கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளங்கதிர்

Page 1


Page 2


Page 3

காலக் கண்ணாடி
இளங்கதிர்
கலாநிதி க. அருணாசலம்
தமிழ்
பன்றார்

Page 4
by Dr. N. ARUNACALAM, Senior Lecturer, Grade I, University of Peradeniya, Pétaidehiya, Sri Lanka,
G) Copyrights reserved.
First published in March, 1994. Seventy first publication of:
No.10, Fourth Lane, Koswattu koad, Rajagirya, Sri Lanka.
MADRAs. 600 dos.

s
ශ්‍රී. .
க் வித்தானந்தன்
ஆகியோருக்கு இந்நூல்
சமர்ப்பனம்
ཡོད༽
ッ

Page 5
.令(5 தகவல் பெட்டகம்
இலங்கைப் பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பரின்றவர்களில், றிப்பாக தமிழ் ஒரு பாடமாகப் படித்தவர்களுக்கு:நிதமும் மனதில் நிழலாடும் கரும்பாயினிக்கின்ற நினைவுகள், பல்கலைக்கழகத் தமிழ்ச் ஆகத்தின் நடவடிக்கைகள்தான் rgrq எவரும் துணிந்து கூறலாம். ஆண்டுதோறும் ஒருநாடகம்; இனிய சொற்பொழிவுகள்,விவாதங் தூண்டிவிடும்போட்டிகள் என்று:பல்வேறுவரைத்தான நிகழ்ச்சிகள் இடம் பெறுவதுண்டு;இவற்றின் சிகரம் போன்று. ஆண்டினிறுதியிஸ்இசங்கதிர்' சஞ்சிகை
வளிவரும்.
܊ ܥܕ: n •و ¥ÀÑ 新
y
முன்னைய •8ಣ್ಣೇ ಙ್ಗಹರ್ಕ பற்றிய
பரங்:ஈழாலப் பிரதான நிகழ்வுகளைப் ரதிபலிக்கும் கவிதைகள், கட்டுரைகள், சிறுத்தைகள் முதலியனவற்றைத்தாங்கிவரும்'இளங்கதிர்ப்ரதிகளைப் பெறுவதில் ஆவலாயிருப்பவர்கள் அவற்றை தகவல்
பெட்டகம் எனக்கருதிப்பத்திரப்படுத்தியும் வைத்துள்ளனர்.
 
 
 
 
 
 

ர்ர்விழுபது ஆண்டுகளுக்கு முன்பு, இலங்க்ை
க்கேழகக் கல்லூரி 1928ம் ஆண்டில் ஆரம்பக்ானதில், 1926-ம் ஆண்டு தமிழ்ச்சங்கிக் ஆரம்பிக்கப்ப்ட்டது. 1942-ம் ஆண்டில் இலங்க்ைஷ் பல்கல்ைக் கழகம் தோன்றியபின்ன்ரும்; தமிழ்ச் சிங்கம் தொடர்ந்து இயங்கியது. இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராயிருந்த 947,46?
{{}} క్రై ?"{\ { விபுலானந்தரின் மறைவைத் தொடர்ந்து பேராசிரி
፰ኽ የለYኳ1ፑእk
(ဈ:#fiစ္?ခုးအံ့(4
* * *:* ് - ஊங்ஜிர்
గ్గాr y *發鷲 {W認眾認為尊
து. கொழுழ‰...ቋT 铅
5
வளியாயின.19 2
عتیق پیام. این و از :
ழகத்தின்,இருழ்
ஈடின் பிற்பகுதியில் பல்க பகுதி பேராதனைக்கு மாற்றப்பட்டது.புேgாதனையில் மொத்தம் இருபத்தி மூன்று இதழ்கள் வூெஜிஆந்துள்ஐ இதுவரை வெளியிடப்பட்டுள்ள இருபத்தேழு இளங்கதிர் இதழ்களின்வரலாறுதான் இந்நூல்
** له نيجي பிள்ளை. அவர்கள். . . , ' 'if (ઇ... "f"
சங்கத்தின் சீத் 思慈 3ў பரரசி
6Ffurfir X- ۲.تانی قوانین (بلہ؟ بولر۔ پنڈی
SOSU ff uւմ ፰፮ : Š k❖ 'ጂ፭ & & Š 愁烈 o இராஜசூழஆரும் வித்தியானந்தனின் அடிச்சுவிட்ன்ட்ப் பெரிதும் விரும்பிப் பின்பற்றுபவரும், அவரின்
தற்பொழுது தமிழ்த்துை

Page 6
6 க. அருணாசலம்
பேரபிமானம் பெற்ற மாணவராய் இருந்தவருமான பேராசிரியர் சிதில்லைநாதன் ஆகியோர் எடுத்துள்ள முயற்சியால், ஏழு சகாப்தங்கள் ஆகிவிட்ட போதிலும் தமிழ்ச் சங்கம் இன்றும் துடிதுடிப்பாய் இயங்கிவருகிறது. இதுபற்றி, தமிழபிமானிகள் அனைவரும் பெரு 1)கிழ்ச்சியடையலாம்.
பேராதனையில் வெளியான முதல் இளங்கதிர்’ ஆசிரியராக இருக்கும் பாக்கியம்" என்க்குக் கிடைத்தது. அத்துடன், அடுத்த(ஆறாவது) இளங்கதிர்வெளிவருவத்ற்கு நானே முழுப் ப்ொறுப்பாயிருக்கும் வாய்ப்பும் கிட்டியது. இளங்கதிர் வளர்ச்சியில் சிறுபங்கேனுமேற்ற எனக்கு, அதன் ஆரம்பத்தில் சிம்பந்தப்பட்ட அனைவரையும் நன்கு தெரியும். அத்துடன், அவர்களோடு அன்பர்கவும், சினேகமாகவும் பழிகியபடியால், இந்நூல் வெளியிடும் வாய்ப்பு எனக்குக்' கிட்டியது பற்றி" அக மகிழ்ச்சியடைகிறேன்." ، ، ، ، ، ، ، ، ، ،
ஒவ்வொரு இளங்கதிர் இதழையும் உன்னிப்பாகப் பார்வையிட்டு, அவைகூறும் செய்திகளை நன்கு ஆராய்ந்து, பேராதனையில் தற்பொழுது சிரேஷ்ட யாளராயிருக்கும் கலாநிதி 岑° அருணாசலம் அவர்கள், அரும்பாடுபட்டு இந்நூல்ைத் தயாரித்துள்ளார்க்ள். இந்த அரிய முயற்சிக்கு அவர்களுக்கு நன்றி கூறுதல் வ்ேண்டும் என்பதைவிட தமிழுலகு பெரிதுமிக்டமைப்பட்டிருக்கிறது என்பதே பொருத்தமாகும்.நூண்லப்பிரிசுரிக்கும்வாய்ப்பை எனக்குத் தந்த கலாநிதி க. அருண்ர்சில்ம் அவ்ர்க்ளுக்கும்,

இந்நூலை மிகச் சிறப்பாகப் பதிப்பித்தளித்த சென்னை இளவழகன் பதிப்பக உரிமையாளர் வே. கருணாநிதி அவர்களுக்கும். எனது மனப்பூர்வமான நன்றி.
அவுர் சுட்டிக் காட்டியிருப்பதுபோல், 'இளங்கதிர் வெளியூரிட்டுள்ள கட்டுரைகள், கவிதைகள்,சிறுகதைகளின்
தொகுப்புகள், விரைவில் பிரசுரமாக வழி சிறக்க வேண்டுமென ஆசிக்கிறேன்.
- எஸ். எம். ஹனிபா.
O * . ● d *ஏங்கள் வாழ்வும் ஈர்கள் வளமும்
ழங்காத தமிழென்று சங்கே முழங்கு"

Page 7
முன்னுரை
பேராதனைப்பல்கலைக்கழகத்துடன் கட்ந்த இருக்திதேழுவில்:வ்ருeங்கள்#ாக: மாணவன்ாகவும்: விரிவுரையாளனாகவும் தொடர்பு 2கொண்டுள்ளவன் என்ற வகையில், பல்கலைக் கழகத்தின் தமிழ்ச்சிேங்க நடவடிக்கைகளையும் சங்கத்தின் ஆண்டு மலரான இளங்கதிரின்இேதழ்களில் வெளிவரும் ஆக்கங்களையும் அவதானித்துவந்துள்ளேன்.இந்நாட்டினதுமீதமிழ்டிபசும் மக்களினதும் பேராதனைப் பல்கலைக் கழகத்தின்தும், ஈழத்துத் தமிழ் இலக்கியத்தினதும் வரலாற்றுடன் அவை
பலிப்பனவாகவும் ລ່ທີ່ສໍາລັງ கின்றன.
 

காலக் கண்ணாடி இளங்கதிர்
வழக்கம் போலவே எனது நூலாக்கங்களுக்கு உற்சாகமூட்டி உந்துதல் அளித்துவரும் எனது மதிப்பிற்குரிய ஆசிரியப் பெருந்தகையும் பேராதனைப்
பல்கலைக் கழகத் தமி 舰翻纲 தலைவருமான பேராசிரியர் சி. தில்லைநாதீன் அவர்கள் இந்நூலாக்கத்திற்கும் உற்சாகமூட்டினார். அன்னாருக்கு எனது இதயம் நிறைந்த நன்றி.
'சுவாமி விபுலானந்தரின் சமயச் சிந்தனைகள் மலையுதத் தமிழ் இலக்கியூம்ஆகிய எனது நூல்களை
பெருந்தகை:இலக்கியமாமணி,தமிழ்மணி,சட்டத்தரணி, அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்களே இந்நூலையும்: எழுதத் துண்டுதல் அளித்தும், வெளியிட்டும். உதஷியுள்ளாரின்ேனாருக்கு எனது உள்ளம் நிறைந்த நன்றிகள்
தமிழ்த்துறை, க:அருணாசலம்: பேராதனைப் பல்கலைக் கழகம், பேராதனை, 22.2.1994

Page 8
இளங்கதிர் ஒரு வரலாற்று நோக்கு
நவயுகத்தின் தொடர்பு சாதனங்களுள், பத்திரிகைத் துறையும் இன்று மிக முக்கியமான தொன்றாக விளங்குகின்றது.பத்திரிக்கைகள் தினசரிப்பத்திரிக்கைகள் நினைவுமலர்கள் ஆண்டு மலர்கள் எனப் பலதிறப்படுத் விடு ப் போராட்ட இயக்கங்கள் முதல் காலத்துக்குக்
காலம்குட்டிபோட்டுப்பெருகும் அரசியல்கள் வரை,
பயன்படுத்துகின்றன. நவீன இலக்கிய வளர்ச்சிக்கும் பரிசோதனை முயற்சிகளுக்கும் பத்திரிகைகள் முக்கிய பங்களிப்புச் செய்துள்ளமையும் செய்து வருகின்றழையும்
இவவகையிலே, பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச்சிங்கத்தின் ஆண்டுமலராக விளங்கும்'இளங்கதிர்' சஞ்சிகையும் 1948ம் ஆண்டு முதல். இற்றைவரை
 
 

காலக் கண்ணாடி இளங்கதிர் 17
தமிழியலின் வளர்ச்சிக்குப் பல்வேறு வழிகளிலும் அரும்பணிகள் ஆற்றிவந்துள்ளதை அவதானிக்கலாம். அப்பணிகள் பற்றி, வரலாற்று நோக்கில் மதிப்பிடுவதாக இந்நூல் அமைகின்றது.
தமிழ்ச்சங்கத்தின் தோற்றம்
குறிப்பிட்ட ஏதேனும் ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகச் சிலரோ பலரோ ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பே, சங்கம் எனப்படும். ஒருவர் தனித்து நின்று சாதிக்க முடியாதவற்றைப் பல்ர்து கூட்டு முயற்சியின் மூலம் சாதிக்க முடிகின்றது. சிங்கம் என்னும் சொல் மேற்குறிப்பிட்ட பொருளில் மீட்டுமன்றி அழகு ஒரு தொகை நிதி, சங்கு கோடர் கோடி,புண்ர்ச்சி. 4Fopu, அன்பு பேரெண், நெற்றி, படைப்பிரிவு என்ப் பல பொருளையும் குறித்து நிற்குமாயினும், இன்று மேற்கண்ட பொருளிலேயே பெருவழக்குப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. & " : : -
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே, மதுரையிற் புலவர்களும் புரவலர்களும் கூடித் தமிழார்ாய்ந்திக்ழகம் அல்லது சங்கம்.கூடல்'தொகை'அவை'புண்ரீமுதலிய
பெயர்க்ளால் அழைக்கப் பெற்றதைச் சான்றிக்ள் வாயிலாக் அறியமுடிகின்றது. இது பேர்ன்றே உல்கின்
பலபாகங்களிலும் அரசியல் பீொருள்ர்தர்ர்ம், சமூகம் சமயம்,கல்ை-இலக்கியம்முதலியபல்வேற்துறைகிளிலும் பணியாற்றிவரும் இல்க்ப்புகழ்பெற்ற சங்கங்க#*ச் உள்ள்ன்த நrம்றித்ததே. இவ்வின்க்ரில் சீரிவ்திேச் செஞ்சிலுவைச் சங்கம் முதல்,"இர்ர்ம்கிருஷ்ண் சங்கீம்

Page 9
2 கஅருணாசலம்
கழகங்களிலும் பிற இடங்களிலும் நிறுவிச் செயற்படுத்தி வருவதை நாம் இன்று கவனிக்கின்றோம். இந்தியா,
அவதானிக்கலாம்:
இலங்கையில் இன்று காணப்படும்:ல்கலைக் ாய்ப் பல்கலைக் கழகமாக } {}, '# {} **
 
 
 
 
 
 

காலக் கண்ணாடி இளங்கதிர் 8 13
அறுபத்தெட்டாவது வயதை எட்டிக் கொண்டிருக்கிறது. 1928-ம் ஆண்டுத் தொடக்கம்1940ம் ஆண்டுவரை, இலங்கைப் பல்கலைக் கழகக் கல்லூரியாக இயங்கிய நிறுவனம்1941-ம் ஆண்டு, இலங்கைப்பல்கலைக்கழகமாக
மாறியது. இல்
இடமாற்றம் பெற்றபொழுது தய பேராதனையில் இயங்கத்தொட்ங்கியது.
இளங்கதிரின்தோற்றமும் வளர்ச்சியும்.
தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டுரறத்தாழ இருபத்தொரு ஆண்டுகள் வரை. அதற்கெனச் சஞ்சிகையோ ஆண்டு மலரோவெளிவரவில்லை. அவ்விருபத்தோராண்டுக் காலமும்:தமிழ்க் சங்கம்:தமிழியலின் வளர்ச்சியின் பொருட்டுமேற்கொண்டிநவேடிக்கைள் செய்துமூடித்த பணிகள்முதலியனவற்றி விரிவாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்ளக்கூடியளிழுத்துமூலச்சொன்றுகள்மிக அரிதே.
இத்தகைய ஒரு:பெருங்குறைப்ாட்டினிை அறிந்த பேராசிரியர்: க.கணபதிட்டமின்ளை: Jaya,urf'assifaðir ஆலோசனைப்படி, அவரது:தனிவர்கிள்,ஃவிரிவுரை யூாளர்கள் மாணவர்கள்: முதலியோரின் ஒத்துழைப்பி ஈரல்1948ம்ஆண்டுஇளங்கதிர்மூதலாவது:இதழிf948424Alraisai ØSTன்றியது. * இாங் கதிக் ஐமுதலாவ் தி இதழாசிரியூராசுத்த சண்முககிந்தரAடிவிளங்கினார். பூல்கலைக்கழகத்தமிழ்க்சங்கத்தின் ஆண்டுமஸ்ரிவின்ற ஈகையிற்காலத்தாஜ்முற்றும்துெம்நீண்மகாலடியுளைப்

Page 10
க.அருண்ாசலம்
பெற்றிருப்பதும், தமிழியலின் வளர்ச்சிக்குப் பல்வேறு வகையிலும் பணியாற்றிச் சாதனைகள் பல புரிந்துள்ளதும் இளங்கதிர் ஒன்றே.
இளங்கதிர் சஞ்சிகைக்கு இவ்வருடத்துடன் நாற்பத்தாறு வயது நிறைவாகிறது. இக்காலப் பகுதியுள் எல்லாமாக இருபத்தேழு இதழ்களை வெளியிட்டுள்ளது. தமிழ்ச் சங்க வரலாற்றின் ஏற்ற இறக்கங்கள் 'தத்துகள் முதலியவற்றை ஒட்டியனவாகவே, இளங்கதிரின் வரலாறும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ச்சங்கம்,தனது நீண்டகால வரலா ற்றில் மிகவும்
துடிப்புடன் செயற்பட்டதும் பலதுறைச் சாதனைகளை நிலைநாட்டியதுமான காலகட்டம், 1950 -ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியே எனலாம். இக்கால்ப் பகுதியில் வ்ெளிவந்த இளங்கதிரின் இத்திகளும் கனதியான்வையாகவும் கீர்த்திரம்ான் படைப்புகளைக் கொண்டவ்ைய்ர்கவும் விளங்குதல், வித்ந்து கூறத்தக்க திொன்றாகும்.
தீளங்கிதீரின் முத்லாவது இதழ் அளவிற் சீர்திர்க்வும் சிறிய்த்தேழு பக்கங்களைக் கொண்ட தீர்க்வும் வெளிவந்துள்ளது. இரண்டாவது இதழ் எழுபத்தாறு Ljá45 klas606rujub epsórpraug Qsp எழுபத்தைந்துபக்கங்களையும்கொண்டுள்ளன.அதனைத் தொடர்ந்து வந்த இதழ்கள் அளவிற் பெரியனவாகவும், சுமார் நூற்றுப் பதினைந்து பக்கங்கள் முதல் நூற்றுத் தொண்ணூற்றெட்டுப் பக்கங்கள் வரை நீண்டனவாகவும், கனமிக்கனவாகவும் வெளிவந்துள்ளமை கவனிக்க
 
 
 

காலக் கண்ணாது இளங்கதிர் வேண்டியதாகும். இதுவரை, வெளிவந்த இருபத்தேழு இதழ்களுள் இருபத்தொரு இதழ்கள் 1970-ம் ஆண்டிற்குள் வெளிவந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
1970 -ம் ஆண்டைத் தொடர்ந்து, இற்றைவரையான ஏறத்தாழ இருபத்துமூன்று ஆண்டு காலப் பகுதியில் எல்லாமாக ஆறு இதழ்கள் மட்டுமே மலர்ந்துள்ளன. 19691970-ல் இளங்கதிரின் இருபத்தோராவது இதழ் கனதியும் காத்திரமும்மிக்கதாகவும்.பயன்மிக்கபலதுறைகள் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளைத்தாங்கியதாகவும்,வெளிவந்த பின், இருபத்திரண்டாவது இதழ்த்மிழ்ச்சங்கத்தின் பொன்விழா ம்லராகவும் அளவிற்சிறியதாகவும் 1976-1977-هb வ்ெளிவந்த்து. இதுபோன்றே, இருபத்து மூன்றாம். இருபத்துநான்காம் இதழ்களும் அளவிற்சிறியனவாக முறையே 1978-1979, 1980-1981 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்தன. இளங்கதிரின் இருபத்தைந்தாவது இதழ் நூற்றுப்பத்துப் பக்கங்களைக் கொண்டதாக 1981-1882 ல் வ்ெளிவந்தது. அடுத்து வந்த பத்தாண்டுகால்ப் பகுதியுள் பல்வேறு காரண்ங்களால் தமிழ்ச்சங்கித்தின் செய்ல்பாடுகள் தொய்ந்து காணப்பட்டன. இதினால் இளங்கிதிரின் இதழ்களும் வெளிவ்ரவில்லை. இளங்கித்ரின் இருபத்தாநிாவது இதழி, நூற்றி இருப்த்தீர்ண்டு பக்கிங்கிளிக் கொண்டத்ாக் ச்ச்-1632-ல் வெளிவ்ந்துள்ளது. இருபத்தீேழ்ாவ்து இத்தீ 1982-1893-ல் கீன்திமிக்கித்ாக்ஷ்மி சிம்ார் நிற்றி எழுபத்தைந்து
பக்கங்கின்ர்ச்சிக்ாண்ட்த்ாகவும் வெளிவந்துள்ளது.

Page 11
16 கஅருணாசலம்’
இளங்கதிரின் இருபத்தேழு இதழ்களுள் கனதிமிக்கதாக வெளிவந்துள்ள இருபத்தேழாவது இதழ்,
! crsööörif, இத்ழ்களிலிலிருந்து வேறுபட்ட சில பண்புகளைக் கொண்டுள்ளது. இளங்கதிரின் வரலாற்றிலேயே சமகால
డూ
“எரியும் பிரச்சனைகள் சில்வற்றைத் துல்லியமாகப்
பிரதிபலிக்கும் மூன்று சிறந்தகார்ட்டூன்கள் முதன்முதல், இருபத்தேழாவது இதழிலிலேய்ே வெளிவந்துள்ளன. i * 8; i ; : rல் நடாத்தப்பட்டகார்ட்டூன் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துக்கொண்ட artrtf(gebras ger Haji  ിഞ്ഞഖ பலிக ápá மாணவர்களாகிய எம்.ஐ.முகம்ட்மசூன்.எம்.எல்.ப்ெளசுல் அமீர், "; . . . . . . . . s:
பெரும்பால் ய்ங்க்ள் சார்ந்தனவாக இருப்பினும் அவை சமக்ால நிலைமைகளையும் எரியும் பிேர்ச்சின்ைகிளையும் துல்ாம்ப்ர்மாக்" எடுத்துக் காட்டும்
வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது."
இளங்கதிரின் இருள் சூழ்ந்த காலம்
பெற்ற கிளர்ச்சி, அதனைத் தொடர்ந்து இன்றுவரை நாட்டில் நிலவி வரும் அமைதியற்ற சூழ்நிலை,
 
 
 
 
 
 
 
 

காலக் கண்ணாடி இளங்கதிர் 17
பொருளாதார நெருக்கடிகள், அடிக்கடி 'இனக்கலவரம் என்ற பெயரில் இடம் பெறும் வன்செயல்கள், கடந்த பத்து வருடங்களாக இடம் பெற்றுவரும் பலப்பரீட்சைக் கெடுபிடிகள் , ஒரே பல்கலைக் கழகமாக இருந்த நிலை மாறிப் பல பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட்டமை, மாணவர்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சனைகள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு எனப் பல்வேறு காரணங்களைக் கூறலாமாயினும், இவையாவற்றுக்கும் மேலாக மாணவர்களது ஒற்றுமையீனமும் உற்சாக மின்மையும்ே இதற்கு முக்கிய காரணங்கள் எனலாம். 1958-ம் ஆண்டு இடம் பெற்ற வன் செயல்களின் போதும், அதனைத் தொடர்ந்தும் இளங்கதிர் இதழ்கள் தொடர்ச்சியாக வெளி வந்துள்ளமை மனங் கொள்ளத்தக்கது.
தமிழ் பேசும் மக்களதும் தமிழ்ச்சங்கத்தினதும் இளங் கதிரினதும் வரலாற்றில் 'இருள் ஆழ்ந்த காலம் எனக் கூறத்தக்க இக்கால கட்டப் பகுதியிலும், இளங்கதிரின் ஆறு இதழ்கள் மலர்ந்துள்ளமையும் அவ்வைந்து இதழ்களின் ஆசிரியர்களும் ஒரே குரலில் மாணவர்களின் ஒற்றுைைமயீனத்தையும் அசமந்தப் போக்கையும் சுட்டிக் காட்டியுள்ளமையும் கவனிக்கத்தக்கது. م”
"இன்றைய எமது தமிழ் பேசும் மாணவர்களிடையே ஒற்றுமையின்மை காணப்படுவது மிகவும் வெட்கப்படக் கூடிய விடயமாகும். ம்ற்றைய விடயம், நிகழ்ச்சிகளை இரசிக்கும் மனப்பக்குவம் குறைவு. இவற்றைக் கருத்திற் கொண்டு, எமது தமிழ் பேசும் மாணவர்கள் எதிர்வரும் காலங்களில் நடப்பார்கள் என நம்புகின்றேன்"

Page 12
19 5. அருணாசலம்
"ஏழு வருடங்களின் பின்னர் இம்மலரைப் 'பொன் விழா மலராக உங்கள் கரங்களிலே தந்துள்ளோம். அது எமக்குப் பெருமையாகவும் இருக்கிறது. ஏழு வருடங்களாக மூடிக் கிடந்த இருண்ட இருளை விலக்கிக் கொண்டு, இந்த இளங்கதிரை’க் கொண்டு வருவதற்கு நாம் பட்ட சிரமம்.இச்சிரமத்தை வெறும் பொருளாதாரச் சிரமம் என்று மாத்திரம் சொல்லிவிட முடியாது. பல பலவீனங்களைச் சில 'பலங்களைக் கொண்டு மோதிச் driidsm prlb செய்ய வேண்டியிருந்தது. நாங்கள் LuLLகஷ்டங்களையும் சிரமங்களையும் ஏற்கும் ஒரு சிரத்தையுள்ள குழு சங்கத்தைஏழு வருடமாக ஏன் தாங்க முடியாமற் போய் விட்டது."
"இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தின் அரை நூற்றாண்டு கால வரலாற்றுப் பின்னணியுடன் எதிர்காலத்தை நோக்கி வீறுநடை போடும் இளங்கதிரின் பொறுப்புகள் சாதாரணமானவைகளல்ல. 6T Lib மாணவர்களின் மத்தியிலுள்ள பலவகைப்பட்ட அரசியல், சமுதாயக் கண்ணோட்டங்களிடையே நடுநிலை வகிக்க வேண்டிய பாரிய பொறுப்பு அதனுடையது.மொழி வழிச் சங்கமொன்றின் பத்திரிகை என்பதால், அதனைத் தனியொரு இனத்தின் பத்திரிகையென்றோ, எம் மாணவர்களுள் ஒரு சாராரை மட்டுமே பிரதிபலிக்கும் பத்திரிகையென்றோ வருணிப்பது தவறு. துவேசமான இனவாதம் அதன் நோக்கமல்ல. சுபீட்சமான நல்லுறவே அதன் நோக்கம்.முடிக்குமுன் உங்களிடம் ஒருவார்த்தை; குறிப்பாக எதிர்காலப் பல்கலைக்கழக மாணவர்களுக்குஉதித்தஇளங்கதிரைநீடுநின்று சுடரொளிபரப்பச் செய்யும் கடமை உங்கள் கைகளில்தான் இருக்கிறது"

காலக் கண்ணாடி இளங்கதிர் fg
"தமிழ்ச் சங்கச் செயற் குழுவின் செயற்பாடுகள்
முழுமை பெறுவது, இளங்கதிர்ச்சஞ்சிகை வெளியீட்டுடன் என்பது எம்மில் பலரறிந்த உண்மை. ஆனாலும் மாணவ சகோதர சகோதரிகளினால் நிரப்பப்பட வேண்டிய Ps ov wasஅவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பக்கங்கள் ஏனோ தானோவென, நிரப்பித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில், நிரப்பப்பட்டன. இந்நிலை இனி வரும் இளங்கதிருக்கும் ஏற்படக் கூடாது. அப்பணியைச் செவ்வனே செய்து தரமான இளங்கதிரை வெளியிட எமது மாணவ சமுதாயம் முன்வரவேண்டும் என்பது எனதவா" என வரும் பகுதிகள் மனங்கொள்ளத்தக்கவை. இந்து மாணவர் சங்கம்
பேராதனைப் பல்கலைக் கழகத்தில், கடந்த சில தசாப்தங்களாகத் துடிப்புடன் இயங்கி வரும் இன்னொரு சங்கம்'இந்து மாணவர் சங்கமாகும்.இதன் ஆண்டுமலராக வெளிவரும் 'இந்து தருமம் சமயம் தொடர்பான அரிய விடயங்களைத் தாங்கி வரும் காத்திரமான மலராக விளங்குகின்றது. இதேபோன்று, முஸ்லிம் மாணவர் களுக்கென இயங்கி வரும் முஸ்லிம் மஜ்லிஸ், இடையிடையே வெளிவரும் அதன் ஆண்டு மலரான மஜ்லிஸ் சஞ்சிகையும் கவனத்திற் கொள்ளத்தக்கவை.
இதுபோன்றே, இன்றைய களனிப் பல்கலைக் கழகம், வித்தியோதயாப்பல்கலைக்கழகம், கொழும்புப்பல்கலைக் கழகம் முதலியவற்றில், சிலகாலம் தமிழ் மொழி மூலம் கற்கை நெறி இடம் பெற்றபோது வெளிவந்த 'இளந்தென்றல்' முதலிய ஆண்டு மலர்களும் கட்டுப் பெத்தைப்பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவரும் நுட்பம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளிவந்த

Page 13
20 க. அருணாசலம்
‘செந்தழல்' பொதிகை முதலிய ஆண்டு மலர்களும் ஆரம்பத்திற் பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் பின்பு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் சிலகாலம் வெளிவந்த'சிந்தண்ன என்னும் காலாண்டுச் சஞ்சிகையும் பேராதனைப் பல்கலைக் கழகத்திலிருந்து வெளிவந்த 'உரிமைக் குரல் முதலிய சஞ்சிகைகளும், தமிழியல் வளர்ச்சிக்கான அவற்றின் பங்களிப்புகளும் இளங்கதிரின் பணிகளுடன் ஒப்புநோக்கத்தக்கவை.
இளங்கதிரும், தமிழியலும்
தமிழியல்"என்னும் பதம் கடந்த சில தசாப்தங்க 6Trrascal ஆய்வுலகில் பரிச்சயமாகியுள்ளது. ஆய்வுலகில் ஏற்பட்டுள்ள புதிய பரிமாணங்களையும், அணுகு முறைகளையும், நோக்கு நிலைகளையும் சுட்டும் வகையில், அச்சொல் அமைந்துள்ளது. தமிழ் ஆய்வு என்பது வெறுமனே இலக்கியம், இலக்கணம், மொழி வரலாறு, தருக்கம், சாத்திரம் முதலியவற்றுடன் அமையாது தமிழுடன் தொடர்புடைய உளவியல். பொருளியல், தொல்பொருளியல், வரலாறு அரசியல், புவியியல், மானிடவியல், சமூகவியல், மொழியியல், நாட்டாரியல் முதலிய துறைகளையும் உள்ளடக்கி நிற்கிறது. இவை ஒருங்கிணையும்போதே தமிழியல் செழித்தோங்கமுடியும் என்பர். இளங்கதிரின் இதழ்களில் இடம் பெற்றுள்ள ஆக்கங்கள் பல இவ்வகையில் நோக்கத்தக்கவை.
1948-ம் ஆண்டுவெளிவந்த இளங்கதிரின் முதலாவது
இதழின் ஆசிரியராகிய த.சண்முகசுந்தரம் தமது குறிப்புரையில், "இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்ச்

காலக் கண்ணாடி இளங்கதிர் 21
சங்கம் சென்ற இருபத்திரண்டு ஆண்டுகளாக் வளர்ந்து வருகின்றது. இச்சங்கம் முதன்முதலாக மலரை வெளியிடுவது இவ்வாண்டிலேதான். எனவே, இவ்வாண்டு நமது தமிழ்ச் சங்க வரலாற்றில் பிரதான gllb பெற்றுள்ளது. நமது சங்கம் தமிழ் மொழியையும் தமிழர் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை வளர்ப்பதற்காகவும், எம்மோடு தொடர்புடைய ஏனைய பண்பாடுகளைக் கற்றறிந்து கொள்வதற்காகவும், நிறுவப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே.இப்பணியை ஏற்று.எமது சங்கம் தனது குறிக்கோளில் ஒரு சிறிதும் வழுவாது ஆற்றிவருகின்றது" எனத் தமிழ்ச் சங்கத்தினதும் இளங்கதிரினதும் நோக்கத்தைக் குறிப்பிடும் ஆசிரியர், தொடர்ந்து, "இன்று எமது நாடு, எம்மொழி, கலை ஆகியவற்றை ஆர்வத்துடன் பயிலும் நிலைமை எய்திவிட்டது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னோ நிலை வேறு. ஐரோப்பிய நாகரிகத்தின் நன்மையையும் திமையையும் பகுத்துப் பார்க்கும் ஆற்றல், நம்மிடம் இருக்கவில்லை. பகுத்துப் பார்க்காமல், எல்லாவற்றையும் உட்கொண்டோம். எமது நாட்டவர் என்று சொல்லவும் தாய்மொழியைப் பயிலவும் g5LDgil பிறப்புரிமையான பண்பாட்டை மேற்கொள்ளவும் நாணினர் நம்மவர். தமிழ் தளர்வுற்ற அந்நாளிலே, எமது சங்கத்தின் முன்னணியில் நின்றவர்களின் வீரத்தையும் ஆர்வத்தையும் நாம் பாராட்டல் வேண்டும். அன்னாரின் விடா முயற்சியினாலேயே, எமது சங்கம் வலியுற்றுத் திகழ்கிறது. அப்பெரியோர்களுக்கு எமது நன்றியை இன்று செலுத்தல் சாலச் சிறப்புடையதே" எனக்கூறியுள்ளமையும் நோக்கத்தக்கது.

Page 14
22 க. அருணாசலம்
இளங்கதிரின் இரண்டாவது இதழில் ‘பொறி விளக்கம் என்ற தலைப்பின் கீழ், தமிழ்ச் சங்கத்தினதும் இளங்கதிரினதும் பொறி (இலச்சினை) பற்றிச் சற்று விரிவாக விளக்கப் பட்டுள்ளது. வட்ட வடிவமாக அமைந்துள்ள செந்தாமரை மலர் உருவுக்குள் கண்ணும் யாழும் ஏடும் பொறிக்கப்பட்டுள்ளன. 'ஏடு கல்வியையும் யாழி' இசையையும் சங்கு வடிவின தாக அமைந்துள்ள கண் அறிவையும் அறிவின் தெளிவையும் குறிப்பிடுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இளங்கதிரின் முதலாவது இதழில் 'இம்மலரில். என்ற தலைப்பின் கீழ் அதன் ஆசிரியர் விரிவாகக் குறிப்பிட்டுள்ள ஒரு விடயம் இன்றுவரை வெளிவந்துள்ள இளங்கதிரின் ஒவ்வொரு இதழுக்கும் முழுக்க முழுக்கப் பொருந்தக் கூடியதே. இளங்கதிர் வெறுமனே ஓர் இலக்கியச் சஞ்சிகையல்ல; அது தமிழியற் சஞ்சிகையே என விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இளங்கதிரில் காணக்கூடிய சிறப்பம்சங்களுள் ஒன்று, இளங்கதிரின் ஒவ்வொரு இதழும் அவ்வப்போதைய சூழ்நிலைகளையும் வரலாற்றுப் போக்குகளையும் பிரதிபலித்து நிற்பதும், அவற்றின் தாரதம்மியங்களை அலசுவதுமாகும். இளங்கதிரில் இடம்பெறும் இதழாசிரியர் குறிப்புரை தொடக்கம் அதில் இடம் பெறும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், உரைநடைச் சித்திரங்கள், நகைச்சுவைச் சித்திரங்கள், செயலாளர், தலைவர், பெருந்தலைவர் முதலியோரது குறிப்புரைகள் வரை, இவ்வுண்மையினை அவதானிக்கலாம்.

காலக் கண்ணாடி இளங்கதிர் 23.
இளமையும், துடிப்பும், செயல் வேகமும் கொண்ட பல்கலைக் கழக மாணவர்கள். தமிழ் மொழி, பண்பாட்டம்சங்களைப் பேணிப் பாதுகாக்கவும் வளர்க்கவும் முயன்று கொண்டிருந்த அதே சமயம், மேலைத்தேய அரசியல், மொழி, பண்பாட்டு ஆதிக்கங்கள் மேலோங்கியிருந்த இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், சுதேசிகள் மத்தியிற் காணப்பட்ட விதேசிய மோகத்தினைக் கண்டிக்கவும் சுதேச மொழி பண்பாட்டம்சங்களைப் போற்றுமாறு வற்புறுத்தவும் தயங்கியதில்லை.
ஆங்கில மோகம்
1960-களின் ஆரம்பம் வரை, பல்கலைக் கழகத்திற் பயின்றவர்கள் ஆங்கிலமொழிமூலமே கற்றனர் என்பதும், அந்நாட்களில் சுதேச மொழிகளும் பண்பாட்டம்சங்களும், பெருமளவு புறக்கணிக்கப்பட்டு ஆங்கிலமும் மேலைப் பண்பாட்டம்சங்களும் அதிகம் பேணப்பட்டன என்பதும், சுதேசிகள் பலர் மேலைத்தேயப் பண்பாட்டம்சங்களை மோகித்து மயங்கியிருந்ததோடு தமது பாரம்பரியப் பண்பாட்டம்சங்களையும் மொழியையும் உதாசீனம் செய்தனர் என்பதும் மனங்கொள்ளத்தக்கது.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து. இந்தியாவில் விடுதலைப் போராட்டம் உக்கிரமடையத் தொடங்கியதும் கூடவே, விதேசிய மோகம் பெருங் கண்டனத்திற்குள்ளாகியது. ‘வெள்ளையனே வெளியேறுஎன்பதுடனமையாது. அவர்களது உற்பத்திப் பொருட்கள், பண்பாட்டம்சங்கள் முதலியன

Page 15
24 க. அருணாசலம்
பகிஷ்கரிக்கப்பட்டுச் சுதேசப்பற்று வற்புறுத்தப்பட்டது. லோகமான்ய பாலகங்காதர திலகர், விபின சந்திரபாலர், லாலாலஜபதிராய், மகாத்மா காந்தி முதலிய அரசியல் தலைவர்கள் முதல் தாகூர், இக்பால், பாரதி முதலிய யுகப் பெருங்கவிஞர்கள் வரை, அவர்கள் வற்புறுத்திய கருத்துகள் இங்கு கவனத்திற்கொள்ளத்தக்கவை. காந்தியக் கருத்துகள் பல தாரக மந்திரமாக ஒலிக்கப்பட்டன. இவை அந்நாளில் இந்தியாவுடன் மட்டும் நில்லாது இலங்கையையும் வெகுவாகப் பாதித்தன. குறிப்பாக, அன்றைய பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் அவை எத்தகைய வரவேற்பைப் பெற்றன : எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதை அப்போது வெளிவந்து கொண்டிருந்த இளங்கதிர் இதழ்கள் வெளிப் படுத்தியுள்ளமை கவனிக்கத்தக்கது.
இளங்கதிரின் நான்காவது இதழில் அதன் ஆசிரியர் மிகுந்த விசனத்துடனும் உள்ளக்குமுறலுடனும் நையாண்டியாகவும் கூறியுள்ள வாசகங்கள் சில வருமாறு: di W0*** W ஒரு பரிதாபகரமான கதை கூற விரும்புகிறோம். மன்னிக்க வேண்டும். கதை எங்களைப் பற்றியது. திந்தமிழ் பாடியநல்லியலார் மரபில் வந்த எங்கள் தாய்மார், தமிழை எமக்கு ஊட்டவில்லை. ஆங்கிலத்துடன் கலந்து அதன் தூய்மையையும் பெருமையும் கெடுத்து - எம்மையும் கெடுத்து ஊட்டினார்கள்.
"வேல் கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇப்பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவித் தனது குலக் கொழுந்தாய் எஞ்சியிருந்த ஒருமகனைப்போர்க்கணத்திற்கு அனுப்பிய தாயின் மரபில் வந்த அவர்கள். அரசாங்க உத்தியோகத்திற்கு அடிபணியும் 1949-68pta

காலக் கண்ணாடி இளங்கதிர் 25
மனப்பான்மையைத் தந்தார்கள். ஏதோ மூன்று நான்கு ஆண்டுகள் தமிழ் படித்தோம். பின்னர், ஆங்கிலப்பள்ளிக் கூடம். அங்கே சீர் கேடாக வாழ்ந்தோம். வாய் தவறித் தமிழைக் கதைத்தால், குற்றம். சின்னத் தம்பிப் புலவர் பிறந்த ஊர் தெரியாது. மில்டன் கவிதைகளை ஒன்றும் விளங்காமற்படித்தோம். ஆங்கில நாட்டுச் சரித்திரம், பூமி சாத்திரம் எல்லாம் படித்தோம். வெட்கம் கெட்ட கதை அந்நிய ஆட்சியின் கீழ் நடந்தது. அதனைக் கூற வேண்டியிருப்பதற்கு வருந்துகிறோம். உத்தியோ கத்துக்காக எங்களுடைய மொழியை விற்றோம். எங்களுடைய இலக்கியங்களை விற்றோம். தமிழ் படித்துத் தாமாக வாழத் தலைப்பட்ட நம்மவர்கள், அந்நியர்களானார்கள். எப்பொழுது நாங்கள் எமது இலக்கியங்களை விற்றோமோ அப்பொழுதே நம் முன்னோர்கள் வாழவில்லை என்று ஆக்கிக் கொண்டோம். காட்டுமிராண்டிகளானோம். அழிந்து ஒழிந்து போகாது எம்மைக் காப்பாற்றிய பெருன்ம, எம் தலைவராகிய நாவலருடையதாகும். ஆனால், நாங்கள் என்னவோ மோட்டார் வண்டியிற் காற்சட்டை அணிந்து உல்லாசமாக உலாத்தும் நாகரீகமடைந்த காட்டுமிராண்டிகளாகவே வாழ்ந்து வந்தோம் 3 வருகிறோம் இவ்வாறு நிலை தவறி நிற்கின்ற எம்மை நோக்கிச் சூறாவளிக் காற்றும் அடிக்கின்றது" 1952 -ம் ஆண்டு, வடபகுதியிற் பெருஞ்சேதத்தை ஏற்படுத்திய சூறாவளி பற்றிய குறிப்பு இதழாசிரியரின் உரையில் மட்டுமன்றி, அவ்விதழின் வேறு சில இடங்களிலும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Page 16
26 க.அருணாசலம் இன, மொழி உணர்வுகள்
1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதையடுத்து மாநில, இன, மொழி உணர்வுகள் தலைதூக்கல்ாயின. குறிப்பாகத் தென்னிந்தியாவிலும் அதனிலும் பார்க்கத் தமிழகத்திலும் இன.மொழி உணர்வுகள் கொழுந்துவிட்டு எரியலாயின. சி.என். அண்ணாதுரையின் தலைமையில் இயங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர செயற்பாடுகளும், அண்ணாதுரையின் உணர்ச்சி மிக்க வீறார்ந்த சொற்பொழிவுகளும் மத்திய அரசினால் மேற்கொள்ளப்பட்ட ஹிந்தி மொழித் திணிப்பும், இவற்றுக்கு மேலும் உரமூட்டின.
1948 -tb ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதையடுத்து வளர்ந்து வந்த இன. மொழி உணர்வுகள், 1956-ம் ஆண்டில் பதவியேற்ற அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக் கைகளால், கொழுந்து விட்டு எரியலாயின. 1919-ம் ஆண்டிலிருந்தே கால் கொள்ளத் தொடங்கிய இன முரண்பாட்டு உணர்வுகள். 1956-ம் ஆண்டினையடுத்து, உக்கிரமடையலாயின. தமிழ் பேசும் மக்கள். தமது எதிர்காலம் பற்றி அச்சத்துடன் நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தமது மொழியையும் கலைகளையும் பண்பாட்டம்சங்களையும் பேணிப் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தத்தை அன்றைய சூழ்நிலைகள் ஏற்படுத்தின. மேற்கண்ட நிலைமைகள் அன்றைய பல்கலைக் கழக மாணவ்ர்கள்ையும் விரிவுரையாளர்களையும் பேராசிரியர்களையும் பிறரையும் எந்த அளவிற்குப் பாதித்துள்ளன என்பதை அக்காலப்பகுதியில் வெளிவந்த

காலக் கண்ணாடி இளங்கதிர் 27
இளங்கதிர் இதழ்களே துல்லியமாக வெளிப்படுத்திநிற்பதை அவதானிக்கலாம்.
இளங்கதிரின் ஐந்தாவது இதழாசிரியர் தமது உரையில், "...இலங்கையிலுள்ள முதன்மைக் கல்வி நிலையமாகிய பல்கலைக் கழகம், இப்பொழுது ஒரு சிறந்த இடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.அமைதியற்றகொழும்பு நகரத்தை விடப்பல்கலைக் கழகப்படிப்புக்கு உகந்த இடம், பேராதனைதான் என்பதில் ஐயமில்லை. இவ்விரு இடங்களிலுமுள்ள காலநிலையை நோக்குமிடத்து, பேராதனையில் என்றும் தண்மை நிலவுவதையும், கொழும்பு ஆண்டு முழுவதும் தாங்கொணா வெப்ப நிலையில் இருப்பதையும் காணலாம். படித்துப் பட்டம் பெற விரும்புகிறவரும் ஆழ்ந்த ஆராய்ச்சியிலிறங்கும் நோக்கமுடையவரும், பேராதனையையே விரும்புவர். கல்வித்துறையிற் பேர்போன துணைவேந்தர். சேர். ஐவர் ஜெனிங்ஸ், இதைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். "பேராதனையில் ஓர் இரவைக் கழித்த ஒருவர். தளர்ச்சித் தன்மையும் விவேக விருத்திக்கு ஒவ்வாத சூழ்நிலையுமுள்ள கொழும்புக்குப் போக எப்படி விரும்ப முடிமென்று என்னாற் கற்பனை கூடச் செய்ய முடியாமல் இருக்கிறது." எனப் பல்கலைக் கழகம் கொழும்பிலிருந்து பேராதனைக்கு 1952-ம் ஆண்டு மாற்றப்பட்டமையையும் பல்கலைக் கழகப் படிப்புக்கும். ஆழ்ந்த ஆராய்ச்சி முயற்சிகளுக்கும் எல்லா வகையிலும் உகந்த இடமாகப் பேராதனை விளங்குவதையும் சிலாகித்துள்ளார்.

Page 17
*y க. அருணாசலம்
தொடர்ந்து தமதுரையில்,".இலங்கைப்பல்கலைக் கழகத்தில் இனித் தமிழ் என்ன நிலையை எய்தும்? கொழும்பிலிருந்ததுபோல,ஆண்டுதோறும் தமிழ்ப்பாடம் படிக்கும் நிலைதான் தொடர்ந்து நடைபெறப் போகிறதா? அன்றி, ஆராய்ச்சித்துறையை எட்டிப் பார்க்கும் நிலையாவது அண்மையில் ஏற்படுமா? சென்னைப் பல்கலைக் கழகத்திற்போல, இங்கும் ஆராய்ச்சிக்கென ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டுப் பழங்காலத்தமிழர் சரித்திரம், தமிழிலக்கிய வரலாறு போன்றவைகளைப் பற்றி ஆராய்ச்சி ஏன் நடத்தக் கூடாது? இப்படியான ஒரு கேள்வியைக் கேட்பதற்கு இலங்கை வாழ் தமிழ் பேசும் பெருமக்கள் உரிமை உடையவர்களே. பேராதனையில் அரசாங்கம்அள்ளிக்கொட்டும் ஆயிரமாயிரக்கணக்கான ரூபாய்களில் ஒரு பகுதியைத் தமிழரும் கொடுத்தனர் என்பதனால் அல்ல, இன்பத்தமிழ்மொழியும் இலங்கையில் அரசாங்க அலுவல் மொழியாகப் போகின்றது என்ற காரணத்தால்." என பேராதனைக்கு மாறிய பின் வெளியான முதல் இளங்கதிர் ஆசிரியர் செ.மு. ஹனிபா அவர்கள், எழுப்பியுள்ள வினாக்களும், அவரது எதிர்பார்ப்புகளும் சிந்திக்கத் தக்கவை.
அரசியல் பிரசாரம்
இலங்கையின் அன்றைய பிரதான அரசியற் கட்சிகள் தமது அரசியற் பிரசாரத்துக்கு மொழியை மிக முக்கியமானதொரு கருவியாகப் பயன்படுத்த முயன்றன. அந்நிய மொழியாகிய ஆங்கிலம் உத்தியோக மொ ழி என்ற அந்தஸ்திலிருந்து இறக்கப்பட்டு, அதன் இடத்தில் சிங்கள

காலக் கண்ணாடி இளங்கதிர் 29
மொழியும் தமிழ் மொழியும் சம அந்தஸ்துடன் உத்தியோக மொழிகளாக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி யிருந்த நிலையிலேயே, 1953 - ம் ஆண்டு செ.மு. ஹனிபா அவர்கள் மேற்கண்டவாறு மிக்க மகிழ்ச்சியுடன் தமது கருத்தைத் தெரிவித்திருந்தார். அதே ஆண்டில், அவர் தமிழ் மன்றம் நிறுவி, இன்றுவரை தமிழ்ப் பணிபுரிவதிலேயே கண்ணும் கருத்துமாயிருப்பது, அவரின் தமிழ்பற்றுக்கு எடுத்துக் காட்டாகும்.
ஆயின், 1956 -ம் ஆண்டு ‘சிங்களமும் தமிழும் என்பதற்குப் பதிலாகச் ‘சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தமது எதிர்காலம் பற்றி நிலவிய அச்சமும் ஏக்கமும் மென்மேலும் அதிகரிக்கலாயின. இந்நிலையில், சிங்களம் அரசகரும மொழியானதைத் தொடர்ந்து விரைவிற் பல்கலைக்கழகம் வரை போதனா மொழியாக ஆங்கிலத்திற்குப்பதில் சிங்களமும் தமிழும் இடம்பெறுமா? அல்லது சிங்கள மொழியையே தமிழ் பேசும் மக்களும் போதனா மொழியாகக் கொள்ள வேண்டுமா? என்னும் அச்சம் மேலோங்கியிருந்ததை அன்றைய இளங்கதிர் இதழ்கள் வாயிலாக அறிய முடிகின்றது.
தமிழ் அரசகரும மொழியாகப் போகின்றது R செ.மு. ஹனிபா அவர்கள் இன்பக் கனவு கண்டது போலவே, அடுத்து வரும் இளங்கதிர் ஆசிரியர்களும் பிறரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்ததை அறிய முடிகின்றது.இளங்கதிரின் ஏழாவது இதழின் (1954-1955),

Page 18
30 க. அருணாசலம்
தாய் மொழி வாழ்த்துப் Lifr L-61 sög பண்டிதர் க. இராசையா. தமிழ் மொழியின் சிறப்புகளையும் பெருமைகளையும் எடுத்துக் கூறி, பாடல்களின் இறுதிதோறும், ".ஈழத்து மொழியாட்சி யிணைந்தூழி வாழி எனவும், .திசைபுகழ் ஆட்சி மொழி திருப்பெற்றே வாழி எனவும். நாடாளும் மொழியாகி நலஞ் சிறந்தே aft g" எனவும் தன்னை மறந்தலயம் தன்னில், மகிழ்ச்சிப் பெருக்குடன் பாடியுள்ளார்.
ஆயின், அவர்கள் கண்ட இன்பக் கனவுகள் எல்லாம் 1958 -ம் ஆண்டு தவிடு பொடியாகின. அதனால் ஏற்பட்ட குமுறல்களையும் கொந்தளிப்புகளையும் இளங்கதிரின் ஒன்பதாவது இதழ் (1956 - 1957) துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளது. அவ்விதழின் ஆசிரியர் செ. குணர்த்தினம் ஆசிரியர் குறிப்புகள்'என்னும் தலைப்பின் கீழ், 'ஈழத்தில் தமிழின் நிலை பல்கலைக் கழகத்தில் தமிழ்', 'தமிழ் பல்கலைக் கழகம் முதலிய தலைப்புகளின் கீழ் எழுதியுள்ள வாசகங்கள் கவனிக்கத்தக்கவை. அவற்றுட் சில வருமாறு.
"நாம் எதிர் பார்த்தது நடந்தே விட்டது. ஈழத்தில், தமிழன் இனித் தலை நிமிர்ந்து வாழ்வதெங்ங்னம்?.எம் இனத்தின் உயிர் நாடியாய் விளங்கிய தமிழ் மொழி ஒதுக்கப்பட சட்ட பூர்வமாய்ச் சிங்களம் அரசாங்க மொழியாகி விட்டது. சுயநலம்மிக்க தான்தோன்றித் தலைவர்களின் பாராமுகமான தன்மையினாலும், அவர்களது சரணாகதி மனப்பான்மையாலும், தக்க தலைவரின்றித்தடுமாறியதமிழினம்தன் உயிரான உரிமை

காலக் கண்ணாடி இளங்கதிர் 31
ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலைம்ை சிருட்டித்தாயிற்று. பெரும்பான்மைப் பலம் ஒன்றையே கொண்டு இதுவரை காலம் தமிழருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து, அவர்க்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்து நயவஞ்சகத்தனமாய், ஜனதாயக தத்துவத்தையே காற்றிற் பறக்கவிட்டுப் பெரும்பான்மை இனம் தமிழர் மீது தமது மொழியைத் திணிக்க முற்பட்டுவிட்டது. நயத்தாலும் பயத்தாலும் நயவஞ்சகமாக நடந்து கொண்டு தமிழ் இனத்தின் மீது சிங்களம் திணிக்கப்படுவதை நாம் எதிர்க்கின்றோம். சிறுபதவிகளுக்காக இனத்தைக் காட்டிக் கொடுத்து சிங்களத்தை நம்மவர்கள் ஏற்க மாட்டார்கள் என எதிர்பார்க்கிறோம்."
வரலாற்றுப் போக்கினைப் புரிந்து கொள்ளும் பல்கலைக்கழக மாணவன் ஒருவனின் உணர்ச்சி முனைப்புடனான இக்கூற்று சிந்தனையைத் தூண்டுவதாக அமைகின்றது. இற்றைக்கு ஏறக்குறைய முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பே, பல்கலைக் கழக மாணவன் ஒருவன் இவ்வாறு கூறியுள்ளமையும் அதன்பின் இன்றுவரை நடந்தேறியவையும், நடந்து கொண்டிருப்ப வையும் நாட்டு நலன் விரும்பும் எவரும் அலட்சியப்படுத்த முடியாதவையாகும்.
விடுதலையும் தமிழரும்
மேற்கண்ட்வற்றின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாக இளங்கதிரின் பத்தாவது இதழில் (1957 - 1958) இடம் பெற்றுள்ள இதழாசிரியரான ஆ. வேலுப்பிள்ள்ை அவர்களின் உரை உட்பட, பல்வேறு வகையான

Page 19
32 க.அருணாசலம்
ஆக்கங்களும் அமைந்துள்ளன. அவற்றுள் விதந்து கூறத்தக்க ஒன்று ‘விடுதலையும் தமிழரும் என்னும் தலைப்பிலமைந்துள்ள நீண்ட ஆய்வுக் கட்டுரையாகும். புகழ் பூத்த அரசறிவியல் அறிஞரான பேராசிரியர் ஜெயரத்தினம் வில்சன் அவர்களே இக்கட்டுரையின் ஆசிரியராவர். ஆய்வறிவுக் கண்ணோட்டத்துடன் எழுதியுள்ள அவர், தமது கட்டுரையின் இறுதியில், "... இதுதான் நமது நாட்டின் சுதந்திர வரலாறு. வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும், கட்டத்திலும் தமிழர்கள் சிங்களவருக்குப் பெருமளவில் உதவியுள்ளனர் என்பது புலனாகும். ஆயினும், எல்லோரும் வெவ்வேறு காலத்தில் மனமுடைந்துள்ளனர். இதுகாறும் கூறியவற்றால் நாம் அறிவதென்ன? இலங்கையில் சிங்களவர்-தமிழர் உறவானது நம்பிக்கைத்துரோகத்தின் வரலாறாகும். ஆயினும், உதைபட்ட போதும் நாட்டின் விடுதலைக்காகத் தமிழர்கள் ஒத்துழைக்க முன்வந்துள்ளனர். முறைக்கு முறை ஏற்பட்ட ஏமாற்றம், நம்பிக்கை வரட்சி ஆகியவற்றால் இன்றைய தமிழர்கள், தாம் வாழும் பிரதேசங்களிற் பிரதேச சுயாட்சி கோரும் அளவிற்கு வந்துள்ளதில் வியப்புண்டோ? இது மறுக்கப்பட்டால் பாகிஸ்தான், தெற்கு அயர்லாந்து போன்றவற்றின் பாதையைத் தமிழர் வகுப்பரோ? அடுத்த சில வருடங்களில் நடப்பவைகள் இக்கேள்விக்கு விடை பகர வல்லனவாக இருக்கும்" எனக் கூறியுள்ளமையும் அதே வருடம் இனக் கலவரம்'என்ற பெயரில் இடம் பெற்ற தமிழர்கள் மீதான மிலேச்சத்தன்மையான தாக்குதல் நடவடிக்கைகளும் ஏற்பட்ட உயிர் உடைமை இழப்புகளும், ஆழ்ந்த கவனிப்பிற்குரியவையாகும்.

காலக் கண்ணாடி இளங்கதிர் .33
1958 -ம் ஆண்டு இடம் பெற்ற கொடூரமான வன்செயல்களுக்குப் பின்னரும், 1959 -ம் ஆண்டு தமிழ்ச் சங்கத்தினால் நடத்தப்பட்ட விவாதப் போட்டிக்கான தலைப்பாக அன்றைய அரசியல் நிலைமைகளே அமைந்திருந்தமை மனங்கொளத்தக்கது.
இளங்கதிரின் பதினோராவது ஆண்டு மலரின் (1958 - 1959) ஆசிரியர் ச. அடைக்கலமுத்து (அமுது) காற்றே கேள்', 'வாழ்வும் தாழ்வும் தமிழ் பல்கலைக் கழகம் வருங்காலம் ஆகிய தலைப்புகளில் அன்றைய நாட்டு நிலைமைகள் பற்றிய தமது கருத்துகளை விரிவாகத் தெரிவித்துள்ளார். காற்றே! கேள் என்னும் தலைப்பின் கீழ், பிஜித் தீவின் கண்ணற்ற கரும்புத் தோட்டத்திலே, அன்று பெண்கள் பட்ட அவலங்களைக் கேட்டிருப்பாய் காற்றே'எனப்பாரதியார் கூறியதற்கொப்ப இதழாசிரியரும் 1958 -ம் ஆண்டு வைகாசி மாதம் இடம் பெற்ற இன சங்காரத்தை விரிவாகக் கூறியுள்ளார்.
"கால வெள்ளத்தில் நாட்கள் பல உருண்டோடி விட்டன. மாதங்கள் பல கழிந்து விட்டன. ஆனால் நேற்று நடந்தது போல் நினைவில் ஒலிக்கிறது. இனவெறி நாடகத்தின் துயர கிதம். அரசியல் அரியாசனம் ஏறுவதற்கு இனப் பகைகளையும் மதவெறிகளையும் தூண்டி விடுவது, குறுக்கு வழியாகும். ஆனால் நாசகார G3 au son aus 6mnt nT Güv நாட்டுக்குண்டாகும் வேற்றுமை வியாதியையும் பொருளாதாரப் புண்களையும் ஆற்றுவதற்கு, நினைவுக்கும் எட்டாத நெடுங்காலம் வேண்டியதாகும்.

Page 20
/ه
፵4- As is AFBI. தனிச் சிங்களம்'என்ற மாயக் குழந்தை நம் மண்ணிற் பிறந்த நாளிலிருந்தே தேசத்தின் ஒற்றுமை உணர்ச்சியும், சகோதர வாழ்வும் தகர்ந்து கொண்டே வந்தன. சிறுபான்மையினரின் கூக்குரல்கள் அலட்சியம் செய்யப்பட்டன. நீலவானத்தில் அழகிய வெண்திங்கள் போலச் சலனமில்லாமல் சென்று கொண்டிருந்த தேசக்கப்பல்.இறுதியில் இனவெறி என்றபாறையில் சென்ற வைகாசி மாதம் படீர் என்று மோதிற்று. அதன் பயங்கரமான ஒலி ஒவ்வொருவர் காதுகளையும் துளைத்தது."
இக்கூற்றுக்கு மேலும் விளக்கம் தேவையில்லை. 1950-களிலேயே வீறு கொள்ளத் தொடங்கிய இனவாதச் செயற்பாடுகள். இன்றுவரை தொடர்கின்றமையும் அதன் விளைவுகளும் உன்னிப்பாக
அவதானிக்கத்தக்கவை.
இதழாசிரியர், அன்றைய பல்கலைக் கழக மாணவனின் கண்ணோட்டத்தில் நின்று உணர்ச்சி முனைப்புடன் உண்மையின் ஒருபுறத்தைக் கூறியுள்ளது டனமையாது மறுபுறத்தையும் ஓரளவு விரிவாகச் சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதாவது, பெரும்பான்மை இனமக்கள் மத்தியில் இனவெறி கிடையாது எனவும், சுயநலம் பிடித்த அரசியல்வாதிகளே அதனைத் தமது இலாபத்திற்காக மக்கள் மத்தியில் வளர்க்க முயன்றனர் எனவும்,1958-ம் ஆண்டுக்கலவரத்தின் போது தமிழ் மக்களைக் காப்பா ற்றமுனை ந்ததால் சிங்கள மக்கள் பலரும் உயிர் துறந்தனர் எனவும், "கடந்த கலவரங்கள் சிங்களப் பொதுமக்களால் நிகழ்ந்தவையல்ல. தமிழருக்காக உயிர்விட்ட தியாகிகள் பலர் சிங்களக்

காலக் கண்ணாடி இளங்கதிர் 35
குலத்தில் இருந்தார்கள். இரு பெரும் சமுதாயத்தின் ஒற்றுமையை விரும்புகிறவர்கள் இலட்சக் கணக்கில் இருக்கிறார்கள். சிறப்பாகப் படித்த இளம் சந்ததியில், இந்த ஒற்றுமை மனப்பான்மை அதிகம் காணப்படுகிறது. தமிழருக்கு ஆபத்துகள் நிறைந்த சென்ற வருடத்தில் நமது பேராதனைப் பல்கலைக் கழக மாணவர்கள் தமிழர் வாழ்வுக்காக ஒரு வீர முழக்கம் செய்திருக்கிறார்கள். தமிழுக்கு சம அந்தஸ்துக் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டிருக்கிறார்கள்." எனவும் சுட்டிக்காட்டியுள்ளமை கருத்திற் கொள்ளத்தக்கது.
மேலும் அதே இதழாசிரியர், ‘வாழ்வும் தாழ்வும் என்னும் தலைப்பின் கீழ் அன்றைய தமிழ் தலைவர்கள் மத்தியில் நிலவிய ஒற்றுமையீனம், தமிழர் சமுதாயத்திற்குள்ளேயே இன்னொரு சிறுபான்ம்ை யினராக நடாத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உயர்த்தப்பட்டவர்கள் இழைத்த அநீதிகள், கொடுமைகள் முதலியவற்றைக் கண்டித்து சாதி வேறுபாடுகளை அறவே ஒழிக்கச் சகலரும் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததுடன், தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் தமிழ் - முஸ்லிம் சகோதரர்கள் மத்தியில் காலம் காலமாக நிலவி வந்த அந்நியோன்னிய உறவு. எவ்வாறு அரசியல்வாதிகளால் திட்டமிட்டுக் குலைக்கப்படுகிறது என்பதையும் விளக்கியுள்ளார்.
".கடந்தகாலத்தில் தமிழ்மக்களுடன் ஒன்றுசேர்ந்து அவர்களது அரசியல் வாழ்விலும் தாழ்விலும் உடன்கட்டையேறிய முஸ்லிம் சகோதரர்கள் இன்று தனிச்

Page 21
36 க. அருணாசலம்
சிங்களச் சட்டத்தைச் சிக்கெனப் பிடித்து வருவது. அவர்களுடைய ஆக்கத்துக்கு வழிவகுக்குமென்று நாம் நம்பவில்லை. ஆடையையும் அணிகலன்களையும் போல், மொழியை வேண்டியபோது நீக்கவும் விரும்பிய போது அணைக்கவும் இயலாது. பல நூற்றாண்டுகளாக, முஸ்லிம் மக்கள் தமிழில் ஊறித் தோய்ந்திருக்கிறார்கள். வழக்கொழிந்த பல செந்தமிழ்த் தாதுக்கள் கூட, இன்று அவர்கள் வாயில் இருக்கிறது. செந்தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அவர்கள் செய்த சேவை ஆராய வேண்டியதில்லை." என வரும் பகுதி மனம் கொளத்தக்கது.
1960-களின் ஆரம்பத்திலிருந்து தாய்மொழிக் கல்வி பல்கலைக்கழக மட்டத்திலும் - குறிப்பாக கலைத்துறையில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.ஆயின்.அவ்வாறு நடைமுறைக்கு வருமுன்பு, தமிழ் போதனா மொழியாகப் பல்கலைக் கழகத்தில் இடம் பெறுமா என்ற ஐயப்பாடும் ஆங்கிலம் அல்லது தமிழ்மொழிக்குப்பதிலாக, தமிழ்பேசும் மாணவர்கள் சிங்கள மொழி மூலமே பல்கலைக் கழகக் கல்வியைத் தொடரவேண்டி வருமோ! என்ற அச்சமும் அன்றையபல்கலைக்கழக மாணவர்மத்தியில் நிலவியதை அன்றைய இளங்கதிர் இதழ்கள் பிரதிபலித்து நிற்கின்றமை கவனித்தற்குரியது.
1956 - ம் ஆண்டில் ‘சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்டதும் மொழிப்பிரச்சனை பூதாகரமாகக் கிளம்பரியபோது அன்றைய பல்கலைக் கழக மாணவர்களையும், அது வெகுவாகப் பாதித்தது.

காலக் கண்ணாடி இளங்கதிர் 37
"அரசாங்கத்தின் அவசரக் கொள்கைக்கு ஏற்ப எங்கள் கலாசாலையும் சிங்களத்தையே போதனா மொழியாக்கி விடுமோ என்ற பயம் இங்கு கல்வி கற்கும் தமிழ் பேசும் மாணவருக்கு இருந்திருந்தால், அது இனியும் இருக்க நியாயமில்லை. அரசாங்கத்தின் கண்மூடிப்போக்கினைப் பின்பற்றாது, ஆங்கிலமே போதனா மொழியாக இருக்குமென்று பல்கலைக் கழகத்து ஆட்சிப் பீடம் தீர்மானித்திருப்பதைப் பாராட்டுகின்றோம். உயர்கல்வி நிலையமாம் இக்கலாசாலையில் தமிழ் பேசும் மாணவர்கள் படிக்கின்றபடியால், இங்கு இருந்தபடியே ஆங்கிலம் போதனா மொழியாக இருப்பின், எதுவித கஷ்டமும் நேராது.ஆயினும், பல்கலைக்கழக மாணவர்கள் எல்லோரும் சிங்களமும் ஒரு பாடமாக, அதுவும் கட்டாய பாடமாகப் படிக்க வேண்டுமென்று செனட் சபை முடிவு செய்தது பாரபட்சமான தொன்றாகும். சர்வகலா Frt&oguulatf சுயமொழியினைப் போற்ற முற்பட்டால், தமிழர்களுக்குத்தமிழையே கட்டாய பாடமாக்கவேண்டும். இதை விடுத்துச் சிங்களம் ஒன்றையே எல்லோரும் படிக்க வேண்டுமென்று கேட்பது முறையான தொன்றல்ல என்பதனையும் தெரியப்படுத்துகின்றோம். ஈழத்தின் உயர் கல்விப் பீடம் நியாயம் போற்றுமா?" " எனவரும் பகுதி சிந்திக்கத் தக்கது.
அன்றைய தமிழ்பேசும் மாணவர்கள் தமிழுக்குப் பதிலாக சிங்கள மொழியைப் போதனா மொழியாகக் கொள்வதிலும் பார்க்க ஆங்கில மொழியே தொடர்ந்து போதனா மொழியாக இருக்க வேண்டும் என விரும்பியதில் வியப்பெதுவுமில்லை.

Page 22
33 க. அருனாசலம்
மாற்றங்கள்
1950 -களின் பிற்பகுதியிலிருந்து நாட்டின் சகலதுறைகளிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வீறார்ந்த செயற்பாடுகள், சோசலிஸச் சிந்தனைகளின் பரம்பல், இடதுசாரி இயக்கங்கள் செல்வாக்குப் பெறத் தொடங்கியமை முதலியன காரணமாகக் காலம் காலமாகச் சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்கப் பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள். தமது அடிப்படை உரிமைகளுக்காகவும் விடிவுக்காகவும் கிளர்ச்சிகள், போராட்டங்கள். ஆலயப் பிரவேசம், தேநீர்க் கடைப் பிரவேசம் முதலியன நடத்தியமையும், தாழ்த்தப்பட்ட சமூகத்தையும் தொழிலாளி வர்க்கத்தையும் சேர்ந்த பலர் Jej TLĎLudš கல்வி அறிவுடனும் வாழ்க்கை அனுபவங்களுடனும் எழுத்தாள்ர்களாகப் பரிணமித்து, கலை, இலக்கியங்களைத் தமது போராட்டச் சாதனமாகப் பயன்படுத்தியமையும், அதே காலப் பகுதியில் இளங்கதிர் இதழ்களில் இடம் பெற்ற ஆசிரியத் தலையங்கங்கள், சிறுகதைகள், கவிதைகள், உரைச்சித்திரங்கள் முதலியவற்றில் ஒருபுறம் பேரினவாதத்திற்கு எதிரான போராட்ட உணர்வும் மறுபுறம் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான கருத்துகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளமையும், இங்கு சுட்டிக் காட்டத்தக்கவை.

காலக் கண்ணாடி இளங்கதிர் 39
இளங்கதிரின் பதினோராவது இதழில், அதன் ஆசிரியர், "...சிறுபான்மையினரான தமிழருக்குள் இன்னொரு சிறுபான்மையிருப்பதும், இருக்கச் செய்வதும் எமக்கு இழிவு தரும் செயலாகும். மேடையிலே சாதிப் பிரிவுகளுக்குச் சவுக்கடி கொடுத்து, நீதிநூல்களை எடுத்து விரிக்கும் தேசபக்தர்கள். 'வீட்டுக் கோடியிலே சிரட்டை எடுத்தா பொடியா, தேத்தண்ணி குடிக்க என்று கூறுவதைக் கண்டும், கேட்டும் வருகிறோம். வெளியிலே சுகாதார சேவை செய்வோர். வீட்டுக் குப்பையை முதலில் மூடி விடவேண்டும்.தூய நெஞ்சோடு, சாதிப்பிளவுகளை நீக்கத் தொண்டு செய்ய வேண்டும். பழமையினால் கறள் பிடித்த நமது சமுதாயத்தில், புதிய அறிவுப் பூச்சைப் பூச வேண்டும்" எனக் கூறியுள்ளமை உற்று நோக்கத்தக்கது.
1950 -களிலும் 1960 -களிலும் வெளிவந்த இளங் கதிரின் இதழ்களைக் கூர்ந்து நோக்கும் போது, சில உண்மைகள் புலப்படும். இளமைத் துடிப்பும் செயற்றிறனும் முற்போக்குச் சிந்தனைகளும் கொண்ட அன்றைய பல்கலைக்கழகமாணவர்கள்.நாட்டு நடப்புகளையும் உலக நிலைமைகளையும் வரலாற்றுப்போக்கினையும், எவ்வளவு தூரம் உன்னிப்பாகக் கூர்ந்து கவனித்துள்ளார்கள் என்பதும் அன்றைய நிலைமைகளையிட்டுஎவ்வளவுதூரம் சிந்தித்துள்ளார்கள் என்பதும், அவர்களது உள்ளக் கிடக்கைகள் எத்தகையன என்பதும், ஒரு சில புறநடைகள் தவிர அவர்கள் காலத்தின் போக்கையும் தேவையையும் உணர்ந்துகொண்டுமுற்போக்குச்சிந்தனைகளுடன் கூடிய முன்னேற்ற நடவடிக்கைகளை ஆதரித்ததுடன், அவற்றுக்கு உற்சாகமூட்டமுயன்றார்கள் என்பதும்,வர்க்க முரண்பாடு

Page 23
4. க. அருணாசலம்
கூர்மையடையத் தொடங்கிய நிலையில் சமூக ரீதியாகவும்
பொருளாதர ரீதியாகவும் பின்தள்ளப்பட்டும் அடக்கி ஒடுக்கப்பட்டுமிருந்த அடித்தளமக்களின் முன்னேற்றத் திற்கு, ஆதரவுக் கரம் நீட்டினார்கள் என்பதும் மனங்கொளத்தக்கவை.
இவ்வகையில் இதழாசிரியர்களின் குறிப்புரைகள் மட்டுமன்றி இளங்கதிர் இதழ்களிலே வெளிவந்த சி. தில்லைநாதனின் வாழ்க்கைச் சூழலிலே மனப்புண்' எம்.ஐ.எச். அமீரின் 'எதிர்பாராதது. சுசிலா சின்னத்துரையின் ‘எப்படி இருக்கிறது உலகம்.அ. சண்முக தாசின் அழைப்பிதழ்'ஐயோ வாசுகி, ஞானரதத்தின் அவனும் அவளும், க. குணராஜாவின் ‘பரிகாரம்' மு. தளையசிங்கத்தின் 'சைக்கிள்சவாரி'தேடல், செ. கதிர் காமநாதனின் 'நெஞ்சில் நஞ்சு செ. யோகநாதனின் சோளகம், செம்பியன் செல்வனின் 'சோளகம் முதலிய சிறுகதைகளும், கவிதைகள், கட்டுரைகள், உரைச் சித்திரங்கள் சிலவும் குறிப்பிடத்தக்கவை.
தமிழ்பேசும் மக்களுக்கெனத் தனியானதொரு பல்கலைக் கழகம் வேண்டுமென்னும் (é5üreib. eggy(Ipés நாவலர் காலத்திலேயே ஒலிக்கத் தொடங்கியதாயினும், இடையில் அக்குரல் ஒய்ந்து, பின்னர் 1940 -களிலேயே மீண்டும் உரமாக ஒலிக்கத் தொடங்கிற்று. சுவாமி விபுலாநந்தர் முதல். பலர் அடிக்கடி இக்கோரிக்கையை விடுத்தனர். 1950 -களின் பிற்பகுதியிலிருந்து நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி மிக்க சூழ்நிலைகளினால், இக்குரல்

காலக் கண்ணாடி இளங்கதிர் 4f
மென்மேலும் ஓங்கி ஒலிக்கலாயிற்று. இந்நிலைமைகளின் பிரதிபலிப்பினையும், கோரிக்கை " விடுத்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் நிலவிய ஒற்றுமையீ னத்தையும், அக்காலப் பகுதியில் வெளிவந்த இளங்கதிர் இதழ்களின் ஆசிரியத் தலையங்களிலும் பிறவற்றிலும் அதிகம் காணலாம். இளங்கதிரின் ஏழாம் இதழ் முதல் பதினோராவது இதழ் வரை (1954 - 1959), இக்குரல் தொடர்ச்சியாக ஒலித்துள்ளமையும் பதினோராவது ஆண்டு மலரின் ஆசிரியத் தலையங்கத்தின் 2 - தலைப்புகளுள் ஒன்றாகத் தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இளங்கதிரின் கருத்துகள் சில வருமாறு : "கடந்த LIGO ஆண்டுகளாக இளங்கதிர்’ ஆசிரிய பீடத்திலிருந்து எழுதுகோல் பிடித்தவர்கள், தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்று தனியாக அமைய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்கள். இன்று சிங்கள மக்களுக்கு வித்தியாலங்கார, வித்தியோதய என இரண்டு பல்கலைக் கழகங்கள் புதிதாய் அமைக்கப் பெற்றுள்ளன.தமிழருடைய மொழி, பண்பாடு, நாகரிகம் என்பவற்றைப் போற்றிப் பாதுகாக்க, ஒருபல்கலைக்கழகம் கூட இல்லை. மாற்றந்தாய் வயிற்று மக்களைப் போலத் தமிழினத்தை நடாத்திவரும் அரசாங்கம், நமது தேவையை நிறைவேற்றும் என்று எண்ணுவதற்கு இடமில்லை. பேராதனைப் பல்கலைக் கழகத்திற் படித்துப் பயன் பெற வாய்ப்புக் கிடையாத நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள், பிறநாடுகளுக்குச்

Page 24
42 4. அருணாகர்
செல்கின்றனர். ஈழ நாட்டிற் பல எழுத்தாளர்களும் நூலாசிரியர்களும் கவிஞர்களும் இருந்தும், அவர்களுடைய அறிவுகாட்டுப்பூவாகத் தேடுவாரற்றுக்கருகுகின்றது. இந்த நிலையில், நமக்கோர் பல்கலைக் கழகம் இன்றியமையாத தொன்றாகும்."
"எங்கள் நாட்டில் உயர்த்ரக் கல்வி உயர்தரமானதாகவே இருக்க வேண்டும் என்றும், எமது தலைவர்கள் குறுகியமன உணர்வின்றித்தேச நலனையும், உலக முன் மாதிரியையும் மனதிற் கொண்டு செயலாற்ற வேண்டும் என்றும் விரும்புகிறோம். இன்று குறுகிய மனப்பான்மையுடன் இன அடிப்படையிலும் மத அடிப்படையிலும் பிரதேச அடிப்படையிலும் ஆ எனக்கொருசொக்ளெற்வேண்டும்'என்றகுழந்தைமனோ' பாவத்துடன் பல்கலைக்க ழகமீ பல்கலைக் கழகம் என்று இடும் கூச்சல், ஈழத்தின் எல்லாத்திசைகளிலும் ஒலிக்கின்றது.ஆயிரங்காலத்துப் பயிரை அவசரப் ッ புத்தியினாற் பாழாக்குபவர்கள் எதிர்காலச் சந்ததி யினரால் நாசகாரக்கும்பல்' என்று பழிக்கப்படுவார்கள். நாட்டின் தேவையைப் புறக்கணிக்காது. தமிழ் பேசும் மக்களின் நலன்நாடி உருவாக்கப்படும்பல்கலைக்கழகம், உண்மையாகவே தமிழ் பேசும் சமூகத்துக்குப் பயன் விளைவிக்க வேண்டுமானால், எங்கள் தலைவர்கள் சுயபுத்தியுடன், போட்டி மனப்பான்மையின்றி, இன்ற்ைய தேவையைச் செவ்வனே உணர்ந்து செயலாற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறோம்"

காலக் கண்ணாடி இளங்கதிர் 43
1960 -களிலிருந்து இளங்கதிர்
ஆரம்ப கட்டத்தில், இளங்கதிர் இதழ்கள் தோறும் சுதேசப் பற்று, தாய் மொழிப் பற்று, பண்பாட்டுப் பாதுகாப்பு:தமிழாராய்ச்சிமுதலியனவற்புறுத்தப்பட்டன. இலங்கையிலும், சர்வதேச அரங்கிலும் ஏற்பட்டுவந்த சூழ்நிலை மாற்றங்களினால், இளங்கதிரின் மேற்கண்ட போக்கிலும் மாற்றங்கள் ஏற்படலாயின. பேரினவாத அரசியற் போக்கு வளரவளர, அதற்கெதிரான எதிர்ப்புக் குரல்களும் பல்வேறுவடிவங்களில்இளங்கதிர் இதழ்களில் வெளிப்படலாயின.
1960-களில், பல்கலைக்கழக மட்டத்தில் சுய மொழிக் கல்வி விருத்தி ஏற்படத் தொடங்கியதையடுத்து. பல மாற்றங்கள் ஏற்படலாயின. 1960-க்கு முன்னர் பல்கலைக் கழகத்திற் பயின்றவர்களுள், மிகப் பெரும் பகுதியினர் சமூகத்தின் மேல் மட்டத்தையோ மத்தியதர வர்க்கக் குடும்பங்களையோ சார்ந்தவராகவும், வசதி வாய்ப்புகள் நிறைந்தோராகவும் விளங்கினர். பெரும்பாலான பல்கலைக் கழக ஆசிரியர்களும், அத்தகையோரே. ஆயின், இந்நிலைமை 1960 -களிலிருந்து படிப்படியாக மாறலாயிற்று. இலவசக் கல்வித் திட்டம், தாய்மொழிக் கல்வி விருத்தி முதலியவற்றால் பின்தங்கிய மாவட்டங்கள் பின்தங்கிய கிராமங்கள், பின்தங்கிய சமூகங்கள். பின்தங்கிய குடும்பங்கள் முதலியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகம் நுழைந்தபோது,பல்வேறு பிரச்சனைகளுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுக்க வேண்டி நேர்ந்தது; பல்கலைக்கழக அதிகாரபீடத்துக்கும்,

Page 25
44 க. அருணாசலம்
மாணவர்களுக்குமிடையில் முரண்பாடுகளும் மோதல் களும் அடிக்கடி ஏற்படலாயின : பட்டதாரிகளின் வேலையின்மைப் பிரச்சனைக் காரணமாகப் பல்கலைக் கழகமாணவர்கள் மத்தியில் அவநம்பிக்கையும் விரக்தியும் போராட்ட உணர்வும் வளரலாயின. பல்கலைக் கழக விடயங்களில் அரசியல் தலையீடு படிப்படியாக அதிகரிக்கலாயிற்று.
அதேசமயம், காலம் காலமாகக் கல்வித் துறையில் மிகவும் பின் தங்கியிருந்த மலையகத் தொழிலாளர் சமூகத்திலும், முஸ்லிம் சமூகத்திலும், 1960 -களின் பிற்பகுதியிலிருந்து, குறிப்பிடத்தக்க விழிப்புணர்வும் எழுச்சியும் ஏற்படலாயின. பல்கலைக் கழகம் நுழையும் அவர்களது தொகையும், பெண்களின் தொகையும் கட்டம் கட்டமாக அதிகரிக்கலாயின.
பல்கலைக் கழகத்துள் மாத்திரமின்றி, பல்கலைக் கழகத்திற்கு வெளியிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழலாயின. மலைமுரசு, செய்தி, மரகதம், மல்லிகை, விவேகி, சிரித்திரன், கவிஞன், நோக்கு மலர், அஞ்சலி, குமரன், பூரணி, களனி, மாவலி, தியாகம், நதி, அலை, செவ்வந்தி, சமர்,கிற்றுமுதலிய சஞ்சிகைகள் 1960-களிலும் 1970 -களிலும் தோன்றித் தமிழ் இலக்கியத்தின் பலதுறை வளர்ச்சிக்கும் உற்சாகமளித்தன. இவற்றுக்கு மேலும் உரமூட்டும் வகையில், இக்காலப் பகுதியிலே தோன்றிய யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர் சங்கம், திக்குவெல்ல எழுத்தாளர் சங்கம், மலையக எழுத்தாளர் மன்றம், நாவலப்பிட்டி இளம் எழுத்தாளர் சங்கம், நீர்கொழும்பு

காலக் கண்ணாடி இளங்கதிர் 45
தமிழ் எழுத்தாளர் சங்கம், மட்டக்களப்பு:தமிழ் எழுத்தாளர் சங்கம், கல்ஹின்னைத் தமிழ் மன்றம். கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றின் செயல்பாடுகள் அமைந்தன.
ஈழத்து இலக்கியம். இந்நாட்டு மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளையும் எண்ணங்களையும் வாழ்க்கை முறைகளையும் உணர்வோட்டங்களையும் பேச்சு வழக்கினையும் பிரதிபலிக்கும் மண்வாசனையுடன் கூடிய தேசிய இலக்கியமாகப் பரிமளிக்க வேண்டும் இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் பண்பாட்டம்சங்களை விண்டு காட்ட வேண்டும் என்னும் கருத்துகள் மேலோங்கத் தொடங்கின. 'இலக்கியச் செல்நெறி பற்றிய சர்ச்சைகள், மரபுப் போராட்டம் முதலியனவும் இத்தகைய மாற்றங்களுக்குத் தூண்டுதலளித்தன. இத்தகைய கருத்துப் போராட்டங்களுக்கு எதிரெதிராகப் பல்கலைக் கழக ஆசிரியர்களே அன்று தலைமை தாங்கினர் என்பதும், அன்றைய பல்கலைக் கழக மாணவர்கள் பலரும் முழு மூச்சாக இவற்றிற் பங்கு கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட நிலைமைகளை 1960 -களிலிருந்து வெளிவந்த இளங்கதிர் இதழ்கள் துல்லியமாகப் பிரதிபலித்து நிற்றல் மனங்கொளத்தக்கது.
அரசியல் தலையீடு
1960-களிலிருந்து பல்கலைக் கழக விடயங்களில் அரசியல் தலையீடு ஏற்படத் தொடங்கி, ஆண்டு தோறும் அதிகரித்து வந்ததைக் கல்விமான்களும் பிறரும் கண்டிக்கலாயினர். இளங்கதிரும் இது விடயத்தில் தனது

Page 26
46 க. அருண்ாசலம்
பங்களிப்பைச் செலுத்தத்தவறவில்லை. இளங்கதிரின் பதினேழாவது இதழில் (1965 - 1966) ஆயிரம் காலத்துப் பயிர் என்னும் தலைப்பிற் கூறப்பட்டுள்ள கருத்துகள் சில வருமாறு: "உலகப் பல்கலைக் கழகங்களை முன் மாதிரியாகக் கொண்டு அரசியல் தலையீடற்ற சுதந்திரச் தழ்நிலையிலே தனித்துவமான அமைப்பில் முதிர்ந்த அறிவின் பிழம்பாக உருவாகியது இலங்கைப் பல்கலைக் கழகம். பல்கலைக் கழக நிர்வாகத்துறையின் இறுக்கமற்ற தன்மையினால், நிர்வாகத்தையே அரசாங்கம் சுவீகரித்துப் பல்கலைக்கழகம் என்ற வார்த்தையையே அர்த்தமற்றதாக்க முனைவது அவ்வளவு விவேகமான செயலன்று. நிர்வாகத்தைச் சீர்திருத்திக் கண்காணிப்புடன் பல்கலைக் கழகக் கல்வி'என்ற கோட்பாட்டுக்கு அழுத்தம் கொடுத்துச் செயலாற்றா விட்டால், சாதாரண பள்ளிக்கூட நிலையே பல்கலைக் கழகத்திலும் உருவாகக்கூடும். அரசியல் வாதிகள் தங்கள் சுய செல்வாக்கை விளம்பரப்படுத்த அவசரப் புத்தியுடன் செயலாற்றினால் இலங்கையின் உயர்தரக் கல்வி சிரழியும் நிலை ஏற்படலாம்"
இளங்கதிரின் பதினெட்டாவது இதழில், தாய்மொழிக் கல்வியும் தமிழ்மொழி வளர்ச்சியும்' என்ற தலைப்பில் இதழாசிரியர் கூறியுள்ள கருத்துகள் சில வருமாறு:"ஆண்டு பலவாக அந்நியர் ஆளுகையின் கீழிருந்து, அண்மையிலே அரசியல் விடுதலை பெற்ற கீழை நாடுகள் பலவும் தாம் பெற்ற விடுதலையைப் பொருளாதார கலாச்சாரத் துறைகளுக்கும் விரிவுபடுத்துவதில் முன்னின்று ழைக்கின்றன. ஈழம், இந்தியா உட்படக் கீழை நாடுகள் பலவற்றிலும் ஆங்கிலேயராட்சிக் காலத்தில் ஆங்கில

காலக் கண்ணாடி இளங்கதிர் 4ፖ
மொழியே உயர்கல்விக்குரிய போதனா மொழியாக விளங்கி வந்தது. இன்று நாட்டின் துரித முன்னேற்றத் திற்கும் கலாசார விடுதலைக்கும் தாய் மொழி மூலமே பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் பூராவும் கல்வியூட்ட்ப்படவேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகின்றது. ஓரளவு செயற்படுத்தப்படுவதையும். நாம் காணக்கூடியதாக உள்ளது."
ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் 1960-களில் ஏற்பட்ட விழிப்புணர்ச்சியின் பிரதிபலிப்பினை 1960-களில் வெளிவந்த இளங்கதிர் இதழ்களில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள், கவிதைகள். கட்டுரைகள் முதலியன வெளிப்படுத்தி நிற்கின்றன. அக்காலப் பகுதியில் தமிழ்ச்சங்கம் பல சிறுகதைப் போட்டிகளையும், கவிதை, கட்டுரைப் போட்டிகளையும் நடத்தியுள்ளமையும் பரிசில் பெற்ற சிறுகதைகளும் கவிதைகளும் இளங்கதிர் இதழ்களில் இடம் பெற்றுள்ளமையும், எழுத்தார்வம் மிக்க மாணவர்கள் பலர் பல சிறுகதைகளை எழுதியதுடன், மாணவர்களே அடுத்துடுத்துப் பல சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.ஈழத்தில் நிலவும் நூல் வெளியீட்டுவசதி குறைபாடுகளும் விற்பனை வசதிக் குறைபாடுகளும் எழுத்தாளர்களின் ஆர்வத்தைப் பாதிக்குமாற்றையும் வசதிவாய்ப்புள்ளவர்கள் ஒன்றுபட்டு, இக்குறைபாட்டைப் போக்க முயலாது தமிழகத்துமூன்றாம் தரச் சஞ்சிகைகளையும் ஆக்கங்களையும் போற்றிக் கொண்டிருந்தமையையும், இளங்கதிர் ஆசிரியர்கள் சிலர் சுட்டிக் காட்டிக் கண்டிக்கத் தவறவில்லை.

Page 27
49 க. அருணாசலம்
இவ்வகையிலே, இளங்கதிரின் பன்னிரண்டாவது இதழில் (1959 - 1960) அதன் ஆசிரியர் மு. தளையசிங்கம், ‘விடியுமா எமக்கு? என்ற தலைப்பில் விரிவான முறையிலே தெரிவித்துள்ள கருத்துகள் * குறிப்பிடத் தக்கவை. போதிய அளவு வெளியீட்டு வசதிகளோ விற்பனை வசதிகளோ விருத்தி செய்யப்படாத நிலையில் ஈழத்து எழுத்தாளர்களுக்கு விடிவேது? ஈழத்து எழுத்தாளர்கள் பலரிடம் போதிய எழுத்தாற்றல் இருந்தும், அவற்றை வெளிக் கொணர்வதற்கேற்ற வசதிகள் இல்லாமை பெருங்குறையாகும்.அக்குறைபாட்டைப் போக்க இலக்கிய ஆர்வம் உடையோரும், செல்வம் படைத்தோரும் உதவ வேண்டும் என ஆசிரியரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வேண்டுகோள், இன்றும் பெருமளவு பொருந்தக் கூடியதே.
1960-களில் நிகழ்ந்த'இலக்கியச்செல்நெறி'இழிசினர் இலக்கியம்', 'மரபு முதலியன பற்றிய சர்ச்சைகளின் பிரதிபலிப்பாகப் பல கட்டுரைகள் அன்றைய இளங்கதிர் இதழ்களில் வெளிவந்துள்ளன. அவற்றுள் மரபு என்ற தலைப்பில், ஒரே இதழில் (1962 - 1963) அடுத்தடுத்து இருகட்டுரைகள் வெளியாகியுள்ளமை விதந்து கூறத்தக்கது. இரு கட்டுரைகளினதும் கருத்துகள் ஒன்றுக் கொன்று எதிரானவை. அமரர்களாகிவிட்ட பேராசிரியர்கள் ஆசதாசிவம், க. கைலாசபதி ஆகியோரே அக்கட்டுரை களின் ஆசிரியர்களாவர்.

காலக் கண்ணாடி இளங்கதிர் 49
1960-களிலிருந்து மலையகத்தில் ஏற்படத் தொடங்கிய விழிப்புணர்ச்சியின் பிரதிபலிப்பினை இளங்கதிர் இதழ்களிலும்காணலாம்.குறிப்பாக இளங்கதிர் இதழ்களில் வெளிவந்துள்ள மலையகத் தொழிலாளர் தொடர்பான கவிதைகளும்,சிறுகதைகளும் கட்டுரைகளும் இவ்வகையில் விதந்து கூறத்தக்கவை. அவற்றுள் இளங்கதிரின் பதின்மூன்றாவது இதழின் (1960 - 1961) வெளிவந்துள்ள கல்லுமலைத் தோட்டத்திலே என்ற தலைப்பில் இராஜ பாரதி இயற்றியுள்ள இருபத்து மூன்று பாடல்களும், இளங்கதிரின் பதினான்காம் இதழில் (1961 - 1962) வெளிவந்துள்ள மலைக்குள் மாண்டிடவோ - அவரிங்கு மனிதராகி வந்தார்’ என்ற தலைப்பில் செ. யோகநாதன் இயற்றியுள்ள முப்பத்திரண்டு பாடல்களும், இளங்கதிரின் இருபத்தைந்தாவது இதழில் (1981 - 1982) வெளிவந்துள்ள ‘எங்களை ஏனின்று ஏங்கவே வைக்கின்றீர்’ என்ற தலைப்பில் வீரா. பாலச்சந்திரன் இயற்றியுள்ள நெடும் பாடலும் சிறப்பித்துக் கூறக் கூடியவை. இதேபோன்று. இளங்கதிரின் இருபத்தாறாம் (1991-1992) இருபத்தேழாம் (1992 - 1993) இதழ்களுட்படப் பல இதழ்களில் வெளிவந்துள்ள சிறுகதைகள், நடைச் சித்திரங்கள் முதலியவையும் இவ்வகையில் நோக்கத்தக்கவை.
முஸ்லிம் சமூகப் பிரச்சனைகள்
முஸ்லிம் சமூகத்தினர் கல்வித்துறையில் முன்னேறத் தொடங்கியதும், வருடாவருடம் பல்கலைக் கழகத்தில் சேரும் முஸ்லிம் மாணவர்களின் தொகையும் அதிகரிக்கலாயிற்று. முஸ்லிம் சமூகத்தினரின்

Page 28
50 க. அருணாசலம்
பல்வேறுபட்ட பிரச்சனைகளும் வாழ்வியல் அம்சங்களும் கடந்த பதினைந்து இருபது ஆண்டுகளுள் முன்னர் என்றும் இல்லாத அளவிற்கு, அதிக அளவிற் சிறுகதைகளாகவும் புதுக்கவிதைகளாகவும் நாவல்களாகவும் கவிதை களாகவும் கட்டுரைகளாகவும் நாடகங்களாகவும் வெளிவந்து கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இதற்கேற்ப, இளங்கதிர் இதழ்களிலும்,குறிப்பாக் 1970-களின் நடுப்பகுதியிலிருந்து இற்றைவரை வெளிவந்த இதழ்களில் இடம் பெற்றுள்ள பலவகை ஆக்கங்களும் அவர்களது பல்வேறுபட்ட பிரச்சனைகளையும் வாழ்வியல் LLLTLYLLTLLLLLT TTTTTTS STtLLLS S 0MTTL கொளத்தக்கது.
தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு, முதல் இருபத்திரண்டுவருடங்களிலும் தமிழியலின் வளர்ச்சிக்குக் குறிப்பிட்டுக் கூறக்கூடிய பெரும் பங்களிப்பு எதனையும் செய்துள்ளதாகத் தெரியவில்லை. எனினும், ஆண்டு தோறும் குறைந்தது ஒரு நாடக அரங்கேற்றமும், நடன நிகழ்ச்சிகளும், சங்கீத நிகழ்ச்சிகளும் இடம் பெற்று வந்தமையை இளங்கதிரின் முதலாவது இதழ் குறிப்பிடுகின்றது.
"ஆண்டுதோறும் எமது சங்கத்தினர், நாடகம் ஒன்றை நடிப்பதுண்டு. எமது நாடகம், கடற்கரையிலும் பூங்காவிலும் நடக்கும் இன்ப நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டுவன அல்ல. வாழ்விலே ஒரு பிரதான நிகழ்ச்சியை எடுத்து அந்நிகழ்ச்சியில் நிகழும் தவறைத் திருத்தும் நோக்கத்துடன் நடித்துக் காட்டப்படுவன எமது

காலக் கண்ணாடி இளங்கதிர் &y7
நாடகங்கள். இம்முறை பொருளோ பொருள் என்னும் 5T L. és Lb A54-éš45 LI LILL-51.......... அதன் வெற்றியெல்லாம் பேராசிரியர் க. கணபதிப் பிள்ளை அவர்களதே. இடைவிடாது இயக்கியவர் சு. வித்தியானந்தன் அவர்கள். நடிப்பைப் பழக்குவதிலும், நாடக மேடை ஒழுங்கை அவதானிப்பதிலும் இவர் காட்டிய ஆர்வத்தை நாம் மறக்க முடியாது. பின் அணி, உடுப்பு இவைகளில் போதிய புத்திமதியும் உதவியும் தந்துதவிய திரு. செல்வநாயகம் அவர்கட்கும் திருமதி. ம. மகாதேவனுக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக." என இதழாசிரியர் குறிப்பிட்டுள்ள onЛ turivasor, po sомоћILЛbgrfluona/.
நாடகம்
தமிழ்ச் சங்கம் தனது வரலாற்றின் ஆரம்பக் கட்டத்திலிருந்தே, ஆண்டுதோறும் நாடகங்களை மேடையேற்றி வந்தது என்பதும் அம்முயற்சியில் அன்றைய பேராசிரியர் கணபதிப்பிள்ளையும், விரிவுரையாளர்கள் சு.வித்தியானந்தன், செல்வநாயகம், திருமதி. மகாதேவன் முதலியோரும், மாணவர்களும் எத்தகைய ஆர்வம் கொண்டிருந்தனர் என்பதும் இளங்கதிர் இதழ்கள் மூலம் தெளிவாகும், துரதிஷ்டவசமாக, இளங்கதிர் தோன்று முன்னர் மேடையேற்றப்பட்ட நாடகங்களின் பெயர்களைக் கூட, இன்று தெளிவாக அறிய முடியவில்லை.
இளங்கதிரின் முதலாவது இதழ்தோன்றியவருடத்தில் மேடையேற்றப்பட்ட பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களின் பொருளோ பொருள் என்னும் நாடகம்" பற்றிய கருத்துரை. அவ்விதழில் இடம் பெற்றுள்ளது.

Page 29
2 க. அருணாசலம்
இலங்கைத் தமிழ் நாடக வளர்ச்சியிற் பேராதனைப் பல்கலைக் கழகத்துக்கும், அதனுாடாகத் தமிழ்ச் சங்கத்துக்கும் மிக முக்கியமான பங்குண்டு. புகழ் பூத்த நாடக ஆசிரியர் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, நாட்டுக் கூத்துக் கலைக்குப் புத்துயிரளித்த பேராசிரியர். சு. வித்தியானந்தன், நாடகங்களை எழுதியும், மேடை யேற்றியும் நடித்தும் நாடக விமர்சனங்களை எழுதியும் பணிகள் புரிந்த பேராசிரியர்கள் கா. சிவத்தம்பி, சி. தில்லைநாதன், கலாநிதி சி. மெளனகுரு முதலியோர் பேராதனைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்களே. தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றாக, நாடகங்களை மேடையேற்றும் நிகழ்ச்சி அன்று தொட்டு இன்றுவரை இட்ம் பெற்றுவருவதை இளங்கதிரின் இதழ்கள் சுட்டி நிற்றல் குறிப்பிடத்தக்கது.
இதுகால வரையில், பல நூற்றுக் கணக்கான நாடகங்களைத் தமிழ்ச் சங்கம் மேடையேற்றியுள்ளது. சில ஆண்டுகளிற் குறிப்பாக 1960-களின் பிற்பகுதியில், ஆண்டு ஒன்றிற்குப் பத்துக்கும் மேற்பட்ட நாடகங்கள் கூட மேடையேற்றப்பட்டுள்ளமை மனங்கொளத்தக்கது. ஆண்டுதோறும் நடிக்கப்பட்ட நாடகங்களின் பெயர்கள். நாடகக் காட்சிகளின் சில கூறுகள் (புகைப்படப் பிரதிகளாக) அவ்வப்போது வெளிவந்த இளங்கதிர் இதழ்களில் இடம் பெற்றுள்ளன. செம்பியன் செல்வன் போன்ற ஒரு சிலரால் எழுதப்பட்ட ஓரங்க நாடகங்கள் சிலவும் இளங்கதிர் இதழ்களில்வெளிவந்துள்ளன.

காலக் கண்ணாடி இளங்கதிர் 3.
இவ்வாறு, ஆண்டுதோறும் மேடையேற்றப்பட்ட நூற்றுக்கணக்கான நாடகங்களுள் பேராசிரியர் க. கணபதிப் பிள்ளையின் நாடகங்களே நூலுருப் பெற்றுள்ளன. பேராசிரியர் சி. தில்லைநாதனின் நாடகங்கள் உட்பட, நூற்றுக்கணக்கான நாடகங்கள் நூலுருப் பெறாமை மட்டுமல்ல, அவற்றுள் அதிகமானவற்றின் பெயர்களைக் கூட, இன்று அறிய முடியாத நிலையிலுள்ளமை, பெரும் வேதனைக்குரியதே. பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மேடையேற்றப்பட்ட தமிழ் நாடகங்களுட் கணிசமானவை பற்றிக் க. சொக்கலிங்கம், இ. சிவானந்தன் முதலியோர் ஆராய்ந்து நூல்களாக வெளியிட்டுள்ளமை, மனம் கொளத்தக்கது." அதிஷ்டவசமாக ஏனைய வகை ஆக்கங்களுக்கு இந்நிலைமை ஏற்படவில்லை. அவை, இளங்கதிரின் இதழ்களிலாவது உறங்கிக் கொண்டிருக் கின்றன. அரிதில் முயன்றாவது அவற்றைப் பெறலாம்.
இளங்கதிரின் இரண்டாவது இதழின் ஆசிரியர் தமதுரையிற் குறிப்பிடும் விடயங்கள் சில எமக்கு வியப்பையும், திகைப்பையும் தருவனவாயினும் உண்மை நிலையையும் தமிழ்ச் சங்கத்தினது வளர்ச்சிக் கட்டங்களையும் செவ்வனே அறிந்து கொள்வதற்கு அவை உதவியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்வுரையின் ஒரு பகுதி வருமாறு: இதழாசிரியர் தமிழ்ச் சங்கத்தின் வழமையான வருடாந்த நிகழ்ச்சிகளான தேநீர் விருந்து, நடன, இசை நிகழ்ச்சிகள். நாடக அரங்கேற்றம், நாடகத்தின் சிறப்பம்சம் முதலியவற்றைக் குறிப்பிட்டபின், ".இதுகா றும் சங்கத்தில் நடந்திராத ஒரு நன்னிகழ்ச்சியும்

Page 30
54 க. அருணாசலம்
இவ்வாண்டு நிறைவேறியது. இதுவும் நமது சங்கம் புத்தம் புதிய துறைகளைக் கண்டு பிடித்துத் தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்ற முன்வந்துள்ளது என்பதை வலியுறுத்தும், யாம் இங்கு குறிப்பிடுவது இவ்வாண்டு நடந்த தமிழ்ப் பேச்சுப் போட்டியையே."
1950 -களிலிருந்து படிப்படியாகப் பேச்சுப் போட்டி மட்டுமின்றி சிறுகதை, கவிதை, நாடகம் முதலிய துறைகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டுப் பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றமையும் கவியரங்குகள், பட்டிமன்றங்கள் முதலியன இடம் பெற்று வருவதும் அமரர்களாகிவிட்ட அறிஞர்களது நினைவுச் சொற் பொழிவுகள். ஈழத்தினதும் தமிழகத்தினதும் அறிஞர்களது சொற்பொழிவுகள் முதலியன இடம் பெற்று வருவதும் தமிழ்ச் சங்கத்தினது வளர்ச்சியைச் சுட்டி நிற்பனவாகும்.
முடிவுரை
இளங்கதிர் தனியொரு துறையினருக்கோ, பீடத்தினருக்கோ மட்டும் சொந்தமாக அமையாது பல்கலைக் கழகத்தின் சகல பீடத்தினருக்கும் சொந்தமாக அன்று தொட்டு, இன்றுவரை விளங்கிவருவதை இளங்கதிரின் ஒவ்வொரு இதழ்களும் நிரூபித்து நிற்கின்றன. இதுவரை வெளிவந்த இருபத்தேழு இளங்கதிர்களிலும் தமிழ் இலக்கியம், மொழியியல், வரலாறு, அரசறிவியல், மெய்யியல், கல்வியியல், புவியியல், பொருளியியல், மருத்துவம், பொறியியல்,சமயம்,பண்பாடு, ஒவியம்,சிற்பம், நடனம் எனப்பலதுறைகள் சார்ந்த அரிய கட்டுரைகள் பல இடம் பெற்றுள்ளன. புகழ் பூத்த பேராசிரியர்

காலக் கண்ணாடி இளங்கதிர்
களான க. கணபதிப் பிள்ளை, சு. வித்தியானந்தன், க. கைலாசபதி, வி. செல்வநாயகம், அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், சோ. செல்வநாயகம், கா. குலரத்தினம், ஜோர்ஜ், தம்பையா பிள்ளை, தனஞ்சயராசசிங்கம், ஆ. சதாசிவம் முதலியோர் தொட்டு, இன்றைய பேராசிரியர்களான சி. தில்லைநாதன். அ. சண்முகதாஸ், சி. பத்மநாதன், சிவஞானசுந்தரம், இந்திரபாலா, ஆ. வேலுப்பிள்ளை, சிவத்தம்பி, பாலசுந்தரம்பிள்ளை, பூலோகசிங்கம், பாலசுந்தரம், சிவசேகரம் முதலியோர் வரை எழுதியுள்ள பலதுறைகள் சார்ந்த அரிய கட்டுரைகள் இளங்கதிர் இதழ்களில் உறங்கிக் கிடக்கின்றன. இக்கட்டுரைகள் துறை வாரியாகத் தொகுக்கப் பட்டுப் பல நூல்களாக உருப்பெறுமாயின் இன்றைய பல்கலைக்கழக மாணவர்கள், எதிர்கால மாணவர்கள். ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் முதலிய பலதிறத்தாருக்கும் பெரும் பயன் நல்கும் என்பதில் ஐயமில்லை.
இதே போன்று. இளங்கதிர் இதழ்களில் இடம் பெற்றுள்ள நூற்றுக் கணக்கான சிறுகதைகள், கவிதைகள், இதழாசிரியரின் உரைகள் முதலியன தனித்தனியாகத் தொகுக்கப்பட்டு, நூல் வடிவம் பெறுமாயின் மாணவர்களும் ஆய்வாளர்களும், பெரும்பயன் அடைவர். கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக வெளிவந்துள்ள சிறுகதைகளும் கவிதைகளும் இதழாசிரியரின் உரைகளும் கால அடிப்படையில் ஒழுங்காகத் தொகுக்கப்படுமிடத்து, அவை அவ்வக்காலக் கட்டச் சூழ்நிலைகளையும் வரலாற்றுப் போக்குகளையும் எவ்வளவு தூரம் துல்லியமாகப் பிரதிபலித்து நிற்கின்றன என்பதை செவ்வனே அறிந்து கொள்ள முடியும்.

Page 31
க. அருணாசலம்
1967- ம் ஆண்டு வரை வெளிவந்த அதிகமான இளங்கதிர் இதழ்களில், பேராசிரியர் கணபதிப் சின்ளையின் கருத்துச் செறிவு மிக்க மிக நீண்ட கவிதைப் பகுதிகள் இடம் பெற்றுள்ளன. அவரது கவிதைகள், பல தொகுதிகளாகத் தொகுக்கப்படத்தக்கவை. அதுபோன்றே, அவரது கட்டுரைகளும் குறைந்தது இரு தொகுதிகளாகத் தொகுக்கப்படத்தக்கவை.
இளங்கதிர் இதழ்களின் தொடக்கத்திலும், இறுதியிலும் இடம்பெறும் புகைப்படங்கள்,விளம்பரங்கள் முதலியவை சுவையான தகவல்களைத் தருகின்றன. இன்றைய பேராசிரியர்கள். அறிஞர்கள். உயரதிகாரிகள், பிரபல எழுத்தாளர்கள் முதலிய பலரது மாணவப் பருவத் தோற்றங்களையும் நாடகங்களிலும் தமிழ்ச் சங்க நடவடிக்கைகளிலும் பிறவற்றிலும் அவர்கள் பங்கேற்ற போது காணப்பட்ட தோற்றங்களையும் மகிழ்ச்சியுடன் தரிசிக்கலாம்.
1976-ம் ஆண்டுவரை வெளிவந்தஇளங்கதிர் இதழ்கள், ஒவ்வொன்றையும் புரட்டிப் பார்க்கும்போது தெற்றென ஓர் உண்மை புலப்படும். தமிழ்ச் சங்கத்தினதும் இளங்கதிரினதும் வளர்ச்சியிற் பேராசிரியர்கள். விரிவுரையாளர்கள். மாணவர்கள். தனிப்பட்டவர்கள் எனப் பலதிறத்தாரும் பங்கு கொண்டுள்ளனர். பேராசிரியர் சுந்தரலிங்கம், அவரது நண்பர்கள் முதலியோரால் தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப் பட்டது. பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களால் இளங்கதிர் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், இவ்விரண்டினதும்

காலக் கண்ணாடி இளங்கதிர் 57
வளர்ச்சியில் வேறு எவரிலும் பார்க்கப் பேராசிரியர் சு. வித்தியானந்தனது பங்களிப்பே கூடுதலாகக் காணப் படுகிறது. இளங்கதிரின் இதழ்கள் தோறும் அவரது பங்களிப்பு விதந்து கூறப்பட்டுள்ளது. ஒரே ஒரு கூற்றினை இவ்விட்த்தே நோக்குதல் பொருந்தும்.நம் தமிழ்ச்சங்கப் பொருளாளர் கலாநிதி சு.வித்தியானந்தன் அவர்களின் உதவி அளக்க முடியாதது. சிறுகதைப் போட்டிக்குரிய தங்கப் பதக்கங்கள் செய்விப்பது தொடக்கம், அச்சகம் ஒன்றில் வேலை ஒப்படைத்துப் பொறுப்பேற்பதுண்டாக, விடுதலை நாட்களில் நாள் தோறும் ப்றுப் படிப்பது வரை. அவரே செய்து உதவினார். விரிவுரை வகுப்புகள், வெளியூர்ப்பயணங்கள். சொற்பொழிவுகள், கலைக்கழகப் பணிகள் என்று, நாட்டுக்குழைப்பவரின் உதவி நமக்குக் கிடைத்தது பற்றிப் பெருமைப்படுகிறோம். இதழாசிரியர் என்ற பெயர் எனக்கிருக்க, அதற்குரிய பணியை மறைமுகமாக அவர் செய்து முடித்த பெருந்தன்மையை மறக்க முடியாது. முதலில் அவருக்கு, எனது இதயம் கலந்த நன்றி." என இளங்கதிரின் பன்னிரண்டாவது இதழில் இதழாசிரியர் கூறியுள்ளமை மனங்கொளத்தக்கது.
பேராசிரியர் “வித்தியானந்தன் அவர்களின் வாரிசாகவும் அவரது பேரபிமானத்துக்குரியவராகவும் விளங்கும் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர். சிதில்லைநாதன் அவர்களே கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, மிகவும் இக்கட்டான நெருக்கடி மிக்க தழ்நிலைகளின் மத்தியிலும், தமிழ்ச் சங்கத்தினைச் சிறந்த முறையில் வழி நடத்திச் செல்லுதலும் தமிழ்ச் சங்க நடவடிக்கைகளிற் புதிய அம்சங்களை இடம் பெறச் செய்தலும் மனம் திறந்து பாராட்டத்தக்கவை.

Page 32
க. அருணாசலம்
தனிச் சிறப்பு
பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தின்
வரலாற்றையும் அதன் வளர்ச்சியையும் செயற்பாடு களையும் சாதனைகளையும், அதன் வளர்ச்சிப் பாதையில் ஏற்பட்ட இடையூறுகளையும் அதற்கான காரணங்களையும் தக்க முறையில் அவ்வப்போது பதிந்து வைத்துள்ளமை இளங்கதிர் ஏட்டின் தனிச் சிறப்பாகும். பேராதனைப் பல்கலைக் கழக வரலாறு, அதன் வளர்ச்சி, தமிழிச் சங்க வரலாறு, தமிழ் பேசும்மக்களது வரலாறு, ஈழத்து இலக்கிய வரலாறு. ஈழத்துத் தமிழியல் ஆய்வு முயற்சிகள் முதலியவற்றை எழுதுவோரோ ஆராயப் புகுவோரோ, இளங்கதிர் இதழ்களைப் புரட்டாது தமது முயற்சியை முழுமையாக்க (Լpւգ-աո Ֆ].
சான்றாதாரம்:
l. வித்தியானந்தன், சு. தமிழர் சால்பு (1958), பக். 16-17,
2. முக்கியமான சஞ்சிகைகள் சிலவருமாறு தூண்டில், சிந்தனை, புதுமை,
தேனி, சமர் (ஜேர்மனி), சுவடுகள், சக்தி (நோர்வே), பள்ளம், ஓசை
(பிரான்ஸ்), மனிதம்(சுவிற்சலாந்து), தேடல், காலம்,பார்வை,நான்காவது
பரிமாணம்(கனடா), மரபு.அக்கினிக்குஞ்சு (அவுஸ்திரேலியா), usftoaurt (இங்கிலாந்து).
3. இளங்கதிர், 1981, 24வது ஆண்டு மலர்
4. இளங்கதிர் பொன்விழா Logut (1976 - 1977)
6. இளங்கதிர் 26வது ஆண்டுமலர், 1991 - 1992, பக்.1

காலக் கண்ணாடி இளங்கதிர்
7 இளங்கதிர், இதழ் 1, 1948 - 1949, இதழாசிரியர் உரை
10.
.
2.
18.
19.
20.
2,
22,
23.
24.
25.
26.
፵7.
இளங்கதிர், இதழ் - 4, 1951 - 1952, பக். 3-5.
இளங்கதிர், இதழ் - 5, 1952 - 1953.
இளங்கதிர், இதழ் - 7. 1954 - 1955.
இளங்கதிர். இதழ் -9, 1956 - 1957
இளங்கதிர், இதழ் - 10, 1957 - 1958 பக்.28-129.
இளங்கதிர், இதழ் - 11, 1958 - 1959, பக். 1-2
இளங்கதிர், இதழ் - 11, 1958 - 1959, பக். 5-6.
. இளங்கதிர், இதழ் - 11, 1958 - 1959, பக். 3-4
இளங்கதிர், இதழ் - 9, 1956 - 1957, பக். 11-12,
இளங்கதிர், இதழ் - 1, 1958-1959 பக். 3.
இளங்கதிர், இதழ் - 11, 1958 - 1959, பக். 4. இளங்கதிர் இதழ் - 17 1965-1966 பக்.2
இளங்கதிர், இதழ் - 17, 1965 -1966, ಎà: 2-ತಿ.
இளங்கதிர், இதழ் - 18, 1966 - 1967, பக். 2.
இளங்கதிர், இதழ் - 12, 1959 - 1960,பக். 3-6.
இளங்கதிர், இதழ் - 1, 1948 - 1949 பக். 4
சொக்கலிங்கம், க. (1977) ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி சிவானந்தன்,இ.(1979) இலங்கைப்பல்கலைக்கழகத்தமிழ்நாடக அரங்கம்
இளங்கதிர், இதழ் - 2, 1949 - 1950 பக்.4
- 12, 1959 , 960, s.17.

Page 33
இனிய தமிழ் இதழ்
-உடு தெணிய ரஷீத் எம். ஹியாழ் "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு" என்ற பைந்தமிழ் கவிதா முழக்கத்துடன், பல்சுவை கலந்த பயன்மிகு படைப்பாக பேராதனைப் பல்கலைக் கழக ஆண்டு மலர் இளங்கதிர் இனிதே இதழ் விரித்துள்ளது.
புத்திஜீவித்துவ மாணவ நெஞ்சங்கள் மத்தியில் துலங்கும் பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தின் இருபத்தேழாவது (27) ஆண்டு மலராகவே இளங்கதிர் இன்தமிழ்க்கதிராக வெளியாகியுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியரும், தமிழ்ச் சங்கத்தின் பெருந் தலைவராக நின்று தமிழ்ச் சங்கத்துக்கு புத்தெழுச்சியூட்டி வருபவருமாகிய பேராசிரியர் சிதில்லைநாதனின் சிறந்த வழிகாட்டலின் பிரதிபலனாக, பயன்மிகு படைப்பாகவே இளங்கதிர்’ எழுந்துள்ளது.
"மொட்டுக்கள் மலர்ந்து மணம் வீச வேண்டும். ஏட்டில் சிந்திய துளிகள் எம் சிந்தை தொட வேண்டும்" என்ற கருத்தமைப்பில் உருவான கவர்ச்சிகரமான அட்டைப்படத்துடன் இவ்விதழ் காத்திரமான படைப்பாக அமைந்துள்ளது.

காலக் கண்ணாடி இளங்கதிர் af
பல்கலைக் கழக விரிவுரையாளர்களதும், மாணவர்களதும் கருத்தோட்டமுள்ள பயன்மிகு கட்டுரைகள், கருத்துக்கினிய கவிதைகள், சிந்தையைத் தொடும் சிறுகதைகள், கார்ட்டூன்கள் பலவும் இவ்விதழைப் புதுப்பொலிவு செய்துள்ளன.
பள்ளிக்கூட மாணவர் முதல் பலருக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் விஞ்ஞானம், கலை இலக்கியம், சமூகவியல், தொழில்நுட்பவியல், அரசியல், மருத்துவவியல், சர்வதேச விவகாரங்கள் என்று பல கோணங்களிலும் அறிவுசார் கருத்துக்களை அள்ளி வழங்கும் அறிவுப்பொக்கிஷமாகக் கருதக்கூடியவகையில் இளங்கதிர் இனிய தமிழ் இதழாக மலர்ந்துள்ளது.
பேராதனைப் பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர் ஜே. எம். குணதாச, தமிழ்ச் சங்கப் பெருந் தலைவர் பேராசிரியர் சி. தில்லைநாதன் பெரும் பொருளாளர், விரிவுரையாளர் ஜனாப்.எம்.எல்.ஏ. காதர். ஆகியோரின் வாழ்த்துச் செய்திகளுடன் ஆரம்பித்துள்ள இவ்விதழில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர்களான கலாநிதி க. அருணாசலம், கலாநிதி துரைமனோகரன், மெய்யியற்றுறை முதுநிலை விரிவுரையாளர் ஜனாப் எம்.எஸ்.எம். அனஸ், அரசறிவியற்றுறைமுதுநிலை விரிவுரையாளர் கலாநிதி அம்பலவாணர் சிவராஜா, புவியியற்றுறை முதுநிலை விரிவுரையாளர் திரு. மா.செ. மூக்கையா, மருத்துவ பீடத்தின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி இரா. சிவகணேசன்,

Page 34
62 க. அருணாசலம்
புவியியற்றுறை முதுநிலை விரிவுரையாளர்களான திரு. வை. நந்தகுமார், கலாநிதி ந. வேல்முருகு A-LiL u lகலாகிர்த்தி பேராசிரியர் டாக்டர் பொ. பூலோகசிங்கம், பேராசிரியர் சி. தில்லைநாதன் ஆகியோரின் கருத்தோட்டம் மிக்க சிறந்த கட்டுரைகளும் இளங்கதிரை அலங்கரித்துள்ளன.
புேராதனைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ச் சங்க வரலாற்று நோக்கு, பள்ளு இலக்கியத்தில் நாட்டார் இலக்கியக் கூறுகள், சிங்கள நாடக மரபில் கலைப் பாணியின் செல்வாக்கு, விபுலானந்த அடிகளாரின் மானிட நோக்கு, இலங்கைத் தமிழ் தேசியவாதத்தின் தோற்றமும் வளர்ச்சியும், குறைவிருத்தியும் குறைந்த வாழ்க்கைத்தரத்தின் பரிமாணங்களும், குருதி அழுத்த அதிகரிப்பிற்கான காரணிகள், வளி மாசடைதலுக்கான காரணங்களும் விளைவுகளும், பழந்தமிழ் இலக்கியத்தில் அங்கத மரபுகள், புதிய நவிற்சி ஓவியங்கள் ஆகிய பல தலைப்புகளிலே விரிவுரையாளர்களின் கட்டுரைகள் அமைந்துள்ளன.
பல்கலைக் கழக மாணவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளில் எம்.ஏ. அப்துல் சக்காடரின் 'வாசகனின் நடுநிலைப்போக்கு எஸ்.ஜெயசிலனின் 'எயிட்ஸ் மனித உலகுக்கு ஒரு சவால் நல்லதம்பி நல்லராஜாவின் கிராம அபிவிருத்தியும் அதில் கிராம மக்களின் பங்களிப்பும் மு. தாரகன், பே. இராஜகுலசிங்கம் ஆகியோரின் கணனிகளே வாழ்க்கையாக எம். அப்துல் நாஹிப்பின் இலங்கை இனப்பிரச்சனைக்கு சமஷ்டிமுறை

காலக் கண்ணாடி இளங்கதிர் 3.
தீர்வாகுமா? கே. கணேசராஜாவின் 'மஹாமேதை கலாயோகி’. ஆனந்த குமாரசுவாமியின் 'பெண் நிலைவாதமும் மகளிர் நிலைப்பாடும் பீ.எம். ஜமீாஹிரின் கிழைத்தேய கலை, அழகியல் மெய்யியலில் இந்தியாவின் பங்களிப்பு-ஓர் அறிமுகமீபூரீதரன் ஜெயரட்னமின்குறள் கூறும் நவீன மருத்துவம்' என்பனவும் இளங்கதிரில் இடம் பெற்றுள்ளன.
இளங்கதிரை அலங்கரித்துள்ள முத்தான மூன்று சிறுகதைகளில் செல்வன் மு.விஜேந்திராவின் 'பாதை மாறிய பயணங்கள்', செல்வி மரீனா இல்யாஸின் சொந்தங்கள் சுமையானபோது', செல்வரி என். தாரணியின் ‘இன்னொரு ஜனனம்'என்பன இடம்பிடித்துள்ளன.
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களான செல்வன் எஸ்.வை.பூரீதர், செல்வன் ரஷீத் எம். றியாழ், செல்வன் ராஜன் நதுர்தின், செல்வன் வே. இராஜ கோபாலசிங்கம், செல்வன் இ. பூரீதர், செல்வி மரீனா இல்யாஸ், செல்வன் கே.எம். அப்துல் ஸ்மது, செல்வன் ரி.வி. ஆர்.சங்கர், செல்வன் இரா. ரவிசங்கர், செல்வி நதாரணி, செல்வன் எம்.வை.எம்.அலி, செல்வன் வி.பீற்றர் ரஞ்சித் ஆகியோரின் கற்பனையில் உருவெடுத்த கருத்துக்கினிய கவிதைகள் பலவும் இளங்கதிரில் இதமூட்டிக் கொண்டிருக்கின்றன.
தமிழ்ச்சங்கம் நடாத்திய,சிறுகதை,கவிதை, கார்டூன் முதலான போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களது படைப்புக்கள் பலவும் ஆங்காங்கே காணப்படுகின்றன.

Page 35
64 க. அருணாசலம்
இளங்கதிரில் அடங்கியுள்ள ஒவ்வொரு ஆக்கத்தின் இறுதியிலும் எஞ்சிய இடைவெளிகளிலும், சுவாமி விபுலானந்தர், மகாகவி பாரதியார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பாரதிதாசன், கவிஞர் கம்பதாசன், கவிஞர் கண்ணதாசன் ஆகியோரின் கவி முத்துக்களும், பழமொழிகளும், இன்னும் பல்சுவைக் கருத்துச் சிதறல்களும் இதழை மெருகூட்டிக் கொண்டிருக்கின்றன.
மொத்ததில் சிந்தைக்கு விருந்து படைக்கும் தேன் இதழாக இளங்கதிர் காணப்படுகின்றது. இதன் சிறந்த உருவாக்கத்துக்கு பல்கலைக் கழக விரிவுரையாளர்களின் சிறந்த வழிகாட்டல்களும், தமிழ்ச் சங்கத்தின் செயற்றிறன் மிக்க சிறந்த உறுப்பினர்களின் பங்களிப்பும், இதழாசிரியர் செல்வன். எஸ்.வை.பூரீதரின் சிறந்த முயற்சியுமே காரணமென்றால் அது மிகையாகாது.
அமுதென்று பேர் கொண்ட தமிழின் அருமை மிகு படைப்பான இளங்கதிர் மொத்தம் 176 பக்கங்களைக் கொண்டதாகவும், சிறந்த அச்சமைப்பைக் கொண்ட தாகவும் அமைந்துள்ளது.
ஆண்டுகள் இருபத்து ஏழினை எட்டிப் பிடித்து இளங்கதிர்’ எனும் இனிய நாமத்தில் எழில் தமிழ் மொழியால் ஆக்கபூர்வமான படைப்பாக வெளியாகியுள்ள இளங்கதிரை, நாமும் வாழ்த்துவோம். இதன் பணி சிறக்கட்டும்! இதமுற வளரட்டும்.
(நன்றி : தினகரன் 30.1.1994)


Page 36


Page 37