கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாற்றம்(சிறுகதைகள்)

Page 1 

 

 

 

 

 


Page 2 

வழ டினா
ப்பர்‌ இவை

(20174
படட

கிகி

 


Page 3 

 

ககபர்‌ ட] வைய ழா ப வட டல வம்‌ ப்‌ 1.

 

 


Page 4 

 

 

மாற்றம்‌


Page 5 

 

மாற்றம்‌

 


Page 6 
 
  
 
 
 
 
  

 
 

 

 

்‌ டர ரம்‌ . ்‌ ம்‌ டது ௫
ட பொ டட ்‌ ்‌ ன ரர க
்‌ ்‌ ச டத ம ்‌ ்‌ ட த ப்பத்‌ ்‌ ட ல
ர ? ்‌ * வ்‌ ஷு
* ்‌ ட ர்‌ டி பி
: . ்‌ ன்‌ ்‌
2 ,
்‌ ்‌ ்‌ ॥ 5 , ௩ ௩
்‌ . க
ட ப
ஈ. பக ன க
. ஆ , 8 ட டட நரக . த ௩ க
வட 8 ம்‌ [்‌ ரி ட 3 ்‌
3 2 |
5 2 ப . பட்டர்‌ ம ட ்‌ 8 ௩ ர
ல்‌ 1 க ்‌்‌ ்‌ ர ்‌ " ்‌ ்‌ உ . ்‌ உ ட: ப்‌. ்‌ ,
ன ர ய்‌ ப்‌

ச ்‌ ச்‌ , . 7 உ ்‌ ட . ்‌ ்‌ ச ்‌ ஆட்கைசிட்டடட 8
ன்‌ ்‌ ட ்‌ ட இலசிற்று, ,

 

 

 

்‌. . ட்டி . ர ர ட 1 ்‌ ப்‌ டல க்கே வ கடச்கத்ட்ட ப
ட்ட. . ச . , ்‌ ட்டு ல ம்‌ உ: . .
பட ்‌ . ன்‌ ்‌ ட்‌ . ட ௩ டா 2 ௯ ்‌ ட ,
1-1 ப டனவவவஅ அடையை ்‌ ்‌ . ௩ . டட .
வ % ்‌ ௪ . ்‌ ட்‌ டல ்‌ ்‌ ட்ட ஒரடைய ்‌ . த . (்‌
142 ்‌. : ௩ உ

 
 

 

 

 

 


Page 7மாற்றம்‌

சிறுகதைகள்‌

நா. கணேசன்‌


Page 8மாற்றம்‌ (சிறுகதைகள்‌)

நா. கணேசன்‌

பதிப்பு : 2009

அச்சு:

குமரன்‌ அச்சகம்‌

3- 0.3, ரம்யா லேன்‌, கொழும்பு - 10.

நிசக8ா வரா (5101 510165)
11. கரக

6 2009

21/22

பரவா நா மு ராம்‌.

3-3, வருக 1.௧6, ம10ல்௦ -10.

12: 011 2421338 ரவ!!: வரா 1120 811 .௦01


Page 9சமர்ப்பணம்‌

இடம்‌ பெயர்ந்து கனடாவில்‌ பதினைந்து ஆண்டுகள்‌
வாழ்ந்து தனது தாய்‌ மண்ணையும்‌ சுற்றத்தாரையும்‌
நேசித்துப்‌ புத்தாக்கங்கள்‌ பல புரிந்து இவ்வுலகை
விட்டு மறைத்தாலும்‌ என்றும்‌ எமது உள்ளத்தில்‌
குடிகொண்டிருக்கும்‌
செல்வி ஜெயபாரதி கணேசபிள்ளை
அவர்களுக்கு


Page 10 

 

 

 

 

 

எறவானம்‌ இதிஷட அச்‌ வ்‌ ட கழுகை கை வட சளயா ல த வட்ட அப்பவும்‌ வனை

ச்‌.
* க
டி ள்‌
ு ர
9
்‌ ட்‌
3
[ ன
௩
௯
ம்‌
(
ய்‌
ஆ எண்ணாலை
மட்ட க்‌
ரீ
ட
8
௯
க்‌
ச
ச்‌
ட்‌
ல ௭
ந்‌!
்‌
ந
ஆ
௯ ட ்‌ ்‌
்‌ ர்‌
௫.
&
8 நி சு
கு க
% க
ட்‌ ல க ஞ்‌

ஸ்‌

 

கீ
ஜு

கூ

 

ன

 

 

ச்‌

நார! சதவ. வனத்‌ வ நன்னர்‌ ஏஞ்னைத்லு வகி மாம்‌

ர்‌

 

 

 

 

 

 

4

௪ ம்‌
க
ல
ந,
ட.
ட்&
ர.
* ௩
ர்‌,
நர்சு

 

 

 


Page 11நூன்முகம்‌

ஒற்றுமையில்லாக்‌ குடி ஒருநாளும்‌ ஓகோ என்று வாழப்‌ போவதில்லை.
வசஇபடைத்தவர்கள்‌ தப்பிப்‌ பிழைப்போம்‌ என்றும்‌, தமது வழி தனிவழி
என்றும்‌, பிளவுபட்டு வாழ்கிறார்கள்‌. சமூகத்தில்‌ ஊறிப்போன வர்க்க
வேறுபாடுகள்‌ அவர்களைப்‌ பொருள்‌ சேர்க்கும்‌ இயந்திரங்களாக
வாழவைத்துள்ளன. தமது நீண்டகால அரசியல்‌ அபிலாசைகள்‌
வெற்றிபெறாமலேயே மழுங்கிப்‌ போவதை கண்டும்‌ காணாமலும்‌
காலத்தை ஒட்டுகின்றனர்‌.

கலங்கிய குளத்தில்‌ பலர்‌ மீன்‌ பிடிக்கின்றனர்‌. ஓடு மீன்‌ ஓட ஒரு
மீன்‌ வரும்‌ வரை காத்திருப்பவர்‌ பலர்‌. மீனையும்‌ பிடித்துக்கொண்டு
குளத்திற்கும்‌ நீர்‌ வராமல்‌ செய்துவிட்டனர்‌. வளர்ந்து வரும்‌ இளம்‌
வயதினர்‌ தமது நிலையைச்‌ சரிவரச்‌ சிந்திக்க வேண்டியவர்களாக
உள்ளனர்‌. குடா நாட்டில்‌ நாள்‌ ஒரு சட்டம்‌ பொழுதொரு அதிமாரம்‌
என நாள்கள்‌ உருண்டு கொண்டு போகின்றன. அடிமட்ட வாழ்க்கை
முறையில்‌ மாற்றம்‌ ஏற்படுவது அத்தியாவசியம்‌. உயிர்‌ வாழ்வதற்கு
அவசியமானவை தடையின்றிக்‌ கிடைக்கும்‌ போது தான்‌ மக்கள்‌ அயலில்‌
உள்ளவர்களையும்‌ எட்டிப்‌ பார்க்க முற்படுவர்‌. அடித்தளத்தில்‌. இருந்தே
இம்‌ மாற்றம்‌ ஏற்பட வேண்டும்‌.

உலக ஒழுங்கில்‌ இருந்து நாம்‌ ஒதுங்கி வாழவும்‌ முடியாது.
இவை யாவற்றையும்‌ சிந்தித்து, இராமிய மட்டத்தில்‌ எவ்வாறான ஒரு
மறுமலர்ச்சியை ஏற்படுத்தலாம்‌ என்பதைச்‌ ௪ிந்தித்ததன்‌ பயனே இந்த
மாற்றம்‌. எனக்குக்‌ கதை எழுதிய அனுபவமில்லை. வாழ்வில்‌ மனித
நேயம்‌ உள்ளவர்கள்‌ அனுபவிப்பவற்றை எழுதினேன்‌. எத்தகைய
விமர்சனமானாலும்‌ மனமுவந்து ஏற்றுக்‌ கொள்வேன்‌. வளர்ந்து வரும்‌
உள்ளங்களில்‌ மாற்றம்‌ ஏற்பட வேண்டும்‌ என்பகே என்‌ அவா.

என்னைக்‌ கற்பித்து ஆளாக்கிய ஆசான்‌

கற்பித்தலிலும்‌ கல்வி நிர்வாகத்திலு% வழிகாட்டிய பேராசான்‌
வாழ்த்தியுள்ளார்‌. உள்ளம்‌ பூரித்துப்போனேன்‌. அவருக்கு எனது வணக்கத்‌
துடன்‌ கூடிய நன்றி.

நா.கணேசபிள்ளை


Page 12மகாஜனக்‌ கல்லூரி முன்னாள்‌ அதிபரும்‌
பல்‌ கலாசார கல்வி ஆலோசகருமான
பொ.கனகசபாபதி அவர்களின்‌

வாழ்த்துரை

நான்‌ ஆசிரியப்பணியில்‌ கால்‌ எடுத்து வைத்தபோது நன்மாணாக்கனாக
வந்து என்னை ஆராகித்தவர்‌. நான்‌ அதிபராகப்‌ பாடசாலை ஒன்றினில்‌
அடி எடுத்து வைத்தபோது அங்கு ஆசிரியப்‌ பணியாற்ற வந்து தோள்‌
கொடுத்தவர்‌, நான்‌ அப்‌ பாடசாலையை விட்டு வெளியேறிய பின்னர்‌
அப்பாடசாலையின்‌ அகுபர்‌ பொறுப்பேற்று நான்‌ தொடக்கிய நற்பணிகள்‌
பலவுற்றினைத்‌ தொடர்ந்து நிறைவேற்றியவர்‌, இன்று எழுத்துத்‌ துறை
யிலும்‌ பிரவேசித்து என்னைக்‌ தொடர்கிறார்‌ என்பதைக்‌ காண மகிழ்ச்சி
தருகிறது. மனது நிறைகிறது.

'மாற்றம்‌' எனது அன்பிற்கும்‌ பெருமதிப்பிற்குமுரிய மாணவன்‌
இரு. நா. கணேசபிள்ளை அவர்கள்‌ எழுதிய முதல்‌ நெடும்‌ புனைகதை.
இதனைப்‌ புனைகதை என்பதா? அல்லது இலட்சியம்‌ இலக்கியக்‌ கோலம்‌
பெற்று நிற்கிறது என்பதா? அங்கே ஒரு புனை கதைக்கு வேண்டிய ௧௬,
களம்‌, கதாபாத்திரங்கள்‌, நிகழ்ச்சிகள்‌, திருப்பங்கள்‌ என அத்தனையும்‌
இருப்பது என்னவோ உண்மைதான்‌. ஆனால்‌ கதை முழுவதுமே
ஊடறுத்துச்‌ செல்கின்ற இலட்சிய வெறி தான்‌ இங்கே முதன்மை
பெற்று நிற்கிறதை இதனை வாசிக்கும்‌ எவரும்‌ கண்டு கொள்வர்‌.
கதையின்‌ கருவினை மறந்து இலட்சியம்‌ பற்றிய எண்ணக்தையே மனதில்‌
பதித்துக்‌ கொள்வார்கள்‌. 1516 ஆம்‌ ஆண்டினிலே சேர்‌ தோமஸ்‌ மூர்‌
என்பவர்‌ எழுதிய “நெடும்‌ கதைஊத்தோப்பியா” (10012. அக்கதை
அத்திலாந்திக்‌ சமுத்திரத்திலே உள்ள ஒரு கற்பனைத்‌ தீவு பற்றியது.
அநீதக்‌ கற்பனைத்‌ தீவினை தோமஸ்‌ மூர்‌ அவர்கள்‌ ஒரு இலட்சியத்‌
தீவாகக்‌ கற்பனை செய்தார்‌. அந்தத்‌ தவினிலே அப்பழுக்கற்ற சமூக
அரசியல்‌, பொருளாதாரம்‌, சட்டம்‌ என அத்தனையும்‌ மேன்மை பெற்று
இருந்தன என, தோமஸ்‌ மூர்‌ வருணித்தார்‌. அப்படியான சமுதாயம்‌
வாய்ப்பது சாதீதியமா௦

அதன்‌ காரணமாக இக்காலத்தில்‌ ஏதாவது, “எட்டாத சிந்தனை,
வெறும்‌ நினைவாகாத கனவு” என்பதற்கு “ஊத்தோப்பியா” எனச்‌ சற்று
ஏளனத்துடன்‌ அல்லது ஏமாற்றத்துடன்‌ சொல்வதற்கே மக்கள்‌ முன்‌


Page 1313%

வந்துவிட்டனர்‌. இரு. கணேசபிள்னையின்‌ கனவு அல்லது இலட்சியம்‌ சேர்‌
தோமஸ்‌ மூரினதை ஒக்தது. இவர்‌ காண்பது ஒரு இலட்சியக்‌ கராமத்தினை.
அதன்‌ பெயர்‌ “பனந்தோப்பு". அந்தக்‌ கராமத்தினை இன்றைய உலகம்‌
ஒரு மாதிரிக்‌ கிராமமாக முன்னுதாரணமாகக்‌ கொள்வதற்கு என்ன
செய்ய வேண்டும்‌? அக்கிராமத்தினைப்‌, “பொருளாதார ஊக்தோப்பியா”,
“பெண்ணுரிமை உஊத்தோப்பியா”, "விஞ்ஞான தொழில்‌ நுட்ப
உளத்தோப்பியா ” என ஆக்குதல்‌ சாத்தியமா? சாத்தியம்‌ ஆக்குதற்கான
வழிவகைகளை எடுத்துக்‌ கூறுவகே இந்த நெடுங்கதையின்‌ நோக்கம்‌.
அதற்காக அவர்‌ தேர்ந்தெடுத்த பாத்திரங்களே முகுந்தன்‌, வசந்தி என்ற
காதலர்களும்‌ அவர்களுடன்‌ தொடர்புள்ள கிராம வாசிகளும்‌. தன்கையே
தனக்குதவி என நம்புகின்ற நடராசர்‌, சிதம்பரப்பிள்ளை, தம்பிராசா
போன்ற முதியவர்கள்‌, முகுந்தனின்‌ வழிகாட்டலில்‌ “சிறுபிள்ளை
வேளாண்மை வீடு வந்து சேராது” என்றதைத்‌ தலை£ழாக மாற்றி
இன்றைய இளைய தலைமுறையினர்‌ தகுந்த வழிகாட்டல்‌ இருந்தால்‌
விண்ணையும்‌ மண்வரை கொண்டு வரும்‌ திறமை உடையோர்‌
என்பதை நிதர்சனமாகக்‌ காட்டும்‌ ரமணனை உள்ளடக்கிய இராமத்து
இளைஞர்‌ படை. இல்லாள்‌ அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
என்பதோடு நின்றுவிடாது அவர்கள்‌ சாதனை, சாதனை படைக்கும்‌
.. தகுதி பெற்றவர்கள்‌ வாய்புக்கிடைத்தால்‌ ஆணுக்குப்‌ பெண்‌ நிகர்‌ என
உலகுக்கு எடுத்தியம்பும்‌ சாதுரியம்‌ மிக்க வசந்தியும்‌ அவள்‌ தோழியரும்‌.
எங்கு வாழ்ந்தாலும்‌ நம்‌ வேர்கள்‌ இங்கேதான்‌, ஆகவே இக்கிராமத்தினை
வாழ வைக்க உதவவேண்டும்‌ என்ற எண்ணத்தில்‌ தான்‌ மாத்திரமல்லாது
கனடாவில்‌ வசிக்கும்‌ அவ்வூர்‌ வாசிகளுடைய ஆதரவினை நாடி ஊருக்கு
உதவும்‌ பண்பாளன்‌. என்னதான்‌. வெளி நாட்டில்‌ இருந்தாலும்‌ எமது
நினைவெல்லாம்‌ எமது தாய்‌ மண்பற்றியதுதான்‌ எனும்‌ ஆனந்தன்‌ என
அத்தனை கதாபாத்திங்களும்‌ உயர்ந்த இலட்சிய வேட்கை உடையோராய்‌
உள்ளமையால்‌, ஆசிரியர்‌ தனது இலட்சியத்தை நனவாக்குதற்கான
சாத்தியமான களமாக அமைகிறது பனந்தோப்பு.

பனந்தோப்பின்‌ கிராமவாசிகளினதும்‌ அவர்களின்‌ குலக்‌ கொழுந்து
களினதும்‌ அறிவு வளர்ச்சிக்காக அரசுப்பாடசாலை, பாலர்பாடசாலையும்‌,
மாலைவேளைகளில்‌ பிரத்தியேக போதனைகளும்‌, வாசிகசாலையும்‌,
பொருளாதார முன்னேற்றத்திறகாக கைத்தறி நெசவு, சமூகத்தின்‌
ஒருமைப்பாட்டிற்கும்‌ சமூகமான வாழ்வுக்குமான பலநோக்கு கூட்டுறவுச்‌
சங்கம்‌, இணக்கசபை, கிராமத்தின்‌ நீர்‌ வளம்‌ உயர்வதற்கான மரம்‌
நாட்டுதல்‌, அவைகள்‌ எல்லாவற்றுக்கும்‌ மேலாக புதிய விஞ்ஞான


Page 143

தொழில்நுட்பத்தைக்‌ கிராமத்தின்‌ வளர்ச்சிக்காகப்‌ பிரயோகிக்கும்‌
காற்றாலைகளும்‌, சூரியதட்டுக்களும்‌ என தனது இலட்சியக்‌ கிராமத்தினை
கண்முன்னே கொண்டுவந்துள்ளார்‌ ஆசிரியர்‌.

அவர்‌ ஒரு விஞ்ஞான பட்டதாறி. ஆகவே சூரியத்‌ தட்டுக்கள்‌ பற்றி
நிறையவே விளக்கம்‌ கொடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது. ஐரோப்பிய
நாடுகள்‌ பலவற்றிலே, சிறப்பாக ஜெர்மனி, டென்மார்க்‌ போன்ற
நாடுகளிலே காற்றாலைகளை அதிக அளவிலே உபயோகிக்கிறதை
நான்‌ கண்டுள்ளேன்‌. ஆசிரியரும்‌ டென்மார்க்‌ பற்றிக்‌ குறிப்பிட்டுள்ளார்‌.
எமது நாட்டினிலே காற்றாலைகளை உருவாக்கி சக்தித்‌ தேவையினை
ஈடு செய்யும்‌ முயற்சியில்‌ உள்ளுர்‌ பொருட்களை உபயோகுப்பதற்கான
முறைகளையும்‌ ஆசிரியர்‌ எடுத்துக்‌ கூறியுள்ளார்‌. உதாரணமாகக்‌ கரப்பினை
உபயோரித்து குழிவு ஆடி ஆக்குவது பற்றியும்‌ எடுத்துக்‌ காட்டியுள்ளார்‌.
ஆசிரியரது இலட்சிய வேட்கை பாராட்டப்பட வேண்டியது.

தனது பெண்‌ பிள்ளையை கனடாவில்‌ வாழும்‌ ஆனந்தனுக்கு
மணமுடித்துக்‌ கொடுத்து நல்ல நிலையில்‌ பார்க்க வேண்டும்‌ என்ற
கண்மணியின்‌ ஆதங்கத்தை மெல்லக்‌ தொட்டு விட்டு நழுவிவிட்டார்‌
ஆசிரியர்‌. ஆனந்தனுக்குக்‌ கனடாவில்‌ ஒரு காதலி இருப்பதாகவும்‌
அவளையே அவன்‌ மணம்‌ முடிக்கப்‌ போவதாகவும்‌ முகுந்தனிடம்‌
அவன்‌ கூறியது முகுந்தன்‌ வசந்தியின்‌ காதலுக்கு எவ்வித தடையும்‌
இல்லாமல்‌ போய்விடுகிறது. தேவையற்ற திருப்பங்களைக்‌ கொண்டு
வருவதால்‌ கதையினுக்கு சுவாரஸ்யம்‌ அதிகமாகலாம்‌ ஆனால்‌ ஆசிரியர்‌
எடுத்த அந்த இலட்சியத்தின்‌ நிறைவேற்றலுக்குச்‌ சிறிதும்‌ தடையாக
அமையப்படாது என்பது அவர்‌ சித்தாந்தம்‌. இதே போன்றது தான்‌
அருகருகே உள்ள இரு வீட்டுக்காரர்களுக்கும்‌ ஜிம்மி என்கிற நாயினால்‌
ஏற்படும்‌ பிரச்சினை. அகனை நீடிக்காமல்‌ இணக்கசபையினரின்‌ தீர்ப்பும்‌
அதனை நிறைவேற்றிய முறையும்‌ பனந்தோப்புக்‌ கிராமத்தில்‌ நீதி
பிறழ்வதில்லை, என்பதைக்‌ காட்டக்‌ கூடியதாக அமைகிறது.

கிராமவாசிகள்‌ எல்லோரும்‌ எப்பொழுதும்‌ நல்லவர்களாக
இருப்பார்களா? சிலர்‌ சில சமயங்களில்‌ பிறழ்வதும்‌ உண்டு. அத்தகைய
கதாபாத்திரம்‌ தான்‌ ரவி. அவன்‌ வசந்தியுடன்‌ சற்றுத்‌ தகாத முறையில்‌
நடக்க முயன்றபொழுது அவள்‌ சீறிப்‌ புலியெனப்‌ பாய்ந்து அவனைத்‌
துவம்சம்‌ செய்தது பாரதியின்‌ புதுமைப்‌ பெண்ணினைக்‌ கண்முன்னே
காட்டியது. ரவி தனது தவறினை உணர்ந்தமையால்‌ அவன்‌ மேற்கொண்டு
ஏதாயினும்‌ பழி வாங்கலில்‌ ஈடுபடாமை அக்கிராமவாசிகளின்‌ நற்‌
பண்பிற்கு எடுத்துக்காட்டு.


Page 1536]

விஞ்ஞான தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய நெடுங்கதைகளை
மிகச்‌ சிலரே எழுதுகின்றனர்‌. ஆசிரியர்‌ இந்த முயற்சியில்‌ ஓரளவு
வெற்றி பெற்றுள்ளார்‌ என்றே கூறவேண்டும்‌. இன்னும்‌ இத்தகைய
நெடுங்கதைகளை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்‌. எனது நல்‌
வாழ்த்துக்கள்‌.

பொ.கனகசபாபதி


Page 16உ 86% % ம 12 6

ஞு ஷு. ந மக. வ வம்‌ வம்‌ ம்‌ வம்‌ வம்‌ வ்‌ வம வம
கூடி 15 ௨. ஒ ௦ 33 98 & மே 15 ௨௨௮

22.

பொருளடக்கம்‌

நூன்முகம்‌

வாழ்த்துரை

பிரிந்தவர்‌ கூடினால்‌ பேசவும்‌ வேண்டுமா”?
வா௫ப்பு விரிவாக்கத்துற்கு ஒரு வாசிகசாலை
காசுக்காகவா கனடா மாப்பிள்ளை2
கணினியுகத்தில்‌ ஒரு கணினி அன்பளிப்பு
உடல்‌ உள உறுதிக்கு காற்பந்து விளையாட்டு
தாய்‌ மண்‌ வாசனை

துணியாத தாகம்‌ தரக்‌ கோப்பி மட்டுமா ௦
எதிர்பாராக கனடா விபத்து

எங்கே அந்த வெண்ணிலா

. சமூகவிரோதச்‌ செயல்‌ அம்பலம்‌

வாணி விழா

மரங்களை நடுவோம்‌ மண்ணைப்‌ பாதுகாப்போம்‌
பிள்ளையார்‌ கோவில்‌ பொங்கல்‌

கைத்தறி நிலையத்தில்‌ கலாட்டா

மரங்களை நடாமல்‌, மழையை எதிர்பார்க்கலாமா?
எமது பொருள்‌ வளம்‌ எமது கையில்‌
கருத்தொருமித்த உள்ளங்கள்‌ இணைந்து கொண்டன !
பொங்கல்‌ விழா _
ஆட்டைக்‌ கடித்து....மாட்டைக்‌ கடித்து.....
எல்லையில்‌ மதில்‌ கட்டுவதே பிரச்சினைக்குத்‌ தீர்வு
வீசும்‌ காற்றிலிருந்து மின்சக்தி

கண்டோர்‌ வியக்கும்‌ வண்ணம்‌ காற்றாடி சுழன்றது
சூரிய ஒளியைக்‌ குவியச்‌ செய்தும்‌ மின்சக்தி
கைத்தொழில்‌ பொருட்காட்சி

கலை நிகழ்ச்சிகள்‌

 

ரர்‌

117

10
14
16

27
32
ட]
58

51
57
62
66
70
72
709
௦2
90
100
109
117


Page 17பிரிந்தவர்‌ கூடினால்‌ பேசவும்‌ வேண்டுமா?

விடுமுறைக்குப்‌ பின்‌ பாடசாலை ஆரம்பநாள்‌ என்பதனால்‌ பாட
சாலை நண்பகலுடன்‌ முடிவுற்றது. புதிதாகக்‌ கடமையேற்ற பட்டதாரி
ஆசிரியர்‌ முகுந்தனும்‌ தனது மிதிவன்டியில்‌ ஏறி மிதித்தான்‌. தாயைப்‌
பற்றிய எண்ணங்கள்‌ அவன்‌ மனதில்‌ அலைமோதிய வண்ணமிருந்தன.
அன்று காலை பாடசாலைக்குப்‌ புறப்படும்‌ போகதே, தாயார்‌ சரியாக
நிமிர்ந்து அவனைப்‌ பார்க்கவில்லை. மூச்சு விடுவதில்‌ உள்ள சிரமத்தை
அவன்‌ உணர்ந்திருநீதான்‌. சமையலுக்குத்‌ தேவையான நீர்‌ விறகு
எல்லாவற்றையும்‌ எடுத்து வைத்துவிட்டுத்தான்‌ பாடசாலைக்குச்‌
சென்றான்‌. பல்கலைக்கழகக்‌ காலத்தில்‌ எப்படியெல்லாம்‌ தாயார்‌
தனிமையில்‌ வேதனைப்பட்டிருப்பார்‌ என்ற எண்ணங்கள்‌ ஒவ்வொன்றாக
வந்து போகவும்‌ மூன்று கிலோமீற்றர்‌ தூரம்‌ எவ்வாறு கடந்தது என்பது
அவனுக்குத்‌ தெரியவில்லை.

வீட்டை அண்மிக்கும்போது தான்‌ எதிரும்‌ புதிருமாக வசந்தியைப்‌
பார்த்தான்‌. கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக அவளைப்‌ பார்த்ததில்லை.
எவ்வளவு வளர்ந்துவிட்டாள்‌. இப்போது சேலை கட்டிய மாது. வண்டி
வசந்தியின்‌ அருகில்‌ சென்று நின்றது.

“என்ன வசந்தி உம்மை அடையாளம்‌ காண முடியவில்லையே”
ஒரேயடியாய்‌ மாறிவிட்டாய்‌? என்றான்‌. அப்படியா? என்று பதில்‌
கொடுத்தாள்‌. வசந்தி நிமிர்ந்து பார்த்தாள்‌., கண்கள்‌ பேசின. பழைய
நினைவுகளைத்‌ தங்களுக்குள்‌ மீட்டுக்‌ கொண்டனர்‌. மெளனத்தைக்‌
கலைத்தபடி புதிய வாத்தியார்‌ தொழில்‌ எப்படி என்றாள்‌ கஇண்டலாக.
இன்றைக்குப்‌ படிப்பு ஒன்றும்‌ இல்லை. அது சரி நீர்‌ என்ன இந்த
நேரத்தில்‌ என்று இழுத்தான்‌ முகுந்தன்‌. பாலர்‌ பாடசாலை முடிந்து
வீட்டிற்குப்‌ போகிறேன்‌ என்று கூறிய வசந்தி, ரமணனின்‌ வருகையைக்‌
கண்டதும்‌ விடைபெற்றுக்கொண்டாள்‌. ரமணன்‌ வந்ததும்‌, "அக்கா அக்கா
இவர்தான்‌ எங்களுடைய புதிய விஞ்ஞான ஆசிரியர்‌. இண்டைக்குத்தான்‌
புதுசா வந்தவர்‌. எல்லோருக்கும்‌ நல்ல சந்தோசம்‌" என்றான்‌. வசந்தி
இதைக்‌ கேட்டதும்‌ ஒரக்கண்ணால்‌ முகுநீதனைப்‌ பார்த்தாள்‌.


Page 182 மாற்றம்‌

தாயின்‌ நினைவில்‌ நனைந்து போய்‌ இருந்த முகுந்தன்‌ கையை
அசைத்து விடைபெற்றுக்கொண்டு வேகமாக வீட்டை அடைந்தான்‌.
வண்டியை நிறுத்திவிட்டு உடைமாற்றச்‌ சென்றவன்‌ தாயார்‌ ஆழ்ந்த
உறக்கத்தில்‌ இருப்பதைக்‌ கண்டான்‌. ஓசைப்படாமல்‌ கஇணற்றடிக்குச்‌
சென்று மேனியைக்‌ கழுவிக்கொண்டு சாமிப்படத்‌ தட்டின்‌ முன்‌ நின்று
தாயாருக்காக வேண்டிக்‌ கொண்டான்‌. திரும்பியவன்‌ , “முகுந்தா பள்ளிக்‌
கூடம்‌ எப்படி?” என்ற தாயாரின்குரல்‌ கேட்டுச்‌ சிரித்தான்‌. "அம்மா
நான்‌ முந்திப்‌ படித்த பள்ளிக்கூடம்‌ தானே! பல ஆசிரியர்கள்‌ ஓய்வு
பெற்றுவிட்டனர்‌. சிறியவர்கள்‌ பெறியவர்களாகிவிட்டார்கள்‌.
இப்போதுள்ள அதிபரும்‌ நல்ல ௨எக்கமுள்ளவராகக்‌ காணப்படுவதால்‌,
எனது பணி நல்ல முறையில்‌ நிறைவேறும்‌ என்ற நம்பிக்கை” என்றான்‌.
“முகுந்தா நீ இந்த ஊருக்கே வருவாய்‌ எனறு நம்பியிருக்கவில்லை.
எல்லாம்‌ அந்தப்‌ பிள்ளையாரின்‌ அருள்‌ தான்‌ ! உன்‌ அண்ணனும்‌
அப்பாவும்‌ உயிரோடிருந்திருந்தால்‌ எவ்வளவு சுந்தோஷப்பட்டிருப்பார்கள்‌”'
என்று ஒரு பெரிய பெருமூச்சை விட்டு எழுந்தாள்‌ முகுந்தனின்‌ தாயார்‌
சிவமணி.

“அம்மா நீங்கள்‌ சொல்வது முழுக்க முழுக்கச்‌ சரி. அப்பாவை
நினைக்கும்‌ போது சந்தோஷமாகவிருக்கிறது'"' என்றான்‌ முகுந்தன்‌.
“சரி இப்ப நீ சாப்பிடவா”, என்று கூறிக்கொண்டு சமையலறைக்கு
நடந்தாள்‌ தாய்‌.

“அம்மா உங்கள்‌ உடல்‌ நிலையையும்‌ கவனிக்காது ஏன்‌ இவ்வளவு
கறிகள்‌ சமைத்தீர்கள்‌ 2?” இரண்டு மூன்று போதுமே "கடைச்சாப்பாடு,
விடுதிச்‌ சாப்பாடு எண்டு என்னத்தைச்‌ சாப்பிட்டாய்‌, இப்போ என்ரை
கறியையும்‌ கொஞ்சம்‌ சாப்பிட்டுப்‌ பாரேன்‌”

"அம்மாவின்‌ கறிக்கு அவைகள்‌ சரிநிகர்‌ சமானமாகமுடியுமா என்ன?"
என்று கூறி ஒரு பிடி பிடித்தான்‌ முகுந்தன்‌. எழுந்து கை கழுவிவிட்டு
வந்ததும்‌, ரமணன்‌ அங்கு ஓடிவந்தான்‌. "என்ன ரமணன்‌ என்ன அவசரம்‌ 9
என்று கேட்க, அவனும்‌ “இன்று வாசிக சாலையில்‌ கூட்டமாம்‌, உங்களை
ஆறு மணிக்கு வரட்டாம்‌” என்று கூறிச்‌ சென்றான்‌.

முகுந்தனின்‌ எண்ணங்கள்‌ வாசிகசாலையைப்‌ பற்றி ஒருமுறை
வட்டமிட்டன. அங்குள்ள பாலர்‌ பாடசாலையில்தான்‌ வசந்தி படிப்‌
பிக்கிறாள்‌. அவளும்‌ நிர்வாகத்தில்‌ ஒர்‌ உறுப்பினர்‌. எனவே அவளும்‌
ஆறுமணிக்கு வருவாள்‌. பார்க்கலாம்‌ கதைக்கலாம்‌ என்ற எண்ணத்தில்‌,
சாய்மனைக்‌ கதிரையில்‌ சாய்ந்தவன்‌ கண்ணயர்ந்துவிட்டான்‌.


Page 192
வாசிப்பு விரிவாக்கத்திற்கு ஒரு வாசிகசாலை

“முகுந்தா முகுந்தா ...நேரம்‌ ஐந்தரை” என்று மகனைக்‌ தட்டி எழுப்பினாள்‌
சிவமணி. முகுந்தன்‌ எழுந்து சுவர்க்‌ கடிகாரத்தைப்‌ பார்த்தான்‌. உடன்‌
முகம்‌ கழுவுவதற்காகக்‌ கணற்றடிக்குச்‌ சென்றான்‌. ஒழுங்கையில்‌ யாரோ
போவது போல்‌ தெரிந்தது. ஓடிச்‌ சென்று வேலிக்கு மேலால்‌ எட்டிப்‌
பார்த்தான்‌. சந்தேகமேயில்லை வசந்தி தான்‌ போகிறாள்‌. நிர்வாகசபைக்‌
கூட்டத்திற்குச்‌ சல ஆயத்தங்கள்‌ செய்ய வேண்டுமல்லவா, அது தான்‌
நேரத்தோடு செல்கிறாள்‌. வீட்டிற்குள்‌ சென்றவன்‌ உடைமாற்றிக்கொண்டு
தாயார்‌ தயாறித்த தேநீரைக்‌ குடித்தான்‌. மகனின்‌ அவசரத்தைக்‌ கண்ட
சிவமணி, கொடுப்புக்குள்‌ சிரித்த படி என்ன அவசரம்‌ தம்பி எல்லோரும்‌
ஆறு மணிக்கு வந்து விடுவார்களா என்ன? ”பதற்றப்படாமல்‌ செல்‌”
என்றாள்‌ தாயார்‌. முகுந்தன்‌ வீட்டில்‌ இருந்து மூன்று வீடுகள்‌ கடந்தால்‌,
வாசிகசாலை. நடந்தே அங்கு சென்று சேர்ந்தான்‌ முகுந்தன்‌. அன்றைய
புதினத்தாள்களைப்‌ புரட்டிப்‌ பார்த்தான்‌. பின்புறமாகவுள்ள பாலர்‌
வகுப்புக்‌ கதவைத்‌ திறந்து கொண்டு வந்தாள்‌ வசந்தி. முகுந்தனைக்‌
கண்ட வசந்தி தன்னைச்‌ சுகாகறித்துக்‌ கொண்டு....

“என்னஆறு மணிக்குத்‌ தானே கூட்டம்‌, ஆறு மணிக்கும்‌ ஆட்கள்‌ வந்து
சேருவார்களோ தெரியாது” எதாவது பேச வேண்டும்‌ என்பதற்காகவே
கேட்டாள்‌ வசந்தி. மனதில்‌ ஒரு வித கிழுகிழுப்பு “எதாவது புதினம்‌
அறியலாம்‌ என்றுதான்‌ வந்தேன்‌” என்று ஒரு பொய்யைக்‌ தெரிவித்தான்‌
முகுந்தன்‌.

“புதினம்‌ அறிய மட்டும்‌ தானோ?" என்று கூறி கடைக்‌ கண்களால்‌
பார்த்தாள்‌ வசந்தி. முகுந்தனின்‌ அங்க அசைவுகள்‌ அவனது பொய்யு
ரையைப்‌ பறைசாற்றின.

"அது சரி வசந்தி, பாலர்‌ வகுப்பில்‌ எத்தனை பிள்ளைகள்‌
படிக்கிறார்கள்‌?” என்று கதையை மாற்றினான்‌. 28 பிள்ளைகள்‌ என்றாள்‌
வசந்தி. "பிள்ளைகள்‌ ஆங்கிலம்‌ படிக்கவேண்டும்‌ என்பது பெற்றோரின்‌
விருப்பம்‌” என்றாள்‌. “அதற்கென்ன நீர்‌ படிப்பிக்கலாம்‌ தானே” என்றான்‌
முகுந்தன்‌. “வளர்ந்த பிள்ளைகளும்‌ ஆங்கிலம்‌ படிக்க விரும்புகிறார்கள்‌”.


Page 204 மாற்றம்‌

“ஓர்‌ ஆங்கில வகுப்பைத்‌ தொடங்கினால்‌ போச்சு”. "கூட்டத்தில்‌ இது
பற்றிக்‌ கதைப்பார்கள்‌ என்று நினைக்கிறேன்‌ ” என்றாள்‌ வசந்தி. பெறிய
மேசையில்‌ உள்ள பத்திரிகைகள்‌ எல்லாவற்றையும்‌ மூலையில்‌ உள்ள
சிறிய அலுமாரியின்‌ மேல்‌ வைத்தாள்‌. மேசைக்கு ஒரு விறிப்பை விறித்து
ஒரு பூச்சாடியையும்‌ அதன்‌ மேல்‌ வைத்தாள்‌.

எல்லா ஒழுங்குகளையும்‌ செய்து முடிக்கவும்‌, தலைவர்‌ சிதம்பரப்‌
பிள்ளை ஆசிரியர்‌ அங்கு வரவும்‌ சரியாகவிருந்தது. வந்ததும்‌ வராததுமாக
வசந்தியைக்‌ கூப்பிட்டு, இன்று கூட்டத்தில்‌ கதைக்க வேண்டியதைக்‌
கேட்டு அறிந்தபின்‌, முகுந்தனின்‌ புதிய பாடசாலை பற்றி விசாறித்து
அறிந்து கொண்டார்‌. முகுந்தனும்‌ தான்‌ கடமையேற்ற சரஸ்வதி
மகா வித்தியாலய அதுபரைப்பற்றிக்‌ கூறினான்‌. "அதிபர்‌ சிவநாதன்‌
எனக்குத்‌ தெரிந்தவர்‌, மிகவும்‌ ஊக்கமுள்ளவர்‌. அவரது காலத்தில்‌
அந்த வித்தியாலயம்‌ மிகவும்‌ உயர்ந்த நிலையை அடையும்‌" என்று
வாழ்த்துக்கள்‌ கூறினார்‌ தலைவர்‌. "விஞ்ஞான ஆசிரியர்‌ ஒருவர்‌
தேவை என்று என்னிடம்‌ அதிபர்‌ சிவநாகன்‌ கேட்டபோது, நான்‌ உனது
படிப்பு முடிந்துவிட்டது என்றும்‌ முடிந்தால்‌ உமது நியமனத்திற்கு
ஆவன செய்யும்‌ படியும்‌ கூறினேன்‌” என்றார்‌. "அதிபர்‌ சிவநாதன்‌
கல்வியதிபதிக்கு மிகவும்‌ நெருக்கமானவர்‌. எனவே உனது நியமனமும்‌
நல்ல படியாக நடந்தேறிவிட்டது. நீர்‌ இங்கு வந்தது இந்தக்‌ கிராமத்தின்‌
நல்ல காலந்தான்‌” என்று முகுந்தனை வாழ்த்தினார்‌ தலைவர்‌.

முகுந்தன்‌ எல்லாவற்றையும்‌ கேட்டுச்‌ சிறித்தபடி வசந்தியைப்‌
பார்த்தான்‌. வசந்தியும்‌ தருணம்‌ பார்த்து, சிவமணி அன்ரியின்‌ சுகம்‌
விசாரித்தாள்‌. நேற்றுச்‌ சற்று சுகயீனமாக விருந்தது, இன்று எல்லாம்‌
சரியாகிவிட்டது" என்றும்‌, பதில்‌ கூறினான்‌ முகுந்தன்‌.

முகுந்தன்‌: உட்பட வரவேண்டிய உறுப்பினர்கள்‌ பத்துப்‌ பேரில்‌
ஏழுபேர்‌ வந்துவிட்டார்கள்‌ என்று செயலாளர்‌ தம்பிராசா வந்து கூறினார்‌.
சிதம்பரப்பிள்ளை ஆசிறியரும்‌ கூட்டத்தை ஆரம்பிக்கலாம்‌ என்றார்‌.

உறுப்பினர்கள்‌ எல்லோரும்‌ பெரிய மேசையைச்‌ சுற்றி எழுந்து
நின்றார்கள்‌. மண்மீட்புப்‌ போரில்‌ மறைந்த மாவீரர்கட்கும்‌ ஏனை

்‌ யோருக்கும்‌ மெளன வணக்கம்‌ செலுத்தப்பட்டது. செயலர்‌ தம்பிராசா

வின்‌ தேவார புராண பாராயணத்தின்‌ பின்‌ எல்லோரும்‌ அமர்ந்தார்கள்‌.
செயலரின்‌ அறிக்கையும்‌ பொருளாளரின்‌ அறிக்கையும்‌ வாக்கப்பட்டு
ஏற்றுக்கொள்ளப்பட்டன. தலைவர்‌ தனது உரையில்‌ ஆண்டுவிழாவில்‌
பங்கு பற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்தார்‌. விசேடமாக வசந்தியை
கலை நிகழ்ச்சிகளுக்காகப்‌ பாராட்டினார்‌. பிள்ளைகளின்‌ ஊக்கத்தைப்‌

ன


Page 21வாசிப்பு விரிவாக்கத்திற்கு ஒரு வாசிகசாலை த்‌

பாராட்டியதுடன்‌, பெற்றோரின்‌ வருகையையும்‌ பெரிதும்‌ புகழ்ந்து
பேசினார்‌. முகுந்தனின்‌ வருகையைக்‌ குறிப்பிட்ட தலைவர்‌, இனிமேல்‌
தான்‌ எமது வாசிகசாலை விளையாட்டில்‌ பல சாதனைகளைப்‌ புரியப்‌
போகிறது. சில காலங்களுக்கு முன்பு எமது கரப்பந்து, காற்பந்து
அணிகள்‌ பெற்ற வெற்றிகளை நினைவுகூர்ந்தார்‌. இவற்றுக்குக்‌
காரண கர்த்தாவாகவிருந்த முகுந்தன்‌ இப்போது மீண்டும்‌ எங்களுடன்‌
இருக்கிறார்‌. அவரை நாம்‌ நல்ல முறையில்‌ பயன்படுத்திக்‌ கொள்ள
வேண்டும்‌ எனக்கூறினார்‌.

பல பிள்ளைகள்‌ ஆங்கிலக்‌ கல்விக்காக அலைகிறார்கள்‌ என்று
ஆரம்பித்த செயலர்‌ தம்பிராசா, ஆங்கில வகுப்பை உடனடியாக ஆரம்பிக்க
வேண்டும்‌ எனக்கூறினார்‌. மாலை நேரத்தில்‌ பாலர்‌ வகுப்பறையை
இதற்காகப்‌ பயன்படுத்தலாம்‌ என்றும்‌, மேற்குப்‌ புறத்தில்‌ உள்ள
இடத்தை ஒரு மறைப்புடன்‌ உயர்வகுப்பு ஆங்கிலத்திற்காக பயன்‌
படுத்தலாம்‌ என்றும்‌ ஆலோசனை கூறினார்‌. எல்லோரும்‌ இக்‌ கருத்தை
ஆதரித்ததுடன்‌, ஆங்கில வகுப்பிற்குப்‌ பொறுப்பாக முகுந்தனை
ஏகமனகாக ஏற்றுக்கொண்டனர்‌. விளம்பரப்‌ பலகையில்‌ இன்றே ஆங்கில
வகுப்புப்‌ பற்றிய குறிப்பு இடம்‌ பெறும்‌ என்றும்‌, விரும்பும்‌ மாணவர்கள்‌
பாலர்‌ வகுப்பில்‌ பதிவு செய்யலாம்‌ என்றும்‌ செயலர்‌ கூறினார்‌.

ஆங்கிலப்‌ புத்தகங்கள்‌ பயிற்சிகள்‌ போன்றவற்றின்‌ பற்றாக்குறை
பற்றிக்கூறிய முகுந்தன்‌, சில விளையாட்டு உபகரணங்கள்‌ தேவை
என்பதையும்‌ கூறினான்‌.

அடுத்த விடயமாக தலைவர்‌ கைத்தறி ஆரம்பிப்பது பற்றி விரிவாக
எடுத்துக்‌ கூறினார்‌. பலநோக்குக்‌ கூட்டுறவு முகாமையாளருடன்‌
தான்‌ ஏற்கனவே கதைத்ததாகவும்‌, இரு தறிகள்‌ நிர்மாணிக்கப்பட
விருப்பதாகவும்‌ எடுத்துக்‌ கூறினார்‌. தகுந்த இடத்தைத்‌ தெரிவு செய்த
பின்னர்‌ மேலதிக விபரம்‌ அடுத்த கூட்டத்தில்‌ தெரிவிக்கப்படும்‌
என்றார்‌.

நான்கு அரிக்கன்‌ லாம்புகளை வசந்தி நன்கு சுத்தம்‌ செய்து ஏற்றி
வைத்தாள்‌. எங்கள்‌ பனந்தோப்புக்‌ கிராமத்திற்கு எப்போது தான்‌
மின்சாரம்‌ வருமோ என்று சற்று சலித்துக்‌ கொண்டாள்‌. ஏன்‌ ஒரு மின்‌
பிறப்பாக்கியை(ஜெனரேட்டரை) வாசிகசாலை மூலம்‌ வாங்கினால்‌,
வாடகைக்கும்‌ விடலாம்‌ என்ற கருத்தை ஆமோதகித்த தலைவர்‌,
“மூயற்சி இருவினையாகும்‌” என்று சுருக்கமாகக்‌ கூறி கூட்டத்தை
நிறைவுக்குக்‌ கொண்டு வந்தார்‌ செயலர்‌ தம்பிராசாவின்‌ நன்றியுடனும்‌,
தகேவாரபுராணத்துடனும்‌ கூட்டம்‌ நிறைவுற்றது.


Page 226 மாற்றம்‌

எல்லோரும்‌ வீட்டிற்குச்‌ செல்ல வசந்தி மட்டும்‌ சற்று தாமதித்து
நிற்பதைக்‌ கண்ட முகுந்தன்‌ வீடு செல்ல மனமில்லாது நின்றான்‌. “ரமணன்‌
விளக்குடன்‌ வருவான்‌, நீங்கள்‌ போங்கோ” என்றாள்‌ வசந்தி. சற்று
நேரத்தில்‌ ரமணன்‌ வந்ததும்‌ மூவரும்‌ வீடு நோக்கி நடந்தனர்‌. இருட்டிலும்‌
வசந்தியின்‌ முகத்தைப்பார்த்து ரசித்தபடி பல எண்ணங்களுடன்‌ நடந்தான்‌
முகுந்தன்‌. தனது வீடு வந்ததும்‌ “மீண்டும்‌ சந்திக்கும்‌ வரை வணக்கம்‌”
என்று கூறி விடைபெற்றுக்‌ கொண்டான்‌.....


Page 233

காசுக்காகவா கனடா மாப்பிள்ளை?

வசந்தியும்‌ ரமணணும்‌ உள்ளே நுழையும்‌ போது கிணற்றடியில்‌ நின்ற
நடராசர்‌ ரமணனைக்‌ கூப்பிட்டார்‌. கணற்றடிக்குச்‌ சென்ற ரமணனை
மேடையில்‌ காய வைக்கப்பட்ட தட்டுகளை உள்ளே எடுத்துச்‌
செல்லும்படி பணித்தார்‌. அத்துடன்‌ ஆட்டுக்கொட்டிலில்‌ ஆடுகளுக்கு
வேண்டிய குழைகளை கட்டித்தொங்கவிடும்‌ படியும்‌ கூறினார்‌.

“உன்‌ அக்காவையும்‌ துணைக்குக்‌ கூட்டிக்கொண்டு போ ” என்றார்‌.
நடராசர்‌ குளித்துவிட்டுச்‌ செல்லவும்‌ அவர்‌ மனைவி கண்மணி பாலைக்‌
கறந்து கொண்டு சமையல்‌ அறைக்குள்‌ சென்றாள்‌. வசந்தி உடை
மாற்றிவிட்டு வந்து ரமணணுடன்‌ வெளி வேலைகளை முடித்துக்‌
கொண்டாள்‌. இருவரும்‌ முகம்‌ கழுவிக்கொண்டு கும்பிடச்‌ சென்‌
றனர்‌. ்‌

நடராசர்‌ சுவர்க்‌ கடிகாரத்தைப்‌ பார்த்துக்‌ கொண்டு, கண்மணி
கண்மணி... என்று கூப்பிட்டார்‌.

“என்னப்பா அவசரம்‌ பிள்ளையள்‌ கும்பிடுகிறார்கள்‌ ம்‌ வாறன்‌”
“நேரம்‌ ஒன்பதரை சாப்பாட்டை எடன்‌”. சாப்பாடு என்று கேட்டதும்‌
ரமணனும்‌ வசந்தியும்‌ மேசைக்கு வந்துவிட்டார்கள்‌. வசந்தி தட்டுகளையும்‌
தண்ணீரையும்‌ எடுத்து வைத்தாள்‌. கண்மணி பிட்டையும்‌, முட்டைப்‌
பொறியலையும்‌ கொண்டுவந்தாள்‌. வசந்தி கறிகளைக்‌ கொண்டுவந்தாள்‌.
கண்மணி சாப்பாட்டைப்‌ பறிமாறினாள்‌.

“அப்பா அடுத்த கழமையிலிருந்து ஆங்கில வகுப்பு வாசிகசாலையில்‌
ஆரம்பிக்கட்‌ போகிறது" என்றாள்‌ வசந்தி. "ரமணனும்‌ படிக்கலாம்‌
தானே அப்பா” என்றாள்‌.

“புதுச்‌ சேரிடம்‌ நான்‌ எப்பவோ சொல்லிப்‌ போட்டேன்‌”
என்றான்‌ ரமணன்‌. "எனக்குத்‌ தெரியும்‌, ரமணன்‌ எல்லாவற்றிலும்‌
முன்னுக்குத்தான்‌” என்றார்‌ நடராசர்‌. எனது வண்டிலைத்‌ திருத்தி,
ரயர்‌ போட்டுப்‌ பெரிதாக்கினால்‌, பெரும்‌ சுமையையும்‌ ஏற்றலாம்‌,
வாடகைக்கும்‌ விடலாம்‌. சந்தியில்‌ இப்போ திறந்திருக்கிற இரும்பு


Page 248 மாற்றம்‌

வேலைத்தலம்‌ மிகவும்‌ வசதியானது. நாளைக்கே இந்த வேலையை
முடிக்கவேண்டும்‌. “வசந்தி நீ ரமணனுக்கு வேண்டிய புத்தகம்‌ கொப்பி
களை வாங்கிக்கொடு, ” என்றார்‌ நடராசர்‌.

“அம்மா நீங்கள்‌ சாப்பிடுங்கோ, நான்‌ பாத்திரங்கள்‌ எல்லாவற்றையும்‌
கழுவி வைக்கிறேன்‌” என்றாள்‌ வசந்தி. கண்மணி சாப்பிட்டுக்‌ கொண்டே,
. “இஞ்சாருங்கோ”...... என்றாள்‌.

“என்னென்று சொல்லன்‌...” இல்லையப்பா அண்ணற்றை பொடியன்‌
ஆனந்தன்‌ கனடாவில்‌ இருந்து வந்திருக்கிறானாம்‌. நேற்றுத்தான்‌
வந்தவனாம்‌.. “அதற்கென்ன இப்ப” !.. என்று அதட்டினார்‌ நடராசர்‌.
கண்மணியின்‌ மனதில்‌ உள்ளதை குறிப்பால்‌ உணர்ந்து கொண்ட
நடராசர்‌ தொடர்ந்தார்‌.

“இவ்வளவு காலமாக நாம்‌ இங்கு பட்ட துன்பங்களைக்‌ கண்டும்‌
காணாதவர்களாக இருந்த உன்ர அண்ணர்‌, இப்ப வசந்தி வளர்ந்துவிட்டாள்‌
என்று சொந்தம்‌ கொண்டாடுகின்றாரோ?” என்று கேட்டார்‌.

இதனைச்‌ கேட்ட வசந்தி மனதில்‌ சற்று ஆறுதல்‌ அடைந்தவளாகத்‌
தான்‌ படுக்கப்‌ போகிறேன்‌ என்று தாயாநினதும்‌ தகப்பனாரினதும்‌
கால்களைக்‌ தொட்டு வணங்கிவிட்டுச்‌ சென்றாள்‌. ரமணன்‌ ஏற்கனவே
நித்திரைக்குப்‌ போய்விட்டான்‌. தனது தகப்பனாரின்‌ எண்ணங்களை
உணர்ந்த வசந்தி பிள்ளையாரை நினைத்து, முகுந்தனின்‌ உறவு நீடிக்கவும்‌,
அவனது முயற்சிகள்‌ வெற்றி பெறவேண்டும்‌ என்று வேண்டுதல்‌

செய்தாள்‌. முகுந்தனின்‌ நினைவுகள்‌ அவள்‌ மனதில்‌ அலை அலையாகப்‌
படம்‌ போல்‌ ஓடிக்கொண்டிருந்தன. அவற்றுடன்‌ அவள்‌ அயர்ந்து
தூங்கிவிட்டாள்‌.

பிள்ளைகள்‌ நித்திரைக்குச்‌ சென்றுவிட்டார்கள்‌ என்பதை உணர்ந்த
கண்மணி, பாலைக்‌ கொடுத்துவிட்டு ஏதோ கூற எத்தனித்தாள்‌.

“என்னவென்றாலும்‌ சொல்லித்‌ தொலை ” என்றார்‌ நடராசர்‌. "ஒன்றும்‌
இல்லையப்பா”, “ஆனநீதன்‌ நல்ல பொடியன்‌. இப்படிப்பட்டவன்‌ எமது
குடும்பத்திற்குக்‌ இடைக்காது".

“அண்ணனுக்கும்‌ அண்ணிக்கும்‌ நல்ல விருப்பம்‌. நீங்கள்‌ ஆனந்தனின்‌
விருப்பத்தை அறிந்து கொண்டால்‌ நல்லது ". "இஞ்சாரப்பா..வடலி
வளர்த்துக்‌ கள்ளுக்குடிக்க எண்ணாதே, ".... "நீ ஒன்றும்‌ மனப்பால்‌
குடிக்காதே. இந்தக்காலம்‌ இளசுகளின்‌ காலம்‌, எதற்கும்‌ நீ கொஞ்சம்‌
பொறுமையாக இரு” என்றார்‌ நடராசர்‌.


Page 25காசுக்காகவா கனடா மாப்பிள்ளை? 9

"உங்களுக்கு நான்‌ என்ன சொன்னாலும்‌ பிடிக்காதே” "நானும்‌

என்‌ பிள்ளையின்‌ நன்மைக்குத்தானே சொன்னேன்‌” ”காசுக்காகவா

இது? கனடா மாப்பிள்ளைக்குக்‌ கனவு காணாதே” என்று கூற அமைதி
குடிகொண்டது.


Page 264
கணினியுகத்தில்‌ ஒரு கணினி அன்பளிப்பு

வசந்தியிடமும்‌ ரமணனிடமும்‌ விடைபெற்றுச்‌ சென்ற முகுந்தன்‌,
முகம்‌ கழுவியபின்‌ இறை வணக்கத்திற்காக சுவாமிப்படங்கள்‌ இருந்த
இடத்திற்குச்‌ சென்றான்‌. தனது வணக்கத்தை மூடித்துக்‌ கொண்டு
இரும்பும்போது தான்‌ தனது மூத்த சகோதரனின்‌ சீருடைதரித்த படத்‌
தைப்பார்ச்து ஒரு கணம்‌ நின்று யோசித்தான்‌. இன்று அண்ணா இருந்தால்‌
எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பார்‌. அத்துடன்‌ அப்பாவும்‌ எவ்வளவு
ஆனந்தப்பட்டிருப்பார்‌. “என்ன தம்பி முகுந்தா ஏதோ ஆழமாக
யோசிப்பது போலக்‌ தெறிகிறது” என்று தாயார்‌ கேட்டார்‌.

"அம்மா / நாங்கள்‌ அப்பாவுடனும்‌ அண்ணாவுடனும்‌ சந்தோஷமாக
வாழக்‌ கொடுத்து வைக்கவில்லையே. அப்பா இருந்திருந்தால்‌ எமது
பூர்வீக வரலாற்றை எல்லாம்‌ கேட்டுத்‌ தெரிந்து கொண்டிருப்பேன்‌.
வருத்தப்பட்டு என்ன செய்வது நாம்‌ இப்பொழுது அனுபவிக்கிறோம்‌.
எமது தேசத்தையும்‌ மக்களையும்‌ எவ்வளவு தூரம்‌ ஏமாற்றினார்கள்‌
எமது பழங்கால அரசியல்‌ வாதிகள்‌. அவர்கள்‌ விட்டதவறுகள்‌
எல்லாவற்றுக்கும்‌ சேர்த்து எம்மை எவ்வளவுக்கு நலிவுறச்செய்து
மண்டியிடவைக்கலாமோ, அவ்வளவு தூரம்‌ சிங்கள அரசு மனப்பால்‌
குடிக்கிறது” என்றான்‌ முகுந்தன்‌. சாப்பிடும்‌ போது வாசிகசாலையில்‌
நடந்தவற்றைத்‌ தாயாரிடம்‌ கூறினான்‌. ஆங்கில வகுப்பு ஆரம்பிப்பது
பற்றிக்‌ கூறிய போது, “அப்பாவின்‌ ஆங்கில அறிவு உனக்கு மிகவும்‌
துணையாகவிருக்கும்‌. இந்த ஊர்ப்‌ பிள்ளைகள்‌ தான்‌ மிகவும்‌ குளப்‌
படிக்காரர்‌ நல்லமுறையில்‌ அவர்களைக்‌ கட்டுப்படுத்த வேண்டும்‌”
என்றாள்‌ சிவமணி.

அம்மாவிடம்‌ விடை பெற்று படுக்கச்‌ சென்றவனுக்கு வசந்தியின்‌
நினைவுகள்‌ தனிமையான எண்ணங்கள்‌ அலை மோதின. அவளின்‌
வதனத்தை மீண்டும்‌ மீண்டும்‌ அசை போட்டவண்ணம்‌ நித்திரைக்குச்‌
சென்றான்‌.

அதிகாலை ஐந்தரை மணிக்கே தனது வேலைகளைச்‌ செய்யத்‌
தொடங்கினான்‌. சமையல்‌ அறையைச்‌ சுத்தம்‌ செய்து, பாத்திரங்கள்‌


Page 27கணினியுகத்தில்‌ ஒரு கணினி அன்பளிப்பு 1]

யாவற்றையும்‌ கழுவி வைத்துவிட்டுக்‌ குளிப்பதற்காக கணற்றடிக்குச்‌
சென்றான்‌. தாயாரின்‌ நிலையை நினைத்துத்‌ தொட்டியையும்‌ நீரால்‌
நிரப்பினான்‌. குளிக்கும்‌ போது வடிந்து செல்லும்‌ நீர்‌ வாழைகளுக்குச்‌
செல்லக்கூடியவாறு வாய்க்காலைச்‌ சரிசெய்தான்‌. அப்போதுதான்‌
நித்திரைவிட்டு எழுந்த சிவமணி, மகனின்‌ செயல்கள்‌ யாவற்றையும்‌
அவதானித்து மனம்‌ பூரிப்படைந்தாள்‌. இவனுக்கு வாழ்க்கைத்‌ துணையாக
வருகிறவள்‌ மிகவும்‌ புண்ணியம்‌ செய்தவளாகத்தான்‌ இருப்பாள்‌ என்று
மனதுள்‌ எண்ணிக்‌ கொண்டாள்‌.

"முகுந்தா நீ ஏன்‌ இவ்வளவு தூரம்‌ கஷ்டப்படுகிறாய்‌, எனக்கும்‌
சொற்ப வேலையைச்‌ செய்வதற்கு விட்டுவிடேன்‌” என்றாள்‌.

"அம்மா உங்கள்‌ உடல்‌ நிலைக்குச்‌ சமையல்‌ வேலையைக்‌
கவனித்தால்‌ போதும்‌ ", என்றான்‌ முகுந்தன்‌. குளித்து முடித்தபின்‌, சிறிய
குவளையில்‌ நீரும்‌ பூவும்‌ கொண்டுசென்று தீபம்‌ ஏற்றி இறைவணக்கம்‌
செய்தான்‌. நேரம்‌ காலை 6.30 மணியிருக்கும்‌. மகனின்‌ மேசையில்‌
தேநீர்‌ கோப்பையைக்‌ கொண்டு வந்து வைத்தாள்‌ சிவமணி. தேநீரரைச்‌
சுவைத்தபடி அன்றைய பாடங்கள்‌ சம்பந்தமான சில குறிப்புகளை
எழுதிக்‌ கொண்டான்‌. எல்லாவற்றையும்‌ தனது பையில்‌ வைத்துத்‌
துவிச்சக்கரவண்டியில்‌ கொழுவினான்‌. தாயார்‌ தயாறித்த உப்புமாவைச்‌
சுவைத்துச்‌ சாப்பிட்டான்‌.

பள்ளிக்கூடத்தில்‌ ஆசிரியர்‌ கூட்டம்‌ நடந்தால்‌ சில சமயம்‌ பிந்தி .
வருவதாகக்‌ கூறிப்‌ புறப்பட்டான்‌ முகுந்தன்‌. சரஸ்வதி மகாவித்தியாலயம்‌
அன்று வெள்ளிக்கிழமையாதலால்‌ சுறுசுறுப்பாக இயங்கியது. புதி
தாகத்‌ தெரிவாகிய வகுப்புத்‌ தலைவர்கள்‌ மாணவர்களை ஒழுங்காக
நிரைப்படுத்தி, அதிபரின்‌ காரியாலயத்தின்‌ முன்புள்ள முற்றத்தில்‌
கூடச்‌ செய்தார்கள்‌. ஆசிரியரும்‌ மாணவர்களின்‌ பின்னர்‌ வரிசையாக
நின்றார்கள்‌. தேவார பாராயணத்துடன்‌ காலைக்‌ கூட்டம்‌ ஆரம்பமானது.
அதிபர்‌ இரு.சிவநாதனின்‌ அறிமுகக்‌ குறிப்புடன்‌ ஆசிரியர்‌ முகுந்தன்‌
உரையாற்றினான்‌.

இருக்குறளில்‌ உள்ள கடவுள்‌ வாழ்த்து என்னும்‌ அதிகாரத்தில்‌ உள்ள
சில குறள்களை விளக்கிக்கூறி மாணவர்களது ஒழுக்கம்‌ பற்றி விரிவாக
எடுத்துக்‌ கூறினான்‌ முகுந்தன்‌... "ஒழுக்கம்‌ உயிரினும்‌ ஒம்பப்படும்‌ ''
என்றான்‌. ஒவ்வொருவரும்‌ நேரத்தைச்‌ சரியான முறையில்‌ திட்டமிட்டுப்‌
பயன்படுத்துவதன்‌ அவசியத்தை வுலியுறுத்தி, எமது நாட்டிற்காக நாம்‌
எவ்வளவோ சாதிக்க முடியும்‌ எனபதையும்‌, நமது உள்ளத்தில்‌ நாம்‌
தன்னிறைவு பெறவேண்டும்‌ என்ற மனத்துடிப்பு இருக்க வேண்டியதன்‌


Page 2872 மாற்றம்‌

அவசியத்தையும்‌ மிகவும்‌ எளிமையாக எடுத்துக்‌ கூறினான்‌. அனைவரும்‌
முகுந்தனின்‌ உரையை மிகக்‌ கவனமாகச்‌ செவிமடுத்தனர்‌. அடுத்து உரை
நிகழ்த்திய அதுபர்‌ மூகுந்தனின்‌ உரையை மிகவும்‌ மனமகிழ்வுடன்‌
வரவேற்று நன்றி கூறினார்‌.

பாடசாலையின்‌ அன்றாட வேலைகள்‌ ஆரம்பமாகின. மாணவர்கள்‌
யாவரும்‌ முகுந்தனின்‌ உரையைப்‌ பற்றியே பேசிக்‌ கொண்டார்கள்‌.
மாணவர்கள்‌ மத்தியில்‌ ஓர்‌ மனப்பூரிப்பு ஏற்பட்டதை, அவர்களின்‌
முகங்கள்‌ வெளிப்படுத்தி நின்றன. காலை பத்து மணியளவில்‌ அதிபறின்‌
அறைக்குள்‌ கனடாவில்‌ இருந்து வந்த ஆனந்தன்‌ உள்‌ நுழைந்தான்‌.
அதிபர்‌ ஆனந்தனை இனங்கண்டு கொள்ளவில்லை. தன்னைத்‌ தானே
அறிமுகம்‌ செய்துகொண்டபின்‌ முகுந்தனைச்‌ சந்திக்க வேண்டும்‌ எனக்‌
கூறினான்‌. அதிபர்‌ முகுந்தனுக்குச்‌ செய்தி சொல்லி அனுப்பி விட்டு,
பாடசாலையின்‌ தேவைகள்‌ பற்றி அடுக்கிக்‌ கொண்டே போனார்‌.
முகுந்தன்‌ வந்ததும்‌, ஆனந்தனைக்‌ கைகொடுத்து வரவேற்றான்‌. இரு
வரும்‌ பழைய நினைவுகளை மீட்டுக்‌ கொண்ட பின்னர்‌, அதிபருடன்‌
பாடசாலைக்கு மிக அவசியமாகத்‌ தேவைப்படுபவற்றைக்‌ கேட்டுக்‌
தெரிந்து கொண்டார்கள்‌. மூவரும்‌ சேர்ந்து இரு கணினிகள்‌ தேவை என
ஏற்றுக்கொண்டனர்‌. எதிர்வரும்‌ விஜய தசமி தினத்தன்று கணினிகள்‌
பாடசாலையில்‌ பொருத்தப்படும்‌ என ஆனந்தன்‌ கூறினான்‌. இருவரும்‌
அதுபரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு ஏனைய ஆசிரியர்களையும்‌
சந்தித்து உரையாடி னர்‌.

ஆசிரியர்‌ அறையில்‌ தேநீர்‌ அருந்திவிட்டு ஆனந்தன்‌ வீட்டிற்குப்‌
புறப்பட்டான்‌... "எடேய்‌ மச்சான்‌ ! நீ ஏன்டா என்‌ வீட்டிற்கு ஒருக்கால்‌
வாவன்‌” என்று அன்புடன்‌ அழைக்தான்‌ ஆனந்தன்‌. “சரியடா நாளைக்குச்‌
சனிக்கிழமை தானே, வாறன்‌ என்றான்‌ முகுந்தன்‌” சரி வா எல்லாம்‌
விபரமாகக்‌ கதைப்போம்‌ என்று நண்பர்கள்‌ இருவரும்‌ விடை
பெற்றுக்கொண்டனர்‌......


Page 295

உடல்‌ உள உறுதிக்கு காற்பந்து விளையாட்டு

மாலை ஐந்து மணியிருக்கும்‌, முகுந்தன்‌ அன்றைய புதினக்காள்களை
புரட்டிப்‌ பார்த்துக்‌ கொண்டிருந்தபோது ரமணனும்‌ அவனது நண்பர்களும்‌
வாசிகசாலைக்கு வநீது சேர்ந்தனர்‌. :

“சேர்‌ எப்போது ஆங்கில வகுப்புகள்‌ நடக்கும்‌?” என்று கேட்டனர்‌.
“ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு” எனக்‌ கூறினான்‌ முகுந்தன்‌. “நல்லது
எல்லோரும்‌ இப்போது என்ன விளையாடப்‌ போறீர்கள்‌?' என்று
முகுந்தன்‌ கேட்க காற்பந்து என்றனர்‌. முகுந்தன்‌ தலையசைக்க, காற்றடித்த
பந்துகள்‌ இரண்டைக்‌ கொண்டு வந்தார்கள்‌. வந்தவர்கள்‌ எல்லோரும்‌
இரு அணிகளாகப்‌ பிரிந்து கொண்டார்கள்‌. 12 வயதிற்குக்‌ குறைந்தவர்கள்‌
ஒரு அணியாகவும்‌, வளர்ந்தவர்கள்‌ வேறொரு அணியாகவும்‌ பிநிந்து
கொண்டார்கள்‌. அணித்‌ தலைவர்களையும்‌ தெரிந்து கொண்டார்கள்‌.
முகுந்தன்‌ கீர்ப்பாளராகக்‌ கடமையாற்றினான்‌. முகுந்தன்‌ தனது பழைய
உதைபந்தாட்ட விதிகளை மீட்டுக்‌ கொண்டான்‌. ரமணன்‌ தனது
அணியில்‌ காயப்பட்ட இருவருக்கு "ஓட்டும்‌ பிளாஸ்ரர்‌” எடுத்து வந்து
கொடுத்தான்‌. எல்லோரும்‌ இடைவேளையின்‌ போது வாசிகசாலை
மண்டபத்தில்‌ வந்து கூடியிருந்தனர்‌. பெரிய பிளாஸ்ரிக்‌ போத்தல்‌ ஒன்றில்‌
நீரை நிரப்பிக்‌ கொண்டுவந்து வைத்தாள்‌ வசந்தி. கலந்துரையாடலில்‌
காற்பந்தில்‌ தமக்கிருநீ்த ஆர்வத்தைப்‌ புரிந்து கொண்டு கதைத்தார்கள்‌.
பல்வேறு விடையங்களைப்பற்றியும்‌ கலந்துரையாடினார்கள்‌. நிரந்தர
மாக காற்பந்து அணிகளை வளர்த்துவரவேண்டிய தன்‌ அவசியத்தை
எடுத்துக்கூறினார்கள்‌. முகுந்தன்‌ இவர்களின்‌ ஆலோசனையை
ஆமோதித்து அப்போது தெறிவாகிய அணித்‌ தலைவர்களின்‌ 8ழ்‌ இரு
அணிகள்‌ உருவாக்கப்பட்டன.

தொடர்ந்து இரு அணிகளும்‌ விளையாட்டில்‌ ஈடுபட்டன.
வளந்ந்தவர்கள்‌ ஒரு கோல்‌ போட்டு வெற்றிபெற்றனர்‌. வாசிகசாலையில்‌
பந்துகளை வைத்துப்பூட்டியபின்னர்‌ அனைவரும்‌ வீட்டிற்குச்‌ சென்றனர்‌.
வீட்டிற்கு போகும்‌ போது, ரமணன்‌ பின்னால்‌ ஓடிவந்தான்‌. இதனைக்‌
கண்ட முகுந்தன்‌ "ஏன்‌ ஓடிவாறாய்‌” என்று கேட்டான்‌. "சேர்‌ உங்களுடன்‌


Page 3014 மாற்றம்‌

ஒரு விடயம்‌ பற்றிக்‌ கதைக்க வேண்டும்‌ என்று கூறித்‌ தயங்கினான்‌.
முகுநீதன்‌ ரமணனை நோக்கி “ஒன்றுக்கும்‌ யோசிக்காது உனது
எண்ணத்தைக்‌ கூறு” என்றான்‌. அதற்கு ரமணன்‌ "நான்‌ முதலுதவிப்‌
பயிற்சி பெறவேண்டும்‌” என்றான்‌. தங்கள்‌ பாடசாலை இடைவேளையின்‌
போது ஆய்வு கூடத்திற்கு வரும்படிகூறி, அதற்கான விண்ணப்ப
படிவங்களைத்‌ தருவதாகவும்‌ கூறினான்‌. ரமணன்‌ மிக்க மகிழ்ச்சியுடன்‌
வீட்டிற்குச்‌ சென்றான்‌.

ரமணன்‌ கிணற்றடியில்‌ தனது வேலைகளை எல்லாம்‌ செய்த பின்னர்‌
ஆடுகளுக்கும்‌, மாடுகளுக்கும்‌ போதிய சாப்பாடு இருக்கின்றதா எனப்‌
பார்த்தபோது தான்‌, வண்டில்‌ நிற்கும்‌ இடத்தில்‌ புதிய வண்டில்‌
நிற்பதைக்‌ கண்டான்‌. “அக்கா.... அக்கா என்ன புதுசா வண்டில்‌...
வந்திருக்கிறது. 2 அப்பா வாங்கினாரா? எனக்கு ஒன்றும்‌ தெரியாகே”
என்றான்‌.

“ரமணன்‌ உனக்குத்‌ தெரியாதா, எங்கள்‌ பழைய வண்டில்‌ தான்‌,
இது,இப்போது புது ரயர்கள்‌ போட்டுப்‌ புதுப்‌ பொலிவுடன்‌ அப்பா
மாற்றியமைத்துள்ளார்‌'' என்று விளக்கிக்‌ கூறினாள்‌ வசந்தி.

சரி சரி நான்‌ சாமிப்பட விளக்கு வைக்கப்‌ போகிறேன்‌, நீயும்‌ வந்து
கும்பிட்டுவிட்டுப்‌ படி என்றாள்‌. ”

“அக்கா, இன்று நடந்த போட்டியில்‌ நாங்கள்‌ தோற்றுப்‌ போய்‌
விட்டோம்‌, அந்தப்‌ பெரிய மாடுகளுடன்‌ எப்படியக்கா விளையாடுவது.
விஞ்ஞான சேர்‌ தான்‌ விசில்‌ ஊதியவர்‌. இரண்டு பெடியளுக்குக்‌
காயம்‌, நான்‌ தான்‌ பிளாஸ்ரர்‌ எடுத்துக்‌ கொடுத்தனான்‌'' இவ்வாறு
எல்லாவற்றையும்‌ விடாமல்‌ கூறினான்‌.

“திங்கட்கிழமை சேர்‌ வரச்சொன்னவர்‌, முதலுதவிப்‌ பயிற௫க்குப்‌
போகிறேன்‌” என்றான்‌. எல்லாவற்றையும்‌ கவனமாகக்‌ கேட்ட வசந்தி,
”வாசிகசாலையில்‌ ஒரு வகுப்பை ஒழுங்கு செய்தால்‌ பெண்களும்‌
கலந்து கொள்ளலாம்‌” என்றாள்‌. “நான்‌ இங்கட்குழமை இது பற்றிப்‌ புது
சேரிடம்‌ சொல்கிறேன்‌” என்றான்‌ ரமணன்‌. இருவரும்‌ கும்பிட்டபின்‌
படிப்பதற்கு, மேசை அருகில்‌ போய்‌ இருந்தார்கள்‌.

“அக்கா அக்கா அப்பாவிடம்‌ சொல்லாதேயக்கா, உன்னைக்‌ கும்பிடு
கிறேன்‌ அக்கா, நாளை சனிக்கிழமை தானே எல்லாக்‌ கணக்குகளும்‌
செய்து காட்டுகிறேன்‌” என்று கூறினான்‌. அப்படி என்றால்‌ நான்‌ சொல்‌
வதெல்லாம்‌ செய்வாயா?” என்று கேட்டாள்‌. "நான்‌ எல்லாம்‌ செய்து
தருவேன்‌ என்று உறுதி கூறினான்‌” ரமணன்‌.


Page 31உடல்‌ உள உறுதிக்கு காற்பந்து விளையாட்டு 15

இரவுப்‌ போசனம்‌ முடிந்த பின்னர்‌ எல்லோரும்‌ படுக்கைக்குச்‌
சென்றுவிட்டனர்‌. நடராசர்‌ தனது சுருட்டைப்‌ பற்ற வைத்துக்கொண்டு
சாய்மனைக்‌ கதிரையில்‌ அமர்ந்தார்‌. ”வண்டிலுக்கு ஆயிரத்து ஐநூறு
முடிஞ்சது” என்று கூறினார்‌.. “உப்பிடிச்‌ செலவு செய்தால்‌, எங்களுக்குப்‌
போதிய வருமானம்‌ கிடைக்குமோ” என்றாள்‌ கண்மணி. “கண்மணி
நான்‌ சொல்வதைக்‌ கொஞ்சம்‌ கவனமாகக்‌ கேள்‌”, என்றார்‌ நடராசர்‌.
”“வண்டிலால்‌ நட்டமில்லை, ஐநீது ஆறு மாசத்தில்‌ நான்‌ அந்தக்‌ காசை
எடுத்துப்போடுவேன்‌”, என்றார்‌ நடராசர்‌. இது தான்‌ தருணம்‌ என்று
ஊளஇத்து, "நாளைக்குப்‌ பள்ளியில்லை, நான்‌ அண்ணர்‌ வீட்டிற்குப்‌
போகப்‌ போறன்‌” என்றாள்‌ கண்மணி..

“நல்லது தான்‌, நீ ஏன்‌ இப்போ அவசரப்படுகிறாய்‌? எனக்கும்‌ எல்லாம்‌
தெரியும்‌. ஆனந்தனைப்‌ பார்க்கப்‌ போகிறாய்‌” என்றார்‌. "கண்மணி நீ
அங்கு போய்‌ ஏதாவது வசந்தியைப்‌ பற்றி உளறிப்போடாதே....காலம்‌
வரும்போது எல்லாம்‌ சரிவரும்‌. நாமாக எதையும்‌ ஆரம்பிக்க வேண்டாம்‌”,
என்று நடராசர்‌ வாய்பூட்டு போட்டார்‌. "சரி சரி ரமணனையும்‌ கூட்டிக்‌
கொண்டு போ” என்று கூறியவர்‌ நித்திரைக்குச்‌ சென்றுவிட்டார்‌.


Page 326

தாய்‌ மண வாசனை.

அதிகாலையில்‌ எழுந்த முகுந்தன்‌ காலைக்கடன்களை முடித்துக்‌
கொண்டு சமையல்‌ அறையைச்‌ சுத்தப்படுத்தி, அடுப்பில்‌ கேத்தலை
வைத்துவிட்டு, வழமையான வேலைகளைக்‌ கவனித்தான்‌. ஆள்‌ அரவம்‌
கேட்ட சிவமணி எழுந்து வந்தாள்‌.

“அம்மா இன்று சனிக்கிழமை தானே , நான்‌ எல்லாம்‌ செய்கிறேன்‌,
நீங்கள்‌ அந்தச்‌ சாய்வு நாற்காலியில்‌ இருங்கோ” என்று கூறிக்‌ தாயாரை
இருக்கச்‌ செய்துவிட்டான்‌ முகுந்தன்‌. பின்னர்‌ தாயாருக்கும்‌ தனக்கும்‌
சேர்த்து கோப்பி தயாரித்தான்‌. கோப்பியைச்‌ சுவைத்த கண்மணி,
முகுந்தனைப்‌ பாராட்டினாள்‌.

"உனக்கு வாறவள்‌ புண்ணியம்‌ செய்தவளாகத்தான்‌ இருப்பாள்‌”,
என்று கூறி வைத்தாள்‌. "ஏன்‌ அம்மா எங்கேயாவது பார்த்து வைத்திருக்‌
கிறியளோ?” என்று கேட்டான்‌. அதற்கு ஒரு பெரு மூச்சுடன்‌ "அந்தப்‌
பிள்ளையாரின்‌ அருளால்‌ எல்லாம்‌ நல்லபடியாக நடக்க வேண்டும்‌

என்று தான்‌ எனது விருப்பம்‌” என்றாள்‌.

"என்‌ அம்மா கவலைப்படுகிறீர்கள்‌? என்றைக்கும்‌ நான்‌ உங்கள்‌
சொல்லைக்‌ தட்டியிருப்பேனா? உங்கள்‌ எண்ணம்‌ எப்படியோ அப்படியே
எல்லாம்‌ நடக்கட்டும்‌” என்று கூறினான்‌.

இருவரும்‌ தாம்‌ நினைப்பதை வெளிப்படையாகக்‌ கதைக்காது
விட்டாலும்‌ மனதில்‌ ஏதோ ஒன்றை எண்ணி மகிழ்ந்தனர்‌., "அம்மா
நான்‌ இன்றைக்கு எனது நண்பனைச்‌ சந்திக்கப்‌ போகிறேன்‌. அனேகமாக
மாலையில்‌ தான்‌ திரும்புவேன்‌. ஆனந்தன்‌ கனடாவில்‌ இருந்து
வந்திருக்கிறான்‌, நேற்றுப்‌ பாடசாலைக்கு வந்தபோது என்னை வரும்படி
கேட்டிருந்தான்‌. அங்குதான்‌ போகப்‌ போகிறேன்‌” என்றான்‌.

“நடராசற்றை மருமகன்‌ ஆனந்தனைக்‌ தானே சொல்கிறாய்‌” "ஓம்‌
அவன்‌ தான்‌. என்னுடன்‌ கூடப்படித்தவன்‌” என்று ஆனந்தனைப்‌ பற்றி
விரிவாகச்‌ சொன்னான்‌.


Page 33தாய்‌ மண்‌ வாசனை 77

சிவமணியின்‌ முகம்‌ வாட்டமுற்றது. வசந்தி ஆனந்தனின்‌ முறைப்‌
பெண்‌, எங்கே இருவருக்கும்‌ முடிச்சுப்‌ போட்டு விடுவார்களோ என்று
ஏங்கினாள்‌. என்ன இருந்தாலும்‌ வசந்தி இலகுவில்‌ மனம்மாறமாட்டாள்‌,
என்று தனக்குத்‌ தானே சமாதானப்‌ படுத்திக்‌ கொண்டாள்‌.

பேச்சை மாற்றும்‌ நோக்கத்தோடு, தேவையான சில பொருட்களின்‌
சிட்டையைக்‌ கொடுத்து, அவற்றை வரும்போது வாங்கிவரும்படி கூறினாள்‌
சிவமணி. காலைச்‌ சாப்பாடு முடிந்ததும்‌ முகுந்தன்‌ தனது துவிச்சக்கர
வண்டியில்‌ புறப்பட்டான்‌. 10.30 மணியிருக்கும்‌ பனந்தோப்புக்கு
மத்தியில்‌ இருநீத ஆனந்தனின்‌ வீட்டை அடைந்தான்‌. ' வாசலில்‌
மணியடித்தபோது ஆனந்தன்‌ ஓடிவந்து வரவேற்றான்‌. தாயாருக்கும்‌
அறிமுகம்‌ செய்துவைத்தான்‌. இருவரும்‌, நோய்வாய்ப்பட்டிருக்கும்‌
புண்ணியமூர்த்தியைப்‌ பார்த்துக்‌ கதைத்தார்கள்‌. தகப்பனாரின்‌ நோய்‌
காரணமாகவே ஆனந்தன்‌ வந்திருக்கிறான்‌ என்பது முகுந்தனுக்குப்‌
புரிந்தது. வீட்டின்‌ பின்புறத்தில்‌ இருந்த சிறிய குடிசைக்குச்‌ சென்று
நண்பர்கள்‌ அமர்ந்தனர்‌.

"ஆனந்தா கனடாவில்‌ உன்‌ வாழ்க்கை எப்படி நகர்கிறது” என்று
ஆரம்பித்தான்‌ முகுந்தன்‌. "கனடாவில்‌ வசகியான வாழ்க்கை முறைகள்‌,
தனிமனித சுதந்திரம்‌ போன்றன இடம்‌ பெற்றாலும்‌ காலநிலையை
நினைக்கும்‌ போது சற்று மனம்‌ சங்கடப்படத்தான்‌ செய்யும்‌. இந்த
விஞ்ஞானயுகத்தில்‌ வாழ்க்கை வசதிகளை எப்படியெல்லாமோ
அமைத்துக்‌ கொள்கிறார்கள்‌. என்னதான்‌ இருந்தாலும்‌ தாய்‌ மண்‌ வாச
னையைப்‌ பெறவும்‌ முடியாது, அதனை நுகரவும்‌ முடியாது. ஆயிரம்‌
ஆயிரம்‌ பூக்கள்‌, ஆனால்‌ அவற்றுக்கு மணம்‌ தான்‌ இல்லையே. வசதிகள்‌
கட்டுப்பாட்டை மீறிப்‌ போகும்‌ போது உறவுமுறைகள்‌ சில சமயங்களில்‌
கேள்விக்குரியதாதி விடுகிறது.

என்னதான்‌ இருந்தாலும்‌ முகுந்தா, நீ கொடுத்து வைத்தவன்‌, தாய்‌
மண்‌ வாசனையுடன்‌ வாழ்கிறாய்‌”, என்றான்‌. "எங்களுக்கென ஒரு நாடு
அமையும்‌ போது தான்‌ நீ கூறிய வாசனையும்‌ நுகர்வும்‌ அர்த்கமுள்ளதாகும்‌.
எதற்கும்‌ நமது முன்னோர்கள்‌ விட்ட தவறுகளைத்‌ திரும்பத்‌ திரும்ப
கூறிக்‌ கொண்டு எமது பொறுப்புக்களில்‌ இருந்து விலகுவது சரியல்ல.
நடந்தவைகளைப்‌ படிக்கற்களாகப்‌ பயன்படுத்தி, நடக்கப்போகிறவற்றைக்‌
திட்டமிட்டுத்‌ தீர்மானிப்போம்‌. அன்று வித்தியாலயத்திற்கு வந்து
கணினிகள்‌ தருவதாக நீ சொன்னாயே, அது கூட ஒரு வகையில்‌ எமது
வருங்காலச்‌ சந்ததியினரை ௨ஊக்கப்படுத்திச்‌ சந்திக்க வைத்துவிட்டாய்‌.
நீ உண்மையில்‌ பாராட்டப்படவேண்டியவன்‌” என்றான்‌ முகுந்தன்‌.


Page 3416 மாற்றம்‌

"நல்லது மச்சான்‌ முகுந்தன்‌. உங்கள்‌ வாசிகசாலை எப்படி நடக்கிறது
சில முற்போக்கான திட்டங்கள்‌ எல்லாம்‌ ஆரம்பித்திருக்கிறீர்கள்‌ என்று
அறிந்து மிகவும்‌ சந்தோசப்பட்டேன்‌”, என்றான்‌ ஆனந்தன்‌.

“எங்கள்‌ கிராமத்தில்‌ மின்‌ வசதி இல்லை. இப்போதும்‌ 'லாம்பு' தான்‌
வீட்டில்‌ ஒளி வீசும்‌ சாதனம்‌. சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றும்‌
'சூரிய தட்டுக்கள்‌' இப்போ பலவிடங்களில்‌ பயன்படுகின்றன. ஆனால்‌
எம்மால்‌ இப்போது அதனைப்‌ பொருத்த முடியாது", என்று கூறினான்‌
முகுந்தன்‌. “இதனை ஒரு இிட்டமாகச்‌ செயற்படுத்த நாம்‌ முயற்சி
செய்யலாம்‌”...

“நானும்‌ இது பற்றிக்‌ கேள்விப்பட்டிருக்கிறேன்‌”, என்றான்‌
ஆனந்தன்‌. 'பனந்தோப்பு' கிராமத்தில்‌ எத்தனை குடும்பங்கள்‌ கனடாவில்‌
இருக்கிறார்கள்‌ என்ற விபரங்களைத்‌ தரும்படி முகுந்தனைக்‌ கேட்டான்‌.
இந்த விபரங்களைத்‌ திரட்டித்தருவதாகக்‌ கூறினான்‌ முகுந்தன்‌.

"நீ கனடாவிற்குத்‌ திரும்பியதும்‌ இதில்‌ கூடிய கவனம்‌ எடுத்து
எமக்கு ஒரு சூரிய தட்டுத்‌ தொகுதியை அனுப்பிவைப்பாய்‌ என
நம்புகிறேன்‌. ”

"மூகுந்தா நீ என்னடா. .. ... நம்பிக்கையில்லாத மாதிரிக்‌ கதைக்கிறாய்‌.
முதல்‌ வேலையாக இதனைச்‌ செய்து முடிப்பேன்‌”, என்று ஆனந்தன்‌
உறுதி கூறினான்‌... “உனது மாமனார்‌ நடராசரும்‌ எங்கள்‌ ஊரில்‌ தானே,
உனது பங்களிப்பு விசேடமாகவிருத்தல்‌ வேண்டும்‌. அது சறி நீ ஏன்‌
எங்கள்‌ ஊர்‌ பக்கம்‌ வரவில்லை?” என்று கேட்டான்‌ முகுந்தன்‌.

"மச்சான்‌ முகுந்தன்‌, அவர்கள்‌ ஏதோ என்னைப்பற்றி நினைத்துக்‌
கொண்டிருக்கிறார்கள்‌, ஆனால்‌ நான்‌ எவ்விதமான எண்ணங்களையும்‌
கொண்டிருக்கவில்லை".

“எட நீ சொல்வது ஒன்றும்‌ விளங்கவில்லை”, என்று முகுந்தன்‌
கூறவும்‌ ஆனந்தனின்‌ தங்கை வாசுகி தேநீர்‌ தட்டுடன்‌ அங்கு வந்தாள்‌.
வடையைச்‌ சுவைத்த பின்‌ தேநீரைப்‌ பருகினார்கள்‌ நண்பர்கள்‌.

“அண்ணா பனந்தோப்பில்‌ இருந்து மாமியும்‌ ரமணனும்‌ வந்திருக்‌
கிறார்கள்‌” என்றாள்‌ வாசுகி.

“என்னடா ஆனந்தன்‌, இப்ப ஏதோ சொன்னாய்‌ ஆனால்‌ மாமியும்‌
மச்சானும்‌ உன்னைப்‌ பார்க்க வந்திருக்கிறார்கள்‌”. இதற்குமேல்‌ ஆனந்தன்‌
உண்மையை மறைக்க விரும்பவில்லை.


Page 35தாய்‌ மண்‌ வாசனை 19

"மச்சான்‌ முகுந்தா, ஏன்‌ சுற்றி வளைக்க வேண்டும்‌, நீ சற்று பொறுமை
காக்க வேண்டும்‌. நான்‌ கூறுவதை ஒருவருக்கும்‌ சொல்லக்கூடாது”,
என்று கேட்டுக்‌ கொண்டான்‌.

கதைகேட்பதற்கு முகுந்தன்‌ சற்று நிமிர்ந்து இருந்துகொண்டு
ஆனந்தனின்‌ முகத்தைப்‌ பார்த்தான்‌. ஆயிரம்‌ எண்ணங்கள்‌ அலைமோதின.
நெஞ்சு பட பட என்று அடித்துக்‌ கொண்டது. ஏதோ ஆனந்தன்‌
வசந்தி சம்பந்தமாகச்‌ சில முடிவை எடுத்து விட்டார்களோ என்று
அங்கலாய்தவனாக இருந்தான்‌ முகுந்தன்‌.

"கனடாவில்‌ எனது கணினித்‌ தொழிலகத்தில்‌, என்னுடன்‌ வேலை
செய்யும்‌ சுகர்தா என்ற பெண்ணை நான்‌ மனதார விரும்புகிறேன்‌.
அவளும்‌ என்னை விரும்புகிறாள்‌. இந்த விபரம்‌ இன்னும்‌ அம்மாவுக்கோ,
அப்பாவுக்கோ தெரியாது. இந்த நேரத்தில்‌ நான்‌ இதனைத்‌ தெரியப்‌
படுத்தினால்‌, அப்பா இப்போதைய உடல்நிலையில்‌ சூத்துத்‌ தாங்கக்‌
கொள்வாரோ தெரியாது. அத்துடன்‌ அம்மாவின்‌ சந்தோசத்தைக்‌ கெடுக்க
நான்‌ விரும்பவில்லை. இந்தச்‌ சங்கடத்தினுள்‌ நான்‌ சிக்கித்‌ தவித்துக்‌
கொண்டு இருக்கிறேன்‌. முகுந்தா நீ தான்‌ என்க்கொரு ஆலோசனை
கூறு” என்று நிறுத்தினான்‌.

முகுந்தனின்‌ முகம்‌ மலர்ந்தது. தனது நண்பனின்‌ மனவேதனையைப்‌
புரிந்து கொண்டான்‌. தான்‌ ஏதாவது ஒரு வகையில்‌ அவனுக்கு உதவ
வேண்டும்‌ என்ற எண்ணம்‌ தலை தூக்கியது.

"இங்கே பார்‌ ஆனந்தா நீ ஏன்‌ இவற்றையெல்லாம்‌ உனது மனதில்‌
வைத்துச்‌ சங்கடப்படுகிறாய்‌. மெல்லமாகக்‌ கதையை அம்மாவிடம்‌
சொல்லு. அதன்‌ தாக்கத்தைப்‌ பார்த்து பின்னர்‌ அப்பாவிடமும்‌ கூறு.
உனது வாழ்கைக்கு ஏற்றவள்‌ சுகர்தா என்பதை நீ தீர்மானித்த பின்பு,
ஏன்‌ அதைச்‌ சொல்லத்‌ தயங்குகிறாய்‌ 2?” என்றான்‌.

"எல்லோர்‌ வீட்டில்‌ உள்ளது போன்றது தான்‌ எங்கள்‌ வீட்டில்‌
உள்ள பிரச்சினையும்‌. இங்கு நான்‌ ஒரு பெண்ணைத்‌ தெரிவு செய்தால்‌,
எனக்குக்‌ கடைக்கும்‌ தேனத்தை நான்‌ பயன்படுத்தப்‌ போவதில்லை.
ஆனால்‌ அதனை வாசுகக்குப்‌ பயன்‌ படுத்தலாம்‌ என்றுதான்‌ அப்பாவும்‌
அம்மாவும்‌ நினைத்துக்‌ கொண்டு இருக்கிறார்கள்‌. ஆனால்‌ வாசுகிக்கு
நான்‌ வங்கியில்‌ பணம்‌ சேமிக்கிறேன்‌. இப்போ நீயே பார்க்கிறாய்‌ தானே,
அவளின்‌ உடை அலங்காரத்தை. இங்கு வந்து பார்த்த போது நான்‌
ஏங்கிப்‌ போனேன்‌. இப்படி உடையணிந்து கொண்டு போனால்‌ பெடியள்‌
சும்மா இருப்பான்களா? இதனால்‌ நேற்றும்‌ எங்கள்‌ வீட்டில்‌ ஒரு


Page 3620 மாற்றம்‌

சண்டை. புத்தகங்கள்‌ கொடுக்கல்‌ வாங்கல்‌. நீலப்படம்‌ பார்க்கிறாளோ
தெறியாது. யாருக்குத்‌ தெரியும்‌.. மச்சான்‌ முகுந்தா நீ தான்‌ இவளைப்‌
பள்ளிக்கூடத்தில்‌ கவனிக்க வேண்டும்‌” என்றான்‌.

.... ஆனநீதனின்்‌நிலையைப்‌ புரிந்து கொண்ட முகுந்தன்‌, "பாடசாலையில்‌
இவ்வாறான கொடுக்கல்‌ வாங்கல்‌ நடைபெறுவது இல்லை. அங்கு
கட்டுப்பாடு அதிகம்‌. உங்கள்‌ வீட்டுப்படலையில்‌ பெடியள்‌ வந்து
தவம்‌ கிடக்கிறாங்கள்‌ என்றால்‌, இது யார்‌ தவறு? யார்‌ இதற்கு ஊக்கம்‌
கொடுக்கிறார்கள்‌ 2. உனது தாயாருக்கும்‌ இது தெரியாதா?" ஏன்று
சற்று கண்டிப்பாகத்தான்‌ கேட்டான்‌. "முதலில்‌ உன்‌ தங்கை வாசு
கியைச்‌ சற்று கட்டுப்படுத்து... தான்‌ விடுகிற பிழையை ஒத்துக்கொள்ளச்‌
செய்‌. அவள்‌ தனது பிழையை உணரச்செய்ய வேண்டும்‌. தானாக
உணர்ந்து கொள்ளாவிடில்‌ திருத்தவே முடியாது. பாடசாலையில்‌
என்னால்‌ முடிந்ததைச்‌ செய்கிறேன்‌, நீயும்‌ உன்‌ அம்மாவும்‌ வீட்டில்‌
நடப்பவற்றைக்‌ கட்டுப்படுத்துங்கள்‌. எல்லாம்‌ சரியாகிவிடும்‌. இந்த
வேளை கைத்தொலைபேசியின்‌ மணி ஒலிக்கவே, ஆனந்தன்‌ அதைக்‌
காதில்‌ வைத்துக்‌ கொண்டு கையால்‌ சைகை காட்டிவிட்டு, அப்பால்‌
நகர்ந்தான்‌. சில நிமிடங்களில்‌ திரும்பினான்‌.

“மச்சான்‌ முகுந்தா நல்ல செய்தி, கொழும்பில்‌ இருந்து இரு
கணினிகள்‌ அடுத்தவாரம்‌ இங்கு வந்து சேரும்‌ என்றான்‌. அதிபருக்கு
இந்தச்‌ செய்தி இனிப்பாகவிருக்கும்‌. எதற்கும்‌ விஜயதசமியின்‌ போது
இவற்றை அதிபரிடம்‌ கொடுப்பதற்கு ஒழுங்கு செய்‌” என்றான்‌.

“உன்னுடைய நல்ல மனத்திற்கும்‌, உதவவேண்டும்‌ என்ற மனப்‌
பாங்கிற்கும்‌ கடவுள்‌ கடாக்ஷ்சம்‌ எப்போதும்‌ இருக்கும்‌. நாம்‌ சிறுவயதில்‌
இருந்து பட்ட துன்பங்கள்‌ பல, நீயோ அவற்றில்‌ இருந்து விடுபட்டுக்‌
கனடாவை நாடினாய்‌. நாம்‌ நினைப்பதெல்லாம்‌ நடப்பதில்லையே”,
என்று சற்று சலித்துக்‌ கொண்டான்‌ முகுந்தன்‌.

“மச்சான்‌ முகுந்தா இங்கே பார்‌, இந்தமண்ணில்‌ வாழ்ந்து கொண்டு
எமது மண்ணுக்குச்‌ சேவை செய்ய, அதுவும்‌ ஒரு ஆசானாக எமது
சந்ததியை வழி நடத்துவதற்கு உனக்கு ஒரு சந்தர்ப்பம்‌ கிடைத்திருக்கிறதே,
அதை நினைத்துப்‌ பார்‌. என்னதான்‌ வெளிநாட்டில்‌ இருந்தாலும்‌, எமது
நினைவெல்லாம்‌ எமது தாய்மண்‌ பற்றியது தான்‌. "

“உன்னைப்‌ போன்றவர்கள்‌ தான்‌ மண்வாசனையையும்‌ தாயகத்‌
தாகத்தையும்‌, ஒவ்வொருவர்‌ உள்ளத்திலேயும்‌ சுவாலை விட்டு எரியச்‌
செய்ய வேண்டும்‌” என்றான்‌ ஆனந்தன்‌.

 


Page 37தாய்‌ மண்‌ வாசனை 57

”எடேய்‌ ! ஆனந்தா நீயா இப்படிப்‌ பேசுகிறாய்‌ 2 உண்மையில்‌
எனது உடல்‌ எல்லாம்‌ புல்லரிக்கிறது. உன்னைப்‌ போல்‌ ஆயிரம்‌ பேர்‌
இருப்பார்களேயானால்‌ எமது விடிவு மிகவும்‌ அண்மித்து விட்டதென்பதே
எனது கருத்து” என்றான்‌ முகுந்தன்‌. ப

உணர்ச்சிவசப்பட்ட ஆனந்தன்‌ ஓடிவந்து முகுந்தனைக்‌ கட்டித்தழுவிக்‌
கொண்டான்‌. "முகுந்தா, நான்‌ கனடாவில்‌ இருக்கும்‌ வரைக்கும்‌ எமக்குத்‌
தேவையான தொழில்நுட்பத்திறனை வழங்குவதற்கு என்னாலான
முயற்சியைச்‌ செய்வேன்‌ என உறுதிகூறினான்‌”. முகுந்தனின்‌ மனம்‌
ஆனந்தனால்‌ ஆனந்தக்கூத்தாடியது.

"உண்மையில்‌ நாம்‌ கிராமிய மட்டத்தில்‌ பல முன்னேற்றகரமான
திட்டங்களை மேற்கொள்ளலாம்‌. இப்போது தான்‌ அதற்கான சந்தர்ப்பம்‌
திடைத்திருக்கிறது ”, என்றான்‌.

வாசுகி ஓடிவந்து, "அம்மா சாப்பிடக்‌ கூப்பிடுகிறா” என்றாள்‌. நேரம்‌
போனதே தெரியவில்லை, சாப்பிடுவதற்கு இருவரும்‌ எழுந்து சென்றனர்‌.
மனம்‌ நிறைந்தது போல முகுந்தனின்‌ வயிறும்‌ நிறைந்தது. தாயாரின்‌ ப
வீட்டுச்‌ சாமான்களை நினைத்து ஆனந்தனிட மிருந்து விடைபெற்றுக்‌
கொண்டான்‌.


Page 38_
தணியாத தாகம்‌ தீரக்‌ கோப்பி மட்டுமா 2

அன்று ஞாயிற்றுக்கிழமை, வாசிகசாலையை காலை 9 மணிக்கே,
பிள்ளைகளும்‌ பெற்றோரும்‌ நிரப்பியிருந்தனர்‌.பிரதான மண்ட பத்திற்குத்‌
தெற்குப்‌ புறமாக இருந்த இரு வகுப்பறைகளும்‌ பிள்ளைகளினால்‌
நிறைந்திருந்தன. வசந்தி தனது வழமையான பாலர்‌ வகுப்பறையைத்‌
இறந்து பாலர்‌ வகுப்பு முதல்‌ ஐந்தாம்‌ ஆண்டு வரையான பிள்ளைகளைக்‌
கூட்டிச்சென்றாள்‌. எல்லோரையும்‌ அமரச்‌ செய்துவிட்டு ஒவ்வொருவராக
அழைத்து விபரங்களைப்‌ பதிவுசெய்யத்‌ தொடங்கினாள்‌. பெறிய
பிள்ளைகளின்‌ இரைச்சலும்‌ கூடிக்‌ கொண்டு செல்லவே, வெளியே
வரவேண்டியதாயிற்று. ரமணனைக்‌ கூட்டி வரும்படி செய்தி அனுப்பினாள்‌.
ரமணன்‌ வந்ததும்‌, உங்கள்‌ ஆங்கில ஆசிறியர்‌ வநீதுவிட்டாரா? என்று
கேட்டாள்‌. அவர்‌ இப்போது தான்‌ வந்துகொண்டிருக்கிறார்‌ என்றான்‌.
எல்லோரையும்‌ வெளியே சென்று, ஆங்கில ஆசிரியர்‌ வந்ததும்‌ அவருடன்‌
உள்ளே வரும்‌ படி கூறினாள்‌. இதற்குள்‌ முகுந்தன்‌ வந்ததும்‌ எல்லோரும்‌
அவனைச்‌ சூழ்ந்து கொண்டனர்‌. எல்லோரையும்‌ கூட்டிக்‌ கொண்டு
பிரதான வகுப்பறையை அடைந்தான்‌. எல்லோரையும்‌ அமைதியாக்கி
அமரச்செய்து ஒவ்வொருவராக அழைத்து விபரங்களைப்‌ பதிவு
செய்தான்‌. முன்னரே தயாரித்து வைத்திருந்த வினாத்தாளைக்‌ கொடுத்து
விடையெழுதும்‌ படி பணித்தான்‌. பெற்றோர்கள்‌ வீடு திரும்பினர்‌.
விடைத்தாள்களைச்‌ சேகரிக்தபின்‌ மாணவர்களை வெளியே சென்று
வர அனுமதித்தான்‌ முகுந்தன்‌. வகுப்புப்‌ பிரகாரம்‌ குழுக்களாக மீண்டும்‌
உள்ளேவந்து அமர்ந்து கொண்டனர்‌. ஆங்கிலக்‌ கல்வியின்‌ முக்கியத்துவம்‌
பற்றி விரிவாக எடுத்துக்‌ கூறப்பட்டது. எமது நாடு உலக நாடுகளுடன்‌
ஒன்றிணைந்து செல்வதற்கும்‌, தொழில்‌ நுட்பத்தில்‌ மேம்படவும்‌
ஆங்கிலம்‌ மிகவும்‌ அவசியம்‌. மாணவர்கள்‌ குழுக்களாகப்‌ பிரிந்து
சில குழு முயற்சிகளைச்‌. செய்தனர்‌. ஒவ்வொரு குழுத்தலைவரும்‌
தமக்கிடையே முடிவுகளைப்‌ பகிர்ந்து கொண்டனர்‌. வகுப்பு நிறைவுறும்‌
நேரம்‌ எல்லா மாணவர்களையும்‌ ஒன்றாகக்‌ கூடச்செய்து, நவராத்திரி


Page 39தணியாத தாகம்‌ தரக்‌ கோப்பி மட்டுமா? 93

பற்றி ஆராயப்பட்டது. "வாணி விழா” பற்றி வசந்தி விரிவாக எடுத்துக்‌
கூறினாள்‌.

மாணவர்கள்‌ யாவரும்‌ வெளியேறிய பின்‌, வசந்தி வகுப்பறைகளை
ஒழுங்குபடுத்திப்‌ பூட்டினாள்‌. பின்னர்‌ வாசிகசாலையின்‌ வாசிப்பு
மண்டபத்தை அடைந்தாள்‌. முகுந்தனும்‌ அங்கு அமர்ந்திருந்தான்‌.
இருவரும்‌ ஆங்கில வகுப்புப்‌ பற்றி விரிவாகக்‌ கலந்துரையாடினர்‌.
மேற்கொண்டு தேவையான பயிற்சிகள்‌, அகராதிகள்‌ போன்றவற்றின்‌
பட்டியலைக்‌ தயாரித்துக்‌ கொண்டனர்‌.

“வரவரப்‌ பொறுப்புகள்‌ கூடிக்கொண்டே செல்கிறது”, என்று கூறிய
முகுந்தன்‌ வாணிவிழாவின்‌ போது மாணவர்கள்‌ தமது ஆக்கங்களையும்‌
வெளிப்படுத்துவதற்குச்‌ சந்தர்ப்பம்‌ வழங்கவேண்டியதன்‌ அவசியத்தையும்‌
வலியுறுத்தினான்‌.

“எல்லா மாணவர்களும்‌ ஏதோ ஒரு வகையில்‌ ஒரு நிகழ்ச்சியில்‌
பங்கு பற்றக்கூடியதாக இருத்தல்‌ நல்லது" என்றாள்‌ வசந்தி.

பல விடயங்களையும்‌ பற்றிக்‌ கதைத்தவர்கள்‌, சரஸ்வதி மகா
வித்தியாலயத்திற்கு இரண்டு கணினிகள்‌ வரப்போகின்றன என்ற
செய்தியைக்‌ கூறினான்‌ முகுந்தன்‌. ஆச்சரியப்பட்ட வசந்தி, யார்‌
இந்தக்‌ கைங்கரியத்தைச்‌ செய்கிறார்கள்‌ என்று ஆர்வமிகுஇயினால்‌
கேட்டாள்‌. வேறு யாருமல்ல உமது நெருங்கிய உறவுக்காரர்‌ தான்‌,
என்றான்‌. புதிர்‌ போடாமல்‌ விடையத்தைக்‌ கூறுங்கள்‌ என்றாள்‌ வசந்தி.
வசந்தியின்‌ முகபாவனையை ரத்த முகுந்தன்‌, வெளி நாட்டில்‌ இருந்து
வந்திருக்கும்‌ ஆனந்தன்‌ தான்‌ என்று கூறினான்‌. வசந்தியின்‌ முகம்‌
சடுதியாக மாறிவிட்டது. அமைதியானாள்‌. வேறு எங்கோ ஒரு இசையில்‌
தன்‌ பார்வையைச்‌ செலுத்திக்‌ கொண்டிருந்தாள்‌.

அமைதியை முடிவுக்குக்கொண்டு வரும்‌ நோக்கில்‌, "தாகம்‌ தீர்க்க
வேண்டும்‌” என்று எழுந்தான்‌. உடன்‌ எழுந்த வசந்தி தனது சுடுநீர்‌
போத்தலில்‌ இருந்து கோப்பியைக்‌ குவளையில்‌ ஊற்றிக்‌ கொடுத்தாள்‌...
அதனை வாங்கிக்‌ குடித்த முகுந்தன்‌, நன்றாகவிருந்தது என்று கூறி
வைத்தான்‌. வசந்தி பார்த்துச்‌ சிரித்தாள்‌. ஒரு நாளும்‌ என்னிடம்‌ ஒன்றும்‌
கேட்காதவர்‌, இன்று என்னிடம்‌ கோப்பி வாங்கிக்‌ குடித்ததன்‌ மர்மம்‌
என்ன என்று விளங்காமல்‌ தவித்தாள்‌.

"என்ன வசந்தி உமது அம்மாவும்‌, தம்பி ரமணனும்‌ நேற்று ஆனந்தன்‌
வீட்டிற்கு வந்திருந்தார்கள்‌, உமக்கு ஓன்றும்‌ கூறவில்லையா?"


Page 4024 மாற்றம்‌

என்று கேட்டான்‌ "இல்லை..... இல்லை.. ஏன்‌ அந்தக்‌ கதைகளைக்‌
கேட்கிறீர்கள்‌?” என்றாள்‌ வசந்தி.

தாயார்‌ ஆனந்தன்‌ வீட்டிற்குப்‌ போனதன்‌ உள்‌ நோக்கம்‌ வசநீதிக்குப்‌
புரியாததல்ல... அங்கு என்ன நடந்தது என்பதில்‌ ஏதோ ஒன்று இருக்கிறது
என்பதை மட்டும்‌ உணர்ந்தாள்‌. இதனை முகுந்தனிடம்‌ எப்படிக்‌ கேட்பது
என்பது தான்‌, அவளுக்குச்‌ சங்கடமாக விருந்தது. இந்தப்‌ புதிருக்கு
எப்படி விடை காணவேண்டும்‌ என்று எண்ணியவளாய்‌, "நான்‌ அங்கு
செல்லவில்லை, நீங்கள்‌ தான்‌ சென்று வந்தீர்கள்‌. எனவே விபரமாகக்‌
கூறுவது உங்கள்‌ விருப்பம்‌” என்றாள்‌.

வசந்தியின்‌ நிலையை நன்கு உணர்ந்த முகுந்தன்‌ மேலும்‌ அவளது
ஆவலைச்‌ சோதிக்காமல்‌, ஆனந்தனின்‌ கனடாக்‌ காதலை மெல்லமாக
எடுத்துக்‌ கூறினான்‌. நான்‌ கூறியது உமது மனத்துடன்‌ தான்‌ இருத்தல்‌
வேண்டும்‌ எனவும்‌ வேண்டிக்‌ கொண்டான்‌.

வசந்தியின்‌ முகம்‌ அப்போதுதான்‌ மலர்ந்த தாமரையை ஓத்ததோ
என ரசித்து நோக்கினான்‌. வெட்கத்தினால்‌ தலைகுனிந்தபடி இருந்த
வசந்தியை நோக்கி, “உமது முகம்‌ இவ்வளவு சந்கோஷப்பட்டதை
நான்‌ ஒருபோதும்‌ பார்த்த தில்லையே” என்றான்‌ முகுந்தன்‌. வசந்தி
சந்தோஷ மிகுதியினால்‌ காற்றில்‌ பறந்தாள்‌. அந்த நேரம்‌ பாந்த்து, ரமணன்‌
ஓடிவந்தான்‌. மேசையில்‌ இருந்த குவளையையும்‌ பார்த்து விட்டான்‌.
... 7மிக்கா.... அக்கா.... உன்னை அம்மா உடன்‌ கூட்டிவரட்டாம்‌”
என்றான்‌. பிரிய மனமில்லாமல்‌, ஓரக்‌ கண்ணால்‌ முகுந்தனைப்‌ பார்த்த
வாறு, “போயிட்டு வாறன்‌” என்று அன்போடு கூறி விடைபெற்றாள்‌. சற்று
தூரம்‌ சென்றவள்‌, மீண்டும்‌ முகுந்தனைப்‌ பார்க்கத்‌ தவறவில்லை.

வீட்டிற்குச்‌ சென்ற வசந்தி தாயாரின்‌ அகோரப்‌ பார்வைக்கு இலக்‌
கானாள்‌. “வகுப்பு முடிந்தால்‌ உடன்‌ வீட்டிற்கு வாறது தானே, அங்கு
பிறகு என்னடீ கதை” ஒரு நாளும்‌ கண்டிக்காத தாயார்‌, தன்னை இன்று
கண்டிப்பதற்குக்‌ காரணம்‌ புறியாமல்‌ நின்றாள்‌ வசந்தி.

"படிப்பிக்கிற விடயம்‌ சம்பந்தமாகக்‌ கதைக்க வேண்டியிருந்தது.
அத்துடன்‌ வாணி விழா” வருகிறது , என்று அடுக்கிக்‌ கொண்டே
போனாள்‌.

“ஏனம்மா இப்படிக்‌ கோபிக்கிறீங்கள்‌ ”...... என்றாள்‌ வசந்தி.
ரமணனைச்‌ தனது அறைக்குக்‌ கூட்டிச்‌ சென்று, முகுந்தன்‌ கோப்பி
குடித்ததைப்பற்றி அம்மா அப்பாவிற்குச்‌ சொல்லக்கூடாது என்று


Page 41தணியாத தாகம்‌ தரக்‌ கோப்பி மட்டுமா?

ம
(51

கேட்டுக்கொண்டாள்‌. ரமணன்‌, அக்கா நான்‌ அப்படிச்‌ சொல்லுவேனா?
என்றான்‌.

எல்லோரும்‌ சாப்பிடும்‌ போது, சாப்பாடு நல்ல ருசியாக இருக்கிறது
என்று வசந்தி கூற, அதனை நடராசரும்‌ ரமணனும்‌ ஆமோதித்தனர்‌.
ஆனால்‌ கண்மணி மட்டும்‌ முகத்தைத்‌ திருப்பிக்‌ கொண்டாள்‌.
தாயாருக்கும்‌ மகளுக்கும்‌ ஏதோ பிரச்சினை என்பது நடராசருக்குப்‌
புரிந்துவிட்டது...

"ரமணன்‌, என்னடா வாசிகசாலையில்‌ என்ன நடந்தது?” என்று
கேட்க, ஆங்கில வகுப்பு நடந்தது என்றான்‌. பின்பு என்ன நடந்தது 2...
நான்‌ வீட்டிற்கு வந்துவிட்டேன்‌. அம்மா அக்காவைக்‌ கூட்டிவாடா என்று
என்னைத்‌ துரத்தினா. நான்‌ போய்‌ அக்காவைக்‌ கூட்டி வந்தேன்‌ என்றான்‌
ரமணன்‌. வா௫சிகசாலையில்‌ ஏதும்‌ விசேடமா? என்று வசந்தியைக்‌
கேட்டார்‌ நடராசர்‌.

அப்பா இன்றுதான்‌ ஆங்கில வகுப்புகள்‌ தொடங்கினோம்‌. முகுந்தன்‌
சேர்‌ தான்‌ இந்த வகுப்புகளுக்குப்‌ பொறுப்பு. வகுப்புகள்‌ முடிந்ததும்‌,
வாங்க வேண்டிய சில ஆங்கிலப்‌ புத்தகங்கள்‌ பயிற்சிகள்‌ பற்றிக்‌ கதைக்க
வேண்டியிருந்தது. சற்று பிந்திப்‌ போச்சு, அப்பா அது தான்‌ அம்மா
பொறிந்து தள்ளுகிறா என்றாள்‌ வசந்தி.

நடராசர்‌ எழுந்து விட்டார்‌ கண்மணியிடம்‌ சென்று, அவள்‌ படிப்பிக்க
வேண்டியவற்றை யாரிடம்‌ கேட்பாள்‌, நீ சொல்லிக்‌ கொடுப்பியா
என்ன? கொஞ்சம்‌ பொறுமையாக இரு, என்று சாந்தப்படுத்தினார்‌.
இதற்கு மேல்‌ அங்கு நிற்காமல்‌, கண்மணி சமையல்‌ அறைக்குள்‌ போய்‌
இருந்துவிட்டாள்‌. நடராசர்‌ வந்து இருந்ததும்‌, வசந்தி ரமணன்‌ இருவரும்‌
தங்கள்‌ சாப்பாட்டை முடித்துக்கொண்டு எழுந்துவிட்டனர்‌. கண்மணி
வந்து என்ன தேவை என்று கேட்டுப்‌ பரிமாறினாள்‌. பிள்ளைகள்‌ இல்லாத
நேரம்‌ பார்த்து, இரகசியமாக நடராசரிடம்‌ ஆனந்தனைப்‌ பற்றிக்‌ கூறினாள்‌.
ஆனந்தன்‌ வந்து ஒரு வாரமாகிறது. இதுவரை அவர்கள்‌ ஒருவரும்‌
இது பற்றியோ எதுவும்‌ கதைக்கவில்லை. அத்துடன்‌, இது விடயத்தில்‌
ஆனந்தனுக்கு விருப்பம்‌ இருக்குமானால்‌ அவன்‌ இங்கு வந்திருப்பான்‌.
நேற்று நீங்கள்‌ அங்கு போனபோது உங்களோடு, அவன்‌ மனம்‌ விட்டுக்‌
கதைத்தானா? என்று நடராசர்‌ கேட்டார்‌. இதற்கு கண்மணி மெளனம்‌
காத்தாள்‌.

“இனி மேற்கொண்டு இது பற்றி ஏதாவது கதைத்தால்‌, எனக்கும்‌
பொல்லாத கோபம்‌ வரும்‌”, கண்மணி மேற்கொண்டு நீ ஒன்றும்‌ கதைக்க
வேண்டாம்‌ என்று எல்லாவற்றுக்கும்‌ ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்‌.


Page 4226 மாற்றம்‌

கதவு நன்கு இறுக்கமாக மூடப்படாததால்‌, எல்லாவற்றையும்‌
வசந்தியும்‌ உள்வாங்கிக்கொண்டாள்‌. அவளது எண்ணமெல்லாம்‌
முகுந்தனைப்‌ பற்றியே வட்டமிட்டது. வாய்‌, "எங்கே அந்த வெண்ணிலா
வ ... என்று முணுமுணுத்தது தாகம்‌ என்றாய்‌ நான்‌ என்னையே தந்தேன்‌”.
என்று நினைத்து நினைத்து அகமகிழ்ந்தாள்‌. வெகு நேரமாகியும்‌
அவளுக்கு நித்திரை வரவில்லை. ஒலிப்பதிவு நாடாவில்‌ உள்ள அந்தப்‌
பாடலை மீண்டும்‌ மீண்டும்‌ கேட்டுக்‌ கொண்டே நித்திரை செய்தாள்‌.


Page 43 

8

எதிர்பாராத கனடா வியத்து

எப்போதும்‌ போலவே கமலம்‌ தனது காலைச்‌ சாப்பாட்டைக்‌ தயாரித்து
விட்டுப்‌ புண்ணியமூர்த்தியின்‌ அறைக்குச்‌ சென்று, அறையைக்‌ கூட்டித்‌
துப்பரவு செய்தாள்‌. புண்ணியர்‌ எழுந்து தனது காலைக்‌ கடன்களை
முடித்துவிட்டுச்‌ சாய்வு நாற்காலியில்‌ அமர்ந்தார்‌.

"இன்றைக்கு கிளினிக்‌ நாள்‌, ஆனந்தனை எழுப்பிவிடன்‌”' என்றார்‌.
"அவன்‌ கொஞ்சம்‌ படுக்கட்டும்‌, அங்கு அவன்‌ நித்திரை செய்யும்‌ நேரம்‌”
என்றாள்‌ கமலம்‌. நான்‌ மணியத்தின்‌ காருக்குச்‌ சொல்லிப்போட்டன்‌, கார்‌
எட்டு மணிக்கு வரும்‌ என்றாள்‌ . கைத்தொலைபேசி மணியடிக்கவே,
ஆனந்தன்‌ எழுந்து கதைத்தான்‌, கனடாவில்‌ இருந்து சுகர்தா கதைத்தாள்‌.
கனடாவில்‌ நடந்த பெருஞ்சாலை விபத்தில்‌ சுகிர்தாவின்‌ கார்‌ பலத்த
சேதமுற்று சுகிர்தாவும்‌ வைத்தியசாலையில்‌ அனுமகிக்கப்பட்டுள்ளாள்‌.
இச்செய்தி ஆனந்தனை அப்படியே உலுப்பிவிட்டது. செய்வதறியாது
பிரமை பிடித்தவன்‌ போல்‌ கட்டிலில்‌ படுத்திருந்தான்‌. ஆனந்தனை
எழுப்புவதற்காக வநீத அவன்‌ தாயார்‌, அவனது நிலையைக்‌ தெளி

வாகப்புரிந்து கொள்ளாது, கனடாவில்‌ இருந்து யார்‌ கதைத்தார்கள்‌ ப

என்று கேட்டாள்‌. தன்னோடு வேலைபார்க்கும்‌ ஒருவர்‌ விபத்தில்‌
பாதிக்கப்பட்டுள்ளார்‌ என்றும்‌, தான்‌ வேலைக்குத்‌ திரும்ப வேண்டும்‌
என்றும்‌ சுருக்கமாகக்‌ கூறினான்‌. தாயார்‌ மகனின்‌ முக பாவனையைப்‌
பார்த்துக்‌ கவலைப்பட்டவளாய்‌, ஆனந்தனிடம்‌ யார்‌ விபத்தில்‌ சிக்கியது
எனக்‌ கேட்டாள்‌. தன்னுடன்‌ வேலை பார்க்கும்‌ ஒரு பெண்‌ தான்‌
விபத்தில்‌ பாதிக்கப்பட்டுள்ளாள்‌ எனக்‌ கூறினான்‌. யாழ்ப்பாணம்‌
போகும்‌ போது விபரமாக்‌ ககைக்கலாம்‌ எனக்‌ கூறினான்‌. மூவரும்‌
வைத்தியசாலைக்குப்‌ போவதற்கு ஆயத்தமானார்கள்‌. ஆனந்தனின்‌

நடவடிக்கைகளை அவதானித்த கமலம்‌ சாப்பிட வரும்படி கேட்டாள்‌. :

ஆனந்தன்‌, தனக்குப்‌ பசிக்கவில்லை என்று கூறி, கோப்பி தயாரிக்கும்‌
படி கேட்டுக்‌ கொண்டான்‌. கோப்பியைக்குடித்த பின்னர்‌ மணியத்தின்‌
காரில்‌ யாழ்ப்பாணம்‌ புறப்பட்டனர்‌. போகும்‌ வழியில்‌, சரஸ்வதி
மகாவித்தியாலயத்தில்‌ கார்‌ நிறுத்தப்பட்டது. ஆனந்தன்‌ ஓடிச்‌ சென்று


Page 4428 மாற்றம்‌

அதிபரிடம்‌, முகுந்தனைச்‌ சந்திக்க வேண்டும்‌ எனக்‌ கூறினான்‌.
தற்செயலாக அங்குவந்த முகுந்தனிடம்‌ நடந்தவற்றைக்‌ கூறினான்‌.
கணினி அன்பளிப்பு விஜயதசமி விழாவில்‌ நடைபெறுவதற்கு அதிபர்‌
ஒழுங்குகள்‌ செய்கிறார்‌ என்ற விபரத்தைக்‌ கூறினான்‌ முகுந்தன்‌.

“இதற்கெல்லாம்‌ இப்போது எனக்கு நேரமில்லை, எனது சார்பில்‌
நீயே எல்லாவற்றையும்‌ செய்து முடி” என்று கூறிய பின்‌ பயணத்தைத்‌
தெடர்ந்தான்‌.

வைத்தியசாலையில்‌ தாயையும்‌ தகப்பனையும்‌ இளினிக்கில்‌
விட்டு விட்டு ஆனந்தன்‌ தொலைத்‌ தொடர்பு நிலையத்திற்குச்‌ சென்று
சுகிர்தாவுக்கு தொடர்பு கொண்டான்‌. சுகிர்தாவிற்குப்‌ பெரிதாகக்‌
காயங்கள்‌ இல்லாவிட்டாலும்‌ காப்புறுகிப்‌ பணவருவாய்க்காக வைத்திய
சாலையில்‌ இருக்கவேண்டிய நிலை. எல்லா விபரங்களையும்‌ கேட்டு
அறிந்து கொண்ட பின்னர்‌ உடன்‌ கனடாவுக்குத்‌ திரும்புவதாக உறுதி
கூறினான்‌. ஆனந்தன்‌, புண்ணியர்‌ உடல்நிலை பற்றியும்‌ சுகிர்தா கேட்டு
அறிநீ்துகொண்டாள்‌. தங்கள்‌ நட்புப்‌ பற்றியும்‌ கூறும்படியும்‌ கேட்டுக்‌
கொண்டாள்‌.

வைத்தியசாலைக்குத்‌ திரும்பிய ஆனந்தன்‌, புண்ணியரின்‌ இலக்கம்‌
கூப்பிடப்பட்டதை அறிந்து கொண்டான்‌. சிறிது நேரத்தில்‌ மூவரும்‌
வைத்தியரின்‌ அறைக்குள்‌ சென்றார்கள்‌. குருதியில்‌ வெல்லம்‌ இருப்பதும்‌,
சிறுநீரகத்தின்‌ பாஇிப்புப்‌ பற்றியும்‌ விளக்கமாக வைத்தியர்‌ எடுத்துக்‌
கூறினார்‌. சுத்தமான நீரும்‌, நல்ல சத்துள்ள உணவும்‌ தான்‌ புண்ணியரைச்‌
சில வருடங்களாவது வாழ வைக்கும்‌ என்பதை வைத்தியர்‌ மூலம்‌
ஆனநீதன்‌ அறிந்து கொண்டான்‌.

இந்த நிலையில்‌ இருவரையும்‌ கனடாவுக்குக்‌ கூட்டிச்செல்வதற்கான
திட்டத்தைக்‌ கைவிடவேண்டியிருக்கிறகே என்று கவலைப்பட்டான்‌.
கமலம்‌ கடைத்தெருவிற்குப்‌ போகவேண்டும்‌ என்று கூறவே,
மணியத்திடம்‌ காரை வசதியான ஓரிடத்தில்‌ நிறுத்தும்படி கூறினர்‌.
கமலம்‌ கடைக்குச்‌ சென்ற சமயம்‌ பார்த்துச்‌ சுகிர்காவின்‌ விபத்துப்‌
பற்றிப்‌ புண்ணியர்‌ கேட்டார்‌.

பெரிய விபத்து இல்லாவிட்டாலும்‌ தனது நிறுவனத்தின்‌ வேலை
பாதிக்கப்படுவதை விபரமாக விளக்கினான்‌ ஆனந்தன்‌. வாசுகியின்‌
படிப்பையும்‌ கவனிக்க வேண்டும்‌ என்று கூறியும்‌ தான்‌ கனடாவிற்குப்‌
போக வேண்டியதன்‌ அவசியத்தை விளக்கினான்‌. தனக்கு 'சர்பத்தும்‌' :
புண்ணியருக்கு இளநீரும்‌ வாங்கி வந்தான்‌. கமலம்‌ கடைச்சாமான்களுடன்‌


Page 45எதிர்பாராத கனடா விபத்து 29

வரவே, மணியம்‌ புறப்படுவதற்குக்‌ தயாரானான்‌. தாயாருக்கும்‌ ஆனந்தன்‌
சர்பத்‌ வாங்கிக்‌ கொடுத்தான்‌. சுகிர்தாவின்‌ விடயங்களைப்‌ பக்குவமாக
எடுத்துக்‌ கூறினான்‌, கமலம்‌ காருக்குள்‌ எதுவும்‌ கதைக்க வேண்டாம்‌
என்று கூறி, வீட்டில்‌ எல்லாவற்றையும்‌ கதைக்கலாம்‌ எனறாள்‌.

மதிய போசனம்‌ அமைதியாக முடிந்தது. கமலமும்‌ ஆனந்தனும்‌
சாப்பாட்டு மேசையில்‌ அமர்ந்து கொண்டார்கள்‌...

கனடாவில்‌ இருக்கும்‌ 'சுகிர்தா' யார்‌ என்று தாயார்‌ கேட்கவும்‌,
ஆனந்தன்‌ தன்‌ நிறுவனத்தில்‌ வேலை பார்க்கும்‌ பெண்‌ என்று கூறவும்‌,
கமலம்‌ கேள்வி மேல்‌ கேள்வி கேட்டுக்‌ கொண்டேயிருந்தாள்‌ ஆனந்தன்‌
யாவற்றையும்‌ விபரமாகக்‌ கூறினான்‌.

"ஆனந்தா உன்‌ வாழ்வு நல்லதாக அமையவேண்டும்‌ என்று அப்பா
எவ்வளவு கனவுகளோடு இருக்கிறார்‌. அவரது கனவுகள்‌ எல்லாவற்றையும்‌
நிறைவேற்றாமல்‌ நீ வேறு திசையில்‌ போவது, எங்கள்‌ எல்லோரையும்‌
பாதிக்கும்‌. மேலும்‌ நீ வாசுகியைப்‌ பற்றி நினைக்கவில்லையே? அவள்‌
விபரம்‌ அறியாதவள்‌. இச்செய்தியை அறியும்‌ போது, எவ்வாறு அவள்‌
மனம்‌ வேதனைப்படும்‌. வசந்தி தான்‌ அண்ணாவுக்கு ஏற்ற அண்ணி, என்று
கூடக்கேட்டாள்‌. அவளின்‌ வாழ்வைப்‌ பற்றி நீ சிந்திக்கவில்லையே”,
என்று கூறிச்‌ சலித்துக்‌ கொண்டாள்‌. அப்பா இப்போ இவைபற்றிச்‌
சரியாகக்‌ கதைக்கிறார்‌ இல்லை. இதற்கும்‌ கவலைதான்‌ காரணம்‌.

"அம்மா / நான்‌ எனது தங்கச்சி வாசுகியை மறக்கவில்லை.
அவளது படிப்பிற்காகவும்‌, பிற்காலத்‌ தேவைக்காகவும்‌, வங்கியில்‌
பணம்‌ போடுகிறேன்‌. அவளின்‌ தேவைகள்‌ எல்லாவற்றையும்‌ நான்‌
நிறைவேற்றி வைப்பேன்‌. இன்னும்‌ இரண்டு மூன்று வருடங்களில்‌
அவளைக்‌ கனடாவிற்குக்‌ கூட்டிச்‌ செல்ல எல்லா வேலைகளையும்‌
நான்‌ செய்வேன்‌, என உறுதிகூறினான்‌ ஆனந்தன்‌.

எல்லாவற்றையும்‌ கேட்டுக்‌ கொண்ட கமலம்‌, ஆனந்தனைப்‌
புண்ணியருடன்‌ இது பற்றிக்‌ கதைக்கும்படி வேண்டினாள்‌. ஆனந்தன்‌
புண்ணியரின்‌ அறைக்குள்‌ சென்று பார்த்தபோது அவர்‌ நல்ல நித்திரையில்‌
இருந்தார்‌. பின்னர்‌ கதைப்போம்‌ என்று திரும்பிவிட்டான்‌. “ஆனந்தா
கண்மணி மாமி இங்கு வந்தபோது வசந்தியைப்‌ பற்றியும்‌ கதைத்தா.
அவர்கள்‌ சில எதிர்பார்ப்புகளோடு தான்‌ இருக்கிறார்கள்‌. அப்பா
இதற்கு என்ன கூறப்‌ போகிறாரோ தெரியாது. வசந்தி மிகவும்‌ நல்ல
பிள்ளை, பாலர்‌ பாடசாலை கைத்தறி நிலையம்‌ என்று எல்லாவற்றிலும்‌
ஈடுபாடு. குடும்பத்துக்கு மிகவும்‌ ஏற்றதொரு பெண்‌. உனக்கு மிகவும்‌


Page 4630 மாற்றம்‌

பொருத்தமானவள்‌. உன்னுடைய விருப்பம்‌ தான்‌ முக்கியம்‌, ” என்றாள்‌
கமலம்‌.

“உலகம்‌ போகிற போக்கில்‌ ஏன்‌ அம்மா, பழைய முறைகளை
நினைத்துக்‌ கவலைப்பட வேண்டும்‌. நான்‌ எற்கனவே சுகிர்தாவுக்கு
வாக்குக்‌ கொடுத்து விட்டேன்‌" என்று கூறினான்‌ ஆனந்தன்‌. இடீரெனத்‌
இரும்பிய கமலம்‌, ”யாரைக்கேட்டடா இந்த வேலையெல்லாம்‌ செய்‌
கிறாய்‌? உனக்கு ஒரு தங்கை இருக்கிறாள்‌ என்பதை நினைத்தாயா
எங்களுக்கு ஒரு வார்த்தை கூறினாயா? எங்களை இவ்வளவு சடுதியாக
மறப்பாய்‌ என்று நாம்‌ கனவிலும்‌ நினைக்கவில்லை” தலையில்‌ கையை
வைத்துக்‌ கொண்டு அழுதாள்‌ கமலம்‌.

“அம்மா !..... அம்மா /! அழாதயணை” [.......என்று சமாதானப்‌
படுத்தினான்‌. சத்தம்‌ கேட்டு புண்ணியர்‌ எழுந்து வந்தார்‌. கதவைப்‌
பிடித்துக்‌ கொண்டு நின்றார்‌.

“கமலம்‌ நீ ஏன்‌ அழுகிறாய்‌, அவன்‌ தனக்குப்‌ பிடித்தவளைத்‌ தெரிவு
செய்து போட்டான்‌. அவனது வாழ்க்கை அவனுக்கு ஏற்றதாக விருத்தல்‌
வேண்டும்‌.” என்று மெதுவாகக்‌ கூறினார்‌. “நாங்கள்‌ எல்லோரும்‌
செத்துப்போட்டம்‌ என்று தானே இந்த வேலை செய்தவன்‌" என்றாள்‌
கமலம்‌. இந்த அமளிதுமளியை, பாடசாலை விட்டு வந்த வாசுதி
அவதானித்துத்‌ இடுக்குற்றாள்‌. ஓடிவந்து அம்மாவை அணைத்து, "ஏன்‌
அம்மா அழுகிறாய்‌?” என்றாள்‌. எல்லோரும்‌ ஒருவர்‌ முகத்தை ஒருவர்‌
பார்த்தார்கள்‌, எதுவும்‌ பேசவில்லை.

வாசுகி ஆனந்தனிடம்‌ ஓடிவந்து, “அண்ணா அண்ணா நீ என்றாலும்‌
சொல்லு அண்ணா” என்றாள்‌. செய்வதறியாது தகைத்து நின்றான்‌
ஆனந்தன்‌.

“எல்லாம்‌ என்‌ வாழ்க்கைப்‌ போராட்டம்‌” என்றான்‌. அண்ணா)
ஏன்‌ அண்ணா யோசிக்கிறாய்‌? சுகிர்தா அன்றி நல்ல வடிவு. எனக்கு
நல்ல விருப்பம்‌” என்றாள்‌. ஆனந்தன்‌ தனது வாயில்‌ சுட்டுவிரலை
வைத்து கதைக்காதே என்று சைகை காட்டினான்‌. வாசுகி அமைதியாகி
விட்டாள்‌

“அம்மா எனக்குப்‌ பசிக்கிறது” என்று தாயாரைக்கூட்டிக்‌ கொண்டு
சமையல்‌அறையில்‌ இருந்துவிட்டாள்‌. கமலம்‌ஒன்றும்‌ கூறாது சாப்‌
பாட்டைப்‌ பறிமாறினாள்‌. வாசுகி சாப்பாட்டைமுடித்துக்‌ கொண்டு
ஆனந்தனின்‌ அறைக்குச்‌ சென்றாள்‌. சுகிர்தாவின்‌ விபத்துப்பற்றி


Page 47எதிர்பாராத கனடா விபத்து 37

வாசு௫க்கும்‌ விளக்கிக்‌ கூறினான்‌. கனடாவிற்குப்‌ போகவேண்டியதன்‌
அவசியத்தையும்‌ எடுத்துக்‌ கூறினான்‌.

நான்‌ பயன்படுத்தும்‌ சிறிய கணினி உனக்குத்தான்‌” என்று கூறினான்‌.
வாசு மிகவும்‌ சந்தோஷப்பட்டாள்‌. வாசுகி நீ நன்றாகப்‌ படிக்கவேணும்‌”
உனக்கு என்ன வேண்டுமோ எனக்கு எழுது” என்றான்‌.

"அண்ணா ! மச்சாளுக்கு நல்ல காயமோ, எப்பொழுது வீட்டிற்குப்‌
போவா? என்று கேள்வி மேல்‌ கேள்வி கேட்டாள்‌. "எல்லாம்‌ விரைவில்‌
சுகம்‌ வந்துவிடும்‌ என்று கூறிவிட்டு, தனது பெட்டியை அடுக்கத்‌
தொடங்கினான்‌. வாசுகி” ரியூசன்‌ வகுப்பிற்குப்‌ போய்விட்டாள்‌.

கமலம்‌! கமலம்‌! புண்ணியர்‌ கூப்பிட்டார்‌. மருந்து போட தண்ணீர்‌
வேண்டும்‌ என்றார்‌. மருந்தையும்‌ தண்ணீரையும்‌ கொடுத்துவிட்டு,
ஆனந்தனின்‌ பயணம்‌ பற்றிக்‌ கூறினாள்‌...

"கமலம்‌ ! அவனது கஷ்டம்‌ அவனுக்குத்தான்‌ தெரியும்‌. குறை
கூறுவதில்‌ எந்தவித இலாபமுமில்லை. அவன்‌ தெரிவு செய்த 'சுகிர்தா'
நல்லவளாகக்‌ தான்‌ இருப்பாள்‌. அத்தோடு அவனுடன்‌ வேலை செய்ப
வளாக இருப்பதால்‌, அவளைப்பற்றி நல்லாகத்‌ தெரிந்து வைத்திருப்பான்‌.
நீ ஒன்றுக்கும்‌ யோசிக்க வேண்டாம்‌. அவனைச்‌ சந்தோஷமாக வழி
யனுப்பிவைக்க வேண்டும்‌. சுகிர்தாவுக்கு வேண்டிய துணிவகைகளை
வாங்கக்‌ கொடுத்துவிடு” என்று புண்ணியர்‌ கூறியதும்‌, கமலம்‌ தனது
கணவனின்‌ மன மாற்றத்தை நினைத்து வியந்தாள்‌.


Page 489

எங்கே அந்த வெண்ணிலா

ஆங்கில வகுப்புகள்‌ முடிந்ததும்‌ முகுந்தன்‌ வாசிகசாலையின்‌ மேசை
யருகில்‌ வசந்தியை எதஇிபார்த்துக்‌ கொண்டு நின்றான்‌. மாணவர்களை
வீட்டிற்கு அனுப்பிவிட்டு வசந்தி வந்தாள்‌. “விஜயதசமி வெள்ளிக்‌
கிழமை வருகிறது என்ன நிகழ்ச்சிகள்‌ ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்‌ 2 என்று
வசந்தி ஆரம்பித்தாள்‌.” ஆடல்‌, பாடல்‌, கோலாட்டம்‌, கும்மி எல்லாம்‌
ஒழுங்கு செய்திருக்கிறேன்‌" என்று கூறிச்‌ சிரித்தான்‌. என்ன பகிடியா௦
பெண்‌ பிள்ளைகள்‌ ஆடல்‌ பாடல்‌ எல்லாம்‌ செய்வார்கள்‌, பெரிய ஆண்‌
பிள்ளைகள்‌ என்ன செய்யப்‌ போகிறார்கள்‌ என்று கேட்டாள்‌.

“ஒவ்வொரு பிள்ளையும்‌ தனது திறமையை வெளிக்கொணரும்‌
முகமாக ஒரு காட்சிப்‌ பொருளைத்‌ தயாரித்து, காட்சிக்கு வைக்க
வேண்டும்‌. திறமையானவர்களுக்குப்‌ பறிசு வழங்கப்படும்‌. இதன்‌
விபரங்கள்‌ பற்றி வகுப்பில்‌ கூறிவிட்டேன்‌”, என்றான்‌ முகுந்தன்‌. தனது
மகிழ்ச்சியைத்‌ தெரிவித்த வசந்தி ஒரு ஒலிநாடாவை முகுந்தனிடம்‌
கொடுத்தாள்‌. கண்கள்‌ பேசிக்‌ கொண்டன. பிரிய மனமில்லாமல்‌
இருவரும்‌ பிறிந்து சென்றார்கள்‌. போகும்‌ போது வருகிற ஞாயிறு
மாலை பின்ளையார்‌ கோவிலுக்குப்‌ பொங்கல்‌ செய்யப்‌ போகிறோம்‌,
என்று கூறி விட்டுச்‌ சென்றாள்‌ வசந்தி.

வீட்டிற்குச்சென்ற முகுந்தன்‌ தாயாரைச்‌ தேடிக்கொண்டி ருந்த சமயம்‌
சிவமணி அர்ச்சனைத்‌ தட்டுடன்‌ நிற்பதைக்‌ கண்டான்‌.

அம்மா நீங்கள்‌ சொல்லியிருந்தால்‌ நானும்‌ வந்திருப்பேன்‌ என்றான்‌.
“இன்று உனது அப்பாவின்‌ பிறந்ததினம்‌. அதுதான்‌ கோவிலுக்குப்‌
போனேன்‌," என்று கூறினாள்‌ சிவமணி.

முகுந்தன்‌ முகம்‌ கழுவியபின்‌, தாயார்‌ கோவிலில்‌ இருந்து
கொண்டு வந்த மோதககத்தைச்‌ சாப்பிட்டபின்‌ தேநீரைக்‌ குடித்தான்‌.
அங்கு வந்த தாயாரைக்‌ கண்டதும்‌, அம்மா!..என்று அழைத்தான்‌. ஏன்‌
கூப்பிட்டாய்‌ முகுந்தா, என்ன வேணும்‌? என்றாள்‌. ஒன்றுமில்லை

என்று தயங்கினான்‌.


Page 49எங்கே அந்த வெண்ணிலா 4]

"எதோ சொல்லப்‌ போகிறாய்‌ போல்‌ தெரிகிறது .... சொல்லன்‌
கேட்போம்‌” என்றாள்‌ சிவமணி. "இம்முறை வாசிகசாலையில்‌ விஜய
தசமி விழா சற்று வித்தியாசமாக அமையும்‌” என்றான்‌. "அந்தப்‌ பிள்ளை
வசந்தி எல்லாம்‌ வடிவாகச்‌ செய்யும்‌ தானே, நீ இப்போ ஆங்கிலம்‌
படிப்பிக்கிறாய்‌. என்ன செய்யப்‌ போகிறாய்‌?” என்று கேட்டாள்‌.
"ஓவ்வொரு பிள்ளையும்‌ ஒரு காட்சிப்‌ பொருளைச்‌ செய்து வைக்க
வேண்டும்‌” என்று எல்லா விபரங்களையும்‌ கூறினான்‌.

புதிய விடயமான படியால்‌ அவர்களுக்குச்‌ சில உதவிகளும்‌ ஊக்கு
விப்பும்‌ தேவைப்படும்‌. எனவே நீ தான்‌ அவர்களுக்கு உதவ வேண்டும்‌
என்றாள்‌.

"அம்மா இந்தவாரம்‌ முழுவதும்‌ நான்‌ அவர்களுக்கு உதவி
செய்வேன்‌ என்றான்‌. அத்துடன்‌ வருகிற ஞாயிறு மாலை பிள்ளையார்‌
கோவிலில்‌ வசந்தி வீட்டார்‌ பொங்கல்‌ செய்யப்‌ போசினமாம்‌, நாங்களும்‌
கோவிலுக்குப்‌ போவோம்‌ என்றான்‌. கண்மணி இது பற்றி எனக்கும்‌
சொன்னவ, எலலோரும்‌ போவோம்‌, என்றாள்‌ சிவமணி.

தாயார்‌ சாதாரணமாக எல்லாவற்றையும்‌ கதைத்து முடித்து விட்ட
தால்‌, வசந்தியைப்பற்றி மேலதிகமாக எதுவும்‌ கதைக்கவில்லை, என்ற
சிந்தனையுடன்‌ தனது அறைக்குள்‌ சென்றதும்‌, வசந்தி கொடுத்த ஓலி
நாடாவை போட்டுக்கேட்டான்‌. திரும்பவும்‌ கேட்டான்‌. மேலும்‌ கேட்க
வேண்டும்‌ போல்‌ இருந்தது. ஒலி நாடாப்‌ பெட்டியுள்‌ இருந்த படத்தைப்‌
பார்த்தான்‌. வசந்தியின்‌ வதனத்தைப்‌ பாரத்துக்கொண்டி நீதான்‌.
எவ்வளவு நேரம்‌ அவ்வாறு இருந்தான்‌ என்பது தெரியாது, தாயார்‌ இரவுச்‌
சாப்பாட்டிற்கு அழைத்தபோது தான்‌ எழுந்து வெளியில்‌ வந்தான்‌.

முகுந்தன்‌ சாப்பாட்டில்‌ கவனமில்லாமல்‌ இருப்பதையும்‌ ஏதோ
சிந்தனையில்‌ ஆழ்ந்திருப்பதையும்‌ அவதானித்தாள்‌ சிவமணி. "என்ன
முகுந்தா, ஏகோ யோசிக்கிறாய்‌, மனதில்‌ ஏதோ ஒன்றை மறைக்கிறாய்‌"
என்றாள்‌. "அம்மா வசந்தியைப்‌ பற்றி என்ன நினைக்கிறீர்கள்‌?” என்று
எங்கோ பார்த்துக்‌ கொண்டு கூறினான்‌.

"அந்தப்‌ பிள்ளைக்‌ கென்ன? அருமையான குணமுள்ள பிள்ளை.
சிறு வயது முதல்‌ அப்பிள்ளையின்‌ குணநலன்களை நான்‌ அறிவேன்‌.
உனக்கு மிகவும்‌ பொருத்தமான பிள்ளை. எங்கள்‌ எண்ணங்கள்‌
நிறைவேற பிள்ளையாரை வேண்டுவோம்‌” என்று சிவமணி கூறியதும்‌,
முகுந்தன்‌ ஓடிவந்து தாயின்‌ காலைக்‌ தொட்டுக்‌ கும்பிட்டான்‌. எல்லாம்‌


Page 5034 மாற்றம்‌

நல்லபடியாக நடக்கப்‌ பிள்ளையாரை நன்கு வணங்குவோம்‌ என்று
நல்லாசிகள்‌ கூறி வாழ்த்தினாள்‌ ௪வமணி.

நிம்மதியும்‌ மகிழ்ச்சியும்‌ பொங்க முகுந்தன்‌ படுக்கைக்குச்‌ சென்றான்‌.
வசந்தியின்‌ ஒலிநாடாவை மீண்டும்‌ மீண்டும்‌ போட்டுக்‌ கேட்டுக்‌
கொண்டே நித்திரையாடஇிவிட்டான்‌.


Page 5110

சமூகவிரோதச்‌ செயல்‌ அம்பலம்‌

மாலை ஆறு மணியிருக்கும்‌ வாசிகசாலையில்‌ விசேட கூட்டத்திற்காக
எல்லோரும்‌ வந்திருந்தார்கள்‌. மாவீரர்க்கான அமைதி வணக்கத்துடன்‌
கூட்டம்‌ ஆரம்பமாகியது. தலைவர்‌ எல்லோரையும்‌ வரவேற்று விஜய
தசமி விழா பற்றி விரிவாக ஆராய வேண்டும்‌ என்றார்‌. வசந்தியைப்‌
பார்த்து வாணி விழாக்‌ கலை நிகழ்ச்சிகள்‌ பற்றிக்‌ கேட்டார்‌. வசந்தி,
நடன ஆசிரியை கலா கேவி மாணவிகளைக்‌ கலைநிகமழ்ச்சிகளுக்காக
பயிற்றுவிக்கிறார்‌ என்றாள்‌. 'மேடைஒழுங்குகள்‌, ஒலிபெருக்கி, மின்‌
வசதி ஆகியவற்றை நான்‌ ஒழுங்கு செய்கிறேன்‌” என்றார்‌ செயலர்‌
தம்பிராசா.

பூசைப்‌ பொருட்கள்‌, படையல்‌ பொருட்கள்‌ யாவற்றையும்‌ சேகரிக்கும்‌
பொறுப்பு பொருளாளரிடம்‌ ஒப்படைக்கப்பட்டது. விரும்பியவர்கள்‌ தமது
பொருட்களை நண்பகலுக்கு முன்னராக வாசிகசாலையில்‌ ஒப்படைத்தல்‌
வேண்டும்‌. வித்தியாரம்பம்‌ செய்வதற்குஏற்ற ஒழுங்குகளை தானே
பொறுப்பேற்றுக்‌ கொள்வதாகக்‌ தலைவர்‌ கூறினார்‌.

தலைவர்‌ முகுந்தனைப்‌ பார்த்து “காட்சிப்‌ பொருட்களை எங்கு
ஒழுங்கு செய்யலாம்‌” எனக்‌ கேட்டார்‌. முகுந்தன்‌ தனது திட்டத்தினைக்‌
கூறுவதற்கு எழுந்தபோது, நவரத்தினம்‌ தனது மகன்‌ சுதாகரனை இழுத்துக்‌
கொண்டு வருவதை அவதானிக்தான்‌. எல்லோரும்‌ நவரத்தினக்தையும்‌
மகனையும்‌ மாறி மாறிப்‌ பார்த்தனர்‌. சுதாகரனின்‌ கையில்‌ "வீடியோ
படச்‌ சுருள்‌” ஒன்று இருப்பதையும்‌ கண்டனர்‌.

சுதாகரனை இழுத்து வந்து தலைவர்‌ முன்‌ நிற்க வைத்து, வாத்தியார்‌
இவனை ஒருக்கால்‌ விசாநியுங்கோ. !, இவன்‌ படிக்கப்போகிறானா?
அல்லது படம்‌ பார்க்கப்‌ போகிறானா?" கோபத்தை அடக்கமுடியாமல்‌
இரண்டு முறை அடித்தார்‌.

தலைவர்‌ எழுந்து போய்‌ சுதாகரனைக்‌ கையில்‌ பிடித்து தகப்பனிட
மிருந்து மீட்டெடுத்து ஒரு கதிரையில்‌ அமரச்செய்தார்‌. ப


Page 5236 மாற்றம்‌

“நான்‌ எல்லாம்‌ விசாரித்துக்‌ கண்டிக்கிறேன்‌, நீங்கள்‌ இப்போது
வீட்டிற்குப்‌ போங்கள்‌ ”, என்று கூறி நவரத்தினத்தை வீட்டிற்கு அனுப்பி
வைத்தார்‌.

கூட்டம்‌ மீண்டும்‌ ஆரம்பமான போது முகுந்தன்‌ காட்சிப்‌ பொருட்கள்‌
பற்றிய விபரங்களை எல்லோருக்கும்‌ எடுத்துக்கூறினான்‌.

“இரண்டு வகுப்பறைகளிலும்‌ காட்சிப்‌ பொருட்கள்‌ ஒழுங்கு
செய்யப்படும்‌. மாலை 3 மணிக்குக்‌ காட்சி ஆரம்பமாகும்‌. 22 காட்சிப்‌
பொருட்களுக்கான விண்ணப்டங்கள்‌ இதுவரை கிடைத்துள்ளன. காட்சிப்‌
பொருட்களை இயக்குவதும்‌, அதற்கான விளக்கம்‌ கூறுவதும்‌ அதனைக்‌
தயாரித்தவர்‌ பொறுப்பாகும்‌. யாழ்‌. பல்கலைக்கழகத்தில்‌ இருந்து இருவர்‌
வந்து மதிப்பீடு செய்வார்கள்‌. சிறப்பான காட்சிப்‌ பொருளுக்குப்‌ பரிசும்‌
பாராட்டுப்‌ பத்திரமும்‌ வழஙகப்படும்‌” என்ற விபரங்களை முகுந்தன்‌
அறிவித்தான்‌.

அடுத்த விடயமாகக்‌ “கைத்தறி” நிலையத்‌ இறப்பு விழா பற்றித்‌
தலைவர்‌ எடுத்துக்கூறினார்‌. கூட்டுறவுச்‌ சங்கம்‌ இரண்டு கைத்தறிகளை,
எமது வாசிகசாலைக்குத்‌ தெற்குப்புறமாகவுள்ள வீட்டில்‌ நிறுவவுள்ளது.
இந்தக்‌ கைத்தறி நிலையத்தின்‌ முகாமையாளராக வசந்தி தெரிவு
செய்யப்பட்டிருக்கிறார்‌ என்பதையும்‌ கூறினார்‌. திறப்புவிழா காலை
10 மணிக்கு நடைபெறும்‌ என்றும்‌ கூறினார்‌.

மரநடுகை சம்பந்தமாக ஒரு கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
எதிர்‌ வரும்‌ சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகும்‌. கமநலப்‌
பகுதி நிபுணர்கள்‌, கூட்டுறவுச்‌ சங்கத்தவர்கள்‌, கராமச்சபைகத்‌
தலைவர்‌ போன்றவர்கள்‌ வருவார்கள்‌. எமது கிராமத்தில்‌ உள்ள
விவசாயிகள்‌ அனைவரையும்‌ பங்குபற்றச்‌ செய்தல்‌ வேண்டும்‌, எனத்‌
தீர்மானிக்கப்பட்டது. செயலர்‌ தம்பிராசா எல்லோருக்கும்‌ நன்றி
தெறிவிக்தார்‌.

கூட்டம்‌ முடிந்ததும்‌, தலைவர்‌ சுதாகரனை வகுப்பறை ஒன்றிற்குள்‌
கூட்டிச்சென்றார்‌. முகுந்தனையும்‌ உடன்‌ கூட்டிச்‌ சென்றார்‌. சுதாகரன்‌
கையில்‌ இருந்த வீடியோ படச் சுருளை வாங்கிப்‌ பார்த்தார்‌. முகுந்தனிடம்‌
காட்டி, என்ன படம்‌? என்று கேட்டார்‌. "பார்க்கக்‌ கூடாத படம்‌ " என்று
கூறினான்‌ முகுந்தன்‌, "நீ ரமணனின்‌ வகுப்பில்‌ தானே படிக்கிறாய்‌ 2”
என்று கேட்க, சுதாகரன்‌, 'ஆம்‌' என்றான்‌. இந்த ஆபாசப்‌ படம்‌ பார்த்தால்‌
என்ன தண்டனை என்று உனக்குத்‌ தெரியுமா” என்று கேட்டான்‌,

மூகுநீதன்‌. சுதாகரன்‌ பதில்‌ கூறவில்லை. தலைவர்‌ மிகவும்‌ அன்பாகக்‌


Page 53சமூகவிரோகச்‌ செயல்‌ அம்பலம்‌ 37

கதைக்கார்‌. யாரிடம்‌ இருந்து இப்படத்தைப்‌ பெற்றுக்‌ கொண்டாய்‌ 9,
என்று கேட்டார்‌. 'அப்பக்கடை” என்றான்‌ சுதாகரன்‌. இக்கடை எங்கு
இருக்கிறது? தெல்லிப்பளையில்‌. ஆமிக்காரங்களின்‌ கடையா......
'ஆம்‌' என்று கூறினான்‌ சுதாகரன்‌.

"பெரிய விடயம்‌”! என்றான்‌ முகுந்தன்‌. சுதாகரன்‌ உடன்‌ தரையில்‌
விழுந்து இருவரையும்‌ கும்பிட்டான்‌. "இனிமேல்‌ நான்‌ போகமாட்டேன்‌,
படம்‌ வேண்டமாட்டேன்‌, ஒருவரிடமும்‌ சொல்லாதேங்கோ' என்று
கெஞ்சி அழுதான்‌. சரி நீ போய்‌ வெளியே மண்டபத்தில்‌ இரு, என்று
சுதாகரனை வெளியே அனுப்பினார்‌ தலைவர்‌. இந்த நோய்‌ தொற்ற
முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. இதற்காக ஒரு விழிப்புக்‌
குழுவைத்‌ தயார்‌ செய்ய வேண்டும்‌, என்றார்‌ தலைவர்‌. .

“இதுவரை எத்தனை எத்தனையோ படங்கள்‌ இரகசியமாக உலா
வருகின்றனவோ?'" என்று முகுந்தன்‌ மிகவும்‌ விசனப்பட்டான்‌. "இந்தப்‌
பாதகத்தை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும்‌. எமது இளசுகளை
என்னென்னவிதமாகப்‌ பாழ்‌ படுத்துகிறார்கள்‌. எமக்குத்‌ தெறிந்தது
இது ஒன்றுதான்‌. இன்னும்‌ தெரியாதவை எத்தனையோ?" என்று
புறுபுறுத்தான்‌ முகுந்தன்‌.

தலைவரை ”மாமா'” என்றே செல்லமாக அழைப்பான்‌. “மாமா
நாம்‌ ஒரு இரகசியக்‌ குழுவை அமைத்தல்‌ வேண்டும்‌. அது மட்டுமல்ல
அதில்‌ ஒரு நடவடிக்கைக்‌ குழுவும்‌ இடம்‌ பெறவேண்டும்‌. நடவடிக்கை
எடுப்பவர்கள்‌ யார்‌ என்பது ஒருவருக்கும்‌ தெரியக்‌ கூடாது”, என்றான்‌
முகுந்தன்‌.

தலைவர்‌ முகுந்தனின்‌ புத்தி சாதுரியத்தைப்‌ பாராட்டி விபரமாக
இது பற்றி ஆராய்ந்து குழுவை அமைப்போம்‌ என்றார்‌. சுதாகரனை நான்‌
கூட்டிச்‌ செல்கிறேன்‌, என்று விடைபெற்றுக்‌ கொண்டார்‌. முகுந்தனும்‌
தனது வீடு நோக்கிச்‌ சென்றான்‌.


Page 5411

வாணி விழா

“சரஸ்வதி மகாவித்தியாலயம்‌” வெள்ளிக்கிழமை காலையிலேயே
விழாக்கோலம்‌ பூண்டுவிட்டது. மாணவர்கள்‌ எல்லோரும்‌ வெள்ளை
வேட்டியும்‌, வெள்ளைச்‌ சேர்ட்டுமாகக்‌ காட்சியளித்தனர்‌. மாணவிகள்‌
வெள்ளைப்‌ பாவாடையும்‌ வெள்ளைச்‌ சட்டையுமாக வந்தவண்ணம்‌
இருந்தனர்‌. எல்லோருடைய தலையிலும்‌ பூமாலைகள்‌ காணப்பட்டன.
காலை 9 மணியளவில்‌ பூசையுடன்‌ விழா ஆரம்பமானது. மாணவரது
நிகழ்ச்சிகள்‌ ஒன்றன்‌ பின்‌ ஒன்றாக நடைபெற்றன. விசேட நிகழ்ச்சியாக
கணினி கையேற்கும்‌ வைபவம்‌ நடைபெற்றது. ஆனந்தனின்‌ சகோதரி
வாசுகி” ஆனந்தனுக்காக கணினிப்பெட்டிகளை அதிபரிடம்‌
கையளித்தாள்‌.

அதுபறின்‌ பாராட்டரைக்குப்‌ பின்‌ முகுந்தன்‌ தனது நண்பனின்‌
அன்பளிப்பை வியந்து பாராட்டினான்‌. பெற்றோரும்‌ மாணவர்களும்‌
மிகவும்‌ மகிழ்ச்சியடைந்தனர்‌. வித்தியாரம்பத்தின்‌ பின்பு எல்லோருக்கும்‌
பிரசாதம்‌ வழங்கப்பட்டது. நண்பகல்‌ ஒரு மணியளவில்‌ வித்தியாலய
விழா முடிவுற்றது.

வீடு சென்ற முகுந்தன்‌ அவசரமாகப்‌ புறப்படுவதை அவதானித்த
சிவமணி தனது பங்களிப்பாகச்‌ சில பொருட்களை முகுந்தனிடம்‌
கொடுத்தாள்‌. எல்லாவற்றையும்‌ எடுத்துக்கொண்டு வாசிகசாலைக்குச்‌
சென்றான்‌ முகுந்தன்‌.

வாசிகசாலையில்‌ வசந்தி சுறுசுறுப்பாக இயங்கிக்‌ கொண்டிருந்தாள்‌.
விசேடமாகத்‌ தயாரிக்கப்பட்ட கொட்டகையில்‌ பொங்கல்‌ நடைபெற்றுக்‌
கொண்டிருந்தது. சிவமணி கொடுத்த பொருட்களை வசந்தியிடம்‌
கொடுத்தான்‌. "வகுப்பறைகளைப்‌ பொருட்காட்சிக்காக ஒழுங்கு
செய்திருக்கிறேன்‌” என்றாள்‌ வசந்தி. "எனது அன்பும்‌ பாசமும்‌ கலந்த
நன்றி” என்றான்‌ முகுந்தன்‌. இருவரும்‌ தமது உணர்ச்சிகளைக்‌ கண்களால்‌
பரிமாறிக்‌ கொண்டனர்‌,


Page 55வாணி விழா 39

பொருட்காட்சிக்கான இடங்களை ஒதுக்கி அவற்றுக்கு இலக்கம்‌
இட்டபின்‌, ஒலிபெருக்கி மூலம்‌ தமது இடங்களைப்‌ பொறுப்பேற்கும்படி
முகுந்தன்‌ அறிவித்தல்‌ கொடுத்தான்‌.

காட்சிப்பொருட்களைத்‌ தயாரிப்பதிலும்‌, ஒழுங்குபடுத்துவதிலும்‌
மாணவர்கள்‌ ஈடுபட்டனர்‌. பிற்பகல்‌ 3 மணியளவில்‌ பொருட்காட்சி
ஆரம்பமாகும்‌ எனக்‌ கூறப்பட்டது. எல்லோரும்‌ சுறுசுறுப்பாக
அவரவர்‌ வேலைகளில்‌ ஈடுபட்டு இருக்கும்‌ போது, ஒலிபெருக்கியை
இயக்கும்‌ நந்தனை முகுந்தன்‌ நாடினான்‌. நந்தனிடம்‌ சிறிது நேரம்‌
ககைத்துவிட்டு, ஓம்‌ சக்திப்‌ பாடலைப்‌ போடும்‌ படி கேட்டான்‌.பல
தடவை அது போடப்பட்டது என்றான்‌. "எங்கே அந்த வெண்ணிலா"
என்ற பாட்டைப்‌ போடு என்றான்‌. நந்தன்‌ சிரித்தபடி அப்பாடலை
ஒலிக்கச்‌ செய்தான்‌. சிறு பிள்ளைகளுக்கு அலங்காரம்‌ செய்வதில்‌
ஈடுபட்டிருந்த வசந்தியை பார்த்தான்‌. முகுந்தனைக்‌ கண்ட வசந்தி
தன்‌ கைகளால்‌ முகத்தைப்‌ பொத்துக்‌ கொண்டு றித்தாள்‌. இருவரும்‌
பாட்டை நன்றாக ரசித்தனர்‌.

சரியாக 3:15 மணியளவில்‌ பொருட்காட்சியை தலைவர்‌ சிதம்பரப்‌
பிள்ளை நாடாவை வெட்டி ஆரம்பித்து வைத்தார்‌. பல்கலைக்கழக
நண்பர்கள்‌ இருவரும்‌ வருகை தந்திருந்தனர்‌. அவர்களை முகுந்தன்‌
தலைவர்‌, செயலர்‌ ஆகியோருக்கு அறிமுகம்‌ செய்துவைத்தான்‌.
வசந்தியையும்‌ அவர்களுக்கு அறிமுகம்‌ செய்துவைத்தான்‌. பொருட்காட்சி
சம்பந்தமான பட்டியலை அவர்களிடம்‌ கொடுத்தான்‌. காட்ட௪ுப்பொருட்கள்‌
உள்ள அறையில்‌ பெற்றோர்‌ வறிசையாக நின்று மாணவர்களுடன்‌
விளக்கங்களை கேட்டுக்‌ கொண்டிருந்தனர்‌. முகுந்தனின்‌ பல்கலைக்கழக
நண்பர்களான சேரனும்‌, குமணனும்‌ காட்சிப்பொருட்களைக்‌ கவனமாக
மதிப்பீடு செய்தனர்‌.

மாற்று வழிகளில்‌ எவ்வாறு சக்தியைப்‌ பெறலாம்‌ என்பதை
விளக்குவதற்குக்‌ "காற்றின்‌ மூலம்‌ மின்சக்தியைப்‌ பெறலாம்‌”
என்பதை விளக்கிக்‌ காட்டினார்கள்‌. எதிர்காலத்தில்‌ காற்றாடிகள்‌ உள்ள
பெரிய பண்ணைகளை நிறுவ முடியும்‌ என்பதைப்‌ படங்கள மூலம்‌
விளக்கினர்‌.

இந்தியாவிலும்‌ டென்மார்க்கிலும்‌ இவை போன்ற காற்றாடிப்‌
பண்ணைகள்‌ செயற்படுவதையும்‌ புள்ளிவிபரம்‌ மூலம்‌ எடுத்துக்‌
காட்டியிருந்தார்கள்‌.


Page 5640 மாற்றம்‌

கடலின்‌ அடியில்‌ உள்ள நீரோட்டங்கள்‌ மூலம்‌ மின்சக்தியைப்‌
பெறலாம்‌ என்பது கூடவியப்பாகவிருந்தது. எரிபொருள்‌ விலையேற்‌
த்தையும்‌ மாணவர்கள்‌ தொடர்புபடுத்தத்‌ தவறவில்லை.

சூரிய ஒளியைக்‌ கொண்டு மின்சக்தியைப்‌ பெற்று சிறிய வானொலிப்‌
பெட்டியை இயக்கிக்‌ காட்டினார்‌ ஒருவர்‌. சூரிய தட்டுகள்‌ கொண்டு
மின்சக்தியைப்‌ பெற்று, எத்தகைய கருவிகளை இயங்கச்செய்யலாம்‌
என்பதையும்‌ விளக்கிக்கூறினார்கள்‌. சூரியகலக்‌ தட்டுகளைக்‌ கொள்வனவு
செய்வதும்‌, கருவிகளைப்‌ பெறுவதும்‌ பெரும்‌ முதலீடாகும்‌. நிதவளம்‌
இருக்குமானால்‌ வெற்றி காணலாம்‌.

எமது வளங்களை நாம்‌ உணராது இருப்பது பெரும்‌ குறையாகும்‌.
உள்ளூர்‌ தயாரிப்புக்களில்‌ இருந்து சமநிலை உணவை எவ்வாறு
பெறலாம்‌ என்பதை இரு மாணவிகள்‌ விளக்கக்‌ கொண்டிரருந்தார்கள்‌.
குரக்கன்‌, சாமை, பனம்‌ பொருட்கள்‌, போன்றவற்றை உள்ளடக்‌இத்‌
தமது விளக்கத்தைக்‌ கொடுத்தார்கள்‌.

ரமணன்‌ தனது நண்பனுடன்‌ சேர்ந்து முதலுதவி பற்றி விளக்‌இக்‌
கூறினான்‌. ஒவ்வொரு வீட்டிலும்‌ ஒரு முதலுதவிப்‌ பெட்டி இருக்க
வேண்டியதன்‌ அவசியத்தைச்‌ செயல்‌ மூலம்‌ விளக்கினான்‌. நீரினால்‌
ஏற்படக்கூடிய நோய்கள்‌ பற்றியும்‌ விளக்கிக்கூறினான்‌.

யாழ்‌. குடாநாட்டின்‌ நீர்‌ வளம்‌ பற்றிய விளக்கத்துடன்‌, மழைநீரைச்‌
சேமிக்க வேண்டியதன்‌ அவசியத்தையும்‌ மாணவன்‌ ஒருவன்‌ விளக்கினான்‌.
கிணற்று நீர்மட்டம்‌ குறைவதும்‌, அது பின்னர்‌ உப்பு நீராக மாறுவதும்‌
ஏன்‌ என்பதை விளக்கிக்‌ கூறினான்‌.

பல காட்சிப்‌ பொருட்களும்‌ பார்ப்பவர்களுக்கு விளக்கத்தைக்‌
கொடுத்ததோடு சிந்திக்கக்கூடியதாகவும்‌ இருந்தன. முகுந்தன்‌ கலை
விழாவிற்கான ஓழுங்குகளைக்‌ கவனித்தான்‌. காலையில்‌ நடைபெற்ற
வித்தியாரம்பம்‌, கைத்தறி நிலையத்‌ திறப்பு விழா பற்றிய விபரங்களைத்‌
தலைவரிடம்‌ கேட்டான்‌. தலைவர்‌ முகுந்தனின்‌ ஆர்வத்தை உணர்ந்த
வராக, கைத்தறி நிலையத்திற்கே அவனை அழைத்துச்‌ சென்றார்‌.
கைத்தறி நிலையத்தின்‌ இறப்புகள்‌ வசந்தியிடமே இருந்தன. எனவே
வசந்தியிடம்‌ சென்று, முகுந்தனுக்குக்‌ கைத்தறி நிலையத்தைக்‌ காட்டும்‌
படி கூறினார்‌. வசந்தியும்‌ தான்‌ செய்த வேலைகளை வேறு ஒருவரிடம்‌
ஒப்படைத்துவிட்டு வந்தாள்‌.மூவரும்‌ கைத்தறிகள்‌ அமைக்கப்பட்ட
வீட்டிற்குச்‌ சென்றனர்‌.


Page 57வாணி விழா தீர்‌

நான்கு அறைகள்‌ கொண்ட வீட்டில்‌ ஒவ்வொரு அறையிலும்‌
ஒரு தறி போடப்பட்டிருந்தது. பொதுவான வரவேற்பறையில்‌ உள்ள
மேசையில்‌ குத்து விளக்கும்‌ நிறைகுடமும்‌ இருந்தன. திறப்புவிழா
நடைபெற்றமைக்கான அறிகுறிகள்‌ காணப்பட்டன. ஒவ்வொரு அறைக்‌
கும்‌ சென்று தறிகளைப்‌ பார்த்தனர்‌. தலைவர்‌ வரவேற்பறையில்‌ உள்ள
கணக்குப்‌ புத்தகங்களைப்‌ பார்வையிட்டுக்‌ கொண்டிருந்தசமயம்‌
பார்த்து, வசந்தியின்‌ காதுக்குள்‌ தாயாரின்‌ சம்மதத்தைத்‌ தெரிவித்தான்‌
முகுந்தன்‌. அப்படியே கன்னத்தில்‌ ஒரு முத்தத்தையும்‌ கொடுத்தான்‌.
வசந்தி வெட்கத்தினாலும்‌, சந்தோஷத்தினாலும்‌, முகுந்தனின்‌ கைகளை
இறுகப்பற்றிக்‌ கொண்டாள்‌. அப்போது தனது தந்தையின்‌ சம்மதத்தையும்‌
தெரிவித்தாள்‌. இருவரும்‌ சிரித்துக்‌ கொண்டே வரவேற்பறையை
அடைந்தனர்‌. தலைவர்‌ ஆச்சரியத்தோடு இருவரையும்‌ பார்த்தார்‌.
முகுந்தன்‌, “இனிமேல்‌ நாம்‌ வசந்தியிடம்‌ தான்‌ மாமா எங்கள்‌ உடைகளை
வாங்க வேண்டும்‌.” என்று கூறினான்‌. எல்லோரும்‌ சேர்ந்து சிரித்தார்கள்‌.
உண்மைதான்‌ முகுந்தன்‌, நாம்‌ எமக்குத்‌ தேவையான உடைகளை
இங்கேயே தயாரித்தல்‌ வேண்டும்‌. அதுமட்டுமல்ல நாம்‌ உடையில்‌
தன்னிறைவு காண வேண்டும்‌, என்றார்‌ தலைவர்‌. எமது தூய்மையான
முயற்சிக்குத்‌ தகுந்த பலன்‌ கிட்டும்‌ என்றாள்‌ வசந்தி. நாம்‌ இவை
பற்றிப்‌ பின்னர்‌ கதைப்போம்‌. இப்போ கலைவிழாவுக்கு வேண்டிய
ஒழுங்குகளைச்‌ செய்வோம்‌.

கலை விழா

வாசிகசாலைக்குச்‌ சென்ற மூவரும்‌ கலை விழாவிற்கு வேண்டிய
ஒழுங்குகளைச்‌ செய்தனர்‌. பனந்தோப்புக்‌ கிராம மக்கள்‌ அனைவரும்‌
ஒன்று கூடி விட்டனர்‌. வாசிகசாலை மண்டபம்‌ மேடையாக அலங்கரிக்கப்‌
பட்டிருந்தது. மண்டபத்திற்கு முன்புறம்‌ சிறுவர்களும்‌, பின்புறமாகப்‌
பெரியவர்களும்‌ அமர்ந்திருந்தார்கள்‌. கொடியேற்ற வைபவம்‌ நடை
பெற்றது. இரை நகர்ந்ததும்‌ சரஸ்வதிக்கான தீப அலங்காரங்களுடன்‌
பூசை நடைபெற்றது.

அறிவிப்பாளர்‌ எல்லோரையும்‌ வரவேற்று "முதல்‌ நிகழ்வாகப்‌
பிள்ளையார்‌ சுழி நடனம்‌” ஆரம்பமாகும்‌ என்றார்‌. தும்பிக்கையுடன்‌
அலங்கறிக்கப்பட்ட ஐந்து சிறுவர்கள்‌ மேடையில்‌ தோன்றினார்கள்‌.
“பிள்ளையார்‌ சுழி போட்டு நல்லதைத்‌ தொடங்கி விடு” என்ற
பாட்டிற்கு சிறுவர்கள்‌ நடனம்‌ ஆடினர்‌. உண்மையில்‌ சிறுவர்‌ போல்‌


Page 5842 மாற்றம்‌

வேடமணிந்தவர்கள்‌ பெண்கள்‌ தான்‌. நர்த்தன விநாயகர்‌ உண்மையாகவே
நடனமாடி எல்லோரையும்‌ மகிழ்வித்தார்‌. இப்‌ புதிய பாணியிலான
நடனத்தை எல்லோரும்‌ வியப்பு மிகுதியினால்‌ பலத்த கரகோசத்துடன்‌
வரவேற்றனர்‌. முகுந்தன்‌ தனது கமராவினால்‌ எல்லாக்‌ காட்சிகளையும்‌
ஓடி ஓடிப்‌ படம்பிடித்தான்‌.

ஏற்கனவே தயார்‌ நிலையில்‌ நின்ற சிறுமிகள்‌ "ஒம்‌ சக்தி ஓம்‌” என்ற
பாட்டிற்கு தீபாராதனை நிகழ்த்தினார்கள்‌. வந்திருந்தவர்கள்‌ தமது
குழந்தைகளின்‌ திறமையைக்‌ கண்டு மகழ்ச்சியாரவாரம்‌ செய்தனர்‌.
ரமணன்‌ முதலுதவிக்‌ குழுவினருடன்‌ கூட்டத்துள்‌ சென்று, எல்லோரையும்‌
அமர்ந்து பார்க்கும்படி வேண்டிக்‌ கொண்டனர்‌. பேச்சுப்‌ போட்டியில்‌
மூதற்‌.பறிசு பெற்ற சிறுமி “ஒளவையார்‌  வேடத்துடன்‌ வந்து சிறந்ததொரு
பேச்சைப்‌ பேசி எல்லோரையும்‌ சிந்திக்கத்‌ தூண்டினாள்‌. மேற்பிரிவில்‌
முதற்‌ பரிசு பெற்ற சிறுவன்‌ நாவலர்‌ போல்‌ வேடமணிந்து, "சைவமும்‌
தமிழும்‌” என்ற பொருளில்‌ பேசி அனைவரது கைதட்டல்களையும்‌
பெற்றுக்கொண்டான்‌.

அடுத்து ஆசிரியர்‌ சிதம்பரப்பிள்ளை தனது தலைமையுரையை
நிகழ்த்தினார்‌. வழமையான வாணி விழாவைவிட இன்று நடைபெறும்‌
விழா புதுமையானது என்றார்‌. கைத்தறி நிலையத்‌ திறப்பு விழா பற்றியும்‌,
பாலர்‌ பாடசாலை, ஆங்கில வகுப்புகள்‌, பொருட்காட்சி பற்றியும்‌
விபரித்தார்‌. வசந்தியையும்‌ முகுந்தனையும்‌ பாராட்டிப்‌ பேசினார்‌.
பொருட்காட்சியில்‌ வெற்றி பெற்ற மாணவர்களின்‌ ஆராய்ச்சித்திறனைப்‌
பாராட்டினார்‌. நாளை சனிக்கிழமை காலை 9 மணியளவில்‌ மர
நடுகைக்கான கருத்தரங்கு நடைபெறும்‌ என்றும்‌, சகல காணிச்‌ சொந்தக்‌
காரரும்‌ க.பொ.த. உயர்தர, சாதாரணதர மாணவர்களும்‌ தவறாது பங்கு
பற்ற வேண்டும்‌ எனக்கேட்டுக்கொண்டார்‌.

இதனைக்‌ தொடர்ந்து நந்தன்‌ வாணி விழா பற்றிய கருத்தைக்‌
கூறினார்‌. வாசிகசாலை எடுக்கும்‌ முற்போக்கான நிகழ்வுகளைப்‌
பெரிதும்‌ பாராட்டிப்‌ பேசியதோடு மக்களின்‌ வாழ்வியல்‌ பிரச்சினைகளை
இனங்கண்டு செயற்படுவதற்கு நன்றியும்‌ கூறினார்‌. பொருட்காட்சி
மிகவும்‌ தரம்‌ வாய்ந்ததாகவும்‌, இந்த மாணவர்கள்‌ தமது ஆய்வுகளைத்‌
தொடர்வதற்குப்‌ பல்கலைக்‌ கழகம்‌ உதவும்‌ என்றார்‌. இறுதி நிகழ்வாகக்‌
“கைகொடுத்த தெய்வம்‌” என்னும்‌ நாடகம்‌ அரங்கேறியது.

செயலர்‌ தம்பிராசாவின்‌ நன்றியுரை இடம்பெற்றது... சனிக்கிழமை
காலை நடைபெறவிருக்கும்‌ மரநடுகை சம்பந்தமான கருத்தரங்கை


Page 59 

வாணி விழா 40

நினைவூட்டினார்‌ எல்லோரும்‌ அமைதியாக எழுந்து நிற்க கொடியிறக்கும்‌
வைபவம்‌ நடந்தது.

வசந்தியும்‌ ரமணனும்‌ வீட்டிற்குப்‌ புறப்பட ஆயத்தமானார்கள்‌.
எல்லோரும்‌ வீட்டிற்குப்‌ போகும்‌ வரை முகுந்தன்‌ காத்து நின்றான்‌.
“நாங்கள்‌ வீட்டிற்குப்‌ போகப்‌ போகிறோம்‌ நீங்கள்‌ மின்‌ விளக்குகளை '
நிற்பாட்டலாம்‌, எல்லாம்‌ காலையில்‌ கதைக்கலாம்‌” என்று கூறிக்‌ கண்‌
களால்‌ விடைபெற்றுக்‌ கொண்டாள்‌ வசந்தி. முகுந்தன்‌ தலையசைத்து
மனமில்லாமல்‌ விடைகொடுத்தான்‌.


Page 6012

மரங்களை நடுவோம்‌ மண்ணைப்‌ பாதுகாப்போம்‌

அன்று சனிக்கிழமை, காலை எட்டுமணியளவில்‌ முகுந்தன்‌ வாசிக
சாலையில்‌ ஒழுங்கற்றுக்‌ காணப்பட்ட தளபாடங்களை ஒழுங்குபடுத்திக்‌
கொண்டிருந்தான்‌. வானம்‌ மப்பும்‌ மந்தாரமுமாக விருந்தது. வசந்தியின்‌
வருகைக்காக எதிர்பார்த்திருந்த முகுந்தன்‌, அவள்‌ வரும்‌ பாதையை
அடிக்கடி எட்டிப்பார்த்த வண்ணம்‌ இருந்தான்‌. வசந்தி வந்ததும்‌,
அவளின்‌ அழகுக்‌ கோலத்தைக்‌ கண்‌ வெட்டாது பார்த்து ரசித்தான்‌.
நெற்றியில்‌ திருநீறும்‌ கறுப்புப்‌ பொட்டும்‌, தலையில்‌ றோசாப்பூவும்‌,
வசந்தியின்‌ இயற்கை அழகை மேலும்‌ மெருகூட்டின. பொருத்தமான
சட்டைக்கு ஏற்ற சேலையும்‌ பார்ப்பவர்‌ மனதைக்‌ கஇழுகழுக்க வைக்கும்‌
பார்வையும்‌ முகுந்தனின்‌ மனதைப்‌ பெரிதும்‌ கவர்ந்தன. "வசந்தியை
நான்‌ அடைவதற்கு மிகவும்‌ கொடுத்து வைத்தவன்‌ தான்‌” என்று
மனதுள்‌ எண்ணினான்‌. ஓடிச்‌ சென்று கட்டியணைக்க வேண்டும்‌
போல்‌ இருந்தது, இருந்தும்‌ எதிரே சென்று "வாணி தேவியே வருக
வருக” என்று வரவேற்றான்‌. அருகில்‌ எவரும்‌ இல்லாததால்‌, "என்ன
வரவேற்பு பிரம்மாதமாக விருக்கிறது” என்றாள்‌ வசந்தி. "வாணி விழா
மிகப்‌ பிரமாதமாக விருந்ததாக எல்லோரும்‌ கூறுகிறார்கள்‌" என்றான்‌.
நாளைக்குக்‌ கோவிலில்‌ எல்லாம்‌ கதைப்போம்‌ என்று கூறிக்‌ கொண்டு
_ பாலர்‌ வகுப்பைச்‌ சுத்தம்‌ செய்வதற்குச்‌ சென்றாள்‌.

ரமணனுடன்‌ வந்திருந்த மாணவர்கள்‌ சிலர்‌ முகுந்தனிடம்‌ வந்து,
எவ்வளவு பேர்‌ வருவார்கள்‌ என்று கேட்டனர்‌.

“பெரிய மேசையை ஒரு பக்கமாக வைத்துப்‌ பத்து நாற்காலிகளை
வையுங்கள்‌, வருபவர்கள்‌ அமர்வதற்கு 50 நாற்காலிகளை ஒழுங்கு
செய்தால்‌ போதும்‌, ” என்று முகுந்தன்‌ கூறினான்‌. ரமணனிடம்‌, மேசை
விரிப்பையும்‌ பூச்சாடியையும்‌ வசந்தியிடம்‌ பெற்று வரும்படி கூறினான்‌.
வகுப்பறையில்‌ உள்ள கரும்பலகைகள்‌ இரண்டினனைக்‌ கொண்டுவந்து
சுவரில்‌ பொருத்தும்‌ படி பணித்தான்‌. அரைமணி நேரத்தில்‌ எல்லாம்‌
குயாராகிவிட்டன.


Page 61மரங்களை நடுவோம்‌ மண்ணைப்‌ பாதுகாப்போம்‌ தீத

தலைவர்‌ வந்ததும்‌ எல்லா ஒழுங்குகளையும்‌ பார்த்து விட்டு,
முகுந்தனையும்‌ மாணவர்களையும்‌ பாராட்டினார்‌. வருகைதரும்‌
யாவரையும்‌ மண்டபத்தில்‌ வநீது அமரும்படி கூறவேண்டும்‌ என
மாணவர்களுக்குச்‌ சொல்லிவிட்டுப்‌ பாலர்‌ வகுப்பறைக்குச்‌ சென்றார்‌.
வசந்தியிடம்‌ சென்று பரிமாறுவதற்காக சிற்றூண்டி வகைகளையும்‌ தேநீர்‌
போன்றவற்றையும்‌ பற்றிக்‌ கேட்டறிந்து கொண்டார்‌. எல்லாம்‌ மாலதி
வரும்போது கொண்டுவருவா என்று கூறினாள்‌ வசந்தி.

நிர்வாகசபை உறுப்பினர்கள்‌, உயர்வகுப்பு மாணவர்கள்‌, ஊறில்‌
உள்ள பெரியவர்கள்‌ பலரும்‌ வருகை தந்துகொண்டிருந்தார்கள்‌.
எல்லோரையும்‌ ஆசிரியர்‌ மண்டபத்தில்‌ அமரச்செய்தார்‌. மாவட்ட
கமநலக்‌ காரியாலயத்தில்‌ இருந்தும்‌ பலர்‌ வந்திருந்தார்கள்‌. முகுந்தன்‌
அவர்களை வரவேற்று தலைவருக்கு அறிமுகம்‌ செய்து வைத்தான்‌.
கமநலப்‌ பகுதியில்‌ இருந்து வருகைதந்த திரு.நடராசா, இிரு.வரதன்‌, இரு.
மோகன்‌ ,திரு.குகதாசன்‌ ஆகியோரை முகுந்தன்‌ வரவேற்றான்‌. தலைவர்‌
எல்லோரையும்‌ கூட்டிச்சென்று பிரதான மேசையில்‌ அமரச்‌ செய்தார்‌.
. உயர்‌ வகுப்பு மாணவர்கள்‌ தாம்‌ வரைந்த பனந்தோப்புக்‌ கிராமத்தின்‌
படத்தைச்‌ சுவரில்‌ பொருத்தினார்கள்‌. பெரும்பாலானவர்கள்‌ வருகை
தந்ததால்‌ தலைவர்‌ நிகழ்ச்சிகளை ஆரம்பிக்க விரும்பினார்‌.

இறை வணக்கத்தின்‌ பின்னர்‌ இரு நிமிட அமைதி வணக்கம்‌
செலுத்தப்பட்டது. தலைமையுரையில்‌ எல்லோரையும்‌ வரவேற்ற
பின்னர்‌ மர நடுகையின்‌ முக்கியத்தையும்‌, மண்ணைப்‌ பாதுகாக்க
வேண்டியதன்‌ அவசியத்தையும்‌, தலைவர்‌ எடுத்துக்‌ கூறினார்‌. எமது
ஊரில்‌ முதல்‌ முறையாக நடைபெறும்‌ மரம்நாட்டு விழாவுக்கான
இட்டமிடல்‌ கருத்தரங்கு இது, எனக்‌ கூறினார்‌. அடுத்து விவசாயப்‌
பயிற்சிப்‌ பாடசாலை அதிபர்‌ இரு.நடராசாவைக்‌ கருத்துரை வழங்கும்‌”
படி அழைத்தார்‌.

இரு.நடராசா அவர்கள்‌ பேசுவதற்கு எழுந்த போது எல்லோரும்‌
எழுநீது நின்று மரியாதை செலுத்தினர்‌. அவர்‌ தொடர்ந்து பேசும்‌ போது
வாசிகசாலை நிர்வாகத்தைப்‌ பராட்டி, இதுபோன்றதொரு நிகழ்ச்சியில்‌
கலந்து கொள்வதையிட்டுத்‌ தான்‌ பெரிதும்‌ சந்தோஷப்படுவதாகக்‌
கூறினார்‌. எமது முன்னோர்கள்‌ தமது வருங்காலச்‌ சந்ததியினரை
நினைத்தார்கள்‌ மரங்களை வளர்த்தனர்‌. நாம்‌ அவற்றின்‌ மூலம்‌ பயனைப்‌
பெறுகிறோம்‌. கடந்த இருபது வருடங்களாக மரங்கள்‌ கணக்கில்லாமல்‌
அழிக்கப்படுகின்றன. அழிக்கப்படும்‌ மரங்களுக்கு ஈடாக மரங்கள்‌
நாட்டப்படுவதில்லை. மரங்கள்‌ அகற்றப்படுவதால்‌ சூழல்‌ சமநிலை


Page 6246 மாற்றம்‌

குலைக்கப்படுகிறது. இதனால்‌ மழைவீழ்ச்சி குறைவடைகிறது. தரைக்‌
கழ்‌ நீர்மட்டம்‌ குறைகிறது. நல்ல நீரின்‌ மட்டத்தை மழைகாலத்தில்‌
கிணற்றின்‌ நீர்மட்டத்கில்‌ இருந்து அறிந்துகொள்ளலாம்‌. மரங்களை
நடுவது மட்டுமல்லாமல்‌ மழைநீரையும்‌ சேமித்தல்‌ வேண்டும்‌.
கடந்த 10 வருடங்களுக்கு முன்னர்‌ இஸ்ரேல்‌ நிபுணர்‌ குழு யாழ்‌.
மாவட்ட தரைக்க&ழ்‌ நீர்‌ பற்றி ஆய்வு செய்தபின்‌ கூறிய கருத்து மிகவும்‌
முக்கியமானது. தரைக்கீழ்‌ நல்ல நீரின்‌ மட்டம்‌ குறைவடைந்து செல்ல
உப்பு நீரைத்தான்‌ விவசாயச்‌ செய்கைக்குப்‌ பயன்படுத்த வேண்டிவரும்‌.
வற்றாத நிலாவரைக்‌ கிணற்று நீர்‌ ஏன்‌ உப்பு நீரானது. 2? கிணறுகளில்‌
இருந்து நாம்‌ வெளிக்‌ கொணரும்‌ நீரின்‌ அளவு கூடக்கூட உப்பு நீரின்‌
கலப்பும்‌ கூடும்‌ இதனால்‌ தான்‌ இஸ்ரேல்‌ நிபுணர்கள்‌, “இன்னும்‌ 50
வருடங்களில்‌ யாழ்‌. குடாநாடு பாலைவனமாகிவிடும்‌”' என்றார்கள்‌.
எனவே மரங்களை நட்டு மழைநீரைச்‌ சேமிதல்‌ வேண்டும்‌ என்று
விளக்கினார்‌.

“இங்கு வந்துள்ள இளம்‌ வயதினரைச்‌ சிறப்பாகப்‌ பாராட்டுகிறேன்‌”
என்றார்‌. பல முன்னேற்றகரமான திட்டங்களை நடைமுறைப்படுத்து
வதற்கு நானும்‌ எனது இணைக்களத்தைச்‌ சேர்ந்தவர்களும்‌ உங்களுக்கு
உதவுவோம்‌ என உறுதிகூறினார்‌. இவரது கருத்துரையைத்‌ தொடர்ந்து,
விவசாயப்‌ போதனாசிநியர்‌ இரு.வரதன்‌ தனது கருத்துக்களைக்‌ கூறினார்‌.
எந்த வகை மரங்களைத்‌ தெரிவு செய்கிறோம்‌, ஏன்‌ அவற்றைக்‌
தெறிவு செய்ய வேண்டும்‌? எந்த அடிப்படையில்‌ நடுதல்‌ வேண்டும்‌ ௦
சூழலையும்‌, நிலத்தின்‌ தன்மையையும்‌ கருத்தில்‌ கொண்டு நாம்‌
திட்டமிட வேண்டும்‌. இங்கு வந்திருக்கும்‌ விவசாசப்‌ பெருமக்களை
பெரு மனத்தோடு வரவேற்கிறேன்‌. எங்கள்‌ விவசாய நிலங்கள்‌ சில
வருடங்களின்‌ பின்‌ எவ்வாறு காட்சிதரும்‌ என்பதையும்‌ கருத்தில்‌ கொள்ள
வேண்டியுள்ளது. நாம்‌ பல்வேறு விடயங்களைப்பற்றிப்‌ பேசிக்கொண்டே
போகலாம்‌. எமது அன்புக்குரிய ஆசிரியர்‌ இரு.முகுந்தன்‌ பல திட்டங்களை
உங்களுக்காக வடிவமைத்துள்ளார்‌. நாம்‌ எல்லோரும்‌ சேர்ந்து, ஐந்து
குழுக்களாகப்‌ பிரிந்து செயலில்‌ இறங்குவோம்‌. உங்கள்‌ பிரதேசம்‌
ஐந்து பிரிவுகளாகப்‌ பிறிக்கப்பட்டுள்ளது.ஒஓவ்வொரு குழுவுக்கும்‌ ஒரு
தலைவரையும்‌ செயலரையும்‌ தெறிவுசெய்து செயலமர்வில்‌ ஈடுபடுவோம்‌,
எல்லோரும்‌ ஐந்து குழுக்களாகப்‌ பிரிந்து செயலமர்வில்‌ ஈடுபட்டனர்‌.

தேநீர்‌, குளிர்பானங்கள்‌, சிற்றாண்டிகள்‌ வழங்கப்பட்டன. மரநடுகைக்‌
குழுக்களைச்‌ சென்று பார்த்து அறிவுரை வழங்கினார்‌ விவசாயப்‌
போதனாகிரியர்‌. பனநீதோப்புக்‌ கிராமம்‌ ஐந்து பிரிவுகளாகப்‌ பிரிக்கப்பட்டு,


Page 63மரங்களை நடுவோம்‌ மண்ணைப்‌ பாதுகாப்போம்‌ கிர

ஒவ்வொரு குழுவுக்கும்‌ ஒருவர்‌ தலைவராகவும்‌, உயர்‌ வகுப்பு மாணவர்‌
ஒருவர்‌ செயலராகவும்‌ தெரிவாகினர்‌. ஒவ்வொரு குழுவிலும்‌, அப்பிரிவில்‌
உள்ளவர்கள்‌ தமது காணிகளில்‌, எவ்வகையான மரங்களை நடலாம்‌ என
விபரமாகத்‌ திட்டமிட்டார்கள்‌. தேவையான மரக்‌ கன்றுகள்‌, நாற்றுகள்‌,
கருவிகள்‌ யாவற்றையும்‌ விபரமாகத்‌ திட்டமிட்டார்கள்‌. ஓவ்வொரு
குழுவும்‌ தமது பிரிவுக்கான படத்தில்‌ எத்தகைய மரங்கள்‌ நடப்பட
வேண்டும்‌ என்று எழுகினார்கள்‌. அத்துடன்‌ தத்தமது இட்டங்களையும்‌
பார்வைக்கு வைத்தார்கள்‌. நண்பகல்‌ 12 மணியளவில்‌ குழுக்கள்‌ தமது
இட்டங்களைப்‌ பார்வையிட்ட பின்பு, தேவையான மரக்கன்றுகளின்‌
பட்டியலை விவசாயப்‌ போதனாகிறியநிடம்‌ கொடுத்தார்கள்‌. அரை
மணிநேர இடை வேளையின்‌ பின்னர்‌ மீண்டும்‌ கூடினார்கள்‌. மர
நடுகை அடுத்த வாரம்‌ சனிக்கிழமை எனத்‌ த$ீர்மானிக்கப்பட்டது.
மரக்கன்றுகளைக்‌ கொண்டுவந்து கொடுக்கும்‌ பொறுப்பை விவசாயப்‌
பிரிவு ஏற்றுக்‌ கொண்டது. தேவையான கருவிகளை உள்‌ ஊறில்‌
சேகரிப்பது எனவும்‌, கேவையான பனம்‌ வித்துக்களைத்‌ தலைவர்‌ தான்‌
தருவதாகவும்‌ கூறினார்‌. மரநடுகைக்கான திட்டங்கள்‌ வகுக்கப்பட்ட
பின்னர்‌ யாவரும்‌ விடைபெற்றுக்‌ கொண்டனர்‌.

வசந்தி முகுந்தனிடம்‌ வந்து, "நாளை மாலை 3 மணிக்குப்‌ பிள்ளையார்‌
கோவிலுக்கு வாருங்கள்‌” என்றாள்‌. முகுந்தனும்‌ தவறாது வருவதாகக்‌
கூறிச்‌ சென்றான்‌.


Page 6413

பிள்ளையார்‌ கோவில்‌ பொங்கல்‌

எந்தவொரு காரியத்தையும்‌ ஆரம்பிப்பதற்கு முன்னர்‌, விநாயகப்‌
பெருமானை வணங்குதல்‌ மரபு. நடராசரும்‌ கண்மணியும்‌ தமது மகளின்‌
இருமணம்‌ நல்ல முறையில்‌ நிறைவேற வேண்டும்‌ என்று நினைத்துப்‌
பிள்ளையாருக்குப்‌ பொங்கல்‌ செய்வதாக வேண்டிக்‌ கொண்டார்கள்‌.
தங்கள்‌ வேண்டுதலை நிறைவு செய்வதற்காக ஞாயிறு மதியம்‌ மருதடிப்‌
பிள்ளையார்‌ கோவிலுக்குச்‌ சென்றார்கள்‌. நடராசர்‌ தனது புதிய வண்டியில்‌
பொங்கலுக்குத்‌ தேவையான பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்றார்‌.
கண்மணியும்‌ வசந்தியும்‌ கால்நடையாகவே சென்றனர்‌. ரமணன்‌ தனது
துவிச்சக்கர வண்டியில்‌ சென்றான்‌. கண்மணி ரமணனிடம்‌ விரைவாகச்‌
சென்று கோவில்‌ மண்டபத்தைச்‌ சுத்தம்‌ செய்யும்‌ படி கூறினாள்‌. போகும்‌
வழியில்‌ சிவமணியைச்‌ சந்தித்தனர்‌. கண்மணி முகுந்தனைப்பற்றி
விசாறித்தாள்‌. “முகுந்தன்‌ இப்போதுதான்‌ குளிக்கச்‌ சென்றான்‌, விரைவில்‌
வந்து விடுவான்‌” என்று சிவமணி கூறினாள்‌.

கோவிலை எல்லோரும்‌ சென்றடைந்ததும்‌, பொங்கல்‌ மண்டபத்தில்‌
நடராசர்‌ எல்லாப்‌ பொருட்களையும்‌ வைத்திருந்ததைக்‌ கண்டனர்‌.
ரமணன்‌ கோவிலைச்‌ சுற்றியிருந்த சருகுகளைக்‌ கூட்டித்‌ துப்பரவு
செய்தான்‌, பொங்கலுக்கு வேண்டிய பொருட்கள்‌ எல்லாம்‌ இருக்கிறதா
என்று சரிபார்த்த கண்மணி கோவிலைச்‌ சுற்றிக்‌ கும்பிட்ட பின்னர்‌
பொங்கல்‌ மண்டபத்திற்கு வந்து சுறுசுறுப்பாக இயங்கினாள்‌. சவமணியும்‌
கூடவே உதவிகளைச்‌ செய்தாள்‌. முகுந்தன்‌ கோவிலை யடைந்ததும்‌
பிள்ளையாரை வணங்கிவிட்டு கோவில்‌ மண்டபத்தில்‌ அமர்ந்து
கொண்டான்‌. கோவில்‌ பூசகர்‌ வந்து முகுந்தனுடன்‌ பல விடையங்களைப்‌
பற்றிக்‌ கதைத்தார்‌.

ரமணன்‌ விளக்குகளைச்‌ சுத்தம்‌ செய்து திரிகளை அடுக்கினான்‌.
வசந்தி கோவில்‌ மண்டபத்தினுள்‌ வந்து ரமணனுடன்‌ விளக்குகளைச்‌
சுத்தம்‌ செய்தாள்‌. பூசகர்‌ ரமணனுடன்‌ உள்‌ மண்டபத்தைச்‌ சுத்தம்‌
செய்து அலங்காரம்‌ செய்தார்‌. இச்சந்தர்ப்பத்தை எதிர்பார்த்த வசந்தி
முகுந்தனுடன்‌ பேச்சுக்கொடுத்தாள்‌. “வெண்ணிலா வந்து விட்டது”


Page 65பிள்ளையார்‌ கோவில்‌ பொங்கல்‌ 40

என்று சிரித்த படி முகுந்தன்‌ கூறினான்‌. தனது வார்த்தைகளை எல்லாம்‌
அள்ளிக்‌ கொட்ட வேண்டும்‌ போல்‌ இருந்தாலும்‌, அவளின்‌ வாயில்‌
இருந்து பேச்சு வரவில்லை. சிரித்தபடி அவனது உருவத்தைப்‌ பார்த்து
ரசித்தாள்‌.

"வசந்தி என்‌ கதைக்காமல்‌ இருக்கிறீர்‌? என்றான்‌. "என்னையே
உங்களிடம்‌ தந்தபின்‌ எதனைக்‌ கதைப்பது” என்றாள்‌.

"பிள்ளையாருக்குத்‌ தான்‌ நன்றி சொல்ல வேண்டும்‌”. அதற்குத்‌
தானே பொங்கல்‌ நடக்கிறது” என்றாள்‌. அது சரி வசந்தி, என்‌ நீர்‌ எங்கள்‌
வீட்டிற்கு வந்து அம்மாவிற்கு உதவியாக இருக்கக்‌ கூடாது? என்று
முகுந்தன்‌ கேட்டான்‌. அம்மாவிற்கு மட்டும்‌ தான்‌ உதவியா? என்று
வசந்தி கேட்டாள்‌. வசந்தி நீர்‌ நன்றாகக்‌ கதைப்பீர்‌ என்று தெரியும்‌.
இருந்தாலும்‌ அம்மா தனிமையில்‌: இருக்கும்‌ போது அங்கு வந்தால்‌
சந்தோஷப்படுவா” என்றான்‌ முகுந்தன்‌.

ரமணன்‌ வெளியே சென்று ஒரு பை நிரம்பப்‌ பூக்களைக்‌ கொண்டு
வந்து வசந்தியிடம்‌ கொடுத்தான்‌. பூசகர்‌ நாரைக்‌ கொண்டுவந்து
கொடுத்தார்‌. சரங்கள்‌, மாலைகள்‌ தயாராகின. முகுந்தன்‌ சரங்களைத்‌
தொங்க விட்டான்‌. ரமணன்‌. விளக்குகளுக்கு நெய்‌ விட்டான்‌. பொங்கல்‌
மண்டபத்துள்‌ ஓடிச்‌ சென்று பார்த்துவிட்டு வந்தான்‌. என்ன நடக்கிறது
என்று வசந்தி கேட்டாள்‌. பொங்கல்‌ தயார்‌, மோதகம்‌ நடக்கிறது,
என்றான்‌.

பிள்ளையாறின்‌ சிறிய மண்டபம்‌ அலங்கரிக்கப்பட்டுப்‌ பூசைக்குத்‌
தயாராகியது. வசந்தி பிள்ளையாருக்காக இரண்டு மாலைகளைக்‌
கட்டிக்‌ கொடுத்தாள்‌. முகுந்தன்‌ அருகில்‌ சென்று எனக்கும்‌ மாலை
கட்டுவதற்குச்‌ சொல்லித்தருவாயா? என்று கேட்டான்‌. "நானே
மாலையாகக்‌ காத்திருக்கிறேன்‌” என்றாள்‌. பூசகர்‌ ரமணனை ஏதோ
அவசர வேலையாக வெளியே அனுப்பிவிட்டார்‌. மண்டபத்தைத்‌
துப்பரவு செய்தவண்ணம்‌ வசந்தியுடன்‌ கதைப்பதில்‌ உள்ள சுகத்தை
அனுபவித்தான்‌ முகுந்தன்‌.

அரைமணி நேரக்தின்‌ பின்‌ அங்கு வந்த ரமணன்‌, பூசகரிடம்‌ எதையோ
கொடுத்துவிட்டுப்‌ பொங்கல்‌ மண்டபத்துக்குச்‌ சென்று பூசைக்கு
நேரம்‌ வந்துவிட்டது என்று கூற, “நாமும்‌ தயாராகிவிட்டோம்‌”' என்று
அங்கிருந்தவர்கள்‌ கூறினார்கள்‌.

நடராசர்‌ படையலுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக்‌ கொண்டு
வந்தார்‌. அபிஷேகத்திற்காக எல்லோரும்‌ மண்டபத்தில்‌ கூடினார்கள்‌.


Page 6650 மாற்றம்‌

பூசகர்‌ அபிஷேகத்தின்‌ பின்னர்‌ படையல்‌ செய்யலாம்‌ என்றார்‌. நடராசரும்‌
ரமணனும்‌, பொங்கல்‌, மோதகம்‌, பழங்கள்‌ யாவற்றையும்‌ மண்டபத்தில்‌
வைத்தார்கள்‌. முகுந்தன்‌ விளக்குகளை ஏற்றினான்‌.

பூசைகள்‌ யாவும்‌ சிறப்பாக நடைபெற்றுக்‌ கொண்டிருந்தன.
சிதம்பரப்பிள்ளை ஆசிரியரும்‌ அவரது துணைவியாரும்‌ வந்து சேர்ந்தனர்‌.
அவர்களும்‌ பூசையில்‌ கலந்து கொண்டனர்‌. எல்லோருக்கும்‌ பிரசாதம்‌
_ வழங்கப்பட்டது. பூசகர்‌ கொடுத்த அர்ச்சனைத்‌ தட்டை முகுந்தன்‌
பெற்றுக்‌ கொண்டான்‌. தலைவரும்‌ பாரியாரும்‌ விடைபெற்றுக்‌
கொண்டனர்‌. முகுந்தனும்‌ ரமணனும்‌ தக்கமது துவிச்சக்கர வண்டிகளில்‌
வீடு திரும்பினர்‌. நடராசர்‌ வண்டிலில்‌ சென்றார்‌. சிவமணி, கண்மணி,
வசந்தி ஆகியோர்‌ நடந்தே வீடு திரும்பினர்‌.


Page 6714

கைத்தறி நிலையத்தில்‌ கலாட்டா

காலை ஏழுமணியிருக்கும்‌ தனது மதிய உணவுடன்‌ பாடசாலைக்குப்‌
புறப்பட்ட போது வசந்தியும்‌ தனது கோள்‌ பையுடன்‌ வருவதைக்‌
கண்டான்‌ முகுநீதன்‌. வசந்தியுடன்‌ சிறிது நேரம்‌ கதைத்துவிட்டுப்‌
புறப்பட்டான்‌. சிவமணி மாமியை மதிய இடைவேளையின்‌ போது
வந்து பார்க்கிறேன்‌ என்று கூறினாள்‌. நிறைந்த மனத்துடன்‌ முகுந்தன்‌
பாடசாலையை நோக்கிப்‌ புறப்பட்டான்‌.

வழமையாக 8 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய கைத்தறி நிலையம்‌,
அன்று காலை ஏழரை மணிக்கே ஆரவாரப்பட்டது. புஇதாகப்‌ பயிற்சி
பெறுவதற்காக வந்த இருவரையும்‌ வரவேற்று, அவர்களுக்கான
கடமைகளை விளக்கிக்‌ கூறினாள்‌ வசந்தி. கைத்தறிகளை நிரந்தரமாக
இயக்கும்‌ இருவரான வசந்தாவும்‌, சோதியும்‌ வந்ததும்‌ அவர்களுக்குப்‌
புதியவர்களை அறிமுகம்‌ செய்தபின்‌ பயிற்சி விபரங்களை விளக்கிக்‌
கூறினாள்‌. கொள்வனவு செய்யப்பட்ட நூல்‌ வகைகளைப்‌ பதிவு செய்த
பின்னர்‌ காரியாலய அறையில்‌ யாவற்றையும்‌ ஒழுங்கு செய்த பின்னர்‌
புறப்படுவதற்குத்‌ தயாராகும்‌ வேளை, வசந்தாவை அழைத்து, பாலர்‌
வகுப்பில்‌ ஒரு ஆசிரியர்‌ மட்டும்‌ தனிமையில்‌ தனது கடமைகளைச்‌
செய்யமுடியாது என்று கூறிக்‌ காரியாலயத்தைப்‌ பூட்டிக்‌ திறப்பை
வசந்தாவிடம்‌ கொடுத்தாள்‌. "அக்கா நீங்கள்‌ ஒன்றுக்கும்‌ யோசிக்காது
உங்கள்‌ வேலையை முடித்துவிட்டு வாருங்கள்‌” என்று கூறி வசந்தியை
வழியனுப்பி வைத்தாள்‌ வசந்தா.

பாலர்‌ வகுப்பிற்குச்‌ சென்ற வசந்தி சிறுவர்‌ சிறுமிகளைத்‌
தமது இருக்கைகளில்‌ அமரச்‌ செய்தாள்‌. பாலர்‌ பாடசாலைப்‌ பயிற்‌
சியைமுடித்து,முதன்‌ முதலாக வந்திருக்கும்‌. மாலதியை வரவேற்றுப்‌
பிள்ளைகள்‌ யாவருக்கும்‌ அறிமுகம்‌ செய்து வைத்தாள்‌. மாலதி
அக்காவிற்கு எல்லோரும்‌ சேர்ந்து "வணக்கம்‌ அக்கா” என்றார்கள்‌.
மாலதிக்கும்‌ ஒரு விதமான உற்சாகம்‌ பிறந்து விட்டது. சிறிது நேரம்‌
மாலதியுடன்‌ பாடலுக்கு அபிநயம்‌ செய்தார்கள்‌. வசந்திக்கும்‌ ஏற்பட்ட
சந்தோஷத்தை சிரிப்பினால்‌ வெளிக்காட்டினாள்‌. குழுக்களாக விருக்கும்‌ _-


Page 6852 மாற்றம்‌

ஒவ்வொருவருக்கும்‌ ஒரு வரைதல்‌ தாள்‌ கொடுக்கலாம்‌ என்றது தான்‌
தாமதம்‌, உடன்‌ குழுத்தலைவர்கள்‌ வந்து தமக்குத்‌ தேவையான
தாள்களைப்‌ பெற்றுச்‌ சென்றனர்‌. ஏற்கனவே தயாரித்து வைத்த உருளைக்‌
கிழங்கு அச்சுக்களையும்‌ கொடுத்தார்கள்‌. பல்வேறு நிற மைகளையும்‌
ஒவ்வொரு குழுவுக்கும்‌ கொடுத்தார்கள்‌. தமக்கு விருப்பமான கோலங்‌
களைத்‌ தாள்களில்‌ பதித்தார்கள்‌. மாலதியும்‌ வசந்தியும்‌ ஒவ்வொரு
குழுவுக்கும்‌ சென்று உதவினார்கள்‌. பிள்ளைகள்‌ குதூகலகமாக இயங்கிக்‌
கொண்டி ருந்தார்கள்‌. மாலதி மிகவும்‌ புத்துணர்ச்சியோடு பிள்ளைகளுடன்‌
சேர்ந்து இயங்கிக்‌ கொண்டி ருந்தாள்‌.

பாலர்‌ வகுப்பறை வாசலில்‌ வசந்தா வந்து நின்றாள்‌. இதனைக்‌ கண்ட
வசந்தி அவளிடம்‌ வந்து, என்ன விசேடம்‌ என்று கேட்டாள்‌. அப்போது
வசந்தா, "அக்கா, யாரோ 'ரவி' என்பவர்‌ வந்திருக்கிறார்‌, உங்களுடன்‌
கதைக்க வேண்டுமாம்‌” என்றாள்‌. 'ரவி' கைத்தொழில்‌ சம்பந்தமான
ஆலோசகர்‌ என்பது வசந்திக்குத்‌ தெரியும்‌. உடன்‌ மாலதியிடம்‌ சென்று,
கைத்தறி நிலையத்திற்குப்‌ போய்‌ வருகிறேன்‌ என்று கூறிவிட்டு வந்தாள்‌.
வசந்தியும்‌ வசந்தாவும்‌ சேர்ந்தே கைத்தறி நிலையத்திற்கு வந்தனர்‌.
காரியாலய அறையில்‌ ரவி அமர்ந்து இருந்தான்‌. வசந்தி உள்ளே

ரர 7/7

வந்ததும்‌, "வணக்கம்‌ வாருங்கள்‌ என்று ரவி வரவேற்றான்‌” உங்களைப்‌
பார்க்கத்தான்‌ வந்தேன்‌” என்றான்‌ ரவி. என்ன விடயமாக வந்தீர்கள்‌
என்று அறியலாமா? என்று வசந்தி கேட்டாள்‌.

"உங்கள்‌ கைத்தறி நிலையம்‌ கூட்டுறவுச்‌ சங்கத்தினால்‌ நடத்தப்‌
படுகிறது என்பது எனக்குத்‌ தெரியும்‌, இருப்பினும்‌ புதிதாக ஆரம்‌
பிக்கப்பட்ட படியால்‌, பல நடைமுறைப்‌ பிரச்சினைகள்‌ இருக்கலாம்‌,
அவற்றை உங்களுக்கு விளக்கிக்‌ கூறத்தான்‌ வந்தேன்‌” என்றான்‌ ரவி.
இங்கு பெறிதாக ஒரு பிரச்சினையும்‌ இல்லை. எல்லாவற்றையும்‌ நாமே
இருத்திக்‌ கொள்கிறோம்‌. மேலஇகமாக ஏதாவது தேவைப்‌ பட்டால்‌, சங்க
உதவி முகாமையாளர்‌ கந்தசாமி அண்ணர்‌ உடன்‌ எமக்கு உதவுகிறார்‌
என்றாள்‌ வசந்தி வேண்டாவெறுப்பாக. "இல்லை வசந்தி நான்‌ உம்மைச்‌
சந்திக்கவே வந்தேன்‌” என்று சொல்லி நிறுத்தினான்‌ ரவி. “என்னை
எதற்காகச்‌ சந்திக்க வேண்டும்‌?” என்று சற்று கடுமையான குரலில்‌
கேட்டாள்‌ வசந்தி. ரவி சிறித்துக்‌ கொண்டே எனக்கும்‌ இரண்டு மூன்று
இடங்களில்‌ பெண்‌ பார்க்கிறார்கள்‌. அவற்றில்‌ எனக்கு விருப்பமில்லை.
ஏன்‌ சுற்றி வளைத்துப்‌ பேசுவான்‌, எனக்கு ௨ம்‌ மீது தான்‌ விருப்பம்‌”
என்றான்‌. நல்ல வேளையாக இப்‌ பேச்சுக்களை வசந்தா கேட்கவில்லை.
வசந்தி பதில்‌ ஏதும்‌ கூறாமல்‌ எழுந்து நின்றாள்‌. முகம்‌ கடுகடுப்பானது.


Page 69கைத்தறி நிலையத்தில்‌ கலாட்டா 58

ரவியும்‌ எழுந்து வசந்தியின்‌ அருகில்‌ சென்றான்‌. "எனக்குக்‌ கட்டே

வராதே” என்று மிகவும்‌ கோபத்தோடு கூறினாள்‌. ரவி வசந்திக்கு மிக

அண்மையில்‌ சென்று அவளை அணைத்ததுதான்‌ தாமதம்‌, ரவியின்‌
கன்னத்தில்‌ வசந்தியின்‌ ஐந்து விரல்களும்‌ ஆழமாகப்‌ ”பளீர்‌” எனப்‌
பதிந்தன. ரவி சற்றும்‌ எதிர்‌ பார்க்காதவனாக அவளின்‌ சேலையைப்‌
பிடித்து இழுத்தான்‌. மின்னல்‌ வேகத்தில்‌ வெளியே பாய்ந்து வந்த வசந்தி,

கையில்‌ இருந்த இறப்பினால்‌ அறைக்‌ கதவைப்‌ பூட்டிவிட்டாள்‌. சத்தம்‌

கேட்டு வசந்தா அங்கு ஓடிவந்தாள்‌. இருவரும்‌ ஓடிச்சென்று ரவியின்‌
மோட்டார்‌ சைக்கிளை அடுத்த அறையில்‌ விட்டுப்‌ பூட்டிவிட்டார்கள்‌.
சோதியிடம்‌, உடன்‌ சங்கத்திற்குச்‌ சென்று கந்தசாமி அண்ணருக்குத்‌
தகவல்‌ சொல்லும்‌ படி கூறினாள்‌. வசந்தி உடன்‌ தலைவருக்குக்‌
தகவல்‌ சொல்லும்‌ படி கூறினாள்‌. அயலவர்கள்‌ நடந்ததை அறிந்து
அவசர ஓலி எழுப்பினார்கள்‌. கோவில்‌ மணிகள்‌ இடைவிடாது ஒலி
எழுப்பின. கையடக்கக்‌ தொலைபேசிகளில்‌ தகவல்கள்‌ பறந்தன. கைத்தறி
நிலையத்தில்‌ ஒரே மக்கள்‌ கூட்டம்‌. தோட்டங்களில்‌ வேலைசெய்தவர்கள்‌
கையில்‌ அகப்பட்டதை எடுத்துக்‌ கொண்டு, கத்தி பொல்லுகள்‌ சதம்‌
கைத்தறி நிலையத்தைச்‌ சுற்றி வளைத்துவிட்டார்கள்‌.

அறையினுள்‌ பூட்டி வைக்கப்பட்ட ரவியைக்‌ கண்டவர்கள்‌, “வாடா
வெளியே ! உனக்கென்டா பெட்டைகளுடன்‌ சேட்டையா”? என்று
கத்தினார்கள்‌. ”உவனைச்‌ சும்மாவிடக்‌ கூடாது”! மக்கள்‌ கூட்டம்‌
அதிகறிக்க அதிகரிக்க, ஒரே களேபரமாகக்‌ காட்சிதந்தது கைத்தறி
நிலையம்‌.

வயது முதிர்ந்தவர்கள்‌ சிலர்‌ ஒப்பாரி வைக்கத்‌ தொடங்கிவிட்டார்கள்‌.
வசந்தி ஓடிச்சென்று முகுந்தன்‌ வீட்டில்‌ சிவமணியிடம்‌ நடந்தவற்றைக்‌
கூறி ஆறுதல்‌ பெற்றாள்‌.

கைத்தறி நிலையத்திற்கு வந்த சிதம்பரப்பிள்ளை ஆசிரியர்‌,
மக்கள்‌ கூட்டத்தைக்‌ கண்டு அதிர்ச்சியடைந்து விட்டார்‌. சோதி நடந்த
விபரங்களைக்‌ கூறினாள்‌. ரவி எங்கேயென்று கேட்டார்‌. அறைக்குள்‌
விட்டுப்‌ பூட்டிவிட்டோம்‌ என்றாள்‌. சங்கத்தில்‌ இருந்து கந்தசாமியும்‌
வந்து சேர்ந்தார்‌. நடராசரும்‌ கண்மணியும்‌ வந்தவுடன்‌ பெரும்‌ ஆரவாரம்‌
ஏற்பட்டது. நடராசர்‌ தனது கோபத்தை அடக்க முடியாதவராக, ஓடிச்‌
சென்று, ரவியைப்‌ பூட்டி வைத்த கதவிற்கு உதைத்தார்‌. இந்த நேரத்தில்‌
பலர்‌ கதவை உடைத்து ரவியை வெளியே கொண்டு வா, எனக்‌ கோரினர்‌.
கண்மணி முகுந்தன்‌ வீட்டிற்குச்‌ சென்று வசந்தியையும்‌ வசந்தாவையும்‌
கூட்டி வந்தார்கள்‌. எல்லோரையும்‌ அமைதியாக இருக்கும்‌ படி கூறி,


Page 7054 மாற்றம்‌

கலைவர்‌ அறைக்‌ திறப்பை வசந்தியிடம்‌ இருந்து பெற்றுக்‌ கொண்டார்‌.
அறையைக்‌ துறந்த போது, ரவி அங்கு அமைதியாகவிருப்பகைக்‌ கண்டார்‌.
தான்‌ செய்த பிழையை மன்னிக்கும்படி தலைவறிடம்‌ வேண்டினான்‌ ரவி.
தலைவர்‌ வசந்தியைக்‌ கூட்டிச்சென்று, பின்‌ ரவிமுன்‌ சென்று, எனக்குக்‌
கூறியதை வசந்தியிடம்‌ கூறும்‌ படி சொன்னார்‌. ரவியும்‌ ஒன்றும்‌ செய்ய
முடியாத நிலையில்‌ வசந்தியிடம்‌ மன்னிப்புக்‌ கேட்டான்‌.

ரவியின்‌ நிலையை உணர்ந்த கந்தசாமி தலைவரிடம்‌ சென்று,
தான்‌ ரவியைகச்‌ கூட்டிச்‌ செல்வதாகக்‌ கூறினார்‌. ரவியை இங்கிருந்து
உடனடியாக அகற்றுவதே மேலான செயல்‌ என்பதைத்‌ தலைவரும்‌
ஒத்துக்கொண்டார்‌. உடன்‌ கந்தசாமி ரவியைக்‌ கூட்டிக்கொண்டு சங்கப்‌
பணிமனைக்குச்‌ சென்றார்‌. தலைவர்‌ வசந்தி நடராசர்‌ கண்மணி ஆகியோர்‌
முகுந்தன்‌ வீட்டிற்குச்‌ சென்றனர்‌.

முகுந்தன்‌ வீட்டில்‌, சிவமணி எல்லோரையும்‌ வரவேற்று உள்ளே
அழைத்துச்‌ சென்றாள்‌. எல்லோருக்குமாகத்‌ தேநீர்‌ தயாரிப்பதற்கான
ஒழுங்குகளைச்‌ செய்தாள்‌. வசந்தி அங்கு வந்து, "மாமி நீங்கள்‌” போய்‌
அவர்களுடன்‌ கதைத்துக்‌ கொண்டிருங்கள்‌ என்று கூறிவிட்டு, தேயிலை
சீனி பால்‌ இருக்கும்‌ இடங்களைக்‌ கேட்டுக்‌ தெறிந்து கொண்டாள்‌.

தலைவர்‌ சிதம்பரப்பிள்ளை சிவமணியைப்‌ பார்த்து, “மனம்‌ வருந்‌
கக்‌ கூடிய சம்பவம்‌ இன்று நடந்துள்ளது, எல்லோருக்கும்‌ வருத்தம்‌
தான்‌, இருப்பினும்‌ உங்கள்‌ மருமகள்‌ வசந்தி நல்லதொரு பாடத்தை
ஒரு காமுகனுக்குப்‌ புகட்டியுள்ளாள்‌, நான்‌ வசந்தியை மனமாரப்‌
பாராட்டுகிறேன்‌” என்றார்‌.

“இனியும்‌ காலம்‌ தாழ்த்தாது நாம்‌ காரியத்தில்‌ இறங்க வேண்டும்‌”
என்றார்‌ நடராசர்‌. கண்மணியும்‌ இதனை ஏற்றுக்‌ கொண்டு, "நல்ல
கருமத்தைப்‌ பின்போடுவது நல்லதல்ல” என்றாள்‌.

தகவல்‌ அறிந்து மதிய இடைவேளையுடன்‌ முகுந்தனும்‌ வீடு
வந்து சேர்ந்தான்‌. வீட்டில்‌ இருந்தவர்கள்‌ எல்லோரையும்‌ பார்த்ததும்‌
சற்று கலவரம்‌ அடைந்து விட்டான்‌. தாயாறிடம்‌ சென்று, “என்னம்மா
நடந்தது” என்று கேட்டான்‌. "பெரிதாக ஒன்றுமில்லை, கலாட்டா செய்ய
வநீதவன்‌ வசந்தியிடம்‌ அடி வாங்கினான்‌” என்று முகுந்தனைச்‌ சாந்தப்‌
படுத்தினாள்‌.

"தம்பி முகுந்தா | இப்படி வா, இங்கே வநீது இரு, எமது ஊர்‌
எப்படிப்‌ பட்டது என்பதைக்‌ தெரியப்படுத்த கைத்தொழில்‌ பரிசோத
கறரின்‌ கன்னத்தில்‌ நல்ல பாடம்‌ புகட்டியிருக்கிறாள்‌ வசந்தி” என்றார்‌


Page 71கைத்தறி நிலையத்தில்‌ கலாட்டா 55

தலைவர்‌. முகுந்தனுக்கு உடன்‌ வசந்தியைப்‌ பார்க்கவேண்டும்‌ போல்‌
இருந்தது. எப்படிப்‌ பார்ப்பது, வசந்திதான்‌ வந்திருக்கமாட்டாளே!
என்று ஏங்கினான்‌. ஆனால்‌ வசந்தி தயாரித்த தேநீரை எல்லோருக்கும்‌
பரிமாறினாள்‌ சிவமணி. முகுந்தனின்‌ முறை வந்ததும்‌, தான்‌ பின்னர்‌
குடிக்கிறேன்‌ என்று கூறிவிட்டுச்‌ சமையல்‌ அறைப்பக்கம்‌ போனான்‌.
அங்கு வசந்தி நிற்பதைக்‌ கண்ட முகுந்தன்‌, "என்ன வசந்தி என்ன
நடந்தது 9” என்று ஆவலுடன்‌ கேட்டான்‌. "எனது இடது கையைப்‌
பிடித்துக்‌ கொண்டு கிட்டே வந்த ரவிக்கு சற்றும்‌ எதிர்பாராதவிதமாக,
எனது முழுப்பலத்தையும்‌ சேர்த்துக்‌ கன்னத்தில்‌ கொடுத்த அறை,
நிச்சயமா வாழ்நாள்‌ முழுவதும்‌ மறக்கமாட்டான்‌.”

அவனது கன்னம்‌ நன்றாக வீங்கிப்பருத்துவிட்டது என்று பார்த்தவர்கள்‌
கூறினார்கள்‌. இதனைக்‌ கூறிச்‌ சிரித்த வசந்திக்கு, முகுந்தன்‌ அவளது
கன்னத்தில்‌ ஓர்‌ அமைதியான பரிசைக்‌ கொடுத்தபோது, வசந்தி
நாணத்துடன்‌ சேர்ந்த மயக்கத்துடன்‌ முகுந்தனின்‌ தோளில்‌ சாய்ந்தாள்‌.
நிலைமையைப்‌ புரிந்து கொண்ட முகுந்தன்‌ தனது தேநீர்‌ குவளையுடன்‌
வரவேற்பறையை அடைந்தான்‌. நடராசருக்குப்‌ பக்கத்தில்‌ இருந்த
வெற்றிடத்தில்‌ அமர்ந்தான்‌.

நடந்தவற்றை அவதானித்த தலைவர்‌, எங்களோடு தேநீர்‌ அருந்தப்‌
பிடிக்காமல்‌ சமையல்‌ அறையில்‌ யாரிடமோ தேநீரைகத்‌ தம்பி வாங்கிவந்து
குடிக்கிறார்‌. அதுவும்‌ மாமனுக்குப்‌ பக்கத்தில்‌ மரியாதையாக வந்து
அமர்ந்து கொண்டார்‌. என்றாலும்‌ தம்பி சற்று விபரமறிந்தவர்‌ தான்‌ /
என்று கூறி நிறுத்தினார்‌.அவரது குதர்க்கமான பேச்சைப்‌ பலர்‌ புறிந்து
கொள்ளவில்லை. ்‌

சிவமணி தேநீர்‌ குவளைகளை எல்லாம்‌ எடுத்து வைத்து விட்டு,
தனது இருக்கையில்‌ வந்து அமர்ந்தாள்‌. மீண்டும்‌ தலைவரும்‌ நடராசரும்‌
ஏதோ கூற முற்பட்டனர்‌. தலைவர்‌ நடராசரைப்‌ பேசும்படி உற்சாகப்‌
படுத்தினார்‌. அடுத்து வரும்‌ சுபமுகூர்த்தத்தில்‌ திருமண எழுத்தை
வைக்கலாம்‌ என்று கூறிச்‌ சவமணியைப்‌ பார்த்தார்‌. “எல்லோரும்‌
சம்மதித்த பின்னர்‌ ஆகவேண்டியதைக்‌ கவனிக்கலாம்‌ தானே” என்று
தலைவர்‌ கூறினார்‌. திருமணப்‌ பதிவாளரிடம்‌ சென்று விளம்பரம்‌
செய்யவேண்டிய இகதியை முகுந்தனிடம்‌ கேட்டார்‌. முகுந்தனும்‌ அதற்குச்‌
சம்மதித்து நல்ல இகதியை அறியத்தரும்படி கேட்டுக்‌ கொண்டான்‌.
வெகு விரைவில்‌ ஒரு சாப்பாடு காத்திருக்கிறது என்று கூறி எழுந்தார்‌.
சங்கத்திற்குச்‌ சென்று முகாமையாளரோடு கதைக்க வேண்டும்‌ என்று
கூறி தலைவர்‌ விடைபெற்றுக்கொண்டார்‌.


Page 7256 மாற்றம்‌

சிவமணியும்‌ கண்மணியும்‌ சமையல்‌ அறைக்குள்‌ சென்றனர்‌.
முகுந்தன்‌ உடைகளை மாற்றிவிட்டு வந்தான்‌. மாமா, ரமணன்‌ பாட
சாலையில்‌ இருந்து வந்ததும்‌ இங்கு வந்து வசந்தியைக்‌ கூட்டிச்‌
செல்லலாம்‌ என்றான்‌. நடராசர்‌ அதற்கென்ன, என்று சம்மதித்தார்‌.
நடராசரும்‌ கண்மணியும்‌ விடைபெற்றுக்‌ கொண்டனர்‌.

வரவேற்பறைக்குள்‌ வந்த வசந்தி, சிவமணிக்கருகல்‌ நின்றாள்‌.
“அடிவாங்கிய அகோரத்தில்‌, இந்நேரத்தில்‌ ரவி ஆட்களைச்‌ சேர்த்துக்‌
கொண்டு மீண்டும்‌ வரலாம்‌ என்றும்‌, பொலிசுக்கும்‌ புகார்‌ செய்திருப்‌
பார்கள்‌ என்றும்‌, முகுந்தன்‌ வசந்தியின்‌ மனதைச்‌ சற்று சீண்டிப்‌
பார்த்தான்‌. அதற்கு வசந்தி, தலைவரும்‌ கந்தசாமியும்‌ வராவிட்டால்‌,
கொதித்தெழுந்த மக்கள்‌ கூட்டம்‌ ரவியை என்ன செய்திருப்பார்களோ
தெரியாது” என்றாள்‌.

“பனந்தோப்புக்‌ கிராமம்‌ எப்படிப்பட்டது, அவ்வூர்‌ மக்கள்‌ எப்படிப்‌
பட்டவர்கள்‌ என்பதை ரவி மட்டுமல்ல, கந்தசாமியும்‌, அவருக்கூடாக
அரச அதிபரும்‌ அறிந்திருப்பார்கள்‌" என்றாள்‌ சிவமணி. வசந்தியை
முகுந்தனோடு கதைக்கும்‌ படி கூறிவிட்டுச்‌ சமையல்‌ அறைகுள்‌ சிவமணி
சென்றுவிட்டாள்‌.

இன்று பாலர்‌ வகுப்பும்‌ கைதறி நிலையமும்‌ நிறுத்தப்பட்டிருக்கும்‌
என்று முகுந்தன்‌ கூறினான்‌. அதற்கு வசந்தி , அப்படி நிறுத்தப்பட மாட்டாது
என்றாள்‌. எனக்காக எனது வேலைகளைச்‌ செய்வதற்கு ஏற்ற வகையில்‌
மற்றவர்களுக்கும்‌ பயிற்சி கொடுத்து வைத்திருக்கிறேன்‌. மேற்கொண்டு
இரு தறிகளை நிறுவுவதற்கான ஒழுங்குகள்‌ செய்யப்படுகின்றன.
தறிகள்‌ யாவற்றையும்‌ மின்சக்தி மூலம்‌ இயங்கக்கூடிய வகையில்‌
விரிவுபடுத்தப்பட வேண்டும்‌ என்றாள்‌ வசந்தி.

மிகவும்‌ நல்ல யோசனை வசந்தி. இது பற்றி நானும்‌ சிந்தித்தேன்‌.
இருவரின்‌ சிந்தனைகள்‌ ஒரேமாகிரியே அமைகின்றன. எல்லாவற்றுக்கும்‌
முதல்‌ நீர்‌ எமது வீட்டிற்கு வரவேண்டும்‌ என்றான்‌.

சிவமணி தட்டில்‌ வெள்ளை நிற உருண்டைகளைக்‌ கொண்டுவந்து
வசந்தியிடம்‌ கொடுத்தாள்‌. வசந்தி அதனை முகுந்தனிடம்‌ நீட்டினாள்‌.
மூவரும்‌ சுவைத்துச்‌ சாப்பிடடனர்‌. இவர்களுடன்‌ ரமணனும்‌ வந்து
சேர்ந்து கொண்டான்‌.

“அம்மாவின்‌ புழுக்கொடியல்‌ மா மிகவும்‌ ருசியானது” என்றான்‌
முகுந்தன்‌. ரமணன்‌ எனக்கு இன்னுமொன்று என்று கேட்டான்‌. தட்டை
ரமணனிடம்‌ நீட்டினாள்‌. சிறிது நேரத்தில்‌ ரமணனும்‌ வசந்தியும்‌
விடைபெற்றுக்‌ கொண்டனர்‌.


Page 7315

மரங்களை நடாமல்‌, மழையை எதிர்பார்க்கலாமா ?
3

சனிக்கிழமை பாடசாலைக்குச்‌ சென்ற முகுந்தன்‌ ஆய்வுகூடத்தில்‌ தனது
வேலைகளை முடித்துக்‌ கொண்டு விசேட வகுப்பிற்குச்‌ சென்றான்‌. பகல்‌
10:30 மணிக்கு வகுப்பை நிறைவு செய்து கொண்டு அகபரின்‌ அறைக்குச்‌
சென்றான்‌. அங்கு அதிபருடன்‌ பாடசாலை கணக்குவிபரங்களைச்‌
சரிபார்த்துவிட்டு வீடு இரும்பினான்‌. இன்று மாலை மரநடுகைக்கான
ஒழுங்குகள்‌ சிலவற்றைச்‌ செய்ய வேண்டும்‌ என்று கூறி, மதிய போச
னத்தை விரைவாக முடித்துக்‌ கொண்டு வாசிகசாலைக்குச்‌ சென்றான்‌.

வாசிகசாலையில்‌ மாணவ குழுக்கள்‌ தமது வேலைகளைச்‌ செய்து

கொண்டிருந்தனர்‌. குழுத்‌ தலைவர்கள்‌ தங்கள்‌ தங்கள்‌ பிறிவுக்குரிய

படங்களைப்‌ பொருத்தினர்‌. ஓவ்வொரு குழுக்‌ தலைவருடனும்‌,
அவர்களது இட்டம்பற்றி விரிவாகக்‌ கலந்துரையாடி வேண்டிய ஆலோச
னைகளை முகுந்தன்‌ வழங்கினான்‌. கமநலச்‌ சேவை அதிகாரிகள்‌ பிற்பகல்‌
2:30 மணிக்கு வருவார்கள்‌. அவர்கள்‌ மாணவ தலைவர்களுடன்‌ சேர்ந்து
மரநடுகைக்குச்‌ செல்வார்கள்‌. ஏற்கனவே வந்து சேர்ந்த மரக்கன்றுகள்‌,
முளைவிட்ட பனம்‌ வித்துக்கள்‌ யாவற்றையும்‌ ஐந்து குழுக்களுக்கும்‌
பிறித்துக்‌ கொடுத்தார்கள்‌.

வசந்தியும்‌ மாணவிகள்‌ ஐவரும்‌ சிற்றூண்டிகளுடனும்‌ தாகம்‌
தீர்ப்பதற்கு வேண்டிய ஒழுங்குகளுடனும்‌ வந்தனர்‌. கமநலப்பிறிவு
ஆலோசகர்களும்‌ வந்து சேர்ந்தனர்‌. எல்லா ஏற்பாடுகளையும்‌ பார்த்து
மிகவும்‌ ம௫ழ்ந்தனர்‌. ஐந்து குழுக்களும்‌ கடமைக்காகப்‌ புறப்படும்‌
சமயத்தில்‌ தலைவரும்‌ மற்றைய உறுப்பினர்களும்‌ வந்து சேர்ந்தனர்‌.
எல்லோரும்‌ ஐந்து குழுக்களாகப்‌ பிறிந்து தத்தமது கருவிகளுடன்‌
புறப்பட்டனர்‌. இச்சமயத்தில்‌ முகுந்தன்‌ ஓர்‌ அறிவித்தலை விடுத்தான்‌.
மாலை 6.30 மணிக்கு இங்கு மீண்டும்‌ கூடுவோம்‌ என்றும்‌ , மேலதிகமாக
மரக்கன்றுகள்‌ இருந்தால்‌ மற்றைய குழுக்களுக்கு அறியத்‌ தரலாம்‌
என்றும்‌ கேட்டுக்‌ கொண்டான்‌. மிதி வண்டி வைத்திருக்கும்‌ மாணவர்‌
மூன்றுபேரைத்‌ தெரிவு செய்து, தகவல்‌ பறிமாற்றத்திற்காக அவர்களை


Page 7458 மாற்றம்‌

நியமித்தான்‌. எல்லாக்‌ குழுக்களும்‌ புறப்பட்டபின்பு இறுதியாகப்‌
புறப்பட்ட குழுவுடன்‌ முகுந்ீதனும்‌ இணைந்து கொண்டான்‌.

ஒவ்வொரு குழுவுக்குரிய பகுதியிலும்‌ மரநடுகை சுறுசுறுப்பாக இடம்‌
பெற்றுக்‌ கொண்டிருந்தது. பயன்படுத்த முடியாத கற்களும்‌ புதர்களும்‌
உள்ள இடங்களில்‌ பனம்‌ வித்துக்கள்‌ நடப்பட்டு நீர்‌ ஊற்றப்பட்டது.
பழமரங்கள்‌, தென்னங்‌ கன்றுகள்‌, தேக்குப்‌ போன்ற இன்னோரன்ன
மரங்கள்‌ நாட்டப்பட்டன. ஒவ்வோரு காணிச்‌ சொந்தக்‌ காரரும்‌ தமது
காணியில்‌ நாட்டப்படவேண்டிய மரக்‌ கன்றுகளைக்‌ கொண்டுவந்து
வைத்திருந்ததுடன்‌, கமநலச்‌ சேவை ஆலோசகருடன்‌ கலந்துரையாடி
சரியான நிலையக்கைத்‌ தெரிவு செய்தனர்‌.

கமநலச்‌ சேவைப்‌ பகுதியினரால்‌ சிறந்த இனத்‌ தென்னங்கன்றுகள்‌
ஏற்கனவே பகிர்ந்து கொடுக்கப்பட்டன. உள்‌ ஊரில்‌ ஒட்டப்பட்ட
“மா” மரக்‌ கன்றுகளும்‌, மாதுளை, கொய்யா போன்றவையும்‌ நடப்‌
பட்டன. காற்றின்‌ இசையும்‌, நீர்‌ வடிந்து செல்லும்‌ வடிகாலையும்‌
கருத்தில்‌ கொண்டு மரங்கள்‌ நாட்டப்பட்டன. ஓவ்வொரு நிலச்‌
சொந்தக்காரருக்கும்‌, தத்தமது நிலத்தில்‌ எங்கெல்லாம்‌ வரம்புகள்‌
கல்வரம்புகள்‌ அமைக்கப்பட வேண்டும்‌ என்ற விபரங்கள்‌ விளக்கமாக
எடுத்துக்‌ கூறப்பட்டன. நிலத்தினுள்‌ மழைநீர்‌ ஊறிச்‌ செல்வதற்காக
எத்தகைய நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட வேண்டும்‌ என்பதும்‌ விளக்கிக்‌
கூறப்பட்டது. உயர்‌ வகுப்பு மாணவர்களும்‌, கமநலச்‌ சேவையாளர்களும்‌,
ஆசிரியர்களும்‌, ஊளறில்‌ உள்ள பெரியவர்களும்‌ ஒன்று கூடிக்‌ கதைத்து
மகிழ்நீது, சிற்றூண்டிகளையும்‌ பறிமாறிக்‌ கொண்டார்கள்‌, அறிவியல்‌
பூர்வமான விளக்கங்களையும்‌ பெற்றுக்‌ கொண்டார்கள்‌.

முகுந்தனும்‌ தகவல்‌ பரிமாற்றத்திற்காக நியமிக்கப்பட்ட மாண
வர்களும்‌, எஞ்சியிருந்த மரக்கன்றுகளை குழுக்களுக்கிடையே பறி
மாறிக்‌ கொண்டனர்‌. சில மாணவர்களுக்கு இம்மரநடுகை ஒரு புது
அனுபவமாகவிருந்தது. மாவீரர்வாரத்தில்‌ தத்தமது மாவீரர்‌ நினைவாக
மரங்களை நாட்டி மகிழ்நீதனர்‌. மரங்களை நட்டுப்‌ பின்னர்‌ அவற்றைப்‌
பேணி வளர்க்க வேண்டிய பொறுப்பையும்‌ சேவையாளாகள்‌ அறிவுறுத்திக்‌
கூறினர்‌.

குழு நான்கில்‌ வசந்தி பணிபுரிவதை அறிந்த முகுந்தன்‌, அங்கு சென்று
தனது தாகத்தைத்‌ தீர்த்துக்‌ கொண்டான்‌. வசந்தியும்‌ முகுந்தனும்‌ சேர்ந்து
சிற்றுண்டிகளையும்‌ பரிமாறிக்‌ கொண்டனர்‌. கைத்தறி நிலையத்தில்‌
நடைபெற்ற கலாட்டா பற்றியும்‌ மீளவிசாரித்துக்‌ கொண்டனர்‌. தலைவர்‌
சிதம்பரப்பிள்ளை முகுந்தனுடன்‌ சேர்ந்து சங்கப்பணிமனைக்குச்‌ சென்று,


Page 75மரங்களை நடாமல்‌, மழையை எதிர்பார்க்கலாமா? 59

அரச அதிபர்‌ நகர்‌ காவலர்‌ பகுதி ஆகியோருக்குக்‌ கடிதங்களை எழுதி
அனுப்பி வைத்தனர்‌. இந்த நடவடிக்கை வசந்தியின்‌ மனதில்‌ ஒருவித
மனஅமைதியைக்‌ கொடுத்தது. முகுந்தன்‌ வசந்தியிடம்‌ இது பற்றி
மேலும்‌ எச்சரிக்கையாக இருக்கும்‌ படியும்‌ கைக்தொலைபேசியைக்‌
கொண்டு செல்லும்‌ படியும்‌ அறிவுறுத்தினான்‌. வசந்தியும்‌ முகுந்தன்‌
கூறுவதை அவதானித்தபின்‌, "நீங்களும்‌ கைத்தொலைபேசியைக்‌
கைவசம்‌ வைத்துக்‌ கொள்ளுங்கள்‌” என்றாள்‌ . "நான்‌ வகுப்பில்‌ கற்பித்துக்‌
கொண்டிருக்கும்‌ போது, நீர்‌ அழைத்தால்‌ என்பாடு சங்கடம்‌ தான்‌.
நான்‌ விரும்பிக்‌ கதைத்தாலும்‌, மாணவர்கள்‌ இதனை ஒரு சாட்டாக
வைத்து, அரட்டை அடிப்பார்கள்‌”, என்றான்‌. எல்லாக்‌ குழுக்களுக்கும்‌
மாலை 6.30 க்கு கூட்டம்‌ என அறிவுறுத்தி மாணவ தலைவர்‌ ஒருவரை
அனுப்பிவைத்தான்‌. வசந்தியை வாசிகசாலைக்குச்‌ சென்று கூட்டத்திற்கு
வேண்டிய ஒழுங்குகளைச்‌ செய்யும்‌ படி கூறி ஐந்தாம்‌ குழு இயங்கும்‌
பகுதிக்குத்‌ தானே சென்றான்‌. வசந்தியும்‌ இதர மாணவிகளும்‌ வாசிக
சாலைக்குத்‌ இரும்பினர்‌.

வாசிகசாலைக்குச்‌ சென்ற வசந்திக்குப்‌ பெரும்‌ அதிர்ச்சி ஏற்பட்டது.
வாசிகசாலை முன்றலில்‌ அரச அதிபரின்‌ உத்தியோக வாகனம்‌ காத்து
நின்றது. இகனைப்‌ பார்த்த வசந்திக்கு ஒரே குழப்பமாகவிருந்தது. எதோ
அசம்பாவிதமான சம்பவம்‌ நடந்திருக்க வேண்டும்‌ என எண்ணினாள்‌.
எதற்கும்‌ உள்ளே செல்வோம்‌ என்று நினைத்து, உள்ளே சென்றாள்‌.

தலைவர்‌ சிதம்பரப்பிள்ளை ஆசிரியர்‌, அரச அதிபர்‌ அவரது பாறியார்‌
ஆகியோர்‌ கதைத்துக்‌ கொண்டி ருந்தனர்‌. வசந்திவருவதைக்‌ கண்டதும்‌,
"வா வசந்தி உனக்காகத்‌ தான்‌ காத்துக்‌ கொண்டிருக்கிறோம்‌” என்றார்‌
தலைவர்‌. வசந்தி எல்லோருக்கும்‌ கைகூப்பி வணக்கம்‌ தெரிவித்துக்‌
கொண்டாள்‌. என்றாலும்‌ மனம்‌ படபடக்க என்ன கூறுவது என்று
தெரியாமல்‌ தத்தளித்தாள்‌. "ஒன்றுக்கும்‌ யோசிக்க வேண்டாம்‌ வசந்தி,
அன்று கைத்தறி நிலையத்தில்‌ நடந்த சம்பவத்திற்காக உம்மைப்‌
பாராட்டவே அதிபர்‌ பாரியாருடன்‌ வந்திருக்கிறார்‌” என்றார்‌ தலைவர்‌.

அரச அதிபர்‌, வசந்தியைப்‌ பார்த்து, "உமது துணிச்சலான செயலைப்‌
பாராட்டுகிறேன்‌, அன்று நடந்தவற்றைக்‌ கூறுங்கள்‌” என்றார்‌. அருகில்‌
இருந்த நாற்காலியில்‌ அமரும்படி கூறினார்‌. வசந்தி அமர்ந்து தன்னை
ஒருவாறு தயார்படுத்திக்‌ கொண்டாள்‌. நடந்தவற்றை விரிவாக எடுத்துக்‌
கூறினாள்‌.


Page 7660 மாற்றம்‌

அரசஅதிபரும்‌ பாரியாரும்‌ வசந்தி கூறியவற்றை ஆர்வத்தோடு
கேட்டுக்‌ கொண்டி ருந்தனர்‌. வசந்தி கூறி முடித்ததும்‌, அதிபர்‌ வியப்போடும்‌
ஆச்சரித்தோடும்‌ வசந்தியைப்‌ பார்த்தார்‌. வசந்தி தனது நெற்றியில்‌
அரும்பிய வியர்வையைத்‌ தனது சேலையினால்‌ துடைத்தாள்‌.

அதிபர்‌ வசந்தியைப்‌ பார்த்து, "அம்மா நீர்‌ செய்தது மிகவும்‌ சரியானது.
உமது மதிநுட்பமான செயலைப்‌ பெரிதும்‌ பாராட்டுகிறேன்‌” என்றார்‌.
கைத்தறியில்‌ மேலதிகப்‌ பயிற்சிக்கு ஏற்பாடு செய்கிறேன்‌ என்று
கூறி, அடுத்த வாரம்‌ வெள்ளிக்‌ கிழமை தன்னைச்‌ சந்திக்கும்‌ படியும்‌
கூறினார்‌.

மரநடுகையின்‌ இறுகப்‌ பகுதியாக நடைபெறவிருக்கும்‌ கூட்டத்திலும்‌
கலந்து சிறப்பிக்க வேண்டும்‌ என அரசஅதிபரையும்‌ பாரியாரையும்‌
குலைவர்‌ வேண்டிக்‌ கொண்டார்‌.

எல்லாக்‌ குழுக்களும்‌ வந்து கூடியபின்னர்‌ கூட்டம்‌ ஆரம்பமாகியது.
ஐந்து குழுக்களும்‌ தங்களது படங்களைச்‌ சுவரில்‌ பொருத்தினார்கள்‌.
பனந்தோப்புக்‌ கிராமம்‌ முழுமையாகக்‌ காட்சி தந்தது. மரங்கள்‌ எங்‌
கெல்லாம்‌ நாட்டப்பட்டன என்பதைப்‌ படங்கள்‌ காட்டிக்‌ கொண்டிருந்தன.
தலைவர்‌ தனது தொகுப்புரையை அடுத்து ஒவ்வொரு குழுத்‌ தலை
வரும்‌ தமது பணிகளைக்‌ கூறினர்‌. கமநலச்சேவை அதிகாரிகளும்‌
தமது தொகுப்புரையை நிகழ்த்தினர்‌. அரசஅதிபரும்‌ பாரியாரும்‌
எல்லாவற்றையும்‌ அவதானித்துக்‌ கொண்டி ருந்தனர்‌.

துலைவறின்‌ வேண்டுதலை அடுத்து, அரசஅதுிபர்‌ தனது அவதானிப்‌
புகளைக்‌ கூறத்‌ தொடங்கினார்‌.

“எமது மாவட்டத்தில்‌ மக்களால்‌ ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு
நிகழ்வில்‌ கலந்து கொள்வதையிட்டு நாம்‌ பெறிதும்‌ மகிழ்வடைகின்றோம்‌.
முதலில்‌ பனந்தோப்பு மக்களையும்‌ இளந்‌ தலைமுறையினரையும்‌
பெரிதும்‌ பாராட்டுகிறேன்‌. ஏனெனில்‌ தமது பிள்ளைகளுக்கு, மரங்‌
களின்‌ அவசியத்தை உணர்க்தியிருக்கிறார்கள்‌. அவர்கள்‌ மனங்களில்‌
ஒரு மனமாற்றம்‌ ஏற்பட்டுள்ளதை நான்‌ உணர்கிறேன்‌. மரங்கள்‌
இல்லாவிட்டால்‌ மழையில்லை, மழை இல்லாவிட்டால்‌ விவசாயம்‌
இல்லை. எமது வாழ்வே சூனியமாகிவிடும்‌. நன்கு திட்டமிட்டு இந்த
மரம்‌ நடும்‌ நிகழ்வை நிறைவேற்றி யிருக்றொர்கள்‌. சம்பந்தப்பட்ட
அனைவருக்கும்‌ எமது பாராட்டுக்களும்‌ வாழ்த்துக்களும்‌. மற்றைய
கிராம மக்களுக்கு இது ஒரு முன்‌ மாதிரியாக அமைந்துள்ளது. அத்துடன்‌
அவர்களும்‌ இகனைப்‌ பின்பற்றி மரநடுகை முயற்சிகளை ஓர்‌ இயக்கமாக


Page 77மரங்களை நடாமல்‌, மழையை எதிர்பார்க்கலாமா? 6]

முன்னெடுப்பார்கள்‌ என்று நம்புகிறோம்‌. இங்கு சமர்ப்பிக்கப்பட்ட
குழுத்தலைவர்களின்‌ அறிக்கைகளையும்‌ அனுபவங்களையும்‌ பத்திரி
கைக்கு அனுப்ப வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்கிறேன்‌. கமநல
உதவியாளர்கள்‌, தொடர்ச்சியான பராமரிப்பு வேலைத்திட்டங்களை
மேற்கொள்ள வேண்டும்‌” இவ்வாறு கூறித்‌ தனது உரையை நிறைவு
செய்தார்‌.

முகுந்தன்‌ தனது ஒளிப்படக்‌ கருவியில்‌ சகலதையும்‌ பதிவு செய்தான்‌.
இரவு ஏழு மணியளவில்‌ விழா நிறைவுற்றது. வசந்தியும்‌ ரமணனும்‌
முகுந்தனிடம்‌ கூறிவிட்டு, முகுந்தனின்‌ வீட்டிற்குச்‌ சென்றனர்‌. சிவமணி
இரவுச்‌ சாப்பாட்டிற்கான ஒழுங்குகளை கவனித்துக்‌ கொண்டிருந்தாள்‌.
இதனைப்‌ பார்த்த வசந்தி மாமியாரிடம்‌ அணுகி விரைவாக உத
வினாள்‌.


Page 7816

எமது பொருள்‌ வளம்‌ எமது கையில்‌

காலை 9 மணியளவில்‌ வாசிகசாலை மண்டபம்‌ நிர்வாக சபை உறுப்‌
பினர்களால்‌ ஒழுங்கு செய்யப்பட்டது. முகுந்தனும்‌ ரமணனும்‌ ”கன்வஸ்‌”
துணிகளினால்‌ மண்டபததை விரிவுபடுத்தினார்கள்‌. கூட்டுறவுச்‌ சமாச
த்திலிருந்து கொண்டுவரப்பட்ட மடிக்கும்‌ நாற்காலிகளை வசந்தியும்‌
மாதர்‌ சங்கப்‌ பெண்களும்‌ ஒழுங்கு செய்தனர்‌. மழைகாலமாதலால்‌
பலத்த மழையை எதிர்கொள்ளக்‌ கூடியதாக எல்லா ஒழுங்குகளும்‌
செய்யப்பட்டன.

சிதம்பரப்பிள்ளை ஆசிரியரின்‌ தலைமையில்‌ கூட்டம்‌ ஆரம்பமானது.
கிராமத்தில்‌ உள்ள அத்தனை சங்கப்‌ பிரதிநிதிகளும்‌, பிரமுகர்களும்‌
வருகை தந்திருந்தார்கள்‌. பல நோக்குக்‌ கூட்டுறவுச்‌ சங்கப்‌ பிரமுகர்களும்‌,
தொழில்‌ அதிபர்களும்‌ கூட வருகை தந்திருந்தார்கள்‌. தலைமையுரையில்‌
ஆசிரியர்‌, “எமது பொருள்‌ வளத்தை நாமே முன்வந்து மேம்படுத்த
வேண்டும்‌, எமது வளங்களைச்‌ சரியான முறையில்‌ பயன்படுத்தவும்‌,
உற்பத்திகளைச்‌ சந்தைப்படுத்தவும்‌, நல்ல தொரு சந்தர்ப்பமாக இக்‌
கூட்டத்தைப்‌ பயன்‌ படுத்தலாம்‌” என்றார்‌. காட்சிச்‌ சாலைகள்‌ இரண்டு
நாட்களுக்கு நடைபெறும்‌. பல்வேறு இடங்களில்‌ இருந்தும்‌ மக்கள்‌
வருவார்கள்‌. தயாரித்து வைக்கப்படும்‌ பொருள்கள்‌ இலகுவாக விற்பனை
யாகிவிடும்‌. புதிய முறையில்‌ தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கு
தொடர்ச்சியான சந்தைவாய்ப்பைச்‌ செய்து கொடுப்பதற்குக்‌ கூட்டுறவுச்‌
சங்கம்‌ முன்வந்துள்ளது, என்று கூறி யாவரையும்‌ வரவேற்றுப்‌ பேசினார்‌
தலைவர்‌. கூட்டுறவுச்‌ சமாசத்தின்‌ தலைவர்‌ சிவதாசனைக்‌ கருத்துரை
வழங்குமாறு கேட்டுக்கொண்டார்‌.

கூட்டுறவுச்‌ சமாசத்தில்‌ பலராலும்‌ விரும்பப்படுபவர்‌ இரு. சிவதாசன்‌.
தனது கம்பீரமான குரலில்‌ யாவரையும்‌ கவரக்கூடிய வகையில்‌ கூட்டுறவின்‌
பண்புகளை விளக்கினார்‌, “நமது மக்களின்‌ வாழ்க்கைத்தரம்‌ உயர
வேண்டுமானால்‌, எமது வளங்கள்‌ நன்கு பாதுகாக்கப்பட வேண்டும்‌.
அதே நேரம்‌ எமது உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பினையும்‌ விரிவாக்க
வேண்டும்‌. இதன்‌ அடிப்படையில்‌ எமது உற்பத்திகள்‌ கிராமிய மட்டத்தில்‌


Page 79எமது பொருள்‌ வளம்‌ எமது கையில்‌ 63

நன்கு திட்டமிடப்பட்டு விரிவாக்கப்பட வேண்டும்‌. கிராமத்தில்‌
வாழும்‌ ஒவ்வொருவரும்‌ தமக்கு ஏற்றதான துறையில்‌ பங்குபற்றுதல்‌
அவசியமாகும்‌. எந்தத்‌ துறையாக விருந்தாலும்‌ அதற்கான பயிற்சிகளும்‌,
ஆலோசனைகளும்‌ வழங்குவதற்குக்‌ காத்திருக்கிறோம்‌. எனவே உங்கள்‌
வேலை உற்பத்தியில்‌ ஈடுபடுவதாகும்‌. ஒவ்வொரு உற்பத்தியிலும்‌ புகிய
முறைகளைப்‌ புகுத்தி அப்பொருளை நவீனத்துவமாக மாற்ற வேண்டும்‌.
அத்துடன்‌ அது மற்றவர்களைக்‌ கவரக்‌ கூடியதாகவும்‌ அமைதல்‌ வேண்டும்‌.
எம்மத்தியில்‌ உள்ள கூட்டுறவாளர்கள்‌ நிபுணத்துவ ஆலோசனைகளை
வழங்குவார்கள்‌. கிராமிய மட்டத்தில்‌ அமையப்போகும்‌ இவ்வுற்பத்திகள்‌
வெளி நாடுகளுக்கும்‌ செல்லக்கூடிய வாய்ப்பு உண்டு. உணவு, உடை,
உறைவிடப்‌ பொருட்கள்‌ எதுவானாலும்‌ அவற்றை விளம்பரப்படுத்தி
விற்க காத்திருக்கிறோம்‌. அதற்கான எல்லாவித ஓத்தாசைகளையும்‌
எமது சங்கம்‌ வழங்கும்‌ என உறுதி கூறுகிறேன்‌", என்றார்‌.

தலைவர்‌ திரு.சிவதாசன்‌ அவர்களுக்கு நன்றி கூறி அலங்காரப்‌
பொருட்கள்‌ உடைகள்‌ பற்றிக்‌ கூறுமாறு வசந்தியை அழைத்தார்‌.

வசந்தி ஆரம்பத்தில்‌ சற்று சங்கடப்‌ பட்டாலும்‌ கைத்தறி நிலையம்‌
பற்றிக்‌ கூறித்‌ தனது பேச்சை ஆரம்பித்தாள்‌. நவீன கைவிரிப்புக்கள்‌
முதல்‌ பெரும்‌ மேசை விரிப்புக்கள்‌ வரை தயாரிப்பதாகவும்‌ கூறினாள்‌.
பெண்கள்‌ ஒவ்வொருவரும்‌ ஒரு பொருளையாவது தெரிவு செய்து
உற்பத்தி செய்வதற்கு ஊக்கப்படுத்தும்‌ படி கேட்டுக்‌ கொண்டாள்‌.
எமது சூழலில்‌ காணப்படும்‌ பொருட்களை, மூலப்‌ பொருட்களாகக்‌
கொண்டு அலங்காரப்‌ பொருட்களைத்‌ தயாரிக்கலாம்‌. மாதர்‌ முன்னேற்றச்‌
சங்கத்தினர்‌ ஒவ்வொரு வாரத்திலும்‌ புதுப்புதுப்‌ பொருட்களை எவ்வாறு
தயாரிக்கலாம்‌ என்பதை விளக்கிக்‌ கூறுவார்கள்‌. அவ்வாறான அறிவுரை
களை நன்கு பயன்‌ படுத்திப்‌ புதிய பொருட்களைத்‌ தயாரிக்கும்படி
கேட்டுக்‌ கொண்டாள்‌. பனம்‌ பொருள்‌ அபிவிருத்திச்‌ சபை விரிவாக்க
உத்தியோகத்தருக்காக தனது பேச்சைச்‌ சுருக்கிக்‌ கொண்டாள்‌ வசந்தி.

கதுலைவர்‌ பனம்‌ பொருள்‌ சபையின்‌ உதவி முகாமையாளரை
வரவேற்று கருத்துரை வழங்குமாறு கேட்டுக்‌ கொண்டார்‌. நேரம்‌ பகல்‌ 12
மணியைக்‌ கடந்து விட்டதால்‌ எல்லோருக்கும்‌ சிற்றுண்டிகளும்‌ பழரசமும்‌
வழங்கப்பட்டன. புதிய உணவுப்‌ பொருட்களை எவ்வாறு தயாரிக்கலாம்‌
என்பதைக்‌ கூறிய பனம்பொருள்‌ ஊழியர்‌, பனந்தோப்புக்‌ இராம மக்களைப்‌
பெரிதும்‌ பாராட்டிப்‌ பேசினார்‌. யாழ்‌. செயலகத்தில்‌ பனந்தோப்புக்‌
கிராமத்திற்குச்‌ சிறப்பான பெயர்‌ நிலவுவதை எடுத்துக்‌ கூறி, மேலும்‌
அந்த நற்பெயரை நிலைநாட்டுவதற்குச்‌ சிறப்பாக ஈடுபட வேண்டியதன்‌


Page 806ம்‌ மாற்றம்‌

அவசியத்தை எடுத்துக்‌ கூறினார்‌. பனம்‌ மட்டையில்‌ இருந்து யன்னல்‌
மறைப்புகளையும்‌, புதிய அலங்காரப்‌ பொருட்களையும்‌ தயாறிக்கலாம்‌
என்றும்‌ கூறினார்‌. ஆர்வம்‌ உடையவர்கள்‌ வாசிகசாலையில்‌ தங்கள்‌
பெயர்‌ விபரங்களைப்‌ பதுவு செய்தால்‌, அவர்களுக்கான செயலமர்வு
ஒழுங்கு செய்யப்படும்‌. எனவே பெயர்களைப்‌ பதிவு செய்யும்படி
கேட்டுக்கொண்டார்‌. பனம்‌ பொருள்களை மூலப்பொருட்களாகக்‌
கொண்டு பல நவீன ஏற்றுமதிப்‌ பொருட்களையும்‌ தயாரிக்கலாம்‌. நாம்‌
எவ்வளவு தூரம்‌ இத்துறையில்‌ ஈடுபடுகிறோமோ அவ்வளவுக்கு எமது
வருமானம்‌ கூடும்‌. தொடர்ச்சியான ஈடுபாடே எம்மை இத்‌ துறையில்‌
முன்னேறச்‌ செய்யும்‌. எமது முன்னேற்றப்‌ பாகையில்‌ எத்தகைய தடைகள்‌
வந்தாலும்‌ அவற்றை எல்லாம்‌ உங்களின்‌ ஒற்றுமையான ஈடுபாட்டின்‌
மூலம்‌ வெல்வோம்‌ என்று கூறிமுடித்தார்‌.

அடுத்து கமநலப்‌ பகுதி ஆராய்ச்சியாளர்‌ குகநேசனைக்‌ கருத்துரை
வழங்கும்‌ படி தலைவர்‌ கேட்டுக்‌ கொண்டார்‌. குகநேசன்‌ எல்லோருக்கும்‌
அறிமுக மானவர்‌. அடிக்கடி இங்கு வந்து பல கருத்துக்களைக்‌ கூறிச்‌
செல்வது மட்டும்‌ அல்லாமல்‌, எமது விவசாயிகள்‌ பலருக்கும்‌ பல
தரப்பட்ட உதவிகளைச்‌ செய்பவர்‌ என்றார்‌ தலைவர்‌. புதிய பயிர்ச்‌ செய்கை
முறைகளையும்‌ விவசாயிகளுக்கு எடுத்துக்‌ கூறி வருபவர்‌.குகநேசன்‌
அவர்கள்‌, ஒவ்வொரு பயிருக்கும்‌ எங்கெல்லாம்‌ மாதிரிச்செய்கை
மேற்கொள்ளப்படுகிறது என்பதை விளக்கமாகக்‌ கூறினார்‌. மாதிரிப்‌
பயிர்ச்செய்கை பண்ணப்படும்‌ இடங்களுக்குச்சென்று பார்க்கும்‌ படியும்‌,
சம்பந்தப்பட்ட விவசாயியுடன்‌ கலந்துரையாடிச்‌ சந்தேகங்களைத்‌ தீர்த்துக்‌
கொள்ளும்‌ படியும்‌ கூறினார்‌. பயிர்‌ இனங்களின்‌ தூய்மை கெடாதபடி
எத்தகைய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌ என்றும்‌ விரிவாக
எடுத்துக்‌ கூறினார்‌. பயிர்ச்‌ செய்கையில்‌ ஈடுபடுபவர்கள்‌, பல்கலைக்கழகம்‌,
விவசாயப்‌ பாடசாலை, கமநலச்‌ சேவை நிலையம்‌ போன்றவற்றின்‌
அறிவுரைகளைக்‌ கேட்டு அவற்றுக்‌ கேற்ப தமது நடவடிக்கைகளை
மேற்கொள்ளுதல்‌ அவசியமாகும்‌. தமக்கு ஏற்படும்‌ பிரச்சினைகளை
அவர்கள்‌ மூலமே தீர்த்துக்‌ கொள்வது நல்லது. பயிர்ச்செய்கைக்‌ குழுக்கள்‌
தேவையான தகவல்களைப்‌ பெற்றுப்‌ பயிர்ச்செய்கை யாளர்களுக்கு
வழங்குவார்கள்‌. நீங்கள்‌ எல்லோரும்‌ எமக்கு வழங்கும்‌ ஒத்துழைப்பும்‌
ஊக்கமும்‌ எம்மை ஒர்‌ உன்னதமான வெற்றிப்பாதையில்‌ இட்டுச்‌
செல்லும்‌ எனக்‌ கூறி முடித்தார்‌.

தலைவர்‌ இரு.குகநேசனுக்கு நன்றி கூறி, முகுந்தனைப்‌ பேசும்‌
படி கேட்டுக்கொண்டார்‌. முகுந்தன்‌ வாசிகசாலையின்‌ வரலாற்றைச்‌


Page 81எமது பொருள்‌ வளம்‌ எமது கையில்‌ 65

சுருக்கமாகக்‌ கூறிய பின்‌, கிராமிய மட்டத்தில்‌ பொருள்‌ வளத்தை
விருத்தி செய்யவேண்டியதன்‌ அவசியத்தை விளக்கினான்‌. எமது
இராமத்தின்‌ கல்வி முன்னேற்றம்‌ பெற்றோர்‌ கையில்‌ தான்‌ தங்கியுள்ளது
என்பதைக்‌ கூறி, கல்வியபிவிருத்தியும்‌ பொருள்‌ விருத்தியும்‌ சமகாலத்தில்‌
ஏற்படவேண்டும்‌ என எடுத்துக்‌ காட்டினான்‌. எமது விடுதலைப்‌
போராட்டம்‌ முற்றுப்‌ பெறுவதற்குப்‌ பொருள்‌ வளம்‌ வேண்டும்‌.
அறிசியும்‌, மாவும்‌, மண்ணெய்யும்‌, சீனியும்‌ தொடர்ந்து தஇிடைக்கும்‌
என்று நாம்‌ நம்பியிருந்தல்‌ கூடாது. இவற்றுக்கான மாற்றுவழிகள்‌
எவை? எனக்‌ கண்டறிந்து, அவற்றின்‌ உற்பத்தியில்‌ நாம்‌ தன்னிறைவு
பெறுதல்‌ அவசியம்‌. "சும்மா வந்த அமெரிக்கன்‌ மா எம்மைச்‌ சோம்‌
பேறிகளாக்கி விட்டது.” மாவையும்‌ சீனியையும்‌ கொடுத்து எம்மை
அரசியல்‌ அடிமைகளாக்கப்‌ பார்க்கிறார்கள்‌. எமது பொருள்‌ விருத்தியில்‌
ஓரளவு நாம்‌ முன்னேறினாலும்‌, தன்னிறைவு பெறும்‌ காலம்தான்‌ எமது
பொற்காலம்‌. தற்போது கல்வி பயிலும்‌ மாணவர்‌ சமூகம்‌ இதுபற்றி நன்கு
அறிந்து வைத்துள்ளார்கள்‌. அவர்களை ஊக்கப்படுத்தி நமது திட்டங்களை
நிறைவேற்றுதல்‌ ஓவ்வொரு பெற்றோரினதும்‌ கடமையாகும்‌.

எதிர்வரும்‌ வருடப்பிறப்பு விடுமுறை காலத்தில்‌ வெகு விமரிசையாக
இடம்‌ பெறவிருக்கும்‌ இக்கண்காட்சியில்‌ எல்லோரும்‌ பங்குபற்றலாம்‌.
புதிய முறையில்‌ தயாரிக்கப்படும்‌ பொருள்கள்‌ வரவேற்கப்‌ படுகின்றன.
இதனை ஊக்குவிப்பதற்காக பரிசுகளும்‌ பாராட்டுப்‌ பத்திரங்களும்‌
வழங்கப்படவுள்ளன. நடுவர்‌ குழுவினால்‌ தேர்ந்தெடுக்கப்படும்‌ முதல்‌
மூன்று பொருள்களுக்கும்‌ ரொக்கப்‌ பறிசுகள்‌ காத்திருக்கின்றன.

முகுந்தன்‌ கூறிய விபரங்களை எல்லோரும்‌ மிகவும்‌ அவதானமாகக்‌
கேட்டார்கள்‌. எமது பொருளாதார முயற்சிகள்‌ யாவற்றுக்கும்‌
மூலாதாரமாக அமைந்திருப்பது மின்சக்தி யாகும்‌. மின்சக்தியை மலிவான
முறையில்‌ உற்பத்தி செய்தால்‌ எல்லாத்துறைகளிலும்‌ அபிவிருத்தியைக்‌
காணலாம்‌. இச்‌ சந்தர்ப்பத்தில்‌ எல்லாவற்றையும்‌ விரிவாக எடுத்துக்‌
கூறிவிடமுடியாது. புதிய முயற்சிகளில்‌ ஈடுபடும்‌ விருப்பமுடையவர்கள்‌
தங்கள்‌ பெயர்களையும்‌ ஏனைய விபரங்களையும்‌ வாசிகசாலையில்‌
படிவு செய்தல்‌ வேண்டும்‌. அவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு வேண்டிய
நிபுணத்துவ உதவியைச்‌ சம்பந்தப்பட்டவர்களை அணுகிப்‌ பெற்றுக்‌
கொடுக்கலாம்‌. எந்தத்‌ துறையில்‌ நிபுணத்துவ உதவி தேவையோ,
அதனைப்‌ பெறுவதற்கு உதவி செய்வோம்‌ என உறுதிகூறுகிறேன்‌ என்று
தனது உரையை நிறைவு செய்தான்‌ முகுந்தன்‌.

தலைவரின்‌ தொகுப்புரையுடன்‌ தம்பிராசா நன்றி கூற கூட்டம்‌
இனிதே நிறைவுற்றது.


Page 8217

கருத்தொருமித்த உள்ளங்கள்‌
இணைந்து கொண்டன !

அன்று சனிக்கிழமை முகுந்தன்‌ வசந்தி திருமணப்பதிவுக்கான செயல்கள்‌
நடைபெறும்‌ என எல்லோரும்‌ எதிர்பார்த்திருந்தனர்‌. வசந்தி வீட்டில்‌
திருமணத்திற்கான ஏற்பாடுகள்‌ யாவும்‌ நடந்தன. நடராசர்‌ தனது மகளின்‌
திருமணப்‌ பதிவையும்‌ திருமணத்தையும்‌ ஒன்றாகச்‌ செய்வதென்று
முடிவெடுத்து விட்டார்‌.

மணமகன்‌ வீட்டில்‌ எதுவித விசேட ஒழுங்குகளும்‌ இல்லாமல்‌,
வழமையான காறநியங்கள்‌ நடைபெற்றன. ரமணன்‌, சிதம்பரப்பிள்ளை
ஆசிரியர்‌ அவரது துணைவி ஆகியோர்‌ முகுந்தன்‌ வீட்டிற்கு
வருகை தந்தார்கள்‌. சம்பிரதாயப்படி முகுந்தன்‌ நீராடிவிட்டுப்‌
புறப்பட ஆயத்தமானான்‌. வருகை தந்தவர்களுக்குக்‌ காலை உணவு
பரிமாறப்பட்டது. காலை 11 மணியளவில்‌ எல்லோரும்‌ பெண்வீட்டிற்குப்‌
புறப்பட்டனர்‌. எளிமையாக அலங்கரிக்கப்பட்ட மோட்டார்‌ வண்டியில்‌
மூகுந்தனும்‌ ஏனையவர்களும்‌ ஏறிக்‌ கொண்டனர்‌.

நடராசர்‌ வீட்டில்‌, தூண்கள்‌ சுவர்கள்‌ யாவும்‌ பூச்சரங்களினாலும்‌
பூங்கொத்துக்களினாலும்‌ அலங்கரிக்கப்பட்டிருந்தன. இரு பிரதான
அறைகளுக்கு முன்பக்கத்தில்‌ உள்ள இடத்தில்‌ இருத்தொங்கலினால்‌
மணவறை எளிமையாக அமைக்கப்பட்டு, அந்தணர்‌ இருமணத்திற்கான
ஒழுங்குகளைக்‌ கவனித்துக்‌ கொண்டிருந்தார்‌. எல்லோரும்‌ அமரக்கூடிய
வகையில்‌ கம்பளங்கள்‌ விரிக்கப்பட்டு இருந்தன. ஒலிப்பதிவு கருவியில்‌
இருந்து நாதஸ்வர ஒலி வெளிவநீது கொண்டு இருந்தது. அறையினுள்‌
வசந்தியின்‌ அலங்காரம்‌ நடந்து கொண்டிருந்தது. மணமகனின்‌ வண்டி
வருவதை முன்கூட்டியே யாரோவந்து கூறியிருந்தார்கள்‌. வாசலில்‌
வைக்கப்பட்ட பூரண கும்பத்திற்கு அருகில்‌ ஆலாத்தித்‌ தட்டுடன்‌ இரு
பெண்கள்‌ காத்திருந்தார்கள்‌.

மணமகன்‌ முகுந்தன்‌ ரமணனுடன்‌ வந்ததும்‌, நடராசர்‌ மலர்‌ மாலை
சூட்டி வரவேற்றார்‌. ரமணன்‌ முகுந்தனின்‌ கால்களுக்கு நீர்‌ ஊற்றி


Page 83கருத்தொருமிக்த உள்ளங்கள்‌ இணைந்து கொண்டன! 67

மோதிரத்தைப்‌ பெற்றுக்‌ கொண்டான்‌. இருவரும்‌ சென்று மணவறையில்‌
அமர்ந்தனர்‌. அந்தணரின்‌ வேதஒலியுடன்‌ நாதஸ்வர ஒலியும்‌ இணைந்தன.
சிறப்பான அலங்காரத்துடன்‌ வசந்தி தோழியுடன்‌ மணவறைக்கு வந்தாள்‌.
மிகவும்‌ எளிமையான சடங்குகளின்‌ பின்‌ முகுந்தன்‌, வசந்தியின்‌ கழுத்தில்‌
தாலியைச்‌ சூட்டித்‌ தனதாக்கிக்‌ கொண்டான்‌. முகுந்தனின்‌ நண்பர்களும்‌,
வசந்தியின்‌ சினேகிதிகளும்‌ சேர்ந்து எல்லோரையும்‌ நன்கு உபசரித்தார்கள்‌.
ஒருவர்பின்‌ ஒருவராக வாழ்துக்களைத்‌ தெரிவித்து, விடைபெற்றுக்‌
கொண்டார்கள்‌. ஆடம்பரமான நிகழ்வுகள்‌ எதுவும்‌ இல்லாமல்‌ மிக
எளிமையாக நடந்தேறிய இருமணத்தைப்‌ பற்றி எல்லோரும்‌ பேசிக்‌
கொண்டார்கள்‌.

வசந்தியின்‌ அறையில்‌ முகுந்தன்‌ சற்று நேரம்‌ உடல்‌ களைப்பைப்‌
போக்கும்‌ முகமாகப்‌ படுத்திருந்தான்‌. வசந்தி வருவதை ஓரக்‌ கண்ணால்‌
பார்த்துக்‌ கொண்டான்‌. இடீரென வசந்தி கொடுத்த முக்தத்கை அவனால்‌
ஒரு காலமும்‌ மறக்கமுடியாது. ரமணன்‌ கதவில்‌ தட்டி, பாடசாலை
அதிபரும்‌ சக ஆசிரியர்களும்‌ வந்திருக்கிறார்கள்‌ என்றான்‌. இருவரும்‌
உடைகளைச்‌ சரிபார்த்துக்‌ கொண்டு வெளியே வநீது வரவேற்றார்கள்‌.
புதன்கிழமை மாலை வித்தியாலயத்தில்‌ நடைபெற விருக்கும்‌ வரவேற்பு
உபசாரகத்தில்‌ கலந்து கொள்ளும்‌ வண்ணம்‌ வேண்டிக்‌ கொண்டனர்‌.
பாடசாலை பற்றிய விபரங்களையும்‌ அன்று இருபாலையில்‌ நடந்த
“திளைமோர்‌” தாக்குதல்‌ பற்றியும்‌ கதைத்தனர்‌. வசந்தியைப்‌ பற்றி
விசாரித்துக்‌ கொண்டனர்‌. வசந்தியை விசேடமாக எல்லோரும்‌ வாழ்த்தி
விட்டு விடைபெற்றுக்‌ கொண்டனர்‌.

ரமணன்‌ தனது நண்பர்களுடன்‌ கதைத்துக்கொண்டிருந்தவன்‌, ஓடி
வந்து “அக்கா” இன்றும்‌ உத்தியோகப்பற்றற்ற ஊரடங்குச்‌ சட்டமாம்‌,
மாலை 5 மணி தொடக்கமாம்‌, என்றான்‌. நடராசரும்‌ அதனை ஆமோதித்‌
தார்‌. மாலை 3 மணியளவில்‌ தம்பதிகள்‌ மோட்டார்‌ வண்டியில்‌ செல்ல,
ஏனையோர்‌ நடந்தும்‌, துவிச்சக்கர வண்டியிலும்‌ சென்றனர்‌. ஏற்கனவே
முகுந்தன்‌ கூறி வைத்தது போல்‌, சிவமணி எல்லா ஏற்பாடுகளையும்‌
செய்திருந்தாள்‌. முகுந்தன்‌ வசந்தி இருவருக்கும்‌ பூரணகும்ப வரவேற்பு
நிகழ்ந்தது. வசந்தியின்‌ உற்ற தோழியர்‌ யாவரும்‌ அங்கு வந்திருந்த
படியால்‌ வாவேற்ப சிற.ப்பாக அமைநீதது.

வந்திருந்த அனைவரும்‌ ஐந்து மணிக்கு முன்னராக தத்தமது வீடு
களுக்குத்‌ இரும்பிவிட்டனர்‌. ரமணன்‌ மட்டும்‌ தங்களுடன்‌ இருக்க
வேண்டும்‌ என்று வசந்தி கேட்டுக்‌ கொண்ட படியால்‌, நடராசரும்‌
கண்மணியும்‌ வீடு திரும்பினர்‌.


Page 8468 மாற்றம்‌

உடைகளை மாற்றி, முகம்‌ கழுவிய பின்பு எல்லோரும்‌ வரவேற்‌
பறையில்‌ அமர்ந்து கொண்டனர்‌. முகுந்தன்‌ தனது படங்கள்‌ எப்படி
அமைந்திருந்தன என்பதை மீளாய்வு செய்து பார்த்தான்‌. வசந்தி பறிசுப்‌
பொருட்களையும்‌, வாழ்த்து மடல்களையும்‌ சிவமணியுடன்‌ சேர்ந்து
பார்த்துக்‌ கொண்டிருநதாள்‌. மருதடி விநாயகர்‌ கோவில்‌ பிரசாதத்தை
எடுத்து வந்து எல்லோருக்கும்‌ கொடுத்தாள்‌ சவமணி.

தனது மகனின்‌ இிருமணச்‌ சடங்கு விமரிசையாக நடக்கவில்லையே
என்ற ஆதங்கம்‌ சிவமணியின்‌ மனதில்‌ சற்று சலனத்தை ஏற்படுத்தியது.
நாட்டில்‌ நிலவும்‌ அமைதியின்மை காரணமாக யாவற்றையும்‌ எளிமையாக
நடத்தவேண்டி இருந்தது எனத்‌ தனக்குத்‌ தானே சமாதானப்‌ படுத்திக்‌
கொண்டாள்‌. ப

சிவமணி முகுந்தனைப்‌ பார்த்து, "ஊரடங்குச்‌ சட்டம்‌ இல்லாமல்‌
இருந்தால்‌ பலர்‌ வந்திருப்பார்கள்‌' என்றாள்‌. அம்மா / "எல்லாம்‌
உங்கள்‌ விருப்பப்படியே நடந்தன, அதனையிட்டு நீங்கள்‌ சந்தோஷப்பட
வேண்டும்‌” என்றான்‌. அத்துடன்‌ உங்களுக்கு ஏற்ற மருமகள்‌ வீட்டிற்கு
வந்துள்ளார்‌. அதுவே பெரும்‌ செல்வம்‌, என்று விளக்கினான்‌
முகுந்தன்‌.

“பொருள்‌ பண்டம்‌, நிலம்‌ புலம்‌, நகை நட்டு என்று எதனையும்‌
நான்‌ எதிர்‌ பார்க்கவில்லை, வசந்தியின்‌ மேலான குணத்தையே நான்‌
பெரிதும்‌ விரும்புகிறேன்‌. அதுவே எனக்குப்‌ பூரண திருப்தி” என்று
வசந்தியைப்‌ பார்த்துச்‌ சிவமணி கூறிய போது, வசந்தியின்‌ முகம்‌ சிவந்து
வெட்கத்தினால்‌ குனிந்து கொண்டாள்‌. ஓரக்‌ கண்ணால்‌ இதனை
அவதானித்த முகுந்தன்‌ மனதில்‌ புளகாங்கிதமடைந்தான்‌.

“என்ன வசந்தி பேசாமல்‌ இருக்கிறீர்‌”! என்றான்‌ முகுந்தன்‌. "உறவு
முறையில்‌ மாமியாக இருந்தாலும்‌, அவர்‌ என்‌ தாய்‌ தான்‌” என்று
மாமியாரை உயர்த்திக்‌ கூறினாள்‌. "பிறந்த வீட்டை விட்டுப்‌ புகுந்த
வீட்டிற்கு வந்தால்‌ பலர்‌ கவலைப்படுவார்கள்‌, ஆனால்‌ நான்‌. மாமியை
என்‌ அம்மாவைப்‌ போல்‌ பார்த்துக்‌ கொள்வேன்‌” என்றாள்‌.

சிவமணி எழுந்து அந்தப்புரப்‌ பக்கம்‌ சென்றாள்‌ சிறிது நேரத்தில்‌
திரும்பு வதற்கு முன்னர்‌, முகுந்தன்‌ வசந்தியின்‌ முகத்தைப்‌ பிடித்து ஒரு
பதம்‌ பார்த்து விட்டான்‌. ஏக்கத்தோடு ஒரு முத்தம்‌ கிடைக்காதா என்று
ஏங்கிய வசந்திக்குப்‌ பெரும்‌ மனம௫ழ்ச்சி எற்பட்டது. முகுந்தனைக்‌
கட்டிப்‌ பிடித்து அவனது காதுக்குள்‌ ஏகோ சொன்னாள்‌.

 


Page 85கருத்தொருமித்த உள்ளங்கள்‌ இணைந்து கொண்டன! 69

வரவேற்பறைக்குள்‌ வந்த சிவமணி ஓசைப்‌ படாமல்‌ மெதுவாகச்‌
சமையல்‌ அறைப்பக்கம்‌ சென்று அடுபில்‌ பாலைவைத்துக்‌ காய்ச்சினாள்‌.
அடுப்பைத்‌ தணித்து விட்டுப்‌ பழங்கள்‌ சிலவற்றை எடுத்துச்‌ சிறு
துண்டுகளாக வெட்டிக்‌ கலந்து கொண்டாள்‌.

சிறிது நேரத்தில்‌ வசந்தியை அழைத்தாள்‌, "என்ன மாமி” என்று
ஓடி வந்தாள்‌ வசந்தி. தன்னைக்‌ கூப்பிட்ட மகிழ்ச்சியில்‌ சிவமணியின்‌
பக்கத்தில்‌ நின்றாள்‌. எடுத்து வைத்த பால்‌ பழங்களை வசந்தியிடம்‌
கொடுத்து, முகுந்தனை உள்ளே கூட்டிச்‌ செல்லுமாறு வேண்டினாள்‌
சிவமணி.. வசந்தி உள்ளே சென்றதும்‌ சிவமணி கும்பிடச்‌ சென்றாள்‌. .
முகுந்தன்‌ வசந்தியிடம்‌ சென்றான்‌.


Page 8618

பொண்கல்‌ விழா

தைப்பொங்கலுக்கு முதல்‌ நாள்‌ இரவு நடைபெற்ற நிர்வாக சபைக்‌
கூட்டத்தில்‌, “முகுந்தன்‌ -வசந்தி' தம்பதியருக்கு ஓர்‌ சிறப்பான வர
வேற்பு கொடுக்கப்பட்டது. தலைவர்‌ தம்பதியரைப்‌ பற்றி விரிவாக
எடுத்துக்‌ கூறினார்‌. நிர்வாக சபை சார்பாக திருமண வாழ்த்துப்‌ பத்திரம்‌
வழங்கப்பட்டது. செயலர்‌ ஒரு பரிசுப்‌ பொருளையும்‌ வழங்கினார்‌.
முகுந்தன்‌ தனது பதிலுரையின்‌ போது, எமது நாட்டின்‌ விடிவுப்‌
பாதையில்‌ நாம்‌ பயனிக்க வேண்டிய தூரம்‌ மிகச்‌ சொற்பமாகவே
காணப்படுகிறது. அநீத மகத்தான முன்னேற்றத்தில்‌ எமது திருமண
பந்தம்‌ மிகச்‌ சிறிதளவே முக்கியத்துவம்‌ பெறுகிறது. உங்கள்‌ அன்பான
உபசரிப்பிற்கும்‌ வாழ்த்துக்கும்‌ எமது மனமார்ந்த நன்றிகள்‌. எனது
துணைவியாரும்‌ சில வார்த்தைகள்‌ கூறுவார்‌, என்று தனது உரையை
நிறுத்தினான்‌ முகுந்தன்‌.
வாசிகசாலையில்‌ கூடியிருந்த அனைவருக்கும்‌ வணக்கம்‌ தெறிவித்து
வசந்தி தனது உரையை ஆரம்பித்தாள்‌. நான்‌ எனது சிறு வயது தொடக்கம்‌
இந்த வாசிகசாலைக்குத்‌ இனமும்‌ வந்து போகிறேன்‌. எனது மனத்திற்கும்‌
, விருப்பத்திற்கும்‌ ஏற்ற துணைவர்‌ கிடைத்ததற்கு முதலில்‌ இறைவனுக்கு
நன்றி கூறுகிறேன்‌. எமது முக்கிய பணிகளுக்கு நீங்கள்‌ பெருமளவில்‌
உதவிவருகிறீர்கள்‌; தொடர்ந்தும்‌ உங்கள்‌ ஒத்துழைப்பை நல்குவீர்கள்‌
என்று பூரணமாக நம்புகிறோம்‌. இன்று எமக்கு நீங்கள்‌ அள்ளிச்‌ சொரிந்த
வாழ்த்துக்கள்‌, பரிசுகள்‌ எல்லாவற்றிற்கும்‌ நன்றி கூறுகிறோம்‌ என்று
கூறிமுடித்தாள்‌ வசந்தி.
தொடர்ந்து பொங்கல்‌ விழாவிற்கான உப குழுக்கள்‌ பற்றி விரிவாக
ஆராயப்பட்டன. போட்டிகள்‌ பற்றிய நிலைவரம்‌, அவை நடப்பதற்கான
இடங்கள்‌ யாவும்‌ தெரிவு செய்யப்பட்டன. பொங்கல்‌ விழா மாலை 4
மணிக்கு ஆரம்பமாகும்‌ என்பதை தலைவர்‌ அறிவுறுத்தினார்‌. வீடுகளில்‌
பட்டிப்‌ பொங்கலையும்‌ கோவில்‌ நிகழ்ச்சிகளையும்‌ முடித்துக்‌ கொண்டு
மைதானத்தில்கூடும்‌ படி கேட்டுக்கொண்டார்‌.

 


Page 87பொங்கல்‌ விழா 77

எமது நாட்டின்‌ நிலைவரம்‌ மிகவும்‌ ௪ிக்கலாகிக்‌ கொண்டு வருவதால்‌,
எமது பாதுகாப்பை நாமே தேடிக்கொள்ள வேண்டிய ஒரு கட்டாய தேவை
எமக்குள்ளது. முதலில்‌ எமக்குத்‌ தேவையானது தகவல்‌ தொடர்பாகும்‌.
எல்லோரும்‌ குழுக்களாக ஏதோ ஒரு விதத்தில்‌ தொடர்பை ஏற்படுத்திக்‌
கொள்வது மிக அவசியமாகும்‌. மேலும்‌ தற்பாதுகாப்புப்‌ பயிற்சி,
போக்குவரத்து என்பனவற்றிலும்‌ கவனம்‌ செலுத்துவது அவசியம்‌.
உங்கள்‌ குழுத்‌ தலைவர்களை அணுகி உறுதிப்படுத்திக்‌ கொள்வது
அவசியம்‌ என்றார்‌.

விசேட நிகழ்ச்சியாக ஒற்றை, இரட்டை மாட்டு வண்டிப்‌ போட்டிகள்‌
நடை பெறவிருப்பது நீங்கள்‌ அறிந்ததே. நமது பொங்கல்‌ விழா சிறப்பாக
நடக்க உங்கள்‌ உதவியை நாடி நிற்கிறோம்‌, என்று கூட்டத்தினை நிறைவு
செய்தார்‌ தலைவர்‌.

பட்டிப்‌ பொங்கல்‌ தினத்தன்று, தத்தமது இல்லங்களில்‌ தமது செல்லப்‌
பிள்ளைகளாக மதிக்கும்‌ மாடுகளுக்குப்‌ பொங்கல்‌ செய்து மகிழ்ந்தனர்‌
விவசாயப்‌ பெருமக்கள்‌. மாலை வேளையில்‌ தத்தமது வண்டிகள்‌ ச௫தம்‌
வாசிகசாலை மைதானத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்‌.

முகுந்தனுக்கு அன்று காலை கனடாவில்‌ இருந்து ஓர்‌ அவசர
அழைப்புக்‌ இடைத்தது. ஆனந்தன்‌ தனது பொங்கல்‌ வாழ்த்துக்களைக்‌
கூறி, வாசிகசாலைக்கு எனது அன்பளிப்பாக சூரியதட்டுத்‌ தொகுதியையும்‌
கணினியையும்‌ நன்கொடை தருவதாக வாக்களித்திருந்தேன்‌, ஏற்கனவே
அனுப்பி வைத்து விட்டேன்‌. இத்தொகுதி இன்று மதியமோ அல்லது
மாலையோ உங்களிடம்‌ கையளிப்பார்கள்‌. உனது கைத்தொலைபேசி
இலக்கத்தைக்‌ கொடுத்துள்ளேன்‌, என்றான்‌. முகுநீதன்‌ மிகவும்‌ மனம்‌
மகிழ்ந்தான்‌. தனது திடீர்‌ திருமணம்‌ பற்றியும்‌ கூறினான்‌. தனது
இதயபூர்வமான வாழ்த்துக்களைக்‌ கூறிய தோடு, வசந்திக்கும்‌ நடராசர்‌
குடும்பத்தாருகும்‌ வாழ்துக்‌ கூறினான்‌. நடராசர்‌ வீட்டில்‌ நடைபெற்ற
பட்டிப்‌ பொங்கலில்‌ முகுந்தனும்‌ வசந்தியும்‌ கலந்து கொண்டனர்‌.

தைப்பொங்கல்‌ தான்‌ எங்கள்‌ வருடப்பிறப்புமாகும்‌, மகளுக்கும்‌
மருமகனுக்கும்‌ நடராசர்‌ கைவிஷேசம்‌ கொடுத்து மகிழ்ந்தார்‌. கண்‌
மணியும்‌ தனது பங்கைச்‌ செய்யத்‌ தவறவில்லை. ப

எல்லோரும்‌ வரவேற்பு மண்டபத்தில்‌ இருந்தபோது, முகுந்தனின்‌
கைக்‌ தொலைபேசி ஒலித்தது. உடன்‌ வாசிகசாலைக்கு வரும்படியும்‌,
ஐந்து பெட்டிகளை பொறுப்பேற்கும்படியும்‌ ஒருவர்‌ கேட்டுக்‌
கொண்டார்‌. தலைவருக்குத்‌ தகவல்‌ கொடுத்து விட்டு, எல்லோரும்‌


Page 8872 மாற்றம்‌

வாசிக சாலைக்குச்‌ சென்றார்கள்‌. சூரியத்தட்டுத்‌ தொகுதி மூலம்‌ பத்துச்‌
சிறிய மின்விளக்குகளைப்‌ பொருத்தும்‌ நடைமுறை கிளிநொச்சியில்‌
நடைபெறுவதை ஏற்கனவே முகுந்தன்‌ தெரிந்து வைத்திருந்தான்‌. எனவே
உடன்‌ வாசிகசாலைக்குச்‌ சென்று பெட்டிகளைப்‌ பெற்றுக்‌ கொண்டான்‌.
நிர்வாக சபையே வாசிகசாலையில்‌ கூடிவிட்டது.

கூரையில்‌ சூரியகலத்தொகுஇி பொருத்தும்‌ வேலை துரிதமாக நடை
பெற்றது. அதனை சேமிப்புக்‌ கலங்களுடன்‌ இணைக்கும்‌ வேலையை
முகுந்தன்‌ செய்தான்‌. இதற்கென ஒரு பெட்டி பாலர்‌ வகுப்பறையில்‌
பொருத்தப்‌ பட்டது. வசந்தி கணினித்‌ தொகுஇயைச்‌ சரிபார்த்து மேசையில்‌
வைத்தாள்‌. ரமணன்‌ ஓடிஓடி. உதவிகள்‌ புரிந்து கொண்டிருந்தான்‌.
நண்பகல்‌ 12:30 மணியளவில்‌ பொருத்தும்‌ வேலைகள்‌ நிறைவுற்றன.
நான்கு அல்லது ஐந்து மணி நேரமாவது சூரிய ஒளி மூலம்‌ மின்‌ சக்தி
சேமிக்கப்பட வேண்டியதன்‌ அவசியத்தை கலைவருக்கு விளக்கிக்‌
கூறினான்‌ முகுந்தன்‌. எனவே பொங்கல்‌ விழா நிறைவுறும்‌ வேளையில்‌
தயாராக இருக்கும்‌ எனக்‌ கூறினான்‌. எல்லோரும்‌ மதிய போசனத்திற்காக
வீடு திரும்பினர்‌. முகுந்தன்‌ வசந்தி இருவரும்‌ ரமணன்‌ கொண்டு வந்து
கொடுத்த பொங்கல்‌, மோதகம்‌, வடை ஆகியவற்றைச்‌ சுவைத்துச்‌
சாப்பிட்டனர்‌. இருவரும்‌ வாசிக சாலையில்‌ இருந்து சாப்பிட்டதில்‌
மிகவும்‌ மனம்‌ மகிழ்ந்தனர்‌.

பிற்பகல்‌ இரண்டு மணியளவில்‌ குழுத்தலைவர்களும்‌ அவர்களது
உதவியாளர்களும்‌ மைதானத்தை ஒழுங்கு செய்யத்‌ தொடங்கினார்கள்‌.
வாசிகசாலையில்‌ சூரியகலதக்‌ தொகுதி வந்திருப்பதை அறிந்து, முகுந்‌
தனிடம்‌ வந்து பார்த்துப்‌ பாராட்டிச்‌ சென்றனர்‌. ரமணனும்‌ தனது
உதவியாளர்களுடன்‌ முதலுதவி பணிமனையை தமக்குரிய கூடாரத்தில்‌
ஒழுங்குபடுத்தினர்‌. ஒலி பெருக்கி பக்திப்‌ பாடல்கள்‌ முதல்‌ இயக்கப்‌
பாடல்கள்‌ வரை இசைபரப்பிக்‌ கொண்டிருந்தது. பார வண்டிகளை
மூடிக்கட்டும்‌ “கன்வஸ்‌” துணியால்‌ தயாரிக்கப்பட்ட மக்கள்‌ தங்கும்‌
சிறு அரங்குகளில்‌ மக்கள்‌ கூடத்‌ தொடங்கிவிட்டார்கள்‌. முதலுதவிச்‌
சிறுவர்களும்‌, சாரணச்‌ சிறுவர்களும்‌ தங்கள்‌ பணிகளை ஆரம்பித்‌
குனர்‌.

சிவமணி வீட்டில்‌ தனியே இருப்பதைவிட, மகனுக்கும்‌ மரு
மகளுக்கும்‌ தேநீர்‌ தயாரித்துக்‌ கொண்டு செல்வோம்‌ என நினைத்து
வாசிகசாலைக்கே வந்து சேர்ந்துவிட்டாள்‌. முகுந்தன்‌ ஓடிச்‌ சென்று
தாயாரைக்‌ கூட்டிவந்து அமரச்செய்தான்‌. மூவரும்‌ வடை மோதகம்‌
சாப்பிட்ட பின்னர்‌ தேநீர்‌ பருகினர்‌. இவர்கள்‌ கதைத்துக்‌ கொண்டிருக்கும்‌

 


Page 89பொங்கல்‌ விழா 73

போது, "ஒற்றைத்‌ இருக்கல்‌ வண்டிச்‌ சவாரிப்‌ போட்டி" ஆரம்பமாக
விருக்கிறது என அறிவிக்கப்‌ பட்டது. கிட்டத்தட்ட 400 மீற்றர்‌ நீளமான
ஓட்டப்‌ பாதையின்‌ இருமருங்கிலும்‌ மக்கள்‌ கூடியிருந்தனர்‌. ஆறு
வண்டில்கள்‌ முதற்‌ பிரிவிலும்‌, மிகுதி ஆறு வண்டில்கள்‌ இரண்டாம்‌
பிரிவிலுமாக போட்டிகள்‌ ஆரம்பமாகின. பார்வையாளர்களின்‌
கரகோசத்தின்‌ மத்தியில்‌ எருதுகளும்‌ உற்சாகமடைந்தன பிரதான
போட்டியாளர்களான சின்னத்தம்பி கூட்டமும்‌, தம்பிப்பிள்ளை கூட்டமும்‌
வெவ்வேறு பிரிவில்‌ இருந்ததால்‌, கலவரமில்லாமல்‌ போட்டியை நடத்தி
முடித்து விடலாம்‌ எனத்‌ தீர்ப்பாளர்கள்‌ கருதினர்‌. ஆனால்‌ அவர்களின்‌
எதிர்பார்ப்பிற்கு மாறாக இரு பிரிவுகளிலும்‌ அவர்களின்‌ வண்டில்களே
தெரிவான. இறுஇப்‌ போட்டி சின்னத்தம்பி, தம்பிப்பிள்ளைக்‌ திடையே
நடைபெறுமெனவும்‌ போட்டி மிகவும்‌ விறுவிறுப்பாக இருக்குமெனவும்‌
அறிவிப்புகள்‌ இடம்‌ பெற்றன. இறுதிப்‌ போட்டி அரைமணி நேரத்தில்‌
இடம்‌ பெறும்‌ என அறிவிக்கப்பட்டது. ப

மைதானத்தின்‌ ஒரு பக்கத்தில்‌ "போர்த்‌ தேங்காய்‌” போட்டி இடம்‌
பெற்றது. ரமணனும்‌ இதில்‌ பங்கு பற்றினான்‌. அவனது தேங்காயை
ஒருவராலும்‌ உடைக்க முடியவில்லை. ஒற்றைத்‌ இருக்கல்‌ சவாரியில்‌
தோற்றாலும்‌ போர்த்‌ தேங்காய்‌ அடியில்‌ வெற்றி பெற்றுவிட்டான்‌
ரமணன்‌. வசந்திக்குப்‌ பெரு மகழ்ச்சி. அடுத்த பக்கத்தில்‌ கட்டித்‌
தொங்கவிடப்பட்ட முட்டியை அம்பு வில்‌ கொண்டு உடைக்கும்‌ போட்டி
இடம்‌ பெற்றது. குறி பார்த்து அம்பு விடும்‌ வல்லமையை வளர்க்கும்‌
பொருட்டு இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. எல்லோரும்‌ மிகவும்‌
ரசித்துப்‌ பார்த்தனர்‌. மாட்டுவண்டி இறுதிப்‌ போட்டி, குழு மோதல்‌
காரணமாக நடைபெறவில்லை.

தாச்சிப்‌ போட்டிக்கான குழுக்கள்‌ தங்கள்‌ பதிவுகளைச்‌ செய்தனர்‌.
அதற்கான மைதானமும்‌ ஒழுங்கு செய்யப்பட்டது. சுண்ணாம்புத்தாளினால்‌
கோடுகள்‌ குறிக்கப்பட்டன. இதில்‌ சிறப்பான அம்சம்‌ யாதெனில்‌,
பெண்கள்‌ குழுக்களும்‌ தங்கள்‌ திறமையை வெளிக்காட்டின. பார்வை
யாளரைக்‌ கட்டுபடுத்துவது பெரும்‌ கடினமாகவிருந்தது. போட்டி
நடைபெற்றுக்‌ கொண்டிருக்கும்‌ போதே எல்லோருக்கும்‌ ஒரே
சமயத்தில்‌ பல்வேறு உதவியாளர்களினால்‌ வடையும்‌ பாயாசமும்‌
வழங்கப்பட்டன. வந்திருந்த மக்கள்‌ வாசிகசாலை நிர்வாகத்தைப்‌
பெரிதும்‌ பாராட்டினர்‌.

இறுதி நிகழ்வாகத்‌ தடை தாண்டும்‌ ஓட்டம்‌ 18 வயதிற்கு மேற்பட்ட
ஆண்களுக்காக நடாத்தப்பட்டது. எல்லா உயர்‌ வகுப்பு மாணவர்களும்‌


Page 90 

74 மாற்றம்‌

கலந்து சிறப்பித்தனர்‌. சிலர்‌ சிறப்புப்‌ பயிற்சிக்குத்‌ தெரிவா௫னர்‌. மாலை
நேரம்‌ இருள்‌ கவ்விக்கொள்ளும்‌ நேரம்‌ வாசிகசாலை முன்றலில்‌ யாவரும்‌
கூடினர்‌. எல்லோரும்‌ வரிசையாகச்‌ சென்று, சூரியஒளித்‌ கட்டினால்‌
இயங்கும்‌ விளக்குகளைப்‌ பார்வையிட்டனர்‌,

தலைவர்‌ சிதம்பரப்பிள்ளையின்‌ அறிவுரையுடன்‌ பறிசளிப்பு
வைபவம்‌ அமைதியாக நடைபெற்றது. சூரிய ஒளித்தட்டுக்களுக்கு
உதவியவர்களைப்‌ பாராட்டினார்‌. எல்லோர்‌ மனத்திலும்‌ புதிதாக வந்த
கணினி, சூரிய ஒளி விளக்குகளும்‌ பெரும்‌ வியப்பை ஏற்படுத்தின.
இந்த வியப்புடன்‌ யாவரும்‌ வீடு திரும்பினர்‌.

 


Page 9119

ஆட்டைக்‌ கடித்து....மாட்டைக்‌ கடித்து.....

வண்டிச்சவாரியில்‌ ஏற்பட்ட மனக்கசப்பு வீட்டுச்‌ சண்டையிலும்‌
தொடர்ந்தது. சின்னத்தம்பியின்‌ வீடும்‌, தம்பிப்பிள்ளையின்‌ வீடும்‌ நூறு
யார்‌ வித்தியாசத்தில்‌ அமைந்துள்ளன. முருகைக்‌ கற்களும்‌ புதர்களும்‌
இடையிடையே பனைகளும்‌ இருப்பத்தால்‌, இரண்டு வீடுகளுக்கிடையில்‌
வேலி இல்லை.

சின்னத்தம்பியின்‌ உயர்‌ ரக நாய்‌ "ஜிம்மி தனது சங்கிலியைக்‌ கழற்றிக்‌
கொண்டு வலம்‌ வருவது வழமை. இதனால்‌ தம்பிப்பிள்ளையின்‌
கோழிகள்‌ காணாமற்‌ போவதுண்டு. தேடிப்‌ பார்த்தால்‌ வீட்டின்‌ பின்‌
பக்கத்தில்‌ உள்ள பற்றைக்குள்‌ கோழிச்‌ செட்டைகள்‌ இறகுகள்‌ கால்கள்‌
என எச்சங்கள்‌ காணப்படும்‌. ்‌

ஒரு நாள்‌ சின்னத்தம்பியின்‌ ஜிம்மியினது சங்கிலி புதறில்‌ இருந்த
கற்களுக்கிடையில்‌ மாட்டிக்‌ கொண்டு விட்டது. அங்கிருந்து ஜிம்மி
குரைக்க ஆரம்பித்தது. எங்கே கள்ளனைக்‌ காட்டிக்‌ கொடுத்து விடுமோ
என்று நினைத்து, சின்னத்தம்பி விரைந்து வந்து ஜம்மியைக்‌ கூட்டிச்‌
சென்றார்‌. இதனைக்‌ கண்ட தம்பிப்பிள்ளை, “எங்கள்‌ கோழிகளை
உங்கள்‌ ஜிம்மிதான்‌ பதம்‌ பார்க்கிறது” என்றார்‌.

"கோழிகளைப்‌ பாதுகாப்பாக அடைத்து விடுங்கோ அல்லது கூட்டில்‌
விடுங்கோ” என்றார்‌ சின்னத்தம்பி.

”ஜிம்மியைக்‌ கட்டிவைத்தால்‌ பிரச்சினை இல்லையே" என்றார்‌
தம்பிப்‌ பிள்ளை. அங்கு ஓடிவந்த தம்பிப்பிள்ளையின்‌ மகள்‌ வதனா
“இரண்டு கோழிகளைக்‌ காணவில்லை” என்றாள்‌.

"ஜிம்மிதான்‌ கொண்டு போய்‌ விட்டது” என்று கூறவும்‌, வதனாவின்‌
தாயார்‌ மரகதம்‌ அங்கு வந்து, ஒவ்வொரு வாரமும்‌ ஒன்று இரண்டெனக்‌
கோழிகள்‌ காணாமற்‌ போகின்றன. இதற்கு ஒரு முடிவே இல்லையா?
என்று கேட்டாள்‌.


Page 9276 மாற்றம்‌

ஒன்றும்‌ கேளாதவர்‌ போல்‌ நைசாக நழுவிவிட்டார்‌ சின்னத்தம்பி.
அவசரமாகத்‌ தோட்டத்திற்குச்‌ செல்லக்‌ தனது ஒற்றைத்திருக்கலைக்‌
தயார்‌ செய்தார்‌ தம்பிப்பிள்ளை.

நொண்டிக்‌ கொண்டு வந்த தனது ஆட்டுக்குட்டியைக்‌ தூக்கிக்‌
கொண்டு வந்து தாயாருக்குக்‌ காட்டினாள்‌ வதனா. அதன்‌ பின்னங்காலில்‌
இரத்தக்‌ கறை இருப்பதைப்‌ பார்த்து அழக்‌ தொடங்கிவிட்டாள்‌.
மரகதம்‌ ஆட்டு குட்டியின்‌ காலை நன்கு ஆராய்ந்த போது இரண்டு
பல்‌ அடையாளங்கள்‌ இருப்பதை அவதானித்தாள்‌. உடன்‌ கைமருந்து
போட்டுக்‌ கட்டினாள்‌. “ஜிம்மியின்‌ வேலையாகத்தான்‌ இருக்கும்‌”
என்றவள்‌, அழுகையை நிறுத்தி ஜிம்மி மீது தனது கோபத்தைக்‌ கொட்டித்‌
தீர்த்தாள்‌.

“இனிமேல்‌ இந்த வீட்டிற்கு ஜிம்மி வந்தால்‌, அது என்னிடமிருந்து
தப்ப முடியாது” என்று பொருமினாள்‌ வதனா.

“சரி சரி ஆட்டில்‌ பாலைக்‌ கறந்து போத்தல்‌ மூலம்‌ குட்டிக்குக்‌
கொடு” என்று தாயார்‌ கூற, வதனா பின்பக்கம்‌ சென்று விட்டாள்‌.

மணியோசை கேட்டு வீட்டின்‌ முன்பக்கம்‌ வந்த மரகதம்‌, தபால்‌
கொடுக்கும்‌ தாமு தள்ளாடிக்‌ கொண்டு வருவதைக்‌ கண்டாள்‌. "அக்கா
இன்று ஒரு போத்தல்‌ கூடக்குடிச்சிட்டன்‌ குறைநினைகச்க வேண்டாம்‌"
என்றான்‌. தபாலைப்‌ பெற்ற மரகதம்‌ "கவனமாகப்‌ பார்த்துப்‌ போ” என்று
தாமுவை அனுப்பி விட்டாள்‌. போகும்‌ போது துவிச்சக்கர வண்டியில்‌ ஏற
முடியாது தள்ளாடி விழுந்து எழுந்து வாயில்‌ வந்தபடி ஏதோ சொல்லிக்‌
கொண்டு சென்றான்‌. அடுப்பில்‌ இருந்த கறியைப்‌ பார்க்கும்‌ அவசரத்தில்‌
தபாலை மேசைமேல்‌ வைத்து விட்டுச்‌ சென்றாள்‌ மரகதம்‌.

பாடசாலை விடுமுறை தினமானதால்‌ வதனா தனது பாடப்‌
புத்தகங்கள்‌ உடன்‌ அமர்ந்து விட்டாள்‌. தம்பிப்பிள்ளை மிகவும்‌
களைப்புற்று வீடு திரும்பியதும்‌ மேசையில்‌ இருந்த கடிதத்தைப்‌ பார்த்தார்‌.
மீண்டும்‌ மீண்டும்‌ புரட்டிப்‌ பார்த்தார்‌. அது “சின்னத்தம்பிக்கு'' வந்த
கடிதம்‌, இங்கு எப்படி வந்தது? "மரகதம்‌... மரகதம்‌ / என்று சற்று
கடினமான குரலில்‌ கூப்பிட்டார்‌. அங்கு வந்த மரகதத்தைப்‌ பார்த்து,
... இந்தக்‌ கடிதம்‌ எப்படி இங்கு வந்தது? இது சின்னத்தம்பியின்‌ கடிதம்‌”
என்றார்‌. தாமு குடிபோதையில்‌ கொடுத்துவிட்டுப்‌ போனான்‌, நான்‌
விலாசத்தைப்‌ பார்க்கவில்லை, என்றாள்‌ மரகதம்‌.. உடன்‌ கடிதத்தை
எடுத்துச்‌ சென்று சின்னத்தம்பியிடம்‌ கொடுத்துவிட்டு வந்தார்‌. கடிதத்தை
வாங்கிக்‌ கொண்ட சின்னத்தம்பி, "எப்ப தொடக்கம்‌ இந்த வேலை”

 


Page 93 

ஆட்டைக்‌ கடித்து...... மாட்டைக்‌ கடித்து...... 77

என்றார்‌ கஇண்டலாக. ”இது தாமுவின்‌ குடிபோதை வேலை” என்று
கூறிவிட்டுச்‌ சென்றார்‌. வீட்டில்‌ வதனா, "அப்பா... அப்பா ஜிம்மி
ஆட்டுக்‌ குட்டியையும்‌ கடித்து விட்டது” என்றாள்‌. கோபமடைந்த
தம்பிப்பிள்ளை, உடன்‌ சின்னத்தம்பியிடம்‌ சென்று, "நாயைக்‌ கட்டி
வையடா..சின்னா ஆட்டுக்குட்டியையும்‌ கடிச்சுப்‌ போட்டுது” என்று
அதட்டினார்‌. ப

“எடுத்ததற்கெல்லாம்‌ ஜிம்மிதான்‌ உனக்குச்‌ சாட்டு” என்று
கடிந்தார்‌ சின்னத்தம்பி. "நாயைக்‌ கட்டி வைத்தால்‌ ஒரு பிரச்சினையும்‌
இல்லையே" என்று மீண்டும்‌ கூறிவிட்டு, அங்கு நின்றால்‌ மேலும்‌
வாக்கு வாதம்‌ வளரும்‌ என்று எண்ணி வீட்டிற்குத்‌ இரும்பிவிட்டார்‌
தம்பிப்பிள்ளை.

வீட்டிற்குள்‌ சென்ற சின்னத்தம்பி "உவன்‌ சொல்லியோ நான்‌
எனது நாயைக்‌ கட்டவேண்டும்‌” என்று தனக்குள்‌ சொல்லிக்‌ கொண்டு
மெல்லிய கம்பியினால்‌ ஜிம்மியைக்‌ கட்டினார்‌. ஜிம்மி மீண்டும்‌ அறுத்துக்‌
கொண்டு வெளியே சென்று விட்டது. இப்போது ஜிம்மிக்கு கோழி
கிடைக்கவில்லை. துள்ளித்‌ இறிந்த கன்றுக்‌ குட்டியுடன்‌ விளையாடி யது.
மாட்டுக்‌ கொட்டிலில்‌ நின்ற மாட்டையும்‌ துரத்தியது. கறவை மாடு
தன்‌ கொம்புகளினால்‌ ஜிம்மியைத்‌ தூக்கி எறிந்தது. சுருண்டு விழுந்த
ஜிம்மி மீண்டும்‌ கன்றுக்குட்டியைக்‌ துரத்திச்சென்று, அதன்‌ பின்னங்கால்‌
தொடையைப்‌ பிடித்து இழுத்தது. கன்றுக்குட்டியின்‌ அலறல்‌ கேட்டு
வதனா ஓடிவந்தாள்‌. கல்‌ ஒன்றை எடுத்துக்‌ குறிபார்த்து ஜிம்மிக்கு
எறிந்தாள்‌. நாயின்‌ தலையில்‌ கல்‌ தாக்கியதால்‌, அவல ஒலியுடன்‌ ஜிம்மி
தன்‌ வீட்டிற்கு ஓடியது.

ஜிம்மியைப்‌ பிடித்துக்‌ கட்டிவிட்டு, தலையில்‌ அல்லது வேறு
இடத்தில்‌ ஏதாவது காயம்‌ உள்ளதா என்று சின்னத்தம்பி ஆராய்ந்தார்‌.
காயம்‌ ஒன்றும்‌ தெரியவில்லை. தலையை ஒரு பக்கம்‌ சாய்த்துக்‌ கொண்டு
படுத்திருந்தது ஜிம்மி. ஜிம்மியின்‌ தலையில்‌ வீங்கியிருந்த இடத்தில்‌
எண்ணெய்‌ தேய்த்துவிட்டார்‌ சின்னத்தம்பி. அவரது கோபம்‌ மேலும்‌
விகாரமடைந்தது.

ஒரு வாரத்தின்‌ பின்பு இப்பிரச்சினை சம்பந்மாக உள்ளுர்‌ இணக்க
சபையில்‌ ஒரு புகாரைக்‌ தம்பிப்பிள்ளை எழுஇிக்‌ கொடுத்தார்‌. இது
சம்பந்தமாக முகுந்தனிடமும்‌ தலைவர்‌ ௪ிதம்பரப்பிள்ளையிடமும்‌
கூறினார்‌. இந்தச்‌ செய்தி எப்படியோ சின்னத்தம்பியின்‌ காதுக்கும்‌
எட்டியது. பொறுத்துக்கொள்ள முடியாத சின்னத்தம்பி ஜிம்மியைக்‌
கட்டாமலே விட்டுவிட்டார்‌. தம்பிப்பிள்ளையின்‌ கோழியைப்‌


Page 94 

78 மாற்றம்‌

பிடித்த ஜிம்மி அது துடித்துத்‌ துடித்துச்‌ சாவதைப்‌ பார்த்துக்கொண்டு
படுத்திருந்தது. ஜிம்மியைக்‌ கண்டு கொள்ளாத தம்பிப்பிள்ளை, கோழி
துடிப்பதைப்‌ பார்த்தார்‌. கோழியை எடுப்பதற்குக்‌ கையை நீட்டியபோது,
ஜிம்மி ஓடிவந்து தம்பிப்பிள்ளையின்‌ கையைக்‌ கவ்விக்‌ கொண்டது.
தம்பிப்பிள்ளையின்‌ ஆஆ... என்ற அலறல்‌ சத்தத்தைக்‌ கேட்ட வதனா ஓடி
வந்தாள்‌. பக்கத்தில்‌ இருந்த உலக்கையால்‌ ஜிம்மியை ஓங்கி அடித்தாள்‌.
ஜிம்மியின்‌ அலறல்‌ சத்தம்‌ கேட்டு யன்னல்‌ வழியாக எட்டி ப்பார்த்தார்‌
சின்னத்தம்பி. ஜிம்மி அணுங்கியபடி தள்ளாடி தள்ளாடிக்‌ கொண்டு
வருவதை அவதானித்தார்‌. வாய்க்கு வந்தபடி வசை பாடினார்‌.

தம்பிப்பிள்ளையின்‌ கையில்‌ ஏற்பட்ட காயத்திற்குக்‌ கட்டுப்‌ போட்டு
விட்டுத்‌ தாயாரைக்‌ கூப்பிட்டாள்‌ வதனா. இணற்றடியில்‌ நின்ற மரகதம்‌
ஓடிவந்து பார்த்தாள்‌. உடன்‌ தம்பிராசா வீட்டிற்குச்‌ சென்று தனது
கணவறின்‌ கையை நாய்‌ கடித்து விட்டது, என்று கூறினாள்‌. தனது
துவிச்சக்கரவண்டியில்‌ தம்பிப்பிள்ளையை ஏற்றிக்கொண்டு வைத்திய
சாலைக்குச்‌ சென்றார்‌ தம்பிராசா.

தம்பிப்பிள்ளையின்‌ கையை ஜிம்மி கடித்த விடயம்‌ எல்லோருக்கும்‌
தெறிய வரவே, மக்கள்‌ கூட்டம்‌ புதினம்‌ பார்க்கக்‌ கூடிவிட்டது.
சிலர்‌ சின்னத்‌ தம்பியின்‌ வீட்டிற்குச்‌ சென்று விசாரணை செய்தனர்‌.
வாய்த்தர்க்கம்‌ அடிதடியில்‌ முடியக்கூடாது என முன்கூட்டியே தீர்மானித்து,
எல்லோரையும்‌ வீட்டிற்குச்‌ செல்லுமாறு தலைவர்‌ சிதம்பரப்பிள்ளை
கேட்டுக்‌ கொண்டார்‌. கையில்‌ கட்டுடன்‌ தம்பிப்பிள்ளை வீடு வந்து
சேர்ந்தவுடன்‌, நாளை நான்கு மணிக்கு இணக்க சபையில்‌ விசாரணை
நடக்கும்‌ என்று கூறினார்‌ தலைவர்‌. செயலர்‌ தம்பிராசா சின்னத்தம்பியின்‌
வீட்டிற்குச்‌ சென்று விசாரணை பற்றிக்‌ கூறிவிட்டு வந்தார்‌.

 


Page 9520

எல்லையில்‌ மதில்‌ கட்டுவதே
பிரச்சினைக்குத்‌ தீர்வு

௨ளர்‌ எல்லையில்‌ உள்ள மாதா கோவில்‌ மண்டபத்தில்‌ இணக்க சபை
உறுப்பினர்கள்‌ கூடினர்‌. இணக்க சபைச்‌ தலைவராகச்‌ செயற்படுபவர்‌
பங்குத்‌ தந்தை செபரத்தினம்‌ அடிகளார்‌. ஆசிரியர்‌ சிதம்பரப்பிள்ளை,
முகுந்தன்‌, செயலர்‌ தம்பிராசா, தம்பிப்பிள்ளை, சின்னத்தம்பி ஆகியோரும்‌
ஏனைய உறுப்பினர்களும்‌ வந்திருந்தனர்‌.

இரு நிமிட அமைதிவணக்கத்துடன்‌ சபை கூடியது. இரு .துரைரத்தினம்‌
அறிக்கையினை வாசித்தார்‌. நிலுவையில்‌ உள்ள முறைப்பாடுகள்‌
ஆராயப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில்‌ கைத்தறி நிலையத்தில்‌ நடைபெற்ற
சம்பவம்‌ பற்றிச்‌ சபைக்கு முறைப்பாடு கிடைக்கவில்லை என்பதை
தலைவர்‌ சுட்டிக்காட்டினார்‌. இருப்பினும்‌ வசந்தியின்‌ துணிச்சலான
நடவடிக்கையை நாம்‌ எல்லோரும்‌ பாராட்ட வேண்டும்‌. தொடர்ந்து
இரு. தம்்‌.பிப்பிள்ளையின்‌ முறைப்பாடு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து
நடைபெற்ற சம்பவங்களை திரு.தம்பிப்பிள்ளை விரிவாக எடுத்துக்‌
கூறினார்‌. கையில்‌ தொங்குக்‌ கட்டுடன்‌ நின்று பேசியது எல்லோர்‌
மனங்களையும்‌ உருக்கியது. எல்லாவற்றையும்‌ அமைதியாகக்‌ கேட்டு
கொண்டிருந்த இரு. சின்னத்தம்பி எழுந்து நின்று, தனது கருத்துக்களையும்‌
சபை கேட்க வேண்டும்‌ என்றார்‌. சபைத்தலைவர்‌ அனுமகியுடன்‌ தனது
கருத்துக்களைக்‌ கூறினார்‌.

“என்‌ வீட்டு நாய்‌ அடிக்கப்பட்டு கால்‌ முறிக்கப்பட்டுள்ளது. நாங்கள்‌
நாய்‌ வளர்க்கக்‌ கூடாதா? நான்‌ நாயைக்‌ கட்டித்தான்‌ வளர்க்கிறேன்‌.
சில வேளைகளில்‌ சங்கிலியை அறுத்துவிட்டுச்‌ செல்கிறது. அப்போது
அது ஆடு மாடுகளுடன்‌ விளையாடும்‌. அதற்காக அதனை அடித்துக்‌
கால்‌ முறிப்பது சரியல்ல. எனது வீட்டுக்‌ காவல்‌ நின்று விட்டது.
எனவே எனக்கு ஒரு புதிய நாயை வாங்கித்தர வேண்டும்‌. அவ்வாறு
தரமுடியாவிடில்‌, அதற்குரிய பணத்தைத்‌ தரவேண்டும்‌” என்றார்‌.


Page 9660 மாற்றம்‌

இதற்குப்‌ பங்குக்‌ தந்தை சின்னத்தம்பியைப்‌ பார்த்து, "நீர்‌ கூரியதைக்‌
கேட்டோம்‌, நாயை உலா வரவிட்டது உமது தவறு. அதனை நீர்‌ ஏற்றுக்‌
கொண்டுள்ளீர்‌. அத்துடன்‌ தம்பிப்பிள்ளையின்‌ கை பாதிக்கப்பட்டுள்ளது.
நாயை விடுவிக்க அடிக்க வேண்டியேற்பட்டது. அந்த நேரத்தில்‌
நான்‌ அவ்விடத்தில்‌ இருந்தால்‌ அதையே செய்திருப்பேன்‌. எனவே
தம்பிப்பிள்ளை தொழிலை இழந்துள்ளார்‌, அதற்கான நட்டஈட்டைச்‌
செலுத்துதல்‌ வேண்டும்‌” என்றார்‌.

இச்சமயத்தில்‌ சபைத்தலைவரின்‌ அனுமதி கேட்டு ஆசிரியர்‌
சிதம்பரப்பிள்ளை எழுந்து நின்று சில கருத்துக்களை முன்வைத்தார்‌.
இரு குடும்பத்தாரையும்‌ எனக்கு வெகு நாட்களாகவே தெரியும்‌, நல்ல
அமைதியான சூழலில்‌ வாழ்நீதவர்கள்‌. ஒரு நாயின்‌ வளர்ப்பினால்‌
பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள்‌. இதற்கு முன்னரும்‌ வளவு வருமானத்தில்‌
சில சச்சரவுகள்‌ ஏற்பட்டன. எல்லைப்‌ பிரச்சினை காரணமாக அவ்வப்‌
போது வாக்கு வாதங்களும்‌, மனக்கசப்புக்களும்‌ ஏற்படுகின்றன.
எனவே திரு.தம்பிப்பிள்ளையின்‌ காணிக்கும்‌, இிரு.சின்னத்தம்பியின்‌
காணிக்குமிடையில்‌ எல்லை தீர்மானிக்கப்பட்டு, உடன்‌ சீமேந்தினால்‌
மதில்‌ கட்டப்படவேண்டும்‌. கால்‌ நடைகளை வளர்ப்பவர்கள்‌ அவற்றைக்‌
கட்டிவைத்து வளர்க்க வேண்டும்‌. எல்லையை நிர்ணயிப்பதற்கும்‌,
மதிலைக்‌ கட்டுவதற்கும்‌ ஒரு குழுவை நியமிக்கலாம்‌” என்று ஆலோச
னை கூறினார்‌. “மதில்‌ கட்டும்‌ செலவை யார்‌ பொறுப்பேற்க வேண்டும்‌
என்பதை இச்சபை தீர்மானிக்கலாம்‌” என்றார்‌.

ஆசிரியர்‌ கூறியதை ஏற்றுக்‌ கொண்ட தலைவர்‌ அவருக்கு நன்றியையும்‌
தெறிவித்தார்‌. எல்லையில்‌ மதில்‌ கட்டுவது சிறந்தது, பிரச்சினையும்‌
தீர்ந்துவிடும்‌, என்று இரு.தம்பிராசா தெரிவித்தார்‌. எல்லோர்‌ முகத்திலும்‌
மகிழ்ச்சி பிரவாகித்தது. இரு. தம்பிப்பிள்ளை எழுந்து தன்னால்‌ மதில்‌
கட்டமுடியாது, அதற்கான பணவசதி தன்னிடம்‌ இல்லை என்று
கூறிவிட்டார்‌.

இச்சமயத்தில்‌ முகுந்தன்‌, சின்னத்தம்பி ஐயாவின்‌ நாயே
இவற்றுக்கு எல்லாம்‌ காரணம்‌.எனவே மதில்‌ கட்டும்‌ பொறுப்பை இரு.
சின்னத்தம்பியே ஏற்றுக்‌ கொள்வது சிறந்தது என்றான்‌. திரு.சின்னத்தம்பி
முகத்தைச்‌ சுழித்துக்‌ கொண்டார்‌.

எல்லோரும்‌ முகுந்தனின்‌ கருத்தை ஏற்றுக்‌ கொணடனர்‌. தலைவர்‌
இரு. சின்னத்தம்பியைப்‌ பார்த்து, "உமக்கு மதில்‌ கட்டுவதுல்‌ ஆட்சே
பனை உண்டா?” என்று கேட்டார்‌. சின்னத்தம்பி மதில்‌ கட்டுவதற்கு

 

 


Page 97எல்லையில்‌ மதில்‌ கட்டுவதே பிரச்சினைக்குத்‌ தீர்வு 87

ஏற்றுக்‌ கொண்டார்‌. முகுந்தன்‌, ஆசிரியர்‌, தம்பிராசா ஆகிய மூவரும்‌
இரு.சின்னத்தம்பியிடம்‌ பணத்தைப்‌ பெற்று ஏப்பிரல்‌ முதலாம்‌ இகதிக்கு
முன்னர்‌ மதிலைக்‌ கட்டி நிறைவேற்ற வேண்டும்‌ என்று தலைவர்‌
கூறினார்‌.

மேலும்‌ இரு முறைப்பாடுகளை விசாரித்து இணக்கப்பாடு காணப்‌
பட்டன. யாவரும்‌ மூழ்ச்சியுடன்‌ வீடு திரும்பினர்‌.

 


Page 98 

21
வீசும்‌ காற்றிலிருந்து மின்சக்தி

கைச்‌ தொலைபேசியின்‌ ஒலியைக்‌ கேட்டவுடன்‌ வசந்தி ஒடி வந்து அதனை
எடுத்தாள்‌. கனடாவில்‌ இருந்து ஆனந்தன்‌ கதைத்தான்‌. வசந்திக்குத்‌ தனது
நல்வாழ்த்துக்களைக்‌ கூறினான்‌. வசந்தி விரைவாகக்‌ கிணற்றடிக்குச்‌
சென்று தொலைபேசியை முகுந்தனிடம்‌ கொடுத்தாள்‌.

முகுந்தன்‌ வாசிகசாலை மின்‌ தொகுதிக்கும்‌, கணினிக்கும்‌ நன்றி
தெரிவித்தான்‌. ௨ர்ப்‌ புதினங்களைக்‌ கூறியபின்‌ காற்றாலைக்கிட்டம்‌
பற்றி ஆனந்தன்‌ தனது விருப்பத்தைக்‌ தெரிவித்தான்‌. கனடாவில்‌ உள்ள
எமது ௫ளர்‌ நண்பர்களின்‌ உதவியைத்‌ தான்‌ நாடியிருப்பதாக ஆனந்தன்‌
கூறினான்‌. கூடிய விரைவில்‌ இந்தப்‌ பெருமுயற்சிக்கான பூர்வாங்க
வேலையைத்‌ தொடங்கலாம்‌. அத்துடன்‌ அங்கும்‌ ஊரில்‌ உள்ளவர்கள்‌
கனடாவில்‌ இருந்தால்‌ அவர்களின்‌ விபரங்களைத்‌ குருமாறு கேட்டான்‌
ஆனந்தன்‌.

வெளி நாட்டில்‌ வசிக்கும்‌ எமது ஊரவர்கள்‌ பற்றிய விபரங்களைச்‌
சேகரித்து வைத்திருக்கிறேன்‌. சிலரது தொலைபேசி இலக்கங்கள்‌
தெரியாது. இருப்பினும்‌ அவர்களது முூகவறிகளை அனுப்புகிறேன்‌
என்றான்‌ முகுந்தன்‌. மேலும்‌ எனது பொறியியல்துறை நண்பர்களுடனும்‌,
யாழ்‌. பல்கலைக்கழகப்‌ பேராசிரியர்களுடனும்‌ இது பற்றிக்‌ கதைத்து
வைத்துள்ளேன்‌. உனது பச்சைக்‌ கொடியுடன்‌ ஒரு கருத்தரங்கை ஒழுங்கு
செய்யப்‌ போகிறேன்‌. இக்‌ கருத்தரங்கு பற்றிய பெறுபேறுகளை உனக்கு
அறிவிப்பேன்‌, என்று கூறினான்‌. ஆனந்தன்‌ தன்‌ மகிழ்ச்சியைத்‌ தெரிவித்த
பின்‌, தனது தங்கையின்‌ படிப்பைப்‌ பற்றி விசாரித்தான்‌ “ஆனந்தா, எனது
அதிபர்‌ உனது தங்கையில்‌ கண்ணும்‌ கருத்துமாக இருக்கிறார்‌. எனது
அறிவுரைகளும்‌ சேர்ந்து அவளில்‌ பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
எனவே நீ ஒன்றுக்கும்‌ கவலைப்பட வேண்டியதில்லை” என்றான்‌.
உனது தந்தையின்‌ உடல்‌ நிலையும்‌ முன்னேற்றம்‌ கண்டுள்ளது,
என்றான்‌ முகுந்தன்‌. அதற்கும்‌ நன்றி கூறினான்‌ ஆனந்தன்‌. தொலைபேசி
உரையாடலை முடித்த பின்னர்‌ அவசரமாகப்‌ பாடசாலைக்குப்‌ புறப்‌
பட்டான்‌. பாடசாலைக்குச்‌ சென்ற முகுந்தன்‌ இடைவேளையின்‌ போது

 


Page 99வீசும்‌ காற்றிலிருந்து மின்சக்தி 83

முதல்‌ வேலையாகக்‌ தனது நண்பர்களுக்கும்‌, மின்‌ ஒப்பந்தக்காரருக்கும்‌,
பல்கலைக்கழகப்‌ பேராசிறியருக்கும்‌ எதிர்வரும்‌ சனிக்கிழமை பிற்பகல்‌
இரண்டு மணிக்கு நடைபெறவிருக்கும்‌ கூட்டத்திற்கு வருகைதரும்‌
படி வேண்டினான்‌. வேண்டிய கடிதங்களையும்‌ வாசிகசாலை கடிதத்‌
தலைப்பில்‌ பிரதி செய்து அனுப்பிவைத்தான்‌.

விசேடவிரிவுரைக்காகப்‌ பாடசாலைக்கு வந்த சிதம்பரப்பிள்ளை
ஆசிரியர்‌ முகுந்தனைக்‌ காணத்‌ தவறவில்லை. காற்றாலை சம்பந்தமான
விபரங்களையும்‌, ஆனந்தனின்‌ உறுதிமொழியையும்‌ பற்றிக்‌ கூறினான்‌.
சங்கக்‌ தலைவர்‌, கிராமத்தில்‌ உள்ள சில பிரமுகர்கள்‌ போன்றவர்களின்‌
பெயர்களையும்‌ கூறி, அவர்களையும்‌ கருத்தரங்கிற்கு அழைக்கும்‌ படி
ஆலோசனை கூறினார்‌. தனது மகழ்ச்சியையும்‌ தலைவர்‌ தெரிவித்து,
எல்லாம்வெற்றி பெற முகுநீ்தனை வாழ்த்தினார்‌.

வசந்தியின்‌ அழைப்புக்கிடைத்தது முகுநீதன்‌ ஆவலுடன்‌ கதைத்‌
தான்‌. தனக்கும்‌ ஒரு கைத்தொலைபேசி வேண்டும்‌ என்று முகுந்தனை
வற்புறுத்திய படியால்‌ இப்போ வசந்தியின்‌ கையிலும்‌ ஒன்று கிடைத்‌
இருக்கிறது. இன்னும்‌ இருபது நிமிடங்கள்‌ தான்‌ இருக்கிறது என்று
முகுந்தன்‌ கூறினான்‌. எனக்கும்‌ நேரக்‌ கட்டுப்பாடா? என்று வசந்தி
சிரித்தாள்‌. சாப்பாடு எப்படி என்று கேட்டு, தனது கடிதம்‌ பற்றிக்‌
கூறினாள்‌. என்ன கடிதம்‌ என்று முகுந்தன்‌ விசாரித்தான்‌. சிறு கைத்‌
தொழில்‌ திணைக்களத்தினால்‌ நடாத்தப்படும்‌ பயிற்சி முகாமில்‌
நான்கு சனிக்‌ கிழமைகளில்‌ பயிற்சிக்காக செல்ல வேண்டும்‌, என்றாள்‌
வசந்தி. "நல்ல விடயம்‌, உமக்கு எனது அன்பு முத்தங்களுடன்‌ கூடிய
வாழ்த்துக்கள்‌” என்றான்‌ முகுந்தன்‌. அதிபரிடமிருந்து அழைப்புக்‌
கிடைக்கவே உரையாடலை மீண்டும்‌ வீட்டில்‌ தொடர்வோம்‌ என்றுகூறி
விடைபெற்றுக்‌ கொண்டான்‌.

அன்றைய தினம்‌ மாலை வாசிகசாலையில்‌ நிர்வாக சபை கூடியது.
முகுந்தன்‌ தனது எண்ணக்‌ கருத்துக்களை விரிவாக எடுத்துக்‌ கூறினான்‌.
மின்வெட்டும்‌, எரிபொருள்‌ கட்டுப்பாடும்‌ எம்மை வெகு தூரம்‌
பாதித்துள்ளன. உலகம்‌ முழுவதும்‌ மாற்று வழியில்‌ எரிபொருளைக்‌
கண்டுபிடிப்பதற்குப்‌ பல விதமான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்‌.
அண்மையில்‌ ஐதரசன்‌ வாயுவில்‌ இயங்கும்‌ காரை யப்பானிய௰யர்கள்‌
கண்டுபிடித்து விற்பனைக்கும்‌ விட எண்ணியுள்ளனர்‌. சூறிய ஒளித்‌
தட்டுகள்‌ மூலம்‌ நாம்‌ மின்சக்தியைப்‌ பெற்றுக்‌ கொண்டிருக்கிறோம்‌.
எம்மிடம்‌ பொதுவான தொழில்‌ நுட்ப அறிவு. இல்லை. எமக்கு ஏற்ற
வழிகளில்‌ எமது தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த வேண்டியுள்ளது.

 


Page 100 

64 மாற்றம்‌

சூரிய ஒளியைப்‌ பயன்படுத்துவது போன்று, வீசும்‌ காற்றின்‌ சக்தியையும்‌
நாம்‌ பயன்படுத்த முடியும்‌. எதிர்வரும்‌ சனிக்கிழமை ஒரு கருத்தரங்கு
இங்கு நடைபெறும்‌ என்று கூறினான்‌ முகுந்தன்‌.

தலைவர்‌ சிதம்பரப்பிள்ளை தனது மகிழ்ச்சியைத்‌ தெரிவித்து
எல்லா உறுப்பினர்களும்‌ தங்களால்‌ வழங்கக்கூடிய உதவியை வழங்க
வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொண்டார்‌. பல நிபுணத்துவம்‌ உள்ளவர்கள்‌
வரவிருப்பதால்‌ அவர்களுக்கான உதவியைச்‌ செய்தல்‌ வேண்டும்‌.
காற்றாலையை எங்கு நிறுவுவது என்று உயர்‌ வகுப்பு மாணவன்‌ கரன்‌
கேட்டான்‌. முகுந்தன்‌ கரனுக்கு நன்றி கூறி, மிக முக்கியமான கேள்வி
என்றான்‌. இதற்கான இடத்தைத்‌ தெரிவு செய்தல்‌ வேண்டும்‌ என்று
தலைவர்‌ கூறினார்‌. இரு. நடராசரின்‌ கோட்டம்‌ மிகப்‌ பொருத்தமாக
இருக்கும்‌. ஏனெனில்‌ அப்பிரதேசம்‌ திறந்த வெளி, வாடைக்காற்றும்‌
சோழகக்‌ காற்றும்‌ நன்கு வீசும்‌ இடம்‌ என்று கூறினான்‌ முகுந்தன்‌.
எனினும்‌ நிலச்‌ சொந்தக்‌ காரரிடமிருந்து அனுமதி பெறவேண்டும்‌.
மேலும்‌ சனிக்கிழமை இங்கு வரும்‌ நிபுணர்‌ குழுவும்‌ சென்று பார்த்து
முடிவுகட்டலாம்‌ என்றார்‌ தலைவர்‌. வழமையான பல விடையங்களைக்‌
கலந்துரையாடிய பின்னர்‌ கூட்டம்‌ நிறைவுக்கு வந்தது. தலைவர்‌ வசந்தியின்‌
பயிற்சி பற்றி விசாரித்து அறிந்து கொண்டார்‌. உமது திறமையும்‌ பயிற்சியும்‌
எமது மக்களுக்குப்‌ பெறிதும்‌ பயன்படப்‌ போகிறது என்றார்‌.

சனிக்கிழமை பிற்பகல்‌ ஒரு மணியளவில்‌ முகுந்தன்‌ ரமணன்‌
கரன்‌ ஆகிய மூவரும்‌ மண்டபத்தை ஒழுங்கு செய்தனர்‌. பங்குபற்றும்‌
ஒவ்வொருவரும்‌ அமர்ந்து எழுதக்‌ கூடியவாறு மேசைகளுடன்‌
இருக்கைகள்‌ ஓழுங்கு செய்யப்‌ பட்டன. ஒவ்வொருவருக்கும்‌ ஒரு
கோவையும்‌, அதன்‌ உள்ளே முகுந்தனின்‌ கைத்‌ தொலைபேசி இலக்கமும்‌
எழுதப்பட்டிருந்தது. எழுதுவதற்கு ஒரு பேனாவும்‌ வைக்கப்பட்டிருந்தது.
பேராசிரியர்களின்‌ ஆலோசனைக்கமைய படங்களைத்‌ திரையில்‌
பார்க்கக்கூடியவாறு ஒரு கிரையும்‌ அமைக்கப்பட்டிருந்தது. ஒரு மகா
நாட்டு மண்டபம்‌ எப்படி இருக்குமோ அவ்வாறு ஒழுங்குபடுத்தப்‌
பட்டிருந்தது. வசந்தி அங்கு வந்ததும்‌ மண்டபத்தைப்பார்த்து ஒரு
கணம்‌ பிரமித்துப்‌ போனாள்‌. தனது பங்கிற்கு என்ன இருக்கிறது என்று
பார்த்தாள்‌. உடன்‌ அலுமாரியைக்‌ திறந்து வெள்ளை மேசை விரிப்புக்களை
ரமணனிடம்‌ கொடுத்தாள்‌. பூச்சாடி களை எடுத்துக்‌ கரனிடம்‌ கொடுத்தாள்‌
உடன்‌ பூக்கள்‌ பறிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன.

வருகைதந்த ஒவ்வொருவரையும்‌ உயர்தர மாணவர்கள்‌ கைலாக்குக்‌
கொடுத்து வரவேற்றனர்‌. நிகழ்ச்சி நிரலைக்‌ கொடுத்து அவர்களை

 

 


Page 101வீசும்‌ காற்றிலிருந்து மின்சக்தி 85

இருக்கையில்‌ அமரச்‌ செய்தனர்‌. தலைவர்‌ மண்டபத்துள்‌ வந்ததும்‌
எல்லாவற்றையும்‌ பார்த்துப்‌ பிரமித்துப்‌ போனார்‌. முகுந்தனிடம்‌ போய்‌
என்ன செய்ய வேண்டும்‌ என்று இரகசியமாகக்‌ கேட்டார்‌. முகுந்தன்‌
அவரைக்‌ கூட்டிச்‌ சென்று, தலைவர்‌ இருக்க வேண்டிய நாற்காலியில்‌
அமரச்‌ செய்தான்‌. வசந்தியிடம்‌ தனது ஒளிப்படக்‌ கருவியைக்‌ கொடுத்து
ஒவ்வொரு பேச்சாளரினதும்‌ படம்‌ பதியப்பட வேண்டும்‌ என்றான்‌.
குறிப்புகள்‌ எடுப்பதற்கும்‌ இரு மாணவர்கள்‌ அமர்ந்திருந்தனர்‌. மண்டபத்‌
தின்‌ பிற்பகுதியில்‌ பத்திரிகையாளருக்‌ கென நான்கு நாற்கலிகள்‌
போடப்பட்டிருநீதன.

பொறியியல்‌ பேராசிரியரின்‌ வருகைக்காகக்‌ காத்திருந்த முகுந்தனுக்குத்‌
தொலைபே அழைப்புக்‌ கிடைத்தது. புத்தூர்‌ சோதனைச்‌ சாவடியில்‌ சற்று
தாமதம்‌, கூட்டத்தை ஆரம்பிக்கும்‌ படி கேட்டிருந்தார்‌. இச்செய்தியைத்‌
தலைவரிடம்‌ கூறி அமைதிவணக்கத்துடன்‌ கூட்டம்‌ ஆரம்பமானது.
தலைவர்‌ தனது உரையில்‌, பல முன்னேற்றகரமான திட்டங்கள்‌ நிறை
வேற்றப்படுகின்றன, என்றும்‌ அதில்‌ மிக முக்கியமான திட்டம்‌ காற்றாலை
மூலம்மின்சக்தியைப்‌ பெறுவதாகும்‌. ஆசிரியர்‌ முகுந்தனின்‌ அயராத
முயற்சியே இந்த மகாநாடு. பேராசிரியர்‌ குணசிங்கம்‌ இன்னும்‌ சில
நிமிடங்களில்‌ எங்களுடன்‌ கலந்து கொள்வார்‌ என்றார்‌.

இயைபு படுத்துபவர்‌ என்ற வகையில்‌ முகுந்தன்‌ மாநாட்டிற்கு
வந்தவர்களை வரவேற்று அறிமுகஞ்‌ செய்தான்‌. நிகழ்ச்சி நிரல்‌ பற்றி
விரிவாக எடுத்துக்‌ கூறினான்‌. பேராசிரியரும்‌ நண்பர்களும்‌ வருகை
தந்தனர்‌. அவர்களையும்‌ வரவேற்று அறிமுகம்‌ செய்த பின்னர்‌ காற்றாலை
நிர்மாணத்திற்கு வேண்டிய நிதியின்‌ ஒரு பகுதியை கனடாவில்‌ இருந்து
எதிர்பார்க்கிறோம்‌. முன்னோடியான இத்‌ திட்டத்திற்கு வேறு பல
நிறுவனங்களும்‌ பங்களிப்புச்‌ செய்வதற்குக்‌ காத்திருக்கின்றன. காற்றாலை
மூலம்‌ மின்சக்தியைப்‌ பெறுவதற்கான திட்டத்தைப்‌ பல பிரிவுகளாக
நிறைவேற்றுவதே இன்றைய மகாநாட்டின்‌ குறிக்கோளாகும்‌. காற்றாலை
ஏன்‌ அவசியம்‌ என்பதைப்‌ பேராசிரியர்‌ குணசிங்கம்‌ அவர்கள்‌ விரிவாக
எடுத்துக்‌ கூறுவார்‌. அதனைத்‌ தொடர்ந்து கோபுர நிர்மாணமும்‌,
காற்றாடியின்‌ சுழலும்‌ பகுதி பற்றியும்‌, பின்னர்‌ மின்‌ பிறப்பாக்கியும்‌
மின்‌ விநியோகம்‌ பற்றியும்‌ விரிவாக எடுத்துக்‌ கூறப்படும்‌. உரிய
பதிவுகள்‌ உடனுக்குடன்‌ கணினியில்‌ பதிவு செய்வதற்கான ஒழுங்குகள்‌
செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தனது குறிப்புரையை நிறைவு செய்தான்‌
முகுந்தன்‌.


Page 10286 மாற்றம்‌

பேராசிரியர்‌ குணசிங்கத்தை தலைவர்‌ அறிமுகம்‌ செய்து, அவரை
உரையாற்றும்படி கேட்டுக்கொண்டார்‌.

உலகில்‌ இன்று நிலவும்‌ பெரும்‌ பிரச்சினைக்கெல்லாம்‌ மூல
காரணமாக அமைவது சக்கித்‌ தேவையே. எண்ணெய்‌ வள நாடுகள்‌ மசகு
எண்ணெய்‌ வளத்தை ஓர்‌ ஆயுதமாகப்‌ பயன்படுத்துகின்றன. வளர்ந்து
வரும்‌ ஈழத்தில்‌ சக்தித்‌ தேவை அதிகரித்து வருகிறது. நீர்‌ மின்‌ சக்தியைப்‌
பெறமுடியாத நிலையில்‌, மாற்று வழிகளில்‌ மின்சக்தியை உற்பத்தி
செய்ய வேண்டிய நிலையில்‌ நாம்‌ உள்ளோம்‌. நிலக்கரி , சூரிய ஒளி,
காற்றுச்‌ சக்கி, உயிர்‌ வாயு, கடல்‌ அலைச்சக்இி போன்ற வற்றில்‌ இருந்து
மின்னை உற்பத்தி செய்யக்‌ கூடியதாகவிருந்தாலும்‌ எமக்குத்‌ தற்போது
சூரிய ஒளி காற்றுச்‌ சக்கி மூலம்‌ மின்னைப்‌ பெறுவது பொருத்தமாக
உள்ளது. மன்னார்க்‌ கடலில்‌ எண்ணெய்‌ வளம்‌ உள்ளது, அதில்‌ இருந்து
எரிபொருளைப்‌ பெறலாம்‌ தானே என்று சிலர்‌ வினாவக்கூடும்‌. புவியின்‌
- கீழ்‌ உள்ள மசகு எண்ணெய்யை வெளியே கொண்டு வருவதற்கு
மிகக்கூடிய செலவாகும்‌. இந்த அகழ்வுக்குரிய தொழில்‌ நுட்பம்‌ எம்மிடம்‌
கைவசம்‌ இல்லை. மேலும்‌ அணுசக்கி மூலம்‌ மின்சக்தியைப்‌ பெறலாம்‌
என்றால்‌ அதற்கான முதலீடு எம்மிடமில்லை. மின்சக்தியை உற்பத்தி
செய்வதற்குரிய அணுகு முறைகளை அரசியலாக்கி, எமது இனத்திற்குக்‌
கிடைக்காமற்‌ செய்வதே பேரினவாதிகளின்‌ நோக்கமாகவுள்ளது. எனவே
நாம்‌ எமது தேவைகளுக்கு எமது காலில்‌ நிற்க வேண்டியுள்ளது.
இவ்வகையில்‌ நாம்‌ ஒரு வழியைப்‌ பின்பற்றி வருகிறோம்‌. அது
தான்‌ சூரிய ஒளித்தட்டுகளாகும்‌. இதன்மூலம்‌ நாம்‌ பெறும்‌ மின்சக்தி
மிகக்‌ குறைவாயினும்‌ சில அவசிய தேவைகளை நாம்‌ பூர்த்தி செய்து
கொள்ளமுடியும்‌. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்துவரும்‌ இவ்‌
வாசிகசாலை நிர்வாகத்தை நான்‌ மனதாரப்‌ பாராட்டுகிறேன்‌. மேலும்‌
மின்னை உற்பத்தி செய்வதற்கு நாம்‌ பயன்படுத்தக்‌ கூடியதாகவிருப்பது
காற்றின்‌ சக்தியாகும்‌.

காற்றின்‌ வேகம்‌, காற்றாடி அமைக்க வேண்டிய இடம்‌, போன்ற
இன்னோ ரன்ன தரவுகளை நண்டன்‌ முகுந்தன்‌ திரட்டியுள்ளார்‌. அதற்காகத்‌
தேவைப்படும்‌ தொழில்‌ நுட்ப உதவிகளை வழங்கிவருகிறோம்‌. இதற்கான
செலவின்‌ ஒரு பகுதியை கனடாவில்‌ உள்ள அன்பர்கள்‌ கொடுக்க
முன்வந்திருப்பது எம்மை ௨க்கப்படுத்தும்‌ ஒரு விடயமாகும்‌

காற்றாடி அமையப்‌ போகும்‌ இடம்‌ தெரிவு செய்யப்பட்டு விட்டதென
அறிகிறேன்‌. இக்கூட்டம்‌ நிறைவு பெற்ற பின்னர்‌ நாம்‌ அதனைப்‌
பார்க்கலாம்‌. கோபுரத்தை அமைப்பதற்கு, “ஒட்டுத்‌ தொழிலகம்‌”


Page 103வீசும்‌ காற்றிலிருந்து மின்சக்தி 87

முன்வந்துள்ளது. இந்த நிறுவனத்தைச்‌ சேர்ந்த ஒருவர்‌ மூலம்‌ எல்லா
விபரங்களையும்‌ நாம்‌ அறிந்து கொள்ளப்‌ போகிறோம்‌. அத்துடன்‌ மின்‌
பிறப்பாக்கியையும்‌, காற்றாடியையும்‌ தயாரிக்கப்‌ போகும்‌ "அம்பாள்‌
தொழிலகத்திலிருந்தும்‌” இருவர்‌ இங்கு வருகை தந்துள்ளார்கள்‌.
அவர்களும்‌ அவை சம்பந்தமான விபரங்களைத்‌ தருவார்கள்‌. இவ்வாறு
தனது கருத்துக்களைக்‌ கூறி, தான்‌ கொண்டுவந்த படமெறிகருவி மூலம்‌
அமையப்போகும்‌ காற்றாடியின்‌ பகுதிகளைத்‌ திரையில்‌ போட்டுக்‌
காட்டினார்‌. பேராசிரியர்‌ அவ்வப்போது கேட்கப்பட்ட வினாக்களுக்கு
விரிவான விளக்கம்‌ கொடுத்தார்‌.

காமாட்சி ஒட்டுத்‌ தொழிலகத்தின்‌ உதவி முகாமையாளர்‌ கோபுரம்‌
சம்பந்தமான விபரங்களைக்‌ கூறினார்‌. கோபுரத்தின்‌ வரைபடம்‌
எல்லோருக்கும்‌ கொடுக்கப்பட்டது. படம்‌ மிகவும்‌ விளக்கமாகவிருந்ததால்‌
ஒருவரும்‌ கேள்விகள்‌ கேட்கவில்லை. 15 நிமிட இடைவேளைக்குப்‌
பின்‌, அம்பாள்‌ தொழிலகத்தைச்‌ சேர்ந்த தொழில்‌ நுட்ப உதவியாளர்‌
தனது உரையை ஆரம்பித்தார்‌. முதலில்‌ சுழலும்‌ காற்றாடி பற்றிய
விளக்கத்தைக்‌ கூறினார்‌. சுழலக்கூடிய உலோக அச்சில்‌ மூன்று சட்டங்கள்‌
பொருத்தப்படும்‌. இவை செங்குத்தாகச்சுழலும்‌. பனை மரச்‌ சட்டங்கள்‌
பரீட்சார்த்தமாகப்‌ பொருத்தப்படும்‌ சுழலும்‌ அச்சு கோபுரத்தின்‌ மேல்‌
இடையாகச்‌ சுழலக்கூடியவாறு பொருத்தப்படும்‌. இத்‌ தளத்தில்‌ இரு
மின்‌ பிறப்பாக்ககள்‌ பற்சில்லுகளுடன்‌ பொருத்தப்படும்‌. தேவையைப்‌
பொறுத்து இரண்டு மின்‌ பிறப்பாக்ககளில்‌ ஒன்றோ அல்லது இரண்டுமோ
வேலைசெய்யக்கூடியவாறு பற்சில்லுகளுடன்‌ பொருத்தப்படும்‌.
வழங்கப்பட்ட வரைபடங்கள்‌ தேவையான விபரங்களைத்‌ தருகின்றன.
மேலும்‌ விளக்கம்‌ தேவைப்படும்‌ போது தரப்படும்‌ என்று கூறித்‌ தனது
உரையை நிறைவு செய்தார்‌.

நிதி சம்பந்தமான விபரங்களைப்‌ பிரதி செய்து எல்லோருக்கும்‌
கொடுத்து, அதற்கான விளக்கத்தையும்‌ முகுந்தன்‌ கூறினான்‌.
உள்ளூர்‌ ஆதரவாளரிடம்‌ இருந்தும்‌ நிதியைப்‌ பெற்றுக்‌ கொள்ளக்‌
கூடாதா? என்று ஒருவர்‌ தெரிவித்த கருத்தை வரவேற்ற முகுந்தன்‌,
பொருளாளரிடம்‌ மனமுவந்து கொடுக்கும்‌ பணம்‌ இத்திட்டத்திற்காக
ஏற்றுக்‌ கொள்ளப்பட்டு பயன்படுத்தப்படும்‌ என்றான்‌. இச்சந்தர்ப்பத்தில்‌
பேராசிரியர்‌ எழுந்து ஒரு குறிப்பைக்‌ கூறினார்‌. இக்‌ காற்றாலை ஒரு
புது முயற்சியாக இருப்பதனாலும்‌, எமது இனத்தின்‌ பொருளாதார
விடுதலைக்குமாக இருப்பதால்‌ சம்பந்தப்பட்டவர்கள்‌ யாவரும்‌ இலாப
நோக்கம்‌ இன்றித்‌ தொழிற்படுகின்றனர்‌. அத்துடன்‌ உள்ளூறில்‌ உள்ள


Page 10458 மாற்றம்‌

அனைத்து வளங்களையும்‌ பயன்படுத்துகிறோம்‌. இம்‌ முயற்சி மேலும்‌
பல இடங்களில்‌ தொடரப்பட வேண்டும்‌ என்ற ஆவலோடு எல்லோரும்‌
செயற்படுகின்றோம்‌. இங்கு வந்துள்ள பத்திரிகை நிருபர்களும்‌ அதனை
உணர்ந்து செயற்படவுள்ளார்கள்‌ என்பதையும்‌ குறிப்பிட விரும்புகிறேன்‌.
எனவே வழங்கக்கூடியதைக்‌ கொடுத்து இதனை நிமிரச்‌ செய்வது
உங்கள்‌ தலையாய கடமையாகும்‌. வந்திருந்தவர்கள்‌ எல்லோரும்‌
கரகோசம்‌ செய்து ஆதரித்தனர்‌. முகுந்தன்‌ தொடர்ந்து தனது உரையில்‌
நிறைவேற்றுவதற்கு எடுக்கும்‌ கால எல்லையை விளக்கிக்‌ கூறினான்‌.
அத்துடன்‌ வருகைதந்த அனைவருக்கும்‌ நன்றி கூறி தனது உரையை
நிறைவு செய்தான்‌.

தலைவர்‌ தனது நிறைவுரையைக்‌ கூறியபின்‌ எல்லோரும்‌ கால்‌
நடையாகவே, காற்றாடி நிறுவப்படும்‌ இடத்திற்குச்‌ சென்றனர்‌. சிறு
புதர்கள்‌ உள்ள மேட்டு நிலத்தில்‌ ஓர்‌ 50' % 50' பரப்பளவை ஏற்கனவே
இரு.நடராசர்‌ பற்றைகளை வெட்டித்‌ துப்பரவு செய்து வைத்திருந்தார்‌.
சுற்றிப்பார்த்த எல்லோரும்‌ ஒரு மனதாகப்‌ பொருத்தமான இடம்‌ எனக்‌
கருத்துக்‌ கூறினர்‌.

பேராசிரியர்‌ குணசிங்கம்‌ ஒட்டுத்‌ தொழிலக, அம்பாள்‌ தொழிலக
முகாமையாளருடன்‌ விரிவாகக்‌ கலந்துரையாடினார்‌. அடுத்த வெள்ளிக்‌
கிழமை அத்திபார வேலைகள்‌ ஆரம்பமாகி, ஞாயிறு நிறைவுறும்‌ என்று
தெரிவித்தனர்‌. மின்‌ உபகரண வேலைகள்‌, காற்றாடி வேலைகள்‌ தமது
தொழிற்சாலையில்‌ நடை பெறுவதாகக்‌ கூறினார்‌. இதனைத்‌ தொடர்ந்து
பேராசிரியர்‌ முகுந்தனிடமும்‌, தலைவர்‌ ஏனைய உறுப்பினர்களிடமிருந்தும்‌
விடைபெற்றுக்‌ கொண்டார்‌. உயர்தர மாணவர்கள்‌ இருவரும்‌ தாம்‌
கணினியில்‌ தயாரித்துப்‌ பெற்ற அறிக்கையைப்‌ பேராசிரியரிடம்‌ கையளித்‌
தனர்‌. அதனைப்‌ பார்வையிட்ட பேராசிரியர்‌ மிக மகிழ்ந்து மாணவரைப்‌
புகழ்நீது பாராட்டினார்‌. அத்துடன்‌ எல்லோருக்கும்‌ பிரதிகள்‌ அனுப்புவ
தாகக்‌ கூறினார்‌.

பேராசிரியரும்‌ அவரது குழுவும்‌ சென்ற பின்னர்‌ வாசிகசாலை நிர்வாக
சபை கூடியது. நேரம்‌ 7 மணியைக்‌ கடந்த படியால்‌ இரண்டு குழாய்‌
விளக்குகள்‌ பொருத்தப்பட்டன. கூட்டத்தின்‌ முடிவில்‌ வசந்தி மிகவும்‌
அமைதியாக இருந்ததைக்‌ கண்ட முகுந்தன்‌ அவள்‌ அருகில்‌ சென்றான்‌.
மாவட்டச்‌ செயலகத்திற்குச்‌ சென்ற விபரம்‌ பற்றிக்‌ கேட்டான்‌. வசந்தி
சற்று அமைதியாக “உங்களுக்குத்தான்‌ என்னைப்பற்றி விசாரிக்கவும்‌
நேரமில்லையே ! ” என்றாள்‌. தனது தவறை உணர்ந்த முகுந்தன்‌, அரச
அதிபர்‌ தன்னுடன்‌ கொலைபேசியில்‌ கதைத்தார்‌ என்று கூறினான்‌. சற்று


Page 105வீசும்‌ காற்றிலிருந்து மின்சக்தி 69

அதுர்ச்சியடைந்தவளாக, "இரு வாரப்‌ பயிற்சிக்குச்‌ செல்ல வேண்டும்‌”
என்றாள்‌. வசந்தியைப்‌ பாராட்டியதுடன்‌, “மோதகப்‌ பூசை காத்திருக்கிறது"
என்றான்‌. கூட்டம்‌ நிறைவுற்று எல்லோரும்‌ சென்ற பின்பு முகுந்தனும்‌
வசந்தியும்‌ வீடு நோக்கி நடந்தனர்‌.

எவ்வளவு காலத்திற்கு உங்கள்‌ பயிற்சி என்று கேட்டான்‌ முகுந்தன்‌.
"அரச அதிபர்‌ கைத்தொழில்‌ பயிற்சியாளர்‌ சிலரைக்‌ தேர்ந்தெடுத்துள்ளார்‌,
அதில்‌ ஓர்‌ இடம்‌ கிடைத்துள்ளது” என்று தனது பயிற்சி சம்பந்தமான
விபரங்களைக்‌ கூறினாள்‌. இரவு நேரமானபடியால்‌ அங்குமிங்கும்‌ பார்த்து
விட்டு, வசந்தியை அணைத்து ஓர்‌ அன்பு முத்தத்தைக்‌ கொடுத்தான்‌.
எதிர்‌ பார்க்காத வசந்தி "உங்களைக்‌ கரம்‌ பிடித்த பலன்‌ தான்‌ எனது
பயிற்சியும்‌” என்றுகூறி "யாழ்‌. மாவட்டம்‌ முழுவதுக்குமாக கைத்தொழில்‌
அபிவிருத்திக்கு ஆலோசகராகப்‌ பணியாற்ற வேண்டும்‌” என்றாள்‌.
“வெகு விரைவில்‌ வாகனம்‌ ஒன்று தேவைப்படும்‌" என்றான்‌. இவ்வாறு
தங்கள்‌ உரையாடலைக்‌ தொடர்நீத வண்ணம்‌ வீட்டினுள்‌ நுழைந்த
முகுந்தன்‌ தாயாரைத்‌ காணாது தவித்தான்‌. சிவமணி தன்‌ அறையில்‌
படுத்திருந்தாள்‌. முகுந்தன்‌ சென்று தாயாரைப்‌ பல கேள்விகள்‌ கேட்டு
எழுப்பி விட்டான்‌.

“தம்பி எல்லாம்‌ சாப்பாட்டு மேசையில்‌ எடுத்து வைத்திருக்கிறேன்‌.
மருந்து மாத்திரை எடுப்பதால்‌ நேரத்தோடு சாப்பிட்டுவிட்டேன்‌, நீங்கள்‌
இருவரும்‌ சாப்பிட்டுவிட்டுப்‌ படுத்துக்‌ கொள்ளுங்கள்‌” என்றாள்‌.
வசந்தியும்‌ வந்து, சூடான பால்‌ தருகிறேன்‌ என்றாள்‌. பாலைக்‌ கொடுத்து
விட்டு வந்த வசந்தி முகுந்தனுடன்‌ உணவருந்திவிட்டுப்‌ பல நிகழ்ச்சி
களையும்‌ மீட்டுப்‌ பார்த்தாள்‌.


Page 10622
கண்டோர்‌ வியக்கும்‌ வண்ணம்‌
காற்றாடி சுழன்றது

காலை வகுப்புகள்‌ யாவும்‌ முடிந்த பின்னர்‌ மாணவ குழுக்களுடன்‌ சற்று
மனம்விட்டுக்‌ கதைத்துக்‌ கொண்டிருந்தான்‌ முகுந்தன்‌. பாதுகாப்புப்‌
பயிற்சிகளை முடித்த மாணவர்களைப்‌ பாராட்டினான்‌. காற்றாலையின்‌
அவசியத்தை விளக்கினான்‌. அவர்கள்‌ சேகரிக்கும்‌ பட்டியலைப்‌ பார்த்து
மகிழ்ந்தான்‌. எதிர்வரும்‌ வெள்ளிக்கிழமை அத்திபாரம்‌ போடப்‌ பட்டு
விடும்‌ என்றான்‌ கோபுர வேலைகள்‌ நடைபெற்றுக்‌ கொண்டிருக்கின்றன.
இன்று அம்பாள்‌ தொழிலகத்திற்குச்‌ சென்று மின்‌ பிறப்பாக்கிகளைப்‌
பார்க்கப்‌ போகிறேன்‌. எல்லா குழுத்‌ தலைவர்களையும்‌ அழைத்து,
அவர்களின்‌ துரிதமான பங்களிப்பின்‌ அவசியத்தை விளக்கிக்‌ கூறினான்‌.
படிப்புக்‌ குழு (ஒருவருக்கொருவர்‌ உதவுவது) பாதுகாப்புக்‌ குழு, தகவற்‌
குழு ,நிதி சேகரிப்புக்‌ குழு என எல்லாக்‌ குழுக்களையும்‌ சந்தித்துப்‌
பணிப்புரைகளை விடுத்தான்‌.

முகுந்தனின்‌ வருகையின்‌ பின்‌ பனந்தோப்புக்‌ கிராமத்தில்‌ மாணவர்‌
மத்தியில்‌ ஓர்‌ எழுச்சியே ஏற்பட்டுவிட்டது எனக்‌ கூறினால்‌ மிகையில்லை.
பாடசாலைச்‌ செயற்பாட்டில்‌ மட்டுமல்லாது நாட்டு நடப்புக்களையும்‌
அறிந்து அவற்றுக்கமைய நடந்து கொள்வது மாணவர்களின்‌ இன்றைய
தேவையாக உள்ளது. தமது பெற்றார்களையும்‌ எழுச்சி கொள்ள
வைப்பதும்‌ பொது நிகழ்ச்சிகளில்‌ பங்கு கொள்ள வைப்பதும்‌ அவர்கள்‌
கடமையாகிவிட்டது.

அம்பாள்‌ தொழிலகத்தில்‌ இருந்து அழைப்புக்‌ கடைக்கவே
உடன்‌ வீட்டிற்குச்‌ சென்று மதிய போசனத்தை முடித்துக்‌ கொண்டு
ஆயத்தமானான்‌. பேராசிரியருக்கும்‌ தான்‌ அம்பாள்‌ தொழிலகத்கிற்குச்‌
செல்வதாகக்‌ கூறினான்‌. பேராசிரியர்‌ தான்‌ அங்கு சந்திப்பதாகக்‌ கூறினார்‌.
வசந்தியிடம்‌ விடைபெற்றுக்‌ கொண்டு அம்பாள்‌ தொழிலகத்தை
அடைந்தான்‌. அங்கு முன்னரே வந்திருந்த பேராசிரியர்‌ குணசிங்கத்துடன்‌
கதைத்த பின்னர்‌, எல்லோரும்‌ முகாமையாளருடன்‌ தொழிற்‌ கூடத்திற்குச்‌

 

 


Page 107 

கண்டோர்‌ வியக்கும்‌ வண்ணம்‌ காற்றாடி சுழன்றது 91

சென்றனர்‌. காற்றாடியின்‌ சில்லும்‌ சட்டங்களும்‌ வெவ்வேறாக வைக்கப்‌
பட்டிருந்தன. அவற்றுக்குரிய பூச்சுப்‌ பூசுவதுதான்‌ வேலை என்று
முகாமையாளர்‌ விபரித்தார்‌. அடுத்து பிறப்பாக்கிகளின்‌ பகுதிக்குச்‌
சென்றார்கள்‌.

அங்கு இரு பிறப்பாக்கிகளும்‌ ஒரே தளத்தில்‌ பொருத்தப்பட்டிருந்தன.
சுழலும்‌ அச்சை மின்மோட்டருடன்‌ பொருத்தி இயங்கச்‌ செய்தார்‌.
ஒவ்வொரு பிறப்பாக்கியையும்‌ இயங்கச்‌ செய்து, ஒரு தொகுதி மின்‌
குமிழ்களை ஒளிரச்‌ செய்தார்‌. ஒரு பிறப்பாக்கி மட்டும்‌ இயங்கும்‌
போது, ஏறக்‌ குறைய ஐந்து அல்லது ஆறு வீடுகளுக்கு மின்னை
வழங்கமுடியுமென்று விளக்கமளித்தார்‌ முகாமையாளர்‌. இதனைத்‌
தொடர்ந்து மூவரும்‌ பல்வேறு தொழில்நுட்ப விபரங்கள்‌ பற்றி சற்று
விரிவாகக்‌ கலந்துரையாடினர்‌. ஆகக்‌ குறைந்தது ஐந்து வீடுகளுக்கு
என்றாலும்‌ மின்‌ இணைப்புகள்‌ இருக்க வேண்டும்‌ என்பது முடிவாயிற்று.
முகுந்தனின்‌ மாமனார்‌ இதற்கான ஒழுங்குகளைச்‌ செய்துவிட்டார்‌.
அவரின்‌ தெரிவில்‌ வாசிகசாலை கைதறி நிலையம்‌ ஆகியவற்றை
இணைத்தால்‌ மேலும்‌ இணைப்புகள்‌ பூர்த்தியாகும்‌ என்பதை முகுந்தன்‌
விளக்கினான்‌. "இத்திட்டத்தில்‌ உனது வீட்டையும்‌ சேர்க்கலாமே”
என்று பேராசிரியர்‌ கேட்டார்‌. அதற்கு முகுந்தன்‌ எங்கள்‌ வீட்டில்‌
சூரியத்தட்டுகள்‌ இரு தொகுதியைப்‌ பொருத்தப்‌ போகிறேன்‌. ஏந்த
வித மின்‌ இணைப்பும்‌ தேவைப்படாது என்றான்‌. எனவே இது ஒரு
முன்மாதிரி யாகவும்‌ இருக்கும்‌ என்றார்‌ பேராசிறியர்‌.

இருவரும்‌ தொழிற்கூடத்திற்கு வெளியே வந்து பேராசிரியரின்‌
மோட்டார்‌ வண்டியில்‌ அமர்ந்து கொண்டனர்‌. வெள்ளிக்கிழமை
நடைபெறவிருக்கும்‌ அத்திபார நிகழ்ச்சிக்கு அரச அதிபரை அழைக்கு
மாறு பேராசிரியர்‌ ஆலோசனை கூறினார்‌. இதன்‌ மூலம்‌ இராணுவக்‌
கெடுபிடிகளைத்‌ தவிர்த்துக்‌ கொள்ளலாம்‌. இதுபற்றித்‌ தான்‌ அரச
அதிபரிடம்‌ கூறிவைத்துள்ளதாகவும்‌, இம்மாதிரியான முன்னோடித்‌
இட்டங்களுக்கு அதிபர்‌ தனது செயலகத்தின்‌ மூலம்‌ வேண்டிய உதவிகளைத்‌
தருவார்‌. நேரில்‌ சென்று அஇபரைச்‌ சந்தித்து விளக்கமளிப்பதாக முகுந்தன்‌
கூறினான்‌. இன்னும்‌ இரு வாரங்களில்‌ யாவும்‌ நிறைவுறும்‌ என்று கூறி
பேராசிரியர்‌ விடைபெற்றுக்‌ கொண்டார்‌.

அந்த வாரம்‌ முழுமையாக மாணவ குழுக்களும்‌, வாசிகசாலை
உறுப்பினர்களும்‌ மிகவும்‌ உற்சாகமாக காற்றாடி வேலைகளில்‌ ஈடு
பட்டனர்‌. வசந்தி தனது பயிற்சிக்காக அரச செயலகத்திற்குச்‌ சென்றாலும்‌,
கைத்தறி நிலையத்தில்‌ மின்‌ இணைப்பு வேலைகளைச்‌ செய்யும்‌

 


Page 10892 மாற்றம்‌

படி தலைவரைக்‌ கேட்டுக்‌ கொண்டாள்‌. செயலர்‌ வாசிகசாலையின்‌
மின்னிணைப்பைச்‌ செய்து முடித்தார்‌. பல நோக்குக்‌ கூட்டுறவுச்‌
சமாசத்தின்‌ உதவியுடன்‌, வாசிகசாலையின்‌ வெளிப்புற அறை ஒரு
மேடை போன்று அமையும்‌ வண்ணம்‌ உயரமான ககரக்‌ கொட்டகை
நிறுவப்பட்டது. செயலர்‌ தம்பிராசா மிகவும்‌ சிறப்பாகக்‌ தொழிற்பட்டுப்‌
பல உள்‌ நாட்டுத்‌ தொழிலகங்களின்‌ உதவியைப்‌ பெற்றுக்‌ கொண்டார்‌.
இரு கரப்பந்து மைதானங்கள்‌ சம காலத்தில்‌ இயங்கும்‌ வண்ணம்‌
இந்த மண்டபம்‌ அமைந்திருந்தது. பெரும்‌ வைபவங்களைச்‌ சிறப்பாக
நடத்துவதுமல்லாமல்‌, பல சுற்றுப்‌ போட்டிகளையும்‌ நடாத்த முடியும்‌.
மாணவ குழுக்கள்‌ மிகவும்‌ குதாகலத்துடன்‌ மண்டபத்தின்‌ கரைப்பகுதியை
மட்டப்படுத்துச்‌ சுத்தம்‌ செய்தனர்‌.

செயளாளரைச்‌ சந்திப்பதற்காக சின்னத்தம்பி அங்கு வந்திருந்தார்‌.
மண்டபத்தைப்‌ பார்த்துப்‌ பிரமித்துப்போய்‌ விட்டார்‌. இரு.தம்‌.பிரா
சாவைப்‌ பார்த்து, மண்டபம்‌ மிகவும்‌ சிறப்பாக அமைந்திருப்பதையிட்டு
பாராட்டைத்‌ தெரிவித்தார்‌. அத்துடன்‌ மதில்‌ வேலைகள்‌ யாவும்‌
முடிவடைந்து விட்டன, என்பதையும்‌ தெரிவித்தார்‌. இவ்வளவு
விரைவாக எப்படிக்‌ கட்டி முடித்தீர்கள்‌ 2? என்று கேட்டார்‌ தம்பிராசா.
தரையில்‌ இருந்து 5 அடி உயரத்திற்கே மதில்‌, மிகுதிப்‌ பகுதி பனை
யோலை ம்ட்டைகளினால்‌ அடைக்கப்பட்டுள்ளது என்றார்‌. அவசியம்‌
வந்து பார்க்க வேண்டும்‌ என்றும்‌ கேட்டுக்‌ கொண்டார்‌, காற்றாடி நிர்மாண
வேலைகள்‌ இருப்பதால்‌, இரண்டு நாட்களில்‌ வந்து பார்ப்பதாகக்‌
கூறினார்‌. காற்றாடியின்‌ விபரங்களைக்‌ கேட்டறிந்தார்‌ இரு.சின்னத்தம்பி.
“இவ்விதமான ஒரு முயற்சி மிகவும்‌ வரவேற்கப்பட வேண்டியதொன்‌
நாகும்‌” என்றார்‌. அத்துடன்‌ நீங்கள்‌ எனது வீட்டிற்கு வரும்‌ போது, ஒரு
சிறு தொகையை அன்பளிப்பாகக்‌ தருகிறேன்‌ என்றார்‌. "மிக்க மகிழ்ச்சி
அவசியம்‌ வருகிறேன்‌” என்று தம்பிராசா கூறினார்‌.

தலைவர்‌ சிதம்பரப்பிள்ளை ஆசிரியர்‌ ஒவ்வொரு மாணவ குழுத்‌
தலைவரையும்‌ அவரது குடும்பத்தையும்‌ நன்கு அறிந்தவர்‌. இவர்களுக்கு
மறைமுகமாகச்‌ சில ஆலோசனைகளையும்‌, வழிகாட்டல்களையும்‌
வழங்குவார்‌. வேறு விதமாகக்‌ கூறுவதானால்‌ தலைமைத்துவப்‌ பண்பு
களை வளர்ப்பதில்‌ மிகவும்‌ வல்லவர்‌. குழுக்‌ தலைவர்கள்‌ சுயமாகச்‌
சிந்தித்துச்‌ செயற்படக்கூடிய வகையில்‌ அவர்களை மாற்றிவிடுவார்‌.
ஆசிரியரின்‌ ஆளுமை, குடும்ப உறவு எல்லோர்‌ மத்தியிலும்‌ அவருக்கிருந்த
மதிப்பு ஆகியன மாணவ தலைவர்கள்‌ வளர்வதற்கு ஏதுவாயின.
இளம்‌ வயதினரான முகுந்தனின்‌ ஈடுபாடு பல புதிய மாற்றங்களை

 


Page 109கண்டோர்‌ வியக்கும்‌ வண்ணம்‌ காற்றாடி சுழன்றது 93

ஏற்படுத்தியது. முகுந்தன்‌ சிதம்பரப்பிள்ளை ஆசிரியரை மாமா என்று
செல்லமா அழைத்தாலும்‌, அவரைக்‌ தன்‌ தந்தையைப்‌ போலவே மதித்து
வந்தான்‌. அத்திபார நிகழ்வுக்கு வேண்டிய ஒழுங்குகளைச்‌ செய்வதற்காக
அவரைச்‌ சந்தித்தான்‌. பேராசிரியரின்‌ ஆலோசனையையும்‌ கூறினான்‌.
இந்தமாதிறி நல்ல காரியத்தைக்‌ தள்ளிப்‌ போடாது, உடன்‌ அரச அஇபரைச்‌
சந்திப்போம்‌ என ஆசிரியர்‌ கூறினார்‌. முகுநீதனும்‌ அதனை ஏற்று,
இருவரும்‌ சென்று அரச அதிபரைச்‌ சந்திப்போம்‌ என்றான்‌.

மறு நாள்‌ மாலை இருவரும்‌ செயலகத்திற்குச்‌ சென்ற போது 4.30
மணி அதிபரின்‌ பாதுகாப்பு அதிகாறி உங்கள்‌ வரவைக்‌ தெரிவிக்கிறேன்‌
அவர்‌ விரும்பினால்‌ சந்திக்கலாம்‌ என்றார்‌. இரண்டு நிமிடங்கள்‌ கூடக்‌
காத்திருக்கவில்லை, உடன்‌ வரும்படி அழைப்பு வந்தது. அரசஅதிபர்‌
மிகவும்‌ மகிழ்ச்சியுடன்‌ காணப்பட்டார்‌. உடன்‌ மூன்று தேநீர்‌ சிற்றுண்டிகள்‌
பரிமாறப்பட்டன. முகுந்தன்‌ வந்த விடயத்தைக்‌ கூறினான்‌. அரச அஇபர்‌,
எல்லாம்‌ தெரியும்‌ என்றும்‌, வெள்ளி மாலை 5:00 மணிக்கு வருவதாகவும்‌
கூறினார்‌. இந்த முயற்சி மிகவும்‌ முக்கியம்‌ வாய்ந்தது. அத்துடன்‌
முன்மாதிரியானது. இது பற்றி ஒரு கட்டுரை வரைந்து பத்திரிகைக்கு
அனுப்பும்படி பேராசிரியர்‌ குண௫ங்கக்தைக்‌ கேட்டிருக்கிறேன்‌. வெள்ளிக்‌
கிழமை வெளிவரும்‌ என்று கூறினார்‌ அரசஅதிபர்‌. ஆசிரியர்‌ சிதம்பரப்‌
பிள்ளையை அதுபர்‌ மிகவும்‌ பாராட்டியதோடு, அவரின்‌ முயற்சிகளுக்குத்‌
தான்‌ எப்போதும்‌ உதவுவதாகவும்‌ கூறினார்‌.

தலைவர்‌ மிகவும்‌ மனம்‌ மகிழ்ந்து, எல்லா ஏற்பாடுகளும்‌ நடை
பெறுகின்றன மேலும்‌ உங்களின்‌ வரவேற்பும்‌ ஈடுபாடும்‌ எங்களுக்குப்‌
புத்தூக்கமளிக்கின்றன என்று கூறினார்‌. கைக்தறி நிலையத்தின்‌ விரிவாக்கம்‌
பற்றியும்‌ எடுத்துக்‌ கூறினார்‌. வசந்இயின்‌ பயிற்சி பற்றியும்‌ கேட்டார்‌.
அதற்கு அதிபர்‌ வசந்தியை நான்‌ பல மூறை அவதானித்துள்ளேன்‌,
கைத்தொழில்‌ பயிற்சி வழங்குவதற்கு மிகப்‌ பொருத்தமானவர்‌, அத்துடன்‌
இரு உதவிச்‌ செயலர்‌ பிரிவுகளில்‌ பயிற்சி வழங்குவதற்குப்‌ பொறுப்பாக
இருப்பார்‌. தற்போதைய பயிற்சி முடிவில்‌ அரசஉளழியராக நியமனம்‌
பெறுவார்‌, என்றார்‌ அரசஅதிபர்‌. முகுந்தனின்‌ சிரிப்பைக்‌ கண்ட அதஇபர்‌
“மூயற்சி தருவினையாகும்‌” என்றார்‌. முகுந்தனும்‌ தலைவரும்‌ அரச
அதிபருக்கு நன்றி தெரிவித்து விட்டுப்‌ புறப்பட்டனர்‌.

தலைவரிடமிருந்து விடைபெற்றுக்‌ கொண்டு வீட்டையடைந்தான்‌
முகுந்தன்‌. கிணற்றடியில்‌ முகம்‌ கழுவிவிட்டுத்‌ தனது இரவு வணக்கத்தை
முடித்துக்‌ கொண்டு நேராக வசந்தியிடம்‌ சென்றான்‌. வசந்தி தனது
பயிற்சி சம்பந்தமான வேலைகளில்‌ ஈடுபட்டிருந்த போது, அவளை


Page 11094 மாற்றம்‌

அன்புடன்‌ அணைத்துக்‌ கன்னத்தில்‌ ஒன்றைக்‌ கொடுத்தான்‌. திடீரென
முகுந்தனின்‌ நடவடிக்கைகளை அவதானித்த வசந்தி என்ன விசேஷம்‌
என்று கேட்டாள்‌. அரசஅதிபரைச்‌ சந்தித்த விபரத்தைக்‌ கூறினான்‌.
வசந்திக்குக்‌ கையும்‌ ஓடவில்லைக்‌ காலும்‌ ஓடவில்லை. தான்‌ ஒரு அரச
ஊழியராகப்‌ போவதை நினைத்துப்‌ பெரிதும்‌ மகிழ்ந்தாள்‌. முகுந்தனை
அணைத்துக்‌ கொண்டாள்‌. உடன்‌ ஓடிச்சென்று மாமியாருக்கும்‌ தகவல்‌
சொன்னாள்‌. சிவமணி வசந்தியைக்‌ கட்டியணைத்து முத்தமிட்டாள்‌.
அத்துடன்‌ பிள்ளையாரையும்‌ வேண்டிக்‌ கொண்டாள்‌. மூவரும்‌
வரவேற்பறையில்‌ அமர்ந்து நீண்ட நேரம்‌ பேசிக்‌ கொண்டார்கள்‌.
முகுந்தன்‌ பசிக்கிறது என்று கூறவும்‌, சிவமணி ஏற்கனவே எடுத்துவைக்க
இரவுச்‌ சாப்பாட்டைப்‌ பரிமாற ஆரம்பித்தாள்‌. சாப்பிட்டுக்‌ கொண்டே
பலதையும்‌ பற்றிப்‌ பேசினார்கள்‌. எதிர்வரும்‌ வெள்ளிக்கிழமை
பிள்ளையார்‌ கோவிலில்‌ மோதகப்‌ பூசைக்குச்‌ சொல்கிறேன்‌ என்று
கூறிவிட்டுச்‌ சிவமணி படுக்கைக்குச்‌ சென்றுவிட்டாள்‌. முகுந்தனும்‌
வசந்தியும்‌ நெடு நேரம்‌ பேசிக்‌ கொண்டிருந்து விட்டு நித்திரைக்குச்‌
சென்றனர்‌.

நடுநிசியில்‌ தொலைபேசி அழைப்பென்றால்‌ அது கனடாவில்‌
இருந்துதான்‌ என்று ஊகித்தான்‌ முகுந்தன்‌. ஆனந்தன்‌ வணக்கம்‌
கூறிவிட்டு, அந்த நேரத்தில்‌ அவனைக்‌ தொந்தரவு செய்வதற்கு மன்னிப்புக்‌
கேட்டான்‌. பின்னர்‌ இரண்டு இலட்சம்‌ ரூபா அனுப்பியிருப்பதாகவும்‌
உடன்‌ பெற்றுக்‌ கொள்ளும்‌ படி கேட்டுக்‌ கொண்டான்‌. தனது
திருமணமும்‌ நிறைவேறிவிட்டது என்று கூறிவைத்தான்‌. முகுந்தன்‌
தனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத்‌ தெரிவித்ததோடு நன்றியையும்‌
கூறினான்‌. வசந்தியிடம்‌ தொலைபேசியைக்‌ கொடுத்து வாழ்த்துக்‌
கூறும்படி கூறினான்‌. வசந்தியும்‌ வாழ்த்துக்களைக்‌ கூறி விடைபெற்றுக்‌
கொண்டாள்‌.

கோட்ட வேலைகளை முடித்துக்‌ கொண்டு வீடுதிரும்பும்‌ போது
செயலர்‌ தம்பிராசா தம்பிப்பிள்ளையைச்‌ சந்தித்தார்‌. மர நிழலில்‌ நின்று
கதைப்போம்‌ என்றார்‌ தம்பிப்பிள்ளை. ஜிம்மியின்‌ பிரச்சினை, மதில்‌
கட்டுதல்‌ போன்றவற்றைப்‌ பற்றி விசாரித்தார்‌ செயலர்‌. "தம்பி தம்பிராசா,
எனது காயம்‌ ஆறிவிட்டது, மதிலும்‌ கட்டிமுடித்து விட்டார்கள்‌
ஆனால்‌ என்று நிறுத்தினார்‌. "ஏன்‌ அண்ணை, ஏன்‌ தயங்குகிறீர்கள்‌ ”
என்று கேட்க "அந்த நாய்‌ ஜிம்மி வெளியே வருவதில்லை, அத்துடன்‌
உலக்கை அடியுடன்‌ கால்‌ முறிந்து விட்டதாம்‌” என்றார்‌ தம்பிப்பிள்ளை.
பிரச்சினைகள்‌ ஆயிரம்‌ இருக்கலாம்‌, மனம்‌ விட்டுப்‌ பேசினால்‌ தீர்வு


Page 111கண்டோர்‌ வியக்கும்‌ வண்ணம்‌ காற்றாடி சுழன்றது 95

கிட்டும்‌. எங்கள்‌ நாட்டுப்‌ பிரச்சினையும்‌ இவ்வாறு தான்‌ அண்ணை,
எல்லையைப்‌ போட்டுப்‌ பிரித்து விட்டால்‌ சனம்‌ சந்தோஷமாக வாழும்‌
அண்ணை. புதினம்‌ ஒன்று தெரியுமோ அண்ணை, என்ன தம்பி என்றார்‌
தம்பிப்பிள்ளை. சினத்தம்பியார்‌ காற்றாடிக்குக்‌ காசு தரப்போகிறார்‌
என்றார்‌ செயலர்‌. "சிங்கள நாட்டில்‌ கடைவைத்துச்‌ சுருட்டிய காசு
நிறைய வைத்திருக்கிறார்‌, அதில்‌ ஒரு பகுதியைக்‌ காற்றாடிக்குக்‌
கொடுப்பது நல்லது தானே” என்றார்‌ தம்பிப்பிள்ளை. இன்னுமொரு
விடையம்‌, "நானும்‌ நடராசரின்‌ ஆலோசனையுடன்‌ ஒரு குறைந்த செலவு
வீடு கட்டப்‌ போகிறேன்‌. செலவு ரூபா 25,000 மட்டும்‌ தான்‌, உள்ளுர்‌
மூலப்‌ பொருட்களை மட்டுமே பயன்‌ படுத்தப்‌ போகிறோம்‌” என்றார்‌
தம்பிப்பிள்ளை. எங்கள்‌ பொருட்‌ காட்சிக்கு முன்னர்‌ முடிக்க வேண்டும்‌
என்றுகூறி விடைபெற்றுக்‌ கொண்டார்‌ செயலர்‌.

வெள்ளி மாலை சற்று நேரத்துடன்‌ முகுந்தன்‌ வீடு வந்து சேர்ந்து
விட்டான்‌. அன்றைய தினசரியில்‌ காற்றாடி பற்றிய விரிவான கட்டுரையும்‌,
கருத்தரங்கில்‌ நடைபெற்ற விடையங்களும்‌ இடம்பெற்றிருந்தன.

மாணவ குழுக்களும்‌ நடராசர்‌, தம்பிராசா, தம்பிப்பிள்ளை போன்ற
பிரமுகர்களும்‌ மாலை நான்கு மணிக்கே காற்றாடி நிறுவப்படும்‌ இடத்திற்கு
வந்து எல்லா வேலைகளையும்‌ கவனித்துக்‌ கொண்டிருந்தனர்‌.

ஆசிரியர்‌ சிதம்பரப்பிள்ளையும்‌ முகுந்தனும்‌ பிள்ளையார்‌
கோவிலுக்குச்‌ சென்று வணங்கிவிட்டு காற்றாடி நிறுவப்படும்‌
இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்‌. அதனைத்‌ தொடர்ந்து அரச அதிபரும்‌
பேராசிரியரும்‌ வநீது சேர்ந்தார்கள்‌. முறையான வரவேற்பிற்குப்‌ பின்னர்‌
அத்திபாரத்திற்கான ஆயத்தங்கள்‌ நடைபெற்றன. அரசஅஇபர்‌ அத்திபாரக்‌
கல்லை எடுத்து வைத்தார்‌. வந்திருந்தவர்கள்‌ யாவரும்‌ ஒரு கரண்டி சாந்து
போட்டுத்‌ தமது ஆதரவைக்‌ தெரிவித்து மகிழ்ந்தனர்‌. வைபவ முடிவில்‌
அரசஅதுபர்‌ ஒரு சிற்றுரையை நிகழ்த்தினார்‌. இந்த முன்னேற்றகரமான
இட்டத்ததை ஆரம்பித்து வைப்பதில்‌ மிகவும்‌ மகிழ்சியடைகிறேன்‌.
இக்கால கட்டத்தில்‌ காற்றின்‌ மூலம்‌ மின்சக்தியை பெறுவது எமது.
தொழில்‌ வளத்தை மேம்படுத்தும்‌. பல பொறியியலாளர்களும்‌
பேராசிரியர்களும்‌ ஒன்றாகச்‌ சேர்ந்து பங்கு கொள்வது பாராட்டப்பட
வேண்டிய தொன்றாகும்‌. பேராசிரியர்‌ குணசிங்கமும்‌, விஞ்ஞான
ஆசிரியர்‌ முகுந்தனும்‌ பல தடவைகள்‌ சந்தித்துப்‌ பூர்வாங்கத்‌ திட்டத்தை
தீட்டியுள்ளனர்‌. நீங்கள்‌ எல்லோரும்‌ சேர்ந்து, உங்களால்‌ இயன்ற


Page 11296 மாற்றம்‌

பங்களிப்பைச்‌ செலுத்தித்‌ திட்டத்தை நிறைவேற்றும்‌ படி கேட்டுக்‌
கொண்டார்‌. தலைவரும்‌ முகுந்தனும்‌ நன்றி கூறினர்‌.

வருகைதந்த மாணவ குழுக்களின்‌ உதவியுடன்‌ அத்திபார வேலைகள்‌
துரிதமாக நடைபெற்றன. அடுத்த வார இறுதியில்‌ பரீட்சார்த்தமாகக்‌
காற்றாடி சுழலும்‌ என்று, அம்பாள்‌ தொழிலக அதிபர்‌ தெரிவித்தார்‌.
அரச அதிபர்‌, பேராசிரியர்‌ உட்பட அனைவரும்‌ வாசிகசாலை நிர்வாகி
களிடமிருந்து விடை பெற்றுக்‌ கொண்டனர்‌. காற்றாடிக்‌ கோபுரத்தின்‌
அடித்தள வேலைகள்‌ நடை பெற்றுக்‌ கொண்டிருந்தன. மாணவ குழுக்கள்‌
மிகவும்‌ உற்சாகமாகத்‌ தொழிற்பட்டனர்‌.

முகுந்தன்‌ தலைவரிடமிருந்து விடைபெறமுன்‌ ஆனந்தன்‌ அனுப்பிய
கனடாக்‌ காசை எடுத்துத்‌ தொழிலதிபரிடம்‌ கொடுக்கப்போவதாகக்‌
கூறினான்‌. வீடு திரும்பியதும்‌ பிள்ளையாரின்‌ பிரசாதம்‌ முகுந்தனை
வரவேற்றது. முகுந்தன்‌ தனது மாலை வணக்கத்தை முடித்துக்‌ கொண்டு
வந்து சாப்பாட்டு மேசையில்‌ இருந்தான்‌. ஒளிப்படக்‌ கருவியை வசந்தி
யிடம்‌ கொடுத்துப்‌ பார்க்கும்படி கூறினான்‌. சிவமணியும்‌ உடனிருந்து
பார்த்தாள்‌. இன்னும்‌ ஒரு மாதத்தில்‌ திருமதி முகுந்தன்‌ கைத்தொழில்‌
பறிசோதகராகக்‌ கடமையேற்கவுள்ளார்‌'” என்றான்‌ .சிவமணி உடன்‌
எழுந்து சமையல்‌ அறைக்குள்‌ சென்று பின்திரும்ப வந்து, வசந்தியின்‌
முகம்‌ உடல்‌ யாவற்றையும்‌ தொட்டுச்‌ சிருஷ்டி கழித்தாள்‌. வசநீதிக்குச்‌
சிரிப்பாகவும்‌ வெட்கமாகவுமிருந்தது. முகுந்தனைப்‌ பார்த்து, “மாமி
இப்போதும்‌ பழையகால நடைமுறைகளை மறக்க வில்லை” என்றாள்‌.
எல்லோரும்‌ பிள்ளையாரின்‌ மோதகத்தை விரும்பி உண்டனர்‌.

சனிக்கிழமை காலை முகுந்தன்‌ யாழ்நகர்‌ சென்று பணத்தைப்‌
பெற்றுக்‌ கொண்ட பின்னர்‌, பேராசிரியருக்குத்‌ தகவல்‌ தெறிவித்தான்‌.
அம்பாள்‌ தொழிலகத்திற்கு வருவதாத்‌ தெரிவித்தார்‌ பேராசிரியர்‌.
முகுந்தன்‌ அம்பாள்‌ தொழிலகத்தில்‌ இருக்கும்‌ போது, பேராசிறியர்‌
அங்கு வந்து சேர்ந்தார்‌. எடுத்து வந்த பணத்தைக்‌ கொடுத்துப்‌ பற்றுச்‌
சீட்டைப்‌ பெற்றுக்‌ கொண்டனர்‌. மீண்டும்‌ ஒரு தடவை எல்லாப்‌ பகுதி
களையும்‌ சரிபார்த்துவிட்டு, மின்வழங்கலுக்குரிய உபகரணங்களைக்‌
காணவில்லையே எனக்‌ கேட்டார்‌ பேராசிரியர்‌. உதவி முகாமையாளர்‌
இன்று கடமைக்கு வரவில்லை, அவரது அறையில்‌ எல்லாம்‌ தயாராக
விருக்கின்றன என்றார்‌ முகாமையாளர்‌. “அத்திபாரக்‌ கட்டு இறுக்கமாக
இருத்தல்‌ வேண்டும்‌. அதற்குக்‌ காலையும்‌ மாலையும்‌ நீர்‌ ஊற்ற
வேண்டும்‌” என்றார்‌. இதற்கு முகுந்தன்‌ “எனது மாமனார்‌ இதில்‌ மிகவும்‌
அனுபவம்‌ வாய்ந்தவர்‌, பக்கத்தில்‌ உள்ள கோட்டக்‌ கிணற்றில்‌ இருந்து

 


Page 113கண்டோர்‌ வியக்கும்‌ வண்ணம்‌ காற்றாடி சுழன்றது 97

நீரைப்‌ பெற்று மூன்று வேளையும்‌ ஊற்றுவார்‌”, என்றான்‌. புதன்‌ மாலை
கோபுரம்‌ நிறைவு பெறும்‌ என்றார்‌ முகாமையாளர்‌. தனது தொழில்‌
நுட்ப உதவியாளரை அழைத்து விபரங்கள்‌ யாவற்றையும்‌ விளக்கினார்‌.
நால்வரும்‌ தேநீர்‌ அருந்திவிட்டு வீடு இரும்பினர்‌. முகுந்தன்‌ புத்தூர்‌
வழியாக வந்துகொண்டிருக்கும்‌ போது திடீரென வெள்ளை நிற வான்‌
குறுக்காக வந்து நின்றது. என்ன வேண்டும்‌ என்று கேட்கு முன்னரே,
முகுந்தனை வானுக்குள்‌ இழுத்துச்‌ சென்று சோகனை செய்தனர்‌.

ஒன்றும்‌ கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தில்‌, “இது பற்றி ஒரு
வருக்கும்‌ மூச்சு விடக்கூடாது" என்ற எச்சரிக்கையுடன்‌ முகுந்தன்‌
விடுதலை செய்யப்பட்டான்‌. பிரதான தெருவழியால்‌ செல்லாமல்‌
ஒழுங்கை வழியாகச்‌ சென்று, தனது மாணவன்‌ நிமலன்‌ வீட்டிற்குச்‌
சென்றான்‌. முகுந்தனைக்‌ கண்ட நிமலன்‌ ஓடிவந்து வரவேற்று, “என்ன
சேர்‌ வேண்டும்‌?” என்று கேட்டான்‌. ஒன்றும்‌ தேவையில்லை என்று
கூறித்‌ தனது தொலைபேசியில்‌ நடந்தவற்றை விபரமாக அரச அடுபருக்குக்‌
கூறினான்‌. அரசஅகுபர்‌ வானின்‌ இலக்கக்கைக்‌ கேட்டார்‌. இலக்கத்தகடு
இருக்க வில்லை என்றான்‌ முகுந்தன்‌. நடந்தவற்றைப்‌ புரிந்து கொண்ட
நிமலனின்‌ தந்‌ைத தானும்‌ கூட வருவதாகக்‌ கூறினார்‌. இதனை மறுக்க
முடியாத முகுந்தன்‌ அவருடன்‌ வீட்டிற்குச்‌ சென்றான்‌. நிமலனின்‌ தந்‌ைத
விடைபெற்றுக்‌ கொண்டார்‌.

வீட்டிற்குச்‌ சென்றதும்‌ நீர்‌ அருந்திவிட்டு வாசிகசாலைக்குச்‌
சென்றான்‌. அரசஅதிபர்‌ தொலைபேசியில்‌ முகுந்தனை அழைத்தார்‌.
“உடன்‌ உதவிப்‌ பொலிஸ்‌ அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதால்‌, புத்தர்‌
சோதனைச்‌ சாவடியில்‌, வெள்ளை வான்‌ வசமாக மாட்டிக்‌ கொண்டது.”
என்று அரசஅதிபர்‌ கூறினார்‌. "ஒன்றுக்கும்‌ நீர்‌ யோசிக்காது உமது
வேலைகளைச்‌ செய்யலாம்‌” என்று ஆறுதல்‌ கூறினார்‌. மேலும்‌ ஏதாவது
தேவைப்பட்டால்‌ தனது கைத்தொலைபே௫க்கு அழைக்கும்‌ படியும்‌
கூறிக்கொண்டார்‌. முகுந்தன்‌ வாசிகசாலையில்‌ இருக்கும்‌ போது தலைவர்‌
வந்தார்‌. அவர்‌ காற்றாடி அமையும்‌ இடத்தில்‌ மரங்கள்‌ இல்லை ,வெய்யில்‌
அதிகம்‌.

நடராசரும்‌ நானும்‌ ஒரு கிடுகுக்‌ கொட்டகையை அமைத்திருக்கிறோம்‌.
வேலை செய்பவர்கள்‌ இளைப்பாறுவதற்கும்‌ ஓர்‌ இடம்‌ வேண்டுமே
என்றும்‌, கூற, நீர்‌ ஊற்ற வேண்டியதன்‌ அவசியத்தை நினைவு படுத்தினான்‌
முகுந்தன்‌. உனது மாமனார்‌ ஏற்கனவே அதனைச்‌ செய்யத்‌ தொடங்கி
விட்டார்‌, அத்துடன்‌ ரமணனும்‌ அதீத கவனமெடுக்கிறான்‌ என்றார்‌
தலைவர்‌. தலைவரைக்‌ தனியாக அழைத்துச்‌ சென்று காலையில்‌


Page 11408 மாற்றம்‌

நடந்தவற்றை விபரமாகக்‌ கூறினான்‌. எல்லாவற்றையும்‌ கேட்ட தலைவர்‌,
“நான்‌ ஒரு தவறு செய்து விட்டேன்‌” உன்னைக்‌ தனியே அனுப்பியிருக்கக்‌
கூடாது. மேலும்‌ நீ ஒரு காரில்‌ சென்றிருக்கலாம்‌. எமது நல்ல முயற்சிக்குத்‌
தெய்வம்‌ கைகொடுக்கும்‌ “எதற்கும்‌ எமது தகவற்‌ பிறிவுக்கும்‌ இது பற்றித்‌
தெரிவித்து, எச்சரிக்கையாக இருக்கும்படி கூறவேண்டும்‌” என்றார்‌.

குனது நண்பன்‌ இலம்போதரனை அழைத்து அவசர அழைப்பை
ஏற்படுத்தக்‌ கூடியவாறு தனது கைக்‌ தொலைபேசியை மாற்றிக்‌ தரும்படி
கேட்டுக்‌ கொண்டான்‌. இலம்போதரன்‌ தொலைபேசி நிறுவனமொன்றை
நடத்துபவராகையால்‌ மாலையில்‌ முகுந்தன்‌ வீட்டிற்கு வருவதாகக்‌
கூறினான்‌.

மாலை நேர வகுப்புகளை நிறைவு செய்து கொண்ட பின்‌, மாணவர்‌
மத்தியில்‌, வெள்ளை வான்‌ கொள்ளைக்‌ கோஷ்டி பிடிபட்டது ஓர்‌
இனிப்பான செய்தியாக விருந்தது. வீட்டிற்குச்‌ சென்றதும்‌, வசந்தி
கேள்வி மேல்‌ கேள்வியாக கேட்டாள்‌. ஆறுதலாக இருந்து நடந்தது
எல்லாவற்றையும்‌ கூறினான்‌ முகுந்தன்‌. தாயார்‌ சிவமணியும்‌ உடன்‌
இருந்தாள்‌. முகுந்தன்‌ எல்லாவற்றையும்‌ கூறி முடித்ததும்‌ இலம்போதரன்‌
வந்து முகுந்தனிடம்‌ சுகம்‌ விசாறித்தான்‌.

தனது கைத்தொலைபேசியை முகுந்தனிடம்‌ கொடுத்தான்‌ இலம்‌
போதரன்‌. சில மாற்றங்களைச்‌ செய்த பின்னர்‌ தனது காரியாலயத்துடன்‌
தொடர்பு கொண்டு சில தகவல்களைக்‌ கொடுத்தான்‌. அவசர அழைப்பின்‌
போது, யார்‌ யாருக்குத்‌ தகவல்‌ அனுப்புவது என்று கேட்டு, அவற்றையும்‌
பதிவு செய்தான்‌ அவசர நேரத்தில்‌ ஒரு பொத்தானை அழுத்தினால்‌,
ஒரே நேரத்தில்‌ நான்கு நபர்களுக்குத்‌ தகவல்‌ சென்று சேரும்‌. எங்கிருந்து
அழைப்பு வருகிறது என்பதையும்‌ அறியலாம்‌. தகவல்‌ மையத்திற்கும்‌,
வசந்தியின்‌ கைத்தொலைபே௫ிக்கும்‌, அரச அதிபரின்‌ கைத்தொலை
பே௫ிக்கும்‌, பேராசிரியரின்‌ கைத்தொலைபேசிக்கும்‌ ஒரே நேரத்தில்‌
தகவல்‌ அனுப்பக்‌ கூடிய வசதி இப்போது முகுந்தனின்‌ கைத்தொலை
பேசியில்‌ உள்ளது. இத்தொலைபேசி தொழிற்படும்‌ போது அது
எங்குள்ளது என்பதையும்‌ கண்டறியலாம்‌.

காற்றாடியின்‌ கோபுர வேலைகளை அம்பாள்‌ நிறுவனம்‌ செய்து
முடித்தது.ஊர்‌ மக்களும்‌ மாணவர்களும்‌ உதவிபுறிந்தனர்‌. ஒரு வார
காலத்தினுள்‌ கோபுர வேலைகள்‌ நிறைவு பெற்றன. கோபுரம்‌ 50
மீற்றர்‌ உயரமுடையது. காற்றாடி பொருத்தப்பட்டால்‌ மேலும்‌ 4
மீற்றர்‌ உயரம்‌ கூடும்‌. மின்சுற்றுக்களை இணைப்பவர்கள்‌ கைத்தறி


Page 115கண்டோர்‌ வியக்கும்‌ வண்ணம்‌ காற்றாடி சுழன்றது 99

நிலையம்‌, வாசிகசாலை, நடராசரின்‌ வீடு போன்ற வற்றில்‌ தமது
உபகரணங்களைப்‌ பொருத்தி முடித்தனர்‌. கோபுரத்தில்‌ இருந்து நடராசர்‌
வீடுவழியே கம்பங்கள்‌ நிறுவி இணைப்புக்களை ஏற்படுத்தியிருந்தார்கள்‌.
அம்பாள்‌ நிறுவனத்தினர்‌ காற்றாடியையும்‌ இரு பிறப்பாக்கெளையும்‌
பொருத்தினர்‌.

காற்றாடியின்‌ சட்டங்களைப்‌ பனை மரக்இினால்‌ அமைத்தனர்‌.
வெவ்வேறு மரங்களைப்‌ பொருத்தப்‌ பரீட்சிப்பதே அவர்கள்‌ தட்டம்‌.
சனிக்கிழமை மாலை எல்லாவற்றையும்‌ பரீட்சிப்பதற்குத்‌ திட்ட
மிட்டிருந்தார்கள்‌. வாசிகசாலையிலும்‌, கைத்தறி நிலையத்திலும்‌ குழாய்‌
விளக்குகள்‌ பொருத்தப்பட்டிருந்தன. ஒரு கைத்தறியை மின்‌ மோட்டர்‌
மூலமாக இயக்குவதற்கும்‌ ஒழுங்குகள்‌ செய்யப்பட்டு இருந்தன.
முகுந்தன்‌ பேராசிரியருடன்‌ சனிக்கிழமை மாலை காத்திருந்தான்‌. மின்‌
இணைப்பாளர்களின்‌ தகவல்‌ கிடைத்ததும்‌, காற்றாடியிடத்திற்குச்‌
சென்றார்கள்‌. தலைவர்‌ சிதம்பரப்பின்ளை எல்லோரையும்‌ கூட்டிச்‌
சென்றார்‌. தலைவர்‌ சமயச்‌ சடங்குகளைச்‌ செய்ய, பேராசிரியர்‌ விசைப்‌
பொத்தானை அழுத்திக்‌ காற்றாடியை சுழலச்‌ செய்தார்‌. காற்றாடி
மெதுவாகச்‌ சுழன்ற போது எல்லோரும்‌ கைதட்டி மகிழ்ந்தனர்‌. படிப்‌
படியாக மின்பிறப்பாக்கியின்‌ வேகத்தை அதுிகறித்துப்‌ பார்த்தார்கள்‌.
பல்வேறு சந்தர்ப்பங்களில்‌ கணிப்புகளைச்‌ செய்து, பதிவுகளைச்‌ செய்து,
நடராசர்‌ வீடு, வாசிகசாலை, கைத்தறி நிலையம்‌, ஆகியவற்றிலும்‌
அளவீடுகள்‌ மேற்‌ கொள்ளப்பட்டன. மின்‌ பொறியியலாளர்கள்‌ தமது
பூரண திருப்தியைத்‌ தெரிவித்தனர்‌. நிறை வான தொழிற்பாட்டிற்கு
என்னும்‌ ஒரு வாரம்‌ காத்திருக்க வேண்டும்‌ என்றனர்‌. பல உபகரணங்
களைப்‌ பொருத்துதல்‌ வேண்டும்‌ என்றனர்‌. எல்லோரும்‌ வாசிகசாலைக்குச்‌
சென்று, பின்னர்‌ விடைபெற்றுக்‌ கொண்டனர்‌.


Page 11623

சூரிய ஒவியைக்‌ குவியச்‌ செய்தும்‌ மின்சக்தி

வீடு திரும்பிய வசந்தி மாமியாரிடம்‌ சென்று தனது எண்ணத்தைக்‌
தெரிவித்தாள்‌. “மாமி ! நான்‌ வேலை செய்யும்‌ இடங்களிலெல்லாம்‌ மின்‌
வசதி இருக்கிறது, ஆனால்‌ இங்கு தான்‌ கைவிளக்கும்‌ லாம்புகளும்‌”
என்று சலித்துக்‌ கொண்டாள்‌.

சிவமணி மருமகளின்‌ ஆதங்கத்தைப்‌ புரிந்து கொண்டு, வசந்தியைச்‌
சமாதானப்படுத்தினாள்‌.. “வசந்தி கொஞ்சம்‌ பொறுமையாய்‌ இரு
மருமகள்‌, முகுந்தன்‌ ஏதோ ஓர்‌ அதிர்ச்சிதகரும்‌ அமைப்பின்‌ வரவுக்காகக்‌
காத்திருக்கிறான்‌ என்பது தான்‌ எனது எண்ணம்‌. எனவே நீ சற்று
ஆறுதலாக இரும்‌, அத்துடன்‌ அவனுக்குப்‌ பல வழிகளிலும்‌ உற்சாகமூட்ட
வேண்டும்‌” என்றாள்‌ சிவமணி. அத்துடன்‌ அவன்‌ ஒரு சாதனையாளன்‌
என்பதையும்‌ வசந்திக்குக்‌ கூறிவைத்தாள்‌. இருந்து பாருமன்‌ ஓர்‌ பெறிய
செய்தி வரும்‌ என்றாள்‌.

வசந்தி ஓடிச்‌ சென்று தன்னைச்‌ சுத்தம்‌ செய்து கொண்டு மாலை
வணக்கத்தை நிறைவு செய்தாள்‌. நான்‌ எவ்வளவு ஒரு பிழையான
எண்ணத்தை என்‌ மனதில்‌ எண்ணுகிறேன்‌. என்‌ நெஞ்சில்‌ நிறைந்தவரைக்‌
குறை கூறலாமா? மேலும்‌ "நாம்‌ எம்‌ மனதில்‌ எண்ணுவதெல்லாம்‌
விதைக்கும்‌ வித்துக்கள்‌ ”.நல்லவித்துக்களை விதைத்துப்‌ பக்குவமாகப்‌
பயிரிட்டால்‌, நல்ல பயிர்‌ வளரும்‌. எமது எண்ணங்கள்‌ தான்‌ இந்த
வித்துக்கள்‌. சதா நல்லதையே ௫ந்இத்துப்‌ பயிர்‌ வளர்க்க வேண்டியது
மிகவும்‌ அவசியமாகும்‌. எனது வாழ்ககையில்‌, இப்படியான ஒரு
சாதனை வீரனை அடைவதற்கு நான்‌ கொடுத்து வைத்தவள்‌. வெறும்‌
விஞ்ஞான ஆசிரியர்‌ ஒருவர்‌ என்று தான்‌ நினைத்தேன்‌. ஆனால்‌
இப்போது எங்கள்‌ கிராமமே அவர்‌ பின்னால்‌ வருவதற்குத்‌ தயாராக
நிற்கிறது. எல்லாவற்றுக்கும்‌ மேலாக சிறு பிள்ளைகள்‌ முதல்‌ உயர்தர
மாணவர்கள்‌ வரை கட்டுப்பாட்டுடன்‌ தொழிற்படுகிறார்கள்‌. இவ்வாறு
தனது எண்ணங்கள்‌ அலை மோதவும்‌, தனது கைப்பையில்‌ இருந்த
முகுந்தனின்‌ படத்தைப்‌ பார்த்து ரசித்த வண்ணம்‌ சற்று அயர்ந்து
விட்டாள்‌.


Page 117சூரிய ஒளியைக்‌ குவியச்‌ செய்தும்‌ மின்சக்தி 101

முகுந்தன்‌ தன்‌ வேலைகளை நிறைவு செய்துவிட்டுச்‌ சாப்பாட்டு
மேசையில்‌ வந்து அமர்ந்தான்‌. சிவமணி இரவுச்‌ சாப்பாட்டை ஒழுங்கு
செய்தாள்‌... “அம்மா வசந்தி எங்கே !....” என்று கேட்டான்‌. "வசந்திக்கும்‌
இப்போ பொறுப்புகள்‌ கூடிக்‌ கொண்டு போகிறது, உனக்கு மட்டும்‌
தான்‌ உடற்சோர்வா? வசந்திக்கும்‌ தானே” என்றாள்‌ தாய்‌.

முகுந்தன்‌ அறைக்குள்‌ சென்று பார்க்க போது, வசந்தி நல்ல நித்திரை
யில்‌ இருந்தாள்‌. கையில்‌ ஏதோ வைத்திருப்பதையும்‌ பார்த்தான்‌. தனது
படத்தைப்‌ பார்த்ததும்‌, அவளைக்‌ கட்டியணைத்து ஆயிரம்‌ முத்தங்கள்‌
கொடுக்க வேண்டும்‌ போல்‌ இருந்தது. மெதுவாக ஒன்றைக்‌ கொடுத்தான்‌.
கண்விழிக்க வசந்தி முகுந்தனை இறுகப்‌ பற்றிக்‌ கொண்டாள்‌. பசிக்கறது
என்று முகுந்தன்‌ கூற இருவரும்‌ சாப்பிடச்‌ சென்றார்கள்‌.

சாப்பாட்டு மேசையில்‌ பலதும்‌ பத்தும்‌ பேசினார்கள்‌. எங்கள்‌
வீட்டிற்கு எப்போது மின்‌ வச கிடைக்கும்‌ ௦ என்று வசந்தி கேட்டாள்‌.
எங்களுக்கு அது உடன்‌ கிடைத்து விடுமா 2 அதற்காக நாம்‌ எமது
வீட்டைத்‌ தயார்ப்படுத்த வேண்டாமா 2 என்று முகுந்தன்‌ கேட்டான்‌.
என்ன செய்ய வேண்டுமோ அதனைச்‌ செய்தால்‌ போகிறது என்றாள்‌
சிவமணி. என்ன விதமான இருக்கம்‌ என்று தெரியாமல்‌ தவித்தாள்‌ வசந்தி.
எங்கள்‌ வீட்டின்‌ முன்பக்கமாக ஒரு மண்டபம்‌ கட்ட வேண்டும்‌. அதில்‌
நான்கு தூண்கள்‌ கட்டி, விசேடமான கூரை அமைக்க வேண்டும்‌ என்றான்‌
முகுந்தன்‌. கூரையில்‌ ஆறு கூடுகள்‌ பொருத்தப்படும்‌. மத்தியில்‌ சூரிய
கலத்‌ தொகுஇகள்‌ பொருத்தப்படும்‌. சூரிய கலக்‌ தொகுதிகள்‌ கிடைத்ததும்‌
கட்டிட வேலைகளை ஆரம்பிக்கலாம்‌ என்று கூறினான்‌.

கூடுகளைக்‌ கூரையில்‌ பொருத்தி கோழிக்‌ குஞ்சுகளை அடைக்கப்‌
போகிறீர்களா 2 என்று நையாண்டி செய்தாள்‌ வசந்தி. வெகு விரைவில்‌
சூரிய கலத்‌ தொகுதி கிடைத்துவிடும்‌. அதன்‌ பின்னர்‌ விரிவாகக்‌
கதைப்போம்‌ என்றான்‌ முகுந்தன்‌.

தி

மறு நாள்‌ காலை தமது வீட்டைச்‌ சுத்தம்‌ செய்து முடித்தனர்‌ வசந்த
முகுந்தன்‌ தம்பதியர்‌. சிவமணி காலைச்‌ சாப்பாட்டில்‌ ஈடுபட்டாள்‌.
காலைச்‌ சாப்பாடு முடிந்ததும்‌ இருவரும்‌ வாசிகசாலைக்குச்‌ சென்றனர்‌.
வழமையான வகுப்புகள்‌ நிறைவுற்ற பின்னர்‌, மாணவ குழுக்களைச்‌
சந்தித்தான்‌ முகுந்தன்‌. சூரிய கலக்‌ தொகுதிகள்‌ நான்கு வரவிருப்பதாகவும்‌
அதற்கான அரைக்கோள வடிவான தெறிக்கும்‌ அமைப்புகளைச்‌
செய்ய வேண்டும்‌ என்றான்‌. உட்குழிவான கோளவடிவ ஆடிகளையே

குறிப்பிடுகின்றீர்கள்‌ என்றான்‌ ரமணன்‌. கோள வடிவ ஆடிகளை


Page 118102 மாற்றம்‌

எப்படித்‌ தயாரிப்பது என்பதே தற்போததைய தேவை என்றான்‌. முகம்‌
பார்க்கும்‌ கண்ணாடித்‌ துண்டுகளை உட்பக்கத்தில்‌ பொருத்தி விட்டால்‌
உட்குழிவான ஆடி தயாராகிவிடும்‌ என்றான்‌ இன்னொரு குழுத்‌
தலைவன்‌. மிகவும்‌ நல்ல ஆலோசனை என்றான்‌ முகுந்தன்‌.

உட்குழிவான அமைப்பை எப்படித்‌ தயாரிப்பது என்று கேட்டான்‌
முகுந்தன்‌. பெறிய இரும்புச்‌ சட்டியைப்‌ பயன்‌ படுத்தலாம்‌ என்றனர்‌.
ஒருவன்‌ எழுந்துநின்று கோழிக்‌ குஞ்சு அடைக்கும்‌ கரப்பான்‌ கூட்டைப்‌
பயன்படுத்தினால்‌ என்ன? என்றான்‌. இதுவும்‌ நல்ல யோசனை, கோழிக்‌
குஞ்சுக்‌ கூடு உட்குழிவானது தான்‌ ஆனால்‌ கண்ணாடித்‌ துண்டுகளை
எப்படிப்‌ பொருத்துவது? என்று கேட்டான்‌ முகுந்தன்‌.

தேவைப்படாத கடதாசித்‌ தாள்களை எறிக்கிறோம்‌. அவ்வாறு
எறிக்காமல்‌ அவற்றை ஒரு வாரத்திற்கு நீரில்‌ ஊறவைத்துக்‌ ”கடதாசிக்‌
கூழ்‌” தயாரிக்கலாம்‌. இக்‌ கூழுடன்‌ ஒட்டும்‌ பசையைக்‌ கலந்து
உட்பக்கத்தில்‌ பூசிக்‌ காயவிட்டால்‌, இந்த அமைப்புத்‌ தயாராகிவிடும்‌,
என்றார்கள்‌ மாணவர்கள்‌. ஆறு ஆடிகளைக்‌ தயாரிக்கும்‌ பொறுப்பை ஆறு
மாணவர்கள்‌ ஏற்றுக்‌ கொண்டனர்‌. இரும்புக்‌ கடையில்‌ விற்கப்படும்‌
“வச்சிரம்‌” சிறந்த பசை தயாரிக்க உதவும்‌ என்றான்‌ முகுந்தன்‌. கூடுகளைத்‌
கயாறிக்கும்‌ போது, உயரம்‌ அரை மீற்றருக்கு மேற்படாமலும்‌ ,விட்டம்‌
ஒரு மீற்றராகவும்‌ இருத்தல்‌ அவசியம்‌. எல்லா ஆடிகளும்‌ ஒரே அளவில்‌
இருப்பது அவசியம்‌ என முகுந்தன்‌ அறிவுறுத்தினான்‌. இரு வாரங்களில்‌
கோள ஆடிகள்‌ தயாராகிவிடும்‌ என மாணவ தலைவர்கள்‌ உறுதி
கூறினர்‌.

வீடு இரும்பிய முகுந்தன்‌, அங்கு வந்திருந்த பெட்டிகளை அவ
தானித்தான்‌. எல்லாம்‌ சூரிய கலத்தொகுதிகளும்‌ சேமிப்புக்கலத்‌
தொகுதிகளுமாகும்‌. உடன்‌ தொலைடேசியில்‌ பேராசிரியருக்கும்‌, அம்பாள்‌
மின்‌ இணைப்பாளர்களுக்கும்‌ தகவல்‌ கொடுத்தான்‌. உடன்‌ கட்டிட
வேலைகள்‌ ஆரம்பிக்க வேண்டும்‌ என்றான்‌. தலைவரைச்‌ சந்தித்துவிட்டு
வருகிறேன்‌ என்று புறப்பட்டான்‌. தலைவரின்‌ வீட்டில்‌ ஆசிறியரும்‌
மகுந்தனும்‌ சூரியக்கலத்‌ தொகுதி பற்றி விரிவாகக்‌ கலந்துரையாடினர்‌.
ஆவல்‌ மிகுதியினால்‌ ஆசிறியரும்‌ முகுந்தனுடன்‌ புறப்பட்டு விட்டார்‌.
முகுந்தன்‌ தனது வீட்டிற்கு வந்த எல்லாப்‌ பெட்டிகளையும்‌ திறந்து
விளக்கமளிக்தான்‌.

எங்கு கட்டிடம்‌ கட்டப்‌ போகிறாய்‌ 2 என்று கேட்டார்‌ தலைவர்‌.
எங்கள்‌ வீட்டு வாயிலுக்கு முன்பாக 15'% 15' அளவுள்ள மண்டபம்‌
நான்கு தூண்கள்‌ மூலம்‌ கட்டப்படும்‌. இதன்‌ மேல்‌ தளத்தில்‌ சூரியக்‌


Page 119சூரிய ஒளியைக்‌ குவியச்‌ செய்தும்‌ மின்சக்தி 103

கலத்தொகுஇகள்‌ பொருத்தப்படும்‌. இவ்வாறு முகுந்தன்‌ விளக்கிக்‌
கூறியபின்‌ தூண்களைப்‌ புது விதமாகக்‌ கட்ட வேண்டும்‌ என்றான்‌.
இரும்புக்‌ கம்பிகள்‌ கொண்டு தூண்கள்‌ அமைக்கப்பட்டாலும்‌,
கம்பிகள்‌ சீமேந்துக்‌ கலவையுள்‌ இருக்கும்‌. அதனைச்‌ சுற்றி சுட்ட
செங்கல்‌ அமைப்பு கட்டப்படும்‌. இதனால்‌ சீமேந்துச்‌ செலவைக்‌
குறைக்க முடியும்‌. இந்த விபரங்கள்‌ கட்டிடப்‌ பொறியியலாளரினால்‌
சிபார்சு செய்யப்பட்டது என்றான்‌. மேசன்‌ வேலையில்‌ மிக நீண்டகால
அனுபவமுள்ள முருகமூர்த்தி தான்‌ இதனைக்‌ கட்டி முடிப்பார்‌ என்றும்‌
கூறினான்‌. தேவையான சீமேந்திற்கு மனுச்‌ செய்து விட்டேன்‌.
திடைத்ததும்‌ வேலைகளைக்‌ தொடங்கலாம்‌. அத்துடன்‌ சூரிய ஒளியைக்‌
காலையிலும்‌ மாலையிலும்‌ சூரிய கலத்தொகுதியின்‌ மேல்‌ குவிப்பதற்கு,
ஆறு தெறிப்பிகள்‌ தயாரிக்கப்‌ படுகின்றன. மாணவ குழுக்கள்‌ இதற்கான
ஏற்பாடுகளைச்‌ செய்கிறார்கள்‌ என்றான்‌ முகுந்தன்‌.

எல்லாவற்றையும்‌ கவனமாகச்‌ செவிமடுத்த தலைவர்‌, சங்கத்‌
தலைவரறிடம்‌ கூறிச்‌ சமேந்தை விரைவாகப்‌ பெறுவதற்கு ஏற்பாடு
செய்கிறேன்‌ என்றார்‌. எனக்கொரு சந்தேகம்‌ என்று நிறுத்தினார்‌
ஆசிரியர்‌. என்னால்‌ முடிந்தவரை விளக்கம்‌ கூறுகிறேன்‌ என்றான்‌
முகுந்தன்‌. உற்பத்தி செய்யப்படும்‌ மின்சக்தி வீட்டை முழுமையாக
ஒளியேற்றக்‌ கூடியதாக இருக்குமா ? என்று கேட்டார்‌. முகுந்தன்‌ தனது
வழமையான சிரிப்புடன்‌, "தாராளமாகப்‌ போதும்‌” என்றான்‌. நான்கு
குழாய்‌ விளக்குகளும்‌, ஒரு கணினியும்‌ ஒரே நேரத்தில்‌ இயங்கும்‌ அல்லது
இரண்டு விளக்குகளும்‌ ஒரு தொலைக்‌ காட்சியும்‌ இயங்கும்‌. மேலதிக
மின்சக்தி சேமிப்புக்‌ கலங்களில்‌ சேமிக்கப்படும்‌. மிகக்‌ கவனமாகப்‌
பயன்படுத்தினால்‌ மின்‌ தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பேயில்லை என்று
விளக்கம்‌ கூறி முடித்தான்‌. வசந்தி கொண்டு வந்த தேநீரைப்‌ பருகிய
பின்‌ தலைவர்‌ விடை பெற்றுக்‌ கொண்டார்‌.

வசந்திக்கு எல்லாம்‌ ஒரே வியப்பாகவிருந்தன. முகுந்தன்‌ இவ்வளவு
பெறிய திட்டத்தைக்‌ கொண்டு நடத்துகிறார்‌ என்று உளமார மஇழ்ந்தாள்‌.
அதன்‌ வெளிப்பாடாக ஓடிஓடி முகுந்தனுக்கு உதவிகள்‌ செய்தாள்‌.
மேசன்‌ வேலை செய்பவரான முருகமூர்த்திக்குத்‌ தகவல்‌ அனுப்பினாள்‌.
முகுந்தன்‌ தனக்கு மேலும்‌ கேவையான மின்‌ உதிரிப்‌ பாகங்களை எழுதி
முடித்தான்‌. இந்த நேரத்தில்‌ நடராசர்‌ தனது வாழைக்‌ தோட்டத்தில்‌
வெட்டிய கப்பல்‌ வாழைக்‌ குலையுடனும்‌ வடையுடனும்‌ வந்து சேர்ந்தார்‌.
முகுநீதன்‌ மாமனாரை வரவேற்றுப்‌ பொருட்களைச்‌ சமையல்‌ அறையில்‌
வைத்தான்‌. சிவமணியும்‌ வசந்தியும்‌ நடராசரை வரவேற்றனர்‌. எல்லோரும்‌


Page 120104 மாற்றம்‌

வரவேற்பறையில்‌ அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்‌. அருகில்‌ இருந்த
பெட்டிகள்‌ பற்றி நடராசர்‌ விசாரித்தார்‌. சூரிய கலத்தொகுது பற்றியும்‌, வாச
லில்‌ அமைக்க வேண்டிய மண்டபம்‌ பற்றியும்‌ விளக்கமாகக்‌ கூறினான்‌.
நடராசர்‌ எல்லாவற்றையும்‌ கேட்டு அறிந்து கொண்டார்‌. 'சீமேந்து, கல்‌,
மணல்‌ இரும்புக்‌ கம்பிகள்‌, பனை மரங்கள்‌, யாவற்றையும்‌ சங்கத்தில்‌
இருந்து ஏற்றிக்‌ கொண்டு வந்து தருவது எனது பொறுப்பு" என்று கூறினார்‌.
உதவிக்கு நானும்‌ வருகிறேன்‌ என்றான்‌ முகுந்தன்‌. இதற்காக நீங்கள்‌
விடுமுறை பெறவேண்டிய அவசியமில்லை, எனக்குக்‌ தெரிந்தவர்கள்‌
இரும்புத்‌ தொழிலகத்திலும்‌ சங்கத்திலும்‌ வேலை பார்க்கிறார்கள்‌.
அவர்கள்‌ தாராளமாக உதவுவார்கள்‌. சுட்ட செங்கட்டிகள்‌ எவ்வளவு
தேவை என்பதைக்‌ கேட்டு அறிந்து கொண்டார்‌. சரியான அளவுகளை
முருகமூர்த்தி தான்‌ தீர்மானிக்க வேண்டும்‌ என்றான்‌ முகுந்தன்‌. அவரே
இதோ நேறில்‌ வந்து விட்டார்‌. அவரது இரு பிள்ளைகள்‌ பாலர்‌ வகுப்பில்‌
படிக்கிறார்கள்‌. வசந்தியின்‌ தகவல்‌ கிடைத்ததும்‌ உடன்‌ வந்து விட்டார்‌.
எல்லோரும்‌ சென்று கட்டடம்‌ அமைக்கும்‌ இடத்தைப்‌ பார்த்து,

அளவுகளைக்‌ குறித்தார்கள்‌. முகுந்தன்‌ கூறிய விளக்கக்தைக்‌ கேட்ட
பின்னர்‌, தூண்களுடன்‌ சேர்த்து நான்கு அடி. உயமுள்ள சுவர்‌ அமைத்தால்‌
நல்லது என ஆலோசனை கூறினார்‌ முருகமூர்த்தி. மேலும்‌ மழைநீர்‌
மண்டபத்தினுள்‌ வருவதும்‌ தவிர்க்கப்படும்‌ என்றார்‌.

தேவையான பொருள்கள்‌ நாளை வந்து சேருமாயின்‌, அடுத்த சனிக்‌
கிழமை கூரை வேலையைச்‌ செய்து முடிக்கலாம்‌ என்றார்‌ முருகமூர்த்தி.
நடராசா அண்ணரின்‌ வண்டில்‌ இருக்கும்‌ போது ஒன்றுக்கும்‌ யோசிக்கத்‌
தேவையில்லை என்று கூறி முடித்தார்‌ முருகமூர்த்தி.

எல்லோரும்‌ வடையுடன்‌ தேநீர்‌ அருந்தி மகிழ்ந்தனர்‌. அப்போது வந்த
ரமணனும்‌ இணைந்து கொண்டான்‌. ரமணனின்‌ படிப்பு விடயங்களைக்‌
கேட்டு அறிந்து கொண்டாள்‌ வசந்தி. ஓய்வு நேரங்களில்‌ இங்கு வந்து
படிக்கலாமே என்றாள்‌ வசந்தி. இந்த வருட இறுதியில்‌ நடக்கவிருக்கும்‌
க.பொ.த (சா.த) பரீட்சையில்‌ ரமணன்‌ தனது திறமையைக்‌ காட்டுவான்‌
என, ரமணனை உற்சாகப்படுத்தினாள்‌. "என்னைப்‌ பற்றி யெல்லாம்‌
அத்தானுக்குத்‌ தெரியும்‌” என்றான்‌ ரமணன்‌. தனது ஆர்வத்தைக்‌
கட்டுப்படுத்த முடியாமல்‌, வசந்தியிடம்‌ சென்று மெதுவாக "சூறிய
கலத்தொகுதியைப்‌ பார்க்க வேண்டும்‌” என்றான்‌. வசந்தி முகுந்தனைக்‌
காட்டி போய்க்‌ கேள்‌” என்றாள்‌.


Page 121சூரிய ஒளியைக்‌ குவியச்‌ செய்தும்‌ மின்சக்தி 705

ரமணன்‌ முகுந்தனுக்கருகில்‌ சென்று, நாணிக்‌ கோணி நின்றான்‌.
இதனைப்‌ புறிந்து கொண்ட முகுந்தன்‌ ,மணனைக்‌ கூட்டிச்‌ சென்று
எல்லாவற்றையும்‌ காட்டி விளக்கினான்‌.

நடராசர்‌, முருகமூர்த்தி, முகுந்தன்‌ ஆகியோர்‌ கட்டிட வேலைகள்‌
சம்பந்தமாக ஆராய்ந்த பின்னர்‌ விடைபெற்றுக்‌ கொண்டனர்‌. திங்கள்‌
காலை வேலைகள்‌ ஆரம்பமாகும்‌ என்று கூறிச்‌ சென்றனர்‌. நிம்மதிப்‌
பெருமூச்சுடன்‌ முகுந்தன்‌ நித்திரைக்குச்‌ சென்றான்‌.

கங்கள்‌ காலை பாடசாலைக்குச்‌ சென்றதும்‌ அதிபர்‌ நேறில்‌ வந்து
முகுந்தனுக்கு ஒரு கடிதத்தைக்‌ கொடுத்தார்‌. அதிபர்‌, முகுந்தனைப்‌
பார்த்து இதில்‌ உனது திறமையைக்‌ காட்டவேண்டும்‌ என்றும்‌ கேட்டுக்‌
கொண்டார்‌. யாழ்‌. பல்கலைக்கழகத்தில்‌ நடைபெறவிருக்கும்‌ விஞ்ஞானம்‌
சம்பந்தமான கருத்தரங்கு பற்றியதே அக்கடிதம்‌. தான்‌ நிச்சயம்‌ கலந்து
கொள்வதாக அதிபருக்கு உறுதி கூறினான்‌. முகுந்தன்‌ ஏற்கனவே தயாரித்து
வைத்திருந்த நவீன போக்குவரத்துச்‌ சாதனத்தை ஆய்வுகூடத்தில்‌
தேடி எடுத்துச்‌ சரிபார்த்துக்‌ கொண்டான்‌. அன்று மாலை ஒரு சூரியகலத்‌
தொகுதியுடன்‌ பல்கலைக்கழகத்திற்குச்‌ சென்றான்‌.

விஞ்ஞானபீடத்தில்‌ நடைபெற்றுக்கொண்டிருந்த கருத்தரங்கிற்குச்‌
சென்ற முகுந்தன்‌ தன்னைப்‌ பதிவுசெய்து கொண்டான்‌. அன்றைய
அமர்விற்கு அரைமணி நேரம்‌ இருந்தது. இந்நேரத்தில்‌ தனது நண்பர்‌
களையும்‌ விரிவுரையாளர்களையும்‌ சந்தித்து உரையாடிக்கொண்டான்‌.
அன்றைய அமர்வில்‌ நான்கு பிரபலங்கள்‌ தங்கள்‌ ஆய்வுரைகளை
நிகழ்த்தவிருந்தனர்‌. அதில்‌ முகுந்தனும்‌ ஒருவன்‌. அன்று நடைபெறவிருந்த
கருத்தரங்கிற்கு அரச அதிபர்‌ சிறப்பு அதிதியாக வந்திருந்தார்‌.

முதலில்‌ கருத்துரை வழங்க திரு.பத்மநாதன்‌ அழைக்கப்பட்டார்‌.
குடாநாட்டு நீர்‌ நிலைகளை எவ்வாறு சீரமைக்கலாம்‌ என்பது பற்றி
விரிவாக எடுத்துரைத்தார்‌. அடுத்த விரிவுரைக்கு முன்னர்‌ முகுந்தன்‌
சூரியகலக்‌ தொகுதியை மண்டபத்திற்கு வெளியே அமைந்த படிக்கட்டில்‌
சூரியஒளி படும்படியாக வைத்துப்‌ பொருத்தினான்‌. அதிலிருந்து
வெளிவரும்‌ இரு கம்பிகளை உள்ளே எடுத்துச்‌ சென்று ஒருமேசையில்‌
பொருத்தினான்‌. இரு.பத்மநதனுக்கு நன்றிகூறிவிட்டு முகுந்தனை
விரிவரைவழங்க அழைத்தார்‌ தலைவர்‌. (அரச அதிபர்‌)

முகுந்தனைப்‌ பற்றி விரிவாக எடுத்துக்கூறிய அரச அதிபர்‌
பனந்தோப்புக்‌ கிராமத்தையும்‌ பற்றிக்கூறக்‌ தவறவில்லை. முகுந்தன்‌


Page 122106 மாற்றம்‌

தனது உரையில்‌ எறிபொருள்‌ விலை பற்றியும்‌ சாதாரண மக்களின்‌
கொள்வனவு சக்தி பற்றியும்‌ விரிவாக எடுத்துக்‌ கூறினான்‌. வெளிநாடுகளில்‌
சூரியகார்கள்‌, ஐதரசன்‌ வாயுக்கார்கள்‌ எனப்பல்வேறு ஆராய்ச்சிகள்‌
நடைபெறுகின்றன. எமது நாட்டில்‌ ஒரு சூரியகலக்‌ தொகுதியை
வாங்குவதே பெரும்‌ பாடாகவிருக்கிறது. இருப்பினும்‌ சூரிய சக்தி
கொண்டு எவ்வாறு தொங்கிக்கொண்டு ஓடும்‌ பேருந்தை இயக்கலாம்‌
ஏன்பதை விளக்கிக்‌ கூறினான்‌. 1' வடிவமான தூண்களைக்‌ கொண்ட
பாதையின்‌ இரு மருங்கிலும்‌ தொங்கிக்‌ கொண்டிருக்கும்‌ பேருந்துகள்‌
சூரியசக்கியில்‌ இயங்கும்‌. தான்‌ செய்து கொண்டு வந்த சிறிய ஓடு
பாதையையும்‌ அதில்‌ இரு பக்கத்திலும்‌ இயங்கும்‌ பேருந்துகளையும்‌
காட்டி, அவை இயங்குவதற்கு மின்‌ இணைப்டைச்‌ செய்தான்‌. பேருந்துகள்‌
தூண்களின்‌ க&ீழ்ப்புறமா தொங்கும்‌ வண்ணம்‌ அமைந்திருந்தன. அவை
மெதுவாக அசைந்தன. பார்வையாளர்கள்‌ குரலொலி எழுப்பினர்‌.
மின்சக்தி எங்கிருந்து வருகிறது என்பதை விளக்கினான்‌. ்‌

இதற்கான பெரும்‌ மூலதனச்‌ செலவு சூரிய கலத்‌ தொகுதியும்‌ ஓடு
பாதையுமாகும்‌. பாதையின்‌ இரு மருங்கும்‌ சூரிய கலத்தொகுதிகளைப்‌
பொருத்தலாம்‌. மேலும்‌ பாதையின்‌ இரு மருங்கிலும்‌ காற்றாடிகளை
நிர்மாணித்து மின்சக்தியை மேலதிகமாகப்பெறலாம்‌. இவ்வாறு தனது
விரிவுரையை முடித்து கைப்பிரதிகளை எல்லோருக்கும்‌ கொடுத்தான்‌.
பார்வையாளர்களின்‌ வினாக்களுக்காகச்‌ சில நிமிடங்களை ஒதுக்கினான்‌.
வினாக்கள்‌ ஒவ்வொன்றிற்கும்‌ தகுந்த பதிலைக்‌ கொடுத்தான்‌. சபையில்‌
எழுந்த வினாக்களில்‌ இருந்து முகுந்தனின்‌ விரிவுரை எல்லோரினது
பாராட்டுதலையும்‌ பெற்றது. சிலர்‌ நம்பமுடியாமல்‌ அருகில்‌ வந்து
மின்‌ இணைப்பைப்‌ பார்வையிட்டனர்‌. ஈற்றில்‌ எல்லோருக்கும்‌
நன்றிகூறி, குறிப்பிட்ட பார ஊர்திகளே பாதையில்‌ செல்ல முடியும்‌
என்றும்‌ கூறிவைத்தான்‌ முகுந்தன்‌. வேறு வினாக்கள்‌ இல்லாததால்‌”
விடைபெற்றுக்கொண்டான்‌. நடுவர்களின்‌ ஆலோசனைப்படி
அடுத்த விரிவுரையாளர்‌ அழைக்கப்பட்டார்‌. விரிவுரைகள்‌ யாவும்‌
முடிந்தபின்‌ அரசஅதிபர்‌ முகுந்தனைப்‌ பெறிதும்‌ பாராட்டினார்‌. பல
விவுரையாளர்களின்‌ பாராட்டுதலுடன்‌ முகுந்தன்‌ வீட்டிற்கு வந்தபோது
வசந்தியின்‌ அன்புப்‌ பறிசு காத்திருந்தது. தாயாருக்கு எல்லாவற்றையும்‌
கூறிச்‌ சந்தோசப்பட்டான்‌.

புதன்‌ மாலை வழமையான நிர்வாகசபை வாசிகசாலையில்‌ கூடியது.
காற்றாடி சம்பந்தமான சகல கணக்கு விபரங்களும்‌ விரிவாகக்‌ கலநீதுரை
யாடப்பட்டன. கனடாவில்‌ இருந்து நிதி சேகரித்து அனுப்பியோருக்கும்‌,


Page 123சூரிய ஒளியைக்‌ குவியச்‌ செய்தும்‌ மின்சக்தி 107

ஆனந்தனுக்கும்‌ நன்றி பாராட்டும்‌ கடிதங்கள்‌ அனுப்பி வைக்கப்பட்டன.
அரச அதிபர்‌, பேராசிரியர்‌ குழு, மின்‌ இணைப்புத்‌ தொழிலகம்‌, இரும்புத்‌
தொழிலகம்‌ ஆகியோருக்கும்‌ பாராட்டுகள்‌ தெரிவிக்கப்‌ பட்டு,கடிதங்கள்‌
அனுப்பப்பட வேண்டும்‌ எனக்‌ கீர்மானிக்கப்பட்டது. செலவு விபரங்கள்‌
யாவும்‌ விளம்பரப்‌ பலகையில்‌ இடம்‌ பெற வேண்டும்‌ என்றும்‌
கர்மானிக்கப்பட்டது.

சித்திரை முதல்‌ இனத்தன்று மாலை திறக்கப்படவிருக்கும்‌ கைத்‌
தொழில்‌ பொருட்காட்சி பற்றிய விபரங்களை சுவரில்‌ பொருத்தியிருந்தான்‌
முகுந்தன்‌. இரண்டு நாட்களுக்குத்‌ தொடர்ந்து நடைபெற விருக்கும்‌
பொருட்‌ காட்சியில்‌ இடம்பெற விருக்கும்‌ காட்சிச்சாலைகள்‌ பற்றிய
கலந்துரையாடல்‌ தொடங்கியது. செயலர்‌ தம்பிராசா, தம்பிப்பிள்ளையின்‌
பழைய வீட்டிற்கு முன்பாக குறைந்த செலவில்‌ நான்கு அறைகளைக்‌
கொண்ட வீடு கட்டப்படுகிறது, இன்னும்‌ ஒரு மாத காலத்தில்‌ இவ்‌
வீடு பூர்த்தியாகிவிடும்‌ என்றார்‌. கட்டிடத்‌ திணைக்கள நிபுணர்கள்‌
இரு.தம்பிப்பிள்ளைக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்கள்‌. சுகத்துடன்‌
வாழ்வதற்கு ஏற்றதாகவும்‌, உள்ளூர்‌ மூலப்‌ பொருட்களை மட்டும்‌ பயன்‌
படுத்தி இவ்‌ வீடு கட்டப்படுகிறது. ஏற்படும்‌ செலவு பதியப்படுகிறது.
இவ்வாறு வீடு பற்றிய விபரங்களைக்‌ கூறினார்‌ தம்பிராசா.

கைத்தறி நிலையத்தில்‌ இரு பிரிவுகளாக காட்சிப்‌ பொருள்கள்‌
வைக்கப்‌ படும்‌. முதற்‌ பிரிவில்‌ கைத்தறி ஆடைகளும்‌, இரண்டாவது
பிரிவில்‌ கைத்தறி நிலையத்தின்‌ வெவ்வேறு தயாரிப்புகளும்‌ இடம்‌
பெறும்‌. விசேடமாக பாடசாலைக்கு எடுத்துச்‌ செல்லும்‌ புத்தகப்‌
பைகளும்‌, நாற்காலிகளுக்கான விரிப்புகளும்‌ இடம்‌ பெறும்‌. மேலும்‌
பல்வேறு விதமான அலங்காரப்‌ பொருட்களும்‌ இடம்‌ பெறும்‌, என
விளக்கம்‌ கொடுத்தாள்‌ வசந்தி. உணவுக்‌ காட்சிப்‌ பொருள்கள்‌ பற்றித்‌
தலைவர்‌ கேட்டார்‌. மாதர்‌ முன்னேற்றச்‌ சங்கத்தில்‌ இணைந்துள்ள
அத்தனை பெண்களும்‌ இதில்‌ ஈடுபட்டுள்ளனர்‌. யார்‌ என்னென்ன
பொருள்களைச்‌ செய்வது என்று பட்டியல்‌ தயாரித்துள்ளார்கள்‌. இதற்கென
ஒரு காட்சிச்சாலை அமைக்கப்படும்‌ என்றாள்‌ வசந்தி,

அடுத்ததாக தலைவர்‌ தான்‌ அமைக்கப்‌ போகும்‌ போக்குவரத்துக்‌
கண்காட்சிச்‌ சாலையை நடராசர்‌ வீட்டில்‌ அமைக்கப்‌ போவதாக்‌
கூறினார்‌. இந்தக்‌ காட்சியறையில்‌ பல புதிய பொருட்களும்‌ இடம்டெறும்‌
என்றார்‌.


Page 124108 மாற்றம்‌

மாணவர்களின்‌ ஆக்கங்கள்‌ வாசிகசாலையிலேயே இடம்பெறுமென
முகுந்தன்‌ கூறினான்‌. இதற்கான பதிவுகள்‌ மேற்கொள்ளப்பட்டு துரிதமாக
வேலை நடைபெறுகிறது என்றான்‌. கல்வி சம்பந்தமான சில புதிய
பொருள்களும்‌ இடம்பெறவுள்ளன. ஆசிரியராகப்‌ பயிலும்‌ நான்கு
மாணவ ஆசிரியர்கள்‌ இதில்‌ ஈடுபட்டுள்ளனர்‌ என்றான்‌.

கூட்ட முடிவில்‌ பொருட்காட்சி முகாமைக்‌ குழுவில்‌ தலைவர்‌, செயலர்‌
முகுந்தன்‌ ஆகியோர்‌ இடம்பெறுவர்‌ என்றும்‌, விற்பனைச்சாலைகளுக்கு
வசந்தி பொறுப்பாகவிருப்பார்‌ என்றும்‌ தீர்மானிக்கப்பட்டது. இரவு
எட்டு மணியளவில்‌ கூட்டம்‌ நிறைவு பெற்றது.


Page 12524

கைத்தொழில்‌ பொருட்காட்சி

சித்திரை முதல்‌ நாள்‌ கொண்டாட்டங்கள்‌ யாவும்‌ வழமை போல்‌
நடைபெற்றன. முகுநீதனும்‌ வசந்தியும்‌ பிள்ளையார்‌ கோவிலுக்குச்‌
சென்று திரும்பினர்‌. மதிய போசனத்தை நிறைவு செய்து கொண்டு,
அரச விடுமுறையாதலால்‌ நடராசர்‌ வீட்டிற்குச்‌ சென்றனர்‌. பழைமையை
மறக்காத நடராசர்‌ இருவருக்கும்‌ கைவிசேஷம்‌ கொடுத்தார்‌. தேநீர்‌
அருந்திவிட்டு வாசிகசாலைக்குப்‌ புறப்பட்டனர்‌.

முகுந்தன்‌ பொருட்காட்சி அறைகளை ஒழுங்கு செய்தான்‌. வசந்தி
கைத்தறி நிலையத்திற்குச்‌ சென்று தனது சகபாடிகளுடன்‌ பார்வைக்கும்‌
விற்பனைக்குமான பொருள்களை ஒழுங்கு செய்தாள்‌. மாதர்‌ முன்னேற்றச்‌
சங்கக்கின்‌ காட்டு அறையையும்‌, உணவகத்கையும்‌ பார்வையிட்டு ஏற்ற
ஒழுங்குகளைக்‌ கவனித்தாள்‌. எந்த ஒரு இடத்திலும்‌ தென்‌ இலங்கைப்‌
பொருளோ வெளிநாட்டுப்‌ பொருளோ இடம்‌ பெறாதவாறு பார்த்துக்‌
கொண்டாள்‌. காட்சி அறைகளில்‌ தயாரிப்புச்‌ செலவு, செயல்‌ முறைகள்‌
யாவும்‌ தகுந்த முறையில்‌ விளம்பரப்‌ படுத்தப்பட்டுள்ளதா எனபதை
உறுதி செய்தாள்‌.

வாசிக சாலையில்‌ நிறுவப்பட்ட கிராமிய வங்கிக்‌ கஇளையின்‌
அலுவலகத்தைத்‌ தலைவர்‌ ஒழுங்கு செய்து வைத்திருந்தார்‌. ஆண்டு
ஐந்தும்‌ அதற்கு மேற்பட்ட வகுப்புகளில்‌ படிக்கும்‌ மாணவர்‌, சுயமாகக்‌
கணக்கினைத்‌ திறந்து கருமமாற்றக்‌ கூடியவகையில்‌ ஒழுங்குகள்‌
செய்யப்பட்டிருந்தன. மாணவர்‌ தாம்‌ சேமிக்கும்‌ பணத்தைக்‌ கொண்டு
பல சுய முயற்சிகளில்‌ ஈடுபடமுடியும்‌. படிப்புச்‌ செலவு, போக்கு
வரத்துச்‌ செலவு போன்ற இன்னோரன்ன தேவைகளை நிறைவேற்ற
முடியும்‌. சேமிப்பில்‌ உள்ள கணக்கிற்கு வட்டியும்‌ வழங்கப்படுகிறது.
நிதி மூகாமைத்துவக்கைச்‌ செயல்முறையில்‌ அறிந்து கொள்ளவும்‌,
சேமிப்பை ஊக்குவிக்கவும்‌ இத்தகைய வங்கிக்‌ கணக்கு மாணவர்களுக்கு
உதவும்‌.

ரமணன்‌ தனது முதலுதவிப்‌ படையை ஒழுங்கு செய்தான்‌. சிறிய
கூடாரமொன்றை அமைத்து, ஒவ்வொரு காட்சியகத்திற்கும்‌ இரு


Page 126110 மாற்றம்‌

மாணவர்கள்‌ வீதம்‌ அனுப்பி வைத்தான்‌. எல்லோரும்‌ வெள்ளை
நிறச்‌ சீருடையுடன்‌ காணப்பட்டனர்‌. ஒவ்வொரு காட்சியறைக்கும்‌
அவர்களே வரவேற்பு உதவியாளர்‌ களாகவும்‌ கடமைபுரிய ஒழுங்குகள்‌
செய்யப்பட்டன. தகவல்கள்‌ வழங்கவும்‌ எழுச்சிக்‌ சதங்கள்‌ இசை
க்கவும்‌ ஒவ்வொரு காட்சியறையிலும்‌ வானொலிப்‌ பெட்டிகள்‌
ஒழுங்கு செய்யப்பட்டன. ஒலிபரப்பு நிலையம்‌ வாசிகசாலையில்‌
அமைந்திருந்தது. தகவல்‌ துணுக்குகள்‌, பணிப்புரைகள்‌, அறிவுறுத்தல்கள்‌
உடனுக்குடன்‌ வழங்கப்பட்டன. தலைவர்‌ பொருட்காட்சியை
வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்‌. மக்கள்‌ வெளியூரிலிருந்தும்‌
வரத்தொடங்கிவிட்டார்கள்‌. பனந்தோப்புக்‌ கிராம நுழைவாயிலில்‌
அலங்கார வளைவு நிறுவப்பட்டு இருந்தது. 'பனந்தோப்பு உங்களை
வரவேற்கின்றது” என்று எழுஇியிருந்தது. காட்சிக்‌ கூடங்கள்‌ எங்கெல்லாம்‌
அமைந்துள்ளன என்ற விபரம்‌ அடங்கிய வரைபடம்‌ பெரிய விளம்பரப்‌
பலகையில்‌ பொறிக்கப்‌ பட்டி ருந்தது.

அம்புக்‌ குறி வழியே சென்றால்‌, "போக்கு வரத்துக்‌ காட்சியகம்‌” என்று
நடராசரின்‌ வீட்டு வாசலுக்கு அருகில்‌ எழுதப்பட்டி ருந்தது. வாகனங்கள்‌
நிறுத்துவதற்கு வசதியான இடம்‌ துப்பரவு செய்யப்பட்டி ருந்தது.
நடராசர்‌ வீட்டு வளவு முழுவதும்‌ தட்டிப்‌ பந்தல்கள்‌ போடப்பட்டு
வெவ்வேறு வண்டில்கள்‌ நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. துவிச்சக்கர
வண்டிப்‌ பாகங்கள்‌, கூடைகள்‌ முதல்‌ இரும்பாலான இருக்கைகள்‌
வரை அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருநீதன. ஒற்றை மாட்டு வண்டி,
இரட்டைமாட்டு வண்டிகள்‌ மோட்டார்‌ வண்டி ரயர்‌ பொருத்தப்பட்டு
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றின்‌ விலையும்‌ உற்பத்திச்‌
செலவும்‌ விபரமாக எழுதப்பட்டி ருந்தது. தோட்டத்தில்‌ பயன்படுத்தும்‌
உபகரணங்கள்‌ யாவும்‌ நவீனமயப்படுத்தப்பட்டு காட்சிக்காக வைக்கப்‌
பட்டிருந்தன. மண்ணைப்‌ புரட்டி கீழ்‌ மண்‌ மேற்புறமாக வரும்‌ வண்ணம்‌
உழுவதற்கான உபகரணங்களும்‌ இடம்‌ பெற்றன. கேவையான பொருட்‌
களை வாங்கவும்‌, கொள்வனவுப்‌ பத்திரங்களை நிரப்புவதற்கான
ஒழுங்குகள்‌ செய்யப்பட்டிருந்தன. ப

சுய பொருளாதார விருத்திக்கு அடித்தளமாக அமைவது விவசாயத்‌
தொழில்‌ நுட்பக்‌ கருவிகளோ என்று வியக்கும்‌ வண்ணம்‌ இக்காட்சியகம்‌
ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நடராசர்‌ வீட்டில்‌ இருந்து வெளியேறி,
காற்றாடி மூலம்‌ மின்‌ சக்கி உற்பத்தி செய்யப்படும்‌ நிலையத்திற்குச்‌
செல்லும்‌ வழி அமைந்திருந்தது. அதில்‌ காற்றின்‌ சக்தியைப்‌ பயன்‌
படுத்துவோம்‌ என்று குறிப்பிட்டிருந்தது.

 


Page 127கைத்தொழில்‌ பொருட்காட்சி 117

காற்றாடி அமைநீதுள்ள இடமும்‌ அதன்‌ சுற்றாடலும்‌ சுத்தமாக்கப்பட்டு
இருந்தது. அங்கு அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறையைக்‌ தவிர ஏனைய
இடம்‌ முழுவதும்‌ வெள்ளை மணல்‌ பரப்பப்பட்டிருந்தது. கட்டுப்பாட்டு
அறையில்‌ மின்‌ விநியோகக்‌ திட்ட விபரம்‌ எழுதப்பட்டிருந்தது. இத்‌
தட்டத்திற்குப்‌ பயன்படுத்தப்‌ பட்ட பொருள்களின்‌ விபரங்கள்‌, அவற்றின்‌
விலைகள்‌ யாவும்‌ குறிக்கப்பட்டிருந்தன. இரு உயர்தர மாணவர்கள்‌
மக்கள்‌ பார்வையிடுவதற்கு ஏற்றதாகப்‌ பல காட்சிப்‌ பொருள்களை
ஒழுங்கு செய்தவண்ணம்‌ இருந்தனர்‌. காற்றாடி சுழன்று கொண்டிருந்தது.
கட்டுப்பாட்டுப்‌ பலகையில்‌ உள்ள பச்சை நிறக்‌ குமிழ்‌ ஒளிர்ந்த
வண்ணமிருந்தது. மின்‌ மானி சுழன்று கொண்டிருந்தது. காற்றாடி
அமைந்த இடம்‌ முட்கம்பி வேலியால்‌ பாதுகாக்கப்‌ பட்டி ருந்தது.

இங்கிருந்து வெளியேறி அம்புக்‌ குறியின்‌ இசையில்‌ சென்றால்‌,
கைத்தறி நிலையத்தை அடையலாம்‌. காற்றின்‌ மூலம்‌ மின்‌ சக்தியைப்‌
பெறும்‌ முறையை விளக்கிக்கூற இரு மாணவர்கள்‌ காத்திருந்தனர்‌.
பொருளாதார விருத்திக்கு மின்சக்தி உற்பத்தியும்‌ அவசியம்‌ என்பதை
எடுத்துக்‌ காட்டுவதாக இக்‌ காட்சிச்சாலை அமைந்திருந்தது.

எமது உடைகளை நாமே தயாரிப்போம்‌ என்ற பெறியதொரு
அறிவித்தல்‌ பலகையின்‌ உள்ளே கைத்தறி நிலையம்‌ அமைந்திருந்தது.
கைத்தறிகளின்‌ சுற்றாடல்‌ முழுமையாக உற்பத்திப்‌ பொருள்களால்‌
மேலும்‌ கீழுமாக நன்கு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. முதலாவது
அறையில்‌ உடைகள்‌ மாத்திரம்‌ காணப்பட்டன. சிறப்பாக உடைகளைத்‌
தயாரிப்பதற்குத்‌ தேவையான துணிவகைகள்‌ யாவும்‌ இடம்பெற்றன.
பெண்களின்‌ சேலைகள்‌, ஆண்களுக்கான வேட்டி போர்வை போன்றவை
காட்சி தந்தன.

இரண்டாவது கைத்தறியுள்ள அறையில்‌, பொதுவாக வீட்டில்‌
பயன்படுத்தும்‌ மேசை விரிப்புகள்‌, மெத்தை விறிப்புகள்‌, தலை
யணை உறைகள்‌ கைப்பைகள்‌ போன்ற பலவித பொருள்கள்‌
ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. விதம்‌ விதமான கைத்துண்டுகள்‌,
துவாய்கள்‌, கதிரைக்குரிய விரிப்புகள்‌ போன்றனவும்‌ இடம்பெற்றன.
வசந்தியின்‌ மேற்பார்வையில்‌ சகலதும்‌ சிறப்பான முறையில்‌ கைத்தறி
நிலையம்‌ அலங்கரிக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்கள்‌ ஒழுங்கான
முறையில்‌ யாவற்றையும்‌ பார்வையிடுவதற்கு ஏற்ற வகையில்‌, நாடாக்கள்‌
மூலம்‌ உட்புகும்‌ வழி வெளியேறும்‌ வழி எனப்‌ பிரிக்கப்பட்டி ருந்தது.
வசந்தி தனது அறையில்‌ , கொள்வனவுப்‌ பத்திரங்களைத்‌ தயார்‌ நிலையில்‌
ஒழுங்குபடுத்தி வைத்தாள்‌.


Page 128112 மாற்றம்‌

கைத்தறி நிலையத்திற்கு அருகில்‌ “எமது உணவில்‌ தன்னிறைவு
காண்போம்‌” என்ற காட்சியகம்‌ அமைந்திருந்தது. இதன்‌ உள்ளே
பனந்தோப்புக்‌ கிராமத்தின்‌ பெரியதொரு படம்‌ வரையப்பட்டி ருந்தது.
அதில்‌ தோட்டங்கள்‌ வயல்‌ நிலங்கள்‌, பனந்தோப்புகள்‌, மேட்டு நிலங்கள்‌
குடியிருப்புகள்‌ யாவும்‌ குறிக்கப்பட்டிருந்தன. நிலத்தை எவ்வாறு
முழுமையாகப்‌ பயன்படுத்தலாம்‌ என்றும்‌ குறிப்பிடப்பட்டி ருந்தது.
அதிகளவில்‌ நீர்ப்பாசனமின்றிச்‌ செய்யக்‌ கூடிய பயிர்களான வரகு,
எள்‌, நெல்‌ போன்றவை எவ்வாறு பயிரிடலாம்‌ என்ற விபரங்கள்‌
குறிப்பிடப்பட்டிருந்தன. தானிய வகைகளில்‌ இருந்து பெறப்படும்‌
மா வகைகள்‌ எவ்வாறு பொதி செய்யப்படலாம்‌ என்பதும்‌ காட்டப்‌
பட்டிருந்தன. எக்‌ காலங்களில்‌ எப்பயிர்கள்‌ பயிரிடப்பட வேண்டும்‌ என்ற
விபரங்கள்‌ பொருத்தமான கையேடுகளுடன்‌ விளக்கப்பட்டிருந்தன.

பயிர்ச்செய்கை நிலங்களில்‌ நீர்ப்பாசன முறைகள்‌, தரைக்கீழ்‌
நீர்ப்பாசன முறைகள்‌, நீர்‌ ஆவியாவதைக்‌ தடுத்துக்‌ களைகளை
எவ்வாறு கட்டுப்படுத்தலாம்‌ என்பனவும்‌ விளக்கப்பட்டிருநீதன.
விலங்குகளின்கழிவுகளை எவ்வாறு கூட்டுப்பசளையாக மாற்றலாம்‌
என்பனவும்‌ உரிய படங்கள்‌ மூலம்‌ விளக்கப்பட்டிருந்தன.

இறுதிப்‌ பகுதியாக வீட்டுத்தோட்டம்‌ எவ்வாறு விரிவுபடுத்தப்படலாம்‌
என்றும்‌, மூலிகையாகப்‌ பயன்படும்‌ தாவரங்கள்‌ எங்கெல்லாம்‌ நடலாம்‌,
என்பதும்‌ விளக்கப்பட்டிருந்தன. காட்சியகக்தை விட்டு வெளியேறும்‌
பகுதியில்‌ 10 முதல்‌ 15 பேர்‌ வரை அமர்ந்து குளிர்‌ பானம்‌ , மோர்‌, பால்‌
போன்றவற்றைப்‌ பருகவும்‌, போசாக்கு நிறைந்த உணவு வகைகளைச்‌
சுவைக்கவும்‌ வசகிகள்‌ செய்யப்பட்டு இருந்தன. சக்தியைச்‌ சேமிக்கக்‌
கூடியவாறு புதிய அடுப்பு வகைகளை எவ்வாறு பயன்படுத்தலாம்‌
என்பதும்‌ விளக்கிக்‌ கூறப்பட்டது.

அடுத்த காட்சியகம்‌ “பனையும்‌ பயன்தரு பொருட்களும்‌”
என்ற அறிவிப்புப்‌ பலகையுடன்‌ காணப்பட்டது. சிறிய வீடு இக்‌
காட்சியகமாக மாறி இருந்தது. பனை ஒலைகளால்‌ முற்பகுதி நன்கு
அலங்கறிக்கப்பட்டிருந்தது. பனந்‌ தோப்புக்‌ கிராமத்தில்‌ உள்ள
மேட்டு நிலங்களில்‌ எங்கெல்லாம்‌ பனைகள்‌ உள்ளன என்பதும்‌,
எங்கெல்லாம்‌ பனம்‌ வித்து நாட்டப்பட்டுள்ளது என்பதும்‌ படத்தில்‌
காட்டப்பட்டி ருந்தது பனம்பொருள்‌ அபிவிருத்தி சபையின்‌ உதவியுடன்‌
காட்சிப்‌ பொருள்கள்‌ ஒழுங்குபடுத்தப்பட்டிருநதன. சுவரில்‌ மாட்டக்‌
கூடிய அலங்காரப்‌ பொருட்களில்‌ இருந்து கட்டில்‌ மேசை கதிரைகள்‌
வரை வைக்கப்பட்டிருந்தன. சிறிய பனம்‌ மட்டைகள்‌ கொண்டு யன்னல்‌

 


Page 129கைத்தொழில்‌ பொருட்காட்சி 113

மறைப்புகள்‌ தயாரிக்கப்பட்டிருந்தன. பதனீர்‌ மூலம்‌ எமக்குக்‌ தேவையான
வெல்லத்தைக்‌ தயாரிக்கலாம்‌ என்று விளக்கினார்கள்‌. தன்மானமுள்ள
ஒவ்வொரு தமிழனும்‌ பனையை வளர்க்க வேண்டியதன்‌ அவசியத்தை
நன்கு வெளிப்படுத்தியிருந்தார்கள்‌. பனை ஓலைப்‌ பொருட்கள்‌, உணவுப்‌
பொருள்கள்‌, பல வகையான பானங்கள்‌ பார்ப்போரைக்‌ கவரும்‌ வகையில்‌
காட்சிக்கு வைத்திருந்தார்கள்‌. பனம்‌ பொருட்களை உண்பதால்‌
எமக்கு எத்தகைய ஊட்டச்‌ சத்துகள்‌ கிடைக்கின்றன எனபதையும்‌
குறிப்பிட்டி ருந்தார்கள்‌.

பனம்‌ பொருட்‌ காட்சியகத்தைப்‌ பார்வையிட்ட பின்னர்‌, தெற்குப்‌
புறமாகவுள்ள குறைந்த செலவில்‌ கட்டப்பட்ட வீடுகள்‌ இரண்டைக்‌
காட்டும்‌ அம்புக்‌ குறி காணப்பட்டது. அத்திசையில்‌ சென்ற போது
இரண்டு வீடுகள்‌ எளிமையாக அலங்கரிக்கப்பட்டி ருந்தன. பெரிய வீடு ஒரு
மாடியைக்‌ கொண்டது. கூரை பனையோலையால்‌ வேயப்பட்டி ருந்தது.
நான்கு தூண்களும்‌ செங்கட்டிகளினாலும்‌ இரும்புக்கம்பிகளினாலும்‌ கட்டி
எழுப்பப்பட்டிருந்தது. சுவர்கள்‌ செங்கட்டியினால்‌ கட்டப்பட்டிருந்தன.
யன்னல்கள்‌ பனை மரத்தினால்‌ பெரிய அளவில்‌ அமைக்கப்பட்டிருந்தன.
கீழ்ப்‌ பகுதியில்‌ வரவேற்பறையும்‌, சாப்பாட்டறையும்‌, அருகே வெளிப்‌
புறத்தில்‌ சமையல்‌ அறையும்‌ அமைந்திருந்தன.

மேல்‌ மாடியில்‌ இரு படுக்கை அறைகள்‌ அமைந்திருந்தன.
உட்பக்கக்‌ கூரையில்‌ பனையோலைத்‌ தட்டுகள்‌ பொருத்தப்‌ பட்டு
வர்ணம்‌ பூசப்பட்டிருநீதது. யன்னல்‌ மறைப்புகள்‌ சிறிய பனையோலை
மட்டையினால்‌ அமைக்கப்பட்டிருந்தன. செலவு ரூபா 25000 எனக்‌
குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்த வீடு உயரம்‌ குறைந்ததாகவும்‌,
மொத்தச்‌ செலவு ரூபா 10 000 இற்குக்‌ குறைந்ததாகவும்‌, கடுகுகளினால்‌
வேயப்பட்டும்‌ காணப்பட்டது. தோட்ட வேலைக்கும்‌ கால்‌ நடை
வளர்ப்பிற்கும்‌ ஏற்றதாக இருந்தது. சமையலறையிலுள்ள அடுப்புக்கூட
சிக்கனமானதும்‌ நவீனமானதாகவும்‌ இருந்தது. வெளிப்புறம்‌ நன்கு
சுக்தப்படுத்தப்பட்டு, பழ மரங்களும்‌ மூலிகை மரங்களும்‌, பூ மரங்களும்‌
வளர்க்கப்பட்டிருந்தன. மூலப்‌ பொருள்களை எப்படிப்‌ பெறுவது,
கட்டிடத்‌ தொழில்செய்வோர்‌ விபரம்‌ யாவும்‌ வரவேற்பறையில்‌, விபரமாக
எழுதப்பட்டி ருந்தன.

அடுத்த காட்சியாக "உயிர்பெற்று எழுந்த தீவு” என்ற குறும்படம்‌
ஒரு வீட்டில்‌ ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. படக்காட்சி நேரம்‌ 1 மணி 30
நிமிடம்‌. கட்டணம்‌ ரூபா 6.00. இருபத்தைந்து பேர்‌ வசதியாக அமர்ந்து
பார்க்கக்கூடியதாக ஒர்‌ அறை அமைக்கப்பட்டி ருந்தது.


Page 130114 மாற்றம்‌

"டிஜிற்றல்‌” படமெறி கருவி மூலம்‌ படம்‌ காண்பிக்கப்படுகிறது.
ஆங்கில மூலமாக விருந்த போதும்‌ தமிழ்‌ விவரணம்‌ கொடுக்கப்‌
படுகிறது.

இந்த விவரணத்தின்‌ படி:- பசுபிக்‌ சமுத்திரத்தில்‌ உள்ள இத்‌ தீவு
சுமார்‌ 200 சதுர கிலோ மீற்றர்‌ பரப்பளவைக்‌ கொண்டதாகும்‌. ஐந்து
துறை முகங்களும்‌, ஆறு பிரதான மாவட்டங்களும்‌ இத்‌ தீவில்‌ உண்டு.
பெரும்பாலும்‌ தென்னை, கரும்பு போன்ற பயிர்களும்‌, நடுப்பகுதி
காடடர்ந்த மலைத்‌ தொடர்களையும்‌ கொண்டது. மீன்‌ பிடித்‌ தொழிலே
பிரதானமானது. உணவு உற்பத்தியில்‌ நிறைவு கண்டுள்ளது இத்‌ தீவு.
மக்களின்‌ படிப்பறிவு மிகவும்‌ குறைவானது. ஒரு பல்கலைக்‌ கழகம்‌
தலைநகரில்‌ இருந்தாலும்‌, மக்கள்‌ வெளிநாடுகளில்‌ தமது பிள்ளைகளை
அனுப்பியே படிப்பறிவைப்‌ புகட்டுகின்றனர்‌. இத்‌ தீவு மக்கள்‌ புராதன
காலத்துப்‌ பழக்க வழக்கங்களைக்‌ கடைப்பிப்பவர்கள்‌. மக்கள்‌
இப்போதும்‌ அம்பு வில்லு ஈட்டி போன்ற கருவிகளைப்‌ பயன்படுத்தி
வருகின்றனர்‌.

வெளிநாட்டு வர்த்தகர்கள்‌ தமது வணிக நடவடிக்கை மூலம்‌
செல்வாக்குப்‌ பெற்றிருக்கின்றனர்‌. அரச நிர்வாகத்தையும்‌, ஆட்சிப்‌
பொறுப்பையும்‌ இவ்‌ வர்த்தகர்கள்‌ இராணுவ மயப்படுத்தி வைத்துள்ளனர்‌.
ஒவ்வொரு மாவட்டங்களில்‌ இருந்தும்‌ தெரிவாகும்‌ பிரதேச சபைத்‌
தலைவர்கள்‌ உள்ளூர்‌ வாசிகளே. இவர்கள்‌ தாம்‌ விதிக்கும்‌ வரியைக்‌
கொண்டும்‌, சுற்றுலா வருமானத்தைக்‌ கொண்டும்‌, தலைநகரில்‌ உள்ள
“மக்கள்‌ சபை” ஆட்சியை நடத்துகிறது. சிறப்பாகக்‌ கூறுவதானால்‌
மக்கள்‌ சபை என்பது வெறுமனே பெயரளவில்‌ தான்‌.

இராணுவ பொலிஸ்‌ அதிகாரிகளே இத்‌ தீவைக்‌ கட்டுப்பாட்டில்‌
வைத்திருக்‌ கின்றனர்‌. புத்தி ஜீவிகள்‌ கேள்வி கேட்கக்கூடாது. மீறினால்‌
ஆளே தலைமறைவாகி விடுவர்‌.பலம்‌ இழந்த பிரதேச மக்கள்‌
தமது பிள்ளைகளை வெளி நாடுகளில்‌ படிக்க வைத்து, அங்கேயே
தொழிலையும்‌ தேடிக்‌ கொள்ளச்‌ செய்கின்றனர்‌.

வெளி நாட்டில்‌ கல்வி கற்ற "றேமன்‌” இத்‌ தீவின்‌ படுகொலை
களையும்‌, தான்தோன்றித்‌ தனமான இராணுவ ஆட்சியையும்‌ எதிர்த்துப்‌
பிரசாரம்‌ செய்கிறான்‌. வெளி நாடுகளில்‌ உள்ள தனது நண்பர்களுக்குப்‌
பயிற்சியளிக்கிறான்‌. பயிற்சி பெற வந்த பெண்‌ மேரி றேமன்‌ மீது
காதல்‌ கொள்கிறாள்‌. கவின்‌ நிலையைப்‌ படம்‌ பிடிப்பதற்கு சுற்றுலா
நிறுவனம்‌ ஒன்றைக்‌ திறந்து, தமது புரட்சித்‌ திட்டங்களை மக்களுக்கும்‌
புகட்டுகின்றனர்‌ றேமனும்‌ மேரியும்‌. ஒவ்வொரு கிராமத்திலும்‌


Page 131கைத்தொழில்‌ பொருட்காட்சி 1/5

எழுச்சிக்‌ குழுக்கள்‌ அமைக்கப்படுகின்றன. உள்ளூர்‌ மட்டத்தில்‌
கொண்டாட்டங்கள்‌ நடைபெறுகின்றன. இராணுவ அதிகாரிகள்‌ பெரும்‌
தொகைப்‌ பணத்தைப்‌ பெற்றுக்கொண்டு இவர்களின்‌ நடவடிக்கைகளுக்கு
இடமளிக்கின்றனர்‌.

பிரதேச குழுக்கள்‌ அம்பு வில்‌ பயிற்சிகளுடன்‌ முதலுதவி உடற்பயிற்கி
போன்றவற்றிலும்‌ தேர்ச்சி பெறுகின்றனர்‌. இங்கிலாந்தில்‌ இருக்கும்‌
றேமன்‌ இரண்டு கப்பல்‌ கட்டும்‌ தொழிற்சாலைக்கு அதிபதியாகிறான்‌.
ஆடைதயாரிக்கும்‌ தொழிற்‌ சாலையில்‌ முகாமையாளராக வேலைசெய்த
மேரி, அடிக்கடி இங்கிலாந்து சென்று றேமனைச்‌ சந்திப்பது வழமை.
ஆடைத்தொழிலக உரிமையாளர்‌ இடீரெனக்‌ காலமாக, மேறி தொழிற்‌
சாலையைப்‌ பொறுப்பேற்று நடாத்துகிறாள்‌. பெருமளவு பணம்‌ சேரவே,
நோர்வேயில்‌ ஒரு படகு கட்டும்‌ தொழிற்சாலையை ஆரம்பிக்கிறாள்‌ மேறி,
இங்கிலாந்தில்‌ உள்ள கப்பல்‌ கட்டும்‌ தொழிலகத்தில்‌, நான்கு பெரிய
சரக்குக்‌ கப்பல்கள்‌ கட்டப்படுகின்றன. தேவை ஏற்படும்‌ போது

இக்கப்பல்கள்‌ இரண்டு இணைந்து கொள்ளக்‌ கூடியதாகவும்‌, சிறிய
மீன்‌ பிடிப்‌ படகுகள்‌ இக்கப்பல்களுக்கிடையில்‌ சென்று மறையக்‌
கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக்‌ கப்பல்கள்‌ டசுபித்தீவுக்குச்‌
சென்று பெட்டிகளில்‌ அடைக்கப்பட்ட மீன்களைக்‌ கொள்வனவு செய்து
வேறு நாடுகளில்‌ விற்பனை செய்யும்‌. நோர்வேயில்‌ கயாரான சிறிய
மீன்பிடிப்‌ படகுகள்‌ பெரிய கப்பல்களினுள்‌ சென்று உரு மாற்றப்பட்டு நீர்‌
மூழ்கிக்‌ கப்பலாக மாற்றப்‌ பட்டுவிடும்‌. கப்பல்கள்‌ யாவற்றிலும்‌ நவீன
தொலைக்‌ தொடர்பு சாதனங்கள்‌ காணப்படுகின்றன. பயிற்சிக்‌ கான
வசதிகளும்‌ உண்டு.$வின்‌ வெளிநாட்டு மாணவர்கள்‌ பயிற்சியின்‌ பின்‌
நாடு திரும்பி வர்த்தகத்தில்‌ ஈடு பட்டாலும்‌, இரகசியத்‌ திட்டங்களுடன்‌
அரசைக்‌ கைப்பற்றுவதற்குக்‌ காத்திருக்கின்றனர்‌.

நவீன பயிற்சித்‌ திட்டம்‌ எனக்கூறி, பிதேச சபை முதல்வர்கள்‌
கப்பலுக்குக்‌ கூட்டிச்‌ செல்லப்பட்டு புதிய நிர்வாகமுறைகள்‌ அறிமுகப்‌
படுத்தப்பட்டன. இராணுவப்‌ புலனாய்வாளர்‌ சந்தேகப்பட்டு
கப்பல்களைச்‌ சோதனை செய்தனர்‌. ஈற்றில்‌ அவர்களும்‌ புதியவர்கள்‌
வலையில்‌ சிக்கிவிடுகின்றனர்‌. மீன்கள்‌ மூலமாகவும்‌, வெவ்வேறு
சாதனங்கள்‌ மூலமாகவும்‌ கொண்டு வரப்பட்ட நவீன துப்பாக்கிகள்‌,
தேவையான அளவு இதவினுள்ளே வந்து சேர்ந்ததும்‌, நக்தார்‌ பண்டி கையின்‌
போது பிரதேச சபையை றேமன்‌ மேறி பொறுப்பேற்கின்றனர்‌. மக்கள்‌
இதனைக்‌ கேட்டு வீதிகளில்‌ கொண்டாடுகின்றனர்‌. இதுவே இப்படத்தின்‌

சாராம்சம்‌.


Page 132116 மாற்றம்‌

பனந்தோப்புக்‌ கிராமத்தில்‌ உள்ள இளவயதினர்‌ ஒருவராவது இப்‌
படத்தைப்‌ பார்க்காதவர்கள்‌ இல்லை. "உயிர்‌ பெற்று எழுந்த இவு” என்ற
படம்‌ பெரியவர்கள்‌ மத்தியிலும்‌ பிரபல்யமடைந்து விட்டது. எங்கும்‌
ஒரே குசு குசுப்‌ பேச்சு. இப்படத்தையும்‌ பார்க்காமல்‌ இருப்பதா என்று
முகுந்தனும்‌ வசந்தியும்‌ இரண்டு தடவைகள்‌ பார்த்து விட்டனர்‌.

இறுதிக்‌ காட்சியகமாக விருந்தது முகுந்தனின்‌ வீடு "சூரிய கலத்‌
தொகுதி மூலம்‌ மின்சக்கி” ஆகும்‌. குழாய்‌ விளக்குகளும்‌ கணினியும்‌
எல்லோர்‌ மனதையும்‌ கவர்ந்து விட்டன. நான்கு குழாய்‌ விளக்குகளும்‌
தொடர்ந்து ஒளிர்ந்த வண்ணம்‌ இருந்தன. கணினியும்‌ தொழிற்பட்டுக்‌
கொண்டேயிருந்தது. பார்த்தவர்களுக்கு ஒரே வியப்பாக விருந்தது.
நேரம்‌ இரவு 9:00 மணியைக்‌ கடந்ததினால்‌ யாவரும்‌ வீடு செல்லும்‌
ஆர்வத்தில்‌ இருந்தனர்‌. அடுத்த நாள்‌ கலை நிகழ்ச்சிகள்‌ வாசிகச
ரலையில்‌ நடைபெறும்‌ என்பதை அறிவித்தார்கள்‌. பொருட்‌ காட்சி
பார்த்த குதாகலத்துடன்‌ யாவரும்‌ வீடு திரும்பினர்‌.


Page 13325

கலை நிகழ்ச்சிகள்‌

பொருட்காட்சியின்‌ பின்னர்‌ ஞாயிறு காலை கூடிய நிர்வாக சபை
எல்லோருக்கும்‌ நன்றி கலந்த மகிழ்ச்சியைத்‌ தெரிவித்தது. எல்லோர்‌
முகங்களிலும்‌ ஒருவித புத்துணர்ச்சி வெளிப்பட்டுக்‌ கொண்டி ருந்தது.

அன்று மாலை நடைபெறவிருக்கும்‌ கலை நிகழ்ச்சியை எப்படி
நடத்துவது என்பதை விரிவாக ஆராயப்‌ புகுந்தனர்‌. எல்லா திணைக்கள
ஊழியரும்‌ வருவார்கள்‌ அவர்களை வரவேற்கப்‌ பொறுப்பேற்றவர்கள்‌
கங்கள்‌ செயற்பாடுகளை நிறைவேற்றத்‌ கேவையானவற்றை மீண்டும்‌
உறுதி செய்து கொண்டார்கள்‌. பலர்‌ பொருட்காட்சியை மேலும்‌ ஒரு
நாள்‌ நீடித்திருக்கலாம்‌ என அபிப்பிராயம்‌ வெளியிட்டனர்‌. ஆனால்‌
பாடுபட்ட மாணவர்களின்‌ நலன்‌ கருதி பொருட்காட்சியை நீடிக்க
முடியவில்லை என்று தலைவர்‌ கூறினார்‌. அத்துடன்‌ கலை நிகழ்ச்சியை
சரியான நேரத்திற்கு நிறைவு செய்து மாணவர்‌ வீடு இரும்ப உதவுமாறு
எல்லோரையும்‌ தலைவர்‌ கேட்டுக்‌ கொண்டார்‌.

மாலை நான்கு மணிக்குத்‌ இறந்த வெளியரங்கு அலங்கறிக்கப்பட்டது.
ஒலி ஒளி அமைப்புகள்‌ செயலர்‌ தம்பிராசாவினால்‌ ஒழுங்கு செய்யப்‌
பட்டன. தலைவர்‌ விசேட விருந்தினர்களுக்குப்‌ பொறுப்பாக விருந்தார்‌.
மக்கள்‌ இருக்கைகளையும்‌ சாரணர்‌ முதலுதவியாளர்களையும்‌ முகுந்தன்‌
நெறிப்படுத்தினான்‌.

மாலை 5 மணிக்கே மக்கள்‌ வருகைதர ஆரம்பித்து விட்டார்கள்‌.
பிரதம விருந்தினராக வருகை தந்த அரசஅஇபரும்‌ பாறியாரும்‌ உறிய
முறையில்‌ வரவேற்கப்பட்டுக்‌ கெளரவிக்கப்பட்டார்‌.கள்‌. சரியாக 5:30
மணிக்கு நிகழ்ச்சிகள்‌ ஆரம்பமாகின.

முதல்‌ நிகழ்ச்சியாக “விநாயகர்‌ வணக்கம்‌” ஐந்து வயதிற்குட்பட்ட
சிறுவர்களினால்‌ நடாத்தப்பட்டது. அதனைக்‌ தொடர்ந்து அலாரிப்பு
நடனம்‌ இடம்‌ பெற்றது. எல்லோரும்‌ மகிழ்ச்சியாரவாரம்‌ செய்தனர்‌.
அரசஅ,துபர்‌ வேறு நிகழ்வுக்குச்‌ செல்ல வேண்டியிருந்ததால்‌ பாராட்டு
நிகழ்ச்சியைக்‌ தலைவர்‌ ஆரம்பித்தார்‌. பரிசுகளையும்‌ பாராட்டுப்‌


Page 134118 மாற்றம்‌

பத்திரங்களையும்‌ அரசஅதுபரின்‌ பாரியார்‌ வழங்கினார்‌. “ஈழத்‌ தாயின்‌
விடுதலை” என்ற நாட்டிய நாடகம்‌ இடம்‌ பெற்றது.

அரசஅதிபர்‌ தனது உரையில்‌, பனந்தோப்புக்‌ கிராமம்‌ ஒரு மூன்‌
மாதிரியான இராமம்‌ என்றார்‌. இவ்வளவு ஒரு பெரிய பொருட்காட்சியை
காலத்திற்கு ஏற்ற வகையில்‌ நடாத்தியிருக்கிறார்கள்‌. வாசிகசாலை
நிர்வாகத்தையும்‌, சிறப்பாக மாணவர்களையும்‌ நாம்‌ மனமாரப்‌ பாராட்டு
கிறோம்‌.

மனித வாழ்க்கைக்கு வேண்டிய உணவு, உடை, உறைவிடம்‌
ஆகியனவற்றைக்‌ கருப்பொருளாகக்‌ கொண்டு பொருட்காட்சியை
அமைத்திருநீதீர்கள்‌. (இவற்றை நாம்‌ பார்க்கும்‌ போது எமது மனத்தில்‌ ஓர்‌
விழிப்புணர்ச்சி ஏற்படுகிறது. இதனால்‌ நாம்‌ நமது பொருளாதாரத்தில்‌
தன்னிறைவு பெற முடியும்‌ என்பதை நீங்கள்‌ எல்லோரும்‌ இணைந்து
செயல்‌ மூலம்‌ நிரூபித்துக்‌ காட்டி யிருக்கிறீர்கள்‌. இதனால்‌ தான்‌ “உங்கள்‌
கிராமம்‌ முன்மாதிரியானது”' என்றேன்‌. இன்று எம்‌ மாவட்டத்தில்‌

்‌. உள்ள சகல உளழியருக்கும்‌ பனந்தோப்புக்‌ கிராமம்‌ பற்றித்‌ தெரியும்‌.

நீங்கள்‌ எல்லோர்‌ மனங்களிலும்‌ இடம்‌ பிடித்து விட்டீர்கள்‌ எல்லோர்‌
மனங்களையும்‌ எழுச்சி கொள்ளச்‌ செய்து மாற்றி விட்டீர்கள்‌. ஓர்‌
செயலைச்‌ செய்வதற்கு முன்‌ நாம்‌ அதனைப்‌ பற்றி எம்மனத்தில்‌
நினைக்கிறோம்‌. அந்த நல்ல எண்ணம்‌ திட்டமாக உருவாகிச்‌ செயல்‌
வடிவம்‌ பெறுகிறது. எனவே இக்கிராம மக்கள்‌ அனைவரும்‌ “செயல்‌
வீரர்கள்‌” ஆவர்‌. இவர்களின்‌ முன்மாதிரியை ஏனைய கிராம மக்களும்‌
பினபற்ற வேண்டும்‌. உங்களின்‌ முற்போக்கான திட்டங்களைத்‌ தினமும்‌
புதினப்‌ பத்திரிகையில்‌ பார்க்கலாம்‌. இவற்றுக்கெல்லாம்‌ காரணம்‌ யார்‌
என்று யோ௫ித்தேன்‌. ஓய்வு பெற்றும்‌ உங்களை வழிநடத்தும்‌ உங்கள்‌
தலைவரை இச்‌ சந்தர்ப்பத்தில்‌ வாழ்த்துகிறேன்‌, அவர்‌ இறையருளால்‌
பல்லாண்டு காலம்‌ சேவை செய்ய வேண்டும்‌. அவருடன்‌ இயங்கும்‌
ஒரு துடிப்பான சோடியைப்‌ பற்றிக்‌ கூற வேண்டும்‌. இவர்கள்‌ இருவரும்‌
உங்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்‌ படுத்துகிறார்கள்‌. அவர்கள்‌ இருவரும்‌
உங்கள்‌ மனங்களில்‌ இடம்‌ பிடித்தது போல்‌ எங்கள்‌ மனத்திலும்‌ இடம்‌
பிடித்து விட்டார்கள்‌. அவர்கள்‌ வேறு யாருமல்ல உங்கள்‌ முகுந்தனும்‌
வசந்தியும்‌ தான்‌. அவர்களை நாம்‌ எல்லோரும்‌ வாழ்த்துவோம்‌, என்றார்‌
அரசஅதிபர்‌. எல்லோரும்‌ எழுந்து நின்று கரகோசம்‌ செய்தனர்‌.
இச்சந்தர்ப்பத்தில்‌ அரச அதிபர்‌ ஒலிவாங்கியை கையில்‌ எடுத்து
எல்லோரையும்‌ அமைதியாக இருக்கும்‌ படி வேண்டிக்‌ கொண்டார்‌. யாழ்‌.
பல்கலைக்கழக விஞ்ஞான விருது இரு.முகுந்தனுக்குக்‌ கிடைத்துள்ளது


Page 135கலைநிகழ்ச்சிகள்‌ 119

என்று அறிவித்தார்‌ எல்லோரும்‌ பலத்த கரகோசம்‌ செய்தனர்‌. தான்‌
கொண்டுவந்த தங்கப்பதக்க விருதை முகுந்கனுக்கு அணிவிக்தார்‌.

அரசஅதுிபர்‌ எல்லோருக்கும்‌ நன்றி கூறிக்‌ தனது உரையை நிறைவு
செய்தார்‌. செயலர்‌ தனது நன்றியுரையில்‌ அரசஅதுபரையும பாறியாரையும்‌
பாராட்டி நன்றி தெரிவித்தார்‌. தலைவருக்கும்‌ விசேடமாக முகுந்தன்‌
வசந்திக்கும்‌ பொதுவாக எல்லோருக்கும்‌. நன்றி கூறினார்‌. வெளி நாட்டில்‌
இருந்து உதவிய அன்பர்களுக்கும்‌ சிறப்பாக ஆனந்தனுச்கும்‌ நன்றி
கூறினார்‌. கலை நிகழ்ச்சிகள்‌ தொடர்ந்து நடைபெற்றன.

இறுதியாக நாம்‌ எமது மனங்களில்‌ எப்போதும்‌ நல்லதையே
சிந்திப்போம்‌, எமது மனதை மாற்றுவோம்‌ மற்றவர்‌ மனங்களையும்‌
மாற்றுவோம்‌ மகிழ்வுடன்‌ வாழ்வோம்‌ என்று நன்றி கூறி முடித்தார்‌ செயலர்‌
தம்பிராசா. கொடியிறக்கும்‌ கதத்துடன்‌ விழா நிறைவு பெற்றது.


Page 136 

 

 

 

 

 

 

 
 

 

 
 

 

 

 

 

்‌ ம்‌ ன்‌
்‌ க்‌
7? பூ ₹
ற
॥ ந
பி
த
ம
ஞு
ச
* ௬
%
ப ய ப
் ்‌
ட்‌
ர்‌
த்‌
க
ட்‌ த சீ
ழ்‌
ஷ்ஃி
்‌ க

 
 

 

 

 

ப

ந

4
8,

" $

2.
ஸ்‌ * ்‌
4 ம்‌] ௩
க
உ 4

 

 

 

 

 
 

 
 
 

 
 

 

 

 

 

 

ல ௯ ம்‌ " ௬
டி 5 ்‌, ்‌
ர உ. ட
2 " ்‌ ்‌
ல்‌ 1 ரி ல்‌ உ
க க
ச ] ட.
ச ச
1 * ப ம்‌
ட டு 4
டட ்‌
ஜ்‌ ட ?்‌
ர க
ன்‌
ன்‌ %
ர %
6 2
்‌ எகா வைழயரைக்தினை விஜ வவத்க ைழலல் வால்‌ அல ட ம தலவய ஓ ர அத்தர்‌
ப்‌ ல ்‌
ட
௩
ஸ்‌ *
௭ ச
2 ம்‌ ச ்‌ ்‌
ஷீ
, ்‌்‌ ல்‌ ட
, க ்‌
்‌ ச்‌
க
க்‌
ச்‌
ய த
ர்‌ க
எ 8
டக த ்‌
௫
2
ச %
்‌ ர
ந ்‌]
ஞி க
ி ச்‌ க ்‌ _

 
 


Page 137 

 

 

ப்‌ ழ்‌ ப்ல்‌ ஒ்ன்து ம்‌ ப்வுயு, ட்‌ டவ்‌, ம்‌ அச்‌ வு ழ்கில்ஸ்வு கய்‌ ம்‌ ன்‌ ஸ்ஸ்‌ ட்‌ வைத வைய தி
2 *்‌ ண
பரச பள ஒர மதுவும்‌. * மழ 1௮9 ர்‌ டின்னர்‌ எண ப னி அரமக வ ஜர்‌ ஒட்டித்‌ மழ ஆராவ ரி ட ஒரு மரி ஏன்‌ மல்‌ 6

றப்‌ ன ரர ட. ல


Page 138 

 

 


Page 139

Page 140படப்‌

 

 

 

உஜார்‌