கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சனநாயகம் என்றால் என்ன

Page 1


Page 2

சனநாயகம் என்றால் என்ன
ஜோண் பி. பிராங் GliratiLir H. Uair (griafuir)
மக்ரியூ ஹன்டல் எரிக் செனோவுத்
தமிழாக்வி சோ. சந்திரசேகரன் டி. தனராஜ் Inn. Bidgaomi
மார்கா நிறுவக வெளியீடு 1994

Page 3
முதலாம் பதிப்பு 1994
C) பதிப்புரிமை : மார்கா நிறுவகம் கணணி அச்சமைப்பு : மார்கா நிறுவக கணணிப் பிரிவு அச்சைமப்பு உதவி : சுதர்ஷினி பெனடிக்
அச்சுப்பதிப்பு யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட்
விநியோக மற்றும் தொடர்புகளுக்கு :
நியூட்டன் பெர்னாண்டோ உதவிப்பணிப்பாளர்
வெளியீட்டுப் பிரிவு
மார்கா நிறுவகம் 61, இசிப்பத்தன மாவத்தை, கொழும்பு - 5
Tel: 585186/881514 61, Cables : Marga Tables : 21642 marga CE
Fax : 580585
7.
ܓܠ
ஆலோசனைக் குழு
கொட்பீரே குணதிலக ஷெல்டன் வனசிங்க நியூட்டள் பெர்னாண்டோ எஸ் . அன்ரனி நோபேட் பி.பி.எம். குணதிலக சரத் மரும்ம
الكب=
இவ்வெளியீட்டுத் தொடருக்கான நிதியுதவியானது கனடாவின் சர்வதேச அபிவிருத்தி முகவரகத்தினால் (CIDA) வழங்கப்பட்டது.

பொருளடக்கம்
முன்னுரை 1
பகுதி 1 : சனநாயகம் என்றால் என்ன
அறிமுகம் 4
1 சனநாயகத்தின் வரைவிலக்கணம் 6
மக்களின் அரசாங்கம் பெரும்பான்மையோர் ஆட்சியும் சிறுபான்மையினர் உரிமைகளும்
II உரிமைகள் 12
மாற்றமுடியாத உரிமைகள் பேச்சு சுதந்திரமும் சமயநம்பிக்கையும் குடியுரிமை:உரிமைகளும் பொறுப்புக்களகம் மனித உரிமைகளும் ஆர்சில்ே இலக்குகளும்
I சட்டவாட்சி 21 சமத்துவமும் சட்டமுடி அரசியல் யாப்புக்கள்
í
IV Cg5g56d556T 26
தேர்தல்களின் அடையுளழ் சனநாயகத் தேர்தல்கள் tன்ற: . சன்நாயக நீதிநெறியும் எதிர்க்கட்சியும்
V சனநாயகப் பண்பாடு 30
ஒரு குடிசார் பண்பாடு சனநாயகமும் கல்வியும் முரண்பாடுகள்,சமரசம்,கருத்தொருமிப்பு
VI சனநாயக அரசாங்கம் 36 சனநாயகமும் அதிகாரமும் தடைகளும் சமநிலைகளும் பிரதம மந்திரிகளும் சனாதிபதிகளும் பிரதிநிதிகள் பாராளுமன்றங்களும் சனாதிபதிகளும்

Page 4
VII அரசியல், பொருளியல்,பன்மைவாதமும் 43
பங்கேற்றல் வாக்களித்தல் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு செய்தித் தொடர்புச் சாதனங்கள் சனநாயகமும் பொருளியலும்
ഗ്രl.ഖുഞ്
பகுதி 2 :ஒரு சுதந்திர சமுதாயத்தில் அரசியல்
அறிமுகம் 52
1 குடியுரிமையும் அரசியல் பங்கு பற்றலும் 56
தனிமனிதப் பங்களிப்பு-மக்களின் உரிமைகள் வாக்களித்தல் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மக்களின் பங்களிப்பு தேர்தல் குழுவாகப் பங்களித்தலும் கூட்டுச்சேரும் சுதந்திரமும் அரசியல் எதிர்ப்பு
I அரசியல் கட்சிகள்,பொதுத்தேர்தலும் பிரச்சாரமும் 68
கட்சி முறைமை அரசியல் கட்சிகளை ஒழுங்கமைத்தல் கட்சியின் நியமனங்களை வென்றெடுத்தல் பொதுத்தேர்தல் பிரசாரத்தை நடத்தல்
III கொள்கையை உருவாக்கும் ஒருவராக அரசியல்வாதி 77
கொள்கை நிகழ்சித்திட்டம் பொதுமக்களின் பங்களிப்பும் செல்வாக்கும்
TV தொடர்புச் சாதனங்கள் 86
தொடர்புச் சாதனம் பற்றிய அரசாங்க ஒழுங்கு விதிகள்
அரசியற் செயற்பாட்டில் தொடர்புசாதனங்களின் பங்கு
முடிவுரை 90

முன்னுரை
சனநாயகத்தின் இயல்பும் கருத்தும் பற்றித்தொடர்ச்சியாக ஐந்து நூல்களை வெளியிடு வதற்கான மார்கா நிறுவனத்தின் முயற்சியில் இவ் வெளியீடு முதலாவதாகும். தகுதி வாய்ந்த படைப்புகளைக் கொண்டநூல்கள் அல்லது அவற்றிற் சில அத்தியாயங்களின் மொழிபெயர்ப்பைக் கொண்டதாக இத்தொடர்கள் அமைந்திருக்கும்.பிரசைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சனநாயக சமூகத்தின் பிரதான அம்சங்களைக் கற்றுணர்ந்த ஆய்வுகளாக இக்கட்டுரைகள் விளங்குகின்றன.ஆரோக்கியமான சனநாயகம் எவ் வாறு செயற்படுகின்றது என்பதை விரிவாகவும், அது நிலைத்து நிற்பதற்குத் தேவை யான பெறுமானங்களைச் சுட்டிக்காட்டுவதாகவும் இக்கட்டுரைகள் உள்ளன. ஏனைய மனித நிறுவனங்கள் போன்று ஒரு சனநாயக முறைமையும் தன்னுள் குறைபாடுகளைக் கொண்டுள்ளதெனினும் இன்றும் இது ஒரு சிறந்த அரசாங்க அமைப்பாக உள்ளது என்பதில் பரந்தளவான உடன்பாடு காணப்படுகின்றது. இத்தொடரில் வரவிருக்கும் ஐந்து புத்தகங்கள் சனநாயகம் ஏன் இந்த அதிஉயர் நிலையைக் கொண்டுள்ளதென் பதை விளக்குகின்றதுடன் சுனநாயக முறைமையின் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை யும் ஆராய்வதாக உள்ளது.
இன்று உலகின் பல பாகங்களிலும் செயற்பட்டு வரும் சனநாயக முறைமைகளானது ஒரே தன்மை உடையவை அல்ல. நிறைவேற்று விடயங்களிலும், அரசாங்கத்தின் செயற்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட சட்டவாக்கக் கருவிகளிலும் குறிப்பிடத்தக்க பல்வகைத்தன்மை காணப்படுகின்றது. பொதுவாக அவை எவற்றைப் பகிர்ந்து கொள் கின்றன என்பது அடிப்படையான தத்துவம் என்பதுடன் அதிலிருந்தே ஏனைய பொது அம்சங்களும் பெறப்படுகின்றது. மக்கள் தமது அரசாங்கத்தைத் தெரிவு செய்யத் தன்னாதிக்கமுடையவர்கள் என்பது தத்துவமாகும். இத்தொடரில் வெளியிடப்படும் ஐந்து நூல்களும், எல்லா சனநாயகங்களுக்கும் பொதுவான அத்தியாவசியமான கூறுகளை விளக்குகின்றதுடன் பல்வேறு சமூகங்களின் தேவைக்குப் பொருந்தும் வகையில் பல்வேறு அமைப்புக்களைப் பரீட்சிக்கவும் முற்படுகின்றது.
இம் முதலாவது அறிமுகத் தொகுதியானது ஒரு சுருக்கமான விளக்கதைக் கொடுக்கின் றது. சனநாயக செயற்பாடுகளின் வழிகளும், வெவ்வேறுபட்ட பகுதிகளின் சனநாயக முறைமையும் எவ்வாறு இடைத் தொடர்புகளைக் கொண்டுள்ள தென்பதையும், ஒன் றுக்கொன்று அவை எவ்வாறு ஆதரவளிக்கின்றது என்பதையும் இந்நூல் தெளிவாக விளக்குகின்றது. அடிப்படை உரிமைகள் மற்றும் சில வேறுபாடு கொண்ட மனிதப் பெறுமானங்களையுடைய ஏனைய அம்சங்கள் தொடர்பாக எல்லாச் சனநாயகச் செயற்பாடுகளும், அமைப்பும் (ஒழுங்கான முறையில் அரசாங்கங்களைத் தெரிவு செய்தலும், பெரும்பான்மையோர் ஆட்சியையும் கொண்ட) எவ்வாறு காணப்படுகின் றது என்பதை இது விளக்குகின்றது. இத்தகைய அகப் பெறுமானங்களும், உரிமைக ளும் பிரிக்க முடியாத சாரமாகவும், சனநாயகத்தின் மையமாகவும் விளங்குகின்றது. இவையில்லாமல் உண்மையான சனநாயகம் இருக்க முடியாது. இலங்கையில் கடந்த இருபது வருட அனுபவமானது தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் அல்லது சனநாயக

Page 5
ஆர்வமானது உண்மையான சனநாயக சமுதாயத்தை நிலைநிறுத்துவதற்குப் போதிய தாக இருக்கவில்லை என்பதை வெளிக்காட்டுகிறது. சக்திவாய்ந்த பெரும்பான்மை ஒன்று சனநாயகரீதியில் தெரிவு செய்யப்பட்டாலும், சனநாயகரீதியான எதிர்க்கட் சியை அழிப்பதற்கும், ஒடுக்குவதற்கும் சனநாயகரீதியற்ற வழிகளைப் பயன்படுத்த முற்பட்டது. இவ் அணுகுமுறையானது எதிர்க்கட்சியாக இருப்பதற்கு அதன் உரி மையை மறுப்பதாக உள்ளது.
ஒரு எதிர்க்கட்சி எப்பொழுதும் நாட்டின் பெரும்பகுதி மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக இருக்கிறது. மறுவகையில் எதிர்க்கட்சி மக்களின் முடிவை ஏற்றுக்கொள் ளவும், சனநாயக முறையின் சட்டத்துக்குள் இயங்கவும் தயாராக இல்லை. கிடைக்கக் கூடிய எல்லாச் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி, நாட்டுக்கு ஒரு நிலையான ஆட்சி யைக் கொடுப்பதற்குத் தெரிவு செய்யப்பட்ட கட்சிக்குப் பிரச்சினையை ஏற்படுத்தவும் முயற்சிக்கின்றது. இத்தகைய பலவீனங்களிற் சில, ஒரு சனநாயக முறைமையின் உள்ளார்ந்த முறைப்பாடாகும். ஆனால் இலங்கையில் சனநாயக முறைமையின் பயனு றுதிவாய்ந்த செயற்பாட்டைத் திரிவுபடுத்தும் வகையில் முனைப்பானவையாகவும் அவை விளக்குகின்றன.
பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுபவர்கள் சலுகைகள், அனுகூலங்களைத் தமக்குரியதாக ஆக்கிக்கொள்கின்றனர். அதிகப்பெரும்பான்மையுடன் தெரிவு செய் யப்பட்ட அரசாங்கங்கள் வழங்கப்பட்ட அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்வன வாகவும், தன்னிச்சையாக நடந்து கொள்வதாகவும் காணப்படுகின்றன. சனநாயகத் தில் பெரும்பான்மையினரின் ஆட்சி என்னும் கருத்தியலானது எப்பொழுதும் சிறு பான்மையினரின் உரிமைகளை மறுக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது.இப்பிரச்சனைக ளில் எல்லாச் சனநாயக முறைமைகளும் தொடர்ச்சியான போராட்டத்தைக் கொண்டி ருப்பதுடன் தவறுகளைத் திருத்துவதற்கு வழிகளைத் தேடுவனவாகவும் உள்ளன. அவைகள் நிறுவனங்களையும், அமைப்புக்களையும் ஸ்தாபிக்கவும், வடிவமைக்கவும் முயலுவதுடன் அவற்றின் மூலமும் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்கள் மிகவும் பயன்படக்கூடிய முறையில், அவர்களை அதிகாரத்துக்குத்தெரிவுசெய்த மக்களுக்குப் பதில் சொல்லக்கூடியதாகவும் மாறுகின்றது.மார்கா நிறுவனத்தின் இவ்வெளியீட்டில் இத்தகைய முக்கிய விடயங்களும், பிரச்சனைகளும் ஆராயப்படுவதுடன் அவை எவ்வாறு சனநாயக முறைமைகளுடன் தொடர்பு படுகின்றதென்பதையும் உசாவுகின் றது.அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பும் உறுதியும் சனநாயக முறைமையின் அடிப் படையாக இன்று தோற்றம் பெற்று வருகின்றது.
இரண்டாவது தொகுதி சனநாயக முறைமையின் கீழ் விருத்தி பெற்ற பல்வேறு அரசாங்க அமைப்புக்களை ஆராய்கிறது. சனாதிபதி மற்றும் பாராளுமன்ற முறைமை ஆகிய இரு முக்கிய வடிவங்களில் ஐக்கிய அமெரிக்கா முன்னையதற்கும், ஐக்கிய இராச்சியம் பின்னையதற்கும் சிறந்த எடுத்துக்காட்டாகத் தரப்படுகின்றது. தேர்தல் முறைமையிற் காணப்படும் வித்தியாசமான வேறுபாடுகளை ஆராய்ந்து, இப்பிரச்சி னைகளுக்குத் தீர்வுகளைக் கொடுக்க அவை எவ்வாறு முனைகின்றன என்பதையும் ஆராய்கின்றது. தேர்தற் செயல்முறைகள் வேறுபாடு கொண்டவை. அவை நன்மைக ளையும்.தீமைகளையும் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, இத்தாலி விகிதாசாரப்
2

பிரதிநிதித்துவ முறையைக்கொண்டுள்ளது. பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண் ணிக்கைக்கு ஏற்பவே ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஐக்கிய இராச்சியத்தில் தற் போது காணப்படும் பிரதேசரீதியான தேர்தல் தொகுதி முறைகளும் சர்ச்சைக்குரிய தொன்றாகவே உள்ளன. தேசிய அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் வாக்குளின் எண்ணிக்கைக்கேற்ப விகிதாசாரமின்றிக் குறிப்பிட்ட எண்ணிக்கையான ஆசனங்கள் வெற்றிபெறும் கட்சிக்குக் கொடுக்கப்படுகின்றது.இலங்கைஇத்தகைய பிரச்சினையை விகிதாசாரப் பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன் கொண்டிருந்தது. விகிதாசாரப்பிரதிநிதித்துவ முறைமை இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும், வாக்கா ளனுக்கும், அவனது பிரதிநிதிக்கும் இடையிற் காணப்படுகின்ற தொடர்பைத் தடை செய்கின்றது என்ற காரணத்தினால் குறைகூறப்பட்டு வருகின்றது. இத்தொடர்பானது தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர் தெளிவாக அடையாளம் செய்யப்பட்ட தொகுதி ஒன்றில் பிரதிநிதித்துவப் படுத்தப்படும்போது மிகவும் இறுக்கமாக இருக்கும். ஜேர்ம னியில் விகிதாசாரப்பிரதிநிதித்துவ முறையும் தொகுதிப்பிரதிநிதித்துவமும் இணைந்த வகையிலான இருமுறைகளின் கலப்பைக் கொண்ட முறை காணப்படுகின்றது. அரசிய லமைப்புச் சீர்திருத்தங்களுக்காக வாதாடுபவர்கள் இம்மாதிரியை இலங்கைக்குப் பொருத்தமுடையதாகக் கூறுகின்றனர்.
மூன்றாவது தொகுதியானது தெரிந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைக் கொண்டிருப் பதுடன் அது கிரேக்க நகர அரசிலிருந்து நவீன காலம் வரைப்பட்ட பிரபல்யமான மெய்யியலாளர்களினதும் அரசியல் சிந்தனையாளர்ளினதும் எழுத்துக்களில் பிரதிப லித்த சனநாயகக் கருத்துருவத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிய தேடலாகவும் அமை கின்றது.
நான்காவது தொகுதியானது இலங்கையின் சனநாயகத்துக்குமுக்கியமான பல்லினப், பண்பாட்டுச் சமுதாயங்களில் நிலையான செயற்பாட்டைக் கொண்டிருப்பதற்கான சனநாயக முறைமைக்கு அவசியமான பெரும்பான்மை ஆட்சியினரின் பிரச்சினை, நிறுவன மற்றும் பொறிமுறை தொடர்பான விடயங்களை எடுத்துரைக்கின்றது. உள் ளுர்ச் சமூகத்தின் பங்கு, பிரசைகள், நிறுவனங்கள் கொண்டிருக்கக்கூடிய பங்காற்றல் பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. பிரசைகளின் சனநாயகப் பங்களிப்பானது அவர்களது வாக்குகளை அளிக்கும் உரிமையுடன் மாத்திரம் இணைந்திருக்கவில்லை. ஆட்சிமுறைமை, தேசியக் கொள்கை தொடர்பான முக்கிய விடயங்களில்நிலையான பொதுக் கலந்துரையாடல்கள் அவசியம். தேசியக் கொள்கைகளின் வடிவமைப்புத் தொடர்பான பொதுவிடயங்களைக் கொண்ட கலந்துரையாடலில் அரசு சார்பற்ற நிறுவனங்களின் கூட்டுப்பங்களிப்பு அவசியமானது. ஐந்தாவது தொகுதிசனநாயக நிறுவனங்களைப் பற்றிய கட்டுரைகளைக் கொண்டிருக்கும். எனவே சனநாயகச் செயற்பாட்டைப் பாதுகாத்தலும், விருத்தி செய்தலும் என்பது பிரசைகள், அரசியற் கட்சிகள், அரசு என்பதன் கூட்டான கடமையாகும். இந்நாட்டின் உண்மையான சனநாயக நிறுவனங்களைப் பேணுவதற்கும் கட்டியெழுப்புவதற்கும் தேவையான பிரதான முயற்சிகளைப் பொதுமக்கள் விளங்கிக் கொள்வதற்கு இது தொடர்பான வெளியீடுகள் பெரிதும் உதவும் என மார்கா நிறுவகம் உறுதியாக நம்புகிறது.
கொட்பிரே குணதிலக

Page 6

பகுதி 1
சனநாயகம் என்றால் என்ன
செஸ்டர் ஈ. ஃபின் (யூனியர்) மத்தியூ ஹன்டல் எரிக் செனோவத்
தமிழாக்கம்
டி. தனராஜ்
செயற்றிட்ட அதிகாரி கல்வி முகாமைத்துவ அபிவிருத்தித் துறை தேசியக் கல்வி நிறுவகம், மகரகம

Page 7
சனநாயகம் என்றால் என்ன
அறிமுகம்
சுதந்திரமும் சனநாயகமும் (Freedom and democracy) வேண்டி நிற்கும் குரல்கள், உலகளாவிய ரீதியில் உரத்தொலிக்கும் ஒரு கால கட்டத்தில் நாம் வாழ்கின்றோம். அரை நூற்றாண்டுக்கு மேலாக வேரூன்றியிருந்த எதேச்சாதிகார அரசுகளை கிழக்கு ஐரோப்பா அகற்றிவிட்டது. 75 ஆண்டுகளுக்கு மேலாகக் காலூன்றியிருந்த பொதுவு டைமை அரசுகளை நீக்கித் தாம் முன்னர் அனுபவித்திராத ஒரு புதிய சனநாயக (gricos (New democratic order)Saap T L G5ITGSugs (estaugaisair (Republics of the Soviet Union)முனைகின்றன. ஆனால் ஐரோப்பாவின் அசாதாரண அரசியல்
நிகழ்வுகள் உலகெங்கிலும் மக்களை ஒருங்கிணைப்பதில் சனநாயகம் காட்டும் உறுதிப் பாட்டினையும் வேகத்தையும் திரைபோட்டு மறைக்கச் செய்கின்றன. இன்று வடஅமெ ரிக்காவும், தென் அமெரிக்காவும் பெருமளவுக்கு சனநாயகம் நிலவும் ஓர் அரைக்கோ ளமாகி விட்டன. ஆபிரிக்கா முன்னெப்பொழுதுமில்லாதவாறு சனநாயக சீர்திருத்த யுகத்தில் மூழ்கிக் கொண்டிருக்கின்றது. ஆசியாவில் வீறுநடை போடும் புதிய சனநாய கங்கள் வேரூன்றத் தொடங்கி விட்டன.
நவீன தாராண்மை வாத சனநாயகம் (modern Liberal democracy) என்பது அடிப்ப டையில் ஒரு மேற்கத்தைய வெளிப்பாடு என்றும் அதனைவேறெந்தப்பண்பாட்டிலும் வேரூன்றச் செய்ய முடியாது என்றும் முன்வைக்கப்படும் வாதத்தை இத்தகைய உலக ளாவிய புரிந்துணர்வானது தகர்த்து வருகின்றது. யப்பான், இத்தாலி, வெனிசூலா போன்ற தமக்குள் மிகவும் வேறுபாடு கொண்ட சனநாயக நாடுகளில் காணப்படும் நிறுவனங்கள், சுதந்திரம், சுயஆட்சிக்கான சர்வதேச மனித அபிலாசைகளை (UniveISalhumanaSpirations)அறிமுகப்படுத்துவதற்குச்சட்டரீதியாக உரிமை கோரும் ஒரு நிலைக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்து வருகின்றன.
சுதந்திர இல்லம் (Freedom House)என்பது ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஓர் ஆய்வு நிறுவனமாகும். எந்த சனநாயகத்துக்கும் அடிப்படையான அரசியல் சுதந்திரம்(Political Freedom), குடியுரிமைச் சுதந்திரங்கள் (Civil Liberties)ஆகியவை ஒவ்வொரு நாட்டிலும் எந்தளவுக்குப் பேணப்படுகின்றன என்பதை இந்நிறுவனம் ஆராய்ந்து வருடாந்த அறிக்கையை வெளியிடுகின்றது. 1990 இல் சுதந்திர இல்லமானது உலகி லுள்ள 167இறைமையுள்ள நாடுகளில்(Sovereign States) 61 நாடுகள் பூரண சுதந்திர மானவை என மதிப்பிட்டது. இந்நாடுகள் உலக சனத்தொகையில் 39 வீதத்தைக் கொண்டுள்ளன. எனினும் இம்மதிப்பீடு இன்று பொருத்தமற்றதாக உள்ளது. இவ் அறிக்கையில் ஜேர்மனியின் இனணப்பு (reunification of Germany) உட்பட கிழக்கு ஐரோப்பாவில் நடைபெறும் சனநாயகப் புரட்சிகள், சோவியத் யூனியனின் குடியரசுக ளில் ஏற்பட்டு வரும் புரட்சிகர மாற்றங்கள், பால்டிக் நாடுகள் உட்பட நிக்கரகுவா, பனாமா, நமீபியா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கங் கள், நைஜீரியாவில் சனநாயகத்தை நிலைநிறுத்த எடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் ஆகியவை முழு அளவில் பிரதிபலிக்கப்படவில்லை. சனநாயகக் காற்று இன்று மொங்
全

கோலியாவிலிருந்து தாய்வான் வரையும் ஆபிரிக்காவிலிருந்து செனகல், காபொன் (Gabon),கொங்கோவிலிருந்து அங்கோலா வரையும் குறிப்பாகத் தென்னாபிரிக்காவி லும் வீசிப் பரவுகின்றது.
கடந்த தசாப்த காலத்தில் சுதந்திரத்தில் காணப்பட்ட வெளிப்படையான பாச்சல்கள் எவ்வகையிலும் அதன் இறுதி வெற்றியை எதிர்வு கூறவில்லை. நிக்கராகுவாவின் தலைநகரான மனாகுவாவில் கல்விமான்கள், அரச அலுவலர்கள் முன்னிலையில், வண்டர்பில்ட்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்வியியல் பொதுக்கொள்கைப் பேராசி ரியரான செஸ்டர் ஈஃபின்(ஜூனியர்) பின்வருமாறு கூறினார். மக்கள் இயல்பாகவே ஒடுக்குமுறையை (Oppression)விடச்சுதந்திரத்தை விரும்புகின்றனர். இது பாராட் டத்தக்கதே எனினும், அதன்பொருள் சனநாயக அரசியல் முறைமை (Democratic Political Systems)காலப் போக்கில் தானே உருவாகித் தன்னைத்தானே பேணிக் கொள்ளும் என்பதாகாது. இதற்கு மாறாக, சனநாயகசிந்தனைகள்தீண்டுநிலைத்து நிற்கக் கூடியவை. எனினும் அதன் நடைமுறைகள் நிலையற்றதன்மை கொண்
6.
இன்று சனநாயக விழுமியங்கள் மறுமலர்ச்சி அடைந்துள்ளன. ஆனால் மனித வர லாற்றை உற்றுநோக்கும் போது 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் நடந்த பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து (French Revolution) 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி யில் தோன்றிய ஏக கட்சி ஆட்சிகள் (One-party regimes)வரை அநேக சனநாயகங் கள் குறுகிய காலமே நிலைத்திருந்தன. இந்த உண்மையானது சனநாயகம் அழிந்துவி டும் என்பதை உணர்த்தவில்லை. மாறாக, அது சனநாயகத்துக்கு ஒரு சவாலாக விளங்குகின்றது. சுதந்திரத்துக்கான அவா உள்ளார்ந்ததும் இயல்பானதுமாகும். ஆனால் சனநாயக நடைமுறைகள் பழக்கப்படல் வேண்டும். வரலாறு தொடர்ந்தும் சுதந்திரம், சந்தர்ப்பம் ஆகியவற்றை வழங்குமா என்பது வரலாற்றின் இறுக்கமான சட்டங்களிலும் (iron laws), தான் தோன்றித்தனமான பொய்மை நிறைந்த பரோபகா ரத்தலைவர்களிலும் நிச்சயமாகத் தங்கியிருக்கவில்லை. அது மக்களின்தியாகத்திலும் (dedication) ஒருங்கிணைந்த மெய்யறிவிலுமே (Collectivewisdom) பெரிதும் தங்கி யுளளது.
சனநாயகச் சமுதாயம் (democraticSociety) என்பது ஒவ்வொருவரும் தமது விருப்பு வெறுப்புகளுக்கமையத் தத்தமது இலக்குகளை நோக்கிச் செயற்படுவதற்கான ஒரு களம் (arena) அல்ல. குடிமக்கள் தமது பொது வாழ்க்கையின் உயர்வுக்காகத் தமது பெறுமதி மிக்க சுதந்திரத்தைக் கையாண்டு பங்குகொள்வதிலேயே சனநாயகங்களின் செழிப்பும் வளர்ச்சியும் தங்கியுள்ளன. இந்த விடயத்தில் மக்கள் பொது விவாதங்க ளில் பங்குகொண்டு தமது கருத்துக்களை வெளியிட வேண்டும். தமது நடவடிக்கைக ளுக்குப் பொறுப்புடைய பிரதிநிதிகளைத் தெரிவு செய்யவேண்டும். பொதுவாழ்வில் சகிப்புத் தன்மை (tolerance), விட்டுக் கொடுத்தல் (Compromise)ஆகியவற்றின் அவசியத்தை உணர்தல் வேண்டும். ஒரு சனநாயகத்தில் மக்கள் தனியாள் சுதந்தி ரத்தை (Individual freedom) அனுபவிக்கின்றனர். அதேவேளை அவர்கள் அடிப்ப டையான சனநாயக விழுமியங்களைக் கொண்டு செயற்படும் ஓர் எதிர்காலத்தை உருவாக்கும் பொறுப்பில் சகலருடனும் கைகோர்த்து நிற்கின்றனர்.
5

Page 8
சனநாயகத்தின் வரைவிலக்கணம்
மக்களின் அரசாங்கம்
சனநாயகம் என்பது பலருக்கும் தெரிந்த ஒரு வார்த்தையாக இருக்கலாம். ஆனால் அதுவே, எதேச்சாதிகாரக் குழுக்களும், இராணுவ சர்வாதிகாரங்களும் (Military dectatorships) சனநாயகச் சின்னங்களைத் (labels) தம்மீது ஒட்டிக் கொண்டு மக்கள் ஆதரவு தம் பக்கமே உண்டு எனக் கூறிக் கொள்ளும் இக் காலகட்டத்தில், மிகவும் தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டதும், தவறாகப் பயன்படுத்தப்பட்டதுமான ஓர் எண்ணக் கருவாகவும் விளங்குகின்றது. எனினும் சனநாயகச் சிந்தனையின் வலுவா னது பண்டைய ஏதென்சின் பெரிக்கிள்ஸிலிருந்து (Pericles) இன்றைய நவீன செக் கோஸ்லாவியாவின் வெக்லவ் ஹேவல் (VaclavHavel) வரை, 1776 இல் வெளியிடப் பட்ட தோமஸ் ஜெபர்சனின் (Thomas Jefferson) சுதந்திரப் பிரகடனத்திலிருந்து (Declaration of Independence) 1989 -şüb - 26öTıq-Go gulub Qujibp ediğğ5Göy Gagö55 ரோவின்(Andrei Sakharov) உரைகள் வரை மிளிர்கின்றது. மேலும் மனிதனின் மனவலிமைக்கும், புத்திக் கூர்மைக்கும் உரைகல்லாகத் திகழும் வரலாற்றின் பண்பட்ட சில சிந்தனைத் துளிகள் வெளிவரக் காரணமாயும் அமைந்தது.
அகராதியின் வரைவிலக்கணப்படி சனநாயகம் என்பது மிக உயர்ந்த அதிகாரத்தைத் தம்மீதே கொண்டுள்ள மக்களின் அரசாங்கமாகும். மக்கள் இவ் அதிகாரத்தை நேரடி யாகவோ அல்லது ஒரு சுதந்திர தேர்தல் முறைமையின் அடிப்படையில் தம்மால் தெரிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலமோ பிரயோகிக்கிறார்கள். ஆபிரகாம் லிங்க னின் வார்த்தைகளில் சனநாயகம் என்பது மக்களின்,மக்களால், மக்களுக்காக நடாத் தப்படும் அரசாங்கமாகும். சுதந்திரமும்,சனநாயகமும் ஒன்றுக்கொன்று மாற்றீடாக அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவையிரண்டும் ஒன்றல்ல. சனநாயகம் என்பது உண்மையில் சுதந்திரத்தைப் பற்றிய சிந்தனைகள், தத்துவங்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். ஆனால் அதேவேளை ஒரு நீண்ட, மிகக் கொடூரமான வரலாற்றி னுாடாக உருவாக்கப்பட்டநடைமுறைகளையும், வழக்காறுகளையும் அது அடக்கியுள் ளது. சுருங்கக் கூறின் நிறுவனமயப்படுத்தப்பட்ட சுதந்திரமே (Institutionalization of freedom) சனநாயகம் எனலாம். இக் காரணத்தினால் தான் சனநாயக சமுதாயம் கொண்டிருக்கக் கூடிய அரசியலமைப்பு அரசாங்கம்(Constitutional Government) , மனித உரிமைகள், சமத்துவம் ஆகிய அடிப்படைகளைச் சட்டத்தின் முன்இனங்காண முடிகின்றது.
சனநாயகங்கள் இருவகையில் அடக்கப்படும். ஒன்று நேரடி சனநாயகம், மற்றது பிரதிநிதித்துவ சனநாயகம், நேரடி சனநாயகத்தில்(direct democracy)குடிமக்கள் தெரிவு செய்யப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட ஓர் இடையீட்டாளரின் துணையில்லா மலேயே பொதுத் தீர்மானங்களை மேற் கொள்ளும் நடவடிக்கையில் பங்கு கொள்ள

முடியும். இத்தகைய ஒரு முறைமை ஒப்பீட்டளவில் ஒரு சமூக நிறுவனத்தில் அல்லது குழுக்கள் சார்ந்த சபை (TribalCouncil)போன்ற சிறு எண்ணிக்கையான அங்கத்துவம் கொண்ட நிறுவனங்களிலேயே செயல்பட முடியும். உதாரணமாக உறுப்பினர்கள் ஓர் அறையில்கூடி விவாதித்துக் கருத்தொருமைப்பாடு அல்லது பெரும்பான்மைவாக்குக ளின் மூலம் ஒரு தீர்மானம் எடுக்கக் கூடிய தொழிலாளர் சங்கம் போன்ற உள்ளூர் மன்றுகள் ஆகியவற்றுக்கு இம் முறைமை மிகவும் பொருத்தமானது. உலகின் முதலா வது சனநாயகத்தைக் கொண்டிருந்த பண்டைய ஏதென்ஸ் 5000 அல்லது 6000 பேர் கொண்ட ஒருமன்றத்தைக் கொண்டு நேரடி சனநாயகத்தை நடத்தியது. நேரடிசனநாய கத்தை நடத்துவதற்கு பெளதீகரீதியில் ஓரிடத்தில் கூடக் கூடிய ஆகக்கூடிய தொகையி னராக இவ்வெண்ணிக்கை இருந்திருக்கலாம்.
நவீன சமுதாயத்தில் அதன் பருமன், உட்சிக்கல் நிலைகளைக்(Complexity)கொண்டு நோக்கும் போது நேரடி சனநாயகம் சாத்தியமானதல்ல. வடகிழக்கு ஐக்கிய அமெரிக் காவில் நியூஇங்கிலாந்து நகரக் கூட்டம் ஒரு பிரசித்தி பெற்ற,புனிதமான வழக்காறா கும். எனினும் தமது வாழ்க்கையைப் பாதிக்கும் விடயங்களில் நேரடியாக வாக்களிப்ப தற்காக சகல சமூகங்களும் ஓரிடத்தில் கூடுவது இன்று அசாத்தியமாகியுள்ளது. இன்று 50,000 பேரைக் கொண்ட நகரமாக இருந்தாலென்ன பிரதிநிதித்துவ சனநாயகமே பொதுவான சனநாயக வடிவமாகக் கருதப்படுகின்றது. இத்தகைய சனநாயகத்தில் பொது நன்மைக்காக அரசியல் தீர்மானம் மேற்கொள்ளவும் சட்டங்களை உருவாக்க வும், வேலைத்திட்டங்களை நிர்வகிக்கவும் அலுவலர்களைத் தெரிவுசெய்யவும் மக்க ளுக்கு வாய்ப்பு ஏற்படுகின்றது. இவ்வாறு தெரிவு செய்யப்படும் அலுவலர்கள், மக்களின் பெயரால் நேரமும், சக்தியும் தேவைப்படுகின்ற சிக்கலான பொது விடயங்க ளில் அவதானத்துடனும் ஒழுங்கு முறைமையுடனும் செயலாற்றுகின்றனர்.இத்தகைய விடயங்களில் தாமே நேரடியாகச் செயலாற்றுவது பெரும்பாலான மக்களுக்கு சாத்தி யமற்ற ஒரு விடயமாகும்.
அலுவலர்களைத் தெரிவுசெய்யும்முறையானது பாரிய வேறுபாடுகளைக்கொண்டுள் ளது. உதாரணமாகச் சட்டசபை உறுப்பினர்கள் தேசிய ரீதியில் ஒரு மாவட்டத்துக்கு ஒரு பிரதிநிதி எனத் தெரிவுசெய்யப்படுகிறார்கள். வேறொரு முறையில், விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் ஒவ்வொரு அரசியற் கட்சியும் தான் தேசிய ரீதியில் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில் சட்டசபையில் உறுப்பினர்களைக் கொண்டுள் ளது. மாகாண, உள்ளூராட்சித்தேர்தல்களும் இத்தகைய தேசிய மாதிரிகளைப்(National Models) பின்பற்றுகின்றன. அல்லது தமது பிரதிநிதிகளைத் தேர்தல்களுக்குப் பதிலாகக் கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் தெரிவுசெய்கின்றன. இத்தகைய முறைகளின் மூலம் பொது அலுவலர்கள் தெரிவு செய்யப்பட்ட போதும் அவர்கள் மக்களின் பெயரால் பதவி வகிக்கிறார்கள். அத்துடன் தமது செயல்களுக்கு மக்களுக் குப் பொறுப்புடையோராகவும் இருக்கின்றனர்.

Page 9
பெரும்பான்மையோர் ஆட்சியும் சிறுபான்மையினர் உரிமைகளும்
சகல சனநாயகங்களும் மக்களின் பெரும்பான்மை ஆட்சியின் அடிப்படையில் சுத்ந்தி ரமாகத் தீர்மானம் மேற்கொள்ளும் முறைமைகளாகும். ஆனால் பெரும்பான்மை அடிப்படையிலான ஆட்சி எப்போதும் சனநாயகத்தன்மை கொண்டதாக இருந்துவிட முடியாது. உதாரணமாக பெரும்பான்மை என்னும் பெயரால் சனத் தொகையின் 51 வீதத்தினர் மீதமுள்ள 49 வீதத்தினரை ஒடுக்கும் ஒருமுறையை நீதியானதும் நேர்மை யானதுமான முறையாக எவரும் கருத முடியாது. உண்மையில் ஒரு சனநாயக சமுதா யத்தில் பெரும்பான்மை ஆட்சிஎன்பது தனிமனித உரிமைகளுக்கான உத்தரவாதத்து டன் இணைந்திருக்கவேண்டும். இவ்வுத்தரவாதமானது சிறுபான்மையினரின் உரிமை களைப் பாதுகாக்க வேண்டும். இச் சிறுபான்மை எனப்படுவோர் இன, மத, அரசியற் சிறுபான்மையினராகவோ அல்லது ஒரு பிரச்சினைக்குரிய சட்டவாக்கத்தைத்(Controversial legislation) தடுக்க முடியாதவர்களாகவோ இருக்கலாம். சிறுபான்மையி னர் உரிமைகள் என்பது பெரும்பான்மையினரின் நல்லெண்ணத்தில் தங்கியிருக்க முடியாது. அத்துடன் அவை பெரும்பான்மை வாக்குகளினால் துடைத் தெறியப்பட வும் முடியாது. சிறுபான்மையினரின் உரிமைகள் சனநாயகத்தில் பாதுகாக்கப்படுகின் றன. ஏனெனில் சனநாயகரீதியான சட்டங்களும், நிறுவனங்களும் சகல மக்களது உரிமைகளையும் பாதுகாக்கின்றன.
புலமையாளரும், நூலாசிரியரும், தற்போதைய ஐக்கிய அமெரிக்காவின் உதவிக் கல்விச் செயலாளருமான டயனே றேவிட்ச் (Diane Ravitch) стотLouf Gurabildo நடைபெற்ற ஒரு கல்விக் கருத்தரங்கில் சமர்ப்பித்த கட்டுரையில் பின்வருமாறு எழுதி யுள்ளார்.ஒரு பிரதிநிதித்துவ சனநாயகம், அரசாங்கத்தின் அதிகாரத்தை வரையறை செய்து மக்களின் அடிப்படை உரிமைகளை உத்தரவாதம் செய்யும் ஒரு அரசியல மைப்பு சனநாயகம் எனப்படுகின்றது. இத்தகைய சமுதாயத்தில் பெரும்பான்மையி னர் ஆட்சி செய்கின்றனர். சிறுபான்மையினரின் உரிமைகள் சட்டத்தாலும், சட் டத்தை நிறுவனமயமாக்கல் மூலமும் பாதுகாக்கப்படுகின்றன. இவ்வம்சங்கள் வர லாறு, கலாச்சாரம், பொருளாதாரம் ஆகியவற்றில் நவீன சனநாயகங்கள் எத்தகைய வேறுபாட்டைக் கொண்டிருந்தாலும் இவ்வம்சங்களே அவற்றின் அடிப்படைகளை வரையறை செய்கின்றன. தேசங்கள், சமுதாயங்கள் என்ற அடிப்படையில் எவ்வளவு வித்தியாசங்கள் இருந்தபோதும் ஓர் அரசியலமைப்பு அரசாங்கத்தின் அடிப்படை அம்சங்கள் - அதாவது தனிமனித சிறுபான்மையினரின் உரிமைகளை உத்தரவாதப்ப டுத்தும் பெரும்பான்மை ஆட்சியும் சட்டவாட்சியும் (rule oflaw) கனடா, கோஸ்டா ரிக்கா,பிரான்ஸ், பொட்ஸ்வானா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் காணப்படு கின்றன.
சனநாயக சமுதாயம்
சனநாயகம் என்பது ஓர் அரசாங்கம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அரசியலமைப்பு விதிகள், நடைமுறைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு
என்பதை விட மிகவும் மேலான அர்த்தமுள்ளது. ஒரு சனநாயகத்தில் அரசாங்கம்

என்பது பல்வேறு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், ஸ்தாபனங்கள், சங்கங்களைக் கொண்ட ஒரு சமூகத்தளத்தில் நின்று அவற்றுடன் இணைந்தியங்கும் ஒரு அம்சமா கும். இத்தகைய பல்வகைமையே (diversity)பன்மை வாதம் (Pluralism) எனப்படு கின்றது. இதன்படி, ஒரு சனநாயக சமுதாயத்தில் உள்ள பல்வேறு நிறுவனரீதியான குழுக்கள், நிறுவனங்கள் ஆகியவை தமது செயற்பாடு, சட்டபூர்வத்தன்மை, மேலாண்மை ஆகியவற்றுக்கு அரசாங்கத்தில் தங்கியிருக்க வேண்டும் என்பதில்லை.
உள்ளூர் மட்டத்திலும், தேசிய ரீதியாகவும் ஒரு சனநாயக சமுதாயத்தில் ஆயிரக்கணக் கான தனியார் நிறுவனங்கள் இயங்குகின்றன. இவற்றில் பெரும்பாலானவை தனிமனி தனுக்கும் தாம் சார்ந்துள்ள சமூக அரசாங்க நிறுவனங்களுக்குமிடையில் ஒரு பாலமா கச் செயற்படுகின்றன. அதாவது ஒரு சனநாயகத்தின் குடி மக்கள் என்ற முறையில் தமது உரிமைகளையும் பொறுப்புக்களையும் அனுபவிக்கவும், அத்துடன் அரசாங்கத் துக்கு ஆற்றவேண்டிய தமது பொறுப்புக்களை நிறைவேற்றவும் இவை மக்களுக்கு உதவுகின்றன. இக்குழுக்கள்பல்வேறு வழிகளில் தமது உறுப்பினர்களின் நலன்களைப் பேணுகின்றன. பொதுப் பணிகளுக்கான வேட்பாளர்களை ஆதரித்தல், பொது விட யங்களை விவாதித்தல், கொள்கைசார்ந்த தீர்மர்னங்களில் செல்வாக்குச் செலுத்தல் என்பவை இவ்வழிகளில் சிலவாகும். அரசாங்கத்திலும், தமது சமூகக் குழுக்களிலும் தனிமனிதர்கள் ஆக்கபூர்வமாகப் பங்கேற்க இக் குழுக்கள் வழிசமைக்கின்றன. தர்ம நிறுவனங்கள், தேவாலயங்கள், சூழல் மற்றும் அயலவர் குழுக்கள், வர்த்தக சங்கங் கள், தொழிற் சங்கங்கள் ஆகியவை இக் குழுக்களின் வேறுபட்ட தன்மைக்குச் சில உதாரணங்களாகும்.
ஓர் எதேச்சாதிகார சமுதாயத்தில் இத்தகைய நிறுவனங்கள் யாவும் கட்டுப்படுத்தப் பட்டு அவதானிக்கப்படுகின்றன. அத்துடன் அவை அரசாங்கத்துக்கு வகை கூறக் கடமைப்பட்டுள்ளன. ஒரு சனநாயகத்தில் அரசாங்கத்தின் அதிகாரங்கள் சட்டத்தி னால் தெளிவாக வரையறை செய்யப்பட்டு வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக இந்நிறுவனங்கள் அரசாங்கக் கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல் சுதந்திரமாக இயங்குகின்றன. மறுதலையாக அவற்றுட் பல, அரசாங்கத்தின் நடவடிக் கைகளுக்கு அதனைப் பொறுப்புடையதாக்க முனைகின்றன. கலைகள், சமய நம்பிக் கைகள், புலமைசார் ஆராய்ச்சி மற்றும் வேறு ஈடுபாடுகளுள்ள குழுக்கள் அரசாங்கத்து டன் எவ்வித தொடர்பும் கொண்டிருக்க விரும்பதில்லை. இத்தகைய சனநாயக சமுதா யத்தின் பிரத்தியேக வட்டத்துக்குள் சுதந்திரத்தின் ஆற்றல்கள் பற்றியும், சுயாட்சியின் பொறுப்புகள் பற்றியும் குடிமக்கள் அரசின் பலமான தாக்கத்துக்கு வெளியே நின்று ஆய்வு செய்யமுடியும்.
சனநாயகத்தின் தூண்கள்
- மக்களின் இறைமை(Sovereignty) - ஆளப்படுவோரின் சம்மதத்தில் தற்கியிருக்கும் அரசாங்கம் - பெரும்பான்மை ஆட்சி

Page 10
- சிறுபான்மையினரின் உரிமைகள்
- அடிப்படை மனித உரிமைகள் பற்றிய உத்தரவாதம்
சுதந்திரமான, சமசந்தர்ப்பம் வழங்கும் தேர்தல்கள்
- சட்டத்தின் முன் சமத்துவம்
- தடையற்ற சட்ட செயல்முறை
- அரசாங்கத்தின் மீதான அரசியலமைப்புக் கட்டுப்பாடுகள்
- சமூக, பொருளாதார, அரசியல் பன்மைவாதம்
- சகிப்புத்தன்மை, நடைமுறைவாதம், ஒத்துழைப்பு, விட்டுக்கொடுத்
தல் ஆகிய விழுமியங்கள்
சனநாயகத்தின் முன்னோடிகள்
சனநாயகம் மிகச் சிக்கலான ஒரு புதுமைக் கலையாகும். எனினும் அதன்ஆரம்பத் தைக் குறிப்பிடுதல் மிக இலகுவானதாகும். கி. மு. 5ஆம் நூற்றாண்டில் ஏதென்ஸ் நகர அரசில் சனநாயகம் தோன்றியது. வெகுவாக விதந்துரைக்கப்பட்ட தனது தலைவரின் பெயரையே தனதாக்கிக் கொண்ட பெரிக்கிளியன் ஏதென்ஸ் பின்னர் புகழ் பெற்ற அரசியல் விற்பன்னர்களையும் அரசியலாளர்களையும் உருவாக்கி யது. எனினும் இன்றைய அரசியல் விமர்சகர்களுக்கு ஏதென்ஸ் சனநாயகத்தின் பல்வேறு அம்சங்கள் புரியாத புதிராகவே உள்ளன. கி.மு.8ஆம், 5ஆம் நூற்றாண் டில் ஏதென்ஸின் மிக முக்கிய அரசியல் நிறுவனம் பொதுச்சபை (Assembly) ஆகும். இது பொதுவாக 5000-6000இடைப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருந் தது. நாட்டின்சகல ஆண்மக்களும் இதன் உறுப்பினர்கள். (பெண்கள், அடிமைகள் மற்றும் வெளிநாட்டினர் விலக்கப்பட்டிருந்தனர்). பொதுச் சபையானது பெரும் பான்மை வாக்குகளின் மூலம், எத்தகைய சட்ட வரம்புகளுமின்றி ஓர் உள்நாட்டுப் பிரச்சினை மீது தீர்மானம் மேற் கொள்ளும் வல்லமை பெற்றிருந்தது. வழக்குகள் 501குடிமக்களைக்கொண்டபூரிமார்சபையினால் விசாரிக்கப்பட்டன. இவர்களும் கூட குற்றவாளி அல்லது நிரபராதி என்பதைப் பெரும்பான்மை வாக்குகளைக் கொண்டே தீர்மானித்தனர்.
ஆனால் குறிப்பிடக்கூடியதென்னவெனில், பொதுச்சபையின்தலைவர்கள்தெரிவு செய்யப்படவில்லை. மாறாக சீட்டுக் குலுக்கல் முறை மூலம் இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். எந்தவொரு குடிமகனும் பொது அலுவலை நடத்தத் திறமை உள்ளவன் என்ற ஏதேனியர்களின்நம்பிக்கையே இச்செயல் Cypselopéo,5ées/TpresertTuDIr கும். அத்துடன் பொது அலுவலர்கள் என்னும் பதவிகள் குறிப்பிடத்தக்க ப்ெரிய அளவில் இருக்கவில்லை. படைத் தளபதிகள் ஓராண்டு தவணையில் தெரிவு செய்யப்பட்டனர். இதைத்தவிர சனாதிபதி, பிரதம மந்திரி, மந்திரிசபை அல்லது நிலையான குடிசார் போன்ற குறிப்பிடக்கூடிய நிர்வாக அம்சங்கள் பெரிக்கிளிய ஏதென்சில் இருக்கவில்லை. தீர்மானம் மேற் கொள்ளல் குடிமக்களை உறுப்பின ராய்க் கொண்டிருந்த பொதுச்சபையின் பிரத்தியேகமான பொறுப்பாகவே இருந் தது. இத்தகைய முறைமையை இன்று பலரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
10

அரசியலமைப்பு வரையறைகள் இல்லாத காரணத்தினால் பெரிக்கிள்ஸ் கால ஏதென்சில் பல்வேறு பிரிவுகள்தலைதூக்கி நின்றன. அத்துடன் பேச்சாளர்களின் சமார்த்தியத்துக்கு மற்றவர்கள் பலியாகும் நிலையும் காணப்பட்டது. மெய்யியலா ாரான சோக்கிரட்டீசை (Socrates) மரண தண்டனைக்கு உட்படுத்தியதும் இந்த சனநாயக ஏதென்ஸே ஆகும். இதன்மூலமாக சோக்கிரட்டீஸின் மிகவும் புகழ்பூத்த சீடரும், சனநாயகத்தின் கடுமையான எதிரியுமான பிளேட்டோ (Plato)வின் அழி யாத வன்மத்தையும் அது தேடிக் கொண்டது.எதிரிகளும் அத்துடன் பல்வேறு "பலவீனங்களும் இருந்தபோதும் ஏதென்ஸ் சனநாயகம் உடைந்து நொருங்கிவிட வில்லை. சுமார்200ஆண்டுகள் அதுநின்றுபிடித்தது. கி.மு.404இல் பெலோபோனி லிய யுத்தத்தில் தனது மிகப் பெரிய எதிரியான ஸ்பாட்டா{Sparta)வினால் தோற்க டிக்கப்பட்டபோதும் அது தழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
1.

Page 11
III
உரிமைகள்
சகல மனிதர்களும் சமமானவர்களாகவே படைக்கப்பட்டனர். இவர்களைப் படைத்தவனால் (Creator) மாற்ற முடியாத சில் உரிமைகளான வாழும்உரிமை, சுதந்திரம், மகிழ்ச்சியைத் தேடும் உரிமை ஆகியவை இவர்களுக்கு உரித்தாக்கப்பட் டன. இவ்வுரிமைகளைக் காப்பதற்காக மக்களிடையே அரசாங்கள் அமைக்கப்பட் டன. இவ் அரசாங்கங்கள்தமது நியாயமான அதிகாரங்களை மக்களின்சம்மதத்துட னேயே பெறுகின்றன. இவ்வுண்மைகள் நிதர்சனமானவையாகும்.
Lorribpcplungs 2 foodLD56it (Inalienable rights)
அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும் மேலே கூறப்பட்ட வாசகங்கள் மூலம் தோமஸ் ஜெபர்ஸன் ஒரு சனநாயக அரசாங்கம் அமைய வேண்டிய ஓர் அடிப்படைக் கோட்பாட்டினை உருவாக்கினார். சனநாயக அரசாங்கங்கள் ஜெபர்ஸன் கூறிய அடிப்படை உரிமைகளை வழங்குவதில்லை. மாறாக, ஒவ்வொரு தனிமனிதனும் தனது பிறப்பின் மூலம் சுவீகரித்துள்ள இவ்வுரிமை களைப் பாதுகாக்கவே அவை உருவாக்கப்படுகின்றன.
17 ஆம் 18 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மெய்யியலாளர்கள் இம் மாற்றமுடியாத உரிமைகள் கடவுளால் வழங்கப்பட்ட இயற்கை உரிமைகள் (God- given natural rights) எனக் கூறினர். குடிசார் சமுதாயம் அமைக்கப்பட்டபோதும் இவ்வுரிமைகள் அழிக்கப்படவில்லை. அத்துடன் சமுதாயமோ அல்லது அரசாங்கமோ இவ்வுரிமை களை அகற்றவோ மாற்றவோ முடியாது. பேச்சுரிமை, கருத்து வெளிப்பாட்டுரிமை, மதஉரிமை, மனச்சான்றுரிமை(Consciencefreedom), கூட்டுச்சேரும் உரிமை, சட்டத் தின் முன் சமமான பாதுகாப்புரிமை ஆகியவை மாற்ற முடியாத உரிமைகளாகும். இவைகள் வெறுமனே ஒரு சனநாயகத்தில் மக்கள் அனுபவிக்கும் உரிமைகளின் ஒரு நீண்ட பட்டியல் அல்ல. மாறாக இவை ஒரு சனநாயக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய மைய உரிமைகள் (Core rights) ஆகும். இவை அரசாங்கத்துக்கு அப்பால் சுயமாக இயங்குவதால் அவற்றைச் சட்டத்தின் மூலம் அகற்றிவிட முடியாது. அத்து டன் ஒரு தேர்தல் பெரும்பான்மையின் கண நேரசலனத்துக்கும் உட்படுத்திவிட முடி யாது. உதாரணமாக ஐக்கிய அமெரிக்க அரசியல் யாப்பின் முதலாவது திருத்தம் மக்களுக்கு மத உரிமைகளையோ அல்லது பத்திரிகை உரிமைகளையோ வழங்க வில்லை. மாறாக, அது பேச்சுரிமை, மதஉரிமை, சமாதானமாகக் கூட்டுச் சேரும் உரிமை ஆகியவற்றில் தலையீடு செய்யும் விதத்தில் காங்கிரஸ் சட்டம் இயற்றுவதைத் தடைசெய்கின்றது.
சரித்திரவியலாளரான லெனாட் லெவியின் (Leonard Levy) வார்த்தைகளில் குறிப்பி டுவதனால் ஓர் அரசாங்கம் சுதந்திரமாக இல்லாதபோதும் கூட அதன் மக்கள் சுதந்திர

மாக இருக்க முடியும் என்பதே. இவ்வடிப்படை மனித உரிமைகள் தொடர்பான விரிவான சட்டவாக்கங்களும், நடைமுறைகளும் சமுதாயத்துக்குச் சமுதாயம் மாறுப டக் கூடியவை. ஆனால் இவ்வுரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் தமது அரசியல் யாப்பு மற்றும் சட்ட, சமூக அமைப்புக்களைக் கட்டியமைக்கும் கடப்பாடு சகல சனநாயகங்களுக்கும் உண்டு.
Cuss (Speech)
பேச்சுரிமை, கருத்து வெளிப்பாட்டுரிமை எந்த சனநாயகத்துக்கும் உயிர் நாடியாகும் விதத்தில், வாக்களித்தல், கூடிநிற்றல், எதிர்த்தல், வழிபடுதல், சகலருக்கும் நீதியை உறுதி செய்தல் ஆகிய சகல உரிமைகளும் பேச்சு, தகவல்பரிமாற்றம், ஆகியவற்றின் கட்டுப்பாடற்ற தன்மையில் தங்கியுள்ளன. சனநாயகத்துக்கான போராட்டம் (The struggeforDemocracy) என்னும் தொலைக்காட்சித்தொடரை உருவாக்கிய, கனடிய ரான பட்றிக் வில்சன்(PatrickWilson) பின்வருமாறு கூறுகிறார். சனநாயகம் என்பது தகவல் தொடர்பாகும். அதாவது மக்கள் தமது பொதுப் பிரச்சினைகள் பற்றி ஒருவரோடொருவர் கலந்துரையாடுவதும் ஒரு பொது விதியை உருவாக்குவதுமா கும். மக்கள்தங்களைத்தாங்களே ஆளுவதற்கு முன்தமது கருத்துக்களை வெளியி டும் சுதந்திரமுடையோராக இருத்தல் வேண்டும். தமது எண்ணங்களையும் அபிப்பி ராயங்களையும் திறந்த மனதுடன் பரிமாறிக் கொள்வதன் மூலம் உண்மையானது பொய்மையை வெற்றி கொள்ளும் என்பதில் ஒரு சனநாயகத்தின் குடிமக்கள் நம். பிக்கை உள்ளவர்களாய் வாழ்கின்றனர். அத்துடன்இதன்மூலம் மற்றவர்களின் விழுமி பங்களை நன்றாகப் புரிந்து கொள்ளமுடியும் என்றும் விட்டுக் கொடுத்தலுக்கான எல்லைகளைத் தெளிவாக வரையறை செய்யமுடியும் என்றும் அவர்கள் நம்புகிறார் கள். இத்தகைய கருத்துப் பரிமாற்றங்கள் எந்தளவுக்கு அதிகரிக்கின்றதோ அந்தள வுக்கு நன்மையும் ஏற்படும். அமெரிக்க கட்டுரையாளரான ஈ.பி. வைற் (E.B.White) பின்வருமாறு கூறுகிறார். எமது சுதந்திரநாட்டின்பத்திரிகைத்துறை, நம்பிக்கையான தும் பயனுள்ளதுமாகும். இதன் காரணம் அதன் நல்ல தன்மை என்பதல்ல. பாரிய அளவிலான அதன் பல்வகைத் தன்மையே ஆகும். தத்தமது உண்மைகளை நிலை நாட்ட முயலும் பத்திரிகை உரிமையாளர்கள் இருக்கும் வரை உண்மையை இனங் கண்டு வெளிச்சத்தில் உலாவ மக்களாகிய நமக்கு வாய்ப்பு ஏற்படுகின்றது. நிறைய எண்ணிக்கை இருக்கும் போது பாதுகாப்பும் உண்டு.
எதேச்சாதிகார அரசுகளைப் போலன்றி சனநாயக அரசாங்கங்கள் எழுத்தையும், பேச்சையும் கட்டுப்படுத்துவதோ, மேலாண்மை செலுத்துவதோ அன்றேல் நியாயா திக்கம் மேற்கொள்வதோ கிடையாது. சனநாயகம் எழுத்தறிவும் விடய அறிவும் கொண்ட மக்களில் தங்கியுள்ளது. ஏனெனில் இவர்களது விடயஅறிவு தகவல்களை மிகச் சிறந்த முறையில் பெறுவதற்கு உதவுவதால் பொதுவாழ்க்கையில் அவர்களால் மிக அதிகமாகப் பங்கு பற்ற முடிகிறது.அறியாமை சிரத்தையின்மையை வளர்க்கின் றது. கருத்துக்கள், அபிப்பிராயங்கள், தகவல்கள், எதிர்பார்க்கைகள் ஆகியவற்றின் தடையில்லாப் பரிமாற்றத்தில் தங்கியிருக்கும் மக்களின் சக்தியிலேயே சனநாயகம் தங்கியுள்ளது.

Page 12
ஆனால் பொதுசனத்தொடர்புசாதனங்களோ அல்லது வேறு நிறுவனங்களோ, பெரும் பான்மையினரின் பார்வையில், பொய்யான, பொறுப்பற்ற அல்லது தரக் குறைவான தகவல்கள் மூலம் பேச்சுச் சுதந்திரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் போது அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் - ஒன்றும் செய்யமுடியாது என்பதே இதற்கான பொதுவான பதிலாகும். இவ்வாறான விடயங்களைத் தீர்மானிப்பது அரசாங்கத்தின் பொறுப்பல்ல. பொதுவாகப் பேச்சுச் சுதந்திரத்திற்கான மருந்து அதிக பேச்சுச் சுதந்திரமே. இது அர்த்தமற்றதாகத் தோன்றலாம். ஆனால் பேச்சுச் சுதந்திரத்தின் பெயரால் சில வேளை களில் ஒரு சனநாயகமானது தனிநபர்கள், குழுக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். இக் குழுக்களும், தனிநபர்களும் சனநாயகத்துக்கு எதிரான இத்தகைய கொள்கைகள் பேச்சுச் சுதந்திரத்தை நசுக்குவதாக வாதிடலாம். சனநாயக சமுதாயத் தின் மக்கள் ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலேயே இவ்வுரிமைகளைப் பாதுகாக் கின்றனர். அதாவது இறுதி முடிவில்,பேச்சு சுதந்திரமும் அதிதிருப்தியும் அமுக்கப்படு வதைவிட, அவற்றின்தடையில்லா வெளிப்பாடே இறுதி உண்மைக்கும், புத்திசாலித்த னமான பொதுமக்களின் நடவடிக்கைகளுக்கும் இட்டுச் செல்லும் என்பதே அந்த நம்பிக்கை.
மேலும் பேச்சுச் சுதந்திரத்தின் ஆதரவாளர் பின்வருமாறு வாதிடுகிறார். பேச்சுச் சுதந்திரத்தை நசுக்குவதை நான் இன்று குற்றமாகக் கருதுகிறேன். ஏனெனில் இதுவே நாளை நான் பேச்சுச் சுதந்திரத்தைக் கையாள்வதற்கு ஒரு பயமுறுத்தலாக அமையலாம். இந்தப் பயமுறுத்தலை நீங்களோ அல்லது வேறெவருமோ குற்றம் என்றே எண்ணுவீர்கள். ஆங்கில மெய்யியலாளரான ஜோண்ஸ்ரூவேட் மில் (John Stuart Mil) என்பவர் பேச்சுச் சுதந்திரத்துக்கு ஆதரவான மிகச் சிறந்த வாதத்தை முன்வைத்தவராவர். அவர் 1859 இல் எழுதிய சுதந்திரத்தைப்பற்றி (On Liberty)என் னும் தமது கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார். பேச்சுச் சுதந்திரம் நசுக்கப்படும் போது சகலரும் பாதிக்கப்படுகின்றனர். அபிப்பிராயம் சரியானதெனில் உண்மை யையும் பொய்யையும் பரிமாறிக் கொள்ளும் சந்தர்ப்பத்தை அவர்கள் இழக்கிறார் கள். அபிப்பிராயம் தவறானதெனின் அவர்கள் தோற்கிறார்கள். ஏனெனில் உண் மையும் பொய்யும் மோதிக் கொள்ளும் போதே உண்மையானது மிகத் தெளிவான வடிவத்தைப் பெறுகின்றது.பேச்சுச் சுதந்திரத்தின் இயல்பான விளைவு என்னவெ னில் தமது கோரிக்கைகளை அரசாங்கம் செவிமடுக்க வேண்டுமெனச் சமாதானமாக வேண்டுவதற்கு மக்களுக்குள்ள உரிமையாகும்.இச்சுதந்திரம் இல்லாதுவிடின் பேச்சுச் சுதந்திரத்தின் பயன் குறைந்துவிடும். இக்காரணத்தினால் பேச்சுச் சுதந்திரமானது மாற் றம் வேண்டிக் கூட்டுச்சேரும், எதிர்க்கும் உரிமையோடு நெருங்கிய தொடர்புடைய தாக அல்லது பிரிக்க முடியாததாகக் கருதப்படுகின்றது. சனநாயக அரசாங்கங்கள் அரசியல் ஊர்வலங்களையும் கூட்டங்களையும் அமைதியை உறுதிப்படுத்தும் நோக் கில் இடம், காலம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்த உரிமை உடையன. ஆனால் அவைக ளால் எதிர்ப்பினை நசுக்கவும், அதிருப்தியாளரின் கூட்டங்களைத் தடுக்கவும் தமது அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது.
14

சுதந்திரமும் சமய நம்பிக்கையும்
மதச் சுதந்திரம் அல்லது ஒரு பரந்த நோக்கில் மனச்சான்றுக்கான சுதந்திரம் என்பது (5 நபர் தனது விருப்புக்கு எதிராக ஒரு சமயத்தையோ அல்லது வேறெதும் நம்பிக் கையையோ பின்பற்றவேண்டும் என வற்புறுத்தப்படாமையேயாகும். மேலும் ஒரு சமயத்தைத் தெரிந்து பின்பற்றும் காரணத்தால் அல்லது எந்தவொரு சமயத்தையும் பின்பற்றாத காரணத்தால் எந்தவொரு நபரும் தண்டனைக்குள்ளாகக் கூடாது. ஒரு நபரின் சமயநம்பிக்கை என்பது முற்றுமுழுதாக அவரது தனிப்பட்ட விடயம் என்பதை சனநாயக அரசு அங்கீகரிக்கின்றது.இதனை இன்னும் விளக்கினால் எந்தவொருநபரை யும் அரசாங்கம் ஓர் உத்தியோகபூர்வமான மதத்தை அல்லது நம்பிக்கையை அங்கீக ரிக்குமாறு வற்புறுத்தமுடியாது. பிள்ளைகளை ஒரு குறிப்பிட்ட மதப் பாடசாலைக்குச் செல்லுமாறு வற்புறுத்த முடியாது. அத்துடன் அவரது விருப்பத்துக்கு மாறாக எந்த வொரு நபரையும் ஒரு குறிப்பிட்ட மதச் சடங்கில் பங்குபற்றுமாறோ அல்லது பிரார்த் தனை செய்யுமாறோ வற்புறுத்த முடியாது. நீண்டகால வரலாறு அல்லது வழக்காறு காரணமாகப் பல சனநாயக நாடுகள் உத்தியோகரீதியில் மதங்களை அங்கீகரித்து அவற்றுக்கு அரசாங்க உதவியும் வழங்கிவருகின்றன. இதனைக் காரணமாகக் காட்டி ஓர் அரசாங்கமானது உத்தியோகரீதியான மதத்துடன் முரண்பட்ட நம்பிக்கை கொண்ட ஒரு தனிநபரின் உரிமையைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளமுடியாது.
குடியுரிமை; உரிமைகளும் பொறுப்புக்களும்
மக்களுக்காகவே அரசாங்கம், அரசாங்கத்துக்காக மக்களல்ல என்ற கோட்பாட்டி லேயே சனநாயகம் தங்கியுள்ளது. வேறுவார்த்தைகளில் கூறினால் மக்கள் ஒரு சனநா யக அரசின் பிரசைகளே தவிர அதற்கு அடிமைப்பட்டவர்களல்ல. அரசு தனது மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்றது. பதிலாக மக்கள் அரசுக்கு தமது விசுவாசத் தைக் காட்டுகின்றனர். மறுதலையாக ஒரு எதேச்சாதிகார முறைமையில், அரசாங்கம் தன்னைச் சமுதாயத்திலிருந்து விடுவித்துக் கொண்டு, மக்களிடமிருந்து விசுவாசத்தை யும் சேவையையும் வேண்டி நிற்கின்றது. தனது நடவடிக்கைளுக்கு மக்களின் சம்மதத் தைக் கோரும் தனது பதிற்கடமையை அது நிறைவேற்றுவதில்லை.
உதாரணமாக, மக்கள் வாக்களிக்கும் போது, யார் தமது பெயரால் ஆளவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் தமது உரிமையைப் பிரயோகிக்கின்றனர். இதற்கு எதிராக, ஒரு ஏதேச்சாதிகார அரசில், ஆளும் குழுவினரால் ஏற்கனவே செய்யப்பட்ட தெரிவுக ளைச் சட்டபூர்வமானதாக்கவே அவர்களின் வாக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சமுதாயத்தில் வாக்களித்தல் என்பது மக்களின் உரிமைகள் பொறுப்புக்க ளோடு தொடர்புள்ள ஒரு செயற்பாடல்ல. அரசாங்கத்துக்கு மக்களின் ஆதரவு உண்டு என்பதைக் காட்டும் ஒரு பலாத்காரமான நாடகமேயாகும்.
இதேபோல், ஒரு சனநாயகத்தில் பிரசைகள், அரசாங்கத்தில் தங்கியிருக்காத, தமக்கு விருப்பமான எந்தவொரு நிறுவனத்திலும் சேரும் உரிமையை அனுபவிக்கின்றனர்.
15

Page 13
அத்துடன் தமது சமுதாயத்தின் பொது வாழ்வில் சுதந்திரமாக ஈடுபடவும் அவர்க ளுக்கு உரிமை உண்டு. அதேவேளையில், அத்தகைய பங்குபற்றலின் விளைவாக வரும் பொறுப்புக்களையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். பிரச்சினைகளை விளங்கிக் கொள்ளல், எதிர்க்கருத்து கொண்டோருடன் சகிப்புத்தன்மை காட்டுதல், ஓர் ஒப்பந்தத்துக்கு வரும் போது விட்டுக்கொடுத்தல் ஆகியவையே இப்பொறுப்புக ளாகும். எவ்வாறாயினும் ஓர் எதேச்சாதிகார அரசில் பிரத்தியேக தொண்டர் குழுக்கள் காணப்படுவதில்லை. அல்லது மிகச் சிலவே காணப்படும். அவையும் கூட தனிநபர் பிரச்சினைகள் குறித்து வாதிக்கவும், தமது விடயங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளவும் உதவுவதில்லை. மாறாகத் தமது பிரசைகளை அடிபணிந்தவர்களாக வைத்திருக்க அரசுக்கு உதவும் மற்றுமொரு சாதனமாகவே இவை இயங்குகின்றன.
இராணுவச் சேவையும் கூட சனநாயக அல்லது சனநாயகமல்லாத சமுதாயங்களில் வித்தியாசமான ஆனால் ஒன்றுக் கொன்று முரண்பாடான உதாரணங்களைக் காட்டு கின்றது. இரண்டு வித்தியாசமான நாடுகள் தமது இளைஞர்களின் சமாதான கால இராணுவச் சேவையை நாடலாம். ஓர் எதேச்சாதிகார அரசில் இக் கடப்பாடு ஒரு தலைப்பட்சமாக விதிக்கப்படுகின்றது. ஆனால் ஒரு சனநாயக அரசில் தம்மால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு இசைவாக மக் கள் மேற் கொள்ளும் கடமையாக இந்த இராணுவ சேவை மதிக்கப்படுகின்றது. இந்த இரு சமுதாயங்களிலும் இச் சமாதான கால இராணுவச் சேவையானது உவந்தேற்றுக் கொள்ள முடியாத விடயமாக இருக்கலாம். ஆனால் ஒரு சனநாயக சமுதாயத்தில் ஒரு போர் வீரன் - பிரசையானவர் தமது சமுதாயத்தில் சுதந்திரமாக ஏற்றுக் கொண்ட ஒரு கடமையையே தாம் நிறைவேற்றுகின்றோம் என்ற பூரண அறிவுடனேயே செயல் படுகிறார். மேலும் ஒரு சனநாயக சமுதாயத்தின் மக்கள் கூட்டமாக இயங்கி இக்கட் டாய கடமையை மாற்றும் அதிகாரத்தையும் கொண்டுள்ளனர். உதாரணமாக ஐக்கிய அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் நடந்ததைப்போல் கட்டாய இராணுவச் சேவையை நீக்கித் தமது விருப்பத்துக்கு இயைந்த இராணுவச் சேவையை உருவாக்கலாம். அல் லது அண்மையில் ஜேர்மனியில்நடந்ததுபோல இராணுவ சேவைக்காலத்தை மாற்றிய மைக்கலாம். அல்லது சுவிற்சலாந்தைப் போல் குடியுரிமையின் மிக முக்கிய பகுதியா கப் பேணுவதற்கு இராணுவ சேவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வுதாரணங்க ளால் குடியுரிமை என்பது உரிமைகள், கடமைகள் என்பவற்றுக்கு மிகப் பரந்த வரைவி லக்கணத்தைக் காட்டி நிற்கின்றது என்பதை அறியலாம். ஏனெனில் உரிமைகளும், கடமைகளும் ஒரு சனநாயகத்தின் இருபக்கங்களாகும். ஒரு தனியாளின் உரிமைப் பிரயோகமும், தன்னுடைய, பிறருடைய உரிமைகளைப் பாதுகாக்கும் அவரது கடமை யும் சேர்ந்தே உள்ளன. உறுதியான சனநாயகங்களின் பிரசைகள் கூட இச் சமன்பாட் டைச் சரியாக விளக்கிக்கொள்வதில்லை. பெரும்பாலும் அவர்கள் தமது உரிமைகளை நிலை நிறுத்த முயலும் அதே வேளையில் தமது கடமைகளை நிராகரிக்கின்றனர். அரசியல் விஞ்ஞானியான பெஞ்சமின் பார்பரின் (Benjamin Barber) வார்த்தைகளில் ஜனநாயகம் என்பது பெரும்பான்மையோரின் ஆட்சி என்றும்,உரி மைகள் என்பது தனியாரின் பிரத்தியேக உடைமை என்றும், ஆகவே இவை பெரும் பான்மை சனநாயகத்துக்கு மாறானவை என்றும் பொதுவாக விளங்கிக் கொள்ளப் படுகின்றன. ஆனால் இது உரிமைகளையும், சனநாயகத்தையும் தவறாக விளங்கிக் கொள்வதாகும்.
16

தனிநபர்கள் பேச்சுரிமை, கூட்டுச் சேரும் உரிமை மத உரிமை போன்ற அடிப்படை யான, மாற்ற முடியாத உரிமைகளை அனுபவிக்கின்றனர். இவை எந்தவொரு சனநா யக அரசாங்கத்தையும் கட்டுப்படுத்துகின்றன. இவ்வகையில் தனிமனித உரிமைகள் அரசாங்கத்தின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஒரு குறுங்கால் அரசியல் பெரும் பான்மைக்கு ஒரு தடைக் கல்லாக விளங்குகின்றன. ஆனால் இன்னொரு பார்வையில் உரிமைகள் என்பது தனிநபர்களைப் போலவே தனிமையில் செயற்பட முடியாது. உரிமைகள் தனிநபர்களின் பிரத்தியேக சொத்தல்ல, சமுதாயத்தின் மற்ற உறுப்பினர்க ளும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கே அது நிலைத்திருக்க முடியும். அமெரிக்க மெய்யிய லாளரான சிட்னி கூக் (Sidney Hook) என்பவர் கூறியது போல ஒரு தேர்தல் தொகுதிதான் தன்னுடைய சுதந்திரத்தின் இறுதிக் காவலனாகும். இந்நோக்கில் தனது பிரசைகளினால் தெரியப்பட்டு அவர்களுக்கே பொறுப்புடைய ஒரு சனநாயக அரசாங்கமானது தனிநபர் உரிமைகளின் எதிரி அல்ல, மாறாக அவற்றின் பாதுகாவல னாகும். அதாவது ஒரு சனநாயகத்தில் அதன் பிரசைகள் தமது குடியியல் கடப்பாடுக ளையும், பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்ளும் முகமாக அவர்களது உரிமைகளை விரிவுபடுத்துவதாகும்.
பொதுவாகக் கூறினால், அதன் இயக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக ஒரு சனநாயக செயற்பாட்டில் பங்கு கொள்வதை இப் பொறுப்புகளே உறுதி செய்கின்றன. ஆகக் குறைந்தது தமது சமுதாயத்தைப் பாதிக்கும் சிக்கலான பிரச்சனைகளைப் பற்றி பிரசை கள் அறிந்திருக்க வேண்டும். இவ்வறிவு உயர் பதவிகளுக்கான வேட்பாளர்களைப் புத்திசாலித்தனமாகத் தெரிவுசெய்ய உதவும். குடியியல், குற்ற வழக்குகளின்பூரிமாரா கடமையாற்றுதல் போன்ற கடப்பாடுகள் சட்டத்தின் பாற்பட்டவை, ஆனால் அவை கட்டாயமானவையல்ல.
சனநாயக நடவடிக்கையின் சாராம்சமானது தமது நாட்டினதும் சமூகத்தினதும் பொது வாழ்வில் அதன் பிரசைகள் தீவிரமாகவும் சுதந்திரமாகவும் பங்கு பற்றுதலாகும். இத்தகைய பரந்த, உயிரோட்டமான பங்கு பற்றுதல் இல்லாதுவிடின் சனநாயகம் தேய்வடையத் தொடங்கி ஒரு சிறிய அளவான குழுக்கள், நிறுவனங்கள் ஆகியவற் தின் விளைநிலமாக மாறிவிடும். ஆனால் சமூகத்தின் சகல மட்டங்களிலும் தனிநபர் கள் தீவிரமாகப் பங்கு கொள்ளும் போது, சனநாயகமானது தான் பாதுகாப்பதற்காக உறுதிஎடுத்த சுதந்திரங்கள், உரிமைகள் ஆகியவற்றைப் பலி கொடுக்காது, சகல பொருளாதார அரசியல் சூறாவளிகளுக்கும் முகம் கொடுத்து வென்று நிற்க முடியும். பொதுவாழ்வில் தீவிரமாகப் பங்கெடுத்தல் என்பது சிலவேளைகளில் அரசியல் பதவி களைப் பெறும் போராட்டம் எனத் தவறாக வரையறை செய்யப்படுகின்றது. ஆனால் ஒரு சனநாயக சமுதாயத்தில் பிரசைகளின் பங்கு என்பது வெறுமனே தேர்தல் போட்டி களில் பங்கெடுத்தல் என்பதை விடப் பரந்த பொருள் உடையது. ஓர் உள்ளூராட்சி மட்டத்தில் பிரசைகள் பாடசாலைக் குழுக்களில் அங்கம் வகிக்கலாம். அல்லது சமூகக் குழுக்களை உருவாக்கலாம், உள்ளூர் பதவிகளுக்குப் போட்டியிடலாம். மாகாண, மாநில, தேசிய மட்டத்தில் பொதுப் பிரச்சினைகளில் பேச்சாலும், எழுத்தாலும் தலை யிட முடியும். அல்லது அரசியற் கட்சிகளிலும், தொழிற் சங்கங்களிலும் ஏனைய தொண்டர் நிறுவனங்களிலும் பங்கு கொள்ளலாம். மக்களின் பங்களிப்பு எந்தளவாக இருந்தபோதும் ஓர் ஆரோக்கியமான சனநாயகம் அதன் மக்களின் விரிந்த, தொடர்ச்சி
17

Page 14
யான, அறிவு ரீதியான பங்கிலேயே தங்கியுள்ளது.டயனே றேவிட்ச்(DianeRavitch) என்பவர் பின்வருமாறு கூறுகிறார். சனநாயகம் என்பது ஒரு செயன்முறை, ஒரு வாழ்க்கை முறை, ஒன்றுபட்டுச் செயலாற்றுதல். அது மாறக்கூடியது, நிலையான தல்ல. ஒத்துழைப்பு விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை ஆகியவற்றைத் தனது சகல பிரசைகள் மத்தியிலும் அது வலியுறுத்துகின்றது. சனநாயகத்தை இயங்கச் செய்வது கடினமானது, இலகுவானதல்ல. சுதந்திரம் என்பது பொறுப்புடைமை, பொறுப்புடைமையிலிருந்து தப்பிக் கொள்வது அல்ல.
சுதந்திரம், சுயவெளிப்பாடு (Self-expression) ஆகியவற்றின் உயர் இலட்சியங்களை சனநாயகம் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனால் அதேவேளையில் மனித இயல்பு பற்றி அது தெளிந்த பார்வையும் கொண்டது. தனது சகல மக்களும் கண்ணியமானவர் களாக இருக்க வேண்டும் என அது எதிர்பார்க்கவில்லை. பொறுப்புடையோராய் இருக்க வேண்டுமென்றே அது கோருகின்றது. றெயினோல்ட் நீபர் (Reinhold Niebuhr) என்றும் ஓர் அமெரிக்க மெய்யியலாளர் பின்வருமாறு கூறுகிறார். நீதியைத் தேடும் மனிதனது ஆற்றல் சனநாயகத்தை உருவாக்குகின்றது. ஆனால் அநீதியைத் தேடும் மனிதனது சார்பு நிலை சனநாயகத்தை அத்தியாவசியமாக்குகின்றது.
மனித உரிமைகளும் அரசியல் இலக்குகளும்
அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாத்தல் என்பது கோட்பாட்டளவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் எழுதப்பட்ட அரசியல் யாப்புக்க ளிலும், ஐக்கிய நாடுகள் அமையத்தின் சாசனத்திலும் ஹெல் சிங்கி இறுதிச் சட்டம் (Helsinki Final Act) போன்ற சர்வதேச ஒப்பந்தங்களிலும் இவ்வுரிமைகள் இணைக் கப்பட்டுள்ளன. பல்வேறுபட்ட உரிமைகளிடையே வேறுபாடு காண்பதென்பது இன் னுமொரு விடயமாகும். அண்மைக் காலமாக அடிப்படை மனித உரிமைகள் பட்டி யலை விரிவுபடுத்தும் ஒரு போக்கு குறிப்பாகச் சர்வதேச நிறுவனங்களிடையே காணப்படுகின்றது. இக் குழுக்கள் தொழிலுரிமை, கல்வியுரிமை, கலாச்சார அல்லது இனத்துவ உரிமை, வாழ்க்கைத் தர உரிமை போன்ற பல உரிமைகளைப் பேச்சுரிமை, சட்டத்தின் முன்னால் யாவரும் சமம் என்னும் உரிமை ஆகியவற்றுடன் இணைத்துள் ளன. இவையாவும் சிறப்பானவையே. ஆனால் இத்தகைய உரித்துக்கள் உரிமைகளா கப்பரிணாமம் கொள்ளும் போது அடிப்படையானகுடியியல் மனிதஉரிமைகள் என்ற பொருளின் பெறுமதியைக் குறைத்துவிடுகின்றது. மேலும் இவை தனிநபர்கள் கொண் டுள்ள உரிமைகளுக்கும், தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் முனை யும் இலக்குகளுக்கும் உள்ள வித்தியாசத்தை மாசுபடுத்துகின்றன.
பேச்சுரிமை போன்ற மாற்றுதற்கரிய உரிமைகளைத் தமது செயல்களைக் கட்டுப்படுத் துவதன் மூலமே அரசாங்கங்கள் பாதுகாக்கின்றன. ஆனால் கல்விக்கு நிதி வழங்கல், சுகாதார வசதிகளை ஏற்படுத்தல், வேலைக்கு உத்தரவாதம் வழங்கல் ஆகியவை மறுதலையாக அரசாங்கத்தின் தீவிர ஈடுபாட்டை உருவாக்குகின்றன. இவற்றுக்காக அரசாங்கம் கொள்கைகள், நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்படுத்துகின்றது. போதுமான சுகாதாரநலன் பராமரிப்பும், கல்விக்கான சந்தர்ப்பங்களும் ஒவ்வொரு குழந்தையின
18

தும் பிறப்புரிமையாகும். ஆனால் இவை மறுக்கப்படுதல் வேதனையான உண்மையா கும். அத்துடன் இவ்விலக்குகளை அடைவதில் உள்ள ஆற்றல் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. ஒவ்வொரு மனிதனின் எதிர்பார்க்கையையும் ஓர் உரிமையாக மாற்றுவதன் மூலம் வெறுப்பை ஏற்படுத்தக் கூடிய அபாய நிலைக்கு அரசாங்கங்கள் உட்படுவதுடன் சகல மனித உரிமைகளையும் புறக்கணிக்கும் நிலையை உருவாக்கு கின்றன.
அடிப்படை மனித உரிமைகள்
- பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் - மனித உரிமை - ஒருங்குகூடுவதற்கும் இணைந்து தொழிற்படுவதற்குமான உரிமை - சட்டத்தின் முன் சமமான பாதுகாப்புரிமை - உரிய செயன்முறையும் சமசந்தர்ப்பமும் கொண்ட வழக்காடு உரிமை
LDé56OTT TLT (Magna Carta)
ஜோண் மன்னனையும், இங்கிலாந்தின் பிரபுக்களையும் சனநாயக வாதிகள் என எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால் அவர்களால் 1215 இல் றன்னி மீட்டில் கைச்சாத்திடப்பட்ட அரசியல்யாப்பானது அரசாங்களின் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாகும். மரபு ரீதியான மானியச் சட்டங்களில் மன்னனது துஷ்பிரயோகம் பிரபுக்களை மன்னனுடன் முரண்பட வைத்தது. ஏனெனில் இச்சட்டங்கள் முடியுடன் தமக்குள்ள தொடர்புகளில் ஓரளவு தன்னாதிக்கத்தை இவர்களுக்கு வழங்கியது. ஜோன் மன்னன் அவர்களது கோரிக்கைகளுக்குச் செவிமடுக்க மறுத்தபோது அவர்கள் ஒரு படையைத் திரட்டி மன்னனை மக்னா கார்ட்டாவில் (மகாபட்டயம்) பலவந்தமாகக் கைச்சாத்திட வைத்தனர். இம் மகாபட்டயம் 63 ஏற்பாடுகளைக் கொண்டி ருந்தது. இவற்றில் பெரும்பாலானவை நிலவுடைமையாளர்கள், கிறிஸ்தவ குருமார் போன்றோருக்குச்சார்பான உரிமைப்பட்டியலாகும். எனினும் இவ் ஏற்பாடுகளில் பல பின்னர் இங்கிலாந்தின் சகல மக்களுக்கும் பிரயோகிக் கப்பட்டது. மற்றவை நாட்டின் சட்ட முறைமைக்கு அடிப்படையாக அமைந்தன. உதாரணமாக மக்னா கார்ட்டா, வரிஅற விடுதல் உட்பட நாட் டின் சகல முக்கிய விடயங்களிலும் அரசன் பிரபுக்களின் அறிவுரையையும், சம்மதத்தையும் நாடவேண்டுமென்று விதிக்கின்றது. பின்னர் இவ்வேற்பா டுகள் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்றத்தின் சம்மதம் இல்லாமல் எந்தவொரு சட்டமும் ஆக்கமுடியாதெனவும், வரிஅறவிடப் படமுடியாது எனவும் உறுதிசெய்யப் பயன்படுத்தப்பட்டன. (அமெரிக்கப் புரட்சியில் சுதந்திரம் வேண்டிய குடியேற்றவாதிகள் இங்கிலாந்துக்கு எதி ராக இந்த எண்ணத்தைப் பயன்படுத்தினர். பிரதிநிதித்துவம் இல்லாமல்
19

Page 15
வரிவிதிப்பதில்லை என இவர்கள் கோஷமிட்டனர். சட்டத்தின் சீரான செயல்முறை, யூரிமார் சேவை ஆகியவை மக்னா கார்ட்டாவின் ஏற்பாடுக ளுடன் தொடர்புடையனவே).
மானிய உரிமைகளிலிருந்து சாதாரண மக்களின் அரசியல் யாப்பு உரிமை வரையிலான மக்னா கார்ட்டாவின் இவ் வளர்ச்சி பல நூற்றாண்டுகளைக் கொண்டது. ஏனெனில் பின்வந்த பல ஆங்கிலேயே மன்னர்கள் இப்பட்ட யத்தை வெற்றிகரமாக நிராகரித்தனர். 1688 இல் நடந்த உன்னத புரட்சி (Glorious Revolution) யுடன்தான் இங்கிலாந்து பாராளுமன்றத்தை நாட் டின் மிக உயர்ந்த சட்டவாக்க அமைப்பாகக் கொண்ட ஒர் அரசியல் யாப்பு முடியாட்சியை ஸ்தாபிக்க முடிந்தது. பராளுமன்றத்தைப் பரந்த பிரதிநிதித் துவ சனநாயக ஸ்தாபனமாகச் சீர்திருத்தும் செயல் இன்னுமொரு நூற் றாண்டை எடுக்க வேண்டியிருந்தது.
20

சட்டவாட்சி
சமத்துவமும் சட்டமும்
சட்டத்தின் முன் யாவரும் சமம் அல்லது சட்டத்தின் முன் சமமான பாதுகாப்பு என்னும் உரிமையானது எந்தவொரு நீதியான சனநாயக சமுதாயத்திலும் அடிப்படையாகும். செல்வந்தன் அல்லது ஏழை, இனப்பெரும்பான்மையினர் அல்லது சமய சிறுபான்மை யினர், அரசின் அரசியல் கூட்டாளி அல்லது எதிரி என்ற வித்தியாசமின்றி சகலரும் சட்டத்தின் முன்நிலையில் சமமான பாதுகாப்புக்கு உரியவர். வாழ்க்கையில் ஒவ்வொ ருவரும் சமத்துவமான நிலையை அடைவதை அரசாங்கம் உறுதிசெய்ய முடியாது. தவிர அது அரசாங்கத்தின் கடமையும் அல்ல. அரசியல் யாப்புச் சட்ட நிபுணரான ஜோண் பி.பிராங் (John PFrank) என்பவர் பின்வருமாறு கூறுகிறார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசானது மேலதிகமான எந்த ஒப்புரவின்மைகளையும்(incqua1ity) திணிக்கக்கூடாது. அது தனது சகல மக்களையும் சமமாகவும் சமத்துவமாகவும் நடத்த வேண்டும்.எவரும் சட்டத்துக்கு மேம்பட்டவரல்ல. சட்டம் என்பது மக்களால் உருவாக்கபப்பட்டது. அவர்கள் மீது திணிக்கப்பட்டதல்ல. ஒரு சனநாயக நாட்டின் பிரசைகள் சட்டத்துக்கு அடிபணிகின்றனர். ஏனெனில் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்கின்றனர். இன்னொரு வழியில் சட்டத்தின் கர்த்தாக்கள் என்ற அடிப்படையில் அவர்கள் மறைமுகமாகத் தமக்குத் தாமே அடிபணிகின்றனர். மக்கள் சட்டங்களை உருவாக்கி அவற்றுக்கு அடிபணியும் போது சட்டமும் சனநாயகமும் பாதுகாக்கப்படு கின்றன.
சட்டத்தின் நேரிய செயன்முறை
வரலாற்று ரீதியாக எந்தவொரு சமுதாயத்திலும் குற்றவியல் நீதி முறைமையின் (Crimina justice System) நிர்வாகிகள், துஷ்பிரயோகம், சர்வாதிகாரம் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய அதிகாரத்தையும் தம்மகத்தே கொண்டுள்ளனர் என ஜோண் பி.பிராங் கூறுகிறார். சட்டத்தின் பெயரால் தனிநபர்கள் எவ்விதமுறையான குற்றமும் அவர்கள் மீது சுமத்தப்படாமலே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எவ்வித சட்டரீதி யான நியாயமும் இன்றி நாடுகடத்தலுக்கும் மரண தண்டனைக்கும் உள்ளாகியுள்ள னர். இத்தகைய துஷ்பிரயோகங்களை எந்தவொரு சனநாயக சமுதாயமும்பொறுத்துக் கொள்ளமுடியாது. எந்தவொரு அரசுக்கும் ஒழுங்கை நிலைநிறுத்தவும் குற்றவாளிக ளைத்தண்டிக்கவும் அதிகாரம் இருக்கவேண்டும். ஆனால் சட்டங்களை அமுல்படுத்து வதில் கையாளும் விதிகளும் நடைமுறைகளும் பகிரங்கமானதாகவோ, ஒரு தலைப் பட்சமாகவோ அரசின் தில்லுமுல்லுகளுக்கு உட்பட்டதாகவோ இருக்கக் கூடாது.
2.

Page 16
ஒரு சனநாயகத்தில் சட்டத்தின் நேரிய செயல்முறைக்கான அத்தியாவசிய நிபந்தனை கள் யாவை? ஒரு தேடலுக்கானநியாயமான காரணங்களைக் காட்டும் ஒரு நீதிமன்றத் தின் உத்தரவு இல்லாமல் பொலீசார் ஒரு வீட்டினுள் பல்ாத்காரமாக உட்புகுந்து அவ்வீட்டைத் தேடுதலுக்கு உட்படுத்தமுடியாது. ஒரு சனநாயகத்தில், இரகசிய பொலி சார்நள்ளிரவில் ஒரு வீட்டின் கதவைத் தட்டமுடியாது. ஒரு சட்டவரம்பு மீறப்பட்டதற் கான தெளிவான எழுத்து மூலமான குற்றப்பத்திரிகை இல்லாமல் எந்தவொரு நபரும் கைது செய்யப்பட முடியாது. தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தின் உண்மையான தாற்பரியத்தை அறிய எந்தவொரு தனிநபருக்கும் உரிமை உண்டு. அத்துடன் குற்றம் ஆதாரமற்றது எனவும், கைது செல்லுபடியற்றது எனவும் ஒரு நீதிமன்று காணும் இடத்தில் ஆட்கொணர்வு மனு என்னும் சட்டக்கோட்பாட்டின் அடிப்படையில் உடன டியாக விடுதலையாகவும் உரிமை உண்டு.
குற்றம் சுமத்தப்பட்டவர்களை மிக நீண்ட காலத்துக்குச் சிறையில் அடைத்து வைக்க முடியாது. அவர்கள் விரைவான பொது வழக்கு விசாரணைக்கு உட்படவும், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு முகம் கொடுக்கவும் உரிமையுண்டு. சந்தேக நபர் தப்பிஓடிவிடுவார் அல்லது வேறு குற்றங்கள் இழைத்து விடுவார் என்ற சாத்தியம் இல்லாதவிடத்து அவருக்குப் பினை அல்லது நிபநதனையுள்ள விடுதலை வழங்கப் பட வேண்டும். வழக்கு பின்னர் தொடரப்படலாம். சமூகத்தின் மரபுகள், சட்டங்களுக் குப்புறம்பான கொடுமையான, அசாதாரணமான (Cruelandunusual) தண்டனைகள் வழங்கப்படக் கூடாது. ஆட்களைத் தமக்குத் தாமே எதிராகச் சாட்சியம் வழங்குமாறு கட்டாயப்படுத்த முடியாது. கட்டாயத்தின் பேரில் தன்னைத்தானே குற்றவாளியாக்கு தல் உறுதியாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் எந்தச் சந்தர்ப்பத்திலும் சந்தேக நபர்களை உடல், உளரீதியான சித்திரவதைகளுக்குப் பொலீசார் உள்ளாக்கக் கூடாது. பலாத்காரமாகக் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்யும் செயலைத்தடுக்கும் ஒரு சட்ட முறைமை பொலீசாரின் சித்திரவதை, பயமுறுத்தல் மூலம் தகவல் பெறுவதை ஊக்கு விப்பதில்லை. ஏனெனில் நீதிமன்றம் அவ்வாறு பெறப்பட்ட தகவல்களை வழக்கின் போது சான்றுகளாக ஏற்றுக் கொள்வதில்லை.
ஆட்களை இரட்டைத் தண்டனைக்கு உட்படுத்தவும் முடியாது. அதாவது ஒருவர்மேல் ஒரே குற்றத்தை இருமுறை சுமத்த முடியாது. ஒரு நபரின் மேல் ஒரு குற்றம் சுமத்தப் பட்டு விசாரணையின் பின்னர் அவர் குற்றமற்றவர் என ஒரு நீதிமன்றினால் தீர்மானிக் கப்படுமிடத்து அதே குற்றத்தை அவர்மீது திரும்ப எப்போதும் சுமத்த முடியாது. ஆட்சியாளர்கள் துஷ்பிரயோகத்துக்கான சந்தர்ப்பங்களைக் கொண்டிருப்பதால் முன் திகதியிடப்பட்ட சட்டங்கள் செல்லுபடியற்றவை. அதாவது ஒரு செயல் அது நடை பெற்ற வேளை சட்டத்துக்குப் புறம்பானதாக இல்லாதவிடத்துப் பின்னால் இயற்றப்ப டும் ஒரு சட்டத்தினால் அச் செயலைக் குற்றமாகக் காணமுடியாது.
அரசின் பலாத்கார நடவடிக்கைகளுக்கு எதிராகப் பிரதிவாதிகள் (Defendants) மேல திக பாதுகாப்புக்களைக் கொண்டிருக்க முடியும். உதாரணமாக ஐக்கிய அமெரிக்கா வில் ஒரு குற்றம் சுமத்தப்பட்டவருக்கு அவரால் கட்டணம் செலுத்த முடியாதவிடத் தும் குற்றவியல் நடைமுறையின் சகல மட்டங்களிலும் ஒரு சட்ட வல்லுநரின் உதவி பெற உரிமை உண்டு. கைது செய்யப்படும் வேளையில் சந்தேகநபருக்கு அவருடைய
s

உரிமைகள் பற்றிபொலீசார் அறிவிக்க வேண்டும். இவ்வுரிமைகளில் ஒரு சட்டத்தரணி யைப் பெறுதல், மெளனம் காத்தல் (தன்னைத்தானே குற்றவாளியாகக் காட்டிக் கொள் வதைத் தவிர்ப்பதற்காக) ஆகியவையும் அடங்கும். அரசாங்கத்தின் எதிரிகளைத் தேசத்துரோகக் குற்றத்துக்கு உட்படுத்துவது எதேச்சாரிகள் கையாளும் ஒரு பொது வான தந்திரோபாயமாகும். இதன் காரணமாக தேசத்துரோகக் குற்றம் மிகக் கவனமாக வரையறை செய்யப்பட்டுள்ளது. இதனால் இதனை அரசாங்கத்துக்கு எதிரான விமர்ச னங்களை அடக்குவதற்கு ஓர் ஆயுதமாகக் கையாள முடியாது.
சட்டத்தை அமுல்படுத்தவும், குற்றவாளிகளைத் தண்டிக்கவும் அரசுக்கு உள்ள அதிகா ரத்தை மேற்கூறிய கட்டுப்பாடுகள் எவ்வகையிலும் தடைசெய்யவில்லை. மாறாக, ஒரு சனநாயக சமுதாயத்தில், குற்றவியல் நீதிமுறைமையினை இது வலிமையுடைய தாக்குகின்றது. அத்துடன் பொது நலன்களையும், தனிநபர் உரிமைகளையும் நீதி நிர்வாகம் எந்தளவுக்கு நியாயமாகப் பாதுகாக்குன்றது என்பதைப் பொது மக்கள் அளவிடவும் இது வழிவகுக்கின்றது. நீதிபதிகள் நியமிக்கப்படலாம் அல்லது தெரிவு செய்யப்படலாம். அவர்கள் தமது பதவியை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அல்லது ஆயுட்காலம் முழுவதுமே வகிக்க முடியும். அவர்கள் எவ்வாறு தெரிவுசெய்யப்பட்டா லும் தமது நடுநிலைமையைப் பேணுவதற்காக அரசியல் அதிகாரத்துக்கு அப்பாற்பட் டவர்களாய் இருக்க வேண்டுவது மிகவும் முக்கியமானதாகும். நீதிபதிகள் மிக அற்ப மான காரணங்களுக்காக அல்லது அரசியல் காரணங்களுக்காகப் பதவிநீக்கம் செய் யப்பட முடியாது. மிகப் பாரிய குற்றங்களுக்காக அல்லது துர்ச் செயல்களுக்காக அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படும் போது கூட குற்றப் பிரேரணை போன்ற (குற்றங்களைச் சுமத்தல்) முறை சார்ந்த நடைமுறைகள் மற்றும் சட்டசபை விசார ணைண ஆகியவற்றின் மூலமே செய்யப்பட வேண்டும்.
அரசியல் யாப்புக்கள் (Constitutions)
சனநாயக அரசாங்கங்கள் அவற்றின் அரசியல் யாப்பு என்னும் அடித்தளத்தில் தங்கி யுள்ளன. அரசியல்யாப்பு என்பது அதனது அடிப்படைக் கடப்பாடுகள், கட்டுப்பாடு கள், நடைமுறைகள், நிறுவனங்கள் தொடர்பாக வெளியிடப்படும் ஒரு முறையான விளக்கமாகும். ஒருநாட்டின் அரசியல் யாப்பு அந்நாட்டின் அதிஉன்னதமான சட்டமா கும்.பிரதம்மந்திரியிலிருந்து விவசாயிகள் வரை சகல பிரஜைகளும் அதன் ஏற்பாடுக ளுக்குக் கட்டுப்பட்டவர்களாவர். அரசியல் யாப்பு என்பது வழக்கமாக ஒரு தனியான எழுத்து மூலமான ஆவணமாகும். அது ஒரு தேசிய அரசின் அதிகாரத்தை நிலைநாட் டுகின்றது. அடிப்படை மனித உரிமைகளுக்கு உத்தரவாதமளித்து அரசாங்கத்தின் அடிப்படைச் செயற்பாட்டு நடைமுறைகளையும் வடிவமைக்கின்றது.
அரசியல் யாப்புக்கள் நிலைத்து நிற்கும் சின்னங்களாகும். ஆனால் அவை வியந்தேற் றுக் கொள்ளும் சின்னங்களைவிட மேலாக இருக்க வேண்டுமெனில் மாற்றங்களை ஏற்கவேண்டும். உலகத்தின் மிகப் பழமையான எழுதப்பட்ட அரசியல் யாப்பான ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் யாப்பு 7 சுருக்கமான ஏற்பாடுகளையும் 26 திருத் தங்களையும் மட்டுமே கொண்டுள்ளது. எனினும் இது ஒரு அடித்தளம் மாத்திரமே.
2S

Page 17
கடந்த 200 ஆண்டுகளாக நீதிமன்றத் தீர்ப்புகள், சட்டங்கள், சனாதிபதியின் நடவடிக் கைகள், மரபுரீதியான நடைமுறைகள் ஆகியவை இத்தளத்தினை அடித்தளமாகக் கொண்டு உருவாகியுள்ளன. இவை ஐக்கிய அமெரிக்க அரசியல் யாப்பினை இது வரை உயிரோட்டமும் பொருத்தப்பாடும் உடையதாகக் காத்துவந்துள்ளன. ஒவ்வொரு சனநாயகத்திலும் இத்தகைய அரசியல் யாப்பு வளர்ச்சி ஏற்படுகின்றது. பொதுவாக, ஒரு நாட்டின் யாப்பினைத் திருத்துவதற்கு அல்லது மாற்றுவதற்குப் பின்பற்றும் செயல் முறை பற்றி இருவகைக் கருத்துக்கள் உள்ளன. ஒன்று பல்வேறு படிகளையும், மிகப் பெரிய பெரும் பான்மைகளையும் கொண்ட கடினமான நடைமு றையாகும். இதன் விளைவாக யாப்பு அடிக்கடி மாற்றப்படுவதில்லை. பொதுமக்களின் பேராதரவு கொண்ட மிக அரிதான காரணங்களுக்காகவே யாப்பானது மாற்றத்துக்கு உள்ளாகின்றது. ஐக்கிய அமெரிக்க அரசியல் யாப்பு இதற்கு உதாரணமாகும். இந்த யாப்பானது பொதுவான கோட்பாடுகள், அரசாங்கத்தின் அதிகாரங்கள், கட்டுப்பாடு கள், கடமைகள், நடைமுறைகள் மேலும் உரிமை மனுவில் கூறப்பட்ட அடிப்படை தனிமனித உரிமைகள் ஆகியவற்றை மிகவும் சுருக்கமாகக் கூறுகின்றது. மற்றமுறை, பல நாடுகளினால் பின்பற்றப்படும் இலகுவான முறையாகும். இதன்படி சட்டசபை யின் அனுமதியுடன் எந்தத் திருத்தத்தையும் மேற் கொள்ளலாம். மறுதேர்தலில் இது வாக்காளர்களால் பரீட்சைக்கு உள்ளாகின்றது. இம்முறையின் மூலம் யாப்புகள் மாற் றத்துக்கு உள்ளாகும் முறை மிக நீண்டதாக இருக்கலாம். ஏனெனில் பொதுவான சட்டவாக்கத்துக்கும் இந்த விசேட ஏற்பாடுகளுக்கும் அதிக வேறுபாடு இல்லை.
18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட எந்த அரசியல் யாப்பும் அமெரிக்க அரசியல் யாப்பினைப்போல் 20 ஆம் நூற்றாண்டுவரை மாற்றத்துக்கு உட்படாமல் நிலைத்த தில்லை. அதைப்போல் இன்றிருக்கும் எந்த அரசியல் யாப்பும் அடுத்த நூற்றாண்டிற் குள் அமெரிக்க யாப்பைப் போல மாற்றத்துக்கு இடம் கொடாமல், அதேநேரத்தில் தனி மனித உரிமைக் கோட்பாடுகள், சட்டத்தின் நேரிய செயன்முறை, ஆளப்படுவோ ரின் சம்மதத்துடனான அரசாங்கம் ஆகிய சீரிய அம்சங்களை உறுதியாகக் கொண்டு 21ஆம் நூற்றாண்டுக்குள் பிரவேசிக்கப் போவதில்லை.
Georseth GudrooTLstudy,6th (Locke and Montesquieu)
நவீன அரசியல் அமைப்பு சனநாயகத்துக்கான அறிவு பூர்வமான அடிப்ப டைகள் 18 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய அறிவியல் இயக்க காலத்தில் இடப்பட்டன. இம் மெய்யியல் இயக்கமானது (Philosophic movement) மரபு ரீதியான சமூக, சமய, அரசியல் கருத்துக்களை நிராகரித்து பகுத்தறிவு வாதத்தை வலியுறுத்தியது. ஆங்கில அரசியல் மெய்யியலாளரான ஜோண் லொக் (John Locke), பிரெஞ்சு நியாயவாதியும் அரசியல் மெய்யியலாளரு மான மொண்டஸ்கியூ ஆகியோர் இவ்வியக்கத்தின் மிகச் சிறந்த சிந்தனை யாளர்களாகும். 1960இல் லொக் என்பவர் அரசாங்கம் பற்றிய இரு ஆய்வு Tsibaiser (Two Treatieses of Government) GTOsirgub suos Guigsrèh கத்தை ஏற்படுத்திய நூலை வெளியிட்டார். ஆளப்படுவோரின் சம்மதத்தி

லேயே அரசாங்கம் தங்கியுள்ளது என்ற அவரது வாதமானது அரசியல் சித்தாந்தங்களை மாற்றியமைத்ததோடு சனநாயக நிறுவனங்களின் வளர்ச் சியையும் மேம்படுத்தியது. இயற்கை விதிகள் (Natural Law)பற்றி வலியு றுத்திய லொக் அரசாங்கம் குறிப்பாக முடியாட்சி (Monarchy)என்பது தெய்வீக அருட்கொடை என்னும் வாதத்தை முறியடித்தார். இயற்கையின் சட்டம் என்பதே கடவுளின் சட்டம் என லொக் வாதாடினார். வாழும் உரிமை, குறிப்பான சில சுதந்திரங்கள், சொத்துச் சேர்த்தல், தனது உழைப் பின் பயனைத் தானே வைத்திருத்தல் ஆகிய அடிப்படை உரிமைகளை இயற்கையின் சட்டம் சகல மனிதர்களுக்கும் உறுதி செய்கின்றது என அவர் கூறினார். இவ்வுரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவே ஒரு குடியியல் சமூகத்தில் வாழும் மனிதன் தனது அரசாங்கத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்கிறான். ஒரு பிரசை சட்டத்துக்குக் கட்டுப்படக் கடமையுள்ளவன். அதேவேளை அரசாங்கம் சட்டங்களை ஆக்க உரிமை உள்ளது. அத்துடன் பொதுநலன்களை அந்நிய ஆதிக்கத்திலிருந்து அரசாங்கம் காக்க வேண் டும். ஓர் அரசாங்கமானது சட்டத்தை மீறித் தான்தோன்றித்தனமாக நடக் கும் போது அதனைத் தூக்கியெறிந்து ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்க பிரசைக்கு உரிமை உண்டு என லொக் வலியுறுத்தினார்.
லொக்கின் இயற்கையின் சட்டம் பற்றிய கோட்பாடு ஒரு பாரிய அறிவுசார் மெய்யியலாளர் பாரம்பரியத்தை ஐரோப்பாவிலும் புதிய உலகத்திலும் தோற்றுவித்தது, பிரான்சில் ஜீன் ஜேக்குவிஸ் ரூசோ (Jean Jacques Rousseau), Gosstianigai Glast'. Syb (David Hume), Gigi Dafusai gth மானுவல் கான்ட் (Immanuel Kant),ஐக்கிய அமெரிக்காவில் தோமஸ் ஜெபர்ஸன், பெஞ்சமின் பிராங்கிளின் ஆகியோர் இவர்களில் சிலராவர். ஆனால் லொக்கின் மிகச் சிறந்த சீடர் மொண்டஸ் கியூவே ஆவர். லொக் கைப் போல் இவரும் மக்களின் சம்மதத்தில் தங்கியிருக்கும் குடியரசு அர சாங்கத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் பெரும்பான்மையின் ஆட்சியால் நிலைநாட்டப்படும் சனநாயகத்தில் அவர் நம்பிக்கை கொள்ள வில்லை.
1748இல் வெளியிடப்பட்ட தமது சட்டத்தின் மெய்ப்பொருள் (The Spirit ofLaws)பற்றிய நூலில் தனிமனித உரிமையை உத்தரவாதம் செய்வதற்காக நீதி, சட்டம், நிர்வாகம் முதலிய அரசாங்கத்துறைகளை வெவ்வேறாக்கி அதிகாரங்களைப் பங்கீடு செய்ய வேண்டுமென வாதாடினார். ஐக்கிய அமெரிக்க அரசியல் யாப்பின் சித்தாந்த அடிப்படைக்கு இக்கோட்பாடு வழியமைத்தது. இதன்படிசனாதிபதி, காங்கிரஸ், நீதித்துறை ஆகியவற்றுக் கிடையில் அதிகாரம் பகிர்வு செய்யப்பட்டுள்ளது.
ஜீன் எஸ். ஹோல்டன்

Page 18
W
தேர்தல்கள்
Gisig, so 950. Luri GT is (Thc Benchmark of Election)
சனநாயக பிரதிநிதித்துவ அரசாங்கங்களின் மைய நிறுவனங்கள் தேர்தல்களாகும். ஏனெனில் ஒரு சனநாயகத்தில் அரசாங்கத்தின் அதிகாரமானது ஆளப்படுவோரின் சம்மதத்திலிருந்தே முற்று முழுதாகப் பெறப்படுகின்றது. மக்களின் சம்மதத்தை அர சாங்க அதிகாரமாக மாற்றும் செயற்பாடுகளில் முதன்மையானது சுதந்திரமான சமசந் தர்ப்பம் வழங்கும் தேர்தல்களை நடத்துவதாகும்,
எல்லா நவீன சனநாயகங்களும் தேர்தல்களை நடத்துகின்றன. ஆனால் சகல தேர்தல்க ரூம் சனநாயக ரீதியானவை அல்ல. தமது ஆட்சிக்கு ஒரு சட்டபூர்வ அந்தஸ்தை வழங்குவதற்காக வலதுசாரி சர்வாதிகார அரசுகளும், மார்க்லீய குழுக்களும், தனிக் கட்சி அரசாங்கங்களும் தேர்தல்களை நடத்துகின்றன. அத்தகைய தேர்தல்களில் ஒரு வேட்பாளர் அல்லது வேட்பாளர் பட்டியல் மட்டுமே உண்டு. தெரிவுகளுக்கு அங்கு இடமில்லை. அத்தகைய தேர்தல்களில் ஒவ்வொரு பதவிக்கும் பல வேட்பாளர்களும் காணப்படலாம். ஆனால் பயமுறுத்தல், கள்ளவோட்டு முறைமூலம் அரசாங்கத்தின் வேட்பாளர் தெரிவு செய்யப்பட வழி அமைக்கப்படுகின்றது. வேறு தேர்தல்கள் உண் மையான தெரிவுகளுக்கு வழிவகுக்கலாம். ஆனால் அத்தெரிவுகளும் ஆட்சியிலுள்ள கட்சிக்கு மட்டுமே உரியது. இத்தகைய தேர்தல்கள் சனநாயகத் தேர்தல்கள் ஆகமாட் - T5).
சனநாயகத் தேர்தல்கள் என்றால் என்ன
கல்வி மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான முன்னாள் அமெரிக்கப் பிரதிநிதியுமான ஜீன் கர்க் பட்றிக் (Jean Kirk Patrick)என்பவர் தேர்தல்களை வரைவிலக்கணப்படுத்தும் போது பின்வருமாறு குறிப்பிடுகின்றார். சனநாயகத் தேர்தல்கள் என்பது வெறுமே ஒரு அடையாளச் சின்னமல்ல. அவை போட்டித்தன்மையும் கிரமமும், நிச்சயமும் கொண்ட தேர்தல்கள். இத் தேர்தல்களில் அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம் மேற் கொள்பவர்கள் பிரசைகளினால் தெரிவு செய்யப்படுகின்றார்கள். இப்பிரசைக ரூக்கு அரசாங்கத்தை விமர்சனம் செய்யவும், அவற்றைப் பிரசுரிக்கவும், மாற்றுவ ழிகளை வழங்கவும் பாரிய சுதந்திரம் உண்டு.
சுர்க்பட்றிக்கின் வரைவிலக்கணத்தின் பொருள் யாது. முதலாவதாக சனநாயகத் தேர் தல்கள் போட்டித்தன்மையுள்ளவை.தமது அரசாங்கத்துக்கு எதிரான விமர்சனங்களை
வெளிப்படையாகக் கூறுவதற்கு எதிர்கட்சியினருக்கும் வேட்பாளர்களுக்கும் பேச்சுச்

சுதந்திரம், கூட்டுச் சேரும் சுதந்திரம்,நடமாடும் சுதந்திரம் ஆகியவை இருக்க வேண் டும்.அத்துடன் மாற்றீடான கொள்கைகள், வேட்பாளர்களை வாக்காளர்களிடம் சமர்ப் பிக்கவும் சுதந்திரம் வேண்டும். எதிர்கட்சியினரை வாக்களிக்க அனுமதிப்பது மட்டும் போதுமானதல்ல. தேர்தல்களில் எதிர்கட்சியினரது வானொலி, கூட்டங்கள், பத்தி ரிகை உரிமைகள் நசுக்கப்படும்போது அது சனநாயக விரோதமானது. அதிகாரத்தில் இருக்கும் கட்சி அதன் காரணமாகப் பல்வேறு நன்மைகளை அனுபவிக்கலாம். ஆனால் விதிமுறைகளும் தேர்தல் நடத்தும் விதமும் நியாயமானதாக இருத்தல் வேண்டும்.
சனநாயகத் தேர்தல்கள் திரும்பத் திரும்ப நிகழ்பவை, சனநாயகங்கள் சர்வதிகாரிக ளைத் தெரிவு செய்வதில்லை அல்லது ஆயுட்கால சனாதிபதிகளைத் தெரிவு செய்வ தில்லை. தெரிவு செய்யப்பட்ட அலுவலர்கள் மக்களுக்குப் பொறுப்புடையவர்கள். அதுமட்டுமல்ல பதவியில் நிலைக்க ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் அவர்கள் திரும்பவும் மக்களிடம் அனுமதி பெறவேண்டும், அதாவது ஒரு சனநாயகத்தில் அலுவலர்கள் பதவியிலிருந்து அகற்றப்படும் அபாயத்தை எதிர் நோக்க வேண்டும். இதில் ஒரு விதிவிலக்கு நீதிபதிகளாவர். பொதுமக்களின் நெருக்கடியிலிருந்து தப்பிக் கவும் தமது நடுநிலமையைக் காப்பாற்றிக் கொள்ளவும் நீதிபதிகள் ஆயுட்காலம் வரை நியமிக்கப்படுகின்றனர். மிகவும் மோசமான நடத்தை காரணமாகவே பதவியிலிருந்து நீக்கப்படுகின்றனர்.
சனநாயகத் தேர்தல்கள் சகலரையும் உள்ளடக்கியவை. ஒரு பிரனச அல்லது வாக்கா ான் என்பதன் பொருள் விரிவானதாக அதாவது வயதுவந்தோரில் ஒரு பெருந்தொ கையினரைக் கொண்டதாக இருக்கவேண்டும். அதன் உள்ளக செயல்முறை எவ்வளவு தான் சனநாயகத் தன்மை கொண்டிருந்தபோதும் ஒரு சிறிய பிரத்தியேகமான குழுவி னரால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் சனநாயகமானதல்ல. இன, மத சிறுபான் மைக்குழுக்கள் அல்லது பெண்கள் தமது குடியுரிமை பெறவும் அதன்மூலம் தேர்தல்க னில் வாக்களிக்கவும், பதவி வகிக்கவும் நடத்திய போராட்டங்கள் சனநாயக வரலாற் நில் குறிப்பிடக்கூடிய அம்சமாகும். உதாரணமாக, 1787 இல் அரசியல் யாப்பு கைச் சாத்திடப்பட்டபோது ஐக்கிய அமெரிக்காவில் சொத்துடைய ஆண்கள் மாத்திரமே வாக்களிக்கவும் தெரிவுசெய்யப்படவும் உரிமை உள்ளவர்களாய் இருந்தனர். 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே சொத்துரிமைத் தகுதி மறைந்துவிட்டது. 1920 இல் பெண்கள் வாக்குரிமை பெற்றனர். எனினும் 1960 களின் குடியுரிமை இயக்கம் வரையிலும் ஐக்கிய அமெரிக்காவின் தென்பகுதியில் கறுப்பு அமெரிக்கர்கள் முழுமை யான வாக்குரிமையை அனுபவிக்கவில்லை. இறுதியாக 1971 இல் வாக்களிக்கும் வயது 21 இல் இருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டபோது இளம்பிரசைகளும் வாக்கு ரிமை பெற்றனர்.
சனநாயகத் தேர்தல்கள் திட்டவட்டமானது. அரசாங்கத்தின் தலைமைத்துவத்தை இத் தேர்தல்கள் தீர்மானிக்கின்றன. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சட்டங் கள், அரசியலமைப்புக்கு அமைய அதிகாரத்தைக் கொண்டுள்ளனர். அவர்கள் பெயர ாவிலான அல்லது அடையாளச் சின்னமான தலைவர்கள் அல்ல. இறுதியாக சனநாய கத்தேர்தல்கள் வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதோடு நின்றுவிடுவதில்லை. அபிப்
T

Page 19
பிராய வாக்கெடுப்பு, ஒப்பங்கோடல் மு:ம் கொள்:க விடயங்களே நேரடியாக தீர்மானிக்கும் உரிமையையும் Iக்கள் கொண்டுள்ள13ர். உதாரETமாக ஐக்கிய அடெ ரிக்காவில் மாகாண சட்டசபைகள் ஒரு பிரச்சினையில் மக்களின் அபிப்ரோபத், நேரடியாகக் கோரலாம். ஒரு குறிப்பிட்ட விடயத்தை அடுத்த தேர்தலில் வாக்களிட் புக்கு விடுமாறு கோரி பிரசைகள் ஒரு குறிப்பிட்டள& கையெழுத்துக்களைச் (பொது இாக மாநிலத்திலுள்ள போக்காளர்களில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தினர்) சேகரிக்கலாம் இவ்விடயத்தில் மாநில சபையின் அல்லது கவர்னரின் எதிர்ப்பினைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. இது ஒப்பங்கோடல் எனப்படும். சு:போர்ரிேயா மாநிலத்தில் ஒவ்வொருமு:ற போக்களிக்கும் போதும் வாக்காளர்கள் பல்வேறு சட்டரீதியான ஆரம்பங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். இவ்வாறு முகம் கோடுக்கும் பிரச்சினைகள் சூழல் மாசுபடுதல் முதல் மோட்டார் காப்புறுதிச் :ெனங்கள் :ரயாக இருக்க
էl:ITLL:
சனநாயக நீதி நெறியும் விசுவாசமான எதிர்கட்சியும்
திறந்த மனப்பான்மை, பொறுப்புக்கூறள் ஆகியவற்றியேயே சனநாயகம் செழிப்படை கின்றது. ஆனால் வாக்களித்தல் இதில் சேராத மிகமுக்கியமான விதிவிலக்காகும் கதந்திரமாக போக்கனிக்கவும், பயமுறுத்தலுக்கான சந்தர்ப்பத்தேக் குறைக்கவும் ஒரு சனநாயகத்தில் இரகசிய வாக்களிப்பு அனுமதிக்கப்ப வேண்டும். ஆனால் அதே வேளை வாக்குப் பேட்டியின் பாதுகாப்பும், வாக்குக:ைள எண்ணுதலும் கூடியவன: மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும். இதன் மூலம் தேர்தல் முடிவுகள் மிகவும் சரியானதெனவும், உண்:ைBபிஸ் அரசாங்கம் தமது சம்மதத்தில் தங்கியிருக்கின்றதென் றும் மக்கள் நம்பிக்கை கொள்ள முடியும்.
விசுவாசமான எதிர்கட்சி என்னும் எண்ணக்கரு சிலருக்கு குறிப்பாக அதிகாரமாற்றமா Eனது வரலாற்று ரீதியாக துப்பாக்கி முனையில் நடைபெறும் நாடுகளில் வாழ்வோருக்கு ஏற்றுக்கொள்ள மிகவும் கஷ்டமானதாகும். எனினும் இக் கருத்து மிகவும் முக்கியமா? தாகும். இதன் பொருளானது. சுருங்கக் கூறின், ஒரு சனநாயகத்தின் சகல பக்கங்களும் அதன் அடிப்பன்ட விழுமியங்களைக் காக்கப் பொதுவான பொறுப்புள்ளனவ. அரசி யல் எதிரிகள் ஒருவர் மற்றவரை விரும்பவேண்டும் என்பதில்லை. ஆனால் அவர்கள் ஒருவரையொருவர் சகித்துக் கொள்வதுடன் மற்றவர்க்கு சட்டரீதியானதும் முக்கியமா னதுமான பங்களிப்புக்கு உரித்துடையவர் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பொதுப் பிரச்சனைகளில் சகிப்புத்தன்மையும் நாகரீகமும் பேணப்பட ஒரு சமுதாயமா னது தனது ஒவ்வொரு பிரசையையும் ஊக்குவிக்க வேண்டும்.
தேர்தல் முடிந்தவுடன் தோற்றவர்கள் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கின்றனர். Lதவியிலுள்ள கட்சி தோற்றால் அது சமாதானமுறையில் அதிகாரத்தை கைமாற்றுகின் நது. யார் வெற்றியடைந்தபோதிலும் சமுதாயத்தின் பொதுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க இரு சாராரும் ஒத்துழைக்கச் சம்மதிக்கின்றனர். எதிர்க்கட்சியில் தற்போது வீற்றிருக்கும் தோற்றவர்கள் தமக்கு உயிராபத்து இல்லை எனவும், தாம் சிறைக்குட் போகவேண்டிய அவசியமில்லை எனவும் அறிகின்றனர். மறுதலையாக, எதிர்கட்சியி

னர் அது ஒரு கட்சியாகவோ அல்லது பல கட்சிகளாகவோ இருந்த போதிலும் பொது வாழ்வில் பங்குபற்ற முடியும். இத்தகைய எதிர்கட்சியினரின் பங்கு ஒரு சனநாயகத் தில் இன்றியமையாதது. அவர்கள் அரசாங்கத்தின் குறிப்பிட்ட கொள்கைகளுக்கு விசுவாசமாக இருப்பதில்லை. ஆனால் அரசின் அடிப்படை சட்டபூர்வ தன்மைக்கும், சனநாயக செயன்முறைக்குமே விசுவாசமாக இருக்கிறார்கள்.
அடுத்த தேர்தல் வரும்போது திரும்பவும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற எதிர்கட்சி யினருக்குப் போட்டியிடச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. மேலும் ஒரு பன்முக சமுதாயத் தில் அரசாங்கம் எல்லா மட்டங்களுக்கும் செல்லமுடியாதாகையால் தேர்தலில் தோற்ற வர்களுக்கு அரசாங்கத்துக்கு வெளியில் நின்று பொதுச் சேவையைச் செய்ய மாற்றீடு கள் வழங்கப்படுகின்றன. தேர்தலில் தோற்றவர்கள் எதிர்க்கட்சியாகத் தொடரலாம் அல்லது எழுத்து, போதனை, பொது விடயங்களில் ஈடுபாடு காட்டும் பிரத்தியேக நிறுவனங்களில் இணைதல் ஆகியவற்றின் மூலம் ஒரு பரந்த அரசியல் செயற்பாட்டி லும், விவாதத்திலும் பங்கு கொள்ளவும் முடியும், சனநாயகத் தேர்தல்கள் வாழ்வதற் கான போராட்டமல்ல, ஒரு போட்டியே ஆகும்,
g

Page 20
W
சனநாயகப் பண்பாடு
ஒரு குடிசார் பண்பாடு
சனநாயகம் என்பது அதன் ஒட்டு மொத்தமான நிறுவனங்கள், அமைப்புக்களை விட மேலானது. ஓர் ஆரோக்கியமான சனநாயகம் பெருமளவில் ஒரு சனநாயக குடிசார் பண்பாட்டில் தங்கியுள்ளது.இவ்விடயத்தில் டயனேறேவிட்ச்(DianCRavitch)குறிப் பிடுவதுபோல் பண்பாடு என்பது ஒவியம், இலக்கியம் அல்லது சங்கீதத்தைக் குறிக் கவில்லை. மாறாகச், தம்மைத்தாமே ஆளுகின்ற மக்களின் ஆற்றலைக் கோடிட்டுக் காட்டும் நடத்தைகள், நடைமுறைகள், நியமங்கள் ஆகியவற்றைக்குறித்து நிற்கின் தது.அவர் மேலும் பின்வருமாறு விளக்குகின்றார், ஓர் எதேச்சாதிகார அரசியல் முறைமை மந்தமும் அசிரத்தையுமானதொரு பண்பாட்டை வளர்க்கின்றது. ஆளும் குழுவினர் ஒரு பணிவுள்ள, அமைதியான பிரசைகளை உருவாக்க முனைகின்றனர். அதற்கு எதிராக ஒரு சனநாயக சமுதாயத்தின் குடிசார் பண்பாடானது. தனிநபர்கள், குழுக்களின் சுதந்திரமான நடவடிக்கைகள் மூலமே உருவாக்கம் பெறுகின்றது. ஒரு சுதந்திரசமுதாயத்தில் பிரசைகள் தமது நலன்களைக் காத்துக்கொள்கின்றனர். தமது உரிமைகளைப் பிரயோகிக்கின்றனர். அத்துடன் தமது வாழ்க்கைக்கான பொறுப்பி னைத் தாமே ஏற்றுக்கொள்கின்றனர். எங்கு வேலை செய்ய வேண்டும். எத்தகைய தொழில், தமது வாழ்விடம், சார்ந்துள்ள அரசியற் கட்சி போன்ற விடயங்கள் சகலவற் றிலும் தாமே தீர்மானம் மேற்கொள்கின்றனர். இலைகள் தனிப்பட்ட தீர்மானங்களே அன்றி அரசியல் தீர்மானங்கள் அல்ல.
ஒரு சமுதாயத்தின் பண்பாட்டின் பிரதிபலிப்புக்களான இலக்கியம், ஓவியம், நாடகம் மற்றும் சினிமா ஆகியவையும் சுதந்திரமானவையே. அவை அரசாங்கத்தின் கட்டுப் பாட்டில் இல்லை. ஒரு சனநாயக சமுதாயம் கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் ஆதரித்து ஊக்குவிக்கலாம். ஆனால் கலைத்துவ நியமங்களை அமைப்பதில்லை. கலை முயற்சிகளின் பெறுமதி குறித்து தீர்ப்பு வழங்குவதில்லை. அத்துடன் கலைத்துவ வெளிப்பாடுகளைத் தணிக்கை செய்வதும் கிடையாது. கலைஞர்கள் அரசின் ஊழியர் களோ வேலையாட்களோ அல்ல, படைக்கவும், ஆராயவும், மனித மனங்கள், உணர் வுகள் என்னும் உலகத்தில் உலாவவும், கலைஞர்களுக்குச் சுதந்திரம் வழங்குவதுமே சனநாயகம் கலைக்கு ஆற்றும் முதன்மையான பங்களிப்பாகும்,
சனநாயகமும் கல்வியும்
கல்வி என்பது எந்தவித சமுதாயத்திலும் முக்கியமானதாகும். ஆனால் ஒரு சனநாய கத்தில் அது சிறப்பான இடம் பெறுகின்றது. தோமஸ் ஜெபர்சன் எழுதியதைப் போல் ஒரு நாகரிக உலகில் ஒரு நாடானது ஞானசூனியமாகவும் சுதந்திரமாகவும் இருக்சு வேள்டுமென எதிர்பார்த்தால் அது என்றும் இவ்வாததையும் இனி என்றும் இருக்க

முடியாததையுமே எதிர்பார்க்கின்றது. ஒரு எதேச்சாதிகார சமுதாயம் தனது பிரசைக வில் எதையும் அமைதியாக எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கினை வளர்க் கின்றது. இதற்கு எதிராக சனநாயகக் கல்வியானது தனது சுதந்திரமான மக்களில் எதனையும் விசாரித்து நுணுக்கமாக ஆராயும் திறனை வளர்க்கின்றது. அதேவேளை சனநாயகத்தின் கோட்பாடுகள் நடைமுறைகளில் ஆழ்ந்த அறிமுகத்தையும் வளர்க் கின்றது. நிக்கராகுவாவில் கல்வியாளர்கள் முன்னிலையில் உரையாற்றும் போது வண்டர் பீல்ட் பல்கலைக் கழகப் பேராசிரியரான செஸ்டர் ஈஃபின் (Chester Einn பின்வருமாறு கூறினார். மக்கள் தமது சுதந்திரத்துக்கானதாகத்துடன்பிறந்திருக் கலாம். ஆனால் அவர்கள் தமக்கும் தமது பிள்ளைகளுக்கும் சுதந்திரத்தை உறுதி செய்யும் சமூக அரசியல் ஏற்பாடுகள் பற்றிய அறிவுடன் பிறந்திருக்க முடியாது. அவற்றை அவர்கள் கற்பதன் மூலமே தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்நோக்கில், ஒரு சனநாயகத்தில் கல்வியின் நோக்கம் எதேச்சாதிகாரக் குழுக்களின் போதனைகளைத் தவிர்ப்பதும் அரசியல் விழுமியங்கள் பற்றி நடுநிலையான கருத்துக் களை வழங்குவதுமே என்று இலகுவாகக் கூறிவிடமுடியாது. அது முடியாத காரியம். சகல கல்விமுறைகளும் தெரிந்தோ தெரியாமலோ விழுமியங்களைப் பரிமாற்றம் செய்கின்றன. மாணவர்களுக்கு சனநாயகக் கோட்பாடுகளை ஒரு சிறந்த மனப்பாங்கு டன் சுற்பிக்க முடியும், இவ்வாறு கற்பிப்பதும் கூட ஒரு முக்கிய சனநாயக விழுமியம் தான்.அதேவேளையில் விவ ாதங்கள் ஆய்வுகள் மூலம் பாரம்பரிய சிந்தனைகளுக்கு சவால் விடவும் மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் பலமான வாதிப் பிரதிவாதங்கள் எழலாம். ஆனால் சனநாயகம் உண்மைகளையும் சம்பவங்க ளயும், அவை எவ்வளவுதான் முரண்பாடானதாகவும் கஷ்டமானதாகவும் இருந்த
ாதிலும் நிராகரித்து விடமுடியாது.
பின் என்பவர் பின்வருமாறு கூறுகின்றார். சுதந்திரசமுதாயங்களில் கல்வி மிகவும் iனித்துவமான பங்கினை வகிக்கின்றது. ஏனனய ஆளும் குழுக்களில் கல்வி அவற் ன் கருவியாக இருக்கும் போது சனநாயகத்தில் ஆளும் குழுக்கள் மக்களின் சேவகர்களாக இருக்கின்றனர். இவ் ஆளும் குழுக்களை உருவாக்கிப், பேணிவ விர்க்கும் மக்களது ஆற்றல் பெரும்பாலும் அவர்களது கல்வி ஏற்பாடுகளின்தரத்தி லும், காத்திரமானதன்மையிலுமே தங்கியுள்ளது. ஒரு சனநாயகத்தில் கல்வியானது சுதந்திரத்தைக் காலப்போக்கில் மேலோங்கச் செய்கின்றது என்று கூறினால் அது தவறாகாது.
முரண்பாடுகள், சமரசம், கருத்தொருமிப்பு
மக்கள் பலவிதமான, சிலவேளைகளில் முரண்பாடான அவாக்களைக் கொண்டுள்ள னர். மக்கள் பாதுகாப்பை வேண்டுகின்றனர். அதேவேளை துணிகரச் செயல்களை அவாவுகின்றனர். தனிநபர் சுதந்திரத்தை வேண்டுகின்றனர். அதேவேளை சமூக சமத் துவத்தையும் கோருகின்றனர். இவ்வேளையில் சனநாயகம் வித்தியாசமானதல்ல. எனவே இத்தகைய மனநிலைகள் உட்பட முரண்பட்ட உண்மைகளும் ஒரு சனநாயக முதாயத்தில் காணப்படுகின்றன என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். லேறி

Page 21
டயமண்ட் (Larry Diamond)atgiruGuit சனநாயக சஞ்சிகை இணையாசிரியரும் ஹூவர் நிலையத்தின் ஓர் ஆய்வாளருமாவார். இவர் பின்வருமாறு கூறுகின்றார். ஒரு மத்திய முரண்படு உண்மையானது முரண்பாடுகளுக்கும் கருத்தொருமிப்புக்குமி டையிலேயே உள்ளது. சனநாயகம் என்பது இம் முரண்பாட்டினைச் சமாளிக்க உதவும் பல விதிமுறைகளின் தொகுப்பேயாகும். இதேவேளையில் இம்முரண்பாடு சில குறிப்பிட்ட வரையறைகளுக்கு உட்பட்டே சமாளிக்கப்படல் வேண்டும். இதன் விளைவான விட்டுக் கொடுத்தல், கருத்தொருமிப்பு அல்லது வேறு ஒப்பந்தங்கள் யாவும் சட்டரீதியானதென சகலரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இச் சமன்பாட்டில் ஒரு பக்கத்தை அதிகமாக விதந்துரைத்தல் முழு ஏற்பாட்டிற்கும் சவாலாக அமைந்து விடும்.
சனநாயகத்தைத் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் ஒரு மன்றமாக மாத்திரம் இக்குழுக்கள் கருதினால் சமுதாயம் தனக்குத்தானே நொறுங்கிவிடும். கருத்தொரு மிப்பை வென்றெடுக்கவும் மக்களின் குரலை ஒடுக்கவும் அரசாங்கமானது மேலதிக மான அமுக்கத்தைப் பிரயோகித்தால் சமுதாயமானது வெளிச்சக்தியினால் நசுக்கப் பட்டு விடமுடியும். இதைத் தீர்க்க ஓர் இலகுவான தீர்வு கிடையாது. சனநாயகமானது சரியான கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் புகுத்திவிட்டால் தானே இயங் கும் ஒரு இயந்திரமல்ல. ஒரு சனநாயக சமுதாயமானது, முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை என்பதையும், சகிப்புத் தன்மை அத்தியாவசியமானது என்பதையும் ஏற்றுக் கொள்ளும் மக்களின் பொறுப்புடைமையிலேயே தங்கியுள்ளது.
ஒரு சனநாயக சமுதாயத்தில் பல முரண்பாடுகள் சரியானது அல்லது தவறானது என்ற கூற்றுக்குள் அடங்குவதில்லை. சனநாயக உரிமைகள், சமூக முதன்மைகள் ஆகியவற் றைப் பற்றிய பல்வேறு வியாக்கியானங்களுக்கிடையே தங்கியுள்ளன. ஐக்கிய அமெ ரிக்காவில் இத்தகைய பல விவாதங்கள் நடைபெறுகின்றன. உதாரணத்துக்கு சில மாதிரிகளைக் கூறலாம். நீண்டகாலமாக பாகுபாட்டுக்கு (discrimination)உள்ளாகியி ருக்கும் சிறுபான்மையினருக்கு ஒரு குறிப்பிட்ட வீதமான தொழில்களை ஒதுக்குவது சரியானதா. மிக அவசியமான ஒரு பாதை அமைப்பதற்காக ஒரு வீட்டினைச் சுவீகரிப் பதற்கு அரசுக்கு உரிமை உண்டா. மரத் தொழிலில் தங்கியிருக்கும் சிறு சமூகங்களின் தொழில் இழப்பையும், பொருளாதார அறிவையும் கவனத்திற்கொள்ளாது வனப்பாது காப்பு என்ற பெயரால் மரந்தறிப்பதைத் தடை செய்யும் போது அங்கு யாருடைய உரிமை மேலோங்கி நிற்கின்றது. போதை வஸ்து கடத்தலைத் தடுப்பதற்காகப் பொலீ சார் மக்களை ஆங்காங்கே தடுத்து வைக்கும் போது தனிமனித உரிமை மீறப்படுகின் றதா அல்லது சமூகத்தின் உரிமை பாதுகாக்கப்படுகின்றதா. இவைகள் இலகுவான வினாக்கள் அல்ல. இப்பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து நுணுக்கமாக ஆய்வு
செய்ய சனநாயக எண்ணக்கருக்கள் வெறுமனே வழிகாட்டல்களை மட்டுமே வழங்கு கின்றன. காலப்போக்கில் இவ் வினாக்களுக்கான விடைகள் மாறிவிடக் கூடும். இதன் காரணமாகவே சனநாயகப்பண்பாடு விருத்தியடைய வேண்டியது மிகவும் முக்கியமா னது.
ஆகக் குறைந்தது, தனிநபர்களும் குழுக்களும் மற்றவர்களது வேற்றுமைகளை சகித் துக் கொள்ளவும் மற்றவர்களின் உரிமைகளை மதித்து அவர்களின் வாதம் சட்டரீதியா
3.

னது தான் என்பதை ஏற்றுக் கொள்ளவும் விரும்புவர். இந்த அடிப்படையில் ஒரு பிரச்சினையில் ஈடுபட்டுள்ள பலரும் அவர்கள் அயலவர், குழுக்களாகவோ அல்லது தேசீய பாராளுமன்ற நிலையிலோ இருக்கலாம். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையு டன் பேசிப் பெரும்பான்மை ஆட்சி, சிறுபான்மை உரிமைகள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு தீர்வு காண முடியும். சில சந்தர்ப்பங்களில் ஒரு முறையான வாக்களிப்பு அவசியமாக இருக்கலாம். ஆனால் பொதுவாக விவாதங்கள் விட்டுக் கொடுத்தல் மூலம் குழுக்கள் ஒரு முறைசாராக் கருத்தொருமைப்பாட்டிற்கும் வரமுடி பும். இவ்வாறான செயன்முறைகள் மூலம் எதிர்காலப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள அவசியமான ஒரு நம்பிக்கையைக் கட்டிஎழுப்ப முடியும்.
டயனே றேவிட்ச் பின்வருமாறு கூறுகின்றார். கூட்டு முன்னனி அமைத்தல் சனநாயக நடவடிக்கையின் சாரமாகும். அது நலன் காக்கும் குழுக்களுக்கு மற்றவர்களுடன் பேரம் பேசவும், விட்டுக் கொடுக்கவும், ஒர் அரசியல் யாப்பு முறைமைக்குள் செயலாற்றவும் பயிற்சி வழங்குகின்றது. இவ்வாறான கூட்டு முன்னணி அமைக்க உழைக்கும் போது, வேறுபட்ட குழுக்கள், அமைதியாக வாதாடவும், சனநாயக வழியில் தமது இலக்கைஅடைய முயற்சி செய்யவும், இறுதியாக ஒருவேற்றுமைப் பட்ட உலகத்தில் எப்படி வாழவேண்டுமென்பதை அறியவும் வாய்ப்பு ஏற்படுகின்
DġSl.
சனநாயகம் என்பது வெளிப்படுத்தப்பட்ட, மாறாக உண்மைகளின் தொகுப்பல்ல. மாறாக, தனிநபர்களும் ஸ்தாபனங்களும், மக்களும் தமது கருத்துக்களால் முட்டி மோதி விட்டுக்கொடுத்து முழுமையாக இல்லாவிட்டாலும் கூட உண்மையை அடைய முயலும் ஓர் இயக்க முறையாகும். சனநாயகம் நடைமுறை சார்ந்தது. பிரச்சினைகளுக் கான கருத்துக்களும் தீர்வுகளும் ஓர் இறுக்கமான சித்தாந்தத்தின் முன்னிலையில் பரீட்சித்துப் பார்க்கப்படுவதில்லை. மாறாக, வாதித்து, மாற்றி, ஏற்றுக் கொள்ளவோ நிராகரிக்கவோ முடிந்த ஒரு நடைமுறை உலகிலேயே அவை பரீட்சிக்கப்படுகின்றன.
தவறுகளுக்கு மத்தியில் சுயாட்சிக்குப் பாதுகாப்பு வழங்கவோ, இனக்கலவரத்தை முடிவுக்குக் கொண்டு வரவோ பொருளாதார செழிப்பை உறுதிப்படுத்தவோ முடி யாது. ஆனால் அதற்கு விவாதித்துப் பரீட்சித்துத் தவறுகளை இனங்காண ஏற்பாடு செய்ய முடியும். ஒன்று கூடிக் கலந்து தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள குழுக்களுக்கு வாய்ப்பு வழங்க முடியும். அத்துடன் பொருளாதார வளர்ச்சியின் அடித்தளங்களான முதலீடு, புனர்நிர்மாணம் ஆகியவற்றுக்குச்ந்தர்ப்பங்களை வழங்க (ՄolգեւվԼD.
உரிமை மனுவும் மனித உரிமைகளும்
1789 ஆம் ஆண்டு சுமார் ஒரு மாத இடைவெளியில் இரண்டு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மனித உரிமைப் பிரகடனங்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டன. அவற்றில் முதலாவது ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி பிரான்சில் பிரகடனப்படுத்தப்பட்ட மனிதனதும் பிரசையினதும் உரிமைகள் (Rights
33

Page 22
ofmanand the Citizen)மற்றது செப்ரெம்பர் மாதம் 25ஆம் திகதி அமெரிக் காவில் பிரகடனப்படுத்தப்பட்ட உரிமை மனு (Bil ofRights).இவை இரண் டும் பிரெஞ்சு, அமெரிக்க மனப்பாங்குகள் நெருக்கமாகவும், இணக்கமாக வும் இருந்த ஒரு காலகட்டத்தில் உதித்தவை. மறுமலர்ச்சிக் காலத்தின் மெய்யியல் ஊற்றுக் கண்களிலிருந்தும், இயற்கை உரிமைகள் என்னும் கோட்பாட்டிலிருந்தும் இவற்றுக்கான அடிப்படை அமைந்தது. ஆனால் இவ்ற்றின் பாதைகள் விரைவில் திசைதிரும்பின.
ஆரம்பகால பிரெஞ்சு - அமெரிக்க உறவுகள் சிக்கலானதாகவும் வெளிப்ப டையற்றதாகவும் இருந்தன. 1776 இல் அமெரிக்கப்புரட்சி நடந்த வேளை யில் பிரான்ஸ் மறுமலர்ச்சி சிந்தனைகளின் மையமாக இருந்தது. அத்துடன் ஐரோப்பாவில் வலிமை மிக்க முடியாட்சியாளரான பூர்பனின் இராசதானி யாகவும் இருந்தது. பூர்பனின் அழகிய அரசசபை வெர் செயில்ஸ்சில் (Versailes) அமைந்திருந்தது. தமது பொது எதிரியான பெரிய பிரித்தானி யாவை முறியடிப்பதற்காகப் பிரான்ஸ் அமெரிக்கப் புரட்சிகரக் குடியேற் றங்களுடன் இராணுவ தொடர்பும் கொண்டிருந்தது. பழமைவாதிகளை எதிர்த்த பிரெஞ்சு விமர்சகர்களுக்கு அமெரிக்காவே, தமது மறுமலர்ச்சி இலட்சியங்களான கட்டுப்பாடுகளிலிருந்து சுதந்திரம், இயற்கை உரிமை கள், பகுத்தறிவின்பாற்பட்ட அரசாங்கச் சீர்திருத்தம் ஆகியவற்றின் பிரதிநி தியாகத் தென்பட்டது.
பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் பிரெஞ்சுப் புரட்சியின் முதற் கட்டத்தை அமெரிக்கர் தீவிரமாக ஆதரித்தனர். பொதுக் கூட்டம், பஸ்ரீல் (Bastile) சிறை உடைப்பு, தேசீயசபையின்தோற்றம்ஆகியவை இம்முதற்கட்டத்தில் அடங்கும். ஆனால் இந்த ஆரவாரமான ஆதரவு 16 ஆம் லூயியின் சிரச்சே தம், பயங்கர ஆட்சியின் ஆரம்பம் ஆகியவற்றுடன் நின்றுவிட்டது. இந்த வன்செயல்களைக் கண்டு வாஷிங்டனின் பழமைவாத சமஷ்டி அரசாங்கம் திகிலடைந்தது. ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது சனாதிபதியான ஜோண் அடம்ஸ் (John Adams) என்பவர் பிரான்சில் இராட்சத மிருகத்தின் பற்கள் விதைக்கப்பட்டு பூதங்கள் வெளிவந்தன என்று குறிப்பிட்டார். எனினும் தோமஸ் ஜெபர்சனின் தலைமையில் வளர்ந்து வந்த அரசியல் எதிரணியினர் பிரெஞ்சு குடியரசு வாதத்தைத் (French republicanism) தொடர்ந்து ஆதரித்தனர். ஜெபர்சன் என்பவர் ஐரோப்பிய சுதந்திர வரலாற் றின் அத்தியாயம் இங்குதான் தொடங்குகின்றது என்று குறிப்பிட்டார். பிரெஞ்சு சீர்திருத்தவாதிகள், புரட்சிவாதிகளின் அமெரிக்காபற்றிய இலட் சிய உருவகம் 1790 களில் அமெரிக்க குடியரசு வாதிகளால் பிரான்சிய உருவகமாகப் பின்னர் உருமாற்றம் அடைந்தது.
ஜெபர்சனுக்கு எழுதிய கடிதத்தில், பிரெஞ்சு மறுமலர்ச்சியாளரான 'டி LTHSLTT T TTTTTSLLLLLLLL LL LLLLGLLLLLLL TTTTTL LLL TTTTTTT TTT ளுடைய புரட்சிக்கும் உள்ள முக்கிய வேற்றுமை என்னவெனில் அழிப்பு தற்கு ஒன்றுமில்லாமையேயாகும். உங்களுக்கு உடைத்தெறிய ஒன்று
34

மில்லை என்று எழுதியிருந்தார். இரண்டு புரட்சிகளும் குறிப்பிட்டுக் கூறும ளவுக்கு வேற்றுமைப்பட்டிருக்கலாம், ஆனால் உரிமை மனு, மனித உரிமை கள் பிரகடனம் ஆகியவற்றின்மூலம் அமெரிக்காவும், பிரான்சும்தனிமனித உரிமைகள் பற்றித்திடமான உறுதிப்பாடுகளை ஏற்படுத்தின. இவை 1791 ஆம் ஆண்டுமே மாதம் 3ஆம் திகதிகைச்சாத்திடப்பட்டபோலந்து அரசியல் யாப்பு முதல் இன்று உருவாக்கப்படும் தேசீய யாப்புக்கள் வரையும் தமது செல்வாக்கை ஆழப்பதித்துள்ளன.
35

Page 23
VI
சனநாயக அரசாங்கம்
சனநாயகமும் அதிகாரமும்
எதேச்சாரிகள் மற்றும் ஏனைய விமர்சனங்களுக்கிடையே காணப்படும் ஒரு பொது வான தப்பெண்ணம் யாதெனில் சனநாயகத்துக்கு அடங்குவதற்கு வலிமை இல்லாத தால் ஆளுவதற்கும் அதிகாரம் இல்லை என்பதாகும். இக்கருத்து அடிப்படையிலேயே தவறானதாகும். சனநாயகங்கள் தமது அரசாங்கங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறுகின்றனவே தவிர அவை பலவீனமாக இருக்க வேண்டும் என்றல்ல. வரலாற்றின் நீண்ட அடிச்சுவட்டை நோக்குகையில் சனநாயகங்கள் உண்மையிலேயே சிலவாகவும், நொறுங்கிவிடக் கூடியதாகவும் தோன்றுகின்றன. சனநாயக மறுமலர்ச் சிக்கு அனுகூலமான கடந்த தசாப்தத்திலிருந்து நோக்கினாலும் கூட இதில் மாற்ற மில்லை. வரலாற்றின் வேகத்துக்கு சனநாயகங்கள் தாக்குப்பிடித்துநின்றிருக்கின்றன. அரசியல் தோல்வி காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளன. உள்ளக விரிசல் காரணமாக அழிந்துள்ளன. வெளிநாட்டுப் படையெடுப்பினால் நிர்மூலமாகியுள்ளன. ஆனால் சனநாயகங்கள் காலப்போக்கில் வியக்கத்தக்க அளவு மீட்சியடைய முடியும் என்பதை யும் காட்டியுள்ளன. தனது பிரசைகளின் அறிவார்ந்த அர்ப்பணிப்பு, பொறுப்புடைமை ஆகியவற்றுடன் பொருளாதார சிரமங்களைக் கடக்க முடியும் என்றும், சமூக இனப் பூசல்களைத் தீர்த்துவைக்க முடியுமென்றும் தேவையெனில் யுத்த காலத்திலும் நின்று பிடிக்க முடியுமென்றும் காட்டியுள்ளன.
சனநாயகத்துக்கு எதிரான விமர்சனங்களால் முன்வைக்கப்படும் அம்சங்களே அதன் மீட்சிக்கும் காரணமாகியுள்ளன. மற்றவர்கள் சனநாயகத்தின் பலவீனங்களாகக் காட் டும் விவாத செயல்முறைகள், அதிருப்தி, விட்டுக் கொடுத்தல் ஆகியவை உண்மையி லேயே அதன் வலிமைகளாகும். ஆனால் இறுதியில், ஆளப்படுவோரின் சம்மதத்தில் தங்கியிருக்கும் ஓர் அரசாங்கம் நம்பிக்கையோடும் அதிகாரத்தோடும் செயலாற்ற முடியும். இந்த நம்பிக்கையும், அதிகாரமும் இராணுவ சக்தியிலும், தெரிவு செய்யப்ப டாத கட்சியிலும் தங்கியிருக்கும் ஓர் ஆட்சிக் குழுவுக்கு இருக்க முடியாது.
தடைகளும் சமநிலைகளும்
சனநாயக நடைமுறைகளுக்கு அமெரிக்காவின் மிகப் பெரிய பங்களிப்பு என்னவெ னில் அரசியல் அதிகாரம் விரிந்து பன்முகப்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்யத் தடைகள், சமநிலைகள் முறைமையை விருத்தி செய்ததாகும். இம் முறைமை நம்பிக் கைகளை அடிப்படையாகக் கொண்டது. அரசாங்கமானது அதன் துஷ்பிரயோகத்துக் கான வாய்ப்புகள் கட்டுப்படுத்தப்படும்போதும் அதனை மக்களுக்குமிகநெருக்கமாக வைத்திருக்கும் போதும் சிறப்பினைப் பெறுகின்றது என்பதே அந்த நம்பிக்கையாகும்.
36

பொதுவாகத் தடைகள். சமநிலைகள் என்பவற்றுக்கு சமஷ்டிவாதம் (Federalism), வலுவேறாக்கம் (Separation of power) ஆகிய இரு அர்த்தங்களும் உண்டு.
சமஷ்டி வாதமானது தேசீய, மாநில, மாகாண உள்ளூராட்சி மட்டத்தில் அரசாங்கத் தைப் பிரித்தலாகும். உதாரணமாக,ஐக்கிய அமெரிக்கா மாநிலங்களைக் கொண்ட ஒரு சமஷ்டிக் குடியரசாகும். இம் மாநிலங்கள் சமஷ்டி அரசாங்கத்தின் கட்டுப்பாடில்லாத நீதித் துறையையும் அதிகாரத்தையும் கொண்டுள்ளன. ஒற்றையாட்சி அரசியல் கட்ட மைப்பினைக் கொண்ட பிரித்தானியா, பிரான்சில் உள்ள அரசியல் உப பிரிவுகளை மாற்றமுடியும். ஆனால் அமெரிக்காவில் சமஷ்டி அரசாங்கத்தினால் மாநிலங்களை மாற்றவோ இல்லாமல் செய்யவோ முடியாது. 20ஆம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக் காவில் தேசியமட்ட அதிகாரம் மாநில அதிகாரங்களுக்கு மேலாகக் குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ந்த போதிலும், மாநில அரசுகள், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சட்ட அமுலாக்கம் ஆகிய துறைகளில் இன்னும் குறிப்பிடக்கூடிய அளவு பொறுப்புக்க ளைக் கொண்டுள்ளன. மத்தியமயப்படுத்தப்பட்ட அல்லது ஒற்றையாட்சிமுறைகளில் இச்செயல்கள் தேசீய அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்கா வில் மாநில அரசுகள் ஒவ்வொன்றும் சமஷ்டி மாதிரியைப் பின்பற்றுகின்றன.
அதிகாரப் பிரிவு (division ofpower) ஒரு சமஷ்டி முறையில் எப்போதும் தீர்க்கமான தாக இருப்பதில்லை. உதாரணமாகக் கல்வி போன்ற துறைகளில், சமஷ்டி மாநில, உள்ளூராட்சி அமைப்புக்கள் ஒரே மாதிரியான அல்லது முரணான நிகழ்ச்சித்திட்டங்க ளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் சமஷ்டியானது, ஒரு சனநாயக சமுதாயத்தின் சீரான இயக்கத்துக்கு உயிர் நாடியான பிரசைகளை ஈடுபடுத்தும் சந்தர்ப்பங்களை உச்சப்படுத்துகின்றது.
வலுவேறாக்கம் என்பது தடைகள், சமநிலைகள் என்பதன் இன்னொரு பொருளாகும். 1789 இல் அமெரிக்க அரசியல் யாப்பின் கர்த்தாக்கள் அதிகாரப் பிரிவு என்னும் கருத்தினை, ஒரு தேசிய அரசின் ஒரு துறையினுள் சகல அதிகாரங்களும் குவிந்திருக் கக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் ஸ்தாபித்தனர். அமெரிக்காவின் நாலாவது சனாதிபதியும், யாப்பினை வரைந்தவர்களில் முக்கியமானவருமான ஜேம்ஸ் மடிசன் (James Madison) என்பவர் சட்டவாக்கம், நிர்வாகம், நீதி ஆகிய சகல அதிகாரங்களும் ஒரே இடத்தில் குவிந்திருத்தல் என்பது எதேச்சாதிகாரத்தின் வரைவிலக்கணம் என துணிந்து கூறலாம் என்று குறிப்பிட்டார்.
வலுவேறாக்கம் என்பது சிலவழிகளில் தவறான கருத்துள்ள ஒரு சொல்லாகும். ஏனெ னில் மடிசனும் மற்றவர்களும் வரைந்த முறைமையானது அதிகாரங்களின் பிரிவு என்பதைவிட அதிகாரப்பங்கீடு எனக் கூறலாம். உதாரணமாக, சட்டவாக்க அதிகாரம் காங்கிரசுக்கு உரியது. ஆனால் காங்கிரசினால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை சனாதிபதி ரத்துச்செய்யலாம். மாறாக, சனாதிபதியின் ரத்தினை நிராகரிக்க காங்கிரசா னது பிரதிநிதிகள் சபையிலும், செனெட்டிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைச் சேர்க்க வேண்டும். சனாதிபதி தூதுவர்களையும், மந்திரிசபை உறுப்பினர்களையும் நியமிக்கிறார். சர்வதேச ஒப்பந்தங்களை நிறைவேற்றுகிறார். ஆனால் இவை யாவும் செனட்டின் ஒப்புதலைப் பெறவேண்டும்.
37

Page 24
சமஷ்டிநீதிபதிகள் தெரிவும் இப்படிப்பட்டதே. இன்னொரு உதாரணம் - சனாதிபதியே சகல ஆயுதப்படைகளின் தளபதியாக இருந்தபோதும் போர்ப் பிரகடனம் செய்யும் அதிகாரம் காங்கிரசுக்கே உண்டு. 1960 களிலும், 1970 களின் ஆரம்பத்திலும் நடந்த வியட்னாமிய யுத்தம். 1990 - 91 இன் குறுகிய கால வளைகுடா யுத்தம் ஆகியவற்றில் இவ்விரண்டு துறைகளுக்கும் உள்ள நெருக்கடிகள் தெளிவாகத் தெரிந்தன. ஓர் அரசி யல்நிகழ்ச்சித்திட்டத்தை நிறைவேற்ற காங்கிரசின் சம்மதம் தேவைப்படுகின்ற தன்மை யினால் ஐக்கிய அமெரிக்காவின் சனாதிபதியின் அதிகாரத்தை ஹிச்சாட் நோஸ்ரட் (Richard Neustad) என்னும் அரசியல் விஞ்ஞானி ஆணையிடும் அதிகாரமல்ல, இணங்கச் செய்யும் அதிகாரமாகும் என்று வர்ணித்தார். சமஷ்டி அரசாங்கத்திலுள்ள சகல தடைகளும் சமநிலைகளும் அரசியல் யாப்பில் குறிப்பிடப்படவில்லை. அமெ ரிக்க முறையிலுள்ள அதிகாரப் பிரிவு வினைத்திறன் கொண்டதல்ல. ஆனால் அரசாங் கத்தின் அதிகாரதுஷ்பிரயோகம் வாய்ப்புக்கு எதிரான ஒரு முக்கியமானதடைக்கல்லா கும். இப்பிரச்சினை ஒவ்வொரு சனநாயகத்துக்கும் பொதுவானது.
பிரதம மந்திரிகளும் சனாதிபதிகளும்
தனது தலைவர்களையும், பிரதிநிதிகளையும் தெரிவு செய்யும் முறையானது ஒரு சனநாயகத்தின் மிக முக்கிய தீர்மானங்களில் ஒன்றாகும். பொதுவாக, இரண்டு தெரிவு கள் உண்டு. ஒரு பாராளுமன்ற முறையில் சட்டசபையின் பெரும்பான்மைக் கட்சி அல்லது கூட்டணி பிரதம மந்திரியின் தலைமையிலான அரசாங்கத்தை அமைக்கிறது. பெரிய பிரித்தானியாவில் தோன்றிய இந்தப் பாராளுமன்ற அரசாங்க முறை இன்று ஐரோப்பாவின் பெரும்பகுதியிலும், கரீபியன், கனடா, இந்தியாவிலும் பல ஆபிரிக்க, ஆசிய நாடுகளிலும் (முன்னைய பிரித்தானியக் குடியேற்றங்கள்) பின்பற்றப்படுகின் றது. இரண்டாவது முக்கியமான முறையானது சட்டசபைக்கு அப்பால் ஒரு சனாதிப தியை நேரடியாகத் தெரிவு செய்தலாகும். இம்முறை இன்று லத்தீன் அமெரிக்காவின் பெரும்பகுதியிலும், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், போலந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றது.
பராளுமன்ற முறைக்கும், சனாதிபதி முறைக்கும் உள்ள முக்கிய வித்தியாசமானது சட்டசபைக்கும் நிர்வாகத்துக்கும் உள்ள தொடர்பாகும். ஒரு பாராளுமன்ற முறையில் சட்டவாக்கமும் நிறைவேற்று அதிகாரமும் ஒன்றே. ஏனெனில் பிரதம மந்திரியும், மந்திரிசபை உறுப்பினர்களும் பாராளுமன்றத்திலிருந்தே வருகின்றனர். அதேபோல் அரசாங்கத்தின் பதவிக்காலமும், பிரதம மந்திரி தனது பெரும்பான்மையைப் பாராளு மன்றத்தில் இழக்காதவரை, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு உதாரணமாக, நான்கு அல் லது ஐந்து வருடங்கள் நீடிக்கும். பெரும்பான்மையை இழந்தால் அரசாங்கம் பதவி இழப்பதோடு புதிய தேர்தல்களும் நடத்தப்படும். மாற்றீடாக ஓர் அடையாளச் சின்ன மாக மிளிரும் சனாதிபதி அல்லது அரசியல் யாப்பு முடியினால் இன்னொரு கட்சிக்கு அரசாங்கத்தை அமைக்கச் சந்தர்ப்பம் வழங்கப்படலாம்.
வலுவேறாக்கம் என்பது அமெரிக்க மாதிரியான சனாதிபதி முறையில் செயலற்றது. ஏனெனில் பாராளுமன்றமே ஆற்றலுள்ள ஆளும் ஸ்தாபனமாகும். பதிலாகப் பாராளு
38

மன்ற முறைகள் அரசாங்க அதிகாரத்தில் தடைகள், சமநிலைகளை வழங்க பராளுமன் றத்தின் உள்ளார்ந்த அரசியற் செயற்பாடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும். இது பொதுவாக அரசாங்கத்தின் நிழலாக இயங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் எதிர்க்கட்சி யாகும், அல்லது பல்வேறு எதிர்கட்சிகளிடையே ஏற்படும் போட்டியாகும்.
ஒரு சனாதிபதி முறையில் அரசாங்கத் தலைவரும், நாட்டின் தலைவரும் சனாதிபதி என்னும் பதவியில் ஒன்றாகி விடுகின்றனர். சனாதிபதி மக்களால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பதவி வகிக்க நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். காங்கிரஸ் உறுப் பினர்களும் இவ்வாறே தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். அதிகாரப் பிரிவின் ஓர் அம்ச மாக விளங்கும் சனாதிபதியின் மந்திரிசபை உறுப்பினர்கள் பொதுவாகக் காங்கிரசின் உறுப்பினர்கள் அல்லர். மிகப் பாரதூரமான குற்றங்கள் அல்லது அடாதகாரியம் காரணமாகப் பதவியிலிருக்கும் சனாதிபதி அவர் பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே பதவியிலிருந்து பொதுவாக நீக்கப்படலாம். சட்டசபையில் தனது கட்சியின் பெரும் பான்மை உள்ளவிடத்து ஒரு சனாதிபதி அதனது அரசியல் காரியங்களை இலகுவாகக் கொண்டு நடத்தலாம். ஆனால் பிரதம மந்திரியைப் போலத் தாம் பதவியிலிருக்க அத்தகைய பெரும்பான்மை சனாதிபதிக்குத் தேவைப்படாது.
பிரதிநிதிகள்
தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது ஒரு சனநாயகத்தின் இன்னொரு முக்கிய தீர்மானமாகும். அடிப்படைத் தெரிவுகள் இரண்டு, அவை பன்முகத் தேர்தல்கள் அல்லது விகிதாசாரப் பிரதிநிதித்துவம். பன்முகத் தேர்தல்கள் சிலவேளைகளில் வென் றவர் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளல் (Winner-take-all) என்று அழைக்கப்படு கின்றது. அதாவது ஒரு தேர்தல் தொகுதியில் பெருமளவு வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் வெற்றி பெறுகின்றார். இவ் வெற்றி பன்முகமாகவோ (50 வீதத்துக்குக் குறைய ஆனால் எந்த வேட்பாளரையும் விட அதிகம்) அல்லது பெரும்பான்மையா கவோ (50 வீதத்துக்கும் அதிகம்) அமையலாம். சனாதிபதிகளும் நாடளாவிய ரீதியில் இவ்வாறுதான் தெரிவு செய்யப்படுகிறார்கள். சில முறைமைகள், முதலிலேயே எவ ரும் அறுதிப் பெரும்பான்மை பெற்ாதவிடத்து முதலிரு வேட்பாளர்களுக்கும் மறுதேர் தல்கள் நடத்த இடமளிக்கின்றன. பன்முக முறைகள், அரசியல் ஆதிக்கம் செலுத்து கின்ற இரு அகன்றதளம் கொண்ட கட்சிகளின் உருவாக்கத்தை ஊக்குவிக்கின்றன.
இதற்கெதிராக ஐரோப்பாவின் பெரும்பகுதியில் உள்ளதைப் போன்ற விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் வாக்காளர்கள் தனிப்பட்ட வேட்பாளர்களுக்கன்றிக் கட்சிக ளுக்கே வாக்களிக்கின்றனர். தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளின் விகிதாசாரம் அல்லது வீதத்துக்குஅமைய தேசிய சட்டசபையில் ஒவ்வொரு கட்சியின் பிரதிநிதித்துவமும் நிர்ணயிக்கப்படுகின்றது. ஒரு பாராளுமன்ற முறையில் பெரும் பான்மைக் கட்சியின் தலைவர் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுப் பாராளுமன்றத்தி லிருந்து தனது மந்திரிசபையைத் தெரிவு செய்கிறார். எந்தவொரு கட்சிக்கும் பெரும் :பான்மை இல்லாவிடத்து ஓர்ஆளும் கூட்டணி அமைப்பதற்காகக் கட்சிகள் தீவிரமான
39

Page 25
பேரம்பேசவில் ஈடுபடுகின்றன. விகிதாசாரப் பிரதிநிதித்துவம் பல கட்சிகளின் அமைப்பை ஊக்குவிக்கின்றன. இக்கட்சிகள் ஒப்பீட்டளவில் ஒரு சிறுதொகை வாக்கா Eளர்களைப் பிரதிநிதித்துவம் செய்த போதும் ஒரு கூட்டணி அரசாங்கத்தில் தமக்கென ஓர் இடத்தைப் பேரம் பேசுகின்றன.
பாராளுமன்றங்களும் சனாதிபதிகளும்
இன்று பெரும்பான்மையான சனநாயகங்களைக் கொண்டுள்ள பாராளுமன்ற முறை யின் சிறப்பான அம்சம் அவற்றின் பொறுப்புணர்ச்சியும் நெகிழ்ச்சியுமாகும். விகிதாசா ரப் பிரதிநிதித்துவ முறையில் தெரியப்படும் பாராளுமன்ற அரசாங்கங்கள் பல் கட்சி முறை நோக்கித் திரும்புகின்றன. இம்முறையில் ஒப்பீட்டளவில் மிகவும் சிறிய குழுக்க ளூம் கூட சட்டசபையில் அங்கம் வகிக்கின்றன. அதன் விளைவாக சிறுபான்மைக் குழுக்களுக்கும் கூட அரசாங்கத்தின் உயர்மட்டங்களில், அரசியல் செயல்முறைகளில் பங்கு கொள்ளமுடியும். இவ்வேற்றுமையானது கட்சிகள் ஒரு ஆளும் கூட்டணியை உருவாக்க முயலும் போது கலந்துரையாடல், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கின்றன. கூட்டணி சரிந்தால் அல்லது கட்சி தனது பலத்தை இழந்தால் பிரதமமந்திரி பதவி விலகுவார். புதிய அரசாங்கம் அமையும் அல்ஃபது புதிய தேர்தல் கள் நடைபெறும். இச் செயல் முறையில் சனநாயக முறைமைக்கு எவ்வித குந்தகமும் ஏற்படுவதில்லை.
பாராளுமன்றங்களின் மிகப் பெரிய குறைபாடு நெகிழ்ச்சியும் அதிகாரப் பகிர்வு (Power sharing) மாகும். இதன் விளைவு ஒரு தளம்பல் நிலையாகும். பல்கட்சிக் கூட்டணிகள் ஓர் அரசியல் நெருக்கடிக்கு நின்று பிடிக்க முடியாமல் உடைந்து விழ லாம். இதனால் அரசாங்கங்கள் மிகக் குறைந்த காலமே பதவி வகிக்க முடியும், அரசாங்கங்கள் சிறிய தீவிரவாதக் கட்சிகளின் கருணையில் தங்கி இருக்கலாம். அவர் கள் கூட்டணியிலிருந்து விலகி விடுவதாகப் பயமுறுத்தி அரசியல் இலாபங்கள் பெற லாம். பிரதம மந்திரிகள் கட்சித்தலைவாகள் மட்டுமே, அதனால் நேரடியாக மக்களி னால் தெரிவு செய்யப்படுவதன் மூலம் வரும் மேலாண்மையை அவர்கள் கொண்டி ருப்பதில்லை.
இன்னொரு குறைபாடு, பாராளுமன்றத்தின் மேலாதிக்க நிலைக்கு (Parliamentary Supremacy)எதிரான நிறுவனரீதியான தடைகள் இன்மையாகும். உதாரணமாக, மிகப் பெரும்பான்மை கொண்ட ஒரு அரசியற் கட்சி ஒரு சனநாயக விரோத அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தை நிறைவேற்றலாம். இதற்கு எவ்வித காத்திரமான தடையும் இல்லை. மேலும் இதுவே பெரும்பான்மையினரின் எதேச்சாதிகாரத்தை உருவாக்க புேம் கூடும்.
சனாதிபதி முறையைப் பொறுத்தவரையில் நேரடியாகப் பொறுப்பேற்றல், தொடர்ச்சி, வலிமை ஆகியவை அதன் சிறப்புக்களாகக் கருதப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பதவியில் அமர மக்களால் தெரிவு செய்யப்படும் சனாதிபதிகள் காங்கிர ஸில் தமது கட்சி எத்தகைய நிலையில் இருந்தபோதும் தாம் நேரடியாகத் தெரிவு

செய்யப்படுகின்ற காரணத்தால் அதிகாரம் உள்ளவர்களாக உள்ளனர். ஒரு சனாதிபதி முறை வெல்வேறான, ஆனால் கோட்பாட்டு ரீதியில் சமமான அரசாங்கத் துறைகளை நிறுவுவதன் மு:பம் ஒரு L1διαιδιά, 5, நிர்வாக, சட்டவாக்க நிறுவனங்களை அமைக்க முயலுகின்றது. இவை இரண்டும் தனித்தனி:ே மக்களிடமிருந்து தேர்தற் தொகுதி அனுமதியைப் பெறக் கூடியவை. ஒவ்வொன்றும் மற்றதைத் தடுக்கவும், சமநிலைப்ப டுத்தவும் கூடியலை நி:வேற்றுத் துறையின் எதேச்சாதிகாரத்துக்கு எதிரானவர்கள் காங்கிரசின் முக்சியத்துபேத்தை பே: 1றுத்துகின்றனர். சட்டவாக்கத்துறையின் நிாை யற்ற பெரும்பான்மைக்கு எதிரானவர்கள் நிறைவேற்றுத் துறையின் மேலாண்மையை வலியுறுத்துகின்றனர்.
வெவ்வேறாகத் தெரிவு செய்யப்பட்ட சனாதிபதி, சட்டவாக்கத்துறையினது பலவீனம் ஒரு ஸ்தம்பித நிலையை ஏற்படுத்தக் கூடிய அம்சமாகும் சனாதிபதிக்குத் நமது விருப்பப்படி செயற்பட ஃபாக்குகள் இல்லாதிருக்கலாம். ஆனால் தமது ரத்து அதிகாரத் தைப் பயன்படுத்துவதன் மூலம் காங்கிரசின் சட்ட மாற்ரீடை அவர் தடைசெய்ய முடியும், சனாதிபதி தமது நேரடித் தெரிவின் காரணத்தால் ஒரு பிரதம மந்திரியை விட அதிக அதிகாரம் படைத்தவராகத் தோன்றலாம். ஆனால் அவர் சட்டத்துறையா ஒனது, எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளதோ, இல்லையோ, சனாதிபதியின் அதி காரத்துக்குக் கட்டுப்படாத ஒரு தேர்தல் அடித்தளத்தைக் கொண்டது என்பதை அவர் ஏற்க வேண்டும். எனவே ஒரு பாராளுமன்ற முறையை விடக் கட்சிக் கட்டுப்பாடு குறிப்பிடத்தக்க அளவு பலவீனமாக உள்ளது. உதாரணமாக, ஒரு பிரதம மந்திரியைப் போல, கட்டுப்பாடற்ற கட்சி உறுப்பினர்களை விளக்கவோ, ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தவோ ஒரு சனாதிபதியினால் முடியாது. ஒரு பிரதம மந்திரியானவர் தனது பாராளுமன்றப்பெரும்பான்மை மூலம் தனது சட்டத்துறை நடவடிக்கைகளைச் சீராகக் கொண்டு நடத்தலாம். ஆனால் ஒரு சனாதிபதி மசோதாவை நிறைவேற்றுவதற்காகத் தன்னளவில் உரிமைகள் கொண்ட காங்கிரசுடன் நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும்.
பாராளுமன்ற முறையா அல்லது சனாதிபதி முறைபா ஓர் அரசியல் யாப்பு சனநாயகத் தின் நேவைகளுக்குச் சரியாக முகம் கொடுக்கின்றது. இக் கேள்விக்கான பதிலானது, இந்த விடயம் அரசியல் விஞ்ஞானிகள், அரசியல்வாதிகளின் தொடர்ச்சியான விவா தங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது என்பதாகும். ஏனெனில் இல்விரண்டு முறைகளுமே தமக்கே உரித்தான வலிமைகளையும், பலவீனங்களையும் கொண் டவை. எனினும் இவ்விரண்டு முறைகளுமே அரசியல்யாப்பு சனநாயகத்துடன் அதனை உறுதிப்படுத்த முடியாது விடினும், இணைந்து செல்கின்றன என்பது குறிப்பி டத்தக்கது.
சனநாயகத்தின் மூன்றாவது அலை Democracy's third wave)
ஹாவார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் விஞ்ஞானியான சாமு வேல் பீஹன்டிங்டன் (Samuel P.Huntington)என்பவர் சனநாயகத்தின்

Page 26
வரலாறு மெதுவானதும் நிதானமானதுமானஒரு முன்னேற்றமல்ல, மாறாக முன்சென்று, பின் வாங்கி, உட்சென்று, மெலெழும்பும் அலைகளின் தொடர்ச்சியாகும் என்று கூறுகின்றார்.
சனநாயக சஞ்சிகையில் (Journal of Democracy) எழுதிய கட்டுரையில் ஹன்டிங்டன், சனநாயகத்தின் வரலாற்று ரீதியான மூன்று நீண்ட அலை களை இனங்காணுகின்றார். முதாலாவது அலை, 19 ஆம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்காவில் ஆண்களின் பெரும் பகுதியினருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டதிலிருந்து தொடங்கி 1920கள்வரை தொடர்ந்தது. இக்காலப் பகுதியில் சுமார் 29 சனநாயகங்கள் தோற்றம் பெற்றன. 1922இல் இத்தாலி யில் முசோலினியின் உயர்ச்சியுடன் இவ்வலை வற்றத் தொடங்குகின்றது. 1942இல் உலக சனநாயகங்கள் 12ஆகக்குறைவடைந்தது வரையும் இப்பின் வாங்கல் நீடித்தது.
இரண்டாம் உலகப் போரில் நேசநாடுகளின் வெற்றியுடன் ஆரம்பித்த இரண் டாவது அலை, 1962 இல் உலக சனநாயகங்கள் 32 ஆக அதிகரித்த போது மேன்நிலையை அடைந்தன. இவ்விரண்டாம் அலையின் பின்வாங்கல் 1962 இல் தொடங்கி எழுபதுகளின் நடுப்பகுதியில் சனநாயகங்கள் 30 ஆகக் குறைவடைந்தது வரை நீடித்தது. 1977 முதல் சனநாயகத்தின் மூன்றாவது அலை சுமார் 30 சனநாயகங்களை இணைத்தது. இது சனநாயக சமுதாயங் களை இரட்டிப்பாக்கியது. எனினும் இதில் சோவித் யூனியனிலும், ஆபிரிக் காவின் சில பகுதிகளிலும் நடந்த அரசியற் புரட்சிகள் அடங்கவில்லை.
மூன்றாம் அலை உச்சத்தைத் தொட்டுவிட்டதா. எழுபதுகளிலும் எண்பதுக ளிலும் சனநாயகம் அடைந்த நன்மைகளைக் குறிப்பிடக்கூடிய அளவுக்குப் பின்தள்ளும் நிலைமை ஏற்படுமா. ஹன்டிங்டன் பல்வேறு பிரதேசங்களில் செயற்படும் மிகவும் சிக்கலான அரசியற் பண்பாட்டுச் சக்திகளை நுணுக்க EOtra; ஆராய்கின்றார். ஆனால் எவ்வித முடிவுகளுக்கும் அவர் வரவில்லை. எனினும் சனநாயகத்தின் மூன்றாவது அலை வற்றும் நிலை ஏற்படுமென் றும், அதனைத் தொடர்ந்து அநேகமாக, 21 ஆம் நூற்றாண்டில் ஒரு நாலா வது அலை தோன்றக் கூடும் எனவும் அவர் கூறுகின்றார்.
இத்தகைய ஒரு நோக்கினை எப்படியும் தடுத்துவிட முடியாது. கடந்தகால சம்பவங்களைக் கொண்டு மதிப்பிடும் போது சனநாயகத்தின் எதிர்கால உறுதிப்பாட்டையும், விரிவாக்கத்தையும் பாதிக்கும் இரண்டு முக்கியமான காரணிகள் பொருளாதார வளர்ச்சியும், அரசியல் தலைமைத்துவமுமாகும். பொருளாதார வளர்ச்சி சனநாயகத்தைச் சாத்தியமாக்குகிறது. அரசியல் தலைமைத்துவம் அதனை யதார்த்த பூர்வமாக்குகிறது என்று ஹன்ரிங்டன் கூறுவது குறிப்பிடத்தக்கது.
A2

VII
அரசியல், பொருளியல், பன்மைவாதம்
Luissippso (Participation)
அரசியல் செயல்முறையில் மக்களைப் பங்குபற்றுமாறு ஒருவரும் வற்புறுத்த முடி யாது. பங்குபற்றாமை மூலம் தமது அதிருப்தியை வெளிப்படுத்த அவர்களுக்குச் சுதந்திரம் உண்டு. ஆனால் மக்களின் பங்குபற்றல் என்னும் உயிர் மூச்சு இல்லாவிடின் சனநாயகம் பலவீனமடையத் தொடங்கிவிடும். ஒரு சனநாயக சமுதாயத்தின் பிரசைக ளுக்குப் பல்வேறு பிரத்தியேக சங்கங்கள், நிறுவனங்கள், தொண்டர் குழுக்களில் சேரச் சந்தர்ப்பம் உண்டு. இவற்றில் பல பொதுக் கொள்கையில் ஏற்படும் பிரச்சினைகள் கொடர்பானவை, எனினும் சில அரசாங்கத்தின் நிதிஉதவி, கட்டுப்பாடுகளுக்கு உட் பட்டவை. அரசாங்கத்துக்குப்புறம்பான குழுக்களில் சுதந்திரமாகச் சேர்ந்து செயற்பட மக்களுக்குள்ள உரிமையானது சனநாயகத்தின் அடிப்படையாகும். ஒரேமாதிரியான ப்ொது ஈடுபாடுகள் கொண்ட மக்கள் ஒன்றிணையும்போது தமது அபிப்பிராயங்களை உரத்தொலிக்கவும், அரசியற் பிரச்சினைகளில் செல்வாக்கு செலுத்தவும் அவர்களுக் குள்ள வாய்ப்பு அதிகரிக்கின்றது. 19 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பிரெஞ்சு அரசியல் அவதானியான அலெக்ஸி டி.ரொகோவில் (Alexis de Tocoueville) என்பவர் ஒரு குழுவினரின் கொடுங்கோன்மையும், ஓர் அரசின் தான் தோன்றித் தனமான அதிகாரத்தையும் தடுப்பதற்குச் சங்கங்கள் அல்லது கூட்டுக்கள் மிகவும் அவசியம். இந்த அவசியம் மற்ற நாடுகளைவிடச் சனநாயக நாடுகளில் மிகமிக அவசியம் எனக் கூறுகிறார்.
ஒரு சனநாயக சமுதாயத்தில் காணப்படும் பல்வேறு குழுக்களைப் பல வழிகளில் வகைப்படுத்த முடியும். ஒன்று சில குறிப்பிட்ட விடயங்களில் அரசாங்கத்தை நெருக் கும் நலன்பேணும் குழுக்கள். மற்றது வர்த்தக அமைப்புக்கள், தொழில்சார் குழுக்கள் அல்லது தொழிற் சங்கங்கள் முதலிய பிரத்தியேக நலன் பேணும் குழுக்கள். பொதுவா க்த் தமது கோரிக்கைகளில் ஒரு பொருளாதார அம்சத்தை இவை கொண்டிருக்கும், சிலவேளைகளில் இவைகள் தமது எல்லைக்கு அப்பாலுள்ள பொதுப் பிரச்சினைகளி லும் ஒருநிலைப்பாட்டினைக் கொள்ளமுடியும். சூழல் பாதுகாப்பு, சமூகநலநிறுவனங் க்ள் போன்ற பொதுநலக் குழுக்கள் பொது நன்மை கருதி செயற்படுகின்றன. இதனால் பிரத்தியேக நலன்காக்கும் குழுக்களைவிடப் பொதுநலன் காக்கும் குழுக்கள் சிறந் தவை என்று கூறிவிட முடியாது. இவைகள் பொது விடயங்களில் ஈடுபடும் போது நமது சொந்த நலன்களை இரண்டாம் தரமாக்கி விடுகின்றன.
எந்த சனநாயகத்திலும் இவ்விருவகை நலன் பேணும் குழுக்களும் தீவிரமாக இயங்கு கின்றன. இரண்டுமே பொதுசன அபிப்பிராயத்தில் கவனம் செலுத்துகின்றன. ஒரே நேரத்தில் பொதுமக்களுக்கு அறிவூட்டவும் அரசாங்க கொள்கையில் செல்வாக்கு செலுத்தவும் முனைவதால் தமது ஆதரவுத் தளத்தை விரிவாக்கச் சகல முயற்சிகளை யும் மேற்கொள்கின்றன.நலன்பேணும் குழுக்கள். தனித்திருக்கும் ஒரு தனிநபருக்கும்,
AS

Page 27
பரந்துவிரிந்து ஒதுக்கமாகவிருக்கும் அரசாங்கத்துக்குமிடையே சமரசம் செய்யும் ஒரு சக்தியாக விளங்குகின்றன. இக்குழுக்களுக்கிடையே ஏற்படும் இடைத்தாக்கத்தின் மூலம் அவற்றிடையே ஏற்படும் திறந்த விவாதம், முரண்பாடு, விட்டுக் கொடுத்தல், கருத்தொருமிப்பு ஆகியவற்றின் மூலமும் மக்களின் நலன்களில் தாக்கத்தை ஏற்படுத் தும் தீர்மானங்களை ஒரு சனநாயக சமுதாயம் மேற்கொள்கின்றது.
வாக்களித்தல் (Woting)
நவீன சனநாயகங்களில் அடிப்படையானதும், பொதுவானதுமான பங்கெடுத்தல் பொது அலுவலர்களின் தெரிவில் வாக்களிப்பதாகும்.இந்நோக்கங்களைச் சுதந்திரமா கவும் நேர்மையாகவும் நடத்தும் ஆற்றலே ஒரு சனநாயக சமுதாயத்தின் உரைக்கல்லா கும். தாம் பிரதிநிதித்துவம் செய்யும் எண்ணிறந்த குழுக்களின்நலன்களைப்போலவே வாக்காளர்களின் வாக்கங்களும் எண்ணிலடங்காதவை. பொதுவாக வாக்காளர்கள் தமது நலன்களைப் பிரதிபலிக்கும் வேட்பாளர்களுக்கே வாக்களிக்கின்றனர். ஆனால் அவர்களது தெரிவுகளில் கட்சிசார்பு போன்ற வேறு காரணிகளும் செல்வாக்குச் செலுத்துகின்றன. ஒரு கட்சியோடு தன்னை இணைத்துக் கொண்ட ஒரு வேட்பாளர் அப்படியில்லாத ஒருவரைவிடத் தனது கட்சிக்குச் சார்பாக வாக்களிக்கக் கூடியவரா வார். ஒரு விகிதாசாரப்பிரதிநிதித்துவ முறையிலெனில் வாக்காளர்கள் தனிநபருக்கன் றிக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டியுள்ளது.
வாக்காளர் விருப்பத்தெரிவினையும், வாக்களிக்கும் வீதத்தையும் பாதிக்கும் பல்வேறு காரணிகளை அரசியல் விஞ்ஞானிகள் இனங்கண்டுள்ளனர். உதாரணமாக, விகிதாசா ரப் பிரதிநிதித்துவ முறையில் ஒவ்வொரு வாக்கும் சட்டசபை பிரதிநிதித்துவத்துக்கு முக்கியமான படியால் தேர்தல்களில் வாக்களிக்கும் வீதம், ஒரு பெரும்பான்மை மூலம் வேட்பாளரைத் தெரிவுசெய்யும் தேர்தல்முறையைக் கொண்டநாடுகளிலும் அதிகமா னதாகும். சமூக, பொருளாதார அந்தஸ்து, வாக்குரிமையைப் பெறும் எளிய முறை, கட்சி அமைப்பின் வலிமை, வேட்பாளரைப்பற்றி வெகுசனத்தொடர்புசாதனங்களின் கணிப்பீடு,தேர்தல்களின் காலஇடைவெளி ஆகிய காரணிகள், வாக்காளர் எவ்வளவு பேர், எவ்வளவு முறை வாக்களிப்பார்கள் என்பதைத் தீர்மானிக்கின்றன. சனநாயகத் தேர்தல்களில் போட்டி என்பது எந்த வேட்பாளர் வெகுசன ஆதரவைக் கொண்டிருக்கி நார் என்பதில் தங்கியிருக்கவில்லை. மாறாக, எந்த வேட்பாளர் தமது ஆதரவை வாக்குகளாக மாற்றும் உந்து சக்தியைக் கொண்டிருக்கிறார் என்பதிலேயே தங்கியுள் ளது. வாக்காளரின் அசிரத்தையின் காரணமாக எந்தவொரு பொது அலுவலர் பதவி பும் நிரப்பப்படாமல்போகாது. ஆனால் அவ்வசிரத்தையின் காரணமாக அப்பதவியா ளர் மிகவும் சிறியதொரு வீதமான வாக்குகளினாலேயே தெரிவு செய்யப்படுவார்.
அரசியல் கட்சிகள்
அரசின் கட்சிகள் பொது அலுவலர்களை நியமனம் செய்கின்றன. அவர்களின் தெரி வுக்காகப் பிரச்சாரம் செய்கின்றன. தாம் பெரும்பான்மையாக இருந்தால் அரசாங்கத்
ಹೈ।

துக்காகக் கொள்கை நிகழ்ச்சித் திட்டங்களைத் தீட்டுகின்றன. எதிர்க்கட்சியில் இருந்
தால் விமர்சனம் செய்வதுடன் மாற்றுக் கொள்கையை முன்வைக்கின்றன. பல்வேறு நலன்பேனும் குழுக்களுக்கிடையே பொதுக் கொள்கைக்கான ஆதரவைத் திரட்டுகின் நன. பொதுப் பிரச்சினைகள் பற்றி அறிவூட்டுகின்றன. சமுதாயத்தின் அரசியல் விவா தங்களுக்கான அமைப்பை வகுத்து வழிமுறைகளையும் கூறுகின்றன. சில அரசியல் முறைகளில் கட்சி உறுப்பினர்களின் நியமனம், ஊக்கப்படுத்தல் ஆகிய விடயங்களில் சித்தாந்தம் முன்னணி வகிக்கின்றது. வேறு சில முறைகளில் சித்தாந்தத்தைவிடப் பொருளியல் ஆர்வங்கள், சமூகப் பார்வைகள் ஆகியன முக்கிய இடம் வகிக்கின்றன, கட்சி நிறுவனங்களும், நடைமுறைகளும் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. ஒரு பக்கத்தில் பல் கட்சி பாராளுமன்ற முறைமைகளைக் கொண்ட ஐரோப்பாவில் அரசி யற் கட்சிகள், முழுநேர ஊழியர்களினால் நிர்வகிக்கப்படும் பெரிதும் ஒழுங்குள்ள நிறுவனங்களாகும். மறுபக்கத்தில் ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் கட்சிகள் உள் ான. இங்கு எதிரிகளான குடியரசு, சனநாயகக்கட்சிகள் பன்முகப்படுத்தப்பட்டுக் காங்கிரசிலும், மாநில மட்டத்திலும் செயல்படுகின்றன. தொண்டர்களிலேயே இக் கட்சிகள் பெரிதும் தங்கியிருக்கின்றன. ஆனால் இக்கட்சிகள் சனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட ஒவ்வொரு நான்கு வருடமும் ஒன்றிணையும் போது இந்நி லைமை மாறுகின்றது.
சமுதாயங்களைப் போலவே கட்சிகளும் பல்வேறுபட்டுக் காணப்படுகின்றன. அவை கள் நடத்தும் தேர்தல் பிரசாரங்கள் வழக்கமாக விரிவானவையாயும், காலநேரத்தை விரயப்படுத்துவனவாயும், சிலவேளைகளில் முட்டாள்தனமானவையாயும் இருக் கும்.ஆனால் அவற்றின்செயற்பாடுகள் மிகவும் காத்திரமானவை. ஒரு சனநாயகத்தில் பிரசைகள் தமது தலைவர்களைத் தெரிவுசெய்யவும், தமது தலைவிதியை நிர்ணயிப்ப தில் அர்த்தமுள்ள பங்கு வகிக்கவும் இக் கட்சிகளே வழிவகுக்கின்றன.
STSL (Protest)
ஒரு சனநாயக சமுதயத்தில் பிரசைகளுக்கு ஒன்று சேரவும், தமது அரசாங்கத்தின் கொள்கைக்கு அல்லது மற்றக் குழுக்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கவும் உரிமை உண்டு. இந்த உரிமையை ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனுக்கள், மறியல்கள், வேலைநிறுத்தங்கள் போன்ற பிரசைகளின் நேரடியான நடவ டிக்கைகள் மூலம் அவர்கள் நிலைநாட்டுகின்றனர். ஒரு சனநாயகத்தில் எவரும் நேரடி நடவடிக்கையில் ஈடுபடலாம். ஆனால் வழமையாக ஒடுக்கப்பட்ட அல்லது அனுகூல மற்ற அல்லது சிறுபான்மையினரான குழுக்களினாலேயே இது பயன்படுத்தப்பட்டு, வருகின்றது. இவர்கள் அரசாங்கக் கொள்கைகளில் செல்வாக்குச் செலுத்தத் தமக்கு வேறு வழிகள் இல்லை எனக் கருதுகிறார்கள். இத்தகைய எதிர்ப்பு நடவடிக்கைகள் சனநாயக சமுதாயத்தின் ஓர் அம்சமாகும். இன்று சாத்வீகப் போராட்டங்கள் செய்தித் தொடர்புசாதனங்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அமைக்கப்படுகின்றன. அத்து டன் இவை வெளிநாட்டுக் கொள்கை விடயங்கள், இனத்துவப் பாகுபாடுகள், சூழல் மாசடைதல், அணுவாயுதங்கள் முதலிய பல்வேறு பிரச்சினைகள் விடயங்களைத்

Page 28
தழுவிய ைபேயாக நடத்தப்படுகின்றன. ஒரு சிறப்பான நேரடி நடவடிக்கை தொழிற் சங்கங்களுக்கு வேலைநிறுத்தம் செய்ய உள்ள உரிமையாகும். தமது வேலை வழங்கு னர்களுடன் தமது பிரச்சினைகள் குறித்து பேரம் பேசுதல் மூலம் ஒரு முடிவுக்கு வரமுடியாதவிடத்து அவர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்கின்றனர்.
எதிர்ப்புக்கள் சனநாயகத்தின் சோதனைக் களமாகும். ஒவ்வொருவரும் அமைதி காத்து, அடிப்படை விடயங்களில் ஒத்துப்போகும் போது கட்டுப்பாடற்ற கருத்து வெளிப்பாடு, பிரசைகளின் பங்களிப்பு ஆகிய உயர் இலட்சியங்களைப் பாதுகாப்பது மிகவும் இலகுவானதாகும். ஆனால் எதிர்ப்பாளர்கள் பொதுவிடயங்களிலும் அவர்க ளது இலக்குகளிலும் ஒன்றுபடுவதில்லை. அதனால் அவ்வினக்சுமின்மை ஆவேசமா கவும், கோபமாகவும் வெளிப்படுகின்றது. இந்நிலையில் சமநிலை காப்பதே சனநாய கத்தின் முன்னுள்ள சவாலாகும். ஒரு புறம் பேச்சுச் சுதந்திரமும், கூட்டுச்சேரும் சுதந்திரம் ஆகியவற்றைக் காக்கவேண்டும். மறுபுறம் பயமுறுத்தல், வன்முறை ஆகிய வற்றை முறியடித்து பொது ஒழுங்கைப் பேணவேண்டும். ஒழுங்கு என்னும் பெயரால் சாத்வீக எதிர்ப்புக்களை அமுக்குதல் அடக்கு முறைக்கு வழிவகுப்பதாகும். அதே வேளை கட்டுப்பாடற்ற வன்முறை எதிர்ப்புக்களை அனுமதிப்பது அராஜகத்தை ஏற்ப டுத்துவதாகும்.
இந்தச் சமநிலையை அடைவதற்கு ஒரு மந்திர தந்திரம் கிடையாது. தனிமனிதனது உரிமைகளையும், சனநாயக நிறுவனங்களையும் கட்டிக்காக்கும் இறுதிப் பொறுப்பு பெரும்பான்மையினரின் கையிலேயே தங்கியுள்ளது. சனநாயக சமுதாயங்கள் தமது மக்களிடையே ஏற்படும் எத்தகைய கடுமையான பிளவையும் சகித்துக் கொள்ளக் கூடியவையே. ஆனால் அவை சனநாயகத்தின் சட்டபூர்வ தன்மைக்கு ஏற்படும் சவாலை மட்டும் சகித்துக் கொள்வதில்லை,
செய்தித் தொடர்புச் சாதனங்கள்
ஆளுதல் என்பது தகவல் தொடர்பை ஏற்படுத்தலே. இன்றைய நவீன சமுதாயங்கள் பருமனிலும் சிக்கல்தன்மையிலும் வளருகின்றன. அதனால் தகவல்தொடர்பு பொது விவாதம் ஆகியவை தகவல் துறையின் ஆதிக்கத்துக்கு உட்பட்டுள்ளன. வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், புத்தகங்கள், சஞ்சிகைகள், இன்னும் கணனி மயப்ப டுத்தப்பட்ட புள்ளிவிபர தரவுகள் ஆகியவை இவ்வாறான தகவல்தொடர்புச் சாதனங் களாகும,
ஒரு சனநாயகத்தின் செய்தித் தொடர்புச் சாதனங்கள் ஒன்றில் ஒன்று சார்ந்த ஆனால் தெளிவான வரையறையுள்ள இயக்கங்கள் பலவற்றைக் கொண்டுள்ளன. முதலாவது தகவல் தருதலும் கல்வியூட்டுதலுமாகும். பொதுக் கொள்கைகளில் புத்திசாலித்தன மான முடிவெடுக்க மக்களுக்கு, துல்லியமான, பக்கஞ்சாராத, நேரந்தவறாத தகவல் கள் அவசியம், அபிப்பிராயங்கள் பல்வேறு திசைகளில் விரிந்து செல்லக் கூடியவை. அதனால் மக்களுக்குப் பல்வேறு பார்வைகள் பற்றிய தகவல்கள் வேண்டும். தேர்தல் பிரச்சாரக் காலங்களில் இவை மிகவும் முக்கியமானவை. ஏனெனில் சகல வாக்காளர்க
萱

இருக்கும் ஒரு வாக்காளரைச் சந்தித்துப்பேச வாய்ப்பிருப்பதில்லை.இதனால் அவர்கள் பல்வேறு விடயங்கள்பற்றிய விளக்கத்துக்கும், வேட்பாளர்,அவர்தம் அரசியல் கட்சி, அவரது நிலைப்பாடு பற்றிய விபரணத்துக்கும், பத்திரிகைகள், தொலைக்காட்சி ஆகி யவற்றையே நம்பி இருக்கின்றனர்.
- செய்தித் தொடர்புச் சாதனங்களின் இன்னொரு செயற்பாடு அரசாங்கத்தையும், சமு தாயத்தின் பல்வேறு பலமிக்க நிறுவனங்களையும் கூர்ந்து கவனிப்பதாகும். முற் றான பூரணத்துவம் இல்லாவிடினும், ஒரு நியாயமான சுதந்திரம், யதார்த்தம் ஆகிய நிலைப்பாட்டில் நின்று தகவற் சாதனங்கள் அரசாங்கத்தின் உண்மையான சொரு பத்தை மக்களுக்கு வெளிக்காட்ட முடியும். தமது செயல்களுக்காக மக்களுக்கு வகை கூறுமாறு பொது அலுவலர்களை வற்புறுத்த முடியும். விரும்பினால் செய்தித் தொடர் புச்சாதனங்கள் பொதுவிடயங்களில் தீவிர சிரத்தை காட்டமுடியும், தேவையானவை எனத்தாம் கருதும் சீர்திருத்தங்கள். குறிப்பிட்ட கொள்கைகள் ஆகியவற்றுக்காக இச் சாதனங்கள் ஆசிரியர் தலையங்கம், ஆய்வு அறிக்கைகள் மூலம் பிரச்சாரம் செய்ய முடியும், ஆசிரியர் கடிதம், வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுதல் போன்றவற்றின் மூலம் தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியவை தமது கருத்துக்களை வெளிவிடும் ஒரு மன்றமாகவும் அவை செயலாற்ற முடியும்.
நிகழ்ச்சி நிரலை அமைத்தல் ேேting the agnேda) என்னும் இன்னுமொரு முக்கிய செயற்பாடு தகவற் சாதனங்களுக்கு உரியது என இன்றைய விமர்சகர்கள் கூறுகிறார் கள். அதாவது சகல விடயங்களையும் இச் சாதனங்களினால் தரமுடியாது என்பதால் எவ்விடயங்களை அறிவிக்கலாம். எவற்றை நிராகரிக்கலாம் என்பதைத் தெரிவு செய்ய வேண்டும். சுருங்கக் கூறின் செய்திகள் எவை, செய்திகளல்லாதவை எவை என்பதை இவைதான் தீர்மானிக்கின்றன. இத்தீர்மானங்களே எவ்விடயங்கள் முக்கிய மானவை என்ற பொதுமக்கள் கருத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன. அதேநேரத் தில் தகவற் சாதனங்கள் யாவும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நாடுகளைப் போலல்லாது. தகவற் சாதனங்கள் தம் விருப்புக் கேற்ப சகல விடயங்களையும் நிராகரிக்கவே ா, மாற்றியமைக்கவோ முடியாது. ஏனெனில் அரசாங்கம் உட்பட அவர் களது போட்டியாளர்களும் தமது முதன்மை நிரலின்படி விடயங்களை முக்கியப்ப டுத்தி வெளியிட முடியும்.
இச் செயற்பாடுகளைத் தகவற் சாதனங்கள் எப்போதும் பொறுப்புடன் கொண்டு நடத்துகின்றனஎனக் கூறிவிடமுடியாது. பத்திரிகை, தொலைக்காட்சிநிருபர்கள் தமது செயற்பாடுகளில் ஒரு புறநிலையான நியமத்தைக் கொண்டுவர முயற்சி செய்யலாம். ஆனால் தவிர்க்கமுடியாதவாறு அவர்தம் செய்திகள், தனிநபர்களின் அல்லது உரிமை யாளரின் சார்புகளையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கின்றன. இச் செய்திகள் கிளர்ச் சிபூட்டுபவையாக இருக்கலாம். மேலோட்டமானவையாகவோ தலையீடு செய்வன வாகவோ அமையலாம் அல்லது தவறானவையாகவோ, தூண்டிவிடுபவையாகவோ இருக்கலாம். இதற்குப்பரிகாரம் சட்டமியற்றிப்பத்திரிகையாளர்களுக்கு உத்தரவுப்பத் திரம் வழங்குவதோ அல்லது அவர்களுடைய பொறுப்புக்கள் பற்றி ஒரு தலைப்பட்ச மான வரையறை செய்வதோ அல்ல. மாறாகப் பொதுசனக் கலந்துரையாடலுக்கான வாய்ப்பிளை விரிவடையச் செய்தலாகும். அதன் மூலம் பொய்யான தகவல்கள்,
설『

Page 29
வார்த்தை ஜாலங்களுக்கு மத்தியில் புதைந்து கிடைக்கும் உண்மையைத் தேடும் வாய்ப்பு மக்களுக்குக் கிட்டுகின்றது. ஐக்கிய அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் மிகச் சிறந்த நீதிபதிகளில் ஒருவரான ஒலிவர் வென்டல் ஹோம்ஸ் (OlivCT Wondel Holmes Jr.) என்பவர் 1919 இல் உண்மைக்கான மிகச் சிறந்த சோதனை என்பது சிந்தைனையின் வல்லமையானது தன்னைத் தானே அச்சிந்தனைப் போட்டியில் ஏற்றுக் கொள்ள வைப்பதே என்று கூறினார்.
சனநாயகமும் பொருளியலும்
சனநாயகம் ஒரு குறிப்பிட்ட பொருளியல் கோட்பாட்டை வலியுறுத்துவதில்லை, சனநாயக அரசாங்கங்கள் தீவிர சோஷலிஸ்டுக்களையும், சந்தைப் பொருளாதார வசதிகளையும் ஒன்றாகவே கருதுகின்றது. உண்மையில் பொருளாதாரத்தில் அரசாங் கத்தின் பங்கு என்ன என்பது பற்றியே ஒரு நவீன சனநாயகத்தில் பெரும் வாக்கு வாதங்கள் நடக்கின்றன. எனினும் எந்த சனநாயக சமுதாயத்திலும் மிகமுக்கிய அம்ச மாக இருப்பது பொருளாதார சுதந்திரமே என சனநாயகத்தின் ஆதரவாளர்கள் கருது கின்றார்கள் எனக் கூறினால் அது மிகையாகாது. இந்த உண்மையின் அடிப்படையி லேயே பொருளாதாரக் காரணிகள் அரசியலை வலதுசாரி-இடதுசாரி என்று பிரித்து வைத்துள்ள்ன.
உதாரணமாக, சோஷவிஸ் சனநாயக வாதிகள் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள் கையின் முதுகெலும்பாக சமத்துவமும் சமூக நலன்களும் இருக்க வேண்டுமென வாதிடுகின்றனர். கடந்த காலத்தில் இதன் விளைவாகத் தொலைத் தொடர்பு சாதனங் கள்,போக்குவரத்து, பாரிய சில கைத்தொழில்கள் போன்ற தேசிய பொருளாதாரத்தின் சில முக்கிய மூலகங்கள் அரசாங்க உடைமைகளாகின. அத்துடன் தேவையானவர்க ருக்கு மருத்துவ, வேலையின்மை மற்றும் ஏனைய நலன்கள் தொடர்பாக நிதியுதவி கள் வழங்குமாறும் அரசாங்கத்தைக் கோரினர். இதற்கு முரணாக, மத்தியமான, பழ மைவாத அரசியற் கட்சிகள் அந்தப் பொருளாதாரத்திலேயே கூடிய கவனம் செலுத்தி னர். அரசாங்கத்தின் தலையீடு, கட்டுப்பாடுகள் இல்லாத இப்பொருளாதார முறையே பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பரந்த செல்வச்செழிப்பு ஆகியவற்றுக்கான அத்திவாரம் என அவர்கள் வாதாடினர்.
உண்மையில், பொருளாதார விவாதத்தில் பங்கு கொள்ளும் சகலரும், ஒரு சூடான அரசியல் வாக்குவாதத்தில் இணங்குவதை விட அதிகமாகவே இவ்விடயத்தில் இனங்குகின்றனர். உதாரணமாக, அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக இயங்கும் ஒரு தொழிற் சங்கத்தின் பங்கை இடதுசாரிகளும் வலதுசாரிகளும் ஏற்றுக் கொள்கின்றனர். ஒரு சுதந்திர சமுதாயத்தில் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் அமைக்கவும், சங்கங்களில் சேரவும் வாய்ப்புள்ளவர்கள். சம்பளம், சுகாதாரம், ஓய்வூ தியம், வேலைநிலைமைகள் ஏனைய குறைகள் தொடர்பாகத் தமது வேலைகொடுப்ப வர்களுடன் பேரம் பேசுவதில் இச்சங்கங்கள் தொழிளாளரின்நலன்களைப் பேணுகின் நனர்,
蛙田

எந்தவொரு சமகால சனநாயக நாட்டிலும் முற்றுமுழுதான அரசாங்கக் கட்டுப்பாடு இல்லாத முறைமை கிடையாது. எல்லாவற்றிலும் ஒரு வகையான கலப்புப் பொருளா நாரமே காணப்படுகின்றன. எல்லாமே சந்தைப் பொருளாதார முறையில் விலைகள் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக ஆயிரக்கணக்கான உற்பத்தி யாளர்கள். நுகர்வோரின் சுயாதீனமான தீர்மானங்களினால் நிர்ணயிக்கப்படுகின்றன.
இடதுசாரி அரசியல் கட்சிகள். சமூக சனநாயக சார்புடையன எனினும் கேள்விவழங்கல் என்றும் கோட்பாட்டில் இயங்கும் சந்தைப்பொருளாதாரமே.பொருளாதார வளர்ச்சிக்கான உந்துவிசை என்பதை ஏற்றுக் கொள்ளுகின்றன. அதேபோல் மத்திய வலதுசாரிக் கட்சிகள் அரசாங்கத்தின் தலையீடு, உற்பத்திச் சாதனைகளை அரசாங்க உடைமையாக்குதல் போன்றவற்றை எதிர்த்த போதும் பொருளாதாரத்தின் சில அம் சங்களை அரசாங்கம் ஒழுங்குபடுத்த வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக வேலை வாய்ப்பு வழங்கல், மருத்துவ மற்றும் நவீன பொதுநல அரசின் ஏனைய நன்மைகள், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் வரிவிதிப்புக் கொள்கை ஆகி பவை அரசாங்கம் ஒழுங்குபடுத்த வேண்டிய சில துறைகளாகும். இதன் காரணமாக நவீன சனநாயகங்கள் வேறுபட்ட அம்சங்களைக் கொண்ட ஆனால் அடிப்படையில் பல்வேறு ஒற்றுமைகள் கொண்ட பொருளாதாரங்களையே கொண்டிருக்கின்றன.
அண்மைக் காலங்களில் உலகின் பல பாகங்களில் மத்திய திட்டமிடல் பொருளாதாரங் களின் சரிவைத் தொடர்ந்து சந்தைப் பொருளாதாரங்களின் முக்கிய பங்கு பற்றி மீள வலியுறுத்தப்படுகின்றது. அரசியல் விவகாரங்களைப் போலவே பொருளாதார விட பங்களிலும் சுதந்திரமே முக்கியமான அம்சம். ஐக்கிய அமெரிக்காவின், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுப் பிரதிநிதி மோரிஸ் ஆபிராம் (Morris Abram) பின்வருமாறு கூறியுள்ளார். பொருளாதார வெற்றியை சுதந்திரம் மாத்திரம் பத்தரவாதப்படுத்த முடியாது ஆனால் அடக்குமுறை சர்வதிச்சயமாகப் பொருளா தாரத் தோல்வியை உத்தரவாதப்படுத்தும். சில நேரங்களில் எதேச்சாதிகார அரசுக குரும் குறிப்பிடத்தக்க பொருளதார சாதனைகளைப் படைத்துள்ளன. ஆனால் உண் மையில் அச்சாதனைகளை அலெகள் தமது பிரசைகளுக்கு அரசியல் ரீதியாக வழங்க மறுத்த சுதந்திரங்களைப் பொருளாதார நடவடிக்கைகளுக்கு வழங்கியதன் மூலமே அதனைச் சாதித்தனர். மேலும் அவ் வெற்றிகள் ஒரு நீண்ட காலப்போக்கில் அவர்க ளுக்கு அரசியல் வலிமையை வழங்கிவிடவில்லை. மாறாகச் சிலி, தாய்வான் ஆகிய நாடுகளில் நடந்ததைப் போல் நமது பொருளாதார விடுதலைக்கு ஏற்ற விதத்தில் அரசியல் விடுதலையும் வேண்டும் என்ற மக்களின் குரலுக்கே வலிமை சேர்த்தன.
கடந்த காலத்தைப்போலவே எதிகாலத்திலும் பொருளாதாரப்பிரச்சினைகள் குறித்து மிகத்தீவிரமான விவாதத்தில் சனநாயகங்கள் ஈடுபடக்கூடும். ஆனால் அவ்விவாதம் தோல்வியுற்ற அரசாங்கக் கட்டுப்பாடுள்ள பொருளாதாரமுறைமை பற்றியதாகஇருக் காது. மாறாக, ஒன்றிவொன்று தங்கியுள்ள உலகில் சந்தைப் பொருளாதாரத்தின் நன் மைகள் சகலருக்கும் கிடைப்பதைஉறுதி செய்வது பற்றியதாகத் தான் இருக்கும்.
தீ

Page 30
576.5 sit (Voices)
சனநாயகங்கள் மனித இயல்பு பற்றிய பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றன. முதலாவது, சந்தர்ப்பம் வழங்கப்படுமிடத்து பொதுவாக மக்கள் தம்மைத் தாமே நியாயமான சுதந்திரமானதொரு வழியில் ஆட்சி செய்யக் கூடியவர்கள். இரண்டா வது எந்த சமுதாயமும் வேறுபட்ட நலன்களையும், தனிநபர்களையும் கொண்டுள் ளன. இத்தனிநபர்கள் தமது கருத்துக்களை முன்வைக்க உரிமையுள்ளவர்கள், அத்து டன் அவர்களது கருத்துக்கள் மதிக்கப்பட வேண்டும். இதன் விளைவாக எல்லா ஆரோக்கியமான சனநாயகங்களிலும் பொதுவாகக் காணப்படுவது என்னவெனில் அவையாவும் கூச்சல் நிறைந்தவை என்பதே.
சனாதிபதி ஜோர்ஜ் புஸ், ஐக்கிய அமெரிக்காவிலுள்ள பலநூறு தொண்டர் நிறுவனங் *oTof voyu9TLň faîlü usitaî5gï La thousand points of lights) GTGIT55-affle:TITñ. இந்த உருவகம் உலகெங்கும் காணப்படும் சனநாயகங்களின் வேற்றுமைகள், பன் மைத்தன்மைகளை விளக்க உதவுகின்றது. சனநாயகத்தின் குரல்கள் எனப்படுவது அரசாங்கம், அதன் அரசியல் ஆதரவாளர்கள், எதிர்கட்சி ஆகிய சகலவற்றையும் உள்ளடக்கியதே. அதுமட்டுமல்லாது தொழிற்சங்கங்கள். நலன்பேணும் குழுக்கள், சமூக அமைப்புக்கள். தகவற்தொடர்புச் சாதனங்கள். புலமையாளர்கள், விமர்சகர்கள், சமயத்தலைவர்கள். எழுத்தாளர்கள், சிறுவர்த்தக நிலையங்கள், பெரிய கூட்டுத்தாப னங்கள். ஆலயங்கள் மற்றும் பாடசாலைகள் ஆகிய சகலவற்றின் குரல்களும் இணைந் ததே சனநாயகத்தின் குரலாகும்.
உள்ளூர் மட்டத்திலோ அல்லது தேசீய மட்டத்திலோ இக்குழுக்கள் அனைத்தும் தமது அபிப்பிராயத்தைக்கூறவும், சனநாயக அரசியல் செயல்முறையில் பங்குகொள்ளவும் உரிமை உள்ளவை. இம் முறையில் சனநாயக அரசியல் ஒரு வடிசுட்டியைப் போன் நது. இவ்வடிகட்டியில் பல்வேறுபட்ட மக்களின் வாய்முலக் கோரிக்கைகள் யாவும் விழுந்து பின்னர் பொதுக் கொள்கையாக மாறுகின்றன முன்னாள் சனாதிபதி ஜிம்மி கார்ட்டர் சனநாயகத்தின்அனுபவம் என்பது வாழ்க்கையின்அனுபவத்தைப் போன் றது. அது எப்பொழுதும் மாறிக் கொண்டிருக்கின்றது. எண்ணில்லாத வேற்றுமை சுள்ள உடையது. சிலவேளைகளில் கொந்தளிப்பாகடன்னது. ஆனால் எதிரிகளின் சோதனைகளுக்கு உட்பட்டதால் மிகப் பெறுமதி வாய்ந்ததாகவும் திகழ்கின்றது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
(լplդճվճճծմ
சனநாயகம் எதையுமே உத்தரவாதம் செய்வதில்லை, பதிவாக அது வெற்றிக்கான சந்தர்ப்பத்தையும் தோல்விக்கான அபாயத்தையும் வழங்குகின்றது. தோமஸ் ஜெபர்ஸ் ரின் விவேகமுள்ள வார்த்தைகளில் சனநாயகம் என்பது வாழ்க்கை சுதந்திரம், மகிழ்ச்சியைத் தொடர்தல் ஆகியவற்றுக்கான உறுதிமொழியை வழங்குகின்றது. ஆகவே சனநாயகம் என்பது ஒருவாக்குறுதியும் ஒரசவாலுமாகும்.அது சுதந்திரமான மனிதர்கள் ஒன்றாகச் செயலாற்றுவதன் மூலம், தனிப்பட்ட சுதந்திரம், பொருளாதார
SO

வாய்ப்பு, சமூகநீதி ஆகிய தமது அபிலாசைகளை அடையும் வகையில் தம்மைத் தாமே ஆளமுடியும் என்னும் வாக்குறுதியை வழங்குகின்றது. சனநாயகத்தின் வெற்றி அதன் பிரசைகளிலேயே தங்கியுள்ளது என்ற விதத்தில் சனநாயகம் ஒரு சவாலாக விளங்குகின்றது.
மக்களால் மக்களின் அரசாங்கம் என்பதன் பொருள் மக்கள் சனநாயக சமுதாயத்தின் நன்மைகளை அனுபவிக்கின்ற அதேநேரத்தில் அதன் சுமையையும் தாங்குகிறார்கள் என்பதாகும். சுயாட்சியை ஏற்றுக்கொள்வதன் மூலம் ஒரு தலைமுறை, தான் கஷ்டப் பட்டுத் தேடிய சொத்தான தனிநபர் சுதந்திரம், மனித உரிமைகள், சட்டவாட்சி ஆகிய வற்றை அடுத்த தலை முறைக்காகப் பாதுகாக்கின்றது. ஒவ்வொரு சமுதாயமும், ஒவ்வொரு தலைமுறையும் சனநாயகத்தைப் புதுப்பிக்க வேண்டும். அதாவது கடந்த காலக் கோட்பாடுகளை ஒரு புதிய யுகத்தில், மாறும் சமுதாயத்தில் பிரயோகிக்க வேண்டும்.
ரஷியாவில் பிறந்தவரும் நோபல் பரிசைப் பெற்றவருமான ஜோசப் பிரொட்ஸ்கி (D5GBர0dsky) என்பவர் ஒரு சுதந்திரமனிதன்தோல்வியுறும் போது ஒருவரையும் குறை சொல்வதில்லை என்று ஒருமுறை எழுதினார். இக் கூற்று ஒரு சனநாயகத்தின் பிரசைகளுக்கும் பொருத்தமானதே, ஏனெனில் தாம் வாழ்வதற்காகத் தெரிவு செய்து கொண்ட ஒரு சமுதாயத்தின் தலை விதிக்கு இறுதியில் பொறுப்பேற்றுக் கொள்பவர்க ளூம் அவர்களே.

Page 31

பகுதி 11
ஒரு சுதந்திர சமுதாயத்தில் அரசியல்
செஸ்டர் ஃபின்
தமிழாக்கம்
சோ.சந்திரசேகரன்
தலைவர்
சமூக விஞ்ஞான கல்வித்துறை கொழும்பு பல்கலைக்கழகம்
மா.கருணாநிதி
விரிவுரையாளர் சமூக விஞ்ஞானக் கல்வித்துறை கொழும்பு பல்கலைக்கழகம்

Page 32
ஒரு சுதந்திர சமுதாயத்தில் அரசியல
ஒரு புதிய ஒழுங்கை அறிமுகஞ் செய்வதற்காக ஏற்றுக்கொள்ளும் த்லைமைத்துவம் மிகவும் கடினமானது. அதனைவிட ஏற்றுக் கொள்ள மிகவும் கடினமானதோ, வெற்றி என்பது நிச்சயமற்றதோ, வழிநடத்த மிகவும் அபாயகரமானதோ எதுவும் இல்லை
நிக்கலோ மக்கியாவல்லி(1532)
அறிமுகம்
அரசியல் எங்கும் காணப்படுகின்றது. ஒவ்வொரு நாட்டிலும், நிறுவனத்திலும் கூட்டுத் தாபனத்திலும், குடும்பத்திலும் அரசியல் உள்ளது. கிரெம்பிளினிலிருந்து வெள்ளை மாளிகைவரை கம்பனிதலைமையகத்திலிருந்து தொழிலாளர் சங்கம் வரை ஆர்ஜெண் டினாவிலுள்ள ஒரு பண்ணையிலிருந்து வார்சோவிவிலுள்ள ஒரு கடை வரை அரசி யல் காணப்படுகின்றது. மனித அபிலாசைகள் ஓர் ஒழுங்கான முறையில் தொடர வேண்டுமெனின் ஒவ்வொரு சமுதாயத்திலும், கட்டமைப்பினுள்ளும், உறவுகளிலும் அதிகாரமானது சரியான முறையில் பங்கிடப்படுவதோடு வேற்றுமைகள் சீரமைக்கப்ப டவேண்டும். இதுவே அரசியலின் பின்னணியாகும்.
இரண்டு மனிதர்கள் ஒன்றிணையும் போது வேற்றுமைகள் உருவாகுவது இயல்பாகும். ஆனால் அவ்விருவரும் இசைவுடன் சகவாழ்வு வாழவேண்டுமெனின் அவ்வேற்று மைகள்களையப்படவேண்டும்.நிறைய மனிதர்கள் ஒன்றிணையும்போது வேற்றுமை களும் பெருக்கமடைந்து சமாதானத்துக்கான தேவையும் அதிகரிக்கின்றது.அரசியல் இத்தேவையை நிறைவு செய்கின்றது.அரசியலானது சமுதாயத்தின் சகல மட்டங்களி லும் ஊடுருவி செயலாற்றும் ஒருசமாதானசக்தியாகும். அரசியல்இன்றேல் அராஜகம் தான்மிஞ்சும். அரசியல் என்பது மிகத்துல்லியமான ஒரு விஞ்ஞானமல்ல. அது வலுவுள்ளவர்களின் கலையாகும் என 19 ஆம் நுாற்றாண்டில் பிஸ்மார்க் கூறியதிலி ருந்து பல பெருந்தலைவர்களும் இதனை ஆமோதித்து வந்துள்ளனர் இக்கூற்றிலுள்ள நடைமுறைத் தத்துவமானது அரசியல் என்பது எப்போதுமே பரோபகாரமானதல்ல (benevolent)என்ற கருத்தினை முன்வைக்கின்றது.
வலுவுள்ளவர்கள் தீமையானவர்களாக இருக்கக்கூடும். அத்துடன் பேராசை, தவருன முகாமைத்துவம், ஊழல், தேக்கநிலை, அழிவு ஆகியவற்றுக்கும் இட்டுச் செல்லுகின் றன. ஏனெனில் சர்வாதிகாரிகளும், எதேச்சாரிகளும் குறிப்பாக ஜேர்மனியில்நாஸி,ரூ ஷியாவில் ஸ்டாலினிஸ்ட், ஈராக்கில் சதாம் ஹஸ்செயின் வரை அரசியலில் ஈடுபட்ட னர்.அரசியலானது ஒர் ஒழுக்கக் கோவைக்கு உட்பட்டு நடத்தப்படும் போதுதான் மேன்மையடைகின்றது. ஒரு சுதந்திர சமுதாயத்தில்தான் அரசியல் அத்தகைய மேன் மையான நிலையை அடையமுடியும், ஒரு சுதந்திர சமுதாயத்தில் அரசியலின்
52

நாளாந்த சராசரி நடைமுறைகள் எப்போதும் உற்சாகமூட்டுபவைகளாக இல்லை. எனினும் அதன் ஒட்டு மொத்தமான செயற்பாடுகள் உண்மையில் மேன்மையானது தான்.
அரசியல் அசிங்கமானதாகவோ, சமரசப்பாங்கு உடையதாகவோ எப்பொழுதும் நோக்கப்படுகின்றதுடன் சிலவேளைகளில் இது உண்மையாகவும் கூட இருக்கின்றது. சில விடயங்களில் வாக்குகளுக்காக அரசியல் வாதிகள் பேராசைக்கு அடிமைப்படுவ தோடு லஞ்சமும் வாங்குகின்றனர். தம்மால் உண்மையிலேயே சாதிக்க முடிவதற்கும் மேலதிகமாகத் தாம் சாதிப்போம் என்று பொய்யான உறுதிமொழிகளை வழங்குகின்ற னர். ஒரு தனிப்பட்ட அரசியல்வாதி ஒரு சனநாயகத்தில் தனது சகலதேவைகளையும், ஆசைகளையும் ஒரு போதும் அடைந்து விடமுடியாதாகையால் அரசியல் என்பது உண்மையிலேயே ஒரு சமரசக்கலைதான். ஆனால் ஒரு சனநாயத்தில் அரசியல் என்பது இதனைவிடப் பரந்தது. அது மக்கள் தனது நாட்டின் தலைவிதியையும், சமூகத்தின், குடிமக்களின்நல்வாழ்க்கையையும் தீர்மானிக்கும் கொள்கை உருவாக்கத் தில் உறுதியாகச் செல்வாக்கு செலுத்த வழிவகுக்கும் ஒரு கருவியாகும்.
ஒரு சுதந்திர சமுதாயத்தை மற்ற சமுதாயங்களைவிடச் சிறப்புடையதாக்கும் காரணி கள் யாவை. முதலாவதாக, குடிமக்கள் சுதந்திரமானர்கள். அதாவது தமது கருத்துக் களை வெளியிடவும்.தமது சொந்தநலன்களைப்பின்பற்றவும் சுதந்திரமுடையவர்கள். மிகவும் முக்கியமானது என்னவெனில் ஒரு சுதந்திர சமுதாயத்தில் அரசாங்கமானது ஆளப்படுபவர்களுடைய சம்மதத்துடனும் அவர்களின் ஆழமான ஈடுபாட்டுடனும் செயல்படுகின்றது.
ஆபிரகாம் லிங்கன், சுதந்திர சமுதாயங்களின் அரசாங்கங்களை விபரிக்கும் போது அவற்றின் முக்கிய குறிக்கோள்மனிதனின்நிலையை உயர்த்துவதும், சகல மக்களி டமிருந்தும் பொய்யானசுமைகளை அகற்றுவதும், சகலரும் தமக்குரிய பெருமைப் படத்தக்க பாதையில் செல்வதற்குத் தடைஅகற்றிக் கொடுப்பதும், வாழ்க்கை என்னும் ஒட்டப்போட்டியில் சகலருக்கும் தடையில்லாத ஆரம்பத்தையும் வழங்கு வதுமேயாகும் எனக் குறிப்பிட்டார்.
சர்வாதிகார, எதேச்சாதிகார, அராஜக சமுதாயங்கள் (despotic Societies)மக்களின் சொல்லையும் செயலையும் கட்டுப்படுத்துகின்றன. தமது வாழ்க்கையைப் பாதிக்கும் மிக முக்கிய விடயங்களிலும் கூட அவர்களால் தமது அபிப்பிராயத்தை வெளியிட முடியாது. ஆனால் ஒரு சுதந்திர சுமுதாயத்தில் மக்களின் குரல் ஒலிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. இந்த சுதந்திரமும் அத்துடன் தனியாள், சிறுபான்மையோரது உரிமைகளைப் பாதுகாக்கும் உத்தரவாதமும் மனித விடயங்களில் விரும்பத்தக்கவை என்ற எல்லைக்குள் அரசியல் என்பது வல்லார்களின் கலை என்ற கருத்தினை மட்டுப்படுத்துகின்றன.
சனநாயக அரசியல் என்பது அடிப்படையில் 50 வீதத்துடன் மேலதிகமாக ஒன்று சேர்ந்து பொதுக்கொள்கையைத் தீர்மானிக்கும் ஒரு பெரும்பான்மை ஆட்சியின் செயற்பாடாகும். ஆனால் அது ஒரு நாட்டின் தனியாள், சிறுபான்மை சமூகங்களின்
53

Page 33
உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய நாட்டின் அடிப்படை அரசியலமைப்பு ஏற்பாட்டு டன் உள்ளிணைந்து செயற்பட வேண்டும். அரசியல் அமைப்பானது அரசாங்கத்தின் பங்கினை வரையறை செய்கின்து. அத்துடன் சமுதாயத்தின் மிக அடிப்படையான விழுமியங்களைக் கோவையாக்கி குடிமக்களின் உரிமைகளிலும் சுதந்திரங்களிலும் தலையிடும் அரசாங்கத்தின் (இராணுவம்,பொலீஸ் உட்பட) அதிகாரத்தையும் மட்டுப் படுத்துகின்றது.
இவ்வாறாக, அரசியல் அமைப்பை அமுல் செய்வதும், அதன் பாதுகாப்புக்களையும், வரையறைகளையும் வியாக்கியானம் செய்வதும், பிரயோகிப்பதும் வழமையாக நீதித் துறையைச் சார்ந்துள்ளதாகும். இதனால் ஒரு நியாயமற்ற பெரும்பான்மை அபிப்பிரா யத்தை நிராகரிக்கவும் அல்லது அரசாங்கத்தின் சட்டவாக்க, நிர்வாகத்துறையினால் கொண்டுவரப்படும்நீதியற்ற ஒரு சட்டமூலத்தை ஒடுக்கவும் நீதித்துறைக்குச் சுதந்திரம் தேவைப்படுகின்றது.
நடைமுறைக்கு உகந்த ஒரு நிலையான சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவது மிகவும் சிக்கவான செயற்பாடாகும். சனநாயக அரசியல் சுமுகமாக நடைபெற உதவும் சட்டங் கள், மரபுகள், விளக்கங்கள். நிறுவனங்கள் ஆகியவற்றை அபிவிருத்தி செய்ய நீண்ட காலம் தேவைப்படுகின்றது. அவற்றை உருவாக்குவதில் சமூக, பொருளாதார சிக்கல் கள் தோன்றலாம். எனினும் அமெரிக்க புரட்சிகர அரசியல் வாதியான தோமஸ் பெய்ன் (Thomas Paine) குறிப்பிட்டது போல சுதந்திரத்தின் நன்மைகளை அணுப விக்க அவாவுடையோர் அதனை அனுசரிப்பதிலுள்ள சிரமங்களையும் அனுபவிக் கவே வேண்டும்.
மேலும் பிராங்கிளின் டி.ரூஸ்வெல்ட் (Franklin DR003CWEt} வார்த்தைகளில் நிலையான சுதந்திரத்திற்கான பாதுகாப்பு என்பது மக்களின்நலன்களைப் பாதுகாக் கும் வலுவுடைய அரசாங்கமும், அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் தமது இறைமை யைப்பேனும் விடயஞானம் உள்ள மக்களுமே ஆகும். சனநாயக அரசியல் செயற் பாடு என்பது பூரணமானதோ, நிலையானதோ அல்ல. அதனால் செல்வச்செழிப்பை உத்தரவாதம் செய்யமுடியாது. ஆனால் அதுமக்களுக்குச் செல்வத்தைத் தேடும் வழி யைத் தீர்மானிக்கவும் இடை நடுவில் வழியை மாற்றவும் கூடிய உரிமையையும் வலிமையையும் வழங்குகின்றது. தவறுகள் ஏற்படுவது சனநாயக்கத்தில் இயல்பானது தான். ஆனால் ஒரு சமுதாயத்தின் அழிவுக்கான பயமுறுத்தல்கள் அதன் தவறுகளை விட, தவறுகளைத் திருத்திக் கொண்டு அவற்றிலிருந்து பாடம்படிக்க முடியாத தன் மையே ஆகும்.
இக் கட்டுரையானது ஒரு சனநாயக சமுதாயத்தின் அரசியலின் பல அம்சங்களைக் குறிப்பாக, நான்கு பிரதான கருப்பொருளை மையப்படுத்தி விபரிக்கின்றது. அவையா வன :(1) குடிமக்களின் பங்கு (2) அரசியல் கட்சிகளின் பங்கும் தேர்தல் பிரசாரத்தை நடத்தலும்; (3) கொள்கைவகுப்போன் என்ற நிலையில் அரசியல்வாதி, (4) பொதுச் ஒத்ெ தாடர்புசாதனங்களின் செயற்பாடுகள். வேறு அம்சங்களும் ஒரு சுதந்திர சமுதா மித்தில் என்னசெய்கின்றன அல்லது செய்யவில்லை என்ற அடிப்படையில் முக்கியமா னவையே. உதாரணமாக, ஒருவர் இராணுவத்தின் அல்லதுஅதிகாரத்துவ அமைப்பின்

பங்கினை ஆய்வு செய்யக்கூடும். இங்கு சனநாயக அரசியலின் நான்கு அடிப்படை அம்சங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. அதில் (1) தகவல்களைச் சுதந் திரமான முறையில் பரிமாற்றம் செய்தல். (2) மக்களின் குறிப்பான செயற்பாடுகள் அல்லது அவர்கள் சில குறிப்பான குழுக்களுக்கு ஆதரவை அளித்தல், (3) சமாதான வழியில் பெரும்பான்மை அமைதலும் கூட்டமைப்புக்கள் தோன்றுதலும், (4) பொது அலுவலர்கள் தெரிவு செய்யப்படுதல் மாற்றங்களுக்கு அதிகாரமளித்தல்.
ஒரு சனநாயகத்தில் அரசியல் என்பது வேறுபட்ட சமூகக் குழுக்களின் தேவைகளும் ஈடுபாடுகளும் ஒரு பொதுக் கொள்கையாக உருவாகும் செயற்பாடாகும்.அரசாங்கம் என்பது மனித தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளமனிதனின்புத்திசாதுரியமான ஓர் ஏற்பாடாகும். அத்துடன் இப்புத்திசாதுரியத்தினால் தனது தேவைகளை நிறை வேற்றிக்கொள்ள மனிதனுக்கு உரிமையும் உண்டு,என எட்மன்ட் பேர்க் (Edmund Burke) நியாயப்படுத்த முனைந்தார். இத்தகைய நோக்கங்களை அடைவதில் சனநா யசு அரசியலே வேறெதனையும் விட முன்னணி வகிக்கின்றது.

Page 34
குடியுரிமையும் அரசியலில் பங்கேற்றலும்
இந்த சனநாயகத்தின் குடிமக்கள் என்ற அடிப்படையில் நீங்களே ஆள்பவர்களும் ஆளப்படுபவர்களுமாவீர்கள். சட்டத்தை உருவாக் குபவர்களும் சட்டத்துக்குக் கட்டுப்படுபவர்களும் நீங்களே. ஆரம்ப மும் முடிவும் நீங்களே,
அட்லெய் ஸ்ரீவன்னன் (1953)
மக்கள் சனநாயகத்தில், அரசியல் தீர்மானங்கள் அதனுடைய சகல மக்களது பங்கேற்பு டனும் எடுக்கப்படுவதில்லை. எனவே மக்கள் சார்பாகத் தீர்மானங்கள் எடுக்கவும் அரசாங்கத்தை நடத்தவும் மக்கள் பிரதிநிகள் தெரிவு செய்யப்படுகின்றார்கள். அத்த கைய முறைமை பொறுப்புடையதாகவும், சீராகவும் நீண்டகாலம் இயங்குவதற்குப் பொதுமக்களின் பொறுப்புடைமையும் சுட்டுப்பாடும் பிரதான திறவுகோலாகும். பிரதி நிதிகள் ஒழுங்காகத் தெரிவு செய்யப்படுவதோடு தேர்தல்களுக்கிடையில் மக்களுக் குப் பொறுப்புடையோராக இருத்தல் வேண்டும். அத்துடன் பிரதிநிதிகளே கொள் கையை வகுத்த போதும் மக்களே அதன் திசையைத் தீர்மானிக்க வேண்டும்
தனிமனித பங்களிப்பு- மக்களின் உரிமைகள்
ஒரு சுதந்திர சமுதாயத்தில் குடிசார்பொறுப்புடைமை என்பது ஒவ்வொரு தனிமனிதனி லும் தங்கி உள்ளது. இப் பொறுப்புடமையை ஒரு சிறிய விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது. அரசியல் செயற்பாடுகளில் குடிமக்கள் நேரடியாகப் பங்கேற்க வேண்டு மென்பது தேவயைானதல்ல. அவர்கள் பங்கு பற்றாமை மூலம் தமது அதிருப்தியைச் சுதந்திரமாக வெளியிடமுடியும், ஆனால் முற்றாக பங்கு பெற்றாமை என்பது ஒரு தடைக்கல்லாக அமைந்து, நாளடைவில் சனநாயத்தைக் குழிதோண்டிப்புதைத்துவிட புெம் கூடும். சனநாயகம் என்பது சுய ஆளுகை உரிமையைத் ஸ்தாபிக்கும், சனநாயகம் வெற்றிபெறவேண்டும் எனில் குடிமக்கள் தமது உரிமைகளை உறுதிப்படுத்திக்கொள் வது மட்டுமன்றி ஒரு சுயாட்சிமுறைமைக்கான முழுப்பொறுப்பினையும் ஏற்றுக்கொள் ளவேண்டும்.
ஒரு சனநாயகத்தின் ஒவ்வொரு குடிமகனும் எப்பொழுதும் தனது சொந்த வாழ்க்கையி னைத் தீர்மானிக்கும் மனிதப் பண்புகளைக் கொண்டிருப்பார் என எதிர்பார்க்கப்படு கின்றது. அத்துடன் கெளரவத்தையும் தனது அறிவையும் சமூக நிலையையும் உயர்த் திக்கொள்ளும் ஆற்றலையும் அவர் பெற்றிருப்பார், மற்றவர்களுக்கு கையளிக்க முடி யாத மனிதஉரிமைகளையும் மனஉறுதியையும் அவர் பெற்றிருப்பதினால் சுயஆட்சிக் கான உரிமையையும் அவர் கொண்டிருக்கின்றார்.
5.

ஒரு குடிமகன் பயனுறுதிவாய்ந்த முறையில் பங்கெடுப்பதற்காக அவருக்கு முக்கிய பொதுவிடயங்கள் பற்றித் துல்லியமான தகவல்கள் வழங்கப்படவேண்டும். இவ்வா றான தகவல்களை ஒருவர் சுதந்திரமான மூலதனங்களான பத்திரிகை.சஞ்சிகை, புத்த கங்கள் முதலிய வாசிப்புச்சாதனங்கள். வானொலி, தொவைக்காட்சிஆகியவற்றின் செய்திஅறிக்கைகள், பிரத்தியேகக் குழுக்கள். நிறுவனங்கள் தரும் தகவல்கள், சக பிரசைகள் நண்பர்களுடனான உரையாடல்கள் ஆகியவற்றின் மூலமாகவும் அரசாங் கீத்திடமிருந்தும் பொதுஅலுவலகர்களிடம் உசாவுவதிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும். இவை ஒவ்வொன்றும் ஒரு பிரசையின் அறிவை வளர்க்கவும் அவரது அபிப்பிராயத்தைப் பண்படுத்தவும் உதவுகின்றன. எப்போதும் பல விடயங்களிலி ருந்து தகவல்களைப்பெறுவதும் சமநிலையைப் பேணுவதும் முக்கியமானவை. ஏனெ னில் நாம் பெறும் ஒவ்வொரு தகவலும் அதைத்தருபவரின் அபிப்பிராயங்கள் பக்கச் சார்புகளின் சாயலைக்கொண்டிருக்கும்.
பொதுவான அல்லது பிரத்தியேகமானதகவல்களை நல்ல முறையில் வியாக்கியானம் செய்யவும் ஒரு பிரசையானவர் நல்ல கல்வி அறிவைக் கொண்டிருக்கவேண்டும், இக்கல்வியானது அவரை விமர்சன ரீதியில் சிந்திக்கத் தூண்டுவதோடு புதிய தகவல் களை பாதுகாக்கும் அறிவுத்திறனையும் கொண்டிருக்கக்கூடியதாக இருக்கவேண்டும். நாம் இளம் பிரசைகளை சனநாயக நிறுவனங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் அறிமு கீப்ப்டுத்துவதோடு, அவர்களை எதிர்நோக்கியிருக்கும் சந்தர்ப்பங்கள். பொறுப்புக ளுக்கும் தயார்ப்படுத்தவேண்டும். அவர்கள் வளரவளர அரசியல் முறைமை, தமது வாழ்க்கையைப் பாதிக்கும் பொது விடயங்கள் பற்றி அவர்களது விளக்கங்களும் வளரவேண்டும். தனது நாட்டினைக் கட்டியெழுப்பிய ஆரம்ப நாட்களில் இக்கருத் தினை ஏற்றுக்கொண்டஐக்கிய அமொக்காவின்மூன்றாவது சனாதிபதியும் சுதந்திரப்பி ரகடனத்தின் தந்தையுமான தோமஸ் ஜெபர்சன் பின்வருமாறு கூறினார். ஒரு நாகரீசு உலகின் ஒரு நாடானது தான் தந்திரமாகவும் அறிவீனமாக்வும் இருக்க வேண்டு மென எதிர்நோக்கினால் அது என்றுமே இல்லாதவற்றையும், இனி ஒன்றுமே இருக்க முடியாதவற்றையுமே எதிர்பார்க்கின்றது.
嗣 கல்வியானது ஒரு சனநாயகத்தில் முக்கியமானதும் வலுவுள்ளதுமான ஒரு கருவியா கும்.ஆனால் அது சமுதாயத்தின் கருவியாகுமே அல்லாது எல்லார்க்கும் கல்வி வழங் கும் பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொண்டாலும்கூட அதனுடைய கருவியாகாது. பாடசாலைகளானது மாணவர்களுக்குச் சனநாயகம் எவ்வாறு செயலாற்றுகின்றது என்பதையும் எவ்வாறு அவர்கள் சனநாயகத்தில் ஈடுபடலாம் என்பதையும் சுற்பிக்க வேண்டும். ஆனால் மாணவர்களை எவ்வேளையிலும் கட்டுப்படுத்தவோ முயலக்கூ L-5,
Gurăssfissio(voting)
கிேல சமுதாயத்திலும், நாட்டையும், சமூகத்தையும், பாதிக்கும் தீர்மானம் மேற்கொள் வதில் சகல குடிமக்களும் பங்கேற்கும் நேரடி சனநாயத்தின் மூலம் ஆட்சி செய்யமுடி பாத நிலை காணப்படுகின்றது. எனவே தீர்க்கமான வரையறைகளுக்கு உட்பட்டமு

Page 35
றையில் ஆளுவதற்காக தீர்மானம் மேற்கொள்ளக்கூடிய பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதுஅவசியமானதாகும். நவீன சனநாயகங்களில் பொது அலுவலர்களைத் தெரிவு செய்வதற்காக ஒருவர் தமது இரகசிய வாக்குரிமையைக் கையாள்வதே மிக வும் அடிப்டையானதும், தெளிவானதும் குறிப்பானதுமான பங்களிக்கும் முறையா கும். நீண்டகாலமாக சமுதாயங்கள் நேர்மையான சமசந்தர்ப்பம் வழங்கும் தேர்தல் களை நடத்தக்கூடியவற்றின் ஆற்றலைக்கொண்டே அளவிடப்பட்டு வந்துள்ளன. இவ்னாறு செய்யக்கூடிய ஆற்றலைப்பெற்றவை மாத்திரமே சுதந்திரமான சமுதாயங் கள் என்னும் உரிமையைப்பெற்றுள்ளன. வாக்களிப்பதும்,தனது அரசாங்கப் பிரதிநிதி யைத் தெரிவு செய்வதில் பங்கேற்றலும் ஒரு சனநாயகத்தில் மிக உன்னதமான உரிமை களில் ஒன்றாகும்.
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற விடயத்தில் ஒரு பிரசையைப் பல காரணிகள் தாக்குகின்றன. ஒன்று ஒரு வேட்பாளர் எந்தஅளவுக்கு ஒரு குறித்த விடயம் பற்றிய வாக்காளரின் அபிப்பிராயத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறார் என்பதும் ஒவ்வொரு பிரசையும் தனது ஆர்வங்களையும், நம்பிக்கைகளையும் தனது அரசாங்கப் பிரதிநிதி வளர்க்கவேண்டுமெனவும் எதிர்பார்க்கிறார். இது அவரின் பிறப்புரிமையாகும். எனவே அவர் இதனை மிகவும் சிறப்பாகச் செய்யக்கூடிய வேட்பாளருக்கே வாக்க னிப்பார். ஓர் அரசியல் கட்சியுடன் சார்ந்திருப்பது இன்னொரு காரணியாகும், ஒரு வாக்காளர் அரசாங்கத்தில் அக்கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க ஆட்சியின் லேட் பாளருக்கே வாக்களிக்க விரும்புவார். மூன்றாவது காரணி, வேட்பாளரின் தனிப்பட்ட தகைமையாகும். குறிப்பிட்ட விடயங்களில் ஒரு வேட்பாளரின் நிலையைத்தவிர நடத்தை, குணாதிசயம், அனுபவம் ஆகியவற்றில் வேட்பாளர்கள் ஒருவருக்கொரு வர்வேறுபடக்கூடும்.இத்தகைய வித்தியாசங்கள் வாக்காளரை வெகுவாகப் பாதிக்கக் கூடும் (குறிப்பாக, கட்சிச் சித்தாந்தங்கள் ஆழமாக வேரூன்றாத சமூதாயங்களில்).
தேர்தல்களில் குடிமக்களின் ஈடுபாடு அதிகரித்து வருவதே இன்றய நவீன சனநாயகத் தின் வரலாறாகும், ஆரம்பத்தில் பலநாடுகளில் வாக்குரிமையானது ஆண்களுக்கும் கல்வியில் உயர்ந்த அதிகாரக் குழுக்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது (சொத்து டையோர்) ஆனால் காலப்போக்கில் சமத்துவத்துக்கான போராட்டம் கூர்மையடைய சொத்துரிமை, கல்வியறிவுவரிசெலுத்தல் போன்ற கட்டுப்பாடுகள் கைவிடப்பட்ட தோடு சர்வசன வாக்குரிமை சுதந்திர நாடுகளில் வழங்கப்பட்டது. உதாரணமாக, ஐக்கிய அமெரிக்காவில் 1919இல் பெண்களுக்குவாக்குரிமையும் 1985இல் கறுப்பர்க ளுக்கு வாக்களிக்கும் உரிமைக்கு முழுப்பாதுகாப்பும் வழங்கப்பட்டன. வாக்குரிமை இன்று குறிப்பிட்ட குழுக்களுக்கு மாத்திரமென மட்டுப்படுத்தப்படவில்லை. எனினும் குடிமக்கள் வாக்களிக்கும் மாதிரியில் குறிப்பிடத்தக்க வேற்றுமைகள் காணப்படுகின் றன. ஐக்கிய அமெரிக்காவை விட மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாக்களிக்கும் விகிதம் அதிகமானது. தேசிய சட்டசபைகளுக்கான தேர்தல்களில் வாக்களிக்கும் மாதிரியை அளவிடும்போது மேற்கு ஜேர்மனி 90வீதமும் பிரான்சும் ஐக்கிய இராச்சிய மும் 70-80 வீதத்துக்கிடையிலும் ஐக்கிய அமெரிக்கா 50 வீதத்தையும் கொண்டுள் ளன. இந்த வீதம் சனாதிபதித்தேர்தல்களில் சிறிது அதிகரிக்கிறது. பலநாடுகளிலும் வழக்கிலுள்ள தேர்தல் முறைமைகளை ஆய்வுசெய்யும்போது இதற்கான காரணங்கள் தெளிவாகின்றன.

சனநாயக முறையிலுள்ள முக்கிய வேற்றுமை பிரதிநிதித்துவ வகையாகும். பல ஐரோப்பியநாடுகளில் தேர்தல் முறைமையானது ஐக்கிய அமெரிக்கா.பெரிய பிரித்தா னியா போன்று பல்லின அடிப்படையிலான தனி அங்கத்துவ மாவட்டமாக இல்லாமல் விகிதாசாரப்பிரதிநிதித்துவ அடிப்படையைக் கொண்டுள்ளது. விகிதாசாரப் பிரதிநி தித்துவமானது சிறிதோ, பெரிதோ எந்தக் கட்சி யானாலும் மொத்த வாக்குகளில் அதன்பங்குஎன்ற அடிப்படையில் சட்டசபையில் தனது பிரதிநிதித்துவத்தை அதிகரித் துக்கொள்ள வாய்ப்பளிப்பதால் அது வாக்களிக்கும் விகிதத்தை அதிகரிக்கின்றது. நாட்டில் முழுமையாக ஒரு கட்சி எந்தளவு வாக்குகளைப் பெறுகின்றதோ அரசாங்கத் தில் அந்தளவு பிரதிநிதித்துவத்தையும் அது பெறுகின்றது. இதற்கெதிராக ஐக்கிய அமெரிக்காவிலும், பிரித்தானியாவிலும் ஒரு மாவட்டத்தில் பெரும்பான்மை வாக்கு களே அதனை அரசாங்கத்தில் யார் பிரதிநிதித்துவம் செய்வதென்பதைத் தீர்மானிக் கின்றது. சமூக, விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் தனிமனித வாக்கு மாவட்ட பெரும்பான்மை பிரதிநிதித்துவத்தை விட அதிகளவில் தீர்மானிக்கும் சக்தியைக் கொடுள்ளது. பங்கெடுக்கும் தன்மை பெரும்பான்மைப் பிரதிநிதித்துவத்தில் குறைந்து செல்கின்றது.
வாக்களிக்கும் விகிதத்தைத் தீர்மானிக்கும் இன்னொரு காரணி பதிவுச்சான தேவைக ளாகும். பல ஐரோப்பிய நாடுகளில் குடிமக்களின் பெயர்கள் அரசாங்கத்தினால் தகுதியுள்ள வாக்காளர் பட்டியியலில் தானாகவே சேர்த்துக்கொள்ளப்படுவதோடு அப்பட்டியல் ஒழுங்காகப் புதுப்பிக்கவும்படுகின்றது. ஆனால் ஐக்கிய அமெரிக்கா வில் குடிமக்கள் தம்மை வாக்காளர்களாகப் பதிவுசெய்ய ஆரம்பத்தில் ஒரு விண்ணப் பம் அனுப்பவேண்டும். தேர்தல் இடாப்புகளில் ஆள்மாறாட்டம், ஊழல் ஏற்படுவதை பும் தவிர்ப்பதற்கு குடிமக்கள் தம்மைப் பதிவு செய்து கொள்வதில் தீவிரம் காட்ட வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஆனால் இதே கடப்பாடு சில குடிமக்களுக்கு சுமையாகவும் குழப்பமாகவும் இருப்பதோடு அவர்களைப்பதிவுசெய்து கொள்வதில் கூட அசிரத்தை காட்டச் செய்கின்றது.
தேர்தல்களில் பங்கெடுக்கும் விகிதம் தேர்தல்கள் எவ்வளவு காலத்துக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன என்ற காரணியினாலும் பாதிக்கப்படுகின்றது. ஐரோப்பிய வாக்கா எானை விட ஐக்கிய அமெரிக்காவில் ஒரு வாக்காளன் அடிக்கடி வாக்களிக்க அழைக் கப்டுகின்றான். ஏனெனில் அங்கு உள்ளூராட்சி, மாகாண அமைப்புகளில் பல்வேறு தெரிவு செய்யப்படவேண்டிய அலுவலர்கள் உள்ளனர். ஒரு வருடத்தில் ஒரு முறையோ அல்லது பல முறைகளோ உள்ளூர், மாகான தேசிய சபைகளுக்கோ அலுவலர்களைத் தெரிவுசெய்யுமாறு ஒரு வாக்காளன் அழைக்கப்படுகின்றான். இத னால் வாக்களிக்கும் விகிதத்தில் ஓர் உயரிய விகிதத்தைக் காப்பாற்ற முடிவதில்லை. நீண்டகாலத்துக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல்கள் வாக்களிக்கும் வீதத்தைக் கூட்டுவ தாக உள்ளது. எவ்வளவு காலத்துக்கு ஒருமுறை தேர்தல்கள் நடத்தப்படுன்றன என் பதை விட எவ்வளவு ஒழுங்காகத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றது என்பதே அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுத்து, பிரதிநிதிகளை மக்களுக்குப் பொறுப்புடையோராக ஆக்குகின்றது. அத்துடன் வாக்களிக்கும் செயற்பாடே தனியாட்களை சமுதாயத்தோ டும் அவர்கள் வாழும் நாட்டுடனும் இணைக்கிறது.

Page 36
தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மக்களின் பங்களிப்பு
தேர்தல் பிரசாரம் இல்லாத ஒரு தேர்தல் அர்த்தமற்றது. வேட்பாளர்களும், கட்சிகளும் தேர்தல் பிரசார காலத்திலேயே தமது கருத்துக்களையும் செயற்திட்டங்களையும் முன் வைக்கின்றனர். அதனால் ஒரு பிரசைக்கு மிகச்சிறந்த வேட்பாளரை அல்லது கட்சி யைத் தெரிவுசெய்யநியாயமான சந்தர்ப்பம் கிடைக்கின்றது. அத்துடன் இந்தப்பிரசார காலத்திலேயே பொது மக்களுக்கு அரசியல் வாழ்வில் தீவிரமாக ஈடுபடும் வாய்ப்பும் கிடைக்கின்றது.
குடிமக்கள் தேர்தல் பிரசாரத்தில் பல்வேறு வகையில் பங்கெடுக்கின்றனர். மிகவும் தீவிரமானவர்கள் வேட்பாளர்களாக மாறுகின்றனர். அல்லது ஒர் அரசியல் கட்சியின் அல்லது வேட்பாளரின் பிரசார நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடுகின்றனர். ஒரு கட்சியில் அல்லது அரசியல்தீவிரம் காட்டும் அமைப்பில் பங்கெடுப்பது இன்னொருவ கையான ஈடுபாட்ாகும். ஒருவர்தமதுஅலுவலர்களுடன் கதைத்து எப்படி வாக்களிக்க வேண்டுமென இனங்கச்செய்தல் அல்லதுதனது வீட்டுவளவில் அல்லது வாகனத்தில் ஒரு வேட்பாளரின் சின்னத்தைக் காட்சிக்கு வைத்தல் அல்லது அரசியல் சின்னத்தை அணிதல் ஆகியவற்றின் மூலம் தேர்தலில் முக்கிய பங்காற்ற முடியும் பல நாடுகளில் தனது ஆதரவை ஒரு வேட்பாளருக்கு அல்லது கட்சிக்கு வழங்கும் நோக்கத்தில் நிதி உதவியளித்தல் மிகவும் முக்கியமானது. இந்தேர்தல்களில் அரசாங்கத்தின் ஈடுபாட் டையும் குறிக்கின்றது.
அரசியல் கட்சிகளின் பல்வேறுபட்ட நிலைப்பாடுகள் குடிமக்களின் ஈடுபாட்டைப் பாதிக்கக்கூடும். ஐக்கிய அமொக்காவில் இரண்டு முக்கிய கட்சிகளும் ஒப்பீட்டளவில் பன்முகப்படுத்தப்பட்டவை, சித்தாந்தங்கள் அற்றவையாகும். இது ஒரு சராசரிகுடிமக ணுக்கு ஈடுபாடு கொள்ள நிறையச் சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. தேசிய மட்டத்தில் கட்சியானது மிக முக்கிய பங்கு வகித்தாலும் கட்சியால் நடத்தப்படும் பிரசாரம், மற்ற சனநாயகங்களைப்போல் அல்லாது மிக அரிதானவையாகும். அமெரிக்க பிரசாரம், வேட்பாளர்கள் அவர்களது ஆதரவாளர்களின் தனிப்பட்ட முயற்சியாகும். (உள்ளூ ராட்சி மட்டத்தில் மிகவும் உண்மையாகும்). தேர்தலில் போட்டியிடும் ஒருவர் ஒரு கட்சியின் அங்கத்தவராக இருக்கவேண்டும் என்பதில்லை. ஆனால் பிரித்தானியா வில் தேர்தல்கள் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட ஒருநிகழ்ச்சிநிரலின்படி நடப்பதில்லை. மாறாக, அவை திடீரென நடத்தப்படுகின்றன. அதனால் தேர்தல் பிரசாரங்களுக்கு மிகக் குறைந்த ஆயத்தமே உண்டு. இதனால் பிரித்தானியாவில் பிரசாரமானது கட்சி அங்கத்தவரினால் உடனடியாக ஒழுங்குபடுத்தி நடாத்துவதிலேயே தங்கியுள்ளது. இந்தக்கட்சி அங்கத்தவர்களைத் தவிர, வாக்களிக்கும் செயலைத்தவிர பங்கேற்கும் வாய்ப்பானது மிக்க குறைந்த எண்ணிக்கையிரான குடிமக்களுக்கே கிடைக்கின்றது.
நவீன தகவல் தொழில்நுட்பம் பலமுக்கிய வழிகளில் தேர்தல் பிரசாரத்தையும், பங்க னிப்பையும் பாதித்துள்ளது. தொலைக்காட்சியில் வலிமையான நிலைமை வாக்காள ரின் ஈடுபாட்டைப் (குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவில் ) பலவழிகளில் மிகவும் குறைந்துள்ளது.தகவல்களை இன்று பத்திரிகைகளின்மூலமாகவோ அல்லது பொதுஅ

லுவலர்களின் மூலமாகவோதான் தொடரவேண்டுமென்பதில்லை. இது குறைந்தளவு முயற்சியுடன் விடய அறிவும், ஈடுபாடும் ஏற்பட்டு, பங்களிப்பு அதிகரிப்பதனால் தீமையான விடயமும் அல்ல. ஆபத்தான விடயமென்னவெனின் குடிமக்கள் தமக்கு தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை அல்லது வாய்மூலம் கிடைக்கும் தகவல்களை அலசி ஆராய்வதை அசட்டை பண்ணுவதாகும். தொழில்நுட்பம் அரசியல் பங்கேற் றலை அதிகரிக்கின்றது. இதனால் அதேவேளையில் குடிமக்களை அமைதியானவர்க ளாக மாற்றுகின்றது. இதனால் அவர்கள் தாம் பார்ப்பவற்றையும் கேட்பவற்றையும் சீர்தூக்கிப்பார்ப்பதை அதிகரிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
தேர்தலில் குழுவாகப் பங்களித்தலும் கூட்டுச் சேரும் சுதந்திரத்தின் முக்கியத்துவமும்
தேர்தல்களிலும் அரசியலிலும் தனிநபர்கள் முக்கிய பங்கு வகித்த போதும் பொது வானநலன்களைக்கொண்ட குழுக்கள், நிறுவனங்கள், சங்கங்கள் மூலமாகப் பங்குபற் றுதல் மிகவும் பயனுறுதி வாய்ந்தது என்று மக்கள் பலரும் நம்புகின்றனர். ஒரு சனநாய கத்தில் தனிநபர்கள் சுதந்திரமாக ஒன்று சேர்தலும், அரசின் தலையீடு இல்லாமல் தம்மைப் பல்வேறு குழுக்களாக இனைத்துக் கொள்வதும் அடிப்படையானதாகும். பொதுநோக்குள்ள மக்கள் ஒன்றினையும் போது அவர்களது குரல் பலமாக ஒலிக்கின் றது. தனித்தனியாக இயங்கும் தனிநபர்களை விட, நிறுவன ரீதியாசு இயங்கும் குழுவின் அரசியலானது பொருளாதார அல்லது சமூகப் பிரதிபலன்களை இலகுவாகப் பெற்றுக்கொள்கின்றனர். ஆகவே தமது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்காக ஒரு சனநாயக சமூதாயத்தில் வாழும் குடிமக்கள் (குறிப்பாக சிறுபான்மையினர்) தம்மைக் குழுக்களாக இணைத்துக்கொள்வது முக்கியமானது.
19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசியல் அவதானிப்பாளரான அலெக்ஸி டி.ரொக்
கோவில்லி (AlExis de Tocqueville) குறிப்பட்டதுபோல ஒரு குழுவின் எதேச்சாதி காரத்தை அல்லது ஆட்சியாளரின் ஒரு தலைப்பட்சமான அதிகாரத்தைத் தடுப்ப தற்கு கூட்டுச் சேரவேண்டிய அவசியமானது வேறு எந்த நாடுகளையும்விட ஒரு சனநாயக நாட்டிலேயே அதிகமாக வேண்டப்படுகின்றது. இவ்வாறான வேறுபட்ட வித்தியாசமான குழுக்கள் அரசியலில் இருவழிகளில் பங்குபற்றுகின்றன. முதலாவது வழி, அரசியல் பிரசாரங்களில் தீவிரமாகப் பங்குபற்றுதலாகும். தனிநபர்களைப் போல. குழுக்களும் தமது நிறுவனத்தின் கொள்கையோடு ஒத்துப்போகக்கூடிய வேட் பாளருக்கோ அல்லது அரசியற் கட்சிக்கோ ஆதரவளிக்கக்கூடும். தொழிற்சங்கங்கள் தமது தொழிலாளரின் நலன்களைக் கருத்திற்கொள்ளும் வேட்பாளரை அல்லது அரசி யற் கட்சிகளை ஆதரிக்கக்கூடும். அதேபோல வர்த்தகக்குழுக்களும் நடந்து கொள் குளும், இக்குழுக்கள் தமது அங்கத்தவரின் நலன்களைக் கருத்திற் கொள்ளும் வேட்பா எாரை அல்லது அரசியல் கட்சியை ஆதரிக்குமாறு இனங்கச்செய்ய முனைகின்றனர். அதேவேளை பொதுமக்களையும் இனங்கச் செய்ய முயற்சி செய்கின்றனர். உண்மை யில் ஒரு தனிப்பட்ட குடிமகன் தனது அனுபவங்கள், நம்பிக்கைகளின் அடிப்படையி லேயே வாக்களிக்கின்றான். ஆனால் அவனது தீர்மானம் தான் தன்னிச்சையாகத் தங்கியிருக்கும் குழுக்களிலிருந்து அவன் பெறும் தகவல்கள், அறிவுரைகளிலும் ஒர ளவு தங்கியுள்ளது.

Page 37
பொதுவாழ்க்கையில் குழுக்கள், நிறுவனங்களின் மிக முக்கிய பங்காற்றல் உண்மை யில் தேர்தல்களுக்குப் பின்னாலேயே உண்டு. ஏனெனில் தேர்தல் முடிந்த பின்னரே புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கொள்கைகளையும், சட்டங்களையும் உருவாக்குகின்றனர். இவ்வாறு அரசாங்கத்தின் சட்டத்துறை அல்லது நிர்வாகத்துறை புதிய கொள்கைகளையும், சட்டங்களையும் உருவாக்கும்போது, பல்வேறு குடிமக்கள், குழுவினரின் பொதுஆர்வங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சுதந்திரமான நிறுவனங்கள் செல்வாக்கு செலுத்த முயற்சி செய்கின்றன. இத்தகைய கொள்கை அல்லது சட்டம், குறிப்பாசுத் தமது அங்கத்தவர்களுக்கும், பொதுவாகப் பொதுமக்க ளுக்கும் நன்மை செய்யக்கூடியது என்ற அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநி திகளையும், அரசாங்க அதிகாரிகளையும் இனங்கச் செய்ய அல்லது ஆதரவு தேட இக்குழுக்களுக்குச் சந்தர்ப்பம் உண்டு,
குழுக்கள் பல்வேறு தத்துவங்கள், ஆர்வங்கள் அல்லது அபிப்பிராயங்களைக் கொண் டிருத்தல் மிகவும் இயல்பானதே. அத்துடன் அவை ஒரே விடயத்தில் தீவிரம் காட்ட வேண்டுமென்பதில்லை. சில பொருளாதார விடயங்களிலும் வேறு சில சூழலிலும் அக்கறை காட்டலாம், சில தேசியக் கல்வியிலும், இன்னும் சில உலக உணவுப்பிரச்சி னையிலும் கவனம் செலுத்தலாம். சில குழுக்கள் ஒரே இனத்துவப் பின்னணியைக் கொண்டவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யலாம். சில ஒரே சமய நம்பிக்கையைக் கொண்டவர்களை ஒன்றினைக்கலாம். இன்னும் சில குழுக்கள் ஒரே விதமான வர்த்தக நோக்கம் கொண்டவர்களையோ அல்லது ஒரே விதமான தொழிலைச் சார்ந்தவர்க ளையோ பிரதிநிதித்துவம் செய்யலாம். உண்மையில் பல்வேறு குழுக்களைப் பிரதிநி தித்துவம் செய்வதால் ஒரு தனிநபருக்கு ஒரே நேரத்தில் பல்வேறு குழுக்களுடன் அவற்றின் கருத்துகள் எதிரானவையாக இருந்தாலும் கூட சேர்ந்திருக்க முடியும்,
ஒரு சனநாயக சமுதாயத்தில் காணப்படும் பல்வேறு விதமானதும், வேற்றுமைப்பட்ட துமான இக்குழுக்களைப் பல வழிகளில் வகைப்படுத்த முடியும். சில குழுக்கள். சமுதாயத்தைப் பாதிக்கும் ஒரு குறிப்பிட்ட விடயத்தில் மாத்திரம் கருத்தைச் செலுத்தி அரசாங்கத்தில் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகின்றன. அவை தமக்குச் சார்பான அங்கத்த வர்களையும் சேர்த்துக்கொள்கின்றன. இவை ஆர்வலர் குழுக்கள் (Interest rேoups) எனஅழைக்கப்படுகின்றன.இக்குழுக்களின் அங்கத்தவர்கள் பக்கச்சார்பற்ற அரசியல் பங்கேற்றலைப் பின்பற்றுவதோடு ஒரு குறிப்பட்ட விடயத்தை அல்லது இலக்கை மாத்திரம் மையமாகக்கொண்டு செயல்படுகின்றனர். ஓர் அரசியல் சக்தி மாறுவதிலும் கொள்கைகளில் செல்வாக்கு செலுத்துவதிலும் இக்குழுக்கள் அரசியல் அலுவலர்க னில் நிர்ப்பந்தத்தை உண்டுபண்ணுவதும், ஆதரவு தேடலுமே முக்கிய செயல்களா கும். உதாரணமாக வர்த்தகக்குழுக்கள் தமது கைத்தொழில் வளர்ச்சியையும், இலாபத் தையும் பாதிக்கும் கொள்கைகளில் முக்கிய கவனம் செலுத்துகின்றன. இக்குழுக்கள் தமக்கு அக்கறையுள்ள விடயங்களைப் பொது அலுவலர்கள் தெரிந்திருக்கவேண்டும் என்பதில் விழிப்பாக இருக்கின்றன.
தேவாலயங்கங்களும் வேறு சமயநிறுவனங்களும் அரசாங்கக் கொள்கைகளில் ஒழுக் கமுடைமை பற்றியும். குறிப்பிட்ட சமயக்கருத்துகளுக்கு மாசு கற்பிக்கப்படுகின்றதா என்பதிலும் கவனமாக இருக்கலாம். இக்குழுக்கள் பொதுசன அபிப்பிராயத்தைக்
ᎬᏘ

கவனத்திற் கொள்வதோடு தமக்கு முக்கியமான விடயங்களில் ஆதரவுத் தளத்தை வலுப்படுத்திக்கொள்ள சகல முயற்சிகளும் மேற்கோள்கின்றன. தமது பிரச்சினைக ளுக்குச் சார்பாக உதாரணமாக, ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை ஒழுங்கு செய்தல், தகவல் பரிமாற்றம் ஆகியவற்றின் ஆண்டாக இக்குழுக்கள் பொதுமக்களுக்கு அறிவிப்ப தோடு அரசாங்க அலுவலர்களையும் செல்வாக்குக்கு உட்படுத்துகின்றன.
இக்குழுக்கள் தமது அங்கத்தவர்களுக்கு வேறுபல தேவைகளைச் செய்யாதுவிட்டா லும் கூட தனிநபருக்கும் அரசாங்கத்திற்கும் ஒரு பாலமாகச் செயல்படுகின்றன. இச் சூழ் நிலையில் ஒரு குடிமகன் தனியாகவன்றி ஒரு குழுவில் சேர்ந்து செயற்படுவத னால் அரசாங்கத்தின் கொள்கை உருவாக்கத்தில் அதிகசெல்வாக்குச் செலுத்தமுடிகின் றது. ஒரு குழுவின் பங்களிப்பிலுள்ள பின்னணியின் வலிமை இதுவாகும்.
குடிமக்கள் சார்ந்துள்ள இன்னொருவகையான குழுவின் முக்கியபணி அரசாங்கத்தால் வழங்க முடியாத சேவைகளை வழங்குவதாகும். தேவை ஏற்படின் இக்குழுக்களும் ஆதரவு தேட முற்படலாம். ஆனால் அவற்றின் கவனம் சுயாட்சி அல்லது தான் பிரதிநிதித்துவம் செய்யும் சமூகத்துக்கு எதுநன்மையோ அதைச்செய்வதாகும். உதார னமாக வர்த்தக சங்கங்கள் அல்லது தொழிற்சங்கங்கள், குறிப்பான தொழில்சார் குழுக்கள் அல்லது முழுமையான தொழிலாளர்கள் அல்லது வர்த்தகர் ஆகியோரின் தேவைகளைக் கவனிப்பதையே தமது நோக்காகக் கொண்டுள்ளன. அவை தமது அங்கத்தவர்களுக்கு. அவர்களது தொழில் அல்லது குடும்பத்தோடு தொடர்புள்ள விடயங்களை அறிவிக்கின்றன. தொழில் வழங்குநர்கள். முகாமையாளர்கள். அரசாங் கம் ஆகியோரின் நீதியற்ற செயல்களிலிருந்து பாதுகாக்கின்றன. அத்துடன் அரசியல் செயற்பாடுகளில் தமது அங்கத்தவர்கள் பங்கு கொள்ள வழியமைக்கின்றன். சுகாதா ரம், ஓய்வூதியம், காப்புறுதி பயிற்சி வேறு பயன்தரும் சேவைகள் மூலமாக அவை தமது அங்கத்தவர்களுக்கு உதவுகின்றன. இளைஞர் குழுக்கள் ஆகியனவும் இத்த கைய சேவைநிறுவனங்களுக்கு உதாரணங்களாகும், இளைஞர் குழுக்கள் இளைஞர்க ளைக் கவனத்திற்கொண்டு செயலாற்றுகின்றன. அயலவர் சங்கங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குச்சேவையாற்றுகின்றன. இக்குழுக்களின்நற்சேவைகளினாலேயே மக்கள் கவரப்படுகின்றனர். பிரதிநிதித்துவம் பெறுவதற்காகவும் வேறு வழிகளில் இக்குழுக் கள் வழங்கும் சேவைகளைப் பெறமுடியாமையினாலும் மக்கள் இச்சேவை நிறுவனங் களில் சேர்கின்றனர்.
பருமன், நோக்கம் ஆகியவற்றில் இக்குழுக்களுக்கிடையே பாரிய வித்தியாசங்கள் உண்டு. பருமனைப்பொறுத்தவரையில் 18 மில்லியன் உறுப்பினர்களையுடைய AFL-C10 என்பது அமெரிக்காவிலேயே மிகப்பெரிய நிறுவனமாகும். ஒரு சமூகக் குழு பத்து உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கலாம். தமது பொதுவான இலக்குக ளுக்கமைய பல்வேறு விடயங்களில் இவ் ஆர்வலர் குழுக்கள் ஈடுபடலாம். ஐக்கிய அமெரிக்காவில் குழந்தைகள் பாதுகாப்பு நிதியம், தேசிய வனவிலங்கு அமைப்பு ஆகியன இத்தகைய நிறுவனங்களாகும். குழந்தைகள் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற் கான தேசியக் குழு. திமிங்கலப் பாதுகாப்பு நிதியம் போன்ற சில நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை மிகக் குறிப்பான ஒரு விடயத்தில் மாத்திரமே மையப்படுத்துகின் றன. சேவைநீறுவனங்களைப் பொறுத்தவரை இத்தகைய வேறுபாடு ஒன்று உண்டு.

Page 38
அமெரிக்க மருத்துவ சங்கம், அமெரிக்க ஆசிரியர் சம்மேளனம், தேசிய விவசாயிகள் ஒன்றியம் ஆகியவை மிகப்பெருந்தொகையான அங்கத்தவர்களைக் கொண்டுள்ள னர். அதேவேளை நுரையீரற் பாதுகாப்புக்கான மருத்துவ இயக்குநர்களின் தேசிய சங்கம், கணித ஆசிரியர்களின் தேசிய கவுன்சில், தேசிய சோளப்பயிர் வளர்ப்போர் சங்கம் போன்றவை குறைந்த எண்ணிக்கையான அங்கத்தவர்களையும் குறிப்பான இவக்குகளையும் கொண்டுள்ளன.
அரசியல் குழுவாக பங்குபற்றுவது எவ்வகையிலும் தேசிய மட்டத்தில் மட்டுப்படுத் தப்படவில்லை. பல உள்ளூர் நிறுவனங்கள் சமூகங்களைப் பாதிக்கும் விடயங்களில் ஆர்வம் காட்டுவதோடு அவற்றைப் பெறுவதற்காக அரசியலிலும் தீவிரமாக ஈடுபடு கின்றன. பொதுசனப் பாதுகாப்பு, முதியோர் சேவை. தோட்டங்கள். பூங்காக்களைப் பராமரித்தல்,சமூக, கலாச்சார நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தல் முதலியவற்றுக்காகவும் மக்கள் சங்கங்களை அமைத்தல் கூடும். உள்ளூர் வாசிகசாவைகளை விருத்தி செய்வ தற்கு ஒரு குழு, வரலாற்றுமையங்களைப் பாதுகாக்க ஒரு குழு. இலக்கிய கலந்துரையா டல் அல்லது கொல்ப் விளையாட்டு அல்லது நடனம் பயில ஒரு குழு என்று பல்வேறு குழுக்கள் இயங்கலாம்.
அத்தகைய குழுக்கள் பொதுவாகத் தமது குழு ஆட்சிக்குள் சனநாயகக் கோட்பாடுக ளைப் பின்பற்றுகின்றன. ஒரு முறையான அரசாங்கத்தைப் போலவே தலைவர் தெரிவு,தீர்மானம் மேற்கொள்ளல், கொள்கை உருவாக்கம் ஆகியவை நடைபெறுகின் நன. பலவழிகளில் தொண்டர் நிறுவனங்களும் அல்லது சேவைநிறுவனங்களும் ஒரு சனநாயகத்தின் மாதிரிப்படிவமாக(Micr000sm) ஆக விளக்குகின்றது. ஆகவே இந்நி றுவனங்களில் பங்கெடுக்கும் குடிமக்கள் ஒரு வகையில் சனநாயக அரசியலில் பங்கெ டுக்கின்றனர். இத்தகைய பங்கெடுத்தல் மூலம் குடிமக்கள் தாம் சார்ந்திருக்கும் குழுக்க னின் கொள்கைகளில் செல்வாக்குச் செலுத்துவதோடு அகன்ற அரசியல் அரங்குக்குப் பரிச்சயமானவர்களாக மாறுவதுடன் சனநாயகரீதியான தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாடுகளிலும் பங்கெடுக்கின்றனர். உதாரணமாக ஒரு குழுத்தலைவராக அல்லது பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்படுவதன் மூலம் ஒருவர் தனக்குள்ள செல்வாக்கு மட்டத்தையும் மதிப்பதற்கான சந்தர்ப்பத்தையும் பெருக்கிக் கொள்ளமுடியும் இல்வா நாசு, மக்களாலும், அரசியல் வாதிகளினாலும் அவர் மதிக்கப்படுகின்றார். அரசியல் வெற்றி என்பது இதுவே.
சுதந்திரமாகக் கூட்டுச்சேர்த்தல் என்பது ஆற்றல் மிக்க உன்னதமான உரிமையாகும். ஒரு சனநாயக அரசியலில் சுதந்திரமாகக் கூட்டுச் சேரும் உரிமை இல்லாவிட்டால் அரசாங்க அலுவலர்களும், தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளும் தனிநபர்களையும், குழுக்களையும் கவனத்திற்கொள்ளாது ஒருதலைப்பட்சமாக நடக்கக்கூடும். எனினும் இது துஷ்பிரயோகத்துக்கு வழிவகுக்கும் என்பதை மறந்து விடக்கூடாது. ஜேம்ஸ் மடிசன் என்பவர் தனது சமஷ்டி பற்றிய கட்டுரைத்தொகுப்பில் (The Federalist Papers)எந்தவொரு சுதந்திர சமுதாயத்துக்கும். சமூகத்தின் நிரந்தரமானதும் முழுமை யானதுமான நலன்களுக்கும் ஏனைய குடிமக்களின் உரிமைகளுக்கும் எதிராக ஒரு பொதுவான எழுச்சித்துடிப்பினால் ஒன்றுபட்டுச் செயற்படும் குழுவினரால் ஏற்படும் உள்ளார்ந்த அபாயம் குறித்து எச்சரித்துள்ளார். ஒரு சனநாயகத்தின் தனிநபர்களுக்கு

வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள், சுதந்திரங்கள், உரிமைகளுக்குப்பின்னால் ஒரு முக் கியமான எதிர்பார்ப்பும் உண்டு. அதாவது ஒரு குடிமகன் ஒரு சுதந்திர சமுதாயத்தில் வாழும் ஏனைய குடிமக்களின் பல்வேறுபட்ட நலன்கள். நம்பிக்கைகள், அபிப்பிரா யங்கள் ஆகியவற்றைப் பொறுத்துக்கொள்ளவும் மதிக்கவும் வேண்டும்ென்பதே அது வாகும்.
சகிப்புத்தன்மை என்பதைநடைமுறைப்படுத்தல் கடினமானதாகும். ஆனால் சனநாயக அரசியலானது அது இல்லாமல் இயங்கமுடியாது. சகிப்புத்தன்மையை நடைமுறைப்ப டுத்த சில சட்டங்கள் உண்டு, ஐக்கிய அமெரிக்காவில் இனத்துவேச அடிப்படையி லான குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் உண்டு. கறுப்பர்களை அவமதிப்பதற்காக குகினக்ஸ் கிளான் (Ku Klux Klan)என்னும் இனத்துவேச அமைப்பினால் நடைபெ றும் யூததேவாலயங்களை மாசுபடுத்தல், சிலுவையை எரித்தல் ஆகிய குற்றங்கள் இத்தகைய வெறுப்புக்குற்றங்களில் அடங்கும். இனத்துவேச நடவடிக்கைகளுக்கு எதிரான குற்றத்தண்டனைகள் குடியியல் உரிமைச்சட்டங்களில் உண்டு. அதேவித மாக ஜேர்மனி, பிரான்ஸ் உட்பட்ட பல நாடுகளில் நாஜி பிரசாரம் ஒரு குற்றமாகும்.
ஒரு பரந்த நோக்கில் சகித்துக்கொள்ளல் என்பது சமுதாயத்தின்நியமமாகக் கருதப்படு கின்றது. சமுதாயத்தில் பொதுவான நடைமுறைகள்,ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தை கள் மூலமாக அது அமுல் செய்யப்படுகின்றது. அத்தகைய நியமங்கள்.ஒரு விடயத் தில் இருசாரார் விவாதம் நடத்தும்போது அவ்விரு பகுதியினருக்கும் சம சந்தர்ப்பம் வழங்க வழிவகுக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவில், பிரித்தானிய பாராளுமன்றத்தில் விவாதங்களின் போது மேற்கொள்ளப்படும் ஒழுங்கு விதிகளை அடியொற்றிய றொபேட்ஸ் ஒழுங்கு விதிகளேRobertsRules OrdEாபின்பற்றப்படுகின்றது. விவா தங்களும் முரண்பாடான வாதங்களும் நாகரீகமான வழியில் நடத்தப்படவேண்டும், ஆனால் ஒரு சனநாயக அரசியலிலும் கூட இவ்விதிகள் எப்போதும் மதிக்கப்படுவ தில்லை. பிரித்தானிய பொதுச்சபையில் எதிர்க்கட்சி அங்கத்தினர் அடிக்கடி பிரதம மந்திரி உரையாற்றும்போது கூச்சலும் சத்தமும் கொண்டு ஆர்ப்பரிக்கின்றனர்.
gréussei) 6TÉirl (Thc politics of Protest)
அரசியல் பங்களிப்பென்பது சில சமயங்களில் தேர்தல்கள், ஆதரவுதேடல் என்னும் எல்லைகளுக்கு அப்பால் சென்றுவிடுகின்றது. இது ஆர்ப்பாட்டங்கள். மனுக்கள். பகிஷ்கரிப்பு, வேலைநிறுத்தம் போன்றவைகளும், இவை தவிர்ந்த குடிமக்களின் நேரடி செயல்களுமாகும். சுதந்திர சமுதாயங்களில் சுருத்து வெளிப்பாட்டிற்கான இவ்ழிகள் மதித்தேற்றுக் கொள்ளப்படுகின்றன. சகல மக்களுக்கும் தமது கருத்துக் களை வெளியிட உரிமை உண்டு. ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் அமைப்பு குடிமக்களுக்குள்ள கூட்டுச்சேரும், மனுக்கொடுக்கும் உரிமையை வெளிப்படையாக உத்தரவாதம் செய்வதோடு இவ்வுரிமைகளைக்கட்டுப்படுத்தும் எந்தவொரு சட்டமும் ஆக்கப்படக் கூடாது எனவும் விதிக்கின்றது. இவ்வுரிமைகள் அரசியற் செயற்பாடுக னில் முக்கிய அம்சமாகவும் இனங்கச் செய்வதற்கான ஒரு வலுவான கருவியாகவும் விளங்குகின்றன.

Page 39
இவ்வாறான நேரடிச் செயல்கள் வழமையாக நசுக்கப்பட்ட பின்தங்கிய அல்லது ஒதுக்கப்பட்ட குழுக்களினாலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. சிலவேளைகளில் பாரம்பரியமான பங்கேற்கும் பாதைகள் தமக்குச் சாதகமாக இல்லாததினால் சிறுபான் மையினராலும் இவை பயன்படுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்க, பிரான்சியப் புரட்சிக்கு வழிகோலிய ஆரம்ப காலச் சம்பவங்களே நசுக்கப்ப்ட்ட குழுக்கள் தமது அரசாங்கங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழும்புவதற்கு எதிர்ப்பு அரசியவைக் கைக் கொண்டமைக்கான ஆரம்பகால உதாரணங்களாகும், (அந்நாட்களில் சனநாயக மற் றும் அரசாங்கங்களினால் இச்செயல்கள் சட்டத்துக்கு எதிரானவையாகக் கருதப்பட் டன. ஆனால் இன்று அவை எதிர்ப்பின் நல் விளைவுகளுக்கான சின்னங்களாக நிற்கின்றன) ஐக்கிய அமெரிக்காவில் இனப்பாகுபாட்டை முறியடிப்பதற்கும் வாக்குரி மையைச் சகலருக்கும் வழங்குவதற்கும் முயன்றவர்கள் பெரிய-அளவில் பலாத்கார மற்ற எதிர்ப்பினை மேற்கொண்டனர்.
அண்மைக்காலத்தில் எதிர்ப்பு என்பது மக்களின் மிகச் சிறந்த உபாயமாக மாறி உள்ளது. கிழக்கு ஐரோப்பாவை ஆக்கிரமித்த சனநாயகத்துக்கான மக்கள் எதிர்ப்பு இயக்கங்கள் எதேச்சாதிகார கம்யூனிஸ்ட் குழுவினரை வெற்றிகரமாக விரட்டியடித்த னர். ஐக்கிய அமெரிக்காவிலும் அறுபதுகளில் பரவி மேற்கத்திய சமூகங்களை உலுக் கிய மாணவர் அமைதியின்மை இதற்கு உதாரணமாகும். அன்று நன்கு படித்த இளை ஞர்கள். பல்கலைக்கழகங்களினதும் அரசாங்கத்தினதும் பல்வேறு கொள்கைகளை எதிர்த்து வீதிகளில் மறியல் செய்தனர். அன்று முதல் அணுவாயுதங்கள், வளிமாசடை தல், தென்னாபிரிக்கா தொடர்பான வெளிநாட்டுக் கொள்கை, கருச்சிதைவு தொடர் பான உள்நாட்டுக் கொள்கைகள் தொடர்பாகப் பல குழுக்கள் எதிர்த்துள்ளன. தமது சார்புகளுக்குக் கூடிய கவனம் பெறுவதற்காக சிறப்பான, சில வேளைகளில் விநோத மான ஆர்வங்களுக்கிடையே சிறு குழுக்களும் கூட ஊர்வலங்களையும் மறியல்களை யும் நடத்தக்கூடும். மறியல்காரர் மக்களின் கவனத்தை ஈர்க்கப் பாடுபடுவதினால் பொதுசன தொடர்பு சாதனங்கள் இவ்விடயங்களில் முக்கிய பங்கேற்கின்றன. ஓர் ஆர்ப்பாட்ட ஊர்வலம் பற்றிய தொலைக்காட்சியிலோ அல்லது பத்திரிகைகளிலோ செய்தி வரும் போது அதன் விளைவுகள் பாரதூரமாக அதிகரிக்கின்றன.
அண்மைக்காலங்களில் எதிர்ப்பியக்கம் பிரசைகளின் பன்முகப்படுத்தப்பட்ட நேரடிப் பங்களிப்பு என்ற வகையில் அரசியலில் வெகுவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. எனினும் பகிஷ்கரிப்பு அரசியல் எதிர்மறையான விளைவுகளையும் கொண்டுள்ளது. எதிர்ப்பு உரிமையானது துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் அல்லது மிகவும் தீவிரமாக் கப்பட்டால் அது தேர்தல் செயற்பாடுகளின் சட்டவரம்பைச் சிதறடிக்கின்றது. கட்டுமீ றிப்போகும் எதிர்ப்பு, பலாத்காரம், குழப்பக்காரர் ஆட்சி, குழப்பம், குறுகிய நலன்க ரிேல் கவனம் ஆகியவற்றில் முடிகிறது. அத்துடன் சனநாயக செயற்பாடுகளை இழிவுப டுத்துவதோடு தனிநபர் உரிமைகள், சுதந்திரங்களின் இழப்புக்கும் வழிவகுக்கின்றது.
நியாயமற்ற கொள்கைகள், நடைமுறைகள் அல்லது அரசாங்கங்களுக்கு எதிராகப் பொதுத் தாக்கத்தை உருவாக்குவதற்காக அரசியல் எதிர்ப்பு நன்றாகப் பயன்படுத்தப் பட்டு வந்திருக்கின்றது. ஐக்கிய அமெரிக்காவில் குடியியல் உரிமைக்கான இயக்கம், சிலி, பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சனநாயக இயக்கங்கள்

ஆகியன இத்தகைய அரசியல் எதிர்ப்புக்கு உதாரணங்களாகும். ஆனால் மக்களிடம் ஆதரவு தேடும் அமைதியான இனக்கமுறைலான பகிஷ்கரிப்புக்கும், மக்களைப் பகைத்துக்கொண்டு அவர்தம் ஆதரவை இழந்து விடும் அழிவைத்தேடும் தடைகளை உருவாக்கும் எதிர்ப்புக்கும் உள்ள வித்தியாசத்தை சுதந்திர சமுதாயங்கள் உணர வேண்டும்.
ஐக்கிய அமெரிக்காவில் அண்மையில் நடந்த கருச்சிதைவுக்கு ஆதரவான,எதிரான இயக்கங்களின் சில நடவடிக்கைகள் இத்தகைய இடையூறு விளைவிக்கும் பகிஷ்கரிப் புக்குச் சிறந்த உதாரணங்களாகும். உதாரணமாக, சில கருச்சிதைவுக்கெதிரான குழுவி னர், வைத்தியர்கள், நோயாளிகளின் மீது மிருக இரத்தம் நிறைந்த பைகளை வீசி எறிந்தனர். மத்திய கிழக்கில் பலஸ்தீனியரின்எதிர்ப்பு பலாக்காரத்தைக் கொண்டிருந்த துடன் வேண்டுமென்றே அதனைத் தமது எதிர்ப்புக்களில் இணைத்துக்கொண்டனர். தீவிர வலதுசாரி, இடதுசாரி குழுவினர் அடிக்கடி ஆத்திரமூட்டும் தந்திரோபாயங் களை மேற்கொண்டனர். எதிர்ப்பு:அரசியல் இறுதியில் பலாத்காரமாகவோ பயமுறுத்த வாகவோ சீரழியக்கூடாது. மாறாக,அது தனிநபர்களுக்குத் தமதுநலன்கள். நம்பிக்கை கள், விருப்புகளைச் சுதந்திரமாக வெளியிடும் ஒரு கருவியாக விளங்கவேண்டும்.
7

Page 40
II
அரசியல் கட்சிகள், பொதுத்தேர்தலும் பிரசாரமும்
அரசியல் சார்பான பொதுவாழ்கை மனிதர்களின் வாழ்க்கையில் ஒரு மகுடமாக விளங்குகின்றது. இளைஞர்களுக்கு மிசுப்பயனு டைய ஓர் அபிலாசையாகும். இன்றும்கூட அரசியல் ஒரு மகத்தான மிகக் கெளரவமான ஒரு செயற்பாடாகும்,
ஜோள் புச்சன்,தீ,
குடிமக்களைக் கொண்ட குழுவொன்று அரசியல் கட்சியாகும், இவர்கள் பொதுவான விருப்புக்கள் அல்லது கருத்துக்களைக் கொண்டவர்கள். அரசாங்கத்துக்குத் தமது உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்பவர்கள். பொதுக்கொள்கையை உருவாக்குப வர். தீர்மானங்களை மேற்கொள்பவர்கள். நவன்பேனும் குழுக்கள், மக்கள் குழுக்கள் போன்ற ஏனைய நிறுவனங்களும் பொதுஉத்தியோகத்தர்களைத் தெரிவுசெய்தல் மற் றும் கொள்கைத்தீர்மானம் மேற்கொள்ளல் தொடர்பாக செல்வாக்கு செலுத்துவர். ஆயினும் அரசியல் கட்சியொன்று இவற்றினின்றும் சற்று வேறுபட்டது. தேர்தலில் வெற்றியீட்டுதல் மற்றும் அரசாங்கத்துக்கு வேண்டிய உத்தியோகத்தர்களை வழங்கு தல். கொள்கைத் தீர்மானங்களுக்கு உருவங் கொடுத்தல் ஆகிய காரணங்களால் இது நிலைத்து நிற்கின்றது. அத்துடன் மக்களுடைய கருத்துக்களையும் விருப்பங்களையும் அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் செய்வதினாலும் இவை நிகழ்கின்றன.
சனநாயக நாடுகள் பலவற்றில் அரசியல் கட்சிகளின் தொழிற்பாடுகள் வேறுபட்டன வாக உள்ளன. இவை அரசாங்கத்துக்கு வேண்டிய ஆளணியினரைச் சேர்த்துக்கொள் கின்றன அல்லது நியமிக்கின்றன. பொது அலுவலர்களை தேர்ந்தெடுப்பதற்கான கட்சியின் கொள்கைகள், இலக்குகளை ஆக்குதற்கும் அமுல்படுத்துவதற்கும் தேவை யான தலைமைத்துவத்தைத் தெரிவு செய்வதன் மூலம் அரசாங்கத்தின் மீது செல்வாக் குச் செலுத்துகின்றது. அத்துடன் முக்கிய நோக்கங்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற் கும் அதற்கு ஆதரவளிப்பதற்குமாகத் தமது கட்சியைச் சார்ந்த பொதுஅலுவலர்க ரூக்கு உற்சாகமூட்டுகின்றன. அரசியல் கட்சி அதிகாரத்தில் இல்லையானால், அது ஆளுங்கட்சியின் பொறுப்புக்களை, அவற்றின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தல், விமர்சித்தல், மாற்றுக்கொள்கைகளை வழங்குதல் ஆகியவற்றின் மூலம் உறுதிசெய்ய முயலுகின்றது.அத்துடன் விசுவாசமுள்ள எதிர்க்கட்சியாகவும் சேவையாற்றுகின்றது. அரசியல் கட்சிகள் பெருந்தொகையாள மக்களையும் கட்சியின் மீதான ஆர்வத்தை யும் ஈர்த்துச் சேர்த்துக்கொள்கிறது. அரசியல் கூட்டுக்களையும் உருவாக்குகின்றது. முக்கியமான அரசியல் விவகாரங்களில் அறிவையூட்டுகிறது. தேர்தல் தொகுதியிலுள் ளவர்களுக்கு அவற்றைத் தெரிவிக்கின்றது. வாக்காளருக்குடதவும் முகமாக அரசியல் மற்றும் தத்துவார்த்தப் பின்னணிகளை வழங்குகின்றது. சிக்கலான கொள்கைகளை அடிப்படையாக வைத்தே அலுவலர்களைத் தெரிவுசெய்கின்றது. அரசியல் முரண்பா டுகளை நாகரீகமான முறையில் அணுகுகின்றது. அரசியல் வேறுபாடுகள் மூலம்

தோன்றும் முரண்பாடுகள், பகைமைகளை இல்லாமல் செய்து நாட்டில் ஒற்றுமையை உண்டாக்குகின்றது.
கட்சி முறைமை
அரசியல் கட்சிகளின் இயல்பும் அவற்றின் தொழிற்பாடும்நாட்டுக்குநாடு வேறுபடும். அது வரலாறு, பண்பாடு, யாப்பின் எதிர்பார்ப்புகள், நாட்டினுடைய தலைவரைத்தெ ரிவு செய்யப்பயன்படும் முறைகள் போன்றவற்றில் தங்கியிருக்கும்.
ஒற்றைக் கட்சி அரசியல் முறைமையால், அதுஅதிகாரவர்க்கத்துடன், பாசிஸ்ட்டுகளு டன் அல்லது கம்யூனிஸ்ட்டுகளுடன் கூட்டுச் சேர்ந்திருப்பது மட்டுமல்லாது, உத்தி யோகபூர்வமான அரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய அரசியல் நிறுவனங்களை இயங்கவி டாமல் தடைசெய்கிறது. ஏறக்குறைய சகல விடயங்களையும் பொறுத்தவரையில் ஒற்றைக்கட்சி முறைமையானது.(One-Party Systems)சனநாயகரீதியற்றது. கட்சித்த லைவர்கள் சகல கொள்கைகளையும் கட்டுப்படுத்துவார்கள், தனிப்பட்ட முறையில் தீர்மானங்களை மேற்கொள்வர். கருத்துவேறுபாடுகள் தோன்றும்போது அல்லது சன நாயகப் போக்குடைய செயற்பாடுகளின் போது சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள் ஏாமாட்டார்கள். சீனா,ஈராக் அல்லது சாய்ரே போன்ற நாடுகளில் ஒருகட்சி முறைமை சனநாயகத்துடன்இணைவுறாதவகையில் தோற்றம் பெற்றனவாயினும் சுதந்திரசமுதா யத்துடன் தொடர்புடையது. ஆயினும் ஒருகட்சியின் ஆதிக்கத்துக்கு உதாரணமாக வரலாற்றுரீதியாகவும் சில நாடுகளைக் குறிப்பிடக்கூடியதாக உள்ளது. பொதுவாக அவை அடக்குமுறைக்கு உட்படுபவையல்ல. மெக்சிக்கோ, நைஜீரியா, எகிப்து போன்றவற்றை இவ்வகையில் குறிப்பிடலாம்.
சனநாயக அரசாங்கங்கள் பல்வேறு அரசியற் கட்சிகள் சுதந்திரமாக இயங்குவதை அனுமதிக்கின்றன. மடிசன் என்பவர் தமது கூட்டாட்சி பற்றிய கட்டுரைகளில் ஒரு சுதந்திர சமுதாயத்தின் அரசியலுக்கு அரசியற் கட்சிகள் முக்கியமானவை என்று குறிப்பிட்டார். அரசியற் கட்சிகள் இல்லாதொழியும்போது பொதுமக்களின் பாது காப்பிற்கு அபாயமேற்படுகின்றது அல்லது சுதந்திரம் முற்றாக இல்லாதொழிகின் றது.பல கட்சிமுறை ஐக்கிய அமெரிக்கா,இந்தியா, ஜப்பான் மற்றும் பல்வேறு ஐரோப் பிய, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் சில ஆசிய, ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படு கின்றன. பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி, ஸ்கன்டிநேவியா, சிலி, இஸ்ரேல் ஆகிய நாடுக னில் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட அரசியற் கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றப் போட்டியிடுகின்றன. ஆயினும் பெரும்பாலான நாடுகளில் பரந்த முறையில் பல்வேறு நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இரண்டு அல்லது மூன்று கட்சிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. உதாரணமாக, ஜப்பானில் நீண்ட காலமாக லிபரல் சனநா யகக்கட்சி ஆட்சிசெய்துவருகின்றது. அங்கு சோஷலிசக்கட்சி முக்கிய எதிர்கட்சியாக விளங்குகிறது. பெரிய பிரித்தானியாவில் பழமைக்கட்சியும், தொழிற் கட்சியும், லிப ரல் சனநாயகக்கட்சியும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஐக்கிய அமெரிக்காவில்குடியர சுக்கட்சியும், சனநாயகக்கட்சியும் இயங்குகின்றன. இல் ஒவ்வொரு நாட்டிலும் அரசி யல் கட்சிகள் பரந்த அளவிலான பிரசைகளை (உதாரணமாக, தொழில்முயற்சியாளர்

Page 41
கள்,தொழிலாளர்கள்,கத்தோலிக்கர்கள், கற்றறிவாளர்கள்) பிரதிநிதித்துவப்படுத்து கின்றன.
இந்நாடுகளில் சிறிய கட்சிகளும் காணப்படுகின்றன. அவை ஒரு குறிப்பிட்ட சித்தாந் தத்தை, ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைக் கருத்திற் கொண்டவை அல்லது பிரதான கட்சிகளில் சேரவிரும்பாத எதிர்ப்புணர்வு கொண்ட வாக்காளர்களைக் கொண்டவை. ஐக்கிய அமெரிக்காவில் பெரும்பான்மை பிரதிநிதித்துவ முறை காணப்படுகின்றது. அங்கு பெரும்பாலான இயக்கங்கள் சில காலமே இயங்கின. தொடர்ந்து இயங்குவன வும் தேசிய தேர்தல்களில் சிறிதளவு தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன. ஏனெனில் அவை போதிய மக்கள் ஆதரவைப் பெறுவதில்லை. (ஆனாலும் சில சிறிய கட்சிகள் செல்வாக்குடையவை. ஏனெனில் அவற்றின் கருத்துக்களையும் நிலைப்பாடுகளை யும் பிரதான கட்சிகள் பயன்படுத்துகின்றன). இஸ்ரவேலிலும் சிறிய கட்சிகள் சில உண்டு, அந்நாட்டில் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் காணப்படுவதால் கூட்டரசாங்கங் களை அமைப்பதில் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்நாட்டில் முக்கிய கட்சிகளான லிகட் (Likud), தொழில் கட்சி என்பன போதிய பெரும்பான்மை பெறாதவிடத்து, சிறிய கட்சிகள் அரசாங்கம் அமைக்கத் தமது ஆதரவை வழங்கத் தமது கோரிக்கை களை வலியுறுத்துகின்றன.
ஐக்கிய அமெரிக்காவிலுள்ள பிரதான அரசியற் கட்சிகள் செயல்முறைப்பாங்குடை யவை, சித்தாந்தப் போக்குடையவை, பன்முகப்படுத்தப்பட்டவை. இவ்வாறான முறையில் அரசியற் கட்சிகள் வளர்ச்சியடையப் பல காரணங்கள் உண்டு. எனினும் இரு முக்கிய காரணங்களைக் குறிப்பிடலாம். அமெரிக்காவின் கூட்டாட்சிமுறையும், பன்முகப்படுத்தப்படுதலும் அரசாங்க முறையில் முக்கிய அம்சங்களாகும். தனித்தனி மாநிலங்களும் உள்ளூர் பகுதிகளும் அரசாங்கத்துக்குரிய அதிகாரங்களைப் பெற்றுள் ளன. அத்துடன் வெற்றி பெற்ற அரசியற்கட்சி சகலவற்றையும் செய்ய முடியும் என்பதால் அரசாங்க அலுவலர்களையும் அவையே தெரிவு செய்கின்றன. ஒரு குறிப் பிட்ட பகுதியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெறுகின்ற வேட்பாளர்கள் வெற்றி பெறும் முறை கடைப்பிடிக்கப்படுகின்றது. எல்லா மட்டங்களிலும் வேட்பாளர்கள் இவ்வாறே தெரிவு செய்யப்படுகின்றனர். இவ்வாறான முறையின் காரணமாக சிறு கட்சிகளின் ஆதரவாளர்கள் பிரதான கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டி யுள்ளது. இதனூடாக அரசாங்கம் மேற்கொள்ளும் தீர்மானங்களின் மீது செல்வாக்கு செலுத்த முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர். இம்முறைக்குப் பதிலாக ஐக்கிய அமெரிக்காவில் உள்ள சட்டசபை ஆசனங்களை விகிதாசாரப்பிரதிநிதித்துவ அடிப்ப டையில் (பல ஐரோப்பியநாடுகளில் உள்ளதுபோன்று) பகிர்ந்தளிக்கப்பட்டால், சிறிய கட்சிகள் முன்னேற இடமுண்டு. பல கட்சிமுறை பற்றி அதிகமாகப் பொதுமைப்படுத் திக்கூறுவது சரியல்ல. ஐரோப்பிய நாடுகளில் ஒற்றையாட்சி முறையும் பாராளுமன்ற முறையின் கீழ் பல கட்சி முறையும் உண்டு அதவாவது பெரும்பான்மைக் கட்சியின் கட்டுப்பாட்டில் சட்டவாக்கத்துறையும்(பாராளுமன்றம் ), நிர்வாகத்துறையும் (அமைச்சுக்களும்) வருகின்றன.
ஐக்கிய அமெரிக்கநாடுகளின் விடயத்தில்இது சற்றுவேறுபடுகிறது. அங்கே அரசியல் கட்சி உத்தியோகத்தர்கள் எப்பொழுதும் நிறைவேற்றுப் பிரிவினைக் கட்டுப்படுத்து
70

வார்கள், (சனாதிபதியும் நிருவாகத்திணைக்களங்களும்). வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த அங்கத்தவர்கள் சட்டவாக்கப்பிரிவிலுள்ள (காங்கிரஸ்) ஒன்று அல்லது இரண்டு சபைகளையும் கட்டுப்படுத்துவர். இவ்வகையான அதிகாரப்பிரிவினை முறைமையானது தடைகளை ஏற்படுத்துவதுடன் ஒரு கட்சியின் அல்லது அரசாங்கத் தின் ஒரு பிரிவின் மேலாண்மையைத் தடுக்கவும் உதவுகிறது. ஆயினும் கொள்கையில் அடிக்கடி மாற்றங்களை ஏற்படுத்தத்தடையாக இருக்கிறது. குறிப்பாக, கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்க வாக்காளர்கள் நிறைவேற்றுப்பிரிவினையும் சட்டவாக்கப்பி ரிவினையும் வெவ்வேறு கட்சிகள் கட்டுப்படுத்த வேண்டும் என விரும்பிவந்துள்ள
soft.
பெரும்பாலான பாராளுமன்ற முறைமையின் கீழுள்ள மக்கள் தனிப்பட்டவொரு அபேட்சகரைத் தெரிவுசெய்வதன் மூலமாகவன்றி ஒரு அரசியல் கட்சியைத் தெரிவு செய்வதன் மூலமாகத் தம்மைப்பிரதிநிதித்துவம் செய்கின்றார்கள். அரசியல் கட்சிகள் கட்டுப்பாடுடையவை, தேசியமட்டத்தில் இயங்குபவை, பரிசோதனைக்கோ அல்லது பிரிவினைக்கோ அவை இடமளிப்பதில்லை. சனநாயகத்தில் இடம்பெறும் கட்சிக்கட் டுப்பாடு தனிமனிதனுக்கு அல்லது சொத்துக்கு எவ்வித அச்சத்தையும் ஊட்டுவ தில்லை. உற்சாகமுள்ள தலைமைத்துவத்தினூடாக ஒரு சனநாயக ஆட்சியில் கட்சி யின் கட்டுப்பாடு பேணப்படுவதற்குப் பதிலாகக் கட்சி விசுவாசமும் நிச்சயமான வெகுமதி வழங்கும் முறைமையும் கடைப்பிடிக்கப்படுமானால் அவை கட்சிஉறுப்பின ரின் சேவையை அல்லது ஆர்வத்தை மேம்படுத்த உதவும் எனலாம். உதாரணமாக, கட்சித்தலைவர்கள் விசுவாசமுள்ள உறுப்பினர்களுக்கு வேலைகளை ஒப்படைக்க அல்லது சட்டவாக்கப்பிரிவில் தலைமைத்துவப் பங்கினைக் கொடுக்க விரும்புவார் கள் அல்லது உயர்சந்தர்ப்பங்களையும் அதிகாரங்களையுங் கொண்ட பொறுப்புக் களை நிறைவேற்றுப் பிரிவில் வழங்க விரும்புவர் அல்லது தேர்தல் காலங்களில் பிரசார நடவடிக்கைகளில் அவர்களுடைய உதவியைப் பெருமளவில் பெற்றுக்கொள் வT.
இத்தகைய கட்டுப்பாடுகள் தாம் தெரிவு செய்த தலைவர்கள் மீது பெருமளவுக்கு மறைமுகமான கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வாக்காளருக்கு உதவுகிறது. ஒரு கட்சி பொதுமக்களின் பெரும்பான்மை ஆதரவைப்பெறுமிடத்து கட்சியின் சகலவிதமான செயலாற்றங்களிலும் பொதுமக்களுக்கு அதிதிருப்தி ஏற்படுமாயின் அவர்களுடைய அபேட்சகர்கள் பலர் அடுத்த தேர்தல் காலத்தில் பதவியை விட்டு விலக்கக்கூடும். அத்துடன் அரசியல் கட்சியும் அரசாங்கத்தின் மீதான கட்டுப்பாட்டை இழக்கும் அதிகாரத்தைப் பேணிப்பாதுகாப்பதற்கு அவர்களுக்கு விருப்பம் இருந்தால், தெரிவு செய்யப்பட்ட கட்சி உத்தியோகத்தர்கள், முன்னைய தேர்தல் பிரசாரத்தின்போது எடுத்துக்கூறப்பட்ட இலக்குகளையும் கொள்கைகளையும் நிறைவுசெய்யவேண்டும். பொதுமக்களின் ஆதரவைப் பாதுகாக்கவேண்டும்.
அரசியல் கட்சியை ஒழுங்கமைத்தல்
ஐக்கிய அமெரிக்காவில் இரு பிரதான அரசியல் கட்சிகள் ஒரேமாதிரியாக ஒழுங்க மைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டும் தேசியமட்டத்திலான மகாநாடுகளை நடத்து
71

Page 42
கின்றன. இம் மகாநாடுகள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை சனாதிபதி உபசனாதிபதி பதவிகளுக்கு வேட்பாளர்களை நியமிப்பதற்காக நடத்தப்படுகின்றன. பொதுவான அரசியல் கட்சியின் நோக்கங்களை அமைத்துக்கொண்டும், கட்சியின் ஒழுங்கைப் பலப்படுத்திக்கொண்டும், கட்சி பற்றிய கருத்தினைப் பொதுமக்கள் மத்தியில் தொலைக்காட்சி மற்றும் ஏனைய சாதனங்களினூடாக மேம்படுத்துகின்றனர். தேசிய மகாநாடுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் காங்கிரஸ் அரசு, உள்ளூராட்சி அலுவ லகங்களுக்கு அபேட்சகர்களைத் தெரிவுசெய்யவும், நிதிசேகரிப்பதற்கும், அடுத்துவ ரும் பொதுத்தேர்தலுக்கு வேட்பாளர்களை நியமிப்பதற்கும், கொள்கைகளை விருத்தி செய்யவும் பொதுவாக அவற்றின் தலைவர்களின் உயர்சிக்காகவும், பொதுமக்களுக்கு ஏற்ற நிகழ்ச்சித்திட்டங்களையிட்டும் உழைக்கிறது.
ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு பிரதான கட்சியும் ஒரு தலைவரினாலும் 50 மாநிலங்களிலுள்ள கட்சிக்குழுக்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட தேசிய கூட்டுக்கமிட்டியினாலும், பல்வேறு ஈடுபாடுகொண்ட குழுக்களினா லும் வழிநடத்தப்படுகின்றது.இவை அரசியல்கட்சியின் ஆதரவுக்கான பிரதானமூலங் களை உருவாக்குகின்றது. மாநிலக் கமிட்டிகள் ஒவ்வொன்றும் ஒரு தலைவரையும் மாநிலத்துக்குள் ஆட்சி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய ஒரு நிருவாகக் குழு வையும் கொண்டிருக்கிறது, (இதேவிதமான அமைப்பு உள்ளூர் நகரங்களிலும், கிரா மிய மட்டத்திலும் நிலைபெற்றுள்ளன). பெரும்பாலான மாநிலங்களில் பொதுமக்கள் ஒரு சாதாரண பிரகடனத்துடன் தமது விருப்புக்கு ஏற்ப ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து கொள்ளலாம். பொதுத்தேர்தலில் போட்டியிடும் கட்சி அபேட்சகரைத் தெரிவு செய்யும் பொருட்டு ஆரம்பமட்டத்தேர்தலில் தாம் தேர்ந்து கொண்ட கட்சிக்கு வாக்க ளிக்கும் பூரண உரிமை பொதுமக்களுக்கு உண்டு. பெரிய பிரித்தானியா, மேற்கு ஜேர்மனி, மற்றும் ஸ்கன்டிநேவியா போன்ற நாடுகளிலுள்ள அரசியற் கட்சிகள் போலன்றி, ஐக்கிய அமெரிக்க அரசியற் கட்சிகள் அதிகமான அரசியல் அதிகாரங் களை மாநிலங்களுக்கும் உள்ளூர் கட்சிக்கமிட்டிகளுக்கும் வழங்குகின்றன(குறிப்பாக மாநில, உள்ளூர் கட்சி அபேட்சகர்களை நியமிக்கவும் உள்ள அதிகாரம்). பெரிய பிரித்தானியாவில் இதற்கு முரணாக தேசியக்கட்சிகள் யாவும் நன்கு மையப்படுத்தப் பட்டனவாகவும் அவை பாராளுமன்றத்தில் கட்சித்தலைவர்களால் தலைமை வகிக்கப் படுபவையாகவும் உள்ளன. பதிலாக அவர் சார்ந்திருக்கும் கட்சியின் மத்திய குழுவுக் கான தலைவரை நியமிப்பார். மத்திய அலுவலகமானது தேர்ச்சி பெற்ற தொழிற்றகை மையுடையோரைக் கொண்டிருக்கிறதுடன் இவர்கள் தேசியமட்டத்திலான பிரசாரங் களை மேற்கொள்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைத்துவமானது கொள்கை உருவாக்குதல், தீர்மானம் மேற்கொள்ளுதல், பொதுமக்கள் ஆதரவைத்திரட்டுதல், கட்சியின் ஒழுங்கமைப்பைப் பாதுகாத்தல், பிரதம அமைச்சரால் தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்படும்பொழுது பிரசாரத்தை மேற்கொள்வதும் பிரதான பங்காகும். தேசியமட்டத்தில் நிகழும் பொதுத்தேர்தல் ஆகக் குறைந்தது ஒவ்வொரு ஐந்தாண்டிற் கும் ஒருமுறை கட்டாயம் நடத்தப்படவேண்டும். ஆனால் பாராளுமன்றம் எந்தநேரத் திலும் பிரதம அமைச்சரினால் கலைக்கப்படலாம். ஆகவே தேசியமட்டத்திலான அரசியல் கட்சி ஒழுங்கமைப்பானது ஒருசிலவாரஅறிவித்தலுடன்நடவடிக்கைகளில் ஈடுபட ஆயத்தமாக இருக்க வேண்டும். எனவேதான் மத்திய அலுவலகம் போன்ற கட்டுப்பாட்டுடன் கூடிய முழுநேர பிரசாரக்குழு தேவைப்படுகின்றது.
7.

கட்சியின் நியமனங்களை வென்றெடுத்தல்
ஐக்கிய அமெரிக்காவின் ஒன்பதாவது சனாதிபதியாகிய வில்லியம் ஹென்றிஹரிச்ன் ஒருமுறை எந்த அரசாங்கத்துக்கும் தெய்வீக வழியுரிமை உண்டு என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆளப்படுபவரிடமிருந்து ஆள்வதற்கான சட்டபூர்வமான அதிகாரத்தைப் பெற்றக்கொள்வதன்மூலமே இது கிட்டுகின்றது. எனக் கூறியுள்ள ளார். இச்செயல்முறை அரசியல் கட்சிகளினால் முறிைப்படி அபேட்சகர்களை நியம னம் செய்தலுடன் ஆரம்பித்து, தேர்தல் நடைபெறும் நாளில் வாக்குச் சீட்டுக்கள் கணக்கிடப்பட்ட பின்னர் நிறைவெய்தும்.ஐக்கிய அமெரிக்காவிலுள்ள அரசியல்கட்சி கள் நீண்டகாலமாக நிகழும் அபேட்சகர் நியமனங்களின்போது தமது பிரதான பங் கினை ஏற்றுக்கொள்கின்றன. ஏனைய சனநாயக அமைப்புகளின் நிலைமைகளிலி ருந்து இருவழிகளில் இது வித்தியாசப்படுத்துகிறது. முதலாவதாக, கட்சித்தலைவர்கள் அல்லது தீவிர ஈடுபாடுடையவர்கள் அல்லாத சாதாரண வாக்காளர்கள் அபேட்சகர்க ளத் தெரிவு செய்யும் நடவடிக்கைகளில் பங்கு கொள்வர். இது ஓர் ஆரம்பமட்டத் தேர்தலினூடாக நடைபெறும் (இத்தேர்தலிலே தமது அபேட்சகர்களைத் தெரிவுசெய் வதில் சகல கட்சி உறுப்பினர்களும் வாக்களிக்கலாம்).இரண்டாவதாக, மாநிலங்களில் அடிப்படை அமைப்புகளில், நியமனப்பத்திர தாக்கலின் ஒவ்வொருகட்டத்திலும் அது பொதுச்சட்டத்தினால் ஒழுங்குபடுத்தப்படுகிறது. நேரடியாக நடைபெறும் ஆரம்பநி லைத்தேர்தலில் மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் பொதுத் தேர்தலுக்கான திகதியைக் குறிப்பிடுவர். வாக்குச்சீட்டுக்களைத் தயார்செய்வர். வாக்குகளைக் கணக் கிடுவர். முடிவுகளை அத்தாட்சிப்படுத்துவர். ஆரம்பநிலைத் தேர்தலில் அபேட்சகர் தகுதிபெற்ற வாக்காளரிடமிருந்து ஒரு தொகுதிக் கையெழுத்துக்களை மனுவொன்றில் பெற்று, அதனைத் தேர்தல்சபை ஒன்றிடம் ஒப்படைப்பர். வாக்களிக்கும் இடம் சீட்டுக் குலுக்கல் மூலம் தீர்மானிக்கப்படும். இதற்கு ஒரு மாற்றுமுறையாக, சில ஐக்கிய அமெரிக்க மாநிலங்களிலும் ஏனைய சில சனநாயக ஆட்சியிலும், அபேட்சகர்கள் கட்சிவிடயங்களக் கவனிக்கவென ஏற்படுத்தப்பட்ட செயற்குழுவினால் தெரிவுசெய் யப்படுவார்கள் (அல்லது கட்சித்தலைவர்களைக் கொண்ட கமிட்டியினால் ) இவை கட்சி விதிமுறைகளுக்கு இயைய நடைபெறும். கட்சிச் செயற்குழுவானது, தமது அபேட்சகர்களைத் தெரிவு செய்யும் போது, தீவிரப் போக்குடையவர்கள் மீது கட்டுப் பாடுகளை மேற்கொள்ளும். பிரசித்திபெற்ற புதியவர்களுக்கு,கட்சியினுடைய ஒழுங் குமுறையான ஆதரவு இன்றி நியமனம் பெறுவது மிகக்கடினமாகும் (சில ஆரம்ப நிலை நேரடித்தேர்தலில் நிகழ்வதுபோல).
வலிமையுள்ள தேசிய அரசியல் கட்சிகள் சனநாயக செயல்முறைகளுக்குஅமைப்பை யும் உறுதிப்பாட்டையும் கொடுக்கிறது. அவர்கள் அபேட்சகர்களைத் தெரிவுசெய்வர், பொதுமக்கள் விவகாரங்களில் கொள்கை நிலைமைகளை விருத்திசெய்வர், பிரசாரங் களைத் திட்டமிடுவர், முகாமைத்துவம் செய்வர், தமது பொது உத்தியோகத்தர்களின் பொறுப்புடைமையைப் பேணுவர். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் ஒருமித்த வழிகாட்டல்களையும் தலைமைத்துவத்தையும் வழங்குவர். மறுபுறத்தில் வலிமையுள்ள தேசியக் கட்சிகள் சக்தி வாய்ந்த அங்கத்தினரல்லாதோரை, இச் செயற் பாடுகளில் ஈடுபாடு காட்டுதல், பொதுச் சேவையில் ஈடுபடுதல் என்பவற்றிலிருந்து தடைசெய்யலாம். புதிய அரசியல் இயக்கத்தையும், கருத்துக்களையும் ஒழிக்கலாம்.
73

Page 43
அத்துடன் உள்ளூர் அல்லது பிரதேச மட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்க எளில் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கலாம்.
பொதுத்தேர்தல் பிரசாரத்தை நடத்துதல்
இறைவன் ஒரு மனிதனுக்கு ஒரு பெரும்பதவியை வழங்கும் போது முதலில் அவனது மனதுக்குத் துன்பத்தையே வழங்குகின்றார் என சீன தத்துவவியலாளர் முன்சியஸ் (Mencius) 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கூறினார்.அக் கூற்றுக்கள் பல வழிகளிலும் தற்கால அரசியல் பிரசாரங்களையும் நன்கு விளக்குகின்றன. பொதுச் சேவையிலுள்ள சமகால அபேட்சகர்கள் பொதுசனத் தொடர்புச் சாதனங்கள் மற்றும் வாக்காளர்களினால் பகிரங்கமாகப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியவர்களாக உள்ளனர். விவகாரங்கள் பற்றிய விளக்கம், வாக்காளர்களுடன் விழுமியங்களைப் பகிர்ந்துகொள்ளல், தேர்தல் பிரசார வேலைகளின் போது தமது தகுதிகளையும் கருத் துக்களையும் பொதுமக்கள் மயப்படுத்தக்கூடிய சக்தி போன்றவற்றையும் மெய்ப்பித் துக் காட்டவேண்டும்.ஐக்கிய அமெரிக்காவில் தேர்தல் பிரசாரம் ஒரு வருடகாலத் துக்கு நீடிக்கும்.
ஐக்கிய அமெரிக்காவில் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் தமது சொந்தப் பிரசாரக் குழுக்கள் மூலம் கட்சிக்கு உதவி செய்ய வேண்டும். எடுத்துக்காட் டாக,அவர்கள் தொழிற்றகமை பெற்ற முகாமையாளர்கள். ஆலோசகர்கள் நிபுணர்கள் போன்றோரைத் தமது பிரசாரப் பணிக்காக அமர்த்துகின்றனர். அவர்கள் கட்சி அமைப் பினுள் இருப்பதற்கான நோக்கம், தமது சார்பாகக் கட்சியின் உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் இயக்கச் செய்வதற்காகவே, ஓர் அபேட்சகர் ஒரு தடவை நியமனம் செய்யப்பட்டால் தேசிய கட்சியின் திட்டங்கள் அல்லது பொது அரசியற் கொள்கை என்பவற்றிலும் பார்க்க முக்கியமாக அவர்களுடைய தனிப்பட்ட ஆளுமை, குணவியல்பு கொள்கை நிலைமை மற்றும் அவருடைய | L வற்றிலேயே பொதுத்தேர்தல் பற்றிய பிரசாரங்கள் கவனம் செலுத்துகின்றன. இது பிரித்தானிய முறைமையிலிருந்து பெருமளவுக்கு வேறுபடுகின்றது. (அங்கே தனிப் பட்ட அபேட்சகர் கட்சியின் தேசிய அரசியல் கொள்கைக்குக் கட்டுப்பட்டவர்), அதேவேளையில் அநேகமான அமெரிக்க வாக்காளர்கள் ஏதாயினும் ஒரு அரசியற் கட்சிக்கு விசுவாசமாக உள்ளனர். பொதுத்தேர்தல்கள் சுதந்திரமான அல்லது இருபக் கச்சார்பு (Split-Tickets)வாக்காளர் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன. கட்சிச் சின்னத் தைப் புறக்கணிக்கும் வாக்காளர்கள் தமது விருப்பங்களை அல்லது தொடர்புகளைப் பெருமளவுக்கு நேரடியாகத் தெரிவிப்பார்கள். ஆகவே அபேட்சகர்கள் தமது தொகுதி பிலுள்ளவர்களின் கருத்துக்களை அல்லது விருப்பங்களை அல்லது அரசியற் கொள் கையை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தல் அவசியமா கும். பொதுத் தேர்தலைப் பொறுத்தமட்டில் அமெரிக்க வேட்பாளர்களின் இலக்கு அத்தேர்தல்களில் அளிக்கப்படும் மொத்தவாக்குகளில் பெரும்பான்மையைக் கைப் பற்றுதலாகும், பெரும்பாலான அமெரிக்க தேர்தல் பிரசாரங்கள் தொகுதிகளை இலக் காகக்கொண்டு, அபேட்சகரின் பொதுசன நோக்கையும் அவருடைய அறிக்கைகளை யும் துணையாகக்கொண்டே வெற்றிகாணப்பட்டுள்ளது. விளம்பரப்படுத்துதல்,

அபேட்சகரின் தோற்றம், அவரின் கூற்றுக்கள். பேச்சுகள் மற்றும் தேர்தல் பிரசாரத்துக் குப் பயன்படுத்தப்படும் சாதனங்கள் எல்லாம் அபேட்சகருடய கருத்துக்களையும் ஆளுமையையும் தொடர்புபடுத்தக்கூடிய வகையிலே வடிவமைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு விடயங்களிலே ஐக்கிய அமெரிக்க அபேட்சகர்கள் சகல வாக்காளருக்கும் சமமான முறையில் வேண்டுகோள் விடுப்பதில்லை. ஆனால் தேர்தல் தொகுதியி லுள்ள வாக்களிக்கும் குழுவானது ஒரே விதமான கருத்து, புவியியல், இன, சமூக, பொருளாதார அல்லது ஏனைய பொதுவான அம்சங்களின் அடிப்படையில் பகிர்ந்து கொள்கிறது. எடுத்துக்காட்டாக ஓர் அபேட்சகர் ஒரு பிரசாரத்தை நடத்தும் போது குறிப்பான கொள்கைகளை முன்வைக்கலாம். இவை விவசாயிகள், தொழிலாளர் சங்கங்கள் மற்றும் இனச் சிறுபான்மையினருக்கும் பொருந்தும். மாவட்டத்திலுள்ள வாக்காளர்களில் குறிப்பிடத்தக்க அளவு மேற்கூறிய கூட்டுக்குழுக்களைக் கொண்ட தாக இருந்தால் இது சாத்தியமாகும். இது வெற்றிகாண்பதற்கு பிரசாரத்துக்குப் பயன்ப டுத்தப்படும், அநேகமான வளங்கள் (அபேட்சகருடைய நேரம், விளம்பரப்படுத்த லுக்கு எடுக்கும் வரவு செலவு, உதவிச் செயற்பாடுகள் போன்றவை) அத்தகைய குழுவினரிடயே ஆதரவைக் கவரும் வகையில் அர்ப்பணம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு தமது இலக்குகளை அடைவதற்கு ஏனைய குழுக்களை அந்நியப்படுத்துவது சம்பந்தமாக அபேட்சகர்கள் கவனம் செலுத்துவதுடன் தமது கூட்டினைக் கவனமான முறையில் பிரசார நடவடிக்கைகளிலே பயன்படுத்த வேண்டும், அத்துடன் தமது திறமையை நிதானமாகவும் கணக்கிடவேண்டும்.
பெரிய பிரித்தானியாவில் பொதுத்தேர்தல்கள் நிகழும்காலம் மிகக்குறுகியது. அக்கா லப்பகுதியில், பொதுத்தேர்தலில் தேசிய அரசியற்கட்சிகளும் அவற்றின் பிரசாரங்க ளூம் ஆதிக்கம் பெறுகின்றன. இங்கு வாக்காளர்கள் தமது வாக்குகளைத் தனிப்பட்ட ஒரு அபேட்சகளிலும் பார்க்க, கட்சிக்கே அளிக்கின்றனர். முன்னர் குறிப்பிட்டதுபோல ஒரு குறுகியகால அறிவித்தவோடு பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடும்நிலை பிரதம அமைச்சருக்கு உண்டு. இது கட்சிகளையும் அரசியல் முகாமையாளரின் முழுநேர அலுவலரையும் தேசிய மட்டத்தில் பிரசாரங்களை நடத்துவதற்கு ஆயத்தமாக இருக் கச் செய்கிறது. இவ்வாறான முகாமையாளருக்கு பொதுவாக நிதிவழங்கும் வசதிக ரூம் உள்ளன. அவை கட்டணமின்றித் தொலைக்காட்சிமூலம் விளம்பரப்படுத்தவும். செய்திகளைப் பரிமாற்ற அஞ்சற் கட்டணத்தைக் கொடுத்தும் உதவுகிறது. இவ்வாறே நோர்வேயிலும் பொது நிதிவழங்கும் வசதியுடன் கூடிய தேசியக்கட்சிப் பிரசார நிலையங்கள் செய்திகளை எடுத்துக்கூற உதவுவதாக உள்ளன. நோர்வேயிலுள்ள அரசியற் கட்சிகள் பிரித்தானியா மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் உள்ளவற்றிலும் பார்க்கக் குறைந்த அளவிலேயே தொலைக்காட்சி மூலம் விளம்பரப்படுத்தலைச் செய்கின்றன. அவை பெருமளவுக்கு கட்சித்தீவிர ஆதரவாளரால் வீட்டுக்குவீடு சென்று ஆதரவு தேடும் முயற்சியிலும் தங்கியுள்ளன.கட்சிச்சார்புடைய புதினத்தாள் கள் அவர்களுடைய கட்சியின் நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் வாக்காளருக்குப் பரிமாற உதவுகின்றன.
சனநாயக முறையிலமைந்த தேர்தல் செயற்பாடுகளும் அரசியற் கட்சியின் விரிவாள தொழிற்பாடும் பிரசாரங்களும் சிரமம் மிக்க ஒரு முறையாகப் புலப்படுகின்றன.
『

Page 44
நாட்டின் பிரதமரையும் தேர்ந்தெடுக்கும் வழி பெரும் செலவுக்குரியதாக இருந்தாலும் கூட, சுதந்திரமான நேர்மையான தேர்தல் செயற்பாடுகள் சகல குடிமக்களையும் பொறுத்தவரையில் தமது தலைவிதியை தீர்மானிக்கும் ஒரேயொரு அமைதியான வழியாகவும் காணப்படுகிறது. ஆபிரகாம் லிங்கனின் கருத்தின்படி மிகச்சிறந்த பொது மாற்று ஏற்பாட்டைவிட இது மிகவும் மேலானது. துப்பாக்கி வேட்டிலும் பார்க்க வாக்குச்சீட்டுகள்வலிமையானவைஎன அவர் ஆலோசனை கூறினார்.இவ்வாறான பலத்தை, அரசியற் கட்சிகள், பிரசாரங்கள் மற்றும் பொதுத்தேர்தல்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பங்குபற்றுதல் வழங்குகின்றது.

III
கொள்கையை உருவாக்குபவராக அரசியல்வாதி
உங்கள் பிரதிநிதிதான் சார்ந்துள்ள தொழிலை மட்டுமன்றி உங்க ளுக்கும் பொறுப்பானவர். அவர்தமது தீர்மானத்தை உங்களுடைய அபிப்பிராயம் காரணமாகத் தியாகஞ் செய்யமுற்பட்டால் அவர் உங்களுக்கு முறையாகச் சேவை செய்பவரல்ல. அவர்களைக் காட் டிக் கொடுப்பவர்.
எட்மன் புறூக் 1774
ஒரு முறை சேவைக்கெனத் தெரிவு செய்யப்பட்டால் அரசியல்வாதி கொள்கையை உருவாக்குபவராகவும் சட்டத்தை ஆக்குபவராகவும் மாறுகிறார். தனது சேவை, அர சாங்கத்தின் அமைப்பு ஆகியவற்றில் தங்கியிருப்பதுடன், அதுபோன்று. தனது கட்சியி லுள்ளவர்கள் பொதுத்தேர்தலில் எவ்விதம் செயலாற்றுகின்றனர் என்பதைப் பொறுத்து, அரசியல்வாதி பொதுக்கொள்கைத் தெரிவிலும் செல்வாக்குச் செலுத்தும் சில ஆற்றலையுடையவராகிறார்.
இத்தகைய செல்வாக்குகள், தொடர்ச்சியாக அமைந்ததும் வரம்புக்கு உட்பட்டதுமான சனநாயக செயல்முறைக்குள் தொழிற்படுகின்றன. பல்வேறுபட்ட விருப்பங்களைப் பிரதிபலிக்கும் மறு அரசியல்வாதிகளின் கருத்தும் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப் படவேண்டும். குறிப்பிட்ட விவகாரம் சம்பந்தமாக எடுக்கப்பட்ட இறுதித்தீர்மானமா னது வழக்கமாக ஒரு விட்டுக்கொடுக்கும் சமாதானமாக எல்லோராலும் ஏற்றுக்கொள் ளக்கூடிய பல்வேறு நிலைமகளில் கூட்டினைப்பாக இருக்கலாம். இந்தத்தீர்மானம் ஒரு கொள்கையை ஆக்கும் தனியாள் அல்லது குழுவின்உண்மையான விருப்புக்களு டன் சிறிதளவு ஒத்திருந்தாலுங்கூட ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
ஒரு சுதந்திரமற்ற நாட்டிலே, அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்களின் விருப்புத் தொடர் பாசுக் கவலைப்படத் தேவையில்லை. அவர்களுடைய நிலைமைகள் பாதுகாக்கப்படு கின்றன.மக்களும் அவர்களுடய தீர்மானங்களுக்குக் கட்டாயம் அடங்கிநடக்கவேண் டும். சனநாயகங்களில், எவ்வாறாயினும் தமது கருத்துக்களுக்கு மதிப்பளிக்காதவர்க ளைச் சேவையிலிருந்து ஒதுக்கி வைப்பதற்குப் பொதுத்தேர்தல் இடமளிக்கின்றது. ஆகவே கொள்கை உருவாக்குபவர்கள் கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது பொதுமக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் கருத்திற்கொள்ளவேண் டுமென எதிர்பார்க்கப்படுகின்றனர்.
நமது தீர்மானங்களுக்காக அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட பொறுப்புகள் யாவற் றையும் கைவிடவேண்டுமென்றோ அல்லது பொதுமக்கள் அபிப்பிராய அலையை அவ்வாறே பின்பற்ற வேண்டுமன்றோ சொல்வதற்கில்லை. ஒரு கொடுக்கப்பட்ட காலப்பகுதியில், தமது தீர்மானத்துக்குப் பொது மக்களின் ஆதரவு அல்லது எதிர்ப்பு

Page 45
எந்தளவினதாக இருந்தாலும், தமது தீர்மானத்தினால் உண்டாகும் விளைவுகளுக்கு ரிய பொறுப்புகளைக் கொள்கையை ஆக்குபவர் ஏற்றுக்கொள்கிறார். தெரிவுசெய்யப் பட்ட பிரதிநிதிகள் மீது தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது தற்கால சனநாயகத் தின் இயல்பாகும். இவை நேரடியாகத் தெரிவிக்கப்படுவதிலும் பார்க்க, சர்வசன அபிப்பிராயம்,கருத்தறியும் பொதுசனவாக்கெடுப்பு, அல்லதுநகரக்கூட்டங்கள் என்ப வற்றினூடாகத் தெரிவிக்கப்படுகிறது.
தெரிவுசெய்யப்பட்டவர் ஒருபுறம் பிரதிநிதியாக விளங்குகிறார். மறுபுறம் அவர் தொலைநோக்குடைய அரச அறிஞனாகவும் விளங்குகிறார்.இவ்விருநிலைமைகளுக் கிடையே வழமையாக ஒரு முரண்பாடு தோன்றுகிறது. மக்கள் அவர்களைத் தெரிவு செய்யும் போதுமட்டும் சுதந்திரமாக இயங்குவதுடன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் அவர்களுடய ஏற்பாடுகளில் செல்வாக்குச் செலுத்த வேண்டும். அரசாங்க முறைமையை அமைத்தல், நாளாந்தப் பிரச்சினையைத் தீர்க்க அவ்வமைப்பினைப் பயன்பயன்படுத்தல் என்பனவற்றில் மக்களின் அங்கீகாரத்தைப் பெறல் வேண்டும், அதற்கு மேற் கூறிய மக்களின் செல்வாக்கு மட்டுமன்றிச் சில அடிப்படையான அரசி யற் சட்ட ஏற்பாடுகளும் அவசியமானவையாயினும் நாம் பொதுச் சேவையாளர்க ளைச் சாதாரணமாகத் தெரிவுசெய்யும் போது அவர்களுடைய நிபுணத்துவம் மதிப்பி டும் இயல்பு ஏனைய குணாதிசயங்கள் என்பனவற்றைக் கருத்தில் கொள்கிறோம். குறுங்காலத்தில் ஒரு தீர்மானம் மக்கள் ஆதரவைப்பெறாது என்றால் அவர்கள் இப் பண்புகளைப் பயன்படுத்தித் தீர்மானங்களை மேற்கொள்வர் என நாம் நம்புகிறோம்.
கொள்கை நிகழ்ச்சித்திட்டம்
கொள்கை பற்றிய பிரச்சினை மூன்று வழிமுறைகளில் தோன்றலாம். அவற்றுள், முதலாவது எவருடைய கட்டுப்பாட்டுக்கும் உட்படாத ஒழுங்கற்ற நிகழ்வு. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு வருடாந்த வரவுசெலவுத்திட்டம். மற்றைய உதாரணம் வெள்ளம், பூமிஅதிர்ச்சி போன்ற இயற்கை அனர்த்தங்கள். இதற்குத் திட்டமிட்டநடவடிக்கைகள் தேவை. அல்லது என்ன செய்யவேண்டும் என்பதற்கான பல்வேறு தெரிவுகள் தேவுை. இரண்டாவது பொதுமக்கள் மத்தியில் வெறுப்பை அல்லது அக்கறையை ஏற்படுத்தும் ஒரு விடயம் கொள்கை வகுப்போருக்கு ஒரு பிரச்சினை ஆகலாம், கடுமையான கோடைவெப்பநிலை அல்லது சூழல் மாசுபடுதல் அல்லது பயங்கரமான குற்றங்கள் என்பவற்றால் மக்கள் தமக்குப் போதிய பாதுகாப்பில்லையென உணர்வர்.
மூன்றாவதாக, ஆட்சிக்கு வரும் கட்சி சில முக்கிய பிரச்சினைகளைக் கருத்திற் கொள் ளும், அதற்கான புதிய கொள்கைகளை வகுக்கமுற்படும். தேர்தலின்போது அரசியற் கட்சிகள் முன்வைத்த நிகழ்ச்சித்திட்டம் இதற்குப் பயன்படும்.இந்நிகழ்சித்திட்டம் பல பிரதான பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டிருந்தால் சமூகத்தில் பலத்த அரசியல் மாற்றங்கள் ஏற்படும். இங்கிலாந்தில் 1979 இல் பழமை பேணும் கட்சி வெற்றி கண்டது. இக்கட்சி பொருளாதார முறையைப் பன்மைப்படுத்தலிலும், தனியார் மய மாக்கத்திலும் ஈடுபட்டது. அத்துடன் அரசியல் துறையில் மத்தியமயம் ஏற்படுத்தப்பட் டது. இம்மாற்றங்களுக்குக் காரணம் புதிய அரசாங்கத்தின் சில தத்துவ நோக்குகளா

கும். அதன்படி அரசாங்கத்தின் பங்குக்கு ஒரு வரையறையுண்டு. அத்துடன் அதன் நோக்கங்களை அடைவதற்தான புதிய வழிமுறைகள் பற்றியதாக அத்தத்துவ நோக்கு கள் அமைந்தன. இத்தகைய கொள்கைப் புரட்சி பாராளுமன்ற அமைப்புக்களில் அதிகம் நிகழ்கின்றன. அங்கே அரசாங்கமும் சட்டசபையும் அமெரிக்காவில் நிலவும் அமைப்புக்களிலும் பார்க்க வேறுபட்ட வகையில் செயல்படுகின்றன. ஐக்கிய அமெ ரிக்காவில் சட்டசபையும் நிர்வாகப்பிரிவும் பல்வேறு கட்சிகளினால் அடிக்கடிகட்டுப்ப டுத்தப்படுகின்றன. இருப்பினும் கொள்கையில் ஏற்படும் விரைவான மாற்றங்கள் அத்தியாவசியமான அல்லது மாறிவரும் தேசிய மட்டமுன்னுரிமைகளுக்குஇடமளிக் கின்றன. இது அரசியல் அல்லது சமூகப்பெயர்ச்சியில் ஆபத்தை எதிர் நோக்கிறது. இதன் விளைவாக, அதிகமான அரசியல் பிரிவுகள் தோன்றலாம், அவை சமூகரீதி யான ஒற்றுமையில் பிளவுகளை உண்டாக்குகிறது.
ஓர் அரசியல்வாதி உரையாற்றுவதற்கு உள்ளார்ந்த விவகாரங்கள்" பற்றிய தொகுப்பு உள்ளது. அதற்கு ஏற்ப விவகாரங்களைத் தெரிவு செய்து, உரையாற்றுவதன் மூலம் பல்வேறு விடயங்களில் பல்வேறுபட்ட குழுக்களினதும் தொடர்புகளை வெளிப்படுத் தலாம். எப்பொழுதும் தயவுகாட்ட வேண்டிய குழுக்கன் இருக்கமுடியாது. மேலாக அரசியல்வாதியின் விருப்பத்திற்கு உட்படவேண்டுமானால், இத்தகைய உபாயமா னது சிறந்த பொதுக்கொள்கைகளை உண்டாக்கும் எனலாம்.
பொதுமக்களின் பங்களிப்பும் செல்வாக்கும்
அரசியல்வாதி தனக்கென்று சில கருத்துக்களையும் ஒரு சித்தாந்தத்தையும் கொண்டி ருக்கிறான். அவன் ஒரு பிரச்சினையைப் பற்றிச் சிந்திக்கும் போது அவற்றுடன் தன்னைத்தெரிவுசெய்த மக்களின் கருத்துக்களைப் பற்றி அறியவும் முயலுகிருன்,இது சகல பொதுமக்களையும் பொறுத்தவரையிலான ஓர் உபபிரிவு (Subscill-gelglb.. gir அரசியல்வாதியைத் தெரிவு செய்த வாக்காளர்கள் அவனது ஆதரவாளர்கள் எனக் கருதப்படுவர்.அரசியல்வாதி அவர்களிடமிருந்து வரும் கடிதங்களைப் படிக்கிறான். அவர்களுடள் கலந்துரையாடுகிறான். இவ்வாறு அவன் அவர்களது கருத்துக்களை அறிந்துகொள்கிறான். அரசியல்வாதி தனது ஆதரவாளருடன் நேரடியாகத்தொடர்பு கொள்வதில் சில நன்மைகள் உள்ளன. ஒரு பிரச்சினை பற்றி மக்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள், அப்பிரச்சினையில் மக்களின் அக்கறை எப்படிப்பட்டது என்பதைப்பற்றி அரசியல்வாதி நன்கு விளங்கிக்கொள்ள முடியும். இதில் ஒரு பிரதிகூலம் உண்டு. ஏனெனில் ஒரு பிரச்சினை பற்றி அரசியல்வா திக்கும் கருத்துத்தெரிவிக்க முற்படுவோர் அப்பிரச்சினை பற்றி மிகக் கடுமையாகச் சிந்திப்பவர்களாவர். எனவே அரசியல்வாதியைச் சந்திப்பவர் அப்பிரச்சினையை யிட்டு மிகக்கூடிய அதிருப்திஉள்ளவராவர். அவர்களுடைய கருத்து பெரும்பான்மை யினரின் கருத்தாக இருக்கமுடியாது.
இன்னொரு பிரதிகூலம் வாக்காளர்களுடன் தொடர்புகொள்ள செலவு செய்யவேண் டிய அதிக நேரமாகும். ஆயினும் ஐக்கிய அமெரிக்காவில் பெரும்பாலான சட்டமன் நப்பிரதிநிதிகள் தமது மாவட்ட மக்களைச் சந்திப்பதில் அதிக நேரம் செலவுசெய்கின்ற

Page 46
னர். ஏராளமான கடிதங்களைப் பார்க்கின்றனர். முக்கிய தீர்மானங்களை ஆதரித்து அல்லது எதிர்த்து வரும் தொலைபேசி அழைப்புகளைக் கவனிக்கின்றனர். உள்ளூர் பிரதிநிதிகளைக் கவனிக்கின்றனர். உள்ளூர்ப்பிரதிநிதிகள் தனிப்பட்டோரின் கருத்துக் கள், தேவைகள், முறைப்பாடுகள் என்பனவற்றைக் கவனிக்க இதைவிட அதிகமான நேரத்தைச் செலவிடுகின்றனர்.
முக்கிய பிரச்சினைகளில் பொதுமக்கள் கருத்தை அறிய மற்றொரு வேகமான வழிமு றையொன்றுண்டு.இப் பிரச்சினைகளைப் பற்றிய மக்கள் கருத்தை அறிய தொலைக் காட்சிச் சேவையினரும்பத்திரிகைகளும், தனியார் அமைப்புக்களும் பல வாக்கெடுப் புக்களை நடாத்துகின்றனர். இதனுடாக அரசியல்வாதிகள் மக்கள் கருத்தை அறியமுடி கிறது.ஆயினும் இவ்வாக்கெடுப்புக்கள் எப்போதும் நம்பகத்தகுந்தனவாக இருப்ப தில்லை. கேள்வியை அமைக்கும் முறையில் கடைப்பிடிக்கப்படும் சிறிய மாற்றங்கள் வாக்கெடுப்பு பெறுபேறுகளில் பெரியதாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அத்துடன்மிகச்சி றந்த வாக்கெடுப்புக்கள் அக்குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் ஏற்றதாக இருக்கும். ஒரு பிரச்சினை பற்றிய மக்கள் கருத்து சில புதிய போக்குகளால் மாற்றமடையலாம். வாக்கெடுப்புகள் முரண்பாடானவையாகவும் அமையலாம். எடுத்துக்காட்டாக ஒரு வாக்கெடுப்பில் பெரும்பாலானவர்கள் மேலதிக சுகாதார வசதிகளை ஆதரிக்கலாம். மக்கள் சுகாதாரத்துக்குச் செலவிடப்படும் பணம் திறமையாகப் பயன்படுத்தப்பட வில்லை, அரசாங்கம் அதேசெல்வில் சிறந்தமுறையில் சுகாதாரத்தைப் பேணவேண் டும் என விரும்பலாம். அத்துடன் பிற துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் ஒரு பகுதியைச் சுகாதாரத்துக்கு பயன்படுத்த விரும்பலாம். அல்லது பொதுமக்கள் இவ்வி டயத்தில் சரியான முதிர்ச்சியான சிந்தனையற்றவர்களாகவும், செலவின்றி நன்மைக ளைப் பெற முயற்சிக்கலாம். இவ்வகையில் கொள்கைகளை வகுப்பதில் வாக்கெடுப்பு களைப் பயன்படுத்துவதில் பல பிரச்சினைகள் உள்ளன. இவை ஒரு தீர்மானம் ஏற்ப டுத்தும் விளைவுகள் பற்றிப் பொதுமக்கள் எதனைக் கருதுவர் என்பது பற்றி அரசியல் வாதிக்குச் சரியாக ஆலோசனை வழங்காது விடலாம்.
ஒரு குறிப்பிட்ட விடயத்தில் அரசியல் வாதியின் கருத்து தனது ஆதரவாளர்களின் கருத்திலிருந்து வேறுபடும்போது அவர் மக்கள், தன்னில் வைத்திருக்கும் நம்பிக்கை பற்றிய வாக்கெடுப்பை விரும்பக்கூடும். எடுத்துக்காட்டாக சனாதிபதி மக்கள் விரும் பாத ஒரு வெளிநாட்டுக்கொள்கைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த விரும்பும் போதுமக்களின் கருத்து எப்படியென அறிய விரும்பக்கூடும். அதற்கான வாக்கெடுப் பில் அவருக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமிடத்து நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆனால் பொதுவாக மக்களால் விரும்பப்படாத ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள முற்படுவார். ஐக்கிய அமெரிக்காவில் கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதற்குப்போதிய மக்களாதரவு உண்டு. ஆயினும் சில அரசியல்வாதிகள் கொள்கையளவில் மரணதண்டனையை எதிர்ப்பர். அவர்களுடைய சிறந்த நிலைப் பாடு, பொதுமக்கள் பாதுகாப்பில் அவர்களுக்கு அக்கறையின்மையைக் காட்டுகிறது என்று பொதுமக்கள் கருதுகின்றார்களா என்பதை அவர்கள் அறிய விரும்புவர்.
ஆயினும் வாக்கெடுப்புக்கள் எப்போதும் சிறந்த வழிக்காட்டிகளாக விளங்குவ தில்லை. அரசியல்வாதிகளின் சில ஆலோசனைகள் முக்கியமானவை, தேவையா
80

னவை. ஆனால் அவர்களுக்கு மக்களாதரவு இருக்காது.இந்நிலையில் வாக்கெடுப்புக் களின் காரணமாக அரசியல்வாதிகள் இவ்வாலோசனைகளைக் கைவிடக்கூடும்.
நாட்டின் அரசியல் முறையைப்பொறுத்தவரையில் ஓர் அரசியல்வாதி ஒரு பிரச்சினை யைத் தனது அரசியல் கட்சியின் நிலைப்பாடுகளைக் கருத்திற் கொள்ள வேண்டிய அவசியம் உண்டு. தேசியரீதியாகக் கட்சிக்கொள்கைளுக்கு அமைய நடக்கவேண்டிய ஒரு கட்டாயமும் உண்டு. உள்ளூர் அலுவர்களைப் பொறுத்தவரையில் ஓர் உடனடி யான பிரச்சினை தொடர்பாக தமது கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்ப நடப்பதில் கூடிய சுதந்திரம் அவர்களுக்கு உண்டு.
பல்வேறு நாடுகளில் பல்வேறு வகையான அரசியல் முறைகள் உண்டு. அதற்கேற்ப நாடுகளுக்கிடையே கட்சி ஒழுக்காற்றலில் வேறுபாடு உண்டு. ஐக்கிய அமெரிக்காவில் இது குறைந்த அளவில் காணப்படுகின்றது. பிரித்தானியாவிலும் ஏனைய பாராளு மன்ற அமைப்பினைப் பின்பற்றும் நாடுகளிலும் கட்சியமைப்பு முக்கியத்துவம் பெறு கின்றது. அரசியல்வாதியின் தேர்தல் பிரசாரம் அவர் அதிகாரம், செல்வாக்கு மற்றும் வாக்குகளைப் பெறுதல் என்பவற்றில் அரசியல் கட்சியமைப்பே முக்கியத்துவம் பெறு கிறது. எனவே அரசியல்வாதி கட்சியின் நல்லெண்ணத்தைப் பெறுதல் வேண்டும். சிலநாடுகளில் அரசாங்கத்தலைவர் நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்படுகிறார். இந்நாடுகளில் பாராளுமன்ற முறை இல்லை. இதன்காரணமாக இந்நாடுகளில் கட்சி ஒழுக்காற்றல் குறைவு. பாராளுமன்ற முறையுள்ளநாடுகளில் அரசாங்கம் சட்டமன்றத் தின் பெரும்பாலானவர்களின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே இயங்க முடியும். இல்லாவிடில் பதவியைத் துறக்கவேண்டிவரும். எனவே இந்நாடுகளில் கட்சி ஒழுக் காற்றல் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
அரசியல்வாதி ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளும்போது தனது அண்மைக்கால அறிக் கைகளையும் நிலைப்பாடுகளையும் கருத்திற்கொள்ளுகின்றான். குறிப்பாகத் தேர்தல் முடிந்தபின்னர் தீர்மானம் மேற்கொள்ளும்போது இவ்வாறு நடக்கவேண்டியுள்ளது. சில அரசியல்வாதிகள் பல்வேறு பிரிவினரையும் திருப்திப்படுத்தவேண்டித் தனது நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றுகின்றான். இப்படியானவர்களைப் பொதுமக்களும் ஆதரவாளர்களும் பெரிதும் மதிப்பதில்லை. அரசியல்வாதி தேர்தலின்போது பலவாக் குகளை வழங்குகின்றான். அடுத்த தேர்தலின் போது தனது வாக்குறுதிகளை நிறை வேற்றியுள்ளானா எனச்சீர்தூக்கிப் பார்க்கப்படும். ஓர் அரசியல்வாதி தான் பொதுமக் கள் மத்தியில் சொன்னவற்றுக்கு எப்பொழுதுமே கட்டுப்படவேண்டும் என்பதில்லை, ஆயினும் எந்தளவுக்குத்தான் சொல்வியவாறு நடக்கின்றானோ அந்தளவுக்கு அவன் மீது நம்பிக்கை ஏற்படும்.
அரசியல்வாதிகள் தமது தீர்மானங்களின் நினைவுகள் பற்றிக் கருத்திற் கொள்வர். இத்தீர்மானங்கள் பொதுமக்கள் மீதும், அதற்கான செலவுகளை வழங்கும் பிரிவினர் மீதும், நன்மை பெறும் பிரிவினர்மீதும் ஏற்படுத்தும் தாக்கங்களை அவர்கள் அறிய முயல்வர்.ஒரு கொள்கை சிறந்ததா எனத் தீர்மானிக்கச் சில வழிகள் உண்டு. அக் கொள்கை பெருந்தொகையானோருக்கு அதிக நன்மைகளை வழங்கியுள்ளதா, அத்து டன் செலவுகளுக்கு ஏற்றமுறையில் நன்மைகள் கிடைக்கின்றதா என்பதைப்
8.

Page 47
பொறுத்தே ஒரு கொள்கை மதிப்பீடு செய்யப்படும். எடுத்துக்காட்டாக ஒரு கொள்கை அநேகமான செல்வந்தர்களுக்கு நன்மையாகவும் வறியவர்களுக்குத் தீமையானதாக வும் அமையக்கூடும். இவ்வாறான கொள்கைகள் பெரும்பான்மையானவர்களைப் பொறுத்தவரையில் நியாயமானவையாகக் கருதப்படுவதில்லை.
அவ்வாறே எந்தக் குழுவினர் செலவுகளையும் நன்மைகளையும் ஏற்றுக்கொள்கின்ற னர் என்ற விடயமும் உள்ளது. மக்களில் ஒரு குழுவினர் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்டி ருந்தால், ஓர் அரசியல்வாதியும் தன்னை அடுத்தபொதுத்தேர்தலில் மக்கள் தண்டிக்கக் கூடும் என அவர்களையிட்டுச் சஞ்சலப்பட வேண்டியதில்லை. ஐக்கிய அமெரிக்காவி லுள்ள ஒரு தொழிற்சங்கம் உதாரணமாக, அமெரிக்கத் தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுடன் முறையற்ற வகையில் போட்டியிடும் வெளிநாட்டுப் பொருட்களைத் தடுக்க அரசாங்கமானது உயர் சுங்கத்தடைகளை விதிக்கலாம். இத்த டைகளைத் தளர்த்துவதுபற்றி அரசியல்வாதி தீர்மானிக்கும்போது தொழிற்சங்க அல் லது இயந்திரசாதன உரிமையாளர் ஆகியோர் அடுத்த பொதுத்தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிடுபவருக்கு அதரவு வழங்கலாம் என்பதைக்கருத்திற் கொள்ள வேண்டும்.
பல்வேறு தொகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட உத்தியோகத்தர்களின் நிலை மைகளைத் தீர்மானிப்பதில் நன்மைகள் பெறுபவர் யார், செலவுகளைச் செய்பவர்யார் என்ற பிரச்சினைகளில் முக்கிய பங்கினை வகிக்கமுடியும் உதாரணமாக ஐக்கிய அமெரிக்காவில் நிலக்கரியைக்கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் உண் டாகும் சூழல்மாசடைதலை எவ்விதம் கட்டுப்படுத்தலாம் என்ற பிரச்சினை எழுந்தது. அங்கே செலவினை மேலும் சுமத்துவதன் மூலம் பொதுநன்மை பெறப்பட்டது.மாச டைதலை உண்டாக்கும் கழிவுப்பொருட்களைக் கட்டுப்படுத்துதலானது மின்சாரக் கம்பனிகளுக்குப் பெரும் செலவையுண்டாக்கியது. ஆனால் இக்கழிவுகளைக் குறைக்க மின்சாரக் கம்பனிகளுக்கு இருந்த இலகு வழி, நாட்டின் பல பாகங்களிலிருந் து"சுத்திகரிக்கப்பட்ட நிலக்கரியை இறக்குமதி செய்தலேயாகும். அது பளுப்புநிலக்க ரியை உற்பத்தி செய்யும் அரசாங்கத் தொழிலாளரை வேலை இழக்கச் செய்தது.
இப்பிரச்சினை குறித்து படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் உடன்பாடு, கழிவுப்பொருட்களைக் கட்டுப்படுத்துவதற்காக மின்சார உற்பத்தியாளர் வடிகட்டும் தொழில்நுட்பத்தை மேற்கொள்வதன் மூலம் அடையப்பட்டது. அச்செயல் துப்பர வற்ற பளுப்புநிலக்கரியைத் தொடர்ந்து எரிப்பதற்கு இடமளிக்கும். இவ்வணுகுமுறை அதிக செலவுக்குரியதாகவும் இருந்தது. ஆயினும் கழிவுகளைக் கட்டுப்படுத்தல் நிறை வேறியது. சுரங்கத் தொழிலாளரின் தொழில் பாதுகாக்கப்பட்டது. ஆனால் அதிகரித்த மொத்தச் செலவைக் கட்டணங்களை உயர்த்துவதன் மூலம் நுகர்வோரிடமிருந்து அறவவிடக்கூடியதாக இருந்தது
ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களின் ஆர்வம் எப்பொழுதும் நிதிசார்ந்தது அல்ல. ஒரு சுற்றாடல் சம்பந்தமான நிறுவனமானது மேலே எடுத்துக்காட்டப்பட்டதுபோல, அரசி
யல்வாதி சூழல்மாசடைதலின் அளவைக்குறைக்க வேண்டும். அல்லது அதற்கென உத்தியோகத்தர்களை நியமிக்க வேண்டும் எனக் கேட்கலாம். ஐக்கிய அமெரிக்காவி
8.

லுள்ள பெரிய சுற்றாடல் சம்பந்தமான நிறுவனங்களிலே பல்லாயிரக்கணக்கான உறுப் பினர்கள் உள்ளனர். இவர்கள் ஏனையவரையும் தமது செல்வாக்குக்குட்படுத்தலாம். எனவே ஒரு அரசியல்வாதி தனது தீர்மானங்கள் இவ்வாறான குழுக்களுக்கு எதிராக அமையுமானால் அடுத்துவரும் பொதுத்தேர்தலில் தான் தோல்வியைத் தழுவலாம் என அச்சம் கொள்வதற்குக் காரணம் உண்டு.
சில குழுக்கள் பொதுவாக குறிப்பிட்ட சில அரசியற் கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்துள் ளன. எடுத்துக்காட்டாக, பல மேற்குலக சனநாயக ஆட்சிகளில் தொழிற்சங்கங்கள், பிரதான கட்சிகள் ஒன்றுடன் கூட்டுச்சேர விரும்புகின்றன. பிரித்தானியாவில் அது தொழிற்கட்சியெனக் கூட அழைக்கப்படுகின்றது. மற்றைய பிரதான கட்சியாகிய பழைமைபேண் கட்சி தொழிற்சங்கத் தலைவர்களின் கருத்தின்மீது அதிக கவனம் செலுத்தவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் தொழிற்சங்கங்கள் தொழிற்கட் சியை அலட்சியம் செய்யும் என்பது எதிர்பார்க்க முடியாததாகும். மறுபுறத்தில் தொழிற்கட்சித் தலைவர்கள் தமது ஆதரவுக்கு வேண்டிய பலமான அடித்தளத்தை உருவாக்கும் தொழிற்சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீது சற்றுக் கவனம் செலுத்த வேண்டும்.
ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள், கொள்கையை உருவாக்குபவருக்கு அவரது தெரிவு கள் சம்பந்தமாக உதவுவதில் முக்கிய பங்கேற்கின்றன. குழுவானது, தனது தீர்மானங்க ளில் ஆர்வமுடையதாக இருக்கிறது என்னும் தகவலை அவர் பெற்றுக்கொள்ள வேண் டும், ஆகவே கொள்கைத்தெரிவுபற்றிய விருப்பத்தில், ஒரு குறிப்பிட்ட விவகாரம் சம்பந்தமாக ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் பெறுமதிமிக்க தரவுகளை வழங்கும் எனவும் அவை எவ்வாறு குறிப்பிட்ட வாக்காளர்களைப் பாதிக்கும் எனவும் அவர் அறியலாம்.
கொள்கையின் விளைவு மிக அரிதாகவே ஒருபக்கத்துக்கு பூரண வெற்றியாக அல்லது பூரண தோல்வியாக இருக்கும். ஏனெனில், ஒரு சனநாயகத்திலே கொள்கையாக்கம் ஏறக்குறைய எப்பொழுதும் பொய்யான உறுதிமொழிகளைக் கொண்டிருக்க முயல்கி றது. அத்துடன் பொதுவான பின்னணியும் உள்ளது. எட்மன்ட் போர்க் (Edmund Burke)என்பவர் சகல அரசாங்கங்களும் விட்டுக் கொடுத்தல் மற்றும் பரிமாற்றங்க ஸ்ரின் மூலமே அமைக்கப்படுகின்றன எனக் குறிப்பிடுகிறார். மிக அருமையான விடயங்களில் மாத்திரம் அரசியல் ரீதியாக ஒரு பக்க ஆதிக்கத்தை முழுமையாகப் பெறுகிறது.இது மற்றவர்களின் விருப்பத்தைப்பூரணமாகப்புறக்கணிக்கின்றது. அத்து டன் அவைநீடித்திருப்பதுமில்லை. ஒரு பூரண வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் இருந் தாலும்கூட அது புத்திசாலித்தனமானதல்ல. இது எதிர்கட்சியை முனைப்படையச் செய்வதுடன் பரஸ்பர மதிப்புக்கான சூழ்நிலையும் மாசுபடுத்துகின்றது. சகிப் புத்தன் மையைக் கெடுக்கிறது. இவை சுதந்திர சமுதாயத்துக்கு அவசியமானவை.
நடைமுறை ரீதியாகவன்றி ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நிறுவனங்கள் இத்தகைய உடன்பாடுகளுக்கு வருதல் எப்பொழுதும் கடினமாக இருக்கும். கொள்கை வகுத்தல் தொடர்பாக நாட்டின் மதச்சார்பான நிறுவனங்களுடன் ஈடுபடுதல் மிகக்கடி னமான துறையாகும்.
83

Page 48
ஐக்கிய அமெரிக்காவில், தேவாலயம் மற்றும் அரசு என்பனவற்றிற்கிடையே யாப்ப டிப்படையிலான பிரிவினை உண்டு. முதலாவதும், மிக முக்கியமானதுமாக, தேவால யம், அரசு ஆகியவற்றிற்கிடையேயுள்ள யாப்பு ரீதியான பிரிவினையானது, ஒரு தனியான மானிலத்துக்குரிய மதத்தின் உருவாக்கத்தைத் தடைசெய்கிறது. சகல சமயப் பிரிவினரும் சமுதாயத்தில் நிலைத்திருப்பதற்குச் சமஉரிமை பெறுகின்றனர். மற்றும் சகல மத உறுப்பினரும் சம உரிமையுடையவர். இவை ஒரு மதக்குழுவினர் தமது கருத்துக்களை இன்னொரு மதக்குழுவினர் மீது திணிப்பதைத் தடுக்கின்றன. பெரும் பான்மையோரின் மதமாக இருந்தாலும் அது நிகழ்வதில்லை. ஐக்கிய அமெரிக்காவின் பெரும் பகுதி மத அடக்குமுறையிலிருந்து விலகி அமைந்துள்ளன. அதாவது தேவா லம் மற்றும் மாநிலங்களுக்கிடையேயுள்ள பிரிவினை மிகப்பலம்வாய்ந்தது. சமயநிறு வனங்கள் நாட்டின் அரசியல் வாழ்க்கையில் பங்கேற்பத்தை இது தடுப்பதிலை அல் லது குறிப்பிட்ட விவகாரங்களில் பொதுச்சேவையாளர்களின் மீது செல்வாக்குச் செலுத்துவதைத் தடுப்பதுமில்லை. ஆனால் தேவாலயம், அரசு என்பவற்றின் அரசி யல்யாப்புரீதியான பிரிவினையானது ஒரு சமயம் கொள்கையை ஸ்தாபிப்பதனைத் தடுக்கின்றது.
சில வகைப்பட்ட பொதுக்கொள்கைகள் சிலவற்றை ஆக்குவதில் மதநிறுவனங்கள் முக்கிய பங்கினை ஏற்கின்றன. இதற்கு அரசியல் யாப்புரீதியான பிரிவினைகள் எவையும் இல்லை. உதாரணமாக, கருத்சிதைவு பற்றிய பிரச்சினை அல்லது பொதுப் பாடசாலைகளில் (Public Schools)மத போதனை என்பவற்றைக் கூறலாம். ஐக்கிய அமெரிக்காவில் மேல்நீதிமன்றமானது பொதுப்பாடசாலைகளில் மதபோதனைகள் செய்யப்படக்கூடாது என அரசியல் யாப்பின் தேவாலய-அரசு பிரிவினைச் சட்டத் தின்படி தீர்மானித்தது. இது வழமைக்குமாறான ஒன்று. பல ஐரோப்பிய சனநாயக ஆட்சிகளில் மத போதனை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அல்லது அது பாடசாலைப் பாடநெறியின் ஒரு பகுதியாக வந்துள்ளது. ஆயினும் சமயம் அல்லது ஒழுக்கம் சம்பந்தமான விடயங்களோடு தொடர்புள்ள விவகாரங்கள் பிரச்சினைக்குரியவை. கருச்சிதைவைச் சட்டரீதியாகக் கொண்டுவருதல் அல்லது சட்டமுரணான அம்சமாகக் கொள்ளல் ஏறக்குறைய எல்லாச் சனநாயகங்களிலும் தொடர்ந்து வருகின்றது.
ஒரு சனநாயக ஆட்சியில், ஒரு பாரிய பிரச்சினை எப்பொழுதும் இருந்து வருகிறது. இது ஒழுக்கம் அல்லது சமயம் சம்பந்தமான விவகாரங்களில் பொதுக்கொள்கை பற்றிய உடன்பாட்டுக்கு வரும்போது ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சினைகளில் விட் டுக்கொடுத்தல் ஒரு கடினமான அம்சமாகும். ஆயினும் எந்தளவுக்கு வரிவிதிக்கப்ப டல் வேண்டும்,நிதி எவ்வாறு ஒதுக்கப்படல் வேண்டும் என்ற விடயங்களில் சமரசம் செய்துகொள்ள முடியும். கடுமையான ஒழுக்க அல்லது சமயப் பிரமாணங்களை உருவாக்குமிடத்து தனியாட்களின் அல்லது சிறுபான்மையினரின் உரிமைகள் பாதிக் கப்படும்.
தெரிவு செய்யப்பட்ட ஓர் அலுவலர் கொள்கையை வகுப்பவர் என்ற முறையில் மக்களுக்குச் சேவை செய்கிறார், அவர்களுக்குத் தலைமை வகிப்பதுடன் பொதுமக்க ளின் கருத்துக்களைக் கருத்திற்கொள்ளவும் வேண்டும். இல்லாவிடில் அவர் பொதுமக் களின் கருத்துக்களைக் கேட்காது விட்டுவிடுவார். முற்றாகவே மக்கள் கருத்துக்குஏற்ப
84

அவர் தீர்மானங்களை மேற்கொள்ளுமிடத்து அவர் சரியான தலைவருமல்ல; நிபுணத் துவம் வாய்ந்தவருமல்ல. அவர் பொதுமக்களின் நீண்டகால நலன்களைப்பற்றி அவர் களுக்கு அறிவுறுத்தத் தவறிவிடுகின்றார். அத்துடன் நலன்களை முன்னெடுத்துச் செல் லவேண்டிய தமது கடமையிலிருந்தும் அவர் தவறிவிடுகின்றார்.

Page 49
IV
தொடர்புச் சாதனங்கள்
சுதந்திரத்தின் மகத்தான அம்சம் பத்திரிகைச் சுதந்திரமாகும். இதனை எந்தச் சர்வாதிகாரஅரசாங்கங்களும் கட்டுப்படுத்திவிடமு டியாது.
ஜோர்ஜ் மேசன்-1776
தற்கால சனநாயக சமுதாயங்களில் மிகத்துார இடங்களுக்கும் ஒருவரோடு ஒருவரும், அவர்களுடைய அரசாங்கத்துடனும் தொடர்புகொள்ளும் வழிவகை மக்களுக்குத் தேவை. தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள், சஞ்சிகைகள் மற்றும் நூல்கள்
போன்றவையின்றித் தற்கால சனநாயகம் நிலைபெறமுடியாது.
பத்திரிகை ஒரு சாதகமான ஊடகமன்று அல்லது தெளிவான தொடர்புச்சாதனமுமன்று. இன்றைய நவீன சுதந்திர சமுதாயத்தில் முக்கியமான பங்கை அது கொண்டுள்ளது. இது அரசாங்கத்தின் செயற்பாடுகளை அரசாங்கம் மறைப்பதற்கு விரும்புகின்ற சில விடயங்களைக்கூட மக்களுக்கு அறியத்தருவதில் விசேட கவனஞ் செலுத்துகிறது. அதனுடைய பங்கினை நிறைவு செய்யுமுகமாக அரசாங்கக் கட்டுப்பாட்டிலிருந்து விலகிப்பத்திரிகை சுதந்திரமாக இருக்கவேண்டும். தனது அரசியல் முன்னேற்றத்துக்கு அரசாங்கம் பத்திரிகையை ஒரு கருவியாகப் பயன்படுத்தக்கூடாது. ஆயினும் பத்திரி கைக்கு ஒரு கடமையுண்டு. அது எப்பொழுதும் அனுமதிக்கப்படுவதில்லை. அதன் சக்தியைப் பயன்படுத்தி பொதுவிவகாரங்களில் சமநிலையான கலந்துரையாடல்க ளையும் சாதகமான அம்சங்களையும் ஊக்குவிக்கும் பொறுப்பும் உண்டு.
தற்கால சமுதாயங்கள் நன்கு விருத்தியடைந்தவை. அவை வசதிபடைத்த தொடர்பா டல் நிறுவனங்களாகவும் விளங்குகின்றன. கட்டுப்பாடுடைய சமுதாயங்களில் இத்த கைய சாதனங்கள் மக்களைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுகின் றன. சனநாயகங்கள் இதற்கு முரணாகச் சுதந்திரமான பத்திரிகைகளைக் கொண்டிருக் கின்றன. அவை அரசியல் செயல்முறைகளில் முக்கிய பங்காற்றி வருகின்றன.
தகவல் தெரிவிப்பதும் கல்வியூட்டுவதும் தொடர்பு சாதனங்களின் இன்னொரு தொழிற்பாடாகும். அரசாங்கம் எவ்வாறு இயங்கவேண்டும், விவகாரங்கள் பற்றி மக்களுக்குத் தேவையான தகவல்கள் பற்றிய தீர்மானங்களை மேற்கொள்வதற்கு இது உதவுகின்றன. நியூயோர்க் ரைம்சின் பதிப்பாளர் ஆதர்சுல்ஸ்பேகர் (Arthur Sulzbeger)ஒரு மனிதனுடைய தீர்ப்பு, அவர் அத்தீர்ப்பை மேற்கொள்ள அடிப்படையா கக் கொண்ட தகவலிலும் பார்க்கச் சிறந்ததாக இருக்கமுடியாது எனக் கூறுகிறார். செய்திக் கதைகள் ஆசிரியத்தலையங்கம், அபிப்பிராயக் கட்டுரைகள் என்பவற்றின் ஊடாகப் பத்திரிகை பொதுமக்களுக்கு, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், விவகாரங்கள் பற்றித் தெரியப்படுத்துகின்றன. சேவைக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட
86

அபேட்சகர் பற்றிய விபரங்களைக் கொடுக்கிறது. அவர்கள் வகிக்கும் பதவிநிலை, அவர்களுடைய அனுபவம் மற்றும் குணவியல்பு போன்றவற்றையும் கூறுகின்றன. இவற்றைக் கருவியாகக் கொண்டு வாக்காளர்கள் அறிவுபூர்வமான தீர்மானங்களை மேற்கொள்ளமுடியும்.
சிலகாலங்களில் அரசியல் கட்சிகளிடையேயுள்ள வேற்றுமைகளுக்கும்பத்திரிகைகள் உடன்பாடு காணலாம். எடுத்துக்காட்டாக, அரசாங்க சேவையாளர்கள் மீது முக்கிய கொள்கை விவகாரங்களில் சிறந்த தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனக் கட்டாயப்படுத்தலாம். மற்றும் தகவல்களையும் அபிப்பிராயங்களையும் பரிமாறுவ தற்கு ஒரு பொதுமன்றமாக விளங்குவதன் மூலம் சில விவகாரங்களில் நாடு ஒரு உடன்பாட்டுக்கு வரவும் இது உதவும்.
அரசாங்கம், தனது பிரசாரங்களுக்குத் தொடர்பு சாதனங்களைக் கையாள்வதன்மூலம் தமது செயற்பாடுகள், எண்ணங்கள் ஆகியவற்றில் பொதுமக்களை ஏமாற்ற முற்பட லாம். இதற்கு மாறுபட்ட வகையில் சுதந்திரமான பத்திரிகையானது அரசாங்கத்தை உண்மை கூற வைக்கிறது. ஆயினும் பத்திரிகைகள் தெரிவிக்கும் தகவல்கள், செய்தி யாளருடைய பக்கச்சார்புகள்,கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட உணர்வுகள் ஆகியவற் றுக்கு அப்பாற்பட்டே அமைகின்றன. இவை பிரசுரத்தின் சந்தைப்படுத்தல் தேவைக ளால் பாதிக்கப்படலாம். பல பத்திரிகை எழுத்தாளர்கள் செய்திபற்றிய உண்மையான, புறவயமான அம்சங்களை வழங்கமுற்படலாம். ஏனைய உன்னதநிலையினரின் பங்கு கொள்கை நிகழ்ச்சிகளை மேம்படுத்துவதும் தனிப்பட்ட அபிப்பிராயங்களை விளக்கு வதுமாகும். ஆனால் தனிப்பட்ட பக்கச்சார்புகள் முழுமையாக அகற்றப்பட்ட சந்தர்ப் பம் இல்லை. அதனாலேதான் மக்கள் பல்வகைப்பட்ட செய்தி ஆதாரங்களை நம்பவ தில் புத்திகாலித்தனமாக இருப்பதுடன், இயலக்கூடியளவுக்கு நிகழ்வுகள் பற்றிய மிகச்சரியான விளக்கத்தைப்பெறவும் முயற்சிக்கிறார்கள்.
அரசியல் செயற்பாடுகளில் நிச்சயமான சில விளைவுகளையும் தொடர்புச் சாதனங் கள் ஏற்படுத்தலாம். அவை பொதுசன அபிப்பிராயத்தைத் தூண்டிவிடலாம். ஏனைய வேலைகள் யாவற்றையும் தவிர்த்து, ஒரு விவகாரத்தில் அரசாங்கத்துக்கு பாதுகாப்பு வழங்கலாம். மற்றும் தனிப்பட்ட இரகசியங்களிலும் தலையிடலாம். குற்றங்களினா லும்,இயற்கை அனர்த்தங்களினாலும் அல்லது ஏனைய துன்பங்களினாலும் பாதிக்கப் பட்டவர்கள் தமது துன்பங்கள் பத்திரிகைகளில் விபரிக்கப்படுவதையும் பரிசீலனை செய்யப்படுவதையும் காணலாம். ஆனால் அரசியல் வாதியின் வாழ்க்கை பற்றிய விபரம்பத்திரிகையில் இல்லை. அவை பத்திரிகைகளின் வேலைகளுமன்று.
பொதுசன தொடர்புச் சாதனங்களின் நன்மைகள் வழக்கமாக பொதுசனக் கொள்கை பற்றிய துறையில் முக்கியத்துவம் பெறுவதைக் காணலாம். தவறான செய்களை வெளிப்படுத்துதல், பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரதான விவகாரங்களை அறிவித் தல் மற்றும் பொதுமக்கள் அறியாமல் பாதுகாக்க வேண்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட சேவையாளர்களின் புதிய தகவல்கள் போன்றவற்றை வெளிப்படுத்துவதிலும் தொடர் புசாதனங்கள் முக்கிய பங்கேற்கின்றன. அதிகாரம் என்பது இயற்கையாகவே கவர்ச்சி கரமானது. சில சமயங்களில் ஊழல் நிறைந்ததுமாகும். எனவே அரசியல் வாதிகள்
87

Page 50
தமது அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்யாமல் தடுப்பது சுதந்திரமாக இயங்கும் தொடர்பு சாதனங்களின் முக்கிய பொறுப்பாகும். இவை வாக்காளரினால் சுமத்தப்பட் டிருக்கின்றன. தொடர்புச் சாதனங்கள் கவனயீனமாக அல்லது பொறுப்பற்ற விதத்தில் செயல்படும் போது வாதங்கள் தோன்றுகின்றன. மற்றும் உண்மைகளைச் சரியாக அறியாமல் விவகாரங்களை வெளிப்படுத்துவதனாலும் இவை தோன்றுகின்றன. அல் லது தொடர்புச் சாதனங்கள் தேர்தலுக்கு முன்பதாக சரியான ஒரு விடயத்தைப் பிரசுரித்தால் ஒரு கட்சியை அது எதிர்மறையாகப் பாதிக்கிறது. (செக்கோசெலவாக்கி யாவில், அதனுடைய முதலாவது சுதந்திரமான தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன் இவ்வாறான ஒரு பிரச்சினைதோன்றியது. ஒரு அரசியல்கட்சியின்தலைவர் பொலீசுக் குத் தகவல் கொடுப்பவர்போல நடித்தமை கட்சியினுடைய சந்தர்ப்பங்களைப் பாதித் தது. ஆயினும் இச்செயல் பின்னர் குறைந்தளவான பாதிப்பையே உண்டாக்கிற்று என வாக்குத் தரவுகள் எடுத்துக்காட்டின) ஒரு சனநாயகத்தில் எவ்வாறாயினும் பத்திரிகை யின் மீது அரசாங்கத்தின் தடைகள் என்பதிலும்பார்க்க சுதந்திரத்திற்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. அலெக்ஸிஸ் டி ரொக்கியுவில்லி எழுதியது போன்று அளவிடமு. டியாத நன்மைகளை அனுபவிக்க வேண்டியதன்பொருட்டு பத்திரிகைச்சுதந்திரமா னது, அது உண்டாக்கும் தவிர்க்கமுடியாத சில கூடாத அம்சங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் உண்டு என உறுதிசெய்கின்றது.
தொடர்பு சாதனம் பற்றிய அரசாங்க ஒழுங்குவிதிகள்
ஒரு சுதந்திரமான பத்திரிகைக்கு, சுதந்திரசமுதாயம் வழங்கும் முக்கிய இடத்தை, ஐக்கிய அமெரிக்க அரசியல் யாப்பு வழங்கும் பாதுகாப்பின் மூலம் பரிசீலனை செய்ய முடியும். அரசியல் யாப்பின் முதலாவது சேர்க்கையானது பேச்சுச் சுதந்திரத்தை அல் லது பத்திரிகையை இணைக்கும் சட்டத்தைக் காங்கிரஸ் இயற்றமுடியாது. ஏதாயினும் தகவல்களைப் பிரசுரித்தல் அல்லது ஒலிபரப்புதலில் இருந்து பத்திரிகைகளை அரசாங் கம் தடுக்கமுடியாது. அன்றேல் பிரசுரிக்கப்பட்டபின்னர் தண்டனைகளையும் விதிக்க முடியாது. அவ்வாறே பிரசுரிக்கப்பட்ட செய்திகள் அரசாங்க இரகசியங்களை உள்ள டக்கியவையாகவும் இருக்கலாம். ஒரு சில விதிவிலக்கான அம்சங்களும் உண்டு. நடைபெற்றுக்கொண்டிருக்கும் குற்றவியல் வழக்குச் சம்பந்தமான விபரங்களை வெளியிடுவதற்கு நீதிபதிகள் பத்திரிகைகளுக்குத் தடைவிதிக்கலாம். உதாரணமாக, யூதர்கள் வெளியிலிருந்துவரும் செய்திகளால் தகாத முறையில் தூண்டப்படக்கூடாது என்பதை உறுதி செய்யவே இவ்வாறு செய்யப்படுகிறது. வானொலியும் தொலைக் காட்சியும் தவறான சிந்தனையைத் தூண்டக்கூடிய மொழியை அல்லது நிகழ்சியை ஒலிபரப்பக்கூடாது. புதின்த்தாள்கள், அல்லது ஒலிபரப்புநிலையங்கள் போன்றவற்றி லிருந்து ஊறுவிளைவிப்பனவற்றைச் சேகரிக்க துன்பப்பட்டவர்களுக்குச் சாத்தியக்கூ றுகள் உள்ளன. இவை தனிப்பட்டவர்களிடத்தில் நேர்மையீனங்களை உருவாக்கும். ஆயினும் இவ்வாறானவை குறிப்பான சில சூழ்நிலைகளிலேயே உண்டாகின்றன.
ஏனைய நாடுகள், தமது தொடர்புச் சாதனங்க.lன்மீது இறுக்கமான கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. பிரித்தானியப் பத்திரிகைகள் அதனுடைய பொதுச்சட்டத்தின்மூலமும் பாராளுமன்றச்சட்துங்களின் மூலமும் கூடிய பாதுகாப்பை அனுபவிக்கின்றனவாயி

னும் பிரித்தானியாவும் தனிப்பட்டவர்கள் அரசாங்க இரகசியங்களை வெளியிடுத லைக் கட்டுப்படுத்த உத்தியோக பூர்வமான இரகசியச் சட்டங்களை வைத்திருக்கின் றது. அச்சடிக்கப்பட்ட விபரங்களைப் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள இது இலகுவாக உள்ளது. பிரான்சில், ஒரு செய்தித்தாள் ஆசிரியர் அந்நாட்டு சனாதிபதியைப்பற்றி விமர்சித்து ஒரு கட்டுரையை எழுதியமைக்காக அபராதம் விதிக்கப்பட்டார். அத்து டன்1970கள் வரை பொதுமக்கள் அமைதியைக் குலைக்கும் எந்தவொரு சலனப்படத் தையும் தடைசெய்யும் அதிகாரம் அரசாங்கத்துக்கு இருந்தது. பல ஐரோப்பிய நாடுக ளில் தேர்தல் சம்பந்தமான ஒழுங்கு விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டிய நிலைமை ஒலிபரப்புச் சாதனங்களுக்கு உண்டு. இவ்வாறான நிலையங்கள் அதிகளவான நேரத்தை அபேட்சகர்களுக்கு வழங்கவேண்டும். பிரசாரத்தின் போது சிலவேளைக ளில் பிரசார விளம்பரங்கள் செய்யப்படுவதுமில்லை.
பலசனநாயகநாடுகளிலே செய்தித்தாள்கள் பெரும்பாலும் தனியாருக்குச் சொந்தமாக இருந்தபோதிலும் ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே வானொலி மற்றும் தொலைக் காட்சிநிலையங்கள் அரசுக்குச் சொந்தமானவையாக இருக்கின்றன.இவற்றின் மீதான அரசாங்கக் கட்டுப்பாடு நாட்டுக்கு நாடு வேறுபடும். பிரித்தானிய ஒலிபரப்புக்கூட்டுத் தாபனமாக இருந்தாலும், அதனுடைய நிர்வாகத்தின் மீதும் ஆசிரியத் தலையங்கம் பற்றிய கொள்கையிலும் பூரண கட்டுப்பாட்டைச் செலுத்துகின்றன. இதற்கு மாறாக பிரான்சு நாட்டுத் தொலைக்காட்சிச் சேவை, அந்நாட்டின் கல்வியமைச்சின் ஒரு பகுதியாக உத்தியோக பூர்வமாக இயங்குகின்றது. அத்துடன் ஆசிரியத்தலையங்கம் பற்றிய கொள்கையில் அரசாங்கக் கட்டுப்பாட்டுக்கு அதிகம் உட்படுகிறது. பிரான்சு நாட்டு முன்மாதிரி ஒரு புறநடையானது. ஆயினும் மேற்கு ஐரோப்பாவிலும் ஜப்பானி லும் இயங்கும் அரசாங்க வானொலிஒலிபரப்புகள் பிரித்தானிய முன்மாதிரியைப் பின்பற்றுகின்றன.
அரசியற் செயற்பாட்டில் தொடர்புச்சாதனங்களின் பங்கு
தற்கால சனநாயக அமைப்புகளில் அரசியலில் தொடர்புச்சாதனங்கள் ஒரு பிரதான பங்கினை வகித்து வந்துள்ளன. எட்மன் பேர்க் பின்வருமாறு சற்று மிகைபடக் கூறி னார். பாராளுமன்றத்தில் மூன்று குழுவினர் (பிரபுக்கள்,மதகுருமார்,பொதுமக் கள்) அமர்ந்துள்ளனர். இவர்களைவிட முக்கியத்துவம் வாய்ந்த நான்காவது குழு வொன்று, பத்திரிகையாளர் குழு பார்வையாளர் பகுதியில் அமர்ந்துள்ளது.
பத்திரிகைகள் தம்மை எவ்வாறு நோக்குகின்றன என்பதில் அரசியல் வாதிகள் கூடிய கவனத்தைச் செலுத்துகின்றனர். தமது கருத்துக்களைப்பத்திரிகையினுாக மக்களுக்குத் தெரிவிக்கின்றனர். தொடர்புச் சாதனங்களினூடாகத் தமக்குச் சாதகமான பிரதிமையை மக்கள் மத்தியில் வளர்க்க முயல்கின்றனர்.
அரசியலில் தொலைக்காட்சி கூடிய செல்வாக்கைச் செலுத்திவருகிறது. பெரும்பாலா னவர்கள் இதனூடாகவே செய்திகளை அறிகின்றனர்.தொலைக்காட்சியில் படங்களு டன்கருத்துரையும் வழங்கப்படுகிறது. படங்கள் மிகச்சிறப்புற அமையுமிடத்துக்குறிப்

Page 51
பிட்ட விடயம் தெளிவாக விளக்கப்பட்டுவிடும். தொலைக்காட்சிச்செய்தியின் மற் றொரு முக்கிய இயல்பு அதன் நேரம் வரையறுக்கப்பட்டிருப்பதாகும். பொதுவாக ஒரு நாளைக்கு முப்பது நிமிடங்களுக்குச் செய்தி காட்டப்படுகிறது. ஒவ்வொரு செய்தித்து ணுக்கும் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் நீடிக்கின்றது. இதனால் ஒரு விடயம் முழுமையாக விளக்கப்படுவதில்லை. சிலவேளைகளில் அவ்விடயம் எளிமைப்படுத் தப்படுகிறது. ஆயினும் தொலைக்காட்சி விரைவாகவும், உடனடியாகவும், தெளிவாக வும் செய்திகளை வழங்குகிறது. இதனால் பொதுமக்கள் உடனுக்குடன் செய்திகளைப் பெறமுடிகிறது.
தொடர்புச்சாதனங்கள் வேறுவழிகளிலும் அரசியலைப் பாதிக்கின்றன.அவை வெளி யிட விரும்பும் செய்திகள் தொடர்பாகச் சுதந்திரமாக முடிவுசெய்கின்றன. செய்தி ஆசிரியர்கள் நாளாந்தம் பெருந்தொகையான செய்திகளைப் பெறுகின்றனர். அடுத்த நாள் அவற்றில் எச்செய்திகள் பிரசுரிக்கப்படல் வேண்டும், ஒலிபரப்பப்படல் வேண் டும் என அவர்களே தீர்மானிப்பர். இவ்வாசிரியர்கள் மக்கள் எதனை வாசிக்கவிரும்பு கின்றனர், பார்க்க விரும்புகின்றனர், எதனை முக்கிய செய்தியாகக் கருதுகின்றனர், எவ்வகையான செய்திகள் பத்திரிகைகளின் விற்பனையைக்கூட்டும் என்பதைக் கொண்டு இத்தீர்மானங்களை மேற்கொள்வர். இவ்வாறான தீர்மானங்களின் அடிப்ப டையில் மக்கள் பல்வேறு விடயங்கள் பற்றி அறிகின்றனர். இவ்விடயங்களே அரசி யல் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஆசிரியர்கள் மேற்கொள்ளும் இத்தீர்மானங்கள் காரணமாக தொடர்புச்சாதனங்கள் விமர்சிக்கப்படுகின்றன. சில வேளைகளில் பத்திரிகைகள் மிகவிரிவான முறையில் பிரச்சினைகளை நுணுக்கமாகக் கவனிக்க முற்படலாம். அத்துடன் இரகசியமான வற்றை வெளியிடவும் முற்படலாம். ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கை பொதுமக்களுக்குத்தேவையான முக்கிய தகவல் எனக் கருதப்ப டுகிறது. தொடர்புச்சாதனங்கள் சில வேளைகளில் இராணுவ இரகசியங்களை வெளி யிடுகின்றன. தேசிய பாதுகாப்புக்குப் பாதகமான முறையில் இரகசியமான அரசாங்கக் கலந்துரையாடல் விபரங்களை வெளியிடுகின்றன. ஆயினும் ஐக்கிய அமெரிக்காவின் அரசியல்யாப்பு தனியாளின் சுதந்திரத்துக்கும் தேசிய பாதுகாப்புக்குமிடையில் ஒரு வகையான சமநிலையை ஏற்படுத்த முயலுகின்றது. பொதுவாக அரசியல் ஈடுபா டுள்ள மக்கள் சுதந்திரமான பத்திரிகையை விரும்புகின்றனர். மக்கள் தகவல்களைப் பெறத்தடையாக அமையும் கட்டுப்பாடுகளை அவர்கள் விரும்புவதில்லை. தோமஸ் ஜபர்சன்பின்வருமாறு மிகச்சிறப்புறக் கூறுகின்றார்.பத்திரிகையின்றி ஒர் அரசாங்கம் வேண்டுமா, அரசாங்கமின்றி பத்திரிகைகள் வேண்டுமா என என்னைக்கேட்டால் நான் பின்னதையே தயக்கமின்றித் தெரிவுசெய்வேன்.
(լpԼԳ6)յ60ծՄ
கடந்த பல நூற்றாண்டுகளாகச் சனநாயகம் ஒரு சக்திவாய்ந்த இலட்சியமாக இருந்து வந்துள்ளது. ஆயினும் நடைமுறையில் இவ்விலட்சியம் சரிவர எய்தப்பட்டதெனக் கூறுவற்கில்லை. ஒருசில நாடுகளே நீண்டகாலமாக சனநாயக அரசியல் இயங்குவதற்
90

குத் தேவையான அடிப்படைநிறுவன அமைப்புக்களையும் ஏனைய அம்சங்களையும் பேணிவந்துள்ளன. ஆயினும் உலக யுத்தத்தின் பின்னர் சனநாயகநாடுகள் அதிகரித்து விட்டன. அங்கு ஸ்திரநிலைமையும் ஏற்பட்டது. இதனால் மக்களுக்குக் கூடிய சுதந்தி ரத்தையும் நலன்களையும் வழங்க முடிந்தது.இன்று மேலும் பல நாடுகள் சனநாயகமே சிறந்த அரசியல் முறை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
சனநாயக சமூகத்தில் அரசியல் என்பது அரசாங்கத்துக்கும் அதன் குடிமக்களுக்கும் இடையிலான கலந்துரையாடலையும் மக்கள் தமக்கிடையிலான கருத்துப்பரிமாற்றத் தையும் கருதுகின்றது. இது ஒரு நியாயமான, நீடித்து நிலவக்கூடிய அரசாங்கத்தை உருவாக்க முக்கியமானது. அத்துடன் மக்களுடைய ஆதரவையும் அங்கீகாரத்தையும் இழக்காது நாளாந்தப் பிரச்சினைகள், சம்பவங்கள் என்பவற்றைக் கருத்திற் கொள்ள வும் இது முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியல்வாதிகள் தமது கருத்துகளும் சிந்தனைக ளும் சரியானவையெனவாக்காளர்களை நம்பவைக்க முயற்சிப்பதுடன் வாக்காளரின் விருப்பங்களை அறிந்துகொள்ளவும் விரும்புவர். அதேவேளையில் தனிப்பட்ட பிரச் சினைகளிலும் சங்கங்களின் கலந்துரையாடலிலும் பங்குகொண்டு வழிகாட்டுவர். தமது சார்பில் அரசியல்வாதிகள் சரியாக இயங்குகின்றார்களா என்பது பற்றியும் கவனிப்பர். எந்தச் சுதந்திர சமுதாயத்திலும் குடிமக்களின் ஊக்கத்துடனான பங்கு கொள்ளல் முக்கியமானது. அரிஸ்டோட்டில் பின்வருமாறு கூறினார்.சனநாயக அமைப்பில் சுதந்திரமும், சமத்துவமும் காணப்பட வேண்டுமாயின் சகல மக்களும் கூடிய அளவுக்கு அரசாங்கத்தில் பங்குபெறல் வேண்டும்.
இக்கூற்றில் பல முக்கிய கருத்துக்கள் உண்டு. முக்கியமாக, சனநாயகமே அதிகளவில் சுததிரத்தையும் சமத்துவத்தையும் வழங்குகின்றது. இவ்வாறான அமைப்பில் தனி யாள் தனது வாழ்க்கையைத் தானே கட்டுப்படுத்த முடிகிறது.அவன் தனது சொந்த விருப்பங்களுக்கு ஏற்பச்செயற்படவும் தனது அபிலாசைகளையும் கனவுகளையும் நிறைவுசெய்யும் வாய்ப்பும் அவனுக்குக் கிடைக்கின்றது. இவ்வாறான சுதந்திரமும் சமத்துவமும் நாட்டினதும் தனியாளினதும் வாழ்க்கையைப் பொறுத்தவரையில் தனி யாளில் பல பொறுப்புகளைச் சுமத்துகின்றன. அதாவது நாட்டின் விவகாரங்கள் பற்றியோ, தனியாளின் பிரத்தியேக விவகாரங்கள் பற்றியோதீர்மானிக்கும் வகையில் எந்தத்தனியாளோ அல்லது கட்சியோ அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கில்லை.
அரசு, தனியாளின் சகல தேவைகளையும் நிறைவுசெய்வதில்லை. தனியாள் இவற் றைத் தானேநிறைவுசெய்துகொள்ளவேண்டும். அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட விடயத் தில்தானே முன்வந்து இயல்பாக இயங்கும் என எதிர்பார்க்க முடியாது. எடுத்துக்காட் டாகக் கல்வித்துறை மேம்பாடு அல்லது ஓர் அபாயகரமான வீதிச்சந்தியில் போக்குவ ரந்துச் சமிக்கைகளை அரசாங்கம்தானாக ஏற்படுத்தாது.சுயாட்சியைப்பொறுத்தவரை யில் மக்களுக்கும் பொறுப்பு உண்டு. குடிமக்களே பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க் கையின் தராதரங்களை உறுதிப்படுத்துபவர்கள். அரசியல் சிறப்புறச்செயற்படக் குடி மக்களின் முழுமையான பங்குகொள்ளல் தேவை.
சகல குடிமக்களும் ஈடுபடுமிடத்துச் சனநாயக அரசியல் சற்றுச்சிக்கலானதாக மாறும். ஒரு கருத்தே சரியானது எனக்கொள்ளப்படுவதில்லை. ஓர் இலட்சிய பூர்வமான
9.

Page 52
அரசியல் ஒழுங்கு என்றகருத்து பொருத்தமற்றது. ஏனெனில் யாவரும் இதனை இலட்சியமாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். கற்பனாவாதம் இலட்சியங்களை அடைய முயலுவதிலுள்ள அபாயங்களைப் பொதுவுடைமை அரசியல் நன்கு எடுத் துக்காட்டியுள்ளது.
ஒரு சுதந்திர சமுதாயத்தில் அரசியலுக்கு ஒரு பரிணாம வளர்ச்சியுண்டு. அது தேக்க முற்று நிற்பதில்லை. சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப அரசியலும் தன் னைச் சீராக்கிக் கொள்ளவேண்டும். காலத்துக்காலம் வலிமைப்படுத்தவேண்டும்.அத் துடன் பல்வேறு தாக்குதலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அரசியல் பொதுமக்களின் நலன்களைப் பாதுகாக்க முயலுகின்றது. குடிமக்களின் வாழ்க்கை நிலைகளை மேம்படுத்த முயலுகிறது. அதேவேளையில் அரசியல் பல்வே றுபட்ட சிந்தனைகள், சித்தாந்தங்கள் என்பவற்றின் வலுவிலும், வேறுபட்ட கருத் தோட்டங்கள் பற்றிய முறையான கலந்துரையாடலிலும் தங்கியுள்ளது.
******


Page 53
PRINTED BY UNIE ARTS (P,
 

VT) LTD. TEL . 330195