கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வேலணைப் பெரியார் கா. பொ. இரத்தினம்

Page 1


Page 2

வேலணைப் பெரியார் கா.பொ. இரத்தினம்
கவிஞர் தில்லைச்சிவன்
கொழும்பு - 13 6615D6060l - 5

Page 3
()2
நாலின் பெயர்
நாலின் ஆசிரியர்
பதிப்பு
உரிமை
பக்கம்
விலை
அச்சு
வெளியீடு
வேலணைப் பெரியார் க.பொ. இரத்தினம்
கவிஞர், தில்லைச் சிவன் (தி.சிவசாமி)
ஆனி (யூன்) 1999.
ஆசிரியருக்கு
44
ob 40/-
விக்ரம் பிரிண்டர்ஸ் 19, வல்வெண்டால் ஒழுங்கை, கொழும்பு 13. தொ.பே 074-610490
தாய்நாடு பதிப்பகம்
கொழும்பு - 13. வேலணை - 5

(IgGüIgGDJ
வேலணைத்தீவு, பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தில் இருந்தே கந்தப்பர், தம்பு, கனகசபாபதி போன்ற பல பண்டிதர்களையும், முத்துமணியம், சோமசுந்தரமணியம், கனகிபுராணம் புகழ் அருணாசல உடையார் மகன் மணியம், முதற்பல புரவலர்களையும், பேரம்பலப்புலவர், தில்லைநாதப் புலவரெனப் பல புலவர்களையும் பெற்றிருந்தது.
இவர்களின் சற்றுப்பின்னர் புரவலர்களான வேலணை விசயரத்தினம், சுருவிலூர் தம்பியர், சரவணை நொத்தார் கா. விநாசித்தம்பி என்பவர்களும், குல. சபாநாதன் ஆசிரியமணி பண்டிதர் இ. மருதையனார், வானொலி புகழ் சோ. சிவபாதசுந்தரம், வித்துவான் வேந்தனார் போன்ற பலரும் எம் தீவின் கலைபண்பாட்டு வாழ்வுமுயற்சிகளுக்கு வேர்களாக இருந்தனர்.
இவர்களைப் போலவே, பத்தொன்பதாம் நூற்றாண்டில் வேலணையின் வளர்ச்சியில் பெரும்பாங்காற்றியவர் பண்டிதர் கா.பொ. இரத்தினம் அவர்கள். முன்னவர்கள் தொடாத துறைகளிலெல்லாம் தொட்டுத் துலங்கியவர் இவர்.
இவரின் முற்போக்கான கொள்கைகட்கும், உணர்வுக்கும் வாழ்ந்த காலமும், வாழ்ந்த கொழும்புநகரும், பார்த்த தொழில்களும் உந்துதலை அளித் திருக்கவேண்டும் , அக்காலத்தில் தமிழ் அறிஞர்கள் என்று கருதப்பட்ட சிலர், தமிழர் பண்பாட்டையும் சமதர்மத்தையும் சிதைத்துப் பேசியும் எழுதியும் வந்தார்கள்.
"தீண்டாமை, சாதி பேதம் நிலையானது - இருக்க வேண்டியது” என்ற இவர்களின் கருத்தை திசை திருப்பி, சாதிகள் இல்லையடி பாப்பா, தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்ற தமது நிலையை வலியுறுத்தியதோடு நில்லாது இக்கருத்துக்களை மக்கள் முன் கொண்டு சென்றார்.

Page 4
இவரின் இச் செயலுக்கு ஆதார ஊற்றாக அமைந்தது. "பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறளமுதம். எனவே திருக்குறளைத் தனது இலட்சிய வாழ்வாகவும், அதன் கருத்துக்களே தமிழரின் கருத்துக்கள். ஏனைய கருத்துக்கள் அனைத்தும் தமிழர்க்கு அப்பாற்பட்டவை; எனவே சாதிக் கொரு நீதி கூறுதலைத் தவிர்த்து, கசடறக் கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக, என்ற சீரிய கருத்தோடு ஒத்துச் செல்லும் திருக்குறளே தமிழ் நெறி - தமிழ்மறை; இதனையே எமது சட்டநூலாக பண்பாட்டு நூலாக ஏற்றுக் கொள்ளவேண்டும். என்று இயக்கம் தொடங்கினார். அவர் தொடங்கிய இயக்கமே "தமிழ் மறைக்கழகம்"
இவ்வாறாக இயக்கம் தொடங்கியதோடு நில்லாது, திருக்குறள் நெறிகளைப் பரப்ப அவர் எடுத்துக் கொண்ட வழிகளைப் பலரும் அறிவர். மாநாடு, பேச்சுப் போட்டி, மனனப்போட்டி, பற்பல. ஆனால் அவர் சொல்வதையே செய்வார் என்பதைச் சிலரே அறிவர் . அவரின் இல் லம் எல்லாச்சாதியினருக்கும் திறந்து விடப்பட்டிருந்தது. அவருடன் பழகுபவர்கள் தவறிக் கூடச்சாதி பேசமாட்டார்கள். பேசினால் அவர்களுக்கு இவர் பகைவராகவே காட்சியளிப்பார்.
வேலணை, வைதீகப் பிடிப்புள்ள ஊர். பலர் சிவபூசா துரந்தரர். கோவில்களில் புராணப்படிப்பும் நித்திய நைமித்திய பூசைகளும் தவறாது. இப்படியான வேலணைப் பெருங்குளம் அம்மன் கோவிலுக்குள், அவ்வுபூர் ஒதுக் கப்ட்ட மக்களை அழைத்துக்கொண்டு உள்ளே சென்று, பூசை வழிபாடுகளைச் செய்வித்து மகிழ்ந்தவர் இவர். இவ்வாறே சொல்வதைச் செய்வதில் வல்லவர் எனப்பேர்பெற்ற பண்டிதர் அவர்கள் அரசியலிலும் ஆமாம் போடும் சாமி அல்ல. இவர் இலகுவில் வாக்குறுதி கொடுக்க மாட்டார். கொடுத்தால் அது கிடைத்து விட்டது என்பதே பொருள்.

05
"எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு”
எனும் அறிவு நிலைப்பட்ட சிந்தனாவாதியான பெரியார் கா. பொ. இயின் சில செயல்கள் பகுத்தறிவுக் கருத்துக்கு உட்பட்டவையே. பழமைவாதத்திற்குள் அவற்றை அடக்க முடியாமல் இடர்ப்படுவோரும் உண்டு. அதனால் அவரின் சமத்துவ சரிநிகர் கொள்கைகள் அவர் முன்னாலேயே வளம் பெற்று வளர்வதைக் காணலாம்.
ஈழத்தில் இன்றைய நிலை ஏற்பட்டிராவிடில், வேலணைத் தீவகத்தில் இருந்து ஒரு புதிய பகுத்தறிவுக் கருத்துக்கள் நிறைந்த தமிழ்க் கலாசாரம், உலகத் தமிழினத்திற்கு தமிழுணர் வாளரான பெரியார் "கா.பொ. இ. மூலம் கிடைத்திருக்கும். தமிழகத்தில் பகுத்தறிவுக் கருத்துக்களையும், எழுச்சியான தமிழ் உணர்வையும் ஊட்டிய பெரியார், அண்ணா, கலைஞர், கி.அ.பெ, திரு. வி. க, சிலம்புச் செல்வர் மா.பொ.சி. போன்றோர் வரிசையில், ஈழத்தில் திருக்குறளின் கருத்துக்கள் மூலம் அறிவையும் தமிழ் உணர்வையும் ஊட்டியவர் பெரியார் பண்டிதர் கா.பொ.இ. ஒருவரே. இத்தகையரின் எண்பத்தைந்து ஆண்டு வாழ்வின் நிறைவையொட்டி அவரது நெருங்கிய நட்பினரான கவிஞர் தில்லைச் சிவன் அவர்கள் எழுதிய இந்நூலுக்கு முன்னுரையாகச் சில வார்த்தைகள் எழுதக் கிடைத்தமையை பெருமைக்குரியதாகக் கருதுகிறேன்.
தமிழ்மறைக் காவலர் பெரியார் கா.பொ.இ. அவர்களின் எண்ணத்தை, அறிவை, ஆற்றலை எதிர்கால உலகத் தமிழர் அறிந்து, அவர் வழி போற் றிவாழ வேண்டும் என விரும்புகிறேன்.
"தமிழ்மனை” வேலணை-5
81/1, கல்லுரி வீதி, கொழும்பு-13. வேலணை வீரசிங்கம்

Page 5
என்னுரை
இன்றைய எமது சமுதாயம் சீவனோபாயத்துக்குரிய தொழிலும் தொழில் சார்ந்தனவாகவுமுள்ள கல வி முயற்சிகளிலேயே கருத்துான்றி வருகின்றது. இதைப்பற்றிக் குறை சொல்வதற்கில்லை. காலத்திற்கேற்ற கல்வி அறிவைப் பெறாது ஒழியின் நாம் நிலையிற் தாழ்ந்துவிடலாம். உலகம் எம்மை விட்டு வெகுதூரம் சென்று விடலாம். ஆயின் இந்தக் காட்டாற்றுப் பெருக்கிலே எமது கலைகளும் பண்பாட்டு விழுமியங்களும் அடித்துச் செல்லப்பட்டு விடுமோ என்ற நியாயமான அச்சமும் எழுவதியல்பே.
இதற்கெடுத்துகாட்டாக, கடந்த ஐம்பதாண்டுகளின் முன், எமது தீவகத்து மாணவர்களிடத்திலே காணப்பட்ட தமிழார்வம், இலக்கிய இலக்கணப் பயிற்சி, சமய கலாசாரம் பற்றிய கருத்தாடல், உரையாடல்கள், பெற்றோர், பெரியார்களை மதித்தலும் அவர்களின் சொற்காத்தலுமான பண்புகள் என்பன அருகிக் காணப்படுதல் தெளிவாகின்றது.
அல்லாமலும் இன்றுள்ள தமிழ் மாணவர்களின் தமிழறிவு பெரிதும் குறைந்து விட்டதெனக் கல்வியியலாளரின் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன, என்பவற்றைக் கூறலாம்.
இன்றைய யுத்தச் சூழலில் கல்வி, கலாசாரச் சூழல் பெரிதும் பாதிப்படைந்துள்ளமை வெளிப்படையானது. மக்களின் உறவுமுறைகளும் உறவுத் தொடர்புகளும் வெகு தூரத்துக்குச் சென்றுவிட்டன. தந்தை ஒருஇடம் தாய் ஒரு இடம் பிள்ளைகள் ஒவ்வோரிடமாக ஒருவர் ஒருவரைக் காணாத தூரத்தில் பாதுகாப்போ பயபக்தியோ இல்லாத நிலை இருக்கின்றது.

O7
இந்தப் பாதுகாப்பற்ற நிலை பல ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு வழி வகுத்துள்ளமை தெளிவானது.
கிறிஸ்தவர்கட்கு பைபிளும், குருமாரும், சேர்ச்சுகளும், முஸ்லிம்களுக்குப் புனித குரானும், ஏனைய மதத்தினருக்கு அவர்களின் மதநூல்களும், மதஸ்தாபனங்களும் வாழும் வழிகாட்டிகளாக இருக்கத் தமிழ் மக்களுக்கு அவ்வாறு வழிகாட்டும் ஸ்தாபனம் இல்லாதிருப்பது பெருங்குறை. உலகப் பொது மறையாகத் திருக்குறள் இருந்தும் அதைத் தமது இன்னல் இடைஞ்சலை நீக்க உதவும் வழிகாட்டியாகக் கொள்வோர் இலர்.
மற்றும் எமது மதம் விமர்சனம் பெறுவது போல, உலக மதங்கள் விமர்சனப்படுத்தப்படுவதில்லை என்பதும் கண்கூடு. இத்தகைய வழிகளில் எல்லாம் நாமும் நமது கலை கலாசாரங்களும் சீரழிந்து போவதைத் தடுப்பதற்குரிய ஒரே சாதனம், திருக்குறள். அதனைப் போற்றி எடுக்க ஒரு தாபனங் கண்டவர் கா.பொ.இரத்தினம். இவரைப்பற்றி எழுதுவதும் சிந்திப்பதும் தமிழர் சிலருக்காவது உற்சாகமும் உந்துதலும் அளிக்குமென்று நம்புகிறோம்.
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராய்க்கொளல் என்று குறள் கூறும். இதை அறிந்தோ அறியாமலோ காந்தி நேரு போன்ற இந்தியத் தலைவர்களையும் அண்ணா பெரியார் போன்ற தமிழகத் தலைவர்களையும் நம் மவர்களாகக் கணி டு போற்றியும் அவர் களின் புகைப்படங்களைப் பூசித்தும் வந்தோம்.
இவ்வாறே சட்டமேதை ஜி.ஜி.பொன்னம்பலத்தின் வாதத் திறனையும் கணிதமேதை சுந்தரலிங் கத்தின் கணிதப்புலமையையும் மதித்து அவர்களைத் தமராகக்கண்டு

Page 6
08
பா.உ ஆக்கினார்கள்.
பண்டிதர் இரத்தினம் தமிழகத்து நல்லறிஞர்களான மா.பொ.சிவஞான கிராமணியார், டாக்டர். சாலை இளந்திரையன் சாலினி இளந்திரையன், டாக்டர் வ.சுப.மாணிக்கனார், புலவர் பெருஞ்சித்திரனார், டாக்டர் ஆறு அழகப்பன் போன்ற பலரைக் காலத்துக்காலம் அழைத்து எமக்கு அறிமுகஞ் செய்து நம்மவராகக் கருதும் வழியை ஏற்படுத்தினார். இவ்வறிமுகங்கள் இக்கட் டான் இன்றைய நிலையில் எமக்கனுதாபமாக இயங்குதலை அறிவோம். எனவே குறள் வழிநாமடைந்த இன்பம் உலகடைய உழைத்தவர் சாலப் போற்றப்படுவார் என்பது திண்ணம்.
யாழி தமிழர் களின் இனி றைய நிலைக் குக் காரணங்களைக் கண்டுபிடிக்கும் நிலையில் நடுவுநிலையில் சிந்தித்தால் முதலில் தெரிவது யாழ்ப்பாணத்தவர்களின் சாதீயம். வேளாளர் என்ற உயர்ந்த வகுப்பினரிடம் மாத்திரமல்லத் தாழ்ந்த சாதியினரிடத்தும் இந்தச் சாதீயம் ஊறிப் போயுள்ளது. வலியார் தம் மில் மெலியாரை இழித்தும், பழித்தும் இடர்செய்தலும் இவ்வகைத்தே. அடுத்துத் தெரிவது எவர் எக்கேடு கெட்டாலும் தான் வாழவேண்டும் என்ற சுயநலம, நம்பிக்கைத் துரோகம். தானே பெரியவன் என்ற சிறுமை, தனக்கே எல்லாம் தெரியும் என்ற மமதை. தமக்கென்று ஒரு கொள்கையையோ தலைவரையோ ஏற்றுக் கொள்ளாது அடிக்கடி மாறும் மனப்போக்கு. பெரியாரிடத்தும் திருக்குறள் போன்ற அரியநூல்களிடத்தும் பற்றில்லாமை. எவரும் எல்லாந் தெரிந்தவர்கள் போலக்கதைக்கும் குணம், இவ்வகையான எமது குணவியல்புகளே இன்றைய எமது நிலைக்குக் காரணம் எனக்கண்டு கொள்ளலாம்.

O9
தெளிந்த மனதோடு திருக்குறளைப் படித்தால் ஒவ்வொருவரும் தமக்குரிய நோய்களையும் அதைத்தீர்க்கும் மருந்துகளையுங் கண்டு கொள்ளலாம். இந்த வழியில் மக்களை ஈடுபடுத்திச் சிந்திக்கச் செய்வதே நோக்கமாகப் பண்டிதர். கா.பொ.இரத்தினம் திருக்குறள் மாநாடுகளையும் திருக்குறட் பேச்சுப் போட்டிகளையும் மனனத்தேர்வுகளையும் நடாத்தினார். இத்தனைக்கும் அவர் பெருஞ் செல்வராக இருக்கவில்லை. முயற்சியும் முயற்சியால் பெற்ற பொருளைச் சிறுகச் சிறுகச் சேமித்து அவற்றைக் கொண்டு குறள் நெறி பரப்பித் தமிழையும் தமிழ் இனத்தையும் வாழ்விக்கும்பணி இவருடையதாக இருக்கிறது.
இலக்கியப் புலவர்கள் இலக்கிய நூலென்றும் , சமயக்கணக்கர் சமயநூலென்றும், அறிஞர் அறிவுநூலென்றும், காதலர் காமநூல் என்றும், மற்றும் அரசுசெயல்வகை பொருள் செயல்வகை எனப்பலமுகத் தோற்றப்பாடுடைய திருக்குறளின் பொதிபொருளை நன்குணர்ந்தவரன்றித், தான்பெற்ற இன்பம் பல்லோரும் பெற்று மகிழ் தற்கென்றே முயன்ற பண்டிதர் தமிழர்க்கினியர். தமிழர் சால்புடையார், அவர்தம் ஆற்றலையும் அன்பினையும் நினைத்தால் அது நமக்கும் பயனாகும் என்பது பட்டறிவு. எவன் எதை நினைக்கிறானோ பழகுகிறானோ அவன் அதே பொருள் ஆகுவான் என்பர்.
நாம் நல்லதைச் சொல்லும் குறளில் அன்புபூண்டு நாளும் பொழுதும் படித்து வர குறள் கூறும் நலம் எல்லாம் பொருந்தி நிற்றல் தவிர்க்க முடியாதது. இத்தகையதான குறளறிஞர். பண்டிதர் வழிநின்று உழைத்தல் நமது உயர்வுக்கு நல்லது.
இவற்றைவிடத் தமிழன் தனது பொருளென எடுத்து முன்வைக்க உள்ள ஒன்றே ஒன்று தமிழ் வேதமான திருக்குறள். திருக் குறள் மட்டும் இல் லையென்றால் கல்லொடு

Page 7
10
மணி தோன்றாக் காலத்தில் , வாளோடு முன் தோன்றி முத்தகுடியெனச் சொல்லலங்காரம் செய்வதில் என்ன பயன்.
எனவே தமிழர்களாகிய நாம் இனியொருவிதி செய்வோம். அதை எந்தநாளும் காப்போம். அது, நமது மதம் தமிழ்மதம் நமதுவேதம் தமிழ்மறை நாம் வாழவேண்டிய நெறிகளையும் செய்ய வேண்டிய தருமங்களையும், பொருள் ஈட்டும் வழிகளையும், அவற்றைச் செலவிடும் முறைகளையும் பேண வேண்டிய ஒழுங்கு நெறிகளையும் பொதுவாகவல்லச் சிறப்பாக எமது வாழ்வு நெறிகளை, சட்ட திட்டங்களை எல்லாம் குறளில் இருந்தே எடுத்துக் கொண்டால் போதும். தமிழர் என்போர் எங்கிருந்தாலும் எம்மதங்களைச் சேர்ந்திருந்தாலும் அவர்களின் வாழ்வியலை நிர்ணயிக்கும் பெருமை திருக்குறளைச் சாரும் என்பதை அறிந்து, அக்குறளிற்கு ஆற்றுந்தொண்டே தனது தலையான பணி எனக் கொண்ட பண்டிதர் கா.பொ.இவர்களை மதித்துப் போற்றுதல் நம் கடன். அவர்தாம், எண்பத்தைந்தாம் வயதைப்பூர்த்தி செய்வதைப் போற்றி வாழ்த்துவோம்.
தில்லைச்சிவன்

கா.பொ. இரத்தினம் 11
தமிழ் வணக்கம் போற்றுந் திருக்குறள் புவியனைத்
துக்கும் பொதுமறை, ஏற்றித்தொழ உழைத்தநம்
பண்டித இரத்தினனார், ஆற்றிய பணிகள் பற்றி
அறிமுகஞ் செய்யுமிந்நூல் தோற்ற உணர்த்திய தூய
தமிழ்த்தாயை துதிப்பேனே நூல் ஆக்கக் காரணம் நாடு மதிக்கும் அறிஞரை
நாடாண்ட முன்நாள் பா,உ,வை கூடலில் ஆய்ந்த தீந்தமிழ்க்
குறள் பரப்பும் புலவரை, *தேடுங்கல்வி இல்லாப் புல்லன்
நாய்வாலால் கடல்அளத்தல்போல் பாடுந்துணிவென்? பண்டிதர்
பற்றில் முற்றிய பாசமே.
தோற்றம் அருணன் உதித்தான் கிழக்கில் இருள் அகன்றது ஆங்கே திருக்குறள் அறமும் தமிழும்
சிறக்க எங்கள் நெஞ்சை உருக்கும் சான்றோர் இரத்தினம் வேலணை யூரிற் பிறந்தார் திருக்கொள் பொன்னம் பலவேள்
செய்தவம் தெரிந்த துலகே 2
* தேடுங்கல்வி - பலநூல்களைப் படித்துத்தேறிய கல்வி

Page 8
வேலனைப் பெரியார்
வேலணைச் சிறப்பு தென்னைபனை செந்நெல்லோடு
கடல் வளங்கள் தேங்க தன்னிறை வுற்றவூர் வேலணை என்பர். தமிழ்படிக்க மெய்தந்த சைவாகம புராண
இதிகாசங் கற்று உய்யக் கிடைத்த ஒய்வே
காரணமாக உயர்ந்ததே. 3
பனம்பழம் தின்று தயிருக்குள்
கைதோய்த்து அப்பழத்தின் மனங்கெடுத் தாங்கு வந்து
படலையில் நிற்கும் விருந்தை இனங்கண் டழைத்து அறுசுவை
உண்டிஇட்டு மகிழ்முன் தனங்கொள் வேலணை வாழ்வை
நினைந்தின்றும் தருக்கார்யாரே. 4
புலவர்கள் நிலை சீட்டுக்கவிகள், வசைசொல்
கவிகள் சிலேடை என்ற பாட்டும். கோவிலில் புராணப்
படிப்பும், பாவையர்கூத்து ஆட்டும். களிப்பும் பிரசங்கமும்
ஆங்காங்கே பலபேர் கூட்டும், கன்னைசேர்த்து விவாதமும்
புலவர் கொள்கையே. 5

கா.பொ. இரத்தினம் 13
பேரம்பலய் புலவர் பாட்டுப்பாடும் புலவர் சிலருள்
பேரம்பலம் என்பார் வாட்ட சாட்டமான புராணிகர்
வண்ணக் கவிராயர் நாட்டம் மூன்றுடை விநாயகர் நன்மாலை செய்த இவர் பாட்டன்எமது பண்டிதர்க் குரிய
பாடம் சொன்னாரே 6 புலவரும் புரவலரும் புலவர்க்கோர் புரவலர் சோம
சுந்தரமர்ம் மணியம், சிலதலைமுறை செங்கோல்
நடாத்திய சிறப்புள்ளவர், தலபுர்ாணம் பாடப்பணித்து
தர்பாரில் கூடி ஆய்ந்து பலபொன் தந்தும் நூல்பதித்தும்
இவரைப்பா ராட்டினாரே. 7
பாலர்பருவம் பாட்டும் படிப்பும் விளையாட்டுமுர்ப்
பள்ளித் தோழருடன் நேற்றென் றிருக்கு நினைக்க
இவர்செய் குறும்புகளை காற்றில் பட்டம் விடுவதும்
கடலில்நீந்தி நீர்விளை யாட்டு மெனஇவர் ஆடவும்
கண்டுர் உவந்ததன்றே. 8

Page 9
வேலணைப் பெரியார்
குமரய்பருவம் பிறப்பினில் திருவார்ந்த
குடிப்பிறந்த இரத்தினம் பிறந்தபின் கல்வி கேள்வி
வல்லவராகத் திகழ்ந்ததும் சிறந்த அந்த நாட்களிலே
இலகுபல பாடநூல்கள் திறம்பெற ஆக்கி மாணாக்கர்க்
குதவிசெய்தார் இனிதே 9
நமது வழிகாட்டி தள்ளா விளையுள் தரும்பெருஞ்
செல்வம் தழைத்து நிற்க நல்வேள் கார்த்தி கேயர்பொன்
னம்பலவர் நமக்களித்தார் சொல்லேர் உழவர் கா, பொ
இரத்தினம் தூயதமிழ்ஆள வல்லார், இவரே நமக்கொரு
நேர்வழி காட்டியாமே. IO
காவிய நாயகன் காவிய நாயகன் கா. பொ.
இரத்தினம் கனித்தமிழின் ஆவியும் தமிழ்மறை அறமும்
பேணும்நல் அந்தனராம் ஓவிய உருவினர், வேலணை
ஊரினர், உண்மையருள் மேவிய உளத்தினர் யாவருங்
கேளிரென் றேத்துவரே 11

கா.பொ. இரத்தினம் 15
தமிழ்மறைக் காவலர் கலைஞர் பல்கலை தேரறிஞர் அமிழ்தின் இனியசெந் தமிழ்மேல்
ஆராத காதலினார் துணிந்தெல் லாந்தமிழிலே என் (று)
இயக்கம் தொடக்கி வைத்துப் பணிசெய் வல்ஸ்ாாளன் பண்டிதர்
புகழைப் பரவுதுமே. 12
கலை முதுமாணி, பண்டிதர்
வித்துவான் கலாநிதிநல் புலவர் எழுத்தாளர் புகழொடு
பலநூல்கள் செய்த தலைவர். ஈழத் தமிழர்செய்
தவத்தினால் பா. உ. வான நிலையில் உயர்ந்தவர் என்றும்
நினைத்தற் குரியவரே 13
ஈழத்துப்பூதந் தேவனார் காலந்
தொடங்கி இன்றுவரை வாழும் இலக்கிய மரபினில்
இவர்ஒரு வரென்றும் நாளுமொவ்வோர் மணித்துளியும்
குறளும் தமிழும் வளர்த்(து) ஆளும்பணி இவர்க்கென அந்நாள்
அறிஞர் அமைந்தாரே. 14

Page 10
வேலணைப் பெரியார்
நந்தம்வாழ்வில் விளக்கேற்றி வைத்த
நல்லை நாவலனார் சிந்தை உவந்து அச்சில்
பதிப்பித்தார் திருக்குறளை அந்த நெறிநின்று குறளை
அறிந்துல குய்திடத் தந்தனர் கா.பொ.இ. நினைத்
தெம்தலை தாழ்த்துவமே, 15
நாவலர் போல்ஒரு வரில்லை
என்றபோது நமக்கு காவலராய் வந்தாதரித்தார்
கா. பொ. இரத்தினவேள் நாவலரோ தமிழோடு சைவத்திரு
முறைகள் காத்தார் காவலர்செந் தமிழோடு தமிழ்
மறையைக் காத்தாரன்றே. 16
ஆசாற்கு ஆசான் அரசின்தமிழ்
கலைச்சொல் ஆக்குபேரார் பாசாங்கற்ற நல்ல பண்பினர் பல்கலைக் கழகங்களின் பேரார்விரி வுரையாளர் தமிழ்மறைப்
போதகர் குறள் ஆராய்ந் தெங்கும் பரப்பவே
தூயஆவி பெற்றாரென்பரே. 17

கா.பொ. இரத்தினம் 7
சாதி வருணம் எனவகுத்
தவையே தருமம்எனப் பேதித்த வஞ்சர்க்குப் "பிறப்பொக்கும்
எல்லா வுயிர்க்குமென ஒதியும் "ஒன்றேகுலம் தேவன்
ஒருவனே” என்றனம்மோர் சேதியும் கூறிநற் குறள்வழி
காட்டித் தெருட்டினாரே 18
"எல்லாரும் ஓர்குலம் எல்லாரும்
மனிதர்” என்றுதன் சொல்லால் மருட்டி செயலாலும் காட்டிய தீரன்என்பார் வல்லாண் மைகூறிச் சாதிபேதம்
செய்யும் சழக்கர்களை எள்ளிக் கடிந்து "நீயாரென்றறி”
என்பர் ரிவரன்றே 19
எப்பொருள் யார்யார்வாய்க்
கேட்பினு மந்தப்பொருளைப் ஆய்ந்து மெய்ப்பொருள் காண்ப தறிவென்றும்
*முனிவாக்கென் றெதையும் ஒப்பா தேஎனத் தெருட்டியும்
தெளிவுறாத வெம்மை இப்படித்தான் வாழ்கென வாழ்ந்து
காட்டினா ரிவரன்றே 2O
* முனி முனிவர்கள்

Page 11
வேலணைப் பெரியார்
"உள்ளத்தில் உயர்ந்தவை உள்ளுக”
என்றுரைத்து அன்பு வெள்ளத்தில் ஆழ்த்தித் தமிழர்
திருவாம் திருக்குறளில் *தெள்ளுற்ற அறிவூட்டத் தேர்வும்
பரிசும் அறிவித்து *அள்ளுற்ற பல்லா யிரர்தேறக்
கண்டக மகிழ்ந்தாரே 21 திருவள்ளுவர் திருநாள் தெய்வாசி பெற்ற சிறந்தவோர்
நாளில் திருவள்ளுவர் உய்யும் நல்வழி ஒதவந்
தாரென்ற உணரப் பெற்றார் மெய்யன்பர் இரத்தினம் உலகமொப்ப
ஒன்று வைத்தார் வைகாசி அனுடம் திருவள்ளுவர்
நாளென வரைந்தே. 22 தமிழ்மறைக்கழகம் குலத்துக் கொருநீதி கூறி
மக்களைக் கொடுமைசெயும் வழக்கம் ஒழியத் தமிழ்மறைக்
கழகம் வைத்துக்குறள் விளக்கும் மாநாடு பேச்சுப்போட்டி
மனனத் தேர்வுஎனக் கலக்கினார் ஊர்மக்கள் வாயெலாம்
குறள் கமழ்கின்றதே ク零
* தெள்ளுற்ற - தெளிந்த * அள்ளுற்ற அளவில்லாதுவந்த

கா.ப்ொ. இரத்தினம் 19
«ΟΦ X-X
ΚΧ X-Х»
இவர் பெற்ற விருதுகள் சில பத்தாம் பசலியல்லப் பகுத்தறிவுப்
பெரியார்போல் வித்தாரமாகக் குறள்விளக்கி அவ்வழி நடக்கும் சித்தாந்தவாதி, செந்தமிழ்க்
கலைமணி, எனச் சான்று பத்தும், திரு வி.க.விருதும்
பெற்றார் தமிழ்ப் பணிக்கே
திருக்குறட் செல்வர், தமிழ்மறைக் காவலர், வள்ளுவர்சீர் பரவுவார், தொண்டர் குறள்நெறிச் செம்மல் எனப்பலவாம் விருதும்சான்றும் பெற்றார் கேட்டுள் மகிழ்ந் தனள் வேலணைத்தாய் பெருமை நிலத்தில் கடலில்
வானிலும் நனிபெரிதே. 25
செந்தமிழ்க்கலைமணி தமிழ்ச்சான்றோர் எனப்பலவுடன் திரு. வி. க. விருது இவைகள் இவரின் தமிழ்ப் பணிக்காகக் பெற்றவை
திருக்குறட் செல்வர் * தமிழ்மறைக்காவலர் வள்ளுவர்சீர் பரவுவார் * குறள் நெறிச் செம்மல் இவை திருக்குறட் பணிக்காக இவர் பெற்றவை.

Page 12
20
வேலணைப் பெரியார்
பாராளும் மன்ற உறுப்பினர் கள்ளும் பணமும் கையில்வைத்து
வாக்குக் கேட்டோர்கவல மெல்லப்பேசிக் குறள்விழா
வெடுத்தநம் பண்டிதரை நில்லென்று வேண்டித் தேர்தலில்
வாக்குப் பலபோட்டு மக்கள் வெல்ல வைத்தார், மேலதிகம்
பத்தாயிரத்தை வென்றதே. 26
கேள்விகளால் வேள்வி செய்தவர்
பாராளும் மன்றத்திலே ஆள்வோர்க்குச் சிம்ம சொப்பனம்
கேட்கும் வினாதம (து) "ஊழ்” என்று கேட்பதை அமைச்சு
உடன்கொடுத் துவிட ஏழ்தலை முறைகானா அபிவிருத்தி
எய்தினமே 27
பேசுவதெழுதுவ தெல்லாம் ஆங்கிலம்
தமிழில் பேசக் கூசுவர் "தமிழ் வராது" என்று
சொல்லத் தமிழர்கட்கு ஆசையந் நிலையிலும் அவர்களை
யுந்தானே தெருட்டி ரோசமானத்தை யூட்டித் தமிழைப்
பழக்கினார் தோன்றலே. 28

கா.பொ. இரத்தினம் 21
கல்வியே எங்கள் சொத்தெனக்
கருதி அதைவளர்க்க பள்ளி தோறும் புதுக்கூடம்
அமைத்து அறிவியலைச் சொல்லித்தரற் கேற்றநல்
ஆசிரியரைத் தேர்ந் தெடுத்து வல்லமையோடு கல்வி வளர்த்தார்
மக்கள் வாழ்த்தினரே 29
“சேர்மன்” சதாசிவம், சண்முகலிங்கம்
அருணா, செல்வா ஆர்வல ரோடுசேர்ந் தாய்ந்து
பயன்தரும் நல்லபல நேர்உயர் சேவைகள் ஆற்றித்
தீவகந்தனை உயர்த்திப் பாரபி விருத்தியைச் செய்தாரை
நாமும் பாடுதுமே 30
கூட்டுறவுய்பணி நாட்டம் இல்லா தெம்அபி
விருத்திப் பணிகளிலே ஆட்சி இருக்க, "இருக்க” என விட்டு மக்களிடம் கூட்டுறவை வளர்த்துப்
பலநோக் கப்பணி பரவி நாட்டு வளம்மிகப் பெருக
நன்றாற்றி னாரிவரே. 31

Page 13
22
வேலணைப் பெரியார்
கமக்காரர்களுக்கு உதவியமை
கல்லுடைத்துக் கிணறு வெட்டிக்
காடழித்துக் கழனிகண்டு நெல்புகை யிலைமிளகாய்
செய்யவங்கிக் கடனுக்குத் தொல்லைதந்த விவசாய
விரிவாக் கரைத்தெருட்டி அல்லல் கெடுத்துக் கமக்காரற்(கு) அன்பு செய்தார் அய்யாவே!
அரசியல்வாதி “சுட்டமனினும் பச்சைமண்ணும்
ஒட்டாதெம் சுதந்திரத்தை விட்டுக் கொடுத்துப் பின்இரக்கோம்
வீரமுடன் நாமின்று முட்டுப்பட்டோம் ஒன்றுபடுவோம்
முன்னுாறா னன்டின்முன் கையை விட்டஆட்சி மீட்போம் போரில்வெற்றி
பெறுவோம்” என்றாரே. காவலர்
பனைபோல சுயமாக வளர்ந் தூர்க்குப் பயனளித்தார் அனைத்துலகப் பொதுவாக
தமிழ்மறை ஆகக்கண்டார் நினைத்தவை முடித்தார் தமிழ்மேற்
கொண்டபெருங் காதலால் அனைத் தெம்மைக் காக்கும்நற்
காவலர் ஆனாரெம் ஆர்வலரே
32
33
34

கா.பொ. இரத்தினம்
நல்ல உள்ளம் பொய்யில்லா நல்மணத்தர் சும்மா
வாயில் புகுந்தசொல்லு மெய்யாகிஆசீர் வாதமுமாய்
முன்னின் றோர்மிடி நீக்க உய்தார் எனக்கேட்டுர் ஆவலித்து
அவர்முகத் தைப்பார்த்து
"அய்யா" வெனநிற்க உவந்தாக்கும்.
தவமும் அவர்க்கே. பெருஞ்சிறப்பு பெண்துணை ஊரோடு ஒத்து வாழ்வதிலும்
உள்ளதைஉளங் கொண்டுநற் சீரோடு சிதைவின்றிச் சிந்தித்துச்
சிறந்திருக்கும் பண்புப் பேராளன் பெருஞ் சிறப்புப்பெண்
துணையைப் பெற்றபயனால் வாராத செல்வம் வருவித்து
வாழ்ந்துயர்ந் தாரெம்வள்ளலே.
அகவை எண்பத்தைந்து எம்துயரைத் தன்துயரென்
எடுப்பதல்லால் ஏதுதுயர் ஒன்றில்லார் பிறர்க்குதவி
புரிதல் கடனென் றோர்ந்த மன்கா.பொ. இரத்தினனார் அகவை
யெண்பத் தைந்தின்று என்றுமிளமை குன்றாத் தென்தமிழ்
போல்வாழ்க இனிதே
986606) - வயது
இன்று - 1999
35
36
37

Page 14
24
வேலணைப் பெரியார்
பொதுமறை புமியாள மதம்பரப்பத் தமிழ்கற்றோர்
திருக் குறளாம் அமிழ்துண்டு சாவாப் புகழடைந்தார்
என்று கேட்டினிய, தமிழ்படித்த நல்லறிஞர்
தத்தம்மொழி யிற்குறளை மொழிபெயர்த்து வையப் பொதுமறையீ
தென்றார் முன்வைத்ததே. 38 சார்ந்தோர்க்கு இனியவர் குவலயம் முழுதும் திருக்குறள்
பரப்பிய கோமான் அவமே செய்யும் அரசைத் தெருட்டி
நல்அறம் உரைத்தெம் தவமாகத் தோன்றிய தலைவன்
தனைச் சார்ந்தார்க் கினியன் பவமே புரியாத கா.பொ.
இரத்தினப் பண்டிதரே 39
பிறவாத நாள் தேசாபி மானம்மிகும் செயலுடையோர்
செந்தமிழின் மேல் பாசாபி மானமொடு குறட் பற்றும்
மிகவுடை யோராயப் ஆசா பாசமெல்லாம் பிறந்த
அன்னைத்திரு நாட்டுயர்வே பேசாத நாளிவர்இப் பூமியில்
பிறவாத நாளன்றே 40

கா.பொ. இரத்தினம் 25
தமிழகத் தொடர்பு பல்கலைக் கழகங்களில் குறள்
பயில வைத்துயர் டில்லியுலகத் தமிழாராச்சி மன்றத் தாயுமானார் எல்லைத் தமிழக அறிஞரை
இங்கழைத்து ஓம்பி கல்விபணி பாட்டுறவு நெருங்கக்
கண்டு வந்தனரே . 41
தத்துவம் தனிமனிதன் அல்லஇவர்
தத்துவம், சமூகஞானி, இனியதிருக் குறளிருக்குங்
கொலு, தமிழின் மூச்சு துணிந்துசில இயக்கங்கள்
தொடக்கி அதற்குழைக்கும் கனிந்த அறிவாளி "சோம்பற்கு”
எதிரி கா.பொ. இயே. 42 *கொழும்புத் தமிழ்ச் சங்கம் கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைமை
ஏற்றாண்டு மூன்றினுள்தன் தொழும்பாக "முருகு' இதழ் பதித்தும்
டில்லிமா நாட்டுக் குழுவில் உலகத் தமிழாராச்சி
மன்றம் உருவாகி எழுதற்கு முன்மொழிந்து தமிழ்க்
கேற்றந்தந்தா ரென்பாரே. 43
* 1992, கொழும்பு தமிழ்ச்சங்கம் பொன் விழா மலரில் அதன் தலைவர், இலக்கியச் செம்மல் திரு. செ. குணரத்தினம் கூறியுள்ளமை காண்க.

Page 15
26
வேலனைப் பெரியார்
இடப்பெயர்வும் உலகத் தமிழ்மறைக் கழகமும் கொல்லும் படைஞர் உயிருடமை கொள்ளக் குடிபேர்ந்து செல்வார்பின் தமிழ்நாடு சென்று
புகலிடம் பெற்றுய்ந்து ஒல்வழி "யுலகத்” தமிழ் மறைக் கழகம் உண்டாக்கி வெல்லும் மாநாடும் நடாத்திக்
கண்டார் வெற்றியன்றே. 44
திருவள்ளுவர் ஆண்டுத் தொடரோடு
வைசாகி அனுடத்
திருநாளும் சொல்லிஉலக ஊடகங்கள்
எல்லாம் நல்ல
பிரசாசஞ் செய்து குறள்போற்றிச்
சிறப்பு மலர்போட்டும் தரமானசேவை செய்யப் பேர்ஊக்கம்
தந்தார் தலைவரே. 45 நட்பினால் சேரும்பழி உள்ளம் உயர்வு ஊராண்மை
யுண்டுமற் றுடன் நிற்போர்தம் கள்ளம் அறியாத கருணையால்
நம்பிச் சிலசெய்து வெள்ளைத் துணியில் மைபட்ட
தோவென வெளிச்சமுற நள்ளர் தம்பழி நாணித்தாம்
கவல்வார்நம் பண்டிதரே. 46
நள்ளர் -- நட்புடையோர்

கா.பொ. இரத்தினம் 27
மக்கள் அறிவு ஒன்றல்லப் பலநூறு பிள்ளைகட்
கோர்நல் ஞானத் தந்தை தன்னிற்றம் மக்கள் அறிவுடமை
எல்லார்க்கும் நல்லதென்(று) எண்ணிப்பல் பள்ளிகள் ஆக்கிப்
பல்கலைக் கழகம்புகும் வண்ணம் உயர்கல்விபெறும்
வாய்ப்பினையும் வைத்தாரன்றே 47
உள்ளமும் ஊழும் "வள்ளுவர் கோட்டம் வேலணைமத்தி
வங்களா வடியில் நல்லநூல் நிலையம் தமிழ்மறை
ஆராச்சி நடுவம் மெல்ல வளரும் ஒவ் gாண்டும்
குறள்மா நாடுவேறு" உள்ளம் இவர்க்கு இவ்வாறு
இருக்க, ஊழ்முந்தியதே பண்டிதரின் ஊர் எனல் வேலணையூர் என்றலுமே
பண்டிதரை உசாவி யெமைச் சாலவுறு களிப்புடனே
அணைக்கும் நந்தமிழ் நாட்டார் ஏலவே அறிந்தவர்போல்
எம்மையா தரித்துவக்கும்நற் சீலம் என்னேயோ! பண்டிதரால்
நாமடைந்த செல்வாக்கன்றே 49

Page 16
28 வேலனைப் பெரியார்
மயிலையில் அறக்கட்டளை உற்றார் மற்றோர்எனக் காழ்ப்புவப்
பின்றி அறிவுப்பசி உற்றார்க்குத் திருக்குறளாம்
அமுதைத் தடைகளின்றி முற்றோத அறக்கட்டளை
நிறுவிய முனைவர்தாம் பெற்றபொருள் "வைப்புழி கண்டா
ரென்ன பெருந்தன்மையே. 50
தங்கக்கரையில் ஆண்டு பற்பலவாகச் சேர்த்த
அரிய குறள் நூல்கள் “கீண்டு மணற்கீழ் போனதும்,
எரியுண்டதும் பிறவும் காண்டுள் வெதும்பிக் கவன்றும்
சோம்பா தெழுந்து முயன்று மீண்டும் சென்னைத் தங்கக்கரை
நூல்நிலையம் மீழ்வித்தாரே. 51
வாழ்த்து கோழிகூவும் விறலோ பொழுதொன்று
விடியுங்கோல ஆழிவெண் சங்கு ஊதும் ஊதும்
அடிமை விலங் கொடியும் ‘பாழிலெம் கொடிஏறும் ஏறும்
பல்லாயிரர் தோள்புடைத்து "வாழி! வாழி!” யென்றார்க்கும் நாள்வரும்,
கண்டுழி வாழியரே. 52 * வைப்புழி - வைப்பிடம் * கீண்டு மணற்கீழ் போனது - இவரால் சேர்க்கப் பல நூறு திருக்குறள் பதிப்புகள் இராணுவ நடவடிக்கையின் போது இருந்த வீட்டுடன் இடித்து மணலுள் புதையுண்டு போனது. அவ்வாறே எரிந்து போனதுமாம் பாழில் - அழிந்த இடத்தில்

கா.பொ. இரத்தினம்
29
தேசமெலாம் திருக்குறளின்
செந்நெறிகள் செழித்தோங்க ! தாசர் எனும் நிலைமாறித்
தமிழர்கள் தலைநிமிர்க ! நேசமுடன் சரிநிகராம்
நிலைவருக ! மனித நேயர்பண்டித இரத்தினனார்
நீடுழி வாழியவே !
பார்புகழும் திருக்குறளைப்
பாராளும் மன்றினுள்ளே சீர்மிகுசெந் தமிழோடு
சேர்த்தினிக்கத் தீற்றியவர் பேர்ஆர நின்ற பண்டித
இரத்தினனார் பல்லாண்டு ஆர்கலிசூழ் உலகனைத்தும்
அறங்கூறி வாழியவே !
தன்குற்றம் நாணிப், பிறர்குற்றம் பாரார் தன்னிற்சிறிய
வன்பெற்ற வெற்றி போற்றித்தன்
தோல்வி ஒப்புமுயர் சான்றோன்
எண்குற்றம் எவர்செயினும்
எல்லார்க்கும் மன்னிக்கும் நல்ல
பண்புற்ற மேலோன்பண்டிதர் கா.பொ.இ.
பல்லாண்டு வாழி!
53
54
55

Page 17
30
வேலனைப் பெரியார்
செல்வா வழி செல்வாவின் வழியில் நாட்டுக்கும்
தமிழுக்கும் சேவை செய்து ஒல்காப் புகழ்கொள் காவலர்
உயிர்கட்கோர் ஊறுஎண்ணா நல்லார் நாளும் சொற்சுவை பொருட்
சுவைதேர் புலமையில் வல்லார் வேலணைப் பெரியார்
இரத்தினம் வாழிநன்றே. 56
இருமொழி என்றிருந்த நிலைமாற்றி
இலங்கை ஆட்சி ஒருமொழி சிங்களமே அரசமொழி
என்றபோது பெருகுதமிழ் உணர்வு பெற்ற
இளைஞர் தடுமாறா தொருமுகமாகத் தமிழரசு கோர
ஊக்கினாரே 57
சிந்தையில் தமிழர், செயல் தமிழர்
உயர்விற் குழைத்தல், வந்தனை திருக்குறட்கு, வாழ்த்துதல்
ஈழநன் நாட்டை, தந்தவை பகுத்தறி வொழுக்கம்,
தமிழ்ஊ ரபிமானம் நந்தா வேலணைப் பெரியார்
இரத்தினம் நனிவாழியவே ! 58

கா.பொ. இரத்தினம் 3.
தான்தோன்றித் தனமாகச் சிலர்
செய்வதனைத் தடுக்காது ஏன்தான் நமக்கென்று வாளாவிருப்பார்
போலன்றி எதிர்த்து மாண்போடு கட்சியைவிட் டகலாது
காத்து வளர்த்த மீன்பாய் கடல்சூழ் வேலனைப்
பெரியார் மிகவாழ்கவே. 59
பட்டம் பதவி பவிசுக் கென்று உரிமையைப்பலர் விட்டுக் கொடுக்கக் கண்டு வெகுண்டு
விறலோடு கட்சியைக் கட்டி வளர்த்த காவலன் கா.பொ.
இரத்தினம் வேலணைத் தொட்டிலில் வளர்ந்த தோன்றல் ஊழி
தோறுாழி வாழியவே. 60
"ஆங்கிலப் புலமை ஆணவப்
பேச்சை ஆதரித்தடி தாங்கி வாழ்வர் தமிழர்” எனும் செருக்கடங்கி நிற்க வீங்குசெந் தமிழாலும் அன்பாலும்
சேவைச் சிறப்பாலும் ஓங்குபுகழ் சேர் வேலனைப்
பெரியார் உயர்க நன்றே. 61

Page 18
32 வேலனைப் பெரியார்
கொழும்புத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட “முருகு' இதழ் 1960 இல் ‘தமிழ் மறைக் காவலர்” “வேலனைப் டெரியர்' கா.பொ.இரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட உணர்ச்சிக் கருத்துக்கள். இவை தமிழ் நாடு, திருநெல்வேலி சைவ சித்தாந்த்தக் கழகம் 1986ல் வெளியிட்ட “தமிழ் உணர்ச்சி" எனும் தொகுப்பிலும் இடம் பெற்றிருந்தது.
தமிழ் இடணர்ச்சி
"தமிழ் வாழ்க, தமிழ் வளர்க, தமிழ் வெல்க..” என்று பலவாறு தமிழ்மக்கள் இப்பொழுது முழங்குகிறார்கள். இந்த முழக்கம் தமிழ் மக்களுடைய உறைப்பான தமிழுணர்ச்சியைக் காட்டுகிறது என்று கூறல் முடியாது. தமிழ்மக்கள் பலருடைய உள்ளத்திலிருந்து இந்த முழக்கந் தோன்றவில்லை. உணர்ச்சியுள்ள இரண்டொருவர் கூற அவரைப் பின்பற்றிச் செய்யப்படும் ஆரவாரமாகவே இது காணப்படுகிறது. தமிழ்மக்கள் பலரிடத்துத் தமிழுணர்ச்சி இன்னும் நன்கு தோன்றவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள. சிறிது சிந்திப்பவர்களுக்கும் அவை எளிதிற் புலப்படும்.
தமிழர் ஆங்கிலத்திற் கையெழுத்திடுகின்றனர்
அண்மையில் ஒரு கழகத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழர்கள் கூடித் தமிழிற் பேசிச் செயலாற்றினர். அக் கூட்டத்துக்கு வந்த உறுப்பினர் தங்கள் கையொப்பங்களை ஒரு தாளில் இட்டனர். இரண்டொருவரைத் தவிர ஏனையோர் ஆங்கிலத்திலேயே கையொப்பமிட்டனர் . தமிழிற் கையொப்பமிடத் தெரியாமல் அவர்கள் ஆங்கிலத்தில் இடவில்லை. பழகிய பழக்கத்தால்-தாய் மொழிக்கு முதலிடங் கொடுக்கும் வழக்கம் இன்மையால்-தமிழுணர்ச்சிக் குறைவால் அவ்வாறிட்டனர்.

கா.பொ. இரத்தினம் 33
தமிழாசிரியர்கள் , தமிழ்ப் பணி டிதர்கள் , தமிழ் எழுத்தாளர்கள், பத்திரிகையாசிரியர்கள். தமிழ்க்கவிஞர்கள் இவர்களிற் சிலர் தமிழிலே கடிதங்களை எழுதி ஆங்கிலத்திலே கையெழுத்திடுகிறார்கள். ஆங்கில எழுத்துக்களையுங் கிரந்த எழுத்துகளையும் தமிழுடன் கலந்து எழுதுகிறார்கள். நிலைத்த கொள் கையும் , தமிழ் மரபு பேணும் ஆர்வமும் இல்லாமையினாலே இவ்வாறு செய்கிறார்கள்.
தமிழர் தமிழுக்கு முதன்மை கொடுத்தல் வேண்டும்
தமிழுணர்ச்சி வேண்டும் எனும் பொழுது அவ்வுணர்ச்சி வெறியாகிப் பிற மொழி வெறுப்பாக வேண்டுமென்பது கருத்தன்று. உலகிலுள்ள மக்களினம் ஒவ்வொன்றும் தத்தம் தாய்மொழியைப் போற்றிப் பேணுதல் வேண்டும். ஈன்ற தாயைப் பேணுவது போலத் தாய்மொழியைப் பேணுதல் ஒருவருடைய தலையான கடன். தன்னுடைய தாயைப் போற்றாமல் அவளைப் புறக்கணித்துப் பிறர் தாயை மட்டும் போற்றுபவனை உலகம் பழிக்கும். தமிழைப் போற்றாமற் பிற மொழிகளுக்கு அடிமைப்படும் தமிழர்களும் பழிப்புக்கிடமானவர்களே.
தமிழுக்குக் குமணன் தலைகொடுத்தான். சேரமான் தகடுரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை தமிழ்ப் புலவர் கண்ணயரக் கவரி வீசினான். கலம்பகத்துக்கு நந்தி உயிர் கொடுத்தான். இப் பெருஞ் செயல்கள் அவர்களுடைய தமிழுணர்ச்சியையே காட்டுகின்றன. இச் செயல்கள் பிறமொழி வெறுப்பால் நிகழ்ந்தனவல்ல. எனவே, தமிழர் தமிழுக்குத் தம் வாழ்வின் துறையனைத்திலும் முதன்மை கொடுத்தல் வேண்டும் என்பது மொழிவெறியுமன்று: பிற மொழி வெறுப்புமன்று. இது தாய்க்குச் சேய் செய்யுங் கடமையேயாகும். எனவே இக் கடமையுணர்ச்சியைத் தமிழ் மக்கள் கைநெகிழவிடல் கூடாது. இவ்வுணர்ச்சி நன்கு நிலைத்தால்,

Page 19
34 வேலனைப் பெரியார்
தமிழ் மொழிக்கும் தமிழினத்துக்கும் பழிப் புண்டாக்குஞ் செயல்களைத் தமிழர்கள் செய்யமாட்டார்கள்.
சென்ற சில நூற்றாண்டுகளாகத் தமிழர் அரசியற்றுறையில் மட்டுமன்றிப் பிற துறைகளிலும் அடிமைப்பட்டு அடங்கி வாழ்ந்தனர். இதனால் அவர்களுடைய வாழ்வுத் துறைகளிலே தூசும் மாசும் படிந்துள. இவற்றை நீக்குதற்குத் தமிழுணர்ச்சி வீறுகொண்டு பெருகுதல் வேண்டும். தமிழுணர்ச்சி பெருகினால், தமிழ் வளம் பெறும்; தமிழினம் தலை நிமிர்ந்து தகுதியோடு வாழும் நிலைமை தோன்றும்.
தமிழின் தனிப்பண்பைக் காத்தல் வேண்டும்
தமிழ் மொழி வடமொழியினின் றுந் தோன்றியது: வடமொழியின்றி அது தனித்தியங்காது எனும் இக் கொள்கைகள் பிழையானவை. தமிழைத் தாழ்த்தும் நோக்கத்துடன் நிலை நாட்டப்பட்டவை, இவற்றை இன்று தமிழ்மக்கள் யாவரும் நன்கறிவர். எனவே தமிழைத் தனிமொழியாக வாழச் செய்தல் தமிழர்தம் கடமையாகும். தக்க தமிழ்ச் சொற்க, ருக்கும் பொழுது அவற்றை விடுத்துப் பிறமொழிச் சொற்களை ஆளுதற்கு விரும்பும் மயக்கம் ஒழிதல் வேண்டும். தமிழிலே தக்க சொற்களின்றேல், தமிழ் மரபுக்கேற்பப் பிறமொழிச் சொற்களை ஆக்கிக் கொள்ளல் பொருத்தமானதே. இவ்வாறுதான் தமிழ்மரபு நன்கறிந்த தமிழ்ப் பெரும் புலவர்கள், தொல் காப்பியர் காலம் முதல் இன்று வரை செய்து வருகிறார்கள்.
தமிழினை மரபு சிதையாமலும், உயிர்ப்புக் குன்றாமலும் பண்பு திரியாமலும் வளர்த்து வருவதனாலே தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தமிழ்நூல்களை இன்றும் தமிழர்கள் இலகுவிற் படித்துச் சுவைக்கிறார்கள். இத்தகைய வாய்ப்பு உலகில் வேறெம் மொழியினருக்கும் இல்லை

கா.பொ. இரத்தினம் 35
என்பதை நாம் மறத்தல் கூடாது. பிறமொழிகள் சிலவற்றில் அறுநூறு எழுநு று அண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய நூல்களை இப்பொழுது இலகுவிற் படித்தறிதல் முடியாது. அறுநூறு எழுநூறு ஆண்டுகளுக்குள் அம்மொழிகளில் உண்டான பெரும் வேறுபாடுகளே இதற்குக் காரணம். இவ் வேறுபாடுகளுடன் ஒப்பிடும் பொழுது ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளிலே தமிழில் உண்டான வேறுபாடுகள் மிகக் குறைவாயிருப்பதை நாம் காணலாம். தமிழின் பழம் பெரும் இலக்கியச் செல்வத்தை இழக்காமலிருப்பதற்கும், தமிழை வேறொரு புது மொழியாக்காமலிருப்பதற்கும் விரும்புவோர் தமிழின் தனிப் பண்பைக் காப்பாற்றுதல் வேண்டும் என்பதை உணர்வர்.
தமிழிற் பிறமொழி எழுத்துக்களைக் கலத்தல் கூடாது
உலகத்திலுள்ள சீர்த்திருந்திய மொழிகளைப் பேசும் மக்கள் தமிழரைப் போலத் தம் மொழிகளிற் பிறமொழி எழுத்துக்களைக் கலந்து எழுவதில்லை. 1. தமிழர்கள் இன்றும் கிரந்த எழுத்துக்களை மட்டுமன்றி ஆங்கில எழுத்துக்களையும் கலந்து எழுதும் பழக்கதையுடையவர்களாயிருக்கின்றனர். 2. இந்தப் பழக்கம் இன்னும் ஒழிக்கப்படாமலிருப்பதற்குப் போதிய தமிழுணர்ச்சி இன்மையே காரணமன்றோ !
தமிழைப் பிழையின்றி எழுதுதல் வேண்டும்
பிழையின்றி எழுதத் தெரியாதவர்கள் ”பேசுவது போல எழுதுகிறோம்” என்று கூறித் தமது அறியாமைக்குத் திரையிடவும் முயல்கிறார்கள். தமிழ் எழுத்தாளர்கள் சிலருடைய எழுத்திலும், தமிழ்ப் பத்திரிகைகள் சிலவற்றிலும், இக்காலப்பாடல்கள் பலவற்றிலுங் காணப்படும் எழுத்து சொற்பிழைகளையும்
1. S. L. lawalaganar என்றோ அ. ஐ. Smith என்றோ ஆங்கிலேயர் எழுதுவதில்லை. 2. C. V. செல்லையா, தி. ஐ. நடராஜா, எஸ். எம். பொன்னையா என்று எழுதுகிறார்கள்.

Page 20
36 வேலனைப் பெரியார்
இலக்கணப் பிழைகளையும் போன்றவற்றைச் சிறந்துயர்ந்த பிறமொழியாளர்களுடைய பாட்டுக்களிலும், எழுத்திலும், பத்திரிகைகளிலுங் காணல் முடியாது. இவ்வாறு நம் எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் கவிஞர்களும் எழுதுவதற்குக் காரணம் தமிழுணர்ச்சிக் குறைவேயன்றி வேறு யாதாயிருக்கலாம். இவர்கள் உணர்ச்சி கொண்டு சிறிது முயன்றால், பிழையின்றி எழுதும் ஆற்றலைப் பெறலாம்.
“சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் பெருமான் தாம் படித்த நுால களிலே பிழைகளைக் கணி டபொழுது எழுத்தாணியாலே தமது தலையிலே குத்தினார். அடிக்கடி குத்தியதால் அவருடைய தலையில் எப்பொழுதும் சீழ் நிறைந்திருந்தது. அதனாலே அவருக்குச் சீத்தலைச்சாத்தனார் எனும் பெயருண்டாயிற்று. அவர் திருக்குறளைப் படித்த பொழுதுதான் அவருடைய தலையிலேயுள்ள சீழ் மாறிற்று.” இட்து ஒரு கதை. இதிலிருந்து ஓர் உண்மை புலப்படுகிறது. தமிழ்ப் பாடல்களிலே பிழையிருந்தால் அதைப் பொறுக்க முடியாது வருந்தும் அளவுக்கு தமிழ் உணர்ச்சி அக்காலத்தில் அறிஞர்களிடம் நிறைந்திருந்தது. இக்காலத்திலோ பிழையின்றித் தமிழை எழுதவும் பாடவும் வேண்டும் எனும் எண்ணங்கூடப் பலரிடம் இல்லாதிருக்கிறது. இந்நிலைமையை மாற்றத் தமிழர் யாவரும் உணர்ச்சியுடன் உழைத்தல் வேண்டும்.
வடமொழி ஆதிக்கம் ஒழிதல் வேண்டும்
பல நாடுகளிலும் வாழுந் தமிழ் மக்கள் இன்று பல சமயங்களைச் சேர்ந்தவர்களாய் இருக்கின்றார்கள். சமய வேறுபாடு காரணமாகத் தமிழர்களிடையே எவ்வித பிணக்கும் தோன்றுதல் கூடாது. சமய வழிபாடுகளையெல்லாம் தமிழிலே செய்தல் நன்று. தமிழருடைய சமயத்துறைகள் பலவற்றிலே வடமொழி புகுந்து தமிழைத் தலைநிமிர்ந்து நிற்கமுடியாமற் செய்து விட்டது. தமிழர்களுக்காகத் தமிழ் மன்னர்களாலும்

கா.பொ. இரத்தினம் 37
பிறராலும் தமிழ்நாட்டுப் பொருளைக் கொண்டு கட்டுவிக்கப்பட்ட கோயில்களிலே தமிழ் முதலிடம் பெறாமலிருக்கிறது. தம் இனத்தவர் சிலரைத் தீண்டாதவராக ஆக்கியது மட்டுமன்றி தம் தாய்மொழியைக் கூடத் தீண்டாத மொழியாகத் தமிழர்கள் ஆக்கியுளர் என்பதை இது காட்டுகிறது. இத்தகைய இழிநிலையை உலகத்தில் வேறெம் மொழியினரும் பொறுக்கமாட்டார்கள். இந்நிலையை மாற்றாதிருக்கும் வரையும் தமிழர்கள் மானமுள்ளவர்களாக வாழ்தல் முடியாது. தமிழருடைய உணர்ச்சியிலே பிறழ்ச்சியை உண்டாக்கி, அவர்களை முன்னேறவிடாது தடுப்பதற்கும் மூலகாரணம் இது தான். தமிழர் தம் வாழ்வுத் துறையனைத்திலும் தமிழுக்கு முதன்மை கொடுக்கும் நாளே தமிழுணர்ச்சி பொங்கும் நாளாகும். அந்நாளை விரைவில் வரச்செய்தல் தம்மை உயர்த்துவற்குத் தமிழர் செய்யுந் தொண்டாகும்.
தமிழிசையைப் போற்றுக
தமிழருடைய சமயத் துறைகளிலே வடமொழி புகுந்தது போலவே அவர்களுடைய இசைத் துறையிலே தெலுங்கு புகுந்து தமிழருடைய மானத்தை அழிக்கிறது. "உங்கள் தாய் மொழிப்பாடல்களையே கருத்தறிந்து நீங்கள் சுவைக்கலாம். கருத்து விளங்காத பிறமொழிப் பாடல்களாற் பயனில்லை” என்ற குரல் இன்று உலகில் தமிழ் நாட்லே தான் தமிழினத்திடையேதான் கேட்கிறது. தமிழருக்குத் தான் "உங்கள் தாய்மொழி இசையைப் போற்றுங்கள்” என்று வேண்டுகோள் விடவேண்டியிருக்கிறது. தம்மைத்தாமே இழிவுபடுத்தற்குக் காரணமான தெலுங்குப் பாடல் மோகத்தை இன்னும் தமிழர் சிலர் விட்டுவிடவில்லை எனின் அவர்களுள்ளத்திலே தமிழுணர்ச்சிக்கு இடமுண்டா ?

Page 21
38 வேலணைப் பெரியார்
தமிழ்ப் பெயர்களை இடுக.
தம்மக்களுக்கு அழகிய செந்தமிழ்ப் பெயர்களையிடுதல் நாகரீகக் குறைவு என்று கருதிப் பலவகையான பிறமொழிப் பெயர்களையிடும் அளவுக் குத் தமிழர் பலரிடையே தமிழுணர்ச்சி குன்றிவிட்டது. "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல இனிதாவதெங் குங் காணோம்” என்று தமிழுணர்ச்சியில் மிதந்த பாரதியார் பாடினார். இன்று பல தமிழ்ப் பெற்றோர்களுக்கு இனிய தமிழ்ப் பெயர்கள் வேப்பங்காய் போலக் கசக்கின்றன. அவர்கள் தம்மக்களுக்கு வைக்கும் பெயர்களோ தமிழ் உள்ளங்களுக்கு வெறுப்பை மட்டுமன்றி வேதனையுங் கொடுக்கின்றன.
தீண்டாமை பாராட்வோர் தமிழராகார்
சமயத்துறையில் வடமொழிக்கடிமையாகவும், இசைத் துறையிலே தெலுங்குக்கு அடிமையாகவும் ஆகியதாலே தம் பகுத்தறிவைக் கெடுத்துச் சிந்திக்கும் ஆற்றலையும் தமிழர் இழந்தனர். இதனால், சாதி வேற்றுமையைப் போற்றித் தீண்டாமையைப் பாராட்டும் கொடுமை அவர்களிடையே தோன்றிற்று. “தமிழ்” என்றால் "இனிமை” என்பது பொருள், "தமிழர்” என்றால் "இனியவர்” எனலாம். சாதி வேற்றுமையைப் பாராட்டித் தீண்டாமையைப் போற்றுபவர்கள் எவரையேனும் இனியவர் என்று கூறலாமா? எனவே தீண்டாமைப் பேய் பிடித்தலைப்பவர்கள் இனியவரல்லர்; தமிழரல்லர். இவர்கள் தொகை இன்று குறைந்துவருகிறது. எனினும், யாழ்பாணத்திலே இத்தகையோர் சிலர் இனி னுங் காட்சியளிப்பது வெட்கத்துக்கிடமானது.
தம் வரலாறு அறியாத் தமிழர்
நம் மக்களிடையே காணப்படும் தமிழுணர்ச்சிக் குறைவுக்கும், தமிழ்ப்பண்பாடு, நாகரிகம் என்பனவற்றுக்கு

கா.பொ. இரத்தினம் 39
மாறான செயல்களுக்கும் அடிப்படைக் காரணம் தமிழ்மொழி வரலாறு, தமிழர் வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு முதலியவற்றை முறையாகப் பலர் அறியாதிருத்தலேயெனலாம். பொய்க் கதைகளையும், கட்டுக்கதைகளையும், மயக்கம் மிக்க புராணக்கதைகளையுஞ் சிறிதும் ஆராயாமல் நம்பி மயங்கிக் கிடப்பவர்களும் பலர் உளர். இந்த இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் மேடைகளிலே ஏறி "நமது தமிழ் நாட்டிலே தோன்றிய நளமகாராசன், தருமர்." என்று பேசுகிறவர்களும் “நம் தமிழ்ப் பெண்மணிகளிலே சீதையும் பாஞ்சாலியும் அனுசூயையுஞ் சிறந்தவர்கள்” என்று கூறுபவர்களும் பலர். வள்ளுவர், ஒளவையார், அகத்தியர் முதலியவர்களைப் பற்றிய கட்டுக் கதையெல்லாம் உண்மைச் செய்திகள் என்று உளறுபவர்களும் உளர். தமிழ்த்தலைவர்கள், தமிழறிஞர்கள் என்பவர்களிடமே இத்தகைய அறியாமை காணப்படுகிறதெனின் பொதுமக்களின் நிலைமை பற்றிக் கூறுவும் வேண்டுமோ? இந்த அறியாமை நீங்கினாலன்றித் தமிழர் தமிழராக வாழ்தல் (Մ?լգա IIT5l.
உலகத் தமிழ் மன்றம்
தமிழருடைய தாய்மொழி தமிழ். தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் யாவருந் தமிழர். தமிழன் என்ற பெயரைக் கொடுத்துத் தமிழினம் என்ற ஓர் இனத்தை ஆக்கியிருப்பது தமிழ்; தமிழினத்தை இணைத்து வைத்திருப்பதுந் தமிழ். தமிழர் இந்த உண்மைகளை மறவாதிருந்தாற்றான் தமிழராக வாழலாம்; தமிழினமாக இணைந்திருக்கலாம்.
1. 14-4-86 ஆம் நாளன்று உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ் நாட்டரசால்
நிறுவப்பட்டுள்ளது. எனது கனவு நனவாகிவிட்டது.
2. தமிழ் நாட்டரசு தைத் திங்கள் இரண்டாம் நாளை வள்ளுவர் திருநாளாக இப்பொழுது கொண்டாடுவதால் இந் நாளையே திருவள்ளுவர் திருநாளாகக் கொள்கிறோம்.

Page 22
40 வேலனைப் பெரியார்
உலகத்தின் பல நாடுகளிலும் வாழுந் தமிழ் மக்களிடையே தமிழுணர்ச்சியை வளர்க்கவுந் தமிழினத்தை ஒன்றுபடுத்தவும் இந்நாடுகள் யாவற்றிலுமுள்ள தமிழர்கள் முயலுதல் வேணி டும் . ஒவ்வொரு நாட் டி லுமுள் ள தமிழறிஞர்களிற் சிலராகுதல் பிற நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தமிழர்களுடன் தொடர்பு கொள்ளுதல இன்றியமையாதது. இத்தொடர்பை உண்டாக்கி, உலகத்தமிழர் யாவரையும் ஒரமைபப்பிலே பிணைப்பதற்கு ஓர் உலகத் தமிழ் மன்றம் நிறுவப்படல் வேண்டுமென்பதை யான் முன்னரும் பல முறை எடுத்துரைத்துள்ளேன். இத்தகையதொரு நிலையத்தை விரைவில் நிறுவுதற்குத் தமிழ்மக்கள் முயலுதல் வேண்டும். 1
திருவள்ளுவர் திருநாள்
தமிழுணர்ச்சி நிலைத்துத் தமிழினம் ஒன்றுபடுதற்குத் தமிழர் யாவரம் எவ்வித வேறுபாடுமின்றித் திருக்குறளைத் தமிழ்மறையாகப் போற்றி அதனைத் தந்த திருவள்ளுவருக்கு ஆண்டில் ஒருநாளைக்கேனும் விழா எடுத்தல் வேண்டும். தமிழ் மறைக் கழகத்தின் முயற்சியால் வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாளாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 2 எல்லாத் தமிழரும் வள்ளுவர் திருநாளைத் தமிழினத்தின் தனிப்பெருநாளாக ஆண்டுந்தோறும் தத்தம் வீடுகளிலே கொண்டாடுதல் தம்முடைய கடன் என்றுணர்தல் வேண்டும்.
திருவள்ளுவராண்டு
“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி வாளோடுமூத்தகுடி” என்று பழமை பாராட்டுந் தமிழினம் மிகப் பழைய மொழிகளில் ஒன்றாகிய தமிழைப் பேசும் தமிழினம் - தனக் கென ஒரு தொடர் ஆணி டை வழங்காதிருத்தல் மானக்கேடான செயலாகும். பிறநாடுகளோடு

கா.பொ. இரத்தினம் 41
தொடர்புடைய தொடராணி டுகளை வழங்குவது மதிப்புக்குரியதாகாது. இதனை நன்குணர்ந்த தமிழ்ப் பேரறிஞர்கள் சிலர் வள்ளுவர் தொடராண்டினைத் தமிழ்மக்கள் வழங்கல் வேண்டுமென அறிவுரை நல்கியுளர். வள்ளுவர் தொடர் ஆண்டை இப்பொழுது சிலர் வழங்குகிறார்கள். தமிழர் யாவரும் இதனை வழங்குதல் வேண்டும்.
நிறைவுரை
தமிழினம் தன் பழமைக்கும், உயர்ந்த பண்பாட்டுக்கும், பகுத்தறிவுக்கும் ஏற்ற முறையில், தன் வாழ்வினை வளம் படுத்தற்கும், தமிழர் தமிழுணர்ச்சியுடன் வாழுதற்குஞ் செய்ய வேண்டியனபற்றி என் உள்ளத்தெழுந்து நிலைத்து நிற்குங் கருத்துக்களிற் சிலவற்றை ஈண்டு எடுத்துக் கூறினேன். இவற்றை ஆராய்ந்து ஆவன செய்தல் உலகெங்கும் வாழுந் தமிழ் மக்களுடைய கடனாகும் . "இன் றில்லாவிடின் நாளையாகுதல்" இவற்றைத் தமிழினம் ஏற்றுப் போற்றிச் செயற்படுத்தும் எனும் உறுதியான நம்பிக்கைஎனக்குண்டு.

Page 23
42 வேலணைப் பெரியார்
பேரறிஞர்களின் பாராட்டுரைகள்
அறிஞர் செம்மல் டாக்டர் வ.சுபமாணிக்கம் அவர்கள் (முன்னைத் துணைவேந்தர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை.)
"ஈழத் தமிழ்ப் பேராசியர். தமிழ்மறைக் காவலர் திரு. கா.பொ.இரத்தினம் தமிழ் நெறியும் அரசியலும் நன்கறிந்தவர். திருக்குறள் மேல் தனிநாட்டம் கொண்டு வாழ்நாள் முழுதும் அதனை உலகறியப் பரப்பியவர்: வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழும் குறளும் நுழையச் செய்தவர். என் நெடுநாள் நண்பர். காலத்தாலும் மாறாத சால்புக் கொள்கையர்”
தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்
"பேராசிரியர் கா.பொ.இரத்தினம் ஒரு சிறந்த தமிழ் அறிஞர். பண்டைய தமிழறிஞராகிய கோவூர்க் கிழார் போல அரசியலில் ஈடுபட்டுள்ள தமிழறிஞர். கற்பக மலரைப் படித்துபடித்து மகிழ்ந்தேன். இன்பத் தமிழ் நடை நெஞ்சினைத் தொட்டது. சம உடைமைச் சமுதாயம் மலர வேண்டும் என்ற ஆசிரியர் கருத்து ஏற்கத்தக்கது மட்டுமன்றிப் பின்பற்றத் தக்கதுமாகும்.
நல்ல படைப்பு: வாழ்க்கைக்குப் பயன்படும் படைப்பு, இரத்தினம் அவர்களின் திருக்குறள் ஆர்வம் இந்நூலில் மணக்கிறது. ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய நூல்.
"திருக்குறள் காவலர் முனைவர் கா.பொ.இரத்தினம் அவர்கள் உலகத் திருக்குறள் மாநாடு நடத்துவது மகிழ்ச்சியைத் தருகிறது.
டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம்.
"திரு. இரத்தினம் அவர்கள் சிறந்த தமிழ் அறிஞர்; இலங்கை அரசியலில் உயர்மட்ட நிலையில் நீண்டகால அனுபவங்கள் உள்ளவர். தமிழ்மொழிப் பற்றும் தமிழ் இன உணர்வும் நிறைந்தவர். நிதானப்போக்கும் முதிர்ந்த பார்வையும் உள்ளவர். அரசியல்வாதி. அரை நூற்றாண்டுகளுக்கு மேலான தரம் மிக்க அரசியல் வாழ்வுக்கும் தமிழ்மொழி தமிழினத் தொண்டுக்கும் இலக்கியப் படைப்புக்கும் சொந்தக்காரர்.

கா.பொ. இரத்தினம் 43
“சிறந்த தமிழ் அன்பர்; எனினும் எதிலும் தீவிரவாதி அல்லர்: மக்கள் விருப்பத்தை மதித்து அவர்கள் உரிமைக்காகப் போராடியவர்: ஆனால் வன்முறையாளர் அல்லர்: நிதானத்தோடும் நெறியோடும் வரம்புக்குள் நின்று வழி தவறாது நீதிக்காக போராடியவர். பல நூல்களுக்கு ஆசிரியர். குறிப்பாகத் திருக்குறளில் ஆழ்ந்த ஈடுபாடும் நுண்பொருள் காணும் புலமையும். சென்றவிடமெல்லாம் அதன் சிறப்புப் பற்றிப் பேசும் எழுதும் சிந்தனையும் கொண்டவர்"
டாக்டர் அவ்வை நடராசன், (துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம்.)
"அரசியல் தலைமையும், அருந்தமிழ்ப் புலமையும் ஒருங்குவாய்ந்த பேராசிரியர் கா.பொ.இரத்தினம் கற்றுத் துறைபோகிய செந்தமிழ் வித்தகள். கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர்: ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர்: தமிழர் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் அடிகோலும் பெருந்தகையாளர்; உலகத் தமிழ் மன்றம் போன்ற உலகளாவிய அமைப்புகளைத் தொடங்கி நடத்திய மாட்சி வாய்ந்தவர்; தமிழர் நாடுகளில் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடி மகிழச் செய்தவர்"
டாக்டர் சிலப்புச் செல்வர் மபொ.சிவஞானம் அவர்கள் (தலைவர், தமிழ் வளர்ச்சி உயர் மட்டக்குழு)
"பேராசிரியர் கா.பொ. இரத்தினம் அவர்களை நாற்பதாண்டுக் காலமாக நன்கறிவேன். இலங்கையில் முதன் முதலில் எனக்கு அறிமுகமான நண்பர் இவரே. இப்பெரும் புலவர் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாளை இலங்கை நாட்டில் கொண்டாடியதோடு இந்தியத் தமிழ்நாட்டிலும் கொண்டாட முயற்சி எடுத்தார். இவரால் தூண்டப்பட்டுத் தமிழகத்திலே தமிழரசுக் கழகத்தின் சார்பில் ஆண்டு தோறும் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடச் செய்தேன். இந்தியத் தமிழகத்திலுள்ள புலவர் பெருமக்களையெல்லாம் அடிக்கடி இலங்கைக்கு அழைத்து, இலங்கைத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகப்படுத்தி வந்த பெருமை இவருக்குண்டு"
நன்றி : பேராசிரியர் நா. சுப்பிரமணியம் (1997 நவம்பர்) வெளியிட்ட
தமிழ்மறைக் காவலர்" கா.பொ.இரத்தினம்’

Page 24
வேலணைப் பெரியார்
வாழ்க சிறந்து
”உலகளந்தான் அன்பின் உளமளந்தான் ஈழ நிலமளந்தான் ஈன்ற நினைவால் - தலமளந்த ஒப்பிலாக் கா.பொ. ஒளிசேர் இரத்தினந்தான் முப்பால் குறள்போன்றோன் முன்"
"வள்ளுவம்போல் வையக வாழ்வு நெறி நூலுண்டோ? தெள்ளிய ஆய்ந்த திறமுண்டோ? உள்ளத்தை ஊக்கும் அறநூலும் உண்டோ? எனவினவித் தேக்கும் கவிநூல் சித்து"
"வாழிய கா.பொ. வளமார் கவிஅரசர் வாழிய அன்னார் வளராயுள் - வாழியவர் ஏரார்ந்த தொண்டு இரத்தினப் பேரறிஞர் சீரார்ந்து வாழ்க சிறந்து"
பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன்
"கடவுளுடைய வாக்குகள் இவை. முனிவர்களுடைய கூற்றுக்கள் இவை. இவற்றை ஆராயாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆராய்தற்கு முற்பட்டால், பொருத்தமற்றன என்று இகழ்ந்தால் நரகத்தில் அழுந்துவீர்கள்” என்று முழங்கிய நூல்கள் மலிந்த அக்காலத்தில் "உண்மைப் பொருளை ஆராய்ந்து பார்த்து அறிதல் வேண்டும். குருட்டுத் தனமாக எதையும் நம்புதல் கூடாது, யார் கூற்றானாலும் ஆராயாமல் ஏற்றுக்கொள்ளப்படாது" என்று பெரும் புரட்சி செய்தவர் வள்ளுவர் பெருமான்”
தமிழ்மறைக்காவலர்” கா.பொ. இரத்தினம்


Page 25