கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ்ச் சமூகமும் - பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்

Page 1
தமிழ்ச்
L[[[]]]|[[[[g 6Î LÎ
01ಸಿ GUTélfuri சிவத் sli PR,
 

a Cup 65Cup fo
1ள் கண்டுபிடிப்பும்
திகேசு சிவத்தம்பி
矚

Page 2


Page 3

தமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
(எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டுச் சிறப்பு வெளியீடு)
பேராசிரியர் : கார்த்திகேசு சிவத்தம்பி
M. A. (Sri Lanka); Ph.D (Birmi) தமிழ்ப் பேராசிரியர் தலைவர், நுண்கலைத்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ் (பி) லிமிடெட், 41 - பி சிட்க்ோ இண்டஸ்டிரியல் ே بنا با

Page 4
Thamizh Sam OOkamum Panpattin Meeli Kandupidippum by KARTHIKES U SIVATHAME3/
முதற் பதிப்பு : நவம்பர், 1994 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு
டு ஆசிரியருக்கு Code No : A 808 ISBN : 81 - 234 ܀ 6 - 0366 ܚ
விலை-ரூபாய் ! 1500
அச்சிட்டோர் : கண்ணப்பா ஆர்ட் பிரிண்டர்ஸ் 604, சூரப்ப முதலி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005. தொலைபேசி : 842910
ஒளி அச்சு ஈசுவர் லேசர், சென்னை -18அச்சிட்டோர்
ii

பதிப்புரை
"தமிழிச் சமூகமும் பண்பாட்டின் மீள்கண்டு பிடிப்பும்" என்னும் தலைப்பில் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் இரு சிறு நூல்கள் இடம் பெற்றுள்ளன.
முதல் நூல் "தமிழ்ப்பண்பாட்டின் மீள்கண்டு பிடிப்பும் நவீனவாக்கமும்" என்பது பேராசிரியர் சிவத்தம்பி 1984ல் லண்டன் பி.பி.சி-யின் "தமிழோசையில்" ஆற்றிய நான்கு உரைகளின் கட்டுரையாகும். இதில் தமிழ்ப் பண்பாடு பற்றிய வரையறை தருகிறார். மேற்குலகத் தொடர்பால் சங்ககாலம் தொடங்கி இக்காலம் வரை தமிழும் வரலாறும் பண்பாடும் அடைந்த மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் இரத்தினச் சுருக்கமாக எடுத்துச் சொல்லுகிறார். குறிப்பாக, கிறித்துவ மிஷனரிமார் கல்வி முறையில் செய்த ஏற்பாடுகள் எவ்வாறு புதிய சமூக அமைப்பு தோன்றிட அடிக்கல் நாட்டின என்பதனை விளக்கிக் கூறியுள்ளார். பிரிட்டானிய ஆட்சிக் காலத்தில் ஒருபுறம், தமிழர்கள் பிறநாடுகளுக்கு கூலி வேலை செய்து பிழைக்க வெளியேறுதலையும் மறுபுறம் தமிழ்ச் சமூகத்தைப் புதிய பிரச்சினைகள் எதிர்கொள்ளுதல் என்னும் போக்கு களையும் காண்கிறோம் . இக்காலக் கட்டத்தில் தமிழ்ச் சமூகம் தனித்துவம் தமிழரை ஒருங்கிணைத்தல், ஒழுங் கமைத்தல் என்பனவற்றைச் சிந்திக்கத் தொடங்கிற்று.
அப்பொழுது ஆரியம் - சமஸ்கிருதம் - வடஇந்தியா ஆகியனபற்றி நிகழ்ந்த புலமை ஆய்வுகள் அவற்றை உயர்த்திக் காட்டின. இப் பின்புலத்தில் திராவிட மொழிக் குடும்பமும் தமிழ் தனித்திருக்கும் தகைமையும் முன் வைக்கப்பட்டன . இவற்றை வலியுறுத்துதற்காக, தமிழர் சிந்தனையின் சிறப்பை எடுத்துக்காட்டுவதற்காக பல்வேறு முயற்சிகள் ஆனந்த குமாரசாமியிலிருந்து தொடங்கப்

Page 5
பட்டன. சைவத்தமிழ் ஒருபுறம் தமிழின் தனித்துவத்தை எடுத்துக்காட்ட முற்பட்டபோது இந்துக்களல்லாதவர்கள் இந்துமதம் சாராத பண்பாடுகளைத் தனித்துவம் பெற்று இலங்குகின்றன என்று கூறத்தொடங்கினர் பகுத்தறிவுச் சிந்தனையாளர் தமிழ்ப் பண்பாட்டின் ஆணிவேர்களைச் சங்க இலக்கியங்களில் காணத் துடித்தனர். சங்க இலக்கி யத்தின் சமயச் சார்பின்மை, திருக்குறளின் சமயப் பொதுமை, சிலப்பதிகாரத்தின் தமிழகப் பொதுமை வற்புறுத்தப்படத்தொடங்கின. இப்போக்கைத்தொடர்ந்து பண்பாடுகளை ஒப்புநோக்கும் முயற்சி மேற்கொள்ளப் பட்டு ஒருபுறம் தமிழையும் தமிழை உலகின் பிற மொழியினுடனும் தமிழ்ப் பண்பாட்டைப் பிறபண்பாடு களுடனும் ஒப்பு நோக்கித் தமிழ்ப் பொதுமை தனித்துவம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மற்றும் தமிழ் மொழி கலை இலக்கியத்தில் உள்ள உலகப் பொதுமை வாதம் முக்கியம் பெற்றது. இதன் விளைவாக இந்திய நாடு முழுவதும் ஒருபண்பாட்டுக்களமாக அமைய தமிழ்மொழி, இலக்கியம் எல்லாம் எவ்வாறு பங்காற்றுகின்றன என்பதனை ஆராய்ச்சியாளர் முன் வைத்தனர். நவீன வாக்கத்திலும் அடிவேர்களையும் பல்துறைச் செயல்பாடு களையும் பேராசிரியர் திறம்பட ஆராய்கிறார்.
இரண்டாவது கட்டுரை யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் அதன் உருவாக்கம், இயல்பு, அசைவியக்கம் பற்றிய ஒரு புராரம்ப உசாவல்.
இது 1992 ஜுன் இரண்டாம் நாள் மறைந்த பேராசிரியர் சொ. செல்வநாயகம் நினைவாக யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆற்றிய நினைவுரை இக்கட்டுரையில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மலையகம் என்னும் மூவகை இலங்கைத் தமிழ்ச் சமுதாயத்தாரிடை உள்ள வேறுபாடுகள், ஒல்லாந்தர் கால ஆட்சியில் வந்த தேசவழமைச்சட்டம் வகித்த நிலைமை ஆகியவற்றை எடுத்துக் கூறி சகல சமூக உறவுகளையும் ஒரு காலத்தில் உறுதி செய்த சாதியின் பாத்திரம் இப்பொழுது குறுகிக்
iv

காணப்படினும் இன்னும் சாதி குடும்ப அச்சாணியாகவே இருந்து வருகிறது என்று எடுத்துக்காட்டுகிறார். பொருள் முதல் வாத அடிப்படையில் யாழ்ப்பாண சாதி சமூக உருவாக்க நிகழ்ச்சிகள் வியத்தகு முறையில் கோடிட்டுக் காட்டுகிறார். சைவத் தமிழ் கருத்துநிலை தாராண்மை வாத சமூகச் சீர்திருத்தக் கருத்து நிலையும் இணைந்தும் முரணியும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தில் இடம் பெற்றுள்ளன என்பதனைப் பேராசிரியர் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார். சமஸ்கிருத நெறிப்படுகை நவீனமயமாதல், வர்க்கப் பிரிவு மயமாதல் எனும் பல கருத்தோட்டங்கள் யாழ்ப்பாண சமூக மாற்றத்தில் பெரும்பங்கினை ஆராய்ந்துள்ளார். இச்சிறுநூல் பல்வேறு சமூக ஆக்கப் போக்குகளை (Social Formation) விளங்கிக் கொள்வதற்கு வழிகாட்டியாக அமைகிறது.
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பல்துறை வல்லுநர். அவருடைய நூலை வெளியிடுவதில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பெருமைப்படுகிறது.
பதிப்பகத்தார்

Page 6
முகவாசகம்
டாக்டர் எம். கே. முருகானந்தன் அவர்கள் நாடறிந்த எழுத்தாளர். தாய்மைப்பேறு பற்றிய நூலை, சிறந்த மருத்துவருக்குரிய அறிவதிகாரத்துடனும் வன்மை மிக்க எழுத்தாளனுக்குரிய எழுத்து வசீகரத்துடனும் எழுதி வெளியிடுகின்றார். அந்த நூலின் வெளியீட்டின் பொழுது அவ்வெளியீட்டரங்கில் வெளியிடப்படுவதற்கென எனது கட்டுரையொன்றினை அவர் கேட்ட பொழுது, நீண்ட ஆலோசனையின் பின்னர், குறிப்பாக நண்பர்கள் சிலரின் கருத்துரைகளையறிந்து கொண்டதன் பின்னர், "தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும்" என்ற இக் கட்டுரையினை வெளியிடுவதே பொருத்தமாக விருக்கும் எனத் தீர்மானித்தேன்.
இது 1984இல் லண்டன் பி , பி. சியின் தமிழோசை யில் ஒலிபரப்பப் பெற்ற நான்கு உரைகளின் கட்டுரை வடிவமாகும் இதன் தோற்றத்துக்குக் காரணமாக இருந்த திரு . சங்கர் , மற்றும் திரு. து. குலசிங்கம் ஆகியோருக்கு அன்புமிக்க நன்றி.
1992, யூன் 2 ஆம் திகதியன்று காலஞ்சென்ற பேராசிரியர் சோ செல்வநாயகம் நினைவாக யாழ் பல்கலைக் கழகத்தில் ஆற்றப் பெற்ற நினைவுரையின் சிறிது திருத்தப் பெற்ற வடிவமே "யாழ்ப்பாணச் கமூகத்தை விளங்கிக் கொள்ளல்" என்ற கட்டுரை நினைவுரை ஏற்படுத்திய தாக்கங்கள் பல உரையின் இறுதியில் எடுத்துக் கூறியுள்ளதுபோன்று, இது "பேசாப் பொருளாக" இருந்த விடயம் . அது "சற்றே" பேசப்பட்டதும் பல பாதிப்புகள் ஏற்பட்டன. சமூக உறவுகள் மட்டத்திலிருந்து உத்தியோகம் வரை பல பாதிப்புக்கள் ஏற்பட்டன. நினைவுரையில் எடுத்துக் கூறப்பட்டவை பற்றிய ஆற்றாமைகளும் தூற்றல்களும் காணப்பட்டனவேயன்றி,
vi

ய்வுநிலை மறுப்புக்கள் இதுவரை வெளிவரவில்லை . ခိဍ:#☎, நூல்வடிவில் வெளிக்கொணருவதன் மூலம் யாழ்ப்பாணச் சமூகத்தின் அமைப்பு, உருவாக்கம், சமகால அசை வியக்கங்கள் பற்றிய ஒரு வெட்டவெளிச்சமான விவாதம் ஏற்படுமேல், இக்கட்டுரையாக்கத்துக்கான எனது புலமை நிலை நோக்கு நிறைவேறியதாகவே கருதுவேன். இலங்கையின் தமிழினக் குழுமம் பற்றியும், அந்தக் குழுமத்தினுள் வரும் சமூகங்கள் பற்றியும் (யாழ்ப்பாணச் சமூகம், மட்டக்களப்புச் சமூகம், மலையகச் சமூகம் எனப் பெறும்படியாக இவற்றை வகுத்துக் கொள்ளலாம்.) சிறப்பாய்வு செய்யும் சமூக சிந்தனைப் புலமையாளர்கள் நம்மிடையே மிக மிகக் குறைவு. இலங்கைத் தமிழ் மக்களின் "நவீன கால" அபிவிருத்திகள், வளர்ச்சிகள் பற்றிய வரலாற்றாய்வுகள் கூட மிக மிகக் குறைவு கடந்த 20 - 25 வருட காலத்திற் சர்வதேச மட்டத்தில் மேற் கிளம்பியுள்ள செல்வாக்குச் சிறப்புள்ள வரலாற்று ஆய்வு அணுகு முறைகள் நமது மாணவர்களுக்கு இன்னும் சரிவர அறிமுகப்படுத்தப்படாத ஒரு நிலமையே காணப்படு கின்றது. இன்றைய வரலாற்றாய்வுகளில் ஒரு முக்கிய செல் நெறியாகவுள்ள பல்துறைச் சங்கம ஆய்வு முறை நம்மிடையே இன்னும் ஊக்குவிக்கப்படவில்லை . காரணமாக நமது சமூகம் பற்றிய நமது நோக்கு இன்னும் புலமையாளர் மட்டத்திலேயே "விடயிநோக்குடையதாக" (Objective) அமையவில்லை. ی
இலக்கியத்தை அதன் சமூகத்தளத்திலிருந்து நோக்கி, சமூக வரலாற்றுக்கும் இலக்கியத்திற்குமுள்ள ஊடாட்டங் களினை ஆய்வதைப் பிரதான துறையாகக் கொண்ட நான், அந்தப் பல்துறைச் சங்கம ஆய்வுத்தளத்தில் நின்று கொண்டு, யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்வதற் கான ஒரு "பிராரம்ப உசாவலாக" வே இந்தக் கட்டுரை அமைகிறது . சமூகவியலையோ, வரலாற்றையோ தமது பிரதான ஆய்வுமையமாகக் கொள்பவர்களின் ஆய்வு முறைமை "இறுக்கம்" இந்தக் கட்டுரையில் முற்று முழுதாக
vii

Page 7
இல்லையென்பதை நான் ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், இக்கட்டுரையில் நான் மேற் கொண்டுள்ள அணுகு முறையோ, நான் தரும் தரவுகளோ தட்டிக் கழிக்கப்பட முடியாதவை என்பதை வற்புறுத்திக் கூற விரும்புகிறேன். ஆய்வு முறைமை பற்றியும், தரவுகள், எடுகோள்கள் பற்றியும் விவாதிக்கப்படுவது நல்லதென்றே கருதுகின்றேன். மறைவாகப் பழங்கதைகள் பேசுபவர்களும், பேச விரும்புகின்றவர்களும் ஒளிவு மறைவற்ற ஒரு புலமை விவாதத்திற் பங்குபற்றின், பல உண்மைகள் தெளிவாகும். உண்மைகள் எக்காலத்தும் ஒருபுடைச் சார்பானவை யுமன்று ஒருவருக்கோ, ஒருகுழுவுக்கோ உரியனவுமன்று. விவாதத்தின் மூலம் உண்மைகளைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் . அத்தகைய ஒரு விவாதத்திலிறங்குவதற் கான கருத்து நிலைத் துணிபு என்னிடம் உண்டு புலமை நிலைப்பட்ட விவாதங்கள் இல்லாததாலேயே ஆய்வுத் தேக்கம் ஏற்ப்டுகின்றது . யாழ்ப்பாணச் சமூகம் பற்றிய இவ்வாய்விற் சாதிகளின் பெயர்களை வெளிப்படையாகவே எடுத்துக் கூறியுள்ளேன். சாதி முறைமையின் தாக்கங்களைத் தவிர்ப்பதற்கான ஒரே ஒரு வழி சாதிமுறைமை பற்றிய பட்டவர்த்தனமான, ஒழிவுமறைவற்ற, மனக் கூச்சங்கள் எதுவுமற்ற ஒரு "திறந்த" விவாதமே. சாதிகளைப் பற்றி நாம் பேசாது விட்டு விடுவதால் அவை இல்லாது போய் விடுவதில்லை . யாழ்ப்பாணத்தின் சமூக யதார்த்தத்தை அறிந்தவர்கள், சாதியமைப்பின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்வார்கள். சாதிகள் பற்றிய பேச்சுக்கள் எழுத்துக்கள் உண்மையில் சாதிகளின் அமைப்பு (Casteasa System) பற்றிய கருத்தாடலேயாகும் . சாதிகள், சாதி அமைப்பு பற்றித் தயக்கங்களற்ற" திறந்த கருத்தாடல் ஏற்படும்வரை சாதி ஒழிப்பைப்பற்றியே நாம் பேச முடியாது. மேலும், நம்மிடையே வரலாற்று புருடர்கள் பற்றி ஆய்வுகள் இன்னும் வளரவில்லை. இதனால் இன்னும் "திருவவதாரம் செய்தார்" என்ற பாணியிலேயே ஆய்வுகள் அமைகின்றன. ஒருவரின் கருத்து நிலைத்தளங்கள் பற்றி ஆய்வதென்பது, அவராலே ஏற்பட்ட நன்னெறிப்
viii

போக்குகளையும், விளைவுகளையும் மறுதலிப்பதாகாது. ஆங்கில மொழியில் எழுதும் பொழுது கடைப்பிடிக்கத் தவறாத ஆய்வியல் மரபுகளைத் தமிழில் எழுதும் பொழுது ஏன் கடைப்பிடிக்கக் கூடாது என்பது புரியவில்லை.
யாழ்ப்பாணச் சமூகம் பற்றிய ஆய்வுக்கு யாழ்ப் பாணத்திற் செயற்படும் பொருளாதார உற்பத்தி முறைமைகள், அவற்றின் சமூகத்தளங்கள், அவ்வுற்பத்தி முறைமைகளின் இணைவு, இணைவின்மைகள் ஆகியன பற்றிய நுண்ணிய ஆய்வுகள் மிக அவசியம். அப்பொழுது தான் யாழ்ப்பாணத்தின் "பாரம்பரிய நோக்கு முறைமை" பற்றிய சிந்தனைத் தெளிவு ஏற்படும்.
இந்த உரையை நான் ற்றவேண்டுமென்பதிலே ர்வம் காட்டிய புவியியற் * விரிவுரையாளர் கா குகபாலனுக்கும், செல்வநாயகம் நினைவுக்குழு வினருக்கும் என் நன்றி உரித்தாகுக. ܙ
இக்கட்டுரைபற்றிய தங்கள் கருத்துக்களைத் தெரிவித்த திருவாளர்கள் ஏ. ஜே. கனகரத்தினா, க. சண்முகலிங்கம், ம. சண்முகலிங்கம், வி. பி. சிவநாதன் ஆகியோருக்கும் செல்வி அம்பிகா சின்னப்புவுக்கும் நன்றிகள் உரித்து.
என்னுடைய இரண்டு கட்டுரைகளை தொகுத்தி நூலாக வெளியிட முன்வந்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தார்க்கு எனது அன்பு மிக்க நன்றி.
கார்த்திகேசு சிவத்தம்பி
ix

Page 8

பொருளடக்கம்
Lješakuf
* தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
நவீனவாக்கமும் 1 - 32
* யாழ்ப்பாணச் சமூகத்தை
விளங்கிக் கொள்ளல் 33-82

Page 9

தமிழ்ப்பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும் மேற்குலகின் பங்கும் பணியும்
சாதாரண எழுத்து வாசிப்புப் பயிற்சியுடைய தமிழர் எவராயினும் அவரது அன்றாட சமூக ஊடாட்டத்தின் பொழுது நிச்சயமாகக் கேட்கும், பயன்படுத்தும் முக்கிய தொடர்களில் "தமிழ்ப்பண்பாடு" என்பதும் ஒன்று. சினிமா, வானொலி, செய்தித்தாள்கள் ஆகிய பல்வேறு பட்டவெகுசனத்தொடர்புச் சாதனங்களில், தமிழ்மக்களின் ஈடுபாடுகளை, விருப்பு வெறுப்புகளை, சார்பு சார்பின்மை களைச் சுட்டுவதற்கு இத்தொடர் பெரிதும் பயன்படு கிறது . இவ்வாறு பார்க்கும், கேட்குமிடம் எங்கனும் நீக்கமற நிறைந்துள்ள இத்தொடரில் வரும் பண்பாடு என்னும் சொல் ஏறத்தாழ கடந்த 50 ஆண்டுகளாக மாத்திரமே வழக்கிலுள்ளது என்ற உண்மை பலருக்கு ஆச்சரியத்தைத் தரலாம் . 1926 - 31இல் தயாரிக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக லெக்சிக்கனில் அச்சொல் இல்லை. ஆங்கிலத்தில் Culture" எனக் குறிப்பிடப்பெறும் சொல்லை 'கலாசாரம்' என்று கூறும் ஒரு மரபு இருந்தது. டி . கே சிதம்பரநாத முதலியார்தான் Culture எனும் ஆங்கிலச் சொல்லுக்குப் பண்பாடு என்னும் பதமே பொருத்தமானதென மொழிபெயர்ப்பு செய்தார். அது நிச்சயிப்புச் சொல் தான் என வையாபுரிப்பிள்ளை கூறுவார்.
வழக்கில் வந்து ஐம்பது வருடங்கள்தான் ஆகி யுள்ளது என்றால் பண்பாட்டைக் குறிப்பிட முன்னர்

Page 10
2 ( ) தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
நியமமான தமிழ்ச்சொல் இருக்கவில்லையா என்ற வினா எழும்புகின்றது. திருக்குறளில் வரும் 'சால்பு' எனும் சொல் ஓரளவு இக்கருத்தைத் தரக்கூடியது . இன்னுமொரு உண்மையுண்டு . 19ம் நூற்றாண்டின் பிற்பகுதி, 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய மானிடவியல், சமூகவியல் ஆகிய புலமைத் துறைகளின் வளர்ச்சியின் பின்னரே சமூக அசைவாக்கங்களை ஆராய்ந்து அவற்றின் உள்ளீடாக உள்ளவற்றைப் பிண்டப்பிரமாணமாக எடுத்துக் கூறும் மரபு வளர்ந்தது.
ஆனால் இன்று தமிழ்ப்பண்பாடு என்பது நமக்குச் சீவாதாரமான ஒரு தொடராகியுள்ளது. பக்தி இலக்கியம் முதல் பகுத்தறிவு இலக்கியம் வரை, பரதநாட்டியம் முதல் தெருக்கூத்து வரை, கோபுரம் முதல் கொட்டகை வரை, திருத்தக்க தேவர் முதல் வீரமாமுனிவர் வரை, சாத்தனார் முதல் உமறுப்புலவர் வரை பலவற்றையும், பலரையும் த்து ஒருமை காண்பதற்கு இத்தொடர் உதவுகின்றது. தமிழ்ப் பண்பாடு என்னும் இந்தச் சொற்றொடரின் முக்கிய பயன்பாடு யாது?
மதங்களையோ, தனித்தனிக் குழும வேறுபாடு களையோ ஊடறுத்து நிற்கும் தமிழ்மொழி தரும் ஒருமைப் பாட்டினை - பண்பு நிலைப்பாட்டினைக் குறிப்பிடு வதற்கு இது பயன்படுகின்றது. தமிழ் மக்களின் மொழித் தொகைநிலைச் சமூகத் தொழிற்பாட்டிற்கு, சமூக அசை வாக்கத்துக்கு வேண்டிய நடத்தை நியமங்களுக்கான ஓர் உரைக்கல்லாக இக்கோட்பாடு அமைகின்றது . இது உண்மையில் கோட்பாடு, (ideology) அதாவது கருத்து நிலையாகும். ஆனால் பாரம்பரியமான நடைமுறை, கண் ணோட்ட நியமங்களை மாத்திரம் குறிப்பிடாது, உலகப் புதுமைகளைத் தமிழர்கள் ஏற்றுக் கொள்வதற்கான நடை முறையைச் சுட்டுவதாகவும் தமிழ்ப்பண்பாடு அமைகிறது. மரபு சிதையாமல் புதுமையை உள்வாங்கிக் கொள்ளும் முறைமையை இது தமிழர்க்கு உணர்த்துகின்றது.

தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும் 3
இந்தப் பண்பாட்டுப் பிரக்ஞையின் - உணர்வின் - வரலாறு யாது? இன்று நாம் தமிழ்ப் பண்பாடு என்று சொல்லும் இதே அமிசங்களையே முன்னரும் தமிழர்கள் கொண்டிருந்தார்களா? தமிழர் வரலாற்றின் பல்வேறு கட்டங்களிலும் தமிழ்ப்பண்பாடு இருந்த நிலைக்கும் இன்றுள்ள நிலைமைக்குமுள்ள வேறுபாடு யாது? இன்று நாம் தமிழ்ப்பண்பாடு என்று கொள்ளுவனவற்றை எப்பொழுதுமுதல் கொள்கின்றோம்? அவ்வாறு கொள்ளும் முறைமை ஏன்,எப்படி ஏற்பட்டது?
தமிழ்மக்கள் தம் சமூக அசைவாக்கத்தை விளங்கிக் கொள்வதற்கு இந்த வினாக்களுக்கு விடையிறுத்தல் வேண்டும்.
இந்த வினாக்களுக்கு விடைகாண முனையும் பொழுது, தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் - அவர்கள் வெவ்வேறு மதத்தினராகவிருக்கலாம், வெவ் வேறு நாட்டினராகக்கூட இருக்கலாம் . - ஒரே பண் பாட்டினை உடையவர்களாகக் கொள்ளப்படும் நோக்கு கடந்த 50, 60 வருடகால எல்லைக்குள்ளேயே தோன்றியது என்பது தெரியவரும்.
தமிழ்ப்பண்பாட்டை இவ்வாறு விளங்கிக் கொண்டு இனத் தனித்துவத்துக்கான அடிப்படையாகக் கொள்ளும் இப்பண்பு மேற்குலகின் தொடர்பால், ஆட்சித் தொடர் பால் கல்வி முறையால் கருத்துப்பரவலால் ஏற்பட்டது என்ப்து வரலாற்றுண்மையாகும் .
மேற்குலகின் தொடர்பால் ஏற்பட்ட புதிய நிலைமை களுக்கு புதிய சவால்களுக்கு - முகங்கொடுக்கும்பொழுது நடந்த சோதனைத்திகளின் பொழுது, நவீன உலகில் தொடர்ந்தும் தமிழராக, நவீன வளர்ச்சிகளை உள் வாங்கிக்கொண்ட தமிழராக வாழுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட பொழுது எவை எவை எமது அடிப்படைப் பண்புகள், எந்தப் பண்பு இல்லாவிட்டால் நாம் தமிழராக

Page 11
4 () தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
இருக்க முடியாது போய்விடும் என்பதை அறிந்த பொழுதுதான், நாம் எமது பாரம்பரியத்தை மீளக் கண்டு கொண்டோம் . முன்னர் இலைமறைகாயாக இருந்ததை கருத்துத் தெளிவுடன், எமது வாழ்க்கை அடிப்படை யாக்கிக் கொண்டோம். புதிய தேவைகள் பாரம்பரியத்தின் தடங்களைக் காட்டின . புதிய உலகோடு இணைய முற்பட்டபொழுதுதான் பழந்தமிழின் சனநாயகப் பண்பு, சமரசம், உலகப் பொதுமை ஆகியவற்றை அறிந்து கொண்டோம் ,
தமிழ்ப் பண்பாட்டின் அமிசங்கள், தன்மைகள் இவைதான் என்ற இந்தக் கண்டுபிடிப்பு- உண்மையில் மீள் கண்டுபிடிப்பு - எவ்வாறு நடைபெற்றது . மேற்குலகின் தொடர்பும் தாக்கமும் எவ்வெவற்றை மீளக்கண்டுபிடிக்க உதவின. இவ்வாறு கண்டுபிடித்ததால் தமிழும் தமிழ் மக்களும் புதுமையை எவ்வாறு ஏற்றுக் கொண்டனர், என்பனவற்றைப் பற்றி மிகச் சுருக்கமாக நோக்குவது தான் இந்த உரைத்தொடரின் நோக்கமாகும் நவீன தொழில் நுட்ப உலகில் தமிழின் தொடர்ச்சியான இளமை எவ்வாறு நிச்சயப்படுத்தப்பட்டது என்பதை அறிவதற்கு இந்தமுயற்சி அத்தியாவசியமானது.
முதலில் இரண்டு ஆரம்பநிலைத் தெளிவுறுத்தல்கள் தேவைப்படுகின்றன
- தமிழுக்கு மேற்குலகத் தொடர்பு சங்க காலம் முதலே உண்டு (யவனர் தந்த வினைமான் நன்கலம்) ஆனால் இங்கு குறிப்பிடப்படுவது மேற்குலகத் தமிழ்மக்களினது - தமிழ்நாட்டில், இலங்கையில் - சமூக அரசியல் வாழ்வில் நேரடியான தொழிற்பாட்டினைக் கொண்ட காலகட்டமே யாகும். அதாவது 19ம் நூற்றாண்டு முதலேயாகும்.
- அடுத்தது, "பண்பாடு' என்னும் பொழுது எதனைக் குறிப்பிடுகின்றோம் என்பதாகும்.

தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும் - 5
"பண்பாடு என்பது குறிப்பிட்ட ஒரு மக்கட்கூட்டம் தனது சமூக, வரலாற்று வளர்ச்சியினடியாகத் தோற்றுவித்துக் கொண்ட பெளதீகப் பொருட்கள் ஆத்மார்த்தக் கருத்துக்கள், மத நடைமுறைகள், சமூகப் பெறுமானங்கள் ஆகிய யாவற்றினதும் தொகுதியாகும். ஒரு கூட்டத்தினரின் தொழில்நுட்ப வளர்ச்சி உற்பத் முறைமை, உற்பத்தி உறவுகள், கல்வி, விஞ்ஞானம், இலக்கியம், கலைகள், நம்பிக்கைகள் ஆகியனவற்றின் தொகுதியாகும் "
காலம், பொருள் பற்றிய வரையறையைச் செய்து கொண்டதனையடுத்து, இந்த மேற்குலகத் தொடர்பு, - அதாவது மேற்குலகின் நேரடியான தொழிற்பாடு - ஏற்படுவதற்கு முன்னர் எவை, எவை தமிழ்ப்பண்பாடு எனக் கருதப்பட்டனவென்பதை அறிதல் வேண்டும். அப்பொழுதுதான், மேற்குலகில் உந்துதல்களும் சவால் களும் எவ்வெவற்றை நாம் மீளக் கண்டுபிடிக்க உதவின ான்பதும், நாம் இப்பொழுது அழுத்திக் கூறுவன முன்னர் எத்தகைய அழுத்தம் பெற்றன என்பதும் தெரியவரும்.
இதனைத் தெளிவுபடுத்துவதற்குத் தமிழ் மக்களின் வரலாற்றைத் தெளிவுபடுத்தல் வேண்டும் . தென்னிந்தியா வுடன் தொடங்கும் அந்த வரலாற்றின் களம் பின்னர் விரிவடைகிறது.
தமிழ்நாட்டின் பண்பாட்டுவரலாற்றை ஐந்துபெருங் கால கட்டமாக வகுத்தல் வேண்டும்
1) ஆரம்பம் முதல் கி.பி. 250 வரை 2) கி.பி. 250 முதல் கி.பி. 600 வரை 3) கி. பி. 600 முதல் கி.பி. 1300 வரை 4) கி. பி. 1300 முதல் கி.பி. 1800 வரை 5) கி. பி. 1800 முதல் இன்றுவரை

Page 12
6 () தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
இதில் நமக்குரியது நான்காவது பிரிவுதான் , 1800இல் திருப்ப மேற்படுவதற்கான தயார் நிலைகள் கி. பி. 1600 முதல் ஏற்படுகின்றன. s
மூன்றாவதன் தொடக்கம் (1300 வரை) சோழ, பாண்டியப் பேரரசு முறைமையின் சிதைவினைக் குறிப்பதால் மாத்திரமல்லாது, இஸ்லாமிய ஆட்சி நிலைநிறுத்தப்படுவதாலும் முக்கியமாகின்றது . இந்த முக்கியத்துவத்தைச் சிறிது பின்னர் சற்று விரிவாகவே Lunti Guitib.
முதலில் 1300 வரையுள்ள பண்பாட்டு வரலாற்றைப் பார்ப்போம்.
ஆரம்பம் முதல் கி. பி. 200 வரையுள்ள காலப்பிரிவு சங்க காலம் எனப் பரிச்சயப்படுத்தப்பட்டுள்ள காலமாகும். தமிழின் தனித்துவமான சில பாரம்பரியங்கள் வளர்த் தெடுக்கப்பட்டது இக் கால்கட்டத்திலேயாகும் , திணை மரபு உணர்த்தும் வாழ்க்கை முறைமைகள், அந்த வாழ்க்கை முறைகளுக்கேற்ற பண்பாட்டுநிலைமைகள், அந்தப் பண்பாட்டுப் பின்னணிக்கேற்ற இலக்கிய உருவாக்கம் இக்காலத்திலே நிகழ்கின்றது . குடியிருப்புக்கு உள்ளேயும் வெளியேயுமிருந்த வாழ்க்கை வேறுபாடுகள் அகம் - புறம் என இருகிளைப்படுத்தப்பட்டுப் பின்னர் இலக்கிய மரபாகின்றது . இந்த அகத்தின் இலக்கிய மரபு தமிழின் தனிச்சிறப்பு ஆகிறது . ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் கற்பிப்பான் பொருட்டுக் கபிலர் பாடியதாகக் கூறப்படுவது குறிஞ்சிப்பாட்டு - அகத்திணைக்கொத்து, தமிழ் என்பது அகத்திணைதான் என்கிறது . பின்னர் களவியலுரைகாரரும் களவியல் கூறியதை "தமிழ் நுதலிற்று 6 TT fT.
அகமரபு தமிழ்மரபு என்பது மாத்திரமல்ல முக்கியம், தமிழ் தனது இலக்கிய வெளிப்பாட்டுக்குச் சமஸ்கிருத லக்கிய மரபை உதாரணமாகக் கொண்டிருக்கவில்லை

தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும் 7
என்பதும் முக்கியம். தமிழின் இலக்கியத் தனித்துவம் வற்புறுத்தப்படுகிறது. இது பின்னர் மொழிநிலை வேறு பாடு வற்புறுத்தப்படும் பொழுது முக்கியமாகிறது.
250 ' இல், சமண, பெளத்த மேலாண்மை காணப் கிறது. தமிழின் களம் விரிவடைகிறது. ஆனால் இந்த வி சிாக்கம் பெளத்தல் சமணத்தை அப்படியே பிரதிபலித்த ஒன்)ன்று பெளத்தம் சமணத்தை உள் வாங்கித் தனக்கென ஒரு சிறப்புடைய தத்துவத்தைத் தருகிறது . திருக்குறள் வாழ்க்கை வாழப்பட வேண்டு மென்பது, அதில் வாழ்க்கை ஒரு சுமை அல்ல; அது சமூக னேற்றத்துக்கான ஒரு பொறுப்பு திருக்குறளின் இந்த
லைப்பாடு அகில இந்திய அறநூல்களுக்குள்ளே
திருக்குறளுக்கு அதன் வழியாகத் தமிழுக்கு - ஒரு தனித் துவத்தைத் தரும் முறைமையை அல்பேட்சுவைட்ஸர் எடுத்துக் கூறுவர். இது மாத்திரமல்ல இன்னுமொரு மாற்றமும் ஏற்படுகிறது. அகம், புறம் என இரு கிளைப் படுத்தி இலக்கிய மரபு போற்றப்பட்ட தமிழ் நாட்டில் ஒரு வணிகனின் குடும்ப வாழ்க்கைக் கதை ஒரு நகரம் எரிவதற்கு, ஒரு மன்னனும், அவன் மனைவியும் றப்பதற்குக் காரணமாக அமைவதை ஒரு புதிய இலக்கியம் - சமஸ்கிருத காவிய மரபை நம்பியிருக்காத ஒரு தொடர் நிலைச்செய்யுள் காட்டுகின்றது . தமிழிலக்கியம் அறத்தின் குரலாக ஒலிக்கின்றது.
மூன்றாவது கட்டம் (600-1300) மிக முக்கியமானது. வடக்கும் தெற்கும் வைதிக மத வரலாற்றில் இணைவதைக் காட்டும் இக்காலகட்டத்திலே தான், தெற்கில் தோன்றும் பல்லவ, சோழப் பேரரசுகள் இந்தியாவின் அரசியற் பாரம்பரியத்தின் தொடர்ச்சியைத் தமக்கே உரிய வகையிலே பேணுகின்றன. தமிழ் நாட்டின் பண்பாட்டு வரலாற்றில் இது முக்கியமான காலம் இந்தியப் பண் பாட்டின் தமிழ் ஆளுமை தெரியத் தொடங்கியது . இக் காலத்திலேயே என்பர் ரெமிலாதப்பர். பல்லவர் காலத்தில்

Page 13
8 தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
தெரியத் தொடங்கிய அந்த ஆளுமை சோழர் காலத்தில் சிலையெழுத்தாக நிச்சயப்படுத்தப்பட்டது.
அரசனுடைய மேலாண்மையையும், உள்ளூராட்சி யின் முக்கியத்துவத்தையும் அரசனது இல்லமும், (கோ - இல்லம்) ஆண்டவனுடைய இருப்பிடமும் (கோவிலும்) சமூக - மத வாழ்க்கையின் அச்சாணிகளாக அமைந்து பண்பாடு வளர்ந்த / வளர்க்கப் பெற்ற காலம் அது.
பக்தி இலக்கியத்தின் தோற்றத்தில், தொகுப்பில், கோயில்களின் வளர்ச்சியில், பெருக்கத்தில், அரண்மனை இலக்கியங்களின் தன்மையில், புதிய இலக்கண நூல்களின் தோற்றத்தில், இந்தக் காலகட்டத்தின் சிறப்பைக் காண லாம். வேதம் ஆகமத்தோடு இணைகிறது சமஸ்கிருத நூல்களிலேயே தென்னகத்தின் சாயல் வீசும் தமிழ் நாட்டின் பக்தி இயக்கமும், இலக்கியமும் இந்தியப் பண்பாட்டின் ஆணிவேர்களாகின்றன. சைவ சித்தாந்தம், விசிஷ்டாத்துவிதம் என்பன தனித் தரிசனங்களாக எழுவதற்கான கால்கோள் இடம்பெறுகிறது.
தமிழ்ப்பண்பாடு அனைத்திந்திய பண்பாட்டை தன்னுள்ளடக்கியதாக, ஆனால் தனக்கேயுரிய சில பண்புகளை உடையதாக அமைகின்றது.
1300க்குப் பின் ஏற்படும் மாற்றம் தமிழ்ப் பண்பாட்டின் பரிமாணத்தில் ஒரு புதிய விஸ்தரிப்பை
ஏற்படுத்துகின்றது.
இஸ்லாம் வட இந்தியாவில் பரவிய முறைமைக்கும் தென்னிந்தியாவில் பரவிய முறைமைக்கும் வேறுபாடு உண்டு இதனைப் பண்பாட்டு வரலாற்றிற் காணலாம் இஸ்லாத்தின் வருகை தமிழில் ஏற்படுத்திய விரிவையும், அதனாலும் அதற்கு அடுத்து வரும் இன்னொரு முக்கிய விஸ்தரிப்பாலும் தமிழ்ப்பண்பாட்டின் வரைவிலக்கணம்
விரிவடைகிறது.

தமிழ்நாட்டின் வரலாறு பற்றிய நூல்களில், இரண்டாம் பாண்டியப் பேரரசின் பின் முஸ்லிம் ஆட்சி நிறுவப்பட்ட வரலாறு சற்று மிகைப்படுத்தப்பட்டே கூறப்படுதல் மரபு கில்ஜி மரபின் ஆட்சித் திணிப்போ ஆசன்கான் 1310இல் நிறுவிய சுல்தானாட்சியோ பொது வான தமிழ் வாழ்க்கை மரபை மாற்றுவதற்கான வலிமை யுடையனவாக அமையவில்லை . அந்த ஆட்சி வட்டம் குறுகியது, அதற்குள் அது பெரும்பால் நின்றுவிட்டது . ஆனால் தமிழ்ப்பண்பாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் இஸ்லாமியப் பரம்பல், தமிழ்நாட்டின் கிழக்குக் கரையோரப் பகுதியில் ஏற்பட்டதாகும் , தமிழ்நாட்டின் கிழக்குக் கரையோரத்தே முஸ்லீம் வணிகர்கள் குடி யேறினர். முத்துக்குளிப்பு முதல் முக்கிய ஊனுார்த் தானிய வணிகம் வரை பல துறைகளில் ஈடுபட்டனர். அவர்கள் தமிழையே பேசினர். தமிழ் - முஸ்லிங்கள் என்றே
குறிப்பிடவும்பட்டனர்.
தங்கள் மதப் பண்பாட்டுத் தேவைகளுக்கு அவர்கள் தமிழையே பயன்படுத்தியதன் காரணமாக, தமிழ் தன் வரலாற்றில் முதல் தடவையாக இந்திய மரபுக்குப் புறத்தே இந்தியப் பண்பாட்டு வட்டத்துக்கு அப்பாலே தோன்றிய ஒரு மதத்தின மொழியாகிற்று. இது ஒரு மிக முக்கியமான மாற்றம், அறபு அந்த மதத்தின் வேதமொழி. அந்த மதத்துக்கு மறுபிறப்பில் நம்பிக்கையில்லை. தமிழை இதுவரை பயன்படுத்திய மதங்கள் யாவுமே மறுபிறப்பில் நம்பிக்கை வைத்துள்ள மதங்களே. இந்த மதத்தின் சமூக அமைப்பு இந்தியப் பாரம்பரியச் சமூக அமைப்பு முறையின் அச்சாணியான சாதியமைப்பை ஏற்காதது, இது ஏக இறைவனை மாத்திரமே பேசுவது, இறைதூதர் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.

Page 14
10 ( ) தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
தமிழ்மொழி அதுகாலவரை எடுத்துக் கூறியிராத சில கருத்துக்களை, கோட்பாடுகளை இப்பொழுது எடுத்துக் கூறவேண்டியிருந்தது . இம்மதத்தின் அடிப்படைக்கோட் பாடுகள் பேசப்பட்ட பொழுது அறபுப் பதங்களே பயன்படுத்தப்பட்டன. ஆனால் இறை வணக்கத்துக்குரிய வெளிப்பாடுகள் - ஆத்ம வேட்கைகள் வேண்டுதல்கள் தமிழிலேயே சொல்லப்பட வேண்டியிருந்தன.
இந்த இஸ்லாமியக் குழுமத்துக்கு பின்னால் கிறிஸ்தவம் பெற்றது போன்ற அரச ஆதரவு இருக்க வில்லை. தமிழ்நாட்டில் பின்னர் வந்த நவாப் ஆட்சியில் உருதுபேசுவோரின் தொகை கூடிற்று. கிழக்குக் கரையோர முஸ்லீம்களின் நிலை வேறுபட்டது.
தமிழைத்தாய்மொழியாகக் கொண்டாலும் இவர்கள் தமது மதத் தனித்துவத்தைப் பேணுவதிலும் அதில் சிதைவு ஏற்படாமல் பார்ப்பதிலும் பெருஞ் சிரத்ன்த கொண்டிருந்தனர். இதனால் அவர்கள் தங்கள் மார்க்க தேவைகள் சிலவற்றைப் பூர்த்தி செய்வதற்குத் தமிழை அறபு லிபியில் எழுதிப் படித்தும் பயின்றும் வந்தனர். இதுதான் அறபுத் தமிழின் தோற்றமாகும்.
தமிழ்ப்பண்பாடு என்பது இக்கட்டத்தில் இந்திய மதப் பாரம்பரியத்தைக் கடந்த ஒன்றாகச் செல்வதை நாம் அவதானித்துக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் இஸ்லாத்தின் தொழிற்பாடு சில முக்கியமான அமிசங்களைக் கொண்டதாக விளங்கு கின்றது. இஸ்லாத்தின் மார்க்கநிலை மக்களுக்கேற்ற ஒழுக்க முறைமைக்காகப் பேணப்பட்ட அதேவேளையில், சில துறைகளில் ஒரு பாண்பாட்டுப் பகிர்வும் நிகழ் வதைக் காணலாம் தர்கா வணக்கமுறைமையில் இது காணப் படுகின்றது. இன்னொரு முக்கியமான அமிசம் இலக்கிய மரபுப் பகிர்வு ஆகும். காவிய மரபு, நாட்டார் பாடல் மரபு, ஆகியனவற்றைப் துயன்படுத்திக் கொண்ட

தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும் 1.
இஸ்லாமியப் புலவர்கள், படைப்போர், மசாலா நொண்டி
மூலகம் போன்ற புதிய வகைகளை அறிமுகஞ் செய்தனர். இந்த இலக்கியப் பகிர்வில் மிக முக்கியமானது மறை ஞானக் கவிதையாகும். தாயுமானவர் பாடலையும், குணங்குடிமஸ்தான் பாடலையும் ஒருங்கு நோக்கும் பொழுது ஒருமைப்பாடுடைய இலக்கிய மரபொன்றினைக் காணக்கூடியதாகவுள்ளது. தமிழிலுள்ள சூஃபிப் பாடல் கள் மிக முக்கியமானவையாகும்.
இஸ்லாத்தின் வருகை தமிழ்ப்பண்பாட்டின் விஸ்தீரணத்தை அகட்டிற்று.
தமிழின் பண்பாட்டு வரலாற்றில் அடுத்த நிகழ்வாக அமைவது, தெலுங்கின் மேலாண்மையாகும். ஆனால் அது இந்துப் பாரம்பரிய வட்டத்தினுள் நின்று செய்யப் பட்டதாகும். உண்மையில் தெலுங்கால் ஏற்பட்ட மாற்றம் அளவு, அல்லது அதிலும் பார்க்க முக்கியமானது இந்தத் தமிழ்த் தொடர்பு தெலுங்கில் ஏற்படுத்திய மாற்றங்களே. துரதிர்ஷ்டவசமாக அது பற்றிய திட்டவட்டமான ஆய்வுகள் இன்னும் வெளிவரவில்லை. 1370 முதல் தொடங்கும் தெலுங்குத் தொடர்பு தமிழ்நாட்டில் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்திற்று.
தெலுங்கு மொழியினைப் பிரதானப்படுத்திய ஓர் ஆட்சி முறைமை தமிழ்நாட்டில் தனது ஆட்சியை நியாயப் படுத்துவதற்கு இந்துமத ஒருமைப்பாட்டை வற்புறுத்திற்று ஆனால் அதற்குள்ளிருந்தே ஒரு தமிழுணர்வும் பீறிட்டுக் கிளம்பிற்று . அதனை முருக வணக்கத்தின் எழுச்சியிற் கண்டுகொள்ளலாம் .
தென்னகம் முழுவதற்கும் பொதுவான கலை வடிவங்கள் கர்நாடக இசைமரபு, சதிராட்ட (பரத நாட்டிய) மரபு ஆகியனவும் இக்காலத்தில் உருவாக்கம் பெறுவது ஒரு முக்கிய பண்பாட்டுப் பரிமாணம் ,
சமஸ்கிருத நெறிப்படுகை இக்காலத்தின் பண் பாகின்றது.

Page 15
12 () தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
இவையாவற்றிற்கும் மேலாக உண்மையில் அடித்தளமாக அமைவது தமிழ்நாட்டினுள் தெலுங்கர்கள் வந்து குடியேறியமையாகும்.
தமிழின் பண்பாட்டு வரலாற்றில் அடுத்த திருப்பு முனையாக அமைவது மேற்குலகின் தொடர்பாகும்.
இது முந்திய பண்பாட்டு மாற்றங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவிருந்தது. இந்த மாற்றம் மேற்கு நாட்டவர்களால் நேரடியாகத் தமிழ் மக்களிடையேயிருந்து செய்யப்பட்ட ஒரு மாற்றமாகும். இந்தமாற்றம் மொத்தமான மாற்ற முயற்சியாகும் . ஆட்சி முதல் மதம் வரை, சமூக ஒழுங்கு முதல் நிர்வாக ஒழுங்கு வரை செய்யப்பட்ட மாற்றமாகும். இந்த மாற்றங்களுக்குப் பின்னால் அரசபலம் இருந்தது. இந்த மொத்த மாற்ற முயற்சியைத் தங்கள் தேவைகளுக்கும் கண்ணோட்டத்துக்கும் ஏற்பவே மேனாட்டார் செய்தனர்.
இந்த மாற்றம் முதலில் மதத்துறையிலே தொழிற் பட்டது போர்த்துக்கேய வருகைக்கும் கத்தோலிக்க வருகைக்கும் தொடர்புண்டு போர்த்துக்கேயருக்கும் ஒல்லாந்தருக்கும் தமிழ்நாட்டில் நேரடிஅரசியல் அதிகாரம் இல்லையெனினும் ஆரம்பத்திலும் அரசபலம் பற்றிய பிரக்ஞையில்லாதிருக்கவில்லை . முதலில் இவை பறங்கி மார்க்கமாகவே வந்தன. பறங்கி மார்க்கம் சத்திய வேதமாக வளர்ந்தவளர்ச்சியிலே கிறித்தவம் தமிழ்ப் பண்பாட்டுடன் இணைந்த வரலாற்றைக் கண்டு கொள்ளலாம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், மேற்குலகத் தொடர்பு எனும் பொழுது பல மேனாட்டினர் சம்பந்தப் பட்டமை தெரிய வரும் - (தென்மார்க்கு நாட்டவர்கள், பிரஞ்சுக்காரர், ஒல்லாந்தர், போர்த்துக்கேயர், ஆங்கிலேயர்) இவர்களுள் ஆங்கிலேயர்களே மிக
முக்கியமானவர்கள்.

தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும் 13
ஆங்கில ஆட்சியும் புரட்டஸ்தாந்தக் கிறித்தவமும் தமிழ்நாடு முன்னர் எக்காலத்தும் கண்டிராத மாற்றங்களை ஏற்படுத்திற்று.
1800 அளவில் பிரித்தானிய ஆட்சி ஏற்படுத்தப் பட்டதும், பிரித்தானியா வழியாக வந்த மேற்கத்திய சிந்தனையே மாற்றத்தின் மூலமாகிற்று.
தமிழ்நாடு மேற்குலகுக்கு முற்றாகத் திறந்து விடப்பட்டது . மூன்று முக்கிய துறைகளில் இத்திறந்த நிலை முக்கியமாகத் தெரிந்தது.
1) மதம்
2) சமூக-அரசியல் களம்
3) பொருளாதாரம்
புதிய அரசியல் முறைமையோடு இணைந்து நின்ற இத்தொடர்பு காரணமாக தமிழ்நாட்டின் பாரம்பரியச் சமூக அமைப்பு பெரியதொரு சவாலை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
பிரித்தானிய ஆட்சிகாரணமாகத் தோன்றியுள்ள பொருளாதார, தொழில்நுட்ப, கருத்து நிலைச் சவால்களுக்கு முகங்கொடுக்கத்தக்க வலு பாரம்பரியச் சமூக்த்துக்கு இல்லையென்பது படிப்படியாகப் புலப்பட லாயிற்று.
இது தமிழ்நாட்டுக்கு மாத்திரம் உரியதொன்று அன்று பிரித்தானிய ஆட்சியின் இந்தச் சவாலை இந்தியாவின் சகல இனங்களுமே எதிர்நோக்கின. ஆனால் தமிழ்நாட்டின் சமூக அமைப்பு இந்தச் சவாலினை எதிர்நோக்கும் முறைமையில் தனக்கேயுரிய சில தன்மை களைக் காட்டத் தொடங்கிற்று.
புதிய அமைப்புக்குள் மக்கள் வழிநடத்தப்பட்ட இந்தச் சவால் நன்கு புலனாயிற்று.

Page 16
14 () தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
இந்தச் சவால் இரு வழிகளில் தெரியவந்தது. முதலாவதாக கிறித்தவ மிஷனரிகளின் தேவ ஊழியப் பணியின் பொழுது தெரியவந்தது. இரண்டாவதாக புதிய பிரித்தானிய ஆட்சியின் கருத்துநிலை அடிப்படைகளின் மூலம் தெரியவந்தது.
முதலில் கிறிஸ்தவ மிஷனரிமார் வழியாக இந்தச் சவால் புலப்பட்ட முறையினை நோக்குவோம்.
கிறித்தவத்தை அவர்கள் பரப்பும் பொழுது, கிறித்தவத்தை அவர்கள் விளங்கிக் கொண்ட முறையிலும் விளக்கிய முறையிலும், கிறித்தவ நம்பிக்கைகள், நவீன லெளகீக முன்னேற்றத்துக்கு வேண்டிய முன்னேற்ற வழி முறைகளுக்கு முரணானவை அல்ல என்பன நிலை நிறுத்தப்பட்டது. நாட்டின் முன்னேற்றத்துக்கு வேண்டிய கல்வியைச் சகலரும் பெறும் முறைமை, கல்வி என்பது சமூக பொருளியல் வளங்களைப் பெருக்குவதற்கான ஒரு வழி வகை என்ற கோட்பாடு ஆகியன கிறித்தவத்தினுள் இணைந்து கிடந்தன . அன்றைய இந்தச் சமூக அமைப்பு இந்த மாற்றங்களை விரும்பவில்லை.
மனிதன் தனது அறிவினால் தன்னை முன்னேற்றிக் கொள்ள முயல வேண்டும் என்று புரட்டஸ்தாந்தவாதம் கூறிற்று பாரம்பரிய சாதியமைப்பு இதனை அங்கீகரிக்க வில்லை.
இதனால், படித்தவர்களிடையே சமூகப் பெறு மானங்கள் சம்பந்தமாக ஒரு பெரு மனக்குழப்பம் ஏற்பட்டது.
புதிய ஆட்சி நிறுவிய கல்விமுறை இந்தக் குழப்பத்தை மேலும் சிக்கற்படுத்திற்று அன்றைய நிலையில் இந்தப் புதிய கல்விமுறை தான், புதிய அமைப்பில் முன்னேற்றத் துக்கான வாயிலாகவிருந்தது. அந்தக் கல்வியை அவர்கள் பாரம்பரிய அமைப்பிலிருந்தது போல அல்லாம்ல் யார் யார் பெறக்கூடியவர்களாக இருந்தார்களோ அவர்கள்

தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும் 15 הח
யாவருக்கும் கொடுக்கத் தயாராகவிருந்தார்கள். பிறப்பு படிப்புக்கான தகைமை அல்ல எனப்பட்டது. இது நமது சமூகத்துக்குப் புதியது.
இந்தக் கல்வி முறைமை மிஷனரிமார்களின் கையிலிருந்தது.
இன்னுமொரு முக்கியமான உண்மையென்ன வெனில், இந்தப் புதிய கல்விமுறை மூலம், தமது ஆட்சிக்கு வேண்டிய ஆதரவாளர்களை அரசாங்கம் திரட்டிக்கொள்ள
ஆதரவாளர்களையும், விசுவாசமுள்ள ஊழியர் களையும், கல்வி வழியாக அரசாங்கம் தோற்றுவிக்க முனைந்ததன் மூலம் இச் சமூகம், அதுவரை காணாத ஒரு ன அசைவாக்கத்தைப் பெற்றது . உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என்பது இப் புதிய நிலைமையிலும் மாறவில்லை எனினும், அந்த உயர்ந்தோரை உயர்ந்த சாதியினர் என்று சொல்லப்படுபவர்களில் இருந்துதான் தெரிந்தெடுக்க வேண்டுமென்ற பாரம்பரிய நியமத்தைப் புதியவர்கள் ஏற்கவில்லை. இது பலருக்கு உந்துதலாகவும், சிலருக்குச் சவாலாகவும் அமைந்தது.
இப்புதிய கல்விமுறை சற்று முன்னர் கூறிய லெளகீக முன்னேற்றக் கோட்பாட்டை முன்வைத்த அதே நேரத்தில், பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றிய புதிய அறிவலையையும் தன்னையறியாமலே அறிமுகஞ் செய்து வைத்தது.
முதலாவது கோட்பாடு மதத்துக்கும் லெளகீக முன்னேற்றத்துக்கும், முரண்பாடு இல்லையென்று கூற, இந்தப் புதிய அறிவலையோ கட்டற்ற சிந்தனை (Free thinking)க்கும் தெய்வ மறுப்பு வாதத்துக்கும் முக்கியமாகப் பகுத்தறிவு வாதத்துக்கும் இடமளித்தது.
எனவே பாரம்பரியச் சமூகத்தின் வழியாக வந்து புதிய கல்வியைப் பெற்ற பொழுது, தம்மையும் தமது

Page 17
18 ( ) தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
பாரம்பரியத்தையும், எதிர் நோக்கிய சவாலை மூன்று வழிகளில் தீர்க்க முனைந்தனர். சிலர் மதம் மாறினர். சிலர் இந்து மதத்தினைச் சீர்திருத்தி அதனை நவீன உலகின் தேவைகளோடு இணைக்கப் " பார்த்தனர். அதாவது மேற்குலகம்,தந்த புது அனுபவத்தின் பின்னணியில் இந்து மதத்தை நோக்கத் தொடங்கினர். வேறு சிலர் பகுத்தறிவுப் Lyrragalpu மேற்கொண்டு மதப் பாரம்பரியமே தமிழினத்தின் கீழ் நிலைக்குக் காரணம் என்றனர். இந்தக் குரல் சமூக சமத்துவத்தைத் தளமாகக் கொண்டிருந்தது.
கிறிஸ்தவம் இந்தப் புதிய சமூக சவாலை விடுத்துக் கொண்டிருந்த அதேவேளையில் அது தன்னை ஒரு அந்நிய மதமாக வைத்துக் கொள்ள விரும்பாமல், 'தமிழுடன் இணைத்துக் கொள்ள விரும்பிற்று முஸ்லிம்கள் செய்தது போன்று அறபுத் தமிழ் என்ற தற்காப்பு முறை எதையும் வைத்துக் கொள்ளாமல் நேரடியாகப் பயன்படுத்தும் முறையில் இறங்கினர்.
மத கல்வித்துறைகளில் ஏற்படுத்தப்பட்டமாற்றங்கள் புதிய சவால்களைத் தோற்றுவித்த அதே வேளையில், இந்தியாவில் பிரித்தானிய ஆட்சி தனது நிர்வாகத் தேவைக்காகச் செய்த மாநில வகுப்பு, தமிழ் மக்கள் அதுவரை எதிர்நோக்காத ஒரு பெரும் பிரச்சினையை - இனத் தனித்துவம் பற்றிய ஒரு நெருக்கடி நிலையைத் தோற்றுவித்தது.

மதமாற்றம், மதச் சீர்திருத்தம், புதிய கல்வி, புதிய அதிகாரம், புதிய அதிகாரிகள் எனப் பலவழிகளில் நிலைமை குழம்பியே கிடந்தது . இந்தப் புதிய சவால் களுக்குத் தமிழ்ச் சமூகம் எவ்வாறு முகம் கொடுத்தது என்பதை அறிவதற்கு முன், புதிதாகத் தோன்றிய பிரச்சினைகளை மிகத் தெளிவாக அறிந்து கொள்வது முக்கியமாகும்.
முதலாவது பிரச்சினை இனத் தனித்துவ உணர்வு பற்றியதாகும்.
பிரித்தானியர் தமது ஆட்சிச் செளகரியத்துக்காகச் சென்னை மாநிலம் - Madras Presidency - எனத் தோற்றுவித்தது முற்றிலும் புதிய அலகாகவே இருந்தது. கன்னடப் பகுதிகளிற் சில (தென் கன்னடப் பகுதி) ஆந்திரா, தமிழ்நாடு, கேரளம், குடகு ஆகிய பகுதிகள் ஒரு நிர்வாகப் பகுதியாக்கப்பட்டன. நிர்வாகமோ முன்னர் இருந்தது போன்று பன்முகப்பட்டுக் கிடந்ததல்ல. இந்த ஆட்சி நன்கு ஒருமுகப்படுத்தப்பட்ட ஆட்சியாகும் . இந்த நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் - 1800 க்கு முன்னர் - தமிழ்நாடு சிறுச்சிறு ஊர்களாகத் துண்டுபட்டுக் கிடந்தது. ஒவ்வொரு தலைவனும் தன்னை ராஜாதிராஜனாகக் கூறிக்கொண் டிருந்தான். இப்பொழுது தப்பமுடியாத ஒருமுகப்பாடு ஏற்பட்டது. இதற்குள் தமிழ்மக்களின் நிலை என்ன? ழ்மக்களைப் போலவே தெலுங்கர்களும், மலையாளி களும், தங்கள் தங்கள் தனித்துவத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர்.
இதுவே முற்றிலும் புதிய ஒரு நிலைமை இது போதாதென்று, இந்தப் பல்கலவைச் சென்னை மாநிலம் இந்திய அரசின் ஒரு மாநிலமாக - பல்வேறு மாநிலங்களுள் ஒன்றாகவே கருதப்பட்டது. உண்மையில் பிரித்தானிய

Page 18
18 ( ) தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
ஆட்சியின் ஆரம்பக் கூற்றில், சென்னை பெருங்கடலுக்குப்
பக்கத்திலுள்ள உப்பங்களி போன்றுதானிருந்தது . பிரித்தானிய ஆட்சியின் உந்துதலுடன் நடைபெற்ற ஆரம்பகால ஆராய்ச்சிகள் வட இந்தியாவின் புகழையும், சமஸ்கிருதத்தின் இந்தோ - ஆரியப் பிதுரார்ஜிதத்தையும், இந்தோ - ஆரியத்துக்கும், இந்தோ - ஐரோப்பியத்துக்கு முள்ள இரத்த உறவையும் பற்றிப் பேசிப் பேசிக் குளிர் காய்ந்தனவே தவிர, தென்னிந்தியாவைப் பற்றியோ, அதன் மக்களைப் பற்றியோ, அவர்களதுகடந்தகால நாகரிகத்தைப் பற்றியோ அதிகம் சிரத்தை காட்டவில்லை . புதிதாக மீள் கண்டுபிடிப்புச் செய்யப்பெற்ற 'ஆரிய மேன்மை பற்றியே பேச்சு மேலோங்கி நின்றது . இந்த நிலைமை போதாது என்று, தென்னாட்டிலேயே வாழ்ந்து வசித்துவந்தவர்களிற சிலரும் தாமும் ஆரிய பரம்பரையினரே என்றனர்.
இவ்வாறாக, தமிழ்ச் சமூகம் தென்னிந்திய மட்டத்திலும், அனைத்திந்திய மட்டத்திலும், ஒரு தனித்துவ அங்கீகாரச் சிக்கலை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இதுதான் முதல் பிரச்சினை.
இரண்டாவது பிரச்சினை, தமிழக அமைப்பினுள் தமிழர் என்னும் ஒருமைப்பாட்டை எந்த மட்டத்தில், எந்த அடிப்படையிற் காண்பது என்பதாகும் . மதங்களின் அடிப்படையிற் பார்ப்பதா என்ற பெரும் பிரச்சினை ஏற்பட்டது. இலங்கையிலும் இப் பிரச்சினை முக்கியமான ஒன்றாகிற்று.
மூன்றாவது பிரச்சினை, மிக மிக முக்கியமானது புதிய ஆட்சிமுறையும், அந்த ஆட்சிமுறையின், அடிப்படை எடுகோளாக இருக்கும் அரசியல், சமூக சித்தாந்தங்களும், ஏற்படுத்திய தொழில் வாய்ப்புக்களும், அந்த வாய்ப்புக் கன்ள மறுதலிக்கும் பாரம்பரியத் தடைகளும், தமிழ்ச் சமூகத்தின் ஒழுங்கமைவு உண்மையிலேயே நியாயமானதா, நியாயமற்றதா என்ற சிந்தனையைத் தோற்றுவித்தன. இதனால், அதுவரை கேள்வி, மறுப்பு இன்றிப்

தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும் 19
பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் இப்பொழுது எதிர்க்கப் பட்டன; மறுதலிக்கப்பட்டன. சாதி முறைமைக்குப் பழக்கப்பட்டிருந்த நமது சமூகம் இந்தப் புதிய தேடுதலைச் சாதிகளின் உயர்வு தாழ்வு பற்றிய ஆராய்ச்சியில் இறங்கத் தொடங்கிற்று . இன்னொரு மட்டத்தில், நாம் முதற் சொன்ன அறிவுவாதிகள் அந்தச் சாதிகளையே மறுதலித்தனர்.
தமிழ்ப்பண்பாட்டின் இன்றைய சமூகப் பரிமா ணங்கள் இந்த மூன்றாவது பிரச்சினைக்குக் காணப்பட்ட தீர்வின் / தீர்வுகளின் வழியாக வந்தவையே.
இவை தமிழ்நாட்டிற்குள் நடைபெற்றவை. அதாவது பாரம்பரியமாகத் தமிழர்கள் வாழ்ந்த இடத்தில் மேறகுலகுத் தொடர்பு ஏற்பட்டதால் ஏற்பட்டவை. தமிழ் பட்டைப் போல் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிக:லும் சில இனத் தனித்துவப் பிரச்சினைகள் தோன்றின.
இந்தப் பிரச்சினைகளைவிட இன்னுமொரு புதிய பிரச்சினையும் தோன்றிற்று.
பிரித்தானிய ஆட்சி தனது பேராட்சியின் கீழ் வந்த மற்ற நாடுகளில் கூலித்தொழிலாளர் தேவைப்பட்ட பொழுது, தமிழர்களையும் அவ்வந்நாடுகளுக்கு அனுப் பிற்று . பஞ்சாப் போன்ற இடங்களிலிருந்தும் மக்கள் அனுப்பப்பட்டனர். ஏற்கனவே தமிழர்கள், பழங்குடிகளாக வாழ்ந்து வந்த இலங்கையின் மத்திய பகுதிக்குத் தோட்டத் தொழிலாளராக அனுப்பப்பட்டனர். மலாயா, பர்மா, மொரிசியஸ், தென்னாபிரிக்கா, பிT, பிரிட்டிஸ் கயானா போன்ற நாடுகளுக்குத் தமிழ்மக்கள் அனுப்பப்பட்டனர். பிரித்தானிய ஆட்சியின் பொதுமையைப் பயன்படுத்திக் கொண்டு தென்கிழக்காசிய நாடுகளுக்குத் தமிழ்நாட்டு வணிகர்கள் சென்றனர்.
சென்றமைந்த நாடுகளில் இம்மக்கள் தமது தனித்துவத்தை எவ்வாறு பேணுவது என்ற ஒரு பெரும்

Page 19
20 () தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
பிரச்சினையுமேற்பட்டது . இது பத்தொன்பதாம் நூற்றாண்டிலோ, அல்லது இருபதாம் நூற்றாண்டின் முன்னரைக்காலத்திலோ கூட அதிகம் உணரப்படவில்லை. இப்பொழுதான் - கடந்த இருபத்தாண்டுக் காலமாக இது பெரிதும் உணரப்படுகிறது.
மேற்குலகின் நேரடித் தொழிற்பாட்டால் தமிழ்ச் சமூகத்தை முப்பெரும் பிரச்சினைகள் எதிர்நோக்கின.
- அனைத்திந்திய மட்டத்தில் தனித்துவம்
தமிழர் சகலரையும் ஒருங்கிணைக்கும் ஒரு "கூறு"
பாரம்பரிய தமிழ்ச் சமூக ஒழுங்கமைப்புப் பற்றிய விமர்சனமும் மீளமைப்பும்.
இந்த மூன்று பிரச்சினைகளுக்கும் நமது சமூகம் கண்ட விடையினுள் இன்று தமிழ்ப் பண்பாடு எனக் கொள்ளப்படுவன பொதிந்து கிடக்கின்றன.
இனி ஒவ்வொன்றையும் தனித்தனியே பார்ப்போம். அனைத்திந்திய அமைப்பினுள் தெற்கின் தனித் துவமும், தெற்கினுள் தமிழின் தனித்துவமும், அன்றைய முக்கிய புலமைவாதமான ஆரியக் கோட்பாட்டின் விஸ்தரிப்பால் பேணப்பட்டன.
வடஇந்தியா, சமஸ்கிருதம் ஆகியன பற்றிய புலமை ஆய்வுகள் அதிகரிக்க அதிகரிக்க, இந்தோ - ஆரியக் குழுவினுள் வராத இந்திய மொழிகள், மொழிக் கூட்டங்கள் பற்றிய புலமைச் சிரத்தை அதிகரிக்கத் தொடங்கியது . தென்னகத்து மொழிகள் இந்தோ ஐரோப்பியத் தொடர் பற்றவை என்பதும், தெரியப்படத் தொடங்க அவற்றினை ஒன்றாகத் தொகுத்து நோக்குவதற்கான முயற்சி கிளம் பிற்று. தென்னகத்திலிருந்த ஒரு பாதிரியார் - கால்டுவெல்அப்பணியைச் செய்தார். தென்னகத்து மொழிகளைத் தனியேயும், தொகுத்தும் வடமொழியோடு ஒப்பு நோக்கியும் ஆராய்ந்த கால்டுவெல் இவற்றின் ஒருமைப்பாட்டைக்

தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும் 21
கண்டு இவற்றை ஒரு மொழிக் குடும்பம் என எடுத்துக் கூறினார். இந்த மொழிக்குடும்பத்துக்கு என்ன பெயரடை கொடுப்பது என்று சிந்தித்த அவர் சொன்னார். "The Word1 have chosen is Dravidiam from Dravida, the adjectival Dravida" நான் தெரிந்தெடுத்துள்ள சொல் Dravidam என்பதாகும். இது "திராவிட" என்னும் சொல்வழி வருவது. அச் சொல்லின் அடைமொழி வடிவம் என்றார்.
தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு ராஜ்மசானி ஆகிய மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தனவாக நிறுவப்பட்டன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குடகு, துளுவை ஒரு மொழிக் குடும்பம் என நிறுவியதன் மூலம், அனைத்திந்திய மட்டத்தில் தென்னகத்தின் தனித்துவம் நிறுவப்பட்ட அதே வேளையில், புதிய நிர்வாக மாநிலமான சென்னை மாநிலத்துக்கு ஓர் அடிப்படையான சித்தாந்த அத்தி வாரமும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அடிப்படையிலே தான் திராவிட நாட்டு இயக்கம் ஓர் அரசியல் இயக்கமாக மாறிப் பின்னர் மொழிவாரி மாகாண அமைப்புடன் தமிழ்நாட்டோடு அமைந்து கொண்டது.
அடுத்து, சென்னை மாநிலத்துள் தமிழின் தனித்துவத்தை நிறுவுவதற்கு, "தமிழ் - திராவிட மொழிக் குடும்பங்களுள் மிகப் பழமையானது - சமஸ்கிருதத் திலிருந்து தனித்து நிற்கக்கூடியது" என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டது.
ஆரியத்தின் மேலாண்மை அதிகம் வற்புறுத்தப் பட்டதால், தவிர்க்க முடியாத வகையில் தோன்றிய திராவிடக் கோட்பாடு தமிழ் சமூக அமைப்புப் பற்றிய விமரிசனத்துக்கும் ஆய்வுக்கும் கருவியாகிற்று தமிழ் நாட்டில் பிராமணர் - பிராமணரல்லாதார் என்ற சமூகப் பிரிவும் பிரக்ஞையும் வலுவான இடம் பெறுவதற்கு இந்தக் கோட்பாடு அடிப்படையாகிற்று.

Page 20
22 தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் க்ண்டுபிடிப்பும்
திராவிடம் ஆரியத்திலிருந்து தனியானது, புறம் பானது என்ற கொள்கை நிலைப்பட்டதும், திராவிடத்தின் தனித்துவத்தைக் காண்பதற்கு, ஆரியச் செல்வாக்குக்கு முற்பட்ட திராவிடத்தைப் பற்றி அறிய முற்பட்டனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப் பெற்ற சிந்துவெளிப் பள்ளத்தாக்கு நாகரீகம், திராவிட உணர்வைப் பெரிதும் வளர்த்தது. ஆரியச் செல்வாக்கற்ற திராவிடச் சிந்தனையின் வெளிப்பாடாகச் சங்க இலக்கியம் போற்றப்பட்டது.
இவ்வாறாக மேற்குலகின் தாக்கம் தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படை அமிசங்கள் சிலவற்றைத் தெளிவுபடுத்துவதற்கு உதவிற்று இவற்றைத் தனித்தனியே நோக்குவது பயன்தரும்.
மேனாட்டு ஆராய்ச்சி கண்டுபிடித்துக் கொடுத்த ஆரிய மேன்மைக் கோட்பாட்டை ஆதாரமாகக் கொண்டு தமிழைச் சமஸ்கிருதம் "சப்பி உமிழ்ந்த சக்கை" என்று கூறியவர்களுக்கெதிராகக் கொதித்தெழுந்தவர்கள் தமிழின் தனித்துவத்தை அதன் சுயாதீனத்தை நிலைநிறுத்தும் வகையில் தனித் தமிழியக்கத்தை நடத்தினர்.
தமிழ் மொழியின் தூய்மையையும் வடமொழியின் உதவியின்றி தனித்தியங்கும் ஆற்றலையும் எடுத்துக்காட்ட விரும்பிய அதே நேரத்தில், தமிழர் சிந்தனையின் தனித் துவத்தை எடுத்துக் காட்டுவதற்கு - இந்துமதக் கோட் பாட்டுக்கு உள்ளேயே நின்று கொண்டு - சைவ சித்தாந்தத்தை, அதன் சிறப்பை எடுத்துக் காட்டினர்.
இத்தகைய ஆய்வுகள் காரணமாக இந்திய நாகரிகத்தில் தமிழ் ஆளுமையை இனங்கண்டு கொள்ளும் புலமை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இலக்கியத் துறையில் மாத்திரமல்லாது, கலைத்துறையிலும், தமிழின் பங்களிப்புப் பற்றி ஆராயத் தொடங்கினர். இத்துறையில் ஆனந்தக்குமாரசுவாமி எழுதியDance of Shiva - சிவநடனம்

தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும் 23
மிக முக்கியமானதாகும். சிவநடனத்தை தமிழ் மூலங்களின் அடிப்படையிலேயே விளங்கிக் கொள்ளலாமென்ற உண்மை நிலைநிறுத்தப்பட்டது.
நடராஜர் சிலையும் கோபுரமும் இந்தியப் பண்பாட்டிற்குத் தமிழின் பங்களிப்பாகப் போற்றப்படத் தொடங்க அந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியான பரத நாட்டியமும் அடிப்படையில் தமிழகத்தின் தொல்சீர் நடனமே என்ற உணர்வு வளரத் தொடங்கிற்று.
ஆனால் ஆரிய திராவிடக் கோட்பாட்டின் மேலாண்மை காரணமாக, தமிழின் தனித்துவத்தை இந்துமதம் சாராத பண்பாட்டு அமிசங்களிலே கண்டு கொள்வதற்கான மனப்போக்கே அதிகமாகக் காணப் பட்டது . இந்துமதத்தைச் சாராத தமிழர்களும் - தமிழ்க் கிறிஸ்தவர்களும், தமிழ் முஸ்லிம்களும் அத்தகைய ஒரு பண்பாட்டுக்கோலத்தையே காணவிழைந்தனர். அத்துடன் சமயச் சார்பற்ற பகுத்தறிவுச் சிந்தனையாளரும் அத்தகைய ஒரு நிலைப்பாட்டையே விரும்பினர். இதனால் தமிழ்ப் பண்பாட்டின் ஆணிவேர்களை இலக்கியப் பாரம் பரியத்திலே காணும் தன்மையே முனைப்புப் பெற்றது . இதனால் சங்க இலக்கியத்தின் சமயச் சார்பின்மையும், திருக்குறளின் சமயப் பொதுமையும், சிலப்பதிகாரத்தின் தமிழகப் பொதுமையும் வற்புறுத்தப்படத் தொடங்கின. இவற்றைத் தமிழ்ப் பண்பாட்டின் அடிவேராகக் காட்டும் பண்பு வளரத் தொடங்கிற்று.
இவ்வாறு அனைத்திந்திய அமைப்பினுள் தமிழின் தனித்துவத்தைக் காட்டுவதற்கான மீள்கண்டுபிடிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த அதேவேளையில், மேற்குலகத் தொடர்பினால் ஏற்பட்ட, வளர்ந்த ஒரு சிந்தனை நெறி தமிழ்நாட்டின் பாரம்பரியச் சமுதாய அமைப்பின் அதிகார வரன்முறையை முற்றாக மறுதலித்து, தமிழின் சிறப்பு தமிழரின் பகுத்தறிவிலேயே உண்டு என்ற கருத்தை முன் வைத்தது . தமிழரின் சுயமரியாதை அல்ர்கள் பகுத்தறிவு

Page 21
24 தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
வாதத்தை மேற்கொள்வதிலும், சமூக சமத்துவத்தை மேற்கொள்வதிலும், சமூக சமத்துவத்தை ஏற்பதிலும், மூடநம்பிக்கைகளை விட்டொழிப்பதிலுமே தங்கியுள்ளது என்ற கோட்பாடு முன் வைக்கப்பட்டது . மேனாட்டுப் பகுத்தறிவாளரான றொபேட் இங்கர்சாவின் கருத்துக்கள் எடுத்துக் கூறப்பட்டன. VN,
இத்தாக்கம் காரணமாக, தமிழ்ப்பண்பாட்டினுள் சனநாயகக் கோட்பாடு உண்டா, சமூக சமத்துவம் உண்டா, மதச் சார்பற்ற சிந்தனையுண்டா என்ற உசாவல்கள் செய்யப்பட்டன. தமிழர் பண்பாட்டின் அடிப்படை மனிதாயுதப் பண்பும், சமத்துவமும் இதன் காரணமாக வெளிக் கொணரப்பட்டன.
தனிப்பகுத்தறிவு - சைவமும் தமிழும் என்ற இந்த இருகிளைப் பாட்டை ஒழித்துச் சகல தமிழர்களையும் ஒன்றிணைக்கும் தனித்துவம் ஒன்று " ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற திருமந்திர வரியின் மீள் கண்டு பிடிப்புடன் வற்புறுத்தப்பட்டது. தமிழ்ப் பண்பாட்டின் இன்றைய முக்கிய அடிப்படைகளில் இது முக்கியமான
மேற்குலகத் தொடர்பின் சவால்களுக்கு நாம் கண்ட பதில்கள் இவை . இவை நம்மையும் நமது சமூகத்தையும்
மாற்றியுள்ளன.

IV
மேற்குலகுத்தொடர்பு காரணமாகத் தமிழ் சர்வதேசிய நிலைப்படுத்தப்பட்டது. முதலில் மேற்குலகினர் அதனைச் செய்தனர். இப்பொழுது அப்பணியைச் செய்யும் மேனாட்டவர்களுடன் கீழைத்தேயத்தவர்களும் குறிப்பாக தமிழர்களும் சேர்ந்துள்ளனர். மறைவாக நமக்குள்ளே நமது புகழை, நமது பண்புகளை நாம் பேசிக்கொள்ளாமல், ழை, தமிழ்ப் பண்பாட்டை உலகப் பொதுமேடையில் வைத்து அதனை மற்றவற்றுடன் ஒப்பிட வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டுள்ளது . இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆராய்ச்சியாளர் சங்கங்களும், ஆய்வுக் கழகங்களும் நிறுவப்பட்டுள்ளன. இந்தப் பணியில் தனிநாயக அடிகளார் தொடங்கிய அனைத்துலகத் தமிழராய்ச்சி மன்றம் முன்னணியில் நிற்கின்றது.
தமிழைச் சர்வதேச மட்டத்தில் வைத்து நோக்குவதன் காரணமாக இரு முனைப்பட்ட நடவடிக்கைகள் முக்கியம் பெற்றுள்ளன.
1) தமிழை உலகின் பிறமொழிகளுடனும், தமிழ்ப் பண்பாட்டை உலகின் பிறமொழிப் பண்பாடு களுடனும் ஒப்பு நோக்கித் தமிழின் பொதுமை யையும், தனித்துவத்தை அறிவதற்கான புலமை
முயற்சிகள். 2) தமிழினுள் - அதன் சமூக அமைப்பில், கலை இலக்கியத்தில் உள்ள, சர்வதேச முக்கியத்துவ முடைய, உலகப் பொதுமைவாதப் பண்புடைய அமிசங்கள் அறிந்து கொள்வதற்கான முயற்சிகள். தமிழ்ப் பண்பாட்டின் அமிசங்களை இனங் கண்டறிந்து கொள்வதிலும், தமிழ்ப்பண்பாட்டின் உலக முக்கியத்துவத்தை எடுத்து விளக்குவதிலும் இரண்டாவது நடவடிக்கைகளே முக்கியமானவையாகும். இவைதான் மீள்

Page 22
சமூகமும் பண்டாட்டின் மீள் பினருடரிடிப்பும் قيامته [ " } 28
கண்டுபிடிப்புக்கள். அதாவது ஏற்கனவே இருந்தவை; ஆனால் தேவையின்மை காரணமாக வற்புறுத்தப்படா தவை; இப்பொழுது தேவை காரணமாக விதந்தோதப் படு:வை. அவற்றைப் பற்றிச் சற்று விரிவாக நோக்குவதற்கு முன்னர் முதலாவது கூறப்பட்ட நடவடிக்கைகள் பற்றிச் சிறிது பார்ப்போம் . அதாவது தமிழையும் தமிழ்ப்பண் பாட்டையும் உலகின் பிறமொழிகளுடனும் பிறமொழிப் பண்பாடுகளுடனும் ஒப்பு நோக்கும் புலமை முயற்சிகள் பற்றிப் பார்ப்போம்.
இவற்றுள் மிக முக்கியமானது மொழியியல் ஆய்வு களாகும். தமிழ் மொழியின், தமிழ் இலக்கண அமைதிகளின் உலகப் பெரு முக்கியத்துவமுள்ள பல சிறப்புகளை இந்த ஆய்வுகள் நிலைநிறுத்தியுள்ளன. a 5/rpra00TLDITeS தொல்காப்பியத்தில் விவரிக்கப்படும் கிளவியாக்க, வாக்கிய ஆக்க அமைதிகள் இக்காலத்தில் நொ ஆம் கொம்ஸ்கியால் எடுத்துக்கூறப்படும் Generative grammer முறைமையுடன் எத்துணை ஒத்திருக்கின்றன என்பது ஆராய்ச்சியாளர் களுக்கு வியப்பைத் தந்துள்ளது.
இந்தியப் பண்பாட்டு ஆய்வில், தமிழுக்கு வட மொழிக்கில்லாத ஒரு பெருமை இப்பொழுது வற்புறுத்தப் படுகின்றது . இந்திய வரலாற்றில் நீண்ட தொடர்ச்சி யுடைய மொழி தமிழே எனவே தமிழின் தொடர்ச்சியில் இந்தியப் பண்பாட்டின் தொடர்ச்சி நெறிகளைக் கண்டு கொள்ளலாம் .
பிற பண்பாடுகளுடன் ஒப்பிட்டு நோக்கும்பொழுது தமிழ்ச் சமுதாய அமைப்பின் அடிச்சரடான தாயமுறைமை முக்கியமாக ஆராயப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில், உலகப் பண்பாட்டு வட்டங்களுள் திராவிட உறவுமுறை மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது - ஏங்கெல்ஸ் முதல் றெனற்மான் (Trantmann) வரை பலர் திராவிட உறவுமுறைபற்றி ஆராய்ந்துள்ளனர்.

தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும் 27
மேலும் ஒருமொழிப் பண்பாட்டு வட்டத்தினுள் பல்வேறு மதப்பண்பாடுகள் தத்தம் மதத் தனித்துவத்தைப் பேணுகின்ற அதேவேளையில், எவ்வாறு ஒரு பொதுவான பண்பாட்டுக் கோலத்தைப் பகிர்ந்து கொள்கின்றன என்பதுபற்றிய ஆய்வுகளுக்குத் தமிழும் தமிழ்ப் பண்பாடும் களமாக அமைந்துள்ளன. மானிடவியலாரும், சமூகவிய லாரும் இவ்வாராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். சமயவியல் அறிஞர்கள் கூடத் தமிழ் வெவ்வேறுபட்ட கோட்பாடு களையுடைய மதங்களுக்குப் பொதுமொழியாக அமைந் துள்ள முறையினை ஆராய்ந்துள்ளனர். (Bror Telander Christian & Hindu Terminclogy. A Study in their mutual relations with Sp. ref. to the Taamil area. Uppsala 1974) gigs il Suai)
ய்வு தமிழ் இலக்கியத்தையும் பரந்த ஒரு வட்டத்துக்கு ட்டுச் சென்றுள்ளதென்றாலும், இத்துறையில் முயற்சிகள்
போதாதென்றே கூறவேண்டும். இந்தப் போதாமை காரணமாக இளங்கோ, கம்பன், பாரதி ஆகிய மூவரும் குடத்து விளக்காகவே உள்ளனர். இந்த வகையில் திருவள்ளுவர் சற்று அதிர்ஷ்டம் செய்தவர் என்றே கொள்ள வேண்டியுள்ளது . அல்பேட் சுவைட்சரின் ஆய்வு திருக்குறளை உலகின் முக்கிய சிந்தனைக் கருவூலங்களில் ஒன்றாக்கியுள்ளது. −
இது தமிழை உலக அரங்கில் வைத்துப் பார்க்கும்பொழுது காணப்படுவன பற்றியது. தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பை அறிவதற்கு இவை உதவும் என்பது உண்மைதான். ஆனால் இவற்றிலும் முக்கியமானது தமிழின் சர்வ தேசியத் தன்மையை அதாவது தமிழ்ப் பண்பாட்டின் உலகப் பெருநோக்கை அறிவது தான்.
மேற்குலகத் தொடர்பின் காரணமாகத் தமிழ்ப் பண்பாட்டை நாம் உற்று நோக்கத் தொடங்கிய பொழுது, நாம் மீளக்கண்டு பிடித்துக் கொண்டவற்றுள் மிக மிக முக்கியமானவை, தமிழ் இலக்கியத்திலுள்ள சர்வதேசியப் பொதுமை, சனநாயகப் பண்பு, மானுடப் பண்பு ஆகியனவையாகும்.

Page 23
28 ) தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
வேறுபடும் வரலாற்றுச் சூழல்களிற் கூறப்பட் 'டிருந்தாலும், கணியன் பூங்குன்றனின் "யாதுமூரே யாவரும் கேளிர்", திருக்குறளின் அரச இலக்கணங்கள், கம்பனின் நாட்டு வருணனை ஆகியன சர்வதேசியப் பொதுமையை ஏதோ ஒரு வகையில் வற்புறுத்தவனவாகவே உள்ளன.
அடுத்தது, தமிழிலக்கியத்தின் சனநாயகப் பண் பாகும் . இந்தத் தேடுதலில் பல்லவர்காலத்துக்கு முந்தி யனவும், சோழர் காலத்துக்குப் பிந்தியனவுமான இலக்கியங்கள் முனைப்புறுத்தப்படுவது இயற்கையே. ஏனெனில் இவற்றில்தான் முறையே இயல்பான தமிழ் நிலைப்பாட்டையும், பேரரச அதிகாரத்திலிருந்து ஒதுங்கிக் கொள்ளும் தன்மையையும் காணலாம். தமிழிலக்கிய மரபின் சனநாயக அடிப்படையை எடுத்துக் காட்டுவதில் காலஞ்சென்ற திரு. வி. க., பேராசிரியர் தெ பொ. மீனாட்சிசுந்தரம், ஜீவானந்தம் ஆகியோர் முன்னணியில் நின்றனர். சிலப்பதிகாரத்தை தெ பொ. மீ. குடிமக்கள் காப்பியம் என்றார். தமிழின் தொல் சீர் இலக்கியங்கள் (பல்லவருக்கு முன்னும் சோழருக்குப் பின்னும் இடையில் பக்தி இலக்கியங்களிலும்) நாட்டார் இலக்கிய அமைப் பினைப் பெரிதும் அடியொற்றிச் சென்றுள்ளமை தமிழிலக்கியத்தின் சனநாயக வேர்களை இனங்கண்டு கொள்வதற்கு உதவுகின்றன என்பன இப்பொழுது பெரிதும் வற்புறுத்தப்படுகின்றது.
மேற்குலகத்தின் நவீன கருத்தியற் பெறுமானங்களில் முக்கியமானதுHumanism எனப்படும் மானுடவாதமாகும். தமிழ்ப் பண்பாட்டில், தமிழ்ச் சிந்தனையில், தமிழ் இலக்கியத்தில் இப் பண்பு பெரிதும் வற்புறுத்தப்பட் டுள்ளது . சங்க இலக்கிய மரபிலும், தொடர்நிலைச் செய்யுள் மரபிலும், ப்க்தி இலக்கிய மரபிலும் (சிறப்பாக ஆழ்வார் பாடல்களில்) சுட்டப்பெறும் மனிதாபப் பெறுமானங்கள் இன்றைய இலக்கிய விமரிசகர்களால் வற்புறுத்தப்பட்டுள்ளன.

தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும் 29
இவ்வாறு செய்வது உண்மையில் வியாக்கியானத்தின் பாற்பட்ட ஒரு முயற்சியேயாகும் . அதாவது பண்டைய சிந்தனைகளுக்கு இன்றைய தேவைகளுக்கேற்ற விளக்கத்தைவியாக்கியானத்தைக் கொடுக்கின்றோம் என்பது உண்மையே ஆனால் இதனை ஏன் சொல்கின்றோம் என்பதுதான் முக்கியமானதாகும்.
இரண்டு வழிகளில் இவ்வகை விளக்கங்கள் முக்கியமாகின்றன.
முதலாவது நவீன உலகின் தொடர்ச்சியான முன் னேற்றத்துக்குத் தமிழ் பயன்படத்தக்கது என்பதாகும். அதாவது நவீன முன்னேற்றத்துக்குத் தமிழ்பயன்படாது என்ற கருத்தை விடுத்து, தமிழ்ப் பண்பாட்டைச் சரியாக விளங்கிக் கொண்டால், அது நமது நவீன முன்னேற் றத்துக்கு தடையாக இருக்காது என்பதாகும் .
இரண்டாவது, முதலாவதனடியாக வருவது தமிழ், நவீன முன்னேற்றத்துக்குத் தடையாக அமையாது என்றால், அந்த மரபில் நின்றுகொண்டே நாம் புதுமைகளை மேற் கொள்ளலாம் புதுமையின் அத்தியாவசியம் காரணமாக நமது பாரம்பரியத்தை நமது அடிவேர்களைக் கல்வி அறிய வேண்டுவது அவசியமில்லை என்பதை இத்தகைய விளக்கங்கள் காட்டுகின்றன.
இந்தக் கட்டத்திலேதான் நாம் தமிழ்ப் பண் பாட்டினைக் கண்டு பிடிக்கும்' அல்லது 'மீளக் கண்டுபிடிக்கும் நிலையிலிருந்து மேற் சென்று அது நவீனவாக்கத்துக்கு எவ்வாறு உதவுகின்றது என்பதுபற்றிச் சிந்திக்க வேண்டியவர்களாகின்றோம்.
தமிழ்ப் பண்பாட்டின் அமிசங்கள் என இன்று நாம் எடுத்துக் கூறுபவை, தமிழர்களைப் பின்தங்கியவர்களாக வைக்கவிடாது அவர்களை முற்போக்குப் பாதையில் இட்டுச் செல்வதற்கு உதவுபவை, உந்துதல் தருபவை எனக் கருதப்படுபவையே.

Page 24
30 தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
இதனாலே தான் தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படை அமிசங்களாகக் கருத்து நிலைகளை முன்வைத்துள்ளோம். நடத்தைகளை, சடங்குகளைப் பண்பாட்டின் அமிசங் களாகக் கூறாது. பெறுமானங்களை கருத்துக்களைப் பண்பாட்டின் அமிசங்களாக எடுத்துக் கூறுவது இதனாலேயே.
தமிழ்ப் பண்பாட்டின் கருத்துநிலை அமிசங்கள் தமிழ் மக்களின் நவீனமயப்பாட்டைத் தடுக்காது, அதற்கு உதவும் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பின், அந்த நவீன மயப்பாட்டுக்குத் தமிழ்மொழி எவ்வாறு தயராக்கப் பட்டுள்ளது என்பதையும், அந்தப் பணியில் மேற்குலகின் பங்கு யாது என்பதையும் மிகச் சுருக்கமாகப் பார்த்தல் பயன்தரும்.
இன்றைய உலகில் அச்சுமுறைமையை நவீனத் துவத்தின் முதற்படியாகக் கருதுவர். தமிழை அச்சு உலகுக்கு அறிமுகஞ் செய்வதற்கு வேண்டிய தயார் நிலையை ஏற்படுத்தியவர்கள் கிறித்தவ ஊழியர்களே. அவர்கள் காட்டிய வழியிலே சென்று, அவர்கள் அச்சிடாத பழந்தமிழ் நூல்களைத் தமிழ்மக்கள் 1835க்குப் பின்னர் அச்சிட்டுக் கொண்டனர். எழுத்துச் சீர்திருத்தம் என்பது உண்மையில் எளிமையான நவீனமயப்பாட்டுக்கான ஒரு கோரிக்கை யேயாகும் . பகுத்தறிவு வாதத்தைச் சமூக சீர்திருத்தத்துக்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டுமென்ற ஈ வே . ராமசாமி நாயக்கர் எழுத்துச் சீர்திருத்தத்தையும் வற்புறுத்தியது இயைபான நடவடிக்கையேயாகும்.
தமிழின் நவீனமயப்பாட்டுக்கான முயற்சிகள் விஞ்ஞானத்தைத் தமிழிற் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் வைத்தியம் மூலம் தேவ ஊழியம் செய்த Dr. கிறீன் முதல் பலர் இதனைச் செய்து வருகின்றனர். மொழிபெயர்ப் பினால் மாத்திரம் ஒரு மொழியில் ஒன்றைச் சேர்த்து விடமுடியாது. அவ்வாறு சேர்க்கப்படவேண்டியது அந்த

தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும் - 31
மொழியின் பண்ணிலிருந்து கிளம்பவேண்டும் தமிழ்நாடு தொழிநுட்டமயப்படுத்தப்படாது தமிழை விஞ்ஞானத் தமிழாக்கி விடமுடியாது.
தமிழ்நாட்டின் பன்முகப்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி தமிழை நவீனமயப்படுத்துவதை இன்று StatGUITLD.
இந்த நவீன மயப்பாட்டுக்கு முக்கியமான உள்ளீடு ஒன்று உண்டு இந்த நவீன மயப்பாடு சனநாயக அடிப்படையில் செல்லுதல் வேண்டும். அப்பொழுதுதான் தமிழில் நவீன மயப்பாடு நிச்சயப்படுத்தப்படும் . மொழி பொது உரிமையானதால் அடிப்படைப் பொதுமை வலுக்கும் பொழுதுதான், மொழியின் வளமும் பெருகும்.
இந்தப் பேருண்மையைப் பாரதி உணர்ந்திருந்தான் தமிழும் தமிழ்ப்பண்பாடும் அடிப்படையான சனநாயகத் துக்கு, மக்கள் ஈடுபாட்டுக்கு இடம் கொடுக்கும்பொழுது தான் தமிழும், தமிழரும் முன்னேற முடியுமென்பதைப் பாரதி, தனது பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையிற் கூறுகிறான்.
"எளிய பதங்கள், எளிய நடை, எளிதிலே அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்தில் செய்து தருவோன் தாய்மொழிக்கு புதிய உயிர்தருவோனாகின்றான் ஓரிரண்டு வருஷத்து நூற் பழக்கமுள்ள தமிழ்மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுது வதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும்" என்கிறான்.
இதிலே வரும் பொது ஜனங்கள்' 'தாய்மொழிக்குப் புதிய உயிர் ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ்மக்கள்’ என்ற தொடர்களை ஊன்றிக் கவனிக்க் வேண்டும். இவை தமிழை நவீன மயப்படுத்துவதன், கனநாயகப்படுத்துவதன் குரல்கள் தமிழ் நவீனமயப்

Page 25
32 ( ) தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
பாட்டின் தேவையையும், சனநாயகப்படுத்துவதன் அத்தியாவசியத்தையும் உணர்த்தியது மேற்குலகத் தொடர்புதான்.
ஆங்கிலக் கல்வியையும், ஆங்கில முறைமைகள் பலவற்றையும் கண்டித்த பாரதியே, இதனைக் கூறுகிறான். மேற்குலகின் தாக்கத்தால் தமிழ் அமிழ்ந்துவிடாது காப்பாற்றப்படுவதற்கு மேற்குலகத் தொடர்பின் வழிவந்த சவால்களுக்கு நாம் முகம் கொடுத்த முறையே காரணமாகும்.
மீள் கண்டுபிடிப்புச் செய்யப்பட்ட தமிழ்ப்பண்பாடு தமிழின் தொடர்ச்சியை நிச்சயப்படுத்துகின்றது . இந்தப் பணியில் மேற்குலகின் பங்கு கணிசமானது.

யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் அதன் உருவாக்கம், இயல்பு, அசைவியக்கம் பற்றிய ஒரு பிராரம்ப உசாவல்
யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் "கண்டதுண்டு, கேட்டத்தில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே குத்திட்டு நிற்கின்றதும், நமது சமூக நடைமுறைகளைப் பெரிதும் ஒழுங்கு படுத்திக் கட்டுப்படுத்துவதுமான இந்தவிடயம் பற்றி நாம் பேசுவதும் இல்லை. பேசமுயல்வதும் இல்லை. இந்த மெளனம், இந்தச் சமூகத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்கின்றமையால், புலமை நிலையிலாவது இதனை அகற்றவேண்டுமென்பதற்காக இந்த உசாவலை மேற் கொள்கின்றேன். நமது சமூகம், அதன் வரலாற்றில் எதிர்நோக்கிய மிக முக்கியமான நெருக்கடி வேளைகளில் ஒன்றான இன்றைய காலகட்டத்தில், நமது சமூக பெரு மாற்றத்தினுக்கு உட்பட்டு நிற்கும் இவ்வேளையில், நமது சமூகத்தின் சிந்தனைகளையும் முன்வைப்பது, சமூகப் புலமையின் குறைந்த பட்சக்கடமையென்றே கருது கின்றேன்.
யாழ்ப்பாணச் சமூகம் பற்றிய மானிடவியல், சமூகவியல் ஆய்வுகள் மிகக்குறைவாகவேயுள்ளன. இத் துறையில் தொழிற்படும் மேனாட்டு அறிஞர் மிகச்சிலரே. (Bryan Pfaffenberger. Kenneth David, Skjonberg). Iš துறையிற் சர்வதேசப்புகழ்பெற்ற எஸ். ஜே தம்பையா போன்ற தமிழர்களாகிய அறிஞர்கள் கூட ஈழத்துத் தமிழ் மக்களின் சமூகவியல் மானிடவியல் ஆய்வுகளிற் பூரண

Page 26
34 ( ) தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
கவனம் செலுத்துவதில்லை. யாழ்ப்பாணச்சமூகம் பற்றிச் சித்தார்த்தன் பேரின்பநாயகம் எழுதியுள்ள "The Karmic Theatre"என்னும் நூல் சுவாரசியமான ஒன்றாகும். ஆனால் அது யாழ்ப்பாணச் சமூக அமைப்பு, மாற்றம் பற்றிய வரன்முறையான ஆக்கம் அன்று. இத்தகைய ஒரு நிலையில், இங்கு நிகழும் சமூக மாற்றத்தின் தன்மைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வது யாழ். பல்கலைக்கழகப் புலமையாளரின் கடமையாகின்றது.
சமூக வரலாறு, சமூகவியல், மானிடவியல் ஆகிய துறைகளின் வழிச்சென்று தமிழிலக்கியப் பாரம்பரியத்தை மீள் நோக்குச் செய்யும் ஓர் ஆய்வுமுறையில் ஏற்பட்ட அநுபவங்கள் காரணமாக நான் இவ்விடயத்திற்கு ஈர்க்கப்பட்டுள்ளேன். அந்தப் புலமைப் பின்புலத்திலேயே இந்தக் கட்டுரை எழுதப் பெறுகின்றது . ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இது ஒரு அறிமுக முயற்சியேயாகும் . தமிழ்மொழி நிலையில் இவ்விடயத்தைப் பற்றி வெளிப் படையான சிந்திப்புக்களைத் தூண்டுவதே இதன் நோக்கமாகும் . அந்த அளவுக்கு இந்தக் கட்டுரையின் அணுகுமுறையிற் சில "நெகிழ்ச்சிகள்" தென்படலாம். அத்துடன், இது ஒரு பிராரம்ப முயற்சியாதலாலும், இக்கட்டுரை 60 நிமிடவேளைக்குள் வாசிக்கப்படத்தக்கதாக அமையவேண்டுமென்பதாலும் நான் விரும்பும் ஆழம் கூட இந்த ஆய்விற் புலப்படமுடியாதுள்ளது.
இச்சிறு ஆய்வு பின்வரும் விடயங்கள் பற்றி நோக்கவுள்ளது.
1. யாழ்ப்பாணத்தின் "சமூக"ததை இனங்கண்டு
கொள்ளல். 1. யாழ்ப்பாணச் சமூகத்தின் உருவாககம், நிலை பேறு, தொடர்ச்சியின் சின்னமாகத் தேச வழமைச்சட்டம்"அமையுமாறு.

யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் 35
III.
IV.
யாழ்ப்பாணச் சமூகத்தின் இயல்புகள் சிலவற் றினை நோக்கல். இச்சமூகத்தின் பண்பாடும் கருத்துநிலையும் . இச் சமூகத்தின் சமகால அசைவியக்கத்தின் தன்மைகள் சில.
நிறைவுரை

Page 27
யாழ்ப்பாணச் சமூகத்தை இனங்கண்டு கொள்ளல்
சமூகவியலிற் பெயர்பெற்ற பாடப்புத்தகங்களுள் ஒன்றான மக்ஜவரின் "சொசைட்டி" (Society) என்னும் நூலில் (1961) வரும் ஒரு கூற்று, சமூகத்தின் அமைப்பு. பற்றிய பல அடிப்படை உண்மைகளை விளக்குவதாக அமைகின்றது.
"சமூகப் பிறவிகளான மனிதர்கள், தமது நடத்தை முறைகளைப் பல்வேறுபட்ட முறைகளில் வழி நடத்துகின்ற, கட்டுப்படுத்துகின்ற ஓர் ஒழுங்கமைப் பினை ஆக்குவதன் மூலமும் மீளாக்கம் செய்வதன் மூலமும், தங்கள் இயல்பினை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்."
ஒரு குறிப்பிட்ட பிரதேச வட்டத்தினுள் வாழுகின்ற வர்கள் என்ற வகையிலும் அவ்வாறு "வாழும்" பொழுது பல்வேறு ஊடாட்டங்களையும் தொடர்புகளையும், உறவுகளையும் கொண்டுள்ளவர்கள் என்ற வகையிலும் (அப்பொழுது தான் அந்தக்குழுமம் இயங்கும்) அந்தக் குழுமத்தினர் ஒரு "சமூகம்" என அழைக்கப்படுதல் மரபு நாட்டுநிலைகளிலும், நாடுகள் அளாவிய நிலைகளிலும் அத்தகைய "சமூகங்களை'ப் பற்றிப் பேசுவது வழக்கம் (அமெரிக்கச்சமூகம், தமிழ்ச்சமூகம்).
குறிப்பாக ஒரு வாழிடவரையறைக்குள் சிவிக்கும் பொழுது, அந்தச் சமூகம் ஒரு குறிப்பிட்ட கட்டமை வினைக் கொண்டதாக அமையும் (Social Structure). அந்தச்

யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் 37
சமூகத்தின் பல்வேறு அலகுகளிடையேயும் நிலவும், காலச் செம்மைபெற்ற, ஒழுங்குமுறைப்பட்ட அமைவொழுங்குள்ள உறவுகள் இந்தக் கட்டமைவைப் புலப்படுத்தி நிற்கும் . இவ்வாறு அமையும் கட்டமைவு அதன் இயங்கு நிலையில் ஓர் "அமைப்பு" (System) ஆகத்தொழிற்படும். அந்தச் சமூகம் இயங்கும் முறைமையை விளங்கிக்கொள்வதற்கு அது எவ்வகையில் ஓர் "அமைப்பு" ஆகத்தொழிற்படுகின்றது என்பதை அறிந்துகொள்வது அவசியமாகும் அமைப்பு என்பது "ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ள பாகங்கள், பொருள்கள், உயிர்களின் தொகுதி" என்பர் அந்த இயங்குநிலைமுறைமை அதற்கு ஒரு "தனித்துவத்தை" வழங்கும.
இவ்வாறு நோக்கும்பொழுது, யாழ்ப்பாணத்தினை வாழிடமாகக் கொண்டஒருவர். "யாழ்ப்பாணத்தவர்"என்று சுட்டப்படுவதற்கான நடத்தை முறைகள், சீவிய முறைகள், கண்ணோட்டங்கள், மனோபாவங்கள் ஆகியவற்றைக் கொண்டிருப்பார் என்பது போதரும்.
ஈழத்தின் தமிழ் மக்களை நோக்கும் பொழுது இரு முக்கியமான சமூக அமைவுகளை இனங்காணலாம் .
1) மட்டக்களப்புச் சமூகம் 2) யாழ்ப்பாணச் சமூகம்
இந்த "யாழ்ப்பாண மனிதனை"ப் பற்றிய சில சமூகவியல், அரசியல், பொருளியல் அவதானிப்புக்கள் உள்ளன. (ஜேன்றசல்:8), ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த யாழ்ப்பான மனிதரைப்பற்றிய வரன்முறையான ஆய்வுகள், சற்று முன்னர் குறிப்பிடப்பட்டதற்கியைய ஆங்கிலத்திலே மிகக்குறைவு தமிழில் இல்லையென்றே கூறவேண்டும் , தமிழில் இத்தகைய ஆய்வுகள், நூல்கள் இல்லாமைக்கு ஆழமான ஒரு நியாயமும் உண்டு. அதாவது நாம் உண்மையில் நம்மைப்பற்றிய ஒரு புறநோக்கான (விடயிநோக்கான - Objective) ஒரு பார்வையை இன்னும்

Page 28
38 () தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
வளர்த்துக் கொள்ளவில்லை என்று கூறவேண்டும் போலுள்ளது . சிங்கள சமூகத்தினைப் புறநோக்காகப் பார்த்து அதனை ஆராய்ந்துள்ள, ஆராய்ந்துவரும் சில அறிஞர்கள் போன்று (நியூட்டன் குணசிங்க, R.A.L.H. குணவர்த்தனா, குமாரி ஜயவர்த்தனா போன்றவர்கள்) நம்மிடையே இன்னும் ஓர் அறிஞர்குழாம் தோன்றவில்லை. நம்மிடையே சமூக வரலாறு பற்றிய ஆய்வுகள் வளர வேண்டுவது மிக அவசியமாகும் . பல்துறைச்சங்கம ஆய்வு முறையின் மூலம் நாம் இந்த ஆய்வுப் பணியினை மேற்கொள்ளல் வேண்டும்.

II
தேசவழமைச்சட்டமும் நமது சமூக உருவாக்கத்தில் அதன் முக்கியத்துவமும்
"யாழ்ப்பாணத்துச் சமூகம்" என்று திட்டவட்டமாகக் குறிப்பிடத்தக்க ஒரு குழுமம் உண்டு என்பதற்கான பிரதான சான்று, இந்த சமூகத்தினரிடையே வழக்கிலுள்ள தேசவழமை எனும் சட்டத்தொகுதியாகும்.
யாழ்ப்பாண மாநிலத்தைத் தமது ஆட்சிக்குக்கீழ் கொண்டு வந்த ஒல்லாந்தர், நீதிபரிபாலனத்தினுக்கான மன்றுகளை நிறுவிய பொழுது அம்மன்றுகளிலே தளமாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான சட்டத்தைத் தொகுக்க முனைந்த பொழுது, யாழ்ப்பாணத் தேசத்தின் "வழமை" யாகவிருந்த நடைமுறைகளையே சட்டமாகத் தொகுத்து எடுத்துக்கொண்டனர். அத்தொகுப்புப் பணிக்குத் திசாவையாகவிருந்த கிளாஸ் ஐசாக்ஸ் (Class Isaaks) என்பவர் பொறுப்பாயிருந்தார் . 1706 ஒகஸ்ட் 14ல் கோனெலியஸ் ஜோன் சீ Gl DrtašráFastrtaů (Cornetus Joan Simmons) பணிக்கப்பெற்ற இத்தொகுப்பு 1707ம் வருடம் ஜனவரி மாதம் 30ம் திகதி டச்சுத்தேசாதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. இத்தொகுதி, தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, 12 தமிழ் முதலியார்களால், உண்மையான தேசவழமையே என அத்தாட்சிப்படுத்தப்பட்டதன் பின்னர், 1707 டிசம்பர் 15 ஆம் திகதி சட்டப்புத்தகத்திற் சேர்த்துக்கொள்ளும் படிக்குத் தேசாதிபதியின் காவலாளரால் பணிக்கப் பெற்றது.

Page 29
40 தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
இச்சட்டத்தினையே யாழ்ப்பாணத்துத் தமிழர் களுக்கிடையே எழும் வழக்குகளுக்கான சட்டமாகக் கொள்ள வேண்டுமென பிரித்தானிய ஆட்சி 1806 டிசம்பர் 9ம் திகதி ஏற்றுக்கொண்டது. அதன் பின்னர், 1895 முதல் தேசவழமைச்சட்டத்திலே பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நாட்டின் பொதுச் சட்டத்துடன் தேசவழமைச்சட்டம் முரணாகுமிடங்களில் இம்மாற்றம் ஏற்படுத்தப்பட்டதெனலாம் . இத்தகைய பல்வேறு மாற்றங்களின் பின்னர் இன்று தேசவழமைச்சட்டமானது யாழ்ப்பாணத்து மக்களின் சொத்துரிமைக் கையளிப்புச் சட்டமாகவே தொழிற்படுகின்றது.
1707 இல் இருந்த நிலையில் அது கொண் டிருந்தனவற்றை நோக்கும் பொழுது அக்கால யாழ்ப்பாணச் சமுதாயத்தின் அமைப்பு மிகத் துல்லியமாகப் புலப் படுகின்றது . 1707 இல் தொகுக்கப்பெற்ற பொழுது, தேசவழமைச்சட்டம் ஒன்பது பிரிவுகளைக் கொண்டதாக விளங்கிற்று அந்த ஒன்பது பிரிவுகளையும் அவை ஒவ்வொன்றிலும் இடம்பெற்றவற்றையும் அறிவது யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சமூகவியல் அமிசமொன் றினை அறிவதாக அமையும்.
முதலாம் பிரிவு
சொத்துரிமையும் பேறும் பற்றியது
மூவகைச் சொத்துக்கள் சீதனம், முதுசம், தேடியதேட்டம் 2. சீதனம்பற்றியது 3-6 மகள்மாரின் விவாகமும் அவர்களுடன்
கொடுக்கப்பெறும் சீதனமும் 7. மகன்மாரின் விவாகமும் அவர்களுக்குரிய பங்கும்

யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் 41
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
சொத்தினைக் கொடுத்தல் (மகன்மாருக்குச் சொத்து போகாமலிருப்பதற்காக ஈடுவைப்பதைத் தடுத்தல்) பிள்ளைகளும் தாயுமுள்ளவிடத்துச் சொத் துரிமை செல்லும் முறைமை (தகப்ப னிறந்தவிடத்து) தாய் மீண்டும் விவாகஞ்செய்யுமிடத்துச் சொத்து பிரிக்கப்பட வேண்டிய முறைமை பிள்ளைகளும் தகப்பனுமுள்ளவிடத்துச் சொத்து பிரிக்கப்படும் முறைமை (தாயிறந்தவிடத்து) பிள்ளைகள் தாய்தந்தையற்றவர்களாகவிருக்கு மிடத்துச் சொத்து பிரிக்கப்படும் முறைமை ஒன்று விட்ட சகோதரர், சகோதரிமார் மாத்திர முள்ளவிடத்துச் சொத்துபிரிக்கப்படும் முறைமை
இரண்டு தாரத்துப்பிள்ளைகளுமிருக்குமிடத்துச் சொத்துபிரிக்கப்படும்முறைமை
தத்தம் பெற்றோருக்கு ஒரே பிள்ளைகளாகவிருந்த இருவரின் சொத்துக்கள் பிரிக்கப்படும்முறைமை சொத்து நன்கு திருத்தப்பட்டு (பயன் அதிகரிக்கப்படுத்தப்பட்டு) இருக்குமிடத்து அது பிரிக்கப்படும் முறைமை "அஞ்ஞானி" யொருவன் கிறிஸ்தவப்பெண்ணை மணம் செய்யும் இடத்துச் சொத்து பிரிக்கப்படும் முறைமை இருவர் "அஞ்ஞானிகள்" விவாகம் செய்யும் பொழுது சொத்து பிரிக்கப்படும் முறைமை

Page 30
42
) தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
இரண்டாம் பிரிவு
சுவீகாரம் செய்தல்
1.
சுவீகாரத்துக்கான சடங்குகள் (பெற்றுக்கொள்ளும் தாய், வண்ணார், அம்பட்டர் முன்னிலையில் மஞ்சள் தண்ணீர்குடித்தல்) சுவீகாரஞ் செய்வோருக்கு வேறு பிள்ளைகளுக்குப்பின், அவர்களது சொத்துக் கையளிக்கப்படும் முறைமையும் பிரிக்கப்படும் முறைமையும். சுவீகாரம் பெறப்பட்டவர் பிள்ளைகளில்லாமல் இறப்பின் ஒருவொருக்கொருவர் உறவினரல்லாத இரு பிள்ளைகள் சுவீகாரம் செய்யப்படுமிடத்El சுவீகரிக்கப்பட்ட பிள்ளையின் சுவீகாரத்தை, சுவீகாரம் செய்பவரின் உறவினர் ஏற்றுக்கொள் ளாதவிடத்து அந்தச் சுவீகாரப் பிள்ளை களிடையே சொத்தை பிரிக்கும் முறைமை மூன்று சகோதரர்களில் ஒருவர் ஒரு பிள்ளையைச் சுவீகாரஞ் செய்யுமிடத்து
உயர்ந்த அல்லது குறைந்த சாதிப்பிள்ளை
யொன்று சுவீகாரம் செய்யப்படும் பொழுது
மூன்றாம் பிரிவு
காணி தோட்டம் முதலியன வைத்திருத்தல்
1.
கூட்டுச்சொத்தாகவோ, கூட்டுச் செய்கையாகவோ வைத்திருத்தல்

யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல 43
காணியை வாடகைக்குப் பெறல் 3. ஒருவர் காணியிலுள்ள மரத்துப் பழங்கள்
இன்னொருவரின் காணி மீது தொங்கிநிற்பின் 4. பனைமர உரிமை
நான்காவது பிரிவு
நன்கொடை பற்றியது
1.
கணவனும் மனைவியும் பிரிந்து வாழும் பொழுது எவையெவற்றை நன்கொடையாகக் கொடுக்க லாம் . எவையெவற்றைக் கொடுக்க முடியாது என்பதுபற்றி எந்த அளவுக்குப் பெறாமக்கள், மருமக்களுக்கு (nephews and nieces) pairGastaol-GlassTCéidiguti என்பதுபற்றி
இன்னொருவரிடத்து காணி நன்கொடை பெறும் பொழுது ஒரு மகனுக்கு அல்லது இரண்டு மகன்மாருக்கு நன்கொடை கொடுக்கப்படுமிடத்து விவாகஞ் செய்யாத மகன்மாருக்கு உறவினரால் கொடுக்கப்படுவன. அவர்கள் விவாகஞ் செய்யும்
பொழுது அவர்களிடத்தேயிருத்தல், மற்றையவை அப்படிச் செல்லா.
ஐந்தாம் பிரிவு
ஈடுகள் அடைவுகள் பற்றி
(குறிப்பு : ஈட்டுக்கும் ஒற்றிக்கும் பொதுவான முறையிலே (mortgage) என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது).

Page 31
44
தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
ஈடுவைத்த காணியானது மீட்கப்படும் வரை அதன் ஆட்சியும், வருமானமும் ஈடு வாங்கிய வருக்கேயுரியதெனுமிடத்து (இது உண்மையில் ஒற்றியாகும்)
ஒற்றி பெறுவோரே அத்தகைய காணிகளுக்கான
2.
வரிகளைக் கட்ட வேண்டும் எனல் 3. போதுமான முன்னறிவித்தல் கொடாது மீட்கும்
பொழுது 4. குறிப்பிட்டவருடக்காலத்துக்கான ஈடு 5. பழமரங்களை "ஈடு"வைத்தல் 6. அடிமைகளை ஈடுவைத்தல் 7. மிருகங்களைப் பயன்படுத்துவதற்கான கடன்
(மாடு) 8. நகைகள் -அடைவு வைத்தல்
ஆறாம் பிரிவு
வாடகை பற்றியது
உழவுக்கு மாடுகளை வாடகைக்குப் பிடிப்பது பற்றியது.
ஏழாம் பிரிவு
கொள்வனவு விற்பனை பற்றியவை
1.
2.
காணிவிற்பனவுகள் பற்றியவை ஆடு, மாடு, விற்பனவுகள் பற்றியவை

யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் [145
3.
பிள்ளைகள் விற்பனவு பற்றியவை. பிள்ளைகளை அடிமைகளாக (வாரங்களாக) விற்கும் முறைமை யும் மீட்கும் முறைமையுமிருந்தது.
எட்டாம் பிரிவு
ஆண், பெண் அடிமைகள் பற்றியது
(1844ம் ஆண்டின் 20ஆம் கட்டளைச்சட்டத்தின் படி
அடிமை முறை நீக்கப்பட்டது. அடிமைக்கும் குடிமைக்கு
டையில் வேறுபாடு காட்டாது Slave' என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது)
1.
பல்வேறு தரமும் வகையுமான அடிமைகள் பற்றியது நான்கு சாதிகளின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. (கோவியர், நளவர், பள்ளர், சிவியார்) அடிமை, குடிமைகளின் விவாகம்
பிள்ளைகளில்லாது இறக்கும் அடிமை குடிமைகளின் சொத்துபிரிக்கப்படும் முறைமை பிள்ளைகள் இறக்குமிடத்து அவர்களின் சொத்துக்கள் பிரிக்கப்படும் முறைமை
விவாகஞ் செய்த அடிமை குடிமைகளின்
கடமைகள் அடிமை, குடிமைகளை அவர்களின் கட்டிலிருந்து விடுவித்தல் அவ்வாறு கட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட (இஷ்டம் போன) வர்களின் சொத்துக்களுக்கான
உரிமைபற்றியவை

Page 32
46 ( ) தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
ஒன்பதாம் பிரிவு
வட்டிக்குக் கடன் கொடுத்தல்
1.
2.
குறிப்பிட்ட நிப் ந்தனைகள் உள்ள கடன்கள் கடனுக்குக் கொடுக்கப்படும் "பிணைகள்" எந்த அளவுக்குக் கடனுக்குபொறுப்பு என்பது கணவனின் கடனுக்கு மனைவி பிள்ளைகள் எந்த அளவுக்குப் பொறுப்பாளிகள் ஆவர் என்பது வட்டிமுதுலுக்குமேலே போகாதிருத்தல் நெல்லுக்கடன்
நெல்கொடுத்துமாறல்
கடனுக்காகக் கொடுக்கப்பட வேண்டும் விளை பொருளின் அளவு குறிப்பிடப்படாது கடன் கொடுக்கப்பட்ட விடத்து, (காணியிலிருந்து) பெறப்படும் இலாபத்திலிருந்து கொடுக்கப்பட வேண்டிய விகிதம் பற்றியது.
இந்தச் சட்டத்தலைப்புகளை நோக்கும் பொழுதே
தேசவழமை என இவ்விதிகள் பதியப்பட்டிருந்த காலத்து யாழ்ப்பாணச் சமூகத்தின்
|-
பொருளாதார அடித்தளம் (பிரதான பொருளாதார முயற்சி அதன் அமைப்பு அதில் ஈடுபடுவோர் அவர்கள் பெறும் ஊதியம் என்பன) யாதுஎன்பதையும் இந்த பொருளாதார அடித்தளத்தைப் பேணும் சமூகக்கட்டமைப்பு (குடும்பம், அக்குடும்பங்கள் உருவாக்கப்படும் முறைமை (விவாகம்) அதற்கான நிபந்தனைகள் அச்சமூகத்தின் பிற நிறுவனங்கள் ஆகியன) யாவை என்பதையும்,

யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் 47
இ அந்த முறைமைகளின் தொடர்ச்சி எவ்வாறு ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருந்ததுஎன்பதையும் நாம் அறிந்துகொள்ளக்கூடியதாகவிருக்கின்றது. இந்தச் சட்டங்கள் பின்வரும் விடயங்களைத் தெளிவுபடுத்துகின்றன.
1. குறிப்பிட்ட காலத்தில் இச்சமூகத்தின் பொருளாதாரத் தளமாக அமைந்த உற்பத்தி முறைமைகள்
2. இந்த உற்பத்தி முறைமையின் முறைமைகளின் தொடர்ச்சிக்கு உதவும் அந்தச் சமூகத்தின் தனிமங்கள் 3. இந்த உற்பத்தி முறைமைகளுள் மேலாண்மை
யுடையதாகவிருப்பது w 4. இவற்றின் நடைமுறைத் தொழிற்பாட்டுக்கான
d5(555,5606) digigabó56it (Ideologial motivations). "சமூக உருவாக்கம்" (Social Formation) என்னும் கோட்பாடு மேற்கூறிய நான்கு விடயங்கள் பற்றிய தெளிவேயாகும்.
"சமூக உருவாக்கம் என்பது சமூக உறவுகளின் பன்முகப்பட்ட கட்டளை வினை சமூகத்தின் பொருளாதார கருத்து நிலை மட்டங்களினதும், சிலவிடயங்களில் அரசியல் மட்டத்தினதும், ஒழுங்கிணை நிலையைக் குறிப்பதாகும் . இந்த ஒருங்கிணை நிலையில் பொருளா தாரத்தின் தொழிற்பாட்டு பங்கு முக்கியமான ஒன்றாகும். மேலாண்மையுடையதாகவுள்ள உற்பத்தி உறவுகளின் நடைமுறை நிலைப்பாடு ஒவ்வொரு மட்டத்திற்கும் ஒவ்வொரு வகையான செயல் வன்மை நிலையினையும், ஒன்று மற்றொன்றில் தலையிடுவதற்கான முறைமையையும் வழங்குகின்றது. இதனால், அந்த மேலாண்மையுடைய உற்பத்தி உறவுகள் நிர்ணய சக்தி உடையனவாக அமைகின்றன" (ஹிண்டஸ் ஹேர்ஸ்ற் 1975:13).

Page 33
48 ( ) தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
யாழ்ப்பாணத்தின் நிலவுடைமை எத்தகைய அமிசங் களைக் கொண்டிருந்தது என்பது இந்த உருவாக்கத்தின் மூலம் தெளிவாகின்றது . அத்துடன் கொலோனியலிச அமைப்பினுள் பாரம்பரிய நிலவுடைமை எவ்வாறு தொடர முடியும், முடியாதுஎன்பதனையும் நாம் இந்தமுறைமையின் தொடர்ச்சி, தொடர்ச்சியின்மையிலிருந்து அறிந்து கொள்ளலாம் . இந்தப் பொருளாதாரம் விவசாயத்தையே பிரதானமாகக்கொண்டிருந்தது. நிலம் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் சொத்தாகவே இருந்தது நிலத்தில் "உழைப்போர்" அடிமை குடிமைகளாக வைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் உழைப்பு முழுவதும், நிலத்தை உடையவர்களின் "சொத்து"ஆக்கப்பட்டிருந்தது. இந்த உடைமை முறைமையின் இயல்புகள்பற்றி இங்கு ஆராயமுடியாது . ஆனால் அத்தகைய ஓர் ஆய்வு மேற் கொள்ளப்படுவது அவசியமாகும் . ஆயின், "யாழ்ப்பாண வரலாறு" பற்றி நம்மிடையே இன்று நிலவும் பார்வைகள் இத்தகைய ஆய்வுகளுக்கு இடம் கொடுப்பதில்லை.
மேலே பார்த்த அமைப்பானது இன்று எத்துணை மாறியுள்ளது என்பதனையும், இன்னும் ம்ாறாமல் ருப்பவை யாவை என்பதையும் நாம் குறித்துக் கொள்ளல் வேண்டும் அடிமை குடிமை முறைமை இன்று இல்லை . ஆனால் அந்த முறைமை வழிவந்த ஒடுக்குமுறைகள் யாவும் அழிந்துவிட்டனவெனக்கூறுதல் முடியாது. அதேபோன்று இன்று "ஒற்றி" முதலிய பொருளாதார முறைமைகளின் செயற்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னர் "ஒற்றி வைத்தல்" என்பது சமூக அகெளரவத்தைத் தரும் ஒரு கடன் முறைமையாகும். ஆனால் இன்றேஒற்றியினால் பெறப்படும் முற்பணத்தை வங்கியிற் போடுவதனால் வரும் லாபம் காரணமாக, ஒற்றிக் கடன்கள் ஏற்புடைமையுள்ள கடன்முறையாகியுள்ளது. (பாலகிருஷ்ணன், 1984). இந்த மாற்றங்களினூடாக யாழ்ப்பாணச் சமுதாயம் என இன்று நாம் கொள்கின்ற "சமூக உருவாக்கத்தின்" தொடக்கம், நிலைபேறு, மாற்றத்தினைக் கண்டு கொள்ளலாம்

யாழ்ப்பாணச் சமூகத்தின் இயல்புகள்
தேசவழமைச்சட்டம் ஒரே நேரத்தில் ஒரு சமூகவியற் சான்றாகவும், ஒரு வரலாற்று ஆவணமாகவும் அமையும் தன்மையை அவதானித்தோம் . இந்தத் தேச வழமைச் சட்டத்தின் அடிப்படையிலும், இந்த நூற்றாண்டில் எழுதப்பெற்றுள்ள, யாழ்ப்பாணம் பற்றிய மானிடவியல் guủaysGrifaðir oyuq L'úLu6ODL Ju9lyub (Pfaffenberger, David, Holmes, Banks) யாழ்ப்பாணச் சமூகத்தின் இயல்புகளை நோக்குவோம் . இந்தச் சமூகம் நிலம் சம்பந்தமாகத் தடை களெதுவுமற்ற முறையிலே, தனியார்சொத்து முறைமை u Sam6MT (System of private property) és GossmrGrăTG aufjög|Girar gy. இத்தனியாள் சொத்துரிமை முறைமை முன்னர் அடிமை குடிமைகளையும் கூட உட்படுத்தி நின்றுள்ளது . படிப் படியாக வந்த மாற்றங்களின் வழியாக அது இன்று "காணியாட்சி" முறைமையிலேயே காணப்படுகின்றது.
அடுத்து இச்சமூகம், ஒரு சமூக அதிகாரப் படிநிலை (papal Duiao)657 (Social hierarchy) a 68Lulu airpiteb. அதாவது, மேலேயுள்ளது உயர்ந்தது, படிப்படியாகக் கீழே வரும் பொழுது கீழேயுள்ளது தாழ்ந்தது என்ற ஒரு எடுகோள் இங்கு உண்டு.
இந்தப்படிநிலை சாதியமைப்பை (caste system) அடிப்படையாகக் கொண்டதாகும் . சாதி ஆய்வினை மேற்கொள்ளும் பொழுது, சாதிகளின் பட்டியலையும், அவற்றின் அதிகாரப்படி நிலைகளையும் பற்றி அறிந்து கொள்வது மாத்திரம் போதாது . இந்தச் சாதிகள் ஒவ் வொன்றும் தத்தம் சமூக உறவுகளில் ஒன்றிணைந்து

Page 34
50 口 தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
எவ்வாறு ஒரு சமூக அமைப்பினை (caste as a social system) உருவாக்கியுள்ளன என்பதை அறிந்துகொள்ளல் வேண்டும். கால மாற்றங்களுக்கேற்ப அமைப்பு மாற்றங்களும் ஏற்பட்டு வந்துள்ளன என்ப்தை நாம் மனதிருத்திக்கொள்ளல் அவசியமாகும்.
ஆரம்பத்தில் சாதியே சகல சமூக உறவுகளையும் நிர்ணகிேே சக்தியாக விளங்கிய ஒரு நிலையிருந்தது. இப்பொழுதோ விவாகத்திலும், சமூகச் செல்வாக்கு அதிகாரத்திலுமே சாதிமுறைமையின் தொடர்ச்சியைக் காணலாம் விவாகம் என்பது குடும்ப உருவாக்கத்துக்கு (tamily formation) அச்சாணியாக அமைவதாலும் குடும்பம் எமது சமூகத்தின் மிகமுக்கியமான அலகான படியினாலும் (இது பற்றிச்சற்று பின் நோக்குவோம்) சாதி இன்னும் அச்சாணியான ஒர் இடத்தையே பெறுகின்றது.
யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பில் சில விசேட பண்புகள் உள்ளன (சிவத்தம்பி 1989) . முதலாவது இங்கு தமிழகத்திலுள்ளது போன்று பிராமண மேலாண்மை ல்லை - சடங்காசாரமாக நோக்கும் பொழுது பிராமணர் கள் சைவக்குருக்கள்மார் முதலிலே வைத்துப் பேசப்படும் மரபு உண்டெனினும் உண்மையான சமூக அதிகாரம் வெள்ளாளரிடமேயுண்டு. இந்த வெள்ளாள மேலாண்மை காரணமாக இன்னொரு கருத்துநிலையும் வளர்ந்துள்ளது. வருண அடிப்படையில் வேளாளரும் சூத்திரரே சூத்திரரே இறுதிக் குழுமத்தினர். இந்த இக்கட்டு நிலையிலிருந்து விடுபடுவதற்காக, இங்கு சூத்திரரை இரு வகையாக வகுத்து நோக்கும் ஒரு முறைமையுண்டு.
சற்குத்திரர்
அசற்குத்திரர் சற்குத்திரர் என்போர் உயர்ந்தோர். இந்தக் கொள்கை யினை யாழ்ப்பாண மட்டத்தில் மிகவும் வற்புறுத்தியவர்
ஆறுமுகநாவலர் ஆவார். (பிரபந்தத்திரட்டு)

யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் - 51
மேலும் சற்சூத்திரரின் மேலாண்மைக்கு ஒரு கருத்துநிலை முக்கியத்துவம் வழங்குவதற்காக, வருண தர்மத்திலே பேசப்படாத இன்னொரு குழுமத்தைப்பற்றி (ஐந்தாவது வருணத்தைப் பற்றி) அழுத்திப் பேசவேண்டிய நிலையேற்பட்டது. "பஞ்சமர்" என்னும் கோட்பாடு யாழ்ப்பாணத்திற் சமூக வன்மையுடைய ஒன்றாகும்.
யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பில் தொழிலே (Vocation) பிரதான அடிப்படையாகின்றது. இதனால் இங்கு சாதி நிலைப்பட்ட தொழிற்பிரிவுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் இங்கு அடிநிலையினரின் சமூக மேனிலைப்பாடு என்பது பாரம்பரியத் தொழிலைக் கைவிடுவதிலேயே தங்கியுள்ளது . யாழ்ப்பாணச் சமூக அமைப்பின் சாதி முறைமை இரு வகையாகத் தொழிற் படுகின்றது என்று கெனத் டேவிட் கூறுவர்.
1. 85LʻG5)LülurtG5)sir6IT «Fit#9a56ir (Boundcaste) 2. கட்டுப்பாடற்ற சாதிகள் (Unbound Caste)
வெள்ளாளரை மேலாண்மையுடையோராகக் கொண்டு மற்றைய சாதியினரின் இடம், பங்கு பணியினை ஆராய முற்படும் பொழுது இம் மரபு காணப்படுவது }யல்பே முன்னர் அடிமைகுடிமை மரபினராகக் கொள்ளப்பட்டவர்கள் கட்டுப்பாட்டுக்குள் (Bound Mode) வருவதாகவும் பொருளாதார சீவியத்தில் வெள்ளாள மேலாண்மைக்குள் நேரடியாக வராதவர்கள் கட்டுப்பாடற்ற முறைமைக்குள் (Unbound mode) வருவதாகவும் அவர் கூறுவார். கெனத் டேவிட் இந்த அடிப்படையில் யாழ்ப்பாணச் சாதிகளை அவற்றின் சமூக உறவின் அடிப்படையில் பின்வருமாறு வகுப்பர்.
கட்டுப்பாட்டு முறைமைக்குள் வருவோர்
குருக்கள்மாரும் விவசாயத் தொழிலில் ஈடு பட்ட சாதியினரும் பிராமணர், சைவக்

Page 35
52 ( ) தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
குருக்கள், வெள்ளாளர், கோவியர், வண்ணார், அம்பட்டர், பள்ளர், நளவர், பறையர், துரும்பர்.
கட்டுப்பாட்டு முறைமைக்குள் வராதவர்கள்
வணிகர்கள், உள்ளூர்க் கைவினையாளர்,
சைவசெட்டி, ஆசாரி, தட்டார், கைக்குளர் சேணியர், முக்கியர், திமிலர்.
கலப்பு முறைமை - பிரதானமாகக் கட்டுப்பாடு உடையது
பண்டாரம், நட்டுவர் (இசை வேளாளர்,
கலப்பு முறைமை - பிரதானமாகக் கட்டுப்பாடற்றது.
கரையார், தச்சர், கொல்லர், குயவர். கட்டுப்பாட்டு மரபு பற்றிப் பேசும் பொழுது யாழ்ப்பாணச் சாதியமைப்பில், வரலாற்றுப் பின்புலத்தில் காணப்படும் ஒரு முக்கிய உண்மையைப் பதிவு செய்தல் வேண்டும் . அதாவது இங்கு முன்னர் "கட்டுப்பாடு" உள்ளவர்களாக இருந்த பல குழுமத்தினர் தங்களைத் தாங்களே தமது சமூகத்தளைகளிலிருந்து விடுவித்துக் கொண்டுள்ளனர். இது 1844 க்கு முன்னர் நடைபெற்ற தாகும் . அத்தகையோரை "இட்டம் போன" (இஷ்டம் போன) வர்கள் என்று குறிப்பிடும் மரபு உண்டு. ஒல்லாந்தர் காலத்திலிருந்தே இந்தப்பண்பினை நாம் stratorourtub (Zwaadracoon). w
யாழ்ப்பாணச் சமூக அமைப்பின் இன்னொரு பிரதான அமிசம், வன்மையான (சிலவேளைகளில் கூர்மைப் பட்ட) பிரதேசவாதமாகும் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவுப்பகுதி என்ற பாரம்பரிய செல்வாக்கு வட்டங்கள் உண்டு. இந்தப் பிரதேசப் பாரம்பரிய உணர்வு சாதி முறைம்ையையும் ஊடறுத்துச் செல்வதுண்டு.

யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளலி 53
உதாரணமாகத் தீவுப்பகுதியில் பஞ்சமர் தம்மை வடமராட்சிப் பகுதிப் பஞ்சமரிலும் பார்க்க அந்தஸ்து நிலை கூடியோராக நோக்குவது வழக்கம்.
யாழ்ப்பாணச் சமூக அமைப்பின் இன்னொருமுக்கிய
அமிசம் இங்கு நிலவும் குடும்ப ஒருங்கு நிலையாகும். இச்சமூகத்தின் இறுதி அலகு குடும்பமேயாகும். மனிதரன்று மனிதர்கள் குடும்ப அங்கத்தவர்களாக இயங்கும் முறைமையுண்டே தவிர அவர்கள் மேற்குலகிற் கொள்ளப்படுவது போன்று "தனி" மனிதர்களாகக் (Individual) கொள்ளப்படுவதில்லை. "Individual" என்னும் மூலக்கருத்துப்படி நோக்கினால் (n+dividual அதற்கு மேல் பிரிக்கப்படமுடியாதது) அந்தப்பிரிக்கப்பட முடியாத அலகு "குடும்பமே" யாகும் குடும்பம் எனும் பொழுது முன்னர் விஸ்தரிக்கப்பட்ட (Extended Family) கருத்திற் கொள்ளப்பட்டது. (சிறியதாய் பெரியதாய், பிள்ளைகள், மாமன் மாமி பிள்ளைகள், சிறிய தகப்பன் பெரிய தகப்பன் பிள்ளைகள்) ஆனால் இப்பொழுது ஒரு தாய் தந்தையரின் பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகள் வளர்ந்தவர்களாகும் நிலைவரை (அதாவது விவாகத்தின் பின்னரும் சில
காலங்களுக்கு) ஒரு குடும்பமாகவே காணப்படும் ஒரு நிலைமையுண்டு.
இந்தக் குடும்ப உணர்வு காரணமாக விவாகம் (கலியாணம்) மிக முக்கியமானதாகின்றது. ஏனெனில் கலியாணம் முன்னர் கூறியது போன்று, குடும்ப உருவாக்கத்துக்கான மையப்புள்ளியாகும் . தங்கள் ள்ளைகள், சகோதரர்களின் "குடும்ப"மாக வருபவர்கள் நல்ல "குடும்ப"மாக இருத்தல் வேண்டுமென்ற கருத்துக் காணப்படுவது இயல்பே. இதனால் சாதியும் சாதியின் கூறாகிய "பகுதி"யும் முக்கியமாகின்றன. காதற்கலியாணம் தவிர்க்கப்பட முடியாத நிலையிலே தான் செய்யப்படும் . அப்படிக் காதல் கலியாணம் செய்யுமிடத்திலும், புதுத்தம்பதியினர் ஏதோ ஒரு குடும்பத்தினரிடையேயே அந்நியோந்நியமாக பழகும் நிலமை ஏற்படும். இந்தக் குடும்ப

Page 36
54 தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
இணைவுநிலை அண்மைக்காலத்தில் புலப்பெயர்வு நடை முறையிலும் காணப்படுகின்றது . பிரான்ஸ், நோர்வே, கனடா, போன்ற நாடுகளுக்கு முதன் முதலிற் புலம் பெயர்ந்து சென்றவர்கள், அவ்விடங்களிலிருந்து கொண்டு தத்தம் குடும்பத்தினரையும், பின்னர் பிரதேசத்தினரையுமே அழைத்துக் கொண்டனர். இதனால் நோர்வேயில் தீவுப் பகுதி, அரியாலை முதனிலைப்பாட்டையும், பிரான்சில் வடமராட்சி முதனிலைப்பாட்டையும் அவதானிக்கலாம்.
யாழ்ப்பாணச்சமூகம் படி நிலைப்பட்ட ஒன்றாக அமைந்திருந்தால், அச்சமூகத்தினரின் வாழிட அமைவில், பிரதேச - குழும / உறவினர் இணைவினைக் காணக்கூடிய தாகவிருந்தது . அதாவது ஒரு கிராமத்தில் ஒவ்வொரு சாதிக்குமான ஏறத்தாழ வரையறுக்கப்பட்ட வாழிடப் பகுதிகளும், அதன்மேல், சாதிக்குள் ஒவ்வொரு உறவினர் குழாமும் - ஒவ்வொரு "பகுதி"யினரும் பிரதானமாக வாழும் பகுதிகளும் அமைந்தன. இந்தப் பிரதேச / உறவினர் குழுமத்துக்கான ஓர் அடிப்படைப் பொருளாதாரக் காரணியும் உண்டு. குடும்ப குழுமத்தினரின் காணிகள் ஒரு இடத்திலேயே செறிந்திருக்கும். மேலும் "தொழிலு"க்கான பரஸ்பர உதவியும் ஒரு காரணமாகும் குறிப்பாகத் தோட்டக் காணிகளைப் பொறுத்த வரையில் இந்த நிலைப்பாட்டின் தொழிற்பாட்டைக் காணலாம். தமிழகக் கிராம அமைப்பிலும் உறவுக்குழும ஒருங்கு நிலையினைக் காணலாம் . ஆனால் அங்கு அக்ரகாரம் கோயில் என்பனவே பிரதான இடம்பெறும்.
வரலாற்றுப் பின்புலத்தில் இச்சமூக உருவாக்க, சமூகப் பேணல் சமூக அசைவியக்க நடவடிக்கைகள் பற்றி ஒர் கண்ணோட்டம்
யாழ்ப்பாணச் சமூகத்தின் உருவாக்கத்தினுள் நிற்கும் சமூக அதிகார மையம் யாது என்பது சுவாரசியமான ஒரு வினாவாகும். ஏனெனில் இப்பகுதி ஒரு குறிப்பிட்ட சமூக உருவாக்கத்தைக் கொண்டிருந்தது மாத்திரமல்லாமல்,

யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் 55
இங்குஒருவகையான "அரச உருவாக்கமும்" (Stateformation) நிகழ்ந்தேறியுள்ளது. "யாழ்ப்பாண இராச்சியம்" (Kingdom ofJaffna) என வரலாற்று ஆசிரியராற் போற்றப்படும் அரச அமைப்பு, 14ஆம் நூற்றாண்டு முதல் 1619 இல் போர்த்துக்கேயரால் கைப்பற்றப்படும் வரை நிலவியது. இந்த அரசியலமைப்பின் தோற்றம் யாழ்ப்பாணத்தினை அதன் சமூகத்தனித்துவங்களுடன் பேணுவதற்குப் பெரிதும் உதவிற்று எனலாம். ஆயினும் இந்த அரச அமைப்பு எந்த அளவுக்கு ஒருமுகப்படுத்தப்பட்ட அதிகாரத்தினைக் கொண்டிருந்தது இன்னும் ஆராயப்படாத ஒரு விடய மாகும்.
யாழ்ப்பாணத்தின் சனவேற்றம் பற்றி (Peopling of Jaffna) யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய வரலாற்று மூலங் களான "கைலாயமாலை", "யாழ்ப்பாண வைபவ மாலை" ஆகியவற்றை நோக்கும் பொழுது, அந்நூல்கள் யாழ்ப் பாணத்தில் அரசோச்சிய அரசருக்குக் கொடுக்கின்ற அளவு முக்கியத்துவத்தை யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதி களிலும் குடியேற்றப்பட்ட முதலிமாருக்குக் கொடுப்பதை எவரும் அவதானிக்கத் தவற முடியாது. யாழ்ப்பாணத்தின் இலக்கிய உருவாக்கத்தை (Literary Formation) அவதானிக் கும் பொழுதும், இவ்வுண்மை வலுப்பெறுகின்றது. "கரவை வேலன் கோவை", "தண்டிகைக்கனகராயன் பள்ளு" முதலிய நூல்கள் எடுத்துக்காட்டாக அமைகின்றன. மேலும் நமது வரலாற்றுச் சமூகவியலை நோக்கும் பொழுது, யாழ்ப்பாணத்தின் சனக்கண்ணோட்ட நிலையில், யாழ்ப்பாண மன்னர்களிலும் பார்க்க அவ்வப்பிரதேச முதலிமாரே முக்கிய இடம் பெறுவதை அவதானிக்கலாம். கண்டி மன்னன் சம்பந்தமாக சிங்கள மக்களிடையே நிலவி வந்துள்ள வரலாற்றுப்பிரக்ஞை யாழ்ப்பாண அரசர்கள் பற்றி யாழ்ப்பாண மக்களிடையே நிலவிவரவில்லை.
இதற்குக் காரணம் பிரதேச முதலிகளின் நிலவுடைமை -
முக்கியத்துவமேயாகும். ஒவ்வொரு பிரதேசத்திலும் அவ்வம் முதலிகளின் குடும்பத்தை மையமாகக் கொண்டு அங்கு

Page 37
56 ( ) தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
நிலவிய சமூகக் கட்டமைப்பு ஒழுங்கமைக்கப்பெற் றிருந்தது. யாழ்பாணத்து வரலாற்று மூலகங்களும் இந்த நிலவுடைமை மேலாண்மையையே வற்புறுத்துகின்றன எனலாம்.
தமிழ்த் தேசிய வாதத்தின் எழுச்சியுடன் தமிழர் களுக்கு இங்கு ஆட்சியுரிமை வழங்கப்பட வேண்டு மென்னும் அரசியற் கோஷமெழுந்த பின்னர் தான் யாழ்ப்பாண அரசு பற்றிய வரலாற்றியல் ஆர்வம் அதிகரிக்கின்றது . 1957 இல் வெளிவந்த பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் சங்கிலி நாடகமும், அதற்கு முன்னுரையாக வந்த "இலங்கை வாழ் தமிழர் வரலாறு" எனும் கட்டுரையும் இத்துறையில் மிக முக்கியமானவை யாகும் . அதற்கு முன்னர்வந்த நூல்களில் பெரும்பாலும் இலங்கை முழுவதிலும் தமிழர்களுக்கிருந்த இடமே அழுத்தம் பெறுகின்றது
மேற்கூறிய வரலாற்று மூலநூல்களை இக்கண் ணோட்டத்தில் நோக்கும் பொழுது உண்மையில் இந்நூல்கள் யாழ்ப்பாணச் சமூக அமைப்பின் உயர்மட்டச் சமூகக் குழுமத்தினரின் மேலாண்மையை அங்கீகாரப் படுத்துவதற்கான இலக்கிய முயற்சிகள் என்றே கொள்ளப் படல் வேண்டும் . இந்த நூல்கள் இந்த மேலாண்மையை இவ்வாறு நிலைநாட்ட இன்னொரு மட்டத்தின் பல்வேறு சாதிக்குழுமங்கள் தங்கள் தங்கள் சாதிப்பெருமைகளைத் தமது சாதி வரலாறுகளில் பதித்து வைத்துள்ளனவெனக் கூறலாம் . அத்தகைய ஒரு சாதி வரலாற்று நூலே அண்மையில் வெளிவந்த "விஷ்ணு புத்திர வெடியரசன் வரலாறு ஆகும் சாதி வரலாறுகள் பல இன்னும் வாய் மொழியாகவே கையளிக்கப்படுகின்றன.
எந்த ஒரு சமூக உருவாக்கத்திலும் அதன் மேல் நிலையிலுள்ளவர்கள் தங்கள் மேலாண்மையை நியாயப் படுத்தவும் அறவலியுடையதாகக் காட்டவும் முக்கியமாக அதைப்பேணவும் முனைதல் இயல்பே. இப்பண்பு தமிழில்

யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் 57
சங்க இலக்கியத் தொகுப்பு முதல் தொழிற்பட்டு வருவதை நாம் அறிவோம் . அத்தகைய ஓர் அதிகாரப் பேணுகை முறைமை யாழ்ப்பாணத்தில் எவ்வாறு தொழிற்பட்டு வந்துள்ளது என்பதை அடுத்து நோக்குவோம்.
யாழ்ப்பாண இராச்சியம் தோன்றிய காலம் முதல், இச்சமூக உருவாக்கத்திலிடம் பெற்று வந்துள்ள முதலிமார் குடும்பங்கள் தாங்கள் அதிகாரத்துடனும் செல்வாக்குடனு மிருந்து வந்த பிரதேசங்களில் தங்களுக்கு மேலேயுள்ள அதிகார சக்திமாறியவிடத்தும் தங்கள் அதிகார செல்வாக்கு நிலமைகளைப் பேண முயன்றே வந்துள்ளனர். இந்தப் பேணுகை முயற்சிகளைத்தாம் தனித்தும் ஒருமித்தும், காலத்துக்கு காலம் மேற்கிளம்பும் சமூகக் குழுமங் களுடனும் இணைத்தும் பேணி வந்துள்ளனர்.
இந்தச் சமூக அதிகார பேணுகையை அவர்கள் சமூகக் கட்டுப்பாடு (Social Control) மூலம் நடத்தி வந்தனர். இந்த சமூகக் கட்டுப்பாடு தனியே அதிகாரபலத்தின் மூலம் நிலைநிறுத்தப்படுவதில்லை. அந்த வட்டத்தினுள் இயங்கும் சகலநிறுவனங்களும் அதற்குப் பயன்படும் என்பதுகிறாம்சி (Gramsc) வலியுறுத்தியுள்ள உண்மையாகும் , அத்தகைய ஒரு பயன்பாட்டுக்குக் கோயில்கள் பெரிதும் உதவின. (சிவத்தம்பி 1990). இது பற்றிச் சற்றுப்பின்னர் விரிவாகப் பார்ப்போம் . இங்கு யாழ்ப்பாணத்தின் மேலாண்மைச் சக்திகள், சமூக அதிகார மட்டத்தில் தங்கள் "ஆட்சி"யினை எவ்வாறு பேணிவந்துள்ளனர் என்பதைப் பார்ப்போம்.
யாழ்ப்பாண மன்னர்களின் ஆட்சியின் பொழுதே, இம்முதலிமார்கள் யாழ்ப்பாண அரசின் இறுதி அரசனின் வீழ்ச்சியிற் கணிசமான பங்கேற்றிருந்தனர் என்பது ஏற்கனவே தெரிந்ததே யாழ்ப்பாணம் குடியேற்ற நாட் டாட்சிமுறைக்கு(கொலோனியலிச முறைமைக்கு) வந்ததன் பின்னர், ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த அதிகார பேணுகைக்கான முயற்சி நடைபெற்றேவந்துள்ளது. ஒரு புறத்தில் தமக்கு மேலேயுள்ள அதிகாரத்தினருடன்

Page 38
58 தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
இணைந்து நின்றுகொண்டு மறுபுறத்தில் தமது ஆதிக்கத் தளத்தில், தம்மையறியாது அல்லது தம்வழியாகச் செல்லாது, எந்த ஒரு ஊடுருவலோ உள்ளிடோ ஏற்படு வதற்கு இடமளிக்காது தமது அதிகாரத்தளத்தை மேலாண்மையாளர் பேணிவந்துள்ளனர்.
போர்த்துக்கேய ஆட்சியின் பொழுது முதலிமாரின் உள்ளூர்ச் செல்வாக்கு போர்த்துக்கேய ஆட்சியின் வன்மைக்குத் தடையாகவிருந்த முறைமை பற்றி அபேசிங்க எடுத்துக் கூறியுள்ளார் (அபேசிங்க, 1988 24) ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தில் இது ஒரு நிர்வாகப் பிரச்சனையாகவே வளர்ந்திருந்தது என்பது சுவாட்றக்கூன் (ZWardra coon) என்னும் பொறுப்பதிகாரி 1697 இல் விட்டுச் சென்றுள்ள நினைவுக்குறிப்பின் படி மேலாண்மையிலுள்ள சாதியினர், மற்றைய சாதியினரை ஒடுக்குகின்றனர் என்றும், ஏழை மக்களைத் துன்புறுத்தி அல்லற்படுத்துகின்றனர் என்றும், அம்மக்கள் ஒல்லாந்த ஆட்சிக்கு இக்குறைபாட்டைத் தெரிவிப்பதைத் தடுக்கின்றனர் என்றும் கூறுகின்றார். (பக். 25). இதன் காரணமாகச் செல்வாக்குள்ள பதவிகளை வெள்ளாளருக்கு மாத்திரமல்லாது அவர்களுக்குச் சமமான மற்றச் சாதியினருக்குக் கொடுப்பதன் அவசியம் பற்றியும் அவர் குறிப்பிடுகிறார். இத்தகைய நியமனங்களினால் நிர்வாகப் பிரச்சினைகள் வரக்கூடுமென்றும் கூறுகின்றார்.
ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இந்த அதிகாரப் பேணுகை நடந்ததற்கான பல உதாரணங்கள் உள்ளன. ஆங்கிலேயர் நிறுவிய நிர்வாகத்தில் முக்கிய இடம் பெற்ற மேலாண்மையினர், அந்தப் பதவிகளின் அதிகார வலிமை கொண்டே, பாரம்பரியமாகத் தமக்குக் கீழ்ப்படக் கிடந்தோரை அடக்கி வந்துள்ளனர். ஆங்கில ஆட்சியின் கீழ் ஏற்பட்டு வந்த கல்வி, பண்பாட்டு மாற்றங்களுக்கு முகம் கொடுத்த ஆறுமுகநாவலர். ஆங்கிலேய ஆட்சி யினரால் ஏற்பட்ட கருத்துநிலை ஆபத்துக்களுக்கெதிரான ஒரு கொள்கையையே வகுத்து விடுகின்றார்.

யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் 59
"(நாவலரின்) கோரிக்கை ஆங்கிலக் கல்வி காரண மாகச் சைவசமய வாழ்க்கைப் பாரம்பரியத்திலிருந்து யாழ்ப்பாணமக்கள் பிழைக்கக்கூடாது என்பதுதான்
LS S SS SS SSL SS SLS S SSS S S 0 S S S S L S SE SS S0 . . . . . . . அவற்றுக்கான பதிலைத் தேட முனைவதற்கு முன்னர், நாவலர் பிரித்தானிய ஆட்சியை ஏற்றுக்கொண்டார் என்பதும், பிரித்தானிய வழிவந்த சமூக மாற்றங்களை - அவை மேற்குறிப்பிட்ட அறநெறி ஒழுக்கத் தாக்கங்களை தெளிவாக ஏற்படுத்தாதுவிடின் - அவர் அவற்றை ஏற்கத் தயங்கவில்லை என்பதும் தெட்டத் தெளிவாக விளங்குகின்றன. சமூகவியற் பரிபாசையிற் கூறுவதானால் அவர் நவீனமயப்படுத்தலை எதிர்க்க வில்லை. ஆனால் நவீனமயவாக்கம் (Modernization) பாரம் பரியத்தை உடைப்பதாக இருத்தல் கூடாது என்று கருதினார் என்பது தெரிய வருகின்றது" (சிவத்தம்பி 1979)
நாவலருக்குப் பாரம்பரியப் பேணுகை என்பது பாரம்பரியச் சமூக அமைப்பைப் பேணுவதாகவே இருந்தது என்பது அவர் எழுத்துக்களின் வழியாக நன்கு புலப்படுகின்றது . நாவலரின் கல்விக்கொள்கையும் அமைப்பும் கல்வியைக் குறிப்பிட்ட ஒரு சமூக வட்டத்துக்கு அப்பாலே கொண்டு செல்ல விடவில்லை யாவற்றினுமூடே நாவலரிடமிருந்து அறநிலைப்பட்ட ஓர் எண்ணத் துணிபு (conviction) இருந்தது . நாவலருக்குப் பின்வந்த காலத்தில், இந்தப் பேணுகை முறைமையானது அதிகாரப்பரவலைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட்ட திட்டமிடப்பட்டநடவடிக்கையாகவிருந்தது.
சேர் பொன்னம்பலம் இராமநாதன் சம்பந்தப்பட்ட மூன்று நடவடிக்கைகளை உதாரணத்துக்கு எடுத்துக் கூறலாம். 1920-30 களில் பாடசாலைகளில் சாதியமைப்பை ஊறு செய்யும் வகையில், பள்ளிப்பிள்ளைகளுக்குச் சமாசனம், சமபோசனம் வழங்கப்படுவதற்கு எதிரான

Page 39
60 தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
இயக்கம் இருந்தது. கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் சேர்க்கப்பட்ட வெள்ளாளரல்லாத மாணவர்களுடன், வெள்ளாள மாணவர்களுக்கு சம போசனம் வழங்குவதை எதிர்த்து 1930 இல் சேர். பொன். இராமநாதன் தேசாதிபதியைச் சந்தித்தார். (ஜேன்றசல்: 11).
தேசவழமைப்படி உயர்ந்த சாதியினரின் இறுதிக் கிரியைமுறைகளுக்குப் பாத்தியதையற்ற சாதியைச் சேர்ந்த ஒருவர், தமது மனைவியின் இறுதி ஊர்வலத்தைப் பறை முதலியவற்றுடன் கொண்டு சென்று, சடலத்தை எரிக்க முற்பட்ட பொழுது, அதனை எதிர்த்தவர்கள் "சட்ட விரோதமற்ற" வகையில் எதிர்த்தனர் என அவர்களுக் கெதிராகப் போடப்பெற்ற வழக்கில் அவர்கள் குற்றவாளி களாகக் காணப்பட்டனர். வழக்கு மேன்முறையீட்டுக்குச் சென்ற பொழுது இராமநாதன் எதிரிகள் தேசவழமைப்படி அந்த மரண ஊர்வலத்தை நிறுத்த உரிமையுடையவர் என்று வாதிட்டார் என்று தேசவழமை பற்றி நூல் எழுதியுள்ள சிறிராம்நாதன் எடுத்துக்கூறியுள்ளார். (பக். 19) (இராணி எதிர் அம்பலவாணர் வழக்கு.
சர்வஜனவாக்குரிமை வழங்கப்படக்கூடாது என இராமநாதன் கருதினார்.
"இராமநாதனும் மற்றும் பல பழமைபேணவாதிகளும் (செல்லத்துரை, சிறிபத்மநாதன், ஆர் தம்பிமுத்து இதற்கு புறநடையானவர்கள்) வெள்ளாளரல்லாதசாதியினருக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை அளிப்பதுகும்பலாட்சி(Mobrule) க்கு இடம் கொடுக்கும் ஒரு பாரிய பிழையென்று நம்பினர், வாதிட்டனர். சிறப்பாக இராமநாதனோ, அவ்வாறு வாக்குரிமை வழங்குவது இந்து வாழ்க்கை முறைக்குப் பழிகேடு விளைவிப்பது என்று கருதினார்." (ஜேன்றசல் 16)
இத்தகைய அதிகாரப் பேணுகை முறைமை நடந்த அதே வேளையில், அந்த அதிகாரப் பேணுகையை
எதிர்த்துச் சமூக சமத்துவக் கருத்துக்களை ஆதரித்தவர்

யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் 61
தளும் யாழ்ப்பாணத்திலே இருந்து வந்துள்ளனர். கல்வி வசதி விஸ்தரிப்பில், இந்து போட் தலைவர் இராச ரத்தினத்தின் பங்கு மிகக் கணிசமானதாகும் . யாழ்ப் பாணத்தில் தோன்றிய வாலிப காங்கிரஸ், சமத்துவ அடிப்படையிலான ஒரு சமூக மாற்றத்துக்குப் போரா டியது. (கதிர்காமர்-1980).
இந்த இருகிளைப்பாடு (பழைமை பேண்வாதமும், மாற்றத்துக்கான ஆதரவும்) யாழ்ப்பாணச் சமூகத்தின் கருத்துநிலைத்தளத்திலும் (ideological bases) நன்கு தெரி கின்றது . போர்த்துக்கேயர். ஒல்லாந்தர் காலங்களிலும் சமூக மாற்ற நடைமுறைகள் காணப்படுவதை நிர்வாக ஏடுகள் குறிப்பிடுகின்றன. (கவாட்றக்கூடின் 29). யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பின் இயல்பும் (சூத்திர மேலாண்மை) தென்இந்தியா மட்டக்களப்புச் சமூகத் தினிலே காணப்படுவதுபோன்ற நன்கு வேரூன்றிய ஒரு நிலவுடைமை இல்லாமையும் இந்த அசைவியக்கத்துக்கு இடம் கொடுத்தன எனச் சிந்திக்க இடமுண்டு.
அடுத்து யாழ்ப்பாணச் சமூக அமைப்பின் கருத்துநிலை அடிப்படைகளை நோக்குவோம்.

Page 40
V
இச்சமூக அமைப்பின் பண்பாடும் கருத்து நிலையும்
யாழ்ப்பாணச் சமூக முறைமையின் இயல்புகள் தன்மைகள்பற்றி ஆராயும் நாம், அச் சமூகமுறைமையின் தொடர்ச்சிக்கான காரணிகள் பற்றிச் சிந்திக்க வேண்டுவது அவசியமாகும்.
ஒரு சமூக முறைமையின் தொடர்ச்சிக்கு அதன் தனித்துவம் பற்றியும், அந்தத் தனித்துவத்தின் சிறப்புக்கள் பற்றியும், அதனைப் பின்பற்றுவோரிடத்துக் காணப்படும் பிரக்ஞை (Consciousness) முக்கியமானதாகும் . அந்தப் பிரக்ஞை அதன் பண்பாடுபற்றிய பிரக்ஞையாகவும் அந்தப் பண்பாட்டினது பெருமைகள் பற்றிய பிரக்ஞையாகவும் தொழிற்படும். அதாவது "யாழ்ப்பாணச்சமூகம்" என்பதன் தொடர்ச்சி, அந்தச் சமூகத்தின் பண்பாடு பற்றிய பிரக்ஞையினதும், அப்பண்பாட்டின் பெறுமானங்களாகக் கொள்ளப்படுவன பற்றிய பிரக்ஞையினதும் வலிமை யிலேயே தங்கியுள்ளது.
இத்தகைய ஒரு சிந்தனை நம்மைக் "கருத்துநிலை" (deology) பற்றியும் பண்பாடு (Culture) பற்றியும் இவ் விரண்டுக்குமுள்ள உறவு பற்றியும், எண்ணக்கரு மட்டத்திலும், பிண்டப்பிரமாணமாக யாழ்ப்பாண மட்டத்திலும் வைத்து விளங்கிக் கொள்வதற்கான ஒரு தேவையை ஏற்படுத்துகின்றது. (சிவத்தம்பி: 1984).
கருத்து நிலை என்பது பற்றிய பின்வரும் விளக்கத்தினை நோக்குவோம்.

யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் 63
"சமூக ஊடாட்டம் வளரத் தொடங்க (அந்த ஊடாட்டத்தில் ஈடுபடும்) மனிதர்கள், உலகம் பற்றியும், தமது சொந்த சமூக வாழ்க்கை பற்றியும், தெய்வம் பற்றியும் சொத்து, அறம், நீதி ஆகியன பற்றியும் பொதுவான எண்ணக்கருக்களையும் நோக்குக்களையும் உண்டாக்கிக் கொள்கின்றனர். இத்தகைய சிந்தனை வழியாக சமூகம் பற்றியும், அரசியல், சட்டம், சமயம், கலை, தத்துவம் பற்றியும் கருத்துப்பிரமாணமான நோக்கு வளரத் தொடங்குகின்றது. அந்தச் சிந்தனை நோக்கே கருத்துநிலை எனப்படும்" (ஜேம்ஸ் கிளக்மன்).
மார்க்ஸியச் சிந்தனைப் பாரம்பரியத்தில் புதிய பரிமாணங்களை ஏற்படுத்திய அல்தூஸர் "கருத்துநிலை என்பது (தனக்குரிய தர்க்கப்பாட்டினையும் இறுக்கத்தை யும் கொண்ட) ஒர் அமைப்பு முறையாகும். இந்த அமைப்பு (System) சில குறியீடுகளைக் கொண்டது (படிமங்கள், ஐதீகங்கள், கருத்துக்கள், எண்ணக்கருத்துக்கள் என தேவைக்கும் இடத்துக்கும் ஏற்பவருவன) இதற்குக் குறிப்பிட்ட அந்தச் சமூகத்திலே வரலாற்றுநிலைப்பட்டஒர் இருப்பும் (Existence) ஒரு கடமைப்பங்கும் உண்டு. சமூகங் களின் வரலாற்றுச் சீவியத்துக்கு இந்தக்கட்டமைப்பு அவசியமானதாகும்" என்று கூறுவர். மேலும் எந்த ஒரு சமூகத்திலும் மனிதர்கள், தங்கள் சீவியத்தின் தேவை களுக்கியையத் தம்மை உருவாக்கிக் கொள்வதற்கும், மாற்றிக்கொள்வதற்கும் கருத்துநிலையானது (அது வெகு சனகுறியீடுகளின் ஒர் அமைப்பு என்ற முறையில்) முக்கியமானது என அவர் கூறுவர்.
"பண்பாடு" (culture) என்பது மனித சமூகத்தின் குறியீட்டு அமிசங்கள் பற்றியதும், அச்சமூகம் கற்றறிந்து கொள்ளும் அமிசங்கள் பற்றியதுமாகும் கருத்துநிலை என்பது (இதனால்) பண்பாட்டினுள்ளிருந்து" மேற் கிளம்புவதாகவேயிருக்கும் . அதாவது எந்த ஒரு கருத்து நிலையும், தனது பண்பாட்டிடுத்தக்கரடுவத்வே

Page 41
64 தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
இருக்கும் . ஆனால் ஒன்று, அவ்வாறு எடுத்துக்காட்டும் கருத்து நிலையானது. அப்பண்பாட்டினுள் இடம்பெறும் சகல நடைமுறைகளையும் ஒருங்கு திரட்டிப் பிரதி பலிக்காது . அந்தப் பண்பாட்டினுள் மேலாதிக்கம் செலுத்தும் குழுமத்தினது கருத்துக்களின் பிரிவு ஆகவே, இருக்கும் . எனவே ஒரு சமூகத்தின் கருத்துநிலை என்பது அச்சமூகத்தின் பிரதான சக்திகளினை எடுத்துக்காட்டு வதாகவே இருக்கும்.
இவ்வேளையில் நாம் இன்னுமொரு விடயத்தையும் மனத்திருத்திக் கொள்ளல் வேண்டும் . இந்தக் கருத்து நிலையினில், சமூக மேலாண்மையுள்ள சக்திகளின் மேலாதிக்கம் (Hegemony) காணப்படும் . அதாவது அந்தச் சமூகத்திலுள்ள மேலாதிக்கமான சிந்தனைப் போக்குக்கு அங்கீகாரம் வழங்குவதாக இந்தக் கருத்து நிலை அமையும். அன்ரோனியோ கிறாம்ஸ்சியின் இந்த மேலாண்மைக் கொள்கை மிக முக்கியமான ஒன்றாகும். குறிப்பிட்ட சமூகத்தின் மேலாண்மைக்குழு தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தி அதனை இயல்பான, ஏற்புடைமையுள்ள ஒன்றாக ஆக்குவதற்குப் பண்பாட்டின் பல்வேறு அமிசங் களைப் பயன்படுத்தும் . பாடசாலைகள், ஆலயங்கள், புதினப்பத்திரிகைகள், கட்சிகள் எனப்பல இப்பணிக்குப் பயன்படும்.
இந்த அடிப்படையிலே பார்க்கும் பொழுது, யாழ்ப்பாணச் சமூகத்தின் பிரதான கருத்து நிலை யாது என்று இனங்காணுவதும் இந்தக் கருத்து நிலை எவ்வாறு அந்தச் சமூகத்தின் பிரதான மேலாதிக்கச் சக்திகளின் தேவையாக அமைகின்றதுஎன்பதையும், அதன் கருவியாகப் பயன்படுகின்றதென்பதையும் கண்டறிந்து கொள்ளல் அவசியமாகும்.
யாழ்ப்பாணச் சமூகத்தின் பிரதான கருத்துநிலை
யானது அந்தச் சமூகத்தின் அதிகாரபடிநிலைத்தன்மையை (Hierarchical character) நியாயப்படுத்துவதாக அமைவது

யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் 65
அவசியமாகும். "அதிகாரப்படிநிலை" என்பதுமதஞ்சார்ந்த ஒரு கருத்தாகும் . அந்த அளவில், அந்த அதிகாரப்படி நிலையை எற்றுக்கொள்ளும் மதம் முக்கிய இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகின்றது . இவ்வாறு சிந்திக்கும் பொழுது, யாழ்ப்பாணத்தின் ஒரு குறிப்பிட்ட மட்ட சமூக அங்கீகாரத்துடனும் எடுத்துப் பேசப்பெறும் "சைவமும் தமிழும்" என்ற கருத்து நிலை முக்கியத்துவம் பெறு கின்றது.
அதே வேளையில், யாழ்ப்பாணச்சமூகத்தின் அசை வியக்கத்தினைச் சுட்டுவதும் "சைவமும் தமிழும்" என்ற கருத்து நிலைப்பாட்டின் மறுபுறத்தைக் காட்டுவதாகவும் உள்ள ஒரு கருத்துநிலையும் ஒன்றுண்டு. அது யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசினால் முனைப்புற எடுத்துக்கூறப் பட்டதான தராண்மைவாதச் சீர்திருத்த கோட்பாடாகும். இந்த இரண்டு கருத்து நிலைகளும் ஒன்றுக்கொன்று முரணானவையாகும். ஆனால் இவை யாழ்ப்பாணச் சமூகப் பிரக்ஞையின் இருவேறு பிரக்ஞை மட்டங்களைக் (Levels of Conssiousness) குறிப்பவையாகவும் கொள்ளப்படலாம்.
சைவத்தமிழ்க்கருத்துநிலை என்பது, யாழ்ப்பாணத் தின் பிரதான மதமரபினையும் மொழிப்பண்பாட்டையும் இணைத்து நோக்குகின்ற ஓர் "உலக நோக்காகும்" இதன் படிக்குச் சைவமும் தமிழும் ஒன்றிலிருந்து மற்றது நீக்கப்படமுடியாததாய், ஒன்று மற்றதில்லாமல் பூரணத் துவம் அடையமுடியாததாய் இருக்கும். ஒரு மதபண்பாட்டு இணைவு நிலையாகும் . இந்த நோக்கு சைவத்தினதும், தமிழினதும் முழு வரலாற்றையும் உள்ளடக்கியதாகும் இந்நோக்கின் உள்ளர்த்தங்கள் மிக ஆழமானவை.
இதன்படிக்குத் தமிழ் மனிதன், அவன் மொழி, அதன் பண்பாடு ஆகியவற்றின் உருவாக்கத்தில் வேறு எந்த மதத்துக்கும் இடமில்லை எனும் எண்ணத்துணிபு முன்வைக்கப்படுகின்றது. சமணம், ஆசீவகம், பெளத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களின் தமிழ்சார்பங்

Page 42
66 () தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
களிப்புக்களை இக்கருத்துநிலை முற்றுமுழுதாக மறு தலிக்கின்றது . (இந்த உட்கிடக்கையர் "பல்வேறு மதத் தினரின் தமிழ்த் தொண்டு" எனப்பெறும் கருது கோளிலே காணலாம். இதன்படிக்குச் சமணம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியன தமிழுக்கு ஆற்றிய தொண்டு பற்றிப் பேசலாம் "சைவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டு" என்று பேசப் படுவதில்லை.)
"சைவமும் தமிழும்" என்ற இக்கருத்துநிலை, வைணவத்தைத்தானும் உள்வாங்குவது என்று கூற முடியாது. அத்துடன் யாழ்ப்பாணத்துமக்களின் அன்றாட மதவாழ்க்கையிற் காணப்பெறும், சாஸ்திர அங்கீகாரமற்ற வழிபாட்டு முறைமைகளாவன குளுத்தி, மடை போன்ற வற்றையும் மறுதலிப்பதாகவேயுள்ளது. இக்கருத்துநிலை, சைவசித்தாந்தத்தினையே தமிழர் வாழ்க்கையின் மெய்யியல் தளமாகக் கொள்கின்றது . இங்கு பேசப் பெறும் சைவம், காஸ்மீர சைவம், வீரசைவம் ஆகியனவற்றைக் குறிப் பிடாது, தேவார திருவாசகங்களிலும் பண்டார சாஸ்திரங்களிலும் எடுத்துக் கூறப்படும் சைவத்தினையே உண்மையான சைவம் எனக் கொள்வதாகும். இந்தக் கருத்து நிலையினை, இது இன்று எடுத்து பேசப்பெறும் நிலையில், உருவாக்கியவர் ஆறுமுகநாவலர் (1822 - 1879) அவர் களாவார். அவர் இதனை ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலிலேயே உருவாக்கினார் என்பது எமக்குத் தெரிந்ததே, கிறிஸ்தவத் தேவ ஊழியப்பணியினரின் செயற்பாடு களினால், யாழ்ப்பாணச்சமூகத்தின் உயர் மட்டத்தினர் மதம்மாறும் நிலையை எதிர்ப்பதற்காக அவர் இக்கோட் பாட்டினை உருவாக்கினார். இதனால் நாவலரின் எதிர்ப்பு, புரட்டஸ்தாந்தக் கிறித்தவத்தையே முக்கியமாகப் பாதித்தது.
தமிழரிடையே பிற மத பண்பாட்டுத் தாக்கங்கள் முன்னர் வந்த வேளைகளிலும் இத்தகைய ஒரு சைவ - தமிழ் இணைப்புப் பேசப்பட்டுள்ளது உண்மையாகும்.

யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் 67
திருஞானசம்பந்தரிலும், அருணகிரியாரிலும் இக்கருது கோளைக் காணலாம் . ஆனால் யாழ்ப்பாண நிலையில் இது உருவாக்கப் பெற்று, வியாக்கியானஞ் செய்யப்படும் பொழுது இது ஒரு புறத்தில் பிராமணர்களின் இந்து மத மேலாண்மை நிலையினை மறுதலிப்பதாகவும் (சைவக் குருக்கள்மாருக்கு முக்கியத்துவம்) மறு புறத்தில் வேளாள மேலாண்மையை நியாயப்படுத்துவதாகவும் அமைகின்றது. சத் - குத்திரக் கோட்பாடு இதனடியாகவே வருகின்றது. மேலும், சைவசித்தாந்தம் படிநிலைப்பட்ட அமைப்பினை ஏற்றுக்கொள்வதாகும். அது தனது சரியை, கிரியை, ஞானம், யோகம் என்னும் கோட்பாடு மூலம் ஆன்மாக்களின் முதிர்ச்சி நிலையில் வேறுபாடு காண்பது மாத்திரமல்லாமல், முத்தி நிலையில் கூட இந்தப் படிநிலையை வற்புறுத்தும் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என முத்திநிலையையே அது வகைப்படுத்தும். இந்த உலகத்திலே மாத்திரமல்லாமல் அடுத்த உலகத்திலும் அது சமத்துவத்தை மறுதலிக்கும். (சிவத்தம்பி. 1983).
சைவமும் தமிழும் என்ற கோட்பாட்டின் சக அரசியல் உட்கிடக்கைகள் மிகமிக முக்கியமானவையாகும் . மொழி வழிப் பண்பாடு வற்புறுத்தும் தமிழ் ஒருமையை இது மறுதலிக்கின்றது. சேர் பொன் இராமநாதன் அவர்களை இந்தக் கருத்துநிலையின் அரசியல் பண்பாட்டுச் சின்ன மாகப் போற்றும் மரபுண்டு . அவரது சகோதரரான சேர் பொன் அருணாசலத்துக்கு அந்த இடம் வழங்கப்படுவ தில்லை.
சைவமும் - தமிழும் இணைத்து நோக்கப்படுதற்கான வரலாற்றுப் பின்புலத்தினைப் புரிந்துகொள்வது அவசிய மாகும். இக் கருத்துநிலையினை மேற்கொள்பவர்கள் ஒன்று மற்றது இல்லாது தொழிற்படாது என்ற கருத்தினையே வலியுறுத்துவர் . யாழ்ப்பாணப் பண்பாட்டினை இந்தக் கருத்துநிலையின் அடிப்படையில் விளக்கும் பொழுது "கந்தபுராணக் கலாசாரம்" என்ற கருதுகோள் முக்கியமா கின்றது. இந்தக் கருத்து நிலை தமிழின் இலக்கிய

Page 43
68 ( ) தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
உருவாக்கத்தையும் இந்தக்கண்ணோட்டத்திலேயே பார்க் கின்றது.
யாழ்ப்பாணச் சமூகத்தின் பாரம்பரிய அமைப் பினைப் பேணுவதற்கான புலமை நோக்கின் வெளிப் பாடாகச் - சைவமும் தமிழும்" என்ற இக்கருத்து நிலையைக் கொள்வோமானால், இதன் மறுபுறத்தில் இத்தகைய சமூக பழமை பேண் வாதத்தினூடேயும் தொழிற்பட்டு வரும் . தவிர்க்கமுடியாத, அசைவியக்கத்தினை அவதானிக்கலாம். அதற்கான அடிப்படை தாராண்மை வாதத்தினை அடிப்படையாகக் கொண்ட சமூகச் சீர்திருத்தம் பற்றிய கருத்து நிலையாகும். 1920 களின் பிற்கூறுமுதல் 1930கள் வரை முக்கிய இடம் பெற்ற வாலிபர் காங்கிரஸ், "தேசிய வாதம்" "சமூக சமத்துவம்" எனும் எடுகோள்களின் அடிப்படையில் முன்வைத்த இந்த அரசியல்-சமூகக் கருத்துநிலை கடந்த நாற்பதுகால யாழ்ப்பாண வரலாற்றில் ஏற்பட்டு வந்துள்ள சமூகச் சீர்திருத்தங்களுக்குத் தளமாக அமைந்து வந்துள்ளது . சாதி ஒடுக்குமுறையொழிப்பு. தீண்டாமை எதிர்ப்பு ஆகிய துறைகளில் இக்கருத்து நிலையினர் ஆற்றிய பணிகள் மிக முக்கியமானவை யாகும் . இக்கருத்துநிலை வளர்ச்சியின் வரலாற்றில் எஸ் ஹண்டி பேரின்பநாயகம், ஒறேற்றர் சுப்பிரமணியம். திரு ந சபாரத்தினம் ஆகியோர் மிக முக்கியமானவர்
56 Tf T6ls.
சைவத்தமிழ்க்கருத்து நிலையையும் தாராண்மை வாதச் சமூக சீர்திருத்தக் கருத்து நிலையையும் எவ்வாறு ஒருங்குசேர வைத்து நோக்குவது என்பதிற் சிக்கற்பாடுகள் உள்ளன. இந்த இரண்டு கருத்து நிலைகளையும் ஒன்றிணைத்து நோக்கமுனையும்பொழுது யாழ்ப்பாணச் சமூகத்தின் அடிப்படையான முரண்பாடுகள் வெளிப்படத் தொடங்கும். இதனாலேயே, இன்று, மத்தியதர, தொழில் (p60p aidiósgsgastri (Middle class professional LD55ufa), "சமூக முன்னேற்றம்", "சமூக ஒருமைப்பாடு" பற்றிய விடயங்கள் பேசப்படும்பொழுது சாதியமைப்பின்

யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் 69
முக்கியத்துவத்தைக் குறைத்து நோக்கும் முறைமை ஒன்று வளர்ந்துள்ளது. தொழில் முறைப்பட்ட மத்திய தர மட்டத்திலே இந்நிலை (அதாவது சாதியமைப்பு வன்மை யான ஒரு சமூக பொருளாதார சக்தியாகத் தொழிற்படும் தன்மை) மிகக் குறைவே ஆனால் கிராம் மட்டங்களிலும், மரபு நிலைத் தொழிற்பாடு மட்டங்களிலும், பாராம்பரிய சமூக நோக்குத் தொடர்ந்து நிலவுவதையும் வன்மை குறையாதிருப்பதையும் அவதானிக்கலாம்.
மேலும் ஒரு வகையிலும், இந்தக் கருத்துநிலைகளின் இன்றியமையா முரண்பாட்டு மோதல் தவிர்க்கப்பட்டு வருகின்றது. அதாவது இந்த இரண்டு கருத்துநிலைகளை யும் இரண்டு வேறுபட்ட பிரக்ஞை மட்டங்களுக் யனவாகக் கொள்ளும் ஒரு நிலைப்பாடு காணப்படு கின்றது. தாராண்மைவாதச் சமூக மாற்றக்கருத்துநிலை யினைப் பண்பாட்டு மட்டத்திலும் வைத்து நோக்கும் ஒரு சைவநெறியினையும் அவதானிக்கலாம். ஆனால் அண்மைக்காலத்தில் மிக முக்கியமான சமூக அரசியற் சக்தியாக மேற்கிளம்பியுள்ள இளைஞர் தீவிரவாதம் யாழ்ப்பாணச் சமூகத்தின் கருத்துநிலைப் பரிமாணத்திலே சில விஸ்தரிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது . அரசியல் நிலையில் தமிழர் கோரிக்கைகளுக்கு முன் எக்காலத்திலும் இல்லாத ஒரு முனைப்பினை வழங்கியுள்ள இவ்வாதம் , சமூக நிலையில் இரு முக்கிய செல்நெறிகளைத் தொடங்கி வைத்துள்ளது.
1. இளைஞரின் சமூகத் திறமை, வெற்றித் தொழிற்
பாடு ஆகியன பற்றிய சிந்தனை மாற்றம். (இது உயர் தொழிற் கல்விக்கானதும் பரீட்சைச் சித்திகளை உரைகல்லாகக் கொண்டதுமான ஒரு கல்வி முறையின் மேலாண்மையைச் சிதைப்பதாக அமைந்துள்ளமை),
2. பெண்கள், குறிப்பாக யுவதிகள், அரசியற்
\போட்டத்தில் ஈடுபடல்.

Page 44
70 ( ) தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
இது நடக்கும் அதே வேளையில் உயர்கல்வியில் பெண்கள் ஆண்களிலும் பார்க்க அதிக தொகையினராக ஈடுபடல். (இச்செல்நெறி குடும்பம், தாய்மை போன்ற கருத்து
லைகளில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது).
இவையிரண்டும் செயற்பாட்டு நிலைமைகளாகத் தொழிற்பாடுகளாக முனைப்புறும், இவ்வேளையில், கிறிஸ்தவத்தின் தமிழ் மயப்பாடும் துரிதப்படுத்தப் பட்டுள்ளது . இந்த நடைமுறை காரணமாகத் தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்களிற் கிறிஸ்தவரிடையே காணப் பட்டு வந்த ஒதுங்கு நிலைப்பாடு உடைத்துக்கொண்டு வருவதைக் காணலாம் . (குறிப்பாக சந்தனப் பொட் டினைப் போடுதல்). இவற்றினூடாக "தமிழ்" குறிப்பிடும், சமயங்களுக்கப்பாலான ஒரு மொழிப் பண்பாட்டை வற்புறுத்தும் தன்மையும் ஒன்று வளர்கின்றது.
ஆனால் இவை யாவும் இன்னும் சமூகச் சி ந்தனையை முற்று முழுதாகத் தம்வசப்படுத்தும் கருத்துநிலையாக்கப் படவில்லை. ஆனால் நிச்சயமாக அரசியல்-சமூக நவீனத் துவத்துக்கும் - பழைமை பேண் வாதத்துக்குமிடையிலான முரண்பாட்டுணர்வு படிப்படியாக முனைப்புப் பெறு வதை நாம் உணரக்கூடியதாக உள்ளது. இந்த முரண்பாடு பற்றிய பிரக்ஞை, அதன் இயங்கியல்தன்மை மூலம் சில அசைவியக்கங்களுக்கு இடமளித்துள்ளது. சமகால யாழ்ப் பாணச் சமூகத்தின் போக்குகளை விளங்கிக்கொள்வதற்கு அந்த அசைவியக்கங்களை அறிந்துகொள்வது அவசிய மாகின்றது.

V
யாழ்ப்பாணச் சமூகத்தின் FOSST6) அசைவியக்கங்கள் சில.
நாம் எத்துணை முயலினும் அசைவியக்கமற்ற சமூகம் (Non-dynamic Society) 6Tairugi Dasāra)LDu'a) spots இல்-பொருளேயாகும். எந்த ஒரு சமூகமும், அது உயிர்ப் புள்ளதாக இருக்கும்வரை அதனுள் ஒரு அசைவியக்கம் காணப்படுவது இயல்பே. சமூகப் பேணுகை என்பது கூட, சமூக மாற்றத்தின் பெறுபேறே, ஏற்படும் மாற்றங்களால் தோன்றும் முன்னர் நிலவாச் சூழ்நிலைகள் காரணமாக உண்டாகும் அசெளகரியங்களிலிருந்து விடுபடுவதற்கும், முந்திய செல்வாக்கு அதிகாரங்களைப் பேணுவதற்குமே சமூகப் பேணுகை நடைபெறுகின்றது.
அண்மைக் காலத்தின் நாட்டுநிலைப்பட்ட, சர்வதேச நிலைப்பட்ட காரணிகளின் தொழிற்பாடுகளினால் "சமூக மாற்றம்" நிகழ்ந்து கொண்டே வந்திருக்கின்றது. கடந்த நான்கு ஐந்து வருடங்களாக உள்ளூரில் ஏற்பட்டிருக்கும் அரசியல் கொந்தளிப்புகளினால் இந்த "மாற்ற" வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது
இங்கு இறுதியாகக் குறிப்பிட்ட மாற்றங்கள் பற்றி இங்கு விரிவாக ஆராய்வது முடியாது. ஆனால் அவற்றைக் கணக்கெடுத்துக் கொண்டு கடந்த 15 தொடக்கம் 20 வருட காலமாக ஏற்பட்டு வரும் சமூக அசைவியக்கங்களைப் பற்றிச் சிறிது நோக்குவோம் சமூக அசைவியக்கத்தின் முக்கியமான அமிசங்களில் ஒன்று சமூக ஸ்தானப் பெயர்வு அசைவு ஆகும். இது இருவகையாக நடைபெறும் .

Page 45
2 தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
1. ஒருவர் ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்குப் பெயர்தல் அன்றேல் ஒரு சமூகக் குழுமத்திலிருந்து இன்னொரு குழுமத்துக்குப் பெயர்தல். இது சிடைநிலையான (horizontal) பெயர்வசைவு ஆகும்.
2 மற்றது ஒரு குறிப்பிட்ட சமூக மட்டத்திலிருந்து (Level} இன்னொரு மட்டத்துக்குச் செல்வதாகும்
இது நிமிர் நிலை (Vertical)யானது . அது மேல் நோக்கியதாகவோ கீழ் நோக்கியதாகவோ இருக்கலாம். பொதுவான மனித இயல்பு மேனிலைப்பாட்டுக் கி ை:சைவேயாகும் யாழ்ப்பாணச்சமூகத்தில் நிகழும் மேனிலைப்பெயர்வு அசைவுகளின் தன்மைகளை (*Er- "r"::
அதற்கு முன்னர் முக்கிய குறிப்பு ஒன்றினைக் கூற வேண்டியுள்ளது . இப்பொழுது நடைபெறும் பெரு மளவிலான புலப்பெயர்வானது உண்மையிற் சில அடிப்படையான சமூகக் காரணங்களுக்காகவே நிகழ் கின்றது என்பதை மறந்து விடுதல் கூடாது. இந்த அமைப்பினுள் அவர்கள் பெறவிரும்பும் மேனிலைப் பெ:ர்வசைவினை இந்தச் சமூகத்தின் பெளதீக பிரதேசத்தில் வைத்து செய்ய முடியாதிருப்பதாலும் மேனிலைப்பெயர்வசைவினால் வரும் செளகரியங்களைத் அநுபவிக்க முடியாதிருப்பதாலும் இந்த அமைப்புக்கு வெளியே சென்று அவற்றைத் துய்ப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கையே இன்றைய அடிநிலை இடைநிலைச் சமூக பட்டத்து:இப்பெயர்வுகள் என்பதை நாம் விளங்கிக்
கெ:ாஸ் வேண்டும் புலம்பெயர்ந்த பின்னர் தமது தற்போதைய செளகரியங்களை தமக்கே அர்த்தப்படுத்திக்
கொள்வதற்காகப் புலம்பெயர்ந்துள்ள இடங்களில், தாம் வி. லத்த சமூக உண்டாட்டுச் சூழலை மீன் உரு வாக்கம் (Heproduce) செய்ய விரும்புகின்றனர். இந்த மீள் உரு:ததுக்கான பெளதீக வாய்ப்புகல்)ளப்
 
 
 
 
 
 

யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கென்னல் " 73
۔۔۔۔۔سس------ا
(பண்பாட்டு, பயன்பாட்டுப் பொருட்க35", நடவடிக்கை களை) பெறுவதற்கு நவீன தொழில்நுட்ட சாதனங்கள் உர் கின்றன. இந்த மீள் உருவாக்கத்தில் ‹፡ : முக்கிய இடம் உண்டு. ஆனால் சிக்கல்: மீள் உருவாக்கத்தை இவர்கள் リ நிலவும் கருத்துநிலை வட
நடவாக (Transplanting) அமைய இடமே இஸ்8ே ஆந்ேத
தலைமுறை அந்தப் பண்டாட்டினுள் உள்&rங்கப்படுவது தவிர்க்கப்பட முடியாததாகும். அதே:ே56ாயில் அங்கு இவர்களது சமூக அந்தஸ்து மிகக்குறைவானதாகவே இருத்தலால் இவர்கள் தனித்துப் பேணுகைக்கும் மேலாண்மை பண்பாட்டின் உள்வாங்குதலுக்குமிடையே தத்தளித்து இறுதியில் இரண்டும் கெட்டான் ஆகிய் ஒரு உடன்பாடாகவே முடியவேண்டிய நிலை (Crectization) ஏற்படலாம் .
ஆனால் இங்கு நாம் இங்குள்ள அமைப்பினுள்ளே, இந்த அமைப்பின் பண்பாட்டு எடுகோள்களை ஏற்றுக் கொண்டு, ஆனால் அதற்குள்ளே தமது மேனிலைப் பெயர்வினை உறுதிப்படுத்துகின்ற சமூக அசைவியக்கங்கள் பற்றியே நோக்குவோம்.
அண்மைக்கால யாழ்ப்பாணச் சமூக அமைப்பினுள் சமூக அசைவியக்கம் இரு முக்கிய தன்மைகளைக் கொண்ட தாகக் காணப்படுகின்றது .
1. அகப்பிரிவுகள் குறைந்த சாதிப்பெருக்குழுமத்
G5T ppb (formation of mega Castegroups) 2. சமஸ்கிருத நெறிப்பாடு (Sanskritization)
முதலாவதினை எடுத்துக் கொள்வோம். அண்மைக் காலத்தில் ஏற்பட்டு வந்துள்ள சமூக அசைவியக்கங்கள் காரணமாகவும், மேனிலைப்பெயர்வசைவு (Upward 30cial mobity) காரணமாகவும், சிறிய சாதிக்குழுக்கள் ஒழிந்து,

Page 46
74 ( ) தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
சுலபமாக இனங்கண்டறியப்படத்தக்கதாக, பெருக்குழு மங்களுள் இவை கொண்டு வரப்படுகின்றன . உதாரண மாக அகம்படியார், மடப்பள்ளி, தனக்காறர், செட்டிமார், எண்ணெய் வாணிகர் போன்ற சாதியினரும் சில பின்தங்கிய பிரதேசக்கமக்காரர்களும் இப்பொழுது படிப்படியாக "வெள்ளாளர் என்ற பெருங்குழுமத்தினுள் வந்துள்ளனர். வந்துகொண்டிருக்கின்றனர். இத்தகைய ஒரு அசைவியக்கம் முன்னரும் நிகழ்ந்துள்ளது.
கள்ளர் மறவர் கனத்த அகம்படியார் மெள்ள மெள்ள வந்து வெள்ளாளர் ஆனார்கள்"
என்ற பழமொழி இதனை உறுதிப்படுத்துகின்றது. அதே போன்று மீன்பிடித் தொழிலைப் பாரம்பரியமாகச் செய்கின்ற சாதி குழுமங்களான கரையார், திமிலர், முக்குவர் முதலானோர் கரையார் என்ற பெருங்குழுமத்தினுள் வைத்துப் பார்க்கப்படுகின்றனர். தச்சர் கொல்லர், தட்டார் ஆகிய விஸ்வகருமப் பாரம்பரியத்தினரிடையேயும் இத் தகைய ஒரு இணைவு காணப்படுகின்றது . இந்தப் பெருங்குழுமச்சாதி உருவாக்கம், கல்விவளர்ச்சி, விவாகத் தேவைகள் காரணமாக உந்தப் பெற்றதென்றே கூறல்
உண்மையில் இது சாதிக்குள் நடக்கும் வர்க்க இணைவேயாகும் (காதல் கலியாணங்களினால் ஏற்படும் சாதிகளின் இணைவின்பொழுது, அத்தம்பதியினர் இறுதியில் யாராவது ஒருவரது சாதிக்குழுமத்துடனேயே இணைவர். இந்த இணைவின் மட்டம் உத்தியோகபலம், சொத்துப் பலம் என்பவற்றினாலே தீர்மானிக்கப்படும் , மேற்குறிப்பிட்ட இந்தப் பெருங்குழுமச்சாதி உருவாக்கத் தினால், ஒவ்வொரு சாதியினதும் அசைவு வட்டம் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது.
அடுத்தது சமஸ்கிருத நெறிப்படுகையாகும். இது யாழ்ப்பாணச் சமூகத்தின் பண்பாட்டுக் கோலத்திலே

யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் ( ) 75
பெரியதொரு விஸ்தரிப்பினை ஏற்படுத்தியுள்ளது. (சிவத்தம்பி, 1989) முதலில் "சமஸ்கிருத நெறிப்படுகை" (Sanskritization) என்பது யாது என்பதனை நோக்குவோம்.
"இந்திய சூழலில் மேனிலைப்பட்ட அசை வியக்கத்திற்கு ஆளாகும் ஒருகுடும்பம் அன்றேல் குழுமம், தமது நடைமுறைகளைப் படிப்படியாக உயர் இந்துமத நெறியில் கூறுப்படுகின்ற, அதாவது சமஸ்கிருத இலக்கியங்களில் (எழுத்துக்களில்) உள்ளது என நம்பப்படுகின்ற முறைமையில் அமைத்துக் கொள்கின்றது. இப்படிச் செய்கின்ற பொழுது, தாம் இதுவரை கடைப்பிடித்து வந்தனவற்றைச் சமஸ்கிருத நிலைப்படுத்தி அல்லது சமஸ்கிருத மயப்படுத்தி அவற்றையும் உயர் மரபுக்குரியன போன்று போற்றுதல் மரபாகும்"
இந்தச் சமஸ்கிருத நெறிப்படுகை பின்வரும் முறை களிலே தொழிற்படுகின்றது.
1. வழிபாட்டிடங்களில் வழிபடப்படும் தெய்வங்கள்
மாற்றப்படுகை (உ- ம்) அண்ணமார் - பிள்ளையார் விறுமர் - பிள்ளையார் நாய்ச்சிமார் - காமாட்சி அம்மன் கண்ணகியம்மன் - ராஜராஜேஸ்வரி முனி - முனிஸ்வரர்(சிவன்) வைரவர் - ஞானவைரவர்
2. வழிபாட்டுமுறைமைகள் மாற்றப்படுகை
6. - பொங்கல் குளிர்த்தி - பொங்கல் பொங்கல் - சங்காபிஷேகம்

Page 47
76 தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கலண்டுபிடிப்பும்
3. கோயில்களின் அந்தஸ்துமாற்றப்படுகை
"விளக்கு வைத்தல்" நடந்த இடத்தில் பிராமணர் சைவக்குருக்கள் பூசை செய்தல்.
சல்காபிஷேகம் நடந்த இடத்தில் மகோற்சவம்
i. பெயர் மாற்றம், காரைநகர் சிவன் கோவில்,
ஈழத்துச் சிதம்பரம் எனப்பட்டமை
v தேர்த் திருவிழா அன்று (நல்லூரில் நடப்பது
போன்று; பச்சை சார்த்தல்.
V. பெருங்கோயில்களோடு சம்பந்தப்படல் (அக்கோயில்களுக்கான விரதம் பிடித்தல் முதலியன).
vi, பஞ்சாங்கத்திற் கோயிலின் பெயர் இடம்பெறல்.
திருப்பணி செய்யப்பெற்றுக் கும்பாபிஷேகம் செய்யப்பெறுதலும். கும்பாபிஷேக மலர் வெளியிடப் படுதலும் முக்கிய நடவடிக்கைகளாகியுள்ளன. கோயில் நிலைப்பட்ட நடவடிக்கைகளுக்குக் காரணம், கோயில் ஈடுபாடு வழங்கும் சமூக உயர் அந்தஸ்து ஆகும். இக்கட்டத்திலே இரு முக்கிய சமூக வரலாற்று உண்மை களைப் பதிவு செய்தல் அவசியமாகும். ஆலயப்பிரவேசம் முக்கியமான கோயில்களிலேயே நடைபெற்றது. தாழ்த்தப் பட்ட மக்கள் உட்செல்ல அனுமதிக்கப்படாத கோயில்கள் இப்பொழுதும் உள்ளன.
இரண்டாவது ஆலயப்பிரவேசம் நடந்த கோயில் களின் நிர்வாகத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. அந்தக் கோயிலின் தானிசர் குழுக்களில் மாற்றங்கள் ஏற்படவில்லையெனலாம். அதாவது ஆலயப் பிரவேசத்

யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் 77
தினாற் கோவில் நிர்வாகமுறைமை மாறவில்லை. இதனால் ஏற்கனவேயுள்ள கோயில்களில் நிர்வாகப்பங்கு அற்றவர் களாகவிருந்தோர், தமக்குத்தமக்கென கோயில்களைவளத் தெடுக்கத் தொடங்கினர். இது சாதி மட்டத்திலும், "பகுதி" மட்டத்திலும் நிகழத்தொடங்கிற்று. இந்த இரு அசை வியக்கங்கள் காரணமாக இல் சமூகத்தினர் பண்பாட்டுச் சீவிய வட்டம் விஸ்தரிக்கப்படலாயிற்று . அத்துடன் இவ்விஸ்தரிப்புக் கோயிற்கலைகளிலும், கோயில்களைப் பயில்வோர்கள் நிலையிலும் (குறிப்பாக இசைக்கலை ஞர்கள் நிலையில்) முக்கியமான மாற்றங்கள் ஏற்படலாயின. இவற்றால் பண்பாட்டு பங்கெடுப்பு (Cultural Participation) அதிகரிக்கலாயிற்று அரசியல் நிலைமைகள் காரணமாக வளரும் பண்பாட்டுப் பிரக்ஞை இந்த வளர்ச்சியின் காரணமாக ஒரு புதிய பரிமாணத்தைப் பெறத் தொடங்கிற்று.
கிறிஸ்தவ ஆலயங்களும் இந்தப் பண்பாட்டுப் பங்கெடுப்பிற்பங்குபற்றின. சந்தனப்பொட்டுப் போடுதல், நாதஸ்வரம் தவில்வாசிப்பித்தல், பட்டுவேட்டி கட்டுதுல் போன்ற பல நடவடிக்கைகளை இங்கு குறிப்பிடலாம். யாழ்ப்பாணச் சமூகத்தின் சமகால அசைவியக்கங்களின் பிரதானமாக எடுத்துக்கூறப்பட வேண்டுவது, இளைஞர் தீவிரவாதப்போக்கினாலும், போராட்டத்தினாலும் ஏற் பட்டுள்ள "நியம' மாற்றங்களாகும் . நியமங்கள் (Norms) என்பவை ஒவ்வொரு பண்பாட்டிலும் அப்பண்பாட்டு வட்டத்தினுள் வரும் நடத்தை முறைகளை (Behavioural Patterns) நிர்ணயிப்பனவாகும் தீவிரவாதப் போராட் டத்தின் காரரணமாகப் பொது நடவடிக்கைகளுக்கான முன்னுரிமை முறையிற் பல மாற்றங்கள் (Priorities) ஏற்பட்டுள்ளன. இவை புதிய நியமங்களைத் (Norms) தோற்றுவிக்கின்றன. இந்த நியமங்கள் காரணமாகப் புதிய முன்னுரிமைகள் வந்துள்ளன. (மாவீரர் குடும்பங்களுக்கு முக்கியத்துவம்) இவை அடிநிலை மட்டங்களிற் சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றன .

Page 48
78 ( ) தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
மேற்கூறிய அசைவியக்கங்கள் காரணமாக சமூக நடைமுறைச்செயல்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன . முன்னர் நிலவிய பொருளாதாரக் கட்டமைப்பும் இப்பொழுது படிப்படியாக மாறி வருகின்றது. பாரம்பரிய கைத்தொழில்களைப் பாரம்பரிய இடங்களிற் செய்யமுடியாமை, அகதிமுகாம்களில் நீண்ட காலம் இருக்க வேண்டிய தேவை . எதிர்பாராத வகையில் ஏற்படும் நிலப்பகிர்வு ஆகியன பல பொருளாதார முயற்சிகளையும், சமூகக் கண்ணோட்டங்களையும் மாற்றி வருகின்றன.
யாழ்ப்பாணச் சமூக அமைப்பின் மாற்றச் செல் நெறிகளுள் மிகமுக்கியமானதாக எடுத்துக் கூறப்பட வேண்டியது "இரண்டாம் நிலைத் தொழினுட்பத்தின்" (Secondary Technology) Feups, scosids60LDL List(5lb - urb பாணப் பாரம்பரியச் சமூக அமைப்புக்குப் புறம்பான, நவீனமயவாக்க நெறிப்பட்ட ஆனால் கீழ்நிலைப்பட்ட தொழில்நுட்பங்கள் இச்சமூகத்தினுள் வந்த பொழுது, அவற்றை மேற்கொண்டோர் அடிநிலைகளைச் சார்ந்தாரே. உதாரணமாக மோட்டார் கார்ப் பாவனை வந்ததும் அதுவழியாக வந்த மோட்டார் திருத்தவேலைகள் படிப் படியாக அடிநிலைப்பட்டாராலேயே மேற்கொள்ளப் பட்டன . குறிப்பாக, 1960 களில் நடைமுறைப்படுத்தப் பட்ட இறக்குமதித் தவிர்ப்புப் பொருளாதார முறை மையின் பொழுது, இந்த இரண்டாம் நிலைத் தொழில்நுட்பம் முன்னிலைக்கு வந்தது. கராஜ்கள், வெல்டிங் நிலையங்கள் ஆகியன முக்கியமாகின. இவைசிறு தொழிற்சாலைகளாகவே இயங்கின. இந்தத்துறையில் ஈடுபட்டோர் அடி நிலைப்பட்டோரே.
இக்காலத்தில் நடந்தேறிய விவசாய நவீனமாக்கமும் இந்த இரண்டாம் நிலைத் தொழில்நுட்பத்தை ஊக்கிற்று. உழவு இயந்திரங்களின் வருகை அது தொடர்பான ஒட்டுதல், திருத்தல் ஆகியன ஏற்படுத்திய தொழில்நுட்ப

யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் 79
வாய்ப்புகளும் இவர்களிடத்தேயே சென்றன . மிகவிரை வில் இவை அதிக உழைப்பைத் தரும் தொழில்களாயின. இத் தொழில் முயற்சிகளால் கீழ்நிலைச் சாதியினரின் பொருளாதார பலம் அதிகரித்தது. அத்துடன் சாதிபற்றிய சில சமூக ஒதுக்கு நிலைகள் உடையத் தொடங்கின. இந்தச் செல்நெறிகாரணமாக முன்பில்லாத செல்வந்தர் குழாம் ஒன்று யாழ்ப்பாணச் சமூகத்தில் உலாவத் தொடங்கிற்று.
அண்மைக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டு வரும் சமூக ஏற்புடைமை உணர்வுக்கு அத்திவாரமாக அமைந்தது . 1930, 1940 களில் இட்து சாரி இயக்கம் தொடக்கி வைத்த சமூக சமத்துவப் போராட்டங்களே சமாசன, சமபோசனப் போராட்டம், (பஸ் முதல் பள்ளிக்கூடம் வரை சமாசனப் போராட்டம் பரவிற்று) தீண்டாமை எதிர்ப்பியக்கம் ஆகியன இப்போராட்டத்தின் முக்கிய மைல்கற்களாகும் . இந்த வரலாற்றில் பவுல், செல்லத்துரை, சுப்பிரமணியம், தர்மகுலசிங்கம், நாக ரத்தினம், டானியல் முதலியோர் முக்கிய இடம் பெறுவர்.
இந்த வரலாறு பற்றி இன்னும் எந்தத் தொழில்முறை ஆராய்ச்சியாளரும் கவனம் செலுத்தவில்லை.

Page 49
நிறைவுரை
. இதுவரை யாழ்ப்பாணச் சமூக அமைப்பின் கட்டமைப்பு தன்மைகளையும், அதன் உருவாக்க முறைமையினையும் பிரதானமாகத் தேசவழமைச் சட்டம் மூலம் நோக்கி, அதன் மேல், மேலாண்மைச்சக்திகளின் பேணுகைத் தொழிற்பாடுகளையும், அதேவேளையில் நடைபெறும் அசைவியக்கங்களையும் அவதானித்தோம் .
1706 இல் உருவாக்கப்பெற்று, 1806இல் பிரித்தானிய ஆட்சியினால் பூரணமான ஒரு சட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொழுது அது சமூக முழுமையையும் பிரதிபலிக்கும் ஒரு சட்டக்கோவையாகவே (Code) இருந்தது . ஆனால் இன்றோ அதன் சமூகச் சமவீன உள்ளிடுகள் அகற்றப்பட்டு வெறுமனே, ஒரு சொத்துரிமைச் சட்டமாகவே, அதுவும் பல்வேறு வரையறைகளைக் கொண்ட ஒரு சட்டமாகவே கொள்ளப்படுகின்றது.
இந்த மாற்றத்தினூடே இச்சமூகத்தில் நடந்த அசைவியக்கங்கள் காரணமாகவே இம்மாற்றம் ஏற் பட்டது . இந்த அசைவியக்கத்தினதும் சமூகப் பேணுகை யினதும் தன்மைகள் இங்கு தொட்டுக் காட்டப்பட்டன யல்லாது, வரலாற்றுப் பின்புலத்தில் வைத்து விளக்கப்பெறவில்லை. அவ்வாறு செய்யும் பொழுது யாழ்ப்பாணத்தின் சமூக வரலாறு எழுதப்படும் யாழ்ப் பாணத்தில் வணிகமும், கைத்தொழில் முதலீடும் செயற் படாத காரணத்தினால் ஏற்பட்ட பலாபலன்கள் பல அவற்றுள் முக்கியமானது கல்வி, ஒரு முக்கிய தொழில் Gyg)60T úL (Entrepenurial Activity) gágbpy 956öTrreü 6GJ. சமயத்தில் பாரம்பரியமும் நவீனமயமாக்க்ழும் நமது

யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் 8.
சமூகத்திலே தொழிற்படுவதைக் காணலாம் . இந்த இணைவின், இணைவின்மையின் வரலாற்றுக்குள்ளேயே
இன்றைய இனப்போராட்டமும் உள்ளது.
இது கால வரை நடைமுறையிலில்லாத அரசியல் உரிமைகளுக்காகப் போராடும் பொழுது, அந்த அரசியல் உரிமைகள் கிடைக்கும் பொழுது அவற்றின் ஜனநாயக ரீதியான, பகிர்வுக்கு உத்தரவாதம் செய்யப்படுவதற்குச் சமூக மாற்றம் மிக மிக அவசியம். K.
படிநிலை அதிகாரத்துக்குப் பழகிப்போன, அதனைப் பேணுவதற்குப் பல்வேறு முயற்சிகளை எடுத்த எடுக்கின்ற சமூகம் வரவிருக்கும் அரசியலுரிமைகளச் சகலருடனும் பகிர்ந்து கொள்வதற்கான சமூகக் கண்ணோட்டத்தை, நிலைப்பாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும். அரசியல் மாற்றத்துக்கான போராட்டங்கள் நடைபெறுகின்ற பொழுது அந்தப் போராட்டத்தின் பெறுபேறுகளைப் பேணுவதற்கானச் சமூகக் கட்டமைப்பு மாற்றங்கள் அவசியம்.
இதனை நான் எடுத்துக்கூறிய முறையில் தந்த தரவுகளினால் யார் மனதையாவது சஞ்சலப்படுத்தி யிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும் என்னைப் பேச
அழைத்த செல்வநாயகம் நினைவுப் பேருரைக்குழு வினரையும் மன்னிக்கவும்.
பேசாப்பொருளைப் பேச நான் துணிந்தேன் கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்; மண்மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புல்பூண்டு, மரங்கள் யாவுமென் வி:யல் இடுப்பை நீர்ந்ததே,

Page 50
82 ( ) தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
இன்ப முற் றன்புடன் இணங்கி வாழ்ந் திடவே செய்தல் வேண்டும், தேவதேவா! ஞானா காசத்து நடுவே நின்று நான் “பூ மண்ட லத்தில் அன்பும் பொறையும் விளங்குக, துன்பமும், மிடிமையும், நோவும்
சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம் இன்புற்று வாழ்க" என்பேன்! இதனை நீ திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி,
"அங்ங்னே யாகுக" என்பாய் ஜயனே!

உசாத்துணைகள்
R.M. MacIver and Charle H. Page - Society, London. 1961.
Jane Russel - Communal Politics under the Donoughmor Constitution (1931-1947) Colombo, 1982.
Barry Hindess and Paul. Q. Hirst-precapitalist modes of production. London, 1975.
N. Balakrishnan - A Note on the Peasanty - IDS/SSA Seminar 1983.
B. Pfaffenberger-Caste in Tamil Culture-Vikas New Delhi-1982.
Kenneth David-Spatial Organization and Normative Schemes in Jaffna. Northern Sri Lanka. Modern Ceylon Studies Vol 4-No. 182. 1973.
Hierarchy and Equivalense in Ceylon-Normative Code as Mediater in Kenneth David (ed), The New wind: Changing lodentities in South Asia-Hagve-Moutoa. 1974.
Tambiah.S.J Bridewealth (ed)......... Cambridge University Press.

Page 51
84 ( ) தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
9. Baldeus. F Ceyion-Feprint with litroduction. 1959.
10. Michael Banks- "Caste in Jaffna" in Aspects of Caste in india. Ceylon and North-West Pakistan. Cambridge. 1960.
1. F.W. Holmes-Jaffna, 1980.
12. K. Sivathamby-The Ethnography of the Sri Lankan
Tamiis-Lanka No 5 (ed.PSehalk) Uppsala, 1989.
13. ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு.
14. S. Arasaratnam - Historical Foundation of the Economy of the Tamil of North Sri Lanka, Chevanayakam Memorial Lecture -1982.
15. யாழ்ப்பாண வைபவமாலை (பதிப்பு) குல. சபாநாதன்,
கொழும்பு. 1953. r
16. சிவானந்தன் - யாழப்பாணக் குடியேற்றம், முதலாம்
பாகம் கோலாலம்பூர், 1933
17. வையாபாடல் (கசெ நடராசா பதிப்பு) கொழும்பு,
1980.
18. முத்துராசக்கவிராயர் - கைலாயமாலை (செ. வே. ஜம்புலிங்கம்பிள்ளை பதிப்பு) சென்னை, 1939, (பி.
நடராசன் பதிப்பு) :ழ்ப்பாrம். 1983

யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் 85
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
Simon Casie Chitty - The caste, customs, manners and Literature of the Tamils-Colombo 1934.
முக சிவப்பிரகாசம் (பதிப்பு) விஷ்ணுபுத்திர வெடியரசன் வரலாறு தொல்புரம் 1988
S. Pathmanathan - The Kingdom of Jaffna Colombo, 1978.
க. கணபதிப்பிள்ளை - இலங்கைவாழ் தமிழர் வரலாறு யாழ்ப்பாணம்,1956(இரண்டாம்பதிப்பு 1989).
Tikiri Abeysinghe - Jaffna Under the Pottuguese Colombo, 1986.
C. Rasanayagam - Ancient Jafna. 1926.
C.S. Navaratnam-Tamil and Ceylon-Jaffna. 1958.
K. Sivathamby-Divine Presom and/or Social Prominence
- An Inquiry into the social role of the place of worship in
Yalppanam Tamil Society-Lanka No.5 (1990) uppsala.
Hendrick Zwaardracoon - Memoirs - 1967 (Tr. Sophia Peter). Colombo. 1917.
கா. சிவத்தம்பி-சமூகவியல் நோக்கில் நாவலர் நாவலர் நூற்றாண்டுமலர், 1979 பதிப்புக. கைலாசபதி,

Page 52
86 ( ) தமிழ் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்
28. வெகுஜனன் - இராவணா சாதியமும் அதற்கெதிரான
போராட்டங்களும் யாழ்ப்பாணம் (1989)
29. S. Kadirgamar - Handy Perinbanayagam - A Memorial
1980.
30. K. Sivathamby-Towards an Understanding of the Culture and ideology of the Tamils of Jaffna Commemorative Souvenir of the rebuilt Public Library of Jaffna. 1984.
31. K. Sivathamby - The Ideology of Saiva - Tamil Integrality: it Socio-historical Significance in the study of Yappanam Tamil Society. Lanka No.5 (1990) Uppsala.
32. கா. சிவத்தம்பி - தமிழ் இலக்கியத்தில் மதமும்
மானுடமும் சென்னை 1983
33. Charles Abeyasekara - Nenton Gunaringhe (ed). Facets of
Ethnicity. Colombo. 1989.
34. கா. சிவத்தம்பி - யாழ்ப்பாண இந்து மக்களிடையே சமூக மேன்நிலைப்பாட்டு அசைவியக்கமும் - வழிபாடும் தலங்காவற் பிள்ளையார் கோவில் கும்பாஷேகமலர் யாழ்ப்பாணம் 1989.
35. Ethnicity and Social change in Sri Lanka. SSA. Colombo.
1984.
36. வட இலங்கையில் ஆலயப் பிரவேச இயக்கம் சைவ
அனுட்டான பாதுகாப்புச்சபை.

யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் 87
37. A Revised Edition of the Legislative Enactments of
Ceylon-1917. .
38. T. Sri Ramanathan-Tesavalamai. Colombo 1962.
39. R.S. Perimpanayagam - The Karmic Theatre-New York.

Page 53


Page 54


Page 55
தமிழ்ச்
பண்பாட்டின் மீள்
பேராசிரியர் காத்தி
 

Fமூகமும் கண்டுபிடிப்பும்
@ 4:09
S S S S