கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தலைமைத்துவ ரகஸ்யங்கள்

Page 1


Page 2

一、9、○○、○°、ダー。 அல்ஹாஜ் எம்.எச்.எம். அஷ்ரஃப் L.M.C. MP நீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் துறைமுகங்கள் அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சர்.

Page 3

தலைமைத்துவ ரகஸ்யங்கள்
தலைவர் நினைவுகள்
பாகம் 1
அல்ஹாஜ் அப்துல் மஜீத் ஆலிம்
புதிய வெளிச்சங்கள்
வெளியீடு 2

Page 4

bFLDrift fü Li6OOTLib
இந்த நூல் நாயகனைப் பெற்றுத் தந்த
கலமுனை மர்ஹம் மீராலெப்பை போடியார் முஹம்மது ஹ"ஸைன் அவர்களுக்கும்
சம்மாந்துறை உமர் லெப்பை மரிக்கார் மதீனா உம்மாவுக்கும்
இப்பணி என் சமர்ப்பணம்.

Page 5
Title
Author
Editor
Publisher
Printer
First Edition :
Copyright
Price
Thalaimaithuwa Rahasyangal (Secrets of Leadership)
Alhaj Abdul Majeed Alim
Alhaj S.H.M. Jameel
Puthiya Velichchankal Publications 56, Vauxhall Lane
Colombo - O2
Sri Lanka
Crecent Publications (Pvt) Ltd. 119, Justice Akbar MaWatha
Colombo - 02
1998 May 23
C) author
RS. 100/-

முன்னுரை
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
"தலைவர் நினைவுகள்’ என்ற இந்த நூலின் தலைப்பு நானாகத் தெரிவு செய்துகொண்டதல்ல. இந்தத் தலைப்பு எப்படி வந்தது; இந்த நூல் ஏன் எழுதப்பட்டது? என்ற விடயத்துக்கு இப்பொழுது நான் வருகிறேன்.
1997 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் நாட்டில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. அந்தத் தேர்தல் சுற்றுப் பிரயாணத்தில் தலைவரவர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். ஆனால், நான் ஆரம்பக் கட்டத்தில் அந்தப் பிரசாரங்களில் கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே இரண்டு வருடங்களாக நான் அரசியலில் ஈடுபடாமல், சொந்தத் தொழில் செய்துகொண்டு, ஓய்வு நேரம் முழுவதையும் இறைவணக்கத்தில் கடுமையாக ஈடுபடுத்தி வந்தேன்.
எனக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைக்குமென்றால், நான் செய்யும்
வேலை, அந்த ஓய்வு நேரத்தில் இறைவணக்கத்தில் தனித்து விடுவேன்.
அது பல மணி நேரங்களாகவும், நாட்களாகவும், மாதங்களாகவும், வருடங்களாகவும் ஆகிவிடும். அதற்கு வரையறையே இருக்காது.
நூறு கோடிதிக்ருகள் என்று ஒரு பட்டியலைப் போட்டுக்கொண்டு அதிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இருபத்தி நான்கு லட்சம் தவ்பாக்கள் செய்ய வேண்டுமென்று, அப்படியொரு வழியில் சென்று கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் ஆயிரம் தடவை புனித குர்ஆன் ஷரீபை ஒதி முடித்து விட வேண்டுமென்று இரவு பகலாக அதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். வாழ்நாளில் கோடிக்கு மேற்பட்ட சலவாத்துகள் சொல்லிவிட வேண்டுமென்று அதில் முயன்று கொண்டிருக்கிறேன். இவை நானே எனக்கு அமைத்துக் கொண்ட வேலைப் பட்டியலாகும். இதனால் எனக்கு ஓய்வு என்பதே

Page 6
இல்லை. பலருடைய பார்வைக்கு நான் சும்மா இருப்பது போன்று தெரிந்தாலும் எனது நிகழ்ச்சி நிரலில் நான் மிகவும் 'பிஸி’யாக இருக்கிறேன். இடைக்கிடையே கனவிலே பெரியார்கள் தோன்றி எனக்கு உற்சாகமளிப்பதும் வழக்கமாகி விட்டது.
கெளரவ தலைவரவர்கள் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தபொழுது, இடையில் ஒருநாள் எனது தம்பி ஓடிக்கொண்டு வந்தார். அவர் ஆரம்பத்தில் எனது மெய்ப்பாதுகாவலராக இருந்தவர். தற்பொழுது கெளரவ தலைவரவர்களுடைய பாதுகாப்பு ஊழியராக தன் வாழ்வை ஈடுபடுத்திக் கொண்டுவிட்டார்.
அவர் என்னுடன் நேருக்கு நேர் நின்று எதையும் பேசமாட்டார். வீட்டில் என் மனைவியிடம் தான் வந்து அனைத்தையும் குணு குணு என்று முறையிடுவார்.
மனைவி வந்து என்னிடம் சொன்னார்: “அந்தா மச்சான் வந்து குசினிக்குள் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்” என்றார்.
நான் என்ன என்று கேட்டேன். மனைவி சொல்லத் துவங்கினார்.
“சேர் ஏசுறாங்களாம்! நீங்க இந்த இக்கட்டான நிலைமையில வீட்டுல படுத்துக் கிடக்கிறீங்களாம். தேர்தல் பிரசாரம் நடக்குறது தெரியாதாமா?”
இப்படி மனைவி சொல்லிக் கொண்டே போனார். அப்பொழுதுதான்
எனக்கு ஒரு உணர்வு வந்தது. எழுந்து அங்குமிங்கும் நடமாடத் துவங்கினேன். எனக்குப் பழைய நாட்கள் நினைவுக்கு வந்தன.
கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து எத்தனை தேர்தல்களுக்கு முகம் கொடுத்து விட்டோம்.
தேர்தல் என்ற ஒன்று வந்துவிட்டால் தலைவரவர்களுடன் தோளோடு தோள் நின்று, பின்தொடர்ந்து ஒடும் ஒரு குதிரையாக நான் இருந்து வந்துள்ளேன். எத்தனையோ பயங்கரமான களங்களை நாம் சந்தித்துள்ளோம். சமாளித்துள்ளோம். பிரசாரங்களில் பறந்து, பறந்து ஹெலிக்கொப்டர்களில் முழு நாட்டையும் ஏக்கர் ஏக்கராக அளந்து விட்டோம். எந்த அளவுக்கென்றால், பைலட்டுக்குக் கூட வழிகாட்டும் அளவுக்கு நிபுணர்களாகி விட்டோம்.
ஒருநாள் கடும் தேர்தல் பிரசாரக் கூட்டம். மாலை நேரம்
6

காலியிலிருந்து ஹெலிக்கொப்டர் வேகமாகப் புறப்பட்டது. வெயாங்கொடைக்கு வந்து சேர வேண்டும்; அங்கு ஜனாதிபதியின் கூட்டம். அங்கு நான் தலைவரவர்களை இறக்கிவிட்டு, இன்னுமொரு கூட்டத்தில் தலைவரவர்கள் காரில் வரும் வரையில் உரையாற்றிக் கொண்டிருக்க வேண்டும்; இப்படியேற்பாடு.
சரியான களைப்பு. ஹெலியில் நாங்கள் தொழுகை, திக்ருகளை முடித்தோம். பிறகு கெளரவ தலைவரவர்களுக்குத் தூக்கம் வந்துவிட்டது. ஹெலி பறந்துகொண்டிருந்தது. நான் பூமியை நோட்டமிட்டேன். ஹெலி திசை மாறிச் செல்வதை உணர்ந்தேன். நிட்டம்புவையினூடாக வெயாங்கொடையை அடைய வேண்டிய ஹெலி, வரக்காப்பொலையைத் தாண்டி குருநாகல் திசையில் சென்றுகொண்டிருந்தது. உடனே, பைலட்டுக்கு அறிவித்து, ஹெலியைத் திருப்பி விட்டேன். தலைவரவர்களுக்கு விழிப்பு வந்ததும், ஹெலி இறங்கத் தாமதித்த காரணத்தை அவர்கள் வினவியபொழுது, நான் நிலைமையை எடுத்துச் சொன்னேன்.
இந்த விடயம் தலைவரவர்களுக்கு நன்கு தெரியும். அதாவது, என்னிடம் அடிக்கடி விசாரித்துக் கொள்வார்கள். ஒரு ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு ஹெலி பறக்கும்பொழுது போய்ச் சேர எத்தனை நிமிடங்கள் எடுக்கும்? என்று தலைவரவர்கள் என்னிடம் தான் விசாரிப்பார்கள். நான் பெரிய நிபுணன் போன்று நிமிடங்களை அளந்து சொல்லி விடுவேன். எப்படியோ ஹெலியும் அந்த நிமிடத்திலேயே போய் இறங்கி விடும்; நானும் தப்பி விடுவேன். இப்படித்தான் அந்த நாட்கள் கடக்கும்.
வீட்டில் சிந்தனையில் நடமாடிக்கொண்டு, தலைவரவர்களுடன் கடந்து சென்ற, பசுமையான நாட்களை எண்ணிப் பார்த்தேன். மறுநாள் வெள்ளிக்கிழமை வேக்கந்தை ஜூம்ஆப் பள்ளிவாசலில் குத் பாப் பிரசங்கத்தை முடித்து விட்டு நேரடியாகத் தலைவரவர்களுடைய வாசஸ்தலத்தை அடைந்தேன். அத்துடன் அந்த பயங்கர சூறாவழிப் பயணத்தில் நானும் தலைவரவர்களுடன் இணைந்தேன். மறுபடியும் ஆகாயத்திலும், தரையிலும் பறந்தோம்; வெற்றிகரமாகத் தேர்தல் பிரசாரத்தை நடத்தி முடித்தோம்.
ஒருநாள் ஒரு கூட்டத்தில் வைத்து நான் உரையாற்றிக் கொண்டிருந்தபொழுது கட்சியினுடைய, கடந்தகால நினைவுகள் என்பேச்சில் வரத்துவங்கியது. நிரம்பியிருந்த மக்கள் மிகவும்

Page 7
ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தனர். தலைவரவர்களும் மிகவும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு காரிலே அடுத்த கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது, தலைவரவர்கள் பேச்சைத் தொடுத்தார்கள். கட்சியினுடைய ஆரம்பகால சரித்திரங்கள் பற்றி நான் பேசிய பேச்சுக்களை எடுத்து முன்வைத்தார்கள்.
இந்த விடயங்களெல்லாம் எழுத்துருவில் புத்தகமாக வரவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து, எழுதும் படி என்னைத் தூண்டினார்கள்.
பிறகு புத்தகத்தின் தலையங்கத்தைப் பற்றி நான் தலைவரவர்களிடமே கேட்டேன். தலைவரவர்களும் நான் பேசிய அடிப்படையை வைத்து, "தலைவர் நினைவுகள்” என்ற தலைப்பைத் தந்தார்கள். நான் அந்தத் தலைப்பை வைத்து எழுதத் துவங்கினேன்.
எனக்கு ஆச்சரியமாகி விட்டது. ஏனென்றால், அந்தத் தலைப்பு வாழ்நாளெல்லாம் தலைவரவர்களும், நானும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் காலமெல்லாம் எழுதிக் கொண்டே இருக்க வேண்டிய தலைப்பாகிவிட்டது.
இப்பொழுது, முதலாம் பாகத்தை சமர்ப்பிக்கின்றேன். இன்னும் அதிகமான விடயங்களை அடுத்த பாகங்களில் எழுத ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறேன்.
தலைவரவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்க இந்தப் பாகத்தை அவசரமாகவே எழுதி முடித்தேன். ஏனென்றால் நான் எழுதி முடியும் ஒவ்வொரு பைலையும் தலைவரவர்கள் ஆர்வத்துடன் வாசிக்கத் துவங்கியதுடன் என்னை உற்சாகப் படுத்தவும் துவங்கினார்கள். அதனால் இரவு பகலாக இரண்டு மாதங்கள் தொடர்ந்து எழுதினேன். கண்கள் மூடாமலேயே எத்தனையோ இரவுகள் விடிந்திருக்கின்றன.
களைப்பு அதிகரிக்கும் பொழுது, தொழுகையில் ஈடுபடுவேன். இப்படி தொழுவதும், எழுதுவதுமாக இரவு, பகல் இரண்டு மாதங்களை எந்த சிந்தனையுமில்லாமல் இதிலேயே கடத்தினேன்.
தலைவரவர்களுடைய வீட்டில் வைத்தும் அதிகமாக எழுதியிருக்கிறேன். ஒரு நாள் இரவு தலைவரவர்களுடைய வீட்டில் வைத்து, சுபுஹத் தொழுகைக்கு பாங்கு சொல்லும் வரையில்

எழுதிக் கொண்டிருந்தேன்.
ஜனாப் ஏ.எல்.எம். நயிம் இரவு முழுவதும் என்னுடன் விழித்து என்னை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார். அதிகாலை நான்கு மணியளவில் ஜனாப் நயிமைப் போய்த் தூங்கும்படி அன்புக் கட்டளையிட்டதன் பிறகுதான் அவர் போய்த் தலையை வைத்தார்.
இந்தப் புத்தகம் வேகமாக வெளியாகி, கட்சியின் வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையை உண்டாக்குவதற்கு, ஜனாப் நயிமுடைய உழைப்பு மிகவும் முக்கியமானதாக அமைந்துவிட்டதை நான் இங்கு நினைவு கூரவேண்டும்.
ஜனாப் நயிமைப் பற்றி இங்கு பல விடயங்கள் நான் குறிப்பிட வேண்டியுள்ளது. நயிமுடைய பதினாறாவது வயதிலேயே தலைவர் அவர்களிடம் நயீமை அவரது குடும்பத்தினர் ஒப்படைத்து விட்டனர். அன்றிலிருந்து இன்றுவரை நயிம் தலைவரவர்களுடனேயே இருந்து பணிபுரிந்து வருகிறார். தற்போது இலங்கையிலிருந்து வெளியாகும் தகவல் தொடர்புசாதனங்களின் பத்திரிகையாளராகவும், படப்பிடிப்பாளராகவும் கடமையாற்றி வருவதுடன் தலைவரவர்களது பத்திரிகை தொடர்புசாதன இணைப்புச் செயலாளராகவும் கடமையாற்றி வருகிறார்.
ஒருநாள் நான் தலைவரவர்களுடன் காரில் பிரயாணம் செய்துகொண்டிருந்தேன். அப்பொழுது எப்படியோ நயிமைப் பற்றிப் பேச்சு வந்தது; தலைவரவர்கள் என்னிடம் நயிமைப் பற்றி ஒரு பரிய வார்த்தையைச் சுருக்கமாகச் சொன்னார்கள்; அந்த வார்த்தையே போதும் நயிமை அளப்பதற்கு.
தலைவரவர்கள் சொன்னார்கள்; “ஹஸ்ரத் இந்த நயீம் கட்சிப் பணியென்றால் அதில் செத்து விடுவார்’ என்றார்கள். ஆம் அதற்கப்பால் சொல்ல வார்த்தையில்லை.
உண்மையில் நயீம் அன்பானவர்; பண்பானவர், பணிவானவர். எந்த நேரமும் சிரித்த முகத்துடன் கருமமே கண்ணாக இருந்து, இருபத்தி நான்கு மணித்தியாலமும் கட்சி கட்சியென்றே மூச்சு விட்டுக்கொண்டிருப்பவர்.
அவர் எட்டு மணித்தியால ஊழியரல்லர். தலைவரவர்களுடைய இருபத்தி நான்கு மணித்தியால ஊழியராக இருந்து,
தலைவரவர்களுடைய உயிர் நாடி போன்று ஆகிவிட்டார்.

Page 8
தலைவரவர்களுடைய உள்ளத்தில் நயிம் பெரிய இடத்தைப் பிடித்து விட்டார்.
தலைவரவர்களுடைய வீட்டிலேயே சகல வசதிகளுடனும் தங்கியிருக்கும் நயீம், எந்த நேரமும் தலைவரவர்களுடைய உத்தரவுகளை எதிர்பார்த்துக் கொண்டேயிருக்கும் ஜனாப் நயிம், தலைவரவர்கள் காலாலிட்ட வேலையைத் தலையால் செய்துகொண்டிருக்கும் ஒருவராக ஆகிவிட்டார்.
அவருடைய பெரிய உழைப்பில் இந்த நூல் வெளிவருவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
அத்துடன் இந்த நூலை வாசித்து ஆலோசனைகள் வழங்கிய முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கைபரப்புச் செயலாளருமான ஜனாப் பளிர் சேகுதாவூத் அவர்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகும்.
இந்த நூலிலிருந்த பிழைகளைத் திருத்தி பதிப்பாசிரியராகக் கடமை புரிந்த கலாசார, சமய அலுவல்கள் அமைச்சின் ஆலோசகர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களுக்கும் நன்றிகூற நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
அத்தோடு இந்த புத்தக அச்சுக்கோர்வையை நவீனமுறையில் கம்பியூட்டரில் அழகாக செய்து பதிப்பித்துத்தந்த கிரஸன்ட் அச்சக நிறுவனத்தினருக்கும், அதில் கணணிப் பிரிவில் கடமையாற்றும் எம்.ஆர்.எப். றிஸ்னியா, ஏ. பாத்திமா, எஸ். விஜயகுமாரி, எம். தியோஜினி, எஸ். பிரியதர்சினி, ப. கோகிலா ஆகியோருக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும்.
நன்றி,
அப்துல் மஜீத் ஆலிம்.
1 O

சிறப்புரை
அளவற்ற அருளாளன் அவன் பெயர் சொல்லி, நிகரற்ற அன்புடையோனை நினைந்து அகிலம் முழுவதற்கும் அருட் கொடையாய் வந்த அண்ணல் பெருமானாரின் அருள் மழையில் நனைந்து ஆரம்பிக்கின்றேன்.
பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை நாட்டில் எதையாவது சாதித்துள்ளதென்றால், அதை சாத்தியமாக்கக் காரணமாயிருந்தது ஒரு தனி இளைஞனின் உள்ளத்தில் ஏற்பட்ட உணர்வுகளும்; அந்த உணர்வுகளை விஷப்பரீட்சைக்கு உட்படுத்த முனைந்த அவனது அபாரத் துணிச்சலும்தான். அவ்விரண்டையும் அளவின்றி அருளிய இறைவனுக்கே அனைத்து புகழும் உரித்தாகட்டும்.
அந்த இளைஞனின் தலையில் எஞ்சியிருந்த கொஞ்ச முடியும் கூட காலத்தின் கழுவுதலால் வெள்ளையாகிக் கொண்டிருக்கின்றது. அவனைச் சுற்றி அங்குமிங்கும் கிடக்கும் அவனது புகைப்படங்களை காணும்போது அவனுக்கே அதிர்ச்சி ஏற்படுகின்றது. அவற்றில் இருப்பவர்கள் யார் என்று அடிக்கடி கேட்டுக் கொள்ளுகின்றான். அவற்றில் ஒன்றுகூட அவனாக இல்லை.
காலக்கோச்சியின் சக்கரங்கள் மிகவும் வேகமாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. அதோடு சேர்ந்து அந்த தனி மனித பயணத்தின் மூன்றில் இரண்டு பங்கும் முடிவடைந்து விட்டது. அவனது பயணம் வேறு. அவன் அவனது சமூகத்துக்கு காட்டிய அரசியல் பயணம் வேறு. அந்த இரண்டு பயணங்களும் பிரிக்க முடியாதவை. சமகால அரசியலில் அந்த இரண்டு பயணங்களும் ஒன்றேதான்.
வெகுவிரைவில் அல்லது நம்மால் நீட்ட முடியாமல் எஞ்சிக் கிடக்கும் இன்னும் சில வருடங்களுக்குள் அந்தத் தனி மனிதனின் பயணம் நிச்சயம் முடிவடைந்தே தீரும். அப்போதுதான் அவன்
11

Page 9
ஆரம்பித்து வைத்த அரசியல் எதிர்காலம் பற்றிய ஆயிரம் கேள்விகள் துள்ளிக்குதிக்கவுள்ளன.
அக்கேள்விகளுக்கு கிடைக்கும் சரியான பதில்கள் மாத்திரமே அப்பயணத்தின் எதிர்கால வெற்றிகளை தீர்மானிக்கும்.
அவனுக்குப் பின்னும் அந்தப் பயணத்தின் தண்டவாளங்கள் உறுதியாக அமைய வேண்டும். சரியான சாரதிகளும் இனம் காணப்படவேண்டும். காத்திருந்தவன் மணப்பெண்ணை நேற்று வந்தவன் கொண்டு போன கதையாக அந்த விடுதலைப் போராட்டம் திசை திரும்பி விடக்கூடாது. ஆகவேதான் அப்பயணத்தையும் அந்த போராட்டத்தையும் நெறிப்படுத்தும் வரலாற்றுப் பதிவுகள் அவசியமாகின்றன.
எதிர்காலப் போராளிகளின் நலன்களுக்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தனது நினைவுகளை எழுதி வைக்க வேண்டுமென்று எத்தனையோ தொண்டர்கள் கோரிக்கைகளை விடுத்துள்ளார்கள். அத்தகைய வேலைகளை இளைப்பாறும் பொழுதுகளில் மாத்திரமே மேற்கொள்ள முடியும். ஒய்வே இல்லாத ஒரு மனிதனுக்கு அதையும் செய்ய முடியுமா?
கடந்த உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அப்துல் மஜித் ஆலிம் அவர்கள் தலைவரோடு பல மேடைகளில் பேசிக் கொண்டும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டுமிருந்தார்.
அவரது பேச்சுக்களை கேட்டுக் கொண்டிருந்தபோது, அந்த மனிதன் தனது இயலாமைகளையும், தனது பலவீனங்களையும் உணரத் துவங்கினான். அவரது பேச்சில் குறிப்பிட்ட எத்தனையோ விடயங்களை அவன் ஏற்கனவே மறந்திருந்தான். பேசுகின்ற போதுதான் எங்கோ தூரத்திலிருந்து அந்த நினைவுகள் மீண்டும் பசுமையாக அவனது மனத்திலே நிழலாடத் துவங்கின.
அத்தகைய சூழலிலேதான் அப்துல் மஜீத் ஆலிம் அவர்களுக்கு எல்லா வேலைகளையும் விட்டு விட்டு உடனடியாக உங்கள் நினைவுகள் எல்லாவற்றையும் எழுதி முடியுங்கள் என்ற அன்புக் கட்டளை விடுக்கப்பட்டது. அப்பணியை அவர் அழகாக செய்து முடித்துள்ளார். இப்பணி, தலைவரோடு அப்துல் மஜீத் ஆலிம் அவர்களை விடவும் கூடுதலான காலம் பழகியவர்களையும்
12

தூண்டிவிடுமென்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. முஸ்லிம் காங்கிரஸின் முன்னணிப் போராளிகள் எல்லோரும் இவ்வாறு தம் நினைவுகளை தலைவரின் சீவிய காலத்திலேயே பதிவு செய்து கொள்ள முடியுமாயின் அதுதான் அவர்கள் இக்கட்சியின் பாதையில் செய்யும் மிகப்பெரும் பங்களிப்பாக அமையும்.
பதினாறு வயதுச் சிறுவனாக தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது தினமும் ஆயிரம் ஏச்சுக்களுக்கும், தலைவரின் சினத்துக்கும் ஆளாகியும் கூட, தலைவரின் கோபத்தை தனது உற்சாக வண்டிக்கு எரிபொருளாக பாவித்து தன்னையும் இச்சமூகத்தின் விடிவுப் பாதையில் எரித்துக் கொண்டிருக்கும் சகோதரர் ஏ.எல்.எம். நயிம் இல்லாமல் இந்த நூல் உங்கள் கைகளில் இன்று தவழமாட்டாது.
தலைவர் நினைவுகளின் அடுத்தடுத்த பாகங்களையும் விரைவில் நமக்குத் தந்திட அப்துல் மஜீது ஆலிம் அவர்களுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக!
அல்ஹம்துலில்லாஹ்!
எம்.எச்.எம். அவுரட்ட், பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும், துறைமுக அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியும்.
13

Page 10
பதிப்புரை
1995 ஆம் ஆண்டு புனித ஹஜ்ஜின் போது, மக்காவிலுள்ள அல்றாஜி கட்டிடத்தில் அப்துல் மஜித் ஆலிம் அவர்களும் நானும் ஒரே அறையில் தங்கியிருந்த வேளையில் ஏராளமான கருத்துப் பரிமாறல்களை மேற்கொண்டோம். அதற்கு முன்னர் நாமிருவரும் ஆளுக்காள் அறிமுகமானவராயினும், இரு வார காலங்களுக்கு மேல் ஒரே அறையிற் தங்கியிருந்தமை கருத்தியல் நெருக்கத்தை ஏற்படுத்தியது. பல விடயங்களில் ஒத்துப்போனோம். இன்று அதே அப்துல் மஜீத் ஆலிம் அவர்களுடைய “தலைமைத்துவ ரகஸ்யங்கள்” எனும் இந்நூலுக்குப் பதிப்புரை எழுதக் கிடைத்தமை மகிழ்ச்சியைத் தருகிறது.
சமூகத் தலைமைத்துவம் தானாகக் கிடைப்பதுமல்ல, சடுதியாக வருவதுமல்ல. இளமைப்பருவத்திலிருந்தே ஒரு மனிதனின் வாழ்வு முறையில் தலைமைத்துவப் பண்புகள் தென்படுதல் வேண்டும். சமூகப் பற்று, தேசப் பற்று, மனிதநேயம் என்பன அக்காலகட்டத்திலேயே முளைவிட்டு வளர்தல் அவசியமாகும். காலக்கிரமத்தில் அவற்றிலான பூரண ஈடுபாடு, தியாகம், துணிச்சல் என்பன ஒரு இலக்கை நோக்கி நகரத்தொடங்கியதும் மக்கள் அத்தலைமைத்துவத்தை ஏற்று ஆதரவும் வழங்குகின்றனர்.
இத்தகைய பண்பினை இந்நூலுடைத் தலைவரிற் காண்கிறோம். பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவராக முகிழ்த்து ஒர் அரசாங்கம் அமைக்கப்படுவதையே நிர்ணயித்து, பலம் பொருந்திய அமைச்சராய் விளங்கும் மாண்புமிகு எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் சிறப்புமிக்க பாரம்பரியக் குடும்பப் பின்னணியைக் கொண்டவர்; பத்து வயதிலேயே சமுதாயப் பிரக்ஞைக் கவிதைகளை யாத்தவர் பள்ளிப் பருவத்திலேயே தலைமைத்துவப் பயிற்சி பெற்றவர். பதினெட்டு வயதிலேயே சமய, சமூக நடவடிக்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டுழைக்க ஆரம்பித்தவர். இன்று இலங்கை முஸ்லிம்களின் தனித்துவத்தைச் சர்வதேச ரீதியிலும் நிலைநாட்டிக்
14

கொண்டிருப்பவர். அதனால் அவரது தலைமைத்துவப் பண்புகள் பதிவு செய்யப்பட வேண்டியவையே.
இன்றைய உலகாயத அமைப்பில் அதிகாரம்’ என்பது அரசியலை மையமாகக் கொண்டுள்ளது. கல்வி, அறிவு, செல்வம், நற்பண்பு யாவும் அதனுள்ளே அடக்கமாகி விடுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் தனிமனித ஆளும்ைகளின் மூலமோ தனிமனித செல்வந்த நிலைகளின் மூலமோ மாத்திரம் ஒரு சமூகத்தின் முன்னேற்றம் சாத்தியமாகாது. சமுதாயத்தின் கூட்டு மொத்தமான அரசியல் தனித்துவத்தின் மூலமே மாத்திரம் அது சாத்தியமாகும்.
இலங்கை முஸ்லிம்களின் இத்தகைய தனித்துவத்தை மிளிரச் செய்ததில் இந்நூலுடைத் தலைவருக்கும் கிழக்கிலங்கைக்கும் முக்கிய பங்குண்டு. -
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சட்டவாக்க சபை நடைமுறையிலிருந்த பொழுது இலங்கை மண்ணிற் பிறந்த அதன் முதலாவது முஸ்லிம் அங்கத்தினர் 1899இல் நியமிக்கப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த புறக்டர் கே.எம். ஷெரீப் அவர்களாவார். அதே போன்று 1931இல் சட்டசபை ஏற்படுத்தப்பட்டதும் அச்சபையின் தெரிவு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் அங்கத்தவரையும் இந்நாட்டின் முதல் முஸ்லிம் அமைச்சரையும் மட்டக்களப்புத் தெற்குத் தொகுதியே வழங்கியது. முதலாவது முஸ்லிம் கட்சியை உருவாக்கியவர், 1960 ஜூலை தேர்தலில் கல்முனைத் தொகுதியில் அகில இலங்கை இஸ்லாமிய ஐக்கிய முன்னணியில் உதய சூரியன் சின்னத்திற் போட்டியிட்ட கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பர் அவர்களாவார். இஸ்லாமிய சோஷலிஸ் முன்னணி எழுச்சியின் பிரதிப்பலிப்பாக ஒரு பாராளுமன்ற அங்கத்தினரை பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தந்ததுவும் கல்முனைத் தொகுதியேயாகும். 1976 இல் முஸ்லிம் ஐக்கிய முன்னணியும் அங்குதான் தோன்றியது.
முஸ்லிம் அரசியல் தனித்துவம் பற்றி அடிக்கடி வெளிப்பாடுகள் தோன்றிய போதும்கூட அதன் உச்சக்கட்டமாக பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1981ல் காத்தான்குடியில் முகிழ்த்தது. இதுவரை நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களின் தனித்துவத்தை நிலைநாட்டியுள்ளது.
முஸ்லிம் ஐக்கிய முன்னணியின் முக்கியஸ்தராயிருந்து அதனைத் தொடர்ந்து பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தாபித்த
15

Page 11
துணிச்சல்காரரின் தலைமைத்துவப் பண்புகள் இங்கு பதிவாகின்றன.
காலாதி காலமாக இந்நாட்டிலிருந்து வந்த முஸ்லிம் தலைமைத்துவப் பீடம் தனது இடம் மாறுவதன் பிரதிபலிப்பாகவும் இந்நூலினைக் கொள்ளலாம். வர்த்தகர்களாக இலங்கையிற் குடியேறிய முஸ்லிம்கள் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வர்த்தக சமூகமாகவே தம்மை அடையாளப்படுத்திக் கொண்டனர். அதனால் தலைமைத்துவமும் அவ்வர்க்கத்தினரிடையேயிருந்து மேலெழும்பியதும் இயல்பே.
ஆனால் கடந்த அரை நூற்றாண்டு காலத்துள் எமது சமூகம் வர்த்தகர்’ எனும் நிலையிலிருந்து மீட்சி பெற்று, 'படித்தோர்’ எனும் சகாப்தத்துள் நடைபோடுவதைக் காண்கிறோம். பட்டதாரிகள், சட்டத்தரணிகள், மருத்துவர், பொறியியலாளர், வங்கியாளர், அரச அலுவலர் எனப் பெருந்தொகையானோர் ஒவ்வொரு பிரதேசத்திலும் இன்றுளர். 1964 இலிருந்து அம்பாறை மாவட்டத்திலிருந்து மட்டும் 2500 பேர் பல்கலைக்கழகம் சென்றுள்ளனர். எனவே வர்த்தகர்கள் எமது சமூகத்துக்கு தலைமைத்துவத்தை வழங்கிய நிலைமாறி படித்தோர் தலைமைத்துவம் மேலோங்குதல் இயல்பே. அதுவே ஆரோக்கியமான சமுதாய மேம்பாட்டுக்கான சான்றுமாகும்.
இவ்வாறான தலைமைத்துவத்தின் தலைமகனாக இன்று திகழும் ஒருவரின் தலைமைத்துவப் பண்புகளை அப்துல் மஜீத் ஆலிம் அவர்கள் வருங்காலச் சந்ததியினருக்குப் பதிவாக்குதல் வரலாற்றாய்வியற்றுறையில் மிக உபயாகமானவொரு பணியாகும். இன்றைய நிகழ்ச்சிகள் நாளைய வரலாறுகளாகும். அவை எழுத்துருப் பெறும் பொழுதே நிரந்தரத்துவம் பெறுகின்றன.
இதற்குச் சிறந்தவொரு உதாரணத்தைக் குறிப்பிடலாம். இலங்கை வரலாற்றின் ஊற்றாகத் திகழ்வது மகாவம்சம் எனும் நூலாகும். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் மகாவிகாரையைச் சேர்ந்த மகாநாம எனும் பிக்குவினால் பாளி மொழியில் எழுதப்பட்ட இந்நூல் 1826 ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆய்வாளரினால் வெளிக்கொணரப்படும் வரை தேவாலய நூலகமொன்றில் தேடுவாரற்றுக் கிடந்தது. 1837 96d Ggt sig Gyff60Iff (George Turnour) 616Old Fl6)flod Gef 6006) அதிகாரி அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பின்னரே, வெளியுலகுக்குத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வில்லியம்
16

கெய்கர் என்போரது மொழிபெயர்ப்பு 1908 இல் வெளிவந்தது. பின்னர் குருகே, ஜி.ஸி மென்டிஸ் என்போரது விளக்கவுரைகள் அதற்கு மெருகூட்டின. இலங்கையின் 2500 ஆண்டு கால வரலாறு இதனடியொற்றி உருவானது. அகழ்வாராய்ச்சிகளும் துணை புரிந்தன. ஆகவே மகாவம்சம் எனும் ஏடு விட்டுச் செல்லப்பட்ட காரணத்தினாலேயே ஒரு நாட்டின் வரலாறே வளம் பெருகிறது. எனவேதான் எதுவும் எழுத்தில் விட்டுச் செல்லப்படல் வேண்டும்.
இந்த ரீதியில் அப்துல் மஜீத் ஆலிம் அவர்கள் தொடர் பணியொன்றை ஆரம்பித்து வைத்துள்ளார். தலைவர் நினைவுகள் என்பது அவருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. இன்னும் பலர் அதிற் பசுமையுடைவர்களாயிருக்கலாம். அவர்களும் இப்பணியைத் தொடர்தலும், அப்துல் மஜித் ஆலிம் அவர்களின் விரித்தலும் எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்நூல் வெளிவருவதில் இரவு பகலென்று பாராது அரும்பாடுபட்டவர் ஏ.எல்.எம். நயீம் அவர்களாவார். பல வருடங்கள் தலைவரோடு சேர்ந்து பணிபுரியும் நிந்தவூரைச் சேர்ந்த நயீம் இத்தகைய பணிகளில் ஈடுபடுதல் மகிழ்ச்சியைத் தருகின்றது.
மாணவப் பருவத்திலிருந்தே அதிலும் குறிப்பாக பேராதனைப் பல்கலைக்கழகக் காலத்திலிருந்து நூல் வெளியீட்டுத்துறையிலும் பதிப்பித்தலும் ஈடுபாடு கொண்ட எனக்கு, இந்நூலைப் பதிப்பிக்கக் கிடைத்தமை சந்தோஷத்தைத் தருகின்றது.
இந்த நூலுக்கான அழகான அட்டைப் படத்தை தெரிவு செய்து உதவிய அமான் அஹ்மத் அஷ்ரஃப் அவர்களுக்கு எமது நன்றிகள்.
இத்தகைய நூல்கள் மேன்மேலும் வெளிவருதல் சமுதாயப் பயனுடைத்து.
அல்ஹம்துலில்லாஹ்!
எஸ்.எச்.எம். ஜெமீல்
17

Page 12
18

அப்துல் மஜீத் ஆலிம்
வெள்ளிக்கிழமை விரிந்த மொட்ரு
அது 1986 ஆம் ஆண்டு; நான் கொழும்பு மாநகரிலே மீரானியா ஜூம்ஆப் பள்ளிவாசலிலே பிரதம இமாமாக செயல்பட்டுக் கொண்டிருந்த காலம். ஒவ்வொரு நாளும் பல பிரசங்க மேடைகள்; பல்லாயிரக் கணக்கான மக்கள் கூட்டங்கள். நான் களைப்படைந்திருந்த காலம். இடையறாத கூட்டங்களும் நீண்ட பேச்சுக்களும். இரவு பகலாக நூற்றுக்கணக்கான மைல்கள் தினந்தோறும் அலைச்சல்,
இவற்றின் விளைவாக அடிக்கடி மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெறும் அளவுக்கு எனது உடல்நிலை பாதிப்படைந்து, பிறகு என் வயிற்றில் சத்திர சிகிச்சை மட்டும் நான்கு தடவைகள் செய்துள்ளேன் என்றால், என் உடல் நிலை பேச்சின் காரணமாக எவ்வளவு பாதிப்படைந்திருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கலாம்.
நான் சன்மார்க்கப் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும்பொழுது, அந்தக் காலகட்டத்தில் மக்கள் தங்கள் நிலை மறந்து, நேரம் போவதும் விளங்காமல், தேம்பித் தேம்பி அழுது கொண்டிருப்பர்; ஒலிப்பதிவு நாடாக்களை வைத்துக் கொண்டிருப்பர்.
இப்படிக் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த அந்த எண்பத்தி ஆறாவது ஆண்டின் ஒருநாள் கொழும்பு மீரானியா ஜும்ஆப் பள்ளிவாசலில் ஜும்ஆப் பிரசங்கம் நிகழ்த்தி தொழுகையை முடித்துவிட்டு, பிரதம டிரஸ்டி ஜனாப் மதனி ஹாஜியார் அவர்களுடன் அவருடைய காரில் அவருடைய வீட்டின் முன் சென்று இறங்கினோம். அன்று எனக்கு அங்கு விருந்து.
நான் காரிலிருந்து இறங்கிய அந்த சில வினாடிகளுக்குள்தான் அந்த ஆச்சரியமான நிகழ்ச்சி நடந்தது. காரிலிருந்து இறங்கிய எனக்கு மதனி ஹாஜியாருடைய வீட்டுக்குள் போவதற்கு ஐந்து வினாடிகள்தான் தேவை. அந்த ஐந்து வினாடிகள் நான் முந்தியிருந்தால் இந்த ஆச்சரிய நிகழ்ச்சி நடந்திருக்காது.
அல்லது பத்துப் பதினைந்து வினாடிகள் நாங்கள் பிந்தியிருந்தாலும் இந்த ஆச்சரிய நிகழ்ச்சி நடந்திருக்க முடியாது.
"அமிர்தயோகம் வெள்ளிக் கிழமை
356T66.....
அதற்குத்தானே காத்திருந்தேன் முன்னாளா.."
19

Page 13
தலைமைத்துவ ரகஸியங்கள்
இப்படி, ஒரு தமிழ்க் கவிதை; ஞானக் கவிதை, வெள்ளிக்கிழமை நாளின் இரகசியத்தை வெளியாக்கும் கவிதை. ஏன் நபி (ஸல்) அவர்கள் கூட வெள்ளிக்கிழமையின் மகத்துவத்தை எவ்வளவு சிறப்பாக சொல்லித் தந்திருக்கிறார்கள். ஏன் திருக்குர்ஆன்கூட அதன் சிறப்பைச் சொல்லும்பொழுது,
“தொழுகை முடிந்து விட்டால் நீங்கள் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் அருளில் நின்றும் தேடிக் கொள்ளுங்கள்" என்று அழகாகச் சொல்லித் தருகிறது. ஆம், வெள்ளிக்கிழமை நாளில் இப்படியொரு இரகசிய அதிர்ஷ்டம் நடமாடிக் கொண்டிருக்கும்; அது அடியார்களின் கையில் சிக்கிக்கொள்ளும். எனக்கும் அதுதான் நடந்தது.
ஜும்ஆவை முடித்த களைப்பு: விருந்து வீட்டின் முன் காரில் வந்து இறங்கி கதவை அடைத்த அடுத்த வினாடி "அஸ்ஸலாமு அலைக்கும். ஹஸ்ரத்!” என்ற ஒரு குரல். எனக்கு அதிகம் பழக்கப்படாத குரல். குரல் வந்த திசையில் வேகமாகத் திரும்பிப் பார்த்தேன்.
என் வாயிலிருந்து பதில் ஸலாம் என்னை அறியாமலே வெளிவந்து கொண்டிருந்தது. கம்பீரமான குரல்; உறுதியான குரல். தன்னம்பிக்கை மிகுந்த வாட்ட சாட்டமான பரந்த குரல். அந்தத் தொனியின் காந்த சக்தி என் உள்ளத்தில் வேகமாக ஊடுருவிய நிலையில், "ஸலாம்” சொன்ன அந்த உருவத்தையும் பார்க்கிறேன்.
என்னிலிருந்து ஒரு பத்து அடி தூரத்திலிருந்து, அந்த உருவம் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. குரலும், தோற்றமும் ஒன்றாகவே இருந்தது.
கம்பீரமான குரல்; உறுதியான தோற்றம். தன்னம்பிக்கை வாய்ந்த குரல்; தன்னம்பிக்கை மிகுந்த தோற்றம். கைகளை வீசிய வேகமான நடை. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்லாயிரம் மக்களுடன் பழகிக்கொண்டிருக்கும் நான், அந்த வினாடிகளில் வித்தியாசமான ஓர் உருவத்தைப் பார்க்கின்றேன். பூமியில் நடமாடும் மனித கோடிகளில் விரல் காட்டிப் பிரித்துவிடக் கூடிய வித்தியாசமான ஒரு மனித உருவத்தை நான் பார்க்கின்றேன்.
அந்த சில வினாடிகளுக்குள் நூற்றுக்கணக்கான விடயங்களை நான் கிரகித்து விட்டேன். களங்கமே இல்லாத அழகான புன்சிரிப்பு.
2O

அப்துல் மஜீத் ஆலிம்
அந்தப் புன்சிரிப்பிலே நம்பிக்கையினுடைய ரேகைகள்.
அந்தப் புன்சிரிப்பு யாரையும் ஏமாற்றும் சிரிப்பல்ல; ஒரு காரியத்தை சாதித்துக் கொள்ளும் சிரிப்புமல்ல. கெஞ்சிக் கேட்கும் சிரிப்புமல்ல. தன்னை ஏதோ ஒர் உருவத்தில் காட்டிக்கொள்ளும் சிரிப்புமல்ல. சோகச் சிரிப்புமல்ல.
அணைப்பில் பிறந்த இணைப்பு
இன்று உலகையே கவர்ந்து வசீகரித்து விட்ட அந்தப் புன்சிரிப்பில் அன்று நான் என்னையே மறந்தேன். கையிலிருந்த பைல் ஒன்றை கூட வந்தவரிடம் கொடுத்துவிட்டு, என் கைகளைப் பிடித்து "முஸாபஹா’ செய்து, என்னைக் கட்டித் தழுவியது அந்தப் புனித உருவம.
ஸலாமும், புன்சிரிப்பும், கட்டித் தழுவலும் என்னை ஓர் ஆச்சரியமான நிலைக்குக் கொண்டு வந்தது. அதுவரையில் நானும் பதில் ஸலாமும், புன்சிரிப்பும், மெளனமுமாக நின்று கொண்டிருந்தேன். என்னைக் கட்டித் தழுவிக்கொண்டே அந்தப் புனித உருவம்,
“ஹஸ்ரத்! உங்களோடு நான் பேச வேண்டும்; தனியாகக் கதைக்க வேண்டும். முக்கியமான விடயங்களை உங்களோடு பேச வேண்டியிருக்கிறது. இப்பொழுது, உங்களுடைய குத்பாப் பிரசங்கத்தைக் கேட்டுவிட்டுத்தான் நான் வந்துகொண்டிருக்கிறேன். உங்களோடு எனக்கு நிறைய வேலை இருக்கின்றது.’ இவ்வாறு வார்த்தைகளை வெளியாக்கிக் கொண்டே, என்னை ஒரு புதுவிதமான ஆர்வத்துடன் இறுக அணைத்தது அந்தப் புனித உருவம்.
இவ்வளவு விடயங்களும் ஒரு பதினைந்து வினாடிக்குள் நடந்து முடிந்துவிட்டன. காரிலிருந்து இறங்கிய மதனி ஹாஜியார், எங்களுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு புன்முறுவலுடன் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மேற்கொண்டு எதுவும் பேசவுமில்லை. பேசுவதற்கு எதுவும் இருக்கவுமில்லை. என்னைக் கட்டித் தழுவிய அந்த உருவமோ, என்னைத் தழுவும்போது, ஏதோ ஒரு பெரிய ஒப்பந்தமொன்று நடைபெறுவது போன்று எனக்கிருந்தது.
“பிறகு பேசுவோம் ஹஸ்ரத்” என்று அன்பாகக் கூறிக்கொண்டு என்னிலிருந்து விடை பெற்றுக்கொண்டு, எனக்கு அறிமுகமில்லாத
21

Page 14
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
அந்த உருவம் நீதிமன்றக் கட்டடங்களை நோக்கி நடந்து கொண்டிருந்தது. துணையாக இன்னுமொருவர் சென்று கொண்டிருந்தார்.
நான் மதனி ஹாஜியாருடன் வீட்டுக்குள் நடந்துகொண்டே, ஆர்வமாக அது யார் என்று கேட்டேன். அவரும் சிரித்துக்கொண்டே என்னிடம், "அவர் ஒரு சட்டத்தரணி, அவர் பெயர் ஜனாப் அஷ்ரஃப். நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறார். ஜும்ஆத் தொழுகைக்கு எங்கள் பள்ளிவாசலுக்குத்தான் வருவார்’ இப்படியாக விடயத்தை சொல்லிக்கொண்டே இருவரும் உள்ளே போய் அமர்ந்தோம்.
அதற்கப்பால் அவருடைய கவனம் வேறு திசையில் திரும்பியது. வேறு விடயங்கள் கதைக்கத் துவங்கினார். ஆனால் என்னுடைய சிந்தனை ஆழமாக வேலை செய்யத் தொடங்கியது. நடைபெற்ற அந்த நிகழ்ச்சியும் எனக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாகிவிட்டது.
அறிவுக்குள் அடங்கியிருந்த அறிமுகம்!
இதற்கு முன்பெல்லாம், எழுத்துத் துறையிலும் கவிதைத் துறையிலும் எங்களுக்குள் அறிமுகங்கள் இருந்தாலும் உறுதியான ஓர் இலட்சியத்தின் பாதையில் இதுதான் எங்கள் முதல் சந்திப்பாகும்.
நான் சிந்திக்கத் தொடங்கினேன். கெளரவ தலைவரவர்களுடைய சந்திப்பு என்னை உறுதியான ஒரு நிலைக்குக் கொண்டுவந்தது. நானும் ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்துக் குவித்துக் கொண்டிருந்தேன்.
சமுதாய எழுச்சிக்குரிய வழிகளைப் பற்றி நீண்டகாலமாக சிந்தித்துக் கொண்டு வந்தேன். எத்தனையோ முக்கியமானவர்களுடன் பழகியும் வந்தேன். ஆனால், எனக்கு தெளிவான ஒரு வழி அமையாமலிருந்தது. அப்படியொரு வழியைக் காட்டுவதற்கு யாரும் இருக்கவில்லை.
ஆரம்பத்தில் தலைவர வர்கள் பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் நானும் பத்திரிகைகளில் எழுதி வந்தேன். பத்திரிகை நிருபராகவும் இருந்தேன். ஆனால், வாசிப்பதில் தான் அதிகமான நேரத்தைக் கடத்தி வந்தேன். சுமார் பதினைந்து வருடங்கள் தளராது வாசித்து வந்தேன்.
22

அப்துல் மஜீத் ஆலிம்
இரவு, பகலாக ஒவ்வொரு நாளும் இருநூறு, முன்னூறு பக்கங்களை வாசித்து முடித்துவிடுவேன்.
அந்தக் காலகட்டங்களில்தான் எங்கள் தலைவர் அவர்களுடைய கட்டுரைகள், கவிதைகளின் பக்கம் என் கவனம் திரும்பியது. அவைகளின் உயிரோட்டம் என்னை சிந்திக்க வைத்தது; ஆனாலும் ’செயல்படுத்துவது யார்? பத்திரிகைகளில் எழுதிக் கொள்வோம்; ஆனால், நாங்கள் சந்தித்துக்கொள்வதேயில்லை. சுமார் ஆண்டு எழுபதுக்கும், எண்பதுக்கும் இடைப்பட்ட காலகட்டங்களில்தான், இவ்விடயங்கள் அதிகமாக நடந்து வந்துள்ளன.
குவைலீத் இனம் கண்ட புரட்சி
அக்காலகட்டங்களில் எங்கள் ஊரில் பாடசாலை அதிபராக இருந்தவர் ஜனாப் யூ.எல்.எம். குவைலித். அவரும் ஒரு கவிஞர். (மறையும் நிழல்) என்ற பெயரில் எழுதிவந்தார். அவருடைய தத்துவச்சாறு எனும் கவிதை நூலை நான் விரும்பிப் படிப்பேன்.
அதிபர் ஜனாப் குவைலிதுடன் நான் பேசிக்கொண்டிருப்பேன். அப்பொழுது அவர் கூறுவார்; அஷரஃப் என்றவோர் இளைஞர் வளர்ந்து கொண்டு வருகிறார். அவருடைய எழுத்துக்களில் நிறைய உயிரோட்டம் காணப்படுகிறது. அவரைக்கொண்டு இந்த நாட்டில் ஒரு புரட்சி ஏற்படும்போல் தெரிகிறது. இப்படியாக நாம் பேசிக்கொண்டே காலத்தைக் கடத்தி வந்தோம்.
அந்தக் காலகட்டத்தில் எத்தனையோ சிந்தனையாளர்களுடைய அறிவுக் கண்களுக்கு எங்கள் தலைவரவர்கள் தென்பட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் அது அக்காலத்தில் மங்கலான காட்சியாக இருந்து வந்திருக்கிறது.
கொழும்பில் முக்கியமான ஓர் அரசியல்வாதி, வெறும் பேச்சாளர், பேரெழுத்தாளர், அவருடன் நான் முஸ்லிம்களின் அரசியல் எழுச்சியைப் பற்றி ஒருமுறை பேசியபோது, அவர் சொன்னார்:
"அங்கொடை பைத்தியகார ஆஸ்பத்திரியில் ஒரு கட்டிலை 'புக்’ பண்ணி விட்டுத்தான் நாம் இந்த வேலைகளில் இறங்க வேண்டும்; எந்தக் காரணம்கொண்டும் கட்டிலை 'புக்’ பண்ணாமல் மட்டும்
இறங்கிவிடக் கூடாது.”
23

Page 15
தலைமைத்துவ ரகஸியங்கள்
இப்படியாக எத்தனை சிந்தனையாளர்கள் இருந்தாலும் “முஸ்லிம்களுடைய அரசியல் உரிமை” என்ற விடயத்தில் தலையிடாதவர்களாக, அது சாதிக்க முடியாத ஒரு காரியம் என்றே நினைத்து வந்துள்ளார்கள்.
தீக்குழிக்குள் கைவிட்ட தீரம்!
எவரும் அணுகாமல், அணுக நினைக்காமல், அணுக முடியாமல் நீண்ட காலமாக இருந்து வந்த ஒரு விடயத்தில்தான் எங்கள் கெளரவ தலைவரவர்கள் கைவைத்தார்கள். இதைத் தான் இப்பொழுது, நான் எழுதத் தொடங்கியுள்ளேன். இவை சாதாரண விடயங்களல்ல. இவற்றைத் தெளிவுபடுத்துவதற்கு எனக்கு ஆயிரம் பக்கங்களுக்கும் அதிகமாகத் தேவைப்படும்போல் தோன்றுகிறது.
அன்றைய தினம் ஜும்ஆ முடிந்த நேரம் பாக்கியம் பெற்ற நேரம். அல்லாஹ்வின் அருள் அடியார்களை அடையும் நேரம். அந்த நேரத்தில் கெளரவ தலைவரவர்களுடைய சந்திப்பு எனது உள்ளத்தில் ஒரு பசுமையான நினைவாக அமைந்து விட்டது.
சந்திப்பில் சரணடைய வைக்கும் ஆளுமை!
நான் பள்ளிவாசலுக்கு வந்து சிந்திக்கத் தொடங்கினேன். பலநாட்கள் இச்சிந்தனையில் ஆழ்ந்தேன். முதலாவது என்னை வசீகரித்தது, தலைவர் அவர்களுடைய தன்னம்பிக்கை வாய்ந்த உற்சாகம் மிகுந்த தோற்றம்தான்.
முன் வைத்த காலைப் பின் வைக்காத அந்த அஞ்சா நெஞ்சத்தோற்றம் என்னை உந்தத் துவங்கியது. நான் மட்டுமல்ல, எந்த மனிதரும் தான் தலைவரவர்களை நேருக்கு நேர் கண்டு, அவர்களிடமிருந்து ஒரு வார்த்தை பேசக் கேட்டாலும் போதும் உற்சாகமடைந்து விடுகிறார். நான் கண்கூடாகக் கண்ட காட்சி இது.
வாழ்க்கையில் களைப் படைந்தவர், சலிப்படைந்தவர், தோல்வியடைந்தவர் தலைவரவர்களுடன் நான்கு வார்த்தைகள் கதைத்த அடுத்த கணம், மின்சாரம் பாய்ந்தது போன்று புதிய உற்சாகத்துடன் திரும்பிச் செல்வதைப் பார்க்கலாம். ஒரு தலைவனுக்குரிய அத்தாட்சிகளில் இதுவும் ஒன்று. இப்படி எத்தனையோ அத்தாட்சிகளையும், அடையாளங்களையும் தலைவரவர்களிடத்தில் காணலாம்.
24

அப்துல் மஜீத் ஆலிம்
தலைவரவர்களுடன் நெருங்கிப் பழகிய எவரும், அவர்களைப் பிரிந்திருக்க விரும்பமாட்டார். மீண்டும், மீண்டும் சந்திக்க வேண்டும், பார்க்க வேண்டும், கதைக்க வேண்டும் என்றே மனம் தூண்டிக்கொண்டிருக்கும்.
எவராவது தலைவர் அவர்களை விட்டும் பிரிந்து சென்றிருந்தால், அவர் தலைவரவர்களை வெறுத்துச் செல்லவில்லை; தன் சொந்த சுயநலமொன்றினால் உந்தப்பட்டே அவர் வெளியேறியிருப்பதை உணர முடிகிறது.
கட்சியிலிருந்து வெளியேறிய எத்தனையோ பேர்களுடைய பட்டியலை ஆராய்ந்து பார்க்கும்பொழுது இந்த உண்மை விளங்க வருகிறது.
தாழ்ந்தோரை உயர்த்தும் தாகம்!
வாழ்க்கையில் சாதாரண நிலையில் தொழிலும், வீடுமென்று மூழ்கிக்கிடந்த எத்தனையோ பேர்களுக்கு, அரசியல் விழிப்பை ஊட்டி, பெரிய பட்டம் பதவிகளை ஒப்படைக்கும்பொழுது, அவர்கள் ஒருவித தம்மையறியாத மயக்க நிலையை அடைகின்றனர். அவர்களுடைய வாழ்க்கையில் ஒருபோதும் இப்படியொரு பட்டம் பதவி வழங்கப்படவில்லை. ஏன் முற்பரம்பரைக்கே அப்படியொன்றும் கிடைத்திருக்காது.
அதுமட்டுமல்ல, பட்டம் பதவிகளை வழங்கி சாதாரணமாக இருந்தவரை பல படிகள் உயர்த்திவிட்டு, அவரை அழகு பார்ப்பது தலைவரவர்களுடைய இயல்பு. அதாவது அவரை மிகவும் கண்ணியமாக வைத்து நடத்துவது தலைவர் அவர்களுடைய தன்மை.
குறைவான பார்வை, குறைவான மதிப்பீடு, குறைவான வார்த்தை. இயல்பிலேயே தலைவரவர்களிடம் இந்தத் தன்மைகளைப் பார்க்க முடியாது. எவரை நோக்கினாலும், நிரப்பமான உள்ளத்துடன், நிரப்பமான முகத்துடன், நிரப்பமான வார்த்தைகளுடன் கண்ணியமாக நடந்துகொள்ளும் தன்மைகளை இயல்பாகப் பார்க்க முடிகிறது.
எந்த ஒரு பெரிய மனிதரிடமும், இத்தகைய குணங்கள் ஒன்றுசேர்ந்து அமைவது மிக அரிது. எந்த ஒரு மனிதரையும் நிரப்பமான உள்ளத்துடன் நோக்குவது, தலைவரவர்களுடைய விசேட இயல்பாகும். இந்தப் பண்பு இலகுவில் எந்த ஒரு மனிதருக்கும்
25

Page 16
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
வருவது மிகக் கஷ்டம். ஓர் அரசியல் வாதிக்கு நிறைய எதிரிகளிருக்கலாம். விமர்சிப்பதென்றாலும் நிறைய விமர்சிக்கலாம். ஆனால், தலைவரவர்கள் எந்தச் சமயத்திலாவது, எவரையாவது ஒரு வார்த்தை குறைவாகவோ, இழிவாகவோ பேசியதை யாரும் கேட்டிருக்க முடியாது.
அழகை ரசிக்கும் ஆர்வலன்! அசிங்கத்தைக் காணமுடியா அந்தகன்!
நண்பனாக இருந்தாலும், பகைவனாக இருந்தாலும் ஒரே தட்டில் வைத்து நோக்கும் ஒரு உயர்வான தன்மையைப் பார்க்க முடிகிறது. எவரிடமாவது பாராட்டத்தக்க ஏதாவது கண்டால், அதைக் குறிப்பிட்டுக் காட்டி மனநிறைவுடன் சந்தோஷப்பட்டுக் கொள்வார்கள். எவருடைய பலவீனமான தன்மைகளைக் கண்டுகொள்வதே இல்லை.
தலைவரவர்கள் பெருந்தொகையானவர்களுக்கு, பெரும் பட்டங்களையும், பதவிகளையும் கொடுத்திருக்கிறார்கள்தான். ஆனால் அவற்றுக்காக எவரும் கடமைப்பட வேண்டுமென்றோ, நன்றி செலுத்திக் கொண்டிருக்க வேண்டுமென்றோ, அடிக்கடி வந்து மரியாதை செலுத்திக்கொண்டிருக்க வேண்டுமென்றோ சிறிதும் எதிர்பார்ப்பு அற்றவராக அவர் இருப்பதைப் பார்க்க முடிகின்றது.
யாருக்கு, எவருக்கு, எவ்வளவு பெரிய பதவிகளைக் கொடுத்திருக்கிறோம் என்பதை உள்ளத்தால் நினைத்துக்கூடப் பார்க்கும் நிலைகூட இல்லை.
காரணமில்லாமல் எவரையும் கட்டுப்படுத்த வேண்டும்; அல்லது அதிகாரம் செலுத்திக்கொண்டிருக்க வேண்டும்; அல்லது தமக்குக் கீழ் இருப்பவர்கள் மீது மிடுக்காக நடந்துகொள்ள வேண்டுமென்ற எத்தன்மைகளையும் பார்க்கவே முடியாத பரந்த உள்ளத்தையும், ஆச்சரியமான மனோ வளர்ச்சியையும் எங்கள் தலைவரவர்களிடத்தில் தெளிவாகப் பார்க்க முடிகிறது.
மன்னரோரும் சாதாரண மனிதரோரும் ஒரே அனுகல்
உயர் அதிகாரிகளுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நம் தலைவரவர்கள், மறுநிமிடம் தம் வீட்டின் உள்ளேயும் , வெளியேயும் சிற்றுTழியராக நியமிக்கப்பட்டிருக்கும் சாதாரண ஊழியர்களிடம் நடந்துகொள்ளும்
26

அப்துல் மஜீத் ஆலிம்
முறையைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கின்றது.
உயர்மட்டத்தில் பழகும்பொழுது எப்படிப்பட்ட தன்மைகளைப் பார்க்கின்றோமோ அதே தன்மைகளைக் கீழ்மட்டத்திலும் பார்க்க முடிகின்றது.
உயர்மட்டத்திலிருந்த அதே கண்ணியமான பார்வை, கண்ணியமான வார்த்தை, கண்ணியமான வேண்டுகோள் அனைத்தையும் கீழ்மட்டத்திலும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. கண்ணியமாக அழைத்து கண்ணியமாக வேலைகளை ஒப்படைக்கும் பாங்கே ஓர் அழகு.
சிலவேளைகளில் ஒரு மனிதன் பெரிய அறிவாளியாகவும், பெரும் தகுதியிலும் இருக்கலாம். வெளியில் பெரிய பெயரும் இருக்கலாம். ஆனால், அந்த மனிதனுடைய சொந்தவாழ்வை, அந்தரங்க வாழ்வை நோக்கும்பொழுது, சுயநடத்தைகளை எண்ணிப் பார்க்கும்பொழுது, சகிக்க முடியாத அளவுக்கு நிலைமை இருக்கும்.
மன வளர்ச்சி, உளப்பக்குவம், உயர்ந்த உள்ளம், உயர்ந்த குணங்கள் என்பவற்றை பெரும்பாலான பெரிய மனிதர்களுடைய சுய வாழ்க் கைக் குள் எதிர்பார்ப்பது மிகவும் கஷ்டம் , வெளித்தோற்றத்திலும், புறக்காரியங்களிலும் தான் அவர்கள் பெரிய மனிதர்களாக இருக்க முடியும்.
அந்தரங்க வாழ்வில் மனைவியால்கூட, பிள்ளைகளால் கூட சகிக்க முடியாத அளவுக்கு, பலருடைய நடத்தைகள்,
அணுகுமுறைகள் இருக்கும் . ஒரு மனிதனுடைய மனோவளர்ச்சியென்பது சாதாரண விடயமல்ல.
இறைவன் வழங்கிய இரகசிய அருட்கொடை
எங்கள் தலைவரவர்களுடைய மனவளர்ச்சியென்பது ஆச்சரியமானவொரு விடயம். அது இறைவனால் கொடுக்கப்பட்ட ஓர் இரகசிய அருட்கொடையென்றே நான் நினைக்கின்றேன். எந்தப் பாசறையில் வளர்க்கப்பட்டார்களோ, எந்த ஆசானால் பயிற்றப்பட்டார்களோ எனக்குத் தெரியவில்லை.
நான் அறிந்த வரையில், பலரும் புரிந்த வரையில் கொழும்புக்கும் கிழக்கிலங்கைக்கும் ஒரு சிறிய இரகசிய இடைவெளியுண்டு.
27

Page 17
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
அது எப்படியென்றால், கொழும்புப் பகுதியில் உள்ளவர்களில் சிலர் கிழக்கிலங்கை மக்களை மட்டக்களப்பான்’ என்று கூறிவிடுகின்றனர். கருத்து வேற்றுமையான கட்டங்களில் இப்படியான வார்த்தைகள் அடிமட்டத்தில் உபயோகிக்கப்படுவதுண்டு.
கிழக்கு மக்கள் சிலர் "கொழும்பான்’ என்ற வார்த்தையை உபயோகித்து விடுவதாக நான் கேள்விப் படுவதுண்டு. இதை நாம் பிரதேச வாதம்’ என்று சொல்லிக் கொள்ளலாம்; அல்லது வேறு ஏதாவது ஒரு பெயரைச் சூட்டிக்கொள்ளலாம். இதுவெல்லாம் ஒரு ரச்சினையல்ல; ஒரு பகுதி மக்களுடைய கொள்கை, கோலங்கள் மறுபகுதி மக்களைக் கவராமலிருக்கலாம். அல்லது புரிந்துணர்வில் குறைபாடு இருக்கலாம். இது வேறு விடயம். எந்தப் பகுதி மக்களுடைய குணங்கள் உயர்ந்தவை, அல்லது தாழ்ந்தவை என்பதெல்லாம் இங்கு அவசியமில்லாத விடயம் என நினைக்கிறேன்.
நான் எதைச் சொல்ல வருகின்றேனென்றால், எங்கள் கெளரவ தலைவரவர்களுடைய உயர்குணங்கள் கிழக்குக்கோ, வடக்குக்கோ, தெற்குக்கோ, மேற்குக்கோ சொந்தமானதல்ல. நாட்டின் மத்திய பகுதிக் குச் சொந்தமானதுமல்ல. அப் படியென்றால் , அவ்வுயர்குணங்கள் எப்பகுதிக்குச் சொந்தமானவை?
இது தான் இங்குள்ள பெரிய விடயம். எப்பகுதி மக்களுக்கும் தனிச் சொந்தம் கொண்டாட முடியாத, ஒரு உயர்ந்த குணத்தை எங்கள் கெளரவ தலைவரவர்கள் அடையப் பெற்றிருக்கிறார்கள் என்பதை சமுதாயம் காலங்கடந்தாவது உணர்ந்தே தீரும்.
ஒரு சமுதாயத்தினுடைய தலைவன் என்று சொல்லும்பொழுது, அத்தலைமகனுடைய குணநடத்தை, ஒழுக்க சீலத்தின் அடிப்படை என்பனவற்றில்தான் அந்த சமுதாயத்தினுடைய ஒளிப்பாதை அமைந்துள்ளது என்பது என் கருத்து.
எங்கள் தலைவரவர்களுடைய குண ஒழுக்கங்களைப் பற்றி எழுதுவதென்றால், பல்லாயிரம் பக்கங்கள் எழுதும் தைரியம் எனக்குண்டு; அப்பணியைச் செய்து முடிப்பது என் வாழ்வின் தலையாய ஓர் அலுவல் என நினைக்கின்றேன்.
வருகின்ற நூற்றாண்டில் இந்த சமுதாயம் மட்டுமல்ல, இந்த நாடே, ஏன் உலகமே இப்பெரும் தலைவரின் உயர் குணத்தின் நிழலில், இன்ஷா அல்லாஹ்! இளைப்பாறப் போகிறது என்பதில் ஐயப்படுவதற்கு எதுவுமில்லை.
28

அப்துல் மஜீத் ஆலிம்
மனித சமுதாயத்தின் விடிவெள்ளி
‘முஸ்லிம் காங்கிரஸ்' என்ற ஒரு கட்சியினுடைய தலைவரைத் தான், தற்பொழுது நாடு பார்க்கின்றது. மனித சமுதாயத்திற்கே ஒரு விடிவெள்ளி உதித்திருக்கிறது, என்பதைக் கூடியவிரைவில் உலகமே உணர்ந்து கொள்ளும் என்பதில் ஐயமில்லை.
கெளரவ தலைவரவர்கள் ஒரு நல்ல மனிதர்; அதிலும் அளவுக்கு மீறிய நல்ல மனிதர்; ஒரு மனிதப் புனிதர்; இதுதான் சிலரைப் பொறுத்தவரையில் ஒரு கொடுமையாகவும் மாறிவிட்டது.
கடந்த காலகட்டத்தில் திடீரென ஒரு கூட்டம் கட்சியிலிருந்து வெளியேறியது. அதுவும் பெரும் பதவிகளும், தகுதிகளும் கொடுக்கப்பட்டிருந்த ஒரு கூட்டம். தலைவரவர்கள் மூலமாகப் பெரும் பிரயோஜனங்களை அடைந்த கூட்டம்.
தற்பொழுது ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் எதற்காக வெளியேறினார்களென்று அவர்களுக்கே தெரியாது. யார் வழிகாட்டியது என்பதுவும் அவர்களுக்குத் தெரியாது. என்ன நடந்தது என்பதுவும் அவர்களுக்குப் புரியவில்லை.
புதுமை என்னவென்றால், வெளியேறியவர்கள் எவருமே எந்த வழியிலும் உருப்படவில்லை. அரசியலிலோ, பொருளாதாரத்திலோ, குடும்ப வாழ்விலோ, எல்லாநிலமைகளிலும் முற்றுப்புள்ளிக்குப்போய், சாக்கடையில் வீழ்ந்து, புரண்டு, உருண்டு, சகதியும், சேறுமாகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நிலையில், தலைவரவர்கள் திரும்பவும் அணைக்க மாட்டார்களா? என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருப்பது எமக்குத் தெரியும்.
தலைவரவர்கள் எவரையும் வெளியேற்றவுமில்லை. வெளியேறிச் சென்று எதிர்த்தவர்களைத் திருப்பி எதிர்க்கவுமில்லை. எதிர்த்து நின்றவர்களுக்கு எதிராக ஒரு வார்த்தை பேசவுமில்லை. அவர்களைப் பற்றிய எந்த ஒரு கருத்தையும், உள்ளத்திற்குக் கூட எடுத்துக் கொள்ளவுமில்லை.
Lu6ona56n 6on6oT Lu6ona56n 6ormruiu 5mT6oormT LIės556 ub
ஒருவரைப் பற்றி நாங்கள் கதைத்தாலும்கூடக் குறையாக தலைவரவர்கள் அதற்குக் காது கொடுப்பதில்லை. பகைவனை
29

Page 18
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
அவர்கள் பகைவனாகக் கருதியதே இல்லை. திரும்பிவந்து அடைக்கலம் புகுந்தவர்களை அணைக்காமல் விட்டதுமில்லை. இத்தகைய காரியங்களை மனோவளர்ச்சியின் உச்சக்கட்டத்தை அடைந்த ஒருவரால் மாத்திரமே செய்ய முடியும்.
பல்லாயிரக் கணக்கான மனிதர்களுடைய தொடர்பு ஒவ்வொரு மனிதனுடைய குண நலன்கள் ஒவ்வொரு விதம். எந்த மனிதன் எந்த நிலையில் வந்தாலும், அந்த மனிதனுக்கு ஏற்றநிலையில் நடந்துகொள்வதில் தலைவரவர்களுக்கு இணையே சொல்ல முடியாது.
டாக்டர் உதுமாலெப்பை கூட ஓர் உதாரணத்தை அடிக்கடி சொல்லிக் கொள்வார்;
"தலைவர், பாதையில் ஒடும் ஒரு ரூட் பஸ் போன்றவர். அதில் ஒரு கூட்டம் ஏறிக் கொண்டே இருக்கும்; ஒரு கூட்டம் இறங்கிக்கொண்டே இருக்கும். பஸ் ஒடிக்கொண்டே இருக்கும்; அவ்வளவுதான்’ என்று.
ஆம். இறங்கியவர்கள் கைசேதப்பட்டு, அதே பஸ் திரும்ப பாதையில் வரும் வரையில் காத்து நின்று கைகாட்டி ஏறிக்கொண்டிருப்பதுவும் ஒரு சகஜமான நிலை.
ஒரு தலைவர் அளவுக்கு மீறி நல்ல மனிதராக இருக்கிறார் என்பதற்குரிய அடையாளம்தான் மேற்கூறப்பட்ட நடவடிக்கைகளாகும்.
மகாத்மா காந்தி அடிகளார், கோட்ஸேயின் குண்டுகளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பொழுது, இந்தியா மட்டுமல்ல, முழு உலகமே அதிர்ந்தது. அந்தக் காலகட்டத்தில், மகாத்மா காந்திக்கு உலக மட்டத்தில் எந்த ஒரு மனிதருக்கும் இல்லாத ஒரு மதிப்பு இருந்தது.
முழு உலகிலிருந்தும் அனுதாபச் செய்திகள் அலையலையாக வந்து குவிந்து கொண்டிருந்தன.
அந்த அனுதாபச் செய்திகளே ஒரு பெரும் நூலாக வெளியிடப்பட்டது. அந்தப் பெரு நூலை நான் முழுவதும் படித்திருக்கிறேன்.
அப்பொழுது உலகப் பேரறிஞராக இங்கிலாந்திலே கொடிகட்டிப்
3O

அப்துல் மஜீத் ஆலிம்
பறந்துகொண்டிருந்த பெர்னாட்ஷாவும் ஒரு இரத்தினச் சுருக்கமான அனுதாபச் செய்தியை அனுப்பியிருந்தார்.
நீண்ட, நீண்ட அனுதாபச் செய்திக் குவியலிலே ஆகச் சிறிய அனுதாபச் செய்தி அறிஞர் பேர்னாட்ஷாவுடையதுதான். இரண்டு வரிகள் மட்டும் தான் அவர் எழுதியிருந்தார். அவ்வரிகள் இவைதான்.
"அளவுக்கு மீறி நல்ல மனிதனாக இருப்பது,
எவ்வளவு கொடுமையானது என்பதை,
மகாத்மாகாந்தியின் மரணம்
எடுத்துக் காட்டுகிறது’
இப்படிக்கு பேர்னாட்ஷா,
இதுதான் அந்த அனுதாப வரிகள். அளவுக்கு மீறிய நல்ல மனிதனாக இருந்து, அதற்குரிய பரிசை வாங்கிக்கொண்டு, புன்முறுவலுடனே கண்களை மூடிக்கொண்டார் காந்திஜி
இஸ்லாமிய வரலாற்றில் அளவுக்கு மீறிய நல்ல மனிதராக
ற கு ந த இருந்த மூன்றாவது கலிபரசர் உதுமான் (ரலி) அவர்களுக்கு என்ன நடந்தது என்பது அனைவரும் அறிந்த விடயம்.
எங்கள் தலைவரவர்களுக்கும் கடந்த காலங்களில் நடந்த விடயம் இதுதான். அளவுக்கு மீறி நல்ல மனிதராக செயற்பட்டதை, சில குறைவான உள்ளங்களால் சகிக்க முடியவில்லை. நான் சொல்வதைத்தான் தலைவர் கேட்க வேண்டும்’ என ஒவ்வொருவரும் நினைத்தார்கள். அதன் விளைவுதான் அந்த வெளியேற்றங்கள்.
மகன் சொல்வதை வாப்பா ஏற்கவில்லையென்று, மகன் வாப்பாவோடு கோபித்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினான். இதுதான் கதை.
அதற்கு இன்னும் ஒரு சிறு உதாரணத்தைக் காட்ட என்னால் முடியும்.
ஹெலிக்கொப்டருக்காக காலை இழக்கும் பேராசை!
அழகான ஒரு வாகனத்தில் ஒருவர் சென்று கொண்டிருக்கிறார்.
31

Page 19
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
சிலர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் வாகனங்களிலேயே ஏறிப் பிரயாணம் செய்யாதவர்கள்; கால்நடை மனிதர்கள். வாகனத்திற் சென்று கொண்டிருந்த மனிதர், இந்தக் கால்நடை மனிதர்களைக் கண்டு வாகனத்தை நிறுத்தினார். நடந்து கொண்டிருந்த மனிதர்களை, “வாருங்கள்” என அன்பாக அழைத்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பிரயாணத்தைத் தொடர்ந்தார். வாகனம் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது.
கால்நடை மனிதர்களுக்குப் பெரும் ஆச்சரியம்; பெருவியப்பு. அப்பப்பா. நடந்து சென்று கொண்டிருந்த நாம், எவ்வளவு வேகமாகச் சென்று கொண்டிருக்கிறோம்! இதுவல்லவா பிரயாணம்? என்று மூக்கில் கை வைக்கின்றனர்.
வெகு தொலை சென்று கொண்டிருக்கும் பொழுது, வாணவெளியிலே மிகவும் தாழ்வாக ஒரு 'ஹெலிக்கொப்டர்’ பறந்து கொண்டிருப்பது இந்தக் கால்நடை மனிதர்களுக்குத் தெரிகிறது. அதனைப் பார்த்து அவர்கள் மீண்டும் அதிகமாக வியப்படைகின்றனர். அதனைப் பற்றி விசாரிப்பதும், பேசுவதுமாக இருக்கின்றனர்.
இப்பொழுது ஒடிக்கொண்டிருக்கும் வாகனம் அவர்களுக்குத் திருப்தியளிக்கவில்லை. ஏதோ வேலையாக, எங்கோ பறந்து கொண்டிருக்கும் அந்த ஹெலிக்கொப்டரில் ஏறிக்கொள்ளலாமா என்று அவர்கள் யோசிக்கத் தொடங்கினர்.
வாகனத்தில் ஏற்றிய சாரதி கூறுகிறார்: "அமைதியாக இருங்கள்; பொறுமையாக இருங்கள்; இந்த வாகனத்தில் நாங்கள் போய்விடலாம் என்று. ஆனால், அந்தக் கால்நடை மனிதர்களுடைய இனந்தெரியாத பேராசை, இன்னும் கொஞ்சம் வேகமாகப் பறந்து பார்ப்போம் என்ற தன்னிலை உணராத ஆசையினால், சாரதியையும் பொருட்படுத்தாமல், வாகனக் கதவுகளையும் திறந்து கொண்டு, வேகமாக ஓடிக்கொண்டிருந்த வாகனத்திலிருந்து கீழே குதித்தனர். பின்னர், வீசுண்டு, உருண்டு சென்று பாதையோரமாக வடிகாலினுள் வீழ்ந்து, கால்களை உடைத்துக் கொண்டு எழுந்து நடக்க முடியாமல் சாய்ந்து விட்டனர்.
வாகனமும் போய் விட்டது; ஹெலிக்கப்டரும் பறந்து விட்டது. கடைசியில் கால் நடைப் பிரயாணத்தையும் இழந்து முடமாகிப் பாதையோரத்தில் உழல்பவர்களாக மாறிவிட்டனர்.
32

அப்துல் மஜீத் ஆலிம்
இதுதான் உதாரணம். தலைவரவர்களை விட்டும் வெளியில் பாய்ந்தவர்கள், இந்த நிலையில்தான் தற்பொழுது வீழ்ந்து கிடக்கின்றனர். எவ்வளவும் அனுதாபப்படலாம்; ஆனால், கொடுப்பதற்குத் தகுதியான மருந்துதானில்லை. என்ன செய்யமுடியும்?
நான் மீரானியா ஜூம்ஆப் பள்ளிவாசலில் சேவையாற்றிக் கொண்டிருந்த காலத்தில், ஒரு நாள் திஹாரியைச் சேர்ந்த நண்பர் முனாஸ் என்னைச் சந்திக்க வந்தார். அவர் அப்பொழுது தலைவரவர்களுடைய சிறிய அலுவலகத்தில் கட்சிப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். நான் மார்க்கப் பிரசங்கங்களிலே தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த காலம் அது.
கார்கள் வந்து கொண்டே இருக்கும். என்னைச் சுமந்து சென்று கொண்டே இருக்கும். உள்நாடு, வெளிநாடு எனப் பறந்து கொண்டிருந்த காலம் அது.
நண்பர் முனாஸ் ஸலாம் சொல்லிக் கொண்டு என் அறைக்குள் வந்தார். இயற்கையிலேயே அவர் நகைச் சுவையான தன்மையுடையவர். பேசினால், நகைச்சுவையுடன்தான் பேசுவார். அந்தக் காலகட்டத்தில் கட்சிப் பணிகளில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
அவர் வந்து பல விடயங்களையும் கதைத் துவிட்டு தலைவரவர்களுடைய செய்தியையும் எனக்குச் சொன்னார்.
தலைவரவர்கள் டாம் விதி ஆபிஸில் இருப்பதாகவும், என்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், கட்டாயம் வர வேண்டும் என என்னை வற்புறுத்தி அழைத்தார்.
ஆனால், எனக்கு நேரத்தை ஒதுக்குவது சிறிது கஷ்டமாக இருந்தது. நான் யோசிக்கத் தொடங்கினேன்.
ஆத்மீகத்திலிருந்து அரசியலுக்கு
ஏனென்றால், நான் ஒரு துறையில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தேன். திடீரென ஓர் அரசியல்வாதியின் அறையில் அமர்ந்து பேசுவதென்பது எனக்குக் கஷ்டமான அனுபவமாக இருந்தது.
33

Page 20
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
அதுகால வரையில் நான் ஒரு போதும் அரசியலில் ஈடுபட்டதேயில்லை. அதாவது எக் கட்சிப் பணிகளிலும் இறங்கியதே இல்லை; பத்திரிகைகளில் எழுதி வந்தது மட்டும் தான்.
கெளரவ தலைவரவர்கள் ஓர் அகதியாக வந்து கொழும்பில் வாழ்ந்துகொண்டிந்த காலம் அது என நினைக்கிறேன். அரசியல் பின்னணி காரணமாக, தலைவரவர்கள் கிழக்கிலங்கையில் பெரும் சோதனைகளுக்கு முகம் கொடுத்து, வாழ்ந்த வீடும் தீக்கிரையாக்கப்பட்டு, வெறும் மனிதனாக பாதையில் விடப்பட்ட பயங்கரச் சம்பவங்களைப் பற்றிப் பிறகு நான் அறிந்தேன்.
தற்பொழுது அரசியல் மட்டத்தில் மிகவும் சக்திவாய்ந்த உயர் ஆசனத்தில் கெளரவ தலைவரவர்கள் அமர்ந்திருக்கலாம். ஆனால் அந்த ஆசனத்துக்கு நடந்து வந்த பாதையை உற்று நோக்கும் பொழுது, அந்தப் பாதையில் யார்தான் நடந்து செல்வார்?
இன்று தலைவரவர்கள் உயர் ஆசனத்தில் அமர்ந்து ஒய்வெடுத்துக்கொண்டா இருக்கிறார்கள்? அவர்கள் உழைக்கும் உழைப்பையும், படும் பாட்டையும் பார்க்கும் பொழுது, சிலசமயங்களில் எனக்குப் பெரும் பரிதாபமாக இருக்கும்.
காரில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் பொழுது, தலைவரவர்கள் என்னுடன் கதைப்பார்கள். "ஹஸ்ரத்! என்னுடைய ஓய்வு புதைகுழியில்தான். அதுவரையில் ஓய்வு, பொழுதுபோக்கு என்பதை நான் நினைத்தும் பார்க்க முடிவதில்லை.”
அல்லாமா இக்பால் ஏற்படுத்திய தாக்கம்!
நானும், அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு மெளனமாக உற்று நோக்கிக் கொண்டிருப்பேன். திரும்பவும் தலைவரவர்கள் சொல்வார்கள்.
"ஹஸ்ரத்! நான் இளம் வயதில் படித்த அல்லாமா இக்பாலுடைய கவிதையின் அடியொன்றுதான் என்னைப் படாத பாடுபடுத்துகிறது” என்பார்கள்.
பிறகு அந்தக் கவிதையின் அடியைப் படித்துக் காட்டுவார்கள்.
34

அப்துல் மஜீத் ஆலிம்
"இளைஞனே! உனக்கு ஒய்வெடுக்க நேரமில்லை. நீ ஒய்வெடுக்கும் இடம்,
உன் புதைகுழிதான்.
அதுவரையில் உனக்கு, ஓய்வு என்பதில்லை
முஸ்லிம் இளைஞனே!
இளைப்பாறும் நேரம் உனக்கெங்கேயிருக்கிறது. நீ செய்ய வேண்டிய
பணிகள் எவ்வளவோ
இருக்கின்றன.”
ஹஸ்ரத் இந்த அடிகளை என்று படித்தேனோ, அன்றிலிருந்து என் வாழ்வில் ஓய்வு என்பதே இல்லாது போய்விட்டது. அந்தக்
கவிதையின் அடிகள்தாம் என்னை இவ்வளவு தூரத்துக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளன" என்பார்கள்.
நானும் அதை வியப்புடன் கேட்டுத் தலையசைத்துக் கொண்டிருப்பேன். பிறகு மர்ஹம் இக்பாலுடைய கவிதைகளைப் பற்றிப் பிரயாணத்தில் நீண்ட நேரம் கதைக்கத் தொடங்கி விடுவோம். ஒரு நாள் நடு இரவு நேரம், காலித் துறைமுகத்தை நோக்கி வாகனம் சென்றுகொண்டிருந்தது; நாங்கள் இக்பாலின் கவிதைகளில் மூழ்கிவிட்டோம். பாகிஸ்தானில் முகம்மதலி ஜின்னாஹ் அவர்களையும் படாதபாடுபடுத்தியது மர்ஹம் இக்பாலுடைய கவிதைகள் தாம் என்பதையும். நாங்கள் கதைத்துக் கொண்டோம்.
இறைவனுக்கு அடிபணிதலில் இப்றாஹீம்!
இலங்கையில் மர்ஹம் கலாநிதி ஏ.எம்.ஏ. அஸிஸ் அவர்கள்
35

Page 21
தலைமைத்துவ ரகளியங்கள்
கடைசி மூச்சுவரையில், அக்கவிதைகளில்தான் மூழ்கிக் கிடந்தார். ஆயிரம் பக்கங்கள் எழுத வேண்டிய ஒரு விடயத்தை, ஒரு அடிக்குள் கொண்டு வந்து காரியத்தை முடித்து விடுகிறார் மகாகவி இக்பால்.
உதாரணத்திற்கு,
"இறைவனுக்கு அடிபணிவதிலே
நீ இப்றாஹீமாக இரு1.”
ஆம். இறைவனுக்கு மனிதன் எவ்வாறு அடிபணிய வேண்டுமென்று, பேரறிஞர்களெல்லாம் லட்சக்கணக்காண பக்கங்கள் எழுதிக் குவித்து விட்டனர். இன்னும் எழுதிக் குவித்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் மர்ஹம் இக்பால் அவர்கள் அந்த மாபெரும் விடயத்தை ஓர் அடிக்குள் கொண்டுவந்து விட்டார்.
ஆம். நீ இறைவனுக்கு அடிபணிய வேண்டும். எப்படி அடி பணிவது? "அதிலே நீ இப்றாஹீமாக இரு.” விடயம் அவ்வளவுதான்.
புனித குர்ஆனிலே இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களுடைய சரித்திரம் ஏறக்குறைய எண்பத்தியொரு இடங்களிலே வருகிறது. இறைவனுக்கு அடிபணிந்து தமது அருமை மகனையே அறுத்துப் பலியிடச் சென்ற சம்பவங்களை நினைக்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது. அதுபோன்ற அடிபணிதல் வேறு கிடையாது.
இதுதான், மர்ஹம் இக்பாலுடைய கவிதைத் திறமை. ஒரு காலத்தில் இஸ்லாமிய சமுதாயம் எவ்வளவு உயர்ந்த தரத்தில் இருந்தது என்பதையும், தற்பொழுது எவ்வளவு தூரத்திற்கு அச்சமுதாயம் பள்ளத்தாக்கை நோக்கிச் சரிந்து விட்டது; என்பதையும் மகாகவி அவர்கள் உணர்த்தும் பொழுது,
"இறைவா! சூரியன் உதிக்கு முன்பே, எழுந்து நின்று உன்னை வணங்கிய மக்கள் நாங்கள்; பாலைவனத்தினுடைய மணலை, எங்கள் இரத்தத்தினால் செந்நிறமாக
மாற்றியவர்கள் நாங்கள்.
36

அப்துல் மஜீத் ஆலிம்
பட்டப் பகலிலே பதைபதைக்கும் வெயிலிலே ஜிஹாதுக் களத்திலே குதிரையின் முதுகிலே நின்று கவனத்தை நினைத்துச்
சிரித்தவர்கள் நாங்கள்.
இரவு முழுவதும் முஸல்லாவின் முதுகிலே நின்று நரகத்தை நினைத்து
அழுதவர்கள் நாம்."
இஸ்லாமிய வரலாற்றில் அந்தக் காலத்துக்கும், இந்தக் காலத்துக்கும், இடையில் உள்ள நீண்ட இடைவெளியை இவ்வாறு சில அடிகளுக்குள் அறைந்து தள்ளி விடுகிறார் மர்ஹம் இக்பால். இதுதான் அவருடைய கவிதையின் மாபெரும் தாக்கத்தின் இரகசியம்.
இப்படியாக நாம் நீண்ட விடயங்களை காருக்குள் கதைத்துக் கொண்டு செல்வோம். நான் எதற்காக இந்த விடயங்களைச் சொல்லிக் கொண்டு வருகிறேனென்றால்,கெளரவ தலைவரவர்கள் வெறுமனே அரசியல்வாதி மட்டுமல்ல, நான் அறிந்தமட்டில், அரசியல், ஆத்மீகம், இறைஞான இரகசியம், மார்க்கப்பற்று, கவிதைத்துறை, எழுத்துத்துறை, சட்டத்துறை, சமுதாய எழுச்சிச் சிந்தனை எல்லாம் ஒருங்கே அமைந்த ஒரு பேரறிஞர், பெரும் ஆத்மீக ஞானி
ஆனால், சமுதாயம் இன்னும் இவைகளைக் கண்டு கொள்ளவில்லை என்றே நான் நினைக்கின்றேன். காரணம், கெளரவ தலைவரவர்கள் வெளிப்படையாக சமுதாயத்தின் முன் காட்சிக்கு வைத்திருப்பது தற்போதைக்கு அரசியலை மட்டும் தான். மக்கள் தலைவரவர்களிடம் பார்ப்பதும் அரசியலை மட்டும்தான். காலப்போக்கில் எத்தனையோ திருப்புமுனைகளைத் தலைவ ரவர்களிடமிருந்து சமுதாயம் காணப்போகிறது என்பதை, ஒரு யூகமாகத் தெரிவிக்க நான் ஆசைப்படுகிறேன்.
37

Page 22
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
டாம் வீதி அலுவலகத்தில் தலைவருடன் சந்திப்பு
நான் கொழும்பு மீரானியா பள்ளிவாசல் இமாமாகச் செயலாற்றிக் கொண்டிருந்த அந்தக் காலத்தில், நண்பர் முனாஸ் என்னை அழைத்துக் கொண்டு டாம் வீதி அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு என்னைத் தலைவரவர்கள் அன்பாக வரவேற்றார்கள்.
அலுவலகம் மிகவும் எளிமையாக இருந்தது. தலைவரவர்களும் மிக எளிமையாகத் தோற்றமளித்தார்கள். மேசை முன் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். பள்ளிவாசல் சூழலிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கும் எனக்கு, அரசியல் அலுவலகம் ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
நான் உற்று நோக்கினேன். அந்த அலுவலகம் தலைவரவர் களுடைய சட்டத்துறை அலுவலகம். அங்கு சில உதவி வக்கீல்களும் அலுவலாற்றிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தொழில் அலுவலகத்துக்குள் அமர்ந்து சமுதாயத்தினுடைய சிந்தனையில் கெளரவ தலைவரவர்கள் மூழ்கியிருந்ததை நான் பார்த்தேன்.
சட்டத் தொழில் செய்ய வேண்டும். அதன் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே தலைவரவர்களிடம் இல்லாதிருந்தது. அதைப் பற்றிய பேச்சோ, மூச்சோ அங்கு காணக் கிடைக்கவில்லை.
துணையாக இயங்கிக் கொண்டிருந்த வக்கீல்களும் தலைவரவர் களுடைய சிந்தனையின் பக்கம் திசை திருப்பப் பட்டவர்களாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.
தலைவரவர்கள் என்னைத் தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அன்றும் என்னோடு மிகவும் உற்சாகமாக நடந்து கொண்டார்கள். என்னை அங்கு கண்டது, அவர்களுக்கு ஒரு பெரிய திருப்தியாகவும், சந்தோஷமாகவும் இருந்ததை நான் அவதானித்தேன்.
மனதார மிகவும் உற்சாகத்தோடும் என்னுடன் உரையாடத் தொடங்கினார்கள். எல்லா நிலைமையிலும் மிகவும் எளிமையாகவும், நடுத்தரமாகவும் நடந்துகொண்டார்கள்.
ஓர் எளிமையான சேட் அணிந்திருந்தார்கள். கைகளை மடித்து விட்டிருந்தார்கள்; இரண்டு பொத்தான்களைத் திறந்து, கடுமையான வேலைகளுக்குத் தகுந்த முறையில் உடை அமைப்பு இருந்தது.
38

அப்துல் மஜீத் ஆலிம்
உண்மையில் ஓர் உற்சாகமான, அப்பாவி உழைப்பாளியின் தோற்றம்.
பேச்சும் மிகமிக எளிமையாகவும், அதே நேரத்தில் உறுதியும் நம்பிக்கையுமுள்ளதாகவுமிருந்தது. பலவிடயங்களை அளவளாவிக் கொண்டிருந்தோம். முதல் சந்திப்பாக இருந்தாலும் மிகவும் அன்யோன்யமாகப் பழகினோம்.
தலைவரவர்களுடைய எளிமையான அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது. பேச்சிலே நம்பிக்கை தொணித்தது.
கடைசியாக அரசியல் விடயங்களுக்கு வந்தோம். "சேர்! அரசியல் கட்சியொன்று அமைக்கும் விடயம்ாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கேள்விப்பட்டேன். இப்படியாக நான் பேச்சைத் தொடக்கி
விட்டேன்.
தலைவரவர்கள் பொறுப்புணர்வு கலந்த முகத்துடன் பேச ஆரம்பித்து விட்டார்கள். நான் சிரித்த முகத்துடன் தலையசைத்துக் கொண்டு, உன்னிப்பாகக் கேட்கத் தொடங்கிவிட்டேன்.
சரித்திரத்தின் சவாலை எதிர்கொள்ளும் துணிச்சல்!
“ஹஸ்ரத் முஸ்லிம்களுக்காக அரசியல் கட்சியொன்று இந்த நாட்டில் கட்டாயம் தேவைப்படுகிறது. நீண்டகாலமாக நான் இதுபற்றி சிந்தித்துக்கொண்டு வந்தேன். இப்பொழுது, அதற்கான வேலைகளில் துணிந்து இறங்கி விட்டேன்” என்றார்கள்.
தலைவரவர்கள் இப்படிச் சொல்லும் பொழுது, எனக்கும் ஒருவித அதிர்ச்சியும், யோசனையும் உண்டாகி விட்டது. என்னை அறியாமலே தலைவரவர்கள் மீது எனக்கு ஒருவித அனுதாபம் உண்டாகியது. அனுதாபம் கலந்த முகத்துடன், தலைவரவர்களுடைய பேச்சை உடைக்காமல் பேசுவது அனைத்தையும் கேட்கத் தொடங்கினேன்.
"ஹஸ்ரத்! இதுகால வரையில், இந்த நாட்டில் முஸ்லிம் களுக்கென்று ஓர் அரசியல் கட்சி தோன்றவேயில்லை. எந்தத் தலைவரும் இதுபற்றி அக்கறை செலுத்தவுமில்லை. இதனால் முஸ்லிம்களுடைய அதிகமான உரிமைகள் பறிபட்டுவிட்டன. இப்படியே போய்க் கொண்டிருந்தால், காலப்போக்கில் வீழ்ந்துவிடும். கரைசேர்க்க முடியாத பள்ளத்தாக்கில் நம் சமுதாயம் தள்ளப்படும் ஆபத்து உள்ளது.”
39

Page 23
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
"ஹஸ்ரத்! பிரச்சினை மிகப் பெரியது தான். இப்பொழுது இறங்கியிருக்கும் காரியமும் மிகக் கடினமானதுதான். ஆழம் தெரியாத ஒரு பாதாளமாகத்தான் தெரிகிறது. என்ன செய்வது? யாரைக் கொண்டாவது இந்தக் காரியம் இந்த நாட்டில் நடந்துதான் ஆக வேண்டும்.”
தலைவரவர்கள் தொடர்ந்து விளக்கம் தந்து கொண்டிருந்தார்கள். தலைவரவர்களுடயை அன்றைய நிலைமையையும், பேசுகிற பேச்சையும், நாட்டினுடைய அரசியல் நிலைமையையும் நான் நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன்.
இது எப்படித்தான் நடக்குமோ, எந்த அளவுக்குப் போய் நிற்குமோ, என்று அனுதாபக் கேள்விகள் என் உள்ளத்தில் எழத்தொடங்கின.
ஏனென்றால் ஒரு விளையாட்டான கட்டமல்ல அது நாட்டில் மிகப் பயங்கரமான ஒரு நிலைமை. அரசியல்வாதிகளே அரசியல் செய்ய முடியாமை நினைத்து நடுங்கிக் கொண்டிருந்த காலம் அது. ஒரு பக்கம் L.T.T.E.யினுடைய பயங்கரமான தாக்கம் நாட்டைக் கடுமையாக அசைத்துக் கொண்டிருந்தது. மறுபக்கம் U.V.P.யினுடைய ஆயுத விளையாட்டு நாட்டைக் கலக்கிக் கொண்டிருந்தது. மக்கள் நிம்மதியிழந்து தட்டுத் தடுமாறினர்.
பாதையிலே செல்ல முடியவில்லை; பீதியின் உச்சக்கட்டம். கடைகளைத் திறந்து வியாபாரம் செய்வது மிகவும் கஷ்டமாக இருந்தது. கடைகளை இழுத்து மூடுங்கள் என்று ஒரு நோட்டிஸ் கிடைத்தால் போதும், முழுநாட்டிலும் கடைகள் இழுத்து மூடப்பட்டு விடும். ஊரடங்குச் சட்டத்தையும் விடக் கடுமையாக இருக்கும்.
ஊரடங்குச் சட்டத்தின் போது மக்கள் வீடுகளில் இருக்க முடியும்; ஆனால், அவர்களுடைய அந்தச் சட்டத்தில் மக்கள் வீடுகளில் கூட நிம்மதியாக இருக்க முடிவதில்லை.
பாடசாலைக் குப் போக வேண்டாமென்று நோட் டிஸ் வெளியாகினால் போதும், பிள்ளைகளெல்லோரும் வீட்டில் இருப்பார்கள். பாடசாலைகள் இழுத்து மூடப்பட்டுவிடும். அரசாங்க அலுவல்களுக்கு எதிராக நோட்டிஸ் வெளியானால் போதும்; எல்லா அலுவலகங்களும் மூடப்பட்டு ஸ்தம்பித்துவிடும். நாட்டின் நிர்வாகம், பொருளாதாரம் அனைத்தும் பெருவீழ்ச்சியடைந்து கொண்டிருந்தன.
40

அப்துல் மஜீத் ஆலிம்
அரசியல்வாதிகள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அமைச்சர்கள், எம்.பி.க்கள் என்று விதிவிலக்கின்றி இது நடந்து கொண்டிருந்தது. கிராமப் புறங்களில் வாழ்ந்த அரசியல் முக்கியஸ் தர்களெல் லாம் கொலை செய்யப் பட்டுக் கொண்டிருந்தார்கள். மக்களுடைய சொத்துக்கள், பணம், வாகனங்கள் போன்றவைகளெல்லாம் சூறையாடப்பட்டுக் கொண்டிருந்தன.
பீதியின் காரணமாக நாட்டை விட்டுப் பெருந்தொகையானவர்கள் வெளியேறி விட்டனர். பொலிஸ் நிலையங்களில் பொலிஸார் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தர்ர்கள். ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. நாடு பெரும் இழப்புக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்தது.
கெளரவ தலைவரவர்கள் குறிப்பிடத்தக்க எந்த செல்வாக்கும், எந்தப் பலமும் இல்லாமல் புதியதோர் அரசியல் திட்டத்தில் இறங்கியிருந்த அந்தக் கட்டம் எவ்வளவு பயங்கரமாக இருந்தது என்பதை, சிந்தித்துப் பார்க்க முடிகிறது.
வெள்ளம் வந்தபின் அனைகட்டிய கதை
வெள்ளம் வந்து கொண்டிருக்கும் பொழுது, அணைகட்ட இறங்கிய சோகக் கதையாகவே அது இருந்தது. வெள்ளம் வந்துவிட்டது. அணைகட்ட ஒருவிதத்திலும் முடியாது. ஆனால் அணை கட்டித்தான் ஆகவேண்டுமென்று தலைவரவர்கள் கூறுகிறார்கள். அதை எப்படிச் செய்ய முடியும்?
இதுதான் எங்கள் தலைவரவர்களுடைய அரசியல் சாணக்கியம். இந்த நூற்றாண்டிலோ, சென்ற நூற்றாண்டிலோ, இப்படியொரு சாணக்கியம் இடம்பெறவில்லை என்றே சொல்லவேண்டும்.
ஒருபக்கம், அரசியல் நிபுணத்துவமும் பெருந்தந்திரங்களு முடையவர்கள் நாட்டை ஆண்டு கொண்டிருந்த காலம். ஜே.ஆர். ஜயவர்தன அன்று ஜனாதிபதியாக இருந்தார். பிரேமதாச அன்று பிரதமராக இருந்தார். நாட்டில் ஒரு கடுகுக் கொட்டை விழுந்தாலும் கூட அவர்களின் காதுகளில் கேட்கும்.
நாட்டில் எந்த எதிர் திட்டங்களையும் தவிடு பொடியாக்கிவிடக் கூடியவர்களாக அவர்களிருந்தனர். அவர்களுக்குப் பின்னால் லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்க போன்ற பெரிய சக்தி
41

Page 24
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
வாய்ந்த, அரசியல் அதிகாரப் போட்டி நிறைந்த ஒரு குழு இயங்கிக் கொண்டிருந்தது.
அவர்கள் நாட்டின் எதிர்கால ஆட்சி அதிகாரங்களை நினைத்துக் கற்பனை செய்தவர்களாக, கடும் அலுவல்களிலே ஈடுபட்டுக் கொண்டிருந்த காலம். மகாபொல என்றும், மகாவலித் திட்டம் என்றும், வீடமைப்பு என்றும் மக்களின் கவனங்களை வேகமாக ஈர்த்துக் கொண்டிருந்த காலம்.
தற்பொழுது பிரதமராக இருக்கும் நூரிமாவோ பண்டார நாயக்காவுடன் இன்னும் சிலரது குடியியல் உரிமை பறிக்கப்பட்டு சிறகுடைந்த பறவைகளாகக் கிடந்த காலம் அது.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பலம் மிகவும் குறைவாக இருந்தது. இன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கூட, நாட்டின் நிலைமையைச் சகிக்க முடியாமல் வெளிநாட்டில் ஒதுங்க வேண்டியிருந்த காலமது. அவருடைய கணவரும் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இலங்கை - இந்திய ஒப்பந்தம், ராஜிவ் காந்தியின் வருகை, ஜே.ஆர்.ஜயவர்தனா அந்த ஒப்பந்தத்தை பலவந்தமாக அமுல்நடத்திக் கொண்டிருந்த காலம்து. இந்தியப் படையினர் வருகைதந்த காலமது. அந்த வருகையினால் ஆயிரம் பிரச்சினைகள் உருவான காலமுமது
எல்லாவற்றையும் விட “நாங்கள் முஸ்லிம்களின் தலைவர்கள்” என்று சொல்லிக்கொண்டு, சில முஸ்லிம் அமைச்சர்கள் பேரின ஆட்சியாளர்களுடன் இணைந்து கொண்டு தவறான தகவல்களைக் கொடுத்துக் கொண்டும், தலைவரவர்களுக்கு எதிராகப் பெரும் சதித்திட்டங்களைத் தீட்டிக்கொண்டும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டுமிருந்த காலம் அது!
அதுமட்டுமல்ல; தலைவரவர்களைக் கொலை செய்வதற்காக, வடக்கிலும், கிழக்கிலும் பெரிய ஏற்பாடுகள். ஒரு கட்டத்தில் கிழக்கில் தலைவரவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். தலைவரவர்கள் கொழும்பு திரும்பியதும், நான் அவசரமாக அவர்களுடைய அன்றைய வீட்டுக்கு விரைந்தேன்.
தலைவரவர்கள் சிரித்துக் கொண்டே என்னிடம் “ஹஸ்ரத்! இதோ பாருங்கள். என் உள்ளங்கையில் ஜிஹாதின் வடு” என்றார்கள்.
42

அப்துல் மஜீத் ஆலிம்
நான் அதிர்ச்சியடைந்தேன். என் கண்களில் கண்ணிர்த் துளிகள் பொங்கின. கையைத் தொட்டுப் பார்த்தேன். உள்ளங்கையின் தோல் உரிந்து இரத்தச் சிவப்பாக இருந்தது.
கடைசிக் கட்டத்தில் தலைவரவர்கள் தன்னந்தனிமையில் ஒரு மதிலின் மேலாய்ப் பாய்ந்து ஏறி மறு பக்கம் குதித்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்கள்.
தலைவரவர்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். இறந்த ஒருவர் உயிர் பெற்று எழுந்து வந்தது போன்று எனக்கிருந்தது. உயிர் பிச்சை தந்த இறைவனுக்குக் கோடி நன்றி செலுத்தினேன்.
இப்படி மிகவும் பயங்கரமான காலகட்டத்தில் பயங்கரமான கடவல்களைக் கடந்து பயங்கரமான சுரங்கப்பாதையினூடாகத் தான் உருவாக்கிய கட்சியை பாதுகாப்பாகச் சுமந்துகொண்டு, அரசியல் மேடைக்குக் கொண்டு வந்து சேர்த்தவர்தாம் எங்கள் கெளரவ தலைவரவர்கள்.
தற்பொழுது, பல்லாயிரம் மக்கள் இம் மரத்திலிருந்து கனி சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம். மிகவும் சந்தோஷம். ஆனால், கடந்து வந்த அந்தப் பயங்கரப் பாதையின் அதிர்ச்சி மிகுந்த சரித்திரத்தை எவரும் மறந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இவைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இது பல நூற்றாண்டுகள் மக்கள் ஆவலுடன் நினைவுகூரும் சரித்திரமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
டாம் விதி அலுவலகத்தில் வைத்து, தலைவரவர்கள் ஆரம்பச் சந்திப்பின்போது எனக்கு இப்படி விளக்கம் தந்து கொண்டிருந்தார்கள்.
"ஹஸ்ரத்! அரசியல் சக்தி அற்றவர்களாக நாம் இருந்து வருகிறோம். மாறி மாறி வரக்கூடிய பேரினவாத ஆட்சிகளிலே உருவாகும் முஸ்லிம் அமைச்சர்கள் அந்தந்த ஆட்சியினருடன் தலையசைத்துக் கொண்டு சென்று விடுகிறார்கள். நம் சமுதாயத்துக்காக எந்த உரிமைக் குரலும் அவர்களால் எழுப்ப முடிவதில்லை. அப்படி வாய் திறந்தாலும் இறுக்கி மூடப்படுகிறார்கள். தங்கள் பதவிகள் பறிபோய் விடுமே” என்ற பயத்தில் அவர்கள் எதற்கும் சரியென்று தலைகுனிந்து கொண்டே போய் விடுகிறார்கள்.
43

Page 25
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
இதனால், சமுதாயம் பெரும் பாதிப்புக்கு இலக்காகி வருகிறது.”
"ஹஸ்ரத்! ஒரு நாட்டில் சிறுபான்மையாக இருப்பது பொல்லாத வறுமையாகும். அதிலும் பயங்கரமான வறுமை எது தெரியுமா? அரசியல் சக்தி இல்லாமல், அரசியல் அதிகாரமில்லாமல், அரசியல் உரிமைகளில்லாமல் ஒரு சிறுபான்மைச் சமுதாயம் ஒரு நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பதாகும். காலமாற்றத்தில் பெரும் ஆபத்தான கஷ்டங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை வரும்.”
"ஹஸ்ரத்! கட்டாயம் எங்களுக்கு அரசியல் அதிகாரம் தேவை. அதை நாம் ஒரு போதும் இழந்து விடக்கூடாது. அரசியல் அதிகாரம் தான் மிகப்பெரிய சக்தியாகும். வேறு எத்தனை சக்திகள் நம்கையில் இருந்தாலும், அரசியல் சக்தி எங்கள் கையில் இல்லையென்றால், அனைத்து சக்திகளையும் நாம் இழக்க வேண்டிவரும்.”
அரசியல் சக்தியற்ற அதிகாரம் அர்த்தமற்ற அதிகாரம்
தலைவரவர்கள் விளக்கம் தந்து கொண்டிருக்கும் பொழுது, “சேர்! இந்த அரசியல் சக்தியினை நாம் எப்படி ஆரம்பத்தில் உருவாக்குவது? நமது மக்கள் பல கட்சிகளிலும் ஊறிப் போயிருக்கிறார்கள். மார்க்கத்திலும் பல இயக்கங்களாகப் பிரிந்து கிடக்கிறார்கள். இது ஒரு சிக்கலான விடயமாக இல்லையா?” என்று மென்மையாகக் கேட்டேன். தலைவரவர்கள் முந்திக் கொண்டு,
"பொறுங்க ஹஸ்ரத்! விடயத்துக்கு வருகிறேன்” என்று கூறிக் கொண்டே ஒரு காகிதத் தாளை எடுத்து மேசையில் வைத்து, பேனாவை எடுத்து ஒரு பெரிய வட்டம் கீறினார்கள். நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். அந்த வட்டத்துக்குள் சுற்றிவர பல சிறு வட்டங்களை வரைந்தார்கள்.
பின்பு நாட்டிலுள்ள ஒவ்வொரு இயக்கங்களின் பெயர்களையும் அந்த வட்டங்களுக்குள் எழுதத் தொடங்கினார்கள். பிறகு கட்சிகளின் பெயர்களையும் ஒவ்வொரு வட்டங்களுக்குள் எழுதத் தொடங்கினார்கள். பிறகு என்னிடம் பார்க்கச் சொன்னார்கள். நான்
பார்த்தேன்.
பெரியவட்டத்துள் பல வட்டங்கள்
பெரிய வட்டம். அதற்குள் பல சின்ன வட்டங்கள். அந்த
44

அப்துல் மஜீத் ஆலிம்
வட்டங்கள் ஒவ்வொன்றிலும் பல இயக்கங்கள், கட்சிகளின் பெயர்கள்; தலைவரவர்கள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நானும் அந்த வட்டங்களைப் பார்த்துக் கொண்டே தலையசைத்துக் கொண்டிருந்தேன். தலைவரவர்களுடைய வார்த்தைகள் தொடர்ந்தன.
“ஹஸ்ரத்! நாங்கள் இந்த நாட்டில் மிகவும் சிறுபான்மையாக உள்ளவர்கள் இல்லையா?” நான் தலையை அசைத்துக் கொண்டே
இருந்தேன்.
"ஹஸ்ரத்! இவ்வளவு சிறுபான்மையாக வாழும் நாம் எத்தனை பிரிவுகளாகப் பிரிந்திருக்கிறோம் என்பதைப் பாருங்கள்! பரவாயில்லை; இப்பொழுது எமக்குள்ள வேலை இதுதான்."
“இத்தனை பிரிவுகளையும் ஒரு குடைக்குள், ஒரு வட்டத்துக்குள் ஒன்று சேர்க்க வேண்டும். எந்தெந்த இயக்கங்களில் இருந்தாலும் பரவாயில்லை, அரசியலிலே அனைவரும் ஒன்றுபட்டு விடவேண்டும். சமுதாயத்தினுடைய எதிர்கால நன்மைக்காக, ஒவ்வொருவரும் இப்படியாகத் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு பெரிய அரசியல் சக்தியின் கீழ், முழுச் சமுதாயமும் ஒன்று பட்டு விட வேண்டும்; சேர்த்து விட வேண்டும்.”
"இந்தக் காரியம் வெற்றியளித்து விட்டால், இந்த நாட்டில் நாம் ஒரு சக்திவாய்ந்த அரசியல் அதிகாரத்தை எப்பொழுதும் கையில் வைத்திருக்க முடியும். எங்களுடைய ஒத்தாசை, அணுசரணை இல்லாமல், எந்த ஒரு பெருங்கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகி விடும்.”
சேர்! இவங்கள எப்படி சேர் ஒன்றுபடுத்துவது? நான் குறுக்கிட்டேன்.
“ஹஸ்ரத்! அதுதான் பெரிய வேலை என்று சொல்கிறேன். இதுவரை சரித்திரத்தில் எவரும் முன்வராத காரணமும் அதுதான். ஆனால், இந்த ஒன்றுபடுத்தும் காரியத்தை சாதிக்காதவரையில், அதில் நாம் முழுமையான ஒரு வெற்றியைக் காணாதவரையில், இந்த நாட்டில் நாம் அரசியல் அதிகாரம் பெற்றவர்களாக மாற முடியாது.”
"எப்படியாவது நம் சமுதாயத்தை அரசியல் ரீதியில் ஒன்றுபடுத்தியே ஆகவேண்டும். இதுதான் நாம் எடுத்துச் செல்லும்
45

Page 26
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
போராட்டமாகும்.”
"இதன் உச்சியை நாம் எட்டிப் பிடிப்பதற்கு ஏறக்குறைய பதினெட்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்தாக வேண்டும். இப்படி ஓர் ஆண்டுக்கணக்கையும் நான் திட்டமிட்டு இருக்கிறேன். நம் சமுதாயம் உணர்வு பெறும்வரையில், இந்த அரசியல் அமைப்பிலே தெளிவு பெறும்வரையில் இந்தப் போராட்டத்தை நாம் எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கப்பால், அரசியலிலே ஏமாற்ற முடியாத பெரும் சக்தியாக நம் சமுதாயம் உருவாகி விடும்.”
இப்படியெல்லாம் பலதரப்பட்ட விடயங்கள் அன்று பேசப்பட்டன.
எனக்கு நினைவும், தேவையும் ஏற்படும் பொழுது, அவை எழுத்துக்கு வரும்.
தலைவரவர்களுடன் அன்று நான் நடத்திய நீண்ட உரையாடலினால் எனக்குப் புத்துணர்ச்சி ஏற்பட்டது. புதுத் தெளிவுகள் பிறந்தன. நானும் ஒரு புதிய சக்தியாக உருவாகினேன். அன்று டாம் வீதி அலுவலகத்திலிருந்து நான் வெளியாகிய பொழுது, புதுத் தெளிவுடனும், புதிய சிந்தனைகளுடனும் அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்தேன்.
தலைவரவர்கள் காட்டிய பாதையில் எனக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. அதனால் இரவு, பகலாக அதுபற்றிய சிந்தனையில் மூழ்கிக் கொண்டிருந்தேன். ஓய்வு கிடைக்கும் பொழுதெல்லாம், டாம் வீதி அலுவலகத்துக்குச் செல்லத் தொடங்கினேன்.
அந்தக் காலகட்டத்தில் தலைவரவர்கள் கட்சியை வளர்க்கும் விடயத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தார்கள். முதலாவது கட்சியின் நிதிநிலை. கட்சிக்கென ஒரு செம்புச் சதமுமே இல்லையென்ற நிலை.
மகாத்மா காந்தி கூட ஒரு தடவை மக்களை நோக்கி 'உங்கள் பணக்குண்டுகளைத் தூக்கி என் பக்கம் வீசுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்தார். அரசியல் துறையில் பணத்தேவை மிகவும் இன்றியமையாத ஒன்று.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட போர்த் தேவைகளுக்காகப் பணம் வசூலிப்பார்கள். ஒரு நாள் பெருநாள் தினத்தில் பெண்கள் தொழும் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு உபதேசித்துவிட்டு
46

அப்துல் மஜீத் ஆலிம்
தர்மம் செய்யும்படி வேண்டினார்கள். தோழர் பிலால் (ரலி) அவர்கள் ஒரு விரிப்பை ஏந்திக் கொண்டிருந்தார்கள். பெண்கள் தங்கள் நகைகளைக் கழற்றி அந்த விரிப்பில் போட்டுக் கொண்டிருந்தார்கள் என்ற அறிவிப்பு புஹாரி ஷரீபில் பதிவாகியுள்ளது. என்னதான் சொன்னாலும் பணம் என்பது பெரிய ஆயுதம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
முஸ்லிம் காங்கிரஸின் முதற்சவட்டம்!
“யூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்” என்ற முஸ்லிம்களின் அரசியல் கட்சியொன்று உதயமாகி இருக்கிறது என்பதை நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டிய முக்கியமான அங்குரார்ப்பண வைபவம் முதன்முதலில் கொழும்பு, தெமட்டக்கொட வீதியில் அமைந்திருக்கும் பாஷா வில்லாவில் நடைபெற்றது.
அந்த வைபவத்தை நடத்துவதற்குப் பட்டபாடு பெரும்பாடாகி விட்டது. கட்சியை அரசாங்கத்தில் பதிவு செய்யவேண்டும். அதற்கு ஏற்பட்ட இன்னல்கள் சொல்லி முடியாதது.
அரசியல் மட்டத்தில் திடீரென எதிர்ச்சக்திகள் தோன்றின. கட்சியை வேரோடு பிடுங்கி கசக்கி விடுவதற்கு அவர்கள் தீவிர முயற்சி
செய்தனர்.
தலைவரவர்கள் ஊண், உறக்கமின்றி இரவு பகலாக அலையும் அளவுக்கு நிலைமை முற்றியதும் உடன் இருந்த தொண்டர்கள் தட்டுத்தடுமாறினர். கடைசியில் பாஷா வில்லாவில் வெற்றிகரமாக அங்குராப்பண வைபவம் நடைபெற்று முடிந்தது. உண்மையில் அது தொண்டர்கள் எதிர்பார்த்த நிகழ்ச்சியாக இருக்கவில்லை.
கடைசியில் மகிழ்ச்சி தாங்க முடியாமல் பலர் கண்ணிர் விட்டு அழுதனர். அன்றையத்தினம் கட்சியெனும் மரம் பூமியில் ஆழமாக நாட்டப்பட்டு விட்டது. அன்று அசைக்க முடியாத ஒரு சக்தியாக எளிய தோற்றத்தில் கட்சி பூமியில் உறுதியாக நின்றது.
அன்று அங்குரார்ப்பண மகாநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் உற்சாகமான கட்டங்களைப் பார்த்து பல தொண்டர்கள் கட்சியின் எதிர்கால வளர்ச்சியைக் கற்பனை செய்து கனவு கண்டு மகிழ்ந்தனர்
அதன்பின் அரசியல் உயர் மட்டத்தில் பல எதிர்ப்புகளும்,
47

Page 27
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
சதிகளும் தோன்றத் தொடங்கின. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பகிரங்கமாக எதிர்க்கத் தொடங்கினர். அரசியல் மேடைகளிலும், பொதுக்கூட்டங்களிலும் கடுமையாகத் தாக்கினர். பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும், கெளரவ தலைவரவர்களையும் பெயர்
கூறி விமர்சித்தனர்.
சிறுகட்சி ஏற்படுத்திய பெரும் கிலேசம்
எளிமையிலும் எளிமையாக சில உறுப்பினர்களுடன்
தொடங்கப்பட்ட இந்தக் கட்சியைக் கண்ட பேரினக் கட்சிகளில் இருந்த முஸ்லிம் அரசியல் வாதிகள், அந்தக் கட்டத்தில் ஏன் தான் அவ்வளவு பீதியும் தடுமாற்றமும் அடைந்திருந்தார்கள் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டிய அளவுக்கு நிலைமை இருந்தது.
முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இனவாதக் கட்சியென்று பெயர் சூட்டி அதற்கு மேடைகளில் நீண்ட விளக்கம் கொடுத்து வந்தார்கள். நாட்டின் பேரின மக்களையும் தூண்டினார்கள். நாட்டைக் கூறுபோடுவதற்கு இவர்களும் வந்து விட்டார்கள்’ என்று கர்ஜித்தார்கள். முஸ்லிம் சமுதாயத்துக்கே பேரழிவு காலம் வந்து விட்டதென்று கூறி முஸ்லிம் சமுதாயத்தைப் பயம் காட்டினார்கள். இவர்களைக் கொழும்பிலிருந்து விரட்டியடிக்க வேண்டுமென்று கர்ஜித்தார்கள்.
‘முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு கிழக்கில் எந்த இடமும் இல்லை. அவருக்கு அங்கு எந்த மதிப்பும் மரியாதையும் கிடையாது. அந்த மக்களால் விரட்டப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு தற்பொழுது கொழும்பிலே அடைக்கலம் புகுந்துள்ளார். அவருக்கு ஊர்ப்பக்கம் தலை காட்ட முடியாது. போனால் ஊர்மக்கள் சுட்டுத் தீர்த்து விடுவார்கள். தற்பொழுது கொழும்பு மக்களை ஏமாற்ற வந்து விட்டார். இங்கு சிங்களவர்களும், முஸ்லிம்களும் ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களைப் பிரித்து, இனப்பிரச்சினையைத் தூண்ட வந்துள்ளார்.’
இப்படி கெளரவ தலைவர் அவர்களை இனவாதியாகப் படம் பிடித்துக் காட்டினார்கள். ஒரு பயங்கரவாதியாக அடையாளம் காட்டினார்கள். 'இந்தக் கட்சி கிழக்குக்கு மட்டும்தான் சரிவரும். வேறு பகுதிகளுக்கு சரிவராது என்றும் தங்கள் அனுதாப ஆலோசனைகளை வழங்கினார்கள்.
48

அப்துல் மஜீத் ஆலிம்
கன்னியுரைக்கும் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி!
இவர்களுடைய இந்ாக் கடும் எதிர்ப்பு பல வருடங்கள் நீடித்தது. கடைசியில் கெளரவ தலைவர வர்கள் முதன் முதல் பாராளுமன்றத்துக்குப் பிரவேசித்து அங்கு கன்னியுரை நிகழ்த்துவதற்காக எழுந்து நின்ற பொழுது அங்கும் பேச விடாமல் கூச்சலிட ஆரம்பித்தனர்.
தொலைக்காட்சி மூலம் இந்தப் பரிதாபக்காட்சியை முழு நாடும் பார்த்துக் கொண்டிருந்தது. தலைவரவர்களுக்கு எதிராக எவ்வளவு பெரிய எதிர்சக்தியொன்று செயல்பட்டு வந்தது என்பதை அன்றையப் பாராளுமன்றக் கூக்குரலிலே விளங்கக்கூடியதாக இருந்தது. தலைவரவர்கள் தங்கள் கன்னியுரையை நிகழ்த்த முடியாத அளவுக்கு அந்தக் கூக்குரல் பாராளுமன்றத்தைக் கலக்கியது. இது 1989 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது.
தலைவரவர்கள் பாராளுமன்றத்துக்குள் கன்னியுரைக்காக எழுந்து நிற்கிறார்கள். கோட், சூட், டை அணிந்திருந்தார்கள். தலையிலே ஒரு தொப்பி இருந்தது. வழக்கமாக உதிரும் தன்னம்பிக்கைப் புன் சிரிப்பு முகத்திலே தவழ்கிறது.
அல்லாஹ்வைப் புகழ்ந்து ஸலவாத்துச் சொல்லி அல்லாஹ்வின் திருநாமம் உச்சரித்து தலைவரவர்கள் பேச வாயெடுத்தார்கள்.
அடுத்தகணம் பாராளுமன்றத்தையே அதிரவைக்கும் அந்த ஓசை சில நிமிடங்கள் நீடித்தது. போகிற போக்கைப் பார்த்தால், தலைவரவர்களை ஒரு வார்த்தைகூடப் பேச விட மாட்டார்கள்
போன்றிருந்தது.
ஆனால், கெளரவ தலைவரவர்கள் ஆரம்பத்தில் எந்த புன்சிரிப்புடன் எழுந்து நின்றார்களோ, அந்தப் புன்சிரிப்பை விட்டுக்கொடுக்காமல் கடைசிவரையில் அதே முகபாவனையுடன் நின்று கொண்டிருந்தார்கள்.
எந்த ஒரு தைரியசாலிக்கும் நிலை தடுமாறகிற ஒரு கட்டம். சொல்லம்புகள் “விர் விர்’ ரென பல திக்குகளிலிருந்தும் பறந்தன. கேட்கக் கூடாத கேள்விக்கணைகள் பாராளுமன்றத்தின் பல கோணங்களிலிருந்தும் நெடுங்குரல் நீட்டி எழுந்து வந்தன.
49

Page 28
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
எங்கள் தலைவரவர்கள் அசையாத இமயமலை போன்று நின்று கொண்டிருந்தார்கள். பயங்கரமான ஒரு கட்டம். இந்தக் கட்டத்தை, இந்த சில நிமிட நேரங்களைத் தலைவரவர்கள் எப்படி ஒட்டப் போகிறார்களென்று ஒருவிதக் கேள்விக்குறி எனது உள்ளத்தில் கிளர்ந்தெழுந்தது.
நான் துஆ பிரார்த்தனை செய்யத் தொடங்கினேன். என் இதயத்தில் ஒரு வித "டிக் டிக்” சத்தம் வந்து கொண்டிருந்தது. இரத்த நாளங்கள் வேகமாக வேலை செய்யத் தொடங்கின. உண்மையில்
அந்தக் கொஞ்ச நேரத்தைக் கடத்த மிகவும் கஷ்டப்பட்டேன்.
நான் ஒரு விதமாக சிந்திக்கத் தொடங்கினேன். “என்னடா இது? நாய் படாத பாடெல்லாம் பட்டு பல வருடங்கள் காணாத கஷ்டங்களையெல்லாம் கண்டு, பாராளுமன்றத்துக்குள் காலெடுத்து வைத்த கொஞ்ச நேரத்துக்குள் இப்படியும் ஒரு நிலையா? இப்படியும் ஒரு சோதனையா” என்று.
எனக்கு எரிச்சல் வந்தது. வரக்கூடாத ஒருவர் உள்ளே வந்துவிட்டது போன்று, இவரை எப்படியாவது விரட்டிவிட வேண்டுமென்பதுபோல் அன்று பாராளுமன்றம் நடந்துகொண்டது.
தலைவரவர்களை நோக்கி ஒரே நேரத்தில் பல கேள்விக் கணைகள் பாய்ந்தன. பாராங்கல்லுக்கு மேலால் எவ்வளவு மழைபெய்தாலும் அந்தக் கல் அந்த மழையை எவ்வளவு சுவாரஸ்யமாக வாங்கிக் கொள்ளுமோ, அது போன்றுதான் அன்று தலைவரவர்களுடைய நிலை இருந்தது. எந்தப் பீதியையும் காட்டிக் கொள்ளாமல் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்கள்.
கடும் கூச்சலுக்கிடையில் நூற்றுக்கணக்கானவர்களுடைய கேள்விகளுக்கு அதாவது அத்தனைபேர்களுடைய கேள்விகளுக்கும் தலைவரவர்கள் ஒரேயொரு பதிலைத்தான் கொடுத்தார்கள். அடுத்த கணம் பாராளுமன்றமே அசந்தது. அனைவரும் மெளனம். முகங்களில் ஒருவித ஏமாற்றச் சிரிப்பு. ஒவ்வொருவரும் அவர்களே அவர்களை ஒரு விதமாக சமாளித்துக் கொண்டார்கள். அடுத்தகணம் அனைவரும் நல்ல பிள்ளைகள் போன்ற ஒரு விதத் தோற்றம்.
இதுதான் அரசியல் சாணக்கியம் என்பது. இதற்காகத்தான் இந்த
வரலாறு எழுதப்படுகிறது. தலைவரவர்கள் புன்சிரிப்பை மாற்றாமல் அனைத்தையும் சகித்துக்கொண்டு சரியான நிமிடங்கள் வரும்
50

அப்துல் மஜீத் ஆலிம்
வரையில் எதையும் பொருட்படுத்தாமல் நின்று கொண்டிருந்தார்கள்.
எந்தக் குரலும் டெல்ல முடியாத இந்தக் குரல்!
தக்க தருணம் வநதது. எங்கள் சொல்லேர் உழவனுடைய, அருமைத் தலைமகனுடைய வாய் திறந்தது. வெட்டு ஒன்று துண்டு இரண்டாக சில வார்த்தைகள் வெளிவந்தன. பாராளுமன்றக் கூட்டத்தின் குரல்வளையைப் பிடித்து நசுக்கிவிட்டது போன்றும் அந்த மன்றத்தையே சூழவுள்ள தண்ணீர் தேக்கத்துக்குள் அமுக்கிவிட்டது போன்றதுமான திருப்தி நிலையில் தலைவர் நின்றார்!
நாவில் தான் வலிமையுள்ளது என்றான் நாவலன். பேனாவில்தான் வலிமையுள்ளது என்றான் நெப்போலியன், ஒழுக்கத்தில்தான் வலிமையுள்ளது என்றார் வள்ளுவர். அன்று நாவலன் கூறிய அந்த மாபெரும் வலிமை நாவுடைய வலிமை எங்கள் தலைமகனிடமிருந்து
வெளியாகியது.
தான் பாராளுமன்றத்துக்குப் புதியவன்; புதுமாப்பிள்ளை போன்றே உட்கார்ந்து விடுவோம் என்று தலைவரவர்கள் அமர்ந்திருக்கலாம். அப்படியொரு நிலைதான் அன்று ஏற்படவிருந்தது. தலைக்கு மேலால் வந்த வெள்ளம் எத்தனை அடிபோனாலும் பரவாயில்லை என்று விட்டுப்போட்டு சும்மா இருந்திருக்கலாம். ஆனாலும் சரியான தருணத்தில் சரியான வார்த்தைகளைப் பாவித்து சபையை கதிகலங்க வைத்தார் நம் தலைமகன்.
எல்லோரும் மெளனம். இதன் பிறகு இந்த சொற்சிலம்பு வீரனுடைய ஆட்டத்தை இந்த சபைக்குள் உயிருள்ளவரையினாலும் நிறுத்த முடியாது என்பது அந்தக் கணத்தில் நிரூபிக்கப்பட்டது. இதன் பிறகு எந்தக் குரலும், இந்தக் குரலைத் தாண்ட முடியாது என்பது அன்று நிருபணமாகியது.
இதோ நம் தலைவரவர்கள் பேசுகிறார்கள். அமைதியாக, நிதானமாக, அலட்டிக் கொள்ளாமல் அந்த வார்த்தைகள் வெளிவந்தன. வரலாறு ஒரு போதும் மறக்கக்கூடாத அவ்வார்த்தைகள் இவை:
"இந்த நாட்டில் இவ்வளவு காலமும் இருந்து வந்த பிரச்சினை இதுவேதான். இந்த நாடு தற்பொழுது பயங்கரமான குழப்பங்களுக்கும் யுத்தங்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் இந்தக் கூக்குரல்தான்”
51

Page 29
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
“இங்கு சிறுபான்மையினரின் குரல்களுக்குப் பூட்டுப் போடப்படுகிறது. இதன் பயங்கரமான தாக்கத்தை வெளியில் பார்க்க முடிகிறது. இந்த நிலை இங்கு இருக்கும் வரையில் வெளியில் சமாதானத்தையோ, ஐக்கியத்தையோ, நாட்டினுடைய முன்னேற்றத்தையோ எதிர்பார்க்க முடியாது. சிறுபான்மையினர் இந்த ஆட்சியில் நம்பிக்கையிழந்திருக்கும் காரணத்தை இந்த இரைச்சல் உணர்த்திக் காட்டுகிறது.”
கெளரவ தலைவரவர்களுடைய இந்த நிதானமான, உருக்கமான வார்த்தைகள் ஒரு வைத்தியன் ஒரு நோயாளியுடைய நோயையும் அந்த நோய்க்குரிய காரணத்தையும் ஆணித்தரமாக சுட்டிக் காட்டுவது போன்று இருந்தன.
அந்தக் கட்டத்தில் அனைவரும் ஒரு வித நோயாளிகள் போன்றும் அந்த வியாதி சுட்டிக் காட்டப்பட்டவர்கள் போன்றும் ஆகி விட்டனர்.
பாராளுமன்றத்தில் அன்று நடந்த அந்த நிகழ்வுகள், கடல் அலைகள் வந்து கரையில் மோதி நின்றது போன்று அமைந்தது. அவ்வளவுதான்.
தலைவரவர்கள் அடிக்கடி சொல்வார்கள்: “நாம் செல்லும் இந்தப் பாதை கொடிய முட்கள் நிரப்பப்பட்ட ஒரு பாதை. இதன் தலைமைப் பொறுப்பு' என்பது முட்கள் நிரப்பப்பட்ட ஒரு படுக்கை”
எதிர்ப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டோர்
ஜனநாயக வழியிலே சிறுபான்மைச் சமூகத்தின் உரிமைக்குரலைச் சுமந்து கொண்டு தலைவரவர்கள் பாராளுமன்றத்தில் புகுந்த பிறகு தலைவரவர்களை எதிர்த்துக்கொண்டே இருப்பதற்குச் சில முஸ்லிம் பிரதிநிதிகள் பேரின ஆட்சியினரால் ஏற்படுத்தப்பட்டனர்.
அவர்களுடைய முழு நேர வேலையும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த முக்கிய அலுவலும் தலைவரவர்கள் சபையில் எதைப் பேசினாலும் அந்தப் பேச்சை எதிர்த்து நிற்பது தான். அதற்காகத்தான் அவர்கள் சம்பளம் வாங்கினார்கள். அதற்காகத்தான் பிரதிநிதிகளாக ஆக்கப்பட்டார்கள். தலைவரவர்களை எதிர்த்து நிற்கும் ஒரே நோக்கத்துக்காகத்தான் அவர்களுக்குக் கார்களும் வசதிகளும் வழங்கப்பட்டிருந்தன.
52

அப்துல் மஜீத் ஆலிம்
காலப்போக்கில் தலைவரவர்களை எதிர்த்தே அவர்கள் தேய்ந்து போனார்கள். வாகனம் ஒடி டயர் தேய்ந்தது போன்று ஆகிவிட்டார்கள்.
இவ்வாறு பல வருடங்கள் தலைவரவர்கள் பாராளுமன்றத்துக்குள் திட்டமிடப்பட்டு எதிர்க்கப்பட்டு வந்துள்ளார்கள். பிரேமதாச ஜனாதிபதியாக ஆட்சி செய்த காலம் முழுவதும் தலைவரவர்கள் பாராளுமன்றத்துக்குள் பெரும் சவால்களை சந்தித்த காலமாகும்.
அக்காலகட்டத்தில் தலைவரவர்கள் பாராளுமன்றத்தில் பேசும் பொழுதெல்லாம் குறிப்பிட்ட அந்த உறுப்பினர்களால் ஏளனப் பதில்கள் அளிக்கப்பட்டு வந்துள்ளன. 'உன் பருப்பு இங்கு வேகாது. உன் வாக்கு இங்கு வெல்லாது. உன் வரவு இங்கு பயனற்றது’ என்ற அமைப்பில் கறை மனத்துடனேயே அப்பிரதிநிதிகள் தலைவரவர்களுடன் நடந்து கொண்டனர்.
இவ்வளவையும் பொறுத்துக் கொண்டும் சமுதாயத்துக்குக் குரல் கொடுத்துக் கொண்டும் கட்சியின் நிலைமையை பாதுகாத்துக் கொண்டும் தலைவரவர்கள் பல வருடங்கள் பெருங் கஷ்டங்களுடன் காலத்தை ஒட்டி வந்துள்ளார்கள்.
நிதி நெருக்கடியும் நெரிசல்களும்!
இவ்வளவு பிரச்சினைகளுக்கும் மத்தியில் கட்சியின் நிதிநிலைமை மட்டுமல்ல தலைவரவர்களுடைய பொருளாதார நிலைமையும் மிகவும் சரிந்து கிடந்தது. கையில் ஐந்து சதம் கூட இல்லாமல் பல நாட்களைக் கடத்திய கட்டங்களும் இருந்தன.
முழுமூச்சும் முழு நேரமும் கட்சியினுடைய பணிக்காகவே கடந்து கொண்டிருந்தன. தொழில் பற்றிச் சிந்திக்கவே நேரமில்லாதிருந்தது
ஆரம்பத்தில் டாம் விதி அலுவலுகத்தை நடத்த முடியாத அளவுக்குப் பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டது. இந்தப் பெரிய நிதி நெருக்கடியில் தலைவரவர்கள் பட்டபாடு சொல்லி முடியாது.
பாஷாவில்லாவிலே கட்சி அரங்கேறிய பிறகு கட்சியினுடைய வளர்ச்சிப் பணிகள் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டன. டாம் வீதி அலுவலகத்திலே பல ஊழியர்கள், தொண்டர்கள் இயங்கத் தொடங்கினர்.
53

Page 30
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
அவர்களுடைய கொடுப்பனவுகள், செலவுகள், கட்டட வாடகை, கட்சியினுடைய வேலைத் திட்டங்களுக்கான செலவுகள், கட்சியினுடைய வளர்ச்சிப் பணியில் நாடு முழுவதும் பிரயாணம். செய்வதற்கான செலவுகள்.
இவ்வாறு கட்சியினுடைய செலவினங்கள் அதிகரித்துக் கொண்டே வந்தன. ஆனால் வருமானம் மிகவும் கம்மியாக இருந்து வந்தது. கட்சியினுடைய வளர்ச்சிக்கு ஆதரவு தேடி எத்தனையோ செல்வந்தர்களை அணுகியும் குறிப்பிடப்பட்ட பயன் ஏதும் கிடைக்கவில்லை. அக்காலகட்டத்தில் கட்சியின் நிதிப் பணிப்பாளராய் ஜனாப் மக்கி ஹாஜியார் இயங்கினார். அவர் பார்வைக்கு மிகவும் வாட்டசாட்டமானவர். சிவந்த உடல்; கம்பீரமான தோற்றம். பார்வைக்கு ஒரு நிதியமைச்சரைப் போன்றே தோற்றம் அளிப்பார்.
மக்கி ஹாஜியார் அழகான தூய வெண்ணிற ஆடை அணிவார். அவருடைய கம்பீரமான அழகிய தோற்றமும், தூய்மையான வெண்ணிற உடை அணியும் தன்மையும் பார்ப்பவர்களுக்கு கட்சி கோடானுகோடி ரூபாய்களை வைத்திருப்பது போன்றே தோன்றும்.
ஆனாலும் என்ன செய்ய முடியும்? நிதி நிலைமை மோசமாகவே இருந்து வந்தது.
கேட்போரை மிகைத்த பேச்சாளர் எண்ணிக்கை
1986, 87,88 ஆம் ஆண்டு காலப் பகுதிகள் கட்சி மிகப் பெரிய வறுமைக்கு முகம் கொடுத்திருந்த காலம். அதாவது கட்சிக்கு நிதியுமில்லை, மக்களுமில்லை. கட்சியை மக்கள் மயப்படுத்துவதென்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை. அக்காலத்தில் கொழும்பு புதுக்கடையில் கட்சி அறிமுகக் கூட்டமொன்று நடைபெற்றது. ஒரு விட்டுச் சூழலில் அது நடந்தது.
அக் கூட்டத்துக்கு கட்சிப் பேச்சாளர்கள் நான்கு பேர் சென்றிருந்தனர். ஆனால் பேச்சை செவியேற்க வந்திருந்தவர்கள் எத்தனை பேர்கள் தெரியுமா? மூன்று பேர்கள் மாத்திரமே!
நண்பர் முனாஸ் என் பள்ளிவாசல் அறையில் வந்து சோகமாகச் சிரித்து மாய்ந்தார். என்னப்பா? என்று நான் கேட்டேன். நடந்த நிகழ்ச்சியை சொல்லிக் காட்டினார்.
54

அப்துல் மஜீத் ஆலிம்
அக்கால கட்டத்தில் அதிகமான மக்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுடைய புதிய அரசியல் கட்சியென்று சொல்லப்படும் போதெல்லாம் ஒரு விதக் கேளிக்கை போன்றிருந்தது. ஏனென்றால் எல்லோரும் யூ.என்.பி. என்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்றும் ஊறிப் போயிருந்தவர்கள் இந்தக் கட்சி வந்து என்ன செய்யப் போகிறது?’ என்று கேள்வி கேட்கக் கூடியவர்களாகவே இருந்தனர்.
மக்கள் உள்ளங்களில் கட்சியினுடைய பெறுமதியை ஆழமாகப் பதிப்பது மிகவும் கஷ்டமாகவே இருந்தது.
ஒரு புதுமையென்னவென்றால் கெளரவ தலைவரவர்களிடத்தில் ஆரம்பத்திலிருந்தே ஒரு உறுதியான நம்பிக்கை இருந்து வந்தது. அந்த நம்பிக்கை எந்தக் கட்டத்திலும் தளர்ந்தது கிடையாது. அந்த அசையாத நம்பிக்கைதான் இந்தப் பாரிய வளர்ச்சியின் பின்னணி என்று துணிந்து கூறலாம்.
தலைவரவர்கள் கட்சிக்காக எப்பொழுதும் ஏதாவது செய்து கொண்டுதானிருப்பார்கள். கட்சியினுடைய வளர்ச்சிக்காக ஒவ்வொரு நாளும் புதிது புதிதான சிந்தனைகள் அவர்களிடத்தில் உருவாகிக் கொண்டுதானிருக்கும்.
பாலூட்டிச் சீராட்டிய பாசமிக்க தாய்!
இந்தக் குழந்தை எனது குழந்தை, நான் பெற்றெடுத்த குழந்தை, இந்தக் குழந்தையை நான் எப்படியாவது வளர்த்துத்தான் ஆகுவேன், ஆளாக்கித்தான் ஆகுவேன் என்று ஒரு தாய் கங்கணங்கட்டி நிற்பதுபோன்றுதான் கெளரவ தலைவரவர்களுடைய நிலை இருந்தது.
கட்சி ஒரு குழந்தை. தலைவரவர்கள் ஒரு தாய். உண்மையில் கட்சியை ஈன்றெடுத்த தாயாகவே தலைவரவர்கள் இருக்கிறார்கள். இந்தக் கட்சிக் குழந்தைக்கு வளர்ப்புத் தாயுமில்லை. செவிலித் தாயுமில்லை.
பாலூட்டி, சீராட்டி, தாலாட்டி, அன்புடனே ஆளாக்கி, சிந்தையில் என்றுமே நிலையாக்கி, இரவு பகலாகத் துணையாகி, அன்புருவே ஆளாக்கி வளர்ந்த ஒரே அன்புத்தாய், ஒரே அருமைத்தாய் நம் தலைவரவர்கள்தான்.
குழந்தையைத் தூக்கவும் அணைக்கவும் கொஞ்சி விளையாடவும்
55

Page 31
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
சுற்றிவர ஆயிரம் பேர்கள் இருக்கலாம். உண்மையில் குழந்தைக்கு அவையும் நல்ல காரியங்கள்தான்.
ஆனால் குழந்தை மலம் கழிக்கும் பொழுது அந்த மலத்தை அள்ளியெடுப்பவள் தாய். அந்தக் குழந்தையை தேய்த்துக் கழுவி விடுபவள் தாய். இரவெல்லாம் குழந்தைக்காக விழித்திருப்பவள் தாய். குழந்தையின் ஆரோக்கியத்தில் கண் வைத்துக் கொண்டே இருப்பவள் தாய். நோய் நொம்பலங்கள் வராமல் கவனமாக இருப்பவள் தாய். நாற்றமெடுத்த குழந்தையைக் குளிப்பாட்டி மனம் பூசி புது உடுப்பு உடுப்பாட்டி விடுபவள் தாய்.
இந்தக் கட்சிக் குழந்தைக்காக இத்தனை காரியங்களையும் செய்து கொண்டே இருப்பவர்கள் தாயாகிய நம் அருமைத் தலைவரவர்கள்தாம்.
தாய் குழந்தையை அழகுபடுத்தி விட்டால் தூக்கிமுத்தமிட்டு விளையாட ஆயிரம் பேர் இருப்பார்கள். அது சகஜம்தான். ஆனால் குழந்தை மலம் கழிக்கும்போது யாரும் நெருங்குவதில்லை. "சீச்சி” என்று கீழே வைத்து விட்டு ஒதுங்கி விடுவார்கள். அப்போது முன் வருபவள் தாய். தாய் வந்து குழந்தையைக் கழுவி விட்ட பிறகு திரும்பவும் குழந்தையுடன் கொஞ்சி விளையாட யாராவது வருவார்கள்.
இதுதான் நம் கட்சியின் நிலையும். இன்று வரை அது தொடர்கிறது. அது என்றும் தொடரும். அந்தப் பாடல், இன்ஷா அல்லாஹ்! தொடர்ந்தும் இந்த மண்ணில் கேட்கத்தான் போகிறது. ஆனால், தாய் என்றும் தாய் தான். குழந்தை எந்த நிலையில் இருந்தாலும் தாயுடைய அணுகுமுறை ஒரு போதும் மாறாது.
இந்தக் கட்சிக் குழந்தை ஆயிரமாயிரம் தடவைகள் மலம்
கழித்துவிட்டது. ஆனால் ஒரு போதும் தளராமல் கழுவித் துடைத்தார்கள் தாயாகிய நம் தலைவரவர்கள்.
இந்தக் கட்சிக் குழந்தைக்குப் பல தடவைகள் நோய்கள் தொற்றியன. தளராமல் சிகிச்சை செய்து ஆரோக்கியப் படுத்தியவர்கள் தாயாகிய நம் தலைவரவர்கள். இந்தக் கட்சிக் குழந்தைக்கு எத்தனையோ தடவைகள் மரணமே வரப் பார்த்தது. மூச்சே நின்று விட்ட நிலை வந்தது. கோமா நிலை வந்தது.
56

அப்துல் மஜீத் ஆலிம்
பலர் சொன்னார்கள் இனி இந்தக் குழந்தை பிழைக்காது மரணித்துப் போகட்டும்; வீண் சிரமம் எதற்கு என்றெல்லாம் ஆலோசனைகள் வந்தன.
ஆனால் மரணமே வந்து முகங்கொடுத்த இந்தக் கட்சிக் குழந்தையை இறைவனிடம் பிரார்த்தித்து மனமுருகி அழுது கெஞ்சி மன்றாடி உயிர்ப்பிச்சை வாங்கியவர்கள் குழந்தையின் அருமைத் தாயாகிய நம் அருமைத் தலைவரவர்கள்தாம்.
அரசியல் பாலைவனத்தில் அன்னை ஹாஜறா!
குழந்தை இஸ்மாயில் தாகம் தாங்காது அழுத பொழுது தாயார் ஹாஜரா அவர்கள் தண்ணீர் தேடி ஷபா - மர்வா மலைகளுக்கிடையில் ஓடினார்கள். அதே ஓட்டத்தை இந்த முஸ்லிம் காங்கிரஸ் குழந்தையின் தாயும் ஓடினார்கள்.
இறைவனுடைய உதவி வந்தது. காலடியிலே தண்ணீர் குமிழியிட்டுப் பொங்கியது. அந்தத் தண்ணீரை இன்று உலகமே அருந்துகிறது.
கட்சிக் குழந்தையின் இந்தத் தாயாரும் தண்ணீர் தேடிப் பல வருடங்களாக ஓடினார்கள். இறைவனுடைய உதவி வந்தது. 'அரசியல் அதிகாரம்’ என்ற ஸம்ஸம் ஊற்றுப் பொங்கத் தொடங்கியது: இன்று ஆயிரமாயிரம் பேர் அதை அருந்தி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனாலும் தாய் தாய்தான். தண்ணீர் அருந்துபவர்களெல்லாம் அருந்திக் கொண்டிருங்கள். அனுபவிப்பவர்கள் அனுபவித்துக் கொண்டிருங்கள். ஆனால் எனது வேலை உயிர் உள்ளவரை இந்தக் கட்சிக் குழந்தையை ஆளாக்குவது தான் என்று கூறிக் கொண்டு இன்றும் இரவு பகலாக ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கின்றாள். இந்தக் கட்சிக் குழந்தையின் தாய்.
இந்தக் கட்சிக் குழந்தைக்கு நோய், இடையூறுகள் வந்த காலங்களில் இந்தக் குழந்தையையும் தாயையும் பரிதவிக்க விட்டு விட்டு எத்தனையோ பேர்கள் ஒட்டமெடுத்தனர். குழந்தையோடு கொஞ்சி மகிழ்ந்தவர்கள் அப்படியே பரிதவிக்க விட்டு வெளியேறினர்.
அதுமட்டுமல்ல, வெளியேறியவர்கள் குழந்தையையும் தாயையும்
57

Page 32
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
எப்படியாவது கொன்று விட வேண்டுமென நீண்ட சதித்திட்டங்களைத் தீட்டினர். குழந்தையும் இவ்வுலகில் இருக்கக் கூடாது என்று விரும்பினர்.
சிற்றன்னை பெற்றன்னை ஆவாளா?
ஒரு காலத்தில் இந்தக் கட்சிக் குழந்தையுடன் கொஞ்சி மகிழ்ந்த பலர் தற்பொழுதும் இந்தக் குழந்தையைக் கொன்று விடும் ஆர்வத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால் தாயின் சாமர்த்தியத்தினால் குழந்தை கம்பீரமாக விளையாடிக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் தாயை இழந்த ஒரு சிற்றன்னையின் அரவணைப்புக்கு இந்தக் கட்சிக் குழந்தை ஆளாகும் காலம் வந்தால் அந்தச் சிற்றன்னை இந்தக் குழந்தையை எத்தனை நாளைக்குப் பார்ப்பாள்? எந்த அளவுக்குப் பார்ப்பாள்? ஏனென்றால் நாள் தோறும் இந்தக் குழந்தைக்கு நோய் வரும். எந்த நேரமும் மாத்திரைகள் தயாராக இருக்க வேண்டும். ஊசு மருந்துகள் கைவசம் இருக்க வேண்டும். இந்தப் பிள்ளைக்கு உயிராபத்து எந்த நேரமும் வரலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்தப் பிள்ளை அடிக்கடி பலவீனமாகும். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிற்றன்னை எந்த அளவுக்கு அக்கறை செலுத்துவாள் என்று யாருக்குத் தெரியும்?
ஆகவே பெற்றெடுத்த இந்தத் தாய் இருக்கும் வரையில் இந்தக் குழந்தையை எந்த சக்தியும் அசைக்கமுடியாது என்ற நிலை இப்பொழுது உறுதியாகிவிட்டது. ஆனால் அதற்குப் பிறகு இந்தக் குழந்தையுடைய எதிர்காலம் எப்படி அமையவேண்டுமென்பதும் சிந்திக்க வேண்டிய விடயமாகவே இருந்து கொண்டிருக்கிறது.
ஆகவே, நான் மேலே கூறிய இப்பொழுது நான் எழுதிக் கொண்டுவந்த விடயங்களிலிருந்து நமக்கு ஒரு விடயம் புலப்படுகிறது.
அது என்னவென்றால் "பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்” என்று சொல்லும் பொழுது அது தனி ஒரு மனிதனுடைய வரலாறாகவே அமைந்துள்ளதை உற்று நோக்கக் கூடியதாக இருக்கிறது.
இந்தக் கட்சியினுடைய விடயத்தில் நான் உற்று நோக்கிய இன்னுமொரு விடயம் கெளரவ தலைவரவர்கள் இந்தக் கட்சியை வழி நடத்தும் விசயத்தில் ஒரு போதும் அயர்ந்திருப்பதில்லை.
58

அப்துல் மஜீத் ஆலிம்
எப்போதும் புதுப்புது திட்டங்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். கட்சிக்காக வேண்டி ‘ஏதாவது செய்து கொண்டேயிருப்பார்கள். அது எதுவாகவுமிருக்கலாம். அது மற்றவர்களுடைய பார்வைக்கு எரிச்சலாகவுமிருக்கும் அல்லது "போரடிக்கின்ற காரியமாகவு மிருக்கும். இது ஏன்? எதற்கு? என்று புரியாத கேள்விக் குறியாகவுமிருக்கும்.
பேசாக் குழந்தையுடன் பேசி மகிழும் தாய்!
தாய்க்கு வேறு வேலை இல்லையென்றால் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு தலையை வருடிக் கொண்டிருப்பாள். சுற்றி விளையாடுவதற்கு எவருமில்லாவிட்டால் அவள் பிள்ளைக்கு ஏதாவது விளையாட்டுக் காட்டிக் கொண்டிருப்பாள். குழந்தைக்குப் பேசத்தெரியாது. தாய் என்ன பேசுகிறாள் என்பதும் குழந்தைக்குப் புரிவதில்லை. அதில் அக்கறையும் குழந்தைக்கு இல்லை.
ஆனாலும் தாய் குழந்தையோடு ஏதாவது பேசி மகிழ்ந்து கொண்டிருப்பாள். அது என்றாவது ஒரு நாள் பேசும். அந்தக் குழந்தை பேசுகின்ற காலம் வரும் வரையில் தாய் தன் பேச்சை நிறுத்துவதில்லை.
இதேபோன்றுதான் இந்தக் கட்சிக் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு தலைவரவர்கள் என்னவெல்லாமோ செய்து கொண்டும் பேசிக் கொண்டுமிருப்பார்கள்.
மற்றவர்கள் குழந்தையை திரும்பிக் கூடப் பார்க்காத நேரங்கள் அதிகமாக இருந்தன. அந்த நேரங்களிலெல்லாம் குழந்தையை மடியிலிருந்து கீழே இறக்காமல் தலையை வருடிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் கட்சிக் குழந்தையைத் தவழப் பழக்கிக் கொண்டும் அதை எழுப்பி நிறுத்த முயற்சி செய்து கொண்டும் அதை நடைபழக்கிக் கொண்டும் சக்கர வண்டிகளில் ஏற்றி அங்குமிங்கும் தள்ளிக் கொண்டும் பொறுமையாக நாட்களைக் கடத்தி வந்த தாய்தான் நம் அருமைத் தலைவர். கட்சி இன்னும் சிறு பிள்ளைதான். அதற்கு இறைவனின் உதவி வந்தது. கட்சிக் குழந்தை தாகத்தினால் துடித்தது. தண்ணீர் தேடித் தாயாகிய நம் தலைவரவர்கள் பூமி முழுவதும் பல வருடங்கள் அலைந்தார்கள்.
கட்சிக்குழந்தை தாகத்தினால் துடிக்கும் துடிப்பையும், தாய் படும் பாட்டையும் கண்ட இறைவன் கட்சிக்குழந்தையின் கால்களை
59

Page 33
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
பேரினப் பாலைவனத்தில் பிடித்து உராசி விட்டான். இது தாய் ஓடிய ஓட்டத்தின் விளைவு பட்டபாட்டுக்குப் படைத்தவன் இறக்கி வைத்த அருட் பேழை.
இப்பொழுது “ஸம்ஸம்” ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. எல்லோரும் தாகம் தீர்த்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
பானையிலே சோறிருந்தால் பூனைகளும் சொந்தமடா!
பானையிலே சோறிருந்தால் பூனைகளும் சொந்தமடா;. சோதனையைப் பங்கு வைத்தால் சொந்தமுமில்லை, பந்தமுமில்லை. இதுதான் இவ்வுலகில் காணப்படும் நியதியாக இருக்கின்றது.
மக்காவிலுள்ள ஸம்ஸம் கிணறும் ஒரு காலத்தில் மூடப்பட்டு அடையாளமே தெரியாமலிருந்தது தெரியுமா? இஸ்மாயீல் நபிக் குழந்தைக்கு தாகம் தீர்க்கத் தோன்றிய அந்தப் பெரு நீர் ஊற்று ஜனங்களுக்கு விளங்க முடியாமல் பூமிக்குள் மறைந்து நீண்டகாலம் கிடந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் ஒரு நேர்ச்சை வைத்திருந்தார்கள். அதாவது அந்த நீரூற்று கண்டு பிடிக்கப்பட்டால் எனது ஒரு ஆண்மகனை இறையாலயத்தில் கொண்டு வந்து குர்பான் (பலி) கொடுப்பேன் என்று. அதன் பின் அப்துல் முத்தலிப் அவர்கள் பூமியில் மறைந்து போன அந்த ஸம்ஸம் கிணற்றைத் தேட ஆரம்பித்தனர்.
ஏற்கனவே நீண்ட காலம் தேடியும் கிடைக்காத காரணத்தால்தான் அப்துல் முத்தலிப் அவர்கள் இப்படி ஒரு பாரதூரமான நேர்ச்சையை வைத்தார்கள்.
பிறகு இரவில் அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது கனவிலே கிணறு அடையாளம் காட்டப்பட்டது.
காலையில் விழிந்தெழுந்து சென்று கனவிலே காட்டப்பட்ட இடத்தைத் தோண்டிப் பார்த்த பொழுது, அங்கிருந்து 'ஸம்ஸம் குமிழியிட்டுக் கொண்டு வந்தது.
பிறகு எந்தப் பிள்ளையைப் பலியிடுவதென்ற பிரச்சினை ஏற்பட்டது. பிள்ளைகள் மத்தியில் துண்டு குலுக்கிப் பார்த்த பொழுது அப்துல்லாஹ் என்னும் பெயர் வந்தது.
60

அப்துல் மஜீத் ஆலிம்
இதனால்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் பலியிடக் கொண்டு செல்லப்பட்ட இரண்டு தந்தைகளின் மகன்.’
‘ஸம் ஸ்ம் கிணறே அடையாளம் தெரியாமல் மறைந்திருந்ததென்றால், இந்தக் கட்சிக் குழந்தைக்காக இறைவன் திறந்த நீருற்று சில வேளைகளில் அஸ்தமித்ததென்றால் அது ஆச்சரியப்படக்கூடிய விடயமல்ல. 'இந்தப் பூமியில் எல்லோருக்கும் எல்லாமே எப்போதும் கிடைப்பதில்லை” என்ற குத்பு நாயகம் அவர்களுடைய ஒரு வாக்கு இருக்கின்றது.
எந்த நிலைமையிலும் கட்சிக்குழந்தையைக் கவசம் போல் பாதுகாத்து நிற்கும் உறுதியான தன் மை கெளரவ தலைவரவர்களிடத்தில் காலமெல்லாம் இருந்து கொண்டிருக்கும் என்பதில் ஒரு போதும் ஐயமில்லை.
கட்சிக்குச் சோதனை வந்த காலத்தில் எத்தனையோ பூனைகள் வெளியில் பாய்ந்தன. அவர்கள் பூனைகளாக இருந்த காரணத்தினால் அவ்வாறு நடந்து கொண்டனர். தற்பொழுது நீரூற்று பொங்கி வருகிறது. பானையில் சோறும் நிரம்பிக்கிடக்கிறது. மறுபடியும் பூனைகள் புகுந்து விட முடியுமா என்று முயற்சி செய்கின்றன புகுந்து கொண்டுமிருக்கின்றன.
பூனைகள் புகலாம், வெளியாகலாம்; இதுவொன்றும் இங்கு புதுமையில்லை. ஆனால் எந்த நிலைமையிலும் கட்சிக்குள் எத்தனை சோதனைகள் பங்கு வைக்கப்பட்ட போதிலும் அந்தப் பங்கை சுமக்க எவரும் முன் வராத போதிலும், தன்னந்தனிமையில் கட்சிக்கு நேர்ந்து விட்ட அத்தனை சோதனைகளையும் தலையில் சுமந்து கொள்ளக்கூடிய உறுதியான தயார் நிலையில் தலைவரவர்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களுடைய மரணத்தறுவாயில், மரணத்தின் கடிய வேதனையை உணர்ந்த பிறகு, உயிர்களைக் கைப்பற்றும் வானவரிடம் எனது மக்களுக்கும் இப்படி வேதனையுண்டா என்று கேட்டார்கள். அதற்கு "மக்களுக்கு, உம்மத்தவர்களுக்கு இதை விடப் பல மடங்கு வேதனையுண்டு” என்ற பதில் வானவரிடமிருந்து வந்தது.
61

Page 34
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
உடனே நபி (ஸல்) அவர்கள் “தயவு கூர்ந்து அந்த வேதனைகளை
ஒன்று சேர்த்து எனக்குத் தாருங்கள். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று வேண்டினார்கள்.
இதுதான் உண்மையான சமுதாய உணர்வு என்பது. நபிகளாருடைய இந்த உணர்வுக்கு நிகராக ஓர் ஆதாரம் காட்டுவதற்கு உலக வரலாற்றிலேயே ஓர் ஏடு கிடையாது.
இது போன்ற ஓர் உணர்வு ஒரு மனிதனிடம் ஏற்படும் பொழுது அவன் தன்னாலேயே ஒரு சமுதாயத் தலைவனாக ஆகி விடுவதில் எந்த வியப்புமில்லை. அத்தகைய மனிதனிடம் இறைவன் அந்தச் சுமையை ஏற்றிவிடுகிறான். அந்தச் சுமையை இறைவன் கண்ட நின்றவர்களிடமெல்லாம் ஒப்படைப்பதில்லை.
விழிப்பிலும் துயிலிலும் சமுதாயம் எனும் வினா!
காலையில் விழித்தெழும்பும் பொழுதெல்லாம் எந்த மனிதனுடைய உள்ளத்தில் சமுதாயத்தினுடைய உணர்வு பொங்கி எழும்புகிறதோ, அந்த மனிதனிடத்தில் இறைவன் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பதில் வியப்பில்லை. கெளரவ தலைவரவர்கள் அடிக்கடி இந்த விடயத்தைப் பற்றிப் பேசுபவர்களாக இருப்பார்கள்.
“காலையில் ஒரு மனிதன் விழித்தெழும்பும் பொழுது சமுதாயத்தைப் பற்றிய சிந்தனையுடன் அவன் எழும்பவில்லை யென்றால், அவன் நபி வழியிலுள்ளவன் அல்ல” என்று அவர்கள் கூறுவார்கள்.
ஈடிணையில்லாத அந்த மாபெரும் உணர்வு நம் தலைவரவர்களை இரவு பகலாக ஆட்கொண்டிருக்கும் புதுமையை நான் பார்த்து உள்ளம் குளிர்கிறேன்.
இதன் காரணமாக இறைவன் இன்னும் எவ்வளவு பெரிய ஆசனங்களை அவர்களுக்காகத் தயார் செய்து கொண்டிருக்கிறானோ அவன் தான் அறிந்தவன்.
ஆரம்ப காலத்தில் ஒரு நாள், நான் பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டு, தலைவரவர்களைப் பார்ப்பதற்காக டாம் வீதி அலுவலகத்துக்குச் சென்றேன்.
62

அப்துல் மஜீத் ஆலிம்
அது மாலை நேரமாக இருந்தது. தலைவரவர்கள் தங்கள் அறைக்குள், சிலருடன் அரசியல் விடயமாக உரையாடிக் கொண்டிருந்தது, எனக்குத் தெரியவந்தது.
கண்ணாடி அறை. அதற்குள், வந்திருப்பவர்களையும் தலைவரவர்களையும் ஒரு கணம் அவதானித்தேன். தலைவரவர்கள் உன்னிப்பாகவும், கவனமாகவும் ஏதோ விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அந்தக் காலத்திலிருந்தே தலைவரவர்களிடம், கட்சியை மக்கள் மயப்படுத்தும் விடயத்திலும், அதை வளர்த்தெடுக்கும் விடயத்திலும் நிதானமான கூரிய கவனம் இருந்து வந்ததை நான் அவதானித்து வந்துள்ளேன்.
தலைவரவர்கள் என்னைக் கண்டதும், “ஹஸ்ரத்! இருங்க, போய்விட வேண்டாம்” என்றார்கள். ஏனென்றால், நாங்கள் அங்கு ஏதாவது வேலைகள் இருந்தால் செய்துவிட்டு வெளியாகி விடுவது வழக்கம். அன்றும் சில வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன்.
வந்தவர்களை வழியனுப்பிவிட்டு, தலைவரவர்கள் அமைதியாக எங்களை நோக்கி நடந்து வந்தார்கள். ஒரு வட்ட மேசையிருந்தது. அதைச் சுற்றி என்னையும், என்னுடன் பேசிக்கொண்டிருந்த சிலரையும் உட்காரவைத்து, உரையாடத் தொடங்கினார்கள். மிகவும் அமைதியாக அரசியல் விடயங்களை எங்களுடன் பரிமாறிக்கொண்டிருந்தார்கள். அன்று அரசியலில் அதிகமான பாடங்களை நாம் கற்றுக்கொண்டோம்.
இப்படியே தலைவரவர்களுடைய அணுகுமுறைகளும், வருவோர், போவோர்களுக்கெல்லாம் மிகவும் சுருக்கமாக அவர்கள் நடத்திவரும் அரசியல் பாடங்களும், நாளுக்கு நாள் கட்சியின் வளர்ச்சிக்கு மெருகேற்றிக் கொண்டிருந்தன. அந்தக் காலகட்டங்களில் மிகவும் நிதானமாகக் கட்சியின் தரத்தைத் தலைவரவர்கள் உயர்த்திக்கொண்டு வநதாாகள.
அவசாமோ அயர்வோ அற்ற அனுகுமுறை
அவசரப்பட்டுக் கொள்ளவுமில்லை, அதற்காக அயர்ந்திருக்கவு மில்லை. எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியையும், உறுதியாக எடுத்துவைத்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு நிமிடத்தையும் வெற்றியுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்கள். அடுத்த நிமிடத்தைப்
63

Page 35
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. அடுத்த நாளைப் பற்றியோ, அடுத்த வருடத்தைப் பற்றியோ, அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை.
எந்த நிமிடத்துக்குள் இருந்தார்களோ, அந்த நிமிடத்திற்குள், அதன் வட்டத்துக்குள் கால்களை உறுதியாக வைத்துக் கொண்டிருந்தார்கள். அதேபோன்று அடையும் ஒவ்வொரு நிமிடத்தையும் உறுதியாகவே அமைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நிமிடத்தை விட்டு விட்டு அடுத்த நிமிடத்துக்குத் தாவிப்பாயும் தன்மையைத் தலைவரவர்களிடம் பார்க்கமுடியவில்லை. இருக்கும் நிமிட வட்டத்துக்குள் அவர்கள் அயராது செயலாற்றுவார்கள்.
ஒவ்வொரு நிமிடத்தையும் ஒரு அழகான உருவமைப்போடு எதிர்கொள்வார்கள். முன்னுக்கு மலை போன்ற ஒரு பெரும் பிரச்சினை அவர்களை எதிர்கொண்டிருக்கும். ஆனால் அதற்காக வேண்டி தலைவரவர்கள் எந்த மாற்றமும் அடைய மாட்டார்கள். பிரச்சினை நம் காலடிக்கு வரும் வரையில் அதைப் பற்றிய எந்தத் தடுமாற்றத்தையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
பிரச்சினை காலடிக்கு வந்து சேரும் பொழுது கோடரியைப் பாவிக்க வேண்டியிருந்த அந்தப் பிரச்சினையை, நகத்தைக் கொண்டே கிள்ளிவிடுவார்கள். இதுதான் நம் தலைவரவர்களுடைய அசாதாரணத் திறமை.
இந்த அரசியல் பாதையிலும், ஏனைய சகல விடயங்களிலும் தலைவரவர்களுக்கு எதிரே தோற்றமளிக்கும் சிக்கல்களையும், பிரச்சினைகளையும் ஒரு தொலை நோக்கிக் கண்ணாடியைக் கொண்டு உற்று நோக்கினால், எவரும் நிலை தளர்ந்து போய்விடுவர்.
அன்றும் அப்படித்தான். இன்றும் அப்படித்தான். என்றும் அப்படித்தான். தலைவரவர்களை நோக்கி ஆயிரமாயிரம் பிரச்சினைகள் கடல் அலைகள் போன்று வரும்.
மலைபோல் எழும் எனினும் பணிபோல் விழும்!
கரையை அடையும்பொழுது அலைகள் பணிந்து விடுவதுபோல், மலை போல் வரும் பிரச்சினைகள் தலைவரவர்களுடைய காலடியில் பணிந்துவிடுவதை, செயலற்றுப் போய்விடுவதை நாம் அன்றாடம் பார்த்து வருகின்றோம்.
64

அப்துல் மஜீத் ஆலிம்
பிரச்சினைகளைக் கண்டு அல்லது நினைத்துப் பயப்படுவதென்பது பரிதாபமான ஒரு விடயம். அத்தகைய ஒரு மனிதன் பூமியில் வாழவே தகுதியற்றவனாகி விடுகிறான்.
“அஞ்சி அஞ்சிச் சாவார்
அவர் அஞ்சாத பொருளில்லை உலகினிலே” எனப்
பாரதி கூட பரிதாபமாகக் கிண்டல் பண்ணுகிறார் அத்தகைய மனித நிலையை.
கெளரவ தலைவரவர்களுக்கு இறைவன் புறத்தால் கொடுக்கப்பட்ட ஒரு பேரருட்கொடைதான் 'அஞ்சா நெஞ்சம்' இந்தப் பூமியில் இறைவனைத் தவிர்ந்த வேறு எந்த ஒரு சக்திக்கும் அவர்கள் பயப்பட்டதை நான் அறிந்ததே இல்லை.
பயம் என்றால் என்ன என்று கூடத் தெரியாதவர்கள்தான் நம் தலைவரவர்கள்.
"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சகத்துள்ளோரெலாம்
எதிர்த்துவந்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே”
தேவராஜ் அவர்கள் இந்நு சமய, கலாசார அமைச்சராக இருந்த காலத்தில், அவருடைய அமைச்சில் நடந்த ஒரு கூட்டத்தில், கெளரவ தலைவரவர்கள் இந்தக் கவிதையைப் படித்துக் காட்டியதை, நான் பக்கத்தில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.
அன்று தமிழ் மக்களால் நிரம்பி வழிந்த அந்தக் கூட்டம் தன்நிலை மறந்தது.
தலைவரவர்கள் அந்தக் கவிதையை இடை நிறுத்தி, நிறுத்தி
உறுதியாக வசனங்களை எடுத்துக்கூறிய பாணி, தமிழ் மக்களை ஒருவித உணர்ச்சிவசப்பட்டவர்களாக மாற்றியது.
65

Page 36
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
கவிதைப் பேரரசன் பாரதியுடைய அந்த வீர வாக்கியங்கள் நம் தலைவரவர்களுடைய இரத்த நாளங்களிலே, முதுகெலும்பிலே ஒன்றித்து விட்டதைத்தான் பார்க்கின்றேன்.
நெப்போலியன் சிறுவனாக இருந்தபொழுது, ஒரு நாள் நடு இரவில் அவனுடைய தாய் அவனைத் தேடிப் பார்த்த நேரம் மகனைப் படுக்கையில் காணாததால் அதிர்ந்து நின்றாள். ஏற்கெனவே அவன் துடி துடித்தவன்; ஏனைய சிறுவர்களிலிருந்து மிகவும் வித்தியாசமானவன்; இது தாய்க்குத் தெரியும். அவனை மிகவும் கவனமாக வளர்த்து வந்தாள்.
மகனைத் தேடி நடு இரவில் வெளியில் பாய்ந்த அந்தத் தாய், வெகு தூரம் சென்றுவிட்டாள். நிலவு நேரம் ஒரு நதிக்கரையில் அவன் மீன்களுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கும் காட்சியைத் தாய் கண்டு அதிர்ந்து நின்றாள்.
'மகனே! உனக்குப் பயமில்லையா? என்று கத்தினாள். அவன் திரும்பிப் பார்த்தான்; தன் தாய் நின்று கொண்டிருப்பதைக் கண்டான்.
"அம்மா! பயம் என்றால் என்ன?” என்று திருப்பிக் கேட்டான். அவனுக்கு எல்லாம் தெரிந்திருந்தது. ஆனால் பயம் என்றால் என்ன என்று தான் தெரியவில்லை.
அச்சத்தைக் கொச்சைப்பருத்தும் ஆளுமை!
நம் தலைவரவர்களை அருமைத் தாயார் எப்படி வளர்த்தார்களோ தெரியவில்லை. நான் இதுகாலவரையில் தலைவரவர்களுடைய நாவால் கேட்காத ஒரு வார்த்தை தான், “பயப்படுகிறேன்” என்ற வார்த்தை.
எதிரிகளுடைய கொலைப் பட்டியலில், முதலாவது இடத்தைப் பெற்று, பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர்தான் நம் தலைவரவர்களுடைய பெயர். அதை மனதுக்கு எடுத்து நினைத்துப் பார்த்தால், இரத்த நாளங்கள் நின்றுவிடும்.
பயம் என்றால் என்ன என்பதைக் கூட அறியாத நம் தலைவரவர்கள், இந்தக் கொலைப் பட்டியலைப் பற்றியெல்லாம் நினைத்துப் பார்ப்பதற்கு என்ன தேவை இருக்கிறது?
1988 ஆம் ஆண்டு இந்நாட்டில் முதன் முதலாக மாகாணசபைத்
66

அப்துல் மஜீத் ஆலிம்
தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தல் அபேட்சகர்களுக்கு மத்தியில் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தியது. கட்சிகளோடு கட்சிகள் மோதிக்கொள்வது ஒருபக்கமிருக்க, அந்தந்தக் கட்சிகளுக் குள்ளிருக்கும் அபேட்சகர்களுடைய மோதல்கள் கடுமையாக இருந்தன.
அன்று ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜயவர்தன இப்படியொரு தேர்தல் முறையை அறிமுகப்படுத்திவிட்டார். அந்தத் தேர்தல்முறை சிறுபான்மைச் சமுதாயங்களுக்குப் பெரும் சவாலாக இருந்ததுடன் தலையிடியையும் கொடுத்தது. அபேட்சகர்களுடைய வாக்குகள் களவாடப்பட்டன; கைமாற்றப்பட்டன. பல கூத்துகளும் இடம்பெற்றன.
எமது கட்சி காலெடுத்து வைக்க முடியாத குழந்தையாக வளர்ந்துகொண்டிருந்த அந்தக் காலத்தில்தான், இந்தத் தேர்தல் வந்து முகங்கொடுத்தது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா? என்ற பிரச்சினை அப்பொழுது எழுந்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சிகூட அப்பொழுது தேர்தலைப் பகிஷ்கரித்து ஒதுங்கிவிட்டது.
நம் தலைவரவர்கள் இதுபற்றிக் கடுமையாகச் சிந்தித்தார்கள். கடைசியில் தீர்க்கமான முடிவுக்கு வந்தார்கள். ‘ஓர் அரசியல் கட்சி எந்தத் தேர்தலுக்கும் முகம் கொடுத்தே ஆகவேண்டும்’ என்ற இரகசிய உண்மையை வெளிப்படுத்தினார்கள். இது இராஜதந்திரமான ஒரு முடிவாகும்.
காங்கிரஸின் பதுறுப் படலம்! ஒரு தேர்தலை நடத்துவதற்குரிய எந்த சக்தியும் அப்பொழுது கட்சிக்கு இருக்கவில்லை. ஆரம்பகாலத்தில் முஸ்லிம்கள் பத்ர் யுத்தத்திற்கு முகம்கொடுத்த ஒரு கதையாகவே அன்று எமது கட்சியின் நிலை இருந்தது.
கட்சித் தொண்டர்கள் அரசியலறிவிலும், ஆற்றலிலும் மிகவும் குறைந்தவர்களாகவே இருந்தார்கள். பண பலத்திலும் மிகவும் கீழ்மட்டத்திலிருந்தார்கள்.
கட்சியினுடைய நிதி நிலைமையும் மிகவும் சரிந்து கிடந்தது.
67

Page 37
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
நாடு முழுவதும் பிரயாணம் செய்ய வேண்டும். அதற்கு வாகனங்கள் வேண்டும். கூட்டங்கள் நடத்த வேண்டும். மக்களைத் திரட்ட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகமான அபேட்சகர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.
வெறும் கையால் முழம் போட்ட முயற்சி
கட்சியோ இன்னும் மக்கள் மயமாகவில்லை. இந்த இக்கட்டான நிலையில் தலைவரவர்கள் துணிந்து இறங்கினார்கள். பயம் என்ற ஒன்று இருந்தால், இந்தக் கட்டங்களை நினைத்தும் பார்க்க முடியாது. பத்ர் யுத்தத்தில் நபிகளாருடைய படை கம்புகளையும், தடிகளையும் எடுத்துக்கொண்டு இறங்கியதுபோன்று, வெறுங் கைகளையும், கால்களையும் எடுத்துக்கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் களத்தில் குதித்தது.
முக்கியமான விடயமென்னவென்றால் தேர்தலுக்குப் பிறகு, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் அபேட்சகர்கள் குழம்பிக்கொண்டு, தலைவரவர்களை நோக்கிப் படையெடுத்து வந்ததுதான். அந்த நிகழ்ச்சி தலைவரவர்களுக்குப் பெருந் தலையிடியைக் கொடுத்தது. அந்த நிலைமையைச் சமாளித்து, ஒரு நிலைக்குக் கொண்டு வருவதற்குத் தலைவரவர்கள் பல நாட்கள் இரவு, பகலாகக் கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
தோல்வியடைந்த பல அபேட்சகர்கள், எங்கள் வாக்குகள் களவாடப்பட்டுள்ளன், கைமாற்றப்பட்டுள்ளன என்று வாதிட்டார்கள். வெற்றியடைந்த நாம் சதி செய்யப்பட்டுவிட்டோம் என்று அவர்கள் புலம்பினர்.
வாக்குகள் திரும்ப எண்ணப்பட வேண்டும்; உண்மை நிரூபிக்கப்பட வேண்டுமென்று கர்ஜித்து நின்றனர். பலர் முகங்களை சுருங்க வைத்துக்கொண்டு அசந்து போயிருந்தனர்.
உஸ்மானையே பணியவைத்த ஒய்யாரம்
கொழும்பிலும் பெரும் பூகம்பம் வெடித்தது. கொழும்பு மாவட்டத்துக்கு அபேட்சகர்களாக (46) நாற்பத்தி ஆறு பேர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பாரிஸ்டர் உஸ்மான் அவர்களும் ஒருவர். தற்போது அவர் நம் மத்தியிலில்லை; காலமாகி விட்டார். அவர் அக்காலகட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார்.
68

அப்துல் மஜீத் ஆலிம்
அவர் கொழும்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் இரண்டாவது அதிகப்படியான வாக்குகளால் வெற்றிபெற்றார்.
நல்ல கம்பீரமான தோற்றமுடையவர். மிக நல்ல மனிதர். அவருக்கு அவசரமாகக் கோபம் வரும். அவர் தெரிவு செய்யப்பட்ட முறை பிழையானது என்று தெரிவு செய்யப்படாத அபேட்சகர்கள் அவருக்கு எதிராகப் பிரச்சினைகளைக் கொண்டு வந்தனர். அதற்காக வேண்டி அத்தனை அபேட்சகர்களும், டாம் விதி அலுவலகத்தில் ஒன்று கூட்டப்பட்டனர்.
ஒவ்வொரு அபேட்சகரும் ஆத்திரங்கொண்டு எழுந்து பேச ஆரம்பித்தனர். ஜனாப் உஸ்மான் ஒரு குர்ஆன் பிரதியைக் கொண்டு வந்திருந்தார். அவருக்கு ஏற்பட்ட கோபத்தில் குர்ஆன் பிரதியைத் தூக்கி மேசை மீது வேகமாக அடித்தார். அதைத் தொடர்ந்து குழப்பம் அதிகரித்தது. டாம் விதி அலுவலகம் அல்லோல கல்லோலப்பட்டது. சத்தியம் செய்து காட்டுவதற்காகத்தான் அவர் குர்ஆன் பிரதியை எடுத்து வந்திருக்கிறார் என்பதும் தெரிய வந்தது.
தலைவரவர்கள் எதுவும் நடவாதது போன்று இனிய முக பாவனையைக் காட்டிக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார்கள். அபேட்சகர்கள் ஆடும் ஆட்டத்தையும் ஜனாப் உஸ்மான் படும் பாட்டையும் அவதானித்துக் கொண்டிருந்த தலைவரவர்கள் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்குரிய தருணத்தை மிகவும் விவேகமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஜனாப் உஸ்மான் மிகவும் நல்ல மனிதர். நல்ல பண்புகள்
உள்ளவர். நிறைந்த மார்க்கப்பற்றை அவரிடத்தில் பார்க்கலாம்.
என்னதான் செய்யமுடியும். 'கோபம்’ என்பது அவரிடத்தில் அவரையே மிகைத்த சக்தியாக இருந்து வந்தது.
எங்கள் கெளரவ தலைவரவர்களைத் தவிர இந்தப் பூமியில் ஜனாப் உஸ்மான் எவருக்குமே கட்டுப்பாடாதவர். அவர் ஒருவித தனிப் போக்குவாதி. அவருக்குப் பின்னால் எவரும் வர வேண்டுமென்றும் அவர் எதிர்பார்க்க மாட்டார்.
அவருடைய வாழ்நாளில் வேறு எவருடைய கட்டுப்பாட்டிலும் அவர் இருந்திருக்கவே மாட்டார். ஏறக்குறைய அவருக்கு எழுபது வயதுக்கும் அதிகமாக இருக்கும். ஆனாலும் பல இளைஞர்களுடைய சக்தியையும், ஆற்றலையும் மிகைத்த உறுதியுடனான தோற்றத்தையும்
69

Page 38
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
உடையவர். அவருடைய முகத்தில் சிரிப்பே இருக்காது. அவரை சிரிக்க வைப்பதும் மிகக் கஷ்டம். எவரைப் பற்றியும் பொருட்படுத்த மாட்டார். யாருடைய விடயத்திலும் அலட்டிக் கொள்ளமாட்டார்.
இத்தகைய ஒரு தனிப் போக்குள்ள மனிதரை நம் தலைவரவர்கள், தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொஞ்சக் காலம் வைத்திருந்தது, ஒரு பெரிய சாதனையென்பதை நான் உறுதியாக முன் வைக்கிறேன். ஒரு கட்சிக்கு, சமுதாயத்துக்குத் தலைவராக இருப்பதென்பது இலகுவான ஒரு காரியமல்ல என்பதை இங்கு தெளிவாக விளங்கக் கூடியதாக இருக்கிறது.
ஜனாப் உஸ்மான் அவர்கள் ஒரு பாரிஸ்டர்; அதிலும் அவரை “டபல் பாரிஸ்டர்” என்று நம் கட்சிக்குள் பேசிக் கொள்வார்கள். எங்கள் தலைவரவர்களைவிட வயதில் மிகவும் மூத்தவர். வாப்பாவும் மகனும் போன்ற வயது வயதுக்குரிய உடல் பலவீனத்தை அவரிடத்தில் பார்க்கவே முடியாது.
அவருடைய சட்டத் தொழில் லண்டனில்தான் நடைபெற்றது
என்றும்; ஒரு விமானத்தில் பறந்து, மறு விமானத்தில் பறந்து, மறு விமானத்தில் வருவார் என்றும் பேசிக் கொள்வார்கள்.
ஜனாப் உஸ்மான் மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர். நான் ஒரு ஜாவ்வன்' என்று அடிக்கடி பெருமையாகக் கூறிக் கொள்வார். தலைவரவர்களைப் போன்றே உறுதியான தோற்றமுடையவர். இருவரும் அருகருகே அமர்ந்திருந்தால் தெரியாதவர்களுக்கு யார் தலைவர் என்று அறிந்து கொள்வது கஷ்டமாக இருக்கும். ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. நபிகளார் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து அகதியாக வெளியாகி, மதீனாவுக்கு வெளியில் ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்திருந்தார்கள். நபிகளாருக்குத் துணையாகச் சென்ற ஹஸரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் பக்கத்தில் தோளோடு தோள் சேர்ந்து அமர்ந்திருந்தார்கள்.
பெருந்தொகையான மக்கள் அவர்களைப் பார்ப்பதற்காக அங்கு விரைந்து வந்து சேர்ந்தனர். வந்திருந்த மக்கள் கூட்டம் இருவரையும் மாறி மாறிப் பார்த்தது. யார் நபி என்பது அவர்களுக்கு விளங்க முடியாமலிருந்தது.
இந்த நிலைமை ஹஸரத் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு நுணுக்கமாக விளங்கியது. உடனே அவர்கள் எழுந்து நின்று
70

அப்துல் மஜீத் ஆலிம்
ஒரு போர்வையை நிழல் போன்று விரித்துக் கொண்டு நின்றிருந்தார்கள் அப்பொழுது வந்திருந்த மக்களெல்லாம் நபியை ளங்கிக் கொண்டார்கள். கட்சியின் ஆரம்பகாலத்தில் ஜனாப் உஸ்மான் அவர்களுடைய நிலையும் இதுபோன்றுதானிருந்தது. எப்படியோ தலைவரவர்களுக்கு ஒரு சக்தி வாய்ந்த ஊன்றுகோல் போன்று அவர் செயல்பட்டார் என்பது எனக்கு விளங்குகிறது.
கொஞ்சக்காலம் தான் அவர் செயல்பட்டார். கொஞ்சக் காலமாக இருந்தாலும், அவருடைய பங்களிப்புப் பரவாயில்லை. என்னதான் செய்யமுடியும்? அவருடைய இயற்கை சுபாவம். அதை மாற்றிக் கொள்வதற்கு அவரால்கூட முடியவில்லை.
தலைவரவர்களுடன் மிகவும் கண்ணியமாகவும் மரியாதையாகவும் நெருக்கமாகவுமே அவர் செயல்பட்டு வந்தார். தலைவரவர்களும் ஜனாப் உஸ்மானைக் கட்சியின் ஒரு பொக்கிஷமாக வைத்துக் கொண்டிருந்தார்கள்.
நாட்டின் அரசியல் உயர் மட்டத்தில் பெரும் ஆபத்துக்கள் இருந்து வந்தன. பெரும் சவால்களுக்கு அடிக்கடி முகம் கொடுத்து வந்த கட்டம். ஜனாப் உஸ்மான் அப்பொழுதெல்லாம் பெரும் தூணாக நின்றார்.
தலைவரவர்களுக்கு ஜனாப் உஸ்மானைக் கண்டால் தைரியம் பன்மடங்கு வளரும். அந்த அளவுக்கு பெறுமதி வாய்ந்த நம்பிக்கை நட்சத்திரமாகவே அவர் திகழ்ந்தார்.
ஆனாலும் என்னதான் செய்யமுடியும்? ஜனாப் உஸ்மான் பிடிவாத குணம் உடையவர். அவர் சென்று கொண்டிருக்கும் பாதையிலிருந்து ஓர் அடி கூட அவரைத் திசை திருப்ப முடியாது. இலகுவில் வளைந்து கொடுக்காத ஒரு மனிதர்.
சொன்னால் ஒரு வார்த்தைதான். கடைசி வரை அந்த வார்த்தையை மாற்ற மாட்டார். ஒரு முயலைப் பிடித்துக் கொண்டு இதற்கு மூன்று கால்கள்தான் என்று அவர் கூறினால் அதை நான்கு கால்களாக மாற்றுவதற்கு இந்தப் பூமியில் மேல் யாராலுமே இருக்க முடியாது.
கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது, அவர் தமது வாழ்நாளில் தலைவரவர்களுக்கு மட்டும்தான் கட்டுப்பட்டு வந்துள்ளார். அதுவும் கொஞ்ச நாள்தான் முடிந்தது; திடீரென கட்டை உடைத்துக்கொண்டு வெளியில் பாய்ந்துவிட்டார்.
71

Page 39
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
அன்று டாம் வீதி அலுவலகத்துக்குள், ஜனாப் உஸ்மான் தன்னந்தனிமையில் ஏனைய அபேட்சகர்களின் கூட்டத்தை எதிர்த்து நின்றார். பக்கத்தில் ஜனாப் சுஹைப் ஏ. காதரும் அமர்ந்திருந்தார். அவர் ஜனாப் ஜாபிர் ஏ. காதர் அவர்களுடைய சகோதரர் ஆவார். அவரும் தலைவரவர்களுடைய சக்திவாய்ந்த ஒரு தூணாகவே உருவாகியிருந்தார். அவரைப் பற்றிய விடயங்களைத் தேவைப்படும் கட்டத்தில் எழுதலாம் என்று நினைக்கிறேன்.
ஆனால் அன்று டாம் விதி அலுவலகத்தில் நடந்த அபேட்சகர் கொந்தளிப்பு ஜனாப் சுஹைப் ஏ. காதரையும் சேர்த்துத் தாக்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் சுஹைப் ஏ. காதர் மெளனமாகவே அமர்ந்திருந்தார்.
கொந்தளிப்பு குமுறிக் கொண்டிருந்தது. நிலைமை கட்டுப்பாட்டை வெகுதூரம் கடந்துவிட்டது. ஜனாப் உஸ்மானுக்கு வந்த கடும் ஆத்திரத்தில் தமது உறையொன்றைத் திறந்து, அதிலிருந்து குர்ஆன் பிரதியொன்றை எடுத்து வேகமாக மேசையில் ஓங்கி ஓர் அடி அடித்தார். அது பெரிய சத்தமாக ஒலித்தது.
அடுத்தகணம், எரிகின்ற நெருப்புக்குப் பெற்றோல் ஊற்றியது போன்ற நிலை. கூட்டம் சகல கட்டுப்பாடுகளையும் கடந்துவிட்டது.
இத்தனைக்கும் நமது அருமைத் தலைமகன் அசையாத சிலை போன்று அமர்ந்து, நிலைமையை அவதானித்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.
நானும் அன்று மிகவும் முன்னுக்கு அமர்ந்திருந்தேன். கூட்டத்தின் ஆரம்பத்தில் எனக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டது. ஜனாப் துவான் புத்ரா சைனூன், ஒரு பொன்னாடையை எடுத்து வந்து பாவா பாருக்கையும் துணையாக எழுப்பாட்டி இருவரும் சேர்ந்து அந்தப் பொன்னாடையை எனக்குப் போர்த்தினார்கள். எதிர்பாராத அந்த நிகழ்ச்சி கெளரவ தலைவரவர்களுக்கு பெருமகிழ்வைக் கொடுத்தது. அந்த மகிழ்ச்சியில் தலைவரவர்கள் திழைத்திருந்த பொழுதுதான் நெருக்கடி நிலைமைகள் உருவாகத் தொடங்கின.
நடந்து முடிந்த அந்தத் தேர்தலில், பெருந்தொகையான வாக்குகளைப் பெற்று, நாட்டில் மிக முன்னணியில் நானிருந்தேன்.
முழு நாடே பிரமிப்படைந்தது. புத்தம்புதிய ஒரு கட்சியால்
72

அப்துல் மஜீத் ஆலிம்
ஏற்பட்ட ஒரு முதலாவது சாதனை. அதற்காகத்தான் அன்று பொன்னாடை போர்த்தினார்கள். அதுபற்றிய விரிவான செய்திகளைத் தேவைப்படும்பொழுது எழுதலாம் என நினைக்கிறேன்.
இரத்த வெள்ளத்துக்கே தயாரான பதற்றம்!
பிறகு, முன்னால்அமர்ந்திருந்த நான், மெதுவாகப் பின்னுக்குப் போய் ஓர் ஒதுக்குப் புறமாக அமர்ந்துகொண்டேன். டாம் விதி அலுவலகம் இரத்த வெள்ளமாகும் அறிகுறி எனக்குத் தென்பட்டது.
நிலைமையை இனிச் சமாளிக்க முடியாது என்ற நிலை உருவாகி விட்டது. சகல விடயங்களும் முற்றி வெடிக்கும் நிலைக்கு வந்துவிட்டன.
அந்த இக் கட்டான நிலைமையில் தான் தலைவரவர்கள் எழும்பினார்கள். எப்படி சாமர்த்தியம்? தலைவரவர்களுடைய தலைமை தாங்கும் அந்த மகத்தான திறமையை நான் உன்னிப்பாக அவதானித்தேன்.
கூட்டம் குமுறிக்கொண்டிருந்த அந்தநேரத்தில் தலைவரவர்கள், இப்பொழுது என்னதான் செய்யப் போகிறார்களோ என்று நினைத்தவனாக நான் அமர்ந்திருந்தேன். அடியோடு இந்தக் குழப்பங்கள் எனக்குப் பிடிக்காது. எனது பிரதிநிதித்துவத்தைக்கூட இராஜினாமாச் செய்து விடுவோமா என்று நான் யோசித்தேன். அந்த அளவுக்கு பயங்கரமான நிலைமை காட்சியளித்தது.
அனைவரும் பேசி ஒயும்வரையில் தலைவரவர்கள் எந்தக் குறுக்கீடுமில்லாமலிருந்தார்கள். பேசுகிறவர்களெல்லாரும் பேச வேண்டிய மட்டும் பேசி, உணர்ச்சிவசப்பட்டு, கடைசியில் அனைவரும் செயலற்ற நிலைக்கு ஆளானார்கள்.
அதற்கப்பால் பேசுவதற்கு எவருக்கும் எந்தத் தலையங்கமும் இல்லாதிருந்தது. அந்தத் தருணத்தில் தலைவரவர்கள் கம்பீரமாக எழுந்து நின்றார்கள். பார்வைக்கு ஆண் சிங்கம் போன்றிருந்தார்கள். சேட் கைகளை முழங்கைவரை ஆழமாக மடித்துவிட்டு சேட்
பொத்தான் ஒன்றைத் திறந்துவிட்டுக் கொண்டு, ஒருவித வாட்டசாட்டமான தோற்றத்தில் காட்சி வழங்கினார்கள்.
தலைவரவர்கள் உடையணியும் அந்த அமைப்பு, அவர்களுக்கு
73

Page 40
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
ஒருவிதமான கவர்ச்சியைக் கொடுக்கும். ஒருசெயல் வீரனாகக் காட்டும்.
நானும் வீட்டில் ஆசைக்கு அப்படி உடுத்துப் பார்ப்பேன். அவ்வாறு உடுத்தால், நன்கு வேலைகளைக் கவனிக்கலாம். உடுப்பு இடைஞ்சல் தராது. தலைவரவர்கள் கடுமையாக இயங்கும்பொழுது அப்படித்தான் சேட் அணிந்திருப்பார்கள்.
கட்டைக்கை சேட் அணிந்தால், அது ஒருவிதக் கவர்ச்சியாக இருக்கும். ஆனால், ஒருபோதும் கட்டைக்கை சேட், டை, கால்சட்டைக்கு உள்ளே அணியமாட்டார்கள். கைநீட்ட சேட்டையை கால்சட்டைக்கு வெளியிலும் விடமாட்டார்கள். கைநீட்ட சேட்டை அணிந்தால், அதை முழங்கைவரை மடித்து, கால்சட்டைக்கு உள்படுத்தி சேட்டில் ஒரு பொத்தானைத் திறந்துவிட்டுக்
கொள்வார்கள்.
நான் 1988 ஆம் ஆண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவுக்குப் போயிருந்தேன். அங்கு வைத்து தலைவரவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தவர்களுக்குமென்று பல அன்பளிப்புச் சாமான்களைத் தேடி வாங்கிக்கொண்டேன்.
அந்தக் காலகட்டம், நமது கட்சி கடுமையான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருந்த காலம். விடைபெறச் சென்றேன். அப்பொழுது டாம் விதி அலுவலகத்தில் வைத்து தலைவரவர்கள், செயலாளர் ஜனாப் உஸ்மான் அவர்களுடன் முக்கியமான விடயங்களைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தார்கள். தலைவரவர்கள் என்னைக் கட்டியணைத்து முஸாபஹா செய்தார்கள். அதன்பின் ஜனாப் உஸ்மான் அவர்கள் என்னை ஒருபக்கம் கண்ணியமாக அழைத்துச் சென்று, என்னைக் கட்டியணைத்து ‘முஸாபஹா’ செய்துவிட்டு, என் காதுக்குள் இரகசியமாக,
"ஹஸ்ரத் ரஸலுல்லாங்கட கபுரடியில் என்னுடைய ஸலாத்தை எத்திவைச்சிருங்க” என்று மிகவும் பொறுப்புடன், அந்த விடயத்தை என்னிடம் ஒப்படைத்தார். அதன்பின் இருவரும் உரையாடத் தொடங்கினர்.
ஹஜ்ஜை முடித்து நாடு திரும்பியதும் தலைவரவர்களை சந்திக்கும் ஆசையில் அன்பளிப்புச் சாமான்களை எடுத்துக்கொண்டு, சித்திரா
74

அப்துல் மஜீத் ஆலிம்
லேன் இல்லத்துக்குச் சென்றேன். இரவு ஏழு மணியாக இருந்தது; தலைவரவர்கள் இருக்கவில்லை.
கட்சிப் பிள்ளை மடியிருக்க பெற்ற பிள்ளை தரையிருக்கும்!
அருமைத் துணைவியாரும், மகனும் வீட்டிலிருந்தனர். தலைவரவர்களுடைய அருமைப் புதல்வன் செல்வன் அமான் அஷ்ரஃப் அவர்கள் அப்பொழுது மிகவும் சின்னஞ்சிறு பிள்ளையாக இருந்தார்.
கட்சியும் சிறுபிள்ளை, அவரும் சிறுபிள்ளை. கட்சியை வளர்க்கவும் வேண்டும். அவரை வளர்க்கவும் வேண்டும்.
தலைவரவர்கள் கட்சிக் குழந்தையை அணைத்து முத்தமிட்டுக் கொண்டு, அதற்கு வைத்தியங்கள் செய்வதில் மூழ்கிக் கிடந்தார்கள். இரவு பகலாக அதனுடன் படாதபாடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
வீட்டில் அமான் குழந்தை, அனாதை போன்று எங்காவது ஒரு மூலையில் தனிமையில் விளையாடிக் கொண்டிருக்கும். கூடி விளையாட வேறு பிள்ளைகளைக்கூட நான் காண்பதேயில்லை. எனக்கு அப்படி ஞாபகமே இல்லை.
பாவம்; அமான் பபா'வுக்கு அண்ணனுமில்லை, தம்பியுமில்லை, அக்காவுமில்லை, தங்கையுமில்லை. அன்னை ஹாஜராவோடு குழந்தை இஸ்மாயில் பாரான் பள்ளத்தாக்கில் தனித்து விடப்பட்டது போன்று, அமான் பபாவும் அருமைத் தாயுடன் சமையலறைப் பள்ளத்தாக்கில் தனிமையில் விளையாடிக் கொண்டிருக்கும். கட்சித் தொண்டர்களெல்லாம் வீட்டில் பெரும் பாகத்தில் இடம்பிடித்து இயங்கிக் கொண்டிருப்பார்கள்.
நான் தலைவரவர்களுடைய அருமைத் துணைவியாருடன், ஹஜ்ஜின் அனுபவங்களைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். துணைவியாரவர்கள் ஒருவிதமான கவலைத் தோற்றத்தில் இருப்பது போன்று எனக்குப்பட்டது.
பானையில் விழும் நெருப்பால் வெந்து புழுங்கும் சோறு
தலைவரவர்களைத் தாக்கும் பிரச்சினைகள், துணைவியாரைச்
75

Page 41
தலைமைத்துவ ரகஸியங்கள்
சும்மாவிடுமா? நெருப்பு பானையைத் தாக்கும்பொழுது அதிலுள்ள சோறு வெந்து புழுங்காமல் வேறென்ன செய்யும்?
சிறிது நேரத்தில் தலைவரவர்கள் நடந்து வந்துகொண்டிருப்பதை நான் பார்த்தேன். நடையில் ஒருவிதத் தளர்ச்சி முகத்தில் மகிழ்ச்சி, நிம்மதி ரேகைகளே இல்லை.
ஆடி அசைந்து ஒரு விதமாகத் தள்ளாடிக்கொண்டு வருவது போன்று வந்துகொண்டிருந்தார்கள். நான் மிகவும் மகிழ்ந்து, உற்சாகமாக எழுந்து தலைவரவர்களை வரவேற்று கட்டியணைத்தேன். ஏறக்குறைய ஒரு மாதத்துக்குப் பிறகு அன்றுதான் தலைவரவர்களைப் பார்க்கின்றேன்.
நான் ஹஜ்ஜுக் கடமையை முடித்து வந்த திருப்தியிலும் மகிழ்விலும் மிகவும் உற்சாகமாகத் தலைவரவர்கள் முன்நின்று கொண்டிருந்தேன்.
ஆனால் தலைவரவர்களிடம் எந்த உற்சாகத்தையோ, மகிழ்ச்சியையோ என்னால் பார்க்க முடியவில்லை. வாடிய புன் சிரிப்பு ஹஜ்ஜ"ப் பயணத்தைப் பற்றி ஏதாவது கேள்வி கேட்பார்கள் என்று எதிர்பார்த்தேன். அப்படியும் ஏதாவது கேட்பதாக இல்லை. நீண்ட நேரம் உரையாடுவதற்கு அதிகமான செய்திகளை நான் வைத்திருந்தேன். ஆனால் தலைவரவர்கள் சுமைதாங்க முடியாத பாரம்போன்று, ஏதோ பாரம் சுமந்து கொண்டிருப்பது போன்று ஒரு பக்கத்தில் அமர்ந்து கொண்டார்கள்.
எனக்குப் புரிந்துவிட்டது. துணைவியாரவர்களும் ஒருவித சலிப்படைந்த மெளனத் தோற்றத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.
நான் கேட்டேன். “சேர்! நடந்து வந்துகொண்டிருக்கீங்க! எங்கிருந்து வாரீங்க? வாகனம் எங்கு போய்ட்டுது?” எனக்கும் மனநிலை ஒருவிதமாக மாறிவிட்டது. என்ன பேசுவதென்றே புரியாத நிலை.
தலைவரவர்கள் பேசத் தொடங்கினார்கள். 'ஹஸ்ரத் ! பிரச்சினைகள் கூடிட்டுது. சமாளித்துக்கொள்ள முடியாத கட்டம். என்னால் ஒரு விதத்திலும் ஈடுகொடுக்க முடியாத நிலை. நான் என்ன செய்தேனென்றால், வீட்டிலிருந்து வெளியாகிப் பாதையில் நடந்துகொண்டிருந்தேன்.”
"அப்பவும் தாக்கம் போகுதில்லை. பாதையில் வந்த பஸ் ஒன்றில் ஏறினேன்.”
76

அப்துல் மஜீத் ஆலிம்
“எங்க போனிங்க சேர்?’ நான் கேட்டேன். “எங்குமில்லை, பஸ் போய்க்கொண்டிருந்தது. நான் பஸ்ஸுக்குள் கிடந்தேன். எங்கேயோ போய் இறங்கினேன். இன்னுமொரு பஸ்ஸில் ஏறினேன். அந்த பஸ்ஸும் வேறு எங்கோ போய்க்கொண்டிருந்தது. இப்படியாக சுற்றியலைந்துவிட்டு வருகிறேன். என்ன செய்வது ஹஸ்ரத்! கூடிய பிரச்சினைகளைத் தாண்ட ஒரு வழி வேண்டுமே” என்று சோர்ந்த நிலையில் பதிலளித்தார்கள்.
அன்றைய அந்த நிலை என்னையும் ஒருவிதமாகத் தாக்கியது. நானும் ஒருவித சோர்வு நிலைக்கு ஆளாகினேன்.
நான் மதீனாவிலிருந்து வாங்கி வந்த அன்பளிப்புச் சாமான்களை யெடுத்து விரித்து ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்தேன். அதிலே ஒரு அழகான வெண்மையான பூவேலை செய்யப்பட்ட கட்டைக்கை சேட் மதீனாவில்கூட சில முக்கியமான ஹாஜிகள் அந்த சேட்வகையை வாங்கி அணிந்திருந்தார்கள். தலைவரவர்கள் அந்த சேட் ஒன்றை அணிய வேண்டுமென நான் ஆசைப்பட்டேன். ஆனால் நான் கடைசி வரையில் தலைவரவர்கள் அந்த சேட்டை அணிந்திருந்ததைக் காணவில்லை. ஏன்தான் அணியவில்லையோ, எனக்குத் தெரியாது. ஒரு வருடமாக நானும் அவதானித்தேன்; ஒரு நாளாவது அவர்கள் அணிவார்களா என்று; ஆனால், கடைசிவரை அணியவில்லை. அது எனக்கு ஒரு கவலையாகவுமிருந்து வந்தது.
அந்த அன்பளிப்புச் சாமான்களில், தலைவரவர்களுடைய
அருமைத் துணைவியாரவர்களுக்கு ஒரு சாறி வாங்கியிருந்தேன்.
“மெடம்! மதீனா சாறி” என்று சொல்லிக் கொடுத்தேன். துணைவியாரவர்கள் மிகவும் மகிழ்வுடன், பெருமிதமான உணர்வுடன் அதை எடுத்துக் கொண்டார்கள். புனித மதீனா நகரத்தில் வாங்கிய பொருளல்லவா?
தலைவரவர்களின் துணைவியார் பல தடவைகள் அந்த சாறியை அணிந்திருப்பதை நான் பார்ப்பேன். அப்பொழுதெல்லாம் மதீனா நகரத்தின் புனித நினைவுகள் என் உள்ளத்துக்கு ஞாபகத்துக்கு வரும். உள்ளத்திற்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும்.
இரத்த வெறிகளை இனியவை ஆக்கும் தீரம்
டாம் விதி அலுவலகத்தில் வைத்து, தலைவரவர்கள் பேச
77

Page 42
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
எழுந்து நின்றபொழுது முழுக் கூட்டமும் அமைதியடைந்தது. எல்லோரும் மெளனமாகி விட்டார்கள். அனைவரும் தலைவரவர் களுடைய பேச்சை ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கினார்கள்.
அனைவரும் என்னென்ன பிரச்சினைகளை வைத்துக் கேள்வி கேட்டார்களோ, என்னென்ன பிரச்சினைகளைப் பற்றிப் பேசினார்களோ, அத்தனை கேள்விகளையும், பிரச்சினைகளையும் தலைவரவர்கள் ஒன்றுசேர்த்து முடிச்சுப் பொட்டணியாகத் தம்மிடம் வைத்துக் கொண்டார்கள். அந்தப் பொட்டணியில் அர்த்தமில்லாக் கேள்விகள், அர்த்தமில்லாத பேச்சுக்கள் நிரம்பிக் கிடந்தன.
இப்பொழுது தலைவரவர்கள் ஆணித்தரமான விளக்கங்களைக் கொடுத்து அந்தப் பொட்டணியை செயலிழக்க வைத்தார்கள். அதற்கப்பால் எவரும் எவ்வித கேள்வியும் கேட்க முன்வரவில்லை.
அனைவருடைய முகத்திலும் தெளிவுகள் தோன்றின. கடைசியில் அனைவரும் கை தொட்டு முஸாபஹா’ செய்து கொண்டனர்.
இடிஇடித்து, மின்னல் வெட்டி, கடும் மழை பெய்து கொண்டிருந்தது போன்ற இரைச்சலில் கிடந்த டாம் விதி அலுவலகம் அமைதியாக
இருந்தது.
ஒரு தலைமகனுடைய மாபெரும் மகாத்தமியத்தை இங்கே உணரக் கூடியதாக இருக்கிறது. இதுதான் அரசியல் சாணக்கியம். அன்று இரத்தக் களரியாக மாறவிருந்த டாம் வீதி அலுவலகம், கைதொட்டு ஸலாம் சொல்லும் தரத்தில் நிறைவு பெற்றது.
ஜனாப் உஸ்மான் சகல திறமைகளும் அமையப் பெற்றவர். ஆனால் ஒரு சிறு கூட்டத்திற்குக் கூட தலைமை தாங்கும் திறமையை அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. மிகவும் நல்லவர். பல கருத்தரங்குகளை அழகாக நடத்திக் காட்டியிருக்கிறார்.
ஆனால் பிரச்சினைகள் வந்தால் சமாளித்துக் கொள்ளமாட்டார். கூட்டத்தினர் அவரைக் கசக்கி விடுவார்கள். அல்லது அவர் கூட்டத்தவர்களைக் கசக்கிப் பிழிந்து விடுவார்.
அன்று டாம் விதி அலுவலகம் குமுறிக் கொண்டிருந்த பொழுது, ஜனாப் உஸ்மான் ஒரு வார்த்தையை உபயோகித்தார். அந்த வார்த்தை கடுமையாகவுமிருந்தது; சுவாரஸ்யமாகவுமிருந்தது.
78

அப்துல் மஜீத் ஆலிம்
அவர் சொன்னார்: “எனக்கு எவனாவது அடித்தால், அவனைக் கொன்று விடுவேன்.” இந்த வார்த்தையைக் கேட்டதும் பலர் வாய்விட்டுச் சிரித்து விட்டனர். தலைவரவர்களுக்கும் சிரிப்பு வந்ததை நான் பார்த்தேன். ஜனாப் உஸ்மான் எதையும் உள்ளத்தில் மறைத்துக் கொண்டிருக்கமாட்டார். எண்ணியதை உடனே வெளியாக்கி
விடுவார்.
தலைவரவர்களை விட்டும் அவர் ஒடிச் செல்லக்காரணம், அவருடைய திடீர் முன் கோபம் தான். அவருடைய முன் கோபத்துக்கு என்றும் அவர் அடிமையாகியே இருந்தார்.
அவர் கட்சியிலிருந்து வெளியேறிய பிறகும், நம் தலைவரவர்கள் அவரைக் கண்ணியமாகவே மதித்து வந்தார்கள். அவருடைய பலவீனமான நிலையை உணர்த்தி, விளக்கம் கொடுத்து, அவருக்கு ஒரு கடிதமும் அனுப்பி வைத்தார்கள். அவருடைய மரணச் செய்தி கேட்டு, ஜனாஸா வீட்டுக்கு விரைந்தார்கள்.
தம் வாழ்நாளில் ஜனாப் உஸ்மான் எவருடைய தலைமைத் துவத்தின் கீழும் இருந்தவரல்ல என்பதை விளங்க முடிகிறது. அத்தகைய ஜனாப் உஸ்மான், தமது வாழ்வின் கடைசி எல்லையில், நம் தலைவரவர்களுடைய தலைமையின் கீழ் சில பயிற்சிகளைப் பெறவேண்டுமென்ற இறையேற்பாடு இருந்திருக்கலாமென நான் நினைக்கிறேன். நல்ல மனிதர்களுக்கு நல்ல வழிகளைக் காட்டிக் கொண்டிருப்பது இறைவனுடைய ஒரு வேலையாகும்.
பொறுமைப் பரீட்சையில் தோல்வியுற்ற மூஸா நபி
மூஸா (அலை) சகல திறமைகளையும் பெற்ற ஒரு நபியாவார்கள். இறைவனுடன் நேருக்கு நேர் நின்று வசனித்தவர். புனித குர்ஆனிலே அவர்களுடைய வரலாறு தான் அதிகமுண்டு. இந்த நபியைப் பிடித்து, பக்குவப்பட்ட அடியாரை சுட்டிக் காட்டி அவரிடம் போய் பல பாடங்களைப் பெற்றுக்கொள்ளும்படி இறைகட்டளை வரவில்லையா?
நபி மூஸா (அலை) அவர்கள் அவ்வாறு பாடம் படிக்கப் போன பொழுது, அவர்களுடைய அவசரப்புத்தி, பொறுமையில்லாத் தன்மை வெளியாகவில்லையா? கடைசியில் ஏமாற்றமடைந்து திரும்பி வரவில்லையா?
79

Page 43
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
இது போன்ற ஒரு விடயம்தான் ஜனாப் உஸ்மான் அவர்களுக்கும் கெளரவ தலைவரவர்களுக்கும் இடையில் இடம் பெற்றது.
ஜனாப் உஸ்மான் அவர்கள் கொஞ்சம் பொறுத்திருந்தால், நம் தலைவரவர்களிடமிருந்து அதிகமான பாடங்களையும், பொறுமைப் பயிற்சியையும் பெற்றிருக்கலாம்.
மூஸா (அலை) அவர்கள், இறைவன் குறிப்பிட்ட அந்த அடியாரால், தகுதி இல்லையென வெளியேற்றப்பட்டார்கள். ஏமாந்து திரும்பினார்கள். பின்னர் வருந்தினார்கள்.
ஆனால் ஜனாப் உஸ்மான் அவர்களைத் தலைவரவர்கள் ஒருபோதும் வெளியேற்றவில்லை. எப்படியாவது பொறுமைப் பயிற்சி கொடுக்கவே முயற்சி செய்தார்கள். சமுதாய உணர்வில் பொறுமைப் பயிற்சி மிக முக்கியமென்பதை பயிற்றுவித்தே இருப்பார்கள்.
என்ன செய்வது? ஜனாப் உஸ்மானால் சகிக்க முடியாத ஒன்று தான் பொறுமைப் பயிற்சியும் தலைமைத்துவக் கட்டுப்பாடுமாகும். இது சிலருடைய இயற்கைச் சுபாவமாகும். அதை மாற்றுவதென்பது எளிதல்ல.
அறிஞர் பெர்னாட்ஷாவுக்கு அழைப்பு வந்தது, செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து அந்த சங்கத்தின் உப தலைவராக இருக்க வேண்டுமென்பதே அந்த அழைப்பாகும்.
உடனே அறிஞர் பெர்னாட்ஷா சுருக்கமாகப் பதில் எழுதினார்.
“என் வாழ்நாளில் ஒரு போதுமே நான் உபதலைவனாக இருந்ததில்லை; இதன் பிறகு நான் உபதலைவனாக இருப்பதென்றால், அகில உலகிற்குமே உபதலைவனாக இருப்பேன்" என்று எழுதினார். இது பெர்னாட்ஷாவுடைய ஒரு தனிப்போக்கு. பூமியில் விழுந்தாலும் அவர் மண் படாதவர் போல்த்தான் நடந்து கொள்வார்.
இதுபோன்ற ஒரு தன்மைதான் ஜனாப் உஸ்மானிடமும் இருந்து வந்திருக்கிறது. இவையெல்லாம் குற்றங்களோ, குறைகளோ என்று சுட்டிக்காட்ட நான் வரவில்லை.
அவர் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த காலத்தில்தான், நாட்டில் முதலாவது மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது. அது
8O

அப்துல் மஜீத் ஆலிம்
1988 ஆம் ஆண்டுக் காலப் பகுதியாகும். அப்பொழுது, ஜே.ஆர். ஜயவர்தனாவுடைய சர்வாதிகாரம் போன்ற ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம்.
எமது கட்சி மிகவும் புதியதாக இருந்தது. தேர்தலில் இறங்குவதற்குத் தைரியமே வர முடியாத நிலைமை. திறமை சாலிகள், மூளை சாலிகளெல்லாம் பின்னால் நின்று ஆதரவு தந்தார்கள். ஆனால் தேர்தலில் குதிக்க இலகுவில் முன்வரவில்லை. ஏனென்றால் நம்பிக்கை இல்லாத நிலை. அடுத்தது, ஒரு புதிய, சிறிய கட்சி மூலம் தேர்தலில் இறங்குவது, ஒருவித வெட்க உணர்வாகவு மிருக்கலாம். இப்படிப் பலதையும் நினைத்துப் பார்க்கலாம்.
கெளரவ தலைவரவர்கள் அந்தக் காலகட்டத்தில் அபேட்சகர்களைத் தேடிப் பட்ட கஷ்டம் சொல்லி முடியாத ஒரு கஷ்டமாகும். கடைசியில் பெருந்தொகையான அபேட்சகர்களாக படிப்பறிவு குறைந்த மக்களையே நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கொம்பனி வீதி ஸஹாப்தீன்!
அந்தக் காலகட்டத்தில், கொழும்பு இரண்டில் ஜனாப் சஹாப்தீன் அவர்கள் கட்சிப் பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருந்ததை நான் பார்த்தேன்.
நடைபெறக்கூடிய ஒவ்வொரு கருத்தரங்கிலும் மிகவும் ஆர்வமாக அவர் பங்கு பற்றினார். நிறைய விடயங்கள் பேசினார். கட்சியின் ஒரு பெரிய தூணாக அவர் அமைந்து விடுவார்’ என நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன். அந்தக் காலகட்டத்தில் நான் அவருடன் நெருங்கிப் பழகாவிட்டாலும்கூட, கட்சியினுடைய வளர்ச்சியில் நான் அவர் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருந்தேன்.
ஒரு கட்டத்தில் அவர் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் இருந்திருந்தார். ஆனாலும் அவர் முதலாவது நடந்த மாகாண சபைத் தேர்தலில் அபேட்சகராகக் குதிக்கவில்லை. பின்னால் நின்று சகல விடயங்களையும் கவனித்தார்.
வாக்கு எண்ணும் நிலையங்களிலும் முன்னணியில் கடைசிவரை நின்று செயற்பட்டார். நான் நினைக்கிறேன், தேர்தல் வெற்றியில்
81

Page 44
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
அவருக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம். அதனாற்றானோ என்னவோ, அவர் அபேட்சராக இறங்கவில்லை.
ஆனால், எனது கணிப்பின்படி ஜனாப் சஹாப்தீன் முதலாவது மாகாண சபைத் தேர்தலில் அபேட்சகராகக் குதித்திருந்தால், ஜனாப் அமீருடைய இடம் அவருக்குத்தான் கிடைத்திருக்கும்.
1989 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஜனாப் சஹாப்தீன் தேர்தலில் குதித்தார். ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளும் எடுத்தார்.
ஆனாலும், பின்னர் அவர் கட்சியில் சரியான நிலைப்பாடு இல்லாதவராகவே இருந்தார். அடிக்கடி அதிருப்தி வார்த்தைகளையும் பிரயோகித்து விடுவார்.
என்னதான் சொன்னாலும், நான் அவர் மீது அனுதாப முடையவனாகவே இருந்து வந்திருக்கிறேன். அவர் கட்சியில் ஒரு நல்ல இடத்தில் இருக்க வேண்டுமென நான் விரும்பினேன்.
ஏனென்றால், கெளரவ தலைவரவர்களுடன் தோளோடு தோள் நின்று பிடிக்கக்கூடியவர்களில் ஜனாப் சஹாப்தீனும் ஒருவராகத் தென்பட்டார்.
கம்பீரமான தோற்றம், உறுதியான நடை, தெளிவான வாக்குத் தன்மை, சரளமான ஆங்கில உரையாடல், வாட்ட சாட்டமான உடை அணியும் தன்மை, சிறந்த ஆளுமை அனைத்தும் அவரிடத்தில் இறை பரிசாகக் குடிகொண்டுள்ளதை நான் அவதானித்துள்ளேன்.
கெளரவ தலைவரவர்களும் , அவரிடத்தில் அந்தக் காலகட்டங்களில் பெருமதிப்பு வைத்திருந்ததை நான் பார்த்தேன். தலைவரவர்கள் ஜனாப் சஹாப்தீன் மூலமாக கட்சிக்கு நிறைய தொண்டுகளை எதிர்பார்த்தார்கள் என நான் உணர்கிறேன்.
நான் கூட ஜனாப் சஹாப்தீனுடன் டெலிபோனில் ஒருநாள் கால்களைப் பிடிப்பது போன்று கெஞ்சினேன். எந்தக் காரணம் கொண்டும் நீங்கள் கட்சியிலிருந்து வெளியேறக் கூடாது என்று தடுத்தேன். என்னதான் செய்ய முடியும்? அவருடைய தலைவிதி
பகிரங்கமாகப் பத்திரிகையில் அறிவித்துவிட்டு அவர் வெளியேறினார். ஜனாதிபதி பிரேமதாசாவுடைய உயிருக்குயிரான
82

அப்துல் மஜீத் ஆலிம்
நண்பன், காதர் ஹாஜியாருடன் சேர்ந்து, புகைப்படம் எடுத்து பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதை நான் பார்த்து விட்டு அதிர்ந்து போனேன்.
உண்மையில் அந்தக் கட்டத்தில் ஜனாப் சஹாப்தீன் கட்சியிலிருந்து வெளியேறியது என் உள்ளத்தில் ஒருவித கவலையைக் கொடுத்துக் கொண்டே வந்தது.
இன்று கட்சியில் மிக உயர்ந்த மட்டத்தில் இருக்க வேண்டியவர்களில் ஜனாப் சஹாப்தீனும் ஒருவர்.
இவ்வாறு மிக முக்கியமானவர்கள் தேர்தலில் குதிக்கத் தயங்கிய அந்தக் காலத்தில் தலைவரவர்களுடைய வேண்டுகோளை ஏற்று களத்தில் குதித்தவர்களில் ஜனாப் உஸ்மான் மிகமுக்கியமானவர்.
அந்தத் தேர்தலில் ஏறக்குறைய ஆறாயிரம் வாக்குகள் எடுத்து இரண்டாவது இடத்தில் நின்றார். ஜனாப் சுஹைப் காதர் ஏறக்குறைய ஐயாயிரம் வாக்குகள் எடுத்து மூன்றாவது இடத்துக்கு வந்தார். அந்தத் தேர்தலில் எனக்கு பதினேழாயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன. இதுதான் முதலாவது மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்ட முடிவாகும்.
பாரிஸ்டர் உஸ்மானும் மேல்மாகாண சபையும்!
ஜனாப் உஸ்மான் கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு முற்பட்ட சிறுகால கட்டத்தில் மேல்மாகாண சபையில் அங்கம் வகித்தார். அவர்தான் எங்கள் குழுவுக்குத் தலைவராகவுமிருந்தார்.
அவர் சபையில் கர்ஜிக்கும் சிங்கமாக இருந்தார். அவருடைய பேச்சு பேரினக் கட்சிகளுக்குப் பெரும் தலையிடியைக் கொடுக்கும்.
ஒருநாள் அவர் சபையில் பேசிக் கொண்டிருந்தார். நானும் சபையில் அமர்ந்திருந்தேன். பேரினவாதத்தை அவருடைய பேச்சுத் தன்மையில் ஒரு தாக்குத் தாக்கினார்.
அப்பொழுது முழுச் சபையே ஒருவிதமாக அசந்தது. எல்லோரும் அவரை எரிச்சலுடன் நோக்கினர். அப்பொழுது, முதலமைச்சராக இருந்த திரு. சுசில் முனசிங்ஹ, ஜனாப் உஸ்மானுடைய வார்த்தைகளின் கடினத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தமது தலையில் தட்டிக் கொண்டதை நான் பார்த்தேன்.
83

Page 45
தலைமைத்துவ ரகஸியங்கள்
மேல் மாகாண சபையின் அங்குரார்ப்பண வைபவம் நடந்த அன்று, சத்தியப் பிரமாண நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, ஜனாப் உஸ்மான் அவர்கள் என்னை வந்து கட்டித் தழுவினார். பிறகு என்னிடம் அவர் சொன்ன வார்த்தை.
"ஹஸ்ரத்! இன்றிலிருந்து, பயம் என்பதை உள்ளத்திலிருந்து எடுத்து விட வேண்டும்” என்றார். -
கட்சியிலிருந்து வெளியேறிய ஜனாப் உஸ்மான் அவர்கள் வீட்டிலேயே இருந்திருந்தால், அவருடைய கண்ணியம் என்றும் ஒரு தரத்திலிருந்திருக்கும்.
ஆனால் அவர் ஒரு காலமும் இல்லாதவாறு, வேறு கட்சி மேடைகளில் ஏறிப் பேசத்தொடங்கினார். அதனால் அவர் எந்தப் பிரதி பலனையும் அடையவில்லை. அந்த நிகழ்வுதான் அவருடைய கண்ணியத்துக்கு ஒரு காயம் போன்று அமைந்தது.
அந்தக் காலகட்டங்களில் ஒரு தடவை ஜனாப் உஸ்மான், நாட்டில் சகல மாகாண சபை உறுப்பினர்களையும், அதாவது கட்சிக்குள்ளிருந்த சகல உறுப்பினர்களையும் அழைத்து அவரது கொள்ளுப்பிட்டி இல்லத்தில் ஒரு விருந்து வைத்தார். நானும் அந்த விருந்துக்குச் சென்றிருந்தேன்.
அன்றையத் தினம் அவர் கட்சியினுடைய வளர்ச்சி பற்றிய நுணுக்கமான விடயங்களை எடுத்துக் கூறினார். அந்த விடயங்கள் எங்களைக் கவர்ந்தன.
இவைதான் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ"டைய வரலாற்றில், முதலாவது பொதுச் செயலாளராக விளங்கிய ஜனாப் உஸ்மான் அவர்களுடைய கதையாகும்.
இப்படியான நிகழ்வுகளையெல்லாம் தாங்கி நின்று, பொறுமையிலும் பொறுமையாக, உறுதியிலும் உறுதியாக நின்று, நம் அருமைத் தலைவரவர்கள் கட்சியை வழிநடத்தி வந்துள்ளார்கள்.
இப்படியான நிகழ்வுகளெல்லாம் நம் தலைவரவர்களுடைய உள்ளத்தில் எத்தனை வெட்டுக்காயங்களை உருவாக்கியிருக்க வேண்டும்.
84

அப்துல் மஜீத் ஆலிம்
அந்தக் காயங்களுடைய வேதனையில் தலைவரவர்கள் எவ்வளவு அவதிப்பட்டிருக்கக் கூடும்.
நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது.
பொங்கி வரும் பொறுமைப் பரீட்சைகள்
கட்சியினுடைய ஆரம்பக் காலத்தில் கெளரவ தலைவரவர் களுடைய பொறுமையைச் சோதிக்கும் காரியங்கள் நிறைய நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
பொறுமையும், சகிப்புத் தன்மையும், மனம் தாங்காத துன்பமான கட்டங்களையும் தாங்கி, அதைத் தமக்குள்ளே ஏற்று சகித்து, “சரி பரவாயில்லை நடக்கிறது நடக்கட்டும்” என்று தங்களது உள்ளத்துக்கு தாங்களே ஆறுதல் கூறி, உள்ளத்தைத் தேற்றி எண்ணி முடிக்க முடியாத கடவல்களை எங்கள் கெளரவ தலைவரவர்கள் கடந்து சென்றுள்ளார்கள்.
ஒரு மனிதனால் ஒரு காலமும் தாங்கிக் கொள்ள முடியாத விடயம்தான் நன்றி கெட்ட தன்மை. ஒரு மனிதன் செய்த உதவியை இன்னுமொரு மனிதன் மறந்து விடுவது மிகவும் கொடுமையான ஒரு கட்டம்.
நெப்போலியன் கூறினான்: "ஆயிரமாயிரம் தோல்விகளையும், கஷ்டங்களையும் நான் மிக இலகுவில் தாங்கிக் கொள்வேன். ஆனால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாத, ஒரு விதத்திலும் சகித்துக் கொள்ள முடியாத ஒன்றுதான், நன்றி கெட்டவனுடைய நயவஞ்சகத் தன்மை.”
நெப்போலியனையும் மிகைத்த நிலை!
இது நெப்போலியனுடைய வாழ் நாட்களில் ஏற்பட்ட பலத்த அனுபவம். ஒரு தச்சுத் தொழிலாளியின் சாதாரண மகனாகப் பிறந்து, தனது முப்பத்திரண்டாவது வயதில் மாமன்னனாகத் தானாகவே முடி சூடிக் கொண்டவன். அவனுடைய மணி முடியை அவனே சூடிக் கொண்டான். அவ்வளவு பெரிய பலவான்.
அப்பொழுது, ஐரோப்பாக் கண்டமே அவனுடைய காலடியில்
85

Page 46
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
மிதிபட்டுக் கிடந்தது. "சாக்கடல் குறுக்கிடாவிட்டால் முழு உலகமே
என்கையில்” என்று சொன்ன மாபெரும் வீரன் அவன்.
அந்த நெப்போலியனால் கூட, தாங்கிக் கொள்ள முடியாமல் போய்விட்ட ஒரு விடயத்தில், நமது தலைவரவர்கள் எவ்வளவு காலமாகத் தாங்கி நின்று வந்துள்ளார்களென்ற நீண்ட சம்பவங்களை, நானும் நீளமாக விளக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறேன்.
செய்நன்றியைக் காலப்போக்கில் மறந்து விடுவது, சில மனிதர்களுக்கு சுபாவமாக இருக்கலாம். அதேநேரத்தில் நன்றி 'கெட்டவனாக' மாறுவது ஒரு கொடுமையான விடயமாகும். நன்றி கெட்டவன் நன்றி கெட்டவனாகவே இருந்து விட்டால், அதுவும் அவ்வளவு பாதிப்பு இருக்காது என்று நினைக்கிறேன்.
ஆனால் நன்றி கெட்ட மனிதனிடத்தில் நயவஞ்சகத் தன்மை உருவானால், அது இலகுவில் தாங்கிக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல.
இதைத்தான் நெப்போலியன் சொன்னான். "அந்தக் கட்டத்தை நான் தாங்கிக் கொள்ளவே மாட்டேன்” என்று. உண்மைதான்; இந்தப் பூமியில் தாங்கிக் கொள்ள முடியாதவைகளில் அது முதன்மையானது.
படைத்த இறைவன் கூட, தனக்கு இணை வைத்தவர்களை மன்னிப்பதே இல்லை. எத்தகைய குற்றங்களையும் மன்னித்து விடக் கூடிய இறைவன், அதை மட்டும் மன்னிக்கவே முடியாது என்கிறான். புனித குர்ஆனை ஆராயும் பொழுது, இந்த உண்மை தெளிவாகப் புலப்படுகிறது.
நயவஞ்சகத்தினுடைய உச்சக்கட்டம் இணையிலே கொண்டு நிறுத்தி விடுவதை உணர முடிகிறது. படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ள மனிதன், அவனை நன்றி மறந்து, அவனுடைய எதிரியாகி, அவனுக்கு இணையாக இன்னுமொரு சக்தியை உருவாக்க நினைத்தால், எப்படி இருக்கும்? உண்மையில் இது பாரதூரமான விடயம்.
யூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸஉடைய வரலாற்றில், நன்றி மறந்த தன்மைகள், நன்றி கெட்ட தன்மைகள், அனைத்தையும் மீறிய நயவஞ்சகத் தன்மைகள் நிறையக் காணக் கிடக்கின்றன.
86

அப்துல் மஜீத் ஆலிம்
இவை பற்றி நான் பேனாவை ஊன்றி எழுதத் தொடங்கினே னென்றால், சரியான தெளிவுகளைக் கொண்டு வர நினைத்தே னென்றால், அதன் காரணமாக நான் கொலை செய்யப்படக் கூடிய ஆபத்தும் உள்ளது.
ஆனால் எவரும் நல்லுணர்வு பெற வேண்டுமென்ற நோக்கத்திலேயே எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒருவர் தனது குற்றங்களை உணர்ந்து தெளிவு பெற்று விடுவதென்பது, மிகப் பெரிய விசயம்.
நயவஞ்சகர்களுக்கு மத்தியில் ஒரு நட்சத்திரம்
கெளரவ தலைவரவர்கள் வெளியேறிச் சென்றவர்களுக்கும் நயவஞ்சகம் செய்தவர்களுக்கும் கூட கதவைத் திறந்துதான் வைத்திருக்கிறார்கள். அத்தகைய மனப்பக்குவம் பெற்றவர்கள் தாம் நம் தலைவரவர்கள்.
கெளரவ தலைவரவர்கள், அன்றிலிருந்து இன்றுவரை நயவஞ்சகத்துடைய தாக்கங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டே வருகிறார்கள். அதுவும் சாதாரணமான கட்டங்களல்ல; தாங்கிக் கொள்ள முடியாத கட்டங்களையெல்லாம் கடந்து சென்றுள்ளார்கள்.
கட்சியினுடைய சரித்திரத்துக்குள்ளே, தாங்கிக் கொள்ள முடியாத பல துன்பச் சம்பவங்கள், கெளரவ தலைவரவர்களுடைய உள்ளத்தைப் பாதித்தன. அந்தத் துன்ப உணர்வுகள் தலைவரவர் களுடைய உள்ளத்தில் பொங்கி எழுந்து, அவர்களுடைய உள்ளத்துக்குள்ளேயே வழிந்து கொண்டிருந்தன. அந்தத் துன்பச் சுமைகளை உள்ளத்தில் சுமந்த நிலையில், பற்களைக் கடித்துக் கொண்டு நீண்ட காலத்தைக் கடத்த வேண்டிய நிலை தலைவரவர்களுக்கு ஏற்பட்டது.
அந்தக் கட்டங்களையெல்லாம் ஒரு வித சோகமான புன்முறுவலுடன் சமாளித்து விடுவார்கள். அவைகளைப் பற்றி அலட்டிக் கொள்ளவும் மாட்டார்கள். பிறகு அந்த நிலைமைகளைப் பற்றிப் பாரதூரமாக எடை போட்டுக் கொண்டிருக்காமல் போகிற போக்கில் விட்டு விடுவார்கள்.
குடும்பங்களுக்குள்ளே காணிப் பிரச்சினை வந்தாலும், பங்காளிகளுக்குள்ளே தொழில் பிரச்சினை வந்தாலும்,
87

Page 47
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
வாடிக்கையாளர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் வந்தாலும், ஏன்? கணவன் மனைவிக்குள்ளே பிரச்சினை வந்தாலும், அது பெரிய விளைவுகளைக் கொண்டு வந்து நிறுத்தி விடுவதைப் பார்க்கின்றோம். இரத்தக் களரிகளையும் நோக்குகிறோம்.
ஓர் அரசியல், சமுதாய அமைப்பை முன்வைத்து, பல லட்சம் மக்களை ஒன்று கூட்டி, அவர்களுடைய உள்ளங்களையெல்லாம் ஒரு தட்டில் வைத்து நிறுக்கப் போகின்ற நேரத்தில், ஏற்படுகின்ற பயங்கரமான விளைவுகள் சாதாரணமானவையல்ல.
திடீர் முடிவு செய்வதில் தீரன்!
தலைவரவர்கள் கட்சியைத் தொடங்கி நடத்திக் கொண்டிருந்த அந்த ஆரம்பக் காலகட்டத்தில் திடீர், திடீரென ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்குத் திடீர்த் தீர்வுகள் காண்பார்கள். இதை எதிர்த்தவர்களும் ஆரம்பத்தில் உண்டு. ஆனால் போகப் போக அந்தத் தன்மை போய் விட்டது. காரணம், தலைவரவர்கள் ஒரு திடீர் முடிவுக்கு வந்தால், அந்த முடிவைத் தாண்டிய கருத்தை வெளியிடுவதற்கு பொதுவாக எவருக்கும் ஆற்றலிருக்கவில்லை. எதிர்த்துப் பேசுவது இலகுவாக இருந்தது. ஆனால் அந்தப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதோ, அதற்குரிய சரியான தீர்ப்புக்கு வந்து காரியமாற்றுவதோ சாதாரண விடயமாக இருக்கவில்லை.
கெளரவ தலைவரவர்கள் அந்த விடயத்தில் தன்னிகரற்றவர்களாக இருந்தார்கள். இந்த அசாதாரணத் திறமையின் முன் பெரும்பாலான தொண்டர்கள் மகிழ்வுடன் சரணடைந்தார்கள். சகிக்க முடியாத, புரிந்துணர்வு இல்லாதவர்கள் வெளியாகிவிட்டார்கள்; அவ்வளவுதான்.
கட்சியின் உள்ளும், புறமும் சகல விடயங்களையும் தலைவரவர்கள் நன்கு தெரிந்து வைத்திருந்தார்கள். தேவையான விடயங்களுக்குத் தேவையான முடிவுக்கு வருவார்கள். தேவையற்ற விடயங்களை அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். இப்படி ஆயிரம் விடயங்கள் குறுக்கிட்டாலும், அவர்கள் இலகுவாகச் சமாளித்து விடுவார்கள்.
கட்சி பல தடவைகள் அடையாளமே இல்லாத நிலைக்கு இறங்கி வந்தது. இப்படி எத்தனையோ கட்சிகள் இந்த நாட்டில் தோன்றி இருந்த இடம் தெரியாமல் மறைந்தன. அவை செத்த இடங்களில்
88

அப்துல் மஜீத் ஆலிம்
தற்பொழுது புல்லும் கிடையாது.
ஒரு சிறுபான்மை மகனாகப் பிறந்து, ஒரு சிறுபான்மைச் சமூகத்தை நம்பி இந்தக் கட்சியைத் தொடங்கிய தலைவரவர்கள், இந்தக் கட்சியை சாகவிடாமல் மயிரிழையில் இறையுதவியால் காப்பாற்றிக் கரை சேர்த்த கட்டங்கள் ஏராளம்.
இவைகளை இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் நான் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறேன். காரணம், என் உள்ளத்தில் அலையலையாக முட்டி, மோதிக் கொண்டிருக்கும் நினைவுகளை எழுதி விடுவதற்கு எனக்குப் பத்துப் பேனாக்கள் தேவைப்படுகின்றன.
ஒரு பக்கம் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருக்கிறேன். அதனால் இரவு பகலாக நேரத்தை மருந்து போல் பாவித்து உழைத்துக் கொண்டிருக்கிறேன். எப்படியாவது இந்தப் பெருநினைவுகளை சமுதாய அரங்கில் சமர்ப்பித்து விடவேண்டும்; இது நூற்றாண்டுகள் நிலை நிற்கும் நினைவுகள்’ என்பது எனது உறுதியான நம்பிக்கை.
திடீரென எனது உயிர் போய்விட்டால், இத்தகைய நினைவுகளை யார்தான் நினைவுக்குக் கொண்டு வரப்போகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கேற்படுகிறது.
நான் எழுதிக் கொண்டிருக்கும் ஆயிரக் கணக்கான பக்கங்கள் அடங்கிய இந்நினைவுகளிலிருந்து வரக்கூடிய தலைமுறை, நிறைய ஆதாரங்களை எடுத்து எழுதும். பல நூற்றாண்டுகள் இந்த நினைவுகள், அத்தலைமுறைக்கு வழிகாட்டும்.
தலைமகன் மறைந்தாலும் மறையாத தலைமைத்துவ சுவருகள்!
இந்தத் தலைமகனை நாம் சும்மா விட்டு விடக் கூடாது. எங்கள் தலைமகன், காலம் நேரம் வரும் பொழுது, எம்மை விட்டும் பிரிந்து செல்வதை எவராலும் தடுக்க முடியாது. ஆனால் இந்தப் பெருமகனுடைய நினைவுகளும், சரித்திரமும், சாதனைகளும் நம்மை விட்டும் ஒரு போதும் அகலக் கூடாது.
ஒவ்வொரு வீட்டிலும் வைத்துப் படித்து நினைவுகூரும் சரித்திரமாக இது அமைய வேண்டும். வருகின்ற நூற்றாண்டில், பாடப் புத்தகங்களுக்கும், பேச்சு மேடைகளுக்கும் இது ஆதாரமாக அமைய
89

Page 48
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
வேண்டும்.
அந்த மாபெரும் இலட்சியத்தில், என்னுடைய ஒரு நிமிடத்தைக் கூட விட்டுக் கொடுக்காமல் நான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்குச் சோர்வு ஏற்படும் பொழுது, தொழுகையில் ஈடுபட்டு, குர்ஆனை ஓதி இறைவனிடம் உதவி தேடிக் கொள்வேன்.
மகாகவி அல்லாமா இக்பால் (ரஹ்) அவர்கள் தமது கவிதையொன்றில்
"நீ இறைவனுக்கு அடிபணிந்து உறுதியான லட்சியத்தில், மனோ சக்தியுடன் நிலைபெற்றால் விதியும் உன் கையில் தான்
அதை எழுதும் தூரிகையும்
உன் கையில் தான்” என்றார்கள்.
இதுதான் நம் தலைவரவர்களுடைய வாழ்வின் இரகசியமுமாகும். இதற்கப்பால் இந்த இரகசியத்தை உணர்த்த எனக்கும் சக்தியில்லை. இதனால்தான் இந்த மகா கவிதையின் அடிகளைக் கொண்டு வந்து மாட்டினேன். இக்கவிதையைப் படித்துப் பார்க்கும் பொழுது, ஆயிரம் இரகசியங்கள் விளங்கவரும்.
பல் திறமைகளின் சங்கமம்!
எதற்கும் அஞ்சாத உள்ளம்; எதையும் தாங்கிக் கொள்ளும் இதயம்; எந்த நிலைமையையும் சகித்துக் கொள்ளும் தன்மை; எந்தப் பிரச்சினைகளையும் பொருட்படுத்தாத தன்மை; இரவிலும், பகலிலும்; அயராமல் இயங்கிக் கொண்டிருக்கும் செயல்திறன். எவர் வந்து எந்தப் பெரிய பிரச்சினையை முன்னுக்குத் தூக்கிப் போட்டாலும் சளைக்காமல், மலைக்காமல், ஆற அமர்ந்து சிந்தித்துத் தீர்ப்புக்கு வரும் மனோபாவம் அனைத்தும் ஒரே நேரத்தில் அமைந்த சக்தி வாய்ந்த ஒரு மனிதப் பிறவிதான் நம் கெளரவ தலைவரவர்கள்.
இதை நான் உருவாக்கி எழுத வரவில்லை; அது எனக்குத் தேவையுமில்லை. சரித்திரத்தில் இப்படி ஒரு மனிதனை இறைவன் கொண்டு வருவது, பல நூற்றாண்டுகளுக்கு ஒரு தடவைதான்.
90

அப்துல் மஜீத் ஆலிம்
அது இறைவனுடைய வேலை; காலத்துக்குக் காலம் அவன் அப்படி ஒவ்வொரு முடிவுக்கு வந்து விடுகிறான்.
மனித கோடிகள் பிறக்கிறார்கள். பிறகு இறக்கிறார்கள். ஒரு சிலரைத் தான் சரித்திரம் துாக்கித் தலையில் வைத்துக் கொண்டிருக்கிறது.
நான் மிகவும் அறிந்த பிறகுதான் இதை எழுதிக் கொண்டிருக் கிறேன். நினைவுகளைத் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். எனக்கு நினைவுக்கு வருவதையெல்லாம் எழுதிக் கொண்டே செல்கிறேன். இதில் வேறு தலையங்கமே கிடையாது.
வள்ளுவர் சொன்னார்
“தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றிலிற் தோன்றாமை நன்று”
ஒவ்வொரு மனிதனும், வளவாழ்வையும், வானளாவும் புகழ்வாழ்வையும் தான் தேடுகிறான். ஆனால் அவன் ஆயிரம் வருடங்கள் வாழ்ந்து கஷ்டப்பட்டாலும் அது கிடைப்பதில்லை.
அது கிடைக்கிறது, வரலாற்றில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலருக்குத்தான். டில்லியில் வைத்து உமர் மெளலானா அவர்களுடைய ஏதோவொரு சொற்பொழிவைக் கேட்டேன். அவர்கள் சொன்னார்கள்:
“உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் உழைக்கக் கூடிய பாக்கியத்தை அடையப் பெற்றவனாக இருக்கிறான். ஒவ்வொரு மனிதனும் ஒரு வழியில் உழைத்துக் கொண்டும் முயற்சி செய்து கொண்டும்தான் இருக்கிறான்.
நோக்கம்: முன்னேற வேண்டும்; வெற்றியடைய வேண்டும். இதில் எவரிடத்திலும் எந்த மாற்றமுமில்லை.
ஆனால் ஒரு கூட்டம் வெற்றியடைகிறது. இன்னுமொரு கூட்டம் தோல்வியடைகிறது.
இதற்குக் காரணமென்ன? மனிதன் உழைக்கக் கூடிய உழைப்பு
91

Page 49
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
சரியானதாக இருக்க வேண்டும். அது முறையானதாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அது ஒருபோதும் வெற்றியைத் தராது.”
கெளரவ தலைவரவர்களுடைய நடைமுறைகளை நாம் உற்று நோக்கும் பொழுது, அவர்களுடைய உழைப்பும், அதன் முறைகளும் சரியானவையாக இருந்தன. அவர்கள் எடுக்கக் கூடிய தீர்மானங்கள்
அவர்கள் யாரையும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதில்லை.
அவர்கள் இலக்கை அடைந்திருக்க முடியாது.
வெளியேற்றங்கள் வெளிப்பருத்திய சுயகோலங்கள்!
தலைவரவர்களுடைய உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்படும் நேரங்களில்தான், ஜனாப் உஸ்மான் வெளியேறினார். ஜனாப் செய்கு இஸ்ஸத்தீன் வெளியேறினார். ஜனாப் அப்துல் ரஸ"ல் வெளியேறினார். இன்னும் பலருடைய வெளியேற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
இவர்களுடைய வெளியேற்றத்தில் சில சுயநலன்களும் இருப்பதை மறந்து விட முடியாது.
ஜனாப் செய்கு இஸ்ஸத்தீன் கட்சிப் பிரகடனம் செய்யப்பட்டதோடு முக்கிய இடத்தைப் பெற்று முக்கிய பங்களிப்புக்களைச் செய்தவர். ஜனாப் மருதூர்கனி அவர்கள் ஆரம்பகாலத்திலிருந்தே தலைவருடன் ஒரே நாளில் இந்த விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தவர். இவரும் அப்படித்தான். எனக்குத் தெரிந்த மட்டில், தலைவரவர்களுடைய சிந்தனையில் கட்சியைப் பற்றிய எண்ணம் உருவாகி, ஊறிக் கொண்டிருந்த காலத்தில் இவர்கள் தலைவரவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள்; பழகி வந்தவர்கள்; பக்க பலமாக இருந்தவர்கள்.
கட்சியின் விதையைத் தலைவரவர்கள் பூமியில் விதைத்துக் கொண்டிருக்கும் பொழுது, பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டு மருதூர்கனி பக்க பலமாகவும் இருந்தவர்கள்தான்.
92

அப்துல் மஜீத் ஆலிம்
ஆனால், கவலையான விடயமென்னவென்றால், இந்த இருவரும் பேசிக் கொள்வது மிகமிகக் குறைவு. அதை நான் கண்டதே மிக அரிது; அரிதிலும் அரிது.
இருவருக்கும் இடையில் நீண்ட இடைவெளி இருந்து வந்ததை உணர முடிகிறது. இருவரும் அகன்ற கருத்து வித்தியாச முடையவர்களாக, நீண்ட காலம் இருந்து வந்திருக்கிறார்கள்.
இந்த விடயம் அந்தக் காலகட்டத்தில் கட்சிக்குப் பெரும் பாதிப்பாகவுமிருந்து வந்திருக்கிறது. அது மட்டுமல்ல; கெளரவ தலைவரவர்களுக்கு இது பெருந் தலையிடியைக் கொடுத்துக் கொண்டே வந்தது. இந்தத் தலையிடியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தலைவரவர்கள் அயர்ந்து தூங்க முயன்று தோல்விகண்ட நேரங்களுமுண்டு.
முழு சமுதாயத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரவேண்டுமென்று தலைவரவர்கள் கடும் முயற்சி செய்து கொண்டிருக்கும் காலகட்டத்தில், கட்சியின் மிக நெருங்கிய சுழற் சக்கரத்துக்குள் இப்படியான பெரும் பாதிப்பு இருந்து வந்தது.
யாரை நெருக்குவது யாரைப் பிரிப்பது! இதற்கு என்ன செய்வது? இவர்களை எப்படி முகம் பார்க்க வைப்பது? இருவரையும் வைத்து எப்படி ஒரு வண்டியை இழுக்க வைப்பது? இது தலைவரவர்களுக் கிருந்த மாபெரும் பிரச்சினை. கடைசி வரையில் இந்தப் பிரச்சினை தீரவில்லை. தலைவரவர்கள் இந்த விடயத்தில் மிகவும் கஷ்டப்பட்டுப் போனார்கள். ஆனால், அவர்கள் இது பற்றி வெளிக்காட்டிக் கொள்ளவே இல்லை.
இருவருக்கும் பிரச்சினையான நிலையிலேயே, இருவரும் சேர்ந்து கட்சியை நடத்தி வந்தார்கள்.
அந்தக் காலகட்டத்தில் ஜனாப் மருதூர்கனி அவர்கள் நிலைமையை சமாளித்துக்கொண்டு ஒரு பொறுமை சாலியாகவே செயற்பட்டு வந்தார். கட்சிக்காகக் கடுமையாக உழைத்து வந்தார். ஆனால், வெளிக் காட்டிக் கொள்ளாமல் சிறிது ஒரமாகவே இருந்து செயற்பட்டுக் கொண்டிருந்தார்.
93

Page 50
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
தவிசாளரை கண்ணியப்படுத்தும் தலைவர்
ஜனாப் செய்கு இஸ்ஸத்தீன், தலைவரவர்களுடன் மிக நெருக்கமாக இருந்து செயற்பட்டார். அந்தக் காலகட்டத்தில் சகல காரியங்களிலும் தலைவரவர்களுக்கு அடுத்த படியிலேயே அவர் நின்று கொண்டிருந்தார்.
ஆயிரக் கணக்கான தொண்டர்கள், போராளிகள், தலைவரவர்களைச் சுற்றிக் கொண்டிருந்த போதிலும் அனைவரையும்விட முதலாவது இடத்தில் ஜனாப் செய்கு இஸ்ஸத்தீன் இருந்தார்.
க்ெளரவ தலைவரவர்கள் ஜனாப் செய்கு இஸ்ஸத்தீனைப் பெரிதும் மதித்து வந்தார்கள். தலைவரவர்களுடைய பிரதிபிம்பம் போன்று அவர் விளங்கினார். கட்சியினுடைய இருதயம் போன்று செயற்பட்டார்.
அவருக்கு ஆரம்ப காலத்தில் தலைவரவர்களிடமிருந்த மதிப்பும் மரியாதையும், எந்த அளவுக்கு மேல்மட்டத்திலிருந்ததென்றால், அதுபோன்று வேறு எவருக்குமே இருக்கவில்லை.
அவருக்காக வேண்டியே தலைவரவர்கள் ஒரு பதவியை உருவாக்கினார்கள். அதாவது கட்சியிலே பெறுமதி வாய்ந்த ஓர் ஆசனத்தை உருவாக்கினார்கள். அதுதான் "தவிசாளர்” என்ற ஆசனமாகும்.
அந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டு அவர் தலைவரவர்களுக்கு நிகராக செயற்பட்டுக் கொண்டிருந்தார். தலைவர்களுக்குச் சொந்தமான அதிகாரங்களைக்கூட இவர் பாவித்து வந்திருக்கிறார். இதுவே பிறகு அவருக்கு வினையாகவும் முடிந்தது எனலாம்.
நான் ஒரு கட்டத்தில் தலைவரவர்களுடைய, அளவுக்கு மீறிய நல்ல மனிதராக இருக்கும் தன்மை சில விபரீதங்களைக் கொண்டு வந்துள்ளன என்று எழுதியிருந்தேன்:
ஜனாப் செய்கு இஸ்ஸத்தீனுடைய விடயத்தில் இதுதான் நடந்தது. அவருடைய விடயத்தில் தலைவரவர்கள் எவ்வளவு கண்ணியமாகவும், அன்பாகவும் நடந்து கொண்டார்கள் என்பதை நோக்கும் பொழுது, எந்த ஒரு கட்சியினுடைய வரலாற்றிலும் ஒரு தலைவர் தம் கீழ்
94

அப்துல் மஜீத் ஆலிம்
உள்ள ஒருவருக்கு இவ்வளவு கண்ணியம் கொடுத்திருக்க முடியாது.
ஜனாப் செய்கு இஸ்ஸத்தீனுடைய வாழ்க்கையில் இனி ஒரு போதும் இத்தகைய கண்ணியத்தையும் மரியாதையையும், வேறு எங்கிருந்தும் பெற முடியாது என்று நினைக்கிறேன்.
தற்பொழுது தலைவரவர்களுடன் தோளோடு தோள் நின்று, பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் மட்டத்திலிருந்து செயற்பட வேண்டியவர்தான் அவர்.
அவருக்கு என்னதான் நடந்ததோ; யார்தான் அவருக்கு இந்தக்
உண்மையில் பெருங் கவலை ஏற்படுகிறது.
வெளியேற்றிய பின்னும் கெளரவிக்கும் தன்மை
அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகும் கூட, கெளரவ தலைவரவர்கள் அவர் மீது தனியானதொரு மரியாதையை வைத்திருப்பதை நான் பார்த்துள்ளேன். அவருடைய வெளியேற்றம் தலைவரவர்களுக்கு பெரும் கவலையைக் கொடுத்தது. அதை மிகவும் கஷ்டத்துடன் தாங்கிக் கொண்டார்கள். கட்சி ஒரு பெரும் சோதனைக்கு முகம் கொடுத்திருந்த கால கட்டத்தில்தான் ஜனாப் செய்கு இஸ்ஸத்தீனுடைய வெளியேற்றமும் நிகழ்ந்தது. அந்த நிகழ்வு கட்சியிலும் பெரிய இடைவெளியை ஏற்படுத்தியது.
தலைவரவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு அந்த இடைவெளியையும் மூடினார்கள். ஜனாப் செய்கு இஸ்ஸத்தீனுக்குப் பிறகு, ஜனாப் அப்துல் ரஸலுக்கு அந்த இடம் வழங்கப்பட்டது.
ஜனாப் அப்துல் ரஸல் தவிசாளராக நியமிக்கப்பட்ட வேளை, கெளரவ தலைவரவர்கள் டாக்டர் உதுமாலெப்பை அவர்களைப் பிரதித் தவிசாளராக நியமித்தார்கள். ஏற்கனவே ஜனாப் செய்கு இஸ்ஸத்தீன் இருந்த காலத்தில், பிரதித் தவிசாளர் ஒருவர் இருக்கவில்லையென்றே நான் நினைக்கிறேன். அந்த இடம் பிரத்தியேகமாக ஜனாப் செய்கு இஸ்ஸத்தீனுக்கே உருவானது என்பது, தலைவரவர்களுடைய பல பேச்சுக்களிலிருந்து தெளிவாகிறது.
டாக்டர் உதுமாலெப்பை அவர்களை, தலைவரவர்கள் பிரதித்

Page 51
தலைமைத்துவ ரகஸியங்கள்
தவிசாளராக நியமித்தது, ஒரு விவேவகமான, சாதகமான ஏற்பாடாக அமைந்தது.
கட்சி மிகவும் சோர்வடைந்திருந்த காலகட்டத்தில்தான், ஜனாப் உதுமாலெப்பை பிரதித் தவிசாளராகக் கட்சியின் அலுவலகத்துக்குள் பிரவேசித்தார்.
அப்பொழுது கட்சியும் எத்தனையோ கட்டங்களுக்குள் புகுந்து வெளிவந்துவிட்டது. ஆரம்பத்தில் டாம் வீதிக் கட்டடத்தில் இருந்த கட்சி அலுவலகம், பிறகு கொழும்பு 6, சித்திரா லேனுக்கு மாற்றப்பட்டது. அது தலைவரவர்களுடைய வீடு. அந்த வீடு வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்தது. தலைவரவர்கள் ஆரம்பத்தில் குடும்பத்தவர்களோடு அங்குதான் வாழ்ந்து வந்தார்கள். பிறகு தங்கள் இல்லத்தை, பக்கத்தில் பைப் Fife வீதிக்கு மாற்றினார்கள். அதுவும் வாடகை வீடுதான்.
பளலீல் மஜித் தந்த பக்கபலம்!
அதன் பிறகு தலைவரவர்களுடைய இல்லம் காஸ்ப்ப றோட்டுக்கு மாற்றப்பட்டது. காஸப்ப றோட்டிலிருந்த அந்த வீடு, தலைவரவர் களுடைய ஒன்றுவிட்ட மூத்த சோதரருடையது என்று நினைக்கிறேன். அது மர்ஹம் பஸில் மஜீத் அவர்களுடைய வீடு. ஜனாப் பளில் மஜீத் அவர்கள், தலைவரவர்களை ஒரு மாபெரும் அமைச்சராகப் பார்த்து விட்டுத்தான் இறையடி சேர்ந்தார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.)
ஜனாப்பஸில் மஜீத் அவர்கள் தலைவரவர்களுக்கு மறைமுகமாகப் பக்கபலமாக இருந்து வந்தவர்கள். தலைவரவர்கள் கட்சியின் வளர்ச்சியில் கடும் சோதனைகளுக்கு ஆளாகி, பொருளாதாரத் துறையில் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்ட நிலையில், வாடகைக்கு ஒரு வீடு அமர்த்துவது கூட அவர்களுக்குப் பெரும் பாடாகி விட்டது.
ஒரு பக்கம் கட்சி அலுவலகம் இடம் விட்டு இடம் மாறிக் கொண்டிருந்தது. மறுபக்கம் தலைவரவர்கள் இடம் விட்டு இடம் மாறிக் கொண்டிருந்தார்கள்.
இந்தக் கொழும்பு மாநகரின் பூமியில், தலைவரவர்களுக்கோ, கட்சி அலுவலகத்துக்கோ, உட்கார இடமின்றி, ஒரு அங்குல நிலமுமின்றி பல வருடங்கள் கஷ்டப்பட வேண்டிய அவல நிலை இருந்து வந்தது.
96

அப்துல் மஜீத் ஆலிம்
அந்தக் கட்டங்களை நினைத்துப் பார்க்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது. ஒருநாள் என் மனைவியையும் அழைத்துக் கொண்டு தலைவரவர்களுடைய பப் றோட் இல்லத்துக்குச் சென்றேன். அடிக்கடி நான் மனைவியுடன் சென்று வருவது வழக்கம்.
விரு இல்லாத விதியுடன் போராட்டம்!
அன்று தலைவரவர்களுடைய பைப் றோட் இல்லம் இருந்த நிலையை நினைத்துப் பார்க்கும் பொழுது, எனக்கு என்னையே சமாளித்துக் கொள்ள முடியாத ஒருவித வயிற்றெரிச்சல் ஏற்பட்டது.
வீட்டிலுள்ள அத்தனை சாமான்களும் கட்டப்பட்டிருந்தன. சகல சமான்களும் பார்ஸல் பண்ணப்பட்ட நிலையில் இருந்தன.
அந்த நிமிடத்திலேயே தலைவரவர்கள் அந்த வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்கள்’ என்று நான் நினைத்துக் கொண்டேன். அடுத்தது எங்குதான் போகிறார்களோ என்று நினைத்துக்கொண்டு, நான் தலைவரவர்களுடைய ஆபீஸ் அறைக்கு வந்தேன். அந்த அறைக்குள்தான் நாங்கள், தலைவரவர்களுடன் அதிகமான வேலைகள் செய்து வருவோம். அந்த அறைக்குள் வைத்துத்தான் ஜனாப் மசூர் மெளலானா அவர்களையும் அடிக்கடி காணக் கூடிய கட்டம் ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில்தான் ஜனாப் மசூர் மெளலானா அவர்களும் கட்சிக்குள் உறுப்பினராக நுழைந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன்.
ஜனாப் மசூர் மெளலானா அவர்களைத் தலைவரவர்களுடைய பைப் றோட் வீட்டு அலுவலக அறையில் நான் அடிக்கடி பார்க்கும் பொழுது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும். காரணம், நாங்கள் அந்தக் கட்டத்தில், கட்சியில் ஒரு நாதியற்ற நிலைக்கு ஆளாகியிருந்தோம்.
அப்போதைய நேரங்களில், தலைவரவர்களைப் பார்க்கும் பொழுது, அழுது தீர்க்க வேண்டும் போலிருக்கும். மசூர் மெளலானா ஒரு பழம் பெரும் அரசியல்வாதி. மெளலானா அவர்கள் ஆரம்பத்திலேயே தலைவரவர்களுடன் இணைந்திருந்தால், எவ்வளவு சிறப்பாகவும் உறுதியாகவுமிருந்திருக்கும் என நான் நினைத்துப் பார்த்துக் கொள்வேன்.
97

Page 52
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
மசூர் மெளலானாவும் மருதமுனையும்
மசூர் மெளலானா அவர்கள் அரசியலிலே சகல வித்தைகளையும் கற்ற ஒருவர். கோடரியைக் கொண்டு செய்ய வேண்டிய காரியத்தை, நகத்தைக் கொண்டே முடித்து விடக் கூடியவர். இயற்கையிலேயே
நகைச்சுவையானவர்.
அவர் கூட்டங்களில் பேசினால், மக்கள் தம்மை மறந்து சிரித்துக் கொண்டிருப்பார்கள். தற்பொழுது அவருக்கு அறுபது வயதையும் கடந்திருக்கலாம் என நினைக்கிறேன். ஆனால் பார்வைக்கு ஓர் இளைஞனையும் மிஞ்சிய உற்சாகமான தோற்றம். மருதமுனை மக்கள் அவர் மீது உயிரையே வைத்துள்ளார்கள் என நான் அறிந்தேன். அங்கு போய்ப் பார்த்தால், பாதைகள், மைதானங்கள், கட்டங்கள் அனைத்தும் மசூர் மெளலானா அவர்களுடைய பெயர் பொறிக்கப்பட்டதாகவே இருக்கும்.
நான் தலைவரவர்களுடன் ஒருமுறை கட்சி வேலைகளாகச் சென்றிருந்த பொழுது, டாக்டர் உதுமாலெப்பை அவர்களுடைய மைத்துனர் மெளலவி அப்துல்கனி அவர்களுடைய வீட்டில் தங்கியிருந்தேன். சில தினங்கள் அங்குதான் வந்து வந்து தங்கினேன். டாக்டர் உதுமாலெப்பைதான் அந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார்.
ஒருநாள் நான் கனி மெளலவி அவர்களுடன் அரசியல் விடயமாகப் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது, மசூர் மெளலானா அவர்களுடைய பேச்சு அங்கு எடுபட்டது. அதாவது, அவர்களைப் பற்றிப் பேசத் தொடங்கினோம்.
பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, கனி மெளலவி அவர்கள், “இன்றைக்கும்தான், நாங்கள் மசூர் மெளலானாவுடைய பேச்சைத் தாண்டிப் போகமாட்டோம்’ என்றார். அவருடைய அந்த வார்த்தைகளிலிருந்து, மசூர் மெளலானா அவர்களுடைய தரத்தை நான் உணர்ந்து கொண்டேன்.
தற்பொழுது, மசூர் மெளலானா அவர்கள், தலைவரவர்களுக்கு மிகவும் நெருக்கமானவராகவும், கப்பல் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் இயங்கிக் கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
நான் அன்று மனைவியுடன், தலைவரவர்களுடைய பைப் றோட்
98

அப்துல் மஜீத் ஆலிம்
வீட்டுக்குச் சென்று அவர்களுடைய ஆபீஸ் அறையை அடைந்தேன். என் மனைவி, தலைவரவர்களுடைய துணைவியாருடன் சமையலறையில் பேசிக் கொண்டிருப்பது சிறிது தொலைவில் எனக்குத் தெரிந்தது. விட்டில் மகிழ்ச்சியான நிலைமை இல்லை. சகல சாமான்களும் முடிச்சுப் போட்டுக் கட்டப்பட்டிருந்தன.
நான் தலைவரவர்களிடம் கேட்டேன். “சேர்! இது என்ன? வீட்டுச் சாமான்களெல்லாம்.” இப்படி நான் பேசத்தொடங்கும் பொழுதே, தலைவரவர்களிடமிருந்து, பொறுமையான ஒரு புன்முறுவல் வெளி வந்தது; அத் தோடு நிலைமையை என்னிடம் விளக்கத் தொடங்கினார்கள்.
கையிலிருந்த பேனாவையும் மேஜையில் வைத்து விட்டார்கள். நான் நினைத்தேன். இப்பொழுதே வெளியாகப் போகிறார்களென்று.
தலைவரவர்கள் சொன்னார்கள்:
"ஹஸரத்! இதுதான் மனிதனுடைய வாழ்க்கை; இது எனது நண்பரொருவடைய வீடு. அவர்களுக்கு இந்த வீடு தற்பொழுது தேவைப்படுகிறது. வாடகையும் நான் பாக்கி கொடுக்க வேண்டி யுள்ளது. வேறு வீடும் தேடுகிறேன். இன்னும் கிடைக்கவில்லை. நான் போக வேண்டிய நாளும் கடந்து விட்டது.
"நான் நிலைமையை சமாளிக்க முடியாமல், ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். வீட்டு சாமான்கள் அனைத்தையும் பார்சல் பண்ணிவிட்டேன்.
"உடுக்கிற சில உடைகளும் சாப்பிடுகிற இரண்டு பீங்கானும், யாரும் வந்தால் தேனீர் கொடுப்பதற்கு சில கோப்பைகளையும் தவிர அனைத்தையும் சுருட்டிக் கட்டி விட்டேன்.”
“ஏனென்றால் வீட்டு உடையக்காரர் வந்து பார்த்தால், சாமான்கள் அனைத்தும் பார்ஸல் பண்ணப்பட்டிருக்கும் காட்சி அவருக்கு ஒரு விதத்தில் திருப்தியளிக்குமல்லவா?” எந்த நிமிடத்தில் சந்தர்ப்பம் அமையுமோ, அந்த நிமிடத்தில் வெளியாகி விடுவது; அவ்வளவுதான்; வீட்டு உடையக்காரருக்கு நிலைமையை எடுத்துச் சொல்வதும் இலகுவாக இருக்கமல்லவா?” என்று தலைவரவர்கள் என்னோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது, அருந்துவதற்கு தேனீர் வந்தது; தலைவரவர்கள் தேனீர் கோப்பையை என் கையில் தந்து கொண்டே சொன்னார்கள்:
99

Page 53
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
“சில கோப்பைகள்தான் இன்னும் பார்ஸல் பண்ணப்படாமலிருக்கிறது.”
தலைவரவர்களுடைய வீட்டுக்கு மகிழ்வுடன் வந்த நான், மனம் சோர்ந்து போனேன். அங்கிருந்த நிலைமை எனக்குப் பெரும் மனக் கவலையை ஏற்படுத்தியது. என் மனைவி கூட வீட்டுக்கு வந்து கண்ணிர் வடித்தார். ஏனென்றால் நாங்கள் எல்லோரும் வாடகை வீட்டுக்காரர்கள்தான். வாடகை வீடுகளில் இருந்து கொண்டு நாங்கள் படும்பாடு படைத்த நாயனுக்குத்தான் தெரியும்.
தலைவரவர்கள் சில வாரங்களாக வீட்டுச் சாமான்களைக் கொண்டு போக இடம் கிடைக்காமல் பார்ஸல் பண்ணிய நிலையிலேயே வைத்திருந்தார்கள்.
கடைசியில் திடீரென மர்ஹ"ம் பளில் மஜீத் அவர்களுடைய வீட்டுக்கு சாமான்கள் மாற்றப்பட்டன. தலைவரவர்களும் துணைவியாரும், பிள்ளையும் அங்கு சென்று அமர்ந்தனர்.
அதன்பின் நாங்கள் அனைவரும் தலைவரவர்களை சந்திக்க அங்குதான் செல்வோம். அது மிகப் பெரிய வீடு. ஆனாலும் தலைவரவர்களுடைய சாமான்கள் நிறைய இடம்பிடித்தன.
பண்பின் சிகரம் பளியீல் மஜீத்
ஜனாப் பளில் மஜீத் அவர்கள் தலைவரவர்களை, வீட்டுச் சொந்தக்காரன் போல் அமைத்துவிட்டு ஓரமாகி இருந்தார்கள். கட்சித் தொண்டர்களைக் கொண்டு அந்த வீடு நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
அதிகமான கூட்டங்கள், ஆலோசனைகளை அங்கு தான் நடத்திக் கொண்டிருப்போம். கட்சியின் அதி உயர்பீட அரசியல் கலந்துரை யாடலுக்காக அங்குதான் கூடுவோம்.
அந்தக் காலகட்டம் மிகப் பயங்கரமாக இருந்தது, தலைவரவர் களுடைய உயிருக்குப் பேராபத்தும் நிலவி வந்தது. தலைவரவர் களுடைய உயிருக்கு எந்த நிமிடத்தில் என்ன நடக்குமோ என்று நாம் அஞ்சிக் கொண்டிருந்தோம்.
ஒரு நாள் இனந்தெரியாத ஒரு தடித்துக் கொழுத்த மனிதன் வந்து புகுந்து விட்டான். அவன் யாரென்று தெரியாமலிருந்தது.
100

அப்துல் மஜீத் ஆலிம்
அவனுடைய பேச்சும் திருப்தியாக இருக்கவில்லை. காவலர்களையும் தாண்டி அவன் எப்படித்தான் புகுந்தானோ என்பது மர்மமாக இருந்தது. தலைவரவர்கள் உடனடியாகக் காவலர்களை அழைத்து, அந்த மனிதனைப் பரிசோதிக்க வைத்தார்கள்.
அன்று மாலை நான் தலைவரவர்களைப் பார்ப்பதற்கு காஸ்ப்ப ரோட் இல்லத்துக்குச் சென்றேன். தலைவரவர்களுடைய முகம் ஒருவித அலட்சியத் தன்மையில் இருந்தது, நடந்த விடயங்களை
என்னிடம் சொல்லிக் காட்டினார்கள்.
"உனது நிலைமை சரியும் பொழுது
உனது நிழலும் சேர்ந்து உன்னை மிதிக்கும்”
என்று கவிஞர் கண்ணதாசன் பாடிக் காட்டுகிறார். இது போன்ற
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டும் அகலாத அக்கறை
ஒரு பக்கம் சுகவீனம் அவர்களைத் தாக்கிக் கொண்டிருந்தது. நவலோக்க மருத்துவமனையில்கூட அனுமதிக்கப்பட்டு மாரடைப்பு நோய்க்காக சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார்கள்.
தலைவரவர்கள் நவலோக்க மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டள்ளதாக எனக்கு உடனடியாக டெலிபோன் செய்தி கிடைத்தது.
விரைந்தேன். இரவு நேரமாக இருந்தது. மருத்துவமனையின் மாடியில் ஏதோ ஓர் அறை. அங்கு நாங்கள் உள்ளே சென்றதும் தலைவரவர்கள் கட்டிலில் சாய்ந்து கொண்டிருந்தார்கள். துணைவியார் அவர்களும் பக்கத்திலிருந்தார்கள். நாங்களும் போய் சேர்ந்து கொண்டோம். சிறிது நேரத்தில் யாரோ ஒரு அரசியல் பிரமுகர் அங்கு வந்தார். அவர் தலைவரவர்களுடன் நீண்ட நேரம் கதைத்தார். அதாவது அப்போதிருந்த பயங்கரமான அரசியல் சூழ்நிலைகளையும், நடந்த சில நிகழ்வுகளையும் அவர் தலைவரவர்களிடம் அமைதியாகச் சொல்லிக் கொண்டிருந்தார். நானும் அமைதியாக அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். தலைவரவர்களும் ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில் இடது கையைக் கன்னத்தில் வைத்துக் கொண்டு அசையாமல் அந்த அரசியல் விடயங்களை அவதானித்துக்
1 O1

Page 54
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
கொண்டிருந்தது இன்னும் எனது கண்களுக்கு விளங்குகின்றது. காஸப்ப றோட் இல்லம் கெளரவ தலைவரவர்களுக்கு ஒரு வகையில் பெரிய அடைக்கல இடமாக அமைந்தது. ஆயிரம் பிரச்சினைகள் சூழ்ந்திருந்தாலும் அந்த வீடு அவர்களுக்கு அலாதியான ஓர் அமைதியைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
பெருந்தலைவர் வீட்டில் நம் தலைவர்
அங்கு வீட்டு வாடகையோ அல்லது சமையலறைச் செலவுகளோ
எதுவுமே தலைவரவர்களுக்கு இருந்திருக்கமுடியாது என்று நினைக்கிறேன்.
ஏனென்றால் சகோதரர் மர்ஹம் பளில் மஜீத் அவர்கள் அங்கு தலைவரவர்களைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வீட்டுக்குத் தலைவரவர்கள் செலவுக்கென்று ஒரு உப்புக் கட்டியைக் கொண்டு செல்வதைக் கூட மர்ஹம் பஸில் மஜீத் அவர்கள் தாங்கிக் கொள்ள மாட்டார்கள்.
தலைவரவர்கள் அங்கு ஒரு கெளரவ விருந்தாளியாக இருந்தார்கள். எந்தக் குறையும் அங்கு இருக்கவில்லை. தமக்குச் சொந்தமாக ஓர் இடமில்லையே என்ற குறையைத்தவிர, வேறு எதையும் அங்குபார்க்க முடியவில்லை.
மர்ஹாம் பளில் மஜீத் அவர்கள், மிகவும் கண்ணியமான ஒரு மனிதர். அவர் ஒரு பண்டிதர்; ஓர் எழுத்தாளர்; ஒரு கவிஞர்; தலைசிறந்த ஒரு சிந்தனையாளர்; மிகவும் எளிமையான தோற்றமுடையவர்.
அவருடைய நடை, உடை, பாவனைகள் அனைத்தும் மிகமிக எளிமையானவை. தம்மை ஒரு முக்கிய மனிதராகக் காட்டிக் கொள்ளவே மாட்டார்கள்.
வாழ்க்கையில் மிகவும் பக்குவப்பட்ட ஒரு தன்மையை அவரிடத்தில் பார்க்கலாம். அந்தப் பெரிய விசாலமான வீட்டில் அவர் அமர்ந்திருக்கும்பொழுது, அந்த வீட்டு உடையக்காரர் அவர்தான் என்று யாரும் சொல்லமாட்டார்கள். அந்த அளவுக்கு பணிவும், எளிமையும் கொண்ட ஒரு தோற்றத்தை அவரிடத்தில் பார்க்கலாம். டாக்டர் உதுமாலெப்பை அவர்கள் அவருடைய பெயரைக் குறிப்பிடும் பொழுது பெரிய தலைவர் என்று குறிப்பிடுவார். இன்னும் பலரும் அப்படிச் சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
102

அப்துல் மஜீத் ஆலிம்
டாக்டர் உதுமாலெப்பை அவர்களிடம் இதுபற்றி நான் ஒருதடவை காரணம் கேட்டேன். அப்பொழுது அவர் விடயத்தை என்னிடம் சொன்னார்.
அதாவது கெளரவ தலைவரவர்கள் ஆரம்பத்தில் கட்சியைப் பதிவு செய்வதில் பலத்த ஒரு சவாலுக்கு முகம் கொடுத்தார்கள்.
அந்தச் சமயத்தில், மர்ஹ"ம் பளில் மஜீத் அவர்கள், ஒரு காலத்தில் சாதித்துவைத்திருந்த ஒரு சாதனை அவர்களுக்குக் கைகொடுத்தது. அந்த சாதனை கெளரவ தலைவரவர்களுக்குப் பெரும் சாதகமாக அமைந்தது.
பழம் வழுகிப் பாலில் விழுந்து, அவை இரண்டும் வழுக்கி வாயில் விழுந்தது போன்று, தலைவரவர்களுக்கு கட்சியைப் பதிவு செய்யும் அலுவல் மிகவும் இலகுவாகிவிட்டது என்று கூறினார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எனது தந்தை இபுறாகீமுடைய மார்க்கத்தை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருக்கிறேன்”
புனித குர்ஆன்கூட அப்படித்தான் கூறுகிறது. மர்ஹ"ம் பளில் மஜீத் அவர்களுக்கும், தலைவரவர்களுக்கும் உள்ள கட்சி உறவு இதுபோன்றதுதான். அதனால்தான், மர்ஹம் பளில் மஜீத் அவர்கள் “பெரிய தலைவர்” என்று அன்பாக அழைக்கப்படுகிறார்கள்.
மர்ஹ"ம் பளில் மஜீத் அவர்கள் மிகுந்த மார்க்கப்பற்றுள்ளவர்; இறைஞான இரகசியங்களின் தொடர்புள்ளவர். என்னுடன் அதுபற்றி
இரகசியமாக உரையாடுவார்கள்.
இத்தகைய மர்ஹாம் பஸில் மஜித் அவர்கள், தலைவரவர்களுக்கு இரகசியமாகப் பேருதவியாளராக இருந்து வந்துள்ளார்கள். கட்சி வளர்ந்து, அரசியல் மட்டத்தில் அது கொடிகட்டிப் பறக்கும் காட்சியைப் பார்த்துவிட்டு, அந்தக் களிப்பில்தான் அவர்கள் உலகை விட்டுப் பிரிந்து சென்றார்கள்.
கடைசியாக நான் மர்ஹ"ம் பளில் மஜீத் அவர்களை துறைமுகப் பள்ளிவாசலில் வைத்துக் கண்டேன். ஒரு ரமழானில் அங்கு நான் மார்க்கப் பிரசங்கம் செய்துகொண்டிருக்கும் பொழுது, மர்ஹ"ம் பஸில் மஜீத் அவர்கள் அங்கு ஒரு மூலையில் அமைதியாக
103

Page 55

அப்துல் மஜீத் ஆலிம்
தலைவரவர்களுடைய தகப்பனாரை கடைசியாகக் கண்டேன். அவர்களுடனே நான் இருந்தேன். எந்த நேரமும் என்னுடன் ஒருவித புன்சிரிப்புடன் நடந்துகொண்டார்கள். வாய்திறந்து பேசுவது மிகமிகக் குறைவாக இருந்தது.
நாங்கள் இருவரும் ஒன்றாகவே அமர்ந்து சாப்பிடுவோம்.
அப்போதும் மெளனமாகவே இருப்பார்கள். தலைவரவர்களுடைய மருமகள் சித் தி நபீஸத் துல் மிஸ்ரிய்யா, அப்பொழுது படித்துக்கொண்டிருந்த காலம்; அந்தப் பிள்ளை எங்களுக்கு மிகவும் ஆர்வத்துடன் உணவளித்து உபசரித்தது. தற்பொழுது தலைவரவர்களுடைய மருமகன் சட்டத்தரணி ஜனாப் நிசாம் காரியப்பர் திருமணம் செய்திருப்பது அந்த மருமகளைத்தான்; என்று நினைக்கிறேன்.
அப்பொழுது, கிழக்குப் பகுதி முழுவதும் மிகவும் பயங்கரமான நிலைமை நிலவியது. நான் அந்த வீட்டில் ஒழிந்துகொண்டுதான் இருந்தேன்.
தலைவரவர்கள் இந்திய இராணுவ முகாமில் மறைத்து வைக்கப் பட்டிருந்தார்கள். அப்படியிருந்தும், தலைவரவர்கள் ஒழிந்திருந்த இராணுவ முகாமை அன்றிரவு ஷெல் தாக்கியது. புலிகளுடைய பயங்கர நடமாட்டம் இருந்து வந்தகாலம் அது. இந்திய இராணுவம் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. அன்றிரவு தலைவரவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்.
ஜே.ஆர். ஜயவர்தனாவுடைய அரசாங்கம் மாகாண சபைத்
தேர்தலைக் கொண்டு வந்து விட்டது. நாடுமுழுவதிலும் அந்தந்த தேர்தல் நடந்த முடிந்து விட்டது; கடைசியாக வட-கிழக்கில் தேர்தலை
நடத்தியே ஆகவேண்டுமென்று உறுதியாக நின்றார் ஜே.ஆர்.
புலிகள் அந்தத் தேர்தலைப் பகிஷ்கரித்தனர். பூரீலங்கா சுதந்திரக்
கட்சியும் அந்தத் தேர்தலுக்கு முன்வரவில்லை.
வட-கிழக்குப் பகுதியில் திரு. பத்மநாபாவுடைய தமிழ்க் கட்சி
ஈ.பி.ஆர்.எல்.எப். அப்பொழுது தேர்தலில் குதித்தது. வரதராஜப் பெருமாள் முதலமைச்சருக்கான அடையாளத்துடன் போட்டியில்
தீவிரமாகக் குதித்திருந்தார்
பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ"ம் அந்தத் தேர்தலில் தைரியமாகக்
105

Page 56
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
குதித்தது. அது நினைத்தும் பார்க்க முடியாத ஒரு வேலையாக இருந்தது.
கொழும்பிலிருந்து செல்வதற்கென்று அப்படி ஒரு பெரிய பட்டாளமும் தயாராக இருக்கவில்லை. தலைவரவர்களிடத்தில்
ஒரு தன்மை இருந்து வந்தது. யாருக்காகவும் அதிகம் காத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
கடைசியில் தனிமையில் சரி, காரியத்தில் இறங்கி விடுவார்கள். தலைவரவர்கள் எனக்கு டெலிபோன் பண்ணினார்கள். “ஹஸ்ரத்! ஒரு மிக முக்கிய பயணம், ரெடியா?” என்று கேட்டார்கள்.
நான் “ரெடி சேர்” என்று சொன்னேன்.
"அப்படியென்றால் ரெடியாகி வாருங்கள்! உடுப்புகளுடன் வாருங்கள்; ஒரு வாரத்துக்கு மேல் வேலை இருக்கிறது” என்று சொன்னார்கள்.
நான் “ரைட் சேர்” என்றேன். திரும்பவும் தலைவரவர்கள் என்னைப் பயம் காட்டினார்கள்.
"ஹஸ்ரத்! வீட்டில் வசிய்யத் செய்துவிட்டு வாருங்கள். திரும்பி வரக்கிடைக்குமோ, என்னவோ, தெரியாது’ என்று கூறினார்கள்.
நான், “அது என்ன சேர்?’ என்று கேட்டேன்.
ஆனால் தலைவரவர்கள் எனக்கு விளக்கிச் சொல்லவில்லை. நானும் அப்பொழுது ஒரு சாதிவாக்கு. தலைவரவர்கள் நெருப்பில் பாய்ந்தால் நானும் பின்னால் பாய்ந்து விடுவேன். அது தலைவ ரவர்களுக்குத் தெரியும். வேறு யாரும் எங்களுடன் வரவில்லை. ஒட்டமாவடி, வாழைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த ஜனாப் முஹிதீன் அப்துல் காதர் மட்டும் எங்களுக்கு உதவியாக வந்தார். அவர் இந்திய இராணுவத்தையும் முந்திக்கொண்டு எங்களுக்கு உதவியாக இருந்ததுடன், சகல விடயங்களிலும் தலைவரவர்களுடன் உதவியாக இருந்தார்.
பல நாட்களாக இரவு பகலாக இந்திய இராணுவ ஹெலிக்கொப்டர்களில் பறந்துகொண்டிருந்தோம். புலிக் குகைகளி லெல்லாம் ஏறி இறங்கிக் கொண்டிருந்தோம். அப்போதெல்லாம்
106

அப்துல் மஜீத் ஆலிம்
ஜனாப் முஹிதீன் அப்துல் காதர் கூடவே இருந்து செயற்பட்டார். அந்த நாட்களில் பல உயிராபத்துக்களைக் கடந்திருக்கிறோம்.
தலைவரவர்களுடைய அழைப்பை ஏற்று நான் உடுப்பு பேக்கையும் தயார் செய்துகொண்டு, வீட்டில் பலநாட்கள் எடுக்கும்’ என்று
மாகாணசபையின் உறுப்பினராக இருந்தேன். நாட்டில் அனைவரையும் விடப் பெருந்தொகையான வாக்குகள் எடுத்து கொழும்பு மாநகரில் பிரதிநிதித்துவம் செய்து கொண்டிருந்தேன்.
தல்ைவரவர்கள் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் எதுவும் அடையாதிருந்த காலம் அது. அறிமுகமில்லாத இராணுவத் தடைகளைக் கடக்கும் பொழுது என்னுடைய உறுப்பினர் அடையாள அட்டையை எடுத்துக் காட்டுவார்கள். அப்பொழுதெல்லாம் தலைவரவர்கள் என்னிடம்,
“ஹஸ்ரத்! அரசியல் அதிகாரம் என்பது இதுதான்” என்று சொல்வார்கள்.
தலைவரவர்களுடைய சித்ரா லேன் வீட்டுக்கு நான் சென்ற பிறகு, கிழக்கிலங்கைக் குத் தேர்தல் பிரசாரத்துக்காகத் தலைவரவர்கள் புறப்பட்டுக் கொண்டிருப்பது எனக்கு விளங்க வந்தது. பிறகு முஹிதீன் அப்துல் காதரும் வந்து சேர்ந்தார். வேறு எவருமில்லை. உண்மையில் எவரும் வரமாட்டார்கள்.
உயிர்வாழ விரும்பும் எவரும் அந்தப் பக்கமே அடியெடுத்து வைக்க மாட்டார்கள். வடக்கும், கிழக்கும் குமுறிக் கொண்டிருந்தது. புலிகள் தேர்தலை நடத்தவிடாமல் கடும் இடையூறு செய்து கொண்டிருந்தனர்.
இந்திய இராணுவப்படையினரின் துப்பாக்கி முனைகளின் பலத்தைக் கொண்டுதான், எந்தக் காரியத்தையும் செய்ய வேண்டியிருந்தது.
கண்ணியவான் ஜெனரல் கல்கட்
தேர்தலை வெற்றிகரமாக நடத்தும் வேலையில் இந்திய இராணுவம் உஷார் படுத்தப்பட்டு, மும்முரமாக ஈடுபடுத்தப்பட்டிருந்தது. அப்பொழுது, மேஜர் ஜெனரல் கல்கட் இந்தியப் படைக்குத் தலைமைதாங்கி மிகவும் உற்சாகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
1 O7

Page 57
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
அவர் மிகவும் கண்ணியமானவர். தலைவரவர்களையும் என்னையும் ஜனாப் முஹிதீன் அப்துல் காதரையும் மிகவும் கண்ணியமாக வரவேற்றார். பழகுவதற்கு மிகவும் எளிமையான நல்ல மனிதர் ஜெனரல் கல்கட் நான், இந்தியப் பாணியில் நீண்ட ஜுப்பா அணிந்து, தலைக்குத் தொப்பியும் அணிந்திருந்தேன். நான் தப்லீக் ஜமாஅத்தில் முன்னணியில் இருந்த காலம். என் அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு தப்லீக் ஜமாஅத் என்னுடன் ஒருவித மெளனமாக இருந்து வருகிறது, அவ்வளவுதான்.
ஜெனரல் கல்கட் என்னுடைய உடை அமைப்பைக் கண்டதும், தலைவரவர்களுடைய கைகளைக் குலுக்கிக் கொண்டே, எனக்கு ஸலாம் சொன்னார். நானும் பதில் ஸலாம் சொன்னேன். முதலில் அவரை ஒரு முஸ்லிம் என்று நினைத்து நான் ஏமாந்தேன்.
குண்டு நுளையா ஆடையுடன் குதிக்கும் தலைவர்
தலைவரவர்களுடைய சித்ரா லேன் வீட்டில், குண்டுதுளைக்காத கவச ஆடைகளைத் தலைவரவர்கள் அணிந்து கொண்டிருந்ததைக் கண்டு நான் ஒருவிதமான அதிர்ச்சிக்கு ஆளாகினேன்.
எனக்கும் இவை புதிய அனுபவங்கள்தானே. ஜனாப் முஹிதீன் அப்துல் காதர் தலைவரவர்களுக்கு அந்த ஆடையை உடுப்பாட்டிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் தலைவர் அவர்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது. துணைவியாரவர்களும் பக்கத்தில் ஒருவித சோகச்சிரிப்பில் மெளனமாக நின்று கொண்டிருந்தார்கள். ஆம், கணவரை, திரும்பி உயிருடன் வர நினைத்துப் பார்க்காத, ஒரு பயணத்துக்குத் தயார் செய்வது இலகுவான காரியமா? ஆனால், எனது வீட்டுக்கு இது தெரியாது. நாங்கள் ஒரு இரத்தக்களறியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பது எனது வீட்டுக்குத் தெரியவே தெரியாது.
தலைவரவர்கள் என்னைக் கண்டு சிரித்தது, ஒரு அசட்டுச் சிரிப்பாகும். நான் எல்லா நிலைமைகளையும் சமாளித்துக் கொண்டேன்.
தலைவரவர்களிடத்தில் இருந்தாப்போல் ஒருவித அசட்டு தைரிய
முண்டாகும். அந்த தைரியத்தில் கடக்க முடியாத எந்தக் கடவை களையும் கடந்து விடுவார்கள். உண்மையில் அது ஒரு ஆபத்தான
108

அப்துல் மஜீத் ஆலிம்
தைரியமாகும். அந்த அசட்டு தைரியத்தைப் பாவிக்கப் போய் தலைவரவர்கள் உயிர் தப்பிய தடவைகள் பல.
இப்படியான நெருக்கடியான கட்டத்தில் பலர் தலைவரவர்களை
நெருங்குவதில்லை, தனிமையில் விட்டு விட்டு ஒதுங்கி விடுவார்கள்.
மூஸா நபி (அலை) அவர்களை அவரது கூட்டத்தினர் தனிமையில் அனுப்பிவிட்டு ஒதுங்கிய அனுபவம் தலைவரவர்களுக்குப் பல தடவைகளில் ஏற்பட்டதுண்டு.
அந்த அசட்டு தைரியமில்லாமலிருந்தால், தலைவரவர்கள் இவ்வளவு பெரிய மேடு பள்ளங்களைக் கடந்து சென்றிருக்கவும் முடியாது.
பாரசீகக் கடலைத் தாண்டிய மகா அலெக்ஸாண்டர்
ஒரு இலட்சியத் தலைவன் என்று சொல்லும் பொழுது, இந்த அசட்டு தைரியம் கட்டாயம் தேவைப்படுகிறது. இல்லை, அது தன்னாலே வந்து விடுகிறது. பாரசீகக் கடலைக் கடக்க வேண்டும், ஆனால் மகா அலெக்ஸாண்டருக்கு நீந்தத் தெரியாது. கொஞ்சமும் தெரியாது. ஆனால் மகா அலெக்ஸாண்டர் அந்தப் பெரும் கடலைக் கடந்து விட்டார். எப்படி? எப்படியோ கடந்து விட்டார். இதுதான் வரட்டு தைரியம் என்பது.
காவலரை ஏமாற்றிக் கடந்து சென்ற லெனின்
‘போல்ஸ் விக்’ புரட்சி வெடித்துக் கொண்டிருந்த கட்டம். லெனினைக் கண்ட இடத்தில் சுட்டுக்கொல்லுமாறு அரசாங்கம் கடும் உத்தரவு பிறப்பித்து விட்டது. லெனின் ஒரு வீட்டுக்குள் மறைந்து கிடந்தார். எத்தனை நாளைக்கு மறைந்திருப்பது? லெனின் ஒரு நிமிடமும் சும்மா இருப்பவரல்ல.
மறைந்திருந்த வீட்டின் ஜன்னலினூடாகத் தலையைப் போட்டுப் பார்த்தார் லெனின். பிறகு கோட்டை மாட்டினார். குடையைக் கையில் எடுத்தார். வெளியிலிறங்கி நடக்கத் தொடங்கினார். குடையை அசைத்து விட்டுக்கொண்டு ஜாலியாக நடுத்தெருவில் கிளம்பி விட்டார்.
ஒரு இராணுவவீரன், அடுத்த வீரனிடம் “இதோ பார்! லெனின்
109

Page 58
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
அடுத்த வீரன் சொன்னான்:
“உனக்குத் தலை சரியில்லை; லெனின் இப்படிப் பாதைக்கு வருவானா? அவன் அவ்வளவு பெரிய மடையனா?”
இருவருடைய சம்பாஷணைகளையும் கேட்டுக் கொண்டே லெனினும் நடந்துகொண்டிருந்தார். அடுத்த தெருவுக்கு மாறி மறைந்து விட்டார். இதற்குப் பெயர்தான் அசட்டு தைரியம்.
கெளரவ தலைவரவர்களிடத்திலும் இத்தகைய அசட்டு தைரியத்தை நான் பல தடவைகள் பார்த்திருக்கிறேன்; தேவைப்படும் பொழுது எழுதுவேன். அந்த அசட்டு தைரியமில்லாமல் உலகில் ஆச்சரியமான எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியாது என்பது சரித்திரம் அறிந்த உண்மை.
நெப்போலியன் எல்பா சிறையிலிருந்து தப்பி வெளியேறி பிரான்ஸ் கரையில் வந்திறங்கினான். அவன் வருவதைக் கேள்விப்பட்டு லூயி மன்னன் ஏழாயிரம் வீரர்களைக் கடற்கரையில் காவல் வைத்தான். அத்தனை வீரர்களும் அவனை நோக்கித் துப்பாக்கிகளை நீட்டிக்கொண்டிருந்தனர்.
“சுடு” என்ற உத்தரவும் பிறந்து விட்டது. நெப்போலியன் தன்னுடனிருந்த இருவருக்கும் குனியச் சொன்னான். தன் கோட் பொத்தான்களைக் கழற்றி நெஞ்சைத் திறந்துகொண்டு அந்த ஏழாயிரம் துப்பாக்கிகளையும் நோக்கி “நான் உங்கள் அரசன்; என்னைச் சுடுவது எப்படி?” என்று சத்தமாகக் கேட்டுக் கொண்டே முன்பாய்ந்தான். அந்த ஏழாயிரம் துப்பாக்கிகளும் பணிந்தன. அடுத்த நிமிடம் அந்த ஏழாயிரம் வீரர்களையும் திருப்பிக் கொண்டு லூயி மன்னனை விரட்டச் சென்றான். இதற்குப் பெயர் அசட்டு தைரியம்.
கெளரவ தலைவரவர்கள் இந்த அசட்டு தைரியத்தைக் கொண்டு நிறைய காரியங்களை சாதித்திருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.
வட-கிழக்குத் தேர்தல் என்பது அந்தக் காலகட்டத்தில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. இதனால்தான் பலரும் முன்வரவில்லையென்று நான் நினைக்கிறேன்.
அந்தத் தேர்தலில் காலெடுத்து வைக்கும் பொழுது தலைவ
11 O

அப்துல் மஜீத் ஆலிம்
ரவர்களிடம் பணபலமும் இல்லை; சரியான தொண்டர் பலமும் இல்லை. வாழ்க்கையில் நிம்மதியான நிலைமையுமில்லை.
லொறி போன்ற ஹெலிக்குள் நாங்கள்!
நான் தலைவரவர்களுடன் புறப்பட்டுச் சென்றேன். இந்திய இராணுவ ஹெலிக்கொப்டர் ஒன்று எங்களை இரத்மலானை விமான நிலையத்திலிருந்து ஏற்றிச் சென்றது.
விமான நிலையத்தில் வைத்து எங்களை வழியனுப்புவதற்காக, இந்தியத் தூதுவராலயத்திலிருந்து உயர் அதிகாரி திரு. குர்ஜித்சிங் அங்கு வந்திருந்தார்.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னணியில் இந்தியத் தூதுவராலயம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த காலம் அது. ‘இலங்கை இந்தியாவின் ஆட்சிக்குள் வந்துவிட்டதோ' என்று நினைக்கும் அளவுக்கு அங்கு காட்சிகள் இருந்தன.
திரு. குர்ஜித்சிங் ஒரு சீக்கியர், பஞ்சாப் வாசி மிகவும் உயரமானவர்; கம்பீரமானவர். பெரிய தலைப்பாகை அணிந்திருந்தார். அவரைப் பார்க்கும்பொழுது, ஒருவித பயங்கரத் தோற்றம். ஆனால், தலைவரவர்களுடன் மிகவும் அமைதியாக நீண்டநேரம் உரையாடிக் கொண்டிருந்தார். இரத்மலானை விமான நிலையத்தில் இந்த உரையாடல் நடந்தது.
நிறைய இராஜதந்திர விடயங்களை அவர் பேசிக்கொண்டிருந்தார்.
அதன் பிறகு ஹெலிக் கொப்டர் தயாரானது. அந்த ஹெலிக்கொப்டரில் எங்களை ஏற்றி அவர் வழியனுப்பிவைத்தார்.
மிகப் பெரிய ஹெலிக்கொப்டர், பழையது. இரண்டு எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஒரு பெரிய லொறி போன்றிருந்தது. இராணுவத்தினரை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தும் ஹெலி.
ஹெலிக்கொப்டர் ஒரு விதமாகத் தள்ளாடிக் கொண்டே பறந்தது. காற்றாடியும் மிகப் பெரியது. கெளரவ தலைவரவர்கள் ஓர் ஒரமாக அமர்ந்துகொண்டு பூமியைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். ஹெலிக்கொப்படர் சப்தமாகவுமிருந்தது. அதனால் சப்தமிட்டுத்தான் பேசிக்கொள்ளவும் வேண்டும். நானும் முஹிதீன் அப்துல் காதரும் சப்தமிட்டு வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக்கொண்டு சிரித்துக்
111

Page 59
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
கதைத்துக் கொண்டிருந்தோம். அந்த நேரம் எங்களுக்கு ஒருவித “ஜொலி"யாக இருந்தது. சாகத்தானே போகிறோம். அதுவும் ஏன் அழுதுகொண்டு சாக வேண்டும் என்பது அப்போதைய மனநிலை.
முஹிதீன் அப்துல் காதர் பேச்சுக் கிடையில் பலத்த சிரிப்புடன் காதுக்குள் ஊதினார். ஹெலி சப்தமாக இருந்தது. ஆகவே இவரும் சப்தமாகவே பேசினார்.
“ஹஸரத்! எல்லாரும் தப்பிட்டாங்க; நாங்க இரண்டு பேரும் லீடருக்கிட்ட நல்லா மாட்டிக்கிட்டோம்; இனிப் பட்டுமாள வேண்டியது
அவர் என்னைத்தான் பயங்காட்டிப் பார்த்தாரோ தெரியவில்லை; நானும் அவருடன் சேர்ந்து சிரிக்கத் தொடங்கினேன்.
மலைநாட்டுக்கு மேலாக ஹெலிக்கொப்டர் பறந்து கொண்டிருந்தது. அப்போது, ஒரமாக அமர்ந்து பூமியைப் பார்த்துக் கொண்டிருந்த நம் தலைவரவர்கள், "ஹஸ்ரத்!” என்று பலமாகச் சப்தமிட்டார்கள். மெதுவாகத்தான் பேச முடியாதே; ஹெலி சத்தம்.
பூமியை நிறைத்திருக்கும் காங்கிரஸ் சின்னங்கள்
அடுத்த ஒரத்திலிருந்த நான், தள்ளாடிக் கொண்டே தலைவரவர்களிடம் ஒடினேன். அவர்கள் சிரித்துக்கொண்டே பூமியைக் காட்டினார்கள். நான் பூமியை எட்டிப் பார்த்து விட்டுத் தலைவரவர்களைப் பார்த்துக் கொஞ்சம் பல்லைக் காட்டினேன். சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்த நேரமல்லவா?
தலைவரவர்கள் கேட்டார்கள்: “ஹஸ்ரத்! பூமியில் என்ன தெரிகிறது?’ நான் பூமியைக் கூர்ந்து பார்த்துவிட்டு, “சேர்! ஒன்றும் விளங்குதில்லை; மரக் கட்டைகள் மட்டும்தான் தெரியுது” என்றேன்.
உடனே தலைவரவர்கள் ஒரு விதப் பூரிப்புடன், "ஹஸரத்! எல்லாமே எங்கள் கட்சியின் சின்னம் மரங்கள்தான் தெரிகின்றன. ஏனைய கட்சிகளின் ஒரு சின்னமும் கண்ணுக்குத் தெரியவில்லை.” என்று சொல்லிவிட்டுப் புன்னகை புரிந்தார்கள். நானும் சில கணங்கள் அந்தப் பூரிப்பில் நின்று பார்த்துக் கொண்டே இருந்தேன்.
எந்த அளவுக்குக் கட்சியின் மீதும், சின்னத்தின் மீதும் தலைவரவர்கள் அக்கறை கொண்டிருந்தார்கள் என்பதை அப்பொழுது
112

அப்துல் மஜீத் ஆலிம்
யூகிக்கக் கூடியதாக இருந்தது. இப்படிக் காரியத்திலேயே கண்ணாக இருந்து, கணவுகண்டுகொண்டும், செயல்பட்டுக் கொண்டும் வந்தவர்கள் தாம் நம் அருமைத் தலைவரவர்கள்.
இலட்சியப்பைத்தியங்களை உருவாக்கும் இலட்சியத்தில்
பென்ஜான்ஸனின் நாடகத்தில் அடி வருகிறது. ஒருவன் ஓர் இலட்சியத்தை அடைவதற்கு, இந்த இலட்சியத்தில் பைத்தியக் காரனாக ஆகிவிடவேண்டும். தன்னோடு ஒரு கூட்டத்தை அவன் பைத்தியக்காரர்களாக ஆக்கி விடவும் வேண்டும் என்று.
எந்த அளவுக்கு இலட்சியப் பைத் தியகாரர்கள் அதிகரிக்கிறார்களோ, அந்த அளவுக்கு அந்த இலட்சியம் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கி விடும்” என்றும் வருகிறது.
தலைவரவர்களுடைய நிலையும் இதேதான். ஒரு “இலட்சியப் பைத்தியம்” என்றுதான் சொல்ல நினைக்குது. இல்லாவிட்டால், இத்தனை கடவல்களைக் கடந்திருக்க முடியுமா?
தங்களோடு சேர்ந்து தோளோடு தோள் நின்று செயற்படக் கூடிய “இலட்சியப் பைத்தியங்கள்’ கொஞ்சப் பேரை உருவாக்கி விடலாமா? என்று. தலைவரவர்களும் இன்னும் கடுமையாக ஈடுபட்டுள்ளார்கள்; ஆம், அதுதான் கடைசி வெற்றி
இறைகாதல், இறைபைத்தியம் கடைசியில் இறைநேசச் செல்வனாக முடிவடைகிறது. இறைவனை அடையும் விடயத்தில் இரவுபகலாக உழைத்து, தன்னிலை மறந்துவிடும் பொழுது, யாரும் அடையாப் பேற்றை அது கொண்டு வருகிறது.
இலட்சியப் பைத்தியம் பிடித்தவர்கள்தான் உலகில் கொடி கட்டியுள்ளதை நாம் பார்க்கிறோம்.
ஹெலிக்கொப்டர் இன்னும் சிறிது தொலை சென்று கொண்டிருந்த பொழுது, ஒருவிதமாக ஆட்டம் காணத்தொடங்கியது; அந்த இடத்திலேயே இறங்கி விடும் போலிருந்தது. முன்னுக்கு இருந்த பைலட்மார்கள் தட்டுத் தடுமாறிக் கொண்டிருப்பதும் எங்களுக்கு விளங்கியது.
எப்படியோ தள்ளாடித் தள்ளாடி, மட்டக்களப்பு நகரை அடைந்தது. அங்கு ஒரு பெரிய இந்திய இராணுவமுகாம்; இந்தியப் படையினர்
113

Page 60
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
அந்த மைதானத்தைச் சூழ நிரம்பிக் கிடப்பது ஜன்னலினூடாக எங்களுக்கு விளங்கியது.
ஹெலி தள்ளாடிக்கொண்டே மெதுவாக மைதானத்தில் இறங்கியது. அடுத்த நிமிடம் இராணுவ அதிகாரிகள் பாய்ந்துகொண்டு வந்து, ஹெலிக்கொப்டர் மீது தாவி ஏறினர். ஹெலிக்குக் கடுமையான பரிசோதனை நடந்தது. நாங்கள் பத்திரமாக இறக்கப்பட்டோம் பிறகுதான் எங்களுக்கு விளங்க வந்தது.
நடுவழியிலேயே 'ஹெலியின் ஓர் எஞ்சின் பழுதடைந்து, மிகவும் ஆபத்தான நிலையில் அது வந்து சேர்ந்துள்ளதை நாங்கள் உணர முடிந்தது.
பிறகு புதிய 'ஹெலி யொன்றுக்கு மாற்றப்பட்டோம். எங்கு பார்த்தாலும் மிகவும் ஆபத்தான சூழ்நிலை. எப்படிக் கூட்டம் நடத்துவது? எப்படிப் பாதைகளில் பிரயாணம் செய்வது? புலிப்படை எல்லா இடங்களிலும் மிகவும் உஷாராக இருந்தது.
ஒரு ஐந்துமைல் போவதென்றாலும் ஹெலிக்கொப்டரில் ஏறிஏறி இறங்கினோம். தரை மார்க்கமாகப் போகவே முடியாது. தலைவரவர்களும் ஒரு விதமான தோற்றத்தில் 'கம் மென்று இருந்தார்கள். அளப்பரிய தைரியத்தையும், உறுதியையும், அமைதியான போக்கையும் அப்பொழுது தலைவரவர்களிடம் பார்க்
முடிந்தது.
முடியாது என்று சொல்ல முடியாது
முடியாத ஒரு காரியத்தை முடியும்’ என்று தங்களுக்குத் தாங்களே உறுதி கூறிக்கொண்டு தலைவரவர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
எந்த வேலையையும் முடியாது என்று நினைத்தால், அது முடியாதுதான். நெப்போலியன் சொன்னான்:
"THE WORD IMPOSSIBLE IS NOT IN MY DICTIONARY" "முடியாது என்ற வார்த்தை என் அகராதியிலே கிடையாது” என்றான். இத்தகைய ஒரு போக்கைத்தான் நம் தலைவரவர்கள் கையாண்டு வந்தார்கள். இன்றும் அந்தப் போக்கைத்தான் கையாண்டு கொண்டிருக்கிறார்கள்.
114

அப்துல் மஜீத் ஆலிம்
இத்தாலியைக் கைப்பற்றுவதற்கு 'எல்ப்ஸ்’ மலையைக் கடந்தாக வேண்டும். அது நினைத்துப் பார்க்க முடியாத வேலையாக இருந்தது. நிலைமையை அவதானிக்க, பொறியியல் வல்லுனர்களை நெப்போலியன் அனுப்பினான்.
அவர்கள் சென்று பார்த்து ஆராய்ந்துவிட்டு வந்து, முடியும் போலத்தான் தோன்றுகிறது’ என்றார்கள்.
பின் என்ன? புறப்படுங்கள் என்றான் நெப்போலியன். சும்மாவா சென்றான்? எண்பதாயிரம் வீரர்களுடன், பொதிகளுடன், போர்க் கருவிகளுடன் எல்ப்ஸ் மலையையும் கடந்தான். அன்றையப் போரையும் வென்றான். இத்தாலியையும் கைப்பற்றினான்.
முடியும் என்ற மனோசக்தி ஒரு பெரிய வரப்பிரசாதமாகும். தலைவரவர்களுடன் அன்றையத் தேர்தலுக்கும் முகம் கொடுத்தோம். புலிப்படையின் பயங்கரமான ஆபத்திலிருந்தும் தப்பினோம். வடகிழக்கு மாகாணசபையில் பதினேழு ஆசனங்களைக் கைப்பற்றினோம்.
அந்த மாகாணசபையின் பிரதான எதிர்க்கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் வந்தது. கடுமையான கட்டங்களுக்கு மத்தியில் கெளரவ தலைவரவர்கள் இந்தப் பெரும் சாதனையை நிலைநாட்டினார்கள்.
தேர்தல் பிரசாரம் அந்தப் பகுதியில் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த பொழுது, பகற்காலங்களில் உணவு, குடிப்பு அனைத்தையும் மறந்து ஈடுபட்டிருந்தோம்.
ஹெலிக்கொப்டர் ஊர் ஊராக ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. ஜனாப் முஹிதீன் அப்துல் காதர் பட்டர், சீஸ் கட்டிகளை வெட்டித் தருவார். அந்தத் துண்டுகளைக் கடித்து சாப்பிட்டுக் கொள்வோம். ஒருநாள் மூதூராக இருக்கலாம். ஒரு சட்டி பொரித்த இறால் ஹெலிக்கொப்டருக்குள் கொண்டுவரப்பட்டது.
அந்தப் பகுதியில் அமைப்பு வேலைகளுக்குப் பொறுப்பாக இருந்த சகோதரர்கள் அதைக்கொண்டுவந்து தந்தார்கள். அந்த இறால் துண்டுகளை ஹெலியில் வைத்துச் சாப்பிட்டோம்.
அந்த மாகாணசபையில் ஜனாப் செய்கு இஸ்ஸத்தீன் எதிர்க்கட்சித் தலைவராக வந்தார். ஜவாத் மரைக்கார், பதுர்தீன் போன்றவர்களும்
115

Page 61
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
அந்த மாகாண சபையில் இடம்பெற்றனர். அவர்களும் தற்போது கட்சியில் இல்லை.
எக்கட்டத்திலும் தளராத மன உறுதி!
ஜனாப் செய்கு இஸ்ஸதீன் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட காலம் கட்சிக்கே ஒரு சோதனை மிகுந்த காலமாக இருந்தது. அவருடைய வெளியேற்றம் கட்சியைப் பாதிக்குமோ என்று நாங்கள் நினைத்ததுண்டு. ஆனால் நினைத்தபடி அது ஒரு பாதிப்பாக அமையவில்லை. தலைவரவர்கள் அந்த இக்கட்டான நிலைமையைச் சமாளித்துக் கொண்டு உறுதியாக நின்றார்கள். எந்தக் கட்டத்திலும் கெளரவ தலைவரவர்கள் தங்கள் மன உறுதியை மட்டும் தளர விடுவதில்லை. உண்மையில் அது ஒரு இக்கட்டான நிலைமைதான்.
ஜனாப் செய்கு இஸ்ஸத்தீன் என்றாவது கட்சியை விட்டும் வெளியேற வேண்டியவர் என்று எவருமே நினைத்திருக்க மாட்டார்கள். ஆரம்பத்தில் தலைவரவர்கள் கூட அவ்வாறு எதிர்பார்த்திருக்கவே முடியாது.
என்னதான் சொன்னாலும் ஆரம்ப காலத்தில் செய்கு இஸ்ஸத்தீனுடைய பங்களிப்பு மிகவும் விஷேசமானதாகவே இருந்து வந்தது. கெளரவ தலைவரவர்களுக்கு அவர் ஓர் 'இருதயம்' போன்று இருந்து வந்தார். ஜனாப் செய்கு இஸ்ஸதீனுக்குத் தெரியாமல் ஒரு மூச்சைக்கூட தலைவரவர்கள் இழுத்துவிட்டிருக்க மாட்டார்கள். ஆனால் அவர் தலைவரவர்களுக்குத் தெரியாமல் எத்தனை மூச்சுக்களை இழுத்தார். அந்த இழுப்புக்களால் தலைவர் அவர்கள் எத்தனை தடவைகள் பெருமூச்சுக்கள் விட்டார் என்பதை இறைவன் மாத்திரமே அறிவான்.
இரவு பகலாக ஜனாப் செய்கு இஸ்ஸதீன் தலைவர் அவர்களுடைய அலுவல்களிலேயே இருந்து வந்தார். டர்ம் வீதி அலுவலகம் செயல் பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அங்கு ஜனாப் செய்கு இஸ்ஸதீன் கட்சிக்காக வேண்டி இரவு பகலாகக் கடுமையாக உழைத்து வந்தார்.
தலைவரவர்கள் ஜனாப் செய்கு இஸ்ஸதீனுக்கு மிகுந்த மரியாதையும், கண்ணியமும் கொடுத்து வந்தார்கள். தலைவ ரவர்கள் அவருக்குக் கொடுத்து வந்த நன்மதிப்பு ஒரு காலமும் குறைந்ததில்லை.
116

அப்துல் மஜீத் ஆலிம்
ஜனாப் செய்கு இஸ் ஸ்தீனும் தலைவரவர்களுடைய மகாத்மியத்தை, மகத்தான நற்குணங்களை நன்குணர்ந்தவராகவே இருந்து வந்தார். கெளரவ தலைவரவர்களுடைய நாற்பத்தி மூன்றாவது பிறந்த நாளை நாங்கள் டாம் விதி அலுவலகத்தில் வைத்து எளிமையாகக் கொண்டாடினோம். அந்த வைபவத்திற்கு ஜனாப் செய்கு இஸ்ஸதீன் தலைமை வகித்தார். அந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவரும் அவர்தான். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படும் வரையில் தலைவரவர்களுக்கு அது பற்றித் தெரியாது என்றே நினைக்கின்றேன். தலைவரவர்கள் கட்சி அலுவலகத்திற்கு சமூகமளித்தபொழுது பிறந்த நாள் ஏற்பாடுகளைப் பார்த்து பூரித்துப் போனார்கள். ஜனாப் செய்கு இஸ்ஸதீன் தலைவரவர்கள் எதிர்பார்க்காத விடயங்களையெல்லாம் செய்து அவர்களை சந்தோஷசப்படுத்துவார். அவர் அதில் ஒரு நிபுணர். அந்த வைபவத்தில் ஜனாப் செய்கு இஸ்ஸதீன் ஒரு வாழ்த்துக் கவிதையை எழுதி அதை கண்ணாடிபோட்டு தலைவரவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார். அந்த வாழ்த்துக் கவிதையின் தலையங்கம் நீவிரும்பப்படுவாய்' என்றிருந்தது. அந்தக் கவிதையை தலைவரவர்கள் படித்தார்கள். அவர்களுடைய உள்ளம் குளிர்ந்தது. நாற்பத்திமூன்றாவது பிறந்த நாளன்று ஓர் இரவில் தலைவரவர்களால் அந்த வாழ்த்துக் கவிதை படிக்கப்படுகிறது. உண்மையில் இது மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி
ஜனாப் செய்கு இஸ்ஸதீன் அந்தக் கவிதையில் தலைவர்களுடைய எதிர்காலத்தை முன்னறிவிப்புச் செய்திருந்தார். கடும் சோதனையான அந்த காலகட்டத்தில்தான் இந்தக் கவிதை தலைவரவர்கள் கையில் கொடுக்கப்படுகின்றது.
இருள் சூழ்ந்த அத்தியாயத்தின் திரைகளைக் கிழித்தெறிந்து சுடர் வீசப் போகும் மாலைக் கதிரவனின் பொன்னொளியாய் நீ விளங்குவாய் என்ற கருத்துக்களை அடக்கிய ஆணித்தரமான கவிதை அது தலைவரவர்களுடைய இன்றைய வெற்றிகளை அந்தக் கவிதை அன்று முன்னறிவிப்புச் செய்து கொண்டிருந்தது.
தலைவரவர்கள் படித்து மனம் நெகிழ்ந்து போனார்கள். அந்த அளவுக்கு தீர்க்க திருஷ்டிமிக்க கவிதை அது. இப்படியாக ஜனாப் செய்கு இஸ்ஸதீன் கட்சிக்காகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த அதே வேளையில தலைவரவர்களுடைய உள்ளத்தையும் ஆறுதல் படுத்தியும் வந்தார்.
117

Page 62
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தொன்பதாம் ஆண்டிலே பாராளுமன்றத் தேர்தல் நடந்த பொழுது அம்பாறை மாவட்டத்திலே தலைவரவர்கள் நம் கட்சியில் முதலாவது இடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்கள். ஜனாப் செய்கு இஸ்ஸதீன் இரண்டாவது இடத்திற்கு வந்தார். ஜனாப் யு. எல்.எம். மொஹிடீன் மூன்றாவதாக வந்தார். ஆனால் நமது கட்சிக்கு ஒர் ஆசனம்தான் கிடைத்தது. அதிலே தலைவரவர்கள் தெரிவானார்கள். வாக்குகள் எண்ணப்படும் இடத்தில் ஒரு பெருத்த சதி இடம் பெற்ற காரணத்தினால் மேலதிகமான இரண்டு ஆசனங்கள் கிடைக்காமல் போய்விட்டன. நாட்டின் பெரும்பாலான இடங்களில் இந்த சதி நடைபெற்றுள்ளது. கொழும்பு மாவட்டத்திலே நான் அந்தப் பாராளுமன்றத் தேர்தலிலே போட்டியிட்டு முதலாவதாக வந்தேன். ஆயினும் ஆசனம் கிடைக்க முடியாதவாறு எங்கள் வாக்குகள் களவாடப்பட்டன. அது பிரேமதாஸாவினுடைய சர்வாதிகார ஆட்சி நடந்த காலம். லலித் அதுலத் முதலி போன்றவர்கள் பதவிப் போட்டிகளில் வெறிகொண்டு ஈடுபட்டிருந்த சமயம். சிறிய கட்சிகள் தலை தூக்கிப் பார்ப்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நேரம். அந்தக் காலத்தில் பேரினவாத ஆட்சிக்குப் பெரும் தொகையான எங்களுடைய வாக்குகளை நாங்கள் பறிகொடுத்து விட்டு ஏமாந்து போனோம்.
களவுபோன கொழும்பு வாக்குகள்
அன்று கொழும்பு மாநகர வாக்குகள் காப்பாற்றப்பட்டிருந்தால் நானும் மிக இலகுவாக பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்திருப்பேன். கொழும்பு நகர மக்களுக்கும் சகல வழிகளிலும் பெரும் சேவைகள் ஆற்றி இருப்பேன். அதன் காரணமாக தற்பொழுதும் பாராளுமன்றத்தில் சக்தி வாய்ந்த பிரதிநிதித்துவத்தை வகித்திருக்கலாம். என்னதான் செய்வது? எண்பத்தொன்பதாம் ஆண்டில் நடந்த தேர்தலில் நமது கட்சிக்குப் பாரிய நஷ்டம் ஏற்பட்டது. ஜனாதிபதி பிரேமதாஸா அந்த கால கட்டத்தில் பயங்கரமான விளையாட்டுகளை காட்டிக் கொண்டிருந்தார். கெளரவ தலைவரவர்கள் கட்சியை முன்னுக்கு வழி நடத்திக் கொண்டு வந்த அந்தக் கட்டத்தில் பேரின ஆட்சி கட்சியையும் தலைவரவர்களையும் போட்டுக் கசக்கியது.
திரு. பிரேமதாஸ் அந்த கால கட்டத்தில் தலைவரவர்களை நன்கு பாவித்தார். உங்கள் சமூகத்திற்குத் தேவையான அத்தனை
118

அப்துல் மஜீத் ஆலிம்
காரியங்களையும் நான் பொறுப்பெடுக்கிறேன் என்ற ஒரு ஒட்டுமொத்தமான வாக்குறுதியை அவர் அளித்தார். எனினும் அரசியல் மறதி அவரின் உறுதியை வென்றது. ஒருவகையில் தலைவரவர்களை அவர் மிகவும் ஏமாற்றினார் என்பது எனக்கு
விளங்க வருகிறது. V.
இதுபற்றி நான் அடிக்கடி சிந்தித்ததுண்டு. முஸ்லிம் காங்கிரஸின் தனித்துவத்தை, தொண்டமான் அவர்களைப் போன்று விட்டுக் கொடுக்கத் தலைவர் தயாராக இருந்திருந்தால், எல்லாவற்றையும் செய்வதற்கு அவர் ஆயத்தமாயிருந்தார். ஒன்றும் இல்லாவிடினும் கூட தனித்துவத்தைக் காத்திடுவேன் எனும் உறுதியில் தலைவர் செயற்பட்டார். விளைவு ஏமாற்றம்; எனினும் அல்ஹம்துலில்லாஹ்! அத்தனை சிக்கல்களுக்குள்ளும் அவர் உயிர் தப்பியது அல்லாஹ்வின் வழிகாட்டலே.
தலைவரவர்கள் சமூகத்தின் விடிவுக்காக வேண்டி எந்த வகையிலாவது கட்சியினுடைய சக்தியை அதிகரிக்கச் செய்துவிட வேண்டும் என்ற குறிக்கோளில் உறுதியாக நின்று செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
பிரேமதாஸாவுடைய அனுசரணைகள் பெரும் பிரயோசனம் அளிக்கும் என்றும் நம்பினார்கள். இறுதியில் பிரேமதாஸவும் தோற்றார். தலைவரும் ஏமாற்றப்பட்டார். ஆனால் கட்சியின் நீண்டகாலப் போராட்டத்தையும் வெற்றியையும் தலைவர் உறுதி செய்தார்.
சிங்கத்தின் குகைக்குள்ளே வாழ்ந்த மனிதன்
ஆனாலும் மிகவும் கவனமாகவே செயற்பட்டுக் கொண்டும் இருந்தார்கள். பிரேமதாஸாவோடு உறவு வைத்துக் கொண்டிருந்த அந்தக் காலம் சிங்கத்தோடு தோழமை கொண்டு அதன் குகையில் வாழ்ந்து கொண்டிருந்தது போன்ற ஒரு நிலை இது எனில் அது மிகையாகாது. உண்மையில் தலைவரவர்களுடைய அரசியல் சாணக்கியத்தையே அது வெளிப்படுத்துகிறது.
பிரேமதாஸா தலைவர் அவர்களுக்கு எதிராக அரசியல் வலையை விரித்து வைத்திருந்தார். எத்தகைய ஒரு அரசியல்வாதியும் அந்த வலையில் சிக்கி இருந்த இடம் தெரியாமல் மறைந்திருப்பார். ஆனால் அந்த வலை வந்து சிக்கிய போதிலும் தலைவர் அவர்கள் ஆடாது அசையாது மிகவும் சாதுர்யமாகத் தப்பி வந்துள்ளார்கள்.
119

Page 63
தலைமைத்துவ ரகஸியங்கள்
பிரேமதாஸா தலைவர் அவர்களை ஏமாற்றி இருக்கலாம். ஆனால் வலையில் சிக்க வைக்க அவரால் கடைசிவரை முடியாமல் போய் விட்டது. அந்த வகையில் பிரேமதாஸாவையும் விடப் பெரிய அரசியல் வித்தைகளை தலைவர் அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதை நான் அறிவேன்.
பிரேமதாஸா சாதாரணமான ஒருவர் அல்ல. அந்த கால கட்டத்தில் தமக்கு மேல் இருந்த ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனாவைக் கூட தமது அரசியல் வித்தைகளால் கவனித்துக் கொண்டிருந்தார். ஜே.ஆர். ஜயவர்தனா ஜனாதிபதியாக இருந்த பொழுது திரு. பிரேமதாஸா பிரதமராக இருந்தார். ஆனாலும் நாட்டின் கண்களுக்கு திரு. பிரேமதாஸாவே அதிகமாகக் காட்சி வழங்கிக் கொண்டிருந்தார். அவர் பிரதமராக இருந்தாலும் கூட அந்தப் பதவி அவருக்கு சிறிதும் திருப்தி அளிக்கவில்லை.
ஜனாதிபதி பதவிக்காக உருகியவரும் - உருவாக்கியவரும்
தனக்கு மேலுள்ள ஜனாதிபதிப் பதவியின் மீது அவர் குறி வைத்துக் கொண்டே இருந்தார். அந்த நோக்கத்தை உள்ளத்தில் ஆழமாகப் பதித்துக் கொண்டு நாடு முழுவதும் ஓடத் தொடங்கினார். இரவு பகலாக செயற்பட்டார். வீடமைப்புத் திட்டங்களையும் பெரும் 'கம் உதாவ' கொண்டாட்டங்களையும் மக்கள் முன் விரித்து வைத்தார்.
நாட்டின் பெரும் தொகையான பணம் அவருடைய அமைச்சுக்காக செலவாகிக் கொண்டிருந்தது. ஜே.ஆர்.ஜயவர்தனா இரண்டாவது தடவையும் ஆட்சியை அமைத்த பிறகும் பிரேமதாஸாவுடைய வேகம் மிகவும் கடினமாகிறது. கழுகு தன் இரையை உற்று நோக்குவது போல அவர் தனக்குரிய சரியான சந்தர்ப்பத்தை உற்று நோக்கிக் கொண்டே இருந்தார். அவர் என்ன ஓட்டம் ஓடினாலும் நாட்டில் அவருக்கு ஜனாதிபதியாக வரக்கூடிய ஆதரவு போதாமல் இருந்ததை அவர் உணர்த்திருந்தார். இதனால் தக்க சமயத்தில் நம் தலைவர் அவர்களை நெருங்கினார்.
அவர் எப்படியாவது தம் குறிக்கோளை அடைந்தே ஆக வேண்டும் என்ற உறுதியில் ஒவ்வொரு வினாடியும் கவனமாக இருந்து செயற்பட்டார். அவர் மயிரிழையில்தான் ஜனாதிபதியாகவும் வந்தார். ஜனாதிபதித் தேர்தலில் அவர் எடுத்த வாக்குத் தொகைகளுக்கு மிகவும் பக்கத்திலேயே திருமதி யூரீமாவோ பண்டாரநாயக்காவும்
120

அப்துல் மஜீத் ஆலிம்
நின்று கொண்டிருந்தார். அன்று தலைவர் அவர்களுடைய தலையீடு இல்லாமலிருந்தால் அவர் ஜனாதிபதியாக வந்திருக்கவே முடியாது. இதுதான் நம் தலைவர் அவர்களிடம் இருந்த அரசியல் சக்தியாகும்.
திரு.பிரேமதாஸா தலைவர் அவர்களுக்கு மாற்று உதவி செய்தாலும் சரி செய்யாவிட்டாலும் சரி அது வேறு விடயம். ஆனால் தலைவர் அவர்கள் அளித்த வாக் குறுதியை நிறைவேற்றினார்கள. திரு. பிரேமதாஸாவை இந்த நாட்டில் ஒரு ஜனாதிபதியாக ஆக்கினார்கள்.
இது பெரிய சரித்திரம். நான் முடிந்தளவு இதை விளக்கிக் கொண்டிருக்கிறேன். அன்று தலைவர் அவர்களுடைய தலையீடு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் திரு. பிரேமதாஸா இந்த நாட்டில் ஜனாதிபதியாக வந்திருக்கவே முடியாது.
அன்று நடந்த ஜனாபதித் தேர்தலில் எந்த சந்தேகமும் இல்லை. திருமதி யூரீமாவோ பண்டாரநாயக்காவேதான் ஜனாதிபதியாக வந்திருக்க வேண்டியவர். இந்த விடயத்தில் கெளரவ தலைவர் அவர்களை அன்று பூரீலங்கா சுதந்திரக் கட்சி புறக்கணித்ததன் காரணமாக ஏற்பட்ட மாபெரும் நஷ்டத்தை அந்தக் கட்சி தெளிவாக இப்போது புரிந்து கொண்டுள்ளது.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தொன்பதாம் ஆண்டு பயங்கரமான ஒரு காலகட்டத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலைப் பற்றியே இப் பொழுது நான் எழுதிக் கொண்டிருக்கின்றேன். உண்மையில் அந்தத் தேர்தலில் எவர் ஜனாதிபதியாக வந்தாலும் சரி பரவாயில்லை. ஆனால் ஒரு ஜனாதிபதியைக் கொண்டு வரும் சூட்சும சக்தியை கெளரவ தலைவர் அவர்கள் அன்றே கைக்குள் பொத்திப் பிடித்துக் கொண்டார்கள்.
திரு. பிரேமதாஸ் ஜனாதிபதித் தேர்தலில் குதித்தார். திருமதி பண்டாரநாயக்காவும் அதில் குதித்தார். மக்கள் கட்சியில் இருந்து திரு. ஒளி அபேயகுணசேகராவும் ஜனாதிபதித் தேர்தலில் குதித்தார். ஆக ஜனாதிபதி அபேட்சகர்கள் மூவராவர்.
அந்தந்த கட்சிகளில் இருந்த முஸ்லிம் அரசியல்வாதிகளும்
அவர்களுடைய கட்சியைப் பலப்படுத்துவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். தலைவர் அவர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள்.
121

Page 64
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
எதிர்வரக்கூடிய ஜனாதிபதித் தேர்தலில் நம்முடைய நிலைப்பாடு என்ன? அந்தத் தேர்தலைப் பயன்படுத்தி நம் சமுதாயத்துக்கு என்ன லாபங்களை அடைவது? நம் அரசியல் சக்தியை எந்த வழியில் உறுதிப்படுத்துவது? என்பதையெல்லாம் கெளரவ தலைவரவர்கள் இரவு பகலாக சிந்திக்கத் தொடங்கினாார்கள். நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. தேர்தலும் மிகப் பயங்கரமான நிலையில் எதிரே வந்து கொண்டிருந்தது. நாளுக்கு நாள் நிலைமை முற்றிக் கொண்டே இருந்தது.
ஒரு பக்கம் ஜே.வி.பி.யினுடைய குழப்பம் நாட்டில் கடும் பீதியை உண்டாக்கிக் கொண்டிருந்தது. மறுபக்கம் எல்.ரி.ரி.ஈ. யுடைய தாக்கம் கடுமையாக இருந்தது. இன்னுமொரு பக்கம் ஜே.ஆர். ஜயவர்தனா இந்தியப் படைகளைக் கொண்டு வந்து குவித்திருந்தார்.
அதிகாரப் போட்டியில் நாடு அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.
சமுதாயத்துக்குப் பெரும் பிரயோசனமளிக்கும் வகையில் இந்தத் தேர்தலைப் பயன்படுத்தி ஆக வேண்டும். இதுதான் மிகவும் முக்கியமான விடயம். கெளரவ தலைவரவர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும் வேலையில் மிகவும் கடுமையாக ஈடுபட்டார்கள்.
தூக்கமா, ஒய்வா, ஊணா, குடிப்பா? எதையும் நினைக்க நேரமில்லாமல், தன்னியக்க இயந்திரம் போன்று அவர்கள் பட்டபாட்டை எழுத்தில் இலகுவில் வடிக்க முடியாமலிருக்கின்றது.
சிறிய கட்சி, புதிய கட்சி சிறுபான்மை இனத்தை நம்பிக்கை கொண்டிருக்கும் கட்சி என்னதான் சொன்னாலும் பேரினத்தின் கைகளிலிருந்து ஒரு வாக்கைக்கூட வாங்கிக்கொள்ள முடியாத நிலை. இந்த நிலையில் இந்தக் கட்சி என்னதான் செய்து விடப் போகிறது?
உண்மையில் அனைவருடைய பார்வையிலும் அப்படித்தான் தென்பட்டது. அதனால்தான் எத்தனையோ பேர் வெளியேறியும் சென்றார்கள். அவர்களுடைய பார்வையில் யானையும் யானையும் சண்டை பிடிக்கும் பொழுது இடையில் மாட்டிக் கொண்ட பல்லியின் நிலையாகவே இருந்தது.
ஆனால் கெளரவ தலைவரவர்கள் சிறுகட்சி என்பதையும் சிறுபான் மை இனம் என்பதையும் நன்கு தெரிநது
122

அப்துல் மஜீத் ஆலிம்
வைத்துத்தானிருந்தார்கள். அதேநேரம் இந்த சிறிய சக்தியை
எந்தநேரத்தில் எந்த இடத்துக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற
சூட்சுமமான அறிவையும் பெற்றிருந்தார்கள்.
வெளியேறியோரின் பாதை வெறும் பாதை
அந்த அறிவை மற்றவர்களுக்கு விளக்கிக் காட்டும் பொழுது அது பலரால் கிரகிக்க முடியாமலிருந்தது. அதனால் அந்தக் கால கட்டங்களில் பலர் கட்சியிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
சட்டத்தரணி மர்ஹம் ஜனாப் கலில் அவர்கள் களுத்துறைப் பகுதியைச் சேர்ந்தவர் என்று நினைக்கின்றேன். அவருக்கும் நடந்தது இதுதான்.
அவர் கட்சியின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவர். தலைவ ரவர்களுடனும் கட்சியுடனும் அவர் உயிரையே வைத்திருந்தார். ஒரு தடவை அவர் என்னுடன் பேசிக் கொண்டிருக்கும்பொழுது, "ஹஸரத்! நாங்களெல்லாம் இந்தக் கட்சியில் பத்ர் ஸஹாபாக்கள் போல ஆரம்ப கர்த்தாக்களாக இருக்கின்றோம்” என்று பக்தி ததும்பப் பேசினார். அவ்வளவுக்கு அவர் பற்று வைத்திருந்தார்.
அடிக்கடி சித்திரா லேன் வீட்டில் அப்போது அவரை நான் பார்ப்பேன். டாம் விதி அலுவலகம் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவரும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். அந்தக் கால கட்டத்திலேயே அவர் வெளியேறியும் விட்டார்.
இதுபோன்று பலரை நான் கண்டு விட்டேன். அவர்களுக்கு அரசியல் அறிவு இருந்தது. அரசியலின்மீது ஆசையுமிருந்தது. ஆனால் தலைவரவர்களுக்கிருந்த அரசியலின் ஆழிய ஞானம் அவர்களுக்கிருக்கவில்லை, இருக்கமுடியாதுதான். தலைவ ரவர்களுக்குப் பின்னால் அவர்கள் கண்களை மூடிக்கொண்டு சென்றிருந்தால் எல்லாமே சிறப்பாக முடிந்திருக்கும்.
ஜனாப் அப்துல் ரஸல் நடைமுறைக்கும் நடந்தது இதுதான். ஒரு கட்டத்தில் அவர் சொல்வதைத்தான் தலைவரவர்கள் கேட்க வேண்டு மென்றார். இல்லாவிட்டால் வெளியேறி விடுவேன் என்றார். வெளியேறியும் விட்டார். இப்படிப் பலர். ஆனால் தலைவரவர்கள் சென்ற வழிதான் சரியான வழியாக அமைந்து விட்டதை அனைவரும் உணர்ந்து விட்டனர்.
123

Page 65
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
பூரீலங்கா சுதந்திரக் கட்சி நீண்ட காலமாகப் படுதோல்வியில் தலைதூக்க முடியாமல் கிடந்தது. அந்தக் கட்சிக்கும் அப்பொழுது தலைவரவர்கள் வெற்றியின் வழியை சொல்லிக் கொடுத்தார்கள்.
ஜே.ஆர். ஜயவர்தனாவுடைய சக்திவாய்ந்த அரசியல் தந்திரங்களின் முன் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா செயலற்றுப் போனார். அந்தப் பெரிய கட்சியை வைத்துக் கொண்டு ஒரு அங்குலம் நகர முடியாமல் தவித்தார். தலைவரவர்கள் 1989ஆண்டு எப்படி ஆட்சியைக் கைப்பற்றுவது என்ற வழியைத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தார்கள்.
அப்படியிருந்தும் அந்தக் கட்சி தலைவரவர்களுடைய சொல்லை மறுத்தது. அதனால் அரசியல் அதிகாரம் கைக்கெட்டியும் வாய்க்கெட்டா நிலை ஏற்பட்டது.
தலைவரால் உயர்ந்த தலைவி
இந்த வகையில் சரியான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய நுணுக்கசாலிதான் தற்போதைய ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா
பண்டாரநாயக்கா ஆவார்.
அதனால் அவர் மயிரிழையில் பாராளுமன்றத்தைக் காப்பாற்றிக் கரை சேர்ந்தார். இல்லாவிட்டால் இலங்கையின் அரசியல் சரித்திரமே வேறு விதமாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமே இல்லை. ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா தலைவரவர்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்த அமைச் சுக்களையும், எண்ணற்ற உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கியுள்ளார்.
அவற்றை சும்மா கொடுப்பாரா? இவ்வளவு பெரிய சக்திகள் எந்த ஒரு மனிதனுக்கும் உலகில் சும்மா கிடைக்குமா? இது என்ன விளையாட்டா? வேடிக்கையா? இந்த நாட்டில் எங்கள் தலைவரவர்களுடைய அரசியல் சாணக்கியத்தை இலகுவில் ஜீரணித்த ஒரே ஒரு தலைவி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்காதான். அதனால்தான் கெளரவ தலைவர் அவர்களுக்கு திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா உரிய கண்ணியத்தை வழங்கினார்.
மத யானையும் மாகாணசபை தேர்தலும்
ஆரம்பத்தில் தேர்தல் விடயமாக யு.என்.பி. யின் தந்திரங்களையும்
124

அப்துல் மஜீத் ஆலிம்
மந்திரங்களையும் தலைவரவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். யு.என்.பி.யின் போக்கும் தலைவரவர்களுக்குப் பிடித்திருக்கவில்லை. ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜயவர்தனா, பிரதமராக இருந்த ஆர். பிரேமதாஸா ஆகியவர்களுடைய தந்திரம் வாய்ந்த அரசியல் நடவடிக்கைகளையும் தலைவரவர்கள் தெளிவாக விளங்கி இருந்தார்கள். அதனால் அவர்கள் ஆரம்ப்த்தில் ஆட்சியிலிருந்த யு.என்.பி கட்சியுடன் எந்த விதமான பேச்சுவார்த்தைகளுக்கும் போகவில்லை.
தலைவரவர்களுடைய திட்டமும் இதுதான். அதாவது யு.என்.பி. யினுடைய சர்வாதிகார ஆட்சி இந்த நாட்டில் இருந்து அகல வேண்டும். ஐ.தே.க. உருவாக்கிய அரசியல் அமைப்பையும் தலைவரவர்கள் மிகவும் வெறுத்தார்கள். கடுமையாக எதிர்த்தார்கள்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவி என்பது தலைவரவர்களுக்குப் பிடிக்காத ஒன்றாக இருந்து வந்தது. அந்த அமைப்பைக் கொண்டு வந்தவர் திரு. ஜே.ஆர்.ஜயவர்தனா ஆவார்.
1977 ஆம் ஆண்டு திரு.ஜே.ஆர்.ஜயவர்தனாவுக்குக் கிடைத்த அறுதிப் பெரும்பான்மை வாக்குகளைப் பயன்படுத்தி அவர் அப்படியான அரசியல் சட்டங்களை இயற்றினார். நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி பதவியை இந்த நாட்டில் உருவாக்கி அவரே ஜனாதிபதியாக ஆனார்.
கெளரவ தலைவர் அவர்கள் அந்த கால கட்டங்களில் அடிக்கடி சொல்லி வந்தார்கள். தனி ஒரு மனிதனுடைய கையிலே இவ்வளவு பெரியதோர் அதிகாரத்தை இந்த ஜனநாயக நாட்டில் ஒப்படைக்க முடியாது என்று தலைவரவர்கள் சொல்லி வந்த அந்தக் கருத்து இன்றைக்கும் ஒரு பிரச்சினையாகத்தான் இருந்து வருகிறது.
ஜனாதிபதி பதவியின் சக்தியை ஏதோ ஒரு வகையில் மாற்றி அமைக்கும் அரசியல் திட்டம் தற்பொழுது உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சிந்தித்துப் பார்த்தால் நம் தலைவர் அவர்களுடைய அரசியல் வியூகம் முழு நாட்டுக்கும் சம்பந்தப்பட்டதாக அமைந்துள்ளதை உணர முடிகிறது. ஒரு சமுதாயத்துக்காக என்று அரசியலிலே காலெடுத்து வைத்தாலும் சகல இனங்களுக்கும் அரசியல் பாடம் நடாத்தும் தனிப்பெரும் திறமையுடன் தலைவர் அவர்களை நோக்க முடிகின்றது.
125

Page 66
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
1989 ஆம் ஆண்டு திருமதி பண்டாரநாயக்கா திரும்பவும் ஆட்சியைக் கைப்பற்றத் துடித்தார். அவருடைய மகன் அனுரா பண்டாரநாயக்காவும் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் நினைத்தபடி ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது அவ்வளவு இலகுவான காரியமாக இருக்கவில்லை. ஏனென்றால் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டிருந்தவர் ஆர். பிரேமதாஸா ஆவார். இருவரும் சாதாரணமானவர்கள் அல்லர்.
திரு. ஜே.ஆர். ஜயவர்தனா தமது சக்தியைப் பயன்படுத்தி திருமதி பண்டாரநாயக்காவின் குடியியல் உரிமையைப் பறித்து விட்டார். நாட்டை ஆண்டு கொண்டிருந்த திருமதி பண்டாரநாயக்காவை நாட்டில் எந்தத் தகுதியுமே அற்றவராக பல வருடங்கள் வீட்டு மூலையிலே உட்காரவும் வைத்து விட்டார். இப்படிப்பட்ட அரசியல் ஆதிக்கம், மந்திரங்கள் அனைத்தும் படைத்தவர்தான் திரு. ஜே.ஆர்.ஜயவர்தனா ஆவார். அதுமட்டுமல்ல; ஜே.ஆர். ஜயவர்தனாவுக்குப் பின்னாலும் திரு. பிரேமதாஸாவுக்குப் பின்னாலும் வேகமாகச் செயல்படக் கூடிய கூட்டம் இருந்துவந்தது. அத்தகையவர்களுடைய கையில் இருந்து அரசாங்கத்தைக் கைப்பற்றுவது என்பது விளையாட்டான ஒரு காரியமல்ல. திருமதி பண்டாரநாயக்காவும் அவரது மகன் அனுரா பண்டாரநாயக்காவும் அன்றைய அரசியலில் வெறும் பகற்கனவுதான் கண்டு வந்தனர்.
கெளரவ தலைவர் அவர்களை சரியாகப் பயன்படுத்துவதற்கு அவர்களுக்குச் சரியான சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் துரதிருஷ்ட வசமாக அந்தப் பாக்கியத்தை அவர்கள் இழந்து விட்டார்கள். அவர்களே அந்த சந்தர்ப்பத்தை துஷ்பிரயோகம் செய்து கொண்டார்கள்.
ஜே.ஆர். ஜயவர்தனா மாகாணசபை முறையை அறிமுகப் படுத்தினார். தேர்தலையும் வைத்தார். அந்த நேரத்தில் எங்கள் தலைவர் அவர்கள் கட்சியை வைத்துக்கொண்டு வெறும் கையோடு இருந்தவர்கள் அஞ்சா நெஞ்சத்துடன் தேர்தல் களத்தில் குதித்தார்கள். பள்ளிவாசலிலே வாழ்ந்து கொண்டிருந்த என்னைக்கூட திடீர் அரசியல்வாதியாக மாற்றினார்கள். கொழும்பு மாநகரின் மத்திய களத்திலே என்னைக் கொண்டு போய் நிறுத்தினார்கள்.
அன்றைய முஸ்லிம் அமைச்சர்களுடன் நேருக்கு நேர் நின்று போரிட்டேன். பயங்கரமாக கொலை செய்யப்படும் அளவுக்கு
6S

அப்துல் மஜீத் ஆலிம்
எனது நிலைமை மாறியது. நான் ஒழித்து வைக்கப்பட்டேன். ஜனாப் முஹியித்தீன் அப்துல் காதர் அவர்களிடம் தலைவர் அவர்கள் என்னை ஒப்படைத்து என்னை மறைத்துப் பாதுகாக்கும் படி ஏற்பாடு செய்தார்கள்.
அன்றைய ருக்மன் சேனாநாயக்காவுடைய கட்சிக் காரியாலயத்தில் இருந்து அவசரமாக டாம் விதி அலுவலகத்திற்கு எச்சரிக்கைச் செய்தி வந்தது. எனது அபேட்சகர் இலக்கத்தைக் குறிப்பிட்டு அந்த அபேட்சகரை அவசரமாக மறைத்து விடுங்கள் என்று அறிவிப்பும் வந்தது. ஏனென்றால் அக்கால கட்டத்தில் திரு. ருக்மன் சேனாநாயக்கா நம் தலைவர் அவர்களுடன் நெருங்கிய அரசியல் நட்புக் கொண்டிருந்தார்.
அந்தத் தேர்தல் காலத்தின் பொழுது நான் தொலைக்காட்சியில் தேர்தல் உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தேன். அந்த உரை முழு நாட்டு முஸ்லிம்களையும் ஒரு திருப்புத் திருப்பியதை பிறகு அறிய முடிந்தது.
அந்தப் பேச்சிலே நான் தலைவர் அவர்களுடைய இலட்சிய அரசியல் பாதையை இரத்தினச் சுருக்கமாக சுட்டிக் காட்டினேன். அது றமழான் மாதமாக இருந்தது. அந்த உரையை தலைவர் அவர்களும் ஜனாப் அப்துல் றசூல் அவர்களும் தலவாக்கலையில் வைத்து தொலைக்காட்சி மூலம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மறுநாள் நான் பலகத்துறை மேடையில் பேசிவிட்டு அடுத்த மேடையை நோக்கி விரைந்து கொண்டிருந்தேன். இடைவழியில் தலைவர் அவர்கள் அந்த மேடையை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தார்கள். பாதையில் நாங்கள் சந்தித்துக் கொண்டோம். தலைவர் அவர்கள் காரை விட்டும் இறங்கி என்னை நோக்கி வேகமாக ஓடிவந்தார்கள். நானும் தலைவர் அவர்களை நோக்கி ஓடினேன். பாதையில் இருந்த மக்கள் கூட்டம் எங்களை புதுமையாகப் பாாத்துக் கொண்டிருந்தது. தலைவர் அவர்கள் பெரும் உற்சாகத்துடன் என் கைகளைப் பற்றிக் குலுக்கினார்கள். அவர்களுடைய முகம் ஒருவித உணர்ச்சி வசப்பட்டிருந்தது.
எங்களுக்கு பேசிக் கொள்வதற்கு ஒரு நிமிடம் கூட நேரம் கிடைக்காத சமயம் அது அவ்வளவு வேகமாக நாங்கள் தேர்தல் பிரச்சாரத்திலே ஈடுபட்டுக் கொண்டிருந்தோம் தலைவர் அவர்கள்
127

Page 67
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
வேகமாகப் பேசினார்கள். “ஹஸ்ரத்! நேற்றிரவு உங்கள் தொலைக் காட்சி உரையை நான் பார்த்தேன்; என்னையும் முந்தி விட்டீர்களே” என்றார்கள். நான் ஒன்றும் பேசவில்லை தலையைப் பணித்துக் கொண்டேன். அவ்வளவு தான்; இருவரும் தலையை அசைத்துக் கொண்டோம். அவசரமாகப் பிரிந்து விட்டோம்.
தலைவர் அவர்கள் பலகத்துறை மேடையை நோக்கிப் பறந்தார்கள். நான் இன்னுமொரு மேடையை நோக்கிப் பறந்து கொண்டிருந்தேன். இவ்வளவுக்கும் றமழான் மாதம்; நாங்கள் நோன்பு பிடித்துக் கொண்டிந்தோம். அந்த நிலையில் தான் இந்த ஓட்டம் ஓடினோம்.
சரியான கட்டத்தில் சரியான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதில் தலைவர் அவர்களுக்கு நிகர் அவர்களேதான். தொலைக்காட்சியில் எனது உரை இடம் பெற்றுக் கொண்டிருந்தபொழுது ஹோட்டல் ரன்முத்துவில் ஒரு நோன்பு திறப்பு வைபவத்தில் ஒரு பிரபல முஸ்லிம் அமைச்சரும் நோன்பு திறந்து கொண்டிருந்தார். அங்கு தொலைக்காட்சியும் போடப்பட்டிருந்தது. நோன்புக் கஞ்சியை அருந்திக் கொண்டே அந்த அமைச்சர் எனது உரையைக் கவனித்துக் கொண்டிருந்தார். அடுத்த கணம் அவருடைய உணர்வுகள் மாறின. உணர்ச்சி வசப்பட்டார். முகத்திலே கடும் கோபக்குறி ஆத்திரம் வந்து அலறினார். அவர் பாவித்த ஆங்கில வார்த்தை கடுங்கோபத்துடன் . (ஹ? இஸ் திஸ் பக்கர்). அப்பொழுது நோன்பு திறக்கச் சென்ற சிலர் என்னைப் பற்றி அவரிடம் எடுத்தியம்பினர். பிறகு அவர் கோபமாக சரி என்று தலையை அசைத்துக் கொண்டார்.
அந்த நிகழ்ச்சி ஒரு நண்பர் மூலமாக எனக்கு மறுநாள் அறிவிக்கப்பட்டது. மிகவும் கவனமாக இருங்கள் என்றும் அந்த நண்பர் என்னை வேண்டிக் கொண்டார். அதன்பிறகு நான் பெரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவும் தவறவில்லை.
ஜே.ஆர்.ஜயவர்தனா தந்திரமான மூளையைப் பாவித்து இறங்கிய தேர்தல் விளையாட்டிலே தலைவர் அவர்கள் அஞ்சா நெஞ்சத்துடன் இறங்கினார்கள். ஆனால் திருமதி பண்டாரநாயக்கா அதைப் புறக்கணித்தார். தனது கட்சி இந்தத் தேர்தலைப் பகிஷ்கரிக்கின்றது என்று அவர் அறிக்கை விட்டார். அந்த இடத்திலும் அவர் பெரும் பிழையைச் செய்து விட்டார்.
128

அப்துல் மஜீத் ஆலிம்
நம் தலைவர் அவர்கள் சொல்லிக் காட்டினார்கள்: எந்த ஒரு அரசியல் கட்சியும் வரக்கூடிய தேர்தல்களுக்கு முகம் கொடுத்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கட்சி அரசியல் மட்டத்தில் சக்தியை இழந்து விடும். இது தலைவர் அவர்களுடைய அரசியல் ஞானம்.
ஆனால் திருமதி பண்டாரநாயக்கா மாகாணசபைத் தேர்தலுக்கு முகம் கொடுக்காமல் ஒதுங்கினார். அதன் காரணமாக ஜே.ஆர். ஜயவர்தனாவுக்குப் பெரியதொரு பாடத்தை படித்துக் காட்டியது போன்று அவர் நினைத்தார். தாம் மாகாண சபைத் தேர்தலை பகிஷ்கரித்தால் எல்லாம் சரியாகி விடும். என்றும் தேர்தலே நடக்காது என்றும் அவர் நினைத்தார். அந்த நினைவு அவர் விட்ட பெரும் தவறுகளிலே ஒன்றாகும்.
அரசியல் ஞானம் என்பது எல்லாத் தலைவர்களுக்கும் கிடைப்பதில்லை. அன்று திருமதி பண்டாரநாயக்கா மாகாண சபைத் தேர்தலிலே குதித்திருந்தால் விழித்திருந்த அந்தக் கட்சி வேகமாக எழுத்திருக்கும். ஜே.ஆர்.ஜயவர்தனாவால் நசுக்கப்பட்டிருந்த திருமதி பண்டாரநாயக்காவின் சக்தி வலுப்பெற்றிருக்கும். லட்சக்கணக்கான தொண்டர்கள் களத்திலே இறங்கியிருப்பர். அங்கும் இங்கும் நாடு முழுவதும் ஓடி இருப்பர். கோடிக்கணக்கான போஸ்டர், பதாதைகளை ஒட்டியிருப்பர். பல நூறு மாகாண சபைகள் உறுப்பினர்களை அந்தக் கட்சி பெற்றிருக்கும். சில மாகாண சபைகளை அந்தக் கட்சி கைப்பற்றியும் இருக்கும். பலநூறு பஜிரோ ஜிப் வண்டிகளும் மற்றும் எத்தனையோ உடைமைகளும் அந்தக் கட்சி உறுப்பினர்களுக்கு வந்து சேர்ந்திருக்கும்.
அடுத்ததாக வந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு இந்த சக்திகள் அனைத்தும் பயன்பட்டிருக்கும். அவர் தேர்தலில் இறங்காத காரணத்தினால் யு.என்.பி. வலுவடைந்தது. தேர்தலில் குதித்த
திரு. ஒளி அபேகுணசேகராவும் ஜனாதிபதித் தேர்தலிலே குதிக்கும் தகுதியையும் பெற்றார். அந்தத் தேர்தலின் காரணமாகத்தான் அடையாளமே தெரியாமல் இருந்த நமது சிறிய கட்சியையும் கெளரவ தலைவர் அவர்கள் அரசியல் மேடைக்குக் கொண்டு வந்தார்கள்.
129

Page 68
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
குவிந்த தேர்தல்களும் கவிந்த வெற்றி மேகங்களும்
நமது சிறு கட்சியை அரசியல் சந்தையில் எப்படி அலங்கரித்து வருவதென்று நாம் தவித்துக் கொண்டிருந்தோம். கட்சியை மக்கள் மயப்படுத்துவதற்கு சக்தி வாய்ந்த வழிகள் கிடைக்காமல் டாம்வீதி அலுவலகத்திலே தலைவர் அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது தான் அரசியல் மட்டத்திலே இந்த மாபெரும் திருப்புமுனை ஏற்பட்டது.
நமது கட்சியை அரசியல் சந்தையிலே சத்தமிட்டு நடமாட வைக்க நமக்கு சந்தர்ப்பம் சரியான முறையில் வாய்த்தது. நான் வழக்கம் போல் ஒரு மாலை நேரத்தில் டாம் விதி அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். தலைவர் அவர்கள் அங்கு மிகவும் வேகமாக சயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டதும் “ஹஸரத்! பதுளைப் பகுதிக்கும் குருநாகல் பகுதிக்கும் தேர்தல் பிரசாரத்துக்குப் போக வேண்டும். அந்தப் பகுதிகளில் அரசாங்கம் அவசரமாகத் தேர்தலை நடாத்தப்போகின்றது” என்றார்கள்.
நான் மலைத்து நின்றேன். “சேர்! இவ்வளவு அவசரமாக எங்களால் தேர்தலில் குதிக்க சக்தி இருக்கின்றதா’ என்று கேட்டேன். ஆனால் ஏற்கனவே தலைவர் அவர்கள் அந்தப் பகுதிகளுக்கு அவசரமாக தொண்டர் படைகளை அனுப்பி விட்டார்கள். அந்தப் பகுதிகளில் பாதைகளிலும் கடைத் தெருக்களிலும் நின்று கொண்டிருந்தவர்களெல்லாம் அபேட்சகர்களாக ஆக்கப்பட்டனர். தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதன்முதலாக அந்தத் தேர்தல் ஊவா மாகாணத்திலும், வடமேல் மாகாணத்திலும், வடமத்திய மாகாணத்திலும் நடைபெற்றது. ஊவா மாகாணத்தில் தேர்தல் பணிகளில் ஜனாப் பஷிர் நியாஸ்டீன் கடுமையாக ஈடுபட்டிருந்தார். வடமேல் மாகாணத்திலே ஜனாப் அப்துல றசூல் பறந்து கொண்டிருந்தார். வடமத்திய மாகாணத்திலும் ஜனாப் இப்றாஹீம் போன்றோர் ஈடுபட்டிருந்தனர். A
நான் நிலைமையை அவதானிப்பதற்கு வடமேல் மாகாணத்திற்குச் சென்றேன். அங்கு அப்துல் றசூல் தேர்தல் பிரசாரத்தில் வேகமாக ஈடுபட்டிருந்தார். தலை திரும்பிய திசையெல்லாம் அவர் பறந்து கொண்டிருந்தார். தேர்தல் கூட்டங்கள் எங்குமே ஏற்பாடு செய்திருக்கப்படவில்லை. போய் இறங்குகின்ற இடம் எல்லாம் நான்கு பத்துப்பேரை உடனடியாக ஒன்று சேர்த்து அவர்கள் மத்தியில் ஒரு பத்து நிமிடம் சொற்பொழிவு நடக்கும். இப்படி மக்களைக் காணுகின்ற இடமெல்லாம் ஒரு குட்டிப் பிரசாரம் நடந்து
130

அப்துல் மஜீத் ஆலிம்
விடும். மிகவும் இலகுவாகவும் இருந்தது.
எப்படியோ அந்தத் ர்தலில் ஊவா மாகாணத்தில் ஓர் ஆசனம் நமது கட்சிக்குக் கி அது. அங்கு சித்தீக் ஹாஜியார் தெரிவு செய்யப்பட்டார். அவர் ஒரு தொழிலதிபர். திடீர் அரசியல் வாதியாக ஆக்கப்பட்டு மக்கள் பிரதிநிதியாகவும் ஆக்கப்பட்டார். இப்படியாக மரச்சின்னம் சிறு கன்றாக இருக்கும் போதே காய்க்கத் தொடங்கி விட்டது. இதுதான் நம் தலைவர் அவர்களுடைய அரசியல் அதிமேதைத் தன்மையாகும்.
ஊவா மாகாணத்தில் பஷிர் நியாஸ்டீன் உயிர் நாடியாக இருந்தார். தலைவர் அவர்களும் அவருடைய பிரதிநிதித்துவத்தை நம்பி இருந்தார்கள். ஆனாலும் அவருக்கு அப்போது பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. ஊவா மாகாணத்தில் நமது கட்சிக்கு ஒர் ஆசனத்திற்குதான் சக்தி இருந்தது. அதில் சித்திக் ஹாஜியார் முதலாவதாக வந்தார்.
வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் ஜனாப் அப்துல் றசூல் கலக்கிக் கொண்டிருந்த அதேவேளையில், அந்த மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தை டாக்டர் இல்யாஸ் அசைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக தலைவர் அவர்கள் அபூபக்கர் ஹாஜியார் அவர்களை அனுப்பி இருந்தார்கள். அபூபக்கர் ஹாஜியார் புத்தளத்திற்குச் சென்று டாக்டர் இல்யாஸ் உடன் இரவு பகலாகத் தங்கி பல நாட்களாக கடும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இரவு பகல் அயராமல் அங்கு அவர் உழைத்துக் கொண்டிருந்தார். தேர்தல் முடிந்த பிறகு தான் அதாவது முடிவுகளும் வெளியாகிய பிறகுதான் ஆபூபக்கர் ஹாஜியார் கொழும்புக்குத் திரும்பினார். அவர் சும்மா திரும்பவில்லை. டாக்டர் இல்யாஸை புத்தளம் மாவட்டப் பிரதிநிதியாக வெற்றி பெறச் செய்து அவரையும் அழைத்துக் கொண்டே கொழும்புக்கு வந்தார்.
புதிதான இந்தத் தேர்தலிலே நாடு சுறுசுறுப்படைந்திருந்தது. நாங்கள் டாம் விதி அலுவலகத்தில் கூடி இருந்தோம். தலைவர் அவர்கள் அரசியல் அத்தியாயம் ஒன்றில் காலெடுத்து வைத்த திருப்தியில் அமர்ந்திருந்தார்கள். குருநாகலில் இருந்து ஜனாப் அப்துல் றசூலும் தேர்தல் வெற்றியுடன் அங்கு வந்து சேர்ந்தார். அலுவலகம் அவரை வரவேற்று மகிழ்ந்தது.
ஜனாப் அப்துல் றசூல் தேர்தல் அனுபவங்களைப் பற்றி நீண்ட
131

Page 69
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
உரை நிகழ்த்தினார். ஏனென்றால் இன்னும் சில வாரங்களில் மேல் மாகாணம் உட்பட இன்னும் விடுபட்ட மாகாணங்களுக்கு தேர்தல் நடத்தப்படவிருந்தது. அந்தத் தேர்தலுக்கு எவ்வளவு கவனமாக முகம் கொடுக்க வேண்டும் என்ற விடயங்கள் அன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டன. ஜனாப் அப்துல் றசூல் தமக்கு நடந்த பயங்கரமான சதிகளை எடுத்து விளக்கினார். வாக்கு அளிக்கும் நிலையங்கள், வாக்கு எண்ணும் நிலையங்கள் போன்றவற்றில் இடம்பெற்ற பெரும் சதிகளை சுட்டிக்காட்டினார். அவருடைய விளக்கங்களை மேல் மாகாணத்தில் தேர்தலில் குதிக்க இருந்த அபேட்சகர்கள் செவிமடுத்துக் கொண்டிருந்தனர்.
நிலைமை மோசமானதாகவே இருந்தது. எவ்வளவு தான் தேர்தலிலே உழைத்தாலும் வாக்கு எண்ணும் நிலையங்களில் சிறிய கட்சிகள் ஆபத்தில் சிக்கிக் கொள்வதை உணரக்கூடியதாக இருந்தது.
ஜனாப் அப்துல் றசூல் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அபூபக்கர் ஹாஜியார் அவர்கள் மிகவும் வேகமாக உற்சாகத்துடன் அலவலகத்தினுள் நுழைந்தர்ா. டாக்டர் இஸ்யாஸம் அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார். அனைவரும் தக்பீர் சொல்லி உற்சாகமாக அவரை வரவேற்றனர்.
டாம் வீதி அலுவலகம் மீண்டும் மகிழ்ச்சியில் மிகவும் சுறுசுறுப்பாகியது. எல்லோருடைய முகங்களிலும் ஒரு விதமான புத்துணர்வு பெற்ற தோற்றம். அபூபக்கர் ஹாஜியார் அவர்கள் மிகவும் உற்சாகமாக அங்கு உரையாற்றத் தொடங்கினார். அவர் மிகவும் உற்சாகமாகவே இயங்கிக் கொண்டிருப்பவர். தேர்தல் நிலைமைகளைப் பற்றி அவர் மிகவும் ஆர்வத்துடன் பெரும் குரல் எழுப்பி விளக்கிக் கொண்டிருந்தார். அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அதற்கு இரு தினங்களுக்கு முன்பு தேர்தல் நடந்து கொண்டிருந்த தினத்தில், அதாவது வாக்களிப்பு நடந்து கொண்டிருந்த வேளையில் நான் தலைவர் அவர்களுடைய சித்திரா லேன் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு தலைவர் அவர்களுடன் தேர்தல் நிலைமைகளைப் பற்றி நாங்கள் கதைத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது டெலிபோனில் பேசிவிட்டு வந்து என்னிேடம் “புத்தளத்தில் இருந்து அபூபக்கர் ஹாஜியார் பேசுகிறார்” என்று உணாச்சித் ததும்பக் கூறினார்கள். நான் என்ன? என்று கேட்டேன். புத்தளப்
132

அப்துல் மஜீத் ஆலிம்
பகுதியில் அதிகாலையிலேயே பெரும் திரளான மக்கள் வாக்களிக்கச் சென்றுகொண்டிருப்பதை ஜனாப் அபூபக்கர் ஹாஜியார் உற்சாகமாக அறிவித்ததுதான் அந்த டெலிபோன் அழைப்பாகும்.
இப்படியாக ஜே.ஆர். ஜயவர்தனாவுடைய அரசாங்கத்தின் மாகாண சபை அமைப்பு அறிமுகமாகியது. அந்தத் தேர்தலில் பூரீலங்கா சுதந்திரக்கட்சி மெளனம் சாதித்து அக்கட்சியை மிகவும் பள்ளத்தாக்கில் தள்ளியது போன்று, தலைவர் அவர்கள் நாங்கள் புதிய கட்சிதானே என்று மெளனம் சாதித்திருந்தால் இன்று இந்த நிலைக்கு வந்திருக்கவே (ԼՔԼգս IITՑl.
அந்த மாகாண சபை தேர்தல்கள் முடிவடைந்த பிறகு பாராளுமன்றத் தேர்தலும் வேகமாக முகம் கொடுத்தது. ஜனாதிபதித் தேர்தலும் முகம் கொடுத்தது. சிறிது காலத்துக்குப் பிறகு உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களும் முகம் கொடுத்தன. இப்படியாக தேர்தல்கள் குவிந்து விட்டன. நமது கட்சியின் வளர்ச்சிக்கு இந்தத் தேர்தல்கள் படிக்கற்களாக அமைந்ததை மறந்து விட முடியாது.
கட்சி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தலைவர் அவர்கள் எட்டு வருடங்களுக்குள் உள்ளூராட்சிச் சபைகள், நகரசபைகள், மாநகர சபைகள், மாகாணசபைகள், பாராளுமன்றம், அமைச்சரவை ஆகிய சகல மட்டங்களிலும் உச்சாணிக் கொம்பிலே அமர்ந்துள்ளார்கள் என்றால் அந்த வேகமான திருப்புமுனைகளுக்கு இந்தத் தேர்தல்கள் வழிவகுத்ததை நாம் நினைவுகூர வுேண்டும். அந்தக் கால கட்டத்தில் ஜே.ஆர்.ஜயவர்தனாவுடைய பதவிக்காலம் அஸ்தமனமாகிக் கொண்டிருந்தது. திரு. பிரேமதாஸாவுடைய யுகத்தை நாடு நினைத்துக் கொண்டிருந்தது.
ஜே.ஆர். ஒய்ந்தார் - பிரேமதாஸா வந்தார் - தலைவர் தேர்ந்தார்
ஜனாதிபதித் தேர்தல் வேகமாகக் குறுக்கிட்டது. யு.என்.பி. கட்சியிலே ஜனாதிபதி அபேட்சகராக வருவதற்கு பலத்த போட்டி அடிமட்டத்தில் உருவாகியது. திரு. லலித் அத்துலத்முதலி, திரு.காமினி திசாநாயக்கா போன்றவர்கள் அதற்குக் கனவு கண்டார்கள். ஆனால் நிலைமை மோசமாக இருந்தது. திரு. பிரேமதாஸா சகல வழிகளிலும் தனது சக்தியை அதிகரிக்கச் செய்திருந்தார். அதனால் அந்தக் கட்சிக்குள் பதவிப்போட்டிகள் பலவீனமாகின. திரு. பிரேமதாஸாவுடன் ஜே.ஆர். ஜயவர்தனா கூட ஒரு விதமான கவனத்துடன்தான் நடந்து கொண்டார்.
133

Page 70
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
ஒய்வெடுக்கப் போகும் திரு. ஜயவர்தனா நிலைமையை சாதுர்யமான ஒரு நிலைமைக்குக் கொண்டு வந்திருந்தார். திரு.லலித் அத்துலத்முதலியையும், திரு. காமினி திஸாநாயக்காவையும் பிரேரிக்கவும் ஆமோதிக்கவும் செய்து திரு. பிரேமதாஸாவை ஜனாதிபதி அபேட்சகராக நியமித்து விட்டார். அத்தோடு ஜே.ஆர். ஜயவர்தனாவுடைய அரசியல் பிரயாணம் அஸ்தமனமாகியது. அவர் 'இனிப் போதும்’ என்று ஒய்வெடுக்கச் சென்று விட்டார்.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னணியிலும் ஜே.வி.பியினது கடுமையான முட்டுக்கட்டையிலும் திரு. ஜயவர்தனா நன்கு களைப்படைந்திருந்தார். திரு. பிரேமதாஸா ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் அதை திரு. ஜயவர்தனா விரும்பி இருப்பார். எது நடந்தாலும் அவருக்குப் பரவாயில்லை. இப்பொழுது அவருக்கும் தேவை ஒய்வு ஒன்று தான். திரு. பிரேமதாஸா ஜனாதிபதித் தேர்தலில் தனிமையில் விடப்பட்டார். கட்சியின் உயர் மட்டத்தில் அவருக்குத் துணைகள் மிகவும் குறைவாக இருந்தன. அவர் அதை எதிர்பார்க்கவும் இல்லை.
அவர் சென்ற பாதை முற்றிலும் இருந்தது. வீடமைப்புத் திட்டங்களையும், கம்உதாவக் கொண்டாட்டங்களையும் வைத்து நாட்டை அவர் ஓர் அளவு தமது பக்கம் திருப்பி இருந்தார்.
அவர் ஜனாதிபதி அபேட்சகராக வந்ததும் ஜனசக்தி திட்டம் பற்றிய ஓர் அறிக்கையை வெளியிட்டு நாட்டு மக்களை இன்னும் ஓர் அளவு திசை திருப்பினார். அப்படி இருந்தும் அவர் நாட்டில் ஜனாதிபதியாக வருவது சந்தேகத்துக்கிடமாகவே இருந்தது. ஏனென்றால் அப்போதைக்கு யு.என்.பி. அரசாங்கம் 12 வருடங்கள் பழமை பெற்றிருந்தது. உண்மையில் அரசாங்கம் மாற்றமடையுேம் காலமாகவே அமைந்திருந்தது. திரு. பிரேமதாஸாவின் அரசியல் வித்தைகளும் நம் தலைவர் அவர்களுடைய திடீர் தலையீடும் தான் திரும்பவும் யு.என்.பி.அரசாங்கம் நிலைப்பதற்குக் காரணமாக அமைந்தன.
தேர்தல் காலம் நெருங்கிக் கொண்டிருந்தபொழுது பூரிலங்கா சுதந்திரக் கட்சி தலையை நிமிர்த்திப் பார்த்தது. திருமதி பண்டாரநாயக்கா தேர்தல் களத்தில் குதித்தார். அப்பொழுதுதான் மாகாணசபை தேர்தலை பகிஷ்கரித்த நஷ்டத்தை அவரால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அவருடைய மகன் அனுரா
134

அப்துல் மஜீத் ஆலிம்
பண்டாரநாயக்காவுக்கும் அரசியலில் தூரப்பார்வை மிகவும் குறைவாக இருந்தது.
இக்கட்டான நிலைமையில் எங்கள் தலைவர் அவர்களுக்கும் சுதந்திரக்கட்சிக்குமிடையில் பேச்சு வார்த்தைகள் ஆரம்பித்தன. எங்கள் தலைவர் அவர்கள் ஜனாதிபதித் தேர்தலிலே எப்படி நடந்து கொள்வது? நமது கட்சியின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி ஆராயத் தொடங்கினார்கள். கட்சியின் அரசியல் அதியுயர் பீடத்தைக் கூட்டி பலமுறை கலந்து ஆலோசித்தார்கள்.
ஜனாதிபதித் தேர்தலில் நமது கட்சி எப்படி நடந்து கொள்வது என்ற விடயம் மிகப் பிரதானமாக இருந்தது. பலரும் பல அபிப்பிராயங்களைத் தெரிவித்தனர். அந்தக் தேர்தலில் தமது கட்சி மெளனம் சாதிக்க வேண்டும் என்று பலருடைய கருத்துக்கள் வந்தன. இத்தனைக்கும் மத்தியில் கெளரவத் தலைவர் அவர்கள் தங்களுடைய அரசியல் தூரப்பார்வையைச் செலுத்தினார்கள். நம் சமுத்ாயம் பயன்படக்கூடிய சில ஒப்பந்தங்களைச் செய்து அந்த ஒப்பந்தங்களுக்கு எந்தக் கட்சி தலைசாய்க்கின்றதோ அந்தக் கட்சிக்கு முஸ்லிம்களுடைய வாக்குகளைத் திருப்பிவிட நினைத்தார்கள்.
ஒரு சிறுபான்மை சமூகத்துடைய வாக்குகளை எந்த நேரத்தில் ஒன்று சேர்க்க வேண்டும்; எந்த இடத்துக்குப் பயன்படுத்த வேண்டும். என்ற நுணுக்கமான அறிவு தலைவர் அவர்களிடம் இருந்து வெளியாகின்றது. நாட்டில் முஸ்லிம்களுடைய வாக்குகள் பல திக்கிலும் சிதறுண்டு கிடக்கின்றன. விழலுக்கு இறைத்த நீர் போன்று அது காலமெல்லாம் கண்ட கண்ட கட்சிகளுக்கெல்லாம் சிதறுண்டு போய்க் கொண்டிருந்தன. சந்தர்ப்பம் வரும்போது அவ் வாக்குகளைப் பயன்படுத்தி முஸ்லிம் அரசியல் வாதிகளாகிக் கொண்டு வந்தார்கள். ஏனைய வாக்குகள் எல்லாம் ஊர்களிலுள்ள செல்வாக்குகளுக்கமைய பேரினத்துக் கட்சிகளுக்குப் போய்விடும்.
வாக்குகளைக் கொண்டு சமுதாயத்திற்குப் பிரயோசனம் இருக்கவும் இல்லை. சக்தி இருக்கவும் இல்லை. பேரினக் கட்சிகள் முஸ்லிம்களுடைய வாக்குகளைப்பற்றிக் கவலைப்படவும் இல்லை. முஸ்லிம்களிடம் இருந்து வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பாராளுமன்றத்துக்குள் புகுந்துவிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் பிறகு, நாங்கள் பாராளுமன்றம் சென்றது சிங்கள மக்களுடைய
135

Page 71
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
வாக்குகளைக் கொண்டுதான், என்று சொல்லி ஏமாற்றி விடுவார்கள். இப்படியாக முஸ்லிம்களுடைய வாக்குகள் காலமெல்லாம் காரணமில்லாமல் வீணாகிக் கொண்டிருந்தன.
இப்பொழுது தலைவர் அவர்கள் கட்சி என்ற பாத்திரத்தைப் பாவித்து முஸ்லிம்களுடைய வாக்குகளை ஒன்று சேர்த்து பேரினக் கட்சிகளுக்கு அதன் பெறுமதியைக் காட்டி தனித்துவம் என்ற ஒரு சக்தியை உணர வைக்கிறார்கள்.
ஒரு மாமேதையின் பிரமாதம் - ஒரு மமதையால் பிறழ்ந்தது
யூரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தலைவர் அவர்கள் பேச்சுவார்த்தைக்குச் சென்றார்கள். "நம்மிடத்தில் இத்தனை இலட்சம் வாக்குகள் தற்பொழுது ஒன்றுபட்டிருககின்றன. இந்த வாக்குகளையெல்லாம் ஜனாதிபதித் தேர்தலில் உங்கள் பக்கம் திரும்பி விடுகிறோம். அதற்காக நீங்கள் எம் சமூகத்திற்குத் தரக்கூடிய
கைமாறுகள் என்ன?’ என்று கேட்டார்கள்.
கடந்த மாகாண சபைத் தேர்தலிலே முஸ்லிம்களுடைய வாக்குகள் பல லட்சக்கணக்கில் ஒரு கட்சிக்குள் ஒன்றுபட்டு விட்டதை பேரினக் கட்சிகள் அறியும். இனி முஸ்லிம்களுடன் விளையாட முடியாது. நம் தலைவர் அவர்களின் கீழ் முஸ்லிம்களுடைய வாக்குச் சக்திகள் ஒன்றுபட்டு வளர்ந்து கொண்டிருப்பதை பேரினக் கட்சிகள் கண்டு கொண்டுவந்தன.
இதுகாறும் சிதறுண்டு போய்க்கொண்டிருந்த வாக்குகளை தலைவர் அவர்கள் கட்சிக் கூடையைப் பிடித்து ஒன்று சேர்க்கத் தொடங்கி விட்டார்கள் என்பது ஏனைய கட்சிகளுக்கு நன்கு தெரிந்தது. எல்லாவற்றையும் விட திரு. பிரேமதாஸா இந்த விடயத்தை நன்கு அறிந்திருந்தார். தலைவர் அவர்களுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் கடும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதும் திரு. பிரேமதாஸாவுக்குத் தெரிய வந்தது. இதேவேளை தலைவர் அவர்கள் திரு. பிரேமதாஸாவை நெருங்கவில்லை. ஏனென்றால் அரசாங்கத்தை மாற்றிவிடுவதும் தலைவர் அவர்களுடைய எண்ணங்களில் ஒன்றாக இருந்தது என்பதும் ஏனைய கட்சிகளுக்கு நன்கு தெரிந்தது. எல்லாவற்றையும் விட கழுகுக்கண் கொண்ட திரு. பிரேமதாஸா இந்த விடயத்தை நன்கு அறிந்திருந்தார்.
136

அப்துல் மஜீத் ஆலிம்
எப்படியோ தலைவர் அவர்கள் நாட்டின் விதியை தீர்மானிக்கும் ஒரு சக்தியை கைக்குள் பொத்திக் கொண்டிருப்பதை அரசியல் மட்டத்தில் அனைவரும் அறிந்து கொண்டிருந்தனர்.
எப்படியாவது சுதந்திரக் கட்சியை ஆட்சியில் அமர்த்தி விடுவோம் என்று தலைவர் அவர்கள் முடிவுக்கு வந்தார்கள். ஆனால் சுதந்திரக் கட்சியின் உயர் மட்டத்தில் சிலர் அறப்படித்தவர்களாகக் காணப்பட்டார்கள். அந்தக் கூட்டத்தினரில் திரு. அனுரா பண்டாரநாயக்கா முன்னணியில் இருந்தார். அவருடைய மமதை அடங்கவே இல்லை. தலைவர் அவர்களும் தெளிவான அரசியல் தீர்வுகளை முன்வைத்து விளக்கம் கொடுத்துப் பார்த்தார்கள். ஆனால் அனுரா பண்டாரநாயக்காவுக்கு தெளிவு வந்தாலும் கூட பொருட்படுத்தாதவராக நடந்து கொண்டார்.
தலைவர் அவர்களும் இரவு பகலாக கடுங் கஷ்டப்பட்டுப் போனார்கள். ஆனால் சுதந்திரக் கட்சிக்கு அதிர்ஷ்டம் என்பது இல்லாமலே போய்விட்டது. அன்று சுதந்திரக் கட்சி தலைவர் அவர்களுடைய அறிவுரைகளுக்கு செவிமடுத்து வேண்டுகோளையும் ஏற்றிருந்தால் சரித்திரமே மாறியமைந்திருக்கும். திரு. பிரேமதாஸ் ஜனாதிபதியாக வருவதை நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது.
திருமதி. பண்டாரநாயக்கா 1989ஆம் ஆண்டு ஜனாதிபதியாக வருவதை வேறு எந்த சக்தியும் தடை செய்திருக்கமுடியாது. அதே காலத்தில் திரு. அனுரா பண்டாரநாயக்கா நாட்டில் பிரதமராக வந்திருக்கவேண்டியவர். அந்தக் காலகட்டத்தில் திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா நாட்டில் இருக்கவில்லை. பயங்கரமான அரசியல் விளைவுகளால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே கணவரையும் பறிகொடுத்திருந்தார். அவருக்கும் கொலைப் பயமுறுத்தல்கள் வந்து கொண்டிருந்தன. நிலைமையை உற்றுணர்ந்து கொண்ட சந்திரிக்கா அம்மையார் நாட்டை விட்டும் வெளியேறி விட்டார்.
இப்படியான நிலைமையில் தான் 1989ஆம் ஆண்டு நிலைமை இருந்து கொண்டிருந்தது. அன்று அவர்கள் தலைவர் அவர்களுடைய சொல் கேட்டிருந்தால் குடும்ப கண்ணியமும் பாதுகாக்கப்பட்டிருக்கும் திருமதி சந்திரிக்கா அம்மையாரும் அந்தக் காலத்திலேயே நிம்மதியாக நாடு திரும்பி இருப்பார். திருமதி பண்டாரநாயக்காவும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நிலைத்திருப்பார். ஏன்? திரு. அனுரா பண்டாரநாயக்கா கூட தமது தாய் தந்தையருடைய கட்சியில்
137

Page 72
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
இருந்து வெளியேறி இருக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்காது. அதுமட்டுமல்ல, திருமதி பண்டாரநாயக்கா நீண்ட சுகயினத்துக்கும் ஆளாகி இருக்கமாட்டார். அரசியலில் ஏற்பட்ட நீண்டகால பயங்கர விளைவுகளின் காரணமாகத்தான் திருமதி. பண்டாரநாயக்கா பெரும் சுகயினத்துக்கு ஆளாகினார். வைத்திய சிகிச்சைக்காக மட்டும் அவர் நீண்ட காலத்தை வெளிநாடுகளில் செலவிட்டுள்ளார். அதனால் கட்சி பிரேமதாஸாவின் காலத்தில் சின்னாபின்னமாகியது. சுதந்திரக் கட்சி என்ற ஒன்று இந்த நாட்டில் தலைதூக்காது என்ற நிலை வந்தது. கட்சிக்குள் பெரும் பூசல்கள் வெடித்தன. திருமதி யூரீமா பண்டாரநாயக் கா அம்மையார் வெளிநாட்டு மருத்துவ மனைக்கட்டிலில் சாய்ந்து கொண்டு கண்ணீர்விட்டு அழும் நிலைக்கு சுதந்திரக் கட்சி படுபாதாளத்தை நோக்கி இறங்கியது.
1989 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் திருமதி பூரீமா பண்டாரநாயக்கா 7 லட்சத்துக்கும் குறைவான வாக்குகளால் தான் தோல்வி அடைந்தார்கள். அவர் தலைவர் அவர்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தால் பல லட்சம் வாக்குகள் அவருக்குக் கூடி இருந்திருக்கும். திரு. பிரேமதாஸாவுடைய அரசியல் சரித்திரமே மறைந்திருக்கும். ஒரு மாபெரும் சந்தர்ப்பத்தை அந்தக் கட்சி அப்பொழுது பறிகொடுத்தது.
பிரேமதாஸவுக்கு விநியோகிக்கப்பட்ட மாபெரும் வெற்றியின் திருப்புமுனை
நம் தலைவர் அவர்களை விட்டு நம் கட்சியில் இருந்து வெளியேறினவர்களெல்லாம் இன்று வரையில் பெரும் பாதிப்பில் விழுந்து கிடக்கின்றார்கள். அவர்கள் மட்டுமல்ல; தலைவர் அவர்களுடைய அறிவுரைகளுக்கு செவிமடுக்காத சுதந்திரக் கட்சியும் பெரும் பள்ளத்தாக்கில் வீழ்ந்தது. திரு. பிரேமதாஸாவுடைய அரசாங்கம் வந்ததும் சுதந்திரக் கட்சி கடுமையாக நசுக்கப்பட்டது. திரு. ஜே.ஆர். ஜயவர்த்தனா அவருடைய காலத்தில் நசுக்க முடிந்தமட்டில் நசுக்கினார். சமார் 17 வருடங்களாக பூரீலங்கா சுதந்திரக் கட்சி கடுமையாக கசக்கிப் பிழியப்பட்டது. எந்த அளவுக்குச் சென்றதென்றால் சுதந்திரக் கட்சியின் பெயரே இல்லாமல் போய் விட்டது. திருமதி சந்திரிகா அம்மையார் நாடு திரும்பிய பிறகு தகப்பன் வைத்த பெயரை வைத்து கட்சியை நடத்த முடியாதவராக இருந்தார்.
138

அப்துல் மஜீத் ஆலிம்
பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற பெயரிலேயே அரசாங்கம் அமைக்க முடிந்தது. தகப்பனாருடைய கை சின்னத்துக்குப் பதிலாக கதிரை சின்னத்தை உபயோகிக்க வேண்டியதாயிற்று அந்த அளவுக்கு சுதந்திரக் கட்சியின் சரித்திரம் மாறி அமைந்தது. என்னதான் சொன்னாலும் கடைசிக் கட்டத்தில் தலைவர் அவர்கள் மீண்டும் தலையிட்டு நிலைமையை சரிப்படுத்தினார்கள்.
1989 ஆம் ஆண்டில் தலைவர் அவர்களுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் சிக்கலான நிலையை அடைந்து கொண்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் திரு. பிரேமதாஸ் மிகவும் வேகமாக செயற்பட்டார். அவருடைய நிலையை ஸ்திரப்படுத்தும் வழிகளை உருவாக்கிக்கொண்டே இருந்தார். அவரிடத்திலே எத்தனை திட்டங்கள் இருந்தாலும்கூட கடைசி நிமிடத்தில் நம் தலைவர் அவர்களுடைய கையில் இருக்கும் சிறிய சக்தி அவரைப் பாதிக்கும் என்று அவர் பயந்தார்.
ஆகவே நிலைமையை சரிசெய்யும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டார். தலைவர் அவர்களோடு தொடர்பு கொண்டார். பேசினார்; கதைத்தார்; சிரித்தார். சுமுகமான நல்லுறவுகளை ஏற்படுத்தினார். திரு. பிரேமதாஸாவுடைய ஆட்கள் இருவர் எந்த நேரமும் தலைவர் அவர்களை சுற்றிக் கொண்டே இருந்தனர். அந்த இருவரில் ஒருவர் சிங்களவர். அடுத்தவர் முஸ்லிம். அதாவது பிரதி அமைச்சராக இருந்த திரு. ரணசிங்காவும் ஜனாப் முஸம்மில் அவர்களும் ஆவர். இந்த இருவரும் எந்த வேளையிலும் தலைவர் அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர்.
இரவு பகலாக இருவரையும் தலைவர் அவர்களுடைய வீட்டில் நான் கண்டு வந்தேன். அங்கு அவர்கள் அமைதியாக அமர்ந்திருப்பார்கள். மிகவும் கண்ணியமாக தலைவர் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பார்கள். ஆழ்ந்த ஆலோசனைகளில், அரசியல் ஆராய்ச்சிகளில் மூழ்கிக் கிடப்பார்கள்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவடையும் வரையில் இவர்கள் தலைவர் அவர்களை விட்டும் பிரியவே இல்லை. பிரேமதாஸாவுடைய மிகப் பெரிய அரசியல் விளையாட்டு இது. திரு. பிரேமதாஸாவுக்கு அச்சம் இருந்து வந்தது. அதாவது எந்த வேளையிலும் சுதந்திரக் கட்சி மீண்டும் நம் தலைவர் அவர்களோடு தொடர்பு கொண்டு விடும் என்ற கடும் பீதி அவருக்கு இருந்து வந்தது. அதனால்
39

Page 73
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
சுதந்திரக் கட்சியோடு தலைவர் அவர்கள் இரண்டாவது முறையும் பேச்சுவார்த்தைக்குச் செல்ல விடாமல் திரு. பிரேமதாஸ் மிகவும் கவனமாக இருந்தார். அவருடைய கையாட்கள் இருவரும் தலைவர் அவர்களுடன் நெருங்கிய நட்புறவு பூண்டிருந்தனர். அந்த காலகட்டங்களில் அந்த இருவரும் தலைவர் அவர்களை விட்டும் பிரியாமல் அவர்களுடன் மிகவும் கண்ணியமாக இருந்து வந்தனர்.
நான் நினைக்கின்றேன், அந்த கால கட்டங்களில் அந்த இருவருக்கும் திரு. பிரேமதாஸா கொடுத்த மிக முக்கிய அலுவல் அதுவாகத்தான் இருக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் முடிவடையும் வரையில் அந்த இருவரும் தலைவர் அவர்களை விட்டும் பிரியவே கூடாது என்ற நிலையில் விடப்பட்டார்கள். அதன் காரணமாக சுதந்திரக் கட்சி மீண்டும் தலைவர் அவர்களைப் பிடிக்கமுடியாமல் காவலாக அமைந்து விட்டது. இந்தப் பெருங்காவலை சூட்சுமமாக ஏற்படுத்தியது. திரு. பிரேமதாஸாவின் அரசியல் சாணக்கியமாகும்.
ஜனாதிபதித் தேர்தலின் மயிரிழைக்கான வெற்றிக்கு கம்உதாவக் கொண்டாட்டங்களும் எடுபடாது. ஜனசக்தித் திட்டங்களும் கைகொடுக் காது. என்ன திறமையைப் பாவித்தும் இனி வேலையில்லை. முஸ்லிம்களுடைய வாக்குகள் ஒரு தலைமையின் கீழ் எங்கு திரும்புகின்றதோ, அங்கு வெற்றிவாகை நிச்சயம் என்பதை திரு. பிரேமதாஸா தெளிவாக உணர்ந்திருந்தார்.
திரு. பிரேமதாஸா தலைவர் அவர்களுடன் தொடர்பு கொண்ட முறையே அலாதியானது. அது ஒரு புதிய பாணி அதுதான் ஆச்சரியமான அரசியல் தந்திரம். பணிவிலும் பணிவாக, அமைதியிலும் அமைதியாக, அப்பாவித்தனத்திலும் மிகவும் அப்பாவியாக திரு. பிரேமதாஸா தலைவர் அவர்களை நெருங்கினார். அவருடைய ஆட்கள் தலைவர் அவர்களுடைய வீட்டில் அப்பாவிக் கோலத்தில் சாய்ந்து கொண்டிருப்பார்கள். தலைவர் அவர்களோடு ஒரு காலமும் பிரியாத தோழமை பூண்டிருப்பார்கள்.
திரு. பிரேமதாஸா தலைவர் அவர்களுடன் வினயமாகப் பேசினார். சுதந்திரக் கட்சியோடு ஏற்கனவே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளம் காயம் பட்டுப்போன தலைவர் அவர்களுக்கு திரு. பிரேமதாஸாவுடைய அணுகுமுறை ஆறுதல் அளித்தது.
கடைசியாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முந்தின நாளன்று கூட
140

அப்துல் மஜீத் ஆலிம்
திரு. பிரேமதாஸா அன்பாக வாழைத்தோட்டத்து வீட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தார். நானும் தலைவர் அவர்களுடன் சென்றிருந்தேன். இன்னும் சிலர் உடன் வந்திருந்தனர். அந்தக் குழுவில் எமது கட்சியின் 2ஆவது பொதுச்செயலாளராக இருந்த மர்ஹம் ஸஹிட் ஹாஜியார் அவர்களும் இருந்தார்கள்.
திரு. ரணசிங்காவும், ஜனாப் முஸம்மிலும் சித்தரா லேன் இல்லத்துக்கு வந்து எங்களை மரியாதையாக அழைத்துச் சென்றனர். நாங்கள் திரு. பிரேமதாஸாவுடைய வாழைத் தோட்டத்து இல்லத்தை அடைந்தோம். அங்கு திரு. பிரேமதாஸா மிகவும் அன்னியோன்யமாக எங்களுடன் உரையாடி மகிழ்ந்து கொண்டிருந்தார். தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பாணியில் மிகவும் அழகான உரையாடல்களில் அவர் நீண்ட நேரத்தைச் செலவிட்டார்.
இப்படியாக தேர்தல் நடந்து முடியும் வரையில் திரு. பிரேமதாஸாவுடைய அணுகுமுறை மிகவும் கண்ணியமாக இருந்தது. ஜனாபதித் தேர்தல் நடைபெறுவதற்கு சுமார் 10 நாட்கள் பாக்கி இருந்தன. தலைவர் அவர்கள் திடீர் முடிவுக்கு வந்தார்கள். “என்ன காரணம் கொண்டும் சுதந்திரக் கட்சியை ஆட்சியில் அமர விடக்கூடாது. திரு. பிரேமதாஸாவை நாம் ஜனாதிபதியாக ஆக்க வேண்டும்”
என்றார்கள்.
சுதந்திரக் கட்சி, தலைவர் அவர்களை அப்போது கடுமையாகப் புண்படுத்தி விட்டது. அத்தகைய நிலையில் “பிரேமதாஸாவுடன் ஒப்பந்தம் செய்தோ இல்லையோ சுதந்திரக்கட்சிக்கு எந்தக் காரணம் கொண்டும் முஸ்லிம்களுடைய வாக்கை இந்த முறை கொடுக்கக் கூடாது” என்றார்கள். சிறுபான்மை கட்சியுடைய சக்தியைக் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முந்திய அந்த 10 நாட்கள் சரித்திரம் மறக்க முடியாத நாட்கள். தலைவர் அவர்கள் வீறுகொண்டு எழுந்தார்கள். சரியான உரோஷம் அவர்களை ஆட்கொண்டது. சிங்கம் குகையிலிருந்து வெளிப்பாய்ந்து கர்ச்சித்தது போன்று தலைவர் அவர்கள் ஒவ்வொரு கணமும் உறுமிக்கொண்டிருந்தார்கள். சுகததாஸ் உள்ளரங்கிலே அவசரமாக மகாநாடு கூட்டப்பட்டது. முழு நாட்டில் இருந்தும் முஸ்லிம்கள், கட்சித் தொண்டர்கள் அவசரமாக வரவழைக்கப்பட்டனர். சுகததாஸ் உள்ளரங்கு நிரம்பி வழிந்தது. ஆச்சரியமான பெருங்கூட்டம். அந்தப் பெருங்கூட்டத்தில்
141

Page 74
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
தலைவர் அவர்களுடைய நீண்ட உரையும் எனது உரையும் மட்டும் தான் இடம் பெற்றன.
ஜனாப் ஸெய்கு இஸ்ஸதீன் அந்த மகாநாட்டை ஒழுங்கு செய்வதில் இரவு பகலாக ஈடுபட்டிருந்தார். அந்த மகாநாடு மாபெரும் திருப்புமுனையை உண்டாக்கியது. அந்த மகாநாட்டில் தலைவர் அவர்களுடைய சொல்லுக்குக் கட்டுப் படவேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றி நான் எனது பேச்சின் பொழுது உருக்கமாக வலியுறுத்தினேன்.
அதன்பிறகு தலைவர் அவர்கள் உரையாற்றத் தொடங்கி விட்டார்கள். வேறு யாரும் அங்கு பேசவில்லை. தலைவர் அவர்களுடைய உரை மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்றது. அந்த உரையின் பொழுது சுதந்திரக் கட்சியினர் செய்த அநியாயங்களை பூரணமாக விளக்கினார்கள். முன்னுக்கு உள்ள ஜனாதிபதித் தேர்தலில் நமது நிலைப்பாடு என்ன என்பதையும் தெளிவாக உணர்த்தினார்கள்.
தலைவர் அவர்களுடைய அந்த உரை நெருப்பு ஊதும் சூளை போன்று இருந்தது. ஆவேசம் வந்து கர்ச்சித்தார்கள். பூரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஜனாதிபதித் தேர்தலில் நம் நாட்டு முஸ்லிம்கள் வாக்களிக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார்கள். அந்த உரை அவசரமாக முழு நாட்டுக்கும் ஒலிபரப்பப்பட்டது. குறிப்பிட்ட அந்த 10 நாட்களில் கெளரவ தலைவர் அவர்கள் இந்த நாட்டில் எவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்வது என்று தீர்மானித்தார்கள். ஜனாதிபதி ஆசனத்திலே உட்கார வைத்தார்கள். இதுதான் கெளரவ தலைவர் அவர்கள் கண்டுபிடித்த அரசியல் சக்தியாகும்.
இந்த சக்தி காலம் எல்லாம் நம் கையில் இருந்து வரவேண்டும் என்பதுதான் தலைவர் அவர்களுடைய அரசியல் வழிகாட்டுதலாகும். திரு. பிரேமதாஸா ஜனாதிபதியாக வரவேண்டுமென்பது தலைவர் அவர்களுடைய ஆசை அல்ல. ஆனால் சுதந்திரக் கட்சி அப்பொழுது தலைவர் அவர்களுடன் நடந்துகொண்ட தரக் குறைவான நடத்தைகளால் தலைவர் அவர்களுடைய உள்ளம் மிகவும் பாதிப்படைந்திருந்தது. அந்தக் கட்சிக்குத் தங்கள் அரசியல் சக்தியைக் காட்ட நினைத்தார்கள்; அவ்வளவுதான்.
திரு. பிரேமதாஸா நாட்டின் ஜனாதிபதியானார். சுதந்திரக் கட்சி
பாட்ம் படித்தது மட்டுமல்ல, பள்ளத்தாக்கிலும் விழுந்தது. திரு. பிரேமதாஸ்ாதலைவர் அவர்களை அன்பாக நெருங்கினார். அரச
142

அப்துல் மஜீத் ஆலிம்
கட்டிலில் ஏறினார். இவைதான் 1989 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் நமது தலைவர் அவர்களுடைய அரசியல் சாணக்கிய சரித்திரமாகும்.
அடித்தவனின் கைநோவுக்காய் அங்கலாய்க்கும் உள்ளம்
கட்சியினுடைய ஆரம்ப காலத்தில் சகல மட்டங்களிலும் கொடி கட்டிப் பறந்தவர்தான் ஜனாப் செய்கு இஸ்ஸதீன். அவருடைய வெளியேற்றத்திற்குப் பிறகு அந்த மாபெரும் இடைவெளி டாக்டர் உதுமாலெப்பை அவர்களால் மூடப்பட்டது. இந்த விடயம் கட்சி வட்டாரங்களில் உணரப் படாமலிருக்கலாம் . அது ஒரு கணக்கில்லாமலும் இருக்கலாம். ஆனால் தெளிவான இரகசிய உண்மை இதுதான்.
கட்சியின் டாம் விதி அலுவலகம் சித்திரா லேனுக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து அதன் பிறகு கொழும்பு - 02, வொக்ஷால் லேனுக்கு மாற்றப்பட்டது. வொக்ஷால் லேன் அலுவலகம் செயல்படத் தொடங்கிய காலத்தில், டாக்டர் உதுமாலெப்பையினுடைய அதிகமான நேரப் பங்களிப்பு கட்சிக்குக் கிடைக்கத் தொடங்கியது. அப்பொழுது ஜனாப் அப்துல் றசூல் தவிசாளராக இருந்தார்.
டாக்டர் உதுமாலெப்பை பிரதித் தவிசாளராக நியமிக்கப் பட்டிருந்தார். ஜனாப் செய்கு இஸ்ஸதீனுடைய வெளியேற்றத்திற்குப் பிறகு தவிசாளருடைய இடைவெளியை யாரைக் கொண்டு நிரப்புவது என்ற பிரச்சினை கட்சி வட்டாரத்துக்குள் சில நாட்கள் இருந்து வந்தது.
கெளரவ தலைவர் அவர்கள் இந்தப் பிரச்சினையை மிகவும் விவேகமாக அணுகினார்கள். தவிசாளர் என்ற பொறுப்பு கட்சிக்கு அவ்வளவு விஷேசமாகத் தேவைப்பட்டிருக்கவும் இல்லை. இந்த ஆசனம் ஆதி ஆரம்பத்தில் ஜனாப் செய்கு இஸ்ஸதீனுக்கு என்றே தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட ஆசனமாகும். அவருடைய வெளியேற்றத்திற்குப் பிறகு அது அவ்வளவாக தேவைப் பட்டிருக்கவும் இல்லை. சிலவேளை தலைவர் அவர்கள் அந்த ஆசனத்தை அகற்றி விடவும் நினைத்து இருந்திருக்கலாம். என்றாலும் தலைவர் அவர்கள் எடுத்த விவேகமான முடிவு அந்தப் பதவியை அகற்றி விடாமல் கிழக்கிலங்கைக்கு வெளியில் ஒரு கட்சித் தொண்டருக்கு அதை அளித்துவிட்டால் பல வகையிலும் அது ஒரு சாதகமான ஏற்பாடாக அமைந்து விடும் என்பதே. -
143

Page 75
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
ஏனென்றால் ஜனாப் செய்கு இஸ்ஸதீன் கிழக்கிலங்கையைச் சேர்ந்தவர். தலைவர் அவர்கள், முஸ்லிம் ஐக்கிய முன்னணியின் தலைவர் மொஹிதீன் அவர்களால் வேண்டப்படாதவர் எனப் பிரகடனம் செய்யப்பட்ட சூழ்நிலையில் அவரைக் கண்ணியப்படுத்த அவருக்குக் கொடுத்த பதவி அது. திரும்பவும் அந்தப் பதவியை கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஒருவரிடம் ஒப்படைத்தால் ஜனாப் செய்கு இஸ்ஸதீனுக்கு அது ஒரு சவால் போன்றும் இருக்கலாம்.
எப்படி என்றாலும் தலைவர் அவர்கள் ஜனாப் செய்கு இஸ்ஸதீன் வெளியேறிய பிறகும் அவருக்குரிய கண்ணியத்தை மனதில் இருத்தி வந்தார்கள். தனக்கு இடர் செய்தவருக்கும் மனம் நோகாமல் நடந்து கொள்வதில் தலைவர் அவர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள்.
யாரும் அடித்தால் அது நொந்ததைப் பற்றித் தலைவர் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் அடித்தவரின் கை நொந்து விட்டதே என்றுதான் கவலைப்படுவார்கள். ஜனாப் செய்கு இஸ்ஸதீனுடைய விஷயத்திலும் தலைவர் அவர்கள் அப்படித்தான் நடந்து கொண்டார்கள். அப்படி ஒரு விவேகமான நடவடிக்கைதான் கிழக்கிலங்கைப் பகுதிக்கு திரும்பவும் அந்த தவிசாளர் பதவியை தலைவர் காட்டாமல் விட்டுவிட்டது என்று நினைக்கத் தோன்றுகிறது.
பதவியை விட்டு வெளியாகிய ஜனாப் செய்கு இஸ்ஸதீனுடைய கண்களுக்கு திரும்பவும் அந்தப் பதவியில் ஒருவர் கிழக் கிலங்கையில் தென்படக்கூடாது என்றும் தலைவர் அவர்கள் நினைத்திருக்கலாம்.
என்னதான் சொன்னாலும் அந்த காலகட்டத்தில் புரியாத புரிந்துணர்வு இல்லாத ஒரு பிரதேசவாதமும் கட்சியின் அடிமட்டத்தில் இருந்து வந்தது. அதாவது பெரும் பெரும் பொறுப்புக்களை யெல்லாம் தலைவர் அவர்கள் கிழக்கிலங்கையைச் சேர்ந்த வர்களுக்கே அளிப்பதாக தவறான ஒரு கணிப்பு இருந்து வந்தது. உண்மையில் கட்சி அலுவலகத்தில் அதிகமானவர்கள் கிழக் கிலங்கையைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்து வந்தார்கள். என்ன செய்வது? வேறு வழியில்லை.
தலைவர் அவர்களுடன் சகல கஷ்டங்களையும் சகித்துக்கொண்டு சரியாக சம்பளம்கூட எடுக்காமல் சரியான உணவும்கூட இல்லாமல் செயல்படுவதற்கு கிழக்கிலங்கையைச் சேர்ந்தவர்கள்தான்
144

அப்துல் மஜீத் ஆலிம்
அப்பொழுது தயாராக இருந்தார்கள். நிலைமை அவ்வளவு நெருக்கடியாக இருந்து வந்தது. இது சிலருடைய பார்வையில் தவறான உணர்வுகளை ஏற்படுத்தி இருந்தது. இப்படியான பிரச்சினைகளையும் தலைவர் அவர்கள் தாங்கிக் கொண்டும் சமாளித்துக்கொண்டும் வந்துள்ளார்கள். வாகனத்தின் 'சொக் அப் சோபர்’ போன்று மற்றவர்களுடைய பிரச்சினைகளையும் இவர்களே தாங்கிக் கொள்வார்கள்.
அணைகிற சூலான அப்துல் றசூலின் தனிமை
இதுபோன்ற பல்வேறு காரணங்களும் இருக்கலாம். அதுமட்டு மல்லாமல் ஜனாப் அப்துல் றசூல் தனியாக ஒரு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்து கொண்டிருந்தார். அந்தப் பகுதிக்கு அவர் முக்கியமானவராகவும் இருந்தார். தூரத்து உறவுமுறை உட்பட தலைவர் அவர்களுக்கு நெருக்கமானவராகவும் இருந்தார். அரசியலிலும் நன்கு விடயங்கள் விளங்கியவராய் இருந்தார்.
எல்லாவற்றையும் மனத்தில் கொண்டு ஏனையவர்களுடைய பிரதேசவாத எண்ணங்களையும் உடைத்தெறிந்து அந்த மாபெரும் பதவியை ஜனாப் அப்துல் றசூலுக்கு வழங்கினார். ஜனாப் அப்துல் றசூல் தவிசாளராக வந்து விட்டார்கள் என்று ஆச்சரியமான மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. காலியான ஆசனம் நிரப்பப்பட்டது; அவ்வளவுதான்.
ஒரு கவலையான விடயத்தை இந்த இடத்தில் எழுதுகிறேன். ஜனாப் அப்துல் றசூல் தவிசாளராக வர முன்பு, மிகமிகக் கண்ணிய மானவராக இருந்தார். அவருடைய நடவடிக்கைகள், நடை உடை பாவனைகள் அனைத்தும் கட்சிக்கு அழகூட்டிக் கொண்டிருந்தன.
அவர் கூட்டங்களுக்கு சமுகமளித்திருந்தாலும், மேடைகளில் ஏறிப் பேசினாலும் கட்சி வட்டாரத்துக்குள் ஒரு அலாதியான கவர்ச்சி இருந்து வந்தது. நான்கூட குருநாகல், கண்டிப்பகுதிகளுக்கு செல்லும்பொழுது, அவருடைய வீடு தேடிச் சென்று அவரைப் பார்க்காமல் வரமாட்டேன். சில சமயங்களில் மனைவியையும் அழைத்துக் கொண்டு அவருடைய வீட்டுக்குச் சென்று வருவேன். அவர் அந்தப் பகுதியில் பள்ளிவாசல் நம்பிக்கையாளராகவும் இருந்தார். அதனால் அடிக்கடி மார்க்கப் பிரசங்கங்களுக்கும் என்னை அழைப்பார். நானும் தவறாது சென்று வருவேன். நான் தினந்
145

Page 76
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
தோறும் தொலைபேசி மூலம் அவருடன் தொடர்புகொண்டு சுக நலன்களை விசாரித்துக் கொள்வதுடன் அரசியல் விடயங்களையும் நீண்ட நேரம் கதைப்போம். இப்படியாக ஜனாப் அப்துல் றசூலுடன் நானும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தேன்.
கெளரவ தலைவர் அவர்கள் ஜனாப் அப்துல் றசூலுடன் ஆச்சரியமான முறையில் பெருமதிப்புக் கொண்டிருந்தார்கள். ஒரு தடவை நானும், தலைவர் அவர்களும் உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரம் ஒன்றில் ஈடுபட்டிருந்தோம். நாடு முழுவதும் பிரயாணம் செய்தோம். இரவு பகலாகப் பல நாட்கள், பல மாவட்டங்களையும் சுற்றி வந்து கொண்டிருந்தோம். அப்பொழுதும் கட்சியினுடைய சோதனையான அத்தியாயங்கள் ஓயவில்லை. இரவு பகலாக நாங்கள் ஓயாமல் ஒடிக்கொண்டிருந்தோம்.
ஒரு கூட்டத்தில் புத்தளம் மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டு நடு இரவில் டாக்டர் இல்யாஸ் அவர்களுடைய வீட்டில் இரவு தூங்கினோம். அதிகாலை விழித்து எங்கள் பிரயாணப் பைகளை எடுத்து வாகனத்தில் போட்டுக் கொண்டு டாக்டர் இல்யாஸ"டைய வீட்டில் இருந்து வெளிப்பட்டோம்.
பணியில் நனைந்து பணியில் மிதந்து.
புத்தளம் நகரிலே வாகனத்திற்கு டீசல் அடித்தோம். தலைவர் அவர்கள் தங்களுடைய பண பக்கட்டை திறந்து டீசலுக்கு பணம் வழங்கினார்கள். அப்பொழுது மிகவும் அதிகாலை நேரமாக இருந்தது. ஒருவிதமாக பனிப்பெய்து கொண்டும் இருந்தது. உடலுக்கு குளிரான ஒரு நிலைமை. தலைவர் அவர்கள் ஒரு சாரம் அணிந்திருந்தார்கள்.கட்டை கை சேர்ட் அணிந்திருந்தார்கள். ஒரு பொத்தானைக் கழட்டி விட்டிருந்தார்கள். கழுத்திலே ஒரு டவலையும் சுற்றிக் கொண்டிருந்தார்கள். என்னோடு ஜோக் பேசி மகிழ்ந்து கொண்டும் இருந்தார்கள்.
புத்தளத்து பெற்றோல் செட்டிலே அமைதியாக டீசல் நிரப்பப் பட்டுக் கொண்டிருந்தது. தலைவர் அவர்கள் என்னுடன் குடும்ப நிலைமைகளையும் கணவன் மனைவிப் பிரச்சினைகள் பற்றியும் விளக்கிக்கொண்டிருந்தார்கள். அது எங்களுக்கு பொழுதுபோக்கு நேரமாகவும் இருந்தது. நான் தலைவர் அவர்கள் சொல்வதற்கு எல்லாம் வேறு எங்கேயோ பார்த்தவண்ணம் தலையை அசைத்துக்
46

அப்துல் மஜீத் ஆலிம்
கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தேன். டீசல் நிரப்பப்பட்டு விட்டது. டயர்களும் சரிபார்க்கப்பட்டு விட்டன. மிகுந்த களைப்புடன் நாங்கள் வாகனத்தில் ஏறி பிரயாணமாகினோம். தலைவர் அவர்களைப் பார்த்தால் கழுத்திலே ஒரு டவலையும் போட்டுக் கொண்டு எங்களை வேட்டைக்கு அழைத்துச் செல்வது போன்று இருந்தது. ஏனென்றால் வாகனம் வில்பத்து காட்டின் எல்லையி னுTடாகச் சென்று கொண்டிருந்தது. உண்மையில் அது வேட்டையாடும் பகுதிதான்.
வாகனம் அனுராதபுரம் மாவட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அன்றைய தினம் அனுராதபுர மாவட்டத்தில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டோம். மிகவும் கடுமையாக வேலை செய்தோம். காடு மேடுகளிலெல்லாம், சிறு சிறு ஊர்களிலெல்லாம் சென்று பிரசாரம் செய்தோம். கடைசியாக நாச்சியாத் தீவை அடைந்தோம். அன்றைய தினம் அதுதான் எங்களது கடைசிக் கூட்டம். அந்தக் கூட்டம் முடிய இரவு 1 மணியாகிவிட்டது. அதன்பிறகு தலைவர் அவர்கள் என்னைப் பார்த்து நன்றாக நீராடினால் உடல் களைப்பைப் போக்கலாம் என்றார்கள்.
குளிப்பதில் குதுகலிப்படையும் தலைவர்!
தலைவர் அவர்களுக்கு இந்தப் பூமியில் மேலால் மகிழ்ச்சி அளிக்கும் காரியங்களில் ஒன்று குளிப்பதாகும். வாய்ப்புக் கிடைத்தால் ஒரு நாளைக்குப் பத்து முறை என்றாலும் குளிப்பார்கள். அதிலே அவர்களுக்கு மட்டில்லாத மகிழ்ச்சியும், பொழுது போக்கும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “இந்தப் பூமியிலே எனக்கு மூன்று விடயங்கள் விருப்பமாக்கப்பட்டுள்ளன: ஒன்று நறுமணம், இரண்டாவது பெண்கள், மூன்றாவது தொழுகையிலே என் கண்குளிர்ந்த வாழ்வு.” இந்த மூன்றும் நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனால் விருப்பமாக்கிக் கொடுக்கப்பட்டுள்ளன. அது அல்லாஹ்வுடைய அருளாகும். நம் தலைவர் அவர்களுடைய வாழ்விலும் இறை அருட் கொடையொன்றை நான் பார்த்தேன். அதுதான் தண்ணிர் அருட் கொடையாகும். நாள் முழுவதும் தண்ணிருக்குள் இருக்க நேர்ந்தால் அப்படியே இருந்து விடுவார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. உணவைப் பற்றியோ, உறக்கத்தைப் பற்றியோ அவர்களுக்கு அக்கறையே இல்லை. என்னதான் செய்ய முடியும்? தண்ணிருக்காக ஒதுக்க அவர்களுக்கு நேரம்தான் இல்லை.
147

Page 77
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
எவ்வளவுதான் வேலை இருந்தாலும், நாளொன்றுக்கு ஐவேளை போன்று பலமுறை தண்ணிருக்குள் போய் மூழ்கி விடுவார்கள். தண்ணீருக்குள் மூழ்கிய நிலையிலேயே கண்களையும் திறந்துகொண்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு தண்ணீரிலே தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.
இவைகளைப் பற்றி என்னிடம் சொல்லியும் காட்டுவார்கள். அன்று இரவு ஒரு மணியளவில் நாங்கள் இருவரும் குளிப்பதற்கு முடிவு செய்தோம். நாச்சியாத்தீவிலே ஒரு பெருங்குளம் இருந்தது. அந்தப் பகுதி இருட்டாகவும் இருந்தது. ஆனால் நிலவு காரித்திருந்தது. நாங்கள் குளித்த இடம் கற்பாறையாகவும் இருந்தது. ஆதரவாளர்கள் குளத்தடியிலே எங்களை விட்டு விட்டு இரவு உணவு ஏற்பாடுகளிலே ஈடுபட்டு இருந்தார்கள். எங்களுடன் வந்தவர்களும் அங்கு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் அமைதியாக குளித்துக் கொண்டிருந்தோம்.
இரவிலே நீர்த்தேக்கம் கடல்போன்று தெரிந்தது. முதலை வருமோ என்ற பயமும் இருந்தது. நாங்கள் பல விடயங்களையும் கதைத்துக் கொண்டும் இருந்தோம். அன்று நடந்த அரசியல் கூட்டங்களைப் பற்றி நினைவு மீட்டுக்கொண்டிருந்தோம். தலைவர் அவர்கள் தண்ணிலே அமைதியாக மூழ்கி மூழ்கி எழும்பினார்கள். இடையிலே அரசியல் விடயத்தையும் கதைப்பார்கள். பிறகு தண்ணிரை அள்ளி அணைத்துக் கொள் வார்கள். நானும் சொல் வதைக்
கேட்டுக்கொண்டே, நீரில் மூழ்கி எழும்பிக்கொண்டிருந்தேன்.
தலைவர் அவர்களை கரைக்குக் கொண்டுவருவதற்குள் போதுமாகி விட்டது போலிருந்தது. நடு இரவு தானே! அன்றைய வேலைகளும் ஓய்ந்து விட்டன. தண்ணீர்தான் அவர்களுக்கு அகமகிழ்வைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
உணவு தயார் நிலையில் நம் தொண்டர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இல்லாவிட்டால் இன்னும் மிகுந்த நேரம் குளித்திருப்பார்கள். என்னதான் சொன்னாலும் நான் தண்ணிருக்குள் மிகவும் கவனமாக இருந்தேன். தலைவர் அவர்கள் தண்ணீரிலே மூழ்குவதிலும் இடையில் அரசியல் பேசுவதிலும் தன்னை மறந்திருந்தார்கள்.
பாரதி சொன்னான்: “எங்கள் தொழில் கவிதை எழுதுவது.”
148

அப்துல் மஜீத் ஆலிம்
இதுபோன்று தலைவர் அவர்களுடைய வேலை, தொழில், ஒவ்வொரு மூச்சும் அரசியலாகும். அது இரவாக இருக்கட்டும், பகலாக இருக்கட்டும், கரையிலாய் இருக்கட்டும், தண்ணிரிலாய் இருக்கட்டும். எந்த நேரத்திலும் அரசியல் உணர்வில் இருந்து ஒருபோதும் விடுபட மாட்டார்கள். பகலெல்லாம் மேடைகளிலே, மணிக்கணக்கிலே பேசித் தள்ளிவிட்டு இரவிலாவது கொஞ்சம் ஒய்வாக இருப்பார்கள் என்று பார்த்தால், அதுதான் இல்லை.
சமூகமே மூச்சு குரும்ப சுகமே போச்சு!!
அவர்களுடைய உயிரைவிட, உடல் ஆரோக்கியத்தைவிட, மனைவியைவிட, பிள்ளையைவிட, சொந்தத் தொழிலைவிட இந்தப் பூமியில் அவர்களுக்கு நெருக்கமாக முஸ்லிம் சமூகத்தைத் தவிர வேறு எதுவுமே இருப்பதில்லை. தலைவர் அவர்கள், “என் அரசியல் வாழ்விலே முதலாவது பாதிக்கப்பட்டவர் என் மனைவியாகும்; இரண்டாவது என் பிள்ளையாகும்’ என்று பரிதாபமாகச் சொல்வார்கள்.
உண்மையில் வீட்டில் குடும்பப் பொழுதுபோக்குகளே நினைத்துப் பார்க்கக்கூட முடியாத அளவு அவர்களை அரசியல் ஆட்கொண்டு விடும்.
பாகிஸ்தானில் முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்களுடைய நிலையும் இப்படித்தான் இருந்து வந்தது. மூச்சை இழுத்தாலும் பாகிஸ்தான் என்றுதான் இழுப்பார். மூச்சை விட்டாலும் பாகிஸ்தான் என்று தான் விடுவார். இரவெல்லாம் அவர் இழுத்து விடும் ஒவ்வோரு குறட்டையிலும் பாகிஸ்தான் என்றுதான் வந்து கொண்டிருக்கும். பகலெல்லாம் அவர் இழுத்துவிடும் ஒவ்வொரு சிகரட் புகையிலும் பாகிஸ்தானுடைய வளையங்கள் தான் வெளிவந்து கொண்டிருக்கும்.
பேச ஆரம்பித்தால் பாகிஸ்தான் என்றுதான் தொடங்குவார். பேச்சை முடிக்கும்பொழுது பாகிஸ்தான் என்றுதான் முடிப்பார். பாகிஸ்தானுடைய கனவிலும், கற்பனையிலும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான சிகரட்டுகளை ஊதித் தள்ளி விடுவார்கள். அவருக்கு உணவும் ஏறாது. உறக்கமும் ஏறாது. இரவு முழுவதும் பாகிஸ்தான், பாகிஸ்தான் என்று முணுமுணுத்துக்கொண்டு மேல்மாடி வராந்தாவிலே சிகரட்டும் கையுமாக தள்ளாடித் தள்ளாடி உலாவிக்
149

Page 78
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
கொண்டிருப்பார். இடைக்கிடை அவருடைய சகோதரி பாத்திமா ஜின்னாஹ் அவர்கள் படுக்கையில் இருந்து எழுந்து, முஹம்மதலி ஜின்னாஹ்வைத் தேடி வருவார்.
"அலி! நீ சாப்பிடவில்லையா” என்று ஒரு கத்து கத்துவார். திரும்பிப் போய் விடுவார். பிறகும் வருவார். "அலி! நீ தூங்க வில்லையா” என்று கத்துவார். இன்னும் ஏதாவது சொல்லிச் சத்தம் போடுவார். திரும்பப் போய் தூங்கி விடுவார். இப்படியாக சகோதரி பாத்திமா ஜின்னாஹ் அவர்கள் இரவு முழுவதும் படாதபாடு படுவார். தம் சகோதரர் ஜின்னாஹ்வுக்கு ஒரு பிடி உணவு ஊட்டிக்கொள்ள முடியாமல், ஒருமணி நேரம் உறங்க வைக்க முடியாமல் இரவு முழுவதும் அவர் கஷ்டப்பட்டு கடைசியில் பாத்திமா ஜின்னாஹ் அவர்கள் ஏமாற்றத்துடன் காலைப் பொழுதைச் சந்திப்பார்.
“அடைந்தால் பாகிஸ்தான், இல்லாவிட்டால் கப்றுஸ்தான்” என்று உளறிக்கொண்டிருப்பார் அவர்.
மகாகவி இக்பால் அவர்கள்
6 பாகிஸ்தான் ஹமாரா
ஸாரா ஜஹான் ஹமாரா” என்று எழுதினார்கள்.
g
“பாகிஸ்தான் எங்களுடையது, ஏன் இந்த உலகமே எங்களுடையதுதான்” என்ற மகாகவி இக்பாலின் இந்தப் பெருங் கவிதை அடிகள் முஹம்மதலி ஜின்னாஹ் அவர்களைப் படாத பாடுபடுத்திக் கொண்டிருந்தது. இக்பால் அவர்களுடைய கவிதையே இப்படித்தான். எத்தனைப் பேர்களைத் தான் இப்படி ஆக்கிவிட்டது. இக்பால் அவர்களுடைய கவிதையிலே மாட்டிக்கொண்டு விட்ட எத்தனையோ பேர் ஊணின்றி, உறக்கமின்றி கடைசி மூச்சு வரையில் பம்பரம் போல் சுழன்றுவிட்டு மறைந்து விட்டார்கள்.
சுழலும் இலட்சியத்திற்கு ஒய்வில் அலட்சியம்
நான் யூகித்துப் பார்த்தேன். நம் தலைவர் அவர்களுடைய கதையும் இப்படித்தான். ஓய்வும் இல்லை. ஒழிச்சலும் இல்லை. பொழுது போக்குகளும் இல்லை. ஒன்றும் இல்லை. சுழல் பம்பரம் போன்று சுழன்று கொண்டிருக்கின்றார்கள். சில தினங்களுக்கு முன்பு இரவு ஒரு மணிக்கு அவசரமாக டாக்டரிடம் கொண்டு செல்லப்
150

அப்துல் மஜீத் ஆலிம்
பட்டார்கள். அவர் குடும்ப டாக்டர். டாக்டர் பரிசோதித்துவிட்டு எத்தனை தடவை தான் சொல்லிவிட்டேன்; கொஞ்சம் தூங்க மாட்டீங்களா என்று எரிந்து விழுகிறார். சில குளிகைகளையும் எடுத்துக்கொண்டு டாக்டரிடம் ஏச்சையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்புகிறார்கள்.
சமீபத்தில் ஒரு வைபவத்தை முடித்துவிட்டு தலைவர் அவர்களுடன் காரில் வந்து கொண்டிருந்தேன். அந்த வைபவத்திற்கு வரவேண்டிய கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் அங்கு வந்திருக்க வில்லை. காரணத்தை ஆராய்ந்த பொழுது அன்று தொடர் லிவு நாட்களாக இருந்தது. ஆகவே, அவர்கள் குடும்பங்களுடன் ஒய்வெடுப்பதற்காக நுவரெலியாவுக்குச் சென்றிருந்தார்கள். எப்படியோ வைபவத்தை முடித்தோம். களைப்புடன் காருக்குள் வந்த தலைவர் அவர்கள் என்னோடு கதைக்கத் தொடங்கினார்கள்.
“ஹஸ்ரத்! இது நீண்ட லிவு நாட்கள்; இந்த சந்தர்ப்பத்தில் நம்மட ஆட்கள் கொஞ்சம் ஒய்வெடுக்கச் சென்றுள்ளார்கள். எனக்குத் தான் இந்த முஸ்லிம் காங்கிரஸ் பைத்தியம் தலைக்கு ஏறியுள்ளது. மற்றவங்களுக்கும் ஏறுமா” என்று சொல்லிக் கொண்டு கார் சீட்டிலே தலையை சாய்த்து அழுத்திக் கொண்டே என்னிடம் சொன்னார்கள். “ஹஸ்ரத் இக்பாலுடைய கவிதை தான் என்னை இந்தப் பாடுபடுத்துது நம்முடைய ஓய்வு கப்ருக்குள்தான்’ என்று ஒரு மாதிரியாக சொல்லிக் கொண்டார்கள்.
என் அரசியல் வாழ்வில் முதலாவது பாதிக்கப்பட்டவர் என் மனைவி என்று தலைவர் அவர்கள் ஒரு கூட்டத்தில் வைத்துச் சொன்னார்கள். உண்மையில் அது நீண்ட பெரும் சரித்திரமாகும். சொல்ல வேண்டியவைகளும் இருக்கின்றன. மறைக்க வேண்டியவை களும் இருக்கின்றன. உண்மையில் அது கசப்பான ஒரு சரித்திரமாகும்.
தலைவர் அவர்களுடைய துணைவியார் மிகப் பெரிய பொறுமைசாலி தலைவர் அவர்கள் சென்ற அந்தக் கடினமான பாதையில் வேறொரு மனைவி பின்னால் சென்றிருக்க முடியாது. ஆண்களுடைய இலட்சியப் பைத்தியத்திற்கு எல்லாப் பெண்களாலும் ஈடுகொடுக்க முடியாது.
151

Page 79
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
இந்தியா பிரியமுன் பிரிந்த ஜின்னாஹ்வின் குரும்பம்
ஜனாப் முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்கள் இரவு பகலாக பாகிஸ்தான், பாகிஸ்தான் என்று பைத்தியம் பிடித்து அலைந்ததால் அதைக் கண்டு சகிக்க முடியாத அவருடைய மனைவி அவரை விட்டும் பிரிந்து சென்று விட்டார். கடைசி வரையும் அவர் கணவரிடம் திரும்பி வரவே இல்லை. ஏனென்றால் முஹம்மது அலி ஜின்னாஹ்வுடைய இலட்சிய வேகத்தை அவரால் தாங்க முடியாமல் போய்விட்டது. கணவரோடு சேர்ந்து அழகாகக் குடும்பம் நடத்த வேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனால், குடும்ப மகிழ்வுகளை நினைத்துக் கூடப் பார்க்க முடியாமல் இருந்தது.
முஹம்மதலி ஜின்னாஹ் அவர்கள் ஆரம்பத்தில் பரம ஏழை. ரிக்ஷாவுக்குப் பணம் இருக்காது. கால்நடையில் தான் அலைவார். பிறகு சட்டத்துறை அவருக்குக் கைகொடுத்தது. மிகப்பெருங் கோடிஸ்வரராக மாறினார். அந்தக் காலத்தில் அவருடைய வக்கீல் பீஸ் ஒரு மணித்தியாலத்துக்கு 1000 ரூபாயாகும். அந்தத் தொகையை தற்காலத்தில் லட்சக்கணக்கான ரூபாயாகப் பெறுமதி காணலாம்.
மிகப் பெரிய வழக்குகளைத் தான் அவர் பேசுவார். நடுத்தரமான வழக்குகளை எடுத்துக் கொண்டு அவருடைய அலுவலகப் பக்கம் நெருங்க முடியாது. கடைசியாக அவர் வாதிட்ட வழக்கு போபால் அரசருடைய வழக்காகும். அந்த வழக்குக்கு அப்பொழுது அவர் பெற்ற தொகை 6 லட்சம் ரூபாய்களாகும். லண்டன் மாநகரிலே அவருக்கு 'மெளன்ட் பிளஸன்ட்’ என்ற பெரிய மாளிகை இருந்தது. பம்பாய் நகரிலே அவருக்கு 'மலபார் ஹில்ஸ்’ என்ற இடத்தில் பெரிய மாளிகை இருந்தது.
அரசியல் மூலமாக அவர் பணம் சம்பாதித்ததே கிடையாது. தமது செல்வ கோடிகளை கடைசிவரை அரசியலுக்காகவே செலவழித்து முடித்தார். மகாத்மா காந்தி கூறும்பொழுது, "முஹம்மத் அலி ஜின்னாஹ்வை யாரும் விலைக்கு வாங்க முடியாது’ என்பார். அவ்வளவு பெரிய குபேரன் அவர். அந்தக் காலத்தில் அவருடைய சொந்தப் பிரயாணங்களுக்கு பெறுமதியான நான்கு கார்கள் இருந்தன. ரோல்ஸ் ரோய் கார் ஒன்றும் அவரிடத்தில் இருந்தது.
இவ்வளவு பெரிய செல்வங்களை வைத்துக் கொண்டு நிம்மதியாக வாழவேண்டும் என்ற முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்களுடைய
152

அப்துல் மஜீத் ஆலிம்
மனைவி விரும்பினார். ஆனால் அது நடக்கவில்லை. அவ்வளவு பெரிய செல்வங்களையும் துறந்துவிட்டு கணவரையும் பிரிந்து சென்றார் அந்தப் பெண். அவர்கள் இருவருக்கும் ஒரு மகள். அவர் பெயர் வாடியா ஜின்னா.
மகளும் தனிப்பட்டு விட்டார். தகப்பனுடைய நிலையை சகிக்க முடியாமல் ஒரு பார்ஸி இளைஞனைத் திருமணம் செய்துகொண்டு அவரும் பிரிந்து விட்டார். முஹம்மது அலி ஜின்னாஹ் வாழ்வில் தனித்து விட்டார். அரசியல் இவ்வளவு தூரத்துக்கு அவரைக் கொண்டு வந்து விட்டுவிட்டது. பாகிஸ்தானைப் பார்க்க வேண்டும். முஸ்லிம்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட ராஜாங்கத்தை உருவாக்கி விடவேண்டும் என்ற அவருடைய கனவு அவருடைய குடும்ப வாழ்வை இவ்வளவு தூரத்துக்குப் பாதிக்கச் செய்தது.
கடைசியில், கூடப் பிறந்த சகோதரி தான் ஜனாப் முஹம்மது அலி ஜின்னாஹ்வை கட்டிக் காத்து வந்தார். அவர் பாகிஸ்தானின் தலைவராக வந்த பிறகும் கூட எல்லா வைபவங்களுக்கும் சகோதரியுடன்தான் சென்று வருவார். அவர் வீட்டிலே, தனிமையிலே, உலாவிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று மனைவியுடைய நினைவு வந்துவிடும். அப்பொழுது, அவர் ஓர் அசைவு அசைந்து விடுவார். தன்னிலை மறந்து விடுவார். கணக்கிலடங்காத சிகரட்டுகளை ஊதித் தள்ளிவிடுவார்.
வேலையாளனை கூப்பிடுவார். ஒரு பெட்டியைக் காட்டி அந்தப் பெட்டியை கொண்டு வரச் சொல்லுவார். அந்த பெட்டியை ஜின்னாஹ் அவர்கள் திறப்பார்கள். தமது ஒற்றைக் கண் கண்ணாடியை கண்ணில் வைத்து அந்தப் பெட்டிக்குள் இருக்கும் மனைவியின் உடுப்புகளை சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார். அவருடைய கண்களில் இருந்து கண்ணிர்த் துளிகள் மிதந்து கொண்டிருக்கும். கடைசி வரையும் இப்படியே அவருடைய குடும்ப நினைவுகள் கடந்து சென்றன.
தான் ஓர் அரசியல் தலைவர் என்ற காரணத்தினால் ஜின்னாஹ் அவர்கள் தமது மகளுடைய மாற்று இனக் காதலையும் தடுத்துப் பார்த்தார்கள். மகள் தந்தையிடம் வந்து காதலுக்கு அனுமதி கேட்டாள். தகப்பன் ஜின்னாஹ் அவர்கள்! "மகளே நன்கு யோசித்துச் சொல். மூன்று நாள் அவகாசம் தருகிறேன்” என்றார். மகள் பிறகு போய் விட்டார். முஹம்மது அலி ஜின்னாஹ் சிந்திக்கத்
153

Page 80
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
தொடங்கினார். சுமார் 1000 க்கும் மேற்பட்ட சிக்ரட்டுகளை ஊதித் தள்ளிவிட்டார். மூன்றாவது நாள் மகள் திரும்பவும் வந்தாள். தகப்பனார், "உனது கடைசி முடிவு என்ன?’ என்று கேட்டார். மகள் சொன்னார்: “முடிவில் எந்த மாற்றமும் இல்லை”, “சரி உன்இஷ்டப்படியே செய்து கொள்” என்றார்.
அரசியல் இலட்சியத்துக்காக வேண்டி அன்றைய தினம் மகளையும் பிரிந்தார். மகளைப் பார்க்காமல் அடுத்த கணம் முகத்தை திருப்பிக் கொண்டார். அதன் பிறகு அவர் மகளைப் பார்க்கவே இல்லை. இப்படி மனைவியையும், மகளையும் அரசியல் லட்சியத்துக்காகப் பறிகொடுத்துவிட்டு வாழ்நாள் முழுவதும் தேசப்பற்றுடனும் சமுதாய உணர்வுடனும் உறுதியாக நின்றவர் தான் முஹம்மது அலி ஜின்னா அவர்கள். கடைசியாக முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்களின் வாழ் நாள் எல்லை வந்தது. ஜின்னாஹ் அவர்கள் மரணத்தருவாயிலே படுத்துக்கொண்டிருந்தார்கள். வியாதியின் உச்சக்கட்டமாக இருந்தது. மகள் வாடியா ஜின்னாஹ் அவர்கள் பாகிஸ்தானின் தந்தையாகவும், தமது தந்தையாகவும் உள்ள ஜனாப் முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்களை கடைசியாக ஒருமுறை பார்த்து விடவேண்டும் என்று தகப்பனாரிடம் வந்தார். மரணத் தருவாயில் இருக்கும் தகப்பனாரைப் பார்த்து "தந்தையே! உங்கள் உடல் நிலை எப்படி இருக்கிறது’ என்று மகள் கேட்டார்.
மகள் வந்து பேசுவது ஜின்னாஹ் அவர்களுக்கு விளங்கியது. உடனே முகத்தை குரல் வந்த திசையை விட்டும் மறுபக்கம் திருப்பிக் கொண்டார். அடுத்த பக்கமாக மகள் சென்று தகப்பனோடு பேசினார். உடனே ஜின்னாஹ் அவர்கள் தமது முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டார். அவர் மகளோடு அந்த மரணத் தறுவாயிலும் கூட பேசவும் இல்லை; மகளுடைய அடையாளத்தைக்கூட அவர் பார்க்கவும் இல்லை. மகள் போகும் வரையில் கண்களை இறுக மூடிக்கொண்டார்.
அரசியல் லட்சியத்துக்காக வேண்டி ஒரு பிள்ளையைப் பறிகொடுத்த அவர் முழு பாகிஸ்தானுக்குமே தகப்பனாக இருந்தார். அன்று முழுப் பாகிஸ்தானும் தகப்பன் என்று அழைத்தது. ஆனால் தாம் பெற்ற ஒரு பிள்ளை மட்டும் தகப்பனே' என்று சொல்ல முடியாமல் தவித்தார். மகளைப் பறிகொடுத்துவிட்டு தேசத்தை வாங்கினார். மனைவியைப் பறி கொடுத்துவிட்டு சமுதாயததை வாங்கினார். இது தான் ஜின்னாஹ்வுடைய கதை.
54

அப்துல் மஜீத் ஆலிம்
அரசியலும், சமுதாய உணர்வும் ஓர் இலட்சியவாதியை என்ன பாடுபடுத்தி விட்டது என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். நம்முடைய கெளரவ தலைவர் அவர்கள் இந்த அரசியல் வாழ்விலே பட்டபாடுகளும், அடைந்த துன்பங்களும் இன்னும் மறைந்தே இருந்து வருகின்றன. அவை நம் சமுதாயத்துக்கு அறிவூட்டும் பாடங்களாக மாறவேண்டும்.
வேலைப் பளுக்கள் முன் தோல்வியுறும் தனிமனித s -6OOTfro856ir
நமது தலைவர் அவர்கள் எவ்வளவு தான் அரசியல் உச்சக் கட்டத்தில் மூழ்கிக் கிடந்தாலும், தமது நிலையை மறக்க மாட்டார்கள். அவர்கள் எந்த நிமிடத்தில் நின்று கொண்டிருக்கிறார்களோ அந்த நிமிடத்தினுடைய செயற்பாடுகளை அழகாகக் கடத்திக்கொண்டு நிதானமாக அடுத்த நிமிடத்துள் காலை எடுத்து வைப்பார்கள். இதனால் அவர்களுடைய நிலைமை ஒருபோதும் தளர்ந்தது இல்லை. குடும்பத்தோடு இருக்கும்போது அந்த சில நிமிடங்களுக்குள் தனிக் குடும்பத் தலைவராகவே நடந்து கொள்வார்கள். மனைவியோடு இருக்கும்பொழுது நல்ல கணவராக தன்னை மாற்றிக் கொள்கிறார்கள். தன் பிள்ளையை சந்திக்கும் பொழுது ஒரு அருமைத் தந்தையாக தமது நிறத்தை மாற்றிக் கொள்கிறார்கள். உறவினர்கள் வீட்டுக்கு வரும்பொழுது உறவு முறைகளோடு அழகாகச் சொந்தம்
காண்டாடுவார்கள்.
அவர்களோடு சேர்ந்து அமைதியாக உணவு அருந்தி அமைதியாக நேரத்தைக் கடத்துவார்கள். உறவினர்களுடைய குழந்தைகளை துாக்கி அணைத்துக் கொஞ்சி விளையாடி மகிழ்ந்து கொண்டிருப்பார்கள். அப்பொழுது தலைவர் அவர்களிடத்தில் அரசியலின் கடுமைகளைப் பார்க்க முடியாது. திடீரென்று ஊழியர்கள் வந்தால் அவர்களுக்கு ஏற்ற முறையில் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். கட்சித் தொண்டர்கள் வந்தால் அவர்களுக்கு உரிய முறையில் அவர்களோடு நடந்து கொள்கிறார்கள். பெரிய அரசியல்வாதிகள் வந்தால் அவர்களுக்கு உரிய முறையில் உருவை மாற்றிக் கொள்வார்கள். திடீரென்று டெலிபோன் கோல்வந்தால், அதில் அவர்கள் உரையாடும் முறையே அலாதியானது.
உணர்ச்சிவசப்படமாட்டார்கள்; தடுமாற மாட்டார்கள்; அவசரப்பட மாட்டார்கள். எவரையும் இலகுவில் கடிந்துகொள்ள மாட்டார்கள். இதுதான் தலைவர் அவர்களுடைய குணாம்சமாகும்.
155 .

Page 81
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
மூஸாவுக்கு ஒர் அலாவும் முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு அவhரஃபும்
நபி மூஸா அவர்களிடத்திலே, அவர்களுடைய "அஸாக்கோல் எழுபது கோணத்தில் வளைந்து கொடுக்கும். ஒரு கம்புக்கே இவ்வளவு தகுதியைக் கொடுக்கும் இறைவன் தன் அடியார்களுக்கு ஏன் கொடுக்க மாட்டான்? அந்தக் கம்பிலே சாய்ந்தால் அது ஒரு கட்டிலாக மாறும். அதிலே உட்கார்ந்தால் அறபிக் குதிரை போன்று பறக்கும். அந்தக் கம்பின் ஒரு முனையைப் பிடித்தால் இரவிலே சூரிய வெளிச்சம் வரும். மறுமுனையிலே சந்திர வெளிச்சம். ஒரு முனையிலே வாயை வைத்தால் தேன் கொட்டிக் கொண்டிருக்கும். மறுமுனையிலே பால் வந்து கொண்டிருக்கும். படையின் முன் போட்டால் பாம்பாகிப் படைகளையே விழுங்கிவிடும். பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்கினால் இரவிலே யாரையுமே நெருங்க விடாது. உயர்ந்த மரத்தின் பக்கம் நீட்டினால் ஆடுகளுக்குக் கொப்புகளையும் சாப்பிடக் கனிகளையும் பறித்தெடுத்து விடும். பிர்அவுனைக் கண்டதும் அந்தக் கம்பை கடலிலே அடித்தார்கள். கடலிலே பன்னிரண்டு பாதைகள் உருவாகின. இது அந்தக் கம்பினுடைய குணங்கள்.
கம்பையே இப்படியாயச் சமைத்த இறைவன் தான் விரும்பிய அடியார்களையும் ஏன் சமைக்க மாட்டான்? நம் கெளரவத் தலைவர் அவர்களும் இடத்துக்கும், நேரத்துக்கும் ஏற்ற முறையில் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஜனாப் முஹம்மது அலி ஜின்னாஹ்வுக்கு பாகிஸ்தானை பிரித்தெடுப்பதைத் தவிர வேறு ஒன்றுமே ஓடவில்லை. அந்த வேலையோடு அவர்களுடைய வாழ்வும் முடிந்து விட்டது. அதற்காக வேண்டி அத்தனையையும் இழந்தார்.
கால்களை இழந்தும் கைகளை நீட்டாத தன்னம்பிக்கை
ஒருநாள் இரவு நான் மனைவியையும் அழைத்துக் கொண்டு கோல்பேஸ் திடலுக்குச் சென்றேன். அந்த மைதானத்திலே, "நானா ஹோட்டல்” என்று ஒன்று நடத்தப்படுகிறது. அந்த ஹோட்டல் உரிமையாளருக்கு இரண்டு கால்களுமே இல்லை. அங்கு கிடைக்கும் உணவு மிகவும் சுவையானது. தலைவர் அவர்கள் கொஞ்சம் தொலைவாக மேசை முன் அமர்ந்திருப்பதை எனது மனைவி தொலைவில் இருந்து காட்டித் தந்தார். நாங்கள் கோல்பேஸில் நடந்து கொண்டிருந்த பொழுது, “அதோ ஸேர் உட்கார்ந்திருக்கிறாங்க
156

அப்துல் மஜீத் ஆலிம்
என்று எனது மனைவி சொன்னார். நானும் அந்தப் பக்கம் பார்த்தேன். மிகத் தொலைவிலே வழுக்கைத் தலை எனக்குத் தெரிந்தது. ஆம், தலைதான் எமக்கு இலகுவாகக் காட்டித் தந்தது. ஹோட்டல் பல்ப் வெளிச்சத்தில் தலைமினுங்க, பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. நாங்கள் அந்தத் திசையை நோக்கி நடக்கத் தொடங்கினோம். நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுதே, தலைவர் அவர்களோடு துணைவியாரும், மகனும் அமர்ந்திருப்பது எங்கள் கண்களுக்குத் தெரிந்தது. ஆம், அவர்கள் நானா சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருப்பதை அறிந்தோம்.
எனது மனைவி என் காதுக்குள் சிரித்துக்கொண்டு குசுகுசு என்று கதைத்தார். “சேர் இப்படியெல்லாம் வந்து சாப்பிடுவாங்களா” என்று கேட்டார். நான் சிரித்துக்கொண்டு பதிலளித்தேன். “இது குடும்பக் கடமைகளை நிறைவேற்றும் நேரம். மனைவியையும், பிள்ளையையும் அழைத்துக் கொண்டு வந்து கோல்பேஸிலே நடமாடி விட்டு சாப்பிட வைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிமிடத்தில் அவர் ஒரு குடும்பத் தலைவர்” என்றேன். இன்னும் பலதையும் கதைத்துக்கொண்டு தலைவர் அவர்களை நெருங்கினோம்.
தலைவர் அவர்கள் எங்களைக் கண்டதும் சந்தோஷமாக உற்சாகமடைந்து எங்களை சாப்பிட அழைத்தார்கள். ஆனால் எங்களால் சாப்பிட முடியவில்லை. நாங்கள் பக்கத்தில் இருந்து கதைத்துக்கொண்டிருந்தோம். பல விடயங்களையும் கதைத்துக் கொண்டிருந்தோம். தலைவர் அவர்கள் சாப்பிட்டுக் கொண்டே என்னிடம் சொன்னார்கள். “ஹஸ்ரத்! இந்த சாப்பாடு எவ்வளவு ருசியாக இருக்கின்றது என்று பாருங்கள். இரண்டு கால்களும் இல்லாத ஒரு மனிதருடைய சாப்பாட்டுக் கடைதான் இது. சாதாரண சமூக பாரம்பரியங்களின்படி பார்த்தால் அவர் பிச்சை எடுக்க வேண்டிய ஒரு மனிதர். சமூகம் அவருக்கு பிச்சை கொடுக்க வேண்டியதும் நியாயம்தான். இரண்டு கால்களுமே அவருக்கு இல்லை. ஆனால் அவருடைய தன்னம்பிக்கையைப் பாருங்கள். கால்களும், கைகளும் உள்ள 32 பேர்கள் அவரிடத்திலே வேலை செய்கிறார்கள். நல்ல சம்பளமும் கொடுக்கிறார். அந்த 32 பேருடைய குழந்தை, குட்டிகளை கணக்குப் போட்டுப் பார்த்தால் 100, 200 பேர் என்று ஆகிவிடுகிறது. ஆக கால்களில்லாத அவரைக் கொண்டு நூற்றுக்கு மேற்பட்ட ஒரு கூட்டம் பிழைத்துக் கொண்டிருக்கின்றது. இப்படியாக அச்சாப்பாட்டுக்கடை நானாவைப் பற்றி எனக்கு நீண்டதொரு விளக்கம் தந்துகொண்டிருந்தார்கள்.
157

Page 82
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
ஏமாறாத உதவி உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டது
அப்பொழுது ஒரு பிச்சைக்கார மனிதன் நெருங்கிக்கொண்டு வந்தான். "அநே சேர் மட படகினி, மொனவா ஹரி கண்ட அரங்தெண்ட” என்று வேண்டினான். தலைவர் அவர்கள் சாப்பிட்டுக் கொண்டும், கதைத்துக்கொண்டும் இருந்த நிலையில் அவன் பக்கம் அமைதியாகப் பார்த்தார்கள். அவன் முதல் தரக் குடுக்காரனாக இருந்தான். தலைவர் அவர்களை எவரும் இலகுவில் ஏமாற்றி விட முடியாது, அது எனக்குத் தெரியும். உதவி செய்வார்கள். ஆனால் ஏமாற மாட்டார்கள். “ஸேர்” ஊருக்குப் போக பஸ்ஸ"க்குப் பணம் வேண்டும்” என்று கேட்பார்கள். தலைவர் அவர்கள் ஆளனுப்பி பஸ்ஸ"க்கு டிக்கட்டை எடுத்துக் கொடுத்து ஆளை பஸ்ஸில் உட்கார வைத்துவிட்டு வரச் சொல்வார்கள்.
ஏனென்றால், ஏமாற்றம் என்பது அவர்களால் சகிக்க முடியாத ஒன்று. அதை என்னிடம் சொல்லிக் காட்டுவார்கள். அந்தப் பிச்சைக்கார மனிதனை உற்றுப்பார்த்த தலைவர் அவர்கள் யோசித்தார்கள். இவனுக்குப் பணம் கொடுத்தால் கொண்டு போய்க் குடுபோடுவான். உணவை எடுத்துக் கொடுத்தாலும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கு விற்பான்.
தலைவர் அவர்கள் உடைந்த சிங்கள பாஷையில் அவனோடு பேசினார்கள். அந்தப் பேச்சுப் பாணி அழகாகவும், எங்களுக்கு சிரிப்பாகவும் இருந்தது. “மம கேம அரங் துன்னத் தம்ஸ மெதன கணவத, மெதன கணவனங் தமய் அரங் தென்னே” என்று சொன்னார்கள். அவன் ஆம்’ என்று தலை அசைத்தான். அடுத்த நிமிடம் தரமான ரொட்டிகளும் விஷேச கறி வகைகளும் அவனிடம் கொண்டு வரப்பட்டன. அதை அவன் எடுத்து புற்தரையில் உட்கார்ந்துகொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தலைவர் அவர்கள் சொன்னார்கள்: “இப்படிச் செய்யவில்லை என்றால் இந்த உணவை வேறுவகையில் பயன்படுத்தி விடுவான்’ இப்படியாக நம் தலைவர் அவர்களிடத்தில் கணக்கிலடங்காத விஷேட பண்புகளைப் பார்க்கின்றோம்.
தலை கொள்ளாத அரசியல் பிரச்சினைகளின் மத்தியில் மனைவி மக்களை அழைத்து வந்து சந்தோஷப்படுத்தும் காட்சியையும் பார்க்கின்றோம். இத்தகைய பரந்த தன்மைகள் ஆயிரத்தில் ஒரு தலைவரிடம் கூட வருவது கஷ்டமாகும். இவை இறைவனின் அருட்கொடைகளைத் தவிர வேறு என்னவென்றுதான் சொல்லுவது!
158

அப்துல் மஜீத் ஆலிம்
முதலைகளின் குளத்திலும் முடங்காத துணிச்சல்
அன்று நாச்சியார்தீவுக்குளத்திலே வைத்து நடுஇரவு ஒரு மணியளவில் நாங்கள் குளித்துக் கொண்டிருந்த பொழுது, தண்ணிருக்குள் இருந்துகொண்டு தலைவர் அவர்கள் அரசியல் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் இடைக்கிடை அந்தப் பாரிய நீர்த்தேக்கத்தின் நீர் அலைகளை உற்றுநோக்கிக் கொண்டிருந்தேன். மங்கலான நிலவு வெளிச்சம். நீர் அலைகள் நெழிந்துகொண்டிருந்தன. அதுவும் மங்கலான தோற்றம். நான் கவனமாகவே இருந்தேன். ஏனென்றால் எங்களுக்கு அறிமுகமில்லாத பெரிய நீர்த்தேக்கம். அரசியல் பேச்சிலே மூழ்கிக்கொண்டிருந்த தலைவர் அவர்கள் உடலுக்குக் குளிர் ஏற ஏற ஆணித்தரமான அரசியல் கருத்துகளை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நீரில் மூழ்குவதை விடவும் அதிகமாக அவர்கள் அரசியலில் மூழ்கிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன்.
கவிஞர் தாகூர் பாடுகிறார்:
"கண் துஞ்சார் பசி அறியார் தன்நிலை அறியார்
கருமமே கண்ணாயினார்.”
ஆம்; இப்படித்தான் தலைவர் அவர்களுடைய நிலையும் இருந்துகொண்டிருந்தது. எனக்கு ஒரு சந்தேகமும் இருந்து வந்தது. பெரிய நீர்த்தேக்கமல்லவா? கற்பாறைகளும் தெரிந்தன. முதலைகளின் ஆபத்துக்கள் இருக்குமோ என்று அஞ்சிக்கொண்டிருந்தேன். தலைவர் அவர்கள் கழுத்து வரையில் நீருக்குள் இருந்தார்கள். எப்படியாவது தலைவர் அவர்களை கரைக்குக் கொண்டுவர வேண்டும். அதுதான் என்னுடைய பிரதானமான வேலையாகும். ஏனென்றால், சாப்பாட்டு வீட்டில் எல்லோரும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். எனக்கும் பசியாக இருந்தது. நன்றாக கழுத்து வரையில் சாப்பிடும் அளவுக்குப் பசியாக இருந்தது. மறுநாள் பிரசாரத்துக்காக வேண்டி சிறிது தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளவும் வேண்டும்.
நாச்சியார் தீவில் சாப்பிட்டுவிட்டு துாங்குவதற்காக இக்கிரிகொல்லாவை இப்றாஹீமுடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
159

Page 83
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
நியாயமான தூரமும் இருக்கிறது. இன்னும் கொஞ்சநேரத்தில் சுப்ஹத் தொழுகை நேரமும் வந்துவிடும். என்ன செய்வது என்று யோசித்தேன். விவேகமாக தலைவர் அவர்களுடைய பேச்சை திருப்பினேன். மெதுவாக முதலைகளைப் பற்றிய கதையை ஆரம்பித்தேன். இது என்னுடைய பேச்சு: “சேர்! தண்ணிருக்குள் முதலைகளுக்கு சரியான சக்தியாம் இல்லையா சேர்” என்றேன். அப்போது தலைவர் அவர்கள் "ஆம்" என்று சொல்லிக்கொண்டு நீர்த்தேக்கத்தையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டார்கள். பெருங் காடுகளும் கண்களுக்கு விளங்கின. நான் சொன்னேன் “சேர்! முதலை தண்ணிருக்குள் யானையைக் கூடப் பிடித்து விடுமாம் இல்லையா? திடீரென்று தண்ணிருக்குள்ளே மனிதன் முதலைக்கு மாட்டிக்கொண்டால் தப்புவதற்கு ஒரு வழி இருக்குதாம் சேர். எப்படியாவது கையை நீட்டி அது கடித்துக் குதற முன்பு விரல்களால் அதன் கண்களிலே ஊன்றிக் குத்திவிட வேண்டுமாம். அப்பொழுது முதலை விட்டுவிட்டு ஓடிவிடுமாம்” இப்படியாக, நான் முதலைகளைப் பற்றிய கதைகளை பேசத் தொடங்கினேன். நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டிருந்தேன்.
எனது நோக்கம் தலைவர் அவர்களை எப்படியாவது கரைக்கு எடுக்க வேண்டும். முதலை வருமோ என்று பயந்து தலைவர் அவர்கள் கரைக்கு வந்து விடுவார்கள் என்று நினைத்தேன். பயத்துக்கும் அவர்களுக்கும் இடையில் வெகுதூரம் உள்ளது. நாட்டின் பெரும் பெரும் அரசியல் முதலைகள் எல்லாம் குறிவைத்தும் அஞ்சாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவர்கள் தண்ணிரில் உள்ள முதலைகளுக்கா பயப்படப் போகிறார்கள். ஒருவாறு தண்ணிரில் இருந்து கரை சேர்ந்தோம். தலைவர் அவர்கள் உடுத்தியிருந்த உடுப்புகளை கழுவலாம் என்று நான் எவ்வளவோ முயன்றேன். ஆனால் அதற்கு அவர்கள் அனுமதி தரவில்லை. தலைவர் அவர்கள் நிலைமைக்கு ஏற்ற முறையில் நடந்துகொள்வதில் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள். மிகுந்த பக்குவம் அவர்களுக்கு உண்டு. சாப்பிடவும் செய்வார்கள். கடும் பசியிலும் இருப்பார்கள். தூங்கவும் செய்வார்கள். இரவு முழுவதும் விழித்துக் கொண்டும் வேலை செய்து கொண்டுமிருப்பார்கள்.
தூங்கித்தான் ஆகவேண்டும் என்ற நிலை வந்த பிறகு தான்
சிறிது தூக்கத்திற்குச் செல்வார்கள். இரவு முழுவதும் குறட்டை விட்டுத் தூங்கிய வரலாறே இல்லை. ஒருபோதும் சும்மா இருந்த
160

அபதுல மஐத ஆலம
நேரமும் இல்லை.
ஒய்வே இல்லா ஒரு வாழ்க்கை
நெப்போலியன் தன் வாழ்நாளில் ஒருபோதும் இரண்டு மணித்தியாலயங்களுக்கு மேல் தூங்கியதே இல்லையாம். லெனின் தன்னுடைய ஒரு குறிப்புப் புத்தகத்தில் எழுதினார்: "எனக்கு நீண்ட நாளாக ஓர் ஆசை இருந்து வருகின்றது. அது என்னவென்றால் எனக்குக் கொஞ்சம் ஒய்வு தேவை. அது அரைமணித்தியாலயமாக இருந்தாலும் சரி. நான் ஒய்வு எடுத்தே ஆகவேண்டும்.”
வரலாறு படைத்தவர்களுடைய சரித்திரக் கதைகள் இப்படித் தான் இருக்கின்றன. ஓர் இரவில் ஆப்ரஹாம் லிங்கன் தமது நண்பர் ஒருவருக்கு ஒரு விஷயத்தை விளக்கிக்கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருந்த நண்பருக்குக் களைப்பு அதிகமாகி தன்னை மறந்தே உறங்கிவிட்டார். திரும்பவும் அந்த நண்பர் அதிகாலையில் கண்களை விழித்துப் பார்த்தார். ஆப்ரஹாம் லிங்கன் அப்படியே அமர்ந்திருக்கக் கண்டார். முன்னிரவில் அவர் விளக்கங் கொடுத்துக்கொண்டிருந்த தயார் நிலையிலேயே இன்னும் இருந்தார். புத்தகமும் அப்படியே கையில் இருந்தது. நண்பர் தடுமாறிப் போனார். ஆனால், ஆப்ரஹாம் லிங்கனோ விட்ட இடத்தில் இருந்து விளக்கங் கொடுப்பதை ஆரம்பித்து நடத்தத் தொடங்கினார்.
இதுதான் இலட்சிய வாதிகளின் கதைகளாகும். கெளரவ தலைவர் அவர்களை ஒருபோதும் ஓய்ந்திருக்க நான் பார்த்தது இல்லை. ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள். தமது பாதையிலே ஒவ்வோர் அடியாக காலை முன்னெடுத்து வைத்துக்கொண்டே இருப்பார்கள். “வேலை ஒன்றும் இல்லை. இன்றைக்கு சும்மா இருக்கிறேன்” என்ற நிலையே அவர்களிடம் இல்லை. சும்மா இருப்பது போன்று பார்ப்பவர்களுடைய கண்களுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் தூண்டிலைப் போட்டு கம்பைப் பிடித்துக்கொண்டு காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
நீர்க் கரையிலே மீன் பிடிக்கும் மனிதன் சும்மா உட்காந்திருப்பது போல் தான் தெரியும். ஆனால் அந்த மனிதன் கம்பும், தூண்டிலுமாக மீனைக் குறிவைத்துக் கொண்டிருக்கின்றான். ஓர் அறிஞர் கூறினார்: “காத்திருந்தவனுக்குத் தான் தோணித்துறையும், அம்பலமும்” நமது தலைவர் அவர்கள் எத்தனையோ விடயங்களிலே காத்துக் காத்து கவனமாகக் காரியம் ஆற்றியவர்களாவார்.
16

Page 84
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
ஒருபோதும் சிதறாத உன்னதாங்கள்
கவனத்தை ஒருபோதும் சிதற விடமாட்டார்கள். ஏதோ ஒரு உருப்படியான காரியத்தில் செலவழித்துக் கொண்டிருப்பார்கள். காரிலே நாங்கள் பிரயாணம் செய்துகொண்டிருந்தோம். அதுவும் தேர்தல் பிரசாரக் காலங்கள்தான். நான் தலைவர் அவர்களுடன் அமர்ந்திருந்தேன். எனக்கு கொஞ்சம் சீனி வியாதி. சில நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும். அடுத்த காரில் ஜனாப் அன்பு முகையதீன் வந்துகொண்டிருந்தார். அவரும் என்னைப்போல் ஒரு சீனிக்கப்பல்தான். எங்களுக்கு அவசரமாக இறங்கவேண்டிய நிலை. நான் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தேன். பாதுகாப்புக் காரணங்களுக்காக காரை கண்டபடி நிறுத்தவும் முடியாது. தாங்க முடியாத நிலைமையில் நான் இறைவனிடம் உதவி தேடிக்கொண்டிருந்தேன். தலைவர் அவர்களும் ஒரு கஷ்டமான நிலைமையில் இருப்பதை நான் உணர்ந்தேன். திடீரென்று தலைவர் அவர்கள் சாரதி அப்துல் மலிக்குக்கு “முன்னுக்குப் பள்ளிவாசலில் கொஞ்சம் நிறுத்த வேண்டும்” என்று சொன்னார்கள். பிறகுதான் எனக்கு விளங்கியது தலைவர் அவர்களுக்கும் பாத்ரூம் போக வேண்டும் என்பது. எனக்கு சந்தோஷம் வந்தது. இறைவன் உதவி செய்தான். வாகனங்கள் நிறுத்தப்பட்டன. நான் கதவைத் திறந்துகொண்டு வெளியில் பாய்ந்தேன். அதே விநாடியில் அடுத்த காரில் இருந்து ஜனாப் அன்பு முகையதினும் தடுமாறிக் கொண்டு வெளியில் பாய்ந்தார். அவரும் ஓடினார். நானும் ஒடினேன்.
பள்ளிவாசல் கழிப்பறையை நோக்கி நாம் ஒட்டப்போட்டி நடத்தினோம். நான் ஒடுகிற ஒட்டத்திலேயே மோதினாரிடம் தலைவர் அவர்களுக்கு பாத்ரூம் அறையை திறந்து கொடுக்கும்படி சொல்லிக்கொண்டு ஓடி விட்டேன். முஅத்தினாருக்கு நான் கூறியது சரியாகக் கேட்கவில்லை. ஆகவே, அதை அவர் செய்யவில்லை. ஜலம் கழிப்பதற்கு இரண்டு அறைகள் தான் இருந்தன. அது கல்ஹின்னையில் உள்ள ஒரு சிறிய தக்கியா. பிள்ளைகள் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்கள். ஜனாப் அன்பு முகையதின் பெருமூச்சு விட்டுக்கொண்டு ஓர் அறையில் பாய்ந்து உட்கார்ந்தார். நானும் ஓர் அறைக்குள் பாய்ந்தேன். இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஜலம் கழித்தோம்.
ஏற்கனவே மேடைகளில் நிறைய பானங்கள்ை அருந்தியும்
162

அப்துல் மஜீத் ஆல்ம்
விட்டோம். ஆகவே, முடுக்கிக் கொண்டிருந்த ஜலம் வேகமாக இறங்கிக் கொண்டிருந்தது. ஜனாப் அன்பு முகையதின் அவர்கள் ஆறுதல் பெருமூச்சு விடும் ஓசை எனக்குக் கேட்டது. நீரிழிவு வியாதி எங்களைப் படுத்தும்பாடு படைத்தவனுக்கும், எங்களுக்கும் தான் தெரியும். இதை எவரிடம் சொல்லி அழுவது? எங்களைப் பின்தொடர்ந்து வேகமாக வந்துகொண்டிருந்த தலைவர் அவர்களை முஅத்தினார் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. அது அவருக்கு விளங்கி இருக்கவும் இல்லை. விஷேட கழிவறைக்குள் தலைவர் அவர்கள் நுழைந்திருப்பார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. நான் நீண்ட நேரம் எழும்பவே இல்லை. ஜனாப் அன்பு முகையதினும் இடைவிடாமல் ஆறுதல் மூச்சு விட்டுக்கொண்டே இருந்தார். இருவரும் எழும்பிய பாடே இல்லை. தலைவர் அவர்களுக்கும் மிகவும் கஷ்டமான நிலை. அது எங்களுக்குத் தெரிய மாட்டாது. தலைவர் அவர்கள் வந்து பார்த்தார்கள். ஹவுஸ்புல்லாக இருந்தது. ஒருவரும் வெளியேறும் நிலையிலும் இல்லை. தலைவர் அவர்கள் திரும்பிச் சென்று விட்டார்கள். இது எனக்குத் தெரியாது. நான் எழுந்து வெளியாகி முஅத்தினாரிடம் "தலைவர் அவர்கள் கழிவறையில் இருந்து வந்துவிட்டார்களா?” என்று கேட்டேன். அப்பொழுது தான் அவருக்கு விஷயமே புரிந்தது. அவர் சொன்னார்: “தலைவர் அவர்கள் மத்ரஸாவில் இருக்கிறார்கள்.” நான் பதறிக்கொண்டு மத்ரஸாவுக்குள் ஒடினேன். தலைவர் அவர்கள் ஒரு முஅல்லிம் போன்று பிள்ளைகளுக்குப் பாடம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ பிள்ளைகளிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அவசரமாக 'சேர்’ என்று சத்தமிட்டேன். அப்பொழுது தலைவர் அவர்கள் அமைதியாக என் பக்கம் திரும்பி “சரியா” என்று கேட்டார்கள். எனக்கு தாங்கிக்கொள்ள முடியாத மனவேதனை ஏற்பட்டது. நடந்ததை நான் எடுத்துச் சொன்னேன். அப்பொழுது ஜனாப் அன்பு முகையதினும் ஆறுதலுடன் வந்து கொண்டிருந்தார். ஜலம் கழித்து முடித்ததில் அவருக்கு மாபெரும் திருப்தியாக இருந்தது. அப்பொழுது நாங்கள் தலைவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு விஷேட கழிவறைக்கு ஓடினோம்.
தலைவர் அவர்கள் அமைதியாக நடந்து கொண்டே சொன்னார்கள். "நான் வந்து பார்த்தேன்; ஹவுஸ்புல்லாக இருந்தது. அந்த இடத்தில் காத்துக் கொண்டிருந்தால் பாரம் கூடிக்கொண்டே இருக்கும். பெரும் வேதனையாக இருக்கும். அதனால் என் கவனத்தைத் திசை திருப்பி மத்ரஸா பிள்ளைகளுடன் நேரத்தை கடத்தினேன்” என்றார்கள்.
163

Page 85
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
வாழ்க்கையில் ஆயிரமாயிரம் துன்பங்களை சகித்துப் பழகிய தலைவர் அவர்களுக்கு அந்த விடயம் அவ்வளவு பெரிதாக விளங்கவில்லை. தலைவர் அவர்களை கழிவறைக்குள் அனுப்பிவிட்டு நானும், ஜனாப் அன்பு முகையதீனும் சீனிவியாதியைப் பற்றிய வரலாறுகளை கதைத்துக் கொண்டிருந்தோம். அதன் கடுமைகளை அவர் கவிதை நயத்தில் என்னிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.
அநுராதபுரத்து ஆணிவேர்
கெளரவ தலைவர் அவர்களிடம் எந்த நிலைமையையும் சகித்து சமாளித்துக் கொள்கிற தன்மை இயற்கையிலேயே அமைந்துள்ளதைப் பார்க்கின்றேன். அன்று நாச்சியார்தீவில் வைத்து நடு இரவிலே குளக்கரையிலே கழுவிய உடுப்புக்களை அமைதியாகப் பிழிந்து கொண்டிருந்தார்கள். நான் முதலைக் கதைகளை கதைத்தது தான் மிச்சம். ஒரு முதலை கூட அங்கு வரவில்லை. நாங்கள் அன்று நடுஇரவில் அமைதியாக சாப்பிட்டோம். பிறகு நாச்சியார்தீவில் இருந்து நடுஇரவில் இக்கிரிகொல்லாவையை நோக்கி புறப்பட்டுச் சென்றோம். அங்கு ஜனாப் இப்றாஹீமுடைய வீட்டில் தங்கினோம். ஜனாப் இப்றாஹீம் அனுராதபுர மாவட்டத்தில் மிகவும் முக்கியமானவர். அவர்தான் அந்த மாவட்டத்தில் நமது கட்சியின் ஆணிவேர் போன்றவர்.
அந்தக் காலத்தில் அரசியல் அதிஉயர் பீடத்திலும் அவர் ஓர் உறுப்பினர். ஆனால் அவருக்கு அங்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. ஜனாப் ராவுத்தர் நைனா முஹம்மட் அந்தப் பகுதியில் மாகாண சபையில் பிரதிநிதித்துவம் செய்து வருகிறார். அது வடமத்திய மாகாணமாகும். இக்கிரிகொல்லாவையில் ஜனாப் இப்றாஹீம் அவருடைய வீடு. அங்கு நாம் இரவு ஓய்வு எடுத்தோம். சுபஹத் தொழுதோம். சிறிது நேரம் தூங்கினோம். நியாயமான ஒரு கூட்டம். வீடு முழுவதும் கால் கைகளை நீட்டி அயர்ந்து படுத்துக் கொண்டிருந்தோம்.
அந்தக் கூட்டத்துக்கு நடுவில் ஒரு பாயில் ஒரு தலையணை கூட இல்லாத நிலையில் தலைவர் அவர்கள் வலப்பக்கம் சாய்ந்து கால்களை லேசாக மடக்கிக்கொண்டு ஒரு அப்பாவிக் கோலத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். எனக்குள் ஒருவித பரிதாப உணர்வு ஏற்பட்டது. சட்டத் தொழில் செய்து கொண்டு கொழும்பு மாநகரிலே நிம்மதியாக வாழவேண்டிய நேரத்தில், காடு மேடுகள் எல்லாம் சரியான தூக்கம் இன்றி ஒய்வே இன்றி நேரம்
164

அப்துல் மஜீத் ஆலிம்
கடந்துகொண்டிருந்ததை நான் சிறிது நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன்.
நீண்ட நேரம் தூங்கக் கிடைக்கவில்லை. ஏனென்றால் அடுத்த கூட்டங்களுக்குத் தயாராக வேண்டும் எழும்ப வேண்டும், இயற்கைக் கடமைகளை முடிக்க வேண்டும், குளிக்க வேண்டும், காலைச் சாப்பாடு சாப்பிட வேண்டும். ஆகவே ஒவ்வொருவராக எழும்பத் தொடங்கினார்கள். குளித்துத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். எங்களுடன் அப்பொழுது ஒரு பெரிய கூட்டம் இருந்தது. நானும், தலைவர் அவர்களும் இப்றாஹிமுடைய வீட்டு முற்றவெளியில் பின்பக்கமாகச் சென்றோம். அது பெரிய முற்றவெளி தென்னை மரங்கள் இருந்தன. தோட்டத்தில் ஒரு கிணறு இருந்தது. பக்கத்தில் ஒரு கழிவறையும் இருந்தது. கிணற்றடிக்குச் சென்றோம். அப்பொழுது இப்றாஹீம் வந்தார். அவரிடம் தலைவர் அவர்கள் காலை சாப்பாட்டு ஏற்பாடுகளுக்கு பணம் கொடுத்தார்கள். ஏனென்றால் இப்றாஹிமால் சுமக்க முடியாத ஒரு பெருங்கூட்டம் அங்கு இருந்தது. பிறகு நாங்கள் கிணற்றடியில் அமைதியாக காலைக் கடன்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அதேநேரம் மிகவும் முக்கியமான விடயங்களை தலைவர் அவர்கள் என்னுடன் கதைக்கத் தொடங்கினார்கள்.
இறைஞான பாதையையும் மனக்கும் சமூகப் பார்வை
அந்தக் காலை வேளையில் அமைதியான மனோநிலை நிலவிக்கொண்டிருந்தது. சிறிது நேரம் தூங்கியது எங்களுக்கு உடலுக்கு ஒருவித புத்துணர்வாகவும் இருந்தது. தலைவர் அவர்கள் என்னுடன் இறைஞான ரகசியங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். அமைதியாக அழுத்தி அழுத்தி கதைத்துக் கொண்டிருந்தார்கள். இறைஞான இரகசியங்களைப் பற்றிப் பேசுவதென்றால் தலைவர் அவர்கள் அரசியலையும் ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு அமர்ந்து விடுவார்கள். இறைஞான விடயங்களில் ஊறிப்போன ஒருவர்தான் நம் தலைவர் அவர்கள். அது அவர்களுக்குப் பேரின்பமளிக்கும் ஒரு காரியமாகும். அவர்களுடைய பிரதான வழியும் அதுதான். ஆனால் சமுதாயத்துடைய இன்றியமையாத கட்டாயத் தேவையின் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் இறக்கப்பட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
முஸ்லிம்களுக்கு ஒரு அரசியல் சக்தி இந்த நாட்டில் கட்டாயம் தேவைப்படுவதையும் அதை எந்த முக்கிய அரசியல் தலைவர்களும்
165

Page 86
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
கணக்கெடுக்காமல் இருக்கும் நிலையிலும் தலைவர் அவர்கள் இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் பொறுப்புக்கு ஆளானார்கள். அப்படி ஒரு தேவை இல்லாமலிருந்தால் தலைவர் அவர்களுடைய வேறொரு தோற்றத்தை நாம் பார்த்திருக்கலாம். இன்று மக்கள் நிறைய அரசியல் உணர்வு பெற்றுவிட்டார்கள். சிறுபான்மைக்குரிய அரசியல் அதிகாரங்களை ஜீரணிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
சிறிது காலத்துக்கு முன்பு இப்படி ஓர் உணர்வே இல்லாமல்தான் முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஏதாவது ஒரு கட்சியோடு சேர்ந்து பதவியையும், செல்வாக்கையும் அடைந்து கொள்வதுதான் நோக்கமாக இருந்து வந்தது. தலைவர் அவர்கள் கட்சியை அமைத்து கண்ட கண்ட எல்லோரையும் கூட்டி வைத்து அரசியல் பாடம் நடத்துவதில், அரசியல் உணர்வுகளை ஊட்டுவதில் பெருமளவு முயற்சி எடுத்தார்கள். அரசியல் குழு உறுப்பினர்களுக்கான கூட்டங்கள், போராளிகளுக்கான கூட்டங்கள், மாகாண சபைகளின் உறுப்பினர்களுக்கான கூட்டங்கள், உள்ளுராட்சி சபைகளில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு என்று கூட்டங்கள், பேராளர்களுக்கான கூட்டங்கள், அரசியல் அதி அதியுயர் பீட கருத்தரங்குகள், மாவட்டக் கூட்டங்கள், பத்திரிகை, சஞ்சிகை வெளியீடுகள், வருடாந்த மகாநாடுகள் இப்படியாக இடையறாத தொழிற்பாடுகளின் மூலம் ஆயிரமாயிரம் உள்ளங்களில் முஸ்லிம்களுக்கான அரசியல் உணர்வுகளை தலைவர் அவர்கள் திணித்து விட்டார்கள். இது ஒரு ஆச்சரியமான திறமையாகும்.
ஆகக்கூடிய பொறுப்புக்களை சுமக்கும் அரசியல் தலைவர்
நமது கட்சிப் போராளிகள் இவைகளைச் சித்தித்துப் பார்க்க வேண்டும். எல்லா அரசியல்வாதிகளைப் போன்றும் ஓர் அரசியல்வாதி என்று தலைவர் அவர்களையும் எடைபோட்டு விடக்கூடாது. பேரினக் கட்சிகளின் தலைவர்களுக்கு இப்படி ஒரு வேலையே கிடையாது. அவர்கள் கட்சிக் கிளைகளை அமைத்தால் போதும், அவ்வளவுதான்.
தேர்தல் காலங்களில் ஆட்டங்களையும், கூத்துக்களையும், அலங்காரங்களையும் காட்டி வாக்குகளை எடுத்து விடுவார்கள். அவர்கள்தான் மக்கள் பிரதிநிதிகள் என்று கருதப்படுபவர்களாக இருந்தார்கள்.
சிதறிக்கிடந்த சமுதாயத்தை திசை திருப்புவது என்பது நினைத்துப்
166

அப்துல் மஜீத் ஆலிம்
பார்க்கக்கூடிய ஒரு விடயமல்ல. தலைவர் அவர்கள் அதைத்தான் செய்தார்கள். அதனால் இந்த நூற்றாண்டிலோ, வருகின்ற நூற்றாண்டிலோ இப்படியான இது போன்ற ஒரு அரசியல் தலைவரை எந்த நாடும் காணமுடியாது. ஏனென்றால், இப்படியான கஷ்டத்தை அனுபவிக்க இந்த நவீன நூற்றாண்டிலே யார்தான் முன்னுக்கு வரப்போகின்றார்கள்? அரசியல் மட்டத்தில் உயர்ந்தவர்களெல்லாம் நிம்மதியாக வீடுகளில் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் பட்டம், பதவிகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தலைவர் அவர்களுக்கு ஓய்வும் இல்லை, ஒழிச்சலும் இல்லை. நேரத்துக்கு உணவும் இல்லை, நிம்மதியான உறக்கமும் இல்லை. சமுதாய மட்டத்தில் ஏதோ இன்றும் பெரும் பெரும் வேலைகளைத் தேடிக்கொண்டிருப்பதில்தான் அவர்களுடைய முழுக்கவனமும் சென்றுகொண்டிருக்கின்றது.
தலைவர் அவர்கள் அப்பொழுது அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்கள்: "தலைவர் ஒருவர் இல்லாத காரணத்தினால் தான் நான் தலைவராக இருக்கின்றேன். எனது பொறுப்பை சுமக்கக்கூடிய சரியான ஒருவர் கிடைத்தால் அவரிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்து விடுவேன். அப்படி ஒருவர் கிடைக்கும் வரையில்தான் நான் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறேன்” என்பார்கள். ஆனால் அவர்கள் சுமந்திருக்கும் அந்தப் பாரத்தை தலையில் தாங்குவதற்கு இதுவரை ஒருவர் தோன்றவில்லை. இதற்குப் பிறகும் இந்த சுமையைத் தாங்க யாருக்குத்தான் முடியும். கடைசி மூச்சுவரை அந்தப் பாரச்சுமை தலைவர் அவர்களை விட்டு ஒருபோதும் அகலப்போவதில்லை என்பது எனக்கு உறுதியாகத் தெரிகிறது.
சுணங்கித் திறக்கும் சுரங்கம்!
தலைவர் அவர்களை நான் மறைமுகமான ஒரு ஆத்மீக ஞானியாகக் காண்கிறேன். இது இன்னும் விசாலமாக வெளிப்படாத ஒரு விடயமாகும். ஏற்கனவே, அது வெளிப்பட இருந்தது. தலைவர் அவர்கள் ஒரு ஆத்மீக ஞானியாக இப்போதே அரசோச்ச வேண்டி இருந்தது. ஆனால், கடுமையான அரசியல் திருப்புமுனையின் காரணமாக அந்தத் துறை மெளனம் சாதிக்கின்றது. எப்படியென்றாலும், அரசியலிலே தொடக்கப்பட்ட ஆச்சரிய வாழ்வு
ஆத்மீக அரசராகத்தான் நிறைவு பெறும் என்பது எனது
167

Page 87
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
எதிர்பார்ப்பாகும். நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுதே தலைவர் அவர்கள் ஒரு ஆத்மீகப் பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருப்பது எனக்குத் தெரியவருகிறது.
ஆயிரம் வேலைகளுக்கு மத்தியில் ஆத்மீக அறிஞர்களை சந்திக்கும் வேலைகளில் தலைவர் அவர்கள் என்னையும் வருமாறு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய இந்த ஆத்மீக விடயங்கள் இரகசியமாகச் சென்றுகொண்டிருக்கின்றன. அவர்களை உலகம் கண்டுகொள்வதும் இல்லை. இவர்கள் காட்டிக்கொள்வதும் இல்லை. காலம் வரும்பொழுது அதுமுற்றி, பழுத்து, சுவையான கனிகளைத் தரும் என்பதில் எனக்கு ஐயமே இல்லை.
தலைவர் அவர்கள் எந்த வேலையில் இறங்கினாலும் அதில் ஆச்சரியப்படத்தக்க வெற்றியை அமைத்துவிடுவார்கள். ஆத்மீகத் துறையில் அவர்கள் தீர்மானத்துடன் காலெடுத்து வைத்தார்கள் என்றால் பெரும் பக்த கோடிகள் அவர்களுக்குப் பின்னால் திரண்டுவிடும். ஆனால் அந்தத் தங்கம் நிறைந்த சுரங்கப் பாதை இன்னும் பூட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சுரங்கம் திறக்கப்படக்கூடிய நாள் நிச்சயம் வரும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இவ்வளவு பெரிய அரசியல் சுமைகளைச் சுமந்துகொண்டு இரவு பகலாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் கெளரவத் தலைவர் அவர்கள் கஷ்டத்துடன் நேரத்தை ஒதுக்கி ஆத்மீக ஞானிகளை சந்திக்கவும் செல்கிறார்கள். மறைமுகமான ஆத்மீக சக்திகளை அவர்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு அரிய பெரிய விஷயம்.
பிற்பகல் விளைந்தும் இளைப்பாறவில்லை
அரசியலின் அத்தியாயம் இனிதே வளர்ந்து அது முற்றி அந்த மரம் கூட கிளைவிட்டு பெரும் நிழலை கொடுக்கத் தொடங்கும் பொழுது அந்த நிழலுக்கடியில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் அளவுக்கு தலைவர் அவர்களுடைய நிலை இருக்காது. எல்லோரும் தாராளமாக இளைப்பாறுங்கள் என்று விட்டு விட்டு முடிவே இல்லாத பேரின்ப நிழல் ராஜ்யம் ஒன்றை உருவாக்கும் வேலையில் அவர்கள் தீவிரமாக இறங்கி விடலாம். அந்த சாத்தியக் கூறுகள் தான் எனது கண்களுக்குப் புலப்படுகின்றன."ஆத்மீக அரசராக உமது வாழ்வு ஒயட்டும் என்று நான் தலைவர் அவர்களை வாழ்த்தி பிரார்த்திக்கின்றேன்.
68

அப்துல் மஜீத் ஆலிம்
காந்தியையும் வென்ற மனிதக் காழ்ப்புணர்வுகள்
மகாத்மா காந்தி அடிகளார் ஒரு மாபெரும் அரசியல்வாதி. அதுமட்டுமல்ல, அவர் அரசியல் ஞானி. அதுமட்டுமல்ல, அவர் ஆத்மீக அரசர். அவருடைய இயற்கைத் தலைவிதி ஆத்மீகமாகும். ஆனால் இந்தியாவின் விடுதலை மிகவும் கட்டாயமாக இருந்தது. ஆகவே அவர் தம்மை அந்த வேலைக்குத் திசை திருப்பினார். அரைநூற்றாண்டு இரவு பகலாக உழைத்து இந்தியாவை மீட்டார். அப்பொழுது அவருக்கு வயது 90 இருக்கலாம். இந்திய விடுதலைக்காக அவர் உழைத்துக்கொண்டிருக்கும் அதே காலத்தில் ஆத்மீக வழியிலும் முன்னேறத் தொடங்கி விட்டார். அதனால் அவரை மனித கோடிகள் அரை நிர்வாணப் பக்கிரியாக ஆத்மீகக் கோலத்திலேயே பார்த்தது. அவருக்கு அரசியல் ருசிக்கவில்லை. ஆனால் அவருக்கு அது ஒரு கட்டாய வேலையாகி விட்டது. அந்த வேலைக்கு மத்தியில் ஆத்மீக இன்பத்தில் அவர் மூழ்கிக் கிடந்தார். அவருடைய உணவு, உடை, உறக்கம், புலன் இச்சைகள் அனைத்திலும் ஒரு பயிற்சியைக் கொண்டுவந்து பெரும் ஒழுக்கக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டார்.
தன்னை வெல்லும் பயிற்சியில் வெற்றி பெற்றார். புலன் இச்சைகளை அடக்கும் பயிற்சியிலும் அவர் தேர்வு பெற்றார். உலகத்திலே அவர் வாழ்ந்த காலத்தில் இப்புவியில் அவரைப் போன்ற ஒரு மனிதர் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு அவருடைய மகாத்மியம் சுடர்வீசியது. அவரைப்பற்றி இன்னும் அதிகமாக எழுதுவது என்றால் அவருடைய அதிகமான விடயங்களில் எமது நபி (ஸல்) அவர்களை ஆதாரமாக வைத்து வாழ்ந்தார்கள் 616.016) ПI D.
இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தபோது விடுதலை வீரர்களை வைத்து அவர் உரையாற்றும்போது, “நீங்கள் மக்கத்து மாநபிகளின் தோழர்களான அபூபக்கர், உமர் ஆகியோர் போன்று ஆட்சி செலுத்த வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். அவர் புனித குர்ஆனைக்கூட அரைவாசி மனனம் செய்திருந்தார் என்று கூறப்படுகிறது. "நபிகளாரின் வரலாற்றைப் படித்துவிட்டு நான் தேம்பித் தேம்பி அழுதேன்’ என்று அவரே எழுதுகிறார். அவர் ஒருபோதும் சிலைகளை வணங்கவும் இல்லை. அவர் சென்ற பாதை அலாதியான ஒரு பாதை.
169

Page 88
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
இந்தியாவுக்கு விடுதலை கிடைத்ததும் டில்லி மாநகரில் விடுதலை விழா கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மனித கோடிகள் மகிழ்ச்சியில் திரண்டு கொண்டிருந்தனர்.
இவர் தமக்கு அணிவிக்கப்பட்ட பெறுமதியான மாலையைக் கழற்றி ஜவஹர்லால் நேருவின் கழுத்தில் போட்டார். இனி எனது வேலை முடிந்துவிட்டது என்று சொல்வது போன்று வெளியாகிச் சென்று விட்டார். விடுதலை விழா டில்லி மாநகரில் நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது நவகாளியிலே ஹிந்துக்களின் ஒரு பெருங்கூட்டம் நெருங்கிக்கொண்டு வந்தபொழுது மகாத்மா காந்தி திடீரென்று அவர்கள் முன் காட்சி வழங்கினார். அனைவரும் அதிர்ந்து நின்றனர். காந்தி அடிகளார் அவர்களைப் பார்த்து “எனது முதுகுக்கு மேலால் சென்று உள்ள பள்ளிவாசலை உடையுங்கள்” என்றார். அத்தனைபேரும் திரும்பிச் சென்றுவிட்டனர். இந்தப் பின்னணியிலேயேதான் காந்திஜீயின் கொலையும் பிறகு இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
அவர் சொன்னார்: “நான் மக்களுக்கு ஆத்மீகச் சேவை செய்துகொண்டு 120 வருடங்கள் உலகில் வாழ நினைக்கிறேன். ஆனால் எனது மக்கள் அதுவரையில் என்னை விட்டுவைக்க மாட்டார்கள். நான் கூடிய விரைவில் பிரயாணமாகி விடுவேன்.” அதன்படியே இந்திய விடுதலை கிடைத்து 6 மாதங்களில் மகாத்மா காந்தி கோட்ஸேயின் குண்டுகளுக்கு இரையாகினார். தம்மைக் கொலை செய்தவரைக் கூட தண்டிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொண்டு இறந்தவர்தான் மகாத்மா காந்தி
விரயமாகாத வெளிநாட்டு விஜயங்கள்
நமது தலைவா அவர்கள் பட்டம் பதவிகளை சுமந்துகொண்டிருக்கிறார்கள். சமுதாய்த்தின் இன்றியமையாத தேவைகளுக்காக அவைகளைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள். அதில் எந்த குஷியையும் அவர்கள் காணவில்லை. அவர்களுடைய அரசியலைக் கொண்டு சமுதாயம் நன்மை அடைவதைத் தவிர அவர் காணப்போவது ஆத்மீகத் திருப்தி ஒன்றுதான். அதனால் தான் தலைவர் அவர்களுடைய ஆத்மீக அத்தியாயமும் தோண்டப் படாத சுரங்கம் போன்று காட்சி வழங்கிக் கொண்டிருக்கின்றது.
17O

அப்துல் மஜீத் ஆலிம்
கெளரவ தலைவரவர்கள் சமீபத்தில் லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்தார்கள். அவர்களுடன் துணையாக ஜனாப் அப்துல் ஹைய் அவர்களும் சென்றிருந்தார். அந்தப் பிரயாணத்தில் தலைவர் அவர்கள் உலக உருண்டையை சுற்றி வந்தார்கள். அவர்கள் செல்லும்போது, நான் துஆ ஓதி வழியனுப்பி வைத்தேன். அவர்கள் வந்திறங்கும்போது, வீட்டுவாசலில் நின்று அவர்களை வரவேற்றேன். சில அனுபவங்களை தலைவர் அவர்கள் என்னிடம் கதைத்தார்கள். ஏறக்குறைய இருபத்தேழாயிரம் மை ல் களை தலைவர் அவர்கள் கடந்திருக்கிறார்கள். நாடு திரும்பிக் கொண்டிருக்கும் சமயத்தில் பசுபிக் சமுத்திரத்துக்கு மேலால் விமானம் பறந்துகொண்டிருக்கும் பொழுது எனது உள்ளம் நெகிழ்ந்தது என்று கூறினார்கள்.
வேலையைத் தேடி விரையும் வேட்கை
தலைவர் அவர்கள் அரசியல் குதிரை முதுகிலே ஒரு ஆத்மீக ஞானியாக அமர்ந்துள்ளதை நான் நினைத்து மகிழ்கிறேன். இரவிலே சிறிது நேரம் படுக்கை விரிப்புக்குச் செல்வார்கள். அங்கு தூங்குகிற நேரத்தில் ஆத்மீகக் கிரந்தங்களை வைத்து ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். அப்பொழுது கண்கள் மூடப்படும், சிறிது நேரம் ஒருகண் அயர்வு, விழிப்பு வர திரும்பவும் மூளை சுழலத் தொடங்கிவிடும். இப்படித்தான் அவர்களது காலம் சென்று கொண்டிருக்கிறது. அதிகாலையில் நான் தலைவரவர்களுடைய வீட்டுக்குச் செல்வேன். முக்கியமான பலரும் சில நேரங்களில் வந்து சந்திக்க அமர்ந்திருப்பர். அங்கு போனாலும் நான் எனது வேலைகளையும் கையில் எடுத்துக்கொண்டே போய்விடுவேன். அதனால் காத்துக்கொண்டு கிடக்க வேண்டுமென்ற பிரச்சினை எனக்கில்லை. என்பாட்டுக்கு நான் எழுதிக் கொண்டிருப்பேன்.
ஊழியர்களிடம் யாரும் தலைவரவர்களைப் பற்றிக் கேட்டால், தூக்கம் என்று சொல்லிவிடுவார்கள். ஏனென்றால் பின்னிரவில்தான் தலைவரவர்கள் அதிகமாகத் தூங்கச் செல்வது வழக்கம். ஊழியர்களுடைய கணிப்பிலும் தவறில்லை. ஆனால், தலைவரவர்கள் தங்கள் படுக்கையறையிலும் வேறு விதமான வேலைகளை அமைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஊழியர்கள் அறியாமலிருக்கலாம். தலைவரவர்கள் அறையிலிருந்து வெளியாகி வரும்பொழுது, தூங்கியெழும்பி வருவது போன்றிருக்காது. கடும்
171

Page 89
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
வேலையில் மூழ்கிக் கிடந்து வரும் களைப்புத் தோற்றம்தான் விளங்கும்.
ஒருநாள் காலையில் நான் சென்று எழுதிக்கொண்டிருந்தேன். ஊழியர் செனவிரத்ன வந்தார். தலைவரவர்கள் எப்படி இருக்கிறார்களென்று இலேசாகக் கேட்டேன். தூக்கம் என்றார். நான் என்பாட்டுக்கு எழுதிக்கொண்டிருந்தேன். பிறகு, தலைவரவர்கள் வந்தார்கள். நான் கேட்டேன்: “சேர்! நன்றாகத் தூங்கக் கிடைத்ததா?” தலைவரவர்கள் சொன்னார்கள்: “இவ்வளவு நேரமாக “யாசீன்’ சூராவை கவிதையில் எழுதிவிட்டு வருகின்றேன்’ இப்படி படுக்கையறையிலும் முக்கியமான வேலைகளை அமைத்து வைத்துக்கொண்டு ஓய்வு அறையும் ஒரு ஆத்மீக அலுவலகமுமாக மாறிய நிலையில் தலைவரவர்களுடைய வாழ்நாட்கள் சென்று கொண்டிருக்கின்றன.
அதுமட்டுமல்ல, பிரயாணத்திலும் தலைவரவர்கள் ஏதாவது வேலையில் ஈடுபட்டிருப்பார்கள். இல்லாவிட்டால் சற்று தூங்கி ஓய்வெடுத்துக் கொள்வார்கள். ஏதாவது வேலை முடியும் கட்டத்தில் தலைவரவர்கள் அடுத்த வேலையைத் தேடிக் கொள்வார்கள். காரணமில்லாமல் ஒரு மணி நேரத்தைக்கூட அவர்கள் கடத்த மாட்டார்கள்.
அறிஞர் அப்துல் றஹீம் தமது நூலொன்றில் எழுதியுள்ளது எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. “வேலை உன்னைத் தேடும் வரையில் நீ காத்துக் கொண்டிருக்காதே. உனக்கு வேலை இல்லையென்றால் நீ வேலையொன்றைத் தேடி கையில் எடுத்துக் கொள். இல்லையென்றால் விதி உனக்கு வேலை பார்த்து விடும்.”
இன்னுமொரு அறிஞன் சொன்னான்: "ஒய்வு என்பது அவ்வளவு நல்ல ஒளஷதமல்ல. அதை அளவாகப் பாவித்துக் கொள்” வேறொரு அறிஞர் சொன்னார்: "வேலையை மாற்றுவது தான் ஒய்வாகும்”
நெப்போலியன் கடுமையாக ஓயாது வேலைகளில் விழுந்து கிடப்பான். ஒரு நாளைக்கு நூறு வார்த்தைகள்கூட அவன் பேசியதே கிடையாது. அவ்வளவும் செயலாகத்தானிருக்கும். அவனுக்குக் களைப்பு வரும்பொழுது வெந்நீரில் நன்றாகக் குளித்துவிட்டு வந்து புதுத் தெம்புடன் அடுத்த வேலையில் இறங்கி விடுவான்.
172

அப்துல் மஜீத் ஆலிம்
சரித்திரம் படைத்தவர்களுடைய செயல் நடவடிக்கைகளை இப்படியெல்லாம் நாம் அறிகிறோம்.
நமது தலைவர வர்கள் வெந்நீரெல் லாம் தேடிக் கொண்டிருப்பதில்லை. களைப்பு வரும் பொழுதெல்லாம் குளிர்ந்த தண்ணீரில் குளித்து விடுவார்கள். தண்ணிருக்குள் மூழ்கி மீன்கள் போல் கண்களைத் திறந்து கொண்டிருப்பார்கள். இப்படி தண்ணீராலேயே களைப்பைப் போக்கி இரவு பகலாக அலுவலாற்றிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
ஒரு நாள் பொலன்னறுவை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு இரவு நேரம் மாத்தளை மாவட்டத்துக்குள் புகுந்தோம். அங்கும் பல மேடைகளைக் கடந்து கடைசியில் எனது ஊராகிய தேவஹ?வைக்குச் சென்றோம். அங்கு ஜனாப் நிஜாம்தீன் அபேட்சகராகப் போட்டியிட்டுக் கொண்டிருந்தார். அங்கு கடைசிக் கூட்டம் முடிவடையும் பொழுது இரவு இரண்டு மணியாக இருந்தது. பிறகு நாங்கள் நிஜாமுதீனுடைய வீட்டுக்குச் சென்றோம். அங்கு இரவு உணவு தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தலைவரவர்களுக்கு சாப்பிட முடியாத நிலை இருந்தது.
உடனே நான் தலைவரவர்களை அழைத்துக் கொண்டு எனது தாயார் வீட்டுக்கு வந்து விட்டேன். அப்பொழுது தலைவரவர்கள் களைப்பு மிகுதியால் உடலை ஒரு விதமாக முறுக்கிக் கொண்டிருந்தார்கள். நிலைமையை விளங்கிக் கொண்ட நான், “சேர்! குளிப்போம்?” என்று கேட்டேன். தலைவரவர்கள் உடனே எழுந்து நின்றார்கள். “ஆம்! குளிப்போம்” என்றார்கள். உடனே சென்று குளித்தோம். குளித்து விட்டு வந்து தலைவரவர்கள் புத்துணர்ச்சியுடன் அமர்ந்தார்கள். ஒரு கோப்பிக் கோப்பையை வைத்துக் கொண்டு அமைதியாக அருந்திக் கொண்டிருந்தார்கள்.
பிறகு தலைவரவர்களே ஜிப்பை செலுத்தத் தொடங்கினார்கள். நான் முன்னுக்கு அமர்ந்து பேசிக் கொண்டே வந்தேன். அப்படியே நாங்கள் குருநாகல் நகரை அடைந்து, ஜனாப் அப்துல் ரஸ்"லுடைய வீட்டில் சிறிது நேரம் ஒய்வெடுத்தோம்.
மறுபடியும் தலைவரவர்கள் அங்கு நன்றாகக் குளித்தார்கள். அதன் பின் கொழும்பு புறப்பட்டோம். இப்படியாக கெளரவ தலைவரவர்கள் குளித்துக் குளித்தே களைப்பைப் போக்கி வருவார்கள். இப்படியே நாட்கள் ஒடிக் கொண்டிருக்கின்றன.
173

Page 90
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
எல்லோரையும் ஈர்க்கும் இனிமை
கெளரவ தலைவரவர்களிடத்தில் உள்ள ஆச்சரியமான பக்குவங்களிலொன்றுதான், சகல மக்களுடனும் இணைந்து வாழும் தன்மையாகும். ஒரு தலைவருக்கு மிகவும் இன்றியமையாத தன்மை அதுவாகும். அது ஒரு தலைவரிடத்தில் இல்லாத பட்சத்தில் தலைமை தாங்குவதே பெருங்கஷடமான காரியமாகி விடும்.
மனிதர்கள் பல்வேறு பட்ட தன்மைகளிலுள்ளவர்கள். ஒவ்வொருவ ருடைய குணமும் ஒவ்வொரு தன்மையிலிருக்கும். அதிலும் வெளித்தோற்றம் ஒரு விதமாக இருக்கும். உள் தோற்றம் வேறு விதமாக இருக்கும்.
கவிஞர் ஸாஅதீ பின்வருமாறு எழுதுகிறார்: "என்னுடைய வெளித்தோற்றத்தைக் கண்டு எல்லோரும் என்னைப் போற்றுகின்றனர். என்னை மேதை என்று வாழ்த்துகின்றனர். ஆனால் என் உள்தோற்றத்தை அவர்கள் கண்டால் அடுத்த நிமிடம் என்னைப் பாய்ந்து கொன்று விடுவர்.”
மனிதர்களின் உள்ளும் புறமும் சம்பந்தப்பட்ட வரையில் இதுதான் ஆச்சரியமான உண்மையாகும். மனிதர்களுக்கு உள்ளே உள்ள கணங்கள் வெளித்தோற்றத்துக்கு விளங்க ஆரம்பிக்கின்றன. அப்பொழுது சகிக்க முடியாத நிலை உண்டாகி விடுகிறது.
கெளரவ தலைவரவர்கள் கட்சியை ஆரம்பித்த காலத்தில் பல பகுதிகளிலிருந்தும், பல்வேறுபட்ட துறைகளிலிருந்தும் தொண்டர்களும், ஆதரவாளர்களும் வந்து நிறையத் தொடங்கினர்.
அலுவலகத்தில் வந்து கை கொடுத்தனர்; கட்டித் தழுவினர். “சேர்’ என்று வாய் நிறைய, உள்ளம் குளிர அழைத்தனர். எங்கள் உயிரைத் தருவோம், எங்கள் ஆயுளைத் தருவோம், எங்கள் அனைத்தையும் தருவோம் என நடத்தைகளில் காட்டி நின்றனர்.
அந்தக் காலகட்டங்களில் நான் டாம் விதி அலுவலகத்தில் வைத்து இந்தக் கட்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பேன். ஒவ்வொருவருடைய உணர்வும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.
கெளரவ தலைவரவர்கள் அனைவரையும் வரவேற்பார்கள். அனைவருடனும் பழகுவார்கள். எவருடைய குறைவான
174

அப்துல் மஜீத் ஆலிம்
தன்மைகளையும் கண்டு கொள்ளமாட்டார்கள். அவரவர்களுடைய தன்மைகளுக்கேற்ப அமைதியாகவும் அன்பாகவும் நடந்து கொள்வார்கள்.
அந்தக் காலகட்டங்களில் அவர்களை ஏமாற்றியவர்கள் பலர். பொய் சொன்னவர்கள் பலர். வெளியேறிச் சென்றவர்கள் பலர். மனநோவைக் கொடுத்தவர்கள் பலர். அநியாயம் செய்தவர்கள் பலர். அத்தனையையும் தாங்கிக் கொண்டு எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தலைவரவர்கள் நடந்த கொள்ளும் முறையே அலாதியானது.
உண்மையில் நமது அன்றாட வாழ்வில் நான்கு பேர்களுடன் நெருங்கிப் பழகி வாழும் பொழுது அவர்களுடைய சில குணங்களைக் கண்டு சகிக்க முடியாமல் போய்விடுகிறது. வாழ்க்கைக்கு ஒரு நண்பனைத் தெரிவு செய்து கொள்வதே வாழ்நாள் முழுவதும் முடியாத காரியமாக அமைந்து விடுகிறது.
வாழ்க்கையில் ஒரு மனைவியோடு அன்பாக வாழ்ந்து கொள்வதே பலருக்குப் பெரும் பிரச்சினையாக உள்ளது.
ஏனென்றால் மனித உள்ளங்கள் பலதரப்பட்டவை. நெருங்கிப் பழகப் போனால் சகிக்கமுடியாத தன்மையாக வெளியாகி உள்ளத்தைப் புண்ணாக்கி விடுகிறது.
நெஞ்சகப் பெட்டகத்தில் வஞ்சகர்கள் பட்டியல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட ஹஸ்ரத் ஹ?தைபா (ரலி) என்ற தோழரிடம் ஒரு பெயர்ப் பட்டியல் கொடுத்திருந்தார்கள். அந்தப் பட்டியல் அந்தத் தோழரிடம் மிகவும் இரகசியமாக இருந்து வந்தது.
நயவஞ்சகர்களுடைய பெயர் வரிசை அதில் இருந்தது. எவருக்காவது பிற் காலத்தில் பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பதென்றால், அந்தப் பட்டியல் இரகசியமாக ஆராயப்பட்டு வந்தது.
ரிவாயத்திலே வருகிறது: ஹஸரத் உமர் (ரலி) ஒரு தடவை
ஹ?தைபா (ரலி) அவர்களை அணுகி அழுதவர்களாக, “என்னுடைய பெயரும் அந்தப் பட்டியலில் இருக்கிறதா என்று சொல்லுங்கள்?”
175

Page 91
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
என்று கெஞ்சினார்கள். அப்படிக் கெஞ்சியும் விவரத்தை எடுத்துக் கொள்ள முடியாது போய்விட்டது. அவ்வளவு இரகசியமாக அந்தப் பட்டியல் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது.
அந்தக் காலங்களில் நபிகளாருடைய பள்ளிவாசலிலே நயவஞ்சகர்கள் முதலாவது அணியில் நின்று வணக்கம் புரிந்து வந்தார்கள். பார்வைக்கு அவ்வளவு நல்லவர்களாகத் தோற்றம் வழங்கி வந்துள்ளார்கள். நயவஞ்சகர்களுடைய ஏமாற்று வித்தைகளில் நபி(ஸல்) அவர்கள் பெருங்கஷடங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளார்கள். எத்தனையோ பொல்லாதவர்கள் நபித்தோழர்களை நபிகளாரிடம் மார்க்கப் பிரச்சாரத்துக்காகப் பொய் சொல்லி அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார்கள்.
உஹ துப் போருக்கு நபிகளாருடன் துணையாக முன்னூறுபேர்களை அழைத்து வந்த அப்துல்லாஹ் இபுனு உபய் என்பவன் யுத்தம் நடக்கும் தறுவாயில் நபிகளாரை விட்டும் ஆட்களையும் எடுத்துக் கொண்டு திரும்பிவிட்டான்.
மனித சமுதாயத்தைச் சீர்திருத்த வந்த நபி(ஸல்) அவர்கள் நயவஞ்சகர்களுடன் பட்டபாடுகள் கொஞ்சமல்ல. இதனால்தான் எத்தனையோ ஞானிகள் மனிதக் கும்பலிலிருந்து வாழ்வில் ஒரமாகி விட்டதைப் பார்க்கின்றோம்.
நமது கெளரவத் தலைவரவர்கள் இந்த விடயங்களில் பட்ட பாடுகள் சாதாரணமானதல்ல. அவற்றை எழுதுவதும் எனக்குப் பெருஞ் சிரமமாக இருக்கிறது.
சுலபமில்லாத பொறுமை - சுகம் கண்ட விட்டுக்கொருப்பு
தலைவரவர்கள் இந்த விசயத்தில் பெரும் வெற்றி கண்டு விட்டார்கள். அதற்குரிய சரியான காரணமென்னவென்றால், தொல்லை கொடுத்தவர்களுடைய தொல்லைகளையெல்லாம் தலைவரவர்கள் தாங்கிக் கொண்டார்கள்.
அநியாயம் செய்தவர்களுடைய அநியாயச் செயல்களையெல்லாம் அவர்கள் தாங்கிக் கொண்டார்கள். அவைகளை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. மற்றவர்களுடைய அநியாயங்களை மனதில் வைத்துக் கொண்டிருப்பதில்லை. அநியாயம் செய்தவர்கள்
176

அப்துல் மஜீத் ஆலிம்
கூட திரும்பத் திரும்ப வந்து அவர்களிடம் பல உதவிகளைப் பெற்றுச் சென்றுள்ளனர். இன்னும் பெற்றுக் கொண்டே வருகின்றனர். அது என்றும் நடந்து "ெண்டிருக்கிறது.
ஒவ்வொருவருடைய தன்மையையும் தலைவரவர்கள் விளங்கி வைத்துள்ளார்கள். ஆனால், அது பற்றி அவர்கள் அலட்டிக் கொள்வதில்லை. நல்ல தன்மைகளை எடுத்துக் கொண்டு, மற்றவைகளை அப்படியே விட்டு விடுவார்கள். அநியாயம் செய்தவனை அனுதாபத்துடன் நோக்கும் தன்மைகளை அவர்களிடம் தினமும் பார்க்க முடிகிறது.
நபி ஈஸா (அலை) சொன்னதாகக் கூறப்படுகிறது: “ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தையும் கொடு” அந்தச் சொல் விட்டுக் கொடுக்கும் தன்மையை அதிகமாகச் சுட்டிக் காட்டுகிறது. கெளரவ தலைவரவர்கள் விட்டுக் கொடுத்துக் கொடுத்தே தங்கள் வாழ்வில் நீண்ட காலத்தைக் கடத்தி முடித்து விட்டார்கள். தலைவரவர்களுக்கு விட்டுக் கொடுப்பதற்கு இனி எதுவுமே இல்லை. அத்தனையையும் விட்டுக் கொடுத்து தன்னை பக்குவப்படுத்திக் கொண்ட ஒருவர்தாம் நம் தலைவரவர்கள்.
இறைவன் அவனுடைய புறத்திலிருந்து அவர்களுக்குப் புனர்வாழ்வைக் கொடுத்துள்ளான். அந்த வாழ்வின் நிழலில் அனைவரும் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றனர்.
குத்துக்கரணங்களால் ஏற்பட்ட குத்துக் காயங்கள்
புண்படுத்தப்பட்டு அந்தக் காயங்களை சொறிவதிலே இன்பங்கண்டு கொண்டிருப்பவர்கள்தாம் நம் தலைவரவர்கள். அவர்களுடைய உள்ளத்தைக் கழற்றி ஒரு தட்டில் வைத்து தகுந்த ஒரு கருவியை வைத்துப் பார்த்தால் ஆயிரமாயிரம் குத்துக் காயங்களைப் பார்க்கலாம். அந்தக் காயங்களை எண்ணியெண்ணி இன்பம் கண்டு கொண்டிருப்பவர்கள்தாம் நம் தலைவரவர்கள்.
இறைவனுடைய ஞான நாதர்களுடைய தன்மைகளும் இவை தாம். அவர்கள் தங்களுக்கு அநியாயம் செய்தவர்களை அமைதியான புன்னகையுடன் நோக்குவர். எவரைப் பற்றியும் எந்தக் குறைவான தன்மைகளும் அவர்களிடத்தில் இருப்பதில்லை. நிறைவான தன்மைகளைப் பற்றி அவர்கள் கவலைப் படுவதுமில்லை.
177

Page 92
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
தங்களுடைய உள்ளங்களை இறைவன் வசம் ஒப்படைத்துவிட்ட அவர்கள் அமைதியாக இருப்பர்.
நமது தலைவரவர்கள் தகுதியே இல்லாதவர்களுக்குப் பெரும் பதவிகளை வழங்கி, பிறகு அவர்களால் காயப்பட்டிருக்கிறார்கள். வாகனங்களை நினைத்தும் பார்த்திராதவர்களுக்கு வாகனங்கள் கிடைக்க வழி செய்தார்கள். டெலிபோனைத் தொட்டும் பார்த்தில்லாதவர்களுக்கு டெலிபோன்கள் கிடைக்க வழி செய்தார்கள். இப்படி அந்தக் காலத்தில் பாதையில் கிடந்த பலரை பஜிரோக்களில் ஏற்றிப் பவனி வர வைத்தார்கள். ஆனால் எத்தனையோ பேர் அதே பஜிரோக் களால் தலைவரவர்களையும், அவர்களுடைய லட்சியங்களையும் முட்டி மோதினார்களென்றால், இது தாங்கிக் கொள்ளக்கூடிய விடயமா?
நினைக்க நினைக்க நெஞ்சு வெடிக்கும் விடயமல்லவா? ஆனால் தலைவரவர்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டார்கள். அந்தக் கதைகளை எழுதவதென்றால் , எனக்கு அதற் கென்று நூற்றுக்கணக்கான பக்கங்கள் தேவைப்படுகின்றன. அவைகளை எழுதுவது பற்றி நான் வெகு தூரத்துக்கு யோசிக்கிறேன்.
நான் எதைச் சொல்லத் துடிக்கின்றேனென்றால், இத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு அவைகளைக் கணக்கெடுக்காமலிருப்பது, அதாவது நன்றி கெட்டவனுடைய நயவஞ்சகத்தைப் பார்த்துக் கொண்டு அதை சகித்துக் கொண்டிருக்கும் தன்மை அப்பப்பா. அது இலகுவில் ஒருவரால் தாங்கமுடிந்ததல்ல. நெப்போலியன் கூட சொன்னானல்லவா? அந்தத் தன்மையை மட்டும் என்னால் தாங்கவே முடியாதென்று.
பாதையில் கிடந்தவர்களைப் பஜிரோவில் ஏற்றிவிட, அவர்கள் அதே பஜிரோவால் ஏற்றியவர்களை முட்டி மோதினால் அதைத் தாங்கிக்கொள்ள எப்படிப்பட்ட இதயம் தேவைப்படுகிறது?
சுற்றி வளைக்கத் தேவையில்லை, நம் தலைவரவர்களுக்கு நேருக்கு நேர் நடந்த விடயம் இதுதான். இவைகளைத் தாங்குவதற்கு எப்படியான இதயம்தான் தேவையோ?
சிரேஷ்டனாவதற்குத் தேவையான சீரான நற்குணங்கள்!
ஒரு பெரியார் கூறியது எனக்கு நினைவுக்கு வருகிறது. அதாவது
78

அப்துல் மஜீத் ஆலிம்
ஒரு மனிதன் சிரேஷ்ட மனிதனாக மதிக்கப்படுவதற்கு அவனிடம் நாயுடைய பத்துக் குணங்கள் அமைய வேண்டுமென்றார். நாயுடைய அந்தக் குணங்கள் அமைந்தால்தான் அந்த மனிதனால் இந்தப் பூமியில் உயர்ந்து பொழ முடியும்; இல்லாவிட்டால் அது சாத்தியப்படவே மாட்டாது என்கிறார் அந்த அறிஞர்.
(1) நாய் நன்றியுடையது, ஒரு பிடி உணவு கொடுத்தால் போதும்; அது கண்ட இடமெல்லாம் வாலை ஆட்டி நன்றியைத் தெரிவித்துக் கொண்டே இருக்கும்.
(2) எஜமானுக்கு அடிபணியும் தன்மை. இது நாயிடம் சிரேஷ்டமாக அமைந்துள்ள ஒன்று.
(3) தன் கடமையை உணர்ந்த தன் மை. எஜமான் கட்டளையிடாமலேயே இரவு முழுவதும் விழித்து அது தன் கடமையில் ஈடுபட்டிருக்கும்.
(4) பழிவாங்காத்தன்மை. எவராவது அடித்துக் காயப்படுத்தி விட்டாலும் அது ஒரு போதும் திருப்பி அவரைப் பழிவாங்கவே மாட்டாது. அநியாயம் செய்தவரைப் பற்றி நாய்க்கு எந்தத் கவலையுமிருக்காது.
(5) கிடைத்ததை சாப்பிட்டுக் கொள்ளும் தன்மை. நாய் ஒருபோதும் பெரிய ஆடம்பர உணவுவகைகளை நினைத்துக் கொண்டிருக்காது. கிடைத்ததோடு திருப்தியடைந்து விடும்.
(6) பசித்திருக்கும் தன்மை. நாய் உணவு கிடைத்தால் சாப்பிடும் இல்லாவிட்டால் பசியோடு நேரத்தைப் போக்கும்.
(7) விழிக்கும் தன்மை. நாய் ஒரு போதும் நீண்ட நேரம் தொடர்ந்து படுப்பதில்லை. இரவில் மிகுந்த நேரம் விழித்துக் கொண்டே நேரத்தைக் கழிக்கும்.
(8) அகப்பட்ட இடத்தில் உறங்கிக் கொள்வது அதற்கு வசதியான படுக்கை ஏற்பாடுகள் தேவைப்படுவதில்லை; கிடைத்த இடத்தில் தலை வைத்துப் படுத்து எழுந்துவிடும்.
(9) கூலி எதிர்பாராமை. நாய் தன் கடமையைச் செய்து கொண்டே இருக்கும். அது ஒரு போதும் கூலியை எதிர்பார்த்துக் கொண்டிருக்காது.
179

Page 93
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
(10) ஓயாத இயக்கம். எந்த நேரமும் சுறுசுறுப்பாகவே இருக்கும். நாய்க்குரிய வேலையுமில்லை, ஓட்டத்தில் குறைச்சலுமில்லை என்பார்கள்.
மேலே கூறப்பட்ட இப் பத்துக் குணங்களும் ஒரு மனிதனிடத்தில் வராமல் அவன் சிரேஷ்ட மனிதனாக அமைய முடியாது என்பது ஞானிகளின் ஒருமித்த கருத்தாகும்.
நல்ல இக் குணங்களெல்லாம் நம் தலைவரவர்களிடம் அமைந்துள்ளதை நான் பார்க்கிறேன். அதனால்தான் அவர்கள் அத்தனை அநியாயங்களையும் தாங்கிக் கொண்டு தலைவராக நிலை பெற்றுள்ளார்களென்று கூறுகிறேன்.
தவப்பேறு சஹீத் ஹாஜியார்
உள்ளும் புறமும் ஒன்றாய் அமைந்த ஒரு மனிதரைத் தேடி, தலைவரவர்கள் நீண்ட காலம் தவம் கிடந்துள்ளார்கள். அந்தத் தவத்தின் மூலம் தலைவரவர்களுக்குக் கிடைக்கப் பெற்றவர் தான், சஹீத் ஹாஜியார் அவர்கள்.
சஹித் ஹாஜியார் அவர்களுடன் தலைவரவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள். உண்மையில் சம்பூரணமான ஒரு மனிதரைப் பார்க்க ஆசைப்பட்டால் கண்களை அகலத் திறந்து சஹீத் ஹாஜியார் அவர்களைப் பார்க்கலாம். கட்சிக்குக் கிடைத்த ஒரு மாணிக்கமாக அவர் திகழ்ந்தார். V
தலைவரவர்கள், சஹித் ஹாஜியாரை உள்ளத்தால் ஏற்றிப் போற்றி வந்தார்கள். தலைவரவர்கள் சஹீத் ஹாஜியாரைப் போன்று மனம் சாந்தி பெற்ற ஒரு மனிதரைத் தமது வாழ்வில் கண்டே இருக்கமாட்டார்களோ? என்று நான் நினைக்கின்றேன்.
ஆச்சரியமான ஒரு மனிதர். அற்புதமான ஒரு மனிதர். மனிதரில் மாணிக்கமாகி விட்ட ஒருவர்தான் சஹீத் ஹாஜியார் அவர்கள்.
அந்தக் காலகட்டத்தில், தலைவரவர்கள் கடும் சோதனைகளுக்கு முகம் கொடுத்திருந்த காலப் பகுதியில் தலைவரவர்களைத் தவிக்க விட்டுவிட்டு எத்தனையோ பேர் வெளியேறிச் சென்றனர். அந்தத் துன்ப உணர்வுகளை உள்ளத்திலே தாங்கிப் பிடித்துக் கொண்டு தலைவரவர்கள் துயருற்றுக் கொண்டிருந்த வேளையில் சஹீத்
180

அப்துல் மஜீத் ஆலிம்
ஹாஜியார் அவர்கள் இந்த உலகத்தை விட்டே விடைபெற்றார்கள். அந்தக் கொஞ்சக்காலமாக தலைவரவர்கள் பட்டபாடு எழுத்தில் வடிக்க முடியாமலிருக்கிறது.
சஹீத் ஹாஜியார் மரணித்த அன்றைய தினம் தலைவரவர்கள் அடிக்கடி கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த காட்சியை நான் பார்த்தேன். பூத உடல் அடக்க ஏற்பாட்டு வேலைகளில் தலைவரவர்கள் ஓடிஓடி வேலை செய்து கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.
அது திரு. பிரேமதாஸ் ஜனாதிபதியாக இருந்த காலம். ஜனாதிபதி பிரேமதாஸாவுக்குத் தலைவரவர்கள் இந்தத் தாங்க முடியாத துக்கச் செய்தியை அறிவித்தார்கள்.
திரு. பிரேமதாஸவும் சஹித் ஹாஜியாருடைய வீட்டுக்கு விஜயம் செய்து தலைவரவர்களுக்கும் சஹித் ஹாஜியாருடைய குடும்பத்தவர்களுக்கும் ஆறுதல் கூறினார்.
அப்பொழுது வொக்ஸல் லேன் அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்த காலம். கட்சிக்குச் சொந்தமான நிரந்தர அலுவலகம் அதுதான். அலுவலகம் கடும் 'பிஸியாக இருந்தது. ஏதோ! தேர்தல் கால வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இரவு நேரம் பத்து மணியிருக்கும். நானும் கட்சி அலுவலகத்திலிருந்தேன். அங்குமிங்கும் ஓடிக்கொண்டு ஏதோ வேலைகளில் ஈடுபட்டிருந்தேன். தொண்டர்கள், அபேட்சகர்களால் அலுவலகம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ஜனாப் சஹித் ஹாஜியார் அவர்கள் அங்குமிங்கும் அமைதியாக ஓடிக் கொண்டிருப்பதை நான் கவனித்தேன். மிகவும் மெளனமாகவே செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
மள்வானை தந்த மணிமுத்து!
இயற்கையிலேயே, சஹீத் ஹாஜியார் அவர்கள் மிகவும் மெளனமானவர். இலகுவில் அவருடைய வாய் திறபடாது. எவரைப் பற்றியும் எந்த ஒரு வார்த்தையும் அவருடைய வாயிலிருந்து வெளிவராது. கண்ணியத்திலும் கண்ணியமான ஒரு மனிதப் பிறவி
அன்றிரவு ஏதோ தமது கடமைகளைப் பூர்த்தி செய்வது போன்று செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். என்னிடத்திலும் ஒரு விடயத்தைப்
181

Page 94
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
பொறுப்படைத்தார்கள். இரண்டு வார்த்தைகள் என்னுடன் கதைத்தார்கள். அந்த இரண்டு வார்த்தைகள்தான், என்னுடன் பேசிய கடைசி வார்த்தைகள் என்பதை நான் அப்போது அறியவில்லை. நானும் அவசரத்தில் பேசி விடை பெற்றேன். சஹீத் ஹாஜியார் என்னுடன் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வார்கள். நான் உண்மையில் சஹீத் ஹாஜியாருடன் உயிரன்பு வைத்திருந்தேன். நான் பாதையில் போகும் போதெல்லாம் சஹீத் ஹாஜியாருடைய தொழில் நிலையத்துக்குச் சென்று பேசிவிட்டுச் செல்வேன்.
தலைவரவர்களுடைய உள்ளத்தையே வெற்றி கொண்டு விட்ட சஹித் ஹாஜியார் அவர்கள் எங்கள் உள்ளங்களை வெற்றி கொள்ளாமலிருப்பார்களா?
அன்றிரவு வொக்ஸல் லேன் அலுவலகத்திலிருந்து நான் வீட்டுக்கு வந்து தூங்கச் சென்றேன். இரவு பதினொரு மணியிருக்கும். எனக்கு ஓய்வும் தேவையாக இருந்தது. நான் உறங்கிக் கொண்டிருந்தேன். எனது தலை மாட்டிலேயே டெலிபோனிருந்தது.
டெலிபோன் மணியடிக்கும் சத்தத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நான், கனவில் போன்று விழித்து டெலிபோனைக் காதில் வைத்தேன்.
அப்பொழுதெல்லாம் எங்களுக்கு இரவுகளில் அனாமதேய டெலிபோன் அழைப்புக்கள் வரும். பயமுறுத்தும் குரல்கள். எச்சரிக்கைச் செய்திகள், கொலைப்பயமுறுத்தல்களுக்குக் குறைவே இல்லை.
தலைவரவர்களுக்கு தினந்தோறும் தவறாமல் அந்த நிலை இருக்கும். ஒருபோது தலைவரவர்கள் என்னிடம், அப்படி டெலிபோனில் பயங்கர ஏச்சுக்கள் வரும் சமயத்தில் டெலிபோனை அப்படியே மேஜையில் வைத்து விடுவேன் என்றார்கள். கிண்கிண் என்று ஒருவித சத்தம் வந்து கொண்டிருக்கும். நீண்ட நேரம் ஏசிவிட்டு பிறகு டெலிபோன் ஒய்ந்து விடும் என்று சிரித்துக்
கொண்டே சொன்னார்கள்.
இந்த அரசியல் பாதையில் எத்தனை அனுபவங்களைத் தான் சொல்லித் தீர்ப்பது?
அன்று நடு இரவு, எனக்கு டெலிபோன் வரும் பொழுது இரவு
182

அப்துல் மஜீத் ஆலிம்
இரண்டு மணி புதுக்கடை பாரூக் பேசினார். ஜனாப் பாரூக் விளையாட்டாகப் பொய்களும் சொல்லி என்னைத் திக்கு முக்காட வைப்பார். “சஹித் ஹாஜியார் காலமாகி விட்டார்கள்’ என்று அவர் சொன்னார். உண்மையில் நான் நம்பவே இல்லை. எப்படி நம்புவது? சற்று முன்புதான் நான் சஹித் ஹாஜியாருடன் கதைத்துவிட்டு வந்தேன். அதுவும் டெலிபோனில் பேசுபவர் பாரூக்தானே. என்னைத் தூங்கவிடாமல் போட்டு அலட்டுகிறார். அவருடைய வேலை அப்படித்தானே!
“மச்சான்! என்னைத் தூங்கவிடு; என்னைக் குழப்பாதே’ என்று
சொல்லி விட்டு டெலிபோனை வைத்துவிட்டேன்.
ஜனாப் பாரூக்கோடு (மச்சான் வா போ) என்று பேசி எனக்குப் பழகிப் போய் விட்டது. ஜனாப் பாரூக் என்னுடன் நெருக்கமாகவுமிருப்பார்; சண்டையும் பிடிப்பார்; இது பழகிப்போன விடயம்.
மறுபடியும், டெலிபோன் மணியடித்தது. டெலிபோனைக் காதில் எடுத்துக் கொண்டே, “இது என்ன பெரிய தொல்லையாக இருக்குது” என்று முணுமுணுத்தேன். அதே பாரூக்தான் "ஹஸரத் ஹஸரத்” என்ற சத்தம். "மச்சான் பாரூக் என்னைத் தூங்க விட மாட்டாயா?” என்று கேட்டேன்.
ஜனாப் பாரூக் சொன்னார்: “உண்மை சத்தியம் சஹீத் ஹாஜியார் காலமாகிவிட்டார்’ என்று: பிறகு நான் சொன்னேன்:
“மச்சான் பாரூக்! இப்ப இரண்டவருக்கு முன்பு தான் நான் சஹீத் ஹாஜியாருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு வருகிறேன், அந்தப் பெரிய மனிதர் நீண்டகாலம் வாழட்டும்” என்றேன்.
திரும்பவும் ஜனாப் பாரூக் நடந்தவற்றைத் தெளிவுபடுத்தி விளக்கினார். நவலோக்க ஹொஸ்பிட்டல் கதைகளையெல்லாம் எடுத்துக் கதைத்தார். பிறகு தான், எனக்கு அரைவாசி நம்பிக்கை வந்தது. பிறகு நான் படுக்கையை விட்டும் எழுந்து, உடுக்கத் தொடங்கினேன். அவசரமாகப் புறப்பட்டு சஹித் ஹாஜியார் அவர்களுடைய பம்பலப்பிட்டி வீட்டை நோக்கி விரைந்தேன்.
அங்கு வீடு திறந்து, பெரும் வெளிச்சமாக இருந்தது. மக்களும் ஓரளவு நிரம்பியிருப்பது எனக்குத் தெரிந்தது. பாரூக் சொன்னது
183

Page 95
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
உண்மைதானென்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அங்கு சென்றிறங்கினேன்.
எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது; நம்ப முடியாமலிருந்த விடயம். அங்கு தலைவரவர்களும் இருந்தார்கள். கெளரவ தலைவரவர்கள் அதிர்ச்சி மிகுந்து காணப்பட்டார்கள். ஒரு நாளுமில்லாதவாறு தலைவரவர்களுடைய தோற்றம் மாறியிருந்தது. அவர்களுடைய கண்கள் கலங்கியிருந்தன.
மரணத்தால் சரிந்த தலைவர்
தலைவரவர்கள் என்னைப் பார்த்துச் சொன்னார்கள். “ஹஸ்ரத்! பெரிய நஷ்டம்; ஈடுசெய்ய முடியாத ஒரு நஷ்டமாகிட்டுதே.”
தலைவரவர்கள் அன்று தம் நிலை மறந்த துன்பத்தில் விழுந்து கிடந்ததை நான் பார்த்தேன். சஹீத் ஹாஜியார் அவர்கள் கட்சியின் பொதுச் செயலாளராவார். ஜனாப் உஸ்மான் கட்சியிலிருந்து வெளியேறிய பிறகு தலைவரவர்கள் அந்தப் பொறுப்பான இடத்துக்கு சஹித் ஹாஜியார் அவர்களை நியமித்தார்கள்.
தொழில் அதிபராக இருந்த சஹித் ஹாஜியாரை அந்தப் பதவி அழகுபடுத்தியது ஒரு பக்கம். மறுபக்கம் சஹித் ஹாஜியார் அந்தப் பதவியை அழகுபடுத்தினார்கள். இருபக்கமும் பொருத்தமாக அமைந்தது. அதனால் கட்சியின் சரித்திரமும் சிறப்புற்றுத் திகழ்ந்தது.
சஹித் ஹாஜியார் அந்தப் பதவியை அலங்கரித்ததைக் கண்ட தலைவரவர்கள் உள்ளம் மகிழ்ந்திருந்தார்கள். தலைவரவர்களுக்கு மிகவும் பொருத்தமானவராக சஹீத் ஹாஜியார் செயற்பட்டு வந்தார். உண்மையில் சஹீத் ஹாஜியார் அவர்களுடைய தன்மைகள் அனைவரையும் கவர்ந்தன.
அவர் கட்சிக்கு விசுவாசமாக இருந்தார்; மிகப் பெரிய விசுவாசமாக அமைந்தார். அவரைக் கொண்டு நமது கட்சி ஒரு கடுகு மணியைக் கூட இழக்கவில்லை. அந்த அளவுக்கு கட்சியின் நலன்களை அவர் பாதுகாத்து வந்தார். தொழில் நிலையத்துக்கு வந்து தொழில் விடயங்களைக் கவனித்து முடிக்கும் அவர், அடுத்ததாக தலைவரவர்களுடைய வீட்டை நோக்கி வருவார்.
தலைவரவர்கள் பைப் ரோட் இல்லத்தில் வாழ்ந்து கொண்டிருந்த
184

அப்துல் மஜீத் ஆலிம்
காலத்தில்தான் சஹீத் ஹாஜியார் அவர்களுடைய தொழிற்பாடுகள் அதிகமாக இருந்த வந்தன.
நான் சஹீத் ஹாஜியார் அவர்களைத் தினந்தோறும் தலைவரவர்களுடைய பைப் ரோட் இல்லத்தில் பார்ப்பேன். அங்கு தலைவரவர்களுடைய உத்தரவுகளுக்காகக் காத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருப்பார்கள். தலைவரவர்கள் எங்கு சென்றாலும் சஹீத் ஹாஜியார் அவர்களும் கூடவே செல்வார்கள். கட்சியின் அலுவல்களில் சஹீத் ஹாஜியார் அவர்கள் அமைதியாகவும் உறுதியாகவும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இடையறாது காரியமாற்றிக் கொண்டிருப்பார்கள்.
என்றும் அமைதியுடையவர். இலேசான ஒரு புன்சிரிப்பு. அவசியப்பட்டால்தான் அது வெளிவரும். மெளனம், அந்த மென்மை, ஒரு போதும் கலைந்ததில்லை. நிதானம்; அந்த நிதானத்திலிருந்து ஒரு போதும் அவர் நழுவியதில்லை.
ஒரு போதும் தம்மை எடுப்பாகக் காட்டிக் கொள்ளவே மாட்டார். ஓர் இடத்தில் அவர் இருந்தால், அவர் இருக்கிறாரா? இல்லையா? என்று கூடத் தெரியாது. தமது காரைத் தாமே செலுத்துவார். ஒரு தடவை பாணந்துறைப் பகுதிக்கு கட்சி வேலைகளாகச் சென்றிருந்தோம்.
தலைவரவர்கள் அங்குள்ள கட்சித் தொண்டர்கள் மத்தியில் பல விடயங்களையும் விளக்கிக் கொண்டிருந்தார்கள். சஹீத் ஹாஜியார் அவர்களும் அமைதியாக அமர்ந்திருந்தார்.
கட்சியின் சரித்திரம் - காசு அற்றது - மாசு அற்றது
தலைவரவர்கள் அழகாக விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கிருந்த முக்கியஸ்தர் ஒருவர் அதாவது அந்தப் பகுதியைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவர் தலைவரவர்களைப் பார்த்து அர்த்தமில்லா நிலையில் “சேர்! நீங்கள் சரியாகப் பேசுகிறீர்களா? அல்லது முனாபிக்தனமாகப் பேசுகிறீர்களா?” என்று கேட்டு விட்டார். அவருடைய ஒரு சுயநல விடயத்தில் வாய்க்கு வந்தது; கேட்டு விட்டார். உண்மையில் பேசக்கூடாத பேச்சு. ஆனால் தலைவரவர்கள் அதையும் தாங்கிக் கொண்டார்கள். இப்படிக் கணக்கில்லாத புண்கள் அவர்களுடைய இதயத்தில் நிரம்பிக் கிடக்கின்றன.
185

Page 96
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
அனைத்தையும் முடித்து விட்டு நாங்கள் கொழும்பு நோக்கி வந்தோம். மொரட்டுவையில் வைத்து காருக்கு பெற்றோல் தேவைப்பட்டது. தலைவரவர்கள் பெற்றோல் 'செட்டில் காரை நிறுத்தினார்கள்.
பெற்றோல் அடிக்கப்பட்டது. தலைவரவர்கள் பாக்கெட்டில் கையைப் போட்டார்கள், ஆனால் பணம் இல்லாமலிருந்தது. தலைவரவர்கள் யோசிக்கும் பொழுதே சஹித் ஹாஜியார் பெற்றோலுக்குப் பணத்தை வழங்கினார். அப்பொழுது தலைவரவர்கள் டிரைவிங் சீட்டில் அமர்ந்து கொண்டே என்னைத் திரும்பிப் பார்த்தார்கள்.
“ஹஸரத்! இதுதான் கதை. நீண்ட நாட்களாக நம் கட்சியின் சரித்திரம் இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது” என்றார்கள். சில சமயங்களில் தலைவரவர்களிடம் ஒரு செம்புக் காசுகூடக் கைகளிலிருக்காது. ஆனாலும் கட்சி வேலைகளில் கண்களை மூடிக்கொண்டு ஈடுபட்டிருப்பார்கள்.
அன்றிரவு நோன்பு மாதமாக இருந்தது. நாங்கள் கொழும்பை அடையும் பொழுது சஹர் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. கூட வந்தவர்களையெல்லாம் தலைவரவர்கள் பிரித்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் சஹீத் ஹாஜியாரை மட்டும் தம்மிடம் காருக்குள் வைத்துக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது சஹர் செய்யவும் வேண்டும். தலைவரவர்களுக்கு வீட்டில் சஹர் செய்யமுடியாது. ஏனென்றால் துணைவியார் வீட்டில் இல்லை. அவர்கள் கம்பளைக்கு சொந்த ஊருக்குப் போய் சில நாட்களாகி விட்டன.
ஏனென்றால் அங்கு தகப்பனாருக்குச் சுகமில்லை. அதுவும் இக்கட்டான நிலைமையாக இருந்து வந்தது. ஒரே காலகட்டத்தில் தலைவரவர்களுடைய தகப்பனாருக்கும் துணைவியாருடைய தகப்பனாருக்கும் சுகவீனம் ஏற்பட்டது. அது நீண்டகாலம் இருந்து வந்தது.
அதனால் துணைவியார் அதிகமாக அங்கு இருக்க வேண்டிய நிலை. தலைவரவர்கள் அடிக்கடி கம்பளை சென்று நிலைமைகளை அவதானித்து வருவார்கள். பைப் ரோட் இல்லத்தில் அலுவலக அறையில் தலைவரவர்கள் இரவு முழுவதும் வேலை செய்து
186

அப்துல் மஜீத் ஆலிம்
கொண்டிருப்பார்கள். அப்பொழுது கம்பளையிலிருந்து டெலிபோன் அழைப்பு வரும். துணைவியார் பேசுவார்கள். தலைவரவர்கள் நோய் விசாரித்துக் கொள்வார்கள்.
இறையடி சேர்ந்த இருவர் . மூத்த துணைகள்
இப்படியாக சில நாட்களில் துணைவியாரின் தகப்பனாரும் இறையடி சேர்ந்தார்கள். இறுதிச் சடங்கில் நாங்கள் அனைவரும் கலந்து கொண்டோம். அங்கு தலைவரவர்கள் சோகமே உருவாக அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
இறுதிச் சடங்குகள் முடிவடைந்த பிறகு தலைவரவர்கள் மாமனாரைப் பற்றிய விடயங்களை எம்முடன் நீண்ட நேரம் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுடைய மடியில் மதினியின் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. பிள்ளையை மடியில் வைத்து செல்லம் விளையாடிக் கொண்டே நம்முடன் கதைத்துக் கொண்டுமிருந்தார்கள்.
கட்சியின் வளர்ச்சியின் மீது மாமனாருக்கு இருந்து வந்த ஆர்வத்தையும், அந்த ஆர்வத்திலேயே நோய் மறந்து காலங் கடத்திய செய்திகளையும் தலைவரவர்கள் எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பிறகு நாங்கள் விடை பெற்றுக் கொண்டு கொழும்பு திரும்பினோம்.
அதே காலகட்டதில்தான் தலைவரவர்களுடைய தகப்பனாரும் இறையடி சேர்ந்தார்கள். தலைவரவர்கள் பைப் ரோட் இல்லத்தில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில்தான் இரு மரணங்களும் சம்பவித்தன. இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த காலத்தில் வட-கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி விட்டு கொழும்பு வந்த பிறகு ஒரு நாள் தலைவரவர்கள் தங்கள் தகப்பனாருடைய சுகவீனம் பற்றி மிகுந்த மனவேதனையுடன் என்னுடன் கதைத்தார்கள்.
ஏற்கனவே கிழக்கில் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்றிருந்த பொழுது தலைவரவர்களுடைய தகப்பனாரை நான் சந்தித்திருந்தேன். அப்பொழுதும் அவர்கள் அதிகமாக மெளனமாகவே இருந்து வந்தார்கள். அதன்பின் மரணமெய்திய பின் தான் எனக்குப் பார்க்கக் கிடைத்தது.
187

Page 97
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
தலைவரவர்கள் சித்திரா லேன் இல்லத்தில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே தகப்பனாருடைய சுகவீனம் அவர்களுடைய உள்ளத்தைப் பாதித்து வந்தது. தலைவரவர்கள் பைப் ரோட் இல்லத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் திடீரென்று மரணச் செய்தி எங்களுக்கு அறிவிக்கப்பட்டது.
அப்பொழுது 1989 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்திருந்தது. தலைவரவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்கள். ஜனாப் செய்கு இஸ்ஸதீன் வட-கிழக்கில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். கட்சியின் சரித்திரம் சிறிது வளர்ச்சி கண்டிருந்த நேரம்.
மரணச் செய்தி கேட்டு, ஜனாப் செய்கு இஸ்ஸதீன் கிழக்கிலிருந்து வேகமாக வந்து கொண்டிருந்தபொழுது இடைவழியில் கார் விபத்துக்குள்ளானது. அவர் மிகவும் சிரமப்பட்டு வந்து சேர்ந்தார்.
தகப்பனார் மரணமடைந்த அன்று தலைவரவர்கள் மிகவும் பாதிப்படைந்த நிலையில் காணப்பட்டார்கள். அவர்களுடைய முகம் வெளுத்து சிவந்திருந்தது. எப்படியோ தகப்பனாருடைய சுகவீனமும் மரணமும் தலைவரவர்களுக்கு ஒருவித அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருந்தது. அன்றையதினம் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்து கிடந்தார்கள்.
கடைசியாகத் தாயாரைக் கட்டி அணைத்தவர்களாக, தகப்பனாரின் ஜனாஸாவை காண்பிக்க அழைத்துச் சென்றார்கள். அந்தக் காட்சியை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த வேளையில் தலைவரவர்களுக்கு அழுகை முற்றிக் கொண்டு வந்து குரல் கரகரத்தது. தாங்க முடியாத துயரத்தில் தள்ளாடிக் கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியைப் பார்த்து எங்களுக்கும் அழுகை வந்து விட்டது.
அப்பொழுதெல்லாம் தலைவரவர்கள் கட்சிப் பொறுப்புடன் பாராளுமன்றப் பிரவேசமும் ஏற்பட்டிருந்ததால் பெருந்தொகையான முக்கியஸ்தர்களை அங்கு பார்க்கக் கூடியதாக இருந்தது. அரசியல் உயர் மட்டத் தலைவர்களெல்லாம் அங்கு சமூகமளித்தனர். அதனால் அன்றையத்தினம் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது. அன்று இரவு நேரத்தில் ஜனாஸா ஜாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
188

அப்துல் மஜீத் ஆலிம்
மன்சூரும் அலி உதுமானும் மரத்துக்கு இடப்பட்ட உரம்
அதேகாலகட்டத்தில் தான் கிழக்கில் மாகாண சபை உறுப்பினர் அலி உதுமானுடைய கொலையும் ஏற்பட்டது.
அதேகாலகட்டத்தில் தான் கிழக்கில் மாகாண சபை உறுப்பினர் மன்சூரும் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
அதேகால கட்டத்தில்தான் தலைவரவர்களுடைய உயிருக்கு உயிரான சஹித் ஹாஜியாரும் இறந்தார்கள்.
இந்த மரணங்களெல்லாம் தலைவரவர்களை ஒரு ஆட்டு ஆட்டி விட்டது. மிகுந்த பாதிப்பைக் கொடுத்தது. அதனால்தானோ என்னவோ அந்தக் காலகட்டத்தில் இருதய வியாதி கூட தலைவரவர்களைத் தாக்கிப் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்தார்கள்.
அலி உதுமானுடைய மரணச் செய்தி கிழக்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாங்கள் தலைவரவர்களுடன் விமானத்தில் அங்கு பறந்தோம். புஹார்தீன் ஹாஜியார், அபூபக்கர் ஹாஜியார், சஹீத் ஹாஜியார், அல்ஹாஜ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் விமானத்தில் வந்தனர். அப்பொழுது அனைவரும் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்த காலம். சஹீத் ஹாஜியார் நெசனல் லிஸ்ட்டில் இருந்தார்கள்.
நாங்கள் சென்று இறங்கிய பொழுது அங்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜனாப் செய்கு இஸ்ஸதீனும் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் எங்களை வரவேற்றனர்.
அங்கு பெரும் குழப்பம் மூண்டது. சில சதிகாரர்கள் திட்டமிட்டு சதி செய்து குழப்பத்தை மூட்டிவிட்டனர். அதனால் பெருங்கூட்டம் எங்களை வந்து சூழ்ந்தது. நிலைமை மிகவும் மோசமாக அமைந்தது. பொலிஸ்ார் கடும் காவல் செய்தனர். தலைவரவர்கள் மிகவும் விவேகமாக நடந்தார்கள். சதிகாரர்களின் சதித்திட்டங்களை முறியடித்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தார்கள்.
ஜனாப் செய்கு இஸ்ஸதீன் அன்று பகற் போஜன விருந்தளித்தார். நிலைமைகள் சமாளிக்கப்பட்டு ஆறுதலுடன் கொழும்பு திரும்பினோம்.
189

Page 98
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
சஹித் ஹாஜியார் சரித்திரமானார்
சஹித் ஹாஜியார் மரணமெய்திய அன்றைய தினம் மாலை நேரம் அவருடைய ஜனாஸாவை பம்பலப்பிட்டியிலிருந்து அவருடைய சொந்த ஊராகிய மல்வானைக்கு எடுத்துச் சென்றோம். பெரும் தொகையான கட்சித் தொண்டர்கள் அதில் கலந்து கொண்டனர். ஜனாப் பாயிஸ் முஸ்தபா அன்றிரவு கண்டியிலிருந்தவர், மரணச் செய்தி கேட்டு இரவோடு இரவாக வந்து சேர்ந்தார். அன்று முழுநாளும் ஜனாஸா கடமைகளில் அவர் முற்றாகப் பங்குபற்றினார்.
மள்வானைப் பூமியில் சஹித் ஹாஜியாரை அடக்கம் செய்தோம். பிறகு அவருக்காக துஆ செய்தோம். அதன்பின் அவர்களைப் பற்றி இரங்கலுரை இடம்பெற்றது.
தலைவரவர்களுடைய உரையுடன் , ஜனாப் செய்கு இஸ்ஸதீனுடைய உரையும் இடம் பெற்றது. ஜனாப் செய்கு இஸ்ஸதீன், சஹீத் ஹாஜியார் கட்சிக்கு மிகவும் விசுவாசமானவராக இருந்தார் என்று பாராட்டினார்.
சஹித் ஹாஜியாருடைய இறப்பு இன்றும் கட்சி வட்டாரத்திலிருந்து மறையவில்லை. தலைவரவர்கள் காலமெல்லாம் சஹீத் ஹாஜியாரை நினைவு கூர்ந்துகொண்டே வருகிறார்கள். ஒவ்வொரு மகாநாட்டிலும் சஹித் ஹாஜியாருடைய பெரிய வரை படம் வைக்கப்பட்டிருக்கும். தலைவரவர்களால் ஒரு காலமும் மறக்க முடியாதவர் தான் சஹித் ஹாஜயார். கொஞ்சக் காலத்துக்குள் தலைவரவர்களுடைய உள்ளத்தை அவ்வளவு தூரத்துக்கு வெற்றி கொண்டவர் தான் சஹித் ஹாஜியார்.
அவருக்கென்று எத்தனையோ நினைவுக்கூட்டங்கள், அனுதாபக் கூட்டங்கள் வைக்கப்பட்டாகி விட்டது.
கட்சியினுடைய வரலாற்றில் கட்சித் தொண்டர்களில் சஹித் ஹாஜியார் போன்று இதுவரையில் வேறு எவரும் நினைவு கூரப்படவில்லை.
"சஹிதே! நீர் சஹிதானாயோ?” என்று தலைவரவர்களால் அனுதாப
அலைவீசி வாழ்த்தப்படும் அளவுக்கு சஹித் ஹாஜியாருடைய வாழ்க்கை மேலே சென்று விட்டது.
190

அப்துல் மஜீத் ஆலிம்
கட்சியின் மகாநாட்டுக் கண்காட்சிகளில் பிரதான பார்வைக்கு வைக்கப்படும் அளவுக்கு சஹித் ஹாஜியார் முக்கியத்துவம் பெற்றுவிட்டார்கள்.
கட்சியினுடைய சரித்திரம் இருக்கும் காலமெல்லாம் , கெளரவ தலைவரவர்கள் இப்பூமியில் வாழும் காலமெல்லாம் அன்னாருடைய பெயர் மங்காது. இதற்காக சஹீத் ஹாஜியார் ஒரு மேடையிலாவது ஏறி நான்கு வார்த்தைகள் பேசிய ஞாபகம் கூட எனக்கில்லை. அமைதியாகவே வாழ்ந்து அமைதியாகவே செயற்பட்டு அமைதியாகவே அவர் மறைந்து விட்டார்.
தலைவரவர்களுடைய உள்ளத்தில் நீங்காத இடைவெளியை விட்டுச் சென்று விட்டார்.
இதுதான் கட்சியின் இரண்டாவது பொதுச்செயலாளர் சஹித்
ஹாஜியாரின் கதையாகும். தலைவரவர்கள் கண்டெடுத்த ஒரு மனிதப் புனிதர், மாணிக்கம் அவராவார்.
நபி (ஸல்) அவர்கள் ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களுடய உடமைகளில் உரிமை கொண்டாடி வந்தது போன்று தலைவரவர்கள் சஹித் ஹாஜியார் அவர்களுடைய உடமைகளில் உரிமையுடன் நடந்துகொண்டார்கள்.
அன்றிரவு ரமழான் மாதம் சஹர் நேரம் கூட வந்த அனைவரையும் தலைவரவர்கள் அனுப்பிவிட்டு, சஹீத் ஹாஜியாரைப் பார்த்து “யூ கிவ் மீ சஹர்” என்றர்கள். அதைக்கேட்டுக் கொண்டிருந்த நான் சிரித்து விட்டேன். பிறகு நானும் இறங்கி விட்டேன்.
தலைவரவர்கள் சஹர் செய்வதற்காக சஹித் ஹாஜியாருடைய வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்கள்.
தலைவரவர்களுடைய உள்ளத்தில் குடிகொண்டு வெற்றி பெற்று விட்ட அந்த மனித மாணிக்கம், காலமெல்லாம் இனி சரித்திரத்தில் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
தோள்களில் துவஞம் துன்பம் கொருக்கும் பாம்புகள்
ஒருநாள் நான் தலைவரவர்களுடைய பைப் ரோட் இல்லத்துக்குச்
191

Page 99
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
சென்றேன். அது காலை நேரமாக இருந்தது. கெளரவ தலைவரவர்கள் தங்களுடைய அலுவலக அறையில் பைல்கட்டுகளைப் புரட்டிக் கொண்டிருந்தார்கள்.
நான் சென்று ஸலாம் சொன்னேன். தலைவரவர்கள் பதில் ஸலாம் சொல்லி என்னை வரவேற்றார்கள்.
நான் அலுவலக அறையில் தலைவரவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அந்த வேளையிலும் எத்தனையோ பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை யோசித்து முடிவெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
பிரச்சினைகளுக்குள் மூழ்கி அவைகளோடு சேர்ந்து நீந்திக் கொண்டிருப்பது தலைவரவர்களுக்கு ஒரு பொழுது போக்கு போன்று ஆகிவிட்டது. அதனால் அவர்கள் சளைக்காமல் மலைக்காமல் பிரச்சினைகளைத் தட்டிக் கொண்டும், அவைகளோடு விளையாடிக் கொண்டுமிருப்பார்கள்.
ஒரு பாம்பாட்டி பாம்புகளைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு எந்தக் கவலையுமில்லாமல் நின்று கொண்டிருப்பான். பார்ப்பவர்கள் தான் பயந்து கொண்டிருப்பர்.
தலைவரவர்களுடைய தோள்களில் பிரச்சினைகள் மலைப் பாம்புகள் போன்று நெழிந்து கொண்டிருக்கும். பிரச்சினைகள் பிரச்சினைகளாக இருக்கும், விஸ்வரூபமாக தோன்றும். அவர்கள் அது பற்றி எந்த அலட்டலுமில்லாமல் தீர்வுக்குரிய வழிகளைத் தேடிக் கொண்டிருப்பார்கள்.
அன்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது தலைவரவர்கள் சொன்னார்கள்: “ஹஸ்ரத் தேர்தல் முடிவடைந்து விட்டது. என் முன் பிரச்சினைகள் குவியல் குவியலாகக் கிடக்கின்றன. இப்பொழுது நான் ஒரு எம்.பி. என்பதைக்கூட எனக்கு நினைத்துப் பார்க்க நேரமில்லாமலிருக்கிறது.”
1989 ஆம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் நமது கட்சியினுடைய வரலாற்றில் சந்தித்த முதலாவது பாராளுமன்றத் தேர்தல் அதுதான். தலைவரவர்களும் அப்பொழுது நாடளவிய ரீதியில் தேர்தலுக்கு முகம் கொடுக்க முன்வந்தார்கள். பெருந்தொகையான மாவட்டங்களில்
192

அப்துல் மஜீத் ஆலிம்
அபேட்சகர்கள் நியமிக்கப்பட்டனர். அபேட்சகர்களில் அதிகமானவர்கள் பொருளாதார பலம் குன்றியவர்களாக இருந்தனர். அதனால் அவர்களுக்கு வேண்டிய உதவிகளும் செய்ய வேண்டிய பாரிய பொறுப்புக்கள் கட்சியின் மீது விழுந்தது. கட்சியின் நிலையும் மிகவும் நெருக்கடியிலேயே இருந்து வந்தது.
அந்தக் காலகட்டங்களில் ஜனாப் முகியித்தின் அப்துல் காதர்தான் நிதித்துறைக்குப் பொறுப்பாக இருந்தார் என்று நான் நினைக்கின்றேன். அவர் அக்காலகட்டங்களில் கட்சி நடவடிக்கைகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். தலைவரவர்களுக்கு அவர் மிகவும் நெருக்கமானவராகக் காணப்பட்டார்.
அந்தப் பாராளுமன்றத் தேர்தலில் ஜனாப் முகைதீன் அப்துல் காதர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபேட்சகராகவும் நின்றார். அவர் பிரதான இடமாக ஓட்டமாவாடி, வாழைச்சேனை, மீராவோடைப் பகுதிகளில் அமைப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தார். இவரும் தற்பொழுது பிரதியமைச்சராக இருக்கும் ஜனாப் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களும் அந்த மாவட்டத்தில் முன்னணி அபேட்சகர்களாகக் காணப்பட்டனர். ஜனாப் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் காத்தான்குடியைப் பிரதான இடமாகக் கொண்டிருந்தார்.
விரல் தாங்கிக்கொண்ட விபரீத வீக்கம்
இந்த மட்டக்களப்பு மாவட்ட விடயம் கெளரவ தலைவரவர் களுக்குப் பெரும் தலையிடியைக் கொடுத்து விட்டது. நீண்ட காலமாக அந்தப் பிரச்சினையில் வெந்து சுடுபட்டே போனார்கள். தலைவரவர்கள் கண்ணிர் விட்டு அழும் அளவுக்கு காரியம் முற்றி விட்டது. அந்தக் கட்டங்களை அவர்கள் பொறுத்து சகித்துக் கடந்த சரித்திரமே ஆச்சரியமானதாகும்.
ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களுடைய காலத்தில் ஏற்பட்ட ஒரு பெரிய அரசியல் பிரச்சினையை நினைவுப்படுத்தக் கூடியது போன்று இந்தப் பிரச்சினை அமைந்திருந்தது. இஸ்லாமிய உலகத்தில் மூன்றாவது தலைவர் ஹஸரத் உதுமான் (ரலி) அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். முஸ்லிம்களுடைய ஒரு கூட்டம் தான் அந்தக் கொலைக்குத் தலைமை தாங்கியது. கொலை செய்த அதே கூட்டத்தினரால் ஹஸரத் அலி (ரலி) அவர்கள் பலவந்தமாக தலைவராக்கப்பட்டார்கள்.
193

Page 100
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
அந்தக் காலத்தில் அந்தப் பெரும் சுமையை சுமக்க அலி (ரலி) அவர்களுடைய தரத்துக்கு யாரும் இருக்கவுமில்லை. உஸ்மான் (ரலி) அவர்களுடைய கொலை இஸ்லாமிய உலகத்தில் பேரதிர்ச்சியை உண்டு பண்ணிவிட்டது. அந்த இக்கட்டான நிலைமையைச் சமாளித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டியது ஹஸரத் அலி (ரலி) அவர்களுக்கு பெருத்த வேலையாக ஆகிவிட்டது. அதனால் ஹஸரத் அலி (ரலி) அன்ஹ" அவர்கள் நிலைமைகளை சீர்படுத்தும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.
மாநிலங்களின் கவர்னர்களையெல்லாம் நீக்கத் தொடங்கினார்கள். கவர்னர்களும் பதவி நீங்கத் தொடங்கினர். ஆனால் சிரியாவில் கவர்னராக இருந்த ஹஸரத் முஆவியா (ரலி) அவர்கள் பதவி விலகவில்லை.
ஹஸ்ரத் முஆவியா (ரலி) அவர்கள் அதற்குப் பதிலாக ஒரு பெரும் பிரச்சினையைத் தூக்கிப் போட்டார்கள். அதுதான் ஹஸரத் உதுமான் (ரலி) அவர்களுடைய கொலைக்கு உடனடியாகப் பழி வாங்க வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்த பிரச்சினையாகும்.
நான் அதைக் கவனித்துக் கொள்கிறேன்; அது என் வேலை; நீர் உடனடியாகப் பதவி விலகும் என்று ஹஸரத் அலி (ரலி) சொன்னார்கள். ஆனால் முஆவியா (ரலி) அவர்கள் பதவிவிலகுவதோ அதுபற்றிப் பேசுவதோ இல்லை. திரும்பவும் உதுமான் (ரலி) அவர்களுடைய கொலைக்குப் பழிவாங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
நிலைமை முற்றி விட்டது. முஆவியா (ரலி) அவர்களை ஒரு வகையிலும் வழிக்குக்கொண்டு வர முடியாமல் போய் விட்டது.
மறு வழியில்லாமல் ஹஸரத் அலி (ரலி) அவர்கள் எண்பதாயிரம் வீரர்களுடன் சீரியா எல்லையை அடைந்தார்கள். முஆவியா (ரலி) அவர்களுக்கும் ஹதரத் அலி (ரலி) அவர்களுக்கும் இடையில் கடும் போர் மூண்டது. அந்தப் போர் பல வருடங்கள் நீடித்தது. சிப்பின் யுத்தம் என்று அந்தப் போருக்கு பெயர் வழங்கப்படுகிறது. முஸ்லிம்களுக்கிடையில் நடைபெற்ற மிகப் பயங்கரமான யுத்தம் அதுவாகும். ஏறக்குறைய ஒரு இலட்சத்து இருபதாயிரம் முஸ்லிம்கள் அதில் கொல்லப்பட்டார்கள். ஆனாலும் கடைசி வரையில் தீர்வு
194

அப்துல் மஜீத் ஆலிம்
கிடைக்கவேயில்லை. ஹஸரத் உதுமான் (ரலி) அவர்களுடைய கொலைக்கு பழிவாங்கித் தீர வேண்டும் என்று முஆவியா (ரலி) அவர்கள் ஒரே பிடியாக நின்றார்கள். கடைசியில் ஒரு குழுவினருடைய சதித் திட்டத்தினால் ஹஸரத் அலி (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள். அந்த நீண்ட சரித்திரத்தை தேவைக்காக மட்டும் நான் சுருக்கி எழுதிக் கொண்டிருக்கிறேன்.
ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களுக்குப் பிறகு அவர்களுடைய மகன் இமாம் ஹஸன் (ரலி) அவர்கள் இஸ்லாமிய உலகத்தை ஆறு மாதங்கள் சுமந்தார்கள். அக்காலத்திலும் முஆவியா (ரலி) கவர்னராகவே இருந்ததுடன் தங்களுடைய சக்தியை மிகவும் அதிகரிக்கச் செய்து கொண்டார்கள். பிறகு முஆவியா (ரலி) அவர்கள் இமாம் ஹஸன் (ரலி) அவர்களிடம், இஸ்லாமிய உலகத்தை இரண்டாக உடைத்துப் பிரித்துக் கொள்வோம்! என்று கூறினார்கள்.
அதற்கு இமாம் ஹஸன் (ரலி), அப்படி உடைப்பது நல்லதல்ல; நீங்களே இஸ்லாமிய உலகம் முழுவதையும் ஆளுங்கள்; ஆனால் உங்களுக்குப் பிறகு நீங்கள் வாரிசு நியமிக்க வேண்டாம்; ஆட்சிப் பொறுப்பை பொதுமக்களிடம் விட்டுவிடுங்கள் என்று அறிவுரை கூறி இமாம் அவர்கள் ஆட்சிப் பொறுப்பை முஆவியா (ரலி) அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி விட்டார்கள்.
நடந்து முடிந்தது என்ன? பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்காத நிலையில் ஹஸரத் அலி (ரலி) அவர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள். உதுமான் (ரலி) அவர்களுடைய கொலைக்குப் பழிவாங்கப்படவுமில்லை முஆவியா (ரலி) அவர்கள் பதவி விலகவுமில்லை. கடைசியில் அதற்கு மாறாக முஆவியா (ரலி) அவர்கள் இஸ்லாமிய உலகிற்கே தலைவராகி விட்டார்கள். காரியம்
முடிந்து விட்டது.
ஆனால் அந்தப் பிரச்சினை இஸ்லாமிய உலகத்தைக் கலக்க வேண்டிய மட்டும் கலக்கி, பாரிய கொலைகளை உண்டாக்கி, நடக்க வேண்டிய துன்பங்கள் அனைத்தையும் நடத்தி முடித்து விட்டது.
நான் ஓர் உதாரணத்திற்கு இந்த சரித்திரத்தைக் கொண்டு வந்தேன். கிட்டத்தட்ட இது போன்ற ஓர் அமைப்பில்தான் நம்முடைய பிரதியமைச்சர் ஜனாப் ஹிஸ்புல்லாஹ் அவர்களுடைய கதையும் அமைந்தது எனலாம்.
195

Page 101
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
தற்பொழுது நாம் இந்தக் கதையைச் சொல்லிச் சிரித்துக் கொள்ள வேண்டியதுதான். வேறு பிரச்சினையொன்றுமில்லை. நினைவுகளைத் தான் எழுதித் கொண்டு செல்கிறேன். இதுபற்றி யோசிப்பதற்கு வேறு ஒன்றுமில்லை.
தலைமைக் காரியாலயத்துள் புதிய முகங்கள்
அந்தக் காலகட்டத்தில் ஒருநாள் நான் டாம் விதி அலுவலகத்துக்குச் சென்றேன். கட்சி வளர்ந்து கொண்டிருந்த காலம் தான் அது. அன்று தலைவரவர்கள் அலுவலகத்தில் இருக்கவில்லை. நான் பத்திரிகைக் குவியல்களைத் தூக்கிக் கொண்டு ஒரு பக்கத்தில் உட்கார்ந்து வாசிக்கத் தொடங்கினேன்.
அப்பொழுதுதான் ஓர் இளைஞர், புதிய முகம் நடமாடிக் கொண்டிருப்பதை அவதானித்தேன். அழகான மெலிந்த தோற்றம், கவர்ச்சியான புன்சிரிப்பு, உற்சாகமான இயக்கம். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பருவம் போன்றிருந்தது.
எனக்கு அவருடன் கதைத்துப் பழக வேண்டும்போல் ஆசை ஏற்பட்டது. அவ்வளவு தூரத்துக்கு அவருடைய தன்மைகள் உள்ளத்தை ஈர்த்தெடுத்தன.
இருவரும் முகத்துக்கு முகம் ஒரு முறை பார்த்துக் கொண்டோம்; சலாம் சொல்லிக் கொண்டோம்; அன்பாக சிரித்துப் கொண்டோம். அவ்வளவுதான். யார் எவர் என்று நாங்கள் ஒருவரையொருவர் விசாரித்துக் கொள்ளவில்லை. அதற்கு இன்னும் நேரமிருக்குது தானே என்று நான் அமைதியாகப் பத்திரிகைகளை ஆராய்ந்து கொண்டிருந்தேன்.
அப்பொழுது பகல் உணவு வேளை வந்தது. பலரும் சாப்பாட்டுப் பார்சல்களை விரித்துக் கொண்டிருந்தார்கள். அந்த இளைஞர் உணவு விடயங்களைக் கூட உற்சாகமாக நெறிப்படுத்திக் கொண்டிருந்ததை நான் அவதானித்தேன். அனைவரும் சாப்பிடுகிறார்களா? என்று அவர் அவதானித்துக் கொள்கிறார். கடைசியாக என் அருகே அவர் நெருங்கி வந்தார். கவர்ச்சியான புன்சிரிப்புடன் சாப்பிடுவோமா? என்று கேட்டார். "நான் சிரித்துக் கொண்டே சாப்பிட வீட்டுக்குப் போவதாகச் சொன்னேன். அவர் நாங்கள் சாப்பிடலாமா? என்று என்னிடத்தில் அன்பான அனுமதியை
196

அப்துல் மஜீத் ஆலிம்
வேண்டினார். நான் சிரித்துக் கொண்டே நீங்கள் சாப்பிடுங்கள் என்று அன்பு அனுமதி கொடுத்தேன். பிறகு அவர் கிளிப்பிள்ளை போன்று அமர்ந்து கொண்டு சாப்பிடும் அழகான காட்சியை கீழ் கண்ணால் பார்த்து மகிழ்ந்து கொண்டேன்.
அந்த அழகிய இளைஞர்தான் ஜனாப் , ஹிஸ்புல்லாஹ் அவர்களாவார். அன்றிலிருந்து எங்களது உறவு வளர்ந்து முற்றியது.
டாம் விதி அலுவலகம் மிகவும் கஷ்டத்தில் தள்ளாடிக் கொண்டிருந்த காலத்தில்தான் ஜனாப் ஹிஸ்புல்லாஹ்வும் வந்து சேர்ந்தார். அவர் கட்சித் தொண்டுக்காக வந்த காலம் அவருடைய கல்லூரிப் பருவமாகும்.
ஜனாப் ஏ.எல்.எம். நயிமும் அப்பொழுது ஓர் இளைஞர். அவர் கட்சியின் கிளைகளின் பணிப்பாளராகவும், அலுவலக பொறுப்பாளராகவும் கடமையாற்றி வந்தார். ஜனாப் நயிம் எந்த நேரமும் சிரித்துக் கொண்டே இருப்பார். பணிவுடனும் மரியாதையுடனும் கட்சி அலுவலகத்துக்குள் ஓடிக் கொண்டிருப்பார். ஜனாப் நயீம் தான் முதன் முதலில் என்னிடம் ஜனாப் ஹிஸ்புல்லாஹ்வைப் பற்றி இரகசியமாக அறிமுகப்படுத்தி வைத்தார்.
அவர் ஊர் காத்தான்குடி; இப்பொழுது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறார். இடையில் கட்சியின் பணிக்காக வந்து சேர்ந்துள்ளார்’ என்று, பலவாறாக ஜனாப் ஹிஸ்புல்லாஹ்வைப் புற்றி ஜனாப் நயிம் எனக்குத் தெரியப்படுத்தினார்.
வாலிபத் துரிகைகளினால் வரைந்தெடுத்த ஒவியம்
கட்சி கடும் கஷ்டத்தில் இருந்தாலும் கூட அந்தக் காலம் அலுவலகம் சுறுசுறுப்பாக இருந்தது. ஏனென்றால், பெருந் தொகிையான இளைஞர்களை அப்பொழுது பார்க்க முடிந்தது. பதினைந்து வயதுக்கும், இருபத்தி ஐந்து வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களாகவே நிறையப் பேர் இருந்தனர்.
மர்சூக், ஏ.எல்.ஏ. மஜீத், பிறகு இனாமுல்லாஹ் , அவர் ஜாமியா நழிமிய்யாவிலிருந்து வந்தார். இப்படியாகப் பல இளைஞர்கள். தலைவரவர்களுடைய அரசியல் அமைப்பு இந்த இளைஞர்களுக்கு ஒரு பொழுது போக்காக அமைந்து விட்டது. அவர்கள் கட்சி
197

Page 102
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
அலுவலகத்துக்குள் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் அரசியலை வைத்துப் பந்தடித்து விளையாடிக் கொண்டிருந்த நேரங்களுமுண்டு. தலைவரவர்கள் தலையிட்டு இந்த இளைஞர்களுடைய எத்தனையோ மண்டைக் குத்துக்களைத் தீர்த்து வைத்துக் கொண்டிருப்பார்கள்.
எப்படியோ காலமும் ஓடிக் கொண்டிருந்தது. கட்சியும் ஓடிக் கொண்டிருந்தது. தலைவரவர்கள் எதையும் அலட்டிக் கொள்ளாமல் காரியத்தில் கண்ணாக இருந்தார்கள். அரசியல் நடவடிக்கைகளை அவதானித்துக் கொண்டும், கட்சியின் வளர்ச்சியில் கவனம் செலுத்திக் கொண்டுமிருந்தார்கள்.
முதியவர்களும் வருவார்கள். இளைஞர்களும் வருவார்கள் நடுத்தரமானவர்களும் வருவார்கள். அதே போன்று போகவும் செய்வார்கள். இதற்குக் கணக் கே இல்லாமலிருந்தது. தலைவரவர்களும் வந்ததை வரவில் வைப்பார்கள், போவதை செலவில் வைப்பார்கள். எதுவென்றாலும் சமாளித்துக் கொண்டு, கட்சியின் நடவடிக்கைகளில் கவனமாகவே இருந்து வந்தார்கள்.
அப்பப்பா. எழுதித் தீராத சரித்திரம் இது. நானும் ஏன் தான் இந்தப் பெரிய வேலையில் இறங்கினேன் என்று யோசிக்கின்றேன்.
டாம் வீதி அலுவலகத்துக்குள் இந்த இளைஞர்கள் படுத்திய பாடு, சில சமயங்களில் படுக்கிற பாய்க்கும் சண்டை நடக்கும். தலையணைகளே இருக்காது.
ஒருமுறை நான் வந்து பார்க்கின்றேன். ஜனாப் ஹிஸ்புல்லாஹ் இரண்டு மூன்று பேப்பர்களை விரித்து அதில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். வெறும் சீமெந்துத் தரையில் அவருடைய தலை கிடந்தது. மாலைச் சூரிய வெளிச்சம் அவருடைய உடலில் பட்டுக் கொண்டிருந்தது. அவருக்குப் பக்கத்தில் ஜவாத் மரிக்காரும் அப்படியே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சி என் உள்ளத்தில் ஒருவிதக் கவலையை உண்டாக்கியது. ஏனென்றால் அப்பொழுது நான் மாகாண சபை உறுப்பினராக ஆகிய புதிது. ஜனாப் ஹிஸ்புல்லாஹ், ஜவாத் மரிக்கார் போன்றோர் மாகாண சபைத் தேர்தலுக்காகக் கடுமையாக உழைத்தவர்கள். இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டவர்கள். அந்தக் களைப்பில்தான் அவர்கள்
198

அப்துல் மஜீத் ஆலிம்
தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய முகங்களில் அப்பாவித்
தோற்றம் நெளிந்து கொண்டிருந்தது.
போராளிக்காகப் பொங்கும் கண்ணிர்
ஏற்கனவே ஜவாத் மரிக்கார் அடிவாங்கிக் கட்டியிருந்தார். அந்த வருத்தமும் அவருடைய உடலில் இருந்தது. கெளரவ தலைவரவர்கள் தேர்தல் முடிந்த பிறகு டாம் விதி அலுவலகத்துக்குள் குழப்பத்தை அடக்கி உரை நிகழ்த்திக் கொண்டிருந்த பொழுது, ஜவாத் மரிக்கார் தாக்கப்பட்ட செய்தியை எடுத்துச் சொல்லும் பொழுது, அவர்களுடைய கண்களிலிருந்து நீர் பொங்கியதை நான் அவதானித்தேன்.
ஜவாத் மரிக்கார் கண்டி மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். தேர்தல் முடியும்வரை அவர் அங்கேயே இருந்தார். ஜனாப் உபைதுல்லாஹ் போன்றவர்களை முன்னுக்குக் கொண்டு வருவதில் அவர் கண்ணாக இருந்தார் எனவும், கம்பளைப் பகுதியில் ரவூப் ஹாஜியாரின் அணுசரணையில் ஈடுபட்டிருந்த ஓர் அபேட்சகருக்கு இரகசியத் தடையாக இருந்தார் எனவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் ஏற்பட்டன.
வாக்கு எண்ணிக் கொண்டிருக்கும் இடத்தில் ஜவாத் மரிக்கார் ஏதோ விளையாட்டுக் காட்டிவிட்டார் எனவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால் கண்டியில் வாக்கு எண்ணும் வேலையை முடித்து விட்டு அவசரமாகக் கொழும்புக்கு வந்த ஜவாத் மரிக்கார், நோய் வாய்ப்பட்டிருந்தார். டாம் வீதி அலுவலகத்துக்குள் படுத்திருந்து விட்டு, ஆட்டாவில் ஏறிக் கொண்டு அவர் டாக்டரிடம் சென்று கொண்டிருந்தார்.
அவரைப் பின் தொடர்ந்து கம்பளை அபேட்சகரின் அதரவாளர்கள் சென்றனர். ஆட்டா ஓரிடத்தில் நிறுத்தப்பட்டது. ஜவாத் மரிக்கார் உள்ளே படுத்துக் கொண்டிருந்தார். பின் தொடர்ந்து வந்தவர்கள் ஆட்டாவை வளைத்தனர்.
ஜவாத் மரிக்கார் அங்கு வகையாக மாட்டிக் கொண்டார். ஜவாத் மரிக்காருடன் துணையாகச் சென்றவர் கடையொன்றுக்குள் போய்விட்டுத் திரும்பி வந்தபொழுது, ஜவாத் மரிக்காரைக் காணவில்லை. அவர் கைகளை வீசிக் கொண்டு அலுவலகத்துக்குத்
199

Page 103
தலைமைத்துவ ரகஸியங்கள்
திரும்பி வந்தார்.
ஜவாத் மரிக்காருக்கு என்ன நடந்தது என்பது புரியாத புதிராக இருந்தது. உடனே தலைவரவர்களுக்கும் விடயம் அறிவிக்கப்பட்டது. தலைவரவர்களும் பறந்து வந்தார்கள். அவர்கள் எத்தனையைத் தான் பார்ப்பது? ஏற்கனவே களுத்துறை மாவட்டத்திலும் குழப்பம். கொழும்பிலும் குழப்பம். அத்தனை சிக்கல்கள்களையும் தீர்ப்பதில் தலைவரவர்கள் பறந்து கொண்டிருந்தார்கள். ஜவாத் மரிக்காரைக் கண்டு பிடிக்க முடியாமலே போய்விட்டது. கடைசியில் இரண்டு நாள் சிறைவாசத்துக்குப் பிறகு ஜவாத் மரிக்கார் தள்ளாடித் தள்ளாடி டாம் விதி அலுவலகத்துக்குள் வந்து சேர்ந்தார். நடந்த விடயங்களைச் சொன்னார்.
மருந்துக்குச் சென்ற ஜவாத் மரிக்காருக்கு பழிவாங்கும் கூட்டம் அவர்களுடைய மருந்தைக் கொடுத்திருந்தனர். அவரைக் கொண்டு சென்று கடும் காய்ச்சலையும் பாரர்மல், அவருடைய உடலுக்குத் தண்ணீர் ஊற்றி ஊற்றி அடியும் உதையும் வழங்கியுள்ளனர். அந்த உதைகளிலே ஜவாத் மரிக்காருடைய காய்ச்சல் பறந்தது.
தேர்தல் நடந்து மறுநாளுக்கு மறுநாள் நான் தலைவரவர்களுடைய வீட்டில் ஒழிந்து கொண்டிருந்தேன். என்னுடன் கட்சியின் சிரேஷ்ட பிரதித்தலைவர் அல்ஹாஜ் மருதூர் கனியும் இருந்தார்கள். ஜனாப் மருதூர் கனி அவர்களுடன் நான் நாட்டில் ஏற்பட்டுள்ள தேர்தல் பின்னணிக் குழப்பங்களைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தேன்.
தலைவரவர்கள் அப்பொழுது களுத்துறை மாவட்டத்துக்கு அவசரமாகச் சென்றிருந்தார்கள். அங்கும் குழப்பம். சித்ரா லேன் இல்லத்தில் நான் அமைதியாக சாய்ந்து கொண்டு ஜனாப் மருதூர் கனி அவர்களுடைய பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஏனென்றால் எனக்கும் பெரும் களைப்பு. ஏற்கனவே கொலைப் பயமுறுத்தல்களின் தாக்கம். திடீரென எங்கள் பேச்சுக்கள் திசை
ருப்பப்பட்டன.
ஒரு வாகனம் வேகமாக வந்து பிரேக் அடித்தது. பலர் பாய்ந்து
இறங்கினர். அதில் ரவூப் ஹாஜியாரும் இருந்தார். கம்பளை அபேட்சகரும் இருந்தார்.
உணர்வு மூச்சோரு பொங்கிய உணர்ச்சித் தும்மல்
பெரிய சத்தம், கடும் குழப்பம், அவர்கள் அனைவரும் குமுறினர்.
200

அப்துல் மஜீத் ஆலிம்
ரவூப் ஹாஜியாருடைய முகத்தில் நெருப்புப் பொறி பறப்பது போலிருந்தது. கம்பளை அபேட்சகர் குமுறினார். ஒரு விதமாக அழுதும் காட்டினார். ஆயிரம் பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் அள்ளிக் கொட்டித் தீர்த்துவிட்டனர்.
நாங்களிருவரும் அவர்களுடன் பேச வேண்டியதெல்லாம் பேசினோம். ஜனாப் மருதூர் கனி அவர்கள் பட்டு மாண்டு போனார்கள். சித்ரா லேன் இல்லம் மீன் மார்க்கட் போன்றிருந்தது.
"முஸ்லிம் காங்கிரஸை அழிப்போம்” என்று ஒரு கர்ஜனைக் குரல்.
“கண்டி மாவட்டத்தில் அழித்து விடுவோம்” என்றது இன்னமொரு குரல். அவர்களை ஒரு விதத்திலும் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. ஜனாப் மருதூர் கனியவர்களும் நானும் உணர்ச்சி எல்லை கடந்த அந்த ஆட்களிடம் வகையாக மாட்டிக் கொண்டோம்.
ஜனாப் மருதூர் கனியவர்கள் அந்த ஆட்களோடு தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த பொழுது, நான் மெதுவாக எழும்பி பின் பக்கமாகச் சென்று தலைவரவர்களுடைய துணைவியாரிடம் விடயங்களை எடுத்துச் சொன்னேன்.
துணைவியாரும் அந்தக் குழப்பத்தை அவதானித்துக் கொண்டு தானிருந்தார்கள். "வீரப்பெண்மணி" அந்தக் குழப்பத்தை அந்த அம்மையார் கால் தூசிக்கும் கணக்கெடுக்கவில்லை. வேறு பெண்களென்றால், வீட்டை விட்டும் பாதுகாப்பான உறவினர் வீடுகளை நாடியிருப்பார்கள்.
“மேடம்! இதற்கு என்ன செய்வோம்?” என்று நான் கேட்டேன். அப்பொழுது துணைவியார் சொன்னார்கள்: “ஹஸரத்! இந்த நேரத்தில் சேர் வெளியில் எங்கும் போகக் கூடாது. இங்குதானிருக்க வேண்டும். ஏனென்றால், பிரச்சினைகள் இங்குதான் தேடிக் கொண்டு வரும். சேர் இருந்திருந்தால் இந்தப் பிரச்சினையை மிகவும் இலகுவாகத் தீர்த்து விடுவார்கள்.” கணவருடைய திறமையில் அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தது.
அதே போன்று அந்தப் பெரும் பிரச்சினை திரும்பவும் தலைவரவர்களிடம் வந்து அது இலகுவாகத் தீர்ந்தது. அதே தேர்தல் விடயமாக மனுதாக்கல் செய்வதற்காகச் சென்ற இடத்தில்
201

Page 104
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
குருநாகல் மாவட்டத்தில் மர்குக் தாக்கப்பட்டார். இப்படிப் பல விடயங்கள்.
ஜனாப் ஹிஸ்புல்லாஹ் மிகவும் வேகமாகத் தலைவரவர்களுடைய அன்புக்கும், நெருக்கத்துக்கும் ஆளானார். கட்சி அலுவலக வேலைகள் ஜனாப் ஹிஸ்புல்லாஹ்வால் திறம்பட நடந்தன.
எவருடனும் அவர் நெருங்கிப் பழகுவார். அன்பாக அளவளாவுவார். மிகவும் பணிவாக நடந்து கொள்வார். அவரிடத்தில் நிறைந்த பண்புகளைப் பார்க்க முடிந்தது. நானும் அவரை எனது பைக் வண்டியில் எனது வீட்டுக்கு அழைத்துச் சென்று வருவேன்.
தலைவரால் தட்டிக்கொருக்கப்பட்ட இளங்கன்று
கெளரவ தலைவரவர்கள் ஜனாப் ஹிஸ்புல்லாஹ்வை தமது பிள்ளை போன்று நடத்தி வந்ததை நான் யூகிக்க முடிந்தது. நான் தலைவரவர்களுடன் அக்காலங்களில் காரில் அங்குமிங்கும் ஒடிக் கொண்டிருக்கும் பொழுது தலைவரவர்கள் என்னிடம் ஜனாப் ஹிஸ்புல்லாஹ்வின் திறமையான சிலவேலைகளை சுட்டிக்காட்டி மகிழ்வார்கள். சில வேலைகளில் ஜனாப் ஹிஸ்புல்லாஹ்வை நேருக்கு நேரும் தட்டிக் கொடுத்துக் கொள்வார்கள்.
ஏன், நபிகளார் (ஸல்) அவர்கள் கூட முஆவியா(ரலி) அவர்களைத் தட்டிக் கொடுத்தவர்கள் தாம். முஆவியா(ரலி) அவர்கள் தமது இளம் பிராயத்திலேயே இஸ்லாத்துக்குள் வந்துவிட்டவர்.
நபிகளார்(ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் அமர்ந்திருக்கும்பொழுது இளைஞர் முஆவியா ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்துக் கொண்டு வேகமாக ஒட்டிச் சென்று கொண்டிருப்பார்கள். அப்பொழுது பாலைவனத்தின் மணற்துாசுக் குவியல்கள் இளைஞர் முஆவியாவை மூடிவிடும். அந்தத் தூசுப் படைக்குள் வீறுகொண்டு ஒட்டகத்தை ஒட்டிச் செல்வார். அப்பொழுதெல்லாம் நபிகளார் (ஸல்) அவர்கள்: "முஆவியா! நீ ஓர் அரசனாகுவாய்! கவனமாக நடந்துகொள்!” என்று கூறித் தோளில் தட்டிவிட்டுக் கொள்வார்கள்.இப்படி எத்தனை தடவைகள் நடந்து விட்டன. நபிகளாருடைய அந்த வாாத்தைகளின் தாக்கத்தை முஆவியா (ரலி) பிற்காலத்தில்தான் உணர்ந்தார்கள்.
ஹஸரத் அலி (ரலி) அவர்களுடன் நடந்த போர் அவர்களுடைய மனத்துக்கு விருப்பமானதாக இருக்கவில்லை. காலமெல்லாம்
2O2

அப்துல் மஜீத் ஆலிம்
அவ்விடயமாக அவர்கள் வருந்தித்தான் வந்துள்ளார்கள்.
கெளரவ தலைவரவர்கள் ஜனாப் ஹிஸ்புல்லாஹ்வுடைய விசயத்தில் நிறையக் கனவுகள் கண்டுதான் வந்துள்ளார்கள். அதனால்தான் தட்டிக் கொடுத்தும் வந்துள்ளார்கள்.
நீண்ட நாள் செல்லவில்லை, வட-கிழக்கு மாகாணசபைத் தேர்தலும்
முகம் கொடுத்தது. நாங்கள் தேர்தல் பிரசாரத்தில் அந்தப் பகுதிகளில் ஹெலிக்கொப்டரில் பறந்தோம்.
டாம் விதி அலுவலகத்துக்குள் வைத்து ஜனாப் ஹிஸ்புல்லாஹ் அடிக்கடி என் தோள்களைத் தடவித் தடவிக் கதைப்பார். “ஹஸரத்! நான் ஒரு சிறு பொடியன். நான் ஒரு மிஸ்கீன். இந்த ஹிஸ்புல்லாஹ் மிஸ்கீனுக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும். நீங்களும் தலைவரவர்களுடன் காத்தான்குடிக்கு வர வேண்டும். என்னைப் பற்றி மக்களுக்கு விசேஷமாகப் பேச வேண்டும்” என்று வேண்டுகோளுக்கு மேல் வேண்டுகோள் விடுத்துக் கொண்டே இருப்பார்.
அந்தக் காலங்களில் புலிகளுடைய தலையீடும் கடினமாக இருந்ததால், ஜனாப் ஹிஸ்புல்லாஹ் பாதுகாப்புப் பிரச்சினையில்
கடும் கஷ்டப்பட்டார்.
கெளரவ தலைவரவர்கள் என்னிடம் சொன்னார்கள்: “ஹஸ்ரத்! ஹிஸ்புல்லாஹ்வுடைய விவேகத்தைப் பாருங்கள். ஹெலிக்கொப்டரில் போய் காத்தான்குடிக்குள் இறங்கினால், மக்கள் மிகவும் கவரப்பட்டு விடுவார்கள் என்று ஹெலிக்கப்டரில் வந்து இறங்கும்படி வேண்டிக் கொண்டே இருக்கிறார்.”
அப்படியே நானும் தலைவரவர்களுடன் பலதடவைகள் ஹெலியில் சென்று இறங்கினேன். ஜனாப் ஹிஸ்புல்லாஹ்வுக்காகப் பிரச்சாரம் செய்தோம். ஊர்வலம் சென்றோம். இது பல தடவை நடந்தது.
மாகாணசபை தேர்தலில் பங்குபற்றி வெற்றி பெற்றார். ஹிஸ்புல்லாஹ்வுக்கு அடுத்த சில மாதங்களுக்குள்ளே பாராளுமன்றத் தேர்தலும் குறுக்கிட்டது. ஏனென்றால், வட-கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஏனைய மாகாணங்களைவிட மிகவும் கடைசியில்தான் நடந்தது. அது முடிந்து சூடும் ஆறவில்லை; பாராளுமன்றத் தேர்தல் வந்தது. அக்காலத்தில் ஒரே தேர்தல் மயம்.
203

Page 105
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
திரு. ஜயவர்தனாவும், திரு. பிரேமதாசாவும் எங்கள் கட்சியின் வளர்ச்சிக்குச் செய்த மறைமுகமான உதவி அது.
வேகப் பிரசாரத்தால் வந்த தேகச் சோர்வுகள்
பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் நான் தலைவரவர்களுடன் பறந்து கொண்டிருந்தேன். முழுக்க முழுக்க ஹெலிக்கொப்டர்களைப் பாவித்து கடும் முயற்சிகளில் ஈடுபட்டோம்.
எனக்கு கொழும்பு மாவட்டத்திலும் பலத்த வேலை. தலைவரவர்களுடன் நாடு முழுவதும் ஓடவும் வேண்டும். தலைநகர் மிகவும் முக்கியம். தலை நகரில் அபேட்சகர்கள் காற்றாகப் பறந்து கொண்டிருந்தனர். எனக்குப் பெரிய தர்ம சங்கடமான நிலை. கொழும்பில் நான் மாகாணசபைப் பிரதிநிதியாக இருந்ததுடன், பாராளுமன்றத் தேர்தலிலும் நிறுத்தப்பட்டிருந்தேன். ஏனைய மாவட்டங்களை விட, கொழும்பு தான் மிகவும் பயங்கரமாக இருந்தது. மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஒருநாள் எனக்கு ஏற்பட்ட தடுமாற்றத்தில் தலைவரவர்களை மாத்தளை மாவட்டத்தில் இறக்கி விட்டுத் தனிமையில் ஹெலியில் ஏறிக் கொண்டு கொழும்புக்குப் பாய்ந்து வந்தேன்.
தலைவரவர்களுடன் நான் நாடு முழுவதும் ஓடிக் கொண்டிருந்தாலும் கூட கொழும்பு மாவட்டத்தில் நான் முதலாவது இடத்துடன் வந்தேன். அப்படியிருந்தும் ஓர் ஆசனம் எங்கள் கட்சிக்குக் கிடைக்க முடியாதவாறு அன்றைய ஆட்சி சதி செய்தது.
அன்று தவறிய காரணம்தான் என் வாழ்வை சோசித்தது. சோதனைக்கு மேல் சோதனைகள் குறுக்கிட்டு என் வாழ்வே சுக்கு நூறாகும் அளவுக்குப் பிரச்சினைகள் வந்து சந்தித்தன. சுமார் ஏழு வருடங்கள் அந்த சோதனைகளில் நான் வெந்து, சுடுபட்டுப் பொசுங்கிப் போனேன். கரணம் தப்பினால் மரணம் என்பார்களே உண்மைதான்.
அந்தப் பாராளுமன்றத் தேர்தல் "ஓட்டத்தில் ஒரு நாள் தலைவரவர்களுடன் ஹெலிக்கொப்டர் மூலம் காத்தான்குடிக்குச் சென்றிறங்கினேன். அங்கு ஜனாப் ஹிஸ்புல்லாஹ் தேர்தல் நடவடிக்கைகளில் மூழ்கிக் கிடந்தார். எங்களுக்கு மாபெரும் வரவேற்பு மக்களால், நசுங்குண்டு போனோம்.
204

அப்துல் மஜீத் ஆலிம்
அத்துடன் பெரியதொரு ஊர்வலம் காத்தான்குடி முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊர்வல வண்டியில் தலைவரவர்கள் ஏற்றப்பட்டார்கள். நானும் ஏற்றப்பட்டேன். ஜனாப் ஹிஸ்புல்லாஹ் தலைவரவர்களுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்.
மீறிய ஒப்பந்தத்தால் மாறிய முகம்
திடீரென தலைவரவர்களுடைய முகம் மாறியது; மகிழ்ச்சித் தோற்றமில்லை. மக்கள் பல்லாயிரக் கணக்கில் பாதையில் நிரம்பி வழிந்தனர். எல்லோரும் தக்பீர் முழுங்கினர். தலைவரவர்கள் மக்களுக்கு கைகளை அசைப்பார்கள். அசைத்துக் கொண்டே ஜனாப் ஹிஸ்புல்லாஹ்வையும் ஆத்திரத்துடன் பார்ப்பார்கள். என்னவோ முணுமுணுப்பார்கள்.
ஜனாப் ஹிஸ்புல்லாஹ் ஒருவித ”சிரிப்புடன் நிலைமையை சமாளித துக் கொண்டிருப் பார். தலைவரவர்களுடைய மகிழ்ச்சியெல்லாம் பறந்தது. மக்களை நோக்கி வெறுங்கைகள் மட்டும் தான் அசைந்தன.
என்ன நடந்ததோ எனக்கும் விளங்கவில்லை. எனக்குக் கொஞ்சம் விளங்கினாலும் நான் அதுபற்றி அலட்டிக் கொள்ளவில்லை. ஜனாப் ஹிஸ்புல்லாஹ்வைத் தலைவரவர்கள் ஏதோ பெரும் குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பது எனக்கு விளங்கியது. நான் யோசித்தேன். என் மனதுக்கும் ஒரு விதமாகி விட்டது. நிலைமையை சமாளித்துக் கொண்டு நான் ஊர்வல வண்டியிலிருந்து இறங்கி விட்டேன்.
அங்கு ஓட்டமாவடி ஜனாப் ஹனிபா என்னுடன் சேர்ந்து கொண்டார். நான் பாதுகாப்பாக ஹெலிக்கொப்டர் இருந்த மைதானத்துக்கே வந்து சேர்ந்து விட்டேன்.
நாங்கள் நாடு முழுவதும் நிறைய ஓடவேண்டியிருக்கிறது. தேர்தல் போராட்டம் கடுமையாகிக் கொண்டிருக்கும் நேரம்; என்ன செய்வது? தலைவரவர்களுடைய உற்சாகமெல்லாம் காத்தான்குடி மண்ணிலே புதையுண்டு விட்டது போன்று எனக்குத் தோன்றியது. எனது மனநிலை மிகவும் பழுதடைந்தது.
நான் மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஹெலிக்கொப்டரில் போய் ஏறி அமர்ந்து சாய்ந்து ஒரு வாக்காகப் படுத்தும் கொண்டேன். எங்க போயும் தலைவரவர்கள் ஹெலிக்கு வந்துதானே ஆகுவார்கள். சரியென்று பலவாறாக யோசிக்கத் தொடங்கினேன். தலைவரவர்கள்
205

Page 106
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
ஒரு போதும் ஜனாப் ஹிஸ்புல்லாஹ்வைக் குறை சொல்வதில்லை. அவரும் அப்படி நடந்து கொள்ளவும் மாட்டார்.
ஹிஸ்புல்லாஹ்வைக் கண்டால் தலைவரவர்களுடைய உற்சாகம் பல மடங்காகும். அதற்கு மாறாக இன்று என்ன நடந்தது? என்று நான் சிந்திக்கத் தொடங்கினேன்.
ஜனாப் ஹிஸ்புல்லாஹ் என்னதான் பிழைவிட்டாரோ என்று நான் மண்டையை உடைத்துக்கொண்டிருக்கும் பொழுது தலைவரவர்களும் ஊர்வல வண்டியில் மைதானத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
நான் படுத்துக் கொண்டிருந்தவன் எழுந்து உட்கார்ந்தேன். கண்ணாடியினூடாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
தலைவரவர்கள் ஏதோ எப்படியோ என்று நிலைமைகளை சமாளித்துக்கொண்டு, ஹெலிக்கொப்டரை நோக்கி வேகமாக நடந்து வந்துகொண்டிருந்தார்கள். முகத்தில் ஒருவித சோர்வும், விரக்தியும்; ஜனாப் ஹிஸ்புல்லாஹ்வும் ஏதோ தலைவரவர்களை சமாளித்துக் கொண்டு வருவது போன்று பின்னால் வேகமாக நடந்து கொண்டிருந்தார். மக்களும் சிறிது தொலைவில் நின்று ஹெலிக்கொப்டரைப் பாாத்துக் கொண்டு நின்றனர்.
தலைவரவர்கள் ஹெலிக்குள் வேகமாகப் புகுந்து, விழுந்து உட்கார்ந்து, வேகமாகச் சாய்ந்து தலையை சீட்டில் ஒரு விதமாக அடித்துக் கொண்டார்கள். ஜனாப் ஹிஸ்புல்லாஹ்வும் பின்னால் வேகமாக வந்தவர், தலைவரவர்கள் பக்கம் குனிந்து தோள்களைத் தடவி சலாம் சொல்லிக் கொண்டு ஒருவித சிரிப்புடன் விடை கொடுத்தார். அவருடைய முகத்தைப் பார்த்தால், “ஏதோ நடக்க வேண்டியது, நடந்துவிட்டது. மன்னித்துக் கொள்வார் சேர்” என்று சொல்வது போன்ற பாவனை.
தலைவரவர்களிடம 'பதில் சலாமுமில்லை, பேச்சுமில்லை, மூச்சுமில்லை. களைத்தது போன்ற ஓர் உணர்வில் தலையை சீட்டில் சாய வைத்துக் கொண்டிருந்தார்.
ஜனாப் ஹிஸ்புல்லாஹ் சிரித்துக் கொண்டே பின்வாங்கிவிட்டார். ஹெலியின் கதவுகள் அடைக்கப்பட்டன. அது எங்களைச் சுமந்து கொண்டு மேலே கிளம்பியது.
நானும் தலைவரவர்களைப் பார்ப்பதும் ஜன்னலுக்கு வெளியில்
2O6

அப்துல் மஜீத் ஆலிம்
பார்ப்பதும், மக்களுக்குக் கைகளை அசைப்பதுமாக இருந்தேன். தலைவரவர்கள் கையசைக்கவுமில்லை, ஏதோ தாங்கிக் கொள்ளக் கஷ்டமான ஒரு துன்ப உணர்வுடன் சாய்ந்து தலையைப் பின்னுக்கு முக்கிக் கொண்டிருந்தார்கள்.
நான் தலைவரவர்களைப் பார்ப்பதும் வெளியில் பார்ப்பதும் யோசிப்பதுமாக அமர்ந்திருந்தேன். பேசுகிற மூடிலே தலைவரவர்கள் அறவே இல்லை. அதனால் நானும் பேசவில்லை. அவர்களுடைய கவலையோடு நானும் சேர்ந்து கொண்டது போல் என்னுடைய முகத்தை தொங்கப் போட்டுக் கெண்டேன். நாங்களிருவரும் கோபித்துக் கொண்டது போல் அமர்ந்திருந்தோம். அடுத்த நகரமொன்றில் சென்று இறங்கும் வரையில் தலைவரவர்கள் பேசவே இல்லை. அப்படியே ஹெலிக்குள் கண்மூடிக் கொண்டு தூங்கி விட்டார்கள்.
பிறகுதான் எனக்கு விடயம் தெளிவு பட்டது. அது பெரிய கதை. மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நிறுத்தப்பட்ட அபேட்சகர்களில் தலைவரவர்கள் சில சட்ட முறைகளை ஏற்படுத்தியிருந்தார்கள். அபேட்சகர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்ற சில விதிகள் தலைவரவர்களால் வகுக்கப்பட்டிருந்தன.
அந்த விதிகள் அன்றைய ஊர்வலத்தின்பொழுது ஜனாப் ஹரிஸ் புல் லாஹ் வால் கடுமையாக மீறப்பட்டிருந்ததைத் தலைவரவர்கள் கண்கூடாகப் பார்த்து விட்டார்கள். அதனால்தான் ஊர்வலத்தின் போது ஜனாப் ஹிஸ்புல்லாஹ்வைக் கண்டித்துக் கொண்டே இருந்ததை நான் பிறகு உணர முடிந்தது.
சாத்தியமான தீர்வுடன் சத்தியப்பிரமானம்
தற்பொழுது மட்டக் களப்பு மாவட் டத்தில் ஜனாப் ஹிஸ்புல்லாஹ்வுடைய யுகம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. மாவட்டத்தின் எந்த முடுக்கிலிருந்து பார்த்தாலும் ஜனாப் ஹிஸ்புல்லாஹ் அவர்களுடைய முகம் தான் தெரிகிறது. மிகவும் சந்தோசமான விடயம்.
ஆனால் அந்தக் கால கட்டத்தில் அப் படியில் லை. தலைவரவர்களுக்கு அந்த மாவட்டத்தில் மிகவும் முக்கியமானவராக ஜனாப் முகியித்தின் அப்துல் காதரும் இருந்தார். சட்டத்தரணி
2O7

Page 107
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
பவுரும் இருந்தார். கட்சி மட்டத்தில் ரூபி முஹிதீன் போன்றோரும் இருந்தனர்.
அப்பொழுது தலைவரவர்களுடைய பார்வையில் அனைவரும் முக்கியமானவர்களாக இருந்தார்கள். கட்சி நடவடிக்கைகளில் ஜனாப் முகியித்தீன் அப்துல் காதர் மிகவும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த காலமாகவுமிருந்தது. தலைவரவர்கள் ஜனாப் முகியித்தீன் அப்துல் காதிருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்களென்றால், எங்கள் தேர்தல் பிரச்சார ஓட்டத்தின்பொழுது, தலைவரவர்களும் நானும் ஒரு தடவை வாழைச்சேனைப் பகுதியில் எங்கோ ஒரு பகுதியில், மூலை முடுக்கொன்றில், புலிகளின் கடுமையான தேடுதல்களுக்கு மத்தியில் இராத் தங்கினோம்.
ஜனாப் முகியித்தின் அப்துல் காதர் சுமார் இருநூறு பேர்களுடன் விடிவிடிய எங்களைக் காவல் காத்தார். உண்மையில் கட்சி வட்டாரத்தில் அவர் மிகவும் முக்கிய பிரமுகராக விளங்கினார்.
மற்றவர்களும் மீறினர்
எப்படியோ மட்டக்களப்பு மாவட்டத்துக்குத் தலைவரவர்கள் அமைத்துக் கொடுத்த தேர்தல் விதிகள் ஜனாப் ஹிஸ்புல்லாஹ்வால் மீறப்பட்டதைத் தலைவரவர்கள் நினைத்து மனம் வருந்திக் கொண்டிருக்கும் பொழுதே, மட்டக்களப்பு மாவட்டத் தேர்தல் முடிவுகளும் ஜனாப் ஹிஸ்புல்லாஹ்வுக்குச் சாதகமாக வெளியாகின.
ஆனாலும் ஜனாப் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தலைவரவர்களை மனஆறுதல் படுத்தி, தலைவரவர்களுடைய தீர்ப்பின்படி நடந்து கொள்வதாக் கூறி விட்டார். அது தலைவரவர்களுக்கு ஒரு வகையில் ஆறுதலாகி விட்டது. உண்மையில் ஜனாப் ஹிஸ்புல்லாஹ் தலைவரவர்களைத் தாண்டுபவரல்ல, தலைவரவர்களும் அப்படியே நம்பினார்கள்.
ஜனாப் ஹிஸ்புல்லாஹவும் தலைவரவர்களுடைய சொல்லைக் கேட்டுத் தமக்கு வாய்த்த பிரதிநிதித்துவத்தை விட்டுக் கொடுக்க முன்வந்து விட்டார். ஆனாலும் ஜனாப் ஹிஸ்புல்லாஹ்வுடைய குடும்பத்தவர்களுடைய தலையீடும் பெரிதளவு முன்னுக்கு வந்தது.
பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமானம் செய்வது முதலில் யார்?
208

அப்துல் மஜீத் ஆலிம்
அவர் எவ்வளவு காலம் பதவி வகிப்பது? இரண்டாவது பதவி வகிப்பது யார்? மூன்றாவது யார் என்று தலைவரவர்களால் அந்த ஆசனம் அப்பொழுது பங்கு போடப்பட்டது. செய்வதற்கு வேறு வழியில்லாமலிருந்தது.
அதற்கும் உடன்பாடு காணப்பட்டது. அதன் பிறகு ஜனாப்
ஹிஸ்புல்லாஹ் அவர்களுடைய சகோதரர்கள் புறத்திலிருந்து தலைவரவர்களுக்கு வேண்டுகோள் வந்தது.
முதலாவதாக சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வை சத்தியப் பிரமாணம் செய்ய வைக்கும் படியும் அதன் பிறகு மறுநாளே அவர் பதவியை ராஜினாமாச் செய்தாலும் பரவாயில்லை என்று நிலைமை சிக்கலாகவே கிடந்தது. ஜனாப் ஹிஸ்புல்லாஹ் விட்டுக் கொடுத்து விட்டார்கள். ஆனால் சகோதரர்கள் புறத்திலிருந்து இப்படியான தலையீடு. இவ்வளவுக்கும் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்ப்புக்கு வருவதில் தலைவரவர்கள் மிகுந்த சிரமத்தையும், மனக்கஷ்டத்தையும் சுமந்து விட்டார்கள்.
கடைசியாக ஜனாப் ஹிஸ்புல்லாஹ் முதலாவது சத்தியப் பிரமாணம் செய்வதாக முடிவெடுக்கப்பட்டுவிட்டது. அப்படியே நடந்தது. ஜனாப் ஹிஸ்புல்லாஹ் 1989 ஆண்டு மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்றப் பிரதிநிதியாக சத்தியப்பிரமாணம் செய்தார்.
பெருமைதந்த பதவியில் சிறுமைப்பட்ட வாக்குறுதி
பிறகு காலம் கடந்து சென்றது. ஜனாப் ஹிஸ்புல்லாஹ்வுடைய கால எல்லையும் முடிந்து வந்தது. ஆனால் அவர் பதவியை விட்டுக் கொடுக்க முன்வரவில்லை.
ஏற்கனவே வெந்து போயிருந்த தலைவரவர்களுடைய உள்ளம், கடும் வேதனைக்கு ஆளாகும் கட்டம் வந்து விட்டது. ஜனாப் முகியித்தீன் அப்துல் காதர் கடும் மன வேதனையில் காலம் கடத்தி வந்தார். கட்சிக்காகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த அவருடைய வேகமும் இந்த்த் தேர்தல் பிரச்சினையால் குறையத் தொடங்கிவிட்டது. கடைசியில் பூஜ்யம்வரையில் இறங்கி விட்டார்.
கெளரவ தலைவரவர்கள் ஜனாப் ஹிஸ்புல்லாஹ்விடம் அன்பாக வேண்டினார்கள். அருளாக வேண்டினார்கள். பண்பாக வேண்டினார்கள், பணிவாக வேண்டினார்கள். கெஞ்சிக் கெஞ்சி வேண்டினார்கள். வாக்குறுதியை மாற்ற வேண்டாமென்று அழுது
209

Page 108
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
வேண்டியதாகவும் நான் கேள்விப்பட்டேன். ஆனால் கடைசி வரையில் ஜனாப் ஹிஸ்புல்லாஹ் வளைந்து கொடுக்கவே இல்லை.
பிறகு தலைவரவர்களால் ஜனாப் ஹிஸ்புல்லாஹ் கட்சி நடவடிக்கைகளிலிருந்தும் இடைநிறுத்தி வைக்கப்பட்டார்.
கொழும்பு புதுக்கடைப் பகுதியில் பெரடைஸ் பூங்கா மைதானத்தில் நடைபெற்ற கட்சி வருடாந்த மகாநாட்டுக்கு மீறி வருவதற்குத் தயாரான போது தலைவரவர்கள் பொலிஸாரைப் போட்டுத் தடுத்து நிறுத்தினார்கள்.
ஏனென்றால் வாக்குறுதிகளைப் பாதுகாக்க வேண்டியது, தலைவரவர்களுடைய முக்கிய வேலையாகி இருந்தது.
பெரடைஸ் பூங்கா மாநாட்டுக்கு ஜனாப் முகியித்தீன் அப்துல்காதர் வந்திருந்தார். ஆனால் அவர் பின்னுக்கு சற்று மறைவாக அமர்ந்திருந்தார்.
கெளரவ தலைவரவர்கள் அந்த மகாநாட்டில் உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுது மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் பற்றி மக்கள் மத்தியில் தெளிவுபடுத்திக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஜனாப் ஹிஸ்புல்லாஹ்வை மகாநாட்டுக்கு வர விடாமல் தடுத்துவிட்டதைப் பற்றியும் ஆனால் ஜனாப் முகியித்தின் அப்துல்காதர் மகாநாட்டுக்கு வராத குறையையும் கவலையுடன் எடுத்து முன்வைத்துக் கொண்டிருந்த பொழுது வாழைச்சேனைப் பகுதியிலிருந்து வந்திருந்த சில இளைஞர்கள் தக்பீர் கூறி கோஷமெழுப்பி, முகியித்தீன் அப்துல்காதர் வந்திருப்பதாக அறிவித்ததுடன் தலைவரவர்களைக் குறை கூறும் வகையிலும் சத்தமெழுப்பினர்.
அந்த நேரத்தில் மகாநாட்டின் கவனம் சற்று திசை திரும்பியது. ஜனாப் அப்துல் காதர் மெளனமாக அமர்ந்திருந்தார். அவருடைய ஆதரவாளர்கள் தடுமாறிக் கொண்டு குரலெழுப்பினர்.
உடனே புதுக்கடை முகம்மத் பாரூக் சிலருடன் ஓடிக் கொண்டு அந்தப் பக்கம் சென்றார். அவருடைய வாய் கொஞ்சம் கடுமையான வார்த்தைகளைப் பாவித்தது. அத்துடன் தலைவரவர்கள் மேடையிலிருந்து கூட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து
பேசத் தொடங்கினார்கள் அத்துடன் நிலைமை கட்டுப்பாட்டுக்கு
210

அப்துல் மஜீத் ஆலிம்
வந்தது.
இப்படியாக நீண்ட காலமாக ஜனாப் ஹிஸ்புல்லாஹ்வுடைய பிரச்சினையால் தலைவரவர்கள் நொந்து, வெந்து, சூடுபட்டுப் போனார்கள்.
கடைசியில் முகியித்தீன் அப்துல் காதர் தம்மை அறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாகக் கட்சியிலிருந்து தூரமாகி கடைசியில் மாலைச் சூரியன் மறைந்தது போன்று மறைந்தே போனார். அதன்பின் அவரை கண்ணால் கூடப் பார்க்கக் கிடைக்கவில்லை.
அதன்பிறகு பிரச்சினை மெளனமாகவே விடைபெற்று விட்டது. ஜனாப் ஹிஸ்புல்லாஹ்வும் மாவட்ட அபிவிருத்தி வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டார். மக்களை வளைத்துப் பிடித்தார். தலைவரவர்களும் அப்படியே மெளனமாகி விட்டார்கள். ஏனென்றால் அதற்கப்பால் செய்வதற்கொன்றுமில்லை. அந்தப் பிரச்சினைகளைப் படைத்தவனே முடித்து விட்டான்.
நான் எதைச் சொல்ல வருகின்றேனென்றால், கட்சியினுடைய வர்லாற்றில் கெளரவ தலைவரவர்கள் எத்தனையோ வகைகளில் எப்படியெல்லாம் சுடுபட்டுப் பொசுங்கிப் போனார்களென்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அந்த மகானுடைய சரித்திரத்தையாவது நாம் நினைவு கூர வேண்டுமல்லவா? இலகுவில் ஒரு மனித இதயம் தாங்கும் சுமைகளையா தலைவரவர்கள் தாங்கினார்கள்?
நபி இபுறாகிம் (அலை) அவர்கள் உண்மையிலேயே நெருப்பில் போடப்பட்டார்கள். ஆனாலும் அவர்கள் அதில் குளிர்மையை அனுபவித்தார்கள்.
ஆனால் அவைகளையெல்லாம் அப்படியே சகித்து, அவைகளை மறந்து, புதிதாக உள்ள விடயங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் நம் அருமைத் தலைமகன் அவர்கள். அந்தப் பண்பட்ட உள்ளம் காலமெல்லாம் வாழட்டும்.
கட்சி வேர்பிடிக்கக் காரணமான தேர்தல் திருவிழாக்கள்
நமது கட்சியினுடைய வரலாற்றில் 1988, 1989 ஆகிய இரண்டு ஆண்டுகளும் மறக்க முடியாத ஆண்டுகளாகும்.
ஏனென்றால், 88வது ஆண்டில் மாதரனrந்த் நிதித்லும, 89
21

Page 109
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
ஆம் ஆண்டில் பாராளுமன்றத் தேர்தலும் நடைபெற்றன. இதன் காரணமாக, லட்சக் கணக்கான மக்கள் கட்சிக்குப் பின்னால்
திரண்டுள்ளதை நிரூபிப்பது இலகுவாகிவிட்டது.
நாட்டுக்கு ஒரு அரசியல் கட்சியை இனம் காட்டுவதற்கு, தேர்தல்கள் போன்று வேறு எந்த சாதனமுமில்லை. ஒரு காலத்தில் பொதுத் தேர்தல் ஒன்று மட்டும்தான் கண்களுக்குத் தெரிந்தது. ஆனால் ஜே.ஆர். ஜயவர்த்தனாவுடைய அரசியலில், பி.ஆர். முறை என்ற பெயரில், பெருந்தொகையான அபேட்சகர்கள் களத்தில் குதித்து, தேர்தல் காலம் பெரிய சூறாவளியாக மாறி, பிறகு ஓய்கிறது.
அதுமட்டுமல்ல, உள்ளூராட்சி சபை, நகர சபை, மாநகர சபை, மாகாண சபை, பாராளுமன்றம், ஜனாதிபதித் தேர்தல் என்று தேர்தல் குவியல்கள். அந்தத் தேர்தல்கள் அனைத்துக்கும் முழு நாட்டிலும் சகல கட்சிகளிலிருந்தும் பல்லாயிரக் கணக்கான அபேட்சகர்கள் திரட்டப்படுகிறார்கள். அதனால் நாட்டில் அரசியல் புதிய வடிவமெடுக்கிறது.
திரு. ஜயவர்தனா எந்த நோக்கத்தில் இதனை ஏற்படுத்தினாரோ, அதுவேறு விடயம்; ஆனால் நமது கட்சி வேர் பிடிப்பதற்கு இந்தத் தேர்தல்கள் பெரிய காரணங்களாகி விட்டன. இதன் காரணமாகத்தான் நமது தலைவரவர்கள் சிறிது காலத்துக்குள் அதாவது கட்சியை அங்குரார்ப்பணம் செய்து எட்டு ஆண்டுகளுக்குள் அரசியலின் உச்சாணிக் கொப்புக்கே வரமுடிந்தது.
நாடு சுதந்திரம் கிடைத்த பிறகு எந்தனையோ சிங்களக் கட்சிகள் இந்நாட்டில் தோன்றின.
கொல் வின் ஆர்.டி.சில்வா, என்.எம். பெரேரா டாக்டர் விக்கிரமசிங்ஹ, பீட்டர் கெனமன் இப்படி இன்று வரை மிக நீண்ட பட்டியல் வருகிறது. ஆனால் அவர்கள் கடைசி வரையில் போராடி, முயன்று எந்த சாதனைகளையும் காணாமலேயே இறந்து விட்டனர். பெரும்பான்மை இனத்தின் முன் அவர்கள் அரசியலை விரித்து வைத்தும் எதையும் சாதிக்க முடியாமல் போய் விட்டது. s
ஆனால் நமது கெளரவ தலைவரவர்கள், கிழக்கிலே உதித்து, மேற்கிலே அகதியாகத் தஞ்சம் புகுந்து, சிதறுண்டு கிடந்த சிறுபான்மையை ஓரளவு ஒன்று திரட்டி பெரும் சக்தியாக ஆக்கி,
212

அப்துல் மஜீத் ஆலிம்
எல்லா சபைகளிலும் பிரதிநிதிகளைப் புகுத்தி, பாராளுமன்றத் துக்குள்ளும் தனிமையில் அல்ல, பல பிரதிநிதிகளையும் கோச்சிப் பெட்டி போன்று இழுத்துக் கொண்டே சென்று விட்டார்களென்றால், இது ஒரு சாதாரண சாதனையல்ல. அதுமட்டுமல்ல; 89 ஆம் ஆண்டு அவர்கள் நினைத்தவரை ஜனாதிபதியாக்கினார்களென்றால், அதுமட்டுமல்ல; அந்த ஜனாதிபதியும் அவருடைய அரசவையும் நன்றி மறந்தவர்களாக இருந்ததுடன் அந்த ஜனாதிபதியுடைய அரசவை, தலைவரவர்களைக் கிண்டல் செய்து கொண்டே வந்த பொழுது, அதனைப் பல்லைக் கடித்துச் சகித்துக்கொண்டே வந்து, சரியான சந்தர்ப்பத்தில், கிண்டல் செய்து வந்த ஆட்சியாளர்களை, தலை கவிழ்ந்த எதிர்க்கட்சியாக மாற்றியமைத்த தலைமகன்தான் நம் தலைவரவர்கள். ரொட்டியைப் புரட்டுவது போன்று மறுபக்கம் புரட்டிக் காட்டினார்கள். 17 ஆண்டுகளாக பயங்கர ஆதிக்கம் செலுத்திய ஆட்சியை அஸ்தமனமாக்கிக் காட்டினார்கள். 17 வருடங்களாக உதைபட்டு, மிதிபட்டு, உடைந்து சிதறுண்டு பெற்ற பிள்ளையே வெளியேறிச் செல்லும் அளவுக்கு நாதியாகிப் போன ஒரு பேரின அரசியல் கட்சியை அதிகாரத்தில் அமரவைத்தார்கள் நம் தலைமகனார்.
கையில் பொத்திய வித்தை கலகலக்கும் விந்தை
பேரினக் கட்சிகள் மாறி மாறி ஆளலாம். ஆனால், அந்தக் கட்சிகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் அரசியல் வித்தையைக்
கையில் பொத்திக் கொண்டவர் தான் நம் தலைமகனார்.
முஸ்லிம் அரசியல் வாதிகள் ஒரு பக்கம் கிடக்கட்டும்; ஏன்? சிங்களப் பேரரசியல் வாதிகளால் கூட நினைத்துப் பார்க்க முடியாமல் போய்விட்ட அரசியல் வித்தை இது.
இதன் காரணமாகத்தான் இந்தப் பெருமகனுடைய நினைவுகளை இரவு பகலாக எழுதி வடித்துக் கொண்டிருக்கிறேன். அன்னாருக்கு இவை என் காணிக்கைகள்.
இன்னுமொருவருடைய நினைவுகளை எழுதத் தொடங்கினால் அது சில பக்கங்களிலே முடிந்து விடும். அதற்கப்பால் நகர முடியாது. நானோ, நூற்றுக் கணக்கான பக்கங்களை ஊடுருவிக் கொண்டிருக்கிறேன்.
213

Page 110
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
உதவிய கரங்களுக்கு உபத்திரவ ஆராதனைகள்
1989 ஆம் ஆண்டிலே தவிர்க்க முடியாத ஒரு கட்டத்தில் மனிதாபிமான அடிப்படையில் இரகசியமான, ஒரு மனநிதியுள்ள, வாய் ஒப்பந்தத்தின் மூலம், ஒருவர் ஜனாதிபதியாக வருவதற்கு நம் தலைவரவர்கள் வழி அமைத்தார்கள். சுகததாச உள்ளரங்கிலே பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை ஒன்று கூட்டி, நீங்கள் இன்ன கட்சிக்கு ஒரு வாக்கைக்கூட வழங்கக் கூடாது, என்று மாத்திரம் கூறி, யார் ஜனாதிபதி ஆகவேண்டுமென்பதை சூசகமாக சுட்டிக்காட்டி வெற்றி பெற்றார்கள்.
அந்த ஜனாதிபதியுடைய வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்று, தேர்தலுக்கு முந்தின நாளன்று, அவருடைய வெற்றிக்காகப் பிரார்த்திக்கவும் வைத்தார்கள்.
இப்படியெல்லாம் செய்த நம் தலைவரவர்களுக்கு அந்த ஜனாதிபதி உதவிகள் செய்யாவிட்டாலும், நன்றியுடையவராகவாவது இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர் தேசியப் பட்டியல் மூலம், தமது கையாட்களை பாராளுமன்றத்துக்குள் அனுப்பினார். அந்தக் கையாட்கள் காலமெல்லாம் நம் தலைவரவர்களை எதிர்ப்பதிலும், கிண்டல் செய்வதிலுமே காலத்தைக் கடத்தி வந்தனர். அதற்காக வேண்டி அந்த ஆசனங்களில் படுத்துக் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தனர். அதற்காகவே காரும், பங்காளவும், சம்பளமும் எல்லா சலுகைகளும் பெற்று வந்தனர். தலைவரவர்களை எதிர்ப்பதைத் தவிர, பாராளுமன்றத்தில் வேறு எதுவும் தெரியாதவர்களாக அவர்களிருந்தனர். அதுவே அவர்களின் வாழ்வில் கலையாகி விட்டது.
இந்த அவலக் காட்சியை அந்த ஜனாதிபதி பார்த்துக் கொண்டும், அறிந்து கொண்டும், தெரிந்து கொண்டுந்தானிருந்தார். அவர் நன்றியுடையவர் போன்று நடித்து வந்தார். ஆனால், அவர் செய்தது நன்றியல்ல.
அவருடைய அனுமதி இல்லாமல் அந்த ஏவலாளர்கள் பாராளுமன்றத்தில் வாய் திறக்கப் போவதில்லை. அப்படியிருந்தும் அந்த ஜனாதிபதிக்கு அவருடைய கட்சிக்குள்ளிருந்த ஒரு சக்திவாய்ந்த குழுவால் அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டு அவர் அசந்து போன நேரத்திலும் கூட நம் தலைவரவர்கள்
214

அப்துல் மஜீத் ஆலிம்
தான் ஓடிச் சென்று அவருடைய கழுத்திலிருந்த முடிச்சை அவிழ்த்துள்ளார்கள்.
அப்படியிருந்தும்கூட அவருடைய நன்றியுணர்வு உறுதிப்படுத்தப் பட்டதாக விளங்கவில்லை. நம் தலைவரவர்களும் அதற்காகத் தவமிருக்கவில்லை. கடைசியாக, பதவியின் இடைக்காலத்திலேயே அவர் உலகை விட்டும் சென்று விட்டார்.
நம் தலைவரவர்கள் கடந்து சென்ற மலை போன்ற பொறுமைக் கட்டங்களைத்தான் நான் இப்பொழுது உணர்த்திக் கொண்டிருக்கிறேன்.
திரு ருக்மன் சேனாநாயக்கா போன்றவர்களுடைய கட்சிகளை ஏமாற்றி விழுங்கி ஏப்பம் விட்டவர்தான் அவர். அப்படிப்பட்ட மலைப் பாம்பிடமிருந்து தலைவரவர்கள் கட்சியைக் கட்டிக் காத்தது போதாதா?
தலைவரவர்கள் வளர்ந்தெடுத்த எத்தனையோ கட்சிக் குழந்தைகளைத் திசை திருப்பி, கட்சி பாயவைத்தவர்களும் அந்த ஜனாதிபதியுடைய ஏவலாளர்கள்தான்.
தலைவரவர்களோடு இருந்தவர்களை வெளியில் இழுத்தெடுத்து, அவர்களோடு புகைப்படம் பிடித்து, அந்தப் படங்களைப் பத்திரிகைகளில் போட்டுக் காட்டி நாட்டு மக்களுடைய உள்ளங்களைத் திசை திருப்பும் வித்தையைக் கையாண்டவர்களும் அந்த ஏவலாளர்கள்தாம்.
தலைவரவர்களோடு பாராளுமன்றத்துக் குள் சென்ற எம்.பி.மார்களில் கூட அவர்கள் கை வைத்தனர். ஜனாப் ஹிஸ்புல்லாஹ் அவர்களைத் திசை திருப்பக் கடும் முயற்சிகள் நடந்தன. கட்சிக்குள் ஜனாப் ஹிஸ் புல்லாஹ்வுக் கிருந்த இடைவெளியை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள கடும் பிரயத்தனம் செய்தார்கள்.
புஹார்தீன் ஹாஜியாரை சுழையாகவே கழற்றியெடுத்து விட்டார்கள். இன்று அவருக்கு அரசனைக் கண்டு புருஷனைக் கை விட்டநிலை. கடைசியில் அரசனுமில்லை. புருஷனுமில்லை; அரசியல் வாழ்வில் புஹார்தீன் ஹாஜியார் மறுமணமும் செய்யமுடியாத விதவை போலாகிவிட்டார்.
25

Page 111
தலைமைத்துவ ரகஸியங்கள்
தலைவரவர்களோடு அவர் இருந்திருந்தால், இன்றும் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியவர். ஆனால் இதன் பிறகு ஒரு காலமும் அவர் பாராளுமன்றத்துக்குச் செல்லக் கூடியவராக இல்லை.
படலை திறந்து வெளியேறும் படலம்
ஒரு காலத்தில் புஹார்தீன் ஹாஜியார் நாட்டின் பெரும் கோடிச் செல்வர்களில் ஒருவராக இருந்தவர். குபேர மன்னனாக அவர் கொடி கட்டிப் பறந்த போதிலும், அவரை ஒரு சக்தி வாய்ந்த ஆசனத்தில் உட்கார வைப்பதற்கு எந்த அரசியல் சக்தியோ, கட்சியோ முன் வரவில்லை. வெறும் பணத்தில் மட்டும்தான் அவர் புரண்டு கொண்டிருந்தார்.
நம் தலைவரவர்கள்தான் அவருக்கு பண வலிமைக்குள், பாராளுமன்றத்தின் பெரு வலிமையையும் உருவாக்கிக் கொடுத்தார்கள். பெரும் அரசியல் சக்தியாக அவரை உருவாக்கியெடுத்தார்கள்.
இப்படி எத்தனை பேர்களை நம் தலைவரவர்கள் அரசியல் சக்தி வாய்ந்த வீரர்களாக உருவாக்கினார்கள். எத்தனை பேர்களை வாழவைத்து, வழி காட்டி அழகுபடுத்தினார்கள். அவர்களெல்லாம் இருந்த இடத்துக்கும் சொல்லாமல் வெளியில் பாய்ந்தபோது அந்தத் துன்ப உணர்வுகளை நம் தலைவரவர்கள் எப்படித்தான் தாங்கியிருந்திருப்பார்கள்.
இத்தனைக்கும் பின்னால் நின்று செயற்பட்டவர்கள் திரு பிரேமதாசவின் ஏவலாளர்கள்தான். இவைகளை அவரும் பார்த்துக் கொண்டேதான் இருந்து வந்துள்ளார்.
கெளரவ தலைவரவர்கள் பெருங் கஷ்டப்பட்டு உருவாக்கிய மாகாண சபை உறுப்பினர்கள் எத்தனையோ பேர். அவர்கள் மீது கைவைத்தவர்களும் அந்த ஏவலாளர்கள்தாம்.
ஜனாப் சுஹைப் காதர் வெளியேறினார். ஜனாப் அமீரும் வெளியேறினர். நீர்கொழும்பில் ஜனாப் அனிஸ் ஷரீபும் வெளியேறிச் சென்றார். குருநாகலில் ஜனாப் அப்துல் ரஸலும் வெளியேறிச் சென்றார். பதுளையில் சித்தீக் ஹாஜியார் வெளியேறினார். களுத்துறையில் நசீர் ஹாஜியாரும் வெளியாகி விட்டார். ஜவாத்
216

அப்துல் மஜீத் ஆலிம்
மரிக்கார், பதுர்தீன், செய்கு இஸ்ஸதீன் உட்பட எல்லோரும் வெளியேறினர். இவர்கள் அனைவரும் மாகாண சபையில் காய்ந்த கனிகள். இவர்கள் அனைவரும் வெளியாகுவதற்குப் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் அந்த ஏவலாளர்கள்தான்.
இந்தக் கனிகளையெல்லாம் பறி கொடுத்த நம் தலைவரவர்கள் எப்படிப்பட்ட துயரத்தில் ஆழ்ந்திருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களுடைய உள்ளம் என்ன உருகாத இரும்பா? கரையாத கல்லா? அசையாத பாறையா? அந்த உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும்?
இத்தனை துன்பங்களையும் தாங்கிக் கொண்டுதான் நம் தலைவரவர்கள் அரசியல் பாதையில் அடியெடுத்து நடந்து வந்துள்ளார்கள்.
ஆனால், கட்சியிலிருந்து வெளியாகிய எவருக்கும் அந்த ஏவலாளர்கள் எதுவுமே பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. அவர்களை, ரோட்டை அளக்க விட்டுள்ளார்கள். அவ்வளவுதான். தன்லவரவர்களுடைய பாசறையில்தான் இவர்களெல்லாம் அரசியல் பிரதிநிதிகளாக இனம் காட்டப்பட்டார்கள். அதற்கு முன்போ, பின்போ அவர்கள் அந்த அடையாளங்களில் இல்லை.
டாம் வீதி அலுவலகம் இருந்த காலத்தில்தான் மாகாண சபைத் தேர்தல் நடந்தது. ஆனால் பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் டாம் விதி அலுவலகம் சித்திரா லேனுக்கு மாற்றப்பட்டது. டாம் விதி அலுவலகத்தைத் தொடர்ந்தும் நடத்த முடியாத அளவுக்கு நெருக்கடிகள் அதிகரித்தன.
தலைவரவர்கள் தங்களது இல்லத்தை பைப் ரோட்டுக்கு மாற்றினார்கள். பைப் ரோட் வீட்டுக்குக் குடி போகிற தினத்தை எனக்கு அவசரமாக அறிவித்தார்கள். நான் அதிகாலை சுபுஹத் தொழுகைக்கு முன்பே அங்கு போய் சேர்ந்தேன். தலைவரவர்கள் புதிய வீட்டில் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள். ஜனாப் பாயிஸ் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணியவர்கள் அங்கு வந்திருந்தார். தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஜனாப் சுஹைர் அவர்களும் அங்கிருந்தார். இன்னும் சிலர் இருந்தனர். நான் சென்று பாங்கு சொன்னேன். பிறகு பிரார்த்தனையிலீடுபட்டோம். சுபஹத் தொழுகையையும் அங்கு தொழுதோம்.
217

Page 112
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
கட்சி அலுவலகத்தை டாம் விதியிலிருந்து சித்திரா லேனுக்கு மாற்றி முடிய பாராளுமன்றத் தேர்தலும் வேகமாக நெருங்கிக் கொண்டிருந்தது.
பாண்துண்டுக்கும் வழியில்லாததால் வீண்போகா நம்பிக்கை
ஆனால் கட்சியில் பணமே இருக்கவில்லை. தேர்தலுக்கு முகம்
கொடுப்பதற்குப் பெருந்தொகையான பணம் தேவைப்பட்டது.
தலைவரவர்களுக்கு மண்டை வெடிக்கும் அளவுக்கு நெருக்கடி நிலை வலுவடைந்தது.
எத்தனையோ பேர்களிடம் உதவி வேண்டப்பட்டும் கிடைக்கவில்லை. எங்கு சென்று பணம் தேடுவது என்ற பிரச்சினையில் தலைவரவர்கள் ஆழ்ந்து விட்டார்கள்.
நாடு முழுவதும் அபேட்சகர்களைத் தேடவேண்டும். தேர்தல் மனு தாக்கல் செய்ய வேண்டும். நாடு முழுவதும் பிரயாணம் செய்ய வேண்டும். கூட்டங்களை நடத்த வேண்டும். பொதுவான போஸ்டர்கள் லட்சக் கணக்கில் அடிக்க வேண்டும். என்ன விளையாட்டு வேடிக்கையா? யார்தான் இப்படியான வேலைக்கு முன்வாருவான்?
பைத்தியம் பிடித்து விடும்.
பணமில்லாமல் பாக்கு, வெற்றிலை கூட வாங்க முடியாத இந்தக் காலத்தில், வெறுங்கையுடன் பாராளுமன்றத் தேர்தலா? நமது தலைவரவர்கள் முன்வைத்த காலைப் பின் வைக்க அறியாதவர்கள். மலை போன்று வரும் சுமைகளைக் கொஞ்சம் கூடக் கணக்கெடுக்கமாட்டார்கள்.
மகாத்மா காந்தி அடிகளார் சொன்னார்: "நான் எனது தோல்விகளையும், பிரச்சினைகளையும் கொஞ்சம் நினைத்துப் பார்த்தேனென்றால் அடுத்த நிமிடமே செத்து விடுவேன்” ஓர் இலட்சியவாதி இறைவனைத் தவிர வேறு எதற்குத்தான் அஞ்சப் போகிறான்.
தற்பொழுது நம் தலைவரவர்களுக்கு பிரியாணி கொடுப்பதற்காகப் பலர் கியூவில் நிற்பதைப் பார்க்கின்றோம். ஆனால் ஒரு காலத்தில்
கட்சி அலுவலகத்துக்குள் கிடக்கும் ஒரு பையனுக்கு ஒரு பாண் துண்டு வெட்டிக் கொடுக்க ஆளில்லாமலிருந்தது.
218

அப்துல் மஜீத் ஆலிம்
ஒரு நாள் நான் சித்திரா லேன் அலுவலகத்துக்குச் சென்றேன். ஆரம்பத்தில் அது தேர்தல் அலுவலகமாகத்தான் செயற்படத் தொடங்கியது. தேர்தல் சூடு நாட்டில் அதிகரித்துக் கொண்டிருந்தது.
திரு லலித் அத்துலத் முதலி போன்றோர் போஸ்டர்களினால், கொழும்பு நகரைப் போர்த்திக் கொண்டிருந்தனர்.
நான் சித்திரா லேன் அலுவலகத்துக்குச் சென்று பார்த்த பொழுது, அங்கே புஹார்தீன் ஹாஜியார் அமர்ந்திருந்தார். அவரைக் கண்டதும் எனக்கு ஒருவிதப் புத்துணர்ச்சி ஏற்பட்டது.
அழகாக அமர்ந்திருந்தார். அள்ளி வீசப்பட்ட கவர்ச்சிப் புன்னகைச் சிரிப்பு வாட்ட சாட்டமான தோற்றம்; கறுப்பழகன், ஆணழகன், ஐஸ்வரியங்களின் சொந்தக்காரன். எந்தக் கவலையுமில்லாமல் சுவர்க்கத்தில் அமர்ந்திருப்பது போன்று அமர்ந்திருந்தார். அரசியல் சக்தியைத் தவிர, உலகில் அனைத்துமே அவருக்கிருக்கிறது. இப்பொழுது அவருக்குத் தேவைப்படுவது அது ஒன்று மட்டும் தான். அதற்காகத்தான் அவர் அப்பொழுது, தன் மாளிகையிலிருந்து இறங்கி, தலைவரவர்களுடைய சிறிய வாடகை வீட்டில் வந்து அமர்ந்துள்ளார்.
புஹார்தீன் ஹாஜியார் தங்கமான ஒரு மனிதர். மிக நல்லவர். என்ன செய்வது? விரும்பியவர் விரும்பிய திசையில் அவரை இழுத்துக் கொண்டு சென்று விடுவார்கள். அவரும் இழுபட்டுப் போய் விடுவார். அவர்கள் பயன்படுத்திக் கொண்டு அவரை விட்டு விடுவார்கள். அவருடைய வாழ்வின் தலைவிதியே இப்படித்தான் இருந்து வந்திருப்பது விளங்க வருகிறது.
அவர் பல கோடி சம்பாதித்துமுள்ளார்; அழித்துமுள்ளார். கணக்குப் போட்டுப் பார்த்தால், சம்பாதித்ததையும் விட அழித்ததுதான் அதிகமாகும். அவர் பணக் குன்றின் மீது அமர்ந்திருந்தவர்தான். ஆனால் அதிலிருந்து அவர் மெதுவாக விழுந்து கொண்டிருந்தது உலகின் கண்களுக்குப் புலப்படவில்லை.
வழுக்கிக் கொண்டிருக்கும் நிலையில்தான், தலைவரவர்களுடைய தொடர்பும் அவருக்கேற்பட்டது. அனால் அவர் வழுக்கிக் கொண்டிருந்ததை, ஆரம்பத்தில் தலைவரவர்கள்கூடக் கண்டிருக்க நியாயமில்லை.
219

Page 113
தலைமைத்துவ ரகளியங்கள்
தலைவரவர்கள் புஹார்தீன் ஹாஜியாரை முதலில் சந்தித்தார்களோ, அல்லது புஹார்தீன் ஹாஜியார் தலைவரவர்களை முதலில் சந்தித்தார்களோ தெரியவில்லை.
பாலும் பணமும் கைகளிலேந்தி.
ஆனால் இரு தரப்பு சந்திப்புகளும் இரு வகைகளாக அமைந்தன. அதை நான் இங்கு சிரமத்துடன் விளக்குகிறேன். அதற்கு முதலில் ஒரு சிறு உதாரணத்தை முன்னுக்குக் கொண்டு வருகிறேன்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறு குழந்தையாக இருந்தபொழுது, பால் குடிப்பதற்காக வேண்டி ஹலிமா அம்மையாரின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள். நபிகளாருக்குப் பால் தேவைப்பட்டது. ஹலீமா அம்மையாருக்குப் பணம் தேவைப்பட்டது. நபிகளார் அனாதைக் குழந்தை; ஹலிமா அம்மையார் குடும்பம் மிகவும் வறுமை நிலை.
நபிகளாரிடம் பணமில்லாவிட்டாலும், பாக்கியமிருந்தது. ஹலீமா அம்மையாரிடம் பாக்கியங்களிருக்கவில்லை; பால் மட்டும் இருந்தது. எப்படியோ இரு தரப்பு சந்திப்புகளும் கட்டாயமானதாக அமைந்தன.
எமது கட்சிக்கும், புஹார்தீன் ஹாஜியாருக்கும் இடையில் ஏற்பட்ட நிலைமை இதுபோன்றுதான் அமைந்தது.
கட்சி குழந்தையாக இருந்தது. வறுமையிலிருந்தது. பால் கொடுக்க யாருமில்லை. கட்சியை ஈன்ற தாயாரிடமும் பாலில்லை. கட்சிக் குழந்தை கடும் பசியில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. இப்பொழுது குழந்தை எழுந்திருக்க வேண்டும். பொதுத் தேர்தல் என்ற பெயரில் ஒரு விளையாட்டு மைதானத்தை அந்தக் குழந்தை சந்திக்க வேண்டியிருந்தது. அந்த மைதானத்தில் வயதுவந்தவர்களுடனும் அனுபவஸ்தர்களுடனும் தவழ்ந்து கொண்டும் போட்டியிடும் நிலை குழந்தைகளுக்கு உள்ளது. ஆனால் அந்தக் குழந்தைக்கு முதுகெலும்பு பலம் போதாமலிருந்தது. அந்தக் குழந்தைக்குக் கொஞ்சம் பாலைக் கொடுத்து விட்டால் போதும். அது விரைவாக விளையாடத் தொடங்கும். அந்தக் குழந்தை விளையாட்டில் வெற்றி பெற்று விட்டால், அதற்குக் கிடைக்கக்கூடிய பரிசுகள் மிகவும் பெரியன.
ஹலிமா அம்மையார் அவர்கள் குழந்தை நபிகளாரை ஏறிட்டுப்
22O

அப்துல் மஜீத் ஆலிம்
பார்த்தார்கள். தன் நிலை மறக்கிறார்கள். அந்தக் குழந்தையின் தாயாரிடம் செல்வங்கள் இல்லாவிட்டாலும் கூட அந்தக் குழந்தை பாக்கியம் பெற்ற ஒரு குழந்தையாக இருப்பதை உணர்ந்து கொள்கிறார்கள். இந்தக் குழந்தையைக் கொண்டு எனது வீட்டுக்கு பெரும் பாக்கியங்கள் ஏற்படலாம் என்று யூகித்தார்கள். ஆகவே குழந்தையை அள்ளி அணைத்தார்கள். எடுத்துச் சென்று பாலூட்டினார்கள்.
ஆம், ஆச்சரியமான உண்மை. அந்தக் குழந்தையினுடைய அதிர்ஷ்டம் ஹலீமா அம்மையாரை வாழவைத்தது; செழிக்க வைத்தது. சூழ்ந்திருந்த கஷ்டங்கள், தரித்திரங்கள், வறுமை, நோய்கள், அனைத்தையும் பறக்கடித்து அவர்களுடைய வாழ்வில் செழிப்பை உண்டாக்கியது.
குழந்தை நபிகளாருக்கு ஹலிமா அம்மையார் அவர்கள் பாலை மட்டும்தான் ஊட்டினார்கள். அந்தக் குழந்தைக்குத் தேவைப்பட்டது அது மட்டும்தான். ஆனால் அந்தக் குழந்தையின் பின்னணியில், ஹலிமா அம்மையாருடைய வாழ்வின் சரித்திரமே புனர்நிர்மாணம் பெற்றது.
இது பற்றி பூசரி இமாம் அவர்கள்,
"நபிகளார் ஹலிமாவின் வீட்டுக்கு
பால் குடிக்கவா சென்றார்கள்?
இல்லை; அவர்கள் சென்று
ஹலிமாவின் குடும்பத்துக்கே பாலூட்டினார்கள்”
என்று பாடுகிறார்கள்.
புஹார்தீன் ஹாஜியார் ஹலிமா அம்மையாரின் பாத்திரம் ஏற்று வருகிறார். கட்சிக் குழந்தையையும், அதன் தாயையும் பார்க்கிறார். தாயிடம் பாலில்லை. குழந்தைக்கும் கடும்பசி அவரிடத்தில் கொஞ்சம் பணப்பாலிருந்தது. இந்தக் குழந்தையை எழுப்பி பொதுத் தேர்தல் மைதானத்தில் விட்டு விடலாம். அதன் பிறகு இந்தக் கட்சிக் குழந்தையின் பாக்கியங்களால் நான் என்னுடைய திரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பயங்கரமான சரிவையும்,
221

Page 114
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
வீழ்ச்சியையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்று அவர் யூகித்தார்.
உடனே கட்சிக் குழந்தையை அள்ளி அணைத்தார். கட்சிக் குழந்தையின் தாயாகிய தலைவர் அவர்களையும் அணைத்தார். அவருடைய யூகத்தின் படி கட்சிக் குழந்தை பால் அருந்தியது. பொதுத் தேர்தல் மைதானத்தில் குதித்து விளையாடியது. அதனால், இந்தக் குழந்தைக்கு நியாயமான பரிசுப் பொருள்கள் கிடைத்தன. குழந்தையும் சற்று உறுதியாகி விட்டது. குழந்தையின் தாய்க்கும் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது.
பரிசைப் பெற்று புன்னகை சிந்தி.
குழந்தைக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களில், தேசியப் பட்டியல் பாராளுமன்ற சிம்மாசனம் ஒன்றும் இருந்தது. அந்த ஆசனத்தை அப்படியே எடுத்து குழந்தையின் அருமைத் தாயார் செவிலித் தாயாகிய புஹார்தீன் ஹாஜியாரிடம் அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். பாலூட்டியவரல்லவா. அதற்குரிய நன்கொடையைக் கொடுப்பது நியாயம்தானே. அந்த சிம்மாசனம் செவிலித்தாய் புஹார்தீன் ஹாஜியாருடைய மறைவிலிருந்த சரிவுப் பள்ளத்தாக்குகளை மூடி மறைத்தது. அந்த சிம்மாசனம் அவருக்கு ஏற்பட்ட சரிவுகளை தடுத்து நிற்கும் கேடயம் போன்று அமைந்தது.
கட்சிக் குழந்தை வென்றெடுத்த அந்த சிம்மாசனத்தில் செவிலித் தாயாகிய அவர் ஒய்யாரமாகச் சாய்ந்தார். அந்த ஆசனம் அவரை கம்பீரமாகக் காட்டி அவரது சரிவுகளை மறைத்தது. அவர் பெரும் சக்தியாக தோற்றம் வழங்கினார். அதுமட்டுமல்ல, கட்சிக் குழந்தையின் தாயாரை அணுகி, உயர் மட்டத்தில், பெரும் பிரயோசனங்களை அடைந்தார். அவருக்கு ஏற்பட்ட பள்ளத்தாக்குகளை தாயாரைக் கொண்டு மூடினார். செவிலித் தாயல்லவா? என்ன செய்வது? குழந்தையின் தாயார் தன் குழந்தைக்குப் பாலூட்டிய காரணத்துக்காக செவிலித் தாய்க்குப் பின்னால் நீண்ட நாட்களாக ஓடி ஒடி களைத்துப் போய்விட்டார்கள். கடைசியில் குழந்தைக்கும் தாய்க்கும் எதிராக அந்தச் செவிலித் தாயார் பெருத்த மனநோவுகளையும் உண்டாக்கினார். சதிகளும் செய்தார். பிரிந்தும் சென்று விட்டார்.
ஹலிமா அம்மையார் அவர்கள் குழந்தை நபிகளாருக்கு பாலை ஊட்டிக் கொண்டு அவர்களிடமிருந்து பெரும் பாக்கியங்களை
222

அப்துல் மஜீத் ஆலிம்
அடைந்தார்கள்தான். ஆனால், அந்த செவிலித் தாயார் குழந்தைக்கு எந்த அநியாயமும் செய்யவில்லை. அதற்கு மாறாக, குழந்தையை கண்களைப் போன்று பாதுகாத்தார்.
புஹார்தீன் ஹாஜியார் 89 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலின் போது செவிலித் தாயாக வந்து நமது கட்சிக் குழந்தைக்குப் பாலூட்டியது பார்ப்பவர்களின் கண்களுக்குத் தெரிந்தது. ஆனால், கட்சிக் குழந்தையும் தாயாகிய தலைவர் அவர்களும் செவிலித் தாய் புஹார்தீன் ஹாஜியார் அவர்களுக்குச் செய்த இரகசியமான பேருபகாரங்களை அதிகமானோர்கள் கண்டிருக்க முடியாது. சிந்தித்துப் பார்த்தால், கட்சிக் குழந்தை அவரிடம் பால் குடிக்கவா சென்றது. மாறாக குழந்தை அவருக்குப் பெரும் பாக்கியங்களை ஊட்டியது.
கொஞ்சுங்கிளியே அமைதிகொள்வாயே
இதுதான் தமது கட்சிக்குள் புஹார்தீன் ஹாஜியாரின் சரித்திரமாகும். பொருளாதாரத்தில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த அவர், அந்தத் துறையில் சோதனை வந்த பொழுது, அதை மறைப்பதற்கு அரசியலில் புகுந்தார். உண்மையில் எந்த மனிதரும் கஷ்டங்களை சமாளிப்பதற்கு ஏதாவது ஒரு வழியைத் தேடுவது சகஜம். இவருக்கும் நடந்தது அதுதான். ஆனால், கவலைப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், தலைவர் அவர்களையும் கட்சியையும் அவர் நன்கு உபயோகித்த பிறகு எதிராளியாக மாறினார். தலைவர் அவர்களுக்கு நீண்ட நாட்களாக ஒரு தலையிடியாக இருந்து வந்தார். அவர் தலைவர் அவர்களுடன் அசையாது நின்று வந் திருந்தால் , அவர்கள் ஒரு போதும் அவரைக் கைவிட்டிருக்கமாட்டார்கள். இன்றும் அவர் பாராளுமன்றத்தில் சிலவேளைகளில் ஒரு பிரதி அமைச்சராக வாழ்ந்து கொண்டிருக்க வேண்டிய ஒருவராவார்.
ஆனால் தலைவர் அவர்கள் எந்த உயரத்திற்கு அவரை ஏற்றி வைத்தார்களோ அந்த உயரத்திற்கு இதன் பிறகு அவர் ஏறுவதை நினைத்துத்தான் பார்க்க முடியுமா? இப்படியாகக் கட்சியினுடைய வரலாற்றில் எத்தனை பெயர்களால் நம் தலைவர் அவர்கள் சுடுபட்டு பொசுங்கியுள்ளார்கள் என்பதை நான் எண்ணி எண்ணி நினைவுகூர வேண்டியுள்ளது.
223

Page 115
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
கப்பலில் ஏற்றப்பட்ட ஆயிரக்கணக்கான கொள்கலன்களை அந்தக் கப்பல் அமைதியாக சுமந்து கொண்டு கடலிலே சென்று கொண்டிருப்பதைப் போன்று கெளரவத் தலைவர் அவர்களும் கப்பற்துறை அமைச்சராக இருந்து, ஒரு கப்பலாக உருவாகி, ஆயிரக்கணக்கானவர்கள் கொடுத்த துன்பங்களையெல்லாம் கொள்கலன்களாகச் சுமந்து கொண்டு அமைதியாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்றுமே அமைதியாகத்தான் போய்க் கொண்டிருப்பார்கள். எத்தனை ஆயிரம் துயரச் சம்பவங்கள் குறுக்கிட்டாலும், அவர்களுடைய அமைதியைக் குலைக்க எந்த சக்தியாலும் முடிவதில்லை.
எழுதிச் செல்லும் நினைவின் அலைகள்
நான் இங்கு கட்சியின் சரித்திரத்தை எழுதவில்லை. தலைவர் நினைவுகளைத் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்த நினைவலைகளில் நான் மிதக்கும் பொழுது, கட்சியின் சரித்திரம் வந்து புகுந்து கொள்கிறது.
ஏனென்றால் தற்பொழுது எனக்கு மிகவும் முக்கியமாக உள்ளது தலைவர் நினைவுகள்தான். இன்றோ, நாளையோ நான் இறந்து விட்டால், இந்த நினைவுகளை இன்னுமொருவரால் கொண்டு வரமுடியாது. அந்த நினைவுகள் என்னோடு மறைந்துவிடும். இந்தப் பெருமகனுடைய சரித்திரம் ஒருபோதும் மறையக் கூடாது.
நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த நினைவுகள் கெளரவத்தோடு எல்லா வீடுகளிலும் வைத்துப் பாதுகாக்கப்பட்டு, படிக்கப்பட்டு, கெளரவத் தலைவர் அவர்களுடைய கண்ணியமான வாழ்வில் உள்ளமெல்லாம், இல்லமெல்லாம் நினைவு கூரும் நாள் வரவேண்டும். அந்த நாளே என் வாழ்வின் பொன்நாள் என்று போற்றுவேன். கட்சியை வளர்ப்பதற்காகத் தலைவர் அவர்கள் பட்ட இப் பெரும்பாடுகளை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். அப் பொழுதுதான் கட்சியின் பெறுமதி காலமெல்லாம் பாதுகாக்கப்பட்டு வரும்.
அவ்வாறு கட்சியின் கண் ணியம் உள்ளங் களில் நிலைபெற்றிருந்தால்தான் கட்சி என்றும் நிலைபெற்றிருக்கும். மக்களின் உள்ளங்களில் தலைவரவர்களுடைய தியாகங்களையும்,
224

அப்துல் மஜீத் ஆலிம்
கட்சியினுடைய பெறுமதியையும், அது உருவாக்கப்பட்ட நோக்கத்தையும் பதிய வைத்து விட வேண்டும். அதுவே கட்சியின் உறுதியான அத்திவாரமாக மாறிவிடும்.
காலத்துக்குக் காலம் கனிதரினும் காலமெல்லாம் நிழல் தரும் மரம்
பதவிகளும், பட்டங்களும் வரலாம்; போகலாம். ஆனால் கட்சியினுடைய தரம் ஒருபோதும் இறங்கி விடக் கூடாது. நமது சின்னம் மரமாகும். அது நம் தலைவர் அவர்களுடைய மூளையிலிருந்து ஊறிய எண்ணமாகும். மரம் எப்பொழுதும் கனியைத் தருவதில்லை. அதற்கும் ஒரு காலம் உண்டு. ஒரு மரத்திடமிருந்து எல்லாக் காலங்களிலும் கனியை எதிர்பார்க்க முடியாது. ஆனால், காலமெல்லாம் அதனுடைய நிழல் இருந்து வரவேண்டும். ஆகவே, மரக்கிளைகளுக்கு சேதம் வராமல் பாதுகாக்கப்பட வேண்டும். மரக்கிளைகளும் வளர வேண்டும். மரம் தந்த கட்சியின் கிளைகளும் உறுதியாக நின்று வளர வேண்டும். ஒவ்வொரு கிளையும் தலைவரவர்களுடைய இந்த நினைவுகளை உரமாகப் பாவிக்க வேண்டும்.
மரத்தைப் பாதுகாத்து வைத்துக் கொண்டால், சமயம் வரும் போது கனிகளைத் தரும். இல்லாவிட்டாலும் காலமெல்லாம் நிழல் தந்து இளைப்பாறவைக்கும். இந்த நிழலும் இளைப்பாறுதலும் மிகவும் முக்கியமான விடயங்களாகும். இதன் காரணமாகத்தான் கெளரவ தலைவர் அவர்களுடைய தலையிலிருந்து மரச்சின்னத்தின் ஊற்று பொங்கி எழும்பியது. இந்த மரத்தை வளர்ப்பதற்கு அவர்கள் பட்ட கஷ்டங்களை நம் தலைவர் நினைவுகள் நினைவுபடுத்திக் காட்டுகின்றன.
அந்த நினைவுகளை காலமெல்லாம் நம் சமுதாயம் நினைத்துக் கொண்டே வரவேண்டும் என்பதற்காகத் தான் இதை எழுதிக் கொண்டிருக்கின்றேன். புனித குர்ஆனிலே, சரித்திரங்களைப் பார்க்கின்றோம். எச்சரிக் கைகளைப் பார்க் கின்றோம். வாக் குறுதிகளைப் பார்க்கின்றோம். உவமானங்களைப் பார்க்கின்றோம். சட்டங்களைப் பார்க்கின்றோம். காலத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ற முறையில் அது இறங்கியுள்ள புதுமையையும் பார்க்கின்றோம்.
225

Page 116
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
நானும் இந்த நினைவுகளில் புனித குர்ஆனுடைய சாயலில் ஓர் அணு அளவை பின்பற்ற விரும்பினேன். தேவையான இடங்களுக்கு, சரித்திரங்கள், உதாரணங்கள் ஆகியவைகளையும் அமைத்து நினைவு வருகின்ற அடிப்படையில் எழுதிக் கொண்டிருக்கின்றேன். எவையெல்லாம் எனக்கு நினைவாக வந்து கொண்டிருக்கின்றவோ அவைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த நிமிடத்தில் நான் படுக்கையில் படுத்திருக்கிறேன். என்னால் எழுந்திருப்பது கஷ்டமாக இருக்கிறது. நான் தலைவர் அவர்களுடைய நினைவுகளை உச்சரித்துக் கொண்டிருக்கிறேன். என் மனைவி கட்டிலில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.
மெல்லப்பேசி வெல்லும் பேச்சு
இப்பொழுது, தலைவர் அவர்களை நான் பார்க்கப் போக வேண்டும். ஒவ்வொரு நாளும் ஓய்வு நேரத்தில் அது என் ஆவலாகும். ஓர் நாளைக்கு தலைவர் அவர்களைப் பார்க்கவில்லையென்றால் என் உள்ளத்தில் துருப்பிடித்தது போன்ற ஓர் உணர்வு ஏற்படும். ஏனென்றால், தலைவர் அவர்களுடைய பேச்சு, அணுகு முறைகள் உள்ளத்தில் ஒரு தெம்பை உண்டாக்கி விடுகிறது. அந்தத் தெம்பு எவரோடு பேசினாலும் வருவதில்லை. அவர்கள் வாயைத் திறந்தால், குரலிலிருந்து வரும் ஒரு விதமான சத்தம், அந்த ஓசை, அது ஒரு கோடிக் குரல்களில் தேடினாலும் எடுக்க முடியாது.
நான் நாடு முழுவதும் அலைந்திருக்கிறேன். உலகில் பெரும் பாகங்களில் சுற்றியிருக்கிறேன். லட்சக்கணக்கான குரல் சத்தங்களை கேட்டிருக்கின்றேன். ஆனால், இந்தக் குரலோசையின் தொனி அமைப்பை, நான் கேட்டதே இல்லை. அதற்குள் ஒரு சக்தி மறைந்திருக்கிறது. மனிதர்களை, மனித உள்ளங்களையெல்லாம் அந்தக் குரல், தட்டிச் சமைத்து விடும். திசை திருப்பிவிடும். அந்தக் குரலைக் கொண்டு ஏமாற்றுவதென்றால் லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றியும் விடலாம். ஏனென்றால், அந்தக் குரலோசையில் ஒரு விதமான நம்பிக்கை உணர்வு தொனிக்கிறது. மக்கள் இலகுவில் கவரப்பட்டு விடுகிறார்கள். அது இறைவனின் அமானிதக் குரல். அதனால் தலைவரவர்கள் அந்தக் குரலால் எவரையுமே ஏமாற்றி அறியமாட்டார்கள், சாதாரணமான ஒருவருக்கு அந்தக் குரலோசை கிடைத்தால் திரும்பிய திசையெல்லாம் ஏமாற்றிக் கொண்டே இருப்பார். அந்தக் குரலோசையின் மீது நம்பிக்கையினுடைய
226

அப்துல் மஜீத் ஆலிம்
முலாம் பூசப்பட்டுள்ளது. நான் தலைவரவர்களுடன் ஒரு நினைவு தினக் கூட்டத்துக்குச் சென்றேன். அந்த கூட்டத்துக்கு திரு. சிவசிதம்பரம் தலைமை தாங்கினார். காலஞ்சென்ற திரு. அமிர்தலிங்கம் அவர்களுடைய நினைவு தினம் நினைவு கூரப்பட்டுக் கொண்டிருந்தது.
அந்தக் கூட்டத்துக்கு திரு. தேவராஜம் வந்திருந்தார். அவர் அப்பொழுது ஒரு பிரதி அமைச்சராக இருந்தார். திரு. தேவராஜ் அங்கு உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபொழுது எங்கள் தலைவரவர்கள் பற்றிய சில ஆச்சரியமான விடயங்களை
வெளியிட்டார்.
அவர் சொன்னார்: "திரு. அஷ்ரஃப் அவர்கள் மிகவும் அழகாக பேசக் கூடியவராக இருக்கிறார். அந்த அழகான பேச்சின் காரணமாகவே மக்களின் தலைவராகவும் இருக்கிறார். அதாவது நீங்கள் மக்களின் தலைவராக இருப்பதற்கு உங்களுக்கு வேறு ஒன்றும் தேவையில்லை. உங்களுடைய அழகான பேச்சு ஒன்று மட்டுமே போதுமானதாகும்’ என்ற கருத்தை அவர் வெளியிட்டார். ஒரு பேச்சு வெல்லும்; இன்னுமொரு பேச்சு கொல்லும் என்றொரு பழமொழி சொல்வார்கள். தலைவர் அவர்களுடைய பேச்சுக்களில் ஒவ்வொரு வார்த்தையும் வெல்லக் கூடிய வார்த்தைகளே. கலப்பில்லாத தங்கம் போன்று ஒவ்வொரு வார்த்தையும் அமைந்து விடுகிறது.
வட-கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்காக நான் தலைவர் அவர்களுடன் சென்றிருந்தேன். இந்திய இராணுவப் படையின் தளபதி ஜெனரல் கல்கட் அவர்களுடைய அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு அவரோடு நாங்கள் அமர்ந்திருந்தோம். அவர் மிகவும் கண்ணியமான மனிதராகத் திகழ்ந்தார். ஒரு சாதாரண இராணுவ அதிகாரியினுடைய எளிமையான தன்மைகளுடன் அவர் எங்களுடன் நடந்து கொண்டார்.
தலைவர் அவர்களுக்கும் அவருக்குமிடையில் உரையாடல் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது, தலைவரவர்கள் பேசிக் கொண்டிருந்த அழகான பாணியைப் பார்த்து அவர் பரவசமடைந்து கொண்டிருந்ததை நான் கண்டு மகிழ்ந்தேன். அதன் பிறகு, திரு. வரதராஜப்பெருமாள் ஒருவிதமான கம்பீரத்துடன் அங்கு வந்தார். அவரோடும் தலைவரவர்கள் அலாதியான ஒரு பாணியில்
227

Page 117
தலைமைத்துவ ரகஸியங்க
பேசினார்கள். அந்தப் பேச்சில் அவர் மடங்கிப் போனார். அவருடை கம்பீரத்தன்மை மாறி புனிதமான ஒரு மனநிலைக்கு இறங் வந்துவிட்டார்.
அதுபோன்று எத்தனையோ பிரிகேடியர்களை சந்தித்தோ கப்டன்மார்களையும் சந்தித்தோம். மற்றும் பெரிய இராணு அதிகாரிகளையெல்லாம் சந்தித்தோம். அவர்கள் அனைவரு தலைவரவர்களுடைய உரையாடலின் முன் தங்களை மறந் பரவசப்பட்டவர்களாக காணப்பட்டார்கள்.
திரு. பிரபாகரன் கூட தலைவரவர்களை நேருக்கு நேர் சந்திக்க கிடைத்தால் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு, தலைவரவர்களோ சேர்ந்து கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
றசூல் (ஸல்) அவர்கள், “நான் உங்களிலே அழகாகப் பேச கூடியவன்’ என்று அழகான பேச்சு இறைவனின் பேரரு கொடையாகும். புனித குர்ஆனிலே கூட “அவன்தான் பேசக் கற்று கொடுத்தான்” என்று இறைவன் கூறுகிறான்.
இந்தப் பேச்சின் வலிமையினாலேயே தலைவர் அவர்க பெருங் காரியங்களை சாதித்துக் கொண்டு வருகிறார்கள்.
பாராளுமன்றில் குரலாயுதப் போராட்டம்
நமது கட்சி சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டிருந்தது. எல்லா சபைகளிலும் உறுப் பினர்கள் உருவாகி விட்டார்கள் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் நாடுமுழுவதும் மலிந்து விட்டார்கள்.
பொதுமக்கள் மத்தியிலும், சாதாரண அரசியல் மட்டத்திலும் உயர் அரசியல் மட்டத்திலும் நமது கட்சி மிகவும் பார்வையாகி விட்டது.
தலைவரவர்களுடைய பாராளுமன்ற உரைகள் அந்த மன்றத்துக்குள் புது வடிவமெடுத்தன. நீண்டகாலமாக பாராளுமன்றத்துக்குள் கிடந்து, பழசாகி அலுப்புத் தட்டி கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த பெருந்தொகையான உறுப்பினர்களுக்கு தலைவரவர்களுடைய பிரவேசம் எதிர்பாராத உணர்வுகளை
ஏற்படுத்தியது.
228

அப்துல் மஜீத் ஆலிம்
ஏனென்றால், 'ஒவ்வொன்றும் அதனுடைய எண்ணத்தைப் பொறுத்தது' என்று நமது நபிகளார் (ஸல்) சொன்ன ஒரு வார்த்தை இருக்கின்றது.
அந்த எண்ணத்தின் அடிப்படையில் செயல்களும் அமைகின்றன. சென்று கொண்டிருக்கின்றன. தலைவரவர்கள் பாராளுமன்றத்துக்குள் புகுந்திருக்கும் நோக்கம் ஏனைய உறுப்பினர்களிலிருந்து சம்பூரணமாக வேறுபட்டதாகும்.
“உயிருள்ளவரை நான் பாராளுமன்றத்தில்தான் வாழவேண்டும்'; பட்டம், பதவி, காலமெல்லாம் என்னிடம் இருக்க வேண்டும்; எனது தொகுதி மக்கள் மத்தியில் காலமெல்லாம் நான் சிறந்து விளங்க வேண்டும்.”
இப்படியாக பல்வேறுபட்ட எண்ணங்களுடன் பெருந்தொகையான உறுப் பரினா களுடைய காலம் பாராளுமன்றத் துக் குள் கடந்துகொண்டிருக்கிறது. அது அவர்களைப் பொறுத்தவரையில் ஒருவகை நியாயமாக இருக்கலாம். அவர்களுடைய நேரத்தைக் கடத்திவிட்டு அவர்கள் போய்விடலாம்.
ஆனால் நமது தலைவரவர்கள் பாராளுமன்றத்துக்குள் புகுந்தநோக்கம், ஒரு பெரும் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டதாகும். வந்துகொண்டிருக்கும் வெள்ளத்துக்கு அணைகட்ட வேண்டும். கடந்த கால அரசியல் வெள்ளத்திலே பாதிக்கப்பட்டு விட்ட சமுதாயத்துக்குப் புனர்வாழ்வு அளிக்க வேண்டும். மீண்டும் வெள்ளம் வந்து சமுதாயத்தைத் தாக்கி விடாதவாறு பாரிய தடுப்புகளை ஏற்படுத்தி விட வேண்டும்.
இப்படி ஒய்வே இல்லாத, கடைசிவரையில் ஒய்வெடுக்கவே முடியாத பாரிய லட்சியங்களை தோளிலே சுமந்துகொண்டு, உதவிக்கு சிலரையும் அழைத்துக் கொண்டு, தலைவரவர்கள் அங்கு பிரவேசித்துள்ளார்கள்.
பாராளுமன்றம் ஏனைய உறுப்பினர்களுக்கு பொழுதுபோக்கும் இடமாகவோ அல்லது தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்ட இடமாகவோ இருக்கலாம்.
ஆனால் தமது தலைவரவர்களுக்கு அந்த மன்றம் ஒரு பெரும் போராட்டக்களமாகும். சாதாரண போரல்ல; இடைவிடாத,
229

Page 118
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
ஆயுதங்களைக் கீழேவைக்க முடியாத அளவுக்கு, நெருக்கடி மிகுந்ததாகும். ஆகவே அதற்குள் அவர்கள் மிகவும் துடிப்புடனும், கவனமாகவும் நடந்துகொள்ள வேண்டிய நிலை.
ஏனைய உறுப்பினர்கள் நிம்மதியாக ஆசனங்களில் சாய்ந்து கொண்டிருக்கும் பொழுது, தலைவரவர்கள் அங்கு கடும் போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டிய நிலை.
அவர்களுடைய அரசியல் ஆயுதபாணித் தோற்றம், மற்ற உறுப்பினர்களுக்குத் தம்மையறியாத உற்சாகத்தைக் கொடுத்து விடுகிறது. அவர்கள் செயற்படுவது எப்படிப் போனாலும், இந்தப் போராட்டக் காட்சிகளை ரசித்துக் கொண்டிருப்பதில் அவர்களுடைய பொழுது இனிமையாகக் கழிந்து விடுகின்றது.
தலைவரவர்கள் அங்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குள்ளே பெருந்தொகையான உறுப்பினர்கள் போராட்டத்தை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். தலைவரவர்கள் மூட்டை மூட்டையாக வேலைகளைக் கட்டிச் சுமந்துகொண்டு தான் அங்கு புகுந்துள்ளார்கள். அவர்கள் சுமந்த போராட்டச் சுமை கடைசிவரை முடிவை எட்டாதது. பரம்பரை பரம்பரையாக எடுத்துச் செல்ல வேண்டிய போராட்டமாகும்.
அவர்களது இடையறாத போராட்டத்தின் காரணமாகப் பாராளுமன்றம் புதிப்பொலிவு பெற்றது. அங்கு நோக்கங்கள் தோற்றத்திற்கு வந்து விட்டன. அந்த மன்றம் எதற்காகப் பாவிக்கப்படவேண்டும் என்பதை அதற்குள் புகுத்த அனைவரையுமே சிந்திக்க வைத்துவிட்டது.
மற்றவர்கள் சிந்தித்துக் கொண்டு, உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, தலைவரவர்களுடைய போராட்டம் வெகுதொலை முன்னோக்கிச் சென்று விட்டது.
பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்குப் பல வருடங்களுக்கு முன்பிருந்தே, அதற்குள் நடக்க வேண்டிய போராட்டத்திற்கான பயிற்சிகளைத் தலைவரவர்கள் எடுத்து விட்டார்கள். எந்தெந்தக் காரணங்களை முன் வைத்து, போராட்டத்தை நடத்திச் செல்லவேண்டுமென்ற நுணுக்கமான ஆற்றலையும் பெற்றுக் கொண்டார்கள்.
துவளாத தொண்டர்கள் தோற்றம்
230

அப்துல் மஜீத் ஆலிம்
வாழ்நாள் முழுவதும் ஆற்றவேண்டிய போராட்டத்தினுடைய அடுத்தடுத்தக் கட்டங்களின் குறிப்புப் பட்டியலையும் தயார் செய்து விட்டார்கள். அதன் பிறகுதான் கட்சியென்ற போர்க் கப்பலைத் தயார் செய்தார்கள். அதன் பிறகு 'தொண்டர்கள்’ என்ற போராளிகளை உருவாக்கினார்கள். அவர்களைக் கொண்டு பொதுமக்களையும் உஷார் படுத்தினார்கள். பிறகு மக்களுடைய வாக்கு ஆயுதங்களை அள்ளியெடுத்துக் கொண்டு பாராளுமன்றத் துறைமுகத்தை அடைந்தார்கள். கட்சிக் கப்பலை நங்கூரமிட்டுவிட்டு, கடும் போராட்டத்தில் இறங்கி விட்டார்கள்.
பாராளுமன்றத்துக்குள்ளே, ஒரு மக்களின் பிரதிநிதியின் உண்மையான உருவம் தலைவரவர்களால் வெளிப்பட்டது. பாராளுமன்றத்தினுடைய உண்மையான லட்சனம் என்ன? என்பது தலைவரவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. பாராளுமன்றத்துக்கு உள்ளே ஒரு பிரதிநிதிக்கு எவ்வளவு பெரிய வேலை காத்துக் கொண்டிருக்கின்றது என்பது அவர்களால் உணர்த்தப்பட்டது. தலைவரவர்களுடைய அரசியல் விரோதிகள் உள்ளத்துக்குள் அவர்களை ஏற்றிப் போற்றும் அளவுக்கு அவர்களுடைய நடைமுறைகள் அலங்காரம் பெற்றன.
பாராளுமன்ற வளவுக்குள் கடந்த காலங்களில் நீண்ட காலமாக பலவீனமான அத்தியாயமே தொடர்ந்து வந்திருக்கின்றது. பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பிழைக்கும் தொழிலாகவும் மாறிவிட்டிருந்தது. அந்தந்தத் தொகுதிகளிலே, நாங்கள் பெரியவர்களாக மதிக்கப்பட்டவர்களாக வாழ்ந்து வரவேண்டும் என்ற நோக்கத்தில் தான் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பாவிக்கப்பட்டு வந்திருக்கிறது.
தலைவரவர்களுடைய பிரவேசத்துக்குப் பிறகு, தூங்கிக் கொண்டிருந்த மனிதன் அவசரமாக எழுப்பப்பட்டால் அவன் திடீரென்று விழித்து தன்னையறியாத ஓர் உற்சாகத்தைக் காட்டிக் கொள்வது போன்று உறங்கிக் கொண்டிருந்த எத்தனையோ பிரதிநிதிகள் திடீர் விழிப்படைந்து கைகால்களை நீட்டி உற்சாகம் அடைந்தவர்களாகக் காட்டிக் கொள்ளுமளவுக்கு தலைவரவர் களுடைய விறுநடை அமைந்து விட்டது. அந்த வீறுநடையை சகிக்க முடியாமல் நீண்டகாலமாக பல பிரதிநிதிகள் ஒரு விதமான ரோஷ உணர்வு கொண்டு நடந்து கொண்டதுமுண்டு. ஆனால், காலப்போக்கிலே தலைவரவர்களுடைய தோற்றம் சுய கெளரவ
231

Page 119
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
உரோஷக்காரர்களுக்கு பெருங்கற்பாறை போன்று தோன்றியது. ஆனால், அவர்களுடைய காழ்ப்புணர்ச்சிகள் அப்படியே மடிந்து விட்டன.
தற்போதைக்கு அத்தகைய மனம் படைத்தவர்கள்கூட இப்படி ஒரு வீரர் பாராளுமன்றத்துக்குள் எப்பொழுதும் வாழவேண்டும் என்ற மனச்சாட்சியின் உருவைப் பெற்று விட்டனர். ஆரம்பகாலத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் மட்டத்தில் தலைவரவர்கள் எரிச்சலூட்டக்கூடிய ஒரு சுமையாக தோற்றம் வழங்கினார்கள். அதற்குக் காரணமென்ன? தலைவரவர்கள் உண்னதமான பாரிய லட்சியக் கோவையுடன் பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்ததை அவர்கள் பார்த்தார்கள். இதன் பிறகு, அவர்கள் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு அனைவரும் சேர்ந்து முயற்சி செய்தாலுங்கூட தலைவரவர்களுடைய கையில் இருக்கும் பாரிய லட்சியக் கோவையை ஒருபோதும் நெருங்க முடியாது என்பதை அவர்கள் நினைத்துப் பார்த்தார்கள்.
மக்கள் மத்தியில் ஏமாற்றப்பட்டு வந்த எங்களுடைய போலித்தோற்றங்கள் இதன் பிறகு செல்லுபடியற்றதாக ஆகி விடும் என்று விசனப்பட்டார்கள். இதன்பிறகு எங்களுடைய பரம்பரைக்கு இந்த ஆசனத்தின் அதிர்ஷ்டம் மறைந்து விடுமே என்றும் அவர்கள் யோசிக்கத் தொடங்கினார்கள். அதன் காரணமாக மக்களை திசைதிரும்பும் முயற்சியில் நீண்டகாலமாக ஈடுபட்டு கடைசியில் தோல்வி கண்டார்கள். உண்மைதான்! அவர்களுடைய கணிப்பு சரியாக அமைந்து விட்டது.
இஸ்ஸதீனின் சிரிப்பும் ஓர் இறுமாப்பா?
நான்கூட கட்சியின் ஆரம்பகாலத்தில் கட்சியினுடைய நோக்கங்களைப் பற்றியும் லட்சியங்களைப் பற்றியும் தொலைக்காட்சியில் உரையாற்றினேன். அந்த உரையின் பொழுது என்னால் ஒரு பெரிய விஷயத்தைத் தெளிவுபடுத்த முடிந்தது. அந்த உரைக்கு நான் செல்ல முன்பு டாம் வீதி அலுவலகத்துக்குச் சென்றேன். தேர்தல் காலமாக இருந்தது. அலுவலகம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். தவிசாளராக இருந்த ஜனாப். செய்கு இஸ்ஸதீன் தமது அறைக்குள் வேகமாக வேலைகளில் ஈடுபட்டிருந்தார். நான் அலுவலகத்துக்குள் நுழைந்ததும், என்னைக் கிண்ட அவர் அவசரமாகக் கூப்பிட்டார். நான் அறைக்குள் சென்றேன்.
232

அப்துல் மஜீத் ஆலிம்
“ஹஸ்ரத்! எங்களிருவருக்கும் ஒரு முக்கிய வேலை இருக்கிறது. நீங்கள் வரும்வரையில் தான் நானும் பார்த்துக் கொண்டிருந்தேன்.” என்று சொல்லிவிட்டு உதடுகளை ஒரு விதமாக ஒரமாக்கிச் சிரித்தார். அவர் சிரித்தால் அவருடைய பற்கள் வெளியில் தெரிய மாட்டாது. மங்கலான இருட்டில் அவர் சிரித்தால் அவருடைய சிரிப்பை ஒரு விதத்திலும் விளங்க முடியாது. அவருடைய சிரிப்பைக்கூட எவராலும் விளங்கிக் கொள்ள முடியாது. அவருடைய சிரிப்பைக்கூட எவராலும் விலைக்கு வாங்க முடியாது.
எப்படிப்பட்ட எமராஜா வந்தாலும் சரி, தலையைப் பணித்து பல்லைக் காட்டிவிட மாட்டார். அப்படிப்பட்ட ஒரு தன்உணர்வை பிடிகொடுக்காமல் வைத்துக் கொண்டிருப்பார். இத்தகைய ஒரு மனிதரைத் தலைவர் அவர்கள் வைத்திருந்ததும் ஒரு பெரிய சாதனையாகும். தற்போது கையில் ஒரு வாக்குக் கூட இல்லாவிட்டாலும்கூட, அவரும் ஒரு கட்சியின் தலைவர் என்ற பெயரில் நடமாடிக் கொண்டிருக்கிறார் என்றால் அவருடைய தனித்துவத்தன்மையை உணர்த்துவதற்கு வேறு ஆதாரம் தேவையில்லை:
அன்று அலுவலகத்துக்குள் வைத்து, “என்ன வேலை இருக்கிறது?” என்று கேட்டேன். "வாருங்கள் போவோம் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்கு” என்று அழைத்தார். அப்படிச் சொல்லிக் கொண்டே பைல் ஒன்றையும் கையில் எடுத்துக் கொண்டு எழுந்துவிட்டார். அவர் எனக்கு மூச்சுவிடவும் அனுமதிக்கவில்லை. அவ்வளவு வேகமாக என்னையும் கைகளால் தள்ளிக்கொண்டு அவரது அறையை விட்டும் வெளியாகி பூட்டும் போட்டு விட்டார். நான் அவருக்குப் பின்னால் நடந்தேன். டாம் விதி அலுவலக மாடியிலிருந்து பூமிக்கு இறங்கினோம். “ஹஸ்ரத்! உங்கள் பைக்கை ஸ்டார்ட் பண்ணுங்கள்’ என்றார். நான் ஸ்டார்ட் பண்ணினேன். அவர் பின்னால் அமர்ந்து கொண்டார். நான் ஒட்டிச் சென்று கொண்டிருந்தேன். அவர் என்னோடு விளையாட்டுக் கதைகளைக் கதைத்துக் கொண்டே இருப்பார். என்னோடு விளையாடி அவருக்கு நன்கு பழகிவிட்டது.
நான் அறிந்தவரையில் எங்கள் தலைவர் அவர்களுக்கு அடுத்ததாக அவர் மனந்திறந்து பேசி மகிழ்வது என்னோடு மட்டும்தான் என்று நினைக்கிறேன். எவருக்கும் அவர் இலகுவில் மனத்தைத் திறந்து
காட்ட மாட்டார். எவராலும் விலைக்கு வாங்கிவிட முடியாதவர்போல்
233

Page 120
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
தற்போதுதான் காட்சிதந்தார். ஒருநாள் என்னை அழைத்துக்கொண்டு காலுக்கு செருப்பு எடுக்க வேண்டும் என்று புறக்கோட்டைக்குச் சென்றார். எங்கள் தலைவர் அவர்களோடு நான் எவ்வளவு நெருங்கி இருந்தேனோ அது போன்று அவரோடும் நெருங்கி யிருந்தேன். புறக்கோட்டையில் பல சப்பாத்துக் கடைகளில் ஏறி இறங்கினோம். எத்தனையோ வகையான செருப்புகளை அவருக்கு நான் காட்டினேன். ஆனால், அவர் எடுக்க முன்வரவில்லை. நகைச்சுவைகளைக் கதைத்துக் கதைத்து, கடைகடையாக ஏறி இறங்கினார். எனக்கு போதுமாகிவிட்டது. ஒரு கடையில் ஒரு பாதணி ஜோடியை சுட்டிக் காட்டி அதை எடுங்கள் என்றேன். வெகுளியாக ஒரு சிரிப்புச் சிரித்தார். ஆனாலும் பற்கள் தெரியவில்லை. அவர் கேட்டார்: “ஹஸ்ரத்! ஒரு கட்சியின் தவிசாளர் போடுகின்ற செருப்பா இது”? நான் ஒருமூச்சு சிரித்துக் கொண்டிருந்தேன்.
எந்த நேரமும் ஏதாவது ஒன்றைச் சொல்லி என்னை சிரிக்கவைத்துக் கொண்டே இருப்பார். என்னுடைய சிரிப்பைப் பார்த்து அவர் ஆத்மதிருப்தியடைந்து உதடுகளை மடக்கிக் கொண்டிருப்பார். சிரிக்கும் விடயத்தில் அவர் என்னை பின்பற்றவே மாட்டார். அவரோடு நான் இருப்பதை ஒரு மனிதர் கண்டார். என்னை அவர் இரகசியமாகக் கூப்பிட்டார். "இவருடன் நீங்கள் எங்கே செல்கிறீர்கள் ஹஸ்ரத்” என்று கேட்டார். நான் சொன்னேன்: "அவர்தான் எங்கள் கட்சியின் தவிசாளர்” பிறகு, அவர் என் காதுக்குள் ஊதினார். இவரைக் கண்டால் ஒரு ஒட்டுக்கூடக் கிடைக்க மாட்டேதே என்று சொன்னார். நான் சிரித்தேன். பிறகு ஜனாப் செய்கு இஸ்ஸதீன் அவர்களிடம் நான் அந்த விடயத்தை சொன்னேன். அவர் அதைக் கேட்டுவிட்டு நீண்டநேரம் சிரித்தார். நானும் அவருடன் சேர்ந்து சிரித்தேன். இருவரும் எங்களை மறந்து சிரித்துக் கொண்டே சென்றோம். அவர் தமது உள்ளத்தைத் திறந்து சிரித்ததை அன்றுதான் நான் பார்த்தேன். அவருடைய இரண்டு பற்களையும் கண்டதுபோன்ற ஞாபகம். அது இரகசியமான விடயம் என்று நினைத்துக் கொண்டேன்.
பிரிப்புக்கு முன்னறிவிப்புச் செய்த சிரிப்பு அலுவலகத்தை அடைந்தோம். தலைவர் அவர்களைக் கண்டோம்.
அடுத்த நிமிடம் ஜனாப் செய்கு இஸ்ஸதீன் தலைவரவர்களிடம் அந்த மனிதர் சொன்ன கதையை அப்படியே சொல்லிவிட்டார்.
234

அப்துல் மஜீத் ஆலிம்
அது பாரதூரமான கதை. நான் மறைத்துவைக்க விரும்பினேன். ஆனால் ஜனாப் செய்கு இஸ்ஸதீனுக்கு அது எவ்வித ஒரு பாராதுரத்தையும் காட்டவில்லை. அந்தக் கதையைக் கேட்டு தலைவர் அவர்களும் எதிர்பாராத ஒரு அமைப்பில் உள்ளான சிரிப்பொன்றை வெளியாக்கினார்கள். அது சிரிப்பாகவும் இருந்தது. சிந்திக்கக் கூடியதாகவும் இருந்தது.
நீண்ட தொலைவில், ஏதோ ஒன்றை வழங்கியது போன்று, கவலைச் சாயலும் கலந்ததாக தலைவரவர்களுடைய சிரிப்பு வெளிவந்தது. அப்பொழுது, அவர்களுடைய சிவந்த முகம் அழுமுகமாகப்பட்ட தோற்றத்தில் இருந்தது. அதை சோகச் சிரிப்பாகவும் மாற்றலாம். அந்தச் சிரிப்பு தவிர்க்க முடியாத, ஒரு விதியை, எண்ணிச்சிரிப்பது போன்றிருந்தது. ஏதோ நீண்ட தொலைவிலுள்ள தவிர்க்க முடியாத ஒரு இரகசியத்தை முன்னறிவிப்புச் செய்வது போன்று அந்தச் சிரிப்பு அமைந்தது. தலைவர் அவர்கள் சிரித்து முடிந்த பிறகு, எங்கள் உள்ளத்தில் இருந்த நகைக்சுவைக் குதூகலம் இனந்தெரியாமல் மறைந்தது. உள்ளத்தின் அடி ஆழத்தில் இருந்து ஒரு சோக உணர்வை வெளிக்கொணர்ந்துவிட்டது.
உண்மையில் தலைவரவர்கள் சிரித்தாலும் அந்தச் சிரிப்பிலும் ஒரு முன்னறிவிப்பு இருந்ததை உணரமுடிகிறது. அந்த முன்னறிவிப்புத்தான் ஜனாப் செய்கு இஸ்ஸதீனுடைய இன்றைய நிலையாகும் என்பதை என்னால் தெளிவாக உணர முடிகிறது.
தூரத்துத் தீர்க்க தரிசனம்
அன்றைய தினம் ஜனாப் செய்கு இஸ்ஸதீன் எனது பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டு சில அரசியல் நகைச்சுவைகளை என்னிடம் சொல்லிக் கொண்டு வந்தார். நானும் சிரித்துக் கொண்டே பைக்கை செலுத்திக் கொண்டு சென்றேன். இருவரும் மகிழ்ச்சி பொங்க சிரித்துக்கொண்டு ரூபவாஹினி நிலையத்தை அடைந்தோம். அவருடைய கையில் ஒரு அழகான போர்வை விரிப்பிருந்தது. அது ஆலிம்களுக்குரிய போர்வை. அதை என் கையில் தந்தார். “உள்ளே சென்று போர்த்திக் கொள்ளுங்கள்’ என்றார். நான் “ஏன்” என்று கேட்டேன். “நீங்கள் இன்று தொலைக்காட்சியில் 15 நிமிடங்கள் கட்சியைப் பற்றி உரையாற்ற வேண்டும்.” என்று சொன்னார். நான் அசையாமல் நின்றுகொண்டு
235

Page 121
தலைமைத்துவ ரகஸியங்கள்
அவருடைய முகத்தை உற்று நோக்கினேன். அவர் உதடுகளை மடக்கிக் கொண்டு என்னைப் பார்த்தார். மறைமுகமான சிரிப்பு நெளிந்தது. கண்களும் மின்னின. அவர் சிரிக்கும் பொழுது, அவருடைய கண்கள் இரகசியமான ஒரு மினுக்கத்தை வெளியாக்கும். அந்த மினுக்கம் "நான் உங்கள் முன் ஏமாறுபவனல்ல” என்று சொல்லுவது போன்று இருக்கும். அவர்தான் தொலைக்காட்சியில் உரையாற்றப் போகிறார் என்று நான் நினைத்தேன். "இது என்ன விளையாட்டு; நாங்கள் கதைத்துக் கொண்டிருப்பது போன்று தொலைக்காட்சியில் உரையாற்றலாமா” என்று சொல்லிப் பின்வாங்கினேன். அவர் சொன்னார். “உண்மையில் நீங்கள் பேசியே ஆகவேண்டும். அதற்காகத் தான் கூட்டி வந்தேன்” நானும் அப்பொழுது அரசியலுக்கு மிகவும் புதியவன்.
கெளரவ தலைவர் அவர்களின் பாசறையில் அரசியல் பாடங்களைப் படித்துக் கொண்டிருந்த காலம். ஜனாப் செய்கு இஸ்ஸதீனிடம் “என்ன பேச வேண்டும்” என்று நான் கேட்டேன். எதை சரி பேசுங்கள் என்றார். கதைத்துக் கொண்டே, ரூபவாஹினிக் கட்டடத்தை நெருங்கிக் கொண்டிருந்தோம். அவர் என்னை கேலி பண்ணுவதில் குறைவே இருக்காது. வெளியில் என்னைப் பயம்காட்டிவிட்டு உள்ளே சென்று அவர்தான் பேசப்போகிறார் என்று நான் நினைத்துக் கொண்டேன்.
நாங்கள் உள்ளே சென்று விட்டோம். அவர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு அவசரமாக ஏற்பாடுகளை செய்தார். பிறகு நாங்களிருவரும் அலங்காரம் செய்யும் அறைக்குள் சென்றோம். அப்பொழுதுதான் எனக்கு உண்மை விளங்க வந்தது. அவருக்குப் பதிலாக அலங்கரிக்கும் ஆசனத்தில் உட்காரவைக்கப்பட்டேன். நன்றாக மாட்டிக்கொண்டேன். அவருடைய வேலையே அப்படித்தான். நான் அலங்கரிக்கப்பட்ட பிறகு என்மீது ஆலிம்களுக்குரிய
போர்வையை போர்த்திவிட்டார். நான் “வேண்டாம்” என்று சொன்னேன். “இந்தப் போர்வைதான் மக்களையெல்லாம் திசைதிருப்பப் போகிறது” என்று சொல்லி முகத்தில் வேடிக்கைத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டார். எனக்கு ஒன்றுமே
விளங்கவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவருடன் இழுபட்டுக்கொண்டு வீடியோ அறையை அடைந்தேன். அங்கு கமெரா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. நான் இரகசியமாக, “இஸ்ஸ்டீன் சேர்! என்ன பேசுவதென்று எனக்குச் சொல்லுங்களேன்;
236

அப்துல் மஜீத் ஆலிம்
இது என்ன விளையாட்டு வேலையா? என்று கேட்டேன்.
மீண்டும் அவர் சொன்னார்: "உங்கள் வாய்க்கு எது வருகிறதோ அதைப் பேசுங்கள்’. அவர் எவ்வளவு பெரிய நுணுக்கசாலி என்பதை நான் யோசிக்க வேண்டியுள்ளது. என்னுடைய பேச்சைப் பற்றி அவர் என்ன இரகசியத்தைத்தான் விளங்கி வைத்துள்ளாரோ தெரியவில்லை. அன்று அவர் சாதிக்க வேண்டியதை சாதித்துவிட்டார். அந்தத் தொலைக்காட்சி உரையின் மூலம் முழு நாட்டையே ஒரு திருப்பு திருப்பி விட்டார். இதுதான் ஜனாப் செய்கு இஸ்ஸதீனுடைய தீர்க்க திருஷ்ட ஞானமாகும்.
தனக்கே உதவா திறமைகளின் தலைவிதி
கெளரவ தலைவர் அவர்கள் ஜனாப் செய்கு இஸ்ஸதினை தங்களது கையிலே வைத்துக் கொண்டிருந்தது சும்மாவா? அந்தக் காலத்தில் தலைவர் அவர்கள் அவரைத்தூக்கி தலையில் வைத்துக் கொண்டிருந்தது விணுக்காக அல்ல. அது அவருடைய தலைவிதி யாகும். ஒரு மனிதனுடைய தலையெழுத்தை இன்னுமொருவரால் மாற்றுவது மிகவும் கஷ்டம். அவர் கட்சிக்கு உள்ளே இருந்தாலும் சரி, வெளியிலே இருந்தாலும் சரி, கெளரவ தலைவர் அவர்கள் அவர்மீது வைத்திருக்கக் கூடிய கண்ணியத்திலே ஒரு குறையும் இல்லை.
ஜனாப் செய்கு இஸ்ஸதீன் வெளியிலிருந்து கொண்டு தலைவரவர்களை தாக்கினார் என்றால், அது அவருக்கேற்பட்ட தலைவிதிதான். கெளரவ தலைவரவர்கள் ஒருபோதும் அவரைத் தாக்கப் போவதில்லை. எவரையும் தாக்கப் போவதில்லை. அவர் மீது தலைவரவர்கள் வைத்த கண்ணியத்தை தலைவரவர்கள் ஒருபோதும் வாபஸ் பெறப் போவதில்லை.
தலைவரவர்களுடைய ஒரு பேச்சிலிருந்து அந்த விடயம் எனக்குத் தெளிவாகிறது. ஜனாப் செய்கு இஸ்ஸதீனிடம் இருந்த ஒரு தீர்க்க திருஷ்டி ஞானத்தை தலைவரவர்கள் நன்கு புரிந்திருந்தார்கள். அதன் காரணமாகத்தான் அவருக்காக வேண்டியே தவிசாளர் என்ற ஆசனத்தை அமைத்து கட்சியின் முகட்டிலே உட்காரவைத்தார்கள்.
ஒரு பெரிய விஷயத்தை நான் குறிப்பிடுகிறேன். அதாவது ஜனாப் செய்கு இஸ்ஸதீனுடைய திறமைகளை உபயோகிப்பதற்கு
237

Page 122
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
நம் தலைவரவர்களால் மட்டும் தான் முடிந்தது. இப்பொழுது அது முடிந்து விட்டது. ஓர் இரகசிய உண்மை என்னவென்றால், அவருடைய திறமைகளை உபயோகிக்க அவரால் கூட முடியாது. இதுதான் தலைவிதி என்பது.
முசோலினி ஹிட்லரோடேயே கிடந்தான். ஸ்டாலின் லெனினை விட்டும் பிரியவில்லை. பிரடரிக் ஏங்கல்ஸ் கார்ல் மார்க்ஸை விட்டுப் பிரியவில்லை. ஜவகர்லால் நேரு மகாத்மா காந்தியின் செருப்பாக நின்று உழைத்தார். லியாகத் அலிகான் முஹம்மது அலி ஜின்னாஹ்வுக்குப் பின்னாலேயே சென்றார். ஹஸ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய ஞாபகமில்லாமல் ஒரு மூச்சைக்கூட இழுத்து விடமாட்டார்கள். மகாகவி அல்லாமா இக்பால் (றஹ்) அவர்கள் இந்த விடயத்தைப் பாடும்போது, வெட்டுஒன்று துண்டு இரண்டாகப் பாடிக் காட்டுகிறார்கள். அதாவது:
பர்வான் கு சிராஹே புல் புல்கு புல் பஸ் சித்தீக்கே லியேஹே ஹதாக்கா
(ரஸ்சல் பஸ்) “விட்டில் பூச்சிக்கு விளக்கு போதுமானது தேன் பூச்சிக்கு பூப் போதுமானது அபூபக்கர் சித்தீக் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய றசூல் போதுமானவர்கள்" என்று விதியினுடைய ஒரு மாபெரும் இரகசியத்தை தெளிவுபடுத்திக் காட்டுகிறார்கள். மகாகவி இக்பாலின் கவிதையின் அடிப்படையில் நான் நோக்குகிறேன்.
சூரிய ஒளியின்றி ஒரு சூரியகாந்தியா?
“ஜனாப் செய்கு இஸ்ஸதீனுக்கு தலைவரவர்களே போதுமானவர்கள்” என்ற ஆரம்ப நிலை தொடர்ந்திருந்தால், ஜனாப் இஸ்ஸதீனுடைய சரித்திரமே புதுமையாக அமைந்திருக்கும்.
மகாத்மா காந்தியோடு கிடந்ததால்தான் நேரு ஒளிவீச முடிந்தது. லியாகத் அலிகானும் அப்படித்தான், ஸ்டார்லினும் அப்படித்தான்,
238

அப்துல் மஜீத் ஆலிம்
ஜனாப் இஸ்ஸeன் ஒரு விதமான தங்கம்தான். ஆனால், அந்தத் தங்கத்தினுடைய தலைவிதி தலைவர் அவர்களுடைய பட்டறையிலே சுடுபட்டுக்கொண்டும் அடிபட்டுக் கொண்டுமே இருக்க வேண்டும். 1989 ஆவது ஆண்டிலே நடைபெற்ற பொதுத் தேர்தலிலே தலைவரவர்கள் முதலாவதாகத் தெரிவானார்கள். ஜனாப் செய்கு இஸ்ஸதீன் பின்னால் நின்றார். அவருக்கு ஆசனம் வாய்க்கவில்லை. அதன் காரணமாக தலைவரவர்கள் அதிர்ந்து விட்டார்கள்.
“தவிசாளர் இஸ்ஸதீன் செல்லாத பாராளுமன்றத்துக்கு நான் எப்படிச் செல்வது” என்று சொல்லி அழுதவர்கள்தான் நம் அருமைத் தலைவரவர்கள். இந்தத் தலைமகனை ஜனாப் இஸ்ஸதீன் ஏன்தான் பிரிந்தாரோ! ஏன்தான் பகைத்துக் கொண்டாரோ! என்பதை நினைக்கும் பொழுது நானும் அழத்தொடங்குகிறேன். ஏனென்றால் ஜனாப் செய்கு இஸ்ஸதீன் மீது தனிப்பட்ட அன்பைச் செலுத்தியவன் நான்.
ஒரு பிள்ளையினுடைய தாய், அப்பிள்ளையினுடைய தந்தையோடு, விவாகரத்தாகிப் பிரிந்து விட்டால், அந்தப் பிரிவு அந்தப் பிள்ளையை எவ்வளவு பாதிக்குமோ அதைவிடவும் ஜனாப் செய்கு இஸ்ஸதீனுடைய பிரிவு என்னைப் பாதித்தது. ஆரம்ப காலத்தில் அரசியல் களத்திலே, தலைவரவர்கள் எனக்குத் தகப்பனாக இருந்தார்கள் என்றால், ஜனாப் செய்கு இஸ்ஸதீன் என் அரசியல் தாயாக இருந்தார். நான் ஓர் உண்மையைக் கூறுகிறேன். தலைவர் அவர்களை விட்டுப் பிரிந்து விட்ட ஜனாப் செய்கு இஸ்ஸதீன், தம் வாழ்நாள் முழுவதும் முயன்றாலும், நினைத்திருக்கும் அரசியல் இலக்கை அடைய (ԼplգԱմո5].
கெளரவ தலைவரவர்கள் ஆரம்பகாலத்தில் கட்சியின் டயராக இருந்தார்கள்; ஜனாப் இஸ்ஸதீன் டியூபாக இருந்தார். காலப்போக்கில் டியூப்பில் பல ஓட்டைகள் விழுந்தன. அந்த ஓட்டைகளை மூடிப்பார்த்தால், வெயிலுக்கு அந்த மூடுவாசல்கள் உருகத் தொடங்கின. போகப் போக டயருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை. வேறு வழியில்லாமல், டியூப் அகற்றப்பட்டு டயர் "டியூப் லெஸ்” ஆக மாற்றப்பட்டது. அதனால் இப்பொழுது கெளரவ தலைவரவர்கள், ஆணி குத்தினாலும், இலகுவில் காற்று வெளியாகாத "டியூப் லெஸ் டயராக" மாறிவிட்டார்கள். ஆனால் டியூப்’ ஒருபோதும் பாதையில் வாகனத்தை சுமக்காது. டயருக்குள் அடங்கி விட்டால்தான் "டியூப்” உடைய பெறுமதி நிலைக்கும். அது வெளியில் எடுக்கப்பட்டு
239

Page 123
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
விட்டால் சுறுட்டப்பட்ட சாரைப்பாம்பு போன்றிருக்கும்.
இன்றைக்கும்தான் ஜனாப் செய்கு இஸ்ஸதீன் எப்படியாவது தலைவரவர்களுக்குள் வந்து அடங்கினால், என்றாவது ஒரு நாள் அவர் பழைய நிலைக்குவர இடமுண்டு என நான் நினைக்கிறேன். அது வேறு விடயம்; ஆனால் வேறு வழி என் கண்களுக்கு விளங்கவே இல்லை.
தொலைக் காட்சியில் துலங்கிய உரை
ரூபவாஹினி நிலையத்துக்குள் வைத்து நான் பேசத் தொடங்கினேன். ஜனாப் செய்கு இஸ்ஸதீன் எதிர்புறத்தில் நின்றுகொண்டு கைகளை அசைத்து அசைத்து என்னை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். இறைவன் புறத்திலிருந்து உதிப்பாக அந்த வார்த்தைகள் என்னிடத்திலிருந்து வெளியாகிக் கொண்டிருந்தன. கட்சியினுடைய வரலாற்றிலே, ஒரு திருப்புமுனையாக அமைந்த அந்த உரையிலே சில நினைவுகளைக் குறிப்பிடுகிறேன். அதாவது, முஸ்லிம் சமுதாயப் பெருமக்களே! நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக கட்சியின் தலைமை அலுவலகத்தை நோக்கி மக்கள் வெள்ளம் நிரம்பிவழிந்து கொண்டிருக்கின்றது. இந்தக் காட்சியைக் கண்டு தற்போதைய முஸ்லிம் அமைச்சர்கள் கதிகலங்கி நிலைதடுமாறி விட்டனர். நமது கட்சியை கடுமையாக தாக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். இதற்குக் காரணம் என்ன? எமது கட்சியைக் கண்டு இந்த முஸ்லிம் அமைச்சர்கள் எதற்காக இப்படிப் பயந்து நடுங்க வேண்டும். இவ்வளவு காலமாக மக்களை ஏமாற்றிக் கொண்டு பாராளுமன்றத்தில் அமர்ந்து கொண்டிருந்தோமே, இனிமேலும் அந்த நிலை தொடர முடியாத அளவுக்கு எங்கள் இரகசியங்களை வெளிக்கொணரக்கூடிய ஓர் அரசியல் அமைப்பு தோன்றி விட்டதே, இதன் பிறகு எங்களுடைய வித்தைகளை சமுதாயத்தின் முன் பாவிக்க முடியாத நிலை வந்துவிட்டதே என்று அவர்கள் பயப்படுகிறார்கள். இதன் காரணமாகத்தான் எப்படியாவது, இந்த முஸ்லிம் அரசியல் கட்சியை வேரோடு கிள்ளி எறிந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் பரம்பரைக்கே தலைதூக்கிப் பார்க்க முடியாத நிலை வந்துவிடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். இதன் காரணமாகத்தான் தங்கள் சுயதேவைக்காக வேண்டி கட்சியை அழித்துவிட கங்கணம் கட்டி இருக்கிறார்கள். இவ்வாறு, எமது உரை சென்றுகொண்டிருந்தது.
240

அப்துல் மஜீத் ஆலிம்
பேச்சு முடிந்ததும் ஜனாப் செய்கு இஸ்ஸதீன் ஒடிக்கொண்டு வந்து தன் நிலை மறந்து என்னை இறுகக் கட்டிப்பிடித்தார். அந்தப் பயங்கரமான அணைப் ஒரு நிமிடம் நீடித்திருக்கும். அவருக்கு வந்த மகிழ்ச்சி உணicல் எனது முதுகெலும்புகளை உடைத்து விடப்பார்த்தார்.
உண்மையில், அவருடைய கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணிர்த்துளிகள் மிதந்து வந்ததை நான் பார்க்க முடிந்தது. வானம் தான் இடிந்து விழுந்தாலும்கூட ஜனாப் செய்கு இஸ்ஸதீன் கண்ணிர் வடிப்பவரல்லர். அவரிடத்தில் கண்ணிரை ஒரு நாளும் பார்க்க முடிவதில்லை. ஆனால் அன்று கட்சியினுடைய வளர்ச்சி கண்டு அந்த மனிதர் அழுதார். நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த நினைவுகளை படிக்கக் கிடைத்தால் அப்பொழுதும் அவர் அந்த பசுமையான நாட்களை நினைத்து அழுதே ஆகுவார் என்பதில் எனக்கு ஐயமில்லை.
இப்படிப்பட்ட ஜனாப் செய்கு இஸ்ஸதீன் ஏன்தான் நம் தலைவரைப் பகைத்துக் கொண்டாரோ? இதை நினைக்கும் பொழுது எனது உள்ளம் கடுமையாகத் துயரப்படுகிறது.
வேகமான என்ஜினுடன் இணைந்த வெற்றுக் கோச்சிப் பெட்டிகள்
அன்றைய உரையில் நான் குறிப்பிட்டது இன்று நடந்து முடிந்தே விட்டது. முஸ்லிம் அமைச்சர்கள் தலைவரவர்களைக் கண்டு எந்தக் காரணத்துக்காகப் பயந்தார்களோ அந்தக் காரணம் பலித்து விட்டது. அன்று, தலைவரவர்களையும் கட்சியையும் அழித்தவிடுவதற்காக குமுறி எழும்பிய அமைச்சர்களெல்லாம் இன்று வீடுகளிலே குப்புறப்படுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வாரிசுகள் பாதையை அளந்து கொண்டிருக்கிறார்கள். சுயநல எண்ணத்தோடு, பாராளுமன்றத்துக்குள் நடமாடிய அவர்களுடைய எதிர்காலம் சூனியமாகிவிட்டது.
தலைவரவர்களோடு, சமுதாய இலட்சியத்தில் இணைந்தால்தான் இனிமேல் அவர்களுக்கு வாழ்வு வரும்; இல்லாவிட்டால், தாழ்வு படுகுழியிலிருந்து அவர்கள் ஒருபோதும் கரைசேர முடியாது என்ற நிலை உறுதியாகிவிட்டது. ஏனென்றால் தலைவரவர்கள், வல்ல இறைவனை நம்பியவர்களாக, கொழும்ாதமிழ்ச்கிய
241

Page 124
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
சென்றுகொண்டிருக்கிறார்கள். அந்தத் தண்டவாளத்திலே வெறும் பெட்டிகளுக்கு இடமில்லை.
முன்பெல்லாம் வெறும் பெட்டிகள் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன. சமுதாயமும் புகையிரதம்' என்று நினைத்து ஏமாந்து வந்தது. அந்தப் பெட்டிகளில் ஏறி அமர்வதும், இறங்குவதுமாக இருந்தனர். ஆனால் கடைசிவரையில் லட்சியத் தண்டவாளத்தில் அந்த வெறும் பெட்டிகள் நகரவே இல்லை.
தற்பொழுது, தண்டவாளத்தில் ஒடி இலக்கைச் சென்றடையக் கூடிய எஞ்சின் பிரவேசித்து விட்டது. ஆகவே, பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த அலங்காரப் பெட்டிகள் தண்டவாளத்தில் ‘எஞ்சினுக்கு இடம் விட்டே ஆக வேண்டும்.
வேறு வழிஇல்லாமலில்லை; ஒரு வழி இருக்கிறது. அந்தப் பெட்டிகள் எஞ்சினுடன்’ தங்களை இணைத்துக்கொண்டால், ஊர் ஊராகப் போகலாம்; நகரங்களையெல்லாம் அடையலாம். மக்களை ஏற்றிச் சுமக்கலாம். அவர்களின் பிரயாணத்துக்கு உதவலாம்.
அவ்வாறு எஞ்சினுடன் இணைந்து கொள்ள விரும்பாத பெட்டிகள், வைக்கப்பட்ட இடத்திலிருந்து நகர முடியாமலும், எஞ்சினுடைய வேகமான ஓட்டத்துக்காக வேண்டி, அப்புறப்படுத்தப்பட்ட நிலையிலும் கிடந்து, கடைசியில் இற்றுப்போவதைத் தவிர வேறு வழியே இல்லை.
தற்பொழுது, நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில், பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த எத்தனை பெட்டிகள் இற்றுக் கொண்டிருக்கின்றன தெரியுமா?
தலைவர் நினைவுகள் கடமையை நிறைவேற்றும்
நான் இந்தத் தலைவர் நினைவுகளை எழுதிக்கொண்டிருப்பது வெறும் பொழுது போக்குக்காக அல்ல.
இது இன்னும் வேறு பாஷைகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். முஸ்லிம்களும் படிக்க வேண்டும்; முஸ்லிம் அல்லாதவர்களும் படிக்க வேண்டும், கட்சியில் உள்ளவர்களும் படிக்க வேண்டும், கட்சிக்கு வெளியில் உள்ளவர்களும் படிக்க வேண்டும்.
242

அப்துல் மஜீத் ஆலிம்
இப்படி ஒரு தலைமகன்’ மனித கோடிகளுக்கு இனங்காட்டப்பட வேண்டும். அந்த வேலையை இந்த தலைவர் நினைவுகள் செய்தே ஆகும் என் நம்பிக்கை எனக்கு உருவாகிவிட்டது: இன்ஷாஅல்லாஹ்! படக் கிடை தொழுகையில் ஈடுபட்டு இறைவனை வேண்டிக் கொண்டே இந்த வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
இந்த விளக்கு இனி ஒரு போதும் அணையவே கூடாது. அதற்காகத்தான் இந்த சக்தி வாய்ந்த எண்ணெய்யை ஊற்றிக் கொண்டிருக்கிறேன்.
தலைவரவர்கள் இவ்வுலகில் வாழும் காலமெல்லாம், என் உடல் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் நேரமெல்லாம், இந்தத் “தலைவர் நினைவுகள்” வெளிவந்து கொண்டே இருக்கும்.
ஏனென்றால், இந்தத் தலையங்கத்தினுடைய தன்மை அப்படிப்பட்டது. இந்தத் தலையங்கம் முடிவுக்குக் கொண்டுவர முடியாத ஒரு 'கருத்தில் அமைந்துள்ளது. இந்தத் தலையங்கத்தை நான் கேட்டபொழுது தலைவரவர்கள்தான் தந்தார்கள். அவர்கள் தந்த தலையங்கத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் நானே தவித்துக் கொண்டிருக்கிறேன்.
வெட்ட, வெட்ட நகமும் முடியும் வளர்ந்துகொண்டிருப்பதைப் போன்றே, இந்தத் தலையங்கம் எழுத, எழுத வளர்ந்துகொண்டே இருப்பதை நான் உணர்கிறேன்.
இன்னும் சில வருடங்களில் இந்தத் தலைவர் நினைவுகள்’ பல்லாயிரம் பக்கங்களாகி, பல பாகங்களாகி, வீடுகளிலும் அலுமாரிகளிலும் மேஜைகளிலும் ஆபிஸ்களிலும் குவிந்து விட
வேண்டும்.
எல்லா இன மக்களும் சுவைத்துப் படிக்க வேண்டும்; இப்படி ஒரு மனித உருவம் பூமியில் நடமாடுகிறது என்பதை எல்லா உள்ளங்களும் ஜீரணித்துவிட வேண்டும்.
பத்துப்பேர் படிக்க, பல்லாயிரம் பேர்களுக்கு அது செய்தியாக அறிவிக்கப்படுகிறது. இந்த மனித உருவத்தினுடைய குணங்கள்,
நடத்தைகள், சிறப்புக்கள் அனைத்தும் புத்தக வடிவமெடுத்து, அது நடையழகு பெறும்பொழுது, அது எல்லோராலும் வாசிக்கப்படும்.
243

Page 125
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு நாளும், ஏதாவது ஒரு நேரத்தில், குடும்பங்கள் ஒன்றுசேர்ந்து, இந்த “தலைவர் நினைவு’களைப் பத்து நிமிடங்கள் “பொது வாசிப்பு” (தட்லிம்) நடத்தும் கொள்கையைப் பழக்கிவிட வேண்டும்.
அதனால் காலப்போக்கில் எல்லா உள்ளங்களிலும் தலைவரவர் களுடைய தன்மைகள், குணங்கள், சாதனைகள், நோக்கங்கள் அனைத்தும் உறையத் தொடங்கிவிடும். அதுதான் தலைவரவர்கள் நாட்டிய மரத்தின் உண்மையான வேர்களாகிவிடும். அதன்பிறகு கட்சியோ, தலைவரவர்களுடைய நினைவுகளோ ஒருபோதும் மங்கப் போவதில்லை.
புத்தகமாக வேண்டிய புரட்சி வாழ்க்கை
ஒரு மிகவும் முக்கியமான வேலை என்ன தெரியுமா? ஒரு சமுதாயத்தினுடைய தலைவர் தோன்றிவிட்டதை அறிந்தால், அந்தத் தலைவருடைய குணநலன்களையும், ஒழுக்க சீலத்தையும், கொள்கைகளையும், திறமைகளையும், கவர்ச்சியான புத்தக வடிவங்களில் பிரபல்யப் படுத்திவிட வேண்டும். அந்தத் தலைவரை தினந்தோறும் நினைவு கூரப்படும், வாசிப்பு முறையை அறிமுகப்படுத்தி விடவேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் புனித குர்ஆனைத் தந்து அதனை ஒதிக்கொண்டே இருங்கள் என்றும் உத்தரவிட்டு விட்டான். நபியைத்தந்து, நபியின் மீது வாழ்த்துச் சொல்வதை நமக்கு ஒரு வணக்கமாக ஆக்கி விட்டான். ஆகவே, குர்ஆனை ஓதிக்கொண்டும் ஆராய்ந்துகொண்டும் இருப்பதும் ; நபியை வாழ்த்திக் கொண்டிருப்பதும் நமக்கு முக்கியமான வணக்கமாகி விட்டது.
அந்த நிலை கவனிக்கப்படாமலிருந்தால், மக்கள் குர்ஆனைத் தொடப் போவதுமில்லை; நபிகளாரை நினைக்கப் போவதுமில்லை. நபியும் மறக்கப்பட்டு, அவர்கள் கொண்டுவந்த கொள்கையும் மறக்கப்பட்டால், தன்னாலேயே மார்க்கம் அழிந்து விடும்.
இதன் காரணமாகத் தான் அப்படியான கட்டாய நிலை அமுல்நடத்தப்பட்டிருப்பதை நாம் உணர்கிறோமல்லவா?
அதே போன்று தலைவரவர்களுடைய கொள்கைகளும், குணநலன்களும் வாசிக் கப்படும் கட்டாயம் வீடுகளில்
244

அப்துல் மஜீத் ஆலிம்
உருவாக்கப்பட்டால், அதன் பின் தலைவரவர்களுடைய நினைவுகளும் பேசப்படத் தொடங்கிவிடும் அந்தப் பேச்சு வாழ்ந்ததாகவும், பிரார்த்தனையாகவும் உருப்பெறத் தொடங்கிவிடும்.
முன்னோடியைப் பின்தொடர்தல் முக்கியமாகும்
அதன் பிறகு காலமெல்லாம் வளர்ந்து சகல இனங்களையும் கவர்ந்து செல்லும் சக்தியாகிவிடும். சமுதாயத்தால் தலைவரவர்கள் வாழ்த்தப்பட்டு, அவர்களது கொள்கைகள் போற்றப்பட்டுக் கொண்டு, அந்த அமைப்பு விரிந்துகொண்டு செல்லும் பொழுது, சகல இனங்களும் அந்த மகா தலைவரைப் பின்தொடரும் நாள் வந்துவிடுகிறது. இதில் ஐயமில்லை.
ஒருநாள், கலிமா சொன்ன மனிதரைக் கொண்டு இந்த நாட்டின் விதி எழுதப்படப் போவதை எந்த சக்தியும் தடுக்க முடியாத நிலை உருவாகி விடுவதில் ஆச்சரியமில்லை.
நெப்போலியன் சொன்னான்: “தன்னையே மதித்து, தன்னையே பின் தொடர்ந்து செல்லும் எந்தச் சமுதாயமும் வாழ்வடையும்.”
ஒரு தலைவரின் வழிகாட்டுதலின் கீழ் சமுதாயம் தம்மை மதித்து, தம்மையே பின்தொடர்ந்து விடுவதென்பது ஒரு பெரிய காரியமாகும்.
உலகளாவிய தப்லீக் இயக்கத்தின் மாபெரும் வளர்ச்சிக்குச் சில காரணங்கள் உண்டு. அதில் முதலாவது, அதன் ஸ்தாபகர் கண்ணியமாக நினைவு கூரப்பட்டு வருகிறார்கள். இரண்டாவது, அதன் கொள்கைகள் புத்தக வடிவமாக்கப்பட்டு, வீட்டுத் த.லிம், பள்ளித் த.லிம் என்ற பெயர்களில் தினந்தோறும் வாசிக்கப்படுகிறது. மூன்றாவது, அதன் கொள்கைகள், பெரும் மகாநாடுகள் அமைக்கப்பட்டு, கடும் பிரச்சார விளக்கம் கொடுக்கப்படுகிறது. நான்காவது, அதற்காகத் தொண்டர்களை செயலில் இறக்கி விடுவது: இப்படிப்பல.
இதில் புத்தக வடிவமென்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அதைத்தான் பெர்னாட்ஷா “பேனாவில் தான் வலிமையுள்ளது.” என்று சொன்னார்.
ஏன்? எங்கள் நபிகளார் (ஸல்) அவர்கள் “போர்வீரனின் வாளைவிட, அறிஞனின் கையிலிருக்கும் எழுதுகோல்முனை மிகவும் புனிதமானது” என்று கூறவில்லையா?
245

Page 126
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
லெனின், கடும் புரட்சியின் ஒய்வுகாலமொன்று வந்த பொழுது, அந்தக் காலத்துக்குள் அனைவரும் புத்தகங்களைப் படித்துக் குவித்துவிடும்படி உத்தரவிட்டார்.
கெளரவ தலைவரவர்களிடம் ஒரு ஓய்வுவேலை உண்டு. புத்தகங்களைப் படித்துக் குவிப்பதில் எங்கள் தலைவரவர்களை முந்துவது மிகவும் கஷ்டம்.
அமைச்சர் மட்டத்திற்கும் வந்து, அரசியல் பொறுப்புகளெல்லாம் தலையில் ஏறிய பிறகுங்கூட, அவர்கள் வாசிக்கின்ற பழக்கத்தை நிறுத்த முடியாமலுள்ளது. அரசியல் மட்டத்தில் தலைவரவர்கள் போன்று வாசிப்பதற்கு எவருமே கிடையாது என்பதை உறுதியாகக் கூறலாம். அந்த அளவுக்கு இரவில் விழிப்பதற்கு யாருக்குத்தான் முடியும்?
நானும் தலைவரவர்களிடம் புத்தகங்கள் கொடுப்பேன். அவர்கள் அன்பு கூடி அதை திருப்பித் தர மாட்டார்கள்; நான் நினைக்கின்றேன்: சில சமயம் கரைத்துக் குடித்து விடுகிறார்களாயிருக்கும்.
சமீபத்தில் அமெரிக்காவுக்குப் போயிருந்த நேரம் அங்கும் புத்தகக் கடையில் புகுந்து “தவ்றாத்” வேதத்தை வாங்கி வந்து அதையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தலைவரவர்களுடைய கைவசம் எப்பொழுதும் புனித குர்ஆன் பிரதி இருந்துகொண்டிருக்கும்.
தேவைப்படும்பொழுது, உடனே எடுத்து வந்து தேவையான ஆயத்துக்களை உடனே காட்டுவார்கள். தற்பொழுதுங்கூட புஹாரி ஷரீப் போன்ற உயர் கிரந்தங்களைப் படித்து விடுகிறார்கள். குர்ஆன் பிரதிகளில் தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிபெயர்ப்புகளை எல்லாம் கைவசம் தயாராக வைத்துள்ளார்கள். அந்தக் காலகட்டத்தில் வீடு மாறும்பொழுது, தலைவரவர்கள் புத்தகங்களையும், அதன் ராக்கைகளையும் ஒரு லொறி வண்டியில் நிரப்பி விடுவார்கள். தற்பொழுது குர்ஆன் முழுவதையும் கவிதை நயத்தில் எழுதுவதில்
ஈடுபட்டுள்ளார்கள்.
சமீபத்தில் தலைவரவர்கள் திரு. செல்வநாயகத்தைப் பற்றி எஸ்.ஜே.வி.யை என் இறக்கைகளில் காணுங்கள், என்று ஒரு கவிதை எழுதி வெளியிட்டிருந்தார்கள். அந்தக் கவிதையை,
246

அப்துல் மஜீத் ஆலிம்
காலியில் ஒரு வைபவத்தில் சென்று உட்கார்ந்து கொண்டிருந்த நிலையில் எழுதி முடித்து விட்டார்கள்.
தலைவரைத் தாலாட்டும் விரு
கெளரவ தலைவரவர்கள் ஆயிரம் சோதனைகளைக் கடந்து கடைசியாக தங்களுடைய ஒன்று விட்ட மூத்த சகோதரரான மர்ஹம் பளில் மஜீத் அவர்களுடைய வீட்டை அடைந்தார்கள்.
அந்த வீடு காசப்ப ரோட்டில் இருந்தது என முன்பே குறிப்பிட்டிருந்தேன். அந்த வீட்டில் தலைவரவர்கள் இளைப்பாறிக் கொண்டிருப்பது போன்ற ஒரு தோற்றத்தில் காட்சி வழங்கினார்கள். பெரிய பெரிய கஷ்டங்களையெல்லாம் கடந்து ஒரமாகிய நிலையில் இருப்பது போன்று அவர்களைப் பார்க்க முடிந்தது.
என்னதான் சொன்னாலும் சகோதரருடைய வீடல்லவா? துயரத்தில் அழும் பிள்ளையைக் குடும்பத்தவர்கள் எவரும் கண்டால் தேற்றுவது போன்று, அந்த வீட்டு சூழல் தலைவரவர்களுடைய துன்ப உணர்வுகளைத் தேற்றிக் கொண்டிருந்தது.
அந்த வீட்டுக்கு நாங்கள் அடிக்கடி அதிகமாகப் போய் வந்து கொண்டிருப் போம். ஏனென்றால் தலைவரவர்களுக்கு அப்பொழுதெல்லாம் நிறைய ஆறுதல் தேவையாக இருந்தது.
ஒரு பக்கம் சுகவீனம் அவர்களைத் தாக்கிக் கொண்டிருந்தது. மருந்துகளுடனும், பத்திய உணவுகளுடனும் அவர்களுடைய நேரம் கடந்து கொண்டிருந்தது.
ஒருநாள் காலை நேரம் நான் அங்கு சென்றேன். தலைவரவர்கள் அங்கு பரிதாபமான தோற்றத்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்தார்கள் அந்தக் காலங்களில் தலைவரவர்களைப் பார்த்தால் நிறைய அனுதாபம்தான் உண்டாகும். பக்கத்தில் இன்னும் யாரோ இருந்தார்கள்.
நானும் போய் சேர்ந்து கொண்டேன். சிறிது நேரம் பல விடயங்களையும் கதைத்துக் கொண்டிருந்தோம். அதன் பிறகு தலைவரவர்கள் காலை உணவு சாப்பிடுவதற்கு எங்களையும் அழைத்தார்கள். நாங்களும் கூடச் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.
247

Page 127
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
மிகவும் பத்தியமாக அந்த உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. அது பால்சோறு உணவாகும். அதிலும் மிகவும் சிறிதளவுதான் தலைவரவர்கள் சாப்பிட்டார்கள். எனக்குப் பால்சோறும், சம்பலும் என்றால் மிகவும் விருப்பம். அதனால் நான் சிறிது அதிகமாக சாப்பிட்டேன். தலைவரவர்கள் சாப்பிட்டு முடிந்து கைகழுவிக் கொண்டிருக்கும் பொழுது, அவர்களுடைய முகத்திலே சோர்வான உணர்வுகளைப் பார்க்க முடிந்தது.
அங்கு போய்விட்டால் எங்களுக்கு ஒருவித குதூகல உணர்வும் ஏற்பட்டு விடும். ஏனென்றால், ஜனாப்பஸில் மஜீத் அவர்கள் எங்கள் உள்ளத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தார்கள். தலைவரவர்களைப் பார்ப்பதற்குச் செல்பவர்களை ஜனாப்பஸில் மஜீத் அவர்கள் ஒரு படி முன்சென்று வரவேற்பார்கள். உபசரிப்பார்கள்.
அவர்களைப் பற்றி நான் ஏற்கனவே பல விடயங்கள் குறிப்பிட்டிருக்கிறேன். இன்றும் அவர்களைப் பற்றிச் சொல்வதற்கு அதிகமான நினைவுகள்’ இருக்கின்றன.
அவர்களோடு பழகுவது, எனக்கு ஒரு இன்பப் பொழுதுபோக்காக இருந்தது. ஆழ்ந்த மார்க்க ஞானங்களை அவர்கள் என்னுடன் இரகசியமாகக் கதைப்பார்கள்.
ஒருநாள் பெருநாள் தினமாக இருந்தது. நான் பகல் சாப்பிட்டு விட்டு, தலைவரவர்களைப் பார்ப்பதற்கு காசப்ப ரோட் இல்லத்துக்குச் சென்றேன். அப்பொழுது வெளிநாட்டுப் பிரமுகர்கள் குடும்பங்களுடன் பெருநாள் சந்திப்பில், தலைவரவர்களைப் பார்க்க வந்திருந்தனர்.
அந்த விருந்தாளிகளுக்குத் தலைவரவர்கள் சிற்றுண்டிப் பீங்கான்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பரிமாறிக் கொண்டே அமைதியாகவும் அன்பாகவும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
நான் அன்று மனைவியுடன் தான் சென்றிருந்தேன். அந்த வீட்டின் பின்பக்கமாகவும் அமர்ந்து பேசுவதற்கு ஒரு அழகான சாலை இருந்தது. அங்கு நாங்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஜனாப் பளில் மஜீத் அவர்கள் எங்களோடு அன்பாக அளவளாவிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் பேச்சிலே மூழ்கிக் கிடந்தோம். அப்பொழுது வெளிநாட்டு விருந்தாளிகளைக் கவனித்துக் கொண்டிருந்த தலைவரவர்கள், நாங்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு சற்று உற்சாகமாகி நடந்து வந்தார்கள். எங்களோடு சிரித்துக்
248

அப்துல் மஜீத் ஆலிம்
கொண்டே “உட்கார்ந்து பேசிக் கொண்டிருங்கள்; நான் வந்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு, திரும்பவும் நடந்தார்கள்.
சிரிப்பலைகளின் சின்னம் டாக்டர் உதுமாலெப்பை
அன்று வீடு மிகவும் குதூகலமாக இருந்தது. பெருநாள் தினமல்லவா? நாங்களும் அன்று அமைதியான அந்தக் குதூகலத்தில் பங்கெடுத்துக் கொண்டோம்.
வெளிநாட்டு விருந்தாளிகளும் விடைபெற்றுச் சென்று விட்டனர். சிறிது நேரத்தில் டாக்டர் உதுமாலெப்பை அங்கு வந்தார். அவருடைய கையிலும் ஒரு பார்ஸல், எங்களைப் போன்றே அவரும் அன்று தலைவரவர்களைப் பெருநாள் சந்திப்பு, சந்திக்கும் மகிழ்வில் வேகமாக வந்தார். தலைவரவர்களுடைய கையில் பார்ஸலைக் கொடுத்தார். அது அவரது தோட்டத்திலிருந்து பறித்த பழவகை என்று சொன்னார்.
பிறகு நாங்கள் சேர்ந்து கொண்டோம். டாக்டர் உதுமாலெப்பை மிகவும் குதூகலமாகக் கதைக்கத் தொடங்கினார். அவருடைய பேச்சுக்களைக் கேட்டால் சிரிப்பு வந்து கொண்டே இருக்கும். அவர் சிரிக்கக் கூடிய விடயங்களைத்தான் அதிகமாகப் பேசுவார். இயற்கையிலேயே நகைச்சுவையான தன்மைகள் அமைந்தவர்.
அவருடைய நகைச்சுவைகளைக் கேட்டு என் மனைவியும் ஒரு கோணத்தில் சிரித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. ஜனாப் பளில் மஜீத் அவர்களும் அமைதியாக சிரித்துக் கொண்டிருந்தார்கள். பிறகு தலைவரவர்களும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்து கொண்டார்கள். அனைவரும் துன்ப உணர்வுகளை சற்று மறந்து, டாக்டர் உதுமாலெப்பையுடைய நகைச் சுவைகளுடன் பெருநாளைக் கொண்டாடி மகிழ்ந்துகொண்டிருந்தோம்.
அந்தக் காலகட்டங்கள் டாக்டர் உதுமாலெப்பையுடைய யுகமாகும். அதாவது, எந்த நேரமும் தலைவரவர்களை அவர் பார்க்க வருவதும், போவதுமாகவே இருந்தார்.
அதுமட்டுமல்ல, தலைவரவர்களுடைய அதிகமான வேலைகளை அவர் கையிலே எடுத்துக்கொண்டார். கட்சிப் பிரச்சினைகளில் நொந்துபோன தலைவரவர்களுக்கு டாக்டர் உதுமாலெப்பை அவர்களுடைய பிரவேசம் ஒரு பெரிய இடைவெளியை
249

Page 128
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
நிரப்பியதுடன், அவர்களுக்கு கட்சி அலுவல்களில் ஓர் ஆறுதலையும் கொடுத்தது.
டாக்டர் உதுமாலெப்பை இரவு பகலாக இயங்கத் தொடங்கினார். கட்சி அலுவலகத்தில் அவருக்கு வேலைகளின் கதவுகள் திறந்து விடப்பட்டன.
ஏற்கனவே ஜனாப் செய்கு இஸ்ஸதீனும் போய்விட்டார். அவருக்குப் பதிலாக ஜனாப் அப்துல் ரஸ?ல் தவிசாளராக ஆக்கப்பட்டார். அதேகட்டத்தில் டாக்டர் உதுமாலெப்பை அவர்கள் பிரதித் தவிசாளராக ஆக்கப்பட்டார்.
ஜனாப் செய்கு இஸ்ஸதீனுடைய காலத்தில் பிரதித் தவிசாளர் இல்லையென்று நான் நினைக்கிறேன். அவருக்குப் பிறகுதான் தலைவரவர்கள் இந்த முறையை அமைத்தார்கள்.
ஜனாப் அப்துல் ரஸ?ல் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர். அவர் பெரும்பாலும் வாரத்துக்கு ஒரு தடவை மாதிரித்தான் கொழும்புக்கு வருவார். வந்தாலும் அவருக்கு தவிசாளருக்குரிய அலுவல்கள் பெரும்பாலும் இருக்க மாட்டாது.
அதற்குக் காரணம் டாக்டர் உதுமாலெப்பை அவர்களுடைய இடையறாத இயக்கம்தான். அவர் தவிசாளருக்குரிய ஒரு வேலையைக் கூட பாக்கிவைக்க மாட்டார். அத்தனையையும் முடித்துவிட்டு, மேலதிகமாக தலைவரவர்களுக்குச் சொந்தமான வேலைகளையும் செய்து கொண்டிருப்பார்.
எந்த நேரத்தில் பார்த்தாலும் அப்பொழுது ஒரு தாய் குழந்தையைத் தூக்கிக்கொண்டிருப்பது போன்று டாக்டர் உதுமாலெப்பை பைல் கட்டுக்களோடுதான் இருப்பார். வெறுங்கையுடன் அவரைப் பார்க்கவே (tքlԳեւ IIT3;].
எந்த ஓசைகளையும் காட்டிக்கொள்ள மாட்டார்கள். அர்த்தமற்ற பொழுது போக்குகளும் அவரிடம் கிடையாது. எந்த நேரத்திலும் ஏதாவது வேலையில் மூழ்கிக் கிடப்பார். கட்சியின் இயக்கம் அப்பொழுது மிகவும் சோர்ந்து போயிருந்தது.
உள்ளத்தைச் செலுத்தி வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லாத நேரம். கட்சி அலுவல்கள் பலருக்கு அலுத்துப் போயிருந்த நேரம்.
250

அப்துல் மஜீத் ஆலிம்
அந்த நேரத்தில் டாக்டர் உதுமாலெப்பை விழிப்புடனிருந்தார். அதுதான் பெரிய விடயமாக அமைந்தது.
ஜனாப் செய்கு இஸ்ஸதீனுடைய வெளியேற்றம் ஒரு நீண்ட இடைவெளியை ஏற்படுத்துமோ என்று பலரும் யோசித்த அந்த வேளையில், டாக்டர் உதுமாலெப்பையுடைய செயற்பாடுகள் அந்த இடைவெளியை சம்பூரணமாக மூடிமறைத்து விட்டது.
நகல் செய்த அசல் வேலை
அவர் ஒரு தவிசாளராக இருக்கவில்லைதான். அவர் பிரதித் த விசாளர் என்பதும் அப் பொழுது பலருக்கு விளங்காமலிருந்திருக்கலாம். ஏன் அவர்கூட அதை யோசித்திருக்க மாட்டார். அவருக்குப் பதவிகளை யோசிக்க நேரமே இருக்கவில்லை. கட்சியின் அலுவல்களையும், தலைவரவர்களுடைய பல வேலைகளையும் ஆற்றிக் கொண்டே இருப்பதில் தம்மை மூழ்கடித்துக் கொண்டிருப்பார்.
அவருக்குத் தேவைப்பட்டது பதவிகளல்ல; வேலைதான். கட்சியின் அலுவல்களை அவர் ஒருவரப்பிரசாதமாக மதித்தார். காலால் செய்ய வேண்டிய வேலைகளை அவர் உச்சந்தலையில் வைத்துக் கொண்டு செய்வார். அந்த அளவுக்கு அவர் அலுவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.
ஜனாப் அப்துல் ரஸல் தவிசாளராக இருந்தார்தான். ஆனால் அந்த ஆசனம் அவருக்கு சிறிதும் பாரத்தைக் காட்டவில்லை. கெளரவமாகவும், ஒய்வாகவும் அந்த ஆசனத்தில் அவர் அமர்ந்திருக்க முடிந்தது.
ஜனாப் செய்கு இஸ்ஸதீன் ஆரம்ப காலத்தில் தலைவரவர்களுடன் சேர்ந்து கடும் உழைப்பில் மூழ்கியிருந்தார்கள். ஆனால் பிறகு போகப் போக அவருடைய ஓட்டத்தின் வேகம் குறைந்தது. கட்சி நடவடிக்கைகளில் அவரை அதிகமாகப் பார்க்க முடிவதில்லை. ஏதோ கட்சி வேலைகளில் அலுத்து விட்டவரைப் போல் காணப்பட்டார். ஆனாலும் கெளரவ தலைவரவர்கள் அவரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதில்லை. அவர்கள் ஓட வேண்டிய ஓட்டத்தை ஒடிக் கொண்டே இருப்பார்கள்.
நாளொன்றுக்குப் பதினெட்டு மணித்தியாலங்கள் விடாது வேலை
251

Page 129
தலைமைத்துவ ரகஸியங்கள்
செய்து வந்தவர்கள்தாம் தம் அருமைத் தலைவரவர்கள். கைவசம் யார் கிடைக்கிறார்களோ அவரை அப்போதைக்குப் பயன்படுத்தித் தங்களுடன் சேர்த்துக் கொண்டு காரியத்திலிறங்கி விடுவார்கள்.
ஜனாப் செய்கு இஸ்ஸதீனுடைய ஒட்ட வேகம் குறைவடைந்து அவர் பெயரளவில் மட்டும் தவிசாளராக இருந்த கட்டங்களும் பல இருந்தன. ஆனாலும் அவருடைய பெயரும் செல்வாக்கும் கட்சி மட்டத்தில் அசையாது நிலை பெற்றிருந்தது. கட்சிக்குள் அவருடைய ஆணிவேர் மிகவும் ஆழமாக வேரூன்றி இருந்தது.
தலைவரவர்களை தொண்டர்கள் தலைவர்’ என்றும், 'லீடர்’ என்றும் அன்பாகக் குறிப்பிடுவது போன்று, ஜனாப் செய்கு இஸ்ஸதீனும் அப்பொழுது சேர்மன்’ என்றும், 'சேர்மன்சேர்’ என்றும் குறிப்பிடப்பட்டும், அழைக்கப்பட்டும் வந்தார். அந்த அளவுக்கு அவருடைய பதவியும், செல்வாக்கும் அடையாளமிடப்பட்டிருந்தது.
அந்த உச்சக்கட்ட நிலைமைதான் அவரது மனப் போக்கில் மாறுதலை ஏற்படுத்தித் திசை திருப்பியிருக்கிறதென்று நான் நினைக்கிறேன். அதுவே போகப்போக அவரது வெளியேற்றத்திற்கும் காரணமாக அமைந்தது எனலாம்.
இந்தத் தவிசாளர்ப் பதவிக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. அந்தப் பதவி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டால், அந்தப் பதவியை அவரால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.
தானும் கட்சியிலிருந்து வெளியாகி ஒரு தலைவராகிவிட வேண்டுமென தம்மையறியாமலே முடிவுக்கு வந்துவிடுகின்றனர். ஜனாப் அப்துல் ரஸலுக்கும் நடந்தது இதுதான்.
தவிசாளராக வர முன்பு அவருடைய மனோநிலையில் மிகவும் புனிதமாக ஈடுபட்டு வந்தவர்தான் ஜனாப் அப்துல் ரஸ"ல். அவர் மிகவும் கணக்கெடுக்கப்பட்டவர். கட்சி மட்டத்தில் தனிப்பட்ட செல்வாக்குடன் திகழ்ந்தார்.
ஆனால், அவரும் தவிசாளராக ஆக்கப்பட்ட பின்பு நாளுக்கு நாள் அவருடைய போக்குகள் மாறத் தொடங்கின. தாமும் ஒரு தலைவராகவே ஆகிவிட வேண்டும் போல் அவருக்கும் ஒருவித ஆவேசம் ஏற்பட்டது. அந்த ஆவேசம் அவருடைய பேச்சிலும், நடவடிக்கைகளிலும் தொனித்தது. கூட்டங்களிலும் ,
252

அப்துல் மஜீத் ஆலிம்
கருத்தரங்குகளிலும் ஒருவித எரிச்சல் மிகுந்தவராகக் காணப்பட்டார்.
ஏதோ ஒரு உச்சக் கொப்பை எட்டிப் பிடிக்கத் துடிப்பது போன்று அவருடைய தன்மைகள் மாறியமைந்திருந்தன. அந்த அடிப்படையில்தான், திடீரென ஒரு தேர்தல் விடயமாக, கட்சி தன் சொல் லைக் கேட்டே ஆக வேண்டுமென ஒரு விடயத்தை முன்வைத்தார். தன் சொல்லைக் கட்சி ஏற்கவில்லையென்றால், தாம் கட்சியிலிருந்து வெளியேறி விடுவதாகப் பயமுறுத்தினார். பிறகு வெளியேறியும் விட்டார். பாவம், தவிசாளர் பதவி அவருக்கு ஒரு சோதனையாகவே மாறிவிட்டது. கட்சிக்குள் கண்ணியமாக இருந்த அவரை வெளியே அனுப்பும் கதவு போன்று அப்பதவி அவருக்கு உருவாகியதுதான் கவலைப்பட வேண்டிய விடயமாகும்.
ஜனாப் அப்துல் ரஸலுடைய வெளியேற்றத்திற்குப் பிறகு தவிசாளர் பதவியை எவரிடம் ஒப்படைப்பது என்பது விடயமாக நீண்டநாள் ஆராயப்பட்டது. தலைவரவர்கள் முக்கியமான ஒவ்வொருவரிடமும் இது பற்றித் தனித்தனியாக ஆலோசனை கேட்டு வந்தார்கள்.
கடைசியாக ஜனாப் சுஹைப் அவர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஜனாப் சுஹைப் காதர், ஜனாப் ஜாபிர் ஏ.காதரின் இளைய சகோதரராவார். அவர் 1988 ஆம் ஆண்டு முதலாவது மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற காலத்திலேயே, கட்சியின் வேட்பாளராக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டார்.
உஸ்மான், சுஹைப் இரட்டையர்
அப்பொழுது கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளில் அவரும் ஒருவர். அவர் ஜனாப் உஸ்மானுடன் சேர்ந்து கொண்டே சகல விடயங்களிலும் ஈடுபட்டிருப்பார். எப்பொழுது பார்த்தாலும் ஜனாப் உஸ்மானும் அவரும் ஜோடியாகவே இணைந்து கூட்டங்களுக்கு வருவதும் போவதுமாக இருப்பார்.
ஜனாப் உஸ்மான் பேசுவார், கதைப்பார். எல்லாக் காரியங்களிலும் ஈடுபட்டிருப்பார். அவருக்குப் பக்கத்தில் சுஹைப் மெளனமாய் இருப்பார். இருவரும் உயிர் நண்பர்களாகத் தோற்றம் வழங்கினர்.
மாகாண சபைக் கூட்டங்களுக்குக் கூட இருவரும் ஒன்றாகவே
253

Page 130
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
சமுகமளிப்பர். ஒன்றாகவே வெளியேறுவர். இருவரும் ஒரே வாகனத்தைத் தான் பயன்படுத்துவர். இந்த நிலை ஒருபோதும் மாறியதில்லை. ஜனாப் உஸ்மானும், ஜனாப் சுஹைப் ஏ. காதரும் கட்சி வட்டாரத்துக்குள் இரட்டைப் பிள்ளைகள் போன்றே தோற்றம் வழங்கினர்.
பொதுச் செயலாளராக ஆரம்பத்தில் திகழ்ந்த ஜனாப் உஸ்மானுடைய வெளியேற்றத்திற்குப் பிறகு, சஹீத் ஹாஜியார் பொதுச் செயலாளராக ஆக்கப்பட்டார். சஹீத் ஹாஜியார் கண்ணியமாக அப்பதவியை வகித்துவிட்டு, இறையடி சேர்ந்து விட்டார். அதன்பிறகு கட்சியின் பொதுச் செயலாளராக ஜனாப் சுஹைப் ஏ. காதர் நியமிக்கப்பட்டார்.
ஜனாப் சுஹைப் ஏ. காதர் கட்சியின் நான்காவது பொதுச் செயலாளராவார். ஜனாப் சுஹைப் ஏ. காதர் மாகாணசபை உறுப்பினராக இருந்த காலங்களிலெல்லாம் கட்சி நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார்கள். அதிகமாக தமது தொழில் அலுவலகத்தில்தான் அவர் இயங்கிக் கொண்டிருப்பார்.
அதனால் ஆரம்பத்திலேயே ஜனாப் உஸ்மான், ஜனாப் சுஹைப் ஏ. காதருடைய தொழில் அலுவலக சாலையிலேயே மாகாணசபை உறுப்பினர்களின் கருத்தரங்குகளை நடத்தத் தொடங்கினர். ஜனாப் சுஹைப் காதருடைய தியேட்டர் அலுவலக அறைக்குப் பக்கத்தில் கருத்தரங்குகள் நடத்த வசதியான ஒரு நீண்ட பெரிய அறை இருந்தது. அங்குதான் நாங்கள் அடிக்கடி கூடி மாகாணசபை விடயங்களை ஆராய்ந்து வருவோம். ஏனென்றால் ஜனாப் சுஹைப் காதரை அவருடைய அலுவலக அறையிலிருந்து வெளியில் கொண்டு வருவது மிகவும் கஷ்டமாக இருந்ததால் ஜனாப் உஸ்மான் கூட்டங்களை அவருடைய அலுவலகத்திலேயே நடத்தும் தீர்மானத்தை மேற்கொண்டிருக்கலாம் என நினைக்கிறேன்.
என்னதான் சொன்னாலும் அக்கால கட்டத்தில் ஜனாப் சுஹைப் ஏ. காதருக்கும், தலைவரவர்களுக்கும் இடையில் நீண்ட இடைவெளி யொன்று இருந்து வந்தது. அந்த இடைவெளி சிறிது காலமாகத் தொடர்ந்தது.
ஜனாப் சுஹைப் காதர் மாகாணசபை உறுப்பினராக இருந்தார். ஆனால் கட்சி நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுவதேயில்லை. இந்த
254

அப்துல் மஜீத் ஆலிம்
விடயம் தலைவரவர்களுக்கும் பெரும் மனக்குறையாக இருந்து வந்தது.
ஆனால் திடீரென்று இந்த நிலை மாறியது. கெளரவ தலைவரவர்களுக்கும், ஜனாப் சுஹைப் காதருக்குமிடையில் திடீரென நெருங்கிய தொடர்புகள் உருவாகின. உறவும், நெருக்கமும் பலப்பட்டன. ஜனாப் உஸ்மானும் கட்சியிலிருந்து வெளியாகிவிட்டார். ஜனாப் செய்கு இஸ்ஸதீனும் இல்லை. சஹீத் ஹாஜியார் அவர்களும் காலமாகி விட்டார்கள்.
இந்த நிலையில்தான் ஜனாப் அப்துல் ரஸ?ல் தவிசாளராக ஆக்கப்பட்டார். ஜனாப் சுஹைப் காதர் கட்சியின் பொதுச் செயலாளராக ஆக்கப்பட்டார். இந்த நிலையில் கட்சி கொஞ்சக் காலம் ஓடிக்கொண்டிருந்தது.
தலைவரையே தருமாற வைத்த 1993
திடீரென 1993 ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் மாகாண சபைகள் கலைக்கப்பட்டன. அப்பொழுது திரு. பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தகாலம். இரண்டாவது மாகாணசபைத் தேர்தலுக்காக நாடு உஷாராகியது. புதுப்புதுக் கட்சிகளும் கிளர்ந்தெழுந்தன.
திரு. லலித் அத்துலத்முதலியின் புதிய கட்சி மிகவும் வேகமாக எழும்பிக்கொண்டு வந்தது. அதில் திரு. காமினி திசாநாயக்காவும் இணைந்திருந்தார். அந்தக் கட்சி மிகவும் வேகமாக நாட்டு மக்களை ஈர்த்துக்கொண்டு வந்தது. ஆட்சியிலிருந்த திரு. பிரேமதாசவுக்கு அது பெரும் சவாலாகவும் அமைந்தது.
1993 ஆம் ஆண்டு நடைபெற்றது, மாகாண சபைத் தேர்தலாக இருந்தாலும்கூட, அந்தத் தேர்தல் கடும் அரசியல் பலப்பரீட்சையாக மாறியதுடன், அசையாத தூண்களையெல்லாம் பிடித்து அசைத்து விட்டது.
திரு. லலித் அத்துலத்முதலி அத்தேர்தல் பிரசாரத்தின்பொழுது தான் கொல்லப்பட்டார். ஜனாதிபதி பிரேமதாசவும் அதற்கு அடுத்தவாரம் கொலை செய்யப்பட்டார். டி.பி. விஜேதுங்க எதிர்பாராத அதிஷ்டம் ஜனாதிபதியாக மாறினார்.
ஏற்கனவே இந்தியப் படையும் இலங்கையை விட்டும் வெளியேறிவிட்டது. வடக்கில் குழப்பங்கள் அதிகமாகத் தொடங்கின. யூரீலங்கா சுதந்திரக்கட்சியும் அந்த மாகாண சபைத் தேர்தலில்
255

Page 131
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
குதித்தது. எட்டுக்கோணத்திலிருந்தும் அரசியல் பலப்பரீட்சை ஆரம்பித்தது. இந்த பயங்கரமான அரசியல் பலப்பரீட்சை ஆரம்பித்த காலத்தில் நமது கட்சியும் விட்டுக்கொடுக்கவில்லை.
தலைவரவர்கள் கடும் சோதனைக்கு மத்தியில் தேர்தலில் குதித்தார்கள். கட்சி படுத்த பாயிலிருந்து எழும்ப முடியாத நிலையில் இருந்த காலத்தில்தான் 1993 ஆம் ஆண்டுத் தேர்தல் வந்தது.
நமது கட்சி அந்த வருடம் கசங்கி நசுங்கியதுபோன்று, வேறு எந்தக் காலத்திலும் நசுங்கவில்லை. நமது தலைவரவர்கள் அசந்துபோன வருடம்தான் 1993 ஆம் ஆண்டாகும்.
பொலிவுறு புதுக்காரியாலயம்
அந்த ஆண்டில் தலைவரவர்கள் காசப்ப ரோட் இல்லத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். கட்சியின் அலுவலகம் வொக்ஸால் லேனில் இயங்கியது. அதுதான் கட்சியின் நிரந்தர இடமாகும். இதுகாறும் கட்சி அலுவலகம் இடம்மாறி மாறி, சீரழிந்து போய் கடைசியாய் தனக்கென்று ஒரு சொந்தமான இடத்தில் குந்தும் பாக்கியம் ஏற்பட்டது. கட்சிக்குச் சொந்தமான இடம் கிடைத்து விட்டது. ஆனால் தலைவரவர்களுக்கு வாடகை வீடு கூட இல்லாத நிலையில் நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன.
1990 காலப்பகுதியில் நெருக்கடியான நிலைமையிலும் தலைவரவர்கள் வெளிநாடுகளோடு தொடர்புகளை உண்டாக்கினார்கள்.
அதில் உலகளவில் இஸ்லாமிய வெகுஜனத் தொடர்பு ஒன்றியத்தின் தென்னாசியப் பிரதிநிதியாகத் தலைவரவர்கள் தெரிவு செய்யப்பட்டதில் தலைவரவர்கள் கட்சியின் பலத்தை சர்வதேச ரீதியிலும் ஊன்றி விட்டார்கள்.
1991 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே வொக்ஸால் லேன் அலுவலகம் இயங்கத் தொடங்கியது. ஜனாப் செய்கு இஸ்ஸதீன் வெளியாகியதும் அந்தக் கால கட்டம்தான்.
கட்சித் தொண்டர்களின் கூட்டங்கள் அந்த அலுவலகத்தில் அடிக்கடி நடக்கத் தொடங்கின. மார்க்கப் பிரசார நிகழ்ச்சிகளும் அங்கு ஆரம்பிக்கப்பட்டன. குர்ஆன் விளக்கம் போன்ற நிகழ்ச்சிகளும் அங்கு நடத்தப்பட்டன. அத்துடன் தொண்டர்களுக்குள் பாராளுமன்ற
256

அப்துல் மஜீத் ஆலிம்
மொன்று அமைக்கப்பட்டு அதற்குள் ஆளுங்கட்சி, எதிர்கட்சிகள் அமைக்கப்பட்டு அரசியல் விவாதங்கள் நடைபெற்று வந்தன.
எவ்வளவு நெருக்கடி ன் இருந்தாலும் கூட கட்சி அலுவலகம் இப்படிப் பலவகையிலும் உயிர்பெற்றுக் கொண்டு வந்தது. எந்த நேரம் பார்த்தாலும் வொக்ஸால் லேன் அலுவலகம் உயிர்த்துடிப்புடன் தோற்றம் வழங்கத் தொடங்கியது. காலிதீன் மெளலவி அவர்கள் அக்காலகட்டத்தில் வந்து பலமுறை குர்ஆன் விளக்க வகுப்பு வைத்துவிட்டுச் செல்வார்.
அஷ் ஷெய்கு இனாமுல்லாஹ் அப்பொழுது இஸ்லாமிய கூட்டங்களுக்குப் பொறுப்பாக இருந்து செயற்பட்டுக் கொண்டிருந்தார்.
நானும் அக்காலகட்டத்தில் வாரமொரு தடவை மார்க்கப் பிரசங்க நிகழ்ச்சிகளை நடத்தி வருவேன். ஒவ்வோர் இரவும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி அங்கு நடந்துகொண்டிருக்கும்.
கொதிநீருக்குள் போட்ட எதிர்நீச்சல் தீரம்
அரசியல் அதி உயர்பீடக் கூட்டங்களையும் நாங்கள் அங்குதான் அதிகமாக நடத்தி வருவோம். பாதுகாப்புக் கருதி, சில சமயங்களில் காஸப்ப ரோட்டிலும், இன்னும் சில சமயங்களில் ஜனாப் ரவூப் ஹக்கீம் அவர்களுடைய இல்லத்திலும் நடத்துவது வழக்கமாக இருந்து வந்தது.
ஒருநாள் காஸப்ப ரோட் இல்லத்தில் ஓர் இரவில் நாங்கள் கூடியிருந்தோம். அந்த வீட்டின் மேல்மாடி முற்றவெளியில் அமைதியாகக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தோம். அரசியல் அதி உயர்பீடக் கூட்டம் மிகவும் சோர்வுடன் நடந்துகொண்டிருந்தது.
அந்த நேரத்தில் அபூபக்கர் ஹாஜியார் அவர்கள் எழும்பிப் பேசிக்கொண்டிருந்தார். “இப்பொழுது இங்கு கூடியிருக்கிறோமே நம்மில் சிலர் இவ்வளவுதான் முஸ்லிம் காங்கிரஸ், வெளியில் தற்பொழுது எவருமே முஸ்லிம் காங்கிரஸ் இல்லை என்றார் அவர். அவர் சொன்ன கருத்து என்னவென்றால், "முழு நாட்டிலும் மக்கள் உள்ளங்களிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் எடுபட்டு விட்டது. தற்பொழுது அரசியல் அதி உயர்பீடம் மட்டும்தான் காங்கிரஸாக இருக்கிறது” என்பதை உணர்த்திக் காட்டினார். அந்த அளவுக்கு ஒரு
257

Page 132
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
கட்டத்தில் கட்சி வீழ்ச்சிப் பள்ளத்தாக்கில் விழுந்து கிடந்தது
உண்மைதான்.
தலைவரவர்கள் உறுதியாக நின்றார்கள். அரசியல் அதிஉயர்பீடம் இருந்தது. பிரதிநிதிகளும் இருந்தார்கள். எல்லா சபைகளிலும் இருந்தார்கள். ஆனால் கட்சியால் மக்களைப் பார்க்க முடியாமலிருந்தது.
இந்த நிலையில் தலைவரவர்களைப் பொருளாதாரக் கஷ்டமும் தாக்கத் தொடங்கியது. அதனால் தலைவரவர்கள் மீண்டும் இடைக்கிடை நீதிமன்றம் சென்று தொழிலையும் கவனிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளானார்கள்.
ஒருநாள் இரவு கசப்ப ரோட் இல்லத்தில் அரசியல் அதிஉயர்பீடக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தோம். இரவு பத்து மணியும் கடந்துவிட்டது. அதன்பிறகு தலைவரவர்கள் புறப்பட்டுத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அழகாக உடுத்துக்கொண்டு ஒரு பேக்கை எடுத்துக் கையில் பிடித்துக்கொண்டு அமைதியாக நடந்து வந்தார்கள்.
“சேர்! இந்த நேரத்தில் இப்படி முக்கிய தயார்நிலையில் எங்கு போக?” என்று நான் கேட்டேன். அப்பொழுது தலைவரவர்கள் அமைதியாக சிரித்தவாறு கதைத்தார்கள்.
“ஹஸ்ரத் தொழிலையும் பார்க்க வேண்டுமல்லவா? நாளை கண்டியில் ஒரு வழக்கு இருக்கிறது. இப்பொழுதே புறப்பட்டுவிட்டால் தான் சவுகரியமாக இருக்கும்’ என்று சொல்லிக்கொண்டே எங்களிடமிருந்து விடை பெற்றார்கள். நாங்கள் சிறிது நேரம் மீண்டும் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தோம். தலைவரவர்கள் அந்த நடு இரவிலேயே கண்டி நோக்கிப் பயணத்தைத் தொடங்கினார்கள்.
இப்படி கட்சி வேலைகளைப் பார்ப்பதா? தொழில் செய்து பொருளாதாரக் கஷ்டங்களைக் கடப்பதா? என்ற பெரும் பிரச்சினையில் தலைவரவர்கள் தள்ளாடிக்கொண்டிருந்த காலம். சுகவீனம் ஒரு பக்கம். எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
இந்த இக்கட்டான நிலையில்தான் 1993 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தல் காலம் வந்தது. அந்த ஆண்டில் நமது கட்சி
258

அப்துல் மஜீத் ஆலிம்
வெந்து பொசுங்கும் அளவுக்கு கஷ்டங்கள் குறுக்கிட்டன.
அந்தக் கஷ்டங்களின் முதல் பிடிதான் கட்சியில் முன்னணியிலிருந்த பல ட்சியிலிருந்து வெளியேறிச் சென்றதாகும். கட்சி தேர்தலுக்காகத் தயாராகிக்கொண்டிருந்த நெருக்கடியான கட்டத்தில் ஏற்கனவே பிரதிநிதிகளாக இருந்த பலர், சொல்லாமல் கொள்ளாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர்.
இன்னார் வெளியாகிவிட்டார், இன்ன மாவட்டப் பிரதிநிதி இன்ன கட்சிக்கு மாறிவிட்டார் என்று ஒவ்வொரு நாளும் பத்திரிகை மூலமும் பலவகையிலும் வெளியாகிக்கொண்டிருந்த செய்திகள் கட்சிக்குப் பேரிடியாக இருந்து கொண்டிருந்தன.
களுத்துறையில் மாகாணசபை உறுப்பினராக இருந்த நசீர் ஹாஜியார் வெளியாகிவிட்டார். இங்கே நீர்கொழும்பில் மாகாண சபை உறுப்பினர் ஜனாப் அனிஸ் ஷரீப் வெளியேறிவிட்டார். கொழும்பில் மாகாண சபை உறுப்பினர்கள் ஜனாப் அமீர், சுஹைப்
ஏ. காதர் ஆகியோர் வெளியேறிவிட்டனர்.
பதுளைப் பகுதியில் சித்தீக் ஹாஜியாரும் வெளியாகிவிட்டார்.
எல்லோரும் மாகாண சபைகள் கலைக்கப்பட்ட பின்னரே வெளியேறினார்கள். குருநாகலில் ஜனாப் அப்துல் ரஸ"ல் வெளியேறிவிட்டார்.
காத்திருந்து கழுத்தில் பாய்ந்த கழுத்தறுப்பு
இப்படி கட்சியில் முக்கியமாகப் பிரதிநிதித்துவம் வகித்துக்
கொண்டிருந்த பலர், தேர்தல் நடைபெறப்போகும் சமயத்தில் வெளியேறினர்.
ஜவாத் மரிக்கார் போன்றவர்கள் ஏற்கனவே வெளியேறியதுடன், பலரும் வெளியேறுவதற்காக வெளியில் நின்று கடுமையாக உழைத்தனர்.
கட்சிக்குள் இயங்கிக் கொண்டிருந்த பலரையும் மெதுவாக அவர்கள் வெளியில் இழுத்துச் சென்றனர். ஜனாப் செய்கு இஸ்ஸதீனுடைய தலைமையில் ஜவாத் மரிக்கார் போன்றவர்கள் இந்த முயற்சியில் கடுமையாக ஈடுபட்டிருந்தனர் என நான் நினைக்கிறேன்.
259

Page 133
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
உண்மையில் அந்தக் காலகட்டத்தில் அந்தக் குழுவினர் நியாயமான அளவுக்கு கட்சியைப் புண்படுத்தி இருந்தனர்.
அந்தக் காலகட்டங்களில் ஜவாத் மரிக்கார் பல தடவைகள் எனது வீட்டுக்கும் தேடி வந்துள்ளார். ஆனால் நான் இருக்கவில்லை. எனது மனைவியின் கடினமான வாாத்தைகளைக் கேட்டு அவர் பின்வாங்கி விட்டார்.
நமது கட்சியிலிருந்து தொண்டர்களை வெளியாக்கும் விடயத்தில், ஜவாத் மரிக்கார் போன்றவர்கள் கடுமையாக ஈடுபட்டிருந்ததுடன், குறிப்பாக முன்னைய ஆட்சியில் அமைச்சராக இருந்த ஜனாப் மன்சூர், கம்பளையில் எம்.பி.யாக இருந்த ஜனாப் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் உட்பட இன்னும் பல முக்கிய பிரமுகர்களும், முஸ்லிம் காங்கிரஸின் மீது கைவைத்தனர். இக்காலகட்டத்தில் கல்முனையில் நடைபெற்ற ஐ.தே.க. கூட்டமொன்றில் தலைவர் கம்பளைக்கு வந்தால் அவரின் காலை முறிப்பதாகவும் மரத்தை அடியோடு பிடுங்கி வீசுவதாகவும் காதர் ஹாஜியார் தனது பண பலத்தின் வர்ணமாக சூளுரைத்தார்.
எப்படியாவது கட்சியைப் பலவீனப்படுத்தும் வேலையில் அவர்கள் ஒன்றுபட்டு, மும்முரமாக இருந்தனர்.
இந்தக் கட்டம் எங்கள் தலைவரவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் இந்தப் படுமோசமான நிலைமையை அவர்கள் எப்படி கடந்திருப்பார்கள். ஆச்சரியமான கட்டங்கள்தான்.
1989 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் நன்கு பணத்தை வீசிய புஹார்தீன் ஹாஜியார், எம்.பி. பதவியையும், பல உதவிகளையும் தலைவரவர்களிடமிருந்து தட்டிக் கொண்டு மனம் போன போக்கில் ஒதுங்கிவிட்டார்.
தேர்தலுக்கு முகம்கொருத்து தெரிவாகிய இன் முகம்
தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்கு பணத்தேவையும் மிகவும் அத்தியாவஸ்யமாய் இருந்தது. மாகாண சபைகள் சரியாக இயங்காத காரணத்தால், மக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கும் ஒரு புறம் சரிந்திருந்தது.
யூ.என்.பி உட்பட ரீலங்கா சுதந்திரக்கட்சி, லலித் அத்துலத்
260

அப்துல் மஜீத் ஆலிம்
முதலியின் புதிய கட்சி அனைத்தும் தேர்தல் களத்தில் குதித்ததால், நாட்டு மக்களின் பார்வையும் அக்கட்சிகளின் மீதே இருந்து வந்தது.
இப்படியான பயங்கரமான கட்டத்தில் நமது கட்சி 1993 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் குதித்தது. கடைசியில் அந்தத் தேர்தல் பெரிய இழப்பை ஏற்படுத்தியது. வடக்கு, கிழக்கு தவிர முழுநாட்டிலும் இருந்த பன்னிரெண்டு மாகாணசபை உறுப்பினர்களுக்குப் பதிலாக இரண்டு பிரதிநிதிகளே தெரிவாகினர். அதுவும் மயிரிழையில்தான் அவர்களும் தெரிவாகினர்.
அனுராதபுரத்தில் ராவுத்தர் நைனா முகம்மத் அவர்களும், களுத்துறையில் ஜனாப் இம்தியாஸம் மட்டும்தான் அப்பொழுது தெரிவாகினர். இதனால் கட்சி பெரிய இழப்புக்கு முகம் கொடுத்தது. இதன்பிறகு கட்சிக்கு ஒரு எதிர்காலமே இல்லையென்று சொல்லும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. அதன்பிறகு கட்சியின் வேகமும் மிகவும் குறைந்தது.
வெளியேற்ற இடிகளும் வெற்றிப் படிகளும்
இப்படி பெரும் சோதனைக்கு முகம் கொடுத்த 1993ஆம் ஆண்டு காலத்தில் தான் ஜனாப் சுஹைப் காதரும் கட்சியிலிருந்து வெளியேறினார். ஜனாப் சுஹைப் காதர் அப்பொழுது பொதுச் செயலாளராக இருந்தார். உண்மையில் தமது பதவியையும் அவர் திறம்படச் செய்தார். கட்சியின் திறமை வாய்ந்த பொதுச் செயலாளராக அவர் நடமாடியது, தலைவரவர்களுக்கும் பெரும் திருப்தியை அளித்தது. அப்பொழுது ஜனாப் அப்துல் ரஸ"ல் தவிசாளராக இருந்தார்.
டாக்டர் உதுமாலெப்பை பிரதித் தவிசாளராக இருந்து கட்சியின் அலுவல்களைத் திறம்பட செய்து கொண்டு வந்தார்.
அப்பொழுது தேர்தலும் மிகவும் நெருங்கிக் கொண்டு வந்தது. நாடெங்கும் தகுதிவாய்ந்த அபேட்சகர்களை நியமிக்க வேண்டிய வேலை மிகவும் பெரிய அலுவலாக இருந்தது.
திடீரென ஜனாப் அப்துல் ரஸல் கட்சியிலிருந்து வெளியாகி விட்டார் என்ற செய்தி பகிரங்கமாகியது. அந்த விடயம் தலைவரவர்களுக்கும் உள்ளத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் அப்துல் ரஸல் அப்படிச் செய்வார் என தலைவரவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.
261

Page 134
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
அதைத் தொடர்ந்து காசப்ப ரோட் இல்லத்தில் அவசரமாகக் கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் உடனடியாகத் தவிசாளர் நியமிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது. அரசியல் அதி உயர்பீட உறுப்பினர்கள் அங்கு ஒன்று சேர்ந்திருந்தனர்.
பொதுச் செயலாளராக இருந்த ஜனாப் சுஹைப் ஏகாதரை அன்று தவிசாளராக நியமிக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால் ஜனாப் சுஹைர் ஏ.காதர் அந்தப் பொறுப்பை எடுக்க முன்வரவில்லை. அரசியல் அதி உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து அவரை கடுமையாக வற்புறுத்தினர். ஆனால் கடைசிவரை ஜனாப் சுஹைப் ஏ.காதர் அந்தப் பொறுப்புக்குத் தலையசைக்காமல், தட்டிக்கழித்துக் கொண்டே இருந்தார். தலைவரவர்கள் ஜனாப் சுஹைப் ஏ.காதரிடம் தவிசாளர் பதவியை ஒப்படைப்பதற்காக அன்று அவரிடம் கெஞ்சியது போன்று, தங்கள் வாழ்நாளில், எவரிடமும், எந்த விடயத்திலும் கெஞ்சியிருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு ஜனாப் சுஹைப் காதரிடம் தலைவரவர்கள் பணிந்து சென்றார்கள்.
அப்படி இருந்தும் கூட அவர் தலையைக் குனிந்து கொண்டு மெளனமாகவே இருந்தார். அவர் எப்படியாவது அங்கிருந்து தப்பியோடிவிட முயற்சிப்பது போன்ற ஒரு தோற்றம் இருந்தது. உண்மையில் அவர் எழும்பி ஓடத்தான் திட்டம் போட்டிருக்கிறார். ஆனால் அரசியல் அதி உயர்பீட உறுப்பினர்கள் அவரை வட்டம் போட்டு சூழ்ந்திருந்தனர்.
விரும்பாத மாப்பிள்ளைக்கு ஒரு பெண்ணைக் கட்டிவைக்கப் படாத பாடுபடுவது போன்று அந்த சபை அன்று இருந்தது. கடைசியில் கெளரவ தலைவரவர்கள் மிகவும் விவேகமாகவும், அதே நேரத்தில் பலவந்தமாகவும் சுஹைப் காதரின் தோள்மீது தவிசாளர் பொறுப்பை ஏற்றி அவரைக் கட்டிப் பிடித்து முஸாபாஹா, ஆலிங்கனம் செய்தார்கள். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஏனைய உயர்பீட அங்கத்தவர்களெல்லாம் அவருக்குக் கைகொடுத்து கட்டித்தழுவினார்கள். செய்வதறியாது ஜனாப் சுஹைப் காதரும் வேண்டா வெறுப்பாக எல்லாருடனும் கைகொடுத்துக் கொண்டார். அதன் பிறகு அவர் தாமதிக்கவில்லை. அங்கிருந்து வெளியாகினார். எப்படியோ அவருக்குத் தவிசாளர் பதவி பலவந்தமாக ஒப்படைக்கப்பட்டு விட்டது.
262

அப்துல் மஜீத் ஆலிம்
அதன்பிறகு ஜனாப் ரவுப் ஹக்கீம் அவர்கள் கட்சியின் பொதுச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார். ஏன் தலைவர் அவசரப்பட்டார்? இப்படி கட்சியின் வரலாற்றில் அவசரம் அவசரமாக மூன்று பொதுச் செயலாளர்கள் உருவாகி மறைந்தனர். நான்காவது பொதுச் செயலாளர் தான் ஜனாப் ரவூப் ஹக்கீம் அவர்களாவார்.
கட்சியினுடைய வரலாற்றில் நான்காவது பொதுச் செயலாளரான ஜனாப் ரவூப் ஹக்கீம் தான் அதிர்ஷ்டம் பெற்ற பொதுச் செயலாளராவார். அவரிலே அந்தப் பதவி நிலைத்ததுடன், அதன்பின் கட்சியினுடைய அதிர்ஷ்டத் திருப்புமுனையும் ஆரம்பிக்கத் தொடங்கியது. அதன் காரணமாக ஜனாப் ரவூப் ஹக்கீம் தற்பொழுது, பாராளுமன்றத்தில் சக்தி வாய்ந்த ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.
ஒரு நாள் தவிசாளர்
ஜனாப் சுஹைர் காதரிடம் ஒப்படைக்கப்பட்ட தவிசாளர் பதவி நில நிமிடங்கள்தான் நீடித்தது. அரசியல் அதி உயர்பீட உறுப்பினர்கள் அவரைக் கட்டித் தழுவிக் கொண்டிருந்த அந்த சில நிமிடங்கள்தான் அவர் தவிசாளராக இருந்தார். அவர் காசப்ப ரோட் இல்லத்திலிருந்து வெளியில் காலெடுத்து வைக்கும் பொழுது, அவர் தவிசாளர் பதவியிலிருந்து மட்டுமல்ல, கட்சியிலிருந்தே பிரிந்து வெளியேறிச் சென்று விட்டார். ஏனென்றால் அவர் திரும்பி வரவேயில்லை. அன்றிலிருந்தே அவருடைய கட்சி சரித்திரம் முற்றுப் பெற்றுவிட்டது.
பிறகு அவர் வேறு கட்சியில் சேர்ந்து, தேர்தலில் அபேட்சகராக இறங்கிப் போட்டியிட்டுத் தோல்வியடைந்து, அதன் பின் அவருடைய அரசியல் சரித்திரம் முற்றுப் பெற்று, திரும்பவும் தமது தொழில் விஷயத்திலேயே தமது வாழ்நாளைக் கடத்தி வருகிறார் என்று நான் அறிகிறேன்.
ஜனாப் சுஹைப் ஏகாதரை நமது தலைவரவர்கள் பலவகையிலும் கண்ணியப்படுத்தி அவரைப் பாராட்டியுமுள்ளார்கள். அவருடைய தந்தையார் மர்ஹ"ம் என்.எம்.எச். அப்துல் காதர் அவர்களுடைய நினைவு தினத்தை நமது கட்சி அலுவலகத்தில் தலைவரவர்கள் கொண்டாட வைத்தார்கள். இப்படியெல்லாம் சரித்திரத்தில் இடம் பிடித்து வந்த ஜனாப் சுஹைப் காதர் தவிசாளர் பதவியில் பொறுமையாக இருந்திருந்தால், இன்று அவருடைய சரித்திரம் ஆச்சரியமானதாக அமைந்திருக்கும் என்பதில் என்ன வியப்பு?
263

Page 135
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
என்ன செய்வோம்? அதிர்ஷ்டம் என்பது அவ்வளவு இலகுவான சொத்தா?
பார்க்குமிடமெல்லாம் பருகுழிகள்
கடைசியில் 1993 ஆம் ஆண்டின் கசப்பு மிகுந்த நாட்கள் தேர்தல் படுதோல்வியுடன் முற்றுப் பெற்றது. 必
நமது கட்சி அனாதைப் பெண்ணைப் போன்று மாறியது. தலைவரவர்களுடைய தோற்றமும் வெகுதூரத்திற்கு மாறி விட்டது. கட்சியாளர் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்க எவருமில்லாத கட்டம் உருவாகியது.
ஏற்கனவே 89 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட மாகாண சபைப் பிரதிநிதிகள் அதிகமானவர்கள் கட்சியிலிருந்து வெளியேறிச் சென்றமை ஒரு சோகம். அடுத்ததாக 93 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலில் பயங்கர சோகம், இந்த நிலையில், மாகாண சபைப் பிரதிநிதித்துவத்தினால் நமது கட்சி 1993 ஆம் ஆண்டு படு அனாதையாகியது.
அந்தத் தேர்தல் முடிந்த பிறகு தலைவரவர்கள் அபேட்சகர்கள், பேராளர்கள் அனைவரையும் ஒன்றுகூட்டி ஒரு கூட்டம் வைத்தார்கள். அந்தக் கூட்டத்தில் அரசியல் பிரயாணத்திலுள்ள பாரிய விளைவை எடுத்து விளக்கினார்கள். அவர்களுடைய முகம் அன்று சோர்ந்திருந்தது. முழு நாட்டிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டது இரண்டே இரண்டு உறுப்பினர்கள். அன்று ஒருவித யோசனையால் அமர்ந்து கொண்டிருந்தார்கள். கூட்டம் சோகமாகவே முடிவு பெற்றது.
அன்றிலிருந்து கட்சியும் பெரும் சோகத்தில் மூழ்கியது. பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் எப்படியோ செயல்பட்டார்கள். பிரதேச சபை உறுப்பினர்களும் எப்படியோ காலத்தை ஒட்டிக் கொண்டிருந்தார்கள்.
93 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் மக்கள் மத்தியில் கட்சியின் வடிவத்தையே மாற்றிவிட்டது. அதன் பிறகு கட்சிக் கூட்டங்களும் சோர்வடைந்தன. கட்சிப் பணியில் எவராவது உற்சாகமாக ஈடுபட்டு இருப்பதைக் கூட பார்க்க முடியவில்லை. தலைவரவர்களுக்கு உகப்பான சில இளைஞர்கள் இருந்து அந்த இடத்தை பாதுகாத்து வந்தார்கள். அங்கு மக்களுடைய வருகையும் வெகுவாகக் குறைந்தது.
264

அப்துல் மஜீத் ஆலிம்
கட்சிக்கு இனி ஒரு எதிர்காலம் எந்த ரூபத்தில்தான் வருமோ? என்று பலரும் யோசிக்கத் தொடங்கினர்.
ஏற்கனவே தலைவரவர்கள் அவசரப்பட்டு இன்னுமொரு வேலையும் செய்தார்கள். அதாவது கட்சி அலுவலகத்தின் பின்பக்கம் அமைந்திருந்த நீண்ட தொகுதியை உடைத்து தரைமட்டமாக்கிவிட்டார்கள். புதிய கட்டடத்திற்கான திட்டங்களை மனதில் வைத்துக் கொண்டே அந்த வேலையைச் செய்தார்கள். கடைசியில் கட்டட வேலையைத் தொடரவும் முடியவில்லை. அதற்கான நிதியும் மிகவும் கஷ்டமாகி விட்டது. அந்த இடம் கானும், குழியுமாகக் கிடந்தது. அதனால் கட்சி அலுவலகமும் பார்க்க பரிதாபமான நிலையில் கிடந்தது. அக்காலங்களில் ஜனாப் அப்துல் அஸிஸ் போன்ற இளைஞர்கள் மிகவும் கஷ்டத்துடன் அங்கு சிறு அலுவல்களை கவனித்து வந்தனர்.
இப்படிப்பட்ட இக்கட்டான கால கட்டங்களில் எல்லாம் கட்சி அலுவலகத்துக்குள், எந்த நேரத்திலும் காட்சி வழங்கியவர் டாக்டர் உதுமாலெப்பை மட்டும்தான்.
ஜனாப் சுஹைப் காதர் சில நிமிடம் தவிசாளர் பதவியில் இருந்து வெளியாகி விட்டார். உலக வரலாற்றிலே சில நிமிடங்கள் ஒரு பொறுப்பான பதவியை வகித்தவர் ஜனாப் சுஹைப் ஏகாதர் மட்டும் தான் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
பாருக்குள்ளே நல்லவர் பாரூக் தவிசாளரானார்
அவருக்குப் பிறகுதான் சட்டத்தரணி ஜனாப் பாரூக் அவர்கள் கட்சியின் தவிசாளராக ஆக்கப்பட்டார். அவரும் கட்சியினுடைய சரித்திரத்தில் நான்காவது தவிசாளர் ஆவார்.
சட்டத்தரணி பாரூக் கல்ஹின்னையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1988 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் கண்டி மாவட்டப் பிரதிநிதியாக வந்தவர். அந்தக் காலத்தில் இருந்து கட்சி அலுவல்களில் ஈடுபட்டு உழைத்து வருபவர்.
அவரும் ஒரு அதிர்ஷ்டத் தவிசாளராக ஆகிவிட்டார். காரணம் ஜனாப் ரவூப் ஹக்கீம் போன்று கட்சியின் வரலாற்றுத் திருப்புமுனைக் காலத்தில் அந்தப் பதவிக்கு வந்தவர். ஜனாப் ரவூப் ஹக்கீம், ஜனாப் பாரூக் ஆகியோர்கள் பதவி வகிக்க வந்த காலம் கட்சிக்கு எந்தப் பெறுமதியும் இல்லாத காலமாகும்.
இந்தக் கடும் சோதனை மிகுந்த கால கட்டத்தில்தான் கட்சியின்
265

Page 136
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
புனர்வாழ்வு மறைமுகமாக உருவாகிக் கொண்டிருந்தது.
அந்தக் காலகட்டங்களில் மூத்த துணைத் தலைவர் அல்ஹாஜ் மருதூர்கனி, ஜனாப் அதாவுல்லாஹ், டாக்டர் உதுமாலெப்பை, டாக்டர் இல்யாஸ், அபூபக்கர் ஹாஜியார், ஜனாப் ஹஸன் அலி, ஜனாப் ரஷ்பூப் ஹக்கீம், மெளலவி கலாநிதி காலிதீன், பஷிர் நியாஸ்தீன், ஜனாப் நியாஸ் போன்ற இன்னும் சிலர் கட்சியின் உயர்பீடக் கூட்டங்களில் கலந்து கொண்டு மிகவும் அமைதியாக செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.
கட்சியினுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைக் கூட யோசிக்காமல் இவர்கள் தைரியமாக செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.
இத்தா இருக்கவும் இடமில்லா நிலை
அனுதாபம் மிகுந்த நாட்கள் மிகவும் கஷ்டத்துடன் நகர்ந்து கொண்டிருந்தன. இந்தக் கால கட்டத்தில்தான் கெளரவ தலைவரவர்கள் கடுமையாகத் தங்களின் சட்டத் தொழிலில் ஈடுபட்டுக் கொஞ்சம் பணம் சம்பாதித்தார்கள். அதுகால வரையில் அவர்கள் உழைத்த பணமெல்லாம் கட்சியின் அலுவல்களுக்கே கரைத்து முடிந்து விட்டது. பணம் என்பதே அவர்களுடைய கையில் இல்லாமலிருந்தது. காசப்பா ரோட்டில் தங்கள் மூத்த சகோதரருடைய வீட்டில் தங்கி வாழ்ந்து கொண்டிருந்த பொழுதுதான் அவர்களுக்கு ஓர் உணர்வு ஏற்பட்டது. ஆம். தமக்குக் குந்தியிருக்க ஒரு வீடு வேண்டுமல்லவா? அதற்கு என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கிய தலைவரவர்கள் கடுமையாகத் தொழில் செய்வதில் ஈடுபட்டார்கள். கட்சி மிகவும் சோகமாகக் கிடந்த காலத்தில் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தினார்கள்
சொந்த வீடில்லாத பிரச்சினை தலைவரவர்களுடைய உள்ளத்தைப் பாதித்தது. அடிக்கடி அதுபற்றிக் கதைக்கத் தொடங்கினார்கள். "நான் இறந்தால், என் மனைவிக்கு இத்தா இருக்கக் கூட ஒரு இடமில்லை; அந்த இடத்தையாவது உருவாக்கி விட வேண்டுமல்லவா?” என்று கூறிப் பெருமூச்சு விட்டுக் கொள்வார்கள்.
கடைசியில் நாரஹேன்பிட்டியில் மன்னிங்ரவுண் தொடர்மாடிக் கட்டடத்தில் இரண்டாம் மாடியில், சிறிது பணத்தைச் செலுத்தி கடன் அடிப்படையில் ஒரு வீட்டை வாங்கினார்கள். அந்த வீட்டை அவசரமாகத் திறந்து வைத்து, மார்க்க நிகழ்ச்சிகளையும் நடத்தினார்கள். அந்த வீட்டுத் திறப்பு விழாவுக்கு குடும்ப சகிதம் நானும் சென்றேன். புதிய வீட்டில் தலைவரவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார்கள்.
266

அப்துல் மஜீத் ஆலிம்
எங்களை ஆர்வமாக, சந்தோஷத்துடன் வரவேற்றார்கள். அங்கு திறப்பு விழாவில் கண்ட புதுமையென்னவென்றால் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும், கடும் உழைப்பாளிகளும் தான் வந்திருந்தார்கள். வேறு குறிப்பிடத்தக்க எவரையோ குடும்ப நண்பர்களையோ பார்க்க முடியாதிருந்தது. அங்கிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களின் குடும்பம் மாத்திரம் இதற்கு ஒரு விதிவிலக்காக இருந்தது.
நான் மனைவியுடன் சேர்ந்து தலைவரவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். தலைவரவர்கள் வாழ்க்கையில் பெரும் சுமையொன்று கீழே வைக்கப்பட்டது போன்ற உணர்வுடன் நிம்மதியாக எங்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
உச்சியிலிருந்து இறங்கிய ஒரு சுமை
அன்று அவர்கள் உரையாடும் பொழுது “ஹஸ்ரத்! இன்றுதான் என் உள்ளத்திலிருந்த பெரும் சுமை இறங்கியது. இன்று நான் இறந்தாலும் கூட எனக்கு சந்தோஷம். ஏனென்றால் என் மனைவிக்கு இத்தா இருக்கவும் என் பிள்ளை உட்கார்ந்து படிக்கவும் ஒரு இடம் அமைந்து விட்டது” என்றார்கள். பிறகு வீட்டை வாங்கப் பட்ட பாட்டை நீண்ட நேரம் எடுத்துச் சொன்னார்கள். புஹாரிதீன் ஹாஜியார், ஜனாப் ஹில்புல்லாஹ் ஆகியோரும் அன்று அங்கு சமுகமளித்தது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் அவர்கள் இருவரும் அந்தக் கால கட்டத்தில் பாராளுமன்ற மட்டத்தில், தலைவரவர்களுக்குப் பெருத்த தலையிடியாக இருந்து வந்தனர்.
தலைவரவர்கள் எங்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, "கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்கு மட்டும்தான் நான் அவசரமாக அறிவித்தேன். ஏனென்றால், எனக்கு கட்சிதான் முக்கியம்” என்றார்கள். அந்த நேரத்திற் கூட கட்சியின் நிலையைத்தான் தலைவரவர்கள் யோசித்தார்கள்.
அந்தப் புதிய வீடு அமைந்த பிறகு தலைவரவர்களுடைய பெரியதொரு சுமை கீழே இறங்கிவிட்டது. அத்துடன் வாழ்க்கையின் சுக்கிர திசையும் ஆரம்பித்தது. அந்த வீட்டின் பின்னணியில்தான் வாழ்க்கை மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் மாபெரும் மாற்றங்கள் உருவாகத் தொடங்கின. அதைத் தொடர்ந்து சமித் பிளெட்டிலும் அவர்களுக்கு ஒரு சிறு வீடு அமைந்தது. அந்த வீட்டில் நாம் அடிக்கடி அரசியல் உயர்பீடக் கூட்டங்களை நடத்தி வந்தோம்.
267

Page 137
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
அக்காலகட்டத்தில் நான் ஒரு கனவு கண்டேன். என் கனவில் சமித் பிளெட் வீடு காட்டப்பட்டது. அந்த வீட்டில் வைத்து தலைவரவர்கள் என்னிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். நானும் கேட்டுக் கொண்டிருந்தேன். இன்னும் சிலர் தொலைவில் இருந்து அவதானித்துக் கொண்டிருந்தனர்.
கனவுக்குப் பின் வந்த கட்சித் தொடர்புகள்
அந்தக் கனவுக்குப் பிறகு என் வாழ்வில் சோதனைகள் இருந்ததை விடக் கடினமாகியது. பெரும் கஷ்டத்துக்கும் துன்பத்துக்கும் நான் இலக்காகினேன்.
1993 ஆம் ஆண்டு மாகாண சபையும் கலைக்கப்பட்டது. அதன் பிறகு பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய்விட்டது. அதனால் நான் குடும்பத்துக்காகத் தொழில் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். தொழில் நிலையும் பெரிய சோதனையாக மாறியது. நான் நண்பர்களிடம் ஒப்படைத்திருந்த தொழில்களும் லட்சக்கணக்கில் பெரிய நஷ்டத்தை உண்டு பண்ணிவிட்டன.
அதனால் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு உழைப்பதில் நான் மிகவும் பலவீனப்பட்டுப் போனேன். என் பொருளாதார நிலை எவருக்கும் தெரியாமலிருந்தது. அந்தக் கால கட்டங்களில் டாக்டர் உதுமாலெப்பை அடிக்கடி என் வீட்டில் இறங்கிச் செல்வது வழக்கம்.
கட்சி அலுவலகத்திலிருந்து அவர் வீட்டுக்குச் செல்லும் பொழுது என் வீட்டுப் பாதையினூடாகத்தான் செல்வார். அத்துடன் என்னோடு பல விடயங்களையும் கதைத்து விட்டுத்தான் செல்வார். இப்படி நாங்கள் மிகவும் நெருக்கமாக இருந்த காலம் அது
ஒருநாள் டாக்டர் உதுமாலெப்பை என் வீட்டுக்கு வந்தார். நான் யோசனையில் மூழ்கிக் கிடந்தேன். அப்பொழுது கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் உள்ளூராட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்ல வேண்டும். அதற்கு நாம் இருவரும் ஒன்று சேர்ந்து செல்லப் பட்டியல் தயார் பண்ணப்பட்டுள்ளது என்று சொன்னார்.
அப்பொழுது, நான் எனது இக்கட்டான நிலைமையை விளக்கினேன். பிறகு, தலைவரவர்களிடம் பேசுவோம் என்று என்னை அழைத்தார். நான் அவரைக் காரில் அனுப்பி விட்டு, எனது மோட்டார் சைக்கிளில் தலைவரவர்களுடைய சமித் பிளெட் இல்லத்தை அடைந்தேன்.
268

அப்துல் மஜீத் ஆலிம்
அங்கு தலைவரவர்கள் மிகுந்த களைப்பினால் அமர்ந்திருந்தார்கள். இன்னும் சிலர் இருந்தனர். தலைவரவர்களுடன் எனது நிலைமையை விளக்கிச் சொல்ல வெட்கமாக இருந்தது. என்ன செய்வதென்று யோசித்து கவலையுடன் அமர்ந்து கொண்டிருந்தேன். தொழில் நிலைமைகளுக்கு முகம் கொடுத்து எனக்கு அலுப்பாக இருந்தது.
தலைவரவர்கள் என்னிடம் முன்னுக்குள்ள போராட்ட நிலைமைகளை எடுத்துச் சொல்லி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். முன்னுக்குப் பாராளுமன்றத் தேர்தலும் குறுக்கிட்டு நெருங்கி வந்து கொண்டிருந்த காலமாக இருந்தது. அதுபற்றிய விடயங்களையும் தலைவரவர்கள் என்னிடம் விளக்கிக் கொண்டிருந்தார்கள். நான் மெளனமாக அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், நான் எனது இக்கட்டான நிலைமைகளை எடுத்துச் சொல்லாமலே தலையசைத்துக் கொண்டிருந்தேன்.
ஏனென்றால் தலைவரவர்கள் பேச்சை மறுத்தோ, அல்லது காரணங்காட்டியோ, நாம் ஒருபோதும் பேசுவதில்லை. பிறகு நான் எழுந்து முன்னுக்குப் புறம்காட்டி நடமாடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது டாக்டர் உதுமாலெப்பை என்னைப்பற்றி அவருக்கு முடியாதாம்’ என்ற ஒரு வார்த்தையைப் பாவித்தது என் காதில் கேட்டது. ஆனால் எனது இக்கட்டான நிலைமையை அவர் விளக்கிச் சொல்லவில்லை. தலைவரவர்கள் கேட்கவுமில்லை. இதற்குத் தலைவரவர்கள் வேறு கருத்துக் கொண்டார்களோ தெரியவில்லை. எப்படியோ நானும் பலவாறு முயற்சி செய்தேன் கிழக்கிலங்கைத் தேர்தல் பிரச்சாரத்துக்குப் போவதற்காக, ஆனால் என்னால் முடியாமலே போய்விட்டது. அந்த அளவுக்குப் பலத்த பொருளாதாரச் சோதனை என்னை ஆட் கொண்டது.
பிறகு அது தொடர்ந்தது. இரவு பகலாக நான் சொந்தத் தொழில் முயற்சிகளில் மூழ்கினேன். அதனால், எனக்கு அரசியல் உயர் பீடக் கூட்டங்களில் கூட சரியாகப் பங்குபற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
நீண்டகாலத் தலைவிதி நீங்கிய வரலாறு இப்படி நான் பெருங் கஷ்டத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த காலத்தில்தான் 1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் குறுக்கிட்டது. இந்தத் தேர்தல் தான் மிகவும் முக்கியமான தேர்தலாகும்.
ஆனால் இந்தத் தேர்தல் காலத்தில் மிகப் பெரிய துரதிர்ஷ்டம்
269

Page 138
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
எனக்குக் காத்திருந்தது. தேர்தல் பிரச்சாரங்கள் இலகுவாக ஆரம்பித்துக் கொண்டிருந்தன. அது சூடாகவுமில்லை. நாடு பெருத்த யோசனைகளில் மூழ்கிக் கிடந்தது. அப்பொழுதுதான் கெளரவ தலைவரவர்கள் ஆச்சரியமான முடிவுக்கு வந்தார்கள்.
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி மேல்மாகாண முதலமைச்சராகப் பதவி வகித்துக் கொண்டிருந்த திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா அப்பொழுது பாராளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். பொது முன்னணிக்கு அவர்தான் தலைமை தாங்கினார்.
ஏற்கனவே அவருடைய சகோதரரர் திரு. அநுரா பண்டாரநாயக்காவும் கட்சியிலிருந்து வெளியாகிவிட்டார். அவரது தாயார் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவும் சுகவீனமுற்றிருந்தார். இந்த நிலையில் தேர்தலுக்கு முகம் கொடுப்பதில் அவரும் பலத்த சோதனைகளைக் கண்டு வந்தார். இந்த நிலைமையில்தான் திருமதி சந்திரிக்காவுக்கும், நமது தலைவரவர்களுக்கும் பேச்சு வார்த்தை ஏற்பட்டது. மிகவும் விவேகமுள்ள திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா அம்மையார் நமது தலைவரவர்களை நல்ல முறையில் பயன்படுத்தினார். சிறந்த முறையில் அணுகினார்.
திறந்த உள்ளத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார். தகுந்த உரிமைகளையும் சலுகைகளையும் கொடுக்க முன்வந்தார். கெளரவ தலைவரவர்கள் சந்திரிக்கா அம்மையாரைப் பற்றிக் கூறும் பொழுது அவர் வித்தியாசமான ஒரு தலைவர் எனப் பாராட்டியுள்ளார்கள்.
உண்மையில் சந்திரிக்கா அம்மையாருடைய திறந்த மனப்பான்மை அவருடைய குடும்ப வரலாற்றின் திசையையே மாற்றியமைத்தது. பதினேழு வருடங்களாக எழும்ப முடியாத நிலையில் குப்புறப் புரண்டு கிடந்த அவருடைய தாய், தகப்பனுடைய கட்சியை அவர் திறம்பட எழுப்பி, ஆட்சி அதிகாரத்தின் மேடையில் கொண்டு வந்து நிறுத்துதவற்கு நமது தலைவரவர்களுடைய இணைப்பு காரணமாக ஆகிவிட்டது.
தலைவரவர்கள் தங்கள் கட்சியைப் பாராளுமன்றத் தேர்தலுக்குத் தயார்படுத்தினார்கள். திருமதி சந்திரிக்கா அம்மையாரின் கரங்களைப் பலப்படுத்தி, அவரை ஆட்சிபீடத்தில் அமர்த்தி சமுதாயத்தின் நல்லெதிர்காலத்திற்குரிய வழியை அமைத்தார்கள்.
1994 ஆம் ஆண்டு வரலாறு மறக்க முடியாத ஆண்டாகும். நாட்டினுடைய நீண்ட காலத் தலைவிதி அந்த ஆண்டில் தான் மாறியது.
270

அப்துல் மஜீத் ஆலிம்
பதினேழு வருட காலமாக திரு. ஜயவர்தனாவுடைய கையிலும், பிறகு திரு. பிரேமதாசாவுடைய கையிலும் பிறகு திரு. விஜேதுங்கவுடைய கையிலும் இருந்து வந்த யூ.என்.பி.யுடைய நீண்ட ஆட்சிக்கு அந்த ஆண்டில்தான் முடிவு ஏற்பட்டது. நாட்டில் பலவகையிலும் படர்ந்திருந்த யூ.என்.பி. சக்திகள் அந்த ஆண்டில்தான் மடக்கப்பட்டன. நீண்டகாலமாக தலை தூக்க முடியாமல் கிடந்த சுதந்திரக் கட்சி அந்த ஆண்டில்தான் மீண்டும் தலைதூக்கியது. நாட்டு மக்களும் ஆட்சியில் ஒரு மாற்றம் வர வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த சந்தர்ப்பமும் அந்த ஆண்டில்தான் ஏற்பட்டது.
கெளரவ தலைவரவர்கள் அந்த ஆண்டை சரியான முறையில் பயன்படுத்தினார்கள். சந்திரிக்கா அம்மையாருடைய அணுகுமுறை மிகவும் சிறப்பான முறையில் அமைந்துவிட்டதால், தலைவரவர்கள் மிகவும் உஷாராகக் களத்தில் குதித்தார்கள். பெரும் போராட்டம் நிகழ்த்தினார்கள்.
பல வருடங்களாக அவர்களுக்கு வாய்த்தும் தவறிப் போன சந்தர்ப்பம் அந்த ஆண்டில் சரியான முறையில் அமைந்தது. 1989 ஆம் ஆண்டில் திருமதி பண்டாரநாயக்கா அம்மையார் தலைவரவர்களுடன் இப்படியான ஓர் அணுகுமுறையை மேற்கொண்டிருந்தால், அவரும் இந்த நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதியாக வந்திருக்க முடியும். திரு. பிரேமதாசா இந்த நாட்டில் ஒரு ஜனாதிபதியாக வர முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். என்ன செய்ய முடியும்? திருமதி பண்டாரநாயக்காவின் தலைவிதி அப்படிப் போய்விட்டது.
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சக்திபெற்ற சந்திரிக்கா
ஆனால், திருமதி சந்திரிக்கா அம்மையாருக்கு இந்த நிலைமை நன்கு விளங்கியிருக்க வேண்டுமென நான் நினைக்கின்றேன். அதனால்தான் அவர் அந்த விடயத்தில் மிகவும் நுணுக்கமாக நடந்து கொண்டார். அந்த வகையில் அவர்கள் தலைவரவர்களைப் பாவித்து தமது நீண்ட கால குடும்ப சரித்திரத்தையே புனர்நிர்மாணம் செய்ததுடன் நாட்டின் சரித்திரத்தையே மாற்றிவிட்டார்.
அதனால் நமது தலைவரவர்கள் 1994ஆம் ஆண்டு நாட்டின் சரித்திரத் திருப்புமுனையின் நாயகராக ஆகிவிட்டார்கள். தலைவரவர்களுடைய பெருத்த தலையீட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் காலாதிகார அட்டகாசம் மிகுந்த அத்தியாயத்தை
271

Page 139
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
மாற்றியமைக்க முடிந்தது. அதுவரையில் எதிர்க்கட்சியின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு கடும் சவால்களுக்கு முகம் கொடுத்து வந்த தலைவரவர்கள், எதிர்க்கட்சியிலிருந்தவர்களெல்லாம் ஆளும் கட்சியின் ஆசனங்களில் அமர்த்துவற்குக் காரணமாக அமைந்தார்கள். ஆண்டு கொண்டிருந்தவர்களை எதிர்க்கட்சியின் ஆசனங்களில் வாய் மூடி அமர வைத்தார்.
எதிர்க்கட்சியில் உட்கார்ந்திருந்த கே.பி. ரத்னாயகாவை சபாநாயகர் ஆசனத்தில் கொண்டு போய் உட்கார வைத்தவிட்டு வந்தார்கள்.
பல பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கி திருமதி சந்திரிக்கா அம்மையாருடைய கட்சியுடன் அணிவகுத்தார்கள். அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு தகுந்த பாடத்தைப் படிப்பித்தார்கள்.
அதுவரையில் தலைவரவர்களை கடுமையாகத் தாக்கித் துன்புறுத்தி வந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மெளனியாகத் தலைகுனிய வைத்தார்கள். இப்படியாக சரித்திரம் புதுப் பொலிவு கண்டது.
அநியாயத்தினை முடிவு கட்டிய ஆளுமை
இந்தப் பாராளுமன்றத் தேர்தல் காலத்திலும் நமது கட்சிக்குப் பெருத்த அநியாயம் நடந்தது. பல தொண்டர்களை கட்சியிலிருந்து பலவந்தமாக வெளியேற்றும் வேலையில் சதிகாரர்கள் கடுமையாக ஈடுபட்டிருந்தனர். பலர் பயமுறுத்தப்பட்டனர். பலர் கொலைப் பயமுறுத்தல்களுக்குள்ளானார்கள்.
கொழும்பு நகரம் இந்த விடயத்தில் மிகவும் கடினமாக இருந்தது. கொழும்பு நகரில் அதிகார ஆட்சியினர் மிகவும் பலவந்தமான காரியங்களில் ஈடுபட்டிருந்தனர்.
நான் கூட பெரும் அநியாயத்தில் மாட்டிக் கொண்டேன். மார்க்கப்பிரசங்க மேடைக்கென்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுத்தான் அழைத்துச் செல்லப்பட்டேன். பிறகு பயங்கரமான நிலையில் பெரிய அரசியல் மேடைக்கு ஏற்றப்பட்டேன். எந்த அறிக்கையும் விடக் கூடாது எனவும் பயங்கரக் கொலைப் பயமுறுத்தல்கள் என்னை நோக்கிவரத் தொடங்கின. அதனால்தான் இரண்டு வருடங்களாக எனது தொழில்களுடனும், மார்க்க விடயங்களுடனும் மெளனமாக இருக்க
272

அப்துல் மஜீத் ஆலிம்
வேண்டியநிலை ஏற்பட்டது. தலைவரவர்கள் என்னை அழைக்கும் வரையில் நான் மெளனமாகவே இருந்தேன்.
இப்படியெல்லாம் அந்தக் காலகட்டங்களில் ஆளும் வர்க்கத்தால் பெரும் பெரும் அநியாயங்களெல்லாம் செய்யப்பட்டு பெருத்த வெறியாட்டங்களுக்குப் பிறகு, பதினேழு வருட அதிகாரம் முற்றுப் பெற்று ஓய்ந்தது.
1994 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாராளுமன்றம் மாற்றமடைந்தது. கெளரவ தலைவரவர்கள் பாராளுமன்றத்தில் சக்திவாய்ந்த தளங்களைக் கைப்பற்றினார்கள். பல உறுப்பினர்களை அங்கு புகுத்தினார்கள். பிரதி அமைச்சர்களையும் உருவாக்கினார்கள். கட்சித் தொண்டர்களையும் பல வழிகளிலும் சக்தி வாய்ந்தவர்களாக மாற்றினார்கள்.
இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலும் வந்தது. அதனால் அந்தத் தேர்தலிலும் நீண்ட கால அரசியல் கட்சி தோல்வியடைந்தது. இறையருளால் நமது கட்சியினுடைய வளர்ச்சிக்கு முக்கிய ஒரு சந்தர்ப்பக் களம் உருவாகி விட்டது.
பகலில் நிலையாமல் இரவில் நிலைக்கும் நிழல்
இந்தக் கட்டத்தில் நமது கட்சியும் தொண்டர்களும் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். ஆனால் நிழல் என்பது சாய்ந்து கொண்டே செல்லக் கூடியது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. நிழல் நிரந்தரமானது என்று நினைத்து நாம் மதிமயங்கி விடக்கூடாது.
நிழல் கிடைத்த சந்தர்ப்பத்தை, நாம் நிரந்தரமான நிழலுக்குத் தயார்படுத்த வேண்டும். அதுதான் கட்சியினுடைய ஆழமான வளர்ச்சியாகும். கட்சி சரியான முறையில் மக்கள் மயமாகிவிட வேண்டும். அந்த வேலை இந்தக் காலத்துக்குள் செய்தாக வேண்டும்.
வீடு வீடாக தலைவர்களைப் பற்றியும் கட்சியைப் பற்றியுமுள்ள தெளிவுகள் புகுந்து செல்ல வேண்டும். இந்த முக்கிய அடிப்படையில்தான் இந்தத் தலைவர் நினைவுகள்’ என்ற நூலும் எழுதப்படுகிறது. இது
பலபாகங்களாக வரக் கூடியது.
இதுபோன்ற நூல்கள் மாவட்டங்கள் தோறும் வெளியிட்டு வைக்கப்பட்டு, கெளரவ தலைவரவர்களைப் பற்றிய சரியான புரிந்துணர்வை மக்கள் உள்ளங்களில் கொண்டு வந்துவிட வேண்டும்.
273

Page 140
தலைமைத்துவ ரகஸ்யங்கள்
அதன் அடிப்படையில், ஒருபோதும் அசையாத ஒரு சக்தி வாய்ந்த பின்னணி உருவாகிவிட வேண்டும் என்பதுதான் நான் இரவு பகலாகக் கஷ்டப்பட்டு எழுதிக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் முயற்சியின் நோக்கமாகும்.
நினைவுகள் நிலைக்க நிரந்தர வீடு
கெளரவ தலைவரவர்களுடைய நேரடிக் கண்காணிப்பின் கீழ்தான் இவைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். 1997 ஆம் ஆண்டு உள்ளூராட்சிச் சபைத் தேர்தலுக்காக நான் தலைவரவர்களுடன் நாடு முழுவதும் பறந்து கொண்டிருந்தேன். நான் மேடைகளில் பல முக்கிய விடயங்களை அறிவித்தேன். கட்சியினுடைய வளர்ச்சியில் கடந்தகால நினைவுகளை மக்களுக்கு நான் எடுத்து விளக்கிக் கொண்டிருந்தது தலைவரவர்களை மிகவும் கவர்ந்தது. அதன் அவசியத்தையும் தலைவரவர்கள் உணர்ந்தார்கள்.
அந்த நீண்ட ஓட்டத்தில் ஒருநாள் காருக்குள் வைத்து தலைவரவர்கள், நான் கூட்டங்களில் பேசும் விடயங்கள் புத்தகமாக எழுதப்பட வேண்டும் என்று சொன்னார்கள். அது பெரும் பயனளிக்கும் என்றும் எடுத்துச் சொன்னார்கள்.
எழுத வேண்டிய தலையங்கத்தையும் தலைவரவர்களே சொன்னார்கள். அதன்படி நான் வேலையைத் தொடங்கினேன். அது பெரும் பயனுள்ள வேலையாக எனக்குப்பட்டது. அதனால் இரவு பகலாக இதற்காக உழைக்கத் தொடங்கினேன்.
அந்த அடிப்படையில்தான் இப்பொழுது, பெரும் சிரமத்துக்கும், உழைப்புக்கும் மத்தியில் முதலாம் பாக நூலை உங்கள் முன் சமர்ப்பித்து விடைபெறப் போகிறேன். இரண்டாம் பாகத்தை இன்னும் திறம்பட ஆராய்ந்து எழுத முடிவு செய்துள்ளேன்.
இன்ஷா அல்லாஹ்! முதலாம் பாகத்தில் இடம்பெறத் தவறியவைகளும், தேவையான முக்கிய விடயங்களும் அதில் இடம் பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர் நினைவுகள் என்ற தலைப்பில் எனது நினைவுக்கு வந்து கொண்டிருக்கும் விடயங்களையே எழுதிக் கொண்டு செல்கிறேன். இன்னும் எத்தனையோ பேர்களுடைய பெயர்கள் இங்கு இடம் பெறாமல் இருந்தாலும் கூட, பிறகு வரக் கூடிய பாகங்களில் அவை
274

அப்துல் மஜீத் ஆலிம்
திறம்பட உரியமுறையில் இடம் பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர் அவர்களைப் பற்றிய நினைவுகள் காலத்தால் அழிந்துவிடக் கூடாது. இதுபோன்று அவரோடு பழகிய அத்தனை பேரும் தத்தமது நினைவுகளை புத்தக வடிவில் எழுதி வைக்க வேண்டியது எதிர்கால சமூகத்துக்கு நாம் செய்யவேண்டிய பாரிய கடமைப்பாடாகும். அத்தகைய நினைவுகள் நிரந்தரமாக வாழக்கூடிய ஒரேயொரு இல்லம் இத்தகைய நூல்கள் மாத்திரமே.
அல்ஹம்துலில்லாஹ்!
275

Page 141


Page 142
பிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது உருவாக்கத்துக்கும் காரணமாயமைந்துள்ள 1979இல் சன்மார்க்கப் பிரசாரத்துக்க திறமை சர்வதேச மட்டத்திலும் பெரும் து இஸ்லாமிய அடிப்படையில் அமைக்கப் கட்சியின் தலைவர் அவர்களால் வி பிரச்சாரத்தோடு அரசியலிலும் குதித்தா (1988) கொழும்பு மாவட்டத்தில் ஆக காங்கிரஸின் முதன்மைப் பிரதிநிதியாகத்
ஒஆம் ஆண்டு இலங்கையின் இே வேட்பாளராகத் தேறியும் கூட வெ இவரிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்டது.
ஏறத்தாழ பத்தாண்டுகளாக நீலர் பாதையில் தீவிர பங்காளியாகவும் இருந்துள்ளார். கடந்த இரணடாண்டுகள
தலைவருக்கு அருகிலேயே இருந்து வருகிறார்.
Cover Design & Pr
 

நூலாசிரியர்
வெள்ளி நாக்குப் பேச்சாளர் இவர் பதினைந்தாவது வயதிலிருந்தே சமூக, சமய நடவடிக்கைகளில் தனது பேச்சுக்கள் மூலமும் எழுத்தின் மூலமும் ஈடுபட்டார். இளமைக் காலத்தில் தினகரன், தினபதி போன்ற பத்திரிகைகளில் நிறைய எழுதியுமிருக்கின்றார்.
ாத்தளை மாவட்டத்திலுள்ள தேவஹவவில் இவர் பள்ளிவாசல்கள் மூலம் இஸ்லாமிய மட்டுமன்றி, பல பள்ளிவாசல்களின் T.
க தங்கப் பதக்கம் பெற்ற இவரின் பேச்சுத் ாக்கங்களை ஏற்படுத்தியது. பட்ட ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் டுக்கப்பட்ட அழைப்பையேற்று மார்க்கப் ர், முதலாவது மாகாணசபைத் தேர்தலில் க்கூடிய தெரிவு வாக்குகளுடன் முஸ்லிம்
தேறினார்.
பதாவது பாராளுமன்றத் தேர்தலில் முதன்மை ற்றி வாய்ப்பு பேரினவாத சதிகளினால்
பகா முஸ்லிம் காங்கிரஸின் விடுதலைப்
சிலவேளைகளில் பார்வையாளராகவும் ாக தனக்கு கிடைக்கும் ஒய்வு நேரங்களில் அவரின் நடவடிக்கைகளை அவதானித்து
inted by: Print & Print