கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எனது நோக்கில் இலங்கைப் பாராளுமன்றம்

Page 1

- 氫,量 髻、笹, 宗

Page 2


Page 3

எனது நோக்கில் இலங்கைப் பாராளுமன்றம்
செல்லப்பா நடராசா சிரேஷ்ட ஹன்சாட் அறிக்கையாளர்
பாராளுமன்றம் கோட்டே
கொழும்புத் தமிழ்ச்சங்க வெளியீடு கo 1986

Page 4
நூல்: எனது நோக்கில் இலங்கைப் பாராளுமன்றம்
ஆக்கியோன் பெயர்: செல்லப்பா நடராசா
வெளியீடு கொழும்புத் தமிழ்ச் சங்கம்
இல, 7, 57ஆவது ஒழுங்கை கொழும்பு - 6, இலங்கை தொலைபேசி 588759
முதற் பதிப்பு : ஒக்ரோபர் 1986
அச்சுப் பதிவு திருமகள் அழுத்தகம், சுன்னுகம் பதிப்புரிமை ஆக்கியோனுக்கு உரியது பக்கங்கள் * Xνi - 148
கட்டுரைகள் : 20
விலை : ரூபா 25|-
TTLE: ENATHU NOKKL ILANKAIP PĀRĀLUMANRAM
Author : Sellappah Nadarajah Publisher : Colombo Tamizh Sangam
No. 7, 57th Lane, Colombo 6, Sri Lanka
y Tel. 583759
First Edition: October 1986,
Printer : Thlrumakal Press, Chunnakam
Copyright : Author
Pages : xvi -- 148
Essays : 20
Price : Rs. 25

பொருளடக்கம்
வெளியீட்டுரை
முன்னுரை
FOREWORD
நயப்புரை
விமரிசன உரை
முதற் கூட்டமும் சபாநாயகர் தெரிவும் மாண்புமிகு சபாநாயகர் w சபாநாயகரின் தீர்ப்புகள்
செங்கோல் சம்பிரதாயங்களும் மரபுகளும் சிறப்புரிமைகள் மாதிரிக்கொரு கூட்டம் வரவு செலவுத் திட்ட விவாதம் வெள்ளை அறிக்கைகள்
சட்டவாக்கம் கூட்டத் தொடர் நடைமுறைகள் குழுக்களின் மூலம் சில செயற்பாடுகள்
. செந்தமிழும் சிங்களமும்
உறுப்பினர்களது நகைச்சுவை
பாராளுமன்றத்தில் வள்ளுவன், கம்பன், பாரதி விவாதங்களில் அறம், பொருள், இன்பம்
பல்சுவை கொழும்பு இராசதானியில் கோட்டே இராசதானியில் ஹன்சாட்
02
10
117 132
137
43

Page 5
h a b Y. வெளியீட்டுரை
பயன் உள்ள பழைய தமிழ் நூல்களையும் புதிய தமிழ்
நூல்களையும் வெளியிடுதலைக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் தன் பிரதான பணிகளுள் ஒன்ருக ஏற்றுள்ளது. அதனல் செய்யுள் - உரைநடை - வரலாறு - சிறுகதை - சிறுவர் கதை ஆகிய துறைகளுக்குரிய நூல்களை வெளியிட்டுள்ளது. இப்போது திரு. செல்லப்பா நடராசா அவர்கள் எழுதிய * எனது நோக்கில் இலங்கைப் பாராளுமன்றம்" என்னும் சமூக இயல் நூலை வெளியிடுகிறது.
இன்று மக்கள் வாழ்வில் பாராளுமன்றம் பிரதான இடத்தைப் பெற்றுள்ளது. பாராளுமன்றத்தின் மரபுகளையும் நடைமுறைகளையும் இந் நூலாசிரியர் மிக்க இலக்கியச் சுவை யோடு எழுதியுள்ளார். இவர் எழுத்தாற்றலும் இலக்கிய ஆர்வமும் பாராளுமன்றத்திற் பல்லாண்டு பணி புரிந்து பெற்ற மிக்க அநுபவமும் உள்ளவர். இந் நூலின் மூலம் இவர் புதியதோர் இலக்கிய அமைப்பைத் தோற்றுவித்துச் சமூக உயர்வுக்கும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் வழி வகுத் துள்ளார்.
பாராளுமன்ற நடைமுறைகளை உணர்த்துவதோடு தமிழ் இலக்கியத்தின் பயன்பாட்டை உணர்த்தித் தமிழ் இலக்கிய நூல்களைக் கற்கும் ஆர்வத்தையும் ஊட்டுகின்ற இந் நூல் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் கற்றற்கு உரியது. மாணவர்க்கும், வளர்ந்தவர்க்கும் பயன் உள்ள நூல். கல்வி நிலையங்களிலும் சனசமூக நிலையங்களிலும் நூலகங் களிலும் இருக்கவேண்டிய நூல். தமிழ் உலகு இந் நூலை உவந்தேற்றுத் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமிழிலக்கிய வளர்ச்சிக்கும் உதவுவ்தோடு தமிழ்ச் சங்க வளர்ச்சிக்கும் ஆதிரவு தருவதாக
சங்க அகம் க. இ. க. கந்தசுவாமி 7, 57ஆம் ஒழுங்கை கெளரவ பொதுச் செயலர்
கொழும்பு 6 கொழும்புத் தமிழ்ச் சங்கக்
01-04-1986

முன்னுரை
இலங்கைப் பாராளுமன்றம் பற்றி யான் கட்டுரைகள் எழுத ஆரம்பித்ததற்குக் காரணங்கள் பல. LITTmSig மன்றத்திற் கடமையாற்றத் தொடங்கிய காலத்தில் சாதாரண பொதுமக்கள், மாணவர்கள், நண்பர்கள் எல் லோரும் பாராளுமன்றம் சம்பந்தமான பல விடயங்களைக் கேள்விகள் தொடுத்துக் கேட்டறிவார்கள். பத்திரிகைகளிற் கட வெளிவராமல் இருக்கக்கூடிய தகவல்களை அறிவதும்
அவர்களது நோக்கமாக இருந்தது. ** பாராளுமன்றம் வெறுமனே ஒரு சட்டமன்றம் அங்கு எப்பொழுதும் சூடான வாதப் பிரதிவாதங்கள் நிகழும்; எதிர் எதிர்
அணிகளைச் சார்ந்தவர்கள் அடிக்கடி ஒருவரை ஒருவர் எதிர்த்துக்கொண்டும் கோபித்துக்கொண்டுமே இருப்பார் கள். இப்படியான ஒரு தாபனத்தில் கடமை புரிவதும் பற்பல அநுபவங்களுக்கு உட்பட்டதாகவே இருக்கும் " என்ற உள்ளக்கிடக்கை அவர்களிடத்தில் மேலோங்கி நின்றதை நான் உணர்ந்ததுண்டு. ஆஞல், பொது மக்கள் பலரது கருத்துக்களுக்கு மாருகப் பாராளுமன்றத்தில் பல நிகழ்ச்சிகளை அன்ருடம் உணரத் தலைப்பட்ட எனக்கு அவற்றைப் பத்திரிகைகள் மூலம் அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உதிக்கலாயிற்று. இதன் விளைவாகவே பாராளுமன்றம் பற்றிய எனது கட்டுரைத் தொடர் ஆரம்பித்தது.
'மெழுகுதிரி வெளிச்சத்தில் நிகழ்ந்த பாராளுமன்றக் கூட்டம்" என்ற தலைப்பில் எனது முதலாவது கட்டுரை 1964ஆம் ஆண்டில் " தினகரன்" வாரப்பத்திரிகையில் பிரசுரமாயிற்று இக் கட்டுரையைச் சுவைத் தகவல்களைக் கொண்டதாகவே எழுதின்ேன். தினகரன்' பத்திரிகை

Page 6
vi
அலுவலகத்தில் 1954ஆம் ஆண்டு முதல் 1960ஆம் ஆண்டு இறுதிவரை கடமையாற்றியபோது அரசியல், இலக்கியம், நகைச்சுவை என்னும் பல்வேறு துறைகளிலும் எழுதிப் பயிற்சி பெற்ற அநுபவமும் என்னைத் தொடர்ந்து எழுதத் தூண்டியது. ** பாராளுமன்ற விவாதங்களில் தமிழ் இலக் கியச் சுவை ", "நகைச் சுவை" எனக் கட்டுரைத் தொடர் வளர்ந்தது. செங்கோல், மாண்புமிகு சபாநாயகர், சபா நாயகரது தீர்ப்புகள், சிறப்புரிமைகள், ஹன்சாட் எனப் பாராளுமன்றம் பற்றிய மிகவும் காத்திரமான விடயங்களும் காலம் போகப்போக இடம்பெறலாயின. இக் கட்டுரை களிற் சில தினகரனிலும் சில வீரகேசரியிலும் வெளி வந்தவை.
செங்கோல் பற்றிய எனது கட்டுரை பிரசுரமான போது பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் அக்கட்டுரை பற்றி மிகவும் விதந்துரைத்ததுடன் அமையாது " இவ்விதம் காத்திரமான விடயங்களையே அதிகம் எழுதுங்கள்; அவை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் என்றும் பயனுள்ளவை யாக அமையும்" எனும் தமது உள்ளக்கிடக்கையைத் தெரிவித்தார். 'தினகரன் ஆசிரியராக அவரது புகழ் எங்கும் உச்சநிலையில் இருந்த காலகட்டத்தில் அவருடன் கடமையாற்றியவன் யான். நல்ல கட்டுரைகள் எல்லாம் ஒரு காலத்தில் நூலுருவில் வெளிவரவேண்டும் என்று என்னிடம் பலமுறை வற்புறுத்தி அதற்கான எண்ணங்களை என்னுள் வளர்த்து விட்டவரும் அவரே. எனது இந் நூல் வெளிவரும் இவ்வேளையில் அவர் இல்லையே என்ற கவலை என்ன உறுத்துகின்றது.
எனது இந்த நூல் ஒரு குடியியல் நூலன்று: 'அரசு இயல் நூலுமன்று. இது இலங்கைப் பர்ராளுமன்றத்தின் வரலாற்று நூலுமாகாது. ஒரு பாராளுழன்ற அறிக்கை யாளன் தான் கடமையாற்றிய இடத்தை எந்தஃஎந்திக்

vii
ஒகாணங்களில் நோக்கிஞன் என்பதற்கு ஒரு சான்ருக இதைக் கோள்ளலாம் எனக் கூறிக் கொள்ள விழைகின்றேன்.
பாராளுமன்ற விவாதங்களில் அரசியலை மட்டுமன்றித் தமிழ் இலக்கியச் சுவையையும் அநுபவித்தேன். sea)6) யெல்லாம் எனது கட்டுரைகளுக்குக் கருப்பொருள்களாயின. கட்டுரைத் தொடர் சாதாரண மக்களையும் உயர்வகுப்பு மாணவர்களையும் நாளாந்த வாசகர்களையும் மனதிற் கொண்டே எழுதப்பட்டது. இந்த நூல் கற்போர்க்கு ஒரு சிறிய அளவிலாவது நன்மை பயக்கும் என்பது எனது உறுதியான நம்பிக்கை.
இக் கட்டுரைகள் வெவ்வேறு கால கட்டங்களில் எழுதப் பட்டவை. இன்று அவை காலத்தின் தேவைக்கேற்பச் சிறு சிறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. உதாரண மாக "செந்தமிழும் சிங்களமும்" என்ற கட்டுரையின் இறுதிப் பகுதி இப்பொழுது புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இக்கட்டுரையை நான் எழுதியபோது கோட் டேப் பாராளுமன்றம் இருக்கவில்லை.
பாராளுமன்றத்தில் எனது சேவையின் இருபத்தைந்து ஆண்டுகளின் நிறைவின் நினைவாக இந் நூல் வெளிவருகிறது. இதன் கட்டுரைகளை அவ்வப்போது பிரசுரித்து என்னை ஊக்குவித்த " தினகரன் ", "வீரகேசரி ?? பத்திரிகைகளுக் குப் பெரிதும் கடமைப்பாடுடையேன். இந் நூலுக்குக் கிடைக்கக்கூடிய பெருமைகளில் எனக்கு மாத்திரமன்றி அந்த இரு பத்திரிகைகளுக்கும் பெரும் பங்குண்டு.
எனது நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள முது தமிழ்ப் பெரியார் திரு.நா.மாணிக்கஇடைக்காடர் அவர்களை ஈழத்து மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். .பல்துறை அறிஞர்; மிகச் சிறந்த ஒரு தமிழ் மகன் என அனைவராலும் போற்றப்படுபவர். அன்ஞருக்கும் என்றும் எனது நன்றிகள் Aerfluar.

Page 7
  

Page 8
*
It is a readable book with ample illustrations. I enjoyed reading the manuscript. It is a book by one who has worked in the Parliament for over two decades-this enhances the value of the book. There is nothing equivalent to experience.
There is a great need in this country for books of this nature, , i.e. by men and women who have worked in a particular field to put in book form their valuable experiences so that it could serve as a guide to the younger generation as well as a handbook for those involved in the field.
The author is to be congratulated on his great endeavour.
Colombo-4 4 March 1986
தமிழாக்கம்
* சிலர் மாம்பழத்தைத் தனியே சுவைத்துச் சாப்பிடு வார்கள். அதோடு மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக வாயையும் துடைத்துக் கொள்வார்கள். ஆளுல் வேறு சிலர் மற்றவர்களையும் அழைத்துப் பங்கிட்டுச் சாப்பிடுவதில் மகிழ்ச்சி காண்பார்கள் " என்று இராம கிருஷ்ண பரமஹம்சர் கூறுவார். இதேபோலச் சிலர் அறிவையும் தாமே நுகருவார்கள். ஆளுல் வேறு சிலரோ அதனை மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொள்வதால் மகிழ்ச்சி அடைகிருர்கள். இலங்கையில் மாம்பழத்தைச் சுவைப்பவர் களைப் போன்று அறிவைச் சுவைப்பவர்களும் இருக்கின் ரூர்கள். பரமஹம்சர் இரண்டாவதாகக் கூறிய வகுப்பைச் சர்ந்தவர்தான் செல்லப்பா நடராசா. தமது நீண்ட காலப் பாராளுமன்ற அறிவையும் அநுபவத்தையும் இந்த துலின் மூலம் மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொள்வதில் கிேழ்ச்சி அடைகிருர் அவர். எமது சமுதாயத்தின் அறிவு விருத்திக்கு இத்தகைய முயற்சிகள் இன்றியமையாதன.

xt
பாராளுமன்ற நடைமுறைகளில் அநேகமாக எல்லா அம்சங்களும் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. பாராளு மன்றக் கோட்பாடுகளில் கரிசனை உள்ளவர்களுக்குச் சட்ட் நுட்ப முறைகள் சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. அதே சமயத்தில் பாராளுமன்றத்தின் நாளாந்த நடைமுறை களில் ஊக்கம் கொள்பவர்களுக்கு அதன் சம்பிரதாயங்களும் பாரம்பரியங்களும் நன்கு படம்பிடித்துக் காட்டப்பட்டிருக் கின்றன. பொதுத் தேர்தல் ஒன்றையடுத்துக் கூடும் பாராளு மன்றத்தில் சபாநாயகர் தெரிவு செய்யப்படுவதில் இருந்து தொடங்கி அந்தத் தாபனத்தின் பல்வேறு தொழிற்பாடு களையும் விபரித்துப் பாராளுமன்றக் கூட்ட நிகழ்ச்சிகள் ஹன்சாட்டில் பதிவுபெறும் கட்டம் வரையான பயணத்தில் எம்மை இலாவகமாக அழைத்துச் செல்கின்ருர் ஆசிரியர்.
தாராளமான எடுத்துக்காட்டுக்களுடன் சுவைத்து வாசிக் கக் கூடிய முறையில் கவர்ச்சியாக நூல் எழுதப்பட்டிருக் கின்றது. இந் நூற் கையெழுத்துப் பிரதியை நான் பெரிதும் சுவைத்து மகிழ்ந்தேன். இரு தசாப்தங்களுக்கு மேலாகப் பாராளுமன்றத்தில் பணியாற்றிய ஒருவர் எழுதிய நூல் இது என்பதால் இதன் மதிப்பு மேலும் உயர்வடைகின்றது. அநுபவத்திற்கு நிகர் அநுபவமே.
இந்த வகையான நூல்கள் தோன்றுவதானது எமது நாட்டின் அவசியத் தேவையாகும். குறிப்பிட்ட ஒரு துறையில் பணியாற்றுவோர் தம் பெறுமதி மிக்க அநுபவங் களை நூல் வடிவில் வெளியிடுதல் மிக மிக அவசியம். அப் பொழுதுதான் அத்தகைய நூல்கள் இளம் சந்ததியினருக்குத் தேவைப்படும் ஒரு வழிகாட்டியாக அமைய முடியும். அந்தத் துறையில் ஈடுபடுவோருக்குக் கைநூலாகவும் இருக்கும்.
இந்தப் பெருமுயற்சியை மேற்கொண்ட நூலாசிரியருக்கு என் பாராட்டுக்கள்.
கொழும்பு-4 4 மார்ச் 1986,

Page 9
ஈயப்புரை
திரு. இ. சிவகுருநாதன் அவர்கள், எம். ஏ. பிரதம ஆசிரியர் தினகரன், சட்டத்தரணி, விரிவுரையாளர் இலங்கை சட்டக் கல்லூரி
"பார்லிமென்ட் நடராசா" என்று புலராலும் அழைக் கப்படும் இந் நூலாசிரியரான திரு. செல்லப்பா நடராசா கால் நூற்ருண்டுக்கு முன்னர் 'தினகரன் நடா" என்றே எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர். இவரது ஊர் கோண்டாவில். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலா கத் தினகரன் ஆசிரியராகப் பணி புரியும் எனக்குத் திரு. நடராசாமீது நிறைய உரிமையுண்டு. அத்துடன் அன்பும் பிணைப்பும் உண்டு.
திரு. நடராசா அவர்கள் தமிழ்மேல் அளவற்ற அன்பு, பாசம், பக்தி கொண்டவர்; தமிழே இவரது மூச்சு என்று கூடச் சொல்லலாம், இனிய உள்ளத்தினர். அமரர் பேரா சான் க. கைலாசபதி தினகரன் பிரதம ஆசிரியராகவும் யான் செய்தித்துறை ஆசிரியராகவும் இருந்தபோது திரு. நடராசா எங்கள் உயிர்த் துடிப்பாக விளங்கினர். தமிழ் விவகாரங்கள் என்ருல் அவை எல்லாவற்றையும் இவரிடமே விட்டுவிடுவோம். எமது நாட்டுத் தமிழ்த் தலைவர்கள் எல்லோருமே இவரது நண்பர்கள். திரு. நடராசாவின் செய்திகள், விமரிசனங்கள், கட்டுரைகள். நகைச்சுவைகள் அனைத்தும் அன்று வாசகர்களது அபாரமான பாராட்டுதல் களேப் பெறத் தவறவில்லை.
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இவர் தினகரனி லிருந்து விலகிப் பாராளுமன்ற அறிக்கையாளராகப் பதவி ஏற்றமை தினகரனுக்கு அன்று பெரு நட்டமாய் அமைந் தது.
பாராளுமன்றத்ன்த முழுமையாகச் சபையிலிருந்தே தேரில் பார்த்துப் படிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

&
K
பாராளுமன்ற சம்பிரதாயங்களைத் தத்துவ நூல்களிலும் சட்ட ஆக்கங்களிலும் வாசித்தறிய முடியுமாயினும் சபை யிலே நடைமுறையில் நிகழ்வனவற்றை நேரில் பார்த்துக் கற்பதுபோல அது இருக்காது; பாலின் இன்சுவையைப் பருகியே அறியலாம். பாராளுமன்ற நடவடிக்கைகளை நேரில் பார்த்து அறிந்துகொண்டவர் நடராசா அவர்கள். இவரது கட்டுரைக் கருவூலங்களில் ஜீவகளை நிறைந்திருப்ப தனக் காணலாம். யதார்த்த இயல்பு மிளிருவதையும் எவரும் உணர்ந்துகொள்ள முடியும். ஆசிரியரது நூல் வாசிக்கின்றபோது அவரது சொல் வளமும் சிந்தனைச் செறி வும் புலனுகும். எளிய நடை, இலகு தமிழ், பலரும் படித்து விளங்கிக்கொள்ளக்கூடிய வசன அமைப்பு ஆகியன இவரது எழுத்தில் காணப்படும் உயிரோட்டம் எனலாம்.
இத் துறையில் தமிழ் நூல்கள் குறைவாக இருப்பதனல் பாராளுமன்ற வாழ்க்கையில் தான் பெற்ற அநுபவத்தைக் கொண்டு மேலும் பல நூல்களை அவர் ஆக்கித் தரல் வேண்டும்,
கோண்டாவில் நெட்டிலைப்பாய் பிள்ளையார்கோயில் தருமகர்த்தாக்களில் ஒருவரான இவர் டிெ ஆலய புனருத் தாரண மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 1980ஆம் ஆண்டில் வண்ண மலரொன்றினை வெளியிட்டகாலை அதனை மிகவும் பாராட்டிப் பண்டிதமணி தினகரனுக்கு விமரிசனம் எழுதினர். அவர் தமது விமரிசன உரையில் அம் மல ரைப் 'பொன்மலர்" என்று பாராட்டினுர்,
நடராசா அவர்கள் சிறந்த சமூக சேவையாளரும் கூட. கிராம முன்னேற்றப் பணிகளிலும் முன்னின்று உழைப்பவர். பல சங்கங்களின் கண்ணியமான அங்கத்தவர்களுள் ஒருவர். அத்தகைய ஒருவரைப் பாராட்டி உரை எழுதுவதில் பெரு மகிழ்வடைகிறேன்.

Page 10
விமரிசன உரை திரு. த. கனகரத்தினம் அவர்கள், பி. ஏ. (இலண்டன்) கல்வி டிப்புளோமா (இலங்கை) பதிப்பாசிரியர், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், விரிவுரையாளர், இலங்கை அபிவிருத்திப் பரிபாலன
*சிலிடா" நிறுவகம்
இலங்கை போன்ற சனநாயகக் குடியரசு நாடுகளில் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றம் வாயி லாகவே ஆட்சி நடைபெறுகின்றது. அத்தகைய முக்கியத் துவம் பெற்ற பாராளுமன்றம் எவ்வாறு செயற்படுகின்றது? அதில் மக்கள் கடமை என்ன என்ற இன்னேரன்ன பல விடயங்களை அனைவரும் கற்றுக்கொள்ள ஆர்வங் கொள்வதில் வியப்பில்லை. அத்தோடு பொது மக்களுக்கும் பாராளு மன்றச் செய்திகள் அறிவிற்கு விருந்தாய் மிளிர்கின்றன.
முன்பு பாடசாலைகளிற் குடியியற் பாடம் கற்பிக்கப் பட்டது. இப்போது, அதற்குப் பதிலாகச் சமூகக் கல்வி கற்பிக்கப்படுகின்றது. சமூகக் கல்வி கற்கும் மாணக்கர் இலங்கைப் பாராளுமன்றம் பற்றியும் விரிவாக அறிந்து கொள்ள வேண்டியவராகின்றனர். இக் காலகட்டத்தில், இலங்கைப் பாராளுமன்றத்தின் பாரம்பரியங்கள், நடை முறைகள் என்பன பற்றிய விரிவான விளக்கமான நூலொன்று இல்லாத குறையைச் செல்லப்பா நடராசா எழுதியுள்ள ** எனது நோக்கில் இலங்கைப் பாராளுமன் றம் ?" என்ற இந் நூல் நிறைவு செய்யும் என நினைக்கின் றேன். ஆசிரியர் தமக்கே உரித்தான பாணியில் எளிமை,

Xν
இனிமை, உண்மை விளங்கப் பல்சுவைகளிற் குழைத்து, இலக்கிய நயமெனும் தேனைக் கலந்து தாம் உண்டு சுவைத்த அநுபவங்களை நூல் வடிவமாகிய அழகிய கலசத்தில் படையலாக வழங்கியிருக்கிருர்,
கண்கள் உள்ளவர்கள் எல்லாரும் பார்க்கிறர்கள் ; நாமும் பார்க்கிருேம் : கவிஞனும் பார்க்கிருன் ; ஒவியன், சிற்பி ஆகி யோரும் பார்க்கின்றனர். ஆனல் பார்வையில் வித்தியாசம். கவிஞனின் பார்வை கவியாக மலர்கிறது. ஒவியனின் பார்வை வண்ண ஒவியமாக ஒளிர்கிறது. இவர்கள் பார்வை கூர்ந்த பார்வை; அவதானிக்கும் பார்வை. திருவள்ளுவர் கூறும் " நோக்கு " என்ற சொல்தான் இதற்குப் பொருந்தும். அவ் வாறே இந் நூலாசிரியரது நோக்கைச் சாதாரண நோக்காகக் கொள்ளாது சபாநாயகர்கள் பலரின் காலகட்டத்தில் பல ஆண்டுகளாக உள்ளேயிருந்து உறவாடிய நிலையில் நோக்கும் நோக்காகவே கொள்ளல் வேண்டும். பல்லாண்டு அநுபவத் தோடு கூடிய நோக்கு நுட்பமானதென்பதனைக் கட்டுரைகள் பிரதிபலிக்கின்றன.
ஆசிரியர் பாராளுமன்றத்தின் சகல நண்டமுறைகளையும் எம் கண்முன்னே நிறுத்தியிருக்கின்ருர், வரலாற்று ரீதியிலும் செய்திகளை நுணுக்கமாக நோக்கிப் படைத்திருக்கின்றர். உதாரணத்திற்காக நூலில் அமைந்துள்ள சில பகுதிகளே எடுத்துக் காட்டலாம். " செங்கோல்" என்ற கட்டுரையில் அதன் அமைப்பு, வரலாறு, மகிமைகள், மரபு, சம்பிர தாயங்கள் என்ற பல விடயங்களுடன், ° செங்கோன்மை ஆட்சி", வள்ளுவர் காட்டும் "செங்கோன்மை" என்ற விடயங்களையும் வரைந்துள்ளதானது ஆசிரியர் பல கோணங் களில் தமது நோக்கினைச் செலுத்தியுள்ளார் என்பதை விளக்கும். பாராளுமன்றத்தின் சம்பிரதாயங்கள், நடை முறைகள் என்பவற்றேடு அரசியலிற் புகழ் பெற்றேரின் நாவன்மை, இலக்கிய நயம் சொட்டும் பேச்சுக்கள் என்பன் வற்றையும் ஆசிரியர் எடுத்துக் காட்டுகின்ருர்.

Page 11
xvi
பாராளுமன்றத்தின் சிறப்புரிமைகளைச் சாதாரண மக்கள் அறியாதிருக்கலாம். பாராளுமன்றம் நீதிமன்றமாகத் தொழிற்படும் விதத்தையும் பாராளுமன்றத்தின் சிறப்புரிமை களையும் ஒரு கட்டுரையில் ஆசிரியர் எடுத்து விளக்கி ae siromrmr ri.
வெள்ளை அறிக்கை என்ருல் என்ன? வெள்ளை அறிக் கைக்குச் சட்ட அந்தஸ்து உண்டா? சிம்மாசனப் பிரசங்கம் என்ருல் என்ன? சஞதிபதியின் அதிகாரங்கள் எவை? எனும் விடயங்களுக்குரிய விளக்கங்களை ஆசிரியர் தம் கட்டுரை. களிற் தந்துள்ளார். சிறப்பாக இந் நூல் உயர்வகுப்பு மாளுக்கர்களுக்குத் துணைப்பாட நூல் போன்று துணை செய்ய வல்லது.
பாராளுமன்றத்தில் வள்ளுவனும், கம்பனும், பாரதியும் உலாவிப் போனதையும் ஆசிரியர் சுவைபட எடுத்துக் காட்டத் தவறவில்லை. பாராளுமன்ற விவாதங்களின் உத்தியோகபூர்வ அறிக்கையான "ஹன்சாட்" பற்றிய விபரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது "விருப்பு வெறுப் பற்ற பிறப்பு" என்பதை அவர் நூலில் நாம் உணர வைக்கின்ருர், கற்பனை கலவாது உண்மையை விளம்புவது "ஹன்சாட் அறிக்கை. அதன் சிரேஷ்ட அறிக்கையாளராக விளங்குபவர் செல்லப்பா நடராசா. அவரது "ஹன்சாட்" பத்திரிகா தர்மம் இக் கட்டுரைகளிலும் மிளிர்கின்றது. மேலும் 'தினகரன்" பத்திரிகையில் அவர் நீண்ட காலம் பெற்ற அனுபவமும் எழுத்து நடையும் இக் கட்டுரைகளுக்கு மெருகூட்டி நிற்கின்றன என்பது எனது எண்ணமாகும்.
பல்வேறு தரத்தினரதும் அறிவு வளர்ச்சிக்கும், பரீட்சை களுக்கும், பாடசாலைகளுக்கும் பயன்படுமாகையால் ஒவ் வொரு நூல்நிலையத்திலும் இருக்கவேண்டிய அருமருந்தன்ன நூல் இது என்று விதந்துரைப்பதில் மகிழ்ச்சி அடை கிறேன். பாராளுமன்றச் சேவையில் வெள்ளிவிழாக் காணும் ஆசிரியர் மேலும் பயனுள்ள ஆக்கங்களை வெளியிடுவதில் ஊக்கங் கொள்வார்ாக,

1.
முதற் கூட்டமும் சபாாகாயகர் தெரிவும்
ஒரு பொதுத் தேர்தலின் பின் நடைபெறும் முதலாவது பாராளுமன்றக் கூட்ட நடைமுறைகள் எவ்வாறு அமையும் என்பது சாதாரணமாக எவரும் சிந்திக்கக்கூடிய ஒரு விடயமாகும். இத்தகைய கூட்டங்கள் சஞதிபதியின் பிரகடனத்துக்கமையவே நடைபெறுவது வழக்கம். கூட்டத்திற்கான தேதியை யும் நேரத்தையும் சனதிபதியே பிரகடனப்படுத்து வார். இதன்படி கூட்டம் நடைபெறுந் தினம், குறிப் பிட்ட நேரத்திற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னர் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் எல்லா இடங்களி லும் மணியோசை எழுப்பப்படும், கூட்டம் ஆரம்ப மாவதற்கான அறிவித்தலான இதைக் கேட்கும் உறுப்பினர்கள் அனைவரும் சபாமண்டபத்தில் வந்து கூடுவர். சரியாக ஐந்து நிமிடங்களின் முடிவில் கூட்ட அறிவித்தல் மணியோசை நிறுத்தப்படும். சணுதிபதி பிரகடனப்படுத்திய நேரத்துக்குக் கூட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும், பேரவையின் படைக்கலச் சேவிதர், சபாநாயகரதும் சபையினதும் அதிகாரச் சின்னமான செங்கோலைத் தோளிலே தாங்கிய வண்ணம் சபா மண்டபத்துள் பிரவேசித்து, நேரே சபாபீடத்துக்குச் சென்று செங்கோலை வழமையான இடத்தில் வைக்காமல் அதனைப் பீடத் தின் முன் சற்றுக் கீழே அதற்கெனவுள்ள மற்றேர் இடத்தில் வைப்பார், அதுவரை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நிற்பார்கள்.

Page 12
2 எனது நோக்கில்.பாராளுமன்றம்
புதிய சபாநாயகர் ஒருவரைத் தெரிவு செய்ய நேரிடும் சந்தர்ப்பங்களில் பேரவைக் கூட்டங் களுக்குப் படைக்கலச் சேவிதர் செங்கோலை எடுத்து வரும் முறையிலே சில மாற்றங்களைக் காணமுடியும். இவ்வாறன கூட்டங்களுக்குப் படைக்கலச் சேவிதர் வழமைபோல் செங்கோலைத் தமது வலக்கையாற் பிடித்து வலது தோளில் தாங்கி வரமாட்டார். இதற் குப் பதிலாகச் செங்கோலை இடது கரத்தினுற் பிடித்து இடது தோளில் தாங்கியபடி சபைக்குள் பிரவேசிப்பார். இவ்வண்ணம் கொண்டுவரப்படும் செங்கோல் முன் குறிப்பிட்டவாறு சபாபீடத்தின் கீழ் வைக்கப்படுவது ஏனெனில், சபாநாயகரொருவர் தெரிவு செய்யப்படாத நிலையில் சபை உரிய முறைப் படி இயங்க முடியாது என்பதை உணர்த்துவதற் காகவேயாம். இது ஒரு சம் பிரதாயம், புதிய சபாநாயகரொருவர் தெரிவு செய்யப்பட்டு அவர் தமது ஆசனத்தில் அமரும்வரை செங்கோலும் அதன் வழமையான இடத்தில் காட்சியளிக்கமாட்
டாது.
செயலதிகாரி
செங்கோலை வைத்து விட்டுப் படைக்கலச் சேவிதர் தமது ஆசனத்தை அடைந்தபின்னர் சஞதி பதியின் பிரகடனத்திற்கமையப் பேரவையின் நிலைக் கட்டளை இரண்டின் ஏற்பாட்டின்படி உறுப்பினர் சபாமண்டபத்துள் முறைப்படி அமர்ந்திருப்பர். பேரவையின் செயலதிகாரியும் அவரின் உதவியா ளர்களும் சபையிலே தத்தமது ஆசனங்களிற் பிரசன்னமாயிருப்பர்.

முதற் கூட்டமும் சபாநாயகர் தெரிவும் 3
ஏனைய பணியாளர் அவரவர் பணியில் ஈடுபட, முதல் நடவடிக்கையாகப் பேரவைச் செயலதிகாரி பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான சஞதிபதி யின் பிரகடனத்தை வாசிப்பார். இதனை அடுத்து உடனடியாகச் சபாநாயகர் ஒருவரைத் தெரிவு செய்யப் பேரவை முற்படும். இதற்கான நடை முறைகளைச் செயற்படுத்தும் பொறுப்பு பேரவைச் செயலதிகாரியைச் சார்ந்ததாகும்.
அரசாங்க தரப்பைச் சார்ந்த ஒருவரே சபா நாயகராகத் தெரிவு செய்யப்படுவார் என்பதனை யான் இங்கு சொல்லவேண்டிய அவசியமில்லை. சபாநாயக ராகத் தெரிவு செய்யப்பட வேண்டியவரின் பெய ரைச்சபை முதல்வராக உள்ளவர், “இன்ன தொகுதி உறுப்பினராகிய இன்னுர் சபாநாயகராக இச் சபை அக்கிராசனத்தமர வேண்டும் என நான் பிரேரிக் கின்றேன்” என எடுத்தியம்புவார். சபையிலே சபாநாயகர் ஒருவர் ஏகமனதாகத் தெரிவு செய்யப் படும் சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் எதிர்க் கட்சித் தலைவராக இருப்பவர் சபை முதல்வரது பிரே ரணையை வழிமொழிவார். இதன்படி அரசாங்கக் கட்சி, எதிர்க் கட்சி ஆகிய இரு தரப்பினராலும் சபாநாயகர் பலத்த கரகோஷத்தினிடையே ஏகமன தாகத் தெரிவு செய்யப்படுவார்.
சபாநாயகர் தெரிவு ஏகமனதாகவே நடைபெற வேண்டும் என்பதற்கு எவ்விதமான சட்டதிட்டமும் கிடையாது, ஒன்றுக்கு மேற்பட்ட அங்கத்தவர்களின் பெயர்கள் சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப் பட்டு வழிமொழியப்படுமிடத்து வாக்குச் சீட்டு மூலம் சபாநாயகர் ஒருவரைத் தெரிவு செய்வதற் குச் சபை முற்படும்,

Page 13
4. எனது நோக்கில்.பாராளுமன்றம்
சேர் அல்பட் எவ். பீரிஸ்
இச் சந்தர்ப்பத்தில் சுதந்திர இலங்கையின் ஆருவது பாராளுமன்றத்தின் சபாநாயகர் தெரிவு எனது ஞாபகத்துக்கு வருகின்றது. 1965 ஆம் ஆண்டு மார்ச்சு மாதப் பொதுத் தேர்தலில் திரு. டட்வி சேனுநாயக்க அவர்கள் பதவிக்கு வந்த சமயம், பொதுத் தேர்தலையடுத்து ஏப்பிறல் மாதம் ஐந்தாந் தேதி சபை முதன்முதலாகக் கூடிச் சபா நாயகர் ஒருவரைத் தெரிவு செய்ய முற்பட்டபோது, அப்பொழுது சபை முதல்வராக விளங்கிய திரு. சி. பி. த சில்வா அவர்கள் நீாத்தாண்டியாத் தொகுதி உறுப்பினரான சேர் அல்பட் எவ், பீரிஸ் அவர்களின் பெயரை முன்மொழிய, காங்கேசன்துறைத் தொகுதி உறுப்பினரான திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்கள் அதனை வழிமொழிந்தார். அச் சந்தர்ப் பத்தில் எதிர்க் கட்சியின் சார்பில் எதிர்க் கட்சி முதல்வர் திருமதி சிறிமாவோ ஆர். டி. பண்டார நாயக்க அவர்கள் திரு. ஆர். ஜி. சேனநாயக்க அவர்களின் பெயரைச் சபாநாயகர் பதவிக்கு முன் மொழிய, எட்டியாந்தோட்டை உறுப்பினர் கலாநிதி என்.எம். பெரேரா அவர்கள் அதனை வழிமொழிந்தார். இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டமையால் வாக்குச்சீட்டு மூலம் தெரிவு நடைபெற்றது. சேர் அல்ப்ட் எவ், பீரிஸ்"க்கு 97 வாக்குகளும், திரு. ஆர். ஜி. சேனநாயக்காவுக்கு 57 வாக்குகளும் கிடைத் தன. சேர் அல்பட் எவ். Lffl6ñ) soi66)JLDub éFluff நாயகராஞர்.

முதற் கூட்டமும் சபாநாயகர் தெரிவும் 5
ஏகமனதாகவோ, வாக்கெடுப்பு மூலமோ தெரிவு செய்யப்படும் சபாநாயகர், முன்மொழிந்தவர் வழி மொழிந்தவர் ஆகிய இருவரினுலும் சபாநாயகரது ஆசனத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார். அவ் விதம் சபாநாயகர் அவர்கள் அக்கிராசனத்தை அடைந்ததுமி சபையில் இரு தரப்பினருக்கும் சிரம் சாய்த்துச் சம்பிரதாய பூர்வமான முறையில் நன்றி செலுத்திவிட்டு அக்கிராசனத்தில் அமர்ந்துகொள் வார். சபாநாயகர் அவர்கள் அக்கிராசனத்தில் அமர்ந் ததும் ஆரம்பத்தில் சபாபீடத்தின் கீழ்த்தளத் தில் வைக்கப்பட்டிருந்த செங்கோலானது சபா பீடத்தின் மேல் அதற்கென உரிய நிரந்தர இடத்தில் வைக்கப்படும். இதன் மூலம் சபாநாயகர் அவர்கள் தலைமையிற் சபை அதிகாரபூர்வமாகக் கூடிவிட்டது என்பது உறுதிப்படுத்தப்படும்.
சம்பிரதாயம்
தொடர்ந்து புதிய சபாநாயகர் அவர்களைக் கட்சித் தலைவர்கள் வாழ்த்தியும் பாராட்டியும் உரை நிகழ்த்துவது சம்பிரதாயபூர்வமானதாகும். புதிய உறுப்பினர்கள் தமக்குச் சபாநாயகர் அவர்கள் பல விதங்களிலும் வழிகாட்டியாக விளங்கவேண்டு மென்று கருத்துத் தெரிவித்துப் பாராட்டுவார்கள். பழம்பெரும் அரசியல் வாதிகள் சபையின் மரபு களையும் பாரம்பரியங்களையும் ஞாபகப்படுத்திப் புதிய சபாநாயகர் அவர்கள் அரசாங்கக் கட்சி, எதிர்க் கட்சி என்று பாகுபாடின்றிச் சேவை புரிவார் என்ற நம்பிக்கையைத் தெரிவித்து வாழ்த்துவார்கள். சிறு பான்மை இன அங்கத்தவர்கள் தமது கோணத்தில் பாராட்டுவார்கள்,

Page 14
6 -எனது நோக்கில்...பாராளுமன்றம்
இச் சந்தர்ப்பத்தில் 1965 ஆம் ஆண்டு ஏப்பிறல் மாதம் 5 ஆம் தேதி சேர் அல்பட் எவ். பீரிஸ் அவர்கள் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட போது, பட்டிருப்பு உறுப்பினராக விளங்கிய திரு. எஸ். எம். இராசமாணிக்கமி அவர்கள் நிகழ்த்திய உரையிலிருந்து ஆங்காங்கே சில பகுதிகளைச் சுருக்கி இங்கு உதாரணத்துக்காகத் தருகின்றேன்.
"மாண்புமிகு சபாநாயகர் அவர்களே, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் உங்களுக்கு வாழ்த்துக் கூறுவதற்காக நான் சில வார்த்தைகளைப் பேச விரும்புகின்றேன். இந்த உயர் பதவியைத் தாங்கள் இப்பொழுதுதான் முதன் முறையாக வகிக்கவில்லை. சபையின் சபாநாயகர் இச் சபையிலுள்ள உறுப்பினர்க ளது உரிமைகள் முழுவதையும் பாதுகாக்க வேண்டியவராக இருக்கிருர், அதே நேரத்தில் சிறுபான்மை உறுப்பினரின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய கடமை அவருக்குண்டு. ஆகவே, இச் சபையில் இருக்கும் பலதரப்பட்ட உறுப்பினரைச் சாதி, சமய வேறுபாடின்றி, மொழி வேறுபாடின்றி நடத்துவது மாத்திர மல்லாமல் அவர்களின் பேச்சுரிமைகளையும் பாதுகாக்கவேண்டியதும் தங்களது பொறுப் பாகும்.” -
இவ்வாறு திரு. இராசமாணிக்கம் அவர்கள் தமது உரையில் அன்று குறிப்பிட்டார்.

முதற் கூட்டமும் சபாநாயகர் தெரிவும் 7
udst L
இவ்விதம் கட்சித் தலைவர்களினதும் உறுப் பினர்களதும் பாராட்டுரைகளின் பின்னர் சபா நாயகர் அவர்கள் தமிமைத் தெரிவு செய்தமைக்கும் பாராட்டியமைக்கும் நன்றி தெரிவித்து உரை நிகழ்த்துவார். சபையின் பாரம்பரியத்தையும் மரபையும் கண்ணியத்தையும் பேணிக் காத்துப் பாரபட்சமின்றிக் கடமை புரிவதாகச் சபாநாயகர் அவர்கள் தமது பதிலுரையில் தெரிவித்துக்கொள் வதும் அதே போன்று கடமை புரிவதும் மரபு முறையாகும்.
இதனையடுத்துச் சபாநாயகர் அவர்களும், அவரைத் தொடர்ந்து உறுப்பினர்களும் சட்டத்துக் கமையச் சத்தியப்பிரமாணம் அல்லது உறுதிப் பிரமாணம் செய்து சபாபீடத்தில் இருக்கும் அதற் கெனவுள்ள பதிவேட்டில் கைச்சாத்திடுவார்கள். குறிப்பாகக் கிறிஸ்தவ உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணமே செய்வர்.
உறுப்பினர்கள் உறுதிப் பிரமாணம் எடுக்கை யில் “.. ஆகிய யான் இலங்கைக் குடியர சுக்கு நம்பிக்கையுள்ளவஞகவும், உண்மையான விசுவாசங் கொண்டவணுகவும் இருப்பேன் எனவும், இலங்கைக் குடியரசின் அரசியலமைப்பைப் போற்றி ஒழுகுவேன் எனவும் பயபக்தியுடன் வெளிப்படுத்தி உறுதிப்படுத்துகிறேன்’ என வாக்குச் செய்து கையொப்பமிடுவர்.

Page 15
8 எனது நோக்கில்...பாராளுமன்றம்
உறுப்பினர்களின் உறுதிப் பிரமாணத்தைத் தொடர்ந்து பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவைச் சபாநாயகரின் தலைமை யில் பேரவை மேற்கொள்வதுடன், அதன் பின்னர் தேவையான வேறு பல அலுவல்களைக் கவனிக்கவும் மேற்கொள்ளவும் அதற்குப் பூரண தத்துவமும் அதிகாரமும் உண்டு. சமய சந்தர்ப்பங்களுக் கேற்ப அலுவல்களை மாற்றி அமைத்துக்கொள்ளும் உரிமையும் அதிகாரமும் கூடப் பேரவைக்கு உண்டு. எந்த விடயங்களிலும் சபாநாயகரது முடியே இறுதி யானதாகும்.
வீரகேசரி - ஜூலை 1977

2 மாண்புமிகு சபாாகாயகர்
உண்மையில் பாராளுமன்றத்தின் கதாநாயகன் சபாநாயகரே. பாராளுமன்றச் சனநாயகம் நிலவும் நாடுகளிற் பதவி வழியாக மாத்திரமன்றி மரபு வழி யாகவும் சபாநாயகருக்கு மிக அதி உயர்ந்த ஒரு ஸ்தானம் உண்டு. பாராளுமன்றச் சட்டதிட்டங் களினதும் சம்பிரதாயங்களினதும் காவ ல ளுக விளங்குபவரும் அவரே. தம் சிறப்புரிமைகளைப் பொறுத்த அளவில் பாராளுமன்ற உறுப்பினர் தம் பாதுகாவலனுக என்றும் ஏற்றிப் போற்றுவதும் சபாநாயகரைத்தான். பிரதம பண்பு
* சபாநாயகர் பதவியினது பிரதம பண்பு நடுவுநிலைமையும் அதிகார ஆளுமையுமேயாமீ” என்று விபரிக்கின்றர் பிரித்தானிய பாராளுமன்ற நடைமுறைகளில் மகா பண்டிதர் எனப் போற்றப் படும் எஸ்கின் மே அவர்கள். ۔
இலங்கையில் நான்கு தடவைகள் பிரதமர் பதவியை வகித்தவரான திரு. டட்னி சேஞநாயக்க அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் ‘இந்தச் சபையின் அலுவல்களைச் சரியான முறையில் நடத்துவதற்கு ஒருதலை சாராத, நடுநிலை தவருத மாண்பு, சபா நாயகருக்கு முழுமையான முறையில் அவசியத் திலும் அவசியமாகும்’ எனக் குறிப்பிட்ட ஆணித் தரமான கருத்தொன்றை இங்கே நினைவு கூருவது பொருத்தமாக இருக்கும்.

Page 16
10 எனது நோக்கில் .பாராளுமன்றம்
கட்சிக்கு அப்பால்
பாராளுமன்ற உறுப் பின் ரொருவர் சபா நாயகர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும்வரைதான் அவர் ஓர் அரசியற் கட்சிக்குச் சொந்தமானவராக இருப்பார். சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கணமே, தாம் எந்த ஒரு கட்சிக்கும் உரியவரல்லர் என்ற கோட் பாட்டுக்குள் உட்பட்டு விடுவார்.
இலங்கைப் பாராளுமன்றத்தில் இதுவரை எட்டுச் சபாநாயகர்களின் கீழ் கடமையாற்றக் கிடைத்த நீண்ட வரலாறுகளை எண்ணிப் பார்க் கின்றபோது சபாநாயகர் பதவியின் மகத்துவத் தைப் பற்றி என்னுல் பரிபூரணமாக உணர முடி கின்றது.
1965ஆம் ஆண்டுப் பாராளுமன்றத்தில் சபா நாயகர்களாக விளங்கியவர்களுள் ஒருவர் சேர் அல்பட் எவ், பீரிஸ் அவர்கள். சேர் பிரான்ஸிஸ் மொலமுரே அவர்களைத் தொடர்ந்து இதற்கு முன்னரும் இவர் சபாநாயகர் பதவியை வகித்த வரலாற்றுக்குரியவர். இவர் தாம் பதவி வகித்த இரு காலகட்டங்களிலும் சபை மரபுகளையும் சம்பிர தாயங்களையும் போற்றிப் பேணுவதில் அதிக கவனம் செலுத்தி, அரசாங்கக் கட்சி, எதிர்க் கட்சி ஆகிய இரு தரப்பினரது நம்பிக்கைக்கும் போற்று தலுக்கும் பாராட்டுதலுக்கும் பாத்திரமாக விளங் கியவர். பாராளுமன்றப் பாரம்பரியங்களில் என்றும் அதிக நாட்டமுள்ளவர்களாக விளங்கிய திரு. டட்லி சேனநாயக்க, கலாநிதி என். எம். பெரேரா,

மாண்புமிகு சபாநாயகர் 11
திருவாளர்கள் எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், ஜே. ஆர். ஜயவர்த்தன போன்ற வர்களும் ஏனையோரும் சேர் அல்பட் எவ். பீரிஸ் அவர்களின் தீர்ப்புகளுக்கு எவ்வளவு தூரம் மதிப் புக் கொடுத்தார்கள் என்பதை யான் சபை நட வடிக்கைகளின் போது பல கட்டங்களில் அவதானித் திருக்கின்றேன்.
சபை நடவடிக்கைகளைப் பொறுத்த அளவில் சேர் அல்பட் எவ், பீரிஸ் மிகவும் கண்டிப்பானவர், சபை மரபுகளை மீறுபவர் எவ்வளவு பெரிய மனித
அவர்களிடமிருந்து தயவு தாட்சணியத்தை எதிர் பார்க்க முடியாதென்பது யான் கண்ட உண்மை யாகும். சபாநாயகரும் உறுப்பினர்களும்
சபாநாயகர் ஒருவரிடமிருந்து பாராளு மன்ற உறுப்பினர்கள் எவ்வெவற்றையெல்லாம் எதிர்பார்க்கிறர்கள்; அவருக்கும் அவரது ஸ்தானத் துக்கும் எவ்வளவு மதிப்புக் கொடுக்கிருர்கள் என்ப தற்கு உதாரணமாக 1965 ஆம் ஆண்டு சேர் அல்பட் எவ், பீரிஸ் அவர்கள் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டதை அடுத்துச் சபையிலே சம்பிரதாயபூர்வமாக உறுப்பினர்களால் நிகழ்த்தப் பட்ட வாழ்த்துரைகளிலிருந்து ஒன்றை இங்கு எடுத்துப் பார்க்கலாம்.
*திரு. ஜீ. ஜி. பொன்னம்பலம் (UJUTLJIT 600Tb):
இந்தச் சபை தன் உறுப்பினர் ஒருவருக்குச் செலுத்தக் - கூடிய அதி உயர்ந்த கெளரவ

Page 17
2
எனது நோக்கில்...பாராளுமன்றம்
நிலைக்குத் தாங்கள் உயர்த்தப்பட்டுள்ளதை நான் பெரிதும் பாராட்டுகின்றேன். இந்தப் பதவிக் குத் தெரிவு செய்யப்பட முன்னர் தேர்தல் ஒன்றைத் தாங்கள் எதிர்நோக்க வேண்டி யிருந்தமை உண்மைதான். ஆயினும் தாங்கள்
ஏதாவது கட்சி ஒன்றைச் சார்ந்தவர் என்பது
இந்தக் கணமே தங்கள் நினைவிலிருந்து நீங்கி விட்டது என்பது பற்றி எனக்கு எவ்வித ஐயமு மில்லை. இந்தச் சபையின் விவாதங்கள் பரி மளிப்பனவாக இருக்குமென்பது மாத்திரமல்ல, கூச்சல் நிறைந்தவையாகவும் இருக்கும் என் பதையும் நாம் அறிந்துள்ளோம்,
இந்தச் சபையிலே கூறப்படும் சில கூற் றுக்களைச் சில சந்தர்ப்பங்களில் தங்கள் காதுகளில் விழாதவையாகவே கணித்துக் கொள்ளுதலும் தேவையென்றே நம்புகின்றேன். சில சந்தர்ப்பங்களில் நாம் முரண்டுத்தன மானவை, அல்லது மகிழ்ச்சியற்றவை எவற்றை யேனும் கூறினுல் அவை எமது கடமைப் பொறுப்புப் பற்றிய ஒரு கருத்தின் காரணமாக அமையுமேயன்றித் தங்கள் உன்னத அதிகா ரத்தை மீற முனையும் செயல்களாக அமையா. தாங்கள் இந்த நாட்டிலுஞ்சரி, நாட்டுக்கு வெளி யிலுஞ் சரி, இம் முழுச்சபையினதும் ஏகப் பிரதி நிதியாக அமைவதால், தாங்கள் இப் பதவிக்கு
உயர்த்தப்பட்டமை குறித்துத் தெரிவிக்கப்
பட்ட புகழ்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் நான் பெரும் பங்கு கொள்கின்றேன்.”

மாண்புமிகு சபாநாயகர் 13
கட்சிக் கோலங்கள் துறப்பு
பல பாராட்டுக்களின் இறுதியில் மாண்புமிகு சபாநாயகர் சேர் அல்பட் எவ், பீரிஸ் அவர்கள் கூறியதாவது :
“கெளரவ பிரதமர் அவர்களே! கெளரவ எதிர்க் கட்சித் தலைவர் அவர்களே! கெளரவ உறுப்பினர்களே! இன்று நீங்கள் எனக்குத் தெரிவித்த நல்லாசிகளுக்கும் பாராட்டுதல் களுக்கும் நான் இதயம் நிறைந்த நன்றி கூறு கின்றேன். என்மீது நீங்கள் பெரிய பொறுப் பொன்றைச் சுமத்தியிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்துள்ளேன். உங்கள் திருப்திக்கு ஏற்ற வகையில் என்க பொறுப்புகளை நிறைவேற்ற உங்களது ஒத்துழைப்பை நீங்கள் என்றும் நல்குவீர்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. இந்தச் சபை விவாதங்களின் கெளர வத்தைப் பேணுவதிலும், எந்தக் கட்டத்திலும் இந்தச் சபையின் மரபுகள், உரிமைகள், சிறப் புரிமைகள் என்பனவற்றைப் பாதுகாப்பதிலும் உங்களது அந்த ஒத்துழைப்பு எனக்குப் பெரிதும் தேவை. இந்தச் சபையிலே நிலை விதிகள் இருக்கின்றன. பின்பற்றக் கூடிய முன்னுதாரணங்கள் இருக்கின்றன. கெளரவ உறுப்பினர்கள் அனைவரும் இதற்கியைய நடந் தால் எனக்குப் பிரச்சினை எதுவும் இருக்காது.
பல புதிய உறுப்பினர்கள் - இங்கே இருக் கிருர்கள். அவர்களுக்கு இவை பரிச்சயமற் றவைகளாக இருக்கலாம். எனவே, அவர்கள்

Page 18
14 எனது நோக்கில்.பாராளுமன்றம்
அவ் விதிகளுக்குத் தம்மைப் பரிச்சயப்படுத் திக் கொள்ளுதல் அவர்களது கடமை. இச் சபையிலுள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு நண்பனுக இருக்கவே நான் விரும்பு கின்றேன். புதிய உறுப்பினர்கள் எவருக்கும் பிரச்சினைகள் ஏதும் இருப்பின் எந்த நேரத் திலும் அவர்கள் என்னைச் சந்தித்து அவை பற்றிப் பேசலாம். எனது சக்திக்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு வழிகாட்டவும் உதவ வும் அவர்களின் நல்லெண்ணம், நம்பிக்கை, ஒத்துழைப்பு ஆகியவற்றை நான் மிகவும் பணி வுடன் கோருகின்றேன்.
இவை எனக்கு நிறைந்த அளவில் கிடைக் கும் என்பது உறுதி. என் கட்சிக் கோலங்கள் அனைத்தையும் நான் துறந்துவிட்டேன். தனி நபர் சுதந்திரத்தினதும் பாராளுமன்றச் சனநாயகத்தினதும் பேரரணுக இச் சபையை ஆக்குவன, மரபு வழி வந்த பாரபட்சமின்மை, சுதந்திரம், ஒழுங்கு என்பனவேயாம். இந்தப் பாரம்பரியங்களைப் பேணுவதில் நான் எனது சக்திக்கேற்ப நடந்துகொள்வேன் என உறுதி கூறுகிறேன்.”
அரசியற் சட்டரீதியில்
சபாநாயகர் பதவியை இதுவரை ஒரு கோணத்தி லிருந்து பார்த்த நாம் இனி இன்னுெரு கோணத் திற்கு வருவோம். சபாநாயகர் ஒருவருக்குள்ள தனித்துவமான சிறப்புகள் பல அரசியற் சட்ட ரீதி யானவை. பாராளுமன்றம் ஒரு சட்டமூலத்தை

மாண்புமிகு சபாநாயகர் I 5
விவாதித்து நிறைவேற்றி விடுகிறதென்று வைத்துக் கொள்வோம். அது சபையில் நிறைவேறியதும் சட்டமாகிவிடாது. பாராளுமன்றத்தினுல் அங்கீகரிக் கப்பட்ட சட்டமூலம் சபாநாயகரது சான்றிதழைப் பெற்ற அந்தக் கணத்திலேதான் சட்ட அந்தஸ்தைப் பெறுகின்றது. இதனை அரசியலமைப்பின் எண்ப தாவது உறுப்புரை குறிப்பிடுகின்றது.
இலங்கையின் அதி உயர்ந்த பிரமுகர்களின் வரிசையில் சணுதிபதி, பிரதமர் ஆகியோருக்கு அடுத்த ஸ்தானம் சபாநாயகருக்கே உரியதாகும். சணுதிபதி சுகவீனம் காரணமாகவோ, இலங்கையில் இருக்காமை காரணமாகவோ, அல்லது வேறே தேனும் காரணமாகவோ தமது பதவிக்குரிய தத்து வங்களையும் கடமைகளையும் பணிகளையும் பிரயோ கிப்பதற்கும் நிறைவேற்றுவதற்கும் இயலாதெனக் கருதுவாரெனில் அவர் அத்தகைய காலத்தின் போது சனதிபதி என்ற பதவியில் முதலமைச் சரை நியமிக்கலாம். ஆயின், அப்போது CP35 லமைச்சர் பதவி வறிதாக இருப்பின், அல்லது முத லமைச்சர் செயலாற்ற இயலாதிருப்பின் அத்தகைய காலத்தின்போது சனதிபதியின் பதவிக்கான தத்து வங்களையும் பணிகளையும் பிரயோகிப்பதற்கும் செய் வதற்கும் நிறைவேற்றுவதற்கும் அவர் சபாநாய கரை நியமிக்கலாம் என்று இன்றைய அரசியலமைப் புக் கூறுவதிலிருந்து எவரும் சபாநாயகர் பதவி யின் உயர் ஸ்தானத்தை உணர்ந்துகொள்ள முடி யும். இந்தத் தொடர்பில் அல்ஹாஜ் எம். அப்துல் பாகீர் மாகார் அவர்கள் சபாநாயகராகப் பதவி

Page 19
16 எனது நோக்கில். பாராளுமன்றம்
வகித்தபோது 1981ஆம் ஆண்டில் பதில் சஞதி பதியாகக் கடமையாற்றினர் என்பதையும் இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.
அதிகாரச் சின்னம்
தமது அதிகாரத்தின் சின்னமாகவே சபா நாயகர் செங்கோலைத் தன்னகத்தே கொண்டுள்ளார்.
சட்டம், ஒழுங்கு, மரபு என்பவற்றுக்கேற்பச் சபையின் விவாதங்களை ஒழுங்கான முறையில் வழி நடாத்திச் செல்வது சபாநாயகரது கடமை என்று கூறுகிருர் எஸ்கின் மே அவர்கள். சபையிலே சபா நாயகரால் வழங்கப்படும் தீர்ப்புகள் எல்லாம் வரலாற்றில் முன்மாதிரித் தீர்ப்புகள் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிடுகின்றன. முடிந்த முடி பான அவற்றுக்கு மேன்முறையீடு கிடையாது. சபாநாயகரின் தீர்ப்புகள் எல்லாம் காலக்கிரமத் திற் பாராளுமன்றத்தின் நடைமுறை விதிகளாகவும் கோட்பாடுகளாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்றும் தெரிவிக்கின்றர் எஸ்கின் மே அவர்கள். பிரித்தானிய பாராளுமன்றத்தின் மரபுகள் சம்பிர தாயங்கள் அனைத்தும் இவ்வாறுதான் உருப்பெற்று நிலைத்திருக்கின்றன.
பாராளுமன்ற நடை முறைகளை ஆராயும் பொழுது சபாநாயகரின் கடமைகள் விரிவுபடும். எனினும் " ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல இங்கு இரண்டொரு அம்சங் களைத் தொட்டுக் காட்டுவது அவசியமாகும். சபா நாயகர் அவர்கள் ஓர் அறிவுரையைப் பாராளுமன்ற

மாண்புமிகு சபாநாயகர் 7
உறுப்பினர்களுக்குக் கூறும்பொழுது அதை எல் லோரும் மிகவும் அமைதியுடனிருந்து செவிமடுத் தல் வேண்டும். இந்தச் சந்தர்ப்பங்களில் யாராவது ஓர் உறுப்பினர் உரையாற்றிக் கொண்டிருந்தால் உடனே அவர் தமது உரையை நிறுத்தி ஆசனத் தில் அமர்தல் வேண்டும். சபையில் சபாநாயகர் உரையாற்றும்பொழுது எந்த ஒரு உறுப்பினரும் தமது ஆசனத்தைவிட்டு அகலக் கூடாது.
எவரும் சபாநாயகரது நடைமுறைகளை விமர் சிக்க முடியாது.
நீதிமன்றமாக
சபை நீதிமன்றமாக அமர்ந்து சிறப்புரிமை மீறல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் பொழுது அத்தகைய நீதி விசாரணைகளுக்குத் தலைமை தாங்கித் தீர்ப்புகளை வழங்கும் அதிகா ரத்தையும் சபாநாயகர் தன்னகத்தே கொண்டிருக் கின்ருர்,
சுருங்கக் கூறின், முடியாட்சிக் காலத்தில் மன்னர் வசமிருந்த செங்கோல் இன்றைய குடி யாட்சிக் காலத்தில் சபாநாயகர் வசமே கையளிக்கப் பட்டுள்ளது எனலாம்,
வீரகேசரி - ரப்பிறல் 1984

Page 20
8
சபாாகாயகரின் தீர்ப்புகள்
1970ஆம் ஆண்டுப் பாராளுமன்றக் காலத்தில், அப்பொழுது நிக்கவெரட்டியத் தொகுதிப் பாராளு மன்ற உறுப்பினராக இருந்த திரு. முதியான்சே தென்னக்கோன் அவர்கள் வெள்ளை வெளேரென்ற காந்திக் குல்லா அணிந்து சபைக் கூட்டங்களிற் கலந்து கொண்டதை அவதானித்த திரு. பீலிக்ஸ் ஆர். டயஸ் பண்டாரநாயக்க அவர்கள் " நிக்க வெரட்டியத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் சரியான முறையில் உடை அணிந்திருக்கிருரா " என்ற ஓர் ஒழுங்குப் பிரச்சினையைக் கிளப்பினுர். அப்பொழுது சபாநாயகராக விளங்கிய மாண்புமிகு ஸ்ரான்லி திலகரத்தின அவர்கள் * கெளரவ உறுப் பினர் அணியும் உடையின் ஓர் அங்கம் அது என்று நான் தற்பொழுது எண்ணவில்லை. ஆயினும் இதற்கு முன் இங்கு காலஞ்சென்ற திரு. பேணுட் அலுவிகார தலையங்கி ஒன்றை அணிந்த உதாரணம் ஒன்றுண்டு. அது காரணமாகத் தீர்ப்பொன்றைக் கூற இந்தக் கட்டத்தில் நான் விரும்பவில்லை. உறுப்பினர் தற்போதைக்குக் குல்லாவை அணிந்து கொள்ளலாம்."? எனத் தீர்ப்பு வழங்கிஞர்,
ஒழுங்குப் பிரச்சினைகள்
பாராளுமன்றம் அமர்வில் இருக்கும் பொழுது பலதரப்பட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் உறுப்பினர் களால் எழுப்பப்படுவதுண்டு. அத்தகைய சந்தர்ப் பங்களிலும் தேவையேற்படுமிடத்தும் சபாநாயகர் தீர்ப்புகளை வழங்குவது நடைமுறையாகும்.

சபாநாயகரின் தீர்ப்புகள் 19
அரசாங்க சபைக் காலத்தில் சேர் வைத்திலிங் கம் துரைசுவாமி அவர்கள் நீண்ட காலம் புகழ் பூத்த சபாநாயகராக விளங்கினர். அதன் பின், சேர் பிரான்ஸிஸ் மொலமுரே அவர்களும், சேர் அல்பட் எவ். பீரிஸ் அவர்களும் சபாநாயகர்களாக விளங்கினர்கள். 1956ஆம் ஆண்டு பிரதமர் பதவிக்கு வந்த திரு. எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்க அவர்களின் காலத்தில் மாண்புமிகு எச். எஸ். இஸ்மாயில் அவர்கள் பெருமைக்குரிய இப் பத வியை அலங்கரித்துள்ளார். பாராளுமன்றத்தில் நான் சேவையாற்றத் தொடங்கிய காலத்தில் மாண்புமிகு ஆர். எஸ். பெல்பொல சபாநாயக ராகப் பதவி வகித்தார். இவருக்கு முன்னர் சிறிது காலம் மாண்புமிகு ரி. பி. சுபசிங்க அவர்களும் இப் பதவியை வகித்த பெருமைக்குரியவர். மாண்புமிகு பெல்பொல அவர்களைத் தொடர்ந்து மாண்புமிகு ஹியூ. பெர்ணுண்டோ, மாண்புமிகு சேர் அல்பட் எவ். பீரிஸ், மாண்புமிகு ஷேர்ளி கொறயா, மாண்பு மிகு ஸ்ரான்லி திலகரத்தின, மாண்புமிகு ஆனந்த திஸ்ஸ த அல்விஸ், மாண்புமிகு அல்ஹாஜ் எம். அப்துல் பாகீர் மாகார் என்ற வரிசையில் சபா நாயகர் பதவி அலங்கரிக்கப்பட்டுப் பாராளுமன்றச் சரித்திரம் தொடர்ந்துகொண்டிருக்கின்றது.
பாராளுமன்ற நடைமுறைகளில் மிகுந்த அநு பவமும் தொடர்ச்சியான அக்கறையும் உள்ளவராக விளங்கிய கலாநிதி என். எம். பெரேரா அவர்கள் பல சந்தர்ப்பங்களிலே சேர் வைத்திலிங்கம் துரை

Page 21
20 எனது நோக்கில்...பாராளுமன்றம்
சுவாமி, சேர் பிரான்ஸிஸ் மொலமுரே ஆகியோரின் முன்மாதிரிகளையும் தீர்ப்புகளையும் வெகுவாகச் சிலாகித்து உதாரணம் காட்டிப் பேசியதை நான் சபையில் அவதானித்திருக்கின்றேன்.
சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளு மன்றக் காலத்தில் சபாநாயகராக விளங்கிய சேர் பிரான்ஸிஸ் மொலமுரே அவர்கள் 1949ஆம் ஆண்டில் ஒரு நாள் அரசாங்கக் கட்சி உறுப் பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சபாநாய கரின் தீர்ப்புகளைக் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளல் வேண்டும்" என்று குறிப்பிட்டபோது, சபாநாய கருக்குச் சாதகமாகவோ அல்லது மேலும் விளக்கம் வேண்டுமுகமாகவோ என்னவோ, சேர் ஜோன் கொத்தலாவலை அவர்கள் “சரியாக இருந்தாலென்ன அல்லது பிழையாக இருந்தாலென்ன” என்று இடைநடுவில் நாகுக்காக விளம்ப, அதற்குச் சபா நாயகர் "ஆம்" எனக் கண்டிப்பான தோரணையில் பதிலளித்துள்ளார். -
இதே போன்று 1955ஆம் ஆண்டளவில் சபா நாயகர் சேர் அல்பட் எவ், பீரிஸ் அவர்கள் * ஒரு முறை என்னுல் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டால் அதன் பிறகு அதுபற்றி என்னுடன் வாதிட முடியா தென்பதை உறுப்பினர் அறிந்து கொள்ளல் வேண்டும் ; ஒரு தீர்ப்பு வழங்கப்படுமிடத்து மறு பேச்சின்றி உறுப்பினர் அதற்குக் கீழ்ப்படிந்து ஒழுகல்வேண்டும்” எனத் தீர்ப்பு வழங்கியிருக்கிருர்,

சபாநாயகரின் தீர்ப்புகள் 21
முடிக்த முடிபு
இத்தகைய தீர்ப்புகள் எல்லாம் எதைக் காட்டு கின்றனவென்ருல், பாராளுமன்ற நடைமுறைகளைப் பொறுத்த அளவில் சபாநாயகரின் தீர்ப்பே முடிந்த முடிபானது. அதற்கு மேன்முறையீடு கிடையாது. தம் தீர்ப்புகளுக்குக் கட்டுப்பட மறுக்கும் உறுப் பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதி காரமும் சபாநாயகருக்குண்டு. சபாநாயகரொருவர் தீர்ப்பொன்றை வழங்குமிடத்து அதுவே பின்னர் பாராளுமன்றச் சம்பிரதாயமாகவும் நடைமுறை யாகவும் ஆகிவிடுகின்றது.
சுதந்திர இலங்கையின் இரண்டாவது பாராளு மன்றக் காலத்தில் சேர் அல்பட் எவ், பீரிஸ் அவர் கள் சபாநாயகராகச் சபைக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்க, அப்போது வவனியாத் தொகுதியின் உறுப்பினராக விளங்கிய திரு. செ. சுந்தரலிங்கம் அவர்கள் “கெளரவ உறுப்பினர் ஒருவர் சபைக்குள் கோப்பி கொண்டுவரலாமா" என ஒர் ஒழுங்குப் பிரச்சினையைக் கிளப்பியபோது அப்படிச் செய்வது சரியல்ல" எனச் சபாநாயகர் தீர்ப்பு வழங்கிஞர்.
இதே போன்று இன்னுெரு சமயம் உறுப்பின ரொருவர் தமது ஆசனத்தில் நித்திரையாகிவிட்டமை பற்றி எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்க அவர்கள், சபாநாயகர் சேர் அல்பட் எவ். பீரிஸ் அவர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். சபா நாயகர் அவர்கள் அதனைப் பெரிதுபடுத்தாது *கெளரவ உறுப்பினர் இங்கே தூங்குவதாயின் لتق{2كم

Page 22
22 எனது நோக்கில். பாராளுமன்றம்
பரவாயில்லை’ எனத் தெரிவித்துவிட்டார். இது சபா நாயகரது தற்றுணிபுக்குரிய விடயம். ஆணுல் சபை நிகழ்ச்சிகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் விதத் தில் ஓர் உறுப்பினர் பலத்த குறட்டை விட்டுத் துரங்குவாரேயானூல் சபாநாயகரது தீர்ப்பு வேறு விதமாக அமையவும் இடமுண்டு.
* உறுப்பினர் ஒருவர் தன்மீதுள்ள குற்றச் சாட்டை மறுப்பாராகில் அந்த மறுப்பு ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும்.
* ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்ட இறுதியிலும் ஒத்திவைப்புப் பிரேரணை இடம் பெறுவது வழக்கம். ஒத்திவைப்புப் பிரேரணையின்போது பகற்போசன இடைவேளையோ, தேநீர் இடை வேளையோ குறுக்கிட்டால் அதற்காக அப் பிரேரணைமேலான விவாதம் இடைநிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் தொடர முடியாது.
இரு தரப்பிலுமுள்ள உறுப்பினர்கள் சபா மண்டபத்தைக் குறுக்கே கடந்து செல்லவோ, மற்றவர்களுடன் சம்பாஷணையில் ஈடுபடவோ (plgust 5l.
தமது பேச்சுகளை எந்தவொரு உறுப்பினரும் சபையில் வாசிக்க முடியாது.
உறுப்பினர் ஒருவர்மீதோ அல்லது அமைச்சர் ஒருவர்மீதோ ஒரு குற்றச்சாட்டுச் சுமத்தப்படு மானுல் அது ஒரு முறையான தன்னிலைப் பிரேரணை முலமே கொண்டு வரப்படல் வேண்

سه
சபாநாயகரின் தீர்ப்புகள் 23
டும். மேலெழுந்த போக்கில் குற்றச்சாட்டுகளை வீசிவிட முடியாது.
ஒருவரது தனிப்பட்ட சொந்த விளக்கம் சபை யில் விவாதிக்க அனுமதிக்கப்படமாட்டாது.
நீதி விசாரணைக் குட்படுத்தப்பட்டிருக்கும் விட யங்களைச் சபையில் விவாதிக்க முடியாது.
கெளரவ உறுப்பினர்கள், பெண் உறுப்பினர் கள் பேசும்பொழுது இடையீடு செய்யாது பெருந்தன்மையாக விட்டுக் கொடுக்கும் பாங் குடன் நடந்துகொள்ளல் வேண்டும்.
சபையில் பேசும்பொழுது ஒர் உறுப்பினர்
இன்னேர் உறுப்பினரைப் பெயர் குறிப்பிட்டு
அழையாமல் இன்ன தொகுதியின் கெளரவ உறுப்பினர் என்றே விளித்து உரையாற்றல் வேண்டும்.
ஒரு தலைவரைத் தெரிவு செய்வதில் எதிர்க் கட்சிக்குள் ஏகோபித்த ஒற்றுமை இல்லாவிட் டால் அத்தகைய சந்தர்ப்பங்களில் எதிர்க் கட் சித் தலைவர் ஒருவரைத் தெரிவு செய்யும் அதி காரம் சபாநாயகருக்கு உண்டு.
சபையில் ஒரு விடயத்தை ஒட்டி வாக்கெடுக்கப் படும்பொழுது அரசாங்கக் கட்சிக்கும் எதிர்க்
கட்சிக்கும் சமமாக வாக்குகள் கிடைக்கு மிடத்து, அத்தகைய சந்தர்ப்பங்களில் வாக் களிக்கும் அதிகாரம் சபாநாயகருக்திருக்கின்

Page 23
24 எனது நோக்கில்...பாராளுமன்றம்
றது. இலங்கையின் முதலாவது பாராளுமன்ற
காலத்தில் சபாநாயகர் சேர் பிரான்ஸிஸ்
மொலமுரே அவர்கள் இவ்விதம் வாக்களித்துள் GITIT. - |
* சபாநாயகரின் அனுமதியின்றி எவரும் தம் எண்ணப்படி சபை நிகழ்ச்சிகளைப் புகைப்படமி எடுக்க முடியாது.
இவ்விதமாகக் காலத்துக்குக் காலம் சபாநாய கர்கள் பலரும் நிலைக் கட்டளைகளுக்கேற்பத் தமது தீர்ப்புகளை வழங்கியிருக்கின்ருர்கள்,
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப் பட்டாலோ தடுப்புக் காவலில் வைக்கப்பட்டாலோ இது விடயம் சபைக்கு அறிவிக்கப்படல் வேண்டும் என்பது மாண்புமிகு ஸ்ரான்லி திலகரத்தின அவர்கள் சபாநாயகராக இருந்தபோது வழங்கிய தீர்ப்புகளில் ஒன்ருகும்.
உயர்ந்த கோட்பாடுகள்
சபாநாயகர் அல்ஹாஜ் எம். பாகீர் மாகார் அவர்கள், 1982ஆம் ஆண்டில் ஒருநாள் பாராளுமன் றத்தில் விடுத்த அறிவித்தல் ஒன்றில், 'நேற்றைய தினம் சில கேள்விகள் இங்கு கேட்கப்பட்டபோது அவற்றுக்குப்பதில்கள்கொடுக்கப்பட்டன.பத்திரிகை அறிக்கைகளைச் சரியென நான் எடுத்துக்கொண்டால் இங்கே வெளிப்படுத்தப்பட்ட சில குறிப்புகள் ஒழுங் கற்றன. சபையின் கெளரவத்தைப் பேணுவனவாக அவை அமையவில்லை. என்னைச் சந்திக்குமாறு

சபாநாயகரின் தீர்ப்புகள் 25
நான் ஹன்சாட் பதிப்பாசிரியரைப் பணித்திருக் கின்றேன். எவையெவை சரியானவையோ, சபை யின் கெளரவத்தைப் பேணுபவையோ அவற்றை நான் அனுமதிப்பேன். மற்றவை ஹன்சாட்டி லிருந்து தவிர்க்கப்படும்” எனக் குறிப்பிட்டார். இது பாராளுமன்றத்தில் எத்தனையோ உயர்ந்த கோட்பாடுகளை, தான் சபையில் இல்லாத நேரங் களிலும் கண்ணுங் கருத்துமாகப் பேணிக் காக்க வேண்டிய ஒரு பொறுப்புமிக்க தானத்தில் சபா நாயகர் இருக்கிறர் என்பதை அனைவருக்கும் உணர்த்தும் ஓர் உதாரணமாகும்.
இதுவரை ஏழு சபாநாயகர்களின் கீழ்க் கடமையாற்றிய அநுபவத்தைக் கொண்டு பார்க்கை யில் அல்ஹாஜ் எம். அப்துல் பாகீர் மாகார் அவர் கள் விசேட தகைமைகள் சிலவற்றைக் கொண்டிருந் தார் என்பது தெளிவு. ஆங்கிலம், சிங்களத்துடன் தமிழ் மொழியிலும் தமது தீர்ப்புகளை வழங்கும் தகைமை அவருக்கிருந்தது. அவருடைய இச் செயற்பாடுகள் முன்மாதிரியானவை என்றே கூற வேண்டும்,
மும்மொழிகளிலும் உரைகளை நிகழ்த்தும் உரிமை வழங்கப்பட்டிருக்கும் பாராளுமன்றத்திலே அம் மும்மொழிகளிலும் நிகழ்ச்சிகளை நடாத்தவும், தீர்ப்புகளை வழங்கவும் ஆற்றல் படைத்திருந்த அவர் அவற்றைச் செய்கையிலும் காட்டினுர் என் பது குறிப்பிடத்தக்கது. -
வீரகேசரி - மே 1983

Page 24
4
செங்கோல்
பாராளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தின் போதும் பாராளுமன்றத்தினுள் பவனி ஒன்று இடம் பெறுவதுண்டு. இதனைச் சிலரே அறிவர். பலர் அறியமாட்டார்கள். இந்தப் பவனியின் பிரதான கதாநாயகர் மாண்புமிகு சபாநாயர் அவர்களே யாவார். சபையின் செயலதிகாரி, உதவிச் செயலதி காரிகள், படைக்கலச் சேவிதர், உதவிப் படைக்கலச் சேவிதர், இரு சேவகர்கள் இந்தப் பவனியில் இடம் பெறும் மற்றும் பிரதானிகளாவர். கூட்டம் ஆரம்ப மாவதற்கு அறிகுறியாக முதலில் ஐந்து நிமிடங்க ளுக்கு நிறைவெண் மணியோசை பாராளுமன்றக் கட்டடம் முழுவதும் எழுப்பப்படும். இம் மணி யோசையின் முடிவிலேதான் சபாநாயகரது பவனி அவரது அலுவலகத்திலிருந்து சபா மண்டபத்தை நோக்கி ஆரம்பமாகின்றது. படைக்கலச் சேவிதர் செங்கோலைத் தமது வலது கையாற் பற்றி வலது தோளிற் சார்த்தித் தாங்கியபடி முன்னேவரப் பவனி சபையின் முன்புற வாயிலை அடையும். அதே நேரத்தில் இரு சேவகர்களும் மண்டபத்தின் இரு கதவுகளையும் அகலத் திறந்து நிற்க, உதவிப் படைக் கலச் சேவிதர் சபாநாயகரின் வருகையை அறி வித்துப் பராக் கூற, சபையோர் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த, மாண்புமிகு சபா நாயகர் அவர்கள் சபாமண்டபத்திற்குள் பிரவேசித் துத் தமது ஆசனத்தைச் சென்றடைவார். இவ்
 

後 後 彩
ல் ஜ்
ன்ற காலத்தி
னற மிகு அ
ன்ருவது பாராளும
விள
யில் அவ
ge
ங்கையின் மூ
ாயகராக
岳f@ö
நந்திர இல
லஹா
ங்கிய மாண்பு ள் கோ
றகுப பவ
956) Fu unrps
ல் சகிதம் பாராளு
ர்கள் செங்
. எஸ். இஸ்மா
ல்லும் காட்சி
ଘof GରଣF
திற்
O
மனறக கூடடத

Page 25

செங்கோல் 27
வாருண வேளைகளில் சபாநாயகருக்கும் படைக் கலச் சேவிதருக்கும் இடையிற் செல்ல எவரும் அநுமதிக்கப்படுவதில்லை. சபாநாயகரது இருக் கைக்கு முன்புறமாக அமைந்துள்ள செயலதிகாரி களின் இருக்கைகளுக்கு முன்னேயுள்ள உயர் பீடத்தில் அதற்குரிய இடத்தில் செங்கோல் வைக் கப்படும். அதற்கென உரிய இடத்தில் செங்கோல் இடம்பெறும்பொழுதுதான் பாராளுமன்றம் முறைப் படி கூடுகின்றது என்று அர்த்தமாகும். பாராளு மன்ற நடைமுறைகளில் சபாநாயகர் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரச் சின்னமான செங் கோல் சபாமண்டபத்துக்கு வெளியே இருக்கும் பொழுது சபையில் எவ்வித அலுவல்களையும் சட் டப்படி மேற்கொள்ள முடியாது. சுருங்கச் சொன் குல் செங்கோல் இன்றிச் சபைக் கூட்டங்களே இல்லை,
மகிமைகள்
முடியாட்சிக் காலத்தில் இடம்பெற்ற செங்கோல் இன்றைய குடியாட்சிக் காலத்திலும் பாராளுமன்ற ஆட்சி முறையில் அரசாங்கத்தின் அதிகாரச் சின்ன மாகப் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது. முடியும் குடியும் இணைந்து ஆட்சி நடைபெறும் இங்கிலாந்து நாட்டில் இன்று அரச அதிகாரச் சின்னமாகவே செங்கோல் சபாநாயகரிடம் இடம்பெற்றிருக்கின் றது. பதவியிலுள்ள அரசனே அன்றி அரசியோ நேரடியாகப் பங்குபற்றும் கொமன்ஸ் சபைக் கூட் டங்களிற் செங்கோல் ஒரு போர்வையால் மறைக் கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். அரசனே அரசியோ,

Page 26
28 எனது நோக்கில் . . . பாராளுமன்றம்
நேரடியாகப் பங்குபற்றும் வைபவங்களில் அவர்க ளது அதிகாரச் சின்னம் அங்கு பலனற்றுப்போவது இயல்பானதே. முதலாவது அரச கட்டளையின் சின்னமாகவும் பின்னர் மரபுவழியின் காரணமாக சபாநாயகரதும் சபையினதும் அதிகாரச் சின்ன மாகவும் செங்கோல் விளங்குகின்றது என்கிருர் பாராளுமன்ற நடைமுறைகள் பற்றிய அறிவாற்ற லில் பெரும் பண்டிதராகக் கணிக்கப்படும் எஸ்கின் மே என்பார். செங்கோல் எனும்பொழுது அஃது எமது வரலாற்றிற்கு ஏதோ ஒரு புதிய அமிசம் ஆகாது. எங்கள் மன்னர்கள் செங்கோல் தவருது நீதி செலுத்தியதாக வரலாறுகளிற் காண்கின்ருேம். தேர்கள், யானைகள், குதிரைகளுடன், மந்திரி, பிர தானிகள் ஆயிரவர் வாய்க்கப்பெற்ற பெரு மன்ன னைக் குறிப்பிடும்பொழுது மிக உயர்ந்த விற்கொடி யையும் செம்மையான செங்கோலையும் உடையவன் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. இங்கே செங்கோல் என்பது அரசாட்சியின் சின்னமான நேர்கோலையே குறிப்பதாயுள்ளது, 11 சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே ’ என்பது சிலப் பதிகார மேற்கோளாகும்.
கல்லாட்சியின் சின்னம்
செங்கோல் நல்லரசாட்சிக்குச் சின்னமாக விளங்கியமையையும் பண்டைக்காலத்திலே போற் றப்பட்ட அறுவகை நாட்டு அமைதிகளுள் ஒன்றை
1. சிலப்பதிகாரம், வஞ்சிக்காண்டம், கால்கோட் காதை, அடி 139.

செங்கோல் 29
அது குறித்தமையையும் மணிமேகலைக் காப்பியம் உணர்த்துகின்றது. 18° செங்கோல் காட்டிச் செய் தவம் புரிந்த ’ (மணி. 18-82) அரசன் பற்றி மணி மேகலை எமக்குத் தகவல் தருகின்றது. இங்கே அரச னது செங்கோலோச்சும் தன்மை உணர்த்தப்படு கின்றது. சுருங்கக் கூறுவதாயின் செங்கோல் என் பது செங்கோன்மையின் சின்னமாகும். செங் கோன்மை என்பது அரச நீதி. இதனையே வள்ளு வரும் செங்கோன்மை என்ற தலைப்பில் (அதி. 55) விரித்துக் கூறியுள்ளார். குடிகளைத் தழுவிச் செங் கோல் செலுத்தி ஆட்சி புரிகின்ற தலைவனை உலகம் பொருந்தி நிற்கும் என்கிறர் அந்தப் பொய்யா மொழிப் புலவர். செங்கோன்மை என்பது சமயப் பொருளில் நீதி செலுத்தும் தேவனுகிய இயமனுக் கும் உரியதாதலின் அவனைச் செங்கோற் கடவுளென நம் முன்னுேர் வழங்கினர். செங்கோல் எனும் பொழுது இத்தகைய வரலாற்றுப் பின்னணிகளை யும் நாம் ஒரு முறை ஞாபகப்படுத்திக்கொள்வது அவசியமாகும்.
வைபவங்களில்
பாராளுமன்றக் கூட்டங்களில் நிலைமைக்குத் தகுந்தாற்போல இரு வெவ்வேறு நிலைகளிற் செங் கோல் வைக்கப்படுவதுண்டு. ஒரு சட்டமூலமானது இரண்டாம் மதிப்பிடம் பெற்ற பின்னர் அதைச் சபை, குழுநிலையில் பரிசீலனைசெய்வதுண்டு. இத்
1. மணிமேகலை, உதயகுமாரன் அம்பலம்புக்க காதை, அடி 82,

Page 27
30 எனது நோக்கில். பாராளுமன்றம்
தகைய சந்தர்ப்பங்களிலே செங்கோலானது அத னுடைய பீடத்தின் கீழுள்ள இரண்டாவது படியில் வைக்கப்பட்டிருக்கும். சபாநாயகர் அவரது ஆச னத்தை அலங்கரிக்கவில்லை என்பதை இது காட்டு கின்றது. இவ்வேளைகளில் சபாநாயகரும் தமது ஆசனத்துக்கு முன்னுள்ள சபைச் செயலதிகாரி யின் இருக்கையிலமர்ந்து சபை நடவடிக்கைகளை மேற்கொள்வார். சபைச் செயலதிகாரி, உதவிச் செயலதிகாரியின் இருக்கையில் அமர்ந்துகொள் வார். குழுநிலை முடிவடைந்து சபாநாயகர் அவர்கள் பழையபடி தமது இருக்கைக்குச் செல்லும்பொழுது சபை வழமைபோலாகிவிடும். செங்கோலும் அதனது வழமையான பீடத்தை அலங்கரிக்கும். பாராளு மன்றத்தினது சகல பாதுகாப்பு நடவடிக்கைகளுக் கும் பொறுப்பதிகாரியான படைக்கலச் சேவிதரே சபைச் செங்கோலின் பாதுகாப்புக்கும் உரியவ ராவார். இவரே பாராளுமன்றத்தின் சகல வைபவங் களிலும் செங்கோலைக் கையாள்பவர். செங்கோலின் மகத்துவமும் அத்துடன் சம்பந்தப்பட்ட பாரம்பரி யங்களும் விசேட வைபவங்களின்போதுதான் வெளிப்படும்.
அகற்றப்படுவதில்லை
பாராளுமன்றக் கூட்டங்களின் அமர்வு போசன இடைவேளைக்காகவோ அல்லது தேநீர் இடைவேளைக் காகவோ இடைநிறுத்தி வைக்கப்படும் பொழுது செங்கோல் சபையிலிருந்து அகற்றப்படுவதில்லை. கூட்டம் தொடர்ந்தும் நடைபெறும் என்பதையே இது குறிக்கும். பாராளுமன்றக் கூட்டம் முடி வடைந்து சபை வேறெரு தினத்துக்கு ஒத்திவைக்

செங்கோல் 31
கப்படும்பொழுதுதான் படைக்கலச் சேவிதர் செங் கோலை முன்னே எடுத்துச் செல்லச் சபாநாயகர் அவர்கள் பிரதான வாயிலூடாகச் சென்று தமது அலுவலகத்தை அடைவார். சபாநாயகர் அவர்கள் சபைக் கூட்டங்களுக்குப் பிரசன்னமாகாத சந்தர்ப் பங்களில் சபைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங் கும் பிரதிச் சபாநாயகர் அவர்கள் கூட்ட ஆரம்பத் திலும் முடிவிலும் சபாநாயகரைப் போன்று சபைக் குப் பவனியாக வருவதோ, சபையை விட்டு அகல் வதோ நடைமுறையில் இல்லை. இத்தகைய சந்தர்ப் பங்களிற் செங்கோல் மாத்திரம் உரிய நேரத்தில் சபைக்குக் கொண்டுவரப்பட்டுப் பின்னர் எடுத்துச் செல்லப்படும்.
பாராளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர்களை ஆரம்பித்துவைக்கும் பொருட்டு மேன்மைதங்கிய சஞதிபதி அவர்கள் பாராளுமன்றத்துக்கு வருகை தருகையில் சஞதிபதி அவர்கள் பிரதான வாயிலி லிருந்து செங்கோல் சகிதமே சபாநாயகராலும் மற்றும் பிரதானிகளாலும் அழைத்து வரப்படுவார். சஞதிபதி அவர்கள் வைபவ முடிவிலே தமது மாளிகைக்குத் திரும்புகையிலும் சபா மண்டபத் தின் பிரதான முகப்புவரை இவ்விதமே அழைத்துச் செல்லப்படுவது வழக்கம், இவையெல்லாம் பாராளு மன்ற நடைமுறைகளுக்குட்பட்டவை.
கொமன்ஸ் சபை அன்பளிப்பு
தற்பொழுது பாராளுமன்றத்தில் உள்ள செங் கோல் இலங்கைக்குக் கொமன்ஸ் சபையால் அன்

Page 28
32 எனது நோக்கில்.பாராளுமன்றம்
பளிப்புச் செய்யப்பட்டதாகும். இங்கி லா ந் து இலங்கை ஆகிய இரு நாடுகளுக்குமிடையில் நிலவி வரும் நல்லெண்ணத்தையும் சுமுக உறவையும் அத்தாட்சிப்படுத்தும் முகமாகவே அன்று இந்த அன்பளிப்புச் செய்யப்பட்டது. இங்கிலாந்தில் அரச குடும்பத்தினரின் ஆபரணுதிகளைத் தயாரிக்கும் பொற்கொல்லர்களால் உருவாக்கப்பெற்ற இச் செங் (βός πέου அன்பளிப்புச் செய்வதன் பொருட்டு கொமன்ஸ் சபையின் உப சபாநாயகர் மாண்பு மிகு ஜேம்ஸ் மில்னர் தலைமையில் தூதுக்குழு வொன்று அன்று இலங்கைக்கு வருகை தந்தது. 1949ஆம் ஆண்டு சனவரி மாதம் 11ஆந் தேதி நடைபெற்ற ஒரு விசேட அமர்விலே சபையின் அன் றைய படைக்கலச் சேவிதரான ஜனுப் எம். இஸ் மாயில் இந்த அன்பளிப்பைக் கையேற்றர். பாராளு மன்றத்தின் பெரும் பொக்கிஷமான இச் செங்கோ லைச் சாதாரண நாட்களில் எவரும் பார்க்க முடி աո Ցl,
தாமரையை . . .
நாற்பத்தெட்டு அங்குல நீளமுள்ள இலங் கைப் பாராளுமன்றச் செங்கோல் கருங்காலியிஞல் தயாரிக்கப்பட்டு வெள்ளி வேலைப்பாடுகளுடன் பதி னெட்டுக் கரட் தங்கமும் விலையுயர்ந்த புஷ்பராகக் கல்லும் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரத் தினத் துவீபம் எனப் புகழ்பெற்ற ஈழத் திருநாட் டின் செங்கோலில் புஷ்பராகக் கல் பொருத்தப்பட்
டிருப்பது மிகவும் பொருத்தமும் அருத்தமுமுடைய ஒரு செயலாகும். இதன் முக்கிய வேலைப்பாடுகள்

செங்கோல் 33
தாமரையை அடிப்படையாகக் கொண்டவை. சூரிய சந்திர சின்னங்களையும் செங்கோலிலே காணலாம். புனிதம், நிதியம்,அழகு, பூரண அமைதி ஆகியவற் றுக்குத் தாமரையையும், முடிவின்மைக்குச் சூரியர் சந்திரர்களையும் சிற்பிகள் செங்கோலில் வடித் துள்ளார்கள். செங்கோலின் அமைப்பானது எமது வரலாற்றுப் பின்னணியையும் அதன் அபிவிருத்தி யையும் வளத்தையும் செழிப்பையும் கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
வாள் ஏந்திய சிங்க இலச்சினையையும் செங் கோல் தன்னகத்தே கொண்டுள்ளது.
செங்கோலைப் பற்றிச் சுருங்கச் சொல்வதானுல், முன்பு முடியாட்சியில் இறைமைத் தன்மையின் சின்னமாக அமைந்த செங்கோல் குடியாட்சி நிலவும் இக் காலத்திலும் நாட்டு அரச பரிபாலனத்தின் அதிகாரச் சின்னமாகச் சிறப்பிடம் பெற்றுப் பல காலமாற்றங்களை வென்றுவந்துள்ளது. செங் கோன்மையின்-அரச நீதியின்- அடிப்படைத் தத் துவத்தில் உதித்த அது முடியாட்சி-குடியாட்சி அமைப்புகளைப் பிணைத்துக் காட்டும் அரசியல் வரலாற்றிற்கு ஒர் அருமையான விளக்கமாகும்.
திணகரன் - மார்ச் 1969

Page 29
5 சம்பிரதாயங்களும் மரபுகளும்
பாராளுமன்றத்தைப் பொறுத்த வரையில் அனேக சம்பிரதாயங்கள் சட்டதிட்டங்களுக்கு உட் பட்டன. அத்துடன் மரபு வழியாகப் பின்பற்றப் படுகின்ற சம்பிரதாயங்களும் உள. சபையில் பின் பற்றப்படுகின்ற சாதாரண சம்பிரதாயங்களைப் பொறுத்த அளவில் எந்த உறுப்பினரும் தன் எண்ணப்போக்கில் தான் விரும்பியபடி உடை அணிந்துகொண்டு சபைக் கூட்டங்களிற் பங்கு பற்ற முடியாது. அதற்கும் சில விதிமுறைகள் உண்டு. தேசிய உடையில் அல்லது மேலைத்தேச உடையில் உறுப்பினர் சபையிற் பிரசன்னமாக லாம். ஆணுல் அவ்வுடைகள் பூரணமானவையாக இருத்தல் வேண்டும். மேலைத்தேச உடையிலே சபைக்கு வருபவர்கள் கழுத்துப்பட்டி கட்டி, கோட் போட்டு பூரணமான மேலைத்தேச உடையிலே பிர சன்னமாகவேண்டும். உடை சம்பந்தமாக ஆருவது பாராளுமன்றத்திலே எழுப்பப்பட்ட ஒழுங்குப் பிரச் சினை ஒன்றை இங்கு குறிப்பிடவேண்டும்.
1969ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட விவா தத்தின்போது அன்றைய உடுவில் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வி. தர்மலிங்கம் அவர்கள் உரையாற்றிக்கொண்டிருக்கிருர். தேசிய உடையிலேயே சபைக்கு வருபவரான திரு. வி. தர்ம லிங்கம் அவர்கள் தமது மேலங்கியின் கைப் பாகங்களை இரு கைகளாலும் மாறிமாறி மேலே

சம்பிரதாயங்களும் மரபுகளும் 35
உருவிவிட்டவாறு தமது உரையிலே ஆழ்ந்தபடி காணப்படுகின்ருர், அவரை அறியாமலேயே அவரது மேலங்கியின் கைப்பாகங்கள் இரண்டும் முழங் கைகளுக்கு மேல் சென்றுவிட்டன. இந்தச் சந் தர்ப்பத்தில் உள்நாட்டு அமைச்சரின் பாராளு மன்றச் செயலாளராக விளங்கிய திரு. சீ. ஆர். பெலிகம்மன ?? கெளரவ உடுவில் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் சபையின் மரபுப்படி உடையணிந்திருக்கிருரில்லை” என்று ஓர் ஒழுங்குப் பிரச்சினையைக் கிளப்பினுர், அன்றைய இராசாங்க அமைச்சரான மாண்புமிகு ஜே. ஆர். ஜயவர்த்தன அவர்கள் அந்த ஒழுங்குப் பிரச்சினையை ஆதரித்த துடன் குறிப்பிட்ட உறுப்பினர் மேலங்கியின் கைப் பாகங்களை முழங்கைகளுக்குமேல் சுருட்டிவிட்டுள் ளார் என்றும் அது சபையை அவமரியாதை செய்வ தாகும் என்றும் எடுத்துரைத்தார். இதற்கிடை யில் யாரோ உறுப்பினர் ஒருவர் 'அவர் சண்டைக் குத் தயாராகிக்கொண்டிருக்கிருர்’ என்று நகைச் சுவையாகக் குறிப்பிடவே தமது தவறைத் திரு.தர்ம லிங்கம் அவர்கள் திருத்திக்கொண்டார்.சபையின் சம் பிரதாயங்களிற் சில உறுப்பினர்கள் எவ்வளவு கண் ஞனுங் கருத்துமாக இருக்கிருர்கள் என்பதற்கு இந்த நிகழ்ச்சி சிறியதோர் உதாரணமாகும். அன்றைய பிரதமர் மாண்புமிகு டட்விரி சேஞநாயக்க, இரா சாங்க அமைச்சர் மாண்புமிகு ஜே. ஆர். ஜயவர்த் தன, கலாநிதி என். எம். பெரேரா, திரு. ஜி. ஜி. பொன்னம்பலம் கியூ. ஸி, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டபிள்யூ. தகநாயக்க, நிதி அமைச்சர் மாண்புமிகு யு. பி. வன்னிநாயக்க

Page 30
36 எனது நோக்கில். பாராளுமன்றம்
போன்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் சபையின் சம்பிரதாயங்களைப் பொறுத்த அளவில் அதிக சிரத்தை காட்டியதை நான் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கின்றேன்.
அறிவுரை
சபையில் உறுப்பினர் ஒருவர் இன்னுேர் உறுப் பினரைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவரைப் பெயர் சொல்லி விளிப்பது மரபல்ல. இன்ன தொகுதியின் மாண்புமிகு உறுப்பினர் என்றே ஒருவரைப் பற்றிக் குறிப்பிடுவது சபையில் நீண்ட காலமாகப் பின்பற் றப்பட்டுவரும் மரபாகும். 1965ஆம் ஆண்டு ஏப்பிறல் மாதத்தில் ஒருநாள் திரு. ஆர். ஜி. சேனநாயக்க அவர்கள் உரையாற்றுகையில் திரு. எஸ். தொண்டமான் அவர்களை ‘தொண்டமான் சகோதரயா" என்று குறிப்பிட்டபொழுது அவர் மாண்புமிகு சபாநாயகரின் அறிவுறுத்தலுக்கு இலக்கானுர், சபையின் கெளரவ உறுப்பின ரொருவரை “சகோதரயா” என விளித்தலாகாது என்பது அன்றைய தினம் சபாநாயகர் அவர்கள் வழங்கிய அறிவுரையாகும்.
உறுப்பினர்கள் எவரும் தம் உரைகளை முன்கூட் டியே எழுதி வாசிப்பது சபையின் ஒழுங்கு விதி களுக்கு முரண்பட்டதாயினும், சில உறுப்பினர்கள் தமது உரைகளைச் சில வேளைகளில் எழுதிப் படிப் பதுமுண்டு. அத்தகைய சந்தர்ப்பங்களில் ஒழுங்குப் பிரச்சினை கிளப்பப்பட்டால், சம்பந்தப்பட்ட உறுப் பினர் தனது உரையை எழுதிப் படிக்கவில்லை என்றும் தனது குறிப்புகளைப் பார்த்தவாறு உரையை நிகழ்த்துவதாகவும் கூறித் தப்பிக்கொள் வது முண்டு.

சம்பிரதாயங்களும் மரபுகளும் 37
பண்ணிசைக்க முடியாது
சபையில் உரையாற்றுகையில் உறுப்பினர்கள் சமய சந்தர்ப்பத்துக்கேற்றவாறு பாடல்களைக் கையாள்வார்கள். ஆனல் பாடல்களை எவரும் இராக, தாள ஆலாபனையுடன் இசைக்கமுடியாது. பொய்யன், கள்ளன், போக்கிரி, மோசக்காரன், இலஞ்சக்காரன் என்பன போன்ற வார்த்தைகளை எவரும் சபை யில் உபயோகிக்க முடியாது. இத்தகைய வார்த்தை களை எவராவது உறுப்பினர் தப்பித் தவறிக் கடும் வாதப் பிரதிவாதங்களின் போது உபயோகித்தால் அவர் சபாநாயகரின் கண்டனங்களுக்கு ஆளாவ துடன் அத்தகைய வார்த்தைகளை மீளப் பெறவும் நேரிடும். மேலும், உறுப்பினர் ஒருவர் உரை நிகழ்த்துகையில் பிற உறுப்பினரின் புத்திசாலித்தன மான குறுக்கீடுகளையே சபாநாயகர் அனுமதிப்பது வழக்கம், வேண்டுமென்றே தொடர்ச்சியாக எந்த உறுப்பினராவது இன்னுேர் உறுப்பினரது உரையில் அர்த்தமில்லாமல் குறுக்கிடுவதைச் சபா நாயகர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். சபா நாயகரைப் பார்த்தே உரை நிகழ்த்த எல்லா உறுப் பினர்களும் கடமைப்பட்டவர்கள். தவிர, எந்த உறுப்பினரும் அமைச்சர்களின் அல்லது உறுப்பினர் களின் சொந்த நடத்தை பற்றிப் பேசச் சபை யில் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனல், அமைச்சர் ஒருவரின் அல்லது உறுப்பினர் ஒருவரின் சொந்த நடத்தைபற்றிச் சபையில் விவாதிப்பதாஞல் அதன் பொருட்டுத் தனியான பிரேரணை ஒன்று கொண்டு வரப்படல் வேண்டும். எந்த உறுப்பினரும் தனக் கென ஒதுக்கப்பட்ட ஆசனத்திலிருந்து மட்டுமே

Page 31
38 எனது நோக்கில்.பாராளுமன்றம்
உரைநிகழ்த்த அனுமதிக்கப்படுவர். சபையில் விவாதிக்கப்படுகின்ற விடயங்களை ஒட்டியன்றி அவற்றுக்குத் தொடர்பில்லாதவை பற்றிப் பேச உறுப்பினர்களைச் சபாநாயகர் அனுமதிக்கமாட்டார்.
கன்னிப் பேச்சுகள்
புதிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபை யில் தனது கன்னிப் பேச்சை நிகழ்த்துகையில் அவர் எந்தக் கட்சியைச் சார்ந்த உறுப்பினராக இருப்பினும்சரி கட்சிப் பாகுபாடின்றி எல்லா உறுப் பினர்களுமே கரகோஷம் செய்து அவரை உற்சாகப் படுத்தி அதன் மூலம் மறைமுகமாக அவரை வாழ்த்தி வரவேற்பதுண்டு, சபைக்குள் பிரவேசிக் கும்பொழுதும் பின்னர் சபையை விட்டு வெளி யேறும் சந்தர்ப்பங்களிலும் உறுப்பினர்கள் சிரம் தாழ்த்திச் சபாநாயகருக்கு மரியாதை செலுத்துவது மரபு. உறுப்பினர் சபையினுள் பிரவேசிக்கவோ வெளியே போகவோ சபாநாயகரின் அனுமதியைப் பெறுவதற்குரிய சம்பிரதாயமாகவும் இது கொள்ளப் படும். சபையில் தம்மைப் பற்றிய ஏதாவது கூற் றுக்களை அமைச்சர்களோ உறுப்பினர்களோ மறுத் துரைத்தால் அத்தகைய மறுப்புரைகளை எவரும் எதிர்க்க முடியாது. அத்தகைய மறுப்புரைகள் சபை யில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண் Equu GO)6).
சபையில் நிகழும் ஒவ்வொரு விவாதத்தின் போதும் எந்த உறுப்பினரும் ஒரேயொரு தடவை மாத்திரமே உரை நிகழ்த்த அனுமதிக்கப்படுவார். ஆனல், சபையானது குழுநிலையில் விடயங்களைப்

சம்பிரதாயங்களும் மரபுகளும் 39
பரிசீலனை செய்யும் பொழுது இந்த விதி நடை முறையில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. குழுநிலை விவாதங்களின்போது மாண்புமிகு சபாநாயகர் அவர்களை “சபாநாயகர் அவர்களே” என்று விளித் துப் பேசுவதற்குப் பதிலாக உறுப்பினர்கள் அவரைத் "தலைவர் அவர்களே” என்று விளித்துப் பேசுவதும் சபை நடைமுறையாகும்.
சபையில் வாய்மூல விஞக்களுக்கான நேரத்தில் உறுப்பினர் ஒருவர் விஞக்களை ஒட்டிய உப விளுக்கள் மூன்று மட்டுமே கேட்க அனுமதிக்கப்படு வார். விஞக்களை ஒட்டிய உரைகளை நிகழ்த்த இந்த வேளைகளில் எந்த உறுப்பினரும் அனுமதிக்கப் படுவதில்லை.
நீதிமன்றங்களின் முன்னுள்ள விசாரணைகளைப் பாதிக்கக்கூடிய முறையில் சபையில் உரை நிகழ்த்து வது என்றும் தவிர்க்கப்படுவதுண்டு. அதே நேரத்தில் சபையில் நிகழ்த்தப்படும் உரைகளை ஒட்டிச் சட்ட நடவடிக்கைகளை எவரும் மேற் கொள்ள முடியாத அளவுக்குப் பாராளுமன்ற உறுப் பின்ர்கள் பலவித சிறப்புரிமைகளுக்கு உரித்தான வர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தினகரன் - ஏப்பிறல் 1970
p)

Page 32
6 சிறப்புரிமைகள்
மக்களின் இறைமையைப் பூரணமாகப் பிரதி பலிக்கும் பாராளுமன்றத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனத் தனியான சிறப்புரிமை கள் பல உண்டு.
உதாரணமாக, பாராளுமன்ற அதிகாரங்கள் சிறப்புரிமைகள் சட்டப்படி சபையிலோ, குழு ஒன் றிலோ, சபையை மருவிய இடங்களிலோ எவரேனும் உறுப்பினர் ஒருவரைத் தாக்குதல், அவமானப்படுத் தல் அல்லது வேண்டுமென்றே தடுத்தல் மிகவும் பாரதூரமான குற்றமாகும்.
இதே போன்று சபையின் உத்தியோகத்த ரைச் சபையிலோ, குழு ஒன்றிலோ, சபையை மருவிய இடங்களிலோ எவரேனும் தாக்குதல்,எதிர்த் தல் அல்லது வேண்டுமென்றே தடுத்தல் முதலான, குற்றச்சாட்டுக்குட்படுபவரைப் பொறுத்த அளவில் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே, பாராளுமன்றத்தின் சிறப்புரிமை களுக்குப் பங்கம் விளைவிக்கும் விதத்தில் எவரும் நடந்துகொள்ள முடியாது. பாராளுமன்றத்தி னதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப் புரிமைகள் மீறப்பட்டனவாகப் பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்படுமிடத்து அக் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யவும், குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமிடத்து குற்றஞ்சாட்டப்

சிறப்புரிமைகள் 41
பட்டவரின் குற்றத்திற்கேற்ப அவருக்குச் சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது மேற் சொல் லப்பட்ட இரண்டையுமோ விதித்துத் தீர்ப்பளிக்க வும் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்கின்றது. நீதிபதிகளாக
இத்தகைய விசாரணைகளின்போது பாராளு மன்றம் தன்னை ஒரு முழுப் பாராளுமன்றக் குழு வாக மாற்றி அமர்ந்து விசாரணைகளை மேற்கொள் ளும். மாண்புமிகு சபாநாயகர் அவர்களே இத் தகைய நீதி விசாரணைகளுக்குத் தலைமை தாங்கிக் குழுவின் முடிவுப்படி தீர்ப்புகளை வழங்குவார். இத் தகைய அமர்வுகளின்போது பாராளுமன்ற உறுப்பி னர்கள் அனைவரும் நீதிபதிகளைப்போலக் கடமை யாற்றும் நியதிகளுக்கு உட்பட்டவர்களாக விளங்குவர். சிறப்புரிமை மீறல் சம்பந்தமான விசாரணைகளின் முடிவில் வழங்கப்படும் தீர்ப்பு களுக்கு மேன்முறையீடு கிடையாது. இதற்குச் சான்ருக, இலங்கை உருக்குக் கூட்டுத் தாபனத்தின் தலைவராக விளங்கிய கலாநிதி பீ. ஏ. த சில்வா சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தை இங்கு எடுத் தாளலாம்.
1980ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று பாராளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட விவாதம் குழுநிலையில் நடை பெற்றது. அன்று இடம்பெற்ற கைத்தொழில் விஞ் ஞான அலுவல்கள் அமைச்சின் மானிய விவாதத்தில் கடுவலைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. எம். டி. எச். ஜயவர்த்தன அவர்கள் உரையாற்றிஞர்.

Page 33
42 எனது நோக்கில். பாராளுமன்றம்
ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர் காலத்துக்குக் காலம் பல தட்வைகள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கங்களில் நிதி அமைச்சராகவும், பெருந்தோட்டத் தொழில் அமைச்சராகவும் பல பதவிகளை வகித்தவர். மிகுந்த அநுபவசாலியான அவர் அன்று கைத்தொழில் அமைச்சையும் இலங்கை உருக்குக் கூட்டுத்தாபனம் உட்பட அந்த அமைச்சிற்கு உட்பட்ட கூட்டுத் தாபனங்களையும் மிகவும் காரசாரமாக விமரிசனம் செய்யத் தவறவில்லை. அவ்வமயம் கடமையின் நிமித் தம் இலங்கை உருக்குக் கூட்டுத்தாபனத்தின் தலை வர் கலாநிதி பீ. ஏ. த சில்வா சபை நிகழ்ச்சிக ளைக் கலரியிலிருந்து அவதானித்துக் கொண்டிருந் தார். நண்பகல் பன்னிரண்டு மணிக்குச் சபை நிகழ்ச்சிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டபோது திரு. எம். டி. எச். ஜயவர்த்தன சபையை விட்டு வெளியே வந்த சமயம் கலாநிதி பீ. ஏ. த சில்வா அவரைப் பார்த்து ? நீர் கடுவலைக்கு வாரும். அப் போது என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம். எனக்குக் கவலை இல்லை. அவர்கள் என்னை என்ன செய்ய முடியும்? அவர்கள் என்னைப் பதவியி லிருந்து அகற்றலாம்” என்று உரைத்தது அவரைப் பெருமி பிரச்சினைகளுக்குள் இட்டுச் செல்ல ஏது வாயிற்று.
கலாநிதி சில்வா பாராளுமன்ற மருவு பகுதி யில் திரு. எம். டி. எச். ஜயவர்த்தன அவர்களுடன் நடந்துகொண்ட முறை மிகவும் பாரதூரமான ஒரு சிறப்புரிமை மீறல் விடயமாகப் பலராலும் கருதப்

சிறப்புரிமைகள் 43
பட்டது. மேற் சொன்ன சம்பவத்தைப் பற்றிக் கேள்வியுற்ற உறுப்பினர்கள் அனைவருமே அன்று மிகவும் தாக்கமடைந்தனர் என்பதை அன்று மாலை நடைபெற்ற சபை நிகழ்ச்சிகள் மூலம் அறியக் கூடியதாக இருந்தது.
சபை பகற்போசன இடைவேளையின் பின்னர் இரண்டு மணிக்குக் கூடியபோது எதிர்க்கட்சி முதல்வர் திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் கலா நிதி பீ. ஏ. த சில்வா கடுவலைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரான திரு. எம். டி. எச். ஜயவர்த்தன அவர்களுடன் நடந்துகொண்ட முறை சபையின் சிறப்புரிமையை மீறும் பாரதூரமான ஒரு சம்பவமாகும் என மாண்புமிகு சபாநாயகர் அல் ஹாஜ் எம். அப்துல் பாகீர் மாகார் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
இந்தக் கட்டத்தில் சம்பந்தப்பட்ட பாராளு மன்ற உறுப்பினரும் தம்மைச் சந்தித்து என்ன நடந்தது என்பது பற்றித் தமக்கு விளக்கியுள்ள தாகவும் இப்பொழுது எதிர்க்கட்சி முதல்வரும் உண் மையில் என்ன நடந்தது என்பது பற்றிச் சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார் என்றும் சபையின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளமை பற்றித் தமக்குச் சந்தேகம் இல்லை எனவும் சபாநாய கர் அவர்கள் தெரிவித்து சிறப்புரிமைகள் சட்டத் தின்கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான பிரேரணை யைப் பிரேரிக்கும்படி சபை முதல்வரைக் கேட்டுக் கொண்டார். . .

Page 34
44 எனது நோக்கில். பாராளுமன்றம்
அன்றைய தினமே பி. ப. 4.30 மணிக்கு கலா நிதி பீ. ஏ. த சில்வாவைப் பாராளுமன்றத்தின் முன் தோற்றக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுச் சிறப்புரிமை கள் சட்டத்தின்கீழ் ஏன் அவர் தண்டிக்கப்படக் கூடாதென்பதற்கு அவரிடம் விளக்கம் கோரப்படல் வேண்டும் என்பதே சபை முதல்வர் சார்பில் பாராளு மன்ற அலுவல்கள் அமைச்சரும் பிரதம அரசாங்க கொறடாவுமான மாண்புமிகு எம். வின்சன்ற் பெரேரா அவர்களாற் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் சாராம்சமாகும்.
பாராளுமன்றத்தில் திரு. எம். டி. எச். ஜயவர்த் தன அவர்களது நடத்தை பற்றி அவரைப் பய முறுத்தும் வகையில் உரையாடினர் என்பதும் அதன் மூலம் அவரை அவமானப்படுத்தி, வேண்டு மென்றே அவரது கடமையில் தலையிட்டார் என் பதுமே கலாநிதி பி. ஏ. த சில்வா மீது சுமத்தப் பட்ட சிறப்புரிமை மீறல் விடயமாக அமைந்தது.
மாலைத் தேநீர் இடைவேளையின் பின்னர் சபை பி. ப. 4-30 மணிக்குக் கூடியபோது முன் தீர்மானப் படி குறித்த சிறப்புரிமை மீறல் விடயம் பரிசீல னைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வேளை பாராளுமன்றம் ஒரு முழுப் பாராளு மன்றக் குழுவாக மாறி அமர்ந்தது. மாண்புமிகு சபாநாயகர் அல்ஹாஜ் எம். அப்துல் பாகீர் மாகார் அவர்களது பணிப்புரையின்படி சபைப் படைக்கலச் சேவிதர் கலாநிதி பீ. ஏ. த சில்வாவைப் பாராளு

சிறப்புரிமைகள் 45
மன்ற மண்டபத்தினுள் சபைச் செங்கோலுக்கு முன்
ஞல் கொண்டுவந்து றிறுத்தினர்.
நீதிமன்றமாக
அப்பொழுது மாண்புமிகு சபாநாயகர் அவர்கள்
உறுப்பினர்களைப் பார்த்து நாம் இப்பொழுது ஒரு
நீதிமன்றமாக அமர்ந்திருக்கிருேம், அதன்படி
நாம் ஒழுகக் கடமைப்பட்டிருக்கிருேம் என்று அறிவுறுத்தி விசாரணையை ஆரம்பித்தார்.
சட்டம், சிறப்புரிமை மீறல் ஆதியாம் விட யங்கள் எடுத்துக் கூறப்பட்டபின் பாராளுமன்றத் தால் ஏன் தண்டிக்கப்படக் கூடாதென்பதற்குக் கார ணம் காட்டுமாறு கலாநிதி சில்வா கேட்கப்பட் டார். இக் கட்டத்தில் தமக்கு விளக்கமளிக்க இரண்டு வார கால அவகாசம் தரும்படி கலாநிதி சில்வா கேட்டுக்கொண்டார். அப்பொழுது உரையாடல்கள் பின்வரும் விதத்தில் நிகழ்ந்தன.
உறுப்பினர்கள்: இல்லை, இல்லை.
மாண்புமிகு எம். வின்சன்ற் பெரேரா எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இவ்விடயம் எடுத்துக்கொள்ளப்படல் வேண்டும்.
உறுப்பினர் ஒருவர்: இன்றே இந்த விடயத்தை முடிக்க வேண்டும் என நாங்கள் விரும்பு கின்ருேம். וא -
திரு. எம். டி. பிரேமரத்ன (அவிசாவளை): கடுவலைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர்.

Page 35
48 எனது நோக்கில். பாராளுமன்றம்
இவராலேதான் இன்று ஐக்கிய தேசியக் கட்சி நிலைத்திருக்கின்றது. இவ்வாருன ஒருவர் சமீபந்தமாகக் கூட்டுத்தாபனமொன்றின் தலை வர் நடந்துகொண்டதைப் பார்த்தால் எங்க ளைப் போன்ற சாதாரண உறுப்பினர்களுக்கு என்ன நடக்குமோ தெரியாது. எங்கள் உரிமை களைப் பாதுகாக்கச் சபாநாயகர் கடமைப் பட்டவராக இருக்கிருர், திரு. அ. அமிர்தலிங்கம் (எதிர்க்கட்சி முதல்வர்): நீண்ட தாமதம் இந்தச் சபை உறுப்பினர்களைப் பொறுத்த அளவில் நீதியாகாது. நாளையும் நாளை மறுதினமும் சனி, ஞாயிற்றுக் கிழமைக ளாக இருப்பதால் திங்கட்கிழமை பி. ப. 4-30 மணிக்கு இந்த விசாரணையை நடாத்த நான் ஆலோசனை கூறுகின்றேன். மாண்புமிகு காமினி திஸாநாயக்க: இப்படியாக ஓர் அரசாங்க உத்தியோகத்தர் நடந்துகொண்டால் பாராளுமன்றத்தில் அமைச்சர்களோ, கட்சி உறுப்பினரோ, எதிர்க்கட்சி உறுப்பினரோ தங்களுடைய மனச்சாட்சிக்கமையப் பேச முடியுமா என்று யோசிக்கின்றேன். டபிள்யு. பி. பி. திஸ்ாநாயக்க (கம்பளை): இப்படி யானவர்களுக்குத் தண்டனை அளிப்பதற்குத் தவணை கொடுப்பது அவசியம் இல்லை. குற்ற வாளி ஞாயிற்றுக்கிழமை விமான மூலம் துபாய்க்குப் போக எண்ணவுங்கூடும். பிணை இன்றி அவரைப் போக விட்டு திங்கட்கிழமை அவர் இந்த நாட்டில் இல்லாவிடின் எப்படி விசாரணையை நடத்துவது?

சிறப்புரிமைகள் 47
மாண்புமிகு ஆனந்த திஸ்ஸ த அல்விஸ் : நான் ஓர் ஒழுங்குப் பிரச்சினையைக் கிளப்ப விரும்பு கிறேன். நீதிமன்றத்தின் முன் நிற்கும் ஒருவர் பற்றி நாம் விமர்சிக்க முற்படுவது அழகல்ல. நீதிமன்றம் இதில் ஒரு பங்காளியாக நடந்து கொள்ளாது நீதிமன்றமாகவே நடந்துகொள்ள வேண்டும். நாம் எல்லோரும் இப்போது நீதி பதிகள்.
இவ்வாருகப் பல உறுப்பினர்களின் கருத் துரைகளை எல்லாம் பரிசீலனை செய்த குழு கலாநிதி சில்வாவுக்கு அவர் விளக்கமளிக்கத் திங்கட்கிழமை வரை அவகாசம் அளிக்க முடிவு செய்தது. அத்துடன் அவர் கடவுச் சீட்டுடன் 5000 ரூபா சொந்தப் பிணையில் செல்ல அனு மதிக்கப்பட்டார்.
மன்னிப்புக் கோரல்
ஏற்கெனவே வெள்ளிக்கிழமை எடுத்த முடிவின் படி திங்கட்கிழமையன்று பி. ப. 4-30 மணிக்குப் பாராளுமன்றம் மீண்டும் முழுப் பாராளுமன்றக் குழுவாக மாறி மாண்புமிகு சபாநாயகர் அல்ஹாஜ் எம். அப்துல் பாகீர் மாகார் தலைமையில் கலாநிதி சில்வா சம்பந்தப்பட்ட சிறப்புரிமை மீறல் விடயத் தைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டபோது கலா நிதி பீ. ஏ. த சில்வா * கடுவலை உறுப்பினருக்கும் குறிப்பாக, மாண்புமிகு சபாநாயகர் உட்பட கெளரவ சபைக்கும் அபகீர்த்தியும் அகெளரவமும் அவமானமும் ஏற்படுத்த நான் எந்தவிதத்திலும்

Page 36
48 எனது நோக்கில். பாராளுமன்றம்
நினைக்கவில்லை என்பதைச் சொல்லிக்கொள்ள விரும் புகிறேன். என்னுல் பிழை ஏதும் ஏற்பட்டிருந்தால் அது சடுதியாக ஏற்பட்ட பிழையேயன்றி வேண்டு மென்று செய்த தவறு அல்ல என்பதை நான் ஏற்றுக்கொள்வதோடு அது சம்பந்தமாக எனது மனவருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத னைக் கருணையோடு பரிசீலனை செய்யும்படி நான் கெளரவபூர்வமாகக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்து மன்னிப்புக் கோரிஞர்.
திரு. எம். டி. எச். ஜயவர்த்தன (கடுவலை ): இவர் செய்த குற்றம் இச் சபையின் சிறப் புரிமையை மீறும் பாரதூரமான செயல். குற்றத் தின் தாக்கத்திற்கு அமைவாகத் தண்டனை விதிக்கப்படல் வேண்டும் என்ற உணர்ச்சியை நான் மதிக்கிறேன்.எமது மக்களின் இறைமையி னது பாதுகாவலனுக விளங்கும் பாராளுர மன்றத்தின் மேலாண்மையைப் பாதுகாப்பதே இச் சிறப்புரிமையின் நோக்கம்.இதனைக் குற்றஞ் சாட்டப்பட்டவர் உணரல் வேண்டும். குற்றஞ் சாட்டப்பட்டவர் கல்வி அறிவிற் சிறந்தவர். இதனல், அவருடைய குற்றத்தின் தாக்கம் மேலும் அதிகமாகின்றது. இனிமேல், ஒருவர் இத்தகைய செயல் புரியாதிருக்கும் வகையில் தண்டனை விதித்தல் வேண்டுமாயினும் இவ ருக்குச் சிறைத் தண்டனை விதிக்கக் கூடாது; எதிர்காலத்தைப் பாழாக்கக் கூடாது என்ற நோக்கில் சிறிது கருணை காட்டுமாறு வேண்டு áidir 0pair.

சிறப்புரிமைகள் 49
தலைவர் : கெளரவ கடுவலைத் தொகுதி உறுப் பினர் குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது மன்னிப் பும் அனுதாபமும் காட்டுமாறு கேட்டுள்ளார். மாண்புமிகு எம். வின்சன்ற் பெரேரா: சிறப்புரிமை மீறல் பற்றிய குற்றச்சாட்டுக்களையும் கலாநிதி பீ. ஏ. த சில்வா அவற்றுக்களித்த விளக் கங்களையும் இப்பொழுது உறுப்பினர்கள் கேட்டார்கள். அவர் மன்னிப்புக் கோரியுள்ளார். இச் சபையினதும் அதன் உறுப்பினரதும் கெளரவம் பேணப்படுவது அவசியம். தம் கடமைகளை நிறைவேற்றுவதில் உறுப்பினர் களுக்குச் சகலவித பாதுகாப்பும் இருத்தல் அவசியம். இச் சபையில் பயமோ பாரபட்சமோ இன்றி உறுப்பினர்களுக்குப் பேச இருக் கும் அடிப்படை உரிமையும் விசேடமாகப் பேணப்படல் வேண்டும். இது உறுப்பினரது அடிப்படை உரிமை. பாராளுமன்ற (அதிகாரங் களும் சிறப்புரிமைகளும்) சட்டத்தில் இவை போற்றிப் பேணி வைக்கப்பட்டுள்ளன. இத் தகைய உரிமை ஒன்றில் கைவைக்கும் முயற்சி யைச் சிறு காரியமாகக் கருதக் கூடாது. இம் முறைப்பாட்டைச் செய்த கடுவலை உறுப்பினர் இப்பொழுது கருணை காட்டும்படி கேட்கின்றர். சம்பந்தப்பட்டவர் உருக்குக் கூட்டுத்தாபனத் தின் தலைவர் பதவியிலிருந்து ஏலவே நீக்கப் பட்டுள்ளார். இவை அனைத்தையும் கருத்திற் கொண்டு பாராளுமன்ற சபை முதல்வரின் சார் பில் பின்வரும் பிரேரணையைப் பிரேரிக்கின் றேன் :
"இலங்கை உருக்குக் கூட்டுத்தாபனத்தின் முன்னுள் தலைவராகிய கலாநிதி பீ. ஏ. த சில்வா 4.

Page 37
50 எனது நோக்கில்...பாராளுமன்றம்
இன்று இச்சபை கலையும்வரை தடுத்து வைக்கப் படல் வேண்டும் என்றும் அவருக்கு 5000 ரூபா தண்டம் விதிக்கப்படல் வேண்டும் என்றும் இக்குழு தீர்மானிக்கிறது.” இப் பிரேரணையை திரு. ஷெல்டன் றணராஜா வழிமொழிந்தார். குழு பிரேரணையை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.
குழு மீண்டும் பாராளுமன்றமாக அமர்ந்த போது மாண்புமிகு சபாநாயகர் பாராளுமன்றத் துக்குக் குழுவின் முடிவை அறிவித்தார். அம் முடிவு பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. கலா நிதி சில்வாவுக்குத் தண்டனைப் பணத்தைக் கட்ட இரண்டு வார கால அவகாசமீ அளிக்கப்பட்டது.
மாண்புமிகு சபாநாயகரது உத்தரவுப்படி கலாநிதி சில்வா சபைப் படைக்கலச் சேவிதரால் அன்றைய சபை அமர்வு முடிவுறும்வரை பாராளு மன்றத்தில் தடுத்து வைக்கப்பட்டார். -
*சபையிலே பேச்சுச் சுதந்திரம், விவாதிக்கும் சுதந்திரம், சபை நடவடிக்கைகளுக்கான சுதந்திரம் இருத்தல் வேண்டும் என்பதுடன் அத்தகைய சுதந்திரம் ஏதேனும் நீதி மன்றத்தாலோ சபைக்குப் புறத்தேயுள்ள ஏதேனும் இடத்திலோ கேள்விக்குட் படுத்தப்படுதல் ஆகாது" என்பதும், "சபையினது அதிகாரத்தின் கீழ் அதனது சட்டபூர்வமான அதிகாரங்களுக்குட்படும் ஒருவர் செய்யும் செயல் எதுவும் நட்டஈட்டுக்கோ வேறு எதற்குமோ உட் படுதல் ஆகாது" என்பதும் பாராளுமன்றத்திற் கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமுள்ள சிறப்
புரிமைகளுட் சிலவாகும்,
வீரகேசரி - ஆகஸ்ட் 1983

7 மாதிரிக்கொரு கூட்டம்
கிழமை வெள்ளி, நேரம் காலை ஒன்பது மணி. பிரதான வாயில்களில் எல்லாம் காவல் துறையினர் காவல்புரியப் பாராளுமன்றக் கட்டடம் உள்ளும் புறமும் களையுடன் காட்சி அளிக்கின்றது. அமைச்சர் களும் அரசாங்க, எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அன்றைய விவாதங்களுக் கேற்றற் போலச் சபைக் கட்டடத்தினுள் சுறுசுறுப்புடன் பிரவேசிக்கிருர்கள். கடமையிற் கண்ணுன மாண்புமிகு சபாநாயகர் அவர்களும் தமது உத்தியோகபூர்வமான அறை யில் இருக்கிருர் என்பதை அவரது அறையைச் சுற்றியுள்ள பயபக்தி எமக்கு உணர்த்துகின்றது. தமது பிரத்தியோக நூல்நிலையத்திற் பல உறுப்பி னர்கள் அன்றையதின வாதப் பிரதிவாதங்களுக்கு வேண்டிய குறிப்புகளைச் சட்டப்புத்தகங்களிலிருந்து சேகரித்துக்கொண்டிருக்கிருர்கள். சபையின் பாது காப்பு நடவடிக்கைகள் அனைத்துக்கும் பொறுப் பதிகாரியான படைக்கலச் சேவிதர் சபாமண்டபத் தையும் அதன் சுற்றுப்புறங்களையும் ஒருதடவை கண்காணித்துக்கொண்டு செல்லுகிறர். சபாமண்ட பத்தில் உறுப்பினர்களுக்கான அரசாங்கப் பத்தி ரங்களை ஒழுங்குபடுத்தி வைப்பதிலே சபை அலுவ லர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிருர்கள். இதற்கிடை யில் மணி 9-25 ஆகிவிடுகிறது. பாராளுமன்றக் கூட்டம் ஆரம்பமாவதற்கு அறிகுறியாக நிறைவெண் மணி ஓசை தொடர்ச்சியாகச் சபைக்கட்டடம் முழுவதும் ஒலிக்க ஆரம்பிக்கின்றது,

Page 38
52 எனது நோக்கில். பாராளுமன்றம்
命
சபாநாயகர் வருகை
அன்றைய கடமைகளுக்குத் தம்மைத் தயார் படுத்திக்கொண்டு சபையில் முதலில் பிரவேசிப்ப வர்கள் பாராளுமன்ற ஹன்சாட் அறிக்கையாளர் களே. நேரம் மணி 9-26, தமக்கே உரிய பிரத்தியேக ஆசனங்களில் பத்திரிகையாளர்கள் தம் கண்களைக் கூர்மையாக வைத்தபடி சபா மண்டபத்தையே நோக்கியவாறு இருப்பது தெரிகிறது. நேரம் 9-27, 9-28, 9-29 என்று நகர்ந்துகொண்டிருக்கின்றது. அமைச்சர்களும் உறுப்பினர்களும் அவசர அவசர மாகச் சபையினுள் பிரவேசித்துத் தமக்கென ஒதுக் கப்பட்டுள்ள ஆசனங்களில் அமர்ந்து கொள்ளுகி ருர்கள், பார்வையாளர் ஆசனங்களில் பொதுமக்கள் அமைதியாக வீற்றிருக்கிறர்கள்.
சரியாகக் காலை 9.30 மணி. ஐந்து நிமிடங்கள் தொடர்ச்சியாக ஒலித்த கூட்ட அறிவிப்பு மணி யோசை அமைதியடைகிறது. “செங்கோல்' எனும் கட்டுரையிற் கூறியது போன்று படைக்கலச் சேவி தர் செங்கோலைத் தாங்கியபடி முன்னே வர, சபைச் செயலதிகாரிகள் தம்மைப் பின்னே தொடர, மாண்பு மிகு சபாநாயகர் அவர்கள் தமது உத்தியோக பூர்வமான அறையிலிருந்து புறப்பட்டு, சபாமண்ட பத்தின் பிரதான வாயிலை அடையும் சமயம், மண்டபத்தின் பாரிய வாயிற் கதவுகளைப் பணி யாளர்கள் இருவர் பயபக்தியுடன் அகலத் திறந்து நிற்கின்றனர். அப்போது, மாண்புமிகு சபாநாயகர் அவர்களின் வருகையை அறிவித்துச் சபைக்குப் “பராக்” கூறப்படுகின்றது. உடனே சபாமண்டபத்தி

மாதிரிக்கொரு கூட்டம் 53
லிருக்கும் யாவரும் சபாநாயகருக்கு மரியாதை செலுத்தும் முகமாக எழுந்து நிற்கின்றனர். சபாநாயகர் அவர்கள் தமது ஆசனத்தை அடைக் ததும் சிரம் அசைத்து உறுப்பினர்களின் மரியா தையை அங்கீகரித்துத் தமது இருக்கையில் அமர் கின்றர். உறுப்பினர்கள் தாமும் மீண்டும் தமது சிரம் அசைத்துச் சபாநாயகருக்கு மரியாதை செலுத்திவிட்டுத் தத்தம் ஆசனங்களில் அமர்ந்து கொள்கின்றனர். மும்மொழிகளிலும் அச்சிடப்பட் டுள்ள அன்றையதினக் கூட்ட நிகழ்ச்சிகளுக்கான ஒழுங்குப்பத்திரத்திலே பலரதும் பார்வை செல் கிறது. கூட்ட நிகழ்ச்சிகள் ஆரம்பமாவதற்கு அறி குறியாகச் சபையிற் பூரண அமைதி நிலவுகின்றது. சபையின் அலுவல் கிரமம்
அவ்வப்போதுள்ள சமயாசமய சந்தர்ப்பங் களுக்கேற்பப் புதிய உறுப்பினர்களின் விசுவாச உறுதிப்பிரமாணம், மேன்மைதங்கிய சஞதிபதியிட மிருந்து வந்த செய்திகள், மாண்புமிகு சபாநாயக ரின் அறிவிப்புக்கள், பத்திரங்கள், நிலைக் குழுக்க ளின் அறிக்கைகள் சமர்ப்பணம், விஞக்களுக்கு வாய்மூல விடைகள், பொது அலுவல்கள் என்ற முறைப்படி சபை தன் அலுவல்களைக் கவனிக்கும். பொது அலுவல்கள் என்பது அன்றைய தினத்தில் சபை தீர்மானிக்க வேண்டிய சட்டமூலங்கள், தீர் மானங்கள் உட்பட அன்றைய தின ஒழுங்குப் பத்திரத்திலுள்ள பல விடயங்களை உள்ளடக்கிய தாக இருக்கும்.

Page 39
54 எனது நோக்கில். பாராளுமன்றம்
தனி உறுப்பினர் தினம்
சபை முற்கூட்டியே வேறுவிதமாகத் தீர்மானித் தாலல்லாமல் சபையின் நிலைக் கட்டளைகளின்படி ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் முதலாவது ஞாயிற்றுக்கிழமையைத் தொடர்த்துவரும் செவ் வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நான்கு நாள்களிலும் மூன்ருவது வாரத்தில் வியாழன் வெள்ளி ஆகிய இரு நாள்களிலும் சபைக் கூட் டங்கள் நடைபெறும். சாதாரணமாக வெள்ளிக் கிழமை தவிர்ந்த மற்றைய நாள்களில் மு. ப. 10 மணிக்கும் வெள்ளிக்கிழமைகளில் மு. ப. 9-30 மணிக்கும் பாராளுமன்றக் கூட்டங்கள் ஆரம்ப மாகும். மாதந்தோறும் முதல் வாரத்தில் வரும் வெள்ளிக்கிழமை தனி உறுப்பினர்களுக்குரிய தின மாகும். தேவைகளுக்கேற்பச் சில சந்தர்ப்பங்களில் இத்தினங்களிலும் அரசாங்க அலுவல்கள் முன்னீடு அடைவதுண்டு.
சபைவிதிகளின்படி கூட்டங்கள் நடைபெறுவ தும் நடைபெருது விடுதலும் சபையின் தீர்மானங் களைப் பொறுத்தவையாகவும் அமைவதுண்டு. சில வேளைகளில் அரசாங்க அலுவல்கள் அவசர அவசர மாக நிறைவேற்றப்படவேண்டி இருந்தால் அத் தகைய தினங்களிற் கூட்டங்கள் நிலைக்கட்டளைக் ளின்படி நடைபெருமல் குறித்த விடயங்கள் விவா தித்து வாக்கெடுப்பு நடாத்தி முடிவுறும் வரை நீண்ட நேரம் நடைபெறுவதும் உண்டு:

மாதிரிக்கொரு கூட்டம் 55
வாய்மூல விடைகள்
பாராளுமன்றக் கூட்ட நிகழ்ச்சிகளின் ஆரம்பத் தில் விஞக்களுக்கு வாய்மூல விடைக்கான நேரம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏற்கனவே அறிவித்தல் கொடுக்கப்பட்டு அன்றைய தின ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ள விணுக் களுக்கு அவ்வவ் விளுக்களுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளிப்பார்கள், கேள்வி நேரத்தில் உறுப்பினர் ஒருவரின் பெயரிலுள்ள கேள்வியை அவர் சபையிலே பிரசன்னமாகாத விடத்து அவரது சார்பில் உறுப்பினர் இன்னுெருவர் கேட்கலாம். சபையிலே பிரசன்னமாயிராத உறுப்பினர்களது பெயரிலுள்ள கேள்விகளை அவர்களது சார்பிலே கேட்க எவரும் முன்வராதுவிடின் அத்தகைய கேள்விகளுக்குச் சபையிலே பதிலளிக்கப்படுவ தில்லை. உறுப்பினர் எவரும் தமக்குக் கொடுக் கப்படும் விடைகள் சம்பந்தமாக மேலும் விளக்கம் வேண்டின் மூன்றுக்கு மேற்படாத உப கேள்விகளைக் கேட்க அனுமதிக்கப்படுவர்.
சமகால மோழிபெயர்ப்புகள்
சபையில் நிகழ்த்தப்படும் பேச்சுக்களின் சம கால மொழிபெயர்ப்புகளை உறுப்பினர்கள் கேட்க முடியும். உதாரணமாக உறுப்பினர் ஒருவர் சபை யிலே - தமது உரையைத் தமிழில் நிகழ்த்துகிறர் என்று வைத்துக்கொள்வோம். தமிழ் மொழியை விள்ங்கிக்கொள்ள முடியாத உறுப்பினர்கள் அந்த

Page 40
56 எனது நோக்கில். பாராளுமன்றம்
உரையின் சிங்கள அல்லது ஆங்கில சமகால மொழி பெயர்ப்பைத் தத்தமது ஆசனங்களில் பொருத்தப் பட்டுள்ள செவியுணர் கருவி (Bar -Phone) மூலம் கேட்கமுடியும். இதேபோலச் சிங்கள, ஆங்கில உரைகளின் மொழிபெயர்ப்புகளையும் கேட்கச் சபையில் ஏற்பாடுகள் நிரந்தரமாக உள்ளன.
பொது மேடைகளிலே பேச்சுக்கள் மொழிபெயர்க் கப்படுவது போன்ற முறை பாராளுமன்றத்தில் கையாளப்படுவதில்லை. சபையின் தகுதிவாய்ந்த சமகால மொழிபெயர்ப்பாளர்கள் சமகால மொழி பெயர்ப்புகளைத் தமக்கென உரிய அறைகளில் இருந்து நிகழ்த்தும்போது அவற்றையே செவி யுணர் கருவி (Ear-Phone) மூலம் உறுப்பினர்கள் தேவைக்கேற்ப விரும்பும்போது கேட்டுக் கொள் வார்கள்.
சபாநாயகரை விளித்தே
உறுப்பினர்கள் பலர் ஒரே முறையில் பேச எழும் வேளைகளில் யார் முதலில் மாண்புமிகு சபா நாயகரது கண்ணிற் படுகின்ருரோ அவரையே உரை நிகழ்த்தும்படி அவர் பணிப்பார். உறுப்பி னர்கள் உரை நிகழ்த்தும்போது சபாநாயகரை விளித்தே உரைநிகழ்த்தல் வேண்டும். உறுப்பினர் எவரும் விவாதிக்கப்படும் விடயத்திற்குப் புறம்பாக உரை நிகழ்த்தச் சபாநாயகர் அனுமதிக்கமாட் டிார், எந்தச் சந்தர்ப்பங்களிலும் சபாநாயகரின்

மாதிரிக்கொரு கூட்டம் 57
கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கும் உறுப்பினர் எவரையும் உடனடியாகச் சபையிலிருந்து வெளி யேறும்படி உத்தரவிடவோ அவரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குச் சபை நிகழ்ச்சிகளிலிருந்து விலக்கி வைக்கவோ சபாநாயகருக்கு அதிகாரமுண்டு.
இரண்டாம் மதிப்பில் பொதுவான அடிப்படை யில் விவாதிக்கப்பட்ட சட்டமூலமானது குழுநிலையில் வாசகம் வாசகமாக விவாதிக்கப்படும்பொழுதுதான் எதிர்க் கட்சியினராலும் அரசாங்கத் தரப்பின ராலும் கொண்டுவரப்படுகின்ற திருத்தங்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. குழு நிலையில் அரங் கேறிய சட்டமூலம் மூன்ரும் முறையாகவும் நிறை வேற்றப்பட்ட பின்னர்தான் சபாநாயகரது அங்கீ காரத்தைப் பெறுகின்றது. இதன்பின்னர்தான் அதற்குச் சட்ட அந்தஸ்துக் கிடைக்கின்றது,
சபையில் உறுப்பினர் ஒருவர் எந்த மொழி யில் பேசுகின்றரோ அந்த மொழியிலேயே அவரது பேச்சு, பாராளுமன்ற விவாதங்களின் அதிகார அறிக்கையான ஹன்சாட்டில் பதிவாகும்.
நிறைவெண்
பாராளுமன்றக் கூட்டங்கள் சிலவேளைகளில் நிறைவெண் இல்லாமல் ஒத்திவைக்கப்படுவது முண்டு. எந்த ஒரு கூட்டமும் தடங்கலின்றி நடை பெறச் சபையில் தலைமை தாங்கும் உறுப்பினர் உட்பட ஆசுக் குறைந்தது இருபது உறுப்பினர்கள்

Page 41
58 எனது நோக்கில். பாராளுமன்றம்
இருத்தல் வேண்டும், ஏனெனில், சபையின் நிறை வெண் அதுதான். சபைநிகழ்ச்சிகளின்போது இடை நடுவில் போதிய நிறைவெண் இல்லாது காணப் படின், சபாநாயகரது அல்லது தலைமைதாங்குபவரது கவனத்துக்கு அதனைக் கொண்டுவர உறுப்பினர் எவருக்கும் உரிமை உண்டு. அத்தகைய சந்தர்ப்பங் களிற் சபையில் நிறைவெண்ணைக் கூட்டுவதற்கான மணியோசை எழுப்பப்படும். உடனே கூடத்திலும் பாராளுமன்றக் கட்டடத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கும் அரசாங்கக் கட்சி உறுப்பினர்கள் அவசர s976)16Fg LDIT5é சபையில் பிரசன்னமாவார்கள். ஏனெனில், சபையின் நிறைவெண்ணைக் காக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்தி னுடையதாகும். போதிய நிறைவெண் காணப் பட்டதும் சபை தன் வழமையான அலுவல்களைக் கவனிக்கும். அஃதின்றேல் சபைக் கூட்டம் ஒத்தி வைக்கப்படும்.
ஒத்திவைப்பு
செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாள்களில் 4-30 மணிக்கும் வெள்ளிக்கிழமைகளில் ஐந்து மணிக்கும் கூட்ட நிகழ்ச்சிகள் நிறைவுபெறும். இந்த நாள்களிலே கூட்டம் முடிவடைவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் அன்றைய பொது அலுவல்களை அந்த அளவில் இடைநிறுத்திவைத்து, சபை முதல்வரால், அல்லது அவரது சார்பில் அமைச்சர் ஒருவரால் சபையின் ஒத்திவைப்புப் பிரேரண்ை , பிரேரிக்கப்படும். •

மாதிரிக்கொரு கூட்டம் 莎姆
இதைத் தொடர்ந்துவரும் ஒரு மணி நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு பல்வேறு முக்கி யத்துவம் வாய்ந்த அவசரப் பிரச்சினைகளையும் நாட்டினதும் மக்களதும் முக்கிய குறைபாடுகளை யும் சம்பந்தப்பட்ட அமைச்சரினதோ முழு அர சாங்கத்தினதோ கவனத்திற்குக் கொண்டுவரலாம். அவ்வப்போது சபையின் ஒத்திவைப்பு நேரத்தில் எழுப்பப்படும் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் பதிலளிக்கப்படும். இதன் முடிவில் மாண்பு மிகு சபாநாயகர் அவர்கள் சபையின் நிலைக் கட் டளைகளின்படி அல்லது பாராளுமன்றம் ஏற்கனவே செய்த முடிவுப்படி சபை, இன்ன மாதம் இத்தனை யாம் தேதி இத்தனை மணிவரை ஒத்திவைக்கப் பட்டுள்ளதென அறிவிப்புக் கொடுத்துப் பாராளு மன்றக் கூட்டத்தை ஒத்திவைப்பார். பின்னர் செங்கோல் முன்னே செல்லச் சபையைவிட்டு அவர் வெளியேறுமிசமயம் மீண்டும் உறுப்பினர்கள் அனைவ ரும் எழுந்துநின்று அவருக்கு மரியாதை செலுத்து வார்கள். மாண்புமிகு சபாநாயகர் அவர்கள் மண் டபத்தை விட்டகன்றதும் உறுப்பினர்களும் வெளி யேறுவர். இவ்விதம் பாராளுமன்றத்தின் ஒருநாள் கூட்ட நடவடிக்கைகள் மேலெழுந்தவாரியாக அமை கின்றன.
தினகரன் டி பெப்ருவரி 1972

Page 42
8 வரவுசெலவுத் திட்ட விவாதம்
பாராளுமன்றத்தைப் பொறுத்த அளவில் அதன் வருடாந்த நடவடிக்கைகளில் வரவு செலவுத் திட்ட விவாதம் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. மிக நீண்ட * மரதன் கூட்டுத் தொடராக வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் மதிப்பின் மீதான விவாதம் ஏழு நாள்களுக்கும் குழுஆய் நிலையில் விவாதம் பத்தொன்பது நாள்களுக்கும் நீடிக்கும். தினசரி காலை பத்துமணியிலிருந்து இரவு எட்டு மணி வரை உயிர்த்துடிப்புடன் நிகழும் இந்த விவாத நாள்களில் இலங்கையில் இருக்கக்கூடிய அத்தனை பிரச்சினைகளும் பாராளுமன்றத்தில் அக்கு
வேறு ஆணிவேருக அலசி ஆராயப்படுவதுண்டு.
உபயோகமுள்ள பல உரைகளினூடே சுவாரசிய மான பல உப கதைகளைக்கூடக் கேட்கும் சந்தர்ப் பங்களுக்கும் குறைவிருக்காது.
உதாரணமாக, ஆமையும் முயலும் பங்கு பற்றிய ஒட்டப் பந்தயத்தில் ஆமை வெற்றியீட்டிய கதையை நாம் எல்லோரும் அறிவோம். ஆனல் இந்த ஓட்டப் பந்தயம் எங்கே எந்த இடத்தில் நடைபெற்றது என்ற விபரம் சிறுவர்களுக்கோ, பெரியவர்களுக்கோ, அல்லது வேறு எவருக்குமோ தெரியாது. ஆளுல் 1977ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரை நிகழ்த்திய மன்ஞர்த் தொகுதி உறுப்பினர் திரு. பி. எஸ். சூசைதாசன் அவர்கள், ஆமையும் முயலும் போட்டிபோட்டு

வரவுசெலவுத் திட்ட விவாதம் 6.
ஒட்டப் பந்தயத்தில் ஈடுபட்ட வீதி மன்னுரில் தான் இருப்பதாக ஒரு போடுபோட்டார். சபை ஒரு கணம் அவரது பேச்சை ஆச்சரியத்துடன் செவிமடுத்தது எனலாம். உண்மையில் முயல் நித் திரை செய்ததால் பந்தயத்தில் தோல்வி காணவில்லை என்றும், மன்னர் வீதிகளில் ஒடும்பொழுது பள்ளங் களிலும், குழிகளிலும் விழுந்து கால் உடைந்து விட்டதன் காரணமாகவே ஆமையிடம் தோல்வி அடைந்ததென்றும், அவ்வளவு கேவலமான நிலையி லேயே மன்னுர்த் தொகுதியிலுள்ள வீதிகள் இருக்கின் றன என்றும் அவர் சொன்ன கதை சபையைச் சிரிப்பொலியில் ஆழ்த்தியது மட்டுமல்ல, மன்னர் வீதிகளின் நிலையைச் சிந்திக்கவும் வைத்ததென்றே கூறவேண்டும்.
கடைமுறை
ஒரு வரவு செலவுத் திட்டத்தின் முதலாவது மதிப்பின்போது வரைவு வரவு செலவு மதிப்பீடு களே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது வழக் கம், அதிலிருந்து குறிப்பிட்ட நிதிவருடத்திற் கான மொத்த வரவையும் செலவையும் துண்டு விழும் தொகையையும் அறிந்துகொள்ள முடியும். இரண்டாவது மதிப்பின்போதுதான் நிதிஅமைச் சர் தமது வரவு செலவுத் திட்டப் பிரசங்கத்தை நிகழ்த்துவார், நிதி அமைச்சரது பிரசங்கத்தின் மூலம்தான் அரசாங்கத்தினது பொருளாதாரக் கொள்கை, நாட்டின் அபிவிருத்தி சம்பந்தமாக

Page 43
62 எனது நோக்கில். பாராளுமன்றம்
எடுக்கப்படவுள்ள திட்டங்கள், நாணய மதிப்பின் ஏற்ற இறக்கம், புதிய புதிய வரி விகிதங்கள், பொருள் விலைகளின் ஏற்ற இறக்கங்கள், புதிய மானிய உதவிகள் என்பன பற்றி எல்லாம் அறி விக்கப்படுவது நடைமுறையாகும்.
வரவு செலவுத் திட்ட விவாதம் முழுவதிலும் கதாநாயகனுக விளங்குபவர் நிதி அமைச்சரே. வரவு செலவுத் திட்டப் பிரசங்கத் தினத்தன்று பாராளு மன்றத்தில் அவருக்கிருக்கும் மதிப்பு சொல்லில் அடங்காது. அன்றைய தினம் சபை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி நிதி அமைச்சர் தமது பிரசங்கத்தை நிகழ்த்த வேண்டிய அந்தக் குறிப்பிட்ட தருணம் வரும்பொழுது, ஒரு கணமேனும் பிந்தாமலோ, அல்லது முந்தாமலோ வரவு செலவுத் திட்டப் பிரசங்கமும் இரகசியங்களும் அடங்கிய பெட்டி யுடன் அவர் சபையில் பிரவேசிக்கையில் உறுப்பி னர்கள் அனைவரும் பலத்த கரகோஷம் செய்து அவரை வரவேற்பக வழக்கமும் சம்பிரதாயமு மாகும்.
நிதி அமைச்சரின் பிரசங்கங்கள் வழக்கமாகப் பல மணித்தியாலங்கள் நீடிப்பதுண்டு. ஆளுல் அன்றைய தின அரச, தனியார் நிறுவன வியா பார பங்கு 8 மார்க்கெட்" நடவடிக்கைகள் எல்லாம் மூடப்பட்ட பின்னர் மாலையில்தான் அவர் தனது உரையின் இறுதியில் புதிய வரிகள், சிகரெட்,

வரவுசெலவுத் திட்ட விவாதம் 63
மதுபானவகைகள் போன்றவற்றின் விலை மாற்றங் கள் பற்றிய வரவு செலவுத் திட்ட இரகசியங்கள் எல்லாவற்றையும் வெளியிடுவது நடைமுறையாகும். இந்தச் சந்தர்ப்பத்தில் வரவு செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகையை அமைச்சர் எவ்வாறு நிரப்புவார் என்கின்ற விபரங்கள் தெரியவருவ துண்டு.
வரவு செலவுத் திட்டத் தினத்தில் நிதி அமைச் சரின் உரையைக் கேட்கவும் வரவு செலவுத் திட்ட இரகசியங்களை அறியவும் அரசியற் கட்சிகளின் பிரமுகர்கள், வெளிநாட்டு இராசதந்திரிகள், வெளி நாட்டு, உள்நாட்டுப் பத்திரிகையாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் என்றும் இல்லாதவாறு பாராளுமன்றத்தின் எல்லாப் பார்வையாளர்கள் ஆசனங்களிலும் நிறைந்து காணப்படுவார்கள்.
உச்சக் கட்டம்
நிதி அமைச்சரின் பிரசங்கத்தைத் தொடர்ந்து வேருெரு தினத்தில் இரண்டாம் மதிப்பின் மீதான விவாதம் ஆரம்பமாகும். எதிர்க் கட்சித் தரப்பில் எதிர்க் கட்சித் தலைவரோ, அல்லது அவருக்கு நிகரான முக்கிய தலைவர் ஒருவரோ விவாதத்தை ஆரம்பித்து உரை நிகழ்த்துவதுடன் வாதப் பிரதி வாதங்கள் ஆரம்பமாகும். இரண்டாம் மதிப்பு விவாதத்தின்போது அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மாத்திரமன்றி மொழிக்கொள்கை

Page 44
64 எனது நோக்கில். பாராளுமன்றம்
போன்ற விடயங்களோடு பொதுவாக எல்லா விட யங்களும் கையாளப்படுவதுண்டு.விவாதம் தொடங்கி ஏழாவது நாளன்று அதாவது இரண்டாவது மதிப்பு விவாதத்தின் முடிவு நாளன்று ‘லயஞான குபேர பூபதி வி. தெட்சணுமூர்த்தி, வலங்கைமான் ஏ. சண் முகசுந்தரம்” போன்ற பெரிய பெரிய தவில்கள் எல்லாம் முழங்குவது வழக்கம். அன்றைய தினம் எதிர்க்கட்சித் தரப்பில் அநேகமாக எதிர்க்கட்சி முதல்வரும் அரசாங்கக் கட்சி சார்பில் பிரதமர் உட்பட நிதி அமைச்சரும் பேசும்பொழுது விவாதம் உச்சக்கட்டத்தை அடையும். விவாத இறுதியில் பதிலளித்து உரை நிகழ்த்துபவர் நிதி அமைச்சரே.
இன்றைய மாண்புமிகு சனதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தன அவர்கள் கூட ஒருகாலத்தில் புகழ் பெற்ற நிதி அமைச்சராக விளங்கியவர்தான். 1965ஆம் ஆண்டு மாண்புமிகு டட்னி சேனுநாயக் காவின் அரசாங்கத்தில் நிதி அமைச்சராக இருந்தவர் யாப்பாகுவத் தொகுதி உறுப்பினராக விளங்கிய மாண்புமிகு யு. பி. வன்னிநாயக்க அவர்கள். வன் னிப் பிரதேசத்திலிருந்து வந்தவரான அவர் தமது பதில்களினூடே கதைகளையும் சந்தர்ப்பத்திற் கேற்றவாறு பயன்படுத்தும் வல்லமை படைத்தவர். 1965ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத் தில் பதிலளிக்கையில் அவர் கூறிய கதை ஒன்று இன்றுபோல எனது ஞாபகத்தில் இருந்துகொண்டே இருக்கிறது.

வரவு செலவுத் திட்ட விவாதம் 65
சபையும் கதையும்
மாண்புமிகு யு.பி. வன்னிநாயக்க: "அநேகமான எதிர்க் கட்சி உறுப்பினர்கள் வரவு செலவுத் திட் டத்தைப் பற்றிப் புரிந்துகொண்ட உணர்வுகள், சில குருடர்கள் யானையைப் பற்றிப் புரிந்து கொண்ட உணர்வுகளை ஒத்தனவாக இருக்கின்றன. யானை என்று அழைக்கப்படும் மிருகத்தைப் பற்றிக் கேள்வியுற்ற குருடர்கள் சிலர் யானை எப்படிப் பட்ட மிருகம், எதைப்போன்றது என்பதைப்பற்றி அறிய வேண்டும் என்று முடிவு கட்டிஞர்கள். அதன்படி யானையினது தந்தத்தைத் தடவிப் பார்த்த ஒரு குருடன் மிகுந்த ஆச்சரியப்பட்டவ ஞக ஒரு மரத்தினுடைய கொம்பர் போல யானை இருக்கிறது என்று கூறிஞன். யானையினது வாலைத் தொட்டுப் பார்த்த இன்னெரு குருடன் யானை துடைப்பத்தைப் போல இருக்கிறதென்றன். மற்றெரு குருடன் யானையின்து செவியைப் பரி சித்துவிட்டு யானை ஒரு முறம் போல இருக்கிற தென்று குறிப்பிட்டான். யானையினது காலொன் றைத் தடவிப் பார்த்த வேருெரு குருடன் ? என்ன அபத்தமான பேச்சு, யானை ஒரு உரலைப்போல அல்லவா இருக்கிறது" என்று கத்தினன். ஒவ் வொரு குருடனும் யானையைப் பற்றி வெவ்வேருன விதத்தில் கற்பனை செய்துகொண்டார்கள். இவர் க்ளில் எவராவது யானையின் விேருேர் அங்கத்தைத் தொட்டுப் பார்த்திருப்பவர்களாக இருந்தால் யானை
S

Page 45
66 எனது நோக்கில். பாராளுமன்றம்
எப்படிப்பட்ட மிருகம் என்பது பற்றி இன்னுெரு கருத்தைத் தெரிவித்திருப்பார்கள். இதைப்போலத் தான் இருக்கிறது சில கெளரவ உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்தின் ஓர் அம்சத்தை மட்டும் பார்த்துவிட்டு முழு வரவு செலவுத் திட்டத்தையும் பற்றி உணர்ந்துகொண்டிருப்பது, அவர்கள் எல் லோரும் வரவு செலவுத் திட்டத்தினுடைய எல்லா அம்சங்களையும் ஆராய்ந்திருந்தால் 2 labrooldur60T யூ. என்.பி. யானையைப் பார்த்திருப்பார்கள். வரவு செலவுத் திட்டத்தின் யதார்த்தமான பூரண வடிவத் தைப் பார்ப்பதற்கு ஒன்ருே அல்லது இரண்டோ, ஆலோசனைகளை மட்டும் எவரும் பரிசீலனை செய்யக் கூடாது. முழு ஆலோசனைகளையும் ஒருமித்துப் பரிசீலனை செய்யும்பொழுதுதான் வரவு செலவுத் திட்டத்தின் உண்மையான வடிவத்தைப் பார்க்க முடியும்.”
மாண்புமிகு வன்னிநாயக்க அவர்கள் யானை யைப் பார்த்த குருடர்களது கதை மூலம் எதிர்க் கட்சியினர் வரவு செலவுத் திட்டத்தை விமர்சித்த விதத்தைத் தமது கோணத்தில் எவ்வளவு சாதுரிய மாகச் சாடிஞர் என்பதை இன்றும் நினைத்துப் பார்க்கும் அளவுக்கு அவரது பதிலுரை 'அன்று அமைந்திருந்தது.
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பொன்றில் அரசாங்கம் தோல்வி அடைந்தால் அது " உடனடி யாக ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகவேண்டி

வர்வு செலவுத் திட்ட விவாதம் 67
இருக்கும். சாதாரண வேறு வாக்கெடுப்புக்களில் தோல்வி ஏற்படின் அத் தோல்வி அரசாங்கத்துக்கு அவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்தாது. நிதிப் பிரேரணைகள் எவையாக இருந்தாலும் அவற்றில் அரசாங்கம் பாராளுமன்றத்தில் தோல்வியைத் தழுவக்கூடாது.
குழுஆய் நிலையில் ۔
இரண்டாம் மதிப்பு வாக்கெடுப்பைத் தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் குழுஆய் நிலையில் விவா திக்கப்படும்பொழுதுதான் அமைச்சுக்களின் மானி யங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக ஆராயப் படுவதுண்டு. இரண்டாம் மதிப்பில் பொதுவாக ஆராயப்பட்ட விடயங்கள் குழுஆய் நிலையில் சிறப் பாக விவாதிக்கப்படுவதுண்டு. உதாரணமாக ஆசிரியர்களது இடமாற்றங்கள் சம்பந்தமான குறை பாடுகளை வரவு செலவுத் திட்ட விவாதத்தில் தெரி விக்க வேண்டுமென்ருல் அதற்குரிய சரியான சந்தர்ப் பம் கல்வி அமைச்சின் மானியம் குழுஆய் நிலையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் நேரமே யாகும்.
குழுஆய் நிலையில்தான் அந்தந்த அமைச்சுக் க்ளின் கீழ்வரும் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங் கள், அவை கடைப்பிடிக்கும் கொள்கைகள், அவற் றின் முன்னேற்றம், ஊழல்கள், மோசடிகள் எல்லா வற்றையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அம்பலத் திற்குக் கொண்டுவ்ருவார்கள். பல உறுப்பினர்க்ளால்

Page 46
68 எனது நோக்கில். பாராளுமன்றம்
புகழ் மாலைகளும் பொல்லடிகளும் பரிசில்களாக அளிக்கப்படும். இது அந்தந்த அமைச்சுக்களினதும் திணைக்களங்களினதும் நிர்வாகத்தைப் பொறுத்த விடயம்.
புகழ்மாலை
பிரதமர் மாண்புமிகு ஆர். பிரேமதாசா அவர்க ளுடைய அமைச்சுக்களின் கீழுள்ள திணைக்களங் கள்ைப் பொறுத்த அளவில் கடந்த பல வருடங்க ாாக அவற்றின் நிருவாகத் திறனுக்கும் நேர்மை மிக்க பரிபாலனத்திற்கும் பாராளுமன்றத்தின் இரு பக்கங்களிலுமிருந்தும் புகழ் மாலைகள் சூட்டப் பட்டதை எவரும் அவதானிக்கக்கூடியதாக இருந் தது. பார்ாளுமன்றத்தைப் பொறுத்த அள்வில் இது ஓர் அரிய விடயமாகும்.
ஒவ்வோர் அமைச்சின் மானியமும் குழுஆய் நிலையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்ப்டும் போழுது எதிர்க் கட்சி உறுப்பினர் ஒருவரே". அமைச்சின் மானியம் பத்து ரூபாவால் குறைக்கப் படுமாக’ என்று மானிய வெட்டைப் பிரேரித்து அந்த அமைச்சுச் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை விமர்சிக்கத் தொடங்குவது வழக்கம்.
எதிர்க் கட்சித் தரப்பிலிருந்து ஓர் அமைச்சின்
மானிய வெட்டைப் பிரேரித்கும் உறுப்பினர் ஒருவ f அந்த அமைச்சுச் சம்பந்தப்பட்ட விடயங்களில்

வரவு செலவுத் திட்ட விவாதம் 69
கைதேர்ந்தவராக இருப்பார். உதாரணத்திற்கு டாக்டர் என். எம். பெரேரா, திரு. பி. எஸ். சூசை தாசன் போன்றவர்கள் எதிர்க் கட்சியில் இருந்தால் அவர்களைப் போன்றவர்களே நிதி அமைச்சின் மானியவெட்டைப் பிரேரித்துப் பேசுவார்கள்,
குழுஆய்நிலை விவாதத்தின் போது அமைச் சர்களுக்கு உதவவும் வேண்டிய வேண்டிய நேரத் தில் வேண்டிய வேண்டிய புள்ளி விபரங்களையும் தகவல்களையும் கொடுக்கவும் சம்பந்தப்பட்ட அமைச் சுக்களின் செயலாளர்கள், திணைக்கள கூட்டுத்தாப னத் தலைவர்கள் உட்பட முக்கியமான அதிகாரிகள் சபையின் மருவு பகுதியில் உள்ள உத்தியோகத்தர் க்ளுக்கான பிரத்தியேக இருக்கைகளில் இருந்தவாறு சபை நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருப்
urrfassr,
குழுஆய்நிலை விவாதங்கள் அனைத்தும் முடி வடைந்ததும் வரவு செலவுத் திட்டம் மூன்றவது முறையாக மதிப்பிடப்பெற்றுப் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும். அப்பொழுது நிதி அமைச்ச ரவ்ர்கள் சுமார் இரண்டு மாதகாலம் நீடித்த விவா தத்தை நடத்தி முடிக்க ஒத்துழைத்த அரசாங்க, எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்குமி சபை அதிகாரி கள், ஊழியர்கள் அனைவருக்கும் சமீபிரதாயபூர்வ மாக நன்றி தெரிவித்துக்கொள்வதுடன் வருட இறுதிக் காலமாவதால் தமது புதுவருட வாழ்த்துக் களையும் தெரிவித்துக்கொள்வார்.
வீரகேசரி . ಜ್ವಲ ಬಗೆ 1983

Page 47
9 வெள்ளை அறிக்கைகள்
பாராளுமன்றத்தில் காலத்துக்குக் காலம் அரசாங்கங்களினுல் பலவேறு சந்தர்ப்பங்களில் வெள்ளை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுவதுண்டு. வெள்ளை அறிக்கை என்றல் என்ன? அது எத்தகை யது? என்ற ஒரு கேள்வி பொதுமக்கள், மாண வர்கள் போன்ருேர் மனங்களில் எழுவது இயல் பானதே. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல தரப்பட்ட பிரச்சினைகள்மீது பாராளுமன்றத்திற் கும் அதன் மூலம் நாட்டு மக்களுக்கும் விளக்கமளிப் பதற்காக அரசாங்கங்களினல் காலத்துக்குக்காலம் வெளியிடப்படும் உத்தேச செயற்றிட்ட அறிக்கைகள் யாவும் வெள்ளை அறிக்கைகள் எனப்படும். பொது வாக வெள்ளை அறிக்கைகள் ஒர் உத்தேச திட்டம் பற்றி அரசாங்கத்தின் நோக்கங்களையும் கொள்கை களையும் விளக்கிக் காட்டுவனவாகவே அமையும். மேலும் அவை, அரசாங்கம் கொண்டுள்ள உத்தேச முடிபுகளைப் பெருமளவிலே தொட்டுக்காட்டக் கூடியனவாகவும் அமைவதுண்டு. ܢ •
1956ஆம் ஆண்டு சனவரி மாதத்தில், சுகாதார மந்திரியாக. அப்பொழுது இருந்த மாண்புமிகு ஈ. ஏ. நுகவெல அவர்களால் ஆயுள்வேதம் பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்று பாராளுமன்றத்திற் சிம்ர்ப்பிக்கப்பட்ட்து.

வெள்ளை அறிக்கைகள் 71
1962ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் நடை பெற்ற புரட்சிச் சதி பற்றிப் பாராளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் தகவல்கள் அளிப்பதற்காக அப்பொழுது மாண்புமிகு பீலிக்ஸ் ஆர். டயஸ் பண்டாரநாயக்க அவர்களால், அரசாங்கத்தின் சார்பாக, பெப்ருவரி மாதம் பதின்மூன்ரும் தேதி யன்று பாராளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையிலே தோல்வியடைந்த புரட்சிச் சதி பற்றி விரிவாக விளக்கி, மேற்கொண்டு அது சம்பந்தமாக அரசாங்கம் எடுக்க உத்தேசித்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் தகவல்கள் தரப்பட்டன.
கல்வித் திட்டம்
1966ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் 26ஆம் தேதி கல்வி கலாசார விவகார அமைச்சர் மாண்பு மிகு ஐ. எம். ஆர். ஏ. ஈரியகொல்ல் அவர்களால் பொது, தொழில்நுட்பக் கல்வி சம்பந்தமான சீர்திருத்தங்கள்பற்றிச் சமர்ப்பிக்கப்பட்ட வெள்ளை அறிக்கை பாராளுமன்றத்தினுலும் பொதுமக்களா லும் 'நன்கு விவாதிக்கப்பட்ட பின்னரே பாராளு மன்றத்திலே சட்டமூல வடிவில் சமர்ப்பிக்கப் فليكسا كالا
வெள்ளை அறிக்கைகள்மீது பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறுவதுண்டு. ஆணுல், விவாத முடிவில் வாக்கெடுப்பு நடைபெறுவதில்லை. பாராளு மன்றத்திற்கு உள்ளும் புறமும் வெள்ளை அறிக் கைகள் பற்றித், தெரிவிக்கப்படும். ஆக்கபூர்வமான சிறந்த கருத்துக்களை அரசாங்கிம் மனத்திற் கொள்ள இடமுண்டு. எந்த ஒரு வெள்ளை அறிக் கைக்கும் சட்டி:அந்தஸ்துக் கிடையாது. வெள்ளை

Page 48
72 எனது நோக்கில். பாராளுமன்றம்
அறிக்கைகள் சட்டமூலங்களல்ல. அரசாங்கம் ஒன்று எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த எண்ணி யிருக்கின்ற சில விடயங்களை அநேகமாக வெள்ளை அறிக்கைகள் கொண்டிருக்கும், இதை ஒரு கொள்கை விளக்கம் என்றுகூடக் கூறலாம். அநேக சந்தர்ப் பங்களில் வெள்ளை அறிக்கைகள் அரசாங்க நடவ டிக்கைகளுக்கு “யானைவரும் பின்னே மணியோசை வரும் முன்னே” என்பதுபோன்று ஒரு முன்னறி வித்தலாக அமையும்.
அரசாங்கம் தான் வெளியிட்ட ஒரு வெள்ளை அறிக்கையிலுள்ள திட்டங்களில் சில சமயம் மாற் றங்களைச் செய்யலாம்; அல்லது செய்யாமலும் விடலாம். வெள்ளை அறிக்கை ஒன்றின் மூலம் வெளி யிட்ட தன் திட்டங்கள் எவற்றையும் ஒரு குறிப் பிட்ட காலத்துக்கிடையில் நிறைவேற்ற வேண்டு மென்ற எவ்வித சட்ட நிர்ப்பந்தங்களும் ஓர் அரசாங்கத்துக்கில்லை.
இவ்வித அறிக்கைகளுக்கு வெள்ளை அறிக்கை (White paper) எனப் பெயர் இடுவதேன் என்பது இவ்விடத்தில் எழும் முக்கியமானதொரு கேள்வி யாகும். White paper என்பது ஒரு காரணப் பெயராகும். பிரித்தானிய பாராளுமன்றத்தில் பத்திரங்கள் பல தடித்த நீலநிற முகப்பு அட்டை யுடன் வெளிவரும். அதேநேரத்தில் மேற் குறிப்பிட்ட கொள்கை விளக்க அறிக்கைகள் மாத்திரம் வெள்ளை முகப்பு அட்டையுடன் வெளிக்கொணரப்படுகின்றன. எனவே, வெள்ளை அறிக்கை என்பது காரணப் பெயராக, அதுவே உத்தியோகபூர்வமான பெய ராகவும் நிலைத்துவிட்டது.
Beerstaðir -gredir. 1968

10 சட்டவாக்கம்
* கடந்த காலத்தையும் உள்ளடக்கும் பயன் கொண்ட சட்டங்களே ஆக்குவதற்குப் பாராளு மன்றம் தத்துவமுடையது. ஆயினும், அரசிய லமைப்பை முழுமையாகவோ அல்லது பகுதியள விலோ இடைநிறுத்தி வைக்கின்ற ஏதேனும் சட்டத்தை, அல்லது இயற்றப்படுகின்ற சட்ட மானது, ஏலவேயுள்ள அரசியலமைப்பை மாற்றீடு செய்கின்ற ஒரு புதிய அரசியலமைப்பை இயற்றினு லொழிய, அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குகின்ற ஏதேனும் சட்டத்தைப் பாராளுமன்றம் ஆக்குதலாகாது.” இவ்வாறு இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் உறுப்புரை எழுபத்தைந்தில் கூறப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தால் ஒரு சட்டமூலம் நிறை வேற்றப்பட்டதும் அது உடனடியாகச் சட்டமாகி விடுவதில்லை. ஒரு சட்டமூலமானது எப்பொழுது சட்டமாகும் என்பதை அரசியலமைப்பின் உறுப் புரை என்பதிற் காணலாம். அதன்படி பாராளு மன்றத்தினுல் நிறைவேற்றப்பட்ட சட்டமூலம் ஒன்று மாண்புமிகு சபாநாயகரின் சான்றுரை பெற்றதும் சட்டத் தகைமையைப் பெறுகின்றது.
சட்டவரைஞரின் பங்கு
சட்டமூலங்கள் அனைத்தும் கருவாகி, உருவாக், அரும்பாகி, மெர்ட்டாசி*சட்டமாக மலருவதற்கு

Page 49
74 எனது நோக்கில். பாராளுமன்றம்
இடையில் உள்ள நடைமுறைகள் பற்பல. தான் அவசியமெனக் கருதும் ஒரு சட்டமூலத்தின் சட்டப் பயன் பற்றிச், சம்பந்தப்பட்ட அமைச்சர் ஒருவர் முதற்கண் அதனை அமைச்சரவையின் ஆய்வுக்கும் அங்கீகாரத்திற்கும் சமர்ப்பிப்பதைச் சட்டவாக்கத் தின் முதல் நிலை எனக் கொள்ளலாம். ஆனல், அரசாங்கத்தின் நோக்கங்கள், கொள்கைகள், இலட்சியங்களுக்கமையச் சம்பந்தப்பட்ட அமைச் சரின் அல்லது அமைச்சரவையின் பணிப்புரையின் பேரிலே சட்டவரைஞர் திணைக்களத்தாலேயே ஒரு சட்டமூலம் அரசியலமைப்புக்கேற்ப வரையப்படு கின்றது. ஒரு சட்டமூலத்தை வரைவதில் சட்ட வரைஞர் வகிக்கும் பங்கு மகத்தானதாகும். இவ் விதம் சட்டவரைஞரதும் அவரது திணைக்களத்தி னதும் துணைக்கொண்டு வரையப்பெற்ற சட்டமூல மானது சம்பந்தப்பட்ட அமைச்சரினுல் அரசாங்க அச்சுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு முதலில் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானப் பத்திரிகையிற் பிரசுரிக்குமாறு பணிக் கப்படுகின்றது.
சட்டமூலம் ஒவ்வொன்றும் பாராளுமன்றத்தின் நிகழ்ச்சித் தாளில் இடப்படுவதற்கு, ஆகக் குறைந் தது ஏழு நாட்களுக்கு முன்னரேனும், வர்த்த மானப் பத்திரிகையில் வெளியிடப்படுதல் வேண்டும் என்று அரசியலமைப்பின் எழுபத்தெட்டாவது உறுப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சட்டவாக்கம் 75
பாராளுமன்றத்தினுல் சட்டமூலமொன்று நிறைவேற்றப்படுதலானது அரசியலமைப்புக்கும் பாராளுமன்றத்தின் நிலைக்கட்டளைகளுக்கும் இணங்கி இருத்தல்வேண்டும் என்பதும் விதியாகும்.
கோக்கம்
ஓர் உத்தேச சட்டமூலத்தை அரசாங்க வர்த்த மானப் பத்திரிகையில் வெளியிடுவதன் நோக்கம் எதுவெனில், பொதுமக்கள் அச்சட்டமூலத்தின் சட்டப் பயன் பற்றி முன்கூட்டியே அறிந்துகொள் வதற்கேயாம், மேலும், மக்களில் எப்பிரிவினருக் காவது அச்சட்டமூலத்தின் ஏதாவது குறிப்பிட்ட நோக்கம் குறித்து ஆட்சேபனை எதுவுமிருப்பின் அவர்கள் அதனை உயர்நீதிமன்றத்திற்குத் தெரியப் படுத்தி நீதி கோரலாம். உயர்நீதிமன்றத்தில் ஒரு சட்டமூலம் பற்றி ஆட்சேபனை தெரிவிக்கப்படும் சந்தர்ப்பங்களில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங் கப்படும்வரை குறித்த சட்டமூலத்தையொட்டி அடுத்து மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கை கள் நிறுத்திவைக்கப்படுதல் இயல்பானதே. ஆனல், இவ்விதம் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நிகழ்வ தில்லை.
வர்த்தமானப் பத்திரிகைப் பிரசுரத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட அமைச்சர் சம்பந்தப் பட்ட்.சட்டமூலத்தைப் பாராளுமன்றத்திலே சமர்ப் பிக்க நடவடிக்கை எடுக்குழ்படி பாராளுமன்றச் சபைமுதல்வர் காரியாலயத்தைக் கேட்டுக்கொள்வார். சபைமுதல்வர் காரியாலயம் இது பற்றிப் பாராசூ

Page 50
76 எனது நோக்கில்.பாராளுமன்றம்
மன்றச் செயலாளர் நாயகத்திற்கு அறிவிக்கும். அதன்படி பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குறிப்பிட்ட சட்டமூலத்தை அதற்குரிய அமைச்சர் மூலம் பாராளுமன்றத்திலே சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பார்.
முதலாம் மதிப்பீடு
வர்த்தமானப் பத்திரிகை அறிவித்தல் வெளி ன்ந்த அதே நேரத்தில் அச்சகத் திணைக்களத்தினுல் சட்டமூல வடிவில் தனியாக அச்சிடப்பட்டு ஆரம் பத்தில் பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கப் பட்ட சட்டமூலமானது இச் சந்தர்ப்பத்திலேதான் ப்ாராளுமன்றத்தின் அதிகாரச் சின்னமான செங் கோல் பிரதிமையுடன் பாராளுமன்ற வெளியீடாக வெளிக்கொணரப்படுகின்றது. குறிப்பிட்ட ஒரு தேதியில் சம்பந்தப்பட்ட அமைச்சரால் சட்டமூல மானது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகையில் அது முதல் மதிப்பீடு எனப்படும்.
பாராளுமன்றத்தில் முதன்முறையாக ஒரு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு ஏழு நாள்களின் பின்னரே அது இரண்டாம் மதிப்பு அல்லது வாசிப்பு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது. இவ் விவாதத்தின்போது சம்பந்தப்பட்ட அமைச்சர் குறிப்பிட்ட சட்டமூலத்தின் சட்டப் பயன் பற்றிச் சபையில் முக்கிய உரையொன்றை நிகழ்த்துவார். விவாத முடிவில் இரண்டாம் மதிப்பில் நிறைவேற் றப்பட்ட்தும் சட்டமூலம் குழுஆய் நிலையில் பரி சீலனை செய்யப்படும். இவ்வாறு ஆராயப்படும்

சட்டவாக்கம் xx 77
பொழுது சட்டமூலத்தின் பகுதிகள் அனைத்தும் வாசகம் வாசகமாகப் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். குழுஆய் நிலையில் அரசாங்கத் தரப்பு, எதிர்த் தரப்பு திருத்தப் பிரேரணைகள் ஏதுமிருப்பின் பாராளுமன்றம் அவற்றையும் பரி சீலனை செய்யும். திருத்தங்களைச் சமர்ப்பிக்க விரும்பும் உறுப்பினர்கள் அவை பற்றி முன்னறி வித்தல் கொடுத்தல் வேண்டும். திருத்தங்கள் அனைத்தும் அரசியலமைப்புக்கும் உடன்பாடான வையாக இருந்தால் மட்டுமே அவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இவ்வேளைகளில் திருத் தங்கள் பற்றிச் சட்டவரைஞரின் ஆலோசனைகள் பெறப்பட்டு அவற்றின்படியே முடிவுகள் மேற்கொள் ளப்படுவதுண்டு. இதன்பொருட்டு ஒரு சட்டமூல மானது குழுஆய் நிலையில் பரிசீலனை செய்யப்படும் பொழுது சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு உதவும் முகமாகச் சட்டவரைஞரோ அவரது பிரதிநிதிகளோ சபையின் மருவு பகுதியில் அதிகாரிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளில் அமர்ந்திருந்து வேண்டியபோது வேண்டிய ஆலோசனைகளை அமைச் சருக்கு வழங்குவர்.
s' குறிப்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்களால் சடிர்ப்பிக்கப்படும் திருத்தங்கள் எவற்றையும் சபை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். பொதுவில் சம்பந்தப்பட்ட அமைச்சரால் சமர்ப்பிக்கப்படும் திருத்தங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுவிடும் ஏன்பதை இங்கு குறிப்பிடல் வேண்டும். வாசகம்

Page 51
78 எனது நோக்கில். பாராளுமன்றம்
வாசகமாகப் பரிசீலனை செய்யப்பட்ட சட்டமூல மானது ஈற்றில் மூன்ரும் முறையாகவும் மதிப்பிடப் பட்டதைத் தொடர்ந்து சபையிலே திருத்தங்கள் எவையேனும் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அத்தகைய திருத்தங்களையும் உள்ளடக்கிச் சட்ட வடிவத்தில் மீண்டும் பரிபூரண நிலையில் அச்சிடப் படும். சபாநாயகரின் சான்றுரை
அரசியலமைப்பின் உறுப்புரை எழுபத்தொன் பதின்படி சபாநாயகர், பாராளுமன்றத்தினுல் நிறை வேற்றப்பட்ட சட்டமூலம் ஒவ்வொன்றிலும், பின்வரும் முறையிலமைந்த சான்றுரை ஒன்றை எழுதுதல்வேண்டும் :
*இந்தச் சட்டமூலம் (இங்கே சட்டத்தின் சுருக் கப் பெயரைக் கூறுக) பாராளுமன்றத்தினல் முறைப்படி நிறைவேற்றப்பட்டுள்ளது" அத்தகைய சட்டமூலம் எவ்வளவு பெரும் பான்மையினல் நிறைவேற்றப்பட்டது என்பதையும் அத்தகைய சான்றுரை எடுத்துக் கூறலாம்.
சட்டமூலமாகவிருந்து பாராளுமன்றத்தினுல் நிறைவேற்றி வைக்கப்பட்டது எதுவோ அது மாண்புமிகு சபாநாயகர் அவர்களால் சான்றுரை வழங்கப்பட்டுக் கையொப்பமிடப்பட்ட அந்த்க் கிணத்திலேயே சட்டம் என்கின்ற தகைமைய்ையும் வலுவையும் பெற்றுக்கொள்கின்றது.
. . . . : i dyCassif - grá 1986

11 கூட்டத் தொடர் கடைமுறைகள்
பாராளுமன்றக் கூட்டத்தொடர்கள் ஒத்திவைக் கப்படுவதும் புதிய கூட்டத் தொடர்கள் சம்பிர தாயபூர்வமாகத் தொடக்கி வைக்கப்படுவதும் பாராளுமன்ற நடைமுறைகளுக்கு உட்பட்டவையே. பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்குள்ளும் இந்த நடைமுறை அடங்கும். ་་་་་་་་་་
இலங்கை ஒரு சனநாயக சோசலிசக் குடியர சானதன்பின் பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் 1978ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் 7ஆம் தேதியன்று மேன்மை தங்கிய சனதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன அவர்களால் ஆரம் பித்து வைக்கப்பட்டது. 1977ஆம் ஆண்டு மாண்பு மிகு ஜே. ஆர். ஜயவர்த்தன அவர்கள் பதவிக்கு வந்தபோது அன்றிருந்த அரசியலமைப்பின்படி பாராளுமன்றம் தேசிய அரசுப் பேரவை என்றே அழைக்கப்பட்டது. அன்றைய தேசிய அரசுப் பேரவை இன்றைய அரசியலமைப்புடன் மீண்டும் பார்ர்ளுமன்றமாக மாற்றப்பட்டுவிட்டது. 1948ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் நான்காம் தேதி இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் அப்போ தைய பாராளுமன்றம் பிரதிநிதிகள் சபை என்றே அழைக்கப்பட்டது.

Page 52
80 எனது நோக்கில். பாராளுமன்றம்
தத்துவங்கள்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியுரசின் அரசியலமைப்பின்படி காலத்துக்குக்காலம் பிரகட னத்தின் மூலம் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு பணிக்கவும், அதன் அமர்வை நிறுத்தவும், அத்துடன் அதனைக் கலைக்கவும் வேண்டிய சர்வ தத்துவங்களும் சஞதிபதிக்கு உரியன.
இன்றைய அரசியலமைப்பின் உறுப்புரை 70இல் பாராளுமன்றத்தின் அமர்வுகள் பற்றிக் கூறப்பட் டுள்ளது. இதன்படி பாராளுமன்றம் ஒவ்வோராண் டுக் குறைந்தது ஒரு தடவையாவது கூட்டப்படுதல் Garrets.
பாராளுமன்றத்தின் அமர்வை நிறுத்தும் பிர கடனத்தின் போது அடுத்த அமர்வுக்கான தேதி யும் நிர்ணயிக்கப்படும். புதிய அமர்வுக்கான தினம் பிரகடனத் தேதியில் இருந்து இரண்டு மாதங்கி ளுக்கு உட்பட்டதாகவே இருக்கும். y, , °* : *.
தேவையேற்படின்
தேவையேற்படின் பாராளுமன்ற அமர்வுகள் நிறுத்தப்பட்டிருக்கும் காலத்தின்போதுதானும் பிரகடனத்தின் மூலம் அமர்வுக்கென நிர்ணயிக்கப் பட்ட தேதிக்கு முந்திய எத்தேதியிலும் பாராளு மன்றத்தைக் கூடுமாறு பணிக்கவோ எந்த நேரத் திலும் அதைக் கலைக்கவோ எதற்கும் தத்துவம் பெற்றவராகவே மாண்புமிகு சுளுதிபதி விளங்கு கிருர்,

கூட்டத் தொடர் நடைமுறைகள் 81
சணுதிபதி கதாகாயகன்
புதிய பாராளுமன்றக் கூட்டத் தொடர்கள் ஆரம்பிக்கப்படும் காலங்களிலே பாராளுமன்றம் வைபவரீதியாகக் கூடுவதுண்டு. பாராளுமன்றத் திறப்பு விழாக்கள் என வருணிக்கப்படும் இத் தகைய கூட்டங்களிற் சனதிபதியே முக்கிய கதா நாயகனுக இருப்பார்.
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் உறுப்புரை 33இன் படி,
(அ) பாராளுமன்றத்தின் அமர்வு ஒன்றின் ஆரம் பத்தில் பாராளுமன்றத்தில் அரச கொள்கைக் கூற்றை வாசிப்பதற்கும்,
(ஆ) பாராளுமன்றத்தின் வைபவ முறையான இருக்கைகளில் தலைமை தாங்குவதற்கும்
சஞதிபதி தத்துவமுடையவராக இருக்கிறர்.
இன்றைய அரசியலமைப்புச் சட்டம் நடை முறைக்கு வந்த 1978ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் 7ஆம் தேதியன்றும், அதன் பின்னர் 1982ஆம் ஆண்டு ஏப்பிறல் மாதம் 29ஆம் தேதி யன்று கோட்டே இராசதானியில் புதிய பாராளு மன்றத்தைத் திறந்து வைத்தபோதும், அதற்குப் பிந்திய ஆண்டுகளிலும் மேன்மை தங்கிய சணுதிபதி அவர்கள் தமது அதிகாரத்திற்கு அமையப் பாராளு மன்றக் கூட்டங்களுக்குத் தாமே தலைமை தாங்கி
6

Page 53
82 எனது நோக்கில். பாராளுமன்றம்
அரசாங்கத்தின் கொள்கைகள் பற்றி உரையாற்றி இருக்கிருர், பாராளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக் கப்படும் வேளைகளில் வைபவரீதியான நிகழ்ச்சிகள் பல இடம்பெறுவதுண்டு. இச் சந்தர்ப்பங்களில் இடம்பெறும் படைகளின் அணிவகுப்புக்களை இங்கே குறிப்பிடலாம். சபைப் படைக்கலச் சேவிதரும் உதவிப் படைக்கலச் சேவிதரும் இவ்வேளைகளிலே சீருடைகளிற் காட்சி அளிப்பர், உறுப்பினர்கள் எல்லோரும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவதை எவரும் அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.
அன்றும் இன்றும்
இலங்கையின் வரலாற்றில், அரசாங்கத்தில் மகாதேசாதிபதிகள் பதவி வகித்தபோது பாராளு மன்றத் திறப்பு விழாக்களில் அவர்களால் நிகழ்த் தப்பட்ட உரைகள் சிம்மாசனப் பிரசங்கங்கள் என்றே அழைக்கப்பட்டன. அவ்வாறன உரைகள் மீது பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறுவது அன்றைய நடைமுறையாகும். இன்று அந்த நடை முறை மாற்றம் கண்டுள்ளது. இத்தகைய உரைகள் மீது பாராளுமன்றத்தில் விவாதம் கட்டாயம் இடம் பெறல்வேண்டும் என்கின்ற நியதி இப்போது இல்லை. இதற்கு உதாரணமாக மூன்று தசாப் தங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஒரு சிம்மாசனப் பிரசங்க விவாதத்தைக் குறிப்பிடலாம்.

கூட்டத் தொடர் நடைமுறைகள் 83
எலிசபெத் மகாராணி
இலங்கைப் பாராளுமன்றத்தின் சிம்மாசனப் பிரசங்கங்கள் எல்லாவற்றையும் ஆராய்கின்ற பொழுது 1954ஆம் ஆண்டில் சுதந்திர இலங்கையின் இரண்டாவது பாராளுமன்றத்தின் மூன்ருவது கூட்டத் தொடரை மாட்சிமை தங்கிய இரண்டாவது எலிசபெத் மகாராணியார் ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்தினுர். அன்னுரது உரையின்மீது விவாதம் எதுவுமே இடம்பெறவில்லை.
இலங்கைப் பாராளுமன்றத்தில் மேன்மை தங்கிய சஞதிபதி அவர்கள் விசேட அமர்வுக ளுக்குத் தலைமை தாங்கும்பொழுது அவருக்கெனத் தனியான சிங்காசனம் ஒன்று உண்டு. பாராளு மன்றத்தின் ஒரு புதிய கூட்டத் தொடரை ஆரம் பித்துவைத்து மேன்மைதங்கிய சஞதிபதி அவர்கள் உரையாற்றுகையில் அவரது உரையைக் கேட்ப தற்காக இராசதந்திரிகள், அரசியற் பிரமுகர்கள், தொழிற்சங்கவாதிகள் என்று பலதரப்பட்டவர்களும் பாராளுமன்றத்தை முற்றுகையிடுவதுண்டு, சளுதி பதி அவர்களின் உரை அரசாங்கத்தின் முக்கிய கொள்கைகளை வெளிப்படுத்தும் உரையாகவும் அமைவதே இதற்குக் காரணமாகும்.
வீரகேசரி - பெப்ருவரி 1984

Page 54
12 குழுக்களின்மூலம் சில செயற்பாடுகள் பாராளுமன்றம் சட்டவாக்கங்களுடன் மாத்திரம் தனது கடமையை நிறுத்திக்கொள்ளவில்லை, அதன் தலையாய பல கடமைகள் பல்வேறு குழுக்களின் மூலமும் பரந்துபட்டுள்ளன. அரசாங்கக் கணக்குக் குழு, சிறப்புரிமைகள் குழு, நிலைக் கட்டளைகள் குழு, பாராளுமன்ற அலுவல்கள் குழு, ஆலோசனைக் குழுக்கள், தெரிவுக் குழு, தெரி குழுக்கள், பொது மனுக் குழு எனப் பல குழுக்களும் பாராளுமன்ற நடவடிக்கைகளில் மிக முக்கிய இடத்தை வகிக்கின் றன. இவற்றின் மிக உன்னதமான நடவடிக்கைகள்
பல பாராளுமன்றத்தின் பூரணத்துவமான கடமை களுக்கு வலுவூட்டுவன எனலாம்.
அரசாங்கக் கணக்குக் குழு
உதாரணமாகப் பாராளுமன்றத்தில் அரசாங்கக் கணக்குக் குழு என ஒரு குழு செயற்படுகிறது. இக் குழு பொதுவாக எந்தவொரு திணைக் களத்தினதும், உள்ளூர் அதிகார சபைகளினதும் பரிசோதிக்கப்பட்ட கணக்குகள், நிதியங்கள், நிதி நடைமுறைகள், செயற்பாடும் நிர்வாகமும் என் பவை பற்றியும் அவற்றினின்று எழும் எந்த ஒரு விடயம் பற்றியும் காலத்திற்குக் காலம் பாராளு மன்றத்திற்கு அறிக்கையிடுதல் வேண்டும். அதாவது அரசாங்கச் செலவுகளுக்காகப், பாராளுமன்றத்தால் வழங்கப்பட்ட தொகைகளைக் கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கைகளுடன் பரிசோ

குழுக்களின்மூலம் சில செயற்பாடுகள் 85
தித்தல் இக் குழுவின் கடமையாக இருக்கிறது. இக் குழுவின் விடயங்களைப் பற்றிப் பொதுமக்களை விட அரசாங்க சேவையிலுள்ளவர்களே நிறைய அருபவ பூர்வமாக அறியும் வாய்ப்பை உடைய வர்கள்.
இதேபோன்று அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள் பற்றிய கணக்குகளைப் பரிசோதிப்பதற்கென மற்ருெரு தனியான குழுவும் பாராளுமன்றத்தில் இயங்கிவருகின்றது. ** அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் குழு’ என இது அழைக்கப்படுகின்றது. பொதுவாக இக் குழுவினது அறிக்கைகள் எல்லாம் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக் கப்படுதல் வேண்டும்.
சிறப்புரிமைக் குழு
பாராளுமன்றத்தில் சிறப்புரிமைக் குழுவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்ருகும். பிரேரணை கொண்டுவரப்பட்டு பாராளுமன்றத்தினுல் அங்கீகரிக்கப்பட்டதின் பின் குழுவுக்கு ஆற்றுப் படுத்தப்படும் ஒவ்வொரு சிறப்புரிமை பற்றிய பிரச் சினையையும் பரிசீலனை செய்வதற்காகவும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உண்மைகளை நிலைநாட்டிச் சிறப் புரிமை மீறப்பட்டுள்ளதா என்பது பற்றித் தீர்மா னிப்பதற்கும், அவ்வாறெனில் மீறலின் தன்மை, அது ஏற்படக் காரணமாயிருந்த சூழ்நிலைகள் ஆகிய வற்றைத் தீர்மானிப்பதற்கும், விதப்புரைகளைச் செய்வதற்கும், குழு பொருத்தமானதெனக் கருதக் கூடியதான அத்தகைய விதப்புரையைச் செயற் படுத்தப் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை முறை

Page 55
86 எனது நோக்கில். பாராளுமன்றம்
யைக் கூறவும் சிறப்புரிமைகள் குழு பாராளுமன்றத் தின் செயற்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் அலுவல்கள் தொடர்பான நடைமுறை, ஒழுங்கு ஆகிய விடயங்களைப் பரிசீ லிப்பதும், அவசியமெனக் கருதப்படும் ஏதேனும் திருத்தங்கள் அல்லது சேர்க்கப்படவேண்டியன பற்றி விதந்துரைத்தலும், நிலைக்கட்டளைகள் தொடர் பாகப் பாராளுமன்றத்தால் ஆற்றுப்படுத்தப்படும் எல்லா விடயங்கள் பற்றியும் அறிக்கையிடுதலும் நிலைக்கட்டளைகள் குழுவின் பணியாகும்.
பாராளுமன்ற அலுவல்கள் குழு, சபாநாயகரைத் தலைவராகவும் பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், சபை முதல்வர், எதிர்க் கட்சி முதல்வர், அரசாங்க, எதிர்க் கட்சியின் முதற் கோலாசான் உட்படத் தெரிவுக் குழுவால் நியமிக் கப்படும் மற்றும் ஐவரை உறுப்பினர்களாகவுமி கொண்டது. சபை முதல்வருடன் கலந்தாலோசித்த பின்னர் சபாநாயகரால் குழுவுக்கு ஆற்றுப்படுத் தப்படக்கூடிய பாராளுமன்ற அலுவல்களின் ஆலோ சனைக்கென ஒதுக்கப்படவேண்டிய நேரம் மற்றும் விடயங்கள் ஆகியவை சம்பந்தமாகப் பரிசீலனை செய்து முடிவெடுத்தல் பாராளுமன்ற அலுவல்கள் குழுவின் கடமையாகும்.
ஆலோசனைக் குழுக்கள்
இப்பொழுதெல்லாம் பாராளுமன்றத்தில் ஒவ் வோர் அமைச்சுக்கும் ஒவ்வோர் ஆலோசனைக்குழு உண்டு. பாராளுமன்றத்தின் ஒவ்வோர் கூட்டத்

குழுக்களின் மூலம் சில செயற்பாடுகள் 87
தொடரின் ஆரம்பத்திலும் தெரிவுக் குழுவானது அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை அளவான ஆலோசனைக் குழுக்களை நியமிக்கும், குழுவுக்குப் பரிசீலனை செய்ய அதிகார மளிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கும் கருமங்களுக்கும் பொறுப்பான அமைச்சரே இத்தகைய ஆலோ சனைக் குழுவின் தவிசாளராக இருப்பார். இத் தகைய ஒவ்வோர் ஆலோசனைக் குழுவும் இயன்ற வரை பாராளுமன்றத்திலுள்ள சகல கட்சிகளையும் பிரதிபலிக்கும் வகையில் அமைதல் வேண்டும் என்பது விதியாகும்.
பாராளுமன்றத்திலுள்ள குழுக்களெல்லாம் சிறப்பு நோக்கங்களுக்கானவையாகும். இவ்விடத் தில் தெரிவுக் குழுவின் அமைப்பை ஆராய்வது பொருத்தமுடையது. ஒவ்வொரு கூட்டத் தொடரின் ஆரம்பத்தின்போதும் ஆலோசனைக் குழுக்கள், சட்டவாக்க நிலைக் குழுக்கள் ஆகியவற்றின் எண் ணிக்கை, கருமங்கள், அவற்றின் அமைப்பு ஆகிய வற்றை ஆராய்வதற்கும், அவை பற்றித் தங்கள் கருத்துக்களை மிகவும் கூடிய விரைவில் பாராளு மன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், பாராளு மன்றத்தினல் நியமிக்கப்படும் அத்தகைய ஆலோ சனைக் குழுக்களிலும் சட்டவாக்க நிலைக் குழுக் களிலும் கடமையாற்றக்கூடிய உறுப்பினர்களை நிய மிப்பதற்கும், சபைக்குழு, நிலைக் கட்டளைகள் குழு, பாராளும்ன்ற அலுவல்கள் குழு, அரசாங்க கணக்குக் குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழு, பொது மனுத் குழு. என்பவற்றிற் கடமையாற்ற

Page 56
88 எனது நோக்கில். பாராளுமன்றம்
உறுப்பினர்களை நியமிப்பதற்கும் தெரிவுக் குழு எனப்படும் ஒரு குழு நியமிக்கப்படல் வேண்டும் என்பது விதியாகும். சபாநாயகரைத் தவிசாளராகக் கொண்டு மேலும் பத்து உறுப்பினர்களைத் தெரிவுக் குழு கொண்டிருக்கும். அவ்வுறுப்பினர் அரசியற் கட்சிகளின் தலைவர்கள் அல்லது அவர்களின் நியமத் தர்களைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதும் விதியாகும். தெரிவுக் குழு என்பது Committee of Selection எனவும், தெரி குழுக்கள் எனப்படுபவை Select Committees எனவும் பிரித்தறிந்து கொள்ளுதல் அவசியம்.
தேரி குழுக்கள்
பாராளுமன்றம் காலத்துக்குக் காலம் தெரி குழுக்களைப் பல்வேறு நோக்கங்களின் பொருட்டுப் பல்வேறு சந்தர்ப்பங்களில் நியமிப்பதுண்டு. பிரதம நீதியரசர் திரு. நெவில் சமரக்கோன் அவர்கள் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவு தொடர்பாகத் தெரி குழு விசாரணை ஒன்று நடைபெற்றதென்பதை இங்கு ஞாபகப்படுத்தல் பொருத்தமுடையது. இத் தகைய தெரி குழுக்களுக்கு அதிகாரங்கள் பல உண்டு. அவை பாராளுமன்றத்தினுல் வழங்கப்படு பவை. ஒரு தெரி குழு சாட்சியங்களை விசாரிக்க வசதி யாக இருக்குமெனக் கருதுமிடத்து சாட்சிகளையோ, பத்திரங்களையோ, பதிவேடுகளையோ வரவழைக்க முடியும். ஒரு நீதி மன்றத்தை ஒத்த ஒழுங்கு முறைகள் இத்தகைய தெரிகுழுவிசாரணையின்போது நிலவும். பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்படினும் தெரி குழு தனது புலன் விசாரணைகளைத் தொடர்ந்து

குழுக்களின் மூலம் சில செயற்பாடுகள் 89
நடத்தலாம். குழு தனது அறிக்கையைப் பாராளுமன் றத்தில் சமர்ப்பிக்கும்வரை, அல்லது பாராளுமன் றத்தின் பிரேரணை ஒன்றின் மீதன்றிப் பாராளு மன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு தெரி குழுவைக் கலைக்க முடியாது.
போது மனுக் குழு
பாராளுமன்ற அங்கத்தவர்களால் பாராளுமன் றத்தில் சமர்ப்பிக்கப்படும் மனுக்களைப் பொது மனுக் குழு ஆராயும் அதிகாரம் வாய்ந்தது, பகிரங்க அலுவலர் ஒருவரால் அல்லது பகிரங்கக் கூட்டுத் தாபனம், உள்ளூர் அதிகார சபை அல்லது இவற்றை ஒத்த பிற நிறுவனம் ஒன்றின் அலுவலர் ஒருவ ரால் அடிப்படை உரிமை ஒன்று மீறப்படுதலை அல்லது வேறு அநீதி இழைக்கப்படுதலைச் சம்பந்தப் பட்ட மனு வெளிப்படுத்துகின்றது என்று குழு கருதுமிடத்து அதனை விசாரித்து அறிக்கை சமர்ப் பிக்கும்படி அத்தகைய மனுவை நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளருக்கு (Ombudsman) ஆற்றுப்படுத்தலாம். பாராளுமன்ற ஆணையாளரின் அறிக்கையைப் பரிசீலித்த பின்னர் அதன்மீதான தனது அபிப்பிராயத்தைக் குழு பாராளுமன்றத் திற்கு அறிக்கையிடலாம்.
பாராளுமன்றக் குழுக்கள் எல்லாம் அவை அவைகளின் நோக்கங்களின்படி இயங்குவன. ஒவ் வொன்றிற்கும் அதன் அதன் தன்மைகளுக்கேற்பத் தனித் தனியான நடைமுறைகள் பல உண்டு. இக் குழுக்கள் எல்லாம் பாராளுமன்றத்துடன் சங்கம மானவையே.
வீரகேசரி = டிசெம்பர் 1985

Page 57
13 செந்தமிழும் சிங்களமும்
தமிழ் மொழியைப் பொறுத்த அளவில் இலங்கைப் பாராளுமன்றத்தில் அதற்கு அளிக்கப் பட்டிருக்கின்ற சிறப்புக்கள் எவையெவை என்று அறிவதில் அவாவுறும் தமிழ் நெஞ்சங்கள் இன்று ஏராளம், இன்று இலங்கைப் பாராளுமன்றத்தின் எந்த ஒரு நடவடிக்கையை எடுத்துப் பார்த்தாலும் அங்கே தமிழ்மொழிக்கும் இடம் அளிக்கப்பட்டிருப் பதை எவரும் இலகுவில் அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.
பாராளுமன்றத்திலே சமர்ப்பிக்கப்படுகின்ற சட்டமூலங்கள், நிர்வாக அறிக்கைகள், கூட்டுத் தாபன அறிக்கைகள் அனைத்தையும் தமிழ் மொழி யிலும் பெற முடியும். இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கைகள், பொருளாதார மீளாய்வு அறிக்கைகள்கூட மூன்று மொழிகளிலுமே பாராளு மன்றத்திற் சமர்ப்பிக்கப்படுகின்றன. காலத்துக்குக் காலம் நடைபெறுகின்ற பாராளுமன்ற வைபவ முறையான திறப்பு விழாக்களுக்கான (Ceremaonial Opening of Parliament) 960-pi'ildissir யாவும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலுமே . அச்சிடப்படுவது இலங்கைப் பாராளுமன்றத்தின் பல ஆண்டுகால வழக்கமாக இருந்து வருகின்றது. சிம்மாசனப் பிரசங்கங்கள்

செந்தமிழும் சிங்களமும் 9 it
எந்த மொழியில் இடம்பெற்ற போதிலும் அது ஹன்சாட்டில் பிரசுரமாகையில் மும் மொழிகளிலுமே பிரசுரமாவது வழக்கம். இலங்கையில் மகாதேசாதி பதிகள் பதவி வகித்த காலத்திற் பாராளுமன்றத் திறப்பு விழாக்களில் அவர்கள் நிகழ்த்தும் சிம்மா சனப் பிரசங்கங்கள் அவர்களது முகதாவில் இன்னுெரு பிரமுகரால் தமிழிலும் வாசிக்கப்படும் வழக்கம் மிக நீண்டகாலமாக இருந்து வந்தது.
தமிழோசை
இலங்கைப் பாராளுமன்றத்தின் தமிழ் நட வடிக்கைகளைச் சுருக்கமாகச் சொல்வதாஞல் அது தமிழ் பேசும் மக்கள் அனைவருடனும் தமிழ் மொழி யிலேயே தொடர்பு கொள்ளுகிறது. ஒரு காலத்தில் ஆங்கிலம் அரசோச்சிய சபையில் இன்றெல்லாம் அடிக்கடி தமிழோசையும் கேட்க முடிகின்றது. சபையில் விசுவாசப் பிரமாணம் எடுக்கும் காலங் களிலே தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மொழியில் விசுவாசப் பிரமாணம் எடுப் பதையே பெருமைய்ாகவும் கடமையாகவும் கருது கிருர்கள்.
பாராளுமன்ற விவாதங்களின் அதிகார அறிக்கை யான் - ஹன்சாட்டில் பொதுவான சபை நடை முறைகள் அனைத்தும் மும்மொழிகளிலுமே இடம் பெறுகின்றன. நிதி அமைச்சரின் வரவு செலவுத் திட்ட உரை. எந்த மொழியில், இடம்பெற்ற

Page 58
92 எனது நோக்கில். பாராளுமன்றம்
போதிலும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் ஹன் சாட்டில் இடம்பெறுவதும் நீண்டகாலச் சபை நடை முறையாகும். பாராளுமன்றக் கூட்ட நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்ட ஒழுங்குப்பத்திரங்கள் (OrderPapers) மூன்று மொழிகளிலும் அச்சிடப்பெற்றே உறுப் பினர்களுக்கு வழங்கப்படுகின்றன. முடிவடைந்த பாராளுமன்றக் கூட்ட வரலாற்று அறிக்கைகளும் (Minutes) இவ்விதமே வெளியிடப்படுகின்றன. இவற்றுடன் ஹன்சாட் விஷய சூசிகைகளும் (Index) மும்மொழிகளிலுமே வெளியிடப்படுகின்றன. காலத் திற்குக் காலம் வெளியிடப்படும் தெரி குழுக்களின் அறிக்கைகள், அரசாங்க கணக்குக் (5C அறிக்கைகள் போன்ற யாவும் மும் மொழிகளிலுமே பிரசுரிக்கப்படுகின்றன.
பாராளுமன்ற விவாத ஹன்சாட் அறிக்கைகள் அனைத்தும் பூரணமாக மும் மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட வேண்டுமென்கின்ற ஒரு கோரிக்கையும் நீண்ட காலமாக இருந்து வரு கின்றது. அதாவது பாராளுமன்றத்தில் இடம் பெறும் தமிழ் உரைகள், சிங்களம் ஆங்கிலத்திலும் சிங்கள உரைகள், தமிழ் ஆங்கிலத்திலும் ஆங்கில உரைகள், சிங்களம் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கையாகும். இந்தக் கோரிக்கையானது ஒரு காலத்தில் நிறை வேற்றி வைக்கப்படுகின்ற பொழுது இலங்கைப் பாராளுமன்றத்தில் இடம்பெறுகின்ற சகல சிங்கள

செந்தமிழும் சிங்களமும் 98
தமிழ் ஆங்கிலப் பேச்சுக்களையும் உலகத்தின் பல பாகங்களிலுமுள்ள மக்களும் விளங்கிக் கொள்ளத் தக்க ஒரு நிலை ஏற்படும்.
நிர்வாகத்தில் மூன்று மொழிகளையும் உப யோகிப்பதென்பது எவ்வளவு கடினமான காரிய மென்று சிலர் கருதுகிறர்கள். ஆணுல், இத்துறையிற் பாராளுமன்றம் சகல துறைகளுக்கும் முன்மாதிரி யாகவும் வழிகாட்டியாகவும் உள்ளது.*
கோட்டேயில் இன்று அமைந்துள்ள புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் உள்ள ஒரு சிறப் பம்சத்தை இங்கு குறிப்பிடுவதும் மிகப் பொருத்த மானதாகும், பாராளுமன்ற அவை மண்டபத்தின் வாயிற் கதவுகள் மிகப் பிரமாண்டமானவை; பன்னிரண்டுக்குப் பன்னிரண்டு என்ற அளவில் நூற்றுநாற்பத்துநான்கு சதுர அடி விஸ்தீரண மானவை. இக் கதவுகளில் முற்காலத்துக் கற் செதுக்கற் பாணியில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் இலங்கைச் சனநாயக சமதர்மக் குடியரசினது அரசியல் யாப்ஷின் பாயிரம் வெள்ளி உலோகத்தினுல் பொறிக்கப்பட்டுள்ளது.
*வீரகேசரி - ஏப்றில் 1967

Page 59
14 உறுப்பினர்களது ஈகைச்சுவை
பாராளுமன்ற விவாதங்கள் என்றதும் சூடான வாதப் பிரதிவாதங்கள், கனல் கக்கும் ஆவேசப் பேச்சுக்கள், சொல்லம்புத் தாக்குதல்கள், கண்டனக் கணைகள், வசைமாரிகள், இவற்றின் விளைவாக ஏற்படக்கூடிய சண்டை சச்சரவுகள்தாம் முழுக்க முழுக்க இடம்பெறும் என்பது பொது மக்களில் பலரது அநுமானமாக இருக்கின்றது. ஆனல், பாராளுமன்றம் பொது மக்களில் பலரும் நினைப் பதைப்போல எப்பொழுதுமே உணர்ச்சி வசப்பட் டிருப்பதில்லை. விவாதங்களின் போது பல சந்தர்ப் பங்களிற் சபையில் இடி இடித்து மின்னல் மின்னு வது என்னவோ உண்மையே. ஆனல், சபை எத் தகைய கொந்தளிப்புகளில் இருந்தாலும் அவற்றை யெல்லாம் பொருட்படுத்தாது சமய சந்தர்ப்பங் களுக்கேற்ப நகைச்சுவைத் துணுக்குக்களையும், இடையிடையே அள்ளிப்போட்டுச் சபையை ஆசு வாசப்படுத்தி தமது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்தியம்புகின்ற சிரேஷ்ட அங்கத்தவர்களும் பாராளுமன்றத்தில் நிறைய இருக்கவே இருக்கின் ருர்கள். : k
டட்ஸ் சேனாநாயக்க
சிறந்த அரசியல்வாதி இராசதந்திரி, கனவான், விவசாய நிபுணர் என்ற கணிப்பிலேயே பிரதமர் மாண்புமிகு டட்னி சேறநாயக்க அவர்களைப் Lisbsólí Glurgluddadr «ssólarodí, éFpsö5 L(sosú'

உறுப்பினர்களது நகைச்சுவை 95
படக் கலைஞர், கலாரசிகருமாவார் அவர் என்னும் விபரமும் சிலருக்கே தெரியும், ஆணுல், அவரது வாதப் பிரதிவாதங்களையும் உரைகளையும் அடிக்கடி கேட்பவர்கள் அவர் சிறந்த நகைச்சுவை மன்னன் என்பதையும் ஒப்புக்கொள்வார்கள். அரசாங்கக் கட்சியினரும் எதிர்க் கட்சியினரும் அவரது நகைச் சுவைகளை ஒன்றுசேர்ந்து அநுபவிக்க என்றுமே தவறுவதில்லை,
1966ஆம் ஆண்டு சனவரி மாதம் எட்டாந் தேதி, தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டப் பிரமாணங்கள் சபையிற் சமர்ப்பிக்கப்பட்ட தின மாகும். அன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற கலவரங்களை இதற்கிடையில் வாசகர்கள் மறந் திருக்க மாட்டார்கள். உணர்ச்சி மயமான ஒரு சூழ் நிலையிற்றன் அன்றைய சபைக் கூட்டம் ஆரம்ப மானது. கூட்ட ஆரம்பத்தில் வாய்மூல விடைகளுக் கான நேரத்தில் எட்டியாந்தோட்டைப் பிரதிநிதி கலாநிதி என். எம். பெரேரா அவர்களது கேள்வி யொன்றிற்குப் பிரதமர் பதிலளித்துக்கொண்டிருந் தார். தமிழ் மொழிப் பிரமாணங்கள்மீது எழுந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக, அரசாங்கக்கட்சி உறுப்பினராக இருந்த ஊவாபரணகம தொகுதி அங்கத்தவர் திருமதி குசுமா ராஜரத்தினு திடீரென அரசாங்கக் கட்சியை விட்டு விலகியிருந்தார். அன்று பிரதமர் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது திருமதி ராஜரத்ணு சபையினுள் பிரவேசித்து, சபாநாய கருக்கு மரியாதை செலுத்திவிட்டு எதிர்க் கட்சிப்

Page 60
96 எனது நோக்கில். பாராளுமன்றம்
பக்கம் சென்ருர். அத்தருணம் எதிர்க் கட்சியில் இருந்த அத்தனை அங்கத்தவர்களும் மேசையில் அடித்துப் பலத்த கரகோஷம் செய்தனர். எதிர்க் கட்சியினரது கரகோஷ ஆரவாரமெல்லாம் அடங்கிய தும் “எனது மறுமொழி இத்தகைய கரகோஷத்தை எழுப்பிவிடக் கூடுமென்று நான் முன்னரே அறிந்திருக்கவில்லை” என்று பிரதமர் சிரித்துக் கொண்டே மிக நிதானமாகக் கூறி எதிர்க் கட்சியின ரது கரகோஷங்களைத் தனக்குரியனவாக்கிக் கொண் LLArjf.
eñGew Gol
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முக்கிய விவாதமொன்றில் திறம்படவும் நயம்படவும் உயரிய கருத்துக்களுடன் பேசுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சகல அங்கத்தவர்களையும் கவர்ந்து தமது உரையைச் செவிமடுக்கச் செய்வது மாகும். இந்தத் துறையில் மாண்புமிகு டட்னி சேன நாயக்க அவர்கள் மிகவும் கைதேர்ந்தவர். எந்தச் சூடான விவாதமாக இருந்தாலும் நல்ல நகைச் சுவையுடன் பேசி அனைவரையும் தம்பால் கவர்ந்து கொள்வார். 1966ஆம் ஆண்டு முற்பகுதியில் ஒரு நாள் அவசரகால நிலை பற்றிச் சபையில் விவாதம் நடைபெற்றது. அவசரகால நிலை பிறப்பிக்கப்படுவ தற்கு முன் கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் சிங்களத்தைக் காப்பதற்காகச் சிலர் சத்தியப் பிர மாணம் செய்த வைபவம் ஒன்றும் நடைபெற்றிருந் தது. இந்தப் பின்னணிகளினூடே அவசரகால நிலை

உறுப்பினர்களது நகைச்சுவை g?
பற்றிப் பேசிய பிரதமரின் நகைச்சுவைத் தாக்குதல் ஒன்றிற்கு யாழ்ப்பாணத்திற் கல்வி கற்றவரும் யாழ்ப்பாணத்தால் மருமகளுக்கிக் கொள்ளப்பட்ட வருமான மதவாச்சித் தொகுதி உறுப்பினர் திரு. மைத்திரிபால சேஞநாயக்க இலக்கானுர்,
மாண்புமிகு டட்வி சேனுநாயக்க: **சத்தியப் பிரமாணம் எடுப்பதைக்காட்டுகின்ற புகைப்படத்தை நான் பத்திரிகைகளில் பார்த்தேன். மாண்புமிகு மத வாச்சித் தொகுதி உறுப்பினர் சபையில் இப்பொ ழுது இல்லை. அந்தச் சத்தியப் பிரமாணப் படத்தில் அவரைப் பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன். அவர் மிகவும் கம்பீரமாக அப் படத்தில் காட்சி யளிக்கின்றர். ஆனல், மாண்புமிகு மதவாச்சித் தொகுதி உறுப்பினரைப் பொறுத்த மட்டில் அவரது சிங்களம் மட்டும் கொள்கை பகலில் மாத்திரமே. இரவில் நியாயமான அளவுதமிழ் உபயோகமுமுண்டு” என்ற சாராமிசம்படச் சபையிலே சிலேடையாகப் பேசியபோது சபை பல நிமிடங்கள்வரை நகைச் சுவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தென்றே கூறவேண்டும்.
குறும்பு
1967 ஆம் ஆண்டு சிம்மாசனப் பிரசங்க விவா
தத்தில் மாண்புமிகு டட்வி சேனநாயக்க அவர்கள்
தமக்கேயுரிய கம்பீரமான பாணியிற் பேசிக்கொண்
டிருக்கிறர். சபை முழுவதுமே அவரது வாதத்தைக்
கேட்டுக்கொண்டிருக்கின்றது. பொதுமக்களுக்கான
பார்வையாளர் ஆசனங்களிலும் ஒரே கூட்டம்.
7

Page 61
98 எனது நோக்கில். பாராளுமன்றம்
பிரதமரின் பேச்சில் கோட்டே தொகுதி உறுப்பினர் (திரு. ஸ்ரான்லி திலகரத்ணு) அடிக்கடி குறுக்கிட்டு அரசாங்கக் கட்சியிலுள்ள பிளவுகள் பற்றிக் கேள் விக்கு மேல் கேள்வியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். தன்னிலும் பார்க்க உயரத்தில் மிகக் குறைந்தவரான திரு. திலகரத்ணுவைப் பார்த்துப் பிரதமர் “கெளரவ கோட்டே பிரதிநிதியைப் பொறுத்த மட்டில் என்னை விட அநுகூலமான நிலையிலிருந்து அவர் பிளவுகளைப் பார்க்க முடியும். ஏனெனில் அவர் பிளவுகளைக் கண் மட்டத்தில் காணமுடியும்” என்று சிருங்காரச் சுவையில் குறும்பாகக் கூறி அவரது குறுக்கீடு களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அப்பொழுது சபையிலே கிளம்பிய குபிர்ச் சிரிப்பொலிகளுக்கும் அவிட்டு வாணச் சிரிப்பொலிகளுக்கும் அளவுப் பிரமாணமே இல்லாமற் போய்விட்டது.
எனக்கு நேரம் வந்துவிட்டது
சபாநாயகர் மாண்புமிகு ஸி. எஸ். ஷேர்ளி கொறயா அவர்கள் சபை விவாதங்களை மிகவும் உயிர்த்துடிப்புடன் களை சொட்டச் சொட்ட நடாத்தி வைப்பதில் மிகவும் சாமர்த்தியம் வாய்ந்தவர்.
ஒரு சமயம் வரவு செலவுத் திட்ட விவாத மொன்றில் தெஹியோவிற்ற உறுப்பினர் (திரு. டீ. பீ. ஆர். வீரசேகரா) உரையாற்றிக் கொண்டிருக்கை யிலே தமக்குக் கொடுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டதென்பதைத் திடீரென உணர்ந்துகொண்டவ ராக அப்பொழுது கூட்ட நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கிய மாண்புமிகு ஷேர்ளி கொறயா அவர்களைப்

உறுப்பினர்களது நகைச்சுவை 99
பார்த்து “கெளரவ சபாநாயகர் அவர்களே எனக்கு நேரம் வந்துவிட்டது” என்ருர். உடனே சபா நாயகர் அவர்கள் ஆச்சரியக் குறியுடன் ' என்ன உங்களுக்கு நேரம்வந்துவிட்டதா? அது இந்த விவா தத்தைப் பொறுத்தவரையில்தான் என்று நான் நம்புகிறேன்” என்று இடைமறித்துச் சொன்னதும் திரு. வீரசேகராவுக்குத் தமது வாக்கின் போக்குப் புரிந்து விட்டது. அவர் 'அறுபது அல்லது எழுபது வயதுவரை நான் வாழ்வேன் என்று நம்புகிறேன் ஐயா’ என்று கூற இந்தச் சுவையான உரையாட லைச் சபையோர் நன்கு அனுபவிக்கத் தவறவில்லை.
தொம்பேயின் சாமர்த்தியம்
சமய சந்தர்ப்பத்திற்கேற்றவாறு மிகச் சாமர்த் தியமாகப் பேசுவதிலே தொம்பே தொகுதி உறுப் பினர் திரு. எவ். ஆர். டயஸ் பண்டாரநாயக்க அவர்கள் அசகாயகுரர். 1967ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்த சமயம் அவரது பாரியாரும் அவரது மாமி முறையான ஒருவரும் விவாதங்களை அவதா னித்தபடி இருந்தனர். தனது மனைவி அமர்ந்திருந்த பார்வையாளர் பகுதியை அடிக்கடி அண்ணுந்து பார்த்தவண்ணம் உரை நிகழ்த்திக்கொண்டிருந்த திரு. பண்டாரநாயக்காவை அப்பொழுது கூட்டத் திற்குத் தலைமை வகித்துக்கொண்டிருந்த உப சபா நாயகர் (திரு. ஷேர்ளி கொறயா) அவர்கள் இடை மறித்து * தயவு செய்து இங்கே தலைமை வகிப் பவரைப் பார்த்து உங்கள் உரையை நிகழ்த்துங்கள்; நீங்கள் அங்கே பார்க்க விரும்புகிறீர்கள் என்று

Page 62
100 எனது நோக்கில். பாராளுமன்றம்
எனக்குத் தெரியும்’ எனக் கூறினுர், உப சபா நாயகர் அவர்களது கூற்றின் அந்தரங்கத்தைப் புரிந்துகொண்ட அத்தனை பேரின் முகங்களிலும் குறும்புப் புன்னகை தவழ்ந்து விளையாடியது.
இந்தச் சந்தர்ப்பத்தில் திரு. பண்டாரநாயக்க அவர்கள்: ‘*உப சபாநாயகர் அவர்களே, நான் ஒரு கணம் விசேட பார்வையாளர் பகுதி நோக்கி இருந்தால் அதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும், வயது முதிர்ந்த எனது மாமி ஒருவர் மேலே அமர்ந்து இருக்கின்றர். சிலாபம் மாவட்டத் தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர ஆதர வாளரான அவர் ஐக்கிய தேசியக் கட்சி பதவிக்கு வந்ததும் மிகவும் சந்தோஷப்பட்டார். ஏனெனில், இனிமேல் தனது மருமகனின் வரவு செலவுத் திட்ட உரைகளைக் கேட்கும் தொல்லை இராது என்று கூறியவர். ஆனல், இப்பொழுது தனது மரு மகன் இதைவிட நன்ருகச் செய்திருக்கக் கூடு மென்று கூறுகிருர். இன்று அவர் பாராளுமன்றத் திற்கு வந்திருக்கிறர்” என்று மிகவும் சாமர்த்திய மாகப் பேசித் தம்மை அந்தச் சங்கடமான நிலையி லிருந்து மிகவும் இலாவகமாக விடுவித்துக் கொண்டது சபையில் மிகச் சுவாரசியமான நிகழ்ச் சியாக அமைந்திருந்தது.
அரிசியில்
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அரிசியுடன் சம்பந்தப்பட்ட இரண்டு நகைச் சுவைச் சம்பவங்கள் இச் சந்தர்ப்பத்தில் ஞாபகத்திற்கு வருகின்றன. கடந்த வரவு செலவுத் திட்ட விவாதத்தில்

உறுப்பினர்களது நகைச்சுவை 10.
பிரமசாரியான பிரதமர் மாண்புமிகு டட்னி சேன நாயக்க அவர்கள் பேசும்பொழுது ஒரு கட்டத்தில் *உபசபாநாயகர் அவர்களே, அரிசியை உணவாகக் கொள்ளும் நாடுகளில்தான் அதிக சனத்தொகைப் பெருக்கம் ஏற்பட்டிருக்கிறதென்பது ஆச்சரிய மூட்டும் ஒரு உண்மையாகும். அரிசியில் அதற்கென உரிய ஒரு தனித்தன்மை உண்டுபோல் இருக்கிறது. கொழும்பு மத்திய தொகுதியின் மூன்ருவது உறுப் பினரும் (திரு. பீ. ஜி. பி. கெனமன்) நானும் அரிசி உண்பவர்கள் அல்லர். எனவே, அதன் பலனும் வெளிப்படையாகத் தெரிகின்றதல்லவா? என்று புத்திரபாக்கியமில்லாத திரு. கெனமனைக் குறித்துக் கூறி முடிப்பதற்கிடையில் சபையில் ஒரே சங்கீதச் சிரிப்பு ஆரவாரம் எழுந்தது.
இதே விவாதத்தில் பிரதமர் அரிசி விலை பற்றித் திரு. கெனமனின் கேள்விக்குப் பதில் அளிப்பது போல் ஒரு கட்டத்தில் உரையை நிகழ்த்தினுர், அப்பொழுது திரு. கெனமன் பிரதமரின் பேச்சில் குறுக்கிட்டு அரிசி, நெல் விலைகளைப் பற்றிக் கூறத் தொடங்கினர். எதிரணியினரைத் தமது வாக்கு வன்மையால் மடக்குவதில் கைதேர்ந்தவ ரான கைத்தொழில் கடற்றெழில் அமைச்சர் மாண்பு மிகு டீ. பீ. ஆர். குணவர்த்தன அவர்கள் திரு. கெனமனைப் பார்த்து 8 நீர் உமது ரொட்டியோடு மாத்திரம் நின்றுவிடும், உமக்கு அரிசியைப் பற்றி ஒன்றும் தெரியாது’ என்றதுதான் தாமதம், சபை
சிரிப்பொலியில் ஆழ்ந்தது.
தினகரன் - ஜூன் 1968

Page 63
15
பாராளுமன்றத்தில்
வள்ளுவன், கம்பன், பாரதி
கடந்த கால்நூற்றண்டு கால பாராளுமன்ற விவாதங்களை நன்கு அவதானித்து வருபவர்கள் தமிழ் இலக்கியத்தினது பெருமை அவற்றில் எவ் வளவு தூரம் ஓங்கி நிற்கின்றதென்பதை உணர்ந்து கொள்ள முடியும். வள்ளுவனும், கம்பனும், பாரதியும், மற்றைய சங்க காலப் புலவர்களும் பாராளுமன்ற விவாதங்களிற் பங்கு பற்றிக் குரல் கொடுத்ததைப் பற்பல சந்தர்ப்பங்களில் நான் அவதானித்ததுண்டு. * வள்ளுவன் தன்னை உலகி னுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு* என்று புரட்சிக் கவி பாரதி வள்ளுவனைப் பற்றியும் திருக்குறளைப் பற்றியும் பெருமைப்பட்டாரல்லவா? பாராளுமன்ற விவாதங்களில் ஏராளமான கட்டங் களில் திருக்குறள் பெரும் பெரும் உண்மைகளைப் புகட்டியது என்றே சொல்லலாம். பாராளுமன்றத் தின் அதிகார அறிக்கையான ஹன்சார்ட்டில் ஆங் காங்கே திருக்குறளின் ஆதிக்கம் பரவலாகப் பல இடங்களில் பதிந்திருப்பதை எவரும் காணமுடியும்.
வள்ளுவன்
* திருக்குறள் உணர்த்தும் அறமும் பொருளும் காதலும் ஒரு வகுப்பார்க்கோ, ஒரு மதத்தார்க்கோ,
ஒரு நிறத்தார்க்கோ, ஒரு மொழியார்க்கோ, ஒரு நாட்டார்க்கோ உரியன அல்ல. அவை உலகிற்குப்

பாராளுமன்றத்தில். L03 9ת חו
பொது, திருக்குறளில் எழுவாய் முதல் இறுவாய் வரை உலகு என்னுஞ் சொல்லும், பொதுமைப் பொருளுணர்த்தும் சொற்களும் சொற்ருெடர்களும் உரிய இடங்களில் திகழ்கின்றன. திருக்குறளின் உள்ளக் கிடக்கையைப் பலபடக் கூறலாம். அவற்றுள் உயிர்ப்பாய் ஒளிர்வது ஒன்று. அஃது உலகம் ஒரு குலம் என்பது, திருக்குறள் ஒரு சுரங்கம். அஃது அவ்வக் கால உலகைப் புரக்கும் பொருள்களை அவ்வப்போது வழங்கும் பெற்றியது” என்றவாறு 1 - fτέι - f மு. வரதராசனு ரது *திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் ” என்ற நூலுக்கு வழங்கிய அணிந்துரையில் தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாணசுந்தர முதலியார் கூறியுள்ளதை நினைவு கூருதல் ஈண்டு பொருந்தும்.
அரசியலில்-அரசாட்சியில்-அறத்தைப் பற்றி யும், செங்கோன்மை பற்றியும் சொல்லவேண்டிய களமான பாராளுமன்றத்தில் திருக்குறளினது பெருமை ஓங்குவதில் வியப்பெதுவும் இருக்க நியாயமில்லை.
ஊர்காவற்றுறைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் எதிர்க்கட்சி முதல்வர் திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் ஆகியோருடன் பாராளு மன்றத்திற்கு அடிக்கடி வந்துபோய்க்கொண்டிருந்த வள்ளுவர், மிக அண்மையில் ஒரு நாள் வரவு செலவுத் திட்ட இரண்டாம் மதிப்பு விவாதத்தின் போது வவுனியாத் தொகுதி உறுப்பினர் திரு. தா. சிவசிதம்பரம் அவர்களின் வாயிலாகவும் குரல் கொடுத்தார்.

Page 64
104 எனது நோக்கில். பாராளுமன்றம்
*தந்தை மகற்காற்றும் கன்றி அவையத்து
முக்தி இருப்பச் செயல்". இவ்வாறு கணிரென ஒலித்தது வள்ளுவனது குரல். ஏழைக் குழந்தைகளின் கல்வியை வவுனியாத் தொகுதி உறுப்பினர் அவர்கள் மிக ஆணித்தரமாக வற்புறுத்திப் பேசினுர் என்பது இங்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இதற்கு முன்னுல் 1980ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பாராளுமன்றத்தில் ஒலித்த வள்ளுவன் குரல் எனது ஞாபகத்திற்கு வருகின்றது. அந்தச் சந்தர்ப்பத்தில்,
* தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை"
என்ருன் வள்ளுவன். ‘மனிதர்கள் தாம் இருந்த நிலையிலிருந்து தாழ்ந்தார்களானல் தலையிலிருந்து விழுந்த மயிர் எவ்விதமாகக் குப்பையிற் கூட்டித் தள்ளப்படுமோ அந்த நிலைக்குத்தான் அவர்கள் செல்லவேண்டி வரும் ” என்று எதிர்க் கட்சி முதல்வர் திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் மூலம் தனது கருத்தைச் சொல்லும் நிலை வள்ளுவனுக்கு ஏற்பட்டது.
ஒருமுறை வள்ளுவனது இன்னுெரு பாணத்தைப் பண்டிதர் கா.பொ. இரத்தினம் அவர்கள் பாராளு மன்றத்தில் பிரயோகித்தார்.
*அல்லற்பட்டு ஆற்ருது அழுதகண் ணிரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை”

பாராளுமன்றத்தில். பாரதி 05
என்பதே அப் பாணம், ஒரு விவாதத்தில் இவ்வித கருத்துக்கள் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இவ்விடத்தில் சிந்திக்கற்பாலது.
1980ஆம் ஆண்டு குழுநிலையில் வரவு செலவுத் திட்டம் விவாதிக்கப்பட்டபோது சபையில் கம்பனது கவித் தாக்கத்தை உணர முடிந்தது. கவியிற் சிறந்தவனல்லவா கம்பன். அவன் அன்று பதித்த முத்திரையின் சிறப்பை இங்கே அவதானிப்போம்.
கம்பன்
குறிப்பிட்ட திங்களில் எதிர்க் கட்சி முதல்வர் திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் உரை நிகழ்த்து கையில் “கெளரவ பிரதித் தலைவரவர்களே, கம்ப ராமாயணத்தில் படித்த ஒரு கவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது. இராம பாணத்தினுல் நிராயுத பாணியாக்கப்பட்ட இராவணனை “இன்றுபோய் நாளை வா’ என்று இராமன் அனுப்பிவிட, இராவணன் இலங்கைக்குத் திரும்பிய கோலத்தைக் கம்பர் அழகாக வருணித்த கவி எனக்கு இப்பொழுது நினைவுக்கு வருகிறது.
வாரணம் பொருத மார்பும்
வரையினை எடுத்த தோளும்
காரத முனிவற் கேற்ப
கயம்பட உரைத்த காவும்
தாரணி மெளலி பத்தும்
சங்கரன் கோடுத்த வாளும்
வீரமுங் களத்தே போட்டு
வேறுங்கையோ டிலங்கை புக்கான்.
1. கம்பராமாயணம், கும்பகர்னன் வதைப்படிகம், பா. 1.

Page 65
106 எனது நோக்கில். பாராளுமன்றம்
இராவணன் தனது வீரத்தையும், நயம்பட உரைத்த நாவையும் களத்தே போட்டுவிட்டு அனைத்தையும் இழந்து வெறுங்கையோடு இலங்கை புக்கான் என்று கம்பர் அழகாகக் கூறிய அந்தக் கவிதையைத்தான் நான் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. என்னுடைய நண்பர் இங்கே அமைச்சராக வீற்றிருக்கிருர், பக்கத்தில் இருக்கவேண்டிய பிரதி அமைச்சர் கூட இல்லை. சகாக்களான அமைச்சர்கள் ஒருவரும் அமைச் சருக்குப் பக்க பலமாக நிற்க இங்கு இல்லை. பின் வரிசையைப் பார்த்தால் ஒருவேளை இராவண னுக்குப் பக்க பலமாக நின்ற கும்பகர்ணன் போல மாவட்ட அமைச்சர் ஒருவர் மாத்திரமே இங்கே வீற்றிருக்கின்றர். வேறு யாருமற்ற நிலையில் அவர் நிற்பதைப் பார்த்தபொழுது என் உள்ளத்தில் எழுந்த வேதனையாற்ருன் இதைக் கூறினேன்” என்று கம்பராமாயணத்தில் ஒரு காட்சியைக் கொண்டுவந்து முன்னிறுத்தினுர்,
எதிர்க் கட்சி முதல்வரது உரையில் அவர் கம்பனின் கவிச் சிறப்பை எடுத்துக் காட்டும் அதே வேளையில் அன்றைய தினம் சபை இருந்த நிலையையும் இலக்கிய இரசனையுடன் படம் பிடித்துக் காட்டுகின்றர். இந்த இடத்திற் பாராளுமன்ற விவாதத்தில் அரசியலை விட கம்பனது கவிச் சிறப்பும் திரு. அமிர்தலிங்கம் அவர்களின் உரைச் சிறப்புமே மேலோங்கி நின்றனவென்பதே எனது கருத்தாகும்.

பாராளுமன்றத்தில்.பாரதி 107
urg
பாராளுமன்ற விவாதங்களில் கம்பனதும் வள்ளுவனதும் இலக்கியத் தாக்கம் போல் புரட்சிக் கவி பாரதியின் கவிதா விலாசத்தையும் ஆங்காங்கே காணலாம். 1981ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டக் கைத்தொழில், விஞ்ஞான அலுவல்கள் அமைச்சின் மானிய விவாதத்திலே பரந்தன் இரசா யனத் தொழிற்சாலை மூடப்படுமா என்ற ஐயப் பாட்டுடன் பேசிய வட்டுக்கோட்டைத் தொகுதி உறுப்பினர் திரு. தா. திருநாவுக்கரசு அவர்கள், *நான் இந்த இடத்தில் பாரதி சொன்ன ஒரு கூற்றைச் சொல்ல விரும்புகிறேன்.
"தண்ணிர்விட் டோவளர்த்தோம்! சர்வேசா ! இப்பயிரைக் கண்ணிராற் காத்தோம் ;
கருகத் திருவுளமோ ’ என்று பாரதி சுதந்திரப் பயிர் பற்றி வருத் தப்பட்டான். நான் ஐந்நூறு தொழிலாளர் சார்பாக மாண்புமிகு அமைச்சரவர்களைப் பார்த்துப் பேசு கின்றேன். தண்ணீர் விட்டோ வளர்த்தோம்'; மாண்புமிகு அமைச்சரே, இப் பயிரைக் கண்ணி ரால் காத்தோம் ; கருகத் திருவுளமோ? எனக் கேட்கிறேன்” என்று முழங்கினுர். இங்கே பாரதி யின் கவிதை விவாதத்திற்கு ஒரு உந்து சக்தியைக் கொடுத்ததென்றே மதிப்பிடலாம். −
இன்னுெரு வேளையில் பாரதியின் 88 க்ாணி நிலம். வேண்டும்” என்ற பாடலை கோப்பாய்த்

Page 66
108 எனது நோக்கில். பாராளுமன்றம்
தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. எம். ஆலாலசுந்தரம் அவர்கள் தொட்டுப் பேசியபோது பாரதி எனது நெஞ்சையும் தொட்டுச் சென்ருன். முன்னுெரு நாள்,
* கெஞ்சில் உரமுமின்றி
கேர்மைத் திரமுமின்றி வஞ்சனை சொல்வாரடி-கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி!” என்று பாரதி பாடிய கவிதையை மட்டக்களப்பு முதல்வர் திரு. செ. இராசதுரை அவர்கள் பாராளு மன்றத்தில் பாரதி பாங்கிலேயே பாடியதை இந்தப் பாரதி நூற்றண்டில் மீண்டும் நினைத்துப் பார்க்க முடிகிறது.
பழந்தமிழ் இலக்கியங்களை மேற்கோள் காட்டிப் பேசுவதில் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்க ளுக்கு நிகர் அவரேதான்.
“நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஒம்புமின் ” .
என்று ஒருசமயம் அவர் புறநானூற்றுச் செய்யுளைச் சபையில் செப்பியதும், இன்னுெரு சமயம் *** ஈழத் துணவும் காழகத் தாக்கமும் " என்ற சங்க கால
1. புறநானூறு, நரிவெரூஉத்தலையார் -பொருண்மொழிக்
காஞ்சி, செய்யுள் 195, அடி 6, 7.
0SS TTTTTTTaLtLTSTS 000S SLLLLTTTTTAASLLLLL LL LLLLLtttLLLLLLS

பாராளுமன்றத்தில். பாரதி 109
இலக்கியமான பட்டினப்பாலையின் கூற்றை எடுத்து விளக்கியதும் இங்கு எனது ஞாபகத்துக்கு வரு கின்றன.
மணிவாசகப் பெருமானின்
* * தந்ததுன் தன்னைக்
கொண்டதென் தன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர்’
என்ற திருவாசகத்தைத் திரு. அமிர்தலிங்கம் அவர்கள் சபையில் எடுத்துரைத்த கட்டமொன்றும் இலக்கியச் சுவை மிகுந்த ஒன்ருக அமைந்தது.
பாராளுமன்றத்தில் பண்டிதர் கா. பொ. இரத்தினம் போன்ருேர் தமிழில் பேசுகையில் தமிழ் மொழி வல்லுநர் பரம்பரையில் வந்தவரான சபா நாயகர் அல்ஹாஜ் எம். அப்துல் பாகீர் மாகார் அவர்களின் தமிழ்ப் பிரயோகங்களும் இடையீடு களும் தமிழுக்குச் சுவையையும் நயத்தையும் கொடுப்பனவாக அமைந்தன. இவ்விதமாகப் பாராளுமன்ற விவாதங்களிற் தமிழ் நயத்தைப் பலவாறு ஆராய்ந்துகொண்டே போகலாம்.
வீரகேசரி - ஏப்பிறல் 1983
1. திருவாசகம், கோயில் திருப்பதிகம். பாடல் 10.

Page 67
16 விவாதங்களில் அறம், பொருள், இன்பம்
* திருக்குறள் பலர்க்குப் பலவகையாய்ப் பயன் படும் சிறப்பு வாய்ந்த தனி நூலாகும். இலக்கிய ஆராய்ச்சியாளர் அதைச் சிறந்த இலக்கியமாகக் கற்றுக் கலைநயம் காணலாம். அறவோர் சமய நூல் எனப் போற்றி ஒழுக்க முறைகளைக் காண லாம். அரசியலார் அரசியல் நூலென மதித்துப் பல நுணுக்கங்களைக் காணலாம். இவ்வாறே ஒவ்வொரு சாராரும் தத்தம் துறைக்கு ஏற்ற கருத்துக்களைக் காணலாம். திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன் வாழ்ந்தவர். அவர் இன்றுள்ள வாழ்க் கையை எவ்வாறு விளக்க முடியும் என்று வினவ லாம். காலம் மாறினும் உண்மைகள் மாறுவதில்லை. காலத்தின் மாறுதல்கள் உடையின் மாறுதல்களைப் போன்றவை, அடிப்படை உண்மைகள் உயிர் போன் றவை. திருவள்ளுவர், வாழ்க்கையின் அடிப்படை யாகவும் பொதுவாகவும் உள்ள உண்மைகளைக் கண்டு எழுதியுள்ளமையால் பல்வேறு காலத்தவரும் அவற் றைப் போற்ற முடிகின்றது. அவ்வாறு போற்றும் போது தம் காலத்திற்கு ஏற்றவாறு அவற்றை உணர் கின்றனர்? என்று திருக்குறள் பற்றி டாக்டர் மு. வரதராசன் அவர்கள் கூறுவதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.

விவாதங்களில் அறம், பொருள், இன்பம் 111
அரசியல் அரங்கமான பாராளுமன்றத்தில் திருக் குறள் சமயாசமயத்துக்கு ஏற்றவாறு அவ்வப் போது உபயோகிக்கப்படுவதை நான் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகக் கண்டும் கேட்டும் உணர்ந்தும் இன்பம் அடைந்ததுண்டு.
விவாதத்திற்கு வலு
* திரண்டு வரும் புது உலகமும் இனித் திரளப் போகும் பல வகை உலகங்களும் ஏற்கத் தக்க பொருள்கள் மிடைந்து கிடக்கின்றன திருக்குறளில்’ என்று தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாணசுந்தர முதலியார் கூறிய கருத்துக்கள் பாராளுமன்றத் திலே திருக்குறள் எடுத்துக் கையாளப்படும் பொழு தெல்லாம் எனது சிந்தனைக்கு வருவதுண்டு.
1983ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட இரண் டாம் மதிப்பு விவாதத்தில் மட்டக்களப்பு மாவட்ட அமைச்சர் திருமதி ரங்கநாயகி பத்மநாதன் பேசுகையில்,
* குணம்ாகாடிக் குற்றமும் காடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் ? எனப் பொருட்பாலில் ** தெரிந்து தெளிதல் ?? என்னும் அதிகாரத்திலுள்ள திருக்குறளைக் கையாண் டார். வரவு செலவுத் திட்டத்திலுள்ள குணங்களை யும் குற்றங்களையும் நாடும்பொழுது அவற்றுள் நல்லவைகளே மேலோங்கி நிற்பதால் வரவு செலவுத் திட்டத்தை நல்லதொன்றென ஏற் று க் கொள்ள முடியும் என்ற தமது வாதத்திற்கு ஆதாரமாகவே

Page 68
112 எனது நோக்கில். பாராளுமன்றம்
திருமதி ரங்கநாயகி திருக்குறளைக் கையாண்டு விவாதத்துக்கு ஒரு வலுவைத் தேடிக்கொண்டார்.
அறமும் பொருளும்
ஒருமுறை அவசரகால சட்ட நீடிப்புத் தொடர் பாகக் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீது பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் பேசுகையில், முத லாவதாக அறத்துப்பாலில் இருந்து ஒரு குறளைத் தொட்டுக் காட்டியும் பொருட்பாலில் இருந்து மூன்று குறள்களை எடுத்தியம்பியும் தமது பேச்சை நிகழ்த் திஞர். அவர் கூறிய அறத்தையும் பொருளையும் பார்ப்போம்.
* நான் மூன்று திருக்குறள்களை மட்டும் உங் களுக்கு இன்று இங்கே சொல்லிவைக்க விரும்பு கிறேன். சென்ற அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த திரு. பீலிக்ஸ் ஆர். டயஸ் பண்டாரநாயக்க அவர்களுக்கு ஒரு முடங்கல் விடுத்திருந்தேன். அதில்,
* மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின் அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு’ என்று சொன்னேன். இன்றைக்கு அவர் எங்கே இருக் கிருர்? இந்தப் பயனை நீங்களும் அநுபவிக்கப் படாது என்பதற்காகத்தான் நான் இவற்றை உங்க ளுக்கு இறுதியாகச் சொல்லுகிறேன்,
* அல்லற்பட் டாற்றது அழுதகண் ணிரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை ’ என்று திருவள்ளுவர் கூறுகின்றர். மக்கள் துன்பம் தாங்க முடியாமல் "ஐயோ’ என்று அலறி வடிக்கின்ற

விவாதங்களில் அறம், பொருள், இன்பம் 11
அந்தக் கண்ணிர் அரசாங்கங்களின் செல்வ மெல்லாவற்றையும் அழித்துவிடும். இஃது இன்று நான் கூறும் முதலாவது திருக்குறள். இரண்டாவது திருக்குறள்,
* நுனிக்கோம்பர் ஏறினர் அஃதிறக் தூக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும் ??
என்பது. அதாவது அளவுக்கு மிஞ்சி அநியாயங் களையோ கேடுகளையோ செய்தால் அது கடைசியாக அழிவையே தேடும் என்பது. அடுத்த திருக்குறள்,
* உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போ டுடனுறைந் தற்று."
அதாவது “ஒற்றுமையாக வாழ முடியாதவர்கள்
உடன்பட்டு வாழ முடியாதவர்கள் - ஒரு வீட்டில் பாம்போடு வாழ்வதைப் போலத்தான் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்” என்று வள்ளுவர் கூறு கின்றர். இங்கே, தான் சொல்லவேண்டியதை மிகவும் ஆணித்தரமாகச் சொல்வதற்கு வள்ளுவரை முன் நிறுத்திய பண்டிதரின் பாங்கினைப் பார்க்கிருேம்.
அகில இலங்கைத் தமிழ்மறைக் கழகத்தின் ஆயுட்காலத் தலைவரான பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் இலங்கையில் இதுவரை இருபதுக்கு மேற்பட்ட திருக்குறள் மகாநாடுகளை நடத்திய பெருமைக்குரியவர் மட்டுமல்ல, அவர் திருக்குறளைத் தமது உயிரினும் மேலாக மதித்துப் போற்றுபவர்.
8

Page 69
114 எனது நோக்கில். பாராளுமன்றம்
அவர் பாராளுமன்றத்திற் சிறந்த கணைகளைத் தொடுக்கவேண்டுமென்ருல் நாகாஸ்திர,பிரமாஸ்திர, பாசுபதாஸ்திர அந்தஸ்தில்தான் திருக்குறள்களை உபயோகிப்பார். தலைவர் திரு. அ. அமிர்தலிங்கம், திரு. தா. சிவசிதம்பரம் போன்றேரது திருக்குறள் மேற்கோள்களையும் விவாதங்களில் நான் அவதானித் திருக்கின்றேன். ஹன்சார்ட் என்னும் கடலில் சுழி யோடுபவர்கள் அவ்வப்போது திருக்குறள் முத்துக் களைக் கைப்பற்றவே செய்வார்கள்.
ஊடுருவல்
திருக்குறளில் அதிக ஈடுபாடுள்ளவரான மன்னுர்த் தொகுதி உறுப்பினர் திரு. பீ. எஸ். சூசைதாசன் அவர்கள் பாராளுமன்றத்தில் ஒருநாள் நீர்ப்பாசன அமைச்சுச் சம்பந்தப்பட்ட விவாதத்திலே கலந்து கொண்டு பேசுகையில் * மிக அருமையாக மழை யாகக் கிடைக்கும் நீர் நமது நாட்டிலே எல்லாப் பாகங்களிலும் ஒரே அளவாகக் கிடைப்பதில்லை. மன்னுர்ப் பகுதியிலே மிக மிகக் குறைவாகவே மழை பெய்கின்றது. எனவே, மழை பெய்யும்போது வருண பகவான் கருணையாற் கிடைக்கும் நீரைத் தேக்கி வைக்கக்கூடிய எத்தனையோ குளங்கள் அங்கே இருந்தும் அவையெல்லாம் இன்று பாழடைந்து கிடக்கின்றன. அங்கேயுள்ள குளங்களைத் திருத்து வதன் மூலம் இந்த நாட்டின் விவசாயத்தைப் பெருக்கி உணவுக் கஷ்டத்தைப் போக்கக்கூடிய தாக இருக்கும்.
* விசும்பின் துளிவிழின் அல்லால்மற் றங்கே
பசும்புல் தலைகாண் பரிது.”

விவாதங்களில் அறம், பொருள், இன்பம் 115
என்று கூறுகின்றர் வள்ளுவர். மழை பெய்யா திருக்கும்போது அங்கே புல்லுக்கூட வளர வழி யில்லாமல் போய்விடுகிறது. ஆகவே கிடைக்கக் கூடிய நீரை எமது பகுதிகளில் உள்ள குளங்களில் தேக்கி வைப்பதும் அதற்கு நடவடிக்கை எடுப்பதும் அவசியமாகும்” என்று எடுத்துரைத்தார். இங்கே அறத்துப்பாலிலிருந்து ஒரு குறளமுதத்தை எடுத்து மழை நீரைச் சேமிக்க வேண்டியதன் தத்துவத் தைச் சிறப்பாக விளக்கிவிட்டார் திரு. சூசைதாசன் அவர்கள் என்றே கொள்ளலாம். இவ்விதம் திருக் குறளின் முன்னேற்றக் கருத்துக்களின் ஊடுருவல் பாராளுமன்ற விவாதங்களில் ஏராளம் ஏராளம்
இன்பம்
திருக்குறளில் அறத்துப் பாலுக்கும் பொருட் பாலுக்கும் சில உதாரணங்களைப் பாராளுமன்ற விவாதங்களில் பார்த்த நாம் இனிக் காமத்துப் பாலுக்கு வருவோம். திருக்குறளில் அறத்தையும் பொருளையும் காட்டியவர்கள் இன்பத்தையும் காட்டு வதுதானே சிறப்பு. இதற்கு ஓர் உதாரணத்தை திரு. வி. தர்மலிங்கம் அவர்களுடைய உரையில் என்னுல் பார்க்க முடிந்தது.
*கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
ULTs (põuG6) o”
என்ற திருக்குறட் கருத்தைத் திரு. தர்மலிங்கம் அவர்கள் பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்

Page 70
116 எனது நோக்கில். பாராளுமன்றம்
காலத்தின்போது ஒரு நாள் சந்தர்ப்பத்திற்கேற்ற வாறு சற்றுச் சுவாரசியமாகக் கையாண்டார்.
பூரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியில் கைத் தொழில் துறைகளில் நாடு தன்னிறைவு பெற்ற பொருள்களுள் மார்புக்கச்சும் ஒன்றென்று வரவு செலவுத் திட்டம் விளம்பியது. திரு. தர்மலிங்கம் அவர்களுக்கு மிகவும் நகைச்சுவைக்குரிய ஒரு விடய மாகப் பட்டதன் காரணமாகவோ, என்னவோ அவர், 'மதங்கொண்ட யானையிலும் பார்க்கக் கச்சு அணியாத கொங்கைகளைக் கொண்ட மாதர் உலகத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள். உண்மையில் பூரீலங்கா சுதந்திரக்கட்சியின் கூட் -ரசாங்கம் இந்த நாட்டிற்குத் தேவையான மார்புக் கச்சுகளை உற்பத்தி செய்து இந்த ஆபத்தி விருந்து மக்களைக் காப்பாற்றி இருக்கின்றது” ான்று கூறியதை இரசிக்கக்கூடியதாக இருந்தது.
வீரகேசரி - சனவரி 1984

17
பல் சுவை
மெழுகுதிரி வேளிச்சத்தில்
உலகத்தின் ஒரு மூலையில் எங்கோ ஒரு சிறு அழகிய தீவு. அத் தீவிற்கோ இரத்தினத் துவீபம் எனவும் மரகதமணித் தீவெனவும் பல சிறப்புப் பெயர்கள். அத் தீவிற்கென ஒரு பாராளுமன்றம். அப் பாராளுமன்றத்தின் கூட்டம் ஒரு நாள் நடை பெற்றுக்கொண்டிருக்கையில், சபா மண்டப மின் விளக்குகள் மின்ன மறுத்தன. எனினும் சபைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது; இருட்டிலல்ல, வெளிச்சத்தில்தான்; அதுவும் மெழுகுதிரி வெளிச் சத்தில்.
இவ்வதிசய சபைக் கூட்டம் எந்தத் தீவுப் பாராளுமன்றத்தில் நடைபெற்றதாக நினைக் கிறீர்கள்? வேறெங்குமன்று, எமது இலங்கைத் தீவில்தான் என்று நான் கூறும்பொழுது பலரும் ஆச்சரியப்படலாம். 1964ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் தேதி வியாழக்கிழமை பாராளு மன்றக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தவேளை, துரதிஷ்டவசமாக அன்று மின்சார விநியோகத் தில் தடை ஏற்பட்டது. சபா மண்டபத்திலோ ஒரே இருள் மயம். இச் சந்தர்ப்பத்தில் மெழுகுதிரி வெளிச் சத்தின் உதவிகொண்டு சபையின் அலுவல்கள்

Page 71
118 எனது நோக்கில். பாராளுமன்றம்
தங்கு தடை எதுவுமின்றி நடைபெற்றன. சபாமண்டப குளிரூட்டி, மின்தடை காரணமாக இயங்காததால், சபாமண்டபத்தின் முன் வாசற் கதவுகள் காற்றேட்டத்தின் பொருட்டு அகலத் திறந்து விடப்பட்டன. அந்திவேளையில் கதிரவனின் பொன்னிறக் கதிர்கள் சபாமண்டபத்திற் பட்டுத் தெறிக்க, பொங்கும் இந்து மகா சமுத்திரத்தை நோக்கியபடி மாண்புமிகு சபாநாயகர் அவர்கள் சபை அலுவல்களை நடத்தினுர். அன்று சபையில் குளிர்ந்த கடற்காற்றுச் சில்லென வீசி, சூடான விவாதங்களில் ஈடுபட்டிருந்த எல்லோரையும் ஆசு வாசப்படுத்தியது.
மரதன் கூட்டம்
ஒரே மூச்சில், தொடர்ந்து இரவு பகல் என்று பாராது சுமார் முப்பத்தைந்து மணி நேரம் சபை அலுவல்களை நடத்திய பெருமை சுதந்திர இலங் கையின் ஐந்தாவது பாராளுமன்றத்திற்கு உரிய தாகும். 1962ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை பத்துமணிக்கு ஆரம்பமான சபைக்கூட்டம் அன்றைய தினம் பகல் முழுவதும் நடைபெற்றுப் பின்னர் இரவுமுழுவதும் தொடர்ந்து நடந்து மறுதினமும் பகற் பொழுதைத் தாண்டி இரவுவரை சென்று எட்டுமணி நாற்பத் தாறு நிமிடத்தில்தான் முடிவடைந்தது. இலங்கைப் பாராளுமன்ற சரித்திரத்தில் அதிக நீண்டநேரம் நடைபெற்ற கூட்டங்களில் இதையும் ஒன்ருகக் கருதலாம்.

llu Gü) gr 600 6)) 119
பாரதி விழா
எந்த வருடத்திலும் செத்தெம்பர் மாதம் பதி னுேராம் தேதி பாரதி தினமல்லவா? 1963ஆம் வருடம் செத்தெம்பர் மாதம் பதினுேராம் தேதி யன்று இலங்கைப் பாராளுமன்றம் பாரதிக்கு விழா எடுத்திருக்கின்றதென்ருல் பலரும் மூக்கின் மேல் விரலை வைத்து ஆச்சரியப்படக்கூடும். அன்றைய தினம் சபையிற் பேசிய மட்டக்களப்புத் தொகுதி உறுப்பினரான திரு. செ. இராசதுரை அவர்கள் சபைக்குப் பாரதி தினத்தை நினைவூட்டிப் பாரதியின் பாடல்கள் பலவற்றை உற்சாகமாகத் தமக்கே உரிய பாணியில் மிடுக்குடன் பாடத் தொடங்கி விட்டார். அன்று திரு. இராசதுரை அவர்கள் பாடிய போது உண்மையில் பாராளுமன்றமே பாரதிக்கு விழா எடுக்கின்றதோ என்ற பிரமிப்பே பலருக்கும் ஏற்பட்டது.
தகாநாயக்க கோரிய அநுமதி
ஐந்தாவது பாராளுமன்றக் காலத்திய அதி சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றல், முன்னை நாள் பிரதமரான டாக்டர் டபிள்யூ. தகநாயக்க அவர்கள் நாட்டில் நிலவிய துணித் தட்டுப்பாட்டின் பிரதிபலிப்பாக, 1963ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கோவணுண்டியாகச் சபையிற் பிரவேசிப்பதற்குச் சபாநாயகரிடம் அநுமதி கோரியதுதான். ஆனல், சபாநாயகர் அநுமதி அளிக்க மறுத்துவிட்டார்.
தினகரன் மதிசெம்பர் 1964

Page 72
120 எனது நோக்கில். பாராளுமன்றம்
முன்வரிசை முக்கியத்துவம்
பாராளுமன்றத்தில் அரசாங்கத் தரப்பு முன் வரிசை ஆசனங்கள் எப்பொழுதும் அமைச்சர் களுக்கே உரியவை. ஆணுல், அமைச்சர்கள் அல்லாத அங்கத்தவர்களும் இந்த முன் வரிசை ஆசனங்களை அலங்கரித்த சிறப்பைச் சுதந்திர இலங்கையின் ஆருவது பாராளுமன்ற காலத்திற் பார்க்கக்கூடிய தாக இருந்தது. 1965ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலை அடுத்துத் தேசிய அரசாங்கம் அமைக்கப் பட்டபொழுது தேசிய அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களில் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் கியூ. ஸி., திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் கியூ. ஸி. ஆகிய இரு தமிழ்த் தலைவர்களுக்கும் அமைச்சர்க ளுடன் முன் வரிசை முக்கியத்துவம் அளிக்கப் பட்டது. தேசிய அரசாங்கத்தின் முக்கிய கதா நாயகர்களாக அவர்களும் விளங்கியதே இதற்குப் பிரதான காரணம். அமைச்சர்கள் நடுவே இருக்க இந்த இரு தமிழ்க் கியூஸிக்களும் இரு அந்தங் களிலும் அமர்ந்திருந்த காட்சியைச் சில ஆண்டுகள் நான் அநுபவித்ததுண்டு. அன்று இந்த இரு தமிழ்த் தலைவர்களுக்கும் பாராளுமன்றத்தில் அளிக்கப் பட்ட இடம் அவர்களது முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது.
ஆசாரி செய்த பேருதவி
திரு. ஆர். பிரேமதாச அவர்கள் உள்ளூராட்சி அமைச்சராகப் பதவியேற்றபொழுது அரச பக்க

பல் சுவை 21
முன் வரிசையில் வெற்றிடம் எதுவும் இருக்கவில்லை. அமைச்சர் ஒருவர் பின் வரிசை ஆசனத்தில் உட்காருவது முறையல்ல என்று கருதப்பட்ட காலம் அது. இந்தப் பிரச்சினை பாராளுமன்ற மரத் தொழில் ஆசாரியின் உதவி கொண்டு அன்று தீர்த்து வைக்கப்பட்டது. பலர் உட்காரக்கூடிய நீளமான ஒரே ஆசன அமைப்பே அன்றைய சபா மண்ட பத்தின் இருக்கைமுறையாகும். அரசாங்கத் தரப்பு வலதுபக்க முன் ஆசனங்களில் ஒவ்வொருவரது இருக்கைக்கும் இடைநடுவில் கைகளைச் செளகரிய மாக வைத்துக்கொள்ளத்தக்க முறையிற் பொருத்தப் பட்டிருந்த தடை மெத்தைகள் அத்தனையையும் ஆசாரி அகற்றிவிட்டார். பாடசாலை மாணவர்கள் நீளமான வாங்குகளில் நெருக்கமாக உட்காருவது போன்று அன்று அமைச்சர்கள் அமர்ந்திருந்து தமது கடமைகளை நிறைவேற்றினர்கள்.
இதே பாராளுமன்ற காலத்தில் ஒரு சமயம் திரு. எஸ். டி. பண்டாரநாயக்க அவர்கள் சபை யைத் * திருடர் குகை” என வருணித்ததன் காரண மாக அவருக்குச் சபைக் கூட்டங்களில் பங்கு பற்ற ஒருவாரகாலத் தடையுத்தரவு விதிக்கப்பட்டது.
1968ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரும் தேதி சபைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் பூனை ஒன்று சபைக்குள் திடீரெனப் பிரவேசித்து விட்டது. அப்பொழுது “ சபையில் ஓர் அபூர்வப் பேர்வழி” என்று எதிர்க் கட்சித் தலைவி திருமதி சிறிமாவோ ஆர். டி. பண்டாரநாயக்க அவர்கள்

Page 73
122 எனது நோக்கில். பாராளுமன்றம்
சபாநாயகரது கவனத்தை ஈர்க்க முனைந்தார். அப்பொழுது டாக்டர் கொல்வின் ஆர். டி. சில்வா அவர்கள் ‘மற்றப் பகுதியினரின் பண்பற்ற பேச்சுக் களால் ஒரு பூனை கவரப்பட்டு விட்டது” என்று அவ்வமயம் கிண்டலாக அரசாங்க தரப்பினரைப் பார்த்துக் குறிப்பிட்டார்.
வேடர்கள் வந்தனர்
சனநாயகம் என்பது மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்கள் ஆட்சி என்று அமெரிக்க சனதிபதியாக விளங்கிய ஆபிரஹாம் லிங்கன் கூறிஞர். இலங்கையும் ஒரு சனநாயக நாடே. சன நாயக ஆட்சியில் வேடர்களாக இருந்தாலும் அவர் களுக்கும் பங்குண்டல்லவா? வேடர்கள் பலர் காலத் துக்குக் காலம் வந்து பாராளுமன்ற நிலைமைகளை அவதானித்ததை நான் பார்த்திருக்கின்றேன். ஒரு சமயம் வேடர்கள் சிலர் பாராளுமன்றத்திற்கு வந் திருந்தார்கள். நீண்ட சடைமுடி, தாடி மீசையுடன் காட்சியளித்த இவர்கள் அரையில் ஒரு சிறு துண்டைமட்டுமே உடுத்தியிருந்தார்கள். தோள்களில் கைக் கோடரிகளை வைத்திருந்தார்கள். சபைக் கூட் டத்தைப் பார்ப்பதற்கு இவர்களுக்கு அநுமதி கிடைக்கவில்லை. காரணமி சபையின் பாதுகாப்புக் கருதி பார்வையாளர்கள் எவரும் எவ்விதமான பொருள்களையும் தாங்கள் இருக்கும் ஆசனங்களுக்குத் தம்முடன் எடுத்துச்செல்ல அநுமதிக்கப்படுவ (bຂຶ້ນ. ஆனல் வேடர்களோ தமது பாரம்பரியத் துக்கு மாருகக் கோடரிகளைத் தோள்களிலிருந்து அகற்றிவிட்டுச் சபைக்குள் செல்லச் சம்மதிக்க

பல் சுவை 23
வில்லை. வேடர்களாக இருந்தாலும் அவர்களும் கொள்கைக் குன்றுகள் என்பதை அன்று நான் உணர்ந்துகொண்டேன்.
தம்பதெனியாத் தொகுதி உறுப்பினராக விளங்கிய திரு. ஆர். ஜி. சேனநாயக்க அவர்கள் சபைக் கூட்டங்களுக்கு வரும்பொழுது ஒரு கைப் பொல்லுடன், அதாவது ஒர் ஊன்றுகோலுடன் வருவார். சில சமயங்களில் ஆர். ஜி. அவர்கள் சபையில் இருக்காதுவிட்டாலும் அவரது ஊன்று கோல் சபையில் அவரது இருக்கையில் இருக்கும். சபையில் ஆர். ஜி. அவர்களுடைய பிரம்பு இருந் தால் அவரும் சமீபத்தில்தான் எங்கேயோ இருக் கின்றர் என்பது அர்த்தம்.
இதே காலத்தில் உடுவில் தொகுதி உறுப்பின ராக விளங்கிய திரு. வி. தர்மலிங்கம் அவர்களும், கோப்பாய்த் தொகுதி உறுப்பினராகவிருந்த திரு. எஸ். கதிரவேலுப்பிள்ளை அவர்களும் தமிழரசுக் கட்சிச் சின்னத்துடன் கூடிய சால்வைகளை அணிந்த வண்ணம் சபைக்கு வருவதை நான் அவதானித்திருக் கிறேன். முன்னையவர் புதுமண மாப்பிள்ளைபோலப் பட்டு வேட்டி சால்வையுடன் ஒரே பட்டு மயமாக அடிக்கடி காட்சியளிப்பார்.
யாழ்ப்பாணக் கல்லி,
ஒரு சமயம் அநுராதபுரத் தொகுதிப் பிரதி நிதியாக விளங்கிய திரு. கே.பி. ரத்ணுயக்க அவர்கள் கணக்கு விபரங்களுடன் பேச்சு நிகழ்த்துகையில்

Page 74
124 எனது நோக்கில். பாராளுமன்றம்
அன்றைய தேசியமய சேவைகள் பிரதி அமைச்சர் திரு.டி.பி.வெலகெதர அவர்கள் குறுக்கிட்டு அவரது புள்ளிவிபரங்கள் தவருனவை யென்று எடுத்து இயம்பினுர், சிறிதுநேரத்திற்கெல்லாம் திரு. வெலகெதர அவர்கள் திரு. ரத்ளுயக்க அவர்களின் கூற்றுக்களைச் சரியென்று ஒப்புக்கொள்ளவே"எனது கணக்கு ஒருபோதும் தவருக முடியாது; ஏனெ னில் நான் யாழ்ப்பாணத்தில் கல்வி கற்றவன்? என்று திரு. ரத்ணுயக்க பெருமையுடன் கூறிச் சபையில் ஒரு கலகலப்பை ஏற்படுத்தினுர்.
மகாவலி அபிவிருத்திச் சபை விவாதத்தில் சாவகச்சேரித் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வி. என். நவரத்தினம் அவர்கள் ஒரு சமயம் பேசிக்கொண்டிருக்கையில் இராசாங்கஅமைச்சராகப் பதவி வகித்த மாண்புமிகு ஜே. ஆர். ஜயவர்த்தன அவர்கள் இடைமறித்து “உங்களுக்குத் தண் ணிர் வேண்டாமா? என்று தமிழில் வினவ அதற்குத் திரு. நவரத்தினம் அவர்கள் தமிழிலேயே“எங்களுக்கு மகாவலி போத்தலில் அடைத்தல்ல, வாய்க்காலில் வரவேண்டும்” என்று பதிலளித்தார். அந்தப் பதிலை நன்கு புரிந்து கொண்டதற்கு அடையாளமாக இராசாங்க அமைச்சர் தலையை அசைத்துப் புன்முறுவல் பூத்தார்.
உள்ளூர்க் கிராமங்களில் வெவ்வேறு அரசியற் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நீண்ட நாள் பகைவர் களைப் போலத் திரிவதை நான் பார்த்திருக்கின் றேன்.திரு.ஆர்.ஜி.சேனநாயக்க அவர்களும் அவரது

பல் சுவை 芷25
AAAAA A SASAS LALALASS q HSS000SSS T KAS SSA S S
கொள்கைகளுக்கு நேர் எதிரிடையான தமிழ்ப் பிரதி நிதிகளும் சபைக் கூடத்தில் (lobby) ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து அகமும் முகமும் மலரச் சுகநயம் விசாரித்த காட்சிகள் பலவற்றை நான் அவதானித்திருக்கின்றேன்.
தினகரன் - மார்ச் 1970
பாராளுமன்ற சம்பிரதாயங்களிற் பல வரலாற் றின் அடிப்படையில் மரபு வழியாகப் பின்பற்றப் படுபவை. இப்படியாகத்தான் இவை பின்பற்றப்படல் வேண்டும் என்ற முறையில் சில பாராளுமன்ற நடைமுறைகள் இருந்தாலும் அவற்றிலும் காலத் திற்குக் காலம் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. சரியாகவோ தவருகவோ பாராளுமன்றம் ஒரு நடைமுறையைக் கைக்கொண்டுவிட்டால் அதுவே பின்னர் நாளடைவில் பாராளுமன்ற ởrtổt $ìg தாயமாகி விடுவதுண்டு. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்ற அறையிற் பேசுகையில் ஒரு கவிதையைச் சொல்லலாம். ஆனல் அதை அவர் இராக ஆலாபனையுடன் இசைக்க (pliquiusT தென்பது முன் சொல்லப்பட்டவாறு இலங்கைப் பாராளுமன்றத்திற் பின்பற்றப்பட்டு வந்துள்ள ஒரு நடைமுறை எனினும், மாறிவரும் காலத்திற்கேற்ப இந்தப் பாராளுமன்ற நடைமுறையில் ஒரு மாற் றத்தை ஏழாவது பாராளுமன்றம் ஏற்படுத்தியது.
1970ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி பாரளுமன்றத்தில் உரையாற்றிய நிக்கவரெட்டியாத்

Page 75
126 எனது நோக்கில். பாராளுமன்றம்
தொகுதி உறுப்பினர் திரு. முதியான்சே தென்னக் கோன் அவர்கள் கோட்டே பற்றிய ஒரு சிங்களக் கவிதையை இராகத்துடன் பாட விரும்பினர். அப்பொழுது கூட்டத்திற்குத் தலைமை வகித்த சபா நாயகர் மாண்புமிகு ஸ்ரான்லி திலகரத்ணு (கோட்டே) அவர்கள் அதற்கான அநுமதியை வழங்கி **இந்தச் சபையில் முன்பிருந்த சபாநாயகர் ஒருவர் சிங்களக் கவிதைகளை ஆங்கிலக் கவிதைகளைப் போலச் சொல்லவேண்டும் என்று கட்டளையிட்டிருக் கிருர். சிங்களக் கவிதைகளை ஆங்கிலக் கவிதைகள் போன்று சொல்வதன்மூலம் ஒருவர் சிங்களக் கவி தையின் இரசனையையோ அல்லது அதன்மரபையோ வெளிப்படுத்த முடியாது. நீங்கள் அதிகம் உரத்த தொனியிலன்றி இச் சபைக்குக் கேட்கக் கூடிய விதத்தில் பாட அநுமதி அளிக்கிறேன். நீங்கள் தற்போது கோட்டேயைப் பற்றிய ஒரு கவிதை யைப் பாட விரும்புகிறீர்கள்; அதை அழகாக இரா கத்தோடு பாடும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறிஞர்.
இவ்வாறு சபாநாயகர் அவர்கள் கூறியதுதான் தாமதம், பாராளுமன்ற உறுப்பினர்கள் உற்சாகமும் ஆரவாரமும் முகமலர்ச்சியும் கொண்டனர். இந்தச் சந்தர்ப்ப சூழ்நிலையில் திரு. முதியான்சே தென்னக் கோன் அவர்கள் தமக்கே உரிய பாணியில் இராக ஆலாபனையுடன் ஒரு சிங்களக் கவிதையை இசைத்துச் சபையைக் கலகலப்பில் ஆழ்த்தினர்.

பல் சுவை 127
எஸ். ஜே. வி.
இந்தப் பாராளுமன்ற காலத்தில் ஆரம்ப காலத்தி லிருந்து இறுதிக் காலம்வரை ஒழுங்காகச் சபைக்கு வந்து தவருது நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய உறுப் பினர்களுள் காங்கேசன்துறைத் தொகுதி உறுப் பினர் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகமும் ஒருவர். பகலோ, இரவோ, மழையோ, புயலோ எதுவானுலும் இவரைச் சபை ஆசனத்தில் காணக்கூடியதாக இருக்கும். தள்ளாத வயதில் இவர் சபைக்குள் பிரவேசிக்கையில் எல்லோரும் மிகுந்த அக்கறை யோடு கவனித்துக்கொள்வதுண்டு. எங்கே பெரியவர் விழுந்து விடுவாரோ என்ற பயம்தான் அதற்குக் காரணம். விண்வெளி வீரரொருவர் விண்வெளியில் நீந்துவதைப் போன்ற பாணியில் அவர் வெற்றி கரமாகத் தமது ஆசனத்திற்குச் சென்றமர்ந்து நிகழ்ச்சிகளைக் கவனிப்பார்.
மக்களின் பிரதிநிதியாகத் தாம் பாராளுமன்றம் வந்ததற்குரிய கடமையைக் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடனும் தமது மனச்சாட்சியின்படியும் நிறைவேற்றினுர் என்றே கூறவேண்டும்.
ஏழாவது பாராளுமன்றத்தின் ஆயுள் பூரண மாக ஏழு ஆண்டுகள் அமைந்தது இதன் சிறப்பம்சங் களுள் ஒன்ருகும். இது தவிர, இதன் காலத்திலேயே 1972 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி இலங்கைக் குடியரசு உதயமாயிற்று. இலங்கை குடியரசானதைத் தொடர்ந்து பிரதிநிதிகள் சபை என அழைக்கப்பட்ட பாராளுமன்றம், தேசிய

Page 76
128 எனது நோக்கில். பாராளுமன்றம்
அரசுப் பேரவையாக நாமகரணம் பெற்றது. 1971ஆம் ஆண்டில் இடம் பெற்ற செனெற் சபை ஒழிப்பு இப் பாராளுமன்ற காலத்தில் இடம் பெற்ற குறிப்பிடத்தக்க மாற்றங்களுள் ஒன்ருகும்.
கோட்டேத் தொகுதி உறுப்பினர் மாண்புமிகு ஸ்ரான்லி திலகரத்ன அவர்கள் திறமை மிகுந்த ஒரு சபாநாயகர் என்ற பெருமைக்குரியவராக இந்த ஏழாவது பாராளுமன்ற காலம் முழுவதும் விளங்கி இருக்கிறர். அரசியல் நிர்ணய சபைத் தலைவராகவும் கடமையாற்றும் பேறுபெற்ற இவர், இலங்கையின் புதிய அரசியற் சட்டம் அங்கீகரிக்கப்பட்டபோது அதிற் கைச்சாத்திட்டு அதை உறுதிப்படுத்திய பெருமைக்கும் புகழுக்கும் உரிய சரித்திர புருஷ ராகவும் திகழ்ந்திருக்கிருர்,
பிரதமர் திருமதி சிறிமாவோ ஆர். டி. பண்டார நாயக்க அவர்கள் பேரவையில் தமது இருக்கையிலே காணப்படுகையில் எப்பொழுதும் அரசாங்கதரப்பில் கட்டுப்பாடும் அமைதியும் நிலவியதை நான் அவ தானித்திருக்கின்றேன். புகழ் மிக்க பெண் பிரதமர் என்ற முறையில் என்றுமே அவருக்கு ஏழாவது பாராளுமன்றம் பெரும் மதிப்பளித்திருக்கிறது. இப் பாராளுமன்ற காலத்திலேயே 1976 ஆம் ஆண்டில் கூட்டுச்சேரா நாடுகளின் தலைவியாகத் தெரிவு செய்யப்பட்ட பெருமைக்குரியவராக இவர் விளங்கி இருக்கிருர்,

பல் சுவை 129
கவிஞர்கள்
ஏழாவது பாராளுமன்றத்தில் எ ன் னே க் கவர்ந்ததொரு சிறப்பம்சம், இப் பாராளுமன்றம் பல கவிஞர்களை உள்ளடக்கி விளங்கியதாகும், தம்புல்லைத்தொகுதி உறுப்பினராக வந்த திரு. ரி. பி. தென்னக்கோன், நிக்கவரெட்டித் தொகுதி உறுப் பினராக வீற்றிருந்த திரு. முதியான்சே தென்னக் கோன், மிகுந்தலைத் தொகுதியிலிருந்து வந்து சேர்ந்த திரு. பி. எம். கே. தென்னக்கோன், உப தேர்தலில் வென்று வந்த கெஸ்பாவைத் தொகுதி உறுப்பினர்திரு. தர்மசேன ஆட்டிகல,இவருக்குமுன் பிரதிநிதித்துவம் வகித்த திரு. சோமவீர சந்திர சிரி, மட்டக்களப்புத் தொகுதி முதல் உறுப்பினர் திரு. செ. இராசதுரை, ஊர்காவற்றுறைத் தொகுதி உறுப்பினர் திரு. கா. பொ. இரத்தினம் ஆகியோர் எல்லோரும் சிறந்த கவிஞர்களாக விளங்கியவர்கள். மூன்று தென்னக்கோன்களும் பேரவையிலே தமது பேச்சுக்களினூடே எப்பொழுதும் இராக ஆலாபனை யுடன் பாடத் தொடங்கிவிடுவார்கள். தம்புல்லைத் தொகுதி உறுப்பினர் திரு. ரி. பி. தென்னக்கோன் கவிதைகளை மழைபோலவே பொழிந்து விடுவார்.
சாவகச்சேரிப் பிரதிநிதி திரு. வி. என். நவரத்தினம் அவர்கள் தாடியுடன் பேரவையில் எழுந்துநின்று பேசுகையில் எப்பொழுதும் தனிக் கவர்ச்சியுடன் விளங்குவார்.
1976ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதியன்று இரவு, கூட்ட நடவடிக்கைகளின்போது கிரியெல்லைத் தொகுதி உறுப்பினராக விளங்கிய
9.

Page 77
130 எனது நோக்கில்... பாராளுமன்றம்
திரு. வாசுதேவ நாணயக்கார அவர்கள் சபை நடுவில் மலர் வளையம் ஒன்றை வீசிக் குறும்பு செய்தமைக்காகச் சபாநாயகரது பலத்த கண்ட னத்திற்கு ஆளாக நேரிட்டது. கிரியெல்லைத் தொகுதி உறுப்பினரது செயல் குறித்துப் பேரவையில் கார சாரமான வாதப் பிரதிவாதங்கள் பின்னர் இடம் பெற்றன.
ஏழாவது பாராளுமன்றத்தின் சுவையாகப் பேசும் உறுப்பினர்களுள் காலித் தொகுதியைப் பிரதி நிதித்துவம் வகித்த கலாநிதி டபிள்யூ. தஹநாயக்க அவர்கள் மிக முக்கியமானவர். 1902ஆம் வரு டத்தில் பிறந்தவரான திரு. தஹநாயக்க அவர்கள் என்றுமே சிறுமைகளைக் கண்டு கொதித்தெழுபவர். சபையில் பல ஆவணங்களை மூக்குக்கண்ணுடியின் உதவியின்றியே இன்றுங்கூட வாசிக்கும் இயல்பு அவருடையது. முன்னைநாள் பிரதமர் மாண்புமிகு டட்ஸ்ரி சேனநாயக்க அவர்களும் தமிழ் மக்களின் மாபெரும் தலைவராகப் பேரவையில் வீற்றிருந்த திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களும் ஏழாவது பாராளுமன்றத்தின் பாரிய இழப்புக்கள் என்றே சரித்திரம் கூறும். எது எப்படியிருப்பினும் ஏழு, அதிஷ்ட எண் என்பார்கள். இந்த ஏழாவது பாராளுமன்றமீ தான் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை வழங்கி அவர் கள் என்றென்றும் அதனை வாழ்த்தவும் வழிதேடிவிட்டுக்
கலைந்துபோயிற்று.
வீரகேசரி - மே 1977

பல் சுவை 13 Ꭵ
s IV கியமன உறுப்பினர்
1972 மே 22 ஆம் தேதி இலங்கை குடியரசான பின்னர் புதிய அரசியலமைப்பின்படி பாராளுமன் றத்தில் முன்னைய காலங்களிற் போன்று நியமன உறுப்பினர்களுக்கு இடமில்லாமற் போய்விட்டது,
1930ஆம் ஆண்டு சனவரி மாதம் 29ஆம் தேதி யன்று அப்பொழுது தேசாதிபதியாக இருந்த சேர் ஹேபட் ஸ்ரான்லி, கே. சீ., எம். ஜி. அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அரசாங்க சபைக்கான கட் டடமே கடந்த பல வருடங்களாகப் பாராளுமன்றத் தின் களமாக அமைந்தது. அன்று அரசாங்க சபை யில் எட்டு நியமன உறுப்பினர்கள், மூன்று அரச அதிகாரிகள் உட்பட அறுபத்தொரு உறுப்பினர்களே அங்கம் வகித்தனர். 1947ஆம் ஆண்டு முதலாவது பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் தொகை, ஆறு நியமன உறுப்பினர்கள் உட்பட 101ஆக வளர்வ தாயிற்று. 1959ஆம் ஆண்டில் மீண்டும் தொகுதிகள் நிர்ணயஞ் செய்யப்பட்டன. இதன் பிரதிபலிப்பாக நான்காவது பாராளுமன்றத்தில் தொகுதிகள் 145ஆக அதிகரித்தன. 151 உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்தனர். ஆறு நியமன உறுப்பினர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகை 157ஆக வளரலாயிற்று. ஏழாவது பாராளுமன்ற காலத்தில் இடம்பெற்ற புதிய தொகுதி நிர்ணய வேலைகளைத் தொடர்ந்து எட்டாவது பாராளுமன்றம் 160 தொகுதி களிலிருந்து 168 உறுப்பினர்களைக் கொண்டதா கின்றது.
வீரகேசரி - ஜூலை 1977

Page 78
18 கொழும்பு இராசதானியில்
காலத்திற்குக் காலம் பிரதமர்களாயும், மந்திரி ծճITITպմ, பாராளுமன்ற உறுப்பினர்களாயும் விளங்கிய அத்தனை பேரும் அரசியல் பேசி, விவாதம் நிகழ்த்தி, சொற்போர் புரிந்து, சட்டங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து, சிந்தையில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்களை வளர்த்து, மகிழ்ந்து, குலாவி, மகிமைகள் நிகழ்த்திய கொழும்புப் பாராளு மன்றம் காலத்தால் அழிக்க முடியாத பல நூறு வரலாறுகளை உடையது.
அமைதியும் அழகும் மிக்க மனுேரம்மியமான சூழ்நிலையில் படாடோபமற்ற முறையில் கண்ணிய மும் கம்பீரமும் வாய்ந்த வனப்புடன், காண்போர் எவரையும் கவரும் எழிலுடன் காலிமுகக் கடற் கரையோரமாகக் கொழும்பு மாநகரிலே காட்சியளிக் கும் பாரம்பரியங்கள் மிக்க இந்தப் பாராளுமன்றக் கட்டடம் முன்னர் கூறியவாறு ஆரம்பத்தில் 61 உறுப்பினர்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு நிருமாணிக்கப்பட்டது. காலப்போக்கில் உறுப்பினர் களின் என்ணிக்கை இன்று 168ஆக அதிகரித்து விட்டது. மேலும் இவ்வெண்ணிக்கை அடுத்த தொகுதி நிர்ணயத்தின்பொழுது 196 ஆக உயரு மெனக் கணிக்கப்பட்டுள்ளது. எனவேதான் மறுக்க முடியாத தேவைகளின் நிமித்தம் கோட்டேயில் புதிய பாராளுமன்றக் கட்டடம் அமைக்கப்படுவதாயிற்று.

கொழும்பு இராசதானியில் 133
பழைய பாராளுமன்றக் கட்டடத்தின் கடந்த ஐம்பது வருட காலச் சரித்திரத்தைப் பார்க்கையில் பிரதமர்களாக விளங்கிய டி. எஸ். சேனநாயக்க, டட்னி சேனநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவலை, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, கலாநிதி டபிள்யூ. தஹநாயக்க, திருமதி சிறிமாவோ ஆர். டி. பண்டாரநாயக்க, ஜே. ஆர். ஜயவர்த்தன, ஆர். பிரேமதாச ஆகியோர் அனைவரும் நமது ஞாபகத்திற்கு வரத் தவறமாட்டார்கள். இதே சமயம் எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளை அலங்கரித்தவர்கள் என்ற வரிசையில் கலாநிதி என். எம். பெரேரா, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, சி. பி. த. சில்வா, டட்வி சேனநாயக்க, திருமதி சிறிமாவோ ஆர். டி. பண்டாரநாயக்க, ஜே. ஆர், ஜயவர்த்தன, அ. அமிர்தலிங்கம் ஆகியோரும் நினைவுக்கு வரவே செய்வார்கள்,
முதலாவது அரசாங்க சபைக் காலத்திலே சபாநாயகராக இருந்த மாண்புமிகு பிரான்சிஸ் மொலமுரே அவர்களையும் இரண்டாவது அரசாங்க சபைக் காலத்தில் அதே பதவியை அலங்கரித்த சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி அவர்களையும் இன்றும் பலர் நினைவுகூருவதைப் பாராளுமன்ற வட்டாரங்களில் நான் அவதானித்திருக்கின்றேன்.
யாழ்ப்பாணப் பகிஷ்கரிப்பு
டொனமூர் அரசியல் திட்டத்தை எதிர்த்து 1931ஆம் ஆண்டில் நடைபெற்ற அரசாங்க சபைத் தேர்தலை யாழ்ப்பாணம் முற்று முழுதாகப் பகிஷ் கரிப்புச் செய்தது. யாழ்ப்பாணம், காங்கேசன்துறை
10

Page 79
184 எனது நோக்கில்.பாராளுமன்றம்
ஊர்காவற்றுறை, பருத்தித்துறை ஆகிய தொகுதி களுக்கு ஒரு குருவி கூட நியமனப்பத்திரம் தாக்கல் செய்யவில்லை. ' யாழ்ப்பாணப் பகிஷ் கரிப்பு’ எனப் பிரசித்தி பெற்ற இப் பகிஷ் கரிப்பின் பின்னர் இத் தொகுதிகளுக்கான தேர் தல்கள் 1934ஆம் ஆண்டில் நட்ைபெற்றபோது அத் தேர்தல்களில் வெற்றிவாகை சூடிய திரு. ஜி. ஜி. பொன்னம்பலம், திரு. அருணுசலம் மகாதேவா போன்றேர் அரசாங்க சபையில் சிம்ம நடையில் பிரவேசித்த காட்சியைக் கண்ணுற்ற சனநாயகத் தின் கோவிலான பழைய பாராளுமன்றம் மற்றெரு வரலாற்று முக்கியத்துவத்தையும் உடையது.
திருவாளர்கள் சேர் பொன். இராமநாதன், ரி. பி. ஜயா, சுப்பையா நடேசன், பெரி. சுந்தரம், கே. ஆர். நடேசஐயர் போன்ற பழம்பெரும் இராசதந்திரி களின் பிரசித்தி பெற்ற வரதப் பிரதிவாதங்களைக் கேட்டதும், ஜி. ஜி.பொன்னம்பலம் அவர்கள் தமிழ் மக்களுக்கு ஐம்பதுக்கு ஐம்பது கோரிப் போராடி யதும் அதே கட்டடத்தில் நிகழ்ந்த வரலாறுகளே, அடங்காத் தமிழர் முன்னணித் தலைவராக ஒரு காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த ஸி. சுந்தரலிங்கம் அவர்கள் தமது வாதப் பிரதிவாதங்களை எல்லாம் சிம்ம கர்ச்சனையில் நிகழ்த்தியதும் இங்கேதான்.
இரண்டாவது அரசாங்க சபைக் காலத்தில் கொழும்பு வடக்குத் தொகுதி உறுப்பினராக இருந்த திருமதி நேசம் சரவணமுத்து என்ற தமிழ்ப் பெண்மணியின் வரலாற்றை உள்ளடக்கி யதும் கொழும்புப் பாராளுமன்றமே.

கொழும்பு இராசதானியில் 135
கேருஜி
இதே களம், பண்டிட் பூரீ ஜவகர்லால் நேரு போன்ற உலகப் பெருந் தலைவர்களின் வருகை களையும் தன்னகத்துள் பதியவைத்துள்ள பெருமை மிக்கது.
இந்தியர் பாகிஸ்தானியர் பிரசா உரிமைச் சட்டம் 1948ஆம் ஆண்டு விவாதிக்கப்பட்ட போதும், 1956ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட போதும், கலாநிதி என். எம். பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வா போன்ற சமசமாசக் கட்சித் தலைவர்களாலும், டாக்டர் எஸ். ஏ. விக்கிரம சிங்க, பீற்றர் கெனமன், பி. கந்தையா போன்ற கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களாலும், எஸ். ஜே. வி. செல்வநாயகம், கு. வன்னியசிங்கம் போன்ற தமிழ்த் தலைவர்களாலும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நிகழ்த் தப்பட்ட சரித்திரப் பிரசித்திபெற்ற உரைகளுக்கும் கொழும்புப் பாராளுமன்றம் என்றும் சாட்சியாக நிமிர்ந்து நிற்கும். சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க முதல்முதலில் சிங்களத்தில் உரையாற்றியதும், ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள் அவ்விதம் தமிழில் உரையாற்றியதும் இங்கேதான். ஆங்கிலம் மட்டும் ‘அரசோச்சிய இடத்தில் தேசிய மொழிகள் அரங் கேறியதைக் கண்டு களித்தது இந்தக் களரி யல்லவா!

Page 80
136 எனது நோக்கில்.பாராளுமன்றம்
எதிர்க்கட்சி முதல்வர் திரு. அ. அமிர்தலிங்கம் அவர்களுக்கெதிராக 1981ஆம் ஆண்டு ஜூலையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் பட்டதும் உலகம் முழுவதும் உன்னிப்பாகக் கவனித்த அந்த வாதப் பிரதிவாதங்களில் மலையகத் தலைவர் மாண்புமிகு எஸ். தொண்டமான் அவர் களும் பிரதி அமைச்சர் திரு. ஷெல்டன் றணராஜா அவர்களும் தீர்மானத்துக் கெதிராகக் குரல் கொடுத்துத் தமது முத்திரையைப் பதித்த செயலையும் கொழும்புப் பாராளுமன்றம் என்றும் நினைவுகூரத் தவறமாட்டாது.
சபாநாயகர் அல்ஹாஜ் எச். எஸ். இஸ்மாயில், சபாநாயகர் அல்ஹாஜ் அப்துல் பாகீர் மாகார் ஆகியோர் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் பேசியும் தீர்ப்புக்களை வழங்கியும் கூட்டங்களை நடாத்திய வரலாற்றையும் கொண்டு விளங்கியது கொழும்புப் பாராளுமன்றந்தான். இப்படியாக ஆயிரம் ஆயிரம் அரசியல், சட்ட, பொருளாதார, சரித்திர, இலக்கிய அம்சங்களுக்கும் நகைச்சுவை, வெகுளிச் சுவை, அவலச் சுவை ஆதி யாம் பல்சுவைகளுக்குமி நிலைக்களஞக விளங்கிய ஒரு தானம் இன்று கோட்டே பூரீ ஜயவர்த்தன புரத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
வீரகேசரி - திசெம்பர் 1981

19 கோட்டே இராசதானியில்
சரித்திரப் பிரசித்திபெற்ற பூரீ ஜயவர்த்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள புதிய பாராளு மன்றத்தைப் பார்ப்பவர்களுக்கு அழகிய வாவி ஒன்றின் மத்தியில் தேவ தச்சர்கள் கூடி நிரு மாணித்த கலைக்கூடமொன்று மிதந்து கொண்டிருக் கிறதோ என எண்ணத் தோன்றும்.
எல்லோரின் கண்களையும் கருத்துக்களையும் கவரக்கூடிய விதத்தில் அமைந்துள்ள புதிய பாராளு மன்றக் கட்டடத்தின் மாடிகளில் நின்று புராதன கோட்டே நகரின் எழிலை எவரும் பருக முடியும், அதே வேளையில் குளிர்ந்த வாவியில் தவழ்ந்து மிதந்துவரும் தென்றல் அவர்களை அரவணைக்கும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படும் பச்சைப் பசேலென்ற இனிய பசுஞ்சோலைக் காட்சிகள் மனதைக் கொள்ளைகொள்ளும். கோட்டே நகரின் சூழலில் பல்வகையான ஈழத்துப் பட்சி சாலங்களைப் பார்க்கவும் அவற்றின் இன்னுெலி களைக் கேட்கவும் முடியும், வெள்ளை வெளேரென்ற நாரைகள் நூற்றுக் கணக்கில் வான வெளியில் மிதந்து மிதந்து பறப்பது மனதிற்கு இதமான ஒரு காட்சியாக இருக்கும்.
சனாகாயகத்தின் கோவில்
பட்டணத்தின் பல போலித் தன்மைகளை விடுத்து இலங்கையின் நிசக் கிராம மக்களின் பாரம்

Page 81
138 எனது நோக்கில். பாராளுமன்றம்
பரியச் சூழலைச் சார்ந்துள்ள இப் பாராளுமன்றம் சரித்திராசிரியர்களுக்குச் சரித்திரமாகவும், கவிஞர் களுக்குக் கவிதைப் பூங்காவாகவும், சனநாயக வாதிகளுக்குச் சனநாயகத்தின் கோவிலாகவும், கலைப் பிரியர்களுக்குக் கலாபவனமாகவும் அமைந் துள்ளதைக் காணலாம்.
1982ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் தேதியன்று புதிய பாராளுமன்றக் கட்டடத் திறப்பு விழா நடைபெறுகிறது.
புதிய பாராளுமன்றக் கட்டடத்துக்கான இட மாகக் கோட்டே பூரீ ஜயவர்த்தனபுரத்தைத் தேர்ந் தெடுத்தமைக்கான காரணங்கள் பலவாகும். பதி ஞன்காம் நூற்ருண்டின் புகழ் பூத்த மன்னனுன ஆரும் பராக்கிரமபாகுவின் காலத்தில் இந்த நகரம் ஆட்சித் திறனிலும், கலை, கலாசாரத்திலும் சிறந்து விளங்கியது. இம் மாமன்னன் காலத்திற் கோட்டே இராசதானியில் அமிழ்தினும் இனிய மொழியாம் தமிழ் மொழியும் அரசோச்சியது. அது மட்டுமன்றிப் பார்க்குமிடமெங்கும் எழில் கொஞ்சுமி அழகாபுரியாகவும் அது திகழ்ந்தது. சிங்கள அறிஞரும் தமிழ் அறிஞருமான வண. பூரீ இராகுலர் போன்ற தேசியக் கவிஞர்கள் கோட்டே இராச தானியை வியந்து யாத்த கவிதைகள் அனைத்தும் முத்துக்கள் போன்றவை.
கல்லூர்த் துணையார்
மேலும், ஆரும் பராக்கிரமபாகுவின் நன் மந்திரிகளில் ஒருவராக விளங்கியவர் தமிழ்

கோட்டே இராசதானியில் 139
அறிஞரும் பெரும் புலவருமாய் விளங்கிய நல்லூர்த் துணையார் என்பவர். இவர் மன்னனின் அருமைப் புதல்வியாகிய லோகநாததேவியை மணந்து தமது அளவு கடந்த தமிழ்ப் பற்றின் காரணமாகத் தம் வாழ்க்கைத் துணைக்கு உலகுடையதேவி என நாம கரணஞ் செய்து மகிழ்ந்து வாழ்ந்த பெருமைக்குரி யவர். சலலிஹினி சந்தேசய’ என்ற தூதுக் காவி யத்தைச் சிங்கள மொழியில் யாத்த தமிழ் அறிஞரான வண. பூரீ ராகுலர் அவர்கள் அதனைத், தமிழ்ப் பெரும் புலவர் நல்லூர்த் துணையாரின் பத்தினி உலகுடைய தேவிக்காகவே பாடியுள்ளார். அம் மாது சிரோ மணிக்கு ஒர் ஆண்மகவு பிறக்க வேண்டுமென்பது வண. பூரீ இராகுலரின் வேண்டுதலாய் இருந்தது. களனியில் கோயில்கொண்டுள்ள விபீஷண தெய் வத்திற்குக் கோட்டேயிலிருந்து நாகணவாய்ப் பட்சி மூலம் விடுக்கப்பட்ட இந்தத் தூதுக் காவியத்தை நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் மகனரான் திரு. சோ.நடராசன் அவர்கள் 'பூவைவிடு தூது’ என்னும் காவியமாக வடித்துள்ளார் என்பதை இச் சந்தர்ப்பத்தில் நாம் ஞாபகத்தில் இருத்துவது பொருந்தும். புராதனக் கொடிகள்
புதிய பாராளுமன்றக் கட்டடம் நான்கு மாடி அமைப்பைக் கொண்டது. இதனது பெரும் கீர்த் திக்குரிய அம்சம்.ஆங்கமைந்துள்ள பாராளுமன்ற சபாமண்டபமாகும்." இருநூறு பாராளுமன்ற உறுப் பின்ர்களுக்கும்:601 பார்வையாளர்களுக்கும். இச் சாமண்டபம் இடிவத்தியூை அளிக்க வல்லது.

Page 82
140 எனது நோக்கில். பாராளுமன்றம்
முன்னர் கூறியவாறு சபாமண்டபத்தின் முன்புற வாயிற் கபாடம் 144 சதுர அடி விஸ்தீரணத்தில் பண்டைய மரபுப்படி அழகுறச் செதுக்கப்பட்டுச் சமைக்கப்பெற்றுள்ளது. இக் கதவில் இலங்கைக் குடியரசின் யாப்பின் பாயிரம் வெள்ளி உலோகத் தால் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது. 9-f மண்டப அலங்காரம் உலோகத்தினுலான செதுக்கு வேலைப்பாடுகளைக் கொண்டது. இலங்காபுரியின் புராதனக் கொடிகளுக்கும் பண்டைய மன்னர்களின் அரச இலச்சினைகளுக்கும் மண்டபத்தில் முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. சுருங்கச் சொல்வ தானுல் கோட்டே பூரீ ஜயவர்த்தனபுரப் பாராளு மன்றம் பழைமைக்குப் பழைமையும், புதுமைக்குப் புதுமையுமான ஒரு கலைப் பொக்கிஷமாக உருவாக்கப்பட்டுள்ளதென்றே கூறல்வேண்டும்.
பாராளுமன்றத்தின் இருதயமான மண்டபம் தவிர பாராளுமன்றக் குழுக் கூட்டங்கள் நடைபெறுவதற்குச் சிறியதும் பெரியதுமான பல சிறப்பு உப மண்டப வசதிகளும் செய்யப்பட்டுள் ளன. பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோ ருக்கும் ஏராளமான சிறந்த வசதிகளை உள் ளடக்கியுள்ள இப் பாராளுமன்றத்தில் தொலைபேசி, தொலைக்காட்சி, வங்கி, தபால் நிலையம் போன்ற வற்றைப் பற்றிச் சொல்லவேண்டிய அவசியம் @db3). இக் கட்டடத்தில் நவீன அலங்கார

கோட்டிே இராசதானியில் 141
அறைகள் நூற்றுக் கணக்கில் உள்ளனவென்றல் மற்றைய அம்சங்களை வாசகர்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.
கோட்டேயில் புதிய பாராளுமன்றக் கூடல் ஒன்றை அமைப்பதற்கான பாராளுமன்ற அங்கீ காரம் 1979 ஜூலையில் பெறப்பட்டது. இக்கட்டட அத்திபாரமிடுதல் தொடர்பில் அரும்பொருட் புதைத்தல் வைபவம் 1980 செப்தெம்பர் மாதத்தில் மேன்மை தங்கிய சஞதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தன அவர்களால் நடாத்தி வைக்கப்பட்டது. இக் குறுகிய காலத்தில் இவ்வளவு சிறப்புமிகு சரித்திரத் தேவையை நிறைவேற்றக் காரண கர்த்தாவாக விருந்த மேன்மை தங்கிய சஞதிபதி இலங்கைச் சரித்திரத்தில் என்றும் நிலைகொள்வார் என்பதில் ஐயமில்லை.
சிங்களத்துடன் தமிழும் சரிசமமாக அரசோச் சிய கோட்டே இராசதானிக்கு இன்று பாராளு மன்றம் இடம் மாற்றமடைந்திருக்கின்றது. இம் மாற்றம் தமிழைப் பொறுத்த அளவிலும் மீண்டும் அதனை அதன் உன்னத நிலைக்குக் கொண்டுவரு மெனச் சரித்திரம் கணிப்போமாக.
வீரகேசரி - சனவரி, 1982

Page 83
2O ஹன்சாட்
பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளையும் விவா தங்களையும் அதன் கூட்ட நடப்புக்களையும் நுணுக்க மாகவும் விளக்கமாகவும் விரிவாகவும் நூற்றுக்கு நூறு வீதம் உண்மையாகவும் சொல்லுக்குச் சொல் சரியாகவும் உயிர்த் துடிப்புடனும் அறிய விரும்புப வர்களின் தேவையைப் பூர்த்தி செய்வது ஹன்சாட் பாராளுமன்ற விவாதங்களின் உத்தியோகபூர்வ மான அதிகார அறிக்கையே "ஹன்சாட்' என அழைக்கப்படுகிறது.
சரித்திரம்
பிரித்தானிய நாட்டுப் பாராளுமன்ற விவாதங் களின் உத்தியோகபூர்வமான அதிகார அறிக்கை களை ஆதியில் மிக நீண்ட காலம் தோமஸ் ஹேஸன் ஹன்சாட் என்பாரும் அவரின் வழி வந்தோரும் அச்சிட்டு வெளியிடும் உரிமையைப் பெற்றிருந்தனர். இதன் காரணமாகவ்ே ஹன்சாட் பாராளுமன்றத் துடன் இணைந்த ஒரு பெயராக நிலைபெற்றுவிட் டது. இன்றுள்ள பாராளுமன்றங்களுக் கெல்லாம் தாய்ப் பாராளுமன்றமாக விளங்கும் பிரித்தா னிய பாராளுமன்றத்திலிருந்துதான் “ஹன்சாட்" தனது சரித்திரத்தை ஆரம்பித்து உலகில் பல நாடுகளிலும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டது. 1981ஆம் ஆண்டின் பிற்பகுதியிலே தனது ஆயிர மாவது “ஹன்சாட்" தொகுதியைப் பிரித்தானிய பாராளுமன்றம் வெளியிட்டு அதனையொட்டிய சிறப்பு

ஹன்சாட் 143
நிகழ்ச்சிகளையும் நடாத்தியது. பல தனிப் பிரதி களைக் கொண்டதே ஒரு தொகுதி எனப்படும். இதி லிருந்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் “ஹன் சாட்டின்' சரித்திரத்தை அளவிட்டு அறிந்துகொள்ள முடியும். இப் பாராளுமன்றம் 1909ஆம் ஆண்டிலி ருந்து கூட்டம் முடிவுற்ற மறுதினமே அதிகாலையில் பாராளுமன்ற உறுப்பினர்களதும் பொதுமக்களதும் நலன் கருதி * ஹன்சாட்டை” வெளிக்கொணரும் நடைமுறையைக் கைக்கொண்டு வருகிறது.
கனேடிய பாராளுமன்றமும் 1982ஆம் வருடம் “ஹன்சாட்டின்” நூற்ருண்டு விழாவைக் குதூகல மாகக் கொண்டாடியது.
ஒரு சட்டமூலம் சம்பந்தமாகப் பாராளுமன்றம் விவாதிக்கின்றதென்றல் அதற்குச் சாதக பாதக மான கருத்துக்கள் அத்தனையையும் “ஹன்சாட்டில்” தவிர வேறு எந்தப் பத்திரிகையிலும் பார்த்தல் அரிது. “ஹன்சாட்’ நிலைக்கண்ணுடிபோல ஒவ்வோர் உறுப்பினரதும் பாராளுமன்ற நிலையைப் பூரண மாகவும் துல்லியமாகவும் பாரபட்சமின்றி அப்படியே பிரதிபலிக்கும். V -
விருப்பு வேறுப்பற்ற பிறப்பு
மேலும், பாராளுமன்ற விவாதங்களைப் பத்திரி க்ைகள் பிரசுரிக்கும் ப்ொழுது அவற்றை எழுதும் பத்திரிகைக் கலைத்துற்ையாளர்களின் கைவண்ண மும் அபிப்பிராயமும் அவற்றில் சேர்ந்திருக்கும். உதார்ண்த்திற்குச் சொல்வதானல் ஓர் உறுப்பினரின்

Page 84
144 எனது நோக்கில்.பாராளுமன்றம்
உரையை அபாரமானதென்றே, ஆணித்தரமான தென்ருே, சங்கநாதமென்றே வருணித்து எழுது கின்ற சுதந்திரம் பத்திரிகைகளுக்குண்டு. ஒருவரது உரைக்கு எட்டுக்கலம் தலைப்புக் கொடுத்தும் பாராளு மன்றப் பேச்சுக்களைப் பத்திரிகைகள் பிரசுரிக்கலாம், பாராளுமன்றத்தில் கூச்சல், குழப்பம், ஆரவாரம், கரகோஷம், பலத்த சிரிப்பொலி என்ற வகையிலும் பத்திரிகைகள் தமது அவதானிப்புக்களைச் சொல்ல லாம். ஆனல் “ஹன்சாட்’ அவ்வாறு அபிப்பிராயம் தெரிவிக்காது. பாரபட்சமற்ற, உத்தியோகபூர்வ மான வெளியீடான அதில் அடைமொழிகளையோ கொட்டை எழுத்துக்களில் தலைப்புக்களையோ பார்க்க முடியாது. ஆணுல் பாராளுமன்றம் முடிவெடுக்கும் சட்டங்கள் உட்பட எல்லாவிதமான முக்கிய விட யங்களைப் பற்றியும் அதிகாரபூர்வமான முறையில் ஒருவர் கதைக்கவும் சிந்திக்கவும் பாரபட்சமற்ற முறையில் அறியவும் கற்றுக்கொள்ளவும் “ஹன்சாட்” பூரணமாகத் துணைபுரிகின்றது. அரசாங்கக் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு அதற்கில்லை. அது விருப்பு வெறுப்பற்ற ஒரு பிறப்பு. பாராளுமன்றத் தைத் தெரிவுசெய்த அத்தனை மகாசனங்களுக்கும் சனநாயக முறைப்படி அது தனது கடமையை எப் பொழுதும் செய்துகொண்டேயிருக்கிறது.
இலங்கைப் பாராளுமன்றத்தைப் பொறுத்த அளவில் ஹன்சாட்டுக்குத் தனியான ஒரு திணைக் களமே உண்டு. இத்திணைக்களத்தில் பதிப்பாசிரியர், பிரதிப் பதிப்பாசிரியர், உதவிப் பதிப்பாசிரியர், சிரேஷ்ட அறிக்கையாளர், அறிக்கையாளர் என

ஹன்சாட்
முப்பத்தைந்திற்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகிருர்கள், அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். வெளி நாடுகளில் உயர்ந்த சம்பளத்தில் தொழில் தேடி ஓட வேண்டிய அவசி யத்தை "ஹன்சாட்’ உத்தியோகத்தர்களுக்குப் பாராளுமன்றம் வைக்கவில்லை.
தவறுவதில்லை
ஒரு உறுப்பினர் விரும்பியோ விரும்பாமலோ சில சமயங்களிலே தம்மை அறியாமலேயே வார்த்தை களை உதிர்த்து விடுவதுமுண்டு. அவ்வித வார்த்தை களைக்கூட * ஹன்சாட்’ பதிவு செய்யத் தவறுவ தில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்தவ ரும் பொத்துவில் தொகுதி இரண்டாவது உறுப் பினராக விளங்கியவருமான எம். கனகரத்தினம் அவர்கள், 1977 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சியி லிருந்து அரசாங்கக் கட்சிக்கு மாறிச் சென்ற போது அன்றைய தினம் அதைச் சற்றும் பொறுக்க முடியாதவராய்த் தம்மை மீறிய சினத்தின் வயப் பட்ட நிலையில் இருந்த எதிர்க் கட்சி முதல்வர் திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் ஒரு கட்டத்தில் *இடி விழும் தலையில்’ என்றர். அதையும் அன்றைய தினம் * ஹன்சாட் ’ பதிவு செய்யத் தவறவில்லை. இவ்விதமாக ** ஹன்சாட்” எவ்விடயத்தையும் மிகவும் நுணுக்கமாகப் பதிவு செய்யும் தன்மை வாய்ந்தது. ஹன்சாட்டில் அமங்கலமான, அசூசையான வார்த் தைப் பிரயோகங்கள் இடம்பெற மாட்டா. அத்தகைய சில சொற்களை மிக நாகுக்கான

Page 85
146 எனது நோக்கில்.பாராளுமன்றம்
முறையில் அறிக்கையாளர்கள் தமது பாரம்பரியத் திற்கேற்ப பதிப்பாசிரியரது ஆலோசனையுடன் தவிர்த்துக்கொள்வார்கள். ஆனல், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உறுப்பினரது பிரதான கருத் தைப் பிரதிபலிக்க * ஹன்சாட் ’ தவறமாட்டாது.
இலங்கையில் 1908ஆம் ஆண்டிலிருந்து "ஹன் சாட்’ பதிவேடு நடைமுறையில் இருக்கிறது. சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பாரன் ஜய திலக்க போன்ற பிரசித்திபெற்ற அரசியல் மேதைகள் ஆற்றிய உரைகளை எல்லாம் இன்றும் ஹன்சாட்டில் பார்க்க முடியும். இன்று கூட அரசாங்கக் கட்சி யினரும் எதிர்க் கட்சியினரும் * அன்று நீங்கள் அப்படிக் கூறவில்லையா? இன்று இப்படிக் கூறு கிறீர்களே ‘’ என்றெல்லாம் ஹன்சாட்டிலிருந்து விட யங்களை அதிகாரபூர்வமாக வெளிக்கொணர்ந்து வாதப் பிரதிவாதம் செய்வதைக் காண்கிருேம்
1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘சிங்களம் மட்டும் * சட்டம் முதல் இலங்கைச் சரித்திரத்தில் இடம்பெற்ற எத்தனையோ சட்ட மாற்றங்களை “ஹன் சாட்’ பதிவு செய்து வைத்துள்ளது. அவை தொடர் பான சரித்திரப் பிரசித்தி பெற்ற வாதப் பிரதிவா தங்கள் எல்லாம் கொண்ட சரித்திர ஏடுகளாகவே * ஹன்சாட்" பிரதிகள் பாதுகாக்கப்படுகின்றன.
அதிகாரம் இல்லை
ஹன்சாட்டில் எந்தவிதமான மாற்றங்களையும் செய்யும் அதிகாரம் எவருக்கும் இல்லை, இதற்குச்

ஹன்சாட் 147
சபாநாயகர் விதிவிலக்கானவர். சபாநாயகரது உத் தரவுக்குக் கீழ்ப்படியாது உறுப்பினர்கள் ஒரே சம
யத்தில் ஏக காலத்தில் பேச முற்படும்பொழுது சபாநாயகரது உத்தரவுக்குக் கீழ்ப்படியாத உறுப். பினரது உரையைப் பதிவுசெய்ய வேண்டாமென்று
அறிக்கையாளர்களுக்கு உத்தரவிடும் அதிகாரம்
சபாநாயகருக்கு மட்டுமே உண்டு. சாதாரணமாக
எந்த அமைச்சரோ, பாராளுமன்ற உறுப்பினரோ
* ஹன்சாட் ’ அறிக்கையாளர்களின் கடமைகளிற்
குறுக்கிட்டதைச் சுமார் கால் நூற்றண்டு கால
அநுபவத்தில் நான் காணவே இல்லை.
இலங்கைப் பாராளுமன்றத்தின் கூட்டமொன்று காலை பத்து மணிக்கு ஆரம்பமாகி மாலை ஐந்து மணிக்கு முடிவடைகிறதென்று வைத்துக்கொள் வோம். பாராளுமன்றம் எந்தெந்த நிமிடத்தில் என்ன நடவடிக்கைளை எந்தெந்த மொழியில் மேற்கொள்ளு கிறதோ அவ்வண்ணமே ' ஹன்சாட்’ அவை எல்லா வற்றையும் பிரதிபலிக்கும். ‘ஹன்சாட்’ அறிக்கை யாளர் சபைக்கு உள்ளேயும் வெளியிலும் மிகவும் பொறுப்பு வாய்ந்த ஒருவராகக் கணிக்கப்படுகின்ருர்,
கம்பிக்கை
1949ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரித் தானிய பாராளுமன்றத்தில் அப்போது சபாநாயக ராக இருந்த கெளரவ கிளிவ்ரன் பிறவுண் அவர்கள் *ஹன்சாட்" அறிக்கையாளர் பற்றிக் கூறுகையில் சாதாரண எல்லா அறிக்கையாளர்களும் ஹன்சாட்” அறிக்கையாளர்களாக வர முடியாது. சபை நடை

Page 86
148 எனது நோக்கில். பாராளுமன்றம்
முறைகளில் அவருக்கு நல்ல பரிச்சயமும் அறிவும் இருத்தல் வேண்டும். சட்டங்களில் ஒரு திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? மீளப் பெறப்பட்டதா? அதற்கு என்ன நடந்தது என்பனவற்றை ஓர் அறிக்கையாளர் தெரிந்து செயற்படவேண்டிய கடமைக்குட்பட்டவராக இருக்கிறர். ஆகவே, அத்தகையவர்களுக்கு என்னுடைய பாராட்டுதல் களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்" என்று தெரிவித்தபோது புகழ்பெற்ற பிரித்தானிய பிரதமர்களுள் ஒருவராக விளங்கிய சேர் வின்ஸ்ரன் சேர்ச்சில் அவர்கள் "நாங்கள் எல்லோரும் ஹன்சாட்டில் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிருேம்” என்று குறிப்பிட்டார். ஹன் சாட்டிற்குள்ள அந்தஸ்தை, சிறப்பை எடைபோட இந்த ஓர் உதாரணமே போதுமானது.
பிரித்தானியாவில், 'பிரித்தானியாவின் சரித் திரமே ஹன்சாட்" என்ற நிலைக்கு ஹன்சாட்டின் அந்தஸ்து உயர்ந்துவிட்டது. ஏனெனில், இரண் டாம் உலகப் போரின்போது பிரதமராக இருந்த சேர் வின்ஸ்ரன் சேர்ச்சில் அவர்கள் நிகழ்த்திய சரித்திரப் பிரசித்திபெற்ற பாராளுமன்ற உரைகள் எல்லாம் ஹன்சாட்டில் இடமி பெற்றுள்ளதால் அது அந்த நாட்டின் ஒரு சரித்திர ஏடாகவும் கணிக்கப் படுகின்றது. இலங்கையிலும் * ஹான்சாட் " அப்படியே என்று பெருமை கொள்ளலாம்.
வீரகேசரி - ஏப்பிறல் 1983


Page 87


Page 88
*எனது நோக்கில் இலங்
திரு. செல்லப்பா நடராக இலங்கைப் பாராளுமன்றம்"
நூல்கள் தோன்றுவதானது தேவையாகும்.
“ பார்லிமென்ட் நடராச இந் நூலாசிரியரான திரு. செ உள்ளத்தினர். பாலின் இன்சுை பாராளுமன்ற நடவடிக்கைகை கொண்டவர் நடராசா அவர்க வூலங்களில் ஜீவகளை நிறைந்தி
இலங்கைப் பாராளுமன்றத் முறைகள் என்பன பற்றிய நூலொன்று இல்லாத குறைவு எழுதியுள்ள "எனது நோக்கில் என்ற இந்நூல் நிறைவு செய்யு
திருமகள் அழுத்த
 

கைப் பாராளுமன்றம்'
---. Fா அவர்கள் எனது நோக்கில் என்னும் இந்நூலின் மூலம் புதியதோர் இ லக் கி ய அமைப்பைத் தோற்று
வழிவகுத்துள்ளார்.
- க. இ. க. கந்தசுவாமி
பாராளுமன்ற நடை முறைகளில் அநேகமாக
கின்றன. பாராளுமன்றக் கோட்பாடுகளில் கரிசனை உள்ளவர்களுக்குச் சட்ட நுட்ப முறைகள் சிறப்பாக எடுத்துக் காட்டப்பட் டுள்ளன. இந்த வகையான எமது நாட்டின் அவசியத்
- நா. மாணிக்க இடைக்காடர்
' என்று அழைக்கப்படும் Fல்லப்பா நடராசா, இனிய வையைப் பருகியே அறியலாம். ா நேரிற் பார்த்து அறிந்து ள். இவரது கட்டுரைக் கரு ருப்பதனைக் காணலாம்.
- இ. சிவகுருநாதன் தின் பாரம்பரியங்கள், நடை விரிவான விளக்கமா யைச் செல்லப்பா நடராச இலங்கைப் பாராளுமன்றம் ம் என நினைக்கின்றேன்.
- த கனகரத்தினம்
5கம், சுன்னுகம்
வித்து, சமூக உயர்வுக்கும் 1 தமிழ்மொழி வளர்ச்சிக்கும்