிவு மிக்க தனிநபர்கள் மற்றும் இறைமையுள்ள அரசு ஆகியவற்றின் தெரிவுகளையும், செயல்களையும் அடிப்படையாகக் கொண்டமைந்த சகல கோட்பாடுகளையும் நிராகரித்தனர். "உடனடியாகச் செய்யப்பட வேண்டிய விடயம் பற்றிக் கிரகாம் வாலசும், சார்ள்ஸ் ஈ. மிரியமும் தெளிவாகக் கூறியிருந்தனர். லாஸ்வெல்லின் வார்த்தைகளில், சமூகச் செயன்முறையுடன் தொடர்பு கொண்டதாக, அரசியலை யதார்த்த ரீதியாகப் பகுப்பாய்வு செய்வதை விருத்தி செய்வதே உடனடி வேலையாகும். இது எண்ணக்கரு உருவாக்கத்திலும் அனுபவ ஆய்வுகளிலுமே தங்கியுள்ளது. இந்த இடைவெளியை நிரப்புவதிலேயே இங்கிலாந்தில் வாலெசும் , அமெரிக்காவில் மிரியமும் ஈடுபட்டிருந்தனர்.
இங்கு வாலஸ், மிரியம் ஆகியோரின் பணிகள் பற்றித் தெரிந்து கொள்வது பயனுள்ளதாகும். தனது "அரசியலில் மனித இயல்பு" (Human Nature of Politics), (1948) opógłb "DrGLC5ób gepasb” (The Great Society) (1914) ஆகிய படைப்புக்கள் வாயிலாகச் சமகால அரசியல் பற்றி அவர் ஓர் உளவியல்சார் விளக்கத்தைத் தந்தார். மனித இயல்புப் பண்பானது பகுத்தறிவு பொருந்தியதாகும் என்னும் ஊகத்தை அவர் நிராகரித்தார். இதற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்த ஒஸ்ரோ கோர்ஸ்கி, (Ostrogorski) ஜேம்ஸ் பிறைஸ் ஆகியோரை அவர் கண்டித்தார். பிறைசின் கருத்துக்கள் விஞ்ஞான பூர்வமற்றவை என வாலஸ் கண்டித்தார்.
103

Page 55
மிரியம், வாலஸின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டதோடு மனித இயல்பின் பகுத்தறிவு அற்ற பகுதி ஒரு தரவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசியல் விஞ்ஞானக் கோட்பாடுகளில் இணைக்கப்பட வேண்டுமென வாலஸ் கூறினார். எனினும் வாலஸ் தான் கூறிய கருத்துக்களை நடைமுறைப் படுத்த இயலாதவாறு இருந்தார்; அவர் பரிசோதனை முறையையும், புள்ளிவிபர முறையையும் பயன்படுத்தவில்லை என மிரியம் கருதினார். எனவே பின்னர் அமெரிக்காவில் ஓர் உறுதியான அரசியல் விஞ்ஞான ஆய்வு மரபை ஏற்படுத்த அவர் உதவினார். உதாரணமாகச் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் தேசிய சமூக விஞ்ஞான ஆய்வுச் சபை (National Social Science Research Council) Lbibigpib o siregjir Feypas ஆய்வுச் F6 (Local Community Research Committee) gasu 960)LDilsófs sect5 முக்கியஸ்தராக விளங்கினார்.
மிரியம் சிக்காக்கோ அரசியலிலும் ஈடுபட்டார். 1911, 1915ஆம் ஆண்டுகளில் மேயர் பதவிக்காக உள்ளுர் ஆட்சியில் வினைத்திறனும் திட்டமிடலும் அவசியம் எனக் கோரிப் போட்டியிட்டார். ஆனால் இருமுறையும் தோல்வியடைந்தார். தனது தோல்விக்கு வாக்களிப்பில் ஊழல் இடம்பெற்றதாக அவர் காரணம் கூறினார். சாம்பர்லெய்ன் மிரியத்தை பர்மிங்ஹாமைச் சேர்ந்த ஜோசப் சாம்பர்லின் என்பவருடன் (JosephChamberlain) ஒப்பிடலாம். சாம்பர்லின் உள்ளூர் அரசியலில் வெற்றி பெற்றார். ஆனால் அவரால் அரசியற் கோட்பாட்டை வெற்றிகரமாகச் செயற்படுத்த முடியவில்லை. இதற்கு எதிர்மாறாக அறிவியல் உலகத்தில் வெற்றியடைந்த அரசியல் உலகத்தில் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
லஸ்கியும் லாஸ்வெல்லும் அமெரிக்க சித்தாந்தமான நடைமுறைவாதத்தால் (Pragmatism) ஈர்க்கப்பட்டிருந்தனர். ஜோன் டியூவி, வில்லியம் ஜேம்ஸ், Suisit (John Dewey, William James, C.S. Peirce) Guitars) ஸ்தாபிக்கப்பட்ட இச்சித்தாந்தம் அனுபவக் கல்வியின் மேன்மையை விதந்துரைக்கிறது. இந்த அணுகுமுறையின்படி நடைமுறைச் செயல்கள் ஏதாவது வழியில் முடிவடையும் போது சிந்தனை தூண்டப்படுகிறது. ஒரு நடைமுறை வாதத்தினைப் பொறுத்தவரையில் ஒர் எண்ணத்தின் "உண்மை” என்பது ஒரு பிரச்சினையைத் தீர்க்க அது எவ்வாறு "செயற்படுகிறது” என்பதில் பரிசோதிக்கப்படுகிறது. இப்பொதுவான ஆரம்பத்திலிருந்து லஸ்கியும் லாஸ்வெல்லும் இருவேறுபட்ட திசைகளில் பிரிந்து சென்றனர்.
இருவருமே புலக்காட்சி, ஆளுமை, அதிகாரம் ஆகியவற்றின் சிக்கலான இடைத்தாக்கத்தில் ஈடுபாடு காட்டினர். எனினும் லாஸ்வெல் பொதுச் செயற்பாடுகளின் தனிப்பட்ட அடிப்படைகள் பற்றி ஆர்வம் செலுத்தினார். லஸ்கி தனிப்பட்ட வாழ்க்கையின் பொதுத்தன்மை பற்றிச் சிந்தித்தார். சாதாரண மனிதனின் ஆளுமைகளுக்கு அரசு அக்கறை காட்டுவதற்கு ஒரு வழிதேட வேண்டுமென்பதில் அவர் முனைப்பாக இருந்தார்.
04

லாஸ்வெல் சமூக முறைமையின் அரசியல் மற்றும் உளவியல் அம்சங்களின் ஆய்வு ரீதியான பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு வினையாற்றும் அரசியல் விஞ்ஞானத்தை விருத்தி செய்தார். அவர் பிராய்டின் கருத்துக்களை வெகுவாகப் பயன்படுத்தினார். லஸ்கி “ஒரு புதிய உலகத்துக்கு ஒரு புதிய அரசியல் சித்தாந்தத்தை” வழங்க முயன்றார். அதற்காக சமூக, அரசியல் மீள் கட்டமைப்புக்குப் பல ஆலோசனைகளை முன்வைத்தார். மார்க்சிய சிந்தனைகளால் அவர் வெகுவாகக் கவரப்பட்டார்.
நல்வாழ்வு
1918இல் மத்திய ஐரோப்பிய அரசுகள் சிதறியதன் காரணமாக அறிவுசார்ந்த விளைவுகள் பற்றி முன்னரே குறிப்பிடப்பட்டது. உண்மையில் ஆங்கிலேயப்பல்கலைக்கழகங்களில் ஜெர்மனிய கருத்துக்களின்செல்வாக்கு முதலாம் உலக யுத்தத்துக்கு முன்னரே தொடங்கி விட்டது எனலாம். 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வெளிப்பட்ட ரி.எச். கிறீன் (T.H.Green), அதற்குப்பின்னர் வெளிவந்த பேர்னாட்பொசான்சே (Bernard BOSanquet) ஆகியோரின் இலட்சியவாதத்தைக் (Idealism) குறிப்பிடலாம். கிறின் என்பவர் ஹேகல், காண்ட் ஆகியோரைத் துணையாகக் கொண்டு ஜே.எஸ்.றைல் (J.S.Reil) என்பவரை விமர்சித்தார். பயன்பாட்டுவாத அணுகுமுறையின் தனிநபர்வாதத்திலிருந்து விடுபட்ட கிறீன் பிறருடன் ஏற்படும் தொடர்பு காரணமாகவே சுயவிளக்கம் (Self-Realisation) ஏற்படுகிறது எனத் தனது Prologomena to Ethics (1883) என்னும் நூலில் வாதிடுகிறார். பொசான்சே தன்னுடைய “அரசு பற்றிய தத்துவக் Gas TLL TG” (Philosophical Theory of the State) (1899) 6T6örspid Tess) சகல மனித நடத்தைகளும் அவை பங்கு கொள்ளும் செயற்பாட்டிலேயே தங்கியுள்ளன எனக் கூறுகிறார். இச் செயற்பாடுதான் அவர்களைத் “தம்மிலிருந்து வெளியே” கொணர்கின்றன. தனிமைப்பட்ட ஒரு நபரால் சாதிக்கக் கூடியது ஒன்றுமில்லை. குழுச் செயற்பாட்டில் பங்கு கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியிலேயே பல ஆங்கிலேய அறிஞர்கள் இலட்சிய வாதத்தை நிராகரித்தனர். லஸ்கியைப் போன்ற சிலர் அக் கருத்தின் ஒழுக்க நோக்கத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் வேறு ஒரு சொல்லைப் பயன்படுத்த விரும்பினர். வேறு சிலர் 'தன்னை’ தன்னினும் மேலான ஒன்றுடன், ஆன்மீகமான ஒன்றுடன் இணைத்துக் கொள்வதை நிராகரித்தனர். இவர்களில் ஒருவரான ஜி.ஈ. மூர் (G.E. Moore) தனது Principia Ethica என்னும் நூலில் "மனித உறவுகளின் இன்பமும், அழகிய பொருட்களை அனுபவித்தலுமே” மிக மிகப் பெறுமதியானது எனக் கூறினார்.
105

Page 56
மூரின் கருத்துக்கள் கேம்பிரிஜ், புளூம்ஸ்பெரி குழுவினரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஜோன் மேனாட் கெயின்ஸ் இக்குழுவில் ஒருவராவார். நீங்கள் உங்களை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு சமூகக் கடமைகளைச் செய்ய வேண்டும் என்னும் தூய்மைவாதிகளின் (Puritan) கருத்துக்கு இவர்கள் எதிரானவர்களாக இருந்தனர். மூரின் சித்தாந்த அணுகுமுறையில் பலன்களும் பலவீனங்களும் இருந்த போதும் "அது தன்னையும் தன் நண்பர்களையும் மார்க்ஸிஸம் என்னும் பெந்தாம்வாதத் (Benthamism) திலிருந்து காப்பாற்றவில்லை” என கெயின்ஸ் பின்னர் எழுதினார்.
ஆனால் பெந்தாம், றிக்காடோவின் கொள்கைகளைக் கெயின்ஸ் முற்றாக நிராகரிக்கவும் இல்லை. 'சே' (Say) யின் விதியை ஒரு கற்பனையான எதிரி என கெயின்ஸ் கருதியபோதும் தனது ‘பொதுக் கோட்பாடு’ மான்செஸ்டர் கலைக்கூடத்தின் பழம்பொருளியல் கோட்பாடுகளைப் பங்கிட்டுக் கொள்ளவில்லை என வற்புறுத்திக் கூறினார். வரிவிதிப்பு, வட்டிவீதங்களில் அவர் மத்திய அரசின் கட்டுப்பாடுகளை ஆதரித்தார். மத்திய அரசு அக்கட்டுப்பாடுகளின் மூலம் முழுமையான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியுமெனில் ‘பொதுக் கோட்பாடு பயனுள்ள தாக அமையும்’ என அவர் வாதிட்டார். அரசின் அதிகாரங்களையும் செயற்பாடுகளையும் அதிகரிப்பது பொருளாதார முறையைப் பாதுகாக்க உதவும். தனிநபர்வாதத்துக்கு அதிக வாய்ப்பளிப்பதன் மூலம் தனிநபர் சுதந்திரத்துக்குச் சிறந்த பாதுகாப்பும் ஏற்படுகிறது.
அரசியலின் இலக்கணம்
ஹரோல்ட் லஸ்கி பொருளாதார, அரசியல் நிறுவனங்களை மீள அமைப்பதில் இன்னும் தீவிரத்தைக் காட்டினார். 1925இல் வெளிவந்த தனது நூலான அர்சியலின் இலக்கணம் (The Grammer ofPolitics) எனும் நூலின் மூலம் ஆங்கிலேய இலட்சியவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் தானும் பங்குகொண்டார். அவர் கிறீன், பொஸான்சே, ஆகியோரின் இலட்சியவாதக் கருத்துக்கு மாற்றீடாக 'அரசு பற்றிய ஒரு யதார்த்தமான கோட்பாட்டை வெளியிட்டார். இக் கோட்பாட்டின் மையம் மக்களைத் தம் ஆளுமையை வெளிப்படுத்த உதவுவதும், தன் உணர்வுகளை ஒரு சமூக வாழ்க்கையில் வெளிப்படுத்துவதுமாகும். ஒரு பிரசையின் நியாய உணர்வும் தர்க்கிக்கும் திறனும் முழு இயலளவுக்கு வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையிலேயே லஸ்கியின் உரிமைகள், கடமைகள், சுதந்திரம், சமத்துவம், சொத்துரிமை, அதிகாரம் பற்றிய அணுகுமுறை உருவெடுத்தது. இவ் அணுகுமுறையின் முக்கிய அம்சம் செயற்படு தன்மையாகும். பிரசைகளிடம் எதிர்பார்க்கப்படும் செயற்பாடு அவர்கள் தமது முழுமையை நிறைவு செய்வதாகும். அவர்கள் தமது தனிப்பட்ட அனுபவத்தையும் நியாய உணர்வையும் பொதுநலனுக்காகப் பயன்படுத்த வேண்டும்.
106

பிரசைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பாக மூன்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டன:
(1) தனிநபர் ஆளுமை பொது அபிப்பிராயம் என்பதற்குள் மூழ்கிவிடக் கூடாது. மக்களுக்கிடையிலான வேறுபாடுகளும் வித்தியாசமான தனிநபர் அனுபவங்களும் அரசுக்குரிய வளங்களாகும். லஸ்கியின் அபிப்பிராயப்படி அரசானது தனிநபர் அனுபவங்களையும் கருத்துக்களையும் நிராகரிக்கக் கூடாது. ஒரு சனநாயக அரசாங்கத்துக்கு இது மிகவும் அவசியமாகும்.
(2) எந்த ஒரு நபருக்கும் ஆக்கபூர்வமானசேவைகள் தேவைப்படுமிடத்து அதனை வழங்க வேண்டியது அரசின் பொறுப்புடைமையாகும். இப் பொறுப்புடைமையானது மக்களுக்குத் தமது அறிவையும் நியாயத்தையும் வளர்த்தெடுக்கும் வாய்ப்புகளை அரசாங்கம் வழங்க வேண்டுமென்பதையும் உள்ளடக்கும். இதற்காக ஒரு வினைத்திறன் மிக்க திறந்த கல்வி முறையும் ஒரு நீதியான நடுநிலையான பத்திரிகையும் அவசியமானதாகும்.
(3) ஒரு பிரசை எந்தளவிற்கு அரசுக்குக் கடப்பாடுடையவன் என்பது அரசு தனது பொறுப்புக்களைச் செய்யும் விதம்பற்றிய அப்பிரசையின் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது. கீழ்ப்படிவு ஓர் அரசுக்கு வேண்டுமெனின் அது மக்களின் தேவைகளை அடைய உண்மையாக முயற்சி எடுக்க வேண்டும்.
லஸ்கியைப் பொறுத்தவரையில் பிரசைகள் என்போர் வெறுமனே பார்த்து இரசித்துக் கொண்டிருப்போர் அல்லர். அவர்கள் அரச நடவடிக்கைகளை நுணுக்கமாக அவதானித்து அதனை மதிப்பீடு செய்து கொண்டிருக்கும் தீவிரமான பங்கேற்போராவர். ஒரு பிரசையின் முழு நலனையும் அடையும் முயற்சிக்கு அரசு உதவவில்லையெனில் அப்பிரசை அரசுக்கு அடிபணிய வேண்டிய கடப்பாடுமில்லை. லஸ்கியின் கோட்பாட்டில் முக்கியமாகப் பலியாகியது.அரசின்பொறுப்பற்ற, வரையறையில்லாத இறைமையாகும். லஸ்கியின் கருத்துப்படி அரசியல் அதிகாரம் என்பது நிபந்தனைக் குட்பட்டதும் ஆலோசனை வழங்குவதும் பன்முகப்பட்டதுமாக இருத்தல் வேண்டும். ஆக்கபூர்வமான கீழ்ப்படிவு என்பது தனக்குத்தானே விதித்துக் கொணிட கட்டொழுங்கின் விளைவாகும்.
லஸ்கி பொருளாதாரம் மற்றும் அரசியல் சமத்துவம் ஆகியவற்றின் மீது உருவாக்கப்பட்ட சுதந்திரத்தை ஆதரித்தார். அரசின் தலையீட்டுக்கு இறுக்கமான எல்லை விதிக்கும் மில்லின் முயற்சிலஸ்கிக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. அவரைப் பொறுத்தவரை தனிநபரின் சகல நடத்தைகளும் சமூக நடத்தைகளாகும். ஏனெனில் ஒரு நபர் எதனைச் செய்த போதிலும் சமூகத்தின் உறுப்பினர் என்ற அளவில் அதன் விளைவும் அவரைப்
107

Page 57
பாதிக்கும். லஸ்கியைப் பொறுத்தவரையில் சுதந்திரம் என்பது சமூகமானது தனிமனிதனைப் பார்த்து "உன்னால் முடிந்தவரை சிறப்பாகச் செய்” என்பதாகும். சுதந்திரம் என்பது குறைந்தபட்ச வேதனம், கல்வி மற்றும் சகலருக்கும் அரசியலுரிமை என்பதை உறுதிப்படுத்துவதாகும். ஏனெனில் எந்த ஒரு தனிமனிதனுக்கும் பிறரது ஒத்துழைப்பின்றி சுயவிளக்கத்தைப் பெற முடியாது. அதிகாரமும் சொத்தும் சட்டபூர்வ செயற்பாடுகளைக் கொண்டிருக்காது விட்டால் அவை எங்கிருந்தாலும் ஒழிக்கப்படவேண்டும். ஒரு தனிநபர் அனுபவிக்கும் உண்மையான செல்வத்தின் அளவு சமூகத்துக்கு அவரது பயன்பாட்டோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
மத்திய அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ் வழமையான அதிகாரங்களைவிடப் பாரிய அதிகாரங்கள் உள்ளூராட்சிக்கு மாற்றஞ் செய்யப்பட வேண்டும். இது உள்ளூர் வாழ்க்கையை உயிரோட்ட முடையதாக்கும். மத்திய, மாகாண அரசுகளுக்கிடையிலான அதிகாரப் பங்கீடு அமெரிக்காவில் மாநிலங்களுக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் நிலவும் அதிகாரப் பங்கீட்டை ஒத்ததாக இருக்க வேண்டும். சனநாயகத்தில் அரசியற் கட்சிகள் மிகமுக்கியமான பங்கு வகிக்கின்றன. லஸ் கி ஒஸ்ரோகோஸ்கியைப் போல ஒரு பகைமையான வழியையோ அல்லது பிறைஸ் மற்றும் வெப்லன் போல சந்தேகத்தையோ கைக்கொள்ளவில்லை. சீசர்வாதத்துக்கு எதிரான உறுதியான தடையைக் கட்சி வழங்குகின்றன என லஸ்கி கூறினார். எதேச்சாதிகாரத்துக்கு எதிரான முதலாவது பாதுகாப்பு அரண் நகரக் கூட்டம் (ரொக்வில்) அறிவும் சுதந்திரமும் நிறைந்த கனவான்கள் (பிறைஸ்) அல்லது விகிதாசாரப் பிரதிநிதித்துவமே (மில்) அல்ல. லஸ்கியின் கருத்துப்படி இருகட்சிமுறைமையே அத்தகைய முதல்நிலை பாதுகாப்பு அரணாகும்.
கட்சியின் பிணக்குகளானது, குழுவாதம், பொய்மை, தனியாள்வாதம் ஆகியவற்றை உருவாக்கக்கூடியவை என்பதை லஸ்கிஏற்றுக்கொண்டார். எனினும் கட்சிகள் ஒரு சனநாயக அரசுக்குச் செய்யும் பணிகள் எண்ணிலடங்காது எனலஸ்கி வாதிடுகிறார். இத்தகைய கட்சிமுறைக்குச் சார்பான கருத்துக்கள் 1924இல் தொழிற்கட்சி முதன்முதலாகப் பதவிக்கு வந்த பின்னர் எழுதப்பட்டபுத்தகத்தில் தாராளமாகவே காணப்படுகின்றன. இத்தகைய கட்சி முறையானது அரசாங்கத்துக்கும் , பொதுசன அபிப்பிராயத்துமிடையே நெருக்கமான தொடர்பு இருப்பதை உறுதி செய்கிறது. எனினும் கட்சிமுறை அரசாங்கத்துக்கு சிறந்த நிர்வாகமும், நிபுணத்துவ ஆலோசனைகளுக்கும் உதவியாக இருக்க வேண்டும். சாதாரண மக்களுடனான தொடர்பு நிர்வாகத்துக்கும், நீதித்துறைக்கும் மிக அவசியமானது. பல்வேறு ஆணைக்குழுக்கள், கமிட்டிகளின் மூலமாகப் பெறப்படும் சமூக அறிஞர்கள், தொழில்சார் விற்பன்னர்கள் ஆகியோரின் அறிவும் அனுபவமும் அரசுக்குப் பயன் உள்ளதாக இருக்கும். பிரதிநிதித்துவமும், ஆலோசனையும் பிரதேசக் கோட்பாட்டையும் (Temitorial principle) Glafu buG Gas Tllust 6DLuyth (Functional principle) ஒன்றிணைக்க வேண்டும்.
108

லஸ்கியின் அரசியற் பொருளாதாரம் தொடர்பான அணுகுமுறைக்கு நாடு (Nation) பத்திரிகையின் ஆசிரியர் குழுவின் உறுப்பினரும் அவரது சகபாடியுமான ஜோன் ஹொப்ஸனின் (John Hobson) பங்களிப்பு காத்திரமானதாகும். ஆனால் ஹொப்சனைவிட லஸ்கி கைத்தொழில் அமைப்புகளுக்குள் தொழில்சார் நிபுணத்துவம் மற்றும் பிரதிநிதித்துவ சனநாயகம் ஆகியவற்றுக்கிடையில் சமநிலையான கலப்பில் கூடிய ஆர்வம் காட்டினார். மத்திய அரசாங்கத்தின் துணையுடன் தொழிலாளர்களை வழிப்படுத்தும் ஒரு தொழில்சார் சங்கங்கள் (Vocational Associations) முறைமையை லஸ்கி விரும்பினார். இதைப்போன்ற ஓர் அமைப்பு எமில் giritsudasib (Emile Durkheim) 6Tsiruguits60Ts. Professional Ethics and Civic Morals (1957) என்னும் நூலில் விபரித்துள்ளார்.
தன்னுடைய "அரசியலின் இலக்கணம்” என்னும் நூலில் லஸ்கி மக்களின் மிகக் குறைந்த பொருளாதாரத் தரத்தை உயர்த்துவதற்கு முதலாளித்துவ வளங்களைப் பயன்படுத்துவதைப் பற்றிக் கூறுகிறார். அத்துடன் கைத்தொழில்களில் சனநாயக நடைமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கூறுகிறார். இந்த அணுகுமுறையிலுள்ள பிரச்சினையால் முதலாளித்துவத்தினால் கூடிய பயனை அடைவோர் சனநாயகத்தை விரிவுபடுத்துதலை எதிர்த்தனர். சனநாயகத்தினால் கூடிய பயன்பெறுவோர் தற்போதைய பொருளாதார ஒழுங்கு முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. முதலாளித்துவமும் சனநாயகமும் வெளிப்படை யாகவே பிணக்குக் கொண்டிருந்தன. அடுத்துவந்த பத்தாண்டுகளில் தான் "அரசியலின் இலக்கணம்” என்பதில் கனவு கண்ட சமூகத்தை அமைப்பதற்கு முன்னால் தாண்ட வேண்டிய தடைகளைப் பற்றித் தெளிவு பெற்றார்.
நெருக்கடி நிலையில் சனநாயகம்
லஸ்கி தனது "நவீன அரசின் சுதந்திரம்" என்னும் நூலில் சுதந்திரம் பற்றி "அரசியலின் இலக்கணம்" என்பதில் வெளியிட்ட கருத்துக்களை மாற்றிக் கொண்டுள்ளார். தனது பிரசைகளின் ஆற்றல் விருத்தியை அரசு ஊக்குவிக்குமா என்பதில் நம்பிக்கை குறைந்தவராக இருந்தார். தனிநபர்களுக்கு அரசிடமிருந்து பாதுகாப்புத் தேவை என அவர் சிந்திக்கத் தலைப்பட்டார். லஸ்கி மில்லின் அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினார். 1860களில் மில் கருதியதுபோலவே 1930களில் லஸ்கியும் அரசியல் அதிகாரம் ஒருநாகரீகமான முறையில் பிரயோகிக்கப்படமுடியுமா என்பதில் நம்பிக்கை இழக்கத் தொடங்கினார். மில்லைப் போலவே தனிநபர்களை அரசிடமிருந்து பாதுகாப்பதற்காக உறுதியான பாதுகாப்புகள் அமைக்கப்பட வேண்டுமென அவர் கூறினார். மக்கள் தமது தனித்துவப் பண்புகளின் பாதுகாப்புப் பற்றிய பெறுமானங்களை விளங்கிக் கொள்ள வேண்டுமென லஸ்கி அறிவுறுத்தினார். ஏனெனில்
109

Page 58
‘சுதந்திரம் என்பது மக்கள் மத்தியில் உள்ள இலகுவில் உணரமுடியாத ஒரு சூழலின் வெளிப்பாடாகும்.
லஸ்கி எதிர்பார்த்த சமூக ஒழுங்கு என்பது மூன்று விடயங்களை அடிப்படையாகக் கொண்டது. அவையாவன:
1. மக்களின் சம்மதம். இச்சம்மதம் இல்லாவிடின் நீண்ட காலத்தில்
சமூக அமைதி இல்லாது போய்விடும்.
2. காத்திரமான இருவழித் தொடர்பாடல். அரசியல் தலைவர்கள் தமது மக்களின் அனுபவங்களின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
3. பகுத்தறிவு சார்ந்த சிந்தனைக்குத் தடையான பிடிவாதங்களையும் கோட்பாடுகளையும் கைவிடவேண்டும். லஸ்கி பகுத்தறிவில் நம்பிக்கை கொண்டிருந்தார். எங்கே பகுத்தறிவுக்கு மதிப்பு உள்ளதோ அங்கே சுதந்திரத்துக்கும் மதிப்பு உண்டு.
1929இல் தொழிற் கட்சி அரசாங்கத்துக்கு ஏற்பட்ட கதியானது பகுத்தறிவின் எதிரிகளான அறியாமையும் வரட்டுவாதமும் மட்டுமல்ல; பொருளாதார நலன்களுமாகும் என்பதைக் காட்டியது. 1931இல் பொருளாதார தேக்கநிலையின் போது தொழிற்கட்சிப் பிரதமர் ராம்ஸே மக்டொனால்ட் பிரித்தானியாவின் சர்வதேச நம்பிக்கை நாணயத்தைக் காப்பாற்றுவதற்காக வேலையற்றோர் கொடுப்பனவுகளைக் குறைக்கச் சம்மதித்தார். இக்கொள்கையை 4அமைச்சர்கள் மாத்திரமே ஆதரித்தனர். எனினும் பழமைபேண் கட்சியினரின் கை மேலோங்கியிருந்த ஒரு தேசிய அரசாங்கத்தில் இதனை அமுல்படுத்த ஒத்துக்கொண்டார். லஸ்கியின் நம்பிக்கைகளுக்கு இந்நடவடிக்கை பேரிடியாக அமைந்தது. தாம் வெளியிட்ட "அரசியலமைப்பும் நெருக்கடியும்"(The Crisis and the Constitution, 1932) என்ற பிரசுரத்தில் ‘அதிகாரத்துக்கான வழி தொழிற்கட்சி இதுவரை எண்ணியதை விட மிகக் கடினமானது" என்பதை ஒத்துக்கொண்டார்.
முதலாளித்துவ சனநாயகம் தொடர்பான லஸ்கியின்பிற்பட்ட கருத்துக்கள் “நெருக்கடியில் சனநாயகம்" (DemocracyinCrisis,(1933) என்னும் நூலில் காணப்படுகின்றன. இந்நூலில் காணப்படும் கருத்துக்களைக் "கோட்பாடு LDfbgb B6DL-cyp6DD fifu Toot syTai" (The State in Theory and Practice, 1935), “ஐரோப்பிய தாராண்மை வாதத்தின் எழுச்சி” (TheRiseofEuropeon Liberalism, 1936) ஆகிய நூல்களில் மேலும் வலுப்படுத்தியுள்ளார். அவருடைய கருத்துப்படி தாராண்மைவாதம் என்பது மத்திய வகுப்பினர் தமக்கென ஓர் இடத்தை ஏற்படுத்திக் கொள்ளும் தமது முயற்சியின் ஒரு துணை விளைவாகும். சோசலிசம் மற்றும் தொழிற்சங்கங்களின் தாக்கம் காரணமாகவும் கிறீன், ஆர்னோல்ட், ரொக்வில் ஆகியோரின் சிந்தனைகளின் தாக்கத்தின் காரணமாகவும் தாராண்மை வாதிகள் 19ஆம்
110

நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அரசு பற்றிய ஓர் உடன்பாடான எண்ணக்கருவை ஏற்றுக்கொண்டனர். எனினும் 'சமூக சேவை அரசு’ என்னும் கருத்துப் பின்னரே வந்தது. சமூக விடயங்களுக்காகச் செலவழிக்கப்பட்ட முதலாளித்துவச் செல்வம் "தன்னைத் தாக்குதல் களிலிருந்து காத்துக் கொள்ளப்" போதுமானதாக இருக்கவில்லை.
1914ஆம் ஆண்டுவரை தாராண்மைவாதம் பற்றிய சோசலிசவாதிகளின் விமர்சனமானது பேபியன் வாதிகளினால் (Fabians) மாதிரியாகக் கருதப்பட்டது. ஒரு சோசலிச அரசை நோக்கிய படிப்படியான மாற்றம் என்னும் அவர்களது நம்பிக்கைகள் முதலாம் உலக யுத்தத்தைத்தொடர்ந்து சிதறிப் போயின. முதலாளித்துவ வாதிகள் மக்களது தேவைகளுக்காகப் பாரிய செலவுகளை ஏற்படுத்தும் சனநாயக ஒழுங்கின் பயன்படு தன்மைபற்றிக் கேள்வி எழுப்பத் தொடங்கினர். பொருளாதாரத் தேக்கமானது தனியார் துறை இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு முறைமையின் வரி வசூலிக்கும் இயலளவைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியது.
முதலாம் உலக யுத்தம் 19ஆம் நூற்றாண்டின் தாராண்மை வாதத்தை மக்கள் ஏற்றுக் கொள்வதற்கு அடிப்படையாக அமைந்த உளவியல் தன்மைகளைச் சிதறச் செய்தது. கெயின்சின்வார்த்தையில் கூறுவதானால் “சகலருக்கும் நுகர்வு செய்வதற்கான வாய்ப்பையும், பலர் நுகர்வு செய்யாமல் இருப்பதற்கான வெறுமையையும் வெளிப்படுத்தியது. லஸ்கி "கைத்தொழில் முறைமையின் உற்பத்தி இயலளவை விஞ்ஞான முன்னேற்றங்கள் மிக மிக விரிவுசெய்தபோதிலும் முதலாளித்துவ அரசுகள் முதலாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைத்து விட்டன" எனக் கூறினார். லஸ்கியின் இந்த ஆய்வு ஹொப்சன், வெப்லன் ஆகியோரின் ஆய்வுகளுக்கு மேலான ஒரு மாக்சிய அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது.
1931க்குப் பின்னர் லஸ்கி ஒரு முதலாளித்துவ சனநாயகத் தேர்தல்களில் சோசலிசத்துக்கு ஆதரவான தீர்ப்புக் கிடைத்து விட்டது என்பதற்காக மாத்திரம் அதனை அனுமதிக்கப் போவதில்லை என்பதனை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினார் . சனாதிபதி ரூஸ்வெல்டின் நடவடிக்கைக்கு அமெரிக்க உயர்நீதிமன்றம் காட்டிய எதிர்ப்புலஸ்கியின் இந்தக் கருத்துக்குச் சான்றாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் பிரித்தானியாவில் எதிர்காலத்தில் தொழிற்கட்சி வெற்றிபெற்றால் அதன் காரணமாக மூலதனம் வெளியேறலாம். அதனைத் தொடர்ந்து தோல்விடைந்த பழமைவாதிகளினாலோ அல்லது வெற்றியடைந்த தொழிற்கட்சிஅரசாங்கத்தினாலோபாராளுமன்றமுறையும்தோன்றலாம். பாசிசவாதமானதுமுதலாளித்துவம்தொடர்ந்தும் அரசியல் அதிகாரத்தைத் தன்வசம் வைத்துக்கொண்டு உழைக்கும் மக்களின் சனநாயக எதிர்ப்பை நசுக்கிவிடமுதலாளித்துவத்துக்கு வழிஅமைத்துக்கொடுத்தது. அத்தகைய 111

Page 59
ஒரு எதேச்சாதிகார ஆட்சிக் குழுவினர் நிதி மூலதனத்துக்கும் மறுபுறம் தொழில்நுட்பவியலாளர் சிறுபூர்ஷ்வாக்கள் ஆகியோருக்குமிடையில் ஒரு பாரதூரமான பிளவு ஏற்படுவதைத் தடுக்கவும் மாட்டார்கள். இவ்விரு குழுவினரும் பின்னர் உழைக்கும் வர்க்கத்தைச் சாரக்கூடும்.
இதனால் ஏற்படக் கூடிய விளைவு புரட்சியேயாகும். ஆனால் அதனுடைய வெற்றி உறுதியானதல்ல. 1917 ரஷ்யப் புரட்சி விசேட சூழ்நிலைகளினால் ஏற்பட்டது. இதில் தோல்வியடைந்த, பிளவுபட்ட ஓர் இராணுவம் இருந்ததை நாம் கவனத்திற் கொள்ளவேண்டும். இதே சூழ்நிலையை உருவாக்க முடியாது. இந்த ஆய்வின் அடிப்படையில் லஸ்கி பின்வருமாறு கூறுகிறார். "ஒரு சமூகத்தின் பொருளாதார அடிப்படைகளை மாற்ற விரும்பும் எந்தக் கட்சியும் தனது வலிமைக்கு ஆதாரமான அரசியல் யாப்பு ஒழுங்கைத் தொடர்ச்சியாகப் பேணுதல் வேண்டும்”. எனினும் லஸ்கி தனது "ஐரோப்பிய தாராண்மை வாதத்தின் எழுச்சி” எனும் நூலில் ஒரு மாற்று அணுகுமுறையை முன்வைக்கிறார். இவ் அணுகு முறையானது அவர் முன்னர் முன்வைத்த வாதத்துக்கு முரணானதாகும்.
"முதலாளிததுவமானது தனது நெருக்கடியிலிருந்து வெளிவரக்கூடிய ஒரு நடைமுறை வழியைக் கண்டுபிடிக்கும் என்பதை ஏற்றுக் கொண்டால் 1929ஆம் ஆண்டு முதல் உலகத்தைப் பாதித்து வரும் இப்பொருளாதாரத் தேக்க நிலையிலிருந்தும் அது விடுபட்டுவிடும். எனவே இந்த நிலைமையானது ஒரு தற்காலிகமான தடையே தவிர மரணததைக் கொண்டுவரும் நோயின் அறிகுறியல்ல. இதிலிருந்து விடுதலையடையும் பொழுது உழைக்கும் வர்க்கத்தின் பொருளாதார நலன்களை ஓர் உயர் மட்டத்தில் திருப்திப்படுத்தக்கூடிய ஒரு புதிய உற்பத்திச் சமநிலையை அடைவதன் மூலம் இந்த முறைமைக்குள் இருக்கும் உடனடி முரண்பாடுகளைத் தீர்க்கவும் முடியும். இதனைச் செய்யும் பொழுது சமூகத்தின் வர்க்கஉறவுகளை மீள வரையறுப்பதற்கு உழைக்கும் வர்க்கம் முனைப்பாகச் செயற்படாது". (Lask 1936: 183-4).
லஸ்கியின் அபிப்பிராயப்படி இந்த மாற்றீடான வாதம் இரண்டு சிந்தனைப் போக்குகளை அடிப்படையாகக் கொண்டது. ஒன்று கெயினிஸியன் சிந்தனை. இது எல்லாரது நன்மைக்காக அரசின் தலையீட்டை ஏற்றுகொண்டது. இத் தலையீடு வர்க்க உறவுகளின் அடிப்படைகளை மாற்றிக் கொள்ளாத முதலாளித்துவத்துக்கும் சோசலிசத்துக்கும் இடையிலான ஒரு நடுவழிப்பாதையாகும். இரண்டாவது சிந்தனைப் போக்கு "தலையிடாமை" யாகும். இவ்விரண்டு போக்குகளுமே வெற்றியடைவதற்கு வாய்ப்பில்லை என லஸ்கி கருதினார். ஆனால் இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்து முதலாளித்துவச் சனநாயகத்தின்
112

அடிப்படையை இவ்விரு அணுகுமுறைகளே காட்டுகின்றன. ஹிட்லருக்கு . எதிரான போர் சாத்வீகமான ஒரு சனநாயகப் புரட்சிக்கும் , முதலாளித்துவத்தைக் கைவிடுவதற்கும் வழிவகுத்தது என லஸ்கி தனது “எமது காலத்துப் பரட்சிகளின் மீதான பிரதிபலிப்புக்கள்” (Reflections on the Revolution of our time) (1943) 6T6irgjib T65s) diagrasp Tir. 6T6fgth 1945ஆம் ஆண்டின் தொழிற்கட்சி அரசாங்கத்தின் கொள்கை லஸ்கியின் ஆர்வங்களுக்கு இசைவாக அமைந்திருக்கவில்லை. இதன் காரணம் லஸ்கி கூறுவதைப் போல “தொழிற்கட்சி அரசாங்கம் தனது முயற்சியில் வெற்றி பெற ஐக்கிய அமெரிக்காவில் தங்கி இருக்கும் நிலை இருந்தது. அமெரிக்க மத்திய வகுப்பினரின் மேலாண்மையைப் பாதுகாக்கும் ஒரு கருவியாக அது செயற்படுவதையும் மேற்கு ஐரோப்பாவின் சோசலிச சவால்களுக்கு எதிராக அமெரிக்காவின் நலன் பேணலையும் அதனால் தவிர்க்க முடியவில்லை".
அமெரிக்காவின் உறுதி மொழியும் செயலாற்றமும்
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் "உலக வரலாறு பெரும்பாலும் அமெரிக்காவின் வரலாற்றை ஒட்டியே உருவாக்கப்படும் எனவும் அது எவ்வாறு நடைபெறும் என்பது அமெரிக்கத்தன்மை (Americanism) எவ்வாறு உருவாக்கப்படும் என்பதிலேயே தங்கியுள்ளது. முதலாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவைப் பற்றி லஸ்கி ஆழமான பரிச்சயம் கொண்டவராக இருந்தார். இந்த 'அன்பின்' காரணமாகவே அவரது நீண்ட நூலான "அமெரிக்கரின் சனநாயகம்" (The AmericanDemocracy(1948) உருப்பெற்றது. அமெரிக்காவின் மரபுகள் பற்றிய இரண்டு அறிமுக அத்தியாயங்களை எழுதினார். இறுதி அத்தியாயம் நாகரீகத்தின்கோட்பாடு என்னும் வகையில் அமெரிக்கத்தனம் பற்றியதாக அமைந்தது. இடையில் அமெரிக்க அரசியல் நிறுவனங்கள், வர்த்தக முயற்சி, தொழிலாளர், சமயம், கல்வி, கலாசாரம் , சிறுபான்மையினர், சர்வதேச உறவுகள், உயர் தொழில்கள் மற்றும் வெகுசனத் தொடர்புச் சாதனங்கள் முதலிய விடயங்கள் பற்றிய அத்தியாயங்களை எழுதினார்.
இந்நூல் பற்றிய கருப்பொருள் மிக உயர்வானது. ஆசிரியரின் அறிவு மிகப் பெரியது. எனினும் இந்நூல் பெருமையடையவில்லை. அமெரிக்க சமூகத்தின் இயல்பு பற்றிக் கூறாது, நூல் முழுவதும் லஸ்கியின் இலட்சியங்களும், விரக்திகளுமே விரவிக் கிடந்தன. சுருக்கமாகக் கூறின் அமெரிக்கா ஒரு பாரதூரமான நெருக்கடியில் சிக்கியுள்ளதென்றும் அமெரிக்காவின் பிரச்சினைகளுக்கு வர்த்தகர்களே காரணம் என்றும் லஸ்கி வாதிட்டார். ரொக்வில் எதிர்வுகூறிய பிரச்சினைகள் இன்னும் உள்ளனவென்றும் வெப்லன் கூறியதைப் போன்று அமெரிக்கர்கள் விரயம் மிகுந்த ஒரு நுகர்வுக் கலாசாரத்தையும், பழமையான ஒரு பொருளியல்
113

Page 60
சித்தாந்தத்தையும் கொண்டுள்ளனர் என அவர் கூறினார். அமெரிக்கர்கள் கடின உழைப்பாளிகள்; நன்மையை நோக்குபவர்கள்; அரசியலற்றவர்கள்; விருந்தோம்புபவர்கள் அத்துடன் அறிவிலிகள். இதற்கு முரணாகத் தொழிலாளர்கள் சோசலிசத்தை நோக்கித் தலையிடாமைக்கு அப்பாற்பட்ட ஓர் உறுதியான இயக்கப் போக்கினைக் கொண்டிருந்தனர். இத்தகைய விடுதலைச் சக்திகள் கொண்ட ஒரு சுதந்திரமான அரசியற் கட்சியை உருவாக்க வேண்டுமென லஸ்கி நம்பினார். 1940களில் அமெரிக்கா ஒரு குறிப்பிட்ட நோக்கில் காலடி எடுத்துவைக்காமல் நடுவழியில் நின்றமையினால் இத்தகைய முயற்சிக்கான வாய்ப்பு நிறையவே இருந்தது. ‘அமெரிக்கா சனநாயகத்தைப் பாதுகாக்கும் ஒரு சமூகமாக வளரும்; அல்லது அதனை முற்றாக நிராகரிக்கும் ஒரு சமூகமாக மாறும் என லஸ்கி (1948) கூறினார்.
அமெரிக்கா தனது வாழ்க்கைத் தரத்தைக் குறைத்தல் அல்லது ஒரு பொருளாதார ஏகாதிபத்தியத்தை மேற்கொள்ளல் ஆகிய இரண்டு பாரதூரமான தெரிவுகளுக்கிடையில் நிற்கிறது. இவற்றில் ஒன்றைத் தெரிவு செய்து அவ்வழியில் செல்வதற்கு முன்னர் இப்போதுள்ள கட்சி அமைப்புக்கு ஒரு சவால் ஏற்படும். பிற்போக்குச் சக்திகள் இருந்தபோதும் வேறு பொதுநலச் சக்திகள் அமெரிக்காவைச் சனநாயகப் பாதையில் இட்டுச் செல்லுகின்றன. இங்குதான் அமெரிக்காவுக்கு வாழ்வு காட்டும் ‘எதிர்கால எதிர்பார்ப்புக் காணப்படுகிறது. இவ்வாறு லஸ்கி கூறிய போதும் அமெரிக்கச்சாதனைகள் இவ்வெதிர்பார்ப்பை அடையக்கூடியதாக இல்லை. துரதிஷ்டவசமாக அமெரிக்காவின் நிறுவனமயப்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கம் பிளவுபட்டிருப்பதோடு முதலாளித்துவத்துக்கும் சனநாயகத்துக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை உணரவில்லை. அமெரிக்கா சனநாயக சோசலிசப் புரட்சியின் நுழைவாயிலில் நிற்கின்றது என லஸ்கி கூறினார். ஆனால் அமெரிக்க மக்கள் உளவியல் ரீதியாக இப்புரட்சிக்குத் தயாராக இருக்கவில்லை. மக்களை இவ்வாறு தயார்ப்படுத்த வேண்டிய முகவர்களே அவர்களது உளவியல் வீழ்ச்சிக்குக் காரணம் என்பதுதான் கவலைக்குரியது. துரதிஷ்டவசமாக லஸ்கி கூறும் இந்த விடயத்தை உணர்ந்து கொள்ள முடியாத அளவுக்குத் தொழிற்சங்கங்கள் அமெரிக்கத்தனமாகக் காணப்படுகின்றது.
அகவயத் தன்மையும் அரசும்
அமெரிக்கரின் சனநாயகம் வெளிவந்த அதே வருடத்தில் ஹரோல்ட் லாஸ்வெல் அமெரிக்கா உட்பட சனநாயகச் சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய தனது சொந்தப் பகுப்பாய்வை வெளியிட்டார். லஸ்கியைப் போலவே அரசியல் அதிகாரம் என்னும் பரிமாணத்தில் தனது கவனத்தைச் செலுத்தினார். ஆனால் அவரது "அதிகாரமும் தனித் தன்மையும்" (1948) என்ற நூலின் தலைப்புக் காட்டுவது போல அவரது
114

பகுப்பாய்வின் இன்னுமொரு பரிமாணம் உளவியல் சார்ந்ததாகும். சனநாயகம் நல்ல முறையில் இயங்க வேண்டுமெனில் மிக முக்கிய நிபந்தனை பொருளாதார அமைப்புக்களை ஒழுங்குபடுத்துவதல்ல; ஆளுமையைச் சரிப்படுத்துவதாகும். விஞ்ஞானிகள் பெளதீகச் சூழலில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றிக் கூடுதல் கவனம் செலுத்தினர். ஆனால் லாஸ்வெல் நடத்தை - ஆளுமை அமைப்புகள் பற்றி அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கூறினார்.
லாஸ்வெல் நடைமுறைவாதம், பிராய்டின் கருத்துக்கள் ஆகியவற்றைத் துணையாகக் கொண்ட மரபு சார்ந்த அரசியல் கோட்பாடுகளிலிருந்து விலகித் தனிநபர் மற்றும் குழுக்களின் மனப்பான்மைகளில் காணப்படும் அரசில் தாக்கத்தில் தமது கருத்தைச் செலுத்தினார். அவர் பக்கச் சார்பற்ற விஞ்ஞான முறையை ஈடுபாடுகளும், உணர்வுகளும் நிறைந்த ஒரு மேடைக்குக் கொண்டு சென்றார். அவரது இந்தப் பாணி சிலவேளை மாக்கியவல்லியையும் சிலவேளைகளில் கிளோஸ்விட்சை (Clausewitz) யும் நினைவூட்டுகின்றன. லாஸ்வெல் பின்னர் ஒரு “கொள்கை விஞ்ஞானம்' என்ற அடிப்படையில் அரசியல் விஞ்ஞானத்தின் நடிபங்கை அறுதியிட்டுக் காட்டினார். இவ்விஞ்ஞானத்தின் முக்கிய செயற்பாடு ஆளிடைஉறவுகளை உருவாக்கும் விழுமியங்களை ஒன்றிணைப்பதற்கான அறிவை வழங்க வேண்டுமென அவர் கூறினார்.
லாஸ்வெல் 1930களில் தனது புகழ்வாய்ந்த நூலான Politics Who gets What, When and How (1951b) என்னும் நூலை எழுதினார். அப்போது அவர் பொதுவான அரசியற் செயன்முறைகளைப் பற்றிக் கவனித்தாரே தவிர ஒரு பொது ஒழுங்கை உருவாக்கும் உத்திகளை உருவாக்குவதைப் பற்றிக் கவனிக்கவில்லை. இந்தப் பணி பின்போடப்பட்டது. கொள்கை விஞ்ஞானம் பற்றிய இப்பணியானது சனநாயகத்தை எவ்வாறு சாத்தியமான முறையில் இயங்கச் செய்ய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே லாஸ்வெல்லினால் விருத்தி செய்யப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளின் வெற்றியைத் தொடர்ந்தே லாஸ்வெல் இப்பணியை மேற்கொண்டார். 1930கள் லஸ்கிக்கு முக்கியமாக இருந்தது போலவே 1940கள் லாஸ்வெல்லுக்கு முக்கியமாக இருந்தது.
உண்மையில் லாஸ்வெல்லின் பணிகளை மூன்று கட்டங்களில் நோக்குவது இலகுவானதாகும். அவையாவன:
1. 1920களில் அவர் ஒரு தனித்துவமான முறையியலை உருவாக்கிக் கொண்டிருந்தார். இக் கால கட்டத்தில் அவரது படைப்புகளாவன: (1) முதலாம் உலக யுத்தத்தில் பிரசார நுட்பங்கள் (Propaganda Technique in World War I) g5 1927'sid (66u6ifuíll'ulu "L. (ii) Psychopathology and Politics (1951a). g.g. 1930s Gaisfsiss.
115

Page 61
2. அவர் 1930களில் ஆளுமை, அரசியல், சமூகம் மற்றும் சர்வதேச ஒழுங்கு ஆகியவற்றுக்கிடையிலான உறவுகளின் மாதிரி ஒன்றை வடிவமைத்திருந்தார். இக் காலத்தில் பின்வரும் நூல்கள் STQg5ul Lot: (i) Politics: Who gets What, When and How? (1951 b), g5 1935g6id (666f6b55. (ii) World Politics and Personal Insecurity (1965), இது 1935இல் வெளிவந்தது. இவை இரண்டும் வாசிப்பதற்கு எளிமையானவை.
3. இரண்டாம் உலகப் போருக்குப்பின்னரான மூன்றாவது கட்டத்தில் அவர் கொள்கை விஞ்ஞானத்தில் கூடிய ஆர்வம் காட்டினார். இக்காலத்தில் வெளிவந்த முக்கிய நூல் அதிகாரமும் ஆளுமையும் (Power and Personality) (1948) (5th.
அழுத்தமும் கற்பனை மயக்கமும்
ரொக்வில்லும், மில்லும் பொதுசன அபிப்பிராயத்தின் பகுத்தறிவின்மை பற்றிக் கவனம் செலுத்தினர். பகுத்தறிவின் மேம்பாட்டைப் பக்கச் சார்பு எப்போதும் தடுக்க முயற்சி செய்யும். இதன்ை லாஸ்வெல் மாற்ற முயன்றார். விஞ்ஞானம் மற்றும் அதிகாரம் பற்றிய பகுத்தறிவுச் செயற்பாடுகள் பொதுசன அபிப்பிராயத்தில் கற்பனை மயக்கத்தையும் பக்கச்சார்பையும் ஏற்படுத்தும் வாய்ப்புகளைப் பெற்றிருக்கின்றன. முதலாம் உலகப் போரில் பிரசாரம் பற்றிய ஆய்வில் இச்செயற்பாடு அரசினால் முறைப்படி ஒழுங்கு செய்யப்படுவதை அவர் எடுத்துக் காட்டினார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தமது இலக்கு சனத்தொகையைக் கவர்வதற்காக அவர்கள் சின்னங்களையும் அடையாளங்களையும் வெளியிட்டனர். இதன்மூலம் எதிராளிகள் மீது பகையுணர்வையும் நேசநாடுகள் மற்றும் நடுநிலைவாதிகளுக்கிடையில் நட்பையும், பகைவர்களில் நமயிக்கையினத்தையும் அவர்கள் எற்படுத்தினர்.
எழுத்து மூலமும் திரைப்படம் மூலமும் செய்யப்படும் பிரசாரமானது காட்டுவாசிகள் எழுப்பும் மேள ஒசைக்கு ஒரு நவீன மாற்றீடாகுமென லாஸ்வெல் கூறினார். ஒரு போருக்குத் தேவையான ஒற்றுமையையும் உறுதியையும் உருவாக்குவதற்குச் சகல பகுத்தறிவற்ற சக்திகளும் இணைக்கப்பட வேண்டுமென அவர் கூறினார். எனினும் பகுத்தறிவின் வெளிப்பாடும் பேணப்படவேண்டும். போதகர்களும் விரிவுரையாளர்களும் எழுத்தாளர்களும் மற்றும் சொற்சிலம்பம் ஆடுபவர்களும் இக் கீழ்த்தரமான பிரசாரத்தை வெற்றிகரமாகக் கொண்டு நடத்துவதற்குத் தேவைப் படுபவர்களாவர். பிரசாரம் செய்பவர் தனது வேண்டுகோள்களைப் பகுத்தறிவு பூர்வமாகச் செய்யும் திறனைக் கொண்டிருப்பது மாத்திரம் போதாது; ஒரு சமூகத்தின் இலகுவில் தீப்பற்றக் கூடிய சக்தி எங்கு மறைந்து கிடக்கிறது என்பதைக் கண்டறியும் ஆற்றலும் அவருக்கு வேண்டும். ஒரு சமூகத்தின் ‘அழுத்தநிலையை அறியக்கூடிய திறமையும்
116

வேண்டும். ஒரு பிரசாரகன் போர்க் காலத்தில் வெடித்துக் கிளம்பத் தயாராக இருக்கின்ற வெறித்தனம் என்னும் நெருப்புக் கோளத்தின் மீது ஒரு சிறு பொறியைத் துாவி விடுவதில் அக்கறையாக இருக்கிறான். ஒரு சமாதானகால அரசியல்வாதியோ இவ்வாறான நெருப்பின் மீது நீரை ஊற்றி அணைப்பதில் ஆர்வம் காட்டுகிறான். Psychopathology and Politics (1951a) என்னும் நூலின் அடிப்படையான கருப்பொருள் இதுவேயாகும்.
அரசியலென்பது பகுத்தறிவுமிக்க கலந்துரையாடலும் சனநாயகரீதியான ஆலோசனை வழங்கலுமாகும் என்னும் கருத்தை இப்புத்தகத்தில் லாஸ்வெல் நிராகரிக்கிறார். இவ்விடயத்தில் லாஸ்வெல் லஸ்கியுடன் முரண்படுகிறார். லாஸ்வெல்லின் கருத்துப்படி அரசியற் பிரச்சினை என்பது பிணக்குகளைத் தீர்ப்பதைவிட அவை நிகழாவண்ணம் தடுப்பதாகும். அரசியல் நடவடிக்கைகள் என்பவை சமூகத்தின் சக்தியைச் சமூகப் பிரச்சினைகளுக்குக் காரணமான மீண்டெழும் காரணிகளை அழிப்பதில் ஈடுபடுத்தப்பட வேண்டும். தடைசெய்யும் அரசியல் மூலம் (Preventive Politics) சமூகத்தின் அழுத்தநிலை கூடியவரை குறைக்கப்படவேண்டும். இதற்கு மனிதர்களின் இணக்க உறவு நிலை பற்றிய உண்மைகள் வழிகாட்ட வேண்டும். இவ் உண்மைகளை அறிவதே விசேட ஆய்வுகளின் குறிக்கோளாகும். இதனை மருத்துவத்துறையோடு ஒப்பிட்டுப்பார்க்கலாம். மருத்துவ ஆய்வாளர்கள் மனிதர்களுக்குப் பயன்படுத்தக் கூடிய தடுப்பு மருந்துகள் பற்றிய அறிவை விருத்திசெய்கிறார்கள். அதேபோல அரசியல் விஞ்ஞானிகளும் அரசியல் பிரச்சனைகளுக்குப் பயன்படுத்தக் கூடிய தடுப்பு அரசியலை வழங்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். உளவியல் நோயறிமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் ஆள்பவர்களினதும் ஆளப்படுபவர்களினதும் ஆளுமை முறைமையை ஆய்வு செய்ய முடியும். குழந்தைப் பருவ அனுபவங்கள் பற்றிய கவனமான பகுப்பாய்வு தற்போதைய நடத்தைக் கோலங்களை (உதாரணமாக கிளர்ச்சியாளர், நிர்வாகி) வெளிப்படுத்த முடியும். கிளர்ச்சியாளர்கள் என்போர் தற்புகழ்ச்சி அல்லது தற்காதல் வகுப்பின்பாற்பட்டவர்களாவர். தற்காதல் என்பது (Narcissism) ஆரம்ப காலக் காதலுறவுகளில் ஏற்படும் தடைகளினாலோ அல்லது தனது குடும்பத்தின் மீதுள்ள அதீத பற்றினாலோ ஏற்படக்கூடும் என லாஸ்வெல் கூறுகிறார்.
அரசியல் மனிதனின் அபிவிருத்தி வரலாற்றுக்காக லாஸ்வெல் ஒரு பொதுவான வாய்ப்பாட்டைப்பிரேரித்தார்:p/d/r=P. இவ்வாய்ப்பாட்டில் p- என்பது தனிப்பட்ட நோக்குகளையும் d - பொதுக் குறிக்கோள்கள் மாறி வைக்கப்படுதலையும் r - பொதுநலன் பற்றிய நியாயப்படுத்தலையும் Pஅரசியல் மனிதனையும் குறிக்கும். / என்னும் அடையாளம் மாறுதலையும் குறிக்கும். அரசியல் மனிதன் ஆரம்ப வாழ்வில் ஒவ்வொருவர் மீது தனிப்பட்ட நோக்கங்களைக் கொண்டிருக்கிறான் எனவும் இத்தகைய தனிப்பட்ட நோக்குகளை மாற்றங்களைப் போல பொது விடயங்களில் மாறி
117

Page 62
வைத்து விடுகிறான் எனவும், இவ்வாறு மாறி வைத்தலைப் பொது நலன்களின் அடிப்படையில் நியாயப்படுத்தலே அரசியல் மனிதனை வித்தியாசமாகக் காட்டுகிறது எனலாஸ்வெல்வாதிடுகிறார். உதாரணமாக ஒர் அரசியற் கிளர்ச்சியாளன் ஒரு தனிநபர் என்ற அடிப்படையில் அன்பை அல்லது கணிப்பை எதிர்பார்க்கிறான். ஆனால் அவன் தனது வர்க்கத்தை அல்லது நாட்டைப் பாதுகாப்பவன் போலத் தன்னைக் காட்டிக் கொள்கிறான். இக் கருத்தானது லஸ்கியின் கருத்துக்கு எதிரானது. லஸ்கி ஒரு பிரசையின் அகவயமான அனுபவங்களைப் பரீட்சித்தார். இதன் மூலம் ஓர் அரசின் சட்டபூர்வத் தன்மையைத் தீர்மானிக்க முடிந்தது. சமூகத்தின் சார்பாக அரசானது ஒரு தனிமனிதனை நிர்ப்பந்திக்கும் எண்ணத்தையே அவர் வெறுத்தார். ஆனால் லாஸ்வெல் இக்கருத்தினை ஆதரித்தார். ஒரு தனிநபர் சமூகத்திற்கு விசுவாசமாக இருத்தல் போன்று குறிப்பான அகவயமான அனுபவங்களைப் பெறமுடியும். இவ்வாறு அனுபவங்களைப் பெறுபவர்கள் ஒன்றுகூடி அரசை உருவாக்க முடியும் என அவர் வாதிட்டார்.
இம்முறையின்படி குழு என்பது ஒரு அதி தனிமனிதக் காட்சியல்லாது பல தனிமனிதர்களைக் கொண்ட காட்சியாகும். இவ்வணுகு முறையின் குறிப்பிடக்கூடிய விளைவு என்னவெனில் அரசானது ஒரு தனி மனிதனிடமிருந்து சுதந்திரமாக இருந்த பொழுதிலும் பல தனிமனிதர்கள் தமது எண்ணங்களை மாற்றிக் கொள்ளும் பொழுது அல்லது சந்ததியற்று இறந்துவிடும் பொழுது அரசும் மறைந்துவிடுகிறது. இதேவிதமான யூகத்தின் அடிப்படையில் லஸ்கி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஒரு புறத்தில் சாதாரண மக்களின் அனுபவங்களோடு பரிச்சயம் கொள்ள வேண்டுமெனவும் மறுபுறத்தில் அறிவையும் நியாயத்தன்மையினையும் வளர்க்க வேண்டுமெனவும் வாதிடுகிறார். லாஸ்வெல் முதலாவது அம்சத்தை ஏற்றுக்கொள்கிறார். சமூக நிர்வாகிகளும், சமூக விஞ்ஞானிகளும் சகலவிதமான மக்களுடனும் நெருங்கிப்பழக வேண்டும். எனினும் இவர்கள் மக்களுக்குக் கற்பிக்கும் பணியைச் செய்யக் கடமைப்பட்டவர்கள் அல்லர். லஸ்கிநியாயபூர்வத்தன்மையை ஆதரித்தார். சம்பந்தப்பட்டவர்களிடையே ஒரு அறிவார்ந்த உரையாடல் ஏற்பட வேண்டுமென எதிர்பார்த்தார். ஆனால் இந்த நியாயபூர்வத்தன்மை ஒரு விஞ்ஞானபூர்வமான தலையீடாக இருக்க வேண்டுமென லாஸ்வெல் கூறினார்.
கற்றறிவாளரும் பொதுமக்களும்
av TsvGlausio 5särgpuspuu Politics: Who Gets What? When and How (1951 b) என்னும் நூலில் அரசியல்வாதிகளின் செயற்பாட்டு மனப்பாங்கின் அடிப்படையில் விளக்கம் தருகிறார். இந்நூலானது மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கிறது. முதற்பகுதி ஒரு சமூக ஒழுங்கில் கற்றறிவாளரையும் பொதுமக்களையும் வேறுபடுத்துகிறது. கற்றறிவாளர்களை
118

விழுமியங்களின் உச்சியில் இருப்பதற்காக அவர்கள் பயன்படுத்தும் வெவ்வேறு நுட்பங்களின் அடிப்படையில் ஆய்வு செய்ய முடியும். அவர்களது பொருளாதாரம் மற்றும் ஏனைய பண்புக் கூறுகளையும் ஆய்வு செய்ய முடியும். இப்புத்தகத்தின் பெரும்பகுதி கற்றறிவாளர்களின் இவ்விரண்டு பரிமாணங்களைப் பற்றி ஆய்வு செய்கிறது. அடுத்த பகுதி உண்மையான அல்லது எதிர்காலத்தில் உருவாகக் கூடிய கற்றறி வாளர்களின் வினையாற்றும் நுட்பங்களைப்பற்றி விளக்குகிறது. லாஸ்வெல் அவர்களது அடையாளங்களைப் பயன்படுத்தக் கட்டுப் படுத்தப்பட்ட வன்முறைப் பொருளாதாரப் பொருட்கள் மற்றும் அரசியல் நுட்பங்கள் பற்றி விளக்குகிறார். அடுத்த பகுதி இவ்வாறான வினையாற்றல்களின் விளைவாக உருவாகும் கற்றறிவாளர்களின் பண்புக் கூறுகள் பற்றி ஆய்வு செய்கிறது. இவ்வாறான கற்றறிவாளர்கள் பல்வேறு வர்க்கப்பின்னணிகளை உடையவர்களாக இருப்பதோடு சண்டையிடுதல், ஒழுங்குபடுத்துதல், பேரம்பேசுதல் போன்ற பல்வேறு திறன்களையும் வெளிப்படுத்துகின்றனர். அவர்கள் பல்வேறு ஆளுமை வகைகளையும் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். பாதுகாப்பின்மை, நெருக்கடி, கோபம் ஆகியவை இவற்றில் அடங்கும். பலவிதமான மனப்பாங்குகளையும் லாஸ்வெல் காட்டுகிறார். தீவிரவாதம் அயலவர்கள் மீது வன்முறைப் பிரயோகம், குறுகிய மனப்பான்மை ஆகிய மனப்பாங்குகளை இவர் மேற்கு ஐரோப்பாவில் காண்கிறார்.
இந் நூலைத் தொடர்ந்து “உலக அரசியலும் தனிமனித Lurgas T. SirgoLDuib" (World Politics and Personal Insecurity (1965) என்னும் நூல் வெளிவந்தது. இந்நூலானது கற்றறிவாளர்களின் உலகளாவிய மாற்றம் மற்றும் ரஷ்யப் புரட்சி முதலாக, அவர்களோடு இணைந்துள்ள அடையாளங்கள் பற்றியும் கூறுகிறது. ரஷ்யாவுக்கு வெளியில் புதிய சமூக ஒழுங்குள் ஏற்றுகொள்ளப்பட்டன; ஒரு கட்சி ஆட்சியான ஐரோப்பிய பாஸிஸ் இயக்கங்கள், அரசாங்க அதிகார விரிவு, வாக்குரிமை போன்றவை இப்புதிய சமூக ஒழுங்கு வடிவங்களாகும். 1929 முதல் இவ்வரசியல் இயக்கங்கள் பல தோன்றின. இக்காலகட்டத்தில் தீவிரமடைந்த பொருளாதார குறுகியவாதம் உலகச்சந்தையின் முக்கியத்துவத்தைப் பாதித்திருந்தது. இதன் விளைவாக ஏற்பட்ட பாதுகாப்பின்மையை "விரிவான" அல்லது செறிவான நடைமுறைகளின் கலவையைக் கொண்டு ஆய்வு செய்யமுடியும், விரிவான நடைமுறை என்பது மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் சமூக அபிவிருத்தியின் சிறப்புக் கூறுகளை அறியக் கையாண்ட முறையாகும். மனிதர்களின் தொழிற் தெரிவுடன் தொடர்புபட்ட இனக்கூறுகளின் வழிவந்த ஆளுமை வளர்ச்சியாகும். (லாஸ்வெல் 1965:18) இந்த நுட்பங்களைக் கையாண்டு சமூக அழுத்த நிலையைக் குறைப்பதற்கு வழிகாண முடியும். போர்கள், புரட்சிகள் போன்ற வழிமுறைகளைவிடக் குறைந்த செலவுள்ள சமூகமாற்றங்களை உருவாக்கவும் முடியும்.
119

Page 63
தன்னுடைய நூலில் லாஸ்வெல் அகன்ற, ஆழ்ந்த நடைமுறைகளைப் பயன்படுத்தினார். நாடுகளினதும், வர்க்கங்களினதும் நடிபங்குகளை அவர் ஆய்வு செய்தார். சர்வதேச வலுச்சமநிலைப் பெயர்வின் விளைவுகள் போர் நெருக்கடியின் தாக்கங்கள், சுதந்திர இயக்கங்கள், ஏகாதிபத்தியவாதம் போன்றவற்றையும், பொருளாதார நிலைகள், குடிப்பெயர்வுக்கோலங்கள், தொடர்புச் சாதனங்கள் போன்றவையும் அவரால் பகுப்பாய்வு செய்யப் பட்டன. இவற்றிலிருந்து பெறப்பட்ட முக்கிய முடிவுகளில் ஒன்று நாடுகளுக்கிடையிலான பகைமை, அரசியலில் மக்களின் பங்குபற்றல் அதிகரிப்பு, உலகப் பொருளாதாரத் தேக்கம் முதலியவை 1930களின் நடுப்பகுதியில் மிக ஆபத்தான நிலையைத் தோற்றுவித்தன.
ஒப்பீட்டளவில் ஐக்கிய அமெரிக்கா உலகளாவிய போக்குகளிலிருந்து தனிமைப்பட்டிருந்தது. அடிமைப்பிரச்சினையானது ஒர் உறுதியானவர்க்க அடையாளம் உருவாவதைத் தடுத்தது. அமெரிக்கா தன்னை ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட தனித்துவவாதியாக ஆக்கிக்கொண்டால் சோசலிசம் அங்கு வேகமாகப் பரவிவிடும் என லாஸ்வெல் கேலியாகக் குறிப்பிட்டார். ‘ஓர் அமெரிக்க மூலதனம்’ என்னும் நூலில் கூட்டு ஆர்வத்தைத் தூண்டக் கூடிய ஒரு வழிமுறையையும் கூறினார். "இந்நூல் தடிப்பாகவும் ஒரு கோஷம் போன்ற தலைப்பையும் கொண்டிருக்க வேண்டும். தடிப்பான புத்தகம் அதிகாரத் தகுதியைக் குறித்து நிற்பதால் பொதுமக்கள் அதனை வாசிப்பதற்கு பின்னிற்பர். அவர்கள் அப்புத்தகத்தைப் புதினமாகக் கருதுவார்கள். இப்புத்தகமானது வரைபடங்களையும், அட்டவணை களையும் கொண்டிருக்க வேண்டும். நூலானது நடை உணர்ச்சியையும், தெளிவின்மையையும், முரண்பாடுகளையும், நச்சுத்தன்மையையும், விளக்கமின்மையையும் கொண்டிருக்க வேண்டும். முடிந்தால் ஆர்வத்தைத் துாண்டவும் கூடாது. அப்பொழுதுதான் இந்நூலை எல்லாரும் வாசித்துவிடும் ஆபத்தைக் குறைக்கமுடியும்”.
ஆளுமையும் அதிகாரமும்
"ஆளுமையும் அதிகாரமும்” (1948) என்னும் தமது நூலில் லாஸ்வெல் சனநாயகத்தின் குறித்த தேவைகளுக்குப் பயன்படும் ஒரு கொள்கை விஞ்ஞானத்தின் பிரதான அம்சங்களை வெளியிட்டார். இந்நூலில் அரசியல்வாழ்வின் உளவியல் அடிப்படைகளை அவர் கையாண்ட விதம் அவரது முன்னைய புத்தகத்தில் அவர் கையாண்ட விதத்தையே ஒத்திருந்தது. ஆனால் அதிகாரம் பற்றிய அவரது ஆய்வு வேறு பட்டிருந்தது. முன்னர் அவர் கற்றறிவாளர்கள் மீது கூடிய முக்கியத்துவம் வழங்கினார்: "நாம் பலரைக் கைவிட்டு சிலரை முக்கியத்துவப் படுத்துகிறோம். என்று நினைப்பது தவறானது. அதிகாரம் என்பது ஒரு ஆளிடை சூழ்நிலையாகும். அதிகாரத்தைப் பெற்றிருப்பவர்கள் அதனால் வலுவூட்டமும் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் வலுவூட்டல்
120

துலங்கல்கள் இருக்கும் வரைதான் மற்றவர்களில் தங்கியிருப்பார்கள்.” முன்னர் அவர் வருமானம், பணிவு, பாதுகாப்பு முதலிய விழுமியங்களை அவை எவ்வாறு வழங்கப்படுகிறது என்ற அடிப்படையில் விளக்கினார். கூடுதலாகப் பெறுபவர்கள் கற்றறிவாளர்கள்; மிச்சத்தைப் பெறுபவர் பொதுமக்கள்’ என அவர் குறிப்பிட்டார். ஆனால் இப்போது அவரது
அழுத்தம் வழங்கப்படும் தன்மையிலிருந்து உறவுமுறைக்கு மாறியிருந்தது.
"பிரமிட்டின் உச்சியில் இருப்பவர்கள் தான் தலைவர்கள்; அவர்கள் கற்றறிவாளர்களாக இருக்க வேண்டுமென்பதல்ல. கற்றறிவாளர் களுக்கும் வெகுசனங்களுக்குமிடையில் உள்ள எல்லை மிகவும் தெளிவற்றது. 'கற்றறிவாளர்கள்’ என்னும் பதம் விவரண அரசியல் விஞ்ஞானத்தில் தலைவர்கள் உருவாகும் சமூக மட்டத்தைக் குறிக்கிறது. சனநாயகத்தில் ‘கற்றறிவாளர்கள் குழு’ (ஆளும் வர்க்கம்) சமூகம் முழுதும் பரந்துள்ளது. (லாஸ்வெல் 1948:109). இதன் அடிப்படையிலேயே நூலின் பிற்பகுதியும் வளர்ந்து வருகிறது. கற்றறிவாளர்களின் கைவினையாற்றும் கருவிகள் பற்றிக் கூறும் குறுகிய யதார்த்த வாதம் கைவிடப்படுகிறது. உலகப் போருக்கு பின்னதான இந்தப் புதிய அணுகுமுறையில் மக்கள் கற்றறிவாளர்களின் சூழ்ச்சித்திறனுக்குப் பலியாவதில்லை. இதற்குப் பதிலாகத் தலைவர்கள் எனப்படுவோர் மக்களின் சம்மதத்தைப் பெறப் பெரு முயற்சி செய்கிறார்கள். சனநாயகம் என்னும் எண்ணக்கரு படைப்பாற்றல்மிக்க, இணக்கம் நிறைந்த ஓர் ஆளிடை உறவுகளின் வலையமைப்பைக் குறித்து நிற்கிறது. இதிலிருந்து விலகிச் செல்வது சனநாயகத்துக்கு எதிரானதும் அழிவைத் தரக் கூடியதுமாகும்.
லஸ்கியைப் போல லாஸ்வெல்லும் அறிவார்ந்த கலந்துரையாடல், தெளிவான தீர்மானம் ஆகியவற்றுக்கு அழுத்தம் கொடுத்தார். எனினும் இவற்றை ஏற்படுத்தக்கூடிய உயரிய சிந்தனையுடைய சனநாயகத் தலைமைத்துவம் மாத்திரம் போதுமானது என்று லாவெல் கருதவில்லை. சமூக அவதானிப்புகளைச் செய்யக்கூடிய நாடளாவிய ஓர் அரசியல் விஞ்ஞானிகள் குழுவினரும் தேவை என்று அவர் கருதினார். இவர்களால் இளவயதினரில் ஏற்படும் நெருக்கடிகளைக் கண்காணிக்க முடியும். துரதிஷ்டவசமாக லாஸ்வெல்லுக்கு இவற்றைச் செய்யக்கூடிய ஆளணியினர் கிடைக்கவில்லை. அது மட்டுமல்லாமல் அரசியல் விஞ்ஞானிகளுக்குப் பொருளியலாளருக்கு கிடைக்கும் சமூகமதிப்பும் கெளரவமும் கிடைப்பதுமில்லை. உண்மையில் கூறுவதாயின் ஹரோல்ட் லாஸ் வெல்லும் அவருடைய குருவான சாள்ஸ் . ஈ. மரியமும் சனநாயகத்தைக் கொண்டு நடத்துவது பற்றிக் கூறிய கருத்துக்கள் ஏற்கெனவே ஐக்கிய அமெரிக்காவில் முக்கிய பொருளியலாளர்களின் கடுமையான தாக்குதல்களுக்கு உட்பட்டுள்ளன.
121

Page 64
முடிவுரை
லஸ் கிக்கும் லாஸ்வெல்லுக்கும் இடையிலான ஒற்றுமைகள் வேற்றுமைகள் பற்றிய முக்கிய விடயங்களில் மூன்று அம்சங்கள் முக்கியமானவை. (1) நியாயபூர்வத்தன்மைக்கும் அகவயத்தன்மைக்கும் இடையிலான இடைவினைகள், (2) பொதுத்துறைக்கும் தனியார் துறைக்கும் இடையிலான உறவுகள் மற்றும் (3) அரசியல் நிறுவனங்களுக்கும் சாதாரண பிரசைகளுக்குமான உறவுகள் பற்றி அவர்கள் கொண்டிருந்த கருத்துக்களும அதனைக் கையாண்ட விதமுமாகும்.
(1)
லஸ்கியைப் பொறுத்தவரையில் கல்வியினாற்பக்குவப்படுத்தப்பட்ட தனிமனித அனுபவங்கள் ஒரு நல்ல தீர்ப்புக்கான அடிப்படையாகும். ஓர் அரசியல் சமூகமானது அகவயப்பட்ட அனுபவங்களைக் கூடியவரை பெறவேண்டும் . குறிப்பான கொள்கைத் தீர்மானங்களுடன் சம்பந்தமுடைய அனுபவங்களைக் கொண்ட தனிநபர்களுக்கிடையில் அல்லது குழுக்களுக்கிடையில் அறிவார்ந்த கலந்துரையாடல்களை நடத்தப் பூரண சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறான கலந்துரையாடல்கள் சரியான இடத்தில் சரியான நேரத்தில் நடத்தப்பட்டு அதிலிருந்து வெளிவரும் அறிவானது தீர்மானம் மேற்கொள்ளுதலுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். அத்துடன் அரசியல், பொருளாதார நிறுவனங்களில் தனிநபர்கள் அனுபவங்கள் பெற வாய்ப்பளிக்கப்படல் வேண்டும். அவர்களது அறிவுடைமை பூரணமாக வெளிப்படச் சந்தர்ப்பமளிக்கப்படல் வேண்டும். இத்தகைய ஒரு சமூகத்தில் பிரசைகளின் அகவய அனுபவங்கள் அறிவுபூர்வமான தீர்மானம் மேற்கொள்ளலுக்குப் பெரிதும் பயன்படும். அறிவார்ந்த கொள்கைகள் பிரசைகளின் பூரண அனுபவத்துக்கான அமைப்புகள் ஏற்பட வழிவகுக்கும்.
இதற்குமாறாக லாஸ்வெல் தனிநபர்களின் அகவயத் தன்மை அரசுகளில் காட்டும் ஈடுபாடு வித்தியாசமானது. ஒரு விஞ்ஞானி எவ்வாறு இந்த அரசுகள் தமது சமூகச் சாதனைகளுடனும், சமூக நிறுவனங்களின்போக்குகளுடனும் தொடர்புபட்டுள்ளன என ஆய்வு செய்வதைப் போலவே லாஸ்வெலின் அகவயமான அரசுகள் பற்றிய ஈடுபாடும் காணப்படுகிறது. அகவய அனுபவங்கள் தனிநபர் நடத்தையுடன் நெருக்கமான உறவு கொண்டுள்ளன. பல நனிநபர்களின் நடத்தையை அவதானித்துத் தரவுகளைப் பெறுவதன் மூலமும் உளவியல் கோட்பாடுகளைப் பிரயோகிப்பதன் மூலமும் இவற்றை ஒரு விஞ்ஞானியால் வெளிக்கொணர முடியும். இந்த ஆய்வில் தனிநபர்கள் தரவுகளைப் பற்றியும், கோட்பாடு களைப் பற்றியும் பொதுவாக அறியாதவர்களாகவே இருப்பர்.
122

(2)
(3)
சூழ்நிலையின் அறிவார்ந்த பகுப்பாய்வு வெளி அவதானியான விஞ்ஞானியாலேயே நடத்தப்பட்டது. உண்மையைக் கண்டறிதல் என்பது லாஸ்வெல் குறிப்பிட்டவாறு ஒரு விசேட முயற்சியாகும். பயம், பொறாமை, வேறு உணர்வலைகளின் காரணமாக ஏற்படும் அறிவுபூர்வமற்ற நடத்தைகள் பொதுவாகக் காணப்படுகின்றன. உண்மையில் போர்க்காலங்களில் பல்வேறு நுட்பங்களைப் பயன் படுத்தி இத்தகைய நடத்தைகளை உருவாக்க முடியும். சமாதானக் காலங்களில் அரசியல் விஞ்ஞானி சமூகத்தில் காணப்படும் அழுத்த நிலையை எவ்வாறு குறைக்க முடியும் என அரசாங்கங்களுக்கு ஆலோசனை வழங்க முடியும்; சனநாயகம் என்பது பயிற்றப்பட்ட தொழில்சார் விற்பன்னர்களால் கைவினையாற்ற உருவாக்கப்படும் பொருத்தமான ஆளுமை வகையாகும்.
அரசும் தனிமனிதனும் ஒருவர்க்கொருவர் ஆதரவு காட்டக்கூடிய ஒர் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென எதிர்பார்த்தார். அவருடைய உடன்பாடான சுதந்திரம் என்னும் கருத்தின்படி சமூகம் முழுதும் தனிநபர்களின் நலன்களை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் சட்டபூர்வத்தன்மையைப் பிரசைகள் இழந்துவிடும் அபாயமும் இங்கு இல்லாமலில்லை. பொதுத்துறைக்கும், தனியார்துறைக்கும் இடையில் விரும்பத்தக்க சமநிலையை அடைதல் என்பது மக்களுக்கும் சொத்துக்களுக்குமிடையிலுள்ள உறவுநிலை காரணமாகத் தடைசெய்யப்படுகிறது. முதலாளித்துவ நலன்கள் நிறுவனங்களிலும் மனப்பாங்குளிலும் தேவையான சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் சனநாயக செயன்முறையைத் தடைசெய்தது.
லாஸ்வெல்லின் மாதிரியில் தனிப்பட்ட பிரசைகளுக்கும் அரசாங்கம் மற்றும் அரசியலுக்கும் இடையிலான உறவுகளின் "உள்ளார்ந்த இயக்கநிலை" பற்றிக் கவனம் செலுத்துகிறது. எனினும் இவ்விரண்டு சாராருக்கும் மேலதிகமாக இவ்வுறவுகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஓர் அரசியல் விஞ்ஞானியையும் அவர் அறிமுகப்படுத்துகிறார். லாஸ்வெல்லைப் பொறுத்தவரையில் சனநாயகத்துக்கும் முதலாளித்துவத்துக்குமிடையில் ஒரு பிணக்கு ஏற்படுவதற்கான சந்தர்ப்பமில்லை. அவர் ஒரு கற்றறிவாளர் அரசியல் மாதிரியை முன்வைக்கிறார். அதிகார மூலங்கள் மற்றும் அரசியல் நுட்பங்கள் அடங்கிய மிகவும் சிக்கலான வகைக்குள் வருமானங்களைக் கொண்டிருத்தல் மற்றும் நுகர்வுப்பொருட்களின் கைவினையாற்றல் ஆகிய இரு வாய்ப்புகளை அவர் தன்னுடைய மாதிரியில் கையாளுகிறார்.
லஸ் கி, லாஸ்வெல் ஆகிய இருவருக்குமே அரசியல் வாழ்க்கையானது "மேலிருந்து" கட்சிகள், கற்றறிவாளர்கள் என
123

Page 65
ஒழுங்கமைக்கப்பட்டுள்ள அரசியல் நிறுவன நடவடிக்கைகள் வாயிலாகவே தீர்மானிக்கப்படுகின்றன. எனினும் சாதாரண பிரசைகளைப் பொறுத்தவரையில் வித்தியாசமான மனப்பாங்கு களைக் கொண்டுள்ளனர். லஸ்கி சகல மட்டங்களிலும் சுதந்திரமான கருத்து வெளிப்பாடு, உயிர்த்துடிப்பான பிரசைகள் என்பவற்றின் தீவிர ஆதரவாளராவார். இவர்களை லாஸ்வெல் “கிளர்ச்சி யாளர்கள்" என இலகுவாக வகைப்படுத்திவிடுகிறார்.
லாஸ்வெல் இக் கிளர்ச்சியாளர்கள் தமது பாரிய பிரச்சினைகள் சிலவற்றைத் திருப்திகரமாகத் தீர்த்துக் கொள்ளத் தவறியவர்கள் என வாதிடுகிறார். அவர்கள் தமது ஆளுமைப் பிரச்சினைகளைப் பொது வாழ்க்கையில் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறாாகள். இரண்டு போர்களுக்கிடையில் அரசியலில் மக்களின் பங்குபற்றல் அதிகரித்தது. "பாதிக்கப்பட்ட ஆளுமை கொண்டோர்" (damaged Personalities) அதிகரித்ததே இதன் காரணம் என லாஸ்வெல் கூறினார். 1835இல் ரொக்வில் இத்தகைய தீவிர பொதுமக்கள் பங்குபற்றலை முதிர்ச்சி மற்றும் வலிமையின் வெளிப்பாடு என முடிவு செய்தார். ஆனால் 1935இல் லாஸ்வெல் இதேவகையான தீவிர பொதுமக்கள் பங்குபற்றலை முதிர்ச்சியின்மை மற்றும் பலவீனத்தின் வெளிப்பாடு எனக் கருதினார். ஏதோவொன்று மாறிவிட்டது
124

III
சும்பீற்றரும் ஹயெக்கும் (Schumpeter and Hayek)
வியன்னாவிலிருந்து சவால்
20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சமூகவிஞ்ஞானங்கள் சமூகத்தில் அரசின் தலையீட்டுக்குச் சார்பாகப் புதிய நுட்பங்களையும் நியாயங்களையும் வழங்கத்தொடங்கின. லஸ்கியின் அரசியல் விஞ்ஞானம் மார்க்ஸின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு முழுமையான சமூகப் பொறியியலை (Social engineering) எதிர்பார்த்தது. லாஸ்வெல் பிராய்டின் உதவியோடு தனிமனிதமட்டத்தில் தலையிடும் திட்டங்களை வகுத்தார். அரசும் , பெரும் வர்த்தகமும் சமூகவிஞ்ஞானத்தின் கருத்துக்களுக்கு நம்பகத்தன்மையை வழங்கின.
தலையீட்டை நியாயப்படுத்தல் என்பது முதலாளித்துவ சனநாயகத்தின் இலக்குகளை அடைவதற்கு அத்தலையீட்டின் பங்களிப்பில் தங்கியுள்ளது. அமெரிக்க, பிரித்தானிய முதலாளித்துவ சனநாயகத்தில் ஒரு கருத்தொருமிப்பு ஏற்படத் தொடங்கியிருந்தது. அதாவது பெரும்பாலான மக்களுக்கு ஒரு சீரிய வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலேயே பொருளாதார, அரசியல் ஏற்பாடுகளின் வெற்றி தங்கியுள்ளது என்பதே அதுவாகும். சீரியவாழ்வு என்பது போதிய ஓய்வும் அதனை அனுபவிக்க வருமானமும், நுகர்வுத் தெரிவும், பொருட்கள் கிடைத்தலும் உள்ள நிலையைக் குறிக்கும். தலையீடுகளை அதிகரிக்கும் போது அதன் விளைவுகள் தனியாள் சுதந்திரம், சமூக முன்னேற்றத்துக்காக எவ்வளவு விட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற அடிப்படையிலேயே அளவிடப் படல் வேண்டும். ஜோசப் சும்பீட்டரும், பிரட்ரிச் ஏ. ஹயெக்கும் இந்த விட்டுக் கொடுப்பின் இலாப நட்டங்களைக் கணக்கிட்டனர். இவர்கள் இருவரும் முரண்பாடான முடிவுகளுக்கே வந்தனர் என்பதை இவ்வத்தியாயம் விளக்குகிறது.
1944 இல் ஹயெக்கின் "அடிமைத்தனத்தை நோக்கி" (The Road to Serfdom (1976a)) என்னும் நூல் வெளியிடப்பட்டது. சார்ள்ஸ் ஈ. மிரியம் (லஸ்வெல்லின் ஆசிரியர்) அந்நூலைப்பற்றி அமெரிக்கன் சமூகவியல் சஞ்சிகையில் ஓர் ஆய்வுரை எழுதினார். அவ்வாய்வுரையில் நூலின் உள்ளடக்கத்தையும் ஆசிரியரையும் விமர்சித்தார். மிரியம் நிர்வாகிகளின் மீது முற்றாகச் சந்தேகம் கொள்ளும் ஓர் அணுகுமுறையை உறுதியாக
125

Page 66
எதிர்த்தார்: "ஹயெக்கின் சிந்தாந்தத் தின்படி சுதந்திரம் இருப்பது சந்தையில் மட்டும்தான். அரசியலின் அடிப்படை வன்முறை என்றும், பொருளாதாரத்தின் அடிப்படை தெரிவுச் சுதந்திரம் என்றும் அவர் கூறுவதில்தான் அவரது அடிப்படைத் தவறு உள்ளது.” முதலாளித்துவ சனநாயகம் பற்றிய இருவரது கருத்துக்களும் இந்த விமர்சனத்தில் உள்ளன என்று கூறுவது இவ்விரண்டு ஆசிரியர்களுக்கும் நீதி செய்வதாகாது. எனினும் ஹயெக்கின் நூல் உருவாக்கிய தீவிர உணர்வலைகளை அவ்விமர்சனம் பிரதிபலித்தது எனக் கூறலாம். திட்டமிடுவோரை 'சோசலிசவாதிகளுடன் இணைக்கும் ஹயெக்கின் நூல் மிரியத்துக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இந்நூல் “நியூயோர்க் ரைம்ஸ்'சின் அதிக விற்பனை நூல்வரிசையில் இடம் பிடித்ததோடு அதனுடைய சுருக்கம் “றிடர்ஸ் டையெஸ்ட்' சஞ்சிகையிலும் வெளிவந்தது.
மிரியமும், ஹயெக்கும் 1945 ஏப்ரல் மாதத்தில் சிக்காக்கோ பல்கலைக்கழக 'வட்டமேசை வானொலி நிகழ்ச்சி' யில் ஒன்றாகப் பங்கு பற்றியபோது திரும்பவும் எதிர்ப்புணர்வுகள் தலைதுாக்கின. மிரியம் ஹயெக்கை திருத்த முற்பட்டதுடன் ஹயெக் ஓர் அண்மைக்கால ஐரோப்பிய வந்தேறு குடிமகன் என்பதையும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அவரை ஹயெக்கும் சும்மா விட்டுவிடவில்லை: 'மிரியம் போன்றவர்கள் அடைய முடியாதவற்றைச்சனநாயகத்தின் மேல் சுமத்துகின்றனர். எனவே அவர்களே சனநாயத்தை அழிக்க முயல்பவர்கள்’ (கார்ல் 1974; 291-2) எனக்குறிப்பிட்டார்.
முதலாளித்துவ சனநாயகம் பற்றிய விவாதத்தில் ஹயெக்கின் தலையீடு ஆங்கில அமெரிக்கப் புலமையில் வியன்னா புத்திஜீவிகளின் ஓர் ஆழமான பங்களிப்பு எனக் கூறலாம். ஜோசப் சும்பீட்டரின் “முதலாளித்துவம், சோசலிசம், சனநாயகம்" (1981) என்னும் நூல் முதன்முதலில் 1942இல் வெளிவந்தது. முதலாளித்துவத்தின் எதிர்காலம் பற்றிய அவரது சோர்வு நிரம்பிய முடிவுகள் மிரியம், லாஸ்வெல் போன்ற அறிவுஜீவிகளுக்கு மனச்சஞ்சலத்தை ஏற்படுதியது. சிக்காக்கோ பல்கலைக்கழகத்தின் பல சமூக விஞ்ஞானிகள், அரசியல் மற்றும் அரசாங்கத் தலையீடுகள் சிக்கலான ஒரு கைத்தொழிற் சமூகத்தில் உண்மையான சனநாயக விழுமியங்களை மேம்படச் செய்கின்றன என நம்பினார்கள். ஹயெக்கின் "புதிய பழமைவாதம்' அவர்களது முறைகளில் பாரதூரமான மனக்கிலேசத்தை ஏற்படுத்தியது. சும்பிட்டரின் "புதிய யதார்த்தவாதமும் ' இலக்குகளை அடையமுடியுமென்ற நம்பிக்கையைப் பின்னடையச்செய்தன. ஹயெக்கும், சும்பீட்டரும் முதலாம் உலகப் போரில் அழிந்துபோன ஒஸ்ரோ - ஹங்கேரியப் பேரரசின் வழிவந்தவர்களாவர். சும்பீட்டர் 1883 இல் மொறோவியாவில் பிறந்தார், வியன்னா பல்கலைக்கழகத்தில் கற்று சட்டத்துறையில் பட்டம் பெற்றபின்னர் லண்டன்பொருளியல் கல்லூரியில் பொருளாதார ஆய்வுகளை அவர் நடத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் பல மதிப்பார்ந்த பதவிகளை வகித்தார். கிராஸ் பல்கலைக்கழகத்தில்
126

அரசியல் பொருளாதார பேராசிரியர், 1919 ஒஸ்திரியாவின் முதலாவது குடியரசு அரசாங்கத்தில் திறைசேரி செயலாளர், வியன்னாவில் ஒரு தனியார் வங்கியின் தலைவர் போன்றவை அவற்றுள் சிலவாகும். இதன்பின்னர் பொன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமை யாற்றிய சும்பீட்டர் 1932 இல் விலகி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பதவியேற்றார். 1950 இல் தமது மரணம் வரை அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலேயே இருந்தார்.
ஹயெக் மிகவும் வித்தியாசமானவர், அவர் 1899 இல் வியன்னாவில் விஞ்ஞானிகளும் அறிஞர்களும் நிரம்பிய ஒரு குடும்பத்தில் பிறந்தார். 1929 இல் அவர் வியன்னா பல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளாதாரப் பீடத்தில் பணியாற்றினார். இரண்டு வருடங்களுக்குப் பினனர் அவர் லண்டன் பொருளியல் கல்லூரியில் விரிவுரையாற்ற அழைக்கப்பட்டார். அதே வருடத்தில் அவர் அங்கு பொருளாதார விஞ்ஞானப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இந்த ஆங்கில அடித்தளத்தில் நின்று கொண்டே ஹயெக் சமகால அரசியற்போக்குகளுக்கெதிராகத் தமது தாக்குதலைத் தொடுத்து "அடிமைத்தனத்தை நோக்கி” என்னும் நூலை எழுதினார். இதன்பின்னர் ஹயெக் சிக்காக்கோ (1950-62) வுக்குச் சென்றார். அங்கிருந்துதான் அவர் தனது "அரசியல் யாப்பும் சுதந்திரமும்” (The Constitution and Liberty, 1976b) என்னும் நூலை வெளியிட்டார். பின்னர் பிறிபேர்க் (1962-7) சல்ஸ்பேர்க் (1974 முதல்) பல்கலைக்கழகங்களில் பதவியேற்றார். 1974 இல் ஹயெக் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசினை வென்றார்.
ஹயெக், சும்பீட்டர் இருவருமே 1930களில் முதலாளித்துவ சமூகங்களில் சோசலிசம் நோக்கிய ஒரு பெயர்வை அவதானித்தனர். 1930களின் இறுதிப்பகுதியில் முதலாளித்துவத்தின் வெற்றியே அதனுடைய சுயஅழிவுக்கு வழிவகுக்கிறது என வாதிட்டனர். ரஷ்யாவில் பரிசோதிக்கப் பட்ட சோசலிசமான மத்தியமயப்பட்ட சோசலிசமே முதலாளித் துவத்துக்குப்பின்னர் முதலாளித்துவத்தின் வாரிசாக அமையும். இன்னும் சில வருடங்களுக்குப்பின்னர் நவீன நிறுவனங்களில் தோன்றிய சோசலிசப் போக்குகள் முதலாளித்துவத்துக்கு அச்சுறுத்தல்களாக அமையும் என ஹயெக் வாதித்திட்டார்.
சும்பீட்டர், தான் எதிர்பார்த்த பொருளாதார அரசியல் சமூகப் போக்குகளைத் தீர்க்கமாகவும் அறிவுரீதியாகவும் விளக்குவதற்கு தனது சக்தியைச் செலவிட்டார். பொருளாதாரத் தேக்கம் பற்றிப் பரவலான பயம் இருந்த கால கட்டத்தில் சும்பீற்றர் அடையப்பட்ட பாரிய பொருளாதார நன்மைகளைச் சுட்டிக்காட்டியதோடு தொடர்ந்தும் அவை அடையப்படும் எனச் சுட்டிக்காட்டினார். இதற்கு மாறாகத் தற்போதைய அரசியற் போக்குக் காரணமாக ஏற்பட்ட இலக்குகளைத் துல்லியமாகவும் அறிவுபூர்வமாகவும் இனங்காணுவதற்கு ஹயெக் தமது கருத்தைச் செலுத்தினார். தேசிய பொருளாதாரங்களில் திட்டமிடுதலின் நன்மைகள்
127

Page 67
பற்றி ஒப்பீட்டளவில் மதிப்பிருந்த ஒரு காலகட்டத்தில் இழக்கப்பட்ட தனியாள் சுதந்திரங்களைப்பற்றி அவர் சுட்டிக்காட்டியதோடு தனியாள் சுதந்திர இழப்புத் தொடரும் எனவும் குறிப்பிட்டார். சும்பீற்றரைப் போலல்லாது 1950 களில் அமெரிக்கா உலகளாவிய பொருளாதார அரசியல் எழுச்சி பெற்றதைப் பார்ப்பதற்கு அவர் வாழ்ந்திருந்தார். அவர் தனது நம்பிக்கையைச் சோசலிசத்தின் மீது வைக்கவில்லை. மாறாக "அமெரிக்காவில் வளர்கின்ற தெரியாத ஒரு நாகரீகத்தின்" மீதே அவர் தனது நம்பிக்கையை வைத்தார்.
புத்தாக்கமும் முயற்சியாளனும்
சும்பீற்றர் பொருளியலாளரினதும் வரலாற்று, சமூகவியலாளரினதும் திறமைகளை ஒன்றிணைத்தார். எனினும் அவரது தொழில்சார் ஈடுபாடு பொருளாதாரத்திலேயே இருந்தது. உண்மையில் ஒரு திறமை வாய்ந்த தொழில்சார் பொருளியலாளரின் விசேட அறிவானது திட்டமிடலின் முக்கியத்துவம் அதிகரிக்க அதிகரிக்க மிகக் காத்திரமான பங்களிப்பை அது செய்யும் என அவர் நம்பினார். சோசலிசத்தின்கீழ் பொருளியலாளர்கள் தவிர்க்க முடியாத முக்கியத்துவம் கொண்டிருப்பார்கள்.
சும்பீட்டரின் பொருளியற் பகுப்பாய்வு 1911 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “பொருளாதார அபிவிருத்திக் கோட்பாடு” (Theory ofEconomic Development (1934) "வர்த்தக வட்டங்கள்” என்னும் நூலிலும் (Business Cycles) என்னும் நூலிலும் காணப்படுகின்றது. வரலாற்றுச் சமூகவியல் பற்றிய அவரது சிந்தனைகள் இரண்டு கட்டுரைகளைக் கொண்ட அவரது நூலான "ஏகாதிபத்தியமும் சமூக வகுப்புக்களும்” (Imperialism and Social Classes) (1951) என்பதில் காணப்படுகிறது. முதலாவது கட்டுரையான "ஏகாதிபத்தியங்களில் சமூகவியல்" 1919 இல் வெளியிடப்பட்டது. இரண்டாவது கட்டுரையான "ஓரினச்சூழலில் சமூகவகுப்புகள்” 1927இல் வெளியிடப்பட்டது. இவ்விரண்டு பகுப்பாய்வுப் போக்குகளும் இரண்டாம் உலகயுத்தத்தின்போது வெளியிடப்பட்ட முதலாளித்துவம், சோசலிசம், சனநாயகம் என்னும் நூலில் காணப்படுகிறது.
சும்பீட்டரின் அணுகுமுறையைப் பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்: இலாபகரமான முதலீட்டுக்காக புதிய வாய்ப்புகளைச் சுரண்டிக் கொள்வதால் அரசுக்கு ஏற்படும் இடையூறுகளில் தமது கவனத்தைச் செலுத்தினார். இந்நிலையை அவர் "சுழல் ஓட்டம்" (Circular flow) எனக் குறிப்பிட்டார். புதியதொரு துறையில் முதன்முதலாகப் பிரவேசிக்கும் ஒருவர்க்கு உச்சஇலாபத்தை வழங்குவதற்குப் போட்டி பூரணமானதல்ல என எண்ணினார். இவ்வாறான தொழின் முயற்சிகளின் பெருக்கமானது, கடன், பணவீக்கம், பணத்தின் வழங்கல் மற்றும் விலையேற்றம் ஆகியவற்றில் தங்கியுள்ளது. உற்பத்தித்திறனின் புதியமட்டங்கள்
128

ஸ்தாபிக்கப்பட்ட பின்னரே அதீக உற்பத்தியும் மந்தநிலையும் பின்னர் தொடரும். இங்கு சும்பீற்றரின் “முதலாளித்துவ செயன்முறை பற்றிய கோட்பாட்டுரீதியான, வரலாற்றுரீதியான, புள்ளிவிபரப் பகுப்பாய்வு” பற்றிய விளக்கம் தரப்படமாட்டாது. எனினும் இச்செயன்முறையின் மத்தியில் வங்கிமுறையின் கடன்வழங்கல் திட்டத்தின் ஆதரவுடன் செயற்படும் ஒருமுயற்சியாளன் முக்கியமான பங்காற்றுகிறான். புத்தாக்கம் என்பது கண்டுபிடித்தல் என்பதைவிட மேலான விடயமாகும். சும்பீற்றரின் கூற்றுப்படி “தொழில் நுட்பமாற்றமானது பண்டப்பொருட்களின் உற்பத்தியில் ஏலவே பயன்பாட்டிலுள்ளது. பொருள் உற்பத்தியில் மாற்றங்களை ஏற்படுத்தல், புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தல்; புதிய ஒழுங்கமைப்புகளை உருவாக்குதல் போன்ற. பொருளாதார வாழ்வின் விடயங்களை வித்தியாசமாகச் செய்தலையே தொழில்நுட்பமாற்றம் என்பது குறிக்கிறது" (சும்பீற்றர் 1939;84), ஒரு முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார வாழ்வில் சகல அம்சங்களிலும், கஷ்டங்களிலும், பிரச்சினைகளிலும் புத்தாக்கம் மையமாக உள்ளது. இதற்கு ஒரு முக்கிய காரணம் புத் தாக்கம் அமைதியாகவும் , தொடர்ச்சியாகவும் , படிப்படியாகவும் ஏற்படுவதில்லை: மாறாக அவைகள் ஒன்றுதிரண்டு ஒரேநேரத்தில் சிலவேளைகளில் அழிவுபடுத்தும் விளைவுகளுடனும் வருகின்றன. "இதன் விளைவாகப் பொருளாதாரப் பரிணாம வளர்ச்சி இயல்பாகவே சமமற்று, தொடர்ச்சியற்று, இணக்கமற்றுக் காணப்படுகிறது. முதலாளித்துவத்தின் வரலாறு முழுவதும் வன்முறைக் கிளர்ச்சிகளும் பயங்கர அழிவுகளும் காணப்படுகின்றன; ஏற்கெனவே உள்ள அமைப்புகளை அது தகர்த்தெறிந்துள்ளது," என சும்பீற்றர் கூறுகிறார்.
இங்கு சும்பீற்றர் உற்பத்தி முறையில் மாற்றங்களுடன் தொடர்புடைய மார்க்ஸிய மாதிரியான புரட்சிகர வர்க்க முரண்பாடுகளைக் குறிப்பிடவில்லை. இங்கு ஏற்படக்கூடிய மாற்றத்தின் முகவர் ஒரு கைத்தொழில் நிறுவனத்தை அமைக்கும் முயற்சியாளன் அல்லது சம்பளம் வாங்கும் ஊழியன் அல்லது முக்கிய பங்காளியாக இருக்கலாம். இங்கு முக்கியமானது சொந்தமுடைமை அல்ல, தலைமைத்துவத்துவமே. இதனைப்பார்க்கத் தவறியமையும், முயற்சி நடவடிக்கைகள் ஒரு தனித்துவமுடைய செயற்பாடு என்பதை இனங்காணத் தவறியமையும் கார்ல் மார்க்ஸ் உட்படப் பழம் பொருளியலாளர்கள் பொதுவாக விட்ட தவறாகும். இரண்டு விடயங்கள் இங்கு முக்கியமானவை: முதலாவது முயற்சியாளன் தனது சொந்த நிதியை முதலிடுவதில்லை. புத்தாக்கத்துக்கான வாய்ப்பை உணரும் ஒருவர் அந்த வாய்ப்பைக் கைப்பற்றும் முன்னர் மூலதனத்தைத் தேடிக் கொள்ளவேண்டும். இவர் மூலதனத்தைக் கொண்டிருப்பவராயின் தனது பணத்தையும் முதலீடு செய்ய முடியும். இப்படி நடப்பது மிகக் குறைவாகும். பொதுவாக நிதிநிலையங்கள் அல்லது வேறு மூலங்களிலிருந்து நிதிவளம் கடனாகத் திரட்டப்படுகிறது. ஒரு புத்தாக்கவாளன் ஒரு முயற்சியாளன் என்ற
129

Page 68
முறையில் மற்றவர்களின் பணத்தை நட்டமாக்குகிறான். இரண்டாவது முயற்சியாளர்கள் ஒரு சமூகவர்க்கத்தை உருவாக்குவதில்லை. வெற்றியடையும் முயற்சியாளர்கள் முதலாளித்துவ வர்க்கத்தில் சேர்ந்து கொள்வர். ஆனால் ஆரம்பத்தில் சகல முயற்சியாளர்களும் சகல வகுப்புகளிலுமிருந்தே வருகின்றனர். அவர்களது குடும்பப் பின்னணி பலவிதமாக இருக்கக் கூடும். இதனை முதலாளித்துவம் மற்றும் பூர்ஷ்வா சமூகத்தின் அடிப்படைச் சமூகவியல் எனச் சும்பீற்றர் கூறுகிறார்.
உயர் குடியினரும் பூர்ஷ்வா சமூகமும் (Aristocracy and bourgeois Society)
ஏகாதிபத்தியம் மற்றும் சமூகவகுப்புகள் பற்றிய சும்பீற்றரின் இரு கட்டுரைகளும் உயர்குடியினரதும், பூர்ஷ்வாக்களினதும் வாழ்க்கைப் பாங்குகைளயும், வாழ்க்கை நலன்களையும் பற்றி ஆய்வு செய்கிறது. ஏகாதிபத்தியத்தின் சமூகவியல் என்னும் தமது கட்டுரையில் 19 ஆம் நூற்ாண்டின் இறுதிப்பகுதிகளிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்
பகுதிகளிலும் ஐரோப்பாலிலும், அமெரிக்காவிலும் உருவாகிய ஏகாதிபத்திய இயக்கங்கள் சமகால முதலாளித்துவத்தில் ஊன்றியிருக்க வில்லை எனச் சும் பீற்றர் கூறுகிறார். அவைகள் பூர் ஷவா வெளிப்பாடுகளல்ல. பதிலாக, தேய்வடையும் உயர்குடியாட்சியின் கடைசி எறி ஆகும். சமகால ஏகாதிபத்தியம் முதலாளித்துவ உற்பத்திமுறை மற்றும் அதனோடு தொடர்புடைய நாகரீகம் ஆகியவற்றின் உள்ளார்ந்த பண்புக் கூறாக அமைவதற்குப் பதிலாக பூர்ஷ்வா சமூகத்துக்கு எதிரான அரசியல் வார்த்தை ஜாலங்களையும் அரசியல் நலன்களையும் கொண்ட ஒரு கலவையாக விளங்கியது.
பிரித்தானிய மக்கள் பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் நலன்களுக்குத் தியாகம் செய்யத் தயாராக இருக்கவில்லை என்பதை "டிஸ்ரேலி" இனங்கண்டு கொண்டார். ஆனால் ஜோசப் செம்பர்லின்னால் இதனை விளங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் ஏகாதிபத்தியத்தை மிகவும் பாரதூரமாக எடுத்துக் கொண்டு தனது சகல வளங்களையும் அதற்காகப் பயன்படுத்தினார். இதன் வளைவாக இங்கிலாந்து அவரை நிராகரித்தது.
சமாதானத்தைச் சிதறடிக்கும் ஒரு கருவியாகப் போரினைக் கொள்ளாத பழைய சமூகங்களில் ஏகாதிபத்தியத்துக்குச் சிறப்பான இடம் இருந்தது. புராதன ஏகாதிபத்தியர்களான எகிப்து, பாரசீகம் போன்றவை போருக்கு எப்போதும் தயார் நிலையிலிருந்தன. போர், கொள்ளை, பேராசை வெறி ஆகியவற்றின் அடிப்படையில் சமூகம் வளர்ந்தது. 14 ஆம் லூயியின் காலத்தில் அரசு ஒரு யுத்த இயந்திரமாகவே காட்சி அளித்தது. காமக் களியாட்டங்கள், விளையாட்டுகள், விழாக்கள் முதலியவற்றிலேயே
130

மூழ்கிக்கிடந்த உயர்குடியினர் ஏதாவது ஒரு போர்’ நடக்காதா என ஏக்கங் கொண்டிருந்தனர்.
நவீன ஏகாதிபத்தியம் இவ்வாறான தனது ‘மூதாதையரின்' பண்பாட்டைத் தனக்கு அடிப்படையாகக் கொண்டது. மேலோட்டமாகப் பார்க்கும் போது இத்தகைய வாதம் வெப்லன் முன்வைத்த “உயிர் கொல்லும் இயல்பூக்கம்” (Predatory instinct) பற்றிய விளக்கத்தைப் போன்றதைப் போலத் தோன்றும். இதில் முக்கிய வித்தியாசமானது சும்பீற்றரின் முயற்சியாளன் 'படைக் கலப் போருடைக்குப் பதிலாக ‘ஆட்' (LOunge Suit) அணிந்திருந்தார். அதாவது முயற்சியாளன் மானியமுறையான நடத்தைகளைக் கொண்டிருக்கவில்லை. வெற்றிகரமான பொருளாதார தொழின் முயற்சிகளின் தலைவர்கள் படிப்படியாகச் சமூகத்தை அடிப்படுத்தினர். அதைப்போன்று அவர்களுடைய கோட்பாடுகள்ான "செயற்பாடு, ஆர்வம், தேவைகள், நம்பிக்கைகள்’ ஆகியனவும் சமூகத்தில் முக்கியம் பெற்றன. அறிவுஜீவிகள், தொழில்சார் விற்பன்னர்கள், கைத்தொழில் ஊழியர்கள் ஆகியோர் ‘ஒரு சிறப்புத்தேர்ச்சியுள்ள யந்திரமயமான ஓர் உலகத்தைக் கட்டியெழுப்ப உதவினர். சனநாயகத் தன்மை, தனிநபர்பண்பு, அறிவுபூர்வத்தன்மை ஆகியவை நவீன கலாசாரத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவி நின்றன. இயல்பூக்கம் பின்னணிக்குத் தள்ளப்பட்டது. முன்னர் போருக்குத் தயாராகவிருந்த சக்தி முழுவதையும் வர்த்தகப்போட்டி விழுங்கியது.
ஏகாதிபத்தியத்தின் துணையான பாதுகாப்பு வரிகள் விதிப்பதைச் சில உறுதியான முயற்சியாளர்கள் விரும்பினார்கள். வெளிநாடுகளிலிருந்து வரும் சந்தைப் போட்டிகளைத் தவிர்ப்பதே இதன் நோக்கம். அவர்கள் பழைய சமூகத்தின் பெருநிலச் சுவாந்தார்களைத் தம்முடன் கூட்டுச் சேர்த்துக் கொண்டனர். ஒழுங்கு படுத்தப்பட்ட முதலாளித்துவத்துக்குள் வங்கியாளர்கள், கைத்தொழிலதிபர்களுக்கிடையிலும் கூட்டு ஏற்பட்டது. இதன் மூலம் உள்ளுர் பொருளாதாரக் கூட்டணி மேலதிக மூலதனத்தின் ஏற்றுமதியுடன் இணைக்கப்பட்டது. ஏகாதிபத்தியத்தை முதலாளித்துவ வளர்ச்சியின் ஒரு தவிர்க்க முடியாத கட்டம் எனக் கூறுவதைச் சும்பீற்றர் நிராகரித்தார். அத்துடன் முதலாளித்துவத்தின் வளர்ச்சி ஏகாதிபத்தியமாக மாறும் என்பதையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
96). US (Social classes in an ethnically homogeneous environment) 6T6örp கட்டுரையில் வர்க்க அமைப்புச் செயன்முறையை நேரடியாகவே சும்பீற்றர் கையாளுகிறார். வர்க்கக் கோட்பாட்டின் அல்லது வர்க்க அலகின் அடிப்படை, தனிநபரை விடக் குடும்பமேயாகும் என்பது அவரது வாதத்தின் அடிப்படையாகும். காலப்போக்கில் குடும்பங்கள் வர்க்கங்களுக்குள் மேலும் கீழுமாக மாறுகின்றன. சில வேளைகளில் வர்க்க எல்லைகளையும் கடக்கின்றன. ஒருவர்க்கத்துக்குள் அல்லது வர்க்கத்துக்கு வெளியே நகர்தல் சாதாரண நிகழ்வாகவும், அசாதாரண நிகழ்வாகவும் காணப்படுகின்றன.
131

Page 69
அது ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் ஒரு பிறப்பை அல்லது மரணத்தை ஒத்தது. இவை ஒவ்வொருநாளும் ஏற்படுவதில்லை. அதே நேரத்தில் ஏற்படாது எனக் கூறுவதற்குமில்லை. வர்க்கங்களுக்குள் குடும்பங்களின் நிலையும் சமூகங்களுக்குள் வர்க்கங்களின் நிலையும் அவற்றின் அங்கத்தவர்களின் சாதனையில் தங்கியுள்ளது. சும்பீற்றருக்கு இந்த அம்சம் மிக முக்கியமாகத் தெரிந்தது. ஏனெனில் அவர் முகாமைத்துவம் மற்றும் தலைமைத்துவம் தொடர்பான தகுதிகளுக்குக்கூடிய முக்கியத்துவம் கொடுத்தார். புத்தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு குடும்பத்தின் இயலளவு அதனுடைய நகர்வுக்குப் பெருந்துணையாக இருக்கிறது. உயர் குடியாட்சி அல்லது பூர்ஷ்வா போன்ற ஒரு வர்க்கம் (சும்பீற்றர் உழைப்பாளர் வர்க்கத்தைக் கவனத்திற் கொள்ளவில்லை) இரண்டு பிரமாணங்களின் அடிப்படையில் சமூகத்தினால் தொடர்ந்து அளவிடப்படுகிறது. அவை அவ்வர்க்கத்தின் சமூக செயற்பாட்டின் ஒப்பீட்டளவிலான முக்கியத்துவமும் அச்செயற்பாட்டினை அது எந்தளவுக்கு வெற்றிகரமாகக் கொண்டுநடத்துவது என்பதுமாகும்.
முன்னர் குறிப்பிட்டது போல உயர் குடிஆட்சியினரின் செயற்பாடு போர் செய்வதாக இருந்தது. வீரப்பண்பு நிறைந்த பெரும் வீரர்களை அது தந்துள்ளது. ஆனால் 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இச் செயற்பாடு படிப்படியாகக் குறைந்து விட்டது. அரசானது தனது அதிகாரத்தை ஒரு புதிய நிர்வாக இயந்திரத்தினுTடாக நிலை நிறுத்தியுள்ளது. வர்த்தகம் மானிய முறைக்கு மேலாக உயர்ந்து விட்டது. போரிடும் வர்க்கத்தின் மேலாண்மை நவநாகரீக வழிகளினால் குறைந்து மங்கிவிட்டது. உயர்குடி ஆட்சியினர் அரசுடன் நெருக்கமாக இருந்த காரணத்தினால் தமது பழைய செயற்பாட்டை இழந்து விட்டாலும் செல்வத்தையும் செல்வாக்கையும் தக்க வைத்துக் கொண்டனர். அரச இயந்திரத்துக்கு ஆளணி வழங்குதல் அரசின் சொத்துக்களைப் பராமரித்தல் போன்ற புதிய செயற்பாடுகளை இவர்கள் ஏற்றுக்கொண்டனர். உயர்குடி ஆட்சியினர் பணத்தினால் கவரப்படடனர். இதன் மூலம் சொத்துக்களைச் சேர்க்கும் மனப்பான்மையைப் பெற்றனர். 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்குள் பூர்ஷ்வா வர்க்கமானது சமூகத்தில் தன்னையும் தனது விழுமியங்களையும் ஒரு முக்கியமான நிலைக்கு உயர்த்திக் கொண்டது. உயர்குடியினரைப்போலல்லாது இந்தப் புதிய வகுப்பினர் தமது நிலையை உறுதிப்படுத்திக்கொள்ள வெற்றிகரமான சாதனையைத் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டியிருந்தது. மறுதலையாக வெற்றியடையாத குடும்பங்கள் பூர்ஷவா வர்க்கத்திலிருந்து வேகமாக வெளியேறினர். எனவே தொடர்ச்சியான தோல்விகள் உயர் குடியினரைப் பாதித்ததைப்போல பூர்ஷ்வாக்களைப் பாதிக்கவில்லை. எனினும் வேறெரு விடயமும் இங்கு முக்கியமானது. உயர்குடி வகுப்பினர் பெற்றிருந்த கெளரவத்தைப்பூர்ஷ்வா வர்க்கத்தினால் பெறமுடியவில்லை. உயர்குடி வகுப்பினர் சமூகக் கோபுரத்தின் உச்சியில் வீற்றிருந்தனர். பூர்ஷ்வாக்களினால் அதனை அடைய முடியவில்ல்ை இன்றும் நவீன கைத்தொழில் அதிபர் உயர்குடி
132

வகுப்பினர் போன்ற ஒரு தலைவரே என சும்பீற்றர் குறிப்பிடுகிறார். சும்பீற்றர் இக்கூற்றினை “முதலாளித்துவம், சோசலிசம் மற்றும் சனநாயகம்” என்னும் தமது நூலில் விளக்குகிறார்.
மார்க்சிசக் கோட்பாடும் சோசலிச அரசியலும்
சும்பீற்றர் முதலாளித்துவம் சோசலிசம் மற்றும் சனநாயகம் (1981) என்னும் தமது நூலில் கார்ல் மார்க்சுடன் வாதம் புரிகிறார். மார்க்ஸ் ஆக்கபூர்வமான சமூக விஞ்ஞானத்தை அறிவுக்கப்பாற்பட்ட வேணவாக்களுடன் இணைத்ததைச் சும்பீற்றர் வியந்தார். ஒரு சமூகவியலாளர் என்ற அடிப்படையில் அவரால் வர்க்கவாதத்தின் தலைவிதியையும் முதலாளித்துவத்தின் தலைவிதியையும் ஒன்றாக இணைக்கும் ஓர் ஆய்வு முறையை உருவாக்க முடிந்தது. அதன் மூலம் சோசலிசம் மாத்திரமே வர்க்க பேதமற்ற சமூகமாகும் என மார்க்ஸ் காட்ட முனைந்தார். அதேபோலவே பொருளாதார வகுதியான "ஊழியத்தையும்" (Labour) சமூகவியல் வகுதியான 'உழைப்பாளரையும்’ ஒன்றாக இனங் கண்டதின் மூலம் அவர்தனது பொருளியலையும் தனது சமூகவியலையும் ஒன்றாக இணைத்தார்.
ஒரு பொருளியலாளன் என்ற அடிப்படையில் வர்த்தக வட்டங்களை விளங்கிக் கொள்வதில் மார்க்சின் பங்களிப்பு மிக முக்கியமானது. முதலாளித்துவப் பரிணாமம், முதலாளித்துவ நிறுவனங்களை உடைத்து நொறுக்கிச் சிதறடித்துவிடும் என்னும் மார்க்சின் கருத்து தூரநோக் குடையவர்களையும் சாமர்த்தியமாக ஒன்றிணைத்தது. எனினும் மார்க்சும் அவரது வழிவந்தவர்களும் வன்முறையை எதிர்வு கூறிய போதிலும் பரிணாமத்தின் எப்பகுதியையும் புரட்சி மாற்றியமைக்கும் என ஏற்றுக்கொள்வதற்கு மார்க்ஸ் உள்ளார்ந்த தர்க்கவியலில் தோய்ந்திருந்தார். சும்பீற்றரின் கூற்றுப்படி வெளியே மார்க்சின் கருத்துக்கள் கவர்ச்சியாக இருந்த போதிலும் அடியில் பழமைவாதத்தின் தாக்கம் இல்லாமலில்லை. முதலாம் உலகயுத்தம் தேசிய ஆளும் வர்க்கங்களின் மதிப்பையும் கெளரவத்தையும் பாதித்தது. இதனால் கூடிய நன்மையடைந்தவை ஐரோப்பிய சோசலிசக் கட்சிகளே. இரண்டாம் உலகயுத்தம் பழைய ஆளும் வர்க்கத்துக்கு எதிராகச் சோசலிசத்தின் செல்வாக்கை இன்னும் உயர்த்தியது. இந்தப் போருக்குப் பின்னர் ஆங்கில, அமெரிக்க உலகளாவிய ஆட்சி "அறநெறி ஏகாதிபத்தியமாக (Ethical Imperialism) உருவெடுக்குமென சும்பீற்றர் எதிர்வு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: ஐரோப்பாவில் தொழிலாளர் அல்லது சமூக சனநாயக அரசாங்கங்கள் மேம்படும். போர்க்கால உயர்வரிவிதிப்பு, பணவீக்கம், அதிகாரத்துவக் கட்டுப்பாடு ஆகியவை தொடர்ந்திருக்கும். பல சமகால சோசலிசவாதிகள் அதனை விரும்ப மாட்டார்கள். உண்மையில் அது “பாசிச அம்சங்களை”
133

Page 70
சும்பீற்றர் ஒரு புறத்தில் முதலாளித்துவம் அழிந்துவிட்டது எனக் கூறிப் பழைமைவாதிகள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார். மறுபுறத்தில் மார்க்சின் கருத்துக்கள் பிழையானவை எனவும் கூறினார். எனினும் சோசலிசம் தவிர்க்க முடியாதது. சோசலிசம் என்பது சில உரிமைகளைக் கைவிடுவதன் விளைவு என்பதைச் சும் பீற்றர் அறிந்திருந்தார். அத்துடன் தலைமைத்துவத்தின் தரத்திலும் முதலாளித்துவம், சோசலிசம், சனநாயகம் ஆகியவற்றைப் பற்றிய மக்களின் விளக்கத்திலும் சோசலிசத்தை அடைவது தங்கியுள்ளது.
முதலாளித்துவம் தொடர்ந்திருக்க முடியுமா?
முதலாளித்துவம் தொடர்ந்தியங்க முடியாது எனவும், முதலாளித்துவத்தின் வெற்றியிலேயே அதன் அழிவிற்கான கருவும் இருக்கிறது எனவும் சும்பீற்றர் கருதினார். அத்துடன் அதன் அழிவில் சோசலிசம் உதயமாகும் எனவும் அவர் எதிர்வு கூறினார். 1920களின் முன்னரான 50 ஆண்டு காலப்பகுதியில் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்தது. அடுத்த 50 ஆண்டுகளிலும் கூட அதன் வளர்ச்சி தொடர்ந்திருக்கும். வருமானப் பங்கீட்டில் ஒப்பீட்டளவில் மாற்றம் ஏற்படவில்லை. எனினும் குறைந்த வருமானம் பெறுவோரின் வாழ்க்கைத் தரத்தில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது. புத்தாக்கத்தின் காரணமாக நுகர்வுப் பொருட்கள் உற்பத்தியாக்கப்பட்டு வெகுசன சந்தையில் பாய்ச்சப்பட்டுள்ளன. “முதலாளித்துவம் இராணிகளுக்கு பட்டுக் காலுறைகளை மேலும் மேலும் உற்பத்தி செய்வதில் வெற்றியடையவில்லை. அவற்றைத் தொழிற்சாலையில் உழைக்கும் பெண்களும் மிகக் குறைந்த முயற்சியுடன் பெறுவதற்கு ஏற்பாடு செய்வதில் வெற்றிபெற்றுள்ளது," எனச் சும்பீற்றர் குறிப்பிட்டார்.
இவ்வாறானதொரு சீரிய சாதனையை இரண்டு காரணிகள் ஏற்படுத்தின. முதலாவது தொழில் முயற்சிக்கு முதலாளித்துவம் வினைத்திறனுடன் அளித்த வெகுமதியும், தோல்விக்கு அளித்த தண்டனையும். இரண்டாவது இரக்கமற்ற 'ஆக்கபூர்வமான அழிவுச் செய்முறையின் விளைவுகள். நுட்பம், உற்பத்தி, வளங்களை வழங்கல், ஒழுங்கமைப்பு முறைகள் ஆகியவை பொருளாதார நடைமுறைகள்ையும், நிறுவனங்களையும் வெற்றிகரமாக உருவாக்கி அழித்தன. விலைப் போட்டிக்குப் பதிலாக உற்பத்திப் பொருளிலும் செயன்முறையிலும் போட்டி ஏற்பட்டன. தனியுரிமையும் சிலருரிமையும் இந்தச் செயன்முறைக்குத் துணையாக அமைந்தன. புத் தாக்கம் நிறைந்த நிறுவனங்களை அவை போலிகளிடமிருந்து காப்பாற்றின. முதலீட்டு வாய்ப்புகளுக்குக் குறைவிருக்கவில்லை. முயற்சியாளர்களுக்கு மீண்டும் மீண்டும் புத்தாக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் நிறையவே இருந்தன.
முதலாளித்துவ நாகரீகம் முறையானதாகவும், அறிவு பூர்வமானதாகவும் தனித்தன்மையுடையதாகவும் இருந்தது. அது தனியார் துறையின்
134

திருப்தியைத் தன்னுடைய நோக்காகக் கொண்டிருந்தது. வர்த்தகர்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் ஒழுக்க நியமங்களையே சர்வதேச உறவுகளிலும் பிரயோகித்தனர்.முதலாளித்துவத்தின் மையம் பூர்ஷ்வா வகுப்பினராவர். இவ்வகுப்பினரின் இயங்காற்றல் அதன் வெற்றிகரமான தொழின் முயற்சியாளரில் தங்கியிருந்தது. அவர்களது புத்தாக்கம் செய்யும் செயற்பாடு பூர்ஷ்வா வகுப்புக்கும் முதலாளித்துவ முறைமைக்கும் அர்த்தத்தையும் வலிமையையும் கொடுத்தது. துரதிர்ஷ்டவசமாக முதலாளித்துவ வளர்ச்சியுடன் சார்ந்திருந்த அறிவுபூர்வத் தன்மையும் அதிகாரத்துவ முறையும் தொழில் முயற்சியாளன் மீது அழிவு நிறைந்த தாக்கத்தைக் கொண்டிருந்தன.
புத்தாக்கம் சாதாரண விடயமாக மாறியது. தொழில்நுட்பவிருத்தியானது குழுக்கள், அதிகாரத்துவத் திணைக்களங்கள் மற்றும் பயற்றப்பட்ட நிபுணர்களால் பொறுப்பேற்கப்பட்டன. மக்கள் மாற்றம் என்பதை ஏற்கும் மனப்பாங்கினை வளர்த்துக் கொள்வதால் ஆளுமையின் சக்தி குறைந்தது. புத்தாக்கம் (Innovation) பொதுமைப்படுத்தப்பட்டது. "இந்நிலைமை முழு பூர்ஷ்வா வர்க்கத்தையும் பாதித்தது. ஏனெனில் பூர்ஷ்வா. . . . . . . ፴፰® வர்க்கம் என்ற அடிப்படையில் தொழின் முயற்சியாளன் மீது தங்கியுள்ளது; அவனுடன் வாழ்ந்து அவனுடனேயே மறையும் தன்மையையும் கொண்டுள்ளது.”
இன்னுமொரு பலவீனம் இதுவரை பூர்ஷ்வா வர்க்கத்துக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கிவந்த அமைப்பின் அழிவாகும். உண்மையில் பூர்ஷ்வாவுக்கு அரசியலுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ளும் ஆர்வ்ம் இல்லை. உயர்குடி வகுப்பினரே முதலாளித்துவ சமூகத்தில் அரசியல் தலைமைத்துவத்தைக் கொண்டிருந்தனர். அவர்களே முதலாளித் துவத்திற்குக் கவர்ச்சியை உண்டுபண்ணினர். முதலீட்டாளர்களுக்கும், கைத்தொழில் அதிபர்களுக்கும் இந்தச் சக்தி இருக்கவில்லை. இதில் வினோதமானது என்னவெனில் முதலாளித்துவத்தின் வெற்றி படிப் படியாக உயர்குடியாட்சியின் சமூக அந்தஸ்தை தேய்த்து வந்தது. பூர்ஷ்வா அல்லாத வகுப்பினரின் அரசியல் ஆதரவு இல்லாமல் பூர்ஷ்வாக்கள் அரசியல் அனாதைகளே. பூர்ஷ்வாக்களுக்கு எப்போதும் ஒர் எஜமான் வேண்டும். மானிய முறையின் இறுதி அழிவு முதலாளித்துவத்தின் இறுதிக்கும் கட்டியம் கூறியது.
முன்னேறிவரும் சிலருரிமை (Oligopoly) யின் சிறுவர்த்தக வளர்ச்சி முதலாளித்துவத்தின் அழிவுக்கு உதவியது. ஒப்பீட்டளவிலான சுதந்திரப் போட்டியில் சிறு சொத்துரிமையாளர்கள் பிரவேசித்தனர். இவர்கள் தனியார் சொத்துரிமை, சுதந்திர ஒப்பந்தம் செய்தல் ஆகியவற்றுடன் இணைந்திருந்தனர். தொழிலிருந்து வெளியேறியபோது இவர்கள் முதலாளித்துவ முறைமைக்குத் தாம் வழங்கிய ஆதரவையும் குறைத்தனர். இவ்வாறான சூழ்நிலைகளில் முதலாளித்துவத்தின் சமூக சூழ்நிலை
135

Page 71
முதலாளித்துவவாதிக்குப் பகையாக மாறியது. துரதிஷ்டவசமாக முதலாளித்துவம் ஓர் உணர்வு பூர்வமான சார்பு நிலையை உருவாக்கிக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக அது ஒரு விமர்சனப்பாங்கினை உருவாக்கிக் கொண்டது. உண்மையில் புத்திஜிவி என்பவன் முதலாளித்துவத்தின் ஒரு படைப்பாவான். ஆனால் புத்திஜீவிகள் சோசலிச மொழியைப் பாவித்து முதலாளித்துவத்தையே தாக்கத்தொடங்கினார்கள். இறுதியாக பூர்ஷ்வா குடும்பத்திலும் நம்பிக்கை இழக்கத் தொடங்கியது. புதிய கைத்தொழில் வம்சங்களை உருவாக்குவதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. குடும்பவாழ்க்கையை உணவுச்சாலைகளும், விடுதிகளும் சுவீகரித்துக் கொண்டன. மனைவியும் பிள்ளைகளும் ஒரு தொழின் முயற்சியாளனின் பார்வையில் மங்கத் தொடங்கினர். பூர்ஷ்வாக்களின் செயற்பாடுகளும் எதிர்கால நம்பிக்கைகளும் இழக்கப்பட்டதைத்தொடர்ந்து அவர்களின் உளளார்ந்த சுய நம்பிக்கைகளும் குறைந்து சென்றன. மானிய முறை அழிவதற்கு எடுத்த அதே காலத்தை (சில வேளை இன்னுமொரு நூற்றாண்டு) முதலாளித்துவமும் அழிவதற்கு எடுக்கலாம். ஆனால் சும்பீற்றரைப் பொறுத்தவரையில் முதலாளித்துவத்தின் அழிவு சுவரில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.
சோசலிசம் இயங்க முடியுமா?
சோசலிசம் இயங்க முடியுமா? முடியும் என்றே சும்பீற்றர் கூறுகிறார். சும்பீற்றரின் கருத்துப்படி சோசலிசம் என்பது உற்பத்திக் கருவிகள் யாவும் ஒரு மத்திய அதிகாரத்திடம் கையாளிக்கப்பட்டுள்ள ஒரு நிறுவன அமைப்பாகும். இதனையே வேறு வார்த்தைகளில் சொன்னால் சமூகத்தின் பொருளாதார விவகாரங்கள் யாவும் இம்முறைமையில் பொதுத்துறையின் கீழ் இருக்கும், தனியார் துறையிடமல்ல. ஹயெக் போன்றோர் சோசலிச அதிகாரத்துவம் சமாளிக்க முடியாத அளவுக்கு சிக்கலான பணிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும் எனச் சந்தேகங்களை எழுப்பினும் சும்பீற்றரைப் பொறுத்தவரையில் சோசலிசத்தினால் பல சேமிப்புகளைச் செய்ய முடியும். சோம்பேறித்தனமான செல்வந்த வகுப்பை ஒழிப்பது அவற்றிலொன்றாகும். தேசிய பொருளாதாரத்தில் போட்டிகளினால் ஏற்படும் செலவுகளை அதனால் குறைக்க முடியும். திட்டமிடல், வட்டிவீத அதிகரிப்புப் போன்ற பல்வேறு பக்க விளைவுகளைத் தவிர்க்க முடியும், எந்நேரமும் போராட்டங்களில் மூழ்கிக் கிடக்கும் முதலாளித்துவ அரசைவிட சோசலிசமானது வளங்களின் அமைதியான நிர்வாகத்திற்கு வழிவகுக்கும், பொதுத்துறையிடமிருந்து தனியார் துறையின் பரிசுத்தத்தைப் பாதுகாப்பதற்கு ஏற்படும் சக்தி மிச்சமாகும். பொதுத்துறை, தனியார் துறை எனப்படும் பிரிவானது உண்மையில் வர்த்தக சமூகங்களில் மட்டும் காணப்படும் விசேடமான அம்சமாகும்.
136

ஒப்பீட்டளவில் சோசலிச அமைப்பில் அதற்கு முன்னுள்ள முதலாளித்துவ கலாசாரத்தை ஒரளவுக்குத்தான் மீளவடிவமைக்க வேண்டியிருக்கும். விவசாயிகள், தொழிற்சாலை ஊழியர்கள், அலுவலகங்களின் எழுதுவினைஞர்கள் ஆகியோர் முன்னரைப் போலவே தொழில் புரிவர். பூர்ஷ்வா வகுப்பின் திறன்கள் விரயமாக்கப்பட மாட்டாது. ஆட்சியினரின் ஒழுக்க அதிகாரத்தின் அடிப்படையிலேயே சமூக கட்டொழுங்கு பேணப்படும். ஒவ்வொரு பிரசையும் இம்முறைமையின் பொருளாதார தர்க்கவியலை அறிந்திருப்பர். எவ்வாறெனினும் இம்முறைமையில் 'ஒ வேலைநிறுத்தம் என்பது ஒரு கலகத்துக்கு சமனாகும்.'
சோசலிசம் சில நிபந்தனைகளின் கீழ் பொருளாதார ரீதியாகச் சாத்தியமானது. ஆனால் அது சனநாயகரீதியானதா? இதற்குப்பதிலளிக்க முன்பதாகச் சும்பீற்றர் சனநாயகம் என்றால் என்ன? என்னும் விடயம் பற்றி ஆய்வு செய்தார். மரபுரீதியான சித்தாந்தத்தின்படி சனநாயகம் என்பது தனிநபர் விருப்பங்கள் அறிவுரீதியாக ஒன்றிணைக்கப்பட்டுப் பொது விருப்பத்தை அடைவதாகும். இப்பொது விருப்பமானது பொது நன்மையை அடைவதற்கான மிகப் பொருத்தமான வழிமுறையைக் காட்டும். ஆனால் பொதுசன அபிப்பிராயம் என்பது பல அம்சங்களில் அறிவுபூர்வமானதல்ல. முரண்பட்ட விருப்பங்கட்கிடையில் இணக்கத்தைக் காண்பது இலகுவில் அடையக் கூடியதுமல்ல. எனினும் சாதாரணமக்கள் வீட்டிலும் வேலைத் தலத்திலும் தமது உடனடி நலன்கள்பற்றி விபரம் தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் பொது விவகாரங்களில் பிரவேசிக்கும் பொழுது யதார்த்த உணர்வு என்பதை முற்றாக இழந்து விடுகிறார்கள். இம்மரபு ரீதியான சித்தாந்தம் வரலாற்றுக் காரணங்களாலும் சித்தாந்தக் காரணிகளாலும் நின்று நிலைத்தது. ஆனால் அது யதார்த்தத்தை விளக்கவில்லை.
சும்பீற்றர் இன்னுமொரு சனநாயக மாதிரியை முன்வைத்தார். அவருடைய கருத்துப்படி மக்களின் பிரதான பங்களிப்பு என்பது பல்வேறு அரசியற் கட்சிகளிலிருந்து தமது பிரதிநிதிகளைப் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்வதாகும். இப்பிரதிநிதிகளே உண்மையான ஆட்சியை நடாத்துவதற்கு அரசாங்கத்துக்கு ஆதரவு தருவர். உண்மையில் சனநாயகம் என்பது மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல்வாதிகளிடையே நடக்கும் போட்டியாகும். சும் பீற்றர் இம்மாதிரியை ஏழு காரணங்களுக்காக விதந்துரைத்தார்.
(அ) இம்மாதிரியானது சனநாயகத்தை, பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் முறையாகக் கொள்கிறது. இதில் அரசியல் இலக்குகள் முக்கியமானதாகக் காணப்படவில்லை
(ஆ) இம்முறையானது தலைமைத்துவத்தையும் அதன் நடிபங்கினையும்
ஏற்றுக் கொள்கிறது.
(இ) அபிப்பிராயத்தை உருவாக்கத் தமக்குள் போட்டியிடும் துறைசார்ந்த
நலன்களின் இடையீடுகளை ஏற்றுக் கொள்கிறது.
137

Page 72
(ஈ) அரசியற் தலைவர்களைத் தெரிவு செய்யும் போட்டிச் செய்முறை
ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
(உ) கலந்துரையாடற் சுதந்திரத்துக்கு முக்கிய இடம் வழங்கப்படுகிறது.
(ஊ) வாக்கு முறை மூலம் தலைவர்கள் தமது அதிகாரத்தை இழக்க
முடியும்.
(எ) பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இது மக்களின் விருப்பம் என்பதைவிடக் கூடிய யதார்த்தபூர்வமானது.
சனநாயக முறையில் சந்தைக்கும், சனநாயக அரசியல் முறைமைக்கும் ஒரு தெளிவான ஒப்புவமை உள்ளது. போட்டியிடும் அரசியல் விற்பனையாளர்களின் முன்னெடுப்புக்கு மக்கள் பதிலிறுக்கின்றனர். ஒரு விற்பனை நிலையம் தனது கண்ணாடி யன்னல்களுக்கு ஊடாகத் தெரியும் பொருட்களைத் திரும்பத்திரும்ப ஒழுங்குபடுத்தி வைப்பதைப் போல அரசியற்கட்சிகளும் தமது கொள்கைகளை மாற்றி அமைக்கின்றனர். சந்தையில் உள்ள ஒரு வர்த்தக சங்கத்தைப் போல அவர்கள் தமது அரசியற் போட்டிகளையும் ஒழுங்குபடுத்துகின்றனர். உற்பத்திப் பொருளைப் பிரசித்தப்படுத்துவதற்குநிறையச்சக்திசெலவழிக்கப்படுகிறது. அதேபோல கட்சியும் விளம்பரம், கோஷங்கள், உளவியல் நுட்பங்கள் ஆகியவற்றை முன்வைக்கிறது. இவ்விடயங்கள் சும்பீற்றரின் நூலில் காணப்படுகின்றன.
சோசலிசம் சனநாயகரீதியானதா எனும் கேள்விக்கு சும் பீற்றர் சனநாயகரீதியானதோ அல்லது சனநாயகரீதியற்றதோ ஆனால் சோசலிசம் இவ் இரண்டு வழியிலும் காத்திரமாக இயங்கமுடியும் என வாதிடுகிறார். ஒரு சனநாயகம் நிலவவேண்டுமாயின் சில நிபந்தனைகளும் நிறைவேற்றப்படவேண்டும். உயர்ந்த தரமுள்ள அரசியல் வாதிகள் தேவையானவர்களே. இவர்கள் அரசியல் வாழ்க்கைக்குப் பழக்கப்பட்ட மட்டங்களில் இருந்து வருதல் விரும்பத்தக்கது. சனநாயகங்கள் சுயமான வரையறைக்குள் தம்மை மட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். அதாவது ஆகப்பரந்த பகுதியைச் சனநாயகம் கட்டுப்படுத்த முயலக்கூடாது. சனநாயகத்துக்குத் துணையாக உறுதியான வினைத்திறனுள்ள அதிகார அமைப்பு இருக்க வேண்டும். ஒரு சனநாயகத்தில் சுய கட்டுப்பாடும் மிதவாதத் தன்மையும் நிலவ வேண்டும்.
முதலாளித்துவ சமூகங்கள் இந் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வல்லமையுடையன. சோசலிச சமூகங்கள் சனநாயகரீதியாக இயங்க விரும் பின் அதிகாரத்துவ முகாமைத்துவத்துக்கும் , அரசியல் முகாமைத்துவத்துக்கும் உள்ள வேறுபாடுகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். சனநாயகமானது ஒரு தொழிற்சாலையில் திறமையான நிர்வாகத்தில் தலையிட அனுமதிக்கப்படக் கூடாது. சனநாயகத்தைச் சமநிலைப்படுத்தல் என்பது மிகவும் நுணுக்கமான பணியாகும். சிலவேளைகளில் சோசலிச சனநாயகம் முதலாளித்துவ சனநாயகத்தைக்
138

காட்டிலும் ஒரு மோசமான குழப்பநிலையைத் தோற்றுவிக்கலாம். சும்பீற்றரின் இம் முடிவு ஹயெக்கைக் கவர்ந்திருக்கலாம்.
அடிமைத்தனத்தை நோக்கி
ஹயெக் சும்பீற்றரைப் போல வர்த்தக வட்டங்களில் ஆர்வங் காட்டினார். அத்துடன் சோசலிசத்தின் முன்னேற்றத்துக்குப் பின்னணியிலிருந்த பரிணாம வாதப் போக்குகள் பற்றியும் அவர் சிந்திக்கத் தொடங்கினார். உதாரணமாக நவீன கைத்தொழில் வளர்ச்சி காரணமாகத் தொழிலாளர் வர்க்கம் நன்மையடைந்தது என்னும் சும்பீற்றருடைய கருத்துடன் அவர் உடன்பட்டார். எனினும் சும்பீற்றர் தனது பொருளியல், வரலாற்றுச் சமூகவியல் ஆகியவற்றை முதலாளித்துவம், சோசலிசம் மற்றும் சனநாயகம் என்னும் வாதத்துக்குள் அடக்கியதைப் போலன்றி ஹயெக் 'தூய பொருளியல் கோட்பாட்டின் பிரச்சினைகளை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு அடிமைத்தனத்தை நோக்கி (The Road to Serfdom) என்னும் நூலை எழுதினார். இதனைத் தொடர்ந்து பின்னர் அவர் “சுதந்திரத்தின் யாப்பு" (The Constitution & Liberty ) (1976 b ) 6T6örgyid IT66)uid, glib, 3L'La Tâasb LDigb gig5igJüb (Law, Legislation and Liberty) (1973-9) என்னும் 3 தொகுதிகள் கொண்ட நூலையும் எழுதினார்.
சும் பீற்றர் இனங்கண்டதைப் போலல்லாது ஒரு வித்தியாசமான பரிணாமவாத செய்முறையை ஹயெக் உணர்ந்தார். சும்பீற்றரைப் பொறுத்தவரையில் கண்டறியும் மேதாவிலாசமும் காரண காரியத் தொடர்பும் கற்பனையும் பரிணாமத்தை ஊக்குவித்தன. ஹயெக் மாற்றங்களின் ஊற்றை அறிய முடியாது எனக் கூறினார். சகல தனிநபர்களது கற்றல் செயற்பாடும் தடையில்லாமல் வளர்க்கப்படுவது அவசியமென்றும் அதனால் முழுச் சமூகமும் பயன்பெறும் எனவும் கூறினார். இவ்விடயத்தில் ஹயெக் தனது எதிரிகளில் ஒருவரான ஹரோல்ட் லஸ்கியின் கருத்துக்களைத் தழுவி நிற்கிறார். எனினும் லஸ்கி தனிமனித அநுபவங்களின் நல்விளைவுகள் அரசின் ஊடாக முழுச்சமூகத்துக்கும் பயன்படவேண்டும் எனக் கூறுகிறார். ஆனால் ஹயெக் அது அரசின் தலையீடு இன்றிச் சந்தை மூலமாக நடைபெறவேண்டும் என்கிறார்.
சும்பிற்றரும் ஹயெக்கும் 1930 களின் பொருளாதாரத் தேக்க நிலையை வேறுபட்டவழிகளில் வியாக்கியானம் செய்தனர். சும்பீற்றர் தொடர்ச்சி அம்சத்தை வலியுறுத்தி, தேக்கநிலை இருந்தபோதும் முதலாளித்துவம் தொடர்ந்து வளர்ச்சியுறும் எனவும் வாதிட்டார். சிலவேளை எதிர்காலத்தில் சப்தமில்லாமல் சோசலிசமாக மாற்றமடையாலாம். ஆனால் ஹயெக் 1931 ஒரு தீவிர திசைமாற்றத்தை ஆகக் குறைந்தது இங்கிலாந்திலெனினும் ஏற்படுத்தியது எனக் கூறுகிறார். 1931 வரை தலையிடாக் கொள்கையே நிலவியது. இதன் காரணமாகப் பொருளாதாரத் தொழின்முயற்சியும்,
139

Page 73
விஞ்ஞானமும் வளர்ச்சியடைந்தன. வாழ்க்கைத்தரமும், வசதிகளும், பாதுகாப்பும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சியடைந்தன. அதைப்போல எதிர்பார்ப்புகளும் அதிகரித்தன. ஹயெக் (1976 a) பின்வருமாறு கூறுகிறார். "மக்கள் தமது சொந்தத் தலைவிதியைத் தாமே நிர்ணயிக்கமுடியும் என எண்ணினர். வெற்றிகளைத் தொடர்ந்து ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்தன. ஆனால் முன்னேற்றத்தின் வேகம் மிக மிகக் குறைவாக இருந்தது. இந்த முன்னேற்றத்துக்குக் காரணமாயிருந்த அதே கோட்பாடுகள் வேகமான முன்னேற்றத்துக்குத்
தடைக்கற்கள் எனக் கருதப்பட்டன.
1840 களிலேயே பல ஐரோப்பியர்கள் முன்னேற்றத்துக்கான கருவியாகக் கருதி சோசலிசத்தினை நோக்கித் திரும்பினர். சோசலிசம் பற்றிய ஹயெக்கின் வரைவிலக்கணம் சும்பீற்றரின் வரைவிலக்கணத்தைப் போன்றதேயாகும். ஒரு மத்திய திட்டமிட்ட பொருளாதாரத்துக்குச் சார்பாகத் தனியார் தொழின் முயற்சிகளைக் கைவிட வேண்டுமென்று ஹயெக் கருதினார். இங்கு ஆச்சரியமான விடயம் என்னவெனில் தாராண்மைவாதத்தின் வெற்றியே அதன் வீழ்ச்சிக்கும் காரணமாகியது. எனினும் தாராண்மைவாத முதலாளித்துவத்திலிருந்து மத்திய திட்ட மிடலுக்கான மாற்றம் எவ்வாறு செய்யப்படல் வேண்டும் என்பதில் ஹயெக்கின் கருத்து சும்பீற்றரின் கருத்திலிருந்து மாறுபட்டது.
இம்மாற்றம் எதிர்காலத்தில் ஏற்படும் என்று சும்பீற்றர் கூறுகிறார். இது முதிர்ச்சியடைந்த முதலாளித்துவ சமூகங்களில் தனியுரிமை அல்லது சிலருரிமை ஆகியவற்றின் விளைவாக ஏறபடும். இதற்கு முரணாக இம்மாற்றம் 1840 களிலேயே தொடங்கி விட்டது என ஹயெக் வாதிடுகிறார். இங்கிலாந்தில் மட்டும் 1930 கள் வரை அம்மாற்றம் ஆரம்பிக்கவில்லை. இம்மாற்றமானது பரிணாமத்தின் இயற்கைச் செய்முறையாக ஏற்படவில்லை. ஆனால் சமூகக் கட்டமைப்பின் பலாத்காரமான செய்முறையாகவே ஏற்பட்டது. பொருத்தமற்ற கோட்பாடுகள் தமது திறமைகளைப் பற்றிய சரியான அனுமானம் இல்லாதவர்களினால் கையாளப்பட்டன. சோசலிசமானது, மேற்கத்தைய நாகரீகத்தை உருவாக்கிய தனிநபர்வாத ம்ரபு முற்றாகக் கைவிடப் படுவதையும் முழுமையான மாற்றத்தையும் வேண்டிநிற்கின்றது. சமூகக் கட்டமைப்பிற்கான முயற்சிகள், சமூகத்திலிருந்த பிழையான விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. சனநாயக சோசலிசம் என்பது அடைய முடியாதது. சுதந்திரத்துக்காகத் திட்டமிட முடியாது. ஒரு மத்திய திட்டமிடல் அமைப்பானது எவ்வளவு தீர்மானங்களை மேற்கொள்கிறதோ அந்தளவுக்குத் தனிநபர்கள் தமது சொந்த வாழ்க்கையைத் திட்டமிட்டுக் கொள்வதற்கான சுதந்திரம் குறைக்கப்படுகிறது. இவற்றில் சிறப்பான வழி நன்றாகச் சிந்தித்து அமைக்கப்பட்ட ஒரு சட்ட அமைப்புக்குள் போட்டியை வளர்ப்பதாகும். சந்தை விலைகள் தனிநபர்களுக்குத் தமது நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தக்கூடிய தகவல்களை வழங்குகின்றன.
140

அரசாங்கத்துக்குத் தெளிவான ஆனால் முற்றாக வரையறுக்கப்பட்ட நடிபங்கு வழங்கப்பட வேண்டும். தடுக்கப்பட்ட செயற்பாடுகளுக்குத் தடைவிதித்தல், சுகாதார, பாதுகாப்புநியமங்களைப் பேணுதல், தனிப்பட்ட சொத்துக்களின் சட்ட உரிமையை வலியுறுத்தல், ஒப்பந்த சுதந்திரம், கூட்டுத்தாபனங்களும் பதிப்புரிமைகளும், சூழல் மாசடைதலைத் தடுத்தல் போன்ற தேவையான சேவைகளைச் சந்தைகளினால் வழங்க முடியாத, இடைவெளிகளை நிரப்புதல் போன்றவற்றை அரசாங்கம் செய்தல் வேண்டும்.
தொழில்நுட்ப முன்னேற்றமும் மிகவும் சிக்கலான கைத்தொழில் அமைப்புகளின் அபிவிருத்தியும் சோசலிசத் திட்டமிடலை தவிர்க்க முடியாததாக்கி விடவில்லை. உண்மையில் மத்திய திட்டமிடல் 1878 முதல் ஜேர்மனியில் அபிவிருத்தி அடைந்தது. அந்நேரத்தில் இக் கைத்தொழில் சமூகம் பிரித்தானியாவை விட "இளமையாக இருந்தது. அரைநூற்றாண்டு கழிந்தும் தாராண்மை வாதத்தின் முன்னோடியாக இன்றும் விளங்கியது.
நிபுணர்கள், சிறப்புத்தேர்ச்சி கொண்டோர் ஆகியோருடைய மொத்த விரக்தியானது மத்திய திட்டமிடலுக்கு அரசியல் ஆதரவை வழங்கியது. துரதிஷ்டவசமாகத் தாம் விரும்பிய சகல சமூக முன்னேற்றங்களையும் ஒரேயடியாக அடைந்து விடமுடியாது என்னும் உண்மையை அவர்கள் உணரவில்லை. தமது பல்வேறு திட்டங்களையும் காத்திரமாக ஒன்றிணைக்கத் தேவையான அறிவை அவர்கள் ஒருவருமே பெற்றிருக்கவில்லை. இதனால் திட்டமிடலுக்கும் சந்தைப்போட்டியின் சாதனைக்குமிடையில் பொருத்தமிருக்கவில்லை.
ஒரு முழுமையான சமூகத்திட்டமிடலானது படிமுறையான இலக்குகளைக் குறிப்பிடவேண்டும். இந்நோக்கத்திற்காக 'ஒரு முழுமையான ஒழுக்கக் கோவை' அவசியமானது. எனினும் நவீன மேற்கத்தைய ஒழுக்க வியலானது இதனைத் தருவதற்குத் தவறிவிட்டது. ஒரு சனநாயகத்தில் திட்டமிடல்பற்றிய அடிப்படைப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இப்பிரச்சினையைத் தீர்க்க லஸ்கி காட்டிய தீர்வினில் ஹயக் ஆர்வம் காட்டவில்லை. சோசலிச அரசாங்கமானது சனநாயக செயன்முறையைப் பற்றிக் கூடுதலாக அலட்டிக் கொள்ளக்கூடாது என்னும் கருத்தினை லஸ்கிகொண்டிருந்தார். ஹயக்கைப் பொறுத்தரையில் இவ்விடயங்களை நிபுணர்களிடம் விடுவதில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. சும்பீற்றர் அரசியற் கட்டுப்பாட்டுக்கும் அதிகாரத்துவக் கட்டுப்பாட்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு ஒரு சோசலிச அரசியல் ஒழுங்கில் விரும்பத்தக்கது என வாதித்தார். இது அதிகாரிகள் மற்றும் தொழில்சார் விற்பன்னர்களின் பக்கச்சார்புக்குக் கூடிய வாய்ப்பளிக்கும் எனக் ஹயக் கருதினார். சனநாயகமானது ஒருதலைப்பட்ச அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளுமாயின் அது பெறுமதியற்றதாகும். பாதுகாக்கப்படவேண்டிய சனநாயகம் என்பது
141

Page 74
சமாதானத்தையும் சுதந்திரத்தையும் வழங்குவதாகும். உண்மையான தெரிவு என்பது யாருக்கு என்ன கிடைக்கும் என்பதை ஒரு சிலர் தீர்மானிக்கும் முறைமைக்கும் (திட்டமிடலாளர்) இரு காரணிகளினால் அதனைத் தீர்மானிக்கும் இன்னொரு முறைமைக்கும் இடையில் காணப்படுகின்றது. இவ்விரண்டு காரணிகளாவன திறமைகள், தொழில் முயற்சிகள் என்பவற்றின் பங்கீடும் புலப்படாத சூழ்நிலைகளின் செயற்பாடுமாகும் . திட்டமிடும் சமூகமானது சொத்துரிமையின் செல்வாக்கைச் சர்வ வல்லமை கொண்ட அரசின் அதிகாரத்துக்கு மாற்றீடாக வைத்தது. திட்டமிடலானது வாழ்க்கையில் தோல்விகளையும், பின்னடைவுகளையும் விதிப்பயன் என ஏற்றுக்கொள்ளும் பழக்கத்தை உடைத்தது. எல்லாவற்றுக்கும் பொறுப்பானவர்கள் நிபுணர்கள் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏதாவது தவறுகள் ஏற்படின் நிபுணர்களையே குற்றம் சாட்டக் கூடியதாகவும் இருந்தது . ஒரு சோசலிச அரசில் யார், எதனை, எப்போது, எவ்வாறு பெறவேண்டும்’ என்பது திட்டமிட லாளர்களினால் தீர்மானிக்கப்படுகிறது. இது ஹயெக்கின் பார்வையில் எது சிறந்தது, சரியானது என்னும் ஒரு சிலரது தீர்ப்பு பலர்மீது திணிக்கப்படுவதால் அது சமூகநீதியாகாது. திட்டமிடுவோர்களே தனிமனித, குழுக்களின் செயற்பாடுகளையும் அவர்களுக்கு அதனால் ஏற்படும் நன்மைகளையும் தீர்மானிப்பர். ஆட்களைத் தமது நியாய நியமங்களுக்கு ஏற்ப வேறுபடுத்துவர். இது சந்தையை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தின் பெறுமானங்களிலிருந்து பெறப்படும் கருத்து என்பது இங்கு குறிப்பிடக் கூடிய விடயம். திட்டமிடுவோரின் நியாயங்களையும் நீதியையும் சமூகம் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காகப் பிரசாரமும் கொள்கை வலிந்துTட்டலும் நடைபெறும்.
சோசலிச திட்டமிடலாளர் உழைக்கும் வர்க்கத்துக்கு ஆதரவாக இருந்தமையினால் சிறுபூர்ஷ்வா மற்றும் சேவை வகுப்பினர் மத்தியில் ஒரு எதிர்ப்பியக்கம் உருவாகியது. அதிருப்தியின் காரணமாக தேசிய சோசலிசமும் பாசிசமும் உருவாகின. இவைகள் திட்டமிடலைச் சனநாயகத்துடனும் இணைக்க முடியும் என்ற நம்பிக்கை உடையோராய் இருந்தனர். தாராண்மைவாதம் சுவீகரித்துக்கொண்ட தனிநபர் சுதந்திரம் இவர்களுக்குத் தடையாக இருக்கவில்லை. இக்கருத்து சோசலிசத்தில் இன்னும் செல்வாக்குச் செலுத்துகிறது. திட்டமிடும் சமூகங்களில் நிலவும் ஓர் இறுக்கமான போக்கு அதிகாரத்துவவாதிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் கருத்தொருமிப்புத் தேவையினால் ஊக்குவிக்கப்பட்டது. இதனை ஓரளவு கல்வி பெற்ற வகுப்பினரிடையே இலகுவாகப் பரப்ப முடிந்தது. தீவிரமான தேசியவாதத்தை வளர்ப்பதன் மூலமும், திட்டமிடலுக்கு வெளியே நிற்கும் குழுவினரைத் தாக்குவதன் மூலமும் ஐக்கியம் என்பது மிகவும் காத்திரமாக உருவாக்கப்பட்டது. அதைப்போல ஓர் ஒழுக்கநியதியும் உருவாகியது. தலைமைக்குச் சகலரும் பணிந்தாக வேண்டும். தனிப்பட்ட ஒழுக்கம் அரசினை எதிர்க்கத்தக்கதாக இருக்கக் கூடாது.
142

1940 களில் பிரித்தானியா அதனுடைய சோசலிசப் போக்குகளுடன் 15 ஆண்டுகளுக்கு, ஹிட்லரின் எழுச்சிக்கு முன்னரான ஜேர்மனியைப் போன்றிருந்தது என ஹயெக் கூறுகிறார். பல நாஸி ஆதரவாளர்கள் சோசலிசத்தின் ஆதரவாளர்களாகவே ஆரம்பித்தனர். பின்னரே அவர்கள் தாராண்மைவாதத்தையும், சர்வதேசியவாதத்தையும் நிராகரித்தனர். அந்நேரத்தில் பிரித்தானியரின் விக்டோரிய விழுமியங்களின் மீதான நம்பிக்கை ஜேர்மனிய எண்ணங்களையும் முறைகளையும் பிரதி பண்ணுவதைவிட முக்கியமானதாக இருந்தது. ஹயெக்கின் சமூக நன்மைக்கான முறை சட்டவாட்சியையும், சந்தைகள் பற்றிய விளக்கத்தையும் உள்ளடக்கியது. சட்டம் சமூகத்தை மாற்றியமைக்கும் ஒரு கருவியாக இருக்க முடியாது. அதனுடைய விதிகளும் சட்டங்களும் சகலருக்கும் உரித்தானதாகவும் அதனுடைய பிரயோகம் எல்லாருக்கும் ஏற்கெனவே தெரிந்ததாகவும் இருக்கவேண்டும். ஆனால் சட்ட வரைஞர்களைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட நபர்கள் அல்லது குழுக்கள்தொடர்பாக அதனுடையதாக்கங்கள் எதிர்வுகூற முடியாததாகவும் தெரியாததாகவும் இருக்கவேண்டும். அந்தளவில் சட்டம் என்பது குருடாகும். சட்டத்தின் உள்ளடக்கத்தைவிடச் சட்டவிதிகளை அனைவரும் தெரிந்திருக்கவேண்டும் என்பது மிக முக்கியமானது. சந்தைக்குள் சுதந்திரமான தனிநபர்கள் அரிதான வளங்கள் பற்றிய அவர்களது பயன்பாட்டில் தெரிவுகளைத் தாமே மேற் கொண்டார்கள். இத் தெரிவுகளின் மூலம் எவற்றுக்கு முதன்மை அளிப்பது எவை பின்போடப்படலாம் என்பதையும் தீர்மானித்தார்கள்.
சுதந்திரத்தின் யாப்பு
முதலாளித்துவ சனநாயகங்கள் எவ்வாறு விளங்கிக்கொள்ளப்படவேண்டும் என்பது பற்றிய ஹயெக்கின் சிந்தனைகள் "சுதந்திரத்தின் யாப்பு" (1976b) என்னும் அவரது நூலில் மேலும் விருத்தி செய்யப்பட்டன. இதில் இரண்டு சுதந்திர மரபுகளை அவர் வேறுபடுத்தினார். பிரெஞ்சு மரபுரிமையின்படி மனித நியாயத்திறனின் வரையறையில்லாத சக்தி மீது நம்பிக்கை வைக்கப்பட்டது. முறையான சமூக ஒழுங்கமைப்புகள் மீதும் அரசின் நெறிப்படுத்தும் அதிகாரத்தின் மீதும் கூடிய பெறுமானம் வைக்கப்பட்டது. ஆங்கில மரபானது சமூக பரிணாமத்தின் காரணமாக தவறுகள், சோதனைகளின் விளைவாக ஒன்று திரட்டப்பட்ட மனித அறிவின் மீது முக்கியத்துவத்தினை வழங்குகிறது. இந்த அணுகுமுறையானது அனுபவபூர்வமானது; ஒருமுறைமையற்றது. ஒழுக்க நியமங்கள், சமூக நிறுவனங்கள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றுக்குக் கட்டுப்படும் உடனடி மனித பதிலிறுப்புக்களை அது மதித்தது. சமூகத்தின் படிப்படியான வளர்ச்சியுடன் இவ்விதிகளும் கூட இணைந்து போயின. வடிவமைக்கப்படாத அறிவுபூர்வமற்ற உபமுறைமையை அவை விளக்குகின்றன. இந்த உப முறைமையின் மீதே அறிவுபூர்வமான நடத்தைகளின் வேர் ஊன்றப்பட்டுள்ளது.
143

Page 75
ஹயெக் சுதந்திரம் தொடர்பான ஒரு எதிர்மறை நோக்கினைக் கொண்டிருந்தார். தனிமனித சுதந்திரங்கள் எவை என்பது அல்லது சுதந்திரமீறல்கள் என்பது சட்டவாட்சியை நடத்தும் நீதிபதியால் தீர்மானிக்கப்படல் வேண்டும். தவிர அரசின் கட்டளைகளினால் அல்ல. தனிமனித சுதந்திரம் என்பது தனிமனித நடத்தைகளுக்கான பொறுப்பு களுடன் இணைந்தது. தனிமனித திருப்தியும் நிறைவு மனப்பான்மையும் அவர் தனது திறன்மகளை முழுமையாய் பயன்படுத்தக் கூடிய ஒரு வசதியான இடத்தைத் தெரிவு செய்து கொள்வதில் தங்கியுள்ளது. இந்த இடத்தை அறிவது தனிமனிதனுடைய பணியாகும். ஒரு தனிமனிதனின் உலகைப்பற்றிய அறிவு பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டது. சமூகத்தின் மொத்த அறிவும் பூரணமானதல்ல. தகவல்கள் இல்லாதவிடத்து நமக்குத் தெரியாதவைகளை அறிவதற்கு நாம் ஒரு திட்டத்தைத் தீட்டமுடியாது. ஹயெக்கின் சமூக மாதிரிக்கு எதிர்பாராதவைகளும் வாய்ப்புகளும் மிகவும் முக்கிமானவை. இவைகள் எமது அறிவை வளர்க்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கின்றன. தனிப்பட்ட நபர்கள் தீர்மானம் மேற்கொள்ளவும், தவறுகள் விடவும் சுதந்திரம் பெறும்போது அதன் காரணமாகக் கண்டு பிடிப்புகளும் ஏற்படுகின்றன. பெரும்பான்மை வாக்குகளினால் ஸ்தாபிக்கப்படும் ஏதேச்சாதிகார ஆட்சியின் ஆபத்துகளில் முக்கியமானது சிந்தனையிலும் செயலிலும் ஏற்படும் கட்டுப்பாடுகளாகும். சனநாயகம் தனிநபர் சுதந்திரத்திற்கான ஓர் வழியாகச் செயற்படும்போது மட்டுமே பெறுமதியானது. அபிப்பிராயங்கள் மேற்கொள்ளப்படும் போது அது அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட சுதந்திரத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். நீண்டகால அடிப்படையில் சனநாயகரீதியான கலந்துரையாடல்களும் விவாதங்களும் மக்களின் விளக்கத்தையும் அறிவையும் அதிகரிக்கும்.
நடைமுறையில் உயர் மட்ட அறிவு முதலில் தெரிவு செய்யப்பட்ட ஒரு குழுவினராலேயே பெறப்பட்டு பின்னர் சமூகம் முழுவதும் பரவுகிறது. கைத்தொழில் நாகரிகத்தின் பொருள் சார்ந்த நன்மைகளை எடுத்துக் கொண்டாலும் இதுவே உண்மையாகும். இங்கு ஒரு படிமுறை அமைப்பு உருவாகிப் படித்தவர்களும், செல்வந்தர்களும் உயர்படியை எடுத்துக் கொண்டனர். பிரித்தானியாவைப் பொறுத்தவரையில் ஹயெக்கின் கூற்றுப்படி "உயர்ந்த தரமுள்ள பொருட்களை நாடும் பழைய மரபுகளைப் பேணும் ஒரு செல்வந்த வகுப்புக் காரணமாக சமூகத்தின் சகலவர்க்கங்களும் நன்மையடைந்தன. ஓய்வு அநுபவிக்கும் வர்க்கத்தினர் புதிய கண்டு பிடிப்புகளுக்கும் உற்பத்தியின் உயர்ந்த தரத்துக்கும் ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்குகிறார்கள். ஓய்வைச் சிறப்பாக அநுபவிப்பதற்கும் கண்டுபிடிப்புகள் அவசியமானவையாகும். செல்வந்தர்கள் பாதுகாவலர் களாவர். எனவே செல்வத்தை மீளப்பங்கிடும் சமத்துவக் கொள்கை களைக் ஹயெக் எதிர்த்தார்.
144

நிபுணர்களின் ஆட்சியை அமைக்கும் ஆவலும் கூட ஒரு மாயையை அடிப்படையாகக் கொண்டதே. நுகர்வோர் என்ற அடிப்படையில் நாம் பெறுபேறுகளுக்குப் பணம் கொடுக்கிறோம். அவை எவ்வளவு இலகுவாக அடையப்பட்டன என்பது பற்றிக் கவலை கொள்வதில்லை. ஆட்களின் சாதனைகள் மற்றவர்களுக்குத் தரும் பெறுமதியின் அடிப்படையிலேயே அவர்கள் வெகுமதிகளைப் பெறுகின்றனர். தனிநபர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையிலான பெறுமதி எதனையும் மற்றவரிடமிருந்து பெறுவ தில்லை. கடுமையாக முயற்சி செய்வதனாலும், சிறந்த தகைமைகளைக் கொண்டிருப்பதனாலும் கூட மனிதர்கள் வெகுமதிகளைப் பெறுவதில்லை. எனினும் தனிமனிதர்களின் பெறுமதியையும் அதற்கான வெகுமதிகளையும் தீர்மானிக்கும் அதிகாரமுறைமை சகிக்க முடியாத ஒருதலையீடாகும். இப்படியான ஓர் உபாயம் அரசின் தலையிடும் அதிகாரத்தைக் குறைக்கும் குறிக்கோளுக்கு மிகவும் முரணானது.
அரசு தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவது தவிர்க்கப்படல் வேண்டும். இத்தலையீடு தனிநபர் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துகிறது. ஒரு தனிநபர் தனக்கென பிரத்தியேகமான ஓரிடத்தைப் பெற்றுக் கொள்வதன் மூலமாகத் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். அதன் மூலம் அரசின் தலையீடும் தவிர்க்கப்படமுடியும். இப்பிரத்தியேக இடத்தின் உள்ளடக்கம் பற்றிய விதிகளாக ஒரு தனிநபரின் உரிமைகள் மாற்றப்படக்கூடும். அரசின் தலையீடு கூடியவரை மட்டுப்படுத்தப்படல் வேண்டும். மற்றவர்களின் தலையீடு, ஒப்பந்தங்களிலிருந்து தப்பித்தலைத் தடுத்தல், அல்லது ஸ்தாபிக்கப்பட்ட தண்டனைகள் போன்றவைகள் தவிர்க்கப்படுதல் வேண்டும். இத்தகைய தண்டனைகள் எதிர்வு கூறக் கூடியதாக (வரிவிதிப்பு முதலியவை) இருக்கவேண்டும். ஹயெக்கின் வரையறுக்கப்பட்ட சட்டவாட்சி என்னும் எண்ணக்கரு மீது சோசலிச சட்டவியலாளர்கள், அரசியல் விஞ்ஞானிகள் (லஸ்கி உட்பட) ஆகியோர் நடாத்திய தாக்குதல்கள் பற்றிக் கவலை கொள்ளவில்லை. லஸ்கி ஓர் உடன்பாடான சட்டக் கொள்கையை ஆதரித்தார். இது பின்னர் அரச நிர்வாகத்தின் கருவியானது.
இறுதியாக, ஹயெக் ஒரு புதிய அச்சுறுத்தலை இனங்கண்டார், சோசலிச யுகம் என்பது1848 முதல் 1948 வரையாக இருந்தது. சோசலிசம் தற்போது
அதன் புதிய எதிரியாகப் பொதுநல அரசினால் (Welfare State) மாற்றீடு செய்யப்படுகிறது எனக் கூறினார். இதில் ஆபத்து எங்கிருக்கிறதெனில் "பொதுநல அதிகாரம் ஒரு சமூகசேவை செய்வதுபோலத் தென்பட்டாலும் நடைமுறையில் அரசாங்கத்தின் தலையிடும் அதிகாரங்களைக் கொண்டுள்ளன. அத்துடன் சில விடயங்களில் உரிமைகளையும் நிலை நாட்ட முயல்கின்றன. திட்டமிடுவோரும் அதிகாரிகளும் தனிநபர் உரிமைகளைப் படிப்படியாகக் குறைத்து விடுகின்றனர். பொதுநல அரசு அதனுடைய முறைகள் மற்றும் இலக்குகள் (முற்போக்கான வரிவிதிப்பு மூலம் செல்வத்தை மீளப்பங்கீடுசெய்வது உட்பட்ட) ஆகியவை உறுதியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
145

Page 76
முடிவுரை
சும்பீற்றரின் வாதத்தின் நிலைக்களனான இரண்டு செய்முறைகளை ஹயெக்கின் பகுப்பாய்வு கவனத்தில் எடுக்கவில்லை. இவற்றில் (அ) பாரிய சிலருரிமை நிறுவனங்களில் புத்தாக்கங்களை முகாமை செய்தமைக்காக அதிகாரத்துவ முறைகள் மூலம் தொழில் முயற்சி யாளனை ஒதுக்கிவைத்தமையாகும். (ஆ) போட்டி அரசியற்கட்சிகளின் அடிப்படையைக் கொண்ட ஒரு சனநாயக வடிவத்தின் தோற்றம். சும்பீற்றரின் கருத்துப்படி முதலாவது மாற்றம் முதலாளித்துவத்தின் உயர் வளர்ச்சிவீத்தைப் பாதுகாக்கும் இயலளவைக் குறைத்துவிடவில்லை. இரண்டாவது சனநாயகங்களில் தலைவர்களை தெரிவு செய்யும் யதார்த்தமானதும் ஒப்பீட்டளவில் வினைத்திறன் கொண்டதுமான ஒரு வழியாகும். இதற்கு மாறாக ஹயெக்கின் கருத்து அமைந்திருந்தது. அதாவது கைத்தொழில் பொருட்கள் உட்பட, புதிய கண்டுபிடிப்புகள் அதிகாரத்துவம் ஊடாகத் திட்டமிட முடியும் என்பதை ஒத்துக் கொள்ள அவர் தயக்கம் காட்டினார். தனியார் சுதந்திரத்தை உயர்த்தும் உபாயத்தில் ஹயெக்நம்பிக்கை கொண்டிருந்தார். ஒரு தனிநபர் உயரிய, அறிவுபூர்மான உயிர் என்ற அடிப்படையில் அவருக்குரிய உள்ளார்ந்த பெறுமானமாக சுதந்திரம் மதிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக முழுச்சமூகத்துக்கும் நன்மையளிக்கக் கூடிய விதத்தில் அறிவு வளர்ச்சியை உயர்த்தும் ஒரு கருவியாகவே எண்ணப்பட்டது. சும்பீற்றர் தனிநபர் சுதந்திரத்துக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் உள்ள உறவை முற்றாக மாற்றியமைத்தார். பெருகிவரும் அறிவு மற்றும் அறிவுடைமை ஆகியவற்றுக்கான விலை தனிநபர் படைப்புத்திறனின் வீழ்ச்சியாகும் எனச் சும்பிற்றர் நம்பினார். இது சும்பீற்றருக்கு மகிழ்ச்சியான விடயம் எனக் கூறுவதற்கில்லை. முன்னேற்றம் என்பதைப் புத்தாக்கம், பொருளாதார வளர்ச்சி, பகுத்தறிவுடைமையின் வளர்ச்சி, பொருள் வசதிகள் எனக் கருதினால் அது தனிநபர்த் தன்மையின் வீழ்ச்சியாகும். ஹயெக் கைப் பொறுத்தவரையில் தனிநபர்த்தன்மை பாதுகாக்கப்படாதவரையில் முன்னேற்றத்தின் பல்வேறு அம்சங்களும் முதலாளித்துவ சனநாயகத்துக்குப் பாரதூரமான அச்சுறுத்தல்களாகவே இருந்துள்ளன.
146

V
கால்பிறைய்த்தும் குறொஸ்லன்டும் (Galbraith and Crosland)
மரபுரீதியான மெய்யறிவைப் புரியவைத்தல்
கோட்பாட்டாளர்களும், தீவிர அரசியலில் ஈடுபட்டவர்களுமான இருவரது பங்களிப்புக்களைப் பற்றி இவ்வத்தியாயத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. 1950க்குப் பின்னரான இரு தசாப்தங்களில் இவ்விருவரும் சோசலிசசனநாயக முறைகளைக் கட்டியெழுப்பமுயன்றனர். இவர்களில் ஒருவரான ஜோண் கென்னத் கால்பிறைய்த் (John Kenneth Galbraith) பின்வரும் மூன்று நூல்களை அடுத்தடுத்து எழுதினார். (1) செல்வம்மிக்க சமூகம் (The affluent Society (1979) ), 1958இல் முதலில் வெளியிடப்பட்டது. (2) glu soa565 stfi guar (The New lindustrial State (1974 a)), 1967இல் முதலில் வெளியிடப்பட்டது, (3) பொருளியலும் பொது Gossaiagpio (Economics and the Public Purpose (1974 b)).
கால்பிறைய்த்தைப் பிரித்தானிய தொழிற்கட்சி அரசியல்வாதியான அந்தணி குறொஸ்லான்டுடன் (Anthony Crosland) ஒப்பிடலாம். குறொஸ்லான்டின் நூல்கள் தொடர்ச்சியாக வெளிவந்தன. அவை (1) சோசலிசத்தின் 67.57ias taub (The Future of Socialism (1964)), 1956gs) p5656) வெளியிடப்பட்டது. (2) "பழமைபேணி எதிரி" (Conservative Enemy (1962) (3) "Gritsatsiaflair GFliglassir" (Socialism News 1975), 1974இல் முதலில் வெளிவந்தது. யுத்தத்திற்குப் பின் வந்த பிரித்தானியாவில் சோசலிசத்தின் கோட்பாடு மற்றும் பிரயோகம் பற்றிய கருத்தினை குறொஸ்லன்ட் விளக்க முனைந்தார்.
கால் பிறைய்த்தும் குறொஸ் லன்டும் சமகால முதலாளித்துவச் சனநாயகத்தின் பின்வரும் மூன்று விடயங்களுக்கிடையிலான இடையீடுகள் பற்றிக் கவனம் கொள்வதற்குப் பல்வேறு சித்தாந்த ரீதியான இடையூறுகளைக் கடக்க வேண்டியிருந்தது. சமூக சமத்துவமின்மையை நிராகரித்தல்; பொருள்முதல் பாதுகாப்பை உறுதிசெய்தல்; பொருளாதார வளர்ச்சியின் விளைவு ஆகிய இந்த விடயங்கள் ஒவ்வொன்றும் ஒரு முதலாளித்துவச்சனநாயக மாதிரியைச்சமர்ப்பித்தன. இந்த மாதிரியானது பாரம்பரியமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த உண்மைகளுக்குச் சவால் விடுத்தது. இவர்கள் இருவரும் பொதுத்துறை மற்றும் தனியார் துறைக்கிடையில் ஒரு சமநிலையின் தேவையை அடிப்படையாகக் கொண்ட
147

Page 77
தீவிர சமூக மாற்றங்களைப் பிரேரித்தனர். ஐக்கிய அமெரிக்காவில் தனியார்துறை வளர்ச்சியடையவில்லை என்று கால்பிறைய்த் கருதினார். குறொஸ்லன்ட் பிரித்தானிய சோசலிசம் பொதுத்துறையை அடித்தளமாகக் கொண்டு தனியார்துறையினால் ஏற்படும் சமூக நன்மைகளைக் கவனத்திற் கொள்ளவில்லை என்று கருதினார். 1908இல் பிறந்த கால்பிறைய்த் ஒன்ராறியோவில் ஸ்கொட் - கனேடிய கிராமியச் சமூகத்தைச் சார்ந்தவர். கல்வினின் போதனைகளின் அடிப்படையில் அவரது இளமைப்பருவம் அமைந்தது. முதலில் ஒன்ராறியோ விவசாயக் கல்லூரியிலும், பின்னர் 1930களில் கலிபோர்ணியப் பல்கலைக்கழகத்திலும் கல்விகற்ற கால்பிறைய்த் தொடர்ந்து விவசாயப் பொருளாதாரத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார்.
டோனி குறொஸ்லன்ட் 1918இல் பிறந்தார். அவரது பின்னணி கால் பிறைய்த்தை விட வளமானது. சிவில் சேவையாளரான குறொஸ்லன்டின் தந்தை அவரைத் தனியார் பாடசாலை ஒன்றில் கற்பித்தாரெனினும் குறொஸ்லன்டின் குடும்பம் ஆங்கில மேல்மத்திய வ்குப்பைச்சார்ந்தவர்களாக இருக்கவில்லை. குறொஸ்லன்டின் தந்தையும் அவரது சிறிய தந்தையும் தமக்கு வழங்கப்பட்ட பிரபுத்துவப் பட்டங்களை நிராகரித்தனர். குறொஸ்லன்ட் பின்னர் ஒக்ஸ்போர்ட்பல்கலைக்கழகத்தில் சாஸ்திரியக் கலைகளைக் (Classics) கற்றார். எனினும் இரண்டாம் உலகப்போர் அவரது கல்வியைப் பாதித்தது. தீவிர போர்க்கால சேவைக்குப் பின்னர் குறொஸ்லன்ட் திரும்பவும் ஒக்ஸ்போர்ட்டுக்குத் திரும்பினார். இம்முறை மெய்யியல், அரசியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களைக் கற்றார். பின்னர் அவர் ஒக்ஸ்போர்ட் யூனியனின் தலைவராகவும் கடமையாற்றினார்.
இருவரும் பொதுவிவகாரங்களில் நிறைந்த நடைமுறை அனுபவங்களைப் பெற்றிருந்தனர். இரண்டாம் உலகப்போரின்போதுகால்பிறைய்த்தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் கமிட்டியில் பொருளாதார ஆலோசகராகவும், விலை நிர்வாக அலுவலகத்தில் பிரதித்தலைவராகவும் கடமையாற்றினார். பின்னர் ஜேர்மனியில் நேசநாடுகளின் குண்டுவீச்சின் விளைவுகளைப் பற்றி ஆய்வுசெய்தார். 1948இல் ஹார்வாட்பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக நியமனம் பெற்றார். சனாதிபதி கென்னடியின் காலத்தில் கால்பிறைய்த் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவராகப் (1961-63) பணியாற்றினார்.
1940-54 காலத்தில் குறொஸ்லன்ட்RoyalWelchFusiers இலும் பின்னர் 2ஆம் பாரசூட் பிரிகேட்டின் தலைவராகவும் பணியாற்றினார். வட ஆபிரிக்கா. இத்தாலி, பிரான்ஸ், ஒஸ்திரியா ஆகிய நாடுகளிலும் பணியாற்றினார். யுத்தத்துக்குப்பின்னர்திரித்துவக்கல்லூரி, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இணைந்திருந்தார். 1950இல் தென் குளோசெஷ்டர்ஷயரின் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்.
148

1955இல் அவர் தேர்தலில் தோல்வியடைந்தார். தொடர்ந்து அவரது “சோசலிசத்தின் எதிர்காலம்" என்னும் நூலானது வெளிவந்தது. 1959இலிருந்து 1977இல் இறக்கும் வரை அவர் கிறிம்ஸ்பியின் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். இக்காலத்தில் பிரித்தானியாவில் இருமுறை (1964-70, 1974-79) தொழிற்கட்சி ஆட்சி நிலவியது. பொருளாதார விவகாரங்கள், கல்வி, விஞ்ஞானம், சுற்றாடல் முதலிய முக்கிய விடயங்களுக்கு குறொஸ்லன்ட் பொறுப்பாக இருந்தார். 1975இல் அவர் வெளிநாட்டுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
கால்பிறைய்த் பொது நிர்வாக விடயங்களில் நீண்ட அனுபவம் பெற்ற பின்னரே தனது பிரதான நூல்களை வெளியிட்டார். ஆனால் குறொஸ்லன்ட் அரசாங்கத்தில் நேரடித்தொடர்புகொள்வதற்கு முன்னரே “சோசலிசத்தின் எதிர்காலம்"என்னும் தனது பிரதான நூலை வெளியிட்டு விட்டார். அவரது இறுதி நூலான "இப்போதைய சோசலிசம்"(Socialism Now) என்னும் கட்டுரைத்தொகுப்புஅமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் அவரது பார்வையில் ஏற்படுத்திய மாற்றங்களைக் காட்டி நிற்கிறது. அவர் தனது சிந்தனைகள் அனைத்தையும் வெளியிடுவதற்கு நீண்டகாலம் உயிர் வாழ்ந்திருக்கவில்லை அல்லது ஜோசப் செம்பர்லின், சார்ள்ஸ் ஈ மிரியம் போன்ற அரசியல்வாதியாகவும், அரசியல் சித்தாந்தவாதியாகவும் மிளிர முடியவில்லை. குறொஸ்லன்ட்கால்பிறைய்த்துடன் சில விடயங்களில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தபோதிலும் "செல்வமிக்க சமூகம்" என்னும் நூலின் விமர்சனத்தில் 'நான் மனப்பூர்வமாகக் கால்பிறைய்த்தை ஆதரிக்கிறேன். ! என்று கூறியுள்ளார். எனவே இந்த ஆய்வை நாம் கால்பிறைய்த்துடன் தொடங்குவது நன்று.
செல்வந்தச் சமூகம்
கால்பிறைய்த் "செல்வந்தச் சமூகம்" என்னும் தனது நூலின் மூன்றாம் பதிப்பின் முகவுரையில் பின்வருமாறு எழுதுகிறார்:
இரண்டாம் உலகப்போரின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவில் சுதந்திரச் சந்தை முறைமை புத்துயிர் பெற்றது. பழமை பேணுதல் என்னும் கருத்துடன் நாம் சுயநலம், சமயம் போன்றவற்றை இணைக்கிறோம். இது நியாயமற்றது. பழமைவாதம் என்னும் கருதது எங்கும் பரந்து காணப்படுகிறது. போருக்குப்பின்னரான பழமைவாதம் 19ஆம் நுாற்றாண்டின் பெந்தாமின் கருததுக்களை மீள உயிர்ப்பித்தது. ஹயக்கின் "அடிமை முறைக்கான பாதை” இக்கருத்துக்கு மேலும் வலுவூட்டியது. சிக்காககோ பல்கலைக்கழகத்திலும், ஏனைய அறிவுப் பீடங்களிலும் இக்கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. (கால்பிறைய்த 1979:7)
149

Page 78
இப்புத்தகத்தின் மூன்றாம் பதிப்பு:1979இல் வெளிவந்தது. இதே ஆண்டில் மார்கரெட் தாட்சர் பிரித்தானியாவில் பழமைவாத அரசாங்கத்தின் தலைவராகப் பதவியேற்றார். 1980இல் குடியரசுக் கட்சியின் சார்பில் அமெரிக்க சனாதிபதித் தேர்தலில் றொனால்ட்றேகன் வெற்றி பெற்றார். தாட்சரின் பாசறையில் ஹயக்கின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது. அதேநேரத்தில் வரிகளைக் குறைத்து மக்களின் தோள்களிலிருந்து அரசாங்கப் பாரத்தைக் குறைக்க வேண்டும் என்றும், பழைய உண்மை களுக்குத் திரும்பவேண்டும் என்றும் றேகன் வலியுறுத்தினார். சிறிது கால "தாராண்மைவாத இடைவெளி"க்குப் பின்னர் பழைமைவாதம் வெற்றிகரமாக மீண்டும் வெளிப்பட்டது. எனினும் 1960களிலும் 1970களிலும் கால் பிறைய்த் சமூக, பொருளாதார, அரசியல் யதார்த்தங்களின் ஒரு சிறந்த மாற்றீடை முன்வைத்தார்.
“செல்வமிக்க சமூகத்தில்” உள்ள மையக்கருத்து மிகமிகத் தாழ்நிலையில் வாழும் சமூகத்தில் சிலர் மாத்திரம் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ளனர் என்பதாகும். மரபுரீதியான பொருளாதாரங்களினால் ஒரு சிலரின் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை விபரிக்க முடியாது. அடம்ஸ்மித் முதல் அல்பிரட் மார்ஷல் வரை இல்லாமை என்பது சாதாரண மக்களுக்கு உரியது. பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்கும் பொருளாதார வினைத்திறனை உயர்த்துவதற்கும் தொடர்ச்சியான முயற்சி தேவையானது. முதலாளித்துவச் சமூகத்தின் சமமின்மையும் , தொழிலின்மையால் ஏற்படும் பாதுகாப்பின்மையும் இவ்வாறான நிலைமைகளை மோசமடையச் செய்கின்றன.
1950களில் சமமின்மையும், பாதுகாப்பின்மையும் அரசியல் நிகழ்வுகளில் முதன்மை பெற்றன. செல்வந்தர்களின் அதிகாரம் குறைவடைந்தது. அரசாங்கமும், தொழிற்சங்கங்களும் செல்வந்த வகுப்பினரைப் போலவே செல்வாக்குப் பெற்றனர். கம்பெனி அதிகாரிகள் பங்காளர்களைவிட அதிக கட்டுப்பாட்டைத் தமதாக்கிக் கொண்டனர். விவசாயிகளும், கைத்தொழில் ஊழியர்களும், ஏழைகளும் வேலையற்றவர்களும் புதிய தொடர்பு காரணமாகக் கூடிய பாதுகாப்பைப் பெற்றனர். எனினும் ஆச்சரியப் படத்தக்க வகையில் கடின உழைப்பிலும் தொழின் முயற்சிகளிலும் பின்னடைவு ஏற்பட்டுவிடவில்லை. இது நல்ல விடயமாகும். ஏனெனில் சமத்துவமின்மை, பாதுகாப்பின்மை ஆகியவற்றை விரட்டியடிப்பது பொருளாதாரம் எவ்வளவு தூரம் சிறப்பாக இயங்குகிறது என்பதில் தங்கியுள்ளது. பொருளாதார வளர்ச்சி என்பது செல்வந்தர்களின் சொத்துக்கு அச்சுறுத்தல் இல்லாமல் சமூகப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும்.
இப்புதிய அணுகுமுறைக்கு கெய்ன்ஸ் ஒரு தத்துவார்த்த அடிப்படையை வழங்கினார். அரசாங்கச் செலவுகளில் தேவையான மாற்றங்களைச்
செய்வதன் மூலம் மொத்தக் கேள்வி மட்டத்தைக் கையாள்வதே அவரது
150

எண்ணமாகும். இதன்மூலம் உற்பத்தியானது வேலையின்மையைக் குறைக்கும் மட்டத்தில் பேணப்பட முடியும். அத்துடன் விவசாயிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் உதவவும் உள்ளூராட்சி, மாநில அரசுகளை ஊக்குவிக்கவும் முடியும்.
எனினும் வளர்ச்சி ஓர் ஒழுங்கற்ற முறையிலேயே தொடரப்பட்டது. மூலதன உருவாக்கம் அசட்டை செய்யப்பட்டது. அடிப்படைக் கைத்தொழில்களில் தொழில்நுட்பப் புத்தாக்கம் முடக்கப்பட்டது. அரசு கொடுங்கோன்மையின் முகவராகக் கருதப்பட்டமையினால் பொதுநல உற்பத்திகள் (பாடசாலைகள், வீதிகள், பூங்காக்கள் முதலியவை) இரண்டாந்தர நிலைக்குத் தள்ளப்பட்டன. உற்பத்தி முறைமை செயற்கையான தேவைகளில் தங்கியிருந்தன. தேவைகள் சமூகரீதியாக உற்பத்தி செய்யப்பட்டன. விளம்பரங்கள் இத்தகைய தேவைகளை உருவாக்க உதவி செய்தன. இதனை கால்பிறைய்த் "தங்கியிருக்கும் விளைவு" (Dependence Effect) எனக் குறிப்பிட்டார். இதனால் இரண்டு பிரச்சினைகள் ஏற்பட்டன. (1) நுகர்வோர் கடன். (2) பணவீக்கம். இது ஒரளவுக்கு ஊதியம் - விலைச் சுற்றுகளால்(Wage-picespiral) ஏற்பட்டன. இதற்குக் கம்பெனி முகாமைத்துவமும், தொழிற்சங்கங்களும் காரண மாகும். நிதிக்கொள்கைகளில் பல ஆய்வுகள் செய்யப்பட்டன. ஆனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நேரடியான கட்டுப்பாடுகள் செய்யப்படவில்லை. அவைகள் வளங்களின் சந்தை ஒதுக்கீடுகளில் தலையீடு செய்கின்றன எனக் கூறப்பட்டது.
இன்னும் அடிப்படையான விடயம் என்னவெனில் பொதுத்துறையானது, தனியார்துறையின் நன்மைக்காக அசட்டை செய்யப்பட்டது. இது வர்த்தகர்களின் ஊன்றிய நலன்களுக்கு உதவியாக இருந்தது. அமைப்புரீதியான சமநிலையின்மைக்கு வழமையாகக் கூறப்படும் பதில் மக்கள் சனநாயகத் தெரிவுகளை மேற்கொண்டதால் அவர்களே இதற்குக் காரணம் என்பதாகும். இது ஒரு நேர்மையற்ற வாதம் எனக் கால்பிறைய்த் கூறினார். உண்மையில் தேவைகள் தனியார் வர்த்தகத்துறையினால் செயற்கையாக உருவாக்கப்படுகின்றன; பின்னர் அவர்கள் அத்தேவைகளைத் தீர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். விற்பனைக்கு உட்படாத அரசின் சேவைகள் தொடர்பாக இதைப்போன்ற செயன்முறை நடப்பதில்லை. உண்மையில் பொதுத்துறைச் செலவுகளுக்காக வரிவிதிப்பை அதிகரித்தல் பிரச்சினைக்குள்ளாகியது. முதலாவதாக, யார் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பது திரும்பவும் சமூக சமத்துவமின்மை என்னும் பாரதூரமான விடயத்தை வெளிக்கிளப்பியது. இரண்டாவது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் இலகுவான வழி பொதுச் செலவினத்தைக் குறைப்பதாகும்.
உற்பத்திக்குக் கூடிய முக்கியத்துவமும் பொதுத்துறை வழங்கிய திருப்திக்குக் குறைந்த முக்கியத்துவமும் வழங்கப்பட்டன.
151

Page 79
கால்பிறைய்த்தின் பிரதான நோக்கம் சமூகத்தின் முக்கிய செயற்பாடு பிரத்தியேக நுகர்வுக்கான பொருள்களை உற்பத்தி செய்தல் என்னும் மாயையை உடைத்தெறிதல் எனினும் அவர் வேறு சில ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் முன்வைத்தார். உதாரணமாக வேலையற்றோரைச் சமூகமானது ஒரு வசதியான வருமான மட்டத்தில் பேணமுடியும். அரசாங்கமானது சமூகத்தின் வருமானத்தின் ஒருபகுதியை விகிதசமமாகப் பெற்று தேவையைப் பொறுத்து மறுபங்கீடு செய்தல் வேண்டும். வறுமையைக் கையாள்வதற்காகப் பொதுசன முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும். வசதியான வேலை மற்றும் வாழ்க்கையை உடைய வெள்ளையுடை புதியவகுப்பின் ஒப்பீட்டளவிலான பரும்னை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். பயனற்ற ஒய்வு வகுப்பினருக்குப் பதிலீடாக, இப்புதிய வகுப்பு விளங்க வேண்டும். மகிழ்ச்சியும் பொருட்களை உடைமையாகக் கொண்டிருப்பதும் சமமானது அல்ல என்பதை மக்களுக்கு ஊட்டவேண்டும்.
புதிய கைத்தொழில் அரசு
நவீன முதலாளித்துவத்தின் செயற்பாட்டினைப்பற்றிய தனது மாதிரியைக் கால்பிறைய்த் "புதிய கைத்தொழில் அரசு” என்னும் நூலில் (1974a) எடுத்துரைத்தார். பாரிய கம்பெனிகளின் 'கைத்தொழில்முறைமை' பற்றி அவர் தமது கருத்தைச் செலுத்தினார். இம்முறைமையானது சம்பளம் வாங்கும் வெள்ளை உடை நிபுணர்கள் மற்றும் சிறப்புத் தேர்ச்சி கொண்டோரினால் நடத்தப்படுகின்றது. இவர்களைப் பொதுவாக "தொழின்முறை அமைப்பு" (Technostructure) என கால்பிறைய்த் அழைத்தார். இந்த அமைப்பில் தனிப்பட்ட ஒரு தொழின் முயற்சி யாளனுக்குப் பொதுவாக இடமில்லை. கால்பிறைய்த்தின் இக் கருத்துக்குச் சும்பீற்றரும் ஆதரவாக இருந்திருக்க முடியும்.
அம்ெரிக்கச் சமூகத்தின் உறவுமுறைகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களை விளக்குவதே கால் பிறைய்த்தின் குறிக்கோள். உதாரணமாகப் பெரும் கைத்தொழில் கூட்டுத்தாபனங்கள் பாரிய கம்பனிகளின் முக்கிய நிர்வாகிகளை மக்கள் யாரென அறிய மாட்டார்கள். எனினும் சமூகத்தின் பொருளாதாரத்தில் இவை முக்கிய இடம் வகிக்கின்றன. 1960களில் அமெரிக்க அரசாங்கச் செலவினம் அதிகரித்ததுடன் மொத்தப் பொருளாதார நடவடிக்கைகளில் மூன்றிலொரு பகுதியாகவும் அது விளங்கியது. கெய்ன்சியப் புரட்சியின்போது அரசானது பொருளாதாரத்தின் மொத்தக் கேள்வியை முகாமை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தது. அத்துடன் ஊதியமும், விலைகளும் மேல்நோக்கி நகர்தலைத் தடுக்கவும் முயன்றது. வர்த்தக வட்டத்தின் உயர்ச்சியும் வீழ்ச்சியும் ஒரளவுக்குச் சமப்படுத்தப்பட்டிருந்தன. இணங்கச் செய்யும் கருவிகளில் நியாயமான வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. 1950களில்
152

தொழிற்சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்தத் தொழிலாளரில் கால்வாசிப் பங்குக்கு உயர்ந்தது. உயர்கல்வியில் பங்குபற்றலில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. ஒன்றிலொன்று இணைந்த இம்மாற்றங்களை விளக்குவதற்கான மிக முக்கியமான காரணி வளர்ந்துவரும் கைத்தொழில் நுட்ப முறைகளாகும். புதிய இயந்திரங்களும் பொருட்களும் மூலதனம் மற்றும் சேவைகளை நாடிநின்றன. கைத்தொழில் செய்முறை பற்றிய ஆய்வுகளுக்கும், வடிவமைப்புகளுக்கும் வழமையைவிட நீண்டகாலம் எடுத்தது. இதனால் ஓர் ஆரம்ப முயற்சிக்கும், சந்தையில் நுழைவதற்கும் இடையில் நீண்டகாலம் எடுத்தது. பெரிய கூட்டுத்தாபனங்களுக்கு இது வசதியாக இருந்ததுடன், திறனுள்ள ஊழியர்களையும், மூலதனத்தையும் திரட்டுவது அவைகளுக்கு மிகவும் இலகுவாகவும் இருந்தது.
இத்தகைய பெரும் முதலீட்டுக்கும், ஒழுங்கமைப்புக்களின் இயலளவுக்கும் விளக்கமான திட்டமிடலும், எதிர்வுகூறலும் தேவையாக இருந்தன. “ஜெனரல் மோட்டோர்ஸ்” போன்ற பாரிய கூட்டுத்தாபனங்களுக்குச் சந்தைகளைக் கட்டுப்படுத்தும் வல்லமை இருந்தது. இதனால் ஊதியம், விலைகள், வழங்கல் போன்றவை மூலம் எதிர்வு கூறவும் முடிந்தது. உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான கேள்விகளை விளம்பரம் மூலம் பேணுவதற்கும் முடிந்தது. அத்துடன் கைத்தொழில் புத்தாக்கத்துடன் இணைந்திருந்த ஆபத்துக்களும் அரசின் தலையீட்டால் குறைந்தன. இதற்கான செலவுகளை அரசு பகிர்ந்து கொண்டதுடன் அவ்வுற்பத்திப் பொருளுக்கான சந்தையையும் உறுதிசெய்தது. பொருளுற்பத்திக்கான நியாயத்தையும் (தேசிய பாதுகாப்பு, தேசிய கெளரவம், வேகமாகப் பயணஞ் செய்தல்) இலகுவாகக் கண்டறிய முடிந்தது. இவ்வாறு நவீன தொழின் முறையியல் நவீன அரசின் ஒரு செயற்பாடாகவும் மாறியது.
பொருளாதாரத்துக்குள் மொத்தக் கேள்வியை நிலைப்படுத்துவதற்கு முயற்சி செய்ததன் மூலம் அரசும் தனது பங்களிப்பைச் செய்தது. சேமிப்பு அதிகரிப்புக்கு இது உதவியாக இருந்தது. சேமிப்பு, செலவு, முதலீடு ஆகியவற்றுக்கிடையில் சமநிலையின் எதிர்கால மாற்றங்களைப் பற்றிய நிச்சயமான தன்மை நிலவவில்லை. அரசாங்கம் மொத்தக் கேள்வியில் கண்காணிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தலைச் செய்வதன் மூலம் புதிய பொருட்கள் சந்தைக்கு வந்து சேருவதைத் தடுக்க முடியும். உதாரணமாக மக்களிடம் செலவழிக்கப் போதிய பணம் இல்லாதபோது புதிய கார்கள் சந்தைக்கு வருவது தடுக்கப்படல் வேண்டும்.
வரலாற்றுரீதியாக கைத்தொழில் முறைமையின் வளர்ச்சியானது சமூக
அதிகாரத்திலும் ஊக்குவிப்பிலும் ஒரு நகர்ச்சியைக் காட்டியுள்ளது. ஒரு
காலத்தில் இந்த அதிகாரமானது நிலத்தை அடிப்படையாகக் கொண்டு
உடல் வலிமையினால் நடைமுறைப் படுத்தப்பட்டது. பின்னர்
இவ்வதிகாரம் 'கைத்தொழில் மூலதனத்திடம் சென்றடைந்தது.
மூலதனத்துக்கு அடிபணியும் நோக்கமானது பணத்துக்கான ஆசையை 153

Page 80
அடித்தளமாகக் கொண்டிருந்தது. அடுத்த கட்டத்தில் மார்க்ஸ் எதிர்வுகூறியதைப்போல உழைக்கும் வர்க்கம் அதிகாரத்தைப் பெற்றிருக்கவில்லை. இதனைப் பெற்றுக் கொண்டது கால்பிறைய்த்தின் கருத்துப்படி தொழின்முறை அமைப்பாகும். உழைக்கும் வர்க்கமும், சாதாரண சிறிய பங்காளர்களும் இத்தொழிண்முறை அமைப்பில் சேரவில்லை.
முகாமைத்துவமானது தமக்குத் தெரியாத, ஒப்பீட்டளவில் அதிகாரமற்ற பங்குதாரர்களின் சார்பில் இலாபத்தை உச்சப்படுத்த முனையும். இதன் அடிப்படையில் பொறுப்பாக இயங்கும் நிர்வாகிகள் பிறருக்கான இலாபத்தை உயர்த்துவதற்குத் தமது தனிப்பட்ட வெகுமதிகளைக் கைவிடுவர். உண்மையில் ஒரு 'பாரிய கூட்டுத்தாபனம்" அல்லது நிறுவனம் தனது இலாபத்தை உச்சப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமற்றது. இதனால் தொழின்முறை அமைப்பானது வேறு இலக்குகளை அடைய முயற்சி செய்யும். பாதுகாப்பின் காரணமாக உருவாகும் தன்னாதிக்கம் தொழின்முறை அமைப்புக்கு முக்கியமானதாகும். கூட்டுத்தாபனத்தின் வருமானம் உயர்மட்டத்தை அடைய முடியுமாயினும் ஆகக் குறைந்த ஆனால் நட்டமில்லாத நிலையை தொழின்முறை அமைப்பு எப்போதும் பேணிவரும்.
அமெரிக்கச் சமூகத்தில் இக் கூட்டுத்தாபனங்களின் செல்வாக்குக் காரணமாக தன்னாதிக்கமும் பாதுகாப்பும் பிரதான தேசிய இலக்குகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இக் கூட்டுத்தாபனங்கள் தேசிய இலக்குகளை ஏற்றுக் கொண்டு அவற்றை நடைமுறைப் படுத்துகின்றன. தனிநபர், கூட்டுத்தாபனம், சமூகம் ஆகிய மூன்று மட்டங்களிலும் இலக்குகள், விழுமியங்கள் பற்றிய ஓர் ஒழுங்கிணைப்பு இருக்க வேண்டும். இம் மூன்று மட்டங்களுக்கிடையிலும் ஒருவகைச் சிக்கலான இணைப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு தனிநபர் தன்னைக் கூட்டுத்தாபன இலக்குகளுடன் இணைத்துக் கொள்கிறார். ஏனெனில் கூட்டுத்தாபனங்களின் இலக்கு உயரிய சமூக இலக்குகளுடன் இணைந்துள்ளது. இதற்குப் பணரீதியான ஊக்குவிப்பை விட ஒழுக்கரீதியான சமர்ப்பணம் தேவையானது. உண்மையில்லாவிட்டாலும் கூட உற்பத்தியைப் பெருக்குவதால் சமூகத்தின் மகிழ்ச்சி பெருகுகின்றது என்பதை நம்புதல் இங்கு மிகவும் உதவியானது.
தொழின்முறை அமைப்பு கால்பிறைய்த்தின் கருத்துப்படி மிகவும் வலிமையான ஒரு சக்தியாகும். அதற்குத் தன்னுடைய சந்தையை உருவாக்க முடியும்; தனக்குத் தேவையான மூலதனத்தை அடையமுடியும்; தொழிற்சங்கங்களுடன் தொடர்பு கொண்டு மனிதவலுத் திட்டமிடலை மேற்கொள்ள முடியும்; பேரினப் பொருளியல் முகாமைத்துவத்தில் அரசு மீது தனது தேவைகளை நிர்ப்பந்திக்கவும் முடியும் . பொருளாதாரத்தின் மிக முக்கிய துறை (சந்தை) அரசின் அரசியல்
154

சபைகளில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கவில்லை. சிறு முதலாளிகள், உள்ளூர் நிறுவனங்கள், தனிப்பட்ட கைத்தொழில் வினைஞர்கள், விவசாயிகள் முதலானோர் அரசாங்கத்துடனும் தொழிற் சங்கங்களுடனும் மிகக் குறைந்த செல்வாக்கையும் தொடர்பையும் கொண்டிருக்கிறார்கள்; அவர்களால் சந்தையில் குறைந்த செல்வாக்கை மட்டுமே செலுத்த முடியும். துரதிஷ்டவசமாகக் கைத்தொழில் முறையினை ஊக்குவிக்கும் திட்டமிடலின் நன்மைகளை அவர்களால் அடைய முடியாது.
பொதுவாக நாகரீகமான ஒய்வு, கைத்தொழில் சாரா கல்வி, கலைகள் போன்ற முக்கிய விழுமியங்களுக்குத் தொழின்முறை அமைப்பு முக்கிய இடம் கொடுப்பதில்லை. உண்மையில் தொழின்முறை அமைப்பின் குறுகிய நோக்குக் காரணமாக உயர்கல்வித் தராதரமானது குறைவடைந்து விட்டன. தனது "அமெரிக்காவில் உயர் கற்றல்" (Higher Learning in America) என்னும் நூலில் கால்பிறைய்த் இந்நிலைமையை விமர்சிக்கிறார். கைத்தொழில் முறைமையிலிருந்து கல்வியையும், (அரசையும் கூட) விடுதலை செய்ய வேண்டும் எனக்கூறுகிறார். இதற்குக் கல்வி, விஞ்ஞானம் ஆகிய துறைகளைச் சார்ந்தோர் புத்திஜீவிக் குழுவினரின் உதவியுடன் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டுமெனக் கூறுகிறார். இவ்வாறான விடுதலை மனிதனின் சுதந்திரத்தை விலையாகக் கொள்ளாத பெளதீகத் தேவைகளை ஈடுசெய்யப் பொருளாதார முறைமையைத் தூண்ட முடியும். இங்கு சுதந்திரம் என்பதை வர்த்தகர்களின் சுதந்திரம் என கால்பிறைய்த் கொள்ளவில்லை. கைத்தொழில் முறைமையானது அதற்குரிய இடத்தில் வைக்கப்பட வேண்டும். அந்த இடம் எது என்பதையும் எவ்வாறு அங்கு வைக்கப்பட வேண்டும் என்பதையும் கால் பிறைய்த் தனது "பொருளாதாரமும் பொதுசன நோக்கும்" என்ற தனது மூன்றாவது நூலில் விளக்குகிறார்.
பொருளாதாரமும் பொதுசன நோக்கும்
கால்பிறைய்த்தின் நோக்கில் பொருளாதாரத்தின் பணிகளில், கைத்தொழில் முறைமையின் நலன்கள் பொதுசன நலன்களிலிருந்தும் மிகவும் வேறுபட்டது என்பதை எடுத்துக் காட்டுவதாகும். இங்கு கைத்தொழில் முறைமை என்பதைத் திட்டமிடல் முறைமை (Planning System) என அவர் மறுபெயரிட்டார். நுகர்வோனும், பிரசையும் இறைமை உள்ளவர்கள் எனச் சந்தையும் சனநாயகமும் கூறுகின்றன. உண்மையில் திட்டமிடல்முறைமை தொழின்முறை அமைப்பின்தேவைகளைப் பார்த்துக் கொள்கின்றது. அதனுடைய அதிகாரமானது குழுமுறைத் தீர்மானம், கருத்தொருமிப்பு ஆகியவற்றிலிருந்துவரும் அதிகாரத்தினால் வலுவூட்டப்படுகிறது.
திட்டமிடல் அமைப்பானது அரசு மற்றும் சந்தை முறைமையுடன் நெருக்கமாகத் தொடர்புபட்டுள்ளது. புதிய, பழம் பொருளியலாளர்கள்
155

Page 81
திட்டமிடல் முறைமையைச் சந்தை முறைமையுடன் இணைக்க விரும்புகின்றனர். கெய்னீசியன் மாதிரியானது அரசின் நடிபங்கினை ஏற்கிறது. எனினும் திட்டமிடல் முறைமைக்கு ஆதரவாகச் செயற்படும் கெய்னீசியன் கேள்வி முகாமைத்துவம் பொதுவாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை. அதைப்போல் பேரினப் பொருளியல் கொள்கைகளுக்கான தண்டனைக்குச் சார்பான போக்குகளும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இவ்வாறான தவறான கருத்துக்களைத் திருத்துவதற்கு கால்பிறைய்த் முயன்றார்.
சந்தை முறைமையே சிறு நிறுவனங்களுக்கு உரிய இடமாகும். இச்சந்தை முறையின் முக்கிய அம்சமானது தொழின் முயற்சியாளனுக்கும், உழைப்பாளர் மீதும் பாரிய சுரண்டலை விதிப்பதாகும். பாரிய கூட்டுத்தாபனங்களுக்குப் பொருட்கள், உபகரணங்கள், சேவைகளை வழங்கும்போதுசிறு பங்குடைமையாளரின் இலாபம் மிகக் கீழ்மட்டத்துக்குக் குறைக்கப்படுகிறது. பொதுவாகச் சந்தை முறைமைக்கும் திட்டமிடல் முறைமைக்கும் உள்ள உறவுமுறையும் பெரிதும் சமத்துவமற்றது. எனவே மேலே குறிப்பிட்டதைப் போலத் திட்டமிடல் முறைமை ஆளும் தொழின் முறை அமைப்பின் பாதுகாப்பான இலக்குகளினால் வழிநடத்தப்படுகிறது. இவ்விலக்குகள் முழுமையாக முரண்பாடற்றவை எனக் கூறிவிட முடியாது. உதாரணமாக வளர்ச்சி என்பது தொழில் வாய்ப்புக்களையும் வருமானத்தையும் மேலும் மேலும் உருவாக்குவதால் மிகவும் நன்மையானது. ஆனால் இவ்வகையான வளர்ச்சி (ஏனைய கம்பெனிகளைப் பொறுப்பேற்றல் போன்றவை) ஆபத்தானவை.
எனினும் தொழின்முறை அமைப்பு தனது சூழலைக் கூடியவரை கட்டுப்படுத்தும் ஆற்றலுடையது. இதனை உள்ளூரிலும் வெளிநாட்டுச் சந்தைகளில் பல்தேசியக் கம்பெனிகள் ஊடாகவும் அடைய முடியும். சில கூட்டுத்தாபனங்கள் அரசாங்கத்துடன் மிக நெருங்கிய உறவைக் (உதாரணமாக அணுசக்தித் துறை போன்றவை) கொண்டிருப்பதையும் காண முடிந்தது. இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால் தனியார்துறை மற்றும் பொதுத்துறை அதிகாரத்துவம் ஒருவருக்கொருவர் தம் நலன்களைப் பேணிக்கொள்ள முடியும். இவ்வாறான ஒரு ஏற்பாடு பொதுசன நலன்களுக்குக் குந்தகமாக அமையக்கூடும். பொதுமக்கள், புதிய உற்பத்திப்பொருட்கள், செயன்முறைகள் தொடர்பாகச் சந்தேகமும் கொள்ளக் கூடும். அவற்றின் வேலைவாய்ப்பு மற்றும் சூழல் தொடர்பான விளைவுகள் பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
மேலும் திட்டமிடல் முறைமை சந்தை முறைமையைப் போல உள்ளார்ந்த உறுதிப்பாட்டைக் கொண்டதல்ல. சேமிப்பு, முதலீடு தொடர்பான தீர்மானங்களில் இணைப்பு இல்லாத காரணத்தினால் பொருளாதாரத் தேக்கமும் அதனால் கீழ்நோக்கிய உறுதிப்பாடின்மையும் (Downward
156

Instability) ஏற்படக்கூடும். இதற்கான கெய்ன்ஸின் தீர்வு பாதுகாப்புக்காகக் கூடுதலாகச் செலவிடுவதாகும். தேசிய பாதுகாப்புக்குச் செலவிடுதல் என்பது அதன் உள்ளார்ந்த நோக்கம் திட்டமிடல் துறையை உறுதிப்படுத்துவ தெனினும் கூட இலகுவில் நியாயப்படுத்தக் கூடியதாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதெனில் மேல் நோக்கிய உறுதிப்பாடின்மை (UpWardlnstability) என்பது பணவீக்கத்துக்கான முறையான போக்காகும். இது இலகுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதுமில்லை; இலகுவாகக் கையாளப்படுவதுமில்லை. ஊதியம் மற்றும் விலைகளை நேரடியாக அரசாங்கம் நிர்ணயிப்பது சித்தாந்தரீதியாக எதிர்க்கப்படுகிறது; இதற்கு விதிவிலக்குகள் ஏற்படலாம்.
திட்டமிடல் முறைமைக்கும் அது சந்தை முறைமைக்கும் அரசுக்கும் எதிராகக் கொண்டிருக்கும் உறவுகளுக்கும் எதிரான குற்றச்சாட்டு கால்பிறைய்த்தின் கருத்துப்படி பின்வருவனவற்றை உருவாக்குகிறது: சமத்துவமற்ற அபிவிருத்தி, ஒப்புரவின்மை, தவறான புத்தாக்கம், சூழல் பாதிப்பு, அரசுக்கு மேலான அதிகாரம், பணவீக்கம், கைத்தொழில்களுக் கிடையிலான இணைப்பின்மை. இதனைச் சீர்திருத்துவதற்கு அவர் மூன்று கட்டங்களைக் காட்டுகிறார்: நம்பிக்கையிலிருந்து விடுதலை, அரசிடமிருந்து விடுதலை, சீர்திருத்தத்தைக் கொண்டு நடத்துவதற்கு அரசினை ஊக்குவித்தல்.
நம்பிக்கைகளிடமிருந்து விடுதலை என்பது சித்தாந்தங்களிடையே உள்ள தொடர்புகளைத் துTக்கிப் பிடிக் காதிருத்தலாகும். வீட்டிலும் , ஆணாதிக்கமுள்ள தொழில் முறை அமைப்பிலும் பெண்கள் நடைமுறைரீதியாகச் சமத்துவம் பெறுதல் வேண்டும். திட்டமிடல் முறையின் நலன்களுக்குச் சேவகம் செய்வதிலிருந்து பொருளாதாரம் கற்பித்தல் உட்பட கல்விமுறையும் விடுவிக்கப்படல் வேண்டும். கம்பெனிகளில் அர்த்தமற்ற விளம்பரங்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வு தூண்டப்படவேண்டும். பொதுவாழ்க்கையைப் பற்றிய விமர்சனப்பார்வை தூண்டப்படல் வேண்டும். சுருக்கமாகச் சொல்வதாயின் பொதுசன விழிப்புணர்வு (Public Cognizance) தேவைப்பட்டது. அரசானது தேர்தல் செய்முறைகள் மூலம் விடுவிக்கப்படல் வேண்டும். காங்கிரஸின் உறுப்பினர்களின் ஊன்றிய நலன்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட வேண்டும் , பொது நலன்களுக்குச் சார்பான முறையில் அரசு விடுவிக்கப்பட்ட பின்னர் பொதுசன விழிப்புணர்வு என்னும் உத்தியைக் கையாண்டு சந்தை முறைமையை வலுப்படுத்தி, திட்டமிடல் முறைமையை ஒழுங்குபடுத்தி இவையிரண்டுக்குமிடையில் சரியான சமநிலையைப் பேண வேண்டும். குறிப்பாக ஏழு விடயங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
(1) இவ்விரண்டு முறைமைகளினதும் ஒப்பீட்டுரீதியான செல்வாக்கு சமப்படுத்தப்பட வேண்டும். சந்தை முறைமையில் ஆக்கபூர்வமான
157

Page 82
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
நடவடிக்கையை இது குறிக்கிறது. விலைகளையும் வெளியீடுகளையும் இணைப்பதற்குச் சிறுவர்த்தகங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். விலைகளையும் உற்பத்திகளையும் உறுதி செய்தல், தொழிற்சங்க ஒழுங்கமைப்புக்கு ஆதரவு, ஆகக் குறைந்த ஊதியச் சட்டம், சந்தை முறைக்குத் தேவையான கல்விசார், மூலதன, தொழில்நுட்பத் தேவைகளுக்கான ஆதரவு போன்ற அரசாங்க ஒழுங்குகள் இருக்க வேண்டும்.
சோசலிச நடவடிக்கைகள் மூலம் சிறப்பாக வீடமைப்பு, போக்குவரத்து, சுகாதாரச் சேவைகள், கலைகள் போன்றவை தொடர்பாகச் சந்தை முறைமையின் திறமைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இவ்விரு முறைமைகளுக்கும் அத்துடன் திட்ட முறைமைக்கும் இடையில் சமத்துவம் ஊக்குவிக்கப்பட வேண்டும். இக்குறிக்கோள்களை உள்ளடக்கக் கூடியதாக வரிவிதிப்புக் கொள்கையும் கூட்டுப் பேரம் பேசலும் விரிவாக்கப்பட வேண்டும்.
ஓர் ஆரோக்கியமான சூழலில் மக்களின் ஈடுபாடு சட்டரீதியாகத் தொடரப்பட வேண்டும்.
பொதுச் செலவுகளின் முகாமைத்துவம் தொடர்பான பொதுசன ஈடுபாடு கட்டியெழுப்பப்பட வேண்டும்.
திட்டமிடல்முறைமையின் பணவீக்கம், சுருக்கம் போன்ற போக்குகள் ஒழிக்கப்படல் வேண்டும்.
கைத்தொழில்களுக்கு இடையிலான இணைப்பு அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்படல் வேண்டும். உண்மையில் திட்டமிடல் என்பது பல்வேறு தேசிய முறைமைகளை ஒன்றிணைக்க வேண்டும்.
சும்பீற்றரைப் போலவே கால்பிறைய்த்தும் மலரும் புதிய சமூக ஒழுங்கில் தனது சீடர்களுக்கு அதிக வேலைகளை எதிர்பார்த்ததுடன் தான் முன்வைத்த புதிய உலகில் தமது சீடர்கள் பல முக்கிய பதவி நிலைகளை வகிப்பர் எனவும் கருதினார். நிலப்பிரபுவின் அதிகாரத்தைக் கைத்தொழில் முதலீட்டாளன் எடுத்துக்கொள்ள அவனிடமிருந்து அதனை தொழின்முறை அமைப்பு எடுத்துக் கொண்டது. தொழின்முறை அமைப்பின் வாரிசாகத் தொழில்சார் பொருளியலாளன் விளங்குவானா?
158

LDö5uî söT 9IL-JI (Left of Centre)
கால்பிறைய்த்தின் “செல்வந்தச் சமூகம்” குறொஸ்லன்டின் “சோசலிசத்தின் எதிர்காலம்” 1950களின் பின்னரைப் பகுதியில் ஈராண்டு இடைவெளியில் வெளிவந்தன. இவ்விரண்டும் முற்போக்கான மத்தியின் இடது சிந்தனைகளாகும். எனினும் இவையிரண்டும் இரண்டு வித்தியாசமான சமூக, அரசியல் சூழ்நிலைகளைப் பிரதிபலித்தன. “செல்வந்தச் சமூகத்தில்” போருக்குப் பின்னரான அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருள் சார்ந்த வெற்றிக்குப் பதில் கூறப்பட்டதுடன் அமெரிக்கர்களைத் தமது பொருள் சார்ந்த அடைவுகளிலிருந்து விலகி நிற்குமாறு கோரி நின்றார். அத்துடன் பொதுத்துறையை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தனது பங்களிப்பைக் கூட்டவேண்டுமெனவும் கூறினார். இதற்கு முரணாகச் “சோசலிசத்தின் எதிர்காலம்” என்னும் நூலில் 1945-51 தொழிற்கட்சி அரசாங்கத்தினால் மரபுரீதியான சோசலிசத் திட்டத்தில் குறிக்கோள்கள் நிறைவு செய்யப்பட்டமைக்குப்பதிலளித்தார். அவரைப் பொறுத்தவரை சோசலிசம் மிகப் பிரதானமானதொரு வெற்றியை அடைந்து விட்டது. அத்துடன் நிரந்தரமாக இருக்கப்போகின்ற ஒரு சமூகக் கட்டுமான செயன்முறையையும் செய்து முடித்தது.
குறொஸ்லன்டும் தனது சகபாடிகளைக் குறிப்பாகத் தனது தொழிற்கட்சி சகபாடிகளைக் கொஞ்சம் விலகி நிற்குமாறு கேட்டுக் கொண்டார். மொத்தமாக அனைத்தையும் தேசியமயக்காத திட்டமிடல் மூலம் சோசலிசக் குறிக்கோள்களை அடைய முடியும் என அவர் கூறினார் . கால்பிறைய்த்தைப் போலவே அவரும் தன்னைச் சூழ உள்ள பலரும் சமகால சமூகத்தின் பண்புகளையும் தேவைகளையும் ஆணித்தரமாக விவரிக்க முடியாத தற்காலத்துக்குப் பொருத்தமற்ற சித்தாந்தத்துக்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என நம்பினார். குறொஸ்லன்டுக்கு எதிராக இருந்த பாரிய தடை கால்பிறைய்த்தின் எதிரியான புதிய பழம் பொருளியல் அல்ல, மாறாகப் போருக்கு முந்திய சோசலிசக் கருத்துக்களாகும். இத் தொடரில் மிக முக்கியமான மார்க்சிய சிந்தனையாளர்களான ஜோன் ஸ்ரெச்சியையும் ஹரோல்ட் லஸ்கியையும் குறிப்பிடுகிறார். ஹரோல் லஸ்கியின் சிந்தனைகள் அரசியல் வானில்..... பாரிய செல்வாக்கு நிறைந்தவை என குறொஸ்லன்ட் குறிப்பிடுகிறார்.
பிரித்தானிய தொழிற்கட்சி மிகவும் தீர்க்கமான வழியில் வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டுமென குறொஸ்லன்ட் விரும்பினார். இந்த வழி கால்பிறைய்த்தின் வழியைவிட வித்தியாசமானது. “செல்வந்தச் சமூகம்’ பற்றிய ஓர் ஆய்வுரையில் குறொஸ்லன்ட் அமெரிக்காவின் செல்வ வளத்தைவிட பிரித்தானிய செல்வவளம் மிகவும் குறைவானது என வாதிட்டார். எனவே பிரித்தானியாவில் வளர்ச்சியும், வினைத்திறனும் இன்னும் சில தசாப்தங்களுக்கேனும் மிகவும் அவசரமானவை எனக் கூறினார். எனினும் சமகால அமெரிக்கா பற்றிய கால்பிறைய்த்தின்
159

Page 83
கண்ணோட்டத்தைக் குறொஸ்லன்ட் ஏற்றுக்கொண்டார். இதனைப் பிரித்தானியா எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு முன்னோடி எனவும் கால்பிறைய்த்தின் கருத்துக்கள் பிரித்தானியா தனது எதிர்காலப் பிரச்சினைகளை எதிர்நோக்க உதவும் எனவும் அவர் கருதினார். குறொஸ்லன்டும் கால்பிறைய்த்தும் சில விடயங்களில் ஒரே கருத்தைக் கொண்டிருந்தார்கள். உதாரணமாக மெய்வருமானத்தின் சராசரி மட்டம் கூடக்கூட சமூகச் சமத்துவம் என்பதன் அகவயப் பொருளும் கூடும் என்று இருவரும் கூறியுள்ளனர். உண்மையில் சமத்துவம், பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றுக்கிடையிலான இடைத்தொடர்புகளே இருவரது நூல்களிலும் உள்ள மையக்கருத்தாகும்.
சோசலிசத்தின் எதிர்காலம்
பிராய்ட், கெய்ன்ஸ் போன்றோரைப் போலவே மார்க்சும் ஒரு ‘மேருமலை’ (Toweringgiant) என குறொஸ்லன்ட் ஏற்றுக்கொண்டாரெனினும் அவரது கருத்துக்களும், எதிர்வுகூறல்களும் சமகாலப் பிரித்தானியாவுக்குப் பொருத்தமற்றவை என அவர் வாதித்தார். இரு யுத்தங்களுக்கிடையில் சோசலிசவாதிகள் மார்க்சியத்தின் மீது பேரார்வம் காட்டினும் அவர்களது எதிர்பார்ப்புக்கு ஏற்ப முதலாளித்துவம் சரிந்துவிடவில்லை. ஆனால் அது மூன்று வழிகளில் மாற்றம் பெற்றுக் கொண்டிருக்கிறது:
(1) வர்த்தக வகுப்பினரின் அதிகாரத்தை அரசு ஏற்றுக்கொண்டது. அரசின் வடிவம் எப்படியிருப்பினும் அரசியல் அதிகாரம் என்பது பொருளாதாரப் பலம் உள்ள வகுப்பினரிடமே இருக்கும் என்னும் லஸ்கியின் கருத்தைக் குறொஸ்லன்ட் நிராகரித்தார்.
(2) நிறைவான வேலைவாய்ப்புக் காரணமாகக் கைத்தொழில் முகாமைத்துவத்திடமிருந்து தொழிற்சங்கங்கள் அதிகாரத்தை எடுத்துக் கொண்டன. இது ஒரு அமைதியான புரட்சியாகும்.
(3) முகாமைத்துவத்தின் சமூகப்பண்புகள் மாறிவிட்டன. அதன் வளப்பயன்பாடும், பொதுசன அபிப்பிராயத்துக்கு முக்கியத்துவ மளித்தலும் அதிகரித்து விட்டன. "மறைகரத்து"க்குப் பதிலீடாக "மகிழ்ச்சிக்கரம்" (Glad Hand) அமைந்தது. குறொஸ்லன்ட் இப்பதத்தை டேவிட் றிஷ்மன் என்பவரின் "துணையற்ற கூட்டம்” (1950) (The Lonely Crowd (Riesman et al 1953) ) 6T6örgyi நூலிலிருந்து கடன் பெற்றார். றிஷ்மன் பிராய்டின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தார். அமெரிக்க சமுதாயத்தில் ஒத்துழைப்பு, குழுவேலை, ஆளிடைத் தொடர்புகளில் பிறரை மதிக்கும் இயல்பு பரவுகிறது எனக் கூறினார். இத்தன்மைகள் பிரித்தானியாவிலும் காணப்பட்டன. சுயநலப் போக்குகளும் தன்னுணர்வுகளும் நிராகரிக்கப்படுகின்றன.
160

மார்க்சியவாதிகள் எதிர்பார்த்ததைப் போல் அல்லாமல் பொதுநல ஏற்பாடுகளும் வருமான மீள் பங்கீடும் அடையப் பட்டுள்ளன. தொழிற்கட்சியின் சனநாயக நலன்களுக்கு எதிராக முதலாளித்துவம் தொழிற்படும் என லஸ்கி எதிர்பார்த்தார். இவ்விடயத்திலும் லஸ்கி தவறு விட்டார் என குறொஸ்லன்ட் வாதிக்கிறார். பிரித்தானிய சமூகத்தின் பொருளாதார, அரசியல் சட்டக அமைப்பு மாறிவிட்டதினால் பழைய சோசலிசம் பொருத்தமற்றுவிட்டது. முதலாளித்துவம் போன்றவை உண்மையில் என்ன என்ற கேள்வியைக் கால்பிறைய்த் எழுப்பினார். கெய்ன்ஸ் மாற்றியமைக்கப்பட்ட முதலாளித்துவம் பொதுநல அரசு என்னும் வாய்ப்பாட்டை இரு வருடங்களின் பின்னர் கால்பிறைய்த் விளக்க முற்பட்டார்.
குறொஸ்லன்ட் தனது இருபத்திரண்டாவது வயதிலேயே மார்க்சியத்தைத் தான் திருத்தப்போவதாகவும் ஒரு நவீன பேர்ன்ஸ்ரைன் வரப்போவதாகவும் ஒரு நண்பருக்கு எழுதியதாகத் தனது சுயசரிதையில் குறொஸ்லன்டின் மனைவியான “சூசன் குறொஸ்லன்ட்” குறிப்பிட்டுள்ளார். குறொஸ்லன்ட் சோசலிசம் என்னும் பெயரில் உள்ள பல்வேறு முரண்பட்டகொள்கைகளைக் கவனமாக ஆய்வு செய்தார். மூன்று மரபு சார்ந்த குறிக்கோள்கள் உள்ளனவென அவர் முடிவுசெய்தார். முதலாவது போட்டிக்குப் பதிலாக ஒத்துழைப்பைப் பதிலீடு செய்தல். இது மிகவும் தெளிவில்லாதது. பிரித்தானியாவில் போட்டியானது ஒப்பீட்டளவில் வன்முறையானதல்ல. போட்டிமுறை வளர்ச்சியுறும் போது ஒத்துழைப்புப் பின்னடைகிறது. அதே நேரத்தில் சலுகை பெற்ற வகுப்பும் உருவாகிறது. குழு ஒத்துழைப்பு மிக இலகுவில் குழுவின் பிரத்தியேகத் தன்மையாக மாற்றமடையக் கூடும் என குறொஸ்லன்ட் வாதிடுகிறார். மற்ற இரு இலக்குகளும் மிகவும் தெளிவானவை. பாதுகாப்பைக் கூட்டவும் துன்பங்களைக் குறைக்கவும் சமூக நல ஏற்பாடுகள் அவசியமானவை. அத்துடன் வர்க்கபேதமற்ற சமத்துவமான ஒரு சமூகத்தை உருவாக்குவதும் மிகவும் முக்கியமானவை. இவற்றில் முதலாவது இலக்கைப் பொதுநல முறைமையின் நான்கு அம்சங்களைப் பலப்படுத்துவதன் மூலம் அடைய முடியும். இடைநிலை வறுமை (வலது குறைந்தோர் உட்பட) மாறும் சமூக மனப்பாங்கு காரணமாக குடும்பம் உடைவுறுதல், தேவைகள், விசேட சூழ்நிலைகளின் அடிப்படையற்ற வருமானப் பங்கீடு, தடுப்பு முயற்சி, பொதுச் சுகாதாரம், வீடமைப்பு, கல்வி போன்றவற்றில் தரத்தைப் பேணுதல் சகலருக்கும் அவ்வசதிகளை இலசவமாக அளிக்க வேண்டும் என்பதை விடமுக்கியமானது, இது நீண்டகாலச் சோசலிச இலக்குடன் சம்பந்தப்பட்டது. வர்க்கபேதமற்ற சமத்துவம் கொண்ட சமூகத்தை அடைய வேண்டுமென குறொஸ்லண்ட் விரும்பினார்.
எனினும் வருமான மீள்பங்கீடு பிரித்தானியாவில் பெருமளவாக
நடந்தபோதும் வர்க்க உணர்வு அங்கு காணப்பட்டது ஆச்சரியமானது.
பொதுவான அதிருப்தி நிலை வேலை நிறுத்தங்கள், வன்முறை, 161

Page 84
கைத்தொழில் எதிர்ப்புணர்வு ஆகியவற்றின் மூலம் வெளிப்பட்டது. அதிக சம்பளம் பெற்றாலும் அவர்களுக்குப் பங்குபற்றுதல் மறுக்கப்பட்டதே இதன் காரணம் என குறொஸ்லன்ட் நம்பினார். உலக அரசியல் சக்தி லண்டனிலிருந்து வாஷிங்டனுக்குச் சென்றதைத் தொடர்ந்து கைத் தொழில் எதிர்ப்புணர்வும் அரசியல் அதிருப்தியும் தலைதுாக்கின. வருமான மீள்பங்கீடு பிரித்தானியாவில் அதிகாரப் படிமுறைகளை மாற்றியமைக்க வில்லை. செல்வத்தை உரித்தாகப் பெற்றதால் வர்க்கபேதங்கள் பாதுகாக்கப்பட்டன. பிளவுபடுத்தும் கல்விமுறைமை தனியார் பாடசாலைப் பிள்ளைகளையும் அரசாங்கப் பாடசலைப் பிள்ளைகளையும் பிரித்து வைத்தது. இதனால் வர்க்கங்களுக்கிடையிலான கலாசார இடைவெளி தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டது.
ஒவ்வொரு பிள்ளைக்கும், ஒரு பிரசை என்ற இயற்கை ‘உரிமை உண்டு. இவ்வுரிமையானது வாழ்வு, மகிழ்ச்சி என்பவற்றுக்கான உத்தரவாதம் மட்டுமல்ல; அவனது இயற்கைத் திறன்கள் மூலம் அவனுக்குரிய சமூக நிலையை அடைவதற்கு அவனுக்கு உரிமையுண்டு என குறொஸ்லன்ட் வாதிட்டார். போட்டித்தன்மையை நசுக்கவேண்டுமென குறொஸ்லன்ட் நினைக்கவில்லை. ஆனால் இப்போட்டித்தன்மை சனநாயகச் சமூகச் சூழ்நிலையில் ஏற்படவேண்டுமென அவர் கூறினார். பின்னர் இவர் கல்வி அமைச்சரான போது, இக் கொள்கையை நடைமுறைப் படுத்துவதற்காக முழுமைப் பாடசாலைகளைப் பரவலாக (Comprehensive Schools) அமைத்தார். பொதுவாக சமூகச் சமத்துவத்துக்காக உழைப்பதே குறிக்கோளாகும். இது சமூக விரயத்தைக் குறைத்தது. ஆனால் பொருளாதார வினைத்திறன், உயர் கலாசாரம் அல்லது தனிமனித சுதந்திரம் ஆகியவற்றை அச்சுறுத்தவில்லை. அமெரிக்காவில் அதிகளவான சனநாயகச் சமூகச் சூழ்நிலை நிலவியது. இச் சூழ்நிலைக்குப் பாடசாலைகளில் கூடிப்பழகுதல், பங்கு கொள்ளும் நுகர்வு நியமங்கள், உயர்ந்த வாழ்க்கைத்தரம் ஆகியவை காரணம் என குறொஸ்லன்ட் கூறினார். இவற்றைவிட மிகவும் முக்கியமானது முகாமைத்துவத்துக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் ஏற்படும் பிணக்குகள் எவ்வளவு பாரதூரமானவையாக இருப்பினும் நிறுவனத்தின் ஏனைய அம்சங்களில் அவை பிரதிபலிப்பதில்லை. பிரித்தானியர்வைப் பொறுத்தவரையில் சமத்துவத்தை நோக்கி முன்னேறுவதற்குக் கல்வி, நுகர்வு, உரித்தான சொத்து, கைத்தொழில் ஆகிய நான்கு விடயங்களில் கவனம் செலுத்துதல்
வேண்டும்.
கல்வியைப் பொறுத்தவரையில் குறொஸ் லன்ட் மிக நேரான அணுகுமுறையைக் கொண்டிருந்தார். அவர் தனியார், அரசாங்கப் பாடசாலை முறைமையைப் படிப்படியாக ஒன்றிணைக்க வேண்டு மெனவும் ஒரு முழுமையான இடைநிலைப் பாடசாலை முறையை அறிமுகம் செய்ய வேண்டுமெனவும் கூறினார். அடுத்த விடயமாக நுகர்வைப் பொறுத்தவரையில் அவர் சும் பீற்றரின் கருத்தையே
162

கொண்டிருந்தார். வளர்ச்சியானது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் எனக் கருதினார். ஆடம்பரப் பொருட்கள் சாதாரண மக்களைச் சென்றடையும், கற்றறிவாளர் குழு மட்டுமே நுகர்வு செய்யக்கூடிய சந்தர்ப்பங்கள் தொடர்ச்சியாகக் குறைவடையும். எனினும் தூய்மையான சோசலிச வாதிகள் செல்வத்தை இழிவாகக் கருதக் கூடாது. சகோதரத்துவ அன்பு மிகவும் சிறந்ததே, ஆனால் சகோதரர்கள் ஏன் செல்வந்தர்களாக இருக்கக் கூடாது. ஒரு நுகர்வுச் சமூகம் தொடர்ச்சியான விரக்திநிலைக்குத் தள்ளப்பட்டுவிடும் என்னும் ரொக் வில் லின் பயத்தை அவர் நிராகரித்தார்.
குறொஸ் லன்ட் மிகவும் தீர்க்கமான செல்வநிலைச் சமத்துவத்தை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதிகளவான உபரிச் செல்வம் குறைக்கப்பட வேண்டும். உழைக்கும் வர்க்கம் பங்குரிமை கொள்வதை ஊக்குவிக்கவேண்டும். இவ்வகையான ஏற்பாடுகள் மூலம் சமூகக் கல்விநிலை மாற்றமடையும். இதன் மூலம் கைத்தொழில் துறையில் காணப்படும் பகைமையுணர்வு குறைக்கப்படும்.
கைத்தொழிலைப் பொறுத்தவரை நான்கு நடவடிக்கைகள் நன்மை அளிக்கும். அவையாவன:
(1) ஊதிய பேரம்பேசலில் ஒரு நீதியான முறைமை (2) ஊழியப்படையினருடன் ஆலோசனை மேற்கொள்ளல் (3) தொழிலாளர் பங்களிப்பை உருவாக்கல். தொழிலாளர் பிரதிநிதிகள் நேரடியாக வேலையாட்களிலிருந்து தெரிவு செய்யப்படல் வேண்டும். (4) தொழிற்சங்கங்களும், உயர்கைத்தொழில்முகாமைத்துவமும் தேசிய
மட்டத்தில் கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும்.
மேற்படி விடயங்களில் வெற்றியடைதல் என்பது வளர்ச்சியில் தங்கியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் செல்வநிலை பரந்திருந்தது. ஆனால் யுத்தத்திற்கு முன்னரான சோசலிசவாதிகளின் எதிர்பார்ப்பின்படி பிரித்தானியா அந்த நிலையை அடையவில்லை. உயர்ந்த வளர்ச்சி நிலை இல்லாதபோது உள்நாட்டிலும் வெளியிலும் கஷ்டநிலையைக் குறைக்க முடியாது; சமூக, உற்பத்தித்துறை முதலீட்டைக் கூட்ட முடியாது; ஏற்றுமதியையோ வாழ்க்கைத் தரத்தையோ கூட்டமுடியாது.
குறொஸ்லன்ட் இவை சாத்தியமாகும் என நம்பிக்கை கொண்டிருந்தார். கெய்ன்ஸின் கேள்வி-முகாமைத்துவநுட்பங்கள் நடைமுறைசார்ந்ததாகவும் காத்திரமாகவும் இருந்தன. நிறைவான தொழில்வாய்ப்புக் காரணமாக தொழில்நுட்பப் புத்தாக்கத்துக்கான எதிர்பார்ப்புக் குறைவடைந்தது. கம்பெனி முகாமையாளர்கள் வளர்ச்சிவீதத்தை ஒரு கெளரவமாகக் கருதத் தொடங்கியிருந்தனர். இலாபத்தின் பெரும்பகுதியைச் சம்பளங்களாகவும்,
163

Page 85
வருமானமாகவும் வழங்காமல் சமூகப் பெறுமதியுள்ள விடயங்களில் முதலீடு செய்யப்பட வேண்டுமென்பதை உறுதிப்படுத்தல் இன்னுமொரு சவாலாக இருந்தது. குறொஸ்லன்ட் ஒரு ஒரேயளவு வீத இலாப வரியை (Flatrate profit fax) 25 figs stå.
வளர்ச்சியைவிடத் திட்டமிடல் வேறு பிரச்சினைகளை முன்வைத்தது. முக்கிய கைத்தொழில்களான மின்சாரம், நிலக்கரிமுதலியவற்றைத் தேசிய மயப்படுத்தியமையால் அவை செல்வத்தின் மீள் பங்கீட்டையோ அல்லது காத்திரமான திட்டமிடலையோ அடையமுடியவில்லை. உள்ளூராட்சி மன்றங்கள் பொதுத்துறைத் தொழின் முயற்சிகளில் முதலீடு செய்வதன் மூலம் வளர்ச்சியில் நேரடியாகப் பங்குபற்ற முடியும். பொதுவாகப் பொருளாதாரம் பன்முகப்படுத்தப்பட்ட, பல்வகையான உரிமை அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். இவ்வகையான பொருளாதார அமைப்பில் திட்டமிடல் முக்கிய இடத்தை வகிக்கின்றது. “சந்தைப் பொறிமுறையில் ஏதாவது தலையீடு செய்யும்போது அது இறுதியில் ஒரு கட்சி ஆட்சி அமைப்பு என்னும் பொறியில் தள்ளிவிடும்” என்னும் ஹயெக்கின் கோட்பாடு இப்போது தனது கவர்ச்சியை இழந்து விட்டது. ஒருபுறம் கைத்தொழில் தனது சித்தாந்த இணைப்பை இப்போது தலையிடாமைக் கொள்கையிடம் இழந்துவிட்து. மறுபுறம் திட்டமிடலாளர்கள் தமது ஆர்வத்தைக் குறைத்துக் கொண்டனர். உதாரணமாகக் குறொஸ் லன்ட் " விலைப்பொறிமுறையை ஒரு திருப்தியான முறையாக” ஏற்றுக்கொண்டார். “சாமுவேல் பிரிட்டன்" (Samuel Britan) குறிப்பிட்டதைப் போல் குறொஸ்லன்ட், அடம்ஸ்மித்தின் மறைகரத்துக்கு முக்கிய இடம் வழங்கினார்.
வளர்ச்சியை நோக்கி
குறொஸ்லன்ட் 1950களில் கொண்டிருந்த சாத்தியமான நம்பிக்கையை 1970களில் கொண்டிருக்கவில்லை. அவரது திட்டத்தின் ஒருபகுதி அடையப்பட்டது என்பது உண்மையே. பொதுச் செலவினங்களைக் குறைப்பதற்கு அழுத்தம் இருந்தபோதும் ஒரு நியாயமான மட்டத்தில் பேணப்பட்டது. சமூக சேவைகள் காரணமாக ஓரளவு வருமான மீள்பங்கீடு செய்யப்பட்டது. முழுமையான கல்வி முறைமை ஆரம்பிக்கப்பட்டது. பெருமளவு வீடுகள் கட்டப்பட்டன. எனினும் சென்மதி நிலுவைப் பிரச்சினைகளும் நெகிழ்ச்சியற்ற அந்நியச் செலாவணி விகிதமும் பொருளாதார வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிட்டன.
ஓர் உயர்நிலை வளர்ச்சியில்லாத நிலையில் சமத்துவக் கொள்கையையும் கூடிய ஏற்றுமதியையும் கையாள்வது மிகவும் சிரமமானது. 1960களில் நேரடி வரிவிதித்தல் காரணமாகப் பணவீக்கமும், வேலைநிறுத்தமும், அமைதியின்மையும் ஏற்பட்டன. 1956இல் உழைக்கும் வர்க்க
164

வாக்காளர்களின் சோசலிச மனப்பாங்குபற்றி நம்பிக்கை கொண்டிருந்தார். 1974இல் தான் எதிர்பார்த்ததைவிடக் குறைந்த நன்மைகளையே சனநாயக அழுத்தம் வழங்கியது என அவர் எழுத வேண்டியிருந்தது. பிரித்தானியச் சமூகம் நெகிழ்ச்சியற்றதுடன், வர்க்கபேதம் நிறைந்தது எனவும் குறொஸ்லன்ட் எழுதினார். அதே கட்டுரையில் ‘நாம் வர்க்கபேதம் நிறைந்தவர்களாகவும் சமூகப்பற்றுக் குறைந்தவர்களாகவும் இருக்கிறோம்’ என எழுதினார். வளர்ச்சியைச் சீக்கிரம் அடைவேண்டுமெனில் உயர்வான பொதுச் செலவினம் தொடர்பாகக் குறுகிய காலத் திறமுறை கையாளப்படவேண்டும். செல்வப் பங்கீட்டைச் சமப்படுத்த மத்திய காலத் திறமுறை கையாளப்படவேண்டும். இவ்விரு முறையுமே அரசியல்ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இவற்றை நடைமுறைப்படுத்தத் தீவிர நடைமுறை சார்ந்த மனவலிமை வேண்டும்.
இத்தகைய மனவலிமையுடன் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் மார்கிரெட் தாட்சர் அரசியலில் பிரவேசித்தார். மார்கிரெட் தாட்சரின் அரசாங்கம் குறொஸ்லன்டின் இலக்குகளில் இரண்டினை ஏற்றுக்கொண்டு அடைய முயற்சி செய்தது.
(1) தனிப்பட்ட நுகர்வில் உயர்நிலையை அடைதல். 62) வளர்ச்சி விகிதத்தினை அதிகரித்தல்.
1970களின் பிற்பகுதி முதல் பிரித்தானியாவில் ஹயக்கின் சோசலிசம் பற்றி விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. நேரடி வரிவிதிப்பைக் குறைத்தல், பொதுச் சொத்துக்களை விற்பனை செய்தல், அரசு வழங்கிய சேவைகள் பலவற்றைத் தனியார் மயப்படுத்துதல் ஆகியவற்றை நியாயப்படுத்தி அவர்கள் வாதித்தனர். குறொஸ் லன்டினதும் கால்பிறைய்த்தினதும் சமூக சனநாயக அல்லது தாராண்மைவாத உபாயங்களுக்கு எதிரான தேசிய அரசியல்வாதிகளுக்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சனநாயக முறைமையானது 1988இல் ஒரேயடியாக மூன்று முறை அதிகாரத்தை வழங்கியது.
முடிவுரை
இறுதியாக குறொஸ்லன்ட், கால்பிறைய்த் ஆகியோரின் ஒப்பீடுகளை ஒன்றிணைத்துப் பார்க்கலாம். குறொஸ்லன்ட் முன்னர் தன்னை ஒரு கால்பிறெய்த் ஆதரவாளர் என்று கூறிக்கொண்டாலும் ஆகக் குறைந்தது நான்கு விடயங்களிலேனும் அவர் கால்பிறைய்த்திலிருந்து மாறுபடுகிறார்.
(1) அமெரிக்க, பிரித்தானிய பொருளாதாரங்களின் வேறுபாட்டுக்குக் காரணமான வளர்ச்சிக்கு கால்பிறைய்த்தைவிட குறொஸ்லன்ட்
165

Page 86
(2)
(3)
(4)
முன்னுரிமை அளித்தார். பிரித்தானிய அரசியல்வாதிகள் 1960களிலும் 1970களிலும் விருத்தியடைந்த வளர்ச்சிக்கெதிரான பழமைவாதப் பிரசாரம் பற்றிப் பெருஞ் சந்தேகத்தைக் கொண்டிருந்தனர். குறொஸ்லன்ட் இந்நிலைமை தெளிவான மத்திய வகுப்பு, உயர் வகுப்புச் சார்பைக் கொண்டிருப்பதாக எண்ணினார்.
குறொஸ்லன்ட் வர்க்க சமத்துவமின்மையைக் குறைப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை வேண்டிநின்றார். ஆனால் கால்பிறைய்த் ஐக்கிய அமெரிக்காவில் நுகர்வு மட்டங்களில் அதிகரிப்பு ஏற்பட்டதன் காரணமாகச் சமமின்மை பற்றிய பிரச்சனை மறைந்து விட்டதாக எண்ணினார். கால்பிறைய்த் வகுப்புகளுக் கிடையிலான சமநிலையின்மைபற்றி அதிக கவனம் கொள்ள வில்லை. பொதுத்துறைக்கும் தனியார்துறைக்கும் இடையிலான சமநிலையின்மை பற்றியே அவர் சிந்தித்தார்.
தனியார்துறைக் கைத்தொழில் பொதுத்துறையைவிட வேகமாக வளர்ந்தது என்ற கருத்தில் குறொஸ் லன்ட் உடன்பாடு கொள்ளவில்லை. தனது 'பழைமைவாத எதிரி” (1962) என்னும் நூலில் செல்வ அதிகரிப்புக் காரணமாக பொதுச் செலவு விகிதம் உயர்வடையும் எனக் கூறினார். இதற்குச் சனநாயக அரசியல் அழுத்தமும் முற்போக்கான வரிவிதிப்பும் காரணமாக மக்கள் செழிப்படைந்து உயர் வருமானக் குழுவினராக மாறியமையும் ஒரளவுக்குக் காரணம் எனக் கூறுகிறார்.
கால்பிறைய்த்தைப் போலல்லாது குறொஸ்லன்ட் "மக்கள் விளம்பர மாயையில் சிக்குப்படுகிறார்கள்” என்ற கருத்துக்கு ஆதரவு வழங்கவில்லை. இதற்கெதிராக விளம்பரப்படுத்தல் புதிய உற்பத்திப் பொருள்களின் அறிமுகத்தை ஊக்கப்படுத்துகிறதெனக் கூறுகிறார். பிரத்தியேக மகிழ்ச்சி விழுமியங்களுக்கு குறொஸ்லன்ட் தமது ஆதரவை வழங்கினார். தமது வாழ்க்கையின் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் உருவாக்க மக்களுக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும் என குறொஸ்லன்ட் கூறினார். அவரைப் பொறுத்த வரையில், "தனிநபர் ஒவ வொருவரும் அரசியல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டும், தனது மாலை நேரத்தில் குழுக் கலந்துரையாடலில் ஈடுபட்டுக் கொண்டும், உலகில் உள்ள சகல பிரச்சினைகளுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டும் இருக்கும் ஓர் ஆரவாரமான சமூகத்தையே விரும்புகிறார் எனக் கூற முடியாது.” (குறொஸ்லன்ட் 1964, 255)
米米米米米
166


Page 87
PRINTED BY UNIE
 

EARTS (PVT) LTD. T.P. 3301.95