கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தஃவாப் பணியில் பெண்கள்

Page 1


Page 2

தஃவாப் பணியில் பெண்கள்
மூலம்: கலாநிதி யூசுப் அல் கர்ழாவி பைஸல் மெளலவி (லெபனான்)
தொகுப்பு: அஷ் ஷெய்க் எம்.ஏ.எம். மன்சூர் (நளிமி) பி.ஏ. (சிறப்பு)
வெளியீடு: தாருல் அர்க்கம் பதிப்பகம் 26Cரக்ஸபான, மல்வான

Page 3
Title
First impression Second impression
Publishers
Offset by
C) Publishers
Women in islamic Propaganda (Tamil)
1000 Copies (1994) 5000 Copies (1995)
Dharul Arqum Publication 26 C, Raxapana, Malwana.
AJ PRINTS, No. 1-B, P.T.De Silva Mawatha, Dehiwala. Phones: 713778 - 730359

அறிமுகம்
"சமூக வாழ்வில் பெண்களின் நிலை" என்பது மிக முக்கியமானதொரு விடயமாகும். இது மனித சிந்தனையை இரு நேர் முரணான தீவிர நிலைகளுக்கு இட்டுச் சென்றுள்ளதை மனிதனின் சிந்தனை வரலாறு எடுத்துக் காட்டுகின்றது.
"பெண்ணுக்கு ஆன்மா இருக்கின்றதா?’ என சர்ச்சைப்பட்டு, அவளை மிகவும் இழிவுபடுத்தியது ஒரு வகை தீவிரவாதம், அதன் தாழ்ந்த சிந்தனை வடிவங்களில் சில இன்றும் வாழ்கின்றன.
"பெண்ணும் ஆணும் எல்லா விதத்திலும் சமனானவர்களே” என்ற கருத்தை மையமாகக் கொண்டு சமூக வாழ்வை அமைக்கின்றது, அதற்கு நேர்எதிரான புதிய தீவிரவாதம்.
சமூக வாழ்வில் இருபகுதிகள் ஒன்று, மனித சந்ததி குறித்தது; அவனது எதிர்கால பரம்பரையின் வாழ்வு, வளர்ச்சி, ஆக்கம் பற்றியது. இன்னொரு பகுதி அவனது பெளதீகத் தேவைகள்,சமூக
pவின் நிர்வாக ஒழுங்குகள் குறித்தது. சாதார்ண பாஷையில் சொன்னால், ஒன்று சொந்த வீடு ප්‍රද් இன்னொன்று விட்டுக்கு வெளியேயுள்ள வாழ்வு
Z
இவ்விரு பகுதிகளும் மனிதவாழ்வில் காணப்படுகின்றன என்பது யதார்த்தம். இனி இவற்றை எவ்வாறு நெறிப்படுத்தலாம் என்பதுவே கேள்வி. எதிர்கால மனித பரம்பரையை உருவாக்கும் பொறுப்பை - அதனைச் சுமந்து, பராமரிப்ப்தில் பெரும் பங்கெடுத்துக்கொள்ளும் பெண்ணிடம் கொடுப்போமா?
அல்லது சமூகத்தின் ஏனைய அலகுகளான நீதி, அரசு, நிதி, கல்வி என்பவை நிர்வகிக்கப்படும் அமைப்புக்கேற்ப ஒரு நிர்வாக ஸ்தாபனமாக மட்டும் ஆக்குவோமா?
பெண்ணின் அதிமுக்கியமான அடிப்படையான களம் எது? விடா? மனித ஆக்கப்பணியா? சமூகக் களமா?

Page 4
அதாவது ஆணும் பெண்ணும் சம அந்தஸ்துடையவர்கள் என்ற கண்ணோட்டத்தில், வீட்டிலும் வீட்டிற்கு வெளியேயும் சம அந்தஸ்தோடு காரியமாற்றவேண்டுமா?
இந்தப் பிரச்சினைக்கு இஸ்லாம் சொல்லும் தீர்வு: பெண் எதிர்காலப் பரம்பரையை உருவாக்கும் அதி உன்னத பொறுப்பு வாய்ந்தவள். அவளது உடல் உள இயற்கை அமைப்புக்கள் அனைத்தும் இந்தப் பணிக்கு ஏற்பவே ஆக்கப்பட்டுள்ளன.
இதன் பொருள், வீட்டில் அவள் அடைபட்டு கிடக்க வேண்டும் என்பதல்ல. அவள் வீட்டை விட்டு போர்க்களம் வரை செல்லக் கூட அது அனுமதிக்கின்றது. ஆனால் வீட்டில் அவளது பணிக்கு அது பாதகம் விளைவித்து விடக் கூடாது என இஸ்லாம் வேண்டுகிறது.
சமூகக் களம் ஆணின் முதன்மையான பகுதி. வீடு, குடும்பம் - இவை அவனது இரண்டாவது பகுதி.
வீடும் குடும்பமும் பெண்ணின் முதன்மையான பகுதி. சமூகக் களம் அவளின் இரண்டாவது பகுதி.
இவ்வாறு இஸ்லாம் ஆண்மீதும், பெண்மீதும் விதித்துள்ள கடமைகளையும், பொறுப்புக்களையும் துணுகி ஆராயும் போது, அற்புதமானதொரு சமநிலையை ஆண் - பெண், குடும்பம் - சமூகம் என்ற இருவகை அலகுகளுக்குமிடையே பேணி யுள்ளமையை அவதானிக்க முடியும்.
இன்று நாம், முஸ்லிம்களின் சமூகவாழ்வும் சீர்கெட்டு, குடும்ப வாழ்வும் சிதைந்து ப்ோயுள்ள கால்ப்பிரிவில் வாழ்ந்து வருகிறோம். அவ்விரு பகுதிகளையும் சீர்படுத்துவதற்கான முயற்சி பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருவதனை அவதானிக்கின்றோம்.
இந்த முயற்சியில், உழைப்பில் பெண்ணின் பங்குயாது?. அந்நியர்கள் இஸ்லாமிய நாட்டின் மீது படையெடுத்து நாட்டுக்குள் நுழைந்து விட்டால் ஆண் - பெண், சிறியவன் - பெரியவன் என்று அனைவர் மீதும் ஜிஹாத் கடமையாகிறது என்பது இஸ்லாமிய சட்ட வல்லுனர்களின் ஏகோபித்த முடிவு. இது இராணுவப் படையெடுப்பு.
இஸ்லாமிய சிந்தனைக்கு எதிரான சிந்தனைய படையெ டுப்பின் போது, அந்நிய சிந்தனைகள் இஸ்லாமிய சமூகத்தினுள் நுழைந்து தனி மனித வாழ்வு மீதும், சமூக வாழ்வு மீதும் ஆதிக்கம் செலுத்தினால்.

சிந்தனா ரீதியான ஜிஹாத் ஆண் - பெண் இருபாலார் மீதும் கடமையாகாதா?
இந்தக் கோணத்திலிருந்து இப்பிரச்சினையை நோக்க வேண்டியநிலையில் நாம் உள்ளோம்.
இஸ்லாமியப் பணியில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறை வாகடள்ளநாடு எமது நாடு.
சமூகத் தீமைக்கெதிராக பாடுபடுதல், உழைத்தல் பெண்க ளுக்குக் கடமையல்ல என்ற மனப் போக்கு பரவலாகக் காணப்படு வதோடு மட்டுமல்ல அவ்வாறு உழைத்தல், பெண்களுக்கு கள்ங்கம் விள்ைவிக்கும் என்ற எண்ணமும் சமூகத்தினரிடையே பரவலாகக் காணப்படுகிறது.
இந்நிலையில் இக்கருத்தை தெளிவுபடுத்த இந்த நூல் முயல்கிறது. ஷெய்க் பைஸல் மெளலவி இஸ்லாமிய அறிஞர்க ளில் ஒருவர் இஸ்லாமிய எழுச்சிக்காகப் பாடுபடும் பிரச்சாரகர்க ளில் ஒருவர். அவர் நிகழ்த்திய உரையொன்றின் மொழிபெயர்ப்பு முதல் கட்டுரையாக வருகிறது. .
கலாநிதி யூசுப் அல் கர்ழாவி இஸ்லாமிய உலகின் சட்ட வல்லு னர்களில் ஒருவர். தன் வாழ்வின் மிக ஆரம்ப காலத்திலிருந்தே இஸ்லாமிய எழுச்சிக்காகப் பாடுபடும் பிரச்சாரகர். நவீன இஸ்லா மிய சிந்தனைப் புனரமைப்பில் அவருக்கு மிகப் பாரியதொரு பங்குள்ளது என்பதனை நவீன இஸ்லாமிய சிந்தனையைப் படித்த யாரும் மறுக்க மாட்டார்கள். அவர் "அல் முஜ்தமஃ” என்ற இஸ்லாமிய உலகின் தலைசிறந்த சஞ்சிகையில் எழுதிய கட்டுரை ஒன்றின் மொழிபெயர்ப்பு.அடுத்தகட்டுரை.
இதனை வெளியிடுவதில் உழைத்த அனைத்து சகோதரர்க ளுக்கும் எம்து நன்றிஉரித்தாகட்டும்.
பெண்கள் பகுதி பற்றிய பல நூல்களுக்கு இது ஆரம்பமாக அமையட்டும் என்ற எண்ணத்தோடு அல்லாஹ் எம் அனைவரை யும் அவன் பணியில் நிலைக்கச் செய்யட்டும் என்ற பிரார்த்தனை யுடன் முத்தாய்ப்பிடுகிறேன்.
எம்.ஏ.எம். மன்சூர், 106, குருகொட, அக்குறனை. 01. 10.94

Page 5
பதிப்புரை
"தஃவாப் பணியில் பெண்கள்’ என்ற எமது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுப்பதில் அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே 6TeobrÜ u&pb.
இதற்கு முன் "அறபு மொழி - 1”, “முஸ்லிம் தனியார் சட்டம். 1 திருமணம்’ ஆகிய நூல்க்ளை வெளியிட்ட நாம், 'தஸ்வாட் பணியில் பெண்கள்" என்ற நூலை ஒரு சிந்தனையாகத் தருவதில் பூகிழ்ச்சியடைகிறோம்.
தஃவாப் பணி இன்று சர்வதேசப் பணியாக வளர்ந்துள்ளது. இருந்தாலும், முஸ்லிம் பெண்கள் தஃவாப்பணியில் ஈடுபடுவது என்பது பலரது உள்ளத்திலும் கேள்விக்குறியாகவே நிற்கின்றது.
நவீன கால தஃவா ஒரு துறைசார்ந்த ஆற்றொழுக்கன்று: பல்துறை சார்ந்த கொந்தளிக்கும். கடல். இதனை இலங்கை முஸ்லிம் சமூகம் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை.
நாட்டின் பல கோணங்களிலும் பெண்கள் மத்ரலாக்கள் தோன்றி வளர்ந்து, கமாரான கால அளவு பரிச்சயப்பட்டு விட்டாலும் கூட, பெண்கள் தஃவா தொடர்பான சிந்தனை மிகக் குறுகிய வட்டத்திலேயே அழன்று கொண்டிருக்கின்றது. இவ்வா றான சமூக சூழலில் வழமைக்கு மாறான கண்ணோட்டத்தில் இந்நூல் வெளிவருகின்றது.
தாருல் அர்கம் இஸ்லாமிய வரலாற்றில் தடம் பதித்த ஒரு நிறுவனமாகும். அது, சஹாபிகளை மட்டுமன்றி சஹாபி யாக்களையும் தாஇகளாக உருவாக்கித் தந்தது. அந்த வகையில் எயது தாருல் அர்கம் பிரசுராலயம் பெண்களுக்கான ஒளி விளக்கா கவும் அமைய வேண்டியுள்ளது. தளிர் வெளியீட்டின் மூலம் இஸ்லாமிய சிந்தனையைப் பொதுவாக நின்று உணர்த்துகின்ற நாம், பெண்களுக்காகவும் - பெண்கள் பற்றி உணர வேண்டிய ஆண்களுக்காகவும் இந்நூலைப் பிரசுரிக்க முன்வந்தோம்.
இந்நூலின் கருத்துக்களுக்குப் பொறுப்பான கட்டுரையாசி ரியர்கள் இஸ்லாமிய தஃவாப் பண்ரியில் கரை கண்டவர்கள். இந்நூலல மொழிபெயர்த்துத் தொகுத்துத் தந்தவரும் இஸ்லாமிய தஃவத்துககென தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். மூல

ஆசிரியர்களின் கருத்துக்கள் சிதறாதவாறு இந்நூலை மொழி மாற்றம் செய்து தந்த அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். மன்ஸுர் (நளிமி) பீ.ஏ. (சிறப்பு) அவர்களுக்கும் மொழிச் செம்மைப் படுத்தலில் உத விய அஷ்ஷெய்க் ஏ.பி.எம். இத்ரீஸ் (நளிமி) அவர்களுக்கும் இந்நூ லின் அட்டைப் படத்தை வடிவமைத்து உதவிய அஷ்ஷெய்க் எம்.கே.எம். ஷகீப் (நளிமி) அவர்களுக்கும் இவ்வாறான பணிக ளுக்குத் தேவையான எல்லா வளங்களையும் உதவிகளையும் வழங்கிய அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக எனப் பிரார்த்திக்கின்றோம்.
இது
பதிப்பகத்தார்.
தாருல் அர்கம் பதிப்பகம். 26C passuunro, மல்வானை.

Page 6

இஸ்லாமியப் பணியில்
பெண்களின் பங்கு
ஸ்லாமிய எழுச்சிக் காற்று அரபு இஸ்லாமிய உலகில் மட்டும்ஸ்ல அதற்கு அப்பாலும் வீசுகின்ற காலமிது. இஸ்லாத்துக்கான உழைப்பில் சமூகத்தின் புத்திஜீவிகள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை பங்கெடுத்துக் கொள்ளும் முக்கிய வரலாற்றுக் காலப் பிரிவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எனினும் சமூகத்தின் சரிபாதியான பெண்கள் இப்பணியில் எடுத்து வரும் பங்கு குறைவாகவே காணப்படுகிறது என்பது மிகத் மிகத் தெளிவான உண்மை. அவர்களது பங்களிப்பு ஏன் பலவீனப்பட்டு காணப்படுகிறது" என ஆராயும் போது இரு முக்கிய காரணிகளை அடையாளம் காண முடிகிறது.
முதலாவது, சமூகத்தின் மத்தியில் பெண்கள் நிலை குறித்துப் பரவிப்போன சில பிழையான சிந்தனைகள்.
இரண்டாவது, ஆணின் சுயநலப்போக்கும், ஆண் மேலாதிக்கவாதமும்,
சில பிழையான சிந்தனைகள்
இப்போது முதலாவது காரணத்தை விளக்கமாக நோக்கு வோம். பொதுவாக இந்த விடயத்தைப் பொறுத்தவரையில்

Page 7
முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பல பிழையான சிந்தனைகள் பரவிக் காணப்படுகின்றன. அப்பிழையான சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டே இருபாலாரின் தொடர்புகளும், நடைமுறைகளும், செயற்பாடுகளும் அமைந்துள்ளன.
இப்பிழையான சிந்தனைகளில் பல உறுதியான ஆதாரங்க ளைக் கொண்டுள்ளன என்பது உண்மையே. ஆனால் அந்த ஆதாரங்கள் சமூக வழக்குகளுக்கும், மனோ இச்சைகளுக்கும் சார்பாக வளர்க்கப்பட்டு பிழையான முடிவுகளைக் கொடுத் துள்ளன அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
பெண்கள் அறிவிலும் மார்க்க செயற்பாட்டிலும்
குறைந்தவர்கள்.
நவீன இஸ்லாமியப் பணியில் பெண்களுக்கும் பங்கிருக்கி றது என்று கூறும் போது ஆண்களில் பலர் அதை, தீவிரப் போக்காக் கருதுகின்றனர். ஏனெனில் பெண்கள் குறையறிவு கொண்டவர்கள் மார்க்க செயற்பாட்டிலும் குறைந்தவர்கள் ன்ன இஸ்லாம் கருதுகின்றது என்று தமது கருத்துக்கு ஆதாரமும் காட்டுகின்றனர். எனவே, கணவனுக்குப் பணி செய்து, பிள்ளைகளை வளர்த்து, வீட்டுக்கடமைகளை நிறைவேற்றுவது மட்டுமே அவள் பொறுப்பாக இருக்க வேண்டுமென இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இறைதூதர் (ஸல்) அவர்களது கீழ்வரும் கருத்து, மேலோட்டமாக நோக்கும் போது இவர்களது கருத்துக்கு ஆதாரமாக அமைய முடியும்; "மார்க்க செயற்பாட்டில் குறைபாடு கொண்டவர்களாகவும் அறிவில் குறைபாடுடைய வர்களாகவும் இருந்து, உறுதியான மனிதனொருவனின் அறி வையும் போக்கக் கூடிய உங்களைப் போன்ற ஒருவரை நான் காண வில்லை’ என்று இறை தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது பெண்கள், 'அல்லாஹ்வின் தூதரே! அறிவுக் குறைபாடு மார்க்க செயற்பாட்டில் குறைவு என்ப தன் மூலம் எதனை நீங்கள் கருதுகிறீர்கள்?’ எனக் கேட்டனர்.
2

அதற்கு இறைதூதர் (ஸல்) “பெண்ணின் சாட்சியம் ஆணின் சாட்சியத்தில்.பாதியல்லவா?’ என வினவ, "ஆம்" எனப் பெண்கள் பதில் கூறினர். 'அதுவே அவளது அறிவுக் குறை வைக் காட்டுகிறது’ என்றார் இறைதூதர்
“மாதவிடாய் காலத்தில் அவள் நோன்பு பிடிக்கவோ, தொழவோ மாட்டாளல்லவா?" என இறை தூதர் (ஸல்) அவர்கள் வினவ பெண்கள் "ஆம்" என்றனர். "இது அவளது மார்க்க செயற்பாட்டில் உள்ள குறைவைக் காட்டுகின்றது’ என இறைதூதர்(ஸல்) அவர்கள் விளக்கினார்கள்.
இது ஸஹீஹ் அல் புஹாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸாகும். இது ஆதாரபூர்வமானது என்பதில் சந்தேக மில்லை. ஆனால் இந்த ஹதீஸ், சில போது பிழையாகப் புரிந்து கொள்ளப்படுவதுண்டு. அப்பிழையான புரிந்து கொள்ளல் மீது எழும் நடத்தைகளும், நிலைப்பாடுகளும் பிழையாக அமைந்து விடும் என்பதிலும் சந்தேகமில்லை.
* அமெரிக்காவிலும், கனடாவிலுமுள்ள மூளை ஆய்வுமையங்கள், சில ஆண்டுகளுக்கு முன்னர் தடத்திய ஆய்வுகள் கீழ்வரும் முடிவுகளைத் தத்துள்ளன. மனிதனின் மூளையில் பணிதத் தொழிற்பாட்டிற்கான பல இயக்க எ :ங்கள் உள்ளன. அவற்றுள் பேச்சு, நினைவாற்றல் என்பவை தொடர்பான இரு மையங்சரூம் அடங்கும். இவ்விரு மையங்களும் ஆணின் மூளையில் இருவேறாகப் பிரித்திருக்கும், ஆனர்ல், பெண்ணின் மூளையில் இவையிரண்டும் ஒன்றாகவே இணைந்திருக்கும். இதனால் ஆண் பேசும் போது அவனது நினைவாற்றல் மையத்தில் எத்தக் குழப்பமும் எற்படுவதில்லை. ஆனால் பெண் பேசும் போது நினைவாற்றல் மையத்தில் பாதிப்பேற்படும். எனவே, பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு ப்ெண் எதையேனும் ஞாபகப்படுத்த முனைத்தால் சில விடயங்கள் தவறலாம். எனவே, ஒரு பிரச்சினையின் போது ஒரு பெண்ணை சாட்சிக்கு அழைத்தால், அப்பிரச்சினையின் சில முக்கிய விடயங்கள் தவறக்கூடும். எனவே, சாட்சியத்தின் போது இகு பெண்களை அழைக்க வேண்டும். இக்கருத்தையே சூாத்துல் பகாாவின் 382வது வசனமும் சொல்கின்றது. இவ்வசனத்தை ஆதாாம் காட்டியே இறைதுதர் (ஸல்) அவர்கள் பெண்ணின் அறிவுக் குறைபாட்டிற்கு விளக்கம் கூறினார்கள்.
ஆதாாம் :அல் முஜ்தமஃ, பக் 59
99. ( . )

Page 8
மார்க்க செயற்பாட்டில் குறைபாடு என்பது அளவில் தோன்றும் குறைவே தவிர,தரத்தில் தோன்றும் குறைவல்ல என்பதைத் தான் இறை தூதர் (ஸல்) அவர்கள் இங்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள். மாதவிடாய்க் காலத்தில் அவள் தொழமாட்டாள். அதனைகளாச் செய்வதுமில்லை. ஆனால், ஆண் இக்காலப்பிரிவு அனைத்திலும் தொழுவான். எனவே, ஆணின் மொத்த தொழுகைகளை விட பெண்ணின் மொத்தத் தொழுகை குறைவாகிறது. இந்த வகையில் பெண்ணின் மார்க்க உணர்வு குறைவுபடுகிறது. ஆனால் இந்தக் குறைபாடு தரத்தில் தோன்றும் குறைபாடல்ல. அளவில் உருவாகும் குறைபாடே என்பது தெளிவாகின்றது.
சுன்னத்தான வணக்கங்களில் அதிகமாக ஈடுபட்டு இக் குறைபாட்டை பூரணப்படுத்திக் கொள்ள முடியும். ஆணைவிட தொழுகையையும், நோன்பு பிடிக்கும் அளவையும் கூட ஒரு பெண். அதிகரித்துக் கொள்ள முடியும். இவ்வாறு ஆண்களை விட தக்வா உணர்வில் கூடிய பெண்கள் காணப்படுவது மிகவும் சாத்தியமாகும்.
எனவே, ஆண்கள் பலரின் வணக்க வழிபாடுகளைவிட உயர்ந்த வணக்க வழிபாடுகளை கொண்ட பெண்கள் காணப்பட முடியும் . ஆண் களைவிட உயர்ந்த ஒழுக்கப்பண்பாடுகள் கொண்ட பெண்கள் காணப்படுவதும் சாத்தியமாகும். ஏனெனில் வணக்க வழிபாடுகளின் தரத்தைப் பொறுத்தவரையில் போட்டிக்கு நிறைய இடமுண்டு. இந்த விடயத்தில் ஆண் பெண்ணுக்கு இடையில் எத்தகைய வேறுபாடும் கிடையாது. எனவே, பெண், ஆணை மிகைக்கும் சந்தர்ப்பங்களும் நிறையவுள்ளன. அல்லாஹ் கூறுகின்றான்:
'முஃமினாக இருந்து கொண்டே யார் - ஆணாயினும் பெண்ணாயினும் - நற்செயல்கள் புரிகிறார்களோ நிச்சயமாக நாம் நல்ல வாழ் வைக் கொடுப் போம். அவர்கள் செய்தவற்றிற்கு மிகச்சிறந்த கூலியை நாம் கொடுப்போம்.
மார்க்க செயற்பாட்டில் பெண்ணிடம் குறைபாடுள்ளது என்பதன் பொருள் வணக்க வழிபாடுகளின் தொகையில் தானே தவிரதரத்திலல்ல என்பது தெளிவாகியது. அத்தகைய குறைபாட்டைமேலதிக வழிபாடுகள் மூலமும், நற்செயல்கள்
4.

மூலமும் ஈடு செய்து கொள்ளவும் முடியும் என்பதும் தெளிவு. எனவே, பெண் உயர்ந்த மார்க்க உணர்வு கொண்டவளாக இருக்க முடியும் என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை. இந்த மார்க்கத்துக்கான பிரச்சாரகராகவும்,போராளியாகவும் வாழ அவளுக்கு உள்ள தகுதியில் குறை காணவும் முடியாது. எனவே, நவீன இஸ்லாமியப் பணியில் அவளுக்குள்ள பாரிய பங்களிப்பை மறுப்பதும் சாத்தியமில்லை.
அறிவுக் குறைபாடு என்பதன் பொருள் அனைத்துப் பெண்களின் அறிவும் ஒவ்வொரு ஆணின் அறிவை விடவும் குறைவாகவே உள்ளது என்பதன்று. சில பெண்களின் அறிவு சில வேளைகளில் பல ஆண்களின் அறிவு நிலையை விட உயர்ந்ததாக இருப்பதுண்டு. இது சாதாரணமாக அவதா னிக்கக் கூடிய,எத்தகைய வாதப்பிரதிவாதங்களுக்கும் இட மில்லாத ஓர் உண்மையாகும்.
ஆண்,பெண்ணை விட மன உணர்ச்சிகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில் அமையுமாறு அறிவாற்றலை அல்லாஹ் அவனுக்கு கொடுத்துள்ளான். ஆனால், பெண்ணின் மன உணர்ச்சிகள் அறிவாற்றலை மிகைத்து நிற்கும் சக்தி பெற்றுள்ளன. அல்லாஹ்வின் இந்த ஏற்பாடு ஆண்களைக் கண்ணியப் படுத்தவோ அல்லது பெண்களை இழிவு படுத்தவோ அல்ல. ஆண்,பெண் இருவரதும் பணிகளைப் பொறுத்து அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆற்றலே இது வாகும். பெண்ணின் மன உணர்ச்சிகள் அறிவாற்றலை விட வீரியம் பெற்றதாக அமைவதாற்றான் பிள்ளை வளர்ப்பை மிகப் பொறுமையோடு அவளர்ல் மேற்கொள்ள முடிகிறது.
இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி குறிப்பிடுவது போன்று குறைபாடு என்பது ஒப்பீட்டு ரீதியானதேயன்றி தனியானதொரு உண்மையன்று. பூரணத்துவமான ஒன்றை மிகப்பூரணத்துவமான ஒன்றோடு ஒப்பிடும் போது குறைபாடு கொண்டதாகவே தோன்றும். இறைதூதர் (ஸல்) அவர்கள் 'ஆண் பூரணத்துவ அறிவு பெற்றுள்ளான்” என்று இங்கே கூறவில்லை. எனினும் பொதுப்படையாக நோக்கும்போது ஆணின் அறிவு நிலை, அவனது மன உணர்ச்சிகளை விட வீரியம் கொண்டதாகவே காணப்படுகிறது.

Page 9
இந்த வகையில் பெண்ணின் அறிவு அவளது மனஉணர்ச்சி களோடு ஒப்பிடும் போது குறைபாடு கொண்டதாகவே உள்ளது. இப்படித்தான் நாம் இந்த ஹதீஸுக்குப் பொருள் காண வேண்டும். ஆணின் அறிவு இந்த வகையில் அவனது உணர்ச்சிகளைவிடப் பலம் பொருந்தியதாக உள்ளது என்றே விளங்கிக் கொள்ள வேண்டும். இதனை நாம் சாதாரணமாக நடைமுறையில் அவதானிக்கலாம். உண்மையில் இத்தகைய அமைப்பு அல்லாஹ்வின் அருளேயன்றி வேறல்ல. இந்நிலை யில் தான் பெண், பிள்ளை வளர்ப்பாகிய தன் கடமையை மேற்கொள்வதும், ஆண் வீட்டிலும் சமுகத்திலும் தன் தலை மைத்துவப் பொறுப்பை நிறைவேற்றுவதும் சாத்திய மாகிறது.
'பெண்கள் மார்க்க செயற்பாட்டிலும், அறிவிலும் குறைந்தவர்கள் ' என்ற ஹதீஸை மேற் குறிப்பிட்ட அடிப்படையில்தான் விளங்க வேண்டும் என்பது தெளிவா கிறது. எனவே ஒரு முஸ்லிம், பெண்ணை இழிவுக் கண் கொண்டு நோக்குதல் தவறாகும். இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெண்களை பரிகசிப்பதும் பிழையான செயலாகும். ஏனெனில் அதே இறை தூதர் இப்படியும் சொல்லியிருக்கிறார்கள்.
'உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் சிறந்தவரே. நான் எனது மனைவியரிடத்தில் சிறந்தவனாக உள்ளேன்'
(ஆதாரம் - இப்னுமாஜா) பெண்மீதான ஆணின் நிர்வாகத் தலைமை 'ஆணின் தலைமைத்துவம்' என்பதும் பிழையாகப் புரிந்து கொள்ளப்பட்ட கருத்துக்களில் ஒன்றாகும். பெண் மீதான ஆணின் நிர்வாகத் தலைமை என்பதன் பொருள், பெண்ணை விட ஆண் உயர்ந்தவன் என்பதாகவே சில ஆண்கள் நினைக்கி றார்கள். உண்மை அவ்வாறன்று; தலைமைத்துவம் என்பது ஒரு பொறுப்பாகும். குடும்ப மட்டத்தில் அமைந்த நிர்வாகத் தலைமைத்துவத்துக்கு ஆணின் தகுதிகளே மிகப் பொருத்தம் எனக் கண்ட அல்லாஹ் அதனை அவனுக்கே கொடுத் துள்ளான். அல்லாஹ் அதை இவ்வாறு கூறுகின்றான்.
6

'அல்லாஹ் சிலரை விட சிலரை மேம்படுத்தியுள்ளமை காரணமாகவும், தமது செல்வங்களிலிருந்து செலவளிப்பதன் காரணமாகவும் ஆண்கள் பெண்களின் தலைவர்களாக உள்ளனர்."
பெண்களை விட ஆண்கள் உயர்ந்தவர்கள் என இங்கே குறிப்பிட்டமை தலைமைத்துவத்திற்கான சில சிறப்பான பண்புகள் காரணமாகவேயாகும் மொத்தமாக ஆண்கள் பெண்களை விட உயர்ந்தவர்கள் என்பது இதன் பொருளன்று. உதாரணமாக பிள்ளைகளைப் பராமரித்தல் என்ற நிலை வரும் போது பெண்கள் ஆண்களை விட உயர்ந்தவர்களாகிறார்கள். ஆண்கள், பெண்கள் இருவரதும் வித்தியாசமான பணிகள் பற்றிய பிரச்சினையே தவிர உயர்வு தாழ்வு பற்றிய பிரச்சி னையல்ல என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
அல்லாஹ் ஆண்களுக்கு அவர்களது பணியை நிறைவேற்று வதற்கான சிறப்பான சில பண்புகளைக் கொடுத்து அவர்களை அப்பகுதியில் பெண்களை விட உயர்த்தினான். பெண்களுக்கு அவர்களது பணியை நிறைவேற்ற உதவும் சிறப்பான பண்புகளைக் கொடுத்து ஆண்களை விட அவர்களை மேம்ப டுத்தினான். பெண்கள் மீதான ஆணின் தலைமைத்துவம் ஆணுக்குப் பொறுப்புக் கொடுக்கப்பட்ட அவனது பணியாகும். அதற்குத்ஷம் ஆற்றலும் சக்திகளும் அவனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய சமுகத்தின் மீதான தலைமைத்துவம் ஆணின் பணியாகவே அமைந்துள்ளது. வீட்டிலும் சமூகத்திலுமான ஆணின் தலைமைத்துவம் என்ற பொறுப்பு, இஸ்லாமியப் பணியில் பெண்ணின் பங்கை ஸ்தம்பிதமடையச்செய்வதேரஅல்லது அவளது பங்களிப்பை மிகச் சிறிய வட்டத்தில் கொண்டு செல்வதோ கூடாது.
'தலைமைத்துவம்’ என்ற கருத்து, பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டதன் காரணமாக இஸ்லாமியப் பணியில் பெண்களின் பங்களிப்பை கிட்டத்தட்ட முழுமையான ஸ்தம்பித நிலைக்கு அது கொண்டு வந்துள்ளது. பெண்களின் இஸ்லாமியப் பணிக்கான வழிமுறை வகுப்ப்து, திட்ட மிடுவது, முடிவுகள் எடுப்பது போன்ற அனைத்து நிலைக ளிலும் அவள் ஆணையே எதிர்ப்பார்க்கிறாள். அவள்
7

Page 10
வெறுமனே நடைமுறைப்படுத்துபவளாக மீட்டுமிே இருந்து விடுகின்றாள். ஆனால் பெண்கள் பகுதிக்கான இஸ்லாமியப் பணியின் உண்மைநிலையைப் புரிந்து கொள்ளவும் அதற்காக திட்டமிடவும் பெண்ணே மிகப்பொருத்தமானவள்என்பதில் சந்தேகம் கிடையாது. ஆண்களை எதிர்ப்பார்க்காது இப்பணியில் அவள் முந்திக் கொண்டு ஈடுபட வேண்டும். இவ்வாறு அவள் ஈடுபடும்போது, பெண்கள் பகுதிக்கான இஸ்லாமியப் பணியின் விளைவு, மிக அதிகமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இஸ்லாமியப் பணியில் பங்குகொள்ள பெண் வீட்டை விட்டு வெளியேறல்:
மிக அத்தியவசியத் தேவை இருந்தாலன்றி ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறுதல் கூடாதென ஆண்கள் பலர் கருதுகின்றனர். இதற்கு ஆதாரமாகக் கீழ் வரும் இறை வசனத்தைக் காட்டுகின்றனர்:
"அவர்கள் (பெண்கள்) தங்கள் வீடுகளிலேயே தங்கியி ருக்கட்டும்’ ஆனால் அதன் தொடராகவே வரும் அடுத்த பகுதியை மறந்து விடுகின்றனர். இத்திருவசனத்தின் அடுத்த பகுதி கீழ்வருமாறு கூறுகிறது:
"ஆரம்ப ஜாஹிலிய்ய நிலை போன்று தமது அழகுகளை வெளிக்காட்டித் திரிய வேண்டாம் ?? இவ்வசனம் இரு கருத்துக்களைத் தருகின்றது:
1. ஒரு முஸ்லிம் பெண், வீட்டில் இருக்கும் போதுதான் மன அமைதியையும் பூரண திருப்தியையும் பெறுகிறாள். ஏனெ னில் அப்போதுதான் அவள் அல்லாஹ் பெண்ணில் படைத்து விட்ட இயற்கை உணர்வோடு ஒத்துப் போகும் பணியில் ஈடு படுகின்றாள். அப்போது தனது பணியை மிகச் சரியாக நிறை வேற்றுகிறாள். பெண் வீட்டிலிருப்பதை ஒரு நிர்ப்பந்தமாக கருதி வீட்டை விட்டு வெளியேறுவதை விரும்புவார்களாயின் அது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்வதாக அமை யும். மேலும் தனது வீட்டுக்கடமைகளிலும் தோல்வி அடை g.T.

2. 'ஆரம்ப ஜாஹிலிய்யத் நிலைபோன்று அழகுகளை வெளிக்காட்டித் திரியவேண்டாம்" என்று வசனத்தின் அடுத்த பகுதி சொல்லுகிறது. ஒரு பெண் வீட்டில் தன் கணவனுக்கு அழகுகளைக் காட்டுவது ஜாஹிலிய்ய பண்பா? கணவனோடு நடந்து கொள்ளும் சிறந்த முறையா? உண்மையில் வீட்டுக்கு வெளியே செல்லும் போது அழகுகள் வெளித் தெரிய நடந்துகொள்ளுவதுதான் ஹராமாகும். இந்தவகையில் ஒரு முஸ்லிம் பெண் அடிப்படையில் வீட்டில் இருந்து தன் பணி களை நிறைவேற்ற வேண்டும். ஷரீஅத்தில் அனுமதிக் கப்பட்ட காரணத்துக்காக வீட்டைவிட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டால் ஆரம்ப ஜாஹிலிய்யத் நிலை போன்று அழகுகளை வெளிக்காட்டி நடந்துகொள்ளக்கூடாது என்ற கருத்து,குறிப்பிட்ட இறை வசனத்திலிருந்து பெறப்படுகிறது.
வீட்டைவிட்டு வெளியேறும் போது அழகுகளை வெளிக் காட்டக்கூடாது என்று இறைவசனம் கூறுவதனூடாக, அனும திக்கப்பட்ட காரணத்திற்காக உரிய முறையில் வீட்டை விட்டு வெளியேற முடியும் என்ற கருத்தையும் பெறமுடிகின்றது.
அந்தவகையில் ஷரீஅத்தில் வாஜிபான ஒரு காரியத்தை நிறைவேற்ற ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறல் வாஜி பாகும். முபாஹான காரியத்தை நிறைவேற்ற வெளியேறல் முபாஹ் ஆகும். மக்ரூஹ் அல்லது ஹராமான காரியத்தில் ஈடுபட வெளியேறின் அது மக்ரூஹாக அல்லது ஹராமாக அமையும். எனவே இஸ்லாமியப் பணிக்காக வீட்டைவிட்டு வெளியேறுவதும் அப் பணியின் சட்ட நிலைகளைப் பொறுத்து வாஜிபாகவோ, சுன்னத்தாகவோ அமையலாம். இக்கருத்து பின்னால் தெளிவாக விளக்கப்படுகின்றது.
ஆணின் சுயநலப்போக்கும் ஆண்மேலாதிக்கமும்
நவீன இஸ்லாமியப் பணியில் பெண்களின் பங்கு குறை வாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் ஆணின் சுயநலப் போக்காகும். ஆண்களில் அதிகமானோர் உலக இன்பங்களை அனுபவிக்க விரும்புகின்றனர். இஸ்லாமியப் பணியில் தனது மனைவி ஈடுபடுவதால் தோன்றும் சிறிய கஷ்டத்தைக் கூட தாங்கிக்கொள்ளும் மனோ நிலை எம்மில் பலருக்கு இருப்ப தில்லை.
9

Page 11
தான் விடுதிரும்பும் போது சுவைநிறைந்த உணவு தன்முன் இருக்க வேண்டுமென ஆண் விரும்புகின்றான். வீடு தூய்மை யாகவும், ஒழுங்காகவும் இருக்க வேண்டுமென ஆசைப் படுகின்றான்,தனது பிள்ளைகள் மிகஅழகாக இருக்க வேண்டு மென எதிர்பார்க்கின்றர்ன். எனவே மனைவி முழுநேரமும் வீட்டு வேலைகளுக்குரியவளாகவே இருக்க வேண்டு மென்பது அவன் கருத்தாகிறது. உண்மையில் இது கணவனின் உரிமையாகும். எத்தகைய வாதத்திற்கும் இடமின்றி இது வீட்டின் சந்தோஷ வாழ்வுக்கு அவசியமாகும். ஆனால், ஆண்கள் இந்த விடயத்தில் கடுமையான போக்கை கையா ளும்போது -அதாவது ஆண்கள் தமது உரிமைகளில் கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்க முன்வராதபோது-பெண் வீட்டிலி ருந்து வெளியேறி தனது முஸ்லிம் சகோதரிகளை சந்திப்பதோ, ஒரு பாடத்தில் கலந்து கொள்வதோ அல்லது பாடம் நடத்து வதோஅல்லது சமூக சீர்திருத்தப்பணியில் ஈடுபடுவதோ,புதிய தொரு இஸ்லாமியப் பெண்கள் சமூகத்தைக் கட்டியெழுப்பு வதில் உழைப்பதேடிமுடியாமல் போகிறது.
புதியதோர் இஸ்லாமிய சமூகத்தைக் கட்டியெழுப்பு வதற்காக உழைக்கும் முஜாஹிதுகள், பிரச்சாரகர்கள் என நாம் எம்மைச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் அதேவேளை உலகை முழுமையாக அனுபவிக்கவும் நாம் விரும்புகிறோம். ஆண்கள் மீது மட்டும் ஒர் இஸ்லாமிய சமூகம் எழும்புவது சாத்தியமா? சனத்தொகையை மட்டும் வைத்து நோக்கினால் பெண்கள், சமூகத்தில் அரைவாசியாவது இருப்பர். ஆனால் சமூகத்தை சீர்திருத்துவதிலும் அல்லது சீர்கெடுப்பதிலும் பெண் ஏற்படுத்தும் பாதிப்பு அதனைவிட மிக அதிகமாகும். ஏனெனில் அவள் எதிர்கால சந்ததியினரை உருவாக்கு கின்றாள். உயர்ந்த மனிதர்களை உருவாக்குபவளும் அவளேபெண் கொள்கைப் பற்றும் இலட்சிய நோக்கும் அற்றவளாக இருக்கும் போது தனது பிள்ளைகளை எவ்வாறு இலட்சிய நோக்கும் கொள்கைப் பற்றும் கொண்டவர்களாக மாற்றுவது சாத்தியமாகும்? பெண்ணின் முழுநேரமும் முழுநோக்கும் உணவு சமைப்பதாகவும், வீட்டை ஒழுங்கு படுத்துவதாகவும் பிள்ளைகளைக் கவனிப்பதாகவும் கணவனுக்காக தன்னை அலங்கரித்துக் கொள்வதாகவும் மட்டும் இருக்கும் போது
10

ஈமானின் ஒளி அவள் உள்ளத்தில் எவ்வாறு தோன்றும் ? கொள்கைப் பற்று அவளிடத்தில் எவ்வாறு காணப்பட முடியும்? இலட்சிய வேகத்தையும் போராட்ட உணர்வையிம் எவ்வாறு அவளிடமிருந்து எதிர்பார்க்க முடியும்?
இஸ்லாமிய சிந்தனையில் "கவனம் செலுத்துவதற்காக தனது வீட்டில் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தான் நேரம் ஒதுக்கி இருப்பதாகவும் குறிப்பிட்ட அந்த நேரத்தில் மனைவி பிள்ளைகள் அனைவரும் உட்கார்ந்து குர்ஆனை ஓதி, விளங்கி ஷரீஅத்தில் சில பகுதிகளைப் படித்து-இவ்வாறு இஸ்லாமிய பிரச்சாரப் பணியில் கவனம் செலுத்துவதாக சிலர் வாதிட முடியும். ஆனால் உண்மை என்னவெனில் வீட்டில் இத்தகை யதொரு இஸ்லாமிய சூழலை உருவாக்குவதில்,ஆண்களில் மிகச்சிலரே வெற்றியடைவர். அத்தோடு இதனை எவ்வாறு நோக்கினாலும் போதாது என்றே கூறவேண்டும். ஏனெனில் பெண்கள் சமூகம், இதனைவிட எவ்வளவோ விரிந்தது. தன் வீட்டில் ஒர் இஸ்லாமிய சூழலைப் பெற்றுள்ள பெண் ஏனைய பெண்களுக்கு மிகவும் தேவையாக உள்ளாள். எனவே இத்தகைய பெண், பெண்கள் பகுதியில் உழைப்பதற்காக வீட்டைவிட்டு வெளியேறிச் செல்வது ஏனைய பெண்களை விட ஒரு படி கூடுதலாக கடமையாகிறது.
நாம் ஒவ்வொருவரும் கீழ்வரும் கேள்விகளை மனந்திறந்து எம்மை நாமே கேட்டுக் கொள்வதோடு அதற்கான தெளிவான பதில்களையும் தேடிக் கொள்ள வேண்டும்.
* நான் இஸ்லாத்தின் பெருமையை மீண்டும் நிலைநாட்டு வதில் உண்மையான நாட்டமும் எண்ணமும் கொண் டுள்ளேனா?
* எனது நேரம் எனது தேவை இவை அனைத்திலும் இஸ்லாத்திற்கு நான் முதலிடம் கொடுத்துள்ளேனா?
* இஸ்லாமியப் பணிக்காக உலக இன்பங்களில் சில வற்றை விட்டுக் கொடுக்க நான் தயாராக உள்ளேன்ா?
* இஸ்லாமிய சமூகத்தைக் கட்டியெழுப்புவது, இஸ்லா மிய நாகரித்தை உருவாக்குவது பெண் இன்றி ஆணினால் மாத்திரம் சாத்தியமாகுமா?
سلسله -

Page 12
* எமது மனைவிகளும் பெண்மக்களும் கலந்து கொள்ளா மல் பெண்களிடையே இஸ்லாமிய தஃவா எழுச்சி பெறமுடியுமா?
* எமது உரிமைகள் சிலவற்றை நாம் விட்டுக்கொடுக்கா மல்,அல்லது வீட்டு வேலைகள் சிலவற்றில் நாம் பங்கு கொள்ளாமல், எமது மனைவியர்களும், பெண்மக்களும் இஸ்லாமிய, உழைப்பில் கலந்து கொள்ளுதல் சாத்திய மாகுமா? நாம் எமது சுயநலப் போக்கால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தேவையின் போது தமது மனைவியர்க ளுக்கு அவர்களது வீட்டு வேலைகளில் உதவினார்கள் என்பதை மறந்து விடுகிறோமா? இறைத்தூதர் அவர்கள் சொன்னார்கள் 'உங்களில் சிறந்தவர் உங்களின் மனைவியர்களுக்குச் சிறந்தவரே" (திர்மிதி)
ஷரீஅத்விதிக்கும் பொ ப்புக்களுக்கு முன்னால் ஆணும் பெண்ணும்
நற் செயல்களைப் பொறுத்தவரையில் அவற்றை நிறை வேற்ற வேண்டும் என்பதில் ஆண் பெண் இருவரும் சமனான வர்களே.ஏனெனில் அது ஈமானின்இயல்பானவிளைவாகும். எனவேதான் குர்ஆனில் ஈமான் எங்கு குறிப்பிடப்பட்டாலும் நற்செயலும் அதனோடு இணைத்துக் குறிப்பிடப்படுகின்றது.
'ஈமான் கொண்டு நற்செயல்கள் புரிவோர்." என்ற வார்த்தை, அல்குர்ஆனில் எண்பதுக்கும் மேற்பட்ட இடங்க ளில் குறிப்பிடப்படுவதை அவதானிக்கலாம். இந்த வகையில் அல் குர்ஆன் கீழ்வருமாறு கூறுகின்றது.
'முஃமினாக இருந்து கொண்டே யார் - ஆணாயினும் பெண்ணாயினும் - நற்செயல்களில் ஈடுபடுகின்றாரோ அவருக்கு நாம் நிச்சயமாக நல்ல வாழ்வைக் கொடுப்போம், “நிச்சயமாக அவர்கள் செய்தவற்றுக்கு மிகச் சிறந்த கூலியை யும் கொடுப்போம்"
12

இன்றைய இஸ்லாமியப் பணிநற்செயல்களில் ஒன்று. அது அல்லாஹ்வின் பாதைக்கு மனிதர்களை அழைக்கும் பணி: நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பதற்கான முயற்சி, பூமி யில் அல்லாஹ்வின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கான போராட்டம். இவை ஆண்களும் பெண்களும் நிறைவேற்ற வேண்டிய கடமைகளே.
அல்லாஹ் கூறுகின்றான்: 'முஃமினான ஆண்களும், பெண்களும் ஒருவருக்கொருவர் பொறுப்பானவர்கள். அவர் கள் நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கிறார்கள். அவர்கள் தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுப்பர். அல் லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் வழிப்படுவர். அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவான். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன், மிகுந்த ஞானமுள்ளவன்.'
(அத்தெளபா 71) நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல், அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப் படுதல், தொழுகையை நிறைவேற்றல், ஸகாத்துக் கொடுத்தல் போன்றன, ஆண், பெண் இருசாராருக்கும் கடமையாகும். இதில் அவர்களுக்கிடையே வேறுபாடோ, ஏற்றத் தாழ்வோ கிடையாது. இந்தவகையில் ஷரீஅத் கடமைகளில் ஆண், பெண் இருவரும் சமமான வர்கள். ஆணுக்கென்று தனியாகவோ பெண்ணுக்கென்று தனியாகவோ விளக்கி வரும் போது மட்டுமே அவர்கள் வேறுபடுவர்."
முஸ்லிம் பெண் நிறைவேற்றவேண்டிய நற்செயல்களில் முதன்மையானவை ஒரு முஸ்லிம் பெண், முஸ்லிம் ஆண் நிறைவேற்ற வேண்டிய அதே கடமைகளை நிறைவேற்ற வேண்டியவ ளாகின்றாள். ஆனால் ஆணுக்கும், பெண்ணுக்கும் கடமைகள் அதிகரித்து அவற்றில் சிலவற்றை நிறைவேற்றவும் ஏனையவற்றை நிறைவேற்ற முடியாத நிலையும் தோன்றும் போது கடமைகளை அவற்றின் முக்கியத்துவத்திற்கேற்ப நிரல் படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
13

Page 13
அந்த வகையில் ஆண் பெண் இருசாராருக்குமான முதன் மையான கடமைகள் யாவை என நோக்குதல் அவசிய மாகின்றது. நாம் இங்கு பெண்ணின் பணி பற்றியே நோக்கு கின்றமையால் பெண்ணின் முதன்மையான பணிகள் யாவை என நோக்குவோம்.
அஸ்மா பின்த் யஸீத் என்ற அன்ஸாரிப் பெண் அல்லாஹ் வின் தூதரிடம் வத்து பின் வருமாறு கூறினாள்: "நான் பெண்கள் அணியிலிருந்து வருகின்றேன். அல்லாஹ் உங் களை ஆண் பெண் இருபாலாருக்கும் தூதராகவே அனுப்பி னான். நாம் உங்களையும் அல்லாஹ்வையும் ஈமான் கொண் டோம். இதே பெண்களாகிய நாம் குறிப்பிட்ட எல்லையில் கட்டுப்பட்டு ஒதுங்கியே வாழ்ந்து வருகின்றோம். உங்கள் வீடுகளின் அடித்தளமாக அமைந்து வீடுகளிலேயே உட்கார்ந்திருக்கின்றோம். உங்களது பிள்ளைகளை சுமக்கி றோம். ஆனால் ஆண்களாகிய நீங்கள் எங்களை விட பல வகைகளில் மேம்படுகிறீர்கள். ஜும்ஆத் தொழுகைகள், ஜமா அத் தொழுகைகளுக்கு சமூகமளித்தல், நோயாளிகளைக் கண்டு நோய் விசாரித்தல், மரண கிரியைகளில் கலந்து கொள்ளல், ஹஜ்ஜுக்குப் பின் ஹஜ்ஜாக பல ஹஜ்ஜுகளை நிறைவேற்றல், அனைத்தையும் விட மேலாக அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்தல் போன்ற அனைத்து நற் காரியங்க ளிலும் ஈடுபடுகிறீர்கள். நீங்கள் ஹஜ்ஜுக்கோ, உம்ராவுக்கோ போனால் நாங்கள் உங்கள் செல்வங்களைப் பாதுகாக்கின் றோம். உங்களது உடைகளைத் தைக்கின்றோம். பிள்ளை களை வளர்க்கின்றோம். இந்நிலையில் உங்களுக்கு கிடைக் கும் கூலியில் எமக்கும் பங்குண்டா? இதனைக் கேட்டுக் கொண்டிருந்த இறைதூதர் (ஸல்) அவர்கள் சூழ இருந்த தம் தோழர்களை நோக்கி: 'இப்பெண்ணைப் போன்று மிக அழகாக அர்த்த புஷ்டியோடு கேள்வி கேட்கும் பெண்ணை நீங்கள் கண்டதுண்டா?’ என ஆச்சரியத்தோடு கேட்டார்கள். அப்போது தோழர்கள்: "இந்த வகையில் ஒரு பெண் சிந்திக்க முடியும் என நாம் நினைத்திருக்கவில்லை. ' எனப் பதில் கூறி னார்கள். அப் போது இறைதூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணை நோக்கி 'பெண்னே! நீயும் நன்கு உணர்ந்து கொள். உனக்குப் பின்னால் இருக்கும் பெண்களுக்கும் நான்
14

சொல்லும் இக்கருத்தை அறிவித்துவிடு. ஒரு பெண்தன் கணவ னோடு சிறந்த முறையில் நடந்து கொள்ளல், அவனது திருப்தி யைப் பெற்றுக் கொள்ளல், அவனது உடன் பாட்டோடு அவனைத் தொடரல், நீ ஏற்கனவே குறிப்பிட்ட அனைத்து நன்மைகளுக்கும் சமமான நன்மையைத் தேடித் தரும்’
ஒரு முஸ்லிம் பெண்ணின் நற்செயல்களில் முதன்மை யானது அவளது வீட்டுக் கடமைகளே என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. ஆனால் இதன் பொருள் அவள் வீட்டுக்கு வெளியே உள்ள தனது கடமைகளை விட்டுவிட வேண்டு மென்பதா? அவ்வாறு யாரும் கருதமாட்டார். ஒரு பெண் தன் ஷரீஅத் கடமைகள் அனைத்தையும் சீர்தூக்கி நோக்கி அவற்றின் முக்கியத்துவ நிலைக்கு ஏற்ப நிரல் படுத்தி நிறை வேற்ற முனைவாள். இந்நிலையில் வீட்டுக் கடமைகளுக்கு முதன்மையான இடத்தைக் கொடுப்பாள் என்பதில் சந்தேகமில்லை.
இறைதூதர் (ஸல்) அவர்களது வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும் போது முஸ்லிம் பெண்கள் யுத்த களத்திற்குப் போய் காயப்பட்டோருக்கு வைத்தியம் செய்தமையையும், தேவையானபோது போராடியமையையும் காண்கிறோம். இந்த வகையில் ரபீதா, நலீபா, கவ்லா, உம்முஸுலைமா போன்ற பல பெண்களை நாம் வரலாற்றில் சந்திக்கின்றோம். இமாம் புஹாரி, தமது ஹதீஸ் நூலில் "போராளிகளோடு பெண்கள் செல்லல்’ என்ற ஒரு தனி அத்தியாயத்தை இட்டுள் ளார்கள். அந்த அத்தியாயத்தின் ஒரிடத்தில் ஒரு பெண் ஸஹாபி சொல்லும் கீழ்வரும் கருத்தைக் குறித்துள்ளார்கள். "நாம் இறைதூதர்(ஸல்) அவர்களோடு போராட்டத்திற்காகச் செல்வோம். அங்கு போராளிகளுக்கு நீர் கொண்டு சென்று அவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்வோம். இறந்தவர்க ளையும், காயமுற்றவர்களையும் மதீனாவுக்குக் கொண்டு வருவோம்"
அல்லாஹ்வின் பாதையில் போராடச் செல்லுதல் பெண் கள் மீது கடமையன்று. கணவனுக்கான கடமைகனிள அவள் நிறைவேற்ற வேண்டும் என்பதும், வீட்டில் பொறுப்புக்களை ஏற்று நடத்த வேண்டும் என்பதுவுமே இதற்கான

Page 14
காரணமாகும். ஆனால் கணவன் ஜிஹாதில் கலந்து கொள்ள அவளுக்கு அனுமதி கொடுத்தால் அல்லது அவனேஜிஹாதில் அவளை அழைத்துச் சென்றால் அவர்கள் இருவர் மீதும் குற்றம் கிடையாது. மேலும் அவர்கள் இருவருக்கும் முஜாஹி தீன்களுக்கான நற்கூலி கிடைக்கும். ஆனால், இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாமிய நாட்டைத்தாக்கும் போது ஜிஹாத் அனைவர் மீதும் ‘பர்ளு ஐன்’ ஆகிறது. இந்நிலையில் மகன் தந்தையின் அனுமதியின்றியே ஜிஹாதுக்கு செல்வது கடமை. மனைவி கணவனின் அனுமதியின்றியே ஜிஹாதுக்கு செல்ல வேண்டும் என்பதில் சட்ட அறிஞர்கள் மத்தியில் எத்தகைய கருத்து வேறுபாடும் கிடையாது.
ஐங்காலத் தொழுகைகளில் ஆண்களைப் போன்று பெண் களும் கலந்து கொள்வது சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட செயலே. இறைதூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் {றழி) அறிவிக்கின்றார்;உங்களது மனைவி பள்ளிக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கோரினால் அவளைத் தடுக்க வேண்டாம்’ (புகாரி, முஸ்லிம்)
இன்னொரு அறிவிப்பில் பின்வருமாறு வந்துள்ளது. 'உங்கள் புெண்கள் இரவு நேரத்தில் பள்ளி செல்வதற்கு அனுமதி கேட்டால் அத்ற்கு அனுமதி கொடுங்கள்’ (புகாரி, முஸ்லிம்)
மேலும், இறைதூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் 'அல்லாஹ்வின் அடியார்களான பெண்களை அல்லாஹ்வின் பள்ளிகளுக்கு வருவதைவிட்டு நீங்கள் தடுக்க வேண்டாம்” (முஸ்லிம்)
பெண் பள்ளியில் தொழுவதை விட அவளது வீட்டில் தொழுவதே உயர்ந்தது" என்பது உண்மையே. இதனை இறை தூதர் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்: பெண்கள் பள்ளியில் ஜமாஅத்தோடு சேர்ந்து தொழுவது ஆகுமான அனுமதிக்கப்பட்ட ஒரு காரியம் என்பதை மட்டும் இங்கு குறிப்பிட விரும்பினோம். அவ்வாறிருந்தும் இறை தூதர் (ஸல்) அவர்கள் பெண்கள் பள்ளிக்குச் செல்வதனைத் தடுக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளமை அவதானிக்கத் தக்கது. எ னும் ஓர் ஆண் தனது மனைவியை பள்ளி செல்லாது தடுப்பின்
16

அது ஹராமாகாது. ஏனெனில் வீட்டுக் கடமைகளைக் கவ னிப்பது பெண்ணின் முக்கிய பொறுப்பாகும். பள்ளியில் தொழும் ஒரு சாதாரண நற்செயலுக்காக கடமையைவிட முடி யாது. ஆனால் ஒரு கடமையை நிறைவேற்ற வீட்டை விட்டு வெளியேறும் போது கணவன் அவளைத் தடுப்பது கூடாது. உதாரணமாக இஸ்லாமிய நாடு தாக்கப்படும் போது அனை வரும் ஜிஹாதில் ஈடுபட வேண்டும் என்பது அறிஞர்களது ஏகோபித்த முடிவு. இந்நிலையில் கணவன் மனைவியைத் தடுக்க முடியாது. கணவனின் அனுமதியின்றியே பெண் ஜிஹாதுக்காக இந்நிலையில் வெளியேறிச் செல்லலாம்.
இஸ்லாமிய நாடு எதிரிகளால் தாக்கப்படும் போது ஜிஹா துக்காக வெளியேறிச் செல்வது பெண்மீது கடமையாகிறது. அவ்வாறாயின் முஸ்லிம்களது நாடுகளிலேயே இஸ்லாம் தாக்கப்பட்டால் இஸ்லாமியப் பணியில் பங்கு கொள்ள பெண்கள்விட்டைவிட்டு வெளியேறுவது அவர்களது கடமை யாகாதா? இஸ்லாமிய ஷரீஅத் புறக்கணிக்கப்பட்டு தீமைகள் ஆதிக்கம் செலுத்தி, மேற்கத்திய சட்டங்கள், மேற்கத்திய சம்பிரதாயங்கள் நடைமுறையில் வரும் போது பெண்கள் இஸ்லாமிய தஃவத்திற்காக, நன்மையை ஏவித் தீமையைத் தடுப்ப தற்காக வீட்டை விட்டு வெளியேறுதல் கடமை யாகாதா?
இதனை இன்னும் தெளிவாக நோக்குவோம். இஸ்லாம் இன்று பேரபாயத்திற்கு உட்பட்டுள்ளது. உலகளாவிய முழு முஸ்லிம் சமூகமும் அபாயத்தில் வாழ்கிறது. இந்நிலையில் நன்மையை ஏவித் தீமையைத் தடுத்து இஸ்லாமியதஃவத்தில் அர்ப்பணத்தோடு ஈடுபட்டு இஸ்லாமிய ஷரீஅத் ஆளுகின்ற இஸ்லாமிய வாழ்வை மீண்டும் தோற்றுவிப்பது இன்றைய நிலையில் ஆண்கள், பெண்கள் இருசாரார் மீதுமுள்ள பெருங் கடமையாகும். இதில் பெண்ணுக்கொரு பெரும் பங்களிப்பு உள்ளது. எனவே, அவள் வீட்டை விட்டு வெளியேறி இஸ்லா மிய தஃவாவில் ஈடுபடுவது அவளது கடமையாகிறது. வீட்டை விட்டு வெளியேற கணவன் அவளை அனும்திப்பது அவனுக்கு கடமையாகிறது. அப்போதுதான் முழுமையான இஸ்லாமிய சமூகத்தின் ஒரு பகுதியாக விளங்கும், பெண்கள் சமூகமொன்றைத் தோற்றுவிப்பது சாத்தியமாகும்.

Page 15
நாமிங்கு இஸ் லாமிய தஃவா , என்ற இஸ்லாமிய கடமைக்காக வீட்டை விட்டு பெண் வெளியேறிச் செல்வதன் அவசியத்தைப் பற்றியே பேசுகிறோம். இஸ்லாமியப் பணி என்ற போர்வையில், புறமும், அர்த்தமற்ற பேச்சுக்களும் நிறைந்த கூட்டங்களுக்காக வீடுகளிலிருந்து வெளியேறல் பற்றிப் பேசவில்லை. அதாவது இஸ்லாமிய தஃவத் ஓர் அமா னிதம்; ஒரு தூது, என்பது உணரப்பட வேண்டும். முஸ்லிம் பெண் தனது முதற் பணி வீட்டுக் கடமைகளே என்பதை மனத்திருப்தியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். வீட்டை விட்டு வெளியேறும் போது அல்லாஹ்வை திருப்திப்ப டுத்தும் இன்னொரு கடமையை நிறைவேற்றவே அவள் வெளியேறிச் செல்ல வேண்டும்.
இஸ்லாமியப் பணியில் பெண் ஈடுபட வேண்டிய பகுதி
வீட்டுக்கு வெளியே பெண் நிறைவேற்ற வேண்டிய கடமை ஒன்றிருக்குமானால் அதற்காக அவள் வீட்டை விட்டு வ்ெளியேறல் கடமையாகும். அவ்வாறு அவள் வெளியேற அனுமதிப்பது கணவனது கடமையாகும் என்பதை ஏற்க னவே விளக்கினோம். இஸ்லாமிய நாடொன்றை எதிரிகள் தாக்கும் போது உருவாகும் ஜிஹாதை அதற்கு உதாரணமாகக் கூறினோம். இதற்கு இன்னும் பல உதாரணங்களைக் கூற முடியும். அவற்றை எல்லாம் விளக்க வேண்டிய அவசியம் இவ்விடத்தில் இல்லை. நவீன இஸ்லாமியப் பணியில் பெண்ணின் பங்குபற்றிய எமதுசிந்தனை என்ன என்ற முக்கிய பகுதிக்கு இப்போது வருவோம். அதனை விளக்கமாக நோக்கும் போதுதான் அப்பணியை நிறைவேற்ற அவள் வீட்டை விட்டு வெளியேறுவது இஸ்லாமிய ஷரீஅத் கண்ணோட்டத்தில் வாஜிபா, சுன்னத்தா, முபாஹா என்ற முடிவுக்கு நாம் வரலாம்.
பூமியில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதே இஸ்லா மியப் பணியின் இலக்காகும். இந்த இலக்கை பல கட்டங்க ளினூடாகவே அடைய முடியும். முஸ்லிம் தனி மனிதனை உருவாக்கல், முஸ்லிம் குடும்பத்தை உருவாக்கல், முஸ்லிம்
18

சமூகத்தை உருவாக்கல், முஸ்லிம் அரசை நிறுவல் என்ற கட்டங்களாக அது செல்ல முடியும்.
முஸ்லிம் தனிமனிதர்களை உருவாக்குவதில் பெண்ணுக்கு பங்குண்டா? இக்கேள்விக்கு நாம் பதிலளிக்க முஸ்லிம் தனிமனிதன் என்பவன் யார் என்பதனை வரையறுக்க வேண்டும். அவன் ஆண் மட்டுமா? அல்லது ஆணும் பெண்ணுமா? உலகில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ முஸ்லிம் ஆண்களை மட்டும் உருவாக்க வேண்டுமா? அல்லது அவர்களோடு முஸ்லிம் பெண்களையும் உருவாக்க வேண்டுமா? ஆண், பெண் இருவ ருக்கும் இஸ்லாமிய மார்க்க கடமைகள் விதியாகின்றன. இஸ்லாமிய ஷரீஅத்தை நடைமுறைப்படுத்த ஆண், பெண், இருபாலாரையும் உருவாக்க வேண்டும் என்பது தெளிவான விடயமாகும். அல்லாஹ்தஆலா ஈமானியப் பண்புகளை விளக்கும் போது ஆண்களோடு பெண்களையும் இணைத்தே கூறியுள்ளான்.
“நிச்சயமாக முஸ்லிமான ஆண்களும், பெண்களும், முஃமினான ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை பக்தி பூர்வமாக பணிந்து ஒழுகும் ஆண்களும், பெண்களும், உண்மை நிறைந்த ஆண்களும், பெண்களும், பொறு மையைக் கடைப்பிடிக்கும் ஆண்களும், பெண்களும், பணிவு நிறைந்த ஆண்களும் பெண்களும் அல்லாஹ்வின் பாதையில் செலவிடும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், தங்களது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வை அதிக மாக் ஞாபகப்படுத்தும் ஆண்களும், பெண்களும் - அல்லாஹ் அவர்களுக்காக பாவ மன்னிப்பையும், பெரும் கூலியையும் தயார்படுத்தி வைத்துள்ளான்’ (அஹ்ஸாப் :35)
எனவே, ‘முஸ்லிம் தனிமனிதன்” என்பதன் பொருள் அது ஆணையும் பெண்ணையும் குறிக்கும் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. இந் நோக்கத்தை நாம் எவ்வாறு நிறைவு செய்ய முடியும்? ஆண், பெண் இருசாராரையும் உருவாக்கும் பொறுப்பை பெண்களால் மட்டும் நிறைவேற்ற முடியும் என்று கூறினால் அது ஒரளவு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக
9

Page 16
இருக்க முடியும். ஆனால் ஆண்மட்டும் தனியே இப்பணியை மேற்கொள்ள முடியும் என்பதை பகுத்தறிவுள்ள யாரும் ஏற்க முடியாது. ஆண், பெண் பிள்ளைகளை உண்மையான முஸ்லிம்களாக உருவாக்கும் பணியில் பெண்ணுக்குள்ள பங்களிப்பை யாரும் மறுக்கமாட்டார்கள்.
இஸ்லாமிய சிந்தனை பற்றிய தெளிவும், இஸ்லாமிய பண்பாடுகளும் அற்றவளாக பெண் காணப்படும் போது அதிகமான ஷரீஅத் சட்டங்களை அவள் அறியாதவளாக் இருக்கும் போது எவ்வாறு தனது பணியை மேற்கொள்வதும் சாத்தியமாகும்?
இஸ்லாமிய சிந்தனையைப் படிப்பதற்காக வீட்டை விட்டு வெளிறச் சென்றால்தான், அவளால் தன் பணியை மேற்கொள்வது சாத்தியமாகும். தனது முதற் கடமையுாகிய வீட்டுப் பொறுப்பை நிறைவேற்றுவதும் அப்போதுதான் சாத்தியமாகும். இஸ்லாமிய ஷரீஅத் சிந்தனைகளில் சில பகுதிகளையாவது தமது மனைவியர்களுக்குப் படிப்பிக்கும் தகுதிவாய்ந்த ஒரு சில ஆண்களை நாம் இங்கே கவனத்தில் கொள்ள முடியாது. ஏனெனில் இவர்களுக்கு படிப்பிப்ப தற்கான தகுதி இருப்பினும், அதற்கான நேரம் அவர்களுக்கி ருப்பதில்லை. இது நாம் பரவலாக அவதானிக்கும் உண்மை யாகும். பெண்களை உருவாக்குவதில் பெண்ணுக்கும் ஒரு பங்கிருப்பதை நாம் மறுக்க முடியுமா? ஒரு கணவனுக்கு தன் மனைவியை இஸ்லாமிய ரீதியாக உருவாக்க முடியாத போது, அவள் பயிற்சி பெறக் கூடிய பெண்கள் சமூக மொன்றை தயார்படுத்தல் அவனது பொறுப்பாகாதா? பெண்ணை உருவாக்கும் பணியை மிகச் சிறந்த முறையில் நிறைவேற்ற பெண்ணை விடப் பொருத்தமானவர்கள் யாரி ருக்க முடியும்? ஷரீஅத்தின் அடிப்படையில் நோக்கும் போது பெண்களை உருவாக்கவும் அவளுக்கு ஹராம் ஹலாலைப் படித்துக் கொடுக்கவும், இஸ்லாமிய ஒழுக்கங்களைப் படிப் பிக்கவும் மிகப் பொருத்தமானவள் பெண்ணே என்பதில் சந்தேகமில்லை.
ஆண்களில் அதிகமானோர் தங்களது மனைவியர்களை இஸ்லாமிய ரீதியாக வளர்த்தெடுக்க முடியாதவர்களாகவே காணப்படுகின்றனர். இந்த வகையில் இப்பணியை
20

மேற்கொள்ள அல்லது குறைந்தது அதற்கு உதவ, பெண்கள் பிரிவு உருவாவது கடமையாகிறது. இப்பெண்கள் அமைப்பு பெண்கள் மூலமாக உருவாவதே சாத்தியமாகும். அப்பெண் கள் வீட்டை விட்டு வெளியேறிச் செல்லாமல் இப்பணிக ளுக்காக உழைப்பதும் சாத்தியமில்லை.
முஸ்லிம் வீட்டை உருவாக்குவதில் பெண்ணின் பங்கு. ஒரு முஸ்லிம் பெண் இன்றி முஸ்லிம் வீடு உருவாவது சாத்தியமாகுமா? என்ற கேள்விக்கு விடை காண்பதே இத்தலைப்பின் நோக்கமாகும். "பெண் தனது கணவனின் வீட்டையும், அவனது பிள்ளைகளையும் பராமரிக்கும் பொறுப்புடையவளாக உள்ளாள்’ (புகாரி, முஸ்லிம்) என இறை தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதற்கு ஏற்ப அவள் வீட்டை பராமரிப்பவளாக இருக்கிறாள்.
கணவனைக் கவனிக்கவும் பிள்ளைகளைப் பராமரிக்கவும் தனது கவனத்தையும் நேரத்தையும் மிகக் கூடுதலாக வீட்டி னுள்ளேயே கழிக்கும் போதுதான், ஒரு முஸ்லிம் பெண் ணால் முஸ்லிம் தனிமனிதனை உருவாக்குவது சாத்தி யமாகும். 'இஸ்லாமிய வீடு' என்பதன் பொருள் கணவ னுக்குப் பணிசெய்வதும் வீட்டைத் தூய்மையாக வைத்தி ருப்பதும், கணவனுக்கு கட்டுப்படலும், பிள்ளைகளைப் பராமரிப்பதும் மட்டுமன்று, கணவன் - மனைவி - பிள்ளைகள் இவர்களிடையே உள்ள தொடர்புகளை ஒழுங்கு படுத்தும் சிந்தனைகளும், சட்டங்களும், கருத்துக்களும், அல்லாஹ்வோடு இவர்கள் அனைவரையும் தொடர்பு படுத்தும் சிந்தனைகளும், சட்டங்களும் வீட்டை ஆளும் போதுதான் அதனை நாம் இஸ்லாமிய வீடு'என்று கூறலாம். இக்கருத்துக்களோடு முஸ்லிம் பெண்ணுக்கு தொடர்பி ல்லாதபோது, இந்த சிந்தனைகளை முஸ்லிம் பெண் கடைப் பிடிக்காத போது எவ்வாறு இஸ்லாமிய வீடொன்றை உருவாக்குவது சாத்தியமாகும்?
அல்லாஹ்வைப் பயந்து, கணவனுக்கு கட்டுப்பட்டு, பிள்ளைகளை இஸ்லாமிய சட்டங்கள், சிந்தனைகளின் அடிப்படையில் வளர்த்தெடுக்கும் பெண்ணை எங்கிருந்து நாம் கொண்டுவர முடியும்? எமது பல்கலைக்கழகங்களும்,
21

Page 17
பாடசாலைகளும், வெகுசனத் தொடர்பு சாதனங்களும், சமூக மும், அரசாங்கங்களும், ஆண்களை கவர்ந்திழுக்கும் வகை யில் அலங்கரித்துக் கொண்டு, தன் கடமைகளை நிறை வேற்றாமல் உரிமைகளுக்காக மட்டும் போராடுகின்ற அல்லது அர்த்தமற்ற கதைகளைப் பேசி, அரட்டையடித்துத் திரிகின்ற மீனைவியர்களை உருவாக்கவே உழைக்கின்றன.
பெண்களை இஸ்லாமிய சிந்தனையின் அடிப்படையில் வளர்த்து, அவர்களைப் பண்பாட்டு ரீதியாகச் சீர்திருத்தி, அவர்களின் உள்ளங்களில் நல்ல உணர்வுகளை வளர்த்து, அல்லாஹ்வையும் அவன் தூதரையும் விரும்புபவர்களாக அவர்களை மாற்றி, வெறும் வெளித் தோற்றங்களை விட்டு விட்டு,உயர்ந்த இஸ்லாமிய கருத்துக்களில் கவனம் செலுத்து பவர்களாக உருவாக்க, எமது சமூகத்தில் ஒர் அமைப்பு இல்லாது போனால், ஒரு சிறந்த மனைவியைப் பெறுவது எப்படி?
பெண்களுக்கு மத்தியில் பரவியுள்ள அசத்திய சிந்தனை களோடு போராடி, அவிர்களிடையே இஸ்லாமிய உணர்வை உருவாக்க, பெண்கள் இயக்கமொன்று இல்லையானால், முஸ்லிம் வீட்டிை உருவாக்கும் இஸ்லாமிய மனைவியைக் காண்பது மிகக் கடினமாகும். சீர்கெட்ட சமூக சூழலில் இஸ்லாம் தெரிந்த சில ப்ெண்களும் கூட தமது வீடுகளி லிருந்து வெளியேறி பெண்களிடையே இஸ்லாமியக் கருத்துக்களைப் பரப்பாது விட்ட்ால் இஸ்லாமியப் பெண்கள் அமைப்பு எப்படி உருவாகப் போகிறது?
ஜாஹிலிய்ய சிந்தனைப் போக்கைக் கொண்ட சமூக ஸ்தாபனங்கள் எமது பெண்களை பல வழிகளிலும் திசை திருப்பி வரும் போது, அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் இஸ்லாமியப் பெண்களுக்கான அமைப்பு தோன்றுவது அவசியமல்லவா? அவ்வாறான அமைப்பு பெண்களுக்கு இல்லாது போனால் நாம் இஸ்லாமிய சமூகத்தை மட்டுமல்ல, இஸ்லாமிய வீட்டை மட்டுமல்ல, முஸ்லிம் தனிமனிதனையும் சேர்த்து இழக்க வேண்டிவரும்.
ஒரு முஸ்லிம் பெண் இஸ்லாத்தைப் படிக்காது போனால், இஸ்லாமியக் கருத்தின் அடிப்படையில், பெண்களை
22

உருவாக்குவதற்கான இஸ்லாமிய இயக்கச் செயற்பாட்டில் பங்கெடுக்காது போனால் ஓர் இஸ்லாமிய வீட்டைக் கட்டியெழுப்புவதில் வெற்றியடைய முடியாது. இத்தகைய இஸ்லாமிய இயக்கச் செயற்பாட்டைத் தோற்றுவிப்பதிலும் அதனை வளர்ப்பதிலும் ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணுக்கும் பங்கிருக்கின்றது. இதன் பொருள், அவள் தனது வீட்டுக் கடமைகளை விட்டு விடுவது என்பதல்ல. இந்த இரண்டு கடமைகளுக்குமிடையே இணக்கம் கண்டு, இரண்டையுமே அவள் நிறைவேற்ற வேண்டும். இந்த இடத்தில் கணவன் உதவி செய்தால் இதனைச் சாதிப்பது அவளுக்கு கஷ்டமாயி ருக்காது. சில பெண்களுக்கு அவர்களது நிலைகளும் சூழலும் இத்தகைய சமூகப்பணிகளுக்கு உதவ முடியும். அதாவது திருமணம் முடிக்காத பெண்கள், பிள்ளைப் பேறுக்குப் பிந்தும் பெண்கள், வயது போன பிள்ளைகளுள்ள பெண்கள் ஆகியோர் ஏனைய பெண்களை விட இஸ்லாமியப் பணியில் நேரத்தையும், முயற்சியையும் அதிகமாகச் செலவிடுவது சாத்தியமாகும். எதிர்பார்க்கப்படும் அந்தப் பெண்கள் பிரிவை உருவாக்குவதில் இவர்கள் பெரும் பங்காற்ற (uplguth.
இஸ்லாமிய சமூகத்தை உருவாக்குவதில் முஸ்லிம்
பெண்ணின் பங்களிப்பு
சமூகமென்பது வெறுமனே தனிமனிதர்களின் கூட்டு அல்ல. அது அவர்களை இணைக்கும் பல்வேறு தொடர்புக ளையும், சட்டங்களையும், நிர்வாக ஒழுங்குகளையும் குறிக்கும். நவீன சமூகங்களில் ஸ்தாபன ரீதியான ஒழுங்கு களின் பங்களிப்பு தனி மனிதர்களின் பங்களிப்பை ஏறத்தாழ முழுமையாக அழிக்குமளவுக்கு செல்வாக்குப் பெற்றுள்ளன. இன்று ஸ்தாபனங்கள் மனித வாழ்வில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. அவர்களின் தேவைகளை நிறைவு செய் கின்றன. அவர்களுக்குத் தேவையான பணிகளை மேற்கொள் கின்றன. அவ்விஸ்தாபனங்களில் சில, பெண் இன்றி இயங்கு வது சாத்தியமில்லை. உதாரணமாக பெண்க ளுக்கான கல்வி நிலை யங்கள், சுகாதார ஸ்தாபனங்கள், மருத்துவ நிலை யங்கள் பெண்களின் பங்களிப்பின்றி இயங்குவது சாத்தி
To
23

Page 18
அநாதைகள், அங்கவீனர்கள் போன்றோரைப் பராம ரிக்கும் பொதுநல ஸ்தாபனங்கள் பெண்களின் பங்க ளிப்பின்றி இயங்குவது சாத்தியமல்ல. ஏன் இவ்விஸ்தாப னங்கள் முஸ்லிமல்லாதாரால் மட்டும் இயக்கப்பட வேண்டும்? இஸ்லாத்தோடு தொடர்பே இல்லாதவர்களால் அல்லது இஸ்லாத்தைக் கடைப்பிடிக்காத முஸ்லிம்களால் ஏன் இயங்க வேண்டும்? ஏன் இஸ்லாத்தைக் கடைப்பி டிக்கும் முஸ்லிம் பெண்கள் இத்தகைய பொதுநல ஸ்தாப னங்களைத் தோற்றுவிக்க முடியாது? அல்லது தற்போது காணப்படும் இத்தகைய ஸ்தாபனங்களினூடாக தமது பணி யை மேற்கொள்ள முடியாது? இதன் மூலம் இத்தகைய பொதுநல சேவைகள் பிழையான நோக்கங்களுக்காகப் பயன்படுத்த்ப்படுவதைத் தடுக்க முடியும். இத்தகைய ஸ்தாபனங்களினூடாக நாம் எதிர்பார்க்கும் இஸ்லாமிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்கள் பாரிய அளவில் பங்களிப்புச் செய்வதும் அவசியமாகும்.
இஸ்லாமிய அரசை உருவாக்குவதில் பெண்ணின் பங்களிப்பு பெண், வீட்டுக் கடமைகளை நிறைவேற்றுபவள். அவளது இயல்போடு இணக்கமான சமூகப்பணிகளில் அவளது குடும்ப சூழல்கள் இடமளிக்குமானால் ஈடுபடவும் முடியும். ஆனால் அரசியல் பணியில் ஈடுபடுவது பெண்ணின் இயல்புக்கு பொருத்தமானதல்ல. அந்நியநாடுகளில் அரசி யல் பகுதி பெண்களுக்காக திறந்து விடப்பட்ட போதிலும் பெண்களில் எத்தனை பேர் அத்துறையில் ஈடுபடுகின்றனர்! மிகக் குறைந்த தொகையினரே அங்கு ஆர்வம் காட்டு கின்றனர். இது அரசியல் பணி பெண்களின் இயல்போடு இணங்கியதல்ல என்பதை உறுதிப்படுத்துகின்றது. மேலும் இதனை 'இஸ்லாமிய ரீதியாக நோக்கும் போது நவீன ஆரசியல், ஒழுங்குமுறைகள் இஸ்லாத்துக்கு முரணான அம்சங்களைக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
பெண்களைப் பொறுத்தவரையில் அடிப்படை இதுவாக இருப்பினும் விதி விலக்கான சந்தர்ப்பங்களும் உண்டு. யுத்தகளத்தில் போராடுவது ஆண்களின் பொறுப்பு, அது
24

பெண்களின் இயல்போடு ஒத்துவருவதில்லை. எனினும் இஸ்லாம் அபாயத்துக்குட்படும் போது இஸ்லாத்தில் பெண்களும் போராடுவது கடமையாக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அத்தியாவசியமான சில சந்தர்ப்பங்களில் ஷரீஅத் ஒழுங்குகளைப் பேணி அரசியல் பணியில் பெண்கள் ஈடுபடு வதனை விதிவிலக்காக அனுமதி அளிக்கலாம். மார்க்கம் காக்கப்படுவது சட்ட அறிஞர்களின் கருத்துப்படி, மிக அத்தியாவசியமான தேவைகளில் ஒன்று. எனவே, அரசிய லில் பங்கு கொள்வது மார்க்கத்தை காக்க வழி செய்யுமா னால் - இஸ்லாமிய ஷரீஅத்தை நடைமுறைப்படுத்த உதவு மானால் அது அனுமதிக்கப்பட முடியும். அரசியல் பிரவேசம் ஒருதிருப்பு முனையாக அமையும் பட்சத்தில் அது கடமை யாகவும் மாறலாம். ஜிஹாத் அரசியல் போராட்டத்தை விட ஆழமானது. அதுவே, சில சந்தர்ப்பங்களில் அனும திக்கப்படவும், கடமையாகவும் முடியுமானால் அரசியலில் பங்கு கொள்வதை அனுமதிப்பதும் அது கடமையாவதும் சாதாரணமானதொன்றாகும்.ஆனால், இதுவிதி விலக்கென்ப தையும் அவ்வாறு அரசியலில் பிரவேசிக்கும் போது ஷரீஅத் விதிகளுக்கு கட்டுப்பட்டு, அரசியல் பணியை செய்ய வேண்டும் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
ஷரீஅத் விதிக்கும் வரையறைகள் 1. ஒரு முஸ்லிம் பெண்ணின் முதன்மையான கடமை வீட்டுப்பணிகளை நிறைவு செய்வதாகும். வீட்டுக்கு வெளி யில் இஸ்லாமியப் பணியில் கலந்து கொள்வதும் அவளது கடமையாகும். ஆனால் இவ்விரு கடமைகளுக்குமிடையே சமநிலையைப் பேணுவது அவளது பொறுப்பாகும்.
2. இஸ்லாமியப் பணியில் ஈடுபட பெண்களுக்கு சந்தர்ப்ப மளிப்பது ஒரு முஸ்லிம் கணவனின் கடமை. இது கணவன் மனைவிக்கு கொடுக்கும் வெறும் அனுமதியன்று. மாறாக அனுமதிப்பது ஷரீஅத் அவனுக்கு விதிக்கும் கடமையாகும் இறை தூதர் (ஸல்) அவர்கள் 'பெண்கள் பள்ளிக்குச் செல்லு அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்க வேண்டாம்` என் நி ஆண்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள். இங்கு ஒரு இஸ்லாமிய கடமையை நிறைவேற்றுவதற்காகத்தான் வெளி யேறிச் செல்கிறாள். ஒரு கடமையை நிறை வேற்றுதல்
25

Page 19
இன்னொன்றில் தங்கியிருக்குமானால் அதுவும் கடமையாகக் கருதப்படும். இது இஸ்லாமிய சட்ட விதிகளில் ஒன்று. ஒரு முஸ்லிம் பெண் இஸ்லாமியப் பணியில் ஈடுபடு வது அவ ளுக்கும் அவளது கணவனுக்கும் அவளது வீட்டுக்கும் நன்மையையே தேடித்தரும். அவள் அத்தகைய இஸ்லா மியப் பணியின் மூலம் தானும் இஸ்லாத்தைப் படித்து பிறருக்கும் அதனைப் போதிப்பாள்.
3. இஸ்லாமியப் பணிக்காக பெண் வீட்டை விட்டு வெளியேறுவதை, கணவன் அனுமதிக்கவில்லையானால் வீட்டை விட்டு வெளியேறுதல் எவ்வளவு அவசியமாக இருந்த பேதிலும் கணவனுக்கு கட்டுப்பட வேண்டும். ஏனெனில் கணவனுக்கு கட்டுப்படல் ஏனைய கடமைகளை விட முதன்மையானது. கணவன் தடுத்தமைக்கு நியாயமான காரணம் இருக்குமாயின் அவன் மீது எத்தகைய குற்றமு மில்லை. நியாயமான எந்தக் காரணமுமின்றி அல்லது தடை செய்தால் அக்குற்றம் கணவனையே சாரும். ஆனால் எந்த நிலையிலும் மனைவி கணவனுக்கு மாறு செய்யக் கூடாது.
4. இஸ்லாமிய இயக்கப்பணியில் பெண் ஈடுபடும் போது பல கடமைகள் அவள் மீது விதிக்கப்படலாம். இதனை இஸ்லாமிய ஷரீஅத்தும் அனுமதிக்கும். அதாவது இறை தூதர் (ஸல்) அவர்கள் பெண்களிடமிருந்து பைஅத் பெற் றார்கள். இது கடமையின் மிக உயர்ந்த நிலையாகும். இந்த வகையில் பெண்களில் ஒரு பிரிவினர் ஒன்று சேர்ந்து இல் லாமிய இயக்கப்பணியில் ஈடுபடுவது அனுமதிக்கப்ப டுகிறது. எனினும் ஒரு முஸ்லிம் பெண் இஸ்லாமியப் பணியாக இருந்த போதிலும் இயக்க ரீதியான பொறுப் புக்களை அது தருமாயின் கணவனின் அனுமதியைப் பெற்றே அதில் ஈடுபட வேண்டும். நியாயமான காரணமின்றி கணவன் அதனை அனுமதிக்க வில்லையாயின் அவன் பாவியாக கருதப்படுவான். ஆனால் கணவனுக்கு கட்டுப்ப டுவது மனைவியின் கடமை என்பது நினைவிற் கொள் ளப்பட வேண்டும். இயக்கப் பொறுப்புக்கள் எதனையும் ஏற்காது இஸ்லாமிய பணியில் கலந்து கொள்ள கணவன் அனுமதித்தால் அந்த வரையறைக்குள் அவள் ஈடுபடுவது கடமையாகும்.
26

கணவன், மனைவியரிடையே கருத்து வேறுபாடுகள் உருவாகக் கூடாது எனபதற்காகவே ஷரீஅத்தின் இந்த வரைய றைகளைக் குறிப்பிட்டோம். அல்லாஹ்வின் பாதையில் போராடுவதும், தஃவத்தில் ஈடுபடுவதும் கணவன் மனைவி இருவரினதும் இலட்சியமாக இருப்பின் அவர்களிடையே இணக்கம் காண்பதும் இலேசாக, மாறும். வீட்டில் அமைதி நிலவ வேண்டுமாயின், குடும்ப வாழ்வில் அன்புணர்வு தொடர வேண்டுமாயின் மனைவி எல்லா நிலைகளிலும் - இஸ்லாமிய பணி தொடர்பான விடயங்களிலும் - கணவ னுக்கு கட்டுப்பட்டேயாக வேண்டும். கணவன், மனைவி யுடன் அன்பாகவும் மிருதுவாகவும் நடப்பதே அவனது முதன்மையான கடமையாகும். இவ்வாறு அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தும் முறையில் இஸ்லாமிய இயக்கப் பணி சாத்தியமானால் அது கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் அல்லாஹ்வின் அருளையும் நற்கூலியையும் தேடித்தருகின்ற பணியாக மாறும்.

Page 20
பெண்களின் பாராளுமன்ற அங்கத்துவம்
ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம்
பெண், ஆணைப் போன்றே கடமைகளும் பொறுப்புக்க ளும் சுமத்தப்பட்ட மனித ஆன்மாவாகும். அல்லாஹ்வை வணங்குதல், அவன் விதித்த கடமைகளை நிறைவேற்றல், அவனது மார்க்கத்தை நிலைநாட்டுதல், அல்லாஹ்வின் மார்க்கத்தின் பால் மனிதர்களை அழைத்தல், நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் போன்ற பணிகள் அனைத்தும் பெண்ணுக்குமுரிய கடமைகளே.
ஆண்களை மாத்திரம் குறிப்பாக விளக்காது பொதுவாக வரும்,சட்டமாக்குவோனின் - அல்லாஹ் அவன் தூதர் (ஸல்) - அனைத்து அழைப்புகளும் ஆண்கள் பெண்கள் இருசாரா ரையுமே குறிக்கும். அல்லாஹ் 'மனிதர்களே.' 'விசுவாசி களே." என்று அழைக்கும் போதெல்லாம் அது ஆண், பெண் இருசாராரையும் குறிக்கும் என்பதில் எத்தகைய கருத்து வேறுபாட்டிற்கும் இடமில்லை.
கீழ்வரும் சம்பவம் இதனை விளக்குகின்றது. ஒருமுறை உம்மு ஸல்மா (றழி) அவர்கள் தமது வேலைகளில் மூழ்கி இருக்கும் போது இறை தூதர் (ஸல்) அவர்கள் 'மக்களே.'
28

என அழைக்கும் சத்தம் கேட்ட போது வேலைகளை விட்டு விட்டு மிக விரைந்து போனார்கள். அதனைக் கண்ட சிலர் அவரை ஆச்சரியப்பட்டு நோக்கிய போது அவர்களை நோக்கி "நான் மனிதர்களில் ஒருவரே!” என விளக்கி னார்கள்.
கடமைகள், பொறுப்புக்களைப் பொறுத்தவரையில் பெண் ஆணை ஒத்தவளே. அதில் எங்காவது வேறுபாடு இருப்பின் அதனைக் காட்டும் விதிவிலக்கான சட்ட வச னங்கள் வந்திருக்கும் - இது பொது விதி.
"ஆண் பெண் இருவரும் ஒருவரிலிருந்து ஒருவர் உருவா னவர்களாகும்’ (ஆல இம்றான் - 195) என்ற வசனமும் 'பெண்கள் ஆண்களின் அடுத்த பகுதியினர்’ (அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், தாரமி) என்ற ஹதீஸும் இந்த விதிக்கு ஆதாரங்களாக அமைகின்றன.
அல் குர்ஆன் சமூக சீர்திருத்தம் என்ற பொறுப்பை - இஸ்லாமிய பரிபாஷையில் சொன்னால், நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தலை ஆண் பெண் இருபாலரது பொறுப் பாக கூறுகின்றது.
"ஈமான் கொண்ட ஆண்க்ளும் - பெண்களும் ஒருவ ருக்கொருவர் பொறுப்பானவர்கள், அவர்கள் நன்மையை ஏவுகின்றனர், தீமையைத் தடுக்கின்றனர். தொழுகையை நிலைநாட்டி-ஸகாத்தும் கொடுக்கின்றனர். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படுகின்றனர். அல்லாஹ் அவர்க ளுக்கு அருள் புரிகின்றான்” (அத் தெளபா - 71) என இப்பொறுப்பை அல் குர்ஆன் விளக்குகின்றது.
அல் குர்ஆன் நயவஞ்சகர்களின் பண்புகளை விளக்கிய பின்னரே முஃமின்களின் இப்பண்புகளை விளக்குகின்றது. அதை அல் குர்ஆன் இப்படிக் கூறுகின்றது. "முனாபிக்கு களான ஆண்களும் பெண்களும் ஒருவரிலிருந்து ஒருவர் பிறந்தவர்கள் (ஒரே பண்பைக்கொண்ட்வர்கள்) அவர்கள் தீமையை ஏவி நன்மையைத் தடுப்பர்?
அத் தெளபா-67
23.

Page 21
முனாபிக்குகளான பெண்கள் சமூகத்தைச் சீர் கெடுக்கும் பணியில் தம் பங்கை நிறைவேற்றுவார்களாயின் முஃமினான பெண்களும் சமூகத்தைச் சீர் திருத்துவதில் தமக்குரிய பங்கை நிறைவேற்றவேண்டுமென இந்த வசனம் விளக்குகின்றது.
இந்த வகையில் இறைதூதர் (ஸல்) அவர்களது காலத்தில் பெண்கள் தம் பங்கை நிறைவேற்றி இருக்கின்றனர். இறை தூதர் (ஸல்) அவர்களை உண்மைப்படுத்தியதில் முதலில் எழுந்தது ஒரு பெண்ணின் குரலே. அது கதிஜா (றழி) அவர்களாவர். இஸ்லாமியப் பாதையில் முதலாவ்து ஷஹிதாகியதும் ஒரு பெண்ணே. சுமையா உம்மு அம்மார் (றழி) அவர்களே அப் பெண்ணாவார். V−
உஹத், ஹுனைன் போன்ற பல போர்க் களங்களில் இறை தூதர் (ஸல்) அவர்களோடு பெண்களும் யுத்தத்தில் கலந்து கொண்டார்கள். இமாம் புஹாரி தமது ஹதீஸ் கிரந்தத்தில் ஜிஹாத் அத்தியாயத்தில் “பெண்கள் யுத்தத்தில் ஈடுபடல்’ என்றொரு தனியான தலைப்பையே இட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அல் குர்ஆனினதும், சுன்னாவினதும் சட்ட வசனங்களை நோக்கினால் ஆண்- பெண் இருபாலாருக்கும் பொதுவாக அவை வந்துள்ளன. இருபாலாரதும் இயற்கை உணர்வுக ளும், தேவைகளும் வேறுபடும் இடங்களில் மட்டும், சட்டங்களிலும், வழிகாட்டல்களிலும் வேறுபாடு காணப்ப்டு வதை அவதானிக்கலாம். மாதவிடாய், பிள்ளைப்பேறு, கர்ப்பம் தரித்த காலப்பிரிவு, பால் கொடுத்தல், பிள்ளை வளர்ப்பு போன்ற பகுதிகளில் பெண்களுக்கென விசேடமான சட்டங்களை காண முடியும்.
குடும்பத்தின் நிர்வாகத் தலைமை, குடும்பத்திற்கான செலவினங்கள் போன்றவை ஆண்களுக்கான தனியான சட்டப்பகுதிகளாகக் காணப்படுகின்றன.
வாரிசுரிமையில் பெண்களுக்கான பங்கின் இருமடங்கை
இஸ்லாம் ஆணுக்கு வழங்குகின்றது. ஆண், பெண் இரும்பா லாருக்குமிடையிலான பொறுப்புக்களின் வேறுபாடு,
30

பொருளாதாரக் கடமைகளுக்கிடையிலான வேறுபாடு ஆகிய வற்றை அவதானித்தே இந்த வித்தியாசம் காட்டப்பட் டுள்ளது.
பன நடவடிக்கைகள், சிவில் நடத்தைகளின் போதான சாட்சியங்கள் பற்றிய சட்டங்கள் இங்கு குறிப்பிடத்தக்கவை. இப்பகுதியில் ஓர் ஆணின் சாட்சியம் இரு பெண்களின்சாட்சி யத்திற்கு சமப்படுத்தப்பட்டுள்ளது. மனிதர்களின்உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக சாட்சியங்களில் காட்டப்பட வேண்டிய கூடுதலான கவனத்தைக் கருத்திற் கொண்டு பெண்களின் யாதார்த்தபூர்வமானநிலைப்பாடுகள் அவதானிக்கப்பட்டமையே, ஆண் பெண் இருபாலாரும் இவ்விடயத்தில் வேறுபடுத்தப்பட்டமைக்கான நியாயமா கும்.
இந்த வகையிற்றான், பிள்ளைப்பேறு, பிள்ளைக்குப் பால் கொடுத்தல் போன்ற இடங்களில் ஒரு பெண்ணின் சாட்சியம் ஏற்கப்படும் சந்தர்ப்பங்களைக் காணமுடிகின்றது.
பெண்களின் பாராளுமன்ற அங்கத்துவம் குறித்து ஆராய்வ தற்கு முன்னால் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய சில முக்கிய விடயங்களை இப்போது குறிப்பிட விரும்பு கின்றோம்.
1. தெளிவான கருத்தைக் கொடுக்கும் ஆதாரபூர்வமான சட்ட வசனங்களை ஆதாரமாக வைத்தே எமக்கான கட்டுக் கோப்புகளை வகுத்துக் கொள்ள வேண்டும். போதுமான ஆதாரங்களற்ற சட்ட வசனங்கள் (பலவீனமான ஹதீஸ் கள்) அல்லது பல கருத்துக்களுக்கு இடம்பாடான, L/GD வகையாக விளக்கப்படக் கூடிய சட்ட வசனங்கள். உதர்ர ணமாக (இறை தூதர் (ஸல்) அவர்களது மனைவியர் பற்றியவை போன்றவற்றைப் பொறுத்த வரையில் குறிப்பிட்டதொரு விளக்கத்தைத் தான் சமூகம் கண்டிப் பாகப் பின்பற்ற வேண்டும் என யாரும் வற்புறுத்த முடியாது. அனைவரையும் பொதுவாகப் பாதிக்கும் இலகுத் தன்மையை வேண்டி நிற்கும் விடயங்கள்
r1

Page 22
இப்பகுதியில் அதிக கவனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும்.
2. சில சட்டங்களையும் பத்வாக்களையும் பொறுத்த வரையில் அவற்றின் காலப்பிரிவுகளையும் சூழ்நிலைக ளையும் விட்டுப், பிரித்து நோக்க முடியாது. அத்தகைய சட்டங்கள் அவை உருவாக்குவதற்கான காரணிகள் மாறும் போது மாறிச் செல்லக் கூடியவையாகும். இந்த சிந்தனை யின் அடிப்படையில்தான் இஸ்லாமிய சட்ட ஆய்வா ளர்கள். 'பத்வா - காலப்பிரிவு, இடம், சூழல், மரபு, இவற்றிக்கு ஏற்ப மாறக் கூடியது” என்ற முடிவுக்கு வந்தனர். பெண்களோடு சம்பந்தப்பட்ட பல சட்டங்கள் இவ்வகை சார்ந்தவையாகக் காணப்படுகின்றன. பெண்கள் பள்ளிக்குச் செல்லல் போன்றதொரு பிரச்சினையில் மிகத் தெளிவான ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் இருந்த போதிலும் கூட, கால மாற்றம் என்பதைக் கவனத்திற் கொண்டு "தீமைக்கு இட்டுச் செல்லும் அனுமதிக்கப்பட்ட செயல்களையும் தடை செய்ய லாம்" என்ற சட்ட விதியை ஆதாரம் காட்டி முழுமை யாகப் பெண் பள்ளி செல்வதையே தடை செய்து விட்டனர். இவ்வாறுதான் பெண்களோடு தொடர்பான பகுதியில் மிகக் கடுமையான போக்கு உருவாகியது எனலாம். எனவே, இவ்வகைச் சட்டங்கள் அவதானத்திற்குரியவையாகும்.
3. மதச்சார்பற்ற அறிஞர்கள் தம் சிந்தனையை வலுப்ப டுத்தவும் மதங்களை எதிர்க்கவும், பெண்கள் பகுதிசார் சட்டங்களையே ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர். இஸ்லாத்தின் மீது இல்லாதவற்றைச் சொல்லி அதன் தூதை மாசுபடுத்த முனைகின்றனர். இஸ்லாமிய வர லாற்றின் பிற்காலப் பிரிவில் தோன்றிய பிழையான நடத்தைகள் சிலவற்றையும் நவீன காலத்தில் பெண்கள் சட்டப்பகுதியில் கடுமையான போக்கை கடைப்பி டிப்போர்களது சில கருத்துக்களையும் ஆதாரமாகக்
32

கொண்டு இஸ்லாம் பெண்களின் ஆற்றல்களையும் சக்திகளையும் வளர்க்காது அழித்து விடுகின்றது என அவர்கள் வாதாடுகின்றனர். மேற்குறிப்பிட்ட அடிப்படை உண்மைகளைக் கவனத்திற் கொண்டுதான் பாராளுமன்றத்தில் பெண் அங்கத்துவம் வகித்தல் அதற்கான தேர்தலில் நிற்றல் பற்றிய பிரச்சினையை யும் நோக்க வேண்டும்.
பெண் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்தல் ஹரா மானது அல்லது பெரும் பாவம் என்பது சிலரின் கருத்தாகும். ஆனால், ஹராம் என்ற சட்டம் ஒரு தெளிவான உறுதியான ஆதாரத்தின் மூலமே பெறப்பட வேண்டும். ஏனெனில், பொருட்கள், மனிதனின் உலக நடவடிக்கைகள் அடிப்படை யில் ஆகுமானவை" என்பது இஸ்லாமிய சட்ட விதிகளில் ஒன்று. எனவே ஹராம் என்பதற்கு உறுதியான ஆதாரம் காட்டப்பட வேண்டும்.
இந்த வகையில் பெண் பாராளுமன்றத்தில் நுழைதல் ஹராம் என்று கூறுவோர் காட்டும் ஆதாரங்களையும் அவற்றின் உண்மை நிலைகளையும் ஆராய்வதனூடாக பெண்களின் பாராளுமன்ற பிரவேசத்துக்கான ஆதாரங்களை நோக்குவோம்.
“உங்கள் வீடுகளில் தங்கியிருங்கள்" என்ற இறைவசனம் சூறா அஹ்லாபில் வரும் இவ்வசனத்தை ஆதாரமாகக் கொள்ளும் சிலர் அத்தியாவசியமான தேவைகளுக்காகவன்றி ஒரு பெண் வீட்டை விட்டுச் செல்லக் கூடாது என்ற கருத்தைத் தெரிவித்தனர். இதனால் இந்த ஆதாரம் கீழ்வரும் காரணங்களால் பொருத்தமற்றதாகின்றது.
1. இந்த வசனம் இறை தூதர் (ஸல்) அவர்களது மனைவியர்கள்ை விழித்துப் பேசுகின்ற வசன்த் தொடரில் வருவதாகும். இறைதூதர்(ஸல்) அவர்களது மனைவியர் மிகக் கூடிய புனிதத்துவத்தோடு வாழ வேண்டும்.

Page 23
அவர்களுக்கான சட்டிங்கள் ஏனைய பெண்களுக்கான சட்டங்கள்ை விடக்க்ஷ்ண போக்கைக் கொண்டிருக்கும். எனவே தான் அவர்களது ஒரு நற்செயலுக்கான கூலி பல மடங்குகொண்டதாகவும் காணப்படும் என அல் குர்ஆன் விளக்குகிறது.
2.இவ்விறை வசனம் இருந்தும் கூட, ஆயிஷா(றழி) ஜமல் யுத்தத்திற்காக வெளியேறிச் சென்றார்கள். உஸ்மான்(றழி) அவர்களை கொன்றோரைப் பழிவாங்கும் மார்க்க கடமை தன்மீது சுமத்தப்பட்டுள்ளது என அவர்கள் கருதியமையே அத்ற்கு காரணமாகும். அலி(றழி)அவர்களுக்கு எதிராக நின்று ப்ோராடியமை தவறு என பிற்காலத்தில் ஆயிஷா (றழி) ஏற்றுக்கொண்டதாக அறிவிப்புக்கள் உள்ளன ள்ன்பது உண்ம்ையே. எனினும் போராடியமையை அது குறிக்குமேயன்றி வெளியேறியமையைக் குறிக்காது.
3.நடைமுறையில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறு கின்றன்ர். பாடசாலைக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் அவர்கள் செல்கின்றனர். ஆசிரியைகள்ாகவும்,மருத்துவர்க ளாகவும், நிர்வாகிகளாகவும் இன்னும் பல்வேறுபட்ட துறைகளிலும் அவர்கள் ஈடுபட்டு உழைக்கின்றனர். இதனைத் தகுதிவாய்ந்த அறிஞர்கள் யாரும் மறுக்க வில்லை. எனவே பெண்கள் வீட்டுக்கு வெளியே வேலை பார்ப்பதை நிபந்தனையோடு அனுமதிக்கலாம் என்பது இஜ்மாவான கருத்தாக மாறிவிட்டது என்று அதிகமா னோர் கூறுகின்றனர்.
4.பெண்களுக்கு தலைமைவகிப்பதற்கும், பெண்கள் விவ காரங்களைப் பொறுப்பேற்று நடாத்துவதற்கும் மதச்சார்பற்ற, ஒழுக்கக் கட்டுப்பாடுகளற்ற பெண்களே அரசியலில் நுழைந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை
34

எதிர்த்துப் போட்டியிடவும் பெண்களுக்கு ஒர் இஸ்லா மிய தலைமைத்துவத்தை ஏற்படுத்தவும் முஸ்லிம் பெண்கள் அரசியலில் இறங்குவது சமூகத்தேவையாக உள்ளது எனலாம். தனிப்பட்ட தேவைகளுக்காக பெண் வீட்டை விட்டு வெளியேறுவதைவிட சமூகத்தேவைக் காக வெளியேறுவது அவசியத்திலும் அவசியமாகும்.
5.பெண்களை வீட்டிலேயே அடைத்து வைத்தல் குறிப்பிட்டதொரு காலப்பிரிவில் - சட்டங்கள் பூரணமாக இறங்கிமுடியுமுன்னர் - விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்க ளுக்கான ஒரு தண்டனையாக இருந்தது. "மரணம் வரும்வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஒரு வழியைக் காட்டும் வரை வீட்டிலேயே பிடித்து வையுங்கள்." (அந்நிஸா = 15) எனவே சாதாரண நிலையில் ஒரு முஸ்லிம் பெண்ணின் பண்பாக இதைக் கொள்ள (ւՔւգսկւDո?
தீமைக்கு இட்டுச்செல்லும் அனுமதிக்கப்பட்ட செயல்கள்
"தீமைக்கு இட்டுச் செல்லும் அனுமதிக்கப்பட்ட செயல்க ளும் தடைசெய்யப்பட்டதே' என்பது இஸ்லாமிய சட்டவிதி களில் ஒன்றாகும். இந்த விதியைக் கைய "ண்டு சிலர் பெண்கள் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெறுவதை அனு மதிக்க முடியாது என்று கூறுகின்றனர். அதாவது தேர்தல் பிரச்சாரங்களின் போது பெண்கள் ஆண்களோடு நடமாடவும் அவர்களோடு தனியே இருக்க வேண்டியும் வரலாம். ஆண் பெண்ணோடு தனித்திருப்பது ஹராமான செயல். ஹராமான இந்த செயலுக்கு இட்டுச் செல்லும் தேர்தல் அங்கத்துவம் பெறலும் இதனால் ஹராமாகின்றது.
35

Page 24
இஸ்லாமிய சட்டவழக்கில் ‘ஸத்து தராஇஃ’ என அழைக்கப்படும் "தீமைக்கு இட்டுச்செல்லும் அனுமதிக் கப்பட்டவையும் தடைசெய்யப்படலாம்? என்ற விதி முக்கியமான விதி என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. இந்த வகையில் இந்த சட்ட விதியை நடைமுறைப்படுத்து வதில் தீவிர நிலையைக் கடைப்பிடித்தல்,இவ்விதியின் எதிர் நிலையான 'நன்மைக்கு வழிவகுக்கும் தீமையும் அனும திக்கப்படலாம்' என்ற விதியை நடைமுறைப்படுத்துவதில் கையாளும் தீவிர நிலைபோன்றே தவறானது. இவ்விதி அளவுமீறிப் பிரயோகிக்கப்படும் போது எதிர்பார்க்கப்படும் தீமைகள் தடுக்கப்படுவதை விட அதிகமான நலன்கள் இழக்கப்படுவதை இந்த வகையில் தவிர்க்க முடியாது. உதாரணமர்க, இந்தச்சட்ட விதியைப் பயன்படுத்தி பெண்கள் (பாக்களிக்கவும் கூடாது என்ற கருத்துக்கும் பலர் வரக்கூடும். ஏனெனில், அங்கும் பெண்கள் ஆண்களோடு கலந்து நிற்கின்றார்கள். இதனால் பித்னாவும் சீர்கேடுகளும் உருவாகலாம் என்று பலர் கூறலாம். ஆனால் இதன் விளைவு என்னாகும்? மதச்சார்பற்றோருக்கெதிரான போராட்டத்தில் இறங்கிய இஸ்லாமிய வாதிகளுக்கு கிடைக்கவேண்டிய பெருந்தொகையான வாக்குகளை இதனால் இழக்க வேண்டியேற்படும்.
‘ஸத்து தராஇஃஎன்ற விதியை அளவு மீறிப் பிரயோகித்த இஸ்லாமிய அறிஞர்கள்,ஒரு காலப்பிரிவில் பெண்கள் கல்வி கற்பதற்குப் பாடசாலைக்குச் செல்வதற்கும், பல்கலைக்கழ கங்கள் நுழைவதற்கும் எதிராக நின்றனர். சிலர் அவள் வாசிக்கப்படிக்கட்டும்; எழுதப்படிக்கக்கூடாது. ஏனெனில் எழுதப் படித்தால் காதல் கடிதங்கள் எழுதுதல் போன்ற தீமைக்கு அது வழிவகுக்க முடியும் என்றனர். ஆனால் இதற்கு எதிராக நின்ற சக்தி வென்றது. கல்வி கற்பது ஒரு தீமையல்ல. அது நிறைய நன்மைகளுக்கு வழிவகுக்கலாம் என்பதை எல்லோரும் உணர்ந்தனர்.
இந்தவகையில் வேட்பாளராக நிற்கும் ஒரு முஸ்லிம் பெண் அல்லது பாராளுமன்ற அங்கத்துவம் பெறும் ஒரு முஸ்லிம்
36

பெண், ஆண்களின் உள்ளத்தில் பிழையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும் வகையில் பணிந்து பேசல், அழகுக னைக்காட்டும் வேண்கயில் உடுத்தல், சகோதரன், தந்தை போன்ற மஹ்ரமியத் இன்றி ஆண்களோடு தனியாக இருத்தல், போன்ற இஸ்லாத்திற்கு மாற்றமான செயல்களில் ஈடுபடுவதிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். இஸ்லாமிய சிந்தனைப் போக்கும் நடத்தையும் கொண்ட பெண்களைப் பொறுத்த வரையில் இவை ஏற்கனவே அவர்களது வாழ்வில் நடைமுறையில் உள்ளவைகளாகும். பெண்ணும், ஆண்கள் மீதான தலைமைத்துவமும் பாராளுமன்ற அங்கத்துவம் பெண்களைப் பொறுத்தவரை யில் அனுமதிக்கப்பட முடியாதது என்போர் "இது ஆண்கள் மீதான பெண்ணின் தலைமைத்துவமாகின்றது. இது அனும திக்கப்படாததாகும்’ என்பதனை ஆதாரமாகக் கொள்கின்ற னர். "உண்மையில் ஆண்கள் பெண்களின் நிருவாகிகள்; தலைவர்கள்'ன்னக் குர்ஆன் தெளிவாகக் கூறியுள்ளது. ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக மாறுகிறது. பெண்கள், ஆண்க ளின் நிருவாகிகளாகத், தலைவர்களாக மாறுகின்றனர்." என மேலும் அவர்கள் வாதிக்கின்றனர்.
இங்கு இரு விடயங்களைக் குறிப்பிட விரும்புகின்றோம். 1.பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் பெண்கள் வரைய றுக்கப்பட்ட சிறியதொரு தொகையினராகவே எப்போது மிருப்பர். அங்கு மிகப்பெரும் தொகையினராக ஆண்களே காணப்படுவர். தீர்மானங்களை எடுக்கவும், முடிவுகளை உருவாக்கவும் அப்பெரும்பான்மையே காரணமாக இருக் கும். எனவே பெண்களின் பாராளுமன்ற அங்கத்துவம் ஆண்கள் மீதான பெண்களின் தலைமைத்துவத்தை உருவாக்கும் என்ற கருத்துக்கு ஒரு போதும் இடமில்லை.
(2) பெண்கள் மீதான ஆணின் தலைமைத்துவம் பற்றி விளக்கும் வசனம் அதனை குடும்ப வாழ்வுக்குரியதாக மட்டுமே குறிப்பிடுகின்றது. ஆணே குடும்பத்தின் தலை
37

Page 25
வன்.அதன் பொறுப்புதாரியும் அவனே. இதனைக்கீழ்வரும் வசனம் விளக்குகின்றது. “அல்லாஹ் ஒருவரைவிட ஒருவரை மேம்படுத்தியிருப்பதன் காரணமாகவும் ஆண்கள் தமது செல் வங்களிலிருந்து செலவளிப்பதன் காரணமாகவும் ஆண்கள் பெண்களின் தலைவர்களாக உள்ளனர்.” (அந்நிஸா : 34) 'ஆண்கள் தமது செல்வங்களிலிருந்து செலவழிப்பதன் கார ணமாக’ என்ற பிரயோகம், குடும்பத் தலைமைத்துவமே இங்கு குறிக்கப்படுகிறது என்பதனைத் தெளிவாகக் காட்டுகி றது. இதுவே ஆண்களுக்குக் கொடுக்கப்பட்ட மேலதிகமான ஒரு படித்தரம் எனக் கீழ்வரும் இறைவசனம் விளக்குகின்றது. “பெண்கள் மீதுள்ள பொறுப்புக்களைப் போன்றே நல்லமு றையில் அவர்களுக்கு சேர வேண்டியவைகளும் உள்ளன. பெண்களை விட ஆண்களுக்கு ஒரு படித்தரம் கூடுதலாக உள்ளது." (அல் பகரா 228)
குடும்ப அமைப்பினுள் தலைமைத்துவம் ஆணுக்கு வழங் கப்பட்டிருப்பினும் பெண்களுக்கும் குடும்ப விவகாரங்களில் பங்குண்டு. அவளது கருத்தும் அங்கு பெறப்படவேண்டும். இக்கருத்தை 'அல்குர்ஆன் குழந்தைக்குப் பால் குடி மறக்க வைத்தல் விடயத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
"அவர்கள் இருவரும் உடன்பாட்டோடு தமக்கிடையே செய்த ஆலோசனையின் படி பிள்ளைக்கு பால்குடி மறக்க வைக்கத் தீர்மானிப்பார்களாயின் அது அவர்கள் மீது குற்றமாகாது.” (அல்பகரா 233)
இறைதூதர்(ஸல்) அவர்கள் இக்கருத்தைக் கீழ்வருமாறு கூறினார்கள்; 'பெண்களிடம் அவர்களது பெண்களின் திரும ண விடயம் குறித்து ஆலோசனை செய்யுங்கள்’ (முஸ்னத் அஹமத்)
குடும்ப அமைப்புக்கு வெளியே குறிப்பிட்ட எல்லை யினுள் ஆண்கள் சிலர்மீது பெண்கள் சிலர் தலைமை வகிப்பது கூடாது எனக் காட்டும் எந்தக் தடையும் வர வில்லை. ஆண்கள் மீதான பெண்களது பொதுத்தலை மைத்துவம் கூடாது என விளக்கியே ஆதாரங்கள் வந்துள்ளன. அபூபக்ரத் (றழி) அவர்கள் அறிவித்ததாக கீழ்வரும் ஹதீஸை இமாம் புஹாரி பதிவு செய்துள்ளார். "தமது
38

விவகாரங்களை ஒரு பெண்ணின் பொறுப்பில் விட்ட சமூகம் வெற்றி பெறாது’ என்ற ஹதீஸ் முழு சமூகத்திற்குமான அரச தலைமைத்துவத்தையே குறிக்கின்றது. "அவர்களது விவ காரங்களை’ என்ற பிரயோகம் இதனையே காட்டுகின்றது. இது வழிநடாத்தப்படும் பொறுப்பை அல்லது தலைமைத் துவப் பொறுப்பைக் குறிக்கின்றது. ஆனாலும் சமூகத்தின் சில விவகாரங்களில் அவளுக்கு தலைமைத்துவம் வகிப்ப தற்கு இடமிருக்கிறது. பத்வா, இஜ்திஹாத், ஹதீஸ் துறை, நிருவாகத்துறை முதலியவற்றில் அவனுக்கு தலைமைத்து வப் பொறுப்பு வகிக்க முடியும். இத்துறைகளில் பெண் தலைமைததுவப் பொறுப்பை ஏற்க முடியுமென்பது இஜ்மா வான கருத்தாகும். இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் பெண்கள் இப்பணிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள்.
இமாம் அபூஹனீபா பெண் சாட்சியம் சொல்லக் கூடிய பகுதிகளில் அதாவது குற்றவியல் பகுதிகள் அல்லாதவற்றில் நீதிபதியாக இருக்கவும் முடியும் என்ற கருத்தைக் கொண்டுள்ளார்கள். இமாம் இப்னு கையிம் துருகுல் - ஹக மிய்யா' என்ற தமது நூலில் ஸஹாபாக்கள் தாபிஈன்களைச் சேர்ந்த சட்ட அறிஞர்கள் குற்றவியல் பகுதிகளிலும் (கொலை, விபசாரம், குடி, களவு போன்றவை) பெண்களின் சாட்சியம் அனுமதிக்கப்படும் என்ற கருத்தைக் கொண்டி ருந்தனர் எனக் குறிப்பிடுகின்றார்.
இந்தக் கருத்தைப் பின்பற்றியே இமாம் தபரி, பொதுவாக பெண் அனைத்துப் பகுதிக்குமென நீதிபதியாக வரமுடியும் என்ற கருத்தைக் கொண்டுள்ளார். நீதிபதிப் பதவியை பெண் வகிக்கக் கூடாது எனத் தடுக்கும் எந்தத் தெளிவான ஆதார மும் காணப்படவில்லை என்பதனையே இது காட்டுகின்றது. அவ்வாறு காணப்படின் இமாம் இப்னு ஹஸ்ம் * அதனைப் பற்றிப் பிடித்துக் கொண்டு வழமை போன்று அதில் முழுமையாக நிலைத்து நின்று அதற்காக மிகக் கடுமையாக வாதாடியிருப்பார்.
* இமாம் இப்னுஹஸ்ம்: கியாஸ், இஸ்திரம்ஸான், மஸ்லஹத் முர்ஸலா போன்ற அறிவுசார் சட்ட மூலாதாரங்களை ஏற்றுக் கொள்பவரல்ல. குர்ஆன் ஹதீஸ் வெளிப்படையான விளக்கங்களோடு நின்று விடுவார். "அல் முஹல்லா" என்பது இவர் எழுதிய மிகப் பெரிய சட்ட நூலாகும். தமக்கு மாற்றமான கருத்துடையோரை கடுமையாகச் சாடுவது இவரது போக்காகும். மேற்குறிப்பிட்ட நூலில் இதனை அவதானிக்கலாம்.
39

Page 26
மேலே குறிப்பிட்ட ஹதீஸ் சமூகத்தின் பொதுத் தலை மைத்துவத்தையே குறிக்கின்றது. இக்கருத்தை ஹதீஸின் பின்னணிக் காரணங்களை ஆராயும் போது புரிந்து கொள்ள முடி யும். பாரசீக மக்கள் தமது பேரரசர் இறந்த போது அவரது மகள் “போரானை’ பேரரசியாக நியமித்தனர். முழுப் பாரசீகத்தையும் ஆளும் அறிவோ, தகுதியோ அப்பெண்ணுக்கு இருக்கவில்லை. இச்சந்தர்ப்பத்தில் தான் இறைதூதர் (ஸல்) அவர்கள் மேற்குறிப்பிட்ட கருத்தைக் கூறி னார்கள்.
பெண்கள் பாராளுமன்ற அங்கத்துவம் பெறுவது தவறா னது என்று கூறுவோர் இறுதியாக எழுப்பும் ஒரு சந்தேகத்தை யும் அதற்கான பதிலையும் இப்போது நோக்குவோம்.
அதாவது, பாராளுமன்ற அங்கத்தவர்கள் அரசைவிடவும், ஆட்சியாளனை விடவும் உயர்ந்தவராக மதிக்கப்படு கின்றனர். ஏனெனில் பாராளுமன்ற அங்கத்தவர் என்ற வகை யில் அரசை எதிர்க்கவும் விசாரிக்கவும் அவருக்கு முடியும். இந்த வகையில் பாராளுமன்ற அங்கத்துவம் மூலம் ஒரு பெண் ஒருவகையில் பொதுத் தலைமைத்துவத்தைப் பெறு கிறாள் அல்லவா?
இக்கருத்தைப் புரிந்து கொள்ள பாராளுமன்ற அங்கத்து வம் பற்றிய ஒரு தெளிவைப் பெற்றுக் கொள்வது அவசி யமாகும்.
நவீன ஜனநாயக சிந்தனையில் பாராளுமன்ற மொன்றின் பணி இருபகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஒன்று அரசைக் கண்காணித்து வரல்; இரண்டாவது, சட்டமாக்கல். இவ்விரு பகுதிகளையும் ஆராயும் போது கீழ்வரும் உண்மைகளுக்கு வரலாம். V
'கண் காணித்தல்" என்பது ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் அல்லது இஸ்லாமிய வழக்கில் நன்மையை ஏவித் தீமை யைத் தடுத்தல்"அல்லது ‘மார்க்க விடயத்தில் உபதேசித்தல் என்ற கருத்தைக் கொடுக்கிறது. இது தலைவர்கள், பொது மக்கள் அனைவரினதும் கடமை என இஸ்லாம் கருதுகின்றது.
40

நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தலும் உபதேசித்தலும் ஆண் பெண் இருவரினதும் கடமையாகும். அல் குர்ஆன் இதனை மிகத் தெளிவாக கூறுகின்றது.
'ஈமான் கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவ ருக்கொருவர் பொறுப்புதாரர்கள். அவர்கள் நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கின்றனர்”
"மார்க்கம் என்பதே உபதேசித்தலாகும்’ என இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறிய போது இது யாரின் பொறுப்பு என ஸஹாபாக்கள் வினவினர். அல்லாஹ், அவனது தூதர், அவனது வேதம், முஸ்லிம்களின் தலைவர்கள், பொது மக்கள் அனைவரதும் பொறுப்பாகும்” எனப் பதிலளித்தார். (முஸ்லிம்)
இதிலிருந்து விளங்குவது யாதெனில் இறை தூதர் (ஸல்) அவர்கள் உபதேசித்தலையும் நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தலையும் ஆண்களுக்குரிய கடமையாக மட்டும் ஆக்க வில்லை. இந்த வகையிற்றான் உமர் (றழி) அவர்களின் கருத்தை ஒரு பெண் மறுத்துப் பேசிய போது 'உமர் தவறிழைத்தார், ஒரு பெண் சரியாகச் சொன்னாள்"என்று கூறி தமது கருத்தை வாபஸ் வாங்கினார் என்ற சம்பவத்தை* நாம் வரலாற்றில் படிக்கிறோம்.
இறை தூதர் (ஸல்) அவர்கள் ஹ"தைபிய்யா உடன் படிக்கை நிகழ்ச்சியின் போது உம்மு ஸல்மா (றழி) அவர்க ளின் ஆலோசனையை ஏற்று நடைமுறைப் படுத்தியமையை வரலாற்றில் காண்கின்றோம்.
உபதேசிப்பதும் ஆலோசனை சொல்வதும் நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பதும் தனி மனிதன் என்ற வகையில் ஒரு பெண்ணின் உரிமையாகும். இந்த உரிமையை வழங்கும் பாராளுமன்றத்தில் அவள் அங்கத்துவம் வகித்தல் கூடாது எனக் காட்டும் ஷரீஅத் ஆதாரம் எதுவும் கிடையாது. சமூகப் பழக்கவழக்கங்கள், கொடுக்கல் வாங்கல்களைப் பொறுத்த வரையில் அவை அனைத்தும் சட்டபூர்வமானவை அல்லது
* இச் சம்பவத்தை அறிவிக்கும் இமாம் இப்னு கதீர் இது ஆதாரபூர்வமான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டது என்கிறார்.
41

Page 27
ஆகுமானவை என்றே அடிப்படையில் கொள்ளப்பட வேண் டும். தெளிவான ஆதாரபூர்வமான சட்ட வசனமொன்று அவற்றில் ஏதாவதொரு நடவடிக்கையைக் கூடாது எனத் தடுக்கும் போது மட்டுமே அக்குறிப்பிட்ட நடவடிக்கை சட்டபூர்வமற்றது எனக் கொள்ளப்பட வேண்டும். இஸ்லா மிய வரலாற்றில் பெண்கள் ஷ"றாஅமைப்பில் அங்கத்துவம் வகித்தார்கள் என்பதற்கு ஆதாரமில்லை என சிலர் ஆதாரம் காட்ட முடியும். இது பெண்கள் பாராளுமன்றத்தில் அங்கத்து வம் வகிக்க கூடாது என்பதற்கு ஆதாரம் எனக் கொள்ளப்பட முடியாது. ஏனெனில் இப்பிரச்சினை, காலம், இடம், நிலை மைகளுக்கு ஏற்ப மாறும் பண்பைக் கொண்ட பிரச்சினை களில் ஒன்றாகும். அக்காலப்பிரிவில் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, அரச ஷறைா அமைப்பு மிக நுணுக்க மான நிருவாக ஒழுங்கைக் கொண்டிருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சில பிரச்சினைகளில் சட்ட வசனங்கள் மிகப் பொதுவாக வும், விரிந்த விளக்கமின்றியும் வந்துள்ளன. அத்தகைய பிரச்சினைகளில் ஒன்றாகவே இதுவும் காணப்படுகின்றது. காலம், இடம், சமூக சூழ்நிலைகளுக்கு ஏற்ப முஸ்லிம்கள் இஜ்திஹாத் மூலம் ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கு இத்த கைய பிரச்சினைகள் விடப்பட்டுள்ளன.
முன்பு காணப்படாத எத்தனையோ பணிகளில் பெண்கள் ஈடுபடுவதற்கு இப்போது நாம் அனுமதிக்கின்றோம். பெண் களுக்கென் தனியான பாடசாலைகளையும், கல்லூரிகளையும் அமைக்கின்றோம். இலட்சக்கணக்கான பெண்கள் அவற்றில் படிக்கின்றனர். ஆசிரியைகளாக, காணக்காளர்களாக, நிர்வா கிகளாக, டாக்டர்களாக, அவர்கள் பட்டம் பெற்று வெளி யேறிச் செல்கின்றனர். ஆண்கள் பலரைக் கொண்ட பல ஸ்தபானங்களில் பெண்கள் நிர்வாகிகளாகவும் உள்ளனர். சில வேளை அப்பெண்ணின் கணவன் கூட அவளுக்குக் கீழ் வேலை செய்பவராக காணப்பட முடியும். வீட்டுக்கு அவர் திரும்பும் போது அவள் கணவனின் தலைமைத்துவத்துக்குக் கட்டுப்பட வேண்டியவளாகின்றாள்.
42

மக்கள் அதிகார சபை அல்லது ஷ"றா சபை அல்லது சமூக பிரதிநிதித்துவ சபை என்று பல்வேறு பெயர்களில் அழைக். கப்படும் பாராளுமன்றம் அரசை விட - அதன் அமுலாக்கும் அதிகாரத்தை விட உயர்ந்த தரத்தில் காணப்படுகின்றது என்றும், அரசுத் தலைவரும் அதிலிருந்தே தெரிவு செய்யப்ப டுகின்றார் என்றும் கருதுவதற்கு காரணம், அச்சபைதான் அரசுத் தலைவரை விசாரிக்கின்றது என்பதாகும். விசாரிக் கின்ற அனைவரும் விசாரிக்கப்படுகின்றவரை விட உயர்ந்த வராக இருக்க வேண்டியதில்லை. விசாரிக்கின்றவர் விசாரிக் கப்படுகின்ற வரை விட தாழ்ந்தவராக இருந்தாலும் விசாரிக் கின்ற உரிமை இருக்க வேண்டுமென்பதே இங்கு முக்கிய LDs (5th.
அமீருல் முஃமினீன் அல்லது அரசுத் தலைவர் உயர்ந்த இடத்தையும் அரசியலில் உயர்ந்த அதிகாரத்தையும் பெற்றி ருக்கும் அதே நேரம், அவரது குடிமக்களில் ஒவ்வொரு தனிமனிதனும் அவருக்கு உபதேசிக்கக்கூடியவனாகவும், அவரை விசாரிக்க கூடியவனாகவும், அவருக்கு நன்மையை ஏவித் தீமையை விட்டு அவரைத் தடுப்பவனாகவும் காணப் பட்டான். முதலாவது கலீபாவின் உரை இந்தக் கருத்தை வலியுறுத்தியதாகவே அமைந்திருந்தது.
'சத்தியத்தின் மீது நான் நிலைத்திருப்பதைக் கண்டால் எனக்குதவுங்கள். நான் அசத்தியத்தின் மீதிருப்பதைக் கண் டால் என்னைத் திருத்துங்கள்’ இரண்டாவது கலீபாவும் இதே கருத்தைச் சொன்னார்.
'உங்களில் யாராவது என்னில் கோணல் இருப்பதைக் கண்டால் அவர் என்னைத் திருத்தட்டும்."
வீட்டு விவகாரங்கள், செலவினங்களில் - ஆண், பெண் ணின் நிர்வாகத் தலைவனாக இருந்தாலும் கணவனை விசா ரிக்க பெண்ணுக்கு உரிமையுண்டு என்பதை யாரும் மறுத்தது கிடையாது. உதாரணமாக,'இதை ஏன் வாங்கினீர்கள்'இது ஏன் இவ்வளவு கூடுதலாக இருக்கின்றது?’ என்று மனைவி கணவனை விசாரிக்க முடியும்.
விசாரிக்கின்றவரின் அதிகாரம் விசாரிக்கப்படுபவரை விட உயர்வானது என்பதை நாம் ஏற்றுக் கொண்டாலும், அது
4.

Page 28
மொத்த அங்கத்தவர்களையும் அடக்கிய பாராளுமன் றத்திற்குரியதாகவே இருக்கும். இச்சபையானது ஆண்களைப் பெரும்பான்மையாகக் கொண்டமைந்திருக்கும் என்பதால் ஆண்களின் மீதான பெண்களின் தலைமைத்துவம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடுகின்றது. சபை அங்கத்தவர்கள் அனைவரும் பெண்களாக அல்லது ஆண்களை விட பெண்கள் கூடுதலாக இருக்கும் போதே மேற்குறிப்பிட்ட பெண் தலைமைத்துவம் உருவாவது சாத்தியமாகும்.
சட்டமாக்கல்:
மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபையின் இன்னொரு முக்கிய பணி "சட்டமாக்கல்’ என்பதாகும்.
தீவிரப் போக்கைக் கொண்ட சிலர் இப்பணியைப் பெரிது படுத்தி, இது ஆட்சிப் பொறுப்பை விட அபாயகரமான தென்றும், இதுதான் அரசுக்குரிய சட்டங்களை இயற்றிக் கொடுக்கின்றதென்றும் கூறி பொறுப்பு வாய்ந்த இப்பணி பில்,பெண்கள் ஈடுபடக்கூடாதென்றும் வாதாடுகின்றனர்.
இப்பிரச்சினையை மிகவும் எளிமையாகத் தீர்த்துவிட முடியும். அடிப்படையில் சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்குரியதாகும். மேலும், ஏவல், விலக்கல்களைக் கொண்ட சட்டங்களின் அடிப்படை விதிகளை அல்லாஹ்வே அமைத்து தந்துள்ளான். மனிதர்கள் என்ற வகையில் தெளி வான சட்ட வசனங்கள் இல்லாத பகுதிகளில் சட்ட மூலா தாரங்களைப் பயன்படுத்தி சட்டங்களைப் பெறுவதே எமது பணியாகும். இதை வேறு வார்த்தையில் சொல்வதானால், சட்டங்களை ஆராய்வதில், அல்லது பொதுப்படையாக வந்திருக்கும் சட்ட வசனங்களை விளக்குவதில் அல்லது அவற்றை வரையறுப்பதில், இஜ்திஹாதில் ஈடுபடல் எனலாம். w V
இஸ்லாமிய சட்டத்துறையில் ஆண் பெண் இருபா லாருக்கும் இஜ்திஹாதின் வாயில் திறக்கப்பட்டுள்ளது. இஜ்திஹாத் ஈடுபடுபவருக்குரிய நிபந்தனைகளை விளக் இஸ்லாமிய சட்ட அடிப்படையை ஆராயும் அறிஞர்கள் (உஸ்லியூன்களில்) யாரும் இஜ்திஹாத் செய்பவர் ஆணாக
44

இருக்க வேண்டும் என்றோ அல்லது பெண் இழ்திஹாத் செய்யமுடியாதென்றோ கூறவில்லை.
முஜ்தஹரிதாயிருந்த, முப்தியாயிருந்த பெண் சஹாபியாக்க ளில் ஆயிஷா (ரழி) அவர்களும் ஒருவராவார். லஹாபாக்க ளில் இருந்த அறிஞர்களை விடவும் 'இஜ்திஹாதில்" தனியான சிந்தனைகளையும் கருத்துக்களையும் இவர் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஆண்கள் இஜ்திஹாதில் ஈடுபட்ட அளவுக்கு பெண்கள் ஈடுபடவில்லை என்பது உண்மைதான். அதற்கு பெண்க ளுக்கான கல்வி வாய்ப்புக்கள் குறைவாகக் காணப்பட்ட மையும், இன்றிருப்பதற்கு முற்றிலும் வித்தியாசமான அன்றைய சமூக சூழலும் முக்கிய காரணங்களாகும். ஆனால் இன்று கல்வி கற்கும் பெண்களின் வீதம் ஆண்கள் கல்வி கற்கும் வீதத்துக்கு நெருங்கி விட்டது என்று சொல்லலாம். மேலும், பெண்களில் ஆண்கள் சிலரை விட அதி விவேகிகளும் காணப்படுகிறார்கள். ஏனெனில் விவேகம் ஆண்களுக்குமட்டுமுள்ள பண்பல்ல. அறிவுத்துறையில் ஆண்கள் பல அடையமுடியாத அளவுக்கு ஆற்றல்களைப் பெற்ற எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள்.
அல் குர்ஆன் ‘ஸபஃ” பிரதேசத்தை ஆட்சிபுரிந்த ஒரு பெண்ணின் வரலாற்றைச் சொல்கின்றது. "ஹ"த்ஹ"த்" பற வையிடமிருந்து தூது கிடைத்ததிலிருந்து சுலைமான் (அலை) அவர்களின் விடயத்தில் அவளுடைய நிலைப்பாட்டை அவ தானிக்குமிடத்து அவள் ஆழ்ந்த அறிவையும் நல்ல சிந்த னைத் தெளிவையும் பெற்றிருந்தாள் என்பது தெரியவரு கின்றது. அப்பறவையின் இரத்தினச் சுருக்கமானதூதிலிருந்து அவள் விடயத்தைப் புரிந்து கொண்டமை, தனது சமூகத்தின் மேல்மட்ட அங்கத்தவர்களை ஒன்று சேர்த்துப் பேசியமை இவை எல்லாம் அவள் மதிநுட்பத்திற்கு ச்ான்று. "என்னு டைய இந்த விடயத்தில் எனக்கு ஆலோசனை கூறுங்கள். நீங்கள் என்னிடம் நேரிடையாகக் கருத்துச் சொல்லாத வரை நான் எந்தக் காரியத்தையும் முடிவு செய்பவளல்ல;
(அந்-நம்லு 32)

Page 29
அப்போது சக்திபலம் படைத்த அந்த ஆண்கள் பொறுப்பு முழுவதையும் அப்பெண்ணிடமே சாட்டினர் என கீழ்வரும் வசனம் விளக்குவது அவதானத்துக்குரியது.
'நாங்கள் பெரும் பலசாலிகளையும் கடுமையாகப் போரி டும் ஆற்றலையும் பெற்றிருக்கின்றோம். ஆயினும் முடிவு உங்களைப் பொறுத்தது. எனவே சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று அவர்கள் சொன்னார்கள்’
(அந்- நம்லு 33)
மதிநுட்பமும் நல்லியல்பும் கொண்ட அப் பெண் இறை வ.ணின் தூதர் சுலைமான் (அலை) அவர்களிடம் இஸ்லாத்தை தழுவுகின்றாள். குர்ஆன் கூறும் இந்த வரலாறு ஒரு வேடிக்கைச் சம்பவம் அல்ல. மாறாக ஒரு பெண் அரசியல் விவகாரங்களில் ஆழ்ந்த அறிவும் தீட்சண்யப் பார்வையும் திட்டமிடும் ஆற்றலும் கொண்டு விளங்குவதோடு பல ஆண்களால் சாதிக்க முடியாத விடயத்தை அவளால் சாதிக்க முடிந்தது என்பதை, இவ்வரலாற்று சம்பவம் எமக்கு உணர்த்தி நிற்கின்றது. ጳ.
இஸ்லாமிய சட்டத்துறையில் பெண்ணோடு, குடும்பத் தோடு, அதன் உறவுகளோடு தொடர்பான சட்டப்பகுதிகள் இருக்கின்றன. இத்தகைய சட்டப்பகுதிகளில் பெண்ணின் கருத்துப் பெற்ப்பட வேண்டும் என்பதை யாரும் மறுக்கமுடி யாது. சிலவேளை அத்தகைய சட்டப்பகுதிகளில் ஆண்களை விடவும் அவள் ஆழமான அறிவு படைத்தவளாக இருக்க (Մ)ւգԱյւb.
மஹர் தொகையின் அளவை வரையறுக்கும் சட்ட மொன்றை உமர் (றழி) அவர்கள் வெளியிட்ட போது பெண் ளின் சார்பாக அக்கருத்துக்கு மறுப்புத் မြို့နှီ႕ இது குடும்பத்தோடு சம்பந்தப்பட்ட சட்டமாக இருந்தது. மஹருக்கு ஆகக் கூடிய அளவொன்றை நிர்ணயிக்க விரும்பிய உமர் (ரழி) தமது கருத்தை மாற்றிக் கொள்ள இம்மறுப்பு காரணமாக அமைந்தது.
இவ்வாறு, உமர் (றழி) அவர்கள் பெண்களின் அபிப்பிரா யத்தைப் பெற்று பல சட்டங்களை இயற்றியுள்ளார்கள்.
46

இராணுவ சேவையில் ஈடுபட்டிருக்கும் கணவன் ஆறு மாதத்துக்கு மேல் மனைவியைப் பிரிந்திருக்கக் கூடாது என்ற சட்டத்தை உருவாக்குவதற்கு உமர் தனது மகள் ஹப்ஸா விடம் ஆலோசனை கேட்டார்:"ஒரு பெண் தனது கணவனை விட்டு எவ்வளவு காலத்துக்குப் பிரிந்திருக்க முடியும்ன்ன்று கேட்ட போது அதற்கு மகள்:"நான்கு மாதங்கள் அல்லது ஆறு மாதங்கள் பிரித்திருக்க முடியும்"என்றார்.
கணவனைப் பிரிந்து தனிமையில் வாடிய பெண்ணொ ருத்தி பாடிய சோகப் பாடலைக் கேட்ட பிறகே உமர் (றழி) அவர்கள் இராணுவத்தில் இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்தார்.
மேலும், உமர் (றழி) அவர்களது ஆட்சியில் குழத்தைக் ளுக்கு நன்கொடை வழங்கப்பட்டது. பால் குடிமறந்த குழந்தைகளுக்கே இந்நன்கொடை கிடைத்து வந்தது. தன்கொடையை அவசரமாகப் பெற வேண்டும் என்ற ஆவ லில் பாலுட்டும் காலம் முடிவடைவதற்கு முன்னரே பெண்கள் சிலர் குழந்தைகளுக்கு பால்குடி மறக்க வைத்தனர். ஒருநாள் குழந்தையொன்று இடைவிடாது அழுவதைக் கண்டு உமர் (றழி) அவர்கள் அத்தாயிடம் அதற்கான கார ணத்தை கேட்டார். அவர் உமரென்று தெரியாத அப்பெண்;
அமீருல் முஃமினீன் பால் குடி மறந்த குழந்தைகளுக்கு
நன்கொடை வழங்குமாறு கட்டளையிட்டுள்ளார். எனவே, முன்னதாகவே பால் மறக்கடித்துவிட்டேன். அதுதான் அழு கிறது"அதைக் கேட்ட உமர்: 'உமருக்கு கேடுதான் உண்டா கும். இச்சட்டத்தால் முஸ்லிம்களின் எத்தனை குழந்தைகள் இறந்திருக்கும்’ என்று வருந்தினார். பின்னர் நன்கொடையை எல்லாக் குழந்தைகளுக்கும் பொதுவாக வழங்கினார்.
பெண் பாராளுமன்றத்தில் நுழைய முடியும் என்று நாம் கூறும் போது அதன் கருத்து பெண் அந்நிய ஆண்களோடு கட்டுப்பாடுகளோ, வரையறைகளோ இல்லாது கலந்து பழகு வதைக் குறிக்காது. மாறாக அவளது கணவன், வீட்டார், பிள்ளைகள் ஆகியோரின் விருப்பத்திற்கமையவே அவள் இயங்க வேண்டும். ஆடையில், நடையில், அசைவில், பேச்சில், ஒழுக்கத்தைப் பேணியவளாகவே அவள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும். . ܚ
47

Page 30
பழைய பத்வாஒன்றும் அதற்கான மறுப்பும்
இது பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெறும் பெண்ணி டம் மட்டுமல்ல பல்கலைக்கழகத்தில், பாடசாலைகளில், மருத்துவமனையில் என்று வீட்டுக்கு வெளியேயுள்ள எந்தப் பணியாக இருப்பினும், அவற்றிலெல்லாம் பெண் இஸ்லா மிய வரையறைகளைப் பேணியே நடந்து கொள்ள வேண்டும்.
மேலும், இஸ்லாமிய அரசு பாராளுமன்றத்தில் பெண்க ளுக்கென்று பிரத்தியேக இடங்களை அல்லது தனியான ஆசனங்களை அமைத்துக் கொடுக்க வேண்டும். அது பெண்களுக்கு மேலும் பாதுகாப்புத் தருவதோடு இஸ்லாமிய வரையறைகளைப் பேணியதாகவும் அமையலாம்.
மேற்குறிப்பிட்ட பகுதிகளை எழுதி முடித்ததன் பின்னர் சிலர் என்னிடம் வந்து அல் - அஸ்ஹர் அறிஞர்கள் சிலரது பழைய் பத்வாஒன்றைக்காட்டினர் அதில் அவர்கள்:
பெண்கள் பாராளுமன்றம் நுழைவதை மட்டுமல்ல, பெண்ணுக்கான அனைத்து அரசியலுரிமைகளையும் மறுத் துள்ளனர். அதாவது பெண்ணின் வாக்களிக்கும் உரிமையி லிருந்து பாராளுமன்றத்தில் பிரவேசிக்கும் உரிமை' வரை இவர்களது மறுப்புச் செல்கின்றது. இவர்கள் தமது மறுப்பை பின்வருமாறு தெரிவிக்கின்றனர். Y−
"பெண்ணின் உடலமைப்பும், சிருஷ்டி அமைப்பும் அவள் குறிப்பிட்ட பணிக்காகவே படைக்கப்பட்டுள்ளாள் என்பது போல் தோன்றுகின்றது. அதுதான் தாய்மை, பாலூட் டல், குழந்தை வளர்ப்பு போன்ற பணிகளாகும். இவை அவளுடைய பணிகளாக இருப்பதால்தான் அதற்கேற்ற இயல்பூக்க உணர்வுகள் அவளிடம் காணப்படுவதை அவதா னிக்க முடிகிறது.
பொதுவாகப் பெண்கள் உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டு செயலாற்றக் கூடியவர்களாகவே காணப்படுகின்றனர்.
R

வரலாறு நெடுக இது பெண்களின் தனிப் பண்பாகவே இருந்து வந்துள்ளதை அவதானிக்கலாம்.
அறிவின் வேண்டுதல்களுக்கேற்ப உணர்ச்சிகளை மிகைக் கக் கூடிய நிலைக்கு பெண்ணைக் கொண்டு வருவது இந்த இயல்பூக்க உணர்வுகளைப் பொறுத்த வரையில் சிரமமாகும். சூரத்துல் அஹ்ஸாபின் சில வசனங்கள் இந்தக் கருத்தை கூறுகின்றன. நபிகளாரின் மனைவியர் உலக வாழ்வையும் அதன் சுகபோகங்களையும் விரும்பினர். மன்னர்களின் துணைவியர் வாழ்வது போன்று தாமும் வாழவேண்டுமென ஆசைப்பட்டனர். ஆனால் குர்ஆன் அவர்களின் ஆசையை அறிவுரீதியாக மறுத்துரைக்கின்றது.
"நபியே நீங்கள் உங்கள் மன்னவிமாருக்குச் சொல்லுங் கள். நீங்கள் உலக வாழ்வையும் அதன் கவர்ச்சியையும் விரும்பினால், வாருங்கள் உங்களின் விருப்பதிற்கேற்ப வாழவைக்கின்றேன் அல்லது அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கின்றேன். நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மறுமை இல்லத்தையும் விரும்பினால் அல்லாஹ் உங்களில் நல்ல முறையில் நடந்து கொள்ளும் பெண்களுக்கு நிச்சயமாக உயர்ந்த கூலியைக் கொடுப்பான்’
(அல் அஹ்லாப் 27) இந்த வசனம் இறங்குவதற்கு ஒரு பின்னணிக் காரணம் இருக்கின்றது. இதனை இமாம் முஸ்லிம் அஹ்மத், நஸாயி ஆகியோர் பதிவு செய்துள்ளனர். "இறை தூதர் (ஸல்) அவர்களைச் சூழ அவரது மனைவியர் அமர்ந்திருந்தனர். இறை தூதர் மெளனமாக இருந்தார். அபூபக்ர் (றழி) அவர்களும் உமர் (றழி) அவர்களும் உள்ளே நுழைவதற்கு இறைதூதரிடம் அனுமதி கேட்டனர். ஆரம்பத்தில் அனுமதி மறுக்கப்பட்டு, பின்னர் அனுமதி வழங்கப்பட்டது. அப்போது உமர் “நான் நபிகளாரோடு பேசுவேன் அவர் அதைக் கேட்டு சிரிக்கலாம் என்று கூறி விட் டு"இறை தூதரே! ஸைதின் மகள் இந்த உமரின் மனைவி இதற்கு முன் என்னிடம் செலவளிக்குமாறு கூறியதை நீங்கள் பார்த்தி ருந்தால் அவளுடைய கழுத்தைத் நெரித்துக் கொன்றி
a

Page 31
ருப்பீர்கள்” என்று கூறவே, நபிகளார் கடைவாய்ப் பற்கள் தெரியுமளவுக்குச் சிரித்துவிட்டு பின்வருமாறு கூறினார். ன்ேனைச் சுற்றியிருக்கும் இப் பெண்களும் செலவுக்கு அதிக வசதி செய்து தருமாறு கேட்கிறார்கள்? உடனே அபூபக்ர் ஆயிஷாவுக்கு அடிப்பதற்காக எழுந்து சென்றார். உமர் ஹப்ஸாவை நோக்கிச் சென்றார். நபிகளாரிடம் இல்லாத தைக் கேட்கிறீர்களா?" என்று இருவரும் கேட்டார்கள், அப்போது அல்லாஹ் அப்பெண்களுக்கு தமது வாழ்வைத் தெரிவு செய்யுமாறு கூறினான்.
எனவே, இந்நிகழ்ச்சியின் பின்னணியில் தான் இத்திரு வசனம் விளக்கப்பட வேண்டுமேயொழிய இந்த வசனம் காட்டும் பொதுவான கருத்திலல்ல. இந்த வசனத்தை பொது வாக விளக்கினால் குர்ஆனின் நேரடியான கருத்தோடு முரண்படுவதைக் காணலாம்.
அதே நேரம் அல் குர்ஆன் சமூகம்ொன்றுக்கு மிகச் சிறந்த முறையில் தலைமைத்துவத்தை வழங்கிய ஒரு பெண்ணின் வரலாற்றையும் கூறுகிறது. அப் பெண்ணின் துண்ணிய அறிவினாலும் முன்னேற்பாட்டினாலும் அச்சமூகம் பேரபா யத்திலிருந்து தப்பியதை நாம் பார்க்கின்றோம். அதுதான் பல்கீஸ் அரசியின் வரலாறாகும்.அவர் சுலைமான் (அலை) அவர்களோடு சேர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக குர்ஆன் குறிப்பிடுகின்றது.
"இறைவா! எனக்கு தானே அநீதி இழைத்துக் கொண்டேன். இப்போது அனைத்து உலகங்களின் ரட்சக னாகிய் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டேன்’
(Mišsigy 44) இன்றைய நிலையைப் பொறுத்தவரையில் பெண்களில் பெரும்பாலானோர் பல ஆண்களை விட தமது தாய் நாட்டுக்கு நன்மை செய்யக் கூடியோராகவே காணப்படு கின்றனர்.

அரபு இஸ்லாமிய உலகை ஆட்சிபுரியும் ஆண்களை விட சில பெண்கள் அரசியல் நிருவாகத்துறைகளில் தகுதியடைந்த வர்களாக இருக்கின்றார்கள் என்பதையும் மறுக்கமுடியாது.
இரண்டாவது, இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் முஸ்லிம் சமூகத்தின் உயர் தலைமைத்துவப் பொறுப்புக்கு பெண் வரமுடியாது என்பதில் ஏகோபித்த கருத்துக் கொண்டு ள்ளனர். இக் கருத்துத்தான் முன்பு நாம் குறிப்பிட்ட ஹதீஸில் கூறப்படுகின்றது. "தமது விவகாரங்களை ஒப்படைத்த" என்ற பிரயோகம் கிலாபத் பொறுப்பையே குறிக்கின்றது. இப்பொறுப்பை அடுத்துள்ள பதவிகளை வகிக்க முடியுமா என்பதில்தான் கருத்து வேறுபாடு நிலவுகின்றது.
எனவே இதுவரை ஆராய்ந்த விடயங்களிலிருந்து ஒரு பெண் அமைச்சராகவோ, நீதிபதியாகவோ அல்லது கண்கா னிப்பாளராகவோ இருக்க முடியும்.
இந்த வகையில் தான் உமரின் ஆட்சிக்காலத்தில் அப்து ல்லாஹ் அல் அதவியாவின் மகள் ஷிபா என்ற பெண் மதினா சந்தைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார்.
நவீன ஜனநாயக அரசியலில் ஒரு பெரும் அமைச்சராக, நிருவாகியாக, பாராளுமன்ற அங்கத்தவராக வரும் போது அவள் முழு சமூகத்தின் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கி றாள் என்பது கருத்தல்ல. மாறாக ஒரு பகுதிப் பொறுப்பைத் தான் ஏற்றுக் கொள்கிறாள். அதாவது ஜனநாயாக அரசியல் கூட்டாகச் சேர்ந்து நிறைவேற்றக் கூடிய பொறுப்புக்களாக காணப்படுவதே அதற்கு காரணமாகும். எனவே, எல்லோரும் பொறுப்புக்களில் பங்கெடுப்பது போல் பெண்ணும் அப்பொறுப்புக்களில் பங்குகொள்கிறாள்.
இங்கிலாந்தில் பதவியேற்ற மாக்கிரட் தட்சர், இந்தி யாவில் ஆட்சி புரிந்த இந்திராகாந்தி, ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனில் தலைமை வகித்த கோல்டா மேயர் போன்றோ
ரின் ஆட்சி ஒரு பெண் சமூகத்தின் மீது ஆட்சி செலுத்தியமை என்று சொல்வதை விட மிக நுணுக்கமான அமைப்பைக்
لق

Page 32
கொண்ட ஸ்தாபன ரீதியான நிர்வாக ஒழுங்கின் ஆட்சி என்பதே மிகப் பொருத்தம்.
உண்மையில் ஆட்சி செய்வது அமைச்சர் குழுவேயாகும். அமைச்சர்களின் தலைவரான பிரதம மந்திரியல்ல.
சொல்லும் அனைத்துக் கருத்துக்களையும் ஏற்றுப் பணியும் வகையில் சர்வாதிகாரம் படைத்த ஆட்சியாளனாக அவள் இருக்கவில்லை. அவள் ஒரு கட்சிக்கு தலைமை வகிக்கலாம். அதற்கு இன்னும் பல எதிர் கட்சிகள் இருக்கும். இந்தியாவில் இந்திரா காந்திக்கு நடந்ததுபோல் அவளே தேர்தலை நடாத்தி தோல்வி அடைய முடியும். தன் கட்சியால். அவளுக்கு ஒரே ஒரு வாக்கே இருக்கும். பெரும்பான்மையான எதிர்ப்பு வருமாயின் அவள் கருத்து சாதாரண மனிதனின் கருத்தாக நிற்கும். f
52


Page 33
0 பெண்களுக்கு தலைமை வ
காரங்களைப் பொறுப்பேற் பற்ற பெண்களே அரசி ருக்கின்றனர். இவர்களை
பெண்களுக்கு ஒர் இஸ்லாட டுத்தவும் முஸ்லிம் பெண்
சமூகத்தேவையாக உள்ளது.
பெண்களை வீட்டிலேயே அ தொரு காலப் பிரிவில் விப ளுக்கான ஒரு தண்டனையா நிலையில் ஒரு முஸ்லிம் ெ கொள்ள முடியுமா?
ஆண்கள் மீது மட்டும் ஓர் இ சாத்தியமா? பெண்ணின்
உணவு சமைப்பதாகவும் வி வும், பிள்ளைகளைக் கவனி தன்னை அலங்கரித்துக் செ கும்போது இலட்சிய வேகத் யும் எவ்வாறு அவளிடமிருந்

கிப்பதற்கும், பெண்கள் விவ று நடாத்துவதற்கும் மதச்சார் பலில் நுழைந்து கொண்டி
எதிர்த்துப் போட்டியிடவும், யெ தலைமைத்துவத்தை ஏற்ப கள் அரசியலில் இறங்குவது
டைத்துவைத்தல் குறிப்பிட்ட ச்சாரத்தில் ஈடுபட்ட பெண்க க இருந்தது. எனவே சாதாரண
பண்ணின் பண்பாக இதைக்
ஸ்லாமிய சமூகம் எழும்புதல் முழுநேரமும் முழுநோக்கும் ட்டை ஒழுங்கு படுத்துவதாக ப்பதாகவும், கணவனுக்காகத் ாள்வதாகவும் மட்டும் இருக் தையும் போராட்ட உணர்வை
து எதிர்பார்க்க முடியும்?