கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நேற்றுப்போல இருக்கிறது

Page 1 

 

 

   

1$3: 978-955-0210-05-3

ர்ரி

9178955012

 

 

 

ட மணை

    

 

 

 

 


Page 2 

8 ப ரவ கை
பெடி பு ம 1 ்‌] ்‌
்‌ ப ॥ வி. தது ॥ 0
மே ன ர்‌ ப்ரி ப்பு பு 9 ர்‌ (4 4 ்‌ பி | 4 ப டி
டட படிய படவ |. 0 மீ பா ப்‌ ட 0
ட்‌ ௨] வட்வகடைஸி மன . ௪ [3 ய ூ ்‌ ௫ ச
ட்‌ நர மட்டப்‌ டு ॥ வ்‌ ப்‌ (4 ர ம்டூ
ப] ்‌ இழி 110
8) 7)
| ர்‌
ம டு , 1 ய)
ப 63
( பூ ப

 

 

 

 


Page 3 

6ரூற்றுப்‌ போல ௫௫23

ங்‌ ட... டு ஓ உட ல
ஆ. ட. டாவச்சஈதிரன்‌

கனகா பதிப்மாகம்‌
நெகிவளை, இ: 2.


Page 4நேற்றுப்‌ போல இருக்கிறது

ஆசிரியர்‌ - கே. எஸ்‌. பாலச்சந்திரன்‌
முதற்பதிப்பு - மே2௦11
வெளியீடு - கனகா பதிப்பகம்‌

தெகிவளை, இலங்கை.

பதிப்புரிமை -. ஆசிரியருக்கே
அட்டைப்படம்‌ - ரமணி, யாழ்ப்பாணம்‌.
அச்சுப்பதிப்பு - யுனி ஆர்ட்ஸ்‌ (பிறைவேட்‌) லிப்‌...

488, புளுமண்டால்‌ வீதி,
கொழும்பு 13, இலங்கை.

விலை - ரூபா450/5 - 12 டொலர்‌

15014 978-955-0210-05-3


Page 5 

சமர்ப்பணம்‌

என்‌ சிறுபிராயத்தில்‌,

என்னை அன்பில்‌ தோய்த்து, வளர்த்த
என்‌ அம்மம்மா

- திருமதி லட்சுமி உமாபதிக்கு


Page 6டோ

௬ 5
ப ப்மையயவனிமகம்மவ்வவ்னி ஆனையை வம்‌ பப்பட்‌
இ ட.

ல்‌

ஸ்ப

அவைவைவக்வ வட்‌ பப அதன்‌ அழும்‌ அத்திரி வகுப்‌ டய அவிய பய்கஸ்டம்ய
ஸ்‌ பட்சரி்‌ ்‌ ர்‌ ரு ட்‌

ர்‌

 

பி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Page 7ஆ.

 

என்னுரை

பல ஆண்டுகளுக்கு முன்பு கனடாவில்‌ நடந்த ஒரு விழாவில்‌
கலந்து கொண்ட இயக்குனர்‌ பாரதிராஜாவிடம்‌ ஒரு கேள்வி கேட்டார்கள்‌.

“நீங்கள்‌ தற்போது நகரத்தில்‌ வாழ்ந்தாலும்‌ கிராமியப்பின்னணியில்‌
உங்கள்‌ திரைப்படங்கள்‌ சிறப்பாக அமைவதின்‌ காரணம்‌ என்ன..?”

அவர்‌ சொன்ன பதில்‌ பொருத்தமானதாகவும்‌, எனக்கு
பிடித்தமானதாகவும்‌ இருந்தது. அவர்‌ இப்படித்தான்‌ சொன்னார்‌.

“ பொதுவாகவே எங்களிடம்‌ ஒரு பழக்கமிருக்கிறது. நேற்று என்ன
செய்தோம்‌ என்று கேட்டால்‌ எங்களுக்கு அனேகமாக ஞாபகமிருக்காது.
ஆனால்‌ பத்து, பதினைந்து வயதில்‌ என்னென்னவெல்லாம்‌ செய்தோம்‌
என்பதை விலாவாரியாகச்‌ சொல்வோம்‌. அதேபோலத்தான்‌ நானும்‌ என்‌
இளமைக்கால நினைவுகளை நான்‌ வாழ்ந்த கிராமியப்பின்னணியில்‌
சித்தரிப்பதில்‌ வெற்றியடைகின்றேன்‌...””

இதேரீதியில்‌ என்‌ இளமைக்காலத்தின்‌ சுவையான அனுபவங்களை,
அவை என்னையொத்த பலருக்கும்‌ நிகழ்ந்திருக்கும்‌ என்ற
நம்பிக்கையுடன்‌, அனுபவித்தவர்கள்‌ என்னோடு இணைந்து “நனவிடை
தோய்தல்‌” செய்யவும்‌, அனுபவிக்கும்‌ வாய்ப்புப்‌ பெறாத அடுத்த
தலைமுறையினர்‌ “அந்த நாட்களை' துய்த்துணரவுமாக, “கடந்தது.
நடந்தது” என்ற கட்டுரைத்தொடரை “ஒரு பேப்பரில்‌” தொடர்ந்து
எழுதினேன்‌.

இதற்கு முதல்‌ 70களில்‌ “சிரித்திரன்‌” சஞ்சிகையிலும்‌, பின்னர்‌
கனடாவில்‌ வெளியான “உலகத்தமிழோசை: சஞ்சிகையிலும்‌ எழுதிய
கட்டுரைகளின்‌ தொடர்ச்சியாகவே இத்தொடர்‌ அமைந்தது.

தொடரை எழுதிய காலத்தில்‌, என்மீதும்‌, என்‌ எழுத்தின்‌ மீதும்‌
நம்பிக்கை வைத்து, பல சந்தர்ப்பங்களில்‌ பத்திரிகை பிரசுரமாகும்‌
இறுதிக்கட்டம்‌ வரை எனக்காகக்‌ காத்திருந்து, நான்‌ அனுப்பிய “சூடு”


Page 86 உர

ஆறாமலே, “ஒரு பேப்பர்‌' படைப்புக்குழுவினர்‌ “களம்‌
இறக்கியிருக்கிறார்கள்‌. அதற்காக என்‌ நன்றி.

இத்தொடரை எழுதத்தொடங்க “கால்கோள்‌” இட்ட, ஓவியர்‌ டிஜி
கருணாவிற்கும்‌, தொடராக வெளிவந்த காலத்தில்‌, விடாமல்‌ ஊக்கமளித்த
“ஒரு பேப்பர்‌” பார்த்திக்கும்‌, சிறப்புற நூலாக்கித்தந்த யுனி ஆர்ட்ஸ்‌
நிறுவனத்தாருக்கும்‌, அதன்‌ அதிபர்‌ பொன்‌. விமலேந்திரனுக்கும்‌ என்‌
இதயபூர்வமான நன்றி.

எனது “கரையைத்‌ தேடூம்‌ கட்டுமரங்கள்‌” நாவலுக்கு அணிசேர்த்த
அட்டைப்படத்தை மண்வாசனையோடூ வரைந்து தந்த ஓவியர்‌
யாழ்ப்பாணம்‌ ரமணி மீண்டும்‌ என்‌ விருப்பப்படி இத்தொகுப்பின்‌ அத்தனை
கட்டுரைகளுக்குமான ஓவியங்களை இழையோடூம்‌ நகைச்சுவையுடன்‌
வரைந்து தந்திருக்கிறார்‌. அவருக்கு என்‌ மனப்பூர்வமான நன்றி.

இதன்‌ முதலாவது கட்டூரை சிரித்திரனில்‌ .“சிரிகதையாக”
வெளிவந்ததை தனது கட்டுரையொன்றில்‌ மறக்காமல்‌ குறிப்பிட்ட, எனது
அபிமான எழுத்தாளரான செங்கை ஆழியான்‌ அவர்களே இந்த நூலுக்கு
முன்னுரை எழுதச்சம்மதித்தது, அவரது வாடைக்காற்று நாவலின்‌
திரைவடிவத்தில்‌ எனக்குப்பிடித்த ' விருத்தாசலம்‌” பாத்திரத்தில்‌
நடித்துக்கிடைத்த பெருமைக்கு ஒப்பான மகிழ்வைத்‌ தருகிறது. அவர்‌
தரும்‌ அங்கீகாரத்துக்கு நன்றி.

இத்தொடரை எழுதும்‌ காலத்தில்‌ அடிக்கடி நான்‌
முணுமுணுத்துக்கொள்ளும்‌ என்‌ அபிமானக்கவிஞர்‌ சு.வில்வரத்தினத்தின்‌
கவிதைவரிகளை இங்கே இணைத்துக்‌ கொள்வது பொருத்தமுடையது
என நினைக்கிறேன்‌.

“நீள நடக்கின்றேன்‌ நேற்று நிலா பொன்‌ விளக்கேற்றிய

பொழுதில்‌ கிளர்வுற எங்கள்‌ தெருக்களின்‌ மீதில்‌ காதல்‌ உலா
வந்த காலமதில்‌ நீள நடக்கின்றேன்‌'..-

கே. எஸ்‌. பாலச்சந்தீரன்‌


Page 9அமை

1 பஆஒடியதடகக ௫ 3 எனம ரள அவபன ருஷளை மனனர சதவமாபனறி

முன்னுறை

யாழ்ப்பாணத்தின்‌ காலச்சாரத்தை இனங்காட்டுகின்ற
தனித்துவமான பண்பாட்டுக்‌ கோலங்களை நமது படைப்பாளிகள்‌ தமது
இலக்கியங்களில்‌ எடுத்துக்காட்டியுள்ளனர்‌. பழம்பெரும்‌ எழுத்தாளர்‌ கே.
டானியல்‌ தனது நாவல்களிலும்‌ (பஞசமர்‌, தண்ணீர்‌) செங்கை ஆழியான்‌
தனது நாவல்களிலும்‌ (முற்றத்து ஒற்றைப்பனை, காட்டாறு) சிறுகதைகளிலும்‌
(பொட்டு ஆடுகால்‌ துலா) என்பவற்றில்‌ எடுத்தியம்பியுள்ளனர்‌. இவ்வாறு
நமது படைப்பாளிகள்‌ பலர்‌. உணவுகள்‌, உடைகள்‌, சடங்குகள்‌, விழாக்கள்‌,
வழிபாடுகள்‌, சம்பிரதாயங்கள்‌, பழக்க வழக்கங்கள்‌ என்பனவற்றில்‌
யாழ்ப்பாணமக்கள்‌ இலங்கையின்‌ ஏனைய பகுதி மக்களிலும்‌ தனித்துவ
இயல்புகளைக்‌ கொண்டவர்கள்‌ என்பதை எடுத்தியம்பியுள்ளனர்‌. கூவில்கள்‌,
ஒடியல்‌ கூழ்‌, ஒடியல்‌ பிட்டு, பிளா, நிரிறைப்பு முறை, பட்டை உமல்‌, உறி போன்ற
பனை உற்பத்திகள்‌, புகையிலைப்‌ போறணை, நாறப்பாக்கு சாடிகள்‌ (தாழிகள்‌),
கோடா சுருட்டு என்பன யாழ்ப்பாணத்திற்கேயுரியன. அவ்‌ வகையில்‌ இன்று
கே. எஸ்‌. பாலச்சந்திரனின்‌ 'நேற்றுப்‌ போல இருக்கிறது' என்ற உரைச்சித்திரம்‌
அமைகின்றது. தமிழிலக்கியத்துக்குக்‌ கிடைத்துள்ள புதிய வரவு இந்‌ நூல்‌
ஆகும்‌.

பல்துறை இலக்கியக்‌ கலைஞர்‌

கே. எஸ்‌. பாலச்சந்திரனின்‌ ஒர்‌ பல்துறை இலக்கியக்‌ கலைஞர்‌
ஆவார்‌. நாடக நடிகர்‌, வானொலி கலைஞர்‌, திரைப்பட நடிகர்‌, சிறுகதை
ஆசிரியர்‌, நாவலாசிரியர்‌, நகைச்சுவை எழுத்தாளர்‌ என்பவற்றிற்கும்‌ மேலாக
நகைச்சுவை உரையாசிரியர்‌ என பலவாறாக வடிவம்‌ கொண்டவர்‌. தனிமனித
நடிப்பான அண்ணை றைற்‌' மறக்கக்‌ கூடியதா? அவர்‌ அதில்‌ தோன்றிய
காட்சி இன்னமும்‌ கண்களில்‌ பசுமரத்தாணி போல நிற்கின்றது. எனது
“வாடைக்காற்று” நாவல்‌ திரைப்படமாகிய போது அதன்‌ பிரதான
பாத்திரங்களில்‌ ஒன்றாகிய விருத்தாசலத்திற்கு உயிரூட்டி திரைப்படத்தில்‌
தோன்றினார்‌. வாடைக்காற்றின்‌ வெற்றிக்கு அவர்‌ நடிப்பின்‌ உயிரூட்டலும்‌
ஒரு காரணமென்பேன்‌. அவ்வாண்டு ஜனாதிபதி விருதினை இப்படம்‌ தட்டிக்‌
கொண்டது. “கரையைத்‌ தேடும்‌ கட்டு மரங்கள்‌” அவர்‌ எழுதிய நாவல்‌.
தமிழ்நாடு அமுதன்‌ வெள்ளிவிழா அறக்கட்டளை விருதினைப்‌ பெற்றது.
பலராலும்‌ விதந்துரைக்கப்பட்ட நாவல்‌ இதுவாகும்‌. தான்‌ ஒரு சிறந்த
நகைச்சுவை நடைச்சித்திரக்காரர்‌ என்பதை 'நேற்றுப்‌ போல இருக்கிறது"
என்ற இந்நூல்‌ நிருபிக்கின்றது.

ஸரி -


Page 10பண்பாட்டு எழுத்தாளர்‌

இந்த நூலில்‌ 36 உரைச்சித்திரங்கள்‌ இருக்கின்றன. அவை
ஒவ்வொன்றும்‌ நமது இழப்பையும்‌ கடந்த காலத்தின்‌ இனிமையையும்‌
சுட்டுகின்றன. எவ்வளவு இனிமைகளை இழந்துவிட்டோம்‌. சிறு வயதில்‌
நாடகம்‌ நடத்தும்‌ ஆசைகளையும்‌, சைக்கிள்‌ பழகும்‌ நாடகத்தையும்‌, அந்தக்‌
காலத்து எலக்சனையும்‌, விசிலடித்த காலத்தையும்‌ கிராமத்தில்‌ நடந்த
பணச்சடங்குகளின்‌ ஏமாற்றத்தையும்‌, திருவிழாக்கேளிக்கைகளையும்‌,
கிராமபோன்களையும்‌ சுவையாகச்‌ சித்தரிக்கின்றார்‌. நாம்‌ இழந்த
இளமைக்காலத்தை நினைவுப்‌ படுத்த ஆசிரியரால்‌ முடிகின்றது.
யாழ்ப்பாணத்தில்‌ மீண்டும்‌ வாழ்ந்த அனுபவம்‌ ஏற்படுகின்றது. ஒவ்வொரு
சொல்லிலும்‌ ஆசிரியனின்‌ படைப்பனுபவத்தினைக்‌ காணமுடிகின்றது.

நகைச்சுவை எழுத்தாளன்‌

தான்‌ கருதியவற்றை நகைச்சுவையாக வாசகரிடம்‌ எடுத்துச்‌
செல்பவர்கள்‌ மிகச்சொற்பமாவர்‌, கே. எஸ்‌. பாலச்சந்திரனுக்கு இத்துறை
கைவந்திருக்கின்றது. “அண்ணை றைற்‌” தனி நாடகத்தின்‌ மூலமும்‌
சிரித்திரன்‌ சிரி கதைகள்‌ மூலமும்‌ தன்னை நல்லதொரு
நகைச்சுவையாளனாக இனங்காட்டிக்‌ கொண்ட பாலச்சந்திரன்‌ இத்தொகுதி
மூலம்‌ தன்னை நகைச்சுவையாளனாக நிருபித்துள்ளார்‌. பந்திக்கு பந்தி
சிரிப்பதற்கு பலவுள்ளன. அதை விட அடைப்புக்குறிக்குள்‌ இடமறிந்து இட்ட
வாக்கியங்கள்‌ சிரிப்பை மூட்டுகின்றன. கனடாவிற்கு யாழ்ப்பாண நினைவாக
அம்மி ஆட்டுக்கல்‌ என்பன போய்விட யாழ்ப்பாணத்தில்‌ அவ்விடயங்களை
மிக்சி, கிரைண்டர்‌ என்பன நிரப்பிவிட்டதெனக்‌ குறிப்பிடும்‌ போது சிந்திக்க
வேண்டியுள்ளது. கனடாவில்‌ நடக்கின்ற முறையான கலியாண சடங்குகளை
வீடியோவில்‌ பார்க்கும்‌ போது நமது அவசரக்‌ கலியாணங்களிலுள்ள
சடங்குகளின்‌ குறைகள்‌ விளங்குகின்றன. புலம்‌ பெயர்ந்த நாடுகளில்‌
யாழ்ப்பாணத்தின்‌ கலாச்சாரம்‌ சரிவரப்‌ பின்பற்றப்படுவதைக்‌ காணலாம்‌.

நிறைவாக திரு. கே. எஸ்‌. பாலச்சந்திரன்‌ ஈழத்தில்‌ இலக்கியத்துக்கு
அணி சேர்க்கும்‌ துறை ஒன்றினைத்‌ தந்துள்ளார்‌. அவர்‌ பணி மேன்மேலும்‌
சிறப்புற வாழ்த்துகின்றேன்‌.

அன்புடன்‌
சாகித்யரத்னா செங்கை ஆழியான்‌ க. குணராசா
பிறவுன்‌ வீதி, யாழ்ப்பாணம்‌.

ரரி

அணு.

த னைக்கவகடன்‌ அபலை


Page 11புதிர்களை சரைக்க எனா னவை வதாகளைகை ஞி

ட க யு.

2உ_௭&ள ூு

ம... ஓ 3 19

11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.

நாடகம்‌ போட்டோம்‌

சைக்கிள்‌ பழகினோம்‌

எங்கள்‌ காலத்து எலெக்ஷன்‌
விசிலடிச்சான்‌ குஞ்சுகள்‌

எங்கள்‌ வீட்டு கிராமப்‌ போன்‌ பெட்டி
பணச்‌ சடங்கு

பேச்சுக்‌ கலை

திருவிழாவும்‌ அவிட்டூம்‌..

காவடி எடுத்தேன்‌

திக்கற்று நாடகம்‌

எங்கள்‌ வீட்டுப்‌ பொங்கல்‌

படம்‌ எடுத்த கதை

ஒரு கிராமத்துச்‌ சிறுவன்‌ ஆஸ்பத்திரிக்கு போகிறான்‌
அது ஒரு பள்ளிக்‌ காலம்‌
புகைப்படம்‌ பிடிப்பது எப்படி
தலையாய தலை

மாமாவின்‌ பகீரதப்பிரயத்தனம்‌
ஊஞ்சல்‌ ஆடிய நாட்கள்‌

பரீட்சை தொடர்கிறது

எங்கள்‌ பள்ளிக்கூட விளையாட்டூப்போட்டி
சூ... மந்திரக்காளி

ஆடி பிறந்தால்‌...

வெள்ளம்‌ வந்த நாள்‌

01
07
15
21
27
33
39

45

51.
57
65
71
77
83
89
95

101

107

1 13

119.

125

131

137


Page 1224.
25.

26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.

தாத்தாவின்‌ குடை
எங்கள்‌ பள்ளிக்கூட அணி பக்கத்து ஊருக்கு
விளையாடப்‌ போனது

எங்கள்‌ ஊரில்‌ ஒரு வாசிகசாலை
எங்கள்‌ கூப்பன்‌ கடை

கைவிரல்‌ மோதிரமும்‌ சுளகாட்டமும்‌
அறிவிப்பாளர்‌ திலகம்‌
திருடா..திருடா

சுவர்‌ இருந்தால்தான்‌...

களவும்‌ கற்று மற...

அடித்து விளாசிய காலம்‌

படம்‌ பார்‌.. பாடம்‌ படி
கண்காட்சி...ஓ...கண்காட்சி

அம்மாளாச்சி வருத்தம்‌

143

149
155
161
167
173
179
185
191
197
203
209
215

 


Page 13ட. அடதக்‌.

 

 

 

 

 

 

 

 

நூற்‌ போர்ட்டோ


Page 14ச்‌

ஓரு ஃல்ப்பருவம்‌. நடுத்தரப்பள்ளியிலேயே நாடகம்‌
போட்ட அனுபவம்‌. ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில்‌ எனது
தமிழ்‌ ஆசிரியர்‌, என்னை இராமாயணத்தை நாடகமாகப்‌
போடச்‌ சொல்லிப்‌ பணித்‌ தார்‌. இயககுனர்‌ என்ற
- வார்த்தைப்பிரயோகமெல்லாம்‌ அவ்வளவு தெரியாத காலம்‌.

 

நடிகர்கள்‌ எல்லோரும்‌ (இராமன்‌, இலக்குமணனைத்‌ தவிர)
ஆசை தீர மீசை வைத்துக்கொண்டார்கள்‌. சீதை, சுமித்திரை,
கோசலை, கைகேயி உட்பட்ட அனைத்து
அந்தப்புரப்பெண்மணிகளாக வந்தவர்களும்‌ தங்கள்‌ “பொலிஸ்‌:
குறொப்‌ தலைகளை மறைக்க தங்கள்‌ அக்காமாரின்‌ மேல்‌
தாவணிகளைப்‌ பாவித்தனர்‌.

மேடை அமைப்பு நீண்ட வாங்கில்களை நெருக்கமாக அடிக்கி
அமைக்கப்பட்டது. பாடம்‌ நடக்கும்போது, இதே வாங்கில்களில்‌
ஆசிரியரின்‌ பணிப்புரையினால்‌ அடிக்கடி ஏறி நின்ற அனுபவங்கள்‌
எமக்கு உதவியாக இருந்தன. உசாராக குறுக்குமறுக்கும்‌ நடந்து
பார்த்தோம்‌.

இராமன்‌, இலக்குமணன்‌, இராவணன்‌ உள்ளிட்ட
அத்தனைபேருக்கும்‌ வில்‌, அம்பு செய்வதற்காக, அயலில்‌ உள்ள
வேலிகளில்‌ பூவரசமரங்களில்‌ கொப்புகளை மும்முரமாக வெட்டி,
சகமாணவர்‌ ஒருவர்‌ பேச்சும்‌, ஏச்சும்‌ வேண்டினார்‌. வளமாக
அகப்பட்டு அடியும்‌ வேண்டினார்‌ என்ற செய்தியும்‌ அடிபட்டது.
ஆனால்‌ அது ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.

62. எஸ்‌. ப௩ல22ஆ$ன்‌

 


Page 15ப கட்‌... அமக.

ஆத ராகக்‌

 

எல்லாமே நன்றாக நடந்தன. ஓன்றே ஒன்றைத்‌ தவிர. அது ஒத்திகை.
ஒழுங்காக வந்தவர்களும்‌, வராமல்‌ நின்றவர்களும்‌, நின்று பிறகு
வந்தவர்களுமாக ஒரு கலப்புக்‌ கூட்டணி மேடையேற ஆயத்தமாகியது.
எழுதப்பட்ட வசனங்கள்‌ யாவும்‌ இயக்குனரான எனக்கு மட்டூம்‌
மனப்பாடமாக இருந்ததினால்‌ இராமன்‌ வேடம்‌ எனக்கு வழங்கப்பட்டது.
வழங்கப்பட்டது என்ன.. நானே எடூத்துக்கொண்டேன்‌.

திரை விலகியது. விலகியதென்றா சொன்னேன்‌. விலக முயற்சித்தது.
இடையில்‌ நின்று விரிவதும்‌, மூடுவதுமாக விளையாட்டூ காட்டி, இரண்டு
பக்கங்களிலும்‌ நின்றவர்களின்‌ உதவியால்‌ வலுக்கட்டாயமாகக்‌ கரை
சேர்ந்தது. பின்னால்‌ வரப்போகின்றவைக்கு இது துர்க்குறியாக
அமைந்திருக்கலாம்‌ என்று பிறகு கதைத்துக்கொண்டோம்‌.

மேலதிகமாக விற்கள்‌ இல்லாத காரணத்தினால்‌, சீதையைக்‌
கைப்பிடிக்க, வில்லை முறிக்கவேண்டூம்‌ என்ற நிபந்தனையை
ஜனகமகாராஜா வைக்கவில்லை. ஜனகமகாராஜாவே இல்லை என்றால்‌
பார்த்துக்‌ கொள்ளுங்கள்‌. கல்லாக மாறிய அகலியை இல்லை. இராமனான
நான்‌ கால்‌ பதிக்க கல்லுமில்லை.

நாடகம்‌ நேரடியாக முடிசூட்டும்‌ படலத்தில்‌ ஆரம்பித்தது. கூனி
ஆலோசனை சொல்லி, கைகேயி தன்‌ “முடிமயிரை” பரப்பிவிட்டு, அது
கழன்று விடாமல்‌, தன்‌ கையினால்‌ இறுகப்பிடித்தபடி படுத்திருந்தார்‌.
தசரதன்‌ அந்தப்புரத்துக்கு அந்தரமாக வந்தார்‌. கைகேயியுடன்‌
வாக்குவாதம்‌ ஆரம்பமாகியது. கைகேயி மறக்காமல்‌ இரண்டூ வரங்கள்‌
கேட்டார்‌. பரதன்‌ நாடாளவும்‌, இராமன்‌ காடூ போகவும்‌ வரங்கள்‌ கேட்க,
தசரதன்‌ தாங்கமுடியாத கவலையினால்‌ மிகுதி வசனங்களைக்‌ கூடச்‌
சொல்லமறந்து மேடையில்‌ “படார்‌” என்று வீழ்ந்தார்‌. வீழ்ச்சியென்றால்‌
அதுவன்றோ வீழ்ச்சி.

அவர்‌ வாட்டசாட்டமான உடம்புக்காரர்‌. நெருக்கமாக அடூக்கியிருந்த
வாங்கில்கள்‌ விலக, “மேலே” போகவேண்டியவர்‌, நேரே கீழே
போய்விட்டார்‌. ஏதோ தந்திரக்காட்சி போல தசரதர்‌ மறைந்துவிட்டார்‌
என்று பலரும்‌ நினைத்திருக்க, தரையில்‌ இருந்த இளசுகள்‌ கீழே
கிடந்த அவரைக்‌ காட்டிக்‌ கொடுத்துவிட்டார்கள்‌. அவர்கள்‌ போட்ட
காட்டூக்கூச்சலில்‌, தசரதர்‌ எழும்பிவரவும்‌ வெட்கப்பட்டவராய்‌ படூத்திருக்க,
திரையை அவசரமாக இழுத்து மூடி, அவரை இரண்டூ மூன்று பேராய்‌
கைகொடுத்து தூக்கிவிட்டு ஒருவாறு நாடகம்‌ தொடர்ந்தது.

சேற்றுப்‌ டோ௨ இருக்சிறது 3


Page 16இனியென்ன.. இராமனும்‌, சீதையும்‌ காட்டுக்கு போவதற்கு

தடையொன்றுமில்லை. இராமனும்‌, தம்பி இலக்குமணனும்‌, (முடிமயிர்‌
கிடைக்காததினால்‌ முக்காடூ இட்டிருந்த) சீதையும்‌ காட்டுக்கு புறப்பட்டோம்‌.
பன்னை, பாவட்டை, கொன்றை, நுணா போன்ற மரக்கொப்புகள்‌
கட்டிச்செய்த காட்டுக்கு ஊடாக நடந்தோம்‌. நடந்தோம்‌. சுற்றி, சுற்றி
நீண்டநேரமாக நடந்தோம்‌.

பஞ்சவடியில்‌ இலக்குமணன்‌ அமைத்துத்தந்த பர்ணசாலையில்‌,
இராமனாகிய நானும்‌, சீதாபிராட்டியாகியவரும்‌ தங்கி ஓய்வெடூக்க
அவகாசம்‌ கொடுக்காமல்‌, மாரீசன்‌ மாயமானாக வந்து முன்னால்‌ நின்றான்‌.
“அதைப்‌ பிடித்துத்‌ தாருங்கள்‌ பிராணநாதா”” என்று சீதையும்‌
சொல்லியாகிவிட்டது.

மாயமான்‌ மரக்கொப்புகளுக்கு இடையில்‌ நின்று விளையாட்டுக்‌
"காட்டியது. இராமனாகிய நான்‌ இதற்குமேல்‌ பொறுக்கமுடியாமல்‌

(பூவரசந்தடியை வளைத்து நாண்‌ கட்டிய) வில்லை எடுத்து, கூராக.

நுனி தீட்டியிருந்த அம்புகளை (பூவரசந்தடிகள்‌ தான்‌) மாயமான்‌ மீது
ஒன்றன்பின்‌ ஒன்றாகத்‌ தொடுத்தேன்‌.

பாவம்‌ மாயமானாக வந்தவர்‌. முதுகின்‌ மேல்‌ மான்தோலைக்‌
கட்டிக்கொண்டு இராமன்‌ எய்வது போலப்‌ பாவனை செய்ய, தான்‌
அடிபடுவது போல .பாவனை செய்யலாம்‌ என்ற நினைப்பில்‌ வந்தவர்‌,
உண்மையாகவே அம்புகள்‌ பாய்ந்து வந்து, மான்தோல்‌ மூடாத அவரது
“ஆசனப்பகுதியில்‌” படவும்‌, மேடையை விட்டு குதித்தோடி ஆசிரியர்களின்‌
பின்னால்‌ சரண்‌ புகுந்தார்‌. நானும்‌ “மாயமான்‌” மீது வஞ்சம்‌ தீர்க்கும்‌
ஆக்ரோஷத்துடன்‌ மேடையை விட்டூ குதித்து சபையின்‌ ஊடே
குறுக்கறுத்து ஒடி அவரைத்‌ துரத்தினேன்‌. இரண்டொரு ஆசிரியர்கள்‌
தடூத்துத்தான்‌ பார்த்தார்கள்‌. நான்‌ விடவில்லை. இது “ராமனின்‌'
மானப்பிரச்சினையல்லவா?

தொடர்ந்து துரத்திக்கொண்டே ஓட, அவர்‌ மண்டபத்தை விட்டூ
வெளியே ஓடி, கல்லூரியின்‌ விளையாட்டூ மைதானத்தின்‌ ஊடாக ஓடி
அப்படியே தன்‌ வீட்டுக்கு போய்‌ விட்டார்‌. பல நாட்களாகியும்‌ அவர்‌
போர்த்துக்கொண்டூ நடித்த மான்தோல்‌ திரும்பக்‌ கிடைக்கவில்லை.
'மாயமானி'ன்‌ ஆசனப்பகுதி காயங்களினால்‌ கொதித்துக்கொண்டிருந்த
அவரது தாயாரிடம்‌ போய்‌ கேட்கும்‌ துணிவும்‌ எங்களுக்கில்லை.
(மான்தோல்‌ இல்லாமல்‌ வீட்டூப்பக்கமே வரவேண்டாம்‌ என்று அதன்‌
உரிமையாளரான என்‌ தாத்தா வேறு சொல்லிக்கொண்டிருந்தது
தனிக்கதை,)

4 62. எஸ்‌. ப௩ல22ஆதன்‌


Page 17ன்‌ ட்டன

 

இருட்டூக்குள்‌ மைதானத்தின்‌ நடூவில்‌ மூச்சிரைக்க நின்று
கொண்டிருந்த ராமனாகிய என்னை, தேடிவந்த தம்பி இலக்குவன்‌,
“அவன்‌ போகட்டும்‌.. வாடா மச்சான்‌.. நாடகம்‌ பார்த்துக்கொண்டிருக்கிற
சனம்‌ கூக்காட்டப்போகுது” என்று 'முறைதவறி'ச்‌ சொல்லி மண்டபத்திற்கு
அழைத்துப்போனான்‌.

இதற்கிடையில்‌ இராவணன்‌ அதிரடியாக வந்து சீதையை,
அலாக்காகத்‌ தூக்கிக்கொண்டூ போய்விட்டான்‌. அவசரத்தில்‌ சீதையின்‌
முக்காடூ விழுவதைக்கூட காணவில்லை. சீதை நடிகரின்‌ “பொலிஸ்‌
குறொப்‌” தலை தெரிய மீண்டும்‌ முன்வரிசையினரின்‌ கூச்சல்‌.. கூக்குரல்‌.

சீதையைத்தேடி இராமனும்‌, இலக்குமணனும்‌ புறப்பட்டோம்‌. வழியிலே
ஜடாயு என்ற கழுகு இறகுகள்‌ வெட்டூண்டூ கிடக்கின்றது. ஓடிச்சென்று
அதன்‌ அருகில்‌ குனிந்து, “என்ன நடந்தது'” என்று மாறி, மாறிக்‌ கேட்டாகி
விட்டது.

“இராமா... சீதையை தென்திசைவேந்தன்‌ இராவணன்‌ கவர்ந்து
சென்றான்‌. தடூக்க முயன்ற என்னை வாளால்‌ வெட்டிச்‌ சென்றான்‌”
என்று ஜடாயு சொல்ல வேண்டும்‌. வாயிலிருந்து ஒரு வார்த்தை
வரவில்லை. ஒருநாள்‌ கூட ஒத்திகைக்கு வராத அவருக்கு வசனம்‌
எங்கிருந்து வரப்போகிறது. நிலைமையைப்‌ புரிந்து கொண்டு நானே
அவர்‌ பேசவேண்டிய வசனங்களை, இலக்குமணனுக்கு சொல்வதாகச்‌
சொல்லி சமாளித்தேன்‌.

அடுத்தது ஜடாயு இறக்க, நாங்கள்‌ அவருக்கு இறுதிக்கடன்கள்‌
செய்து அப்பால்‌ செல்ல வேண்டூம்‌. எது செய்வதென்றாலும்‌ ஜடாயு
இறக்கவேண்டூமே!

வைத்த கண்‌ வாங்காமல்‌ என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்‌
ஜடாயு. இறந்தபாடில்லை. அது கூட அவருக்கு தெரியாது என்பதை
நான்‌ உணர்ந்து கொண்டு, சற்று அருகில்‌ குனிந்து “செத்துப்‌ போடா”
என்று ரகசியமாகச்‌ சொன்னேன்‌. மூழ்கிப்போகிறவனுக்கு கயிறு
கிடைத்ததைப்போல, தான்‌ பேச வேண்டிய வசனத்தை நான்‌ சொல்லித்‌
தருகிறேன்‌ என்று ஜடாயு நினைத்து விட்டார்‌.

ஒருக்களித்து சாய்ந்து படூத்திருந்தவர்‌, பட்டென நிமிர்ந்து பலத்த

குரலில்‌ “செத்துப்‌ போடா” என்றாரே... சபையில்‌ கூக்குரல்‌ அடங்க
வெகுநேரமாகியது.

செற்றுட்‌ டோ௨ இருக்கிறது 5


Page 18இத்தோடூ எங்கள்‌ சோதனை முடியவில்லை. அது இறுதிக்காட்சி
வரை நீடித்தது. இராம - இராவண யுத்தம்‌. இராம, இராவண சேனைகள்‌
என்று எல்லோரும்‌ தயார்நிலையில்‌ நின்றோம்‌. கைகளில்‌ விற்களும்‌,
அம்புகளும்‌ றெடி. யுத்தபூமி நிசப்தமாகவிருந்தது.

திடீரென்று எனக்குப்‌ பின்னால்‌ ஒரு சலசலப்பு. நான்‌ திரும்பிப்‌
பார்ப்பதற்கிடையில்‌ எனது சேனை, என்னைத்‌ தாண்டிக்கொண்டூ
ஆரவாரத்துடன்‌ இராவணனை நோக்கி ஓடியது. அத்தோடு நிற்கவில்லை.
அவனை விழுத்தி சரமாரியாக அடிக்கத்தொடங்கியது. வில்‌, அம்புகளை
மேடையில்‌ எறிந்து விட்டு கைவரிசையைக்‌ காட்டத்‌ தொடங்கிவிட்டார்கள்‌.

சிறிது நேரத்தில்‌ இராவணனின்‌ சேனையும்‌ எனது சேனையோடு
சேர்ந்து கொண்டு இராவணனுக்கு கண்மண்‌ தெரியாமல்‌ அடித்தது.
போகிறபோக்கில்‌, “இன்று போய்‌ நாளை வா” என்று இராமன்‌ சொல்ல
வேண்டிய தேவையே இல்லாமல்‌ இராவணனை துவம்சம்‌ செய்து
போய்விடுவார்கள்‌ போலத்‌ தோன்றியது. பரிதாபமான நிலையில்‌ இருந்த
இராவணனை, கடைசியில்‌ நான்‌ (இராமன்‌) காப்பாற்றிவிட வேண்டியதாகி
விட்டது.

கோபத்துக்கு காரணம்‌ இதுதான்‌. இராவணன்‌ எங்கள்‌ வகுப்பின்‌
மொனிற்றர்‌. (சட்டாம்பிள்ளை என்பார்களே..அவர்தான்‌). வகுப்பிற்கு
ஆசிரியர்கள்‌ வராத நாட்களில்‌ இவரது காட்டூத்தர்பார்‌” தான்‌.
கூடப்படிக்கிற மாணவர்களைப்பற்றி அவ்வப்போது ஆசிரியர்களிடம்‌ 'கோள்‌
மூட்டி' பிரம்படி வாங்கிக்கொடூப்பதுதான்‌ இவரது வேலை.

பலநாள்‌ கோபம்‌ வைத்திருந்தவர்கள்‌ மேடையில்‌ வைத்து தீர்த்துக்‌
கட்டிவிட்டார்கள்‌. இராமாயண நாடகம்‌ முழுநீள சிரிப்பு நாடகமாகிய

கதை இதுதான்‌.

இப்போதைக்கு இது போதுமே !

6 62. எஸ்‌. பு௩ல22$ன்‌

திவு.


Page 19ப

|

 

 

 

 

 

 

 

சைக்கன்‌ 1110ம்‌


Page 20[அ 4

கதிடாவில்‌ கார்‌ ஓடுகிற ஆசை சரிவராது... சரியே
வராது” என்று இரண்டு தரம்‌ சொல்லிக்கொண்டூ வரும்போதே
இந்த முறையும்‌ கார்‌ ஓட்டும்‌ அனுமதி (லைசன்ஸ்‌) பெறும்‌
முயற்சியில்‌ நண்பர்‌ தோற்றுவிட்டது தெரிந்து விட்டது. ஆனால்‌
நான்‌ வாய்‌ திறக்கவேயில்லை. ஏதாவது நான்‌ சொல்லப்போக
என்னில்‌ தொடங்கி, பயிற்றுவித்தவர்‌, பரீட்சை நடத்தியவர்‌,
ஓன்ராரியோவில்‌ றோட்‌ போட்ட புண்ணியவான்‌ வரை
எல்லோரையும்‌ சந்திக்கு இழுத்துத்தான்‌ நிறுத்துவார்‌ என்று
எனக்குத்‌ தெரியும்‌.

“சுளை. சுளையாக காசு வேண்டத்தெரியும்‌... ஆனால்‌ பாஸ்‌
பண்ணுவிக்கத்‌ தெரியாது... அதுக்குள்ளை பெரிய
விலாசக்கதை...”

யாரைத்திட்டூகிறார்‌ என்று தெரிந்தது. அது சரி... அதென்ன
சுளை, சுளையாக... பணம்‌ எப்படி பலாப்பழமாகும்‌ ?

பயிற்றுவிப்பவர்‌ பாஸ்‌ பண்ணுவிக்க முடியுமென்றால்‌ பரீட்சை
எதற்கு...?

கேள்விகள்‌ கேட்கப்படாமல்‌ மனதுக்குள்‌ அடங்கிப்‌ போயின.

ஆனால்‌ இதையொட்டி என்‌ நினைவு ்‌ நிவேர்ஸில்‌ * போய்‌
எதிலோ முட்டி நின்றது.

பயிற்சி என்ற வார்த்தை பழக்கத்திற்கு வர முந்திய காலம்‌.
பழக்கிறது என்ற வார்த்தை புழக்கத்தில்‌ இருந்த காலம்‌.

62. எஸ்‌. ப௩ல7ந்தன்‌


Page 21விடலைப்‌ பருவத்தில்‌ சைக்கிள்‌ பழகி, எட்டாத பெடலை எட்டி
உழக்கி, உழக்கி ஓடி, முழங்காற்‌ சில்லை பெயர்க்கும்‌ வகையில்‌ கல்‌
றோட்டில்‌ விழுந்து எழும்பியும்‌ சளைக்காமல்‌ -

கடைசி, கடைசியாக ஒரு நாள்‌ -

எப்படியோ சீற்றின்‌ முன்‌ நுனியில்‌ ஏறிக்குந்திக்‌ கொண்டு கருமமே
கண்ணாக சைக்கிள்‌ ஓட, சீற்றின்‌ பின்புறத்தில்‌ பிடித்துக்‌ கொண்டு
 நாரியை வளையாதை... ஹாண்டிலை நேராய்‌ பிடியடா:. என்று சொல்லிக்‌
கொண்டே கூட ஓடி வந்த நண்பனின்‌ குரல்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாக
தொலைவில்‌ கேட்பது எதையோ உணர்த்த -

திரும்பிப்‌ பார்க்கும்‌ சாத்தியமும்‌, துணிவும்‌ இல்லாமல்‌, நடக்கிறதைக்‌
கண்டு கொள்வோம்‌ என்ற நினைப்புடன்‌, மேலும்‌ நாரியை வளைத்து,
நெற்றி வியர்வை வழிந்து வாயில்‌ உப்புக்‌ கரிக்க, நேராக வரும்‌
முருகேசப்பாவின்‌ வண்டிலையும்‌, கொம்புகளில்‌ ஏற்கெனவே சிவப்பு
வர்ணம்‌ பூசிய மாடுகளையும்‌ கண்ணை மூடிக்‌ கொண்டே கடந்து-

அம்மன்‌ கோயில்கிணற்றில்‌ குளித்து விட்டு ஈரப்புடவையுடன்‌
தலையில்‌ தண்ணீர்‌ குடத்துடன்‌ வரும்‌ தங்கம்மா அக்கா முணுமுணுத்துக்‌
கொண்டூ வந்த கந்தர்‌ சஸ்டி கவசத்தையும்‌ சொல்ல மறந்து அவசரம்‌
அவசரமாக வேலியோடூ ஒதுங்கிக்‌ கொள்ள -

சைக்கிளை எப்படி நிறுத்துவது, எங்கு நிறுத்துவது என்பதே
ஜீவமரணப்‌ போராட்டமாக மாறி பயம்‌ அதிகரிக்க, கூடவே கை நடுக்கம்‌
அதிகரித்து, சைக்கிள்‌ “ஹாண்டில்‌” மனம்போன போக்கில்‌ (அதன்‌
மனம்‌ போன போக்கில்‌) திரும்பி நேராகச்‌ சென்று சுமைதாங்கிக்‌ கல்லில்‌
மோதி விழும்‌ போது ஏற்பட்ட நிம்மதி இருக்கிறதே - அது சொல்லி
மாளாது

இப்படி சைக்கிள்‌ பழகிய காலத்தில்‌ ஒரு இரவு.
இப்படி நேராக இரவுக்கு சென்றதிற்கு காரணம்‌ இருக்கிறது. (எங்கள்‌
தகப்பனார்‌ உள்ளிட்ட) ஜீவராசிகள்‌ எல்லாம்‌ உறக்கத்திற்குப்‌ போன

பின்னர்‌. நாங்கள்‌ படுத்த பாய்கள்‌ அப்படியே இருக்க, படுத்த இடத்தில்‌

சற்றுப்‌ டோ௨ இ.ருக்சிறது ்‌ 9


Page 22தலையணைகள்‌ நேராக போர்த்துக்‌ கொண்டூ படுத்திருக்க,
கல்லுக்கட்டிய தகரப்‌ படலையை ஒலியெழுப்பாமல்‌ தள்ளித்‌ திறந்து,
ஒழுங்கையில்‌ கால்‌ வைக்க, சில்லென்ற இரவு நேரக்‌ குளிர்‌ காற்று,
சாறத்திற்கு மேல்‌ உள்ள வெற்று மேனியை தடவி நடூங்கவைக்கும்‌.

என்னைப்‌ போல நாலைந்து பேர்‌ மேற்கூறிய கிரியைகளை
நிறைவேற்றி குட்டிப்‌ பிசாசுகளைப்‌ போல மெதுவாக நடந்து எங்கள்‌
பிள்ளையார்‌ கோவில்‌ வாசலுக்கு வந்து சேருவார்கள்‌. கோயில்‌ என்றால்‌
நிமிர்ந்து நிற்கும்‌ கோபுரத்துடன்‌, சுற்றாடலை ஒளி வெள்ளத்தில்‌ குளிக்க
வைத்து - ம்‌.. கற்பனையை இத்தோடூ நிறுத்திக்‌ கொள்ளுங்கள்‌.

அசலான குக்கிராமத்துக்‌ கோயில்‌. அந்தகார இருளோடு போட்டி
போட முடியாத ஒரு விளக்கு. நாலு பக்கமும்‌ உள்ள கண்ணாடிகளில்‌
ஒன்று அனேகமாக வெடித்தோ அல்லது உடைந்தோ இருக்கும்‌. வந்து
கூடிய குட்டிப்பிசாசுகளில்‌ ஒன்றின்‌ கைங்கர்யமாக இருக்கும்‌ என்பது
பொதுவான அபிப்பிராயமும்‌ கூட.

அந்த விளக்கு சின்னத்தம்பியப்பா வாரத்துக்கு ஒருமுறை விடும்‌
தேங்காயெண்ணெயின்‌ பலத்தினால்‌ “மினுக்‌.மினுக்‌. ' என்று காற்று
அடித்து நூர்க்கும்‌ வரை எரிந்து கொண்டிருக்கும்‌.

இந்த' மினுக்‌..மினுக்‌' என்ற வார்த்தைகளோடூ கல்கியின்‌' பொன்னியின்‌
செல்வனில்‌ * வரும்‌ பெரியபழுவேட்டரையரின்‌ மனைவி நந்தினியும்‌
அவளுடன்‌ சதியாலோசனை நடத்துபவர்களும்‌ உங்கள்‌ ஞாபகத்திற்கு
வரலாம்‌. அவர்களைப்‌ போலவே அந்த விளக்கின்‌ அருகில்‌ நின்று
ஆலோசனை நடத்துவோம்‌.

ஆலோசனை எவ்வாறு நடந்தாலும்‌ இறுதிமுடிவு எடுப்பது என்னவோ
சைக்கிள்‌ பழக்குவதில்‌ எங்கள்‌ குருநாதரான மகாலி ': என்ற
மகாலிங்கம்தான்‌. ஓவ்வொருவரும்‌ எவ்வளவு பங்குக்காசு போடவேண்டும்‌
(குறைந்தது 25 சதத்திலிருந்து 50 சதம்‌ வரை) என்பதிலிருந்து, அடூத்த
ஊரிலிருக்கும்‌ சைக்கிள்‌ கடையில்‌ தனது செல்வாக்கை பயன்படுத்தி
முக்கால்‌ சைஸ்‌ சைக்கிளை எடுத்து, (அவரைப்‌ புடைசூழ ஓடிவரும்‌
எங்களின்‌ இளைப்புக்கும்‌, பெருமூச்சுக்கும்‌ மத்தியில்‌) அங்கிருந்து
அனாயாசமாக ஓடி வந்து, (பெரியவர்களுக்கு தெரியாமல்‌, கோயிலின்‌

10 62. எஸ்‌. ப௩ல7௪ஆதநன்‌

 


Page 23வடக்கில்‌ இருக்கும்‌ பனங்காணிக்குள்‌ பாவட்டைமரங்களுக்கிடையில்‌
ஒளித்து வைப்பது வரை அவரே செய்து முடிப்பார்‌.

அவர்‌ எங்களுக்கு குருநாதராகியது என்னவோ கால்‌ பங்கினால்‌
தான்‌. எங்கள்‌ எல்லோரையும்‌ விட சற்று வயதாலும்‌, உயரத்தாலும்‌
கூடிய அவரது கால்‌ நீளத்தின்‌ அனுகூலம்‌ காரணமாக நாங்கள்‌ முக்கால்‌
சைக்கிள்‌ ஓடவே திணறிக்‌ கொண்டிருக்க அவர்‌ முழுச்சைக்கிளே ஓட
வல்லவராயிருந்தார்‌. இதுவே அந்த கால்‌ பங்கு ரகசியம்‌.

கோயிலைச்‌ சுற்றி ஒவ்வொருவராக மூன்று, நான்கு றவுண்ட்‌ சுற்றி
ஓடி, எல்லோருக்கும்‌ சந்தர்ப்பம்‌ கிடைத்தபின்னர்‌, குருநாதரே ஆறேழு
றவுண்ட்‌ வலம்‌ வருவார்‌. அது நாங்கள்‌ இளைப்பாறுவதற்காகவாம்‌.

யாராவது ஆட்சேபனைக்குரல்‌ எழுப்பி... மூச்சு... அந்தக்கதையே
இருக்காது. தப்பித்தவறி அது நடந்தால்‌ எதிர்விளைவாக என்ன நடக்கும்‌
என்று எங்களுக்கு தெரியும்‌.

ஆதிகால ரோமாபரியில்‌ சிங்கங்கள்‌ திறந்துவிடப்பட்ட மைதானத்தில்‌
கைதிகளை விட்டூ பார்த்து ரசிக்கும்‌ ரோமாபுரி சக்கரவர்த்திகளைப்‌
போல, அந்த நடுநிசியில்‌ தனியாக கோயிலின்‌ பின்‌ வீதி, வடக்குவீதி
தாண்டி வரும்படி அனுப்பி விடூவார்‌. முன்னேற்பாடாக சில
குட்டிக்கதைகளை எங்களுக்கு புல்லரிக்கும்‌ வண்ணம்‌ சொல்லி
வைத்திருப்பார்‌.

பின்‌ வீதியின்‌ பக்கத்தில்‌ இருக்கும்‌ கொன்றை மரத்தில்‌,
மொட்டாக்கு போட்டபடி இருந்த ஒரு உருவம, படம்பார்த்து விட்டு
வந்த சின்னையாவை “உஸ்‌. உஸ்‌... புகையிலை கொஞ்சம்‌ தந்திட்டு
போறியே * என்று கேட்டதையும்‌, அவர்‌ நின்று திரும்பிப்‌ பார்க்க,
கூக்காட்டிக்‌ கொண்டு அந்த உருவம்‌ அந்தரவெளியில்‌ பறந்து
போனதையும்‌, அதற்குப்‌ பிறகு பேய்ச்‌. சின்னையா (அடைமொழி,
காரணப்‌ பெயர்‌ என்று குருநாதரே சொன்னார்‌) பத்து, பதினைந்து
நாட்களாக பல்லுக்‌ கூட விளக்காமல்‌ படூத்த படுக்கையாக கிடந்து
எழும்பியதையும்‌, மகாலி என்ற மகாலிங்கம்‌ என்ற எங்கள்‌ குரு,
உரிய ஒலிச்‌ சேர்க்கைகளுடன்‌ சொல்லி முடிக்க-

சற்றுப்‌ டோ௨ இருக்கிறது 11


Page 24வாடகைச்‌ சைக்கிளுக்கு பங்கு போட்ட பங்காளிகளில்‌ சிலர்‌
பார்வையாளர்களாக கூட நிற்க தெம்பில்லாமல்‌ தங்கள்‌ வீடுகளுக்கு
பறந்து போயிருப்பார்கள்‌.

விடாக்‌ கண்டன்‌ கொடாக்‌ கண்டன்‌ என்றது மாதிரி எங்களில்‌ சிலர்‌
நிற்கத்தான்‌ செய்தோம்‌. ஆனால்‌ ஒரேயொரு வேலை செய்தோம்‌." மழைக்‌
காலத்தில்‌ பள்ளிக்‌ கூடத்தில்‌ ஒதுங்கியபோதும்‌, பள்ளிக்கூடப்‌ பக்கம்‌
பார்க்காமல்‌ மழையைப்‌ பார்த்துக்‌ கொண்டிருந்ததாக ' எழுத்தாளர்‌
கி.ராஜநாராயணன்‌ எழுதியதைப்‌ போல -

பின்‌ வீதியைக்‌ கடக்கும்போது, கொன்றை மரப்பக்கமே பார்க்காமல்‌,
கோயில்‌ பக்கமே பார்த்துக்‌ கொண்டு பக்திசிரத்தையுடன்‌ சைக்கிள்‌
உழக்கினோம்‌. ஓடாமல்‌ உழக்கியதிற்கு காரணமிருக்கிறது. பின்‌ வீதியில்‌
புழுதியென்றால்‌ அப்படிப்‌ புழுதி. அப்புழுதியில்‌ சிக்கி ஓட முடியாமல்‌
அப்படியே சாய்ந்து சரிந்தால்‌ -

சைக்கிளை அதிலேயே விட்டூவிட்டூ திரும்பிக்கூடப்‌ பார்க்காமல்‌
மற்றவர்கள்‌ நிற்கும்‌ இடத்திற்கு ஓடி வந்து விடுவோம்‌. கட்டியிருந்த
சாறம்‌, சைக்கிள்‌ செயினில்‌ சிக்கி அதை உருவக்கூட யோசிக்காமல்‌
“ கையது கொண்டூ மெய்யது பொத்தி” - தற்போது மேற்கு நாடூகளில்‌
விளையாட்டு மைதானங்களின்‌ குறுக்கே திகம்பர சாமியார்கள்‌ போல
ஓடும்‌ விண்ணர்களைப்‌ போல ஓடி வர நேர்ந்ததும்‌ உண்டு.

விட்டு வந்தவைகளை (சைக்கிளையும்‌, சாறத்தையும்‌) போய்‌ மீட்டுக்‌
கொண்டூ வந்து, அதற்கு பிராயச்சித்தமாக பத்து றவுண்ட்‌ தானே ஓடி
முடிப்பார்‌. வேறு யார்‌ ? அவர்தான்‌.

அன்று பின்நிலவு நாள்‌. நிலவின்‌ கீற்றுகள்‌ பட்டு கோயிலின்‌ மதிலில்‌
வளர்ந்திருந்த குட்டி அரசமரத்தின்‌ இலைகள்‌ மின்னத்‌ தொடங்கின.
பயப்பிராந்தி சற்று குறைந்தது போல கொன்றை மரத்தை கடைக்‌
கண்ணால்‌ பார்க்கிற அளவாவது துணிவு எனக்கும்‌ மற்றவர்களுக்கும்‌
வரத்தொடங்கிய அந்த வேளையில்‌ தான்‌ அந்த அசாத்திய நிகழ்வு
நடந்தது.

12 62. எஸ்‌. ப௩ல22ந்தநன்‌


Page 25கோயிலின்‌ வடகிழக்கு மூலைக்கு சற்று அண்மித்ததாக கிணறு
ஒன்று இருந்தது. அடியில்‌ பருமனாகவும்‌, நுனியில்‌ மெல்லியதாகவும்‌
முழுப்‌ பனையொன்றை செதுக்கிச்‌ செய்த துலா.

வாளி எப்போதோ கழன்று கிணற்றில்‌ விழுந்து போய்‌ எடூப்பாரின்றி
இருக்க, பொதுச்‌ சொத்து எனக்கும்‌ சொந்தம்‌ தானே என்ற
எண்ணத்தினாலோ என்னவோ கட்டியிருந்த கயிற்றையும்‌ யாரோ
அவிழ்த்துக்‌ கொண்டு போய்‌ விட்டார்கள்‌.

கைவாளியால்‌ அள்ளிக்‌ குளிக்கும்‌ வண்டில்காரர்கள்‌ கூட அந்தத்‌
துலாவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. எப்போதாவது முதுகைத்‌
தேய்த்துக்‌ கொள்ளுவதைத்‌ தவிர.

துலாவைத்‌ தாங்குவதற்காக நட்ட பூவரசக்‌ கொப்புகள்‌ வளர்ந்து,
மரங்களாகி இலை பரப்பி இருக்க, நடுவே விண்ணுக்கு செல்ல தயார்‌
நிலையில்‌ நிற்கும்‌ ரொக்கற்றினைப்‌ போல அந்த வெறும்‌ துலா நின்றது.
நானும்‌, மற்றவர்களும்‌ ஒவ்வொரு முறையும்‌ அதைக்‌ கடக்கும்‌ போதும்‌
எங்களைப்‌ பார்த்துக்‌ கொண்டூ ஒரு அப்பாவியைப்‌ போல நின்றது.

கடைசி, கடைசியாக நான்‌ பின்‌ வீதி தாண்டி, வடக்கு வீதியில்‌
திரும்பிய போது தான்‌ திடீரென்று அந்த துலா முன்னுக்கு பதிவதும்‌,
பின்‌ உயர்வதுமாக விளையாட்டுக்‌ காட்டத்‌ தொடங்கியது. நிலவின்‌
ஒளியில்‌ தெளிவாகத்‌ தெரிந்தது. அள்ளுபவர்‌ இல்லாமல்‌, பதித்து
இழுக்க கயிறும்‌ இல்லாமல்‌ அந்தக்‌ கள்ளத்‌ துலா கீழே வந்து, மேலே
சென்று -

நான்‌ எழுப்பிய அவலக்குரலில்‌, பயந்து திடுக்கிட்டு ஆட்காட்டிக்‌
குருவியொன்று கீச்சிட்டுக்‌ கொண்டூ பறந்தது. சைக்கிளை அதிலேயே
போட்டூ விட்டு வந்த வழியே ஓடத்‌ தொடங்கினேன்‌.

தெற்கு வீதியால்‌ சிலர்‌ ஓடி வந்து என்னைத்‌ கடந்து ஓடினார்கள்‌.
என்‌ அலறலைக்‌ கேட்டதோடு, ஆடுகின்ற துலாவையும்‌ அவர்கள்‌ கண்டு
விட்டார்கள்‌ என்று தெரிந்தது. ஒருநாதரை அவர்களிடையே
காணவில்லை. இதென்ன குசலம்‌ விசாரிக்கும்‌ நேரமா..என்ன 9

சேற்றுப்‌ டோ௨ இருக்கிறது 13


Page 26எப்படி தகரப்படலை திறந்தது... எப்படி பாயில்‌ விழுந்தேன்‌. கனவு
முழுக்க அந்தத்‌ துலாதான்‌. வந்து கொண்டிருந்தது.

பல- நாட்களுக்கு பிறகு யாரோ சொன்னார்கள்‌. மகாலி என்ற
மகாலிங்கம்‌ என்ற எங்கள்‌ குருநாதர்‌ அன்று பகல்‌ நேரத்திலேயே
அந்த துலாவின்‌ அடிப்பாகத்தில்‌ பிடித்து தூக்கிப்‌ பயிற்சி செய்து
கொண்டிருந்தாராம்‌.

ஆனால்‌ அத்தோடு எங்கள்‌ சைக்கிள்‌ பழக்கம்‌ நின்று போனது.

14 62. எஸ்‌. பு௩ல22நதன்‌


Page 27 

 

 

 

 

 

 

 

 

 

கலத்து
ஏலைக்க்ஷன்‌

னங்கள்‌

15


Page 2816

ர்‌ ங்களும்‌ அக்காலத்தில்‌ தேர்தல்‌
நடத்தினோம்‌. யார்‌ வெல்வதென்பதுதான்‌ முக்கியமான
விஷயமாகக்‌ கருதப்பட்டு. அத்தோடூ முற்றுப்‌ புள்ளி
வைத்து விடுவோம்‌. அதற்குப்‌ பிறகு அவ்வளவுதான்‌.

தற்கால அரசியல்வாதிகளைப்‌ போல, எங்களுக்கு
எதிராக வேலை செய்தவர்களை நாங்கள்‌ நீண்ட நாள்‌ வன்மம்‌
வைத்து தண்ணி இல்லாத காட்டூககு இடமாற்றம்‌ செய்ய
சிபார்சு செய்ய வில்லை. எங்கள்‌ தேர்தலில்‌ வென்றவர்‌
கூட பதவிக்காக ஆசைப்‌ படவில்லை. பிரதம மந்திரி
பதவி வேண்டாம்‌. மந்திரிப்‌ பதவி. துணை மந்திரி பதவி.
மூச்சு. பாராளுமன்றத்துக்கு போகும்‌ எண்ணம்‌ கூட இல்லை.
அடூத்த ஊரில்‌ நடக்கும்‌ வொலிபோல்‌ போட்டியைப்‌ பார்க்கப்‌
போவதற்கே அப்பாவின்‌ முறைப்பினால்‌ அனுமதி கிடைக்கும்‌
என்ற நம்பிக்கையே அற்றுப்போன நிலையில்‌
பாராளுமன்றத்துக்கு போவதாவது.

வேடிக்கை என்னவென்றால்‌ பாராளுமன்றம்‌ என்று ஒன்று
இருக்கிறதா., அதற்கு எப்படி போவதென்றோ வெற்றி
பெற்றவர்‌, தோற்றுப்‌ போனவர்‌, வாக்காளப்‌ பெருமக்களாகிய
எங்களில்‌ யாருக்குமே தெரியாது.

இது எந்த நாட்டூத்‌ தேர்தல்‌, எங்கே நடந்தது என்று
கேட்க நினைத்து, அரசியல்‌ பக்கமே தலைவைத்தும்‌
படூக்கமாட்டேன்‌ என்று எப்போதோ யாருக்கோ செய்த
சத்தியத்தினால்‌ மெளனமாக இருக்கும்‌ உங்களுக்காக -

6. எஸ்‌. ப௩ல22ஆதன்‌


Page 29இது ஒரு தனித்தேர்தல்‌ எங்கள்‌ காணி பின்‌ வளவுக்குள்‌ நடந்த
தனித்துவமான தேர்தல்‌. ஒரே ஒரு தொகுதி. பொதுத்தேர்தல்‌ முடிந்தகையோடு
எங்கள்‌ ஊரில்‌ நிலவிய தேர்தல்‌ ஜம்‌ எங்களையும்‌ பற்றிக்‌ கொண்டது.

பொதுத்தேர்தல்‌ காலத்தில்‌ “உங்கள்‌ பொன்னான வாக்குகளை
லண்டனில்‌ அப்புக்காத்தராக படிச்சு மகாராணியோடூ படம்‌ எடூத்துக்‌
கொண்ட எங்கள்‌ தங்கம்‌ முத்து ராசாவிற்கு அளியுங்கள்‌” என்று
ஒலிபெருக்கியில்‌ உச்சஸ்தாயியில்‌ அலறிக்கொண்டு, புகை கிளப்பிப்‌
போகும்‌ ஏபோட்டி காரில்‌ இருந்து வீசிச்சென்ற அத்தனை
நோட்டீசுகளையும்‌ பத்திரமாக அடுக்கி வைத்துப்‌ அடிக்கடி
எண்ணிப்பார்த்துக்‌ கொள்வோம்‌. கூடப்பிறந்த தம்பியே யாருக்கும்‌ தூக்கிக்‌
கொடுத்துவிட்டால்‌ என்ற பயந்தான்‌.

எங்களுடைய கோயில்‌ வீதியில்‌ மேடைபோட்டு, கோயிலை சுற்றி
இருக்கும்‌ முப்பத்து ஐந்து குடூம்பத்தின்‌ 64 வாக்குகளை மனதில்‌
கொண்டூ சுயேச்சையாக கேட்கும்‌ (போட்டியிடும்‌) முத்துராசா கூட்டம்‌
வைத்தார்‌. மேடை என்பது வைரமுத்தண்ணை வீட்டுக்கட்டிலை
தம்பிமுத்தண்ணை வீட்டு கட்டில்‌ அருகில்‌ வைத்து உருவாக்கியது.

இரண்டூ பேருக்குமிடையில்‌ இருந்த கோபத்தைப்போல இந்த இரண்டூ
கட்டில்களும்‌ உயரமும்‌ பள்ளமுமாக இருந்தன. மேலே வெள்ளை
விரித்திருந்தது. பாய்ந்தேறிய வேட்பாளர்‌ முத்துராசா, கட்டில்‌
இடைவெளிக்குள்‌ காலைச்‌ செருகிக்கொண்டு “என்னை யாராலையும்‌
அசைக்கமுடியாது.”” என்று சொல்லிக்‌ கொண்டே வெகுநேரமாக நின்றார்‌.

அவருடைய முகம்‌ போகிற போக்கை அவதானித்து, இரண்டு
மூன்று பேர்கள்‌ பாய்ந்து கட்டிலில்‌ ஏறவும்‌ நிலைமை மோசமாகி. கால்‌
வேதனை தாங்கமுடியாமல்‌, தன்னுடைய விசுவாசமான ஆதரவாளர்களை
நோக்கிச்‌ சொல்லக்கூடாத வார்த்தைகளை முத்துராசா சொல்லவும்‌,

அவர்கள்‌ அக்கணமே கட்சி மாறினார்கள்‌. சுயேட்சையாக கேட்ட
முத்துராசா பன்னிரண்டூ வாக்குளால்‌ தோற்றுப்‌ போனார்‌. கட்சி மாறிய
அந்த மூன்று பேரின்‌ குடும்பத்தவர்‌, சொந்தக்காரர்‌ என்று, செத்துப்போன
நாகமணிக்கிழவன்‌ உட்பட பன்னிரண்டூ துண்டுகள்‌ இருந்தது
கனபேருக்குத்‌ தெரியாது.

இந்த பின்னணியில்‌, நாங்கள்‌ சிறுவர்களே ஒரு லெக்ஷன்‌ வைத்தால்‌
என்ன என்று யோசித்தோம்‌. பள்ளிக்கூடம்‌ இல்லாத ஒரு

சேற்றுப்‌ டோ௨ இருக்கறது 17


Page 30ஞாயிற்றுக்கிழமை. எங்களுடைய பின்வளவு பனங்காணியின்‌. நடூவில்‌
பனைகள்‌ தறித்துவிட்டதினால்‌ வெட்ட வெளியாக இருந்த பகுதியில்‌,
வேப்ப மரம்‌ ஒன்று சுயம்புவாக முளைத்து நிழல்‌ பரப்பிக்கொண்டிருந்தது.
அதன்‌ நிழலில்‌ வாக்குச்சாவடி போடப்பட்டது.

சனிக்கிழமையே சுற்றாடல்‌ எல்லாம்‌ சுத்தம்‌ பண்ணி, பந்தல்‌
போட்டு, வாக்காளப்பெருமக்கள்‌ வரிசையாக வருவதற்காக கயிறு
கட்டி, அவர்கள்‌ வாக்களித்து விட்டூ வெளியேறுவதற்கான அம்புக்குறி
எல்லாம்‌ கீறி ஒட்டி, பழைய கார்‌ பற்றறியின்‌ வெற்றுப்பெட்டி ஒன்றை
வாக்குப்பெட்டியாக வைக்கத்‌ தீரமானித்தாகியும்‌ விட்டது.

எல்லாம்‌ சரி யார்‌ போட்டியிடுவது என்று தான்‌ இன்னும்‌
தீர்மானமாகவில்லை. இறுதியாக சனிக்கிழமை பின்னேரமாக மூன்று
பேரின்‌ பெயர்கள்‌ அடிபட்டன. ஒன்று நான்‌. மற்றது சிங்கப்பூர்‌ வீட்டுக்கார
சோதி. மற்றது மகாலி என்ற மகாலிங்கம்‌. ஆமாம்‌ எங்களுக்கு சைக்கிள்‌
பழக்கின அவரேதான்‌.

இரவோடூ இரவாக மகாலி போட்டியிலிருந்து விலகுவதாகவும்‌,
எனக்காக முழுமூச்சாக வேலை செய்யப்‌ போவதாகவும்‌ அறிவித்தார்‌.
என்னிடமிருந்த பெட்டிக்கமரா - பெரியப்பா வாங்கித்‌ தந்தது - அவருக்குச்‌
சொந்தமானது கொசுறுச்‌ செய்தி.

ஞாயிறு விடிந்தது. இரவு முழுக்க நித்திரை வரவேயில்லை. திரும்பி
திரும்பி படுத்துக்‌ கொண்டேன்‌. அடூத்த நாள்‌, அதிகாலையிலேயே
வாக்குச்சாவடிக்குப்‌ போப்‌ விட்டேன்‌. தேர்தல்‌ அதிகாரியாக
நியமிக்கப்பட்ட, யோகன்‌ - எங்கள்‌ இரண்டூ பேருக்கும்‌ பொதுவானவனாக
நம்பப்பட்டவன்‌ - சதுரறூல்‌ போட்ட கொப்பி ஒன்றோடு, பதவிக்குரிய
மிடுக்குடன்‌ இங்குமங்கும்‌ திரிந்தான்‌.

மத்தியானம்‌ வரையும்‌ வாக்களிப்பு மந்தகதியிலேயே நடந்தது. காரணம்‌
பல வாக்காளர்கள்‌ வீட்டுச்சோலிகளுக்காக வெவ்வேறு இடங்களுக்குப்‌
போய்‌ விட்டார்கள்‌. தேங்காய்‌ எண்ணெயும்‌, பப்படமும்‌ வாங்கக்‌ கடைக்கு
போன வழியில்‌ குட்டியன்‌ இடையில்‌ வந்து எனக்கு துண்டு போட்டு
அதை எனக்கு எல்லார்‌ முன்னிலையும்‌ சந்தோசமாகத்‌ தூக்கிக்‌
காட்டப்போய்‌, மற்றக்கையில்‌ இருந்த எண்ணைப்‌ போத்தல்‌ வழுக்கி
கீழே விழுந்து கல்லொன்றில்‌ பட்டு உடைந்து போனது. குட்டியன்‌ வீட்டில்‌
திடைக்கப்போவதை நினைத்து ஏங்கி அழுது கொண்டே போனான்‌.

18 6. எஸ்‌. ப௩ல2சந்தன்‌


Page 31விதானையார்‌ வீட்டுக்கு புல்லுக்கட்டு கொண்டு போன ராணி அதை
வாக்குச்சாவடிக்குப்‌ பக்கத்திலேயே போட்டூ விட்டப்‌ போய்‌ வாக்களித்து
விட்டு சோதியைப்‌ பார்த்து சிரித்துக்‌ கொண்டே போனாள்‌.

அடுத்த காணிக்குள்‌ ஆடு கட்ட வந்த ராசன்‌ அவசரமாக வந்து
வாக்களிக்க நினைத்து ஆட்டை சரியாகக்‌ கட்டாமல்‌ வர, அது
நளக்கயிறை இழுத்துக்‌ கொண்டூ ஒழுங்கைக்குள்ளால்‌ போய்‌
ராசம்மாக்காவின்‌ வீட்டுக்கு முன்னால்‌ வடிவாக பூத்திருந்த மணி
வாழைகளை தின்றுவிட்டது. நடந்தது தெரிந்திருந்தால்‌ அக்கா இனி
எலெக்சனே நடத்தக்கூடாது என தடை உத்தரவே வாங்கியிருப்பா.

வருகின்ற குறைந்த எண்ணிக்கையினரும்‌ சிங்கப்பூராரின்‌
பொடியனோடூ (எனது எதிராளிதான்‌) கதைத்து விட்டுப்‌ போவதை
பார்க்கும்போது எனக்கு வெற்றியின்‌ மீது சற்று நம்பிக்கை
குறையத்தொடங்கியது. வாக்கு எண்ணப்படுவதே அவசியம்‌ இல்லை

என்பது போல எதிரணியினர்‌ “பட்டான்‌ பட்டான்‌ பாலச்சந்திரன்‌...” என்று

கோசமிடத்‌ தொடங்கியும்‌ விட்டார்கள்‌.

எனது பெயர்‌ சொல்லப்படூவதைக்‌ கேட்டு என்ன விஷயம்‌ என்று
கேட்பதற்காக அம்மம்மா வேலியால்‌ எட்டிப்பார்த்து, விஷயமறிந்து
என்னைக்‌ கூப்பிட்டாகியும்‌ விட்டது. இனியென்ன தோற்றதை
ஒப்புக்கொண்டு தேர்தலில்‌ இருந்து வாபஸ்‌ பெறவேண்டியதுதான்‌.

திடீரென்று எங்கள்‌ காணியின்‌ பின்‌ ஒழுங்கையிலிருந்து சலசலப்பும்‌
விசில்‌ சத்தங்களும்‌ கேட்டன. ஒழுங்கையின்‌ ஊடாக வந்து எங்கள்‌
காணியின்‌ நடுவே குறுக்கறுத்து வரும்‌ ஒற்றையடிப்பாதையில்‌ நீண்ட
வரிசை வந்து கொண்டிருந்தது. .

முன்னணியில்‌ எனது பிரதான ஆதரவாளர்‌ மகாலி கையில்‌ ஒரு
“பொடிப்பிள்ளை”யும்‌, இடுப்பில்‌ ஒருவரும்‌, தோளில்‌ ஒருவருமாக மந்தகாசப்‌
புன்னகையுடன்‌ வர.. அவருக்கு பின்னே குஞ்சு குருமான்‌ கூட்டம்‌ புழுதி
கிளப்பிக்‌ கொண்டூ வந்து கொண்டிருந்தது.

சொல்ல மறந்து விட்டேன்‌. வாக்களிப்பதற்கு குறைந்த வயதெல்லை
எதுவும்‌ விதிக்கப்படவில்லை. நாலைந்து வயதான வாக்காளர்கள்‌ சிலர்‌
பிறந்த மேனியுடன்‌ வந்து கொண்டிருந்தார்கள்‌. வந்தவர்கள்‌ மகாலியின்‌
பணிப்புரையில்‌ என்னைச்சுற்றி ஜே ஜே என்று கோசமிட்டார்கள்‌.

சேற்றுப்‌ டோ௨ூ இருக்கிறது 19

 


Page 32 

 

எம்‌.ஜி.ஆர்‌ பொது இடங்களில்‌ செய்வது போல, எண்ணை பூசிய
சில குட்டி வாக்காளர்களை எட்டித்‌ தடவப்‌ போக, அவர்கள்‌ என்‌
இடுப்பில்‌ இருக்கப்‌ போவதாக அடம்‌ பிடித்தார்கள்‌. என்ன செய்வது
எலெக்ஷன்‌ என்று வந்து விட்டால்‌ இதெல்லாம்‌ பார்க்கமுடியுமா..?

ஓவ்வொருத்தராக தூக்கி இடுப்பில்‌ வைத்து நிலத்தில்‌ விட்டேன்‌ சிலர்‌
இடுப்பில்‌ இருந்து இறங்கிய போது சற்று ஈரலிப்பானதாக இருந்தது.
என்னவென்று பார்க்கும்‌ துணிவுமில்லை. அதே நேரத்தில்‌ அப்புக்காத்தர்‌
முத்துராசா சொன்னது போல பொறுத்தநேரத்தில்‌ பிழைபாடாகச்‌ சொல்லி
இந்த வாக்காளர்‌ கூட்டத்தையே பகைத்துக்கொள்ளவும்‌ நான்‌ தயாரில்லை.

வந்த வாக்காளர்‌ கூட்டத்தினர்‌ யார்‌ வாக்குச்சீட்டை வாங்கினாலும்‌
அவர்கள்‌ பக்குவமாக மகாலியிடம்‌ கொடுக்க அவர்‌ எனது பெயருக்கு
நேரே புள்ளடி போட்டு பற்றறிப்‌ பெட்டிக்குள்‌ தானே அடைந்து கொண்டிருந்தார்‌.

“இவர்கள்‌ எங்கள்‌ தொகுதி எல்லைக்கு அப்பாற்பட்டவர்கள்‌'” என்று
எதிர்‌அணியினர்‌ ஆட்சேபனைக்குரல்‌ எழுப்பித்தான்‌ பார்த்தார்கள்‌. எனது
ஆதரவாளர்கள்‌ விட்டால்தானே. ஏதோவெல்லாம்‌ கத்தி ஆர்ப்பாட்டம்‌ பண்ணி
அவர்களை வாயடைக்கச்‌ செய்து விட்டார்கள்‌. இதை தாங்கமுடியாத
எதிரணியினர்‌ கண்ணீரும்‌ கம்பலையுமாக வாக்‌ அவுட்‌' செய்தனர்‌.

மகாலி ஓடிப்போய்‌ ஐயரின்ரை கடையில்‌ ஐம்பதுசதத்துக்கு
பல்லிமுட்டை இனிப்பு தனது சாறத்தின்‌ சண்டிக்கட்டூக்குள்‌ வாங்கி
வந்து, வாக்காளப்‌ பெருமக்களுக்கு வாரி வாரி வழங்கி அவர்களை
அனுப்பி வைத்தார்‌. போற வழிக்கு புண்ணியம்‌ என்பது போல
'பாலச்சந்திரனுக்கு ஜே” போட்டுக்கொண்டு அந்தக்கூட்டம்‌ போனது.

எனக்கென்ன கவலையென்றால்‌ பற்றறிப்‌ பெட்டிக்குள்‌ அடைந்திருந்த
துண்டுகள்‌ எண்ணப்படாமலே போனதுதான்‌. பல ஆண்டூகளுக்குப்பிறகு
எங்களுர்க்காரர்‌ எடுத்த பெரும்பான்மை வாக்குச்சாதனையை அப்போதே
நான்‌ முறியடித்திருக்கலாம்‌.

பலகாலமாக அந்தப்‌ பற்றறி பெட்டி, அடைந்த வாக்குச்சீட்டுகளுடன்‌
எங்கள்‌ மண்குசினியின்‌ தாழ்வாரத்தில்‌ அனாதையாகக்‌ கிடந்தது.

அந்த வருஷம்‌ மார்கழியில்‌ ஒரு நாள்‌ பெய்த அடைமழையில்‌
அந்த பற்றறி பெட்டியினுள்‌ தண்ணீர்‌ போய்‌ வாக்குத்‌ துண்டூகள்‌
வெள்ளத்தில்‌ மிதந்து: போயின. நான்‌ திண்ணையில்‌ இருந்து அதை
பார்த்துக்‌ கொண்டிருந்தேன்‌.
94

20 ்‌ 62. எஸ்‌. 0௩ல7௪நதன்‌


Page 33 

 

 

 

 

 

ஞ் கன்‌

21

 


Page 34கட க! எ ஷதகிக்‌ ட க அ ட டட

 

 

22

கனடாவுக்கு வந்தவர்கள்‌ எங்கள்‌ பாரம்பரியக்‌
கலைவடிவங்களை, பண்பாட்டுக்‌ கோலங்களை கொண்டு
வந்தார்களோ இல்லையோ இடியப்ப உரல்‌, புட்டுக்குழல்‌,
அம்மி குழவி என்றெல்லாம்‌ கொண்டூ வந்து குவித்து
விட்டார்கள்‌. இதற்கு போட்டியாக ஊரில்‌ மிக்சி, கிரைண்டர்‌
என்றெல்லாம்‌ பாவிக்கத்‌ தொடங்கி விட்டார்கள்‌ என்று கேள்வி.

இவை எல்லாவற்றுக்கும்‌ மேலாக, இங்கு கலை
நிகழ்ச்சிகளில்‌, எங்களுக்கே உரித்தான ஒரு கலை வடிவம்‌..
மேடையில்‌ அல்ல.. சபையில்‌ இருந்து வரும்‌ போது
மெய்சிலிர்த்து புளகாங்கிதம்‌ அடைகின்றேன்‌. விசில்‌
சத்தங்களைத்தான்‌ சொல்கிறேன்‌. அதைக்‌ கேட்கும்‌ போது,
என்‌" இளமைக்காலத்திற்கு காலஇயந்திரத்தில்‌ பயணம்‌
செய்து மீள்வது போன்ற ஒரு உணர்வு.

விசில்‌ அடிப்பதென்பது என்பது ஒரு தனிக்‌ கலை.
சொன்னால்‌ நம்பமாட்டீர்கள்‌. ஐம்பெரும்‌ காப்பியங்களில்‌
ஒன்றான சீவகசிந்தாமணியிலேயே “கொக்கரிப்பையும்‌,
சீழ்க்கையும்‌ எழுப்பினார்‌” என்று வருகிறது. அதாவது
சோழர்காலத்திலேயே கூக்காட்டி, சீக்காய்‌ (விசில்தான்‌)
அடித்திருக்கிறார்கள்‌.

எங்கள்‌ கிராமத்தில்‌ தாத்தா, பாட்டாமார்‌ “சீக்காய்‌' என்று
சொல்வதை கேட்டிருக்கிறேன்‌. அவர்கள்‌ “சீக்காப்‌”
வலிக்காதை: என்று சொன்னால்‌ “விசில்‌ அடிக்காதே' என்று

அர்த்தப்படும்‌.
62. எஸ்‌. ப௩லசந்$ன்‌


Page 35ர்‌

ர அவடன ஷான்‌

ப அவவ வ கர வாகன ன ட ட ட
இகவ ணில்‌

சென்னைச்‌ செந்தமிழில்‌ ' சீக்காய்‌' என்று சொல்கிறார்களே. அது
“சுகமில்லாமல்‌” என்று அர்த்தமாம்‌. (சிக்‌ என்ற ஆங்கிலச்சொல்லின்‌
தமிழ்வடிவம்‌ தான்‌. விசிலுக்கு இருக்கவே இருக்கிறது பிகில்‌. இப்படியே
போய்‌ “தொல்காப்பியம்‌”, “நிகண்டு” என்று சொல்லாராய்ச்சியில்‌
இறங்கப்போகிறேன்‌ என்று நினைத்து நீங்கள்‌ “சீட்டி அடிக்க” முதல்‌
விட்டஇடத்திலிருந்து தொடர்கிறேன்‌.

என்னவோ தெரியாது... விசிலுக்கும்‌ எங்கள்‌ பெற்றாருக்கும்‌ ஜென்மப்‌
பகை. தப்பித்‌ தவறி, ஏதோ ஒரு சந்தோசத்தின்‌ வெளிப்பாடாக-

பரீட்சையின்போது சேர்ட்டின்‌ முழங்கை மடிப்புக்குள்‌ மறைத்து
வைத்திருந்த குறிப்புகளை பரீட்சகருக்கு தெரியாமல்‌ எடுத்துப்பார்த்து
எழுதியபின்‌ வெளியில்‌ வரும்‌ போதுள்ள சந்தோசம்‌ மாதிரி -

இரட்டைப்பின்னல்‌ ஈஸ்வரி தண்ணீர்‌ அள்ளிக்‌ கொண்டூ வரும்‌
மத்தியானப்‌ பொழுதில்‌ காத்திருந்து நெஞ்சு படபடக்க கடிதத்தை
(அந்தக்‌ கடிதந்தான்‌) கொடுத்து விட்டு சைக்கிளை உழக்கிக்‌ கொண்டு
வரும்‌ போது தோன்றும்‌ சந்தோசம்‌ மாதிரி -

ஏதோ ஒரு சந்தோச காலத்தில்‌ விசில்‌ அடிக்கிறோம்‌ என்று வைத்துக்‌
கொள்ளுங்கள்‌. அது நரகத்திற்கு போகும்‌ அளவிற்கு உரிய பாவச்‌
செயலாக எங்கள்‌ ஊரில்‌ கருதப்படும்‌.

“ஓுதுவும்‌ அதின்ரை விசிலும்‌. உது உருப்படாது” என்று அ.
றிணைப்‌ பொருட்களோடு எங்களைச்‌ சேர்த்து விடூவார்கள்‌.

விசில்‌ அடிப்பதற்காக குவித்த உதடூகள்‌ பிரிவதற்கிடையில்‌
விசிலடித்த கதை வீடூ போய்ச்‌ சேர்ந்து விடும்‌. வீட்டு வாசலில்‌ அப்பா
கோபமாக நிற்பார்‌.

“விளாத்தி..(இது ஒரு சாதி மரம்‌.. என்னைத்தான்‌ குறிப்பிடுகிறார்‌)
ஏதாவது படிக்கச்‌ சொன்னால்‌ விக்கி விக்கிக்‌ கொண்டூ நிற்கும்‌.
சந்தியிலை நின்று விசில்‌ அடிக்கிறாராம்‌ விசில்‌. இதிலை நிண்டியோ
விசிக்கி விட்டிடூவன்‌.. விளாசிப்‌ போடுவன்‌”

என்று பி.எச்‌.அப்துல்‌ ஹமீட்டின்‌ “பாட்டுக்கு பாட்டூ' நிகழ்ச்சியில்‌
வருவது போல வீ என்ற எழுத்திலேயே நிற்பார்‌.

சேற்றுப்‌ டோ௨ இருக்கிறது 23


Page 36இந்தத்‌ தொல்லைகளை தவிர்த்து நிம்மதியாக விசில்‌
அடிக்கவேண்டூமென்றால்‌, எங்கள்‌ ஊரின்‌ எல்லையைத்‌ தாண்டி வரும்‌
வயல்வெளி, உப்புத்தரவைகளில்தான்‌ அது சாத்தியமாகும்‌.

இரவு வேளைகளில்‌ ஆங்கிலப்‌ படங்கள்‌ இரண்டாம்‌ காட்சி பார்த்து
விட்டு சைக்கிள்களில்‌ வருவோம்‌. படத்தில்‌ வந்த “இரண்டங்குல
கடைவாய்ப்பல்‌ உள்ள பிசாசுகள்‌' பின்தொடர்வது போன்ற பயம்‌ பின்‌
பிடரிப்பாகத்தை சிலிர்க்க வைக்கும்‌. கூடவருபவர்களோடூ கதைக்கவே
பயம்‌ இடம்கொடுக்காது. இந்த நேரத்தில்‌ விசில்‌ அடிப்பது தான்‌ பயத்தைத்‌
தவிர்க்கும்‌ அருமருந்தாகச்‌ செயல்படும்‌.

சூழ மரங்களும்‌, பற்றைகளும்‌ மூடியிருக்க கும்மிருட்டில்‌ இருக்கும்‌
எங்கள்‌ அம்மன்‌ கோயிலை தாண்டீம்போது, எங்கள்‌ விசில்‌
உச்சஸ்தாயியில்‌ ஒலிக்கும்‌. ஊர்மனைகள்‌ வந்து விட்டாலும்‌ அந்த
விசிலடி நிற்காது.

கோடையின்‌ வெப்பம்‌ காரணமாக, வீட்டுக்குள்‌ படூக்க முடியாமல்‌,
விறாந்தையில்‌ பாய்‌ விரித்து, நிம்மதியாக படுத்திருக்கும்‌ யாரோ ஒரு
முதியவர்‌ திடுக்கிட்டு எழுந்து -*யாரடா உவன்‌. இந்த அர்த்த சாமத்திலை
உப்பிடி விசில்‌ அடிக்கிறவன்‌” என்று “மயானகாண்டம்‌”
வி.வி.வைரமுத்துவைப்‌ போல உரத்துக்‌ கேட்கவும்‌ எங்கள்‌ விசில்‌
ஒலிகள்‌ தேய்ந்து மெளன ஊர்வலம்‌ நடக்கும்‌. அடூத்த ஒழுங்கையில்‌
மீண்டும்‌ ஆரம்பித்து அவரவர்‌ வீட்டடி வரை தொடர்ந்து கொஞ்சம்‌
கொஞ்சமாக கரைந்து நின்று விடும்‌.

அந்தக்காலத்தில்‌ தமிழ்ப்படங்கள்‌ பார்க்கப்‌ போனவர்களுக்கு,
கதாநாயகன்‌ வாள்ச்‌ சண்டையில்‌ வில்லனை துரத்தி துரத்தி வாள்‌
வீசும்போது கலரிப்‌ பகுதியிலிருந்து “ஊய்‌.. ஊய்‌” என்று வரும்‌ விசில்‌
சத்தம்‌ ஞாபகமிருக்கும்‌. 100, 150 விசில்களின்‌ கூட்டோசை காதை
அடைக்கச்‌ செய்து, தொடர்ந்து வரும்‌ காட்சிகளை மெளனப்‌ புடம்‌
போல பார்க்க வைக்கும்‌.

இந்தியாவில்‌ கே. சிவப்பிரசாத்‌ என்ற கலைஞர்‌ விசில்‌ அடித்தே
கர்நாடகக்‌ கச்சேரி செய்கிறார்‌. “வாதாபி கணபதீம்‌””, “நகுமோமு”
என்றெல்லாம்‌ விசில்‌ அடித்து. பக்க வாத்தியங்களுடன்‌ அமர்க்களப்‌

24 64. எஸ்‌. புல2௪ஆதரன்‌

ஸ்ட... ெஅடது பவய்சிகவளது.

வ தவ வஹபிகம்‌ எட


Page 37ப... எ ப.
ன்‌

ரானை ஆனாள்‌? எ

ட்ட

ணை. பப்ப ஃ
பவனி

படுத்துகிறார்‌. இதை வாத்திய இசையில்‌ சேர்ப்பதா, வாய்ப்‌ பாட்டில்‌
சேர்ப்பதா என்று சங்கீதக்காரர்கள்‌ அல்லல்‌ படூகிறார்கள்‌ என்பது
தனிக்கதை.

எனக்கு உள்ள கவலை என்னவென்றால்‌, எங்கள்‌ பெற்றோர்கள்‌,
ஊரவர்கள்‌ மாத்திரம்‌ தடை போடாமல்‌ இருந்திருந்தால்‌, நானும்‌
என்னுடைய நண்பர்களும்‌ * விசில்‌ அடித்து, அடித்து தினமும்‌ சாதகம்‌
பண்ணி, இன்றைக்கு இங்கிலாந்து, பிரான்ஸ்‌, ஜேர்மனி, சுவிஎம்‌ என்று
எங்கள்‌ தமிழர்‌ வாழும்‌ இடமெல்லாம்‌, விசிலில்‌ கர்நாடகக்‌ கச்சேரி,
விசிலில்‌ மெல்லிசைக்‌ கச்சேரி, விசிலில்‌ திரையிசை, விசிலில்‌ ரெகே
இசை, விசிலில்‌ பொப்‌ இசை என்று கொடி கட்டிப்‌ பறந்திருப்போம்‌.
விதி யாரை விட்டது. எங்கள்‌ விசிலை விடுவதற்கு.

கனடாவிலும்‌, ஐரோப்பிய நாடுகளிலும்‌ மாதம்‌ தவறாமல்‌, சில
காலங்களில்‌ நாள்‌ தவறாமல்‌ கலை நிகழ்ச்சிகளை நடாத்தி கலை
வளர்க்கும்‌ பெருமக்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்‌.

மேடையில்‌ ஆற்றப்படும்‌ அல்லது ஏற்றப்படும்‌ பரதம்‌, சங்கீதம்‌ போன்ற
இத்தியாதி கலை வடிவங்களோடூ நம்மவர்‌ அவையில்‌ தவறாமல்‌ வழங்கும்‌
விசில்‌ கலையையும்‌ அரங்கேற்றுவதோடூ, வருடாந்தம்‌ உலகளாவிய
ரீதியில்‌ “விசில்‌ போட்டி” நடாத்தி, முதல்‌ பரிசாக “தங்க விசில்‌”
(உதை  பந்தாட்டத்தில நடுவர்‌ வைத்திருப்பதை போன்றது) பரிசாக
வழங்க வேண்டும்‌. இத்துறையில்‌ சாதனை படைப்பவர்களுக்கு “விசில்‌
வித்தகன்‌”, “விசில்‌ சக்கரவர்த்தி', “விசில்‌ மன்னன்‌” என்றெல்லாம்‌
விருதுகள்‌ வழங்க வேண்டும்‌. இதையெல்லாம்‌ பார்த்து மற்ற சமூகத்தவர்‌
விக்கித்துப்‌ போய்‌ விரலை வாயில்‌ வைக்க வேண்டும்‌. (விசில்‌
அடிக்கத்தான்‌, இதுவே என்‌ தாளாத ஆசை. நிறைவேற்றுவீர்களா ?

சேறிறுட்‌ டோ௨ூ இருக்கிறது 25


Page 38

Page 39ரஷ ட்‌ அங்கன்‌ அளக.

 

அலார.

 

 

 

 

 

ப்‌

 

 

 

ஸ்ண்கள்‌ ஷீ்ரு
ரர சோராலிர்‌ மெரம்கு

27


Page 4028

லக்க ஊரில்‌ கிராமப்‌ போன்‌ பெட்டி முதலில்‌
பாடியது எங்கள்‌ வீட்டில்தான்‌ என்று அம்மா அடிக்கடி சொல்லிக்‌
கொள்வார்‌. அதென்ன கிராமப்‌ போன்‌ ? அந்தக்காலத்திலேயே
உங்கள்‌ கிராமத்தில்‌ போன்‌ இருந்ததா ? அதற்கு ஒரு
பெட்டியும்‌ இருந்ததா என்று நீங்கள்‌ யோசித்து மண்டையை
பிய்த்துக்‌ கொள்வதற்கு முதல்‌ சொல்லி விடுகிறேன்‌.

இப்போதைய “டிஸ்க்‌ ஜொக்கி' (பார்ட்டிகளில்‌ பாட்டு
போடுபவர்‌) பாவிக்கும்‌ இசைத்தட்டு போடும்‌ கருவியின்‌
மூதாதையர்தான்‌ இந்த கிராமப்போன்‌. கைகளால்‌ பற்றி
முன்னுக்கும்‌ பின்னுக்கும்‌ ஸிவ்‌ ஸிவ்‌ என்று இழுத்து
பாடல்களை கலந்து பார்ட்டி நடக்கும்‌ இடங்களில்‌ இசை
வழங்கும்‌ அந்தக்‌ கருவியின்‌ கொப்பாட்டன்‌ என்று வைத்துக்‌
கொள்ளுங்களேன்‌.

சாவி கொடூக்கும்‌ சதுரப்‌ பகுதியும்‌, அதன்மேல்‌

பொருத்திய சுருங்கி விரிந்த ஒரு குழாய்‌ போன்ற ஸ்பீக்கரும்‌,

மேலே இசைத்தட்டு போடும்‌ சுழலும்‌ ஒரு தட்டும்‌ (அதில்‌
இப்போதும்‌ மாற்றமில்லை), அதற்கு மேலே வளைந்து நிற்கும்‌
ஒரு கை போன்ற பகுதியும்‌ , அதன்‌ முகப்பில்‌ பொருத்திய
ஊசியும்‌ உள்ள “ஹிஸ்‌ மாஸ்டர்ஸ்‌ வொயிஸ்‌' (115 1,1251876
01௦6) கிராமப்‌ போன்‌ பெட்டி அது. அதில்‌ நாய்‌ ஒன்று
பக்குவமாக அமர்ந்து குழாயின்‌ ஊடாக ஒலிக்கும்‌ தன்‌
எஜமானனின்‌ குரலைக்கேட்பதுபோல சின்னம்‌
வரைந்திருக்கும்‌. அதை பார்த்துக்கொண்டிருப்பேன்‌.

62. எஸ்‌. பால22ஆன்‌

ஆ ட த பது பஅரச்சிசெ்கட்கினி வட்ட

லஷ


Page 41வலு கலவவைவஹன எளகா?? ்‌

அது எப்போது எங்கள்‌ வீட்டிற்கு வந்தது என்று எனக்கு
ஞாபகமில்லை. எனக்கு அறிவு வந்த காலம்‌ தொடக்கம்‌ (எனக்கு
அறிவு வந்ததென்று நீங்கள்‌ ஒத்துக்‌ கொண்டால்‌) அது தனக்கென்ற
ஒரு மேசையில்‌ கெளரவமாக இருந்தது. அதற்கு அருகில்‌ ஒரு
சின்னஞ்சிறு பெட்டிக்குள்‌ பளபளக்கும்‌ சிறிய ஊசிகள்‌ இருந்தன.

அப்பா அதை பக்குவமாக எடூத்து முனையில்‌ பொருத்தி மெதுவாக
துலா பதிப்பது போல பதித்து இசைத்தட்டின்‌ மேல்‌ பட்டூம்‌ படாமலும்‌
படிய விடுவார்‌. சாவி கொடூத்ததினால்‌ ஏற்கெனவே சுழன்று
கொண்டிருக்கும்‌ இசைத்தட்டின்‌ மேல்‌ அந்த ஊசி படவும்‌ இசை கேட்கத்‌
தொடங்கும்‌.

இசைத்தட்டை நாங்கள்‌ தோசைக்கல்லு என்று சொல்வோம்‌.
அத்துணை பருமனானது. ஆனால்‌ கொடுத்த சாவியின்‌ விசை குறைந்து
போனால்‌ ஜி.என்‌.பாலசுப்பிரமணியம்‌ சிலநேரம்‌ என்‌.சி. வசந்தகோகிலம்‌
போல குரல்‌ மாற்றிப்‌ பாடுவார்‌. மீண்டும்‌ அப்பா சாவி கொடுக்க அவர்‌
தன்னை சுதாகரித்துக்கொண்டு சொந்தக்‌ குரலில்‌ ”திக்குத்தெரியாத
காட்டில்‌ உன்னைத்‌ தேடித்தேடி அலைந்தேன்‌” என்று பாடூவார்‌.

அப்பா வாரத்துக்கு ஒரு. முறை எங்கள்‌ கிராமத்தின்‌
மையப்பகுதியிலுள்ள கடைகள்‌, தியேட்டர்கள்‌ இருக்கும்‌ குட்டி ரவுண்‌
பகுதிக்கு செல்வதே புதிய இசைத்தட்டூக்கள்‌ வந்திருக்கிறதா என்று
பார்க்கவும்‌, புதிய ஊசிப்‌ பெட்டி வாங்கவும்‌ தான்‌.

புதிதாக அவரது அபிமானப்‌ பாடகரின்‌ அல்லது நாதஸ்வர
வித்வானின்‌ இசைத்தட்டு கிடைத்து விட்டால்‌ அவரது சந்தோசம்‌
சைக்கிளால்‌ இறங்கும்‌ போதே எங்களுக்கு தெரிந்து விடும்‌. கையில்‌
உள்ள இன்னமொரு சரையில்‌ இருக்கும்‌ மலையாளத்தர்‌ கடை வடையும்‌
சுசியமும்‌ அவற்றின்‌ வாசத்தினால்‌ எங்களை கவர்ந்து ஈர்க்கும்‌.

தேனீர்‌ போடச்சொல்லி அம்மாவைப்‌ பணித்து விட்டு, விஸ்தாரமாக
நடிகர்‌ - பாடகர்‌ பி. யூ. சின்னப்பாவைப்‌ பற்றியோ, நாதஸ்வர வித்வான்‌
டி.என்‌. இராசரத்தினம்‌ பிள்ளையைப்‌ பற்றியோ சொல்வார்‌. தேனீரும்‌
வர வடையும்‌ வெளியில்‌ வர நானும்‌ தம்பிமாரும்‌ அந்த வித்வான்களுக்கு
மனதுக்குள்‌ நன்றி சொல்லிக்‌ கொள்வோம்‌.

நாங்களே இரண்டூ மூன்று தடவைகள்‌ கேட்டபின்னர்‌ தான்‌
வெளியாட்களுக்கு சந்தர்ப்பம்‌ வழங்கப்படும்‌. என்றாலும்‌ அந்தக்கால

சற்றுப்‌ டோ௨ு இருக்கிறது 29


Page 42அமைதியான இரவு வேளைகளில்‌ எங்கள்‌ ஒழுங்கை முகப்பு வரை
மட்டு மல்ல, அதையும்‌ கடந்து எங்கள்‌ கோயில்முன்‌ வீதியில்‌
நிற்பவருக்கும்‌ சின்னப்பாவின்‌ குரல்‌ கேட்டிருக்கும்‌. ஆர்யமாலா படத்தில்‌
வருகிற :”சுந்தராங்கவதனி.. உனையே காணும்‌ நாளும்‌ வருமோ” என்ற
மாதிரி பாட்டுக்கள்‌. இதனால்‌ அன்று மாலையே அண்டை அயலில்‌
உள்ளவர்களின்‌ கூட்டம்‌ எங்கள்‌ முற்றத்தில்‌ கூடிவிடும்‌..

அவரவரோடூ உள்ள உறவின்‌ அல்லது கோபத்தின்‌ அடிப்படையில்‌
அவரவரோடூ முகம்‌ கொடுத்தும்‌ கொடூக்காமலும்‌ அப்பா பேசிக்‌
கொண்டிருப்பார்‌. மனதளவில்‌ கோபங்கள்‌ இருந்தாலும்‌ அதைக்‌ காட்டிக்‌
கொள்ளாமல்‌ சிலர்‌ வந்து இருக்கத்தான்‌ செய்வார்கள்‌. கிட்டப்பா,
சின்னப்பா, மாரியப்பா எல்லாம்‌ எங்கள்‌ அப்பாவின்‌ கைக்குள்‌
இசைத்தட்டாக இருப்பதினால்‌ அவர்கள்‌ அப்படிச்‌ செய்ய
வேண்டியிருந்தது... அம்மா கோபதாபம்‌ பார்க்க மாட்டார்‌. எல்லோருக்கும்‌
சமமான வரவேற்புத்தான்‌.

“என்னண்ணை.. யோசிக்கிறியள்‌ ..இந்தாருங்கோ ..தேத்தண்ணியைக்‌
குடியுங்கோ” என்று அம்மா சொல்ல அப்பாவோடு தோட்டக்காணிப்‌
பிரச்சினையில்‌ கோட்டுக்கு போனால்‌ என்ன என்று யோசித்துக்‌
கொண்டிருந்த பொன்னுக்கிழவரும்‌' மனம்‌ மாறி அந்த யோசனைக்கு
முற்றுப்புள்ளி வைத்து விடூவார்‌.

நேரம்‌ செல்ல செல்ல கூட்டமும்‌ அதிகரிக்க அம்மா குசினிக்கும்‌
முற்றத்துக்குமாக நடந்து வந்து போய்க்‌ கொண்டிருப்பார்‌. சில விசேட
சந்தர்ப்பங்களில்‌ வந்தவர்களுக்கு கொடுப்பதற்காகவே மோதகமோ
வடையோ எங்கள்‌ வீட்டில்‌ தயாரிக்கப்படும்‌.

பிறகென்ன உற்சாக வெள்ளந்தான்‌. ஒவ்வொரு முறையும்‌ புதிதாக
வருபஷ்களுக்காக பியூசின்னட்பா சளைக்காமல்‌ 12, 13 தடவை சிவக்கிருபையால்‌
என்று பாடூவார்‌. அப்பா அவரது பரமரசிகன்‌ என்பதினால்‌ மறந்தும்‌
தியாகராஜபாகவதரை புகழ்ந்து விடாமல்‌ வந்தஹ்கள்‌ கவனமாக இருப்பர்கள்‌.

இசைத்தட்டில்‌ ஏறக்குறைய வயல்‌ உழுவது ட€போால
செயற்படுவதினால்‌ ஊசிமுனை விரைவில்‌ தேய்ந்து விடும்‌. அடிக்கடி
ஊசி மாற்றிக்‌ கொண்டேயிருக்கவேண்டூம்‌. இடைநடூவில்‌ ஊளசிமுடிந்து
விட்டால்‌ அவ்வளவுதான்‌. எல்லாச்‌ சந்தோசங்களும்‌ காணாமல்‌
போய்விடும்‌... அந்தச்சாமத்தில்‌ எங்கே போய்‌ ஊசி வேண்டூவது ?

30 62. எஸ்‌. ப௩ல22- ன்‌

- அவதிகாகிச்ட றல்‌ எமக்கு பவட


Page 43 

ஒவ்வொருவராக எழுந்து வேட்டிப்புழுதியைத்‌ தட்டிக்கொண்டூ
மெளனமாகப்‌ போய்‌ விடுவார்கள்‌.

எங்கள்‌ கிராமப்போன்‌ பெட்டிக்கு இருந்த பிரக்யாதி ஒருநாள்‌
திடீரென்று இல்லாமல்‌ போய்விட்டது. எதிர்‌ ஒழுங்கையில்‌ இருந்த
நாகமணியர்‌ வீட்டுக்கு சிங்கப்பூர்‌ சொந்தக்காரர்‌ உதவியினால்‌ கார்‌
பற்றறியில்‌ பாடும்‌ ரேடியோ ஒன்று வந்து சேர்ந்தது.

அவர்கள்‌ நகைச்சுவை நடிகர்‌ டிங்கிரி சொல்வது போல திரிச்‌
சீலை விடூவதா ( திருச்சி வானொலி நிலையம்‌) குழம்பில்‌ விடுவதா
(கொழும்பு வானொலி நிலையம்‌) என்று யோசித்து முடிவு
எடூப்பதற்கிடையில்‌, அன்று மாலையே அப்பா பட்டினம்‌ போய்‌ ரேடியோப்‌
பெட்டியுடன்‌ வந்து இறங்கினார்‌.

ரேடியோ வந்த காலத்தில்‌ சின்னப்பா, தியாகராஜபாகவதர்‌
ஆகியோரின்‌ புகழும்‌ தேய்ந்து போய்க்கொண்டிருந்தது. அவர்களோடு
எங்கள்‌ கிராமப்போன்‌ பெட்டிக்கும்‌ பெருமை குறைந்து போய்விட்டது.
அது இருந்த இடத்தை புதிதாக வந்த ரேடியோ பெட்டி ஆக்கிரமித்துக்‌
கொண்டது.

ஒருநாள்‌ யாரோ ஒரு சைக்கிள்‌ கடைக்காரர்‌ எங்கள்‌ கிராமப்போன்‌
பெட்டியை விலைக்கு வாங்கிக்கொண்டு போனார்‌. பலநாட்களுக்கு
பிறகு நான்‌ அதைப்‌ பார்ப்பதற்காகவே மூன்றுமைல்‌ சைக்கிள்‌ உழக்கி
பக்கத்து ஊருக்குப்‌ போனேன்‌. சைக்கிள்‌ கடைக்கு முன்னால்‌ நின்று
அதைப்‌ பார்க்கும்‌ போது, பவுண்‌ நிறத்‌ தினாலான தனது
குழாயைத்திருப்பி கிராமப்போஸ்‌. என்னைப்‌ பார்ப்பது போல ஒரு பிரமை
ஏற்பட்டது.. அது பிறகு பாடவேயில்லை என்று யாரோ சொன்னார்கள்‌.
துக்கம்‌ தொண்டையை அடைக்க சைக்கிளை மிதித்து வீடு வந்து
சேர்ந்தேன்‌.

சேற்றுட்‌ பயோ௨ இருக்கறது 31


Page 44

Page 45 

 

 

 

 

 

 

த்த ட ட கதத பட்ட த பட.

 

ண

5 உஎயாக்கு

17

33

 


Page 4634

௫9. “மயல்‌ நடந்த பன்னிரண்டாவது

புத்தகவெளியீட்டு விழாவில்‌ பத்தாவது பேச்சாளராகக்‌ கலந்து
கொண்ட ஒரு பிரமுகர்‌ - “கடன்பட்டார்‌ நெஞ்சம்‌ போல
கலங்கினான்‌ இலங்கை வேந்தன்‌” என்று நீட்டி முழக்கவும்‌
என்‌ சிந்தனை கடந்ததில்‌ நடந்து, எங்கோ ஒரு இடத்தில்‌
தரித்து நின்றது.

எங்கள்‌ காலத்தில்‌ இப்படி கடன்‌ படுவதையே ஒரு
விழாவாக, மூன்று நாள்‌ சடங்காக செய்திருக்கிறார்கள்‌.
முக்கியமாக என்‌ மாமா, அம்மாவின்‌ ஒன்று விட்ட சகோதரன்‌.
வருடத்தில்‌ முக்கால்‌ பகுதிக்குமேல்‌ ஊர்‌ பக்கமே தலை
காட்டாமல்‌ எங்கெங்கெல்லாமோ திரிந்து விட்டூ, அம்மியும்‌
நகரும்‌ ஆடிக்காற்று அடிக்கும்‌ காலத்தில்‌ திடீரென்று
பிரசன்னமாவார்‌. அதுவும்‌ வைரமுத்து எழுதியதைப்‌ போல
- “இரவும்‌ பகலும்‌ உரசிக்‌ கொள்ளும்‌ அந்திப்‌ பொழுதில்‌”-
எங்கள்‌ வீட்டுக்கு வந்து நிற்பார்‌.

அந்த வேளையில்‌ வருவதற்கு காரணம்‌ இருக்கிறது.
ஊரில்‌ உள்ளவர்களில்‌ முக்கால்‌ வாசிப்‌ பேருக்கு மேல்‌
ஐந ததோ, பத்தோ அவருக்கு கைமாற்றாக
கொடுத்திருப்பார்கள்‌. அவர்கள்‌ கண்ணில்‌ படாமல்‌
வருவதற்காகத்தான்‌ இந்த முன்னேற்பாடு.

6. எஸ்‌. ப௩ல2௪நதநன்‌


Page 47வாகனட்‌ குஷ்‌ நத ட ர ரர ரக்ககிக்க ட ட எக அறத.

 

“என்னக்கா எப்பிடி இருக்கிறாய்‌' - மெல்லிய குரலில்‌ தான்‌ கேட்பார்‌.
காரணம்‌, அடூத்த வேலிக்கு அப்பால்‌ இருக்கும்‌ சின்னத்துரையிடமும்‌
“போய்விட்டு வந்து தாறன்‌” என்று சொல்லி காசு வாங்கியிருக்கிறார்‌,
எங்கே போறன்‌, எப்போ வாறன்‌ என்று சொல்லவில்லை என்பது
மட்டும்‌ உண்மை. அசிரத்தையாக நிமிர்ந்து, இருக்கிறன்‌ என்பதாக
தலையை சற்று அசைத்துவிட்டூ கருமமே கண்ணாக இருப்பார்‌ அம்மா.

“அக்கா யோசிக்காதை.. எல்லாற்றை காசையும்‌ குடுத்து முடிக்க
வழி ஒண்டூ வைச்சிருக்கிறன்‌. பணச்சடங்கு வைக்கப்‌ போறன்‌” என்று
தொடங்க எங்களுக்கு சிரிப்புத்தான்‌ வரும்‌.

பணச்சடங்கு என்பது இதுதான்‌. எவருக்காவது பணக்கஷ்டம்‌
ஏற்பட்டு விட்டால்‌, திருமண அழைப்பைப்போலவே நோட்டீஸ்‌ அடித்து,
வாருங்கள்‌, வந்து பண உதவி தாருங்கள்‌ என்பதாக, மூன்று நாள்‌
சடங்கு நடைபெறும்‌ என்ற முன்னறிவித்தலுடன்‌, வீடு வீடாகப்‌ போய்‌
கொடுத்து, கெளரவமாக கடன்‌ கேட்கும்‌ ஒரு சடங்கு.

ஏற்கெனவே ஊர்‌ முழுக்க கடன்‌ வாங்கிவிட்டு, அந்தக்‌ கடன்களை
அடைப்பதற்கு மீண்டும்‌ அவர்களிடமே கடன்‌ கேட்க (பணச்சடங்கு
வைத்து) நினைத்த மாமாவின்‌ துணிவுதான்‌ எங்களுக்கு சிரிப்பைக்‌
கொண்டூ வந்தது.

ஆனால்‌ மாமா இதொன்றுக்கும்‌ மசிந்து போகவில்லை என்பது
அவரது முதிசச்‌ சொத்தான பழம்‌ வீட்டுப்‌ பக்கமாக, ஒருநாள்‌
அதிகாலையியே -கே.பி.சுந்தராம்பாள்‌ தனது வெண்கலக்குரலில்‌, “ஞானப்‌
பழத்தை பிழிந்து என்று உச்சஸ்தாயியில்‌ பாடும்‌ சத்தம்‌
கேட்டபோதுதான்‌ எங்களுக்குப்‌ புரிந்தது. படுத்திருந்த பாயை சுருட்டி
வைக்கக்‌ கூட நேரமில்லாதவர்களாய்‌, நானும்‌ தம்பிமாரும்‌ ஓடிச்சென்று,
கிணற்றடியில்‌ நின்ற பெரிய பூவரசு மரத்தில்‌ ஏறி நின்று பார்த்தோம்‌.

உண்மைதான்‌. மாமாவின்‌ பழம்‌ வீட்டின்‌ கூரை ஓட்டைகளை
மறைக்கும்‌ வண்ணம்‌ வெள்ளை கட்டி, மலிவான கலர்‌ பேப்பர்களில்‌
வெட்டி, கூப்பன்‌ மாவின்‌ பசையினால்‌ ஒட்டிய தோரணங்கள்‌ காற்றில்‌
அசைந்தாட, முன்பக்கமாக மூன்று காலும்‌, நாலாவது காலாக அடுக்கிய
சிமெந்து கற்கள்‌ மேல்‌ தங்கி நின்ற மேசையும்‌, அதன்மேல்‌ விரித்த

சற்றுப்‌ போவ இருக்கிறது ப 35


Page 48வெள்ளைத்துணியும்‌, குத்துவிளக்குகளும்‌, கும்பமுமாக, மாமா
அசத்தித்தான்‌ விட்டார்‌.

அரைப்பனை உயரத்தில்‌ கட்டியிருந்த ஒலிபெருக்கி (லஸ்பீக்கர்‌
என்பது நாங்கள்‌ சூட்டிய பெயர்‌) வழியாகத்தான்‌ கே.பீ.சுந்தராம்பாள்‌
ஊரையே நித்திரை எழுப்பிக்கொண்டிருந்தார்‌. இனிமேலும்‌ பொறுத்திருக்க
முடியாதவர்களாய்‌ வேலிப்‌ பொட்டூக்குள்ளால்‌ (துவாரம்‌) நுழைந்து,
மாமாவின்‌ வீட்டு முற்றத்தில்‌ நின்ற நிலையில்‌ பாட்டுப்போட்டுக்‌
கொண்டிருக்கும்‌ ஒலிபெருக்கிக்காரரின்‌ அருகில்‌ போனோம்‌. எங்கள்‌
கோலத்தைக்‌ கண்டூ விட்டோ என்னவோ. அவர்‌ “கிட்ட
வராதேயுங்கோடா்‌ என்பதாக சைகை செய்தார்‌.

விடிய வெள்ளணவே யாரோ அன்பளிப்புத்‌ தொகையுடன்‌ வந்து
விட்டார்கள்‌ என்று நினைத்து, பரபரப்பாக வெளியில்‌ வந்த மாமா,
எங்களைக்‌ கண்டவுடன்‌ முகம்‌ மாறி - “போங்கோடா.. போய்க்குளிச்சு,
முழுகி வாங்கோடா”” என்று துரத்தாத குறையாக அனுப்பி வைத்தார்‌.

மீண்டும்‌ பொட்டூக்குள்ளால்‌ நுழைந்து நிமிர்வதற்கிடையில்‌
முதுகுகளில்‌ பட்‌ பட்‌ என்று அடி விழுந்தது. அப்பாவின்‌
கைங்கர்யந்தான்‌. அவருக்கும்‌ மாமாவிற்கும்‌ முந்திக்கூடவே உறவு
அவ்வளவு சுமூகமாக இல்லை. யாரும்‌ அங்கை போறதில்லை என்று
எங்களுக்கு சொல்வதாக, அம்மாவுக்கும்‌ முன்னெச்சரிக்கை செய்து
வைத்தார்‌.

அன்று பகல்‌ முழுக்க ஒலிபெருக்கி பாடிக்கொண்டேயிருந்தது.
ஆனால்‌ யாரும்‌ பணச்சடங்கிற்கு வந்ததாகத்‌ தெரியவில்லை.
பின்னேரமாக, பாட்டூ திடீரென்று நின்று போக, யாரோ உடைந்த குரலில்‌,
வசந்த முல்லை போலே என்று மைக்கில்‌ பாடிக்‌ கேட்டது. அது
அடூத்த வீட்டுக்கார சின்னத்துரையின்‌ மகன்‌ கேசு.
- ஓலிபெருக்கிக்காரரை எப்படியோ சம்மதிக்கவைத்து, ஸ்பீக்கரில்‌ பாடும்‌
சாதனையை நிலைநாட்டி விட்டான்‌.

எனக்கு கோபம்‌, கோபமாக வந்தது. மாமாவின்‌ உரித்தான மருமகன்‌
நான்‌ - விஸ்வநாதன்‌ வேலை வேண்டும்‌ - என்று பிழை விடாமல்‌

36 62. எஸ்‌. ப௩ல22%ன்‌

அவதி படட...


Page 49 

 

பாடக்கூடியவன்‌ இப்படி இருக்கவேண்டி வந்ததே என்ற கோபந்தான்‌.
ஆனால்‌ கணேசுவின்‌ அரங்கேற்றப்‌ பாடலும்‌ அரைவாசியில்‌ நின்று போனது.

மாமா காசு வாங்கித்‌ தராத கோபத்தில்‌ கொதித்துக்‌ கொண்டிருந்த
சின்னத்துரையர்‌ “வாடா இங்காலை .. ரோசமில்லையே உனக்கு”' யாரைச்‌
சொல்கிறார்‌ என்ற எங்களுக்குப்‌ புரிந்தது) என்று கர்ஜிக்கவும்‌, கணேசு
மைக்கை அப்படியே நிலத்தில்‌ போட்டுவிட்டு ஓடிவிட்டான்‌.

ஒலிபெருக்கிக்காரர்‌ ஏதோ பேசுவதும்‌, மாமா சமாளிப்பதும்‌ நிலத்தில்‌
கிடந்த மைக்கின்‌ ஊடாக ஊர்‌ முழுக்கக்‌ கேட்டது. இலங்கை வானொலி
நாடகம்‌ கேட்பது போல, றோட்டால்‌ போகிறவர்கள்‌ இதைக்‌ கேட்டூச்‌
சிரித்துக்‌ கொண்டே போனார்கள்‌.

இரவானது. நான்‌ அப்பாவிற்கு தெரியாமல்‌ எங்கள்‌ வீட்டின்‌ கோடிப்‌
பக்கமாகச்‌ சென்று மாமா வீட்டைப்பார்த்தேன்‌. ஓலிபெருக்கிக்காரர்‌ காசு
கொடுக்காத கோபத்தில்‌ எல்லாற்றையும்‌ கழற்றிக்‌ கொண்டு எப்போதோ
போய்விட்டார்‌. அங்கு வீட்டின்‌ முன்புறத்தில்‌ கட்டியிருந்த, வாடகைக்கு
எடூத்த பெட்றோமாக்ஸ்‌ விளக்கு, எண்ணெய்‌ குறைந்து போனதினால்‌,
கொஞ்சம்‌ கொஞ்சமாக ஒளியிழந்து, பக்‌ பக்‌ என்று அடித்து, நூர்ந்து
போவதற்கு தயாராகியது.

அந்த நிசப்தத்தைக்‌ கிழித்துக்‌ கொண்டு, ஒரு பாட்டு - போனால்‌
போகட்டும்‌ போடா. இந்தப்பூமியில்‌ நிலையாய்‌ வாழ்ந்தவர்‌ யாரடா -
மாமாதான்‌. அம்மா கையில்‌ லாம்புடன்‌, எதற்காகவோ கண்களை
சேலைத்‌ தலைப்பால்‌ துடைத்துக்‌ கொண்டூ எங்கள்‌ குசினிப்பக்கமாக
போவது தெரிந்தது.

அடூத்த நாள்‌ மாமா மீண்டும்‌ மறைந்து விட்டார்‌. அவருக்காக இரங்கி
சாமான்களை இரவல்‌ கொடுத்தவர்கள்‌. ஏதோவெல்லாம்‌ பேசிக்கொண்டு,
தங்கள்‌ பொருட்களை எடுத்துக்‌ கொண்டு போனார்கள்‌. மேசைக்கு
முட்டுக்‌ கொடுத்துக்‌ கொண்டிருந்த சிமெந்து கற்களை கொடூத்தவர்களும்‌
கொண்டு போக மாமாவின்‌ மூன்று கால்‌ மேசை கவிழ்ந்து கிடந்தது.
பணம்‌ வராத பணச்‌ சடங்கு நடந்ததிற்கு சாட்சியாக கலர்ப்‌ பேப்பர்‌
தோரணங்கள்‌ காற்றில்‌ அசைந்து கொண்டிருந்தன.

சேற்றுப்‌ டோ இருக்கிறது 37


Page 50நினைவு கரைய, புத்தக வெளியீட்டூவிழாவில்‌ சிறப்புப்பிரதிகள்‌
வழங்கிக்‌ கொண்டிருந்தார்கள்‌. வலிந்த சிரிப்புடன்‌ எழுத்தாளர்‌ நீட்டிய
வெள்ளித்தட்டில்‌ என்வலப்புகளைப்‌ போட்டூ, அவரவர்‌ வீட்டு புத்தக
அலுமாரிகளில்‌ அனேகமாக படிக்கப்படாமலே உறங்கப்‌ போகும்‌ அந்தப்‌
புத்தகங்களை எடூத்துக்‌ கொண்டிருந்தார்கள்‌. ஏதோ ஒரு ஞாபகம்‌
வந்து போனது.

38 62. எஸ்‌. ப5௩ல22 ன்‌

 


Page 51 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ரோச்‌ தலை

39

 

 

 


Page 5240

ஒரீஃ்கள்‌ இளமைக்காலத்தில்‌ அப்பா, அம்மா,
அயலவர்‌, ஆசிரியர்‌ என்று எங்களை எக்கச்சக்கமான
வார்த்தைப்‌ பிரயோகங்களுடன்‌ பேசியது போக, எங்கள்‌
ஊர்‌ பேசாமடந்தை ஒருத்திக்கு காதல்கடிதம்‌
கொடூக்கப்போய்‌, ஊரே திரண்டு பேசி, அதற்கு பிறகு
கல்யாணம்‌ பேசி, அது நடந்ததின்‌ பிறகு, இப்போது வீட்டில்‌
வாய்‌ திறந்து ஒரு வசனம்‌ பேசத்துணிவில்லாமல்‌ இருக்கும்‌
என்னைப்போன்ற வாயில்லாப்பூச்சிகளுக்கு இக்கட்டுரை
சமர்ப்பணம்‌.

பேசிப்பேசியே காலத்தை வீணாக்கியவர்கள்‌ என்று
எங்கள்‌ இனத்தைப்பற்றி ஒரு பேச்சு பலகாலமாக பேச்சு
வழக்கில்‌ இருக்கிறது. நான்‌ இதை ஒரு பேச்சுக்காக
சொல்லவில்லை.

கவிஞர்‌ சில்லையூர்‌ செல்வராஜன்‌, “எங்கள்‌ இமை
பாடலோடூ பிறந்து, பாடலோடூ மரணிக்கிறது. பிறந்தவுடன்‌
தாலாட்டு, வளர்ந்து ஊஞ்சல்‌ பாட்டு, துலா மிதிக்கப்பாட்டூ,
நெல்விதைக்கப்‌ பாட்டு, அறுவடைசெய்யப்‌ பாட்டு,
நெல்லை சூடூ மிதிக்கப்‌ பாட்டு, வண்டில்‌ பாட்டு
என்றெல்லாம்‌ நடந்து, இறுதியில்‌ ஒப்பாரிப்பாட்டோடூ
முடிகிறது” என்று சொல்வார்‌.

62. எஸ்‌. ப௩ல? சந்தன்‌

 


Page 53 

 

 

 

இப்படி எங்கள்‌ பாட்டிலே பாடிக்கொண்டிருந்த நாங்கள்‌
இப்போதெல்லாம்‌ எங்கள்‌ சாரீரம்‌ (சரீரம்‌ அல்ல) கெட்டுப்‌
போனதினாலோ என்னவோ, பாடாமல்‌ நிறையப்‌ பேசத்‌
தொடங்கிவிட்டோம்‌. 50 பாடல்கள்‌ நிரம்பிய திரைச்சித்திரம்‌ என்று
விளம்பரப்படுத்திய தியாகராஜபாகவதர்‌ காலத்து சினிமா, 50 பக்க
அடூக்கு வசனத்தை நிறுத்தாமல்‌ பேசும்‌ சிவாஜி காலத்து சினிமாவாக
மாறியது போல என்று வைத்துக்கொள்ளுங்களேன்‌.

எங்கும்‌ எதிலும்‌ அதே பேச்சு. சந்தர்ப்பம்‌ கிடைத்து, அத்தோடு
ஒலிவாங்கியும்‌ (மைக்‌ என்று சுத்தத்தமிழில்‌ சொல்லுங்கள்‌ என்று
நீங்கள்‌ சொல்வது கேட்கிறது) கிடைத்து விட்டால்‌ சிலரை
நிறுத்தச்சொல்வதென்னவோ பெரும்பாடாய்ப்‌ போய்விடும்‌.

உதாரணமாக புத்தக வெளியீட்டூவிழாவில்‌, தலைவர்‌,
அமைப்பாளர்‌ என்று ஒவ்வொருவராய்‌ வந்து பேசுபவர்‌ காதுக்குள்‌ -
“போதுமையா ரோதனை..... முடியும்‌ உமது பேச்சை.. புத்தகம்‌
வாங்காமல்‌ மிச்சச்சனமும்‌ போகப்போகுது” என்று பலமுறை
சொன்னாலும்‌, அவர்கள்‌ ஏதோ நகைச்சுவையாக சொல்கிறார்கள்‌
என்பதாக சிரிப்புடன்‌ தலையாட்டிக்கொண்டே -

“நான்‌ அதிகம்‌ பேசவிரும்பவில்லை. (இவர்கள்‌ தான்‌ மன்றாடிக்‌
கேட்கிறார்கள்‌ என்ற பொருள்படச்சொல்லி) ஒரேயொரு விஷயத்தை
மாத்திரம்‌ சொல்லி விடைபெறுகிறேன்‌ என்று சொல்லிய பிறகும்‌,
மணித்தியாலக்கணக்காகப்பேசி... இவர்களை என்ன செய்தால்‌
தகும்‌..?

முன்பெல்லாம்‌ அரசியல்‌ கூட்டங்களில்‌ மட்டும்‌ நான்‌ அனல்‌
பறக்கும்‌ பேச்சுக்கள்‌ கேட்டிருக்கிறேன்‌. இப்போது
சமயக்கூட்டங்களிலிருந்து, சங்கக்கூட்டங்கள்‌, திருமணவிழாக்கள்‌,
பிறந்ததினவைபவங்கள்‌ வரை சம்பந்தசம்பந்தமில்லாமல்‌
பேசித்தள்ளுகிறார்கள்‌. பேச வேண்டிய விஷயத்தைத்‌ தவிர
எதைப்பற்றியும்‌, எவரும்‌ பேசலாம்‌ என்றாகி விட்டது.

எங்கள்‌ காலத்தில்‌ மேடையில்‌ ஏறுவது என்பது மகா கஷ்டமான
கருமமாகக்‌ கருதப்பட்டது. மேடையில்‌ வைக்கப்பட்டிருக்கும்‌

சேற்றுப்‌ டபோ௨ இருக்கிறது 41

 


Page 54குத்துவிளக்குகளுக்கு “ கொஞ்சம்‌ எண்ணெய்‌ வீட்டு விடூ தம்பி”
என்று யாராவது கேட்டாலும்‌ என்ற பயத்திலேயே மேடைக்கு
அருகிலும்‌ போகமாட்டோம்‌. நிலைமை இப்படி இருக்க, மேடையில்‌
நான்‌ பேச வேண்டி நேர்ந்தது எவ்வளவு பயங்கரமான அனுபவமாக
இருந்திருக்கும்‌ என்று ஒரு தடவை நினைத்துப்பாருங்கள்‌.

எல்லா ஊர்களையும்‌ போலவே எங்கள்‌ ஊரிலும்‌ ஒரு வாசிகசாலை
இருந்தது. அரைச்சுவர்‌ எழுப்பி, நிலத்திற்கு வெள்ளைமணல்‌ புழுதி
பரவி விட்டூ, நீளமான வாங்கில்களும்‌, நின்ற நிலையில்‌ வாசிப்பதற்கு
வசதியான உயரமான மேசைகளும்‌, அவற்றில்‌ கயிற்றினால்‌
கட்டப்பட்டு காற்றினில்‌ அலையுண்டூ போகும்‌ வீரகேசரிப்‌ பேப்பருமாக
இருந்த அந்த வாசிகசாலையில்‌ வருடாவருடம்‌ எல்லா ஊர்களையும்‌
போலவே பாரதிக்கு விழா எடூப்பார்கள்‌ அந்த விழாவில்‌ நிச்சயம்‌
பேச்சுப்போட்டியும்‌ இருக்கும்‌.

ஒரு வருடம்‌ இப்படி எங்கள்‌ வாசிகசாலையில்‌ பேச்சுப்போட்டி
நடந்தபோது, எப்படியோ எனது பெயரும்‌ பங்குபற்றுவோர்‌ பட்டியலில்‌
இடம்‌ பெற்று விட்டது. நம்பினால்‌ நம்புங்கள்‌, இன்றுவரையும்‌ அது
எப்படி நடந்தது என்று எனக்கு தெரியாது.

“ஆளை விடுங்கள்‌ ஐயா” என்று காரியதரிசியின்‌ காலில்‌ விழுந்து
தப்பியிருப்பேன்‌. இல்லாவிட்டால்‌ அடுத்த ஊர்‌ தூரத்து சொந்தக்காரர்‌
(சொந்தம்‌ தான்‌ தூரம்‌.. ஊரல்ல) வீட்டுக்கு தற்காலிகமாக
குடிபெயர்ந்திருப்பேன்‌. ஆனால்‌ அதற்கு முதல்‌ எதிர்பாராதவிதமாக,
நான்‌ முன்னர்‌ குறிப்பிட்ட பேசாமடந்தைக்கு நான்‌ பேச இருப்பதாகச்‌
செய்தி போய்விட்டது.

அவள்‌ என்னை தனிமையில்‌ சந்திக்க நேர்ந்தபோது
(தற்செயலாகத்தான்‌), “நீங்கள்‌ பேச்சுப்போட்டியிலை பேசப்‌
போறீங்களாம்‌.. உண்மையே” என்று முதன்முறையாக வாய்‌ திறந்து
கிள்ளை மொழியில்‌ கேட்கவும்‌, “காதல்‌ பெண்கள்‌ கடைக்கண்‌
பணியிலே காற்றிலேறி அவ்விண்ணையும்‌ சாடூவோம்‌ “ என்ற பாரதி
சொன்னதிற்கொப்ப, பேச்சுப்போட்டியிலே பேசியே தீர்ப்பது என்று
அக்கணமே முடிவு செய்துகொண்டேன்‌.

42 62. எஸ்‌. ப௩ல2 ஆதன்‌

 


Page 55 

இரவு, பகல்‌, வீடு, வெளி, தோட்டம்‌, துரவு என்று பாராமல்‌
பேசிப்பழகினேன்‌ பன்னை, பாவட்டை, நுணா. கொய்யா என்று தாவரம்‌,
கொடி, செடி எல்லாவற்றிற்கும்‌ முன்னால்‌ நின்று பேசிப்பார்த்தேன்‌.
இப்படி என்‌ பாட்டில்‌ பேசிக்கொண்டூ திரியும்‌ என்னை (பேரனை)
பார்த்து “ பிள்ளைக்கு பேய்‌, பிசாசோ, என்னவோ பிடிச்சிட்டுது”
என்று என்‌ அம்மம்மா பரிதவித்து, வைரவ கோயிலில்‌ வடைமாலை
சாத்துகிறேன்‌ என்று நேர்த்திக்கடனும்‌ வைத்தாகிவிட்டது.

காலம்‌ தன்பாட்டில்‌ பேசாமல்‌ சென்று கழிந்து போக, அந்த
நாளும்‌ வந்தது. விழாவில்‌ ஆரம்பமே பேச்சுப்போட்டிதான்‌. பலிக்கு
என்று விதிக்கப்பட்ட ஆடூகளைப்போல நானும்‌, இன்னும்‌ சிலரும்‌
நின்றோம்‌. ஒவவொருத்தராக ஏறி, தட்டுத்தடுமாறி எப்படியோ பேசி
முடித்து இறங்கினார்கள்‌. என்முறை வந்தது. என்‌ நண்பர்கள்‌ வெகு
உற்சாகமாக விசில்‌ அடித்து என்னை வரவேற்றார்கள்‌. நானும்‌
உசாராகத்தான்‌ தொடங்கினேன்‌. ப

ஆனால்‌ மனனம்‌ செய்தது, பொறுத்த நேரத்தில்‌ மறந்து போய்‌
விட்டது. பாரதபோர்க்களத்தில்‌ பிரம்மாஸ்திரத்தை எய்வதற்கான
மந்திரத்தை மறந்து விட்ட காணனைப்போல நான்‌ பரிதவித்து நின்றேன்‌.
சுற்றுமுற்றும்‌ பார்த்தேன்‌. எல்லோரும்‌ என்னை வைத்த கண்‌
வாங்காமல்‌ பார்த்துக்கொண்டிருந்தது, மேலும்‌ நடுக்கத்தை
வரவழைத்தது. போதாக்குறைக்கு பெண்கள்‌ பகுதியில்‌, என்‌
பார்வையில்‌ தட்டுப்பட்ட “அவள்‌' பார்த்த பார்வை... “துட ... நீ
இவ்வளவுதானா...?” என்று சொல்வது போலப்பட்டது.

பரிதாபமாக பேச்சின்‌ அடுத்த பந்திக்கு போக முயற்சி செய்தேன்‌.
ஒரே ஒரு வசனம்‌. “பாரதி என்ன சொன்னார்‌..” அதை திரும்பத்‌
திரும்ப எத்தனை முறை சொன்னேனோ தெரியாது. சபையிலிருந்து,
ஒரு புண்ணியவான்‌ முத்தாய்ப்பாக ஒன்று சொன்னார்‌...
“தம்பி... பாரதி என்ன சொன்னார்‌ எண்டு சொல்றதெண்டால்‌
சொல்லும்‌. விருப்பமில்லையெண்டால்‌ விடூம்‌.. நாங்கள்‌ இண்டைக்கு
வீட்டை போகவேணுமெல்லே..”

சேற்றுப்‌ போ௨ இருக்கிறது 43


Page 56பாலச்சந்தர்‌ படத்தில்‌ வருவது போல “கைகொட்டிச்‌ சிரித்தார்கள்‌...
ஊரார்‌ சிரித்தார்கள்‌'

[1]

நீண்டகாலமாக என்னை காண்பவர்கள்‌ பலர்‌ பாரதி என்ன
சொன்னார்‌” என்ற கேட்டூக்கொண்டிருந்தார்கள்‌. பதில்‌ சொல்வதற்கு
இன்றுவரை அடுத்த பந்தி ஞாபகத்திற்கு வரவில்லையே... என்ன

செய்வது..?

44 ப 62. எஸ்‌. புல22த5ன்‌

 


Page 57 

 

 

 

 

 

 

 

தருன்ழு£ஷம்‌ கூண்பரும்‌..

45

 


Page 5846

 

ருவிழாவும்‌ அவிட்டும்‌..

திருவிழா சரி, அதென்ன “அவிட்டூ” என்ற கேள்வி
இதுவரையில்‌ உங்கள்‌ நெஞ்சில்‌ உதித்து, நாக்கு நுனி
வரை வந்திருக்கும்‌.

இளம்வயதில்‌ இருந்தகாலம்‌. (என்ன பெருமூச்சு
கேட்கிறதா?.. என்னுடையதுதான்‌). திருவிழாவென்றால்‌
எங்களையெல்லாம்‌ அவிட்டு (அவிழ்த்து) விட்டது மாதிரி
விட்டூவிடுவார்கள்‌.

முதல்‌ நாள்‌ காலையில்‌ போய்‌, அடுத்தநாள்‌ காலை
கோயில்‌ புழுதியில்‌ தீக்கோழிகள்‌ போல தலை புதைத்து
கிடக்கும்போது, தாய்மார்‌ வந்து மண்சுமந்த மேனியராக
கிடக்கும்‌ என்னைப்‌ போன்றவர்களை எப்படியோ அடையாளம்‌
கண்டுபிடித்து தட்டி எழுப்பி கொறகொறவென்று எங்கள்‌
ஒழுங்கைக்குள்ளால்‌ இழுத்துப்‌ போகும்‌ வரை உள்ள
இடைக்காலத்தில்‌ எங்களைத்‌ தேடவே மாட்டார்கள்‌.
அதைவிட “ஆனந்த சுதந்திரம்‌” வேறென்ன இருக்கப்‌
போகிறது.

“இவ்வளவு நேரமும்‌ எங்கை போனன்‌...”
“சந்தியிலை நிண்டு கதைச்சுக்‌ கொண்டுூ

நிண்டனியாம்‌...”

6. எஸ்‌. ப௩ல2௪ஆ்தரன்‌


Page 59 

“ஏனடா மாமாவின்ரை சைக்கிளை எடூத்தனீ..”

இப்படி அடிக்கொரு தடவை எங்கள்‌ காதுகளுக்கு நாராசமாக
விழும்‌ கேள்விகள்‌ எதுவும்‌ இல்லாமல்‌ இஷ்டம்‌ போல திரியக்கிடைப்பது,
எங்கள்‌ கோயில்‌ திருவிழாக்காலத்தில்‌ தான்‌.

நிமிர்ந்து நிற்கும்‌ இராசகோபுரத்துடன்‌, கொடியேறி, பத்து நாள்‌
திருவிழா நடக்கும்‌ கோயிலல்ல, எங்களுடைய கோயில்‌. கண்ணே
கண்ணே என்று இரண்டே இரண்டூ திருவிழா. அதுவும்‌ முதல்நாள்‌
பின்னேரம்‌ வரை சர்வாதிகார நாட்டின்‌ தேர்தல்‌ மாதிரி நடக்குமா நடக்காதா
என்று சந்தேகமாகத்தான்‌ இருக்கும்‌.

மப்பும்‌ மந்தாரமுமாக இருந்த வானம்‌ திடீரென்று வெளித்து பிரகாசம்‌
அடைவது போல, யாரோ ஒருவர்‌ “ திருவிழா நடத்தாவிட்டால்‌ எங்கள்‌
மானம்‌ என்னாவது “ என்ற தொனியில்‌ உரத்த குரல்‌ கொடுக்க,
கிண்டி வைத்திருக்கும்‌ வெங்காயமும்‌, பிடுங்கி வைத்திருக்கும்‌
மிளகாயும்‌ நல்ல விலை போகும்‌ என்ற துணிவில்‌, அவரவர்‌ தங்கள்‌
பங்குக்காசு தரலாம்‌ என்று உற்சாகமாகச்‌ சொல்ல,

ஊரில்‌ நிற்கும்‌ ஒரேயொரு வாடகைக்காரில்‌, சேர்ட்டின்‌
பொத்தான்கள்‌ ஒழுங்காகப்‌ போடவும்‌ அவகாசமில்லாதவர்களாய்‌
கட்டியிருந்த சாறங்களுடனேயே பாய்ந்து ஏறி, சின்னமேளம்‌,
பெரியமேளம்‌, சாத்துப்படி, சப்பறம்‌, வாணம்‌, வெடி ஒழுங்கு பண்ண
சிலர்‌ புறப்பட்டு விடுவார்கள்‌.

இன்னுமொரு பிரிவினர்‌ சிகரத்துக்கும்‌, மணிமாலைச்சோடனைக்கும்‌,
லைற்‌ எஞ்சினுக்கும்‌, லவுட்‌ ஸ்பீக்கருக்கும்‌ (எல்லாம்‌ ..அசல்‌ தமிழ்ச்‌
சொற்கள்‌) சொல்ல சைக்கிளிலும்‌, நடையாகவும்‌ புறப்பட்டூவிடூவார்கள்‌.
கதை எங்கும்‌ ஓடிப்‌ பரவி குதூகலம்‌ எல்லோரையும்‌ பற்றிக்‌ கொள்ளும்‌.

அடைவு வைத்த நகைகள்‌ தற்காலிகமாக மீளப்படும்‌ அல்லது
இரவல்‌ பெறப்படும்‌. செல்வச்‌ சந்நிதி கோயில்‌ தீரத்தத்திற்கு போட்டு
விட்டு, பத்திரமாக பூச்சிக்‌ கொட்டை போட்டூ டிரங்குப்‌ பெட்டிக்குள்‌
வைத்திருந்த பட்டுப்‌ பாவாடை சட்டைகள்‌ மீண்டும்‌ வெளிச்சம்‌ காணும்‌.

அண்ணன்‌ அல்லது அத்தான்‌ கொழும்பில்‌ இருந்து கொண்டூ வந்த
டெரிலின்‌, பொலியிஸ்டர்‌ சேர்ட்டுக்களை மம்மல்‌ இருட்டுக்குள்‌ கொண்டு

சேற்றுப்‌ டோ௨ூு இ.ருக்சிறது 47


Page 60போய்‌, வயற்‌ கிணற்றின்‌ படியில்‌ வைத்து லக்ஸ்‌ சவுக்காரம்‌ (எங்கள்‌
முகத்துக்கு போட்ட கையோடு) போட்டூ அலம்பி, காற்றுப்‌ பட கொடியில்‌
விரித்து, நாங்களும்‌ தயாராகுவோம்‌.

அடூத்தநாள்‌ காலை, எங்கள்‌ கிராமத்தை ஊடறுத்துச்‌ செல்லும்‌
ஒரேயொரு கல்‌ றோட்டில்‌, முன்னேயும்‌ பின்னேயும்‌ கட்டிய
ஸ்பீக்கர்களுடன்‌ எங்கள்‌ ஊர்‌ வாடகைக்கார்‌ “இரண்டு மனம்‌ வேண்டும்‌”
என்று பாடிச்‌ செல்ல, நாங்கள்‌ அதன்‌ பின்னால்‌ “ஒரே மனமாக”: ஓடிச்‌
சென்று, வீசப்படும்‌ பல வர்ண நோட்டீஸ்களை பொறுக்கி தடக்கி
விழுவோம்‌.

ஓவ்வொரு சந்தியிலும்‌ காரை மறித்து,. எங்கள்‌ ஊர்‌ சிம்மக்குரலோன்‌
(யார்‌ இந்தப்‌ பட்டம்‌ இவருக்கு கொடுத்தது என்று யாருக்கும்‌ தெரியாது
- இவருக்குந்தான்‌) கலைஞர்‌ மு.க வின்‌ குரலில்‌, சின்ன மேளச்‌ செற்றின்‌
சதுரக்‌ கச்சேரி பற்றி விஸ்தாரமாகச்‌ சொல்லி முடிப்பார்‌.

மாலை அண்மிக்க அணமிக்க எங்கள்‌ உற்சாகமும்‌ அதிகரிக்கும்‌.
சரியான நேரத்தில்‌ லைற்‌ எஞ்சின்‌ பலத்த ஒலியுடன்‌ ஸ்ராட்‌ பண்ண,
ஜெகஜ்ஜோதியாக மின்விளக்குகள்‌ எரிய, கோயிலில்‌ சுற்றாடல்‌
முழுவதும்‌ வெளிச்சம்‌ பெறும்‌. முன்னால்‌ கட்டிய சிகரத்தின்‌ மின்விளக்கு
அலங்காரங்கள்‌ தனிச்‌ சோபை தரும்‌. வழக்கத்தில்‌ சாதாரண புழுதியாக
இருந்த தெற்கு வீதி, வடக்கு வீதி எல்லாம்‌ பொன்னிறமாகத்‌ தெரியும்‌.

வாங்கில்களை நெருக்கமாக அடுக்கிச்‌ செய்த மேடையில்‌ மேளக்‌
கச்சேரி தொடங்கும்‌. சில பெரியவர்கள்‌ அங்கங்கு இருந்து கொண்டு
தங்களுக்குள்‌ கதைப்பதும்‌, இடையிடையே தலைகளை ஆட்டூவதுமாக
இருப்பார்கள்‌. இவர்கள்‌ ஏதோ சங்கீதம்‌ தெரிந்து தலையை அசைப்பதாக
நினைத்துக்‌ கொண்டு கோயில்‌ மேளத்தின்‌ தவில்காரர்‌ தனது முதலாவது
“மேடை”க்‌ கச்சேரியினை அமர்க்களமாக நடத்தி முடிப்பார்‌.

“மேல்‌ மேளம்‌'” என்ற நாதஸ்வரக்காரர்‌, கழுத்து நிறையச்‌
சங்கிலிகளுடன்‌, நாதஸ்வரங்களில்‌ பொன்னாலான “டாலர்கள்‌'' தொங்கி
மின்ன - மேடையில்‌ அமர்ந்து சீவாளியில்‌ “பீப்பீ” என்று இரண்டு
தடவை ஊதித்தொடங்க கூட்டம்‌ சற்றுச்‌ சேர்ந்து விடும்‌. இதற்காகவே
காத்திருந்தவர்கள்‌ போல, “கடதாசி'' விளையாடூபவர்கள்‌, பின்‌ வீதியில்‌,
துணிவிரித்து, கச்சேரி தொடங்குவார்கள்‌. அவர்களைச்‌ சுற்றியும்‌ ஒரு
கூட்டம்‌ நிற்கும்‌.

48 62. எஸ்‌. ப௩லச்சஆ்தன்‌

 


Page 61 

அடுத்து, சதிர்க்‌ கச்சேரி என்ற சின்னமேளத்தின்‌ ஆர்மோனியக்காரர்‌
துரித கதியில்‌ வாசித்து, “அம்பா..தாயே.. ஜகதீஸ்வரி'” என்று கரகரத்த
குரலில்‌ பாடத்‌ தொடங்கத்தான்‌, ஒழுங்கைகளின்‌ ஊடாக, பட்டூப்‌
பாவாடைகள்‌ சரசரக்க, தலையில்‌ அணிந்த பூக்களும்‌, பூசிக்கொண்ட
பவுடரும்‌ கலந்து ஒரு வித்தியாசமான மணம்‌ பரவ, எங்கள்‌ ஊர்க்‌
குமர்ப்‌ பெண்கள்‌, தாய்மார்‌ காவலாக உடன்வர, “குசுகுசுப்பு “களும்‌,
“ஜிளுக்‌”” சிரிப்புகளுமாக வரத்‌ தொடங்குவார்கள்‌.

அந்த நேரம்தான்‌, மீசை அரும்பும்‌ பருவத்தில்‌ இருந்த நாங்களும்‌,
“கரு கரு“மீசைகளுடன்‌ காட்சி தரும்‌ எங்களை விட சற்று மூத்த
அண்ணன்மாரும்‌ உசாரடைந்து, கேந்திர ஸ்தானங்களில்‌ நின்று கொண்டு
அவர்களைப்‌ பார்க்க, அவர்களும்‌ கூடவரும்‌ தாய்மாருக்குத்‌ தெரியாமல்‌
எங்களைப்‌ பாரத்து கள்ளப்‌ பார்வை வீசிச்‌ செல்ல, நாங்கள்‌ பிறந்ததின்‌
பயனை அப்பொழுதே பெறுவோம்‌.

சின்ன மேளம்‌ நடக்கும்‌ போது கூட்டம்‌ நிரம்பி வழியும்‌. (வழிதல்‌
என்பதற்கான வேறு ஒரு அர்த்தமும்‌ உண்டு) கட்டிய கயிறுகளின்‌
ஊடாக தலையை உள்‌ நுழைக்க முயற்சிப்பவர்களுக்கு, தலையிலும்‌,
முதுகிலும்‌ ஊர்ப்‌ பெரியவர்‌ ஒருவர்‌ வேப்பங்குழைக்‌ கொத்தால்‌ அடித்து
விரட்டுவார்‌.

போதாதற்கு சதிராடும்‌ பெண்கள்‌ : இடையிடையே துரிதகதியில்‌
சுற்றி வந்து, புழுதியை கால்களினால்‌ கெந்தி எற்றி வீசுவார்கள்‌.
பக்திப்‌ பாடலில்‌ தொடங்கி, “மாதவிப்பொன்‌ மயிலாள்‌ தோகைவிரித்தாள்‌”
போன்ற சினிமாப்பாடல்களுக்கு அபிநயம்‌(?) பிடிக்க, நாங்கள்‌ பெண்கள்‌
பக்கத்தில்‌ இருக்கும்‌ எங்கள்‌ “இலக்கு'களை பார்த்து கண்களால்‌
பாணம்விட, அவர்கள்‌ தாய்மாருக்குப்பின்னால்‌ பயத்துடன்‌
பதுங்கிக்கொள்வார்கள்‌.

எங்களுக்குப்‌ பக்கத்தில்‌ நின்றுகொண்டே அவர்களின்‌ அண்ணன்‌,
மச்சான்‌, மாமன்‌ என்ற “வில்லன்கள்‌' எங்கள்‌ பார்வைப்‌ பரிமாற்றங்களை
நோட்டமிட்டூுக்கொண்டிருந்தால்‌ அவர்களுக்கு பயம்‌ வரத்தானே செய்யும்‌.
தொடர்ந்து எங்களுக்குள்‌ கைகலப்புகள்‌, சச்சரவுகளும்‌ அதனால்‌
சலசலப்புகளும்‌ வரும்‌.

அனேகமாக சதிராட்டத்தில்‌ கடைசியாக வேலன்‌ - வள்ளி நடனம்‌
நடக்கும்‌. வள்ளி “கொஞ்சும்‌ கிளி குருவி மைனாவே கூட்டமாய்‌ இங்கே

சேற்றுப்‌ டோ இருக்கிறது ன 49


Page 62 

வராதர்‌.. சோ..சோ” (நமக்கு தெரிந்த அவரல்ல..) என்று பறவைகளை
விரட்டிக்கொண்டிருக்க, வேலன்‌ வேடனாக, வேங்கைமரமாக,
விருத்தனாகவெல்லாம்‌ வருவார்‌.

தாடிக்கிழவனாக வள்ளியிடம்‌ தேனும்‌, தினைமாவும்‌ வாங்கி உண்டு,
விக்கி, விக்கி தண்ணீர்‌ கேட்கும்போது, வருடாவருடம்‌
எல்லாத்திருவிழாக்களிலும்‌ அனேகமாக பார்த்த இந்த சங்கதியை,
முதன்முதலாக பார்ப்பதுபோன்ற ஆனந்தத்துடன்‌. ஆச்சி. குஞ்சியாச்சி
எல்லோரும்‌ பொக்குவாய்காட்டி விழுந்து.விழுந்து சிரிப்பார்கள்‌.

பொறுத்தநேரம்‌ பார்த்து, கோயில்‌ ஐயர்‌ உள்ளிருந்து கோயில்‌
மணியை அடித்து “சுவாமி சுற்றும்‌ நேரம்‌ வந்துவிட்டது” என்று
ஞாபகப்படூத்துவார்‌.

அவ்வளவுதான்‌. உற்சாகம்‌ அப்படியே குறைந்து விடும்‌. தூக்கக்‌
கலக்கத்தடன்‌ எதிர்ப்‌ பக்கத்தில்‌ உள்ள பெண்கள்‌ பக்கமாக கண்களை
விட்டூ பார்க்க - எங்கள்‌ பார்வைகளின்‌ இலக்குகளும்‌ அதே தூக்கக்‌
கலக்கத்துடன்‌, ““இனியென்ன.. அடூத்த வருசத்‌ திருவிழாவில்‌ தான்‌...”
என்ற ரீதியில்‌ சோகமாக பார்ப்பதும்‌ உண்டு. பாராமுகமாகச்‌ செல்வதும்‌
உண்டு.

அதுசரி. ஆரம்பத்தில்‌ சொன்ன “அவுட்டுக்கு என்ன நடந்தது என்று
கேட்கிறீர்களா? சில தமிழ்த்திரைப்‌ படங்களில்‌ ““தெய்வப்பிறவி'” என்பது
மாதிரி தலைப்பு வைத்து விட்டூ, படம்‌ முழுவதுமே அதைப்பற்றி ஒன்றும்‌
சொல்லாமல்‌, கடைசி கடைசியாக வணக்கம்‌ போடூவதற்கு சற்று
முன்னதாக, கதாநாயகியின்‌ அம்மா, கதாநாயகனைப்‌ பார்த்து “தம்பி..
நீ ஒரு தெய்வப்பிறவி” என்று சொல்வார்‌. அதே மாதிரித்தான்‌.

வடக்கு வீதியில்‌ சுவாமி நிற்கும்‌ போது, அருகில்‌ இருக்கும்‌
பனங்காணியில்‌ இருந்து, ஊரே கலங்கும்படி ““அவிட்டு”” (பீரங்கி வெடி
என்றும்‌ சொல்வார்கள்‌) விடுவார்கள்‌. அவிட்டூ என்று பெயர்‌ வந்ததிற்கு
“வெளியே” என்று பொருள்படும்‌ ஆங்கிலச்சொல்லின்‌ திரிபாக - அதாவது
மேல்‌ நோக்கி வெளிச்‌ செல்வதினால்‌ வந்திருக்கலாம்‌.
புழுகுபவர்களுக்கும்‌ “அவிட்டு'” விடுகிறான்‌ என்றும்‌ சொல்வார்கள்‌.
நான்‌ அப்படியில்லை.

“அவிட்டூ”” வந்து விட்டது. திருப்திதானே.

444

50 ப 62. எஸ்‌. புலன்‌

 

 


Page 63 

 

 

 

 

 

 

 

 


Page 64ட. ர னை மரதன்‌

52

ன அகல்‌ ப ப ப ப ரா எர கதித எ கல சதகர்கிகிவத்தகக் வி வியக்கத்தக்க ட அப்த்‌ எட தனம அணம்யங் திகம்‌ விவ்‌ வமர செ யம்ல டு பழய யி உய உ வட ச பதிவிவி வய

ம எங்கு வாழ்ந்தாலும்‌ முருகனுக்கு கோயில்‌
கட்டூுலார்கள்‌. பல்‌ பொருள்‌ அங்காடி (கடை)
தொடங்குவார்கள்‌. முடிந்தால்‌ வானொலி ஒன்றும்‌, பத்திரிகை
ஒன்றும்‌ தொடங்குவார்கள்‌ என்று நான்‌ எழுதி 15
ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. இது யதார்த்தமான கூற்று
என்று நான்‌ இப்போது உணர்கிறேன்‌.

லண்டன்‌ தமிழ்‌ பத்திரிகையில்‌ ரூட்டிங்‌ முருகன்‌
கோயிலில்‌ தூக்குக்‌ காவடி எடூத்தார்கள்‌ என்ற படத்துடன்‌
செய்தி வந்தால்‌, ரோரன்ரோ பத்திரிகையில்‌ கனடா கந்தசாமி
கோயிலில்‌ தூக்குக்காவடி என்று அதே மாதிரி படத்துடன்‌
செய்திகள்‌ வருகின்றன.

காவடி எடூப்பதென்பது எங்கள்‌ வாழ்க்கையோடூ
நீண்டகாலமாக இணைந்து விட்டதொன்று. ஆதி காலத்தில்‌
நீண்ட கழியின்‌ இரண்டு பக்கத்திலும்‌ தெய்வத்துக்குரிய
பொருட்களை கட்டித்தொங்கவிட்டுச்‌ சென்றவர்கள்‌
காலப்போக்கில்‌ அந்தக்‌ கழிக்கே அலங்காரம்‌ செய்யும்‌
வகையில்‌ மயிலிறகுகளைச்‌ சேர்த்து காவடிகள்‌
போலாக்கினர்‌ என்பர்‌.

தூக்குக்‌ காவடி என்பது மிகமிக அபூர்வமாக இருந்த
காலம்‌. சிறிய வயதில்‌ அப்படி அபூர்வமாக நடக்கும்‌
தூக்குக்காவடியைக்‌ கண்டாலே நெஞ்சம்‌ பதைபதைக்க ஓடி
மறைந்திருக்கிறேன்‌. இன்றும்‌ அந்த மனேபாவம்‌ மாறவில்லை.

62. எஸ்‌. பா௩ல2சநதன்‌

 

 


Page 65 

இது இப்படியிருக்க, என்‌ சிறு வயதுக்காலத்தில்‌, அம்மா ஒருநாள்‌
திடீரென்று “ தம்பி... நீ காவடி எடுக்க நேர்ந்திருக்கிறேன்‌'” என்றவுடன்‌ நான்‌
ஒருகணம்‌ விறைத்துப்போய்‌ இருந்து விட்டேன்‌. போதாதற்கு என்‌ தம்பி
அருகில்‌ வந்து “அண்ணை... எந்தக்‌ காவடி தெரியுந்தானே”” என்று சொல்லிக்‌
கண்களைச்‌ சிமிட்டவும்‌, நான்‌ முற்றுமுழுதாக பயத்தில்‌ உறைந்து போனேன்‌.

அன்றிரவே நான்‌ யாருக்கும்‌ தெரியாமல்‌ தலை மறைவாகி, அடுத்த
ஒழுங்கையில்‌ இருந்த மாமா வீட்டு மாட்டுத்‌ தொழுவத்தில்‌ அடைக்கலம்‌
புகுந்தேன்‌. கண்ணனும்‌ இயேசுநாதரும்‌ தங்குவதற்கு பொருத்தமாக
தேர்ந்தெடுத்த மாட்டூத்தொழுவத்தில்‌ நான்‌ சேர்ந்தது ஒன்றும்‌ எனக்கு
குறைவாகப்படவில்லை. ஆனால்‌ நேரம்‌ செல்ல, செல்லத்தான்‌ அவர்கள்‌
எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள்‌ என்று விளங்கியது.

என்னதான்‌ எரித்து வீபூதியாக்கி நெற்றியில்‌ இட்டாலும்‌, அதன்‌
மூலவடிவத்தில்‌ சாணம்‌ தாங்க முடியாத நெடியுடன்‌ இருந்தது அது
போக நிலம்‌ முழுவதும்‌ ஈரமாக வேறு இருந்தது. கொட்டிலுக்குள்‌ ஈரம்‌
வருவதற்கு ஒரேயொரு காரணம்‌ .மாத்திரம்‌ இருக்கமுடியும்‌ என்று
தெரிந்ததினால்‌ கால்களை நிலத்தில்‌ வைக்கவே கூசியது. மாடுகளுக்கு
மாத்திரம்‌ அவ்வப்போது ஊசி போட்டுக்‌ கொண்டிருந்த நுளம்புகள்‌
எனது சிறுபராயத்தின்‌ மெல்லிய தோலில்‌ இலகுவாக தடுப்பூசி
போட்டூக்கொண்டிருந்தன.

இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும்‌ நான்‌ பொறுமை காத்து
விடிகிற நேரமாகி விட்டது. ஏதோ சரசரப்பு கேட்க எட்டிப்‌ பார்த்தேன்‌.
மாமா செம்புடன்‌ வந்து கொண்டிருந்தார்‌. அவரிடம்‌ அகப்பட்டூ விட்டால்‌
அவ்வளவுதான்‌. தூக்குக்காவடியில்‌ தொங்குவதை நினைத்து ஒருமுறை
உடம்பை சிலிர்த்துக்‌ கொண்டேன்‌.

“தோள்‌ கண்டார்‌ தோளே கண்டார்‌” என்று ஒரு பாடல்‌ வரி
இருக்கிறதல்லவா. அதுமாதிரி மாமாவின்‌ அரை நித்திரைக்‌ கண்களுக்கு
என்‌ மெல்லிய கால்கள்‌ மட்டும்‌ தெரிந்திருக்கின்றன. நேற்று மாலை
கட்டில்‌ (மாட்டுத்‌ தொழுவம்‌) கட்டிப்போன பசுவின்‌ கால்கள்‌ ஒரு
ராத்திரிக்குள்‌ இப்படி மனிதக்கால்களாக மாறியதைக்‌ கூட அவர்‌
நம்பியிருப்பார்‌. ஆனால்‌ அதுவே சாறம்‌ கட்டிக்‌ கொண்டூ நின்றதை
எவர்தான்‌ நம்புவார்‌... சொல்லுங்கள்‌.

சற்றுப்‌ போ௨ஹ இ.ருக்சபிறது 53


Page 66பால்ச்‌ செம்பை கொட்டிலின்‌ உச்சியை நோக்கி எறிந்து விட்டூ ௧..
க... என்று கத்திக்கொண்டு போய்‌, குடை சாய்ந்த வண்டிபோல விழுந்தார்‌.
(நான்‌ அவரது வண்டி'யையும்தான்‌ சொன்னேன்‌)

அதென்ன ௧..க... என்று கேட்கிறீரகளா? அவர்‌ “கள்ளன்‌” “கள்ளன்‌''
என்றுதான்‌ கத்தினார்‌. ஆனால்‌ மிகுதி வெளியில்‌ கேட்கவில்லை. அவர்‌
அதற்குப்‌ பிறகு நீண்டகாலமாக அப்படி முதல்‌ எழுத்தில்தான்‌ கதைத்தார்‌.
த.. வ... போ.. இ.. என்றால்‌, “தம்பி வயலுக்கு போக இல்லையே”
என்று அர்த்தமாகும்‌. எப்படியோ மாமியும்‌ பிள்ளைகளும்‌ அவரது சங்கேத
மொழியை புரிந்து கொண்டார்கள்‌.

வெளியில்‌ பலத்த ஆரவாரம்‌ கேட்கவும்‌, சதாம்‌ ஹுசெயினைப்‌
“போல நான்‌ மாட்டூத்‌ தொழுவத்திலிருந்து வெளி வந்தேன்‌. அபிமன்யுவைக்‌
கண்ட துரியோனாதியர்‌ போல என்‌ சொந்தக்காரர்‌ எல்லோரும்‌ திகைத்துப்‌
போய்‌ நின்றனர்‌. பிறகுதான்‌ பேசத்தொடங்கினர்‌. பேச்சென்றால்‌ அப்படிப்‌
பேச்சு. அவர்களின்‌ பேச்சுக்கு மத்தியில்‌, அம்மா என்னைக்‌ “கொற
கொற வென்று இழுத்துப்போய்‌, வயல்‌ கிணற்றில்‌ அவசரம்‌ அவசரமாக
என்‌ தலையில்‌ தண்ணீர்‌ வார்த்து, துடைத்ததும்‌ துடைக்காததுமாய்‌,
பட்டுவேட்டி உடுத்தி மீண்டும்‌ “கொற கொற..' அம்மன்‌ கோயில்‌ வாசலில்‌
நின்றோம்‌.

அங்கே எங்களுக்காக பலர்‌ காத்துக்‌ கொண்டுூ நின்றார்கள்‌. கோயில்‌
ஐயர்‌, காவடிக்காரர்‌, மேளகாரர்‌. சுற்றுமுற்றும்‌ பார்த்தேன்‌. வயல்‌
கிணற்றுத்‌ துலாவைத்‌ தவிர வேறு எந்த துலாவையும்‌ காணவில்லை.

எனக்களவான சிறிய காவடி ஒன்றுமட்டூம்‌ நிலத்தில்‌
வைக்கப்பட்டிருந்தது. என்னைக்கண்டவுடன்‌, அவசர அவசரமாக ஐயர்‌
கையிலிருந்த மணியை அடித்துக்கொண்டே என்னை அருகில்‌
அழைத்து, என்‌ நெற்றியில்‌ திருநீறு இட்டு (ஏதோ ஞாபகம்‌ வந்து
மூக்கைச்‌ சுழித்துக்கொண்டேன்‌) காவடியைத்‌ தூக்கி என்‌ தோளில்‌
வைத்து விட்டார்‌. அது மெதுவானதாக, காற்றுப்‌ போல இருந்தது.
போதாதற்கு மயிலிறகுகள்‌ காற்றில்‌ அசைந்து அழகாகவும்‌ இருந்தன.
பிறகென்ன..

54 62. எஸ்‌. புல22ஆ்தன்‌

 


Page 67வு

நான்‌ உற்சாகத்தடன்‌ ஒரு மைல்‌ தொலைவில்‌ இருக்கும்‌ எங்கள்‌
கோயிலை நோக்கி நடைபோட்டேன்‌. அம்மா தலையில்‌ தீச்சட்டியுடன்‌
என்னைப்‌ பின்‌ தொடர்ந்தார்‌.

அம்மன்‌ கோயிலை விட்டூ வெளியேறி, சுடூ மணலில்‌ கால்வைத்ததும்‌
சூடு தாங்காமல்‌ நான்‌ துள்ளிக்குதிக்கத்‌ தொடங்க, அதுவரையும்‌
அசட்டையாக மேளத்தின்‌ ஒரு பக்கத்தில்‌ மாத்திரம்‌ தட்டிக்கொண்டூ
வந்த மேளகாரர்‌, எனக்கு “உரு” வந்து விட்டது என்று நினைத்தோ
என்னவோ ஆட்டத்திற்கேற்ற துரிதகதியில்‌ “மூசி.. மூசி”
அடிக்கத்தொடங்கினார்‌. கூடவந்த சொந்தக்காரப்‌ பெண்மணிகள்‌
எல்லோரும்‌ “அரோகரா” என்று ஓஒலியெழுப்பத்‌ தொடங்கினார்கள்‌.
தொடங்கியாகி விட்டது. இனி நிறுத்தமுடியாது. ஆட்டந்தான்‌. அம்மா
என்னைப்‌ பார்த்து “என்ரை அப்பனே” என்ற சொல்லி அழத்தொடங்கினார்‌.
முன்னுக்குப்‌ போய்க்கொண்டிருந்த பெரியப்பா, சடுதியில்‌ நின்று
என்னையும்‌ காவடியையும்‌ ஒன்றாக தூக்கி தோளில்‌ வைத்துக்‌ கொண்டு
நடக்கத்தொடங்கினார்‌.

கிடைத்த முக்கியத்துவத்தை இழக்க நான்‌ விரும்பவில்லை.
“இறங்கப்‌ போகிறேன்‌” என்ற மாதிரி முரண்டூ பிடிக்கவும்‌, பெரியப்பா
என்னை இறக்கி விட்டு, கண்கலங்கப்‌ பின்தொடர்ந்தார்‌. என்‌ ஆட்டம்‌
தொடர்ந்தது. யாரோ கூட வந்தவர்கள்‌.. நான்‌ துள்ளி ஆடும்‌ காரணத்தைப்‌
புரிந்து கொண்டோ என்னவோ, அருகில்‌ இருந்த கிணற்றில்‌ இருந்து
தண்ணீரை குடம்‌ குடமாக அள்ளி வந்து, நான்‌ சென்ற பாதையில்‌
நிலத்தில்‌ ஊற்றி காரியத்தைக்‌ கெடூத்தார்கள்‌.

நிலத்தின்‌ சூடு தணியவும்‌, என்‌ ஆட்டத்தின்‌ வேகமும்‌ குறைந்தது.
இருந்தாலும்‌ ஆடிய களைப்பினால்‌ கால்கள்‌ பின்ன, நடைபோட்டேன்‌.
வழி, வழியே தங்கள்‌ வீட்டு வாசல்களில்‌ கும்பம்‌ வைத்துக்‌ காத்திருந்த
பல பெண்மணிகள்‌, நான்‌ தள்ளாட்டத்தடன்‌ அண்மிக்கவும்‌, சேலைத்‌
தலைப்புகளினால்‌ தங்கள்‌ கண்களைத்‌ துடைத்துக்‌ கொண்டார்கள்‌.

அவர்களுக்குப்‌ பின்னால்‌ நின்று கொண்டு அவர்களின்‌ சின்ன
மகள்மாரும்‌ எனக்காக இரங்கி அழுதார்கள்‌. (அப்படி அழுத சின்ன
மகள்மாரில்‌ ஒருவர்தான்‌, இப்பவும்‌ என்னை பல விஷயங்களிற்காகவும்‌
“தாவடி” எடுக்க வைத்துக்‌ கொண்டிருக்கும்‌ என்‌ மனைவியானது ஒரு
தனிக்கதை).

சேற்றுட்‌ டோ௨வ இருக்கிறது 55


Page 68எப்படியோ தள்ளாடி நடைபோட்டு, எங்கள்‌ கோயிலை அணிமித்ததும்‌,
உள்ளே சென்றதும்‌, கோயில்ஐயா திருநீறு இட்டு, காவடியை
என்னிடமிருந்து பெற்றுக்‌ கொண்டதும்‌ கனவு போல இருந்தது. உலக
சாதனை செய்தவனைப்‌ போல சுற்றுமுற்றும்‌ பார்த்து புன்னகை செய்ய
முற்பட்டேன்‌. ஆனால்‌ அதற்கு முன்னால்‌ மயக்கம்‌ வந்திருக்க வேண்டும்‌.

மயக்கம்‌ தெளிந்தபோது மாமாவின்‌ மடியில்‌ கிடந்தேன்‌.
ஆமாம்‌..அந்த மாமாதான்‌. எ...ரா..எ..செ.. என்றார்‌. “என்னடா..ராசா..என்ன
செய்யுது “ என்று அவர்‌ கேட்டதாக பலர்‌ இப்பொழுதும்‌ நினைத்துக்‌
கொண்டிருக்கிறார்கள்‌. ஆனால்‌ அவர்‌ சொன்னது இப்படித்தான்‌ என்று
எனக்கு தெரியும்‌...

“என்னடா ராஸ்கல்‌ எனக்கு செய்ததுக்கு...”

56 6. எஸ்‌. ப௩ல22ரன்‌

ரகு


Page 69 

 

 

 

 

 

 

தக்கற்று நுற்டமை

57


Page 7058

1)படியும்‌ தொடங்கியாகிவிட்டதா? ஏதாவது
இடக்கு முடக்கான சொல்லை தலைப்பில்‌ பாவிப்பது. பிறகு
அதற்கு சம்பந்தமில்லாமல்‌ கட்டுரையை (1) எழுதி முடிப்பது.
எத்தனை நாட்களுக்குத்தான்‌ இப்படிச்‌ செய்யப்போகின்றீரகள்‌
என்று நீங்கள்‌ கொதிப்பது எனக்கு தெரியாமலில்லை. அவிட்டூ
என்று எழுதியதைத்தானே சொல்கிறீர்கள்‌. இந்தத்‌ திக்கற்று
அப்படியில்லை.

ஏதோ வாழத்‌ திக்கற்று (வாழ வழியற்று) நாடகம்‌
போட்டோம்‌ என்றும்‌ நினைத்து விடாதீர்கள்‌. இந்தத்‌ திக்கற்று,
ரிக்கற்‌ என்று நாங்கள்‌ இப்போது பாவிக்கும்‌ அசல்‌ தமிழ்ச்‌
சொல்லின்‌ மருவிய வடிவம்‌. சீட்டூக்‌ கட்டி ஏமாந்தவர்களைத்‌
தவிர மற்றவர்கள்‌ இதை நுழைவுச்‌ சீட்டு என்றும்‌ சொல்லலாம்‌.

எங்கள்‌ ஊரில்‌ அம்மன்‌ கோயில்கள்‌ என்றால்‌ அவற்றின்‌
சூழலில்‌ வருடந்தோறும்‌ “காத்தவராயன்‌” “வள்ளி
திருமணம்‌” “அரிச்சந்திரா” “பவளக்கொடி போன்ற
நாடகங்கள்‌ தவறாமல்‌ மேடையேறும்‌. வெளியூர்களிலிருந்து
தருவிக்கப்படும்‌, பாடவும்‌, நடிக்கவும்‌ கூடிய ஸ்பெஷல்‌
நடிகர்களைத்‌ தவிர உள்ளூர்‌ நடிகர்களும்‌ உதிரி
வேடங்களில்‌ நடிப்பார்கள்‌.

சேவகர்கள்‌, கிங்கரர்கள்‌, அயலாத்துப்‌ பிள்ளைகள்‌
(அதாவது அடுத்த வீட்டுப்‌ பிள்ளைகள்‌) இப்படியான
வேஷங்களில்‌ தோன்றி வசனம்‌ எதுவும்‌ பேசும்‌ சந்தர்ப்பம்‌
கிடைக்காவிடினும்‌, “கூத்தில்‌ நடித்த பொடியன்‌” என்று

6. எஸ்‌. ப௩ல22 ரன்‌


Page 71௩
%

. வவட

இனங்காணப்படூவது ஏறக்குறைய இப்போதைய ஒஸ்கார்‌ விருது
கிடைப்பதற்கு ஒப்பானது.

சற்று மிகையாகச்‌ சொல்லி விட்டேனோ தெரியாது.
இப்பொழுதெல்லாம்‌ தமிழ்ப்படங்கள்‌ எடுப்பவர்கள்‌ அனைவருமே எங்கள்‌
படத்தை ஒஸ்கார்‌ போட்டிக்கு அனுப்ப யோசிக்கிறோம்‌ என்று
சர்வசாதாரணமாகச்‌ சொல்வதினால்‌, நானும்‌ அப்படிச்‌ சொல்லி விட்டேன்‌.

எனக்கும்‌ இப்படியாக “ஏழு பிள்ளை நல்லதங்காள்‌” நாடகத்தில்‌,
நல்லதங்காளின்‌ ஏழு பிள்ளைகளில்‌ ஒருவனாக நடிக்கும்‌ சந்தர்ப்பம்‌
கிடைத்தது. இந்த நாடகத்தின்‌ கதாநாயகி படூம்‌ துன்பம்‌ அளவற்றது.
இக்கால “சீரியல்‌” களில்‌ வரும்‌ கதாநாயகிகள்‌ படூம்‌ துன்பங்களுக்கு
முன்னோடி நல்லதங்காள்தான்‌.

இந்நாடகத்தின்‌ இறுதியில்‌, சோதனைகளைத்‌ தாங்க முடியாத
நல்லதங்காள்‌ தன்‌ ஏழு குழந்தைகளையும்‌ கிணற்றுக்குள்‌ போட்டூவிட்டூ,
தானும்‌ குதித்து விடூவாள்‌. இந்தக்‌ காட்சிக்காக, மேடையில்‌ கிணறு
மாதிரி செய்து வைத்திருப்பார்கள்‌. நல்லதங்காளாக நடித்தவர்‌
பெண்மணியல்ல.. “ஆண்‌”மணி. உணர்ச்சிவசப்பட்டு நடிப்பதில்‌ பேர்‌
எடுத்தவர்‌ (பேர்‌ போனவர்‌ என்றும்‌ சொல்வார்கள்‌).

உச்சஸ்தாயியில்‌ பாடிக்‌ கொண்டே, ஒவ்வொருவராக கிணற்றுக்குள்‌
“ணங்‌ கென்று வீசுவார்‌. “ணங்‌ என்பது, அடியில்‌ இருக்கும்‌
மேடைப்பலகையில்‌ எங்கள்‌ மண்டை முதலான உடம்பின்‌
உதிரிப்பாகங்கள்‌ மோதிக்கொள்ளும்போது எழுப்பப்படூம்‌ ஒலிதான்‌.
வேதனை தாங்க முடியாமல்‌ வாய்‌ விட்டூ அலறினால்‌, பிள்ளைகள்‌
அற்புதமாக நடிக்கிறார்கள்‌ என்று சபையோர்‌ கரகோஷம்‌ செய்து,
“வண்ஸ்மோர்‌” கேட்க, நல்லதங்காள்‌(ன்‌) எங்களைத்‌ துூக்கியெடுத்து
மறுபடியும்‌ “ணங்‌” ஒலி கேட்கச்‌ செய்தாலும்‌ என்ற பயத்தில்‌ வாய்‌
பொத்தி பேசாமல்‌ கிடப்போம்‌.

எனது நிலைதான்‌ மிகவும்‌ பரிதாபகரமானது. நான்தான்‌ மூத்தபிள்ளை
ஞானசேகரனாக நடித்தவன்‌. ஆறு தம்பிமாரையும்‌ கிணற்றில்‌ போட்டுூவிட்டூ,

என்னைப்பிடிக்கவர,

“என்னை மட்டும்‌ கொல்லாதே..என்னைப்பெற்ற மாதாவே'” என்று
மன்றாடிக்கொண்டு மேடையில்‌ சுற்றி.சுற்றி ஓடுவேன்‌. வழிப்போக்கர்களின்‌

சேற்றுப்‌ போவ இருக்கிறது 59


Page 72துணையுடன்‌ நல்லதங்காள்‌ என்னைப்பிடித்து கடைசியாக கிணற்றில்‌
போடூவார்‌.

கடைசி “வீச்சு” என்றபடியால்‌ கடுமையாக இருக்கும்‌. போதாக்குறைக்கு
விழுந்த நான்‌, என்னைச்‌ சுதாகரித்துக்கொண்டூ சற்று அகல்வதற்கிடையில்‌
என்‌ மேல்‌ நல்லதங்காள்‌ தானும்‌ குதித்து, ஏறக்குறைய அம்மியில்‌
நசியுண்ட “செத்தல்‌ மிளகாயைப்‌ போல இருந்தேன்‌.

நாடகம்‌ பார்த்தவர்கள்‌ எல்லோரும்‌ நல்லதங்காளுக்கு துன்பம்‌
தந்த “மூளி அலங்காரியை” “திட்டி'த்‌ தீர்க்க, என்‌ அம்மா மட்டும்‌ என்‌
நாரி, முதுகுப்‌ பகுதிகளுக்கு எண்ணை பூசிக்கொண்டே, நல்லதங்காளாக
நடித்தவரையும்‌, என்னை நடிக்க விட்ட அப்பாவையும்‌ பேசித்‌ தீரத்தார்‌.

இந்த அனுபவங்களை வைத்துக்கொண்டு, நாங்கள்‌ சிலர்‌ ஒன்று
சேர்ந்து நாடகம்‌ போட தீர்மானித்தோம்‌. அதுவும்‌, முன்னர்‌ குறிப்பிட்ட
நாடகங்களைப்‌ போல அல்லாமல்‌, சமூக நாடகம்‌ அதுவும்‌ திக்கற்றுக்கு
(ரிக்கற்‌ தான்‌) எங்கள்‌ கோயில்‌ வடக்கு வீதியில்‌ போட ஏற்பாடாகியது.
காசு கொடுத்து நாடகம்‌ பார்த்து பழக்கமில்லாத எங்கள்‌ ஊரவர்‌
இதற்கு ஆதரவு கொடூக்க ஆரம்பத்தில்‌ தயங்கினர்‌. கோயிலின்‌ சுற்று
மதில்‌ அங்காங்கே காரை பெயர்ந்து வெடித்திருந்ததை சுட்டிக்காட்டி
அதை புதிதாக கட்டி எழுப்புவதற்காகத்தான்‌ நாடகம்‌ போடுகிறோம்‌
என்று சொல்லவும்‌ பெரியவர்கள்‌ கொஞ்சம்‌ இறங்கி வந்தனர்‌.

நாடகம்‌ எழுதுவது ஒன்றும்‌ எங்களுக்கு சிரமமாகப்‌ படவில்லை.
அப்‌ பொழுது சினிமா கதை வசனங்கள்‌ புத்தகங்களாக
வெளிவருவதுண்டு. அவற்றினை அப்படியே எடூத்துக்‌ கொள்ளாமல்‌,
ஒவ்வொரு கதையிலும்‌ ஒவ்வொரு பகுதியை எடுத்து ஒரு புதுக்கதையை
உருவாக்கினோம்‌.

இக்காலத்தில்‌ கூட அப்படியே ஒரு புத்தகத்தைப்‌ பார்த்து
எழுதினால்தானே பிரச்சினை. கொப்பி அடித்து ( தமிழ்‌ நாட்டில்‌ காப்பி
அடித்து) எழுதியது என்று ஆர்ப்பாட்டம்‌ பண்ணுவார்கள்‌. பத்து,
பதினைந்து புத்தகங்களை பார்த்து, மேற்கோள்‌ காட்டி எழுதினால்‌
அதை ஆராய்ச்சி என்று பாராட்டி, டாக்டர்‌ பட்டமும்‌ கொடுூக்கிறார்கள்‌.

இவ்வாறாக “மணமகள்‌”, “மர்மயோகி”யைச்‌ சந்தித்து, “சொர்க்க
வாசலி'ல்‌ “பராசக்தி'யைக்‌ கண்டு, நீதி கேட்பதாக எழுதப்பட்ட நாடகத்தில்‌

60 6. எஸ்‌. ப௩ல22 ஈன்‌


Page 73 

யார்‌ கதாநாயகனாக நடிப்பது என்பது பெரிய சிக்கலாகி விட்டது.
யாரைக்‌ கேட்டாலும்‌ “நான்‌ மாட்டேன்‌”: என்று சொல்லிக்‌
கொண்டிருந்தார்கள்‌. நீண்ட வசனங்களை மனப்பாடம்‌ செய்யவேண்டிய
சிக்கல்தான்‌ காரணம்‌.

பிறகு ஒரு மாதிரி, பாடப்புத்தகத்தையே பக்கம்‌,பக்கமாக (பக்க.
இலக்கங்களுடன்‌) மனப்பாடம்‌ பண்ணி பரீட்சையில்‌ எழுதிப்‌ புகழ்பெற்ற
ஒருவரைத்‌ தேடிப்பிடித்து கதாநாயகனாக நடிக்க வைத்தோம்‌. அவரும்‌
மும்முரமாக வசனங்களை மனப்பாடம்‌ செய்து கொள்ளத்‌ தொடங்கினார்‌.

எனக்கு கிடைத்தது, நகைச்சுவை வேடம்‌. நான்‌ தும்மினாலும்‌,
இருமினாலும்‌, கூட நடித்தவர்கள்‌ அதில்‌ ஏதோ நகைச்சுவை இருப்பதாக
நினைத்து விழுந்து, விழுந்து சிரித்தார்கள்‌. இடையில்‌ எனக்கு
ஜலதோஷம்‌ வரப்போக, அவர்கள்‌ நிறையவே சிரித்து சிரமப்பட்டார்கள்‌.

கோயிலின்‌ முன்வீதியையும்‌, மேற்கு வீதியையும்‌ மறித்து
கிடுகுகளினால்‌ வேலி மாதிரி கட்டி, வடக்கு வீதியின்‌ தலைப்பில்‌
கொட்டகை போட்டு, ஊரவரின்‌ கட்டில்களை அடுக்கி மேடை போட்டு,
தரையில்‌ இருப்பவர்களின்‌ வசதிக்காக புழுதி பறக்க நிலமெல்லாம்‌
கூட்டி, எங்களூர்‌ விதானையார்‌ இருப்பதற்காக நடுநாயகமாக
வேலைப்பாடூள்ள அவர்‌ வீட்டுக்‌ கதிரையும்‌ கொண்டூ வந்து வைத்து
எல்லாம்‌ ரெடியாகி விட்டது.

ஆனால்‌, ஒளி வழங்குவதற்காக அயலூரிலிருந்து வாடகைக்கு
தருவித்த சின்ன லைற்‌ எஞ்சின்காரர்‌ மட்டும்‌, பணத்தைக்‌ கண்ணில்‌
காட்டினால்தான்‌ எஞ்சினை முடூக்கி விடுவேன்‌ என்று அடம்பிடித்துக்‌
கொண்டிருந்தார்‌. அவரின்‌ காலில்‌ விழாதகுறையாக மன்றாடிக்‌ கேட்டூ,
முன்னால்‌ திக்கற்‌ பெறுவதற்காக காத்திருக்கும்‌ நீண்ட
வரிசையைக்காட்டி, அவரவர்‌ கையில்‌ இருந்த காசு, எங்கள்‌ கையில்‌
வந்தவுடன்‌ மொத்தமாகக்‌ கொண்டு வந்து கணக்கு முடிக்கிறோம்‌
என்று சொல்லி, அவர்‌ அரை மனதுடன்‌ சம்மதித்தார்‌. வடக்கு வீதியும்‌,
அயலும்‌ ஒளிவெள்ளத்தில்‌ மிதந்தது.

கூட்டம்‌ என்றால்‌ அத்தனை கூட்டம்‌. வளர்ந்தவர்களுக்கு 25 சதம்‌,
சிறியவர்களுக்கு 10 சதம்‌ என்று போட்டதினால்‌, பல பெரியவர்களும்‌,
கூனிக்குறுகி சிறியவர்களாக தங்களைக்‌ காட்ட முயன்று
சிரமப்பட்டார்கள்‌. மேக்‌அப்‌ போட்டவர்களும்‌, போடாதவர்களுமாக

செற்றுப்‌ டபோ௨ூ இருக்கிறது 61


Page 74நடிகர்கள்‌ அங்குமிங்கும்‌ தங்கள்‌ முக்கியத்துவத்தைக்‌ காட்டிக்‌ கொண்டு
திரிந்தார்கள்‌.

கதாநாயகியாக நடிக்கும்‌ ராசன்‌, அடிக்கடி விலகிப்‌ போகும்‌ தன்‌
முந்தானையை சரி செய்து கொண்டே, வரிசையில்‌ நின்ற நண்பர்களுடன்‌
கதைத்து, சிரித்துக்‌ கொண்டிருந்தான்‌. அப்பா வேஷம்‌ போட்ட தங்கன்‌,
நரை போலிருப்பதற்காக கோதுமை மா (கொட்டிய) தலையுடன்‌, தன்னை
அடையாளம்‌ காண்கிறார்களா என்று பார்ப்பதற்காக, மைத்துனி ராணியும்‌
(ம்‌...அப்படித்தான்‌; அவளின்‌ தாய்‌ தகப்பனும்‌ நிற்கும்‌ இடங்களில்‌
குறுக்குமறுக்காகத்‌ திரிந்தான்‌. அவர்களோ அவனைத்‌ திரும்பிப்‌
பார்ப்பதாயில்லை. அவனும்‌ விடூவதாயில்லை

நாடகம்‌ தொடங்குவதற்கு சற்று முன்னதாகத்தான்‌ நான்‌ ஒப்பனை
செய்து கொண்டேன்‌. எங்கள்‌ குசினிக்குள்‌ அடுப்பின்‌ அருகே கவிழ்த்து
வைக்கப்பட்டிருந்த கரிப்பானைகளில்‌ கைவைத்து, முகத்தில்‌ கோடூ
கோடாக இழுத்து விட்டு, கொடியில்‌ போட்டிருந்த அப்புவின்‌ நாலு
முழத்‌ துண்டை இடுப்பில்‌ கட்டிக்‌ கொண்டால்‌ சரி. தற்செயலாக,
சபையில்‌ இருக்கும்‌ அப்பு தன்‌ துண்டை அடையாளம்‌ கண்டுபிடித்து,
மேடைக்கே வந்து அதை உருவிக்கொண்டால்‌ என்ற
முன்ஜாக்கிரதையுடன்‌, உள்ளுக்குள்‌ நான்‌ காற்சட்டை போட்டிருந்தேன்‌.

நான்‌ அவசரமவசரமாக நாடகம்‌ நடக்கும்‌ இடத்திற்குப்‌ போன
பொழுது, வரிசை ஒன்றும்‌ இருக்கவில்லை. வாசலில்‌ நின்று “திக்கற்‌'
வித்தவர்களும்‌ இல்லை. எல்லோரும்‌ உள்ளே போயிருக்க வேண்டும்‌.
மனக்கணக்கு போட்டுப்‌ பார்த்ததில்‌, மதில்‌ கட்டுவதோடூ, கோயிலுக்கு
மணிக்கூட்டூக்‌ கோபுரமும்‌ கட்டி, பிறகும்‌ பணம்‌ மிஞ்சும்‌ போலத்‌
தெரிந்தது. நாடகம்‌ தொடங்கி விட்டது. கதாநாயகன்‌ ஏதோ பேசுவது
கேட்டது. சற்று அண்மித்தபோதுதான்‌ அவர்‌ பாட முயற்சிக்கிறார்‌ என்று
தெரிந்தது. சபையிலிருந்து விசில்‌ ஒலி எழுந்து காதைக்‌ கிழித்தது.

மேடையின்‌ பின்‌ பக்கத்தால்‌ நுழைய முயன்ற என்னை, யாரோ
பற்றிப்‌ பிடித்தார்கள்‌. அது லைற்‌ எஞ்சின்காரர்‌.

“என்ன தம்பி... நீர தானே காசுக்கு பொறுப்பு சொன்னண்‌... எங்கை காசு”

“காசு எண்ணி மினைக்கெடுகுகிறாங்கள்‌ போலை... டக்கென்று
வாங்கிக்‌ கொண்டு வாறன்‌ அண்ணை...”

62 6. எஸ்‌. பு௩ல22ஆதன்‌


Page 75 

மேடையின்‌ பக்கத்திற்கு அவசரமாகப்‌ போனேன்‌. அப்போது
மேடையில்‌ கதாநாயகன்‌ சரமாரியாக அடுக்கு வசனங்களைப்‌ பேசிக்‌
கொண்டிருந்தார்‌. சபையே திகைத்துப்‌ போய்‌ அமைதியாக இருந்தது.
காது கொடூத்துக்‌ கேட்டேன்‌. கதாநாயகன்‌ சொல்ல வேண்டிய
வசனங்களை மறந்து போய்‌, இரசாயன பாடத்தில்‌ நைதரசன்‌ வாயுவின்‌
குணாதிசயங்களை அட்சரசுத்தமாகச்‌ சொல்லிக்‌ கொண்டிருந்தார்‌.

டைரக்டரும்‌, கதாசிரியரும்‌, சக நடிகர்களும்‌ என்னை விட
கறுத்துப்போன முகங்களுடன்‌ நின்று கொண்டிருந்தார்கள்‌.
கதாநாயகரின்‌ வசனங்கள்‌ மட்டூம்‌ அதற்கு காரணமில்லை என்று
எனக்கு புலனாக வெகு நேரம்‌ எடுக்கவில்லை.

வாசலில்‌ நின்று 'திக்கற்று' விற்றுக்‌ கொண்டிருந்த இரண்டூ
பேரும்‌, எங்களை திக்கற்றவர்களாக்கி விட்டு பணத்துடன்‌ பறந்து
விட்டார்கள்‌ என்று அறிந்ததும்‌, லைற்‌ எஞ்சின்காரரின்‌ மீசைதான்‌
என்‌ கண்‌ முன்னால்‌ வந்து நின்றது.

ஏதோ முடிவுடன்‌, கதாசிரியரும்‌, டைரக்டரும்‌ இருட்டுக்குள்‌
மறைந்து போனார்கள்‌. காற்று பெலமாக அடிக்கும்‌ போது,
நாடகக்கொட்டகை சரிந்து விழாமல்‌ இருப்பதற்காக இழுத்துக்‌
கட்டியிருந்த கயிற்றின்‌ பக்கமாகத்தான்‌ போனார்கள்‌. சிறிது
நேரத்தில்‌, பேரோசையுடன்‌ கொட்டகை சரிந்து விழுந்தது.

மின்சாரமும்‌ நின்று எங்கும்‌ இருட்டாகி, சபையில்‌ இருந்தோர்‌
கூக்குரல்‌ இட்டவாறே, அடைத்திருந்த கிடுகு6வலியை தள்ளி
விழுத்திப்‌ பறந்தார்கள்‌. விதானையார்‌ இருந்த இடத்தில்‌ அவரது
பட்டுச்‌ சால்வை சுற்றியபடி அந்த வேலைப்பாடூள்ள கதிரை மட்டும்‌
சரிந்து கிடந்தது.

சம்பவம்‌ நடந்து சில நாட்களாக, நாங்கள்‌ கொஞ்சப்பேர்‌ எங்கள்‌
ஊருக்கு வெளியே வயல்களுக்கும்‌ அப்பால்‌, பனங்காணியொன்றில்‌
இருந்த கொட்டிலுக்குள்‌ வாசம்‌ செய்து கொண்டூ, அப்பகுதியில்‌
பிரபலமான கோயில்‌ ஒன்றில்‌ பொங்கி விட்டூ, அந்த வழியால்‌
மாட்டு வண்டிகளில்‌ போகின்றவர்களை மறித்து, பூவரசம்‌ இலையில்‌
பொங்கல்‌ வாங்கிச்‌ சாப்பிட்டோம்‌. பொங்கல்‌ தந்தவர்களில்‌ யாரோ
தெரிந்தவர்கள்‌ இருக்கப்‌ போய்‌, எங்கள்‌ வீடுகளுக்கு செய்தி போகும்‌
வரை எங்கள்‌ “வன வாசம்‌' தொடர்ந்தது.

சேற்றுப்‌ டோ௨ூ இருக்கிறது 63


Page 76தன்‌ எஞ்சினுக்குள்‌ யாரோ மண்‌ அள்ளிக்கொட்டி விட்டதாக, தன்‌
கடை வாசலில்‌ நின்றவாறே எங்கள்‌ ஊர்‌ பக்கமாகப்‌ பாரத்து, மண்‌
அள்ளி வீசி, அந்த லைற்‌ எஞ்சின்காரர்‌ நீண்ட நாட்களாக வருவோர்‌,
போவோர்‌ எல்லோரிடமும்‌ பேசிக்‌ கொண்டிருந்தாராம்‌.

இப்போது கூட யாராவது நரைத்த மீசைக்காரர்‌, என்னை உற்றுப்‌

பார்ப்பது போலப்‌ பட்டால்‌, “படக்‌'கென்று முகத்தைத்‌ திருப்பிக்‌
கொள்கிறேன்‌.

64 62. எஸ்‌. பு௩ல2 ஆதன்‌


Page 77 

 

 

 

 

 

ஸன்ங்கண்‌ ஷீ்ருப்‌ வெண்லல்‌

65


Page 7866

ரட்‌ டம கூதற்‌ பனிக்காலம்‌ முடிந்து தை பிறக்கும்‌
போது எங்கள்‌ சந்தோசங்களும்‌ கூடவே வரும்‌. தைப்பொங்கல்‌
கொண்டாடூவதற்கான ஆயத்தங்கள்‌ ஒரு வாரத்துக்கு முதலே
ஆரம்பித்து விடும்‌.

எங்கள்‌ ஊரின்‌ குட்டி ரவுண்‌ பகுதியில்‌, தையற்காரர்‌
என்றுமில்லாத அளவில்‌ பிசியாக இருப்பார்‌. கூப்பன்‌ கடையில்‌
கிடைத்த வெள்ளைத்துணியுடனும்‌, புடவைக்கடையில்‌ வாங்கிய
காக்கித்துணியுடனும்‌, அப்பா முன்ஜாக்கிரதையாக ஒரு
வாரத்திற்கு முந்தியே என்னையும்‌ கூட்டிக்கொண்டூ
தையற்காரரிடம்‌ போய்விடுவார்‌.

அவர்‌ மெசினில்‌ கடகடவென்று தைத்து விட்டூ, ஒரு
இடைவெளியில்‌ எங்களை நிமிர்ந்து பார்த்து “என்ன கடைசி
நேரத்திலை வாறீங்கள்‌”” என்று கேட்பார்‌. ஓரு மாதமென்ன, ஒரு
வருடத்திற்கு முன்‌ வந்தாலும்‌ இப்படித்தான்‌ சொல்வார்‌ என்று
அப்பாவுக்குத்‌ தெரியுமாதலால்‌, “இவனுடைய அளவை எடூங்கோ”
என்ற சொல்லிக்கொண்டே துணியை நீட்டூவார்‌.

“வளருகிற பிள்ளையள்‌ கொஞ்சம்‌ பெரிசாக தைச்சால்தான்‌
நல்லது'” என்று தையற்காரர்‌ சொல்லிக்‌ கொள்ள, ஏறக்குறைய
முழங்காலுக்குக்‌ கீழ்‌ காற்சட்டை நிற்கப்‌ போகிறது என்று எனக்கு
தெரிந்து விடம்‌. (இக்காலத்தில்‌ அதுவே நாகரீகமாக மாறி
விட்டதைக்‌ கண்டூ அதிசயிக்கிறேன்‌)

62. எஸ்‌. புலன்‌


Page 79 

“நிமிர்ந்து நில்‌, “வண்டியை(வயிற்றை) உள்ளுக்கு எக்காதை”
என்ற அறிவுறுத்தல்களுடன்‌ அளவு எடுக்கும்‌ படலம்‌ முடிந்து நாங்கள்‌
புறப்பட இரண்டூ மணித்தியாலமாவது ஆகும்‌.

சகோதரிகளுக்கு பூக்கள்‌ போட்ட ௪த தைத்துணியில்‌
தையலக்காவிடம்‌ தொளதொளப்பான மேற்சட்டை, பாவாடைகள்‌
தைக்கப்படூம்‌. எப்பவாவது இருந்து விட்டு அப்பாவுக்கு வேட்டி
அம்மாவுக்கு சேலை என்று எடுூப்பதுண்டு.

எந்தப்‌ பொருட்களுமே முன்கூட்டி வாங்கி வைக்கும்‌ வசதி
இல்லையாதலால்‌, முதல்‌ நாள்தான்‌ எப்படியோ பணம்‌ புரட்டி, அம்மா
சர்க்கரை, பச்சையரிசி முதலானவையுுடன்‌ பொங்கற்‌ பானையும்‌ வாங்கி
வர, அப்பா மீண்டும்‌ ஒரு நடை ரவுணுக்கப்‌ போய்‌, பூவிறிஸ்‌ (பூவாணம்‌),
முக்கோண வெடி, சரவெடி என்றெல்லாம்‌ வாங்கி வருவார்‌.

இரவிரவாக அவற்றை யெல்லாம்‌ நானும்‌ சகோதரர்களும்‌ தொட்டுப்‌
பார்த்து, “உனக்கிது” “எனக்கிது” என்று பங்கு பிரித்துக்‌ கொள்வோம்‌.
எது எப்படி இருந்தாலும்‌ விடிந்தபின்‌ என்‌ தம்பிமார்‌ பயந்து நடூங்கிக்‌
கொண்டிருக்க, நான்தான்‌ அனேகமான வெடிகளைக்‌ கொழுத்தப்‌
போகிறேன்‌ என்று எனக்குத்‌ தெரியும்‌.

அம்மா அடுத்தநாள்‌ பொங்குவதற்கான ஏற்பாடுகளை “கடமுடா”ச்‌
சத்தங்களுடன்‌ செய்து கொண்டிருக்கும்‌ போது, நாங்கள்‌ நித்திரை
கொள்ளாமல்‌ விடிவதை எதிர்பார்த்து காத்திருந்து, கடைசியாக இருந்த
இடத்தில்‌ உறங்கிப்போவோம்‌.

அதிகாலை இரண்டரை, மூன்று மணிக்கே நிசப்தமான இரவின்‌
அமைதியைக்‌ குலைத்துக்‌ கொண்டூ எங்கிருந்தோ வெடிச்சத்தம்‌ கேட்கும்‌.
போட்டிக்கு அடிக்கும்‌ தவில்காரர்களைப்‌ போல “சடசட'வென்று மற்றப்‌
பக்கத்திலிருந்து சரவெடிகள்‌ வெடிக்கும்‌. நாங்கள்‌ திடூக்கிட்டூ எழுந்து,
படூத்திருந்த பாய்களில்‌ உட்கார்ந்து கொள்வோம்‌.

அப்பா இதற்காகவே காத்திருந்தவர்‌ போல, எங்களை
அழைத்துக்கொண்டு, அரைமைல்‌ தொலைவிலுள்ள வயற்கிணற்றிற்கு
செல்வார்‌. அரைநித்திரையில்‌ கால்கள்‌ தள்ளாடினாலும்‌ “விடிந்தால்‌
பொங்கல்‌' என்ற நினைவே தித்திப்பாக இருக்க, வரிசையாக
அப்பாவிற்குப்‌ பின்னால்‌ நடைபோடூவோம்‌.

சேற்றுட்‌ டோ௨ூ இருக்கிறது 67


Page 80அந்தக்‌ கும்மிருட்டில்‌, “வெடவெட':வென்று நடூங்கும்‌ குளிரில்‌,
வயற்கிணற்றின்‌ மாரிக்கால தண்ணீரை அப்பா வாளியில்‌ இருந்து எங்கள்‌
மேல்‌ வார்க்கமுன்னரே, நாங்கள்‌ ஓசையெழுப்பாமல்‌ வாயைப்‌
பொத்திக்கொண்டே, உடம்பைத்‌ தயார்‌ நிலையில்‌ வைத்துக்கொள்வோம்‌.
இருந்தாலும்‌ கடைசி நேரத்தில்‌ “சடார்‌' என்று நாங்கள்‌ விலகப்போய்‌,
கஷ்டப்பட்டு அள்ளிய நீர்‌ அப்படியே நிலத்தில்‌ ஊற்றப்பட்ட கோபத்தில்‌
அப்பா எட்டி முதுகில்‌ அடிக்கும்‌ ஓசை வயல்வெளியில்‌ எதிரொலிப்பதும்‌
உண்டு. ்‌

தனித்தனியாக என்று இல்லாமல்‌ சமகாலத்தில்‌ எல்லோருக்கும்‌
குளியல்‌ நடப்பதினால்‌, நடூக்கத்தினால்‌ வரும்‌ “ங்ங்ங்‌” என்ற ஒலியுடன்‌,
அனுங்கல்கள்‌, சிணுங்கல்கள்‌ என்பன கலந்து ஒரு ராகமாலிகையே
அங்கு அரங்கேறும்‌.

கடைசி, கடைசியாக “போடா.. போய்‌ துவாயை எடூத்து துடை'
என்று அப்பாவின்‌ ஆணை பிறக்க, விடுதலை பெற்ற சிறைக்கைதிகளைப்‌
போல ஓடிச்சென்று, ஒரேயொரு துவாயினால்‌ பறித்துப்‌ பறித்து ஈரம்‌
துடைத்து, கழற்றிவைத்த ஆடைகளை அணிந்து கொண்டு, உற்சாகமாக
வீடு நோக்கி ஓட்டமும்‌ நடையுமாகச்‌ செல்வோம்‌.

வழி வழியே வீடூகளின்‌ வாசல்களுக்கு முன்னே வெடித்துச்சிதறிய
வெடிகளின்‌ எச்சசொச்சங்களான கடதாசிச்சிதறல்கள்‌ எங்களுக்காக
காத்திருக்கும்‌ வெடிகளை ஞாபகப்படுத்தி நடையில்‌ வேகத்தைக்‌
கொண்டூ வரும்‌.

வீட்டுக்குள்‌ நுழைந்ததும்‌, நுழையாததுமாக புதுமணம்‌ மாறாத
(மணந்து பார்த்ததினால்‌ தெரியும்‌) எங்கள்‌ காற்சட்டைகளை,
சேர்ட்ட்க்களை அணிந்து கொண்டு, முதல்‌ வேலையாக வெடிகள்‌,
வாணங்களை எடூத்துக்கொண்டூ முற்றத்திற்கு வருவோம்‌. முற்றத்தில்‌
ஏற்கெனவே அம்மா சாணத்தினால்‌ அழகாக மெழுகி, உலக்கை வைத்து
கோலம்‌ போட்டு, இரண்டூ, மூன்று பொங்கல்‌ கண்டூ கறுத்துப்‌ போன
அரிந்த சிமெந்து கற்களை வைத்து, அதன்‌ மேல்‌ பானையை ஏற்றி,
அரிசியும்‌, பாலும்‌, சர்க்கரையும்‌ கலந்து பொங்கலாக உருமாற்றும்‌
பணியில்‌ ஈடுபட்டுக்‌ கொண்டிருப்பா.

எங்களைக்‌ கண்டதும்‌ நிமிர்ந்து, “பொங்கயிக்கை வெடி விடலாம்‌”
என்ற தற்காலிக தடையுத்தரவு போட்டு, குளித்து விட்டூ வந்த அப்பாவும்‌

68 62. எஸ்‌. புல* ஆதன்‌

 


Page 81 

சேரந்து கொள்ள, பொங்கற்‌ பானையின்‌ விளிம்பில்‌ வெண்ணுரை பொங்கி
வர, தடையுத்தரவைத்‌ தளர்த்தி, “வெடியை விடூங்கோ” என்ற சொல்ல,
அவசரம்‌ அவசரமாக முக்கோண வெடிகளை எடூத்தால்‌ அவற்றில்‌
அரைவாசிக்குமேல்‌ திரிகள்‌ இருக்காது - தம்பி அவற்றை உருவி
பத்திரமாக எங்கேயோ சேமித்து வைத்திருக்கிறான்‌ என்று தெரியவரும்‌.

உருப்படியாக இருக்கும்‌ இரண்டொன்றும்‌, குளித்து விட்டு வந்து
ஈரக்கையால்‌ தொட்டதினால்‌ நமத்துப்‌ போய்‌, இக்கால அரசியல்வாதிகளைப்‌
போல, திரியளவு மட்டும்‌ சீறிவிட்டு அமைதியாக இருக்கும்‌. அவற்றை
வெடிக்குமா, வெடிக்காதா என்று கையில்‌ எடுத்துப்‌ பார்க்கும்‌ துணிவு
இல்லாமல்‌, வைத்த கண்‌ வாங்காமல்‌ பார்த்துக்‌ கொண்டிருப்போம்‌.

இந்தளவிற்கு, அம்மா பொங்கலை வாழையிலையில்‌ படைத்து,
வாழைப்பழத்தில்‌ குத்திய சாம்பிராணிக்குச்சிகளை கொழுத்தி, ஆகாயம்‌
பார்த்து கும்பிட்டு, எங்களையும்‌ கும்பிடும்படி பணிக்க, சூரியனை நிமிர்ந்து
பார்க்க கண்‌ கூசுமாதலால்‌, ஒரு கண்‌ பொங்கலிலும்‌, ஒரு கண்‌
வெடிக்காத வெடியிலுமாக, எங்கள்‌ சூரிய நமஸ்காரம்‌ நிறைவேறும்‌.

தங்கைமார்‌, தங்கள்‌ புதுச்சட்டைகளை கவனமாக ஓதுக்கி, கையை
நீட்டிப்‌ பிடித்து பூவாணம்‌ விட முயல்வார்கள்‌. தம்பி அதை எட்டிப்‌
பறிக்கமுயல, அதன்‌ பொறிகள்‌ பறந்து தங்கையின்‌ சீத்தைச்‌ சட்டையில்‌
கறுத்த புள்ளி ஒன்று போடும்‌. அத்தோடு “மூட்‌ அவுட்‌'டாகிய அவள்‌
மூலைக்கு மூலை நின்று சட்டையைப்‌ பார்த்து பார்த்து அழுவாள்‌.

இத்தனைக்கு மத்தியில்‌ அப்பா வேண்டி வந்த சரவெடிகளை
முற்றாக மறந்திருப்போம்‌. அப்பாதான்‌ மறக்காமல்‌ அதை எடுத்து
வந்து முற்றத்தில்‌ போட்டிருக்கும்‌ மல்லிகைப்பந்தலின்‌ ஒரு ஓரத்தில்‌
கட்டித்‌ தொங்க விட்டூ, எட்டி நின்று அடுப்பிலிருந்து எடுத்த சுள்ளியின்‌
நுனி நெருப்பினால்‌ சரவெடியின்‌ முதலாவது வெடியை கை நடூங்க
பற்றவைக்க முயல்வார்‌.

அந்த நேரமாகப்‌ பார்த்து, இதுவரையில்‌ வெடிக்காமல்‌ இருந்த
வெடி சற்று சீறுவது போல இருக்க, “அப்பா வெடிக்கப்‌ போகுது” என்று
நான்‌ தொடங்கி முடிப்பதற்கிடையில்‌, “டமார்‌ என்று அந்த வெடி
வெடித்தது. திசை, திக்குத்‌ தெரியாமல்‌ நெருப்புச்‌ சுள்ளியை எறிந்த
விட்டு, அப்பா எழுப்பிய ஒலி குறைந்தது பக்கத்து வீட்டுக்காரருக்காவது
கேட்டிருக்க வேண்டும்‌. வேலியோரமாக கால்கள்‌ தெரிந்தன.

சேற்றுப்‌ டோ இருக்கிறது 69


Page 82எங்கள்‌ பொங்கல்‌ சந்தோசம்‌ அவ்வளவுதான்‌ என்று நினைத்த
வேளையில்‌ அப்பா தன்னைச்‌ சுதாகரித்துக்கொண்டு, எறிந்த சுள்ளியை
தேடியெடுத்து, இம்முறை சற்று உசாராகவே சரவெடியைப்‌ பற்ற வைக்க,
அவையும்‌ நிலைமை தெரிந்து ஏமாற்றமளிக்காமல்‌, “படார்‌ படீர்‌ என்று
ஓவ்வொன்றாக விழுந்து வெடித்தன. அப்பா மெல்லிய சிரிப்புடன்‌ வேலிப்‌
பக்கமாக ஒரு முறை பார்த்துக்கொண்டார்‌.

பல நாட்களுக்குப்‌ பிறகும்‌ பந்தலில்‌ சரவெடி கட்டிய கயிற்றுத்துண்டுூ
காற்றில்‌ ஆடிக்கொண்டிருந்தது என்‌ கண்ணில்‌ பட்டது. பாரதியின்‌
“காற்று” வசன கவிதையில்‌ வரும்‌ கயிற்றைப்‌ போல “குசாலாக இருந்தது”
என்று வைத்துக்‌ கொள்ளுங்களேன்‌ !

70 ப 6ஃ. எஸ்‌. ப௩ல22ஆ$ரன்‌

 

 


Page 83 

 

 

 

 

 

 

11% ஏருக்த ை

71


Page 8472

ஒக்க காலத்துக்கு இரண்டு தலைமுறைக்கு
முந்தியவர்களில்‌ அனேகமானவர்கள்‌ படம்‌ எடூத்துக்கொள்ள
தயங்கினார்களாம்‌. அதனால்‌ ஆயுள்‌ குறைந்து போய்விடும்‌
என்று அவர்கள்‌ நம்பினார்கள்‌. நல்லகாலம்‌, எங்கள்‌
தலைமுறைக்கு முந்தியவர்கள்‌, அதாவது எங்கள்‌
பெற்றோர்கள்‌ அதை நம்பாமல்‌ போனதினால்‌ எங்கள்‌
இளமைக்காலத்தின்‌ விரல்‌ சூப்புகின்ற, பெரிய நெற்றியில்‌
பெரிய கறுத்தப்‌ பொட்டுகளுடன்‌, அழுதுகொண்டூ அல்லது
அழத்தயாராகும்‌ தோற்றங்களுடன்‌ இருக்கும்‌ அழியாத
கோலங்களை கறுப்பு வெள்ளையிலாவது பார்க்கக்‌
கூடியதாகவிருக்கிறது.

படம்‌ எடூத்துக்‌ கொள்வதற்காக எங்கள்‌ குடும்பத்தினர்‌
ஏறக்குறைய ஸ்தல யாத்திரை புறப்படுவது போல எவ்வளவு
ஆயத்தங்களுடன்‌ நீண்டதூரம்‌ பயணஞ்‌ செய்து ரவுணுக்குப்‌
போய்‌ சிரமப்பட்டார்கள்‌. என்பது எனக்குத்‌ தெரியும்‌.

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே
ஊரிலிருக்கும்‌ ஒரேயொரு வாடகைக்காருக்கு சொல்லி
வைப்பதென்ன. - முதல்‌ நாள்‌ இரவே, அணியப்‌ போகும்‌
உடுப்புகளை பூச்சிக்கொட்டை போட்டு வைத்திருக்கும்‌
பெட்டகத்தினிலிருந்து எடுத்து பக்குவமாக வைப்பதென்ன

டிரங்குப்பெட்டியில்‌ துணியில்‌ கட்டி வைத்த அத்தனை
நகைகளையும்‌ எடூத்து அணிந்து அலங்காரம்‌ பார்ப்பதென்ன
- ஓரே ஆரவாரந்தான்‌.

6. எஸ்‌. ப௩ல22$ன்‌


Page 85 

அதிகாலையிலேயே அம்மா, அப்பா, அம்மம்மா, சித்தப்பா, நான்‌,
தம்பி உட்பட எல்லோரும்‌ குளித்து, முழுகி ஆடை அலங்காரங்கள்‌
செய்து காரில்‌ புறப்படும்‌ போதே ஊர்‌ எல்லாம்‌ செய்தி பரவி
விடும்‌.

“பூட்டியிருக்கிற வீட்டைப்‌ பார்த்துக்கொள்ளுங்கோ அக்கா”,
“முற்றத்திலை நிற்கிற கோழியளைப்‌ பார்த்துக்‌ கொள்ளுங்கோ”,
“கோடியில்‌ கட்டியிருக்கும்‌ ஆடு கத்தினால்‌ இரண்டு குழை போட்டூ
விடுங்கோ” என்று அம்மா அடுத்த வீட்டிலிருக்கும்‌ பெரியம்மா வீட்டாருக்கு
ஓடியோடிப்‌ போய்‌ சொல்லி விட்டூ வருவார்‌.

காரில்‌ ஏற்கெனவே ஏறி அடைந்து கொண்டூ சிரமப்பட்டூக்‌
கொண்டிருக்கும்‌ நாங்கள்‌ ஓலமிடவும்‌, முன்‌ ஆசனத்தில்‌
வசதியாகவிருக்கும்‌ அப்பா உரத்துக்‌ கூப்பிடவும்‌, அம்மா
கடைசிமுறையாக “எங்கடை வீரன்‌ இங்கினை வந்தால்‌ கொஞ்சம்‌
சோறு போடூங்கோ அக்கா”? என்று பெரியம்மாவிடம்‌ சொல்லாமல்‌
வரமாட்டார்‌. வீரன்‌ எங்கள்‌ வீட்டு நாய்‌.

இதில்‌ சுவையான அம்சம்‌ என்னவென்றால்‌ அம்மாவின்‌ அத்தனை
கோரிக்கைகளுக்கும்‌ “ம்‌...ம்‌” என்று தலையாட்டிய பெரியம்மா நாங்கள்‌
புறப்பட்டுப்போன அடூத்த வினாடியே கடகத்தையும்‌, புல்லுக்கிண்டியையும்‌
எடூத்துக்கொண்டூ சர்வசாதாரணமாக தோட்டத்திற்குப்‌ புறப்பட்டுவிடுவார்‌.
நாங்கள்‌ வரும்வரையும்‌ வீரன்தான்‌ பட்டினிபுடன்‌ முற்றத்தில்‌ நின்று
காவல்‌ காக்கும்‌.

இரண்டூ மணித்தியாலப்‌ பயணத்தின்‌ பின்னர்‌ ரவுணை அடைந்து,
பெரிய கடைப்பகுதியால்‌ சுற்றி வரும்போதே அப்பா பயண வழிகாட்டி
போல எங்களுக்கு விளக்கங்கள்‌ சொல்லி வருவார்‌. கழுத்தைத்‌ திருப்பிப்‌
பார்ப்பதற்கே வசதி இல்லாத நெருக்கடி. எங்கே இடங்களைப்‌ பார்ப்பது.
ஒருவாறு ஸ்ரூடியோ வாசலில்‌ போய்‌ கார்‌ நின்று, நாங்கள்‌ நிலத்தில்‌
கால்‌ பதிக்க, நிம்மதிப்‌ பெருமூச்சுகள்‌ எங்களிடமிருந்து வரும்‌.

ஸ்ரூடியோவின்‌ முன்னறையில்‌ பல நூற்றுக்கணக்கான
புகைப்படங்கள்‌ அடுக்கடுக்காக சுவர்‌ முழுவதும்‌ ஒட்டியிருக்கும்‌. சில
படங்கள்‌ மாத்திரம்‌ பெரிய அளவில்‌ “பிரேம்‌” செய்யப்பட்டு
மாட்டப்பட்டிருக்கும்‌. அந்தப்‌ படங்களில்‌ இருப்பவர்கள்‌ ஸ்ரூடியோக்காரரின்‌
சொந்தக்காரர்களாக இருக்கலாம்‌ என்று நினைத்துக்‌ கொள்வேன்‌.

சேற்றுப்‌ படோ௨ இருக்கிறது 73


Page 86இன்னும்‌ சில பெரிய படங்களில்‌ உள்ளவர்கள்‌ அணிந்திருக்கும்‌
சேலை அல்லது சேர்ட்‌ என்பனவற்றில்‌ அழகாக வர்ணம்‌
தீட்டப்பட்டிருக்கும்‌. வர்ணப்‌ புகைப்படங்கள்‌ என்றே அறியப்படாத
அந்தக்காலத்தில்‌ அவை எனக்கு பிரமிப்பைத்‌ தந்தன. ஆவலுடன்‌
பார்த்துக்‌ கொண்டூ நின்றேன்‌.

கதிர்காமத்தில்‌ திரைக்குப்‌ பின்னால்‌ என்ன இருக்கின்றது என்று
தெரியாத மறைபொருளாக இருக்க, வாய்‌ கட்டிப்‌ பூஜை செய்யும்‌
பூசகர்களைப்‌ போல ஸ்ரூடியோக்காரரும்‌ அடிக்கடி திரைக்குப்‌ பின்னால்‌
மறைந்தார்‌. கையில்‌ சதுரமான ஒரு மரப்பிரேம்‌ ஒன்றைக்‌ கொண்டு
வந்து முக்காலியாக நின்ற பெரிய கமராவுக்குள்‌ நுழைத்தார்‌.

அதன்பிறகுதான்‌ நாங்கள்‌ இருக்கவேண்டிய ஒழுங்கை அவர்‌
தீரமானித்தார்‌. இருக்க வேண்டியவர்கள்‌ இருக்க, நிற்க வேண்டியவர்கள்‌
நிற்க எல்லாம்‌ ஒழுங்காக இருக்கிறதா என்று அடிக்கடி கமராவை
மூடிய கறுப்புத்துணிக்குள்‌ மறைந்து பார்த்துக்‌ கொண்டார்‌. கடைசி
கடைசியாக “எல்லாரும்‌ இங்கை பாருங்கோ” என்று சொல்லி கமராவுக்க
முன்னால்‌ இருந்த ஒரு மூடியைத்‌ திறந்து மூடினார்‌. இத்தோடூ எங்கள்‌
படம்‌ எடுக்கும்‌ படலம்‌ நிறைவேறியது.

ஒரு நல்ல நாளில்‌ அப்பா மீண்டும்‌ ரவுணுக்குப்‌ போய்‌ (இந்த
முறை பஸ்ஸில்‌) எங்கள்‌ குறூப்‌ போட்டோவை எடுத்து வந்தார்‌.
நான்‌ மாத்திரம்‌ ஏதோ முழுசுவது போல நிற்பதாக பொதுவான
அபிப்பிராயம்‌ இருந்தாலும்‌, “என்ரை பிள்ளையின்ரை கண்‌ அப்பிடி..
நாவூறு பாராதையுங்கோ' என்று எனது அம்மா சொல்லிக்‌
கொள்வார்‌.

காலப்‌ போக்கில்‌ எங்கள்‌ கிராமத்துக்கும்‌ ஒரு ஸ்ரூடியோ வந்தது.
ஆனால்‌ எங்கள்‌ கிராமத்தவர்கள்‌ ஏனோ தொடர்ந்தும்‌ ரவுணுக்குப்‌
போய்‌ படம்‌ பிடித்துக்‌ கொண்டார்கள்‌. உள்ளுர்‌ ஸ்ரூடியோக்காரருக்கு
போதிய வருமானம்‌ இருக்கவில்லை. “அரைச்‌ சலார்‌(அரைக்‌ கட்டணம்‌)
என்று துணியில்‌ எழுதி, றோட்டுக்கு குறுக்காக கட்டிப்பார்த்தார்‌.
வைக்கோல்‌ ஏற்றி வந்த லொறி ஒன்று அதையும்‌ ஒரு நாள்‌ அறுத்துக்‌
கொண்டூ போய்‌ விட, மனிதர்‌ மிகவும்தான்‌ நொந்து போய்விட்டார்‌
என்று நானும்‌ எனது நண்பர்களும்‌ கேள்விப்பட்டோம்‌. எப்படியாவது
அவருக்கு கை கொடுப்பது என்று தீர்மானித்துக்‌ கொண்டோம்‌.

74 6. எஸ்‌. ப௩ல27 சந்தன்‌


Page 87அதற்கு ஒரு சந்தர்ப்பம்‌ வந்தது. எங்கள்‌ ஊருக்கு சற்றுத்‌ தள்ளியிருந்த
கோயிலின்‌ கடல்‌ தீர்த்தம்‌ முடிந்து, எங்கள்‌ ஊருக்கு நடையாக வந்து
கொண்டிருந்தோம்‌. சிரிப்பும்‌, கேலிப்‌ பேச்சுகளுமாக எங்கள்‌ குட்டி ரவுணை
அண்மித்த பொழுது நேரம்‌ பத்து மணிக்கு மேலாகி விட்டிருந்தது.

ஸ்ரூடியோ பூட்டப்‌ பட்டிருந்தது. ஆனால்‌ உரிமையாளர்‌ வழக்கமாக
ஸ்ரூடியோவில்தான்‌ தங்கியிருக்கிறார்‌ என்று எங்களுக்குத்‌ தெரியும்‌.
எனவே முதலில்‌ மெதுவாகத்தான்‌ கதவில்‌ தட்டினோம்‌. கதவு
திறக்கப்படும்‌ அறிகுறிகள்‌ தென்படாமல்‌ போகவே எங்கள்‌ தட்டூதல்‌
சற்றுப்‌ பலமானதாக மாறியது.

“பாவம்‌ மனுஷன்‌... நித்திரை போலை.. விடூங்கோடா” என்று
எங்களுக்குள்‌ யாரோ சொல்லத்தான்‌ செய்தார்கள்‌. ஆனால்‌ நாங்களோ
அன்று அவருக்கு உதவி செய்யாமல்‌ போவதில்லை என்று உறுதி
பூண்டவர்களாக, தொடர்ந்து கதவில்‌ தட்டி உதைத்து) இறுதியாக
கதவு திறக்கப்பட்டது.

நித்திரைக்‌ கலக்கத்துடன்‌, கையில்‌ ரோச்‌ லைற்றுடன்‌ நின்ற
ஸ்ரூடியோக்காரர்‌ ஈனஸ்வரமாக, “என்ன தம்பி..” என்று முன்னுக்கு
நின்ற என்‌ நண்பர்களில்‌ ஒருவரைக்‌ கேட்டார்‌. “அண்ணை... இப்ப படம்‌
எடுக்கலாமே” என்று நாங்கள்‌ ஏககுரலில்‌ கேட்கவும்‌, மனிதர்‌ என்ன
நினைத்தாரோ, “ஓம்‌” என்று சொல்லி எங்களை உள்ளுக்கு அழைத்தார்‌.

மெதுவாக அங்குமிங்கும்‌ நடந்து, லைற்றுகளைப்‌ போட்டார்‌. சின்னக்‌
கமரா ஒன்று ஸ்ராண்டில்‌ பொருத்தப்பட்டிருந்தது. அங்கு ஒட்டியிருந்த
படங்களில்‌, சில பெண்கள்‌ கையில்‌ மறக்காமல்‌ கைலேஞ்சி வைத்துக்‌
கொண்டு, கண்களில்‌ கறுத்தக்‌ கண்ணாடி அணிந்து கொண்டூ,
பிறைச்சந்திரனில்‌ ஏறியிருந்தார்கள்‌. போதாதற்கு ஒரு சிரிப்பு. நீல்‌
ஆம்ஸ்ட்றோங்‌ கூட அப்படி பெருமிதச்‌ சிரிப்பு சிரித்திருக்க மாட்டார்‌.
மந்தஹாசம்‌ என்றால்‌ தெரியுமா ? அதேதான்‌.

“தம்பி.. வெளிக்கிட்டுக்‌ கொண்டு வாறீங்களே” என்று மனிதர்‌
பணிவாக ஒரு தடூப்பால்‌ மறைக்கப்பட்டிருந்த பகுதியைக்‌ காட்டினார்‌.
அங்கே முகம்‌ பார்க்கமுடியாத ஒரு கண்ணாடியும்‌. ஒரேயொரு
குட்டிக்கூரா பவுடர்‌ ரின்னும்‌ இருந்தன. மணம்‌,குணம்‌ யாதும்‌ இல்லாத
அந்த பவுடரை(மாவை) சாடையாகப்‌ பூசிக்கொண்டு கசங்கிய வேட்டி,
சேர்ட்டைச்‌ சற்ற சீர்செய்து கொண்டூ வந்து நின்றோம்‌.

ரேற்றுப்‌ டோ௨ இ.ருக்சிறது 75


Page 88ஓவ்வொருவராக கைகளை நேராக உடம்போடூ ஒட்ட வைப்பித்து,
இயற்கையாகவே சரிந்து நிற்கும்‌ எங்கள்‌ தலைகளைப்‌ பிடித்து நேராக்கி
வைத்து, நாய்க்காதுகளாக தொங்கிக்‌ கொண்டிருக்கும்‌ எங்கள்‌ சேர்ட்‌
கொலர்களை நிமிர்த்தி வைத்து, மனிதர்‌ அந்த நித்திரைக்‌ கலக்கத்திலும்‌
தன்‌ தொழிலில்‌ அக்கறையாகத்தான்‌ இருந்தார்‌.

இவ்வளவு காரியங்களுக்குப்‌ பிறகு போய்‌ அவர்‌ செய்த காரியந்தான்‌
எங்களுக்கு அடக்க முடியாத சிரிப்பைத்‌ தந்தது. அவர்‌ மிகவும்‌
குள்ளமானவர்‌. கமராவுக்குப்‌ பின்னால்‌ நிலத்தில்‌ கிடந்த
பலகைத்துண்டுகளை ஒன்றுக்கு மேல்‌ ஒன்றாக பக்குவமாக அடுக்கிக்‌
கொள்வார்‌. பிறகு அதன்‌ மேல்‌ ஏறிக்கொண்டு கமராவுக்கு ஊடாக
எங்களைப்பார்ப்பார்‌. பலகை சற்று விலகிக்கொள்வது தெரிந்ததும்‌, “சடார்‌”
என்று குதித்து விடூவார்‌.

இதற்கிடையில்‌, சிரிப்பு மிகுதியினால்‌ எங்கள்‌ கைகள்‌ இடம்‌ மாறி,
தலைகள்‌ 60 பாகையில்‌ சரிந்து, கொலர்கள்‌ மீண்டும்‌ நாய்க்காதுகளாக
மாறிவிடும்‌. சளைக்காமல்‌ அவர்‌ மீண்டும்‌ எங்களிடம்‌ வந்து, நேராக்கி,
நிமிரத்தி எங்களை ஒரு தரத்துக்கு இரண்டூ தரம்‌ பார்த்துப்‌, போய்‌
பலகையில்‌ ஏற, மீண்டும்‌ அவை சரிய... நாங்கள்‌ சிரிக்க..

சளைக்காமல்‌ வேதாளத்தை மரத்திலிருந்து தள்ளிய
விக்கிரமாதித்தியனைப்‌ போல அவரும்‌ முயன்று ..

கடைசியில்‌ ஏதோ எடுத்து முடித்து, “வாற கிழமை வாங்கோ...படம்‌
தாறன்‌'” என்று மன்றாடாத குறையாக வழி அனுப்பி வைத்தார்‌. ஒரு
மாதத்திற்குப்‌ பிறகுதான்‌ போகக்‌ கிடைத்தது. அப்போது ஸ்ரூடியோ
அங்கு இருக்கவில்லை.

76 ப 6ஃ. எஸ்‌. ப௩ல2சநதரன்‌


Page 89 

 

 

 

 

 

 

 

5ர.ர15ஜது*- சலுவண்‌
ஆஸ்மத்தரீக்கு போகிறான்‌

77


Page 9078

ஒரீங்கள்‌ இளமைக்காலத்தில்‌ எங்களுக்கு சிம்ம
சொப்பனமாக இருந்த இடங்கள்‌ இரண்டூ - ஒன்று எங்கள்‌
கிராமத்துப்‌ பள்ளிக்கூடம்‌. மற்றது எங்கள்‌ கிராமத்து
ஆஸ்பத்திரி.

எங்கள்‌ வயதினருக்கு கிராமத்து ஆஸ்பத்திரி என்றாலே
பயம்‌ வருவதற்கு காரணங்கள்‌ இருந்தன. அம்மைக்கு தடுப்பு
ஊசி போடுவதற்காக அல்லது பேதி மருந்து தருவதற்காகத்தான்‌
எங்களை அனேகமாக அழைத்துப்‌ (இழுத்து) போவார்கள்‌.

அங்கே ஊசி போடுவதற்கான பீடிகைகளைச்‌ செய்யும்‌
போதே அப்போதிக்கரி என்ற உதவிமருத்துவர்‌ காளைமாட்டில்‌
ஏறிவரும்‌ தென்புலத்துத்‌ தெய்வம்‌ போலத்‌ எங்கள்‌
கண்களுக்குத்‌ தோன்றுவார்‌. அவர்‌ கையில்‌ ஊசி எடுக்கவே
நாங்கள்‌ கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு அண்டை
அயல்‌ கலங்குமளவிற்கு கத்தத்தொடங்கி விடுவோம்‌.

“டேய்‌... நான்‌ என்னும்‌ போடவேயில்லை.. உப்பிடிக்‌
கத்திறாய்‌ “ என்று அவர்‌ சொல்லி, நாங்கள்‌ தப்பி விட்டோமோ
என்று நினைக்கிற அவகாசத்தில்‌ இடதுகையின்‌ மேற்புறத்தில்‌
ஏதோ குத்துவது போல..

பிறகென்ன வீடூ வரும்‌ வரைக்கும்‌ முகாரி ராகம்‌
(அழுகைக்கானது) பாடிக்கொண்டு வருவோம்‌. அம்மைப்‌

6. எஸ்‌. ப௩ல22ரன்‌


Page 91பால்‌ போட்ட வீரத்‌ தழும்பு என்னையொத்த வயதுக்காரர்களின்‌
இடதுகையில்‌ தோள்மூட்டூக்கு சற்றுக்கீழே நீள்‌ வட்டமாக இருக்கும்‌.
காலப்போக்கில்‌ காணாமல்‌ போய்விட்டது. தழும்பு மாத்திரமல்ல,
அம்மைப்பால்‌ கட்டும்‌ பழக்கமுந்தான்‌. இதே மாதிரித்தான்‌ பேதி
குடித்தலும்‌. (யார்‌ குடித்தார்கள்‌...வில்லங்கமாக பருக்கினார்கள்‌)

நானும்‌ தம்பிமாரும்‌ எந்த நினைவு அப்பாவுக்கு வரக்கூடாதென்று
கடவுளை கற்பூரம்‌ கொழுத்தாமல்‌ (வாங்கக்‌ காசில்லாததினால்‌) வேண்டிக்‌
கொண்டிருந்தோமோ, அது திடீரென்று ஒருநாள்‌ அப்பாவுக்கு ஞாபகம்‌
வந்து விடும்‌.

“இவன்‌ தம்பிக்கு பேதி குடூத்தும்‌ கன நாளாச்சு” என்பார்‌. அவர்‌
சொல்லுக்கு அப்பீல்‌ ஏது?

அடூத்தநாள்‌ காலையிலேயே பலிக்கடாவுக்கு சோடனைகள்‌ செய்வது
போல என்னை அம்மா வெளிக்கிடூத்தவும்‌, ப

“என்ரை அம்மாவெல்லே நாளைக்கு குடிக்கிறன்‌' ' என்று
நாளையென்பது ஜம்பது ஆண்டூகளுக்குப்‌ பிறகு வருவது போன்ற
நினைப்பில்‌ மன்றாடவும்‌,

“இவன்‌ இன்னும்‌ வெளிக்கிடயில்லையே என்று அப்பா
உறுமிக்கொண்டு வர, அவரது கோபத்தினால்‌ வரும்‌ விளைவுகளை
விட பேதி ஒன்றும்‌ பெரிதாக தீங்கு விளைவிக்காது என்ற நம்பிக்கையில்‌,
மனதிற்குள்‌ ஒரு பாட்டம்‌ அழுது கொண்டூ புறப்படூவேன்‌.

பேதி என்ற அந்தக்‌ கசப்புப்‌ பானத்தை குடித்த உடன்‌ வாயில்‌
போட்டுக்‌ கொள்வதற்காக, அம்மா ஒரு கடதாசிச்‌ சரையில்‌ சீனி
கொஞ்சம்‌ சுற்றித்‌ தந்து விடுவார்‌. காலையில்‌ ஒன்றும்‌ சாப்பிடாத
நியைில்‌, உடம்பு ஒரு பக்கமும்‌ கால்கள்‌ மறு பக்கமுமாகப்‌ போக,
புழுதி ஒழுங்கைகளுக்குள்ளால்‌ வளைந்து வளைந்து நடந்து, கப்பி
(தார்‌ போட்டு, அது மாரி வெள்ளத்தில்‌ அள்ளுண்டு போக கற்கள்‌
துருத்திக்கொண்டு நின்று கால்களைப்‌ பதம்‌ பார்க்கும்‌) றோட்டில்‌ ஏறிக்‌
கடந்து, ஆஸ்பத்திரிக்‌ கேற்றை அடைய, என்னைப்‌ போன்ற நிலையில்‌
இன்னும்‌ சில அபாக்கியவான்கள்‌ நின்றும்‌, இருந்தும்‌, சிலவேளைகளில்‌
சரிந்திருந்தும்‌, கிடந்தும்‌ என்னைப்‌ பரிதாபமாகப்‌ பார்ப்பார்கள்‌.

சற்றும்‌ டோ௨ூ இருக்கிறது 79


Page 92என்‌ முறை வந்ததும்‌, அப்பா என்னை அசையாமல்‌ (ஓடாமல்‌)
பிடித்துக்கொள்ள, அந்த சிறு ஆஸ்பத்திரியின்‌ பணியாளர்‌ (அவரை
ஈ ஓடலி என்பார்கள்‌- அந்தப்‌ பெயர்‌ எப்படி வந்தது என்று இன்று
வரை எனக்குத்‌ தெரியாது) எனது தாடையை இறுகப்பிடித்துக்‌
கொண்டு, (மாட்டுக்கு புண்ணாக்கு கொடுக்கும்‌ பாணியில்‌ ) ஒரு
பெரிய கண்ணாடிக்‌ குடூவையிலிருந்து அந்த உப்புக்‌ கலவையை
ஒரு சொட்டூ விடாமல்‌ என்‌ வாய்க்குள்‌ வார்த்து விடூவார்‌. அவசரம்‌
அவசரமாக சீனிச்சரையை விரித்து வாய்க்குள்‌ போட்டுக்‌ கொள்ளவும்‌,
அது எதிர்‌ விளைவைத்தான்‌ கொண்டூ வரும்‌.

“ஓ...” என்று விரித்த வாயை அப்பாவின்‌ அதட்டலினால்‌
பொத்திக்‌ கொண்டு, அதாவது ஓங்காளத்தை அடக்கிக்‌ கொண்டு
மீண்டும்‌ வீடு நோக்கி எங்கள்‌ பவனி தொடரும்‌. வழக்கமாக என்னோடு
பிரச்சினைப்படூம்‌ என்‌ தம்பிமார்களும்‌ என்‌ கண்ணீர்‌ சிந்தின
கோலத்தைக்‌ கண்டதும்‌ மெதுவாக ஓதுங்கிக்‌ கொள்வார்கள்‌.
தங்களுக்கும்‌ இது என்றோ ஒரு நாள்‌ நடக்கும்‌ என்று
யோசித்தார்களோ என்னவோ, அனுதாபம்‌ கூட சாடையாக அவர்கள்‌
பார்வையில்‌ எட்டிப்‌ பார்க்கும்‌.

வாசலடியில்‌ காத்து நின்ற அம்மா மூக்குப்‌ பேணியில்‌ நிறைய
தேனீர்‌ விட்டூ விட்டுத்‌ தர, வாங்கிக்‌ குடித்துவிட்டு, பின்னேரம்‌ வரை
பின்காணிக்குள்தான்‌ சீவியம்‌.

காய்ச்சல்‌ போன்ற சாதாரண தர வருத்தங்களுக்கு, பக்கத்து
ஒழுங்கையில்‌ உள்ள ஒரு வீட்டில்‌ சூலம்‌ நட்டு வருடாவருடம்‌ மடை
போடுகிற அப்பு மந்திரிச்சுப்‌ போடுகிற திருநீறே சிலவேளைகளில்‌
போதுமானதாக இருக்கும்‌. தலையில்‌ கொத்தாக திருநீற்றை வீசி,
மிகுதியை நேராக முகத்தினை நோக்கி ஊதுகின்றபோதே காய்ச்சல்‌
சற்றுக்‌ குறைவானது போலத்‌ தெரியும்‌. இல்லாவிடின்‌ அப்பு கொஞ்சம்‌
குறைவாகத்‌ (மங்கலாகத்‌) தெரிவார்‌, தீருநீறு கண்ணுக்குள்‌
போனதினால்‌.

அதையும்‌ தாண்டி காய்ச்சல்‌ இறங்காவிடின்‌ எங்கள்‌ பரியாரியார்‌
௯ப்பிடுதூரத்தில்தான்‌ இருக்கிறார்‌. கொடுத்துச்‌ சிவந்த கர்ணனின்‌
கைகளைப்போல மூக்குப்‌ பொடிபோட்டதினால்‌ சிவந்து போன கூர்‌

80 62. எஸ்‌. பு௩ல22*ன்‌


Page 93ணக அன்னன்‌ ட பட

மூக்குடன்‌, அவர்‌ கையில்‌ பளபளக்கும்‌ ஒரு பித்தளைப்பெட்டியுடன்‌
திருக்கை வண்டிலில்‌ வந்து இறங்குவார்‌.

அந்தப்‌ பெட்டிக்குள்ளேதான்‌ எங்கள்‌ ஊரில்‌ எவருக்கும்‌
வரக்கூடிய சகல வருத்தங்களுக்கான குளிகைகள்‌ (குளிசைகள்‌
என்றும்‌ சொல்வார்கள்‌) இருக்கும்‌. வந்ததும்‌ வராததுமாக என்‌
மெலிந்த கையின்‌ நாடியைப்‌ பிடித்து, கண்களை மூடி, சில
விநாடிகளின்‌ பின்னர்‌, காய்ச்சலுக்கான காரணம்‌ - சிரசில்‌ (தலையில்‌)
நீர்ப்பிடிப்பு என்று சொல்லவும்‌, நான்‌ கூட்டாளிகளோடூ பள்ளிக்கூட
லீவு விட்டதைக்‌ கொண்டாட, மழைநீர்க்‌ குளத்தில்‌ தொடர்ந்து சில
நாட்களாக நந்தப்‌ போனதை, என்னுடைய முறுகலையும்‌
பொருட்படுத்தாமல்‌, அம்மா விபரமாக அவருக்குச்‌ சொல்வார்‌.

மருந்துக்கு மேலாக அவர்‌ சொல்லும்‌ பத்தியங்களை அம்மா
கவனமாகக்‌ கேட்டூக்‌ கொள்வதும்‌, அவற்றையெல்லாம்‌ மறக்காமல்‌,
கடைப்பிடிப்பதும்‌ என்னை வியக்கவைக்கும்‌. இப்போதெல்லாம்‌
ஒவ்‌ வொருவரினதும்‌ மேசையில்‌, கபினெற்றில்‌, ஒரே ஒரு
வருத்தத்திற்கே எத்தனை மருந்து வகைகள்‌ வரிசையாக அடூக்கி
வைத்திருப்பதைக்‌ காணும்போது அந்தப்‌ பித்தளைப்பெட்டியை
நினைத்துக்‌ கொள்வேன்‌. அவரைப்‌ பொறுத்தவரையில்‌ ஆங்கில
வைத்தியம்‌ என்பது கிள்ளுக்கீரை போன்றதே. ஒரு பொருட்டாக
மதிக்கவே மாட்டார்‌.

இருப்பினும்‌ காலப்போக்கில்‌ நாட்டுவைத்தியத்தில்‌ நம்பிக்கை
கரைந்து போக ஊசி போட்டு உடனடி நிவாரணம்‌ தருபவர்கள்‌ என்ற
ரீதியில்‌ அப்போதிக்கரி முதல்‌ பெரிய டாக்டர்‌ வரை தேடிச்‌
செல்பவர்கள்‌ அதிகரித்தார்கள்‌.

இலவச மருத்துவமனைகள்‌ அதாவது அரசாங்க
ஆஸ்பத்திரிகளுக்கு ஆட்கள்‌ படையெடுக்கத்‌ தொடங்கினார்கள்‌.
நோயிருக்கிறதோ இல்லையோ, நிம்மதியாக படூத்தெழும்பலாம்‌ என்று
சிலர்‌ நினைத்திருக்கலாம்‌. வார்ட்டூகள்‌ நிரம்பி வழிந்தன.

சேற்றுப்‌ டபோ௨ூ இருக்கிறது 81


Page 94ஒரு முறை நாய்‌ கடித்ததிற்கு (ஒரு முறைதான்‌.. இரண்டாவது
முறை கடிப்பதற்குள்‌ ஓடித்‌ தப்பி விட்டேன்‌) ஊசி போட என்னைக்‌
கொண்டூ போனார்கள்‌. கடித்த நாய்க்கு ஊசி போடாமல்‌ காயம்‌
பட்ட எனக்கு ஏன்‌ ஊசி போட்டார்கள்‌ என்று அழுதழுது அம்மாவைக்‌

கேட்டது ஞாபகத்தில்‌ இருக்கிறது.

இந்தக்‌ கேள்வியை இப்போதும்‌ பலர்‌ வெவ்வேறு சந்தர்ப்பங்களில்‌
கேட்டுக்‌ கொண்டூதானிருக்கிறார்கள்‌ !

82 62. எஸ்‌. ப௩ல2சந்தரன்‌


Page 95 

 

 

 

 

 

அது ஒரு ஈன்னீக்‌ காலந்‌

63


Page 9684

ஒன்னய வைத்த நடூ உச்சி பிரித்த
தலையுடன்‌, மரத்தெறி வைத்த தொள,தொள காற்சட்டையும்‌,
வெள்ளைச்‌ சேர்ட்டூம்‌ அணிந்து, பாலபாடப்‌ புத்தகத்தையும்‌,
சிலேற்றையும்‌, அதில்‌ எழுதி, எழுதி குறுணியாய்ப்‌ போன
சிலேற்‌ பென்சிலுடன்‌ பற்றிப்‌ பிடித்துக்‌ கொண்டு, குறுக்கு
வழி என்ற ஒரே காரணத்தால்‌, வரும்‌ பயத்தையும்‌
பொருட்படூத்தாமல்‌ அம்மன்‌ கோயில்‌ சூழவுள்ள
பற்றைக்காட்டின்‌ ஊடாக, மென்சிவப்பு கம்பளமாக
பரவியிருக்கும்‌ வாகை மரத்தின்‌ பூக்களின்‌ மேலாக.
ஓட்டமும்‌, நடையுமாக, பிந்திப்‌ போனதுக்காக வாத்தியார்‌
பிரம்பினால்‌ அடிக்கப்போவதை நினைத்து ஏங்கிக்‌ கொண்டே,
அரைகுறை அழுகையுடன்‌ போன அது ஒரு அருமையான
பள்ளிக்‌ காலம்‌.

வழியிலேயே சாடையான விம்மல்கள்‌ தொடங்கி,
பள்ளிக்கூடத்தின்‌ பின்பக்கத்தில்‌ இருக்கும்‌ ஒழுங்கையில்‌
கால்‌ வைக்க, என்‌ வகுப்புக்காரர்கள்‌ கோரஸாக
“ஆனா..ஆவன்னா..ஈனா.. ஈயன்னா..'” என்று சொல்வது
கேட்கவும்‌, வகுப்புத்‌ தொடங்கி, வெகு நேரமாகி விட்டதென்று
தெரிந்து, அதனால்‌ அழுகை தொடங்கி, தலைமை வாத்தியார்‌
பிரம்புடன்‌ நிற்பதைக்‌ கண்டதும்‌, காற்சட்டையை
தன்னிச்சையாக நனைத்துக்‌ கொள்வதும்‌ உண்டு.

தலையில்‌ இருந்து வழிந்து நெற்றிக்கு வந்து விட்ட
எண்ணெய்‌, ஓடியதினால்‌ வந்த வியர்வை, இத்தோடு

6. எஸ்‌. பால22ரன்‌


Page 97கண்களிலிருந்து அருவியாகக்‌ கொட்டும்‌ கண்ணீரும்‌ கலந்த அந்த
அபிஷேகக்‌ கோலத்தைக்‌ கண்டதும்‌ தலைமை வாத்தியாருக்கே
சிலவேளைகளில்‌ இரக்கம்‌ வந்து விடும்‌.

“இனி.. இப்பிடி.. பிந்தி வந்தியோ..” என்று சொல்லிப்‌ பிரம்பை
விசுக்கவும்‌ ( வெறும்‌ விசுக்கல்தான்‌), காற்றைக்‌ கிழித்துக்கொண்டு,
“ஸ்ஸ்ஸ்ஸ்‌...” என்று வரும்‌ அந்த ஒலி கலக்கம்‌ தர, அழுகையை
நிறுத்தாமலே, வகுப்புக்குள்‌ ஓடவும்‌, “ஆனா..ஆவன்னா” கோரஸ்‌ பாடிக்‌
கொண்டிருந்தவர்கள்‌ திடீரென்று நிறுத்த, வகுப்பு வாத்தியார்‌ என்னை
கோபமாகப்‌ பார்த்து, எழும்பி நிற்கப்‌ பணிப்பார்‌. வகுப்பு முடியும்‌ வரையும்‌
நின்ற நிலையில்‌, அவர்களோடூ சேர்ந்து கத்திமுடியும்‌ வேளையில்‌
காற்சட்டை கொஞ்சம்‌ காய்ந்து போய்விடும்‌.

நாங்கள்‌ பள்ளிக்கூடத்தில்‌ அடி வாங்குவதற்கு 1001 காரணங்கள்‌
இருக்கும்‌. வீட்டுக்‌ கணக்கு செய்யாததற்கு, முதல்‌ நாள்‌ பள்ளிக்கூட
வளவில்‌ இருக்கும்‌ மாமரத்தில்‌ ஏறியதிற்கு (கவனிக்கவும்‌ - ஏறியது
மட்டுந்தான்‌. மாங்காய்‌ பிடூங்கவில்லை), ராசனோடூ மாபிள்‌ அடிக்கும்போது
வாக்குவாதப்பட்டு அவனைத்‌ தள்ளி விழுத்தியமைக்கு என்று தினம்‌
தினம்‌ ஏதாவது பிரச்சினை வந்தே தீரும்‌.

இதற்காக வாத்தியார்‌ அடிக்கக்கூடாதென்று பிள்ளையார்‌ கோயில்‌,
அம்மன்‌ கோயில்‌ என்று கண்ணில்‌ படும்‌ கோயில்களையெல்லாம்‌
கையெடுத்துக்‌ கும்பிட்டுக்‌ கொண்டு போய்‌ இவை ஒன்றுக்கும்‌
சம்பந்தமில்லாத ஒரு காரணத்துக்காக, உதாரணமாக இங்கிலீஸ்‌
எழுத்து, நீட்டி முழக்கி எழுதும்‌ நாலு வரிக்‌ கொப்பி கொண்டு
போகாதற்காக அடி வேண்டுவோம்‌.

கடவுள்தான்‌ என்ன செய்வார்‌. இப்படி ஒரு புதுப்‌ பிரச்சினை நாலு
வரிக்கொப்பியால்‌ வரும்‌ என்று அவருக்கு தெரியாதே என்று ஆறுதல்‌
அடைவோம்‌.

இந்த பிரச்சினைகளுக்குப்‌ பயந்து பள்ளிக்கூடம்‌ போகாமல்‌ விட்டால்‌
அது மகா பிரச்சினையாகிவிடும்‌. இன்னுமொன்று - அந்த நாட்களில்‌
பள்ளிக்கூடம்‌ போகாவிட்டால்‌, “ஏதோ காரணத்தால்‌ வரவில்லை...
போகட்டூம்‌' என்று விட்டூவிடமாட்டார்கள்‌.

செற்றுப்‌ டோ௨ இருக்கிறது 85


Page 98மாணவர்கள்‌ வருகைக்கும்‌, ஆசிரியர்களின்‌ சம்பளத்திற்கும்‌ ஏதோ
தொடர்பு அக்காலத்தில்‌ நடைமுறையில்‌ இருந்ததினால்‌, காலையில்‌
இடாப்பு (யார்‌ யார்‌ வந்திருக்கிறார்கள்‌, யார்யார்‌ வரவில்லை என்று
அறியும்‌ பதிவேடு) ௯ூப்பிட்டபின்பு வந்திருக்கும்‌ வாட்டசாட்டமான
மாணவர்கள்‌ (சிறுச்சிறு குழுக்களாக) வராதவர்களை தேடி அழைத்து
வர அனுப்பப்படூவார்கள்‌.

தேடிப்‌ போகின்றவர்கள்‌ மகாபுத்திசாலிகள்‌ - தேடப்‌ படூபவர்கள்‌
அருகில்‌ உள்ள தாமரைக்குளத்தில்‌ நீந்திக்கொண்டிருக்கிறார்களா -
றோட்டோரத்‌ தோசைக்கடையில்‌ தோசை சாப்பிட்டுக்‌ கொண்டிருக்கிறார்களா
என்றெல்லாம்‌ பார்த்துத்தான்‌ அவர்கள்‌ வீடுகளுக்கு போவார்கள்‌.

அவர்களும்‌ குறைந்தவர்களல்ல. வீட்டுக்குள்‌ இருந்து கொண்டே,
அச்சொட்டாக தங்கள்‌ தாயின்‌ குரலில்‌ “அவனுக்கு அம்மாள்‌ வருத்தம்‌
(பொக்குளிப்பான்‌ போன்ற பொல்லாத தொற்றுநோய்‌ என்று சொன்னால்‌
உள்ளே வரமாட்டார்கள்‌ என்ற துணிவுதான்‌) படூத்திருக்கிறான்‌'” என்ற
மாதிரிச்‌ சொல்லவும்‌, வந்தவர்கள்‌ நேரே ஓட்டமாகப்‌ போய்‌ பள்ளிக்கூடத்தில்‌
செய்தி சொல்லி விட்டூ, பல நாட்களுக்கு தங்களுக்கு அந்த நோயின்‌
அறிகுறி தெரிகிறதா என்று பார்த்து பார்த்து ஏங்கிக்‌ கொண்டிருப்பார்கள்‌.

ஆனால்‌ இதற்கு எதிர்மாறாக, திரும்பிப்‌ போவதாக பாசாங்கு செய்து
விட்டு, அருகில்‌ எங்கேயாவது பதுங்கியிருந்து, மிமிக்றி செய்தவர்‌
அனாயாசமாக தன்‌ வீட்டில்‌ இருந்து வெளிவரவும்‌, கோழிக்குஞ்சை
அமுக்குவது போல ஆளை அமுக்கி, இழுத்துக்‌ கொண்டு வந்து
தலைமை ஆசிரியரின்‌ முன்னால்‌ நிறுத்தவும்‌ செய்வார்கள்‌ சிலர்‌.

படிப்பென்னவோ ஆரம்பத்தில்‌ பெரிய சிரமமாக இருக்காது.
வாத்தியார்‌ அல்லது சற்றுக்‌ கெட்டிக்காரனான ஒரு மாணவன்‌
உரத்தகுரலில்‌ சொல்வதை திருப்பிச்‌ சொல்லிக்‌ கொண்டிருந்தாலே
போதும்‌. அதற்குள்ளேயே நித்திரை தூங்கி அல்லது அருகில்‌ நிலத்தில்‌
இருக்கிறவனோடுூ கதைக்கப்போய்‌ வாத்தியாரின்‌ பிரம்பின்‌ நுனி
“சுள்‌” ளென்று படூவதுமுண்டு.

பிரச்சினை எப்போது தொடங்குமென்றால்‌, சொன்னதை
எழுதப்போகும்போதுதான்‌. “அப்பம்‌” என்ற வார்த்தையை குற்றுப்போட
மறந்து “அபபம” என்று சிங்களக்‌ கிராமப்பெயர்‌ மாதிரி எழுதி பலநாட்கள்‌
அடி வாங்கியிருக்கிறேன்‌.

86 6. எஸ்‌. ப௩ல22 ஆதன்‌

 


Page 99 

கணக்குத்தான்‌ என்னையொத்தவர்களுக்கு மிகுந்த சண்டித்தனம்‌
செய்யும்‌ பாடமாக இருக்கும்‌. ஒற்றை இலக்கங்களின்‌ கூட்டல்‌,
கழித்தலுக்கே கைவிரல்கள்‌, கால்விரல்கள்‌ அத்தனையும்‌ பாவித்தும்‌
விடை காணமுடியாமல்‌, “அடி,முடி' தேடிக்‌ களைத்த
“பிரம்ம,விஷ்ணுக்களைப்‌ போலத்‌ தவிப்போம்‌.

கோபம்‌ தாங்கமுடியாமல்‌ வாத்தியார்‌, “ நீங்களெல்லாம்‌ மாடுதான்‌
மேய்க்கப்‌ போறீங்கள்‌”” என்று சாபம்‌ போடூவார்‌. கனடாவில்‌, கல்காரி
போன்ற இடங்களில்‌ உள்ள “கவ்போய்ஸ்‌” எனப்படும்‌ மாடூ
மேய்ப்பவர்களை, அவர்களுடைய கணக்கு வாத்தியார்‌ இப்படித்தான்‌
சாபம்‌ போட்டிருப்பாரோ என்று இப்போது யோசிக்கிறேன்‌.

தினமும்‌ இப்படியே போய்‌ தொண்டைத்‌ தண்ணீர்‌ வற்றக்‌ கத்தி,
பிரப்பம்‌ பழம்‌ (கையில்‌ பிரம்பினால்‌ அடி பட்ட வீக்கம்‌) வாங்கி,
அலுத்துப்போய்‌ விட்ட எங்களுக்கு, பள்ளிக்கூட விடுதலை என்றால்‌
சொல்லவா வேண்டும்‌.

அரசாங்க விடூமுறைகள்‌, பண்டிகை தினங்களுக்கு மாத்திரமல்ல,
எங்கள்‌ ஊர்‌ கோயில்‌ கொடியேறினாலே பள்ளிக்கூடம்‌ லீவு விட்டூ
விடூவார்கள்‌. அந்த பத்துப்‌ பதினைந்து நாட்களும்‌ புத்தகங்கள்‌, சிலேட்‌,
பென்சில்‌ எல்லாவற்றையும்‌, பரணுக்கு மேலே எறிந்து விட்டூ ஓட்டமும்‌,
ஆட்டமும்‌, பாட்டும்‌ தான்‌.

ஆடிப்‌ பிறப்புக்குக்‌ கூட விடுதலை (விடுமுறை என்பதை விட
இதுதான்‌ உணர்வு ரீதியாக பொருத்தமான சொல்‌ என்று நினைக்கிறேன்‌)
விடூவார்கள்‌.

ஆடிப்‌ பிறப்புக்கு முதல்நாள்‌ பள்ளிக்கூடம்‌ விட்டதும்‌, நாங்கள்‌
படித்த எத்தனையோ பாட்டுக்களில்‌, மனப்பூர்வமான சந்தோசத்துடன்‌

பாடிச்செல்லும்‌ பாடல்‌ இதுதான்‌. நவாலியூர்‌ தங்கத்தாத்தாவின்‌ -

“ஆடிப்பிறப்புக்கு நாளை விடூதலை..
ஆனந்தம்‌ ஆனந்தம்‌ தோழர்களே..

கூடிப்‌ பனங்கட்டி கூழும்‌ குடிக்கலாம்‌
கொழுக்கட்டை தின்னலாம்‌ தோழர்களே”

“9

சற்றுட்‌ டோ௨ இருக்கிறது 87


Page 100 

 

 

 

 

 

 

 

 


Page 101என்‌ ன்‌.

 

 

 

 

 

 

 

 

 

 

 

89

 


Page 10290

(ஏற்கெனவே ஒருபேப்பரில்‌ வெளிவந்த கனடா
கருணாவின்‌ கட்டுரையின்‌ தொடர்ச்சி என்று நினைத்து
சந்தோசப்படும்‌ வாசகர்கள்‌ மன்னிக்கவும்‌. இது 54% (11270),
4றச77007௪, 57/11/77௪7 போன்ற ஆங்கிலம்‌ பதங்களை
ஆங்காங்கே தாவிய அறிவு பூர்வமான சங்கதியல்ல.)

(ரூ); கறத்த சங்கதிகள்‌ பழக்கத்திற்கு வரமுந்திய
காலத்து, எங்கள்‌ காலத்து பெட்டிக்‌ கமராவில்‌ படம்‌ பிடிப்பது
எப்படி என்ற விஷயந்தான்‌ இனி வரப்போகின்றது.

ஆரம்பத்தில்‌ கமராவின்‌ விஞ்ஞான தத்துவத்தையே
எனக்குப்‌ புரிய வைத்தவர்‌, ஏற்கெனவே உங்களுக்கு
அறிமுகமான எங்கள்‌ ஞானகுருவான மகாலி அவர்கள்தான்‌.
சுயகண்டூபிடிப்பாக எங்கள்‌ அன்றாடப்‌ பாவனைக்கான
பொருட்களிலிருந்து வாயுக்களை உருவாக்கி பலூன்களில்‌
நிரப்பி ஆகாயத்தில்‌ பறக்க விடூவார்‌. நாங்களும்‌ அண்ணாந்து
பார்த்தபடியே அந்தப்‌ பலூன்களைத்‌ தொடர்ந்து ஓடி, எங்கள்‌
ஊர்‌ எல்லை கடந்து தோட்டம்‌, துரவுகள்‌ எல்லாம்‌ கடந்து,

- வழியில்‌ வருபவர்களோடூ மோதி விழுந்தாலும்‌, தொடர்ந்தும்‌

பார்வையை விடாது, கடைசி கடைசியாக இன்ன
பனைக்கூடலின்‌ மேலாக பலூன்‌ பறந்து சென்று மறைந்தது
என்று மகாலியிடம்‌ வந்து சொல்லுவோம்‌. அவர்‌ அதற்கு
முதலே அடுத்த விஞ்ஞானப்‌ பரிசோதனைக்காண முயற்சியில்‌
ஈடுபட்டுக்‌ கொண்டிருப்பார்‌.

62. எஸ்‌. ப௩ல22ந%ன்‌


Page 103பள்ளிக்கூட லீவு நாட்களில்தான்‌ : இந்தப்‌ பரிசோதனைகள்‌
நடக்குமென்றில்லை. இதற்காகவே எங்களில்‌ சிலர்‌ பள்ளிக்குப்‌
போகாமல்‌ நின்றதுமுண்டு. வரலாற்றின்‌ திருப்புமுனைகளாக அமையும்‌
என்று நாங்கள்‌ நம்பிய அவரது முயற்சிகளில்‌ நாங்கள்‌ கலந்து கொள்வதே
அப்பொழுது எங்களுக்கு முக்கியமானதாகப்‌ பட்டது.

ஒருநாள்‌ திடீரென்று தான்‌ கமரா செய்ய முடிவு எடுத்திருக்கிறேன்‌
என்று ஞானகுரு எங்களுக்கு சொன்னார்‌. அதுவரையில்‌ நாங்கள்‌ கண்ட
கமரா என்பது எங்கள்‌ ஊர்‌ பத்திரிகை நிருபர்‌ கொண்டூ வரும்‌ பெரிய
கமராதான்‌. அதில்‌ பொருத்திய வட்டக்கிண்ணமும்‌, நடூவில்‌ இருக்கும்‌
பல்ப்பும்‌ எங்கள்‌ கவனத்தை ஈர்க்கும்‌. எங்கள்‌ பள்ளிக்கூட விளையாட்டுப்‌
போட்டியின்‌ முடிவில்‌, பிரதம விருந்தினராக வந்த எம்‌.பி யின்‌ கழுத்தில்‌
மாலை விழும்போது “பளிச்‌” சென்று மின்னி கண்களை கூசவைக்கும்‌.

சுட்டுப்போன (கையாடூவது, திருடுவது என்ற பொருட்படூம்‌ சுடூவது
என்ற தமிழ்ச்சொல்‌ இதிலிருந்துதான்‌ வந்திருக்க வேண்டும்‌) அந்தப்‌
பல்ப்புகளை பொறுக்குவதற்காகவே கூட்டாளிகளான எங்களுக்குள்‌
பெரிய போராட்டம்‌ நடக்கும்‌.

எப்பொழுதாவது நாங்கள்‌ சுகாதாரவிழாவில்‌ பாடமாக்கிய பேச்சை
ஒப்புவித்துக்‌ கொண்டு மேடையில்‌ நிற்கும்போது, அந்த நிருபர்‌ வந்து
தனது மாபெரும்‌ கமராவினால்‌ படம்‌ எடூத்தாரென்றால்‌ சொல்லவே
தேவையில்லை.

இரவு, பகல்‌ என்று பாராமல்‌ நானும்‌, எனது கரைச்சலினால்‌ அப்பாவும்‌
அவர்‌ வீட்டுக்கு நடையாக நடந்து, அந்த படத்தின்‌ கொப்பியை வாங்கிய
பிறகுதான்‌ ஓய்வோம்‌. கொண்டு வந்த படத்தை, பழைய பிரம்‌
ஒன்றுக்குள்‌ மினுங்கல்‌ கடதாசியின்‌ பின்னணியில்‌ செருகி, விறாந்தையில்‌
மாட்டி, அப்பா வீட்டுக்கு வருபவர்கள்‌ எல்லோருக்கும்‌ காட்டிக்‌, காட்டிப்‌
பெருமைப்படுவார்‌.

இத்துணை பிரக்யாதியுள்ள கமராவை எங்கள்‌ ஞானகுரு செய்யப்‌
போகின்றார்‌ என்றவுடன்‌, எங்கள்‌ விறாந்தைகளெல்லாம்‌ படங்களால்‌
நிரம்பி வழிவதாக கற்பனை செய்து கொண்டோம்‌. அந்த நாளும்‌
வந்தது.

சேற்றுப்‌ டோ இ.ருக்சிிறது 91


Page 104நீள்சதுரவடிவான ஹோர்லிக்ஸ்‌ பெட்டியை எடூத்துக்கொண்டார்‌. ஒரு
பக்கத்தில்‌ துவாரம்‌ இட்டு, அதற்கு அளவாக பூதக்கண்ணாடி வில்லை
ஒன்றைப்‌ பொருத்தி, மறுபக்கத்தில்‌ பூகோளப்‌ படங்கள்‌ கீறுவதற்காக
வைத்திருக்கும்‌ மெல்லிய கடதாசியை ஒட்டிக்‌ கொண்டார்‌. கமரா றெடி.

முற்றத்தைப்‌ பார்த்தபடி வீட்டின்‌ இருட்டான பகுதிக்குள்‌ (அக்கால
எங்கள்‌ மண்‌ வீட்டுக்குள்‌ பகலிலும்‌ கும்மிருட்டாக இருக்கும்‌) கமராவை
வைத்து, எங்களை முற்றத்தில்‌ நின்று சிரிக்கவும்‌, பேசவும்‌, ஆடவும்‌
வைத்தார்‌. மற்றவர்கள்‌ இருட்டூக்குள்ளிருந்து நாங்கள்‌ தலைகீழாக
பின்‌ கடதாசியில்‌ தெரிவதாக ஆனந்தக்கூச்சலிட்டார்கள்‌. ஆனால்‌
எங்களை நாங்களே பார்க்கமுடியாதது ஒரு குறையாகப்பட்டது.

இந்த நேரத்தில்தான்‌ பெட்டிக்‌ கமரா (80% கோரா) பற்றி
கேள்விப்பட்டோம்‌. தலைநகருக்கு அடிக்கடி போய்வரும்‌ பெரியப்பாவிடம்‌
சாம, தான, பேதம்‌ என்ற சகல அஸ்திரங்களையும்‌ பிரயோகித்து
மன்றாடி, கமரா ஒன்று வாங்கித்தரும்படி கேட்டேன்‌. ஒரு நாள்‌, இரவு
அவர்‌ வரும்‌ வரையும்‌ அவர்‌ வீட்டில்‌ அடூகிடை, படூகிடையாகக்‌ கிடந்த
என்னைத்‌ தட்டி எழுப்பி கையில்‌ புத்தம்‌ புதுக்‌ கமராவையும்‌ அதற்கான
பிலிம்‌ றோலையும்‌ பெரியப்பா கொடுத்தார்‌. என்‌ சந்தோஷம்‌
அளவிடற்கரியதாக இருந்தது. இரவு முழுக்க தூக்கமே வரவில்லை.
என்‌ கமராவை அருகில்‌ வைத்துக்‌ கொண்டே உறங்கினேன்‌.

அடூத்த ஞாயிற்றுக்கிழமை, எங்கள்‌ ஊருக்கு அண்மித்ததாக
கடற்கரையோரமாக இருந்த கோயிலுக்கு, நாங்கள்‌ கொஞ்சப்பேர்‌
சைக்கிள்களில்‌ புறப்பட்டோம்‌. நண்பனின்‌ சைக்கிளில்‌ பாரில்‌ இருந்த
என்‌ கையில்‌ எனது புதுக்கமரா பக்குவமாக இருந்தது. எங்கள்‌ பேச்சு,
மூச்சு எல்லாவற்றிலுமே எப்படி படம்‌ எடூக்கப்‌ போகிறோம்‌ என்ற கதையே
நிறைந்திருந்தது. கோயிலை அடைந்ததும்‌ பக்திபூர்வமாக வணங்கி,
தற்கால சினிமாக்களின்‌ ஆரம்ப பூசை மாதிரி செய்து கொண்டோம்‌
என்று வைத்துக்‌ கொள்ளுங்களேன்‌.

கடற்கரையோரமாக நடந்தோம்‌. பி.சி.ரீராம்‌, தங்கர்‌ பச்சான்‌
போன்றவர்களுக்கு முன்னோடிகளாக வர நினைத்தவர்களைப்போல
ஆங்காங்கு 'லொக்கேசன்‌' பார்த்தோம்‌. சரிந்தும்‌, நிமிர்ந்தும்‌ மாறி,
மாறி படங்கள்‌ எடூத்துக்கொண்டோம்‌. ஒற்றைப்‌ பனை, இலையுதிர்த்த
மொட்டை மரம்‌, மணற்குன்றுகள்‌, வானில்‌ அசையாமல்‌ நிற்கும்‌

92 6. எஸ்‌. ப௩ல22ஆ$ரன்‌


Page 105௨௨093

முகில்கூட்டங்கள்‌ எல்லாவற்றையும்‌ பாரத்து “ச்‌” கொட்டிக்‌ கொண்டோம்‌.
எங்கள்‌ புழுதிக்கால்களிலிருந்து, காற்றினால்‌ குழம்பிப்போன தலைகள்‌
வரை தனித்தனியாக படங்கள்‌ எடூத்தோம்‌. வீடூ திரும்பியபோது எங்கள்‌
உடம்ப முழுவதுமே வெயிலில்‌ அலைந்ததினால்‌ கமராக்கலரில்‌
(அட்டைக்கரியாக) இருக்கிறது என்ற வீட்டுக்காரர்‌ பேசினாலும்‌, எங்கள்‌
சாதனையை இவர்கள்‌ பார்த்து வியக்கத்தான்‌ போகிறார்கள்‌ என்று
எங்களுக்குள்‌ கதைத்துக்‌ கொண்டோம்‌.

ஸ்டூடியோவில்‌ கழுவக்கொடூத்து கிடைத்த படங்களை அவசரம்‌,
அவசரமாக பார்த்தோம்‌. ஒரு படத்தில்‌ பனையின்‌ வட்டூ (உச்சி)
வடிவாகத்தெரிந்தது. மற்றப்படத்தில்‌ புழுதி அளைந்த கால்கள்‌
- யாருடையதென்றுதான்‌ அடையாளம்‌ தெரியவில்லை) கோயில்‌
தூண்களைப்போல வரிசையாகத்‌ தெரிந்தன. இன்னமொரு படத்தில்‌
வானம்‌ தெரிந்தது. ஆனால்‌ முகில்களைத்தான்‌ காணவில்லை. நல்ல
காலம்‌ - சில படங்களில்‌ வெறும்‌ மேனியுடன்‌ (சாறங்களுடன்தான்‌)
எங்களில்‌ சிலபேர்‌ ஆதிவாசிகளைப்போல நின்றோம்‌. நாங்கள்‌ எடுத்த
படங்கள்‌ என்று சொல்லிக்‌ கொள்வதற்கு அப்படியாவது இருந்தது
சற்று ஆறுதலாக இருந்தது.

தொடர்ந்து காசு கொடுத்து பிலிம்‌ றோல்‌ வேண்டூவதென்பது மிகுந்த
சிரமமான காரியமாக இருந்ததினால்‌, பிலிம்‌ இல்லாமலே படம்‌ எடுப்பதாக
“பாவனை' செய்யத்தலைப்பட்டேன்‌. எங்கள்‌ கோயில்‌ திருவிழாவின்‌ போது
குறுக்கும்‌ மறுக்குமாக என்‌ பெட்டிக்‌ கமராவுடன்‌ நடை பயின்றேன்‌.
இப்படியாக அடிக்கடி “கிளிக்‌” செய்து கொண்டிருக்கும்போது,
தவறுதலாக அடுத்த ஊர்ப்‌ பிள்ளை ஒருத்தியை பார்த்து “கிளிக்‌:
செய்யப்‌ போக அவளின்‌ முரட்டு அண்ணன்‌ இக்காலச்சினிமாக்களில்‌
வரும்‌ அரசியல்வாதிகளைப்‌ போல முரண்டூ பிடித்துக்கொண்டான்‌.
ஆனால்‌ அவன்‌ பிலிமை தரச்‌ சொல்லிக்‌ கேட்கவில்லை பிலிமை
வைத்துக்‌ கொண்டூ கமராவைத்‌ தரச்சொல்லித்தான்‌ கேட்டான்‌.

சற்றுப்‌ டோ௨ூ இ.ருக்விறது 93


Page 106 

 

ஆ
ந
ப
ப்‌
,

 


Page 107 

10

 

 

 

 

 

தலைவரா தலை

95


Page 10896

1 அந்த கடையைத்தாண்டூம் போது
தற்செயலாகப்‌ பார்ப்பது போல உள்ளே இருப்பவர்களைப்‌
பார்ப்பதுண்டு. பெரிய விசாலமான சோபாக்களில்‌ தங்கள்‌
விசாலமான உடம்புகளைப்‌ பரப்பிக்கொண்டு (இப்படிச்சொல்வது
சற்றுச்‌ சிரமமாகத்தானிருந்தாலும்‌ வேறு பொருத்தமான சொல்‌
ஞாபகத்திற்கு வரவில்லை) அரைகுறைத்‌ தூக்கத்துடன்‌
கண்களை சுருக்கிக்கொண்டு, கையிலுள்ள புத்தகங்களில்‌
பார்வையை அரைகுறை மனதுடன்‌ செலுத்திக்கொண்டு, அடிக்கடி
உட்புறமாகப்‌ பார்த்துக்கொண்டு (இப்படி இன்னமும்‌ பல
கொண்டூகளுடன்‌) அவர்கள்‌ காத்திருப்பார்கள்‌.

சாமுவல்‌ பெக்கற்‌ எழுதிய 'கொடோட்டுக்காக
காத்திருத்தல்‌” (14/வ1பஈ9 1௦ 60001) என்ற நாடகத்தில்‌ வரும்‌
பாத்திரங்களைப்‌ போல அவர்கள்‌ காத்திருந்தார்கள்‌. உள்ளிருந்து
ஒருவர்‌ வர, அவசரவசரமாக இவர்கள்‌ எழுந்து உள்ளே
போவார்கள்‌. உழுத வயல்களில்‌ வரம்புகள்‌ கட்டியது போன்ற
தோற்றத்துடன்‌, மிகச்‌ சிறிதாகப்‌ பின்னிய சிகையலங்காரத்துடன்‌
போகின்றவர்கள்‌, ஏதோ சாதித்துவிட்ட முகபாவத்துடன்‌
இவர்களைக்‌ கடந்து போவார்கள்‌.

அது அவர்களது சிகையலங்காரம்‌. எண்ணெய்‌ வைத்து
வாரி இழுத்த, நடூ உச்சி பிரித்த எங்கள்‌ சிகையலங்காரம்‌
அவர்களுக்கு புதினமாகக்கூட இருக்கலாம்‌. அதைப்‌ பார்த்து
அவர்கள்‌ நமட்டுச்‌ சிரிப்பு சிரிப்பது போல எனக்கு சிலவேளைகளில்‌
படூவதுமுண்டு.

62. எஸ்‌. ப௩ல22%ன்‌


Page 109ட ட னா

எங்கள்‌ காலத்தில்‌ சிகையலங்காரம்‌ என்பது ஒரேயொரு பிரிவில்‌
அடங்கும்‌. “பொலிஸ்‌ குறொப்‌' என்ற வகைதான்‌. மொட்டை அடித்துக்‌
கொள்வதற்கு கிட்டியதாக இருக்கும்‌. “கிட்டிப்புள்‌ பட்ட காயம்‌, சைக்கிள்‌
பழகியபோது விழுந்து ஏற்பட்ட காயம்‌ எனப்படும்‌ “வீரத்‌
தழும்பு'களெல்லாம்‌ மண்டையில்‌ தெரியும்‌ காலம்‌ இது.

எங்கள்‌ குடும்பத்தில்‌ எனக்கும்‌, தம்பிமார்‌, தங்கச்சிமார்‌, அப்பா
எல்லோருக்குமே சிகையலங்காரம்‌ செய்ய ஒருவர்‌ வீட்டுக்கு வருவார்‌.
சின்ன வயதில்‌ மிகுந்த பயத்துடன்‌ அவரது வருகையை
எதிர்கொள்வோம்‌. காரணம்‌ - அவர்‌ கையில்‌ புழங்கும்‌ ஆயுதங்கள்‌.
கத்திரிக்கோல்‌, றேசர்‌ கத்தி, மண்டையில்‌ விறாண்டூம்‌ கூர்ப்பல்லுச்‌
சீப்பு எனப்படுவன.

யாரிடமும்‌ முடி வெட்டிக்‌ கொள்வதற்கு போகும்‌ அவசியம்‌ இல்லாத
வழுக்கைத்‌ தலை, முழங்கால்‌ தெரிய உயர்த்திக்‌ கட்டிய நாலு முழம்‌,
அதற்கு மேலால்‌ தெரியும்‌ சிறிய முட்டி போன்ற வண்டி (வயிறு) -
ஒழுங்கைக்குள்ளால்‌ வரும்போதே ஏதோ ஒரு பாட்டூடன்தான்‌ வருவார்‌.
அது அவர்‌ பாடவில்லை. உள்ளுக்குள்‌ போன பனம்‌ பானம்‌ பண்ணுகிற
வேலைதான்‌ என்று எங்களுக்குத்‌ தெரியும்‌.

எங்கள்‌ வீட்டு முற்றத்தில்‌ நின்று, “என்ன தம்பியவை” என்று ஒரு
வார்த்தை சொல்லிவிட்டு நேராக எங்கள்‌ வீட்டூப்‌ பின்வளவுக்குப்‌ போய்‌
விடூவார்‌. அதுதான்‌ அவருடைய சமஸ்தானம்‌ மாதிரி. நானும்‌ தம்பிமாரும்‌,
வெறும்‌ மேலுடன்‌, சாறத்துடன்‌ போய்‌ அடிவளவில்‌ இருக்கும்‌ வேப்ப
மர நிழலில்‌ குந்தியிருப்போம்‌.

ஒவ்வொருவராக அழைத்து தனக்கு முன்னால்‌ குந்தியிருக்கச்‌
செய்தோ அல்லது நின்ற நிலையிலோ முடிவெட்டத்‌ தொடங்குவார்‌.
தொடங்கிய இரண்டாவது நிமிடமே, ஏதாவது கதை சொல்லத்‌
தொடங்குவார்‌. கதை சுவாரஸ்யமாக இருக்கிறதோ இல்லையோ அவர்‌
நிறுத்தும்‌ இடங்களில்‌ நாங்கள்‌ “ம்‌” சொல்லவேண்டும்‌. மறந்து போய்‌
இருந்து விட்டால்‌, எங்கள்‌ தலையில்‌ சிறிய அழுத்தம்‌ பிரயோகித்து
எங்கள்‌ கவனத்தை எடுத்துக்‌ கொள்வார்‌.

சில சந்தர்ப்பங்களில்‌ அப்பாவும்‌ வந்து சேர்ந்து கொள்ள, அவர்‌
தன்‌ கதையை திசை திருப்பி, வெளியூர்களில்‌ தொழில்‌ நிமித்தமாக

சேற்றுப்‌ டோ௨ இருக்கிறது 97


Page 110தங்கியிருந்த பொழுது ஏற்பட்ட அனுபவங்களை சொல்லத்‌
தொடங்குவார்‌. அயல்மொழி தனக்குத்‌ தண்ணி பட்ட பாடு என்று
சொல்லி சில வார்த்தைப்‌ பிரயோகங்களைச்‌ சொல்லிக்காட்டூவார்‌.
நாலைந்து சொற்களையே மாற்றி மாற்றிச்‌ சொல்லி நீள வசனங்கள்‌
பேசுவதாகப்‌ பாவனை செய்தார்‌ என்பது பிறகு எங்களுக்குத்‌ தெரிய
வந்தது.

அவரது கற்பனையின்‌ உச்சம்‌ என்று சொன்னால்‌, நாட்டின்‌
தேசாதிபதிக்கு தன்‌ தொழிற்றிறன்‌ மீதுள்ள நம்பிக்கையைப்‌
பற்றி சொல்வதை எடூத்துக்‌ கொள்ளலாம்‌. அந்தப்‌ பெருமகன்‌
என்ன முக்கிய சந்தர்ப்பங்கள்‌ வந்தாலும்‌ தனக்கு ஆள்விட்டூ
கூப்பிட்டு தன்னிடம்‌ முடிவெட்டிக்‌ கொண்டுதான்‌ அடுத்த காரியம்‌
செய்வாராம்‌.

தரும்‌ கூலி தங்க நாணயங்களாம்‌. எல்லாவற்றையும்‌ முடிச்சாகக்‌
கட்டி வைத்த இடத்தில்‌, கூடத்‌ தங்கியிருந்தவன்‌ அதை
திருடிக்கொண்டு போய்விட்டானாம்‌. என்ன இருந்தாலும்‌ செய்தவன்‌
சொந்தக்காரன்‌ என்றபடியால்‌ தான்‌ அவனை “மன்னித்தோம்‌.
மறப்போம்‌” என்று விட்டதாகவும்‌ சொல்லிக்‌ கொண்டே போவார்‌.

அடுத்தமுறை சொல்லும்பொழுது, கதை மாறி விடும்‌. தங்க
நாணயங்கள்‌ வெள்ளி நாணயங்களாகி விடும்‌. ஒம்‌ ரெயினிலே
களவு நடந்ததாகச்‌ சொல்வார்‌. இவற்றை நம்புவது, நம்பாமல்‌
விடூவதொன்றும்‌ பிரச்சினையில்லை. பிடரியில்‌ கத்திவைத்திருக்கும்‌
போது நம்பவில்லை என்று சொல்வதின்‌ சிரமம்‌
அனுபவித்தவர்களுக்குத்தான்‌ புரியும்‌.

வெட்டி முடிந்ததின்‌ பின்னர்‌ வியர்த்த உடம்பில்‌ மயிர்‌ பிசுபிசுக்க,
நேராக வீட்டுக்‌ கிணற்றடிக்குப்‌ போய்‌, அப்பா அள்ளி வார்க்க முழுகி,
துடைத்து கண்ணாடியில்‌ பார்க்க, தலையில்‌ சீப்பினால்‌ கஷ்டப்பட்டு
வைத்த “கிறில்‌: (சுருள்‌) இருந்த அடையாளமே இல்லாமல்‌, காணாமல்‌
போய்‌, சட்டி கவிழ்த்து விட்டது போல - அழுகை அழுகையாக
வரும்‌.

சிலகாலத்கின்‌ பின்னர்‌, ஒருநாள்‌ அப்பா என்னையும்‌, தம்பியையும்‌
சைக்கிளில்‌ ஏற்றிக்கொண்டு எங்கள்‌ குட்டி ரவுணுக்கு போனார்‌.

98 6௯. எஸ்‌. புலசசந்தன்‌

3


Page 111 

போகும்போதுதான்‌ அங்கு புதிதாக வந்திருக்கும்‌ சலூனில்‌
முடிவெட்டப்போகிறோம்‌ என்று தெரியவந்தது. சட்டென்று அவரின்‌
முகமும்‌, அழுக்கான நாலுமுழமும்‌, ஒரு பக்க நுனி உடைந்துபோன
கத்திரிக்கோலும்‌ ஞாபகத்திற்கு வந்து போயின. புது அனுபவம்‌
பெறப்போகிறோம்‌ என்ற இளம்‌ வயதின்‌ ஆர்வத்தில்‌ அப்போது
எனக்கு அந்த நினைவும்‌ பெரிய இழப்பாகப்‌ படவில்லை.

போன இடம்‌ மிகுந்த கவர்ச்சியானதாகத்தெரிந்தது. பல புதிய
வாசங்களின்‌ (மணங்களின்‌) சங்கமம்‌ எங்களை வரவேற்றது. பெரிய
கண்ணாடிகள்‌, உயர்ந்த கதிரைகள்‌, நாலாபக்கச்சுவர்களில்‌
எஸ்‌.டி.சுப்புலட்சுமி, சந்தானலட்சுமி போன்ற அக்கால கனவுக்கன்னிகள்‌
உறைந்து போன சிரிப்புகளுடன்‌ இருந்தார்கள்‌. தலைமயிரால்‌
பிரசித்திபெற்றவர்களின்‌ முகம்‌ தெரியாத பிடரிப்‌ படங்கள்‌ ஆங்காங்கு
ஒட்டப்பட்டிருந்தன.

உரிமையாளர்‌ வேற்று ஊரில்‌ தொழில்‌ பார்த்துவிட்டு வந்தவர்‌
என்று பார்த்த உடனேயே தெரிந்தது. வெள்ளை அரைக்கை சேர்ட்‌;
அதை உள்வாங்கிய நீலக்கோடூள்ள வெள்ளைச்சாறம்‌, இடுப்பில்‌
கட்டிய வெள்ளிப்‌ பட்டி (பெல்ட்‌), வாயில்‌ ஒரு தங்கப்பல்‌. சிரிக்கத்தான்‌
செய்தார்‌. ஆனால்‌ அதில்‌ அந்நியோன்யம்‌ தெரியவில்லை.

அப்பாவின்‌ உதவியுடன்‌ உயர்ந்த கதிரைகளில்‌ ஏறி இருந்து
கொண்ட எங்களின்‌ தலைகளில்‌ வெகு நேரமாக ஏதோ “ஜிகினா'்‌
வேலைப்பாடூ செய்வதைப்‌ போல பளபளக்கும்‌ கத்திரிக்கோலினால்‌
நறுக்கினார்‌. கிடுக்கி போன்ற கருவியினால்‌ பிடரியை கொஞ்சம்‌
கூடுதலாகவே உயர்த்தி விட்டார்‌. வாசமுள்ள ஒரு ஸ்படிகக்‌
கல்லினால்‌ காதின்‌ பின்பக்கத்திலும்‌ பிடரியிலும்‌ தடவி விட்டார்‌.
குளிர்ந்தது. சிலிர்த்துக்‌ கொண்டோம்‌. வெள்ளைத்துவாயினால்‌
தலையிலும்‌ சேர்ட்டிலும்‌ (வெறும்‌ மேனி இல்லை) தட்டி விட்டார்‌.

அப்பா கொடூத்த காசை வாங்கி லாச்சிக்குள்‌ போட்டு விடை
கொடுூத்தார்‌. மிச்சக்காசு ஏதாவது இருக்கும்‌ என்று நினைத்து ஏமாந்த
முகபாவம்‌ அப்பாவின்‌ முகத்தில்‌ தெரிந்தது. கண்ணாடியில்‌
பார்த்துக்கொண்டேன்‌. சட்டி கவிழ்த்ததிற்குப்‌ பதிலாக சதுரப்பெட்டி
கவிழ்த்தது போலிருந்தது.

சேற்றுப்‌ டோ௨ இருக்கிறது 99


Page 112“அவர்‌” காலவெள்ளத்தில்‌ கரைந்து போய்‌ விட்டார்‌. அந்த ஒரு
பக்க நுனி உடைந்த கத்திரிக்கோல்‌ -கிறுக்‌ கிறுக்‌” கென்று
நறுக்குவது கேட்கிறது. பிடரியில்‌ ஏதோ குறுகுறுக்கிறது. தடவிப்‌
பார்த்துக்கொள்கிறேன்‌.

100 62. எஸ்‌. புல2 ஆதன்‌


Page 113 

 

 

 

 

 

 

 

ண

ர்வ

ஜரகுப்‌

101


Page 114102

நி ணச்சடங்கு வைத்து ஏமாந்து போன (போன
என்றால்‌ ஊரை விட்டே போன) மாமா மீண்டும்‌ ஒரு ஆடிக்‌
காலத்தில்‌ ஊருக்கு வந்தார்‌. அதே மம்மல்‌ பொழுது.
சம்பல்‌ பள்ளத்தாக்கு முகமூடிக்‌ கொள்ளைக
காரர்களைப்போல முகமே தெரியாத அளவிற்கு
தலைப்பாகை கட்டியபடி வந்து எங்கள்‌ வீட்டு திண்ணையில்‌
இருந்தார்‌. அந்தக்காலத்தில்‌ நடையாக கதிர்காமம்‌
யாத்திரை புறப்படுபவர்கள்‌ இருந்தார்கள்‌. அவர்கள்‌
எந்தவிதமான முன்னறிவித்தலும்‌ இன்றி திடுூதிடூப்பென்று
வீட்டிற்கு வந்து திண்ணையில்‌ இருந்து கொண்டூ “தாயே
அன்னம்‌ போடுகிறீர்களா” என்று கேட்பார்கள்‌. சிலவேளை
போகும்‌ வழியில்‌ சமைப்பதற்கென்று அரிசியும்‌ கேட்பதுண்டு.
அவர்களில்‌ ஒருவர்‌ என்று நினைத்து அம்மா சின்ன
ஓலைப்பெட்டியொன்றில்‌ அரிசியுடன்‌ வந்து கொடுப்பதற்கு
தயாராகவும்‌, மாமா திடுக்கிட்டு “அக்கா” என்று ஈனஸ்வரக்‌
குரலில்‌ சொல்லி வைத்தார்‌.

“ஆ நீயே” என்றவாறே அம்மா, மிகுதியைச்‌
சொல்லாமல்‌ வாய்க்குள்‌ முணுமுணுத்துக்கொண்டூ, எடுத்த
அரிசியை வைப்பதற்காக குசினிக்குள்‌ போனார்‌.

சிறிது நேரம்‌ மெளனமாகக்‌ கழிந்தது. அம்மாவும்‌
குசினிக்குள்‌ இருந்து வெளியே வருவதாய்‌ இல்லை. மாமா
திண்ணையிலிருந்து மெதுவாக எழுந்தவர்‌, முற்றத்தில்‌
நின்றவாறே, “அக்கா... நான்‌ உதிலை ஒருக்கா போட்டூ

6ஃ. எஸ்‌. பால22நதரன்‌


Page 115கண கன ப

வாறன்‌.. இந்த காசை ஒருக்கா வைக்கிறியளே” என்று மடியிலிருந்து,
சில நோட்டுக்களை நீட்டினார்‌. சில நூறுகள்‌. இக்காலத்தில்‌ பல
ஆயிரங்களுக்கு சமமானவை.

அம்மா அவசரஅவசரமாக வெளியில்‌ வந்து, “எங்காலையடா தம்பி
காசு” என்று கேட்டவண்ணம்‌ காசை பெற்றுக்‌ கொண்டார்‌.

“என்னட்டை இருக்கட்டும்‌. தேவையான நேரம்‌ கேள்‌ தம்பி”
என்று மனதுக்குள்‌ மகிழ்ச்சியுடன்‌ சொல்லி முடிப்பதற்கிடையில்‌,

“ஓமக்கா. பின்னேரம்‌ வரை இருக்கட்டும்‌.. நான்‌ ஒரு தேத்தண்ணிக்‌
கடை போடப்போறன்‌. எங்கடை முருகன்‌ கோயில்‌ திருவிழா
வருகுதெல்லே.. அங்கைதான்‌ பதினைஞ்சு நாளும்‌ கடை போடப்போறன்‌”
என்று சொல்லி, அம்மாவின்‌ தற்காலிகக்‌ கனவைச்‌ சிதைத்தார்‌ மாமா.

அதற்குப்‌ பிறகு கொஞ்ச நாட்களாக மாமா வலு பிசியாகத்‌ திரிந்தார்‌.
பலகாரங்கள்‌ செய்வதற்கான பொருட்கள்‌ மூட்டைகளில்‌ வந்து இறங்கின.
“மாமாவுக்கு இதற்கான பணம்‌ எங்கிருந்து வந்தது' என்று ஊரில்‌
பலரும்‌ பலவாறாகப்‌ பேசிக்‌ கொண்டார்கள்‌. எங்கோ தொலைவில்‌
மாமா தோட்டம்‌ செய்த நேரம்‌ கொத்தும்பொழுது நாகரத்தினம்‌ ஒன்று
கிடைத்தது என்றும்‌, செப்புக்குடமொன்றில்‌ தங்கக்‌ காசுகள்‌ கிடைத்தன
என்றும்‌ பேச்சு காட்டுத்தீ போலப்‌ பரவியது.

மாமாவோடூ பேசிக்‌ கொள்வதைத்‌ தவிர்த்தவர்கள்‌ கூட வலிய
வந்து பேசிச்‌ சென்றார்கள்‌. அப்பா ௯ட சமாதானமாகி விட்டார்‌ என்றால்‌
பார்த்துக்‌ கொள்ளுங்களேன்‌.

முருகன்‌ கோயில்‌ கொடியேற்றத்துக்கு முதல்நாள்‌, பொழுதுபடூம்‌
நேரமாக, எங்கள்‌ ஊர்‌ பிள்ளையார்‌ கோயிலில்‌ கற்பூரம்‌ கொழுத்தி
கும்பிட்ட பின்‌ இரண்டு வண்டில்கள்‌ புறப்பட்டன. தற்காலிக தேண்‌
கடையின்‌ கொட்டில்‌ போடுவதற்கான கிடூகுகள்‌, தடிகள்‌, கயிறு
என்பனவற்றோடு அரைக்க, துவைக்க, பொரிக்க, வறுக்க போன்ற
திரியைகளுக்கான உபகரணங்களும்‌, பொருட்களும்‌ கூடவே நானும்‌
மாமாவும்‌ ஒரு வண்டிவிலும்‌, சமையல்‌ உதவிக்கு அம்மா உட்பட்ட
இரண்டூ மூன்று பேரும்‌ அவர்களின்‌ பிள்ளைகளுமாக மற்ற வண்டிலிலும்‌
இருந்தார்கள்‌.

சேற்றுப்‌ போ௨2 இருகிறது 103


Page 116ஒருவாறு மாமாவின்‌ தேனீர்க்கடை அமையப்‌ போகும்‌ இடத்தை
அடைந்தபோது இரவாகிவிட்டது. கோயிலில்‌ இருந்து வெகுதூரத்தில்‌
இந்த இடம்‌ இருந்தது. கோயிலுக்கு முன்னே அரைவட்டமாக
போடப்பட்டிருக்கும்‌ கடைகளையெல்லாம்‌ தாண்டி இவ்வளவு தூரம்‌
யார்‌ வரப்போகிறார்கள்‌ என்று கொட்டில்‌ போட்டுக்‌ கொண்டிருப்பவர்கள்‌
பேசிக்‌ கொள்ளவும்‌ எனக்கு திக்கென்றிருந்தது.

மாமா உற்சாகமாகவே நின்றார்‌.

“அக்கா மத்‌ தியானத்தை அண்டி பலகாரங்கள்‌
சுடத்தொடங்குவோம்‌. காலமை கொடியேற்றத்துக்கு வாற சனம்‌
தேத்தண்ணிதான்‌ குடிக்கும்‌”

கிடாரத்தை (அண்டா) வைத்து சுடூதண்ணீர்‌ வைக்க
தொடங்கினார்கள்‌. பதினைந்து நாளும்‌ அந்த அடுப்பு எரிந்து
கொண்டிருக்கப்போகிறது என்ற நம்பிக்கை இருந்தது.

கடைசி நேரத்தில்‌ என்னிடம்‌ ஒரு பெரிய வெள்ளைநிற
மட்டையைக்‌ கொண்டூ வந்து தந்து “அன்னதானக்‌ கந்தன்‌ கபே”
என்று எழுதச்‌ சொன்னார்‌. பென்சிலால்‌ எழுதி மங்கலாகத்‌ தெரியவே,
அடுப்பின்‌ விறகுக்கரியினால்‌ மேலே தீட்டி ஒப்பேற்றினேன்‌.
எழுதும்போது எல்லாம்‌ சரியாகத்தான்‌ இருந்தது..

ஆனால்‌ உயரத்தில்‌ கட்டித்‌ தொங்கவிட்டபோதுதான்‌.,
“அன்னதானக்கந்தன்‌' பெரிய எழுத்துக்களிலும்‌, “கபே” மிகச்‌ சிறிதாக
வந்து விட்டதும்‌ தெரிந்தது. இனியென்ன செய்வது.

அடூத்த நாள்‌ விடிந்ததும்‌, முகம்‌ கழுவுவதற்காக கிணற்றடிக்குப்‌
போனபோதுதான்‌, அதே காணிக்குள்‌ எங்கள்‌ கடைக்கு அணமித்ததாக
சர்க்கரைத்‌ தண்ணீர்‌ பந்தல்‌ ஒன்று போட்டிருக்கிறார்கள்‌ என்று தெரிய
வந்தது.

தேனீரை உயர்த்தி ஆற்றுவதில்‌ பிரசித்திபெற்ற சித்தப்பா ஒருவர்‌
தன்‌ திறனைக்காட்டிக்‌ கொண்டிருந்தார்‌. நானும்‌ என்‌ குழுவைச்‌
சார்ந்த சிறுவர்களும்‌ அதைப்‌ பார்த்து பிரமித்திருந்தோம்‌.

104 6. எஸ்‌. பு௩ல?2ன்‌ .


Page 117“தம்பி இங்கை வாடா எப்பிடி ருசியாய்‌ இருக்கோ எண்டூ பார்‌”
என்று அரைச்சூட்டூடன்‌ ஒரு வடையை அம்மா பூவரசம்‌ இலையில்‌
வைத்துத்‌ தந்தார்‌. மாமியும்‌ சளைக்காமல்‌ தன்‌ மக்களைக்‌ கூப்பிட்டு
ருசி பார்க்க ஆளுக்கொரு சூசியம்‌ கொடுத்தார்‌. சரியாக ருசி கண்டு
பிடிக்க முடியாத நிலையில்‌ நானும்‌ ஒரு சூசியம்‌ கேட்டேன்‌. மாமா
வருவதைப்‌ பார்த்தவாறே அம்மா இன்னுமொன்று தர நான்‌ ருசி
பார்க்கத்‌ தொடங்கினேன்‌.

மாமா பலகாரங்களை முன்னுக்கிருந்த கண்ணாடி அலமாரித்‌
தட்டுகளில்‌ போடத்தொடங்கினார்‌. எல்லாம்‌ ஒழுங்காக நடந்தது.
கொடியேற்றம்‌ முடிந்து போகின்றவர்கள்‌ (நாங்கள்‌ மறித்து
நிறுத்தினால்‌ என்ன செய்வது என்ற நினைப்பவர்கள்‌ போல)
சால்வைகள்‌ காற்றில்‌ பறக்க, சைக்கிள்களில்‌ வலு வேகமாக எங்கள்‌
கடையை கடந்து சென்றார்கள்‌. சற்றுத்‌ தரித்து நின்றவர்களும்‌
நேராக பக்கத்திலிருந்த சர்க்கரைத்‌ தண்ணீர்‌ பந்தலுக்குச்‌
சென்றார்கள்‌.

முன்னுக்கிருந்த மேசையில்‌ வரிசையாக அடுக்கியிருந்த சர்பத்‌
போத்தில்களில்‌ சோடா திறப்பானினால்‌, நான்‌ டிங்‌ டிங்‌ என்று
அடித்துக்‌ கொண்டிருந்தேன்‌. மாமியின்‌ பிள்ளைகளுக்கு அனுப்பு
தட்டத்‌ தொடங்கியிருக்கவேண்டும்‌. சர்க்கரைத்தண்ணீர்ப்‌ பந்தலடியில்‌
நின்று வேடிக்கை பார்க்கப்‌ போய்விட்டார்கள்‌.

பொழுது சாயும்‌ நேரம்‌ வரை யாருமே வரவில்லை. சித்தப்பா
தேனீர்‌ உயர்த்தி ஆற்றுவதை நிறுத்தி விட்டார்‌. அடுப்பை
தற்காலிகமாக நூர்க்கச்‌ சொல்லி விட்டார்‌ மாமா

அடூத்த நாளும்‌ அப்படியே. அதற்கடுத்த நாள்‌ ஒருவர்‌ வந்து
நின்று நிதானமாக, நான்‌ எழுதிய போட்டைப்பார்த்து விட்டூ அவசரமாக
வந்து “அன்னதானமா” என்று கேட்டார்‌. மாமா என்ன நினைத்தாரோ,
காய்ந்து போய்க்‌ கொண்டிருந்த வடைகளில்‌ இரண்டொன்றை எடுத்துக்‌
கொடுத்தார்‌. செய்தி வேகமாகப்‌ பரவியிருக்க வேண்டும்‌. ஒரே கூட்டம்‌.
எல்லாம்‌ முடிந்தது.

சேற்றுப்‌ டோ௨ இருக்கிறது 105


Page 118மூன்றாம்‌ நாளே நாங்கள்‌ “அன்னதானக்கந்தன்‌ கபே”யைக்‌
கைவிட்டு ஊர்‌ திரும்பினோம்‌. மாமா அப்படியே போய்விட்டார்‌. சில
நாட்களுக்குப்‌ பிறகு, மாமாவின்‌ காணிக்குள்‌ யாரோ ஒருவர்‌ வந்து
நின்றபோதுதான்‌, மாமா அவரிடம்‌ அந்தக்காணியை ஈடு (அடமானம்‌)
வைத்துத்தான்‌ பணம்‌ வாங்கியிருக்கிறார்‌ என்று தெரிய வந்தது.

106 62. எஸ்‌. ப௩ல22ஆதரன்‌

 

ுவ்விக்வ...........


Page 119வ ரசாக்‌ வான அம்ப அலபட
அனார்‌

 

 

 

 

 

 

 

107


Page 120108

ங்கிலப்‌ பத்திரிகைகளில்‌ வெளிவரும்‌ சில
கார்ட்டூன்களில்‌, வெளிநாட்டுப்‌ பெண்கள்‌ எலிகளுக்குப்‌ பயந்து
கதிரைகளில்‌ ஏறி நின்று கொண்டூ - “யீக்க்க்‌11116) என்று
கத்துவதாக போடூவார்கள்‌.

ஆனால்‌ இஷ்களே கேளிக்கைட்பூங்காக்களில்‌ வெகு உயரத்திற்கு
ஏறியும்‌, பாய்ந்து கீழே வந்தும்‌. வெகுவேகமாக வந்து சரிந்தும்‌,
நிமிரந்தும்‌ கதி கலங்கவைக்கும்‌ “றோலர்‌ கோஸ்டர்‌” களில்‌ ஏறி
எவ்வாறு பயணஞ்செய்கிறார்கள்‌ என்று நான்‌ நினைப்பதுண்டு. இந்த
வேளைகளில்‌ எல்லோருமே கூட்டாக கத்தி ஒலியெழுப்புவதே. பயத்தை
மறைப்பதற்காகத்தான்‌ என்று பிறகுதான்‌ தெரிய வந்தது.

இதன்‌ தொடர்ச்சியாக என்‌ இளமைக்கால நினைவுகள்‌
வந்தன. எங்கள்‌ ஊரில்‌ இளைஞர்களும்‌, இளம்பெண்களும்‌
சற்றுத்துணிவாகவே ஒருவரோடொருவர்‌ பேசிக்‌ குதூகலிக்கும்‌
அரிதான சந்தர்ப்பங்களில்‌ ஒன்றான ஊஞ்சல்‌ ஆட்டம்தான்‌ அந்த
நினைவுகளில்‌ முக்கியமானது.

சிவராத்திரி நாளன்று இரவு முழுக்க நித்திரை முழிக்க
வேண்டூமென்பதற்காக, வீடியோ படம்‌ போடூம்‌ காலத்திற்கு
முன்னதாக கோயில்களில்‌ பிரசங்கங்கள்‌ நடத்துவார்கள்‌ அல்லது
அயலில்‌ நாடகம்‌ போடூவார்கள்‌.

இவைகளுக்கும்‌ முன்னதாக எங்களுக்கு தெரிந்தது, ஊஞ்சல்‌
கட்டி ஆடூவதுதான்‌. ஊஞ்சல்‌ என்றவுடன்‌ வீட்டின்‌ பின்வளவுக்குள்‌

6ஃ. எஸ்‌. பால22ந$ன்‌

 

வண்ட வட


Page 121பு எக்‌

அஷ ஒவகளாரர்‌

நிற்கும்‌ பூவரசு மரத்திலோ, வேப்பமரத்தின்‌ கொப்பிலோ கயிறு கட்டி
இருந்து ஆடூவதல்ல.

எங்கள்‌ கோயிலின்‌ தெற்கு வீதியில்‌ அங்கொன்றும்‌, இங்கொன்றுமாக
உயர்ந்த பனைகள்‌ நிற்கும்‌. அவற்றுள்‌ ஒரு நேர்கோட்டில்‌ போதிய
இடைவெளியுடன்‌ நிற்கும்‌ இரண்டு பனைகளில்‌ முக்கால்‌ பங்களவு
உயரத்தில்‌ வைத்து பெலமான பனைத்துண்டங்களை குறுக்கே
கட்டுவார்கள்‌. அதாவது இரண்டு பனைகளையும்‌ இணைக்கிற மாதிரி.
கட்டு என்றால்‌ அந்தமாதிரி கட்டூ. இரவு முழுக்க அந்த ஊஞ்சலில்‌
ஏறி ஆடப்போகின்றவர்களை தாங்கக்கூடிய கட்டு.

குறுக்கு மரத்தில்‌ சாக்கால்‌ சுற்றி( கயிறு தேயாமல்‌ இருப்பதற்காக)
அதன்மேலாக கயிறு போட்டு, கீழே தொங்கும்‌ அதன்‌ இரண்டு
முனைகளையும்‌ இணைக்கிறமாதிரி பலமான பலகைத்துண்டை வைத்து
கட்டி விடுவார்கள்‌. சாதாரணமாக நாலு பேர்‌ அருகருகே இருக்கக்கூடிய
நீளமான பலகை. கயிற்றுக்கு வெளியே பலகையின்‌ இரண்டூ
முனைகளும்‌ துருத்திக்கொண்டூ நிற்கும்‌. ஊஞ்சல்‌ ஆடூபவர்கள்‌
உல்லாசமாக பலகையில்‌ அமர்ந்திருக்க, ஊஞ்சலை உதைத்து மேலே
கொண்டூ போகின்றவர்கள்‌ இந்த முனைகளில்தான்‌ நிற்பார்கள்‌.

இருப்பவர்கள்‌ பெண்களாகவும்‌, உதைப்பவர்கள்‌(உழக்குபவர்கள்‌)
ஆண்களாகவும்‌ இருக்கப்போக கேலிப்பேச்சுகளுக்கும்‌, கிளுகிளுச்‌
சிரிப்புகளுக்கும்‌ சொல்லவா வேண்டூம்‌. மேலே போகும்‌ வேளையில்‌
அவர்கள்‌ என்ன கதைத்துக்‌ கொள்கிறார்கள்‌ என்பது கீழே நிற்கும்‌
பெண்களைப்‌ பெற்றவர்களுக்கு தெரியவா போகின்றது. அப்படித்தான்‌
ஏதோ வித்தியாசமாகக்‌ கதைக்கிறார்கள்‌ என்று தெரிந்து - “இனிப்‌
போதும்‌..இறங்கு”” என்ற மாதிரி சொல்லி சைகை காட்டினாலும்‌,
விளங்காதவர்கள்‌ போல அந்தப்பெண்கள்‌ தாங்கள்‌ பாடூம்‌ பாட்டில்‌
திளைப்பார்கள்‌. தொடர்ந்து சிரிப்பார்கள்‌.

ஆமாம்‌... ..ஊஞ்சல்‌ மேல்‌ எழும்பத்‌ தொடங்கியவுடன்‌ இருப்பவர்களை
பாடச்சொல்வார்கள்‌. கோஷ்டி கானந்தான்‌. உயரம்‌ அதிகரிக்க
பயத்தினால்‌ பாட்டூக்கள்‌ சுருதிபேதம்‌ அடைவதுமுண்டு. அமைதியான
அக்கால இரவுகளில்‌ அந்தப்‌ பாடல்கள்‌ சற்றுத்தள்ளிக்கூடத்‌ தெளிவாகக்‌
கேட்கும்‌.

சேற்றுப்‌ டோ௨ூ இருக்கிறது 109


Page 122ஊஞ்சல்‌ ஆடூம்‌ சந்தர்ப்பம்‌ கூட ஒவ்வொரு பிரிவாகத்தான்‌
கிடைக்கும்‌. சின்னவர்கள்‌, இளம்பெண்கள்‌, பேரிளம்பெண்கள்‌.
திருமணமானவர்கள்‌, தாய்மார்கள்‌, பாட்டிகள்‌ என்று பகுதி பகுதியாக
ஊஞ்சல்‌ ஆடூவார்கள்‌. அதற்கேற்ப நாளை நமதேயில்‌ தொடங்கி,
வதனமே சந்திர பிம்பமோ வரை பாட்டுக்கள்‌ கேட்கும்‌.

எங்களைப்‌ போன்ற ஒல்லிப்‌ பயில்வான்களுக்கு, ஊஞ்சல்‌
உழக்குகின்ற சந்தர்ப்பம்‌ கிடைப்பது மிக அரிது. பெரிய அண்ணாமார்‌
தங்களுக்கு பிடித்தவர்களை வைத்து உழக்கி(சற்று அபஸ்வரம்‌
தட்டூகிறதா..?) மகிழக்கிடைத்த ஒரெயொரு சந்தர்ப்பத்தை இழக்க
விரும்பாதவர்களாய்‌ ““அவரும்‌.. அவற்றை பேத்தை வண்டியும்‌.. உழக்கப்‌
போறாராம்‌.. மேலையிருந்து குத்தண (செங்குத்தாக) விழப்போறியே”
என்ற விரட்டூவார்கள்‌.

நாங்களும்‌ கழுகுகள்‌ மாதிரி காத்திருந்து, ஆடியவர்கள்‌
ஓய்வெடுக்கப்போன ஒரு இடைவெளியில்‌, ஊஞ்சலில்‌ ஒருவரும்‌ இல்லாத
சந்தர்ப்பத்தில்‌ ஏறி விட்டோம்‌. நானும்‌ என்னைப்‌ போன்ற நெத்தலிப்‌
பயில்வான்‌ ஒருத்தனும்‌, சாரத்தையே தார்ப்பாச்சிக்‌ கட்டுக்கட்டிக்கொண்டூ,
வெறும்‌ மேலுடன்‌ உழக்குவதற்கு றெடியானோம்‌. ஆனால்‌ எங்களை
நம்பி ஏறி ஆடூவதற்குத்தான்‌ யாரும்‌ றெடியில்லை.

கோயில்‌ முன்‌ பக்கத்தில்‌, பெட்றோமாக்ஸ்‌ வெளிச்சத்தில்‌ வட்டமாக
நிலத்தில்‌ இருந்துகொண்டு,

“நுள்ளுப்பிராண்டு..கிள்ளுப்பிராண்டு
கொக்கா தலையிலை என்ன பூ.. முருக்கம்பூ”

என்று விளையாடிக்கொண்டிருந்தவர்களை கூவி அழைத்தோம்‌.
அவர்களும்‌ எங்களைப்போலவே யாராலும்‌ கவனிக்கப்படாமல்‌
இருந்தவர்கள்‌ - இரட்டைப்பின்னல்கள்‌ காற்றில்‌ பறக்க ஓடி வந்து,
நான்‌ முந்தி, நீ முந்தி என்று பாய்ந்து, ஊஞ்சலில்‌ ஏறிக்கொண்டார்கள்‌.
ஆறேழு பேர்‌ நெருக்கி உட்கார்ந்து கொண்டு, “அண்ணை...
உதையுங்கோவன்‌'' என்று சொல்லியாகியும்‌ விட்டது.

ஒரு சிக்கல்‌. ஊஞ்சல்‌ வேகம்‌ பெறுவதற்கு உதவியாக யாராவது,
நிலத்தில்‌ நின்றவாறே ஒருமுறையாவது உந்தித்‌ தள்ளித்‌ தொடக்கி

110 62. எஸ்‌. ப௩ல22 தன்‌


Page 123தண்ர்‌ இ

ஷி சகு கனா”

விடவேண்டும்‌. சுற்றிப்‌ பார்த்த பொழுது, மண்ணுக்குள்‌ தலை
புதைத்து, படுத்திருந்த அண்ணை ஒருத்தர்‌ கண்ணில்‌ பட்டார்‌. பகல்‌
முழுவதும்‌ அவர்‌ அருந்திய பானங்களின்‌ கலவை அவரை வீடூ வரை
போக விடாமல்‌, கோயில்‌ வீதியிலேயே விழுந்து படுக்கச்‌ செய்து
விட்டது, எங்களுக்கும்‌ தெரியும்‌. இருந்தாலும்‌ அவரை விட்டால்‌
யாருமில்லை என்ற நிலை. ௯ூப்பிட்டோம்‌.

மண்‌ நிறைந்த தலையை சிலுப்பிக்கொண்டு, தள்ளாடி வந்து -
“என்னடா பொடியள்‌...” அவர்தான்‌ கேட்டார்‌. விடயத்தைப்‌
பவ்வியமாகச்‌ சொன்னோம்‌.

66 99

உது சிம்பிள்‌... எது.. உது சிம்பிள்‌...” என்று சொல்லிக்‌
கொண்டே, ஊஞ்சல்‌ பலகையின்‌ ஒரு நுனியில்‌ பிடித்து, உந்தித்தள்ளிக்‌
கொண்டு போய்‌ விட்டார்‌. ஒரு முறையல்ல. இரண்டு, மூன்று முறை
அவர்‌ அப்படி உந்தித்தள்ளவும்‌, எங்கள்‌ ஊஞ்சல்‌ தானாகவே மேலே
போய்‌ வரத்‌ தொடங்கி விட்டது.

“இது தான்‌ தாயம்‌” என்பதாக, நானும்‌ எனது நண்பரும்‌, இருந்து,
இருந்து எழும்பி உழக்க, ஊஞ்சல்‌ கோயில்‌ மடத்திற்கு மேலால்‌
எட்டி, உள்‌ வீதி தெரியும்‌ அளவிற்கு போய்‌ வந்தது. இருந்தவர்களிடம்‌
இருந்து ஒரு சத்தம்‌ இல்லை. பேயைக்‌ கண்டவர்கள்‌ போல இருந்தார்கள்‌.
திடீரென்று ஞாபகம்‌ வந்தவர்களைப்போல அலறத்தொடங்கினார்கள்‌.
ஒரே கோரஸ்‌.

“அண்ணை இறங்கப்போறன்‌..'” என்று பாட, நாங்கள்‌ எப்படி
நிறுத்துவது என்ற தெரியாமல்‌ தடூமாற, ஒவ்வொரு முறையும்‌ ஊஞ்சல்‌
கீழே வரும்‌ நேரமாகப்‌ பார்த்து, ஒவ்வொரு இரட்டைப்பின்னல்‌
“தொப்‌”பென்று கீழே குதித்தது. நான்‌ குதித்த நேரத்திலும்‌ என்‌ சகபாடி
உழக்குவதை நிறுத்தவில்லை. நாரியை வில்லாக வளைத்து குனிந்து
நிமிர்ந்தார்‌. பாரமற்ற ஊஞ்சல்‌ சுழன்று, கயிறு “டெலிபோன்‌ வயரை”
போல முறுக்கிக்கொண்டது.

கீழே கிடந்தவாறே, நான்‌ நிமிரந்து பார்க்க, அவரும்‌, ஊஞ்சல்‌
பலகையும்‌ ஒன்றாக கீழே வருவது தெரிந்தது.

“ஒட

சேற்றுட்‌ டோ௨) இடருகசபிறது 111

ர ரர ரன


Page 124 

புதறம்சக்வவ


Page 125அ

அர எர ஒழுதாரமி கவல்‌ எ எ நகத்தில்‌ மக சிவப ட அழ தர தகி ணவ ன அன அத ட இப்ப ட

ன்‌

 

 

 

 

 

ராசை கெ௱டா்கறது

113


Page 126114

[அ 4
இட்க்களுடைய 1௦௦4 ஐ கொடுத்திட்டு

போங்கோ.. 186918 வந்தாப்பிறகு கூப்பிடுகிறன்‌'” என்று
சர்வசாதாரணமாக துண்டொன்றை எனது கையில்‌ திணித்து
விட்டு, எனது குடூம்ப மருத்துவர்‌ அடுத்த நோயாளியை
அழைத்துக்‌ கொண்டு போனார்‌. அவரது உதவியாளர்கள்‌
இரத்ததானம்‌ செய்கிறோமோ என்று சந்தேகப்படூமளவிற்கு
எனது இரத்தத்தை தாராளமாகவே எடுத்துக்‌ கொண்டார்கள்‌.
பிறகுதான்‌ 185015 எப்படி வருமோ என்று யோசிக்கத்‌
தொடங்கினேன்‌.

அதற்குப்‌ பிறகு ஒரு வாரகாலமாக, வீட்டில்‌ போன்‌
அடித்தால்‌, அல்லது கைத்தொலைபேசி சற்று சிணுங்கினாலும்‌
பாய்ந்து விழுந்து எடுத்து - ஒரு நாள்‌ இப்படித்தான்‌ எடூக்க
- அது யாரோ இன்சூரன்ஸ்‌ முகவர்‌ - “நீங்கள்‌ இதுவரையில்‌
இன்சூரன்ஸ்‌ எடூக்கவில்லையா.. இந்தக்‌ காலத்திலை எதுவும்‌
நடக்கலாம்‌. சொல்லிக்கொள்ள முடியாது” - என்ற ரீதியில்‌
இருக்கிற பயத்தை அதிகரிக்கும்‌ வகையில்‌ அடுக்கிக்‌
கொண்டே போக, சடாரென்று போனை அடித்து வைத்து
அடுத்த நிமிசமே இன்னமொரு தொலைபேசி அழைப்பு -”
பாவம்‌ அந்த பொடியனுக்கு நடந்தது தெரியுமே.. வயசும்‌
கனக்கயில்லை”. போன்‌ வயரை அறுத்தெறியலாம்‌
போலிருந்தது.

தற்செயலாக எனது மருத்துவரிடமிருந்து முடிவு
(பாருங்கள்‌... வரும்‌ வார்த்தைகள்‌ கூட அபசகுணமாக

62. எஸ்‌. பு௩ல2௪ ன்‌

பச்‌


Page 127வருகின்றன) வந்தால்‌, இந்த போனில்தானே வரவேண்டும்‌ என்ற
நினைப்பில்‌ (வயர்‌ அறுக்கிறற அந்த யோசனையை கைவிட்டூ அந்த
போனின்‌ ஒவ்வொரு சிறு ஓசைக்கும்‌ எல்லாத்தெய்வங்களையும்‌
மனதிற்குள்‌ பிரார்த்தனை செய்து கொண்டூ காத்திருந்தேன்‌.

“சோதனை மேல்‌ சோதனை போதுமடா சாமி” என்று உரத்த
குரல்‌ எடூத்துப்‌ பாடினால்‌ பரவாயில்லை என்று தோன்றினாலும்‌, அப்படிப்‌
பாடப்போக, ஏற்கெனவே என்‌ பேச்சு, நடை, உடை, பாவனைகளை
சந்தேகக்‌ கண்ணுடன்‌ பார்த்துக்கொண்டு திரியும்‌ என்‌ மைத்துனன்‌
என்னை அந்தப்‌ (மண்டைப்‌) பரீட்சைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச்‌
(இழுத்துச்‌) சென்றாலும்‌ என்ற பயத்தில்‌ நான்‌ பாடமுயற்சிக்கவில்லை.

சின்ன வயதில்‌ இருந்தே சோதனை என்றால்‌ போதும்‌.
பள்ளிக்கூடச்சோதனையைச்‌ சொன்னேன்‌. சோதனைகள்‌ நடத்தினால்‌
பரவாயில்லை. பெறுபேறுகள்‌ (05116) வாராமல்‌ விட்டால்‌ போதும்‌
என்ற நிலை எனக்கு. நான்‌ எழுதிய விடைத்தாள்‌ ஏதோ காரணத்தால்‌
காணாமல்‌ போய்‌, வெள்ளம்‌ அடித்து வந்து அதை மாத்திரம்‌
அள்ளிக்கொண்டுபோய்‌, பயங்கரப்புயல்‌ அடித்து மாஸ்டரின்‌ கையில்‌
இருந்து அதை பிடுங்கி திக்கு திக்காய்‌ வீசி - இப்பிடி பயங்கர
இயற்கை அனர்த்தங்கள்‌ நடந்தாவது நான்‌ தப்புவேனோ என்று பார்த்தால்‌
ஒன்றும்‌ நடக்காது. “டாண்‌” என்று குறித்த திகதியில்‌ பரீட்சை முடிவுகள்‌
வரப்போவதாக கரும்பலகையில்‌ எழுதிப்போடுவார்கள்‌. பிறகென்ன. பெரிய
கோயில்கள்‌, சிறு தெய்வங்கள்‌ என்று பேதம்‌ காட்டாமல்‌ சூலம்‌ நட்ட
இடமெல்லாம்‌ நின்று கும்பிட்டு, ஏற்கெனவே எழுதிக்கொடூத்து கட்டோடு
கட்டாக யாரோ பரீட்சகர்‌ வீட்டு மேசையில்‌ கிடக்கும்‌ எனது
விடைப்பேப்பரை கடவுள்‌ தேடிக்கண்டுூபிடித்து, சரியான மறுமொழிகளை
எழுதி வைத்து என்னைக்‌ கரையேற்றப்போகிறார்‌ என்று நம்பினேன்‌.
என்‌ நிலை அப்படி.

சோதனை முடிவு வரும்போது தானே வீட்டில்‌ சோதனை
தொடங்குகிறது. ஒரு முடிவில்‌ ஒரு தொடக்கம்‌. (பெரிய தத்துவம்‌ -
போதுமையா என்று நீங்கள்‌ சொல்வது கேட்கிறது)

“முள்முருக்கு.. புத்தகங்கள்‌, கொப்பிகள்‌ வாங்கி வடிவாக கலர்‌

பேப்பரிலை மட்டை போட்டு மேசையிலை அடுக்கி வைச்சால்‌ சரியே..
ஒருநாள்‌ புத்தகம்‌ திறந்து பார்த்ததை நான்‌ காணயில்லை. சோதனை

சேற்றுப்‌ டோ இ.ருகசிறது 115


Page 128வ ஹன்‌ ட

எப்பிடி பாஸ்‌ பண்ணும்‌ எருமை”: என்று மரத்தில்‌ தொடங்கி ஆஅ,
றிணையில்‌ முடிப்பார்‌ அப்பா.

பேச்சோடூ நின்றால்‌ பரவாயில்லையே. அநேகமாக றிப்போர்ட்‌ கொப்பி
முகத்தில்‌ விட்டு எறியப்படும்‌. சிலவேளைகளில்‌ என்‌ மேல்‌
தாளவாத்தியக்‌ கச்சேரியும்‌ நடக்கும்‌. அம்மா இடையில்‌ நுழைந்து
மங்களம்‌ (எனக்கும்‌, அப்பாவுக்கும்‌) பாடிக்‌ கச்சேரியை முடித்து
வைக்காவிடின்‌ என்‌ கதி அதோ கதிதான்‌.

வகுப்பேற்றம்‌ நடக்காத முதலாந்‌ தவணைப்‌ பரீட்சைக்கே இத்தகைய
புபல்‌ வீசுமென்றால்‌, இறுதிப்பரீட்சை நடந்து முடிந்ததின்‌ பின்னர்‌
எத்தகைய சூறாவளி எங்கள்‌ வீட்டில்‌ வீசும்‌ என்பதை யூகித்துக்‌
கொள்ளுங்கள்‌.

வகுப்பாசிரியர்‌ தனது தொட்டெழுதும்‌ பேனாவினால்‌, உருண்டை
எழுத்துக்களில்‌ - இவர்‌ சித்திரம்‌, பன்னவேலை, தோட்டப்பாடம்‌ ஆகிய
மூன்று பாடங்களில்‌ மட்டும்‌ சித்தி பெற்றுள்ளார்‌. இதனால்‌ இவர்‌
வகுப்பேற்றப்‌ படவில்லை - என்று ஈவிரக்கமின்றி எழுதி விடூவார்‌.
அருகில்‌ “பெற்றார்‌ கையொப்பம்‌” என்று அச்சிட்டு வெற்றிடமும்‌ இருக்கும்‌.
பெற்றார்‌ என்றால்‌ இந்த விஷயத்தில்‌ அப்பாதான்‌ என்பது எங்கள்‌
வீட்டில்‌ முடிந்த முடிபு. மேற்குறித்த ஆசிரியத்‌ தலையங்கத்துடன்‌
(குறிப்புடன்‌) றிப்போர்ட்‌ கார்ட்டை நீட்டி அப்பாவிடம்‌ எட்டி நின்றே
கையெழுத்துக்‌ கேட்டாலும்‌, அப்பாவின்‌ கைகள்‌ கர்ணனின்‌ கைகளைப்‌
போல “கொடுத்துச்‌ சிவந்து விடும்‌” என்று எனக்குத்தெரியும்‌.

இதை தவிர்த்துக்‌ கொள்வதற்காக, என்னைப்‌ போன்ற “வகுப்பேற்றம்‌'
(பிற்காலத்தில்‌ இதற்காகவே பல பேர்‌ “குதிரையேற்றம்‌” பயின்றார்கள்‌
என்பது தனிக்‌ கதை) பெறாத அபாக்கியவான்களாகிய இரண்டூ, மூன்று
பேர்‌ பள்ளிக்கூடம்‌ முடிந்து மற்றவர்கள்‌ சந்தோசமாக வீடூகள்‌ போய்ச்‌
சேர்ந்த பின்னரும்‌, எங்கள்‌ வீடுகளுக்கு போக மனமில்லாமல்‌, வழியில்‌
உள்ள புளிய மர நிழலில்‌ குந்தியிருந்து, மந்திராலோசனை நடத்துவோம்‌.
அடிக்கடி றிப்போர்ட்‌ காரட்டை விரித்துப்‌ பார்த்துக்‌ கொள்வோம்‌. ஒவ்வொரு
முறை திறக்கும்‌ போதும்‌, “வகுப்பேற்றப்படவில்லை' என்ற வாசகமே
“பளிச்‌'சென்று தெரியும்‌.

திடீரென்று எங்கள்‌ கூட்டத்தில்‌ ஒரு பிரேரணை முன்‌ வைக்கப்பட்டது.
“படவில்லை என்ற சொல்லை பட்டார்‌ என்று மாற்றிக்கொண்டால்‌

116 6. எஸ்‌. ப4ல2௪ஆதன்‌


Page 129 

என்ன என்பதுதான்‌ அந்தப்‌ பிரேரணை. ஏகமனதாக எற்றுக்‌
கொள்ளப்பட்டபின்‌, முதலாவது காரியமாக “படவில்லை” எப்படியாவது
அழிக்கவேண்டும்‌ என்று தொடங்கினோம்‌. எனது றிப்போர்ட்‌ கொப்பியில்‌
தான்‌ ஆரம்பித்தார்கள்‌. இந்தக்காலத்தைப்‌ போல, மையழிக்கும்‌
சாதனங்கள்‌ எதுவும்‌ அக்காலத்தில்‌ இல்லையென்பதினால்‌, “முரட்டூ
அழி றப்பர்‌” (852) ஒன்றினால்‌ அழுத்தி, அழிக்கப்போக
எழுத்துக்களோடு, றிப்போர்ட்‌ கொப்பியின்‌ மெல்லிய தாளும்‌ (பேப்பர்‌
என்பதின்‌ மறு பெயர்‌) கொஞ்சம்‌ கொஞ்சமாகத்‌ தேய்ந்து போய்‌, “டே..
போதுமடா”' என்று நான்‌ கத்தி, நிறுத்துவதற்கிடையில்‌, அழித்த இடத்தில்‌,
(ஆகாயத்தில்‌ “ஓஷோன்‌' படலத்தில்‌ வருவதாகச்‌ சொல்லப்படும்‌
துவாரத்தைப்போல) துவாரம்‌ விழுந்து, முன்பக்கத்திலுள்ள இரண்டாம்‌
தவணைக்குரிய “ஆசிரியக்‌ குறிப்பு தெரிய ஆரம்பிக்கும்‌. அழுகை,
அழுகையாக வரும்‌.

அழுது முடிந்தபின்‌, “தேவதாஸ்‌:படத்தில்‌ வரும்‌ “துணிந்தபின்‌
மனமே துயரம்‌ கொள்ளாதே்‌ (கண்டசாலா அப்படித்தான்‌ பாடினார்‌)
என்ற பாட்டை நினைத்து, ஆறுதல்‌ அடைந்து துணிவடைந்தேன்‌. அகதி
அந்தஸ்து கோரும்‌ சிலரின்‌ கடவுச்சீட்டுக்கு நிகழும்‌ கதியைப்போல
எனது றிப்போர்ட்‌ கார்ட்டூம்‌ கிழிக்கப்பட்டு, புளிய மரத்துக்குப்‌ பின்னால்‌
உள்ள ஈச்சம்‌ பத்தைக்குள்‌ சங்கமமாகும்‌.

வீட்டுக்குப்‌ போனவுடன்‌ அப்பா கேட்ட “எங்கையடா.. றிப்போர்ட்‌?”
என்ற கேள்விக்கு நான்‌ பதில்‌ தயாராக வைத்திருந்தேன்‌. “லீவு
முடியத்தான்‌ தருவினம்‌”'

மார்கழி விடுமுறை முடிய ஒரு மாதத்துக்கு மேலாகும்‌. அதற்குள்‌

என்னவென்னவெல்லாமோ நடந்து முடிந்து விடும்‌. அவகாசம்‌ ஒன்று
தேவை. அவ்வளவுதான்‌.

போன்‌ அடித்தது. அவசரமாக எடூக்க, எனது குடூம்ப மருத்துவரின்‌
வரவேற்பாளர்‌ கதைத்தார்‌. “இன்னமொரு 165 எடுக்க வேணும்‌. வர
முடியுமா 7”,

பரீட்சை தொடர்கிறது.

“4

சேற்றுப்‌ டோ௨ இ.ருக்சமிறது 117


Page 130அர்த்‌

 

 


Page 131அடு

 

 

 

 

 

 

ப அவையை... வவர க சமக கைட படட.

ன்னீஃ்கூட

ன்ண்க்ண்ரா

ண்னையாா்பிருப்‌ போற்பாத

119

 


Page 132120

517 கபற்றுவதுதாள்‌ முக்கியம்‌,
வெல்லுவதல்ல்‌ என்ற ஒலிம்பிக்‌ சம்பந்தமான வாசகம்‌
ஒன்றை பார்த்த நேரம்‌ தொடக்கம்‌ இது எனக்கு எனது
இளமைக்காலத்தில்‌ தெரிந்திருந்தால்‌ எவ்வளவு

பிரயோசனமாக இருந்திருக்கும்‌ என்று
நினைத்துக்கொள்கிறேன்‌.
எங்கள்‌ பள்ளிக கூடத்தின்‌ வருடாந்த

விளையாட்டூப்போட்டி அணமிக்கும்‌ வேளையில்‌
பள்ளிக்கூடமே களை கட்டி விடூம்‌. பரீட்சை, புத்தகங்கள்‌
எல்லாவற்றிற்கும்‌ தற்காலிக விடுமுறை கொடுூத்து விடூம்‌
காலம்‌. :

மஞ்சள்‌, சிவப்பு, நீலம்‌, பச்சை என்று நான்கு இல்லங்கள்‌

இது அனேகமாக எல்லாப்‌ பள்ளிக்கூடங்களுக்கும்‌
பொதுவானது. மண்ணிற இல்லம்‌, ஊதா இல்லம்‌ என்று
இருந்ததாக ஞாபகமில்லை. தடகளப்‌ (1780% 8௬ 716]0)
போட்டிகளைவிட இன்னுமொரு முக்கியமான போட்டி
நடைபெபறும்‌ . எந்த இல்லம்‌ சிறப்பாக
அலங்கரிக்கப்பட்டுள்ளது என்ற போட்டி. அனேகமாக பச்சை
இல்லம்தான்‌ இதில்‌ வெற்றிபெறும்‌. இலை, குழை,
காட்டூத்தாழை, வெங்காயத்தாள்‌, தென்னோலை என்று
பச்சையாக எது அகப்பட்டாலும்‌ அதைக்கொண்டு வந்து
அலங்கரித்து விடுவார்கள்‌. பச்சையாக சொல்வதானால்‌
நாங்கள்‌ செயற்கையான கடதாச/களை,

62. எஸ்‌. ப௩ல22- ரன்‌

ப்ப ப தது பத்திக்கு ப பாட.


Page 133ட... அணை!!! ௬... ச...

 

சோடனைப்பொருட்களை நம்பியிருக்க அவர்கள்‌ இயற்கையால்‌ வென்று
விடூவார்கள்‌.

குறைந்தது இரண்டூ மூன்று கிழமைகளாக நாங்கள்‌ பயிற்சி என்ற
பெயரில்‌, வகுப்புப்‌ பக்கமே தலைகாட்டாமல்‌ எங்கள்‌ கல்லூரி
மைதானத்தில்தான்‌ அனேகமான நேரம்‌ நிற்போம்‌. ஓட, பாய, எறிய
எதுவுமே இயலாத எங்களைப்‌ போன்றவர்களுக்கு “டிறில்‌” என்ற
அணிவகுப்பு இருக்கவே இருந்தது. மேலே கையில்லாத பெனியனும்‌,
கீழே கறுப்புக்‌ காற்சட்டையுமாக “லெப்ற்‌, றைற்‌” என்று சொல்லி
வயிற்றை எக்கி இழுத்து வைத்துக்கொண்டு, இல்லாத நெஞ்சை
இருப்பதான பாவனையுடன்‌ நிமிர்த்திப்‌ பிடித்துக்கொண்டு
மைதானத்தைச்‌ சுற்றி வந்து நடுவில்‌ அணிவகுத்து நிற்பதோடூ காரியம்‌
முடிந்துவிடும்‌. உச்சி வெய்யில்‌ “பொலிஸ்‌ குறோப்‌” மண்டையைப்‌
பிளக்க நின்று, காய்ந்து கருவாடாகி வரும்போதும்‌ மற்றவர்கள்‌
முக்கியமாக சகமாணவிகள்‌ எங்களை கணக்கெடுக்கவே மாட்டார்கள்‌
என்பதுதான்‌ பெரிய சோகம்‌.. வெறுவாய்க்கு பொரி கூடக்கிடைக்காது
என்பதுபோல, ஓடூபவர்கள்‌, பாய்பவர்களுக்கு கிடைக்கும்‌ ஐ110056
கூட எங்களுக்குக்‌ கிடைக்காது.

என்‌ நண்பன்‌ ஒருவன்‌ இப்படி “லெப்ற்‌..றைற்‌” சொல்லிக்கொண்டு
வரும்போது, திடீரென்று மயங்கி விழுந்து விடுவான்‌. பிறகென்ன- எங்கள்‌
இல்லத்து பொறுப்பாசிரியரிலிருந்து இல்லத்தலைவன்‌ வரை ஓடிவந்து
அவனைச்‌ சுமந்து கொண்டுபோய்‌ குளுக்கோஸ்‌ வாயில்‌
அள்ளிப்போடூவதென்ன, “விலத்துங்கோ.. காற்றுப்‌ படட்டூம்‌” என்று
சொல்லி முழு அனுதாபத்துடன்‌ அவனைக்‌ கவனிப்பதென்ன,
சகமாணவிகள்‌ “ச்‌..ச்‌' கொட்டிக்கொள்வதென்ன -

எனக்கும்‌ ஆரம்பத்தில்‌ அவன்‌ மீது சந்தேகம்‌ வரவில்லைத்தான்‌.
ஆனால்‌ அந்த மயக்க நிலையிலும்‌, “குளுக்கோஸ்‌” போடப்போகிறார்கள்‌
என்று தெரிந்தவுடன்‌, வாயைத்திறந்து தயார்நிலையில்‌ அவன்‌ வைத்துக்‌
கொண்டபோதுதான்‌ எனக்கு சந்தேகம்‌ வரலாயிற்று. இதையே அவன்‌
இரண்டாம்‌ மூன்றாம்‌ தடவையாக செய்தபொழுது யாருமே பெரிய
அக்கறை எடூத்துக்கொள்ளவில்லை. போதாக்குறைக்கு. “கொஞ்சம்‌
உப்புக்‌ கரைத்துப்‌ பருக்கினால்‌ மயக்கம்‌ தெளியும்‌'” என்று யாரோ
யோசனை சொல்லப்போக, அவன்‌ தானாக எழுந்து உட்கார்ந்து
கொண்டான்‌.

சோற்றுப்‌ டோ௨ இ.ருக்சிறது ்‌ 121


Page 134ஒருநாள்‌ தீடீரென்று எங்கள்‌ இல்லத்துக்குப்‌ பொறுப்பான ஆசிரியர்‌
நாங்கள்‌ சிலர்‌ 'டிறில்‌: பயிற்சி செயப்துகொண்டிருக்கும்‌ வேளையில்‌
அவசரமாக வற்து கேட்டார்‌. “உங்களில்‌ யாராவது
குண் டெறியக்கூடியவர்கள்‌ இருக்கிறீர்களா.” என்றார்‌. நாங்கள்‌
ஆளையாள்‌ பார்த்துக்கொண்டோம்‌. நாங்கள்‌ அனைவருமே நோஞ்சான்‌
பயில்வான்கள்‌. நக்கலாகத்தான்‌ கேட்கிறாரோ என்ற சந்தேகம்‌ வேறு.

பிறகுதான்‌ விசயம்‌ தெரியவந்தது. குண்டெறிதலில்‌ வழக்கமாக
முதலாவதாக வரும்‌ ஒரு பலசாலி தனது பதிவு எண்ணை வீட்டில்‌
விட்டு வந்து விட்டார்‌. வேறு இல்லத்தைச்சேர்ந்த அவர்‌ பங்குபற்ற
முடியாமல்‌ போகும்‌ பட்சத்தில்‌, யாராவது குண்டை சற்றுத்தொலைவில்‌
எறிந்தாலும்‌ வெற்றி நிச்சயம்‌ என்ற நிலை. குண்டை காலில்‌ போட்டு
விட்டு துள்ளிக்குதிக்கும்‌ சாத்தியத்தைச்‌ சொல்லி கூடநின்றவர்கள்‌
கேலிசெய்தபோதும்‌. மனந்தளராமல்‌ நான்‌ கையை தூக்கினேன்‌.
அவ்வளவுதான்‌ - எங்கள்‌ இல்ல ஆசிரியர்‌ என்னை இழுத்துக்கொண்டு
போய்‌ என்‌ இலக்கத்தைப்‌ பதிவு செய்து குண்டெறிதல்‌ போட்டி
நடக்கும்‌ இடத்தில்‌ விட்டார்‌.

மற்றவர்களும்‌ என்னைப்போல ஆசைவார்த்தை காட்டி
இழுத்துவரப்பட்டவர்கள்‌ என்று புரிந்தது. குண்டைத்‌ தூக்கவே
சிரமப்பட்டவர்களும்‌, ஒருமுறை எறிந்து விட்டூ (போட்டியிலிருந்து) ஓய்வு
பெற்றவர்களுமாக இருந்தனர்‌. உள்ளவர்களில்‌ நான்தான்‌
அங்குலக்கணக்கில்‌ முன்னணியில்‌ நின்றேன்‌.

எதிர்பாராத வகையில்‌ குண்டெறிலில்‌ கிடைக்கப்போகும்‌ முதலாம்‌
இடத்திற்கான சான்றிதழ்‌ என்‌ கண்ணில்‌ தெரிந்தது. கடைசி
எறிதல்தான்‌ பாக்கி. யாரோ வேகமாக சைக்கிளில்‌ மைதானத்துக்குள்‌
வருவது தெரிந்தது. அது நம்பரை தொலைத்து விட்டூ காணாமல்‌
போனவர்‌.

அந்தக்‌ குண்டர்‌ (குண்டெறிதலில்‌ வல்லவரை இப்படியும்‌
சொல்லலாமே) வந்த வேகத்தில்‌ சைக்கிளை நிலத்தில்‌ சாத்தி வைத்து
விட்டு ஓடிச்சென்று பொறுப்பானவர்களிடம்‌ தனது இலக்கத்தைக்‌ காட்டி,
குண்டை அனாயாசமாகத்‌ தூக்கி, இரண்டு கைகளுக்கும்‌ மாற்றி
விட்டு முழுமூச்சுடன்‌ எறிந்தார்‌. தாரத்தில்‌ நின்றவர்கள்‌ விலகி
ஓடினார்கள்‌. எனது முதலாமிடக்‌ கனவு அக்கணமே சிதைந்து போனது.

122 6. எஸ்‌. ப௩ல22தன்‌


Page 135போட்டி முடிவதிற்கிடையில்‌ தன்‌ வீட்டுக்கு ஓட்டமாக ஓடி
இலக்கத்தோடுூ வந்து விடூவார்‌ என்று யார்‌ எஜிர்பார்த்தார்கள்‌.
இருந்தாலும்‌ எனக்கு இரண்டாம்‌ இடம்‌ கிடைத்ததினால்‌
எதிர்பாராதவிதமாக எங்கள்‌ இல்லத்திற்கு சில புள்ளிகள்‌ கிடைத்தன.
பரிசளிப்பின்போது என்‌ பெயர்‌ அறிவிக்கப்பட்டவேளை பலத்த ஆரவாரம்‌
கேட்டது. முதல்நாள்‌ நான்‌ முக்கி எறிந்ததினால்‌ ஏற்பட்ட நாரி
நோவினால்‌ வளைந்து வளைந்து நடந்ததற்காகத்தான்‌ அந்த ஆரவாரம்‌
என்று எரிச்சல்காரர்கள்‌ சொன்னார்கள்‌.

அடூத்த ஆண்டூ எங்கள்‌ கல்லூரி விளையாட்டுப்போட்டியில்‌ 220
யார்‌ ஓட்டம்‌. நானும்‌, எனது இல்லத்தைச்‌ சேர்ந்த நண்பர்‌ ஒருவரும்‌
இறுதிச்சுற்றிற்கு வந்ததோடு அவர்‌ முதலாவதாகவும்‌ நான்‌
இரண்டாவதாகவும்‌ வரப்போவதாக எல்லோரும்‌ நம்பியிருந்தனர்‌. அந்த
இடங்களிற்கான புள்ளிகள்‌ கிடைத்தால்‌ எங்கள்‌ இல்லம்‌ வெற்றி
பெறும்‌ என்ற நிலை. ஆனால்‌ இறுதி ஓட்டத்தில்‌ நண்பர்‌ தடம்‌ மாறி
ஓடியமைக்காக பெற்ற வெற்றியை இழக்கவே எனக்கு முதலாமிடம்‌
கிடைத்தது. அதற்காக உள்ளூர நான்‌ சந்தோசப்பட்டாலும்‌ எங்கள்‌
இல்லம்‌ இழந்த புள்ளிகளினால்‌ எவருமே என்‌ வெற்றியைக்‌ கண்டு
கொள்ளவில்லை. மற்றவருடைய வெற்றியை திருட்டூத்தனமாக
அபகரித்து விட்டேன்‌ என்ற மாதிரி பார்க்கவும்‌ செய்தார்கள்‌. முதலாமிடம்‌
கிடைக்காமல்‌ போயிருக்கலாம்‌ என்று நினைத்துக்கொண்டேன்‌.

முக்கியமாக என்‌ இல்லத்தரசிகள்‌ (பயப்படாதீர்கள்‌.. என்‌ பள்ளிக்கூட
இல்லத்தினைச்‌ சார்ந்த “அரசி'களைச்சொன்னேன்‌) வெற்றிவாகைசூடி
வந்த என்னைக்கண்டவுடன்‌ “வில்லனை”க்‌ கண்ட சினிமா கதாநாயகிகள்‌
போல முகங்களைத்‌ “படக்‌*கென்று திருப்பிக்‌ கொண்டார்கள்‌.

மைதானத்தில்‌ அந்தநேரம்‌ பார்த்து ஒலிக்கவிடப்பட்ட பாட்டு
ஒன்றுதான்‌ நையாண்டியின்‌ உச்சமாக எனக்குத்தெரிந்தது.

“புத்தி உள்ள மனிதரெல்லாம்‌ வெற்றி காண்பதில்லை. வெற்றி
பெற்ற மனிதரெல்லாம்‌ புத்திசாலி இல்லை...புத்திசாலி இல்லை.”

யாரோ கைதட்டி சிரிக்கவும்‌ செய்தார்கள்‌.

நான்‌ நொந்து நூலாகி...இல்லை...நாடூல்ஸாகிப்போனேன்‌.

“4

சற்றுப்‌ டோய்‌ இருக்கிறது 123


Page 136

Page 137 

 

 

 

 

 

 

       

125


Page 138 

126

௫ூ9$யகக எழுத்தாளரான லியோன்‌ யுறிஸ்‌
எழுதிய றினிற்றி' என்ற நாவலை வாசித்தபொழுது,
அயர்லாந்து நாட்டு கிராமிய மக்கள்‌ எங்கள்‌
இளமைக்காலவாழ்க்கையைப்போலவே ஐதீகங்களின்‌
அடிப்படையில்‌ உருவான நம்பிகீகைகளுடன்‌
வாழ்ந்திருக்கிறார்கள்‌ என்றறிந்து வியப்படைந்தேன்‌.

அந்தக்காலத்தில்‌ நாங்கள்‌ எதையும்‌ நம்புபவர்களாக
இருந்தோம்‌.

பாரதி சொன்னார்‌-

“வஞ்சனைப்பேய்கள்‌ என்பார்‌.. அந்த மரத்தில்‌ என்பார்‌

இந்தக்‌ குளத்தில்‌ என்பார்‌.. துஞ்சுது முகட்டிலென்பார்‌

மிகத்‌ துயர்ப்படூவார்‌...எண்ணிப்‌ பயப்படூவார்‌'” என்று

மின்சாரமில்லாத அக்காலத்தில்‌ அடர்த்தியான
இலைகளுடன்‌ புளிய மரம்‌ பார்ப்பதற்கு பயமாக இருக்தம்‌.

புளிய மரத்தில்‌ முனி இருக்கிறதென்றால்‌ அவ்வளவுதான்‌.
புளிய மரம்‌ காய்த்து குலுங்கினாலும்‌ யாரும்‌ தொடமாட்டார்கள்‌.
மரத்தில்‌ எறி முனியிடம்‌ அடி வாங்கவா என்று
தயங்குவார்கள்‌.

விழுந்த பழத்தைக்கூட பொறுக்க மாட்டார்கள்‌.

முனிக்கு புளியமரத்தில்‌ அல்லது புளிப்பில்‌ என்ன
விருப்பமோ ?

6ஃ. எஸ்‌. ப௩ல2 ன்‌


Page 139ரக... அக எக்க டட

.. சர்க்கம்‌

மாமரத்தில்‌ முனி இருப்பதாக யாரும்‌ நானறிய சொன்னதில்லை.

வசந்தகாலத்தில்‌ மாமரத்தில்‌ குயில்‌ இருந்து கூவும்‌. அல்லது கிளிகள்‌
இருந்து பழம்‌ தின்ற சொண்டூகளை சிறகுகளில்‌ துடைத்துக்கொள்ளும்‌.

திடீரென்று ஊர்‌ முழுக்க ஒரு கதை பரவும்‌.

இன்னார்‌ வீட்டின்‌ மேல்‌ சரமாரியாக பேய்‌ கற்களை எறிகின்றது
என்று.

துணிந்தவர்கள்‌ சிலர்‌ கூடிச்சென்று காவல்‌ காத்தால்‌ கல்‌ ஸீச்சு
பெய்து ஓய்ந்த மழை போல குறைந்து நின்று விடும்‌.

அவர்கள்‌ சற்று அகன்றால்‌ பிறகும்‌ கற்கள்‌ விழத்தொடங்கும்‌.
எறிபவர்கள்‌ அயல்‌ வீட்டூக்காரராக இருக்கலாம்‌.
கோபக்காரராக இருக்கலாம்‌

எது எப்படியோ அந்தக்‌ குடும்பத்தின்‌ அன்றாட வாழ்க்கையே
சிதைந்து போய்‌ விடும்‌.

பிள்ளைகள்‌ பள்ளிக்கூடம்‌ போக மாட்டார்கள்‌.

நித்திரை முழித்து, முழித்து வீட்டுக்காரரும்‌ மனைவியும்‌ கண்‌ சிவந்து
போவார்கள்‌

வந்த மாதிரியே ஒரு நாள்‌ திடீரென்று கல்‌ எறியும்‌ பேய்‌ தன்‌
கைங்கரியத்தை நிறுத்தி விடும்‌.

அண்டையில்‌ றோட்டுப்போட பறிக்கப்பட்டிருந்த சல்லிக்கற்கள்‌ முடிந்து
விட்டதுதான்‌ காரணமா என்று கூட பரவலாகப்‌ பேசப்பட்டு நாளடைவில்‌
அந்த சங்கதியே மறக்கப்பட்டு விடும்‌.

இன்னுமொரு நாள்‌ காலை, காலையில்‌ நித்திரை விழிக்கும்போதே
ஊரின்‌ மற்ற மூலையில்‌ மீண்டும்‌ பேயின்‌ கைவரிசை நடப்பதாக சேதி
வரும்‌.

கிணற்றுக்குள்‌ வெட்டிய பூசனிக்காய்‌. குங்குமம்‌ பூசிய
நத்துப்பூசனிக்காய்‌, எலுமிச்சம்பழம்‌, பூக்கள்‌ எல்லாம்‌ வீசப்பட்டிருக்கும்‌.

சற்றுப்‌ டோ௨ இருக்கிறது 127


Page 140யாரோ சூனியம்‌ செய்திருப்பதாக பேச்சு வரும்‌. சூனியத்தை முறிப்பதற்கு
மந்திரவாதியை அழைப்பதற்கு ஆள்‌ போவார்‌.

அந்த வீட்டுக்காரரின்‌ நடூ வயது மகள்‌ உரு வந்து ஆடூவாள்‌.
தனக்கு படையல்‌ போடூங்கள்‌ என்ற ஆவேசமாக காளியின்‌ சார்பாக
கேட்டூுக்கொள்வாள்‌, மந்திரவாதியோ கோழியும்‌ தருவேன்‌ என்று தானாக
சொல்லிக்‌ கொடுப்பார்‌. காளியும்‌ ஞாபகம்‌ வந்தது போல அதையும்‌
கேட்பாள்‌.

மிகுந்த வறுமை நிலையிலும்‌ சகல சம்பிரதாயங்களுடன்‌ நடத்துவேன்‌
என்று வீட்டுக்காரர்‌ வாக்குக்கொடுத்தபின்தான்‌ உரு அடங்கும்‌.
அதற்குப்பிறகு அந்தப்பெண்ணோடூ பழகுவதற்கே கூடப்படிக்கும்‌
சினேகிதிகள்‌ தயங்குவார்கள்‌.

“உரு வாற பிள்ளை' என்று கதை பரவியவுடன்‌, “காணமல்‌ போன
பசுமாடு எங்கு நிற்கிறது” “கடைசிப்பொடியன்‌ படிப்பு குழப்புவானா்‌
என்றெல்லாம்‌ கேட்பதற்கு ஆட்கள்‌ எலுமிச்சம்‌ பழத்தடன்‌ வரிசையாக
வருவார்கள்‌.

ஏற்கெனவே துரும்பாய்‌ இளைத்திருக்கும்‌ அந்தப்பெண்‌ உரு வந்து
ஆடியே மேலும்‌ இளைத்துப்‌ போவாள்‌. அவளின்‌ படிப்பும்‌ அத்தோடூ
குழம்பிப்போகும்‌.  “நம்புங்கள்‌..நம்பிக்கை வாழ வைக்கும்‌' என்றால்‌
எங்கள்‌ இந்த நம்பிக்கைகள்‌ வாழ்க்கையையே சிதைத்துவிடும்‌.

கொழும்புக்கு முக்கிய அலுவலாகப்‌ புறப்பட்ட அப்பா, ஐயர்‌ வீட்டு
பூனை குறுக்கே வந்ததென்று திரும்பி வந்தார்‌.

முதல்‌ நாள்‌ இரவு, புறப்படுகிறது பற்றி கதைத்தபொழுதே
வடதென்மூலையிலிருந்து “ப்ஸ்‌ ப்ஸ்‌' என்று நாலு முறை பல்லி
சொல்லியதாகச்‌ அம்மா சொன்னார்‌. குமுதத்தின்‌ ஒரு பக்கக்‌ கதையில்‌
காதலி தன்‌ காதலனை இப்படித்தான்‌ கூப்பிடுவாள்‌ என்று அம்மாவுக்கு
தெரியாது. அம்மா குமுதம்‌ வாசிப்பதில்லை.

பஞ்சாங்கத்தை புரட்டிப்பார்த்தால்‌ புகையிரதம்‌ வெளிக்கிடுகிற நேரம்‌
மரணயோகம்‌ என்று வேறு இருந்தது. அதற்குப்‌ பிறகு அப்பா போக
வேண்டிய அவசியம்‌ இல்லாமல்‌ போய்விட்டது. அவருக்கு கிடைக்க
இருந்த வேலை வேறு யாரோ ஒருவருக்கு கிடைத்ததாகச்‌ சொல்லி
பூனையைப்‌ பேசிக்‌ கொண்டார்கள்‌.

128 6. எஸ்‌. பால*2ஜன்‌

க ட ட்‌.


Page 141 

இனி வருவதை இதயநோயுள்ளவர்கள்‌ தவிர்த்துக்கொள்ளுங்கள்‌.

அப்பாவும்‌ சித்தப்பாவும்‌ தொலைதூரத்திற்கு ஏதோ அலுவலாக
போய்‌ விட்டூ வந்தவர்கள்‌ சொன்ன திகில்‌ கதையைக்‌ கேட்டு நான்‌
படூத்திருந்த பாயில்‌ எழுந்து உட்கார்ந்து கொண்டேன்‌.

அவர்கள்‌ வரும்‌ வழியில்‌ ஒரு சுடலை இருக்கும்‌ பகுதியைத்‌ தாண்டி
வர நேர்ந்ததாம்‌. அப்பா தற்செயலாக சுடலைப்பக்கம்‌ திரும்பிப்‌
பார்த்தபொழுது அங்கே கொட்டகை போட்டூ தேத்தண்ணிக்கடை நடந்து
கொண்டூ இருந்ததாம்‌.

பட்டடை(காசுமேசை)யில்‌ ஒருவர்‌, டம்ளரை தூக்கி தேத்தண்ணி
ஆற்றிக்கொண்டிருக்கும்‌ ஒருவர்‌, தோளில்‌ துண்டுடன்‌ மேசை
துடைத்துக்கொண்டு ஒருவர்‌ என்று சிலர்‌ அங்கு பணியாற்றிக்‌
கொண்டிருந்தார்களாம்‌. இதற்கிடையில்‌ தங்களை வரும்படி கைகாட்டிக்‌
கொண்டிருந்தாராம்‌ ஒருவர்‌.

அப்பா சைக்கிள்‌ பின்காரியரில்‌ இருந்து வரும்‌ சித்தப்பாவை
அந்தப்பக்கம்‌ பார்க்காதை பார்க்காதை” என்று சொல்லித்தடுூத்து
விட்டாராம்‌.

இந்தக்கதை கேட்டுக்‌ கொண்டிருக்கும்போதே எனக்கு காய்ச்சல்‌
தொடங்கி விட்டது என்றால்‌ சித்தப்பாவின்‌ நிலையைச்‌ சொல்லவா
வேண்டும்‌. குலைப்பன்‌ காய்ச்சல்தான்‌.

பல .நாட்களுக்குப்பிறகு அப்பாவுக்கு தெரிந்த ஒருவர்‌ எங்கள்‌
ஊருக்கு வந்த பொழுதுதான்‌ விட்டூ விட்டு அடித்த காய்ச்சல்‌ நின்றது.
அவர்‌ தங்கள்‌ ஊரில்‌ தேத்தண்ணீர்‌ கடை போட்டிருப்பதாகவும்‌ ஏன்‌
தான்‌ கூப்பிட்ட பொழுதும்‌ நீங்கள்‌ ஏன்‌ நிற்கவில்லை என்று அப்பாவை
மனத்தாங்கலுடன்‌ கேட்டார்‌.

தயங்கி தயங்கி சுடலைக்கதையைச்‌ சொன்னபோழுது அவர்‌ விழுந்து
விழுந்து சிரித்து விட்டூச்‌ சொன்னார்‌, அது அடூத்த றோட்டில்‌
இருக்கிறதென்று.

இந்தக்கட்டுரை எழுதிக்‌ கொண்டிருக்கும்போதே அடுத்த வீட்டுக்காரர்‌
மூன்று முறை தும்மினார்‌. எனவே பிரசுரமாகாமல்‌ போகலாம்‌.

சேற்றுப்‌ டோ இ.ருக்சவிறது 129


Page 142இரட்டைப்படையில்‌ தும்மியிருந்தால்‌ சிலவேளை பிரசுரமாகலாம்‌.
காலம்‌ ஒன்றும்‌ மாறிவிடவில்லை.

அடூத்த வீட்டில்‌ புதிதாக குடிவந்தவர்‌ இன்றுதான்‌ தொலைபேசி
இணைப்பு எடூத்தவர்‌ “தமிழர்‌ மத்தியில்‌” விளம்பரக்‌ கையேடூ
இருக்கிறதா என்று கேட்டூ வாங்கி கோயில்‌ நம்பர்களைத்‌ தேடினார்‌.
ஏனென்று கேட்டதிற்கு முதல்‌ அழைப்பு கோயிலுக்கு எடுத்தால்‌ நல்லது
என்றார்‌.

இலங்கையில்‌ முன்பு இப்படிச்செய்தாலும்‌ நியாயம்‌ இருக்கிறது.
அக்காலத்தில்‌ அங்கே சொந்தமாக வீட்டுக்கு தொலைபேசி இணைப்பு
ஏற்படுத்திக்கொள்வது ஐந்து குமர்களை கரையேற்றுவதற்கு சமமானது
என்று சொல்வார்கள்‌.

இங்கு தொலைபேசிக்‌ கொம்பனிகளின்‌ அன்புத்‌ தொல்லை
தாங்கமுடியாத அளவிற்கு இருக்கிறது. “எடூங்கள்‌.. எடூங்கள்‌ ஒன்று
எடூத்தால்‌ இன்னமொன்று இலவசம்‌ என்றெல்லாம்‌. கூவி
அழைக்கிறார்கள்‌. அழைப்பில்‌ வரும்‌ பெண்‌ குயில்‌ போலக்‌
கதைப்பதினால்‌ கூவி என்று சொன்னேன்‌.

130 62. எஸ்‌. ப௩ல22௫தநன்‌


Page 143 

 

 

 

 

 

5 ந்மரு்தூால்‌..

131


Page 144132

ேே

டிக்‌ காற்றில்‌ அம்மியும்‌ பறக்கும்‌” என்று
ஊரில்‌ சொலீவார்கள்‌. நான்‌ அதை பெரிதாக நம்பவில்லை.
எங்கள்‌ குசினியின்‌ மண்திண்ணை மெழுகப்படூம்‌ காலத்தில்‌
“கொஞ்சம்‌ அம்மியை அரக்கி வை” என்று அம்மா சொல்ல
நான்‌ பட்ட கஷ்டம்‌ எனக்கல்லவா தெரியும்‌. காற்றாவது
அம்மியைத்‌ தூக்கிறதாவது என்று சொல்லிக்கொண்டிருந்த
நான்‌, இங்கு வட அமெரிக்க கண்டத்தில்‌ அடிக்கடி வரும்‌
1௦118௨௦௦ என்ற சுழல்காற்று அம்மி, ஆட்டூக்கல்‌
இத யாதிகளோடு வீடுகளையே அடூத்த ஊரில்‌
கொண்டுபோய்‌ போட்டூ விடுகிறது என்று அறிந்த பின்‌ என்‌
முடிவை மாற்றிக்கொண்டேன்‌ என்பது தனிக்கதை.

ஆடியென்றவுடன்‌ காற்றைத்தவிர எங்களுக்கு ஞாபகம்‌
வருவது, எங்கள்‌ பகுதிகளில்‌ அனேகமாக கோயில்களின்‌
கொடியேற்றந்தான்‌. கொழும்பு போன்ற இதர மாவட்டங்களில்‌
வேலைகளின்‌ நிமித்தம்‌ தங்கியிருக்கும்‌ அண்ணாமார்‌
நாக்கைச்சுழற்றி, சப்புக்கொட்டிக்கொண்டூ றெயின்‌ எடுத்து
ஊருக்கு வருவார்கள்‌. பனைகளில்‌ கொடியேறும்‌ காலமும்‌
அதுவாக இருப்பதால்‌ தான்‌ இந்த சப்புக்கொட்டூதல்‌.
(இதையே பொச்சடித்தல்‌ என்று கிராமிய வழக்கில்‌
சொல்வதுண்டு).

62. எஸ்‌. புல7சந்தரன்‌


Page 145எங்களைப்போன்ற சிறுவயதினருக்கு எல்லாம்‌ சேர்ந்து ஒரே
குதூகலந்தான்‌. மேற்குறிப்பிட்டவர்கள்‌ அண்ணா, சித்தப்பா, மாமா
என்ற நேரடிச்சொந்தக்காரராய்‌ இருந்தாலும்‌, சொந்தக்காரராய்‌ வரும்‌
எண்ணம்‌ உள்ளவர்களாப்‌ (எங்களுக்கு அக்காமார்‌, சித்திமார்‌
கலியாணவயதில்‌ இருப்பதினால்‌) இருந்தாலும்‌, அவர்கள்‌ கொண்டு
வரும்‌ “மினுங்கல்‌' பேப்பரில்‌ சுற்றிய சொக்கலேற்‌, இனிப்பு வகைகள்‌
- “நெல்லுக்கிறைத்த நீர்‌ வாய்க்கால்‌ வழியோடி புல்லுக்கும்‌ ஆங்கே
பொசியுமாம்‌' என்ற பாணியில்‌ எங்களுக்கும்‌ கொஞ்சம்‌ கிடைக்கும்‌.

சாதகத்தில்‌ குருபார்வை நன்றாக இருந்தால்‌ அவர்கள்‌ போட்டூ, அடிக்கடி
கழுவியதினால்‌ சிறிதாகிப்போய்விட்ட அக்கால நாகரீக சின்னமான
“டெரிலின்‌'” சேர்ட்டே எங்களுக்கு கிடைக்கும்‌. அதை வயல்கிணற்றில்‌
கல்லில்‌ போட்டு, அடித்துத்‌ துவைக்காமல்‌, “லக்ஸ்‌” சோப்‌ போட்டு அலம்பி
விரித்து, காய்ந்ததும்‌, குளித்த வெறும்‌ மேனியில்‌ அணிந்துகொண்டு
ஒருமுறை ஊரை வலம்‌ வந்தால்‌ காணும்‌. அலம்பல்‌ வேலிகளின்‌
இடூக்குகளின்‌ ஊடே பல கண்கள்‌ எங்களை விழுங்குவன போலப்பார்க்கும்‌.

இதுவே கோயில்களின்‌ திருவிழாக்காலமாதலால்‌ எங்களைப்‌
போன்றவர்களுக்கு ஓய்வு, ஒழிச்சலே இருக்காது. எங்கள்‌ கோயில்‌
அலங்காரத்திருவிழா முடிந்துவிட்டால்‌ அடுத்த ஊர்க்கோயில்‌, அதற்கும்‌
அடுத்த ஊர்‌ என்று கொடியேறி நடந்து கொண்டிருக்கும்‌.

நாங்களும்‌ இன்றைக்கு இத்தனை கூட்டம்‌ மேளம்‌ வருகிறது,
இன்ன செற்‌ சின்னமேளம்‌ வருகிறது, இந்தக்கோஷ்டி (இசைக்குழு)
இங்கே வருகிறது என்ற புள்ளிவிபரங்களை விரல்நுனியில்‌
வைத்துக்கொண்டு அலைவோம்‌. எல்லாம்‌ சரி. அண்டை, அயலூரை
விட்டு சற்று தள்ளியிருக்கும்‌ ஊர்த்திருவிழாக்களுக்கு போவதிற்கு
அனுமதி வாங்குவதுதான்‌ சிரமமான அலுவல்‌. சரியாகச்சொன்னால்‌
அனுமதி கிடைக்கவே கிடைக்காது. ப

இத்தனைக்கும்‌ எங்கள்‌ ஊரிலிருந்து ஏழு, எட்டு மைல்‌ தொலைவில்‌
உள்ள ஒரு கிராமத்தில்‌ இருக்கும்‌ கோயில்களில்‌, திருவிழாக்கள்‌
அந்தமாதிரி நடக்கும்‌. எங்கள்‌ அபிமானத்துக்குரிய கோஷ்டி (இசைக்குழு
தான்‌) இந்த இடத்தில்‌ வாசிக்கப்போகிறார்கள்‌ என்று செய்தியும்‌
கிடைத்து விட்டது.

சற்றுப்‌ டோ௨ இருக்கிறது 133


Page 146அதிலும்‌ அந்த குழுவின்‌ தலைவர்‌ பியானோ அக்கோடியனை
கழுத்தில்‌ மாட்டி, ஒரு கையால்‌ பட்டன்களை அழுத்தி, மற்றக்கையால்‌
துருத்திபோல இருக்கும்‌ மடிப்புகளை விரித்து, மூடி எழுப்பும்‌ இசை
எங்களுக்கு தேனாக இனிக்கும்‌. இசை வராவிட்டால்‌ கூட அவர்‌
அக்கோடியளை விரித்து மடக்குவதைப்‌ பார்த்துக்‌ கொண்டூ இருக்கலாம்‌
என்று எங்களுக்கு தோன்றும்‌.

எப்படியாவது போவது என்று நாங்கள்‌ ஆறு நண்பர்கள்‌ தீர்மானம்‌
எடூத்தோம்‌. எங்கள்‌ சைக்கிள்‌ ரயர்களில்‌ காற்று போதுமானதாக
இருக்கிறதா, கரியர்கள்‌ ஆடாமல்‌, அசையாமல்‌ இருக்கிறதா (டபிள்‌
போகவேண்டி இருப்பதால்‌) என்று பார்த்துக்கொண்டோம்‌. “என்ன
இன்றைக்கு பொடியன்‌ வலு ஒழுக்கமாய்த்‌ திரியிறான்‌..” என்று வீட்டில்‌
உள்ள பெரியவர்கள்‌ சொல்லும்‌ வண்ணம்‌, செய்ய வேண்டிய
வேலைகளை கவனித்துக்‌ கொண்டோம்‌. ஆடுகளுக்கு முருங்கைக்குழை
தாராளமாகவே ஓடித்துப்போட்டோம்‌. அம்மா மறந்து போன சாமான்கள்‌
வாங்கி வர சங்கக்கடைக்கு ஒருதரத்துக்கு இரண்டு தரம்‌ சினக்காமல்‌
போய்‌ வந்தோம்‌. தம்பிக்கு நுள்ளாமல்‌, யாரும்‌ பார்க்காத நேரம்‌ பார்த்து
எட்டிக்குட்டாமல்‌ சிரித்த முகத்துடன்‌ திரிந்தோம்‌. சைக்கிளை மாத்திரம்‌
கேற்றுக்கு கிட்டவாக, வேலவியோடோ, மதிலோடோ சாத்திவிட்டு
வெள்ளெணவாக நித்திரைக்கு போவதாக பாவனை செய்தோம்‌.

பத்து, பதினொரு மணிக்கு மேல்‌ ஒவ்வொருவராக அவரவர்‌ வீடுகளில்‌
இருந்து சின்ன சத்தம்‌ கூட எழுப்பாமல்‌ தகரப்படலைகளை திறந்து,
சாத்தி வெளியே வந்து தார்‌ றோட்டில்‌ ஏறி, சைக்கிள்களை உழக்கத்‌
தொடங்கிய பின்னர்தான்‌ முதன்முதலாக சிரித்தோம்‌. கொஞ்சநேரம்‌
சிரிப்பும்‌, கும்மாளமுமாக வந்த நாங்கள்‌ திடீரென்று ஓரு விஷயம்‌
ஞாபகத்திற்கு வர, எல்லோருமே திகைத்து சற்று நின்று விட்டோம்‌.

அதாவது எங்கள்‌ ஊருக்கும்‌ நாங்கள்‌ போகவேண்டிய ஊருக்கும்‌
இடையே நண்டதொரு வெளிப்பிரதேசம்‌ இருந்தது. அதை
ஊடறுத்துத்தான்‌ நாங்கள்‌ செல்லவேண்டிய பாதை இருந்தது. அந்த
வெளியின்‌ தொடக்கத்திலும்‌, முடிவிலும்‌ அடர்த்தியான பனைக்கூடல்கள்‌
இருந்தன. போதும்‌ போதாதற்கு இரண்டூ சுடலைகள்‌ வேறு தள்ளித்தள்ளி
அந்தவெளியில்‌ அதுவும்‌ நாங்கள்‌ போகப்போகும்‌ றோட்டிற்கு அருகாகவே
இருந்தன. அதாவது ஒரு பயங்கரப்படம்‌ எடுப்பதற்கான சகல
காட்சியமைப்புகளும்‌ இயற்கையாகவே இருந்தன.

134 6ஃ. எஸ்‌. ப௩ல27 சந்தன்‌


Page 147ப. இச ப!

இரவு பன்னிரண்டு மணி. வெளியின்‌ தொடக்கத்தில்‌ பனைக்கூடலை
அணிமிக்கவே பின்‌ கரியரில்‌ இருந்த மூவரும்‌ 'தொப்‌.. தொப்‌ : என்று
குதித்தார்கள்‌. என்ன ஏதென்று கேட்பதிற்கு முன்னரே, சைக்கிள்‌ “பார்‌்‌
களில்‌ தொற்றிக்‌ கொண்டார்கள்‌. பின்னுக்கு இருந்தால்‌ வரப்போகும்‌
'பேயோ...பிசாசோ..முனியோ” அவர்களைத்தான்‌ முதலில்‌ பிடிக்கும்‌ என்று
நினைத்துவிட்டார்கள்‌. சைக்கிள்‌ ஓடிக்கொண்டிருந்த நாங்களும்தான்‌
மன்றாடிப்‌ பார்த்தோம்‌. அவர்கள்‌ அசையவில்லை. பனைக்கூடலின்‌
பனைகள்‌ வெவ்வேறு உருவங்களாகத்‌ தோன்றின. ஆடிக்காற்றில்‌
ஒலைகளின்‌ சரசரப்பு வேறு.

சற்று நிற்பதும்‌, மீண்டும்‌ முன்னே கொஞ்சத்தூரம்‌ செல்வதுமாக
பயணம்‌ தொடர்ந்தது. முதலாவது சுடலையைக்‌ கடக்கும்போதுதான்‌
“பாரில்‌ இருந்த ஒரு புண்ணியவான்‌ நாங்கள்‌ எப்பவோ பார்த்து
மறந்துபோன ஒரு ஆங்கிலப்படத்தை ஞாபகப்படூத்தினான்‌. அந்த
“டிராகுலா' ப்‌ படத்தில்‌, ஒரு பிசாசு நடூச்சாமத்தில்‌ மயானத்திற்கு வந்து,
வாவென்று அழைக்க, புதைக்கப்பட்டவர்கள்‌ ஒவ்வொன்றாக எழுந்து
வருவார்கள்‌.

இதைச்‌ சொன்னதும்‌ றோட்டூுக்கரையைக்‌ கவனமாகப்‌
பார்க்கத்தொடங்கினோம்‌. காற்றில்‌ ஆடும்‌ செடிகளே, எழுந்து வரும்‌
கைகளைப்‌ போலத்‌ தெரிந்தன. திடீரென்று பாரம்‌ கூடியதுபோல
சைக்கிளை உழக்குவதே கஷ்டமானதாகப்பட்டது. யாராவது (யாராவது
என்ன யாராவது - ஏதாவது) பின்‌ காரியரில்‌ ஏறி உட்கார்ந்து கொண்டது
மாதிரி இருந்தது. ஓடிக்கொண்டே காரியரை தடவிப்பார்த்துக்‌ கொண்டோம்‌.

சில்லையூர்செல்வராசன்‌ சொன்னது மாதிரி, தமிழன்‌ பாட்டொடூ பிறந்து
(தாலாட்டு) பாட்டொடூ இறப்பான்‌ (ஒப்பாரி) என்ற வரிசையில்‌ பயத்துக்கும்‌
தமிழன்‌ பாடுவான்‌ என்று நிருபிப்பதற்காக பாடத்தொடங்கினோம்‌.
பாட்டென்றால்‌ அந்தமாதிரி பாட்டு. கிட்டப்பா கிட்டவே வரமுடியாத
உச்சஸ்தாயி. நாங்கள்‌ பாடிய கோஷ்டிகானம்‌, அந்த அந்தகார இரவில்‌,
வெளியில்‌ பரவி, அதன்‌ அடுத்த முனையில்‌ உள்ள வீடுகளில்‌
முற்றங்களில்‌ ஹாயாக பாய்‌ விரித்துப்‌ படுத்திருந்தவர்களை, எழுந்து
வீடுகளுக்குள்‌ ஓடப்பண்ணியிருக்கும்‌.

இத்தனையும்‌ தாண்டி ஒருவாறு நாங்கள்‌ போகவேண்டிய
கோயிலடிக்குப்‌ போய்ச்‌ சேர்ந்தோம்‌. சிகரம்‌, மின்விளக்குகள்‌, அலங்காரம்‌

சேற்றுப்‌ டோ௨ இ.ருக்சிறது 135


Page 148எதுவும்‌ இல்லாமல்‌ கோயில்‌ - பெற்றோமாக்ஸ்‌ ஒளியில்‌ யாரோ ஒரு
முதியவர்‌ சமயப்பிரசங்கம்‌ செய்து கொண்டிருந்தார்‌. பியானோ
அக்கோடியன்‌ வரும்‌ சாயலே தெரியவில்லை. பொறுத்து அலுத்து,
பிரசங்கத்தைக்‌ கேட்டூக்கொண்டிருந்த ஒருவரைக்‌ கேட்டோம்‌;

அவர்‌ எங்களை ஏற, இறங்கப்‌ பார்த்துச்‌ சொன்னார்‌.
“அலங்காரத்திருவிழாவா..அது நேற்றல்லோ நடந்து முடிஞ்சுது”

விடியும்வரை அந்த கோயில்‌ வீதியிலேயே உறங்கினோம்‌.

136 6. எஸ்‌. ப௩ல22 ஆரன்‌


Page 149 

 

 

 

 

 

 

ளனென்ணட்‌ வந்த நான்‌

137


Page 150138

19 பாளமொழியில்‌ தண்ணீருக்கு “வெள்ளம்‌”
என்று சொல்வார்கள்‌ என்று கேள்விப்பட்டபின்‌ எனக்கு ஒரு
கேள்வி தோன்றி அதற்கு விடைதெரியாமல்‌ மலையாளம்‌
“பறையக்‌”கூடியவர்களைத்‌ தேடிக்கொண்டு திரிகிறேன்‌.

வெள்ளமாகத்‌ தண்ணீர்‌ வந்தால்‌ அதை மலையாளத்தில்‌
எப்பிடிச்‌ சொல்வது?

எங்கள்‌ ஊரில்‌ வெள்ளம்‌ வந்த காலத்தை
நினைத்துப்பார்க்கிறேன்‌. நூறே நூறு பேர்‌ வந்த
விழாக்களையே ஜனவெள்ளம்‌ வந்தது, எள்ளுப்போட்டால்‌
எள்ளு விழாத கூட்டம்‌ (எள்ளுப்போட்டால்‌ வேறென்ன
கொள்ளா விழும்‌) என்றெல்லாம்‌ பத்திரிகைகளில்‌
எழுதுகிறார்கள்‌. இது எங்கள்‌ ஊரில்‌ உண்மையாகவே
வெள்ளம்‌ வந்தது.

ஆறு பெருக்கெடுத்து ஊருக்குள்‌ வெள்ளம்‌ வந்து மாடு,
கன்றுகள்‌, அறுவடைசெய்து வைத்த நெல்மூட்டைகள்‌
எல்லாவற்றையும்‌ கொண்டுபோய்‌ விட்டது என்று
அந்தக்கதையெல்லாம்‌ இல்லை. ஆறு என்பது எங்கள்‌
பக்கத்தில்‌ இல்லவே இல்லை. அப்படி இருந்தாலும்‌ ஆறுமுகம்‌
அண்ணையின்‌ பெயரில்தான்‌ இருந்தது. அவர்‌
மேற்சொன்னவற்றை “அபேஸ்‌” பண்ணிக்‌ கொண்டூ
போவதுண்டு. அதைத்தான்‌ “ஆறு” கொண்டுபோய்‌ விட்டது
என்று எங்கள்‌ பக்கத்தில்‌ சொல்லிக்‌ கொள்வார்கள்‌.

62%. எஸ்‌. ப௩ல2௪௫$ன்‌


Page 151ஒரு நாள்‌ அதிகாலையிலேயே மழை பெய்யத்தொடங்கிவிட்டது.
அம்மா சுடும்‌ தோசையின்‌ மணம்‌ மழைக்காற்றில்‌ பட்டூ சுற்றிச்சுழன்று
வந்து எனக்கும்‌ தம்பிமாருக்கும்‌ வயிற்றுக்கனலை எரியவைத்தது.
குசினிக்கும்‌ நாங்கள்‌ குந்தியிருக்கும்‌ மாலுக்கும்‌ (மாலுக்கும்‌
இங்கெல்லாம்‌ இருக்கின்ற மோலுக்கும்‌ சம்பந்தமேயில்லை) இடையில்‌
நண்டதொரு முத்தம்‌. ஓடிக்கடந்து, குனிந்து குசினிக்குள்‌
நுழைவதற்குள்‌ உள்ள ஒரேயொரு காற்சட்டையும்‌ நனைந்து விடும்‌.
நானும்‌, தம்பிமாரும்‌ பசி கொண்ட வேட்டை நாய்களைப்போல ஒருவரை
ஒருவர்‌ பார்த்துக்கொண்டோம்‌.

அம்மம்மா செத்தையில்‌ செருகிவைத்த உமிக்கரியை பாவித்து
பல்விளக்கி, பனையோலை வேய்ந்த கூரையில்‌ பட்டூ வழுகிவரும்‌
மழைத்தண்ணீரில்‌ எட்டி முகத்தைக்‌ கழுவியபின்‌ மழை ஓயுமென்று
காத்திருந்தோம்‌. மழைக்கு அந்த எண்ணமே இருக்கவில்லை என்று
தெரிந்தபின்‌, கூரையில்‌ சுருட்டி செருகி வைத்திருந்த தாத்தாவின்‌
மான்தோலை பிடித்துக்கொண்டு குசினிக்குள்‌ பாய்ந்தோம்‌. “மச்ச,
மாமிசம்‌ சமைக்கிற குசினிக்குள்ள பூசைக்குப்‌ பாவிக்கிற
மான்தோலைக்‌ கொண்டூ போறாங்கள்‌”” என்று அம்மம்மா கத்தினா.
“மான்தோல்‌ மரத்திலேயே எடூத்தது.. அம்மம்மா”” என்று நானும்‌
பதிலுக்கு கத்தினேன்‌.

தோசைகளை “துவம்சம்‌” செய்து கொண்டிருக்கும்போதுதான்‌
அம்மா சொன்னா... “ இண்டைக்கு பள்ளிக்கு போகவேண்டாம்‌.. சரியா..
மழை பெய்யுது “

எங்கள்‌ பள்ளிக்குப்‌ போகும்‌ வழியில்‌ உள்ள குளம்‌ நிரம்பி
வழியும்‌ காட்சி மனதில்‌ வந்து போனது. இந்த சந்தர்ப்பத்தை விட்டால்‌
பிறகு எப்போதோ...

“இண்டைக்கு சோதனை இருக்கம்மா.. கட்டாயம்‌ போகவேணும்‌.”

வழியில்‌ நண்பர்கள்‌ மூவர்‌ சேர்ந்து விட்டார்கள்‌. எல்லோரும்‌
என்னைப்போலத்தான்‌ சொல்லி வந்திருக்கிறார்கள்‌. ஒழுங்கைகளில்‌
முழங்கால்‌ வரை வெள்ளம்‌ ஓடியது. பள்ளிக்கூடத்திற்கு கிட்ட உள்ள
குளம்‌ நுங்கும்‌ நுரையுமாக நிரம்பி வழிந்தது. வரும்போது
பார்த்துக்கொள்வோம்‌ என்ற முடிவுடன்‌ பள்ளிக்கூடம்‌ சென்றோம்‌.

சேற்றுப்‌ போ௨ூ இடருக்சமிறது 139


Page 152அங்கே நின்ற சில ஆசிரியர்கள்‌ எங்களை வினோதமாகப்‌
பார்த்தார்கள்‌. சாதாரண நாட்களிலேயே அடிக்கடி பள்ளிக்கு வராமல்‌
விடும்‌ கூட்டம்‌ இன்று அக்கறையாக வந்திருக்கிறார்களே என்ற ஆச்சர்யம்‌
தான்‌ அது.

எங்களை விரட்டாத குறையாக வீட்டுக்கு போகச்சொல்லிவிட்டார்கள்‌.
மீண்டும்‌ அதே வெள்ள ஒழுங்கைகள்‌. இடுப்பு வரை இப்போது வெள்ளம்‌
ஓடியது. காற்றின்‌ உக்கிரத்தில்‌ பனைகள்‌ வளைந்து வளைந்து
நிமிர்ந்தன. எல்லோரும்‌ தான்‌ தெப்பமாக நனைந்து விட்டோம்‌.

குளத்தடிக்கு வந்தால்‌ குளம்‌ எது, கரை எது என்று தெரியவில்லை.
கரைக்கான அடையாளங்களாக நின்ற பூவரசு மரங்களை பார்த்து
கொண்டே சென்று குளப்பக்கமாக சாய்ந்து நின்ற அம்மரங்களின்‌
கிளைகளில்‌ ஏறி உட்கார்ந்து கொண்டோம்‌. ஆளுக்கொரு மரம்‌.
அங்கிருந்து தண்ணீரில்‌ குதித்து பார்ப்பதாகத்‌ தீர்மானம்‌.

குதிப்பதற்கு சற்றுமுதல்‌ தான்‌ ஒரு ஞாபகம்‌ வந்தது. என்னுடைய
சொத்து பூராவும்‌ என்‌ காற்சட்டை பொக்கெற்றுக்குள்தான்‌ இருந்தது.
சொத்தென்றால்‌ வேறொன்றுமில்லை. பள்ளிக்கூடத்தில்‌ நான்‌ அடித்து
வென்ற மார்பிள்‌ உருண்டைகள்‌. கோயில்‌ திருவிழா முடிந்து அடுத்தநாள்‌
ஐஸ்கிறீம்‌ விற்கும்‌ வாகனம்‌ நின்ற இடத்தில்‌ மணலுக்குள்‌ கிடந்த
ஐந்து சதக்குத்தி, உடையார்‌ வீட்டுக்காணிக்குள்‌ கம்பி வேலிக்கு
கீழாக தவழ்ந்து போய்‌ எடூத்து ஒரே ஒரு கடி கடித்த பிஞ்சு மாங்காய்‌,
என்‌ சொத்துக்களை நான்‌ வீட்டில்‌ வைத்துவிட்டு வரவில்லை. காரணம்‌
என்‌ தம்பிமார்‌ அவற்றை எனக்குத்‌ தெரியாமலே பாகப்பிரினை செய்து
கொள்வார்கள்‌.

முந்தியும்‌ ஒருதடவை இப்படித்தான்‌ நீட்டுப்பின்னல்‌ ஈஸ்வரி எனக்கு
இரவலாகத்‌ தந்த றோஸ்கலர்‌ அழிறப்பரை திருடியதோடூ, அதை
சொக்கலேற்‌ என்று நினைத்து சத்தகக்‌ கத்தியால்‌ இரண்டாக வெட்டி
சமமாக விழுங்கி விட்டார்கள்‌. கேட்டதிற்கு எங்கள்‌ வீட்டிற்கு முன்னால்‌
உள்ள பனங்காணியில்‌ கொண்டல்‌ மரத்தின்‌ கீழ்‌ தீடீரென்று எழுந்தருளிய
சூலத்தைக்காட்டி, “வைரவராணை'' என்று சத்தியம்‌ செய்தும்‌ விட்டார்கள்‌.
யாருடையதோ வீட்டு கேற்றில்‌ கிடந்த சூலம்‌ மாதிரி கம்பியை
அவர்கள்தான்‌ கழற்றிக்கொண்டுூ வந்து நட்டிருக்கிறார்கள்‌ என்று
பிறகுதான்‌ தெரிய வந்தது. அதுதான்‌ அவர்கள்‌ செய்த சத்தியம்‌
பலிக்காமல்‌ போயிருக்க வேண்டும்‌ என்று நினைத்துக்‌ கொண்டேன்‌.

140 6. எஸ்‌. பாலச்சந்$ரன்‌


Page 153(இப்போதும்‌ ஈஸ்வரி என்‌ சேர்ட்‌ பொக்கெற்றில்‌ எனக்கு தெரியாமல்‌
காசு எடுத்து விட்டூ, கண்டூபிடித்துக்‌ கேட்டால்‌, “அந்த அழிறப்பர்‌
காசுக்கு கழியுங்கோ்‌ என்ற சொல்கிறாள்‌. யார்‌ என்று தெரிகிறதல்லவா?

எங்கே விட்டேன்‌. பூவரசு மரத்தில்‌, காற்சட்டையில்‌ இருக்கும்‌
சொத்துக்களை நினைத்துக்‌ கொண்டூ இருந்தேன்‌. அவை தண்ணீரில்‌
குதிக்கும்‌ போது விழுந்து விட்டால்‌...

ஒரே ஒரு வழி. சேர்ட்‌, காற்சட்டையைக்‌ கழற்றி பக்குவமாக
மரப்பொந்துக்குள்‌ செருகிவிட்டூ குதிப்பதுதான்‌. நான்‌ அப்படியே செய்தேன்‌.
இடுப்பில்‌ கட்டியிருந்த கறுப்பு அரைஞாண்‌ கயிறைத்‌ தவிர
வேறொன்றுமில்லை. நாங்கள்‌ படித்த பாடத்தில்‌ ஒரு கதை உண்டு.
தொப்பி விற்பவனின்‌ தொப்பிகளை குரங்குகள்‌ அபகரித்துப்போக,
தொப்பிவியாபாரி தன்‌ தொப்பியைக்‌ கழற்றி எறிய குரங்குகளும்‌
அவ்வாறே செய்தனவாம்‌. அந்த மாதிரியே நான்‌ காற்சட்டையை கழற்றி
அம்மணமாக நிற்க, என்‌ நண்பர்களும்‌ அவ்வாறே செய்தார்கள்‌. குரங்குப்‌
புத்தி.

“தொப்‌, தொப்‌” என்று வெள்ளத்‌ தண்ணீருக்குள்‌ குதித்தோம்‌.
விழுந்த வீச்சுக்கு பூவரச மரங்களின்‌ கிளைகள்‌ தாழ்ந்து நிமிர்ந்தன.
கூடவே “தொப்‌, தொப்‌” என்று வேறு சத்தங்களும்‌ கேட்டன. எங்கள்‌
சேட்‌, காற்சட்டைகள்‌ புத்தகக்கட்டூக்கள்‌ சுற்றிய பாரத்துடன்‌
வெள்ளத்தில்‌ வீழ்ந்து, எங்கள்‌ கண்களுக்கு முன்னாலேயே தாழ்ந்தும்‌,
மிதந்தும்‌ வேகமாக கடந்து சென்றன.

நினைக்க, முடிக்க எல்லாம்‌ நடந்து முடிந்தன. எங்களின்‌ சந்தோசம்‌
எல்லாம்‌ அந்த வெள்ளத்தில்‌ வற்றிப்‌ போய்‌ விட்டது. வீட்டக்குப்‌ போய்‌.
புத்தகங்களுக்கும்‌, காற்சட்டை, சேர்ட்டூக்களுக்கும்‌ என்ன நடந்தது
என்று சொல்லுவோம்‌ என்ற கவலை.

இதற்கு மேலாக எப்படி இந்தக்கோலத்தில்‌ வீடுகளுக்குப்‌
போகப்போகிறோம்‌ என்ற யோசனை வரவும்‌ திகைத்துப்‌ போய்விட்டோம்‌.
எங்களில்‌ ஒரு புத்திசாலி சொன்ன யோசனைதான்‌ சரியாகப்பட்டது.

“நாங்கள்‌ வரும்போதுதான்‌ பார்த்தோமே., எல்லா ஒழுங்கைகளிலும்‌
எங்கள்‌ இடுப்புகளுக்கு மேல்‌ வெள்ளம்‌ பாய்ந்தது. நாங்கள்‌ அப்படியே

ரூட்றுப்‌ டோ௨ இ.ருக்சவிறது 141


Page 154வெள்ள ஒழுங்கைகளுக்கால்‌ நடந்து போனால்‌. ஒருவருக்கும்‌ தெரியப்‌
போவதில்லை. வீடூகளுக்கு கிட்டப்‌ போனவுடன்‌ பாய்ந்து உள்ளே ஓடி
விடுவோம்‌...”

“ஆகா... அருமையான யோசனை” என்று சொல்லிக்கொண்டே.
வெள்ளத்துக்குள்‌ எங்கள்‌ பிறந்த மேனிக்கோலங்களை மறைத்துக்‌
கொண்டே நடந்து போனோம்‌. ஆரம்பத்தில்‌ எல்லாம்‌ சுமூகமாகவே
நடந்தது.

ஆனால்‌ போகப்போக வெள்ளம்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாக இடுப்புக்கு
கீழே வந்தது. இன்னும்‌ போக முழங்காலளவு. எங்கள்‌ வீடுகளுக்கு
அருகில்‌ போக வெள்ளம்‌ கணுக்காலை தொட்டுத்‌ தடவியது.

யாரோ அலவாங்குகள்‌, கடப்பாரைகளுடன்‌ நின்று றோட்டை வெட்டி
வெள்ளத்தை வழிந்தோடச்‌ செய்து கொண்டூ நின்றார்கள்‌.

தூரத்தில்‌ சில இரட்டைப்பின்னல்கள்‌ வருவது தெரிந்தன. அதற்கு
பிறகு யார்‌ நின்று பார்த்தது. ஓடினோம்‌. அதல்லவோ ஓட்டம்‌.

142 6ஃ. எஸ்‌. புல2 ஆதன்‌

 


Page 155 

 

 

 

 

 

 

ஆதறத்தறண்ண்‌ கூரை,

143

 


Page 156 

 

144

இ. போதெல்லாம்‌ எனக்கும்‌ மழைக்கும்‌

என்னவோ பொருத்தம்‌ குறைவு. ஒரு மழைத்துளி தலையில்‌
பட்டாலே தும்மத்‌ தொடங்கி விடும்‌. போகிற இடம்‌ கல்யாண
வீடு மாதிரி இருந்து விட்டால்‌ எவ்வளவு பிரச்‌ சினை.
யோசித்துப்‌ பாருங்கள்‌. “மாங்கல்யம்‌ தந்துனானே “ என்று
ஐயர்‌ சுற்றுமுற்றும்‌ பார்த்துக்‌ கொண்டே தொடங்க
கணக்காக ஒரு தும்மல்‌. மாப்பிள்ளை, பெம்பிளையின்‌
சொந்தக்காரர்கள்‌ கண்ணில்‌ அக்கினி எரிய என்பக்கமாக
பார்வையை வீசுவார்கள்‌. அடுத்து “கெட்டிமேளம்‌..
கெட்டிமேளம்‌” என்று சொல்லி, தவில்‌ வித்வான்‌ வெற்றிலை
போடூவதற்காக அருகில்‌ வைத்துவிட்ட மேளம்‌ அடிக்கும்‌
தடியைத்‌ தேடி எடூப்பதற்கிடையில்‌ அடூத்த தும்மல்‌.
மாப்பிள்ளை கட்டக்கொண்டுபோன தாலியை
வைத்துக்கொண்டு, “ஸ்ரில்‌”” காட்சியில்‌ நிற்பார்‌. இதனால்‌
இப்போது வீட்டிலிருந்து குடை இல்லாமல்‌ இறங்கவே
மாட்டேன்‌. “ஆள்‌ பாதி ஆடை பாதி' என்பார்கள்‌. என்னைப்‌
பொறுத்த வரையில்‌ “நான்‌ பாதி.. குடை பாதி' என்ற மாதிரி
ஒரு பாசப்பிணைப்பு.

என்னைச்‌ சின்னவயதில்‌ பார்த்தவர்கள்‌ அசப்பில்‌ நான்‌
தாத்தாவைப்‌ போலவென்று சொல்லி மாளுவார்கள்‌.
“அசலாய்‌ பேரனைப்போலை.. குடை மாதிரி
காதைப்பாருங்கோவன்‌” என்பார்கள்‌. இப்படி தாத்தாவை
நினைக்கப்போக அவரது குடையின்‌ ஞாபகம்‌ வந்தது.

62. எஸ்‌. ப௩ல22ஆ$நன்‌

 


Page 157 

 

தாத்தாவின்‌ குடை மகாபிரசித்தம்‌. மான்‌ மார்க்‌ குடை என்பதாலோ
என்னவோ விரித்தால்‌ பல ஓட்டுத்‌ தையல்கள்‌ போடப்பட்டு புள்ளி
மான்‌ மாதிரி இருக்கும்‌. தாத்தா எங்கள்‌ ஊரின்‌ நடுநாயகமாய்‌ இருக்கும்‌
ரவுணுக்குப்‌ போவதே தன்னுடைய குடைக்கு தையல்‌ போடுூவிக்கவும்‌,
முறிந்த கம்பிகளுக்கு கட்டூக்கள்‌ போடவும்‌ தான்‌. குடை திருத்திறவரே
அலுத்துக்கொண்டாலும்‌, தாத்தா தனது குடையின்‌ மகாத்மியத்தை
ஒவ்வொரு முறையும்‌ சொல்லாமல்‌ விடமாட்டார்‌.

அம்மம்மா சொல்லுவா.. குடை வாங்கிய ஆரம்பகாலத்தில்‌
மழைகாலத்தில்‌ குடைத்துணி நனைந்துபோய்விடும்‌ என்று விரிக்காமலே
தொலைதூரம்‌ என்றாலும்‌ நனைந்து கொண்டூவருவாராம்‌.

இப்படியிருக்க, ஒரு நாள்‌ எங்கள்‌ வீட்டிலிருந்து வெகு தொலைவில்‌
உள்ள எங்கள்‌ பனங்காணியில்‌ ஓலை வெட்டப்‌ போனோம்‌. அப்பாவில்‌
ஒரு குணம்‌ இருந்தது. என்ன அலுவலுக்கு புறப்படுவது என்றாலும்‌
அதிகாலையிலேயே, அதாவது “மைமமல்‌” பொழுதில்‌
புறப்பட்டுவிடவேண்டூம்‌. முன்பு ஒரு முறை சொன்னது போல வயல்‌
கிணற்றில்‌ குளிக்கவென்றாலும்‌ என்னையும்‌ தம்பிமாரையும்‌ ஊர்‌
விழிக்கமுதல்‌, நித்திரைக்கலக்கத்துடன்‌ நடத்திச்செல்வார்‌. அதற்கு
அவர்‌ சொல்லும்‌ காரணம்‌ போகும்போது யார்‌ கண்ணிலும்‌
முழிக்கக்கூடாது. என்பதுதான்‌. சரி. “முழுவியளம்‌” போன்றவற்றில்‌
நம்பிக்கை வைப்பதுதான்‌. ஆனால்‌ குளிக்கப்போகும்போது கூட அது
பார்ப்பதா?

இவ்வாறே அன்றும்‌ சென்றோம்‌. எங்கள்‌ பனங் காணி
ஊர்மனைகளுக்கு வெளியே, வயல்களுக்கு நடூவில்‌ ஒரு அந்தகார
வெளியில்‌ இருந்தது.. மொத்தம்‌ இருபது பனைகள்‌ இருக்கும்‌ ஒரு
திடல்தான்‌ அது. சுற்றிவர கண்ணுக்கெட்டிய தூரம்‌ வரை
வயல்வெளிகள்‌.

போய்‌ ஓலையும்‌ வெட்டூவித்தாகிவிட்டது. பனை ஒலைகள்‌
படியவேண்டூமென்பதற்காக -“நிலக்கரம்‌” என்று நளத்துக்கு ஒன்றன்‌
மேல்‌ ஒன்றாக அடூக்கியாகிவிட்டது. இனி வீட்டுக்குப்போப்‌ வண்டில்‌
கொண்டூவரவேண்டும்‌. ஆனால்‌ யாராவது ஒரு ஆள்‌ ஓலைக்கு காவலாக
இருக்கவேண்டும்‌. ஏனென்றால்‌ ஓஒலைகளைத்‌ திருடிக்கொண்டு
போவதிற்கும்‌ ஆட்கள்‌ இருந்தார்கள்‌. அப்படிக்‌ கொண்டு போய்‌ “ஓலை

சற்றுப்‌ டோ௨ூ இருக்கிறது 145

த்தன பது பத்து ட வவ வ ப்ப


Page 158 

 

கொண்டூ வந்திருக்கிறேன்‌ மகாராஜா” என்று சரித்திர நாடகப்பாணியில்‌
யாருக்கும்‌ விற்றும்‌ விடுவார்கள்‌.

“நான்‌ நிற்கிறேன்‌” என்று சொல்லவும்‌ அப்பா என்னை ஆச்சர்யமாகப்‌
பார்த்தார்‌. பிறகும்‌ மற்றவர்களுக்கு முன்னால்‌ தன்மகன்‌ எதற்கும்‌
அஞ்சாதவன்‌ என்று நிரூபிக்க நினைத்தாரோ என்னவோ - “கவனமாக
இரடா தம்பி” என்ற சொல்லிவீட்டு மற்றவர்களுடன்‌ புறப்பட்டார்‌.

அவர்கள்‌ போய்‌ மறையும்‌ வரை பார்த்துவிட்டு, ஒரு பனைக்குப்‌
பின்னால்‌ மறைத்து வைத்திருந்த தாத்தாவின்‌ குடையை எடூத்தேன்‌.
ஒரு விஞ்ஞானப்‌ பரீட்சை செய்து பார்ப்பதுதான்‌ என்‌ நோக்கம்‌.
அதற்காகத்தான்‌ யாருக்கும்‌ தெரியாமல்‌ தாத்தாவின்‌ குடையை எடூத்து
வந்திருந்தேன்‌. இருட்டூக்குள்‌ வந்ததும்‌ வசதியாகப்‌ போய்விட்டது.

விஷயம்‌ இதுதான்‌. அக்காலத்தில்‌ சுகாதார திணைக்களத்தார்‌
ஊர்‌ ஊராகப்போய்‌ “சுகாதாரப்படம்‌” என்று சின்னத்திரையில்‌
காட்டுவார்கள்‌. அவர்கள்‌ வருகிறார்கள்‌, எங்கள்‌ கோயில்‌ வீதியில்‌
படம்‌ காட்டப்போகிறார்கள்‌ என்றாலே எங்களைப்போல பொடியன்களுக்கு
வலு சந்தோசம்‌.

படம்‌ என்னவோ இப்படித்தான்‌ இருக்கும்‌. கைகளை சுத்தமாக
கழுவவேண்டும்‌. கழுவாமல்‌ சாப்பிட்டால்‌ வயிற்றுக்குள்‌ அசுத்தம்‌ போய்‌
அதனால்‌ புழுக்கள்‌ உண்டாகும்‌ என்று புழுக்களை வெகுநேரமாக
காட்டிக்கொண்டிருப்பார்கள்‌. எவ்வளவு நேரம்தான்‌ அதை பார்த்துக்‌
கொண்டிருப்பது. பார்த்துக்கொண்டிருக்கும்‌ அண்ணாமார்‌ -விசில்‌'
அடிப்பார்கள்‌.

உடனே படத்தை மாற்றிப்போடூவார்கள்‌. ஏதோ எம்‌. ஜீ. ஆர்‌ -
சரோஜாதேவி நடித்த பாடல்‌ காட்சி போடுவார்கள்‌ என்று நினைத்து
விடாதீர்கள்‌. அதற்கென்றே சில காட்சிகள்‌ வைத்திருந்தார்கள்‌. பனி
மலையாக குவிந்திருக்கும்‌ காட்சி. அதில்‌ சறுக்கி விழும்‌ மனிதர்கள்‌.
பகல்வெய்யிலின்‌ சூடு தணியாத புழுதியில்‌ இருந்து கொண்டூ அந்த
பனிச்சறுக்கலைப்‌ பார்க்கும்போது பொறாமையாக இருக்கும்‌. (இங்கே
வந்து வின்ரர்‌ காலத்தில்‌ பேப்பர்‌ போடூம்‌ போதுதான்‌ அந்த அருமை
தெரிகிறது)

146 6. எஸ்‌. ப௩ல2சந்தரன்‌

 


Page 159அனவ

 

இதே மாதிரி குடை மாதிரி ஒன்றைப்பிடித்துக்கொண்டுூ மேல்‌ இருந்து
குதித்தால்‌ அப்படியே காற்றில்‌ மிதந்து கொண்டுபோய்‌ வெகு தூரத்தில்‌
இறங்குவார்கள்‌. அதைச்‌ செய்து பார்ப்பதுதான்‌ என்‌ நோக்கம்‌. இந்த

மாதிரி விஷயங்களில்‌ என்‌ “ஞானகுரு வான மகாலியும்‌ தாத்தாவின்‌ ':

குடை இதற்கு தாக்குப்‌ பிடிக்கும்‌ என்று நம்பிக்கை தந்திருந்தான்‌.

காற்று பலமாக வீசிக்‌ கொண்‌ டிருந்தது. குடையை
விரித்துக்கொண்டு, எங்கள்‌ பனங்காணித்திடலில்‌ இருந்து வயல்‌
பக்கமாக குதிக்கவேண்டியதுதான்‌ பாக்கி' எல்லாம்‌ சரியாக நடந்தால்‌
அடுத்த ஊரில்‌ போய்‌ இறங்குவதாக நினைத்திருந்தேன்‌.

நான்‌ விரிக்கும்‌ நேரம்‌ பார்த்தா அந்தக்‌ காற்று வீசவேண்டும்‌. “சட
சட” வென்று கம்பிகள்‌ முறிய, குடையின்‌ உள்பக்கம்‌ வெளிப்பக்கமாக
மாறியதோடூ, கையிலிருந்து நழுவி அப்படியே பறந்து சென்று
வயலுக்குள்‌ தொலைவில்‌ விழுந்தது. .

பதைபதைத்து உழுத வயலுக்குள்ளால்‌ குடையைத்‌ துரத்திச்‌
சென்றேன்‌. அப்போது தான்‌ அது “மான்‌ மார்க்‌” குடை என்பதை
நிரூபிக்கத்‌ தொடங்கியது. அதாவது சீதைக்கு முன்னால்‌ நின்றும்‌,
கிட்டப்போனால்‌ ஓடியும்‌ விளையாட்டூக்‌ காட்டிய மாரீச மாயமானைப்‌
போல என்று வைத்துக்‌ கொள்ளுங்களேன்‌. முடிந்த அளவுதான்‌
ஓடிப்பார்த்தேன்‌. கடைசியில்‌ நான்‌ பார்க்கும்போது நான்‌ பறந்து போக
நினைத்த ஊர்பக்கமாக குடை போய்க்‌ கொண்டிருந்தது.

இதற்குப்பிறகு தாத்தா குடை எங்கே போயிருக்கும்‌, யார்‌
களவாடியிருப்பார்கள்‌ என்று சாத்திரம்‌ கேட்டூப்பார்த்தார்‌. வெற்றிலையில்‌
மை போடுூவித்துப்‌ பார்த்தார்‌. கோயிலில்‌ 'சுளகாட்டி'ப்பார்த்தார்‌
(சுளகாட்டூதல்‌ - அந்தக்காலத்தில்‌ களவு போன, காணாமல்‌ போன
பொருளை கண்டூபிடிக்க கையாளும்‌ ஒரு முறை). ஆனால்‌ என்‌ பக்கமாக
சுளகு திரும்பவில்லை. நானும்‌ நடந்ததைச்‌ சொல்லவில்லை.

எனக்கு வேலை கிடைத்தவுடன்‌ தாத்தாவுக்கு ஒரு குடை வாங்கித்‌

கொடூக்க இருந்தேன்‌. ஆனால்‌ எனக்கு வேலை கிடைத்தபோது அவர்‌
இருக்கவில்லை.

சேற்றுப்‌ போ இருக்கிறது 147

ட வவ லட


Page 160

Page 161சவன்கரைதள கு பயணச்‌ ரர்‌ 0ணிரி

 

 

 

 

 

 

 

 

வங்கள்‌ பன்வீககஉட ணீ
1ககத்து ஊருக்கு
வ்ணையர்டப்‌ போறது

149

ப ்லை,


Page 162 

 

150

எக ஆண்டுகளுக்கு ஒருமுறை
உதைபந்தாட்டத்தின்‌ உலகக்கிண்ணத்திற்கான போட்டி
எந்த நாட்டில்‌ நடந்தாலும்‌ பிரித்தானிய அரசாங்கம்‌ வயிற்றில்‌
நெருப்பைக்கட்டிக்‌ கொண்டு இருக்குமளவிற்கு அந்த நாட்டின்‌
உதைபந்தாட்ட ரசிகர்கள்‌ நடந்து கொள்வார்கள்‌. போட்டி
நடக்கும்‌ நாட்டிற்கு ஆயிரக்கணக்கில்‌ போய்‌ இறங்கி,
தங்கள்‌ அணியைத்தவிர வேறு எந்த அணி வென்றாலும்‌
கலாட்டாதான்‌. வேறு ஒரு நாட்டிற்குப்போய்‌ அந்த நாட்டு
ரசிகர்களிடம்‌ கலாட்டா பண்ணுவதற்கும்‌ ஒரு “தில”
இருக்கவேண்டும்‌.

இப்படியான “தில்‌'” இருப்பதாக நினைத்துக்கொண்டுதான்‌
ஒருமுறை எங்கள்‌ பள்ளிக்கூட அணிக்கு ஆதரவாக நாங்கள்‌
கொஞ்சப்பேர்‌ வெளியூர்‌ ஒன்றுக்குப்‌ போனோம்‌.

உதைபந்தாட்டம்‌ அல்ல. வொலிபோல்‌ என்ற
கரப்பந்தாட்டம்‌. கிரிக்கெற்‌ போன்ற வெள்ளைக்காரரின்‌
விளையாட்டுக்கள்‌ எங்கள்‌ கிராமப்பகுதிகளுக்குள்‌
நுழையாத காலத்தில்‌ கிராமப்‌ பள்ளிக்கூடங்களில்‌
கரப்பந்தாட்டம்‌ தான்‌ கோலோச்சியது.

இரண்டு பனங்குற்றிகளை நட்டு, குறுக்கே
வலையைக்கட்டி பந்தை அதற்கு மேலாக “மூசி மூசி”
அடித்துக்‌ கொண்டிருப்பார்கள்‌. சாதாரணமாக கோயில்‌
வீதிகளில்‌, வாசிகசாலை முன்றல்களில்‌ ஒரு சிறிய

62. எஸ்‌. ப௩ல22ஆ$ரன்‌

அம்‌,

 


Page 163 

 

இடத்திலேயே விளையாடக்கூடியதாக இருந்ததினால்‌ இது
கிராமவாசிகளின்‌ ஆதர்ச விளையாட்டாக இருந்தது.

இந்த அபிமானத்தின்‌ காரணமாக எங்கள்‌ பள்ளிக்கூடத்திலும்‌
ஒரு “திறமான” கரப்பந்தாட்ட அணி உருவாகியிருந்தது.
விளையாடியவர்கள்‌ - நோஞ்சான்கள்‌, நெத்தலிப்‌ பயில்வான்கள்‌
இல்லை. ஆறடி தொடும்‌ உயரம்‌. மண்வெட்டி பிடித்து மரத்துப்போன
கைகள்‌. தொங்கி எழுந்து வலைக்கு மேலாக ஓங்கி அடித்தால்‌
பந்தின்‌ வீச்சை தடூக்கமுடியாமல்‌ எதிர்‌ அணியினர்‌ நிலத்தில்‌
விழுவார்கள்‌. எங்களில்‌ விசில்‌ அடிக்கத்‌ தெரிந்தவர்கள்‌ விசில்‌ அடிக்க
நாங்கள்‌ சிலர்‌ “* காய்‌ கய்‌” என்று தொண்டைத்தண்ணீர்‌ வற்றக்‌
கத்தி அட்டகாசம்‌ செய்வோம்‌.

உள்ளூர்‌ பாடசாலைகள்‌ எல்லாவற்றையும்‌ இப்படியாக மண்கவ்வச்‌
செய்தபின்‌ வெளியூர்‌ பாடசாலை ஒன்றோடு பொருதப்‌ புறப்பட்டது
எங்கள்‌ பாடசாலை அணி. எங்கள்‌ தலைமை ஆசிரியர்‌ வழக்கமாக
வெள்ளிக்கிழமைகளில்‌ கூட்டும்‌ அசெம்பிளிக்கூட்டத்தில்‌ பெரிய
பிரசங்கமே செய்து முடித்தார்‌. ஐரோப்பாவை தன்‌ ஆட்சிக்கு கீழ்‌
கொண்டு வந்த மகா அலெக்சாந்தர்‌ இந்தியாவை நோக்கி
படையெடூத்ததை ஒப்பிட்டார்‌.

உணர்ச்சி வசப்பட்ட நாங்கள்‌ நால்வர்‌ எங்கள்‌ அணிக்கு ஆதரவாக
அந்த ஊருக்கு போவதென்று தீர்மானித்தோம்‌. பள்ளிக்கூடத்திலிருந்து
ஒர்‌ தட்டிவானில்‌ வீரர்களுடன்‌, விளையாட்டுக்கு பொறுப்பான
ஆசிரியரும்‌, வேறு சிலரும்‌ புறப்பட்டார்கள்‌. பள்ளிக்கூட வாசலில்‌
நின்று எல்லோருமாக வழியனுப்பி வைத்தார்கள்‌.

இதற்காக அன்று கடைசி வகுப்பும்‌ நடைபெறாது என்று
அறிவித்ததினால்‌ எங்களுக்கு இரட்டிப்புச்‌ சந்தோசம்‌. நாங்கள்‌ போக
வேண்டிய ஊரின்‌ தூரம்‌ ஏழு மைல்களுக்கு மேலிருக்கும்‌. கொஞ்சம்‌
முன்னதாக வெளிக்கிட்டால்‌ விளையாட்டு தொடங்கும்‌ நேரத்துக்குப்‌
போய்ச்‌ சேர்ந்து விடலாம்‌ என்ற எண்ணந்தான்‌.

சக மாணவர்‌ கூட்டம்‌ கலைந்து போகவும்‌ எங்கள்‌ பயணம்‌
ஆரம்பமானது. எங்கள்‌ குட்டி ரவுண்பக்கமாகப்‌ போனால்‌ ஒழுங்கான

றோட்டில்‌ பயணம்‌ சுகமாக இருக்கும்‌ என்று தெரிந்திருந்தாலும்‌,

சேற்றுப்‌ போ௨ூ இருக்கிறது ட 151


Page 164எங்களின்‌ சித்தப்பா, பெரியப்பா வழியில்‌ குறுக்கிட்டு “எங்கையடா
போறீங்கள்‌'”” என்று கேட்டூுத்தொலைத்து. பயணத்தை நிறுத்தச்‌
செய்துவிடூவார்கள்‌ என்ற பயத்தில்‌, எங்கள்‌ ஊரின்‌ பின்பக்கமாக
தோட்டவெளிகள்‌, வயல்கள்‌ பக்கமாக இருக்கும்‌ “கப்பி' றோட்டால்‌
பயணமானோம்‌.

தார்‌ போட்ட அடையாளமே இல்லாமல்‌ காற்றும்‌, மழையும்‌
அரித்துக்கொண்டு போய்விட, பெரிய கற்கள்‌ ஆங்காங்கே
துருத்திக்கொண்டூ நிற்கும்‌ அந்த றோட்டில்‌, சைக்கிள்‌ ஒடுவது மகா
சிரமமாக இருந்தது. ஒவ்வொருமுறை கல்லின்‌ மேலாகத்‌ தொங்கி
விழும்போதும்‌, அந்த றோட்டுப்‌ போட்ட முகம்‌ தெரியாத ஒப்பந்தகாரரின்‌
மரண ஊர்வலம்‌ எப்போ நடந்தாலும்‌ இந்த றோட்டாலேயே
நடக்கவேண்டுமென சபித்துக்கொண்டு தொடர்ந்தோம்‌.

இவ்வளவு சிரமத்தின்‌ மத்தியில்‌ நாங்கள்‌ போக வேண்டிய
இடத்திற்குப்‌ போய்ச்சேர்ந்த பொழுது, கரப்பந்தாட்டத்தின்‌ மூன்றாவது
செற்‌ நடந்து கொண்டிருந்தது. வழக்கம்‌ போலவே எதிர்‌ அணியின்‌
வீரர்கள்‌ அடிக்கடி நிலத்தில்‌ குப்புற விழுவதைக்‌ கண்டவுடனேயே
எங்கள்‌ உற்சாகம்‌ கரைபுரண்டோடியது. எங்கள்‌ பாடசாலையின்‌
பெயரைச்சொல்லி கோசமிட்டோம்‌.

சடூதியாக மைதானமே அமைதியானது. எல்லோரும்‌ எங்களைப்‌
பார்த்தார்கள்‌. பார்வை சுமூகமானதாக இருக்கவில்லை. எங்கள்‌
பாடசாலை அணி வீரர்களே “யார்‌ இவர்கள்‌'” என்று ஆச்சர்யத்துடன்‌
பார்த்தார்கள்‌. நாங்கள்‌ அத்தோடூ நிறுத்தியிருக்கலாம்‌. ஆரவாரத்தைத்‌
தொடர்ந்தோம்‌.

வென்றவர்களுக்கு தோற்றவர்கள்‌ கைலாகு கொடுக்கும்‌ விம்பிள்டன்‌
ரென்னிஸ்‌ நாகரீகம்‌ எல்லாம்‌ பரவாத கிராமம்‌ அது என்று எங்களுக்கு
வெகு சீக்கிரத்திலேயே தெரிந்து விட்டது. மரவள்ளிக்கட்டைகளும்‌,
குறுணிக்கற்களும்‌ விளையாட்டூ இடத்தில்‌ சரமாரியாக வந்து விழுந்தன.

“அடாது மழை பெய்தாலும்‌ விடாது நாடகம்‌ நடத்தும்‌'” பாணியில்‌
எங்கள்‌ வீரர்கள்‌ கல்வீச்சின்‌ மத்தியிலும்‌ விளையாடி மூன்றாவது
செற்றையும்‌ வென்று போட்டியில்‌ வெற்றி பெற்றார்கள்‌. இதன்பிறகு
நடந்ததுதான்‌ சுவாரஸ்யமானது. முன்னேற்பாடாக தட்டிவான்‌ டிரைவர்‌

152 6ஃ. எஸ்‌. ப௩ல22$ரன்‌

 


Page 165 

மைதானத்துக்கு அருகிலேயே வாகனத்தை நிறுத்த எங்கள்‌ அணி
வீரர்கள்‌ உடுப்புகள்‌ கூட மாற்றாமல்‌ அவசரம்‌ அவசரமாக ஏறி புறப்பட்டூச்‌
சென்றார்கள்‌. போகும்போது எங்கள்‌ பக்கமாக பரிதாபப்‌ பார்வை வீசி
விட்டுச்‌ சென்றார்கள்‌. ரோம சாம்ராச்சியத்தின்‌ விளையாட்டூ அரங்கிலே
பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள்‌ பார்த்துக்‌ கொண்டிருக்க,
சிங்கங்களுடன்‌ விடப்பட்ட கைதிகளைப்போல வெலவெலத்து நாங்கள்‌
நின்று கொண்டிருந்தோம்‌.

கடைசிக்கல்லை புழுதிபறக்க விரையும்‌ தட்டிவான்‌ பக்கமாக எறிந்து
விட்டு திரும்பிய ஒரு உள்ளூர்‌ பெருமகன்‌ எங்களைக்‌ கண்டுூ விட்டார்‌.
“இங்கை நிற்கிறாங்கள்‌” என்று தன்‌ சகபாடிகளை அழைக்கவும்‌,
நாங்கள்‌ எங்கள்‌ சைக்கிள்களில்‌ பாய்ந்து ஏறினோம்‌. உழக்கிய
வேகத்தில்‌ “கடகட” வென்று ஒரு சத்தம்‌ கேட்டது. என்னுடைய
சைக்கிள்‌ செயின்‌ கழன்று விட்டது. சற்று தடூமாறுவதற்கிடையில்‌
முதுகில்‌ யாரோ மொத்தினார்கள்‌. சைக்கிளையும்‌ உருட்டிக்கொண்டு
ஓடித்தான்‌ பார்த்தேன்‌. காலடிகள்‌ அண்மித்துக்‌ கேட்கவும்‌, அதை
அப்படியே போட்டூ விட்டூ முன்னால்‌ சென்று கொண்டிருந்த நண்பனின்‌
சைக்கிள்‌ பாரில்‌ தொற்றிக்‌ கொண்டேன்‌.

நாங்கள்‌ போய்ச்‌ சேர்வதற்கு முன்னால்‌, இந்தக்கதை எங்கள்‌
வீடுகளுக்கு “செல்லிடப்போன்‌'”' இல்லாத அந்தக்காலத்திலேயே போய்ச்‌
சேர்ந்து விட்டது. சொல்லாமல்‌ போனது, சைக்கிள்‌ தொலைத்தது
எல்லாவற்றுக்குமாகச்‌ சேர்த்து அங்கே வாங்கத்தவறியதை அப்பாவிடம்‌
வாங்கினேன்‌. என்‌ நண்பர்கள்‌ வீடுகள்‌ பக்கமாகவும்‌ ஓலங்கள்‌ கேட்டன.

சற்றுப்‌ டோ௨ இருக்கிறது 153


Page 166 

 

 

 

 


Page 167பட ௭...

 

 

 

 

 

 

 

 

எங்கள்‌ ஊரில்‌
ரு வாச்கசார்லை

155


Page 168156

ரீக ஊர்களில்‌ கிராமந்தோறும்‌ ஒரு வாசிகசாலை
இருக்கும்‌. அவற்றில்‌ தவறாமல்‌ பாரதி விழா நடக்கும்‌ என்று
முன்பொரு முறை எழுதியிருக்கிறேன்‌.

ஆனால்‌ தொடக்கத்தில்‌ எங்கள்‌ ஊரில்‌ வாசிகசாலை
இருகீகவில்லை. அருகில்‌ உள்ள பகுதியின்‌
வாசிகசாலைக்குத்தான்‌ போய்‌ வந்தோம்‌. ஆனால்‌ அவர்கள்‌
எங்களை அங்கத்தவர்களாக சேர்த்துக்‌ கொள்ளவில்லை...
எனவே வாசிகசாலையின்‌ பல வசதிகள்‌ எங்களுக்கு
மறுக்கப்பட்டன.

முக்கியமாக எங்களில்‌ பலர்‌ மிகுந்த வாசிப்புப்‌ பசி
கொண்டவர்களாக இருந்தோம்‌. ஜெகசிற்பியன்‌, நா. பார்த்தசாரதி,
அகிலன்‌, சாண்டில்யன்‌ ஆகியோரின்‌ நீண்ட நாவல்களையே
ஐந்து, ஆறு நாட்களில்‌ வாசித்து முடித்து விடுவோம்‌. ஆரம்பத்தில்‌
அயலூர்க்காரர்கள்‌ எங்களுக்கும்‌ நாவல்கள்‌ வாசிக்க இரவலாகத்‌
தரத்தான்‌ செய்தார்கள்‌. அனால்‌ நாளைடைவில்‌ எங்கள்‌ வேகம்‌
அவர்களுக்கு எரிச்சல்‌ மூட்டியிருகீகவேண்டுூம்‌.
அங்கத்தவர்களாகிய தங்களை விட தங்களின்‌ வாசிகசாலை
நூலகத்தின்‌ முழுப்பயனையும்‌ நாங்கள்‌ அனுபவிப்பதாக அவர்கள்‌
கருதியிருக்கவேண்டும்‌. திடீரென்று ஒரு நாள்‌ ஒரு அறிவித்தல்‌
பலகை வாசிகசாலையின்‌ முன்‌ பக்கத்தில்‌ தொங்கியது.

“அங்கத்தவர்கள்‌ அல்லாதோர்க்கு நூல்கள்‌ இரவல்‌
கொடுக்கப்படமாட்டாது.”

6. எஸ்‌. ப௩ல22ன்‌


Page 169 

நாங்கள்‌ கூனிக்‌ குறுகிப்போனோம்‌. வந்ததுதான்‌ வந்தோம்‌.
பேப்பரையாவது வாசித்து விட்டு போவோம்‌ என்று பார்த்தால்‌ பேப்பரின்‌
ஓவ்வொரு தாளையும்‌ விரித்து வைத்துக்‌ கொண்டு அக்கறையாக
வாசிப்பது போல அவர்கள்‌ பாவனை செய்தார்கள்‌. நாங்கள்‌ வேண்டாத
விருந்தாளிகள்‌ என்ற புரிந்து விட்டது. அப்படியே புறப்பட்டு எங்கள்‌
ஊர்‌ கோயில்‌ வீதிக்கு வந்தோம்‌. மற்றப்‌ பொடியன்களுக்கும்‌ தகவல்‌
சொல்லி அனுப்பி வரவழைத்தோம்‌. அரசமரத்தின்‌ அடியில்‌ எங்கள்‌
ஆலோசனைக்கூட்டம்‌ ஆரம்பமாகியது.

எல்லோர்‌ பேச்சிலும்‌, மூச்சிலும்‌ எங்களுக்கென ஒரு வாசிகசாலை
அமைக்கவேண்டுமென்ற எண்ணம்‌ மேலோங்கி இருந்தது.
காலந்தாழ்த்தாமல்‌ உடனடியாக நடவடிக்கையில்‌ இறங்கினோம்‌. நாங்கள்‌
கூட்டம்‌ நடத்திய அந்த இடத்திலேயே வாசிகசாலை நிறுவத்‌ தீர்மானித்து
மண்வெட்டி, உளவாரம்‌ சகிதம்‌ சிரமதானப்பணியில்‌ குதித்து, இடத்தை
சுத்தப்படுத்திக்‌ கொண்டிருக்கும்போது எங்கள்‌ கோயிலின்‌ தர்மகர்த்தா
அவிழும்‌ நாலுமுழத்தைச்‌ சரிசெய்து கொண்டே ஓடோடி வந்தார்‌.

“என்ன செய்கிறீர்கள்‌?” , “யாரைக்கேட்டூ செய்கிறீர்கள்‌ ?” என்று
இரண்டூ கேள்விகளுக்கும்‌ பதில்‌ சொன்னோம்‌. இரண்டாவது கேள்விக்கான
பதில்தான்‌ அவருக்கு ஆத்திரமூட்டியிருக்கவேண்டும்‌.

“யாரைக்கேக்க வேணும்‌.. இது பொது இடம்‌” - என்பதுதான்‌ எங்களில்‌
ஒருவர்‌ சொன்ன பதில்‌.

“தோம்பு உறுதி பார்த்துத்தான்‌ சொல்றீங்களோ” என்று சற்று
உறுதியாகச்‌ சொன்னார்‌, தர்மகர்த்தா.

சொன்ன தோரணை எங்களைக்‌ கொஞ்சம்‌ தடூமாறவைத்தது

“இந்த மூலைத்துண்டூ எட்டூ்ப்‌ பனையோடை என்ரை பெயரிலைதான்‌
இருக்கு. என்ரை காணியுக்கை கொம்மினிசக்‌ கூட்டம்‌ நடத்த
போறீங்களோ”” என்றார்‌. இவர்‌ போட்ட சத்தத்துக்கு, நாலைந்து பேர்‌
கையில்‌ தடிகளுடன்‌ ஓடிவருவது தெரிந்தது.

முன்னுக்கு வந்தவர்‌ என்‌ மாமா... “யார்ரா அவன்‌... சண்டித்தனமோ...
காட்டட்டோ விளையாட்டூ”” என்று கம்பு சுற்றத்‌ தொடங்கி விட்டார்‌. அவர்‌

சேற்றுப்‌ டோ இருகிறது 157


Page 170சீனடி, சிலம்படி தெரிந்தவர்‌ என்று ஊரெல்லாம்‌ கதை இருந்தது. அவர்‌
கையில்‌ இருந்த கம்பு “விர்‌..விர்‌ என்று காற்றைக்கிழித்துச்‌ சுழன்றது.

வியப்புடன்‌ பார்த்துக்‌ கொண்டிருந்த நாங்கள்‌ ஒருமித்து கரகோசம்‌
செய்தோம்‌. பாராட்டூக்களுக்கும்‌, கைதட்டல்களுக்கும்‌ மசியாத யாரும்‌
இருக்கிறார்களா என்ன?. மாமாவின்‌ கோபம்‌ சட்டென்று இறங்கி விட்டது.
ஒரு சின்ன புன்னகையுடன்‌ * என்னடா பொடியள்‌.. என்ன நடந்தது.?”
என்று எங்களைப்‌ பார்த்துக்‌ கேட்டார்‌.

மாமா கட்சி மாறுகிறார்‌ என்று புரிந்து கொண்ட தர்மகர்த்தா ஏதோ
இடையில்‌ சொல்லப்புறப்பட, தனது இடது கையாலேயே அவரைப்‌
பேசாமல்‌ நிற்கப்‌ பணித்தார்‌. மாமா ஒரு “ஒற்றை றோட்டு ஆள்‌” என்று
பிரக்யாதி பெற்றவர்‌. தர்மகர்த்தா பணிந்து போனார்‌.

நாங்கள்‌ எங்களது கடைசி அஸ்திரத்தையும்‌ பாவித்தோம்‌.
“ மாமா.. நாங்கள்‌ இதிலை வாசிகசாலை கட்ட கூட்டம்‌ நடத்தி
உங்களைத்தான்‌ தலைவராகப்‌ போட முடிவு எடுத்திருக்கிறம்‌””

அதன்பிறகு மாமாவின்‌ முகத்தில்‌ தலைவருக்கான தேஜஸ்‌
தானாகவே வந்து விட்டது.

“என்ன மனுசரப்பா நீங்கள்‌.. பிள்ளையள்‌ ஒரு நல்ல வேலை
செய்யவும்‌ விடமாட்டியளே”” என்று கேட்கவும்‌, தர்மகர்த்தாவும்‌,
மற்றவர்களும்‌ இடத்தைவிட்டுப்‌ போயே விட்டார்கள்‌.

“நங்கள்‌ செய்யிறதைச்‌ செய்யுங்கோடா பொடியள்‌.. என்ன வேணும்‌
எண்டாலும்‌ என்னட்டை வாங்கோ” என்று அமெரிக்கா மூன்றாம்‌ உலக
நாடூகளுக்கு உறுதி மொழி கொடுக்கிற மாதிரி சொல்லிவிட்டுப்‌ போனார்‌,
மாமா.

பிறகென்ன... காரியம்‌ மளமளவென்று நடந்தது. நான்கு மரங்கள்‌
நட்டு, சுற்ற வர அரைச்சுவர்‌ களிமண்ணால்‌ எழுப்பி, மேலே பனம்‌
சலாகைகளில்‌ பொருத்திய சாக்குகளினால்‌ மறைப்பு எற்படுத்தி,
நெருக்கமாக அடுக்கிய கிடூகுகளினால்‌ கூரை வேய்ந்து, உள்ளே
வெண்புழுதி பரவி, இப்படி இரண்டே நாட்களில்‌ வாசிகசாலை றெடியாகி
விட்டது.

158 6ல. எஸ்‌. பு௩ல22ஆதரன்‌


Page 171பொருட்கள்‌ எல்லாம்‌ தலைவரின்‌ (மாமாவின்‌) உபயந்தான்‌. ஏதோ
தன்பணத்தில்‌ இவற்றையெல்லாம்‌ வாங்கித்‌ தந்தார்‌ என்று நினைத்து
விடாதீர்கள்‌, அவரது வழிகாட்டலில்‌ பலரின்‌ வீடுகளிலும்‌ காணிகளிலும்‌
நாங்கள்‌ “அபேஸ்‌ பண்ணியவைதான்‌. பொதுவாக தலைவர்களே
இப்படித்தானே?

சங்கக்கடைகாரரின்‌ மகனின்‌ உதவியுடன்‌ அவருக்குத்‌ தெரியாமலே
“தாள்‌ தேயிலை” வருகிற பெட்டி ஒன்று கொண்டு வந்தோம்‌. வீடு
வீடாக போய்‌ எங்கள்‌ நூலகத்திற்கு புத்தகங்கள்‌ கேட்டோம்‌. “பெரிய
எழுத்து நல்லதங்காள்‌ கதை, விக்கிரமாதித்தன்‌ கதை, அல்லி அரசாணி
மாலை முதலான புத்தகங்களை சிலர்‌ மனமுவந்து தந்தார்கள்‌. பல
புத்தகங்கள்‌ பெயர்‌ போனவையாக இருந்தன. அதாவது முன்‌ அட்டை,
பின்‌ அட்டைகள்‌ இல்லாமல்‌ எட்டாம்‌ பக்கத்தில்‌ தொடங்கி 88ம்‌
பக்கத்தோடூ நின்று விட்டிருந்தன. கதைகளின்‌ முடிவுகளை
யூகித்துத்தான்‌ கண்டூபிடிக்கவேண்டும்‌.

இனி பேப்பர்‌. சிங்கப்பூர்‌ பென்சனியர்‌ கடைக்கு நிறுத்து விற்க
வைத்திருந்த கட்டிலிருந்து உருவி நாலு இங்கிலீஸ்‌ பேப்பர்‌ தந்தார்‌,
பத்திரமாகத்‌ திருப்பித்‌ தரவேண்டுமென்ற ஓஒப்பற்தத்துடன்‌.
திகதிகளைப்பற்றி நாங்கள்‌ அக்கறைப்படவேயில்லை. எங்கள்‌
வாசிகசாலையில்‌ இங்கிலீஸ்பேப்பரும்‌ இருக்கிறது என்று பெருமைப்பட்டூக்‌
கொள்ளலாமே !

தமிழ்பேப்பர்‌ சொந்தமாக வாங்கி வாசிக்கும்‌ இரண்டு ஆசிரியர்களிடமும்‌
போய்‌ கெஞ்சிக்கூத்தாடி, அவர்கள்‌ பின்னேரம்‌ ஐந்து மணிக்கு மேல்‌
வந்து பேப்பரை வீட்டில்‌ வாங்கிக்‌ கொண்டூ போகும்படி சொன்னார்கள்‌.

எல்லாம்‌ ஒப்பேறியது. வெகு அடக்கமாக வாசிகசாலையை
ஆரம்பித்தோம்‌. நாங்களே எல்லாப்பத்திரிகைகளையும்‌ மாறி, மாறி
வாசித்தோம்‌. கயிற்றில்‌ தொங்கிய பழைய ஆனந்தவிகடன்‌, குமுதம்‌
உட்பட ஒன்றையுமே விட்டு வைக்கவில்லை. கும்மிருட்டாகும்‌ வரைக்கும்‌
இருந்து எதிர்காலத்திட்டங்கள்‌ பற்றிக்‌ கதைத்துவிட்டூ வீடூ சென்று ஏச்சு
வாங்கினோம்‌. ஆனாலும்‌ சாதித்து விட்ட பெருமிதம்‌ எங்களிடம்‌ இருந்தது.

அடூத்த நாள்‌ போனபொழுது வாசிகசாலை கதவைக்காணவில்லை.
விசாரித்தபொழுது, “சிவமயம்‌.. ௧. செ' என்று எழுதப்பட்டிருந்த அந்த

சேற்றுப்‌ டோ இ.ருக்சிறது 159


Page 172தகரக்‌ கேற்றை அதன்‌ உண்மையான சொந்தக்காரரான
தென்னங்காணிக்காரர்‌ கொண்டூபோய்‌ விட்டார்‌ என்று தெரிய வந்தது.
உள்ளே எட்டிப்‌ பார்த்தால்‌ எங்கள்‌ தலைவர்‌ புழுதிக்குள்‌ நீட்டி நிமிர்ந்து
படூத்திருந்தார்‌. நன்றாகக்குடித்து விட்டு வந்து படுத்திருக்கிறார்‌ என்று
தெரிந்தது. அவரது நாய்‌ “வீரன்‌” இங்கிலீஸ்‌ பேப்பருக்கு மேல்‌
சாவதானமாகப்‌ படுத்திருந்தது.

அதற்குப்பிறகு தலைவர்‌(மாமா) அடிக்கடி மாமியுடன்‌ தகராறு
பண்ணிக்கொண்டூ வந்து வாசிகசாலைக்குள்‌ படூக்கத்தொடங்கினார்‌.

நாங்கள்‌ பழையபடி அடுத்த பகுதி வாசிகசாலைக்கு போகத்‌
தொடங்கினோம்‌. அந்த வாசிகசாலைக்காரர்‌ கொடுப்புக்குள்‌ சிரித்துக்‌
கொண்டார்கள்‌. நாங்கள்தான்‌ நிமிர்ந்தே பார்ப்பதில்லையே!

160 6ஃ. எஸ்‌. பு௩ல22ஆதன்‌


Page 173 

ப்ரீ

 

 

 

 

ன்ங்கனஸ்‌ கூர்ரானர்‌ கரை,

161


Page 174162

ந லநோக்குக்‌ கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ பற்றித்‌
தெரியாதவர்கள்‌ இருக்கமுடியாது. இந்த ப. நோ. ௯.
சங்கங்கள்‌ பற்றி நமது நகைச்சுவை நடிகர்‌ “சக்கடத்தார்‌்‌
இராசரத்தினம்‌ ஒரு சுவையான விளக்கம்‌ சொல்லுவார்‌.

“சக்கடத்தார்‌.. ப. நோ. ௯. சங்கம்‌ என்றால்‌ என்ன?”
என்று கேட்டால்‌,

“பழுதான, நோயுள்ள, கூடாத சாமான்கள்‌ விற்கும்‌
சங்கம்‌...” என்று பதில்‌ சொல்வார்‌.

இந்தப்‌ ப.நோ.கூ.சங்கங்கள்‌ வருவதற்கு முதலில்‌
எங்கள்‌ ஊர்களில்‌ கூப்பன்‌ கடைகள்‌ இருந்தன. அவை
தனியாருக்கு சொந்தமானவை. அரசாங்கம்‌ ஒவ்வொரு
குடும்பத்தில்‌ உள்ளவர்களைப்‌ பொறுத்து விதானையார்‌
மூலம்‌ கொடுத்த கூப்பன்களை ஒவ்வொரு வாரமும்‌
கொண்டுபோய்‌ கூப்பன்கடையில்‌ கொடுத்து, அதற்குரிய
அரிசி, மா, சீனி, மண்ணெண்ணெய்‌ போன்ற
அத்தியாவசியப்‌ பொருட்களை வாங்கிக்‌ கொள்ளலாம்‌.
ஆனால்‌ மேலதிகமாக இந்தப்பொருட்களை வாங்குதற்கோ,
உழுந்து, பயறு, சவர்க்காரம்‌ வாங்கவோ பணம்‌
கொடூக்கவேண்டூம்‌. கூப்பன்கடை நடத்துபவர்க்கு லாபம்‌
இவற்றால்‌ மட்டூம்‌ வருவதில்லை. இலவசமாக அரசாங்கம்‌
கொடுக்கும்‌ முன்னர்‌ குறிப்பிட்ட சாமான்களிலும்‌ வெட்டு,
கொத்து என்றும்‌ மிஞ்சும்‌.

6. எஸ்‌. ப௩ல22 ன்‌


Page 175 

இந்தக்காலத்தில்‌ விமானங்கள்‌, பீரங்கிகள்‌ வாங்கும்‌
வியாபாரங்களிலேயே வெட்டு, கொத்துக்கள்‌ இருக்கிறதாமே ?

இப்படி ஒரு கூப்பன்‌ கடை எங்களிடமும்‌ இருந்தது. இது ஒரு
பரம்பரைச்சொத்து, எங்கள்‌ அப்பாவின்‌ அம்மா (அப்பாச்சி) தான்‌
ஆரம்பத்தில்‌ இதை நடத்தினார்‌. கடன்‌ கொடுப்பது, கடன்‌ வசூலிப்பது
என்று வந்து விட்டால்‌ அவ கறாராக நடந்து கொண்டாலும்‌, ஏழை,
பாளைகளின்‌ வயிற்றில்‌ அடிக்கிறமாதிரி நடந்து கொள்ளமாட்டா.
புதுவருசம்‌, தைப்பொங்கல்‌ என்று பண்டிகைக்காலங்களில்‌ வடை,
முறுக்கு, அரியதரம்‌ என்று செய்து கடகங்களில்‌ நிரப்பிவைத்து தனது
வாடிக்கையாளர்களான ஏழைகளுக்கு அள்ளிக்கொடுூப்பா. அவர்களும்‌
வாழ்த்திச்‌ செல்வார்கள்‌. இப்படி அன்னியோன்யமாக நடந்து
கொண்டார்கள்‌.

நான்‌ பள்ளிக்கூடத்தால்‌ வந்தவுடன்‌ அப்பாச்சியின்‌ கடைக்குப்‌
போய்‌ விடுவேன்‌. கடையோடூ சேர்ந்ததாக வீடு இருந்தது. என்னைக்‌
காவலுக்கு விட்டூவிட்டு அவ சாப்பிட, தேத்தண்ணீர்‌ குடிக்க என்று
பின்பக்கம்‌ போனதுதான்‌ தாமதம்‌ - நான்‌ கல்லாப்பெட்டியில்‌ கை
வைப்பேன்‌. கல்லாப்பெட்டி என்று பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு பழைய
தகரப்பேணி. மேல்மூடியில்‌ அரைப்பகுதி வெட்டப்பட்டு, கைவிட்டு காசை
எடுப்பதற்கு வசதியாக இருக்கும்‌. ஒரு நாணயத்தோடூ மற்ற நாணயங்கள்‌
மோதி ஒலி எழுப்பாமல்‌ மெதுவாக ஒரு இருபத்திஐந்து சதக்குற்றியோ,
ஐம்பது சதக்குற்றியோ எடுத்து விடுவேன்‌. அது அக்காலத்தில்‌ பெரிய
காசு.

பிறகு ஒரு நாள்‌ கொழும்பில்‌ நான்‌ வேலை பார்க்கும்‌ காலத்தில்‌
ஒரு பிச்சைக்காரனுக்கு ஐம்பது சதம்‌ போட, அவன்‌ அதை
திருப்பித்தந்து “வைத்து தேத்தண்ணீ குடியுங்கோ”' என்று சொன்னதும்‌
ஞாபகத்திற்கு வராமலில்லை. அதை நான்‌ பக்குவமாக
வாங்குவதைக்கண்ட என்னோடு வேலை பார்த்த நண்பன்‌ ஒருவன்‌ -

“மச்சான்‌ என்னதானிருந்தாலும்‌ ந இந்த நிலைமைக்கு
வருவாயெண்டு..'” என்று பல நாட்களாக அறுத்துக்‌ கொண்டிருந்தான்‌
என்பது தனிக்கதை.

அப்படி அப்பாச்சியின்‌ கல்லாப்பெட்டியில்‌ எடூத்த ஐம்பது
சதக்காசுக்கு பின்னேரம்‌ இங்கிலீசு ரியூசனுக்குப்‌ போகும்போது வழியில்‌

செற்றுட்‌ போவ இருகிறது 163


Page 176இருந்த ஐயரின்‌ கடையில்‌ பல்லிமுட்டை இனிப்பு வாங்குவேன்‌. ஐந்து
சதத்திற்கே “சிறங்கை' (கையால்‌ அள்ளும்‌ அளவு) நிரம்பி வழிய
தருபவர்‌, ஐம்பது சதத்திற்கு என்‌ சாரத்தின்‌ சண்டிக்கட்டில்‌ அள்ளி
நிறைத்து விடுவார்‌.

எனக்குள்ள ஒரே ஒரு பிரச்சினை. எங்கள்‌ வீட்டிலிருந்து நாலைந்து
ஒழுங்கை முடக்கு தாண்டியிருந்த இங்கிலீசு வாத்தியார்‌ வீட்டுக்கு
போவதிற்கிடையில்‌ சாறத்து சண்டிக்கட்டில்‌ உள்ளதை முடித்து
விடவேண்டும்‌. அங்கேபோய்‌ நிற்க வாத்தியார்‌ -

“ என்னடா சண்டிக்கட்டிலை.. அவிழ்‌ ஒருக்கா” என்று கேட்டு,
விஷயம்‌ தெரியவந்து வீட்டுக்கு செய்தி போனால்‌ “தோலரித்தல்‌”
தான்‌ நடக்கும்‌ என்று தெரியும்‌.

அள்ளி, அள்ளி சிறங்கைக்‌ கணக்கில்‌ வாயில்‌ போட்டாலும்‌
பல்லிமுட்டை இனிப்பு முடிகிற பாடாய்த்‌ தெரியவில்லை. ஒரே ஒரு
வழி. அள்ளிக்‌ கொட்டூவதுதான்‌. அதுவும்‌ ஒரே இடத்தில்‌ போட்டால்‌
வில்லங்கம்‌ என்று வழி,வழியே இருக்கிற பன்னை, பாவட்டை,
அண்ணாஉண்ணா (எந்த அண்ணா உண்ணாமல்‌ விட்டாரோ - ஏன்‌
இந்தப்பெயர்‌ வந்ததென்று தேடினேன்‌. அனோனா என்பதுதான்‌
இதன்பெயர்‌ என்று தெரியவந்தது) மரங்களின்‌ அடியில்‌ எறிந்து
கொண்டே போவேன்‌. அந்த அண்ணாஉண்ணா மரங்களின்‌ பழங்கள்‌
மிகவும்‌ இனிப்பாக இருந்ததிற்கு நான்‌ எறிந்த இனிப்புகளும்‌ காரணமாக
இருக்கலாம்‌.

நல்லதோ, கெட்டதோ எதற்கும்‌ ஒரு நாள்‌ முடிவு வரும்‌ என்பார்கள்‌.
யாரோ ஒருத்தன்‌ காட்டிக்கொடுத்து அல்லது போட்டுக்‌ கொடுத்து
விட, அன்றிலிருந்து அப்பாச்சியின்‌ கடை என்னைப்‌ பொறுத்தவரையில்‌
பாதுகாப்பு வலயத்துக்கு உட்பட்டதாப்‌, தடை செய்யப்பட்ட
பிராந்தியமாயிற்று.

அதன்பிறகு நான்‌ ரியூசனுக்கு போகும்‌ போதெல்லாம்‌, பன்னை,
பாவட்டை எல்லாம்‌ என்னை பரிதாபமாக பார்ப்பதாக நினைத்துக்‌
கொள்வேன்‌. “எனக்கே இனிப்பு என்ற சங்கதி இல்லை. உங்களுக்கு
எப்படி தருவேன்‌'' என்று சொல்லிக்கொள்வேன்‌. பாரதி தனது வசன
கவிதையில்‌ கயிற்றோடுூ பேசிக்கொள்வதைப்போல என்று வைத்துக்‌
கொள்ளுங்கள்‌.

164 6. எஸ்‌. பு௩ல22ந்தரன்‌

 


Page 177்‌: அறுக... 3

ப டடக்‌.

டட ஈஸ்‌.

 

இப்படி இருக்கும்போது எங்கள்‌ ஊரில்‌ தேர்தல்‌ வந்தது. அத்தோடு
ஒற்றுமையாக இருந்த ஊர்‌ மக்களே ஒவ்வொரு சின்னத்திற்கும்‌ (தேர்தல்‌
சின்னங்கள்‌) பின்னால்‌ பிரிந்து சின்னாபின்னமாகிப்‌ போனார்கள்‌.
இந்தப்பிரிவுகளினால்‌ அப்பாச்சியின்‌ கடையில்‌ இருந்தும்‌ பிரிந்து வேறு
கூப்பன்‌ கடைகளுக்குப்‌ போனார்கள்‌. போதாக்குறைக்கு சக்கடத்தார்‌
சொன்ன ப.நோ.கூ. சங்கமும்‌ வந்து மிச்சசொச்ச கூப்பன்காரரை
தன்பக்கம்‌ இழுத்துக்‌ கொண்டது.

கூப்பன்‌ கடை வெறுங்‌ கடையாகிப்போன கவலையுடன்‌
அப்பாச்சியும்‌ ஒருநாள்‌ இறந்துபோக, என்‌ அப்பா கடையை “பாரம்‌:
எடுத்தார்‌. அது உண்மையில்‌ “பாரமாக'த்தான்‌ இருந்தது. மிகுந்த
சிரமத்துடன்‌ நடத்திக்கொண்டிருந்தார்‌.

பள்ளிக்கூடத்தால்‌ வந்தவடன்‌ நானே கடையில்‌ நின்று வியாபாரம்‌
செய்யவேண்டி வந்தது.

இப்பொழுதும்‌ சோகப்படங்களைப்‌ பார்த்துவிட்டு கண்ணீர்‌ விடுகிற
எனக்கு அந்த நாட்களில்‌ சொல்லவா வேண்டும்‌. யாராவது வந்து ஒரு
வசனம்‌ - “ தம்பி.. தோசைக்கு போடூவம்‌ என்று பார்த்தால்‌ உழுந்து
இல்லை. பிள்ளையளுக்கு காலமை சாப்பாடு இல்லை” என்று “தவமாய்‌

_ தவமிருந்து” சேரன்‌ எழுதிற வசனம்‌ மாதிரி சொல்ல. உழுந்தைக்‌

கொடுத்து அனுப்பி விடுவேன்‌. கணக்கு எழுதி வைத்தால்‌ அப்பா
பேசுவார்‌ என்ற பயத்தில்‌ “உழுந்துக்கடன்‌்‌ அப்படியே போய்விடும்‌.
நான்‌ இருக்கிற நேரம்‌ பார்த்து பலரும்‌ வரத்‌ தொடங்கினார்கள்‌. வியாபாரம்‌
அமோகமாக நடந்தது. ஆனால்‌ “கல்லாப்பெட்டி” நிரம்பவில்லை.

போதும்‌, போதாதற்கு “இரட்டைப்பின்னஸ்‌” ஈஸ்வரி கையில்‌
கிடைக்கிற ஒருசதம்‌, இரண்டு சதத்தோடூ அடிக்கடி வரத்தொடங்கினா(ஸ்‌.
நான்‌ கைநிறைய இனிப்பு: கொடுத்து அனுப்புவேன்‌. பத்து நிமிசத்திலே
இன்னுமொரு ஒரு சதத்துடன்‌ ஆள்‌ வந்து நிற்கும்‌. இதற்கென்றே
சில்லறையாக மாற்றி வைத்திருந்த சங்கதி பிறகுதான்‌ எனக்கு
தெரியவந்தது.

அண்மையில்‌ கூட, பல்‌ வைத்தியரிடம்‌ போக நேர்ந்த பொழுது,
தன்னுடய “ஞானப்பல்‌”” சூத்தையாகப்‌ போனதிற்கு நான்‌ தந்த

சேற்றுப்‌ டோ இ.ருக்சசிறது 165


Page 178இனிப்புகள்தான்‌ காரணமாம்‌. அது ““ஞானம்‌' இருக்கிறவர்களுக்
குத்தான்‌ “ஞானப்பல்‌” முளைக்கும்‌ என்று சொல்லி நான்‌ பட்ட பாடூ..

இப்படி “என்‌ கடன்‌ கடன்‌ கொடுூத்து இருப்பதே” என்று நான்‌

நடக்கப்போய்‌, ஒரு நாள்‌ எங்கள்‌ கடை நிரந்தரமாக பூட்டப்பட்டூப்‌
போனது.

166 6. எஸ்‌. புலன்‌


Page 179 

 

ரதறநும்‌

ஸ்‌
ஊணகா்ப்டராறாடு

ஃ

167


Page 180168

வ ஒன்றில்‌ வெளிவந்த புதுக்கவிதையின்‌
தலைப்பு போலிருக்கிறதே என்று யோசித்து தொடர்ந்து
வாசிப்பதா? விடுவதா என்று நீங்கள்‌ சிரமப்பட்டுக்கொள்வதற்கு
முதல்‌ சொல்லிவிடுகிறேன்‌.

இதற்கும்‌, புதுக்கவிதைக்கும்‌ சம்பந்தமே இல்லை.

இது என்‌ அப்பாவின்‌ நீலக்கல்‌ வைத்த மோதிரம்‌
பற்றியது. நலக்கல்‌ சனிபகவானின்‌ பார்வைக்கு
பலனளிக்குமென யாரோ சொன்னதை நம்பி, அப்பா அதை
நீண்ட நாட்களாக அணிந்து கொண்டிருந்தார்‌. நான்‌ கணக்கு
பாடத்தில்‌ சித்தியாகாமல்‌ போய்‌. (இது அனேகமாக
நடப்பதுண்டு) வகுப்பேற்றப்படவில்லை என்று வகுப்பு ஆசிரியர்‌
றிப்போர்ட்‌ புத்தகத்தில்‌ எழுதித்‌ தந்துவிட, அப்பா
எட்டிக்குட்டும்போது கூட, நீலக்கல்‌ உள்ள மோதிரப்பக்கத்தை
மேலே திருப்பிவிட்டிட்டூத்தான்‌ குட்டுவார்‌.

இத்தகைய நீலக்கல்‌ மோதிரத்துக்கே சனி பார்வை
படூமென்று யார்‌ நினைத்திருந்தார்கள்‌. அந்தக்காலத்தில்‌
வளரும்‌ பிள்ளைகளுக்கு பின்னர்‌ அளவாகிப்போகுமென்ற
நினைப்பில்‌ “தொள தொள: சட்டைகள்‌ எங்களுக்கு அப்பா
தைப்பிப்பார்‌. அதைப்போலவே இந்த மோதிரமும்‌ அப்பாவின்‌
விரலுக்கு சற்று பெரிதாக அமைந்து போனதால்‌, நூல்‌ சுற்றி
விரலில்‌ அணிந்திருந்தார்‌.

62. எஸ்‌. பு௩ல22 ன்‌

 


Page 181 

 

அந்த நாட்களில்‌ எங்கள்‌ கோயிலின்‌ வடக்கு வீதியில்‌, புழுதி
நிறைந்த பகுதியில்‌, மாலை நேரங்களில்‌, பனங்குற்றிகள்‌ நட்டூ,
“வொலிபோல்‌” என்ற கரப்பந்தாட்டம்‌ விளையாடிக்‌ கொண்டிருப்பார்கள்‌.
நிலத்தில்‌ விழாமல்‌ நெற்‌ என்ற வலைக்கு டமேமேலால்‌ தொடர்ந்து
அடித்துக்கொண்டிருக்கும்‌ “ஓவர்கேம்‌” என்ற அந்த வகையில்‌ யாரும்‌
எந்த நேரத்திலும்‌ இணைந்து கொண்டு, கொஞ்ச நேரம்‌ அடித்து
விட்டுப்போகலாம்‌. எங்கள்‌ றோட்டால்‌, போகும்‌ பலரும்‌ தாங்கள்‌ வந்த
சைக்கிளை கோயில்‌ மதிலோடூ சாத்திவிட்டூ கொஞ்ச நேரம்‌
விளையாடித்தான்‌ போவார்கள்‌.

இப்படியாக ஒரு நாள்‌ எங்கள்‌ அப்பாவும்‌ எங்கள்‌ சின்ன ரவுணுக்கு
போய்விட்டு வந்தவர்‌, வேட்டியை மடித்துக்கொண்டு விளையாடப்‌
புறப்பட்டார்‌. மற்றவர்களின்‌ உற்சாகமான வரவேற்புடன்‌ களத்தில்‌ குதித்து
“மூசி மூசி' அவர்‌ அடிப்பதை நானும்‌ பார்த்துக்‌ கொண்டிருந்தேன்‌.

இருளும்வரை அடித்தபின்‌, விளையாட்டு அன்றைக்கு நிறுத்தப்பட்டது.
எல்லாரும்‌ கலைந்து போனார்கள்‌. நானும்‌ அப்பாவைப்‌ பின்தொடர்ந்தேன்‌.
வீட்டூுக்கிணற்றில்‌ கை, கால்‌, முகம்‌ கழுவப்போன அப்பா
பதறியடித்துக்கொண்டூ வந்தார்‌. அம்மா “என்ன என்று : கேட்டதிற்கு,
தனது விரலைக்காட்டினார்‌. அவரது நீலக்கல்‌ மோதிரத்தைக்‌
காணவில்லை.

ஓரே களேபரந்தான்‌. நான்‌, அம்மா, அம்மம்மா என்று ஒவ்வொருவரும்‌
ஒவ்வொரு சாத்தியங்களைச்‌ சொன்னோம்‌. கிணற்றடியில்‌ முகத்திற்கு
சவர்க்காரம்‌ போடும்போது மோதிரம்‌ கழன்று விழுந்திருக்கலாமென்று
அம்மம்மா சொல்ல, மோதிரத்தை ரவுணுக்குப்‌ போன இடத்தில்‌
தொலைத்திருக்கலாமென்று அம்மா சொன்னா. நானும்‌, அம்மம்மாவும்‌
கைலாம்பு வெளிச்சத்தில்‌ (மின்சாரம்‌ என்பது தெரியாத காலம்‌)
கிணற்றடியெல்லாம்‌ தேடினோம்‌. காணவில்லை.

ரவுணுக்குப்போய்‌ எங்கே தேடூவது, எப்படித்‌ தேடூவது என்ற
நிலையில்‌ அந்த யோசனை கைவிடப்பட்டது. இந்த நேரத்தில்தான்‌,
“வொலிபோல்‌' விளையாடிய இடத்தில்‌ தொலைந்திருக்கலாமென்ற எனது
யோசனையை முன்வைத்தேன்‌.

சேற்றுப்‌ டோ௨ூ இருக்கிறது 169


Page 182காலையில்‌ போய்‌ தேடலாம்‌ என்றால்‌, அதற்குள்‌ செய்தி பரவி,
யாராவது இதற்காகவே காத்திருந்து விடிந்ததும்‌, விடியாததுமாக வடக்கு
வீதியில்‌ மணலைக்‌ கிளறி, மோதிரத்தை எடூத்து விட்டாலும்‌ என்ற
எண்ணத்தில்‌ எங்கள்‌ குடும்பமே, பசி, தூக்கம்‌ எல்லாவற்றையும்‌ மறந்து
வடக்கு வீதிக்கு படை எடுத்தது.

பாதம்‌ புதையும்‌ புழுதி மணல்‌, எங்கள்‌ கைலாம்பு வெளிச்சத்தில்‌
மின்னியது. அப்பா நின்று விளையாடிய இடத்தை நான்‌ அடையாளம்‌
காட்ட, அங்கும்‌ சுற்றுப்புறத்திலும்‌, எல்லோரும்‌ இருந்து, மணலை
அளைந்து மோதிரத்தைத்‌ தேடத்தொடங்கினோம்‌. அந்த இரவுநேரத்திலும்‌
ஐயரின்‌ கடையில்‌ கடைசி நேர கொள்வனவாக, பாண்‌, மண்ணெண்ணெய்‌,
தீப்பெட்டி போன்றவற்றை வாங்கிக்கொண்டு போனவர்கள்‌, நின்று, “என்ன
தேடூகிறீர்கள்‌' என்று கேட்கத்தான்‌ செய்தார்கள்‌. “மோதிரத்தைத்‌
தேடுகிறோம்‌” என்று சொன்னால்‌ எங்கே அவர்களும்‌ மணலில்‌ குந்தி
எங்களோடூ தேடி, அதிஷ்டம்‌ அவர்கள்‌ பக்கம்‌ இருந்து, மோதிரம்‌
அவர்கள்‌ கையில்‌ அகப்பட்டு, அதை நைசாக அமுக்கிக்‌ கொண்டூ
போய்விடுவார்கள்‌ என்ற பயத்தில்‌ நாங்கள்‌ கருமமே கண்ணாக
இருந்தோம்‌. ஏதொ சொல்ல வாய்‌ திறந்த நானும்‌ அப்பாவின்‌ பார்வையில்‌
மெளனமாகிவிட்டேன்‌.

திடீரென்று எழுந்து எங்கள்‌ வீட்டுப்பக்கமாக விரைந்த அம்மம்மா,
கையுடனே ஒரு பெரிய கடகப்பெட்டி, மா அரிக்கும்‌ அரிதட்டூ
என்பனவற்றுடன்‌ வந்தா. வந்ததும்‌ வராததுமாக, கோயில்‌ மதில்‌
ஒரத்திலிருந்து, வீதியின்‌ எல்லை வரை, அங்கங்கே மணற்குவியல்களாக
குவித்து விட்டு, அள்ளி அரிதட்டில்‌ போட்டு அரிக்கத்தொடங்கினா.
மணல்‌ போக மிஞ்சிய குறுணிக்கற்கள்‌ உட்பட எல்லாவற்றையும்‌
கடகப்பெட்டியில்‌ போட்டா. அரிதட்டில்‌ மோதிரம்‌ தங்கும்‌ - அகப்படூம்‌
என்ற யோசனை சரியானதாகவே எங்களுக்குப்பட்டது.

அடுத்தநாள்‌ காலை பொல,பொலவென்று விடிந்தபொழுது, வடக்கு
வீதி மாசுமறுவற்று காட்சியளித்தது. கடகப்பெட்டியும்‌ நிரம்பிப்போனது.
ஆனால்‌ நீலக்கல்‌ மோதிரம்‌ மாத்திரம்‌ அகப்படவேயில்லை.

அடூத்தநாள்‌ மோதிரச்செய்தி எப்படியோ கசிந்துபோப்‌, ஊருக்குள்‌

6௦௨38

பரவிவிட்டது. சொந்தக்காரர்கள்‌ ஒவ்வொருத்தராக வந்து “ச்‌

170 6. எஸ்‌. ப௩ல2 ஆதன்‌

 


Page 183 

கொட்டிக்கொண்டே, அப்பாவின்‌ விரலைப்பார்ப்பதும்‌, நீலக்கல்‌
மோதிரத்தின்‌ மகிமையை, அழகைச்சொல்வதுமாக எங்கள்‌ கவலையை
அதிகரிக்கச்செய்து சென்றார்கள்‌.

பலரும்‌ பலவிதமான யோசனைகளைச்சொன்னார்கள்‌. சாத்திரம்‌
கேட்கலாம்‌, மைபோட்டூப்‌ பாரக்கலாம்‌, கோயிலில்‌ பூக்கட்டிப்‌ பாரக்கலாம்‌
என்ற இந்த வரிசையில்‌ சுளகாட்டிப்பார்க்கலாம்‌ என்பதும்‌ சொல்லப்பட்டது.

சுளகாட்டூவதற்கு ஒருவர்‌ அழைத்துவரப்பட்டார்‌. சுளகின்‌
மேற்பக்கத்தின்‌ இரண்டு மூலைகளிலும்‌, இரண்டு கத்தரிக்கோல்களில்‌
கூர்‌ முனைகளைக்‌ கொழுவி, இருவர்‌ இரண்டூ பக்கத்திலும்‌ இருந்து
பிடித்துக்கொள்ள, சுளகு முன்னும்‌ பின்னுமாக ஆட வசதியாக
விடப்பட்டது. ஆடித்திரும்பி சுளகு நிற்கும்‌ திசையைக்கொண்டு, காணாமல்‌
போன பொருள்‌ இருக்கும்‌ திசையை அல்லது அதை எடுத்தவர்‌ இருக்கும்‌
பக்கத்தை கண்டூபிடிக்கலாம்‌ என்று சொன்னார்கள்‌. கோயில்‌
முன்மண்டபத்தில்‌ சுளகாட்டம்‌ நடந்தது. இரவின்‌ குளிர்காற்றினால்‌
மட்டுமல்ல, அந்த சூழ்நிலையின்‌ அமானுஷ்யத்தன்மையினால்‌ சிறுவனான
என்‌ உடம்பு சிலிர்த்துக்கொண்டது.

வெகுநேரம்‌ நடந்த சுளகாட்டத்தின்‌ முடிவில்‌ நான்‌ அப்படியே
உறங்கிப்போனேன்‌. அடூத்த நாள்‌, ஊகத்தினால்‌ வந்த வதந்திகளில்‌,
சுளகு திரும்பிய பக்கத்தில்‌ இருக்கும்‌ எங்கள்‌ கோபக்காரர்களின்‌
பெயர்கள்‌ சொல்லப்பட்டன. அவர்கள்‌ எங்களுக்கு மேலும்‌
கோபக்காரர்களாகிப்போனார்கள்‌. நீண்டகாலமாக இது தொடர்ந்தது.
கடைசி, கடைசியாக அவர்கள்‌ குடூம்பத்தில்‌ பிறந்த இரட்டைப்பின்னல்‌
ஈஸ்வரியின்‌ நிமித்தம்‌ அந்தக்‌ கோபங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்‌
என்பது தனிக்கதை.

பலகாலத்துக்குப்‌ பிறகு, எங்கள்‌ வீட்டுக்கிணறு இறைக்கப்பட்டபோது,
கிணற்றில்‌ இறங்கி நின்றவர்‌, அடியில்‌ இருந்த குழியில்‌ இருந்து எதையோ
எடூத்து மேலே எறிய நான்‌ அதை எடுத்துப்பார்த்தேன்‌. அது அப்பாவின்‌
நீலக்கல்‌ மோதிரம்‌.

சேடிறுப்‌ டோ௨ இ.ருக்சசிறது 171


Page 184 
 
 

 

 

 

 
 

 
  


Page 185 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அர்ன்பாணர்‌ தலஃந்‌

173

 

 


Page 186 

(இஃ௬கை வானொலியில்‌ அறிவிப்பாளர்‌
மயில்வாகனம்‌, செய்யது பீடியைப்‌ பற்றியும்‌, கோபால்‌
பற்‌ பொடியைப்‌ பற்றியும்‌ விலாவாரியாகச்‌
சொல்லிக்கொண்டிருந்த காலம்‌. அவரது அறிவிப்பின்‌
கவர்ச்சியினால்‌, எங்கள்‌ ஞானகுரு மகாலி கவரப்பட்டு,
பன்னை செடிப்பத்தைகளின்‌ பின்னால்‌ இருந்து ரகசியமாக
புகை விட்டார்‌. அந்த உறையில்‌ “தொழிற்சாலை'' என்று
இருந்ததை “தோளில்‌ சால்வை” என்று எங்களுக்கு வாசித்தும்‌
காட்டினார்‌. நாங்களும்‌ பீடிக்கும்‌, தோளில்‌ சால்வைக்கும்‌
என்ன சம்பந்தம்‌' என்று ஆரம்பத்தில்‌ மூளையைக்‌
கசக்கினாலும்‌, அனேகமாக தோளில்‌ சால்வைபுுடன்‌ திரியும்‌
சிலர்‌ பீடி குடிப்பதினால்‌ “அதில்‌ ஏதோ இருக்கிறது'” என்று
பலகாலமாக நினைத்துக்‌ கொண்டிருந்தோம்‌.

.  மயிலர்‌ கரடியாகக்‌ கத்தினாலும்‌ உமிக்கரியும்‌, பூவரசம்‌

தடியும்‌ இருக்கும்வரை நாங்கள்‌ கோபால்‌ பற்பொடியையும்‌
நாடவில்லை. “பற்பொடியே கலர்‌ பூசின உமிக்கரிதான்‌,
அதற்கெல்லாம்‌ காசு செலவளிக்கமுடியாது'” என்று அம்மா
கறாராகச்‌ சொல்லிவிட்டா.

ஆனால்‌ ஒரே ஒரு விஷயத்தில்‌ அறிவிப்பாளர்‌
மயில்வாகனத்தை பின்பற்றுவது என்று எங்களில்‌ பலர்‌
கங்கணம்‌ கட்டிக்கொண்டூ சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தோம்‌.
அதாவது, அறிவிப்பாளர்களாக வருவது...

62. எஸ்‌. ப௩ல22ஆதநன்‌


Page 187சுருட்டிய “காட்போர்ட்‌'” மைக்கில்‌ எங்கள்‌ ஒழுங்கையின்‌ ஊடாக
ஆட்கள்‌ பார்க்காத மாலை வேளைகளில்‌ அறிவிப்பு
செய்துகொண்டுபோக, ஒழுங்கைவீடூகளில்‌ வளர்ந்த நாய்கள்‌
(வீட்டுக்காரர்கள்‌ வளர்க்கவில்லை. அவை தாமாக உணவு தேடி உண்டு
வளர்ந்தவை என்றதினால்‌ அப்படிச்‌ சொன்னேன்‌.) எங்களை துரத்தின.
எனவே கொஞ்ச நாட்களில்‌ எங்களுக்கு அதுவும்‌ அலுத்துப்‌ போனது.

உண்மையான ஒலிவாங்கி (மைல்‌) எங்கள்‌ ஊர்ப்பக்கம்‌ வருவதே
திருவிழாக்காலத்தில்தான்‌. பத்துநாள்‌ திருவிழா வென்றாலும்‌, ஆடம்பரமாக
நடக்கும்‌ இரண்டொரு திருவிழாக்காரர்தான்‌ “லவுட்‌ ஸ்பீக்கர்‌”
(ஒலிபெருக்கி) பிடிப்பார்கள்‌.

அந்நாட்களில்‌, இரவுதான்‌ திருவிழா என்றாலும்‌, காலையிலேயே
“லவுட்‌ ஸ்பீக்கர்காரர்‌” வந்துவிடுவார்‌. கோயில்‌ முன்னால்‌ இருக்கும்‌
அரசமரத்தில்‌ தற்காலிகமாக ஒரு “ஒலிபெருக்கியை' கட்டியபின்‌, கே.பீ.
சுந்தராம்பாள்‌ ஐந்தரைக்கட்டை சுருதியிலோ அல்லது அதற்கு மேலோ
“ஞானப்பழத்தை பிழிந்து” பாடத்தொடங்க, வீட்டூக்கிணற்றில்‌
குளித்துக்கொண்டிருந்த நான்‌, ஈரம்‌ துவட்டாமலே அகப்பட்ட துண்டைச்‌
சுற்றிக்கொண்டு, அம்மா கூப்பிட கூப்பிட கேட்காதவனாய்‌ கோயிலடிக்கு
ஓடிவிடுவேன்‌.

கோயில்‌ முன்மண்டபத்தில்‌, அரைச்சுவருக்கு அருகாக பெரிய கட்டில்‌
ஒன்றில்‌ கடைபரப்பி, ஓலிபெருக்கிக்காரர்‌ ஒவ்வொன்றாக பெரிய
“தோசைக்கல்‌” (மாதிரி) இசைத்தட்டூக்களை பக்குவமாக எடூத்து
சுழல(பாட) விட்டுக்கொண்டிருப்பார்‌. ரேப்புகள்‌, கசெற்றுக்கள்‌ என்றெல்லாம்‌
வருவதற்கு முந்திய காலம்‌. அரைச்சுவருக்கு வெளியே என்னைப்போல
ஒரு கூட்டமே நிற்கும்‌.

ஒலிபெருக்கிக்காரர்‌ “குடிக்க தண்ணீர்‌” என்று சொல்லி வாய்‌
மூடுவதற்கிடையில்‌, ஒரே ஓட்டமாகப்போய்‌, அம்மா சாம்பல்‌ போட்டூ
பளபளக்க மினுக்கி வைத்த செம்பில்‌ (அது காவடிக்குப்பின்னால்‌ பால்‌
செம்பு எடுப்பதற்காக மினுக்கி வைத்தது என்று அம்மாவிடம்‌ பேச்சு
வாங்குவது வேறு கதை) தண்ணீரோடு வந்து நிற்பேன்‌. அவருடைய
பார்வையில்‌ நன்மதிப்பைச்‌ சம்பாதித்து, அதன்‌ பயனாக. “தம்பி.. இந்த
மைக்கைக்கொண்டூ போய்‌ நடூ மண்டபத்துக்குள்‌ புராணம்‌ படிக்கிறவைக்கு
முன்னாலை வை” என்று தருவார்‌ என்ற நப்பாசைதான்‌.

சற்றுப்‌ டோ௨ூ இருக்கிறது 175

நோ ணை ப பட ணப ப ட த ௮௮௮ க்ப்‌.


Page 188 

அப்படி ஒருதடவை சந்தர்ப்பம்‌ கிடைத்து, புராணம்‌ படிப்பவர்களிடம்‌
கொண்டூ போகும்‌ வழியில்‌ “மைக்‌“கில்‌ “எல்லாருக்கும்‌ வணக்கம்‌”: என்று
சொல்லி ஊர்‌ முழுக்க என்‌ குரல்‌ கேட்டிருக்கும்‌ என்று நினைத்து
புளகாங்கிதமடைய, கழன்று போன வயருடன்‌ கூட்டாளி பின்னால்‌ வந்து
சந்தோசத்தைக்‌ குலைத்தான்‌.

வழக்கமாகப்‌ புராணம்‌ படிக்கும்‌ நாகமணியப்பாவும்‌, பயன்‌

(புராணத்தின்‌ பொருள்‌) சொல்லுகிற வாத்தியாரும்‌ தங்கள்‌ பாட்டில்‌
“வெள்ளையெருதேறும்‌ விரிசடையோன்‌ பெற்றெடுத்த
பிள்ளையார்‌ நோன்பின்‌ பெருங்கதையை .......ஃ-- ்‌்‌

என்று பாடும்போது நாலைந்து பெரிசுகள்‌, வெளிமண்டபத்தில்‌ இருந்து
அரைத்தாூக்கத்தில்‌ கேட்டூக்கொண்டிருப்பதுண்டு. இது “மைக்கி'ல்‌
சொல்லுகிறோம்‌ என்ற உசாரில்‌, இரண்டூபேரும்‌ நீட்டிமுழக்கி, ஆலாபனை
பாட எங்களுக்கு எரிச்சல்‌, எரிச்சலாக வரும்‌.

இதுதான்‌ முடிந்தது என்று பார்த்தால்‌, பின்னேரப்பொழுதில்‌
இன்னுமொருவர்‌ வருவார்‌. அவர்தான்‌ அறிவிப்பாளர்‌ திலகம்‌.
தனக்குத்தானே இந்தப்‌ பட்டத்தை சூட்டிக்கொண்டார்‌ என்று ஒரு
கதையும்‌ அடிபட்டது. இந்தக்கால “மிமிக்ரி” காரர்களுக்கெல்லாம்‌ அவர்‌
“தண்ணீர்‌” காட்டக்கூடியவர்‌.

சிதம்பரம்‌ ஜெயராமனின்‌ குரலில்‌ “தாவியமா ஓவியமா' பாடினால்‌
என்ன, சிவாஜி கணேசனுக்கு சவால்‌ விடூவது போல “மனோகரா”
வசனம்‌ பேசினால்‌ என்ன, “ரத்தக்கண்ணீர்‌: எம்‌. ஆர்‌. ராதாவாக “அமைதி
ஒழிந்தது” என்று பாடி வசனம்‌ பேசுவதாயிருந்தாலென்ன, அவருக்கு
நிகர்‌ அவரேதான்‌ என்று எங்கள்‌ ஊரே நம்பியது.

இந்தச்‌ சங்கதிகளுக்கிடையே, “டகாடையிடி கைதடி பழனி தவில்‌
கச்சேரி”. “புத்தூர்‌ இரத்தினம்‌ செற்‌ சதிரக்கச்சேரி” என்ற அறிவிப்புக்களை
(திருவிழாக்காரருக்கு “ஐஸ்‌' வைப்பதற்காக) கலைஞர்‌ கருணாநிதியின்‌
கரகரத்த குரலில்‌ சொல்லியும்‌ வைப்பார்‌.

இரவு திருவிழாவின்‌ முதல்‌ நிகழ்ச்சியாக கோயில்‌ நாதஸ்வரக்காரர்‌

தங்களுக்கும்‌ மேடை (நெருக்கி அடூக்கின கட்டில்கள்தான்‌)
கிடைத்துவிட்ட சந்தோசத்தில்‌. சீவாளியை (வாயில்‌ வைத்து ஊதுகின்ற

176 62%. எஸ்‌. பக௩ல2ச௪ந்தரன்‌


Page 189பகுதி) நாதஸ்வரத்தில்‌ பொருத்தி, “பீப்பி” என்று ஊதிப்பார்த்துக்கொள்ளும்‌
வரை, “மைக்‌” நமது அறிவிப்பாளர்‌ திலகத்தின்‌ கையில்தான்‌.

எங்களுக்கு ஒன்று புரிந்தது. அவர்‌ “ஆட்சி” நடக்கும்வரை
எங்களுக்கு “அறிவிப்பாளர்‌ திலகம்‌” பட்டம்‌ வேண்டாம்‌. “மைக்‌” கை
பிடிக்கும்‌ காலமும்‌ வரவே வராது.

ஆனால்‌ அதற்கும்‌ ஒருமுடிவு வரத்தான்‌ செய்தது. எங்களூர்‌ தரவையில்‌
நடந்த மாட்டுவண்டிச்சவாரியின்‌ போது ஏதோ காரணத்தினால்‌ மிரண்ட
மாடுகள்‌ சனக்கூட்டத்தில்‌ நுழைந்தபோது, அறிவிப்புச்‌ செய்து கொண்டிருந்த
எங்கள்‌ திலகம்‌”, ஆட்கள்‌ உழக்கியதினால்‌ படுகாயமுற்றார்‌. (இவரது
அறிவிப்பினால்தான்‌ மாடுகள்‌ மிரண்டன என்றும்‌ ஒரு கதை வந்தது)

பிறகென்ன.. (நமக்கு பழக்கமான அரசியலைப்போல) வாக்கு
எண்ணிக்கையில்‌ அடுத்த ஸ்தானத்தில்‌ இருந்த என்‌ கையில்‌ “மைக்‌'
வந்தது. “காய்ந்த மாடூ கம்பிலை விழுந்தாற்போல” என்று சொல்வார்கள்‌.
(கம்பு என்பது ஒரு வகைத்தானியம்‌) அதுபோல நான்‌ விழுந்தால்‌,
எழும்பினால்‌ “மைக்‌'கில்‌ அறிவிப்பு என்பதாக அந்தமுறை
திருவிழாவையே “உண்டு, இல்லை” என்று ஆக்கிவிட்டேன்‌.

கடைசி, கடைசியாக காரில்‌ ஒலிபெருக்கி கட்டி எட்டாந்திருவிழா
பற்றி அறிவிப்பு செய்து கொண்டு வரும்போது, இரட்டைப்பின்னல்‌ ஈஸ்வரி
வீட்டுவாசலில்‌ கொஞ்சநேரம்‌ அதிகமாகவே தரித்து நின்று, “இன்றைய
திருவிழாவிற்கு உங்கள்‌ வரவை ஆவலுடன்‌ எதிர்பார்க்கிறோம்‌”” என்று
அழுத்தி இரண்டு, மூன்று தரம்‌ சொல்லப்போக, படீரென்று
படலையைத்திறந்த, இரட்டைப்பின்னல்‌ ஈஸ்வரி என்னைப்பார்த்து ““விசரா”
என்று சொல்லிவிட்டூச்சென்றது, கார்‌ டிரைவருக்கும்‌ கேட்டிருக்கவேண்டும்‌.
மற்றப்பக்கம்‌ பார்த்துச்‌ சிரித்தார்‌.

“உங்களுக்கு விசரா” என்று கேட்டாளா? அல்லது “விசரா”” என்று
பெயர்ச்சொல்லாகவே விளித்தாளா என்ற சந்தேகம்‌ எனக்கு நீண்ட
நாட்களாகவே இருந்தது.

இப்போது கேட்டாலும்‌. “விசரா.. நான்‌ அப்படிச்சொல்வேனா””

என்றுதானே சொல்கிறாள்‌....!
94

சேற்றுப்‌ டோ) இருக்கிறது 177


Page 190 

 

அடை ப ௮


Page 191 

 

 

 

 

 

179


Page 192 

ருடிய முத்தங்கள்‌ மிகவும்‌ இனிப்பானவை”'
என்று ஒரு இங்கிலாந்து கவிஞன்‌ சொல்லியிருக்கிறார்‌ என்று
வாசித்தபொழுது, என்னவோ எனக்கு அந்தக்கருத்தோடூ
உடன்பட மனம்‌ இடம்‌ கொடுக்கவில்லை. நான்‌ என்‌
சின்னவயதில்‌ “திருடிய மாம்பழங்களும்‌, பப்பாசிப்பழங்களும்‌”
அதைவிட இனிப்பானவை என்ற எண்ணமும்‌ கூடவே
வந்தது. “எப்படி நீங்கள்‌ அவ்வளவு நிச்சயமாகச்சொல்வீர்கள்‌”
என்று நீங்கள்‌ திருப்பிக்கேட்டால்‌ பதில்‌ சொல்வதற்கு
இதுவல்ல நேரம்‌. வளையல்‌ சத்தங்களுடன்‌, யாரோ பின்னால்‌
நிற்பதுபோல, பிடரி குறுகுறுக்கிறது.

அந்த நாட்களில்‌ எங்கள்‌ வீட்டிலோ. எங்கள்‌ அயலிலோ
காய்க்கும்‌ மாமரங்கள்‌ என்று இல்லை. நாலாவது வீட்டு
முற்றத்தில்‌ பட்ட்ப்போன கிளைகளுடன்‌ ஒரேயொரு மாமரம்‌,
எப்பவோ ஒரு காலத்தில்‌ காய்த்ததிற்கு அடையாளமாக,
பழைய தகரவாளியுடன்‌, கல்லுக்கட்டிய கயிறும்‌ தொங்கியது.
பழங்களைத்‌ தின்ன வரும்‌ கிளிகளைத்‌ துரத்தவாம்‌.
பழங்களே இல்லை. பச்சைக்கிளிகள்‌ எப்படி வரும்‌. ..? ஆனால்‌
இரட்டைப்பின்னல்‌, ஒற்றைப்பின்னல்‌ கிளிகள்‌ மாத்திரம்‌ அந்த
மரத்தின்‌ கீழே கெந்தி விளையாடுவதைக்‌ கண்டிருக்கிறேன்‌.

சில சந்தர்ப்பங்களில்‌, அம்மா காய்கறி, மீன்‌, தேங்காய்‌
என்று பலதும்‌ பத்தும்‌ சந்தையில்‌ வாங்கி மிச்சமாக காசு
இருந்தால்‌ மட்டும்‌, எனக்கும்‌, தம்பிமாருக்குமாக கஷ்டப்பட்ட
மாம்பழங்கள்‌ வாங்கி வருவதுண்டூ, (கஷ்டப்பட்ட மாம்பழங்கள்‌

180 62%. எஸ்‌. ப௩ல2நதநன்‌

இது


Page 193என்றால்‌ தெரியாதா? மெலிந்து, நசுங்கி, நலிந்துபோன பழங்கள்‌ அவை
வெட்டிச்சாப்பிடும்‌ நிலையில்‌ இருக்காது. தோலை கையால்‌ உரித்து
சதைப்பகுதியை வாயில்‌ வைத்து உறிஞ்ச வேண்டியதுதான்‌. கைவிரல்கள்‌,
முகத்தில்‌ வாய்க்கு அண்மித்தான பிரதேசங்கள்‌ எல்லாம்‌ அதன்‌ பாகினால்‌
தோய்த்து மெழுகி, சூத்தைப்பற்களின்‌ இடூக்குகளில்‌ அதன்‌ நார்கள்‌
சிக்கிக்கொள்ள, மகாபிரயத்தனத்துடன்‌ அவற்றை பிடுங்கி எடுத்து - பெரிய
சடங்காகவே நானும்‌, தம்பிமாரும்‌ மாம்பழம்‌ சாப்பிட்டு (குடித்து) முடிப்போம்‌.

கறுத்தக்கொழும்பான்‌, விலாட்டு, கிளிச்சொண்டன்‌ என்றெல்லாம்‌
காய்த்துக்குலுங்கும்‌ ஒரு இடம்‌ எங்களூரில்‌ இருக்கத்தான்‌ செய்தது.
எங்கள்‌ பள்ளிக்கூடத்திற்கு போகும்‌ வழியில்‌, சிங்கப்பூர்‌ பென்சனியர்‌
ஒருவருக்கு சொந்தமான காணி. சுற்றிவர முள்ளுக்கம்பி அடித்து, பலத்த
பந்தோபஸ்துடன்‌ விளங்கியது. நானும்‌ நண்பர்களும்‌ போகவும்‌ வரவும்‌,
இளவெய்யிலில்‌ இலைகளின்‌ இடையே ஒளித்து விளையாடும்‌ அந்த
மாம்பழங்களைப்‌ பார்த்து “சப்புக்‌ கொட்டி” க்கொண்டே திரிந்தோம்‌.

திடீரென்று ஒருநாள்‌ நல்லசெய்தியொன்று எங்களுக்கு கிடைத்தது.
தனியாக இருந்த பென்சனியர்‌ தன்‌ பிள்ளைகளைக்‌ காண
தொலைவிலுள்ள ரவுணுக்கு போய்‌ இரண்டு கிழமை மட்டில்‌ அங்கேயே
தங்கப்போகிறார்‌ என்று யாரோ சொன்னார்கள்‌. எங்கள்‌ காரியம்‌ நிறைவேற
இரண்டூ கிழமை எதற்கு.. இரண்டு மணித்தியாலமே போதுமே என்று
சொல்லிக்கொண்டோம்‌.

அந்தக்காணியின்‌ யாரும்‌ வராத ஒரு ஒதுக்குப்புறமான மூலையில்‌,
முள்ளுக்கம்பிக்கு கீழாக உள்ள மண்ணை வாரி, சுரங்கப்பாதை மாதிரி
அமைத்துக்கொண்டோம்‌. (சிறைக்கைதிகள்‌ தப்புவதற்கு செய்வார்களே
அதுமாதிரி) சிறிதுநேரத்தில்‌ மேலே உள்ள முள்ளுக்கம்பி எங்கள்‌
வெறும்‌ முதுகில்‌ கீறாமல்‌ மாந்தோப்புக்குள்‌ தவழ்ந்து போகிறமாதிரி
செய்தாயிற்று. முதலாவதாக நான்‌ உள்ளே நுழைந்த பின்‌ திரும்பிப்‌
பார்த்தால்‌ கூட்டாளிகள்‌ தயங்குவது தெரிந்தது. நான்‌ பயப்பிடுவதை
அவர்களுக்கு காட்டிக்கொள்ள முடியுமா?

முதல்‌ இரண்டு, மூன்று அடிகள்‌ பயத்துடன்‌ எடூத்துவைத்த நான்‌,

யார்‌ வரப்போகிறார்கள்‌ என்ற எண்ணம்‌ மனதில்‌ குதூகலத்தைத்தர,
பாட்டொன்றை முணுமுணுத்துக்கொண்டூ காரியத்தில்‌ இறங்கினேன்‌.

சற்றுப்‌ டோ இருக்கிறது 181

 


Page 194 

 

மரத்தில்‌ கொத்துக்கொத்தாகத்‌ தொங்கும்‌ பழங்களுக்கு ஒரு
வழிபண்ணவேண்டாமா?. “நாமிருக்கப்பயமேன்‌'” என்பதுபோல ஒரு
கொக்கச்சத்தகத்‌ தடி மரத்தில்‌ சாத்தியிருந்தது. எடுத்து ஒவ்வொரு
இழுப்புக்கும்‌, காயும்‌, பழமும்‌, பிஞ்சுமாக விழுந்து சருகுகளின்மேல்‌
பரவின.

ஆங்காங்கே விழுந்திருந்த பழுத்த பழங்களை சண்டிக்கட்டில்‌
கட்டிக்கொண்டு போய்‌ கம்பிவேலிக்கு வெளியே காத்திருந்த
நண்பர்களிடம்‌ கொடுக்க, “கெதியாக..கெதியாக'” என்று அவர்கள்‌
சொல்லத்தான்‌ செய்தார்கள்‌. இரண்டு, மூன்று தடவைகள்‌ இப்படி ஓடி,
ஓடி பழங்களை “போடர்‌' தாண்ட வைத்தேன்‌.

அடுத்த தடவை திரும்பிப்போகும்போது ஒரு மரத்தின்‌ பின்னிருந்து,
நீலக்கலர்‌ சேலைத்தலைப்பு மாதிரி காற்றில்‌ பறந்து, சட்டென்று மறைந்தது.
தயக்கத்துடன்‌ நின்று திரும்பிக்‌ கூட்டாளிகளை பார்த்தேன்‌. அவர்கள்‌
நின்ற இடம்‌ வெறிச்சோடிப்போய்‌ இருந்தது. அதற்கிடையில்‌ வளையல்கள்‌
போட்ட ஒரு கை என்தோள்‌ மீது படிந்தது.

பட்டென்று நிமிர்ந்து பார்த்தால்‌ பென்சனியர்‌ பக்கத்துவீட்டு அக்கா.
அவவிடம்‌ பென்சனியர்‌ காணிக்காவலை ஒப்படைத்து விட்டூப்‌
போயிருக்கிறார்‌ என்று தெரிந்தது. கண்களை அகலவிரித்து, “நீயா”
என்று அவ கேட்க, அது நாள்வரை “குழப்படி யில்லாதவன்‌”” என்று
ஊருக்குள்‌ எனக்கிருந்த நல்ல பெயரெல்லாம்‌ கரைந்து போவது
போலிருந்தது.

“என்ன செய்கிறாய்‌” என்று அவ கேட்டதிற்கு, எச்சிலை விழுங்கி,
எதையாவது சொல்லிவைக்க வேண்டூமென்பதற்காக “பந்து இங்கை
விழுந்திட்டூது.. எடுக்க வந்தனான்‌ அக்கா” என்றேன்‌. அந்த நேரம்பார்த்தா
சாறத்தின்‌ சண்டிக்கட்டு அவிளவேண்டுூம்‌?. மாம்பழங்கள்‌
பொலபொலவென்று என்‌ காலடியில்‌ விழுந்து காட்டிக்கொடுத்தன.

அருகில்‌ இருந்த மாமரத்தைக்காட்டி “கட்டிப்பிடி” என்றா.
கட்டிப்பிடித்துக்கொண்டேன்‌. “உன்னைக்‌ கட்டுறதிற்கு கயிறு எடுத்துக்‌
கொண்டு வாறன்‌.. ஒடப்பார்த்தியோ.. நாய்‌ அவிட்டூ விட்டூ இருக்குது”
என்று சொல்லிக்கொண்டே தங்கள்‌ வீட்டுப்பக்கமாகப்‌ போனா.

182 ்‌ 62. எஸ்‌. ப௩ல2*சந்தன்‌


Page 195 

“அக்கா..அக்கா”” என்று அழுகையுடன்‌ கூப்பிட்டுத்தான்‌ பார்த்தேன்‌.
ஒன்றும்‌ பலிக்கவில்லை. அப்படியே விம்மலுடன்‌ மரத்தைக்‌
கட்டிப்பிடித்தபடி நின்றேன்‌. காணியின்‌ ஒரு பக்கத்தில்‌ றோட்டு.. அதிலே
நல்ல தண்ணீர்‌ அள்ளிக்கொண்டு போகும்‌ எங்கள்‌ ஊர்‌ பெண்கள்‌
போவார்கள்‌. முள்ளுக்கம்பி வேலிதானே. என்னை பார்த்துக்‌
கொண்டூபோவார்கள்‌ என்று நினைக்கவே முதுகெல்லாம்‌ கூசுகிறது
மாதிரி இருந்தது.

நான்‌ நினைத்தது போலவே, யாரோ றோட்டில்‌ நின்று என்னை
உற்றுப்‌ பார்ப்பதுபோல... கடைக்கண்ணால்‌ பார்த்தேன்‌. கலர்கள்‌
தெரிந்தன. “கிளுக்‌””, “கிளுக்‌”” என்று மெதுவாக சிரிப்பதும்‌ கேட்டது.
அதில்‌ ஒன்று எனக்குத்‌ தெரிந்த “கிளுக்‌”. கண்களை இறுக
மூடிக்கொண்டேன்‌. படங்களில்‌ வருகிறமாதிரி மந்திரம்‌ சொன்னவுடன்‌
“பூம்‌” என்று புகையில்‌ மறைந்து போகும்‌ சங்கதி எனக்குத்‌
தெரிந திருந்தால்‌ எவ்வளவு நன்றாகவிருக்கும்‌ என்று
யோசித்துக்கொண்டேன்‌. “உஷ்‌..உஷ்‌” என்று சத்தம்‌ கேட்டது.
அவர்கள்தான்‌... என்‌ முகத்தைப்‌ பார்த்துவிடவேண்டுமென்று பறக்கிறார்கள்‌.
நான்‌ கருமமே (மாமரமே) கண்ணாக அசையாமல்‌ நின்றேன்‌. நின்று
அலுத்துப்போயோ, என்னவோ, தங்களுக்குள்‌ கதைத்து, சிரித்துக்கொண்டு
போனார்கள்‌.

கயிறு எடூக்கப்போன அந்த அக்கா என்ற ராட்சசியைக்‌
காணவேயில்லை. ஒருவேளை என்னை முற்றாக மறந்து போனாளோ.
சாடையாக இருட்டிக்கொண்டு வருகிறமாதிரி இருந்தது. காற்றில்‌
மாவிலைகள்‌ சரசரக்கிற சத்தத்தைதவிர, வெளிச்சத்தங்கள்‌
குறைந்துபோயின. பயம்‌ ஒருபக்கம்‌, வெட்கம்‌ ஒரு பக்கம்‌, கவலை
ஒரு பக்கம்‌. நின்ற நிலையிலேயே கண்கள்‌ கிறங்கிக்கொண்டுபோக,
சருகுகளில்‌ யாரோ நடந்து வருவது தெரிந்தது. அது அவள்‌. அந்த
அக்கா.

“என்னடா..பயந்து போனியே?” என்று கேட்டூ, அவள்‌ சிரிக்கவும்‌
தான்‌ நான்‌ மரத்தை கைவிட்டேன்‌. “சரி போ.. இனி ஒருநாளும்‌ இப்படிச்‌
செய்யக்கூடாது” என்று சொல்லி, காணியின்‌ கேற்றைத்‌ திறந்து என்னைப்‌
போகவிட்டாள்‌. நான்‌ வெளியில்‌ காலடி எடுத்துவைக்க. “இதைக்‌ கொண்டு
போவன்‌” என்றாள்‌. கையில்‌ இரண்டு, மூன்று மாம்பழங்கள்‌. “வேண்டாம்‌”
என்று தலையாட்டிவிட்டு எங்கள்‌ வீட்டுப்பக்கமாக ஓடினேன்‌. கோயில்‌

நேற்றுப்‌ டோய்‌ இருக்கிறது 183


Page 196வீதியில்‌ நின்று என்‌ கூட்டாளிகள்‌ கைகாட்டூவது தெரிந்தது. நான்‌
திரும்பிப்பார்க்காமல்‌ நேரே ஓடினேன்‌.

இப்பொழுதெல்லாம்‌ வீட்டில்‌ மாம்பழசீசனுக்கு மறக்காமல்‌ வாங்கி,
அழகாகச்சீவி, பாளம்‌, பாளமாக வெட்டி சாப்பாட்டுமேசையில்‌
வைக்கிறார்கள்‌. ஆனால்‌ போதாக்குறைக்கு “திளுக்‌” என்று
சிரிக்கிறார்களே. அதனால்‌ மாம்பழம்‌ எனக்கு பிடிப்பதேயில்லை.

184 62. எஸ்‌. ப௩ல22நதநன்‌


Page 197அரக அதத்‌ அ ப ப ப்ப ப ட ட ர...

 

 

 

 

 

 

௭லர்‌ இருந்குரல்குறன்‌...

185


Page 198186

௦
இடப பார்த்துக்கொள்ளுங்கோ.. சுவர்‌

இருந்தால்தான்‌ சித்திரம்‌ வரையலாம்‌” என்று
சொல்லிக்கொண்டே, தான்‌ கொண்டூ வந்த அப்பிள்‌ உள்ள
பையை முன்னால்‌ எடுத்து வைத்து விட்டூச்சென்றார்‌ நண்பர்‌.
ஏற்கெனவே மற்றவர்கள்‌ கொண்டூவந்த பழம்‌, பிஸ்கற்‌
பைகளுடன்‌ தன்னுடையது மாறிப்போய்விடும்‌ என்று
நினைத்திருப்பார்‌.

அவர்‌ சொன்னதிற்கு நான்‌ “சுவர்‌ இருந்தால்‌ சித்திரம்‌
வரைவது மட்டுமா?” என்று கேட்டிருப்பேன்‌. உடனே அவரும்‌,
நானும்‌ மீண்டும்‌ ஒரு மணித்தியாலமோ, அல்லது அதற்கு
மேலோ எங்கள்‌ இளமைக்கால “நனவிடை தோய்தலில்‌”
முழ்கியிருப்போம்‌.

நாளைக்கு சுவிஸுக்கு திரும்பப்‌ போகிறதிற்கிடையில்‌
இன்னும்‌ இரண்டூ சொந்தக்காரர்‌ வீட்டுக்குப்போய்‌, கடை
இடியப்பம்‌, வீட்டுச்சொதியுடன்‌ சாப்பிட வேண்டிய
அவசியத்தை அவரது மனைவி ஏற்கெனவே ஞாபகப்படுத்தி
விட்டார்‌. இருந்தாலும்‌ “போட்டு வாறம்‌' என்று சொல்லி,
கதவடிக்கு போனதின்‌ பிறகும்‌, அதில்‌ நின்று அரை
மணித்தியாலம்‌ “வடக்குவீதிச்‌ சமா' நடத்திவிட்டுத்தான்‌
போனார்கள்‌.

அவரும்‌, நானும்‌ சிறுவயது நண்பர்கள்‌. அதுபோதுமே..
மணித்தியாலக்கணக்காக கதைப்பதற்கு.

62. எஸ்‌. ப௩ல22ஆதரஈன்‌

 


Page 199அந்தநாட்களில்‌ எங்கள்‌ ஊரில்‌ வீடுகளுக்கு மதில்சுவர்‌ பெரிதாக
யாரும்‌ கட்டுவதில்லை. பூவரசு மரங்களும்‌, அலம்பல்‌ வேலியுந்தான்‌.
அலம்பல்‌ வேலிக்குள்ளால்‌ அடுத்த வீட்டில்‌ ஏதோ “அலம்பி”க்கொண்டே
மனைவியுடன்‌ கணவன்‌ சண்டை போடூவதை பார்த்து ரசிக்கலாம்‌.
ரீவி “சீரியல்‌” இல்லாத அந்தக்காலத்தில்‌ வேறென்ன பொழுதுபோக்கு.
அந்த வேலியில்‌ “பொட்டு” வைத்து (இது பாதைதான்‌... “பொட்டு வைத்த
முகமோ” பாட்டில்‌ வரும்‌ பொட்டு அல்ல) அவசரத்துக்கு இடம்பெயரலாம்‌.
அதாவது கடன்‌ தந்தவர்‌ திடீரென்று வந்தால்‌ அல்லது கடன்‌ கேட்டவர்‌
வந்தால்‌ அந்த பாதைக்குள்ளால்‌ “தவழ்ந்து” போகலாம்‌.

மற்றது வேலி இல்லாவிட்டால்‌ “வேலிச்சண்டை' எப்படி வரும்‌ ?
ஒரு சாண்‌ அளவு வேலியை தள்ளி அடைத்தாரென்று, அடூத்த
வீட்டுக்காரரை தள்ளி விழுத்தி அடித்த வழக்கை, அந்தக்காணியையே
விற்று சுப்நீம்‌ கோர்ட்வரை கொண்டூபோவது எப்படிச்‌ சாத்தியமாகும்‌. ?

எங்கள்‌ ஊரில்‌ சிங்கப்பூரில்‌ இருந்து திரும்பிய பென்சனியர்‌ ஒருவர்‌
முதன்முதலாக தன்‌ வீட்டிற்கு முன்பக்கத்தில்‌ மதில்‌ கட்டி, கேற்றும்‌
போட்டார்‌. அவருடைய வீடூ “மதில்வீடூ்‌ என்று அதனால்‌ பெயர்‌ பெற்றது.
வேலியைப்பிய்த்துப்‌ போட்டாலும்‌, வேலியிலிருந்த பெரிய பூவரசுகளை
அப்படியே விட்டூ விட்டார்‌. அவற்றைத்‌ தறித்தால்‌, அவருடைய
காணியின்‌ எல்லை மதிலோடுூ நின்று விடும்‌ என்று யாரோ விஷயம்‌
தெரிந்த உள்ளூர்வாசி சொல்லியிருக்கலாம்‌.

நானும்‌ மேற்குறிப்பிட்ட நண்பரும்‌ அற்‌ தவழியால்தான்‌
ஒவ்வொருநாளும்‌ பள்ளிக்கூடத்துக்கும்‌, பின்னேரத்தில்‌ இங்கிலீஷ்‌
ரியூசனுக்கும்‌ போவோம்‌. மதில்‌ கட்டிய பிறகு, ஒழுங்கையில்‌ நின்று
பார்த்தால்‌ அவர்கள்‌ வீட்டுக்கூரையைத்தவிர வேறு ஒன்றும்‌ தெரியாது.
அவர்கள்‌ அதிகமாக வெளியில்‌ வருவதே இல்லை. நெருங்கிய
சொந்தக்காரர்களைத்‌ தவிர வேறு யாரையும்‌ வீட்டுக்கு அழைப்பதும்‌
இல்லை. அப்படிப்‌ போனவர்களையும்‌ முற்றத்தில்‌ நிற்பாட்டி வைத்தே
கதைத்து அனுப்பி விடுவார்களாம்‌. சிங்கப்பூரில்‌ இருந்து பவுண்‌ கட்டிகள்‌
நிறையக்‌ கொண்டூ வந்திருக்கிறார்கள்‌ என்ற கதை வேறு உலாவியது.

நானும்‌ கூட்டாளியும்‌ ஒருநாள்‌ முன்னுக்கு நின்ற பூவரசுகளில்‌
ஏறி இருந்து வீட்டூமுற்றத்தை பார்த்தோம்‌. குறோட்டன்‌,
பூக்கண்டூகளுக்கு நடூவில்‌ நின்று, “றிப்பன்‌' கட்டிய வீட்டுப்பிள்ளைகள்‌.

சற்றுப்‌ டோ௨ூ இருக்கிறது 187

 


Page 200ஏதோ வலைக்கு மேலாக அடித்து விளையாடிக்‌ கொண்டிருந்தார்கள்‌.
சின்னப்பிள்ளை எங்களுடைய பக்கம்‌ தற்செயலாகப்‌ பார்த்தது,
எங்களைக்‌ கண்டிருக்கவேண்டுூம்‌. வீட்டுப்பக்கமாப்‌ திரும்பி ஏதோ
சொல்லுவதற்கிடையில்‌, நாங்கள்‌ சரசரவென்று பூவரசிலிருந்து சறுக்கி
கீழே இறங்கிவிட்டோம்‌. கூட்டாளிக்கு ஏதோ கொப்பு இடித்து நெஞ்சில்‌
“வீரத்தழும்பு' வந்து விட்டது. தன்னுடைய தாய்க்கு அதுக்கான காரணம்‌
சொல்லக்‌ கஷ்டப்பட்டாராம்‌. கோயிலுக்கு “பிள்ளையார்‌ கதைக்கு
தென்னையில்‌ “செவ்விளனி' இறக்க ஏறினதாக கதை விட்டதாகச்‌
சொன்னார்‌.

அதன்பிறகு எனக்கும்‌, அவருக்கும்‌ என்னவோ, அந்த வெள்ளை
மதில்மீது கோபம்‌ வந்துவிட்டது. இதற்கென்றே அடுப்பிலிருந்து கரி
கொண்டுவந்து, வாத்தியார்‌ தந்த வீட்டுக்கணக்கை மதிலில்‌ செய்து
பார்த்தோம்‌. எங்கள்‌ மூளையைக்‌ கசக்கிப்பிழிந்து, பன்னிரண்டு சக
பதின்மூன்று சமன்‌ இருபத்தி ஆறு என்று கூட்டல்‌ செய்து போட,
யாரோ கணிதமேதை அதை பிழை என்று போட்டூ அருகில்‌ இருபத்தி
ஏழு என்று போட்டிருந்தார்‌. இன்னமொருவர்‌ அதை திருத்தி முப்பது
என்று போட்டு, மொத்தத்தில்‌ எங்கள்‌ ஊரில்‌ பல “ராமானுஜ ங்கள்‌
இருப்பதை பலரும்‌ அறியச்செய்தோம்‌.

பிறகு, பிறகு மற்றப்பாடங்களிலும்‌ முக்கியமானவற்றை கேற்றுக்கு
இரண்டூ பக்கங்களிலும்‌ உள்ள மதில்களில்‌ எழுதத்தொடங்கினோம்‌.

“தோடுடைய செவியன்‌ பிறைசூடியோர்‌”' தேவாரம்‌ எழுதத்தொடங்கி
மிச்சம்‌ மறந்துபோய்‌ யாரோ விட்டிருந்தார்கள்‌. கொஞ்ச
நாட்களுக்குப்பிறகு, எங்கள்‌ அனேகருக்கு “கரிக்கட்டி' பிடித்து,
கட்டைவிரலும்‌, சுட்டூவிரலும்‌ (கள்ள வோட்‌ போட்டவர்களைப்போல
அழித்தாலும்‌ போகாத) கறுப்பாகிட்டது.

சிங்கப்பூர்காரரிடம்‌ ஒரு “மொறிஸ்‌ மைனர்‌” கார்‌ இருந்தது. அந்த
வீட்டுக்கார பிள்ளைகள்‌ அதில்தான்‌ பள்ளிக்கூடம்‌ போவார்கள்‌.
எப்பவாவது நிழல்மாதிரி அவர்களின்‌ முகம்‌ தெரியும்‌. ஒருநாள்‌ என்‌
நண்பன்‌ சொன்ன கதையை என்னால்‌ நம்பமுடியவில்லை. தான்‌
றோட்டூக்கரையால்‌ நடந்துவரும்போது காருக்குள்‌ இருந்து தனக்கு
அந்தப்பிள்ளைகளில்‌ ஒன்று கைகாட்டினது என்று சொன்னான்‌.

 

 

188 டட 6. எஸ்‌. பகலசசந்தன்‌ ன


Page 201அதற்குப்‌ பிறகு நடந்ததுதான்‌ புதினமான விஷயம்‌. அவன்‌ என்னைத்‌
தவிர்க்கத்தொடங்கினான்‌. காலமை நான்‌ அவனைக்கூட்டப்‌ போனால்‌
அவன்‌ முதலே போய்விட்டான்‌ என்று அவன்‌ வீட்டூக்காரர்கள்‌
சொன்னார்கள்‌. அவர்களுக்கே அது ஆச்சர்யமாயிருக்கவேண்டும்‌.
பள்ளிக்கூடத்தால்‌ திரும்ப வெளிக்கிடும்போதும்‌, வேணுமென்றே
பின்னடிக்கிறான்‌ என்று தெரிந்தது. கொஞ்ச நாட்களுக்குப்‌ பிறகு
நான்‌ அவனை எதிர்பார்ப்பதையே விட்டூவிட்டேன்‌.

ஒரு நாள்‌ நான்‌ அந்த ஒழுங்கையால்‌ வரும்போது, அந்த மதிலின்‌
ஒரு அறிமுகமான எழுத்து, அறிமுகமான பிழைகளுடன்‌ இப்படி
எழுதியிருந்தது.

“என்‌ கேழ்விக்கு என்ன பதில்‌”

கனநாட்களாக எழுதியவருடைய *“கேழ்வி'க்கு பதில்‌
கிடைத்ததாகத்‌ தெரியவில்லை. கேள்வியென்றால்‌ பதில்‌
கிடைத்திருக்கும்‌. இது “கேழ்வி” யல்லவா?

இருந்தாலும்‌ என்மனம்‌ இரக்கமானது என்பதினால்‌ அதற்கு மறுமொழி
எழுதத்‌ தீர்மானித்தேன்‌. பள்ளிக்கூடத்தில்‌ பூமிசாத்திர ரீச்சர்‌ வகுப்பில்‌
விட்டுவிட்டுப்போன “சிவப்புச்‌ சோக்குக்‌ கட்டி” என்னிடம்‌ இருந்தது.

அதனால்‌ கவனமாக எழுத்துக்கூட்டி இவ்வாறு எழுதினேன்‌.

“உன்‌ பார்வைக்கு என்ன பொருழ்‌”

நான்‌ இப்படி எழுதி இரண்டாம்‌ நாளே ஒருவர்‌, (எப்படியோ, எங்கேயோ
ஒரு பச்சைச்‌ சோக்குக்‌ கட்டி: எடுத்து) இவ்வாறு பதில்‌
எழுதிக்கொண்டிருந்தார்‌. என்னுடைய கூட்டாளிதான்‌.

“உன்‌ மெளனம்‌ என்ன மொளி”

அவர்‌ எள'வுக்கு கொம்பு போட்டூமுடிய, “மொறிஸ்‌ மைனர்‌? கார்‌
அதில்‌ வந்து நின்றது. கார்‌ டிறைவர்‌ ஒடி வந்து அவரை “கையும்‌
மெய்யுமாக(சோக்கட்டியுமாக) பிடித்துவிட்டார்‌.

சேற்றுப்‌ டோ௨ூ இ.ருக்சிறது . 189


Page 202பிறகென்ன.. தகவல்‌ கூட்டாளியின்‌ வீட்டுக்கு போய்‌, தகப்பனார்‌
தன்னுடைய செலவில்‌ மதிலுக்கு வெள்ளை அடித்துக்‌ கொடுத்த
கோபத்தில்‌, அவருக்கு “மொத்தினது' காணாதென்று, “இங்கிலீஷ்‌:
ரியூசன்‌ மாஸ்டர்‌, அவருக்கு “மொளி:யில்‌ அடிமட்டையால்‌ அடித்ததுதான்‌
சரியான “நோ'வென்று சொல்லிக்கொண்டிருந்தார்‌. |

என்னோடூ “நேசம்‌: (உறவு) ஆகியபின்னர்‌ அவர்‌ சொன்னதுதான்‌
இங்கே முக்கியம்‌.

“யாரோ படூபாவி.. சிவத்தச்சோக்காலை எழுதினதை நான்‌
அந்தப்பெட்டை எழுதினது என்று நினைச்சிட்டன்‌”

- இந்தமுறையோடூ, அவர்‌ மூன்றுமுறை “சுவிஸ்‌”ஸிலிருந்து வந்து:

போய்விட்டார்‌. நான்‌ நடந்ததைச்‌ சொல்லவில்லை. அடுத்த முறை
பார்ப்பம்‌..!

190 6. எஸ்‌. ப௩ல22 ன்‌

 


Page 203ப்ட்‌... 41 எண ஒதுக்‌,

 

 

 

 

 

 

 

கணட கற்று மற...

191


Page 204192

ஆப்ப உள்ள பல்கலைக்கழகம்‌ ஒன்று
“வங்கிகளில்‌ திருடுவது எப்படி” என்றும்‌ ஒரு பாடம்‌
நடத்துகிறதாம்‌. எதிர்காலத்தில்‌ அவர்கள்‌ வங்கிகளில்‌
முகாமையாளர்களாக வரும்‌ பட்சத்தில்‌ இப்படியான
திருட்டுக்கள்‌ நடைபெறாவண்ணம்‌ தடுக்கலாம்‌ என்று
நினைக்கிறார்கள்‌ போலும்‌. ஆனால்‌ மற்றமாதிரி நடந்தால்‌...

நாங்கள்‌ சின்னவயதில்‌ எவ்வளவுதூரம்‌ “களவும்‌ கற்று
மற்‌ என்பதில்‌ அக்கறையாக இருந்தோம்‌ என்பதை
நினைத்துக்‌ கொள்கிறேன்‌. மாங்காய்‌ திருட்டு ஒரு பருவத்தில்‌
என்றால்‌, பப்பாசிப்பழம்‌, இளநீர்‌ என்று உயர்ந்துகொண்டே
(மர உயரத்தைச்‌ சொன்னேன்‌) போகும்‌.

எங்கள்‌ ஊரின்‌ சிறிய ரவுணின்‌ எல்லைப்பகுதியில்‌, ஒரு
பொலிஸ்காரர்‌ இருந்தார்‌. சாதாரண பொலிஸ்‌ அல்ல. பெரிய
பதவியில்‌ இருந்தவர்‌. அவரைப்பற்றியதல்ல இந்தக்கதை.
அவர்‌ வீட்டு பப்பாசிப்பழங்களைப்‌ பற்றியது.

எங்கள்‌ ரவுண்‌ பகுதிக்கு பேப்பர்‌ வாங்க, வெளியூர்களில்‌
வேலைசெய்யும்‌ சித்தப்பா, மாமா போன்றோரை பஸ்‌ ஏற்ற,
திரும்பிவரும்போது அவர்களை கூட்டிக்கொண்டு வர என்று
அடிக்கடி சைக்கிளில்‌ போய்‌ வரும்‌ காலத்தில்‌, எங்கள்‌
மெயின்‌ றோட்டுக்கு அருகில்‌ இருக்கும்‌ இந்த பொலிஸ்காரர்‌
வீடும்‌, அவரது பப்பாசி மரங்களும்‌ எங்கள்‌ கண்ணில்‌ படாத
நாளே கிடையாது.

62. எஸ்‌. ப௩ல2ஆ$நன்‌

 


Page 205அவரது வீடூ மதில்‌ சூழ, சிறிய அரண்மனைபோல இருக்கும்‌. வீட்டின்‌
முன்பக்கமாக, மதில்‌ ஒரமாக வரிசையாக பப்பாசி மரங்கள்‌ இருந்தன.
அவற்றில்‌ மஞ்சளும்‌, பச்சையும்‌ கலந்த வர்ணங்களில்‌, கிளிகள்‌ கொத்திய
துவாரஈர்களுடன்‌, பழங்கள்‌ கொத்தாக இருக்கும்‌.
அவற்றைப்பார்க்கும்போதே, எங்கள்‌ உமிழ்நீர்‌ சுரப்பிகள்‌ அதீதமாக
வேலை செய்யும்‌.

சில நேரங்களில்‌ பழங்கள்‌ கனிந்து, அப்படியே பாதி “பிய்ந்து” போய்‌
காகங்கள்‌ கொத்திக்கொண்டிருக்க காணும்போது வயிற்றெரிச்சலாக
இருக்கும்‌. “இருக்கட்டும்‌... இருக்கட்டும்‌” எங்களுக்கும்‌ ஒரு காகம்‌
(மன்னிக்கவும்‌.. காலம்‌) வரும்‌ என்று சொல்லிக்கொள்வோம்‌.

பள்ளிக்கூடம்‌ இல்லாத நாட்களில்‌, எங்கள்‌ அம்மன்‌ கோயில்‌ பற்றை
நிழலுக்குள்‌, மரங்களிலிருந்து கீழே வந்து, மீண்டும்‌ வளைந்து மேலே
போகும்‌ வலுவான கொடிகளில்‌ இருந்து கொண்டூ “மந்திராலோசனை”
நடத்தும்‌ வேளைகளில்‌ ஒருநாள்‌ இந்தக்கதையும்‌ வந்தது.

“எதையும்‌ செய்யலாம்‌... பொலிஸ்காரன்‌ வீட்டிலேயே திருட்டா..
அகப்பட்டால்‌ விமோசனமே இல்லை என்ற ரீதியில்‌ சிலர்‌ உடனடியாகவே
“ஜகா: (ஜகா என்றால்‌ பின்வாங்குதல்‌) வாங்கிவிட்டார்கள்‌. நாங்கள்‌
நான்குபேர்தான்‌ மிகுதியாகவிருந்தோம்‌.

எப்பவாவது ஒருநாள்‌ எங்கள்‌ ரவுண்தியேட்டரில்‌ “இங்கிலீஷ்‌” படம்‌
ஓடுகிற நாளில்‌ இரண்டாவது ஷோ பார்த்து விட்டு (அப்போதுதான்‌
சனம்‌ கொஞ்சம்‌ குறைவாக இருக்கும்‌) வரும்போது எங்கள்‌ திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதாகத்‌ தீர்மானித்தோம்‌.

சிலபேர்‌ இருக்கிறார்கள்‌ - வெளித்தோற்றத்திற்கும்‌, மூளையில்‌
இருப்பதற்கும்‌ சம்பந்தமே இல்லாமல்‌ இருப்பார்கள்‌. நான்‌ கொஞ்சம்‌
உரத்துச்‌ சொல்லி விட்டேனா..? ஏதோ குசினிக்குள்‌ விழுந்து உடைந்தது
மாதிரிக்‌ கேட்டது...)

நான்‌ சொல்லவந்தது இதுதான்‌. நாங்கள்‌ திட்டமிட்டபடி பார்த்த
படத திற்கும்‌, வெளியில்‌ ஒட்டியிருந்த படங்‌ களுக்கும்‌
சம்பந்தமேயிருக்கவில்லை. போதாதற்கு தியேட்டருக்குள்‌ இருக்கும்போது
எங்களுக்கு பயமாக வேறு இருந்தது. பயங்கரப்படம்‌ என்று ஒன்றுமில்லை.

கற்றுப்‌ டோ௨ூ இருக்கிறது 193

 


Page 206நாங்கள்‌ நாலுபேர்தான்‌ தியேட்டருக்குள்‌ இருந்தோம்‌. இடைவேளைக்குப்‌
பிறகு தியேட்டர்காரர்‌ கிட்டத்தட்ட எங்கள்‌ பொறுப்பில்‌ விட்டூ.விட்டூப்‌
போனதுமாதிரி போய்விட்டார்கள்‌.

எல்லாம்‌ முடிந்து, றோட்டில்‌ கால்‌ வைக்க கும்மிருட்டாக இருந்தது.
நாலுபேரும்‌ இரண்டூ சைக்கிள்களில்‌ வந்திருந்தோம்‌. புறப்பட்டு இரண்டு
வளைவு தாண்டி, பொலிஸ்காரர்‌ வீட்டுக்கு முன்னால்‌ வந்தபின்‌ இருட்டுக்கு
பழக்கப்பட சிறிதுநேரம்‌ அசையாமல்‌ நின்றோம்‌. “சில்‌ வண்டூ'ச்‌ சத்தத்தைத்‌
தவிர வேறொன்றுமில்லாத மயான அமைதி.

கொஞ்சநேரத்தில்‌ பப்பாசிமரங்களும்‌, பழங்களும்‌ கண்ணுக்கு
புலனாக, எங்கள்‌ திட்டப்படி ஒருவர்‌ மதிலில்‌ ஏறி, மெதுவாக பழங்களை
ஒவ்வொன்றாக பிடுங்கத்தொடங்கினார்‌. மற்றவர்‌ கீழே நின்று பக்குவமாக
வாங்கி, சைக்கிள்‌ ஹாண்டிலில்‌ (118416) தொங்கிய சாக்குப்பைபில்‌
வைத்தார்‌. அதே நேரத்தில்‌ சைக்கிள்களில்‌ இருந்த நானும்‌,
இன்னுமொருவரும்‌, உதைத்தால்‌ முன்னுக்கு வேகமாக உந்தித்தள்ளும்‌
வகையில்‌. “பெடல்‌” களை மேலே விட்டு, ஒரு காலை அதில்‌ வைத்து,
தயார்‌ நிலையில்‌ நின்றோம்‌.

வீட்டுவிறாந்தையில்‌ யாரோ வந்து நிற்பது போல இருக்கவும்‌,
மதில்மேல்‌ நின்றவர்‌ அசையாமல்‌ மரம்போல நின்றார்‌. மூச்சுவிட
மறந்தவர்கள்போல்‌ நாங்கள்‌ நின்றோம்‌. விறாந்தையில்‌ நின்றவருக்கு
_ சந்தேகம்‌ வந்திருக்கவேண்டும்‌.

கும்மிருட்டு என்று சொன்னேன்‌ அல்லவா..? அன்று பின்னிலவு.
திடீரென்று முகில்கள்‌ விலகிப்போக, நிலவு “பளிச்‌”சென்று தோன்றி,
அந்தச்‌ சுற்றாடல்‌ முழுவதற்கும்‌ வெளிச்சம்‌ போட்டது.

அடூத்தறிமிசமே, “கள்ளன்‌..கள்ளன்‌..” என்ற அவல ஓசையும்‌,
“லல்ஷேசியன்‌” நாயின்‌ உறுமலும்‌ தொடர்ந்து கேட்டன.

ஓரே மிதியில்‌ எங்கள்‌ சைக்கிள்கள்‌ “விர்‌ரென்று முன்னோக்கிப்‌
பறந்தன. சிலவிநாடிகளின்‌ பின்னர்தான்‌, மற்ற இரண்டு பேரையும்‌
விட்டுவிட்டு வந்தது தெரிந்தது. நான்‌ “கிறீச்‌' என்று “பிறேக்‌' போட்டூ
நின்றேன்‌.

194 6. எஸ்‌. ப௩ல2? சந்தன்‌

ன ்ண்ண்ண்க்வ அட பத்திக்கு மில்து


Page 207“அவங்கள்‌ முன்‌ ஒழுங்கைக்குள்ளால்‌ ஓடியிருப்பாங்கள்‌... அந்த
ஆள்‌ (பொலிஸ்காரர்தான்‌) மோட்டார்ச்சைக்கிளிலை வந்தாலும்‌ வரும்‌..
வாடா போவம்‌” என்று அவசரப்படுத்தினான்‌, நண்பன்‌.

மீண்டும்‌ “தம்‌” பிடித்து சைக்கிள்‌ “பெடல்களை்‌ உழக்கினோம்‌.
எங்களுக்கு முன்னால்‌ இரண்டூபேர்‌, தார்றோட்டில்‌ சாறத்தைப்‌
பிடித்தபடியே ஓடிக்கொண்டிருந்தார்கள்‌. சைக்கிள்‌ “டைனமோ”
வெளிச்சத்தில்‌ தெரிந்தது. எங்கள்‌ கூட்டாளிகள்‌ தான்‌. அந்த
ஓட்டத்திலும்‌, பப்பாசிப்பழம்‌ அவர்களது “சண்டிக்கட்டூ”க்குள்‌ இருப்பதும்‌
தெரிந்தது.

அருகில்‌ போய்ச்‌ சைக்கிள்களை நிறுத்தியதும்‌, நிறுத்தாததுமாக,
“பாரில்‌” பாய்ந்தேறி உட்கார்ந்து கொண்டார்கள்‌. பிரதான வீதியிலிருந்து
எங்கள்‌ வீட்டுப்பக்கம்‌ போகும்‌' கல்‌”றோட்டில்‌ திரும்பும்வரைக்கும்‌” மூச்சு
பேச்சு” இல்லை.

வழியில்‌ பெரிய தோட்டவெளி. மாரிகாலத்தில்‌ மாத்திரம்‌ தண்ணீர்‌
நிற்கும்‌ துரவுக்‌ கிணற்றிற்கு (ஆழமில்லாதது... சிமெந்தால்‌ கட்டப்படாதது)
அருகில்‌ சைக்கிள்களை சரித்து வைத்துவிட்டு, “சரசரவென்று,
பப்பாசிப்பழங்களுடன்‌ உள்ளே இறங்கினோம்‌.

பிறகென்ன... துரவுக்குள்‌ இருந்த கல்லொன்றில்‌ குத்தி, பழங்களை
துண்டங்களாக்கி, ௮ணில்‌ பற்களால்‌ “நன்னுவது£போல சாப்பிட்டு
முடித்தோம்‌. அடியில்‌ குட்டைமாதிரி தேங்கியிருந்த தண்ணீரில்‌ கைகளை
அலம்பிக்கொண்டோம்‌.

இனி வெளியே வந்து சைக்கிள்களை எடுத்துக்கொண்டு
போகவேண்டியதுதான்‌ பாக்கி. எங்கள்வீடுகளின்‌ பக்கமாகப்போகும்‌
“கல்‌” றோட்டில்‌ மோட்டார்சைக்கிள்‌ போகும்‌ சத்தம்‌ கேட்டது. மெதுவாக
எட்டிப்பார்த்தால்‌, எங்கள்‌ பக்கம்தான்‌ போகிறது.

இடிந்துபோய்‌ இருந்து விட்டோம்‌. வெகுநேரமாயும்‌
வீட்டுப்பக்கம்‌ போன மோட்டார்‌ சைக்கிள்‌ திரும்பிவரவில்லை.
ஒவ்‌ வொருததராய்‌ வீடுகளில்‌ தேடப்படுகிறோம்‌ என்று
மெல்லியகுரல் களில்‌ கதைத்துக்கொண்டோம்‌. அப்படியே
கண்ணுறங்கியிருக்கவேண்டும்‌.

ரேற்றுடீ। டோ௨ இ.ருக்சபிறது 195

த்‌

அட்டர்‌


Page 208அதிகாலைப்பொழுதில்‌ தோட்டம்‌ கொத்தவந்த எங்களூர்க்காரர்‌ ஏதோ
காரணத்தினால்‌ “துரவு'க்குள்‌ எட்டிப்பார்த்துவிட்டு, கத்திக்கொண்டூ
ஒடத்தான்‌ நாங்கள்‌ எழும்பி சைக்கிள்களைத்‌ தூக்கிக்கொண்டூ
மற்றப்பக்கமாக ஓடினோம்‌.

ஒரு சந்தோசம்‌. சாமத்‌ தில்‌ எங்கள்‌ வீட்டூப்பக்கமாக
மோட்டார்சைக்கிளில்‌ போனவர்‌, எங்கள்‌ ஊரின்‌ புதுமாப்பிள்ளை. எங்கோ
தொலைவில்‌ வேலை பார்க்கும்‌ அவர்‌ இப்படி வருவார்‌ என்று அவரது
வீட்டூக்காரருக்கே தெரியாதென்றால்‌ எங்களுக்கு தெரிவது எப்படி..?

்‌
க

ஒ$

196 ப 62. எஸ்‌. பகல2௪ஆ$ன்‌


Page 209 

 

 

 

 

 

 

தது வீணாக கலந்‌

197


Page 210198

அன இலங்கைக்கு வெள்ளைக்காரர்களின்‌
ஆட்சியில்‌ அந்தக்காலத்திலேயே வந்தாலும்‌, பெரிய
நகரக்கல்லூரிகளில்‌ விளையாடப்பட்டாலும்‌, எங்கள்‌ ஊருக்கு
வருவதற்கு நீண்டகாலம்‌ எடுத்தது.

அதுவரை நாங்கள்‌ கிட்டியடித்தல்‌, வாரோட்டம்‌,
கொடியோட்டம்‌, தாச்சி, ஒளித்து விளையாடூதல்‌ (இதில்‌
பெண்களும்‌ கலந்து விளையாடூவதுண் டூ) என்று
விளையாடிக்‌ கொண்டிருந்தோம்‌.

ஒளித்து விளையாடூதலில்‌, எல்லோரும்‌ கும்பலாக
நின்றுவிட்டு, தேடிப்‌ பிடிக்‌ கவேண் டியவர்‌ கண்ணைப்‌
பொத்திக்கொண்டூ நிற்க, மற்றவர்கள்‌ திக்குத்திக்காக ஓடி,
வீட்டில்‌ பரணுக்குள்ளும்‌, காணிக்குள்‌ (ஈச்சம்பற்றை தவிர்ந்த)
பன்னை. பாவட்டை பற்றைக்குள்ளும்‌, வேப்பமரத்தின்‌ மேலும்‌,
கோயில்‌ மதிலுக்கு பின்னாலும்‌ ஒளித்துக்கொள்ள, தேடூபவர்‌
ஒவ்வொருத்தராக தேடிக்‌ கண்டூபிடிக்கவேண்டும்‌.
ஒளித்தவர்கள்‌ இடை,இடையே கூக்காட்டவேண்டும்‌.
அப்போதுதான்‌ தேடூபவர்‌ சத்தம்‌ வரும்‌ திசை பார்த்து
கண்டூபிடிக்கமுடிஃும்‌. சில சந்தர்ப்பங்களில்‌ நான்‌ ஒளிப்பதற்கு
போய்‌, பசி வந்தால்‌ அப்படியே என்‌ வீட்டில்‌ சாப்பிட்டுவிட்டு
உறங்கிப்போவதுமுண்டுூ. எல்லோரையும்‌ கண்டுூபிடிக்காவிட்டால்‌
விளையாட்டு முடியாது என்பதினால்‌, பாவம்‌ தேடுபவர்‌
“கூக்காட்டடா.. கூக்காட்டடா'” என்று தொண்டைத்தண்ணீர
வற்ற கத்திக்‌ கொண்டிருத்தலும்‌ நிகழும்‌.

62. எஸ்‌. ப௩ல22ஆதநன்‌


Page 211இந்த ஒளித்து விளையாடுதல்‌ எப்படியோ எங்களோடூ
வெளிநாடூகளுக்கு வந்து விட்டது. இதற்கு சாட்சியாக சிலர்‌ ஒளித்து
விளையாடிக்கொண்டிருககிறார்கள்‌. பலர்‌ அவர்களைத்‌
தேடிக்கொண்டிருக்கிறார்கள்‌.

எங்கள்‌ ஊரில்‌ பணக்கார வீட்டுப்‌ பொடியன்கள்‌ நகரப்பள்ளிகளுக்கு
படிக்கப்போனதின்‌ பிறகுதான்‌ அவர்களோடு கிரிக்கெற்றும்‌ “அருளாமல்‌'
(சத்தம்‌ போடாமல்‌) எங்கள்‌ ஊருக்கு வந்தது.

ஆரம்பத்தில்‌ அருகில்‌ இருக்கும்‌ வீட்டூச்சுவரில்‌ கரியால்‌
விக்கெற்றைக்கீறிவிட்டு அதற்குமுன்னால்‌ நின்று அகப்பட்ட
பலகைத்துண்டால்‌ பந்தை அடித்து, கோயில்‌ மதிலில்‌ பட்டால்‌
நாலென்றும்‌, அதற்குமேலால்‌ போனால்‌ ஆறென்றும்‌, கோயிலுக்குள்‌
நிற்கும்‌ மணியகாரரோ அல்லது ஐயாவோ பந்தை எடூத்துவிட்டூத்‌ தர
மறுத்தால்‌ ஆட்டம்‌ அத்தோடு வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததாகவும்‌
தீரமானிப்போம்‌.

கொஞ்சநாள்‌ போனபின்‌, எங்கள்‌ ஊர்‌ மரக்காலைக்கு (மரவேலை
செய்யுமிடம்‌) தூதுக்குழு மாதிரி நாலைந்து பேர்‌, நடையாக நடந்து,
மரக்காலைச்‌ சொந்தக்காரரின்‌ காலைப்பிடிக்காத குறையாக மன்றாடி,
அவர்‌ வாங்கிலோ, அலுமாரியோ செய்தபின்‌ மிஞ்சிய பலகைத்துண்டைத்‌
தர, அதில்‌ எங்கள்‌ கூட்டாளி ஒருவன்‌, கைப்பிடி செதுக்கி, (பிடிப்பதற்கு
இதமாக இருக்க) சைக்கிள்‌ ரியூப்‌ துண்டு ஒன்றை அதற்குமேல்‌ கொழுவி,
துடுப்பு (பாற்றென்றும்‌ சொல்லலாம்‌.) றெடியாகினால்‌ பிறகென்ன... சீவிய
பூவரசம்‌ தடிகள்‌ (ஸ்ரம்புகள்‌), ரென்னிஸ்‌ பந்து சகிதம்‌ களத்தில்‌
இறங்குவோம்‌.

களம்‌ எதுவென்றால்‌, எங்கள்‌ ஊரின்‌ நடுநாயகமாக இருக்கும்‌
வயல்வெளிதான்‌. வயல்வரம்புகள்தான்‌ “பவுண்டரி' எல்லைகளாக
இருக்கும்‌. அறுவடை முடிந்த வயலில்‌, நெல்லின்‌ அடிக்கட்டை காலை
இடற, சற்று மேடும்‌, பள்ளமுமாகவிருக்கும்‌ முரடான நிலத்தில்‌,
துடூப்பாட்டக்காரர்‌ அடித்த பந்தைப்‌ பாய்ந்து விழுந்தெழும்பி, “காட்ச்சுகள்‌”்‌
(465) பிடித்து, முழங்கால்களைச்‌ சிராய்த்துக்‌ கொண்டாலும்‌, நின்று
பார்க்க நேரமில்லாமல்‌, அடூத்த பந்தை வலு சீரியஸஎம்ஸாக
எதிர்பார்த்திருப்போம்‌. ஏதோ இரண்டூ நாடுகளுக்கிடையே நடக்கும்‌ போட்டி
மாதிரி எங்கள்‌ நினைப்பு...

சேற்றுப்‌ டோ௨ இருகிறது 199


Page 212நடூவர்‌ ஒருவர்‌ (எங்களில்‌ ஒருவர்தான்‌) இருந்தார்‌. அவருக்கும்‌ சுய
விருப்பு, வெறுப்புக்கள்‌ இருக்கும்தானே. துடுப்பாட்டக்காரர்மீது பழைய
கோபம்‌ இருந்தால்‌, ஏதாவது காரணம்‌ சொல்லி அவரை “அவுட்‌”
(ஆட்டமிழந்தார்‌) என்று விரலைத்தாக்குவார்‌. துடுப்பாட்டக்காரர்‌ துடுப்பை
தூக்கிக்கொண்டு அவரை அடிக்கத்‌ துரத்துவார்‌. நடுவர்‌ சுற்றி.சுற்றி
ஓடி தப்பிவிட, இவர்‌ துடுப்பை எறிந்து விட்டு இனி விளையாட வரமாட்டேன்‌
என்று சொல்லிவிட்டு, பந்தை தூக்கிக்கொண்டு போவார்‌. (பந்து
அவருடையதாக இருந்தால்‌). பிறகு மன்றாடி எப்படியாவது பந்தை வாங்கி
ஆட்டம்‌ தொடரும்‌.

நாளடைவில்‌, எங்கள்‌ வயல்வெளியைச்‌ சுற்றியுள்ள எல்லாக்‌
குறிச்சிகளில்‌ (ஊரின்‌ பிரிவுகள்‌) இருந்தெல்லாம்‌ பொடியன்கள்‌ எங்களோடு
வந்து சேர்ந்து கொண்டார்கள்‌. அவர்களில்‌ சிலர்‌ நகரப்பள்ளிக்கூடங்களில்‌
படிப்பவர்கள்‌. அவர்களிடமிருந்து “ஹவ்‌ இஸ்‌ தற்‌” (ர 1 மல்‌
போன்ற வார்த்தைப்பிரயோகங்களை கற்றுக்கொண்டு, எடூத்ததுக்கெல்லாம்‌
கத்தி, நடுவரை ரோதனைக்குள்ளாக்குவோம்‌.

வீட்டுக்கணக்கு செய்யவென்று வாங்கிய “சதுர றால்‌” கொப்பியில்‌
ஒவ்வொரு நாளும்‌ ஒவ்வொருத்தரும்‌ அடிக்கின்ற ஓட்டங்களை
குறித்துக்கொள்வது எனது வேலையாகியது. துடுப்பு, பந்து, ஸ்ரம்புகளை
வைத்து, அடுத்தநாள்‌ விளையாடக்‌ கொண்டூவருவதும்‌ என்‌
பொறுப்பாகியது.

இந்தக்காரணங்களினாலோ என்னவோ, திடீரென என்னை
அணித்தலைவராக (ஹேக்‌) ஆக்கிவிட்டார்கள்‌. அதன்பிறகு எனது
நடையிலேயே ஒரு வித்தியாசம்‌ தெரிகின்றதென நண்பர்கள்‌
சொன்னார்கள்‌. நானும்‌ நம்பினேன்‌. சொல்லிவிட்டு சிரித்திருக்கிறார்கள்‌.
அதை நான்‌ காணவில்லை.

அயல்‌ ஊர்களில்‌. இருந்தெல்லாம்‌ எங்களோடூ “மாட்ச்‌” விளையாட
வந்தார்கள்‌. எனது அணியில்‌ இருந்த சின்ன பொடியன்கள்‌ இரண்டு,
மூன்று பேர்‌ நன்றாக விளையாடினார்கள்‌. அவர்களினால்தான்‌ நாங்கள்‌
ஒவ்வொரு முறையும்‌ வென்றோம்‌.

நான்‌ (கப்ரின்‌) துடூப்பெடுத்தாடப்‌ போகும்போது எதிர்‌ அணியினர்‌
என்னை மரியாதை கொடுத்து பார்ப்பார்கள்‌. ஆனால்‌ அதுவே, நான்‌

200 6௯. எஸ்‌. ப௩ல22ன்‌

 


Page 213முதலாவது, இரண்டாவது பந்தில்‌ “அவுட்‌” ஆகும்போது “நக்கல்‌”
பார்வையாக மாறிவிடும்‌. என்னுடைய “சாதனைகளை” ஊருக்குள்ளும்‌
யாரோ கசியவிட்டிருக்கவேண்டுூம்‌.

ஜிரிக்கெற்‌ றுக்கும்‌, “கிளித்தட்டூ”க்கும்‌ வித்தியாசம்‌ தெரியாத
ஒருத்தி (இரட்டைப்பின்னலின்‌ சிநேகிதி), ஒழுங்கையில்‌ வைத்து
“எத்தினை கோல்‌ போட்டனீங்கள்‌” என்று கேட்டூவிட்டூுப்‌ போனாள்‌.
“எய்தவள்‌ இருக்க அம்பை நோவான்‌ ஏன்‌” என்று நினைத்துப்‌ பேசாமல்‌
போய்‌ விட்டேன்‌.

கொஞ்ச நாட்களுக்குள்‌ “கங்கையும்‌, கடாரமும்‌' வென்ற
சோழனைப்போல அண்டை, அயல்‌ ரீம்‌ எல்லாரையும்‌ வென்று, இறுதியில்‌
கொஞ்சம்‌ தள்ளியிருந்து, ஒரு அணிக்காரர்‌ சவால்‌ விட்டார்கள்‌. சவாலை
ஏற்காவிட்டால்‌ அவமானம்‌ அல்லவா?

பத்து பதினைந்து சைக்கிள்களில்‌, வழக்கமான எங்கள்‌
விளையாட்டுக்‌ கருவிகளுடன்‌ புறப்பட்டோம்‌. நாங்கள்‌ விளையாடப்போகும்‌
அணியின்‌ தலைவர்‌, அப்போது பெரிய கல்லூரியின்‌ அணியில்‌
விளையாடூபவர்‌ (அதுவும்‌ லெதர்‌ பந்தில்‌ விளையாடூபவர்‌) என்று
அறிந்ததும்‌ சற்று தடூமாறித்தான்‌ விட்டோம்‌.

நாங்கள்‌ விளையாடிய இடம்‌ - சுற்றிவர கல்வேலி அமைத்த
தென்னம்காணி. சரியான முள்ளுக்காணி. பந்து பொறுக்கிறதை விட,
ஒவ்வொரு தடவையும்‌ காலில்‌ குத்துகிற முள்‌ பொறுக்கிறதிலேயே
எங்கள்‌ கவனம்‌ போனது. விழுந்து “காட்ச்‌” பிடித்தால்‌, “செடில்‌”
காவடிக்காரர்‌ போல நின்றிருப்போம்‌ என்றதினால்‌ நாங்கள்‌ நிலத்தில்‌
விழ நினைக்கவில்லை.

என்ன அதிசயமோ, அன்று நான்‌ “கப்ரின்‌ விளையாடவேண்டிய
வகையில்‌ (ஹேக்‌ ஸோ) விளையாடினேன்‌. துடூப்பெடுத்து
ஆடும்போது, மூசி,மூசி விளாசி அடித்தேன்‌. பந்து தானாக வந்து என்‌
துடூப்பில்‌ பட்டுப்‌ பறந்தது. சற்று தள்ளி கடல்‌ இருந்ததுபோல ஞாபகம்‌.
அதனால்தான்‌ நான்‌ சிக்சர்‌ அடிக்கவில்லை என்று மற்றவர்களுக்குச்‌
சொன்னேன்‌. முடிவில்‌ எங்களுக்கு வெற்றி. சந்தோசம்‌ என்றால
சந்தோசம்‌.

சேற்றுப்‌ போவ இருக்கிறது 201


Page 214கூச்சல்‌ ஒன்றும்‌ போடவில்லை. காரணம்‌ அவர்கள்‌ ஊரில்‌ வைத்து
சாத்திவிடுவார்களோ (கதவை அல்ல- முதுகில்தான்‌) என்ற பயந்தான்‌.
சந்தியில்‌, கொம்பனி கணக்கில்‌ (எல்லோரும்‌ காசு போட்டு வடை
சாப்பிட்டு, தேனீர்‌ குடித்துப்‌ புறப்பட்டோம்‌.

எங்கள்‌ ஊர்‌ வந்தவுடன்‌, என்னுடைய அணிக்காரர்‌ பெரிய
அட்டகாசம்‌ பண்ணிவிட்டார்கள்‌. ஏதோ உலகக்கிண்ணம்‌ வென்றது
மாதிரி என்னை தூக்கி இறக்கினார்கள்‌.

வீட்டுக்கு போகும்‌ வழியில்‌ ஈஸ்வரியின்‌ தோழியை மறுபடியும்‌
கண்டேன்‌. அவளுக்கு விளங்குகிற மாதிரி சொல்வோம்‌ என்று நினைத்து
“நான்‌ 18 கோல்‌ அடித்தேன்‌'” என்றேன்‌. “பாவம்‌ கிரிக்கெற்றிலை
எடுக்கிறது “றன்‌' என்றதே தெரியவில்லை. அதுக்குள்ளே கிரிக்கெற்‌
கப்ரன்‌'” என்று சொல்லி, என்னைக்‌ கவிழ்த்துவிட்டுப்‌ போனாள்‌.

கிரிக்கெற்‌ விஷயம்‌ தெரிந்த தமையனிடம்‌ அதற்கிடையில்‌ கேட்டு
அறிந்திருப்பாள்‌ என்று நான்‌ எதிர்பார்க்கவில்லை.

இப்போதும்‌ வீட்டில்‌ நான்‌ ரிவியில்‌ “கிரிக்கெற்‌ மாட்ச்‌” பார்த்தால்‌,

சகதாமிணி “எத்தினை கோல்‌ அடிச்சாச்சு'” என்று சொல்லிவிட்டு போவது
எதற்காக..?

202 62. எஸ்‌. பு௩ல22 தன்‌


Page 215 

 

 

 

 

 

 

 

 

 

 

ரர, ரூர்‌... ராரரீபர ராக

203


Page 216204

॥பொழுதெல்லாம்‌ எங்கும்‌, எதிலும்‌ படம்‌
என்றாகிவிட்டது. கசெற்றில்‌ படம்‌, டிவிடியில்‌ படம்‌, ரிவியில்‌
படம்‌, என்று வீடுகளுக்கே படம்‌ வந்து விட்டது போக, கார்‌,
பஸ்‌, விமானம்‌ என்று வாகனங்களில்‌ படங்கள்‌ எங்களைத்‌
துரத்துவது போதாதென்று, சட்டைப்பைகளிலும்‌ படங்கள்‌
ஒலியெழுப்பி கூச்சலிடுகின்றன. அதாவது போன்களிலும்‌
கமலஹாசன்‌ அசினைத்‌ துரத்துகிறார்‌.

கதை இப்படி இருக்க, எங்கள்‌ சின்ன வயதில்‌, நாங்கள்‌
திரைப்படம்‌ பார்த்த கதை சொன்னால்‌ கிறிஸ்துவுக்கு முன்பா
அல்லது பின்பா நடந்தது என்று கேட்பீர்கள்‌. அவ்வளவு
பழைய காலம்‌ என்றாகிவிட்டது. நானும்‌ என்‌ நண்பர்களும்‌
விடலைப்பருவத்தில்‌ நிறையப்படம்‌ பார்த்ததினால்‌ படிப்பில்‌
கோட்டை விட்டோம்‌ என்று எங்கள்‌ வீட்டுக்காரருக்கு பெரிய
குறை. ஆனால்‌ அவர்கள்‌ இப்போத பார்த்துத்தள்ளும்‌
சீரியல்களுக்கு கணக்கில்லை. நாங்கள்‌
ஒழுங்காகக்கதைக்காமல்‌, எங்கள்‌ “பிசி'யில்‌ திரிய, அவர்கள்‌
படங்களே கதியென்று கிடக்கிறார்கள்‌.

ஆதிகாலத்தில்‌ திரைப்படங்கள்‌ காண்பிக்கப்பட்டபோது
“இது பிசாசின்‌ வேலை” என்று மக்கள்‌ ஓடி ஒளிந்தார்களாம்‌.
அதன்‌ எச்சசொச்சமாக, பொதுவாக எங்கள்‌
வீட்டுப்பெரியவர்களும்‌, திரைப்படம்‌ பார்ப்பதை தாழ்வாகவே
நினைத்தார்கள்‌. இருந்தாலும்‌ பக்திப்படங்களை அவர்களும்‌
ரகசியமாக பார்க்கவே செய்தார்கள்‌. முருகன்‌, கிருஷ்ணர்‌,

62. எஸ்‌. புால2 ஆதன்‌


Page 217சிவபெருமான்‌, லட்சுமி திரையில்‌ வரும்போது கன்னத்தில்‌
போட்டுக்கொண்டு, தியேட்டர்‌ இருட்டூக்குள்‌ கரம்‌ கூப்பத்தான்‌ செய்தார்கள்‌.
இப்போதும்‌ அது இருக்கிறது. “நம்ம தலை”, “தளபதி: என்றெல்லாம்‌
திரையில்‌ கண்டவுடன்‌ கூவி, பாலாபிஷேகம்‌ செய்து, கற்பூரம்‌
கொழுத்துகிறார்களே. ஆட்கள்தான்‌ மாறிவிட்டார்கள்‌. இந்த கடவுள்‌
நம்பிக்கைகளெல்லாம்‌ விட்டூப்போகவில்லை.

அந்நாட்களில்‌, மிக அபூர்வமாக எங்கள்‌ வீட்டில்‌ ஏதாவது
சந்தோசமான வேவேளையில்‌ படம்‌ பார்க்கிற கதை வரும்‌. யாரோ
சொன்னதைக்கேட்டு அப்பா ஏதோ ஒரு படத்தைப்பற்றி
சிலாகித்துப்பேசவும்‌, நானும்‌ தம்பிமாரும்‌ உடனேயே கவனமாகக்‌
கேட்டுக்கொண்டு, உசாராக நிற்போம்‌.

தொடர்ந்து “அந்தப்படம்‌ எங்கள்‌ சின்ன ரவுணில்‌ ஓடூகிறது.. நாளைக்கு
போவோமா: என்று அப்பா கேட்கவும்‌, நாங்கள்‌ உள்ள
தெய்வங்களுக்கெல்லாம்‌ மனதிற்குள்‌ கற்பூரம்‌ கொழுத்தி, தீபம்‌
காட்டுவோம்‌. அம்மா சம்மதிக்கவேண்டூமே. அம்மா சம்மதித்து விட்டால்‌
பிறகென்ன, சந்தோசமென்ற சந்தோசந்தான்‌.

அடூத்தநாள்‌ வரை, அம்மாவோ, அப்பாவோ எள்ளென்றால்‌
எண்ணையுடன்‌ நிற்போம்‌. கரும்பென்றால்‌ சாறுடன்‌ நிற்போம்‌. ஓடியோடி
எல்லா வேலையும்‌ நடக்கும்‌.

அனேகமாக இரவு இரண்டாம்‌ காட்சிக்குத்தான்‌ நாங்கள்‌ போவது
வழக்கம்‌. மற்றவர்களுக்கு நாங்கள்‌ படம்‌ பார்க்கப்போவது தெரியாமல்‌
இருக்க வேண்டூமென்பதுதான்‌ அப்பாவின்‌ விருப்பம்‌. ஆனால்‌, நானும்‌
தம்பிமாரும்‌ எங்கள்‌ கூட்டாளிகளுக்கு ஏற்கெனவே சொல்லிப்‌
பெருமையடித்திருப்போம்‌. அவர்கள்‌ மூலம்‌ அவரவர்‌ வீடுகளுக்கு செய்தி
போயிருக்கும்‌.

கார்‌ என்ற சங்கதி ஒன்றுமில்லை. பொடி நடைதான்‌. எங்கள்‌ வீட்டின்‌
பின்புற புழுதி ஒழுங்கையால்‌ நடந்து, அடுத்துவரும்‌ வயல்வெளியை
குறுக்கறுத்துப்‌ போனால்‌, தார்‌ போட்ட றோட்டில்‌ ஏறலாம்‌. தார்றோட்டில்‌
ஏறி நடக்கும்போது, படம்‌ பார்க்கப்‌ போகிறோம்‌ என்ற
சந்தோசமிகுதியினால்‌, வெறும்‌ பாதங்களை றோட்டில்‌ அடித்து ஒலியெழுப்பி
நடந்து, அப்பாவிடம்‌ “ பேசாமல்‌ வாங்கோடா” என்று பேச்சும்‌ வாங்குவோம்‌.
அதன்பிறகு கொஞ்ச நேரம்‌, இருட்டுக்குள்ளால்‌ அமைதி ஊர்வலம்‌ நடக்கும்‌.

சற்றுப்‌ டோ௨ூ இ.ருக்சிறது க 205


Page 218கடைசி, கடைசியாக ரவுணை அணிமித்து, முடக்கு திரும்ப, தியேபட்டர்‌
வெளிச்சத்தினால்‌ சந்தியே பிரகாசமாக ஜொலிக்கும்‌. கூடவே எங்கள்‌
நடையும்‌ துரிதகதியில்‌ நடக்கும்‌. நாங்கள்‌ தியேட்டருக்கு போகும்‌
நேரத்தில்‌, அனேகமாக முதல்காட்சி முடிந்திருக்காது. கடைசிக்காட்சியில்‌
எம்ஜீஆர்‌ வீரப்பாவுடன்‌ மலை உச்சியில்‌ வாள்சண்டை
போட்டுக்கொண்டிருக்கும்‌, “டணாங்‌.. டணாங்‌்‌ சத்தம்‌ கேட்கும்‌. அது
முடிந்ததும்‌, அவரோடூ பாட்டூப்பாடிக்கொண்டு போவதுற்கு றெடியாக,
பானுமதி, தியேட்டரின்‌ பக்கத்து திரைக்குள்‌ நிற்பார்‌. (அப்படித்தான்‌
நாங்கள்‌ நினைத்திருந்தோம்‌.)

தியேட்டரின்‌ பின்கதவின்‌ இடுக்கின்‌ ஊடாக, மின்னல்‌ கீற்றுகள்‌
போல சில காட்சிகளும்‌, விசிலடிகளும்‌ எங்களைப்‌ பரவசப்படுத்த,
மேலே ஒட்டியிருக்கும்‌ போஸ்டர்களை *ஆ'வென்று பார்த்து நிற்போம்‌.
கதவுகள்‌ திறக்க, “திமுதிமு்‌ வென்று கூட்டம்‌ வெளியில்‌ வரும்‌.

எங்களை இழுக்காத குறையாக அழைத்துக்கொண்டு அப்பாவும்‌,
அம்மாவும்‌ தியேட்டரின்‌ முன்பக்கத்தில்‌ வரிசையாக வைத்திருக்கும்‌
குறோட்டன்‌ மரப்பக்கமாகச்‌ செல்வார்கள்‌. படம்‌ முடிந்து வருபவர்களில்‌
எங்கள்‌ ஊர்க்காரர்‌ யாராவது இருந்து எங்களை கண்டூவிட்டாலும்‌
என்றுதான்‌ இந்த முன்னேற்பாடு.

பார்த்தவர்களில்‌ சிலர்‌ காட்சிகளை மீளாய்வு செய்து, சிரித்து
மகிழ்ந்து கொண்டு போக, இன்னும்‌ சிலர்‌ எங்களுக்கு
கேட்கவென்பதுபோல உரத்து “ படம்‌ அவ்வளவு திறமில்லை”” என்று
தங்கள்‌ பாட்டில்‌ விமர்சனம்‌ செய்து கொண்டு போவார்கள்‌. இந்த
விமர்சனங்களால்‌ பாதிப்புற்ற அப்பா, * என்ன செய்வோம்‌” என்பதாக
அம்மாவை பார்க்கும்‌ பார்வையில்‌, நாங்கள்‌ பயப்பிராந்தியடைந்து, சற்று
சிணுங்கத்‌ தொடங்க - ப

“பரவாயில்லை.. இவ்வளவு தூரம்‌ வந்திட்டம்‌.. பார்த்திட்டுப்போவம்‌”
என்று சொல்லி அம்மா எங்கள்‌ வயிற்றில்‌ பாலை வார்ப்பார்‌.

அதற்குப்பிறகு அப்பாவின்‌ “மூட்‌” மாறிப்போகும்‌. சற்றுச்‌
சினத்துடனேயே தங்களுக்கு இரண்டு கதிரை ரிக்கெற்றுகளும்‌
(செக்கண்ட்‌ கிளாஸ்‌), தம்பிமாருக்கு அரை ரிக்கெற்றுக்களும்‌ எடுப்பார்‌.
எனக்கு கலரி ரிக்கெற்‌ வேணும்‌ என்று அடம்‌ பிடிப்பேன்‌. திரைக்கு

206 6. எஸ்‌. ப௩ல22% ன்‌


Page 219கிட்ட இருந்தால்‌ வடிவாகப்‌ பார்க்கலாம்‌ என்பது எனது எண்ணம்‌.
திரையில்‌ வரும்‌ நட்சத்திரங்களெல்லாம்‌ தொட்டூவிடும்‌ தூரத்தில்‌
இருப்பார்கள்‌.

என்னிடம்‌ கலரி ரிக்கெற்றைத்‌ தந்து “* நித்திரை கொண்டிடாதை”
என்று சொல்லி அனுப்பி வைப்பார்‌. நான்‌ நித்திரை கொள்ள நினைத்தாலும்‌
கலரி வாங்கில்களில்‌ நிரந்தரமாகத்‌ தங்கியுள்ள மூட்டைப்பூச்சிகள்‌
தொடர்ந்து எனது ஆசனப்பகுதியில்‌ ஊசிபோட்டு நித்திரையைக்‌
குழப்பிக்கொண்டேயிருக்கும்‌ என்பதை அப்பா அறியவில்லை.

படம்‌ ஆரம்பித்து இடைவேளைவரை வலு உசாராக இருந்து
பார்த்துக்கொண்டிருப்பேன்‌. ஆனால்‌ ஒரே ஒரு சங்கதிதான்‌ எனக்கு
அந்தக்‌ காலப்படங்களில்‌ பிடிக்காதது. எடூத்ததுக்கெல்லாம்‌
பாட்டூப்பாடுவது. கவலை வந்தால்‌ பாட்டூ. சந்தோசம்‌ வந்தால்‌ பாட்டு.
நித்திரை கொண்டாலும்‌ கனவில்‌ பாட்டு. விழித்தவுடன்‌ ஒரு பாட்டு.
கதாநாயகன்‌ கதாநாயகியைப்பார்த்து பாடுவார்‌. சிலவேளை
விதிவிலக்காக வில்லனைப்பார்த்துப்‌ பாடியே அவரை சித்திரவதை
செய்வார்‌. (அந்தப்பாட்டை விட சித்திரவதை வேறேன்ன இருக்கப்‌
போகிறது)

இவையெல்லாம்‌ போதாதென்று குதிரையும்‌ ஒரு படத்தில்‌ பாடியது.
அதைப்‌ பார்த்து விட்டூ, தமிழ்ப்பாடச்சோதனையில்‌ - யானை பிளிறும்‌,
சிங்கம்‌ கர்ஜிக்கும்‌, புலி உறுமும்‌ என்ற வரிசையில்‌ குதிரை கனைக்கும்‌.
சிலவேளைகளில்‌ பாடும்‌ என்று எழுதி, ஆசிரியரிடம்‌ அடிவாங்கிய
அனுபவம்‌ எனக்குண்டு.

இந்த ரோதனைகளையெல்லாம்‌ நான்‌ பொறுத்துக்‌ கொண்டிருந்து
இடைவேளை வந்தவுடன்‌ வெளியே ஓடூவது, தியேட்டருக்கு அருகில்‌
உள்ள தேனீர்‌ கடைக்காரர்‌ விற்கும்‌ எண்ணெய்‌ ஊறும்‌ சுண்டல்‌, வடை
அல்லது சூசியம்‌ என்பனவற்றை அப்பாவைக்‌ கொண்டு
வாங்குவதற்காகத்தான்‌.

படங்களில்‌ “கிளைமாக்ஸ்‌” எப்போது வருகின்றதென எங்களுக்கு
அக்கறையில்லை. இந்த சுண்டல்‌, சூசியம்‌ இத்யாதி தின்பண்டங்கள்‌
கைக்கு வரும்காலம்தான்‌ நாங்கள்‌ (நானும்‌, தம்பிமாரும்‌) படத்திற்கு
வந்ததின்‌ “கிளைமாக்ஸ்‌”

சற்றுப்‌ டோ௨ இருக்கறது 207


Page 220இடைவேளைவரைதான்‌ இந்த மூட்டைகளின்‌ தொல்லைகள்‌ எல்லாம்‌.
அதற்குப்‌ பிறகு அவை நித்திரையாகிப்போய்விடும்‌ என்றல்ல. நாங்கள்‌
நித்திரையாகிப்போய்விடுவோம்‌. படம்‌ முடிந்து, வெளிச்சம்‌ வந்ததின்பிறகு,
அம்மா தாங்கி வழியும்‌ தம்பிமாரை தட்டி எழுப்பிக்கொண்டு நிற்க,
அப்பா என்னைத்தேடி கலரிக்கு வந்தால்‌, நான்‌ வாங்கிலில்‌ நட்டி,
நிமிர்ந்து அனாதரவாக படுத்திருப்பேன்‌. “இதுக்கோ.. படம்‌ பார்க்க
வந்தனி”” என்று காசு செலவழிந்து போன கோபத்துடன்‌, “கொறகொற
வென்று இழுத்துக்கொண்டூ போய்‌ வெளியில்‌ விடூவார்‌.

இரண்டாம்‌ காட்சி முடிந்தகையுடனே. சந்தியில்‌ இருந்த வெளிச்சம்‌,
தியேட்டரில்‌ இருந்துதான்‌, அதற்கான மின்சாரம்‌ கிடைப்பதினால்‌
அணைக்கப்பட்டிருக்கும்‌. கும்மிருட்டில்‌ மீண்டும்‌ எங்கள்‌ நடை தொடரும்‌.

நித்திரையில்‌ கால்கள்‌ தடுமாற, நானும்‌ தம்பிமாரும்‌ பாதையை
விட்டு விலகி, அருகில்‌ உள்ள வேலியோரமாகப்‌ போய்‌, அப்பாவின்‌
அதட்டலில்‌ திடுக்கிட்டு, கொஞ்சத்தூரம்‌ நேராக நடப்போம்‌. ஆனால்‌
மறுபடியும்‌, மறுபடியும்‌. .. எப்போது வீடு சேர்ந்தோம்‌ என்று எங்களுக்கே
தெரியாது.

208 ்‌ 6. எஸ்‌. புல22 ஆதன்‌

 


Page 221 

 

 

 

 

209


Page 222210

ஒக்க காலத்தில்‌ பள்ளிக்கூடநாட்களில்‌, எங்காவது
“ரூர்‌” போவது என்பது எங்களுக்கு தரும்‌ சந்தோசத்துக்கு
அளவேயில்லை. “பூமத்தியரேகை” எங்கே என்று கேட்ட
ஆசிரியர்‌ கேள்விக்கு, பதில்‌ தெரியாமல்‌ “கைரேகை'யே
அழிந்துபோகும்‌ அளவிற்கு பிரம்பினால்‌ அடிவாங்குவதற்கு
தற்காலிக ஓய்வு கொடுக்கலாம்‌ என்ற சந்தோசந்தான்‌.

ஒருநாள்‌ காலை முதற்பாடத்திற்கு வழக்கமாக வரும்‌ தமிழ்‌
ஆசிரியர்‌ வராமல்‌, எங்கள்‌ பள்ளிக்கூடக்‌ “கிளாக்கர்‌' பஞ்சர்‌
(பஞ்சு போல நரைத்த தலைக்காரர்‌) - வரும்போதே எங்களுக்கு
ஏதோ அறிவித்தல்‌ வரப்போகிறதென்று தெரிந்துவிட்டது.

பள்ளியில்‌ படிப்பதற்கு, “சம்பளக்காசு” கட்டியகாலம்‌.
கட்டாதவர்களை பெயர்சொல்லி அழைத்து, “பிரின்சிப்பல்‌்‌
அறைக்கு முன்னால்‌, வெயிலில்‌ வரிசையாக
காட்சிப்பொருளாக நிற்கவைத்தலைவிட பெரியதண்டனை
எதுவும்‌ இருக்கமுடியாது.

அதுவும்‌ மற்றவகுப்புகளில்‌ படிக்கும்‌ பெண்பிள்ளைகள்‌
திரும்பி, திரும்பிப்‌ பார்த்துக்கொண்டு போக கூனிக்குறுகி
நிற்கும்‌ அவஸ்தையை தவிர்த்துக்கொள்வதற்காகவே
பள்ளிக்கூடத்திற்கு போகாமல்‌ விட்ட நாட்களும்‌ உண்டு.

அதை நினைத்துக்கொண்டு “வெலவெலத்துப்போப்‌்‌
இருந்த சம்பளக்காசு கட்டாதவர்கள்‌ நான்‌ உள்ளிட்ட)

வயிற்றில்‌ பால்‌ வார்த்ததுபோல, அவர்‌ ஒரு அறிவிப்பு செய்தார்‌.

6. எஸ்‌. ப௩ல272ஆ்தரன்‌


Page 223அடூத்த கிழமை எங்கள்‌ பெரிய ரவுணில்‌ இருக்கிற பள்ளிக்கூடத்தில்‌
நடக்கப்போகிற விஞ்ஞானக்‌ கண்காட்சிக்கு போக விருப்பமானவர்கள்‌
பெயரை தன்னிடம்‌ பதிந்து கொள்ளலாம்‌ என்றும்‌, ஆளுக்கு ஐந்து ரூபா
தரவேண்டூமென்றும்‌ சொன்னார்‌. .கேட்ட மாத்திரத்தே உற்சாகமாக
கையைத்தூக்கினாலும்‌, “ஐந்து ரூபா' சங்கதிதான்‌ உதைத்தது.

சம்பளக்காசுக்கே சாக்குப்போக்கு சொல்லுகிற அப்பா, கண்காட்சியும்‌
வேண்டாம்‌, ஒரு மண்ணும்‌ வேண்டாம்‌ என்று “வீட்டோ்‌ பண்ணிவிடூவார்‌
என்று தெரியும்‌. இருந்தாலும்‌, விதானையார்‌ வீட்டு விளா மரத்தில்‌
“யானைமுகம்‌ தோன்றிய மாதிரி” ஏதாவது அதிசயம்‌ நடக்கும்‌ என்ற
"நம்பிக்கையுடன்‌ எனது பெயரையும்‌ பதிந்து கொண்டேன்‌.

என்னுடைய மொத்தச்‌ சேமிப்பை எத்தனைதரம்‌ கொட்டி
எண்ணினாலும்‌ நாற்பது சதத்தை தாண்டாமல்‌ இருந்தது. எங்கள்‌
பிள்ளையார்‌ கோவிலில்‌ பக்திசிரத்தையுடன்‌, விழுந்து கும்பிட்டு
வேண்டூதல்‌ விட்டேன்‌. பள்ளிக்கூடத்திற்கு போகும்போதும்‌, வரும்போதும்‌
நிலத்தைப்‌ பார்த்தபடி நடந்தேன்‌. யாராவது நாணயக்குற்றியை
கைதவறியாவது போட்டிருப்பார்களா என்ற நப்பாசைதான்‌. ஆனால்‌
எல்லோருமே மிகஜாக்கிரதையாக திரிந்தார்கள்‌.

கண்காட்சிக்கு வருகிறோம்‌ என்று கைதாூக்கியவர்களில்‌
அனேகமானோர்‌ பணம்‌ கட்டிவிட்டு சந்தோசமாக திரிய, நான்‌
ஒவ்வொருநாள்‌ விடியவும்‌, கவலைபபுடன்‌ எழுந்தேன்‌. கவலையுடன்‌ படுக்கப்‌
போனேன்‌. குறிப்பிட்டநாளுக்கு, இரண்டூ நாட்கள்‌ இருக்கும்போது, “பெயர்‌
லிஸ்ற்‌'டோடு வந்த “கிளாக்கர்‌' என்னை ஏளனமாகப்பார்த்து,
விட்டுப்போனது வேறு அவமானமாகவிருந்தது.

அரசர்கள்‌ கூடியிருந்த சபையிலே, அவமானமுற்று தலைகுனிந்த
கர்ணனை அரசனாக்கி நண்பனாக்கிய துரியோதனனைப்போல எனது
வகுப்பு நண்பன்‌ எனக்கு கைகொடுக்க முன்வந்தான்‌. அவனது தகப்பனார்‌
அரிசி மில்‌ வைத்திருக்கிறவர்‌. இவன்‌ தான்‌ மில்லில்‌ நிற்கிற நேரம்‌,
கையாடி ஐந்துரூபா கொண்டூ வந்து ரகசியமாக என்னிடம்‌ ஒப்படைத்தான்‌.
அன்றிலிருந்து நான்‌ அவனுக்கு கொத்தடிமையாக நடக்க நேர்ந்தது
தனிக்கதை.

விஞ்ஞானப்படிப்புக்கு உதவியாகவிருக்கும்‌ என்றபடியால்‌
பள்ளிக்கூடக்கணக்கில்‌ எங்களை கூட்டிக்கொண்டுபோகிறார்கள்‌ என்று

ரோற்றுப்‌ போ௨ இ.ரு&சிறது 211

 


Page 224கணக்கு விட்டு, அப்பாவிடம்‌ கெஞ்சிக்கூத்தாடி, அம்மாவும்‌ தன்பங்குக்கு
“ஓரு விஞ்ஞானி எங்கள்‌ குடூம்பத்திற்கு கிடைக்கும்‌ வாய்ப்பை ஏன்‌
இழக்கச்செய்கிறீர்கள்‌'” என்ற ரீதியில்‌ வாதாடி, எப்படியோ அனுமதியும்‌
கிடைத்தது.

அந்த நாளும்‌ வந்தது. எண்ணெய்‌ வைத்து, நடூஉச்சி புறித்த
தலையுடன்‌, வாசச்சவுக்காரம்‌ போட்டு தோய்த்த வெள்ளைச்‌ சேர்ட்‌
கொலரில்‌, அந்த எண்ணெய்‌ வடிந்து படிவதையும்‌ கவனிக்காமல்‌,
பொங்கலுக்கு தைத்த நீலக்காற்சட்டையுடன்‌ நான்‌ புறப்பட்டேன்‌.

நாங்கள்‌ போகவிருந்த தட்டிவான்‌ வந்து நிற்கவும்‌ ஒரே ஆரவாரம்‌.
கரைப்பக்கமாக இருக்கும்‌ ஆசனங்களுக்காக, தள்ளிவிழுத்திப்‌ போராடி,
கிடைத்த ஆசனத்தை, “துரியோதனனுக்கு நான்‌ கொடுக்கவும்‌
மற்றவர்கள்‌ என்னை ஆச்சர்யமாகப்‌ பார்த்தார்கள்‌. பிறகு பலகாலமாக
அவர்கள்‌ இப்படி ஆச்சர்யமாக பார்க்க நேர்ந்தது.

தட்டிவானின்‌ பக்கத்‌ தட்டிகளில்‌ தட்டிப்பாடிக்கொண்டே போனோம்‌.
எங்களோடூ வந்த மாணவிகள்‌, எங்களோடு சேராமல்‌ தனியாக சுசீலா,
ஜிக்கி பாடிய பாடல்களைப்பாடினார்கள்‌. எங்களில்‌ சிலர்‌, வாத்தியார்‌
கண்டூபிடிக்காமல்‌ இருக்க, குரலை மாத்தி, “மிமிக்றி' வேலைகள்‌
செய்தோம்‌. உற்சாகம்‌ கரை புரண்டோடியது.

கடைசியாக பெரிய ரவுணின்‌ ஒதுக்குப்புறமாக இருந்த அந்தப்‌
பள்ளிக்கூட வாசலில்‌ நின்றபோது, எங்கள்‌ உற்சாகம்‌
வற்றிப்போய்விட்டது. ஜேஜே என்று கூட்டம்‌ நிற்கும்‌ என்று
எதிர்பார்த்திருந்தோம்‌. வாசல்‌ வெறிச்சிட்டிருந்தது. வாசலில்‌ நின்றவர்‌
எங்களை ஆதிவாசிகளைப்‌ பார்ப்பதுபோலப்பார்த்து தலைக்கணக்கு
எண்ணி உள்ளே அனுமதித்தார்‌.

நடுவில்‌ இருந்த பெரியமைதானத்தைச்‌ சுற்றியிருந்த அரைவட்டத்தில்‌
வகுப்பறைகளில்‌ தான்‌ கண்காட்சி. மந்தையை வழிநடத்துவது மாதிரி
எங்கள்‌ வாத்தியார்‌ எங்களை நடத்திச்‌ சென்றார்‌. கழுத்துப்பட்டிகள்‌
கட்டிய ரவுண்பள்ளிக்கூட மாணவர்களும்‌, மாணவிகளும்‌ குழாய்களோடுூம்‌,
குடுவைகளோடூம்‌ நின்று லெக்சர்‌ அடித்துக்கொண்டிருந்தார்கள்‌.
குடுவைகளிலிருந்து அழுகிய முட்டையின்‌ வாசம்‌ மாதிரி வந்தது.
மூக்கைப்பொத்திக்கொண்டுூ நடந்தோம்‌.

212 62. எஸ்‌. பகல2-சஆ்த்றன்‌


Page 225ஒரு இடத்தில்‌ அந்தரத்தில்‌ தண்ணீர்குழாயின்‌ முகப்புப்பகுதி மட்டும்‌
தொங்கவிடப்பட்டிருந்தது. அதிலிருந்து “சோ”? வென்று தண்ணீர்‌ கொட்டி,
கீழிருந்த தொட்டியை நிரப்பியது. தண்ணீர்‌ எங்கிருந்து வருகிறது என்ற
யாரோ கேட்ட கேள்விக்கு, காற்று மண்டலத்திலிருந்து தண்ணீரை
உறிஞ்சித்தருகிறது என்று நமுட்டூச்சிரிப்புடன்‌ விளக்கம்‌ சொன்னார்கள்‌.
எங்கள்‌ பள்ளிக்கூடத்தில்‌ தண்ணீர்‌ பைப்பில்‌ திறந்தால்‌ அனேகமாக
காற்றுத்தான்‌ வரும்‌. இப்படியொன்றிருந்தால்‌ எவ்வளவு நல்லது என்று
“குசுகுசு'த்துக்கொண்டோம்‌.

இதற்கிடையில்‌, எங்களுக்குள்‌ ஒரு புத்திசாலி, தாரையாக கொட்டும்‌
தண்ணீருக்கு குறுக்கே விரலைக்கொண்டுூ போக, கீழிருந்து மேலே
தண்ணீரைக்கொண்டு போன கண்ணாடிக்குழாய்‌ சரிந்து ரகசியத்தை
உடைத்து விட்டது. தொட்டியிலிருந்து தான்‌ தண்ணீர கண்ணாடிக்குழாயின்‌
ஊடாக மேலே போய்வந்தது என்று நாங்கள்‌ சொல்லி கைகொட்டிச்‌
சிரிக்க, விளக்கமளித்தவர்‌ எங்களை விரட்டினார்‌.

இன்னுமொரு அறையில்‌ வைத்திருந்த சின்ன புகையிரதப்பாதையில்‌
ஒடிய சின்ன புகையிரதத்தை நீண்டநேரமாக பார்த்துக்‌ கொண்டே
நின்றோம்‌. சின்னப்பாலத்தின்‌ மேலாக ஓடி, சின்ன சிக்னல்‌ விழக்‌
காத்திருந்து, சின்னக்‌ குகைக்குள்‌ நுழைந்து வெளியே வந்து ஓடியது.
அதன்‌ அருகில்‌ நின்றவர்களை கிரகாம்‌ பெல்லைப்‌ பார்ப்பது போல
மரியாதையுடன்‌ பார்த்துக்கொண்டோம்‌. பலகாலத்துக்குப்பிறகுதான்‌, அந்த .
புகையிரதச்செற்‌ முழுவதுமே, யாரோ வெளிநாட்டிலிருந்த சொந்தக்காரர்‌
அனுப்பியதை காட்சிக்கு வைத்திருந்தார்கள்‌ என்று தெரியவந்தது.

அடுத்த அறையில்‌, ஒரு முழு மனித எலும்புக்‌ கூடு நிற்க, அருகில்‌
நின்ற மாணவி, எந்தவித பயமுமின்றி, தடியால்‌ ஒவ்வொரு எலும்பாக
தட்டி விளக்கம்‌ சொன்னார்‌. எலும்புக்கூடு சற்று அசைவதுபோலத்‌
தெரியவும்‌, திரும்பியும்‌ பாராமல்‌, தள்ளிவிழுத்திக்கொண்டு ஓடினோம்‌.
அதன்பின்‌ நீண்டநாட்களாக அந்த எலும்புக்கூடு கனவில்‌ எங்களை
கால்‌ புதையும்‌ புழுதிக்கூடாகத்‌ துரத்தியது.

எங்கள்‌ கிராமத்துப்‌ பெண்பிள்ளைகள்‌ வான்‌ ( விண்ணில்‌ பறந்து
போய்‌ அல்ல - வான்‌ என்பது தரைவாகனம்‌) ஏறிப்போய்‌ படிக்கும்‌
அடுத்த ரவுண்‌ பள்ளிக்கூடத்திலிருந்தும்‌ காட்சிப்பொருட்கள்‌ கொண்டு
வந்திருந்தார்கள்‌. எங்களை வழக்கத்தில்‌ மண்புழுக்களைப்போல
பார்ப்பவர்கள்‌. இன்று யாரும்‌ வராத ஒதுக்குப்புறமான

சேற்றுப்‌ டோ௨ இருக்கிறது 213


Page 226வகுப்பறையொன்றில்‌, (அவர்கள்‌ சொல்வதைக்‌) கேட்பாரற்று
காய்ந்துபோய்‌ நிற்பதைப்பார்க்க சந்தோசமாக இருந்தது.

இருந்தாலும்‌, நாங்கள்‌ அடிக்கடி போய்‌, உடல்நலம்‌ பற்றிய
கேள்விகளை அக்கறையாகக்‌ கேட்டோம்‌. (ஆமாம்‌.. அதுபற்றிய
காட்சிப்பொருட்களைத்தான்‌ வைத்திருந்தார்கள்‌) அவர்களும்‌ மனப்பாடம்‌
செய்து வைத்திருந்த பதில்களை வேண்டாவெறுப்பாகச்‌ சொன்னார்கள்‌.

நம்ம “துரியோதனனின்‌” வற்புறுத்தலில்‌ நானும்‌ ஒரு கேள்வி
கேட்டேன்‌.

“ஒரு நாளைக்கு நாங்கள்‌ எத்தனை தரம்‌ குளிக்க வேண்டும்‌? “

எங்கள்‌ ரோதனைக்கு முற்றுப்புள்ளிவைப்பது போல, காட்டமாக
பதில்‌ வந்தது.

“நீர்‌ ஒரு மாசத்திலை ஒரு நாளாவது குளிக்கவேண்டும்‌.”

பதிலைக்கேட்டு “ஹோ' வென்று சிரித்தவர்களிடையே
“துரியோதனனும்‌” இருந்ததுதான்‌ எனக்குக்‌ கோபம்‌.

அடுத்து நடந்ததுதான்‌ உச்சம்‌. கடைசியில்‌ இருந்த வகுப்பறையில்‌,
நீண்ட மேசையில்‌ ஒருவர்‌ படுத்திருந்தார்‌. குறட்டை பலமாக
ஒலித்துக்கொண்டிருந்தது. அருகில்‌ யாரும்‌ இல்லை. அவரைக்‌
காட்சிப்பொருளாக்கி, கையில்‌ அகப்பட்ட தடியொன்றினால்‌ தொட்டு,
தலையிலிருந்து விளக்கம்‌ சொல்லி கால்‌ வரை வரும்போது அவர்‌
விழித்துக்கொண்டார்‌. அதற்குப்பிறகுதான்‌, அவர்‌, அந்தப்பள்ளிக்கூட
காவல்காரர்‌ எங்களை துரத்தத்தொடங்கினார்‌.

அன்று அவரிடம்‌ அகப்படாமல்‌ தப்பினாலும்‌, பின்னொரு
பள்ளிக்கூடநாளில்‌, யாரே “வத்தி' வைத்துவிட நானும்‌, இன்னும்‌
ஒருவனும்‌, எங்கள்‌ தலைமைஆசிரியரிடம்‌ “பகிரங்க பிரம்படி வாங்கி
“தாட்சிப்பொருட்களாக” நேர்ந்தது.

மற்றவர்‌. நம்ம “துரியோதனன்‌ தான்‌.

“4

214 6ஃ. எஸ்‌. ப௩ல22ஆதன்‌

 


Page 227 

 

 

 

 

 

 

 

டடரணா௪ச்‌ வருத்தும்‌


Page 228216

ஒக சற்றே மீசை அரும்பிய காலம்‌. மீசை
அரும்பியதை கண்டூபிடித்ததே என்‌ வகுப்பு நண்பர்கள்தான்‌.
நாங்கள்‌ பள்ளிக்கூடத்தில்‌ தண்ணீர்‌ குடிக்கும்‌ பைப்பில்‌
குனிந்து கையேந்தி நீர்‌ குடித்து நிமிரும்போது, ஈரமான
மேலுதட்டில்‌ படிந்த “பிஞ்சு” க்‌ கேசங்களின்‌ தொகுப்பு
அவர்களுக்கு காட்டிக்கொடுத்து விட்டது.

“டட... இவனுக்கு மீசை வந்திருக்கடா..” என்று
கூச்சலிட்டார்கள்‌.

அவசரமாக உதட்டின்‌ ஈரத்தை துடைத்துக்கொண்டாலும்‌,
அதை உறுதிப்படூத்தவேண்டுமென்ற எண்ணத்துடனேயே
வீட்டுக்கு செல்லும்‌ நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன்‌.
பள்ளிக்கூடத்தில்‌ இருந்து வீட்டூக்கு போனதும்‌,
முதல்வேலையாக அறைக்குள்‌ இருந்த கண்ணாடியில்‌
பார்த்தேன்‌. அவர்கள்‌ சொன்னது உண்‌ மைதான்‌.
வியர்த்திருந்த மேல்‌ உதட்டில்‌ மங்கலாக தெரிந்தது.

அதற்குப்‌ பிறகு கொஞ்சம்‌ கொஞ்சமாக எனது நடை,
உடை. பாவனைகள்‌ மாறிக்கொண்டே போயின. கண்ணாடிக்கு
முன்னால்‌ அதிகநேரம்‌ செலவழித தேன்‌.
சினிமாப்புத்தகங்களில்‌ நடிகர்களின்‌ உடூப்புகளில்‌,
சிகையலங்காரங்களில்‌ எனது கவனம்‌ சென்றது.

இரட்டைப்பின்னல்‌ ஈஸ்வரியின்‌ அண்ணன்‌ எனக்கு
நண்பனாகிப்‌ போனான்‌. காரணங்களை உருவாக்கிக்கொண்டுூ

6ஃ. எஸ்‌. ப௩ல22ஆன்‌


Page 229அவனிடம்‌ அடிக்கடி போனேன்‌. விறாந்தையில்‌ இருந்த கதிரைகளில்‌
இருந்து படிப்பு, கிரிக்கெற்‌ என்று பலவற்றையும்‌ கதைத்தோம்‌.

ஒரு மெல்லிய உருவம்‌ அறைக்கும்‌, குசினிக்குமாக நடைபோடூவதை
கண்டாலும்‌ காணாததுபோல பாவனை செய்தேன்‌. எப்பொழுதாவது
அரிதாக ஒரு புன்னகை என்‌ பக்கம்‌ வீசப்படுவதை எதிர்பார்த்து
காத்திருந்தேன்‌.

(என்ன இது.. அம்மாளாச்சி வருத்தம்‌ என்றுவிட்டு எதையெல்லாமோ
சொல்கிறீர்களே.. என்று யோசிக்கிறீர்களா..? கவலையை விடூக..)

எங்கள்‌ ஊரில்‌ பொக்குளிப்பான்‌, சின்னமுத்து போன்ற நோய்கள்‌
வந்தால்‌ “அம்மாளாச்சி வருத்தம்‌” வந்துவிட்டதாகச்‌ சொல்வார்கள்‌.
இந்த வருத்தங்கள்‌ வந்துவிட்டால்‌, நோயுற்றவர்களை மற்றவர்களுக்கு
தொற்றாவண்ணம்‌, ஒதுக்குப்புறமாக விட்டூ விடூவார்கள்‌.

நான்‌ முன்னர்‌ குறிப்பிட்ட நாட்களில்‌, எனக்கு “அம்மாளாச்சி வருத்தம்‌'
எப்படியோ வந்துவிட்டது. எங்களுக்கு பழைய வீடு ஒன்றிருந்தது.
ஓலையால்‌ வேய்ந்த வீடு, குளிராகவிருக்கும்‌ என்பதோடூ யாரும்‌ அங்கு
இருப்பதில்லை என்பதாலும்‌ என்னை அங்கே படூக்கவிட்டார்கள்‌. எனக்கு
துணையாக அம்மம்மா அங்கே இருந்தா.

வெய்யில்‌ காலத்தில்‌ உடம்பெல்லாம்‌ தீப்பற்றி எரிவதுபோல
இருக்கும்‌. சில நாட்கள்‌ அம்மம்மாவின்‌ வேப்பிலை விசிறலால்‌ சற்று
ஆறுதல்‌ கிடைக்க, அங்கே படூத்திருந்தேன்‌.

நோயின்‌ சின்னங்கள்‌ முற்றாக மாறியபின்னர்‌ குறிப்பிட்ட

நாட்கணக்கில்‌ முழுக்கு, குளிப்பு - அதுவும்‌ எங்கள்‌ ஊர்‌
அம்மன்கோயிலின்‌ அருகிலுள்ள வயற்கிணற்றில்‌ அதிகாலையில்‌ தான்‌
நடக்கும்‌.

இவையெல்லாம்‌ நிறைவேறிய பின்னர்‌, அம்மா ஒரு குறிப்பிட்ட
நாளில்‌ காலையில்‌ முழுகி, விரதமிருந்து எங்கள்‌ உறவினர்‌ வீடுகளின்‌
வாசல்களில்‌ நின்று, “அம்மாளாச்சிக்கு பிச்சை போடூங்கோ்‌ என்று
மடிச்சீலையில்‌ அரிசி முதலானவற்றை தானமாகப்பெற்று (மடிப்பிச்சை
என்று சொல்வார்கள்‌), அவற்றை கொண்டுபோய்‌ அம்மன்கோயிலில்‌
பொங்கிப்படைத்து, அம்மனைக்‌ கும்பிட்டு வருவதாக ஏற்பாடு. இதுவே
வழக்கம்‌.

சற்றுப்‌ டோ௨ூ இ.ருகசவிறது 217

 


Page 230இதற்கு இரண்டூ மூன்று நாட்கள்‌ இருந்தன. நோய்‌ காரணமாக
நீண்டநாட்களாக எங்குமே போகாதது அலுப்பாகவிருந்தது. உடம்பில்‌
சிறிது பலம்‌ வந்தபின்‌ ஒருநாள்‌ “அவர்கள்‌” வீட்டிற்கு போகவேண்டூமென்ற
“தவனம்‌” (விருப்பம்‌) வந்தது.

அதற்கு அம்மாவிடமிருந்தோ, அம்மம்மாவிடமிருந்தோ அனுமதி
கிடைக்காது என்று நிச்சயமாகத்தெரியுமாதலால்‌, சற்று இரவாகியபின்னர்‌,
அம்மம்மா உறங்கியபின்னர்‌ ரகசியமாகப்‌ போவதாகத்‌ தீர்மானித்து
படுத்திருந்தேன்‌.

அன்றைக்குப்‌ பார்த்து அம்மம்மாவுக்கு உறக்கம்‌ வரவில்லை. ஏதோ
கதைகள்‌ சொல்லிக்கொண்டேயிருந்தா. வழக்கத்தில்‌ அவவின்‌
சுவையான கதைகளுக்கு, “ம்‌ கொட்டிக்கொண்டு சுவாரஸ்யமாக
கேட்டூக்கொண்டிருப்பேன்‌. உண்மையில்‌ அவை சுவாரஸ்யமானவைதான்‌.

ஆனால்‌ அன்று எனக்கு இருந்த மனநிலையில்‌, மூச்சும்‌ விடாமல்‌
படுத்திருந்தேன்‌. என்னிடமிருந்து எந்தவிதமான அசுகையும்‌ (பதில்‌ -
அசைவ) இல்லாத நிலையில்‌, அவ நான்‌ உறங்கிவிட்டேன்‌ என்று
நினைத்திருக்கவேண்டூும்‌. எனது நோயின்‌ ஆக்கல்‌, சுகப்படூத்தல்‌
இரண்டினுக்கும்‌ பொறுப்பாக இருப்பதாக நம்பும்‌ “அம்மாளாச்சி“யை
ஒருமுறை அழைத்துவிட்டு உறங்கப்போய்விட்டா.

மெதுவாக எழுந்து, நான்‌ படுத்திருந்த இடத்தில்‌, தலையணையை
நீட்டுக்கு வைத்து, போர்த்துவிட்டு, இதற்காகவே பகலே எடுத்து
வைத்திருந்த சேர்ட்டைப்போட்டுக்கொண்டு முற்றத்தில்‌ கால்வைக்க,
கும்மிருட்டாக இருந்தது. நேரம்‌ என்னவென்று தெரியவில்லை.

தூரத்தில்‌ எங்கோ, “டாங்‌..டாங்‌' என்று பன்னிரண்டூமுறை அடித்து
ஓய்ந்தது. நேரம்‌ நடூச்சாமமாகிவிட்டது என்பதை அது உணர்த்தியது -
போன்ற துப்பறியும்‌ கதைகளில்‌ வரும்‌ சங்கதிகள்‌ ஒன்றும்‌ எங்கள்‌
குக்கிராமத்தில்‌ இல்லை. யாராவது ஒழுங்காகப்‌ படிக்கின்ற
பிள்ளைகளின்‌ வீடுகளில்‌. “கிர்ர்ர்‌' என்று ஒலியெழுப்பும்‌ சின்ன “அலாரம்‌
மணிக்கூடூ”, அதுவும்‌ அரிதாகத்தான்‌ இருக்கும்‌.

முற்றத்தில்‌ நின்றுகொண்டு நேரத்தை யூகிக்கமுனைந்த நான்‌,
சாமத்தை அண்மித்துக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து, அன்றைய
திட்டத்தை கைவிட்டு, வீட்டிற்குள்‌ திரும்ப ஒருகணம்‌ நினைத்தாலும்‌,
நெஞ்சுக்குள்‌ இருந்த “குட்டிப்பிசாசு' போகச்சொல்லி ஏவியது.

218 6ஃ. எஸ்‌. ப௩ல2ரன்‌

 


Page 231இருளுக்குள்‌ நடந்து, எங்கள்‌ கோயிலின்‌ தெற்குவீதியின்‌ வெள்ளை
மணலுக்குள்‌ கால்‌ புதைய நடந்து சென்றேன்‌. ஊரே உறங்கிவிட்டது.
அவர்களும்‌ உறங்கிப்போயிருக்கலாம்‌ என்றாலும்‌, அவர்கள்‌ வீட்டுக்கேற்‌
வரை சென்று, அதை உறுதிப்படூத்தினால்தான்‌ மனம்‌ நிம்மதியடையும்‌
போலிருந்தது.

அப்படியே போய்‌ அவர்களின்‌ வீட்டுக்கேற்றடியில்‌ நின்றேன்‌.
விறாந்தையும்‌, அதில்‌ “தணித்து” (ஒளி குறைத்து) வைக்கப்பட்ட 'லாம்பு“ம்‌
தெரிந்தது. யாரோ படூத்திருந்தார்கள்‌. அவர்களின்‌ தகப்பனாக இருக்கலாம்‌.

தமிழ்த்திரைப்படங்களில்‌ நடிக, நடிகையரின்‌ உருவத்திலிருந்து
மனச்சாட்சி பிரிந்து புறப்பட்டு, வேறாக நின்று, வாதாடூவதாகக்‌
காட்டூவார்களே.. அதுமாதிரி மனதிற்குள்‌ பட்டிமன்றம்‌ நடந்தது. தீர்ப்பு
சொல்வதற்கிடையில்‌ கேற்றில்‌ கை வைத்து விட்டேன்‌. அது
தன்னிச்சையாகத்திறந்து கொண்டது.

அவர்கள்‌ முற்றத்தில்‌ கால்வைத்து, என்‌ நண்பனை (ஈஸ்வரியின்‌
அண்ணனை) அழைப்பதா அல்லது பேசாமல்‌ திரும்பிப்போவதா என்று
யோசித்துக்கொண்டிருந்த எனக்கு ஒரேயொரு - விஷயம்‌ தெரியாமல்‌
போய்விட்டது. அதாவது நான்‌ நோயுற்று இருந்த ஒரு மாத
இடைவெளிக்குள்‌ அவர்கள்‌ “பெரிய்யயய” நாய்‌ ஒன்றை வளர்க்கத்‌
தொடங்கிவிட்டார்கள்‌

- நினைக்க முடிக்க பாய்ந்து வந்து எனது தொடையைக்‌ கவ்வியது.
திமிறினேன்‌. கழுத்தில்‌ பிடித்துத்‌ தள்ளினேன்‌. அது அழுங்குப்பிடியாப்‌
இருந்தது. பெலத்து கத்தி யாரையாவது ௯ூப்பிட்டிருக்கலாம்‌. அண்டை,
அயல்‌ எல்லாம்‌ நித்திரை கலைந்து ஓடிவந்து, “ஏன்‌ தம்பி..இந்த
நேரத்தில்‌ இங்கே வந்தனீ ...?” என்று கேட்டுத்தொலைக்க, அதற்கு
பதில்‌ தேடும்‌ சிரமத்தை நினைத்து, நானும்‌, நாயும்‌,
திமிறலைத்தொடர்ந்தோம்‌.

யாரோ கேற்றைத்‌ திறந்துகொண்டூ வெளியில்‌ இருந்து வந்தார்கள்‌.
அது அவர்களின்‌ உறவுக்காரன்‌. ஈஸ்வரிக்கு ஒன்றுவிட்ட அண்ணன்‌
முறை. எட்டி நாய்க்கு விட்ட உதையில்‌ நாய்‌ ஈனஸ்வரத்துடன்‌ என்‌
காலைவிட்டது. அடூத்த உதை நேரங்கெட்டநேரத்தில்‌ “பெண்‌ புரசுகள்‌”
(புரசுகள்‌ என்றால்‌ என்ன?) இருக்கும்‌ வீட்டிற்கு வந்த எனக்குத்தான்‌
என்று நினைத்தவேளையில்‌, வீட்டிந்கு உள்ளிருந்து யாரோ
கைவிளக்குடன்‌ வந்தார்கள்‌. அது தாய்‌.

கற்றுப்‌ டோ௨ இருக்கறது 219

 


Page 232“என்ன தம்பி..நாய்‌ கடிச்சுப்போட்டுதே'” என்று கேட்டகேள்விக்கு,
“சாடையாக நகம்‌ கீறிவிட்டது'” என்று பதில்‌ சொல்லி அவசரமாக
புறப்பட்டேன்‌. “பார்ப்பம்‌”? என்று கேட்டு, ஏறக்குறைய “புறாவுக்காக
தன்தொடைச்சதையை கொடுக்க முற்பட்ட சிபிச்‌ சக்கரவர்த்தி யின்‌
நிலையில்‌ நான்‌ நிற்பதை அவர்கள்‌ கண்டுகொள்ள விடாமல்‌, ஏதோ
சொல்லி நான்‌ புறப்பட, அந்தவீட்டுப்‌ புறா, மெதுவாக வந்து தாயின்‌
பின்னால்‌ நின்று பரிதாபமாக என்னைப்‌ பார்ப்பதை கால்வேதனைக்கு
மத்தியிலும்‌ கவனிக்கத்தான்‌ செய்தேன்‌.

என்‌ வீட்டூக்காரருக்கு, குறிப்பாக அம்மம்மாவுக்கு என்ன
சொல்லப்போகிறேன்‌ என்ற சிந்தனையுடன்‌ நடந்தேன்‌. எங்கள்‌ வீட்டுக்‌ கேற்றை
ஒலியெழுப்பாமல்‌ திறந்து உள்நுழைந்தேன்‌. அம்மம்மா நித்திரை கலைந்து
என்னைக்காணவில்லை என்று பார்த்திருப்பதை தெரிந்து கொண்டேன்‌.
அவ கேட்பதற்கு முதல்‌ நான்‌ முந்திக்கொண்டேன்‌.

“ ஓும்மம்மா.. பின்வளவுக்கு போனன்‌.. அங்கை படுத்திருந்த நாயிலை
மிதிச்சு விட்டன்‌. அது கடிச்சுப்போட்டூது” என்று பட்டினியால்‌ மெலிந்து
போய்‌, நடக்கவும்‌ பெலமில்லாமல்‌ திரிந்த ஒரு அனாதை நாய்‌ மேலே
வீண்பழி சுமத்தினேன்‌.

ஒன்றுமறியாத அந்த அப்பாவி நாயைத்‌ திட்டிக்கொண்டே, அம்மம்மா
துணியால்‌ காயத்துக்கு கட்டிவிட்டு, விடியும்‌ வரை, ஏதோ சொல்லி
அரற்றிக்‌ கொண்டிருந்தா. அவவின்‌ கவலை என்னவென்றால்‌,
 ஒம்மாளாச்சி வருத்தம்‌” வந்து, சுகமாகும்போது, தயிர்‌ போன்ற குளிரான

சாப்பாடுகள்‌ கொடுப்பது வழக்கம்‌. ஆனால்‌ நாய்க்கடிக்கு குளிரானவை -

கண்ணிலிலேயே காட்டக்கூடாது. தன்னுடைய அருமைப்பேரனுக்கு இப்பிடி
ஒரு நிலை வந்துவிட்டதே என்று, “லும்மாளாச்சி/யை துணைக்கு
அழைத்துக்கொண்டு படுத்திருந்தா.

அடுத்தநாள்‌ காலை சேதியறிந்த அம்மா, அப்பாவும்‌
கலங்கிப்போனார்கள்‌. என்‌ தம்பிமார்கள்‌, நான்‌ மறித்தும்‌ கேட்காமல்‌,
கண்ணில்‌ பட்ட தெருநாய்களுக்கு கல்லால்‌ எறிந்து விரட்டி திரிந்தார்கள்‌.
நெஞ்சம்‌ குறுகுறுக்க, நான்‌ நல்லபிள்ளை மாதிரி, மூச்சு விடாமல்‌
இருந்து விட்டேன்‌.

நேற்றுப்போல இருக்கிறது...

ஒட

220 62%. எஸ்‌. பால22ஆதரன்‌

ஷி


Page 233 

 

 
 

 

 

க ்‌ ப ச
்‌ 5 சு
6
ர்‌
॥
ச்‌
, .
்‌ ப
-. ்‌ ॥ ்‌ க
.
9
! க
ட்ட)
ப
[து 2 ௬ வடு
௩ | )
ட்ட
்‌ வம்‌
| ்‌.
வ
|
( ரக
ல்‌ ்‌ ்‌ பது!
ரி ்‌
ச ட ச
்‌ ஸ்ர
., ப்ப ்‌ வ பி
ர. உ ்‌ ்‌ ்‌, ட
பூ ்‌

ச ம |

௩ "1

்‌ . ம்‌
॥ - ்‌ . த]
! 1 ர , ்‌
ச ்‌ ட்ட கட்ட்்்ப
்‌்‌ ரு ட்‌ | ு
. டட .
்‌ ல்‌ ்‌ ௭. ்‌ இத , ட. டேப்‌
% ட்டு
ச்‌ ச ॥ ॥

 

 

 

்‌ ்‌ ்‌
சீ கவல அடை புஜர கிவடநமுவ்‌ த வவவதம ர
. அ

ச பச்‌

 

 

 

     

ஸ்ர
பஹ டி

 

நரகக்‌ காட்டை டைய ட ஸர்வ ஓடகர னி பங ரி, ககிப்ம

 

 

%
த டட ர ர. டி
11 வ்கி வி ஒட்ட / க கடவ


Page 234 

மித்கிவளைநி இலங்கை

    
  
      
 
 

 

1584: 978-955-0210-05-3 ட
| | ரு
|
| பச
வயி

ண்டைரமமமேல அறா அணை