கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வதனமார் வழிபாடு ஒரு மதிப்பீடு

Page 1


Page 2


Page 3

வதனமார் வழிபாடு ஒரு மதிப்பீடு
ஈழததுப பூராடனா இலக்கியமணி கதா.செல்வராசகோபால் மு.நடேசானந்தம் B. A
பதிப்புக் குழு அன்புமணி இரா.நாகலிங்கம் செல்வி கதங்கேஸ்வரி சக்திசாந்தன்
2000
கனடிய மட்டக்களப்பு சமூகத்தின் ஆதரவிலும் மட்டக்களப்பு அன்பு வெளியீட்டு ஆதரவிலும்
கனடிய ஜீவா பதிப்பகத்தின்
நிழல் வெளியீடு.

Page 4
பதிப்புத் தகவல்கள்;
நூலாசிரியர்கள். ஈழத்துப்பூராடனுர் -இலக்கியமணி கதா.செல்வராசகோபால் 1928 (p.53LJITETëgjub, B. A
பதிப்புக்குழு அன்புமணி இரா.நாகலிங்கம் செல்வி கதங்கேஸ்வரி சக்திசாந்தன்
1. நூற்பெயர்" வதனமார் வழிபாடு - ஒரு மதிப்பீடு" 2. பகுதி மட்டக்களப்பு மண்வாசஃன 3. பதிப்பாசிரியர் ஈழத்துப்பூராடஞர் 4. பதிப்பகம் ஜீவா பதிப்பகம் (இலங்கை - கனடா) 3. அச்சிட்டது நிப்ளக்ஸ் அச்சகம் - தொரன்ரோ .ே வெளியீட்டிலக்கம் 20ர். 7 வெளியிட்ட திகதி, புரட்டாதித் திங்கள் 2000 8. விலே; $2கெனேடிய டாலர்கள் .ெ அளவு - பக்கங்கள் டிமை எட்டிலொன்று 40, 10. அச்சமைப்பு மின்கணனித் தமிழ் 11. அச்செழுத்து புத்தகம் 10, அலகு ரோமன் எழுத்துகள்
2. அச்சு நுட்பங்கள், இதயம் சகோதரர்கள் - கனடா
வியாபார விசாரக்னகளுக்கு
REFLEX PRINTING #3. 1292 Shcrwood Mills, MISSISSAUGA,Ont.
Calada L5V 1.S.

நினைவு கூர்கிறுேம்.
*முதன்முதலில வதனமார் வழிபாடு பற்றிய ஒரு சிறு தகவல் இலங்கை வானுெவியில ஒலிபரப்பியவர் "விபுலானந்த அடிகளாரின் வரலாற்றை முதன்முதவில நூலுருவாக்கியவர் "அவரது பல கட்டுரைகளேத் தொகுத்து பல தொகுதிகளாக வெளியிட்டவர் *தமிழ்க் கலக்களஞ்சியத்தில் இடமபெற்ற கட்டரையாளர் *மட்டக்களப்பு மண்ணின் கலே வளங்களேப் பல கட்டுரைகளால் பத்திரிகைகளிலும் வானுெலியிலும் வெளியிட்டவர் "பல நூல்களின் ஆசிரியர் தமிழக வெளியீட்டாளர்களின் மதிப்புக்குரியவர்
எனும்புகழுக்குரிய
அமரர் அருட் செல்வநாயகம் அவர்களே நிகனவு கூர்கிருேம்
பதிப்பகத்தார்.

Page 5
பழைய தமிழ் எழுத்துக்களா? அதுவும் இந்த 2000 ஆண்டில்!
இந்த நூலினேக் கையில் எடுத்தவுடன் நீங்கள் ஒவ்வொருவரும் கேட்கும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை, தமிழர் வாழும் உலகின் பல பாகங்களிலும் சீர்திருத்தப்பட்ட தமிழ் எழுத் துக்கள்தானே பயன்படுத்தப்படுகின்றன. நாடுகளும், அரசும், மக்களும் புதிய சீர்திருத்தப்பட்ட எழுத்தை உபயோகித்துத்தானே எழுதுகிறர்கள், வாசிக்கிறர்கள், நூல்கள், பத்திரிகைகள், அறிவித்தல்கள், அழைப்பி தழ்கள் , வர்த்தக விளம்பரங்கள் ஆதியவற்றை அச்சிடுகிறர்கள்! அப்படி யிருக்க நீங்கள் மட்டும் ஏன் பழைய எழுத்துகளேப் பாவிக்கும் கட்டுப் பெட்டிகளாக இருக்கிறீர்கள்? என்று நீங்கள் மாத்திரமல்ல, எங்கள் வெளியீடுகளேக் காண்பவர் யாவரும் கேட்கிறர்கள்.
மின்கணனியில் தமிழ் எழுத்துக்களே நெறிப்படுத்தி உலகின் முதல் முதலில் அறிமுகப்படுத்தியும் தமிழ் அச்சமைப்புச் செய்தும், அதன் மூலம் நூல்கள் பத்திரிகைகள் என்பவற்றை அச்சிட்டவர்கள் நாங்கள். அதுமட்டுமல்ல அமரிக்கக் கண்டத்தில் கனடா தேசத்தில் தொறன்ரோ நகரில் றிப்ளக்ஸ் பிரிண்டர்ஸ் எனும் பெயரில் தமிழில் அதுவும் மின்க னனித் தமிழில் அச்சுசிடும் அச்சகத்தை நிறுவிய பெருமையும் எங்களுக் குண்டு. அன்றுதொட்டு இற்றைவரை சீர்திருத்தத்தை ஒதுக்கிப் பழைய எழுத்துகளிலேயே அச்சிட்டு வருகிருேம். காரணம் சீர்திருத்தம் ஒன்றினுல். காலம், இடம், முயற்சி என்பன சேமிக்கப்படல் வேண்டும். இந்த முன்று காரியங்களேயும் சீர்திருத்த எழுத்துகளால் செய்ய முடியாது போயிற்று. மற்றது மின்கணனி திருத்தம் செய்யப்பட்ட பழைய எழுத் துகளே ஏற்றுக்கொள்ளாது. அதனுல் ஒரே தொடுகையால் அந்தக் கூட்டு எழுத்துகக்ள அச்சிடமுடியாதென்று அதற்கு ஒரு காரணம் சொன்னுர்கள். அது எங்களால் முடிகிறது மட்டுமல்ல எந்தவொரு மின்கணியாலும் பழைய எழுத்துகளால் அச்சமைப்புச் செய்ய முடிகிறது. இப்படி இருக்க ஏன் சீர்திருத்தமென்ற அரசியல் லாபம் கருதுவோர்கள் கொண்டு வந்த பயனற்ற கருத்தை நாம் பின்பற்ற வேண்டும் என்பதை நிக்லநாட்டவே நாங்கள் 2000 ஆண்டிலும் பழைய எழுத்துகளேக் கைவிடாமல் காத்து வருகிருேம், மின்கணணிக் கருவிகளே பழைய எழுத்துகளே விரைவில் கேட்கும் காலம் வெகுதாரமில்லே. அப்போது பழைய எழுத்துக்கள் அவசி யப்படும். இது எங்கள் உறுதியான நம்பிக்கை
----பதிப்பகத்தார்.
 
 

புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளே அவர்களின் முழு உருவச் էր: 22.1999ல் மட்டக்களப்பு கல்வித் தினேக்களச் சந்தியில் திறந்து வைக்கப்பட்டது. விலே செய்வதற்கான ஆபா 25000 அன்பளிப்புச் செய்தவர் லவர்மனணியின் மானவர் , இலக்கியமணி கதா.செல்வராசகோபால் - கனடா
- தகவல் புலவர்மனி உருவக சிலேதிறப்பு விழா மலர்
5

Page 6
பதிப்பகத்தார் பகர்வன.
மட்டக்களப்பு மண்ணின் வளத்தில் ஒரு தனித்துவம் உண்டு, ஆரியமாயையின் சாயல்படியாத பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள், சமயக் கொள்கைகள் என்பதுதான் அந்தத் தனித்துவத்தின் முக்கிய கூறுகள். எத்தொழில் புரிபவர்களாக இருந்தாலும் அத்தொழிலின் அடிப் படையில ஆக்கப்பட்ட குலமாக இருப்பினும் அவர்களுக்கு மட்டக் களப்பில் மனித நேய அடிப்படையில் அமைந்த சுயமரியாதைக்கு இடமுண்டு. அவர்களேத் தீண்டாமை எனும் அரக்கன் இங்கு சாடுவது மிகமிகக் குறைவு.
இப்படிப்பட்ட மண்ணில் கால்நடை பேணும் தொழில் ஒரு உன்னத இடத்தில் இருந்து வந்துள்ளது. எருதும் ஏரும் கொண்டு செய்யுந் தொழிலாக வேழாண்மைச் செய்கை ஒருகாலத்தில் இருந்தது. அப்போது வேழாண்மை வயற் சொந்தக்காரர்களான போடிமார் தமக்கு வேண்டிய எருமைகளேயும் பசுக்களேயும் காடு சார்ந்த இடங்களில் பட்டி கண் வைத்து வளர்ந்து வந்தனர். அப்படியான பட்டிகள் கமச்செய் கைக்கு வேண்டிய கால்நடைகளேயும் பாலுணவுகளேயும் மக்களுக்கு
தந்து வந்தது.
அப்படிப்பட்ட பட்டிக்களும் அதனேப் பேணிக் காத்து வந்த பட்டிக்காரர்களும் எவ்வாறு தோன்றினூர்கள் எவ்வித மாற்றங்களுக்குள் ஆளாகி இன்று பாற்பண்ணேக்காரர்களாகினர் எனும் ஒரு வரலாற்றை எடுத்துக் கூறும் இந்த நூல் ஒருபுதுமைப் படைப்பு. தொழில்சார்ந்த ஒரு முனேயில் இருந்து மட்டக்களப்பு மண்ணின் மக்களின் வாழ்க்கையை எடுத்து ஆராயும் நூலாக அமைந்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு முயற் சியில் நாங்களும் ஈடுபடுவதில் மகிழ்ச்சி அடைகிறுேம்
எட்வேட் இதயச் சந்திரா
நிழல் வெளியிட்டாளர்
மிசிஸ்சாகுவ - för rT ĆW).

ஈழத்துப் பூராடஞரின் இல்ல நூலகம் அமரர் ஜோசப் பாலசிங்க நினேவு ஆய்வு
நூலகமாக 6.300ல் பொ துமக்கள பாவக்கக்கு திறந்து வைக்கப்பட்டது.

Page 7
உள்ளடக்கம்.
1. முகப்ப்புத்தாள்
2. பதிப்புத் தகவல்கள்
3. நினேவுகூர்கிறேம்
4. பழைய தமிழ் எழுத்துக்களா அதுவும் இந்த 2000ல் 5. புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் உருவச் சிலை 6. பதிப்பகத்தார் பகர்வன
7. அமரர் ஜோசப் பாலசிங்கம் நீனேவு ஆய்வு நூலகம்
8. உள்ளடக்கம்
9. நூலாசிரியர் உரை 10. ஏட்டுச் சுவடிகளேத் திரட்டல் 11. தேற்றத்தீவு மகா வித்தியாலய நீர்வழங்கல் திட்டம் 12. கூட்டுப் படைப்பாளியின் குறிப்புகள் 13. புலவர்மணி சிலேக்கு முன்னுல் நூற்ருண்டு விழா 14. கனடிய மட்டக்களப்பு சமூக வெளியீட்டுரை 15 அமரர் ஜோ பாலசிங்க நினேவு நூலகத் திறப்பு விழா 16. மட்டக்களப்பு அன்பு வெளியீட்டு ஆதரவுரை 17. மட்டக்களப்புவதனமார் வழிபாடு ஒரு மதிப்பீடு 18. நூல் அறிமுகம் 19. வதனமார் வழிபாட்டு இலக்கியங்கள் 20. 1 - வதனமார் யானேகட்டு அகவல் 21. 2-வதனமார் குழுமாடு கட்டு அகவல் 22, 3 - வதனமார் குழுமாடு கட்டுக் காவியம் 23.4 - வதனமார் தேன்வெட்டுக் காவியம் 24, 5 - வதனமார் உளர் சுற்றுக் காவியம்
25. பி -வதனமார் பொங்கல் வழிபாட்டுக் காவியம் 26. பட்டிக்காரர்களின் வதனமார்பற்றிய நம்பிக்கை 27. முடிவுரை 28. சொல் விளக்கம்
i

நாலாசிரியர் உரை.
இலங்கை வானெலியும் தினகரன் பத்திரிகையும் மண்வாசனைக் கவிகளுக்கும் கட்டுரைகளுக்கும் போதிய இடமளித்த காலத்தில் மட்டக் களப்பின் பல எழுத்தாளர்கள் இந்த முயற்சிக்குப பக்கபலமளிக்கும் நோக்கில் தங்கள் எழுத்தாற்றலே இத்துறையில் செலவிட்டனர். அவற்றின் மூலமாக பட்டி தொட்டிகளில் கவனிப்பாரற்றுக் கிடந்த பல இலக்கியங்களும் சுவையான சம்பவங்களும் வெளிக்கொணரப்பட்டன. பல புதிய படைப்பாளிகளும் தோற்றினர். அவற்றில் ஒன்ருக பிரபல எழுத்தாளர், நூலாசிரியர், சிறப்பாக விபுலானந்த அடிகளாரின் ஆக்கங் களேப் பல நூல்களாக பதிப்பித்த பதிப்பாசிரியர் குருமண்வெளி அருட் செல்வநாயகம் அவர்கள் 'மட்டக்களப்பின் வழிபாட்டுப் பாடல்கள்" என்ற தலைப்பில் களுவாஞ்சிக்குடி கவி.கனகசபை அவர்களுடன் இணேந்து ஒரு நிகழ்ச்சியை இலங்கை வானெலி - கிராமிய சஞ்சிகையில் ஒலி பரப்பினர் அதில் ஒரு சில நிமிடங்கள் மட்டும் இடம்பெற்ற வதனமார் சாவியம் என்ற பாடல்கள் எந்தன் கவனத்தைக் கவர்ந்தது.
அதன் பின்னர் அதையிட்டு விபரமாக ஒரு நிகழ்ச்சி தயாரிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் மட்டக்களப்பில் பட்டிகளுக்குச் சொந்தக்காரர்களான போடிமாரையும் பட்டிக்காரர்களேயும் வதனமார் சடங்கு செய்யும் பூசாரிகளான சில கட்டாரிமார்களேயும் காணுந்தோறும் தகவல்களேத் திரட்டினேன். இதன் போது வதனமார் சடங்கு என்னும் தலேப்பில் ஒரு நிகழ்ச்சியை 1957ம் ஆண்டு ஒலிபரப்பினேன். அது ஏறக் குறைய 15 நிமிடங்கள் கொண்டதாக அமைந்தது. ஒரு காவியத்தைப் படிக்கவும அதற்குரிய முகவுரையை எடுத்துச் சொல்லவுமே அநத் நேரம என்னே அனுமதித்து. அதன்பின் அதில் உள்ள ஈடுபாட்டால் செல்லு மிடங்களிலும் எனது அச்சகத்துக்கு வரும் வாடிக்கைக்காரர்களிடமு மிருந்து மேலதிக தகவல்களேச் சேகரிக்கலானேன். 1984ம் ஆண்டி லேயே நான் தாயகத்தைவிட்டு கனடாவுக்கு புலம் பெயர்ந்து வந்து விட்டேன். நான் தேடி வைத்த தகவல்கள் என்னேக் கைவிட்டுப் போய் விட்டன என்றே நினைத்தேன்.
பதினுறு வருடங்களுக்குப் பின்னர் நான் தாயத்துக்குச் சென்று
100 நாட்களே தங்கியிருக்கக் கூடியதாக இருந்தது. அப்போது நான் விட்டுச் சென்ற பல குறிப்புப் புத்தகங்களை மீண்டும் காணக்கூடிய

Page 8
நூலகத்தை பொது நூலகமாக்கும் பிரகடனத்தை ஈழத்துப் பூராடனுர்
போவித்தளிக்கிரு
I |
N
மட்டக்களப்பு கலாச்சாரச் சபைக்கு அவர் பல ஏட்டுச் சுவடிகளே ஊர்ஊராகச் சென்று பெற்றுக்கொடுத்தார். அதில் பாண்டிருப்பில் வசித்த செட்டிடாளேயம் புலவர் கணபதிப்பிள்க்ளயின் மகன் அமரர்திரு செல்வநாயகம்
ܠܢ757N
HAWA MINNA THIT "THA 酥 # 一°
|
அதிபர் அவர்களின் இல்லத்தில் ஏட்டுப் பிரதிகளே அவரது மக்காவியிடம்
இருந்து பெற்று கலாச்சார உத்தியோகத்தர்களான அன்புமணி, இரா
நாகலிங்கம், செல்விதங்கேஸ்வரி அவர்களிடம் ஒப்படைக்கிருச் O
 
 
 
 
 
 
 
 
 

வாய்ப்பு வாய்த்தது. அதில் வதனமார் வழிபாடு சம்பந்தப்பட்ட குறிப்புகளும் தகவல்களும இருந்தன. நாட்டில் இருந்த பயங்கர சூழ்நி ஃலயில் என்னுல் சிலரைச் சந்தித்து மேலதிக தகவல்களேச் சேர்க்க முடியாதிருந்தது. ஆணுலும் நான் சிறுபிள்ளேயாக இருக்கும்போதே அறிமுகமான ஒரு துடிப்பும் ஆற்றலும் உள்ள வாலிபனிடம் அந்தப் பொறுப்பையும் அதுபோன்ற தகவல்களேத் தேடி எடுக்கும் பொறுப்பையும் ஒப்படைத்து விட்டு வந்ததேன். அவர் தனக்கிட்ட தமிழ்ப் பணியை நல்லபடியாகச் செய்து வருகிறர். அவற்றுள் மட்டக்களப்பு மாநில வசந்தன் கவிகள், வதனமார் காவியங்கள் என்பன அடங்கும். அதில் ஒன்று "மட்டக்களப்பு மாநிலத்தில் வசந்தன் கூடத்து ஒரு நோக்கு" என்ற நூலாக வெளிவந்தது. அதில் இவர் திரட்டாசிரியராய் முயன்ருர், இப்போது "வதனமார் வழிபாடு ஒரு மதிப்பீடு" என்ற நூலிற்குக் கூட்டா சிரியாகிறர். இவரது தமிழ்ப் பணி ஈடுபாட்டிற்கு நன்றிகள். இம்முயற்சியில் ஈடுபட்டு வரும் வாலிபர் தேற்றத்தீவு மு.நடேசானந்தம் B.A என்பவராவார் இவர் கல்வித் துறையில் பணிபுரிகிருர்,
1948ம் ஆண்டளவில் மண்டுருக்கு அருகாமையில் இருந்த ஒரு பட்டிக்குச் செல்லவேண்டி ஏற்பட்டபோது அங்கு கண்ட காட்சி மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருந்தது, பரட்டைத் தல், இடுப்பில்மட்டும் கோவணம், சாம்மல் பூத்த மேனி காவிப்பற்கள் ஆதியவற்றுடன் பட்டிக் காரனும் அவனின் மகனும் நின்றிருந்தார்கள், பட்டிக்கு ஒரு பக்கத்தில் சாணம் மஃபோல் குவிந்திருந்தது. ஒரே கால்நடை நெடி, பட்டிக்குப் பக்கத்தில் பரண்வடிவில் அமைக்கப்பட்ட வாழிடம். காட்டுக்கு மத்தியில் இவர்கள் பயத்துடனும் பீதியுடனும் தனித்த சூழ்நிக்லயில் வாழ்ந்தனர். இவர்களின் உடலமைப்பின் அளவுக்கு அதிகமாக வயிற்றின் சுற்று பெருத்திருந்தது. அது தொந்தியல்ல, வயிற்றுக் கட்டியாகவே இருந்திரு க்கலாம். ஏனெனில் இவர்கள் அடிக்கடி மலேரியாக் காய்ச்சலாலும் அசுத் தமான குடிநீர் அருந்துவதால் ஏற்படும் பாண்டு ரோகத்திற்கு ஆளாவதாலும் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஐந்தாவது மாநாடு மதுரையில் நடப்பதற்கு ஏர்கோல் விழாவாக அதன் மட்டக்களப்புக் கிளே ஒரு மாநாட்டை நடத்திற்று. அவ்விழாவிற்காகப் பெருமளவில் தயிரும் பாலும் நெய்யும் பெறும் ஏற்பாடு செய்வதற்காக அதன் உணவு வழங்கும் குழுவுடன் நான் 1978ல் மட்டக்களப்பு வாவிக்கு மேற்கே கொக்கட்டிச் சோலேக்கண்மையில் உள்ள ஒரு பட்டிக்கு சென்றிருந்தோம். அப்போது நான் அங்கு கண்ட பட்டியின் அமைப்பும் பட்டிக்காரரின் வாழ்க்கை முறையும் நினேக்க முடியாத அளவுக்கு மாற்றம் அடைந்திருந்தது. பட்டி ஒரு காட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்தாலும் வழக்கமாக அங்கே மலே போல குவித்து வைக்கப்பட்டிருக்கும் சாணக் குவியலேக் காணமுடிய வில்லே. அதற்குப் பதிலாக அவைகளே சாக்குகளில் கட்டி மூடைகளாக
11

Page 9
பதினூறு வருடங்களின் பின் தாயகம் திரும்பிய ஈழத்துப் பூராடனுர், தனது மாேவி பீபற்றிஸ் பசுபதிப்பிள்ளே செல்வராசகோபால் ஆசிரியை தனது பிறந்த கிராமமாகிய தேற்றத்தீவு ருேகாமி பாடசாலேயில் - 0 1949 - 3.283 வரையிலான காலகட்டத்தில் 35 வருடம் தொடர்ந்து
ரேண செய்த நிக்னலாகத் தன்னே வளர்த்து உயர்வி ாடிச் செமீ
FAKËFI" அமரர் தி சிதா,வேல்முருகு அதிபரின் பேரில் தனது இளேபாற்று ஊதியத்தில் ஒன்றரை இலட்சம் ரூபாவில் நிறுவிய குடிநீர் வழங்கும் திட்டத்தையும் 28.300ல் நிறைவு செய்து வைத்தார்.
-
12
 
 

அடுக்கி வைத்திருந்தனர். அப்போதுதான் இவை எருவுக்காக உளர்கள் தோறும் எடுத்துச் சென்று விற்கப்படுவதாக அறிந்தேன். அதுபோலவே பால் சேகரிக்க மண்பாண்டங்கள் இருப்பதற்குப் பதிலாக அலுமினியத் தாலான பாற்தகரங்கள் இருந்தன. காலேயில் கறக்கப்படும் பாலேத் துவிசக்கரவண்டியில் எடுத்துச் சென்று அருகாமையில் அமைந்துள்ள பால் சபையின் சேகரிக்கும் நிலேயங்களில் ஒப்படைத்து வருவார்கள்.
காவற்பரண் இருந்தாலும் பட்டியின் பக்கத்தில் ஒரு மண்விடும் கிணறும் சுற்றிவர வேலியிடப்பட்டு பட்டிக்காரர்களின் வதிவிடமாக அமைந்திருந்தன. இதக்ன இப்போது பட்டி என்று சொல்லாமல் வாடி என்று அழைத்தனர். அதனேச் சுற்றி தென்னே மரங்களும், தோடை, எலுமிச்சை, பலா, வாழை போன்ற கனிதரும் தருக்களும் நின்றன. வீட்டின் ஒரமாக காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்தன. பட்டிக்காரனின் மனேவி மக்களின் உடை களிலும் தோற்றத்திலும் ஒரு சாதாரண கிராமவாசிக்குரிய அம்சங்கள் பொலிந்தன. பிரயான வசதிக்கு துவிசக்கர வண்டிலும் இரட்டை மாட்டுக் கட்டை வண்டிலும் முன்றிலில் நின்றன. பட்டிக்காரர்கள் பாற்பண்கணக்காரர்கள் ஆகிவிட்ட காட்சி என்க்னப் புல்லரிக்க வைத்தது.
அதற்கு மேலாகப் பட்டிகளின் உரிமையில் அவர்களுக்குப் போதிய பங்குரிமையும் இருந்தமை மந்தைத் தொழிலின் வளர்ச்சியையும் உறுதிப்பாட்டு நிலேயையும் எடுத்துக்காட்டிற்று. ஆயினும் வதனமார் வழிபாட்டில் இருக்கும் நம்பிக்கை அவர்களுக்கு அதிகரித்து இருந்ததே தவிர குறையவில்லே என்பதை நடந்து முடிந்த சடங்கின்போது பூசையில் வைத்த வேப்பம் பத்திரம், கமுகம் பாக்ள, தாமரைப்பூ என்பவை உலர்ந்த நிலயில் வீட்டின் முன்புற உட்பக்கக் கூரையில சொருகப்பட்டிருந்தமை துலக்கிற்று.
முன்பெல்லாம் பட்டிகளின் சொந்தக்கார போடிமார் சென்று நடத்தி வந்த வதனமார் சடங்கு இப்போது அந்தப் பட்டிகள் அமைந் துள்ள இடத்தை சூழ்ந்த இடமக்களின் ஒரு பொதுவிழாவாகவும் கொண்டாடப்பட்டுவருகிறதுபொது மக்களும், குறைந்த அளவில் கால் நடை வைத்திருப்போர்களும் இந்தச் சடங்கில் கலந்துகொண்டு
வதனமாரை வழிபடலாயினர்.
இந்த மாற்றத்தையும் மறைந்து அருகிப்போன பட்டிக்காரர் பரம்பரையும், பட்டிகளுக்குச் சொந்தக்காரர்களாக இருந்த போடிமார் களேயும் நான் சேகரித்து வைத்த வதனமார்பற்றிய செய்திகளேயும் இணேத்து இந்த நூலே ஆக்குவதால் மட்டக்களப்பில் மறைந்துபோன ஒரு வரலாற்றை இந்த நிலயிலாவது ஆவணப்படுத்தி வருங்காலச் சந்ததியினருக்கு விட்டு வைக்கலாம் என்று எண்ணியே இந்தச் சிறு நூலே படைக்க ஆரம்பித்தேன்.
13

Page 10
இதற்கு வேண்டிய தகவல்களேயும் காவியங்களேயும் நான் 1956ல் இருந்த் சேகரிக்கத் தொடங்கியபோது, உதவியவர்கள் பலர், அவற்றுள் குறிப்பிடக் கூடியவர்களின் பெயர்களே நான் இப்போது ஞாப கத்திற்கொள்ள முடியாவிட்டாலும்,தேற்றத்தீவு சண்முகம் சாத்திரியார், கழுதாவளே சிதங்கராசா அண்ணுவியார், செட்டிபாளேயம், கு.கந்தப்பன், மாங்காடு அமரர்கள் திரு.க வேலாயுதம், திரு.க.கணபதிப்பிள்ளே ஆசிரி யர்கள், கிரான்குளம் திரு குழந்தை, . வீ.பெரியதம்பி, . ஆரையம்பதி அமரர் இளேயதம்பி தலேமையாசிரியர், குருமண்வெளி, திரு முருகுப் பிள்ளே, அமரர்கள். வே.பூபாலரெத்தினம் ஆசிரியர், திரு வராக முத்து சாத்திரியார், நிந்தவூர் கே.எல்.அபூபக்கர் ஆசிரியர், சம்மாந்துறை அமரர் கலந்தர்லெப்பை ஆசிரியர். கொம்மாதுறை அமரர் கே.ராஜகோபுால் ஆசி ரியர் களுவாஞ்சிகுடி அமரர் கவி. கனகசபை, பழுகாமம் கே.விநாயக மூர்த்தி இக்ளப்பாறிய அதிபர், அமரர் செட்டிபாக்ாயம் க.வ.செல்வநாயகம் மண்டுர் அமரர் திரு செல்வநாயகம் ஆசிரியர், மண்டுர்க் கோட்டைமுக்ன அமரர் திரு நா. தம்பிப்பிள்ளே ஆசிரியர்.என்பவர்கள் என் மனதில்
ற்கின்றனர்.
நான் பாடசாலே மாணவனுய் இருந்த காலத்தில் எங்களின் வீட்டருகில ஒரு பட்டிக்காரர் வசித்து வந்தார். அவர் எங்களது உற வினர். இவரை வருடத்தில் சில நாட்கள்தான் வீட்டில காணமுடியும். அதுவும் தனது இல்லத்தில் நடைபெறும் நல்ல காரியங்களின் போதும், சித்திரை வருடப் பிறப்பு. தைப்பொங்கல் போன்ற வருடாந்த கொண்டாட் டங்களிலும், பக்கத்தில் நடக்கும் கோயிற் திருவிழாக் காலத்திலும்தான் இவர் ஊரில் நடமாடுவார். ஏனேய காலத்தில் பட்டியிலதான் இவரது சீவியம் இருக்கும். அங்கிருந்து வரும்போது தயிர் முட்டிகளேக் காத்தா டியில் வைத்துக் காவிக்கொண்டு வருவார். அதுபோலவே திரும்பிப் போகும்போது சாப்பாட்டுக்குரிய அரிசி, தேங்காய். எண்ணெய், மசால் வகைகள் என்பவற்றை உடனெடுத்துச் செல்வார். இதை இங்கு சொல்ல வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் இதன் மூலம் இரு காரியங் களே நாம் அறிந்துகொள்ளலாம். ஒன்று பட்டிக்காரர்கள் என்றெரு இனமோ குடியோ இருந்ததில்லே. வயற் சொந்தக்காரர்களின் இனசனத் தாரே பட்டிக்காரர்களாக்கப்படுவார்கள். என்பது. இரண்டாவது இதன் மூலம் அவர்கள் எவ்வளவு தூரம் மக்கள் சமுதாயத்திலிருந்து தனிமைப் பட்டிருந்தனர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இதுபற்றிய மேலதிக தகவல்களே மதிப்பீடு எனும் பகுதியில் காணலாம். இத்தகைய வரலாற்று அடையாளங்கள் வருங்காலச் சந்ததியினருக்கு எடுத்து முன்வைக்கப்படும் நோக்கில் முயற்சிகளில் படைப்பாளிகள் ஈடுபட வேண்டும். அதைவிடுத்து சமூகத்தின் தேவை களுக்கு ஒவ்வாத, வடமொழிச் சொற்கள் தொண்ணுறு வீதம் தப்புந் தவறுமாகக் கலந்த நூல்களே வெளியிடும் முயற்சிகளில ஈடுபடுவதைத்
4.

அண்மையில் நான் தாயகஞ் சென்றிருந்தபோது ஒரு நூலேக் கண்டேன். அது ஒரு பழைய ஏட்டுப்பிரதியின் அச்சுப் பதிவு என்று சொல்லிக் கொண்டார்கள், பதிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது ஒரே ஒரு பிரதிதான் என்று பதிப்புரையில் சொல்லப்பட்டிருந்தது. . ஒப்பிட்டுப் பார்க்கவோ உண்மை நிலே காணவோ வேறு பிரதிகள் இல்லாத நி3லயில் நூல் வெளிவந்தது. ஒரு மரம் தோப்பல்ல. குறைந்தது இரண்டு மூன்று மரங்களாவது இருந்தால்தான் தனி மரங்கள் தோப்பாகும் நிலே உண்டாகும். கையில் கிடைத்த ஒரே ஒரு பிரதியைக் கொண்டு நூக்லத் துணிவது தக்கதொரு முயற்சியாகாது.
இந்த நூல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் அண்மையில்தான் நான் வசித்து வந்தேன். வசித்து வந்தேன் எனபதிலும் பர்க்க அந்தப் பகு தியில் உள்ள அறிஞர்களேப் பற்றி நான் நன்கு அறிவேன். அதில் ஒருவர் கழுதாவளே திருநீற்று கேணியில் வசித்த வீரபத்திரன் சாமியார் என்பவர். அவரது தமிழறிவு இலக்கண இலக்கிய அத்திவாரம் கொண்டது. வீரபத்திரன் சுவாமிகளின் தோத்திரத் திரட்டுகள் இரண்டை அச்சிட்டு வெளியிட்டுள்ளேன். இதற்காக நான் இடைக்கிடை அவரது குடி லுக்குச் சென்று உரையாடுவது வழக்கம். அப்படிச் செல்லுந் தருணங் களில் அங்கு அவர் அவித்த வள்ளிக் கிழங்கைத் தந்து உபசரித்தது என்னுல் மறக்க முடியாததொன்று. அப்போது அவர் வேதாந்த சூரியன், வேதாந்த பிரம்ம ரகசியம். வேதாந்த பாஸ்கரன் போன்ற நூல்களே வைத்து தானறிந்த தத்துவங்களே ஒலேப் பிரதியில் எழுதிக் கொண்டிருப்
அதே பிரதி அவரது மரணத்தின் பின்னர் இந்தியாவிலிருந்து வந்து இங்கு வசித்த ஒரு யோகியால் செய்யப்பட்டது என்ற கணிப்பில் ஒலே சுவடி நூல் வடிவம் பெற்றது கண்டு திகைத்துப் போனேன். அப்படியாக 1945க்குப் பிறகு எநத யோகியும் இப்பகுதியில் வந்து வாழ்ந்ததில்லே. ஆணுல் முந்லழுநீசோமேஸ்வரானந்த கிரி என்ற் ஒருவரும் சாம்பல் சாமி என்று ஒருவரும் இங்கு வாழ்ந்தனர். அவர்களுடனும் நான் ஊடாடியுள்ளேன். ஆனல் அவர்கள் இத்தகைய முயற்சியில ஈடுபட்ட தாக நானறியேன்.
அந்த நூலேயும் நான் முன்னர் குறிப்பிட்டவை போன்ற நூல் களேயும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தத் தில்லு முல்லு தெற்றெனப் புலணுகும். இதையும் நான்இங்கு எடுத்துரைக்க வேண்டியுள்ளது. காரணம் இப்படியான இலக்கிய மோசடிகள் இனங்கண்டு தவிர்க்கப் படல் வேண்டும் என்பதே ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சிக்கு ஏதுகோலாக இருக்கும். அதுமட்டுமல்ல இனி ஏட்டுப் பிரதிகளே நூலு ருவாக்க முன்வருபவர்களுக்கும் பதிப்பாசிரியர்களிக்கும் எசரிக்கையா கவும் இருக்க வேண்டுமென்று அவாவுகிறேன்
15

Page 11
இந்த விசயம் நான் எடுத்துக்கொண்ட பணியுடன் சம்பந்தப்பட்டதல்ல. எனினும் இத்தகைய ஆள்மாறட்டங்களும் அவசர முடிவுகளும் ஒக்லச் சுவடிகளேப் பதிப்பிக்கும் விசயத்தில் இனிமேலாவது இடம்பெறக் கூடாது என எதிர்ப்பார்க்கின்றேன், இலங்கையை விட்டு வெளிக்கிழம்பும்போது ஏறக்குறைய என்னுல் மட்டகளப்பு மாநிலத்தில் சேகரிக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஏட்டுப் பிரதிகளே விட்டு வந்தேன். அவற்றுள் அம்மானே, இலக்கியம், மாந்திரிகம், கூத்து, வைத்தியம் முதலியன அடங்கும். அப்படி இருந்தும் அவற்றுள் கபோத காதை, இர ணிய சம்ஹார அம்மானே எனும் இரண்டே இரண்டு பிரதிகளே மட்டும் என்னுல் அச்சுருக் கொடுக்க முடிந்தது. அவற்றில் பல பிரதிகளேச் சேர்த்த பிறகே நூலின் (முழுமையைத் துணியும் நிலே எனக்கு ஏற்பட்டது. ஏனேயவைகளில் ஆய்வுக்கும் ஒப்பீடு செய்வதற்கும் போதிய பிரதிகள் சேரும்வரையும காத்திருந்தேன். ஆணுல் இப்போது அவைகள் என் இல்ல நூலகத்தில் இல்லாதிருப்பதையிட்டு கவக்லப்படுகிறேன். அதே தருணம் முழுமையான ஆய்வு செய்யாமல் தமிழுக்கு பிழையான தகவல் களேத் தந்துவிடவில்லே என்ற ஆனந்தம் என்மனதில் தவழ்கிறது.
இங்கே எனது மதிப்பீட்டுக்கு ஆதாரமான தகவல்கள், வாய்வழி யாகவும் கொப்பிகளில் எழுதி வைத்தவற்றையும அடிப்படையாகக் கொண்டும் பெறப்பட்டவை. நான் சேகரித்து வைத்திருந்த தகவல்கள் சரி யானவை எனும் துணிவுக்கு நான் வரத்தக்தாக"தேரோட்டம்"எனும் நூலில் இருந்து கூட்டாசிரியர் திருமு.நடேசானந்தம் அவர்கள் தகவல் களேத் திரட்டி அனுப்பி இருந்தார்.அவரால் இந்த நூல் முழுமை பெறுகிறது. நன்றி.
ஈழத்துப்பூராடனுர்
மிசிஸ்சாகுவா - கனடா 2000.
16

கூட்டுப் படைப்பாளியின் குறிப்புகள்.
குருவித்தலேயில் பனம்பழம் என்பது என்னளவில் கண்கூடா னது. ஈழத்துப்பூராடனுர் அவர்களால் அவ்வளவு பாரச் சுமை என்மேல் சுமத்தப்பட்டது. அவர் இலங்கைக்கு வந்திருந்தபோது நான் அவரைப பலதடவைகள் சந்தித்தேன். அப்போதெல்லாம் அவரென்னிடம்சில பணி களேச் செய்து உதவும்படி கேட்டுக்கொண்டார். எனது கல்விச் சேவை காரணமாக கிடைக்கும் ஒய்வு நேரம் அற்பமே. ஒய்வு கிடைக்கும்போது வெளியே சென்று வருவதானுல் வழியெங்கும் படையினரின் தடைகள். அடுத்தது, எங்கு சென்றலும் வீட்டிற்கு ஆறு மணிக்கு முதல் திரும்பியாக வேண்டும் என்ற நாட்டு நிலை. இவற்றின் மத்தியில் ஊர்ஊராகச் சென்று தகவல்களேத் தேடுவதென்பது முடியாத காரியம். அதுவும் மறைந்து போன மட்டக்களப்பு மண்ணின் கலேகள், பராம்பரியங்கள், நடை முறைகள் என்பனபற்றி இப்போதுள்ள சந்ததியினருக்கு அதிகமாகத் தெரியாத நிலே, அப்படிச் சில தகவல்களே அறியத்தரும் அனுபவமுள்ள வயோதிபர்களிடம் சென்றல் அவர்களின் ஞாபகத்துக்கெட்டாத சில மாறுபட்ட தகவல்கள்.
இப்படியான நிலேயில் ஈழத்துப்பூராடனுர் என்னிடம் கேட்டுக் கொண்டபடி வசந்தன் கவிகள்பற்றிய தகவல்களேப் பெற்று அனுப்பி வைத்தேன். அது இப்போது மட்டக்களப்பு மாநிலத்தில் தொன்று தொட்டு வழக்கில் இருந்து வரும் 'வசந்தன்கூடத்து ஒரு நோக்கு" என்ற பெயரில் நூலுருவாக்கப்பட்டுள்ளது. அடுத்து அவர் தந்த தேடற் பணி, ஊஞ்சற் பாட்டுகள், வதனமார் வழிபாடு என்பனவாகும். இவற்றில் வதனமார் வழிபாடு பற்றிய சில தகவல்களேத் திரட்ட முடிந்தது. அது இப்போது 'வதனமார் வழிபாடு - ஒரு மதிப்பீடு என்ற தலப்பில் நூலுரு வாக வெளிவருவதையிட்டு பெருமைப்படுகிறேன்.
முன்பின் எழுத்துத் துறை அனுபவமில்லாத சாதாரண ஆசி ரியன் ஒருவனே எழுத்தாளனுக்கும் முயற்சியும் ஈழத்துப் பூராடனுரின் தமிழ்ப் பணியில் ஒன்று என்பதை அறிந்தபோது நான் பிரமித்துப்
۔۔۔۔ جبہ محل
17

Page 12
போனேன். பிறரிடம் இருந்து பெற்ற தகவல்களேக் கொண்டு நூல்களைப் படைப்பவர்கள், குறைந்த பட்சம் தகவல்களே அளித்தவர்களின பெயர் அட்டவணேயிலாவது தகவல்களே மிகவும் சிரமத்துடனும் செலவுடனும் தேடிக் கொடுப்பவர்களின் பெயர்களேச் சேர்க்கத் தவறிவிடும் இக்கா லத்தில் ஓரிரண்டு தகவல்கள் மட்டும் சேர்த்துக்கொடுப்பவர்களின் கூட்டு முயற்சியாக நூல்களே வெளியிடும் இவரது பணி வருங்காலப் படைப்பாளிகளுக்கு புத்தூக்கமும் எழுச்சியும் தரும் செய்தியாகும். அவர் இப்படிப்பட்ட முயற்சிகளே இன்ற நேற்றுமட்டுமலல 1960ம் ஆண்டிலி ருந்தே செய்து வந்துள்ளார் என்பதற்கு பிரபல கவிஞர் வெல்லவூர்க் கோபாலின் கன்னி மலர் எனும் படைப்பே எடுத்துக்காட்டு.
அவர் இலங்கையில் தங்கியிருந்த காலம் 100 நாட்கள்மட்டுமே. அதற்கிடையில் அவருக்கு கிடைத்த பாராட்டுகள அநேகம். சந்திப்புகள், செவ்விகள் அநேகம். அதற்கிடையிலும் அவர் தமிழ்ப் பணிகள் மட்டும் செய்யவில்லே பல நற்பணிகளும் செய்தார் என்பதை நான் நேரில் கண்டேன். அவற்றில் நான் கலந்துகொண்டேன். ஆதலால் அவற்றை இங்கு குறிப்பிடுவதால் அவருக்குப் பெருமை சேர்க்காமுடியாவிட்டாலும் சமூகத்தில் சோம்பிக் கிடக்கும் பலர் அவரது முயற்சிகளேப் பின்பற்றி எழுச்சிகொள்வார்கள் என்ற அவாவினுல் வெளியிடுகிறேன்.
இவர் வாழ்ந்த இடம் தேற்றத்தீவு. அதுதான் எனது தாயக முங்கூட. இங்கு அரசினர் பாடசாலேயில் இவர் 13 வருடகாலம் பணி யாற்றினுர். இவரது மனேவியார் திருமதி வியற்றிஸ் பசுபதிப்பிள்ளே செல்வராச கோபால் அவர்கள் எனது ஆசிரியை. அவர் தேற்றத்தீவு ருேமன் கத்தோலிக்க மிசன் பாடசாலேயில் தனது ஆசிரியப்பணியை ஆரம்பித்து நெடுநாள் தொடர்ந்து சேவைசெய்து இதே பாடசாலேயில் ஒய்வு பெற்றர்.
பசுபதி அக்கா என்ற மதிப்புடன் கிராமத்தவர்களும் மான வர்களும் அழைத்துப் பெருமைப்படும் இவர்தான் இந்தக் கிராமத்தில் பயிற்றப்பட்ட ஆசிரியையாக இக்கிராமத்தில் கற்பிக்கத் தொடங்கிய பெண்மணி. இந்தக் கிராமத்தில் பெண் கல்வி வளரப் பெரும்பாடு பட்டு ழைத்தார். இதனுல் பல பெண்ணுசிரியைகள் இக் கிராமத்தில் தோன் றினர்.இவர் மூன்று தக்லமுறைகளுக்கு ஆசிரியையாக இருந்தார். ஒழுங்குக் கட்டுப்பாடும், ஒழுக்கமும் நிறைந்த இவரிடம் படித்த மாணவர் களும் இவருடன் கற்பித்த ஆசிரியர்களும் இவரது நல்லாசிரியக் குணத்தையிட்டு அறிவார்கள்.
அத்தகைய ஆசிரியை தனக்குக் கிடைத்த இக்ளப்பாற்றுச் சம்ப ளத்தைச் சேர்ந்து வைத்து, அதே பாடசாலையில் நீர்வழங்கல் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். கனடாவில் இருந்தபடியால் அவரது நேரடிக் கவ
18

னத்தில் இதை விரைவில் நிறைவேற்ற முடியாதிருந்தாலும் இலங் கைக்கு வந்த அவரது கணவர் மிகவிரைவாக முடித்து 26.1.2000ந் தினத்தன்று நீர்வழங்கலே தொடங்கச் செய்தார். அப்போது அவர் பேசிய பேச்சில்;
"இது உங்கள் பசுபதி அக்கா தரும் அன்பளிப்பு. இதை ஒன்றே கால் இலட்சம் ரூபாச் செலவில் அமைக்க அவர் இதே பாடசாலேயில் தொடர்ந்து கற்பித்து ஓய்வு பெற்றுக் கிடைத்த ஓய்வூதியச் சம்பளத்தில் இருந்து கட்டித் தந்துள்ளார். தூரந் தொலேவில் இருப்பதால் அவரது கரங்களாலேயே இதைத் திறந்து வைக்கமுடியாமல் இருந்தாலும் அவர் இங்கு வரும்போதுரிய முறையில் இங்கு நடைபெறும் திறப்பு விழாவை நினேவுகூர்ந்து. உத்தியோகபூர்வமாகக் கொண்டாடுவார்.
இதேபோன்று இங்கு படித்த மாணவியும் இப்போது இளேப் பாறிய ஆசிரியையுமாகிய திருமதி சின்னப்பிள்ளே தியாகராசா எனப்படும் மாரிமுத்த அக்காவும் தனது சொந்த நிலத்தை இந்தப் பாடசாலேக்கு நன்றிக் கடனுக வழங்கியுள்ளார். இவர்களேப் பின்பற்றி மற்றவர்களும் செய்தால சிறுதுளி பெரு வெள்ளமாகி இந்தப் பாடசாலேயின் தேவைகள் முழுமை செய்யப்படும்.
இதைவிட, நான் மேலும் ஒரு செய்தியைச் சொல்லி மனம் மகிழ் கின்றேன். பூரிப்படைகிறேன். அதாவது இந்த நீரவழங்கல் நீர்த்தாங்கிக் கோபுரத்தைப் பார்க்கும்போது என்னெஞ்சில் நிக்லத்து நிற்கும் ஒருகாரியம் நினேவுக்கு வருகிறது. எங்களுக்கு எழு மக்கள் உள்ளனர். அவர்கள் அனேவரும் இந்த ஊரில்தான் பிறந்தார்கள், இந்தப் பாடசா லேயில்தான் தங்கள் ஆரம்பக் கல்வியைக் கற்றர்கள். அதுமட்டு மல்ல அவர்கள் பால்குடிக்கும் பருவத்தில் புட்டிப்பால அருந்தாது தங்கள் தாய்ப்பாலே நேரம் தவருமல் இங்கு கொண்டு வரப்பட்டுத் தாயின் அரவக்ணப்பில் அருந்தி வளர்ந்தார்கள். இந்த வாய்ப்பு எழிதான தொன்றல்ல. அந்த வசதியைத் தந்த இந்தப் பாடசாலே மாணவர்களுக்கு தாகத்துக்கு நல்ல குடிநீர் இலகுவாக அருந்தக் கொடுக்கின்ற ஒரு தாயின் உயர்ந்த உள்ளத்தைக் காண்கிறேன்.
அவ்வாறு பாடசாக்லக்கு வந்து தாய்ப்பால் அருந்தி வளர்ந் தவர்களில் ஒருவரான எட்வேர்ட் இதயச் சந்திரா அவர்களே அவரது மனேவி மகனுடன் இந்தக் கோபரத்தைத் தனது தாயின் பிரதிநிதியாகத் திறந்து வைக்கிறர். இந்த நினைவுடன் மாத்திரமல்ல, உங்கள் பசுபதி அக்கா தன்னே வளர்த்து ஆசிரியையாக்கிய தனது அக்காளின் கணவர், அமரர் திரு.சி.தா வேல் முருகு இளேப்பாறிய தக்லமை ஆசிரியர் அவர்கட்கு நன்றிக் கடனுகவும் கட்டிப் பெருமை செய்துள்ளார் இவ்வாறு இந்தப் பணியால் தனது நன்றிக் கடனே நினேவுகூர்கிருர்" என்று உரைத்தார்.
19

Page 13
இதற்கு முன்னரே 16.1.2000ந் தினத்தன்று தைப்பொங்கற் பரிசாக பல ஆயிரம் அரிய நூல்கள் கொண்ட தனது இல்ல நூலகததை தன் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட குருக்கள்மடம், செட்டிபாக்ளயம், மாங்காடு, தேற்றத்தீவு, கழுதாவளே எனும் ஐந்து கிராமங்களின் சொத்தாக்கிப் பொது நூலகமாக திறந்து வைத்தார். இப்போது இது ஒரு ஆய்வு நூலகமாக இயங்கி வருகிறது. பல அரச பணிப்பாளர்களும் பாராளுமன்ற பிரதிநிதியும் சமயப் பெரியார்களும் கலந்துகொண்ட விழாவில் பங்களித்த எனக்னயும் இந்த நூலகப் பரிபாலகர் குழுவில் ஒருவராக ஈழத்துப்பூராடனுரே நியமித்தார்கள்.
இவருக்குப் பண்டை மட்டக்களப்புக் கலேச் சின்னங்களும் பாரம்பரியங்களும் அழிந்து போகாமல் பாதுகாக்கும் பெரு நோக்குண்டு. அதன் பேரில் அழிந்துபோகும் நிலேயில் இருக்கும் அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து சேகரிக்கும் எண்ணத்துடன் இந்த நூறு நாட்களில் முயன்றர்
அவ்வாறு முயன்றதின்பேரில் செட்டிபாக்ாயத்தில் வாழ்ந்து பல நூல்கள் ஆக்கிப் புகழ்படைத்த புலவர் பெருமான் கணபதிப்பிள்ளேப் புலவர் அவர்களின நூல்களேச் சேகரித்த வைத்திருந்தஅவரது மகன் அமரர் க.செல்வநாயகம் அதிபர் அவர்களின் பாண்டிருப்பில் உள்ள இலத்திற்குச் சென்று பல ஏட்டுப் பிரதிகளேப் பெற்று பாராளுமன்றப் பட்டிருப்புப் பிரதிநிதி, மட்டக்களப்பு கலாச்சாரச் சபை தமிழ்மணி திரு அன்புமணி இரா நாகலிங்கம், மட்டக்களப்புக் கலாச்சார உத்தியோகத்தர் செல்வி கதங்கேஸ்வரி என்பார்களிடம் ஒப்படைத்தார்.
மேலும் பல அநாதை நிறுவனங்களுக்கு சென்று, தன்னல் இயன்ற உதவிகளேச் செய்தார். தான் பணிசெய்த, கற்ற, பயிற்சி பெற்ற கல்வித் தாபனங்களுக்கு மட்டக்களப்பு எழுத்தாளர்களின படைப்புகளே வாங்கி அன்பளிப்புச் செய்தார். இவைகள் எனக்குத் தெரிந்தவை. தெரியாது செய்த காரியங்கள் பலவாகவும் இருக்கலாம்.
புலவர்மணி பெரியதம்பிப்பிள்க்ளயின் மாணவனுனஇவர் தனது ஆசிரியரின் நினைவாக நடந்த இரு விழாக்களில் கலந்துகொண்டார். அங்கு தமிழ்ப்பணிக்குரிய சிறப்பு விருதும் பெற்றர். தனது சொந்தச் செலவில் நிறுவிய புலவர்மனியின் உருவச் சிலேக்கு மலர்மாக்லயணிந்து தனது நன்றிக் கடப்பாட்டை நிறைவேற்றினர்.
இதைவிட அமரர் ஜோசப் பாலசிங்கம் நினேவு ஆய்வு நூல
கத்தின் கையளிப்பு விழாவின்போது அங்கு உரையாற்றிய இவரது முன்னுள் மாணுக்கர்களின் சொற்பொழிவுகளில் இருந்து:
20

ஈழத்துப்பூராடனுரின் மட்டககளப்பு மாநிலம் பற்றிய நால்கள்
1. மட்டக்களப்பியல் 2. மட்டக்களப்பு மாநில உபகதைகள் 3. மட்டக்களப்புசொல்லகராதி 4. மட்டக்களப்பு மரபுச் சொற்கள் 5. மட்டக்களப்பு பழமொழி அகரவரிசை 6. மட்டக்களப்பு சொல்லிலக்கணம் 7. பிசாசின் புத்திரர்கள் -மட்டக்களப்பு மாந்திரீகம் 8. சொல்வெட்டு 9. நீரரர் நிகண்டு 10. மட்டக்களப்பு உழவர் மாட்சிக் கலம்பகம் 11. கன்னங்குடா உழுதொழிற் பள்ளு 12. இரும்பரசன் பேராசிரியர் சங்கரதாஸ் 13. விபுலானந்தர் வாழ்க்கை வரலாற்று வெண்பா 14. விபுலானந்த அடிகளார் வாழ்க்கை வரலாற்று வெண்பா 15. விபுலானந்தர் தோத்திரப் பாக்கள் 16. விபுலானந்தர் பிள்ளேத் தமிழ் 17. புலவர் மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளே வாழ்க்கை வரலாற்று வெண்பா 18. பண்டிதர் செழபாலபிள்ளே வாழ்க்கை வரலாற்று வெண்பா 19. புலமை மக்கள் - அச்சில் 20. மீன்பாடும் தேன்நாடு - அச்சில் 21. வசந்தன் கூத்து ஒரு நோக்கு 22.மட்டக்களப்பில் இருபாங்குக் கூத்துக்கல் - அச்சில் 23 வயலும் வாரியும் 24. மல்லிகைப்பந்தல் 25. ஈழத்து இரட்டையர்கள் 26. செட்டிபாளேயம் கணபதிப்பிள்க்ளப்புலர் நூற்திரட்டு தொகுதி ஒன்று 27. செட்டி பாளேயம் கணபதிப்பிள்ளேப் புலவர் நூற்திரட்டு தொகுதி இரண்டு 28. மட்டக்களப்புத் தமிழறிஞர் வரிசை 29. சிவபுராணம் - நெடுங்கதை 30. வதனமார் வழிபாடு ஒரு மதிப்பீடு 31. கபோத காதை - ஒலே ஏட்டுப்பிரதி அச்சுருவம் 32. இரண்ணிய சம்ஹார அம்மானே - ஒக்ல ஏட்டுப்பிரதி அச்சுருவம்

Page 14
"தமிழில் கல்விகற்றவர்களுக்கு ஒரேயொரு வழியாக குந்த ஆசிரியப் பயிற்சி வாசக்ல நாடிச் செல்வோரின் வழிகளே திசைமாற்றி, அரச எழுதுவினேஞர், கூட்டுறவு பரிசோதகர், மருத்துவத் தாதி முதலிய அரச துறைகளிற்கு நுழையும் வாசல்களிலும் காலடி எடுத்து வைக்க வகுப்புகளே நடாத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார். சிறிய குக்கிராம மாகிய தேற்றத்தீவை மற்றக் கிராமத்தவர்கள் நாடி வருமளவு இங்கு
1.மனுேகரா அச்சகத்தை நடாத்தியும்,
2. தட்டெழுத்துச் சுருக்கெழுத்துப் பயிற்சி அளிக்கும் வேத தட்டச்சு கற்கை நிலேயத்தை ஆரம்பித்தும்,
3. வணிக வகுப்புகளே நடாத்திப் பல வணிக ஆசிரியர்களேத் தோற்றுவித்தும் வந்த இவர் பல்கலேக் கழக மாணவர்களின் ஆய்வுக்குத் தனது நூலகத்தையும் நேரத்தையும் ஒதுக்கியும் வாழ்ந்து கிராமத்துக்குப் பெருமை தேடித் தந்தார்.
நூற்றுக்கு மேற்பட்ட பல நூல்களே இலங்கையில் வாழும் போதும் கனடாவில் வாழ்ந்துகொண்டும் படைத்த இவருடன் கூட்டா சிரியாராகச்கச் சேர்ந்து இந்த நூலேப் படைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்த கிடைத்தற்கரியதொரு பாக்கியமாகும்,
இவரும் இவரது மக்களும் மின்கணணி முலம் அச்சமைப்புச் செய்து தமிழில் அச்சிடும் பணியை முதன் முதலில் செய்ததுடன் அமரிக்கக கண்டத்தில் தமிழ் அச்சுக் கூடத்தையும் நிறுவி பெருமை சேர்த்து உலகத்தில் முதலிடம் வளர்த்தவர்கள். இவர்களது சேவையை தமிழ் மக்கள நாடிநிற்கின்றர் இவர்களின் தொண்டு பல்காலம் வாழ்க.
மு.நடேசானந்தம் தேற்றத்தீவு - இலங்கை
2X)
22

குரு புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளே அவர்களுக்கு நிறுவிய தனது குரு பு -
சிஃக்கு அவரது நினவு விழாளில்
rASTrini rri?i: சாத்தியபோது புலவர்மணி அவர்களின் மக்களின் குடும்பத்துடன்
ஈழத்துப்புராடனுர்,
இவ்த நிகழ்ச்சியில் புலவர்மணி நிக்னலாப் பணி மன்ற உறுப்பினருடன்
23

Page 15
მრ60IIg [[U மட்டக்களப்பு சமுகத்தின்
ஆதரவுரை.
மட்டக்களப்பு மாநிலத்தில் வதனமார் சடங்கு என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிற ஒரு தொழில்சார் வழிபாடு உண்டு என்ருலும் அதன் பின்னணி என்ன? எதற்காக அது கைகொள்ளப்பட்டு வருகிறது? அந்த வழிபாடு இன்றும் நடை முறையில் உள்ளதா? எங்கு இத்தகைய வழிபாடு இடம் பெறுகிறது? என்ற பல கேள்விகள் எழுவதுண்டு.
இத்தகைய வினுக்கள என் மனதிலும் எழுந்த போதெல்லாம் என் தந்தையார் அமரர் திருஞானமுத்து (இளேப்பாறிய உதவி அரசாங்க அதிபர் )அதையிட்டு பல குறிப்புகளைச் சொல்லி இருக்கிறர். எனினும் காலப் போக்கில் நான் அவற்றிற் பலவற்றை விளங்கிக் கொள்ளமுடியா திருந்தது. வதனமார் வழிபாடு - ஒரு மதிப்பீடு என்ற இந்த நூல் அவற் றிற்கான விளக்கங்களே தெளிவாக்குகிறது. பட்டிக்காரன், முல்லேக் காரன் என்று கமச் செய்கையுடன் சம்பநதப்பட்ட சொற்களின் ஆய்வு சங்ககாலத்துத் தமிழரின் வாழக்கையையும் அதிலே சம்பந்தப்பட்டிருந்த முல்லே மருதத் திணேச் சம்பவங்களேயும் நினைவுக்கு கொண்டு வருகிறது.
மட்டக்களப்பில் மறைந்து வரும் ஒரு தொழில்சார் வாழ்க்கை முறையின் உற்பத்தி வரலாற்றை இந்த நூலில் காண்கிருேம். ஆதி மனி தனின் முதல் தொழிலாக இருந்த வேட்டையாடுதலே அடுத்து வளர்ந்த தொழில் மந்தை மேய்த்தல். மந்தை வளர்ப்பவர்கள் முல்லேத் தினேக் குரியவர்கள் என்றும் அவர்களே,
முல்லேயர் பொதுவர், அண்டர், முந்து கோவிந்தரே, ஆன் வல்லவர், குடவர், பாலர், மதித்த கோவலர், கோபாலர், சொல்லிய அமுதர், ஆயர், தொதுவர், இடையரென்ப முல்லேயின் மாக்கள் பேர்தாம் முன்நான்கு மொன்றுமாமே
சூடாமணி நிகண்டு - மக்கட் பெயர்த் தொகுதி - 69
24
 

எனும் 12 பெயர்களால் அழைப்பர். நெல்விளே வளங்கொண்ட நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பிலும் மந்தை வளர்த்தல் தொழில் பண்டு தொட்டு இருந்து வந்துள்ளது. 'ஏரும் எருதும் உளவாயின்' எனும் வயற்களச் சொற்றெடர் வேழாண்யைச் செய்கைக்கு கால்நடைகள் எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துக் காட்டுகிறது. எருதின் இடத்தை இன்று உழவு இயந்திரங்கள் எடுத்துக் கொண்டாலும் அவற்ருல் பாலும், முளிதயிரும், நெய்யும் தரமுடியா திருப்பது கண்கூடு. எனவே கால்நடைகளின் ஒரு உபயோகம் மட்டும் மங்கி வரும் காலத்தில் அவற்றின் ஏனேய உபயோகங்கள் வளர்ந்து வரு கின்றன. அதுவும் நவீன மயப்படுத்தப்பட்டு வருகின்றன.
மந்தை கார்ப்போருக்கு நிகண்டுககள் பனிரெண்டு பெயர்களேத் தந்துள்ளது. இவற்றில் எந்தவொரு பெயரும் மட்டக்களப்பு மந்நை காப்போரைக் குறிப்பதாக இல்லே. அதுமட்டுமல்ல அவற்றில் தரப்படாத வேறு ஒரு தனித்துச் சொல்லாலே வழங்கப்பட்டு வருகிறது. அதுதான் பட்டிக் காரன்' என்ற சொல்லாகும். இவனின் குலத்தொழில் இதுவல்ல. இவன் ஆதியிலிருந்து வயற் சொந்தக்காரர்களின கால்நடைகளேப் பேணுவதற் காக அமர்த்தப்பட்ட ஒரு தொழிலாளி. கால் நடை வளரும் இடமாகிய பட்டியைக் காத்து வருவதால் பட்டிக்காரன் எனும் பெயருக்குரியவனு கிருன். இவனின் பேராபத்துமிக்க வாழ்க்கையை எடுத்துக் கூறுகிறர் ஆசிரியர். மறைந்து வரும் ஒரு மட்டக்களப்புத் தமிழ்ப் பண்பாடு ஒன்று இந்த ஆக்கத்தின் மூலம் ஆவணப்படுத்தபபடுகிறது.
இதற்காகப் பல வருடங்கள்அரிதில் முயற்சியெடுத்துச் சேகரித்து வைத்துப் புலம் பெயர்ந்தகாலே இலங்கையில் விட்டு வந்த குறிப்புக ளேயும் காவியங்களேயுந் தாயகத்திற்குச் சென்று திரும்பிய இவர் எடுத் துக்கொண்டு வந்து இந்த நூலேப் படைத்துள்ளார். இவரின் இலங்கைப் பயணத்தின் பலனுகக் கிடைக்கும் இந்த நூலைப் போல இன்னும் என்ன வென்ன சேகரிப்புகளைக் கொண்டு வந்துள்ளாரோ என்பதை இனி வெளிவரும் படைப்புகள் எடுத்தரைக்கும். அதுவரை பொறுத்திருப்போம். முதுமையிலும் படைப்பிலக்கிய முயற்சியில ஈடுபட்டுள்ள இவருக்கு இறைவன் சுக நலத்தை அளிப்பானுக
சக்திசாந்தன்
விரும்ரன் ஒன்ரோறியோ கனடா

Page 16
ஈழத்துப்பூராடனூர் தனது இல்ல நூலகத்தை பொது நூலகமாக மாற்றி தன் வாழ்வுடன் சம்பந்தப்பட்ட அயற் கிராமங்களுக்குச் சொந்தமாக்கிய விழாவில்
iو قال :
ے۔//// I 枋^ "I WILLIAMI
til
அவரின் மகன் நிழல் சந்திரா அவர்கள் நன்றி தெரிவித்தும் கலாச்சார
- f*= ܒܦܡ - உத்தியோகத்தர் செல்வி கதங்கேஸ்வரி வரவேற்றும் பேசுகிறர்கள்
26
 
 
 
 

மட்டக்களப்பு அன்பு வெளியீட்டு
ஆதரவிரை.
பட்டிக்காரன்' என்ற ஒரு சொல்லே வைத்துக்கொண்டே ஒரு வழிபாட்டு இலக்கியம் படைத்துள்ளார் ஆசிரியர். இது வழிபாட்டு இலக் கியமாக இருந்தாலும் ஒரு வரலாற்று ஆய்வு நூல் என்பதே மிகப் பொருந்தும் மட்டக்களப்பின் வயற்செய்கையில் அதிகமாக உபயோகிக் கப்படும் 'முல்பிலக்காரன்" என்ற பதத்தின் பொருளும் இந்த நூலினுல் வெள்ளிடை மேேபால் தெளிவாகிறது.
பொதுவாக எந்த ஒரு மதவழிபாட்டிற்கும் பின்னுல் ஒரு புரா ணத்தின் கதையமைப்பு இருப்பது வழக்கம். அதுபோலவே சில வழிபாட் டுகளுக்குப் புரானப் பின்னணி இல்லாதவிடத்து பரம்பரைக் கதை யொன்று நிச்சயமாக பின்னப்பட்டிருக்கும். இது உண்மையோ அல்லது கட்டுக்கதையோ என்று எவரும் ஆய்ந்தறிய முயல்வதில்லே. வழிபா ட்டின் அவசியம், அதில் உள்ள நம்பிக்கை அந்த நம்பிக்கையால் மக்கள் பெற்ற அனுபவம் என்பவற்றல் அந்தப் பரம்பரைக் கதை நாளடைவில் ஒரு உண்மையான சம்பவமாகவே மாற்றமடைந்து விடுகிறது.
இப்படிப்பட்ட வழிபாட்டுத் தெய்வங்களுக்கு அவதாரம ஒன்று படைக்கப்படுகிறது. அதுவும் தெய்வ அம்சம் பொருந்திய அற்புதப் பின்ன ணிையில் அந்த அவதாரம் நிகழ்கிறது. தொடர்ந்து அந்தத் தெய்வத்தின் செயல்கள் மக்களின் இடர்களே அகற்றுவதாகவும், அதற்காக பல திர வீரச் செயல்களயும் அற்புதங்களேயும் நிகழ்த்துவதாகவும் சொல்லப்படு கிறது. இந்த அடிப்படையில் ஏற்பட்டதே வதனமார் அவதாரமும் வழிபாடும் என்று சொல்லலாம்.
மட்டக்களப்பில் நிக் கொண்டிருக்கும் இந்த வதனமார் வழிபாடு மந்தை கார்த்தலுடன் தொடர்புடையது. கமத்தொழிலுக்கு உதவும் கால் நடைகள் வயற்காரர்களின் செல்வமாக மதிக்கப்படுகிறது. எனினும் மருத நிலத்தில் அவற்றை வைத்துப் பேணுவதென்பது மிகவும் சிரமமான காரியம். ஆகவே அருகில் உள்ள காடும் காடு சார்ந்த இடங்களிலும் பட்டி அமைத்து வளர்க்கப்பட்டன. அதற்கு உதவும் பட்டிக்காரர்களின் வரலாறு இங்கு தெளிவாக்கப்படுகிறது. சுவாதியம்மை என்னும் இருபத்தேழு
27

Page 17
நட்சத்திரங்களில் ஒன்றன சோதி நட்சத்திரத்தின் மக்களாக அவதரித்த மங்கலனுர் முதலிய நூற்றி அறுபது வதனமார்களும் இந்தியாவிலிருந்து இலங்கையின் கிழக்குப் பகுதியில் கால் வைத்து திருகோணமலே இருந்து திருக்கோவில் வரை மட்டக்களப்பு வாவிக்கு மேற்கில் உள்ள காடுகளில் அலேந்து திரிந்து குழுமாடுகளேப் பிடித்து பட்டிகள் அமைத்து வாழ்ந்தார்கள். இதை 'வதனமார் ஊர் சுற்றுக் காவியத்தின் மூலம் அறியலாகும். அதுபோலவே தேன்வெட்டுக் காவியம், வதனமார் பூசைக் காவியம், குழுமாடு பிடித்தல் காவியம், மதயானே பிடித்தல காவியம் என்பன அவர்களின் திரவீரச் செயல்களேச் செப்புகின்றன.
இப்போது உழவு இயந்திரத்தின் அறிமுகத்தால் வேழாண்மைச் செய்கைக்கு கால் நடைகளே உபயோகித்தல் மிகமிகக் குறைந்து வரு வதால், பட்டிக்காரர்களின் வாழ்க்கை முறை பாற்பண்ணே வாழ்க்கை முறையாக மாறியுள்ளது. இதனுல் வதனமார் வழிபாடு மிகவும் குறைந்து வருகிறது. இத்தருணத்தில் இந்தப் பராம்பரிய பண்பாட்டு வழிபாட்டை நினேவுக்குக்கொண்டுவர ஆசிரியர் முயன்றுள்ளார்.
இதை இவர் 1956ம் ஆண்டிலிருந்து தேடிச் சேகரித்து வைத்திருந்தார். இலங்கையை விட்டுப் புலம்பெயர்ந்து கனடாவில் வாழச் சென்றபோது இதுபோன்ற பல அரிய சேகரிப்புகள் இலங்கையில் அவரது இல்லத்தில் கைவிடப்பட்டிருந்தன. பதினறு வருடங்களுக்குப் பின்பு வந்து அவற்றைச் திரட்டிச் சென்று இப்போது நூல்களாக வெளியிட்டு வருகிறர். இவரது முயற்சியால் மறைந்து போக இருந்த ஒரு பண்பாட்டு வரலாறும், இலக்கியமும் அழியாது பேணப்படுவதில் எங்களது ஆதரவும் இருப்பதையிட்டுப் பெருமைப்படுகிறேம்.
ஈழத்துப்பூராடனுரை நாங்கள் பலதடவைகளில் தனது சுய வர லாற்றை எழுதும்படி சொல்லியும் வாழாதிருந்தாலும அவர் படைக்கும் நூல்களின் பதிப்புரைமுகவுரை,அறிமுகவுரைகள்மூலம் சிறுசிறு துணுக் குகளாக இவரது வாழ்க்கை வரலாறு வெளிவருகிறது. அதையே இந்த நூலிலும் கூட்டாசிரியர் திரு. மு.நடேசானந்தம் இந்நூலில் தந்துள்ளார்
அன்புமணி இரா நாகலிங்கம் செல்வி க.தங்கேஸ்வரி
அன்பு வெளியீடு
LDLL-886 TUL
14.11. 2000
28

29

Page 18
நால் அறிமுகம்.
வதனமார் வழிபாடு ஒரு மதிப்பீடு எனற இந்த நூல் 'வதனமார், 'பட்டிக்காரன்", என்ற இரண்டு சொற்களைக் கொண்டு அவற்றின் மூலங்களேயும் காரியங்களேயும் இட்டு ஆய்தறியும் இலக்கிய நோக்குடன் செய்யப்பட்டாலும் , இவற்றுடன் சம்பந்தப்பட்ட 'முல்லேக்காரன் என்ற பதமும் இந்தக் கட்டுரைக்கு ஆணி வேராக அமைந்துள்ளது. இந்தப் பதம்பற்றி இலங்கை வானெலியில் மட்டக்களப்பில் வழங்கப்பட்டு வரும் சங்க காலத்து நூற்களில காணப்படும் சொற்கள்பற்றிய விளக்கத் தொட ராக ஒலிபரப்பப்பட்டது. பின்பு அவற்றில் 12 பதங்களின் விளக்கங்களே மட்டக்களப்பு சொல்வெட்டு எனும் நூலாக 1984ம் ஆண்டு தேற்றத்தீவு ஜிவா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. அந்த நூலின் 19ம் பக்கத்தில் நான்காவது பதமாக முல்லேக்காரன் எனும் சொல்பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரையை வாசகர்களின் நலன் கருதி மீண்டும் இங்கே b.
" இது மட்டக்களப்பு நெற்செய்கையாளர்களிடை பயிலப்பட்டு வரும் சொல். வேழாண்மைச் செய்கையோடு சம்பந்தப்பட்ட மரபுச் சொற்கள் அநேகம். அவற்றில் இதுவொன்று. வயற் சொந்தக் காரனேப் போடியார் என்றும் பரிபாலனஞ் செய்பவர்களே வட்டை விதானே, அதிகாரி என்றும் கூலிக்கு வேலே செய்பவனே முல்லேக்காரன் என்றும் அழைப் பதுண்டு.
இம்முல்லேக்காரன் என்ற சொல்மூலம் ஐந்தினே நிலப் பண்பும் பாங்கும் பண்டைக் காலத்தில் எவ்வாறிருந்தன என்பதை ஆய்ந்தறி யலாம். காடும் காட்டைச் சார்ந்த இடமும் முல்லே. அதனேயடுத்த வயலும் வயல்சார்ந்த இடமும மருதம். இப்புலமிரண்டும் ஒன்றை ஒன்று தொடர்ந்து தொட்டு நிற்பன. இவ்வுண்மைகளே தொல்காப்பியம் பொரு ளதிகாரமும், இறையனர் மாறனுர், நம்பியகப் பொருள்கள் என்பனவும் கூறுகின்றன. முல்லே வாழ்வு மந்தை மேய்க்கும் ஆயர் வாழ்வாகும். அலே பவர் , தொழில் நிலேயற்றவர் என்று இவர்களேக் குறிப்பிடலாம். மருதநில மக்களோ நிலேத்து நிலத்தை நம்பி வான் மழையால் ஊன் புரக்கும் உணவாக்குபவர்கள். நெல்லிந்து உயிர்காக்கும் மருத நில மக்களின் வாழ்க்கைக்கு அதிக மனித வலு தேவை. ஆக்கல், காத்தல், திரட்டல், பேணல் எனும் பல தொழிற்பாடுகளின் பின்னரே வேழாண்மைச் செய்கை நிறைவுறும்.
30

இத்தொழில்களே மருத நிலமக்கள் செய்ய முடியாத விடத்து தம் அயல் நிலத்தில் வாழும் முல்லேத் திணே மக்களின சேவையையும் அவர்களின் மந்தைகளையும் கொள்வது வழக்கம். இவ்வாறு தொழிற் துனே செய்ததால் இவர்கள் முல்ஃலக்காரர்கள் எனப்பட்டனர். வடக்கி லிருந்து வந்தோரை வடக்கர் என்பதுபோல முல்லேயிலிருந்து வந்த இவர்களே முல்லேக்காரர் என்பது வழக்கமாயிற்று. வேட்டைக்காரன் கமக்காரன் போல முல்லேக்காரன் எனும் சொல் பிறந்தது. அக்காலத்தில் இவ்விவிருதினே மக்களுக்கும் எவ்வாறன தொடர்பிருந்தது என்பதனே இந்த முல்லைக்காரன் என்ற சொல் மூலம் தெரிகிறது. அந்த வழக்கமும சொல்லும் இன்றும் மட்டக்களப்பில் பயிலப்பட்டு வருகிறது.
வயற்செய்கைச் சொந்தக்காரெனப்படும் போடிமார்க்கு இன்று வேழாண்மைச் செய்கைக்கு முல்லைக்காரர்கள் பல வழியிலும் உதவி வருகின்றனர். வயலில் கூலி வேலே செய்பவர்களுக்கும் போடிமாருக்கும் இடையில் தொடர்பாளராகவும். மற்றும் உழுதல், விதைத்தல். காத்தல், வெட்டல் சூடுபோடுதல் என்பன சரிவர நடைபெறக் கண்காணிப்ப வராகவும் இருந்து வருகிறர்கள். இவர்கள் இப்போது மருதத் திணை மக்களாகிவிட்டனர். எனினும் முல்லேக்காரன் என்ற சொல்லுக்கு உரியவர்களாக இந்தத் தொழிலேச் செய்து வருகின்றனர். இப்போது இவர்கள் கால்நடைகளேப் பேணுவதும் இல்லே. உழவுத் தொழிலுக்கு அவற்றை வழங்குவதும் இல்லே. இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என்பது ஆய்ந்தறிய வேண்டிய விசயமாகும்.
கால்நடைகளே வளர்ப்பதும் பேணுவதும் போடிமாருக்கு மிகவுஞ் சிரமமான காரியம். உழுதல், மிதித்தல், சூடுபோடல் எனும் ஒரு சில தொழில்களுக்கே கால்நடைகள் ஒரு சில நாட்களுக்கே வேண்டப் பட்டன. இந்தத் தேவைக்கு அவற்றை போடிமார் தம்முடைய பராமரிப்பில் வைத்துக் காப்பது என்பது முடியாத காரியம். எனவே காட்டு மத்தியிலே பட்டிகளே அமைத்து அதை ஒருவனுக்கு ஒப்படைத்து காத்துவரச் செய்தனர். அவர்களேப் பட்டிக்காரன் என்ற அழைத்தனர். இப்படியாக முல்க்லக்காரர்களின் கையிலிருந்த கால்நடை வழங்கல் பட்டிக்காரனின் கைகளுக்கு மாறியது. நாளடைவில் பட்டிக்காரர்கள் பாற்பண்ணேக் காரர்களாகி வருகின்றனர்.
இப்போது போடிமாரும் அருகி விட்டனர். காரணம் மட்டக்களப்பு மக்களின் திருமண ஒழுங்கின்படி மாப்பிளேக்குச் சீதனமாக, வீடு, கிணறு உட்பட்ட வளவு, வயற்காணி. கால்நடை கொடுப்பதுடன், திருமணமாகி ஆறு மாதங்களுக்கு குடும்பச் செலவை பெண்ணின் குடும்பத்தார் ஏற்றுக்கொள்வர். வயலில் ஒரு போகச் செய்கையை விதைத்து வெட்டி சேர்த்தும் தக்லப்பிள்ளைப் பிரசவச் செலவையும் ஏற்றுக்கொள்வர். இப்படிச் செய்வதால் மணமகனின் பொருளாதாரத்தை
31

Page 19
நிலேப்படுத்துவதுண்டு. இதைவிட திருமணமாகிய பின்னர், மணமகன் பெண்விட்டிலேயே வசிக்கத் தொடங்கிவிடுவார். இதனுல் மாமி மருமகள் தொல்க்லகள் நிகழ்வதில்லே. இந்த முறையால் பல ஏக்கர்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்த போடிமார் தங்கள் நிலத்தை மக்களுக்கு" பங்கிட்டு வருவதால் இறுதியில் அவர்களின் பெரிய அளவிலான சொத்துக்கள் குறைந்துவிடச் சிறு வயற் சொந்தக்காரர்களின் தொகை பெருகி விட்டது. இதனுல் முல்லேக்காரன் எனும் வயற் செய்கைக்காரர் களின தேவையும் குறைந்துவிட்டது.
பட்டிக்காரர்களின் வாழ்க்கை மிகவும் அபாயமும் பரிதாபமுஞ் சூழ்ந்தது. இதே நோக்குடன் வாழும் அமரிக்காவில் உள்ள COW - Boy எனும் மந்தை வளர்ப்போரின் வாழ்க்கை ஒத்திருந்தாலும். இவர்களின் உடைகள், தொப்பி, காலணி என்பன ஒருவித பழமை தழுவிய அலங்கார உடை போன்றது. கைத் துப்பாக்கி, கத்தி வெளுக்கயிறு என்பன வற்றைத் தாங்கி குதிரையில் ஏறி இளவரசர்கள்போல் தனிப்போக்குடன் அலேந்து திரிவார்கள். இவர்களேக் கண்டால் பொதுமக்கள் அஞ்சுவர். அத்தகைய வழிபறிக் கொள்ளேக்காரர்களாகவும் இருப்பார்கள். அவர்க ளுடன் நமது பட்டிக்காரர்களே ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இவர்கள் பரிதாபத்துக்குரிய சீவன்களாகவே உள்ளார்கள்.
பட்டிக்காரர்களேப் பொறுத்த அளவில் காலத்துக்கேற்ற மாற்றங்கள் தாமதமாக ஏற்பட்டாலும், இப்போது ஓரளவு பாதுகாப்புக்கு சுடுகலன் பாவித்தல், பட்டியில் பெறும் பால்வகை உணவுகளே நியாய விலேக்குச் சந்தைப்படுத்தல் வசதிமிக்க வாடி எனும் வதிவிடங்களே அமைத்துக் குடும்பத்துடன் வாழ்தல், பட்டியின் உரிமை என்பவற்றில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மந்தைப் பராமரிப்பிலும் மிருக வைத்தியர் களின சேவை கணிசமாகப் பெறப்படுகிறது. முன்பெல்லாம மாட்டு வாகடம் எனும் ஏட்டில் கண்டவாறு மாடுகளின் நோய்க்குப் பரிகாரம் செய்த முறைகள் இப்போது அருகி வருகிறது. கால்நடைகளின் பதி வுகள் வைக்கும் மாட்டு இடாப்பு முறையிலும் பெரிய மாறறங்கள் புகுத்தப்பட்டுள்ளன. கிராமத் தலைமைக்காரர்களால் பரிபாலிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சூட்டு அடையாளச் சின்னங்கள் இடப்படும் பணி இப்போது, அரசினரின் கால்நடைப் பகுதியினரால் மாத்திரம் அதற்குரிய அடையாள இலக்கங்களுடன் இடப்படுவதுடன் அதற்குரிய பதிவுப் பத்திரமும உடனே வழங்கப்படுகிறது. இப்படி நவீன வாழ்க்கை வசதிகள் சிறிது சிறிதாகப் புகுத்தப்பட்டதால் பட்டிக்காரர்களிடை வதனமார்பற்றிய நம்பிக்கையும் வழிபாடும். அருகி வருகிறது. எனவே இத்தருணத்தில் வதனமார் வழிபாடுபற்றி நினேவுகூர்வது, மறைந்து வரும் மட்டக்க ளப்பின் பண்டை மரபு வழிபாடு ஒன்றை ஆவணப்படுத்துவதா அமையும் என்ற நோக்குடன் இந்த நூல் உருவாகிறது

வதனமார் வழிபாட்டு இலக்கியங்கள்.
மட்டக்களப்பு மாநிலத்தில் வயற் செய்கையும் அதற்கு மிகவும் உதவி செய்யுமபசுக்கள், எருமைகள் போன்ற கால்நடைகளே வளர்க்கும் பட்டித் தொழிலும் இணேந்து நடைபெறுவது வழக்கம். பட்டித் தொழி லுக்கு இப்போது தைப் பூசத்தை அடுத்து வரும் மாட்டுப் பொங்கல் நடை பெறுவது போல மந்தைகளே தீய பிணிகளிலும், கெட்ட ஆவிகளிலும், கொடிய மிருகங்களிலும் இருந்து காப்பாற்ற வதனமார் என்னும் தேவ தைகளே வழிபடுவர். இது பொங்கலுடன் கூடிய பூசையாக இராது பல நியமங்களக் கொண்டதொரு இரவு நேர வழிபாடாகவும் அமையும். பொதுவாக மாடுகளே அடைத்துக் காக்கும் பட்டிகளின் அருகிலே காட்டின் அமைதியிலே இந்த வழிபாடு நடைபெறும். இதில் மந்து, வெளுஎனும் மாடுபிடிக்கும் சுருக்குக் கயிறு, ரொட்டி, மொந்தன் வாழைப் பழம், மதுப்போத்தல், கஞ்சா எனும் படையல்களேயும் உபகரணங்க ளேயும் வழிபடு பொருட்களாக வைத்து வணங்குவர்.
சூடு போடலுக்கு முன்னர் இந்த வழிபாடு நடக்கும். பட்டிக ளுக்கு வயற்சொந்தக் காரர்களான போடிமாரே உரிமையாளராக இருப்ப துண்டு. முல்லேத் தினேக்குரிய வழக்கம் இது என்பது குறிப்பிடத் தக்கது. வயலே அடுத்த காடும் காடு சார்ந்த நிலத்திலும் பட்டிகள் அமைக் கப்படுவதும் பட்டியையும் வயலேயும் கார்த்துப் பேணும் பணியாளனே முல்லேக் காரன் பட்டிக்காரன் என்று அழைப்பதும் மரபு. பட்டிக் காரன் பட்டியில் இருந்து வரும் பால், தயிர், நெய், என்பவற்றை ஊதியமாகக் கொள்வான், அதுமட்டுமல்ல பட்டியில் புதிதாகப் பிறந்த கால்நடைக ளுக்கு குறிச்சூடு போடும் போது பட்டிக்காரனுக்குன்று சில கால்நடை களுக்கு குறியிடுவார்கள்.இந்தக் குறிகள் சொந்தக் காரர்களின் குலத் துக்கு இடத்துக்கு என்ற பிரித்தறியும் வகையில் உள்ள சின்னங்களாக அமையும். இதன்மூலம் முல்லே நிலத்துக்குரிய பண்டைத் தமிழ்ப் பண்பாட்டுக் கூறு இங்கு பேணப்படுவது கண்கூடு. காட்டின் மத்தியில் நடைபெறும் வதனமார் சடங்கில் வதனமார் காவியம் பாடபீபடும். உடுகின் ஒசையில் இது இணேந்து ஒலிக்கும். அப்போது சந்நதம் கொள்ளும் வதனமார் உருக்கொண்ட சிலர் பத்திரம், கமுகம் பாளே என்ப வற்றைக் கைப்பிடித்துக் கட்டுச் சொல்வர். அத்தருணம் பாடப்படும் பாடல்களின் தொகுப்புகள் பின்னல் தரப்படுகினறன;
33

Page 20
1. வதனமார் யானைகட்டு அகவல்
காப்பு
சீராரும் மங்கலனுர் திருக்கதையை நான் பாடக் காராரும் ஐந்துகரக் கற்பகமே முன்னடவாய் நடமாடும் பாம்பணே நாராயணன் புகழ் பாடத் தடமாருங் கயிலேமலேச் சங்கரனுர் முன்னடவாய்
மங்கலஞர் வரலாறு - எழில் தோற்றம்
கற்றகுழுமங்கலனுர் காசியெனுமாநகரில் 5 வாய்தத கமலப்பூவில் வந்த வரலாறு செப்பச் செப்பரிய பூமுலேயாள் சுவாதியம்மை தன்னருளால் மெய்க்கமல வேல்விழியாள்மாமறையோர் தங்குலத்தில் கற்புநெறிமுத்தியுள்ள கனகமணிக் கன்னியென்பாள் பக்தியுடன் செந்தாமரைப் பூவில் வந்துதித்து 10 மங்கலனுர் வரக்கண்டு அவர்பாதம் போற்றி செய்து பன்னிரண்டாண்டு பரிவாகச் சென்றபின்பு முற்றவே பன்னிரண்டு முப்புரிநூலுமணிந்து வல்லயம் வில்லம்பு வாய்த்த வெளுக்கோடாலி சொல்லரிய பூந்துகிலும் சொக்காய்களு மணிந்து 15 கல்பதித்த மோதிரமுங் கடுக்கன் மேலிடுகளும் நல்ல சட்டை தொப்பிகளும் நயினுருந்தானணிந்தார் எல்லா மணிந்து இருந்தாரே மங்கலனுர்
பாலா வதனனிடம் மதயானே தேடி வரச் சொல்லல்
இருந்து திருமத்து இசைவாகத் தானெடுத்துப் பாலா வதனனுடன் பலபேரையு மழைத்து 20 உற்ற வதனன் ஓடி வந்து தெண்டனிட்டு நிற்பளவிலப்போது செப்புவார் மங்கலனுர் வெற்றிசேர் பூவுலகில் விரைவாகத் தான்தேடி மத்தகயம் பார்த்து வாருமென்றர் மங்கலனுர் வெற்றி சேர் பூவுலகில விரைவாகத் தான்தேடி 25 மத்தகயம் பார்த்து வாருமென்ருர் மங்கலனுர்
பாலா வதனன் மதகரி தேடிக் காணல்
பொன்னுெத்த மார்பன புகைபோலே தான்தேடி நீடுதிகழ்வாவிகளால் நிறைந்த பூங்காவனமாம்
IV 34

தேடியெங்கு மோடித் திரும்பி வருகையிலே கொண்டை முடித்துக் குணமுடனே பொல்லெடுத்து 30 முண்டியிருள்போலே வளைத்தார் மதகரியை வளைத்ததனேக் கண்டு மதம்பொழிந்து குஞ்ரசமும் அந்தரமும் விண்ணும் அதிரவே மரத்தை முறித்தெடுத்து மண்டியிட்டுத் துரத்தியதாம் மதகரியை அடக்கமுடியாமல் மங்கலனுரை அழைத்தல்
துரத்தி வருகையிலே தொளிவதனன் வந்ததெதிர்த்துக் 35 கண்ட கோடாலி மழுக்கையம்பு வில்லெடுத்து சாடியடித்துத்தலேதிரும்பிக் கொண்டோடி ஒடி மரத்திலிட்டு ஓம்நமசிவாயவென்று கூடி வெளுத் தெறித்துப் பாதத்தால் மோதிவர மோதிவருமானேதனே முன்னின்று பொல்லெடுத்து 40 மறித்தார் படுவதனன் மாபாவியாக்னயது பார்க்க வந்த வீரர்களப் பலதிக்குந்தான்துரத்தி அடுத்த மரம் பிடுங்கியவரைத் துரத்துகையில் நம்மால் முடியாது நயிஞர்க்குச் சொல்லுமென்றர்
குஞ்சரச் சிறப்பு உரைத்தல்
என்று பாலாவதனன் இந்த மொழிதானுரைக்கக் 45 கூடிவந்த குஞ்சரழுங் குமுகம் பூச் சோலேயிலே நீர்குடிந்து முக்குளித்து நின்றுவிளே யாடையிலே பார்ந்து நின்று கண்களித்துப் பஞ்சவர்ணக் கொம்பஃனத்தான் பன்னிராயிரம் பிறப்பு இறந்து பிறந்தாலும் மண்ணுலகிற் கிட்டாது மாணிக்கக் கொம்பனென்றர் 50
குஞ்சரத்தை அடக்க மங்கலனர் புறப்படுதல்
இந்த மொழி கேட்டு இன்புற்றர் மங்கலனர் சந்தோஷப்பட்டுத்தன்மனது பூரித்து வாருங்கோ வென்றுவதனமாரையழைத்து எல்லோரும் பொல்லெடுங்கோ இசைத்த வெழுத்தானெடுங்கோ என்று மொழிந்தாரே எல்லேர்க்கும் மங்கலனுர் 55 தானுமிசைந்து தல்கோதி எண்ணெயிட்டு வன்னப் பிரம்பெடுத்து வாய்த்த வெழுத்தானெடுத்தார் பொன்னின் மிரிதடியில் புறப்பட்டார் மங்கலனுர் மனணதிர விண்ணதிர வதனமார் சூழ்ந்துவரச் சொல்லரிய பூங்காவைச் சூழ வளைத்தார்கள் 60 வளேத்து மதனமாரும் மதகரியைத் தான்பார்த்துத் தழைத்த மரச் சோலேயிலே சந்திரனேச் சேர்வதென்று
35

Page 21
திருப்பாற் கடல்வதனன்
சென்று ஒரு நொடியில் திருப்பாற் கடல்வதனன் வந்து முன்னே நின்று வாய் புதைத்துத் தெண்டனிட்டு இந்திரனுர் தன்னருளால் ஈசன் திருவருளால் 65 கந்த மருஞ்சோலேயிலே கன்னிமார் தன்னருளால் இந்தவிதமே நாங்க ளறிந்தநிலை நாயகமே எழுந்தருளாய் நாயகமே யிலங்குமணிக் கொம்பஃனததான் மந்துதனே தனேயெடுத்து வந்தார் மதகரிமுன் நடந்தவரைக் கண்டு நல்ல மத யானேயுந்தான் 70 அடர்ந்து நயினர் அடிப்பாதங்குத்தியதாம் குத்திவருங் குளுசரத்தின் கொம்புதனே விலக்கி வெற்றி விநாயகரே என்று வெளுப் பூட்டி வெளுப் பூட்டி விட்டதற்பின் வீரவிளந்தாரி யெல்லாம் பழுத்த மரந்தனிலே பட்சி வந்த சேர்ந்தாப் போல் 75 வந்துதலே மந்தெறிந்து மரத்திலே அடுத்தாராம்
மதகரிமேல் மங்கலனுர் பவனி வருதல்
அடுத்த மதகரியை அனைவோரும் தான் மதித்து சிரித்து விளையாடிச் சிநேகித் திருக்கையிலே வேர்த்து வந்துநின்று வெண்கமலப் பொய்கையிலே கோலம் பெறவே குளிப்பாட்டிக் கொண்டு வந்து &0 காலுக்குத் தண்டை கழுத்துக்கு வீரமணி மேலுக்கு வெள்ளே விதியிலே கொண்டு வந்து சட்டையணிந்து சகலாத்தும் தானணிந்தார் தொப்பியணிந்து சூனியமுந் தான்முடித்தார் பொன்னின் பிரம்பெடுத்து பொற்றுகிலும் மேற்போட்டு 85 வண்ணமுள்ள மங்கலனுர் மதயானை மேலேறிச் சின்னக் குழலூதச் செந்தமிழோர் பாடிவர அன்னநடைக் கன்னியர்கள்ஆலாத்தி ஏந்திவரக் கங்கை நதிசூழக் கற்பகப் பூங்காவினிலே மங்கலனுர் விதிவர வதனமார் சூழ்ந்துவர எங்கும் மதிக்க எழுந்தருளி வந்தாராம் திருந்து புகழ் மங்கலனுர் சீர்பாதந் தான்வாழி வருத்து பிணிதீர்க்கும் மங்கலனுர்தான்வாழி பாடினுேர் வாழி படித்தோர் மிக வாழி நாடிப் படித்தவர்கள் நாள்தோறும் வாழியதே
அரிராமர் ஜெயம்
36

2. வதனமார் குழுமாடு கட்டு அகவல்
காப்புப் பகுதி
ஐந்து கரத்தோனே ஆனே முக வேதியனே வஞ்சியுமையாள் பயந்த மதகரியே வாரணமே தொந்தி வயிற்றேனே தோராத ஐங்கரனே தாரார் அறுமுகனே சண்முக வேலாயுதனே சிராரும் வெற்றிமயில் ஏறிவருஞ் சேவகனர் 5 சேவகளுர் மங்கலஞர் சீர்பாதம் பாடுதற்குக் காவலாய் வந்துதித்த காரண மேனியனே
வேதியரை அழைப்பித்தல்
சந்தனத்தாற்கால்நாட்டி காந்தாற்றரைமெழுகி அந்நன் திருவுளத்தில் அரியோன் தனேநினேத்து விட்டுணு வேதம் விறும குலம்தான் விளங்கச் 10 செந்தாமரை மலரைச் சேயிளேயாள் கைகொடுக்கச் செந்தாமரை மலரைச் சேயிளேயாள் கைவாங்கி வேதப் பிராமணரை வேதியரை அழையுமென்ருள்
செல்வன் பிறக்க நல்ல தினம் பார்க்கச் சொல்லல்
வேதப் பிராமணரும் வேதியரும் வந்தபின்பு வேதப் பிராமணரே வேதியரே நாட்சொலுங்கோ 15 வெள்ளி சனிக்கிழமை வேண்டிய நாளுங்களுக்கு பூணுரம் பூணப்புதன்கிழமை நல்ல தினம் செல்வன் பிறக்கத்திருந்திய நாள் வேண்டுமென
வேதியர் நல்ல தினம் பார்த்துச் சொல்லல் பஞ்சாங்கந் தானெடுத்துப் பலவிதமாய் நாள் பார்க்க ஒன்பது கிரக மொன்றித்து நிற்குது காண் 20 உச்சிவரமுன் கதிரோன் ஒன்பதடி நேரம் திங்கட் கிழமை சிறந்தநாள் நல்ல தென்ருர்
37

Page 22
பாலர்கள் பதின்மர் பிறந்தனர்
வேதப் பிராமணரை வேதியரையும் அனுப்பி ஒன்று பிறந்தது உடையோன் தனேத் தொழுது இரண்டுபிறந்தது இலக்குமணரைத் தொழுது 25 மூன்று பிறந்தது முக்கண்ணரைத் தொழுது நாலு பிறந்தது நாலுமுகனேத் தொழுது ஐந்து பிறந்தது ஐங்கரனேத் தொழுது ஆறு பிறந்தது அரனுர்தனேத் தொழுது ஏழு பிறந்தது இளேயபெருமாள் தொழுது 30 எட்டுப் பிறந்தது ஈசுபரரைத் தொழுது ஒன்பதுதான் பிறந்தது ஓம்நவசிவாய வென்று பத்துப் பிறந்தவுடன் பாலகருந்தான்பிறந்தார்
பெரிய இளந்தாரி
பிறந்து வளர்ந்தாரே பெரிய இளந்தாரி பத்து வயதும் பதினுறுஞ் சென்றபின்பு 35 யானே சமர்த்தையாரறியப் போருர்காண் காலி சமர்த்தைக் கருதுவோம் வாருமென்ருர் வில்லம்பு செல்லே வெளுக்கயிறு கோடாலி மின்னுங் கிரிசவடி மேல்வளேந்த கோடாலி எல்லேயில்லாப் பொல்லே எடுத்து நடந்தாராம் 40
மங்கலஞர் அயோத்தியிலிருந்து இலங்கைக்கு வருதல்
அயோத்தியிருந்து அழகுள்ள மங்கலனுர் இராவணனு ராண்ட இலங்கைக்கு வந்தார் சாய்ந்த மரத்தடியில்லி சாவாற்றுப் பொய்கைதனில் நல்ல நிழலில் நயினுரும் வீற்றிருந்தார் வீற்றிருந்த மங்கலர்க்கு வெண்சாமரை விசி 4S அயனம் பொருந்தியவரவரே நிற்கையிலே ஏலமொடு வால்மிளகு எல்லோருந்தானருந்தி அடைக்காயும் வெள்ளிலேயும் அடைவுடனே
மங்கலஞர் கூற ஆக்ன சமர்த்தறியக்
காக்காய் வதனன் செல்லல்
வீராதி வீரர்களே விரவிளந்தாரிகளே ஆனே சமர்த்தை ஆரறியப போறிர்கள் SO காலி சமர்த்தைக் கருதிடுவோம் வீரர்களே
38

காக்காய்வதனன் கடுகெனவே தானெழுந்து அழகாயரவமெல்லா மாராய்ந்தடிபார்த்து ஓரிடமுங் காணுமலே ஓடிவந்து நிற்கையிலே வில்லுக்குளத்தில் மேல்வளே குடாவினிலே 55 ஐந்நூறு காட்டெருமை அழுதழுது ஓடிவந்து தண்ணிர் குடித்துத் தவிப்பாறி நிற்கையிலே கண்டு பதுங்கிக் கண்குளிரப் பார்த்து நின்று நின்றலும் மெத்த நெடு நேரம் செல்லுதென்று விரைந்து நயினுர்க்கு விண்ணப்பஞ் செப்புவனும் 60
காக்கை வதனன் கண்டு வந்ததைக் கூறல்
ஒராட்டை வென்ருலோ எங்கள் நயினுரே
ஒருநூறு போதுங்காண் ஈராட்டை வென்ருலோ எங்கள் நயினரே
இருநூறு போதுங்காண் மூவாட்டை வென்ருலோ எங்கள் நயினரே 65
முந்நூறு போதுங்காண் நாலாட்டை வென்ருலோ எங்கள் நயினரே
நாநூறு போதுங்காண் ஐந்தாட்டை யென்றலோ எங்கள் நயினரே
ஐந்நூறு போதுங்காண் 70
மங்கலஞர் காலி கட்ட கட்டக்ாயிடல்
சிந்தை மகிழ்ந்துநயினர் திருமேனி பூரித்து மந்துதனே எடுத்த மறுமந்து தான்போட்டு வீராதி வீரரெல்லாம் விதியிலே தானடைந்தார் காலி கனக்கக் கடுகியாள் ஒடுமென்றர் குழுவதனணுேடிக் கூவென்றன் காலிதனே 75 மீனப் பிராந்து விரும்பி எடுத்தாற்போல் வெள்ளி மலேப் பிராந்து விரும்பி எடுத்தாற் போல் ஆளுக்கொரு மாடு அவரவரே கட்டுமென்றர்
காலி கட்டியபின் காடு திருத்தல்
ஐநூறு மாடும் அணியாகக் கட்டியபின் செம்மல் குருமல் சொல்லவொண்ணுமங்கலனும் 80 வல்லல் அலங்காரி நல்ல குருநாச்சி சின்னவள்ளிகந்தி சிறியா விளங்காத்தாள் என்று பெயரும் வகுத்துப் பறப்பட்டார் நயினரும் வெட்ட வெளியாக வெட்டுங்கோ காடதனே தெற்கு வடக்காகச் சாயுங்கோ காலிதனே 85
39

Page 23
மங்கலனுர் தேன் வெட்டுதல்
ஆலே விருட்சத்தை அண்ணுந்து பார்க்கையிலே தெற்கே போன கந்திலொரு தேன்கூடிருக்குதென்று தேனேறி வெட்டுமெனத் திரைவாகி யெல்லோரும் எங்களாற் கூடாது எங்கள்நயினரே சிந்தை மகிழ்ந்து நயினுர் திருமேனி பூரித்து 90 செப்புக் குடமெடுத்து சிறுகோடரி சொருகி தேனேறி வெட்டியப்போ திரைவாகத் தான்பிழிந்தார் தேன்பகிர வாருங்கோ காலிதனேத் தேடுங்கோ காணுமற்போன காலிகழ்த் ஆகாய வதனன தேடிவந்து
காக்காய வதனனப்போ கடுகெனவே தான்பறந்து அரவ மரவமெல்லாம் மாராயத் தடி பார்த்துத் 95 துறைகள் துறைகளெல்லாஞ் சோதித் தடிபார்த்து ஓரிடமுமில்லாமல் ஓடிவந்து நிற்கையிலே வில்லுக்குத் தெற்கே மேல்வளே குடாவினிலே வெள்ளேக் கிடாவொன்று வெட்ட மறித்ததுவே கண்டு பதுங்கிக் கண்குளிரப் பார்த்து நின்று 100 நின்றலும் மெத்த நெடுநேரஞ் செல்லுதென்று விரைந்து நயினுர்க்கு விண்ணப்பஞ் செப்புவனும் கால்நாலும் பார்த்தாலே எங்கள் நயினரே
கட்டிற்கால் சேர்ந்ததுபோல் கண்ணிரண்டும் பார்த்தாலே எங்கள் நயினரே 105
கண்டுவம்மிப் பூவதுபோல் கோடிரண்டும் பார்த்தாலே எங்கள் நயினரே
குத்து விளக்கதுபோல் செவியிரண்டும் பார்த்தாலே எங்கள் நயினரே
சிறுசுழகு புடைத்தாற்போலெனச் 110
வெள்ளேக் கிடா வெட்டியது
சிந்தை மகிழ்ந்து நயினர் திருமேனி பூரித்து மந்துதனே எடுத்த மறுமந்து தோள்போட்டு வீராதி வீரரெல்லாம் மேன்மைபெறவே நடந்தார் வெள்ளேக் கிடாவை வெழுவிலே போடுமென்ருர் வெள்ளேக் கிடாவும் வெளுவுக்கு வாராது 115 குடிமறந்த கன்றும் வெளுவிற்கு வாராது வெள்ளேக் கிடாவும் விரைந்துவர லுற்றதுவே வேதங்களோதி நிற்க வெள்ளேக்கிடா வெட்டியதே வீராதி வீரரெல்லாம் விணிலே தான்மடிந்தார்
40

சுவாதியம்மனிடம் அழிவுச் செய்தி கேட்டு அனுக்கிரகித்தல்
காக்கா வதனப்போ கடுகெனவே பறந்து 120 ஆனசுவாதியம்மைக் கன்புடனே செப்புவனும் செப்பேணியாலே சுவாதியம்மன் தானிறங்கிப் பச்சைத் தேரேறி பரிவாகக் கை தொழுது எமலோகந் தான் கடந்து அப்பால் வருகையிலே வெள்ளேக் கிடாவும் விரைந்து வரலுற்றதுவே 125 வேதங்களோதி நிற்க வெள்ளேகிடா மடிந்ததுவே பாற்பொங்க லுண்டுபண்ணிப் பரிவாகக் கைதொழுது எல்லோரையும அழைத்து எதிர்கொண்டு போகையிலே
சுவாகியம்மன் வதனமாரைப் பட்டிக்காரர்களாக மாற்றுதல்
எச்சில்பட்ட நீங்களினி இங்குவரக் கூடாது
பட்டிக்குப்பட்டி பாலமிர்தமுண்டுபண்ணி 130 எல்லாமை செல்லாமை எல்லோர்க்குமுண்டுபண்ணி எல்லோரும் நில்லுமென்று ஏகினுள் சுவாகியம்மன் 131
மேற்கூறிய நிகழ்வினுல் பட்டிக்காரர் எனப்படும்ஒரு பகுதியினர் தோன்றிய வரலாறு சொல்லப்படுகிறது, வெள்ளேக் கிடாவை எதிர்க்க சக்தியற்றுப் போன வதனமாரைக் காத்த சுவாதியம்மன் அவர்களே
பட்டி கார்ந்து பாருக்கு நன்மை செய்யுங்கள் என்று ஏகினுள். வதனமார் எனும் தேவ அம்சம் பொருந்தியவர்கள் தேன் அருந்தும் ஆசைகொண்ட் தங்களது கவலேயினத்தால் அம்மனுல் சபிக்கப்பட்டு பட்டிக்காரர்க ளாயினும் தங்கள் முன்னேர்கள் வதனமாரே என்ற நம்பிக்கையில் இன்றும் அவர்களே வழிபட்டு வருகின்றனர்.
41

Page 24
3. வதனமார் குழுமாடு கட்டுக் காவியம்
இதுவரை வதனமாரின் அவதாரம், அவர்களின் தொகை, வெள்ளேக் கிடாவின் அட்டுழியம் பற்றிய சில செய்திகளே முன்போந்த பகுதிகளில் பார்த்தோம். இந்தப் பகுதியில் அவைபற்றிய மேலும் பல தக வல்களேக் காணக்கூடியதாக இருக்கிறது. அவற்றுள் வதனமார் இலங் கைக்கு வந்தது பற்றியசில சேதிகளேயும் காண்கிறேம். அவர்கள் வந்த வழியும் ஈற்றில் அவர்கள் மட்டக்களப்பில உள்ள நாதனே வெளியெனும் எனுமிடத்தில் நகரமைத்த் ஆட்சி செய்த செய்தியையும் காண்கிருேம். மண்முனேப் பற்றில் நாதனேக் கண்டம் என்றெரு வயற் செய்கைக் கண்டம் என்றெரு பகுதி இப்போதும் உள்ளது.
வாழத் தெரிந்துகொண்ட இடம்,காடும் காடுசார்ந்த முல்லே நில மாக இருந்ததையும் அவர்களின் செல்வம் மாடு வளர்த்தலிலே தங்கி யிருந்ததையும நாம் இந்தச் செய்யுள்களால் அறிந்து கொள்ளலாம். காலி என்பது குழுமாடுகளேக் குறிக்கும். காட்டில் எதேச்சையாக வாழும் பசுக்களேயும் எருமைகளேயும் இப்பெயரிட்டு அழைப்பர். வதனமாரின் நடபடிக்கைகள் இவற்றை மடக்கிப் பிடித்து வீட்டு மிருகங்களாக்கி அவற்றை வளர்த்தலிலே செல்வதைக் கொண்டு வதனமார் இனத்தவர் பாற்பண்ணே பராமரிப்பாளர் என்பது புலணுகின்றது
காப்புச் செய்யுள்
சீருலவு கமலமலர் வாவியிடை சூழவளர்
செம்பொனு லயமருவுதிருவயோத்திப்பதிக் கேருலவு விறுமசூல மகிழ்வுயரரிராம
ரின்பமுறு மங்கலர்மேலினியபுகழ் பாடப் பாருலவு நீடுபுகழ் மேவி வளர் பாரதம்
பைம்பொன்முனி கூறவளர் செம்பொன் வரைமீது கூருலவு கொடெடுத்தெழுதரிய விகடதடக்
குஞ்சரமு கன்சரணம் நெஞ்சில்மற வேனே
மக்கள்செல்வம் வேண்டி விரதமிருத்தில்
சரணபரி புரகமலவனிதையந்தணர்குலத்
42

பிரணவ வமிர்தகலே யோதுமறை தேருமுனி
பேசரிய சொற்படி பெருந்தவமியற்றி
அருணன் நிகர் கெருடன்மிசை பஞ்சாயுதத்துடன்
ஆதிநாராயண சுவாமிவந்தருளக்
கிரணவொளி சேர்புதுமை மலரடி பணிந்தாள்
கேசவர் மகிழ்ந்துநற் கிருபை செய்தனரே
வதனமார் அவதாரம்
வானவர்களாலுமுடியாததவம் நீசெய்த
வண்மைபுகலென்னமறை மங்கையுலகிற்பாய் ஏனவுருவாயுலக மீடேற்றி யாழும்
ஏந்தலே சிறுவரையெனக் கருள்செய்யென்னக் கானமலர் மேனியன் முகுந்தனருள் செய்து
கமலமலரைக் கன்னி கைதனிலளிப்பத் தானதன்ம மீறியுயர் சைவநெறி வாழத்
தருமமங்கலதேவநயினர் பிறந்தார்
நவமது புரிந்துபின் மனமது மகிழ்ந்து
சந்தோஷமாகவொரு செந்தாமரைப்பூ
அவசரமதாகவே صهجr கையிற் கொடுக்க
ஆயிளேஆருந்தவே கெற்பவுற்பத்தியாய்
நவலகொழு நாயன்மார் திங்களொரு பத்தினில் நயினருடன்கூடியேபிறந்த தனரே
மங்கலரும் வதனமாரும் வளர்தல்
Sip மங்கலருடன்வதனமாரும்
ரியநாளும் நிறை பிறைபோல் வளர்ந்து சிறந்த புகழ் மேவிவளர்ரெத்தின குண்டலமுந்
ஞானுடன் செம்பொன் முத்தாரம் மறங்குலவு தண்டமொடு வல்லயஞ் செல்லே
மழுக்கயிறு கோடாலிவாள்பொல் லெடுத்துத் திறங்குலவு ரணசூர வீரகேசரியான
செல்வமிகுநயினர் சிறந்து வீற்றிருந்தார்
வதனமார் ஆட்சி தாரசைய மணிமகுட கிரணவொளி வீசத்
தயங்குமுப்புரிநூலிலங்கவொளிர் சரணம் வீரசங்கிலியசையத்தரியலர்கள் வெருவ
விண்ணுடர் புகழவருகனநாதர் பரவக்
43

Page 25
காரணமதானமங்கலதேவ ருடனே
கருணேசெறிவதனமார் கருதிவளர் போதில் ஆரண விதிப்படியோர் வெள்ளேக்கடா வந்து
அயோத்திமா நகர்தனி லயர்ந்து நின்றதுவே வெள்ளேக்கிடா கண்டுவந்து மங்கலஞரிடம் சொல்லல்
நின்றதையறிந்து சிலர்கண்டு மனமேங்கி
நேசமுடனே நயினர் பாதமலர் தொழுது கண்டறியோம் நாங்களொரு வெள்ளேக் கடாவந்து
கன்னல் செந்நெல் கதலி காய்வன மழித்து மிண்டிவரு வோர்களே வெருட்டியமராடி
வீரமுடனே பதியழிக் குதிது வெனவே நன்றெனவே வதனமாரனேவருஞ் சூழ
நயினு ரெழுந்து வெண்பகடுகண்டனரே மங்கலஞரும் வதனமாரும் கிடாச் சாய்த்தல்
கண்டவர்கள் மனம் வெருவ வெடிவால் சுழற்றி
காயச்சுருக் கொண்டு காரிடிபோல் முழங்கிச் சண்டமாருதமெனப் பகடுமுன் செல்லத்
தாக்னபல பின்செல்ல நயினு ரெழுந்து முண்டாசுப் பாரசடை பாதமலர் தொழுது
முன்போன வெள்ளேக் கடாவைத் துரந்து பண்டுநம் ராமனுங் கடல்கடந்ததுபோல்
பரிவான தென்னிலங்காபுரியில் வந்தார்
பிறந்தே வளர்ந்தே பெலத்ததிறமாகிப்
பேய்முலேயருந்துபெருமானருளினலே சிறந்தமங்கலவதன மார்களுங் கூடி
ா ளெருமையைச் சென்று சாய்த்திடவே துறந்தமுனிநாதர்தன் பகட்டைத் துரத்த
சொல்லுமுனியெங்களுக்கேயுரிய தென்ன பறந்திளேய நம்வதன மார்களும் வந்து
பகடது பறித்திலங்கைக்கு வந்தனரே இலங்கைக்கு மங்கலஞர் பரிவாரங்களுடன் வருதல்
வந்தபின் கந்தாளே கவடாலே மின்னேரி
வாகான கோமாரி வதனவொளி நாவலூர் சந்தம் மிகுந்தருளுகந்தைமக்ல முருகவேள்
தங்கிவளர் கதிரைமலே வலவை மாகாமம் கொந்தலர் தடங்கடொறு மாராய்ந்து பார்த்துக்
கூறரிய மாவெலிக் கங்கை யா ல்
44 -

சிந்தைமகிழ் வெய்தியே மதுரை நிழல்தன்னில்
முநீநமோ நாராயணுவென விருந்தார்
காலி கண்டறிந்துவரச் சொல்லல்
இருந்தருளு நயினர் தனக்குவெண் சாமரை
இரத்னவகை காளாஞ்சி இருபாலு மேந்தப் பொருந்தி வளர்பொன்னடப்பக்காரர் தானும்
போற்றரியவதனமார் நாற்றிசையுஞ் சூழத் திருந்திவருபோதிலவரைப்பார்த்து நயினர்
செப்பரிய எருமைக் குழு காலியா ராய்ந்து தெரிந்துவர வேநல்ல வதனமார் தன்னைச்
சீக்கிரமனுப்புமென வேயருள் புரிந்தார்
பாலாவதனன் பார்த்து வந்த சேதி உரைத்தல்
அருள்செய்யும் பணிவிடை கண்டுபாலாவதன
னப்போதுவாய்வேகி மனவேகி யெனவே இருவர்தன விட்டவர்கள் எங்கெங்கு மேகி ஏற்றுரிய வெடிமுத்தங்கண்டு மீண்டு திருவருள்செய் நயினுர் தனக்குமுன் சென்ற
செப்பரிய வேடிகள் திரண்டொரு வழிக்கே பருவரை யிற்புகழ்முத் தஞ்சித்து மேடையில்
பார்த்து வந்தோமென்று தோத்திரஞ் செய்தார் மங்கலஞரும் வதனமாரும் மாடு பிடித்தல்
செய்தியை அறிந்துநயிஞர்மன மகிழ்ந்து
செம்பொன் முத்தாரவகை சேலேகள் கழைந்து கைதனிலே பொல்லெடுத்துக் கச்சை கட்டி
கருதரியதிருநீறு திருநாமம் வீறய்த் துயயபுகழ கூறறறுபதுவதனமாருந
தோராத வெற்றித் துவால்போல் லெடுத்து வையக மதிக்கவே விற்குடா வெளிதன்னில்
வாகாக வேபோய் வளைந்து நின்றனரே
நின்றவுடனேவதன மார்கள் சில ரோடி
நேசமுடனே காலித் திரள்களே வெருட்டி ஒன்றேடொன் ருெட்டாமற் செந்தூள் பறக்க ஓடியெதிர் வருபோது ஓர்மித்து நின்று கன்றுடன் எருமைகுழு நாகுபல நாம்பன்
கறையடித் திரள்போல வருபகட தெல்லாம் சென்றுசென்றேயவர்கள் ஆளுக்கொரு மாடு
சேர்த்துவைத் தேவெழுப்பூட்டிவந்தனரே
45 -
10
11

Page 26
நாதனேயில் நகரமைத்து இருத்தல்
வந்தவுட னேநயினுர் திருமனது பூரித்து
வாகான வதனவெளி தன்னிலொரு சாரில்
சிந்தைமகிழ் வெய்தினேர் வந்தின திருந்து
தேசிகர் முகிர்த்த தமிழது தெரிந்து
கொந்தலர் தரிக்கு மெருமைக்கு நல்லபேர்
குமரிகுடி தாங்கிகுறு மற்சேர் மலமங்கல்
விந்தைபெறு திருநாமம் வெவ்வேறு நல்கி
வீறுபெறுநாதனேமா நகர்தனிலிருந்தார் 15
நகரமதில் வீறுபெறு சந்தனச் சோலேயும்
நளினமலரோடை செறிநல்ல பூங்காவும் பகரரிய நூல்பசும் பொன்னுலிழைத்த
பாய்தனே விரித்ததின மேலெழுந்தருளிக் சிகரவருள் போல்வதன மார்கள் புடைசூழத்
தேவதே வாதிகள் சிறந்துமண மகிழ அகரமுதலெட்டெழுத் தோதியே நயினர்
அரியசிங் காசனத்தனில்வந்திருந்தார் I6
வாழி
திருந்துமங்கலவீர வதனமார் வாழி
சிவசமய மைந்தெழுத் தெப்போதும் வாழி பொருந்தபூசனேசெய்த கட்டாடி மார்வாழி
பூலோக நற்பதிகள் நீடுழி வாழி அருந்தவஞ்செய்கின்ற முனிவோர்கள் வாழி
அழகுசெறி மட்ட்க் களப்புநகர் வாழி பருந்துவா கனமீதெழுந்துவருகின்ற
பச்சைமால் பொற்பாதம வாழவாழியதே 17
おss窓3お乏ーリ玄s
46

4. வதனமார் தேன்வெட்டுக் காவியம்.
ஆதி கால மனிதர் ஆடையின்றித் திரிந்தனர் அடுத்து இலே குழைகளேக் கட்டி மானத்தை மறைந்தனர். பின்னர், மரப்பட்டை, தோல், சணல், சணற் பின்னல், நூல் நூலால் செய்த புடவைகளால் தங்கள் உடல்களே வெட்பதட்பத்திலிருந்து காத்தனர் என்று சொன்னல் நாங்கள் வெட்கப்பட்டுக் கூனிக் குறுகுவதில்லே. ஏனெனில் இப்போ துள்ள மனித இனம் இத்தகைய பல கட்டங்களேக் கடந்துதான் தற்போ தைய நிலயை அடைந்துள்ளது. இதை ஒப்புக்கொள்வதால்தான் எங்க ளிலும் நாகரீகம் குறைந்த் நிலேயில் வாழ்ந்த எங்கள் முன்னேர்களேப் போற்றிப்புகழ்கிருேம்.அவர்களின் சந்ததியினர் என்று பெருமைப்பட்டுக் கொள்கிருேம், வம்ச மதிப்பைக் கட்டிக் காக்க வாழ்கிறேம்.
வேட்டையாடிய காலம் மாறியபோது, பண்டைக்கால மக்கள் அலேந்து திரிந்த காலத்தொழிலாக மந்தை மேய்த்தனர். பின்பு பயிர்ச் செய்கை செய்யத் தொடங்கியதும் நிலேயாக ஒரு இடத்தில் தங்கி வாழ்ந்தனர். பின் இந்த இருவித சிவனுேபாயத் தொழில்களும் பிரிக்கப் பட்டன. எனினும் இப்போதும் மட்டக்களப்பு மக்களின் வாழ்க்கையில் கால்நடை வளர்த்தலும் கமத்தொழிலும் இணேந்தே வளர்கின்றன.
தற்போது கமத் தொழில்ப் பார்க்கும்போது வயல்களில் உழுது, குடுபோட்ட மாடுகளின் நாலு கால்களும் உழவு இயந்திரத்தின் சக்கரங் களாக உருமாறி உள்ளதைக் காண்கிறேம். அருவி வெட்டலில மாத்திரம் இன்னும் இயந்திரங்கள் நுழையமுடியாமல் தவிக்கிறது. ஏனெனில் வயலில் வரம்புகள இடப்பட்டு வரவைகள் பிரிக்கப்படும் முறை எனலாம து அடி அகலமும் இருபதடி நீளமும் கொண்ட வரவையின் நாலு பக்கமும் சூழவர இரு அடிப் அகலப் பரப்புள்ள செய்கை நிலம் வரம்புக் காக ஒதுக்கப்படுகிறது. அதனுல் செய்கை பண்ணப்படும் நிலம் 25 சத வீதத்தால் விணுக்கப்படுகிறது. அடுத்தது எல்லே வகுக்கும்போது இடப் படும் வரம்புகள் இடையிடையே குறுக்கிடுவதால இயந்திரம் மூலம் அருவி வெட்டுவது இடர்பாட்டைத் தருகிறது. வளர்ச்சிபெற்ற மேல் நாடுகளில் வரம்பிடப்படாத பரந்த வயல் செய்கை முறை கைக்கொள்ளப்
47

Page 27
படுவதால் நீர்ப்பாசனம், கிருமி, நாசினிகள் தூவுதல், உழுதல், விதைத்தல் அருவி வெட்டல், தானியம் தூற்றல், வைக்கோல் கட்டுதல்,
என்பன இயந்திரத்தின் பன்முக இயக்க அமைப்பால் இலகுவாக்கப் படுகிறது.என்பது மனதிற் கொள்ளற்பாலது.
இப்போது வேழாண்மைச் செய்கை இயந்திர மயப்படுத்தப்பட்டு வருகிறது. மாடுகளே வளர்க்கும் பட்டிகளும் பாற்பண்ணேக்கு பால், பாலுணவு வழங்கும் சிறு பண்ணேகளாக மாறி வருகின்றன. இதனுல் பழையமுறைகளும் சம்பிரதாயங்களும் சமயஞ்சார் சடங்குகளும் கைவிடப்படுகின்றன. இதனுல் இந்தப் பண்பாட்டுக் கோலங்கள் நம்மி லிருந்து மறைந்துபோகும் நில் வந்துள்ளது. இந்த நேரத்தில் பண்டைப் பராம்பரியங்களே நினைவுபடுத்தும் அடையாளங்களே ஆவணப்படுத்தும் நோக்குடன்தான் இவ்வித ஆய்வுகளும் பதிப்புகளும் அவசியப்படுகின் றன.
இலங்கையில் காடுகளில் வாழும் வேடர்கள் குமார தெய்வ வழி பாடுள்ளவர்கள். அதுபோவ இறந்த முன்னுேர்களின ஆவியை வணங்கு பவர்கள், இத்தகைய தருணங்களில் அவர்கள் பாடும் இரு பாடல்களேத் தமிழ்ப்படுத்தி இங்கே தருகிறேன்.
மூதாதைகளே வணங்கும் பாடல்:
மா மினி மாமினி மா மினி தெய்யா எனத்தொடங்கும் பாடல்;
என் மூதாதே என் மூதாதே என் மூதாதே என் தெய்வமே நாங்கள் உடும்பைச் சுட்டெடுப்போம் சுட்ட உடம்பின் சுவையெடுப்பாய் சுட்டவுடனே ஈரல் எடுப்பேன் படைப்பேன் பனித்துளி பூமியில் விழுந்ததடா பாடுங்கள் எருமையில் ஏறிச் செல்வோம்
தேனெடுக்கும் பாடல்; வோரி வோரி செல்லலா மாகே
தூரத்து மலேயாம் பல்லி கடுதலயா பூத்த மலரில் தேனெடுத்து வருவாம் எடுத்த தேன் கொடுத்து இருலாக்குமாம் தேனெடுக்க வந்தேன் கொட்டாதே தேவையிலாத் தொந்தரவு தந்திடாதே
இந்தவகையில் வதனமார் தேனெடுக்கும் நிகழ்வைச் சித்தரிக்கும் பகுதி இது.
48

காவியம்
வதனமார் 160 பேர் பிறத்தல்
சீர்மேவு வேதியர் குலத்திலொரு மாது
செங்கண்ணெடு மால் திருப்பாதமலர் போற்றி பேர்மேவு பிள்ளே வரம் வேணுமென் ருேதப
பெருமாள் வரத்தினுற் பெற்ற பிரதாபன் தார்மேவு திருமார்பன் அந்தணராகிச்
சங்கைபெறு மங்கலர் பிறந்த சமூகத்தில் பார்மேவு புத்திரர்நூற்றறுபது வந்தவரும்
பரராசரும் வந்து சூழ்ந்தடி பணிந்தார் I
மங்கலஞர் சாவாறில் ஆட்சி புரிந்தது பணியாபரணமும் பொன்முத்து மால்
சரப்பணி பொன்னுெளி பதக்கமொடு சங்கிலி அணியாகவேஎடுத்தங்கங்கு பூட்டி
அழகான பட்டாடை சட்டைசக லாத்தும் கெணிதான மதரூபன் கீர்த்தி ப்ரதாபன்
கிருபையுட னேயலங் காரவடிவாகி மணிமால் யும்முன்கை வாகுபுரிவளேயலும்
Ausdaujollu apsoluon JuguorijësorGJ 2 வதனகமலம்போ விளந்தாரி வீரர்
வரிசைபெற வேமழு மந்துகோ டாலி இதமான கைகட்டுத் தொங்கலணி வில்லம்பு
இன்பமுடனேபல வாயுத மெடுத்து பதனமுட னேநெடும் படைமனிதர் சூழவரு
பங்குடனே சாவாறு தனிலெழுந்தருளி இதமுடனே நல்லநிழலென்றுநயினரும்
இனிதாக வீற்றிருந்தருளது புரிந்தார் 3
காலி கண்டு வாவென ஆணேயிட்டார்
வீற்றிருந்தேகாலி பார்த்துவா வெனவே
என்றெரு மொழி பகர வன்று நயினரும் ஏற்றமுட னேபாலா வதனணு மெழுந்து
இப்போதுவாருேமென் றெருநொடியிற் சென்று காற்றெனவே நாலுதிக் தெங்கணு மோடிக்
காலியடி பார்த்துவந்த்ாலித்து மீண்டு ஏற்றமுட னே காலி குளிக்கிறது கெங்கை
இப்போது கண்டோமென் ருெரு நொடியில் வநதார் 4
49

Page 28
காலி பிடிக்கப் போதல்
ஓடிவந்தேகாலி கண்டதை யுரைக்க
உற்றதிருமங்கலரும் மெத்தமகிழ்வாகி ஆடியே யவர்களெல்லாருமே கூடி
அவரவரேகச்சை கட்டிப்பொல் லெடுத்து கூடியே விரவிளந்தாரிவதனமார்
கொண்டாடி மந்துபொல் கோடாரியெடுத்து தேடிவடிவாகத்திரிந்துநயினருஞ்
சீக்கிரமே காலிக லேத்தன ராங்கே
ஆங்கவர்களாலாக் கிளேகளது போற்கூடி
ஆளுக்கோர் மீனெடுத் தருந்தினது போல தேங்குகஸ்தூரிமணம் வீசுமணி மார்பனும்
திக்கெங்கு மாளுக்கோர் குழுமாடு பிடித்து தாங்குதலே கால்மந்து பாய்ச்ச இறுக்கித்
தயவாக மதுரைநிழல் தனிவெழுந்தருள பாங்குடன் தேன்கூடு கண்ட நயினுரும் பரிவுடனேறிவெட் டிப்பணிய வந்தார் நயினுர் தேன் எடுத்தல் வெள்ளேக் கிடாவின் தொல்லே
வந்தபின் நயினுர் மனமிக மகிழ்ந்து
வாகுடன் தேன்பகிர வாருமென வோத இந்தநிழலில்வதன ரெல்லோருங் கூடிச்
சிங்காரமாகவே யாங்கவரிருக்க மந்தார மாமுகில் போலே புயத்தான்
மாடுமேய்க் குமிடையனுேடியே வந்து விந்தைசெறிவெண்டா மரைத்தலேயனுன
வெள்ளேக் கிடாவந்து வீரிடுகு தென்ருன்
வெள்ளேக் கிடாவடக்கப் பறப்படுதல்
வீரிடுகு தென்றவனு மோதுமொழி கேட்டு
யொப்புடைய நயினரும் வீரரை யழைத்து ஒதியே குழல் கச்சை யொதுக்கியே கட்டி
ஒம்நமசிவாயமென் ருெருமந்தெடுத்துச் சோதிமறையவர்களுமப்போதுவங்கித்
துய்யதொரு வெள்ளேக் கிடாவைத் துரத்தி ஆதிநெறி மாலருளால் நீதிமங்கலரும்
அப்போது தயபாமற் படுத்தா ரடுத்தார்
50

அடக்க முற்பட்டவர் அழிந்தார்
படுத்தார் தலேமந்து பாய்ச்சிமுன் போனுர்
பதைக்கப்பதைக்கப் பகட்டுக் கடாவை அடுத்தே சிரத்தைக் கரத்தை உடைத்தார்
அழித்தா ருருண்டார் அனைவர்களும் மாட்டால் பிடித்தானே வாலேக் கரத்தாலிடையன்
பேய்க்கோல் நரம்பைப் பிடிக்குமுன் போட்டு எடுத்தார் கைக்கத்தி தொடுக்க வலேக்க
இழுத்தாரறுத்தார் இறந்தார்கள் மாட்டால் தாளேக் குளத்தில் நாயன்மார் பூசை
காலிமேய்க்குமுமிடை யன்பட்ட பின்பு
ஆலிப்புடனே யிலங்கைக் கதிபனென்
ருசாங்குழலுமோ ரம்புங்கொடுத்து நாலுதிக்குங்காவலாகவிளயாடி
நயமாகவேயுலகம் மிகவாழ்க வென்றே காலியருளாலேகந்தாளேக் குளத்தினிற்
கருதரிய நாயன்மார் பூசைகொண்டனரே
வதனமார் பூசையின் பலன்
அருள்கொண்ட நாயன்மார் தன்னேநினேந்து
அன்பாகவேயூசை பொங்கல்மடை செய்வோர் திரள்கொண்ட பூதப் பிரேதப் பசாசி
சிறந்ததோர்பில்லிவஞ்சனே சூனியம் அருள்கொண்ட வதனரைப் பகடுகொண்டரியபுலி
வாகாண வதனமா ராக்னசொல் வோர்க்கு ஒருநிக்கு மனுகாமவொதுங்கியோடிடுமே
ஒதரியவதனமாருண்மையுலகோர்க்கே
மங்களம்
திருவாழி மறைவாழி நாலுவேதமும்வாழி
செப்பரிய மன்னர்செங் கோல்நிதம் வாழி கார்வாழி காவியம் பாடினுேர் வாழி
கட்டாடி மார்வாழி கன்னிமார் வாழி அருந்தவஞ்செய்கின்ற முனிவோர்கள் வாழி
அழகுசெறி மட்டுக்க ளப்புநகர் வாழி பருந்துவா கனமீதெழுந்து வருகின்ற
பச்சைமால் பொற்பாதம வாழவாழியவே
露さ総s露姿gs2s答リ
51
IO
II
12

Page 29
5. வதனமார் ஊர்சுற்றுக்
காவியம்.
வதனமார் இந்தியாவிலிருந்து வந்து இலங்கை சேர்ந்து, கிழக் குத்திசை நோக்கிச் சென்று அங்கிருந்து தெற்கு வழியாக பானமைவரை சென்றனர். பின்பு அங்கிருந்து வடக்கு நோக்கித் திரும்பி நாதனே வெளியில் நகரமைத்து வாழ்ந்தனர். இந்தச் செலவைக் கூறும் பகுதி வதனமார் ஊர்சுற்றுக் காவியம் எனப்படுகிறது. இப்பாதைகளே நோக்கு மிடத்து அவை காடும் காடுசார்ந்த புல்வெளியும் உள்ள முல்லே நிலமாக இருப்பதைக் காணலாம். மந்தை வளர்ப்பதையும் , குழுமாடுகளேப் பிடித்து மந்தைகளேப் பெருக்குவதையும் சிவனுேபாயமாகக் கொண்ட இவர்களுக்கு இத்தகைய இடங்களே வாழ்விடமாக அமைந்ததில் வியப்பில்லே.
இவர்களின் வருகை எக்கால கட்டத்தில் நிகழ்ந்தது என்று அறிவதற்கு இலங்கை வரலாற்றில் ஏதேனும் தகவல்களே அடையாளம் காணமுடியாதிருக்கிறது. மட்டக்களப்பு மான்மியத்திலும் வதனமார் என்ற செய்தி இல்லே. ஆணுல், அமரசேனன் சரித்திரம் - மறவர் வருகை என்ற பகுதியில் பின்வரும் செய்தி ஒன்று தரப்பட்டுள்ளது
'இராமர் நாட்டு மறவர் குலத்து இராச வம்சத்தைச் சேர்ந்த ஏழு பெண்கள் தங்கள் மணவாளர்களுடனும் சிறைத் தளங்களுடனும், வவனியர் குலத்து குருகக் குடும்பம் ஐந்தும் சேர்ந்து மட்டக்களப்பின் பரிசுத்தங்களே அறியும்படியும் வைதூலிய சமயத்தை மாற்றி அரிநமோ என்னும் நாமத்தைப் போதித்து வைக்க வேண்டுமென்றும் கம்பர் இயற்றிய இதிகாசப் பிரதியை எடுத்து. இராம நாடுவிட்டு சேதுதனில் ஸ்நானம் செய்து. இரா மேஸ்வர தெரிசனே கண்டு ஒரு ஒடத்தில் ஏறி மன்னரில் இறங்கி, திருக் கேதிஸ்வரம், கோணேஸ்வரம் தெரிசனே கண்டு ஒரு இடத்தில் கொட்டியான் புரத்தில் வந்து மட்டக்களப்பில் அமரசேன மன்னனேக் கண்டு தங்கள் வரலாற்றைக் கூறி வன்னிச் சீமாரென விருது பெற்று கலேவஞ்சி ஓர் ஊரிலும், மங்கிஅம்மை ஒரு ஊரிலும், செட்டிச்சி ஒரு ஊரிலும், மகிழரசி ஒர் ஊரிலும், இராசம்மை ஓர் ஊரிலும், வீரமுத்து ஒரு ஊரிலும், பாலம்மை ஓர் ஊரிலும் தங்கள் தங்கள் மணமகனுட னிருந்து வந்த சிறைகளே கொண்டு கமத்தொழில் செய்து வாழ்ந்தனர்." என்பதே அந்தச் செய்தியாகும்.
52

அமரசேனன் காலம் 'கலியுத்த மூவாயிதது நானூற்றி அறுபத் தாறே ' என்பதால் இது தற்போத் கலிவருடம் 5102 அதிலிருந்து 3466 கலிவருடங்களேக் கழித்தால் கி.பி 368 வருடங்களாக இருக்க வேண்டும். இது வரலாற்றுச் சாத்தியமறறது. அத்துடன் கம்பரின் இதிகசாசம் (கம்பராமாயணம்) கொண்டு வந்ததென்று இருப்பதும் இந்தக் காலத் துடன் ஒத்து வராது. ஏனெனில் கம்பராயாணத்தின் காலம் மிகவும் பிந்தியது.
அடுத்து இவர்களுக்கும் வதனமாருக்கும் தொடர்புகள் இருப்பது மூன்று காரியங்களால் மட்டும் ஒன்றுபடுகிறது. முதலாவது வைணவ சமயம், இரண்டாவது ஏழு கன்னியர் வருகை, மூன்றவது இவர்கள் மட்டக்களப்பிக்னச் சேர்ந்த பாதையும் வதனமாரின் பாதை களும் ஒத்திருப்பது. . இவற்றல்மட்டும் வதனமாருக்கும் இவர்களுக்கும் தொடர் புண்டு என்று நிட்சயிக்க முடியாதுள்ளது.
எனினும் இந்த மறவர் குலத்தவர்கள் வந்து குடியேறிய இடங்க ருக்கு இவர்களின் நாமம் இடப்பட்டது எனக்கொண்டால் கலேவஞ்சி - கருவாஞ்சி, மகிழரசி - மகிழுர், பாலம்மை - பாலமுனே, செட்டிச்சி - செட்டிபாக்ாயம், வீரமுத்து - வீர முனே, எனும் ஊர்களின பெயர் வரலாறு கிடைக்கும்போல் தெரிகிறது.
காவியம்
இறை வணக்கம்.
திருமருவயோத்தியம் பதிதனிலிருந்து
மருமருவு மங்கலருடன்வதன மார்சேர்ந்து வந்தனர் மாயவன் தன்புகழ் வகுத்த எருதேறு மீசரிடமாகிவளர்கின்ற
ஈசுபரிதன்கிருபை பெற்றருள் சிறந்த கருமாது விகடதட வீரமுங் கண்ணன்
கணபதியை யொருபோதும் மனதில் மறவேனே வதனமார் கதிரையம்பதி நோக்கி வருதல் மறவாமலந்தணர் குலத்தவதரித்து a
மதயானே எருமைகுழு மாடுகள் பிடித்துத்
திறமான வயதுமே யிரெட்டுச் சென்றபின்
செப்பரிய மந்துபொல் கண்டகோ டாலி
53

Page 30
நிறமான பட்டுடன் சட்டை சகலாத்தும்
நீள்துளயமாலேஅணி பூஷண மணிந்து
குறமாது மணவாளர் கதிரையம் பதிநகர்
குறித்தவர் மனத்தினில் நினேந்துவந்தனரே
வதனமார் கன்னிமாருடன் திருகோணமலேயை அடைதல்
வந்துமதுராபுரியில் நின்றவதரித்து
ல் நீராடி யேமனமகிழ்ந்து விந்தைசெறி கும்பகோணந்தன்னில் வந்த
மேன்மையுடனேமுழ்கி நன்மைபெற வேதான் இந்தவகை யெண்ணியவர் சந்தோஷமாகவே
இன்புற்று ராமே சுரந்தன்னில் வந்து செந்தமிழ் சிறந்துவளர் கந்தமா பருவதந்
வந்தவதரித்தவர்கள் தன்னுள மகிழ்ந்து
வளமையுள் நற்பதிகளெங்கணு நிறைந்து கந்தமலர் மாதுளே செவ்வந்தி செண்பகங்
கனகமலர் நிறைவாவி கண்டவருகந்து சிந்தையுடனேயெடுத்தனேவருமணிந்து
சீருலவு கன்னிமா ரும்வதன மாருஞ் சந்தோஷமாகவே கந்தாளேக் குளத்தில்
தன்மனமகிழ்ந்தவர்கள் அருள்புரிந்தனரே
வதனமார் தெற்கு நோக்கிச் செல்லல்
அருள்புரிந்தேகொட்டி யாரநகர் கிளிவெட்டி
ஆனதம் பன்கடவை தம்பலகாமம் தருவளரு கந்தைமலே சலவைபா னகையுடன்
தமிழ்பெருகு நாவலூர் நாகமுனே அறுகாமம் எருமைமத யானேகள் பிடித்து விளேயாட
இதமான தலமென்று அவர்மனதிலெண்ணி வரிசைபெற வேயவர்கள் அனேவரும் வந்து
வதனவெளி தன்னிலே இனிதிருந்தனரே
ஒரு பகுதியார் வதனவெளியில் இருந்து வடக்குக் கரையோரம் நோக்கிச் செல்லல்
இனிதிருந் தேசிறிது பேரங்கிருக்க
இன்பமுட னேசிறிது பெரெழுந்தருளித்
54

தனிமைபெற வேதிருக் கோவில் நகரெய்தித்
தம்பட்டை மட்டிநகர் தளகைக் குடாவும்
கனிபால னேயதமிழ் பயில்துடி பிடிநடைக
கன்னியர்களுறைகின்ற காரைநக ரெய்திப்
பனிமலர்கள் சொரிகின்ற கல்முனேயில் வந்து பரிவுசெறியாலநிழல் வீற்றிருந்தனரே
நாதனேப் பதியில் அமர்தல்
விற்றிருந்தேயெழிய மானிடர் தமக்கு
வினேதுயர கற்றிநல்ல வெளிகள்விளே வித்து கீர்த்திபெற வேபூசை பொங்கல்கள் விரும்பிக்
கிருபையுட னேயவர் தமக்கருள் புரிந்து போற்றிசெய்தேநல்ல தோத்திரஞ் செய்து
பூலோக ம் வாழவென்றேதான் நாற்றிசைகள் புகழ்கின்ற நாதனப் பதியில்
நாச்சிமார் கல்லடிநற் பதியெனவிருந்தார்
நற்பதிகளென்றவர்களொப்பமுடனேதான்
நளினமலர் கமழ்வாவி அதிகதலமென்று பொற்பிளவை நீலநவரெத்தினம ணிந்து
பொன்னினரை ஞானுடன் சட்டை சகலாத்தும்
சீர்மையுள்ள கன்னிமாரும்வதனமாரும் எப்பொழுது மித்தல மிரட்சிப்போ மென்று எல்லோரும பொங்கல்மடை கொண்டிருந்தனரே
மடைகொண்டிருந்தவர்கள் அகேநெடுநாளாய்
மாருத வல்வினே வரும்பிணியகற்றிப் படைவந்து கிருஷ்ணனும் அணுகாமலேதான் பஞ்சாட் சரங்கொண்டு அஞ்சத் துரத்தித் தடையின்றி வாழவே நற்கிருபை செய்து
சந்தோஷமாகவே அந்தமா நகரில் அடைவுபெற வேபூசை அர்ச்சனே விரும்பி
அனைவோரு மங்கே யமர்ந்திருந்தனரே
மணற்பிட்டி நகர்வு
இருந்துமத யானேகுழு மாடுகள் பிடித்து
இயல்புபெற வேயவர்கள் ஓடிவிளேயாடித்
55

Page 31
திருந்துமலர் வாவிதனில நீராடியேதான்
திருமனதி லெண்ணி நல்ல சிவதலமீ தெனவே
பொருந்துமங் கலவீர வதனமார் தாமும்
புந்திசெறி தான்தோன்றுமப்பர நகரெய்தி
மருந்துமந்திரம்முகிலி சிந்திக்க நல்ல
மணற்பிட்டிதனில்வந்து வீற்றிருந்தனரே IO
வாழ்த்து
திருந்துமங்கலவீர வதனமார் வாழி
சிவசமய வைந்தெழுத் தோதுவோர் வாழி பொருந்தவே பூசைசெய் கட்டாடிமார் வாழி
பூலோகம் நற்பதிகள் நீடுழி வாழி அருந்தவஞ் செய்தசிவ முனிவோர்கள் வாழி
அருள்பெருகு மட்டுக் களப்புநகர் வாழி பருந்துவா கனமீதி லெழுந்தருளி வருகின்ற
பச்சைமால் பொற்பாதம் வாழவாழியதே II
Sessrsessexgrassesses
56

6. வதனமார் பொங்கல் வழிபாட்டுக் காவியம்
மட்டக்களப்பில் இப்போதும் காட்டில் யதேச்சையாக அலேந்து திரியும் காலிகளே வெளு எனும் சுருக்குக் கயிறிட்டும் வைத்தும் பிடிக்கும் சிலர் இருக்கிருர்கள். இவர்கள் பிடித்த கால் நடைகளுக்கு குறி சுட்டு அவற்றை மந்தையிற் சேர்த்து விற்று விடுவார்கள். இவ்வித குறிசுடும் போது அதற்கான அடையாளங்கள் அவற்றின் உரிமையாளரின் குலத் துக்கும் குடிக்கும் ஏற்பப் பொறிப்பதுண்டு. அப்படியான சின்னங்களின் பட்டியல் ஒன்றை மட்டக்களப்பு மான்மியம் பின்வருமாறு தருகிறது;-
"தோணி கரையார்க்குத் தொப்பி துலுக்கருக்கு காணியுழு மேழிசுளிகாராளர்தனக்கு நாணிவில்லம்பு நாட்டிலுள்ள வேடுவர்க்கு எழுந்நாணிகளிமுற்குகர்க்கு கமலமலர் கோயிலார்க்கு கைப்பிரம்பு பண்டாரப்பிள்க்ளக்கு திமிலருக்குப்பால்முட்டி Gwalutas grawn Jyudawiakgas Csi&Glastigas6it அம்பட்டருக்குக்கத்திரிக்கோல் விமலருக்கு மத்து வேதியர்க்குப் பூனூலாம்
சுண்ணும்பு சுடும் கடையர்க்கு கூடையாம்
தொல்வேந்தர்க்குச் செங்கோல் மேளமது வள்ளுவர்க்கு சேர்ந்த குயவருக்குக்கும்பகுடம் தட்டார்க்கு குறடு சாணுர்க்குக் கத்தி செட்டி குலத்தோருக்கு தோடு தராசுபடி "
இவை குலத்துக்குரிய விருதுகளாகும் இதனடிப்படையிலே மாடுகளின் குறிசுடும் அடையாளமும் ங்கம்.
காட்டில் திரிந்து தன்னிச்சையாய் வளர்ந்தபடியால் அவை நல்ல தேகாரோக்கியமும் திடகாத்திரம் உள்ளவைகளாகவும் இருக்கும் .
இதனுல் இவற்றை , உழுதொழில் செய்வதற்கும் இறைச்சிக்கும் நல்ல விலேக்கு விற்றுவிடுவார்கள். குழுமாடு பிடித்தல் மிகவும் அபாயம் நிறைந்
57

Page 32
ததொரு தீரச் செயல். ஆனபடியால் அத்தகைய பட்டிக்காரர் வதனமார் வழி பாடு செய்பவர்களாக இருப்பார்கள். வதனமாருக்குரிய மந்திரங் களேச் செபித்துக்கொண்டே தொழிலில இறங்குவர். இவர்களுடன் தொடர்பு வைததிருந்த் குருமண்வெளியைச் சேர்ந்த அமரர் வே. பூபால ரெத்தினம் ஆசிரியர் என்பவர் பல வருடங்களுக்கு முன்னர் எனக்கு அளித்த ஒரு பாடற் கொப்பியிலிருந்து எடுத்த இந்தக் காவியப் பகு தியைத் இங்கு தருகிருேம். வதனமார் சடங்கின்போது கட்டாரிமார் இதனேப் பாடுவார்கள், வதனமாரின சந்நதம் வந்தவர்கள் கட்டுச் சொல்வார்கள்.
இந்தத் தனிப்பட்ட வழிபாடு பட்டி அமைந்துள்ள இடத்தில் காட்டின் மத்தியில் நடைபெறும். அத்தருணம் பட்டியின் சொந்தக்காரப் போடிமார் குடும்பமும் பட்டிக்காரர் குடும்பமும் சமூகந்தந்து வழிபடுவர்.
காவியம்.
காப்பு.
பார்காக்கும் பரமசிவா பயிர்காக்கும் இந்திரா
பசுகார்க்கும் பாம்பனேயே பலம்கார்க்கும் வீரபத்திரா சீர்கார்க்கும் சீதேவி செகத்தன்னே பார்வதியே
செல்வாக்குத் தரும்வாணி செல்லும் வழியில் ஊர்கார்க்கும் வயிரவரே உலகமெனப் பெற்றவரை
உடன்சுற்றிப் பழம்பெற்ற உத்தமப்பிள்ளேயாரே ஏர்காக்க எமைக்காக்க எல்லாவுயிரும் கார்க்க
ஏறுமயில் வாகனரே எமக்குகந்த காப்பாமே I
சுவாதியம்மை திருமகனும் சுடர்சோதி நயினுர் சுந்தரத்து மங்கலஞர் சூழவரும் வதனர் தவநுாற்று அறுபதினரும் தங்கியிங்குநின்று தாக்குகின்ற தீயசக்தி தம்மையே நீக்கி அவமாக்கும் புலிகரடி அரியநாய் நரிகள் அரவங்கள் தேள்பூச்சி அழிவுதரும் பிணியைத் துவம்சமது செய்தழித்துத் தொல்லேகளே ஒழித்து துட்டரிலிருந்து காத்தெமக்குத் துணேதரவே வாரீர் 2
மக்களில்லாக் காட்டினிலே மான்மரைகள் காலி மதயாக்ன ஒநாய்கள் மறைந்துறையும் பாம்பு திக்கெட்டும் பரக்கின்ற திகைப்புள்ள இடத்தில் திரிந்தலேந்து வாழுகின்ற உம்மடியார் தமக்கு
58

எக்கேடும் வாராது இருளன்மருளன் என்னும் எமதுாதர் காவலிட எழுந்தருளி வந்து பக்குவமாய் உந்தனருள் பரிந்ததிடவே வேண்டி பணிந்திட்டோம் இத்தருணம் பாலித்திடும் தேவே
காரிருளில் பெருமழையில் காவலதைக் கடந்து களவாகக் கால்நடைகள் கவர்ந்துசெல்லும் கள்ளர் வேரிலாத மரமாக விரைவினிலே வீழ வேல் தண்டு கோடாலி வெளுக்கயிறு மந்து கூரியவாள் கொடியமழு கொண்டெம்மைக் கார்க்க கூடிநின்று தாள்பணிந்து கும்பிடுகிறேம் ஐயா ஆரியனே ஆயனர் அருங்குலத்து வந்த அழகுசெறிவதனமார் அண்ணலே வருக
மனிதக்குரல் ஒலிக்காத மாபெரிய வனத்தில் மாதவளுர் குலத்தொழிலில் மாடுகளேக் கார்த்து கணிகிழங்கு பால் ால் காலமெல்லாம் வாழ்ந்து காட்டில்வாழ் மிருகங்களாய் காய்ந்துடலம் மெலிந்து
கிடந்துநாம் தவிக்கின்ற நிலேயைத் தான்பார்த்து எங்கள்மேல் தயவுவை ஐயா புனிதனே இருளில் புழுபூச்சி நகர்ந்து புகுந்தெம்மைத்தாக்கிப்புடைக்காமல் காரே
a/TigrTubuaw awarguib artuozsegpy Svalörgyub காலமெல்லாம் போற்றுகின்ற காலிகளேப் பிடிக்கும காரணத்தால் வெளுவைக்க கால்கடுக்க ஓடி காட்டினிலே செலும்போதுகாவலாக வருவாய் சாராயம் கள்ளுகஞ்சா சாம்பல்செறிமொந்தன் சர்க்கரையும் பாலுமிட்ட சம்பாவின் பொங்கல் பாராயணம் செய்துமக்கு படையலது இட்டோம் பக்தரெமைக் காத்தருளும் பக்கத்துணே நீரே
மாரிவந்தால் குளிராலே நடுங்குகின்றபோது மாடுறையும் பட்டியிலே மறைந்து வந்து தாக்கும் பேரிருளன் மருளனெனும் பெய்கணேயே துரத்தி பிள்ளேகளாம் எங்களேயே பேணிநீகாப்பாய் சேரியில்லாக் காட்டினிலே செறிபரணில் தனித்து சிவிக்கும் எங்கள்மேல் சீறுகின்ற வெள்ளேக் கூரியதாம் கொம்புடைய கொடிய கிடா வகையின் கொலேக்கண்கள் பாயாது கோபாலா காரே
59

Page 33
கொடுவெப்பங் கூடியதால் குளத்துநீர் வற்றி கொள்ளேநோய் மந்தைக்கு கொடுமைசெயும் நேரம் படுதுயரம் சொல்லொண்ணுப் பரிதாபந் தீரும் பசுநிரைக்கு அம்மைநோய் பாதிப்பு நீக்கும் தடுத்தாளும் மங்கலனுர்தாயேசுவாதியம்மா தனேயர்களே வதனமார் தங்குமெங்கள் பட்டி விடுத்தெங்கும் செல்லாது விளேயாடி நின்று வினேதிரும் எங்களின் விண்ணப்பம் கேளே
அரிஅரிஓம் நாராயணு ஆதிசேடன் அனேயில் அனந்த சயனமிடும் ஆதிமூலநாதா சுரிசேறு ஆறுகுளம் சூழ்ந்துவாழ் முதலே சுழற்றுவால் கொடும்பற்கள் சொண்டாலே நிரையை பிரித்தெடுத்து தாக்கினுலே பிழைத்திடவே கார்ப்பாய் பிரானேநீ கசேந்திரனுர் பெரும்புலம்பல் கேட்டு பிரியமுடன் புவிவந்து பேணியே காத்த பெரும்பேறு எங்களுக்கும் பிரியமுட னருளே
திருமருவுமாலினது தேங்குகுலமாகத் தேர்ந்தெடுத்தவதனமார் திசைதோறும் காக்க கருநிறத்துக் காலனவன் கதிபெற்ற எருமை காத்தளிக்கும் எங்குலத்தைக் காலமெல்லாம் காக்க பெருவுடலன் வரித்தோலன் பித்தவிசம் கக்கும் பிரிநாக்கன் பின்கொடுக்கன் பீடியாதுகாக்க வருகொள்ளே கள்ளர்கள் வரட்சியுறு கோடை வார்வெள்ளக் கொடுமைகள் வருத்தாதுகாக்க புல்நிறைந்த காட்டினிலே பூக்கட்டிப்பந்தல் புனேந்ததிலே பத்திரமும்பாளேதேன் சூடி நெல்கதிரும் குருத்தோலே நீள்மாவின் இலேயும் நீள்குரும்பை தாமரைப்பூ நிரைநிரையாய்த் தூக்கி மல்லுடுத்துத்தலேப்பாகை மதிப்புடனே கட்டி மஞ்சள்நீர் கெண்டிகளும் கற்பூரத்தட்டு வல்லமைசேர் மழுவுடனே வளேந்தவெளுக்கயிறு வடிவான தீபகலம் வண்ணமதைத் தந்தோம்
சார்ந்துவந்து பூசைசெய்சங்கைகட் டாடி சாற்றுகவிக் காவியத்தை சத்தமிடு உடுக்கு வார்ந்தெடுத்த மத்தளமும் வளேசிலம்பும் ஒலிக்க வதனமார் சந்நதத்தில் வந்துகுதி பேர்கள் கார்ந்துமவர் கட்டாலே கனதுயரைத் தீரும் கதிக்கவே பட்டிநிரை காலமெல்லாம் நிறையச்
60
10
10

சேர்ந்திடவே சுவாதியம்மை திருமகனம் வதனர் சிறப்பதனுல் தேசமெங்கும் சீர்பெறவே செய்க
கன்னிமார் எழுவருமே கால்நடையைப் பெருக்கக் கதிபெற்ற மங்கலனுர் கடைக்கண்ணுல் பார்க்க பின்னிவரும் வதனமார் பேணியெமைக் காக்க பெற்றதாய் சுவாதியம்மை பின்தொடர்ந்து காட்டில் முன்வருகும் இடர்கழைந்து முழுநலமும சேர்க்க முழுப்பொங்கல் தான்படைத்தோம் முனேந்துவந்து ஏற்று பன்னலமும் பால்தயிரும் பசுநிரையும ஓங்க பாலித்திடவே உங்களது பாதங்களேத் தொழுதோம்
அம்மாவெனப் பசுகதறும் அலறல் காதை அடையாத காரணம்தான் அறியோம் அய்யா விம்முகின்ற பட்டிகளேக் கார்க்கும் எங்கள் விண்ணப்பம் கேட்டருள வேண்டுமய்யா நம்பிமாராம் வதனமார் தன்னுடனே வந்து தற்காக்கமங்கலஞர் நயவே வேண் டும்
O டும் 曼 ம் வந்து O நெருட்டாமல் இருக்கவுன் திருவருளேத் தாராய் வான்பொய்ந்தால் வரட்சியிலே வளரும் புல்கள் வரளாமல் பசுமையுறப் பணியைத் தாரும் கோன்வதனர் நரசிங்கர் கூடிவந்து கோள்திசைகள் நாலுமே சுற்றி நின்று ஆன்நிரைகள் காத்திடும்நல் ஆட்சி வேண்டும் அய்யனே மங்கலஞர் ஆயர் கோவே
வதனமார் நலம்வாழிவயிரவரும் வாழி வளராயர்குலம்வாழிவருசோதியம்மை இதமான மங்கலஞர் இனிது வாழி இலங்கை வந்திடர் தீர்த்துபட்டி தன்னே நிதங்காக்கும் திருமகளும்நீல வண்ணன் நேசமுறு மந்தைகளும் நீடு வாழி பதம்தொழுகும் அடியார்கள் பணிந்துபூசை பாலிக்கும் கட்டாடிப் பார்ப்பார் வாழ்க
61 i
11
12
13
14
IS

Page 34
7. பட்டிக்காரர்களின் வதனமார் பற்றிய நம்பிக்கை.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து, மட்டக்களப்பில் நிலே கொண்டு வாழ்ந்த வதனமார்களின் தற்போதைய நில் என்ன? அவர் களோ அல்லது அவர்களின சந்ததியினரோ இப்போதும் வாழ்கிறர் களா? எங்கே வாழ்கிறர்கள்? என்ற விஞக்கள் எழுகின்றன. இவற்றிற்கு விடைகாணமுடியாத ஒருநிலதான் உண்டு என்பதே இதற்கு விடையாக அமைகிறது.
மட்டக்களப்பு வாவியை அடுத்து படுவான்கரைப் பிரதேசம் வேழாண்மைச் செய்கைக் குடியிருப்புகளேக் கொண்ட நிலமாக அமை கிறது. அதனுல் அங்கு கிராமங்களும் அவற்றைச் சூழ்ந்த வயல்களும் இணேந்தே இருக்கின்றன. இந்த அமைப்பு இன்றும் மாருதிருந்து வருவதைக் காணக் கூடியதாயிருக்கிறது. இந்த குடியிருப்பை அடுத்து மேற்குத் திசையில் பரந்தபுல்வெளியும் காடும் இருக்கிறது. பொதுவாகச் சொல்லப் புகுந்தால் கிழக்கில் நெய்தல் நிலம், அதையடுத்து வரும் மருதத்தைத் தொடர்ந்து முல்லே நிலம், பின்பு குறிஞ்சி எனும் முறையில் நிலத்தோற்றம் அமைகிறது. வங்கக் கடற்கரையில் இருந்து மட்டக்க ளப்பு வாவியை ஊடறுத்துச் சென்ருல் இந்த நான்கு தினே நிலங்க ளேயும் ஒன்றின்பின் ஒன்ருக 15 மைல் இடைவெளிக்குள் தரிசிக்கலாம். கடர் ாரத்து கிராமங்களின் மேற்குப் பக்கத்தில் உள்ள எழுவான் கரையில் நின்று பார்ப்பின் வளேத்துச் செல்லும் மலேத்தொடர் ஒன்று அண்மையில் உள்ளதுபோன்ற காட்சியைப் பார்க்கலாம்.
வதனமாரின் பயணம் இந்த புல்வெளி அடர்ந்த காடுகளே அண்டியே நடைபெற்றது. இவர்கள் திருகோணமலேக்கு வந்து, இதே புவியியல் அமைப்புள்ள கந்தளாய் தம்பலகாமம் வாகரை முதலிய இடங்களின் வழியாக மண்முனே, கரவாகுப் பற்றுக்களேக் கடந்து பானமைமட்டும் சென்றனர். பின்பு திரும்பி திருக்கோவில், தம்பிலுவில், வீரமுனே, காரைதீவு முதலிய இடங்களேக் கடந்து மண்டுருக்கு அருகாமையில் உள்ள நாதனேவெளி எனுமிடத்தில் தங்கி வாழ்ந்தனர்.
62

இவர்களின் இந்த நெடும் பயணத்தில் எங்கெங்கு குழு மாடுகள் வாழ்கின்றன, அவைகளே மந்தைகளாக வளர்க்கத்தக்க நீர், புல், ஆதிய வசதிகள் வசதிகள் உண்டா என ஆராய்ந்து வந்தனர். இப்படிப்பட்ட இடங்கள் தென்படும்போது தம்முடன் வந்தவர்களே ஆங்காங்கு குடியமர்த்தியும் சென்றனர். இவ்வாறுதான் வதனமாரின் இடைவிட்ட குடியேற்றம் அமைந்தது.
நாளடைவில் இவர்களின் மத்தை வளர்ப்பு நலிவடைந்ததால் இவர்கள் என்னவானுர்கள் என்பதை இனங் காணமுடியாதளவு மறை யலாயினர். எனினும் இலங்கையின் குடிவரவு அகல்வுச் சட்டம் நடை முறைப்படுத்தியதும் மட்டக்களப்பில் மந்தை வளர்த்து வந்த ஒரு இனத் தாரைக் காண்பதரிதாயிற்று. இவர்கள் நாடோடிகளாக வாழ்ந்து வந்த பசினர் அல்லது பயினர் எனப்பட்டனர். இவர்கள் தமிழ் கலந்த தெலுங்கு மொழியைப் பேசி வந்தனர். காலத்துக்குக் காலம் தங்கள் மந்தைக ளுடன் மட்டக்களப்பு புகையிரத நிகிலயத்தை நோக்கி மட்டக்களப்பின் தெற்கிலிருந்து வருவார்கள், இவர்களுடன் மந்தைத் திரட்சியும் மனேவி மக்களும் கூட்டமாக வரும் வழியில் கிராமத்தை அண்டிய பகுதியில் உள்ள பாழ்வளவுகளில் தங்கி செல்வர். இவர்களின் நாடோடி வாழக்கை முறையும் கள்ளுண்டு ஆடும் ஆட்டமும் காண்போர்க்கு நகைப்பும் களிப்பும் ஊட்டும்.
இவர்களின் நடமாட்டம் உள்ள பகுதி மக்கள் தமது சொந்தக் கால்நடைகளில் கண்ணுங் கருத்துமாக இருப்பதுண்டு. ஏனெனில் இவர்கள் கட்டுப்பாடற்றுமார் சுற்றும் கட்டாக்காலிகளேக் கடத்தித் தமது மந்தைகளுடன் மந்தையாகக் கொண்டு சென்று விடுவர். இப்படி கொண்டுவரும் மாடுகளே மட்டக்களப்பில் இருந்து,கொழும்புக்கு இரயில் வண்டிகள மூலம் கொண்டு சென்று அங்கு இறைச்சிக்காக விற்பது வழககம.
இவர்கள் இந்தியாவிலிருந்து நாயக்கர் ஆட்சிக் காலத்தில் வந்து காடும் புல்வெளியும் கலந்த இடங்களில் பட்டி அமைத்து வாழ்ந்தி ருக்க வேண்டுமென்று துணியலாம். இவர்கள் இலங்கைப் பிரசை களாக இல்லாதபடியால் இலங்கைச் சமூகத்திலிருந்து மறைந்தனர். இலங்கைக் குறவர்களே ஒத்த இவர்கள் இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றனரா அல்லது காட்டருகே வாழ்ந்த Diaset 637 மக்களாகக் கலந் தனரா என்பது ஆய்ந்தறிய வேண்டிய காரியமாகும். ஆணுல் இவர்கள் வதனமாரின் சந்ததியினர் இல்லை என்பது மட்டும் உறுதியாகும்.
வேழாண்மைச் செய்கைக்கு வலது கரமாக மாடுகள் அமைந்
திருந்ததால் அவற்றை போடிமார்கள் வளர்த்துக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு ஏற்பட்டது. காடுகளில் மாடுகளைக் காப்பாற்றும்
63

Page 35
வல்லமை எவருக்கும் கைவராததொன்று. ஆனபடியால் தமது வயல் களில் பணிபுரிந்த சிலரிடம் தமது மாடுகளே ஒப்படைத்து வளர்த்து வரச் செய்து அவர்களுடைய நாளாந்தரத் தேவைக்கு வேண்டிய நெல்லேப் படி அளந்து கொடுத்து வந்தனர். அத்துடன் பட்டிகளில் இருந்து வரும் பால் தயிர், நெய் என்பனவும் அவர்களுக்குச் சேர்ந்தது. இடைக்கிடை போடி மாரின் தேவைகளுக்கும் இவற்றை அளித்து வந்தனர்.
சிறுதொகை கொண்ட மந்தைகளே பாதுகாக்கும் இடம் பட்டி என்றும் பாதுகாப்பவர்களே பட்டிக்காரர் என்றும் அழைத்தனர். சன நட மாட்டமற்ற காடுசார்ந்த இடங்களிலே பட்டிகள் அமைந்திருந்தபடியால் பட்டிக்காரர் மக்களிடையே இருந்து பிரிந்து பட்டி களின் மத்தியில் அமைந்த பரண் குடிசைகளில் வாழ்ந்து வந்தனர். இதனுல் படிப்பறிவோ நாகரீகத்தின் நிழலோ இவர்களேத் தீண்டுவது அருமையாக இருந்தது.
ஒரு காலத்தில் பட்டிக்காரர்பற்றிய எண்ணம் மக்களிடையே மட்டமாக இருந்து வந்தது. காடுகளில் எருமை மாடுகளுடன் வாழ்ந்து வந்ததால் இவர்களின் வாழ்க்கை அசாதாரணமாகவே அமையும் சூழ் நிலே தடுக்க முடியாத ஒன்றக இருந்தது. எனினும் பல பயங்களுக்கு இடையில் வாழ்ந்த இவர்களே நாட்டார் மறந்தாலும் பசுவின் பாலும், தயிரும், நெய்யும். காட்டுத் தேனும் அவர்களே நினேவூட்டின. இவர்களு டைய குடும்ப சீவியம் விக்கிரமாதித்தனின் வாழ்வுக் காலம்போலவே இருந்தது. அந்த வாழ்க்கையாவது ஆறருறு மாதங்கள் தொடர்ந்தன. ஆணுல் பட்டிக்காரரின் வாழ்க்கையோ மாதத்தில் ஒரு சில தினங்களில் மட்டும் நாட்டிலும் ஏனேய காலமெல்லாம் காட்டிலும் கழிப்பதாகவே அமைந்தது.
புதிய பட்டிக்காரர்கள் தோன்றினலும் அவர்களின் காடுசார்ந்த தனிமை வாழ்க்கை வதனமார்பற்றிய நம்பிக்கைகளில் நிலேத்து வந்தது. வருடந்தோறும் வதனமார் பூசைசெய்வதுடன் வதனமார் காவியங்களே மனனஞ் செய்து வைத்து இரவில் பாடித் தமது மனப்பயங்களே அகற் றியும் வந்தனர்.
இதுமட்டுமல்ல இரவில் பட்டியின் படக்ல அடைக்கும்போதும் தேன் எடுக்கச் செல்லும்போதும், காடுகளில் புகுந்து குழு மாடுகளைப் பிடித்து அடக்கும்போதும் மனனஞ் செய்து வைத்திருக்கும் மந்திரப் பாடல் வரிகளேத் தமக்குள்ளே உச்சரிப்பதுண்டு. அப்படிப்பட்ட சில மந்தி ரங்களேக் கீழே தருகிருேம்.
64 -

1. படலை அடைக்கும் மந்திரம்
காட்டுவெளியில் மத்தியில் பட்டிகள் அமைக்கப்பட்டிருக்கும். உறுதியான திருக்கொன்றை, முதிரை, கருங்காலி, பாலே முதலிய மரங் களேக் கதியால்களாக வெட்டி வந்து நட்டு, எதுவும் நுழையாது வட்ட மாக வேலியடைத்து அதனுள் மந்தைகளே வைத்துக் காப்பர். காலே பால் கறந்த பின்னர் மேய வெளியே விடுவார்கள் மாக்லயானதும் அவற்றைத் திரட்டி வந்து பட்டிக்குள் ஏற்றி அடைப்பர். அப்போது உள்ளுக்குள் இருக்கும் மாடுகள் வெளியே வராது இருக்கவும் உள்ளுக்குள் புலியாதிய கொடிய மிருகங்கள் உட்புகாதிருக்கவும் வதனமாரை நோக்கி மந்திரம் செபித்துப் படலயை அடைப்பர். அப்போது மூன்று தடவை நிலத்தில் காலால் கோடிட்டு மறித்து ஆன செய்வர். பட்டியின் மத்தியில் தீனு எனும் நெருப்பிட்டுக் கால்வரை எரிப்பர்.
வதன வாவா வந்திங்கு இருந்து வருகின்ற நரிபுலி படலேயைத் தாண்டி அருகினில் வராது ஆண்டிடு நயினு காக்காய்வதஞ காவலுக்கிருப்பாய் கடப்படி வதகு காலியைக் கார்ப்பாய் வடக்கிலும் தெற்கிலும் வளேயவாவா கிழக்கிலும் மேற்கிலும் கிட்டியாய் இறுக்கு இறுக்கு இறுக்கு இரும்பாக இறுக்கு உறுககு உறுககு ஒமன்ன உறுககு மங்கலஞரே மாதா சுவாதியே மறந்திடாது பொங்கல் மடைகளேப் படைப்போம் எங்களேக் காப்பாய் எருமையைப் பசுவை கன்றைக் கறவையைக் கடுகியே காப்பாய் பட்டியைக் காப்பாய் பால்பொங்கல் தருவோம் ஓம் சுவாகா சுவாகா சுவாகா ஓம்'
என்பது படலேக்காப்பு மந்திரம். இது பட்டிக்குப்பட்டி வேறுபடும். வேறு ஒரு மந்திரம் இங்கே தரப்படுகிறது.
"அரிஅரிநாராயணு அரிஓம் நாராயணு
நரிபுலி கரடி நாகம் கொடுநாய் வழியை அடைத்து வராமல் காப்பாய்
65

Page 36
தரித்திங்கு திருடர் தயையிலா மறவர் வரிச்சனே அறுத்து வந்துட் புகுந்து காலியை விரட்டிக் கடுகியே ஏகாது வேலியாய் நின்று வீரரே காரும் அரிஓம் அரிஓம் ஆதிநாராயணு அரியின் குலத்து அருள்மிகுவதணு காக்கக் காக்கக் கதிபடக் காக்க நோக்க நோக்க நொடிபட நோக்க ஓம்அரி ஒம்அரி ஒம் ஓம் சுவாகா
3. இருளன் மருளன் பிரார்த்தனை
அரிதிருமுருகா குருவே போற்றி சிவனிட குருவே செவ்வேல் போற்றி என்னுட சிவனேத் தேடியெக் காலமோ எக்கோடி காலமோ தேடினேனேயா ஆதி மருளா ஆங்கார மருளா ஓம்நமோ மருளா ஓங்கார மருளா உடலிங்க மருள சிவலிங்க மருளா மத்தப் பிறமத்தா சித்தப்பிற சித்தா சுத்தப்பிற சுத்தா அத்தப்பிற அத்தா அக்கினிமா மலேயில் நின்று
பாதாளபரமேசுரி பிள்ளேயோ சிறிமருளா இராச மருள்வீரா என்தேவதேவனே
4. ஆதிசேடன் கட்டு
விரிந்த நாக்கு விசங்கொள் பல்லு சுருண்ட உடலாய் சுண்டி இழுத்து எலும்பெலாம் விரிய எழுந்திட முடியா அரவே உன்னே ஆணேயிட்டுரைத்தேன் வந்தவழியே புற்றுக்குப்போ வராதே இந்தவழியால் மறந்திடு ஆணே கோபாலன் பசுக்கள் கோபட்டி காக்கும்
66

ஆதிசேடன் மேல் ஆணே ஆணே ஆணே அதற்குமேல் நகர்ந்தால் அழிந்தே போவாய் ஆடியில் பொங்கல் அடைவாய்ப் படைத்து பால்முட்டை தருவோம் பாய்ந்தப்பால் ஒடு அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம் சுவாகா
5. வயிரவர் தோத்திரம்
கால வயிரவா கண்டவயிரவா ஆலத்தை உணடவன் அருமைப்புதல்வா சூலம் பொல்லு சுழற்றும் கோடாலி சொருகி நாய்மேல் சுற்றியே காவல் செய்ய வருவாய் செந்நாய் கரடி சிறும் நாகம் செப்படிக் கள்ளர் நாறும் பேய்கணம் நலிக்கும் பூதம் கோரப் பல்லுக் கொடிய நாகம் சேரவிடாது செவ்வேள் காக்க பட்டியைக் காக்கப்பசுக்களக் காக்க பட்டியைக் காக்கும் பாலன் என்னே இட்டமாய்க் காக்க இடர்களேக் காக்க இரவுபகலாய் என்னுடன் இருந்து காத்து ஆள்வாய் கதிநீதருவாய்
இவைகள் எல்லாம் தனித்து வாழும் பட்டிக்காரர்களின் தந்தளிந்துத் தவிக்கும் மனதில் தளாரத நம்பிக்கை ஊட்டும் தாரக மந்திரங்கள். இவற்றை அவர்கள் இடைக்கிடை ஒதிக்கொள்வதால் ஒரு தற்காலிக உள உறுதி ஏற்படும். இந்த நம்பிக்கையுடன் வதனமார் தங்களேக் கார்க்கிறர்கள் என்ற விசுவாசமும சேர்ந்து தங்கள் பட்டி வாழ்க்கையை ஒட்டுகிறர்கள்.
(plg6/60s.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பட்டிப்பளே, பட்டிருப்பு எனும் இடப்பெயர்கள் இங்கெலாம் பட்டிகள் அமைந்திருந்ததை உறுதிப்படுத்து கிறது. பதியத் தலாவைகூட பட்டித் தளாவை என்ற பெயரின் திரிபோ என நம்ப இடமுண்டு. பட்டிக்காரர்களுக்கு காட்டில் வாழும் குழு மாடு களாலும் அபாயம் ஏற்படுவதுண்டு. மாடுகள் சினேப்படுங் காலத்தில மறிமாடுகள் பட்டியிற் புகுந்து விடுவதுண்டு. அவ்வேளேயில் மாடுகளேத்
67

Page 37
தமது கூரிய கொம்பால குத்திக் கிழிப்பதும காலத்துக்குக் காலம் நடைபெறும். இத்தகைய காலத்தில் தமக்கு நேரவிருக்கும் பேரபா யத்தையும் பொருட்படுத்தாது தனியொரு ஆளாக நெருப்பு பந்தங்கங் கொண்டு விரசியடிப்பதுண்டு. இதுபோலவே பட்டி மாடுகள் பக்கத்துக் காட்டில உள்ள நாகுகளே நாடிச் செல்வதும் உண்டு. அப்படிச் செல்லும்
இதுபோல திடீரென்று பெருகி வரும் காட்டாற்று வெள்ளத் தாலும், பககத்தில் உள்ள குளங்கள் மழைக் காலத்தில பெருக்கெடுப் பதாலும், பாய்ந்து வரும் வெள்ளம் பட்டிகளே வாரிஎடுத்துச் செல்வதும் உண்டு.
நானறிந்த அளவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கு சொல்வது இதை விளக்குமென்று நம்புகிறேன். ஒரு ஆசிரியருக்கு புல்லு மலேப் பக்கத்தில் ஒரு பட்டி இருந்தது. அங்கு பல வசதிகளேச் செய்து கொடுத்து பட்டியைக் காத்து வந்தார். அங்கு உள்ள வாடியில் பட்டிக் காரனும் ஆறுபேர் கொண்ட அவனது குடும்பமும் வாழ்ந்து வந்தனர். இதனுல் அந்த ஆசிரியரைப் பட்டிக்கார மாஸ்டர் என்று சொல்வார்கள். அவர் இடைக்கிடை விடுதலே நாட்களில் அங்கு சென்று வருவதுண்டு.
இப்படி இருக்கும்போது 1957ம் ஆண்டில் நடைபெற்ற பெரு வெள்ளக் காலத்தில் அங்கு சென்றவர் அகப்பட்டுக்கொண்டார். பெருகி வந்த வெள்ளத்தைக கண்டு தன் குடிசையின் கூரையில் ஏறிநின்றர். அங்கும் நீர்பெருகிவரப் பக்கத்தில் நின்ற தென்னே மரத்தில் தாவி அதன் வட்டுக்குள் ஒதுங்கிக் கொண்டார். வெள்ளம் இரு நாட்களுக்கு விடி யவே இல்லே . இரண்டு நாட்களும் தென்னே மரத்தில் நடுங்கும் குளி ரிலும் மழையிலும் துன்பப்பட்டு வெள்ளம் வடிந்ததும் பார்த்தால் பட்டி யையோ அதில் இருந்த கால்நடைகளேயோ காணவில்லே. அதுமட்டு மல்ல பட்டிக்காரனும் குடும்பத்தோடு வெள்ளத்தில் அடிபட்டுப் போனதை அறிந்தார். உயிர் தப்பிய அவர் மிகவுஞ் சிரமம்பட்டு தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தார். இப்பிடியான வெள்ளக் கொடுமைகளும் இடைக் கிடை இடம்பெறுவதுண்டு.
களுவாஞ்சிக்குடி கவி கனகசபை என்பவர் சிறந்த கவிஞர், நாடக நடிகர், நாடக ஆசிரியர், இயக்குநர். பல தோத்திரப் பாக்களே நூல் வெளியிட்டவர். இலங்கை வானுெலியில் நிகழ்ச்சிகளே நடத்துபவர் களுக்கு பின்னணிக் குரல் வழங்குநராக உதவிபுரிந்தவர். அவர் பாண்டி ருப்பு திரோபதை அம்மானே எனும் நூலே அச்சிட எனது அச்சகத்திற்கு வநதார் . அதற்குரிய கையெழுத்துப் பிரதி எழுதப்பட்டிருந்த கொப்பிப் புத்தகத்தின் பின்பக்கங்களில் 'கோவலன் - கண்ணகி என்ற ஒரு நாடகமும் இருந்தது. அதில் ஒரு போடியாருக்கும் பட்டிக்காரனுக்கும்
68

இடையில் ஏற்பட்ட மனக் கசப்பு நகைச்சுவைக்காக எழுதப்பட்டிருந்தது. அதுவும் மதுரைப் பண்ணைக்காரனுக்கும் இடையனுக்கும் இடையில நடப்பதை நம் நாட்டிற்கேற்ப அவர் இப்படி மாற்றி அமைத்திருந்தார். இந்த நூலே முடிப்பதற்கு முன்னர் அதை இங்கு எடுத்துச் சொல்வது நலமென எண்ணுகிறேன்
போடியார் வீடு. கந்தப்போடியார் அடுத்த தினம் வீட்டில் நடக்க விருக்கும் கலியானத்திற்கு வேண்டிய தமிர் பால் நெய் என்பவறறை தனது பட்டியிலிருந்து பட்டிக்காரன் கொண்டு வருவான் என எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறர். நேரம் போகிறது. இதனுல் எரிச்சலடைந்த போடியார் படிக்கிறர்.
பிடிக்கப் நீங்க சொக் O
டிததுப பாருங்க :âi: ஐடியை ஒரு தடவை
மிஞ்சிப் போஞனே சின்னத்தம்பி மிஞ்சிப் போனுனே கஞ்சிக்கும் வழியில்லாமல் காஞ்சு கிடந்தவனே கஞ்சிகுடிந்தாற்றுப்பட்டிக்கு காவலாப் போட்டபின்பு - மிஞ் ஆறுமாதம் ஆகிப்போச்சு ஆளேயே நான் காணவில்க்ல ஆள்நடமாட்டம் வீட்டில் அதிகமாய இருக்குதெண்டு ஆரோ சொன்னதெல்லாம் அநியாயம் என்று எண்ணி - மிஞ் முறையாகப் படியைமட்டும் முன்னலே வந்து வாங்கி நிறைவாக இருக்குக் குடும்பம் முட்டாளாய் ஆக்கிப் போட்டு பறைப்பயல் இந்தப் பக்கம் பாராமலே இருக்கிறனே -மிஞ் பட்டியிலே எத்தனே மாடு பார்க்கலா மென்று அங்குபோனுல் கிட்டவிட மாட்டான் எண்ணக் கிடக்கும் அவற்றின் வாலே எண்ணி மட்டிமடையன் கணக்காய்ச் சொல்லிமடுத்துவிட்டுப் போகிறனே - மிஞ்
எத்தனே மாடு கன்றை எவனெவனுக்கு விற்றுவிட்டு வித்தைகள் காட்டுருனே விளேயாட்டு ஆடுருனே சத்துராதி நம்பினவர்க்கு சதிசெய்து போடுருனே - மிஞ்
பட்டிக்குச் சொந்தக்காரன் பாலதயிர் காசுக்கு வாங்கும் முட்டாள்தனத்தை எனக்கு முடிசூட்டிப் போட்டு விட்டான் பட்டிக்காரன் அவனு நாணு பாக்கப்போறேன் ஒருகை இன்று - மிஞ்
ஈன்றதெல்லாம் கிடாவாப் போச்சாம் இருக்கிறதும் மலடாப் போச்சாம் எப்படிப்பால்தயிரு வரும் என்றென்னேக் கேட்கிருனே பன்றி மகன் பட்டியிலே பகற்கொள்ளே அடிக்கிறனே - மிஞ்சி
69

Page 38
அப்போது அங்கே சின்னத்தம்பி சில தயிர்ப்பானேகளேக் காவிக கொண்டு வந்து குசினிப் பக்கம் பொய்விட்ட கால்முகம் கழுவி விட்டு போடியாரிடம் வந்து
மார்கழி மாதம் திருவாதிரை நாள் என்ற மெட்டில் பாடுகிறன் அதற்குமுதல் தொகையரு ஒனறை மனதுக்குள் பாடுருன்;
காக்கொத்து நெல்லேக் கொடுத்து கால்படி அரிசியும் தவிடு காக்கொத்தும் கொண்டுவா என்ற கடப்பளிப் போடியாரே சோக்காக வீட்டில் இருந்து சோற்றுடன் தயிரும் உண்பாய் நானே வேக்காட்டில் வெந்து நொந்து வெட்டையில் பசியால் வாடி
பாட்டு வந்திட்டேன் போடியாரே வரப்போகும் கலியாணத்திற்கு தந்திட்டேன் தயிருநெய்பால் தயவாக ஏற்றுக் கொள்ளும் முந்தநாள் தொட்டு மூன்றுநாலு பேரிடம் சொல்லி வந்திட்டேன் கெஞ்சிப பெற்று வாங்கிக்கொள்ளும் - ஆண்டே
இரண்டொரு நாகு ஈன்றுது கன்று அதுவும் இரவோடிரவாக இருப்பதைக் குடிசசால் பாலு எப்படி வருமோ போடியாரே இதெல்லாம் எந்தன் விதி தப்பொன்றும் நினேயாதீங்க தயவு புரியுங்க எனககு
மீண்டும் ஒரு தொகையருவை தனக்குள் சொல்கிறன்
எல்லாரும் பட்டுடுக்க ஏன்போடி என்ற குடும்பம் மட்டும் இல்ல ஒரு பருத்திதானும் இல்லாமல் என்ற பிள்ளேகுட்டி தொல்லப்படம்னு என்று தொப்பி வைத்த அலியாரிடம் நல்லாக ஐந்து கிடாவை நான் கொடுத்து வருசம் வைப்பேன்
இப்படியாக இருவருக்கும் இடையில் உள்ள மனக்கசப்பு
நாடகம் தொடர்கிறது. ஒருவேளே இப்படியான மனக்கசப்புத்தாணுே இன்று பட்டிக்காரரைப் பண்ணைக்காரராக்கியதோ?
வதனமார் வழிபாடு ஒர்மதிப்பீடு
முற்றும்

சொல் விளக்கம்
(இந்த நூலில இடைக்கிடை பாவிக்கப்பட்டிருக்கும் மட்டக்களப்பு மண்வளச் சொற்களின் விளக்கம்)
இளந்தாரி - வாலிபன்
ஒர்மித்தல் - துணிநல்
A'LTupuant - 4/ffflesir
đu-ửLMộ = (affỡdo
கதியால் - வேலிக்கு நடும் மரம் அலலது கம்பு
காந்தாடி - காவுதடி இருபக்கமும் தொங்கும் கயிற்று உறியில் பொருளே
வைத்து தோழில் வைத்துப் பாரஞ்சுமக்கும் நீண்ட தடி
காலி - மந்தை
இட்டி - மரங்களக் கொண்டு அமைக்கப்படும் வேலி உறுதியாக இருக்க
இருபக்கமும் நீண்ட தடிகளே வைத்துக் கொடிகளால் இறுக்கிக் கட்டுதல்
குழு மாடு - எதேச்சையாக காடுகளில் அலேந்து திரியும கால்நடை
சகலாத்து - ஆடை அணிகள் யாவும்
சடங்கு - சக்தி வழிபாட்டிலும் காவற் தெய்வங்களுக்கும் நடாத்தப்படும்
வழிபாட்டுப் பூசை
சாடியடித்து ஒடல - தக்லதெறிக்க ஓடுதல்
தீனு (தீ நா) - காட்டு விலங்குகளே விரட்டுவதற்கு பட்டியில்
எரிக்கப்படும் பெரு நெருப்பு
பட்டி - காட்டு மத்தியில் கால்நடைகளே வளர்த்துப் பேணும் இடம்
பட்டிக்காரன் - கால்நடைகளே பட்டியில் வைத்துப் பேணுபவன்
படலே - சூழ வேலியமைத்த இடத்தின் வாசலில் இடப்படும் கம்புகளால்
கட்டப்படும் கதவு.
7

Page 39
படக்லக் காப்பு மந்திரம் - வாசல் வழியாக எதுவும் நுழையாது செபித்து
ஆணேயிடும் மந்திரம்
பயினர் , பசினர் - கால்நடைகளே வளர்க்கும் ஒரு இனத்தார்
பரண் - வயலிலும் பட்டியிலும் காவற் பணி புரிபவர்கள் தங்குவதற்கு
கட்டப்படும் மாடி வைத்துபோன்ற உயர்ந்த குடில்கள்
பெருவுடலன் - யானே
பிரிநாக்கன - பாம்பு
பின்கொடுக்கன் - தேழ்
போடிமார் - வயற் சொந்தக்காரர்கள்
மறி மாடுகள்.- சினேப்படுங் காலத்தில் கட்டற்று ஒடித்திரியும் காளேகள்
மாட்டு இடாப்பு- கால்நடைபற்றய விபரப் பதிவு
மாட்டு வாகடம் - கால்நடை வைத்தியம் பற்றிய தமிழ் மருத்தவ நூல்
முல்லேக்காரன் - வயற்செய்கையில் அனுசரணை செய்பவன்
லடாய - பிணக்கு
வதனமார் - கால்நடை வளர்ப்பவர்கள் கைதொழும் காவற் தெய்வம்
வதனமார் சடங்கு - பட்டிகளில் பட்டியின் காவற் தெய்வத்திற்கு செய்யும்
வழிபாடு
வரியுடலன் - புலி
வாடி - வயலின மத்தியில் அமைக்கப்படும் சிறு வீடு
விரிநாக்கன் - பாம்பு
வெளு - கால்நடை பிடிக்க உபயோகமாக இருக்கும் சுருக்குக் கயிறு
宏家空签空空空空空三宫三空茎多宰空空零


Page 40


Page 41

பாடஞர்
* ஆசிரியராகப் பணியாற்றி
இளேப்பாறியவர், *உயர் வகுப்பு ஆசிரியராகப் |ணிசெய்தாலும் பாலர் கீழ் பிரிவு, மேற்பிரிவுகளில் எழுத்து எண், வாசிப்பு பாடங்களேக் கற்பித்து எழுத்தறிவித்தவன் இறைவன்" ற ஆத்மதிருப்தியுடன் வாழ்ந்தவர்.
*எனினும் ஒரு பேராசிரியரின் பணியிலும் சிறந்த பணியை ட்டிலிருந்துகொண்டே பல்லாயிரம
நூல்களைக் கொண்ட இலரது ாலகத்தையும் ஒய்வு நேரத்தையும்
இலவசமாக உயர் வகுப்பு மாணவர்களுக்கு நல்கினர். ண்டாவிற் குடிபெயர்ந்து வாழ்பவர்.
"இவரும் இவரது மக்களும் ன்ெகணனித் தமிழ் அச்சமைப்பை முதன்முதலில் உலகில் அறிமுகப்படுத்தியவர். *பல நூல்களின் படைப்பாளி. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கப்
பிரதித் தலேவராக இருந்தவர். *கனடாவில் உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் கிளேயை ஆரம்பித்தவர். *தற்போது அதன் காப்பாளராக
இருக்கிறர்.
மு.நடேசானந்தம்