கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிறுபான்மையினர் சில அவதானங்கள்

Page 1


Page 2

சிறுபான்மையினர் சில அவதானங்கள்
எம்.எம்.எம்.நாறல்ஹக் (DIPLOMA IN MASS MEDIA)
logib õDa Sapäälu GILb
aFTL 575 scrag - 05.
J九ー

Page 3
V
Title of the book
Subject
First Edition
Author
CopyRight 专
Pages
Type Setting 8. Printed at
Publisher
Cover Design
FrIGe
ISBN.
: Sirupaanmayyinar
Sila Avathaanangal
: Political and History
: 27th May 2002
: M.M.M.Noorul Hagu
(Diploma. In Mass Media) 129B, Osman Road,
Sainthamar LuthL - 05
: Author
: 112
: Millennium Advertising &
Printers (Pvt) Ltd, 41772, Galle Road, Colombo 03
: Marutham Kalai llakkiya
Wattam 129/B, Osman Road, Sainthamaruthu 05
; M. M. M. Naheebu, L.M.Faizal
Rs.150=
955-B105-01-5

எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களுக்கு இந்நூலி சமர்ப்பணம் !

Page 4

திரு. சூரன் ஏ.ரவிவர்மா
"தமிழ்த்து முகவுரை
لم يلتقيا
زيري من الأهمية اليا فينيك
இலங்கை அரசியலையும்,சிறுபான்மைச் சமூகங்களான தமிழ், முஸ்லிம் மக்களின் எனண்ணக் கருத்துக்களையும் துல்லியமாக வெளிக்காட்டும் "சிறுபான்மையினர் சில அவதானங்கள்' என்ற இந்த நூல், நூல் என்ற வரையறையும் தாண்டி ஆவணமாக உயர்ந்துள்ளது.
சுதந்திர இலங்கையின் 11 பாராளுமன்றங்களையும் ஒரேபார்வையில் ஆசிரியர் காட்டியுள்ளார். ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியல் கட்சிகளின் எழச்சியும், வீழ்ச்சியும் அதற்கான காரணங்களும் மிகுந்த அவதானத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது.
அரசியல் தலைவர்கள் விட்ட வரலாற்றுக் தவறுகளினால் ஏற்பட்ட அமைதியின்மையும், பொருளாதார, வங்குரோத்தும் வாசகரின் மனதைத் தொடும் வகையில் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் இன்றைய அரசியல் புதிர்க் கணக்குப் போன்று உள்ளது. அரசியல் அதிகாரம் எங்கு உள்ளது என்பது இன்னும் சிலருக்கு புரியாத புதிராகவே உள்ளது.
ஜனாதிபதி அதிகாரம் உள்ளவரா? பாராளுமன்றத்துக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் எவை என்பதில் குழம்பிப் போயிருக்கும் மக்கள், கட்சி நலன்கொண்ட சிலர் எழுதும் கட்டுரைகளினால் மேலும் குழம்பிப் போயுள்ளார்கள்.
இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் நடுநிலையாக நின்று அதிகாரங்களின் வரையறையை அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ளன. சிக்கலான பல சர்ச்சைகளுக்குத் தெளிவான விளக்கங்களைத் தருகின்றன.
புலிகளை ஒரம்கட்டிவிட்டு சமாதானத்தை ஏற்படுத்திவிட முடியாது என 1995ஆம் ஆண்டு இவர் எழுதிய கட்டுரை இன்று நிதர்சனமாகியிருப்பது

Page 5
N
இவரது தீர்க்க தரிசனத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
முஸ்லிம் மக்களின் ஏக்கத்தையும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அரசியல் அநீதிகளையும் தன் இனத்தின் உரிமைக் குரலாக ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். முஸ்லிம் அல்லாத சிலரிடமிருந்து முஸ்லிம் மக்களின் விருப்பத்துக்கு மாறான கருத்துக்கள் எழுவது இயல்பே.
ஆனால் பேரினவாதக் கட்சி அரசியற் காரணங்களுக்கா முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளைக் குழி தோண்டிப் புதைத்த சிறுபான்மை இன அரசியல்வாதிகளைத் துணிச்சலுடன் ஆசிரியர் அடையாளப்படுத்தி இருக்கிறார்.
அரசியல்வாதிகளின் பதவி ஆசையினால் தமிழ், முளப்லிம் மக்களின் உறவுகளில் விரிசல் விழுந்த சந்தர்ப்பங்களை ஆணித்தரமான வாசகங்களின் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.
முஸ்லிம் இனத்தின் மீது சேறுபூசும் கட்டுரைகளுக்கு உடனுக்குடன் பதில் கொடுத்து தன் இனத்தின் மீது பூசப்படும் உண்மைக்கு மாறான அசிங்கங்களைக் களைவதில் ஆசிரியருக்கு இருக்கும் பற்றானது, சமூகத்தின் மீது அவர் வைத்துள்ள விசுவாசத்தைக் காட்டுகிறது.
தமிழர், முஸ்லிம் உறவு பிரியக்கூடாது என்பதில் ஆசிரியர் மிக உறுதியாக உள்ளார் என்பது அவரது அரசியல் கட்டுரைகளிலிருந்து தெளிவாகிறது.
ஆசிரியர், மாணவர்,' அரசியல்வாதி ஆய்வு போன்ற துறைகளைச் சார்ந்தவர்களின் சந்தேகங்களைப் போக்கும் வகையில் நூறுல்ஹக் எழுதிய "சிறுபான்மையினர் சில அவதானங்கள்" என்ற இந்த நூல் அமைந்துள்ளது.
இது போன்ற இன்னும் பல அரசியல் நூல்களை ஆசிரியரிடமிருந்து தமிழ், முஸ்லிம் சமூகங்கள் எதிர்பார்க்கிறது.
நன்றி
8-05-200
அண்டன்
சூரணர்.ஏ.ரவிவர்மா, இர" ஆசிரியர்

ஜனாப். ஏ.எல்.எம்.பளில்
N
தகவுரை
நண்பர் எம்.எம்.எம்.நூறுல்ஹக் அவர்களின் இந்நூலை முதன் முறையாக ஒரு தடவை வாசித்து முடித்தவுடன் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
நூறுல்ஹக் - இலங்கையில் குறிப்பிடத்தக்களவு தடம் பதித்த சிரேஷ்ட இலக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். ஒரு சிறந்த படைப்பாளி. தனது வாழ்க்கைக் காலத்தின் முழுநேரப் பணியாகப் பத்திரிகைத் துறையைத் தேர்ந்தெடுத்துள்ளார். எமது நாட்டின் எழுத்தாளர்களில் எவ்வித ஒய்வுமின்றி மிகவும் அதிகம் அதிகமாக எழுதிக் குவிக்கும் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.
பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் இவரது பெரும்பாலான கட்டுரைகள் அரசியல் சார்ந்தவையாகவும், இஸ்லாமியக் கோட்பாடுகள் பற்றியனவாகவும், இலக்கிய விமர்சனங்களாகவும் மிளிர்கின்றன.
இலங்கையின் தேசிய அரசியல், தமிழர்களின் அரசியல் நடவடிக்கைகள், தமிழ்பேசும் மக்களின் போராட்ட அரசியல் அணுகு முறைகள், முஸ்லிம்களின் அரசியல் முன்னெடுப்புக்கள் என இவர் சகல துறைகளிலும் துறைபோக அணுகி ஆராய்ந்து பத்திரிகைகளில் கட்டுரைக ளை எழுதி வருகின்றார்.
நடுநிலை தவறாமல், துணிகரமான மாற்றுக் கருத்துக்களுடன் - கட்டுரைகளைத் தேசியப் பத்திரிகைகளில் படைப்பதென்பதும், விமர்சனங்களை முன்வைப்பதென்பதும் இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரை - எழுத்தாளர்கள் தமக்குத் தாமே படைத்துக் கொள்ளும் தற்கொலைக் களங்களாகும்.
கடந்த காலங்களில் இவ்வாறான பத்திரிகை எழுத்தாளர்களின் வசிப்பிடங்கள் கூட அழித்தொழிக்கப்பட்டுள்ளன. சில சந்தர்ப்பங்களில் எழுத்தாளர்களும் கூட எந்தவொரு தடயங்களுமில்லாமல் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனால்தான் இவ்வாறான எழுத்தாளர்கள் "புனைப் பெயர்களில்" பதுங்கியிருந்து எழுதுவதனை விரும்பி எடுத்துக் கொள்கின்றனர். இது அவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பினை ஓரளவுக்காவது வழங்கிக் கொண்டிருக்கின்றது.

Page 6
அதுவும் இன்றைய நிலையில் ஒரே புனைபெயரில்கூடத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்க முடியாது. புனைப் பெயர்களையும் கூட அடிக்கடி இரகசியமாக மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை இன்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தனது வழமையான எழுத்துப் பாணியைக் கூட மாற்றி மாற்றி எழுதவேண்டியுள்ளது.
இவ் அத்தனை நடைமுறைச் சிக்கல்களையும் தானன்டி நூறுல் ஹக் எழுதிய மிக முக்கியமான கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும்.
இந்நூலிலுள்ள கட்டுரைகள் யாவும் நான்கு வகை அரசியல் அடிப்படைகளில் எழுதப்பட்டுள்ளன.
1. இலங்கையின் முக்கியமான விடயங்களிலான அரசியல் அமைப்பு: அதன் அடிப்படையில் அதிகாரம் பெற்றியங்கும் ஆனைக்குழுக்கள்; சிறுபான்மை மக்கள் மீது அவற்றின் தாக்கம்; அதற்கான மாற்று ஆலோசனைகள்.
2. தேசிய அரசியலில் அரசியல் கட்சிகளின் போலித்தனங்கள்; தில்லு முல்லுகள் கூட்டுக்கள் ஒப்பந்தங்கள் அவற்றின் சாதக, பாதகமான அரசியல் முன்னெடுப்புக்கள்.
3. வடக்கு - கிழக்கு மாகாண தமிழ் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள், அவர்களின் அரசியல் காய் நகர்த்தல்களில் உள்ள பலவீனங்கள்; அவைபற்றிய காரசாரமான விமர்சனங்கள்; இனப்பிரச்சினை; தமிழர்களின் பாரம்பரிய அம்சங்கள்.
4. இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் சமுதாயம் மீதான தூர நோக்கின்மை: அவற்றில் தொக்கி நிற்கும் போலித்தனங்கள்; சிறுபான்மையினர்களான தமிழர்களும், முஸ்லிம்களும் முரண்படும் விடயங்கள்; முஸ்லிம்கள் மீதான ஏனைய சமூகத்தினரின் சந்தேகங்கள்.
இவ்வாறு பல சிறப்பம்சங்களுடன் அமையப் பெற்ற கட்டுரைகளைத் தாங்கி நிற்கும் இந்நூலைப் படித்து முடித்தவுடன், ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தின் அரசியல் வரலாற்றுத் தடங்கள் யாவும் - ஒரே பார்வையில் ஓர் குறுக்கு வெட்டு முகம் போல எம் மனக்கண்முன் தெளிவாக வியாபித்து நிற்கின்றன. இது வாசகர்களுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய வரப் பிரசாதமாகும்.
அரசியல் துறைசார்ந்த கல்விமான்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு மாத்திரமின்றி, தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்து கொள்ளத் துணியும் அரசியல் தலைவர்களுக்கும் இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஏ.எஸ்.எச்.பன்சீவி,
பிரதேச fellyfr y lleilldref jag: Pétp_kapr೩Agt;&#? கல்முனை. நிரதேச செயலாளர்,
WÉDANYM

அகவுரை
இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களான தமிழர்களும், முஸ்லிம்களும் பல்வேறு வகையான புறக்கணிப்பிற்குள்ளாகி, இந்நாட்டின் இரண்டாம் தர பிரஜைகளாக பெரும்பான்மையினர்களினால் கணிக்கப்படுகின்றனர்.
இதன்மூலம் தமிழ்பேசுகின்ற சமூகங்கள் எதிர்கொள்கின்ற இடர்களை வெகுஜனப்படுத்துவதிலும், மாற்றிடு பற்றிய சிந்தனைகளை முன்வைப்பதிலும் நான் கவனஞ் செலுத்திக் கொண்டிருக்கின்றேன். அவ்வாறான அறுவடைகளின் ஒரு பகுதியே இங்கு நூலாக்கம் பெற்றிருக்கின்றது.
எழுத்துத் துறையினுள் கடந்த 1981களிலிருந்து நான் காலடி எடுத்து வைத்தாலும் 1986களிலிருந்தே அரசியல், வரலாறு துறை சார்ந்த தரவுகளுடன் கூடிய தேடல் கட்டுரைகளின் பால் எனது கவனம் திரும்பியது. 1986களிலிருந்து 2002 ஏப்ரல் வரையான காலகட்டத்தில் எழுதியவற்றிலிருந்து சிலவற்றை இந்நூலின் உள்ளடக்கமாக்கி இருக்கின்றேன். ஆகவே, இந்நூலில் இடம்பெற்றுள்ள எல்லாக் கட்டுரைகளையும் அவற்றை எழுதிய கால சூழலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது காலப்பொருத்தமுடையதாக இருக்கும்.
இந்நூலின் உள்ளடக்கத்தில் காணப்பட்டிருக்கும் கட்டுரைகள் மூன்று பிரிவுகளை மையப்படுத்தி எழுதப்பட்டவையாகும். (1) இலங்கை அரசியலின் பொதுவான போக்குகள், (2) தமிழ் மக்கள் அரசியல்வாதிகளின் காய்நகர்த்தலினால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றார்கள், (3) முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், அதன் தடங்கள் என்பன பற்றியதாகும். "சிறுபான்மையினர் சில அவதானங்கள்" எனும் இந்நூலை வாசிப்போர் மேற்படி மூன்று நிலைகளையும் தெரிந்து கொள்வதன் மூலம் வரலாற்றின் பக்கங்களைச் சரிவர அடையாளங்காணுவார்களென நம்புகின்றேன்.
காலப் பதிவுகள் மனித வரலாற்றில் பல்வேறு மாற்றங்களுக்கு வழிகோரத் தக்கது. அந்த வகையில் இந்நூல் சில காலங்களின் பதிவுகளை தத்ருபமாகப் படம் பிடித்துக் காட்டுவதனால் இந்நூல் எக்காலத்திலும் நின்று நிலைக்குமெனவும் நம்புகின்றேன்.
இந்நூலிற்கான "முகவுரை" வழங்கிய "இடி வாரப் பத்திரிகையின்
ஆசிரியர் உயர்திரு.ஏ.ரவிவர்மா அவர்கட்கும், "தகவுரை" வழங்கிய

Page 7
கல்முனை பிரதேச செயலாளர் ஜனாப்.ஏ.எல்.எம்.பளில் அவர்கட்கும்.
இந்நூல் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும் கட்டுரைகளைப் பிரசுரித்து உதவிய பத்திரிகைகளுக்கும் அதன் ஆசிரியர்களுக்கும்,
இந்நூலினை வெளிக் கொணரும் மருதம் கலை இலக்கிய வட்டத்தினருக்கும், பதிவுரை வழங்கிய அதன் தலைவர் ஜனாப்.ஏ.எம்.எம்.நளிர் அவர்கட்கும்,
இந்நூலின் முகப்பட்டைக் கருத்துருவாக்கம் செய்து உதவிய அபாபில்கள் கவிதாவட்டப் பொருளாளரான, எனது உடன்பிறந்த சகோதரர் ஜனாப் எம்.எம்.எம்.நகீபு அவர்கட்கும்,
எனது அறிமுகத்தை எழுதி உதவிய "இரண்டாவது பக்கம் கவிதை இதழ் ஆசிரியரும், அபாபீல்கள் கவிதா வட்டச் செயலாளருமான ஜனாப் ஏ.எம்.எம்.ஜாபிர் பீ.ஏ அவர்கட்கும்.
இந்நூல் வெளிவருவதில் மிகவும் கரிசனையும், உதவிகளையும் மேற்கொண்ட எனது நண்பர்களான எஸ்.எச்-நிமத் (இடி-பிரதம ஆசிரியர்) என்.ஏ.திரன் (அபாபீல்கள் கவிதா வட்டம் - செயற்குழு முதல்வர்), அனிஸ்டஸ் ஜெயராஜ் (பன்னூல் ஆசிரியர்) ஜனாபா ரீ.என்.என்.பெறோஸா (ஆசிரியை) ஆகியோர்களுக்கும்,
இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை சேகரித்தும், நெறிப்படுத்தியும் உதவிய என் இனிய இல்லாள் எஸ்.பூகமர்ஜான் பீபீ (சமாதான நீதவான்) அவர்கட்கும்,
இந்நூலின் முகப்பட்டையை கணனிப்படுத்திய ஜனாப் எல்.எம்.பைசால் நூலின் தளக் கோலங்களை அமைத்து உதவிய எம்.எல்.எம்.அன்ஸார், ஏ.பி.மதன், கணனி எழுத்தமைப்பில் உதவிய செல்விகளான பிடேலியா பெர்னாண்டோ, பிரியதர்ஷினி சிவராமன், கபிலா ராஜசிங்கம், படிபார்த்து உதவிய சுபாரஞ்சனி சபாரட்ணம் ஆகியோர்களுக்கும்,
இந்நூலினை வாங்கி உற்சாகப்படுத்தும் அனைத்து உள்ளங்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிப்பதில் மிக மகிழ்ச்சியடைகின்றேன்.
மீண்டும் ஒரு சந்திப்பில் சந்திப்போம்.
-எம்.எம்.எம்.நூறுல்றைக்(Diploma. In MassMedia) 129,பி.ஒளப்மன் வீதி, சாய்ந்தமருது - 05. 27.05.2미02.

ஜனாப். ஏ.எம்.எம்.நளிர்
பதிவுரை
10ருதம் கலை இலக்கிய வட்டத்தின் இரண்டாவது வெளியீடு இது. எம்.எம்.எம்.நூறுல்ஹக் எழுதிய 'தீவும் தீர்வுகளும்'எனும் நூல் 1998ம் ஆண்டு முதலாவது வெளியீடாக வெளிவந்தது.
இரண்டாவதாகவும் எம்.எம்.எம்.நூறுல் ஹக் அவர்களின் 'சிறுபான்மையினர் சில அவதானங்கள்' என்ற இந்த நூலை வெளியிட்டு வைப்பதில் மருதம் கலை இலக்கிய வட்டம் மகிழ்ச்சியடைகிறது.
தமிழ் மொழியைப் பேசுகின்ற சிறுபான்மைச் சமூகங்களான தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் அரசியல்-சமூகப் பிரச்சினைகளை ஆராய்ந்து, நூறுல்ஹக் அவர்கள் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக "சிறுபான்மையினர் சில அவதானங்கள் வெளிவருகிறது. சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக நூலாசிரியர் நூறுல்ஹக் தெளிவான கருதுகோள்களைக் கொண்டிருக்கிறார். அக்கருதுகோள்களை ஆய்வுக்குட்படுத்தி சமூகத்தின் முன் அவதானிப்புக் காகச் சமர்ப்பிக்கப்படுவதே இந்நூலாகும்.
நூறுல் ஹக்கின் அரசியல் பார்வை விசாலமானது. புள்ளி விபரங்களையும், வரலாற்றுத் தரவுகளையும் ஆதாரமாகக் கொண்டவையாகவே அவரது கட்டுரைகள் உருவாக்கம் பெறுகின்றன. இதனால் வாசகர்களிடையே நூறுல்ஹக்கின் எழுத்துக்களுக்கு நம்பிக்கை மிகுந்த வரவேற்பிருக்கிறது.
இலங்கையின் சுயநல அரசியல் போக்குகளினால் சிறுபான்மைச் சமூகங்கள் பாரிய அளவில் பின்னடைவுகளை எதிர்நோக்கியிருக்கின்றன. இந்நூலில் இடம்பெற்றிருக்கும் சில அரசியல் ஆய்வுக்கட்டுரைகளில் நூலாசிரியர் நூறுல்ஹக் புறக்கணிக்கப்பட்டிருக்கும் சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் நிலைப்பாடுகளை தெளிவாக ஆராய்ந்திருக்கிறார். பலதுறை சார்ந்தவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் 'சிறுபான்மையினர் சில அவதானங்கள்' என்ற இந்த அரிய நூலுக்கு தமிழ் பேசும் நல்லுலகம் தங்களின் பூரண ஆதரவை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மருதம் கலை இலக்கிய வட்டம், -ஏ.எம்.எம்.நளிர்சாய்ந்தமருது தலைவர்
27.052O)2.

Page 8
2)
3)
4) 5)
6)
7)
8)
9)
O)
11)
12)
13)
14)
15)
I6) 17) 18)
19)
20) 21)
22)
உள்ளே உள்ளவை
சுதந்திர இலங்கையின் 11 பாராளுமன்றங்கள் ஒரு பார்வை 1947 -2000 தமிழர் பிரச்சினை திராதவரை இலங்கைக்கு விமோசனமில்லை. கல்முனை கரையோர மாவட்டத் திட்டம் இலங்கையின் நிர்வாகத்திற்குட்பட்டதே. தனித்துவமான இஸ்லாமிய பண்பாடு, நாகரிகம் சாதரண பெரும்பான்மையும் மக்கள் தீர்ப்பும் அரசியலமைப்பை மாற்றியமைக்க போதுமானதா? புலிகளை ஒதுக்கி விட்டுச் சமாதானத்தை ஏற்படுத்தலாமா? தெளிவான இனத்துவ வரையறைக்குள் இலங்கை முஸ்லிம்கள் வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு இது உகந்த தருணமா? ஆதம் வந்திறங்கிய இடம் இலங்கை! மலைமீது பதிந்துள்ளது அவரது பாதச் சுவடே!! இலங்கை அரசியலில் பெளத்த குருமாரின் ஆதிக்கம் தவிர்க்க முடியாததா? ஏமாற்றிப் பிழைக்கும் தமிழ்க் கட்சிகள் சமாதானம் யார் கையில்? தலைமைத்துவச் சண்டையில் ஹக்கீம் - பேரியல் நடுத் தெருவில் நிர்க்கதியாக முஸ்லிம் சமூகம் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி புலிகளுடன் ஓர் இணக்கத்துக்கு வரவேண்டும் வேட்டியும், சால்வையும் அணிவது திராவிடரிடமிருந்து வந்த பழக்கமல்ல! ஜனாதிபதி நாடாளுமன்றத்தை முற்றாக நிராகரித்து ஆட்சி புரிய முடியாது புலிகளின் எதிர்பார்ப்பை புரிந்து கொள்ளுமா அரசு
தென் கிழக்கலகிற்கான கோரிக்கை மீளாய்வுக்குரியதா?
ஜிஹாத்தின் யதார்த்தமும் தவறான கருத்துக்களும் இலங்கை அரசியலில் ஜூலை மாதமும் தமிழர் அழிப்புக்கான சதிமுயற்சிகளும்
சிவப்பு நீலம் கூட்டு சிறுபான்மையினருக்கு வேட்டு
தமிழ் பேசும் மக்களின் உறவு அழிவை நோக்கிச் செல்கிறதா? தடம் மாறும் இடது சாரிகள்
F=
F=
01 - 13
14 - 16
17 - 24 25-28
29 - 32
33-36
37 -40
41 - 45
46-48
49-53
54-55
56-58
59 - Bք
63-64
65-58 69-71 72 - 75 76 - 83
84-87 88-90
91-97 98-OO

லங்கையின் பாராளுமன்றப் பிரதி இ நிதித் தெரிவுமுறைமை மூன்றல் கைகளில் பேணப்பட்டிருக்கிறது.
கடந்த 1910 லிருந்து 1931 வரை "இனவாரிப் பிரதிநிதித்துவ" முறைமையும், 1931களிலிரு ந்து 1978கள் வரை "பிரதேசவாரி - தொகுதி ரீதியான பிரதிநிதித்துவ" முறைமையும், 1978 களிலிருந்து இற்றைவரை நடைமுறையில் "விகிதாசாரப் பிரதிநிதித்துவ" முறைமையும் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் முதலாவது தேர்தல் தொ குதி நிர்ணயக்குழு 1946களில் நியமிக்கப்பட் டது. இக்குழுவில் எல்.எம்.டி.சில்வா, எச்.ஈ. ஜோன்ஸ், என்.நடராசா ஆகிய மூவர் இடம் பெற்றிருந்தனர். இக்குழு முழு இலங்கையை யும் 89 தேர்தல் தொகுதிகளாக வரையறுத்
இவற்றில் 84 தனியங்கத்துவத் தேர்தல் தொகுதிகளையும், பலப்பிட்டிய அம்பலங் கொடை, பலாங்கொடை கடுகண்ணாவ, பதுளை ஆகிய நான்கு தொகுதிகளை இரட் டை அங்கத்துவத் தேர்தல் தொகுதிகளா கவும், கொழும்பு மத்தி மூன்று அங்கத்துவத் தேர்தல் தொகுதியாகவும் வகுக்கப்பட்டது. இதன் பிரகாரம் 89 தேர்தல் தொகுதிகளிலி ருந்து 95 உறுப்பினர்கள் மக்களினால் தெரிவு செய்யப்பட்டனர். 6 பேர் நியமன ரீதியாக அங்கத்துவம் பெற்றனர்.
நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர் கள் 95+6=101 பேர்களாகும். இதன்படி சுதந்திர இலங்கையில் 1947, 1952, 1956 ஆகிய காலங்களில் மூன்று பொதுத் தேர் தல்கள் நடைபெற்றுள்ளன. அதன் விபரங் கள் பின்வருமாறு:
OO
எம்எம்எம்நூறுல்ஹக்

Page 9
கட்சிகள் பெற்றமொத்தவாக்குகள் I ஐ.தே. கட்சி 751,432 42 சுயேட்சை 5,49,38 21 லச, கட்சி 2,04,020 O தமிழ்ச் சங்கம் 82,493 O7 தமிழ் காங்கிரஸ் 72,230 O பொ, லெ, கட்சி 1, 13, 193 D5 கம்பியூனிஸ்ட் கட்சி 70,331 O3 தொழிற் கட்சி 38,933 Ol வெற்றி பெற்ற மொத்த உறுப்பினர்கள் 95 நியமன அங்கத்தவர்கள் D5 நாடாளுமன்ற மொத்தப் பிரதிநிதிகள் 墮101薔灑
சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் ஓர் உறுதியான அரசாங்கத்தை அமைப்பதற்குப் போதுமான பெரும்பான்மை ஆசனங்களை எக்கட்சியுமே பெறவில்லை. ஆயினும் ஐ.தே.கட்சி அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றியதனால் ஏ.ஈ குணசிங்கா, சிற்றம்பலம், எஸ்.சுந்தரலிங்கம் போன்றவர்களை ஆரம்பத்தில் இணைத்துக் கொண்டு அது ஆட்சியை அமைத்தது.
ஐ.தே.க. யின் தலைவரான டி.எஸ், சேனநாயக்கா இலங்கையின் முதல் பிரதம மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அரசாங்கம் அமைத்த ஒரு வருடத்துள் அ.இ.தகாங்கிரஸைச் சேர்த்து ஜிஜிபொன்னம்பலத்திற்கும் அமைச்சர் பதவி வழங்கினர். இவ்வாறு ஐதேக.வைச் சேராத அங்கத்தவர்களும் இலங்கையின் முதலாவது மந்திரி சபையில் இடம்பெற்றிருந்ததனால் இதுவொரு "கூட்டு மந்திரி சபை" என்றே கொள் ளப்பட்டது.
பிரதம மந்திரி டி.எஸ். சேனாநாயக்கா 1952ல் குதிரையிலிருந்து விழுந்து மரணம டைந்ததையடுத்து அவரது மகன் டட்லி சேனநாயக்காவை இலங்கையின் இரண்டாவது பிரதம மந்திரியாக சோல்பரி பிரபு நியமித்தார். பதவியேற்ற குறுகிய காலத்துள் இவர் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு வழிவகுத்தார். இத்தேர்தல் மூலம் ஓர் உறுதியான அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளவும் வழி கோரினார். இந்த நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக என்.எம்.பெரேரா இருந்தார்.
து நாடாளுமன்றம் - 1952
வற்றுமொத்தவாத்திவி|வெற்றிற்கு
10,26,005
3,26,783 1. ரீலங்கா சுதந்திரக் கட்சி 3,61,250 லங்கா சமசமாஜக் கட்சி 303,133 09 புரட்சிகர ல, ச. கட்சி 34,528 தமிழ்ச் சங்கம் 64,512 O4 பெடரல்கட்சி (தமிழரசுக்கட்சி) 45,31 தொழிற் கட்சி 27,096 O வெற்றி பெற்ற மொத்த உறுப்பினர்கள் 95 நிய"ஆன அங்கத்தவர்கள் H 05
ாடாளுமன்ற மொத்தப் பிரதிநிதிகள் 101蠱
சிறுபானமையினர் சில அவதானங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுதந்திர இலங்கையின் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.தே.கட்சி பெரும் பான்மையான ஆசனங்களுடன் வெற்றி பெற்று, இரண்டாவது அரசாங்கத்தைத் தனிப் பெரும்பான்மையில் அமைத்துக் கொண்டது. அதன் தலைவரான டட்லி சேனநாயக்கா பிரதம மந்திரியாகத் தெரிவு செய்யப்பட்டாரென்பது குறிப்பிடத்தக்கது. இப்பாராளுமன் றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக எஸ்.டப்ளியூ. ஆர்.டி. பண்டாரநாயக்கா இருந்தார்.
பிரதம மந்திரிப் பதவியிலிருந்து டட்லி சேனநாயக்கா 1953 இல் இராஜினாமா செய்ய நேரிட்டதினால் போக்குவரத்து அமைச்சராகவிருந்த சேர், ஜோர்ன், கொத்தலா வெல இலங்கையின் மூன்றாவது பிரதம மந்திரியானார். 1956 இல் மொழிப் பிரச்சினை முக்கியத்துவம் பெற்றமையால் அதனை மக்கள் முன்கொண்டு செல்வதற்காக பாராளு மன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது.
இத்தேர்தலுக்கு முன்னர் றி.ல.சு.கட்சி, விப்லவக்கார, இலங்கை சமசமாஜக் கட்சி, பாசாபெரமுன சரியக் கொல்லையின் கீழ் இயங்கிய ஒரு குழு என்பன கூட்டிணைந்து "மக்கள் ஐக்கிய முன்னணி" என்ற அமைப்பினை உருவாக்கி, லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்பவற்றுடன் ஒரு தேர்தல் போட்டித் தவிர்ப்பு ஒப்பந்தத்துடன் இத்தேர்தலைச் சந்தித்தது.
Eg ILITLDE-956
மக்கள் ஐக்கிய முன்னணி 1045,725 5 லங்கா சமசமாஜக் கட்சி 2,74,204 14 பெடரல் கட்சி (தமிழரசுக் கட்சி) 42,036 O ஐக்கிய தேசியக் கட்சி 7,13,154 O3 சுயேட்சை 2,89,491 O8 கம்யூனிஸ்ட் கட்சி 1, 19,715 O3 தமிழ் சங்கம் 8,914 O
வெற்றி பெற்ற மொத்த உறுப்பினர்கள் 95 நியமன அங்கத்தவர்கள் O நாடாளுமன்ற மொத்தப் பிரதிநிதிகள் ့ဖြိုးနှီး 羈
சுதந்திர இலங்கையின் மூன்றாவது பாராளுமன்றத் தேர்தலில் பல கட்சிகளின் கூட்டான மக்கள் ஐக்கிய முன்னணி கட்சி அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றி அரசாங்கத்தை அமைத்தது. இதன் பிரதான கட்சியான ரீல.சு.கட்சியின் தலைவரான எஸ்.டப்ளியூஆர்.டி.பண்டாரநாயக்கா இலங்கையின் நான்காவது பிரதம மந்திரியானார். இப்பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக என்.எம்.பெரேரா இருந்தார்.
மக்கள் ஐக்கிய முன்னணி பெற்ற வெற்றி "இலங்கை அரசியலில் ஒரு மெளனப் புரட்சி, திருப்பு முனை, பிரிவினைக் கோடு" என அரசியல் விமர்சகர்களினால் கோடிட்டுக் காட்டப்பட்டதுடன், ஐ.தே.க. செலுத்திய தனிக்கட்சி ஆதிக்க நிலையினை மாற்றி இலங்கை அரசியலை இரு கட்சிப் போக்குக்கு வழிசமைத்ததென்ற நிலையினையும் ாடுத்துக் காட்டிற்று. 1947-1955 காலப்பகுதிகளில் ஐ.தே.கட்சியின் ஆதிக்கமே மேலோங் மிக் காணப்பட்டது.
(EB)
.எம்.எம்.எம்.நூறுல்லுறக்

Page 10
பிரதமர் பண்டார நாயக்கா அமைத்த அமைச்சரவையும் "ஒரு கூட்டு மந்திரி சபையாகும்" இவரது காலத்தில் இருமுறை மந்திரிசபை மாற்றியமைக்கப்பட்ட போதும் ஒரு தமிழர் கூட அமைச்சராக்கப்படவில்லை என்பது ஈண்டு கவனிக்கத்தக்கது. இவர் 1959இல் சுட்டுக் கொலை செய்யப்பட்டதையடுத்து இலங்கையின் ஐந்தாவது பிரதம மந்திரியாக டபிள்யூ தஹநாயக்க பதவியேற்றார்.
இவர் நாடாளுமன்ற ஜனநாயக சம்பிரதாயங்களுக்கு மாறாக அமைச்சர்களை நியமிப்பதில் கரிசனை காட்டியதனால் அரச தரப்பின் பெரும்பான்மை ஆதரவை இழந்தார். இந்நிலையுணர்ந்த அவரே நாடாளுமன்ற ஆயுட்காலம் முடியும் முன்னரே கலைத்து, பொதுத்தேர்தலைப் பிரகடனப்படுத்தினார்.
சுதந்திர இலங்கையின் தேர்தல் தொகுதிகளை நிர்ணயிப்பதற்காக இரண்டாவது தடவையாக 1959 இல் ஒரு குழு நியமிக்கப்பட்டது. இக்குழு முழு இலங்கையையும் 45 தேர்தல் தொகுதிகளாக நிர்ணயித்து அதில் 140 தனி அங்கத்துவத் தேர்தல் தொகுதிகளாகவும், மட்டக்களப்பு, மூதூர், பதுளை, அக்குறனை ஆகிய நான்கு தொகுதிகளை இரட்டை அங்கத்துவ தேர்தல் தொகுதிகளாகவும், கொழும்பு மத்தி மூன்று அங்கத்துவத் தேர்தல் தொகுதியாகவும் வரையறுத்தது.
சோல்பரி அரசியல் திட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தினால் அம்பலாங்கொடை பலப்பிட்டிய, பலாங்கொடை, கடுகண்ணாவ ஆகிய மூன்று தொகுதிகளிலும் தொடர்ந்து இரு அங்கத்துவத்தை இக்குழு அனுமதிக்க முடியாது போயிற்றென்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி 145 தேர்தல் தொகுதிகளிலிருந்து 151 பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெ டுக்கவும், 6 பேர் நியமன உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுவதற்கும் வழியானது. நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் 151+6=157 பேர்களாகும். இதற்கமைய 1960 மார்ச், 1960 ஜூலை, 1955,1970 ஆகிய காலங்களில் நான்கு நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. அதன் பெறுபேறுகள் பின்வருமாறு அமைந்தன.
DITaïditsugi BILITEILOaïJû - 1960. LDITïá
தகள்" பற்வத்தவக்குள்லறிவற்றதாங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 9,08996 50 ரீலங்கா சுதந்திரக் கட்சி 548,094 AS பெடரல் கட்சி (தமிழரசுக் கட்சி) 1,76,492. 5 மக்கள் ஐக்கிய முன்னணி 325,832 O லங்கா சமசமாஜக் கட்சி 3,22,352 10 சுயேட்சை 88 ரீலங்கா ஜனநாயகக் கட்சி 1,25,341 O4 கம்யூனிஸ்ட் கட்சி 141,857 O3 தேசிய விமுக்தி பெரமுன 120 தமிழ்ச் சங்கம் 38,275 : 01 சோசலிஷ மக்கள் கட்சி 24,143 O ரீலங்கா தேசிய முன்னணி 11115 O1 போசத் பண்டாரநாயக்க முன்னணி 9,749 Öl
வெற்றி பெற்ற மொத்த உறுப்பினர்கள
நியமன அங் த்தவர்கள்
நாடாளுமன் மொத்தப் பிரதிநிதிகள்
சிறுபான்மையினர் சில அவதானங்கள்"
 
 
 
 
 
 
 

சுதந்திர இலங்கையின் நான்காவது நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்கக் கூடியளவில் ஆசனங்களைப் பெறவில்லை. ஐ.தே.கட்சி அதிக இடங்களை வெற்றி பெற்றதனாலும், சமஷ்டிக் கட்சியின் ஆதரவு கிடைக்குமென்ற எதிர்பார்ப்பில் ஐ.தே.கட்சித் தலைவர் டட்லி சேனநாயக்கா அரசாங்கத்தை அமைத்துக் கொண்டார். இப்பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ளி.பி.டி சில்வா இருந்தார்.
சமஷ்டிக் கட்சியின் குறைந்த பட்சக் கோரிக்கைகளை ஏற்க முடியாததனால் இவ்வரசாங்கம் "சிம்மாசனப் பிரசங்கத்" தின்போது தோற்கடிக்கப்பட்டது. மகாதேசாதிபதி அடுத்த பெரும்பான்மையுள்ள ரீல.சு.கட்சியினை ஆட்சியமைக்க அழைக்காது, பாராளு மன்றத்தைக் கலைத்து மீண்டும் 1960 ஜுலையில் பொதுத் தேர்தல் என்ற அறிவிப்பை வெளிப்படுத்தினார். இது ஒரு தலைப்பட்சமானதென மகாதேசாதிபதியின் நடவடிக்கை விமர்சிக்கப்பட்டுக் கண்டிக்கப்பட்டது.
8jTsugLIGIOSilph - 960äoga
|பெற்றமொத்தவாக்குகள் வெற்றிபெற்றதாங்க
|றிலங்கா சுதந்திரக் கட்சி 10,22, 154 75 |ஐக்கிய தேசியக் கட்சி 1143,290 3) பெடரல் கட்சி (தமிழரசுக் கட்சி) 2, 18,753 1Ճ GAITĖJEGT FLIDEFLDITEgli atsiif 2,23,993 50Bu Ju 600&F 140,527 OS க்ேகள் ஐக்கிய முன்னணி 102,833 O கம்யூனிஸ்ட் கட்சி 90,219 O4 |றிலங்கா ஜனநாயகக் கட்சி 29,190 O2 தேசிய விமுக்தி பெரமுன 14,030 Γ2 தமிழ்ச் சங்கம் 46,803 Ol
வெற்றி பெற்ற மொத்த உறுப்பினர்கள் 15 நியமன அங்கத்தவர்கள் D5
டாளுமன்ற மொத்தப் பிரதிநிதிகள் 曇157轟
ஐந்தாவது நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதலான ஆசனங்களை ரீலககட்சி பெற்றதனால் தனித்து அரசாங்கத்தை அமைத்துக் கொண்டது. அதன் தலைவரான திருமதி றிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் ஆறாவது பிரதம மந்திரியானார். அதே நேரம் உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுக் கொன் பார். இப்பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக டட்லி சேனநாயக்கா இருந்தார். ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களைக் கொண்ட மந்திரிசபை அமைக்கப் பட்டாலும் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு, பொருளாதாரப் பிரச்சினை என்பன போன்றவற் றினை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. இதனைச் சமாளித்துக் கொள்வதற்காக வேண்டி இடதுசாரிக் கட்சிகளைத் தன்பக்கம் இணைத்து விடும் நடவடிக்கையில் இறங்க வேண்டியதாயிற்று.
இடதுசாரிக் கட்சிகளுள் பலமிக்கதான LS.S.Pயை அரசாங்கத்துடன் சேர்ப்பதில் வெற்றி கண்டார் இக்கட்சியினர்களுக்கும் தமது அமைச்சரவையில் இடம் வழங்கினார். தன் மூலம் இங்ரது மந்திரி சபையும் "ஒரு கூட்டு அமைச்சரவையாகியது" அதேநேரம்
- O -எம்.எம்.எம்நூறுல்லுறக்

Page 11
Uலசு கட்சியின் அரசாங்கத்தில் இணைவதை விரும்பாத ஒரு பகுதியினர் L.S.S.P யிலிருந்து விலகி, எட்மண்ட் சமரக் கொடியின் தலைமையில் ஒரு புதிய கட்சியைத் தோற்றுவித்தனர்.
Uல.சு. கட்சியமைத்த கூட்டு மந்திரி சபை தொழிற்சங்க நடவடிக்கைகளைப் பிற் போட உதவிய போதிலும் அரசாங்கத்தை நிலை நிறுத்த உதவவில்லை. இவ்வரசாங்கம் கொண்டு வந்த பத்திரிகைகளைத் தேசிய மயமாக்கல் மசோதாவை முறி.லசு. கட்சியினரில் பத்துப் பேர் எதிர்த்து வாக்களித்தமையால் மசோதா தோல்வியடைந்ததோடு, அரசாங் கமும் தோல்வி கண்டதால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலுக்கான திகதியும் அறிவிக்கப்பட்டது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் 1956 - 1965 காலப் பகுதி ரீ.ல.சு.கட்சி ஆதிக்கம் செலுத்தியதாகும். இக்காலப் பகுதிகளில் பண்டாரநாயக்காவும் திருமதி பறிமாவோ பண்பார நாயக்காவும் கூட்டரசாங்கங்களை அமைத்தமையால் "இலங்கையின் அரசியல் ஒரு இரு கூட்டுக் கட்சி" முறையை நோக்கி வளர்ந்து செல்கின்றதென்ற முடிவிற்கு இட்டுச் சென்றது.
ஆறாவது நாடாளுமன்றம் - 1965
万 கட்சிகள்:Tவற்பொத்தவர்க்குகளிவற்றிவற்ஆாங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 15,79, 18 பரீலங்கா சுதந்திரக் கட்சி 12,26,883 41 பெடரல் கட்சி (தமிழரசுக் கட்சி) 2,17,986 4. GusÉET SuperLpergef a, L-fl 302,095 O
CALLLIGE 237,805 ரீ. சுதந்திர சோஷலிசக் கட்சி 129,986 OS கம்யூனிஸ்ட் கட்சி 109,744 O தமிழ்ச் சங்கம் 98,726 O3 மக்கள் ஐக்கிய முன்னணி 110,883 (O 1 தேசிய விமுக்தி பெரமுன 18,791 OLI வெற்றி பெற்ற மொத்த உறுப்பினர்கள் 151 நியமன அங்கத்தவர்கள் O நாடாளுமன்ற மொத்தப் பிரதிநிதிகள் 。|円臀
சுதந்திர இலங்கையின் ஆறாவது நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியும் தனித்து அரசாங்கத்தை அமைக்குமளவில் ஆசனங்களை வெற்றி கொள்ளவில்லை. ஆயினும் இத்தேர்தலில் கூடுதலான ஆசனங்களை வெற்றி பெற்ற ஐ.தே.கட்சி சமஷ்டிக் கட்சி, தமிழ் காங்கிரஸ், ரீ.ல.சு.சோ கட்சி, ஜாதிக விமுக்திப் பெரமுன என்பவற்றை இணைத்து ஒரு தேசிய அரசாங்கத்தை அமைத்தது. இப்பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகத் திருமதி ரீமாவோ பண்டாரநாயக்கா இருந்தார்.
டட்லி சேனநாயக்காவை பிரதம மந்திரியாகக் கொண்ட இவ்வரசாங்கத்தின் அமைச்சரவையும் ஒரு கூட்டு மந்திரி சபையாகும். இதில் எம். திருச்செல்வம் அமைச்சரா கவிருந்து இடையில் இராஜினாமாச் செய்தார். கூட்டுக் கட்சிகளுக்குள் பிளவுகளும், கருத்து முரண்பாடுகளும் ஏற்பட்ட போதிலும் நாடாளுமன்ற ஆயுட்காலம் முழுவதும் ஆட்சியிலிருந்ததென்பது குறிப்பிடத்தக்கது.
இப்பாராளுமன்ற காலத்தோடு இலங்கையின் அரசியல் வரலாற்றில் புதியதோர் அத்தியாயம் ஆரம்பமாயிற்று. அதாவது ஐ.தே.கட்சி வலதுசாரிகளுடனும், ரீல.சு. கட்சி இடதுசாரிகளுடனும் கூட்டுச் சேர்வதுமான ஒரு போக்கினை நோக்கிச் ல்ெலத் தொடங்கிற்று
9–
சிறுபாண்மையினர் சில அவதானங்கள்

signag STLISELDeigh - 1970
:கட்சிகள் ஜி பெற்றமொத்தாக்குகள் வெற்றிவர்
ரீலங்கா சுதந்திரக் கட்சி 18, 12,849 91 லங்கா சமசமாஜக் கட்சி 4.33,224 19 ஐக்கிய தேசியக் கட்சி 18,76,956 தமிழரசுக் கட்சி 2.45,747 3 கம்யூனிஸ்ட் கட்சி 169,229 O தமிழ் காங்கிரஸ் 1, 5,567 O3 சுயேட்சை 2,25.559
வெற்றி பெற்ற மொத்த உறுப்பினர்கள் 15 நியமன அங்கத்தவர்கள் நாடாளுமன்ற மொத்தப் பிரதிநிதிகள்
சுதந்திர இலங்கையின் ஏழாவது நாடாளுமன்றத் தேர்தலில் ரீலசு. கட்சி தனித்தே ஆட்சியை அமைக்கக் கூடிய பலமிருந்தும் லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவைகளை இணைத்து அரசாங்கத்தை அமைத்தது. இப்பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஜே.ஆர். ஜயவர்த்தன இருந்தார். திருமதி பறிமாவோ பண்டார நாயக்கா பிரதமரானதுடன், "ஒரு கூட்டு மந்திரி சபையையே அமைத்துக் கொண்டார்.
இவ்வரசாங்கம் "சோல்பரி அரசியல் திட்டத்தின் கீழ் இலங்கை நாடாளுமன்றம் இறைமை பெற்றிருக்கவில்லை" என வாதிட்டு 1972 இல் ஒரு புதிய "குடியரசு அரசி பல் திட்டத்தினை" அறிமுகப்படுத்தியது. இவ்வரசியல் திட்டத்தின் கீழ் "தேசிய அரசுப் பேரவையை ஒரு மீயுயர்" கருவியாக்கியது. நிலச் சீர்திருத்தம், மற்றைய கொள்கை களிலும் U.ல.சு. கட்சிக்கும், லங்கா சமசமாஜக் கட்சிக்குமிடையில் முரண்பாடுகள் தோன்றியதனால் ல.ச.ச.கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சொற்ப காலத்துள் கம்யூனிஸ்ட் கட்சியும் அரசாங்கத்திலிருந்து வெளியே றியது. இதனால் இவ்வரசாங்கம் தனது இறுதி காலத்தில் தனியே (ரீல.சு. கட்சி மட் டுமே ஆட்சியை நடத்தியது.
இலங்கை முதலாம் குடியரசு அரசியல் திட்டத்தின் கீழ் மூன்றாவது தடவையாக நேர்யல்தித்தவல தலைமையில் தேர்தல் தொகுதி நிர்ணய குழுவொன்று நியமிக்கப் பட்டது. இக்குழுவின் சிபாரிசுக்கமைய 1975 பெப்ரவரியில் தேசிய அரசுப் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட முதலாம் குடியரசு அரசியல் திட்டத்தின் முதலாம் திருத்தத்திற்கமைய 90,000 மக்களுக்கு ஒர் உறுப்பினர் என மாற்றியமைக்கப்பட்டது.
இக்குழுவினர் முழு இலங்கையையும் 160 தேர்தல் தொகுதிகளாக வகுத்து, இதி லிருந்து 168 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் தங்களின் வாக்குரிமையினால் தேர்ந்தெடுக்கும் வகை செய்யப்பட்டது.
இவற்றில் 154 தனி அங்கத்துவ தேர்தல் தொகுதிகளாகவும், கொழும்பு மத்தி, நுவரெலியா - மஸ்கெலியா ஆகிய இரு தொகுதிகளையும் 3 அங்கத்தவர்கள் தொகுதிகளாகவும், மட்டக்களப்பு பொத்துவில், பேருவளை, ஹரிஸ்பத்துவ ஆகிய வற்றை இரட்டை அங்கத்துவ தொகுதிகளாகவும் வரையறுத்தனர்.
O)
στώ στιοστώφρούρινά

Page 12
இதன்படி மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 154+6+8=168 பேர்களாவர். இவர் களை மக்கள் தங்களின் வாக்குரிமையினால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்கியது. இதற்கமைய 1977 இல் ஒரு நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமே நடை பெற்றது. அதன் விபரம் பின்வருமாறு அமைந்து காணப்படுகின்றது.
மொத்த வாக்குகள்|வெற்றிபெற்ற ஆசனங்கள்
31,79,221 1 (} தமிழர் விடுதலைக் கூட்டணி 4,21,488 8 ரீலங்கா சுதந்திரக் கட்சி 18,44,331 O8 சுயேட்சை 3,53,014 O1 இ.தொ.கா 62.707 Ol
வெற்றி பெற்ற மொத்த உறுப்பினர்கள் நாடாளுமன்ற மொத்தப் பிரதிநிதிகள்
சுதந்திர இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை வரலாறு காணாத அளவில் ஐ.தே.கட்சி 45 வீதமான ஆசனங்களைக் கைப்பற்றி அரசாங்கத்தை அமைத்துக் கொண்டது. அதன் தலைவரான ஜே.ஆர். ஜயவர்த்தனா இலங்கையின் ஏழாவது பிரதம மந்திரியானார். 'தனித்து அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளும் பலமிருந்தும், ஆரம்பத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொண்டமானும், பின்னர் சமஷ்டிக் கட்சியிலிருந்து விலகி ஐ.தே.கட்சியில் இணைந்து கொண்ட செ. இராசதுரையையும் அமைச்சரவையில் இடம்பெறச் செய்தார். ஆகவே இப்பாராளுமன்றமும் ஒரு கூட்டு மந்திரிசபை என்றே கூறவேண்டும்.
இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் முதற் தடவையாக சிறுபான்மைச் சமூகத் தின் கட்சி எதிர்கட்சியான வரலாறும் இப்பாராளுமன்றத்திற்கேயுண்டு. 1977 - 1978 காலப்பகுதி வரை திரு.ஏ. அமிர்தலிங்கமும், 1978 - 1988 வரை அனுரா பண்டாரநா யக்காவும் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்தனர். அது மட்டுமன்றி 1978 இல் ஒரு புதிய அரசியல் திட்டத்தையும் நடைமுறைக்குக் கொண்டு வந்தது. அதுவே இற்றை வரைநடைமுறையில் இருந்து வருகின்றது.
இவ்வரசியல்திட்டத்தின் மூலம் "நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி" முறைமையினை அறிமுகஞ் செய்ததோடு, இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜே.ஆர். ஜயவர்த்தனா ஆனார். இவ்வரசியல் திட்டம் "விகிதாசாரத் தேர்தல்" முறைமையையும் கொண்டு வந்தது.
இதனால் சுதந்திர இலங்கையில் நான்காவது தடவையாக ஜி.பி.ஏ. சில்வா தலைமை யில் "தேர்தல் தொகுதி நிர்ணயக் குழு" நியமிக்கப்பட்டது. இக்குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையில் பின்வரும் வகையில் தேர்தல் தொகுதிகளும் பாராளுமன்ற மொத்தப் பிரதிநிதிகளின் எண்ணிக்கைகளும் மாற்றம் பெற்றன.
இலங்கையின் இருபத்து ஐந்து நிர்வாக மாவட்டங்கள் இருபத்திரண்டு தேர்தல் LDILLETTE மாற்றப்பட்டன. இதன் மூலம் ஒவ்வொரு தேர்தல் மாவட்டமும் ஒரு
சிறுபாணிமையினர் சில அவதானங்கள்
 
 
 

தேர்தல் தொகுதியானது. இதிலிருந்து 196 நாடாளுமன்றப் பிரதிநிதிகள் தெரிவாக வேண்டுமென மேற்படி குழு வரையறுத்தது. ஆனால் நடைமுறை அரசியல் திட்டத்திற் குக் கொண்டுவரப்பட்ட 14ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தின் மொத்த உறுப்பினர் தொகை 225 ஆக அதிகரிக்கப்பட்டது.
இது "இலங்கையின் சனத்தொகை காலத்திற்குக் காலம் மாற்றமடைந்தாலும் இப் பாராளுமன்ற மொத்தப் பிரதிநிதிகளின் தொகையில் மாற்றமேற்படாதென்பதை" எடுத்துக் காட்டுவதாகக் கொள்ளலாம். 225 உறுப்பினர்களும் பின்வரும் அடிப்படையில் தெரிவு செய்யப்படுகின்றனர்.
இருபத்திரண்டு தேர்தல் மாவட்டங்களிலிருந்து 150 உறுப்பினர்கள் மக்களின் வாக்குரிமையினால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகின்றனர். ஒரு மாகாணத்திற்கு நான்கு பிரதிநிதிகள் என்ற வகையில் ஒன்பது மாகாணங்களுக்கும் 36 உறுப்பினர்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றனர். ஏனைய 29 பிரதிநிதிகளும் தேசிய ரீதியாகக் கட்சிகள் பெறும் வாக்குகளின் வீதத்திற்கேற்ப "தேசியப்பட்டியல்" உறுப்பினர்களாகின்றனர்.
இதன் பிரகாம் இலங்கையின் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகை 160+36+29-225 பேர்களாகும். இதற்கமைய 1989, 1994, 2000 ஆகிய காலங்களில் மூன்று பொதுத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. அதன் விபரம் பின்னர் இடம்பெறும். கடந்த 1978 இல் கொண்டு வரப்பட்ட அரசியல் திட்டத்தின் மூலம் ஜனாதிபதியான ஜே.ஆர். ஜயவர்தனா 1982 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார். இதன் பின்னர் இதேயாண்டில் "பொதுத் தேர்தல் வேண்டுமா? வேண்டாமா?" என்ற கோரிக்கையை மக்கள் தீர்ப்பிற்கு முன் வைத்து நடாத்தப்பட்ட தேர்தலில் "தேர்தல் வேண்டாமென" மக்கள் அளித்த ஆணையின் அடிப்படையில் 1977 தொடக்கம் 1988 காலப்பகுதிகள் வரை ஐ.தே.கட்சியே ஆட்சியிலிருந்தது.
கடந்த 1970 - 1977 வரையான காலப் பகுதிகளில் ஆட்சியிலிருந்த பூரில.சு. கட்சியின் பொருளாதாரக் கொள்கையினால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டனர். உணவு, உடைத்தட்டுப்பாடுகளும் வரையறைகளும் காணப்பட்டதனால் இவ்வரசாங்கத்தைவிடப் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஐதேகட்சியே பொருத்தமுடை யதாக இருக்குமென மக்கள் நம்பத் தொடங்கினார்கள்.
சிறுபான்மைச் சமூகங்களான தமிழ், முஸ்லிம் மக்கள் மீது நெருக்குதல்களை இவ்வரசாங்கம் மேற்கொண்டமை - தரப்படுத்துதல், மொழிப்புறக்கணிப்பு, மத விரோதப் போக்குகளைப் பொதுவாகவும், குறிப்பாக முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட புத்தளம் பள்ளிவாசல் தாக்குதல், மகியங்கனைக் கலவரம், ஹஜ்ஜுக் கடமைக்குச் செல்வோர் தொகையில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள், முஸ்லிம்களின் வர்த்தகத் தைச் சீர்குலைத்தமை போன்ற நடவடிக்கைகளினால் மாற்று அரசாங்கத்தின் பால் இவர்களது கவனஞ் செல்லத் தொடங்கி விட்டது.
இவற்றின் பிரதிபலிப்பே 1977 இல் ஐ.தே. கட்சி அமோக வெற்றி பெற்றதன் பின்பு லமென்றும், மக்களின் எதிர்பார்ப்பிற்கேற்ற வகையில் பொருளாதாரக் கொள்கையில் கொண்டுவரப்பட்ட பல மாற்றங்களினால் காணப்பட்ட முன்னேற்றகரமான பொருளாதார நிலைகளுமே 1977 -1994 வரையான காலப் பகுதிகளில் ஐ.தே.கட்சி ஆதிக்கம் செலுத்தியதை விமர்சகர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருமுறை பதவி வகித்தவர் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடியாது என்ற சட்டத்தின் அடிப்படையில் 1988 இல் நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கட்சியின் சார்பில்

Page 13
ரனசிங்க பிரேமதாசா போட்டியிட்டார். இவர் 50.43 வீதமான வாக்குகளைப் பெற்று இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானார்.
கடந்த 1989 இல் இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதுவே விகிதாசாரத் தேர்தல் முறைமையின் கீழ் நடைபெற்ற முதலாவது நாடாளுமன்றத் தேர்தலும் 225 பிரதிநிதிகளைக் கொண்ட முதற் பாராளுமன்றமுமாகும். இத்தேர்தலில் பெறுபேறுகள் கீழ்காட்டப்பட்ட அட்டவணையில் உள்ளவாறு அமைந்திருந்தன.
|ili
பெற்றமொத்த தேர்தல்மாவட்டத் வெற்றிபெற்ற
ಙ್ ||:|ಿಣಾ|Ñ ஐ.தே.கட்சி 28,37,961 11) 125 றி.சு.கட்சி 1780,599 5E சுயேட்சை 2,29,877 12 3. த.வி.கூட்டணி 1,88,593 O9. O ரீ.மு.கா 2,02,014 O3 [[]] ஐ.சோ.முன்னணி 1,60,271 O O3 ம.ஐ.வி.மு 95,793 O
மொத்த நாடாளுமன்றப்
பிரதிநிதிகள்
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.தே.கட்சி தனித்து உறுதியான அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளப் போதுமான ஆசனங்களைக் கைப்பற்றியது. ஆயினும் இத்தேர்தலின் போது ஐ.தே.கட்சியின் சின்னத்தில் இ.தொ.கா போட்டியிட்டது. இதனால் ஐ.தே.கட்சியமைத்த அமைச்சரவை "ஒரு கூட்டு மந்திரி சபை" யாகும். இப்பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகத் திருமதி ரீமாவோ பண்டாரநாயக்கா இருந்தார்.
ஏறத்தாழப் பதினேழு வருடங்கள் (1977 - 1994 வரை) தொடர்ந்தும் ஐ.தே. கட்சியே அரசாங்கத்தை அமைத்த வரலாறு அக்கட்சிக்கேயுரியது. இதுவொரு வரலாற்றுச் சாதனையாகவே இன்றுவரை உள்ளது. 1993 இல் குண்டுத்தாக்குதலில் ஆர். பிரேமதாச இறந்ததையடுத்து டிபி, விஜயதுங்கா இலங்கையின் மூன்றாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இவரது காலத்தில் அமைச்சரவையில் சிறுமாற்றம் நிகழ்ந்தது. அது மட்டுமன்றிச் சிறுபான்மைச் சமூகத்தைக் கொடி எனப் பேசியது பரவலான சர்ச்சைக்கும் அவரதும் அவர் சார்ந்த கட்சியினதும் செல்வாக்கு கீழிறங்கவும் வழிவகுத்தன. இவர் குறுகிய காலத்துள் பாராளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலை நடாத்தினார். "தன் பெறுபேறு பின்வருமாறு அமைந்தது.
s'I//TansoduF60TT 46u அவதானங்கள்
 
 
 
 
 

ujTelg LISTELoeigji - 1994
இ|ெேபற்றவாத்த பூதர்தலியன:|தேசியப்பட்டியல்
| ஆசய பொ.ஐ.மு 38,87.823 14 1D5 |ஐ.தே.கட்சி 34,9837) 8. 3. g력
|சுயேட்சை(EPDP) |யாழ், நகர் 10,744 O O |றி.லப்.மு.கா 1,43,307 O
த.வி.சு. 1,32,461 4. ஐ.ம.வி.மு 1567 S.L.P.F. 9.DTH Ol 1. சுயேட்சை(ம.ம.மு நுவரெலியா 27,374 Ol 1. - மொத்த நாடாளுமன்றப் |鷺|鷺 பிரதிநிதிகள் ■ 196 |羲29 |225蠱
சுதந்திர இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் தனியரசாங்கம் அமைப்பதற்குப் போதுமான ஆசனங்க்ளைப் பெறவில்லை. எனினும் இத்தேர்தலில் பெரும்பான்மையான ஆசனங்களை வெற்றி பெற்ற பொதுஜன ஐக்கிய முன்னணி (இது றி.ல.சு.கட்சியைப் பிரதானமாகக் கொண்டு சில கட்சிகளும் இணைந்து கொண்ட ஒரு கூட்டமைப்பாகும்) றி.ல.மு. காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகியவை இணைந்து அரசாங்கத்தை அமைத்தது. பின்னர் இ.தொ.காங்கிரளம் இணைந்து கொண்டது.
இப்பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக காமினி திசாநாயக்க ஆரம்பத்தில் இருந்தார். இவர் கொலையுண்டதை அடுத்து ரணில் விக்கிரமசிங்க அப்பதவிக்கு வந் தார். இந்நாடாளுமன்றமும் "ஒரு கூட்டு அமைச்சரவையை"க் கொண்டிருந்ததென்பது குறிப்பிடத்தக்கது.
இத்தேர்தலையடுத்து நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொ.ஐ.முன்னணியின் வேட்பாளராக திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா 3228 வீதமான வாக்குகளைப் பெற்று இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே 1999 இல் நடைபெற்ற நான்காவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலில் 51.12 விதமான வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியானார். இதனையடுத்து 2000 இல் நடைபெற்ற சுதந்திர இலங்கையின் பதினோராவது நாடாளுமன்றத் தேர்தலின் பெறுபேறுகள் பின்வருமாறு
அமைந்தன.
OO
-எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 14
LEDITSIgETLITSILDGib-2OOo
ಹtáಗಿ க்குகள் ரீதியான ஆசனங்கள்: பொது,ஐ.மு 39, ()(),901 94 ஐ.தே.கட்சி 34,77.770 77 ம.வி.மு 518,774 O8 த.வி.கூ 106,033 தே.ஐ.மு. 197,983 O ஈம.ஐ.கட்சி 50,890 O)4 ரெலோ 26, 112 O3 சிஹல உருமய 127,863 அ.இ.த.கா 27.323 Ol சுயேட்சை 19,812 O1 (திகாமடுல்ல) மொத்த நாடாளுமன்றப் பிரதிநிதிகள்
சுதந்திர இலங்கையின் பதினோராவது நாடாளுமன்றத் தேர்தலிலும் எந்தவொரு கட்சியும் தனித்து அரசாங்கம் அமைக்குமளவில் ஆசனங்களைப் பெறவில்லை. ஆயினும் அதிக ஆசனங்களை வெற்றி பெற்ற பொ.ஐ.முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தேசிய ஐக்கிய முன்னணி, சுயேட்சை ஆகியவைகளை பங்காளியாகக் கொண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை அமைத்துக் கொண்டது. இப்பாராளுமன் றத்தின் எதிர்கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தெரிவாகியுள்ளார்.
இப்பாராளுமன்றம் "ஒரு கூட்டு மந்திரி சபையையே" கொண்டுள்ளது. கடந்த 1994 களிலிருந்து பொ.ஐ.முன்னணியின் ஆட்சி நடைபெற்றாலும் 1994, 2000 ஆகிய இருகட்டங்களிலும் சிறிய கட்சிகளின் ஆதரவிலேயே ஆட்சியமைக்க முடிந்திருப்பதை அவதானிக்கலாம். அதுமட்டுமன்றி இலங்கையின் பாராளுமன்றம் "கூட்டு அமைச்ச ரவையை" நோக்கி வளர்ந்து வந்திருப்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.
சுதந்திர இலங்கையின் பதினொரு நாடாளுமன்றத் தேர்தல்களையும் கூட்டு மொத்த மாக நோக்கும் போது முதல் எட்டு வருடங்கள் தனிக்கட்சி (ஐ.தே.க.) ஆதிக்கம் பெற்ற காலங்களாகவும், அதனையடுத்த ஒன்பது வருடங்களும் றி.ல.சு.கட்சி செல்வாக் குச் செலுத்திய காலங்களாகவும், அமைந்திருப்பதைத் தெளிவாகக் காணலாம். இத னால் இலங்கையின் அரசியல் "ஒரு இரு கட்சி முறையை" நோக்கி வளர்ந்து வரு கின்றதெனக் கொள்ளப்பட்டது.
ஆனால் 1964இல் றி.ல.சு. கட்சி, ல.ச.ச.கட்சி கூட்டுச் சேர்ந்தமை" 1965 இல் ஐ. தேகட்சி வலது சாரிக் கொள்கையுடையோர்களுடன் இணைந்தமையை வைத்து நோக்கிய அரசியல் விமர்சகர்கள் "இலங்கை ஒரு இரு கூட்டுக் கட்சி முறையை" நோக்கி வளர்ந்து வருவதாக நம்பிக்கை தெரிவித்தனர்.
ஆயினும் 1970, 1977 களில் முறையே ரீ.ல.சு.கட்சி, ஐ.தே.கட்சி பெற்ற பெரும்பான் மையான வெற்றிகளும், 189 இல் தனித்து ஆட்சியமைக்கும் அளவிலான ஐ.தே.கட்சி பின் வெற்றியும் 1994, 2000 களில் கூட்டுக் கட்சிகளின் (பொ.ஐ.மு) ஆட்சியையும்
R
சிறுபான்மையினர் சில அவதானங்கள்
 
 
 
 
 

வைத்து நோக்கும் போது 1952 களிலிருந்து ஐ.தே.கட்சி, றி.ல.சு.கட்சி ஆகிய இரண்டில் ஒன்றை ஆட்சியில் அமர்த்துவதற்கு மக்கள் தங்களது பங்களிப்பை நல்கி இருப்பதை அவதானிக்கலாம்.
ஐதேகட்சி, றி.ல.சு. கட்சி ஆகியவை பல சந்தர்ப்பங்களில் தனியே ஆட்சியமைக்கும் பலமிருந்தும் முறையே வலது, இடதுசாரிப் போக்குடையோர்களுடன் இணைந்து ஆட்சியமைத்தமையையும், பலகட்சியினர்களையும் இணைத்த கூட்டு மந்திரி சபைகளை யும் அவதானிக்கும் போது இலங்கையின் அரசியல் "இருகட்சி முறையினை நோக்கி நிலைபெறத் தொடங்கியிருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
அதேநேரம் கூட்டு அமைச்சரவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு போக்கி னையும் காணலாம். ஆகவே இலங்கையின் அரசியல் "இருகூட்டுக் கட்சி" முறையைக் கொண்டதெனக் கொள்வது மிகப் பொருத்தமான கணிப்பீடாகும்.
நன்றி இடி J?Xዕ፲ö2ዕ፲}ሆ - 2ሷዕ፻፵፰፻፺፰/
OB)
-எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 15
CD
சிறுபாண்மையினர் சில зерттеу —
R 合 e .5
S. ကြွ
C 4世y
S S 15
ன்று தமது நாடு மிகவும் மோச இ. பொருளாதார வீழ்ச்சியை
அடைந்திருக்கிறது. அதன் வெளிப்
பாடான விலையேற்றங்களும், பண நெருக்க டிகளும் மக்களை வெகுவாகக் கவ்விக் கொண்டுள்ளதை நாம் தெளிவாக அனுப வித்துணர்ந்து கொண்டிருக்கின்றோம்.
நிலவும் நெருக்கடிகளுக்கு நமது நாட் டின் பொருளாதார கோட்பாடுகள் சரிவர அமைந்ததில்லை என்பதை விட இலங்கை பயில் பேணப்பட்டு வரும் "யுத்தம்தான் என் பதே உண்மையானதும், பிரதானமான கார னமுமாகும். ஏனெனில் "யுத்தம் குடிகொண் டிருக்கும் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவது வெளிப்படையான ஒரு பன் பாகும்."
இலங்கை மக்களின் பெரும் பகுதியினர் நடுத்தரவாழ்விலும் பொருளாதார வளமில் லாதவர்களும் என்பது புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்ற துல்லியமான விடயமாகும். நாளுக்கு நாள் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்தும், பொருளாதார சுமைகள் கனத்துக் கொண்டே செல்லும்போது அரசு மீதான நம்பிக்கையை வெகுவாக விலக்கிக் கொள்வோர் தொகை பெருகிவிடும் அபாயத் தையும் இது விளைவிக்கலாம்,
எது எப்படி இருப்பினும் நாட்டில் இருப்புக் கொண்டுள்ள இறுக்கமான பொருளாதார வீழ்ச்சிக்கும், நடைபெறுகின்ற யுத்தத்திற்குமி டையில் நெருங்கிய தொடர்புகளுண்டு. யுத் தச் செலவினங்கள், அளவுக்கதிகமான
 
 
 

S S S SLSLSLSLSu u u uu uu D D D D DD DD u SDS அமைச்சர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படுதல் போன்றவற்றினை ஏற்படுத்துவதனால் அரசின் செலவினங்கள் ஒரு கட்டுப்பாட்டிற்குள் வரக்கூடிய சாத்தியமுண்டு. இதனால் நாட்டில் காணப்படும் பொருளாதாரத் தளம்பல் ஒரு சம நிலையைப் பெற வாய்ப்பி ருக்கிறது.
ஆகவே நமது நாட்டில் நிலை கொண்டுள்ள புத்தச் சூழ்நிலை முடிவுக்குக் கொண்டுவரப்படல் வேண்டுமென்கின்ற எண்ணம் தூய்மையாகவும், விசுவாசமுடையதா கவும் எழுவதுடன் சமாதான முயற்சிகளும் இந்தப் பண்பில் கட்டி எழுப்பப்படுவதன் மூலமே ஆக்கபூர்வமான செயற்பாட்டினை இங்கே தரிசிக்கக் கூடியதாக அமையும், அது மட்டுமன்றி, தமிழர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை இன்றைய அரசிய லமைப்பை வைத்துக் கொண்டு சாத்தியப்படுத்துவதும் ஒரு சிரமமான காரியமாகும். ஏனெனில் "ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப்பரவலாக்கம் நடைமுறைச் சாத்தியமற்ற" வொன்று.
தமிழர் பிரச்சினைகளைத் தீர்க்காதவரை நாட்டில் யுத்தச் சூழல் அகன்று சுமுகமான நிலை தோன்றி விடுவதும் சாத்தியமில்லாத ஒன்றாகவே அமையும். ஆயின் நல்ல தீர்வுத் திட்டங்களைத் திட்டி, அதனை அமுல் நடத்துகின்ற போதே சமூகங்களுக்குள் பீதிமறைந்து நல்லுறவு நிலவத் தொடங்கும்.
உண்மையில் தீர்வுகள் கூடிப் பேசுவதனாலோ எழுத்தில் வரைவதனாலோ ஏற்பட்டு விடப்போகின்ற ஒன்றல்ல. அதனை நடைமுறைக்குக் கொண்டு வருவதினால்தான் ஆக்கபூர்வமான விளைவுகள் நடந்தேறுமென்பதும் ஒரு வகையான யதார்த்தமாகும். நடைமுறைப்படுத்துகின்ற பங்களிப்புக்கள் எப்பக்கங்களிலிருந்து வெளிப்படல் வேன் டுமோ அப்பக்கங்களிலிருந்து நிகழவேண்டும்" அதுவல்லாதவரை அமைதியான வாழ்வு முறைமையை இலங்கை நிரந்தரமாக இழந்து விடும்.
தமிழர்களிள் நியாயமான கோரிக்கைகளை வெறும் இனவாத முலாம் பூசி "இந்த நாட்டில் நிலவுவது தமிழினவாதமே" எனக் கூறி புறந்தள்ளிவிடுகின்ற கைங்கரியம், நாட்டைத் துண்டாடக் கையாளும் கிளர்ச்சி" என்ற போர்வையினை அணிவித்து தமி ழர்களுக்கு எவ்விதமான பிரச்சினைகளும் இந்நாட்டில் இலலையென பறை சாற்றுவதோ, கலாநிதி பியசேன திஸாநாயக்கா, நளின் டி.சில்வா, எஸ்.எல்.குணசேகர போன்ற வர்கள் வெளிப்படுத்துகின்ற தமிழர் விரோதச் சிந்தனைகளும் அதன் பக்கம் சிங்கள மக்களை அணி திரட்டுவதும், சில நேரங்களில் இனவாதக் கூற்றுக்களும் ஓய்ந்து விடாத நிலையிலோ,
பெளத்த தேரர்களின் பேரினவாதச் சிந்தனைகளை முற்றாக நிராகரித்து விடுகின்ற துணிவில்லாத அதேநேரம் நேர்மையான திட்டங்களை நடைமுறைப்படுத்த திறனியற்று தனது இருமுகத் தோற்றத்தைக் காட்டுகின்ற அரசு இருக்கின்ற நிலையில் அதாவது தமிழர்களிடம் ஒருமுகத்தையும், சிங்கள பேரினவாதிகளுக்கு இன்னொரு முகத்தையும் காட்டுகின்ற போக்குகளும், தமிழ் மக்களின் நியாயபூர்வமான கொள்கைகளைக் கை விட்டு விட்டு, பேரினவாதத்துக்கு இசைவாக வளைப்பதில் காய்களை நகர்த்துவதிலும், அரசின் போக்கிற்குத் தமிழர்களை உட்படுத்துவதிலும் கபட நாடகமாடிக் கொண்டி ருக்கின்ற அரசியல்வாதிகள் மலிந்து விட்ட நிலையில் ஆக்கபூர்வமான தீர்வுகள் இத யசுத்தியுடனும் அர்ப்பணிப்புடனும் நடந்தேறுமென எதிர்பார்க்கலாமா?
"நாயோடு சேர்ந்து வேட்டையாடிக் கொண்டு, முயலோடு இணைந்து ஓடுவது சாத்தியமில்லை" என்கின்ற உணர்வுகள் விழிப்படையாதவரை அமைதியை நோக்கிய பயணங்கள் மெளனித்துப் போவதொன்றும் விசித்திரமானதல்ல. எனினும் நல்லுணர்வுகள்
-எம்.எம்.எம்.நூறுல்லுறக்

Page 16
புத்தெழுச்சியாகப் புறப்படுவதன் மூலமே நல்ல பல மாற்றங்களும், சமூக மேம்பாடு, சமூக சங்கமம் என்பனவும் தோன்றமுடியும்.
அதுமட்டுமன்றி "யுத்தத்தை நடத்திச் செல்வதற்கோ, இனவாத நெருப்பில் குளிர்காய் வதற்கோ பெரும்பான்மையான சிங்கள மக்கள் இந்த அரசுக்கு ஆனையை வழங்க வில்லை" "மாறாக அமைதி, சமாதானம், சுபிட்சம் என்பன இந்நாட்டில் எங்கும் தங்க வேண்டுமென்பதையே கருத்தில் கொண்டு தங்கள் ஆணையை நான்கு தேர்தல்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.
அவ்வாறாயின் இந்நாட்டில் தொடர்ந்தும் யுத்தச் ஜுவாலையும், இனவாதத் தியும் எரிந்து கொண்டிருக்கின்றதென்றால் அது சில பேரினவாதிகளின் கூப்பாடுகளுக்கும் ஆர்ப்பரிப்புகளுக்கும் ஆட்சியாளர்கள் இரையாகிப் போவது அல்லது ஆட்சியாளர்களும் இந்தப் பேரினவாதச் சிந்தனைகளில் இருப்பு கொண்டிருப்பது தவிர வேறில்லை எனக் குறிப்பிடுவது மிகையான அபிப்பிராயமாக இராதெனலாம்.
நாட்டில் அமைதி, சமாதானம் தோன்றுவதற்காகவே தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்ப டுகின்றன என்கின்ற அடிப்படையைக் கூட மறந்து அல்லது மறுத்து விடுகின்ற பாங் கில் "அமைதி, சமாதானம் ஏற்படும் வரை தீர்வுத் திட்டங்களை அரசு பின் போட வேண்டும்" எனப் பொறுப்பற்ற விதத்தில் அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கும் - பேரினவாத "இடியை" முழங்கிக் கொண்டிருக்கும் பெளத்த தேரர்களின் கூற்றுக்களைப் புறந்தள்ளிவிட்டு நாட்டில் அமைதி ஏற்படும் வழிகளைக் கைக்கொள்ளல் இன்றியமை Wit!!.
ஏனெனில் இன்று நாடு இருக்கும் நிலையில் பொருளாதாரம் தொடர்ந்திருப்பின் நடுத்தரமக்கள் மட்டுமன்றி, எல்லாத் தரப்பு மக்களும் நடுத்தெருவுக்கு வருவதிலிருந்து விடுபட முடியாத ஓர் இடர்பாட்டை சந்திக்க நேரிடும். அது சிலவேளை அரசுக்கெதிரான கிளர்ச்சியாக மாறிவிடும். அல்லது மாற்றப்பட்டு விடுகின்ற அபாயத்தைக் கொண்ட தென்பதை நாம் புறந்தள்ளாது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு பக்கமாகும்.
ஆகவே அர்த்தமற்ற பேரினவாதக் கூப்பாடுகளுக்குச் செவிசாய்க்காது பெளத்த தேரர்களின் தேவையற்ற சலசலப்புகளைக் கருத்தில் கொள்ளாது மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு எதுதேவையோ, சமூகங்கள் ஒன்றித்து சந்தேக மனோ நிலைக்கு அப்பால் நிலை கொள்வதற்கு எக்கோட்பாடுகளை அமுல் நடத்துவதினால் சாத்தியமாகுமோ அவற்றினை யாருக்கும் எந்தச் சக்திக்கும் அஞ்சாது ஆணைபிறப்பித்து நடைமுறைப் படுத்துகின்ற தலைமைத்துவம் தோன்றாதவரை தமிழர் பிரச்சினைகள் திரப் போவதில்லை. அது தீராதவரை இலங்கைக்கு விமோசனமுமில்லை.
நன்றி விரகேசரி
...,
சிறுபானமையினர் சில அவதானங்கள்
 
 
 

Գ5
ԳԸ
- ም°
ဒြီ၊
5. ଟ
டந்த சில வாரங்களாக வெகுஜன |d# ဂြွီး சாதனங்களின் முக்கிய தொனியாக "கல்முனை கரையோர
மாவட்டம்" இடம் பிடித்திருக்கிறது. அதே நேரம் இதுவொரு இனவாத அடிப்படையி லும், இலங்கையின் ஆள்புலத்திற்கும், நிர் வாகத்திற்கும் அப்பாலான கோரிக்கை என்ற சாயலையும் பெற்றிருக்கிறது.
ஒரு புறத்தில் "கல்முனை கரையோர மாவட்ட உருவாக்கம் சிங்கள, தமிழ் மக்க ளுக்குப் பாதகமானது" என்ற குரலையும், மறுபுறத்தில் "இது சமூகங்களின் ஐக்கியத் திற்கும், நிர்வாகப் பணிகளை இலகுபடுத்து வதோடு, தமிழ் பேசும் மக்களுக்குப் பய ணுள்ள" தென்ற சுட்டுதலையும் முன்வைக் கின்றனர். ஆயின், இருவேறு கருத்துக்களை இரு அணி நின்று பிரதி வாதங்களில் ஈடுபடு வதை அவதானிக்கலாம்.
இது இலங்கையின் அரசியல் சூழலில் ஓர் ஆரோக்கியமற்ற நிலையினையும், சமூ கங்களுக்குள் சந்தேகப் பார்வையினையும் நிலைப்படுத்தி விடக் கூடும். இப்போக்குத் தொடருமாயின் பேரினவாதச் சிந்தனையுடை யோர்களிடமும், இனவாத மனோ நிலையு டையோர்களிடமும் "கிளர்ச்சி உணர்வு" மேலோங்க வழி வகுத்து விடும்,
அம்பாறை மாவட்டத்திலிருந்து "கல்மு னைக் கரையோர மாவட்டம் தோற்றுவிக் கப்படக் கூடாது" என்போரில் மூன்று சமூகங் களினது அரசியல்வாதிகளும், சமூக அமைப் புக்களும் அடக்கம் பெறுகின்ற அதே
-எம்.எம்.எம்நூறுல்ஹக்

Page 17
வேளை ஒரே அமைப்புக்குள் இதன் உருவாக்கத்தை வரவேற்போர்களும் உளர். இதற்கு உதாரணமாக ஐ.தே.கட்சியைக் குறிப்பிடலாம்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் அமைப்பின் அத்தியாயம் ஒன்றின் ஐந்தாம் உறுப்புரைக்கு 04:10.1983 ஆம் திகதி ஊர்ஜிதம் செய்யப்பட்ட ஏழாவது திருத்தத்தின் படி இலங்கையின் ஆள்புலத்தினைப் பின்வருமாறு வரையறுத்துக் கூறுகின்றது.
"இலங்கைக் குடியரசின் ஆள்புலமானது இருபத்தி ஐந்து நிர்வாக மாவட்டங்களையும் அதன் எல்லைப்புற நீர்ப்பரப்புகளையும் கொண்டிருக்கும். பாராளுமன்றம் ஒரு பிரேரணை தீர்மானித்து குறிப்பிட்ட நிர்வாக மாவட்டங்களை சிறு பிரிவுகளாக்கியோ அல்லது மற்றவற்றுடன் சேர்த்தோ வேறு நிர்வாக மாவட்டங்களை உருவாக்கலாம்"
மேற்படி நடைமுறையை அரசியலமைப்புச் சுட்டுவதினால் நிர்வாகங்களை இலகுப டுத்துவதற்குத் தேவை ஏற்படும் போது புதிய நிர்வாக மாவட்டங்களை ஏற்படுத்தலாம் என்கின்ற அனுமதியை முன்வைக்கின்றதெனக் கொள்ளலாம். ஆயின், இன்றைய கோரிக்கையான "கல்முனை கரையோர மாவட்டத்திற்கான எதிர்ப்புக்களும், நெருக்கடி களும் ஒர் அர்த்தமற்றவை" எனப் புரிவதில் சிரமமில்லை.
கல்முனை கரையோர மாவட்டத்தின் கோரிக்கை என்பது சுமார் இருபத்தி ஐந்து வருடங்களுக்குமுந்தியதாகும். உண்மையில் அம்பாறை மாவட்டத்தின் மொத்த குடிசனத் தொகையில் தமிழ் பேசும் மக்களின் தொகை சிங்களவர்களைப் பார்க்கிலும் அதிகமா னது. இதனைப் பின்வரும் அட்டவணை மூலம் தெளிவாக அவதானிக்கலாம்.
(அட்டவனை ஒன்று)
அப்பாறை மாவட்ட குதசனத் தொகை - 1963, 1971, 1981
鷺
- , * | ಕಿರಾಣಾಗ್ಬ963 ||: முஸ்லிம்கள் 98.270 126,033 வீதம் 46.3% 46.2% 41.5%yዕ
சிங்களவர்கள் 62,160 81,762 146,371 விதம் 29.3% 30.07% 37.7%
தமிழர்கள் 50,480 69,971 79,725 வீதம் 23.8% 23.8% 20.5%
அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் தீர்மானமொன்றின் படி, "நில அமைப்பு மற் பறும் ஏனைய காரணங்கள் குறித்து கல்முனைதான் அம்பாறை மாவட்டத்தின் நிர்வாக இடமாக இருக்க வேண்டும்" என்ற முடிவிற்கு வந்து அது 12.06.1977இல் ஐ.தே.கட்சி தலைவரிடம் கையளிக்கப்பட்டது" (நன்றி : முஸ்லிம் டைம்ஸ் 1980 செப்டம்பர் 1ம் வெளியீடு)
"முஸ்லிம்கள் மிகவும் பெரும்பான்மையாக வாழும் மாவட்டம் அம்பாறை. இதனை நாம் ஒரு முஸ்லிம் மாவட்டம் என்றே அழைக்க வேண்டும். எனவே, அம்பாறை
சிறுபாண்மையினர் சில அவதானங்கள்
 
 
 
 
 
 
 

மாவட்டத்தை அரசு எவ்வாறு கவனிக்கின்றதோ அதனை அடிப்படையாக வைத்தே இந்நாட்டு முஸ்லிம்கள் அனைவரையும் அரசாங்கம் கவனிக்கும் பாங்கினை நாம் புரிந்து கொள்ளலாம்.
அம்பாறை மாவட்டத்தின் பெயரை அங்குள்ள பெரும்பான்மையினராக வதிகின்ற முஸ்லிம்களின் அபிலாசைகளையும், உணர்வுகளையும் மதித்து கல்முனை மாவட்டம் எனப்பெயரிட வேண்டுமென அ.இ.மு.லிக் பல ஆண்டுகாலமாக குரல் எழுப்பி வந்துள் T....... அம்பாறை மாவட்ட அபிவிருத்திச் சபையின் அலுவல்கள் அனைத்தையும் தமிழிலேயே நடத்த வேண்டும்" என ஜனாப் எஸ்.எல்.எம்.ஷாபி மரிக்கார் தெரிவித்தார். நன்றி உதயர் பிரி-17 டிசர்பர் 8ெ) மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனாவின் ஆட்சிக் காலமான 1978இல் மாவட்டங்களைப் பரவலாக்கும் "மொறகொட" கமிஷன் அறிக்கையில் கல்முனை (கரையோர) மாவட்டம் விதந்துரைக்கப்பட்டுள்ளது. ஆயின், இது யூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் அமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னர் உத்தேசிக்கப்பட்ட திட்டமென் பது வெளிப்படையானது.
"எதிர்வரும் ஜூலை மாதம் முதல் கல்முனை ஒரு தனி மாவட்டமாக உதயமாகும். உத்தேச கல்முனை மாவட்டத்திற்கு மேலதிக அரசாங்க அதிபராக மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் ஜனாப் மஃபூல் நியமிக்கப்படலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது"
நன்றி தினகரன் 3.5 நிதிதி) கடந்த 1985களில் கல்முனை மாவட்டத் திட்டம் கூர்மையடைந்து, அதனை வழங்குவதற்கான சாதக நிலை தோன்றியிருந்தமையினையும், பின்னர் ஐ.தே.கட்சியில் முக்கிய இடத்தினை வகித்த கே.டபிள்யூதேவநாயகம், பிதயாரத்ன போன்றோர்களின் எதிர்ப்பினால் அது அமுங்கிப் போனது. இம்மாவட்டத்தை பெற்றுக் கொள்வது தொடர்பில் முன்னாள்அமைச்சர்களான ஏ.எஃஎஸ்.ஹமீத் முயற்சியில் இறங்கியும், எம்.எச்.முஹம்மத் உறுதியளித்தும் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையில், அம்பாறை மாவட்டத்தின் நிர்வாக இடமாகக் கல்முனை மாற்றப்படல் வேண்டும், கல்முனை கரையோர மாவட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கை எழுந்ததன் பின்னணிகள் என்று நோக்கின் பின்வரும் காரணங்களை அவதானிக்கலாம். அம்பாறை கச்சேரியில் தமிழ் மொழி பேசுவோர்கள் எதிர்கொள்ளும் மொழிப் பிரச்சினை, சமூக ரீதியான புறக்கணிப்பு, அதிகாரிகளின் அலைக்கழிக்கும் மனோபாவம் போன்ற நிலைகள்தான் இக்கோரிக்கையினைத் தீவிரப்படுத்தியவற்றுள் பிரதான இடத்தினை வகிக்கின்றது.
தமிழ் பேசுவோர்களிலிருந்து அம்பாறைக்கு மேலதிக அரசாங்க அதிபர் மாவட்டச் செயலாளர் நியமிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் கூட, அவர்களும் அம்பாறை கச்சேரியில் கடமையாற்ற முடியாத நெருக்கடிகள், புறக்கணிப்புகளுக்கு உட்பட்டதோடு, இடம், தளபாட வசதிகள் மறுக்கப்பட்ட நிலைகளும் இவ்விடத்தில் நினைவு படுத்தப்பட வேண்டிய சமாச்சாரங்களாகும்.
ஐ.தே.க. ஆட்சியின் போது (1985இல்) கல்முனை தனிமாவட்டக் கோரிக்கை எத்த கைய நெருக்கடிகளை எதிர்கொண்டதோ, அதே நிலையே இன்றும் காணப்படுகின்றது. இன்றைய ஆட்சியாளர்களிடமிருந்தும் கல்முனை கரையோர மாவட்டம் தொடர்பில் முன்னுக்குப் பின் முரண்பாடான செய்திகள் வெளிவந்துள்ளன.
முஸ்லிம்களின் எதிர்காலத்தை அவர்களல்லாதவர்களினால் நிர்ணயிக்கப்படுகின்ற பாரம்பரியத்திற்கு நீண்ட வரலாறுண்டு. இதனைத் தகர்த்தெறியும் பாங்கில் உருவாக்
09) .எம்.எம்.எம்.நூறுல்லுறக்

Page 18
கப்பட்ட ரீல.மு. காங்கிரஸிற்குள் காணப்படும் பிளவு நிலை நிரந்தரமானால், முஸ்லிம் களின் நிலையில் மோட்சமின்றி, அதனை நிரந்தரப்படுத்திவிடுமெனக் கூறுவது மிகையா னதல்ல.
கல்முனை கரையோர மாவட்டத் திட்டத்தின் மீது முஸ்லிம்களின் கவனம் வெகு வாகத் திரும்பியதற்கு பின்வரும் காரணங்கள் ஓர் உந்து சக்தியாக அல்லது பின்பலமாக அமைவதனை நியாய சிந்தனையுடன் நோக்கும் எவரும் சரியானதென்பதை ஒப்புக் கொள்வார் என நாம் நம்பலாம்.  ைஒரு சமூகத்திற்கென்று பாரம்பரிய இருப்புப் பிரதேசம் அல்லது தாயகமென
உரிமை பாராட்டக் கூடிய நிலத்தினைக் கொண்டிருப்பது இன்றியமையாதவை. இந்நிலைதான் அந்தச் சமூகத்தின் இருப்பை அடையாளப்படுத்தி உரிமைகளையும், தனித்துவங்களையும் பேணிக்கொள்வதற்கும், பெறுமதிகளை உலகறியச் செய்வ தற்கும் ஓர் ஊன்று கோலாக அமையவல்லது.  ை"இந்தியாவில் வாழும் பத்து கோடி முஸ்லிம்கள் ஒரு தனிச் சக்தியாக விளங்க முடியாமைக்கு அங்குள்ள முஸ்லிம்கள் சிதறுண்டு வாழ்வதே காரணமாகும்" என்பதை நாம் உணர்ந்து கொள்ளல் வேண்டும், இலங்கையிலும் முஸ்லிம்களின் நிலை அவ்வாறே அமைந்து விடக் கூடிய சாத்தியங்கள் அதிகரித்து காணப்படு கின்றது. இதனைத் தவிர்ப்பதற்கு இம்மாவட்ட உருவாக்கம் அவசியப்படுகின்றது.  ைஎதிர்காலத்தில் நடைபெறலாமென எதிர்பார்க்கப்படுகின்ற "அதிகார பரவலாக்கல்"
தீர்வு நடைமுறைக்கு வருமாயின் இலங்கை முஸ்லிம்களுக்கான அடையா ளத்தையும், அதிகாரங்களையும் கொண்ட சபையினை நிறுவிக்கொள்வதற்கு உத்தேச கல்முனை கரையோர மாவட்டம் "தளமாக" அமையலாமென்கின்ற எதிர்பார்ப்பு.  ைஇலங்கையின் நிர்வாக மாவட்டங்கள் இருபத்தி ஐந்திலும் சிங்களவர்கள், தமிழர்கள் எனும் இரு சமூகத்தினர்களையும் முதன்மைப் படுத்திய - பெரும்பான்மையாகக் கொண்ட நிர்வாக மாவட்டங்கள் காணப்படும் அதே வேளை முஸ்லிம்களை முதன்மைப்படுத்திய ஒரு மாவட்டமும் இன்றில்லை. 9 அம்பாறை மாவட்டம் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட் டமென்ற நிலை மாற்றம் பெற்று விட்டது. இதுதான் இம்மாவட்டத்தின் தொடர் கதையாகவும், நிலையாகவும் இருக்குமென்பதை முன்னர் சுட்டிக்காட்டிய அட்டவணை ஒன்று உட்பட பின்வரும் இரு அட்டவணைகளையும் இணைத்து நோக்கும் எவரும் இதனைத் துல்லியமாக இனங்கண்டு கொள்ளலாம்.
(அட்டவனை இரசினர்டு)
கிழக்கு மாகாண குடிசனத்தொகை - 1881, 1946, 1981
TTCTTTLOLOLLCCCCHS LLLTLOTTLC LL LCTST TCL TTCT TCLCLTLTT LLL
சமூகங்கள் 蠶 881 E. LISTI தமிழர்கள் 754C) 136,059 331,675 வீதம் 59.19ሩ 48.Dեն 56.8% முஸ்லிம்கள் 43,001 109,024 154,504 வீதம் 34.5%, 39,Uዓሳነ 25.4% சிங்களவர்கள் 597 27.556 96.988 விதம் 4.6% 9.3% 16.6%
சிறுபான்மையினர் சில அவதானங்கள்
 
 
 

(அட்டவனை மூன்று)
அம்பாறை மாவட்ட வாக்காளர்கள் 1965 - 1991
|ஆண்டு | சிங்களவர்கள் | முஸ்லிம்கள்
1965 sooo 57,000
1970 39,000 62,000
1977 46,000 68,000
1980 68,000 78,000
1981 118,326 113,788
திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்கள மக்களின் குடியேற்றங்களும், சிங்கள மக்களைக் கொண்ட பிரதேசங்களின் இணைப்புகளினாலும் சிங்கள மக்களின் அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டன என்பது பட்டவர்த் தமானது. ஆயின் கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களின் அதிகரிப்பு இயற்கையா னதல்ல என்பதினை இலகுவாக இனங்காணலாம்.
"இலங்கையில் இதுவரை நடந்த மாவட்ட உருவாக்கம், எல்லை மாற்றம், ஒன்றி ணைப்பு என்பன சிங்கள மயமாக்குதலுக்காகச் செய்யப்பட்டதன்றி, நிர்வாக வசதிகளை இலகுபடுத்துவற்காகச் செய்யப்படவில்லை" என்பதை நாம் ஊன்றி நோக்கின் தெளிவ டைய முடியும். முஸ்லிம்களின் மேலாண்மையை நசுக்குவதிலும், அவர்களின் பொருளா தார மேம்பாட்டினைச் சிதைப்பதிலும் இதன் பாத்திரம் - பங்கு தனியானது.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரித்தெடுத்து அம்பாறை மாவட்டத்தை உருவாக் கும் போது முஸ்லிம்களை பெரும்பான்மையாகவும், அதனை அடுத்தவர்களாக சிங்கள வர்களைக் கொண்டதாகப் பிரித்தெடுத்தாலும் நாளடைவில் அம்பாறை மாவட்டம் சிங்களவர் மயமாக்கப்பட்டிருக்கின்றது.
காலஞ் செல்லச் செல்ல இந்நிலை கூடுமேயொழிய குறையாது. அம்பாறை மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், நில இணைப்பு, திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், காணிச் சுவீகரிப்பு போன்றவற்றினைத் தடுக்க முடியவில் லையானால் எதிர்காலம் மிகவும் கடுமையாக அமைந்து, முஸ்லிம்களின் நிலை இருள் கொண்டதாக அமைந்து விடுமென்பதில் ஐயமில்லை,
இலங்கையில் ஓரளவு முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டிருந்த அம் பாறை மாவட்டத்தின் தன்மையினை மாற்ற மடையச் செய்வதில் 70, 80 களில் மேற் கொள்ளப்பட்ட முயற்சிகளையடுத்தே கல்முனை கரையோர மாவட்டமொன்றுக்கான கோரிக்கை வலுவடைந்ததாக எழுந்தன. ஆயினும் இதன் நியாயம் மறுக்கப்பட்ட காலத்தில்தான் கம்பஹா(1978), முல்லைத்தீவு(1976), கிளிநொச்சி(1984) ஆகிய மூன்று மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும்.
பேரினவாத அழுத்தங்களை உதறித்தள்ளிவிட்டு, சமூகங்களின் நீதியான கோரிக்கை களை நிறைவேற்றும் எண்ணம் நிரம்பியவராக இன்றைய ஜனாதிபதி தனிப்பட்ட
e) -எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 19
முறையில் இருந்தாலும், அதனை நடைமுறையில் பேண முடியாதவராகவே காட்சியளிக் கின்றார் எனலாம். ஏனெனில், "கல்முனை கரையோர மாவட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. அதனை உரிய அமைச்சர் மூலம் துரிதப்படுத்துங்கள்" எனக் கூறியதாகப் பத்திரிகைச் செய்திகள் வெளிப்படுத்தின.
அதேநேரம் உரிய அமைச்சர் "ஜனாதிபதியிடமிருந்து எனக்கு இது தொடர்பில் அறிவிப்பு கிடைக்கவில்லை" எனத் தெரிவித்திருப்பது மறைவன்று. இவைகள் எதனைக் காட்டுகின்றது? பேரினவாதக் கரங்களின் மறைமுக அழுத்தங்களின் பிரதிபலிப்பின்றி வேறில்லை எனக் கூறுவது தவறாகுமா?
சிங்களப் பேரினவாதிகளுடன் தமிழர்களும் இணைந்து கொண்டு கல்முன்ை கரை யோர மாவட்டத்தை எதிர்ப்பதானது இவ்விரு சமூகங்களும் முஸ்லிம்களை நசுக்குவ திலும், அடிமைப்படுத்துவதிலும் ஒரே வகையான போக்கை கடை பிடிக்கின்றனர் என் பதனையே எடுத்துக் காட்டுகின்றது என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.
கல்முனை கரையோர மாவட்டம் உருவாக்கப்படுவதில் அமைச்சர்களான பௌளி, அலவி மெளலானா போன்றோருக்கு ஒரு பொருட்டாக இல்லாவிட்டாலும் அமைச்சர்க ளான றவுப்ஹக்கீம், பேரியல் அஷ்ரப் போன்றோர்களுக்கு ஒரு முக்கிய அம்சமாக இருக்க வேண்டிய கடப்பாடுகள் உண்டு. அதற்குப் பின்வரும் மூன்று காரணங்கள் பிரதானமானவையாகும். 01) "அம்பாறையில் கல்முனையைத் தலைநகராகக் கொண்டு கரையோர மாவட்டம்
உருவாக்கப்பட வேண்டும்" என்ற பிரேரணையைக் கல்முனை பிரதேச சபை (1994 இல் ஏகமனதாக நிறைவேற்றியது. இப்பிரதேச சபையின் ஆளுமை ரீ.ல.மு.கா. உடையதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 02) ரீ.ல.மு.கா. மறைந்த தேசியத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்கள்
பெரும்பாலும் வெளிப்படையாக "கல்முனை கரையோர மாவட்டம்" பற்றி பிரசா ரங்களை முன்னெடுக்காத போதிலும், "கல்முனை, கரையோர நிர்வாக, தேர்தல் மாவட்டமாகப் பெறுவதில் 1988 களின் பிற்பகுதியிலிருந்து கரிசனை கொண்டவர்க ளாக இருந்தார்கள். இதனைத் தனக்கு நெருக்கமானவர்களுடன் கலந்துரையாடும் போது வெளிப்படுத்துபவர்களாக இருந்தார்கள் என்பதற்கு இன்றும் பலர் ETT FLUITEE இருப்பார்களென நாம் நம்பலாம். 03) கடந்த 1988இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் முன்னர் ஐ.தே.க. வேட்பாளர் ஆர்.பிரேமதாசவுடன் மறைந்த தலைவர் அஷ்ரஃப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது தெரிந்ததே. இப்பேச்சுவார்த்தையில் (1) ஒருகட்சி அல்லது ஒரு சுயேட்சைக் குழுவானது போட்டியிடும் தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்கு களில் 12.5% பங்குக்குக்கு குறைவாகப் பெறின் அது போட்டிக்குத் தகைமையற்ற கட்சியாகக் கருதப்படுவதனை 5% வீதமாகக் குறைக்கப்படல் வேண்டும். (2) கல்முனை கரையோர மாவட்டம் "எனும் இரு கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன.(வேறு கோரிக்கையும் உண்டு) இவற்றில் 125% வெட்டுப்புள்ளியை உடன் குறைத்து 5% ஆக்குவது, கரையோர மாவட்டம் தேர்தல்களின் பின்னர் உருவாக்கித் தருவது என்று உடன்பாடு காணப்பட்டது இதன் விளைவு தான் ரீல.மு.காங்கிரஸ் நடுநிலை என்ற தோரனையில் ஐ.தே.க வேட்பாளரான ஆர்.பிரேமதாஸாவை ஆதரித்தது என்பது பிரசித்தமானவை. பிரேமதாச வுடன் பேசப்பட்டவைகள் ஒரு எழுத்து மூலமான ஒப்பந்தமில்லா விட்டாலும் அந்த நேரத்தில் பிரபல்யமானவை.
சிறுபாண்மையினர் சில அவதானங்கள்

அது மட்டுமன்றி, மறைந்த தலைவர் அஷ்ரஃப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த (1992இல்) காலகட்டத்தில் "எழுச்சிக்குரல்" வாரப் பத்திரிகையில் ஒரு வாசகன் பகிரங்க மடல் எழுதிய போது, "தாங்கள் அமைச்சராகும் சந்தர்ப்பம் கிடைத்தால் முதல் வேலையாக அம்பாறை மாவட்டத்தில் ஒரு கரையோர மாவட்டம் பெறுவதில் கரிசனை காட்ட வேண்டும்" என வேண்டியிருந்தமை இங்கு நினைவு கூரத்தக்கது. இன்றைய ஜனாதிபதிதான் முஸ்லிம்களின் தேவைகளை உணர்ந்தவர். மறைந்த நமது தலைவரின் எண்ணங்களைப் புரிந்தவர். முஸ்லிம்களின் அரசியல் ஸ்திரத்தைக் கொள்கையளவில் ஏற்றவர் என்பதினால் முஸ்லிம் சமூகத்திற்கு ஆவப்போவது ஒன்றுமில் லை என்பதை ரீ.மு.கா, தே.ஐ.மு.பாராளுமன்ற உறுப்பினர்கள் உணர்ந்து, உணர்ச் சியும், தெளிவும் பெற்றிருக்க வேண்டிய பக்கங்களாகும்.
தனது அரசாங்கத்தின் பங்காளியாகவும், முதுகெழும்பாகவும் இருப்பவர்களின் ஒருமித்த கோரிக்கையாக மலர்ந்த பின்னரும் காலங் கடத்துவதானது இலங்கை முஸ்லிம்கள் நீண்ட காலமாக அனுபவித்து வருகின்ற ஒடுக்குதலிருந்து இன்னும் விடு தலை பெறக் கூடியவர்களாக மாறவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது. அதேநே ரம், முஸ்லிம்களை நசுக்குவதில் ஐ.தே.க, ரீலசு.க, பொ.ஐ.முன்னணி கட்சிகளினது போக்கு ஒரே வகையான பண்பாக பரிணமித்து இருப்பதே நிதர்சனமான நிலையென்ப தையும் கட்டுகின்றதெனலாம்.
"பிரித்தானியர் இலங்கைக்கு சுதந்திரத்தை வழங்கியது மட்டுமன்றி, அவர்களின் இயல்பில் குடி கொண்டிருந்த "பிரித்தாளும் தந்திரோபாயத்தையும்" சிங்களத் தலைவர்க ளிடம் தாரைவார்த்துக் கொடுத்து விட்டுத்தான் சென்றுள்ளனர்" இதன் பிரதிபலிப்புத்தான் தமிழ் பேசும் சமூகங்களை நெருக்குதல்களுக்குள் அகப்படுத்துவது, ஆளும் தரப்பின ரினது வியூகங்கள் அல்லவெனக்காட்டுவதற்கு சிறுபான்மைச் சமூகங்களிலிருந்து சில ரைக் கொண்டு முன்ேெனடுக்கின்ற கைங்கரியத்தை மேற்கொள்கின்ற போக்காகும். உண்மையில், அம்பாறை மாவட்டத்திலிருந்து கல்முனை கரையோர மாவட்ட உருவாக்கம் நீர் பிரச்சினையை ஒரு போதும் ஏற்படுத்தாது. இலங்கையின் அரசியல மைப்பு இதற்கு இடந்தராது. நடைமுறையில் இவ்வாறான நிகழ்வுகள் சில சந்தர்ப்பங் களில் நடந்திருக்கிறது எனில் இது இணைந்திருக்கும் போது கூட ஏற்பட்ட ஒன்றாகும். பிரிந்து நின்று இத்தகைய தடைகளை பலமான சட்டத்துணையோடு தட்டிக் கேட்கலாம். அதுமட்டுமன்றி, நீர் வழங்கும் சமுத்திரம் ஊவா மாகாணத்தின் எல்லையில் அமைந்தி
ஒரு மாவட்டத்தில் வாழும் மக்களுடைய அசையாச் சொத்து இன்னொரு மாவட் டத்தில் இருக்கக் கூடாதென்ற சட்டம் இல்லாமையினால் அம்பாறைத் தேர்தல் தொகுதியி ணுள் காணி, நிலம் போன்றவற்றின் சில பகுதிகள் அடங்குவது பிரச்சினையான விட யமல்ல. ஏனெனில், இணைந்திருக்கும் போதே "புனிதபூமி" என்ற அடிப்படையில் காணிகளை முன்னரே முஸ்லிம்கள் இழந்திருக்கின்றனர்.
ஆகவே, நீர், கானி, நிலம், மின்சாரம் போன்றவற்றில் பிணக்குகள் தோன்றுமென்ற பயப் பீதியை ஏற்படுத்தி அர்த்தமுள்ளஒரு கோரிக்கையை அர்த்தமற்றதாகக் காட்ட எடுக்கும் நடவடிக்கையின் தோற்றப்பாடாகும். இதனை மறுக்கும் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறான உள்நோக்கங்கள் குவிந்து இருப்பது இரகசியமானதல்ல.
தனியான கல்முனை கரையோர மாவட்டம் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி, முழு இலங்கை முஸ்லிம்களுக்கும் விமேர்சனமானதொன்று என்பதை உணர்வதில்தான் இதன் வெற்றி தங்கியிருக்கிறது. கட்சிபேதங்களுக்கு அப்பால்

Page 20
நின்று இதனைச் சாத்தியப்படுத்துவதில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்து, கேட்டுப்பெற வேண்டிய ஓர் அம்சமென்பதிலும் எள்ளளவும் சந்தேகமேயில்லை.
கல்முனை கரையோர மாவட்டக் கோரிக்கையினை ஆளும் தரப்பின் பங்காளியாக இருந்து கொண்டு பெறுவதைப் பார்க்கிலும், ஆட்சியமைப்பதற்கான பேரம் பேசுதலின் போது சாத்தியப்படுத்துவதில் சாதகங்கள் நிறைந்த சந்தர்ப்பமாகும். இன்று ஆட்சிக்கான ஆதரவை விலக்கி இதனைச் சாத்தியப் படுத்துவதில் சில சட்டப் பிரச்சினைகள் ஏற் பட இடமுண்டு.
ஏனெனில், பொ.ஐ.மு, ரீல.மு.கா, தே.ஐ.மு.கட்சிகளுக்குள் முறையான புரிந்துணர்வு ஒப்பந்தம் இக்கட்டுரை எழுதும் வரை சாத்தியப்படவில்லை. இதனால் கடந்த பொதுத் தேர்தலில் பொ.ஐ.முன்னணி வேட்பாளர் பட்டியலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, அதன் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்போர்கள் வெளியே றுவது அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களிப்பது போன்ற செயற்பாடுகள் சில சட்டப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கக் கூடும் எனலாம்.
ரீலமு.காங்கிரசும் தேசிய ஐக்கிய முன்னணியும், கரையோர மாவட்ட பிரச்சினையை முதன்மைப்படுத்தாது பொதுஜன ஐக்கிய முன்னணியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முதலில் சாத்தியப்படுத்திக் கொண்டு, கல்முனை கரையோர மாவட்டக் கோரிக்கையினை முன்னெடுத்திருப்பின் சிலவேளை இதனைச் சாத்தியமாக்கி இருக்கலாம். ஏனெனில், ஆளும் தரப்பிற்கான ஆதரவை விலத்துவதில் சட்டப்பிரச்சினைகளுக்கு இடமிருந்திருக் காது எனலாம்,
நன்றி: ஆதவன் (24.06.2001, 0.07.200.
சிறுபான்மையினர் சில அவதானங்கள்

R
任 @)
5. է5 ଛି। Տ
ண்பாடு, கலாசாரம், நாகரிகம்
எனும் சொற்கள் ஒரே பொருளில்
இன்று பெரும்பாலும் உபயோகிக் கப்படுகின்றன. உண்மையில் பண்பாடு, கலாசாரம் எனும் சொற்கள் ஒரே அர்த்தமு டையதாக இருப்பினும் நாகரிகம் எனும் பதம் வேறான பொருளைக் கொண்டிருக் கிறது.
பண்பாடு என்றால் என்ன? என்ற வினா வுக்குப் பலர் பல்வேறு வரைவிலக்கணங் களை முன்வைத்துள்ளனர். அவர்களின் கூற்றுக்களை முதலில் நோக்குவதன் மூலமே இஸ்லாத்தின் பார்வையில் பண்பாடு எனும் சொல்லின் பொருள் இலகுவில் தெளிவு பெறும்."
"மனித இன வரலாற்றின் ஒவ்வொரு
காலகட்டத்திலும் மக்கள் செய்து கொண்ட கருவிகள், அவர்கள் வாழ்ந்த சமூகத்தின் பழக்க வழக்கங்கள், அவர்களது சமயக் கொள்கைகள், நம்பிக்கைகள் என்பன புலப்ப டுத்தும் அறிவு நிலை" என மானிடவியலா ளர் கலாசாரம் - பண்பாடு எனும் சொல்லிற்
குப் பொருள் தருகின்றனர். பண்பாடு மனித
வரலாற்றை வகைப்படுத்திக் காட்டல், அறிவி யல், விஞ்ஞானம், அழகியல் துறையில் குறித்த சமூகம் அடைந்த முன்னேற்றங் களை விளங்கிக் கொள்ள உதவுகின்றது.
இஸ்லாமிய அறிஞர்களின் பார்வையில் பண்பாடு எனும் சொல் கொண்டிருக்கும் பொருள் இவற்றிலிருந்து சற்று வித்தியாசப் பட்டதாகவும், தனியான கோணங்களையும்
(250

Page 21
கொண்டிருக்கிறது.
"திருத்த நிலை அல்லது செம்மை நிலை அடைந்த ஒழுக்கவியல், ஆன்மீகவியல், சமூகவியல், அறிவியல், அழகியல் என்பவற்றின் சங்கமமான நிலை" என்பது சமூகவிய லாளரும், வரலாற்று ஆசிரியருமான இப்னுகல்தூன் தஹற்திப் - பண்பாடு என்பதற்குக் கொண்டுள்ள கருத்தாகும்.
"பண்பாடு, கலாசாரம் என்பது நல்ல பழக்க வழக்கங்கள். நன்நயத்தல், சீரான சிந்தனை முதலியவற்றின் ஊடாகப் புலப்படக் கூடிய உளப்பாங்கு' என்பது கலாநிதி அமிர் ஹசன் எபித்தீகி அவர் குறிப்பிடுகின்ற பொருளாகும்.
பொதுவாக இஸ்லாத்தின் பார்வையில் பண்பாடு, கலாசாரம் எனும் பதத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்ற பொருளை உள்ளம், சிந்தனை, உணர்வு எனும் அம்சங்களுடன் தொடர்புடையதாகக் கொள்ளலாம். இக்கருத்தையே பெரும்பாலான சமூக, வரலாற்று ஆசிரியர்கள் கொண்டிருக்கின்றனர்.
"பண்பாடு என்பது செம்மை நிலையடைந்த, சரியாகச் சிந்திக்கக் கூடிய உளப்பண்பு, உள உணர்வு, சிந்தனை எனும் அகத்தோற்றத்துடன் தொடர்புபடுகின்ற அதேவேளை, நாகரிகம் என்பது புறத்தோற்றத்துடன் தொடர்புபடுவதைக் காணலாம். நாகரிகம் எனும் சொல்லிற்கு சமூகவியல் அறிஞர்கள் கொண்டிருக்கும் கருத்துக்களின் பொருள்களைப் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்தலாம்.
“சமூக வளர்ச்சியின் முன்னேற்றமடைந்த கட்டத்தை நாகரிகம் எனும் பதம் சுட்டிக்காட் டுகிறது. நடை, உடை, பாவனைகள், அறிவியல் முயற்சிகள், அழகியற் கலைகள், சட்டம், சமூகப் பழக்க வழக்கங்கள் முதலியவற்றை உள்ளடக்கிய மனித இனத்தின் வளர்ச்சியே நாகரிகம் ஆகும்.
நாகரிகம் எனும் பதத்திற்கு இஸ்லாமிய அறிஞர்கள் முன்வைக்கின்ற கருத்துக்களை மேற்படி நாகரிகம் தொடர்பான கருத்துடன் வைத்து நோக்கும் போது சற்று புறநடையா கவும், தனியான இலக்குகளைக் கொண்டிருப்பதையும் அவதானிக்கலாம்.
"நகர வாழ்வில் விளைவுகள் அல்லது பெறுபேறுகளையே நாகரிகம் எனும் பதம் குறிக்கும் என்பது இப்னு கல்தூன் கருத்தாகும்.
"நாகரிகம் என்பது ஓர் இனத்தின் அல்லது ஒரு வர்க்கத்தின் பண்புகளைக் குறிக் கும் ஒரு பொதுச் சொல். அது கண்களுக்குப் புலப்படக் கூடிய சடப் பொருட்களின் அபிவிருத்தியையும், பொது வாழ்வின் முன்னேற்றத்தையும் சுட்டுகிறது" என்று கலாநிதி அமிர்ஹசன் ஸித்திகி கருதுகின்றார்.
இஸ்லாத்துக்கென்றொரு தனியான பண்பாடு, நாகரிகம் என்பவை இல்லாதது என்ற கருத்தை முஸ்லிம் அல்லாத சிலர் முன்வைத்துள்ளனர். இக்கருத்துடையவர்கள் இருபகுதியினர்களாவார்கள். அவர்களுள் ஒரு பகுதியினர் பின்வரும் கருத்தினைக் கொண்டிருக்கின்றனர்.
'இஸ்லாமிய பண்பாடு, நாகரிகம் என்று ஒன்றில்லை' என முற்றாக மறுதலிக்கின் றனர். இத்தகையோர்களை அடையாளங்காட்டும் கூற்றுக்கள் பல இருக்கின்றன. எனினும், பின்வரும் கூற்றை இவ்வணியினர்களுக்குச் சான்றாகக் கொள்ளலாம்.
"முஸ்லிம் பண்பாடு என்றால் என்ன? என விளங்கிக் கொள்வதற்கு நான் மிகவும் முயற்சி செய்தேன். நான் கண்டதெல்லாம் முஸ்லிம் பண்பாட்டின் வெளிப்படையான சின்னங்களாகக் காணப்படுவது ஒரு குறிப்பிட்ட தன்மையுடைய மிக நீண்டதும், கட் டையானதுமல்லாத. பைஜாமாவும், தாடியை வளரவிட்டு ஒரு குறிப்பிட்ட முறையில் முகச்சவரம் செய்வதுமாகும்.' ଶ20}}
சிறுப்ாண்மையினர் சில அவதானங்கள்
 
 
 

இவ்வாறு பண்டிட் ஜவகர்லால் நேரு தனது சுயசரிதை பற்றிய நூலில் குறிப்பிடு கின்றார். இஸ்லாமியப் பண்பாடு என்றொன்று இருப்பதுடன், அது தனித்துவமும், தனிப் பாதையையும் கொண்டதாகும். இதனைப் பின்வரும் கூற்று தெளிவுப்படுத்துகின்றது. "இஸ்லாமிய பண்பாடு. மனிதனின் ஆளுமையினதும், சமூக அமைப்பினதும், லோகாயத் தேவைகளையும், ஆன்மீகத் தேவைகளையும் ஒரே நேரத்தில் பூர்த்தி செய்யும் பண்பாடாக அது விளங்குகின்றது. இஸ்லாமிய பண்பாட்டின் நோக்கம். மனித வாழ்வினையே முழுமைப்படுத்துவது, மேம்பாடடையச் செய்வதுமே அதன் மகத்தான இலட்சியமாகும்" என கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி குறிப்பிடுகின்றார்கள்.
"அரபு முஸ்லிம்களுக்குரிய கலை, பண்பாடு, ஓவியம், கட்டிடக்கலை, தத்துவம், அறிவியல் என்பன இருக்கவில்லை. ஈராக், பாரசீகம், எகிப்து ஆகிய நாடுகளைக் கைப்பற்றிய போது அங்கு ஏற்கனவே நிலைபெற்றிருந்த கிரேக்க, ரோம, பாரசீக, எகிப்திய பண்பாடுகளின் செல்வாக்கிற்குட்பட்டனர்.
அவர்கள் கைப்பற்றிய இந்நாடுகளிலிருந்து கலாசாரப் பாரம்பரியங்களைத் தம்மோடு இணைத்து அதற்குப் புதுப் பொலிவும், மெருகுமிட்டு உலகிற்கு அளித்தனர். இஸ்லாமிய நாகரிகம் என நாம் அழைப்பது உண்மையில் அரபு முஸ்லிம்களின் கைவண்ணத்தில் புது பொலிவுப் பெற்ற கிரேக்க, ரோம, பாரசீக, எகிப்தியப் பண்பாடே ஆகும்."
இச்சிந்தனைகள் அறிவுபூர்வமானதல்ல. ஒரு நாகரிகம் வளர்ச்சியுறும் போது பிற நாகரிகங்களில் காணப்படும் நல்லம்சங்களைத் தனதாக்கிக் கொள்வதென்பது இயல்பான பண்பாகும். ஆயினும் இஸ்லாமிய நாகரிகம் உள்வாங்கி அங்கீகரித்துக் கொண்டதென் றாலும் அது தவறானதோ, பிழையானதோ அல்ல என்பதற்கு நியாயமான காரணங் களைப் பெறமுடியும்.
இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி, இஸ்லாம் அல்லாதவர்களாக இருந்தாலும் சரி மனிதர்களை சிருஷ்டித்தவன அல்லாஹற். மனிதனின் எண்ணம், செயற்பாடுக்ள என்பவற்றின் உதிர்ப்பை வழங்குவோன் அல்லாஹம் என்ற கருத்து இஸ்லாத்தினதாகும், ஆகவே, மனிதனின் கண்டுபிடிப்பென்று கூறுவதைவிட அல்லாஹ்வின் நாட்டத்தினால் ஏற்பட்ட தேட்டம் என்பதே மிகச் சரியானதாகும். இதனாலேயே இஸ்லாம் தனதாக்கிக் கொள்வதில் தவறில்லை.
ஏனெனில், தெளஹரீத் - ஏகத்துவத்திற்கு இழுக்கோ முரண்பாடோ ஏற்படாதவற்றை இஸ்லாம் தடைசெய்யவில்லை. அவைகளினால் ஈமான் புறந்தள்ளப்படுமானால் அவற்றி லிருந்து விலகி வாழவே வழிகாட்டுகின்றது.
இந்த அடிப்படையில் நல்ல பழக்க வழக்கங்களை அந்தந்த மக்களின் நாடு, சூழ லுக்கு ஏற்ப இருப்பவைகளை முழுமையாக நிராகரித்து விடாது அங்கீகரிக்கத்தக்க வைகளை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறது. இதற்கு முக்கிய காரணம் நல்ல பண்பாடு, நாகரிகங்களை உருவாக்கும் எண்ணத்தின் மூலம் அல்லாஹ் தவிர வேறு இருக்க முடியாது’ என்பதினாலாகும்.
இஸ்லாமியப் பண்பாடு, இஸ்லாமிய மூலாதாரங்களில் இருந்து உருவாவதைக் குறித்து நிற்பதினால் இவற்றில் மாற்றம் நிகழ்வதில்லை. அதே நேரம், இஸ்லாமிய நாகரிகம் என்பது கால சூழல், தேசவேறுபாட்டிற்குள் சங்கமமாகிக் கொள்வதினால் இஸ்லாமிய நாகரிகத்தில் மாற்றம் ஏற்பட முடியும்.
இஸ்லாம் அல்லாதவர்களிடம் காணப்படும் நடை, உடை, பாவனை போன்றவற்றின் சாபவில் ஒத்தவைகள் முஸ்லிம்களிடமும் காணமுடியும், ஆதலால் பிறகலாசார நாக ரிகத்தின் தாக்கத்தினால் ஏற்பட்ட ஒட்டுதல், கடன்பட்டவைகள் என விமர்சிப்பது
SS (270
எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 22
விவேகமானதாக இராது.
ஏனெனில், உலகத்தில் தோன்றிய ஒவ்வொரு நாகரிகங்களிலும் இன்னொன்றின் சாயல் இல்லாதவைகள் இல்லை எனலாம். செல்வாக்கு, பாதிப்பு, தாக்கம் எனும் வட்டத்தை அடையாத பண்பாடுகள், நாகரிகங்கள் நானிலத்தில் எப்பாகத்திலும் இல்லை எனலாம். ஆயினும் இதுவொரு தவிர்க்க முடியாத பண்பின் தன்மை என்பதை எளி தில் விளங்கிக் கொள்ளலாம். இந்தப் பின்னணியில்தான் எகிப்திய நாகரிகத்தில் கிரேக்கச் செல்வாக்கும், பாரசீக நாகரிகத்தில் மத்திய ஆசிய நாகரிகத்தின் பாதிப்பும், திராவிட நாகரிகத்தில் ஆரிய நாகரிகங்களின் தாக்கங்கள் காணப்படுவதைப் புரிந்து கொள்ளல் வேண்டும்.
இஸ்லாமிய நாகரிகம் இஸ்லாத்திலிருந்து தோன்றக் கூடியதாகும். மார்க்கத்தின் ஓர் அம்சமாக நாகரிகத்தை இஸ்லாம் கருதுகின்றது. அது மட்டுமன்றி இஸ்லாமிய நாகரிகத்தின் அடிப்படைகள் தனித்துவமானதும், தனிப்பாதையையும் கொண்டதுமாகும். இஸ்லாமிய நாகரிகம், குர்ஆன், ஹதீஸ் (ஸுன்னா), இஜ்மா, கியாஸ் ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றி வளர்ந்த ஒன்றாகும். இஸ்லாமிய நாகரிகம் தெளஹறித் (ஏகத் துவம்), ரிஸாலத் (தூதுத்துவம்), மசூத் (மறுமைக்கோட்பாடு) ஆகிய மூன்று அடிப்படை யில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாகரிகம் என்பது கலிமாவை ஏற்று இஸ்லாத்தைப் பின்பற்றும் அனைவரையும் உள்ளடக்கும்.
இஸ்லாமிய நாகரிகம் மனிதனின் இம்மை, மறுமை ஆகிய ஈருலகத் தேவைகளையும் நிறைவு செய்யக் கூடியதாக அமைந்துள்ளது. இஸ்லாமிய நாகரிகம் வெறுமெனக் கட்டிடங்களிலும், கலைகளிலும் கவனம் செலுத்தாமல் மனித உள்ளங்களையே அழகுபடுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றது. இஸ்லாமிய நாகரிகம் நடை, உடை, பாவனை போன்றவற்றில் அக்கறை கொண்டு அதற்கென்று ஒரு பண்பட்ட ஒழுக்கப் பாதையினைக் கொண்டு திகழ்கின்றது.
இஸ்லாத்திற்கென்று கிராஅத் கலை, அரபு எழுத்தணிக்கலை, கட்டிடக்கலை என முஸ்லிம்களினால் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.
இஸ்லாமிய நாகரிகம் மேற்படித் தன்மைகளைக் கொண்டிருப்பதால் அது ஏனைய நாகரிகங்களிலிருந்து வேறுபடுவதை அவதானிக்கலாம். மனிதனின் நெறி பிறழும் மனோவிச்சைகளைத் தூண்டும் கலை, இலக்கிய முயற்சிகளை இஸ்லாம் மிக வன் மையாகக் கண்டிக்கிறது. இதனால்தான் இசை, நடனம், சித்திரம் போன்ற கலைகள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை அது முன்வைத்திருக்கின்றன.
இஸ்லாத்தை சமயம், பண்பாடு கலாசாரம், நாகரிகம் என கூறுபடுத்த முடியாது. இவைக்ள் யாவும் இஸ்லாத்திற்கு மாற்றமில்லாதவற்றிலிருந்து பெறப்படல் வேண்டும் என்பது இஸ்லாத்தின் உறுதியான கூற்று என்பதினால் இஸ்லாமிய பண்பாடு, நாகரிகம் என்பது தனித்துவமானதும், தனிவழியைக் கொண்டதுமாகும்.
நண்றி : தினக்குரண் 5. WYSYWAY?
GED
சிறுபான்மையினர் சில அவதானங்கள்

ே
S R
ငြ
தந்திர இலங்கையின் பதினோரா பொதுத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் பத்தாம் திகதி நடைபெற வுள்ளது. இத்தேர்தலில் பிரதான போட்டிக் கட்சிகளாக பொ.ஐ.முன்னணியும், ஐ.தே.கட் சியும் திகழ்கின்றன. இப்போதே இவ்விரு கட்சிகளும் ஏட்டிக்குப் போட்டியாக, ஒன்றுக் கொன்று சவாலான கருத்துக்கனை வெளிப்ப டுத்தத் தொடங்கிவிட்டன. அதன் ஒரு கோணத்தைப் பின்வரும் செய்தி நமக்குத் தெளிவாகப் புலப்படுத்துகிறது.
"அடுத்த பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றிச் சாதாரண பெரும்பான்மையுடன் புதிய அரசியலமைப் பை நிறைவேற்றிய பின் சர்வஜன வாக்கெடுப் பை நடத்தி மக்கள் ஆணையை அதற்குப் பெற்றுக்கொள்வோம்" என ரீல.சு.க.பொதுச் செயலாளரும், அமைச்சருமான எஸ்.பி.திசா நாயக்க தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை ஜனாதிபதி சந்திரிகா பண்பார நாயக்க குமா ரதுங்கவும் பாராளுமன்றம் கலைக்கப்படுவ தற்கு முன்னர் அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தார்.
"அரசியல் நிர்ணய சபையை ஏற்படுத்தி அரசியலமைப்பை நிறைவேற்றப் போவதாக அவர் கூறியுள்ளார். தற்போதைய அரசியல் யாப்புக்கு இது விரோதமானதாகும். பாராளு மன்றத்தில் அரசியல் யாப்பு நகல் வரைவு 23 பெரும்பான்மைப்பலத்துடன் நிறைவேற் றப்பட்ட பின்னர் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட்டேயாக வேண்டும். இதைவிட
(2)
.எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 23
வேறு மாற்று வழியெதுவும் கிடையாது என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்" என ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க செய்தியாளர் மத்தியில் தெரிவித்தார். இவ்விரு கூற்றுக்களையும் நோக்குமொருவர் எக்கூற்று உண்மையானதென்று அறியாது திண்டாடும் நிலைக்குச் செல்லலாம். ஆதலால், இக்கருத்துக்களின் மெய்மைத் தன்மையை இனங்காண வேண்டும்.
"சாதாரண பெரும்பான்மை, மக்கள் தீர்ப்பு ஆகியவற்றினால் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை மேற்கொண்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வினைக்கொண்டு வருவோம்" என ஜனாதிபதி உட்பட அவர் சார்ந்த கட்சி பிரமுகர்கள் அண்மையில் தெரிவிப்பதில் உண்மை, நேர்மை இருப்பின் தங்களின் ஆட்சிக் காலத்தல் குறைந்தது நடுப்பகுதியி லாவது இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம். அதனைத் தவிர்த்துக் கொண்டதன் பின்னணி எதனை நமக்கு உணர்த்துகின்றது?
தனது ஆட்சிக்குரிய பாராளுமன்ற கலைப்பை அண்மிய காலத்தில் இது விடயத்தில் காட்டிய அவசரத்தன்மையினை முன்னரே காட்டியிருக்கலாம். ஏனெனில், 1994 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போதும் இதே மாதிரியான கூற்றுக்களைத் தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கொண்டிருந்தனர் என்பது அவர்கள் மறந்து போனாலும் மக்கள் மறந்து போகவில்லை. அக்கருத்துகள் பின்வருவனவாகும்.
"நிறைவேற்றுத் துறை ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஒழிப்பதற்கான அதிகார ஆணையை ரீலங்கா மக்களிடமிருந்து பொ.ஐ.முன்னணி கோரி நிற்கின்றது. அத்துடன், ஒரு புதிய அரசியலமைப்பொன்றை ஆக்கவும், அதனைச் செயற்படுத்துவதன் மூலம் மக்களுக்கு அவர்களது இறைமையைப் பூரணமாகவே திருப்பிக் கொண்டு வந்து தரப்படவும் வழி செய்யப்படும். இந்த இறைமையானது பாராளுமன்றத்திலுள்ள அவர் களது பிரதிநிதிகளினால் பிரயோகிக்கப்படும். பொ.ஐ.முன்னணியானது அரசாங்கத்தை அமைப்பதன் மேல் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டதான அரசியலமைப்பு நிர்ணய சபை ஒன்றைக் கூட்டி புதிய அரசியலமைப்பொன்றை ஆக்கி நிறைவேற்றும், இது தனது வலிமையையும், வலிதுடைமையையும் மக்களின் அரசியல் விருப்பின் வெளிப்படுத்தல் வாயிலாகப் பெற்றுக் கொள்ளும்"
இன்று கவர்ச்சிகரமான வார்த்தையில் கம்பீரம் தொனிக்க "இப்படியெல்லாம் தீர்வைச் சாத்தியப்படுத்துவோம்" என ஓங்கி ஒலிப்பது தமிழ் பேசும் மக்களாகிய தமிழ், முஸ் லிம் சமூகங்களைத் திருப்திபடுத்தி அவர்களின் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தங்கள் பக்கம் திசை திருப்பி, வெற்றியை நிச்சயித்துக்கொள்வதன் காய்ந கர்த்தல் நாடகமேயாகும்.
அண்மையில், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு மாற்றம் என்பது நடைமுறைக்கு வருவதாயின் 23 பெரும்பான்மை ஆதரவு வேண்டும், மக்கள் ஆனை வேண்டும், பெளத்த பீடங்களின் ஆசி வேண்டும் என்பதை பிரதான கட்சிகளான பொ.ஐ.முன்னணியினர்களும், ஐதே.கட்சியினர்களும் நன்கறிந்த நிலையிலேயே ஆதரவு. எதிர்ப்பு என்ற கோஷங்களை முன்வைத்தனர் என்பதே யதார்த்தமாகும். ஏனெனில், நடைமுறைக்கு வருவதாயின் தேவைப்படும் மேற்படி மூன்று அம்சங்களும் கிடைக்காது என்பதை முன்னரே பூகித்துணரக்கூடியதே.
"தான் விரும்பிய சட்டமூலங்களை மக்கள் தீர்ப்புக்கு விடுதல், பாராளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட சட்டமூலங்களை மக்கள் மத்தியில் தீர்ப்புக்கு விடுதல் போன்றவை ஜனாதிபதி கொண்டிருக்கும் சட்டத்துறை தொடர்பான அதிகாரங்களாகும்" இதே போன்று மக்கள் தீர்ப்புக்குப் பின்வரும் சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி ஏற்பாடு செய்யலாம்
H
சிறுபான்மையினர் சில அவதானங்கள்

என அரசியல் திட்டம் கூறுகின்றது.
"பாராளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ள ஏதேனுமொரு சட்டமூலம் நாட்டு நலனுக்கு அவசியமானது என ஜனாதிபதி கருதும் பட்சத்தில், அவ்விடயம் ஜனாதிபதியின் அபிப்பிராயப்படி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் கருதும் விடயங்கள்" இது இன்று ஜனாதிபதிக்குத் திடீரென வந்த அதிகாரங்கள் அல்ல. நடப்பில் உள்ள 1978இல் கொண்டு வரப்பட்ட யாப்பு கொண்டிருக்கும்.அல்லது வழங்குகின்ற அதிகாரங்களாகும். ஆயின் பொ.ஐ.முன்னணியின் ஆட்சிக் காலத்தின் ஆரம்பத்தில் அல்லது நடுப்பகுதியிலாவது பிரயோகித்திருக்கலாமே? அவ்வாறு செய்யாமை எதைக்காட் டுகின்றது? தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கும் எண்ணம் தூய்மையாக இருந்ததில்லை என்றே கொள்ளலாம்.
அதேநேரம், இங்கு இருவிடயங்களை முக்கியமாகக் கருத வேண்டியுள்ளன. ஒன்று "தமிழ் பேசும் மக்களாகிய தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஏறத்தாழ 25% அள வில் இருப்பதனால் இவர்களின் அபிலாஷைகளுக்கு எதிரான சட்டங்களை மக்கள் தீர்ப்பின் மூலம் சாத்தியப்படுத்தும் அபாயம் இருக்கிறதே தவிர சிறுபான்மைச் சமூகங்கள் நன்மையடைவதற்குப் போதுமானதாக இல்லை" என்பதாகும்.
"பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படாத ஒரு விடயத்தை மக்கள் தீர்ப்புக்கு விட்டு அங்கும் அது தோல்வி காணும் போதும், பாராளுமன்றத்தில் 23 பெரும்பான்மை ஆதரவினைப் பெற்ற ஒரு விடயம் மக்கள் தீர்ப்புக்கு விடப்படும் போது தோல்வி காணும்போதும் என்ன செய்ய வேண்டும் என்பதை நடைமுறை அரசியல் திட்டம் தெளிவாக்கவில்லை" என்ற கருத்தும் இங்கு ஊன்றிச் சிந்திக்கத் தக்கதாகும்.
இத்தகைய நிலையில் மக்கள் தீர்ப்புக்கு - சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடுவதனால் மட்டும் குறித்த விடயத்தில் தீர்வைப் பெற்று விடலாமென்று நம்புவதற்கு இடமில்லை. ஏனெனில், தமிழ் பேசும் மக்களின் முக்கிய தேவையினை ஜனாதிபதி நடைமுறைப்ப டுத்தும் எண்ணம் கொண்டவராக இருந்தாலும் அதனை மக்கள் தீர்ப்பின் போது பெரும்பான்மை மக்கள் அங்கீகரித்துக்கொள்வார்கள் என்பதற்கு எவ்விதமான உத்தரவா தங்களும் இல்லை. இந்நிலையில் இவ்வாறான உறுதிமொழிகள் வெறுமனே கம்பீரத்தன் மையைப் பெற முடியுமே தவிர, நடைமுறை காண்பது வெறும் பகற் கனவாக அமைந்துவிடக் கூடிய பாங்கே நிறைந்து காணப்படுகின்ற நிலையினையும் நாம் புறந் தள்ளி விட முடியாது.
எது எப்படி இருப்பினும் இலங்கையில் இன்று நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பின் தன்மை பற்றிய தெளிவு நமக்கு முக்கியமாகும். அப்போதுதான் இப்போது வெளியாகியுள்ள மேற்படி செய்தியின் நம்பகத்தன்மையைப் பூரணமாகப் புரிந்து கொள்ள ஏதுவாகும்.
"அரசியல் அமைப்பைத் திருத்த விசேட வழிமுறைகள் தேவையில்லாதவிடத்து அது "நெகிழும்", "அரசியல் திட்டம்" எனவும், "விசேட வழிமுறைகள் தேவைப்படுமி டத்து அது "நெகிழா"அரசியல் திட்டம் எனவும்" அழைக்கப்படும்"
அரசியல் திட்டங்களைத் திருத்தும் முறையினை வைத்து நெகிழும், நெகிழாதெனப் பிரித்து நோக்கும் மரபினை அவதானிக்கலாம். நெகிழும் யாப்பு முறைமையைக்கொண்ட நாடுகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. நியூசிலாந்து, பிரித்தானியா போன்றவை இம்முறையினைக் கொண்டுள்ளன. அதேநேரம், உலகின் பல நாடுகள் நெகிழா யாப்பு முறையினைக் கொண்டுள்ளன. இவற்றுக்கு சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகள் உதாரணங்களாகும்.
GEBO
எம்எம்எம்நூறுல்ஹக்=

Page 24
- SS E
எமது நாட்டின் நடைமுறை அரசியல் திட்டத்தின் சில பகுதிகளைத் திருத்துவதற்கு சாதாரணப் பெரும்பான்மை இருந்தால் போதுமெனவும், இன்னும் சில பகுதிகளை மாற்றுவதாயின் பாராளுமன்றத்தின் மொத்த அங்கத்தவர்களின் 23 பங்கினர்களின் ஆதரவும், மக்கள் தீர்ப்பின் அங்கீகாரமும் வேண்டுமெனவும் குறிப்பிடுகின்றது. ஆகை யால், நெகிழும், நெகிழா ஆகிய இரு பண்புகளையும் எமது அரசியல் திட்டம் கொண்டுள்ளது. இவ்வாறான இரு தன்மைகளையும் கொண்ட யாப்பு முறைமையினை நடைமுறையாகக் கொண்ட நாடுகளுக்கு அவுஸ்திரேலியா, தென்ஆபிரிக்கா போன்ற நாடுகள் உதாரணங்களாகும்.
எமது அரசியல் திட்டத்தில் பின்வரும் உறுப்புக்களைத் திருத்த வேண்டுமானால் 23 பெரும்பான்மை ஆதரவுடன், மக்கள் தீர்ப்பு ஒன்றின் மூலம் மக்களின் சம்மதமும் அவசியமாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவை 1,2,3,5,7,8,9,10,11 எனும் உறுப்பு களாகும்.
"இலங்கை சுதந்திரமும், இறைமையையும், தன்னாதிக்கமும் கொண்ட ஜனநாயக சோஷலிச குடியரசாகும் என்பதோடு இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு என அறியப்படுதல் வேண்டும்" (1) எனவும், "இலங்கை குடியரசு ஒற்றையாட்சி உடைய ஒரு அரசாகும்" (2) என்பது நடைமுறை யாப்பில் காணப்படும் அம்சங்களாகும். அதேநேரம், அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பை நீக்குவதற்கும், மாற்றீடு செய்வதற்குமான சட்டமூலத்தின் அத்தியாயம் 1 உறுப்பு 1 பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
"இலங்கை குடியரசானது மத்தியினதும், பிராந்தியங்களினதும் நிறுவனங்களை அடக்கிய ஒரு சுதந்திர, இறைமைத்துவ, தன்னாதிக்க அரசாகும் என்பதுடன், அது அரசியலமைப்பில் தரப்பட்டுள்ளவாறு தத்துவத்தைப் பிரயோகித்தலும் வேண்டும்"
எனவே சாதாரண பெரும்பான்மை, மக்கள் தீர்ப்பு போன்றவற்றினால் மேற்படி திருத்தம் போன்றவற்றினை மேற்கொள்ள முடியாது என்பது தெளிவான ஒன்றாகும். நிரந்தரத் தீர்வுக்கும், நிலையான சமாதானத்திற்கும் இவ்வாறான வாக்குறுதிகள் போதுமானதுமல்ல. இன்றும் எத்தனையே வாக்குறுதிகள் தேங்கி எழுத்திலும், பேச்சிலும் இருந்து கொண்டேயிருக்கின்றன.
ஆகவே, அரசியலமைப்பை சாதாரணப்பெரும்பாண்மை மூலமும், மக்கள் தீர்ப்பின் அங்கீகாரத்தின் மூலமும் மாற்றியமைப்பது இயலாத காரியமென்பது நிகழும் யாப்பு கூறும் தெளிவுரையாகும். இன்னுமின்னும் இவ்வாறான வார்த்தை ஜால வித்தையினை வைத்துத் தமிழ் பேசும் மக்களாகிய தமிழ், முஸ்லிம் சமூகங்களை விலை பேசிக் கொண்டிருப்பது விவேகமான வழியுமல்ல; மேலும் மேலும் இவ்வாறான வெற்றுக் கோஷங்களில் இரையாகிப்போவதும் தமிழ் பேசும் மக்களின் ஆரோக்கிய அரசியலுக்கு உகந்ததுமல்ல.
நன்றி தினக்குரவி
(09.09.200
820 -
சிறுபான்மையினர் சில அவதானங்கள்

ܘܝܘ
D
S. "5 9
e s 合 s ଛି
s
S: சுடுகாடாக மாறியிருந்த இ தைக் கண்டித்து அவ்வாறான துர் பாக்கிய நிகழ்வுகளை நாம் ஆட்சி யிலிருந்தால் ஏற்படுத்த மாட்டோம் எம்மிடம் இனப்பிரச்சினைக்குத் தீர்வுத் திட்டமிருக்கிறது எனச் சொல்லியவர்கள் இன்று ஆட்சி பீடத் தில் இருக்கின்றனர்.
அப்படியிருந்தும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீண்டும் "மனிதப்ப டுகொலைகள்" நிகழும் நிலைதோன்றியிருப் பதானது, அரசையும், புலிகளையும் அச்சத் துடன் கூடிய சந்தேகத்துடன் மக்கள் பார்க் கும் நிலையினைத் தோற்றுவித்துள்ளது.
இந்தச் சூழல் ஆரோக்கிய வாழ்க்கை யைச் சீரழித்து அவலம் நிறைந்த வாழ் வையே மக்கள் மத்தியில் நிலவச் செய்யத் தக்கது என்பதை மனிதாபிமானத்துடன் நோ க்கும் எவரும் புறக்கணித்து விடமுடியாது. கசப்பாகவிருந்தாலும் உண்மைகளை ஜீரணித்துக்கொள்ளும் பக்குவம் வேண்டும். குறிப்பாக ஆளும் வர்க்கம் இந்தப் பக்குவத் தில் நிலை கொள்ள வேண்டும். இல்லை யேல் எதிரிகளின் பலத்தைக் குறைத்து மதிப்பிடச் செய்துவிடும். இது அழிவுகளைத் தேடித்தரும்.
இதற்கு விதிவிலக்காக இன்றைய அரசு இல்லை என்பதை அண்மைய புலிகளின் யுத்தத் தவிர்ப்பு மீறுதலும் அதன் எதிரொல் யாக நிகழ்ந்த அனர்த்தங்களையும் கொண் டு உணரலாம். அவற்றினை நாம் ஒரே திரட்டாகப் பார்ப்போம்,
GB
எம்எம்எம்நூறுல்ஹக்

Page 25
கடந்த 19.04.1995 இல் திருமலையில் கடல் புலிகள் 14 கடற்படை வீரர்களை கொன்றொழித்து புலிகள் யுத்தத்தவிர்ப்பு ஒப்பந்தத்தை மீறியது. அதனைத் தொடர்ந்து 22.04.1995ல் பொலன்னறுவை காட்டுப் பகுதி முகாம் ஒன்றினைப் புலிகள் தாக்கி ஏறத்தாழ 20 இராணுவ வீரர்களை பலி கொண்டனர்.
மேலும் கடந்த 27.04.1995ல் விமானப்படையின் விமானம் ஒன்றினை ஏவுனைத் தாக்குதல் மூலம் சிதைத்ததுடன் அதிலிருந்த 38 பேர் உயிரிழந்தனர். மேலும் 29.04. 1995இல் மீண்டும் ஒரு விமானத்தை ஏவுகணைத் தாக்குதல் மூலம் சிதைத்ததுடன் 32 பேர்களையும் பலி கொண்டனர்.
இன்னுமின்னும் இராணுவங்களைத் தாக்கிக் கொண்டிருப்பது. இப்படி புலிகள் தரப்பிலிருந்து சில தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்தச் செயல் சரியானதா? இல்லையா? என்று நாம் பட்டிமன்றம் நடாத்தி இனிப் பயன் இல் லை. மாறாக இன்னும் இப்படி மனித அழிப்புக்கள் நிகழாதிருப்பதற்கு என்ன வழியெனச் சிந்திப்பதே ஆக்கபூர்வமானதாக அமையலாம்.
விரும்பியோ விரும்பாமலோ புலிகள் அமைப்பு ஒர் அச்சுறுத்தும் சக்தி என்பதுடன், ஆயுதமேந்திய தமிழ்க்குழுக்களுள் விடுதலைப் புலிகள் மிகவும் உறுதியும், உயர் பயிற்சியும் உள்ளவர்களென்னும் உண்மைகளை உள்வாங்க வேண்டிய நிலை அர சுக்கு இருக்கிறதென்று கூறலாம்.
ஏனெனில், புலிகளைப் பொறுத்தவரை துணிவும் தற்கொலைப்படையின் ஒத்துழைப்பும் கெரில்லாத் தாக்குதல்களும் குண்டு வைத்து தகர்ப்பதிலுள்ள நிபுணத்துவம் என்பவற்றின் அகோர முடிவுகள் பலவற்றை நம் நாடு உள்வாங்கியிருப்பதாலேயே
அரசாங்கம் எதிர்பார்க்கின்ற சர்வதேச ஆதரவு என்பது அரசுக்கு கிட்டும் என்பதில் வேறு கணிப்பில்லை. இதற்குப் பல நாடுகள் புலிகளின் அண்மையத் தாக்குதல்களைக் கண்டித்து அறிக்கை விட்டிருந்தமையை ஆதாரமாகக் கொள்ளலாம். சர்வதேச அபிப்பிரா யங்களை பற்றியெல்லாம் புலிகள் அக்கறை கொண்டவர்கள் அல்ல என்பதையும் நாம் ஏற்றாக வேண்டும்.
முன்னர் இந்தியாவின் பின்புலத்தில் தங்கியிருந்தும் அதன் பல உதவிகள் அவசியமா கவிருந்தும் இந்தியப்படைகளை எதிர்த்து நின்றதுடன் இந்தியாவின் முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றழித்ததும் புலிகளுக்கு சர்வதேசம் பற்றிய அக்கறையில்லை என்பதைக் காட்டவல்லது.
தனது விடுதலைப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும்பியிருக்கும் பிரபல தமிழ் அமைப்புக்களிடம் ஆயுதம் இருக்கின்றது. அதே நேரம் அரச படையிடமும் ஆயுதம் இருக்கின்றது. இவ்விருவகையான ஆயுதங்களையும் புலிகளுக்கு எதிராகத் திருப்பி விடலாம் அல்லவா? என்று எம்மிற் சிலர் நினைக்கலாம். ஆயுதம் தரித்த தமிழ் அமைப்புக்களுள் புலிகளைத் தவிர அனைத்து அமைப்புக் களையும் இணங்க வைக்கும் திட்டத்தை அரசு முன்வைத்து இதனைச் சாத்தியப்ப டுத்தலாம் என்றும் சிந்திக்கலாம், இப்படி எல்லாம் செயற்படலாம் என்று வைத்துக்கொணர் டாலும் அது சமாதானத்தைத் தரமாட்டாது.
ஏனெனில் புலிகளின் பலம் ஏனைய ஆயுதமேந்திய தமிழ் அமைப்புகளுக்குத் தெரியும் புலிகளுடன் மோதி வெற்றி பெறுவது என்பது "மனலில் தலையை உடைப்பது போன்றதொன்று என்பதை உணர்ந்ததன் விளைவே இதுவெனலாம்.
ஆகையால் இப்பக்கச் சிந்தனையில் ஏனைய ஆயுதமேந்திய தமிழ் அமைப்புக்கள் பங்களிப்பு நல்க மாட்டாது. அதேவேளை பலமுறை அரசபடைகள் பாரிய தாக்குதல்கள்
சிறுபாண்மையினர் சில அவதானங்கள்

புலிகளை நோக்கிமேற்கொண்ட போதிலும் பலம் குறையாதும் யுத்த சாதனங்களுடன் புலிகள் தலை நிமிர்ந்திருப்பதை அரசு கவனத்திற் கொள்ளல் நலமெனலாம்.
முன்னைய நிகழ்வுகள் பின்னைய நிகழ்வுகளுக்குப் பாடமாக அமைய வேண்டும். இல்லையேல் அந்த நிகழ்வின் தடயம் அர்த்தமற்றதாகி விடுவதுடன் அதனை ஒத்த பின்னைய நிகழ்வுகள் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி விடும் என்பதும் ஓர் உண்மை பாகும்.
புலிகள் ஏனைய ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்கள் எதுவும் செய்திடச் சக்தி பெறாத அதே நேரம் புலிகளால் ஏனைய தமிழ் அமைப்புக்களை தங்கள் கட்டுப்பாட் டுக்குள் கொண்டு வரும் பலம் கூடப் புலிகளுக்கு இருக்கிறதென்பது இன்னொரு si GaiGTLD.
ஏனெனில் இதற்கு முன்னர் பல ஆயுதமேந்திய தமிழ் அமைப்புக்கள் ஏற்றுக்கொண்ட மாகாண சபை அமைப்பினால் தொடர்ந்து செயற்பட முடியாத இடர்பாட்டுக்குப் புலி கள் காரணமாக இருந்ததென்பது வரலாறு. ஆகவே இந்தச் செயலும் புலிகளை உயர்த்தி காட்டவே செய்கின்றது.
ஆகவே புலிகளை ஒதுக்கி விட்டு அல்லது வெளியே வைத்துக்கொண்டு சமாதானம் ஏற்படுத்தலாம். என்று நினைப்பது அதாவது சமாதானம் வேண்டும் என்பது நல்ல கோரிக்கையாகக் கருத்தாக இருக்கலாமே தவிர அது செயல் வடிவம் பெற முடியாது என்பதும் ஓர் உண்மையே,
இதற்கு ஒரே மாற்று வழி புலிகளை இணக்கப்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் அல்லது தமிழ் மக்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசு இனப்பிரச்சினைக் கான தீர்வைப் பகிரங்கமாகவே முன்வைக்க வேண்டும்.
தடைசெய்யப்பட்ட அத்தியாவசியப்பொருட்களில் இராணுவ ரீதியான பாதிப்புப்பொ ருளைத்தவிர ஏனையவற்றை பொது மக்களுக்காக உடன் தடையினைத் தளர்த்துதல், கடல் வலயத் தடைகளை மீண்டும் தளர்த்தல், கடல்வலயத்தடையினால் பாதிக்கப் படும் மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கல் போன்ற அடிப்படை பிரச்சினை களை உடன் நிவர்த்தி செய்யலாம்.
யாழ் நகருக்கு உள்ளே வெளியே அவஸ்தையின்றி நுழைவதற்கு பொருத்தமான பாதையொன்றினைத் திறந்து கொடுப்பது. (அத்துடன் கிழக்கில் ஆயுதத்துடன் புலிகள் நடமாடுதல் என்பதில் முஸ்லிம்களும் சம்பந்தப்படுவதால் அதனை இருதரப்பினரும் நன்கு கலந்தாலோசித்து நிறைவேற்ற வேண்டும்)
இப்படியான தொழிபாட்டின் மூலம் அரசு இன்னும் தன் செல்வாக்கை உலக அரங்கில் உயர்த்திக் கொள்ளலாம். அதே நேரம் புலிகளையும் பேச்சு வார்த்தை மேடைக்கு கொண்டு வரவும் உதவலாம்.
எது எப்படி இருப்பினும் புலிகளும் கொஞ்சம் புரிந்துகொள்ளல் தன்மையில் நடந் து கொள்ள முன்வர வேண்டும், அரசிடம் குறிப்பாக அரசின் உயர் பீடத்தில் இனவா தப் போக்கு மங்கிக் காணப்பட்டாலும் சில அதிகாரிகள் சில இராணுவங்களிடம் இன வாதப் போக்குக் காணப்படலாம்,
புலிகள் மீதுள்ள அரசின் பயம் சந்தேகம் என்பது உடனடியாகக்களையப்பட்டு முழுமையான நம்பிக்கைகளுடன் பேச்சு வார்த்தையில் அரசு இறங்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் எதிர்பார்ப்புகளையும் விட்டுக்கொடுத்து கால அவகாசம் கொடுக் கப்படல் வேண்டும்.
புலிகள் அமைப்புக் கூறும் சமஷ்டி ஆட்சி முறைமை என்றால் என்னவென்பதைத்
2قلک= -எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 26
தெளிவாக்கும் பொறுப்பும் புலிகள் தரப்பில் உள்ளதெனலாம்,
ஏனெனில் இந்த சமஷ்டி எனும் வார்த்தை பல பொருட்களைத் தரக்கூடியதாகவிருப் பதால். ஆகவே புலிகளும், அரசும் திறந்த மனத்துடன், கூரிய பார்வையுடன் விடயங் களை அணுகி இருதரப்பினரும் விட்டுக்கொடுத்தல் எனும் பக்குவத்துக்கு வர வேண்டும் இல்லையேல் சமாதானம் சமாதியுறுவதிலிருந்து வேறு திசைக்கு நகர முடியாதெனலாம் புலிகளின் ஆதரவு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி நாம் சமாதானத்தை ஏற்படுத்துவோம். என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது அறிந்ததே.
அதே நேரம் புலிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் சமாதானத்தைக் கொண்டு வரு வது நடைமுறைச் சாத்தியமாயின் அரசு கொண்டு வரட்டும் பார்ப்போம் எனப் புலி கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு ஏட்டிக்குப் போட்டியாகக் கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதென்பது சமாதானத் தை பின்னடையச் செய்யத்தக்கது. அதே நேரம் அரசின் பலம் என்பது புலிகளின் ஆயுத பலத்துக்குச் சமமானது அல்ல என்று நாம் கருத வேண்டியுள்ளது. இதற்குப் பின் வரும் பிரிகேடியர் சரத் முனசிங்கவின் விளக்கத்தைக் கொள்ளலாம்.
ஆயுதப்படையினர் எல்.ரி.ரி.ஈயினருக்கெதிராக எத்தகைய சவால்களையும் முகம் கொடுக்கத் தயாராகவுள்ளனர். இருந்த போதிலும் பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகள் என்று ஆரம்பிக்கும் பட்சத்தில் இலங்கையின் பொருளாதார நிலையையும் கருத்திற்கொள்ள வேண்டியுள்ளது.
இலங்கை ஒரு வறிய நாடு, வல்லரசுகளுக்கு நிகரான பலத்துடன் மோதுவதென்பது நடைமுறைச் சாத்தியமில்லை. ஆகவே பாரிய யுத்தம் ஒன்றினை நம் நாடு கானன்ப தென்பது பல சிக்கல்களைத் தரவல்லது. சமாதானத்தில் நாம் நம்பிக்கை இழக்கவில்லை. சமாதான வழிமுறை மூலமாகத் தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு கான முடியும். எனவும்,
சமாதானத்திற்கான முன்முயற்சிகளை அரசாங்கமே எடுக்க வேண்டும். எனவும் புலிகள் தரப்பில் கூறப்பட்டிருப்பதால் அரசு இது பற்றிக்கவனம் கொள்ளுதல் நாட்டுக்கு நன்மையெனலாம்.
யார் பலசாலி எனும் பலப் பரீட்சையில் இறங்காதும் முதலில் யார் இறங்கி வருவ து என்று சிந்திக்காதும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய கடப்பாடு அரசுக்கு இருப்பதால் அரசு முதலில் சமாதானத்திற்கான முன்வைப்புக்களை முன்வைப்பதில் ஒன்றும் தவறுமில்லை தாழ்வுமில்லை.
இலங்கை வாழ் சமூகங்கள் நாட்டில் அமைதி தோன்றி சுபீட்சம் பெற வேண்டும் என்பதில் குறியாகத் தொங்கி நின்றனர். யுத்த அச்சமற்ற சூழலுக்காக ஏங்கிக் கொண்டிருந்தனர் என்பதும் ஓர் உண்மையே.
மக்களின் அபிலாசைகளுக்கெதிராக அரசோ, புலிகளோ நடந்து கொள்வது விவேக மான நடைமுறையல்ல. இருதரப்பினரும் பரஸ்பரம் புரிந்து, தெளிவில் ஒன்றுபட்டுச் சமாதானம் நிலைத்தோங்க வழி செய்யப்படல் வேண்டும் என்பதே இன்றைய தேவை * LUTJjLD.
நன்றி : தினத்தந்தி (2.05.1995,
சிறுபாணிமையினர் சில அவதானங்கள்

R
宙 S)
E
லங்கை முஸ்லிம்களைத் தனியா இே இனமெனக் கொள்ள
சிமுடியாது. ஏனெனில், முஸ்லிம் சமூகத்தை ஒரு தேசிய இனமாகக் கொள்வ தற்கு இனம் பற்றி ஆய்வாளர்களினால் முன்வைக்கப்படுகின்ற கோட்பாடுகளுக்குள் அவர்களை முழுமையாக உள்ளடக்கிக் கொள்ள முடியாதவர்களாக இருப்பதினாலா குமென்ற காரணம் மேலோட்டமாகக் கூறப் பட்டு வருகின்றமையேயாகும்.
இலங்கை முஸ்லிம்களை ஒரு தேசிய இனமாகக் கொள்ள முடியாது என்கின்ற சிந்தனை ஏறத்தாழ நூற்றி ஐம்பது ஆண்டு களாக இங்கு இருந்து வருகின்றது. இக்க ருத்தினை எமது அண்டைய நாடான இந்தி யாவின் தமிழ் நாடு வரை பரப்பியும் வைத் துள்ளனர். இக்கருத்தினை இலங்கைத் தமிழ் அரசியல் வாதிகளில் பெரும்பாலாரும், சில சிங்கள அரசியல்வாதிகளும், விரல் விட் டெண்னக் கூடிய முஸ்லிம் அரசியல்வாதி களும் கொண்டுள்ளனர்.
இலங்கை முஸ்லிம்கள் தனியானதொரு தேசிய இனமல்லவென்ற கருத்தை முன் வைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், முன்வைப்போர்களின் பின்காணியையும் நாம் கூர்ந்து நோக்கின் அந்தச் சூழலும், அவர்க குளும் அரசியல் ஆதாயம் தேடும் நோக்க மின்றி வேறெதுவும் இருக்காமையைப் புரிந்து கொள்வதில் சிரமமிருக்காது.
சேர்ராஸிக் பரீத் "எனது உடலில் சிங்கள இரத்தம் ஓடுகிறது என்பதிலி நாணி
.எம்.எம்.எம்நூறுல்லுறக்

Page 27
பெருமிதப்படுகின்றேன்" என்ற கருத்துத் தொனிக்க தெரிவித்தமை, முன்னாள் யாழ் உதவி மேயர் "எனது உடலில் தமிழ் இரத்தம் ஓடுகிறது என்பதில் நான் பெருமைப்பு டுகின்றேன்" என்ற கருத்துப்பட உரைத்தமை,
1985ல் சேர், பொன் இராமநாதன் "இலங்கை முஸ்லிம்கள் இனத்தால் தமிழர்கள் என்ற கருத்துப்பட கூறியமை, டாக்டர் இல்யாஸ் 1977பொதுத் தேர்தல் பிரசார காலத் தில் "தமிழர்களும் முஸ்லிம்களும்இரத்தக் கலப்புள்ளவர்கள்" என்று பிரசாரம் செய் தமை. "இலங்கையில் வாழும் அத்தனை முஸ்லிம்களும் தமிழர்களே, அவர்களின் தாய் மொழியும் தமிழே, அவர்களின் சமயம் மட்டும் இஸ்லாம்" என ராணி இதழ் 1987இல் வெளிப்படுத்தியமை,
"இலங்கை முஸ்லிம்கள் மரக்கலத்தில் வந்து குடியேறிய வந்தேறிகள்" என எஸ்.கே.வடிவேலு வரைந்தமை, "இலங்கையில் இரண்டு பிரதான தேசிய இனங்கள் வாழ்கின்றன" என தினகரனில் இடம் பெற்றமை. "இலங்கையில் இரு தேசிய இனங்களே உள்ளன. அவை சிங்களவர், தமிழர் ஆகியோரே அந்த இரு இனத்தினராவர்" என தினமுரசு வெளிப்படுத்தியமை.
"இலங்கை முஸ்லிம்களை ஒரு தேசிய இனமென்று கூறமுடியாது. இலங்கையில் சிங்கள தேசிய இனம், தமிழ் தேசிய இனம் ஆகிய இரண்டு தேசிய இனங்களே உள் ளன. இந்த வகையில் முஸ்லிம்களுக்கு அரசியல் சுய நிர்ணய உரிமை இலங்கையில் இல்லை. ஒரு தேசிய இனத்திற்கே சுய நிர்ணய உரிமை இருக்கிறதேயன்றி ஒரு சமு கத்திற்கு அந்த உரிமை கிடையாது" என நவமணி பத்திரிகைக்களித்த பேட்டியில் தமிழ் அரசியற் கட்சிப் பிரமுகர் தெரிவித்தமை.
இப்படியான கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுவதன் பிரதான இலக்கு அரசியல் நன்மை கருதி என்பதை நாம் தெளிவாக அவதானிக்கலாம். ஆதலால் இதுவொரு குறுகிய மனோ பாவத்தினதும், பரந்த சிந்தனைகளுக்குப் புறம்பானதும் என்பதை ஆழமாகச் சிந்திக்கும் எவரும் இலகுவில் விளங்கிக் கொள்ளலாம்.
ஒரு தேசிய இனத்தை அளவிடுவதற்குப் பின்வரும் பண்புகள், அளவுகோல்களாக பெரும்பாலானவர்களினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தேசம் அல்லது அரசியல் அடையாளம். மொழியியல்
E GJITT EFTIT LÊ பொருளாதாரம் பெளதீகவியல்(நிறம், தோற்றம் - அமைப்பு, தோல், குருதி, பாரம்பரியம்) மதம் இனம் பற்றிய சிந்தனைகளில் மானிடவியல், சமூக விஞ்ஞான அறிஞர்கள் தமக்கி டையே அளவீடு சம்பந்தமான பண்புகளை ஒன்றுக்கொன்று வேறுபாடாக வெளிப்படுத்தி உள்ளனர். இதனால் பிரதேசத்திற்கு பிரதேசம், சமூகத்திற்கு சமுகம் மாறுபாடான அளவீடுகளைப் பிரயோகித்திருப்பதையும் காணலாம்.
"இனம்"என்ற சொல் ம்ே நூற்றாண்டுகளுக்குப் பின்னரே தோற்றம் பெற்றதாக நம்பப்படுகின்றது. ஐரோப்பியமொழிகளில் இச்சொல் 6ம் நூற்றாண்டிலிருந்தே கையாளப் பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. "உடலியல் கூறுகளினால் - பண்புகளினால் ஒரு குழுவினரிடமிருந்து வேறுபடும் இன்னொரு குழுவினரைக் குறிக்கும் "பொருளில் இனம்" எனும் சொல் பயன்பட்டது மிக அண்மையில் என்பதும் ஆய்வுகர் முன்வைக் கின்ற ஒன்றாகும்,
=சிறுபாண்மையினர் சில அவதானங்கள்

தேசிய இனம் பற்றிய பலவரையறைகள் இருந்த போதிலும் ஸ்டாலினின் கருத்தான "பொதுவான மொழி, வாழ்புலம், பொருளாதர வாழ்வு பொதுவான E, ELITTTTLps LLu வரலாற்றுப் பாரம்பரியம் உடையவர்களுமான மக்கள் குழுவே" ஒரு தேசிய இனமாகும் என்ற கூற்றினை பலர் ஏற்றிருப்பதனைக் காணலாம்.
தேசிய இனத்துவம் பற்றிய இச்சிந்தனைகள் - கோட்பாடுகள் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செயலிழந்ததாக அல்லது பொருளற்றதாக மாற்றப்பட்டிருப்பதை வரலாறு நமக்கு விபரிக்கின்றது. இனத்துவ அளவீடுகளில் மதமும் ஒரு சமுகத்தைத் தனியான இனமாக அடையாளப்படுத்த பயன்பட்டிருப்பதை மானிடவியலாளர்களும், சமூக ஆய்வா எார்களும் இக்காலத்தில் ஏற்றுள்ளனர்.
"இனக்குழு என்பதனால் கருதப்படுவது யாதெனில், வரலாற்று ரீதியாக வரையறுக் கப்பட்ட சுய உணர்வுள்ள ஒரு சமூகமாகும். அதற்குப் பெரும்பாலும் மொழியும், சம யமும் முக்கிய அம்சங்களாக அமைந்த சிறப்பான வரலாறும், பண்பாடும் உண்டு" என சேனக்க பண்டார நாயக்க சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்தியாவின் பஞ்சாப்பில் மொழியை அடிப்படையாகக்கொள்ளாது சமயத்தை அடிப்படையாக கொண்டு மாகாண அரசு வழங்கப்பட்டமையையும், பொது மொழி மட்டும் ஒரு தேசிய இனத்தை உருவாக்கி விடாது. அதே நேரம் தொடர்ச்சியான பிர தேசம் அவசியமான பண்பாயினும் இதுவும் ஒரு தேசிய இனத்தை நிர்ணயிக்க நிலை யான சான்றல்லவென்பதும் வரலாற்று உண்மைகளாகும்.
சமய அடிப்படையில் ஒரு தனித்துவமான சமுதாயம் நீண்ட நாட்களாக வாழ்ந்து வருவார்களாயின் அவர்களை மத அடிப்படையிலான சுய அடையாளம் தேசிய இனச் சுய நிர்ணய உரிமை பெற தகுதியுடையவர்களாகக் கொள்ளலாம். இதற்கு முன்னாள் "யூகோஸ்லாவியாவில் முஸ்லிம், கத்தோலிக்க, மரபுசார்ந்த கிறிஸ்தவர் தனித் தேசிய இனங்களாக அடையாளப்படுத்தப்பட்டதை" உதாரணமாகக் கொள்ளலாம். "இலங்கையில் வாழும் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் யாவரும் ஒரேவகையான உடலியற் பண்புகளை கொண்டிருந்த போதிலும் வெவ்வேறான இனக்குழுக்களாகவே உள்ளனர். தனித்தனி இனக் குழுக்களாக இவர்களை வேறுபடுத்துவன சமயம், மொழி ஆகியவையும் ஏனைய பண்பாட்டுத்தனித் தன்மைகளுமாகும்" என சித்திரலேகா மெளனகுரு குறிப்பிடுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
"இலங்கையில் இனம் கட்டமைக்கப்பட்டுள்ளமை, சிங்களவர், தமிழர், முஸ்லிம் மற்றும் வேறு மக்கள் தொகுதி என்ற அடிப்படையிலாகும்" என எம்.ஓ.ஏ.டி.சோய்சா எம்ஏ சுட்டிக் காட்டியுள்ளார். ஆயின், இலங்கை முஸ்லிம்களும் ஒரு தேசிய இனமாகவே கொள்ளப்படுகின்றனர். அதே நேரம் இனத்துவ கோட்பாடுகளும் ஏற்றுக் கொள்கின்ற ஒன்றில் முஸ்லிம்கள் ஒரு தேசிய இனமல்லவென குறிப்பிடுவது இயலவே ஏற்கப்பட்ட வொன்றில் புதிய அபிப்பிராயத்தைத் தோற்றுவிப்பதாகவே அமையும்.
இலங்கை முஸ்லிம்கள் மட்டுமன்றி, உலகத்தில் எந்த இடத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் தங்களை அடையாளப்படுத்துவதற்கு மதத்தையே பிரயோகிப்பது அவர்க குளுக்கான ஓர் அம்சமாக இருக்கின்றது. இதனால் இரத்தஉறவு, பாரம்பரியங்கள், கலாசாரம் போன்றவற்றுக்கு அப்பால் மதத்தினைக் கொண்டு தங்களை அடையாளப் படுத்திக் கொள்கின்றனர். இதற்கு இலங்கை முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல.
இப்பண்பு நேற்று இன்று தோன்றிய ஒன்றல்ல. இருபதாம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே அதாவது, மனித உற்பத்தியான நபி ஆதம் (அல்ல) அவர்கள் காலம் தொட்டே முஸ்லிம்கள் மதத்தின் மூலமே தங்களை அடையாளப்படுத்தி வந்துள்ளனர்
-எம்.எம்.எம்நூறுல்ஹக்

Page 28
என்பதே குர்ஆனின் கூற்றாகும்.
ஸ்டாலின் போன்றவர்களுக்கும், மானிட சமூக ஆய்வாளர்களுக்கும் முன்னரேயே முஸ்லிம்களின் அடையாளம், நிறம், கோத்திரம், மொழி, இரத்தம், பிரதேசம், தோல் போன்ற தன்மைகளினால் அடையாளப்படுத்த முடியாதவை என்றும் அவர்களின் தனித்துவமான சுய அடையாளம் மதம் சார்ந்தது என்பதும் நிரூபிக்கப்பட்ட உண்மை யாகும். எனின், இலங்கை முஸ்லிம்களின் சுய அடையாளம் மதத்தின் வழி நின்று பெறத்தக்கதாகும்.
மாறாக, "இஸ்லாமியத் தமிழர், சிங்கள முஸ்லிம்கள்" போன்ற அடைமொழிகளி னால் முஸ்லிம்களை அழைப்பதோ, கணிப்பதோ அடையாளப்படுத்துவதோ அறிவுபூர் வமான நடவடிக்கையல்ல. உண்மையில் இலங்கை முஸ்லிம்கள் ஒரு தனியான தேசிய சமூகமாக அடையாளங் காணப்பட்டு அரசியல் சுயநிர்ணய உரிமையுடைய வர்களாக இனங் கானப்பட்டுள்ளனர் என்பதே யதார்த்தமாகும்.
இலங்கை முஸ்லிம்களைத் தனியானதொரு தேசிய இனமாக - சமூகமாக ஏற்றுக் கொள்வதிலிருந்து விலகிச் செல்வதற்கு ஏதுவான எந்தக் காரணங்களுமில்லை. எனவே, அவர்களைத் தேசிய சமூகமாக எல்லாத் தரப்பினர்களும் ஒப்புக் கொள்வது இன்றியமை யாத ஒன்றாகும்.
நண்றி ஆதவனி (2005, 2000)
சிறுபான்மையினர் சில அவதானங்கள்

ཕྱི་
e
(כ .
டக்கு மாகாண முஸ்லிம்கள் எவ்
விதமான நியாயபூர்வமான கார
னங்களுமின்றி விடுதலைப் புலிக ளினால் விரட்டியடிக்கப்பட்டு நிர்க்கதியான வாழ்வு நிலைக்குள்ளாகி பன்னிரெண்டு வரு டங்களை அண்மிய அல்லல் நிறைந்த வாழ் வில் இருப்புக் கொண்டிருக்கின்றனர்.
வடக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம் களை விடுதலைப் புலிகள் வெளியேற்றி யமை தொடர்பில் ஒன்றுக் கொன்று முரண் பட்ட கருத்துக்களை புலிகள் முன்வைத் ததன் மூலம் இச்செயற்பாட்டிற்கான தகுந்த காரணங்கள் விடுதலைப் புலிகளிடம் இல் லை என்பதை வெளிக் கொணரப் போது மான சான்றாகும்.
நிகழ்வுக்கான காரணங்கள் எவ்வாறு
இருந்த போதிலும் நியாயமின்றி வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் வடக்கு மாகாணத் தில் குடியேறி நிரந்தரமாக வாழவேண்டும் என்பதிலோ, அதுவே அவர்களின் தாயகம் என்பதிலோ மாற்றுக் கருத்துக்கள் கூறுவதற் கில்லை.
டும் வடக்கு மாகாணத்தில் எப்போது? எப் படி? மீள்குடியேற்றப்படல் வேண்டும் என்ப தில் ஒருமித்த கருத்தில்லை. பல்வேறு தரப்பி னர்கள் வெவ்வேறான அபிப்பிராயங்கள் கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இவற் றில் உடனடியாக மீள்குடியேற்றம் நிகழ வேண்டும் என்கின்ற கருத்து ஆழ்ந்து நோக்
GO

Page 29
கவும், விமர்சிக்கப்படவும் உரியதாகும்.
அண்மையில் விடுதலைப் புலிகளின் மன்னார் பிரதேச நிர்வாகப் பொறுப்பாளர் பூவண்ணன் என்பவரை அமைச்சர் நூர்தின் மஷர் சந்தித்த போது, வடபகுதி முஸ்லிம் களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கருத்தறிவதற்கு முற்பட்ட வேளை பின்வருமாறு பூவண்ணன் தெரிவித்திருக்கிறார்.
"வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தத்தமது இருப்பிடங்களுக்குத் திரும்பி விவசாயம் மற்றும் ஏனைய தொழில்களை ஆரம்பிப்பதில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தற்போது எந்தவிதமான ஆட்சேபமும் கிடையாது" (As27 Eyazi 31.01.2002) இக்கருத்து வெளிவந்த பின்னர் "வடக்கு மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்" தொடர்பிலான கருத்துக்கள் மிகவும் சூடுபிடித்துக் காணப்படுகின்றன. இதில் முஸ்லிம் அரசியல்வாதிகளிற் சிலரும் புத்திஜீவிகள் என வட்டமிட்டுக் கொண்டோரில் சிலரும் முண்டியடித்துக் கொண்டு பின்வருமாறு கருத்துக்கள் தொனிக்க தமது உரைகளையும் அறிக்கைகளையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
"முஸ்லிம்கள் மீது விடுதலைப் புலிகள் நல்லெண்ணங் கொண்டிருக்கின்றனர் என்பதை எடுத்துக் காட்டும் வகையிலும், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முஸ்லிம்க வினதும் தாயகம் என்பதை ஏற்றுக் கொள்வதை வெளிப்படுத்தும் வகையிலும் விரட்டப் பட்ட வடக்கு மாகாண முஸ்லிம்களை உடனடியாக, அவசரமாக மீள்குடியேற்றி நிரூபிப்பதுடன் இனநல்லுறவு நிலை பெறவும் வழிகாட்ட வேண்டும்"
உண்மையில் மேற்படி கருத்துக்கள் வடக்கு மாகாண முஸ்லிம்களின் எதிர்கால வாழ்வில் ஒளியேற்றிவைக்க வேண்டுமென்ற தூய எண்ணத்தின் பேரில் வெளிப்பட்டதாக இருந்தாலும்கூட, இன்றைய சூழலில் இதனை வரவேற்றுக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் விளைவதற்குப் பதிலாக மீண்டும் வேதனைச் சுமைகளைச் சுமக்க வேண்டிய இடர்களை நோக்கிய நிலைக்கு இட்டுச் செல்லவே வழியாகும்.
விடுதலைப் புலிகளின் பூவணன்னன் மட்டுமன்றி, அவர்களின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சுப. தமிழ்ச் செல்வன் இது விடயத்தில் பின்வருமாறு சுட்டிக் காட்டி இருப்பதையும் இணைத்து நோக்குவது சில தெளிவுகளைப் பெறுவதற்கு உரைகல்லாகத் துணைபுரியுமென நம்பலாம்.
"நிச்சயமாக அவர்களது சொந்தத் தாயகத்தில் வாழும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கின்றது. அந்த நியாயபூர்வமான மக்களது எண்ணப்பாடுகளை எமது தலைவரும் அமைப்பினரும் மிக உறுதியாக ஏற்றுக் கொள்கின்றார்கள். முஸ்லிம் மக்கள் எமது சகோதர மக்கள். அவர்களது உணர்வுகளை நாம் மதிக்கின்றோம். இங்கு ஒரு சுமூக மான நிலை உருவாகும் போது நிச்சயமாக முஸ்லிம் மக்களை நாம் வரவேற்போம். அவர்களை அவர்களது சொந்த மண்ணில் வாழ வழி செய்து கொடுப்போம். இதுதான் எமது தலைவரின் உறுதியான கொள்கையாக இருக்கின்றது." (நிகரி 03.02.2002)
மேற்படி பூவண்ணன், தமிழ் செல்வன் ஆகியோர்களின் கூற்றுக்களை விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வமான கருத்துக்களாகவோ, முடிந்த முடிவான தீர்வுக ளாகவோ முஸ்லிம்கள் கொள்ள முடியாது. மாறாக முன்னரும் விடுதலைப் புலிகள் சார்பில் இவ்வாறான கருத்துக்கள் கொள்கையளவில் அல்லது கோஷமாக முன்வைக் கப்பட்டிருக்கிறது. அதற்குப் பின்வரும் கூற்றுக்கள் தக்க சான்றுகளாகும்.
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் "ஐலண்ட்" பத்திரிகைக்கு 1995ம் ஆண்டு காலப்பகுதியில் வழங்கிய நீண்ட பேட்டியில் "முஸ்லிம்க (2) -
சிறுபாண்மையினர் சில அவதானங்கள்

ளைப் பொறுத்தவரையில் நடந்த விடயங்களையிட்டு நாம் எமது வருத்தத்தை அவர்க க்குத் தெரிவித்திருக்கிறோம். அத்தோடு அவர்களை மீளக்குடியேற்றுவதற்கான : எடுத்து வருகிறோம். இங்குள்ள (தமிழ்) அகதிகள் அவர்களது ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சென்றதும் முஸ்லிம்கள் மீண்டும் குடியேறலாம்" எனவும்,
"முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், அவர்களுக்குத் திட்டவட்டமான பிரச்சினை இருக்கிறது. அவர்களில் அநேகம் பேர் அகதிகளாக அல்லல்படுகிறார்கள். எனவே, அவர்களை அவர்களது இருப்பிடங்களில் குடியமர்த்துவது எங்களுடைய கடமையாக இருந்து கொண்டிருக்கிறது" எனவும் கூறியமை இங்கு கவனம் பெறவேண்டிய கூற்றுக்க ாகும்.
"உண்மையில் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேறச் செய்ததானது வருந்தத்தக்க விடயம். விட்ட தவறை நிவர்த்தி செய்ய மீளக்குடியேற்ற வேண்டியவர் கள் நாங்களே." என விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்திய அரசியல் பொறுப்பாளர் துரை சரிநிகர் (இதழ் 104 இல்) பத்திரிகைக்கு 1996 காலப் பகுதியில் வழங்கிய செவ் வியில் தெரிவித்திருந்தமையும் இங்கு நினைவு கூரத்தக்கவையாகும்.
பி.பி.ஸி தமிழோசைக்கு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் (1993 காலப்பகு தியில்) வழங்கிய பேட்டியில், "யுத்தம் முடிவடைந்து சமாதான சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் அவர்களை மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியமர அனுமதிப்போம்" எனக் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே, வடக்கு மாகாண முஸ்லிம்கள் மீண்டும் அங்கு குடியேற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லாவிட்டாலும் அவர்களின் மீள்குடியேற்றம் எப்போது? எப்படி? என்பதில் உகந்ததருணத்தில் தான் அது சாத்தியமாகக் கூடிய ஒன்றென்பதுவே பொருத்தமான கருத்தாகத் தெரிகின்றது.
விடுதலைப் புலிகளின் ஒட்டு மொத்தமான கருத்துக்களிலும், சமாதான சூழல்தான் மீள்குடியேற்றத்திற்கு உகந்த தருனமென்பதும், அதுவே வடக்கு மாகாண முஸ்லிம்க ருக்குப் பாதுகாப்பான அரணாகவும் மிளிரும் என்பதும் இழையோடிக் காணப்படுவதைக் காணலாம். இதுவே சாலச் சிறந்த நிலையென்பதை ஆழ்ந்து நோக்கின் விளங்கலாம். அது மட்டுமன்றி, விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் வடக்கு மாகா ன முஸ்லிம்களை வந்து குடியேறுங்கள் என அழைக்க வேண்டும். அதேநேரம் மீண்டுமொரு வெளியேற்றம் நடைபெறாது என்ற உத்தரவாதத்தையும் அவர் நேரிடை பாக விடுக்க வேண்டும்.அதுவே விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வமான கூற்றாக இருக்கும் என்பதைப் பின்வரும் இரு செய்திகளும் உறுதி செய்வதாக நம்புவதற்கு இடமுண்டு.
"யாழ்ப்பானத்திலிருந்து முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டதை விடுதலைப் புலிகள் நாம் செய்த தவறென ஏற்றுக் கொள்கின்றார்கள். விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் அவர்களின் புனர்வாழ்வு தொடர்பாக விடுதலைப் புலிகள் தலைவர் வ.பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்ப டும்." இவ்வாறு விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் வை.பி.த. சில்வா தெரிவித்தார்.
நன்றி தினகரன் 2.02.2002) "அண்மையில் உங்கள் தலைவர் றவுபூப் ஹக்கீம் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்துக்கான பதில் தற்போது தயாரிக்கப்பட்டுக் H -بگببببببببب -எம.எம.எம.நூறுலஹக

Page 30
கொண்டிருக்கிறது. தலைவர் பிரபாகரனே அக்கடிதத்தைத் தயாரிக்கிறார். அப்பதில் கடிதத்தில் நீங்கள் முஸ்லிம் மக்கள் தொடர்பாக சுட்டிக் காட்டிய விடயங்களுக்குப் பதில் கிடைக்கும். நிச்சயமாக அதுநல்ல பதில்களாகவேயிருக்கும் என்றும் பூவண்ணன் அமைச்சர் (நூர்தின் மலடி?ர்)ரிடம் மேலும் குறிப்பிட்டுள்ளார்."
(56, 56 oxf : 0.32.2002) வடக்கு மாகாண முஸ்லிம்கள் அகதிகள் எனும் பொறிக்குள் சிக்குண்டு சொல்லொ னாத் துயரங்களில் துவண்டு ஒரு தசாப்தத்திற்கு மேலான காலங்களைக் கடந்து, படிப்படியான பல்வகையான தடைகளைத் தகர்த்தெறிந்து ஓரளவு நிம்மதியான வாழ்வி லும், சரிந்த பொருளாதாரத்தை சிறுகச் சிறுகச் சீர்செய்து வருகின்ற காலத்தில் காலடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் முஸ்லிம்களின் இருப்பிற்கும், பொருளாதார வளத்திற்கும், ஈந்தவி தமான உத்தரவாதங்களையும் விடுதலைப் புலிகளோ அரசாங்கமோ முன்வைக்காத நிலையில் அவசரமாக மீளக் குடியேறிய பின்னர் மீண்டுமொரு வெளியேற்றமோ அல்லது அரசு - விடுதலைப் புலிகள் யுத்தமோ ஏற்பட்டால் "கதி" என்னவாகும்?
மீண்டும் அகதிகளாக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு பல ஆண்டு களை அவல வாழ்க்கையாக கழிக்க வேண்டிய நிர்ப்பந்தங்களும் சிலருக்கு தாங்க முடியாத பேரிடியாக மாறிவிடுகின்ற அபாயங்களும், உடல், உளரீதியான வதைகளும் போன்ற சுமைகளின் பால் அழிவதைத் தவிர வேறு வழிவகுக்குமா? இந்தச் சீரழிவு சீர்பெறுவதற்கு எத்தனையோ வகையான இருண்ட யுகத்தினைக் கழிக்க வேண்டிய பரிதாபம் ஏற்படும்.
ஆயின், இவ்வாறான குந்தக நிலையில்லாத ஒரு சூழலில்தான் வடபுலத்து முளப் லிம்களின் மீள்குடியேற்றம நிகழ்வது புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்க முடியுமென்றால் இன்றைய சூழல் அதற்கு ஏற்ற தருணமாக இல்லை என்பது மிகப் பகிரங்கமான நிலையாகவே இருக்கின்றது.
நிரந்தர சமாதானம் ஏற்படுமா? என்பது இன்று கேள்விக்குரிய ஒன்றாகவே இருக் கின்றது. ஜனாதிபதி, பிரதமர் அதிகார முறுகல் நிலை, அரசு - விடுதலைப் புலிகளிடை யே விட்டுக் கொடுப்புக்களில் காணப்படும் நெருக்கடிப் போக்கு போன்றவைகள் இன் றும் இருந்த வன்ைனமே உள்ளன.
மறுபுறத்தில் கடந்த 1994 இல் ஆட்சிக்கு வந்த பொதுஜன ஐக்கிய முன்னணியும் சமாதானம் என்பதை வலியுறுத்தியும், பிரபல்யப்படுத்தியுமே ஆட்சியை கைப்பற்றியது. அதேபோன்றுதான் இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஐக்கிய தேசிய முன்னணியினரும் சமாதானம் என்ற கோஷத்தின் படிக்கட்டுக்களின் வழியில்தான் ஆட்சிபீடத்தைக் கைப்பற்றி புள்ளனர்.
1995 காலப் பகுதியிலும் விடுதலைப் புலிகளின் இனப்பிரச்சினையின் தீர்வின் பாங் கை முன்வைப்பதைப் பார்க்கிலும் பொருளாதாரத்தடை நீக்கம், புனர்வாழ்வு, பாதை திறப்பு, அத்தியாவசியப் பொருட்கள் அனுப்புதல் போன்ற விடயத்தையே முன்வைத்தனர். அதன் பின்னர்தான் பேச்சுவார்த்தை என இறுக்கமாகக் கூறினர். இன்றும் இதே பாங்கு கானப்படாமல் இல்லை.
அன்று (1995) பொதுஜன ஐக்கிய முன்னணியும் விடுதலைப் புலிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுத்து பொருளாதாரத் தடையைத் தளர்த்தியும், அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து வகைகளை விரைவாகக் கிடைக்க வழி செய்தன. அவ்வாறுதான் இன்றைய அரசும் நடந்து கொண்டிருக்கின்றது.
00
சிறுபாண்மையினர் சில அவதானங்கள்

அன்றும் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டிலிருந்து 16 பொலிஸாரை விடுவித்து தமது நல்லென்னத்தை வெளிப்படுத்தினர். தற்போதும் அதே பாணியில் அரச படை களை விடுதலை செய்து தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இனப்பிரச் சினைக்குத் தீர்வு ரணில் - சந்திரிகா கூட்டு" என்ற முனைப்பு அன்று வெளிப்பட்டது. இன்று "எதிர்க்கட்சியினர்களின் ஆதரவோடு தீர்வு" என்ற முனைப்பு காணப்படுகின்றது.
விடுதலைப் புலிகள் காலக்கெடுவை முன்வைத்து அன்று புத்தத்தவிர்ப்பை மீறிக் கொண்டனர். ஆனால் இன்று யுத்தத் தவிர்ப்பு ஒப்பந்த அடிப்படையிலும் கண்காணிப்பு என்ற வகையிலும் புதிய பரிமாணத்தையும், முனைப்பையும் கொண்டிருக்கின்றது. இது அன்றைய நிலையிலிருந்து முற்றிலும் வித்தியாசமான முன்னெடுப்பு என்பதில் யேமில்லை.
இந்தவொரு வித்தியாசக் கோணம் யுத்த தவிர்ப்பு முறிவு பெறாது என்றும், உடன் நிரந்தர சமாதானத்தைத் தந்து விடும் என்றும் வடபுலத்து முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்வதற்குப் போதுமான முகாந்திரம் அல்ல என்பதும் மிகத் தெளிவான ஓர் அம்ச -LDתאחDו
இவ்வாறான நிலைகள் யாவற்றையும் கூட்டு மொத்தமாக வைத்து அவதானிக்கின்ற போது வடக்கு மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் நிகழ்வதற்கு தருணம் இன்
ணும் வாய்க்கவில்லை என்பதையே புலப்படுத்துகின்றது.
உண்மையில் நிரந்தர சமாதானம் வந்த பின்னரும், விடுதலைப் புலிகளின் தலைவர்
பிரபாகரன் அழைத்து, பாதுகாப்பு உத்தரவாதப்படுத்திய பின்னரும் தான் மீள்குடி யேற்றம் என்பது சாத்தியமான ஒன்றாகும். இவ்விரு பிரதான நிலைகளும் தோன்றுவதற்கு முன்னர் மீள்குடியேறுவது கைசேதப்படக் கூடிய அபாயம் நிறைந்ததென்பதும் புறந்தள்ள முடியாத நிலையே.
நன்றி : திகரி
2. 222.
H9
-எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 31
GD
e @)
S
GS
E SA Գ6
c 裡 Կ5 尉
தம் (அலை) அவர்கள் இலங்கைக் 9 குன்றில் இறக்கப்பட்டார்களென்
றும், அதனால் அவர்களின் பாதச் சுவடுகள் பதியப்பட்டனவென்றுமே இலங்கை முஸ்லிம்கள் உட்பட பொதுவாக பெரும்பான் மையான முஸ்லிம்கள் கருதுகின்றனர்; நம்பு கின்றனர்.
நபி ஆதம் (அலை) அவர்கள் தோன்றிய இடம், அவர்களின் கல்லறை அமைந்த குன்று என்றெல்லாம் அண்மைக்காலமாக முஸ்லிம் அல்லாத எழுத்தாளர்கள் சித்தரித் துக் காட்ட ஆரம்பித்துள்ளனர். உதாரண மாக: "இரத்தினக்கல் விளையும் இம்மலை யைக் கிரேக்கர்கள் "ஆதம்பீக்" (ADAM'8 PEAK) என அழைத்தார்கள். இக்காரனப் பெயரைத்தான் கிறிஸ்தவர்களும் இஸ்லாமி யர்களும் ஆதம் என்னும் ஆதிமனிதன் தோன்றிய இடம் எனக் கூறி உரிமை பாராட் டுகின்றார்கள்"
தினகரன் வாரமஞ்சரி 204.1997 திரு. பூம.செல்லத்துரை ஜேபி) "உச்சியிலே ஆதித்தந்தையாகிய ஆதா முடைய கல்லறை உள்ளதென்று இங்குவா ழும் முஸ்லிம்கள் கருதுகின்றனர்"
ஞாயிறு தினக்குரல் பி.12.1997
இபரேகோப்ரைன் ஆதம் (அலை) பற்றி முஸ்லிம்களி டையே இல்லாத கருத்துக்களைக் காட்ட முனைவதனால் முஸ்லிம்களிற் சிலர் தடுமா றலாம். முஸ்லிம் அல்லாதவர்களும் இது விடயமாகத் தவறாகப் புரிந்து கொள்வார்
சிறுபான்மையினர் சில அவதானங்கள்
 
 

எனவே, அதனைக் களைந்துவிடச் செய்வது எமது பொறுப்பு என்ற அடிப்படை யிலேயே இக்கட்டுரை எழுதப்படுகிறது.
நபி ஆதம் (அலை) அவர்களின் வாழ்க்கை இருவேறு பகுதிகளைக் கொண்டதாகும். அவர்களின் தோற்றம் இம்மண்ணுலகில் ஆரம்பமான ஒன்றல்ல. மாறாக அது சுவர்க்கத் திலிருந்து ஆரம்பமாகின்றது. பின்னர் இம்மண்ணுலகம் நோக்கி இறக்கப்படுகின்றனர்; அனுப்பப்படுகின்றனர். அதன் பின்னரே நபி ஆதம்(அலை) அவர்களுக்கும் இப்பூவுலகிற் கும் தொடர்புகள் ஏற்படுகின்றன. இது பற்றி இறைமறை இப்படிச் செப்புகிறது.
"அவர்கள் இருவரும் இருந்த (கவர்க்கத்திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம் நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்." (குர்ஆன் 236) இந்த மறைவசனத்திற்கு இமாம் குர்த்துபீ (ரஹற்) அவர்கள் தமது தப்ளில், "நபி ஆதம்(அலை) அவர்கள் இந்தியாவிலுள்ள இலங்கையில் வந்திறங்கினார்கள். அவர் வந்திறங்கிய மலை "நூத்" என்றழைக்கப்பட்டது." என விபரிக்கிறார்கள்.
(அப்ஜாமிஉல் அதிர்காமிலம் குர்ஆனில் கரீம் பாகம் :) மேலும், தப்ளபீர்களான "காஸின், பைலாவிகளில், "ஆதம் (அலை) அவர்கள் ஸ்ரந்தீவில் அல்லது இந்தியாவில் "நூத்" எனும் ஒரு மலையின் மீது இறங்கினார்கள்" எனக் கூறுகின்றது. "நபி ஆதம் (அலை) அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள். அது இந்தியாப் பூமியிலுள்ளதென்றும், இலங்கையில் உள்ள மலையொன்றில் ஆதம் (அலை) அவர்கள் முதன் முதலில் வந்திறங்கினார்கள்" என இப்னு அப்பாளப் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்களென்று இமாம் அபூ இஸ்ஹாக் அத்த"லிபீ (ரஹ்) அவர் கள் குறிப்பிடுகிறார்கள். (கஸஸால் அன்பியா)
"இலங்கையில் றஹன் என்றழைக்கப்பட்ட ஒரு மலை உண்டு. அம்மலை மீதே நபி ஆதம் (அலை) அவர்கள் வந்திறங்கினார்கள். அதன் முகட்டில் ஆதம் (அலை) அவர்களின் பாதச் சுவடுகள் கல்லில் பதிவாகியுள்ளது." (மு."ஜமுல் புல்தான்)
"இந்தியா பூமியில் ஸ்ரந்தீப் என்ற இடத்திலுள்ள "நூத்" என்ற மலையில் நபி ஆதம் (அலை) அவர்கள் வந்திறங்கினார்கள்" (மஆலிமுத் தன்ஸில் "நபி ஆதம்(அலை) அவர்கள் இலங்கையில் விடப்பட்டார்கள்" (அதற்பாறுஸ்ஸமான்) "இந்தியாவின் இலங்கை எனும் தீவில் நபி ஆதம்(அலை) அவர்கள் வந்திறங்கினார்கள். அம்மலையின் ஆரம்பப் பெயர் றஹ"ன் என்பதாகும்" (அஹற்ளபணுத்தகானபீம் பீம.ரிபதில் அகாலீம்) "இப்னு அப்பாளம் (ரலி), அலி (ரலி), கதாதா (ரலி), அபுல் ஆலியா (ரஹற்) ஆகியோர் நபி ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் உள்ள இலங்கையில் "நூத்" என்ற மலையில் விடப்பட்டார்கள்" என அறிவித்துள்ளனர். (அல்-காமில் பித்தாரீஹற்)
"நபி ஆதம் (அலை) அவர்கள் இலங்கையில் வந்திறங்கினார்கள் என்ற கருத்தே gif|ELJsoLib GJITLLÈGEETEtih." (THE ENCYELOPEDIA OF ISLAM WOL. I.)
வரலாற்றாசிரியர் தபரீ, "நபி ஆதம் (அலை) இந்தியாவில் வந்திறங்கினார்" என்ற பொதுவான கருத்தையும், இலங்கையின் "நூத்" என்ற மலையில் இறங்கினார்கள் என்ற குறிப்பான கருத்தையும் கட்டிக்காட்டுகிறார். (தாரிஹத் தபரி பாகம் ஒன்று) "இந்தியாவில் இலங்கை என்ற தீவில் நபி ஆதம் (அலை) அவர்கள் இறக்கப்பட்டார்கள்" தப்ளூறும் ஹமீதி பீதப்ளிஷ் குர்ஆனில் மஜீது - பாகம் ஒன்று) "முஸ்லிம் எழுத்தாளர்களோ அதனை முதல் மனிதராம் ஆதமின் பாதச் சுவடு எனக்குறிப்பிடுகின்றனர். அவர்கள் அம்மலையை "பாவா ஆதம்மலை" என்கின்றனர். அதிலிருந்துதான் ஆதமின் சிகரம் (ADAM"SPEAK) எனப் பெயர் வந்தது" என குயிண்டஸ் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். சி
(இலங்கைச் சோனகர் பற்றிய கடந்த கால நினைவுகள்) (7)
-எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 32
"மனிதனின் பாதம் போன்ற ஒரு குழி உள்ளது. அதன் நீளம் 5 அடி 4 அங்கு லம், அகலம் 2 அடி 6 அங்குலம் நபி ஆதம் (அலை) அவர்கள் விண்ணிலிருந்து இந்தியாவில் இறங்கியதாக புகாரி ஷரீ"யின் விரிவுரையாளர் அய்னி (ரஹ்) கூறுகின்றார்." முற்காலத்தில் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இலங்கை இருந்ததென்பது குறிப்பிடத் தக்கது. (நபிமார்களின் வரலாறு - முதல்பாகம்)
கடல் கோள்களினால் இந்தியாவும், இலங்கையும் பிரிக்கப்பட முன்னர் இரண்டும் ஒன்றாகவே இருந்தது. அது லெமூரியாக் கண்டம் என்றழைக்கப்பட்டது. மற்றுமொரு கருத்துப்படி கடலில் மூழ்கிய குமரிக் கண்டத்தின் எஞ்சியபகுதியே இலங்கை எனக் கொள்ளப்படுகிறது.
தற்போதைய இந்தியாவில் அல்லது பிறவிடங்களில் (இலங்கையைத் தவிர) நபி ஆதம் (அலை) அவர்கள் வந்திறங்கினார்களென்று எவரும் இன்றுவரை கூறவுமில்லை. இதற்கான சான்றுகள் முன்வைத்ததுமில்லை. மாறாக பலஸ்தீனப் பகுதியில் அவர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன தவிர முதன் முதல் வந்திறங்கியதற்கல்ல. அதேநேரம், இலங்கையை அரபியர்கள் ஸைலான், எபரந்தீப் போன்ற நாமங்களால் அழைத்தனர். அறிந்திருந்தனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கதொரு அம்சமாகும்.
இலங்கைக் குன்றிலிலங்கும் பாதச்சுவடுகள் பற்றி வேறு சமயத்தவர்கள் வேறு விதமான கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். ஆயின், அவர்கள் எல்லோரும் வேறெங் காவது இதனைப் போல் தங்களது கடவுளது அல்லது தாங்கள் புனிதர்களாகக் கருது வோர்களின் அங்க அடையாளங்கள் இயற்கையாகக் கல்லில் பதிந்திருக்கும் வரலாறு கொண்டவர்கள் அல்லவென்பது உண்மையாகும்.
ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரை பாத அடையாளச் சின்னங்களுக்கு உரித்துடையவர்களாவார். நபி இப்றாஹீம் (அலை) அவர்களுடைய பாதச் சுவடுகள் இயல்பாகப் பதிந்த கல்லை இன்றும் மக்காவிலுள்ள ஹரம் ஷரீப் அருகே பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு முந்திய நபியாக "நபி ஆதம் (அலை) இருப்பதால் அவர்களுக்குப் பின் தோன்றிய நபி ஈஸா (அலை) அவர்கள் வரையான காலத்தில் எவருடைய அங்க அடையாளங்களும் இயற்கையாகக் கல்லில் பதிவாகிய தற்குச் சான்றுகளில்லை என்பது ஈண்டுகுறிப்பிடத்தக்கது."
"நபி ஆதம் (அலை) பாதச் சுவடுகள் பதியக் கூடிய வாய்ப்புண்டு என்ற அனுமான மும், மேலே காட்டியசான்றுகளும் குன்றில் விளங்கும் பாதச் சுவடுகள்" நபி ஆதம் (அலை) அவர்களுடையது எனக் கூறுவதற்குப் போதுமான சான்றுகளாகும்.
எனவே, "நபி ஆதம் (அலை) இலங்கையில் வந்திறங்கினார்களென்பதும், இலங்கை குன்றில் காணப்படும் பாதச் சுவடு அவர்களுடையது என்பதும், அகில உலக முளப் விம்களின் மனிதவர்க்கத்தின் மூலபிதா தரிசித்த நாடென்பதும் ஐயங்களுக்கு அப்பால் நிருபணமாகின்ற விடயங்களாகும்.
இதுதவிர, நபி ஆதம் (அலை) அவர்கள் தோன்றிய இடமென்பதற்கோ, கல்லறை அமைந்த குன்றென்பதற்கோ போதிய ஆதாரங்களில்லை. ஆதாரபூர்வமில்லாத கருத்துக்க ளைப் பொதுவாக முஸ்லிம்கள் கருத்திற் கொள்வதில்லை என்பது மிகத் தெளிவான ஒன்றாகும்.
கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள எட்டாம் ஆண்டுக்கான சிங்கள மொழிமூல "வரலாறு" நூலில் இலங்கையிலுள்ள ஆதம் மலையில் முகம்மது நபியின் பாதச்சுவடு இருப்பதைத் தரிசிப்பதற்காகவும், அரபிகள் இலங்கைக்கான யாத்திரையை மேற்கொன் டதாக புதியதோர் வரலாற்றைப் படைத்திருக்கிறார்கள்.
பாடப் புத்தகத்தில் இப்படிக் குளறுபடிகள் இடம்பெறுவது மிகவும் வருந்தத்தக்கதே
நன்றி : நவமணி
..
61:B)
சிறுபானர்மையினர் சில அவதானங்கள்
 

ကြွ
லங்கையின் அரசியல் வரலாற் இ நினை எடுத்து நோக்கின் அதில் பெளத்த மதம் சார்ந்து நிற்பது
புரியும். பெளத்த மதத்தின் மேலீட்டினைப் பறைசாற்றும் வகையில் அரசியல் வளர்ந்து வந்திருக்கின்றது.
சிங்கள மக்களைப் பெரும்பான்மை யாகக் கொண்ட நாடாக இலங்கை இருக் கின்றது. ஆகவே அம்மக்களுடைய அரசு அமைவதென்பது தவிர்க்கமுடியாததுதான். அதேநேரம் இதற்கெதிரான அரசு இங்கு அமைய வேண்டுமென எதிர்பார்ப்பது அற வே சாத்தியமற்றதென்பதும் துலாம்பரமா
୩g.
ஆகவே, சிங்களவர் பெரும்பான்மை யினர் என்கின்ற எண்னம் அகலமாகக் காலூன்றிக் கொண்டுள்ளது. அதன் அழுத் தங்கள் பேரினவாதங்களாக மாறி சிறுபான் மைச் சமூகங்கள் மீது அதன் பாதிப்புகள் படிந்து வந்திருக்கிறது. இதை ஏற்க இயலா தது மட்டுமன்றி, அனுமதிக்கவும் முடியாது. ஏனெனில், பேரினவாதங்களின் அழுத் தங்கள் எப்போதும் சிறுபான்மைச் சமூகங் களை காவுகொள்வதிலும், அடக்கி, ஒடுக்கி ஆள்வதிலும் கரிசனை கொண்டதாகும். இது என்றும், எங்கும், சிறுபான்மைச் சமூகங்க ஞக்கு பேரிடியாகவும், பாரிய நசுக்குதல்க ளுக்கும் வழிவகுக்கிறது. இழப்புக்களையும் ஏற்படுத்திவிடுகின்றது.
இவ்வாறான விளைவுகளைக் கொண்ட தாக பேரினவாதங்கள் இருக்கின்றன. இத
2 کــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ
.எம்.எம்.எம்நூறுல்ஹக்
NAO
Ջ
R s S)
는 c S.
S s
G 除 3 R tə ଛୈ
-6
恒

Page 33
னால்தான் அதனை உருவாக்கக் கூடிய பெளத்த மேலாதிக்கச் சிந்தனைகளையும், அதனையொட்டிய அரசுகளையும் சிறுபான்மைச் சமூகங்கள் விமர்சிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தினை ஏற்கவேண்டிய தர்மசங்கடமான நிலையினைச் சந்திக்க வேண்டியதா கின்றது.
இலங்கையில் பேரினவாதங்களின் அழுத்தங்கள் என்று நோக்கின் அவை மிகவும் பிற்போக்குத்தனமாகவும், மூர்க்கத்தனமாகவும், சிறுபான்மைச் சமூகங்கள்மீது திணிக் கப்பட்டு வந்துள்ளன. இவை வரலாற்று ரீதியாகச் சான்றாதாரங்களுடன் நிரூபிக்கக் கூடியதாகவும் இருக்கின்றன.
பெரும்பான்மையினரின் கருத்து
இலங்கையின் பழங்குடி மக்களான தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இந்நாடு சொந்தமில்லை. இவ்விருபகுதியினர்களும் இங்கு வெவ்வேறு காலப்பகுதிகளில் வந்தே றிய குடிகள், இலங்கை சிங்கள மக்களை மட்டுமே பூர்வீகக் குடிகளாகக் கொண்டது என்கின்ற ஒரு கருத்து நிலை பெரும்பாலான சிங்கள மக்கள் மத்தியில் நீண்ட கால மாக இருந்து வருகின்றது.
இக்கருத்து நிலையினை வேரூன்ற வைப்பதில் பெளத்த மேலாண்மைப் போக்கினைக் கடைப்பிடித்த ஆட்சியாளர்களினதும், பெளத்த குருமார்களினதும் பங்குகளைக் குறைத்து மதிப்பீடு செய்ய முடியாது. அது பரந்து தொழிற்பட்டிருப்பதனையும் வரலாறு நன்கு புடம் போட்டுக் காட்டத் தவறவில்லை.
வெறுமனே இந்த நிலை தோன்றியது எனக் கூறிவிட முடியாது. நன்கு திட்டமிட்டு இக்கருத்தியலை விதைத்து, வளர்த்து வந்திருப்பதானது பேரினவாதத்தின் அழுத்தத் தினைக் கோடிட்டுக் காட்டப்போதுமான சான்றாகும்.
மேற்படி கருத்து நிலையானது இலங்கையின் அமைதிக்கு நிரந்தர பங்கமாகவும், சமூகங்களுக்குள் இருப்பு கொள்ள வேண்டிய பண்புகளான ஒற்றுமை, புரிந்துணர்வு, பரஸ்பர உறவு போன்றவைகள் அற்றுப் போகவும் வைக்கின்றது. அத்துடன் ஒரு சமு கத்தின் மீது மற்றொரு சமூகம் நிலையான சந்தேகக் கண்கொண்டு நோக்குகின்ற குந்தகத்தினையும் நிரந்தரமாக்குவதற்கு வழிவகுக்கிறது.
அதுமட்டுமன்றி, இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களான தமிழர்களும், முஸ்லிம் களும் அவர்களின் பூர்வீக நாட்டிலேயே இரண்டாந்தர பிரஜைகளாக வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். இவ்விரு சமூகங்களுக்குமான தனித்துவங்களும் உரிமைகளும் மறுக்கப்பட் டும், புறக்கணிக்கப்பட்டும் நடாத்தப்படுகின்றனர் என்பது கண்கூடு.
பேரினவாத முதலைT
இந்நிலையானது சிறுபான்மைச் சமூகங்களான தமிழர், முஸ்லிம்களை எவ்வாறு சிங்களப் பேரினவாத முதலைகள் கபஸ்ரீகரம் கொள்கின்றன என்பதைக் கோடிட்டுக் காட்டப் போதுமானது.
அதே நேரம் பேரினவாதமானது சமூகங்களுக்குள் சங்கமிப்புக்கள் ஏற்படுவதனை
நிரந்தரமாகத் தடுத்து விடுகின்றது. அத்துடன் நிரந்தர பகையுணர்வை நிலைப்படுத்தி விடுவதிலும் பெரிதும் பங்காற்றவல்லது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. பெரும் பான்மை, சிறுபான்மை என்கின்ற பேதமைச் சிந்தனைகள் எங்கு தோன்றினாலும், எங்கு உதித்தாலும் அதன் பெறுபேறுகள் ஆரோக்கியமான சமூகத்தை நோக்கியதாக இராது என்பது மட்டும் உறுதியானது.
சிறுபாண்மையினர் சில அவதானங்கள்

அது பல வாதங்களையும், வர்க்க முரண்பாடுகளையும் எழுப்பி நிரந்தர வேறுபாட் டினை நோக்கிப் பயணிப்பதையே குறியாகக் கொண்டிருக்கும். இது இலங்கைக்கும் விதிவிலக்காக அமையவில்லை. அதன் கோரப்பிடியினுள் அகப்பட்டு அல்லல்படுகின்ற நிலையினையே இலங்கையும் கொண்டிருக்கிறது.
பெளத்த குருமாரின் ஆளுமைகளும், அவர்களின் கருத்துகளும் இலங்கை அரசாங் கங்களைக் கைகட்டி சேவகம் புரிய வைத்திருக்கின்றன. இன்னொரு பக்கம் பேரினவா திகள் பெளத்த மேலாண்மை வாதத்தினை வைத்து ஆட்சியினைக் கைப்பற்றுவதற்கு அதை ஓர் ஏணியாக உபயோகிக்கப்பட்ட பாங்கும் இலங்கை அரசியலில் அடிக்கடி நிகழ்ந்த ஒன்றாகவே இருக்கின்றது.
இலங்கையின் மன்னர் ஆட்சி, காலனித்துவ ஆட்சி, சுதந்திரத்திற்குப் பின்னரான ஆட்சி போன்றவற்றினை எடுத்துக்கொண்டாலும் அங்கும் பெளத்த மதகுருமாரின் செல்வாக்கும் இருந்துள்ளன.
இவை அரசாங்கத்தில் பெரிதும் உட்சென்று, "இலங்கையின் அரசாங்கம் சிங்கள பெளத்த அரசாங்கம்" என்கின்ற போக்கினையும், "இந்நாடு பெளத்தர்களினது" என்கின்ற உணர்வுகளையும் விதைத்துவிட்டன.
இந்நிலை தற்செயலாக நிகழ்ந்த ஒன்றல்ல. நன்கு திட்டமிட்டுக் காரியமாற்றி உருவாக்கிக்கொண்ட பெறுபேறு இது என்பதில் சந்தேகமில்லை. இதனால் நாடு பெற்ற விளைவுகள் என்று நோக்கின், நலன்கள் என்பதை விட தீமைகள் பெருகிக் காணப்படுவதையும் அவதானிக்கலாம்.
இலங்கையின் சிங்கள மன்னர்களின் அரச சபைகளிலும், கோட்டை, கண்டி இராச்சியங்களிலும் பெளத்தத்தை முதன்மைப்படுத்தியே ஆட்சி புரியப்பட்டிருந்ததனை வரலாறு எடுத்தியம்புகின்றது.
சுதந்திரத்திற்குப் பின்னர் எழுதப்பட்ட முதலாம், இரண்டாம் குடியரசு யாப்புகளும் பெளத்த மதத்தைத் தேசிய மதமாகவும், முதன்மையாகவும் அங்கீகரித்து இருக்கின்றன. சுருங்கக் கூறுமிடத்து இலங்கை ஒரு பெளத்த நாடென்ற தன்மையினைப் பேணுவதில் பேரினவாதிகள் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்திருப்பதனை இவைகள் சுட்டிக் காட்டு கின்றன.
அன்றும் சரி, இன்றும் சரி இந்நிலை ஒரு தொடர் கதையாக நீடித்துக் காணப்படுகிறது. அதி தீவிர பெளத்த தேசிய வாதத்தில் இலங்கை இருப்பு கொண்டுள்ளது.
பெளத்த தேசிய வாதத்தின் இன்னொரு முகமாக ஜனாதிபதி, பிரதமர் உட்பட்ட அரசாங்க உயர் பதவிகளுக்கு சிங்களச் சமூகத்தின் பெளத்த மதம் சார்ந்தவர்களே தெரிவு செய்யப்படுகின்றனர். கிறிஸ்தவ மதம் சார்ந்த சிங்களவர்களும் இலங்கையில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயின் பெளத்த மேலாண்மை, சாதி வேறு பாடு என்பனவும் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன.
இதனால் இலங்கையில் வர்க்க முரண்பாடுகளும், விடுதலைப் போராட்டங்களும் நிலைப்பேறாகப் பற்றுக்கொள்ளத் தொடங்கியதும் நீண்ட வரலாறாகி விட்டது.
இதனை இன்னொரு கோணத்தில் நோக்கின், சில வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடும் "இலங்கையின் வரலாறு என்பது சிங்களவர், தமிழர் எனும் இரு பகுதியினர்களுக்கிடை பில் நடைபெற்ற யுத்தங்கள்" எனும் அபிப்பிராயம் ஏற்கத்தக்கதாகின்றது.
SLLLLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS
-எம்.எம்.எம்நூறுல்ஹக்

Page 34
கோட்டை இராச்சியத்தை ஆட்சி புரிந்த மன்னன் 1557 இல் கத்தோலிக்க மதத்திற்கு மாறியதனால் பெளத்த குருமாரினால் அவன் புறக்கணிக்கப்பட்டான். மதமாற்றம் கோட்டை இராச்சியம் வீழ்ச்சி காண்பதற்கு வழி சமைத்தது. முதலாம் இராஜசிங்கன் 1590இல் சைவ மதத்தினை ஏற்றுக்கொண்டதனால் சீதாவாக்கை இராச்சியம் சிதை வுற்றது.
ஆகவே, பெளத்த மதத்தினையும் அதன் குருமாரினையும் மதிக்காத, பின்பற்றாத எல்லா ஆட்சிகளும் அழிவுகளை சந்தித்துள்ளன. அப்படியான ஒரு அழிவினைச் சிங்களவர் விரும்பவில்லை என்கின்ற ஒரு வழக்கத்தினை இது காட்டுகின்றது.
அதேநேரம் பெளத்த மதத்தினையும் அதன் குருமாரினது சொல்லிற்குக் கட்டுப்பட்டு நடக்கின்ற சிங்கள அரசாங்கங்களையே சிங்கள மக்களில் பெரும் பகுதியினர் விரும்பி அரவணைத்து வந்திருக்கின்றனர். இப்போக்கினை இலங்கை வரலாற்றில் பரவலாகக் காணக்கூடியதாயுள்ளது.
எது எப்படி இருப்பினும் பெளத்த மேலாண்மைப் போக்கினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் நன்கு வெளிப்பட்டன. அவற்றினால் நிலையாகப்படிந்துவிட்ட கறைகளை அகற்றுவதிலும் தேவையான தீர்வுகளை முன்வைத்து நடைமுறைப்படுத்துவதற்கு சில சிங்கள தலைமைத்துவங்கள் முற்பட்டன. அப்போதெல்லாம் அவற்றினைத் தடுத்து நிறுத்துவதிலும், எதிர்ப்பு அலைகளைப் பெருவாரியாகக் கிளப்புவதிலும் மும்முரமாக பெளத்த பிக்குமாரின் குறுக்கீடுகள் தலை தூக்கியே வந்திருக்கின்றன.
இலங்கையின் அரசியலில் "மதமும் அரசியலும் இரண்டறக் கலந்து" பேணப்பட்டு வந்திருக்கிறது. மதமும், அரசியலும் இரு துருவங்களாகச் செயற்பட வேண்டும் என் கின்ற கோட்பாடுகள் எழுந்ததன் பின்னரும் இலங்கையின் அரசியலில் மதம் இணைந்தே செயற்பட்டுக் கொண்டிருக்கிற பாங்கையே காணலாம்.
இலங்கையின் சிங்கள அரசர்களின் ஆட்சியில் பெளத்த மதமும், பெளத்த குருமா ரும் பிரதான இடத்தினைப் பெற்றிருந்தனர். இலங்கை மேலைத் தேசத்தவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டபோது கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து மதங்கள் முதன்மைப் பெற்றிருந்தன.
சுதந்திர இலங்கையில் மீண்டும் பெளத்த மதமும் அதன் குருமாரின் செல்வாக்கும் தொடர்ந்து வந்திருக்கின்றது. இந்நிகழ்வுகள் இலங்கை அரசியலில் மதம் பிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வந்திருப்பதனை நிதர்சனமாக்குகின்றன.
விம்மதமும்
சுதந்திர இலங்கையில் "பெளத்த ஜயந்தி" விழாவினைக் கொண்டாடுவதற்கு அர சாங்க உதவியும், அனுசரணையும் வழங்கியதுடன் அதன் ஆதிக்கம் ஆரம்பமாகின்றது. 1954ல் உருவான "இலங்கை பெளத்த மண்டலய" 1956, 1957களில் பெளத்த ஜயந்தி செயற்பாட்டிற்கு உதவியமையும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ஐ.தே.கட்சி ரீலசு.கட்சிஎன்பன பெளத்த மதத்தினைப் பாதுகாப்பதனை பிரதான இலக்காகக் கொண்டு செயற்பட்டது மறைவன்று. 1956ல் எஸ்.டபிள்யூஆர்.டி. பண்டாரநாயக்காவை வெற்றிபெற செய்தமையிலும் பெளத்த குருமாரின் பங்குகள்
இருந்தன.
=சிறுபாண்மையினர் சில அவதானங்கள்
 
 
 

பண்டாரநாயக்க - செல்வநாயகம் உடன்படிக்கை, டட்லி சேனநாயக்கா - செல்வா ஒப்பந்தம், ரீமா - சாஸ்திரி உடன்பாடு என பல்வேறு தீர்வுத் திட்டங்கள் தீட்டப்பட்ட் போதிலும் அவை அனைத்தும் நடைமுறை காணாது தோல்வியுற்றன. இதற்குப்
பளத்த குருமாரின் எதிர்ப்புக்கள் பிரதான இடத்தினைக் கொண்டிருந்தன.
1970களில் இடதுசாரிப் போக்கில் தீவிரத்தைக் கொண்டிருந்த அணியிலும், 1971 இல் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியிலும் பெளத்த குருமாரின் ஒரு பகுதியினர் இருந்தனர் என நம்பப்படுகின்றது.
鳶 L. ■■ 轟「-嵩轟
பெளத்த குருமாரின் பங்களிப்பு 1982இல் கொண்டுவரப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபைகள் தமிழர் தனித் தாயகத் திற்கு வித்திடும் எனக் கோஷமிட்ட போதும், 1987ல் உருவான இலங்கை - இந்திய ஒப்பந்தம் நாட்டிற்கு குந்தகமானது என எதிர்த்த போதும் பெளத்த மதகுருமாரின் :: இருந்தனவென்பதும் நிதர்சனமானது.
பொ.ஐ.முன்னணியினர் கொண்டு வந்த பல தீர்வுத் திட்டங்களை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்களை முன்வைத்ததிலும், விடுதலைப்புலிகள் அமைப்பினைத் தடை செய்ய வேண்டும், மாகாண சபைத்தேர்தல்களைப் பின்போட வேண்டும் போன்ற கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்ததிலும் பெளத்த மத குருமாரின் பங்களிப்புக ளிருந்தன.
இவற்றினை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு செயலாற்றியதையும் தெளிவாகக் கான லாம்.பொதுவாக பெளத்த மதகுருமார் கட்சி அரசியல் சார்புடையவர்களாகவும் இருக் நின்றனர்.
ஆகவே, இலங்கை அரசியலில் பெளத்தபிக்குமாரின் செல்வாக்கு, ஆளுமைகள் என்பது நீண்டகாலமாக குடி கொண்டிருப்பதுடன், அவர்களின் கோரிக்கைகள், கருத்துக் கள் என்பனவற்றை முற்றாக நிராகரித்துக் கொண்டு அரசாங்கத்தை நடாத்திச் செல்வது மிக கஸ்டமானது.
பொதுவாக இலங்கை அரசியலில் பெளத்த மத மேலாண்மை, பெளத்த இன மேலீட்டு சிந்தனைகள் காணப்படுகின்றன.
இலங்கை ஒரு பெளத்த நாடு சிங்கள மக்களுக்கு மட்டுமான பூர்வீகக் தாயகம் போன்ற எண்ணப்பாடுகள் நிலை கொள்ளவும், அதன் வழியில் நாட்டை ஆட்சி புரிவ தற்கு ஏதுவான உந்துசக்தியாக அல்லது பின்புல மாக இருந்தவற்றுள் பெளத்த பிக் குமாரின் செல்வாக்கு முதன்மை பெற்றுக் காணப்படுகின்றது.
இந்நிலை அகற்றப்படல் வேண்டும் என்பதில் வேறு அபிப்பிராயமில்லை. ஆயின், மேற்படி நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு துணிந்து இறங்க முன்வரவேண்டும். இதன் முதற்படியாக பதவி ஆசைகளை விட மக்கள் நலன் என்பதில் பற்று நிறைந்த சிங்களத் தலைமைத்துவத்தை அடையாளங் காணவேண்டும்,
இலங்கையொரு பல் சமூகங்களுக்கும் சொந்தமான தேசம், இங்கு பல்வேறு சம பங்களும் சமமாக மதிக்கப்படுகின்ற போக்கிருப்பது அவசியம், ஒரு நாட்டிற்குள் உரி மை என்பது சமூகத்திற்கு சமூகம் வேறுபடக்கூடாது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சாசனம் வலியுறுத்துகின்ற "இன உரிமை, மத உரிமை என்பன எல்லோருக்கும் சமம் என்ற நிலைப்பாட்டினை நடைமுறைப்படுத்து கின்ற தலைமைத்துவத்தினைக் கொண்ட அரசாங்கம் ஒன்றினை இலங்கை சமூகங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளாதவரை நாட்டிற்கு மோட்சம் என்பதில்லை என்பதே தற்போ தைய யதார்த்தமாகும்.
Д56уд : «йг д” கொ கமித்ச் சங்கே YČAS. V.22)
ᎾiiᏴ -எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 35
号
S
S
է5 D
S.
5
சிறுபாண்மையினர் சில அவதானங்கள்
| d# ဂြွီး நாட்டில் ஏற்படுத்து வதே எமது இலக்கு. குறிப்பாகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக் குத் தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது முதற் கடமை. என்ற கோஷங்களை முன் வைத்தே இன்றைய ஆட்சியாளர்கள் ஆட்சி பீடத்தைக் கைப்பற்றினர்.
இலங்ககை மக்களின் மனங்களும் நாட் டில் அமைதி நிலவுவதை அதிகமாக நேசித் தமையினாலும், சமாதானத்தின் மீதான உணர்வுகள் மேலோங்கிக் காணப்பட்டதினா லும் இன்றைய ஆட்சியாளர்களை மீண்டும் ஆட்சி பீடத்தில் ஏற்றி வைப்பதில் அவர்கள் பெரிதும் துணை நின்றனர்.
கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக் கவிட்டு விட்டு அவர்களின் பழைய போக் கை அதாவது பேரினவாதத்தின் அழுத்தத் தை மெருகூட்டி வளர்த்துக் கொண்டிருக்கின் றனர் ஆட்சியாளர்கள்.
இதற்கு அரசாங்க தரப்பில் கூறப்படும் காரணம் தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சு
பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அர சுக்கு ஆதரவாக செயற்படுகிறார்கள் என் பதே.
இதையே ஆதராமாக வைத்து சர்வதேச மட்டத்தில் தங்களது செயற்பாடுகளை நியா யமெனக் காட்ட முனைந்து கொண்டிருக் கிறது அரசு,
இனப்பிரச்சினையை நன்குனர்ந்த இன வாதச் சிந்தனையில்லாத இன்றைய
வர்த்தைக்குவர விரும்புவதில்லை. தமிழ்
 
 
 

ஜனாதிபதியினால்தான் சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்கின்ற கருத் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்படுகின்ற ஒரு போக்கும் காணப்படுகின்றது.
இந்நிலையானது உண்மைக்குப் புறம்பானது மட்டுமன்றி, சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற துளியளவு எண்ணமில்லாதவர்களின் கருத்துமாகும் என்பது தமிழ்
г. க்கள் உணர்ந்துள்ள ஒன்றே.
தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தத்தை மீறிக் கொண்டிருக்கின்றனர் என் கின்ற ஒரேயொரு காரணம் மட்டும் இன்றைய யுத்தத்தை நியாயப்படுத்திவிடாது.
ஏனெனில், இந்நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு ஏதுவான முன்னேற்பாடுகளை மேற்கொள்கின்ற பொறுப்பு அரசாங்கத் தரப்பில்தான் முற்று முழுதாக இருக்கின்றது. தமிழ் மக்கள் மீது காட்டப்படுகின்ற பேரினவாத அழுத்தங்கள், மொழிப் புறக்கணிப்பு சோதனைச் சாவடிகளில் நடைபெறுகின்ற வதைகள், இராணுவக் கெடுபிடிகள் போன்றவற் றினை அகற்றுவதற்கான ஆக்கபூர்வமான செயற்றிட்டங்களை நடைமுறைக்குக்
காண்டு வருகின்ற தார்மீகக் கடமை அரசாங்கத்தினுடையதே.
இவ்வாறான தொழிற்பாடுகளை மேற்கொள்ளாது. சமாதானத்துக்கு முட்டுக்கட்டை டுதலைப் புலிகள்தான் என சித்தரிப்பது தமிழ் மக்களிடம் நல்லெண்ணத்தை ஏற்படுத்து ற்குப் பதிலாக, அரசாங்கத்தை சந்தேகக் கண்கொண்டு நோக்கும் நிலையையே ருவாக்கும்.
ஆகவே, ஆட்சியில் இருப்பவர்கள்தான் இந்த நாட்டில் சமாதானம் சீர்குலைந்து வதற்கான காரணிகளைக் கண்டறிந்து, பேரினவாதச் சிந்தனைகளை அகற்றுவதிலும், ழ் மக்களின் மனங்களில் நம்பிக்கையை வளர்த்தெடுப்பதிலும் முனைப்புற வேண்டும். இவ்வாறு ஆக்க பூர்வமான அணுகுமுறைகள் அரச தரப்பிலிருந்து தமிழ் மக்கள் மீது காட்டப்படுகின்ற போதுதான் அரசின் வார்த்தையிலும் அதன் சமாதான கோஷத்தி லும் அர்த்தமான நம்பிக்கைகள் ஏற்படமுடியும்.
உண்மையில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் எனத் தம்மைக் காட்டிக் கொ ண்டு அரசாங்கத்தின் சலுகைகளைக் கெளவிப்பிடித்துக் கொண்டு சமாதானத்துக்கு ஏற்ற தலைவி இன்றைய ஜனாதிபதிதான் என கோஷமிடுவது அறிவு பூர்வமானதல்ல. மக்களை ஏய்த்தும், ஏமாற்றியும் வழிகாட்டுவதினாலோ, விடுதலைப் புலிகள் சமா நானத்தின் எதிரிகள் என்று ஆர்ப்பரிப்பதனாலோ எதுவித நன்மைகளும் தமிழ் சமூகத் திற்கு கிட்டப்போவதில்லை.
இந்த யதார்த்த பூர்வமான நிலைமையினைக் கருத்திற்கொண்டும், அரசாங்கத்தின் கடந்தகால தேர்தல் வாக்குறுதிகள் மீறப்பட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டதை நினைவிற் கொண்டும் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களுக்கு நிரந்தர முடிவைப் பெற்றுக் கொடுப்பதிலும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்க் கட்சிகள்
மையான பங்களிப்பைச் செய்ய வேண்டும். சமாதான உருவாக்கத்திற்கான சூழலை ஏற்படுத்துவதும், அதற்கான தயார்படுத்தல் ளை மேற்கொள்கின்ற கடமைப்பாடும் அரசாங்கத்திற்கும், அரசாங்கத்தைச் சார்ந்து நிற்கின்ற தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமே இருக்கின்றது. வெறுமனே விடு தலைப் புலிகளையே எடுத்ததற்கெல்லாம் குறை கூறிக் கொண்டிருப்பது வலுவிழந்த ஒரு செயலாகவே கொள்ள வேண்டியிருக்கிறது. இந்நிலையில் நிரந்தர சமாதானம் இந்நாட்டில் உண்டாவதற்கான பொறுப்பு அரசாங்கம், தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ாள் ஆகியோரின் கரங்களிலேயே தங்கியிருக்கிறதே தவிர, தமிழீழ விடுதலைப் புலிகளின் கரங்களிலல்ல,
நன்றி இத
3.0.2.0)
-எம்.எம்.எம்நூறுல்ஹக்.

Page 36
5.
சிறுபாண்மையினர் சில அவதானங்கள்
லங்கை முஸ்லிம்கள் அரசியல் @ခြွစ္ထိ தேடிக் கொண்டி ருந்த காலகட்டத்தில்தான் மர்ஹாம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினைத் தோற்றுவித்து, அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுத லைக்கு வழியொன்றை ஏற்படுத்தினார்.
இதன் இன்னொரு பரிணாமமாகவே தேசிய ஐக்கிய முன்னணியையும் உருவாக் கினார். இவ்விரு கட்சிகளின் தோற்றப்பாட்டிற் குள்ளும் பிரதான இலக்காக இருந்தது முஸ் லிம் சமூகத்தின் விடுதலைப் போராட்டமென் பது யாராலும் மறுக்க முடியாத உண்மை யாகும்.
இவ்விரு கட்சிகளின் உருவாக்கங்களின் பின்னணிகள் இன்று புறந்தள்ளப்பட்டு அதன் தூய இலட்சியங்கள் யாவும் சின்னா பின்னமாகச் சிதறடிக்கப்பட்டு அவைகளின் எதிர்காலம் என்னவாகும்? என்கின்ற வினாக் குறியினை முஸ்லிம் சமூகத்தில் இன்று ஏற்ப டுத்தி இருக்கின்றது.
சமூக அபிவிருத்திகளுக்கு அமைச்சுப் பதவிகள்தான் ஊன்றுகோல் என நம்பியி ருந்த முஸ்லிம் சமூகத்தின் என்னப்பாட்டி னைக் களைந்து, அமைச்சுப் பதவிகளினால் கிடைக்கின்ற சலுகைகளை விடவும், உரி மைகளும், தனித்துவங்களும்தான் அவசிய மானதென்ற நம்பிக்கையினைக் கட்டியெழுப் பிய பாரிய பங்கினை மேற்படி கட்சிகள் செய்தன.
இவற்றினை இன்று மாற்றி, பழையபடி
呜
 
 
 

காடுக்கலாமென்ற நிலைக்குத் தள்ளிவிடுகின்ற கைங்கரியத்தில் ரீலங்கா முஸ்லிம் ாங்கிரஸ், தேசிய ஐக்கிய முன்னணி கட்சிகளின் இன்றையத் தலைவர்கள் காரியமாற்றத் |ணிந்திருப்பதனை அவர்களின் சில நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.
இந்நிலையானது முஸ்லிம் சமூகத்தின் விடியலின் முகவரியைத் தொலைத்து, ன்னுமின்னும் அடிமைப்பட்ட சமூகமாகவும், சமூக எழுச்சிகளுமின்றி, பின்னேற்றகரமான ரு சூழலின்பால் இருப்பு கொள்வதை நிரந்தரப்படுத்த உதவுமே தவிர வேறில்லை. நிரந்தரமற்ற பதவிகளினால் மக்களுக்கு ஏற்படும் அற்ப சலுகைகளைத் தூக்கியெ ந்து சமூகத்தினை மீண்டும் அதன்பால் ஈர்க்கும் நடவடிக்கைகளில் கரிசனை கொள்வ தன்பது அவர்களையும், அவர்களைச் சார்ந்திருக்கும் மக்களையும் ஏமாற்றிக் கொள் ன்ற ஒரு கபட நாடகமாகவே அமைய முடியும்.
இன்று ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய ஐக்கிய முன்னணி கட்சிகளின் ஏக பாகத் தலைவர் நானே என முன்னாள் அமைச்சர் றவூப் ஹக்கீம் அடம்பிடிக்க, ல்லவேயில்லை தேசிய ஐக்கிய முன்னணியின் ஏக தலைவி நானே என அமைச்சர் பேரியல் அஷ்ரஃப் தடம்கொள்ள ஏனைய சமூகத்தினர் இதனைப் பார்த்து முஸ்லிம் முகத்தினை எள்ளிநகைக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.
உண்மையில் இவ்விரு கட்சிகளை மர்ஹம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் உருவாக் யபோது, மக்கள் மலைத்துப் பின்னர் அவர் சாதனைகள் கண்டு அதுபோல் வேண்டு மன மற்றவர்கள் விரும்பிய காலங்கள் கடந்து, இன்று முன்னுதாரணங்களாகப் சவே முடியாதளவில் அதன் நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டிருப்பதனைக் காணுகின்ற பாது, வேதனைகள் விம்மியெழ வைக்கின்றது.
இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் ஆரோக்கியமான அரசியல் சூழலினை அவலங்க நக்குள் அகப்படுத்திய கைங்கரியத்தினை இன்றையத் தலைவர்கள் ஏற்படுத்தியிருக் ன்றனர் என்பதனை நியாயபுத்தியோடு சிந்திக்கும் எவராலும் மறுக்க முடியாது.
இத்தகைய சீரழிவின்பால் நிலைகொள்ளுமளவில் அமைச்சர் "பேரியல் அஷ்ரப், வூப் ஹக்கீம் ஆகியோர் கட்சிகளைக் கொண்டு செல்வதானது இவ்விருகட்சிகளையும் நாற்றுவித்த மர்ஹாம் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பின் தூய இலட்சியங்களை அலட்சியப்படுத் வதாகவும், நோக்கைச் சிதைப்பதாகவும் உள்ளது.
கொள்கைகளையும், சமூக மேம்பாடுகளையும் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, பதவிகளின் து கொண்ட மோகத்தின் விளைவில் இருவேறு பாதைகளைத் தங்களது பிரிவுக் காட்பாட்டிற்கு இவ்விருவரும் தெரிந்து கொண்டனர். இப்பிரிவினை இனி ஒற்றுமைக் நாட்டில் சங்கமிக்குமா? என்கின்ற வினாவிற்கு இல்லை என்ற பதில் கிட்டும் நிலையே பரும்பாலும் காணப்படுகின்றது.
அமைச்சர் ஃபேரியல் அஷ்ரஃப் நாடாளுமன்ற உறுப்பினர் றவூப் ஹக்கீம் ஆகிய ருவரும் வெளியில் ஒரு தோற்றப்பாட்டினைக் கோடிட்டுக் காட்டினாலும் அவர்களுள் பட்டிருக்கும் பிரிவினையின் மையம் பதவிச் சண்டைதான் என்பது சாதாரண பாமர ம் புரிந்து கொண்டுள்ள பக்கங்களாகும்,
முஸ்லிம் சமூகத்தின் விடுதலை என்ற முகவரியை றவூப் ஹக்கீம் கொடுக்க, சமூ ங்களின் ஒற்றுமை என்ற போர்வையினை அமைச்சர் பேரியல் அஷ்ரஃப் போர்த்திக் காண்டுள்ளார் என்பதனை மக்கள் தெரிந்துகொள்ளமாட்டார்களென்று அவர்கள் ண்ணிக் கொண்டு தொழிற்பட்டாலும் இவ்வேஷங்களை மக்கள் இலகுவில் இனங்கன்ை விடுவர் என்பதுதான் உண்மை.
(5)
-எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 37
சார்பு நிலையினால், அவர்களை ஆதரிப்போர்களை மீண்டும் பேரினவாதச் சேற்றினுள் தள்ளிவிடும் அதேவேளை றவூப் ஹக்கீமின் அணியினர் தம்மை ஆதரிப்போரை ஐக் கிய தேசியக் கட்சியினுள் சங்கமிக்க வைக்கும் நிலையினையே தோற்றுவிக்குமென நம்பப்படுகின்றது.
இத்தகைய போக்கு என்பது முன்னர் முஸ்லிம் சமூகம் எவ்வாறு பேரினவாதக் கட்சிகளின் பின்னால் அல்லல்பட்டுப் பிரிந்து நின்று, தமது உரிமைகளையும், தனித்து வங்களையும் பறிகொடுத்தார்களோ அதே இடத்திற்கு இட்டுச் செல்லப் போவது மட் டும் உறுதியான சங்கதியாகும்.
முஸ்லிம் சமூகத்தினை பலத்த விலை கொடுத்தலுக்கு மத்தியில் மர்ஹம் எம்.எச்.எம். அஷ்ரப் ஒன்றிணைத்தார் என்பதனை இவ்விரு அணியினரும் புரிந்து கொண்டால் மீண்டும் “பழைய குருடி கதவைத் திறடி" என்பது போல் முஸ்லிம் சமூகத்தினைப் பாதாள பேரினவாதத்தினுள் புதைக்கும் நிலையினை உருவாக்கமாட்டார்கள்.
அவ்வாறு உருவானால் பின்னர் அதிலிருந்து மீட்டெடுக்க இன்னும் சில வருடங்க ளையும், பல இழப்புக்களையும் முஸ்லிம் சமூகம் செலுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுவதிலிருந்து விடுதலை பெறப்போவதில்லை என்பது திண்னமா கிவிடும்.
ஆகவே அமைச்சர் "பேரியல் அஷ்ரப் பாராளுமன்ற உறுப்பினர் றவூப் ஹக்கீம் ஆகியோரின் பதவி ஆசைகளினால் நிகழும் இந்தத் திருப்புமுனைகளுக்கு நிகழ்கால வரலாற்றில் மாறாத சில அவலங்களை முஸ்லிம் சமூகம் சுமக்க நேரிடுவதுடன், இந்த வரலாற்றுத் துரோகத்தினை எதிர்காலச் சந்ததியினர்களும் மன்னிக்கமாட்டார்க ளென்பதையும் நன்குனர்ந்து செயற்படல் வேண்டும்.
இவ்விருவரின் குறுகிய அரசியல் இலாபத்திற்கும், பதவிச் சொகுசுகளுக்குமிடையில் ஏற்பட்ட போராட்ட வெறியினால் முஸ்லிம் சமூகம் நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றதென் பதே இன்றைய யதார்த்தம். இதனை அனுமதிப்பதன் மூலம் முஸ்லிம் சமூகம் பல் வேறு வகையான குந்தகங்களுக்கு முகம்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். வீரவசனங்களை அள்ளிச் சொரிவதனாலோ, யார் தூய்மையானவர்கள் என்று தன்னிலை விளக்கங்களை முன்வைப்பதனாலோ, ஒற்றுமையினை நோக்கி அதிகமான விட்டுக் கொடுப்புக்களையும், தியாகங்களையும் செய்தனர் என்ற கணக்குகளைக் காட்டுவதனாலோ முஸ்லிம் சமூகத்திற்கு எவ்விதமான விமோசனங்களும் இல்லை என்பதனைப் புரிந்து கொள்வதனாலும், மர்ஹம் எம்.எச்.எம்.அஷரஃப் தொடங்கி வைத்த தூய இலட்சியங்களையும், முஸ்லிம் சமூகத்தின் விடியலுக்கான தாபங்களையும் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்கின்ற தூய்மையான எண்ணமும், சமூகப் பற்றும் கொண்ட புதியதொரு அணியின் பிரவேசத்தின் அவசியத்தையும் உணர்ந்து, அதற்கேற்ற ஆயத்தங்களை முன்வைப்பதும் முஸ்லிம் சமூகத்திற்கு நன்மைகளை ஈடேற்றி வைக்குமென நம்பலாம்.
நன்றி இர ??????
சிறுபான்மையினர் சில அவதானங்கள்
 

Կ6
Գ6
s S 隆 医
E
图片
டக்கு, கிழக்கு மாகாண முஸ் ၈rါးနှီး விடுதலைப் புலிக ளுக்கும் இடையில் சரியான புரிந் துணர்வின்றி பாரிய இடைவெளி உறவு நிலை பேனப்படுவதனால் இங்குள்ள முளப் லிம்களின் சகஜவாழ்வும், அன்றாட நிகழ்வுக குளும் சீர்குலைந்து கொண்டிருக்கின்றன.
அதேநேரம் பகையுணர்வுகளும், பழி வாங்கும் மனோபாவங்களும் தலைவிரித்து, நிரந்தர அடக்கு முறைமைகளுக்குள் முஸ் லிம்களை நசுக்கி வைக்கும் பாங்கிலும் விடுதலைப் புலிகளின் அணுகு முறைமை கள் அதிகரித்தும் வருகின்றன.
இந்நிலையினைத் தொடர்ந்து அனுமதித் துக் கொண்டிருப்பதானது வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் நிரந்தர இருப்புக்களும் நிலையான பொருளாதார வளங்களும், பாதுகாப்புக்களும், தனித்துவங்களும், அடிப் படை உரிமைகளும் கேள்விக்குரியதாக மா றுவதுடன், நிரந்தர அச்சவுணர்விற்குள் அகப்பட்டு, அல்லல்படுகின்ற நிலையை உருவாக்கி விடக்கூடும்.
இத்தகைய நிலை முஸ்லிம்களுக்கு ஓர் ஆரோக்கியமானதாகவோ அவர்களின் எதிர் காலம் ஒளிமயமாக விளங்குவதற்கோ துணையாக இருக்கப்போவதில்லை என்பது நிச்சயமானது. எனில் இது பற்றிய மாற்றுக் கருத்துக்களின் பால் முஸ்லிம்களின் தேட்டம் திரும்ப வேண்டும் என்பதையே குறித்துக் காட்டுவதாகவே கொள்ளவேண்டும்.
விடுதலைப் புலிகளைப் பற்றி தனிப்பட்ட
எம்.எம்.எந்நூறுல்ஹக்

Page 38
முறையில் பல்வேறு கருத்துக்கள் ஒவ்வொருவர்களிடமும் இருக்கலாம். ஆனால் அவ்வமைப்பு பற்றிய பொதுவான சில பதிவுகள் உண்டு. அவைகள் பற்றிய தெளிவு கள்தான் அவர்களுடனான உறவுகளை எக்கோணத்தில் நிர்ணயிக்க வேண்டும் என்கின்ற செய்தியை அறிவிப்பவைகளாகும்,
விடுதலைப் புலிகள் ஒரு பலம் பொருந்திய சக்தியாக இன்று வளர்ச்சியும், வள மும் கண்டிருக்கின்றனர். அது மட்டுமன்றி இலங்கையின் அரச படைகளுடன் தொடரான யுத்தத்தில் ஈடுபடும் அளவில் ஆயுதபலத்தையும், உளவலிமையையும் பெற்றிருக் கின்றனர்.
இன்னொரு கோணத்தில் சிங்கள மக்களின் பாதுகாப்பில் அதிகரித்த பார்வையைக் கொண்டிருக்கும் அரச படைகளின் பாதுகாப்பும், சில எல்லைப்புற சிங்கள மக்களுக்கு சுயபாதுகாப்பு நிமித்தம் அரசாங்கம் ஆயுதம் வழங்கிய பாதுகாப்பும் என்கின்ற நிலைகள் இருந்தும் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு பெறமுடி யாத சந்தர்ப்பங்கள் பல நடந்தேறியிருக்கின்றன.
விடுதலைப் புலிகளின் இருப்பும் ஆளுமைகளும் தலை தூக்கிய பின்னர் இவ்வ மைப்பை புறந்தள்ளிவிட்டு அல்லது விடுதலைப் புலிகள் அங்கீகரித்துக் கொள்ளாதநி லையில் காணப்பட்ட அத்தனை தீர்வுகளும் தோல்வியைத் தழுவிக்கொண்டது மட்டுமன் றி மீண்டும் அவர்களுடனே பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்கின்ற நிலைக்கே இட்டுச் சென்றிருக்கும் வரலாறுகள் தான் இன்றுவரை பதிவு பெற்றுக்கொண்டி ருக்கின்றது.
விடுதலைப் புலிகளின் மேற்படி போக்குகளின் அவதானங்களிலிருந்து வடக்கு, கிழக்கு மாகாண முஸ்லிம்களின் எதிர்காலம் குறித்த நோக்கு நன்கு திட்டமிட்டு முன்னெடுக்கப்பட வேண்டும். இங்கு வாழும் முஸ்லிம்களின் இருப்பு நிலைகள், பொ ருளாதார கேந்திரங்களின் அமைவிடம் போன்றவற்றினைக் கருத்திற் கொண்டதாகவும், முஸ்லிம்களின் பலம், பலஹினம் பற்றி தெளிவுகளுடன் நடைமுறைச் சாத்தியமான வழிகளிலும் நெறிப்படுத்தப்படுகின்ற போதுதான் முறையான நிலைப்பாட்டில் முஸ்லிம்கள் இருப்பு கொள்வதை உறுதி செய்ய முடியும்,
மாறாக, பலஹினத்திலிருந்து கொண்டு வீர கோஷங்களை எழுப்புவதையோ யதார்த்த நிலைகளைப் புறந்தள்ளிவிட்டு வெற்றுக்கோஷங்களைப் பற்றிக் கொண்டிருப் பதாலோ எந்த விதமான முன்னேற்றங்களும், முடிவுகளும் வந்துவிடப்போவதில்லை. தீர்வுகளைப் பெறவேண்டும் என்ற எண்ணம் தூய்மையாகப் பிறக்க வேண்டும். அப் போதுதான் அதன் அணுகுதல்களும் வெற்றியை நோக்கிய பயணத்திற்கு அடிகோலும், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் விரைவில் சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கப்படலாம் என்கின்ற ஒரு நிலை காணப்படும் இந்தச் சந்தர்ப்பத் திற்காக மட்டுமன்றி வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளின் நடவடிக்கை களை எதிர்கொண்ட நிலையில் தான் வாழ வேண்டிய நிலையிருப்பதனாலும் இங்கு வாழும் முஸ்லிம்களுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஓர் இணக்கப்பாட்டினைக் காண்பதை அவசியப்படுத்துகின்றது.
அதேநேரம் அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஓர் இணக்கப்பாடு தோன்றிய பின்னர் முஸ்லிம்களின் தீர்வு இப்படித்தான் தீர்க்கப்படவேண்டும் என முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற போது சிலவேளை சமாதானத்தைக் குலைத்தவர்கள் முஸ்லிம்கள் என்கின்ற பழிச்சொல்லிற்கு ஆளாக வேண்டிய நிலையும் தோற்றுவிக்கக் கூடுமென்பதும் முஸ்லிம்கள் கவனிக்க வேண்டிய பக்கமாகும்.
== =சிறுபாண்மையினர் சில அவதானங்கள்
 

இன்றைய அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கின்ற ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் இவ்வாறுதான் தீர்க்கப்பட வேண்டு மென்ற உத்தரவாதத்தையோ, குறைந்தபட்சம் கோரிக்கையோ முன்வைக்கப்படவில்லை. இந்நிலையில் அரசுகூட புலிகளுடன் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான தீர்வென முன்வைத்துப் பேசும் நிலையும் இல்லை.
கடந்த 1983களுக்குப் பின்னர் இனப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் என முன்னெடுக் கப்பட்ட சந்தர்ப்பங்களில் தமிழ் கட்சிகள், தமிழர் விடுதலை அமைப்புக்கள் ஒன்றுபட்ட நிலை இல்லை எனவும், தமிழர் தரப்பு தீர்வுகளை முஸ்லிம்கள் ஏற்கின்றார்களில்லை iனவும் கூறி காலங்களைக் கடத்தியும், சமாதானத்தைப் பிற்படுத்திய அனுபவங்களை நினைவிற் கொண்டால் இரு பகுதியினர்களின் இணக்கத்தின்போதே முஸ்லிம்களின் இணக்கப்பாடுகளும் சங்கமித்தாக வேண்டும் என்கின்ற யதார்த்தத்தின் அவசியம் விளங்கப்படும்.
ஆகவே, வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற இன்னல்களும் அனுபவிக் கின்ற இம்சைகளும் ஒரு கட்டமைப்பாக இனங்காணப்பட்டு அவற்றுக்கான தீர்வு எவ் வாறு அமைவதன் மூலம் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் நிரந்தர பரஸ்பர உறவு நிலை கொள்ளும் என்பதையும் அடையாளப்படுத்தப்பட வேண்டும்.
இவற்றில் முஸ்லிம்களின் வாழ்நிலை இருப்பு பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியல் பிரதிநிதித்துவம், தொழில்வாய்ப்பு, சுயநிர்ணய உரிமை, தனித்துவங்கள், மதம், கலாசாரம், பண்பாடு, கல்வி போன்ற துறைகளில் காணப்படுகின்ற அச்சம், தடைகள், இடர்கள் களையப்படும் வகையில் ஆக்கபூர்வமான தீர்வுகளைக் காண்பதற்கான பேச்சுவார்த்தையில் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களும் விடுதலைப் புலிகளும் ஈடுபடவேண்
முஸ்லிம்களின் போராட்டமென்பது தமது அரசியல் பிரதிநிதித்துவத்தை மட்டும் உறுதி செய்வதல்ல; அதன் இருப்பை மட்டும் நிலைப்படுத்துவதனால் அனைத்தும் வந்துவிடும் என்பதுமல்ல. இதனைப் புரிந்து கொண்டால் வடக்கு, கிழக்கு மாகாண ஸ்லிம்களிடமிருந்து புத்திஜீவிகள், சமூக அக்கறையுடைய அமைப்புக்கள், கல்வி ன்கள், உலமாக்கள் கட்சிநிலைகளுக்கு அப்பாலான முஸ்லிம் சமூக நலன் என்ற குறிக்கோளுடன் கூடிய அரசியல் பிரதிநிதிகள் கொண்ட ஒரு குழு முதலில் அடையா ளப்படுத்தப்பட வேண்டும்.
அக்குழு கடந்த கால அனுபவங்களை ஒரு பாடமாகக் கொண்டு எதிர்கால நலன் க்கு எவ்வாறான முன்னெடுப்புக்களும், முன்னிடுகளும் பொருத்தமாக அமையுமென் தை இனங்கண்டு பள்ளிவாயல்களை மையமாக வைத்து இதுபற்றிய மக்கள் அபிப்பிரா பங்களைத் திரட்டிய பின்னர் விடுதலைப் புலிகளின் அதிகாரமிக்க அதுவும் அதன் தலைவர் பிரபாகரன் அடையாளப்படுத்தும் குழுவுடன் சமரசப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும்,
விட்டுக் கொடுப்புக்கள் இரு தரப்பிலிருந்தும் வெளிவரக்கூடிய நிலையினை உறுதி ய்து கொள்ளல், தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை மனித உரிமைகளும், சுய நிர்ணயங்களும் பலிக்கடாக்களாகாத நிலையில் பேச்சுவார்த்தை நகர்ந்து செல்வதை
உறுதி செய்துகொள்ளல் போன்ற முன்னேற்பாடுகளும் பேணப்படவேண்டும்.
ஒரு பகுதியினர்களின் பலஹினம் மறுபகுதியினர்களின் பலமாகக் கொள்ளல், ரு பகுதியினர்களின் பலம் மறுபகுதியினர்களினை நசுக்குவதற்கு உபயோகமாகக் ாள்ளல் போன்ற இழிநிலைகள் புறந்தள்ளப்பட்டு, உண்மையான சமரசம், ஒற்றுமை,
GO
στώ στιο στιοφτωςύςνυα,

Page 39
பரஸ்பர உறவு என்கின்ற நல்லெண்ணம் இருதரப்பிலும் மேலோங்கிக் கொள்ளல் போன்ற சுமுக நிலைகளும் உறுதி செய்யப்படல் வேண்டும்.
சுருக்கமாகக் கூறுவதாயின் ஒருவரையொருவர் சரிவரப் புரிந்தும், மதித்தும், உரி மைகளைப் பேணிக்கொள்ளும் வகையில் ஓர் இணக்கப்பாட்டிற்கு வடக்கு, கிழக்கு முஸ்லிம்களும், விடுதலைப்புலிகளும் அவசர அவசியமாக வரவேண்டிய கால சூழலில் இருக்கின்றனர் என்பதே யதார்த்தமாகும்.
இந்நிலையினை வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் புறந்தள்ளிப் புறக்கணித்துக் கொள் வது அவர்களின் எதிர்காலத்தைப் புதைத்துக் கொண்டதாகவும் எதிர்காலம் இருண் யுகத்தினை நோக்கிப் பயணிப்பதாகவும், இன்னுமின்னும் நெருக்கடிக்குள் அகப்பட்டு அவஸ்த்தைப்படுவதையும் உறுதி செய்வதாகவும் அமைந்துவிடலாம் என்கின்ற நிலை பைத் தோற்றுவிக்கும்.
நன்றி வீரகேசரி
2.2.2,
சிறுபான்மையினர் சில அவதானங்கள்
 
 
 

ஸ்லிம்கள் புனித ஹஜ் கடமை
நிறைவேற்ற அணியும் இஹற் ராம் ஆடை பற்றி முளப்லிம் அல்
லாத பலரிடையே தவறான கருத்து நிலவுவ தைப் பின்வரும் கூற்றுக்கள் தெளிவுபடுத்து கின்றன.
"எனவே இஸ்லாம் மதத்தை ஆரம்பித்த வர்களின் முதாதையும் திராவிடர் என்பது உண்மையாகும். இன்று புனித மக்காவுக்கு ஹஜ் யாத்திரை செல்பவர்களில் ஆண்கள் வேட்டியும், சால்வையும் அணிந்தே செல்லு கின்றார்கள். இது பழைய பழக்கத்தின் தொடர்பாகும்."
தினசரி ஒன்றில் 16.04.99 பூம.செல்லத் துரை மேற்படி கூற்றிலிருந்து "திராவிடர் எனும் இனக்குழுவிலிருந்துதான் முதன் முத லில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள்" தோற்றம் பெறுகின்றார்கள் எனவும், இத னால்தான் "அவர்களிடமிருந்த இந்தப் பழக் கம் முஸ்லிம்களிடம் ஒட்டிக்கொண்டது" என சித்தரித்துக் காட்ட முஸ்லிம் அல்லாதவர்க ளிடம் முனைப்பு ஏற்பட்டிருப்பதை அவதா னிக்கலாம்.
ஹஜ்ஜுக் கடமையின் போது முஸ்லிம் ஆண்கள் அணிகின்ற மேல் துண்டு, கீழ்த் துண்டு, தையல் இல்லாதவை என்கின்ற அமைப்பைக் கொண்ட "இஹம்ராம்" உடை தரித்தல் எனும் அம்சம் திராவிடரினது பன் பாக இருக்கவில்லை என்பது மிகத் தெட்டத் தெளிவான ஒன்றாகும். இதற்குப் பின்வரும் கூற்றை ஆதாரமாகக் கொள்ளலாம்.
GE)
-எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 40
"மேல் துண்டு, கீழ்த்துண்டு (தையல் இல்லாத) ஆடை அணியும் பழக்கம் உயர்ந்த மதகுருமார்களுடையதாக இருந்தன. இது பழைய ஏற்பாட்டிலும் குறிப்பிடப்பட் டுள்ளது. மத குருமார்கள் இடுப்பைச் சுற்றித் துண்டு அணியும் பழக்கத்தைக் கொண்டி ருந்தனர். இடுப்பு, தோள் என்பனவற்றைச் சுற்றி (ஆடை) அணியும் பழக்கம் (குர்ஆன் எனும் இறுதி வேதமான) இஸ்லாத்திற்கு முந்திய பண்டைய அரேபியர்கள் (இரு துண்டுகளை அணிந்து) வந்தனர். திட்டமாக பண்டைய செமித்தியர்களின் புனித ஆடை இவ்விதமாகவே இருந்தது" (நன்றி சிறு இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்) திராவிடரிடமிருந்து இப்பழக்கம் தோன்றவில்லை. முஸ்லிம்களிடம் தொற்றிக் கொள்ள வுமில்லை என்பது மிகத் தெளிவான வரலாறாகும். செமித்தியர்களின் மரபு வழக்கில் காணப்படும் இப்பழக்கம் இஸ்லாமியர்களிடம் எப்போது? எப்படி வந்து அப்பிக் கொண்ட தென்ற வரலாறு தெளிவற்றுக் காணப்படுகின்றது.
இருப்பினும், "இஸ்லாம் மக்கள் மீது ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றும்படி ஆணை பிறப்பித்தது நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் காலத்திலிருந்துதான்" என இஸ்லாமிய அடிப்படைச் சட்ட மூலாதாரங்கள் உறுதியாகவும், தெளிவாகவும் முன்வைக் கின்ற உண்மையாகும். அதுமட்டுமன்றி, அபிப்பிராய பேதங்களுக்கு அப்பால் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற கருத்துமாகும்.
புன்னியங்கள் நிறைந்த கண்ணியமிக்க ஹஜ்ஜுக் கடமையினை நிறைவேற் றும்போது, வழிபாடுகளை மேற்கொள்ளும் தலங்களில் காணப்படும் ஸ்பா, மர்வா, மகாமு இப்றாஹீம், ஸம்ஸம் நீருற்று, கல்லெறிதல், குர்பானி போன்ற அனைத்து அம்சங்களும் நபி இப்றாஹீம் (அலை) அவர்களுடன் தொடர்புபட்ட நினைவுச் சின்னங்க ளாகவும் வழிபாட்டுத் தலங்களாகவும் இருப்பதை அவதானிக்கலாம்.
இன்று நடைமுறையில் இருக்கின்ற ஹஜ்ஜுக் கடமையினை நிறைவேற்றும் முறைமை களும், வழிபாடுகளும் நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் காலத்தில் இருந்து வந்தவை என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.
அதேநேரம் நபி ஆதம் (அலை) அவர்களிலிருந்து நபி இப்ராஹீம் (அலை) அவர் கள் வரையான அல்லாஹ்வின் தூதர்களுக்கு மட்டும் ஹஜ்ஜு கடமையாக இருந்ததென்று ஒரு வரலாற்று கருத்தும் இருந்து வருகின்றது.
ஆனால், நபி இப்றாஹீம் (அலை) அவர்களிலிருந்து இவ்வகிலம் கண்ட அல்லாஹம் வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வரையான எல்லாத் தூதுவர்களுக்கும், அவர்களை ஏற்றுக் கொண்ட, அவர்களின் சமூகங்களுக்கும் புனித ஹஜ்ஜ" கடமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
ஆயினும் "இஒற்ராம்" ஆடை தரித்தல் ஹஜ்ஜுக் கடமையில் கட்டாயமான அம்சமா கக் காணப்படுகின்றது. இதனால் நபி ஆதம் (அலை) அவர்களின் ஹஜ்ஜுக் கடமையின் நிறைவேற்றத்துடன் ஆரம்பித்த ஒன்றாகவும் இருக்கலாம். ஏனெனில் "செமித்தியர்களிடம் இப்பழக்கம் இருப்பதனால் இதுவொரு தொன்மையான" வழக்கமாக இருப்பதை நாம் யூகிக்க முடிகின்றது.
பொதுவாக மனிதவர்க்கத்தை சிருஷ்டித்தவன் அல்லாஹற்வாகும். ஆதலால் மனித னின் என்னம் செயற்பாடுகள் என்பவற்றில் உதிர்ப்பை ஊட்டுபவன் அல்லாஹற்வேயா கும், ஆகவே, மனிதனின் கண்டுபிடிப்பு ஆராய்ச்சி என்ற கூறுவதைவிட, அல்லாஹ்வின் நாட்டத்தினால் ஏற்பட்ட தேட்டமென்பதனால் அதனை இஸ்லாம் தனதாக்கிக் கொள்வதில் தவறில்லை என்பதே மிகச் சரியானதாக இருக்கலாம்.
ஆகவே, "இன்று புனித மக்காவிற்கு ஹஜ் யாத்திரை செல்பவர்களில் ஆண்கள் வேட்டியும் சால்வையும் அணிந்து செல்லுகின்றார்கள். இது (திராவிடரினது) பழைய பழக்கத்தின் தொடர்பாகும்" என்பதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பது மிகத் தெளிவானதும், நிதர்சனமானதுமாகும்.
நன்றி தவிரனி"
...)
சிறுபான்மையினர் சில அவதானங்கள்
 
 
 
 

மைச்சரவையை அமைப்பதும், அரசாங்கத்தை அமைப்பதும் நானே" எனவும், "எதிரணியினர்
வெற்றி பெற்றாலும் சமுர்த்தி அமைச்சு என்னிடமே இருக்கும்" என்னும் கருத்துத் தொனிக்கும் வகையில் ஜனாதிபதி தனது தேர்தல் பிரசாரங்களில் தெரிவித்திருப்பதைச் சில செய்திகள் தெரிவிக்கின்றன.
அதே நேரம் "எதிர்வரும் பொதுத் தேர்த லில் அதிக ஆசனங்களைக் கைப்பற்றி நாமே ஆட்சி அமைப்போம்" என ரணில் தெரிவித்திருக்கின்றார். ஊர்ஜிதப்படுத்தப்ப டாத செய்திகளின் படி ரணில் சிலரிடம் குறிப்பிட்ட அமைச்சுக்கள் தருவதாக வாக்கு றுதி வழங்கியதாகவும் தெரியவருகிறது.
இவ்விரு முரண்பாடான கூற்றுக்களினால் பொது மக்களில் பெரும்பகுதியினர் குழம்பிக் காணப்படுகின்றனர். ஆதலால் மேற்படி கூற் றுக்கள் தொடர்பில் இலங்கையின் நடை முறை அரசியலமைப்பு என்ன கருத்தைக் கொண்டிருக்கின்றது என்பதை நோக்குவதே இக்க்ட்டுரையின் இலக்காகும்.
1978ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அரசியலமைப்பு மூலம் நாட்டில் பேணப்பட்டு வந்த பிரதமரை முதன்மைப்படுத்திய ஆட்சி முறைமை முற்றாக ஒழிக்கப்பட்டு, நிறை வேற்று அதிகாரங்கொண்ட ஆட்சி நிர்வாகம் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் பிரதமர் ஆட்சி முறைமை முழுமையாக மாற்றப்பட்டு விட்டது என்பது தெளிவாகின்றது.
பிரதமர் என்பவர் ஏனைய அமைச்சர்க

Page 41
ளைப் போன்ற ஒருவராகவே ஜனாதிபதியைப் பொறுத்து அமைகின்றார். ஏனெனில், "முதலமைச்சர், அமைச்சரவையின் ஓர் அமைச்சர்" என நடைமுறை அரசியலமைப்பின் 47வது பிரிவு சுட்டிக் காட்டுகின்றது.
ஜனாதிபதி கடமையில் இல்லாத நேரங்களில் பதிற் கடமையாற்றுவதற்கு பிரதமரை ஜனாதிபதி நியமிக்கலாம். அப்போதுதான் பிரதமர் அதிகாரமுடையவராகத் திகழ்கின்றார். ஏனைய சந்தர்ப்பங்களில் அவர் அமைச்சரைப் போலத்தான் செயற்படுகின்றார். இதனை அவரது கடமைகளும், பணிகளும் துலாம்பரமாக எடுத்துக் காட்டுகின்றன.
பிரதமர் என்பவர் அமைச்சரவையின் தலைவர் அல்ல. ஆதலால் இவரது நிர்வாக அதிகாரம் குறைவானதாகும். எனினும் பாராளுமன்றத்தில் அரசாங்கக் கட்சி உறுப்பி னர்களை வழிநடாத்தும் பொறுப்பு இவரைச் சார்ந்ததாக இருக்கின்றது. பாராளுமன் றத்திற்கும், ஜனாதிபதிக்குமிடையே ஒருபாலமாகவும் விளங்குகின்றார்.
யாரை பிரதமராக ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என்பதில், அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய கட்சியின் தலைவரைத்தான் நியமிக்க வேண்டுமென்ற கட்டுப்பாட்டினை நடைமுறை அரசியல் அமைப்பு குறிப்பிடவில்லை.
மாறாக, "ஜனாதிபதி அவரது கருத்துப்படி எந்த உறுப்பினர் பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளவராக இருக்கிறாரோ அந்த உறுப்பி னரை முதலமைச்சராக நியமித்தல் வேண்டும்" என்கின்ற விதியையே கொண்டுள்ளது. இதன்படி ஜனாதிபதி அதிகப்படியான ஆசனங்களைப் பெற்ற கட்சியின் தலைவ ரையே பிரதமராக்க வேண்டுமென்பதில்லை. அவர் விரும்பின் கட்சித் தலைவர் அல்லாத ஆனால் அக்கட்சியின் வேறு ஒருவரை பிரதமராக்கலாம் எனும் கருத்தையும் பெற முடிகின்றது.
கடந்த 1994இல் சந்திரிகா குமாரதுங்க அவர்களை ஜனாதிபதி, பிரதமராகப் பதவி ஏற்க அழைத்த போது றிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவியாக இருக்கவில்லை என்பதும், பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க பொதுஜன ஐக்கிய முன்னணி, றி.ல.சு.கட் சிகளின் தலைவரே அல்லாதவராவார் என்பதும் இதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்களா கின்றன.
எது எப்படி இருப்பினும், இலங்கையின் ஆட்சித்துறைத் தலைவர் ஜனாதிபதியே ஆவார். நாட்டின் நிர்வாக முறைமை இவரின் கீழே உள்ளன எனும் போது பிரதமர் வகிக்கும் இடத்தினை நாம் விளங்கிக் கொள்வதில் சிரமமிராது என நம்பலாம்.
இலங்கையின் நடைமுறை அரசியலமைப்பின்படி அமைச்சரவை தொடர்பில் ஜனாதிப திக்கு அதிகமான ஆளுமைகளும், வலுவான அதிகாரங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. இதனை அரசியலமைப்பின் எட்டாவது அத்தியாயம் விபரமாக விபரிக்கின்றது. அவற்றி னைச் சுருக்கமாக பின்வருமாறு விளங்கலாம்.
"அமைச்சரவையின் தலைவராக ஜனாதிபதியே இருப்பார். அமைச்சர்களை நியமித் தல், நீக்குதல், மாற்றுதல், அமைச்சர்களுக்குரிய திணைக்களங்களை ஒதுக்குதல், மாற்றுதல் என்பவற்றில் ஜனாதிபதி தேவையென கருதுகின்ற போதுமட்டுமே பிரதமரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளலாம். மற்றுப்படி ஜனாதிபதி இது விடயத்தில் பூர ன அதிகாரங்களையே கொண்டிருக்கிறார்.
அமைச்சர்களுக்கான விடயங்கள், பணிகள் என்பவற்றைக் குறித்தொதுக்குதலையும், அத்தகைய அமைச்சரவையின் அமைச்சர்களினதும் எண்ணிக்கை பற்றித் தீர்மானிக்
GTLb.
ஜனாதிபதி தமக்கென்று எவ்விடயத்தையும் அல்லது எப்பணியையும் குறித்தொதுக்க
=சிறுபான்மையினர் சில அவதானங்கள்

வேண்டிய அமைச்சுகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கலாம்"
இப்படி பல்வேறு அதிகாரங்களை அமைச்சரவையில் பிரயோகிக்கும் நிலை ஜனாதிப திக்கு இருப்பதனால் அமைச்சரவையை நானே தீர்மானிப்பேன், நியமிப்பேன் எனக் கூறுவதும், சமுர்த்தி அமைச்சரவையை வேறு எவருக்கும் வழங்கமாட்டேன் எனக் கூறுவதும் நடைமுறை அரசியலமைப்புக்கு அமைவானதென்பதில் வேறு கருத்தில்லை. கடந்த 1977இல் அரசாங்கத்தை அமைத்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பிரதமமந்திரி, பாதுகாப்பு, திட்டமிடல், பொருளாதார அமைச்சராகவும் விளங்கினார். 1989இல் ஆட்சிய மைத்த ஆர்.பிரேமதாச ஜனாதிபதியாகவும், பெளத்தசாசன, கொள்கைத் திட்டம் மற் றும் அமுலாக்கல், பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்புக்களையும் கொண்டிருந்தார். 1994இல் அரசாங்கத்தை அமைத்த ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க பாதுகாப்பு, நிதி, பெளத்தசாசன, தேசிய நல்லிணக்க இன விவகார அமைச்சு போன்றவற்றினையும் கொண்டிருந்தார்.
ஆகவே, ஜனாதிபதி என்பவருக்குத் தாம்விரும்பும் அமைச்சுக்களை வைத்திருக்க முடியுமென்பதை மேற்படி உதாரணங்களிலிருந்து நன்குனர்ந்து கொள்ள முடியும். இந்நிலையில் இன்றைய ஜனாதிபதியின் கூற்றுக்களை விமர்சிக்கதக்கதாக்குவது முறை யல்ல என்பதும் வெளிப்படையான ஒன்றாகும்.
முன்னாள் சமுர்த்தி அமைச்சர் பல ஊழல் மோசடிகளில் கடந்த காலத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதனால் இவ்வமைச்சை நேர்மையாகச் செயற்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி தமது பொறுப்பில் கொண்டு வருவதாகக் கூறுகின்றார் எனவும்,
சமுர்த்தி பெறுநர் வறுமையையும், கல்வியறிவு இல்லாதவர்கள் என்பதினால் இவ்வமைச்சு ஜனாதிபதியிடம் இருக்கும் என்பதினால் விஷயம் புரியாது அவர் சார்ந்த கட்சியினர்களை இவர்கள் பலப்படுத்தி, பொ.ஐ.முன்னணியின் நிரந்தர வாக்காளர் களாக மாற்றி விடுகின்ற உள்நோக்கம் கொண்டதெனவும் இது விடயத்தில் இரு வேறு கருத்துகளுண்டு.
பிந்திய கருத்தை முற்றாக நிராகரித்து விடுவதற்கில்லையாயினும் ஜனாதிபதி விரும்பும் அமைச்சுக்களை அவரது நேரடிப் பொறுப்பில் கொண்டிருக்கும் அதிகாரத்தை நடைமுறை அரசியலமைப்பின் கீழும், பொதுமக்கள் பாதுகாப்புப் பற்றிய அப்போதைக் குள்ள சட்டம் உட்பட எழுத்திலான ஏதேனும் சட்டத்தின் கீழும் தமது தத்துவங்களையும் பணிகளையும் கடமைகளையும் முறைப்படி பிரயோகிப்பதற்கும் நிறைவேற்றுவதற்கும் பாராளுமன்றத்துக்குப் பொறுப்பாயிருத்தல் வேண்டும்.
"பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டமொன்றின் அல்லது இப்போதுள்ள ஏதேனும் சட்டத்தின் ஆதிகாரத்தினால் அல்லது அதன் கீழ்த் தவிர ஏதேனும் உள்ளூர திகார சபையினால் அல்லது வேறு ஏதேனும் பகிரங்க அதிகார சபையினால் வரி, வீதவரி, அல்லது வேறு ஏதேனும் அறவீடு எதுவும் விதிக்கப்படுதல் ஆகாது"
மேற்படி நடைமுறை அரசியலமைப்பு எடுத்துக் காட்டுவதும், இலங்கையில் நடைமு றையில்காணப்படும் ஆட்சி முறைமையினைச் சிலர் "நாடாளுமன்றம் சார்ந்த ஜனாதிபதி முறைமை" எனச் சுட்டுவதும் இங்கு மனங்கொள்ளத்தக்கது. இலங்கை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரங்கொண்டவராக இருந்தாலும் முற்று முழுதாக பாராளுமன்றத்தை நிராகரித்து ஆட்சியினை நடாத்திச் செல்ல முடியாது என்பதும் இவற்றினால் புலப்படு கின்றன.
GO
-எம்.எம்.எம்.நூறுல்லுறக்

Page 42
H HE
அதேநேரம் ஜனாதிபதியின் பதவிகாப்பதில் இருக்கின்ற வலு பாராளுமன்றத்தைச் சாராது இருப்பு கொள்வதை அனுமதிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளல் வேண்டும்,
தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்த நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பலத்தை நம்பியிருக்க வேண்டும். இது ஜனாதிபதியின் அதிகாரத்தினால் புதிதாக ஏற் படுத்தும் நடவடிக்கைகளுக்கும் தேவையாகின்றது. அவசரகால பிரகடனத்திற்கும் இது அவசியமாகின்றது. இவ்வாறு பாராளுமன்றத்தைச் சார்ந்து நின்றாலும் பொதுத் தேர்தல் ஒன்று நடந்து ஒரு வருடத்தின் பின் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதி காரம் ஜனாதிபதிக்குண்டு.
ஜனாதிபதியைச் சாராத கட்சிகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றிருந் தால் ஜனாதிபதி தனது கொள்கைகளை அமுல் செய்யவும், தனது பதவிக்காலத்தை நிறைவு செய்வதற்கும் அவர்களுடன் சுமுகமான உறவைப் பேண வேண்டிய நிர்ப்பந் தத்தை ஏற்படுத்தும்,
இன்றைய ஜனாதிபதி அவ்வாறு நடந்து கொள்வாரா? என்கின்ற ஒருசந்தேகம் இருந்தே வருகிறது. ஏனெனில், தனது கட்சியின் பெரும்பான்மையை உறுதி செய்வதற் காக என்பது தெட்டதெளிவாக இருப்பதினாலாகும். இது அவரது ஒரு முயற்சி மட்டும் எனில், தனது கட்சிசாராத பெரும்பான்மைப் பாராளுமன்றத்தை நடாத்திச் செல்லவும் முடியும்,
இந்நிலையானது ஜனாதிபதி ஒரு கட்சியிலும் பாராளுமன்றப் பெரும்பான்மை வேறு கட்சியிலும் அமைந்தால் ஏற்படும் முறுகலை தவிர்த்து ஒரு சுமுக நிலையில் ஆட்சி நடைபெறலாம். இல்லையாயின் ஜனாதிபதியின் எஞ்சிய பதவிக்காலங்களுள் சில தேர்தல்களைச் சந்திக்கவும், நாடு அபிவிருத்தியின்றி முடங்கி விடுகின்ற நிலைகளை
யுமே நிலைப்படுத்தி வைக்கும்,
நண்றி இடி (25.11,200
சிறுபான்மையினர் சில அவதானங்கள்
 
 

Կ5 5 ကြွ fa
3. ཟླ་ G
5. G
டக்கு, கிழக்கு மாகாணங்களின் @r É:: நிர்வாக அமைப்பு
ஒன்றினை ஏற்படுத்தி விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என் கின்ற கோரிக்கை இன்று வலுப்பெற்றிருக் கிறது. இதனைக்கொள்கையளவில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஏற்றிருக்கின்றது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிறு வப்படும் இடைக்கால சபை எத்தகைய அதி காரங்களையும், ஆள்புல எல்லையையும் கொண்டிருக்கும் என்பதை மிகத் தெட்டத் தெளிவாக வரையறுத்து வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் ஐக்கிய தேசி யக் கட்சி அரசாங்கம் கொண்டிருக்கிறது.
ஏனெனில், வடக்கு, கிழக்கு மாகாணங் களின் இடைக்கால சபை எனத் தமிழர் தரப்பில் கூறப்படும்போது அது இவ்விரு மாகாணங்களையும் இணைத்த அடிப்படை யைக் கொண்டிருப்பது மிகத் தெளிவானது. ஆனால், இன்றைய அரசாங்கம் இதில் வே றொரு கருத்தைக் கொண்டிருப்பதை அவதா னிக்கலாம்.
"வடக்கு, கிழக்கிற்கு இடைக்கால நிர் வாக அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும். மற் றப்படி இணைப்புப் பற்றி இன்னும் ஆலோசிக் கப்படவில்லை" என பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி தீர் வுத்திட்டம் எந்த அடிப்படையில் அமையும் என்பதைப் பின்வருமாறு தெரிவித்துள்ளார். "ஒற்றையாட்சி வரம்புக்குள்ளேயே இன ப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 43
இந்தத் தீர்வு சகல இனக் குழுக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். இந்த இலக்கை அடைவதற்குத் தனது அரசு திடசங்கற்பம் பூண்டிருக்கிறது"
ஐக்கிய தேசியக் கட்சி தமிழர் பிரச்சினையை ஒற்றையாட்சியின் கீழ் தீர்த்து விடு வதை நீண்டகால குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றது. இதன் ஒரு கட்டம் தான் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபையும், அதிகாரப் பரவலாக்க லுமாகும். ஆனால், இதனை விடுதலைப் புலிகள் முற்றாக நிராகரித்தனர் என்பது ஆழ்ந்து நோக்கத்தக்கது.
இனிப்பிரச்சினைத் தீர்வில் விடுதலைப் புலிகள் நீண்டகாலமாகக் கொண்டிருக்கும் கருத்துக்களை, அவர்களின் உத்தியோக பூர்வமாசிகையான "விடுதலைப் புலிகள்" (பெப்ரவரி 1995) என்ற இதழில் "எவ்வகையான தீர்வுத்திட்டத்தைப் புலிகள் இயக்கம் எதிர்பார்க்கின்றது" என்ற அவர்கள் வெளியிட்ட செய்திக் கட்டுரையில் பின்வரும் எதிர்பார்ப்புகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
"தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வுத் திட்டம் தயாரிக்கும்போது பின்வரும் விடயங்களை அரசு கட்டாயம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
தமிழரின் பிரச்சினையை ஒரு தேசியப் பிரச்சினையாகக் கருத வேண்டும். தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும். தமிழ் மக்களின் தேசிய தாயக பூமியை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அதேவேளை தமிழினத்திற்குத் தேசிய சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை அங்கீகரித்து இவற்றின் அடிப்படையில் ஒரு தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். தேசியம், தாயகம், தன்னாட்சி இம்மூன்று அரசியல் உரிமைகளும் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே 1985 ஆம் ஆண்டு நடைபெற்ற திம்பு மாநாட்டிலிருந்து புலிகள் இயக்கம் முன் வைத்து வரும் அரசியல் கோரிக்கைகளாகும்"
இவ்வாறான கோரிக்கைகளுக்கு இசைவாகப் பொதுஜன ஐக்கிய முன்னணி அர சாங்கம் தீர்வுத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவில்லை என்பதற்காகவே விடுதலைப் புலிகள்அவ்வரசாங்கத்தோடு கொண்டிருந்த உறவை முறித்துக் கொண்டனர் என்பது மறைவானதல்ல.
அதேநேரம் சமஷ்டி முறையிலான "பிராந்தியங்களின் ஒன்றியம்" என்ற வகையிலான அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் திட்டத்தை பொ.ஐ.முன்னணி முன்வைத்த போதிலும் அதனைக் கூட விடுதலைப்புலிகள் நிராகரித்தனர் என்பதும் கவனங்களுக்குரியவை. ஐக்கிய தேசியக் கட்சி ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு காணப்பட வேண்டும் என் று அன்றும், இன்றும் வலியுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில் இவர்களின் அரசாங்கத் தில் எவ்வாறான தீர்வுத் திட்டங்களை விடுதலைப் புலிகள் எதிர்பார்க்கின்றனர் என்பது இங்கு முக்கியமான ஒருவிடயமாகும்.
"யங்ஏசியா" தொலைக்காட்சிக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் அண்மையில் அளித்த பேட்டியில், "நீங்கள் தற்போது தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு இருக்கின்றீர்கள். அப்படியென்றால் நீங்கள் எதிர்பார்க்கின்ற தீர்வு என்ன?" என்ற வினாவிற்குப் பின்வருமாறு விடையளித்துள்ளார்.
"நாங்கள் சமாதானப் பேச்சுக்களின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கின்றோம். எமது அபிலாஷைகள் குறிப்பாக பரீலங்கா அரசாங்கத்திற்குத் தெளிவாகத் தெரியும், அதன் அடிப்படையில்தான் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான ஆரம்பக் கட்டம் தொடங்கியி ருக்கின்றது. காலப்போக்கில் ரீலங்கா அரசு எமது மக்களின் அபிலாஷைகள், விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு என்பவற்றை வைத்துக் கொண்டு எதைக்கொடுக்க முன்வருகிறதோ அதனடிப்படையில்தான் எமது தீர்வு சம்பந்தமான நிலைப்பாட்டைக் கூறுவது பொருத் தமாக இருக்கும்"
O

ஆகவே, விடுதலைப் புலிகளின் எதிர்பார்ப்புக்கள் என்ன என்பது இன்றைய அரசாங்கத் திற்கு நன்கு தெரியும் என்ற அடிப்படையில்தான் பேச்சுவார்த்தையில் நாட்டங் கொண்டி ருக்கின்றனர் எனும் போது, விடுதலைப் புலிகள் தமிழர் பிரச்சினையில் கொண்டிருக்கும் சித்தாந்தக் கோட்பாட்டில் முற்றாகத் தளர்ந்துவிடவோ, முற்றாக நிராகரித்து முற்றிலும் வேறான போக்கைக் கடைபிடிக்கவோ தயாரில்லை என்பதை சூசகமாகச் சுட்டிக் காட் டுவதாகக் கொள்ள இடமுண்டு.
இன்றைய அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதில் அவசரமான முயற்சிகளை வேகமாக மேற்கொள்வது போன்ற பிரமையை ஏற்படுத்தியபோதிலும் ஆக்கபூர்வமான தீர்வினை நோக்கிய நகர்வுக்கு அவர் இன்னும் செல்லவில்லை என்பதை இன்றைய அணுகுமுறைமைகள் தெளிவாக்கி வைக்கின்றன. ஏனெனில், கடந்தகால சமாதான முயற்சிகள் கை நழுவிச் சென்றமைக்கான கார னங்கள் உள்வாங்கப்பட்டு மாற்று நடிவடிக்கையில் இறங்குவதற்குப் பதிலாக மீண்டும் "பழைய குருடிகதவைத் திறவடி" என்பதற்கொப்ப இன்றைய பிரதமரும் "வடக்கு கிழக்கு இணைப்பில்லை", "ஒற்றையாட்சிக்குள் தீர்வு" போன்ற கோஷங்களையே முன்மொழிந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையானது விடுதலைப் புலிகளின் எதிர்பார்ப்பான "சிங்கள தேசம், தமிழ் தேசம்" என்ற பாங்கிலான தீர்வு முன்னெடுப்புக்களை செல்லாக்காசாக மாற்றுவதைத் தவிர்க்க முடியாததாக்கி விடும் என்பதும், தமிழ் மக்களின் ஆகக் குறைந்த எதிர்பார்ப் பான வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பும் சிதைவடையப் போவதிலிருந்து விடுபடப் போவதில்லை என்பதும் துலாம்பரமானவை.
ஒற்றையாட்சிக்குப்புறம்பான தீர்வுத் திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்து வதற்கு நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதியினால் கூட முடியாத ஒன்றென்று கூறுவதுமிகையானதல்ல. ஏனெனில் இலங்கையின் நடைமுறை அரசியலமைப்பின் பிரகாரம் "இலங்கைக் குடியரசு ஒற்றையாட்சி உடைய அரசாகும்" இதனை மாற்றுவது என்பது பாராளுமன்ற மூன்றில் இரண்டு பலத்துடன் மட்டும் முற்றுப் பெறுகின்ற ஒன் றல்ல.
மாறாக, சர்வஜன வாக்கெடுப்பு - மக்கள் தீர்ப்பு மூலமும் அங்கீகாரம் பெற்ற நி லையில்தான் "ஒற்றையாட்சி" முறைமையை நீக்கி, வேறு வகையிலான குடியாட்சியினை மாற்றிக்கொள்ளலாம் என்கின்ற நிலையையும் அரசும், விடுதலைப் புலிகளும் எவ் வாறு எதிர்கொள்ளப் போகின்றனர் என்பதும் இதுவிடயத்தில் முக்கியமான ஒன்றாகும். பாராளுமன்றத்தின் மூலமான அதிகாரங்களை முற்றாக நிராகரித்துக்கொண்டிருக்கும் விடுதலைப் புலிகள் தமது அதிகாரத்திற்குட்பட்ட வடக்கு, கிழக்கு நிர்வாக சபை யின்அதிகாரப் பகிர்வில் எத்தகைய எதிர்பார்ப்பினைக் கொண்டிருப்பார்கள் என்பது ஆாகித்துணரக் கூடியதே. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் இன்றைய அரசாங்கம் தீர்வை நோக்கிச் செல்லுமா என்பதும் கேள்விக்குரியதே.
இப்படி கனதியான,முரண்பாடுகளுக்கு மத்தியில்தான் அரசும், விடுதலைப்புலிகளும் சமரசத்தைக் காணவேண்டி இருக்கின்றது. சமாதானத்தின் மீதான நம்பிக்கைகளும் இதற்குள்ளேதான் ஊசலாடுகின்றன. இவ்வாறான ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலை களை வைத்து ஒட்டுமொத்தமாக நோக்கின், "இனப்பிரச்சினைத் தீர்வில் விடுதலைப் புலிகளின் எதிர்பார்ப்புக்களிலும், அரசாங்கத்தின் அணுகுமுறைமைகளிலும் விட்டுக் கொடுப்புக்களும், மாற்றங்களும் தோன்றினாற்றான் இலங்கையில் சமாதானம் சாத்திய மாகும்" என்ற யதார்த்தமே மேலோங்கி நிற்கிறது.
நன்றி : இர.
(7.02,202
O
-எம்.எம்.எம்நூறுல்ஹக்

Page 44
L I கொழும்
'சிதரித்ர் தந்து 欧
சங்கம் ill
I. 2 0}_gقافراد انہماالفاظ اُمڈفیلڈنگ
盟
ஸ்லிம்களுக்கென தனியானதொரு அலகு அமைவதை, முஸ்லிம்க ளிற் சிலரும், சிங்களவர்களில் பல ரும் தமிழர்களில் பெரும்பாலானவர்களும் எதிர்க்கின்ற அதேவேளை இம்முக்கோன எதிர்ப்புகளின் அடிப்படைகள் வெவ்வேறான வைகளாகவும் காணப்படுகின்றன. 56 தென்கிழக்கு அலகு தொடர்பில் தெரிவிக் * கப்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்டி அக் காரணங்களுக்காக வேண்டி முஸ்லிம்களுக் கான தனியலகு கோரிக்கை நிராகரிக்கப்ப வேண்டுமா? என்பதை அலசுவதே இக்கட்டு ரையின் நோக்கமாகும்.
"ஆரம்ப காலத்தில் வடக்கு கிழக்கு இணைப்பை ஆதரித்தும், பின்பு அதனை : நிபந்தனையுடன் ஆதரித்தும் அத்துடன் நி இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஆளுமைக்கு உட்பட்டதான ஒரு முஸ்லிம் உப அலகு பற்றி பிரஸ்தாபித்தும் வந்த ரீ.மு.கா 1994 ஆகஸ்ட் தேர்தலுக்குப் பின் இதுவரை தான் கொண்டிருந்த நிலைப்பாட் டில் இருந்து முற்றாக மாறி 2-4-95 இல் நி கொழும்பில் நடைபெற்ற தனது கட்சியின் 13வது தேசிய மகாநாட்டின் தனியான முஸ் லிம் மாகாணசபை கோரிக்கையை முன் வைத்திருந்தது.
முஸ்லிம்களுக்கான தனியலகு கோரிக் கையை முதன்முதலில் முன்வைத்து றி.ல. மு.காங்கிரஸோ அதன் தலைவரோ அல்ல. " இந்த சிந்தனையின் பிறப்பிடம் வேறு இட மாக இருந்தாலும், இக்கோரிக்கையினை ே
சிறுபானமையினர் சில அவதானங்கள்
 

ல.மு.கா முக்கிய இடத்தை பெறுகிறது.
"முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் என்பது இன்றைய முஸ்லிம் இளைஞர்களின் லட்சியக் கனவாக மாறிக் கொண்டிருக்கின்றது" என பரீ.ல.மு.கா தலைவர் b.எச்.எம்.அஷ்ரஃப் தெரிவித்துள்ளார்.
"உத்தேச முஸ்லிம் மாகாண சபையின் 71 வீதம் முஸ்லிம்களே இருப்பர் எஞ்சிய வீதமும் தமிழர்களும், சிங்களவர்களும் ஆவர். உத்தேச முஸ்லிம் அரசியல் அலகின் நிலப்பரப்பின் மூன்றில் இரண்டு பங்குக்கும் திகமான பிரதேசங்கள் தமிழ் மக்களின் வாழ்விடங்களாக இருப்பதனாலும் பூகோள தியாக நிலத் தொடர்பின்றி காணப்படுவதால் தனியான முஸ்லிம் மாகாணம் என்பது ரு கேள்விக்குரியதாகவே உள்ளது.
மேற்படி விடயத்தினுள் இதற்கான பதிலும் காணப்படுகின்றன. மூன்றில் இரண்டு லப்பரப்பில் தமிழ் மக்கள் வாழ்க்கின்றார்கள் என்பதற்காக முஸ்லிம்களுக்கான வியலகு சாத்தியம் இல்லையெனில் அதே நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியினர் ஸ்லிம்கள் என்பதனால் பெரும்பான்மை தமிழர்களுக்கான மாகாண சபை அமைவதும் த்தியமற்ற ஒன்றே.
இங்கு மக்களின் எண்ணிக்கையை விட சமூகங்களின் எண்ணங்கள், உணர்வுகள் வித்துவங்கள் உரிமைகள் என்பவற்றின் பக்கமும் கவனம் செலுத்த வேண்டும். துமட்டுமன்றி அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களை விட முஸ்லிம்கள் அதிகமாகக் ாணப்படுதும் கிழக்கு மாகாணத்தில் மிகச் சிறியத் தொகையினராகத் தமிழர்களை ட முஸ்லிம்கள் குறைவாக உள்ளமையும் தெரிந்த விடயமாகும்.
தமிழ் மக்களும், முஸ்லிம்களும் கிழக்கு மாகாணம் முழுவதும் சமூகங்கள் ன்ற அடிப்படையில் நிலத் தொடர்பற்றே நிலையிருப்புக் கொண்டுள்ளனர். ஒரு முகத்தின் தேவையை இன்னொரு சமூகத்தின் எண்ணிக்கையையும் நிலத் நாடர்புகளையும் காரணமாகக் கொண்டு மறுத்துவிடுவது அறிவியல் ரீதியாகவோ முக நலன் ரீதியாகவோ ஏற்கமுடியாதது மட்டுமன்றி நிர்வாக இணைப்பிற்கு லத்தொடர்பு அவசியமானதும் அல்ல. ஏனெனில் நிலத்தொடர்பின்றி நிர்வாக னைப்பாட்சி சாத்தியமான ஒன்றென்பதற்கான முன்னுதாரணங்களும் உள்ளன.
இன்றைய பாராளுமன்றம் அமைந்துள்ள ரீ ஜெயவர்த்தனபுரவில் இருந்து 200 மல்களுக்க அப்பாற்பட்ட பிரதேசங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் ப்பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கவில்லையா? உதாரணமாக மொனராகலையும் ஜெயவர்த்தனபுரவும் நிலத்தால் இணைக்கப்பட்டுள்ளனவா? நிர்வாக இணைப்பிற்கு
இணைப்பு அவசியமற்றதொன்றாகும். முஸ்லிம்களினால் முன்வைக்கப்படும் தனியலகு கோரிக்கைகளினால் நாடு ாவுபடும் என்ற ஐயமும் வீணானதாகும் என்பதோடு உண்மையில் இவை ர்ேகாலத்தில் பிரிவினைக் கோட்பாட்டை முன்வைத்து போராட்டங்களை தொடங்கவிடாது டுப்படுத்த வல்லனவாகும். இது நேர்மையாக சிந்திக்கும் எவரும் இலகுவில் ளங்கக்கூடிய விடயமாகும்.
நமதுநாட்டில் புரையோடிக் காணப்படும் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக நகங்களுக்கான மாகாண சபை வழங்கப்படுமானால் முஸ்லிம்களுக்கும் ஒரு சியலகு உருவாக்கப்படுதல் இன்றியமையாததொன்றாகும். அவ்வாறு வழங்கப்படுதல் பிர்க்கபடுமானால் நிரந்தர சமாதானத்திற்கும் தீர்விற்கும் எதிர்மறையான
SS (78)
-எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 45
நிலையினையே நாம் சந்திக்க நேரிடும்.
இந்நிலை தோன்றிவிடாமலும் தேசிய ஒருமைப்பாடு குலைந்துவிடாமலும் சமூகங்களுக்குள் பிளவுகள் ஏற்படாது பாதுகாப்பதற்கு ஏதுவான கோரிக்கையே முஸ்லிம்களுக்கான தனியலகுக் கோரிக்கை என்பது தெளிவாக விளங்கக்கூடிய ஒன்றாகும்.
அம்பாறை மாவட்டத்தில் வாழும் சிங்களவர்களும், தமிழர்களும் தென்கிழக்கு தனியலகு உருவாவதை விரும்பவில்லை. ஆகையால், இது சாத்தியமானதல்ல என்பது இது தொடர்பில் முன்வைக்கப்படும் வாதங்களில் உள்ளவையாகும்.
வடகிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக இணைக்கப்படவேண்டும் என்கின்ற கோரிக்கையில் இதற்கு தெளிவைப் பெறமுடியும். இவ்விரு மாகாணங்களும் இணைந்திருத்தல் வேண்டும் என்பதில் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு உடன்பாடு காணப்படுகின்றன. இணைந்து கொள்வதில் பெரும்பாலான சிங்கள மக்களுக்கு விருப்பமில்லை. முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் இணையலாகாது எனவும், இன்னொரு பகுதியினர் நிபந்தனைகளுடன் இணைந்து கொள்ளலாம் என்ற கருத்தையும் கொண்டுள்ளனர்.
நாடு தழுவிய சிங்கள மக்களின் பெரும்பகுதியினரும் முஸ்லிம்களில் ஒரு தொகையினரும், வடகிழக்கு மாகாணங்கள் இணையலாகாது என கூறுவதினால் பெரும்பாலான தமிழ்மக்களின் விருப்பாக இருக்கும் இணைப்பை சாத்தியமில்லையெனக் கூறிவிடல் நியாயமா? நியாயமாயின் தென்கிழக்குத் தனியலகு விடயத்திலும் இது பொருத்தமுடையதாக இருக்கும். அதாவது மறுத்துவிடுவது நியாயமானதாக இருக்கும். அதுமட்டுமன்றி தமிழர்களின் ஒரு பகுதியினர் கிழக்கு வடக்கு மாகாணத்துடன் தொடர்ச்சியாக இணைக்கப்படுவதை விரும்பவில்லை. இதற்காக வேண்டி இவ்விரு மாகாணங்களும் இணைவது சாத்தியமில்லை எனக் கூறிவிடமுடியுமாயின் முஸ்லிம்களில் ஒரு தொகையினர் எதிர்ப்புக்காக வேண்டி, பெரும்பாலான முஸ்லிம்களின் விருப்பமான தென்கிழக்கு தனியலகு கோரிக்கையினை நிராகரித்துவிடல் சாத்தியமென வாதிக்கலாம் எனவே அம்பாறை மாவட்டத் தமிழர்களும், சிங்களவர்களும் விரும்பவில்லை என்பதற்காக முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் விருப்புக் கொண்டுள்ள, முஸ்லிம்களுக்கான தனியலகு கோரிக்கை நிராகரிக்கப்பட முடியாததொன்று என்பதை மேற்படி கூற்றுக்கள் தெளிவுபடுத்துகின்றன.
இலங்கை முஸ்லிம்களின் தனித்துவம் உரிமை, இறைமை ஆகியனவற்றின் பேணுதலை உறுதிசெய்யவும், முஸ்லிம்களும் இந்நாட்டின் ஒரு தேசிய சமூகமென்பதனை பறைசாற்றவும், முஸ்லிம்களுக்கென ஒரு தனியான அரசியல் அதிகாரம் கொண்ட அலகினை அவர்கள் ஏற்படுத்திக் கொள்வது அவசியத்திலும் அவசியமாகும்.
அம்பாறை மாவட்டக் கரையோர முஸ்லிம் பிரதேசங்களான பொத்துவில் சம்மாந்துறை கல்முனை ஆகிய தேர்தல் தொகுதியை உள்ளடக்கிய பிரதேசத்திலேயே முஸ்லிம்களுக்கான தனியலகு அவசியமானது.
வடகிழக்கில் வாழும் முஸ்லிம்களின் அபிலாசைகளை நிறைவேற்றவும், பாதுகாப்பு பொருளாதார, மத கலாசார விழும்மியங்களுக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய வகையிலும் அமையக்கூடிய தென்கிழக்கு மாகாண சபையொன்றை ஏற்படுத்திக் கொள்வதே முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கான உத்தரவாதமாக இருக்க முடியும்.
உத்தேச தென்கிழக்கு மாகாண சபையின் நிலப்பரப்பு 895 சதுர மைல்கள்
சிறுபான்மையினர் சில அவதானங்கள்
 
 
 

ஆகும். 2,79926 சனத்தொகை கொண்ட பிரதேசங்களே இதற்குள் அடங்குகின்றன. முஸ்லிம்கள் 58 வீதம், தமிழர்கள் 27.6 வீதம், சிங்களவர்கள் 14.9 விதம், பிற சமூகங்கள் 03 வீதங்களாக இருப்புக் கொண்டுள்ளனர். மட்டு, திருமலை மாவட்டங்களை இணைத்தால் தென்கிழககு மாகாண சபையின் நிலப்பரப்பு 1287 சதுர மைல்களாக அமையும்.
எவ்வளவு விஸ்தீரணமான பரப்பளவில் முஸ்லிம்களுக்கு தனியலகு கிடைக்கிறது என்பதல்ல விடயம். மாறாக இந்நாட்டின் பிரதான சமூகங்களில் முஸ்லிம்களும் ஒரு அங்கம் என்பதை நிலை நாட்டுவதிலேயே எமது தனித்துவங்கள் தங்கியுள்ளன என்பதை உணர்ந்து கொள்வதிலும் அதனை நிலைநாட்டுவதிலுமேயே முஸ்லிம்களின் வெற்றி தங்கியுள்ளது.
பலஸ்தீனப் போராட்டத்தில் முக்கிய இலக்கான "பைத்துல் முகத்திஸ்" புனித பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியைக்கூட விட்டுக்கொடுத்து, சமாதான ஒப்பந்தத்திற்கு வந்ததை முன் உதாரணமாகக் கொண்டு நாம் இங்கு அவசியம் நோக்கவேண்டும். விட்டுக் கொடுப்புகள் இன்றி விடாப்பிடியாக இருப்பது சிலவேளை தீர்வுகளைத் தராது போய்விடலாம். அந்த வகையில் நிலப்பரப்பு நமக்கு முக்கியமல்ல. நமது சமய அனுஷ்டாணங்களில் குறிப்பாக விசுவாச வாழ்வுக்கு மாற்றான எவற்றினையும் முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்காது விடாப்பிடியாக பற்றிக் கொள்வது அவர்களின் முக்கிய நெறிமுறையாகும்.
எனவே தென்கிழக்கு அலகு அமைவதற்கு போதியளவில் விஸ்தீரணமான பூமி அமையவில்லை என்ற வாதம் அர்த்தமற்றதாகும். ஏனெனில் நமது நாட்டில் மொத்த நிலப்பரப்பே சிறியதாகும். ஆகையால் அதற்குள் தான் எமது கோரிக்கையும் நிறைவேற்றப்படவேண்டியுள்ளதென்பதை முஸ்லிம்கள் மறக்கலாகாது.
ரீ.ல.மு.காங்கிரஸ் கோருகின்றது என்பதற்காக, எதிர்க்கும் ஒரு பகுதியினரும் நமக்குள் இருக்கின்றனர். மறுபுறத்தில் முஸ்லிம்களுக்கு ஆளுமை தலைமைத்துவம் வழங்கக்கூடாது என்ற கருத்துடையவர்கள் ஏனைய சமூகங்களில் பெரும் பகுதியினராக இருக்கின்றனர். இவ்விரு நிலைகளும் அகற்றப்பட வேண்டியதாகும்.
தென்கிழக்கு கோரிக்கையில் பாதகங்கள் இருக்கின்றதென விமர்சிக்கும் முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு பக்கம் இருக்கின்றது. நிறைவான, பக்க விளைவுகள் இன்றி, தீர்வுகளை, எவற்றிலும் குறைவான அறிவுடைய மனிதனால் முன்வைக்க முடியாது. முழுமையான நிறைவுகளைக் கொண்ட தீர்வுகளை இஸ்லாத்தினால் மட்டுமே காட்ட முடியும் என்கிற யதார்த்தங்களை நாம் நினைவிலிருத்தல் வேண்டும்.
நன்றி ஆதவன் 2,07, 2002)
H O) -எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 46
டுே
LSSSSSSSSSSS SS
சிறுபான்மையினர் சில அவதானங்கள்
S)
5) E S. R
மாதானம், சாந்தி, பரஸ்பர நல்லு 于 றவு, சகோதர வாஞ்சை போன்ற நற்பண்புகளைப் பின் பற்றி வாழும் படி இஸ்லாம் கட்டளையிடுகின்றது. ஆனால் இவ்வறக் கொள்கைகளுக்கு மாற்றமாக முஸ்லிம்கள் வாழ வேண்டிய சூழ்நிலையை இலங்கை முஸ்லிம்களும் சந்தித்துக் கொண்டிருப்பது நமது துரதிர்ஷ்டம்தான்.
இந்த நிலைக்கு நாம் விரும்பாமலே வந்திருக்கிறோம் என்றால் அதற்கு முக்கிய காரணம் முஸ்லிம்களை நோக்கித் தொடுக் கப்பட்டிருக்கும் ஆயுதக்கரங்களின் நெருக்கடி யான அடக்குமுறைமைகளும் புறக்கணிப் புக்களுமெனத் துணிந்து கூறலாம்.
திட்டமிட்ட வன்செயல்களா? என்று முஸ் லிம் சமூகம் சந்தேகிக்கும் வகையில் பிற சமூகத்தினர்கள் நடந்து கொள்கின்றனர். இனமோதலுக்கு எம்மைத் தூண்டி இரை பாக்கிக் கொள்கின்றனர்.
திடீரெனத் தாக்கி பல உயிர்களைப் பலி கொள்கின்றனர். உடமைகளை சூறை யாடுகின்றனர். கப்பமென்றும் ஆள் கடத்தல் என்றும் அடாவடித்தனங்கள் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் முஸ் லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இவற்றுடன் மட்டும் முஸ்லிம்களை விடு வதாக இல்லை. மாறாக இவையெல்லாவற் றையும் விட அவர்களின் மார்க்கக் கோட்பா டுகளிலும் கைவைக்கும் அளவில் பிற ஆதிக்கம் செல்வாக்குப் பெற்றுள்ளன. இதன் விளைவுகள் எவ்வாறான பாதிப்புக்களைத் தருமென்பதை எம்மில் பலர் எண்ணிப்
 

பார்க்க மறந்து விட்டனர். தயங்கி விட்டனர். இத்தகைய ஆக்கிரமிப்புப் போக்கு தொடர்ந்து எம்மீது கடைபிடிக்கப்படுமாயின், நாமிருந்த இடம் தெரியாமல் புதைக்கப்பட்டு விடுவோமெனலாம்.
எனவேதான் எம்மை நோக்கி விரிக்கப்பட்டிருக்கும் நெருக்கடி வலைக்குள் சிக்குண்டு சுக்கப்படாது, தலைநிமிர்ந்து வாழக்கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்கத் துணிய வேண்டும். அதுவல்லாது எம் மீது இழைக்கப்படும் அநீதிகளுக்கு அல்லாஹற் தண்டனை கொடுப்பானென்று நாம் சும்மாவிருந்து விடுவது ஆரோக்கிய வாழ்வுக்கு
ழியாகிவிடுமா?
ஆகவே, முஸ்லிம்கள் மீது ஆயுதக் கரங்களின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலை பெறுவதற்காக முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்த வேண்டுமெனச் சிலர் பகிரங்கமாக கருததுத் தெரிவித்திருப்பது தெரிந்ததே.
அதே நேரம் இக்கூற்றினை சிலர் மறுதலித்து 'முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவது இஸ்லாம் அனுமதிக்காத ஓர் அம்சமென்றும் அவ்வாறு ஆயுதத்தில் நம்பிக்கை வைத்து பாதுகாப்பு கோருவது வழிர்க்கான போக்கு எனவும் கருத்துத் தெரிவித்துள்ளனர். அவர்களின் வாதங்களுக்குப் பின்வரும் காரணங்களை ஆதாரமாக அறைகின்றனர். அதாவது 'பத்ரு யுத்தத்தின் போது முஸ்லிம்கள் எவ்விதமான ஆயுதங்களுமின்றி, அல்லாஹ்வை மட்டும் நம்பி யுத்தத்தில் ஈடுபட்டனர். வெற்றியும் பெற்றனர்.
அதேநேரம் உஹது யுத்தத்தின் போது ஆயுதங்களுடன் போர்க்களம் சென்று போரிட்டனர். இறை நம்பிக்கை குன்றிய நிலையில் தோல்வியும் கண்டனர். ஆகையால் ஆயுதத்தில் நம்பிக்கை வைத்து முஸ்லிம்களின் பாதுகாப்பினைக் கோருவது தவறான போக்கு என்பதற்கு வலு சேர்க்கின்றன என்கின்றனர்.
ஆகையால் இஸ்லாம் கூறும் ஜிஹாத் என்பது என்ன? ஆயுதத்தில் நம்பிக்கை வைக்கலாமா? ஆயுதத்தரிப்பும் பயிற்சி பெற்றிருப்பதும் கூடுமா? அவ்வாறாயின் அவர்களின் கடமைகள் யாது என்பனவற்றை நோக்குவதே இக்கட்டுரையின் இலக்கு. 'ஜிஹாத்' என்ற சொல்லை முஸ்லிம்களில் பலரும் முஸ்லிம் அல்லாதவர்களும் ஓர் அச்சத்துக்குரிய பதமாக நோக்குவதை நாம் அவதானிக்கலாம். உண்மையில் இச்சொல்லுணர்த்தும் இலக்கிலிருந்து நழுவி தவறான அர்த்தத்தில் வழங்கப்பட்டு அல்லது விளங்கிக் கொள்ளும் நிலைக்கானது துரதிர்ஷ்டமானதே.
ஏனெனில் இஸ்லாம் 'ஜிஹாத்' என்ற அமைப்பை வழிமுறையினை முன்வைத் திருப்பதே சகல சமூகங்களும் ஆரோக்கியமாகவும் பரஸ்பர நல்லுறவு பூனவும் சீரிய வாழ்வை மேற்கொள்ளவுமென்னும் யதார்த்தம் கூட எம்மில் பலருக்கு மறந்து போன கதையானது வேதனையே,
நாம் தவறிழைக்காத நிலையில் எம்மைத் தாக்கும் போது நாம் பொறுமையாக, மெளனம் பூண்டுவிட வேண்டும் என்பது எமக்கு விதியல்ல. ஆனால் தாக்குதல்களை எதிர்கொள்ளும் பக்குவம், ஆற்றல் இல்லாதபோது தான் "பொறுமையை கடைபிடித்து அல்லாஹற்வின்பால் பாரம் சாட்டுவதாகும்.
அதுவல்லாது நம்மிடத்தில் எதிர்கொள்ளும் தகுதி இருந்தால் எம்மீது எந்த ப்படையில் எந்த உருவத்தில் வருகின்றதோ அதே கோணத்தில் நாம் ஈடு கொடுக்க ண்டுமே தவிர, கோழைகளாக அடக்கு முறைமைகளுக்கு அடிபணிந்து வாழ்வதை iலாம் ஒரு போதும் முழுமையாக விரும்பவில்லை, இதனைத் தெளிவாக இறைமறை டுத்தியம்புகிறது.
"ஒருவர் உங்களைத் தாக்கினால் அவர் உங்களைத் தாக்கியது போலவே வரையும் நீங்கள் தாக்குங்கள் (குர்ஆன் 2-194)
ஆகவே எம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கை (ஏற்பாடுகளை
.எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 47
மேற்கொண்டு வைத்துக் கொள்ள வேண்டும். இது காலவோட்டத்தின் மாறுதல்களையும் தாக்குதல்களின் கோணங்களையும் கருத்திற் கொண்டதாக இருப்பது அவசியம், அப்படியிருந்தால்தான் எமது பாதுகாப்பு பலப்பட்டதாக் அமையுமெனலாம்.
அவர் (நிராகரிப்பவர்களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும் திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள், இதனால் நீங்கள் அல்லாஹற்வின் எதிரியையும் உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம் அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்) குர்ஆன் சீ  ே இவ்வாயத்துக்கு சில தப்ளபீர்களில் உள்ள கருத்துக்களை முதலில் நாம் நோக்குவோம். அப்போதுதான் இவ்வசனத்தின் உண்மையான விளக்கம் நன்கு விளங்கும். அதுவல்லாது நாமாகவே சுயமாக வலிந்து பொருள் கூற முற்பட்டால் அவ்வசனத்தின் யதார்த்த தன்மையை நெகிழச் செய்வதுடன் தவறான கொள்கைகளுக் குள் அகப்பட்டுச் சீரழிந்து விடுவோம் என்பதையும் நாமுனர வேண்டும்.
யுத்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் முஸ்லிம்கள் எப்போதும் யுத்தத்திற்கு தயாராகவே இருக்க வேண்டும் என்பதும், யுத்தத்திற்காகச் செலவு செய்யும் பொருட்களுக்குத்தக்க பிரதி அல்லாஹற்வினால் வழங்கப்படும். அதில் எள்ளவும் குறைக்கப்படமாட்டாது என்பதும் இவ்வாயத்தின் கருத்து.
இவ்வாயத்தில் கூறப்பட்ட கட்டளைக்கேற்ப அக்காலத்தில் முஸ்லிம்கள் எச்சமயத் திலும் யுத்தத்திற்குத் தயாராகவே இருந்தார்கள். அக்காலத்தில் அம்பெய்தல், வாள் வீசுதல் முதலியவைகள் மூலமாகவே காலாட் படையினரும் குதிரைப் படையினரும் யுத்தம் செய்தனர்.
இதனைக் குறித்து நபியுல்லாஹம் (ஸல்) அவர்கள் நிச்சயமாக பலம் என்பது அம்பெய்தல் தான் என்பதாகக் கூறியிருக்கிறார்கள். ஆகவே குதிரைகளைத் தயாராக வைத்திருப்பதும் அம்பெய்தப்பழகி இருப்பதும் தான் யுத்தப் பயிற்சி என்பதாக அக்கா லத்தில் விஷேசமாகக் கருதப்பட்டிருந்தது.
(ஆதாரம் - தப்னிறுல் ஹமீத் பீதப்பீைரில் குர்ஆனில் மஜீத் பாகம் 2 பக்கம் ப்ே)ே போர்க் கருவிகளும் தனியொரு படையும் எப்போதும் உங்களிடம் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் தேவைப்படும் போது உடனே போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிய வேண்டும். இல்லையெனில் அபாயம் தலைக்கு மேல் வந்த பின்னர் பதற்றத்தில் அவசர அவசரமாக வீரர்களையும் ஆயுதங்களையும் உணவு பொருட்களையும் மற்றும் தேவைப்படும் பொருட்களையும் சேர்த்திட முயற்சி செய்வீர்கள். உங்கள் ஆயத்தப்பணி முழுமையடைவதற்குள் எதிரிகள் தமது வேலையை முடித்து கொண்டு சென்று விடுவர்,
(ஆதாரம் - திருக்குர்ஆன் அத்தியாயர் -16தப்னர் பக்கம் 300) ஈமான் கொண்டவர்களே! உங்களுக்குரிய ஜாக்கிரதையை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அப்பால் அஞ்சல் அஞ்சலாகச் செல்லுங்கள் அல்லது எல்லோருமாகச் செல்லுங்கள் .
குர்ஆன் **) பகைவர்களுக்கு இடங்கொடுக்காமல் உங்களது தற்காப்பிற்குரிய ஆயுதங்களை எடுத்துக் கொண்டு பல கூட்டங்களாகப் பிரிந்து யுத்தத்திற்குச் செல்லுங்கள். அல்லது எல்லோரும் ஒன்று சேர்ந்து செல்லுங்கள் என்பது. இந்த ஆயத்தின் கருத்து.
(ஆதாரம் -தப்னபிறுவிப் ஹமீத் பீதப்ளில் குர்ஆனில் மஜீத் பக்கம் பக்கம் 702) உண்மையான போரில் கலந்து கொள்வதற்காகச் செல்பவர்கள் எதிரிகளின் தன்மைக்கும் போரின் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு சிறு சிறு படைகளாகவோ, ஒரே
(D
சிறுபான்மையினர் சில сәттіғұл -

கூட்டமாகவோ ஒன்று திரண்டோ செல்லுமாறும் எதிரிகளும் போர் பயிற்சி பெற்றவர் களாகவே இருப்பார்கள். ஆதலால் எச்சரிக்கையாக இருக்குமாறு இவ்வாயத்து (4:7) எடுத்துரைக்கின்றது.
ஆதாரம் எரத்துண்னினா தப்ளிபீர் அண்வாறும் குர்ஆன் பக்கம் திே அதுமாத்திரமன்றி தபூக் யுத்தத்தின் போது, நபியுல்லாஹம் (ஸல்) அவர்கள் யுத்தத்திற்கான யுத்தசாதனங்களுடனும் உணவுப் பொருட்களுடனும் வந்து விடுமாறு (ஸஹாபாக்களை நோக்கி) அழைப்பு விடுத்துள்ளார்கள் என வரலாற்று ஏடுகள் தக வல்கள் தருகின்றன.
ஆகவே யுத்த பயிற்சி பெற்றிருப்பதும் ஆயுத்தங்களைத் தயார் நிலையில் வைத்திருப்பதும் இஸ்லாத்திற்கு முரண்பாடான செயலல்ல என்பது மிகத் தெளிவான சங்கதியே.
'ஜிஹாத்' என்றால் என்ன? என்பதை முதலில் தெளிவு பெற்றிருப்பது அவசியம். அப்போதுதான் ஆயுதம் தரிப்பதும் கோருவதும் பயிற்சி பெற்றிருப்பதும் தெளிவாகும். 'ஜிஹாத்' என்பது பல வகைகளைக் கொண்டது. இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் ஐவகையானது ஜிஹாத் எனத் தகவல் தருகின்றது.ஆயினும் நாம் இங்கு நோக்குக்கு எடுத்துக் கொண்ட ஜிஹாத் அமைப்பின் யதார்த்த நிலையை நாம் இங்கு பார்ப்போம்.
ஜிஹாத் என்பது இருவகைத் தன்மைகளைக் கொண்டதாகும். 1. பர்ளு அய்ன் (யாவரின் மீதும் கட்டாயக் கடன்) 2. பர்ளு கிபாயா (சிலர் செய்தால் போதும்) உண்மை விசுவாசிகள் வாழும் பிரதேசத்திற்குள் பகைவர்கள் அக்கிரமமாக நுழைந்து முஸ்லிம்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் அவர்கள் வசிக்கும் பிரதேசத் திற்கும் சேதம் விளைவித்தார்களானால் அப்பொழுது முஸ்லிம்களின் வயது வந்த ஆண்கள் அனைவரும் அப்பகைவர்களை எதிர்த்துப் போராடப் புறப்படுவது (பர்ளு gAL(6) 45L"LÍTLL Jaià - EL60) LDLIIITg5Lń.
கடும் நோயாளிகள், பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்து பலவீனமடைந்த வர்கள் முதலானோர் மட்டும் யுத்தத்திற்குச் செல்வதிலிருந்து விதி விலக்கு அளிக்கப்பட் டிருக்கின்றனர்.
முஸ்லிம்களின் பிரதேசத்துக்குள் எதிரிகள் நுழையாமல் வெகுதொலைவில் இருந்து பயமுறுத்திக் கொண்டிருப்பார்களாயின் அவர்களை எதிர்க்க எல்லோரும் செல்லவேண்டி பதில்லை. ஒரு குறிப்பிட்ட படையைத் திரட்டி அவர்களை எதிர்த்துப் போராட அனுப்பி னால் போதும். அவர்கள் சென்று எதிரிகளை அடக்கினால் எல்லோரும் அவ்வாறு செய்தது போன்று ஆகிவிடும், இதைத்தான 'சிலர் செய்தால் எல்லோரும் செய்தது போன்று என்னும் கருத்தில் பர்ளு கிபாயா என்று கூறப்படுகிறது.
ஏனெனில் ஊரைவிட்டு எல்லோருமே சென்று விட்டால் ஊரைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடுவதுடன் பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். ஆதலால் ஒரு சிலர் சென்றால்போதும் என்று கூறப்படுகிறது. 'ஜிஹாத்' என்பது"எந்த ஒரு முஸ்லிம் தன் மார்க்கத்தைச் சாராத மற்றவர்களுடன் போரிட்டே ஆக வேண்டுமென்பதல்ல. அப்படி ஒருவன் நினைத்துச் சண்டையிட்டால் அதனை அக்கிரமம் என்றுதான் கூறப்படுமே தவிர 'ஜிஹாத் என்று கூறப்படுவதில்லை. தங்களுடைய மார்க்கத்தின் பெயரால் தங்களது உயிருக்கும் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கும் நோக்குடன் துராக்கிரமமாகப் படையெடுத்து வரும் ஒரு ட்டத்தினரைத் தற்காப்பினிமித்தம் தடுப்பதற்குத்தான் "ஜஹாத்' என்று கூறப்படும்.
இக் கருத்துத்தான் திருக்குர்ஆனில் இது பற்றிக் கூறப்படும் இடங்களில் தெரிவிக்கப்பட் ள்ளது. எடுத்ததற்கெல்லாம் சண்டையிடுவதை ஜிஹாத் என்று யாராவது கூறமுற்பட்
SS GD -எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 48
டால் அவர் இதன் பொருளை உணராதவர் என்றே கருதப்படுவர்.
(ஆதாரம் ஸ்ரதுண்ணினா தப்ளபீர் அண்வாறுஷ் குர்ஆன் பக்கம் 179-180 "உங்களை எதிர்த்து போர் புரிபவர்களுடன் நீங்களும் அல்லாஹற்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள் நிச்சயமாக அல்லாஹற் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை
(குர்ஆன் 2:தி0) *(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும் அவர்களைக் கொல்லுங்கள். இன்னும் அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்.
(குர்ஆன்-2:19) தொடரான தாக்குதலுக்கு நாம் ஆயத்தமாகிவிடக்கூடாது. சமாதானத்தை முன்வைத்து நம்முடன் பரஸ்பரம் கொள்ள நாடுகிற போது புறக்கணித்துவிடாது செவி சாய்த்துக் கட்டுப்படுவது கட்டாயம் என்ற கட்டளையையும் இஸ்லாம் முன்வைக்கின்ற தென்பதற்கு பின்வரும் வசனம் சான்றாகும்.
"அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்தால் நீங்களும் அதன்பக்கம் சாயுங்கள். அல்லாஹற்வையும் நம்புங்கள்"
(குர்ஆனி சிே) பத்ரு யுத்தம் முஸ்லிம்களின் முதல் யுத்தம். இது ஏற்கனவே நபியுல்லாஹற் (ஸல்) அவர்களுக்கு வெற்றியாக அமையக்கூடியதென்று கூறப்பட்டுள்ளது. அல்லாஹற்விடம் துஆக் கேட்டுவிட்டு யுத்த களத்தில் நபியுல்லாஹற் (ஸல்) அவர்கள் நின்று வழிநடாத்துகி றார்கள். அல்லாஹ்வின் ஆசியோடும் அவனது கட்டளைக்கிணங்கி ஸஹாபாக்களின் விருப்போடும் அதுவும் நிர்ப்பந்தமான நிலையில் கைவசம் இருந்த யுத்த சாதனங்களுடன் களத்தில் இறங்கினார்கள்.
"...இரு கூட்டத்தினரும் ஒன்று நிச்சயமாக உங்களுக்கு உண்டு என அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்" என்று நபியுல்லாஹற் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம் - ஸ்ரதுண் ணபவிப்பாதப்பீைர் காஜின் தண்தாவி அஹர்னாண் வகையறா) .பத்ரு யுத்தம் நடைபெறுவதற்கு முதல் நாள் மாலை நபியுல்லாஹ் (ஸல்) அ வர்கள் விரோதிகள் கொல்லப்படும் இடங்களை எங்களுக்குக் காட்டினார்கள். அல்லாஹற் நாடினால் இந்த இடம் இன்னார் வீழ்த்தப்படும் இடமாகும் என ஒவ்வொரு இடத்தையும் சுட்டிக்காட்டி அதில் வீழ்த்தப்படும் எதிரிகளின் பெயர்களையும் குறிப்பிட்டார்கள்.
புதிரரி "நபியுல்லாஹற் (ஸல்) அவர்களும் அவர்களுடன் 313 முஸ்லிம்களும் பத்ரு நோக்கிப் புறப்பட்டுவிட்டனர். முஸ்லிம்களிடம் மிகவும் குறைந்த ஓட்டங்களும், சில உருக்குச் சட்டைகளும் 80 பேரிடம் மட்டுமே வாட்களும் இருந்தன. மீதியுள்ளோருக்கு கற்களும், கம்புகளும்தான் ஆயுதங்கள்"
(ஆதாரம் - அலு இர்ரான் ஸ்ராவின் தப்ளர் அண்வாறுல் குர்ஆன் பக்கம் 27) மேற்கூறப்பட்ட குர்ஆன் (8:0) வசனம். பத்ரு யுத்தத்தின் பின்னர் இறங்கியதாகும், அப்படியானால் இவ்வசனத்தின் சட்டத்தை - கருத்தை பத்ரு யுத்தத்தின் நிகழ்வை வைத்து மறுதலிக்க முடியாது. மாறாக பத்ரு யுத்தத்தின் நிகழ்வில் இருந்தும் மேலதிகமான ஒரு நடவடிக்கையாகவே குர்ஆன் (8:60ம்) வசனத்தின் கருத்தைக் கொள்ளவேண்டும்.
அதுவல்லாது தான் தோன்றித்தனமாக தாங்களின் சொந்த விருப்பு வெறுப்பிற்கேற்ப குர்ஆன் ஆயத்திற்கு விளக்கம் கூற, பெறமுற்படுவது அறிவுபூர்வமான செயல் அல்லவே. GEO
சிறுபான்மையினர் சில அவதானங்கள்
 
 
 
 

எனவே பத்ரு யுத்தக் களத்தில் நபியுல்லாஹ் (ஸல்) அவர்களின் தரப்பு வெறும் கைகளுடன், அதாவது தங்கள் தரப்பில் இருந்த யுத்தச் சாதனங்களை வைத்துவிட்டு (அதுவும் முன்கூட்டியே வெற்றி அறியப்பட்ட நிலையிலும் கூட) யுத்தக் களம் நோக்கிச் செல்லவில்லை.
மாறாக கைவசம் இருந்த யுத்தக் கருவிகளை எடுத்தே சென்றிருக்கிறார்கள். ஆகையால் ஆயுதமின்றி யுத்தக் களம் செல்லவேண்டும் என்பதை பத்ரு யுத்தம் நமக்குக்கேற்றுத்தரவில்லை என்பதும் துலாம்பரமான உண்மைகளாகும்.
"உஹது யுத்தத்திலே முஸ்லிம்கள் தோல்வியடைந்தனர். காரணம் அல்லாஹம் மீதான நம்பிக்கை குன்றியமையாகும்" எனச் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இது அவர்களின் புதுக் கண்டுபிடிப்பா என்ற ஐயமும் எழத்தான் செய்கின்றது.
உண்மையில் உஹது யுத்தம் வெற்றி தோல்வியென்று அறுதியிட்டுக் கூறமுடியாத விடயம் என்பதற்கு சான்றுகள் உண்டு. அல்லாஹற்வே பத்ரு யுத்தத்தையும் உஹது யுத்தத்தையும் ஒப்பிட்டு நோக்கி கூறுகின்றான். மேலும் இவ்யுத்தம் அடிப்படைத் தேர்வுக்கு வழியாகவும், ஆக்கியதாகவும் கூறுகின்றான்.
"உறுதுப் போர் நடந்து முடிந்தாலும் யாருக்கு வெற்றி தோல்வியென்பது உறுதிப்படவில்லை. இந்நிலையில் ஆத்திரம் கொண்ட எதிரிகளின் தலைவர் அபூசுப்யான் மீண்டும் உங்களை 'சிறிய பத்ரு என்ற இடத்தில் சந்திக்கின்றோம் என்று ஆவேசத் துடன் மொழிந்தார்"
ஆதாரம் - காஜின் ருதிறன் ஆனி "முஸ்லிம்களின் உக்கிரமான தாக்குதலால் மீண்டும் எதிரிகள் பின்வாங்கினர். கனவாயில் நின்ற குறைஷி வீரர்களும் ஓடலாயினர். முஸ்லிம்கள் மீண்டும் அக்கண வாயைப் பிடித்துக் கொண்டனர். இப்போர் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
(ஆதாரம் இனப்லாமிய வரலாறு பாகம் பக்கம் 3) "நபி (ஸல்) அவர்கள் சுகமாயிருப்பதைக் கண்ட முஸ்லிம் வீரர்களுக்குத் தைரியம் வந்தது. மறுபடியும் எல்லா வீரர்களும் ஒன்று சேர்ந்து உறுதியோடு எதிரியை தாக்கினார்கள். எதிரிகள் தோல்வியுற்றனர்.
(ஆதாரர்-உத்தத் துரதிர் பக்கர் 3 "இறுதியாகச் சிதறிய படை மறுபடியும் ஒன்று சேர்ந்து பலமாக எதிர்த்துப் பகைவர்களைத் துரத்திற்று
(ஆதாரம் - தப்ளதுல் ஹமீத் பீதப்ளிஷ் குர்ஆனில் மஜீத் பாகம் பக்கர் திே "இந்த உஹது யுத்தத்தில் முஸ்லிம்களின் 70 நபர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இதே யுத்தத்தில் எதிரிகளும் வெற்றியடைந்துவிடவில்லை. ஒரு அளவிற்கு முஸ்லிம்கள் நஷ்டமடைந்த போதிலும் எதிரிகளின் நோக்கங்கள் எதுவும் ஈடேறவில்லையென்ற வகையில் முஸ்லிம்களுக்கு ஓரளவு வெற்றி என்று தான் சொல்லவேண்டும்
(ஆதாரர். ஆலு இம்ரான் குராவின் தப்ளி அண்வாறுல் குர்ஆன் பக்கம் 18889) உஹது யுத்தத்தின் போது நடுவில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குக் காரணம் அல்லாஹற்வின் மீதான நம்பிக்கை குன்றியமையால் அல்ல. நபியுல்லாஹம் (ஸல்) அவர்களின் அறிவுறுத்தல்களை மீறியதனாலும் தோல்வி போன்ற நிலையில் ஒரு தத்துவம் உள்ளடக் கப்பட்டிருக்கிற தென்பதுக்குமான சான்றுகளை நாம் காணலாம்,
உஹது யுத்தத்தில் நபி யுல்லாஹம் (ஸல்) அவர்கள் ஐம்பது வீரர்களைத் தயார் செய்தார்கள். அவர்கள் அத்தனை பேரும் "வில் வீரர்கள்" உஹது மலையின் கேந் திரக் கணவாயலில் அவர்களை நிறுத்தி எங்களை பறவைகள் கொத்திக் கொண்டு தூக்கிச் சென்றபோதிலும் நீங்கள் இவ்விடத்தை விட்டு இம்மியும் நகரக்கூடாது. நாங்கள் எதிரிகளுக்குத் தோல்வியைக் கொடுத்து அவர்களை மிதித்துக் கொன்றுவிட்ட

Page 49
போதிலும் நான் உங்களுக்குச் சொல்லியனுப்பி திரும்பிவருமாறு கூறும்வரை நீங்கள் இவ்விடத்திலிருந்து இடம்பெயரக் கூடாதென மிகவும் வலியுறுத்திக் கூறியிருந்தார்கள்
(ஆதாரர். ஆலு இம்ரான் சூராவின் தப்ளர் அண்வாறுல் குர்ஆன் பக்கர் 28) இக்கட்டளையை மீறி இடையில் விட்டுச் சென்ற யுத்தப் பொருட்களை எடுப்பதில் சிலர் கவனம் செலுத்தியமையும், நபியுல்லாஹற் (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று எதிரிகளினால் அவிழ்த்துவிடப்பட்ட வதந்திகளில் சோரம் போனதாலும் கணவாயிலிருந்து சிலர் இடம்பெயர்ந்தனர். இதுவும் உஹது யுத்தத்தின் தோல்வி போன்ற (நடுவில் ஏற்பட்ட) நிலையின் காரணங்களில் ஒன்றாகும் இதனைக் குர்ஆன் இப்படிக் கூறுகிறது.
'.நீங்கள் விரும்பிக் கொண்டிருந்த (ஜெயத்தை அவர் உங்களுக்குக் காட்டிய பின்னர் நீங்கள் (நபியின் உத்தரவுக்கு) மாறு செய்து கொண்டும், நீங்கள் பலவீன மடைந்து, கொண்டுபோகும் வரை (தான் உதவி செய்வதாக அளித்துள்ள) தனது வாக்குறுதியை அல்லாஹற் நிச்சயமாக நிறைவேற்றியே கொடுத்தான்.
(குர்ஆன் 3:32) உங்களுக்கு இப்படியொரு சந்தர்ப்பம் வரக் காரணம் உங்களில் உண்மையான நம்பிக்கையுடையவர்கள் யார் என்பதனை அல்லாஹற் கண்டறிந்து உண்மையிலே சத்தியத்திற்குச் சான்று பகர்கின்றவர்களை (ஷாஹாத) உங்களில் இருந்து வேறுபடுத்து வதற்காகத்தான்'
குர்ஆன் 340) முலத்தின் ஷ"ஹாதாக்களை உங்களில் இருந்து வேறுபடுத்துவதற்காகத்தான் என்று வந்துள்ளது. இதன் ஒரு பொருள் அல்லாஹற் உங்களில் சிலரை ஷாஹிதாக்கள் எடுத்துக் கொள்ளவிரும்பியிருந்தான் என்பதாகும். அதாவது சிலருக்கு ஷஹாதக் என்னும் அல்லாஹற்வுக்காகப் போரிட்டுக் உயிர்த் தியாகம் செய்யும் பாக்கியத்தை அளித்து கண்ணியப்படுத்த நாடியிருந்தான் என்பதாகும் இதன் இன்னொரு பொருள் "இறை நம்பிக்கையாளர்களும் நயவஞ்சகர்களும் கலந்திருக்கின்ற இந்தக் குழுவிலிருந்து உண்மையில் ஷ"ஹாதா அலன்நாளப் மக்களிடையே சத்தியத்திற்காகச் சான்று பகர்வோராய் இருப்பவர்களைத் தனியாகப் பிரித்தெடுக்க நாடியிருந்தான் என்பதாகும் ஆதாரம் - திருக்குர்ஆன் அத்தியாயர் சிதப்னர் பக்கர் 34) எனவே இறை நம்பிக்கை குன்றியதனாலேயே உஹது யுத்தத் தோல்வியுற்றதென்றோ பத்ரு யுத்தத்தின்போது முஸ்லிம் தரப்பில் எடுத்துச் செல்லப்பட்ட ஆயுதங்களைப் பார்க்கிலும், அதிகமாக உஹது யுத்தத்தின்போது எடுத்துச் செல்லப்பட்டதினாலே உஹது யுத்தத்தின் நடுவில் வீழ்ச்சி போன்ற நிலை ஏற்பட்டதென்பதும் முழுமையான தோல்வியை முஸ்லிம்கள்கள் உஹது யுத்தத்தில் சந்தித்தனரென்பதும் தவறான கருத்துக்களாகுமென்பதை மேற்கண்ட ஆதாரங்கள் மூலம் நாம் நன்கறிந்து கொள்ளலாம்.
'காரியங்களைச் செய்யத் தகுமானவன் அல்லாஹ்' என்பது முஸ்லிம்களின், சுன்னத்வல்ஜமாஅத்தினர்களின் அகீதாக் (களில் - கொள்கை)களில் ஓர் அம்சமாகும். ஆகையால்தான் "எதுவும் சுயமாக இயங்குவதல்ல எல்லாம் அல்லாஹற்வின் சக்திகொண்டே இயங்குகின்றன, என்ற கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்களே விசுவாசிகளுமாவார்.
ஆகவே சுயமாக இயங்கக் கூடியவன் அல்லாஹற் மாத்திரம் என்ற நம்பிக்கையே தெளஹறிதாகும். இஃது போல் சுயமாக இயங்கக்கூடியவைகள் இருக்கின்றன என்ற நம்பிக்கையே "விர்க்காகும். இந்த அடிப்படையில் ஆயுதங்கள் மட்டுமல்ல பொதுவாக எல்லா அம்சங்களும் அடங்கும்.
சிறுபான்மையினர் சில அவதானங்கள்
 
 

s Hs - ஆயுதமோ நிராயுதமோ சுயமாக பாதுகாக்கும் சக்தியைக் கொண்டுள்ளதென்ற நம்ேேய ஷிர்க்காகும். மாறாக ஆயுதங்களின் மூலம் அல்லாஹற் பாதுகாப்பை வழங்குகின்றான் என்ற நம்பிக்கை தெளஹறிதுக்குப் புறம்பானதல்ல.
இந்த அடிப்படையில்தான் முஸ்லிம்கள் ஆயுதம் தரிப்பதையும் பயிற்சி பெற்றிருப்பதையும் கொண்டிருக்கின்றனர் என்பது வெள்ளிடை மலை ஆயுதங்கள் தன்னிச்சையாக முழுமையான பாதுகாப்பைத் தரும் என்ற நோக்கில் இஸ்லாம் ஆயுதத்தரிப்பை பயிற்சி பெற்றிருப்பதை முன்வைக்கவில்லை என்பதும் தெளிவானதே. நாம் கத்தியினால் ஒரு மரத்தை வெட்டுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். இப்போது கத்தி வெட்டியது என்பது உண்மை. ஆனால் வெட்டிய அந்தச் சக்தி கத்திக்கான சுயமான சக்தியல்ல வெட்ட வைத்தவன் அல்லாஹற். கத்திக்கு வெட்டும் சக்தியை இரவலாக அல்லாஹற் கொடுத்துள்ளான் என்பதே யதார்த்தம். ஆகவே கத்தி வெட்டும் (ஒவ்வொரு வஸ்த்துக்களும் காரண காரியங்களுடனேயே படைக்கப்பட்டுள்ளன என்பதை இவ்விடத்தில் ஞாபகத்துக்குக் கொண்டு வருவது அவசியம்) என்று சொன்னால் அது ஷிர்க்காகாது அது எப்போது ஷர்க்காகுமென்றால் கத்தி சுயமாக வெட்டியது - வெட்டும் என்ற நம்பிக்கையோடு கூறும் போதே.
முஸ்லிம் எனும்போது "காரியங்களைச் செய்யத் தகுமானவன் அல்லாஹற்’ என்ற அடிப்படையை ஏற்றுக்கொண்டவர்களாகவே இருக்க வேண்டும். இந்நிலையில் பாதுகாப்புக்காக ஆயுதம் கோருவதோ பயிற்சி பெற்றிருப்பதோ ஷிர்க்காகவோ தவக்கலுக்கு மாற்றமானதாகவோ அமைந்துவிடாதென்பதும் தெட்டத் தெளிவான விஷயம்.
"அல்லாஹற்வில் நம்பிக்கை வைத்தல் எனும்போது தரும் பொருளும் ஆயுதங்களில் நம்பிக்கை வைத்தல் எனும்போது தரும் கருத்துக்களும் ஒரே தன்மைகளைக் கொண்ட தென்ற கருத்து மறுதலிப்பவர்களிடம் இருக்கிறது போலும் அதனால்தான் நம்பிக்கை வைத்தல் என்ற சொல் சிலருக்கு சிக்கலுக்குள்ளாகிவிட்டதுபோலும். உண்மையில் சொல் ஒன்றானாலும் கருத்து வேறுபட்டதாகும்.
இச்சொல் பயன்படும் இடம், காலம் பொறுத்து வேறுபட்ட கருத்துக்களைத் தரும் அல்லாஹற்வில் நம்பிக்கை வைத்தல் எனும்போது தரும் பொருள்-கருத்து வேறு எதற்கும், எப்படியும் எப்போதும் முஸ்லிம்களிடத்தில் - விசுவாசிகளிடத்தில் தராதென்பதை முதலில் தெளிந்து கொள்வதன் மூலம் தவறாகத் தவக்கலை விளங்கி வைத்திருப்போருக்கு ஏற்பட்டிருக்கும் சொல் மயக்கம் மறைந்து - தெளிந்துவிடலாம். அத் தவலக்குல் என்பது எல்லாக் காரியங்களிலும் அல்லாஹற்வின் மீது பொறுப்பு கொடுத்துவிட்டு அவனை நம்பி இருப்பதற்குப் பெயர். இது இருதய சம்பந்தமுள்ளது புறத்தில் மனிதர்கள் பல அலுவல்களில் ஈடுபடுவதானது இந்த நம்பிக்கைக்கு முரண்பட்டதல்ல.
(ஆதாரம் தப்ளியிறுல் ஹமித் மீதப்ளில் குர்ஆனில் மஜீத் பாகம் 2 பக்கம் 19) எனவே ஜிஹாத் பற்றிய அச்சமும் தவக்கல் பற்றிய மயக்கமும் யத்ரு, உஹது யுத்தம் பற்றிய ஐயப்பாடுகளும் தெளிவுபெறுவதற்கு மேற்காணும் ஆதாரங்கள் போதுமானதாக அமையுமென நம்புகிறேன்.
(அனைத்தையும் நன்கறிந்தவன் அல்லாஹற் ஒருவனே)
நன்றி தினகரனர் B-2-992 4-2.99. 9-2-99
-எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 50
GED
S
S) է5
ଗୁଞ୍ଜ
德
@)
லங்கை அரசியலுடனும் தமிழ் மக் களின் பிரச்சினைகளுடனும் ஐ" லை மாதம் இரண்டறக் கலந்து
காணப்படுகின்றது. அது மட்டுமன்றி இதற்கு நீண்டகாலமாகத் தொடர்புமிருந்து வருகின் றது. ஜூலை மாதத் தொடர்பு மூன்று நிலைக ளில் உறவு கொள்கின்றது.
() இலங்கை அரசியலில் சில மாற்றங்க ஞக்கும் பெருமைகளுக்கும் உடன்படுகின்
D.
0 ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு முயற்சிகள் தோல்வியைத் தழுவுகின்றன.
() தமிழ் மக்களின் உயிர், உடமைச் சேதங்களை ஏற்படுத்துவதில் முக்கிய கார னியாக அமைந்திருக்கின்றது.
ஜூலை மாதம் மேற்படி மூன்று நிலைக ளைக் கொண்டிருக்கின்றது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவற்றினைக் கூட்டு மொத்தமாக இங்கு நோக்காது, அவைகள் எவ்வாறு பதிவாகியிருக்கின்றதென்பதற்குச் சில சான்றுகள் மட்டுமே இங்கு நோக்கப்படு கின்றன.
சுதந்திர இலங்கையின் அரசியல் வர லாற்றில் சமவுடமைப் பொருளாதாரக் கோட் பாடுகள், சோசலிசச் சித்தாந்தத்தின் அடிப்ப டைகள் போன்றவற்றில் ஆட்சியை நடாத்து வதில் அக்கறை செலுத்தியவர் மறைந்த பிரதமர் எஸ்.டபிள்யூ ஆர்.டி.பன்டாரநாயக்க எனபது தெளிவானது. அதே நேரம் இவர் கூட இந்நாட்டில் புரையோடிக் காணப்படு
 
 

ன்ற இனவாதச் சேற்றில் புதையுண்டு போன சந்தர்ப்பங்களும் இருக்கத்தான் செய்கி றன.
இவரது ஆட்சியில் "மக்கள் மயப்படுத்தல்” எனும் கொள்கைத் திட்டத்தை டைமுறைக்குக் கொண்டுவருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதன் பிரதிபலிப்பாக 958இல் போக்குவரத்துச் சேவையை மக்கள் மயப்படுத்தியதுடன் துறைமுகத்துடன் விரிவுபட்டு ஜூலை மாதத்தோடும் இணைந்து கொண்டது.
மக்கள் மயப்படுத்தலில் வேறுபட்ட கருத்துக்கள் நிலவிய போதிலும், பொருளாதார மேம்பாட்டு ரீதியாக சிறந்த திட்டமெனக் கொள்ளப்படுகின்றது. அதேநேரம் மக்களுக்குப்
ாரிய நன்மைகளை இத்திட்டம் வழங்கக் கூடியதென்றும் நம்பப்படுகின்றது.
மறைந்த முன்னாள் பிரதமர் றிமாவோ பண்டாரநாயக்க முதன் முதலில் பிரதமர் தவிக்கு வந்ததும், உலகின் முதல் பென் பிரதமர் என்ற பெயரைத் தனதாக்கிக் ாண்டது 21.07.1960ல் ஆகும். இங்கு ஜூலை மாதத்தின் மற்றொரு பெருமையினைக் T5uIsofflö.
சுதந்திர இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் 1977இல் ஐ.தே.க பெற்ற iறிதான் முன்னும், பின்னும் இன்னும் வெற்றி கொள்ளப்படவில்லை. இத்தகையதொரு விகிதாசாரத் தேர்தல் முறைமை நடைமுறையில் இருக்கும் வரை சாத்தியமில்லை என்றே நம்பப்படுகின்றது.
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக சுமார் 17 வருடங்கள் ஐ.தே.க. தனது ஆட்சிப் பீடத்தை ஸ்திரமாக வைத்திருக்கவும் ஒரு பின்புலமாக அமைந்தது. இவ்வாட்சியின் ஆரம்பமும் ஜூலை மாதத்துடன் பங்குகொள்கின்றது. ஆயினும் இவ்வாட்சிக் காலத்தில் தமிழர் வாழ்வில் ஓர் இறுக்கமான நிலையினை நிரந்தரப்படுத்த வாய்க்காலாக அமைந்திருப்பதும் மறுதலிக்க முடியாத உண்மையாகும்.
ஜூலை மாதம் இலங்கை அரசியலில் பிரபல்யமாகி இருக்கின்ற போதிலும் அம்மாதத்தின் இன்னொரு பக்கம் "தோல்வி" என்ற பெறுபேற்றை முத்திரையாக்கி நிற்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பல இனக்கப்பாடுக ருக்கான முயற்சிகள் தோல்வியைத் தழுவிக் கொண்டதும், அதனால் ஏற்பட்ட தாக் கத்தின் பிடியிலிருந்து தமிழ் மக்கள் இன்னும் விடுதலையைப் பெறாமலிருப்பதும் கவ னிக்கத்தக்கதாகும்,
இலங்கையை யுத்த ஜுவாலையாக மாற்றிய பிரதான காரணங்களில் முக்கிய இடத்தினை வகிப்பதான மொழிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மாநாடு ஒன்று ஜூலை 1957இல் கூட்டப்பட்டு அது தோல்வியில் முடிந்திருக்கிறது. இவ்வாறு தோல்வி யைத் தழுவாது இருந்திருப்பின் மொழிப்பிரச்சினைச் சச்சரவு முடிவுக்குக் கொண்டுவரப்பட் டிருக்கும். இதனால் இனப்பிரச்சினைத் தீயின் வெப்பம் சற்று தனிந்து கொள்ள வழி பிறந்திருக்கும்.
கடந்த 1987இல் உருவான இலங்கை-இந்திய உடன்படிக்கையின் உள்ளடக்கங் 5ளும், அதனால் முன்னெடுக்கப்பட்ட மாகாணசபை முறைமைகளும் தமிழர்கள் ாழ்வில் விடியலை ஏற்படுத்தவில்லை. மாறாக அது இன்னும் தனது இறுகிய பிடியி னத் தளர்த்திக் கொள்ளவில்லை. முதன் முதலில் நடைபெற்ற மாகாணசபைத் தேர் b ஏப்ரல் 1988இல் ஆரம்பித்தும் ஜூலை 1988 இல் முடிவுற்றிருப்பதும் கவனிக்கத்தக்கது. ஆகவே, ஜுலை மாதத்தின் இன்னொரு முகம் தோல்வி என்று வரலாற்றில் தடம் காண்டிருப்பதனைப் பரவலாக அவதானிக்கலாம். ஜூலை மாதம் ஒரு புறம் இலங்கை ரசியலில் சில புகழ் பெறுபேறுகளைக் கொண்டிருந்தாலும் தமிழ் மக்களின் வாழ்வோடு
Gib .எம்.எம்.எம்நூறுல்ஹக்

Page 51
இணைத்துப் பார்ப்பின் அது நாசகரமானதாக அமைந்திருப்பதனையும் காணலாம், அதேவேளை சில நிகழ்வுகள் தமிழ் மக்களுக்குச் சாதகமானதாக அமைந்திருப்பத னையும் ஜூலை மாதம் வெளிப்படுத்துகின்றது.
இலங்கையின் வரலாற்றில் எதிர்க்கட்சி தலைமைத்துவம் என்ற அந்தஸ்த்தைத் தமிழர்கள் பெற்றிருந்தும் அதனைக் கூட தூக்கி வீசியெறிந்த நிகழ்வும் ஜூலை 1983இல் நடைபெற்றது. இந்த வெளியேற்றம் பதவி எனும் மோகத்தினை விட சமூக உணர்வு அதிகரித்தது என்ற அடிப்படையினை வெளிப்படுத்தியது.
பதவிகள் இன்றுவரும், நாளை போகும். ஆனால் அப்பதவி வகித்த காலங்களில் தனது சமூகத்திற்கு என்ன செய்தோம் என்கின்ற பக்கம் மிகவும் முக்கியமானது, அப்பதவியினால் தனது சமூகம் உள்ளிட்ட சமூகங்களுக்குள்ளான உறவுகள் காவு கொள்ளப்படுமானால் அதனை உதறித் தள்ளிவிடுவதற்குப் பின்னிற்கக் கூடாது என்கின்ற உறுதி நிலையினை இச் செயல் நிரூபித்ததாகக் கொள்ளப்பட்டன.
கடந்த 1983இல் யாழ்நகரில் 13 இராணுவத்தினர்களை ஒரே தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகள் கொன்றனர். அதன் எதிரொலியாக நாடு தழுவிய ரீதியாகத் தமிழர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டு வந்த வன்செயல்களில் கொழும்பில் மட்டும் 400 பேர்கள் கொல்லப்பட்டதுடன் பல வீடுகளும், கடைகளும் உடைத்து எரிந்து நாசமாகின.
இக்கலவரத்தின் பின்னணி, சிங்களக் காடையர்களின் வெறியாட்டம் எனக் கூறப்பட்டாலும் அரசியல்வாதிகளின் மறைமுக ஆதரவுகளும் இருந்தனவென்பது அப்போதே கண்டறியப்பட்டுப் பேசப்பட்டவையாகும், இருப்பினும் இவ்வன்செயல் ஓர் இகழ்வுக்குரியதாகவும் இலங்கையின் நற்பெயருக்கு களங்கமாகவும் அமைந்தது.
ஜூலை 1980இல் நாடு தழுவிய வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதை வன்முறை கொண்டு முறியடித்தது போல் 1983 ஜூலைக் கலவரத்தினால் தமிழர்களை அடிபணிய வைக்கலாமென்ற எண்ணம் இக்கலவரத்தைத் தூண்டியவர்களிடம் இருந்திருக்கலாம் என்கின்ற ஒரு கருத்தும் உண்டு. இத்தகைய எண்ணங் கொண்டவர்களின் எதிர்பார்ப்பும் தீயில் வெந்துபோனதென்பதே யதார்த்தமாகும்.
"கறுப்பு ஜூலை" என்ற நினைவு நாள் அனுஷ்டிப்பைத் தமிழீழ விடுதலைப் புலிகள் 1984களிலிருந்து கடைப்பிடித்து வருகின்றனர். அதேநேரம் கடந்த 1983களிலி ருந்து "கரும்புலிகள்" தினத்தையும் நினைவு கூறுகின்றனர். இதனாலும் இம்மாதம் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி சிங்கள மக்கள் மத்தியிலும் பிதியோடு எதிர்பார்க்கப்ப டுகின்ற ஒரு மாதமாக இருந்து வருகின்றது.
தமிழர் வாழ்வில் ஜூலை மாதம் வெகுவாகப் பேசப்படுவதற்கு வரலாற்று ரீதியில் நீண்ட காலங்கள் இருந்தாலும் 1983களின் பின்பே அதிக இடத்தைப் பெற்றிருக்கிறது. இன ரீதியான அழிப்பு நடவடிக்கையில் பாரியளவில், உடைமைச் சேதங்களையும் ஏற்படுத்தியது, இக்கலவரமும் இதன்பின் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இன அழிப்பு புத்தங்களுமாகும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை சர்வதேச மட்டத்தில் ஓர் அங்கீகாரத்தைப் பெற்றதும் சிங்களப் பேரினவாதம் வெறியாகத் தலைவிரித்தாடியதன் மூலம் இலங்கைக்குத் தீராத அவப்பெயர் சர்வதேச மட்டத்தில் கிடைத்ததும் 1983 ஜூலை மாதக் கலவரத்தின் மூலமேயாகும்,
"கறுப்பு ஜூலை"க் கலவரம் என வர்ணிக்கப்படும் இது தமிழர் வாழ்வில் கசப்பான பல அனுபவங்களையும் கைச்சேதங்களையும் உண்டுபண்ணியதோடு தமிழர்கள்
சிறுபான்மையினர் சில அவதானங்கள்
 
 

இலங்கையில் அடக்கியொடுக்கப்படுகின்றனர் என்கின்ற உண்மை நிலையினை உலகறிய வைத்ததுடன், அவற்றின் அழுத்தங்களை இலங்கை மீது திணிக்க வைப்ப திலும் பாரிய இடத்தினை இக் கலவரம் வகித்துள்ளது. இன்னொரு பக்கத்தில் "வெற்றியின் வாசல்" என்றே கொள்ளவேண்டும்,
ஒரு போராட்டம் வெற்றியை நோக்கிச் செல்வதில் பலரின் பல்வேறு வகையான தியாகங்கள் இன்றியமையாதவை. ஆயின் தமிழர்களைப் பொறுத்தவரை இந்த விலைப் பக்கம் அநேகமாக இரையாகிப் போயிருக்கின்றதென்பது துலாம்பரமானது. இக்கலவரம் ஒருவகையில் சிங்கள மக்களுக்கும் பாதகமானதாகவே அமைந்திருந்தது.
இதனாற்தான் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன 1984இல் சிலாபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றும்போது "ஜுலைக் கலவரத்தின் மூலம் தமிழர்களைத் தோற்கடித்ததாக எண்ணுவது முட்டாள்தனம்" என்று கூறினார். எனில் இதன் தோல்வி எவ்வளவு தூரம் அவரைப் பாதித்திருக்கின்றதென்பதை யூகித்துணரலாம். | ஜூலை மாதத்துடன் தமிழர் வாழ்வு கசப்பான நிகழ்வுகளைச் சந்தித்து கசந்து போனதாக அமைந்திருக்கின்றது. குறிப்பாக 1983களின் பின்பே இது மேலோங்கியிருக் கின்றது. அவற்றில் சிலவற்றைத் தடயங்களாக இங்கு நோக்குவோம்.
கேடந்த 1987 ஜூலை 5 இல் த.வி. புலிகள் வடமராட்சியில் "ஒபரேஷன் லிபரேஷன்" என்ற ரீதியில் தாக்குதலை மேற்கொண்டு, நெல்லியடியில் பெருந்தொகையான இராணு வத்தினரைக் கொன்று தங்கள் இலக்கினை நிறைவேற்றினர்.
0ே1.07.1996 இல் கந்தளாய் மீகங்கொடல்ல பகுதியில் பாதுகாப்புப் படையினரின் காவலரணை ஒளிந்திருந்து தாக்கிய புலிகளின் செயற்பாட்டினால் அரசபடையினர் 29 பேரும் த.வி.புலிகள் 35 பேரும் கொலையுண்டனர்.
0ே5.07.1996 இல் திருகோணமலையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அதங்கத்துரை உட்பட ஐந்து பேர் கிரனைட் தாக்குதலில் கொல்லப்பட்டனர். 17.07.1996 இல் வடகொரிய கப்பலொன்றைப் புலிகள் கடத்தினர். ஒரு மாலுமி கொல்லப்பட்டார்.
18.07.1996 இல் முல்லைத் தீவு இராணுவ முகாமொன்றை நோக்கித் தமது திடீர்த் தாக்குதலை மேற்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அரச படையினில் சுமார் 1000 பேரைக் கொலை செய்ததுடன், மேற்படி மோதலில் நேரடியாகப் பங்கேற்ற த.வி.புலிகள் தலைவர் பிரபாகரன் காயங்களுக்கு உள்ளானாரென்றும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
22.07.1996 இல் ரயில் பெட்டிக்குள் த.வி.புலிகள் வைத்த அதி சக்தி வாய்ந்த இரண்டு குண்டுகள் தெஹிவளையில் வைத்து வெடித்ததினால் 70 பேரளவில் மரணமா யினர். காயப்பட்டோர் 550 பேர்களுக்கு மேல் எனச் செய்திகள் தெரிவித்திருந்தன.
2ே6.07.1995 இல் வடக்கில் "சத்ஜய" என்ற பெயரில் யுத்த நடவடிக்கையில் இலங்கை இராணுவத்தினர் இறங்கிச் செயற்பட்டனர். இதனாலும் தமிழர்கள் பாரிய அனர்த்தங்களைத் தாங்க வேண்டியதாயிற்று
எனவே கறுப்பு ஜுலை தமிழர் வாழ்வில் வெறுப்பேற்றும் ஈனச் செயல்களைப் பதிய வைத்தும், சில நல்ல பெறுபேறுகளை அச்சமூகம் பெறவும் உதவியிருக்கின்றது. ஆயினும் இம்மாதத்தினை இருவேறு கட்டங்களாகக் கரும்புலிகள் தினம், கறுப்பு ஜூலை எனத் த.வி.புலிகள் நினைவு கொள்வதினால் இம்மாதத்தினைத் தமிழர்களும் சிங்களவர்களும் பிதியோடும் ஒருவகை கலவரத்துடனும் எதிர்கொண்டு நிற்பதனையும் காணக் கூடியதாகவிருக்கின்றது.
நண்றி இடி
9,720.
στώσπώστόφωςύςνα

Page 52
க்கிய தேசிய கட்சியுடன் இணைந் து நல்லிணக்க அரசாங்கமொன்றி னை அமைத்துக் கொள்வதற்காக பொதுஜன ஐக்கிய முன்னணி மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் முறிவடைந்துவிட்டன. இருபகுதியினரும் விட்டுக் கொடுப்பின்றி, முடிவிலிருந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டத னால்தான் இந்நிலை ஏற்பட்டதென்பது நடுநி லையாளர்களின் கருத்தாகும்.
பிரதமர் பதவியை ஐக்கிய தேசிய கட்சியி னருக்கு வழங்குவதை முற்றாக பொது ஜன ஐக்கிய முன்னணியினர் மறுத்தமையினால் தான் இம்முறிவு ஏற்பட்டதென்றும், பிடிவாத மும் சந்தர்ப்பத்தைத் தமக்கு சாதகமாக்கி ஆட்சியைக் கைப்பற்றும் உள்நோக்கத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி முனைந்ததினாலும் தான் பேச்சுவார்த்தை குழம்பி, இடையில் முறிவு ஏற்பட்டதென பொதுஜன ஐக்கிய முன்னணியும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றன.
கட்சி சார்பு நிலைக்கருத்துக்கள் ஒன்றுக் கொன்று நேர்விரோதம் கொண்டதாகக் காணப்படுவது ஒன்றும் புதுமையானதல்ல. இதுவே இந்நாட்டின் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடாகப் புரையோடிக் காணப்படு கின்ற ஒன்றாகும். அதேநேரம் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு நெருக்கடி தோன்றிய காலந்தொட்டு அதற்கு முண்டு கொடுக்கும் போக்கில் ஜே.வி.பியினர் தமது தொனியை மாற்றிவந்திருப்பதனையும் அவதானிக்கக் கூடியதாகவிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் அரசுக்கெதிரான நம் பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட் டால் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்க
器
g
C
C
-சிறுபானிமையினர் சில அவதானங்கள்
 

வின் விருப்பிற்கேற்ப வாக்களிக்கலாம் என்கின்ற ஒரு தொய்வினை முதற்கட்டமாகக் கொண்டிருந்தது. அதன் பின்னர் பின்வரும் நிபந்தனைகளைப் பிரதானமாக முன்வைத்து அதனை அரசு ஏற்றுக் கொண்டால் குறிப்பிட்ட சில காலத்திற்கு அரசை ஆதரிப்பதெனவும் அது தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது.
"ஆணைக்குழுக்களை நியமித்தல், சர்வஜன வாக்கெடுப்பை நடத்தாது இரத்துச் செய்தல், ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத்தினை உடன்கூட்டுதல், அமைச்சர்களின் எண்ணிக்கையினை இருபதாகக் குறைத்தல்' என்பன ஜேவிபி முன் வைத்த நிபந்தனைக ளிற் சிலவாகும்.
இக்கோரிக்கைகளின் பெரும்பகுதிகளை பொதுஜன ஐக்கிய முன்னணி ஏற்றுக் கொண்ட நிலையில் உடன்பாட்டிற்கு வந்து, தனது அரசாங்கத்தினைத் தொடர்ந்து நடாத்திச் செல்வதற்கு ஜனாதிபதி முன்வந்திருப்பதானது நாட்டின் நலனிற்கென்றோ, சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டுமென்றோ அல்லவென்பது பட்டவர்த்தமானது.
ஜனாதிபதியின் தலைமையில் இயங்கும் ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளுக்குள் ஏற்பட்டிருக்கும் வெடிப்புகளைச் சரிசெய்து கொள்வதற்கும், இழந்திருக்கும் பாராளுமன்ற பலத்தினை கூட்டிக் கொள்வதற்குமான நடவடிக்கையே இதுவன்றி, வேறில்லை,
ஜே.வி.பியுடன் இணைந்து ஆட்சியினை நடாத்திச் செல்லும் காலங்களில் சிறுபான் மைச் சமூகங்களின் நலனைக் காப்பதிலும், நாட்டில் புரையோடிக் காணப்படும் இனப்பிரச்சினைக்குத் தீர்வினைக் காண்பதிலும் பொதுஜன ஐக்கிய முன்னணி ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாதென்பதைத் துல்லியமாகப் புலப்படுத்தி, உறுதி செய்வதாகக் கொள்ள முடியும்.
அதேநேரம், ஜே.வி.பி.யுடன் பொதுஜன ஐக்கிய முன்னணி இணைந்து ஆட்சியினை நடாத்துகின்ற போது பாரிய பொருளாதார நெருக்கடியை நாடு சந்திக்க நேரலாம். இன்று காணப்படுவதைப் பார்க்கிலும், அதிகரித்த நெருக்கடிகளையும் எதிர்கொள்ள நேரிடும் அபாயமுமுண்டு. சர்வதேச ரீதியாக இதன் அழுத்தம் பரவிக் கொள்ளவும்
bIIIbl
இவ்வாறான பின்னடைவகளைத் தரக்கூடிய ஒரு விடயத்தில் ஜனாதிபதி துணிந்திறங்க முடிவு செய்திருப்பதானது, தனது தலைமையிலான அரசாங்கம் கவிழ்ந்து விடாது பாதுகாப்பதில் உள்ள கரிசனையே தவிர வேறு காரணங்கள் இருப்பதாகக் கொள்ள ԱPlգLLITEl.
ஜே.வி.பியினர் அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து பாரியளவில் விலகிக் காணப்படும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் ஆட்சியினை நிலைப்படுத்துவதற்கு ஜே.வி.பியினர் முன்வந்திருப்பதானது நாட்டின் நலனை மட்டும் கருத்தில் கொண்டல்ல என்பது நிதர் சனமாகும். ஏனெனில், பின்வரும் கூற்றுக்களில் இவர்களின்று நிலை கொண்டுள்ளதைக் காணலாம்.
"தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அரசாங்கம் யுத்த நிறுத்தச் சமாதானம் பற்றிப் பேசலாம். ஆனால் அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசலாகாது. முஸ்லிம்களுக்கு கல்முனை கரையோர மாவட்டம் உருவாகக் கூடாது" என்கிற கருத்தினை ஜே.வி.பியினர் அண்மை யில் தெரிவித்துள்ளனர்.
இதுவொன்றே போதும் ஜேவிபியினர்களை இனங்கண்டு கொள்வதற்கு. இதிலிருந்து தெளிவாவது யாதெனில் "சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதுவும் வழங்கப்படக் கூடாதென்பதிலும், அவர்களின் தனித்துவங்கள் அங்கீகரிக்கப்படலாகாதென்பதனைக் கருத்திற் கொண்டுமே, அரசுக்கான முனன்டு கொடுத்தலை ஜே.வி.பியினர் துரிதப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்."
குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மையான ஆதரவினைப் பெற்றுவிளங்கும்
SS 69)
எம்.எம்.எம்நூறுல்ஹக்

Page 53
ரீலங்கா முஎஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியினைத் தீர்மானிக்கின்ற தன்மையினை முழுமையாக இல்லாமற் செய்வதனை ஒரு வெறிபாகக் கொண்ட, குறிக்கோளினை முழு மூச்சாகக் கொண்ட செயற்பாடே இன்றைய அரசு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி க்கு ஜேவிபியினர் முண்டு கொடுக்க முண்டியடித்ததன் உள்ளார்ந்தமான நோக்கமாகும், சமத்துவம், சமதர்மம் என்றெல்லாம் பிற்றிக் கொள்ளும் ஜே.வி.பியினரின் மிகவும் கேவலமான இலக்கின் போக்கே ஆளும் கட்சிக்கான ஆதரவினை எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு வழங்குவதற்கு எண்ணுவதாகும். இது "தனது இரு கண்களும் பறிபோனாலும் பரவாயில்லை. எதிரியின் ஒரு கண்ணாவது இழக்கப்படவேண்டுமென் கின்ற" வேட்கையுணர்வுகளின் வெளிப்பாடெனக் கொள்ளலாம்.
ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பேரில் அரசாங்கத்திற்காக ஆதரவினை ஜே.வி.பி வழங்க முன்வந்தாலும், அதனை அரசு ஏற்றுக் கொள்வதாக இருந்தாலும் முற்றுமுழு தாக அதனை இருதரப்பினரும் நூறுவீதம் நம்பிக்கையுடன் பேணிக் கொள்வார்களென எதிர்பார்க்க முடியாது. இதனைப் பின்வரும் காரணங்கள் உறுதிபடத் தெளிவூட்டுவதாகக் கொள்ளமுடியும்.
தேர்தலில் கூட்டுச் சேர்ந்து போட்டியிடும்போது எழுதிக் கொள்ளும் புரிந்துணர்வு உடன்படிக்கை போன்ற வலுவை இது கொண்டதல்ல.
பண்டா-செல்வா, டட்லி-செல்வா ஒப்பந்தங்கள் போன்ற எத்தனையோ ஒப்பந்தங்கள் நமது நாட்டில் தீர்வுக்கென எழுதப்பட்டிருந்தாலும் அவை நடைமுறைக்கு வராமலே கிழித்தெறியப்பட்ட வரலாற்றுப் பாரம்பரியத்திற்கு நீண்டகால வரலாறு உண்டு.
சட்ட ரீதியாக எழுந்த ஒப்பந்தங்கள் தோல்வியைத் தழுவியிருப்பதனால், சிலவேளை பொதுஜன ஐக்கிய முன்னணி, எதிர்பார்க்கின்ற தனது பெரும்பான்மைப் பலத்தினை அடையும்வரை ஜே.வி.பி.யினருடன் இணைந்து ஆட்சியினை நடாத்துவது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்திக் கொண்டு, தமக்குச் சாதக நிலையுண்பானதும் ஜே.வி.பியுட னான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு செயற்படமாட்டாது என்பதற்கு என்ன உத்தர வாதம் இருக்கின்றதென்பதும் இதுவிடயத்தில் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.
இன்னொரு புறம் ஜேவிபியினரும் அரசாங்கத்துடன் இணைந்து அதாவது உள்வாரி யாகவிருந்து ஆதரவு வழங்குவதைத் தவிர்த்து எதிர்க்கட்சியினர் வரிசையிலிருந்து ஓராண்டுக்கு ஆதரிக்க முன் வந்திருப்பதானது நிலையான ஆதரவாகத் தொடர்ந்திருக் குமா? என்பதும் கேள்விக்குரிய விடயமாகும். ஏனெனில் அவர்களும் ஒப்பந்தத்தை மீறிச் செயற்படக் கூடிய சாத்தியங்களும் இதில் காணப்படுகின்றன.
அதேநேரம், ஆட்சியினைத் தீர்மானிக்கும் சக்தியாகவிருந்த ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பலத்தினை முஸ்லிம் சமூகம் இழந்து போவது மட்டும் இங்கு சீரா க நடைபெற்று இருக்கும். அந்தக் கயமை நிலையினை ஏற்படுத்துவதுதான் ஜே.வி. பியினரின் முதல் நோக்கமாகவும் இருக்கின்றது. அது ஈடேறிப் போய்விடுவது முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாக எதிர்காலத்தில் அமையும்.
எது எப்படி இருப்பினும் பொதுஜன ஐக்கிய முன்னணியும், ஜே.வி.பியினரும் இணைந்து கொண்டு ஆட்சி நடாத்துவது நிரந்தரமானதா? இவ்வரசாங்கத்தினால் நாட்டிற்கு விளையப்போகும் நன்மை என்ன? என்று நோக்கின் நலனென்று எதுவுமே இல்லை என்பதே விடையாகக் கிடைக்கும். அத்தோடு, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஜே.வி.பி கூட்டு என்பது பேரினவாத அரசொன்றை உருவாக்கவும், சிறுபான்மை இனங்களை சதிசெய்து நசுக்கவும் வழிகோலும் என்பதே உண்மையிலும் உண்மை யாகும,
நன்றி இடி ዕሿሿ ዕቧሿኃûû;.
90 E
சிறுபான்மையினர் சில அவதானங்கள்

ܘܝܘ
S 6
G يا، E 6 醬 료 39 c
S. ଛୈ
ல்லின மக்கள் வாழும் இலங்கை யில் சமூகங்களுக்கிடையில் புரிந் துணர்வும், பரஸ்பர நல்லுறவும், ஒவ்வொரு சமூகங்களினது உரிமையை மதித்துப் பேணிக் கொள்ளுதலும், பொது நன்மையைக் கருத்திற்கொண்டு "விட்டுக் கொடுத்தல் போன்ற நற்பண்புகளில் ஐக்கி யம் கொண்டவர்களாக எல்லோரும் இருப் பது கட்டாயமாகும்.
இவற்றின்பால் சிந்தனையைச் செலுத் தாது தன்னினம், தன் சமூகம் என்னும் குறுகிய வட்டத்தினுள் முழுமையாக நுழைந் துகொள்வது மிக ஆபத்தான போக்காகும். ஏனென்றால் இவ்வுணர்வின் வெளிப்பாடுகள் சமூகங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்து வதற்குப் பதிலாக இடைவெளியை ஏற்ப டுத்தி இன மோதல்களுக்கு வழிவகுக்கும். இதனால் ஒரு சமூகத்தை ஒரு சமூகம் நம்பாது - சந்தேகம் கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடும் என்பதும் ஒரு யதார்த்த மான விடயமாகும்.
களின் உறவு உறுதியான முறையில் கட்டி யெழுப்பப்படல் வேண்டும். எதிர்கால வாழ் வின் எழுச்சியும் சரியான விடிவும் பெறுவ தற்கு ஒரு சமூகத்தைவிட்டு ஒரு சமூகம் பிரிந்துவிட முடியாதளவில் புவியியல் அமைப்பும், வசிப்பிட பிரதேசங்களும்,
92
-எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 54
பொருளாதாரங்களும் பின்னிப் பிணைந்துள்ளன.
ஆயினும் மதங்களும், கலாசாரங்களும், தனித்துவங்களும் வேறுபட்டவைகளாகும். என்றாலும் சில பொதுப்பிரச்சினைகளிலும், உரிமைகளிலும் இவ்விரு சமூகங்களும் ஒன்றைவிட்டு ஒன்று தனித்துவிட முடியாதளவிலுள்ளது. ஆகையால் இவ்விரு சிறு பான்மை சமூகங்களினது ஒன்றித்த உறவுப் பாலத்தின் மீதுதான் வட-கிழக்கின் எழுச் சியும் விடிவும் தங்கியுள்ளதென்பது நிதர்சனமாக உணரும் உண்மைகளாகும்.
இவ்வுண்மைகளுக்குப் புறமுதுகு காட்டும் வரை தமிழ்முஸ்லிம் சமூகங்கள் அழிவிற் கும், பகையுணர்விற்குள்ளும் உட்படுவதிலிருந்து விடுதலை பெறமுடியாததென்பது ஒருவகையான தீர்க்க தரிசனப் பார்வையாகும்.
தமிழ்முஸ்லிம் சமூகங்களின் நலன்களும் நம்பிக்கைகளும் நனவாகப் பரிணமிப்பதென் பது தமிழ் பேசும் மக்களின் ஒன்றித்தலில்தான் தங்கியுள்ளதென்னும் யதார்த்த நிலையி னைப் புரிந்துணர்ந்து கொள்வதன் மூலம்தான் இவ்விரு சமூகங்களும் அவற்றின் எதிர்காலச் சந்ததிகளும் நிம்மதியாகவும் சுபீட்சமாகவும் வாழவழிவகை செய்யுமே தவிர வேறெந்தமார்க்கங்கள் மூலமும் விடிவுகளைக் கட்டியெழுப்ப முடியாது. அப்படி முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் அது பிரச்சினைகளையும் பிணக்குகளையும் மூனடெழச் செய்து ஓர் ஆரோக்கியமற்ற சூழ்நிலையை தோற்றுவிக்கும்.
முஸ்லிம்கள் தமிழர்கள் மீது நம்பிக்கை வைக்க முடியாதளவுக்கு அல்லது சந்தேகிக்க வேண்டிய நிர்பந்த நிலைக்குத் தள்ளிவிட்டவர்கள் தமிழர்களே என்னும் கசப்பான உண்மையை தமிழர்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
முஸ்லிம்களின் எதிர்கால அரசியல் வாழ்வையும் பலத்தையும் குறைத்தது மட்டுமல் லாது. (இப்போக்கினை சிங்களவர்களும் முஸ்லிம்கள் மீது கையாண்டனர் என்பதும் வரலாறு) ஒரு நிரந்தர பகையுணர்வையும் தூவி நிலைநிறுத்திவிடும் கைங்கரியத்தில் சில தமிழ்த் தலைவர்களும், போராளிகளும் செயற்பட்டனரெனக் கூறுவது தவறான கூற்றல்ல என்பதற்குச் சான்றுகள் பலவுண்டு.
ஆயினும் ஓர் உண்மையை இரு சமூகங்களும் உணர்ந்தேயாக வேண்டும். அதா வது, வட-கிழக்கைப் பொறுத்தவரை தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமை அவசியமாகும். ஒற்றுமையின்றி நிரந்தரத் தீர்வோ, அமைதியோ முழுமையாக சங்கமித்துவிட முடியாது. எனவேதான் தமிழ்-முஸ்லிம் சமூகங்களிடையே காணப்படும் "விரிசல்களை” இனங் கண்டு அவற்றுக்கான இனக்கங்களைக் கடைப்பிடித்தொழுக இவ்விரு சமூகங்களும் முன்வரவேண்டும். அப்போதுதான் நிரந்தர வெற்றியும், ஆரோக்கியமான சூழ்நிலையும் எழுச்சியான அரசியல் மயமும் வட-கிழக்கில் பரிணமிக்க முடியுமென எதிர்பார்க்கலாம்,
நாம் இஸ்லாமிய தமிழர்களா?
தமிழ், முளப்லிம் சமூகங்களிடையே "இடைவெளி காணப்படும் விஷயங்களில் மிகப்பாரதூரமான இரண்டு அம்சங்கள் இருக்கின்றன.
இலங்கை முஸ்லிம்களைத் தமிழ் இனமென்றும், இஸ்லாமியத் தமிழரெனவும் கூறுவது விரிசலின் பிரதான அம்சமாகும்
வடகிழக்கு மாகாணம் தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசம் எனக்கூறுவது இடைவெ ளியின் இரண்டாவது அம்சமாகும்.
இவ்விரு அம்சங்களிலும் முதலில் உடனடியாக இணக்கம் காணப்படுவதன் மூலமே ஏனைய பிரச்சினைகளுக்கு இணக்கமும் - உடன்பாடுகளும் தமிழ் - முளப்லிம் சமூகங்களிடையே வளர்ந்தோங்கச் சந்தர்ப்பம் ஏற்படும். 92
சிறுபான்மையினர் சில அவதானங்கள்

அதுவல்லாதவரை எந்த நிலையிலும் தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையே நிரந்தர ஒற்றுமை வேரூன்றவோ ஒன்றிணைதலோ ஏற்படுவது அசாத்தியமானதாகவே அமையுமென்பது திண்ணம்.
முஸ்லிம்களை “தமிழ் இனம் எனக் கூறுவது இன்று நேற்று ஆரம்பமான கூற்றல்ல. இப்படிக் கூறப்பட்டதற்குப் பிரதான காரணமே, "ஆளும் பக்குவம் தமிழர்களுக்குத்தான் இருக்க வேண்டும் என்கின்ற ஒரு குறுகிய சிந்தனையில் எழுந்த சிதைவெனலாம்.
இது பழைய தமிழ் தலைவர்கள் விட்ட தவறு. ஆனால் இந்த யுக்தியை இன்றைய சில விடுதலைப் போராளிகளும் கொண்டுள்ளனர் என்பது தான் வேதனைக்குரியதும் கண்டனத்துக்குரியதுமாகும்.
".சட்டவாக்க சபையில் ஒரு முஸ்லிம் வேண்டும்" என்று அறிஞர் சித்திலெப்பை குரல் எழுப்பினார். ஆங்கிலேயரும், முஸ்லிம்களுக்கென ஒரு பிரதிநிதித்துவத்தைச் சட்டவாக்க சபையில் தரவிருந்த போதுதான் திரு.இராமநாதன் (ETHNOLOGY OF THE MOORS OFCEYLON) 6Tsiy) guns upsispinlimit.
இவ்விடயங்களை எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான மர்ஹாம் எச்.எம்.பி. முஹிதீன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
'திரு.இராமநாதன் ஈழத்து முஸ்லிம்களை ஒரு தனி இனமாக இடம்பெறச் செய்யாது தமிழ் இனத்துக்குள் அவர்களைக் கட்டுப்படுத்த முயற்சித்ததற்கு அந்த வேளையில் பேரறிஞர் சித்திலெப்பை அவர்கள் ஒரு காரணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருந்தார்கள். அதாவது அந்தச் சமயத்தில் சிட்டவாக்க சபைக்குச் சோனக உறுப்பினர் ஒருவரை நியமிக்க பிரிட்டிஸ் அரசாங்கம் சிந்தித்துக்கொண்டிருந்தது. சோனகர் ஒரு தனி இனமல்ல என்ற கூற்றை வெள்ளையராட்சி ஏற்றுக்கொண்டால் ஒரு முஸ்லிம் நியமனத்திற்கு இடமே இல்லாது போயிருக்கலாம்.
திரு.இராமநாதன் அவர்கள் பேரறிஞர் சித்திலெப்பையின் இந்தக் கருத்துக்களுக்கு எவ்வித பதிலும் தர முன் வரவில்லை. மாறாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அரச ஆசியகழகத்தில் இந்த உரையை நிகழ்த்தினார்."
நன்றி இலங்கைச் சோனகர் இனவரலாறு தினகரனர் முஸ்லிம் மலர் ர77.2) இதனையே ஐ.எல்.எம்.அப்துல் அளபீஸும் "சோனகரைத் தமிழ் இனம் என்று சொல்வதற்கு ஒரு குறிக்கோளும் இருந்தது என எண்ணப்பட்டது என்று குறிப்பிடுகிறார். முஸ்லிம்கள் தம்மை ஒரு தனி இனமாகத் தாபிக்க முயன்ற போதும் நமக்கென ஓர் அரசியல் வளர்ச்சியை உருவாக்க முயன்ற போதும் திரு.இராமநாதன் செய்த குறுக்கீடு தொற்றுநோய் போல் அவர் வழிவந்த தமிழ்த் தலைமையிலும் காணப்பட்டதா? என்ற ஐயமும் முஸ்லிம்களிடத்தில் உண்டு.
1885ல் சேர் பொன்னம்பலம் இராமநாதன் முன்வைத்த முஸ்லிம்களால் வெறுக்கப்பட்ட அதே உபாயங்களையா? நீங்களும் முன்வைக்கிறீர்கள்? அவர் அதில் படுதோல்வியுற்றதை"ஞாபகப்படுத்த விரும்புகிறேன் என சேர்.ராஸிக் பரீத் 1958ல் பாராளுமன்றத்தில் தமிழ்த் தலைவர்களைப் பார்த்துக் கூறினார்.
நன்றி அவர்ரைரா பெப்-மார்ச் 1985) "ஈழத்து முஸ்லிம் சமூகத்தை திரு.இராமநாதன் அவர்கள் மிகச் சாதாரண செல்வாக்கற்ற, சக்தியற்ற, புத்திஜீவிகளற்ற ஆளும் திறமையற்ற ஒரு மக்கள் கூட்டமாக ஒதுக்கித் தள்ளுகிறார் என முஸ்லிம் அரசியல்வாதிகளும் வரலாற்றறிவுள்ளவர்களும் சாடினர்'
நண்றி அவர்ரைரா ஏப்ரல் 1985)
-எம்.எம்.எம்நூறுல்ஹக்

Page 55
இந்த மேற்கோள்கள் தமிழ்த் தலைமைத்துவங்கள் முஸ்லிம்களை ஒரு தனித்து வமான இனமல்லவெனக் காட்டி அரசியல் ஆளுமைக்கோ, தலைமைத்துவங்கள் உருவாகாத முறையில் முடக்கிவிட முற்பட்டுள்ளனரென்பதைத் தெளிவாக நமக்குனர்த் துகின்றன.
பழைய தமிழ்த் தலைமைத்துவம்தான் சரியாகச் சிந்திக்கத் தவறிவிட்டது. ஆயினும் புதிய இளைய தலைமைத்துவமான போராளிகளாவது சரியாகச் சிந்திப்பார்கள் என எதிர்பார்த்த முஸ்லிம் சமூகத்தை போராளிகளும் ஏமாற்றி விட்டனரென்றுதான் கூற வேண்டும்.
ஏனென்றால் முன்வந்த தமிழ்த் தலைமைத்துவத்தின் அடிவருடிகளாகவே இவர்கள் இவ்விஷயத்திலிருக்கின்றனர் என்பதற்கு அவர்களின் வெளியீடுகளே சான்றாக அமைகின்றன.
ஜனவரி 1987ல் வெளிவந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் 'இஸ்லாமியத் தமிழரும், தமிழீழ விடுதலைப் போராட்டமும்' என்ற நூலில் "இலங்கையில் முஸ்லிம்கள் என அழைக்கப்படும் மக்கள் இஸ்லாமிய மதத்தைத் தழுவிய தமிழர்களே. இந்த இஸ்லாமியத் தமிழர்கள் இலங்கைத் தமிழ்த் தேசிய இனத்தின் ஒரு இணைபிரியாத அங்கம் என்பது எமது நிலைப்பாடு (முன்னுரை 3ம் பக்கம்) எனக்கூறியுள்ளனர். இக்கூற்று முன்னைய தமிழ்த் தலைமைத்துவத்திற்கும் இவர்களுக்கும் வேறுபாடில்லை என உணர்த்தப் போதுமான சான்றாகவுள்ளது. | மொழியும் முஸ்லிம்களும்
எது எப்படி இருப்பினும் இங்கு சில கருத்துக்களை முன்வைத்தாக வேண்டியுள்ளது. அதாவது இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றிய கருத்துக்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன.
தமிழ் மொழியைப் பேசுவதனால் தமிழர் என்றும், சிங்கள மொழியைப் பேசுவதனால் சிங்களவர் என்றும் முஸ்லிம்களைக் கொள்ளமுடியாது.
ஆனால் இலங்கையில் மொழியைக்கொண்டு அடையாளம் காணப்படுவோர் சிங்கள வர்களும், தமிழர்களும் தான். முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்கள் மொழியினால் இனம் காட்டப்படும் ஒரு சமூகமல்ல.
மொழி முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினையாகவும் அமையவில்லை. ஏனென்றால் மொழியையும் விட முஸ்லிம்கள் இஸ்லாத்தையே அதிகம் நேசிக்கிறார்கள். அதே நேரம் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அசைவுகளும் இஸ்லாம் கூறும் வழியில்தான் இருக்க வேண்டும்.
ஆகவேதான் முஸ்லிம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மொழியை முன்வைத்து பிளவுபட்டுக் கொள்ளவில்லை. மதத்திற்குச் சவாலாக "மொழி" அமையுமானால் அந்த மொழியை தூக்கிவீசிவிடவும் முஸ்லிம்கள் பின்நிற்கவில்லை என்பதையும்
இலங்கை வரலாற்றில் கானலாம்.
இஸ்லாமிய அறநெறியை (மதத்தை) ஏற்றுக்கொண்டவர்களைத் தமிழர் எனக் கூறுவது முஸ்லிம்களின் தனித்துவமான அறநெறியை உடைத்தெறிவதாகவும், இஸ்லாத் தின் மீது மாசு கற்பிப்பதாகவும் அமைகின்றன.
எவ்வாறெனில் இஸ்லாத்தின் பார்வையில் முஸ்லிம் அல்லாதவர்கள் இறை ஈடேற்றம் பெறத் தகுதியில்லாதவர்களும் இறைமறுப்பாளர்களென்றும் கணிக்கிறது. அப்படியாாைல் இஸ்லாத்தை ஏற்று முழுமையாக வாழ்பவர்களைத் தமிழா (இஸ்லாத்திற்குப் புறம்பா
சிறுபான்மையினர் சில அவதானங்கள்
 
 
 
 
 

E - E
னவர்) எனக் கூறும்போது அதனை ஏற்கும் பக்குவம் வருமா?
ஆகவேதான் முஸ்லிம்களைத் தமிழர் என்றோ, சிங்களவர் என்றோ அல்லது வேறு எப்படிக் கூறினாலும் (இஸ்லாம் கூறாதமுறையில்) அது முஸ்லிம்களின் மதவு னர்வை மிதிப்பதாகவும், கேவலமாகச் சித்தரிப்பதாகவுமே அமையும்.
ஈழத்து முஸ்லிம்களைத் தமிழ் இனம் எனக் கூறுவது பொருத்தமற்ற கூற்றாகும். ஏனென்றால்-இலங்கை முஸ்லிம்களுக்கு அரேபியர்களின் தொடர்புண்டு. (அவற்றினை இங்கு ஆராய்வது சாத்தியமல்ல. இது சிறிய கட்டுரை என்பதனால்)
ஆகவே, விபரமாக அறிவதற்கும்-விளக்கம் பெற முனைவோர்களும் ஐ.எல்.எம்.அப்துல் அளபீஸ் அவர்களால் எழுதப்பட்ட "இலங்கைச் சோனகர் இன வர லாறு ஒரு திறனாய்வு" என்னும் நூலையும், "இலங்கைச் சோனகர் பற்றிய கடந்த கால நினைவுகள்" என்னும் நூலின் 213ம் பக்கத்தையும் பார்க்கவும்.
தமிழர்களின் கூற்றுப்படி தமிழர்கள் தான் இஸ்லாத்தை ஏற்றனர் என்று வைத்துக் கொண்டாலும் அவர்களைத் தமிழர் எனக்கூறுவது - அழைப்பது தவறாகும். ஏனெனில் அவர்கள் இஸ்லாமியர்களானவுடன் அவர்களுக்கென்று தனித்துவமான கலாசாரமும், வணக்க வழிபாடுகளும் முழுமையான வாழ்க்கை நெறியும் வரவேற்றுக் கொள்கிறது. இவைகள் ஏனைய சமூகங்களிலிருந்து வேறுபட்டவைகள் என்பதும் இங்கு கவனிக்கத் தக்கது.
முஸ்லிம்களின் தாய்மொழி தமிழாக இருப்பதனாலோ அல்லது தமிழ் மொழியைப் பேசுவதனாலோ முஸ்லிம்கள் தமிழர்களாக - தமிழ் இனமாகக் கருதப்பட முடியாது. ஏனென்றால் ஈரானில் வாழும் முஸ்லிம்கள் பாரசீக மொழியைப் பேசுவதனால் "பாரளகே முஸ்லிம் என்றோ, பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்கள் உர்து மொழியைப் பேசுவதனால்
உர்து முஸ்லிம்கள் என்றோ கூறுவதில்லையே.
முஸ்லிம்கள் எனப்படும் இஸ்லாமிய அறநெறியை ஏற்றவர்கள் எங்கு வாழ்ந்தாலும், எந்த மொழியைப் பேசினாலும் அவர்கள் எல்லோரும் "முஸ்லிம்கள்' என்னும் ஓர் கொடியின் கீழ் ஒன்றுபட்டு சகோதரத்துவத்தைப் பேணவேண்டியவர்கள் என்பதே முஸ்லிம்களின் நிலைப்பாடு; இதுவே குர்ஆன் கூறும் வாழ்க்கையுமாகும்.
இவற்றிற்குப் புறநடையாகக் கூறப்படும் கூற்றுக்களும் கருத்துக்களும் முஸ்லிம்கள் ஏற்கக்கூடியதாக இராதென்பது யதார்த்தமானது. அப்படியானால் முஸ்லிம்களை "தமிழர் எனக் கூறுவது பரஸ்பர நல்லுறவிற்கு நல்ல சகுனம் அல்ல. மாறாகச் சந்தேகப் பார்வையை வலுப்படுத்துவதாகவே அமையும் என்பதையும் தமிழ் சகோதரர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
எனவேதான் இதுவொரு பாரிய பிரச்சினையாக; பிளவாக தமிழ்-முஸ்லிம் சமூகங்களிடையே வேருன்றி விரிசலுக்கும் பிரதான காரணமாகிவிடுகிறது. ஆகையினால் முஸ்லிம்களை "முஸ்லிம்கள் என அழைக்கும் பக்குவம் தமிழர்களிடையே வரவேண் டும். அப்போதுதான்" சுமுகமான உறவும், பரஸ்பர சிநேகிதப் பக்குவமும் இரு சமூ கங்களிடையேயும் தோன்றும்; வளருமென எதிர்பார்க்கலாம்.
|ಷ್ರŠgiestfair gruáæ|
தமிழ் பேசும் மக்களின் உறவிற்குப் பங்கமாக அமையும் இன்னொரு முக்கிய
அம்சம் வட-கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் என்றபோக்கு அல்லது
நோக்கு. இதுவொரு தவறான கருத்தாதும்.
ஏனென்றால் 'தமிழ் மக்களது பாரம்பரியப் பிரதேசங்களான வடக்குக் கிழக்கு
H- -எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 56
மாகாணங்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் இந்த மாநிலத்தில் வாழும் முஸ்லிம் மக்களதும் பாரம்பரியப் பிரதேசமாகும்."
"முஸ்லிம்களையும் உள்ளடக்கிய நிலையில் மட்டுமே கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் உரிமை கொண்டாடுவது சாத்தியமாகும். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த அம்பாறை, திருகோணமலை மாவட்டப் பிரதேசங்களில் இதுவே உண்மை நிலையுமாகும்.”
"உண்மையில் கிழக்கு மாகாணம் புத்தளம், மன்னார்ப் பிரதேசங்களில் வாழும் முஸ்லீம் மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்காத எந்த ஒரு இயக்கமும் தம்மை அனைத்துத் தமிழ் பேசும் மாநிலத்தின் மக்கள் இயக்கம் எனக்கூறிக் கொள்ளுதல்
plợLI ITTFT
நன்றி, வ.ஐ.ச.ஜெயபாலனின் "தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும் பங்கர் ?? மேற்கண்ட ஜெயபாலனின் கருத்துப்படி, தமிழ்த் தலைவர்கள் கிழக்கு மாகாணத்தை முஸ்லிம்களினதும் பாரம்பரியப் பிரதேசம் என்பதை ஏற்றுக்கொண்டு செயற்ப மறந்துவிட்டனர். அதன் விளைவு தமிழ்பேசும் மக்களின் உறவு வீழ்ச்சியை நோக்கிச் சென்றதென்பதையும் படம்பிடித்துக் காட்டுகிறது.
ஆயினும் வட-கிழக்குப் பிரதேசம் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் பாரம்பரிய பிரதேசம் என்பதை தமிழ்ச் சகோதரர்கள் ஏற்றுக்கொண்ட நிலையில்தான் அநேக பரஸ்பர உறவு தமிழ்-முஸ்லிம் மக்களிடையே ஏற்படச் சந்தர்ப்பமிருக்கிறது.
மாறாக தமிழர்களினது பாரம்பரிய பிரதேசம் என மட்டும் கொண்டால் அது மீன் டும் மீண்டும் தமிழ்முஸ்லிம் சமூகங்களிடையே பிளவையும் விலகிச் செல்லும் தன் மையையும் ஏற்படுத்தும். இந்த நிலைப்பாடு இரு சிறுபான்மைச் சமூகங்களுக்கும் ஆபத்தானது.
உண்மையில் தமிழ் முஸ்லிம்களின் ஒன்றிப்பிலும் நல்லுறவிலும் தான் வடகிழக் கின் ஆக்கபூர்வமான எழுச்சியுண்டென்பதையும் மறந்தவர்களாக யாரும் வாழமுடியாது! மதத்தால், இனத்தால், கலாசாரத்தால் வேறுபட்டவர்களாக தமிழ்-முஸ்லிம்களி ருப்பினும் வடகிழக்கின் பாரம்பரிய குடிகள் என்பதிலும், பேசுகின்ற மொழியில் ஒன்றுபட்டவர்கள் என்பதிலும், சில பொதுப்பிரச்சினையில் ஒரே கணிப்புக்குட்பட்டு இணைந்திருப்பதையும் மறந்துவிடலாகாது.
எனவேதான் நிரந்தரச் சந்தேக நோக்கும், பகையுணர்வும் இவ்விரு சமூகங்களிடை யையும் தொடராக இருக்குமானால் எவ்வித விமோசனமும் ஏற்பட்டு விடாது.
தமிழ் மக்களின் கடம்ை:
எனவே, மேற்கண்ட அடிப்படை முரண்பாடுகளான முஸ்லிம்களைத் தமிழர் எனக் கூறுவதிலிருந்தும், வடிகிழக்குப் பிரதேசம் தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசம் என்பதி லிருந்தும், விடுபட்டுச் சற்று வளைந்து கொடுத்தும்; முஸ்லிம்கள் கொண்டுள்ள (தமி ழர்கள் மீதான) நியாயமான ஐயப்பாடுகளுக்குச் சரியான நம்பிக்கைகளை ஊட்டித் தங்கள் பால் அரவனைத்துக் கொள்ளும் வழியில் தமிழர்கள் செயற்பட வேண்டும்.
தவிர முஸ்லிம்கள் வளைந்து-சார்ந்து வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் 'நம்ப முடியாதவர்கள் நாங்கள் என்பதுபோல் தமிழர்கள் பல கட்டங்களில் செயற்பட்டுள்ளனர். இந்தக் கறைபடிந்த சம்பவங்கள் முஸ்லிம்களின் நெஞ்சங்களில் வேரூன்றிப் பதிந்தவைகள்.
90 SS சிறுபாண்மையினர் சில அவதானங்கள்
 
 

ஆகையால் வளைந்து கொடுத்து ஒருமைப்பாடும், உறவும் நிலைகொள்ள தமிழ்ச் சகோதரர்கள் உழைக்க வேண்டும். வேறுபட்ட சமூகங்களான தமிழ்-முஸ்லிம்களை ငြှိုနှီ பாலமான 'தமிழ் பேசும் மக்கள் என்னும் நிலையை மறந்தவர்களாகத் தமிழர்கள் இருக்கமுடியாது.
"தமிழன் என்ற உணர்வு நீங்கிதமிழ் பேசுபவன் என்ற நிலை தமிழ் மக்களின் மனதில் வேரூன்றி நிற்கும்வரை தமிழ்-முஸ்லிம் மக்களிடையிலான சந்தேக மனப்பான்மையும், சந்தேகப் பார்வையும் மறையப் போவதில்லை. இவை மறையாதவரை ழ்-முஸ்லிம் மக்களிடையே ஒரு விசுவாசமான ஐக்கியத்தையும், பொதுவான ரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பதற்குச் சாதகமான ஒரு சூழ்நிலையையும் ற்படுத்த முடியாது
(எம்.வை.எம்.சித்தீக் அல்-இன்ஸாப் 198384)
இவ்வுண்மைகளை வெகுதூரத்திற்கு அப்பால் வைத்துவிட்டு தமிழ்-முஸ்லிம் மூகத்தை ஒன்றுபட வேண்டும், தமிழர்களுடன் இணையாதவரை முஸ்லிம்களுக்கு எந்தவிதமான வெற்றிகளுமில்லை என்னும் கருத்துக்களை முன்வைப்பதன் மூலம் எந்தப் பயன்பாட்டையும் பெற்றுவிட முடியாது.
அடிப்படை முரண்பாடுகளில் இணக்கம் கண்டு, தளர்ந்து காணும் தமிழ் பேசும் மக்களின் உறவை முதலில் உறுதிப்படுத்திக் கொண்டபின்னர்தான் பொதுப்பிரச்சினையில் ஒன்றித்துக் கொள்ளும் நிலையை எதிர்பார்க்கலாம்.
உண்மையில் தமிழ் பேசும் மக்களின் உறவைச் சரியான முறையில் பலப்படுத்தாத நிலையில் ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை தொடராக நிலையாக வடகிழக்கில் ஏற்பட்டுவிடும் என எதிர்பார்க்கும் எதிர்பார்ப்பு எதிர்பார்ப்பாகவே அமையும் என்பதில் சந்தேகிக்க வேண்டியதில்லை.
நண்றி பரவிப்
g"XJS - ISP35.
-எம்.எம்.எம்.நூறுல்ஹத்

Page 57
长
லங்கையின் அரசியல் வரலாற்றில் இ இடதுசாரிக் கொள்கையினர் ஒரு புரட்சிகரமான மாற்றத்தினை ஏற்ப
டுத்த வேண்டுமென்ற நோக்கினைக் கொண் டு தோற்றம் பெற்றவர்களாவர்.
இனம், மதம், மொழி போன்ற வேறுபாடு களைக் கடந்த சமுதாயத்தையும், சமதர்ம ஆட்சியினையும் குறியாகக் கொண்டு செயற் படுவதற்கு முனைப்போடு முன்வந்தவர்கள் இடதுசாரிக் கொள்கையினர் என்பதும் குறிப் பிடத்தக்கது.
இலங்கையின் இடதுசாரி கொள்கையி னர் தமக்கென ஒரு கொள்கையினை வகுத் துச் செயற்படுவதில் கவனஞ் செலுத்தாது. மாக்ஸிச, லெனினிச, றொக்ஸிஸ், மாவோ சிய சித்தாந்தங்களையே தமது கொள்கைக எாகக் கொண்டனர்.
இலங்கையின் அரசியல் களத்தில் பேரி னவாதச் சிந்தனைகளும், பெளத்த மதப் பற்றும் மேலோங்கிக் காணப்பட்ட சூழலில் சமூக சேவையையும், தொழிலாளர் வர்க்க மேன்மையையும் கருத்திற் கொண்டு செயற் பட்டதோடு மக்களின் மனங்களையும் வென் று கொள்வதில் ஆர்வத்தினைக் கொண்டி ருந்தனர்.
இலங்கையில் பொதுவுடமைக் கொள் கைகளை வலியுறுத்தி, அதனை மக்கள் மயப்படுத்தும் வகையிலும் இடதுசாரிக் கொ ள்கையில் முதன் முதலில் தோற்றுவிக்கப் பட்ட கட்சியும் சமசமாஜக் கட்சியாகும். இ தன் உருவாக்கம் கடந்த 1935 ஆம் ஆண் டாகும்.
ஆரம்பத்தில் இடதுசாரியினர் கொண்டி ருந்த கொள்கையில் ஒருபிடிமானத்தோடு செயற்பட்டு மக்களின் மனங்களில் இருப்புக் கொள்ளும் ரீதியில் அவர்களின் செயற்பாடு கள் அமைந்திருந்தன. இதற்குப் பின்வரும்
E
9:B) சிறுபாண்மையினர் சில அவதானங்கள்
 

நிகழ்வுகள் நல்ல உதாரணங்களாக அமைகின்றன.
"இந்திய பிரஜாவுரிமைச் சட்டம்" 1948இல் கொண்டுவரப்பட்ட போது, அது சகல மக்களும் சமமானவர்கள் என்ற கோட்பட்டை தகர்த்துவிடுகின்றதென்பதினால் அதனைக் கடுமையாக சமதர்மவாதிகள் எதிர்த்துக் கருத்துக்களை முன்வைத்தனர்.
சமசமாஜ கட்சித் தலைவர் கலாநிதி என்.எம்.பெரேரா இச்சட்டம் "முழுமையான வகுப்புவாத நோக்கம் கொண்டது" எனவும், "கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகில் உள்ள வேறான ஒரு தனிச்சாதியாக (சிங்களவர்களாகிய) எம்மைக் கற்பனை செய்வ தனை அனுமதிக்க முடியாது. நாம் மட்டும் இந்நாட்டின் பிரஜைகளாக இருக்கும் பேறுபெற்றவர்கள் ஒன்பது தவறு" எனவும் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம் கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா இச்சட்டத்தை "பிற்போக்குத்தனமானதா கவும், இனவாத நோக்கம் கொண்டது" எனவும் சாடினார்.
1954இல் தோற்றம் பெற்ற "ஜாதிக்ககுரு சங்கமய" மற்றும் "அகில இலங்கை பெளத்த சம்மேளனம்" போன்றவை "சிங்களம் அரச கரும மொழியாக்கப்பட வேண் டும்" எனக்கூறி நாடு பூராவும் பிரசாரங்களை முடுக்கிவிட்ட போதும், 1955 இல் ரீல ங்கா தந்திரக்கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆகியவை இக்கோரிக்கையினை முன்வைத்த போதும், 1956இல் இதனை மசோதவாக முன்வைத்த போதும் இடதுசாரியினர் மறுத்தும், எதிர்த்தும் கருத்துக்களை முன்வைத்தனர்.
"சிறுபான்மையினரை வலிந்து சிங்கள மொழியை ஏற்கும்படி நிர்பந்திப்பது இனக்கலவ ரத்திற்கு வழிவகுக்கும்" என கலாநிதி லெஸ்லி குணவர்த்தனா எடுத்துரைத்தார். கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா "ஒரு மொழி இரு நாடுகள்; இரு மொழிகள் ஒரு நாடு” எனச் சுட்டிக்காட்டினார். அதேவேளை பீற்றர் கெனமன், எஸ்.ஏ.விக்ரமசிங்கா போன்றோரும் தக்க காரணங்களை முன்வைத்து மொழிச்சட்டத்தினை கண்டித்தனர். இவ்வாறு ஆரம்பகாலத்தில் இடதுசாரியினர் கொண்டிருந்த சமதர்ம கோட்பாட்டுச் சிந்தனைகள் பிற்காலங்களில் தளம்மாறிச் சென்றுவிட்டதென்று கூறுமளவில் அவர்களின் போக்குகள் சிதைவடைந்துவிட்டதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளன.
இலங்கையில் - இடதுசாரிகளின் கொள்கைகள் கடந்த 1950களில் தடம்மாறத் தொடங்கியதாகக் கொள்ளப்படுகின்றது. சோசலிஷ ஆட்சியினை இங்கு இடம்பெறச் செய்வதற்குப் பாராளுமன்ற உறுப்புரிமையை தேர்ந்தெடுத்துக் கொண்ட இவர்கள், தமது கொள்கைகளை கைகழுவிவிட்டுவிட்டுத்தான் நாடாளுமன்ற ஆசனங்களைக் குறியெனக் கொண்டு தொழிற்படத் தொடங்கினரெனலாம்.
இதனால் பொதுவுடைமைவாதிகள் கொண்டிருந்த அல்லது ஏற்றிருந்த கோட்பாடு களுக்கு நேர்முரணான போக்குகளை தமதாக்கிக் கொள்ளவேண்டி கட்டாயத் தேவைக குளும், நிர்பந்தங்களும் இடதுசாரியினர்களைக் கவ்விப்பிடிக்கத் தொடங்கிவிட்டது. இதனா ல் பின்வரும் கோணங்களில் கொள்கைப் பிறழ்வுகள் படியத் தொடங்கியதென ஆய்வாள ர்கள் கருதுகின்றனர்,
இனம்மதம், மொழிவாதங்களை முன்னெடுத்துச் செல்லவும், இவர்களின் ஏணிப்படியா கவிருந்த தொழிலாளர்வர்க்கத்திற்கு துரோகமிழைக்கும் பாங்கிலும் தங்களது நோக்கி னை மாற்றிக்கொண்டு செயற்படத் தொடங்கிவிட்டனர். இதற்குச் சில உதாரணங்களாகப் பின்வருவனவைகளைக் கொள்ளலாம்.
1956இல் பிலிப் குணவர்த்தனா றிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டதுடன் இடதுசாரியினர் கொள்கை மாற்றப் பிறழ்வு ஆரம்பமாகின்றது. இவர் தனிச்சிங்களமொழி மசோதாவை ஆதரித்துக் கொண்டதன் மூலம் இவர் ஒரு பேரினவாதியாகவும் தன்னை அடையாளப்படுத்த வழிவகுத்தார்,
1980களில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் போதிய ஆசனங்களை வெற்றிகொள்ள முடியாமைக்கு "தாங்கள் பின்பற்றிய சிறுபான்மை இனங்கள் சார்பான நிலைப்பாடே காரணம்" எனக் கூறி சமவுடமையினர் மனவேதனைப்பட்டதுண்டு
பிளவுபட்டிருந்த இடதுசாரியினர் 1963இல் ஒன்றிணைந்து "ஐக்கிய முன்னணி" என்ற அமைப்பினை உருவாக்கினர், சோசலிஷ சமுதாயக் கொள்கையினை வலியுறுத் தவும், அதனை அடைவதற்குமென இவ்வமிைப்பு உருவாக்கப்பட்ட போதிலும் அதன் இலக்கை அடைவதற்கு முன்னரே ஐக்கிய முன்னணி பிளவுகண்டது. இதற்கு
9:D .எம்.எம்.எம்நூறுல்ஹக்

Page 58
இடதுசாரியினர் றிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணங்கிச் சென்றதும், அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டதென்பதும் பகிரங்கமானது.
கடந்த 1965இல் உருவான ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்திற்கு ஆதரவு வழங்கியது மட்டுமன்றி, இந்தியா வம்சாவளியினர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதையும் இடதுசாரியினர் சரிகண்டனர். சமசமாஜ கட்சியின் பத்திரிகையான "ஜனதின" இதுபற்றி எழுதும் போது, "சிங்கள பெளத்தர்களே எழுக! வடக்கிலுள்ள சிங்களவர்களுக்கு ஆபத்து, டட்லி-செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறி" என எழுதியமை ஈண்டு குறிப்பிடத் தககது.
1965இல் அரசின் மொழி பற்றிய கொள்கையினை அமுல்படுத்தும் பொறுப்பு இடதுசாரித் தலைவரும், நிதியமைச்சருமான கலாநிதி என்.எம்.பெரேராவிடம் ஒப்படைக் கப்பட்டது. 1970 இல் ஆட்சிக்கு வந்த மக்கள் ஐக்கிய முன்னணியில் இடதுசாரியினர் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். இவ்வரசாங்கம் புதிய அரசியலமைப்பினை வரையும் பொறுப்பினை இடதுசாரித் தலைவரும், அரசியலமைப்பு விவகார அமைச்ச ருமான கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வாவிடம் ஒப்படைத்தது. இதனால் "சோசலிஷம்" நிலை கொள்ளும் வகையில் யாப்பு திட்டப்பபடும்ென இடதுசாரியினர் உட்பட பெரும்பா லானவர்கள் எதிர்பார்த்திருந்த போதிலும் பேரினவாதத்திற்குத் துணை போகும் வகையில் யாப்பினை அவர் வரைந்து முடித்தார் என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.
1972இல் தோட்டத் தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகளை கொல்வின் ஆர்.டி.சில்வா மிகத் தூசியாக மதித்து மிதித்தார். "உலகில் எங்காவது தோட்டத் தொழிலாளருக்கு மாதச் சம்பளம் வழங்கப்படுகின்றதா?" என்ற ஏளன வினாவை எழுப்பி இதனைப் புறக்கணித்தார்.
1972 இல் மேற்கொள்ளுப்பட்ட வங்கிஊழியர்களின் தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டம் மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் அங்கத்துவம் ரீே தொழிற்சங்க மேதையான என்.எம்.பெரேராவால் முறியடிக்கப்பட்ட்து.
1992 இல் ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் தோற்றுவிக்கப்பட்ட பொ.ஐ. முன்னணியில் ஓர் அங்கமாக இடதுசாரியினர் இணைந்து கொண்டனர். 1994இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்த ஆசனங்களைப் பற்றி, பொ.ஐ.முன்னணியின் ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் உறுதுணையாக இருந்து வருகின்றன.
இதன் மூலம் முதலாளித்துவப் பொருளாதாரக் கோட்பாடு, பல்தேசியக் கம்பனிகளின் ஊடுருவல், தாராள இறக்குமதி, அரச கூட்டுத்தாபனங்கள் தனியார் உரிமையாக்கப் படுதல் போன்ற நடைமுறையினைக் கடைப்பிடிக்கும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் போக்கை ஏற்றுக் கொண்டனர். பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாளித்துவத்தை மட்டும் எதிர்ப்பதானது ஒரு கேலிக் கூத்தான விடயமாகும்.
இடதுசாரிக் கொள்கைகளில் மிகத் தீவிரவாதப் போக்கினைக் கொண்டிருந்த ஜே.வி.பி யினர்களும் இன்று தங்களின் கொள்கை முன்னோர்களைப் பின்பற்றி அதிாவது இடது சாரிக் கொள்கைச் சறுக்குகளில் இவர்களும் உடன்பட்டுக் கொண்டனர் என்பதனை இவர்களின் அண்மைக்காலப் போக்குகள் நிதர்சனமாக்குகின்றன.
நாட்டில் காணப்படும் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக கொண்டுவர உத்தேசிக்கப்பட்ட பொதியை 1997 இல் கண்டித்து "நாடு எங்கே செல்கிறது" என்ற தொனிப் பொருளில் பிரசாரங்களை மேற்கொண்ட்மை, அதிகாரப் பரவலாக்க்த்திற்கு எதிராகப் பாரிய சிட்டங் களை நடாத்தியமை, கடந்த பதினோராவது நாடாளுமன்றத் தோத்லிற்கான தங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்துடன் சென்று பெளத்த குருமார்களின் ஆசியைப் பெற்றமை, அண்மைய அரசியல் நெருக்கடியின் போதும் பெளத்த மதகுருமார்களின் ஆதரவையும், ஆலோசனைகளையும் உள்வாங்கிக் கொண்டமை.
இப்படி எத்தனையோ விடயங்களில் முரண்பட்டு ஜே.வி.பி. யினர் காணப்படுகின்றனர். இவைகளைக் கூட்டு மொத்தமாக நோக்கின் இடதுசாரிக் கொள்கைகள் இந்நாட்டில் முழுமையாக அங்கீகரிக்கப்படாத ஒன்றாகவும், சமவுடமையினை முழுமையாக நிலைப்ப டுத்துவதில் கொள்கைப்பிடிமானம் கொண்டோர் நிலைப் பேறாக இருந்து வரவில்லை என்பதனையும் சுட்டிக்காட்டுகின்றது.
ரீறி இடி கொழும தழைச சங்கீல்.இ.
சிறுபாணர்மையினர் சில அவதானங்கள்
 


Page 59
மது நாட்டின் தேசியப்
சஞ்சி பான்மையினர் பிரச்சினைகளை கம் செய்து வரும் நூறுல்ஹக்க முடியாத வரலாற்றுப் பதிவேடு
சமூகமும், அரசியலும் சார்ந் யான புள்ளிவிபரத் தரவுகளைக் பதால் மற்றைய அரசியல் கட் பெரிதும் வேறுபடுகிறார்.
1998இல் வெளியான இவரது அரசியல் சார்ந்த நூல் அறிவு கழக மட்டங்களிலும், ஊடகத்து ஈர்ப்புக்கு உட்பட்டதொன்றாகு
விமர்சன ரீதியான நியாயத் ளுக்கிடையிலும் நூறுல் ஹக்கின் கொண்ட எழுத்துக்கள் வரவேற ரின் எழுத்தாளுமைக்கு இன்னெ
1983 'அல்ஹ'தா' காலாண்டி இதழ்,1988 ' வலிமார்களும் வ6 றவையும் மற்றும் 1993 இல் மலர், 1996இல் ' தெரிந்த வி 1998இல் ' தீவும் தீர்வுகளும்’ இவரது சமய, இலக்கிய, அரச யமிக்க பங்களிப்புக்களாகும்.
Diploma in Mass Media60) உதயம், சங்கமம் ஆகிய வா ஆசிரி யராகக் கட்மையாற்றிய மர்ஹம் அல் ஹாஜ் மெளல (பஹற்ஜி) என்ற இவரது அருடை வந்த சமூக, இலக்கியம், அரசி இயற்கைப் பின்னணியாக அமை களை மேலும் செம்மைப்படுத்த பிடத்தக்கது.
ஏ.எம
** -9JA MATA aFTLü gö4 8. OS
ISBN 955
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பத்திரிகைகளிலும், வார கைகளிலும் இலங்கைச் சிறு மையப்படுத்தி எழுத்துருவாக் கின் ஆக்கங்கள் புறக்கணிக்க களாகும்.
த பொருள் கோடலை தேவை கொண்டு இவர் முன்வைப் டுரை ஆய்வாளர்களிலிருந்து
தீவும் தீர்வுகளும்’ என்ற
ஜீவிகள் மற்றும் பல்கலைக் றைகளிலும் அதிகரித்த கவன
D.
தன்மைகளை விரும்பாதவர்க திடமானதும், தீர்க்கமானதும் ) புக்குரியதாக இருப்பது இவ னாரு சான்றாகும்.
தழ், 1984 'சோலை’ கவிதை nலாத் தேடல்களும்’ போன் இரு பெருநாட்களின் சிறப்பு டைகளுக்கான கேள்விகள்”, ஆய்வு நூல் என்பவையும் சியல் துறைகளின் ஆரோக்கி
வ பயின்ற இவர் பார்வை, ரப் பத்திரிகைகளில் உதவி
வருமாவார்.
வி ஐ.எல். முஹம்மது முத்து மத் தந்தையார் மேற்கொண்டு பல் பணிகள் நூறுல்ஹக்கிற்கு ந்ததானது, இவரது எழுத்துக் உதவியது என்பதும் குறிப்
எம். ஜாபிர் (பீ.ஏ.)
ாளர்,
பீல்கள்’ கவிதா வட்டம்
தமருத - 05
2 Ο Ο2
3105-01-5