கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வயது பதினாறு

Page 1டடதற்து காரணம்‌ இருக்கிறது. அவற்றில்‌ உள்ள வாசிப்புத்‌ -

௭ படிப்பதற்கு நிறைய பொறுமை வேண்டும்‌. மடித்து,
னல்‌ இது நேரடியாக சொல்லப்பட்டு நவீனத்துக்குள்‌
ட டமக்கும்போது ஏதாவது ஒரு பயன்‌ கிடைக்கிறது.

௩௮னால்‌ அதைப்‌ பாதியிலே மடித்து வைத்துவிட்டு பிறகு
“5. ஓரேயடியாக உங்களை இழுத்து முடிவு வரைக்கும்‌
 பதர்கள்‌ கிடையாது. சிலருடைய கதைகள்‌ அல்ஜிப்ரா
வைத்ததுபோல தலையைப்‌ பிய்க்கத்தோன்றும்‌. இங்கே
போது வாழ்க்கையை ஒரு புது வெளிச்சத்தில்‌ பார்க்கிற

எழுத்தாளர்‌ ௮. முத்துலிங்கம்‌

-து மனப்பட்டறையில்‌ ஏற்பட்ட பாதிப்புக்கள்‌, தைப்புக்கள்‌,
-5, அழகிய மொழியில்‌ எம்முடன்‌ பேசுகின்றன.

க்கிய கலாவித்தகி பத்மா சோமகாந்தன்‌

்‌ பீரபலமான சட்டத்தரணி. ௧௬ அவருக்கு எப்படிக்‌
எச்‌ 5மா? ஆனால்‌ அது மட்டும்‌ போதுமா? நிறையவே

அதிபர்‌ பொ. கனகசபாபதி

வர்கள்‌, தமது சில படைப்புக்களில்‌ மருத்துவ மனைச்‌

சப்புக்களையும்‌ பின்புலமாக வைத்து, இலக்கியத்தில்‌ “

ன யாகத்‌ திகழ்பவர்‌. 'சட்டத்தரயி மனுவல்‌ யேசுதாசன்‌
. மீன்புலமாகக்‌ கொண்டு தமிழிலக்கியத்தில்‌ மற்றொரு
ன) அபிப்பிராயம்‌. ்‌

தமிழ்‌ஒளி நா. சோமகாந்தன்‌

(0 ப ரலல(8ரா. ரோமா

ஸகோமா5ரா

நல. 222

 
  
    
 
  
  
 

க்க

   

 

 


Page 2 

 

 


Page 3மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

 

- வயது பதினாறு

மனுவல்‌ ஜேசுதாசன்‌ -


Page 4வயது பதினாறு

 

வயது பதினாறு

மனுவல்‌ ஜேசுதாசன்‌

முதற்‌ பதிப்பு: பங்குனி 2007

பதிப்புரிமை: ஆசிரியர்‌
அச்சமைப்பு: ... ஆசிரியர்‌
அட்டை. அமைப்பு: குவாலிற்றி பிறின்ரிங்‌
அச்சகம்‌: குவாலிற்றி பிறின்ரிங்‌

416 281 6554

ஆசிரியரின்‌ வேறு ஆக்கம்‌:
90 நாட்களுள்‌ (நாவல்‌) - டிசம்பர்‌ 1999

விலை: கனேடிய $10.00

று்்ய 0 வ்ரலாய

11வபவ 465ப0ல5லா

ட௦14௦: 14ல்‌ 2007

ற பிரட்‌ அண

௫06 50: கபர்‌

வேள ட: பெவிநு ஈரா
ரா): பெலிந்‌ு உர்ற்ார

ப்ள 7பட்‌/௦2௦5 பு கபம்‌
90 1180/அ/ப! (4௦69) - ப௦௦௨ாம௪,1999

௦6: கோ. $ 10.00

80 0௦௭௦46 டர/6, 8ப16ீ 210
50810010ப0ர, 0. 1/1] 305
1: 416 444 8070

[5ட14: 0-9782676-0-5


Page 5மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

சமர்ப்பணம்‌

 

 

 

 

 

 

 

அன்பால்‌ தன்‌ பண்பால்‌
அழகுத்‌ தமிழால்‌

எனை ஈர்த்த

தமிழ்‌ஒளி நா. சோமகாந்தன்‌
அவர்கட்கு சமர்ப்பணம்‌

இவ்‌ வயது பதினாறு


Page 6வயது பதினாறு

 


Page 7மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

வாழ்த்துக்கவி

எனது நெஞ்சத்‌ தொளிர்‌ நண்பர்‌
இனியர்‌ சட்டத்‌ தரணிதிரு
மனுவல்‌ ஜேசு தாசன்‌ புகழ்‌
வையம்‌ போற்ற வாழியவே!

சட்டத்‌ துறையில்‌ பல பட்டம்‌
தாங்கும்‌ இவரே முத்தமிழில்‌
பட்டம்‌ பெறாத பண்டிதராம்‌
பணிவை அணியும்‌ பெருமையராம்‌.

நாட்டுக்‌ கூத்தில்‌ மிக வல்ல
நாவாந்‌ துறையின்‌ கலைப்‌ புதல்வன்‌
காட்டிக்‌ கனடா நாட்டினிலும்‌
கலைகள்‌ வளர்க்கும்‌ தமிழன்பன்‌.

வருமா னத்தைப்‌ பாராது

வாரி வழங்கித்‌ தமிழர்தம்‌

பெறுமா னத்தைக்‌ கனடாவில்‌
பிறங்கச்‌ செய்யும்‌ கொடைக்‌ கோமான்‌.

எழுத்துக்‌ கலையும்‌ எளிதாகும்‌
இவரின்‌ சிந்தனை வண்ணத்தில்‌
பழுத்த கதைகள்‌ நாடகங்கள்‌
பண்பை வளர்க்கும்‌ ஊடகங்கள்‌.


Page 8வயது பதினாறு

 

பி

தொண்ணூறு நாட்களுள்‌ எனும்நாவல்‌
சுவைத்திடத்‌ தந்தார்‌ எழுத்துலகம்‌
எண்ணூறு ஆயிரம்‌ என்றில்லை

( இவரோர்‌ இரத்தினப்‌ படைப்பாளி

மீண்டும்‌ ஆண்டூகள்‌ ஐந்தின்பின்‌
வயது பதினாறு தனைத்‌ தந்தார்‌
தூண்டும்‌ சிந்தனைச்‌ சிறுகதைகள்‌
சுமந்து வந்தாள்‌ வரவேற்போம்‌

பொழுதில்‌ லாத தொழிற்‌ பொறுப்பு
பொதுப்பணி நிறைந்த வாழ்க்கையிலும்‌
எழுத வேண்டும்‌ எனநினைக்கும்‌
இலக்கிய இதயம்‌ வாழியவே!

தொழிலால்‌ சட்டம்‌ துலக்குகிறார்‌
தொழுதே சமயம்‌ போற்றுகிறார்‌

எழுதித்‌ தமிழும்‌ வளர்க்கின்றார்‌

எங்கள்‌ மனுவல்‌ வாழியவே!

கவிநாயகம்‌ வி. கந்தவனம்‌


Page 9 

மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

வாழ்த்துச்‌ செய்தி

சட்டத்தரணி திரு. மனுவல்‌ யேசுதாசன்‌ அவர்கள்‌ வயந்த '
பதினாறு என்ற சிறுகதை தொகுதி வெளியிடூவதையிட்டூ ௦ம்‌
வானலை மன்றம்‌ மிக்க மகிழ்ச்சியடைகிறது. இவர்‌ 6100 வானலையில்‌
தமிழ்‌ மக்கள்‌ பயனடையும்‌ வகையில்‌ பல விடயங்களை முன்னெடுத்து
தனது சிறந்த கருத்துக்கள்‌ மூலம்‌ நற்பணி ஆற்றி வருகிறார்‌. இவரது
பணியைப்‌ பாராட்டியும்‌ இவரது வயது பதினாறு சிறுகதை தொகுதி
வெளியீடூ சிறப்புற நடைபெறவும்‌ வாழ்த்துகிறோம்‌.

அன்புடன்‌
கமலா சந்திரன்‌

சாட வானலை மன்றம்‌
கனடா
05.02.2007

|


Page 10வயது பதினாறு

 

என்‌ பார்வையில்‌ நூலாசிரியர்‌...

1995ல்‌ உலகத்‌ தமிழ்‌ பண்பாட்டுக்‌ கழகம்‌ கனடாவில்‌ தனது
ஆறாவது உலகத்‌ தமிழ்ப்‌ பண்பாட்டு மகாநாடூ நடத்திய சமயம்‌ அதில்‌
செயற்‌ குழுவினது நிர்வாகச்‌ செயலாளராக ஓடி ஓடிச்‌ செயலாற்றி
விழாவின்‌ பூரண வெற்றியில்‌ தன்‌ செயலாற்றலை நிலைநாட்டிய போது
அவரை வியந்த நான்‌ அவர்‌ தமிழ்‌ ஆர்வமிக்க சட்டத்தரணி மனுவல்‌
யேசுதாசன்‌ எனத்‌ தெரிந்து கொண்டேன்‌. அவரில்‌ ஒரு அக்கறை
ஏற்பட்டது.

1999ல்‌ அவரது முதல்‌ நாவலான “90 நாட்களுள்‌” வெளியீடு.
அவர்‌ வெறும்‌ சட்டத்தரணியல்ல சிறந்த கற்பனை வளமிக்க
படைப்பிலக்கிய வாதியாகவும்‌, புலம்‌ பெயர்‌ மக்கள்‌ புகுந்த நாட்டிலே
படூகின்ற அல்லலை மனிதாபிமானத்துடன்‌ நோக்கும்‌ பண்பாளராகவும்‌
கண்டேன்‌. என்னை அறியாமலே அவர்‌ மேல்‌ ஒரு ஈர்ப்பு வந்தது.

2001ல்‌ “தமிழர்‌ தகவல்‌” சஞ்சிகையின்‌ விருது வழங்கும்‌
ஆண்டுவிழா, அவர்‌ தலமை ஏற்றார்‌. அவரது இன்னொரு முகம்‌
பளிச்செனத்‌ தெரிந்தது. விழாவினை நடத்திய பாங்கும்‌, தலைமையுரையும்‌
அவர்‌ புலமையையும்‌ தலைமைத்துவப்‌ பண்பையும்‌ தெளிவாகக்‌
காட்டின. ஒரு மதிப்பு ஏற்பட்டது.

2003ல்‌ “உதயன்‌” பத்திரிகை தனது ஆண்டு விழாவினை
நடத்தியது. அன்றைய தினம்‌ இவர்‌ நெறிப்படுத்தி நடித்த “வேந்தனின்‌
சீற்றம்‌” எனும்‌ நாட்டுக்கூத்து மேடையேறியது. இவர்‌ ஆட்டத்தையும்‌,
பாட்டினையும்‌ பார்த்துக்‌ கொண்டிருந்த சிறப்பு விருந்தினராக விழாவினைச்‌
சிறப்பித்த வீரகேசரி வார இதழின்‌ ஆசிரியர்‌ தேவராஜ்‌ அவர்கள்‌-“இவர்‌
ஒரு தொழில்‌ முறைக்கலைஞர்‌ தானே? என வினவிய பொழுது” வர்‌
ஒரு புகழ்‌ பெற்ற சட்டத்தரணி எனக்‌ கூறினேன்‌. அவரது திறந்த வாய்‌

மூடச்‌ சிறிது நேரம்‌ எடூத்தது. அவர்‌ ஒரு பிறவிக்‌ கலைஞர்‌ என்பது
நான்‌ சொல்ல வேண்டியதில்லை. எனது வியப்பு ஆ..!

ப்பு

 


Page 11மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

2004ல்‌ எமது தாய்‌ நாட்டில்‌ சுனாமி எனும்‌ ஆழிப்‌ பேரலை
எற்படூத்திய அனர்த்தம்‌ கண்டு எம்மவருக்காக ஏதாயினும்‌ செய்ய
வேண்டும்‌ என்ற அவரது அவாவிற்கு சுனாமியால்‌ பாதிக்கப்பட்டோர்‌
புலம்‌ பெயர்வதற்கு கனடிய அரசு உதவவுள்ளது என்ற அறிவிப்பு மன
நிறைவு தந்தது. ஏறக்குறைய இரண்டு மாதங்கள்‌ சனிக்கிழமைகளில்‌
தனது நேரத்தைச்‌ செலவிட்டது மாத்திரமல்லாமல்‌ தனது நிறுவன
ஏனைய சட்டத்தரணிகளையும்‌, ஊழியர்களையும்‌ பாதித்த மக்களின்‌
உறவினர்களுக்கு வேண்டிய ஆலோசனைகள்‌, பத்திரம்‌ நிரப்புதல்‌,
உறுதிப்படுத்தல்‌ என அத்தனை தேவைகளையும்‌ பூர்த்தி செய்ய
உதவினார்‌. நானும்‌ இராமர்‌. அணைகட்டூகையில்‌ சிறு உதவி
செய்த அந்தச்‌ சிறு அணில்‌ போன்று இந்தப்‌ பரோபகாரிக்கு உதவ
முனைந்ததில்‌ மகிழ்வெய்துகிறேன்‌. அச்‌ சந்தர்ப்பம்‌ அவரினது
முழுமையான ஆளுமையைப்‌ பூரணமாகத்‌ தெரிந்து கொள்ளக்‌ கூடிய
நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. எப்பேர்ப்பட்ட மனிதர்‌!

010 வானலைகளில்‌ “மனுவல்‌ ஜேசுதாசனுடன்‌ மாதம்‌
ஒரு முறை” என்ற நிகழ்வின்‌ மூலமும்‌, 771 தொலைக்காட்சியில்‌
“கேளுங்கள்‌ தரப்படும்‌” போன்ற நிகழ்வுகளின்‌ மூலமும்‌ சிறந்த அரிய
கருத்துக்களை வழங்கி கனடிய தமிழ்‌ மக்கள்‌ மனதில்‌ பசுமையான
இடத்தைப்‌ பிடித்துள்ளார்‌. செயல்‌ வீரம்‌ அவர்‌ திறமை.

நல்ல குடும்பம்‌ ஒரு பல்கலைக்கழகம்‌ என்பார்கள்‌. இவரது
பல்கலைக்கழகத்தில்‌ மனைவி சிறந்த குடும்பத்‌ தலைவியாக
விளங்குவதுடன்‌ அவருக்கு உறுதுணையாக அலுவலக நிர்வாகத்தில்‌
உதவி வழங்க, ஒரு மகள்‌ மருத்துவக்‌ கல்வியும்‌, மற்றைய மகள்‌
சட்டக்‌ கல்வியும்‌ மூன்றாவது மகள்‌ வர்த்தக செயலாட்சிக்‌ கல்வியும்‌
கற்பதோடல்லாமல்‌ தந்தையின்‌ கலையார்வத்தைப்‌ போற்றும்‌,
பேணும்‌ நாடக, நடனக்‌ கலைஞர்களாகவும்‌ திகழ்கின்றனர்‌. மூவருமே
அரங்கேறியவர்கள்‌, அப்பாவின்‌ அரங்கங்களை அணிசெய்பவர்கள்‌.

இப்போ அவர்‌ சிறுகதை எழுத்தாளனாக இன்னொரு அவதாரம்‌

எடுத்துள்ளார்‌. அவரது “வயது பதினாறு” உங்கள்‌ கைகளில்‌
தவளுகிறது.

கலைக்கதிர்‌ கதிர்‌. துரைசிங்கம்‌


Page 12வயது பதினாறு

 

அணிந்துரை

சில ஆண்டூகளுக்கு முன்னர்‌ திரு. மனுவல்‌ யேசுதாசனுடைய
“90 நாட்களுள்‌” நாவல்‌ வெளிவந்தது. அதன்‌ அட்டைப்படம்‌ நூதனமாக
இருந்தது. எனக்கு மனுவல்‌ யேசுதாசன்‌ யார்‌ என்று அப்போது
தெரியாது. அந்த புத்தகத்தை காசு கொடூத்து வாங்கி சில மணி
நேரத்திலேயே ரசித்துப்‌ படித்து முடித்தேன்‌. நாவலைப்‌ பற்றி நான்‌
யோசித்து வைத்திருந்த வரையறையை எனக்கு மீண்டும்‌ பரிசோதனை
செய்யவேண்டிய கட்டாயம்‌ ஏற்பட்டது.

யேசுதாசனை தொலைபேசியில்‌ அழைத்து என்‌ கருத்தை
சொன்னேன்‌. வதிவிட உரிமை பெற்று ஒருவர்‌ கனடா வருவதற்கு ஒரு
காதலனோ, காதலியோ ஸ்பொன்சர்‌ செய்யமுடியும்‌. ஆனால்‌ அப்படி
வந்தவரை வரவழைத்தவர்‌ 90 நாட்களுக்குள்‌ மணமுடிக்கவேண்டும்‌.
அப்படி மணம்‌ செய்யாவிட்டால்‌ வந்தவருடைய கதி என்ன? இதுதான்‌
நாவலின்‌ சுருக்கம்‌. இதைப்‌ போல ஒரு நாவலை நான்‌ இதற்கு முன்னர்‌
படித்தது கிடையாது.

இப்பொழுது இவருடைய சிறுகதை தொகுதி ஒன்று
வெளிவருகிறது. தலைப்பு “வயது பதினாறு.” இதிலே உள்ள எட்டூக்‌
கதைகளில்‌ ஏழு கனடாவைப்‌ பின்புலமாகக்‌ கொண்டவை. மீதி ஒரு
கதை முற்றிலும்‌ இலங்கையில்‌ நடப்பதாக புனையப்பட்டது. இந்தத்‌
தொகுப்பை நான்‌ இரண்டு மணி நேரத்தில்‌ படித்து முடித்தேன்‌. ஒரு
கதையாவது அரைவாசியில்‌ ஒற்றையை மடித்து வைத்து பிறகு
தொடரவில்லை. வாசகருடைய ஆர்வத்தை இழுத்துப்‌ பிடிக்கும்‌
வகையிலேயே எல்லாக்‌ கதைகளும்‌ அமைந்து ஏதோ ஒரு வகையில்‌
மனதைத்‌ தொட்டன. அதிலும்‌ இரண்டு கதைகள்‌ என்னை வெகுவாகப்‌
பாதித்தன.

வயது பதினாறு என்று ஒரு கதை. ஓரு கணவன்‌ மனைவிக்கு
இரண்டூ பெண்பிள்ளைகள்‌. அவர்கள்‌ கனடாவுக்கு குடிபெயர்ந்தபோது

(0


Page 13மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

ஒருத்திக்கு வயது 8, மற்றவளுக்கு 5. எட்டு வருடங்கள்‌ அவர்கள்‌ .
கனடாவில்‌ சந்தோசமாக வாழ்க்கை நடத்தி குடியுரிமையும்‌
பெற்றுவிட்டார்கள்‌. ஓரு நாள்‌ தகப்பன்‌ அடித்து இம்சை செய்ததாக
911 க்கு பிள்ளைகள்‌ முறைப்பாடு கொடுத்ததில்‌ கணவனைப்‌
பொலிசார்‌ அழைத்துச்‌ சென்றுவிட்டனர்‌. திரும்பவும்‌ கணவன்‌ வீட்டுக்கு
வரக்கூடாதென்பது கோர்ட்டின்‌ உத்தரவு. நீதிமன்றத்தில்‌ கணவனும்‌,
மனைவியும்‌ எவ்வளவு மன்றாடியும்‌ அவர்கள்‌ பேச்சு எடுபடவில்லை.
பிள்ளைகளின்‌ சொல்லுக்குதான்‌ அங்கே மதிப்பு. ஒரு இடத்தில்‌
மூத்தவள்‌ பெற்றோரைப்‌ பார்த்து சொல்கிறாள்‌, “நான்‌ எங்கேயும்‌
போவன்‌, வருவன்‌. எனக்கு இப்பொழுது 16 வயது. நான்‌ யாரோடூம்‌
போவன்‌, யாரோடும்‌ படுப்பேன்‌. உங்களால்‌ ஒன்றும்‌ செய்யமுடியாது.”

கனடிய நீதி மன்றமும்‌, அதன்‌ சட்டமும்‌, உத்தரவும்‌ தகப்பனுக்கு
அதிர்ச்சியைக்‌ கொடுக்கிறது. நெஞ்சிலே போட்டு வளர்த்த அவருடைய
மகளுக்கு இப்பொழுதுதான்‌ பதினாறு வயது நிரம்பியிருக்கிறது. ஆனால்‌
அவளுடைய நெஞ்சம்‌ பூட்டப்பட்டுவிட்டது. அவர்‌ அதற்குள்‌ இனி
நுளைய முடியாது. ஏன்‌ நீதிமன்ற உத்தரவுப்படி 500 மீட்டர்‌ சுற்றுவட்ட
தூரத்துள்கூட அவர்‌ நுளைய முடியாது.

இதைப்போல இன்னொரு சட்ட நுணுக்கத்ததை வைத்து
புனைந்த கதைதான்‌ முன்னாள்‌ கணவன்‌ மனைவி. புதிதாக மணமுடித்த
ஒரு கணவன்‌ தன்‌ மனைவியை ஸ்பொன்சர்‌ செய்து கனடாவுக்கு
அழைக்கிறான்‌. மனைவிக்கு பிடிக்கும்‌ என்று நல்ல வசதிகள்‌ கொண்ட புது
வீட்டை கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில்‌ கட்டுகிறான்‌. அவர்களுக்குப்‌
பிள்ளை பிறந்த சில வருடங்களிலேயே தம்பதிகளுக்குள்‌ பிரச்சினை
உண்டாகிறது. மனைவி வேறொருத்தனை விரும்புவதால்‌ மணமுறிவு
ஏற்படுகிறது. மனைவி மேல்‌ வீட்டில்‌ வசிக்க கணவன்‌ நிலவறைக்குத்‌
தள்ளப்படுகிறான்‌. அவன்‌ மறுபடியும்‌ மணம்‌ செய்து புதுமனைவியை
ஸ்பொன்சர்‌ செய்ய முயற்சிக்கிறான்‌. இந்த நேரத்தில்‌ முன்னாள்‌
மனைவி தன்னை அவன்‌ கொலை பயமுறுத்தல்‌ செய்ததாக பொலிசில்‌
புகார்‌ கொடூக்கிறாள்‌. நீதிமன்றத்துள்‌ விசாரணைகள்‌ நுணுக்கமாகவும்‌,
சுவாரஸ்யமாகவும்‌ வர்ணிக்கப்படுூகின்றன. சொந்தமாகக்‌ கட்டிய வீட்டை
இழந்து அல்லல்‌ படூம்‌ ஒருவரின்‌ கதை இது. சூரியன்‌ மறைந்தபிறகும்‌
வெளிச்சம்‌ இருப்பதுபோல கதை முடிந்தபிறகும்‌ நெடுநேரம்‌ மனதைத்‌
தொட்டபடியே இருந்தது.

இந்தச்‌ சிறுகதைகளை நான்‌ மதிப்பதற்கு காரணம்‌
இருக்கிறது. அவற்றில்‌ உள்ள வாசிப்புத்தன்மை. இப்பொழுதெல்லாம்‌
சிறுகதைகளை படிப்பதற்கு நிறைய பொறுமை வேண்டூம்‌. மடித்து

0


Page 14வயது பதினாறு

 

மடித்து வசனங்கள்‌ எழுதப்பட்டிருக்கும்‌. ஆனால்‌ இது நேரடியாக
சொல்லப்பட்டு நவீனத்துக்குள்‌ அகப்பட்டு நசிபடாத நல்ல படைப்பு.
ஆகவே படிக்கும்போது ஏதாவது ஒரு பயன்‌ கிடைக்கிறது.

ஒரு கதையைப்‌ படிக்கத்‌ தொடங்கினால்‌ அதைப்‌ பாதியிலேயே
மடித்து வைத்துவிட்டு பிறகு படிக்கலாம்‌ என்று தள்ளிவைக்கத்‌
தோன்றாது. ஓரேயடியாக உங்களை இழுத்து முடிவு வரைக்கும்‌ கொண்டூ
செல்லும்‌. இது தவிர, கதைகளில்‌ புதிர்கள்‌ கிடையாது. சிலருடைய
கதைகள்‌ ஒரு அல்ஜிப்ரா கணிதத்தை தந்துவிட்டு விடையை
ஒளித்து வைத்ததுபோல தலையைப்‌ பிய்க்கத்தோன்றும்‌. இங்கே
அப்படியில்லை. இந்தக்‌ கதைகளைப்‌ படிக்கும்போது வாழ்கையை ஒரு
புது வெளிச்சத்தில்‌ பார்க்கிற உணர்வுதான்‌ ஏற்படும்‌.

மனுவல்‌ யேசுதாசன்‌ கனடாவில்‌ ஒரு பிரபலமான சட்டத்தரணி.
சட்ட அலுவலகம்‌ ஒன்றை நடத்தி வருபவர்‌. இந்தக்‌ கதைகள்‌ மூலம்‌
பணமோ, புகழோ சம்பாதிப்பது அவருடைய நோக்கமல்ல. அது
ஏற்கனவே அவரிடம்‌ இருக்கிறது. எதற்காக எழுதுகிறீர்கள்‌ என்று
அவரிடமே கேட்டேன்‌. “என்ன செய்வது ஒரு உந்தல்தான்‌. என்னால்‌
எழுதாமல்‌ இருக்க முடியவில்லை'' என்றார்‌.

இதுதான்‌ யேசுதாசன்‌. உண்மையான உள்மனத்‌ தூண்டலில்‌
பிறந்த இந்தக்‌ கதைகள்‌ என்னை மகிழ்வித்தது போலவே
வாசகர்களையும்‌ மகிழ்விக்கும்‌. இவர்‌ தொடர்ந்து எழுதவேண்டும்‌.
இவருக்கு என்‌ வாழ்த்துக்கள்‌.

அ. முத்துலிங்கம்‌
ரொறொன்ரோ.
16 யூன்‌ 2005

01


Page 15மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

அணிந்துரை

பொதுவாகவே படைப்பிலக்கியத்‌ துறையில்‌ கால்‌ பதிப்பவர்கள்‌
சிறுகதையில்‌ ஆரம்பித்தே நெடூங்கதைக்குப்‌ போவார்கள்‌. நண்பர்‌
மனுவல்‌ யேசுதாசன்‌ வித்தியாசமானவர்‌. அவர்‌ முதலில்‌ எழுதியது
நெடுங்கதை “90 நாட்களுள்‌”. அது அச்சேறி ஐந்து வருடங்கள்‌ ஆகி
விட்டன. இப்போ அவரது சிறுகதைத்‌ தொகுதி வெளி வருகிறது.
கால இடைவெளி நீளம்‌. காரணம்‌ அவர்‌ தொழில்‌ முறை எழுத்தாளர்‌
அல்ல. ஒருசமூக மருத்துவர்‌, சமூகநோயினைத்‌ தீர்க்க நன்‌ மருந்தாகப்‌
படைப்பிலக்கியத்தைக்‌ காண்பவர்‌.

ஓரு காலத்தில்‌ ஜதார்த்தமாகக்‌ கதை எழுதிச்‌ சாதனை
புரிந்தவர்‌ ஜெயகாந்தன்‌. “உங்களுக்குக்‌ கதை எழுதுவதற்கான ௧௫
எப்படிக்‌ கிடைக்கிறது” என அவரிடம்‌ கேட்டார்கள்‌. இங்கு கூலி
வேலை செய்கிறவர்கள்‌ மாலை நேரங்களில்‌ வந்து ஆங்காங்கே நடை
பெறுவதைச்‌ சொல்வார்கள்‌. அவற்றிலிருந்தே எனக்குக்‌ கதைக்கான ௧௫
கிடைக்கிறது” என்றார்‌ ஜெயகாந்தன்‌.

திருவாளர்‌ மனுவல்‌ யேசுதாசன்‌ பிரபலமான சட்டத்தரணி. (0)
அவருக்கு எப்படிக்‌ கிடைக்கிறது என்பது பற்றிச்‌ சொல்ல வேண்டுமா?
ஆனால்‌ அது மட்டும்‌ போதுமா? நிறையவே கற்பனை வளம்‌.

நான்‌ கீத்‌ மில்லரை வாசிக்கவில்லை. ஆனால்‌ அவர்‌ சொன்னதாக
நமது பெரும்‌ எழுத்தாளர்‌ அ. முத்துலிங்கம்‌ அவர்கள்‌ “மகாராஜாவின்‌
ரயில்‌ வண்டி” என்ற சிறுகதைத்‌ தொகுதியின்‌ முன்னுரையில்‌ கூறியுள்ளார்‌:
“உண்மையான கதைகளை எழுத வேண்டாம்‌, யாரும்‌ நம்பமாட்டார்கள்‌.
உண்மைத்‌ தன்மையான கதைகளை எழுதுங்கள்‌” என்றாராம்‌ கீத்‌

மில்லர்‌. யேசுதாசன்‌ கீத்‌ மில்லரை வாசித்துள்ளார்‌ போலத்‌ தெரிகிறது. '

அளவோடூ கற்பனையைக்‌ கலந்துள்ளமையால்‌ கதைகள்‌ உண்மைத்‌

தன்மை பெறுகின்றன. முழுதும்‌ உண்மையானவையாக அமைந்தால்‌ 4

யார்‌ நம்பப்‌ போகிறார்கள்‌.

281


Page 16வயது பதினாறு

 

ஒரு கதை தவிர மற்றைய ஏழு கதைகளும்‌ முழுமையாக
ரொறன்ரோவைக்‌ களமாக வைத்து வடிக்கப்பட்டவை, இந்த “வயது
பதினாறு”. களம்‌ முக்கியமல்ல, கருத்தே தான்‌ முக்கியம்‌. இதிலே
நான்‌ காணக்‌ கூடியதாக அமைவது புத்தகம்‌ ஊடாக நிலவி வரும்‌
இயல்பமைதியும்‌, ஆசிரியரின்‌ சமயப்‌ பற்றுமிக்க சிந்தனைப்‌ போக்கும்‌,
புலம்‌ பெயர்ந்த _ தமிழர்கள்‌ வாழ்‌ வாழ்வியல்‌ மாற்றங்கள்‌ அவர்‌ மனதில்‌
ஏற்படுத்திய குமைச்சல்களும்‌, _வடூக்களும்‌ ஆதங்கங்களுமே.

எங்குமே மிகையான சொற்பதங்கள்‌ பாவிப்பதில்லை என உறுதி
பூண்டூள்ளார்‌. பாமரத்‌ தமிழைப்‌ பக்குவமாகக்‌ கையாண்டூள்ளார்‌. எளிமை
அவர்‌ நோக்கு. சரளம்‌ அவர்‌ போக்கு. ஆகவே தான்‌ புதுமைத்துவம்‌
பின்‌ தள்ளப்‌ பட்டிருக்கிறது மரபு பேணப்‌ பட்டுள்ளது. அடைய
வேண்டியவர்களை அடைந்தால்தான்‌ நோக்கம்‌ ஈடேறும்‌.

திரு யேசுதாசன்‌ அவர்களது சிறப்பியல்பு இக்கதைகளில்‌
நிலவி வரும்‌ பாத்திர வார்ப்பினது சீரமை. ஒரு கதை மாத்திரம்‌
சுய சரிதப்‌ பாணியில்‌ எழுதப்பட்டுள்ளது. ஏனையவை யாவும்‌ மூன்றாம்‌
வேற்றுமையிலேயே கூறப்பட்டுள்ளன. எனவே, ஒவ்வொரு பாத்திரத்திலும்‌
அவர்தம்‌ மனநிலையினில்‌ நின்று (சோக) அவர்கள்‌ உணர்வுகளுக்கு
மதிப்புக்‌ கொடுத்து அங்கே உள்ள நியாயத்தை எடை போடூகின்ற
தனித்துவத்தை எம்மால்‌ காணமுடிகின்றது.

என்னைப்‌ பெரிதும்‌ ஈர்த்த கதை “என்‌ கண்மணி”. கண்மணி,
அவள்‌ பாத்திரம்‌ அற்புதமான படைப்பு. எதனையும்‌ யதார்த்தமாகச்‌
சிந்திக்கும்‌ பக்குவமான மனது அவளுக்கு.” தன்‌ கணவனைக்‌
கட்டியணைத்து தன்‌ நெஞ்சோடூ இறுகப்‌ பற்றி அவனது காதுகளில்‌,
“எனக்கு எல்லாம்‌ தெரியும்‌” நான்‌ உம்மை ஏற்றுக்‌ கொள்கிறேன்‌. ஜு
லியாவை ஏற்றுக்‌ கொள்கிறேன்‌” “நமது குழந்தை பிறிஜெட்டை ஏற்றுக்‌
கொள்கிறேன்‌” என அன்பாகக்‌ கூறினாள்‌.

பிறிஜெட்டை “நம்‌ குழந்தை” என கண்மணி அழைப்பதற்கு
அவள்‌ மனதில்‌ எத்தனை பக்குவம்‌ வேண்டும்‌. அங்கே பெண்மை
பெருமையுடன்‌ நிமிர்ந்து நிற்கிறதை ஆசிரியர்‌ காட்டியுள்ளார்‌.

“கலாசாரம்‌, பண்பாடு, சமயக்‌ கட்டுப்பாடு என்பவை எங்களை
மட்டும்‌ சில சமயங்களில்‌ பாழாக்கவில்லை. மேல்‌ நாட்டவரின்‌
வாழ்க்கையையும்‌ சில சமயங்களில்‌ பாழாக்குகிறது என நினைத்துத்‌
தான்‌ இந்த ஒழுங்கினைச்‌ செய்தனான்‌”. நான்‌ ஏதும்‌ பிழை
செய்திருந்தால்‌ தயவு செய்து என்னை மன்னியும்‌!.. எனக்கு என்ன

2014


Page 17மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

தண்டனை வேண்டுமென்றாலும்‌ கொடும்‌. ஆனால்‌ என்னை நம்பி
வந்த இவர்களின்‌ மனதைப்‌ புண்படுத்தாதேயும்‌.” எனக்‌ கண்மணி
வாயிலாக ஆசிரியர்‌ கூறுவது வெறும்‌ வாதத்துக்கு மட்டுமே அன்றி
உண்மையில்‌ எமது கலாசாரத்தின்‌ உயர்வையும்‌, சமய வாழ்வின்‌
மகிமையையும்‌ இதே கதையில்‌ பல இடங்களிலும்‌ அவர்‌ பேணி
நிற்கிறதைக்‌ காணமுடிகிறது. பொதுவான விழுமியங்கள்‌ எல்லோருக்கும்‌
ஒன்றே. இனத்துக்கு இனம்‌ வேறுபடூம்‌ என்பது வெறும்‌ மாயை. ஆசிரியர்‌
உலகளாவிய பொது விழுமியங்களின்‌ உயர்வை ஜுலியா எனும்‌
ஐறிஸ்‌ பெணமூலம்‌ உணர்த்துகிறார்‌. கத்தோலிக்க மதத்தில்‌ உள்ள
அதீத நம்பிக்கை காரணமாக, திருமணமாகாமலே கருவுற்றிருந்த ஜு
லியா, கருவைச்‌ சிதைக்கவில்லை. பெற்றோர்‌ விரும்பாத காரணத்தால்‌
நாதனை மணக்கவும்‌ மனம்‌ ஒப்பவில்லை. உள்ளத்தை ஒருவனுக்கும்‌
உடலை இன்னொருவனுக்கும்‌ கொடுக்கும்‌ மனைவியாக விரும்பவில்லை.
நாதனை தன்‌ மனதில்‌ வைத்துப்‌ பூசிக்கத்‌ தவறவில்லை. அவன்‌ ஈந்த
செல்வத்துடன்‌ தன்‌ பெற்றோர்களை விட்டூ நீங்கி ஒரு தவ வாழ்க்கை
வாழ்ந்து கொண்டிருக்கிறாள்‌, இன்று வரை என்றால்‌, அவள்‌ உள்ளத்தின்‌
உயர்வு கண்மணியினதிலும்‌ குறைந்ததாக இருக்க முடியாதல்லவா.

நாதனை மானசீகமாக தன்மனத்திலே வளர்த்த காதலாகட்டூம்‌,
அவன்‌ திருமணத்தின்‌ பின்னரும்‌ அவன்‌ தனது காம லீலைகளில்‌
ஈடுபட்டதை மன்னிக்கும்‌ பெருமனதிலாகட்டூம்‌, அவனது முன்னைய காதலி
ஜுலியாவுடன்‌ ஒரு பிள்ளை உண்டாக்குமளவுக்கு சென்றுள்ளதை
அறிந்தும்‌ நிலைகுலையாத மனத்‌ திண்மத்திலாகட்டூம்‌ ஒரு ஆதர்சப்‌
பெண்ணாக கண்மணியைப்‌ படைத்த ஆசிரியர்‌ ஏனோ அவள்‌ சிறுவயதில்‌
பாலியல்‌ வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாக ஒரு சிறு மாசு பூசிவிட்டார்‌.
அக்‌ கரும்‌ புள்ளியைத்‌ தவிர்த்திருக்கலாம்‌ என்பது என்‌ கருத்து.

அந்த ஜுலியா பாத்திரம்‌ கூட நன்றாகச்‌ செதுக்கப்பட்ட பாத்திரம்‌.
மேலைத்தேயப்‌ பெண்கள்‌ என்றதும்‌ நம்மவர்‌ பார்க்கின்ற பார்வையே
வேறு. ஆசிரியரின்‌ பார்வை அசர வைக்கிறது. மதத்தில்‌ அவருக்கு
உள்ள ஆழ்ந்த நம்பிக்கையை அவள்‌ மூலம்‌ சொல்வதைக்‌ கேளுங்கள்‌.
“நாங்கள்‌ கத்தோலிக்கர்கள்‌. அயர்லாந்து கலாசாரத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌.
பெற்றோர்களின்‌ சம்மதம்‌, அனுசரணை, ஆசீர்வாதமின்றி எமது திருமண
முடிவை எடுப்பதில்லை.'' நல்ல விழுமியங்களுக்கு கிழக்கு மேற்கு என்ற
பேதமில்லை என காட்டியுள்ளார்‌.

“முன்னாள்‌ கணவன்‌ - மனைவி” புகலிடத்தில்‌ குடும்ப
வாழ்வில்‌ ஏற்படுகின்ற சோகத்திற்கு யார்‌ பொறுப்பாளி என சுயசரித

வகையில்‌ எழுதப்பட்ட நவீனத்தில்‌ எண்ண வைக்கிறார்‌. குடூம்ப

704


Page 18வயது பதினாறு

 

வீழ்ச்சிக்குக்‌ காரணமாய்‌ அமையும்‌ மனவிரக்தி ஏன்‌ ஏற்படவேண்டும்‌?
கதை நாயகனே சொல்கிறான்‌. தனது ஆரம்ப குடும்ப வாழ்க்கையில்‌
பணத்தை முன்வைத்து அல்லும்‌ பகலும்‌ உழைத்து மனைவியைப்‌
புறக்கணத்ததாலா? அவள்‌ எதிர்பார்த்த குடும்ப சுகத்தை முற்றாகவே
கொடுக்கத்‌ தவறியதாலா? உடன்‌ வேலை செய்த கல்வி அறிவில்லா ரவி
தன்னை இம்சைப்‌ படூத்தியது போன்று தனது நண்பர்கள்‌ முன்னிலையில்‌
அவளைத்‌ தாழ்த்தியதாலா அல்லது அவளது உணர்வுகளை மதிக்க
மறந்ததாலா? பணம்‌ சம்பாதிக்கும்‌ வேகத்தில்‌ அவளையும்‌ வேலைக்கு
அனுப்பியதாலா? தனது காம இச்சைக்காக தரம்கெட்ட பாலியல்‌
படங்களை அவளுக்கு அறிமுகம்‌ செய்து விட்டதாலா? தன்‌ மனைவி
தனது நண்பன்‌ ஒருவனுடன்‌ கள்ளக்காதலுற்று அதன்‌ விளைவாக
பிள்ளை ஒன்றையும்‌ பெற்ற துரோகச்‌ செயலுக்குக்‌ கூட, தான்‌ விட்ட
தவறுதான்‌ காரணமாயிருக்கலாமோ என சிந்திக்கிறான்‌ நாயகன்‌. இது
உண்மையிலேயே புகலிட வாழ்க்கையால்‌ குடும்ப வாழ்க்கைக்கு ஏற்ற
பின்னடைவு தான்‌ என்பதில்‌ சிறிதும்‌ ஐயம்‌ இல்லை.

“வயது பதினாறு” புகலிட நாட்டிலே பெற்றோருக்கும்‌
பிள்ளைகளுக்கும்‌ ஏற்படுகின்ற பிணக்கு பெரிய பிரமாணம்‌ எடூப்பதற்கான
காரண காரியங்களை ஆராய்கிறது. நாங்கள்‌ அங்காலயும்‌ இல்லை,
இங்காலயுமில்லை, என அங்கலாய்த்தது, இங்கு வந்தது தவறோ என
எண்ணிய பெண்‌ பிள்ளைகளின்‌ மனப்‌ பாங்கிலே இந்நாட்டு கலாசாரப்‌
போக்கு, குந்தி அவர்களை ஆட்டிவைப்பதற்குரிய காரணத்தை உணர்வு
பூர்வமாக ஆராய்கிறது. ஆசிரியர்‌ பாமரத்‌ தமிழிலே அதனைச்‌ சொல்லும்‌
விதம்‌, “அது சரி.. அதுக்கெல்லாம்‌ என்ர பிள்ளைகள்‌ காரணமில்லை,
இந்தப்‌ பள்ளிக்‌ கூடம்‌, பள்ளிக்‌ கூடத்தில்‌ படிப்பிக்கின்ற ஆசிரியர்‌,
பிள்ளைகளை வழி நடத்துதற்காக நியமிக்கப்‌ பட்ட ஆலோசகர்கள்‌..
இவர்கள்‌ தான்‌ காரணம்‌!. அதோட எங்கட சமூகத்தைச்‌ சேர்ந்த காவாலிக்‌
கூட்டங்கள்‌... அந்த இளம்‌ பொடியங்கள்‌... தாங்கள்‌ தறுதலையாகத்‌
திரியிறதுக்கு... தங்கட குடும்பங்களையும்‌ பிரித்து... பாருங்கள்‌ இந்த
ஊதாரிகளாகத்‌ திரிகின்ற தறுதலைப்‌ பொடியங்கள்‌ செய்கின்ற முதல்‌
வேலை தங்கட தாயையும்‌ தகப்பனையும்‌ பிரிக்கிறது... அப்பதானே
அவையள்‌ காவாலித்‌ தனம்‌ பண்ணலாம்‌. அதுக்குப்‌ பிறகு அப்பாவிப்‌
பிள்ளையளை, என்ர பிள்ளைகளைப்‌ போன்ற பிள்ளைகளையும்‌,
தங்களைப்‌ போலத்‌ திரியிறதுக்காக தாய்‌ தகப்பனைப்‌ பிரியச்‌ செய்து...
இது தான்‌ இண்டைக்கு எனக்கும்‌ நடந்திருக்கு ............

இந்தப்‌ பள்ளிக்‌ கூடத்தில்‌ ஆசிரியர்களையும்‌ ஆலோசகர்களைப்‌
பற்றியும்‌ சொன்னான்‌... இவையள்‌ எனக்கு முன்னால்‌ என்ர பிள்ளைக்குச்‌

சொல்லினம்‌, “ நீங்க அப்பா அம்மா சொல்லுறதைக்‌ கேட்க வேண்டிய

0


Page 19மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

அவசியமில்லை. உமக்கு இப்போ 16 வயது... நீர்‌ நினைத்ததை,
விரும்பியதைச்‌ செய்யலாம்‌, அரசாங்க உதவிப்‌ பணம்‌ பெறலாம்‌,
யாருடனும்‌ போகலாம்‌, வரலாம்‌, உடலுறவு வைக்கலாம்‌. பெற்றோர்களுடன்‌
இருக்க வேண்டிய அவசியமில்லை”... 16 வயது வந்தால்‌ இதெல்லாம்‌
செய்ய இங்கே சட்டம்‌ அனுமதிக்குதாம்‌. இருந்தாலும்‌ இவர்கள்‌ எல்லாம்‌
இப்படிப்‌ பிள்ளைகளுக்குச்‌ சொல்லிக்‌ கொடுக்கலாமா?” எம்மில்‌ பல
பெற்றோர்களின்‌ மனதில்‌ உள்ள குமுறலை ஜெகதீஸ்‌ வாயிலாக ஆசிரியர்‌
துல்லியமாகச்‌ சொல்கிறார்‌ மனது வெதும்புகிறது. இறுதியில்‌ கதையை
முடிக்கின்ற போது ஜெகதீசைப்‌ பற்றி “சொந்த நாடிழந்தவன்‌ புலம்‌
பெயர்ந்த நாட்டில்‌ வீட்டையும்‌ இழந்து விட்டான்‌” எனும்‌ போது நம்மில்‌
பலரது நிலையினை ஆசிரியர்‌ தத்ரூபமாக எடூத்துக்‌ காட்டியுள்ளார்‌.
மனம்‌ மறுகுகிறது.

“சந்திப்பு” தாய்‌ தந்தையரின்‌ பிரிவின்‌ தாக்கம்‌ பிள்ளையில்‌
எத்தனை மனப்‌ பேதலிப்பைக்‌ கொண்டு. வரும்‌ எனக்‌ காட்டுகிறார்‌.
சிறப்பாக அப்பிள்ளை பதின்‌ வயதினராயிருந்தால்‌ யெளவனத்தின்‌
ஆரம்பக்‌ கட்டங்களிலே மனத்தில்‌ ஏற்படுகின்ற போராட்டங்களுக்கு, அந்த
வயது மனதில்‌ பல முரண்பாடுகள்‌ ஏற்படுகின்ற வயது, ஆதரவுக்‌ கரம்‌
நீட்ட வேண்டிய தாயும்‌ தந்தையும்‌ பிரிந்து நின்றால்‌ அது பிள்ளையை
எத்தனை பாதிக்கும்‌. பிரிந்தன்‌ பாடசாலையில்‌ கெட்டிக்கார மாணவனாக
இருந்தவன்‌, இப்போ படிப்பில்‌ அசிரத்தை காட்டூகிறான்‌. ஒழுங்காக
வீட்டிற்கு நேரத்திற்கு வந்தவன்‌, இப்போ ஏனைய விடலைப்‌ பருவத்து
மாணவர்களுடன்‌ பொழுதைக்‌ கழித்து விட்டு காலதாமதமாய்‌ வீடூ ஏகிறான்‌.
தாயினை எதிர்த்துப்‌ பேசுகிறான்‌ கண்டிக்கப்‌ போனால்‌ பொலிசிடம்‌
போவேன்‌, நீ அப்பாவுக்குச்‌ செய்ததை நான்‌ உனக்குச்‌ செய்வேன்‌
எனச்‌ சவால்‌ விடுகிறான்‌, பயமுறுத்துகிறான்‌. பிரிந்தனுடைய போக்கு
தாமிராவின்‌ பெற்ற மனத்தில்‌ பெரும்‌ கிலேசத்தை ஏற்படுத்துகிறது. தான்‌
அவசரப்பட்டு தனது தாய்‌ தந்‌ைத, சகோதரர்‌ வாக்கினைக்‌ கேட்டூத்‌ தவறு
செய்து விட்டேனோ என எண்ண வைக்கிறது. ஆறு வருடங்களாக அவள்‌
மன்னிப்புக்காகத்‌ காத்திருந்த மகேசு, தன்னிடம்‌ பலமுறை மன்னிப்புக்‌
கேட்டும்‌ சற்றும்‌ தளராத மனம்‌ இப்போ பிரிந்தனின்‌ நடத்தை கண்டூ
தளருகிறது. மகேசு தவறொன்றும பெரிதாக இழைக்கவில்லையே, நான்‌
ஏன்‌ அவருடன்‌ மீண்டும்‌ சேர்ந்து வாழலாகாது என எண்ண வைக்கிறது.
ஆனால்‌ அது காலம்‌ கடந்த ஞானம்‌ ஆகி விட்டது. வித்தியாசமான
முடிவு.

“நம்ப முடியவில்லை” மனைவியை இழந்த பின்னரும்‌ தனது
இரு பெண்பிள்ளைகளின்‌ நல்வாழ்க்கையே தனது குறிக்கோளாக வாழும்‌

சிவராசா தனது இரண்டாவது மகளின்‌ வாழ்வில்‌ ஏற்பட்ட அவலத்தை

0441


Page 20வயது பதினாறு

 

நினைத்துத்‌ தனக்கு நிம்மதியை இனி சாவேதான்‌ தரமுடியும்‌ என்ற
விரக்தியின்‌ எல்லையில்‌ நிற்பது தான்‌ கதை. புலம்‌ பெயர்‌ வாழ்க்கை
சிலருக்குத்‌ தறிகெட்டு போகத்‌ தருணம்‌ அமைத்துக்‌ கொடுக்கிறது.
சில பெண்களின்‌ சினேகம்‌ பாலியல்‌ வரை கூடச்‌ செல்கிறது. பின்னர்‌
வேறொருவரை மணம்‌ முடிக்கையில்‌ பிரச்சனை விஸ்வரூபம்‌ எடூப்பது
தான்‌ கதை. எமது கலாச்சாரப்‌ பின்னணியில்‌ வாழ்ந்து பழக்கப்பட்ட
பழைய மனுசன்‌ சிவராசாவால்‌ இதனை எப்படித்‌ தாங்கிக்‌ கொள்ள
முடியும்‌.

“மருமகள்‌” சற்று வித்தியாசமான கற்பனை. அங்கேயும்‌
புலப்பெயர்வின்‌ பாதிப்பு உள்ளது, “ஸ்பொன்சரை” அங்கீகாரம்‌
செய்வதற்கு எடூக்கப்படும்‌ அசாதாரணமான நீண்ட காலம்‌, காரணம்‌
என்றாலும்‌ கூட கதையின்‌ எதிர்பார்காத முடிவினால்‌, இதற்கு என்ன
காரணம்‌ என வாசகர்களையே ஊகிக்குமாறு விட்டூ்ள்ளரமை ஒரு
வேறுபாடான உத்திகை. தர்சி எனும்‌ கதாபாத்திரம கனடா வருவதற்கு
ஏன்‌ மறுத்தாள்‌, வாசகர்களையே அதனை ஊகிக்க விட்டூ விட்டார்‌.
முகுந்தன்‌ தன்னுடைய பெற்றோர்‌ மேல்‌ வைத்த பாசம்‌ மிக அழகுறச்‌
சித்தரிக்கப்‌ பட்டுள்ளது.

“நினைவெல்லாம்‌” எனும்‌ கதையின்‌ ஒரு பகுதியில்‌ கொழும்புப்‌
பல்கலைக்‌ கழகத்தில்‌ நடந்த “றாக்கிங்‌” பற்றிக்‌ கூறியுள்ளார்‌.
மாணவர்களின்‌ “சொல்‌அகராதி” சற்று வித்தியாசமானது என்பதையும்‌
எடூத்துக்காட்டத்‌ தவறவில்லை. அத்தகைய “றாக்கிங்‌'” தான்‌ மனோவுக்கும்‌
தேவிக்குமிடையே காதலைக்‌ கனிய வைத்தது. ஆனால்‌ கனடாவில்‌
வசிக்கும்‌ அவனுடன்‌ அவளையும்‌ பிள்ளைகளையும்‌ சேர்த்து வைப்பதில்‌
கனடா குடிவரவு திணைக்களம்‌ காட்டிய அசமந்த நிலை எத்தனை
மன விரக்தியைத்‌ தந்தது. அதே சமயம்‌ அங்கேயுள்ள போர்க்காலச்‌
சூழல்‌ வல்லூறுகள்‌ சிலவற்றின்‌ காமக்‌ கண்களையும்‌ திறக்க தனியே
ஊரில்‌ உள்ள பெண்களின்‌ கதி? எதனையும்‌ நம்மால்‌ சாதிக்க முடியும்‌
என்ற மனத்‌ திண்மத்துடன்‌ நின்று வெற்றி காண முயன்ற தேவி வீரத்‌
தமிழச்சியே தான்‌.

“நிராகரிப்பு” வித்தியாசமான படைப்பு. அருள்‌ எனும்‌ பண்புடைய
சமூக விளிப்புடைய இளைஞன்‌ கிராமத்தைச்‌ சீர்திருத்த முனைகின்ற
பொழுது அங்கே உள்ள பிற்போக்கு வாதிகளால்‌ அவனுக்கு ஏற்படுகின்ற
எதிர்ப்புக்கள்‌ அவன்‌ மனநிலையில்‌ மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
கொள்கைப்‌ பிடிப்பிலே விட்டுக்‌ கொடுக்கும்‌ எண்ணம்‌ அவனிடமில்லை.
“இறைவன்‌ கொடுப்பதில்‌ வள்ளல்‌. உண்மைச்‌ சீடன்‌ அன்புச்‌ சேவையில்‌
இன்பம்‌ காண்பான்‌” என்கிற நற்செய்தியைத்‌ தன்‌ வாழ்வின்‌ இலட்சியமாக்‌

0111


Page 21மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

கொண்ட இவனுக்குச்‌ சோதனை வருகிறது. அமலா தனது வீட்டை
விட்டூ வந்து அவனிடம்‌ அடைக்கலம்‌ கோருகிறாள்‌. தனது அக்காவின்‌
செல்வத்துடன்‌ தனது அக்கா ஒரு குழந்தையை ஈன்று கொடுத்துவிட்டூ
இறையடி சேர அவளது குடிகாரக்‌ கணவன்‌ அவளைத்‌ தனக்கு
இரண்டாம்‌ தாரமாக கட்டித்‌ தருமாறு வற்புறுத்துகிறான்‌. சமூகமும்‌ அவன்‌
சார்பாக நிற்க அமலாவின்‌ பெற்றோரால்‌ ஒன்றும்‌ செய்ய முடியவில்லை.
அடைக்கலம்‌ தேடிவந்த அமலாவிடம்‌ அருள்‌ கூறும்‌ வார்த்தை எத்தகைய
பெருமகனிடமிருந்து வரமுடியும்‌. அவன்‌ மிக, மிக உயர்ந்து நிற்கிறான்‌.

“அமலா புறப்படு... நாம்‌ இந்த ஊரை விட்டே போய்விடுவோம்‌...
நான்‌ உன்னைப்‌ படிக்க வைக்கிறேன்‌... பட்டதாரியாக்கிறேன்‌. இந்தப்‌
பிள்ளையைத்‌ தத்தெடுூக்கின்றன்‌'”. அருள்‌ உண்மையான மனிதன்‌.

புலப்பெயர்வின்‌ ஒரு பக்கத்தை மாத்திரம்தான்‌ ஆசிரியர்‌
கவனத்தில்‌ கொண்டுள்ளார்‌ என்பதை மாத்திரமே இத்தொகுப்பில்‌
உள்ள குறையாகச்‌ சொல்வேன்‌. அவரது கதாபாத்திரங்கள்‌ பலர்‌
தமது அல்லலுக்கு “சாவே முடிவு” எனக்கூறுகிறார்கள்‌. இந்தத்‌ துன்ப
இயற்கைக்‌ கோட்பாடு (06581/1485) எம்மவர்‌ உள்ளத்தில்‌ இருந்து
அறவே போக வேண்டும்‌.

ஆசிரியரின்‌ மனதிலே உள்ள ஆதங்கங்கள்‌ ஏக்கங்களுக்கு
வடிகாலாய்‌ அமைந்தவை இக்‌ கதைகள்‌. எனவே அவரது அடுத்த தொகுதி
நிச்சயமாகப்‌ புலப்‌ பெயர்வினால்‌ ஏற்பட்ட அனுகூல விளைவுகளைப்‌
புலப்படூத்துபவையாக அமையும்‌ என்ற நம்பிக்கை எனக்குண்டு. அவர்‌
ஒரு சமூக வைத்தியர்‌ என்றோம்‌. இக்கதை ஒரு நோயற்ற சமூகத்தை
உருவாக்குமாயின்‌ அடூத்த தொகுதி நான்‌ கூறிய படி அமையும்‌ என்பதில்‌
ஐயமில்லை. அவரது எண்ணம்‌ ஈடேற வாழ்த்து. நன்றி

அதிபர்‌ பொ. கனகசபாபதி - கனடா

20%


Page 22வயது பதினாறு

 

வாழ்த்துரை

இந்நூலின்‌ ஆசிரியர்‌ தொழில்ரீதியாக, இயந்திரகதியிலும்‌
வாழ்க்கை ஓட்டத்தின்‌ வீச்சிலும்‌ சுற்றிச்‌ சுழன்று அவதியுறும்‌ மக்களின்‌
நிதர்சனமான ஒளிவுமறைவற்ற உள்ளத்து உணர்வுகளையும்‌ அவற்றின்‌
தாக்கங்களையும்‌ உணர்வோடும்‌ உண்மையோடும்‌ ஒப்பிக்கும்‌
வாசகங்களைக்‌ காதாரக்கேட்கும்‌ வாய்ப்பைக்‌ கொண்டவர்‌. இத்தகைய
அவசங்களையெல்லாம்‌ அவர்களை அற்றுப்‌ படூத்துவதற்கான
தேவைக்காக அவர்‌ காதுகொடுத்தாலும்‌, பல சம்பவங்கள்‌ அவர்‌
செவியூடாக நுளைந்து இதயத்தில்‌ தைத்து வலியையேற்றும்‌ பாரிய
நோவை அவரால்‌ பொறுத்துக்‌ கொள்ள முடியாத வேளைகளும்‌ உண்டு.
நோவைப்‌ போக்க மருத்துவர்‌ மருந்து ஊசியேற்றிக்‌ குணமாக்குவது போல
அன்பர்‌ யேசுதாசன்‌ அவர்களும்‌ 'பேனா' ஊசிமூலம்‌ தாம்‌ உணர்ந்து
கொண்ட மக்களின்‌ வலிகளையெல்லாம்‌, தனது உள்ளத்திலே தைத்து
ரணத்தை ஏற்படுத்திய பதிவுகளுக்கெல்லாம்‌ இலக்கிய வடிவம்‌
கொடுத்து சிறுகதைகளாக வடித்து தனக்கு அமைதியைத்‌ தேடூம்‌
வேளையில்‌, ஏனையவரும்‌ அவற்றை உணரும்படி நூலாக்கி நம்‌ முன்‌
படைத்துள்ளார்‌.

வாழ்வின்‌ தொழில்‌ மூலமாக அவரது மனப்பட்டறையில்‌ ஏற்பட்ட
பாதிப்புக்கள்‌, தைப்புக்கள்‌, பதிவுகள்‌, தாக்கங்கள்‌, மனப்பாரங்கள்‌
அவரது அழகிய மொழியில்‌ எம்முடன்‌ பேசுகிறன.

அவரது முதலாவது தொகுப்பான “வயது பதினாறு” என்ற
இச்சிறுகதைத்‌ தொகுதியோடுூ மேன்மேலும்‌ செப்பனிடப்பட்ட நல்ல
சிறுகதைத்‌ தொகுதிகளை ஆசிரியர்‌ வழங்கித்‌ தமிழுக்கு வளம்‌
சேர்க்கவேண்டுமென வாழ்த்துவதில்‌ பெரு மகிழ்ச்சியடைகிறேன்‌.
வணக்கம்‌.
இலக்கிய கலாவித்தகி பத்மா சோமகாந்தன்‌
(0/1/1 அன்டேசன்‌ தொடர்மாடி

பாக்‌ றோட்‌, கொழும்பு 05
ம்ரீலங்கா

70%


Page 23மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

என்னுரை

எனது முதல்‌ முயற்சியான “90 நாட்களுள்‌” - நாவல்‌
1999ம்‌ ஆண்டூ மார்கழிமாதம்‌ 19ம்‌ திகதி வெளியிடப்பட்டது. சென்ற
நூற்றாண்டில்‌ வெளியிடப்பட்ட கடைசி நூல்‌ எனக்‌ கருதப்படுகிறது.

“வயது பதினாறு” எனும்‌ சிறுகதைத்‌ தொகுதியான எனது
இரண்டாவது முயற்சி “90 நாட்களுள்‌” வெளியிடப்பட்டு ஐந்து
வருடங்களின்‌ பின்‌ வெளியிடப்படுகிறது. இத்தொகுதியிலுள்ள
கதைகளை ஐந்து வருடகாலமாக எழுதியுள்ளேன்‌!

இத்தொகுதில்‌ பிரசுர ம்‌. ஒவ்வொரு கதையின்‌ ௧௫௬
உள்வாங்கப்பட்ட விதம்‌, ஒங்வெட' தையும்‌ எவ்விடத்தில்‌, எந்த
சூழ்நிலையில்‌ எழுதப்பட்டது “என்பூதை எண்ணும்‌ பொழுது எனக்கு
வினோதமாகவுள்ளது. இக்கதைகள்‌ யாவும்‌ ஒன்ராறியோ மாகாண- பல
பாகங்களிலுமுள்ள நீதிமன்றங்களில்‌ மக்களும்‌, சட்டத்தரணிகளும்‌
தங்கியிருக்கும்‌ பகுதிகளில்‌ வழக்குகளுக்காக காத்திருந்த சமயங்களில்‌
எழுதப்பட்டவை.

  

| ஈழத்‌ தமிழ்க்‌ கனடிய சமூகத்தில்‌ காலா காலம்‌ வியாபிக்கும்‌ '.
ச க அனர்த்தங்களையும்‌, அவை ஏற்படுத்தும்‌ சட்டவிளைவுகளையும்‌
க லத்துவமாகப்‌: படைத்து, படிப்போர்‌ _ பமனதில்‌ பயனுள்ள சமூக

வஹமமனானாபிரவஷகைவையவகலுவலைமைக லப வுவவவ கையக

   

க வவ வவனள ன ட ப யயை பெயமகவுவக்க வகைகளா?

சந்திப்பு”. “வயது பதினாறு” சுமார்‌ 2000ம்‌ ஆண்டளவில்‌
எழுதப்பட்டவை. அக்காலகட்டத்தின்‌ முன்‌ தமிழ்‌ சமூகத்தைச்‌ சார்ந்த
குடும்பமொன்றின்‌ விவகாரத்தில்‌ பொலிசார்‌ தலையிடூவது என்பது
ஒரு புதினம்‌. ஆனால்‌, 2000ம்‌ ஆண்டளவிலும்‌ அதைப்‌ பின்தொடர்ந்த
காலங்களிலும்‌ கனடாவில்‌ தமிழ்‌ சமூகம்‌ சார்ந்த குடும்ப வன்முறை
விவகாரங்களில்‌ பொலிசார்‌ ஈடுூபடூவது நாடறிந்த விடயம்‌, நாளாந்தம்‌
நடைபெறும்‌ சம்பவம்‌. வீட்டுக்கு வீடு வாசற்படி என்றாகிவிட்டது.
“முன்னாள்‌ மனைவி” கதையில்‌ நிகழ்ந்த சம்பவங்களும்‌ இன்று
மலிந்துபோய்விட்டன என கவலையுடன்‌ கூறவேண்டியுள்ளது.

வி


Page 24வயது பதினாறு

 

தமிழ்‌ தொடர்ந்து வாழுமா அல்லது சாகுமா என்ற கேள்வி தமிழ்‌
நாட்டில்‌ தமிங்கிலிஷ்‌ (தமிங்கிலம்‌) தலைதூக்கிய காலத்திலிருந்தும்‌,
ஈழத்தமிழர்‌ மேற்புலத்து நாடுகளுக்கு புலம்‌ பெயரத்தொடங்கிய
காலத்திலிருந்தும்‌ கேட்கப்பட்டு வரும்‌ ஒரு கேள்வி.

பேராசிரியர்‌ அன்பழகன்‌ அவர்கள்‌, கலைஞரின்‌ தொல்காப்பிய
பூங்காவில்‌ தனது அணித்துரையில்‌, “முத்தமிழும்‌ வளர்த்த
முச்சங்கங்களுள்‌, தலை, இடைச்சங்கள்‌ இரண்டின்‌ காலத்திலும்‌
வழங்கிப்‌ பின்னர்‌ கடல்கோள்‌ முதலானவற்றால்‌ அழிவுற்ற ஏடூகளின்‌
பட்டியல்‌, இன்று நாம்‌ பெற்றுள்ள தமிழ்‌ ஏடுகளின்‌ எண்ணிக்கைளை
விடப்‌ பெரிதாகும்‌.” எனக்‌ கூறியுள்ளார்‌.

தமிழ்‌ இலக்கியம்‌ படைப்பதில்‌ கனடா ஈழத்தமிழர்கள்‌ ஆர்வம்‌
காட்டி வருகிறார்கள்‌. அதிக எண்ணிக்கையில்‌ தமிழ்‌ நூல்கள்‌ இங்கு
வெளியிடப்படுகின்றன. தமிழில்‌, தமிழ்‌ இலக்கியத்தில்‌ என்‌ ஆர்வத்தைத்‌
தூண்டியவர்கள்‌ கனடா-ஈழ தமிழர்களே!

இயற்கையாலும்‌ அழிக்கமுடியாத எண்ணிக்கையில்‌ தமிழ்‌
இலக்கிய நூல்கள்‌ வெளிவரவேண்டும்‌. தமிழ்‌ அழியாது காக்க
இதுவும்‌ ஒரு வழி.

இத்தொகுதிக்கு வாழ்த்துப்‌ பா மூலம்‌ ஆசிவழங்கிய
கவிநாயகம்‌ கந்தவனம்‌ அவர்கட்கும்‌ அணிந்துரை வழங்கிய அதிபர்‌
பொ. கனகசபாபதி அவர்கட்கும்‌, புகழ்பெற்ற பிரபல எழுத்தாளர்‌ அ.
முத்துலிங்கம்‌ அவர்கட்கும்‌, மூத்த இலக்கியப்‌ பேராளர்‌ அமரர்‌ என்‌.
சோமகாந்தன்‌, அவரது துணைவியார்‌ இலக்கிய கலாவித்தகி பத்மா
சோமகாந்தன்‌ அவர்கட்கும்‌ நான்‌ நன்றிக்கடன்‌ பட்டூள்ளேன்‌.

இந்நாலை அழகுற அச்சேற்றித்தந்த பதிப்பக உரிமையாளர்‌
“குவாலிற்றி பிறின்ரிங்‌” அதிபர்‌ ஆனந்தகிருஷ்ணன்‌ அவர்கட்கு எனது
மனமார்ந்த நன்றி. லை

மிக சிரத்தையடன்‌ இன்நூலைப்‌ படித்து அச்சுப்பிழை திருத்திக்‌
கொடூத்த நண்பர்‌ சட்டத்தரணி வேலுப்பிள்ளை இந்திரசிகாமணி
அவர்கட்கும்‌ எனது நன்றி.

பல வழிகளில்‌ என்னை ஊக்குவித்து, தேவை ஏற்படூம்‌
போதெல்லாம்‌ உதவிகள்‌ புரிந்து, என்னையும்‌ வயது பதினாறு என்ற

இந்த சிறுகதைத்‌ தொகுதியையும்‌ உங்களுக்கு அறிமுகம்‌ செய்து
வைத்துள்ள நண்பர்‌ கதிர்‌ துரைசிங்கம்‌ அவர்கட்கும்‌ எனது உளம்‌

நிறைந்த நன்றி.

2௦


Page 25 

மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

“௦0 நாட்களுள்‌” நாவலுக்குப்‌ பலவாறான விமர்சனங்கள்‌
கிடைத்தன. புகையிரதத்தில்‌ நாவலை வாசித்த ஒருவர்‌ இரண்டுதடைவகள்‌
தான்‌ இறங்கவேண்டிய நிலையத்தை தவறவிட்டதாக பாராட்டிப்‌
புகழ்ந்தார்‌. மற்றுமொரு நண்பர்‌ அலுவலகத்தில்‌ நாவலைப்‌ படிக்க
ஆரம்பித்து விடாது தொடர்ந்து படித்து முடித்துவிட வேண்டுமென்ற
ஆவலில்‌ அலுவலகத்தை விட்டூ வெளியேறி வீடூ சென்று தனது படுக்கை
அறைக்‌ கதவை மூடிவிட்டு முழு நாவலையும்‌ படித்து முடித்ததாகப்‌
பாராட்டினார்‌.

கவிஞர்‌ கந்தவனம்‌ அவர்கள்‌:

“பண்பான நூல்‌

பயனுள்ள நூல்‌

பயமின்றி எழுதுக

பயம்போக எழுதுக” என ஊக்குவித்தார்‌.

மூத்த இலக்கியப்‌ படைப்பாளியாகிய என்‌. சோமகாந்தன்‌
ஐயா அவர்கள்‌ 22-5-2005 வீரகேசரியில்‌ தான்‌ எழுதிய
கனடாவில்‌ 16 வாரங்கள்‌ என்ற கட்டூரையில்‌, “மருத்துவப்‌
பேராசிரியர்‌ நந்தி அவர்கள்‌, தமது சில படைப்புக்களில்‌
மருத்துவமனைச்‌ சூழலையும்‌, சத்திர சிகிச்சைக்‌ கூடத்தின்‌
சுறுசுறுப்புக்களையும்‌ பின்புலமாகவைத்து, இலக்கியத்தில்‌ புதிய
பரிரமாணம்‌ ஒன்றைக்‌ காட்டிய முன்னோடியாகத்‌ திகழ்பவர்‌.
சட்டத்தரணி மனுவல்‌ ஜேசுதாசன்‌ அவர்கள்‌ இப்போது தமது சட்ட
அறிவைப்‌ பின்புலமாகக்‌ கொண்டூ தமிழிலக்கியத்தில்‌ மற்றொரு
பரிமாணத்தை ஏற்படூத்தியுள்ளார்‌ என்பது எனது அபிப்பிராயம்‌” என
விமர்சித்துள்ளார்‌.

இதேபோன்று “வயது பதினாறும்‌ உங்கள்‌ மத்தியில்‌
தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்‌ என்ற பேராவலுடன்‌ இத்தொகுதியை
உங்கள்‌ கரங்களில்‌ சமர்ப்பிக்கிறேன்‌.

அன்புடன்‌,

மனுவல்‌ ஜேசுதாசன்‌

2௦1


Page 26வயது

பதினாறு

 


Page 27மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

உள்ளடக்கம்‌
சந்திப்பு........................்‌.்.பப 03
வயது பதினாறு........................... 10
மருமகள்‌..........................்‌.் 17
நம்ப முடியவில்லை........................... 24
என்‌ கண்மணி............................. 28
முன்னாள்‌ கணவன்‌ மனைவி............ 41
நினைவெல்லாம்‌............................ 71


Page 28வயது பதினாறு

 


Page 29மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

சந்திப்பு

ஒன்ராறியோ நீதிமன்றக்‌ கட்டளைப்படி மகேஸ்‌ தனது மகனை
வாரத்தில்‌ ஒரு தடவை சனிக்கிழமைகளில்‌ காலை 9 மணிமுதல்‌
மாலை 5 மணிவரை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டூள்ளது.

அன்று சனிக்கிழமை. ஒரு வாரத்தின்‌ பின்‌ தன்‌ மகனுடன்‌ சில
மணி நேரங்களைச்‌ சந்தித்து.' தமது உறவை மேலும்‌ வலுப்படுத்தப்போகும்‌
ஆதங்கத்துடன்‌ அதிகாலை. டபக்‌ எழுந்து, உற்சாகத்துடன்‌ தன்னைத்‌
தயார்படுத்திக்‌ கொண்டு சநீதிப்பிற்கா $ மகேஸ்‌ புறப்பட்டான்‌.

பட.

பிரிவ நிகழ்வதற்கு எட்டு வருடங்களின்‌ முன்‌ தாமிராவும்‌
மகேசும்‌ ஸ்காபரோவில்‌ லோரன்ஸ்‌-வோடன்‌ சந்திப்பில்‌ தமது மகனுடன்‌
தம்‌ வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்‌. பிரிவின்பொழுது பிரிந்தனுக்கு
ஆறு வயது. பிரிவிற்குப்‌ பின்‌ தாமிரா பிரிந்தனுடன்‌ பிரம்ரன்‌ நகரில்‌
வாழ்ந்து வருகிறாள்‌.

ஸ்காபரோவில்‌ இருந்து பிரம்ரனுக்கு 401 பெரும்‌ ப பாதை 9 வழியாக
வாகனத்தில்‌ செல்வதற்கு சுமார்‌ அரைமணி நேரம்‌ “தேவை. அதிலும்‌
பெரும்பாக வீதியில்‌ வாகன நெருக்கம்‌ ஏற்பட்டால்‌ மேலதிக நேரம்‌
தேவைப்படும்‌. அன்றும்‌ மேற்கு நோக்கி 401 பெரும்‌ பாதை விமான
நிலையம்‌ செல்வதற்காக கிளைவிட்டூ வடக்கு நோக்கிச்‌ செல்லும்‌ 409
பெரும்வீதி சந்திப்பில்‌ வாகன விபத்து ஏற்பட்ட காரணத்தால்‌ வாகன
நெருக்கம்‌ ஏற்பட்டிருந்தது. இதனால்‌ அனுமதிக்கப்பட்டூள்ள வேகத்தில்‌
மகேஸால்‌ வாகனத்தைச்‌ செலுத்த முடியாமல்‌ ஊர்ந்து செல்லவேண்டி
நேர்ந்தது.

வாகனம்‌ போல்‌ அவனது வாழ்க்கையும்‌ ஆறு வருடங்களிற்கு
முன்‌ குடும்ப வாழ்கையில்‌ ஏற்பட்ட உடைவினால்‌ நத்தை வேகத்தில்‌
நகர்ந்து கொண்டூ செல்கிறது. சனிக்கிழமைகளில்‌ அவன்‌ பிரிந்தனுடன்‌
செலவழிக்கும்‌ நேரம்‌ மட்டூம்‌ கண்மூடித்‌ திறக்கும்‌ முன்‌ ஓடி மறைந்து
விடூகிறது.


Page 30வயது பதினாறு

 

அப்பாவும்‌ அம்மாவும்‌ தன்னில்‌ அளவிலா அன்பு காட்டி வருவது
பிரிந்தனுக்குத்‌ தெரியும்‌. பெற்றோர்கள்‌ இருவரது வாழ்க்கையும்‌ தன்னை
மையமாக வைத்து நகர்ந்து செல்லுவதைபுும்‌ அவன்‌ அறிவான்‌. அப்பாவும்‌
அம்மாவும்‌ பிரிந்த காரணம்‌, பிரிவின்‌ பொழுது அவனுக்குத்‌ தெரியாது
அவன்‌ சிறுவனாயிருந்த காரணத்தால்‌. இப்பொழுது பதினாலு வயது
நிரம்பிய இளம்‌ வாலிபனாக வளர்ந்து விட்டவனுக்குப்‌ பாடசாலையில்‌
கற்பிக்கப்படும்‌ பிள்ளை பராமரிப்பு வகுப்பு அளித்த அறிவு ரீதியான
அனுபவத்தினால்‌ தனது பெற்றோர்களின்‌ வாழ்க்கையில்‌ ஏற்பட்ட
விரிசல்‌, அது அவர்களுக்கு உண்டாக்கிய பாதிப்பு, அதனால்‌ தனக்கு
ஏற்பட்டுள்ள தாக்கம்‌ பற்றி பல உண்மைகள்‌ தெளிவாகியுள்ளன.

தனது பெற்றோர்கள்‌ தாமாகவே தமது பிரிவின்‌ காரணத்தைக்‌
கூறும்வரை மீண்டும்‌ அதுபற்றி அவர்களிடம்‌ கேள்வி கேட்கக்கூடாது
என்ற மனப்‌ பக்குவத்தைப்‌ பெற்றுவிட்டான்‌. முன்பு ஒருநாள்‌, தான்‌
சிறுவனாக இருந்தபொழுது அப்பாவிடம்‌ இந்தக்‌ கேள்வியைக்‌
கேட்டதும்‌ அதற்கு அப்பா, “ பிரிந்தன்‌, அம்மாபற்றி நானோ அல்லது
என்னைப்பற்றி அம்மாவோ உனக்கு ஒன்றும்‌ சொல்லக்கூடாது. அப்படி
நான்‌ ஏதாவது சொன்னால்‌ அது அம்மாவிற்குத்‌ தெரிஞ்சு அம்மா
அதனைக்‌ கோர்ட்டிலை சொன்னால்‌ உன்னை நான்‌ கிழமைக்கு ஒருநாள்‌
சந்திக்கும்‌ சந்தர்ப்பம்‌ கூட இல்லாமல்‌ போயிடும்‌...” எனக்கூறியது
அவனுக்கு ஞாபகமிருக்கிறது.

வழமைபோல்‌ 9 மணிக்கெல்லாம்‌ அப்பா தன்னை
அழைத்துச்செல்ல வந்துவிடுவார்‌ என்ற எண்ணத்துடன்‌ அன்றைய
தினமும்‌ நேரத்துடன்‌ காலையில்‌ எழுந்து தந்்‌தைக்காகக்‌ காத்திருந்த
பிரிந்தனுக்கு 12 மணி ஆகியும்‌ அவர்‌ வராதது ஏக்கத்தை ஏற்படுத்தியது.
அப்பாவின்‌ கைத்தொலைபேசி எண்ணை அழைத்தும்‌ அப்பாவின்‌ பதில்‌
கிடைக்காதது அவனுக்கு பயத்தை உண்டாக்கியது.

தன்னை அழைத்துச்‌ செல்ல அப்பா இன்னும்‌ வரவில்லை
என்பதனால்‌ தனக்கு ஏற்படும்‌ உணர்வுகளை அம்மாவிடம்‌ கூறலாமா?
கூறினாலும்‌ அம்மாவால்‌ அதைப்‌ புரிந்து கொள்ள முடியுமா?

போன்ற கேள்விகள்‌ அவன்‌ உள்ளத்தெழுந்து அவனைத்‌ துன்பத்தில்‌
ஆழ்த்தியதுமல்லாது விரக்தியின்‌ எல்லைக்கே இழுத்துச்‌ சென்றன.
இவ்வாறான விரக்தி ஏற்படும்‌ தருணங்களில்‌ காடைப்‌ பொடியங்களுடன்‌
சேர்ந்து திசைமாறிச்‌ செல்லவேண்டும்‌ போன்ற எண்ணங்கள்‌
தோன்றுவதுண்டு. அதே உந்தல்‌ இன்றும்‌ பலமாக அவன்‌ உள்ளத்தை
உலுப்பியது.

4

 


Page 31மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

மகேஸ்‌ மகனைச்‌ நதிக்கும்‌ சனிக்கிழமைகளில்‌ தாமிரா
வீட்டில்‌ இருப்பதில்லை. (அன்றை தினங்களில்‌ மேலதிகநேர வேலை
செய்வாள்‌, .அல்லது தனது பெற்றோரின்‌ வீட்டிற்கு. சென்று தனது
குடும்பத்துடன்‌ நேரத்தைக்‌ கழிப்பாள்‌.

அன்றைய தினம்‌ தனது பெற்றோரின்‌ வீட்டிற்கு செல்வதற்குத்‌
தயாராகியவள்‌ பிரிந்தனின்‌ முகத்தில்‌ தோன்றிய ஏக்கத்தையும்‌
விரக்தியையும்‌ அவதானித்த காரணத்தால்‌ மகேஸ்‌ வந்து பிரிந்தனை
அழைத்துச்‌ செல்லும்‌ வரை வெளியே போக வேண்டாமென வீட்டிலேயே
இருந்துவிட்டாள்‌.

மகனின்‌ மனதில்‌ பெற்றோரின்‌ பிரிவால்‌ ஏற்பட்ட தாக்கத்தை
தாயான அவளால்‌ உணர முடியாமல்‌ போகவில்லை. பாடசாலையில்‌
விளையாட்டுப்‌ போட்டிகளில்‌ மூன்‌ நின்றவன்‌, பாடங்களில்‌ சிறந்த
தரம்‌ பெற்றுவந்தவன்‌ இப்பொழுது பாடசாலையிலும்‌, பாடங்களிலும்‌
அக்கறை காட்டாமல்‌ இருப்பதும்‌ அவற்றில்‌ மிகவும்‌ குறைந்த தரம்‌
பெறுவதும்‌ தாய்க்கு தவிப்பை ஏற்படுத்தியது. அண்மைக்‌ காலத்தில்‌
மகன்‌ பாடசாலை முடிந்ததும்‌ நேரத்திற்கு வீடு திரும்பாமல்‌ இரவு
பத்து பதினொரு மணிவரைக்கும்‌ எங்கு யாருடன்‌ என்ன செயல்களில்‌
ஈடுபட்டுள்ளான்‌ என்பதை அறியாது அவள்‌ மேலும்‌ கவலைப்பட்டாள்‌.
மகனின்‌ நடத்தை பற்றிக்‌ கண்டிப்பதற்கும்‌ அவளால்‌ முடியவில்லை.
எதிர்த்துப்‌ பேசத்‌ தொடங்கி விட்டான்‌. அவனைக்‌ கை நீட்டி அடிக்கவும்‌
முடியாது. ஒருநாள்‌ அவனை கண்டித்துத்‌ தண்டிக்க முயன்ற வேளை
அவன்‌, “எனக்கு அடித்தா நீ அப்பாவைப்‌ பொலிசில்‌ பிடிச்சுக்‌ குடுத்த
மாதிரி நானும்‌ 911 அடித்து உன்னைப்‌ பொலிசில்‌ பிடிச்சுக்‌ குடுப்பன்‌”
என்று ஆவேசத்துடன்‌ கூறியது அவள்‌ மனக்கண்‌ முன்தோன்றி
அச்சத்தை ஏற்படுத்தியது.

சீ!. நான்‌ 911 அடித்து மகேஸைப்‌ பொலிஸில்‌ பிடிச்சுக்‌
கொடுத்திருக்கக்‌ கூடாது. ஆறு வருடங்களின்‌ பின்‌ என்றுமில்லாதவாறு
அவள்‌ மனதில்‌ ஒரு விழிப்பு ஏற்பட்டது. அந்த உணர்வு அவளை
அதிசயிக்க வைக்கும்‌ விதத்தில்‌ முதல்‌ தடவையாக நாடி நரம்புகளை
வருடி ஓடியது. தம்‌ காதல்‌ கனிந்த விதம்‌ மனதில்‌ தோன்றியது.

கொழும்பு மக்கள்‌ வங்கியின்‌ தலைமையகம்‌, காலை ஏழரை
மணியளவில்‌ அன்றும்‌ வழமைபோல்‌ களை கட்டியிருந்தது. வங்கி
ஊழியர்கள்‌ துரிதவேகத்தில்‌ பாய்ந்து பாய்ந்து தத்தமது வங்கிப்‌
பகுதிகளுக்கு விரைந்து கொண்டிருந்தனர்‌. இவர்களுக்கு எதிர்மாறாக
முண்டியடிக்காமல்‌ தனக்குரிய நிதானத்துடன்‌ கணிசமான உயரம்‌,

5


Page 32வயது பதினாறு

 

கட்டுக்கோப்பான உடலமைப்பு, காலத்திற்கேற்ப எடுப்பான உடை;
ஆணழகன்‌ என்று கூறமுடியாது என்றாலும்‌ அவள்‌ மனம்‌ கவர்ந்த
இளஞன்‌ ஒருவன்‌ வங்கி மாடிக்கட்டிட வாசலில்‌ நுளைவதை தாமிரா
அவதானித்த பொழுது அவளது மனதில்‌ நம்பிக்கையுடன்‌ அமைதி
ஏற்பட்டது. அவள்‌ அன்றுதான்‌ அந்த வங்கியில்‌ முதல்‌ நாள்‌ வேலை
ஆரம்பிக்கிறாள்‌. எட்டு மணிக்கு அவளது வங்கிப்பிரிவின்‌ முகாமையாளர்‌
முன்‌ சமூகமளிக்க வேண்டும்‌. அரை மணிநேரத்துக்கு முன்னதாக
கட்டிடத்தை அடைந்தபோதும்‌, குறிப்பிட்ட தனது முகாமையாளரின்‌
அலுவலகத்தைக்‌ கண்டூ பிடிப்பதற்கு வங்கிக்‌ கட்டிடத்தைப்‌ பற்றிப்‌
பரிச்சயமுள்ள ஒருவரின்‌ உதவி தேவைப்பட்டது. அவளும்‌ பல
நிமிடங்கள்‌ யாரிடமாவது உதவி கேட்கலாம்‌ என்ற நோக்கத்துடன்‌
காத்து நின்றும்‌ பயன்‌ கிடைக்கவில்லை. வாயிலில்‌ நுழையும்‌ வங்கி
ஊழியர்களின்‌ அவசர வேகத்தின்‌ காரணத்தால்‌ அவர்கள்‌ எவரையும்‌
அணுகி உதவி கேட்க முடியவில்லை. அப்பொழுதுதான்‌ நூற்றுக்‌
கணக்கான அத்தனை ஆண்‌ பெண்களிலும்‌ அவனின்‌ நிதானத்‌ தோற்றம்‌
அவனை அணுகி உதவி கோர அவளைத்‌ தூண்டியது. அவளின்‌
எதிர்பார்ப்புக்ேகேற்ப்‌ அவனும்‌ வேண்டிய உதவிகளை அவளுக்கு
அன்று திருப்தியுடன்‌ செய்து முடித்தான்‌. அந்த நாள்‌ மகேஸ்‌
அவள்‌ உள்ளத்தில்‌ ஏற்படுத்திய பசுமையான தாக்கம்‌, அதன்‌ பின்‌
தமது காதல்‌ உறவு, திருமண வாழ்க்கை, பிரிந்தன்‌ பிறப்பு, கனடா
வருகை, தனது வாழ்க்கையில்‌ தன்‌ பெற்றோரின்‌ தலையீடு, அந்த
நாள்‌ விபரீதம்‌ யாவும்‌ பல வருடங்களின்‌ பின்‌ மீண்டும்‌ இன்று அவள்‌
உள்ளத்தில்‌ தோன்றி தூக்கத்திலிருந்தவளை உலுப்பி எழுப்பியது.
அவன்‌ நினைவுகள்‌ வியப்பையும்‌, குற்ற உணர்வையும்‌, சோகத்தையும்‌
ஏற்படுத்தியது.

கை நீட்டி அவன்‌ அடித்த அந்த சம்பவத்திற்கு முன்பு அவன்‌
தன்மேல்‌ வைத்திருந்த அன்பு, பரிவு, அக்கறை அதற்கு மேலாக
தமது காதல்‌ லீலைகளின்‌ ஞாபகங்கள்‌ அவள்‌ நினைவலைகளில்‌
தோன்றி எட்டு வருடங்களாக உறங்கிக்‌ கிடந்த உணர்வுகளைத்‌ தட்டி
எழுப்பின.

அன்று ஏன்‌ பொறுமையிழந்தேன்‌...? மகேஸ்‌ என்னைக்‌ கை நீட்டி
அடித்தது பிழைதான்‌. இருப்பினும்‌, நான்‌ எனது அப்பா அம்மாவிலும்‌,
தங்கச்சி, தம்பிமாரிலும்‌ எவ்வளவு பாசம்‌ வைத்திருந்தாலும்‌ அவர்களுடன்‌
சேர்ந்து மகேஸையும்‌ அவனது குடூம்பத்தினரையும்‌ இகழ்ந்திருக்கக்‌
கூடாது. பாவம்‌ மகேஸ்‌, எனக்கெண்டாலும்‌ எல்லாரும்‌ கனடாவில்‌
இருக்கினம்‌. மகேசுக்கு ஒருவருமில்லை. அப்பா அம்மா இறந்துவிட்டினம்‌.


Page 33மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

ஒரு அக்காவும்‌ அவவின்‌ குடூம்பம்‌ மட்டூம்‌... மருதமடூவில்‌ அகதிகளாக...
முகாமில்‌... ஐயோ நான்‌ பிழை விட்டிட்டன்‌ போல.....

தாமிராவின்‌ பெற்றோர்‌ சகோதரர்களால்‌ மகேசுக்கு ஏற்பட்ட
அவமானத்தின்‌ காரணமாகவும்‌, தாமிரா அவனை நன்கு புரிந்து
கொள்ளாது, அவனது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது, அவனுக்கு
ஆதரவு கொடுக்காது தனது பெற்றோர்கள்‌ சார்பாக, அவர்களுடன்‌
சேர்ந்து மகேசை மதிப்புக்‌ குறைவாக பேசியதில்‌ ஏற்பட்ட கோபத்தில்‌
முதல்‌ முறையாக அவன்‌ கைநீட்டி அவளை அடித்துவிட்டான்‌. அதற்காக
அவன்‌ அனுபவித்த தண்டனைகள்‌ அவன்‌ புரிந்த குற்றச்செயலுக்கு
மிகவும்‌ அதிகமானவை. மனைவியை, மகனைப்‌ பிரிந்தான்‌. " போலிஸ்‌
தடுப்புக்‌ காவலில்‌ மோசமான குற்றவாளிகளுடன்‌ மூன்று நாட்களைக்‌
கழித்ததுடன்‌ நீதிமன்றத்தில்‌ மனைவியைத்‌ தாக்கிய குற்றத்தை
ஏற்றுக்கொண்டு குற்றவாளி என்ற பட்டத்தையும்‌ பெற்று இன்று வரை
அந்தப்‌ பட்டத்தைச்‌ சுமந்து வருகின்றான்‌. இந்த சூழ்நிலைகளிலும்‌ பல
தடவைகள்‌ அவளிடம்‌ மன்னிப்புக்‌ கேட்டும்‌ அவள்‌ அவனை இதுவரை
மன்னிக்கவுமில்லை அவனை மீண்டும்‌ தன்‌ வாழ்க்கையில்‌ ஏற்றுக்‌
கொள்ளவுமில்லை.

முதல்‌ தடவையாக தன்‌ பெற்றோர்‌ சகோதரர்களின்‌ செயல்களில்‌
சுயநலத்தையும்‌, செய்நன்றி மறப்பையும்‌ அவள்‌ உணர்ந்தாள்‌.
“ஐயோ”. மகேசின்‌ உதவியும்‌ உற்சாகமும்‌ இல்லாவிட்டால்‌ எனது
பெற்றோர்களையும்‌ சகோதரங்களையும்‌ என்னால்‌ ஸ்பொன்சர்‌
பண்ணியிருக்க முடியுமா? நானும்‌ நன்றி கெட்டவளாகிவிட்டேன்‌..” என
அவள்‌ உள்ளம்‌ குமுறியது.

இன்று மகேஸில்‌ தாமிராவுக்கு ஏற்பட்ட மாறுதலான உணர்வு
அவன்மேல்‌ அக்கறையைத்‌ தூண்டியது. “ஏன்‌ இன்னும்‌ மகேஸ்‌

வரவில்லை? ஒருபோதும்‌ அவர்‌, இவ்வளவு பிந்தி வருவதில்லையே... ட

ஒருவேளை வாகன விபத்து, “சீ! சீ! அப்படி ஒன்றும்‌ நடந்திருக்காது”
அவர்‌ இந்து கதவைத்‌ தட்டியதும்‌ நான்தான்‌ திறக்க வேண்டும்‌: ' ஆனால்‌
எப்படி-திடீரென்று, பிரிந்தன்‌ கூட எவ்வளவு தரம்‌ அம்மா ஏன்‌ அப்பாவோடு _
சேரக்கூடாது? என்று கேட்டிருக்கிறான்‌. முதலில்‌ அவனுக்குத்தான்‌ :-

கொஞ்சம்‌ கொஞ்சமாக எனது மனமாற்றத்தைச்‌ சொல்லவேண்டும்‌!.... ்‌்‌ 7
என்‌ மனம்‌ மாறினாலும்‌ மகேஸ்‌ என்னை ஏற்றுக்கொள்வாரா?. ... என்‌
நினைவு அவர்‌ உள்ளத்தில்‌ இன்றும்‌ பதிந்திருப்பதால்தான்‌ ஆறு வருட்‌

1)

பிரிவிலும்‌ அவர்‌ வேறொரு பெண்ணையும்‌ ஏறெடுத்தும்‌ பார்க்கவில்லை...

. அவள்‌ மனதில்‌ நினைவுகளும்‌ கீற்பனைகளும்‌ தாண்டவமாடின. “4

ட

ன


Page 34வயது பதினாறு

 

கதவு தட்டூம்‌ சத்தம்‌ கேட்டது. சமையலறையில்‌ இருந்து
தன்னையும்‌ அறியாமல்‌ தாமிரா நுளைவாசல்‌ கதவு நோக்கி வேகமாகப்‌
பாய்ந்து வந்தாள்‌.

“அம்மர?) அப்பா வந்திட்டார்‌ நான்‌ போயிற்று வாறன்‌!”
எனக்‌ கூறிக்கொண்டு முன்‌ கதவைப்‌ பலமாக அடித்துச்‌ சாத்திவிட்டு
வெளியேறினான்‌ பிரிந்தன்‌.

தாமிரா ஏமாற்றத்துடன்‌ கதிரையில்‌ உணர்வற்ற நிலையில்‌
அமர்ந்தாள்‌.

மின்தூக்கியில்‌ கீழே இறங்கும்‌ பொழுது “அப்பா எங்க
போனீங்க?... ஏன்‌ இண்டைக்கு பிந்தி வந்தீங்க? நான்‌ பயந்திட்டன்‌”,
எனப்‌ பிரிந்தன்‌ கேள்விமேல்‌ கேள்வி கேட்டான்‌.

மகேசுக்கு மகனின்‌ கேள்விகளுக்கு எங்கு எப்போ எந்த
சூழ்நிலையில்‌ எப்படி பதில்‌ கூறுவது என்று தெரியாது மிகவும்‌ சங்கடமாக
இருந்தது. பிரிந்தனுக்கு அதிர்ச்சியைப்‌ பலமாகக்‌ கொடுக்கக்கூடாது;
இருப்பினும்‌ அதை அவனுக்குத்‌ தாமதமின்றி கூறியே ஆகவேண்டும்‌
என்பதை உணர்ந்து அந்தக்‌ கட்டடத்தின்‌ வரவேற்பு மண்டபத்தி
ஒதுக்குப்‌ பக்கமாக அவனை அழைத்துச்‌ சென்று, “பிரிந்தன்‌' (நீங்க
எவ்வளவு தரம்‌.. கிட்டத்தட்ட இரண்டு வருடமாக என்னைக்‌ கேட்டாய்‌...
அப்பா நீங்க ஏன்‌ இன்னும்‌ அம்மாவுக்காக காத்திருக்க வேண்டும்‌...
அவ மனம்‌ மாறுவதாகத்‌ தெரியவில்லை... நீங்க வேறொரு கல்யாணம்‌
முடிக்கக்‌ கூடாதா? என்று... நானும்‌ கன காலமாக... நீ கேட்டதில்‌
இருந்து நல்லா யோசிச்சுத்தான்‌ வந்தனான... இப்ப சொல்லுகிறேன்‌
நான்‌ ஏன்‌ இன்று பிந்தி வந்தேன்‌ என்று... நான்‌ இப்ப உண்மை ஒன்று
சொல்லப்‌ போகிறேன்‌... நீ அப்பாவில்‌ கோபிக்க மாட்டியே! என்று
கேட்டான்‌.

 

பிரிந்தனின்‌ இதயம்‌ வேகமாகத்‌ துடிக்கத்‌ தொடங்கியது.
உண்மை என்னவென்று அறியவேண்டூுமென்ற ஆவல்‌ அச்சிறுவனை
ஒருநிலை கொள்ளச்‌ செய்யவில்லை. விரைவில்‌ நடந்ததைக்‌ கூறுமாறு
வற்புறுத்தினான்‌.

மகனின்‌ ஆவலின்‌ உத்வேகத்தை அவதானித்த மகேஸ்‌
எப்படியும்‌ அதை அவனுக்குச்‌ சொல்லித்தானே ஆகவேண்டும்‌, அதை
இப்பொழுதே கூறிவிட்டால்‌ நல்லது என தீர்மானீத்துத்‌ தொடர்ந்தான்‌:

 


Page 35மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

“பிரிந்தன்‌ உனக்கு யசோ ஆன்ரியைத்‌ தெரியும்தானே”, நானும்‌
உன்‌ அம்மாவும்‌ பிரிந்து இரண்டு மூன்று வருடங்கள்‌ இருக்கலாம்‌
“என்னுடன்‌ நட்பாகப்‌ பழகினவ.. அவ” தன்னைக்‌ கல்யாணம்‌ செய்யும்படி
பல தடவைகள்‌ கேட்டவ. இதுவரை எனக்கு மனம்‌ வரவில்லை. உன்‌
அம்மாவின்‌ மனம்‌ மாறுமென்று இவ்வளவு காலமும்‌ காத்திருந்த நான்‌,
இப்பொழுது நம்பிக்கை இழந்து விட்டேன்‌!. அதனால்‌, இன்று தான்‌
உன்னைக்‌ கூப்பிட வரும்பொழுது வழியில்‌ ஏற்பட்ட கார்‌ விபத்தினால்‌
கனநேரம்‌ ரோட்டிலை நிற்க வேண்டுமென்று ரேடியோவிலை சொன்ன
படியால்‌ அப்படியே வெளியேறும்‌ பாதை வழியாக எற்றோபிக்கோ போய்‌
யசோ ஆன்ரியைச்‌ சந்தித்துப்‌ பேசி ஒரு முடிவு எடூத்து, அதனாலதான்‌
நேரம்‌ போய்விட்டது. அவ உன்னோடூ கதைக்க வேணும்‌ எண்டவ.
அதற்கு நான்‌ சொன்னனான்‌; பிறகு பார்க்கலாமென்று.

பிரிந்தன்‌ மெளனமானான்‌, அப்பாவை சந்திக்கவேண்டு
மென்றிருந்த ஆர்வம்‌ தளர்ந்தது. தடையை மீறிப்‌ பீறிட்டு வரும்‌
கண்ணர்த்துளிகளை அப்பா பார்த்துவிடக்‌ கூடாது என்பதற்காக தன்‌
முகத்தை மறுபக்கம்‌ திருப்பினான்‌. தனது பெற்றோர்‌ என்றோ ஒருநாள்‌
இணைவார்கள்‌; தன்‌ வாழ்வில்‌ வசந்தம்‌ மலரும்‌ என்ற நம்பிக்கையுடன்‌
காத்திருந்த பிருந்தனின்‌ மனம்‌ உடைந்து நொருங்கியது. இருவரும்‌
தொடர்ந்து வாகனம்‌ நிறுத்தப்பட்ட இடம்‌ நோக்கி மெளனமாக
நடந்தனர்‌.


Page 36வயது பதினாறு

 

வயது பதினாறு

“இவர்‌ உங்கள்‌ அப்பாவின்‌ வழக்குரைஞர்‌. நான்‌ முடிசார்‌
வழக்குரைஞர்‌. உங்களை இங்கு வரும்படி அழைத்தது யார்‌?”

“இவர்‌” என தமது அப்பாவின்‌ வழக்குரைஞரைத்‌ தமது சுண்டூ
விரல்களால்‌ விஜயாவும்‌, ஜெயாவும்‌ காட்டினர்‌.

விஜயா எட்டு வயதாகவும்‌, ஜெயா ஐந்து வயதாகவும்‌
இருக்கும்பொழுது அவர்களின்‌ பெற்றோர்களான ஜெகத்சும்‌,
சுரூணாவும்‌ தாயகத்தில்‌ (ஈழத்தில்‌) மேற்கொள்ளப்படூம்‌ தமிழின
அழிவு நடவடிக்கைகளிலிருந்து தப்பி, புதியதோர்‌ வாழ்வு தேடி,
தமது குழந்தைகளின்‌ ஒளிமயமான எதிர்காலத்துக்கான வாய்ப்புத்‌
தேடி நெஞ்சம்‌ நிறைந்த கனவுகளுடன்‌ அகதிகளாகக்‌ கனடாவில்‌
பிள்ளைகளுடன்‌ அடைக்கலம்‌ புகுந்தனர்‌.

இப்பொழுது விஜயாவிற்குப்‌ பதினாறு வயது நிரம்பிவிட்டது.
பெற்றோர்களும்‌ பிள்ளைகளும்‌ கனடாவின்‌ பிரஜா உரிமையும்‌
பெற்றுவிட்டனர்‌.

நீங்கள்‌. என்ன காரணங்களுக்காக இங்கு அழைக்கப்‌
பட்டிருக்கிறீர்கள்‌ என்பது தெரியுமா?

“ஆம்‌” என இருவரும்‌ தலையாட்டினர்‌.

“எதற்காக?”

இருவரும்‌ மெளனமாக இருந்தனர்‌.

“உங்களுடைய அப்பா வீட்டிற்கு வந்து உங்களுடன்‌ வசிப்பது

உங்களுக்குச்‌ சம்மதமா?”

10


Page 37மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

முடிசார்‌ வழக்குரைஞரின்‌ கேள்விகளுக்கு அக்கா தொடர்ந்தும்‌
மெளனமாக இருப்பதை உணர்ந்த ஜெயா சற்றுத்‌ தயக்கத்துடன்‌ “ஆம்‌”
எனப்‌ பதில்‌ அளித்தாள்‌.

“உங்களின்‌ அப்பாவிற்கு நீங்கள்‌ இருவரும்‌ இப்பொழுது
பயமில்லையா?”

அக்கா பதிலளிப்பாள்‌ என்று எதிர்பார்த்த ஜெயா, அவள்‌
தொடர்ந்தும்‌ மெளனமாக இருப்பதைக்‌ கண்டு அதே தயக்கத்துடன்‌,
“இல்லை” எனக்‌ கூறினாள்‌.

விஜயாவின்‌ முகத்தில்‌ கோபக்கனல்‌ வெடித்தது. இதை
அவதானித்த முடிசார்‌ வழக்குரைஞர்‌ “நான்‌ உங்களின்‌ நலனைப்‌
பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால்‌ நியமிக்கப்பட்டூுள்ளேன்‌. நீங்கள்‌
ஒருவருக்கும்‌ பயப்படத்‌ தேவையில்லை. துணிவுடன்‌ உண்மை
கூறுங்கள்‌.” எனக்‌ கூறினார்‌.

இதைக்‌ கேட்டதும்‌ உக்கம்‌ கொண்டு விஜயா தனது
தங்கையைப்‌ பார்த்து,

“ஜெயா” ஏன்‌ பொய்‌ சொல்லுகிறாய்‌! உனக்குப்‌ பயமில்லையா
அவருக்கு, எனக்குப்‌ பயமாக இருக்கு, அவர்‌ சரியாகக்‌ குடிக்கிறார்‌,
தொட்டதுக்கும்‌ கோபம்‌ வரும்‌, கோபம்‌ வந்தால்‌ எங்களை அடிக்கிறவர்‌,
அம்மாவை அடிக்கிறவர்‌. அண்டைக்குக்‌ கெட்ட வார்த்தையால்‌ என்னை
ஏசி.. என்ர சட்டையை இழுத்துப்‌ பிடித்துக்‌ கிழித்து.. அம்மா குறுக்கிட..
அவவைப்‌ பிடித்துத்‌ தள்ளி அவவின்‌ தலை சுவரில்‌ அடிபட்டது, இது
நேற்று இண்டைக்கில்லை.. கனநாளாக.. ஓமா.. இல்லையா...?

நெருப்புப்‌ பொறியாக அக்காவின்‌ வாயிலிருந்து தெறித்த
வார்த்தைகளால்‌ ஆடிப்போனவள்‌ : எதற்காகவோ பயப்பட்டவள்போல்‌
அக்காவின்‌ அதட்டலான கேள்விக்கு “ஆம்‌” என்று கூறினாள்‌ ஜெயா.

“நன்றி நீங்கள்‌ இப்பொழுது வீட்டிற்குப்‌ போகலாம்‌.”
விஜயாவையும்‌, ஜெயாவையும்‌ முடிசார்‌ வழக்குரைஞர்‌ வழி அனுப்பி
வைத்தார்‌.

அப்பாவின்‌ வழக்குரைஞர்‌ செய்வதறியாது திகைத்தார்‌. சிறிது
நேரம்‌ ஆழமாய்ச்‌ சிந்தித்தவர்‌, “நன்று என்னுடைய கோரிக்கையை
ஏற்று இந்த இரு பிள்ளைகளையும்‌ என்‌ முன்னிலையில்‌ விசாரணை

11


Page 38வயது பதினாறு

 

செய்தமைக்கு நன்றி. இந்த வழக்கின்‌ மறு பக்கத்தைப்‌ பார்ப்பதற்கு
இப்பொழுது தான்‌ வாய்ப்புக்‌ கிடைத்தது. எனது சேவை பெறுநரிடமிருந்து
எனக்குக்‌ கிடைத்த தகவல்கள்‌ இப்பொழுது இந்த இரு பிள்ளைகளிடம்‌
இருந்து நான்‌ கேட்ட தகவல்களுக்கு முரண்பாடானவை. .. என
அப்பாவின்‌ வழக்குரைஞர்‌ தன்‌ கருத்தைக்‌ கூறி முடிக்குமுன்‌, “மன்னிக்க
வேண்டும்‌ வழக்குரைஞர்‌, பிள்ளைகள்‌ கூறிய விபரத்திலிருந்து நங்கள்‌
கேட்டுக்கொண்ட பிரகாரம்‌ இந்த வழக்கை முடிசார்‌ தரப்பினர்‌ வாபஸ்‌
பெற முடியாது. மாறாக இந்த வழக்கை இன்று முடிவுக்குக்‌ கொண்டூவர
வேண்டுமானால்‌ தமது குழந்தைகளை அடித்துத்‌ துன்புறுத்திய
குற்றத்தைக்‌ குற்றப்பிரிவு 0.0.266-ன்‌ கீழ்‌ உமது கட்சிக்காரர்‌
ஏற்றுக்கொண்டு அதற்கான குறைந்தபட்ச தண்டனையை அனுபவிக்க
முன்வரவேண்டும்‌.”

  
  
  

பணய

“சரி, உங்கள்‌ கருத்தை நான்‌ ஏற்றுக்‌ கொள்கி ன்‌்‌
இடம்‌ பெற்ற சந்திப்பின்‌ விபரங்களை நான்‌ எனது கட்சிச்‌
கலந்தாலோசிக்க வேண்டும்‌.

ரருடன்‌

முடிசார்‌ வழக்குரைஞருடனும்‌ தமது பிள்ளைகளுடனும்‌
நடைபெற்ற சந்திப்பின்‌ விளைவை அறிவதற்காக ஆவலுடன்‌ எதிர்பார்த்து
தமது வழக்குரைஞரின்‌ வரவுக்காக பொதுமக்கள்‌ தங்கும்‌ பகுதியில்‌
காத்திருந்த ஜெகதீசும்‌, சுகுணாவும்‌ அவர்‌ தனது அறையிலிருந்து
வெளியே வருவதைக்‌ கண்டதும்‌ இருக்கையை விட்டெழுந்து அவரை
நோக்கி வேகமாக நடந்து வந்தனர்‌.

“மன்னிக்க வேண்டும்‌, நாம்‌ எதிர்பார்த்தது போல்‌ இன்று
இந்த வழக்கை முடிவுக்குக்‌ கொண்டுவர முடியாது,” திட்டவட்டமாக
வழக்குரைஞர்‌ கூறினார்‌.

“ஏன்‌?” வியப்புடன்‌ இருவரும்‌ கேட்டனர்‌.

“நீங்கள்‌ சொன்னீர்கள்‌, பிள்ளைகள்‌ தகப்பன்‌ வீட்டிற்குத்‌
திரும்பி வந்து பிள்ளைகளுடனும்‌ உங்களுடனும்‌ ஒன்றாகச்‌ சேர்ந்து
வாழ்வதற்கு எதிர்ப்புத்‌ தெரிவிக்க மாட்டார்கள்‌ என்று, ஆனால்‌,

குறிப்பாக உங்கள்‌ மூத்த மகள்‌.. .. ஏதோ காரணத்திற்காக இப்பவும்‌
கோபமாக இருக்கிறாள்‌. அவர்‌ தொடர்ந்து ஜெகதீசைப்‌ பார்த்து, “நீர்‌
குடிக்கிறதென்றும்‌.. கெட்ட வார்த்தைகளால்‌ ஏசுவதென்றும்‌.. சம்பவம்‌
நடந்த நாள்‌, நீர்‌ உமது மனைவியைத்‌ தள்ளிவிட்டு, அவவின்‌ தலை
சுவரில்‌ அடிபட்டதென்றும்‌ உங்கள்‌ மூத்தமகள்‌ சொன்னா.. இப்ப

12


Page 39மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

சொல்லும்‌ இதைக்‌ கேட்டால்‌ முடிசார்‌ வழக்குரைஞர்‌ எப்படி நமது
கோரிக்கையை நீதிபதி முன்னிலையில்‌ ஆதரிப்பார்‌?..”.

“ஐயோ... இவளுகள்‌ சொன்னதெல்லாம்‌ பொய்‌.. நான்‌ குடிக்கிறதே
இல்லை... கெட்ட வார்த்தையால்‌ ஒருபோதும்‌ ஏசியது கிடையாது.
இவவிட்டக்‌ கேட்டூப்‌ பாருங்கோ .. அண்டைக்கு என்ன நடந்தது என்று..
அதிர்ச்சியும்‌ ஆத்திரமும்‌ அவன்‌ குரலில்‌ தொனித்தது.

“எல்லாம்‌ சுத்தப்‌ பொய்‌... அவள்‌ தான்‌ என்னைத்‌ தள்ளி
விட்டவள்‌” வர ஒரு நாளும்‌ எனக்கு அடித்தது கிடையாது... ஏன்‌
இப்படி எல்லாம்‌ பழி சுமத்துகிறாள்‌ கடவுளே..” எனப்‌ புலம்புவதைப்‌
போலக்‌ கூறினாள்‌ சுகுணா.

“எப்படி இருந்த பிள்ளைகள்‌. ஏன்‌ இப்படி மாறி விட்டினம்‌?
இந்தா பாருங்கோ, ஒரு வருஷத்திற்கு முதல்‌ என்ர பிள்ளைகள்‌ இருந்த
மாதிரி.. இப்ப இருக்கிற மாதிரி...” இரு புகைப்படங்களை ஜெகதீஸ்‌
வழக்குரைஞரிடம்‌ காட்டினான்‌.

ஒரு படத்தில்‌ இரு பிள்ளைகளும்‌ பின்னோக்கித்‌ தலைவாரி,
இரட்டைப்‌ பின்னலிட்டூு, பூவும்‌, பொட்டும்‌ வைத்து, நீளப்‌ பாவாடை
அணிந்து, கலைவாணியே அவர்களில்‌ குடியிருப்பதைப்‌ போன்று
தோற்றம்‌ அளித்தனர்‌. மறு படத்தில்‌ அலங்கோல ஆடை அணிந்து
அவயவங்கள்‌ வெளித்தெரிய ஆபாசமாகக்‌ காட்சி அளித்தனர்‌.

“கனடாவில்‌ எட்டு வருடங்களாக எப்படி அடக்கமாக இருந்த
பிள்ளைகள்‌, என்ர மூத்தவள்‌ என்னட்டக்‌ கேட்டவள்‌, அப்பா ஏன்‌
எங்களைக்‌ கனடாவிற்குக்‌ கூட்டிக்கொண்டு வந்தனீங்கள்‌.. நாங்கள்‌
அங்காலயுமில்லை..  இங்காலயுமில்லை.. தமிழ்ப்‌ பண்பாட்டைப்‌
பின்பற்றுவதா? அல்லது மேல்நாட்டூ நாகரிகத்தைப்‌ பின்பற்றுவதா?” என்று.
தனக்கு நல்ல தமிழ்‌ சினேகிதிகள்‌ இல்லை என்றும்‌ கவலைப்பட்டவள்‌
என்ர பிள்ளை. நான்‌ என்ர பிள்ளையைக்‌ குற்றம்‌ சொல்ல மாட்டன்‌”
எனக்‌ கூறி முடிக்குமுன்‌,

“ஜெகதீஸ்‌ உம்மட பிள்ளைகள்‌ 911 தொலைபேசி மூலம்‌
பொலிசாரை அழைத்து நீர்‌ தங்களைத்‌ துன்புறுத்தவதாக குற்றம்‌ சாட்டி
உள்ளார்களே!..” வழக்குரைஞர்‌ கேட்டார்‌.

“அது சரி... ஆனா.. அதுக்கெல்லாம்‌ என்ர பிள்ளைகள்‌
காரணமில்லை. இந்தப்‌ பள்ளிக்கூடம்‌, பள்ளிக்கூடத்தில்‌ படிப்பிக்கிற

ஆசிரியர்‌, பிள்ளைகளை வழி நடத்துவதற்தாக நியமிக்கப்பட்டுள்ள

13


Page 40வயது பதினாறு

 

ஆலோசகர்கள்‌.. இவர்கள்தான்‌ காரணம்‌, அதோட எங்கட சமூகத்தைச்‌
சேர்ந்த காவாலிக்‌ கூட்டங்கள்‌... அந்த இளம்‌ பொடியங்கள்‌.. தாங்கள்‌
தறுதலையாகத்‌ திரியிறதக்கு.. தங்கட குடூம்பங்களையும்‌ பிரிந்து..
பாருங்கள்‌ இந்த ஊதாரிகளாகத்‌ திரிகிற தறுதலைப்‌ பொடியங்கள்‌
செய்யிற முதல்‌ வேலை தங்கட தாயையும்‌ தகப்பனையும்‌ பிரிக்கிறது
அப்பதானே அவையள்‌ காவாலித்தனம்‌ பண்ணலாம்‌. அதுக்கு
பிறகு அப்பாவிப்‌ பிள்ளையளை, என்ர பிள்ளைகளைப்‌ போன்‌

பிள்ளைகளையும்‌, தங்களைப்‌ போல திரியிறதுக்காக தாய்‌ தகப்பலை

பிரியச்‌ செய்து... இதுதான்‌ இண்டைக்கு எனக்கும்‌ நடந்திருக்கு... என்‌

பிள்ளைகளில்‌ நான்‌ குற்றம்‌ சொல்ல மாட்டன்‌... என்ர மூத்த மக
நல்லாப்‌ படித்து பெரிய உத்தியோகத்தில்‌ வரவேண்டுமென்று எவ்வள
கனவு கண்டவள்‌... இதை நினைக்கும்போது என்ர மனம்‌ குமுறுது
பாருங்கோ. இந்தப்‌ பள்ளிக்கூடத்திலை படிப்பிக்கிற ஆசிரியர்களையும்‌
ஆலோசகர்களையும்‌ பற்றிச்‌ சொன்னன்‌... இவையள்‌ எல்லாம்‌ எனக்கு
முன்னால என்ர பிள்ளைக்குச்‌ சொல்லினம்‌, “நீங்க அப்பா அம்மா
சொல்லுறதைக்‌ கேட்க வேண்டிய அவசியமில்லை. உமக்கு இப்ப 16
வயது... நீர்‌ நினைத்ததை, விரும்பியதைச்‌ செய்யலாம்‌... அரசாங்க
உதவிப்‌ பணம்‌ பெறலாம்‌. .. யாருடனும்‌ போகலாம்‌ வரலாம்‌, உடலுறவு
வைக்கலாம்‌.. பெற்றோர்களுடன்‌ இருக்க வேண்டிய அவசியமில்லை...
16 வயது வந்தால்‌ இதெல்லாம்‌ செய்ய இங்கே சட்டம்‌ அனுமதிக்குதாம்‌.
இருந்தாலும்‌ இவர்களெல்லாம்‌ இப்படிப்‌ பிள்ளைகளுக்குச்‌ சொல்லிக்‌
கொடூக்கலாமா? நீங்கள்‌ சொல்லுங்க.. நாங்கள்‌ சொல்லிக்‌ கொடுக்கிற
நல்ல பழக்க வழக்கப்படி பிள்ளைகள்‌ நடப்பினமா? நான்‌ என்ர
பிள்ளைகளைக்‌ குறை கூற மாட்டன்‌...அவர்களை நான்‌ மன்னித்து
விட்டேன்‌...” என்று குரல்‌ தளதளத்து நீண்ட விரிவுரை ஒன்றையே
நடத்தினான்‌.

“இவர்‌ கெதியாக வீட்டிற்கு வர தயவு செய்து உதவி
செய்யுங்கள்‌...” கண்ணீரைத்‌ துடைத்துக்‌ கொண்டூ வழக்குரைஞரைக்‌
கெஞ்சுவது போன்று சுகுணா கேட்டாள்‌.

இவர்களின்‌ சமூக அங்கமான அந்த வழக்குரைஞர்‌ தனது
முகத்தை மறுபுறம்‌ திருப்பிக்‌ கொண்டார்‌. தனது உணர்வுகளை
மறைத்தும்‌ கசிந்த ஈரவிழிகளைத்‌ துடைத்துக்கொண்டூம்‌, “இந்தா
பாருங்கள்‌... உங்கட புருஷன்‌ இன்றே வீட்டிற்கு வரக்கூடிய வகையில்தான்‌
முடிசார்‌ வழக்குரைஞரை ஒருவாறாகச்‌ சம்மதிக்கச்‌ செய்து... நானே
உங்கள்‌ வீட்டிற்குப்‌ போய்‌.... என்ர வாகனத்தில்‌ உங்கள்‌ பிள்ளைகளை
நீதிமன்றத்திற்கு கூட்டிக்கொண்டூ வந்து.. பிறகு என்ன நடந்தது என்பது

14


Page 41மனுவல்‌. ஜேசுதாசன்‌

 

உங்களுக்குத்‌ தெரியும்தானே...” எனத்‌ தனது நிலைப்பாட்டைத்‌
தெளிவாக விளங்கப்படூத்த முயன்றவேளை,

“ஓம்‌.. நீங்கள்‌ எங்களுடைய சமூகத்தைச்‌ சேர்ந்தபடியால்‌
ரான்‌ எங்களின்‌ உணர்வுகள்‌, கலாசாரத்‌ தாக்கங்கள்‌ உங்களுக்குப்‌
ரிகிறது... நான்‌ கெதியாக வீட்டிற்குப்‌ போய்‌ எனது மனைவி
ந்களுடன்‌ சேர்ந்து வாழ நீதிமன்ற உத்தரவு கிடைக்காவிட்டால்‌..
வவால்‌ பிள்ளைகளைக்‌ கட்டூப்படுத்த முடியாது... இவவைக்‌ கேட்டுப்‌
ருங்க நான்‌ வீட்டிலை இல்லாத படியால்‌ அதுகள்‌ என்ன செய்யினம்‌
ன்று”, எனக்கூறி மனைவியைப்‌ பார்த்தான்‌.

“இரண்டும்‌ என்னை மதிக்கிறதில்லை. மூத்தவள்‌ கெட்ட
வார்த்தைகளால்‌ என்னை ஏசுகிறாள்‌. என்ன மாதிரித்‌ தமிழ்‌ கதைத்தவள்‌!
இப்ப தமிழே அவள்‌ வாயிலை வருகுதில்லை... அவளுடைய முழுப்‌
பிரச்சனையும்‌ வெளியில்‌ திரியவேண்டும்‌ என்பதுதான்‌. அண்டைக்குப்‌
பொலிசைக்‌ கூப்பிட்ட சம்பவம்‌ நடந்த நாள்‌ இரவு 8 மணிக்கு வீட்டுக்குத்‌
திரும்பி வருவேன்‌ என்று 5 மணிக்கு வீட்டைவிட்டுப்‌ போனவள்‌, வீடு
திரும்பியது இரவு 11 மணிக்குத்தான்‌... நீங்கள்‌ சொல்லுங்க எந்த தாய்‌
தகப்பனால்‌ இதைத்‌ தாங்க முடியும்‌. அண்டைக்கு இவர்‌ கொஞ்சம்‌
கோவப்பட்டு “எங்கே இவ்வளவு. நேரமும்‌ போனனீ?” என்றுதான்‌
கேட்டவர்‌. அதற்கு அவள்‌ என்ன சொன்னாள்‌ தெரியுமா? உனக்கென்ன
நான்‌ எங்க போனாலும்‌... நான்‌ எங்கேயும்‌ போவன்‌... வருவேன்‌... எனக்கு
இப்போது 16 வயது. நான்‌ யாரோடும்‌ போவன்‌.. யாரோடூம்‌ படுப்பன்‌..
என்னவும்‌ செய்வேன்‌.. உங்களால்‌ ஒன்றும்‌ செய்ய முடியாது..
உண்மையில்‌ இவர்‌ அவளுக்கு அடிக்கவில்லை. அவளின்‌ தோளைப்‌
பிடித்துக்‌ கொஞ்சம்‌ உலுப்பினவர்‌.. இதற்கு அவள்‌ 911 ஐ அடித்துப்‌
பொலிசைக்‌ ௯ூப்பிட்டூ... இவ்வளவும்‌..” தொடர முடியாமல்‌ துக்கம்‌
அவள்‌ தொண்டையை அடைத்தது.

ஜெகதீஸ்‌ தொடர்ந்தான்‌. “இப்ப அவவின்‌ அட்டகாசம்‌
அளவிற்கு மிஞ்சிற்று.. போன வெள்ளிக்கிழமை மூத்தவள்‌ இரவு 7
மணிக்கு வீட்டை விட்டூப்‌ போனவள்‌ திரும்பி வந்தது சனிக்கிழமை
அதிகாலை 3 மணிக்குத்தானாம்‌.... யாரோடூ.. எங்கே.. போகிறாள்‌..
வருகிறாள்‌.. என்ன செய்கிறாள்‌..... ஒன்றும்‌ தெரியாது. இவளைப்‌
பார்த்து சின்னவளும்‌ பழகப்‌ போகிறாள்‌... அவளும்‌ வெளியில்‌ போகத்‌
தொடங்கி க ஒட்டானாம்‌... “தக்கம்‌ அவன்‌ வார்த்தைகளில்‌"... தெரிந்தது.

த இ
“இந்தப்‌ பிள்ளைகளுக்கு ' நாங்கள்‌ என்ன செய்யவில்லை?.
கேட்ட விதம்‌ விதமான உடுப்பு... சாப்பாடு. நாங்கள்‌ நல்ல

15


Page 42வயது பதினாறு

 

நண்பர்களாகத்‌ தான்‌ இருந்தநாங்கள்‌ .. நம்பமாட்டீங்கள்‌.. .. எங்களின்‌
சினேகிதர்கள்‌ எல்லாரும்‌ தங்கள்‌ பிள்ளைகளை எங்கட பிள்ளைகளைப்‌
போலத்தான்‌ வளர்க்க வேண்டும்‌ என்று பெருமைப்‌ பட்டார்கள்‌. அப்படி
ஒழுக்கமாக நடந்த பிள்ளைகள்‌... அவர்களின்‌ நன்மைக்காக கொஞ்சம்‌
கண்டிப்பாக இருந்த நாங்கள்‌. அதுக்காக திடீரென்று மாறிவிட்டார்கள்‌.
அவர்‌ சொன்னதைத்தான்‌ சொல்லுவன்‌. என்ர பிள்ளைகள்‌ நல்ல
பிள்ளைகளாகத்தான்‌ இருந்தவர்கள்‌... இந்தப்‌ பள்ளிக்கூடம்‌, வாத்திமார்‌..
எமது இளம்‌ சமூகவிரோதக்‌ கும்பல்கள்‌.... எங்கடை பிள்ளைகளைப்‌
பாழாக்கிப்‌ போட்டினம்‌. இண்டைக்கு எங்களின்‌ பிள்ளைகளை நாங்கள்‌
இழந்து விட்டோம்‌...இவரும்‌ இல்லை... நான்‌ தனிய... நித்திரையுமில்லை.
நான்‌ கெதியாகச்‌ செத்திடுவன்‌” குமுறினாள்‌ சுகுணா.

பெற்றோர்களை நம்புவதா? அல்லது பிள்ளைகளை நம்புவதா?
என்ற சங்கடம்‌ வழக்குரைஞரின்‌ மனதில்‌ எழ ஒருவாறாக,

“ஜெகதீஸ்‌ அடுத்த நீதிமன்றத்‌ தவணைக்கு முன்பதாக
என்னை எனது அலுவலகத்தில்‌ வந்து சந்தியும்‌” என்று கூறிவிட்டு
சுமை நிறைந்த உள்ளத்துடன்‌ விடைபெற்றுச்‌ சென்றார்‌ அவர்களின்‌
சட்டத்தரணி.

பிள்ளைகள்‌ எங்கு போனார்கள்‌ என்பது பெற்றோர்களுக்குத்‌
தெரியவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு முடியும்‌ வரை ஜெகதீஸ்‌
தனது மனைவியும்‌ மக்களும்‌ வாழும்‌ வீட்டிற்கு 500 மீற்றர்‌ தூரத்துள்‌
செல்ல முடியாது. பிள்ளைகளுடன்‌ பேசக்கூடாது. அக்கட்டளையை
மீறினால்‌ நீதிமன்ற கட்டளையை மீறிய குற்றத்தைப்‌ புரிந்த மற்றுமொரு
குற்றத்திற்கான தண்டனைக்குள்ளாவான்‌.

சொந்த நாடிழந்தவன்‌ புலம்‌ பெயர்ந்த நாட்டில்‌ வீட்டையும்‌
இழந்துவிட்டான்‌.

16


Page 43மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

மருமகள்‌

முகுந்தன்‌ செலஸ்ரிக்காவில்‌ கணினிப்‌ பிரிவில்‌
பொறியியலாளராக ஒரு பிரிவின்‌ பொறுப்பதிகாரியாக உயர்‌ பதவி
வகிக்கிறான்‌. பெரும்பான்மைத்‌ தமிழர்களைப்‌ போன்று லல்‌ பட்டூ
அகதியாக கனடாவில்‌ குடியேற வேண்டிய அவசியமும்‌ பந்தமும்‌
முகுந்தனுக்கு இருக்கவில்லை. அவனது பட்டப்படிப்புக்‌ கார மாகவும்‌,
தொழில்‌ ரீதியான அனுபவம்‌ காரணமாகவும்‌, கனடாவில்‌ வேலை
வாய்ப்புக்‌ கிடைத்த காரணமாகவும்‌ தன்‌ சுய முயற்சியால்‌ நிரந்தர
வதிவிட உரிமை பெற்றுக்‌ கனடாவில்‌ குடியமர்ந்தான்‌.

கொழும்பில்‌ பிறந்து வளர்ந்த முகுந்தன்‌ ஈழத்தமிழ்‌ மக்களின்‌
இன்னல்கள்‌ பற்றி, அவர்களின்‌ இன அழிவுகள்‌ பற்றி ஆழமாக
அறிந்திருக்க அவசியமிருக்கவில்லை. செல்வத்தில்‌ தழைத்த
பெற்றோர்களின்‌ செல்வப்‌ புதல்வனாக தனது விருப்பு வெறுப்புகளுக்கு
எதிர்ப்புத்‌ தெரிவிக்காத, மாறாக ஓரே பிள்ளையின்‌ மகிழ்வுக்காக
அவனது விருப்பத்தையே நிறைவேற்றும்‌ பெற்றோர்களின்‌ அன்பில்‌
வளர்ந்து வாழ்ந்து வந்தவன்‌, கனடா வந்தும்‌ வசதியான வாழ்க்கையைத்‌
தொடர்ந்தான்‌.

முற்போக்குச்‌ சிந்தனை, செயல்‌, மக்களை மதிக்கும்‌
மனப்பக்குவம்‌, கள்ளம்‌ கபடமற்று இளம்‌ பெண்களுடன்‌ பழகும்‌ பண்பு,
எடுப்பான தோற்றம்‌ இவை முகுந்தன்மேல்‌ இளம்‌ பெண்கள்‌ காதல்‌
கொள்வதற்கான காரணங்கள்‌. கடந்த காதலர்‌ தினமன்று இவனைக்‌
காதல்‌ வலையில்‌ சிக்க வைக்க சித்திரா பட்ட சிரத்தையை முகுந்தன்‌
அதிசயத்துடன்‌ நினைத்துப்‌ பார்த்துச்‌ சஞ்சலப்‌ பட்ட நாட்களுமுண்டூ.
எந்தப்‌ பெண்ணிடமும்‌ தனது மனதைப்‌ பறிகொடுக்கக்‌ கூடாது என்ற
திடமான கொள்கையுடனும்‌, நிதானத்துடனும்‌ இதுவரை வாழ்ந்து
விட்டதை நினைத்து அவன்‌ சில சமயங்களில்‌ பெருமையடைவான்‌.

தர்மா அறுபதுகளில்‌ இங்கிலாந்தில்‌ வாழ்ந்தவர்‌.
கணக்கியலாளராகப்‌ பட்டம்‌ பெற்று ஏனஸ்ற்‌ அண்ட்‌ யங்கில்‌
கணக்கியலாளராகப்‌ பணி புரியும்பொழுது நீர்மலாவைக்‌ காதலித்துத்‌

17


Page 44வயது பதினாறு

 

திருமணம்‌ செய்து கொண்டவர்‌. திருமணத்தின்‌ பின்‌ இலங்கை திரும்பி
கொழும்பில்‌ தொழில்‌ ரீதியாகப்‌ பெரும்‌ செல்வம்‌ ஈட்டினார்‌.

தம்‌ மகன்‌ திருமண வயதை அடைந்துவிட்டான்‌. இருப்பினும்‌
அவனை திருமணம்‌ செய்யும்படி தாம்‌ நிர்ப்பந்திக்கக்கூடாது, மாறாக
அவனே தான்‌ விரும்பிய பெண்ணை மணந்துகொள்வான்‌ என்ற எதிர்‌
பார்ப்பில்‌, அவனாகவே தனது திருமணம்‌ பற்றிய கருத்தைத்‌ தெரிவிப்பான்‌
என்ற முற்போக்கு எண்ணத்தில்‌ இருப்பினும்‌ சற்று ஏக்கத்துடன்‌ சில
வருடங்களைக்‌ கழித்துவிட்டனர்‌ முகுந்தனின்‌ பெற்றோர்கள்‌. சகல
விடயங்களிலும்‌ தம்‌ மகனுடன்‌ மனம்‌ திறந்து கருத்துப்‌ பரிமாறும்‌
தாம்‌, காலம்‌ கனிந்து வந்தும்‌ தம்‌ மகனின்‌ திருமணம்‌ பற்றிய பேச்சு
வார்த்தையை மேற்கொள்ளாத குறைபாடூ ஏற்படுத்திய கிளர்ச்சியில்‌
மேலும்‌ தாமதிக்கக்கூடாது | என்ற உணர்வின்‌ உந்தலில்‌ அன்று
முகுந்தனுடன்‌ தர்மாவும்‌ நீர்மலாவும்‌ தொடர்பு கொண்டனர்‌.

ஓவ்வொரு சனிக்கிழமையும்‌ காலை 10 மணியளவில்‌ முகுந்தன்‌
தனது பெற்றோர்களுடன்‌ தொலைபேசியில்‌ தொடர்பு கொண்டூ
உரையாடூவது வழக்கம்‌.

அன்று ஒரு கிழமைநாள்‌ இரவு ஒரு மணி. முகுந்தன்‌ ஆழ்ந்த
தூக்கத்திலிருந்தான்‌. அப்போது தொலைபேசி அலறும்‌ சத்தம்‌ கேட்டூ
ஏக்கத்துடனும்‌ பதட்டத்துடனும்‌ கட்டிலைவிட்டு எழுந்தவேளை கால்‌
அடிபட்டுக்‌ கீழே விழுந்துவிட்டான்‌. ஆவலுடன்‌ தொலைபேசியைக்‌
கையில்‌ எடுத்த பொழுது பெற்றோர்களின்‌ குரல்‌ கேட்டு ஒரு பக்கம்‌
ஆறுதலும்‌, மறுபக்கம்‌ அதிர்ச்சியும்‌ அடைந்தான்‌.

நடுநிசியில்‌ வரும்‌ தொலைபேசி அழைப்புக்கள்‌ துக்கச்‌
செய்திகளை காற்றில்‌ சுமந்து வருபவை என்பதை முகுந்தன்‌ மட்டூமல்ல;
கனடாத்‌ தமிழ்‌ மக்கள்‌ மட்டுமல்ல; ஈழ இன அனர்த்தத்தால்‌ தாயகத்தை
விட்டூ விரட்டி அடிக்கப்பட்டூப்‌ புலம்‌ பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும்‌
சகல தமிழ்‌ மக்களும்‌ அறிந்த உண்மை. ஆனால்‌ இந்தத்‌ தொலைபேசி
அழைப்பு சற்று வித்தியாசமாக இருந்தது.

அம்மாதான்‌ முதலில்‌: “தம்பி முகுந்தன்‌ எப்பிடி ராசா
இருக்கிறீங்கள்‌?” இந்த வார்த்தையைக்‌ கேட்டதும்‌ முகுந்தனுக்கு
ஒருபுறம்‌ மகிழ்ச்சியும்‌, மறுபுறம்‌ சற்றுச்‌ சினமாகவும்‌ இருந்தது.

“ஏனம்மா இந்த நேரத்தில்‌... இப்ப நேரம்‌ என்ன தெரியுமா?
இரவு ஒரு மணி... நான்‌ சரியாப்‌ பயந்து போனேன்‌...”

18

 


Page 45மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

“சரி முகுந்தன்‌ கோவிக்காதேயும்‌...” அப்பாவும்‌ நானும்‌
உம்மோட அவசியமாக ஒரு விசயம்‌ கதைக்க வேண்டும்‌. அதுக்குத்தான்‌
எடூத்தனாங்கள்‌... இதுபற்றி பலதரம்‌ கதைக்க நினைச்சனாங்கள்‌.. ஆனா
என்னவோ தெரியாது.. நாளைக்கு நாளைக்கு எண்டூ பின்‌ போட்டிட்டம்‌.
அதனாலதான்‌ அப்பா சொன்னவர்‌ பிள்ளையை எழுப்பி எண்டாலும்‌
கதைப்பம்‌ எண்டு...”

“அப்படி என்னம்மா கதைக்க வேண்டும்‌ இந்த நேரத்திலை...”

“உம்மட கல்யாணம்‌ பற்றித்தான்‌! உமக்கும்‌ முப்பது வயது
வந்திற்றிதுதானே தம்பி."

“அம்மா என்ர வாழ்க்கையிலை நீங்களும்‌, அப்பாவும்தான்‌
முக்கியம்‌...” எனக்காக நீங்கள்‌ வாழ்ந்திருக்கிறீங்கள்‌.. சகல
வழிகளிலும்‌ என்னைச்‌ சந்தோஷப்‌ படுத்தி இருக்கிறீங்கள்‌... அதால
உங்களை நான்‌ சந்தோஷப்படூத்துவதற்கு இதைத்‌ தவிர வேறு ஒன்றும்‌
எனக்குத்‌ தெரியாது. நான்‌ உங்களுக்குப்‌ பணமோ பொருளோ எதுவும்‌
தரவேண்டிய அவசியமில்லை. அதனால்‌ ஒரு நல்ல மருமகளைத்‌
தெரிவு செய்யும்‌ பொறுப்பை உங்கள்‌ இருவரிடமும்‌ விடப்போகிறேன்‌....
நீங்கள்‌ யாரைக்‌ கட்டச்‌ சொல்லுறீங்களோ அந்தப்‌ பெண்ணை நான்‌
கட்டுகிறேன்‌.

முகுந்தனின்‌ தெளிவான திட்டவட்டமான கருத்தைத்‌ தெரிந்ததும்‌
தர்மாவும்‌,' நீர்மலாவும்‌ அதிர்ந்து போயினர்‌. தங்கள்மேல்‌ தங்கள்‌ மகன்‌
வைத்துள்ள அன்பும்‌, மதிப்பும்‌ மனதிற்கு இதமாக இருந்தாலும்‌, அவன்‌
தம்மேல்‌ சுமத்தியுள்ள பொறுப்பு... அவர்கள்‌ இதை எதிர்பார்க்காத
படியால்‌ பெரும்‌ சங்கடத்தையும்‌, குழப்பத்தையும்‌ ஏற்படுத்தியது.

இருவரும்‌ ஓடி முழித்தனர்‌. அமெரிக்காவா? அவுஸ்திரேலியாவா?
இங்கிலாந்தா? இலங்கையா? எந்த நாட்டில்‌ பெண்‌ பார்ப்பது? உறவிலா,
பிறத்தியிலா? கேள்விகள்தான்‌ எழுந்தனவே தவிர அவைக்குத்‌ தீர்க்கமான
பதில்கள்‌ புலப்படவில்லை. சில மாதங்கள்‌ கழிந்துவிட்டன. மருமகளைத்‌
தேர்ந்தெடுக்க தர்மாவாலும்‌, நீர்மலாவாலும்‌ முடியவில்லை.

இந்த வேளையில்‌ உறவினரின்‌ திருமணத்தில்‌ கலந்துகொள்ள
வேண்டூமென முகுந்தனுக்கு அழைப்புக்‌ கிடைத்தது. அவன்‌ கொழும்பு
வந்து சேர்ந்தான்‌. ்‌

பொறுப்பான பதவி வகிப்பதால்‌ இரு வாரங்களிற்கு மேல்‌
முகுந்தனுக்கு லீவு கிடைக்கவில்லை. உறவினரின்‌ திருமணம்‌
19


Page 46வயது பதினாறு

 

நிறைவேறி மறுநாள்‌ இரவு கனடா திரும்புவதாக பிரயாண ஒழுங்குகள்‌
செய்திருந்தான்‌.

கொழும்பில்‌ நடைபெற்ற திருமணத்தில்‌ கலந்து கொள்வதற்காக
உலகின்‌ பல பாகங்களிலிருந்தும்‌ தர்மாவிற்கும்‌, நீர்மலாவிற்கும்‌
நெருங்கிய நண்பர்களும்‌, உறவினர்களும்‌ வந்திருந்தனர்‌... இருப்பினும்‌
இவர்களை எல்லாம்‌ திருமண வேளையிலும்‌, விருந்துபசார வேளையிலும்‌
தான்‌ நேரில்‌ சந்திக்கும்‌ வாய்ப்பு தர்மாவிற்கும்‌, நீர்மலாவிற்கும்‌
கிட்டியது. இதன்‌ காரணமாக யாருடனும்‌ மனம்விட்டு உரையாடும்‌
வாய்ப்புக்‌ கிடைக்கவில்லை.

கொழும்பின்‌ பிரபல நட்சத்திர ஹோட்டலில்‌, நாட்டின்‌
அரசியல்‌ பிரமுகர்கள்‌ பங்குகொள்ள, இராணுவப்‌ பாதுகாப்புடன்‌
பிரமாண்டமாகவும்‌, ஆடம்பரமாகவும்‌ திருமணச்‌ சடங்கும்‌ அதைத்‌
தொடர்ந்து திருமணவரவேற்பு விழாவும்‌ நடைபெற்றன.

திருமண விழாவின்போது அவள்‌ சுறுசுறுப்பாக விருந்தினர்களை
புன்முகத்துடன்‌ வரவேற்று ஆசனங்களில்‌ அமர்வதற்கு ஒத்தாசை செய்து
கொண்டிருந்தாள்‌. தர்மாவையும்‌, நீர்மலாவையும்‌, முகுந்தனையும்‌
பார்த்த பொழுது அவளின்‌ அகல்விழிகள்‌ மேலும்‌ அகல விரிந்தன.
மெல்லிய இதழ்கள்‌ இதமான புன்சிரிப்பைப்‌ பூத்தன. சூரிய வெயில்‌
சுட்ட மேனி நிறம்‌. இவள்‌ மேற்புலத்து நாடூகளிலிருந்து திருமணத்தில்‌
கலந்து கொள்வதற்காக வரவில்லை என்பதை உறுதிப்படூத்தியது.
தர்மா அந்தப்‌ பெண்ணை அவதானமாக உற்றுப்‌ பார்த்தார்‌.

|

கட்டுக்கோப்பான உடலமைப்பு, பொதுநிற மேனி, இந்தியப்பெண்‌
போன்ற பேச்சுமொழி - இவற்றிலிருநிது இவள்‌ இந்தியாவிலிருந்து
வந்துள்ளாள்‌ என்பதை அவரால்‌ ஊகித்துக்கொள்ள முடிந்தது. தன்‌
மகனுக்குப்‌ பொருத்தமான உயரம்‌. மொத்தத்தில்‌ அவளின்‌ கவர்ச்சியான
தோற்றம்‌ தர்மாவைச்‌ சங்கடத்தில்‌ ஆழ்த்தியது.

தன்னையே தர்மா உற்றுப்‌ பார்ப்பதையும்‌, தன்‌ செய்கைகளை
கூர்ந்து கவனிப்பதையும்‌ அவதானித்த அவள்‌ சந்தர்ப்பம்‌ பார்த்து
தர்மாவின்‌ பக்கம்‌ வந்து, “நீங்கள்‌! தர்மராஜா மாமாதானே?” எனக்‌
கேட்டாள்‌.

தர்மாவின்‌ காதுகளில்‌ ஒலித்த கேள்வி அவரைத்‌ தடுமாற்றம்‌
அடையச்‌ செய்தது. சில விநாடிக்ளில்‌ ஒரு வாறாகத்‌ தன்னைச்‌
சுதாகரித்துக்கொண்டூ

20


Page 47மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

“ஓம்‌ நீங்கள்‌ ஆரம்மா?” என்று கேட்டார்‌.

“நான்‌ தர்சினி மாமா! என்னை உங்களுக்கு ஞாபகமில்லையா?
நான்‌ செந்தில்ராஜாவின்‌ மூத்த மகள்‌. இந்தியாவில்‌ நான்‌ சின்ன
வயசில்‌ இருந்து படிச்சனான்‌. இப்ப அங்கதான்‌ வேலை பார்க்கிறேன்‌.
சின்னனிலை நீங்கள்‌ எனக்குப்‌ பொம்மை வாங்கித்‌ தந்தது எனக்கு
இப்பவும்‌ ஞாபகத்தில்‌ இருக்கு. என்னை உங்களுக்கு ஞாபகம்‌
இருக்கிறதா?” என்று கேட்டாள்‌.

எதுவித பதிலுமில்லாமல்‌ தர்மாவும்‌, நீர்மலாவும்‌ தன்னையே
விழித்துப்‌ பார்த்துக்‌ கொண்டிருப்பதைக்‌ கண்ட தர்சினி தொடர்ந்தாள்‌,

“இதுதான்‌ முகுந்தன்‌ அத்தானா?” இந்தக்‌ கேள்வி தர்மாவின்‌
ஆவலை மீண்டும்‌ தூண்டியது.

“உனக்கு முகுந்தனை ஞாபகமிருக்கா?
“ஓம்‌, நல்லா ஞாபகமிருக்கு...

அன்று இரவு முழுவதும்‌ தர்மாவாலும்‌ நீர்மலாவாலும்‌ தூங்க
முடியவில்லை. தர்சினியைப்‌ பார்த்துப்‌ பேசியதில்‌ தம்‌ மகனுக்குப்‌
பெண்‌ பார்க்கும்‌ படலத்தின்‌ இறுதி நிலையை அடைந்துவிட்ட நிறைவு
அவர்கள்‌ மனதில்‌ தோன்றியது. பொழுது விடிந்ததும்‌ தர்மாவும்‌ நீர்மலாவும்‌
செந்தில்ராஜாவையும்‌ அவரது மனைவி புனிதாவையும்‌ தொடர்பு
கொண்டூ தர்சினியைத்‌ தம்‌ மகனுக்குப்‌ பெண்‌ கேட்கவேண்டுமென
முடிவு செய்தனர்‌.

செந்தில்ராஜா-புனிதாவின்‌ மகிழ்ச்சி மட்டற்றிருந்தது. மகளின்‌
எதிர்காலம்‌ ஒளிமயமாக அமையப்‌ போகிறது என்ற எதிர்பார்ப்பில்‌
அவர்கள்‌ அணைகடந்த ஆனந்த வெள்ளத்தில்‌ மூழ்கினர்‌.

முகுந்தனுக்கும்‌ தர்சினிக்கும்‌ திருமணம்‌ செய்யப்‌ பெற்றோர்களும்‌
பெரியோர்களும்‌ நிச்சயித்தனர்‌.

இன்றைய நவநாகரிக முற்போக்கு உலகில்‌ வாழ்ந்து
கொண்டிருந்த பொழுதும்‌ பெற்றோர்களின்‌ விருப்பமே தனது
பாக்கியமெனக்‌ கருதிய முகுந்தன்‌ தர்சினியைத்‌ திருமணம்‌ செய்வதற்கு
மறுப்புத்‌ தெரிவிக்கவில்லை. அவன்‌ தனது சம்மதத்தை தாமதமின்றி
ஒப்புவித்துவிட்டான்‌.

21


Page 48வயது பதினாறு

 

தர்சினி சற்றுத்‌ தயங்கினாலும்‌ பெற்றோர்களின்‌ விருப்பத்திற்கு
மறுப்புத்‌ தெரிவிக்காமல்‌ முகுந்தனைத்‌ திருமணம்‌ செய்வதற்குச்‌
சம்மதம்‌ தெரிவித்துவிட்டாள்‌.

முகுந்தன்‌ அன்று இரவு கனடா புறப்படவிருந்த காரணத்தால்‌
இரு குடூம்பத்தினரும்‌ ஒன்று சேர்ந்து முகுந்தன்‌-தர்சினி இருவருக்கும்‌
பதிவுத்‌ திருமணம்‌ செய்யத்‌ தீர்மானித்து இனிதே அன்றைய தினம்‌
பதிவுத்‌ திருமணத்தை நிறைவேற்றி வைத்தனர்‌.

திருமணப்‌ பதிவிற்குப்‌ பின்‌ முகுந்தன்‌ கனடாவுக்கும்‌ தர்சினி
இந்தியாவுக்கும்‌ திரும்பிச்‌ சென்றனர்‌.

இந்தியாவிலுள்ள கனடிய தூதராலயத்தைப்‌ பார்க்கிலும்‌
இலங்கையிலுள்ள கனேடியத்‌ தூதராலயத்தில்‌ மனைவியென்ற
பிரிவில்‌ நிரந்தர வதிவிட அந்தஸ்து பெறுவது இலகுவானது
என்பதற்காக ஸ்பொன்ஸர்‌ விண்ணப்பப்‌ படிவத்தை இலங்கையிலுள்ள
தூதராலயத்தில்‌ தாக்கல்‌ செய்தான்‌ முகுந்தன்‌. அத்துடன்‌ தர்சினியின்‌
தொடர்புகொள்‌ விலாசத்தை தனது பெற்றோர்களின்‌ விலாசமாகப்‌ பதிவு
செய்திருந்தான்‌.

பதிவுத்‌ திருமணத்தின்‌ பின்‌ மாதங்கள்‌ வருடங்களாகின.
தர்சினி பற்றிய இந்திய, இலங்கை பொலிஸ்‌ அங்கீகாரப்பத்திரம்‌
பெற்றுத்‌ தூதராலயத்தில்‌ சமர்ப்பிப்பதற்கு இந்திய இலங்கை
அதிகாரிகள்‌ காரணமின்றி காலதாமதம்‌ செய்த காரணமாக தர்சினியின்‌
கனடாவுக்கான நிரந்தர வதிவிட விண்ணப்பம்‌ பல வருடங்களாகியும்‌
பூர்த்தியாக்கப்படாமல்‌ காத்திருந்தது. தர்மாவும்‌ நீர்மலாவும்‌ தமது
மகனின்‌ சமயரீதியான திருமண வைபவத்தைக்‌ கனடாவில்‌ மிகவும்‌
கோலாகலமாக நிறைவேற்றுவதற்காக ஆயத்தங்கள்‌ செய்யத்‌
தொடங்கினர்‌. மருமகளுக்கு கனடா விசா கிடைக்கும்‌ நாளை மிக
ஆவலுடன்‌ காத்திருந்தனர்‌.

அவர்களின்‌ ஆவல்‌ நிறைவேறியது போல்‌ கனடா
தூதராலயத்திலிருந்து தர்சினியின்‌ நேர்காணலுக்கான கடிதம்‌
கிடைத்தது. இந்த மகிழ்ச்சியை மகனுடன்‌ பகிர்ந்து கொள்வதற்காக
தொலைபேசியில்‌ அழைத்து அந்தச்‌ செய்தியைக்‌ கூறினர்‌.

பெற்றோர்களின்‌ உற்சாகத்தை உணர்ந்த முகுந்தன்‌, அவர்களைத்‌
திடீரென ஏமாற்றமடையச்‌ செய்யக்கூடிய அந்தச்‌ செய்தியை எவ்வாறு

அவர்களுக்குத்‌ தெரிவிப்பது என்று அறியாது திணறினான்‌. கனேடிய

22


Page 49மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

தூதராலயத்திலிருந்து கிடைத்த கடிதத்தைக்‌ கண்டு களிப்புறும்‌
பெற்றோருக்கு பல மாதங்களின்‌ முன்‌ தர்சினியிடமிருந்து தனக்குக்‌
கிடைத்த ஈமெயில்‌ செய்தியை வாசித்ததும்‌ ஏற்பட்ட துன்பத்தை
எவ்வாறு தெரிவிப்பது என்று தெரியாது தவித்தான்‌. தர்சினி கனடா வர
விரும்பவில்லை என்பதையும்‌ தன்னை விவாகரத்து செய்யும்படி தன்னிடம்‌
கேட்டுக்‌ கொண்டதையும்‌, தன்னை இவ்வாறான குழப்பத்தில்‌ துன்பம்‌
ஏற்படூத்தியதற்கு மன்னிப்புக்‌ கேட்டதையும்‌ அவனால்‌ தன்‌ அன்புப்‌
பெற்றோர்களுக்கு கூறி அவர்களால்‌ அவளின்‌ முடிவை ஏற்றுக்கொள்ளச்‌
செய்யும்‌ ஆற்றல்‌ அப்பொழுது தன்னிடமிருக்கவில்லை என்பதை
ஏற்றுக்கொண்டான்‌. அந்த ஏமாற்றச்‌ செய்தியை தன்‌ பெற்றோர்களுக்கு
க்ஷி அவர்கள்‌ மகிழ்ச்சி வெள்ளத்தில்‌ மூழ்கி இருக்கும்‌ வேளை
அந்த வெள்ளத்தில்‌ மின்சாரத்தைச்‌ செலுத்தி அவர்களை அதிர்ச்சி
வெள்ளத்தில்‌ மூழ்கடிக்கச்‌ செய்து இதுவரையில்‌ அவர்கள்‌ வாழ்ந்து
வந்த நிறைவான வாழ்வை நீர்மூலமாக்க அவன்‌ விரும்பாத காரணத்தால்‌
சந்தர்ப்பம்‌ வரும்வேளை உண்மை தானாகத்‌ தெரியவரட்டூம்‌ எனப்‌
பெற்றோர்களுடன்‌ சேர்ந்து தானும்‌ மகிழ்ச்சி அடைவதாகப்‌ பாசாங்கு
பண்ணினான்‌. தனது பெற்றோர்கள்‌ நிஜத்தை சந்தித்தே ஆகவேண்டும்‌,
அப்பொழுது அந்த நிஜம்‌ ஏற்படுத்தும்‌ தாக்கம்‌ சமநிலைப்படுத்தப்பட
வேண்டும்‌ என்பதை உணர்ந்து தனது துணையைத்‌ தானே தேட அந்தக்‌
கணமே தீர்மானித்த வேளை, சித்திராவின்‌ சித்திர வதனம்‌ அவனது
மனத்திரையில்‌ தோன்றியது.

23


Page 50வயது பதினாறு

 

நம்ப முடியவில்லை..

சிவராசா கடின உழைப்பாளி. ஐம்பது வயதைத்‌ தாண்டிய பின்‌
கனடாவில்‌ புலம்‌ பெயர்ந்த போதிலும்‌ சமூக ஊழல்களில்‌ ஈடூபட்டு அதன்‌
மூலம்‌ வேறு பலர்போல்‌ பொருள்‌ பணம்‌ சேர்த்து மோசடிக்‌ கும்பலுடன்‌
தன்னை அடையாளப்படூத்தாது, மாறாக, நேர்வழியில்‌ நாளாந்தம்‌
பத்து மணித்தியாலங்களுக்கு மேல்‌ தொழிற்சாலைகளில்‌ உடலால்‌
உழைத்து தனது பிள்ளைகளுக்கும்‌, தமது சமூகத்திலுள்ளோர்க்குட்‌
முன்மாதிரியாகத்‌ தன்‌ வாழ்கையை முன்னெடுத்துச்‌ செல்பவர்‌.

“யாருக்காக நீ கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்‌, உன்ர மூத்‌;
மகள்‌ கலியாணம்‌ முடிச்சிற்றாள்‌. இரண்டாவது மகள்‌ தொழிற்சாலையி6
வேலை செய்கிறாள்‌. சும்மா அரசாங்கம்‌ கொடுக்கும்‌ வெல்பியர்‌ கா
எடூத்துக்‌ கொண்டூ சொகுசாகவிருக்கலாமே..” என சிவராசாவோட ஓத்‌
பலர்‌ அவரைத்‌ தூண்டூவதுண்டூு. அவர்களுக்கெல்லாம்‌ தன்‌ உடலி.
வலுவிருக்கும்‌ வரை தன்‌ சொந்தக்‌ காலில்‌ நிற்க வேண்டுூமென்ப;
தனது இலட்சியமெனப்‌ பெருமையுடன்‌ கூறுவார்‌.

தனது அன்பு மகள்‌ வனிதாவின்‌ திருமணத்தை சிறப்பாகக்‌
கொண்டாடூவதற்காகப்‌ பணம்‌ சேர்க்க வேண்டுமென்பது தான்‌ இப்பொழுது
அவரது முதன்மையான நோக்காக இருந்தது.

மனைவி இளவயதில்‌ இறந்தபின்‌ தன்‌ இரு குழந்தைகளையும்‌
வளர்த்து ஆளாக்குவதற்கு சிவராசா அரும்பாடூ பட்டார்‌. மறுமணம்‌
செய்யும்படி தனக்கேற்பட்ட தொந்தரவுகளையும்‌ சோதனைகளையும்‌
மேற்கொள்ள அவர்‌ பட்ட பிரயத்தனம்‌ எம்மாத்திரம்‌!  தாயில்லாப்‌
பிள்ளைகள்‌ என்ற குறையின்றி வளர்ந்தனர்‌ பிள்ளைகள்‌. ஆரம்பப்‌
பாடசாலைக்‌ கட்டத்தைத்‌ தாண்டிய வயது வந்தபின்‌ கனடாவில்‌
புகலிடமடைந்த சிவராசாவின்‌ பிள்ளைகள்‌ உயர்கல்வியை மேற்கொள்ள
முடியாமல்‌ போனதற்கு முக்கிய காரணம்‌ எனக்‌ கூறலாம்‌. இருப்பினும்‌,
கட்டுக்கோப்புடன்‌, ஒழுங்கு முறையான வளர்ப்பின்‌ வதனம்‌ சுகந்தியிலும்‌,
வனிதாவிலும்‌ நிறைந்திருந்தது. இவர்களைத்‌ திருமணம்‌ செய்வதற்கு
ஆண்கள்‌ பலர்‌ ஆர்வம்‌ காட்டினர்‌.

24


Page 51மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

தந்தையின்‌ ஆசியுடன்‌ சுகந்தி தான்‌ விரும்பிய கணவனைத்‌
திருமணம்‌ செய்துகொண்டு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து
வருகிறாள்‌.

ஏதோ காரணங்களுக்காகச்‌ சில வருடங்களாகத்‌ தன்‌
திருமணத்தைப்‌ பின்போட்டூக்‌ கொண்டூ வந்த வனிதா சிவராசா எதிர்பாராத
வேளை மனம்‌ மாறி அவர்‌ தெரிவு செய்த குணசிங்கத்தைத்‌ திருமணம்‌
செய்ய ஒப்புக்‌ கொண்டது சிவராசாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சியைக்‌
கொடுத்தது.

முன்னூறுக்கும்‌ மேற்பட்ட விருந்தினர்கள்‌ வந்திருந்து
பாழ்த்தியருள, நிழல்‌ படப்பிடிப்பாளர்கள்‌, வீடியோ படப்பிடிப்புக்‌
ரவிகள்‌ பல ஆரவாரம்‌ காட்ட, கோவில்‌ திருவிழாபோல்‌ மெகாபார்ட்டி
ஹாலில்‌ ஜி.என்‌.எஸ்‌. றென்ரலின்‌ கைவண்ணம்‌ கண்கவரக்‌ காட்சி தர
காலாகலமாக குணசிங்கம்‌-வனிதா திருமணம்‌ நிறைவேறியது.

திருமணத்தின்‌ பின்‌ குணசிங்கத்தின்‌ வேண்டு கோளுக்கிணங்க
வராசா குணசிங்கத்துடனும்‌ வனிதாவுடனும்‌ அவர்கள்‌ வீட்டில்‌
£ழ்ந்து வந்தார்‌. மகளின்‌ வாழ்க்கை மகிழ்வுடன்‌ நிறைந்திருப்பதை
வதானித்து மன நிறைவடைந்தார்‌. இளம்‌ தம்பதியினர்‌ போல பல
தமான சுகங்களையும்‌ குணசிங்கமும்‌ வனிதாவும்‌ அனுபவிப்பதன்‌
றிகுறிகள்‌ சிராசாவிற்கு அளவில்லா ஆனந்தத்தைக்‌ கொடுத்தன.
௮வரது மனைவி செல்வத்தை அவர்‌ கண்முன்‌ நிறுத்தினாள்‌ வனிதா.

அன்றிரவு வழமைபோல்‌ இரவு உணவு அருந்தியபின்‌ மூவருமாக
தமிழ்‌ சினிமா படம்‌ ஒன்றை ரி.வி.ஐ.யில்‌ பார்த்துவிட்டு நித்திரை கொள்ள
தமது அறைகளுக்குச்‌ சென்றனர்‌. சில நேரத்துள்‌ சிவராசா அயர்ந்து
தூங்கிவிட்டார்‌. ஆழ்ந்த தூக்கத்திலிருந்தவர்‌ திடீரென்று தனது மகளின்‌
அறையிலிருந்து வரும்‌ அலறல்‌ சத்தம்‌ கேட்டுத்‌ துடிச்சுப்‌ பதைச்சு
எழும்பி மகளின்‌ அறை நோக்கி ஓடி வந்தார்‌. அங்கு கண்ட காட்சியால்‌
கதி கலங்கிவிட்டார்‌.

தன்‌ மகளுக்கும்‌ மருமகனுக்கும்‌ இடையில்‌ பாரதூரமான சச்சரவு
ஏற்பட்டுவிட்டது என்பது குணசிங்கத்தின்‌ தோற்றத்திலிருந்து தெரிந்தது.
கண்ணில்‌ தீப்பொறி பறந்தது. சிவராசா பதறிக்‌ கொண்டு வருவதைக்‌
கண்டவன்‌, சுவரில்‌ தொங்கவிட்டிருந்த தமது திருமணப்படத்தை எறிந்து
உடைத்து சின்னாபின்னப்‌ படூத்தினான்‌.

25


Page 52வயது பதினாறு

 

வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு ஆயத்தமாக குணசிங்கம்‌
தனது பெட்டி ஒன்றைத்‌ தயார்‌ படூத்தினான்‌. இதைக்‌ கண்ட சிவராசா...
ஐயோ தம்பி இதென்ன கோலம்‌.. .. என்ன நடந்தது... .. ஏன்‌ இந்த
நேரம்‌ வீட்டை விட்டப்‌ போகவேண்டும்‌? எனத்‌ தளதளத்த குரலில்‌
இரக்கம்‌ தழும்பக்‌ கேட்டார்‌.

“நீயும்‌ ஒரு மனுசன்‌, ஒழுக்கமான குடும்பம்‌ என்று உன்ர
மகளைக்‌ கட்டினனான்‌. எனக்கு உன்ர மகள்‌ ஒரு பரிசு தந்திருக்கிறாள்‌.
என்ன எண்டூ அவளிட்டக்‌ கேள்‌, சுத்துமாத்துக்‌ குடும்பம்‌, பரிசுகெட்ட
சனியங்களிட்ட வந்தன்‌. என்னெண்டு நான்‌ வெளியில்‌ தலை
காட்டப்போறன்‌? எனது அப்பா அம்மா சகோதரங்களுக்கு என்ன பதில்‌
சொல்லப்போகிறேன்‌...” என ஆவேசமாகக்‌ கதறினான்‌ குணசிங்கம்‌.

சிவராசாவால்‌ சூழ்நிலையைப்‌ புரிந்துகொள்ள முடியவில்லை.
சினிமாப்‌ படம்‌ பார்த்த பின்‌ சந்தோஷமாக  நித்திரைக்குச்‌
சென்றவர்களுக்கு இந்த இரு மணி நேரங்களில்‌ என்ன நடந்தது என்று
அவரால்‌ புரிந்துகொள்ள முடியவில்லை. எவ்வளவு கெஞ்சிக்‌ கேட்டூம்‌
குணசிங்கம்‌ மனதை மாற்றவில்லை. வெளியேறிவிட்டான்‌.

மகளிருந்த நிலையைப்‌ பார்த்த சிவராசாவால்‌ அவளிடம்‌
குணசிங்கத்தின்‌ மனமாற்றத்தின்‌ காரணத்தைக்‌ கேட்க மனம்‌
வரவில்லை. அவளும்‌ அதைக்கூற முன்வரவில்லை. அன்றைய இரவின்‌
அனுபவம்‌ ஒரு மனிதனின்‌ வாழ்விலும்‌ வரக்கூடாது என சிவராசா
சாமியை வேண்டினார்‌. அந்த இரவின்‌ தாக்கத்தின்‌ பாதிப்பை தனது
வாழ்க்கையின்‌ பிடியிலிருந்து மரணம்‌ மட்டூம்‌ விடுதலையைக்‌
கொடுக்கும்‌ என அவருக்குத்‌ தோன்றியது. வனிதா அலங்கோலமாக
நின்றாள்‌. வன்முறை, பாலியல்‌ தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவள்‌
போல்‌ நிலை குலைந்து மெளனமாக நின்றாள்‌.

நாட்கள்‌ மாதங்களாயின. வனிதாவின்‌ தோற்றத்தில்‌ மாற்றங்கள்‌
ஏற்படத்‌ தொடங்கின. அவள்‌ அம்மாவாகப்‌ போகிறாள்‌ என்பது
வெளிப்படையாகியது.

பிள்ளைப்‌ பாக்கியத்தின்‌ பின்‌ என்றாலும்‌ குணசிங்கம்‌ தனது
மனைவியுடன்‌ மீண்டும்‌ உறவை ஏற்படுத்திக்‌ கொள்வான்‌ என்று

சிவராசா கண்ட கனவு குழந்தை பிறந்து சில மாதங்களின்‌ பின்‌ பகற்‌
கனவாகியது.

26


Page 53மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

குணசிங்கம்‌ விவாகரத்துக்‌ கோரி விவாகரத்து மனு தாக்கல்‌
செய்து அதன்‌ பிரதியை சட்ட நியதிப்படி வனிதாவிடம்‌ சேர்ப்பித்தான்‌.

ஒரு வருடத்திற்கு மேலாக தொடர்ந்து வனிதாவும்‌
குணசிங்கமும்‌ பிரிந்திருந்த காரணத்தால்‌ குணசிங்கம்‌ விவாகரத்துப்‌
பெறுவதை சட்டப்படி தவிர்க்க முடியாது என்பதை சட்டத்தரணியின்‌
ஆலோசனையில்‌ அறிந்து கொண்டார்‌.

இருப்பினும்‌, குணசிங்கம்‌ தனது பிள்ளைக்குத்‌ தாபரிப்பு
வழங்கவேண்டும்‌ எனக்‌ கோரி சிவராசாவின்‌ உந்தலில்‌ வனிதா தாபரிப்பு
வழக்கைத்‌ தாக்கல்‌ செய்தாள்‌.

பல மாதங்களின்‌ பின்‌ தாபரிப்பு வழக்கு நீதிமன்றத்தில்‌
விசாரணைக்கு எடுக்கப்பட்டது. நீதிமன்றத்‌ தமிழ்‌ மொழி பெயர்ப்பாளர்‌
மணியின்‌ நிதானமான, அறுத்துறுத்தமான, தெளிவான தமிழ்‌
வார்த்தைகள்‌ சிவராசாவின்‌ காதுகளை அம்புகள்‌ போல்‌ பாய்ந்து
ஊடுருவிச்‌ சென்றன.

“விஞ்ஞானகூட இரத்தப்‌ பரிசோதனையின்‌ (19144) பிரகாரம்‌
சம்பந்தப்பட்ட குழந்தைக்கு எதிர்த்‌ தரப்பினர்‌ குணசிங்கம்‌ கதிரேசன்‌
உயிரியல்‌ ரீதியான அப்பா அல்ல. அத்துடன்‌ குழந்தை பிறப்பதற்கு
முன்பாகவோ அல்லது குழந்தை பிறந்த பின்னரோ சரி குழந்தைக்கும்‌
குணசிங்கத்திற்கும்‌ உணர்வு பூர்வமான உறவு இருந்திருக்கவில்லை.
அத்துடன்‌ குணசிங்கம்‌ குழந்தையை சந்திப்பதற்கான கட்டளையையும்‌
கேட்கவில்லை. ஆகவே அக்குழ ந்தைக்கு அவர்‌ தாபரிப்பு வழங்க
வேண்டியதில்லை.”

இந்த வார்த்தைகள்‌ மீண்டும்‌ மீண்டும்‌ தன்னைக்‌ கூரிய வாள்போல்‌
தாக்கி தனது வாழ்வின்‌ முடிவை விரைவில்‌ நிறைவேற்றிவிடும்‌ என்ற

வேகமான இதயத்துடிப்புடன்‌ நீதிமன்றத்தில்‌ போடப்பட்டிருந்த அமர்வில்‌
சாய்ந்தார்‌ சிவராசா.

27


Page 54வயது பதினாறு

 

என்‌ கண்மணி

நாதன்‌ நன்கு தூக்கத்திலிருந்தான்‌.

அவன்‌ பாதுகாப்பு உத்தியோகத்தராக மாலை 5 மணி
தொடக்கம்‌ இரவு 3 மணிவரை வேலை செய்யும்‌ காரணத்தால்‌
அவன்‌ மறுநாள்‌ காலை பத்து மணியளவில்‌ தான்‌ தூக்கத்திலிருந்து
எழும்புவது வழக்கம்‌.

அவனது மனைவி கண்மணி அவன்‌ தானாக எழுந்திருக்கும்‌
வரை அவனைத்‌ தொந்தரவு செய்யாது தனது கணவனுக்கும்‌ காலை
உணவு தயார்‌ பண்ணி மேசையில்‌ வைத்துவிட்டு தனது வேலைக்குப்‌
புறப்பட்டுச்‌ செல்வாள்‌. காலை 5 மணிக்குத்‌ தூ£க்கத்திலிருந்து எழுந்து
காலைக்‌ கடமைகளை முடித்து ஆறு மணிக்கு வீட்டை விட்டுப்‌
புறப்பட்டால்தான்‌ அவள்‌ எட்டு மணிக்கு வேலைக்குப்‌ போய்ச்‌ சேர
முடியும்‌. நல்ல சம்பளத்துடன்‌ சலுகைகள்‌ பல கொண்ட அமைதியான
வேலை என்ற காரணத்தால்தான்‌ கண்மணி ஸ்காபரோவிலிருந்து ஒருமணி
நேரம்‌ நாளாந்தம்‌ பிரயாணம்‌ செய்து மிசிசாகாவில்‌ உள்ள ஸ்தாபனம்‌
ஒன்றில்‌ தொடர்ந்து பத்து வருடங்களாக வேலை பார்க்கிறாள்‌.

அன்று காலை வழமைக்கு மாறாக தான்‌ வேலைக்குப்‌
புறப்படுமூன்‌ தன்‌ கணவனை எழுப்பி, “நாதன்‌ இன்றைக்கு எனது
கந்தோரில்‌ என்னுடன்‌ பணிபுரியும்‌ மடோனாவை ரொறொன்ரோ விமான
நிலையத்தில்‌ வழியனுப்பப்‌ போகிறேன்‌. அவள்‌ இத்தாலிக்கு ஒருமாத
விடூமூறைக்காகச்‌ செல்கிறாள்‌... விமான நிலையத்திற்கு நண்பர்களுடன்‌
காரில்‌ போவேன்‌. ஆனால்‌ அங்கிருந்து நேரே வீட்டிற்கு வரவேண்டும்‌.
நீர்தான்‌ என்னை வந்து அழைத்துப்‌ போகவேண்டும்‌. நீர்‌ சரியா
இரண்டூ மணிக்கு இரண்டாவது “ரேமினலில்‌” வந்து சந்தியும்‌... நான்‌
உம்மைத்தான்‌ நம்பி இருக்கிறன்‌. மறக்காதேயும்‌. இது முக்கியம்‌. நீரும்‌
எயர்போர்ட்டிற்கு வரவேண்டும்‌. என்னைத்‌ தவிக்க விடாதேயும்‌. ராக்சி

28

 


Page 55மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

பிடிச்சுக்‌ கொண்டு வரச்சொல்லக்‌ கூடாது. நீர்‌ சரியாக 2 மணிக்கு
என்னை எயர்போட்டில்‌ சந்திக்காவிட்டால்‌ உமக்கும்‌ எனக்கும்‌ பெரிய
பிரச்சனை வரும்‌..'' எனக்‌ கூறிச்‌ சென்றாள்‌.

தூக்கத்தில்‌ அலட்சியமாக இருந்தவனுக்கு “உமக்கும்‌ எனக்கும்‌
பெரிய பிரச்சனை வரும்‌” என்ற வார்த்தைகள்‌ மனச்‌ சஞ்சலத்தையும்‌
இதயத்தில்‌ சிறிய வலிப்பையும்‌ ஏற்படுத்தியது. திருமணமாகி 20
வருடங்களை அவளுடன்‌ கழித்து விட்டான்‌. ஒரு பொழுதும்‌ அவள்‌
இப்பேற்பட்ட வார்த்தைகளைப்‌ பாவித்ததை அவன்‌ கேட்டறியான்‌.

கல்லூரி உதைபந்தாட்டக்‌ குழுவின்‌ தலைவனாகவும்‌,
தொடர்ந்து யாழ்‌ மாவட்ட உதை பந்தாட்டத்‌ தெரிவுக்‌ குழுவின்‌
தலைவனாகவும்‌, பின்‌ அகில இலங்கை உதைபந்தாட்ட வீரனாகவும்‌
புகழ்‌ பெற்ற நாதனில்‌ கண்மணி அவனது கல்லூரி நாட்களிலிருந்து
கவர்ச்சி வசப்பட்டிருந்தாள்‌. தனக்கு ஐந்து வயதுக்கு குறைந்தவளான
கண்மணியை தனது கல்லூரி நாட்களில்‌ கவனத்தில்‌ கொள்வதற்கு
நாதனுக்கு வாய்ப்பு ஏற்படவில்லை. புகழின்‌ உச்சியிலிருந்த நாதனின்‌
கடைக்கண்‌ பார்வைக்காக எத்தனை கல்லூரிப்‌ பெண்கள்‌ காத்திருந்தனர்‌.
நண்பனின்‌ தங்கை என்ற காரணத்திற்காகவும்‌ நாதன்‌ கண்மணியின்‌
உள்ள உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி எடுக்கவில்லை.

உதைபந்தாட்டப்‌ பயிற்சி எடுப்பதற்காக இலங்கை அரசினால்‌
இங்கிலாந்து அனுப்பப்பட்ட நாதன்‌ சில வருடங்களை அங்கு கழித்தபின்‌
மீண்டும்‌ இலங்கை திரும்பிய பின்பு உதை பந்தாட்டப்‌ போட்டி ஒன்றின்‌
பின்‌ கொழும்பு சுகததாச மைதானத்தில்‌ நீண்ட இடைவேளையின்‌
பின்‌ கண்மணியைச்‌ சந்தித்த பொழுது முதல்‌ தடவையாக அவளின்‌
கண்களின்‌ காந்த ஈர்ப்பால்‌ இழுக்கப்பட்டான்‌.

இன்னும்‌ கால தாமதமானால்‌ தனது காதல்‌ நீர்க்‌ குமிழி போல்‌
ஆகிவிடும்‌ என்ற ஏக்கத்தால்‌ சந்தர்ப்பம்‌ பார்த்து நாதனிடம்‌ தனது
காதலைத்‌ துணிந்து தெரிவித்து விட்டாள்‌ கண்மணி.

தனது கடந்த காலப்‌ பொறுப்பற்ற வாழ்க்கையை ஒருகணம்‌
சிந்தித்துப்‌ பார்த்த நாதன்‌ கண்மணியை, தனது நெருங்கிய நண்பனின்‌
தங்கையின்‌ காதலை எவ்வாறு ஏற்றுக்‌ கொள்வதெனப்‌ பல மாதங்களாகத்‌
தன்‌ உள்ள உணர்வுடன்‌ போராடினான்‌. இருப்பினும்‌ கண்மணியின்‌
ஆளுமை அவனை ஆட்கொண்டது. தனது கடந்தகால வாழ்க்கையை
கனவுபோல்‌ மறந்து புதியதோர்‌ வாழ்க்கை அத்தியாயத்தை
கண்மணியுடன்‌ தொடங்க படிப்படியாகத்‌ தன்னை தயார்‌ பண்ணி ஈற்றில்‌

கண்மணியின்‌ காதலை ஏற்றுக்‌ கொண்டான்‌.
29


Page 56வயது பதினாறு

 

கண்மணி-நாதனின்‌ திருமணம்‌ பிரபலங்களின்‌ திருமணமாகக்‌
கொழும்பில்‌ புகழ்பெற்ற ஹோட்டலில்‌ சிறப்பாக நடந்தேறியது. ஆங்கிலப்‌
பத்திரிகைகள்‌ விளையாட்டுப்‌ பகுதியில்‌ இவர்களின்‌ திருமணத்தை
செய்தியாக வெளியிட்டன.

இருபது வருடங்கள்‌ பல நாடூகளில்‌ இன்ப துன்பங்களில்‌
திளைத்தது; தற்பொழுது இவர்களின்‌ வாழ்க்கைச்‌ சக்கரம்‌ கனடாவில்‌
தொடர்ந்து சுழன்று கொண்டு போகிறது. கனடாவில்‌ சமூகப்படியில்‌
மேலிருக்கும்‌ இவர்கள்‌ பலராலும்‌ கவரப்பட்டவர்கள்‌. குடும்ப
வைபவங்களை நண்பர்களுடன்‌ சேர்ந்து சிறப்பாகக்‌ கொண்டாடி
மகிழ்வது இவர்களின்‌ சிறப்பான பண்பு. மேற்புலத்து நடனமாடூவதில்‌
நிகரற்றவர்கள்‌. மாதிரித்‌ தம்பதிகள்‌ என பலரும்‌ இவர்களைப்‌
பாராட்டுவார்கள்‌.

“உமக்கும்‌ எனக்கும்‌ பெரிய பிரச்சனை வரும்‌. என்ற
வார்த்தைகள்‌ மீண்டும்‌ நாதனை உலுக்கின. தூக்கம்‌ கலைந்தவனால்‌
தொடர்ந்து கட்டிலில்‌ படுத்திருக்க முடியவில்லை. மன உளைச்சலாக
இருந்தது அவனுக்கு. கண்மணி புறப்பட்ட சில நிமிடங்களில்‌ கட்டிலை
விட்டு எழுந்துவிட்டான்‌. விமான நிலையத்திற்குப்‌ புறப்படுவதற்கு
சுமார்‌ ஆறு மணித்தியாலங்கள்‌ இருந்தன. இதற்கிடையில்‌ அவளா
சொன்னாள்‌! ஏன்‌? எதற்காகச்‌ சொன்னாள்‌?.. .. பல பதில்‌ காணா
வினாக்கள்‌ தோன்றின.

என்‌ கண்மணிக்காக நான்‌ என்னதான்‌ செய்யமாட்டன்‌.
அவளைக்‌ காதலித்த நாள்‌ தொட்டு இன்றுவரை அவள்‌ அன்பிற்கு
இணையாக என்னையே கொடுத்து வந்தேன்‌. விமான நிலையத்தில்‌
அவளை ஏற்றிவர நான்‌ ஏன்‌ தயங்கவேண்டூம்‌. இவ்வாறான
விடயங்களுக்கெல்லாம்‌ அன்றுதொட்டு இன்றுவரை என்னை அவள்‌
எதிர்பார்த்து வாழ்ந்தவளல்லவே. இப்படிப்பட்ட விடயங்களுக்காக நான்‌
முன்வந்து உதவ முயன்ற வேளைகளில்‌ எல்லாம்‌ என்‌ நலன்‌ கருதி
எனது உதவியை மறுப்பவளல்லவா. எதற்காக அந்த அவசியமற்ற
வார்த்தைகள்‌.. மீண்டும்‌ கேள்விகள்‌ அவன்‌ மனதில்‌ எழுந்தன.

அவளின்‌ அந்த வார்த்தைகளுக்கு காரணமாக அமையக்கூடிய
தடயங்கள்‌ ஏதும்‌ கிடைக்குமா என்ற ஏக்கத்துடன்‌ தங்கள்‌ படுக்கை
அறையை; குறிப்பாக கண்மணியின்‌ பிரத்தியேக பகுதிகளை ஆராய்ந்தான்‌.
தடயம்‌ கிடைக்கவில்லை. மறுகணம்‌ தனது மனநிலையை எண்ணி
வெட்கப்பட்டான்‌. தன்‌ மனைவியின்‌ வார்த்தைகளில்‌ விபரீதம்‌ ஏற்படலாமா
என்ற கற்பனையில்‌ வேதனையும்‌ சங்கடமும்‌ அடைந்தான்‌.
30


Page 57மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

பல மணி நேரங்களுக்கு முன்பே விமான நிலையத்திற்ருப்‌
புறப்படுவதற்காகத்‌ தன்னைத்‌ தயார்‌ பண்ணினான்‌. அந்த சில மணி
நேரங்கள்‌ பல வருடங்கள்‌ போல்‌ தோன்றின. நினைவுகள்‌ நிலையின்றி
அலைந்தன.

கடந்த இரவு அவன்‌ நினைவுகளில்‌ தோன்றியது. இருபது
வருடங்களின்‌ முன்‌, இளமை உணர்வுகளுடன்‌ உறவு கொண்ட கண்மணி
அன்றைய இரவில்‌ மீண்டும்‌ அதே துடிப்புடன்‌ தோன்றிய நினைவு
அவனை அந்த நிமிடம்‌ திகிலடையச்‌ செய்தது. அவள்‌ சொரிந்த
அன்பு, கூறிய வார்த்தைகள்‌.. .. அதற்கு மாறாக இன்று காலை
அவள்‌ கூறிய வார்த்தைகள்‌.. .. கடந்த இரவில்‌ அடைந்த மகிழ்வின்‌
இன்பங்கள்‌ கூட குழப்பமடைந்துள்ள அவனை எதுவிதத்திலும்‌ ஆறுதல்‌
படுத்தவில்லை. கடந்த இரவின்‌ இன்ப நினைவில்‌ திளைத்திருந்த
வேளை தான்‌ இங்கிலாந்தில்‌ திருமணத்திற்கு முன்‌ கழித்த
காலத்தைப்‌ பற்றி அவள்‌ வினவியது அவனது கவனத்தில்‌ வந்தது.
அது மட்டூமா.. திருமணத்திற்கு முன்‌ தான்‌ சென்ற நாடூகள்‌ அந்த
நாடுகளில்‌ தான்‌ நடத்திய கூத்துகள்‌, லீலைகள்‌, ரசித்த காட்சிகள்‌,
சரித்திர முக்கியத்துவம்‌ பெற்ற இடங்கள்‌, கட்டிடங்கள்‌ ஆகியவற்றைத்‌
திருமணத்தின்‌ பின்‌ அவளும்‌ பார்த்து உணர்ந்து ரசிப்பதற்காக அவளை
அழைத்துச்‌ சென்ற சம்பவங்களை எல்லாவற்யைம்‌ விபரமாக அவள்‌
கடந்த இரவு இரைமீட்டியது ஞாபகத்திற்கு வந்ததும்‌; ஏன்‌ எதற்காக
இவற்றைப்‌ பற்றி நினைவு படூத்தி, இரவு முழுவதும்‌ இன்பமூட்டி, அந்த
இரவு முடிந்த மறுகணமே நமக்குள்‌ பெரிய பிரச்சனை வரும்‌ என
என்றுமில்லா வகையில்‌ எச்சரிக்கை செய்தாள்‌? மீண்டும்‌ மீண்டும்‌ அதே
கேள்வி.

மனதில்‌ வியப்பு, ஊடல்‌; மறுகணம்‌ வெறுப்பு, பயம்‌, கோவம்‌:
எல்லா உணர்வுகளும்‌ மாறி மாறித்‌ தோன்றி அவனைச்‌ சித்திரவதை
செய்தன. விமான நிலையம்‌ வினாக்களுக்குப்‌ பதில்‌ கூறும்‌ என
நம்பினான்‌. அதனால்‌ விமான நிலையத்தில்‌ அவளைச்‌ சந்திக்கும்‌
நேரம்‌ மறு நொடியில்‌ வராதா என ஏங்கினான்‌.

உண்மை நிலையை அறியாது ஏன்‌ மனதைப்‌ புண்படுத்திக்‌
கொள்ளவேண்டும்‌? இன்னும்‌ சில மணி நேரங்களில்‌ விமான நிலையத்தில்‌
அவளைச்‌ சந்திக்கத்தானே போகிறேன்‌. அதுவரை மனதில்‌ ஏன்‌
கற்பனைகளை வளர்த்து இருபது வருடங்களாக இலட்சிய மனைவியாக
வாழ்ந்தவளில்‌ வெறுப்பை ஏற்படுத்த வேண்டும்‌. அந்த நேரம்‌ வஷர
அவள்‌ தன்‌ வாழ்வில்‌ ஏற்படுத்திய' மகத்தான மாற்றங்களை மனதில்‌
நினைத்து, மனமாற மகிழ்ந்து ஆறதலடைவதன்‌ மூலம்‌ மனதில்‌ எழுந்த

குழப்ப நிலையை ஒருவாறு சீர்ப்படூத்த முயன்றான்‌.
31


Page 58வயது பதினாறு

 

கண்மணி ஒரு சராசரிப்‌ பெண்ணாக இருந்திருந்தால்‌ இன்று
நாதனின்‌ வாழ்வு சிதைந்து, சீரழிந்து போயிருக்கும்‌. சமூகத்தில்‌ ஒரு
மனிதனாக அவனால்‌ தலை நிமிர்ந்து நிற்க முடியாது தலைக்‌ குனிவை
ஏற்படுத்தி இருக்கும்‌.

ஒரு சம்பவமா? இரு சம்பவமா? எத்தனை சந்தர்ப்பங்களில்‌
நாதன்‌ கண்மணியின்‌ மனதைச்‌ சிதைத்துள்ளான்‌. குறிப்பாக ஒரு
சம்பவம்‌ அவன்‌ மனதை உறுத்தியது:

பல வருடங்களின்‌ முன்‌ நண்பர்களுடன்‌ சேர்ந்து கியுபா
நாட்டிற்கு இரு வார விடுமுறையைக்‌ கழிப்பதற்கு சென்ற வேளை
நண்பர்களுடன்‌ சேர்ந்து இளம்‌ பெண்களுடன்‌ உடலுறவு கொண்டதும்‌,
விடுமுறை முடிந்து வீடு திரும்பிய பின்‌ குற்ற உணர்வு ஒரு பக்கம்‌
உறுத்த, அந்தத்‌ தொடர்புகள்‌ மூலம்‌ எயிட்ஸ்‌ நோய்‌ ஏற்படலாமா
என்ற ஏக்கம்‌ வருத்த, அவற்றிலிருந்து விடுபடுவதற்காக கண்மணியிடம்‌
தனது தவறை ஒப்புவித்து அதன்‌ மூலம்‌ அவளின்‌ மனச்‌ சுமையை
மலைபோல்‌ உயர்த்தியதை நினைத்தும்‌ துக்கம்‌ தாங்காமல்‌ அவன்‌
கண்களிலிருந்து கண்ணீர்‌ சொரிந்தது. தாய்போல்‌ தன்னைத்‌ தாங்கி,
தன்னை மன்னித்து, அந்த பயத்திலிருந்து விடுபடக்‌ கண்மணி காட்டிய
பரிவு, பாசம்‌, உளவியல்‌ ரீதியாக அவள்‌ அளித்த உறுதுணை, தன்னை
மீண்டும்‌ உயிர்பெறச்‌ செய்த செயல்களை நினைக்கும்‌ வேளை தன்னில்‌
வெறுப்பும்‌ அவளில்‌ மதிப்பும்‌ அவனுக்கு ஏற்பட்டது.

நாதன்‌ தன்னைத்‌ திருமணம்‌ செய்ததைக்‌ கண்மணி
பேரின்பமாகக்‌ கருதியவள்‌. திக்கற்ற தனக்கு வாழ்வளித்த வள்ளல்‌
நாதன்‌ என அவனில்‌ மதிப்பு வைத்திருந்தாள்‌. “நாதன்‌ நீங்கள்‌ எனக்கு
வாழ்வளித்த தெய்வம்‌” எனப்‌ பல தடவைகள்‌ கண்மணி தன்னிடம்‌
கூறிய வார்த்தைகள்‌ அப்பொழுது அவனது காதுகளில்‌ ஒலித்தன.
அதில்‌ ஏற்பட்ட சுகம்‌ புண்ணுக்கு புனுகு தடவுவது போலிருந்தது.
அந்த வார்த்தைகளைக்‌ கூறும்‌ வேளைகளில்‌ எல்லாம்‌ அவளைக்‌
கட்டியணைத்து அவளைத்‌ தான்‌ திருமணம்‌ செய்வதற்கு முன்‌ அவள்‌
வாழ்வில்‌ நிகழ்ந்த கடந்த சம்பவங்களை அவள்‌ மனதிலிருந்து
நிரந்தரமாக அழித்திடத்‌ தான்‌ மேற்கொள்ளும்‌ காதல்‌ லீலைகளை
எண்ணிய வேளை, தமது உறவின்‌ பலம்‌ ஒருவரின்‌ குறைபாட்டை
மற்றவர்‌ மகிழ்வுடன்‌ ஏற்பது என்பதை உறுதி செய்தது. தனக்காக
அவள்‌ மாறவேண்டும்‌ என்று அவனோ அல்லது அவளுக்காக தான்‌
மாறவேண்டும்‌ என்று அவளோ ஒரு பொழுதும்‌ எண்ணியது கிடையாது.
“மாறவேண்டாம்‌. மாறவேண்டாம்‌. மாறினாலும்‌ மாறாவிட்டாலும்‌ நீ எனது
நண்பன்‌” என்ற கோட்பாட்டை தாம்‌ பல தடவைகள்‌ பேசிப்பகிர்ந்து
கொண்டதை நினைத்தான்‌.
32


Page 59வயது பதினாறு

 

திருமணத்தின்‌ முன்‌ இளவயதில்‌ அவள்‌ தனது நண்பன்‌
ஒருவனால்‌ பாலியல்‌ ரீதியாக ஏமாற்றப்பட்டது அவளின்‌ தவறல்ல
என்பதை சமூக, உளவியல்‌ ரீதியாக நிரூபித்து அவளைச்‌ சாந்திப்படுத்த
எடூத்த எத்தனங்கள்‌ எத்தனை என எண்ணிப்‌ பார்த்தான்‌.

தம்‌ இருவரின்‌ வாழ்விலும்‌ இனிப்‌ பிரிவென்பதில்லை என
மனதில்‌ உறுதி எழுந்த வேளை தொலைபேசி மணி அடித்தது. அடுத்த
பக்கத்தில்‌ கண்மணி-நாதனின்‌ ஒரே மகள்‌ எல்லாள்‌,

“அப்பா... அம்மா உங்களை எயர்போர்ட்டில்‌ சரியாக இரண்டூ
மணிக்கு நிக்கட்டாம்‌ என ஞாபகப்படூத்தச்‌ சொன்னவ. அதோடூ ஒரு
பூங்கொத்தும்‌ வாங்கி வரட்டாம்‌.” எனக்‌ கூறி அவசர அவசரத்தில்‌
தொலை பேசி சம்பாசணையை முடித்துக்கொண்டாள்‌.

காலையில்‌ கண்மணி அவனை நித்திரையிலிருந்து
எழுப்பியதிலிருந்து தொடர்ந்து நடைபெறும்‌ சம்பவங்கள்‌ பதட்டமும்‌
திகிலூட்டுவதாகவும்‌ அமைந்தன. எல்லாவற்றிற்கும்‌ முற்றுப்புள்ளி
வைக்க வேண்டூமானால்‌ கண்மணியை அவளது அலுவலகத்தில்‌
தொலைபேசி மூலம்‌ அழைத்து விளக்கம்‌ கேட்க வேண்டும்‌. ஆனால்‌
தொலைபேசியில்‌ தனது சூழப்பநிலை பற்றி வினவினால்‌ அதை அவள்‌
தவறாகப்‌ புரிந்துகொண்டு... குறிப்பாக அந்த வார்த்தைகள்‌ முன்கூட்டியே
திட்டமிடப்படாத அப்பாவித்‌ தனத்துடன்‌ கூறப்பட்ட வார்த்தைகளாக
அமைந்திருந்தால்‌ அவள்‌ தன்னில்‌ வேதனை அடையக்கூடிய செயலாக
அது அமைந்துவிடும்‌ எனக்‌ கருதினான்‌. மேலும்‌ கபடமற்ற தன்‌
வார்த்தைக்கு விபரீதமான அர்த்தம்‌ கற்பித்து 20 வருட குடூம்ப வாழ்வின்‌
மத்தியிலும்‌ தன்னைப்‌ புரிந்து கொள்ளாத கணவனாக இதுவரை
வாழ்ந்து விட்டதாக தன்மேல்‌ அவள்‌ தாழ்வான அபிப்பிராயம்‌ கொண்டு
விடுவாளோ என்ற பயமும்‌ வருத்தியது.

அவள்‌ கூறிய வார்த்தைகளைப்‌ பற்றி விளக்கம்‌ கேட்காது
என்ன காரணத்துக்காக விமான நிலையத்திற்கு வரம்‌ பொழுது
பூங்கொத்து வாங்கி வரவேண்டும்‌ என்று கேட்டுவிடலாம்‌ என மனதைத்‌
தயார்‌ படுத்தி தொலைபேசி எண்களை அழுத்தினான்‌.

வழமையாக கண்மணிதான்‌ அவன்‌ அழுத்திய எண்களைக்‌
கொண்ட தொலைபேசி அழைப்புக்குப்‌ பதில்‌ கூறுவாள்‌. ஆனால்‌
இப்பொழுது வேறு ஒரு பெண்ணின்‌ குரல்‌ ஒலித்தது. கண்மணிபுடன்‌
பேசக்‌ கேட்டபோது அவனுக்குக்‌ கிடைத்த பதில்‌ அவனைத்‌ திகிலடையச்‌

33


Page 60மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

செய்தது. அது மட்டுமல்லாமல்‌ அவனது மனதை மேலும்‌ குழப்பியது.
இதயத்‌ துடிப்பு வேகமாக அடிக்கத்‌ தொடங்கியது. ஒரு கணம்‌ தான்‌
விமான நிலையத்திற்குச்‌ செல்ல முடியாமல்‌ ஆஸ்பத்திரியில்‌ அவசர
சிகிச்சைப்‌ பகுதியில்‌ சேரவேண்டி ஏற்படுமோ எனப்‌ பயமுற்றான்‌.

இன்று வேலைக்குப்‌ போகவில்லை என்று கண்மணி
எனக்குக்‌ கூறவில்லையே. அப்படியானால்‌ அதிகாலை எழுந்து எங்கு
சென்றிருப்பாள்‌? பூக்கள்‌ வேறு வாங்கி வருமபடி கேட்டூுள்ளாள்‌.
யாருக்காக?.. என்னதான்‌ நடக்கப்‌ போகிறதோ? பயத்தில்‌ அவன்‌ கை
கால்கள்‌ நடுங்கத்‌ தொடங்கின.

தனது மனநிலையைச்‌ சமப்படூத்தாவிட்டால்‌ தன்‌ உடல்‌
நிலை பாதிக்கப்படும்‌ என்பதை உணர்ந்து யோகாப்பியாசம்‌ செய்தான்‌.
சில நிமிடங்களில்‌ அவன்‌ மனநிலை ஓரளவு சமநிலை அடைந்தது.
அப்பொழுது எங்கோ வாசித்த மூன்று ஆங்கில சொற்கள்‌ அவன்‌
ஞாபகத்திற்கு வந்தன. “(1110024237 1௦4226” ஈற்றில்‌ ஒன்றுமே
முக்கியமில்லை. இந்த சொற்களைப்‌ பலமுறை உச்சரித்ததில்‌ அவன்‌
மனதில்‌ ஒருவித துணிவு ஏற்பட்டது.

விமான நிலையத்தில்‌ அதிர்ச்சி அளிக்கும்‌ சம்பவம்‌ நிகழும்‌
என்பதை அவனது உள்மனம்‌ உறுத்தியது. இருப்பினும்‌ அது
எதுவானாலும்‌ அதை ஏற்றுக்‌ கொள்வதற்கு இப்பொழுது அவனது
மனநிலை தயாராகியது.

இரண்டு மணிக்கு முன்னதாகவே விட்‌. நிலையத்திற்குச்‌
சென்றுவிட வேண்டும்‌ என்ற உறுதியுடன்‌ மதியமே பூங்கொத்து ஒன்றை
வாங்கிக்கொண்டு விமான நிலையம்‌ நோக்கிப்‌ புறப்பட்டான்‌.

சுமார்‌ 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே அவன்‌ விமான
நிலையத்தை வந்து அடைந்துவிட்டான்‌. கண்மணி அப்பொழுது
அங்கிருக்கவில்லை.

ஒரு மூலையில்‌, இருக்கையில்‌ அமர்ந்தவன்‌, காலையிலிருந்து
நீராகாரம்‌ தன்னும்‌ பருகாத காரணத்தாலும்‌ மனதில்‌ ஏற்பட்டூக்‌
கொண்டிருக்கின்ற உணர்வலைகளின்‌ உலுத்தலின்‌ காரணத்தாலும்‌
அயர்ந்து தூங்கிவிட்டான்‌.

எவ்வளவு நேரம்‌ தன்னை மறந்த நிலையில்‌ இருக்கையிலே
கண்‌ அயர்ந்திருப்பான்‌ என்று அவனக்குத்‌ தெரியாது. கண்மணி அவனை

34


Page 61வயது பதினாறு

 

அழைக்கும்‌ சத்தத்திலும்‌ யாரோ தோளில்‌ பிடித்து அசைக்கும்‌
உணர்வுடனும்‌ கண்‌ விழித்துப்‌ பார்த்தவனுக்கு தான்‌ கண்ட காட்சியை
நம்ப முடியவில்லை. தான்‌ தொடர்ந்தும்‌ தூக்கத்தில்‌ இருக்கிறேனா?
நான்‌ காண்பது கனவா? அல்லது சுய உணர்வுடன்‌ உள்ளேனா?
என உறுதிப்படுத்த ஒரு முறை தன்னைக்‌ கிள்ளிப்‌ பார்த்தான்‌.
தான்‌ காண்பது நிஜம்தான்‌ என்பதை உறுதியாக்கியவன்‌ தொடர்ந்து
செய்வதறியாது செயலிழந்து போனான்‌.

நாதனின்‌ நினைவு பின்னோக்கிச்‌ சென்று இங்கிலாந்தில்‌
அவனது வாழ்க்கையை தெளிவாக ஞாபகப்படூத்தியது.

1980ஆம்‌ ஆண்டின்‌ நடூப்பகுதியில்‌ இங்கிலாந்து சென்று
லண்டனிலுள்ள “ருட்டிங்‌ புரோட்வே'” என்ற பகுதியில்‌ வாழ்ந்து வந்த
காலத்தில்‌ நடந்த சம்பவங்களிலிருந்து காட்சிகள்‌ ஆரம்பமாயின:

லண்டனில்‌ சில மாதங்கள்‌ கழிந்துவிட்டன. கொழும்பில்‌
உறவாடிய நண்பர்களின்‌ உறவு மீளக்‌ கிட்டியது. அவர்களில்‌ சிலர்‌
லண்டன்‌ மாநகரை அண்டிய “கவுண்டிஸ்‌” என அழைக்கப்படும்‌
பிரதேசங்களில்‌ அமைந்துள்ள வைத்தியசாலைகளில்‌ ஆண்‌ தாதிகளாக
வேலையில்‌ அமர்ந்துள்ளார்கள்‌. சிலர்‌ பல்கலைக்கழகங்களில்‌ உயர்கல்வி
கற்று வந்தனர்‌. விடுதலைத்‌ தினங்களில்‌ இவர்களுடன்‌ சேர்ந்து
பல வழிகளில்‌ நாதன்‌ பொழுதைக்‌ கழிப்பான்‌. விளையாட்டூக்களில்‌
குறிப்பாக உதை பந்தாட்டத்தில்‌ இவனுடைய திறமையில்‌ மையல்‌ .
கொண்ட நண்பர்கள்‌ சந்தர்ப்பம்‌ ஏற்படும்‌ தறுவாய்களில்‌ தமது தொழில்‌
ஸ்தாபனங்கள்‌ நடத்தும்‌ விளையாட்டுக்களில்‌ இவனையும்‌ பங்கு
கொள்ளச்‌ செய்வார்கள்‌. இந்தச்‌ சந்தர்ப்பங்களில்‌ உண்டான உறவு

இது.

ராஜன்‌ “சறே” எனப்படும்‌ பகுதியிலுள்ள வைத்தியசாலையில்‌
ஆண்‌ தாதியாக தொழில்‌ பார்த்து வந்தான்‌. ராஜனும்‌ நாதனும்‌
யாழ்ப்பாணத்தில்‌ ஒரே கல்லூரியில்‌ கல்வி கற்றவர்கள்‌. இருவரும்‌ தம்‌
கல்லூரிக்கு விளையாட்டுத்‌ துறையில்‌ பேரும்‌, புகழும்‌, பெருமையும்‌
தேடிக்கொடூத்தவர்கள்‌. இவர்கள்‌ உதைபந்தாட்ட அணியில்‌ இருந்த
காலத்தில்‌ இரு தடவைகள்‌ இவர்கள்‌ கல்லூரி அகில இலங்கை
உதைபந்தாட்டப்‌ போட்டிகளில்‌ வெற்றி ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
ராஜன்‌-நாதன்‌ இருவரின்‌ கூட்டு இந்த வெற்றிகளுக்கு முக்கிய காரணம்‌
என்பது உதைபந்தாட்ட ஆர்வலர்களின்‌ அபிப்பிராயம்‌. இருவரின்‌ நட்பு
நீண்ட இடைவெளியின்‌ பின்‌ இங்கிலாந்தில்‌ தொடர்ந்தது.

35


Page 62மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

ராஜனின்‌ உதைபந்தாட்டத்‌ திறமையை அறிந்த அவனது
வைத்தியசாலை உதைபந்தாட்டக்‌ குழு அவனை தமது அணியின்‌
முக்கிய உறுப்பினராக சேர்த்துக்‌ கொண்டது. எந்தச்‌ சுற்றுப்‌
போட்டிகளிலும்‌ அரை இறுதி ஆட்டம்வரை வெற்றி பெற்றிராத இந்த
அணி ராஜனின்‌ உதைபந்தாட்டத்தில்‌ நிறைந்திருந்த நுணுக்கமான
திறன்களால்‌ அவன்‌ சேர்ந்த முதல்‌ வருடமே சுற்றுப்‌ போட்டிகளில்‌ அரை
இறுதி ஆட்டம்வரை வெற்றி பெறத்‌ தொடங்கியது. இதன்‌ காரணத்தால்‌
ராஜனின்‌ வைத்தியசாலை ஊழியர்களும்‌ வைத்தியசாலை அமைந்துள்ள
பகுதியில்‌ வாழும்‌ உதை பந்தாட்ட ரசிகர்களும்‌ இந்த அணியினர்‌ பங்கு
கொள்ளும்‌ சுற்றுப்போட்டிகளில்‌ அதிக ஆர்வம்‌ காட்டத்‌ தொடங்கினர்‌.
இது வைத்தியசாலை நீர்வாகிகளினதும்‌ உதைபந்தாட்டக்‌ குழுவிற்குப்‌
பொறுப்பாக இருந்த நடத்துனர்களினதும்‌ உற்சாகத்தைத்‌ தூண்டியது.
இந்தச்‌ சந்தர்ப்பத்தில்தான்‌ ராஜன்‌ தனது நண்பன்‌ நாதனின்‌ அபார
உதைபந்தாட்டத்‌ திறமையை நீர்வாகிகளிடம்‌ எடுத்து இயம்பினான்‌.
ராஜனில்‌ வைத்திருந்த மதிப்பு, நம்பிக்கை காரணத்தால்‌ நாதனையும்‌
வைத்திய சாலையின்‌ ஊழியனாகச்‌ சேர்த்துக்கொள்ள நீர்வாகம்‌
தீர்மானித்தது. இந்தச்‌ செய்தி நாதனுக்கு மிகவும்‌ மகிழ்ச்சியைக்‌
கொடுத்தது. “புலமைப்‌ பரிசில்‌ மாணவனாக குடிவரவு அந்தஸ்துடன்‌
இங்கிலாந்தில்‌ வாழ்ந்து வந்த நாதனுக்கு இந்தத்‌ தொழில்‌ ரீதியான
சந்தர்ப்பம்‌ பொருளாதார ரீதியாகவும்‌ இங்கிலாந்தில்‌ குடிவரவு நிலை
காரணமாகவும்‌ நல்ல பெரும்‌ மாற்றத்தை ஏற்படுத்தியது. பகுதிநேர வேலை
மட்டூம்‌ செய்யும்‌ அனுமதி பெற்றிருந்தவனுக்கு முழுநேர வேலை வாய்ப்பு
மட்டுமல்லாது தொடர்ந்து உதைபந்தாட்ட புலமைப்பரிசில்‌ பயிற்சியை
தொடர்வதற்கும்‌, அத்துடன்‌ உதைபந்தாட்டச்‌ சுற்றுப்போட்டிகளில்‌ உயர்‌
மட்டத்தில்‌ பங்கு பற்றுவதற்கும்‌ வாய்ப்புக்‌ கிடைத்தது.

பல்லாயிரம்‌ மைல்களுக்கு அப்பால்‌ எழுபதுகளில்‌ சுமார்‌
இருபத்தைந்து வயதுகளில்‌ பெற்றோர்‌, உறவுகளைப்‌ பிரிந்து கலாசார
முரண்பாட்டூச்‌ சூழல்களில்‌ வாழ்ந்து வந்த நாதனுக்கும்‌ ராஜனுக்கும்‌
வாழ்க்கையில்‌ பல அனுபவங்கள்‌; சில கசப்பானவைகளாகவும்‌ பல
பசுமையானவைகளாகவும்‌ அமைந்தன.

நாதனால்‌ அவனது வாழ்நாளில்‌ என்றும்‌ மறக்க முடியாத
சம்பவம்‌:

கல்லூரிக்‌ காலங்களைப்‌ போன்று நாதன்‌ ராஜன்‌ கூட்டூ
உதைபந்தாட்டப்‌ போட்டிகளில்‌ மிகவும்‌ அபூர்வ முடிவுகளை
ஏற்படுத்தியது. என்றும்‌ முன்னணியில்‌ திகழாத இவர்களது அணி
பலராலும்‌ பாராட்டிப்‌ பேசப்படும்‌ அளவிற்கு அப்‌ பிரதேசத்திலே

36


Page 63வயது பதினாறு

 

சிறந்த அணியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாதன்‌-ராஜன்‌ பலரின்‌
நாயகர்களாகினார்கள்‌. அழகிய இளம்‌ பெண்கள்‌ நிறத்‌ துவேசத்தை
ஓரங்கட்டி வைத்துவிட்டு இவர்களின்‌ நட்புக்காகப்‌ போட்டி போட்டனர்‌.
இருவருக்கும்‌ பல நட்புகள்‌ ஏற்பட்டன.

அவற்றில்‌ ஒன்று நாதனுக்கு ஒரு . சிறப்பான நட்பாக
அமைந்துவிட்டது. ஜாலியா உதைபந்தாட்டத்தில்‌ கொண்டூள்ள அதி
தீவிரப்பற்றால்‌ நாதனின்‌ திறமையை கண்டூ கொண்டு அவனில்‌ அளவு
மீறிய காதல்‌ கொண்டூவிட்டாள்‌. அவன்‌ பங்கு கொள்ளும்‌ போட்டிகளைத்‌
தவறாமல்‌ பார்ப்பதுடன்‌ படிப்படியாக அவனுடன்‌ தொடர்பு : கொண்டு
அவனின்‌ உள்ளத்திலும்‌ இடம்‌ பிடித்து விட்டாள்‌. நட்பாகிக்‌ காதலாகிய
அவர்களின்‌ உறவு திருமணப்பேச்சு வரை முன்னேறியது.

புலமைப்பரிசில்‌ காலம்‌ முடிவடைந்து விட்டது. இலங்கை
அரசாங்கத்துடன்‌ செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி நாதன்‌ இங்கிலாந்தை
விட்டு இலங்கை திரும்பவேண்டிய காலம்‌ நெருங்கி வந்தது.

ஜுலியாவிடம்‌ பல தடவைகளில்‌ தம்‌ திருமணத்தைப்‌
பற்றி நாதன்‌ பேசிவிட்டான்‌. அவளும்‌ திருமணத்திற்கு ஆட்சேபனை
தெரிவிக்கவில்லை. ஆனால்‌, அவளின்‌ பெற்றோர்கள்‌ அவர்களின்‌
திருமணத்தை அங்கீகரிக்கவில்லை. அத்துடன்‌ அவள்‌ நாதனுடன்‌
இலங்கை சென்று அங்கு நிரந்தரமாக வாழ்க்கையைத்‌ தொடர்வதையும்‌
நிராகரித்து விட்டார்கள்‌.

மறுநாள்‌ இலங்கை நோக்கி விமானப்‌ பிரயாணம்‌. நாதனும்‌,
ஜுலியாவும்‌ அவளின்‌ பெற்றோர்களிடம்‌ இறுதித்‌ தடவையாக சம்மதம்‌
வேண்டி நின்றனர்‌. பெற்றோர்‌ மறுத்துவிட்டனர்‌. நாதன்‌ மிகவும்‌
கோபமடைந்து பெற்றோர்களை விட்டூவிட்டூத்‌ தன்னுடன்‌ வரும்படி
ஜுலியாவை வற்புறுத்தினான்‌. அவளுடைய முடிவு அவனை அதிர்ச்சி
அடையச்‌ செய்தது.

“நாங்கள்‌ கத்தோலிக்கர்கள்‌. அயர்லாந்து கலாச்சாரத்தைச்‌
சேர்ந்தவர்கள்‌. பெற்றோர்களின்‌ சம்மதம்‌, அனுசரணை, ஆசீர்வாதமின்றி
எமது திருமண முடிவை எடூப்பதில்லை.'” இந்த வார்த்தைகள்‌ தான்‌
அவன்‌ அவளிடமிருந்து இறுதியாகக்‌ கேட்ட வார்த்தைகள்‌. மறுநாள்‌
இலங்கைக்குப்‌ புறப்பட்டான்‌.

நாதன்‌ கல்லாய்‌ சமைந்ததை உணர்ந்த கண்மணி மீண்டும்‌
அவன்‌ தோள்களைப்‌ பற்றி சற்று உலுப்பி அவனை சுய உணர்வு

37


Page 64மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

பெறச்‌ செய்தாள்‌. சுய உணர்வு பெற்றவன்‌ தன்முன்‌ நின்ற மூவரையும்‌
மாறி மாறிப்‌ பார்த்தான்‌. அவனை அறியாமலேயே அவனது உதடூகள்‌
ஜுலியா என உச்சரித்தன. உள்ளத்தில்‌ புதைந்து கிடந்த உணர்வுகள்‌
பீறிட்டு எழுந்தன. மறுகணம்‌ கண்மணியைப்‌ பார்த்தான்‌. அவளும்‌
அவனைப்‌ பார்த்தாள்‌. அப்பொழுது நாதனின்‌ முகத்தில்‌ ஏற்பட்ட பயம்‌
கண்மணியைக்‌ குழப்பத்தில்‌ ஆழ்த்தியது.

நிலைமையைச்‌ சீராக்கத்‌ தாமதமின்றி தன்‌ கணவனைக்‌
கட்டியணைத்து தன்‌ நெஞ்சோடூ இறுகப்‌ பற்றி அவனது காதுகளில்‌,
“எனக்கு எல்லாம்‌ தெரியும்‌... .. நான்‌ உம்மை ஏற்றுக்‌ கொள்கிறேன்‌.
ஜாலியாவை ஏற்றுக்‌ கொள்கிறேன்‌.. .. நமது குழந்தை பிறிஜெட்டை
ஏற்றுக்‌ கொள்கிறேன்‌.” என அன்பாகக்‌ கூறினாள்‌.

நாதனால்‌ எதையும்‌ ஏற்றுக்‌ கொள்ளக்‌ கூடிய மனநிலை
அப்பொழுது இருக்கவில்லை. கண்மணியின்‌ செயலால்‌ தான்‌
அவமதிக்கப்‌ பட்டு விட்டதாகவும்‌ அவர்கள்‌ மூவரும்‌ தன்னை ஏமாற்றி
விட்டதாகவும்‌ கோபமடைந்தான்‌. நிலைமையை உணர்ந்து கொண்ட
கண்மணி அவனைப்‌ பக்கமாக அழைத்துச்‌ சென்று,

“நாதன்‌ நீங்கள்‌ கோபப்படுவதற்கு எதுவித காரணமுமில்லை..

உம்மை மகிழ்ச்சிப்‌ படூத்துவதற்காகத்தான்‌ நான்‌ இந்த சந்தர்ப்பத்தை
ஏற்படுத்தினேன்‌. உமக்குத்‌ தெரியுமா.. .. பிறிஜெட்டிடமிருந்து அந்தத்‌
தொலைபேசி அழைப்பு வந்தபொழுது நான்‌ பட்ட வேதனை. பாவம்‌
அந்தப்‌ பெண்‌, தனது அப்பா யார்‌ எனத்‌ தெரியாமல்‌ பெயரளவிலும்‌,
அவர்‌ எந்த நாட்டைச்‌ சேர்ந்தவர்‌ என்பதை மட்டும்‌ தெரிந்து
வைத்துக்கொண்டு... இப்ப அவளுக்கு 20 வயது, -:ரார்‌ 15 வயதிலிருந்து
தன்‌ தகப்பனைக்‌ கண்டூ பிடிப்பதற்காக அவள்‌ பட்ட பாடு, இவற்றை
எல்லாம்‌ அறிந்தபின்தான்‌ எந்தக்‌ குழந்தைக்கும்‌ தனது பெற்றோர்‌ யார்‌
என்று அறிந்து கொள்ளும்‌ உரிமை உண்டு... இதை எவரும்‌ மறுக்கவும்‌
முடியாது... தடுக்கவும்‌ முடியாது.. .. இதனால்தான்‌ அந்தப்‌ பெண்‌
உம்மைச்‌ சந்திக்க ஓம்‌ எண்டனான்‌. உமக்குத்‌ தெரியாது... .. நர்‌
இலங்கை சென்ற சில வாரங்களின்‌ பின்‌ தான்‌ கர்ப்பமாக உள்ளதை
ஜுலியா உறுதிப்‌ படூத்தியதும்‌ உம்முடன்‌ தொடர்பு கொள்வதற்காக
அவள்‌ பட்டபாடு. பாவம்‌ ஒரு பெண்ணுக்கும்‌ அந்த நிலைமை
ஏற்படக்கூடாது. அவள்‌ கத்தோலிக்கப்‌ பெண்‌. கருத்தடை செய்தால்‌
அவர்களின்‌ சமயம்‌ அவளைத்‌ தள்ளி வைத்துவிடும்‌. பெற்றோர்களையும்‌
விட்டூ .. .. இன்றுவரை அவர்களுடன்‌ அவளுக்குத்‌ தொடர்பு கிடையாது.
தனது பிள்ளைக்காக இதுவரை அவள்‌ வாழ்ந்து வருகிறாள்‌. இப்படிப்‌
பெண்கள்‌ எங்கள்‌ கலாசாரத்தில்‌ இருக்கிறார்களோ எனக்குத்‌ தெரியாது...

38


Page 65வயது பதினாறு

 

ஒரு பெண்தான்‌ மற்றப்‌ பெண்ணின்‌ உணர்வுகளை நல்லாய்‌ தெரிந்து
கொள்வாள்‌. அண்டைக்கு நீர்‌ வேலைக்குப்‌ போயிற்றீர்‌. வெள்ளண
காலை 3 மணி இருக்கும்‌ ரெலிபோன்‌ வந்தது. இங்கிலாந்திலிருந்து
உம்மைக்கேட்டு ஒரு இளம்பெண்‌.. .. அவவின்‌ குரலில்‌ இருந்து அவ
தமிழ்ப்‌ பெண்‌ இல்லை என்று தெரிந்தது. ஆச்சரியத்துடன்‌ யார்‌ என்று
கேட்டூம்‌ அந்தப்‌ பெண்‌ ஒரு தகவலும்‌ தரவில்லை. அந்தப்‌ பெண்ணின்‌
அக்கறை எல்லாம்‌ நான்‌ யார்‌ என்று தெரிந்து கொள்வதாக இருந்தது.
நானும்‌ உண்மையை அறியவேண்டும்‌ என்றால்‌ நான்‌ யார்‌ என்று
முதலில்‌ கூறவேண்டும்‌ என்ற காரணத்தால்‌ நான்‌ யார்‌ என்று கூறினேன்‌.
அப்பதான்‌ அந்தப்‌ பெண்‌ என்னை அன்பாக “மம்மி” எனக்‌ கூப்பிட்டு
தனது சரித்திரத்தைக்‌ கூறினாள்‌. அதோட தாங்கள்‌ நம்முடைய
வாழ்க்கையில்‌ பங்குபோட வரவில்லையென்றும்‌, தனது அப்பாவைப்‌
பார்க்கவேண்டும்‌ என்றும்‌ ஆசைப்படூவதாக மட்டூம்‌ கூறினாள்‌. நானும்‌
சந்தர்ப்பம்‌ வரும்‌ பொழுது ஒழுங்கு செய்வதாகக்‌ கூறினேன்‌. இது
நடந்து சுமார்‌ ஒரு வருடம்‌ இருக்கும்‌. இதைப்‌ பற்றி உம்மிடம்‌
கூறவேண்டுமா வேண்டாமா என்று நான்‌ பெரும்‌ பாடூபட்டூ விட்டேன்‌. ஏன்‌
கூறவில்லை என்று எனக்குத்‌ தெரியாது. பிறகு.. .. இரண்டூ கிழமைக்கு
முதல்தான்‌ பிறிஜெட்‌ திரும்பவும்‌ ரெலிபோன்‌ பண்ணித்‌ தானும்‌ தாயும்‌
ரொரன்ரோ வழியாக அமெரிக்கா போவதாகவம்‌ ரொறன்ரோவில்‌
இரண்டு மணித்தியாலம்‌ தங்கி நிற்பதாகவும்‌ அந்த நேரம்‌ உம்மை
சந்திக்க முடியுமா எனவும்‌ கெஞ்சிக்‌ கேட்டாள்‌. எனக்கும்‌ அவளில்‌
பாசம்‌ ஏற்பட்டது. ஜுலியாவும்‌ பாவம்‌... .. அவள்‌ செய்த குற்றம்‌ என்ன?
கலாசாரம்‌, பண்பாடு, சமய கட்டுப்பாடு என்பவை சில சந்தர்ப்பங்களில்‌
எங்களை மட்டூம்‌ பாழாக்கவில்லை மேல்‌ நாட்டவரின்‌ வாழ்க்கையையும்‌
பாழாக்குகிறது என்று நினைத்துத்தான்‌ இந்த ஒழுங்கைச்‌ செய்தன்‌..

நாதன்‌ நான்‌ ஏதும்‌ பிழை செய்திருந்தால்‌ தயவு செய்து என்னை
மன்னியும்‌... .. எனக்கு என்ன தண்டனை வேண்டுமென்றாலும்‌ கொடும்‌.
ஆனால்‌, என்னை நம்பி வந்த இவர்களின்‌ மனதைப்‌ புண்படுத்தாதேயும்‌...
என்று பெரிய விரிவுரை செய்து முடித்தாள்‌.

அவளின்‌ ஒரு வார்த்தையைக்‌ கூட தவறவிடாமல்‌ கேட்ட
நாதனைப்‌ பல்வேறு உணர்வுகள்‌ பல திசைகளிலிருந்து எழுந்து நிலை
தடூமாறச்‌ செய்தன. கண்மணியின்‌ அருள்‌ நிறைந்த உள்ளத்தையும்‌,
தெளிந்த சிந்தனையையும்‌, உலகில்‌ எந்தப்‌ பெண்ணும்‌ கொண்டிராத
உன்னத சீர்‌ திருத்த கொள்கையையும்‌ கண்டு வியப்புற்றான்‌,
புழகாங்கிதமடைந்தாள்‌. மறுகணமே கண்மணியைக்‌ கட்டியணைத்து
முத்தமிட்டான்‌. பின்‌ கண்மணியை அணைத்த வண்ணம்‌ ஜாலியா,
பிறிஜெட்‌ நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி வந்தான்‌. தனது
கைகளிலிருந்த பூங்கொத்தை ஜுலியாவிடம்‌ கொடுத்து அவளைக்‌

39


Page 66மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

கண்ணியத்துடன்‌ அணைத்துக்‌ கொண்டான்‌. அப்பொழுது ஜுலியாவின்‌
உணர்வுகள்‌... அது ஒரு கதை.. பிறிஜெட்டைக்‌ கட்டியணைத்து
கன்னத்தில்‌ மாறி மாறி முத்தமிட்டான்‌.

அந்த இருமணி நேரங்கள்‌ இரு நிமிடங்களாக ஓடி மறைந்தன.
விமான நிலையத்தை விட்டூ வீடு நோக்கிச்‌ சென்று கொண்டிருக்கும்‌
வேளை நாதனின்‌ சிந்தனை கட்டுக்கடங்கா வகையில்‌ மனதில்‌
அலைமோதியது; நான்‌, கண்மணி, எல்லாள்‌, ஜாலியா, பிறிஜெட்‌ -
சமுதாயக்‌ கண்ணோட்டத்தில்‌ எங்களின்‌ உறவுக்கு என்ன பெயர்‌?
பதில்‌ காணாக்‌ கேள்வி எழுந்த வண்ணமிருந்தது. கண்மணியின்‌
சிறந்த ஆளுமையின்‌ உயர்வை எண்ணித்‌ திகைப்படைந்தவன்‌;
கண்மணி... என்‌ கண்மணி, என்ர வாழ்வு அதில்‌ நான்‌ காணும்‌ இன்பம்‌,
என்‌ பொருளாதாரச்‌ சிறப்பு, என்‌ மன அதி நிறைவு, இவை யாவும்‌
நீ எனக்குக்‌ கொடுத்த தானங்கள்‌. நீ ஒரு சராசரி குறுகிய மனம்‌
கொண்ட பெண்ணாக இருந்திருந்தால்‌ நமது வாழ்க்கையில்‌ எப்பவோ
இருள்‌ சூழ்ந்திருக்கும்‌, எனது நன்றி என அவன்‌ உதடுகள்‌ முணு
முணுத்தன.

40


Page 67வயது பதினாறு

 

முன்னாள்‌ கணவன்‌-மனைவி

“நியூமாக்கற்‌'' குற்றவியல்‌ நீதிமன்றம்‌ நான்‌ தற்காலிகமாகத்‌
தங்கியுள்ள ஸ்காபரோ. நகரிலிருந்து சுமார்‌ 40 கிலோ மீற்றர்‌
தொலைவிலுள்ளது. அன்று காலை பத்து மணிக்கு எனக்கு எதிரான
வழக்கின்‌ இறுதி விசாரணை. 401-404 பெரும்‌ தெருக்கள்‌ காலையில்‌
நெருக்கடியாக இருக்கும்‌. எனது சட்டத்தரணியும்‌ என்னை வேளைக்கு
நீதிமன்றத்தில்‌ வந்து நிற்கும்படி கண்டிப்பாகக்‌ கூறியுள்ளார்‌.

இரவு இரண்டூ மணிக்குத்தான்‌ வேலை முடிந்து வீட்டிற்கு
வந்து; நல்ல பசி; பழைய சாப்பாட்டைச்‌ சாப்பிட்டு விட்டுப்‌ படுக்கப்‌
போனேன்‌. நாளை வழக்கு விசாரணை நடைபெற உள்ளது, எனக்கு லீவு
வேண்டும்‌ என்று கெஞ்சிக்‌ கேட்டும்‌ அந்தப்‌ பாவி “கயானாக்காரன்‌”,
தான்‌ தான்‌ முதலாளி என்ற எண்ணம்‌. அவனுக்குத்‌ தெரியும்‌ இந்த
வேலையை விட்டால்‌ வேறு வேலை என்னால்‌ எடுக்க முடியாது என்று
மறுத்துவிட்டான்‌.

சாப்பாடு செமிக்கவில்லைப்‌ போல இருக்கவேண்டும்‌. நாளை
வழக்கு விசாரணை பற்றிய பயம்‌ மறுபக்கம்‌; கிட்டத்தட்ட நாலு மணிக்கும்‌
ஏழு மணிக்குமிடையில்‌ ஐந்து தரம்‌ வயிற்றோட்டம்‌ போய்விட்டது.

பழைய சாப்பாடு. சுடச்சுட சாப்பிட்டு, அந்த நினைவே மறந்து
போய்விட்டது. சில நாட்கள்‌ லீவில்‌ வந்து நின்று விட்டுத்‌ திரும்பவும்‌
கொழும்பிற்குப்‌ போவதற்கு, ஊரெல்லாம்‌ பொடியளோட சுற்றிவிட்டூக்‌
கடைசி நேரத்திலை, அவசரம்‌ அவசரமாக உடூப்புக்களை சூட்கேசில்‌
அடுக்கிக்‌ கொண்டிருக்கும்‌ பொழுது நான்‌ சாப்பிடாமல்‌ புறப்பட்டூப்‌
போய்‌ விடூவேன்‌, வழியிலும்‌ சாப்பிட மாட்டேன்‌ என்று அம்மா எனக்கு
விருப்பமான அரைச்ச மீன்கறியும்‌, மீன்‌ பொரியலுடன்‌ நல்லாகக்‌
குழைச்சு... .. நான்‌ அங்கும்‌ இங்கும்‌ நடை பயில, என்னைப்‌ பின்‌

41


Page 68மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

தொடர்ந்து ஊட்டி விட்ட காலத்தின்‌ பின்‌, ௬டூ சாப்பாட்டை நான்‌
அறியேன்‌.

என்ர பிள்ளை கஷ்டப்படுகிறது. தான்‌ தான்‌ சமைச்சுச்‌
சாப்பிட வேண்டூமாம்‌. உப்புப்‌ புளிக்குக்கூட வித்தியாசம்‌ தெரியாதவன்‌.
எப்படித்தான்‌ சமைக்கிறானோ. என்னத்தைத்தான்‌ சாப்பிடுறானோ.
“லாண்டட்‌” கிடைச்சபின்‌ ஊருக்குப்‌ போய்வந்த துரைசிங்கம்‌ மாமாவிடம்‌
அம்மா கவலைப்பட்டிருந்தா.

வயது போன காலத்தில்‌ அம்மாவை, அவவின்‌ ஆசையை
நிறைவேற்ற வேண்டும்‌ என்றதற்காகத்தான்‌ நானும்‌ கலியாணத்திற்கு
ஓம்‌ எண்டனான்‌. ஊர்ப்பிள்ளை: நல்லா சமைக்கும்‌, ஓரளவிற்குப்‌
படித்திருக்கிறாள்‌, எனக்கு நல்ல பொருத்தமாக இருப்பாள்‌ என்று
அம்மா சொன்னவ.

இரண்டூ பிள்ளைகள்‌ பிறந்தும்‌ பழைய சாப்பாடுதான்‌. அவளையும்‌
முழுதாகப்‌ பிழை கூற முடியாது. அவள்‌ சுடச்சுடத்தான்‌ சாப்பிடுகிறாள்‌.
நான்‌ அவளுடன்‌ வாழ்ந்த காலத்தில்‌ சுடச்‌ சுடச்‌ சாப்பிடாதற்கு என்ரை
வேலையும்‌ காரணம்‌. கடந்த இரண்டு வருடங்களாக நான்தானே
சமைக்கிறேன்‌. “பேஸ்மென்ரில்‌” சமைக்கிறதற்கான வசதியும்‌ குறைவு.
மேலே இருக்கிற வீட்டுச்‌ சொந்தக்காரர்‌ தங்களால்‌ “மோட்கேஜ்‌'' கட்ட
முடியாது என்று கட்டாயப்‌ படுத்தி என்னைத்‌ தங்கட பேஸ்மென்ரில
இருக்கச்‌ சொல்லி, இப்ப நான்‌ சமைக்கிறதற்கு கூட சட்டம்‌ போடூகினம்‌.
என்ர சமையல்‌ சாப்பாடு மணக்குதாம்‌. தங்கட உடூப்பெல்லாம்‌ நாறுதாம்‌.
அவையளுடைய சமையல்‌ மணக்கிறதில்லையா? அவர்கள்‌ சமைக்கிற
சாப்பாட்டைத்தானே நானும்‌ சமைக்கிறன்‌.

வயிற்றுவலி தாங்க முடியாமல்‌. ஐந்து மணிவரை நித்திரை
இல்லாமால்‌ புரண்டு புரண்டு படூத்து அவஸ்தைப்பட்ட நான்‌ பின்‌
எட்டரை மணிவரை நல்லாகத்‌ தூங்கிவிட்டேன்‌.

கண்‌ விழித்துப்‌ பார்த்த பொழுது சட்டத்தரணியின்‌ கண்டிப்பான
முகம்‌ என்‌ மனத்திரையில்‌ தோன்றியது.

அவசர அவசரமாகப்‌ பல்‌ தீட்டி, முகம்‌ கழுவி, உடுப்பு
அயன்‌ பண்ணவும்‌ நேரமில்லாமல்‌, மெல்லிசாகக்‌ கசங்கிய சேட்டையும்‌
போட்டுக்கொண்டு... கால்சட்டை பரவாயில்லை. அது அவ்வளவாகக்‌
கசங்காது. வீட்டை விட்டுப்‌ புறப்பட்டேன்‌.

42


Page 69வயது பதினாறு

 

நேரத்தோட வந்தாலே கார்‌ “பார்க்‌” பண்ணுவதற்கு இந்த
நீதிமன்ற கார்‌ பார்க்கில்‌ இடம்‌ கிடைக்காது. இப்ப அரை மணித்தியாலம்‌
பிந்திவிட்டேன்‌. பத்து நிமிடம்‌ சுத்தி சுத்தி வந்த பிறகுதான்‌ ஒருவர்‌
வெளியேறும்‌ பொழுது எனக்குப்‌ பார்க்‌ பண்ணுவதற்கு வாய்ப்புக்‌
கிடைத்தது.

எனது சட்டத்தரணி நேரத்துக்கு வந்துவிடுவார்‌. அந்த மனுசன்‌
சொன்னதைச்‌ செய்யாவிட்டால்‌, நேரத்துக்குக்‌ குறித்த இடத்தில்‌
நிற்காவிட்டால்‌ வாயால்‌ பேச மாட்டார்‌. பார்வையால்‌ வயிற்ரைக்‌
கலக்கச்‌ செய்வார்‌.

பத்து முப்பத்தைந்து. நீதிமன்ற வாசலிலுள்ள “செக்கியுறிற்ரி
செக்‌ ஊடாகச்‌ செல்லவேண்டும்‌. இராணுவம்‌, பொலிஸ்‌, பெரிய
துப்பாக்கிகள்‌, கைத்‌ துப்பாக்கிகள்‌ இவற்றுக்கெல்லாம்‌ இலங்கையில்‌
பரிச்சயமானவன்‌ தான்‌. என்றாலும்‌ கனடாவில்‌ ஆரம்ப காலங்களில்‌
சுமார்‌ பத்து வருடங்களின்‌ முன்‌ நீதிமன்றங்களில்‌ இவ்வளவு
பாதுகாப்பு முறைகளைக்‌ காணவில்லை. சில வருடங்களின்‌ முன்‌ இதே
நீதிமன்றத்தில்‌ துப்பாக்கியால்‌ சுட்டுக்‌ கொலை நடந்ததாம்‌.

அவசரத்தில்‌ பொது மக்கள்‌ செல்லவேண்டிய வழியாகச்‌
செல்லாமல்‌ நீதிமன்ற ஊழியர்கள்‌. சட்டத்தரணிகளுக்கான வழியால்‌
நீதிமன்றத்துள்‌ செல்ல முனைந்த பொழுது ஒரு பொலிஸ்காரன்‌ என்ர
“சேட்‌ கொலரில்‌'” பிடித்து பொது மக்களுக்கான வழியை சமிக்கை
மூலம்‌ காட்டினான்‌. எனக்கு ஆங்கிலம்‌ தெரியாது என்ற நினைப்பு.

எனது ஆங்கில அறிவைக்‌ காட்டூவதற்கும்‌, எனது தவறை
ஒத்துக்கொண்டு மன்னிப்புக்‌ கேட்பதற்காகவும்‌ . ஆங்கிலத்தில்‌ சில
வார்த்தைகள்‌ விளாசினேன்‌. இந்தப்‌ பரபரப்பில்‌ “மெற்றல்‌ டிடெக்டர்‌”க்குள்‌
அம்பிட என்னிடமிருந்த சில பொருட்களை, “செல்போன்‌” “வோலற்‌”
போன்றவற்றை வெளியே எடுத்து அந்த “பாஸ்கற்றுள்‌” வைக்காது
உள்ளிட்டு விட்டேன்‌.

ஏற்கெனவே கோபத்திலிருந்த பொலிஸ்காரனுக்கு இதுவும்‌
சினத்தைக்‌ கொடுத்தது. என்னை ஒரு பக்கமாகக்‌ கூப்பிட்டு மோசமாகச்‌
சோதனையிட்டான்‌. பின்‌ எச்சரிக்கை செய்து உள்ளே போகவிட்டான்‌.
அவங்கட நாட்டிலை நாங்கள்‌ கொஞ்சம்‌ கவனமாக இருக்க வேண்டூம்‌.
எங்கே எங்களைக்‌ கரைச்சலில்‌ மாட்டலாம்‌ என்று சந்தர்ப்பம்‌ பார்த்துக்‌
கொண்டிருப்பாங்கள்‌.

43


Page 70மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

203 வது அறையில்‌ வழக்கு விசாரணை என எனக்குக்‌
கொடுக்கப்பட்ட துண்டில்‌ எழுதப்பட்டிருந்தது. அந்த அறை பூட்டப்‌
பட்டிருந்தது. என்‌ சட்டத்தரணியையும்‌ காணவில்லை. பயந்துவிட்டேன்‌.

வழக்கு விசாரணைத்‌ திகதியில்‌ நேரத்துக்கு வராவிட்டால்‌
கண்ட இடத்தில்‌ பிடிக்கும்படி “பெஞ்‌ வொறன்ற்‌” விடப்படும்‌.

அவர்‌ சொன்ன மாதிரி பெஞ்‌ வொறன்ற்‌ விடப்பட்டு விட்டதோ?
அப்படியெண்டால்‌ திரும்பவும்‌ “பெயில்‌” விசாரணை... சூரியால்‌
திரும்பவும்‌ பிணை எடூக்க முடியாது. பாவம்‌ அவனும்‌ ஐயாயிரம்‌
ரூபாவை இழக்கவேண்டி வரும்‌. சட்டத்தரணியும்‌ கோபத்திலிருப்பார்‌.
அதுக்குப்‌ புறம்பாக “பீஸ்‌” கொடுக்கவேண்டும்‌.

ஏன்‌ நான்‌ இந்த நாட்டுக்கு வந்தனான்‌. சொந்த நாட்டில
ஆற்ற கையால செத்தாலும்‌ பரவாயில்லை... இங்க என்ன சாகாமலா
இருக்கப்போறம்‌.... காரிலை வெளிக்கிட்டா “கைவேயிலை”
செத்துப்போறமோ... இந்த விஞ்ஞானத்திலை உற்பத்தியான
உணவுகளைச்‌ சாப்பிட்டு “கான்சர்‌” வந்து சாகிறமோ.. ஏன்‌ அவளே
எனக்கு நஞ்சு தந்து கொண்டிருப்பாள்‌!.. என்ர இரண்டூ பிள்ளைகளும்‌
இல்லாவிட்டால்‌ நானே அன்று அவளையும்‌ அவனையும்‌ கொலை
செய்துவிட்டு நானும்‌ செத்திருப்பன்‌.

சட்டத்தரணி படிகளால்‌ ஏறி மேலே வந்து கொண்டிருந்தார்‌.
அவர்‌ கண்களில்‌ கோபக்கனலை எதிர்பார்த்தேன்‌. அவர்‌ அமைதியாகக்‌
காணப்பட்டார்‌. என்னைப்போன்ற குழப்பத்தில்‌, விரக்தியில்‌, நோக்கின்றி
துயரத்தில்‌ அலைகின்ற பலருக்கு இவர்‌ ஆறுதல்‌ வார்த்தைகளால்‌
நம்பிக்கை ஊட்டி வருபவர்‌. ஆனால்‌, நீங்கள்‌ தமிழர்தானே அதனாலதானே
உங்கட உதவிக்கு வந்தோம்‌ என்று மட்டும்‌ அவரிடம்‌ சொல்லக்‌
கூடாது. ஓரு நாள்‌ தெரியாமல்‌ அப்படிச்‌ சொல்லிவிட்டன்‌. பெரிய
லெக்சரே வைத்துவிட்டார்‌. நீங்க தமிழர்‌ என்பதனால்‌ நான்‌ சட்டத்தை
மாத்தியமைக்க முடியுமா? நீரும்‌ நானும்‌ தமிழனாய்‌ இருப்பதால்‌ நான்‌
எனது கடமையை செய்யாமல்‌ விட முடியுமா? அல்லது நீர்‌ பீஸ்‌
எனக்கு தராமல்‌ விடமுடியமா? எனது சட்ட அறிவிலும்‌, அனுபவத்திலும்‌,
நேர்மையிலும்‌ நம்பிக்கையிருந்தால்‌ எனது உதவியை நாடுங்கள்‌...
அந்த விரிவுரைக்குப்‌ பின்‌ நான்‌ அவருடன்‌ ஏறுக்கு மாறாய்‌ எதுவும்‌
சொல்வது கிடையாது.

சற்று நேரத்துக்கு முன்‌ வந்திருக்கலாம்‌. நீர்‌ பிந்தி வந்தபடியால்‌
வேறு வழக்கொன்றை விசாரணைக்கு எடுூத்துவிட்டார்கள்‌. இப்பொழுது

44


Page 71வயது பதினாறு

 

பத்து நிமிடம்‌ இடைவேளை. இந்த வழக்கு முடிந்தபின்‌ தான்‌ உமது
வழக்கு ஆரம்பமாகும்‌. பெரும்பாலும்‌ பின்னேரம்‌ இரண்டூ மணிக்குத்தான்‌
ஆரம்பமாகும்‌.

“அவள்‌ வந்திருக்கிறாளா?”

எனக்கு அவளைத்‌ தெரியாது, நம்மட பெட்டை போல ஓருத்தி
ஜீன்ஸ்‌ போட்டுக்கொண்டு.. நீண்ட மயிர்‌, விரித்து விட்டுக்கொண்டு...
பார்க்க கவர்ச்சியாக இருந்தாள்‌. ஒரு வெள்ளைக்காரி வந்து இந்தக்‌
கதிரையிலை இருந்தவவைக்‌ கூட்டிக்கொண்டு போனவ.

அவள்தான்‌, அப்ப முழு வழக்கும்‌ இண்டைக்கு நடக்கும்‌.

நீர்‌ ஏன்‌ பயப்படுகிறீர்‌? விசாரணையில்‌ உண்மையைச்‌ சொல்லும்‌.
நான்‌ அவளின்‌ பொய்யை அம்பலப்படுத்தப்‌ பார்க்கிறேன்‌. ஒன்றை
மட்டும்‌ திரும்பத்‌ திரும்ப உமக்குச்‌ சொல்லுகிறேன்‌. நீர்‌ சுற்றவாழி
என்று நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. நர்‌ குற்றவாழி என்பதை
அரசு தரப்பு நியாயமான சந்தேகத்துக்கு அப்பால்‌ நிரூபிக்க வேண்டும்‌.
நீதிபதி உமது சாட்சியத்தை நம்பினால்‌ நிட்சயமாக உம்மை விடுதலை
செய்வார்‌. நீங்கள்‌ இருவரும்‌ உண்மை சொல்வதாக நீதிபதி கருதினாலும்‌
உம்மை விடுதலை செய்யவேண்டும்‌. உமது சாட்சியத்தை நம்பாமல்‌
அவளின்‌ சாட்சியத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டால்‌ நீர்‌ மறியலுக்குப்‌
போகவேண்டி நேரிடும்‌.

நான்‌ பிழை விட்டிட்டன்‌. அண்டைக்கு அவனையும்‌ அவளையும்‌
என்ர கட்டிலில.. கொலை செய்திருக்க வேண்டும்‌. அதுக்காக
மறியலுக்குப்‌ போனாலும்‌ பரவாயில்லை. அவளை மன்னிச்சுவிட்டூ,
அவனையும்‌ சந்திக்கு கொண்டுவராமல்‌ விட்டு இப்ப செய்யாத
குற்றத்துக்காக மறியலுக்குப்‌ போறதென்றால்‌.. இது என்ன நியாயம்‌?

தம்பி இப்ப அதைப்பற்றி ஒன்றும்‌ கதைக்காதயும்‌. அது நடந்து
முடிந்த விடயம்‌. இனி நடப்பதைப்‌ பார்ப்போம்‌.

அந்தா! வெள்ளைக்காரியோட 203ம்‌ அறைக்குள்‌ போறாள்‌.
அவள்‌ தான்‌ என்ர முன்னாள்‌ மனைவி.

“சுதாகர்‌ பரமலிங்கமும்‌ அவரது சட்டத்தரணியும்‌ தயவுசெய்து
203ம்‌ அறைக்கு வரவும்‌.” ஒலிபெருக்கி வாயிலாக அறிவித்தல்‌
தெளிவாகக்‌ கேட்டது. அது 203ம்‌ அறையின்‌ “மடம்‌ கிளார்க்‌” என

45


Page 72மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

அமைக்கப்படும்‌ அந்த நீதிமன்றத்தின்‌ உதவியாளர்‌. சில வேளையில்‌
“மிஸ்ரர்‌ கிளார்க்‌” ஆண்களும்‌ கடமை புரிவார்கள்‌. இவர்கள்‌ தான்‌
வழக்கு விசாரணை சீராக நடைபெறுவதற்கு நீதிபதிக்குத்‌ துணையாக
இருப்பார்கள்‌.

தம்பி, உமது வழக்கை விசாரணை செய்யும்‌ நீதிபதி முதல்‌
எடூத்துக்கொண்ட வழக்கை வேறு தவணைக்கு ஒத்தி வைத்துவிட்டார்‌
போலும்‌. உமது வழக்கு ஆரம்பமாகப்‌ போகிறது என நினைக்கிறேன்‌.
வாரும்‌ கோர்ட்டூக்குள்‌ போவம்‌.

வழமையான ஒன்ராறியோ மாகாண நீதிமன்ற அறை. நல்ல
உயரத்தில்‌, எடுப்பான ஆசனம்‌, நீதிபதி அமர்வதற்கு வைக்கப்பட்டூள்ளது.
நீதிபதி கோர்ட்டூக்குள்‌ இன்னும்‌ வரவில்லை. வழக்கு ஆரம்பமாவதற்குரிய
ஆயத்தங்கள்‌ நடைபெறுகின்றன.

நீதிபதியின்‌ மேடையின்‌ கீழ்‌ முன்பக்கமாக மடம்‌ கிளார்க்‌.
விசாரணையின்‌ நடவடிக்கைகளைப்‌ பதிவு செய்வதற்கு “றிப்போர்ட்டர்‌”
ஒரு ஆண்‌; மடம்‌ கிளார்க்கிற்கு உதவியாக ஒரு பெண்‌. மடம்‌ கிளார்க்‌
நடூவிலும்‌, மற்றைய இருவரும்‌ ஒருவரை ஒருவர்‌ பார்த்த வண்ணம்‌ எதிர்‌
பக்கங்களிலும்‌ அமர்ந்திருந்தார்கள்‌.

கண்களைச்‌ சுழற்றி நீதிமன்ற அறையைச்‌ சுற்றி மேலும்‌
கீழுமாகப்‌ பார்க்கிறேன்‌. கண்களைப்‌ பறிக்கிறது மின்சார வெளிச்சம்‌.
புனிதத்துவம்‌ தெரிகிறது. சுவர்கள்‌ மிகவும்‌ விலை உயர்ந்த “ஓக்‌”
மரப்‌ பலகைகளால்‌ அழகு படூத்தப்பட்டுள்ளன. மரப்‌ பலகைகளின்‌
அமைப்பை, தோற்றத்தை வியக்கிறேன்‌. ஆறடி நளம்‌, ஐந்தடி
அகலம்‌; ஒவ்வொன்றும்‌ தனிப்‌ பலகைகள்‌. மரத்தொழிலுக்கு கனடா
பெயர்போன நாடூ என்று ஊர்ப்‌ பள்ளிக்கூடத்தில புவியியல்‌ பாடத்தில்‌
படித்திருக்கிறேன்‌. இப்ப இந்த நீதிமன்ற அறையைப்‌ பார்க்கும்‌ பொழுது
அது உண்மை என்று புரிகிறது. இந்த அளவில்‌ பலகைகளை வெட்டி
எடூப்பதற்கு மரங்கள்‌ எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும்‌. மீண்டும்‌,
மீண்டும்‌ வியக்கிறேன்‌.

நீதிமன்றத்தின்‌ அறையின்‌ சீலிங்‌ (உள்கூரை) பத்துப்‌
பன்னிரண்டு அடி உயரமிருக்கும்‌. கனடாவில்‌ வீட்டு உள்கூரை சராசரி
எட்டு அடிதான்‌. நான்‌ தங்கியிருக்கும்‌. பேஸ்மென்ற்‌ உள்கூரை ஏழடி
உயரம்தான்‌ இருக்கும்‌. ஊர்‌ பதுங்கு குழிதான்‌ ஞாபகம்‌ வரும்‌.
வெளிச்சமுமில்லை. காற்றோட்டமுமில்லை.

46


Page 73வயது பதினாறு

 

நீதிமன்ற உள்‌ முகட்டின்‌ உயரத்தை அவதானிக்கும்‌ பொழுது
மனதை அழுத்தும்‌ ஞாபகம்‌ வருகிறது:

ஸ்பொன்ஸரில்‌ எனது மனைவி கனடா வருமுன்‌ நான்‌
உயர்ந்த தொடர்மாடி “அப்பாட்மென்ட்‌“டை விட்டு சொந்த. வீடு
வாங்கி.... அங்குதான்‌ அவள்‌ என்னோடூ வாழ்க்கையைத்‌ தொடங்க
வேண்டூம்‌ என்ற ஆதங்கத்தில்‌, சிறிது சிறிதாகச்‌ சேமித்து முற்பணம்‌
(டவுண்பேமன்ற்‌) கட்டுவதற்குப்‌ போதுமான தொகைப்‌ பணத்துடன்‌ வீடு
வாங்குவதற்கு விபரங்கள்‌ திரட்டிய பொழுதுதான்‌ “மார்க்கத்தில்‌”
புது வீடு வாங்குவது நல்லது எனத்‌ தீர்மானித்தேன்‌. ஐயாயிரம்‌
டொலர்களை வீடூ வாங்கும்‌ ஒப்பந்தத்துடன்‌ கட்டினேன்‌. பின்‌ மூன்று
மாதங்கள்‌ ஒவ்வொரு மாதமும்‌ ஜயாயிரம்‌ மொத்தம்‌ இருபதினாயிரம்‌
“டிப்பொஸிற்‌'' கட்டினேன்‌. இரண்டு மாதங்களின்‌ பின்‌ “டெக்கொ
சென்ரரில்‌” எனது விருப்பத்திற்கு ஏற்ப பல மாற்றங்கள்‌ செய்யலாம்‌
என்றும்‌, அவற்றுள்‌ எட்டடி உயரமான உள்கூரை, மூவாயிரம்‌ டொலர்கள்‌
மேலதிகமாகக்‌ கொடுத்தால்‌ ஒன்பது அடி உயரமாக கட்டித்தரப்படூம்‌
எனவும்‌ அறிந்தேன்‌. அவளைக்‌ கவரவேண்டும்‌ என்பதற்காக ஒன்பது
அடி உயரமான முகடூ மட்டுமல்ல மேலதிகமாக இருபத்தைந்தாயிரம்‌
டொலர்கள்‌ வேறு ஆடம்பர விடயங்களுக்குச்‌ செலவு செய்து அந்த
வீட்டை வாங்கினேன்‌. அவளுடன்‌ இந்த வீட்டில்‌ ஏழு வருடங்கள்‌
வாழ்ந்து பின்‌ அவளால்‌ வீட்டிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டு மீண்டும்‌
அப்பாட்மென்ட்‌. இப்பொழுது பேஸ்மென்ட்டில்‌ துன்பப்படுகிறேன்‌. அவள்‌
தொடர்ந்து அந்த வீட்டில்‌... சொகுசாக வாழ்கிறாள்‌... அவனும்‌ அவளும்‌
எனது கட்டிலில்‌...

எல்லோரும்‌ எழுந்திருங்கள்‌ நீதிமன்றம்‌ ஆரம்பமாகின்றது. மடம்‌
கிளார்க்‌ முன்வர நீதிபதி பின்‌ தொடர்ந்து எங்கிருந்தோ மர்மமாகத்‌
தோன்றியதைப்‌ போன்று சுவரினூடாக வருகிறார்‌. அந்த சுவரில்‌
கதவு இருப்பதாக முதல்‌ முறையாக அந்த அறையில்‌ இருப்பவர்கள்‌
தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பில்லை. சுவரோடூ சுவராக ஓக்‌ மரப்‌
பலகையால்‌ செய்யப்பட்டூள்ளது அக்கதவு. மீண்டும்‌ மீண்டும்‌ வியப்பாக
இருக்கிறது.

காலை வணக்கம்‌. வழக்கு விசாரணையைத்‌ தொடர்வதற்கு
இரு தரப்பினரும்‌ தயாராக உள்ளீர்களா?

நாம்‌ தயாராகவுள்ளோம்‌ கனம்‌ நீதிபதி அவர்களே! முடிதரப்பு
சார்பில்‌ செல்வி மக்கோன்‌.

47


Page 74மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

எதிர்‌ தரப்பு சார்பில்‌ அன்ரன்‌ மரியதாசன்‌. எதிர்‌ தரப்பும்‌
வழக்கு விசாரணைக்குத்‌ தயாராகவுள்ளது.

“எ 2 நன்று, எதிராளிக்கு எதிரான குற்றச்சாட்டை வாசியுங்கள்‌...
அதற்கு - “முன்பாக தமிழ்‌ மொழி பெயர்ப்பாளர்‌ இங்குள்ளார்‌. ஐயா,
உங்கள்‌ பெயர்‌?

ரவ

பபவேலு ஆறுமுகதாஸ்‌.

டட ட வா?

இவரை எனக்கு நன்றாகத்‌ தெரியும்‌. இவரை சத்தியப்‌
பிரமாணம்‌ செய்யும்படி இரு தரப்பினரில்‌ எவரும்‌ வேண்டூகிறீர்களா?

இல்லை.

இல்லை.

மடம்‌ கிளார்க்‌ குற்றச்சாட்டை வாசியுங்கள்‌.

சுதாகர்‌ பரமலிங்கம்‌, நீர்‌ டிசம்பர்‌ மாதம்‌ 23ம்‌ திகதி 2002ம்‌
ஆண்டூ நியுமார்க்கட்‌ நகராட்சிக்குள்‌ அமைந்துள்ள மார்க்கம்‌ நகரசபைப்‌
பிரிவிலுள்ள பகுதியில்‌ ரதி மோகன்‌ என்பவரைக்‌ கொலை பயமுறுத்தல்‌
செய்து கனடா குற்றவியல்‌ சட்டம்‌ பிரிவு 264.1 (1) (வன்‌ கீழ்‌ குற்றம்‌
புரிந்துள்ளீர்‌.. .

முடிதரப்பு எந்த நடவடிக்கையின்‌ கீழ்‌ இந்த விசாரணையை
நடத்த விரும்புகிறது.

சுருக்க நடவடிக்கையின்‌ கீழ்‌ இந்த விசாரணையை நடத்த
விரும்புகிறது.

சுருக்க நடவடிக்கை முறையின்கீழ்‌.. ...

சுதாகர்‌ பரமலிங்கம்‌, இந்தக்‌ குற்றச்சாட்டுக்கு நீர்‌ குற்றவாளியா
சுற்றவாளியா?

டிசம்பர்‌ மாதம்‌ 23ம்‌ திகதி எனது காதில்‌ விழுந்த பொழுது
எனது நினைவுகள்‌ அந்த நாளுக்கு என்னை அழைத்துச்‌ சென்றன.

பத்து மணித்தியால வேலை. வழமையாக காலையில்‌

48


Page 75வயது பதினாறு

 

வேலைக்குப்‌ புறப்பட முதல்‌ வின்ரர்‌ காலங்களில்‌ தொலைக்காட்சியில்‌
அன்றைய காலநிலையைப்‌ பற்றிய விபரங்களை அறிந்து கொண்டூ
புறப்படூவதுதான்‌ வழக்கம்‌. ஆனால்‌ அன்று கூற முடியாத காரணத்துக்காக
காலநிலையைப்‌ பற்றித்‌ தெரிந்து கொள்ளாமல்‌ புறப்பட்டு விட்டேன்‌.
முதல்‌ நாள்‌ காலநிலை சுமாராக இருந்தபடியால்‌ மறுநாளும்‌ அதே
காலநிலையாயிருக்கும்‌ என்ற நம்பிக்கையில்‌ அதிக குளிர்‌ தாங்கக்‌
கூடிய உடை அணியவில்லை. பக்டரியில்தான்‌ அறிந்து கொண்டேன்‌
அன்று பின்னேரம்‌ ரொறன்ரோவிலும்‌ அதைச்‌ சூழ்ந்த பகுதிகளிலும்‌
இருபத்தைந்து வருடங்களின்‌ பின்‌ 15-20 “சென்ரி மீற்றர்‌ ஸ்னோ”
கொட்டப்போகிறது என்பதை.

காலநிலை கருதி ஒரு மணி நேரம்‌ முன்னதாகவே
தொழிற்சாலை மூடப்பட்டூவிட்டது. பின்னேரம்‌ ஐந்து மணிக்கு வெளியே
வந்தபொழுது அதிர்ந்து போய்விட்டேன்‌. வேறு மண்டலத்தில்‌, சினிமாப்‌
படங்களில்‌ தேவலோகத்தைப்‌ பார்க்கும்‌ காட்சி. எமது பக்டரி
ஒதுக்குப்‌ புறத்தில்‌ அமைந்திருந்ததால்‌ கண்ணுக்கெட்டிய தூரத்தில்‌
உயர்மாடிக்‌ கட்டிடங்களில்லை. பதிந்த கட்டிடங்கள்‌ புகாரினால்‌
மூடப்படடிருந்தன. இதனால்‌ தேவலோகக்‌ காட்சியில்‌ சித்தரிக்கப்படும்‌,
தரையில்‌ வெள்ளைக்‌ கம்பளம்போல்‌ ஸ்னோவும்‌, புகை மண்டலம்‌
போல்‌ புகாரும்‌ காட்சியளித்தன. காட்சியை ஒரு கணம்‌ ரசித்து
மகிழ்ந்த பொழுதும்‌ மறுகணம்‌ எப்படி வீடு சென்றடையப்போகிறேன்‌
என்று சலிப்பும்‌ ஏற்பட்டது.

பிரதான வீதிகளைச்‌ சீர்படுத்தும்‌ முயற்சியில்‌ “ஸ்னோபிளவ்ஸ்‌”,
ஸ்னோ அகற்றும்‌ இயந்திரங்கள்‌ மும்முரமாக ஈடூபட்டிருந்தன.

எனது வாகனம்‌ எங்கு தரிக்கப்பட்டூுள்ளது என்பதை கண்டூ
பிடிப்பதற்கு நீண்ட நேரம்‌ பிடித்துவிட்டது. இதற்கிடையில்‌ பொருத்தமான
பூட்ஸ்‌ அணிந்திராத காரணத்தினால்‌ எனது கால்கள்‌ விறைத்துப்போய்‌
விட்டன. நல்லவேளை எனது “ஜக்கற்றுக்குள்‌” எப்பொழுதும்‌ கைக்கு
அணியும்‌ “கிளவ்ஸ்‌” நான்‌ வைத்திருப்பதால்‌, எனது கைவிரல்களை
ஓரளவிற்கு சூடாக வைத்திருக்க முடிந்தது. இப்பேர்ப்பட்ட காலநிலையில்‌
எதிர்பாராமல்‌ தகுந்த ஆயத்தமின்றி அகப்படும்‌ வேளையில்‌ கனடா
நாட்டில்‌ ஒரு வெறுப்பே ஏற்பட்டூவிடூம்‌.

இச்சந்தர்ப்பத்தில்‌ கனடா எமக்களித்த அடைக்கலத்தின்‌ அருமை
மறந்துவிடும்‌. வாழ்க்கைச்‌ சொகுசு மறைந்துவிடும்‌. பொருளாதாரச்‌
சுபீட்சம்‌ ஒரு பொருட்டல்லவாகி விடும்‌. வன்முறையிலிருந்து பாதுகாப்புத்‌
தேவையா எனத்‌ தோன்றும்‌. இயற்கையே நமக்கு எதிரி எனப்படும்‌.

49


Page 76மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

பம

“எனது காரைக்‌ கண்டூபிடித்து அதை மூடியிருந்த
ஸ்னோவை முடியுமானவரை தட்டிவிட்டு காரினுள்‌ ஏறியபொழுது
குளிர்ப்பெட்டியில்‌ அதிக குளிரான பகுதியில்‌ இருப்பதைப்‌ போல்‌
உடம்பெல்லாம்‌ குளிர்ந்து நடுங்கியது. காரினுள்‌ உஷ்ணமேறப்‌ பத்து
நிமிடங்கள்‌ பிடித்தன.
“ஆ

றா _ .. பாதைகளில்‌ கார்கள்‌ நத்தைபோல்‌ நகர்ந்து
கொண்டிருந்தன. பல கார்கள்‌ பாதையைவிட்டூ விலகி சில பள்ளமான
பகுதிகளில்‌ விழுந்திருந்தன. சில வாகனங்கள்‌ நாற்‌ சந்திகளில்‌
விபத்துக்களில்‌ சிக்கியிருந்தன. பொறுமையற்று விரக்தி அடைந்தவர்கள்‌
ஒருவரோடொருவர்‌ வாய்ச்சண்டை போட்டுக்‌ கொண்டிருந்தனர்‌. பொலிஸ்‌
வாகனங்கள்‌ “சைரன்‌” சத்தத்துடனும்‌ மின்னி மின்னி நூரும்‌ செந்நிற
எச்சரிக்கை வெளிச்சத்துடனும்‌ பல திசைகளிலும்‌ வேகமாகச்‌ சென்று
கொண்டிருந்தன. இந்தக்‌ காட்சியைப்‌ பார்க்கும்‌ பொழுது நான்‌ எதுவித
ஆபத்துமின்றி வீடு சென்றடைவேனோ என்ற பயம்‌ பிடித்திருந்தது.
யாழ்ப்பாணத்தில்‌ றீகல்‌ தியேட்டரில்‌ ஆங்கில “திரிலர்‌'” பார்த்த ஞாபகம்‌
வந்தது.

வழமையாக வேலைத்‌ தளத்திலிருந்து சுமார்‌ அரைமணி
நேரத்துள்‌ வீடு சென்றடைவேன்‌. இன்று மூன்று மணித்தியாலங்களுக்கு
மேல்‌ பிடித்துவிட்டது வீடு சென்றடைவதற்கு.

அவளின்‌ கார்‌ “கராஜ்ஜினுள்‌'' நிறுத்தப்பட்டிருந்தது. இந்தக்‌
காலநிலையில்‌ அவள்‌ வேலைக்குப்‌ போகமாட்டாள்‌ என்ற எண்ணத்தில்‌
அவளின்‌ காரை மறித்து அவளது காருக்குப்‌ பின்னால்‌ “டிறைவேயில்‌”
எனது காரை நிறுத்தினேன்‌.

உடம்பெல்லாம்‌ விறைத்துப்‌ போயிருந்தது. எவ்வளவு
அதிகளவில்‌ காரினுள்‌ உஷ்ணத்தை ஏற்படுத்தியும்‌ குளிரைத்‌ தாக்குப்‌
பிடிக்க முடியவில்லை. “-40 செல்சியஸ்‌” என்று வானொலியில்‌
அறிவித்தர்கள்‌. அப்பாடி! உஷ்ணவலய நாடூகளில்‌ உஷ்ணம்‌
முப்பத்தைந்து வரை செல்லும்‌. அந்த நாடூகளில்‌ பரிச்சயப்பட்ட
எனக்கு -40 செல்சியஸை எப்படித்தான்‌ தாங்கிக்கொள்ள முடிந்தது.
குளிர்போக நன்றாக சுடூதண்ணியில்‌ குளித்தேன்‌. பின்‌ முதல்‌ நாள்‌
சமைத்துக்‌ குளிர்ப்பெட்டியில்‌ வைத்திருந்த கோழிக்கறியையும்‌,
சந்திரா உணவகத்தில்‌ வாங்கிய இடியப்பத்தையும்‌, சொதியையும்‌
“மைக்ரோவேவில்‌” சூடாக்கிச்‌ சாப்பிட்ட பின்புதான்‌ உடம்பில்‌ ஓரளவு
உஷ்ணமேறியது.

50


Page 77ப ப ப ப ப ப...“ அத்கைவைத வமையககிவவையகிகுவ

வயது பதினாறு

 

சொந்த வீட்டில்‌ பேஸ்மென்றில்‌ தனிமை வாட்டியது.
நேரத்தைப்‌ பார்க்கிறேன்‌. இலங்கையில்‌ சுமார்‌ காலை பத்து மணி.
தமிழ்‌ கடையில்‌ வாங்கி வைத்த முன்கூட்டியே பணம்‌ செலுத்தப்பட்ட
தொலைபேசி அட்டையை எடுத்து எண்களை அழுத்தி புவனாவுடன்‌
பேசத்‌ தொடங்கினேன்‌. ஐந்து நிமிடங்கள்‌ பேசியிருப்பேன்‌ எனது
மாஜி மனைவி மேலிருந்து படிகளில்‌ இறங்கிவரும்‌ காலடிச்‌ சத்தம்‌
கேட்டது.

ட்ப வேலைக்குப்‌ போகவேண்டூமென்று தெரியாதா?

ஏன்‌ என்‌ ர மறித்துப்‌ பின்னால்‌ பார்க்‌ பண்ணினீர்‌”

“என்ன? இந்த “வெதரில்‌”... வெளியிலை படூ மோசமாக இருக்கு
வேலைக்குப்‌ போகப்‌ போறியா?”

“உமக்கென்ன நீர்‌ உம்மட காரை எடுத்துவிடும்‌.”

“நான்‌ இப்ப வெளிநாட்டு ரெலிபோனிலை நிக்கிறன்‌. கதைச்சு
முடிஞ்சபிறகுதான்‌ என்னண்டாலும்‌ செய்வன்‌.”

“எனக்குத்‌ தெரியும்‌ நீ ஆரோட கதைக்கிறாய்‌ எண்டு, அவள்‌
கனடாவுக்கு வாறதை நான்‌ பார்த்துக்‌ கொள்ளுறன்‌.. நீர்‌ கனவு
காணாதேயும்‌ அவளோட கனடாவில வாழ்க்கை நடத்துவீர்‌ எண்டூ.”

இவள்‌ போட்ட சத்தம்‌ புவனாவுக்கும்‌ கேட்டூவிட்டது.
மறுபக்கத்திலிருந்து புவனா அழத்‌ தொடங்கிவிட்டாள்‌.

“ஏனப்பா... அவ வீட்டில இல்லாத நேரம்‌ பார்த்து என்னோட
கதைக்கலாமே. நீங்கள்‌ அங்க படூம்‌ பாடைப்‌ பார்க்கும்‌ பொழுது எனக்குச்‌
சரியான கவலையாக இருக்கு. நீங்க அந்த வீட்டில இருக்கவேண்டாம்‌.

தயவு செய்து வேற வீடூ வாடைக்கெடுத்துக்‌ கொண்டென்றாலும்‌
கெதியாகப்‌ போங்கோ...”

“நர்‌ உடனடியாக உம்மட காரை எடுக்கிறீரா இல்லையா?”
“காரை எடுக்காவிட்டால்‌ என்ன செய்வாய்‌.”

“911 அடித்துப்‌ பொலிசைக்‌ கூப்பிடுவன்‌. நீ என்னைச்‌
சித்திரவதை செய்ததாக முறைப்பாடூ செய்வன்‌.”

51


Page 78மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

“நீ ஒரு பெண்ணா?உன்னோடவா நான்‌ கணவனாக வாழ்ந்தனான்‌?
உனக்காகவா என்‌ வாழ்க்கையின்‌ பகுதியை அழித்தனான்‌?”

மறுபக்கத்திலிருந்து புவனாவின்‌ அழுகைக்‌ குரல்‌... .. “ஐயோ
அப்பா... கொஞ்சம்‌ பொறுமையா இருங்கள்‌.. முதலில்‌ அவவிட காரை
வெளியே எடுத்துவிட்டு அதுக்குப்‌ பிறகு என்னுடன்‌ கதையுங்கள்‌..”

“நீர்‌ சும்மா இரும்‌ புவனா. இவள்‌ என்ன செய்வாள்‌ என்று நான்‌
பார்த்துக்‌ கொள்ளுறன்‌.”

“நீ போடி. செய்யிறதைச்‌ செய்‌... பொலிசைக்‌ கூப்பிடப்‌
போறியா... கூப்பிடு.”

நான்‌ எனது காரை வெளியே எடுத்து விடவில்லை. புவனாவுடன்‌
சிறிது நேரம்‌ பேசிவிட்டுழ அவவை ஸ்பொன்ஸர்‌ செய்வதற்கான
பத்திரங்களை தாக்கல்‌ செய்த விபரங்களைக்‌ கூறிவிட்டு, கோபம்‌
தணியாத நிலையில்‌ தூங்க முயன்றேன்‌.

சிறிது நேரத்தின்‌ பின்னர்‌ அழைப்பு மணி அடிக்கும்‌ சத்தம்‌
கேட்டு திகைப்புடன்‌ பேஸ்மென்ரிலிருந்து மேலே ஏறி வந்து... இந்த
நேரம்‌ யார்‌ இந்த வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்‌... என்ற ஆதங்கத்துடன்‌
கதவைத்‌ திறப்பதற்காக வந்தபொழுது அவள்‌ ஏற்கெனவே கதவைத்‌
திறந்து வந்திருந்தவர்களுடன்‌ பேசிக்‌ கொண்டிருந்தாள்‌.

ட இருவர்‌ வந்திருந்தனர்‌. ஒருவர்‌ ஆண்‌. மற்றவர்‌ பெண்‌.
வெள்ளைத்தோல்‌ என்பதில்‌ அவர்களின்‌ சீருடையைப்‌ பார்க்காமலே
பொலிசார்‌ என்று உறுதிப்படுத்தி விட்டேன்‌. என்னைக்‌ கண்டதும்‌
அவர்களில்‌ ஆண்‌ பொலிசார்‌ என்னை மீண்டும்‌ பேஸ்மென்ருக்குப்‌
போகும்படி சமிக்கை காட்டி என்னுடன்‌ பின்‌ தொடர்ந்து கீழே வந்தார்‌.

நீர்‌ உமது மாஜி மனைவியைக்‌ கொலைப்‌ பயமுறுத்தல்‌
செய்ததாக நான்‌ உம்மைக்‌ கைது செய்கிறேன்‌. கனேடியச்‌ சட்டத்தின்‌
கீழ்‌ உமது உரிமைகளை வாசிக்கிறேன்‌. கவனமாகக்‌ கேளும்‌.

நீர்‌ மெளனமாக இருப்பதற்கு உமக்கு உரிமை உண்டு.
மாறாக நீர்‌ வாக்கு மூலம்‌ கொடுத்தாலோ அல்லது வேறு ஏதாவது
தகவல்‌ கொடுத்தாலோ அவை நீதிமன்றத்தில்‌ உமக்கு எதிராகப்‌
பாவிக்கப்படலாம்‌. அத்துடன்‌ வாக்குமூலம்‌ கொடூக்க விரும்பினால்‌

52


Page 79வயது பதினாறு .

 

அதற்கு முன்பாக ஒரு சட்டத்தரணியுடன்‌ ஆலோசனை பெறுவதற்கு
உமக்கு உரிமையுண்டு. உமது சட்ட உரிமைகள்‌ எவை என்பது
புரிகின்றதா?

பொலிசார்‌. ஒருவரைக்‌ கைது செய்யமுன்‌ கைது
செய்யப்படுபவரின்‌ சட்ட உரிமைகளை வாசித்துக்‌ காட்டவேண்டும்‌
என்பது சட்ட நியதி என்பது அப்பொழுது எனக்குத்‌ தெரியாது.

விரக்தியின்‌ எல்லைக்கே தள்ளப்பட்டேன்‌. மனித மனதில்‌
ஏற்படக்கூடிய எல்லா உணர்வுகளும்‌ ஒன்றன்பின்‌ ஒன்றாகவும்‌
ஒருமித்தும்‌ தோன்றி எனது சிந்தையில்‌ குழப்பத்தை உருவாக்கி
செயலில்‌ மதியிழக்கச்‌ செய்தன.

பொலிசார்‌ என்னைக்‌ கைது செய்வதற்கு சொல்லாலும்‌
செயலாலும்‌ எதிர்ப்புத்‌ தெரிவித்தேன்‌. அமைதியாகவும்‌ நான்‌ எதுவித
குற்றமும்‌ செய்யவில்லை எனக்‌ கெஞ்சிப்‌ பார்த்தேன்‌. ஆத்திரத்துடன்‌
அவள்‌ எனக்கு இழைத்த துரோகத்தை அவர்களுக்கு எடுத்துக்‌ கூறியும்‌
பார்த்தேன்‌. ஆனால்‌ பொலிசார்‌ எனது கெஞ்சலுக்கு அனுதாபம்‌
காட்டவில்லை. எதுவானாலும்‌ கோர்ட்டில்‌ சொல்லும்‌ எனக்‌ கூறி எனது
இரு கைகளையும்‌ பின்புறமாக மடித்துப்‌ பிடித்து கைவிலங்கிட்டான்‌.

சில நிமிட நேரங்களின்‌ பின்‌ பெண்‌ பொலிசாரும்‌ கீழே வந்து குளிர்‌
தாங்கக்கூடிய உடையும்‌ “வின்ரர்‌ பூட்ஸ்சும்‌” அணியும்படி கூறினாள்‌. இது
எனது விருப்பம்‌ என்றும்‌, மறுத்தால்‌ நான்‌ உடூத்தியிருந்த சாரத்துடனும்‌
பெனியனுடனும்‌ வெறுங்காலுடனும்‌ என்னை பலாத்காரமாக இழுத்துச்‌
செல்ல நேரிடும்‌ என்று அச்சுறுத்தினாள்‌. இதைக்‌ கேட்டதும்‌ ஏற்பட்ட
பயத்தினால்‌ அவர்களின்‌ உத்தரவிற்குப்‌ பணிந்து செயல்படுவதுதான்‌
எனக்கு நன்மை பயக்கும்‌ என அவர்களின்‌ கூற்றுக்கு இசைவாக
நடந்தேன்‌.

க விலங்கிடப்பட்டு, பொலிஸ்‌ வாகனத்தின்‌ பின்‌
ஆசனத்தில்‌ அமர்த்தப்பட்டு, மார்க்கம்‌ பொலிஸ்‌ நிலையத்திற்கு கொண்டு
செல்லப்பட்டேன்‌. அங்கு ஒரு சிறிய அறையில்‌; யன்னல்‌ வைக்கப்படாத
காற்றோட்டமற்ற அந்த அறையில்‌ தள்ளப்பட்டுூப்‌ பூட்டி வைக்கப்பட்டேன்‌.
அந்த அறையில்‌ எத்தனை நாட்கள்‌ வைக்கப்பட்டிருந்தேன்‌ என்பதை
27ம்‌ திகதி, நத்தார்‌ பண்டிகைக்கு மறுநாள்‌, “பொக்சிங்‌ டே” எல்லாம்‌
கழிந்து கோர்ட்டில்‌ ஆஜர்‌ செய்யப்பட்டு சூரியின்‌ உதவிபபுடனும்‌,
சட்டத்தரணி மரியதாசன்‌ அவர்களின்‌ உதவியுடனும்‌ பிணையில்‌
விடுவிக்கப்‌ பட்ட பின்புதான்‌ ஐந்து நாட்கள்‌ தடுப்புக்காவலில்‌ வைக்கப்‌
பட்டிருந்தேன்‌ என்பதை உணர்ந்துகொண்டேன்‌.

53


Page 80மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

“மேலே வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டூக்கு நீர்‌ குற்றவாளியா?
சுற்றவாளியா?”.. எத்தனை தடவைகள்‌ இந்தக்‌ கேள்விகள்‌
கேட்கப்பட்டனவோ தெரியவில்லை. அந்தக்‌ கேள்விகளைப்‌ புரிந்து
கொள்ளும்‌ மனநிலையும்‌ எனக்கிருக்கவில்லை.

யாரோ என்னை மெதுவாக அசைக்கும்‌ உணர்வு எற்பட்டது.
எனது சட்டத்தரணி கோபமாக என்னைப்‌ பார்த்த வண்ணம்‌, உதடூகள்‌
ஆடாமல்‌, சத்தம்‌ வெளியே வராமல்‌ உறுதியான வார்த்தைகளால்‌
“சுற்றவாளி” என்று சொல்லும்‌ எனக்‌ கூறிய பொழுதுதான்‌ சுய உணர்வு
பெற்றேன்‌. கண்களிலிருந்து கண்ணீர்‌ சொரிந்தது. சுற்றவாளி எனக்‌
கூறினேன்‌.

மேசையிலிருந்த “கிளினெக்ஸ்‌” பெட்டியை எடூத்து மொழி
பெயர்ப்பாளர்‌ எனக்கு நீட்டினார்‌. அதிலிருந்து சில ரிசுக்களை எடுத்து
எனது கண்களை துடைத்துக்‌ கொண்டேன்‌. இதை அவதானித்த நீதிபதி
“வழக்கைத்‌ தொடர்வதற்கு உமது மனநலை தயாராக உள்ளதா”
எனக்‌ கேட்டார்‌. நான்‌ மெளனமாக இருந்தேன்‌. இதை அவதானித்த
எனது சட்டத்தரணி கனம்‌ நீதிபதி அவர்களே! எனது கட்சிக்காரர்‌
கவலையினால்‌ சற்றுக்‌ குழப்பமடைந்து காணப்படுகிறார்‌, ஆகவே
அதிலிருந்து மீள்வதற்கு சிறிது நேர அவகாசம்‌ வழங்கும்படி கேட்டுக்‌
கொள்கிறேன்‌.” என்று கேட்டார்‌.

அதற்கென்ன. பத்து நிமிட இடைவேளை. பதினொன்று
இருபதுக்கு இந்த வழக்கில்‌ சம்பந்தப்பட்ட சகலரும்‌ நீதிமன்றத்தில்‌
ஆஜராகவேண்டும்‌.

எல்லோரும்‌ எழுந்து நில்லுங்கள்‌. இது மடம்‌ கிளார்க்‌.

வழக்கு மீண்டும்‌ ஆரம்பமாகியது.

வழக்குத்‌ தொடூனர்‌ உங்கள்‌ சாட்சிகளை அழையுங்கள்‌.

ரதி மோகன்‌, முறையீட்டாளரை சாட்சியாக அழைக்கிறேன்‌.

சரி திருமதி மோகன்‌ நீங்கள்‌ சாட்சியம்‌ கூறுமுன்‌ சொல்லப்‌
போகும்‌ சாட்சியம்‌ அத்தனையும்‌ உண்மையென சத்தியம்‌ செய்ய
வேண்டும்‌. அல்லது உறுதி கூறவேண்டும்‌. இதில்‌ எது உங்கள்‌
மனச்சாட்சியைக்‌ கட்டுப்படுத்தும்‌.

54


Page 81வயது பதினாறு

 

உறுதி கூற விரும்புகிறேன்‌.
“மடம்‌ கிளார்க்‌” அவரை உறுதி கூறச்‌ செய்யுங்கள்‌.
உங்கள்‌ வலது கையை உயர்த்துங்கள்‌.

“நான்‌ கூறப்போகும்‌ சாட்சியம்‌ எல்லாம்‌ உண்மை உண்மையைத்‌
தவிர வேறொன்றுமில்லை என உறுதிப்‌ படுத்துகிறேன்‌.”

அரச தரப்பு சட்டத்தரணி வழக்கைத்‌ தொடர்ந்தார்‌.

உங்கள்‌ முழுப்பெயர்‌ ரதி மோகன்தானே?
ஆம்‌.

உங்களுக்கு இப்பொழுது 34 வயது?
£ எநீங்கள்‌ முன்பு திருமணமாகி இப்பொழுது விவாகரத்துச்‌

செய்து ர்கள்‌?

ஆம்‌.

உங்களுக்கு இரண்டூ குழந்தைகள்‌ இருக்கிறார்கள்‌?

ஆம்‌.

அவர்களுக்கு ஐந்து வயதும்‌ மூன்று வயதும்‌?

ஆம்‌.

உங்கள்‌ மாஜிக்‌ கணவன்‌ இங்கு இருக்கிறாரா?

ஆம்‌.

அவர்‌ யார்‌ என்று காட்டூங்கள்‌.

அதோ அந்த சட்டத்தரணிக்கு அருகாமையில்‌ அமர்ந்துள்ளார்‌.
நீல நிற சேட்‌ அணிந்துள்ளார்‌.

95


Page 82மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

நல்லது. இப்பொழுது உங்களை டிசம்பர்‌ 23ம்‌ திகதிக்கு
அழைத்துச்‌ செல்லப்‌ போகிறேன்‌. அந்த நாள்‌ ஞாபகத்தில்‌ உண்டா?

ஆம்‌.

அன்றைய தினம்‌ என்ன நடந்தது?

நான்‌ இரவு வேலை செய்யிறனான்‌. இரவு 11.00 மணிக்கு
வேலை தொடங்கி காலை 6.00 மணிக்கு வேலை முடியும்‌. அன்று நான்‌
வேலைக்குப்‌ போவதற்கு வெளியே வந்தபொழுது எனது காருக்குப்‌
பின்னால்‌ அவர்‌ தன்ர காரை நிறுத்தி வைத்திருந்தார்‌.

அவர்‌ என்றால்‌ யார்‌?

எனது மாஜிக்‌ கணவன்‌

நீங்கள்‌ விவாகரத்துச்‌ செய்து விட்டீர்கள்‌. அப்படியானால்‌
எதற்காக அவர்‌ தனது காரை நீர்‌ வசிக்கும்‌ வீட்டில்‌ நிறுத்தி

வைக்கவேண்டூம்‌?

அவரும்‌ அதே வீட்டில்‌ பேஸ்மென்ரில்‌ இருக்கிறார்‌. நான்‌ மேல்‌
பகுதியில்‌ இருக்கிறேன்‌.

பிள்ளைகள்‌ யாருடன்‌ இருக்கிறார்கள்‌?

அவர்‌ பகல்‌ நேரம்‌ வேலைக்குப்‌ போகும்‌ போது என்னுடனும்‌,
நான்‌ இரவு நேரம்‌ வேலைக்குப்‌ போகும்‌ போது அவருடனும்‌
இருப்பார்கள்‌.

சரி தொடரும்‌.

அவருடைய கார்‌ எனது காரை மறித்து நிறுத்தப்பட்டிருந்த
படியால்‌ நான்‌ அவரிடம்‌ சென்று அவருடைய காரைப்‌ பின்னெடூத்து
றோட்டூக்‌ கரையில்‌ நிறுத்தும்படி கேட்டேன்‌.

அவர்‌ வழமையாக எங்கே தனது வாகனத்தை நிறுத்தவார்‌?

நான்‌ வேலைக்குப்‌ போகும்வரையில்‌ றோட்டுக்‌ கரையில்‌
நிறுத்துவார்‌. |

56


Page 83வயது பதினாறு

 

அன்றைய தினம்‌ உமது வாகனத்துக்குப்‌ பின்னால்‌ உமது
வாகனத்தை மறித்து நிறுத்தி உள்ளார்‌ சரிதானே.

ஆம்‌.

சரி தொடரும்‌.

நான்‌ அவரது காரை வெளியே எடுக்கும்படி கேட்ட பொழுது
அவர்‌ சரியாகக்‌ கோபமடைந்து என்னைக்‌ கேவலமான வார்த்தைகளால்‌
அவமானப்‌ படுத்தினார்‌.

என்ன வார்த்தைகளால்‌ அவர்‌ உம்மை அவமானப்படுத்தினார்‌?

நீ ஒரு நடத்தை கெட்டவள்‌. விபச்சாரி, யாரைப்‌ பார்க்க
வேலையெண்டூ இந்த நேரத்திலை போகிறாய்‌... ..

அவர்‌ இவ்வாறு உம்மை ஏசும்‌ பொழுது நீர்‌ ஏதாவது பதிலுக்குக்‌
கூறினீரா?

நான்‌ சொன்னேன்‌... .. உமக்கென்ன நான்‌ யாரையும்‌ பார்க்கப்‌
போனால்‌. நீர்‌ பேசாமல்‌ காரை வெளியே எடூம்‌ என்றேன்‌.

அதற்கு அவர்‌ என்ன சொன்னார்‌?

அதற்கு அவர்‌ என்னைக்‌ கெட்ட வார்த்தைகளால்‌ ஏசி.. போடி
வெளியே காரை எடுக்க மாட்டன்‌. உன்னை இண்டைக்குக்‌ கொல்லாமல்‌
விடமாட்டன்‌ என்று எனக்குப்‌ பின்னால்‌ துரத்திக்‌ கொண்டூ வந்தார்‌.
அப்பொழுது நான்‌ மேலே ஓடிவந்து கதவைப்‌ பூட்டிவிட்டு பொலிசுக்கு
911 அடித்தனான்‌.

அவர்‌ வேறு ஏதாவது சொன்னவரா? அல்லது செய்தவரா?

கதவைத்‌ தட்டூ தட்டு என்று தட்டி சரியாகச்‌ சத்தம்‌ போட்டு
நீ எப்படியும்‌ வெளியே வரத்தானே வேண்டும்‌. உன்னைக்‌ குத்திக்‌
கொல்லாமல்‌ விடமாட்டேன்‌ என்று சொன்னவர்‌.

அவர்‌ வேறு ஏதாவது சொன்னவரா? அல்லது செய்தவரா?

இல்லை.

57


Page 84மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

அவர்‌ உம்மைக்‌ கொலை செய்யப்‌ போவதாகச்‌ சொன்னதைக்‌
கட்டாயம்‌ செய்வார்‌ என்று நீர்‌ பயப்படுகிறீரா?

ஆம்‌.

இப்பொழுதும்‌ அவரும்‌ நீரும்‌ அதே வீட்டில்தான்‌
இருக்கிறீர்களா?

இல்லை. நான்‌ அதே வீட்டில்‌. அவர்‌ எங்கு இருக்கிறார்‌ என்று
எனக்குத்‌ தெரியாது.

அவரில்‌ இப்பொழுதும்‌ உமக்குப்‌ பயம்‌ இருக்கிறதா?
ஆம்‌.

இந்த சாட்சியிடம்‌ வேறு கேள்விகள்‌ . நான்‌ கேட்பதற்கு
இல்லை.

அவள்‌ நீதிமன்றத்தில்‌, உறுதி கூறி, ஒரு நீதிபதியின்‌ முன்னால்‌
கூறிய பொய்களைக்‌ கேட்கும்‌ பொழுது என்‌ மனம்‌ சுக்கு நூறாக
நொறுங்கியது. தாயகத்திலும்‌ குடும்பங்கள்‌ பல காரணங்களுக்காகப்‌
பிரிவதுண்டு. ஆனால்‌ அங்கெல்லாம்‌ பெண்கள்‌ இவளைப்போல்‌ தரம்‌
கெட்டவர்களாக இருப்பதில்லையே. கனடாவில்‌ சில பெண்கள்‌ தமது
சுதந்திரத்தை அவமதித்துத்‌ துஷ்பிரயோகம்‌ செய்கிறார்கள்‌ என்பதை நான்‌
முன்பு கேள்விப்பட்டூுள்ளேன்‌. கணவன்மாரைப்‌ பெண்கள்‌ மதிப்பதில்லை.
அற்ப விடயங்களுக்கெல்லாம்‌ 911 அடித்து கணவன்மாரைப்‌ பொலிசில்‌
பிடித்துக்‌ கொடுத்து கணவன்மாரின்‌ வாழ்க்கையை மட்டுமின்றி
தமது பிள்ளைகளின்‌ வாழ்க்கைகளையும்‌ நாசம்‌ பண்ணுவதைப்பற்றி
பலரிடமிருந்து பலவாறாகக்‌ கேள்விப்பட்டூுள்ளேன்‌. அதை சில காலமாக
நானே நேரடியாக அனுபவிக்கிறேன்‌. கனடாவில்‌ எம்‌ இனத்தின்‌ குடூம்ப
சீரழிவுகள்‌ அதிகளவு ஏற்படுவதன்‌ காரணங்கள்‌ எவை என அறியப்‌ பல
தடவைகள்‌ முயன்றேன்‌.

“உ... எனது குடும்ப சீரழிவிற்கு நான்தான்‌ பொறுப்பா? நான்‌
ஒரு இலங்கைப்‌ பட்டதாரி. தமிழ்ப்‌ பாடசாலையில்‌ படித்து பின்‌ யாழ்‌
பல்கலைக்கழகத்தில்‌ தமிழ்‌ மொழியில்‌ விஞ்ஞான பட்டதாரியாக பட்டம்‌
பெற்றவன்‌. நான்‌ அதிர்ஷ்டவசமாக கொழும்பு பாடசாலை ஒன்றில்‌
தமிழ்ப்‌ பிரிவிற்கான விஞ்ஞான ஆசிரியராக இரு வருடங்கள்‌ கடமை

58


Page 85வயது பதினாறு

 

ஆற்றியபின்‌, கல்வித்துறையில்‌ மேன்மை பெற இலங்கையில்‌ எனக்கு
உருவாக்கப்பட்ட வாய்ப்பை உதறித்‌ தள்ளிவிட்டு வெளிநாட்டு மோகம்‌
கொண்டூ எண்ணற்ற எதிர்பார்ப்புகளுடன்‌ கனடா வந்து சேர்ந்தேன்‌.
அரு எதிர்பார்ப்புக்கள்‌ நீர்முலமாகி, விஞ்ஞான பட்டதாரி
என வெளியில்‌ கூறக்கூட அருகதையற்று, படிப்பறிவற்று தாயகத்தில்‌
கூலி வேலை செய்தவர்களுடன்‌, நீர்‌ இலங்கையில்‌ பட்டதாரியாக,
ஆசிரியராக இருந்திருக்கலாம்‌, ஆனால்‌ கனடாவில்‌ நீரும்‌ நானும்‌
சமம்‌. என்னட்ட இருக்கிற பணம்‌ உம்மட்ட இருக்கா.. என்ர வீட்டிலும்‌
பார்க்க உம்மட வீடு பெரிசா? என்ர கார்‌ ஹொண்டா அக்குரா.. உம்மட
ரொயோற்றா கொரல்லா.. இப்ப சொல்லும்‌ நீர்‌ பெரிசா? இல்ல நான்‌
பெரிசா? ரவி மதுபோதையில்‌ என்னிடம்‌ கேட்ட கேள்விகள்‌ ஒன்றன்பின்‌
ஒன்றாக நச்சரித்தன. அன்று ஏற்பட்ட விரக்தி. அதுதான்‌ நான்‌ திசை
மாறிய தினம்‌. கல்வியில்‌ உயர்வு பெற நான்‌ கொண்ட தாகம்‌ பணம்‌
சம்பாதிக்கும்‌ ஒர்மமாகியது.

இந்த விரக்திதான்‌ எனது குடும்ப வாழ்க்கையின்‌ வீழ்ச்சிக்குக்‌
காரணமா?

எனது ஆரம்ப குடூம்ப வாழ்க்கையில்‌ பணத்தை முன்வைத்து
எனது மனைவியைப்‌ புறக்கணித்தேனா? அவள்‌ எதிர்பார்த்த குடூம்ப
வாழ்க்கையின்‌ இன்ப சுகத்தை முற்றாக கொடுக்கத்‌ தவறினேனா? ரவி
போன்றவர்கள்‌ என்னை இம்சைப்‌ படுத்தியதைப்‌ போன்று என்‌ நண்பர்கள்‌
முன்னிலையில்‌ அவளைத்‌ தாழ்த்தினேனா? அவளது உணர்வுகளை
மதிக்க மறந்தேனா?

தாயகத்தில்‌ அவள்‌ பொருளாதாரத்‌ தேவைக்காக என்னில்‌ முற்று
முழுதாகத்‌ தங்கி இருந்திருப்பாள்‌. எனக்கு அடங்கிய மனைவியாக
எனக்கு சமைத்துப்‌ போட்டு, பணிவிடை செய்து, பிள்ளைகளை
உருவாக்கும்‌ இயந்திரமாக வாழ்ந்திருப்பாள்‌. ஆனால்‌ கனடாவில்‌ சில
வருடங்களில்‌ பெண்ணின்‌ சுதந்திரத்தைப்‌ புரிந்துகொண்டு விட்டாள்‌.
எங்கு வேண்டுமென்றாலும்‌, எப்படி வேண்டுமானாலும்‌, தனிமையில்‌
சுயமாக இயங்கி வாழமுடியும்‌ என்று கற்றுக்கொண்டூ விட்டாள்‌. பணம்‌
சம்பாதிக்கும்‌ வேகத்தில்‌ அவளையும்‌ வேலைக்கு அனுப்பிவிட்டேன்‌.
எனது காம இச்சைக்காக தரம்கெட்ட பாலியல்‌ படங்களை அவளுக்கு
அறிமுகம்‌ செய்துவிட்டேன்‌.

சுய நினைவு பெற்ற பொழுது வழக்குத்‌ தொடர்ந்து நடைபெற்றுக்‌
கொண்டிருந்தது. எனது சட்டத்தரணி அவளிடம்‌ கேள்விகள்‌ கேட்டூக்‌
குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தார்‌.

59


Page 86மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

உங்கள்‌ திருமணம்‌ காதல்‌ திருமணமா அல்லது பெற்றோர்‌,
உறவினர்கள்‌ ஒழுங்கு செய்து செய்யப்பட்ட திருமணமா?

எனது பெற்றோரும்‌ அவரது தாயாரும்‌ ஏற்பாடு செய்த
திருமணம்‌.

உங்கள்‌ திருமண வாழ்க்கை ஆரம்பத்தில்‌ ஓரளவு மகிழ்ச்சியாக
அமைந்திருந்தது அப்படித்தானே?

ஆம்‌.
பின்பு கசப்புறக்‌ காரணமென்ன?
அதற்கு அவரைத்தான்‌ கேட்கவேண்டும்‌.

அவரிடமும்‌ கேட்பேன்‌. உங்களிடமும்‌ கேட்கிறேன்‌. என்ன
காரணம்‌?

எங்களுக்குள்‌ ஒருவருக்கொருவர்‌ இடைவெளி ஏற்பட்டூவிட்டது.
அதற்குக்‌ காரணம்‌ என்ன?
என்னில்‌ அவருக்கு சந்தேகம்‌ எற்பட்டூவிட்டது.

சந்தேகம்‌ ஏற்பட்டுவிட்டதென்றால்‌.. சற்று விபரமாகக்‌ கூற
முடியுமா?

எனக்கு வேறு ஆண்களுடன்‌ தொடர்பு இருப்பதாக அவர்‌
சந்தேகப்படூகிறார்‌.

தொடர்பு என்றால்‌ .. பாலியல்‌ ரீதியான தொடர்பு என்று
சந்தேகப்படூகிறாரா?

சற்று விரக்தியுடன்‌, ஆம்‌.

அப்படியான பாலியல்‌ ரீதியான தொடர்பு வேறு ஆண்களுடன்‌
உங்களுக்கு உண்டா?

60


Page 871. நகு
படர
த்‌

வயது பதினாறு

 

இல்லை.

உண்மையாகவா?

தயக்கத்துடன்‌.. ஆம்‌

உங்கள்‌ விவாகரத்து மனுவை யார்‌ தாக்கல்‌ செய்தது?
அவர்தான்‌

அந்த மனுவில்‌... உமது மாஜி கணவன்‌ உமது பாலியல்‌

முறைகேட்டூக்காக விவாகரத்துக்‌ கோருவதாக கூறியுள்ளார்‌.
சரிதானே?

அந்தக்‌

ஆம்‌.

உமக்கும்‌ வேறு ஆணுக்கும்‌ பாலியல்‌ தொடர்பு இல்லையென்றால்‌
கூற்றுக்கு எதிராக எதிர்மனு தாக்கல்‌ செய்தீரா?

நீண்ட நேரத்‌ தயக்கத்தின்‌ பின்‌ .. இல்லை
ஏன்‌?
பதில்‌ வரவில்லை.

கனம்‌ நீதிபதி அவர்களே நான்‌ முன்‌ கூறிய விவாகரத்து

மனுவின்‌ பிரதி ஒன்றை பத்திர சாட்சியாக அணைக்கிறேன்‌.

உமது நண்பரிடம்‌ அதைக்‌ காண்பித்தீரா?
ஆம்‌. அவரிடமும்‌ பிரதி ஒன்று கொடுத்துள்ளேன்‌.

அம்மணி .. உங்களின்‌ இரண்டாவது குழந்தையின்‌ உயிரியல்‌

ரீதியான தகப்பன்‌ யார்‌?

அவர்தான்‌...
அவரென்றால்‌?

எனது மாஜிக்‌ கணவன்‌

61


Page 88மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

ரகு என்பவரை உமக்குத்‌ தெரியுமா?

ஆம்‌.

யார்‌ அவர்‌?

எனது மாஜிக்‌ கணவனின்‌ நண்பர்‌.

இப்பொழுதும்‌ நண்பரா? அல்லது மாஜி நண்பரா?
மிகவும்‌ தயங்கிய வண்ணம்‌, மாஜி நண்பர்‌.

ரகு என்பவரினதும்‌ உமதும்‌ தொலைபேசி சம்பாசணையை
உமது மாஜிக்‌ கணவர்‌ பதிவு செய்து அதை நீர்‌ கேட்டனீரா?
ம்‌.

“௮

அந்த உரையாடலில்‌ உமது இரண்டாவது குழந்தை, ரகுவின்‌
குழந்தை என்பதை ஏற்றுக்‌ கொண்டுூள்ளீரா?

பதில்‌ வரவில்லை. சட்டத்தரணி தொடர்ந்தார்‌.

அந்தப்‌ பதிவு செய்த நாடாவை நீர்‌ கேட்கும்படி செய்து
உம்மை உமது மாஜிக்‌ கணவன்‌ உமது இரண்டாவது குழந்தையின்‌
தந்‌ைத யார்‌ எனக்‌ கேட்டபொழுது ரகுதான்‌ அக்‌ குழந்தையின்‌ அப்பா
என ஏற்றுக்‌ கொண்டனீர்தானே..

பதில்‌ இல்லை.

ஆம்‌ அல்லது இல்லை எனத்‌ தயவு செய்து பதில்‌ கூறவும்‌.

மீண்டும்‌ பதில்‌ இல்லை.

நீதிபதி அவர்கள்‌ குறுக்கிட்டு .. நீங்கள்‌ பதில்‌ கூறவேண்டும்‌.
அல்லாவிடில்‌ அந்தக்‌ கேள்விக்கான பதிலை உமக்குப்‌ பாதகமாக
நீதிமன்றம்‌ கருதும்‌.

எதுவித பதிலும்‌ இல்லை.

சரி சட்டத்தரணி அவர்களே... உங்கள்‌ கேள்விகளைத்‌
62


Page 89வயது பதினாறு

 

தொடரலாம்‌. சாட்சியின்‌ பாலியல்‌ நடத்தை பற்றிய கேள்விகளை
தொடர்ந்து கேட்கவேண்டிய அவசியமில்லை.

அவரின்‌ நடத்தைதான்‌ இந்த வழக்கின்‌ ஆணிவேர்‌. அவரது
கடந்தகால வாழ்க்கை எனது கட்சிக்காரருக்கு எதிரான பொய்யான
முறைப்பாடு செய்வதற்கான நோக்கத்தை வெளிக்கொணரும்‌
என்பதற்காகவும்‌ அவாது கடந்தகால ஒழுக்க ரீதியான விடயம்‌ எதிர்‌
தரப்பினரின்‌ சார்பில்‌ அமையும்‌ என்பதனாலும்‌ அதுபற்றி மேலும்‌ சில
கேள்விகள்‌ கேட்க விரும்புகிறேன்‌.

மட்டூப்படூத்தப்பட்ட கேள்விகளை மட்டூம்‌ எதிர்பார்க்கிறேன்‌.

நன்றி... சரி அம்மணி அவர்களே! உமது இரண்டாவது
குழந்தையின்‌ தந்‌ைத ரகு என்பதை இப்பொழுது ஓத்துக்கொண்டூள்ளீர்‌.
அப்படியானால்‌ முதலில்‌ உமது மாஜிக்‌ கணவன்தான்‌ அந்தக்‌
குழந்தையின்‌ தந்‌ைத என்று இந்த நீதிமன்றத்தின்‌ முன்னிலையில்‌
உண்மை கூறுவதாக உறுதி கூறிவிட்டு, மாறாக திட்டமிட்டுப்‌ பொய்‌
கூறினீர்‌. அப்படித்தானே.

பதில்‌ இல்லை.

சரி. தொடர்ந்து வேறு கேள்விகளைக்‌ கேளுங்கள்‌.

நன்றி நீதிபதி அவர்களே! அம்மணி... உமது மாஜி கணவன்‌
உம்மிடமிருந்து விவாகரத்துப்‌ பெற்ற பின்பும்‌ நீங்கள்‌ இருவரும்‌ ஒரே
வீட்டில்தானே, நீர்‌ அவருக்கு எதிரான முறைப்பாட்டை டிசம்பர்‌ 23ம்‌
திகதி செய்யும்வரை, வாழ்ந்து வந்துள்ளீர்கள்‌...

ஆம்‌.

அந்த வீடூ யாருக்கச்‌ சொந்தமானது?

மாஜிக்‌ கணவனுக்கு.

அந்த வீட்டைத்‌ திருமணத்தின்‌ பின்‌ வாங்கினாரா அல்லது
அதற்கு முன்பாகவா?

அதற்கு முன்பாக.

63


Page 90மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

அப்படி இருந்தும்‌ டிசம்பர்‌ 23ம்‌ திகதியிலிருந்து நீர்‌ அந்த
வீட்டில்‌ இருக்க, உமது மாஜிக்‌ கணவன்‌, அந்த வீட்டின்‌ உரிமையாளன்‌,
அனாதை போன்று வீடற்றவன்போல்‌, வீதிகளில்‌ வாழ்வதுபோல்‌ வாழ்ந்து
வருகிறார்‌. அப்படித்தானே?

பதில்‌ வரவில்லை.

பதிலுண்டா?

நீதிபதி குறுக்கிட்டு அந்தக்‌ கேள்விக்கு அவர்‌ பதில்‌
கூறவேண்டிய அவசியமில்லை.

நன்றி.. கனம்‌ நீதிபதி அவர்களே!

உமது கணவன்‌ தாயகத்தில்‌ வேறொரு பெண்ணை இப்பொழுது
மறுமணம்‌ செய்துள்ளார்‌. இது உமக்குத்‌ தெரியுமா?

ஆம்‌.

தனது மனைவியை கனடாவுக்கு “ஸ்பொன்ஸர்‌” பண்ணியுள்ளார்‌.
இதுவும்‌ உமக்குத்‌ தெரியுமா?

இல்லை.

தனது மனைவியை ஸ்பொன்சர்‌ பண்ண வேண்டிய அவசியம்‌
உள்ளது என்பது உமக்குத்‌ தெரியும்தானே.

ஆம்‌.

காரணம்‌ உம்மைத்‌ திருமணம்‌ செய்தபின்‌ உமது மாஜிக்கணவன்‌
உம்மை ஸ்பொன்சர்‌ செய்தார்‌. சரிதானே?

ஆம்‌.
ஆகையால்‌ தனது புதிய மனைவியை அவர்‌ கட்டாயம்‌
ஸ்பொன்சர்‌ செய்திருப்பார்‌ என்பதை யாரும்‌ சொல்லித்தான்‌ நீர்‌

தெரிந்துகொள்ள வேண்டுமா?

அவர்‌ ஸ்பொன்சர்‌ பண்ணுவார்‌ என்பது எனக்குத்‌ தெரியும்‌.
ஆனால்‌ ஸ்பொன்சர்‌ பண்ணிவிட்டாரோ என்பது எனக்குத்‌ தெரியாது.

64


Page 91 

வயது பதினாறு

 

அவர்‌ ஸ்பொன்சர்‌ பண்ணவேண்டும்‌ என்பதன்‌ அவசியம்‌
உமக்குத்‌ தெரிந்திருக்கிறதே! அதை அறிவதை நோக்கமாகக்‌
கொண்டுதான்‌ அந்தக்‌ கேள்விகள்‌ அமைந்தன. நன்றி...

உமது மாஜிக்‌ கணவன்‌ மறுமணம்‌ செய்ததைப்‌ பற்றி நர்‌
அறிந்ததும்‌, உமது மனநிலை எப்படி இருந்தது?

எனக்கென்ன அவர்‌ என்ன செய்தாலும்‌.. ..

அது சரிதான்‌ ஆனாலும்‌ அதையிட்டூ நீர்‌
கோபமடையவில்லையா?

எனக்கு ஏன்‌ கோபம்‌ வரவேண்டூம்‌?

உமக்கும்‌ பிள்ளைகளுக்கும்‌ அவர்‌ தாபரிப்புப்‌ பணம்‌
செலுத்தும்பொழுது.. அவருக்கு இன்னொரு மனைவியும்‌ தொடர்ந்து வேறு
பிள்ளைகளும்‌ பிறந்து விட்டால்‌ அதனால்‌ உமது முன்னாள்‌ கணவன்‌
உமது பிள்ளைகளில்‌ அதிக அக்கறை காட்டமாட்டார்‌. அத்துடன்‌,
இப்பொழுது அவர்‌ உமது பிள்ளைகளுக்கு வழங்கும்‌ பொருளாதார
உதவி குறைந்துவிடும்‌; இது உமக்கு ஒருவித பாதிப்பை ஏற்படூத்தும்‌
என்பதைப்பற்றி நீர்‌ அதிருப்தி அடையவில்லையா?

அப்படி ஒன்றுமில்லை.

உமது பதில்களிலேயே ஒருவித வெறுப்பும்‌ விரக்தியும்‌
ஏற்படுவதால்‌ நீர்‌ உமது மாஜிக்‌ கணவன்‌ மறுமணம்‌ செய்ததால்‌
மிகவும்‌ கோபம்‌ அடைந்துள்ளீர்‌ என்பது வெட்ட வெளிச்சமாகத்‌
தெரிகிறது. இதைக்‌ கனம்‌ நீதிபதி அவர்களும்‌ அவதானிக்கிறார்‌
என்பதை உணர்கிறீரா?

சட்டத்தரணி அவர்களே நான்‌ எதை அவதானிக்கிறேன்‌ என்பதை
நீர்‌ சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லை.

அதை ஏற்றுக்‌ கொள்கிறேன்‌. இருப்பினும்‌ சாட்சியின்‌
பதில்களில்‌ ஏற்படும்‌ தொனியிலிருந்து அவரது மாஜிக்‌ கணவனின்‌
மறுமணம்‌ அவருக்கு எவ்வளவு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது
என்பதை அவதானிக்கும்படி தாழ்மையுடன்‌ கேட்டூக்கொள்கிறேன்‌.

சரி.. நன்றி. குறுக்கு விசாரணையைத்‌ தொடரவும்‌.

65


Page 92மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

நன்றி... அம்மணி... உமது மாஜிக்‌ கணவன்‌ தனது புதிய
மனைவியுடன்‌ தொலைபேசியில்‌ தொடர்பு கொள்வது உமக்குத்‌
தெரியுமா?

எனக்கென்ன அவர்‌ தொடர்பு கொண்டாலும்‌
கொள்ளாவிட்டாலும்‌.

அதை நான்‌ நன்றாக விளங்கிக்‌ கொள்கிறேன்‌. ஆனால்‌
எனது கேள்வி என்னவென்றால்‌ உமது மாஜிக்‌ கணவன்‌ தனது புதிய
மனைவியுடன்‌ தொலைபேசியில்‌ பேசியதைக்‌ கேட்டுள்ளீரா?

ஆம்‌.

அவ்வாறு அவர்‌ தனது புதிய மனைவியுடன்‌ தொலைபேசியில்‌
பேசும்‌ பொழுது நீர்‌ கோபம்‌ அடைவதில்லையா?

நான்‌ கோபம்‌ அடைந்து என்ன பிரயோசனம்‌?

நர்‌ கோபம்‌ அடைந்து பல தடவைகள்‌ உமது மாஜிக்‌
கணவனுடன்‌ தர்க்கம்‌ போட்டுள்ளீர்‌ அப்படித்தானே?

நீண்ட மெளனத்தின்‌ பின்‌, இல்லை.

ஆம்‌, சண்டை போட்டூள்ளீர்‌ என்பதை உமக்குக்‌ கூறுகிறேன்‌.

பதில்‌ வரவில்லை.

சம்பவ தினம்‌ அவ்வாறே அவர்‌ தனது புதிய மனைவியுடன்‌
தொலைபேசியில்‌ பேசிக்‌ கொண்டிருக்கும்‌ டெ மது நீர்‌ அவருடன்‌
ஆத்திர ஆவேசத்துடன்‌ சத்தம்‌ போட்டுச்‌ சண்டை போட்டூள்ளீர்‌.

இல்லை நான்‌ அவருடைய காரை வெளியே எடுக்கும்‌ படிதான்‌
கேட்டேன்‌.

ஆம்‌.. நீர்‌ சண்டை போட்டு அவரை எச்சரிக்கை செய்தனர்‌.
அதாவது எப்படி நீ உன்ர மனைவியை கனடாவுக்கு ஸ்பொன்சர்‌
பண்ணுவீர்‌ எண்டூ நான்‌ பார்த்துக்‌ கொள்கிறேன்‌ என்று கூறினீர்‌.

இல்லை.

66


Page 93 

வயது பதினாறு

 

அப்பொழுது அவர்‌ உம்மை எந்தக்‌ காரணத்துக்காகவும்‌
தன்னுடன்‌ பேச வேண்டாமென்றும்‌ வீட்டின்‌ உமது பகுதிக்குப்‌
போகுமாறும்‌ கூறினார்‌.

பதில்‌ இல்லை.

நீர்‌ அவ்வாறு வீட்டின்‌ உமது பகுதிக்குப்‌ போகாமல்‌ தொடர்ந்து
அவரைத்‌ தரக்குறைவாக ஏசியதனால்‌ அவர்‌ உம்மை நோக்கி வேகமாக
வந்தபொழுது நீர்‌ மேலே போய்விட்டீர்‌. அதன்‌ பின்‌ அவர்‌ தனது
பகுதியின்‌ கதவைத்‌ தாழ்ப்பாளிட்டூ மூடிவிட்டார்‌.

|
|

பதிலில்லை.

அதனாலே நர்‌ கோபம்டைந்து பொலிசை அழைத்து ஒரு பொய்‌
முறைப்பாட்டைச்‌ செய்துள்ளீர்‌.

இல்லை. அப்பொழுது அவர்‌ என்னைக்‌ கொலை செய்வதாக
எச்சரித்தார்‌.

நீர்‌ அவரைப்‌ பழி வாங்கும்‌ நோக்கத்துக்காகத்தான்‌ இந்த
பொய்‌ முறைப்பாட்டைச்‌ செய்தனர்‌.

இல்லை.

அவரது புதிய மனைவி கனடாவுக்கு வருவது உமக்கு
விருப்பமில்லை. மேலும்‌ உமது மாஜிக்‌ கணவர்‌ ஒரு குற்றவியல்‌
நீதிமன்றில்‌ ஏதாவது ஒரு குற்றச்சாட்டூுக்காக குற்றவாளி எனத்‌
தீர்க்கப்பட்டால்‌ அவர்‌ தனது புதிய மனைவியை கனடாச்‌ சட்டப்படி
ஸ்பொன்சர்‌ செய்யமுடியாது என்பதை நீர்‌ அறிவீர்‌. அதனால்தான்‌
இந்தப்‌ பொய்‌ குற்றச்சாட்டை அவர்‌ மேல்‌ சுமத்தி உள்ளீர்‌.

இல்லை.

உமது முன்னாள்‌ கணவன்‌ உமது பிள்ளைகளுக்கு ஒழுங்கு
முறையாகத்‌ தாபரிப்புப்‌ பணம்‌ மாதா மாதம்‌ செலுத்துவதில்லை என்றும்‌
இது தொடர்பாகப்‌ பல வருட பாக்கிப்‌ பணம்‌ உமக்கு அவர்‌ செலுத்த
வேண்டும்‌ என்றும்‌ நீர்‌ கனடா குடிவரவு அலுவலகத்திற்கு முறைப்பாடு
செய்தனீரா?

67


Page 94மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

ஆம்‌.

குடும்ப நீதிமன்றத்திலல்லவா தாபரிப்பு சம்பந்தமான
விடயங்களுக்கான விண்ணப்பம்‌ செய்திருக்கவேண்டும்‌. எற்காக கனடா

குடிவரவு அலுவலகத்தில்‌ முறைப்பாடூ செய்தீர்‌?
தெரியாது.

என்ன தெரியாது? தெரியாதவற்றைத்‌ தெரிந்தவர்களிடம்‌ கேட்டூ
அறிந்திருக்கலாமே?

பதில்‌ ஏதுமில்லை.

நான்‌ கூறுகிறேன்‌. உமது முன்னாள்‌ கணவன்‌ தனது புதிய
மனைவியை ஸ்பொன்ஸர்‌ பண்ணுவதைத்‌ ஹழ்ப்பதற்காகவே நீர்‌
அவ்வாறான பொய்‌ முறைப்பாட்டைத்‌ தாக்கல்‌ செய்திருந்தீர்‌?

இல்லை

நான்‌ உமக்கு ஒரு விபரத்தைக்‌ கூறவிரும்புகிறேன்‌. உமது
முறைப்பாடு பொய்யானது என்பதை உறுதிப்படுத்திய குடிவரவு
அலுவலகம்‌ உமது முன்னாள்‌ கணவன்‌ தனது புதிய மனைவியை
விரைவில்‌ கனடா வருவிப்பதற்கு அவர்களின்‌ விண்ணப்பத்தை
துரிதப்படுத்தியது. அதனால்தான்‌ அவரது புதியமனைவி துரித கெதியில்‌
கனடா வந்து சேர்வதற்கு கொழும்பிலுள்ள கனடா தூதராலயத்திற்கு
கனடாவிலிருந்து குடிவரவு அதிகாரிகள்‌ வேண்டுகோள்‌ விடூத்துள்ளனர்‌.

அது பற்றி எனக்கு ஒன்றும்‌ தெரியாது.
உண்மை. அதனால்தான்‌ அதை உமக்குத்‌ தெரிவிக்கிறேன்‌.

சட்டத்தரணி அவர்களே தொடர்ந்து வேநு, -கள்விகள்‌ இருந்தால்‌
கேட்கலாம்‌. சாட்சியுடன்‌ விவாதம்‌ வேண்டியதில்லை

அவளின்‌ பொய்‌ சாட்சியைக்‌ கேட்கும்‌ பொழுது என்‌ மனம்‌
வேதனையில்‌ வெந்தது. அவளது பொய்யையும்‌ புரட்டையும்‌ தொடர்ந்து
காதால்‌ கேட்க முடியவில்லை. மனம்‌ வேறு திசைகளெல்லாம்‌
அலைந்தது.

என்‌ மனம்‌ அலைபாயும்‌ வேளை எனது சட்டத்தரணி அவளிடம்‌

68


Page 95 

வயது பதினாறு

 

வேறு என்ன என்ன கேள்விகள்‌ கேட்டிருப்பாரோ தெரியவில்லை. நான்‌
ஒரு மயக்க நிலையிலிருந்தேன்‌.

வேறு கேள்விகள்‌ இல்லை, எனக்‌ கூறித்‌ தனது குறுக்கு
விசாரணையை எனது சட்டத்தரணி முடித்துக்‌ கொண்டூ பின்னர்‌
என்னை சாட்சியம்‌ அளிக்கும்படி அழைத்த பொழுதுதான்‌ மீண்டூம்‌
சுயநினைவு பெற்றேன்‌.

கனடாவில்‌ எனது வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக என்மூலம்‌
நீதிமன்றில்‌ சமர்ப்பித்தார்‌. அவர்‌ கேட்கும்‌ கேள்விகளுக்கு நான்‌ பதில்‌
கூறுவதில்‌ எதுவித கஷ்டமும்‌ இருக்கவில்லை.

எனது சட்டத்தரணியின்‌ கேள்விகளைத்‌ தொடர்ந்து அரசதரப்பு
சட்டத்தரணி என்னைக்‌ குறுக்கு விசாரணை செய்தார்‌. அவரது
கேள்விகள்‌ என்னை கோபமடையச்‌ செய்தன. என்னைக்‌ குற்றவாளி
என நிரூபிக்க வேண்டியதுதான்‌ அவரது நோக்கமாக இருந்தது.
உண்மையை ஆராய்ந்து அறிவதாக அமையவில்லை. ஆனால்‌, எனது
சட்டத்தரணியின்‌ ஆலோசனைப்படி பொறுமையாகவும்‌, தெளிவாகவும்‌,
நிதானமாகவும்‌ அவரது கேள்விகளுக்கு பதிலுரைத்தேன்‌.

கனடாவின்‌ புள்ளி விபரப்படி அதிக வீதாசாரமான கொலைகள்‌
கணவன்‌ - மனைவியினாலும்‌, ஒன்றாக வாழும்‌ ஆண்‌ - பெண்‌
நண்பர்களினாலும்‌, நன்கு அறிந்தவர்களாலும்‌ புரியப்படுவதால்‌ கணவன்‌
மனைவிக்கிடையிலான சிறிய சச்சரவுகளைக்‌ கூட மிகவும்‌ பாரதூரமான
விவகாரமாகப்‌ பொலிசாரும்‌, சட்டமா அதிபர்‌ அலுவலகமும்‌, நீதி
மன்றங்களும்‌ கருதுகின்றன என்ற காரணத்தால்‌ என நினைக்கிறேன்‌,
என்னையும்‌ வலுவாகப்‌ பயமடையச்‌ செய்துவிட்டார்கள்‌ பொலிசாரும்‌,
அரச சட்டத்தரணியும்‌.

மறுகணம்‌ எனது சட்டத்தரணியின்‌ தொகுப்புரை எனக்கு ஓரு
தெம்பையும்‌, நம்பிக்கையையும்‌ ஊட்டியது. இந்த வழக்கு எனக்கு
எதிரான ஒரு பழி வாங்கும்‌ நோக்குடன்‌ புனையப்பட்ட பொய்‌ வழக்கு
எனச்‌ சுருக்கமாக எடுத்துக்‌ கூறினார்‌. அவளின்‌ சாட்சியத்தை நம்புவது
நீதி தவறச்செய்து விடும்‌ என்று எடூத்துக்கூறினார்‌.

தொடர்ந்து அரச தரப்புச்‌ சட்டத்தரணியின்‌ தொகுப்புரை
என்னை மீண்டும்‌ அச்ச நிலைக்குக்‌ கொண்டூ சென்றது. எது எவ்வாறாக
இருப்பினும்‌ நான்‌ எனது முன்னாள்‌ மனைவியை கொலை செய்யப்‌
போவதாக எச்சரிக்கை செய்தேனா? இல்லையா? என்பதை மட்டும்‌

நீதிபதி கவனத்தில்‌ கொள்ள வேண்டும்‌ எனச்‌ சமர்ப்பித்தார்‌.
69


Page 96மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

இரு சட்டத்தரணிகள்‌ சமர்ப்பணங்களையும்‌ அமைதியாகக்‌
கேட்ட நீதிபதி கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்தார்‌. நேரம்‌ மாலை
4.45 ஆகிவிட்டது. நேரம்‌ போனதுகூடத்‌ தெரியாமல்‌ இந்த வழக்குத்‌
தொடர்ந்துள்ளது. நேரம்‌ கடந்த காரணத்தால்‌ இந்த வழக்கின்‌ தீர்ப்பை
மறு திகதிக்கு ஒத்தி வைக்கிறேன்‌ எனக்‌ கூறியதும்‌ எனது மனம்‌
கொதித்தது.

அவளிடமிருந்து எப்பொழுது விடுதலை முற்றாகக்‌ கிடைக்கப்‌
போகிறது என்ற ஏக்கத்துடன்‌ நீதிமன்றை விட்டூ வெளியேறி வாகனம்‌
தரித்து வைக்கப்பட்டிருந்த பார்க்கிங்கை அடைந்த பொழுது எனது
வாகனம்‌ மட்டும்‌ அந்தப்‌ பகுதியில்‌ ஒரு திறந்த வெளியின்‌ நட்ட
நடூவில்‌ தனி மரம்‌ நிற்பதைப்போல்‌ நின்றது.

70


Page 97 

வயது பதினாறு

 

நினைவெல்லாம்‌

கனடாவில்‌ கடும்‌ குளிர்காலம்‌. குளிரின்‌ கொடுமைக்கு
முகம்‌ கொடூக்கமுடியாத கதிரவனும்‌, தன்னில்‌ தஞ்சம்‌ கொண்டுள்ள
தரணியோரைத்‌ தவிக்கவிட்டு அன்று மாலை ஐந்து மணிக்கு
தலைமறைவாகிவிட்டான்‌. கனடாவில்‌ கதிரவன்‌ நினைத்த
பொழுதெல்லாம்‌ ஓய்வு எடுத்துக்‌ கொள்கிறான்‌.

அலுவலகத்தை விட்டூ வீடு செல்வதற்காக ஐந்து மணிக்கு
வெளியே வந்தபொழுது நடூ நிசி போன்று இருள்‌ படர்ந்திருந்தது.
தாயகத்தில்‌ மாலைக்‌ கதிரவன்‌ மயக்கும்‌ மாலைப்பொழுது இது.
நினைவுகள்‌ பின்‌ நோக்கிப்‌ பறக்கின்றன:

எட்டாம்‌ வகுப்பில்‌ அலெக்ஸ்‌ மாஸ்ரர்‌, “மயக்கும்‌
மாலைப்பொழுது: என்ற தலைப்பில்‌ கட்டுரை எழுதும்படி பணித்து,
தான்‌ எழுதிய கட்டூரைக்காக சிறந்த புள்ளி பெற்றதும்‌, அந்தக்‌
கட்டுரையை வகுப்பில்‌ தன்னை மற்ற மாணவர்களுக்கு வாசித்துக்‌
காட்டூம்படி கேட்டபொழுது தனக்கு ஏற்பட்ட மட்டற்ற மகிழ்ச்சியை
மனோ மீளவுணர்கிறான்‌.

அலெக்ஸ்‌ மாஸ்ரரிடம்‌ கெட்டிக்காரன்‌ எனப்‌ பெயர்‌ வாங்க
வேண்டூமென்பதற்காக அவன்‌ பட்ட பிரயத்தனம்‌ பிரமாதம்‌.

அந்த மாலை வேளையில்‌, பாடசாலை மாணவர்கள்‌, அலுவலக

ஊழியர்கள்‌, மீனவர்கள்‌, விவசாயிகள்‌, தொழிலாழிகள்‌ என்ன
செய்கிறர்கள்‌ என்பதை அனுபவித்து ! அறிவதற்காக அவ்விடங்களுக்குச்‌
சென்று அவர்களுடன்‌ உரையாடிப்‌ பெற்ற தகவல்கள்‌... மாலை

நேரத்தில்‌, ஊரின்‌ கடற்கரைக்குச்‌ சென்று கடற்காற்றுடன்‌ உறவாடி
பகலவன்‌ பல வர்ணங்களை அடிவானத்திலே அள்ளித்‌ தெளித்து மீண்டும்‌
வருவேன்‌ என்ற உறுதியுடன்‌ மறையும்‌ கண்கொள்ளாக்‌ காட்சியைக்‌
கண்டூ களித்த நிறைவான உணர்வு.. மனதில்‌ தோன்றியது.

71


Page 98மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

தனது வாகனத்தின்‌ பின்னிருந்து ஹோர்ன்‌ ஒலி தன்னை
நோக்கி ஒலிக்கப்பட்டதை உணர்ந்த பொழுதுதான்‌ வீதி விளக்கு
சிவப்பாகவிருந்து பச்சைக்கு மாறியதை அறிந்து தான்‌ ஊரிலில்லை
கனடாவில்‌ இருக்கிறேன்‌ என்ற நினைப்பு ஏற்பட்டு வாகனத்தை நகர்த்தத்‌
தொடங்கினான்‌.

வீடு வந்தடைந்ததும்‌ சாவியால்‌ முறுக்கிவிடப்பட்ட பொம்மை
போன்று வாகனத்திலிருந்து இறங்கி தபால்‌ பெட்டியை ஆவலுடன்‌
திறந்தான்‌.

யாழ்ப்பாணத்தில்‌ பெரியகடைக்கு அண்மித்த பகுதியில்‌,
ஒரு சாதாரண குடூம்பத்தில்‌ பிறந்தவன்‌ மனோ. இவனது தந்தையார்‌
மோட்டார்‌ வாகனம்‌ திருத்தும்‌ தொழிலாளி. தனது மகன்‌ தன்னைப்போல்‌
தேகத்தை வருத்தும்‌ கடின உழைப்பால்‌ தான்‌ வாழும்‌ வாழ்க்கை
சூழலில்‌ தள்ளப்‌ படாமல்‌, சமுதாயம்‌ கெளரவமான தொழில்‌ எனக்கருதும்‌
உயர்‌ அரச உத்தியோகமோ அல்லது சமூக ஏணியின்‌ உச்சத்தில்‌
வைத்துப்‌ பார்க்கப்படும்‌ வைத்தியத்துறை, பொறியியல்‌ துறை,
சட்டத்துறை அல்லது கணக்கியல்‌ துறை போன்ற துறைகளில்‌ சிறந்து
விளங்க வேண்டுமென்ற ஆவல்‌ கொண்டார்‌. மனோ சிறுவனாக இருந்த
வேளைகளில்‌ இவனது தந்தையார்‌ மனோவின்‌ உள்ளத்தைப்‌ பதனிட்டுூ
அவனது எதிர்காலத்தை மேன்மைப்‌ படுத்தக்கூடிய வித்துக்களை
ஆழமாகப்‌ பதித்தார்‌.

மனோ வளர்ந்த சூழலில்‌, அவனது அயல்‌ பிள்ளைகளின்‌
பெற்றோர்கள்‌ தமது பிள்ளைகளின்‌ கல்விக்கு முன்னுரிமை
கொடூக்கவில்லை. தத்தமது பரம்பரைத்‌ தொழில்களைத்‌ தமது
பிள்ளைகள்‌ தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்‌ என்பதில்‌ அக்கறை
கொண்டிருந்தனர்‌. இதனால்‌ மனோவின்‌ அயல்‌ நண்பர்களினால்‌
அவனுக்கு சிறுவயதில்‌ பெரும்‌ அல்லல்‌ ஏற்பட்டது. இவனது நண்பர்கள்‌
பாடசாலை முடிவடைந்ததும்‌ வீடு செல்லாது நேராகவே விளையாட்டு
மைதானத்திற்குச்‌ சென்று இருள்‌ சூழும்‌ வரை விளையாட்டில்‌
ஈடுபடுவார்கள்‌. மனோவுக்கோ மாலை நாலு மணி தொடக்கம்‌
ஆறுமணிவரையும்‌ தான்‌ விளையாடுவதற்கு அவனது தந்‌ைத அனுமதி
கொடுத்திருந்தார்‌. எந்த நிமிடத்திலும்‌ தன்‌ மகன்‌ எங்குள்ளான்‌, என்ன
செய்கிறான்‌ என்பதைத்‌ தெரிந்திருக்க வேண்டியது ஒரு தகப்பனின்‌
கடமை என்பதை உணர்ந்து அதை தனது மகனுக்கும்‌ உணர்த்தி வந்தார்‌.
இவ்வாறான கட்டுப்பாட்டால்‌ மனோ 'தான்‌ பல விடயங்களில்‌, குறிப்பாக,
தனது நண்பர்கள்‌ போன்று கட்டுப்பாடற்ற பறவையாகச்‌ சிறகடிக்க
முடியவில்லையே என்பதில்‌ ஏமாற்றமடைந்திருந்தான்‌. அப்பொழுது

72


Page 99வயது பதினாறு

 

அவனது நண்பர்கள்‌ திக்கற்ற பறவைகளாக திசைமாறிச்‌ செல்கிறார்கள்‌
என்பதை அறிவதற்கு அவனுக்கு அனுபவமிருக்கவில்லை.

தான்‌ இழந்த கல்வியின்‌ பலனைத்‌ தன்‌ மகன்‌ இழக்கக்‌
கூடாது என்பதற்காக, மகனின்‌ கல்வியின்‌ மேம்பாட்டிற்காக அவனது
சிறு வயதிலிருந்து அவனுக்கு பல சோதனைகளை  ஏற்படுத்தியுள்ளார்‌
அவனது தந்தை. பன்னிரண்டு வயதிலேயே அவனைக்‌ கொழும்பிலுள்ள
கல்லூரியில்‌ அனுமதித்து அக்கல்லூரியின்‌ விடுதியில்‌ தங்கி கல்வி
கற்கச்‌ செய்தார்‌. அது மட்டுமன்றி தமது குடூம்பத்தில்‌ நிகழ்ந்த நன்மை
தீமையான சம்பவங்களுக்குக்‌ கூடத்‌, தன்‌ மகனது கல்வி பாதித்துவிடும்‌
என்ற ஒரே காரணத்துக்காக அவனை அழைக்காமலும்‌, ஏன்‌ அவனுக்கு
அவை பற்றி அறிவித்தல்‌ கொடுக்காமலும்‌, அந்நிகழ்வுகளில்‌ அவனது
பங்கேற்பின்றி நடத்தி முடித்திருக்கின்றார்‌. இச்‌ சோதனைகளெல்லாம்‌
ஆரம்பத்தில்‌ ஏமாற்றத்தையும்‌ விரக்தியையும்‌ ஏற்படுத்திய போதிலும்‌,
பின்‌ தந்தையின்‌ நன்னோக்கம்‌ தெளிவானதும்‌ அவன்‌ மனதில்‌
திடகாத்திரம்‌ ஏற்பட்டது. கல்வியில்‌ சிறப்புப்‌ பெறவேண்டுூமென்ற
ஆவல்‌ ஏற்பட்டது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில்‌ கணக்கியல்‌ உயர்‌ கல்விக்காக
அனுமதி பெற்று முதலாண்டு மாணவனாக பல்கலைக்‌ கழக விடுதியில்‌
சேர்ந்த பொழுது அந்தச்‌ சம்பவம்‌ நடைபெற்றது.

அந்த ஆண்டு பல்கலைக்‌ கழக வளாகத்தில்‌ “றாக்கிங்‌”
மிகவும்‌ மோசமாக இடம்‌ பெற்றது. அந்த றாக்கிங்கிலிருந்து மனோவால்‌
தப்பிக்கொள்ள முடியவில்லை.

மனோவின்‌ பல்கலைக்‌ கழக வளாக விடுதிக்கு அண்மையில்‌
பெண்களுக்கான தனியார்‌ விடுதி அமைந்திருந்தது. அதில்‌ கொழும்பு
பல்கலைக்‌ கழகத்திலும்‌ வேறு தனியார்‌ பாடசாலைகளிலும்‌ பயிலும்‌
பெண்கள்‌ தங்கியிருந்தார்கள்‌.

ஒருநாள்‌ மாலை மனோவின்‌ விடுதியில்‌ சிரேஷ்ட மாணவர்கள்‌
சற்று எல்லை மீறிய கேலி விளையாட்டூக்களில்‌ ஈடுபட்டிருந்தனர்‌.
அவர்களின்‌ இம்சைக்கு மனோவும்‌ இலக்கானான்‌.

அந்தப்‌ பெண்களுக்கான தனியார்‌ விடூதியிலுள்ள அழகிய
இளம்‌ பெண்களை “டா” அடிப்பது; யாழ்ப்பாண மொழியில்‌ “சுழட்டூவது”
இந்த சிரேஷ்ட மாணவர்களின்‌ தாகம்‌. இதற்காக முதலாண்டூ
மாணவர்களை றாக்கிங்‌ காலத்தில்‌ பயன்படுத்துவது மரபு. ஒரு இளம்‌

73


Page 100மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

பெண்ணில்‌ கண்வைத்த சிரேஷ்ட மாணவன்‌ முதல்‌ வருட மாணவன்‌
ஒருவன்‌ மூலம்‌ அப்பெண்ணுக்குத்‌ தூது விடுவது வழமையான நிகழ்வு.
இத்தூது பல தடவைகளில்‌ காதலாகக்‌ கனிந்து திருமணத்தில்‌
முடிவதுமுண்டு. சில சமயங்களில்‌ முதலாண்டு மாணவன்‌ வசமாக
வசைமாரி பெறுவதுமுண்டூ.

மனோவுக்கு நடந்த சம்பவமோ சற்று வித்தியாசமாகவிருந்தது.
இந்தக்கட்டளை அவனைப்‌ பெரும்‌ சங்கடத்தில்‌ மாட்டிவிட்டது.

அந்தக்‌ கட்டளையை நிறைவேற்ற எத்தனிக்கு முன்‌
அக்கட்டளையை நிறைவேற்றுவது சாத்தியமற்ற செயல்‌ என
எண்ணினான்‌. ஒருகணம்‌ அந்த விடுதியை விட்டு வெளியேறி வேறு
தனியார்‌ விடுதிக்குச்‌ சென்றுவிடலாமோ என  அந்தக்கட்டளை
அவனைப்‌ பலமாகச்‌ சிந்திக்கச்‌ செய்தது. இருப்பினும்‌ தனது குடும்ப
நிலபரத்தைக்‌ கவனத்தில்‌ கொண்டவன்‌, தனியார்‌ விடுதிகளில்‌ அறை
வாடகைக்கு ஏற்படுத்துவது அதிக பணச்செலவை ஏற்படுத்தும்‌
என்ற ஒரே காரணத்தாலும்‌, அக்கட்டளையை நிறைவேற்ற
எத்தனிப்பதால்‌ ஏற்படக்கூடிய விளைவு என்ன என்று சிந்தித்த வேளை,
நையப்புடைக்கப்படலாம்‌, அவமானம்‌ ஏற்படலாம்‌, எதையும்‌ தாங்கும்‌
மனப்பக்குவம்‌ வேண்டூம்‌.. அப்பொழுது தான்‌ நிஜ உலகில்‌, தேவை
ஏற்படும்‌ பொழுது நாணலைப்‌ போல்‌ வளைந்து கொடுத்தும்‌, நிமிர்ந்தும்‌
நிற்கலாம்‌ என்பதை ஏற்றுக்கொண்டவன்‌ தயக்கத்துடன்‌ அந்தப்பெண்கள்‌
விடூதி நோக்கிச்‌ சென்றான்‌.

ஆறடி உயரமான மதில்‌, அதன்‌ நடூவில்‌ கனத்த இரும்புக்கதவு
அந்த விடூதிக்கு அரணாக அமைந்திருந்தது. பிரித்தானியர்‌ காலத்தில்‌
உயர்‌ அதிகாரி வாழ்ந்த வீடு. நூற்றாண்டு காலமாகியும்‌ எடூப்பாகவிருந்தது.
மாலை ஏழுமணிக்குப்‌ பின்‌ காலை ஆறுமணிவரை அனுமதியின்றி
எவரும்‌ உள்ளே செல்லவோ அல்லது வெளியே வரவோ முடியாது.
கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளின்‌ கட்டூப்பாட்டில்‌ இயங்கியது அந்தப்‌
பெண்கள்‌ விடுதி.

விசாலமான முற்றம்‌. நடுவில்‌ நீர்த்தடாகம்‌. தண்ணீர்‌
தட்டூப்பாட்டுக்‌ காலங்களில்கூட பூவடிவில்‌ சீறியடிக்கும்‌ நீர்த்தடாகம்‌.
நடைபாதை தவிர்த்து முற்றம்‌ சூழ பூந்தோட்டம்‌... கண்கவர்‌ பூங்காவனம்‌
போல்‌ எழில்‌ தோற்றம்‌.

கால்கள்‌ கூச மெல்ல மெல்ல உள்ளே நடந்தான்‌. அந்த
விடூதியிலிருக்கும்‌ எவரையும்‌ அவனுக்குத்‌ தெரியாது. கன்னியாஸ்திரிகளின்‌

74


Page 101வயது பதினாறு

 

கண்ணில்‌ பட்டால்‌ பொலிசில்‌ சிக்கக்கூடிய வாய்ப்புமுண்டு. பயத்துடன்‌
உள்ளே சென்றான்‌.

கைகொடுத்த தெய்வமாக எழிலான இளம்‌ பெண்‌, பதினாறு
பதினெட்டு வயதிருக்கலாம்‌! மாநிறம்‌, ஐந்தடி உயரம்‌. அலட்சியமாக
அவனைக்‌ கடந்து சென்றுகொண்டிருந்தாள்‌.

தான்‌ முதலாண்டு பல்கலைக்‌ கழக விடூதி மாணவன்‌ என்பதை
அறிந்து, யாரிடம்‌ யாரின்‌ காதலைத்‌ தூதுவிட வந்துள்ளான்‌ என
எண்ணுகிறாளோ எனக்‌ கருதினான்‌. தன்னை நோக்கி வருபவள்‌, தான்‌
பெண்கள்‌ விடுதிக்கு வருவதன்‌ காரணம்‌ என்ன என வினவப்போகிறாள்‌
என்று நினைத்தவன்‌, அவள்‌ தன்னையும்‌ தாண்டிச்‌ செல்வதை அறிந்து
ஏமாற்றத்துடன்‌, அவள்‌ சிங்களப்பெண்ணோ அல்லது தமிழ்ப்பெண்ணோ
என்று அறியாத காரணத்தால்‌ ஆங்கிலத்தில்‌ அவள்‌ கவனத்தை ஈர்க்க
முயன்றான்‌.

[0005௦ 116... (மன்னிக்கவும்‌) ] வா நாரத 11 116 பார்ரரர்(ு
லொட 1051௦1.... (நான்‌ பல்கலைக்‌ கழக வளாக விடூதியில்‌ இருக்கிறன்‌..)
[| வார உரிகர்‌ ௦ பார்ரளவ/௫ு 81ம்‌ நான்‌ முதலாண்டு பல்கலைக்‌
கழக மாணவன்‌) 1 1௦2௦ 8 012 ரீ8/௦பா ரா0ா 300... உங்களிடமிருந்து
எனக்கு ஒரு பெரிய உதவி தேவைப்படூகிறது..) 193) (6௨ ௬... நீரு ஈவா
15 48௦... (எனது பெயர்‌ மனோ...) /

அவன்‌ தன்னுடன்‌ உரையாட முயல்வான்‌ என்பதை
எதிர்பார்த்திருந்தும்‌.... அவன்‌ தன்னுடன்‌ பேசியதைக்‌ கண்டு
வியப்படைந்தவளைப்போல்‌ பாசாங்கு பண்ணினாள்‌.

விசயம்‌ அறிந்தவள்‌, தானும்‌ சற்று வேடிக்கை பார்க்கலாம்‌
என்ற எண்ணத்துடன்‌... /18ம 78௦? (என்ன உதவி) ஏன்‌ நீங்க..
தமிழா?.. .. என்ன வேண்டும்‌?... யாருக்காக தூது வந்தனீங்க?.. எனக்‌
கேட்டாள்‌.

அவளின்‌ தமிழ்‌ வார்த்தைகள்‌ அவனது காதுகளில்‌ தேனாகப்‌
பாய்ந்தன. அவ்வார்த்தைகள்‌ “த்மிழுக்கும்‌ அமுதென்று பேர்‌”
எனத்‌ தமிழின்‌ இனிமையை கவிஞர்கள்‌ வர்ணிப்பதன்‌ அர்த்தத்தை
உணரவைத்தன.

உற்சாகத்துடனும்‌, ஆவலுடனும்‌.... ஆம்‌.. ஆம்‌.. உங்கட பேர்‌
என்ன? என்ற கேள்வியுடன்‌ உரையாடலை தொடர முயன்றவனை

இடை மறித்து,

75


Page 102மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

“அதிருக்கட்டூம்‌.... என்ன தேவை என்பதை மட்டூம்‌ சொல்லுங்க...
முடிந்தால்‌ செய்கிறேன்‌.”

அவன்‌ அவளது கண்களைப்‌ பார்க்க வெட்கினான்‌. அவனது
வெட்கத்தின்‌ காரணம்‌ புரியாது அவள்‌ சற்றுக்‌ குழப்பமடைந்தாள்‌.
மீண்டும்‌ அவனை உற்றுப்பார்த்தவண்ணம்‌.... உங்களுக்கு என்ன
வேண்டும்‌?.. .. என்று கேட்டாள்‌.

அப்பொழுதும்‌ அவன்‌ தனது முகத்தை உயர்த்தி அவளது
கண்களை எதிர்கொள்ள முடியாது தயங்கினான்‌. அவளால்‌ அவனது
போக்கைப்‌ புரிந்து கொள்ள முடியவில்லை. ஆணின்‌ பார்வையில்‌
பெண்ணல்லவா உருகிப்போவாள்‌ என்று கதைகள்‌, கவிதைகள்‌,
காவியங்கள்‌ கூறுகின்றன! அவனது கண்களில்‌ குழப்பத்தைப்‌
பார்த்தவள்‌, சற்று அனுதாபக்‌ குரலில்‌, சரி எனது பேர்‌... தேவி
என்ன உதவிவேண்டூம்‌?.. முடிந்தால்‌ செய்கிறேன்‌.. ஏன்‌ இவ்வாறு
சங்கடப்படூகிறீர்கள்‌.. .. ? என்ற அவளின்‌ ஆறுதலான வார்த்தைகள்‌
. உச்சரிக்கப்பட்ட பட்சமே அவனது முகம்‌ நம்பிக்கையால்‌ மலர்ந்தது,
சற்று உற்சாகத்துடன்‌,

“எனக்கு.... இப்ப றாக்கிங்‌ நாட்கள்‌.... அவங்க சொல்லிறதை
யெல்லாம்‌ நான்‌ செய்யவேண்டும்‌.... அல்லாட்டி.... உங்களுக்குத்‌
தெரியும்தானே.... நான்‌ அங்க இருக்கமுடியாது... விடமாட்டாங்க....

எப்பொழுது இவன்‌ கூறவேண்டிய விடயத்துக்கு
வரப்போகிறானோ என்ற சலிப்புடனும்‌, அவனுடைய தயக்க நிலையைக்‌
கண்டூ வியப்புடனும்‌, இருப்பினும்‌ பொறுமையுடன்‌ அவன்‌ கூறுவதை
அவதானத்துடன்‌ கேட்டுக்‌ கொண்டிருந்தாள்‌ தேவி.
இப்ப என்னை இங்கே வந்து.... எந்த ஒரு பெண்ணிடமாவது....
ஒரு உள்‌ ஆடை ஒன்று வாங்கி வரச்சொல்லி உத்தரவிட்டிருக்கிறாங்க....
அவங்க மிகவும்‌ மோசமான கேடிகள்‌ போல தெரிகிறாங்க.... ஒன்றில்‌
அவங்க சொல்வதை நாங்க கேட்கவேண்டும்‌.... அல்லாவிட்டால்‌....
படிப்பையே விட்டிட்ட்ப்‌ போகவேணும்‌... இப்ப நான்‌ என்ன
செய்வதென்று தெரியாது.... எனக்கும்‌ இங்க ஒருவரையும்‌ தெரியாது...
கடையில காசு கொடுத்து புதுசா ஒன்றை வாங்கிக்‌ கொண்டூ போய்க்‌
காட்டலாமென்றால்‌.... அதுவும்‌ முடியாது.... நான்‌ எங்க போறன்‌ என்று
பார்த்துக்‌ கொண்டூ நிற்கிறாங்க....”

அவளுக்குத்‌ திக்கென்றிறாந்தது. அவளின்‌ இதயத்துடிப்பின்‌
வேகத்தில்‌ ஏற்பட்ட இரத்தவோட்டத்தின்‌ சத்தம்‌ அவள்‌ காதுகளைச்‌

76


Page 103வயது பதினாறு

 

செவிடாக்கியது. இவன்‌ எனது உள்ளாடையைக்‌ கேட்கிறானா அல்லது
தனது சோகக்‌ கதையை எனக்கு கூறுகிறானா.... குழப்பத்தில்‌, “அதுக்கு
நான்‌ என்ன செய்ய?” என்று வெறுப்புடன்‌ கேட்டாள்‌.

அவளின்‌ கேள்வியின்‌ தொனியில்‌ பதிலை உணர்ந்தவன்‌,
“மன்னிக்கவும்‌.... ஏதோ ஒரு குழப்பத்தில்‌ கேட்டூவிட்டேன்‌.... எனது
தலையெழுத்தை நானே தீர்மானித்துக்‌ கொள்கிறேன்‌....” என்று
கூறிக்கொண்டு திரும்பி வாசல்‌ கதவை நோக்கி நடக்கத்‌
தொடங்கினான்‌.

அந்த சில நிமிட சந்திப்பில்‌ ஏற்பட்ட முரண்பாட்டிலும்‌ தேவியின்‌
மனதில்‌ மனோவில்‌ அனுதாபம்‌ ஏற்பட்டது. வார்த்தைகளால்‌ விபரிக்க
முடியாத உணர்வு உள்ளார நெருப்பெனக்‌ கொதிக்கவும்‌, வெளியார
சில்‌ என்று குளிரவும்‌ செய்தது.

தன்னை அறியாத ஒரு உந்தலால்‌ நிமிர்ந்து பார்த்த பொழுது
அவன்‌ வாசல்‌ கதவை அணுகிவிட்டான்‌.

நில்லுங்க...” என்று சத்தமாக கூப்பிட்டாள்‌. அவனும்‌
மெல்ல நின்று திரும்பிப்‌ பார்த்தான்‌.

தேவி ஓட்டமாக உள்ளே சென்றவள்‌ அதே வேகமாக வெளியே
வந்து புத்தம்‌ புதிய உள்ளாடை ஒன்றை ஒரு உறையிலிட்டு அவனது
கைகளில்‌ திணித்துவிட்டு மீண்டும்‌ அதி வேகமாக உள்ளே ஓடி
மறைந்து விட்டாள்‌.

மனோ-தேவி திருமணமாகி பதினாறு வருடங்கள்‌ ஓடி மறைந்து
விட்டன. இப்பொழுது அவர்களுக்கு இரண்டூ பிள்ளைகள்‌, பதினான்கு
வயதில்‌ ஒரு பெண்‌, பன்னிரண்டு வயதில்‌ ஒரு ஆண்‌.

பிரியாது இணைந்திருந்த குடூம்பம்‌. ஈழத்தைப்‌ பீடித்த
வன்முறையால்‌ துரத்தப்பட்ட, மனோ கனடாவிலும்‌, தேதவியும்‌
பிள்ளைகளும்‌ ஈழத்திலும்‌ பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்‌.
அவர்களது தாம்பத்திய உறவு கடித பரிமாற்றங்கள்‌ மூலம்‌ கடந்த சில
வருடங்களாகத்‌ தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடம்‌ குளிரிலிருந்து தப்புவதற்காக பட்டை பட்டையாக
அணிந்திருந்த ஆடைகளைக்‌ களைந்து, வாசலைத்‌ தாண்டியதும்‌
வீட்டினுள்‌ அமைந்துள்ள “குளோசற்‌”றில்‌ விரக்தியுடன்‌ அலட்சியமாக
கொழுவி வைத்துவிட்டு, வாசலில்‌ வைக்கப்பட்டிருந்த நாற்காலியில்‌
அமர்ந்து நீண்ட நனைந்து கனத்த பாதணிகளைக்‌ கழற்றும்‌ பொழுது

[ச


Page 104மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

தன்னை அறியாமலே தனது மடியில்‌ வைக்கப்பட்டிருந்த கடிதங்கள்‌ கீழே
விழுந்ததை அவதானித்து, தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தவன்போல்‌
அவற்றைக்‌ குனிந்து எடுத்தான்‌. அவற்றுள்‌ பல கடிதங்கள்‌
வங்கியிலிருந்தும்‌, பணம்‌ கட்டும்படி அரச அலுவலகங்களிலிருந்தும்‌,
விளம்பரதாரர்களிடமிருந்தும்‌ வந்திருந்தன. அவற்றை வெறுப்புடன்‌
ஒதுக்கி வைக்கும்‌ பொழுது அவன்‌ ஆவலுடன்‌ ஏங்கி நிற்கும்‌ தேவியின்‌
கடிதம்‌ அவனது கண்களில்‌ பட்டது.

“சோபாவில்‌ தொப்பென அமர்ந்து தலையை மெதுவாகப்‌
பின்‌ சாய்த்து பெருமூச்சொன்றை விட்டான்‌. அன்று அவன்‌ மனம்‌
என்றுமில்லாதவாறு ஒருவித ஏக்கத்தில்‌ தவித்துக்‌ கொண்டிருந்தது.
தேவியின்‌ நினைவுகள்‌ சுகமான சுகந்தமாக, உள்ளத்தை மெல்ல
வருடிக்‌ கொண்டிருந்தன. பிரிவின்‌ தாக்கத்தால்‌ ஏற்படும்‌ ஏக்கத்தை
வழமைபோல்‌ இக்கடிதத்திலும்‌ கொட்டியிருப்பாள்‌.. அன்பான கணவன்‌
மனைவியின்‌ பிரிவிலுண்டாகும்‌ கொடூமை இராணுவத்தினரின்‌
துப்பாக்கிக்‌ குண்டு மார்பைத்‌ துளைப்பதிலுண்டாகும்‌ வேதனையை
விடக்‌ கொடுமையானது என்பது அவர்கள்‌ இருவரினதும்‌ உணர்வு.

நாலு வருட பிரிவு வார்த்தைகள்‌ விபரிக்க முடியாத
வேதனையையும்‌, சோதனையையும்‌ மனோ-தேவிக்கு ஏற்படுத்தியது.

எதிர்பார்ப்புக்கு மாறாக மனோவின்‌ அகதிக்கோரிக்கை
கனடாவில்‌ வெகு விரைவாக ஏற்றுக்‌ கொள்ளப்‌ பட்டூவிட்டது. அவன்‌
உண்மையான அகதிதானே! ஆனால்‌ நிரந்தர உரிமை பெறுவதற்கு
நீண்டகாலம்‌ எடுத்துவிட்டது. இலங்கைப்‌ பொலிசாரிடமிருந்து பாதுகாப்பு
நற்சான்றுப்‌ பத்திரம்‌ கனடா குடிவரவு அலுவலகத்துக்கு உரிய
நேரத்துக்கு அனுப்பிவைக்கப்படாமை தாமதத்திற்கு காரணமாம்‌.

நிரந்தர" வதிவிடம்‌ கிடைத்தபின்‌ மனைவி மக்களின்‌
“ஸ்பொன்சர்‌”- அதுவும்‌ சில காலத்தை அள்ளிச்‌ சென்றுவிட்டது.
அதுபற்றிய முடிவு இன்றுவரையில்லை.

மோகன்‌, அண்மையாக தேவியின்‌ கடிதங்களில்‌ தொனிக்கும்‌
விரக்தியை சகித்துக்‌ கொள்ள முடியாத நிலையில்‌ கனடா
வாழ்கையிலிருந்து விடைபெற்றுக்‌ கொண்டூ தாயகம்‌ திரும்பிவிடலாமோ
என்று எண்ணிய நாட்களுமுண்டு.

தற்பொழுது தேவி ஈழத்தில்‌ எதிர்நோக்கும்‌, அவளுக்கு
உயிராபத்து ஏற்படுத்தக்‌ கூடிய ஒரு சம்பவம்‌ மேலும்‌ அவனைக்‌
கவலையில்‌ வாட்டியது:
78


Page 105வயது பதினாறு

 

“நம்மட ஊரில்‌ இராணுவம்‌ வீடூ வீடாகத்‌ தேடூதல்‌ வேட்டையில்‌
ஈடுபட்டது. நம்மட வீட்டுக்கும்‌ பத்துக்கும்‌ மேற்பட்ட ஆமிக்காரங்க
வந்தாங்க. இரவு இரண்டூமணியிருக்கும்‌. வாசல்‌ கதவைக்‌ காலால்‌
உதைத்துத்‌ தள்ளிக்கொண்டு வளவுக்குள்ள வந்து நம்‌ வீட்டு முன்‌
கதவை உதைந்த சத்தத்தில்‌ நானும்‌ பிள்ளைகளும்‌ திடுக்கிட்டூ,
ஆமிக்காரன்‌ வந்திட்டான்‌ என்ற பயத்தில்‌ என்‌ இதயமே நிண்டிடூம்‌
போல இருந்தது. தம்பியும்‌ வாட்டசாட்டமாக இருப்பதால்‌ பிள்ளையைப்‌
பிடித்துக்கொண்டு போய்விடுவாங்களே என்று தவித்துப்‌ போனேன்‌. வீடு
முற்றாகத்‌ தேடினார்கள்‌. அப்பொழுது நீங்க எனது பிறந்த நாளுக்காக
வாங்கிக்‌ கொடுத்த கணினி அந்த இராணுவத்‌ தளபதியின்‌ கண்களில்‌
பட்டுவிட்டது. எப்படி? எங்கு? யார்‌ இந்தக்‌ கணினியை வாங்கிக்கொடுத்தது
என்று கேட்டான்‌. அதற்கு நீங்கள்‌ கனடாவிலிருந்து பணம்‌ அனுப்பி
வாங்கினேன்‌ என்று சொன்னேன்‌. தொடர்ந்து உங்களைப்‌ பற்றிக்‌
கேள்விகள்‌ கேட்டான்‌. அத்தோடூ, நீங்கள்‌, நாம்‌ பிரிந்த நாட்களிலிருந்து
எனக்கு எழுதிய காதல்‌ கடிதங்கள்‌ எல்லாவற்றையும்‌ ஒழுங்காக அடுக்கி
வைத்திருந்தேன்‌; அந்தக்கடிதங்கள்‌ எல்லாவற்றையும்‌, அதோட நமது
திருமணப்‌ படங்கள்‌, நீங்கள்‌ பல்கலைக்கழக நண்பர்களுடன்‌ சேர்ந்து
எடுத்த படங்கள்‌ வைத்திருந்த “அல்பம்‌” - இவற்றையும்‌ எடுத்துக்‌
கொண்டூ போய்விட்டான்‌. கடிதங்கள்‌ தமிழில்‌ எழுதப்‌ பட்டிருந்தாலும்‌
அவன்‌ அதை யாரிடமோ கொடுத்து வாசித்துவிட்டான்‌. அது எப்படி
எனக்குத்‌ தெரியும்‌ என்று நினைக்கிறீர்களா? இந்த சம்பவம்‌ நடந்து
சுமார்‌ ஒரு வாரத்துக்குப்‌ பின்‌ அவன்‌ எனது அலுவலகத்திற்கு வந்து
என்னைத்‌ தனது முகாமுக்கு வரும்படி கட்டளையிட்டுப்‌ போனான்‌. நான்‌
பயத்தினால்‌ வேறு வழியின்றி அவனது முகாமிற்குச்‌ சென்றபொழுது
தனக்கு கணினி இயக்கும்‌ முறை கற்பித்துத்‌ தரும்படி கேட்டான்‌.
மறுக்க முடியாத காரணத்தால்‌ நானும்‌ சம்மதித்தேன்‌. இதுவரை மூன்று
தடவைகள்‌ முகாமுக்குச்‌ சென்று வந்துவிட்டேன்‌. இப்பொழுது அவனது
போக்கில்‌ காம வக்கிரம்‌ தெரிகிறது. நீங்கள்‌ உங்கள்‌ கடிதங்களில்‌
எழுதிய எமது காதல்‌ நினைவுகள்‌ பற்றி வக்கிரமாக விபரிக்கத்‌
தொடங்கியுள்ளான்‌. என்னைப்‌ பாலியல்‌ பலாத்காரம்‌ செய்து விடுவானோ
எனப்‌ பயமாகவிருக்கிறது. இதை நீங்கள்‌ வாசித்து வீணாகக்‌ கற்பனை
செய்து பயப்படவேண்டாம்‌. என்னால்‌ அவனைச்‌ சமாளிக்கமுடியும்‌. உங்கள்‌
தேவியின்‌ உடல்‌, உயிர்‌, ஆவி அனைத்தும்‌ உங்களுடையது. அதை
பலாத்காரமாகத்‌ தட்டிப்பறிக்க முயல்பவன்‌ உயிரோடிருக்கமாட்டான்‌.
நான்‌ வீரத்‌ தமிழச்சி என்பது உங்களுக்குத்‌ தெரியாதா என்ன! என்னை
அவன்‌ தொடூமுன்‌ நான்‌ அவனைக்‌ கொலை செய்துவிடுவேன்‌. அதற்கு
ஆயத்தமாக இருக்கிறேன்‌. உங்கள்‌ மனைவியாக, வீரத்‌ தமிழச்சியாக
நான்‌ செத்து உங்களுக்கும்‌, நம்‌ தேசியத்துக்கும்‌ பெருமை சேர்ப்பேன்‌.

79


Page 106மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

பயப்படவேண்டாம்‌. பொறுமையாக இருப்போம்‌. பால்‌ பொங்கிவரும்‌
வேளை பானையை உடைக்கவேண்டாம்‌.

சென்ற மாதம்‌ அவளிடமிருந்து கிடைத்த கடிதத்தில்‌ அவள்‌
எழுதியிருந்த இச்சம்பவம்‌, மனனம்‌ செய்தது போல்‌ வார்த்தைகள்‌
தப்பாது அவனது நினைவில்‌ வந்தன.

தேவியின்‌ கடிதம்‌ உடைபடாத உறையில்‌ இவ்வளவு நேரமாக
தனது கைகளில்‌ இருக்கிறதே என ஆச்சரியமடைந்தான்‌. இவ்வளவு
நேரமும்‌ அவளின்‌ கடிதத்தை வாசிக்காது சென்றமாத கடிதத்தைப்‌
பற்றி கனவு கண்டு கொண்டதை நினைத்து அக்கனவு அபசகுனமோ
என எண்ணிக்‌ கையிலிருந்த கடித்ததைப்‌ பிரிக்க அவனது கைகள்‌
நடூங்கின.

நிஜத்தைத்‌ தழுவியே ஆகவேண்டும்‌ என்ற ஜதார்த்தத்தை
ஏற்றுக்கொண்டு கடித உறையைப்‌ பிரித்துப்‌ படிக்கத்‌ தொடங்கினான்‌. சில
வரிகள்‌ வாசித்ததுமே மேற்கொண்டூ வாசிக்கமுடியாமல்‌ சோபாவிலிருந்து
துள்ளி எழுந்தான்‌. அவனிட்ட சத்தத்தில்‌ மாடியறையிலிருந்த அவனது
நண்பன்‌ நொடிப்பொழுதில்‌ படிகளைத்தாண்டி குதித்து வந்து அவன்‌
முன்‌ நின்றான்‌.

நண்பனைக்‌ கண்டதும்‌ மனோ அவனைக்‌ கட்டியணைத்து,
“மச்சான்‌ எனது பொறுமைக்குப்‌ பலன்‌ கிடைத்துவிட்டது. தேவிக்கும்‌
பிள்ளைகளுக்கும்‌ கனடா வருவதற்கு வீசா கிடைத்துவிட்டது.
தேவி கடிதம்‌ எழுதியிருக்கிறாள்‌””, என மகிழ்ச்சிப்‌ பெருக்கெடுக்கக்‌
கூறினான்‌.

அப்பொழுது தொலைபேசி அலறியது. அந்த அலறலின்‌
தொனியிலிருந்து அழைப்பு வெளி நாட்டிலிருந்து வருகிறது என்பது
தெரிந்தது.

நண்பன்‌ தொலைபேசியை எடூத்து காதில்‌ வைத்த பொழுது
மறுபக்கத்திலிருந்து அழுகைக்குரல்‌ கேட்டது. வார்த்தைகள்‌ வரவில்லை.
ஹலோ.. ஹலோ எனப்‌ பல முறைகள்‌ கத்தியும்‌ பதில்‌ வரவில்லை.

மனோவும்‌ நண்பனும்‌ ஒருவரை ஒருவர்‌ பார்த்துத்‌ திகைத்தனர்‌.
தொலைபேசி அழைப்பின்‌ காரணத்தை அறியாமல்‌ தொடர்பைத்‌ துண்டிக்க
விரும்பாமல்‌ சிறிது நேரம்‌ ஹலோ, ஹலோ எனக்‌ கூறியவண்ணம்‌
இருந்தனர்‌.

80


Page 107வயது பதினாறு

 

சிறிது நேரத்தின்‌ பின்‌ மறுபக்கத்திலிருந்து ஒரு ஆணின்‌ குரல்‌
கேட்டது.

இந்தப்‌ பக்கத்‌ தொலை பேசியில்‌ மனோவின்‌ நண்பன்‌ பேசுவதை
அறிந்த அந்த நபர்‌ சுருக்கமாக அந்தச்‌ செய்தியை சிரமத்துடன்‌
கூறினார்‌.

“தேவி இராணுவ அதிகாரியைக்‌ கொலை செய்து விட்டார்‌.
அவவை இராணுவம்‌ கைது செய்து விட்டது. அவவை எங்கே
வைத்திருக்கிறார்கள்‌ என்று தெரியாது.”

நண்பன்‌ மனோவின்‌ முன்‌ நிற்கமுடியாமல்‌ கடும்‌ குளிரையும்‌

பொருட்படுத்தாது வீட்டுடையுடனே மனநோயாளி போன்று வீட்டின்‌ முன்‌
கதவை தன்‌ பலம்‌ கொண்டூ அடித்து மூடிவிட்டு வெளியேறினான்‌.

81


Page 108மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

நிராகரிப்பு

அருள்‌ ஒரு பண்புள்ள, சமூக விளிப்புடைய துடிப்பான
இளைஞன்‌. அவனது கிராமத்தின்‌ முதல்‌ பட்டதாரி. தன்னைப்‌ போன்று
தனது கிராம இளைஞர்கள்‌ பலர்‌ பல்கலைக்‌ கழகம்‌ புகுந்து கல்வியில்‌
மேன்மையடைந்தும்‌, பொருளாதாரத்தில்‌ வளர்ச்சியுமடைய வேண்டூம்‌
என்ற ஆவல்‌ கொண்டவன்‌. தனது கிராம மக்களின்‌ நலனுக்காக
அக்கறை கொண்டூ உழைப்பவன்‌. நகரத்தின்‌ அண்மையில்‌ தன்‌ கிராமம்‌
அமைந்திருந்த பொழுதும்‌ தன்‌ உறவுகள்‌ கல்வியிலும்‌, நாகரீகத்திலும்‌
பின்னடைவு கொண்டுள்ளது அருளுக்கு தாங்கொணா கவலை.

நகரின்‌ சிறந்த பாடசாலை ஒன்றில்‌ கல்விச்‌ சேசையாற்றி
அப்பாடசாலையைச்‌ சார்ந்த மக்கள்‌ மத்தியிலும்‌, மாணவர்கள்‌
மத்தியிலும்‌ நன்மதிப்புப்‌ பெற்றவன்‌ அருள்‌. மாணவர்களின்‌ முன்னேற்றம்‌
தனது தனிப்பட்ட சொந்த வெற்றியெனக்‌ கருதுபவன்‌. பணம்‌
சம்பாதிப்பதற்காகத்‌ தனியார்‌ வகுப்புக்கள்‌ நடத்தும்‌ சில ஆசிரியர்கள்‌
போலல்லாது தன்னிடம்‌ உதவி கோரிவரும்‌ மாணவர்களுக்கு தனது
நேரத்தைச்‌ செலவுசெய்து ஊக்குவிக்கும்‌ ஒரு வேறுபட்ட மனிதன்‌.

நாட்டின்‌ முன்னேற்றமடைந்த பகுதிகளுக்கோ அல்லது
மேற்புலத்து நாடுகளுக்கோ தனது பெற்றோர்களுடன்‌ புலம்‌ பெயர்ந்து
தனக்கும்‌ தனது குடூம்பத்திற்கும்‌ சிறப்பான வாழ்க்கையை அமைத்துக்‌
கொடுத்து ஒரு சுயநல மனிதனாக மாற அவன்‌ விரும்பாத காரணத்தால்‌
தனது கிராமத்திலேயே தனது வாழ்க்கை நிறைவுற விரும்பினான்‌.

ஓரு தீர்க்கதரிசி தன்‌ சொந்த நாட்டில்‌ மதிப்புப்‌ பெறமாட்டான்‌
என்ற கிறிஸ்துவின்‌ அறிவுரை அருளுக்கு மிகவும்‌ பொருத்தமாக
அமையும்‌.

முற்போக்கு சிந்தனைகளையும்‌, விளிப்புணர்வுகளையும்‌,
முன்னேற்றச்‌ செயற்பாடுகளையும்‌ தனது கிராமத்தில்‌ வித்திட்டூ
விருட்சமாக்க கனவு காண்பவனுக்கு அவனது உறவுகளிடமிருந்து
கிடைக்கும்‌ விருது அவமதிப்புத்தான்‌. ஊர்மக்களின்‌ நலனுக்காக

62


Page 109வயது பதினாறு

 

அவன்‌ முன்னின்று உருவாக்கிய கிராம நலன்புரி. சங்க கூட்டங்களில்‌
அவனது முற்போக்கு சிந்தனைகளும்‌ செயல்‌ திட்டங்களும்‌ காரசாரமாக
விமர்சிக்கப்படுவன. அத்தகைய கூட்டமொன்றில்‌ ஒரு ஊர்‌ மகன்‌ அவனைப்‌
பார்த்து, “நர்‌ படிச்சு வாத்தியாராக உத்தியோகம்‌ பார்த்தாப்போல நீர்‌
பெரிய ஆளா? நீர்தான்‌ எங்களுக்குத்‌ தலைவராக இருக்கவேண்டுமா?”
என்று தன்னை நிராகரித்தது, அவனது உள்ளத்தில்‌ நிரந்தர வடுவை
ஏற்படுத்தியது.

சாதி, சமய, - சம்பிரதாய மூடக்‌ கொள்கைகளில்‌
இம்மக்களுக்குரிய தீவிரவாதம்‌ அருளை விரக்தியடையச்‌ செய்தது.
கத்தோலிக்கர்‌ அல்லாத பிற சமய மக்களுடன்‌ திருமணங்கள்‌
செய்வதில்‌ இவர்களின்‌ எதிர்ப்பு எத்தனையோ இளம்‌ உள்ளங்களை
சிதைத்துள்ளது. கிறிஸ்தவர்களுக்கு மட்டூம்‌ மீட்புண்டு என்ற நினைப்பை
. மாற்றியமைக்க அவன்‌ எடுத்த எத்தனங்கள்‌ அவனை அக்கிராமத்தின்‌
விரோதியாக படம்பிடித்தது. அன்புதான்‌ கடவுள்‌. அன்புடையான்‌ கடவுளின்‌
சித்தத்தை நிறைவேற்றுவான்‌. அவ்வாறு கடவுளின்‌ . சித்தத்திற்கு
அடிபணிபவன்‌ எம்‌ மதத்தைச்‌ சார்ந்திருந்தாலும்‌ அவனுக்கு விமோசனம்‌
உண்டு. நாம்‌ மனிதத்தை நேசிக்க வேண்டூம்‌. சமயத்தையல்ல என்று
விவாதமிடூவான்‌. இப்பேற்பட்ட விவாத வேளையில்‌ அவன்‌ எங்கோ
கேட்ட பகிடிக்கதையை...

“கிறிஸ்தவ மதத்தைச்‌ சேராத ஒரு நபர்‌ மோட்சக்கதவை
அடைந்தார்‌. அவரை பேதுரு வரவேற்று உள்ளே அழைத்துச்‌ சென்றார்‌.
அப்பொழுது உயர்ந்த மதிலால்‌ சூழ்ந்துள்ள ஒரு பகுதியிலிருந்து
காதுக்கினிமையான கீதம்‌ ஒலித்துக்‌ கொண்டிருந்தது. அந்தக்‌
கீதத்தைக்‌ கேட்ட இந்த நபர்‌ பேதுருவைப்‌ பார்த்து, ஐயா, இந்த நாதம்‌
எங்கிருந்து வருகிறது என்று வினவினார்‌. : அதற்கு பேதுரு, “தம்பி,
சத்தம்‌ போடாதேயும்‌, அந்த மதிலுக்குள்‌ இருப்பவர்கள்‌ கிறிஸ்தவர்கள்‌.
அவர்கள்‌ நினைக்கிறார்கள்‌ தாங்கள்‌ மட்டூம்தான்‌ மோட்சத்துக்கு
வரமுடியுமென்று. உம்மைப்‌ போன்ற கிறிஸ்தவ மதத்தைச்‌ சாராதவர்கள்‌
மோட்சத்துக்குள்‌ புக முடியாது என்பது அவர்களின்‌ நினைப்பு. ஆகவே
அவர்களுக்குக்‌ கேட்கும்‌ படியாக சத்தம்‌ போடாதேயும்‌.”

இக்கதையை பகிரங்கமாக ஒரு கூட்டத்தில்‌ . கூறிவிட்டான்‌.
இதனால்‌ ஊரில்‌ அவனுக்கு ஏற்பட்ட எதிர்ப்பை மேற்கொள்வதற்கு
அவன்‌ அனுபவித்த நிந்தைகள்‌ சொல்லிலடங்கா.

இன்னொரு தடவை, தனது உறவினர்‌ ஓருவர்‌ இந்து: மதத்தைச்‌
சார்ந்த பெண்ணைத்‌ திருமணம்‌ செய்யவேண்டூமானால்‌ அப்பெண்‌

83


Page 110மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

கத்தோலிக்க மதத்தைத்‌ தழுவவேண்டூம்‌ என்ற தனது உறவினரின்‌
பெற்றோரினதும்‌, ஊர்‌ மக்களினதும்‌ கட்டூப்பாட்டுக்‌ கோரிக்கைகு
எதிராக விவாதிக்கும்‌ பொழுது, மத்மாற்றம்‌ செய்பவர்களைக்‌ கிறிஸ்து
நேரில்‌ சந்தித்தால்‌: “இதனால்‌ உனக்கு என்ன பயன்‌? இது உன்‌
கிறிஸ்தவ அகந்தையைத்தானே அதிகரித்துள்ளது' என்று கேட்பார்‌
என அருட்திரு அந்தோனி டி. மேல்லோ அவர்கள்‌ பறவையின்‌ பாடல்‌
நூலில்‌ கூறியிருந்ததை எடூத்துக்காட்டியும்‌ அதில்‌ தோல்வி கண்டான்‌.

இத்தகைய ஊர்ச்‌ சூழலிலும்‌ அம்மக்களின்‌ வருங்கால
சந்ததியின்‌ நலனுக்காக பல எதிர்ப்புக்களின்‌ மத்தியில்‌ பிடிவாதமாக
அவ்வூரிலேயே நம்பிக்கையுடன்‌ வாழ்ந்து வந்தவனுக்கு ஒட்டகத்தின்‌
முதுகை உடைத்த கடைசி வைக்கோல்‌ சருகாக, எதிர்பாராமல்‌
நிகழ்ந்தது அந்தச்‌ சம்பவம்‌.

அமலா திருக்குடும்பக்‌ கன்னியர்‌ மடத்தில்‌ உயர்தர வகுப்பில்‌
படித்துக்‌ கொண்டிருந்தாள்‌. தன்‌ ஊர்‌ முன்னேற்றத்தில்‌ தான்‌
கொண்ட கனவுகளை நிறைவேற்றுவதற்கு அவளில்‌ பூரண நம்பிக்கை
வைத்திருந்தான்‌ அருள்‌.அவனுக்கு அடுத்ததாக அவர்களின்‌ ஊரிலிருந்து
பல்கலைக்‌ கழகம்‌ புகுந்து பட்டதாரியாகும்‌ வாய்ப்பு அவளுக்கிருந்தது.
இதனால்‌ அவளின்‌ நலன்களில்‌ அபார அக்கறை காட்டினான்‌.
அமலா அருளின்‌ அப்பாவின்‌ ஒன்று விட்ட சகோதரனின்‌ மகள்‌ என்பது
அவன்‌ அவளுடன்‌ சகோதர பாசத்துடன்‌ உறவாடூவதற்கு மற்றுமொரு
காரணமாக அமைந்தது.

அமலாவின்‌ சகோதரங்கள்‌ அருளை அண்ணா என்றுதான்‌
அழைப்பார்கள்‌. அமலா மட்டும்‌ அவனைப்‌ பெயர்‌ சொல்லித்தான்‌
அழைப்பாள்‌. அவள்‌ அவனுக்கு சுமார்‌ எட்டு வயது இளையவள்‌. அவள்‌
பெயர்‌ சொல்லி அழைப்பது அவனுக்குச்‌ சற்று அதிருப்தியைக்‌ கொடுத்த
பொழுதும்‌ அதில்‌ விபரீதம்‌ இருப்பதாக அவன்‌ கருதவில்லை.

கடந்த வருடம்‌ அவளது குடும்பத்தில்‌ நிகழ்ந்த அந்த
அனர்த்தம்‌: மாமாவின்‌ மகனைத்‌ திருமணம்‌ செய்த அவளது அக்கா
பிரசவயவேளை ஆண்‌ குழந்தை ஒன்றைப்‌ பெற்றெடுத்து தன்‌ உயிர்‌
நீத்தாள்‌. இந்தச்‌ சம்பவம்‌ ஓரளவு மறக்கப்பட்டு வந்த வேளை வேறு
ஒரு அதிர்ச்சி அவளது குடூம்பத்தைத்‌ தாக்கியது.

அக்காவின்‌ கணவனின்‌ நடத்தையில்‌ மாற்றம்‌ ஏற்பட்டது.
கவலையை மறக்கவென்ற போர்வையில்‌ குடியில்‌ தஞ்சமடைந்தான்‌.

84


Page 111வயது பதினாறு

 

தான்‌ பெற்ற பிள்ளையை வெறுத்தான்‌. அமலாவைத்‌ தனக்கு இரண்டாம்‌
தாரமாக திருமணம்‌ செய்து தரும்படி வற்புறுத்தினான்‌.

அமலாவின்‌ ஆளுமைக்கும்‌ அக்காவின்‌ கணவனின்‌ ஆளுமைக்கும்‌
பெரும்‌ வித்தியாசம்‌. அவள்‌ கல்வியறிவும்‌ பொதுஅறிவும்‌ பெற்றவள்‌.
அவனோ கல்விக்கு மதிப்புக்‌ கொடுக்காத தான்தோன்றித்தனமாக
வாழும்‌ போக்குடையவன்‌. அருளின்‌ முற்போக்குச்‌ செயற்பாடூகளுக்கு
முட்டுக்கட்டையானவன்‌.

அமலாவின்‌ பெற்றோர்கள்‌ அவனின்‌ அதிகாரத்திற்குப்‌
பணியத்தொடங்கினர்‌. ஒரு நாள்‌ ஞாயிறு காலை பூசை முடிந்ததும்‌
கோவில்‌ சபையில்‌ அங்கம்‌ வகிக்கும்‌ முதியவர்களைக்‌ கூட்டி மக்கள்‌
மத்தியில்‌ நியாயம்‌ கேட்டான்‌. இளவயதில்‌ தனது மனைவி இறந்தபடியால்‌
தன்‌ மனைவியின்‌ தங்கை தனக்குத்‌ தாரமாக வரவேண்டும்‌ என்று
நியாயம்‌ கற்பித்தான்‌. அவனது கோரிக்கை ஊரில்‌ பலமுறை நடந்த
நிகழ்வு என்ற காரணத்தைக்‌ காட்டி அமலா தன்‌ இறந்த அக்காவின்‌
கணவனைத்‌ திருமணம்‌ செய்வதற்கு ஊர்‌ ஆதரவு வழங்கவேண்டும்‌
என்று அவனைச்‌ சார்ந்த பெரியவர்கள்‌ கருத்துத்‌ தெரிவித்தனர்‌.

அருள்‌ தன்னால்‌ முடிந்தளவு இந்தத்‌ திருமணம்‌ நிறைவேறுவதை
நிறுத்துவதற்கு எதிர்ப்புத்‌ தெரிவித்தான்‌. கோவில்‌ பங்குத்தந்தையும்‌
அவனுக்கு ஆதரவாக ஊர்‌ இந்த விடயத்தில்‌ தலையிடக்கூடாது
என்று திட்டவிட்டமாகக்‌ கூறிவிட்டார்‌. அமலாவின்‌ விருப்பின்றி
இத்திருமணத்தைத்‌ தான்‌ நிறைவேற்றப்‌ போவதில்லை என்பதை
ஆணித்தரமாக அறிவித்துவிட்டார்‌.

பொறுப்பற்ற ஒரு சிலரின்‌ வேண்டாத வீண்‌ தலையீட்டால்‌
அமலாவின்‌ பெற்றோர்கள்‌ நிலைதடூமாறினர்‌. மருமகன்‌, பேரன்‌,
இறந்த மகள்‌, சின்னமகள்‌ அமலா - யார்‌ பக்கம்‌ நாங்கள்‌ சார்வது?
குழம்பினார்கள்‌. நிர்ப்பந்தம்‌ மேலோங்க அமலாவை இறந்த அக்காவின்‌
கணவனுக்கு திருமணம்‌ செய்வதெனத்‌ தீர்மானித்தனர்‌. அமலாவின்‌
சம்மதம்‌ அவர்களுக்கு அவசியமாகத்‌ தெரியவில்லை.

மாசி மாதம்‌. கோவில்‌ பெருநாள்‌ “நவநாட்கள்‌'' நடைபெற்றுக்‌
கொண்டிருந்தன. ஆறு நவநாள்‌ வழிபாடூகள்‌ முடிந்து விட்டன. இன்னும்‌
மூன்று நாள்‌ நவநாள்‌ வழிபாடூடன்‌ கோவில்‌ திருநாள்‌ முடிவடைந்து
விடும்‌. அதன்‌ பின்‌ அமலாவின்‌ திருணத்திற்கான ஆயத்தங்களை
ஆரம்பிப்பதென அவளது பெற்றோர்கள்‌ திட்டமிட்டனர்‌.

85


Page 112மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

அருள்‌ அன்று இரவு நவநாள்‌ வழிபாட்டிற்குப்‌ போகவில்லை.
பாடசாலை சம்பந்தமான அவசர வேலைகளில்‌ எஈடூபட்டிருந்தான்‌.
அம்மாவும்‌, அப்பாவும்‌ கோவிலுக்குப்‌ போயிருந்தனர்‌.

தமிழ்‌ நாட்டிலிருந்து பிரசங்கம்‌ செய்வதற்கு குருவானவர்‌ ஒருவர்‌
வருகை தந்துள்ளார்‌. சுவையான உவமைகள்‌ மூலம்‌ கிறிஸ்துவின்‌
போதனைகளை மக்களுக்கு கடந்த ஆறு நாட்களாக நவநாள்‌ வழிபாட்டு
வேளைகளில்‌ வழங்கி வருகிறார்‌. அவர்‌ நகைச்சுவையான கதைகள்‌
மூலம்‌ தக்க போதனைகளைப்‌ போதித்தார்‌.

“மனிதன்‌ கடவுளைத்‌ தேடூகிறான்‌. கோவில்களில்‌...
சிலைகளில்‌...... அவன்‌ வானத்தை அண்ணாந்து பார்ப்பதில்லை. கண்ணை
மிளிரும்‌ நட்சத்திரக்‌ கூட்டங்கள்‌ அவன்‌ கண்களில்‌ படுவதில்லை.
மாலைக்‌ கதிரவனை அவன்‌ பார்ப்பதில்லை. அதன்‌ வண்ண நிறங்கள்‌
அவன்‌ கண்களைக்‌ கவர்வதில்லை. தோட்டத்துப்‌ பூக்களை அவன்‌
பார்ப்பதில்லை. அவற்றின்‌ நறுமணங்களை அவன்‌ நுகர்வதில்லை.
அயலவனை அவன்‌ பார்ப்பதில்லை. அயலவனின்‌ சிரிப்பொலி அவனது
காதுகளில்‌ விழுவதில்லை.

பழைய இஸ்லாமிய கதை ஒன்றைக்‌ கூறினார்‌: நசுருதீன்‌ தனது
கழுதையில்‌ வேகமாகப்‌ பாய்ந்து சென்று கொண்டிருந்தார்‌. இதைப்‌
பார்த்த சிலர்‌, முல்லா, எங்கே இவ்வாறு வேகமாகச்‌ செல்கிறீர்கள்‌ என்று
கேட்டனர்‌. அதற்கு, நசுருதீன்‌, நான்‌ எனது கழுதையைத்‌ தேடூகிறேன்‌
என்று கூறினார்‌.

ஒரு குரு தன்‌ உடலைத்‌ தேடுகிறேன்‌ என்று கூறியதைக்கேட்டு
உள்ளொளி பெறாத அவரது சீடர்கள்‌ சிரித்தார்கள்‌.

சிறிய மீனே கடலைத்‌ தேடாதே. உன்‌ கண்களைச்‌ சுழற்றிப்‌
பார்‌ நீ கடலைக்‌ காண்பாய்‌.”

அருட்தந்தையின்‌ பிரசங்கம்‌ பற்றித்தான்‌ மறுநாள்‌ ஊர்முழுவதும்‌
பேச்சு.

அன்று வீட்டில்‌ ஒருவருமில்லை. அமைதி நிலவியிருந்தது.
முன்‌ வளவின்‌ கதவு மூடப்பட்டிருந்தது. அமைதியைக்‌ குலைத்தது
அருளின்‌ நாய்க்குட்டி, யாரோ வீட்டினுள்‌ வருவதை அந்த நாய்‌
கட்டியம்‌ கூறியது. யார்‌ என அறிவதற்காக தனது அறையை விட்டூ
வெளியே வந்தான்‌. அமலா அவளது அக்காவின்‌ மகனுடன்‌ முற்றத்தில்‌
நின்றுகொண்டிருந்தாள்‌. அவனுக்கு அதிர்ச்சியைக்‌ கொடுத்தது. அவள்‌

86


Page 113 

வயது பதினாறு

 

இதற்கு முன்‌ தனியாக அந்த நேரத்தில்‌ அவனது வீட்டிற்கு வந்ததில்லை.
அதுவும்‌ அக்காவின்‌ பிள்ளையுடன்‌ தோன்றியது பல கேள்விகளை
எழுப்பின.

அமலா... என்ன இந்த நேரம்‌... நீ கோவிலுக்குப்‌
போகவில்லையா?..

இல்லை அருள்‌... நான்‌ கோவிலுக்கென்ன என்ர வீட்டுக்கே
போகமாட்டேன்‌...

அவளின்‌ அந்த வார்த்தைகள்‌ அவனை ஜிகைப்படையச்‌
செய்தன. ்‌

உன்னைத்தான்‌ நம்பி வந்துள்ளேன்‌.

அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்று வீட்டு
விறாந்தையில்‌ கதிரையில்‌ அமர்த்தினான்‌.

அமலா என்ன சொல்கிறாய்‌? நான்‌ உனக்கு என்ன உதவி
செய்யமுடியும்‌? எனத்‌ தெளிவாக வினவினான்‌.

..அத்தானைத்‌ திருமணம்‌ செய்யும்படி அப்பாவும்‌ அம்மாவும்‌
என்னை வற்புறுத்துகிறார்கள்‌. எனது சம்மதமில்லாமல்‌ திருமண நாளும்‌
குறித்துவிட்டார்கள்‌. இந்தத்‌ திருமணத்தில்‌ எனக்கு விருப்பமில்லை.
நான்‌ பல்கலைக்‌ கழகத்தில்‌ சேர்ந்து ஒரு பட்டதாரியாகவேண்டூம்‌
என்பதுதான்‌ எனது ஆசை. நீதானே இவ்வளவு காலமும்‌ என்னைத்‌
தூண்டினனி.. கல்வியில்‌ எனக்கு ஆர்வத்தை ஏற்படூத்தினனி...
இப்ப.... திருமணம்‌ செய்வதென்றால்‌.. அதுவும்‌ அந்த குடிகாரனை..
ஐயோ... என்னால்‌ நினைத்துப்பார்க்க முடியவில்லை... செத்துப்‌
போகலாமென்றால்‌.... அக்காவின்‌ இந்தப்‌ பிள்ளை.. இந்தப்‌ பிள்ளைக்காக
நான்‌ வாழவேண்டும்‌..

அருள்‌ மெளனமாக அவள்‌ சொல்வதைக்‌ கேட்டூக்கொண்டிருந்தான்‌.
வேகமாக எழுந்தான்‌. ்‌

அமலா புறப்படு. நாம்‌ இந்த ஊரைவிட்டே போய்விடூவோம்‌..

நான்‌ உன்னைப்‌ படிக்கவைக்கிறேன்‌. பட்டதாரியாக்கிறேன்‌. இந்தப்‌
பிள்ளையைத்‌ தத்தெடூக்கிறேன்‌...

67


Page 114மனுவல்‌ ஜேசுதாசன்‌

 

எதிர்பார்த்து வந்தவள்‌ போல்‌ அவள்‌, அவன்‌ பின்‌ தொடர்ந்தாள்‌.
கோவில்‌ நவநாள்‌ வழிபாடூகள்‌ . நடை பெற்றுக்‌ கொண்டிருந்தன.
அருட்தந்தையின்‌ பிரசங்கம்‌ ஒலிவாங்கியில்‌ தெளிவாகக்‌ கேட்கிறது.

“இறைவன்‌ கொடுப்பதில்‌ வள்ளல்‌. உண்மைச்‌ சீடன்‌
அன்புச்சேவையில்‌ இன்பம்‌ காண்பான்‌. இதுவே நற்செய்தி.”

கோவிலைத்‌ தாண்டி மூவரும்‌ பயணத்தைத்‌ தொடர்ந்தனர்‌.

68


Page 115

Page 116 

 
 
  

இந்தச்‌ சிறுகதைகளை நான்‌ மதிப்பதற்கு காரணம்‌ இருக்கிறது. அவற்றில்‌ உள்ள வாசிப்புத்‌ -

தன்மை, இப்பொழுதெல்லாம்‌ சிறுகதைகளை படிப்பதற்கு நிறைய பொறுமை வேண்டும்‌. மடித்து,
மடித்து வசனங்கள்‌ எழுதப்பட்டிருக்கும்‌. ஆனால்‌ இது நேரடியாக சொல்லப்பட்டு நவீனத்துக்குள்‌
அகப்பட்டு நசிபடாத நல்ல படைப்பு. ஆகவே படிக்கும்போது ஏதாவது ஒரு பயன்‌ கிடைக்கிறது.

ஒரு கதையைப்‌ படிக்கத்‌ தொடங்கினால்‌ அதைப்‌ பாதியிலே மடித்து வைத்துவிட்டு பிறகு
படிக்கலாம்‌ என்று தள்ளிவைக்கத்‌ தோன்றாது. ஒரேயடியாகக்‌ உங்களை இழுத்து முடிவு வரைக்கும்‌
கொண்டூ செல்லும்‌. இது தவிர, கதைகளில்‌ புதிர்கள்‌ கிடையாது. சிலருடைய கதைகள்‌ அல்ஜிப்ரா
கணிதத்தை தந்துவிட்டு விடையை ஒழித்து வைத்ததுபோல தலையைப்‌ பிய்க்கத்தோன்றும்‌. இங்கே
அப்படியில்லை. இந்தக்‌ கதைகளைப்‌ படிக்கும்போது .வாழ்க்கையை ஒரு புது வெளிச்சத்தில்‌ பார்க்கிற
உணர்வுதான்‌ ஏற்படும்‌. ்‌

எழுத்தாளர்‌ ௮. முத்துலிங்கம்‌

வாழ்வின்‌ தொழில்‌ மூலமாக அவரது மனப்பட்டறையில்‌ ஏற்பட்ட பாதிப்புக்கள்‌, தைப்புக்கள்‌,
பதிவுகள்‌, தாக்கங்கள்‌, மனப்பாரங்கள்‌ அவரது அழகிய மொழியில்‌ எம்முடன்‌ பேசுகின்றன.

இலக்கிய கலாவித்தகி பத்மா சோமகாந்தன்‌

திருவாளர்‌ மனுவல்‌ யேசுதாசன்‌ பிரபலமான சட்டத்தரணி. ௧௬ அவருக்கு எப்படிக்‌
கிடைக்கிறது என்பது பற்றிச்‌ சொல்ல வேண்டுமா? ஆனால்‌ அது மட்டும்‌ போதுமா? நிறையவே

கற்பனை வளம்‌.
/ அதிபர்‌ பொ. கனகசபாபதி

மருத்துவப்‌ பேராசிரியர்‌ நந்தி அவர்கள்‌, தமது சில படைப்புக்களில்‌ மருத்துவ மனைச்‌
சூழலையும்‌, சத்திர சிகிச்சைக்‌ கூடத்தின்‌ சுறுசுறுப்புக்களையும்‌ பின்புலமாக வைத்து, இலக்கியத்தில்‌
புதிய. பரிமாணம்‌ ஒன்றைக்‌ காட்டிய முன்னோடியாகத்‌ திகழ்பவர்‌. சட்டத்தரயி மனுவல்‌ யேசுதாசன்‌
அவர்கள்‌ இப்பொழுது தமது சட்டஅறிவைப்‌ பின்புலமாகக்‌ கொண்டூ தமிழிலக்கியத்தில்‌ மற்றொரு
பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளார்‌ என்பது எனது அபிப்பிராயம்‌.
தமிழ்‌ஒளி நா. சோமகாந்தன்‌

பன்ன.

ஆம்‌

ஆகம்‌
டீ ஷிட்‌ 38%
அடல ன ட்ட்ட்‌

ஸாரமாய்‌5ரா

   

 

 
  
    
     
   
  
 
  
  
 

உகு ம

ந்.ஐ.ய5ஐ