கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளங்கதிர் 1956-1957

Page 1
  

Page 2
ܐܡܐ ܫ
தொலைபேசி இல.233 தந்திவிலாசம். ஹாஜிசன்ஸ்
ஹாஜிவி.எம்.எம்.அபுசாலி அன்சன்ஸ்
பவுன், வைர அணிகல அமைப்பாளர், !
57, கன்னதிட்டிவீதி, யாழ்ப்பாணம்.
தித்திக்கும் தேன்மொழியாம் தமிழோசை திக்கெல்லாம். பரவ தாயகமாம் தமிழ் நாட்டின் செல்வகிலே தழைத்தோங்கி வளர, நம்தாய்ச் செல்வம், இன்பத் தமிழ்த்திரு நாட்டிலே தங்கிவளம்-பெற்றேங்க சுதந்திரத்தின் சுபீக்ஷம் சுகம்பெற வழிசெய்யுங்கள்.
நம் நாட்டின் மூலதனம்! நம் நாட்டின் கைவினைஞரின் திறன்! நம் நாட்டவரின் அனுபவம்! நாணயம், நம்பிக்கை, கட்டுப்பாடு, இவையாவும் அமைந்த சேவை:
உங்கள் பவுன், வைர நகை தேவைகளுக்கு உடன் தெரிவு செய்வதற்கோ, தயாரிப்பதற்கோ, அளப்பரிய அபிமான ஆதரவாளர்களுள் நீங் ளும் எங்களின் சேவையைப் பகிர்ந்துகொள் அன்புடன் அழைக்கின்ருேம்.
உரிமையாளன் : -
ஹாஜி 6. எம். எம். அபுசாலி, (உதவி மேயர், யாழ்ப்பாணம்

ஆசிரியர் : செல்லத்துரை குணரெத்தினம்
பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், பேரா த னை.

Page 3
ವ್ಹಿಟಿಟಿಡಿಪಿಟಿಟಿಟಣಟಟಿಣಟಿಜಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಟಿಣಣ್ಣ 3
இ
இ
č,
O O
வளரும் தமிழ்
பொருப்பிலே பிறந்து தென்னன்
புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே யிருந்து வைகை
யேட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றேர்
நினைவிலே நடந்தோ ரேன மருப்பிலே பயின்ற பாவை
மருங்கிலே வளரு கின்றள்.
(வி. பா. சிறப்புப்பாயிரம்)
භීෂුද්‍රිෂුද්‍රිෂ්ෂ්ෂීඝ්‍රත්‍රීඝ්‍රද්‍රිෂුද්‍රිෆිත්‍රීෂීලීෂී
 


Page 4
*( 4 sie w legòric) sự số sơomo ‘une) ’(ymų,5%: „ Agosty neĝo „ ) ques## gress@ :ee, 属g督gg1晚准电像'qisigotson@-s'se)'(4.191 qerr. £ (c)4%iთg)*0,919 ‘ų uį9+ p119 urte@g , «ogrw4행5: SLLLJYYY0L LYKJJK KKY0SLLLY 000LLSYYYLYCL YSY LLL LLLLL SLLLL YS LLLLTYYS SLYLL LLLYSYYYKlY L 0YYL KKK SLLL LLLLLL LYLLSYYYY
oraș șw o €g woso (srećego o ictogo) spoj ligiosons (presē unĠ usos pasure@s :•« gre æfi)
19-9961 đì)o) qjmose) șoņioșổigio
 

O இ ள ங் க தி ர் (இலங்கைப் பல்கலக்கழகத் தமிழ்ச் சங்க வெளியீடு) & ஆசிரியர் :
செல்லத்துரை குணரெத்தினம்
wNNwx^^ - - - 1 -
மலர் 9 தலையங்கம் 1956-1957
wwN-Ax
சிவமும் செந்தமிழும்
பேரம்பலத்திலே மோப0 வெளியிலே தன் ஜனயே மறந்த லயத்தில் ஒருகாலூன்றி மறு கால தூக்கி நடமாடிக்கொண்டி ருந்தான் கூத்தன். r -
"அடியொன்று பாதலம் ஏழிற்கும் அப்புறம்பட்டது இப்பால் முடியொன்று இவ்வண்டங்கள் எல்லாம் கடந்தது முற்றும்
(வெள்ளைப் பொடியொன்று தோள் திக்கின் புறத்தன. s என்ற கி%லயில் தேவதேவன் ஆடிக்கொண்டிருந்தான். அண்ட பகிரண்டங்களேயும் படைத்துக் காத்து அழித்து அலகிலா ஆடல்புரியும் அப்பன் ஆனந்தத்தில் தன்னே மறந்தே ஆடிக் கொண்டிருந்தான். முல்லே முறுவல் காட்டி, முதல்வனின் தூய-வெண்ணிறு துதைந்த பொன் மேனியில், தூக்கிய திரு வடியில், துள்ளிக்குதிக்கும் மறு அடியில் லயித்துக் கனவுல கிற் சஞ்சரித்துக்கொண்டிருந்தாள் அம்மை. முப்பத்து முக் கோடி தேவர்களும், பூதகணங்களும் துரக்கிய திருவடியைத் தொழுது போற்றி நின்றனர்.
வேதங்கள் அறைகின்ற
உலகெங்கும் விரிந்தனஉன் பாதங்கள் இவையென்னிற்
படிவங்கள் எப்படியோ..2 ஒரு மூலையில் நின்று காரைக்காலம்மையார் . *அடிபேரில் பாதாளம் பேரும் அடிகள் v முடிபேரில் மாமுகடு பேரும் - கடகம்
மறிந்தாடு கைபேரில் வான்திசைகள் பேரும் அறிந்தாடும் ஆற்ருது அரங்கு ' - என்று அப்பன் ஆடும் அரங்கைப்பற்றிய கினேவிலிருந்தார்.

Page 5
இ ைைேரிடத்தில் கின்ற அ ப பர் சுவிாமிகள் கன்னே :றந்த நிலையில்
"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணிறும் இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்ருல் ' என்று திரும்பத்திரும்பப் பாராயணம் பண்ணி $கொண்டிருந்
5frfᎢ ;
சம பங் தரோ காசலாகிக் கசிந்து கண்ணிர் மலகி ஏதோ வொரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தார். மாணிக்கவாச சருக்கோ
* நன்றே செய்வாய் பிழை செய்வாய்
நானே இதற்கு நாயகமே" என்ற நினைவு. கூப்பியகைகளுடன் இறைவனைப் பாதார விக்கமாகப் பார்த் துக்கொண்டே சுந்தார் நின்றிருந்தார். மேனியழகில் ஈடுபட்டு --மெய்மறந்து கின்ற சுந்தரர் கண்கள் திருநீலகண்டனின்கண்டத்தைச சுறறி நின்று படமெடுத்தாடும் பாம்பினிடம் வந்ததும் அப்படியே ஒரு கணம் லயித்து கின்றன
"செந்தமிழ்த்திறம் வல்லிரோ
செங்கையாவு முன்கையிலாடவே” என்று முன்னர் ஒருதரம் தான் கேட்டதை கினேந்ததும் சுந்தரரது செவ்வா யில் மின்னற்கீற்று ஒன்று வெட்டி மறைந்தது. ஆட்டத்தில் ஈடுபட்டு நின்ற அக்தப்பாட்டுக்குருகும் தமிழ்ச் சொக் கன இதைப் பார்த்துவிட்டான். அம்மையப்பனின் ஆண்டிவேடத தைக் கண்டு எள்ளி நகையாடியவனல்லவா சுந்தரன ? h−
'பித்தரே யொத்தார் நச்சிலராகில்
இவரலாதில்லையோ பிரானர்" என்றே கேட்கத் துணிந்த சுந்தர ைஉள்ளம் இறைவனுக்குத் தெரியும் செங் தமிழ் ஞாபகம் வந்ததும சுந்தரனுக்கோ சிந்தனை கள ஒன்றன பின் ஒன ருகப் பிரவாகமெடுக்கத் தொடங்கிவிட்டன. தமிழ் என ருல இறைவனுக்கு எத்தனை ஈடுபாடு என்று சுந்தர னுக்குத் தெரியும. 'நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்கரையனும் பாடியநற்றமிழ்
சொல்லியவே சொல்லி ஏத்துகப்பானை' என்றுப,
'இருந்து நீர் தமிழோடு இசைகேட்கும்
இச்சையாற் காசு நித்தல் நல்கினீர்" என்றும் தாம்

முன்பு பாடியதைச் சுங் த ர ர் கினைத்துக்கொண்டார். செங் தமிழ்ப் பனுவல்களில் மூழ்கிமூழ்கிப் பழைய சிந்தனைகளிலே தோய்ந்து தோய்ந்து அவற்றுள் சுந்தரர் ஆழ்ந்துவிட்டார்.
* சுந்தரா ! சிங் கன அதிகமாகவிருக்கிறதே! என்ற முதல் வனின் குரல் கேட்டுத் திகைத்துச் சிந்தனையிலிருந்து சுந் தரர் தன சீன விடுவித்துக்கொண்டார்.
* அமமையப்பா செந்தமிழின் கினைவு வந்தது. அதிற் சிறிது திளைத்திருந்தேன்’ என்ருர் ஆலாலசுங் கரர்.
"செந்தமிழ், செந்தமிழ்’ என் அறு தித்தித்தது இறைவன் வாய். அந்தத் தித்திப்பின் பொருட்டல்லவா "பித்தா? என்ப தையும் அவர் பொஅலுத்தார்.
செந்தமிழ் என்றதும் இறைவன் உள்ளத்தில் தமிழின் நினைவுகள் அலையலையாக - ஒனறன்பின் ஒன்ருக எழுந்தன.
மதுரையிலே திருவிளையாடல்கள்.
வாதவூரனுக்காக-அவன் வாக்கின் இனிமைக்காக .
... ... ... LD6in drudisagil. . . . . . . ... ... அடிபட்டது. செமமனச் செல்வியின் பிட்டு இனித்தது. அதன் தித்திப்பு தேவருலக அமிழ்தைவிடவா
அதிகம்? எதற்காக அடிபட்டார்? தெள்ளமுதின் மேலான முத்திக் கனியான முத்தமிழிற்காக. வாதவூரனின் மணிவா சகத்துக்காக, திருவாசகத் தீந்தமிழிற்காக...
சிந்தனே ஓய்ந்தது. தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டார் இறைவன. -
அகில உலகத்தையுமே அளந்து கிற்கும் அமலன் கண் கள் அமரர்கள் பக்கம திரும்பியது.
அதோ! கபிலன், பரணன், நக்கீரன். 62J6i7o75 oni 6ör • • • • • • • • • • • • • • • சேக்கிழார், பாரதியும். தமிழ்ப் புலவர்கள் எல்லோருமே கின் அறுகொண்டிருந்தார் கள். தமிழால் வைதாரையும் வாழவைப்போனல்லவா. அத் தமிழ்ச் சொக்கன் ? l
எல்லோருமே செந்தமிழ், தீந்தமிழ் பாடிக்கொண்டிருந் தார்கள். உடலில், அதில் ஓடும் 5ரம்பு நாளங்களில்; உள் ளத்தில், அதன் ஒவ்வெர்ரு அடிதுடிப்பில்; உயிரில், அந்த

Page 6
உயிருக்குயிராம உயிரில்; அது உயிர்க்கும் ஒவ்வெர்ரு மூச்சில் -முழுவதும் தமிழாயே இருந்தாாக்ள.
அடுத்துப் பூலோகத்திலே தமிழ் வழங்கும் புண்ணிய பூமியிலே இறைவன் கண்கள் வந்து கின்றன.
அமரர்கள் கொடுத்த பூமாலேகள், அவர்கள் மானசீகமாக இறைவனுக்கு அணிந்து அழகு பார்த்த மாலைகளும்கூட நறு மணம்-தமிழ் மணம-கமழக் குவிந்து கிடந்தன.
வாடைக் காற்றும் குறைக்காற்றும் வடக்கிலும் தெற்கிலு மிருந்து வீசிக்கொண்டிருந்தன.
வாடைக்காற்று (இந்தி) சற்று வேகம் குறைந்து வீசியது. தெற்கிலிருந்து சூறைக் காற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. சிங்களத்தின் சீற்றம் அப்படிப்புயலாக உக் கிர வேகம் பெற்றுக்கொண்டு தானிருந்தது, பசுந்தமிழ் மலர்க ளாற் புனையப்பட்ட மலர்மாலேகள் காற்று வேகத்திலும்கூடக் கனகச்சிதமாகவே காட்சியளித்தன. மண்ணும் புழுதியும் கூட அவற்றின் பிரகாசத்தை மறுப்படுத்தவேயில்லை.
இறைவன் அம்மையின் பக்கம் பார்த்தார். அம்மையின்கண்களும் மலர் மாலைகளிலா லயித்து இருக்கிறது? அம்மை யின் கண்களிலிருந்த ஏக்கத்தை அப்பன் காணமுடிந்தது.
அப்பொழுது, "தமர நீர்ப்புவனம் முழுதொருங் கீன்ருள்
தடாத கா தேவியென் ருெருபேர் தரித்துவந்ததுதவும் தனிமுதலொரு நீ சவுந்தர மாறஞனதுவும். ” GT6ör gpy கூட்டத்திற் கூட்டமாய கின அறு குல முக்கு பாடிய குமரகுரு பரன் குரல் கேடடது.
மீண்டும அவன் குரலே சான், * தொடுக்கும் கடவுட் பழம்பாடல் தொடையின் பயனே துறைத்தீந் தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே” என்று 5ாத் தழுதழுக்கப் பாடிய பாடலது.
அன்பினுல் உள்ளம் நைக் த அப்பன் அம்மையைப் பார்த் தான்! அகம் குழைந்த அம்மை அப்பனேப் பார்த்தாள். *தமிழுக்கு அழிவில்லை” என்ருன் முழுமுதல். இறைவனை அப்படியே தழுவிக்கொண்டாள் உலகமாதா.

பிரபஞ்சத்தையே இயக்கி கிற்கும் இரண்டு சக்திகள்ஒன்றிலேயொன்று அடங்கி ஒடுங்கின.
来源 | 来
எங்கிருக்தோ பாரதியின் குரல் அசரீரிபோல்
"தமிழா! தெய்வத்தை நம்பு
பயப்படாதே
உனக்கு நல்லகாலம்
வருகிறது' என்றது.
"இளைஞர்களின் வாழ்க் கை யில் ஒரு குறிக்கோள் இருக்கவேண்டும். ஒரு வெறிகட்சிவெறி அல்லது சமயவெறி இருந்தாலும் மேலானதே. வெளியுலகத்தில் ஒரு போராட் டம் இருக்கவேண்டும். இல்லயானுல், இளமை எண்ணங்கள் சும்மா இருக்கமுடியாது. நாடி நரம்புகளின் ஆசையைப்பற்றி அலேந்து உட லேக் கெடுத்துவிடும். அந்த ஆசைக்கு இட மில்லாமல் இரு பது இருபத்தைந்து வயது இளைஞன் இருக்கவேண்டுமானல், ஒரு குறிக் கோள், ஒரு வெறி இருந்து வெளியுலகம் அவனைக் கவரவேண்டும். இவற்றுள் ஒன்றி லும் மனம்பற்ருத இளைஞனுக இருந்தால், பேசாமல் பெற்றேரே பார்த்துத் திருமணம் செய்துவிடவேண்டும்.'
- டாக்டர் வரதராசன்,

Page 7
ஆசிரியர் குறிப்புகள்
ஈழத்தில் தமிழின் நிலை
காம் எதிர்பார்த்தது கடந்தேவிட்டது. ஈழத்தில் தமிழன் இனித் தலைநிமிர்ந்து வாழ்வதெங்ங்ணம் ? *தமிழனென்ருெரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்று பாடினர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கமயிள்ளை. எம் இனத்தின் உயிர் நாடியாய் விளங்கிய தமிழ்மொழி ஒதுக்கப்படச் சட்டபூர்வ மாய்ச் சிங்களம் அரசாங்க மொழியாகிவிட்டது. சுயநலம்மிக்க -தான் தோன்றித் த%லவர்களின் பாராமுகமான தன்மையா லும், அவரது சரணுகதி மனப்பான்மையாலும், தக்க தலைவ ரின்றித் தடுமாறிய தமிழினம் தன் உயிரனன உரிமை பறி போன நிலையில் - வாழ்வதா வீழ்வதா என் அறு ஊசலாடிக் கொண்டிருககும் கிலைமை சிருஷ்டித்தாயிற்று. பெரும்பான மைப் பலம் ஒன்றையே கொண்டு. இதுவாை காலம தமிழருக் குக் கொடுத்த வாக்குறுதிகளே மறந்து, அவர்க்கு நமயிக் கைத் துரோகமிழைத்து 6யவஞ்சகத்தனமாய், ஜனநாயகத் தத்துவத்தையே காற்றில் பறக்கவிட்டுப் பெரும்பான்மை இனம் தமிழர்மீது தமது மொழியைத் திணிக்க முற்பட்டுவிட்டது.
இந்த நிலையிலாவது சீர்குலைந்துகி-க்கும் தமிழினம் ஒரே குரலில் தம எதிர்ப்பைத் தெரிவித்ததா? இல்லவேயில்லை. பிரிந்து கின்று தனித் தனி கூச்சல போட்டார்களேயன்றித் தமிழ் காக்க எல்லோரும த த த ம் கட்சிகளை விட்டு ஒன அறு கூடவேயில்லை.
"எனயீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனமீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னல் தினையளவு நலமேனு மிருக்கு மென்னுற்
செத்தொழியும் நாளெனக்குத் திருநாளாகும்" என்று பாடிய தமிழன் பொங்கியெழுந்தான என்பது உண் மையே; ஆனல், ஒன் அறுகூடி, ஏகோபித்து எழவில்லை என்ப தையே யாம் இங்கு கருதுகினருேம். கிழக்கு இலங்கையின் வளம்தரும் கழனிகளில் உரிமைக்குப் பொங்கி எழுந்த மான முள்ள தமிழனின் குருதி வெள்ளம படிந்து மண்ணுேடு மண்ணுகி அவனது மானத்தைம் பேசிக்கொண்டே உரம்தருகிறது. விடு
O

தலைப் போராட்டம் ஆரம்பித்த முதல் யுத்தகளம் அது என் போம். அங்கே நடந்த கோரமான கலகங்களில் வீர மரணம் எய்திய வீரத் தமிழர்களுக்குத் தலைதாழ்த்துகிருேம். புறநா அனுாற்று வீரம் இன்னும் அழிந்துவிடவில்லை. வீரத்துக்குப் பரணிபாடிய உணர்ச்சி இன்னும் பொன்றி விடவில்லை என் அறு தமிழன் பெருமிதம் அடைய இன்னும் இடமிருக்கிறது என்போம்.
இன உணர்ச்சியைத் தூண்டி வகுப்புக் கலகம் ஏற்படுத் அதுவது எங்கள் நோக்கமல்ல. அதே நேரத்தில் இன உரிமை பறிபோவதையும் பார்த்துக்கொண்டு கண்மூடியிருப்பதற்கும் முடியாது. இளங்கதிர் தனது அபிப்பிராயத்தைச் சொல் லியே தீரவேண்டும்; அல்லது அதன் கடமையினின்றும் தவறியதாக முடியும்.
கயத்தாலும் பயத்தாலும் நயவஞ்சகமாக நடந்துகொண்டு தமிழ் இனத்தின்மீது சிங் களம் திணிக்கப்படுவதை நாம் எதிர்க் கின்ருேம். சிறுபதவிகளுக்காக இனத்தைக் காட்டிக்கொடுத துச் சிங்களத்தை நம்மவர்கள் ஏற்கமாட்டார்கள் என எதிர் பார்க்கிருேம்.
தமிழர் சிங்களத்தை ஒரு காலமும் ஏற்கமாட்டார்கள், அவர்கள் உரிமையைப் பறித்து இன உணர்ச்சியைக் கிளப்பி ஈழத்தை உள்நாட்டுக் குழப்பத்தில் ஆழ்த்தவேண்டாமென்று ஆட்சியாளரைக் சுேட்டுக்கொள்ளுகிருேம்.
தமிழிற்குச் சம அந்தஸ்த்துத் தந்தால் என்றும்போல் ஒன்றி வாழ்வோம். அது தரத் தவறினல் பிரிந்து சமஸ்டியின் கீழ் ஒன்றுபடுவோம். அதுவும் தரத்தவ மினல் முற்ருகப் பிரிந்து 'தனித் தமிழ் அரசு அமைப்போம். அரசாங்கம் இவற் றில் ஒன்றைச் செய்துதரத் தவறுமேயானல் தமிழரே எகோ பித்து எதிர்த்துப் பெறுவதற்குத் தயாராக இருக்கவேண்டும் இதற்கு ஒற்றுமை தேவை. தமிழினம் உயிர்போகும் தறுவா யிலாவது ஒன்றுபடுமா?
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு. பல்கலைக் கழகத்தில் தமிழ்
அரசாங்கத்தின் அவசரக் கொள்கைக்கேற்ப எங்கள் கலாசாலையும் சிங்களத்தையே போதனுமொழியாக்கி விடுமோ என்ற பயம் இங்கு கல்விகற்கும் தமிழருக்கு இருந்திருந்தால்
1.

Page 8
அது இனியும் இருக்க நியாயமில்லை. அரசாங்கத்தின் கண் மூடிப் போக்கினேப் பின்பற்ருது ஆங்கிலமே போதனமொழி யாக இருக்குமென்று பல்கலைக் கழகத்து ஆட்சிபீடம் தீர்மா னித்திருப்பதைப் பாராட்டுகிருேம். உயர் கல்வி கிலேயமாம் இக் கலாசாலையில் தமிழ் மாணவர்கள் படிக்கின்றபடியால் இங்கு இருந்தபடியே ஆங்கிலம் போதனமொழியாக இருக்கின் எது வித கஷ்டமும் நேராது. ஆயினும், பல்கலைக்கழக மாணவர் கள் எல்லோரும் சிங்களமும் ஒரு பாடமாக, அதுவும் கட்டாய பாடமாகப் படிக்கவேண்டுமென்று செனட் சபை முடிவு செய்தது பாராபட்சமானதொன் ருகும். சர்வகலாசாலையினர் சுய மொழியினைப் போற்ற முற்பட்டால் தமிழர்களுக்குத் தமிழையே கட்டாய பாடமாக்கவேண்டும். இதைவிடுத்துச் சிங்களம் ஒன்றி னேயே எல்லோரும் படிக்கவேண்டுமென்று கேட்பது முறை யானதொன்றல்ல என்பதனையும் தெரியப்படுத்துகிருேம். ஈழத் தின் உயர் கல்விப்பீடம் நியாயம் போற்றுமா?
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தமிழுக்கென்று ஒரு பல்கலைக்கழகம் ஏற்படுத்த எடுக்கப் படும் முயற்சியினை மனப்பூர்வமாகப் பாராட்டுகிருேம். தமிழ னின் மொழி, பண்பாடு, நாகரிகம், கலே முதலியவற்றைப் போற்றிப் பாதுகாப்பதற்கும், அவற்றை வளர்ப்பதற்கும் ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் இன்றியமையாதது என்பதை யாவ ரும் ஒப்புவர். இத்தொண்டினைப் பல சமூகங்கள் பயிலும் இலங்கைப் பல்கலைக்கழகம் செய்யும் என்று எதிர்பார்ப்ப தற்கு இடமில்லை. ஈழத்துப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச் சியே நடத்துவதற்கு அரசாங்கம் வசதிகள் செய்து தரவில்லை. அரிய ஆசாய்ச்சி நூல்கள் வெளியிடப்படவேண்டும். பெரும் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் நாடகங்களும், பேராசிரியர் வி. செல்வநாயகத்தின் ‘இலக்கிய வரலாறு’ என்ற நூலும், கலாநிதி சு. வித்தியானந்தனின் 'தமிழர் சால்பு' என்ற நூலும் பாராட்டத்தக்க முயற்சிகளே. இலங்கையில் கலை முயற்சிகளை யும் அவற்றிற்கு இருக்கும் ஆதரவையும் எண்ணிப் பார்க்கும் பொழுது இவ ற்  ைற ப் பற்றி நாம் பெருமைப்பட இட முண்டு. இ  ைவ போ ன் அறு இன்னும் அனேக நூல்கள்
12

வெளிவந்தாகவேண்டும். இப்படிப்பட்ட பெருமுயற்சிகளுக்குத் தமிழ்ப் பல்கலைக்கழகம் பெரிதும் துணையாக இருக்கும் என் ணும கருத்தே-தமிழ்ப் பல்கலைக்கழகம் அதிவிரைவில் ஏற் பட்டு ஆகவேண்டும் என்று நாம் கருதுவற் தகுக் காரண மாகும.
தனிப்பட்ட பண்பாடுகொண்ட தமிழினம் தனக்கெனக் கலைவளர்ச்சிக்கு ஒரு கி%லய மினறி இதுவரை இந்தியாவையே கம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. காவலர் பெருமான் அருள் திரு. விபுலானந்த அடிகள் போன் ருரன் றி இந்தியரும பாராட் டும் வியப்புறு செய்கை செய்தவர் இல்லையென்றே கூறிவிட லாம். இதற்கு ஈழத்தில் திறமைமிக்கோர் இல்லை என்பது கருத்தல்ல. இருக்கும் கிறமைகளைப் போற்றிக் கலைவளர்க்க ஒரு நிலையமில்லை எனபதே ஈழத்துக் கலை முயற்சிக்குப் பெருங் தடையாக இருந்தது எனலாம். தமிழருக்கு ஒரு பல்கலைக்கழ கம் வேண்டும் என்ற கருத்தை எந்தத் தமிழ் மகனும் ஆவ லுடன் வரவேற்பதோடு, இக்கனவு நனவாகப் பேராதரவும் தருவான் என்பதில் ஐயமில்லை. இத்துறையில் உழைக்கும் தமிழ்ப பெருமக்களுக்கு கல்லாசி கூறுவதோடு அவர் முயற்சி வெற்றிபெறுவதற்குத் தமிழ் மக்கள் எல்லோரும் ஏகோபித்து உழைக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளுகிருேம். திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல்வேண்டும் - பாரதி.
வரவும் பிரிவும்
ஒக்ஸ்போர்ட் சர்வகலாசாலை சென்று மொழியாராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றுத் திரும்பியுள்ள டாக்டர் ஆ. சதாசிவத்தை வரவேற்கிருேம். அவர்கள் சேவை தமிழ்ச் சங்கத்திற்கு என்றும் இருக்கும் என்று எதிர்பார்க்கின்ருேம்.
தமிழ் விரிவுரையாளராகக் கடமையாற்றிய திருமதி As தேவா அவர்களும், திரு. சி. முருகவேள் அவர்களும் தங்கள் பதவிகளை விடுத்து வேறு இடங்களுக்குச் சென்றுள்ளார்கள். அவர்களுக்கு எங்கள் நல்லாசிகள் உரித்தாகுக.
5 Gir f)
இம்மலரை கல்ல முறையில் வெளியிடுவதற்குப் பலர் துணையாக இருந்தனர். தனது பல அலுவல்களுக்கிடையே
2
3

Page 9
யும் எனது வேண்டுகோளுக்கிணங்கிக் கட்டுரைகள், த%லயங் கம் முதலியவற்றைப் பார்வையிட்டுப் பிழைகள் திருத்தியும், புது யோசஃன கள் கூறியும் உதவிபுரிந்த - எனது ஆசிரியர் டாக்டர் ஆ. சதாசிவம் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
என்னுடன் வந்து விளம்பரம சேர்ப்பதில் துணைபுரிந்தும, உடனிருந்து பல உதவிகள செய்தும் பலவாருக உதவிய நண பன் செ. உருபசிங்கத்தின் உதவியும மறககப்பால சன்று
இனி இம்மலருக்குக் கட்டுரை, கதை, கவிதை முதலிய தந்து சிறப்பித்த பெருமக்களுக்கும், தமிழ்ச் சங்க அங்கதத வர்களுக்கும் என நன்றியுரியது.
விடுதலை
விடுதலை ? எங்கிருந்து விடுதலை கிடைக் கும் ? நம் ஆண் ட வனே நம் மீது அருள் சுரங்து படைப்புத் தளைகளைத் தன் திருமேனியில் பூண்டிருக்கிறன்; என்றும் நம்மைவிட்டுப் பி ரிய மு டி யா ம ல் அவன் இணைக்கப்பட்டிருக்கிருன். பூவையும் நறும் புகையையும் உன் பூசையையும் விட்டு வெளியே வா! உன் ஆடை கிழிந்து அழுக் கடைந்தாலும் பாதகமில்லை. நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழைத்து அந்த உழைப்பிலே
நின் ஈசனைக் கண்டுகொள்.
- கீதா ஞ் ச லி
14

சிவப்பிரகாச சுவாமிகள் பாடற்சிறப்பு
*ஜெயந் தி"
* கற்பனைக் களஞ்சியம் அது அதன் அற்புதத்தை அறியவேண்டாமா ? - ஆசிரியர்.
இருள் கவிந்திருந்த நாயக்கர் காலத் தமிழ் இலக்கிய வானில் ஒளிகாலும் கவிச்சுடர்களும் அங்கொன்று இங்கொன் ருகப் பூத்துப் பொலிந்து அக்காலத் தமிழ் இலக்கிய வானே முற்ருக இருள் கவ்வாது காத்தருளின. அப்படிப்பட்ட கவிச் சுடர்களில் ஒன்றே துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிக ளாவர். சிவ ப் பி ர கா சர் கருவிலே திருவுடையர். அவர் தொண்டை மண்டலத்தில் தோன்றி, பாண்டிநாட்டிலே கலைப் புலமை கிரம்பி மெய்ஞானம் கைவரப்பெற்ருர், சிவப்பிரகாசர் ஓர் சிவநெறிச் செல்வர், வீரசைவர்; இளமையிற் துறவுடை யார், எண்ணுன்கு ஆண்டுகளே அவர் வாழ்ந்திருக்கின்றர்.
இவர் பாடிய அகால்கள் முப்பக்திநான்கு. அதைவிட இவர் தனிப்பாடல்களாகவும் பல பாடியுள்ளார். இவற்றுள் சோணசைலமாலை, திருவெங்கைக் கலம்பகம், உலா, கோவை, நால்வர் நான்மணிமாலை, சிவஞான பாலையர் பிள்ளைத் தமிழ், திருக்கூவைப் புராணம், பிரபுலிங்கலீலை, நன்னெறி, இயேசு மத நிராகரணம், சீகாளத்திப் புராணம் என்பவை குறிப் பிடத்தக்கவை.
பரந்து பட்ட இந்த இலக்கியப் பரப்பில் உலவி, சிவப்பிர காசரின் கவிதைக் கடலில்மூழ்கி, முக்குளித்து அவற்றுள் காணப்படும் கவிதாமணிகளிற் சிறப்புக்கண்டு கூறுவது எளி தனநு. தத்துவக் கருத்துக்கள் பின்னிப்படரக் கற்பனை அற் புதத்துடன் பல்வேஅலுபட்ட யாப்புக்களில் இவர் பாடல்கள் அமைந்துள்ளமையை கோக்கின் இவரது வித்தகப் பெரும் புலமையே முசுலில் திகைப்புறச் செய்கின்றறு. கால்வர் நான் மணிமாலை யென்ற சிறு நூலிலேயே இவர் வெண்பா, கலித் துறை, ஆசிரியவிருத்தம், அகவல் எனற நான்கு வேறுபட்ட யாப்பமைதிகளைக் கையாண்டிருத்தல் இவர் யாப்புமுறை எல் லாவற்றிலும் நல்ல வல்லமை பெற்றவர் என்பதைக் காட்டப் போதுமானவையாகும். வெண்பாவிற் புகழேந்தி, விருத்தம்
15

Page 10
என்னும் ஒண்பாவிற்குயர் கம்பன் என்று யாப்புமுறைகளைத் தம் ஆட்சியினலேயே பூரணத்துவம் அடையவைத்த அத் அதுணைப் பெரும் புலவரென்று இவரைக் கருதாவிட்டாலும் எந்த யாப்பிலும் குறைவறப்பாடும் திறனமைந்த புலவர் என்று கருதினலே போதுமானதாகும். இதழுடன் இதழ் ஒட் டாது பாடவல்ல கிரோட்டக யமக அந்தாதி இவரது வித்த கப் பெரும் சிறப்பைக்காட்ட வல்லது. உதாரணமாக ஒரு செய்யுள் பின்வருமாறு :
தங்கந் தினங்க ளடையத் தனியெனைத் தள்ளியங்கே தங்கந் தனங்க டரச்சென் றனரறிந் தாரிலைகா தங்கந் தனங்க ளலர்காக்க ரூரெழிற் றண்செந்திலார் தங்கந் தனங்க நிகர்செக்கர் செய்சஞ் சலத்தினையே. சிவப்பிரகாசர் போன்ற இத்துணைப் பெரும் புலவர்கூட நாயக் கர் கால இலக்கியப் போக்கிற் கேற்பப்போலும சொல்லலங் காரங்கள் கொண்ட செய் யு ள் செய்வதிலும் ஈடுபட்டனர் என்று கொள்ளவேண்டும.
பழமைபோறதும் பண்பினைப்பெற்றுப் பல்வேறு பிரபந் தங்கள் வெவ்வேறு துற்ைகளிற் கையாளப்பட்ட நாயக்கர்கால இலக்கியப் போக்கிற்கேற்ப இவர் பல்வேறு பிரபந்த வகை களேக் கையாண்டுள்ளார். கோவை, உலா, பிள்ளைத் தமிழ் போன்ற பழைய பிரபந்தங்களே இவர் கையாண்டபொழுது முன்பு இப்பிரபந்தங்கள் கையாண்ட பாட்டுடைக் தலைவனைப் போலல்லாது புதிய கலைவனே ப் பாட இவற்றைக் கையாண் டார். பல்லவர் காலத்தில் இபபிரபந்தவகைகள் இறைவனைப் பாடச் சோழர் காலதகில் அரசனேப் பாட, இவரோ தம் ஆசி ரியப்பிரான் சிவஞான பாலைய சுவாமிகளைப் Liriuț6ii 6Tri. குரவரில் ஒருவராகிய ஆசிரியரைக குறித்தே இவர் தாலாட்டு, நெஞ்சுவிடு தூது, திருப்பள்ளியெழுச்சி, பிள்ளைத் தமிழ், கலம் பகம் முதலிய பிரபந்தங்கள் பாடியுள்ளாரெனில் இவர் ஆசி ரியர்மீது கொண்ட அன்பு சொல்லுங் தரமாமோ ? சிவஞான பாலைய சுவாமிகள் திருபபள்ளியெழுச்சியில் அவர் தம குரு காதனைப் பாடும் பாட்டொன்று பினவருமாறு: நிறைந்தவொரு சச்சிதா னந்தபர சிவத்தி
னிகழுமூயி ரிப்பியிடை வெள்ளிபோற் ருேன்றி அறிந்துமய லகன்றிடி லொன்றன்றிவே றிலையென்
றறைவர்சிலர் பதியினைப்போ லாருயிர்நித்தியமே
16

இறந்துமல சத்திவிடிற் சிவசமா னதையா
யிருக்குமென வறைவர்சில ரெதுவழக்கென் றடியேஞ்
செறிந்தனநின் றனைவினவ வெங்கள்சிவ ஞான
தேசிகனே யருண்மலையே பள்ளியெழுந்தருளே.
சிவப்பிரகாசர் பாடிய கால்வர் நான்மணி மாலை, ச பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகர் இவர்களைக் குறித்து நாற்பது பாக்களாற் பாடப்பட்ட சிறு பிரந்தமாகும். இச்சிறு பிரபக் தம் இபபெரியார் சமய குரவர் நால்வரிடத்தும் வைத்திருந்த பெருமதிப்பை கன்கு விளக்குகின்றது பக்திகிலையில் கின்று இறைவனே வழிபட்ட இவர் நால்வரையும போற்றும் முறை நலமுடைத்தென்பதோடு, பக்திச்சுவை கனிசொட்டச் சொட் டப் பாடப்பட்டுப் பக்தித் திறம படைத்திவையாகவும் அமைக் துள்ளன. இறைவனேப் பார்த்து கால்வா 15ான மணிமாலையில்
' உறைக்கரும்புகழ் மேவியசுந்தர னும்பன் மீதி வரா
நினைப்ப ருங்கயிலாயம டைந்தமை நின்றுகாண்குறுவது எனக்கு வந்துறுமோ” என்று கேட்பது நெஞ்சை உருக்கு வதாக அமைந்துள்ளது.
அவர் சுந்தரரைப் பார்த்துக் கேட்பதாக அமைந்துள்ள * போதமுண்ட பிள்ளை யென்பு பொருகண் மாதுசெய்ததோ காதல்கொண்ட சொல்லின் மன்னர் கன்மி தப்பவுய்த்ததோ வாய்தி றந்து முதலை கக்க மகனை நீய ழைத்ததோ யாது நம்பி யரிது நன்றெ னக்கி யம்ப வேண்டுமே "
என்று கேட்கும் பாடலின் கயம் உள்ளுங்தோறும் உவகை பயப்பதாக அமைந்துள்ளது. "சுந்தரா! சம்பந்தன் பிள் ஆள எலும் பினைப் பெண்ணுக்கினுன. 15 வக்கரசனே கடலிற் கல் மிதக்கச் செய்தார், முதலைவாய்ப் பிள்ளையை நீ அழைத்தாய் இக்க மூன்று அற்புதங்களிலும் எது செய்தற்கரியது. சிறங் ததெது?" என்று கேட்குமுகமாய் அமைந்துள்ள இப்பாடல் பக்திவெள்ளத்தில் மனுேபாவனையில் தன்னை மறந்து நிற்கும் சிவப்பிரகாசர் திருவுள்ளத்தைக் காட்டி கிற்கின்றது.
திருவாசகத்துக் குருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பர். மணிவாசகரின் அருள் வாசகத்தில் திளைத்த அவர் அவ்வாசகம்பற்றிக் கூறுவது பின்வருமாறு:
17

Page 11
* விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட் காரண னுரையெனு மாரண மொழியோ ஆதிசீர் பரவும் வாதவூர் ரண்ணல் மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனே யாதோ சிறந்த தென்குவி ராயின் வேத மோதின் விழிநீர் பெருக்கி நெஞ்சநெக் குருகி நிற்பவர் காண்கிலேம் திருவா சகமிங் கொருகா லோதிற் கருங்கன் மனமும் கரைந்துகக் கண்கள் தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய அன்ப ராகுங் ரன்றி மன்பதை யுலகின் மற்றைய ரிலரே” நாயன்மார் வாழ்க்கையிலும் அதன் அற்புதத்திலும் ஈடு பட்டதன்றி அவர்தம் தேவாரத்திருவமுதிலும் திளேத்த உள் ளம் கிவப்பிரகாசர் திருவுள்ளம் என்பதைச் சோன சைல மாலையைப் படித்துச் சுவைத்தவர் கன்கறிவர். தேவார ஓசை நயம், பொருட்செறிவு, பக்திகிலே முதலியவற்றிற்கு எத்துறை யிலும் இணைகிற்கக்கூடிய அற்புதம் வாய்ந்தவை சோணசைல மாலைப் பாடல்கள். அவற்றை நாம் படிக்குங்தோறும தேவா ரம் என்ற நினைவையே அவை எழுப்புகின்றன. பின்வரும பாடல் இதனை விளக்கவல்லது. * நேர்ந்திடு மொரு செங் கோல்கொடு கொடுங்கோ னிமிர்ந்திட (விலங்கை சென்றடைந்தோன் கூர்ந்தவன் பொடுகின் றிறைஞ்சுபு வழுத்துங் குரைகழ
(லிரக்கவஞ்சுவல் யான் சேர்ந்திடு மலைமான் பெருமுலை யுவமை சிறுமலைகளுக்
(குதவாமற் சார்ந்திட விரும்பி வளர்ந்தெழுஞ் சோணசைலனே
கைலை நாயகனே' இதில் சம்பந்த சுவாமிகள், அப்பர் சுவாமிகள் தேவாரங் களிற் காணப்படும் இராவணன் பற்றிய குறிப்பும், இயற்கை வருணனைகளும் இதனைத் தேவாரம் என்றே க்ொள்ளச்செய் யும் என் ப த னே இதனைப் படிப்போர் யாவரும் ஒப்புவர் கைலாயநாதனைப் பார்த்துக் கசிக் துருகி நின்று அவர் பாடிய பாடல்கள் கற்போர் இதயத்தைக் கசிந்துருகச் செய்பவையாக
அமைந்துள்ளன.
8

சிவப்பிரகாச அடிகள் இறைவனைப் பார்த்து "இறைவா!
ஞானசம்பந்தனைப்போல் முலைப்பாலீந்து பாடச்செய்யாதுவிடி னும், நாவுக்கரையன் போற் சூலைநோய் தந்தாவது பாடச்செய் வாய்" என்று கேட்கும்பொழுது கண்களிற் கண்ணிர் மல்கா தார் யாரே *யாவுமா முமையுண் ணுமுலைப்பா லீந்துபா டச்செயாயெனினும் மேவுமா துயர்செய் சூலைநோ யெனினும் விடுத்துகிற் பாடுமா
[றருளாய்" என்பதே அப்பாடற் பகுதியாகும். கற்போர் நெஞ்சம கசிந் துருகச் செய்வதில் தேவாரத்திற்கு இது அதிகம் சளைத்த தல்ல எனபதே இரண்டும கற்ருேர் துணிபு.
குர வரையும் இறைவனேயும் பாடிய சிறப்புக் கண்டோம், இணிக கோவை பாடிய சிவப்பிரகாசர் காண்போம். இலக்கிய நலனெல்லாம் சிறப்புற எடுத்தாண்டு, இன் பத்தின் இன்ப மாக மணிவாசகர் திருக்கோவையார் எனற இன்ப இலக்கியம கண்டசர். பேரின்பம், சிற்றின்பம் என்ற இருவேறு இன்பங் களுக்கிடையே ஒருமைப்பாடு கண்டு நூல்செய்த அவருக்குப் பின் எத்தனையோ கோவைகள் தோன்றியுள்ளன. பலவகை யில் திருக்கோவையாரைப் பினபற்றியே பின எழுந்த கோவை கள் எழுந்தபோதும் இலக்கியத்தன்மையில் தனித்துவம் உடையவையாகவே ஒவ்வெசரு கோவையும் விளங்கக்காணலாம்.
தலைவியைத் தோழி அச்சுறுத்துவதாக அமைந்த துறை யின் கீழ்வரும் பாடலொன்று பின்வருமாறு : * சுனைக்காவி யன்ன புனத்திற் சுங்கடியா
துணைக்காதல் செய்தவர் தம்பொருட் டாக வுலைத்தல்கண்டு வினைக்கா டெறியு மழுவார் திருவெங்கை வெற்பிலன்னை தினைக்காவன் மற்றெரு வர்க்களித் தாலென்னை
(செய்குவையே’ இவையன்றித் திருக்குறள் கற்றுத்துறை போய் அதன் சொல்லும் பொருளும் பல இடங்களிலும் ஆற்றலோடு கையா ளும் அடிகள் - திருவெங்கைக் கலம்பகத்திலே ஒதற் பிரிவு கூறுமிடத்தில் "விண்ணுடை யார்புகழ் நூபுர பாதர்வெல் வேனெடுங்கண் , பெண்ணுடை யார்மகிழ் தென்வெங்கை மாநகர்ப் பெண்ண
[ணங்கே
19

Page 12
கண்ணுடை யார்கற் றவரே கல் லார்கண் முகத்திரண்டு புண்ணுடை யாரெனக் கூறிநங் காதலர் போயினரே?
எனகின்றர். "கண்ணுடையார் என்போர் கற்றேர் முகத்திரண்டு
புண்ணுடையார் கல்லாதவர்” என்ற திருக்குறட் சொல் லும் பொருளு இங்கு பயின்று வந்துள்ளமை காணலாம்,
இனி கன்னெறியென்ற செந்நெறியுணர்த்தி அறம்போதிக் கும் சிவப்பிரகாசர் காண்போம். "நீதிநெறி விளக்கம்? சுந்த குமரகுருபர அடிகள் போன்றே 'நன்னெறி" வழங்கிய சிவப் பிரகாசர் அதன் கண் நாற்பது செய்யுள்களில் அரிய பெரிய உண்மையெல்லாம் பொதிந்து தந்துள்ளார். விஞவுக்கிறுக்கும விடைபோன்று அமையப்பெற்ற வெண்பா யாப்பினை மேற் கொண்டு அவர் கூறும் அறவுண்மைகள் இலக்கியச் சுவை பயக்கத்தக்க வகையிற் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒர் எடுத்துக்காட்டு நினைவுகூரலசம் :
"காதல் மனையாளும் காதலனும் மாறின்றித் தீதி லொருகருமம் செய்யவே - ஒதுகலை எண்ணிரண்டும் ஒன்றுமதி யென்முகத்தாய் நோக்கத்தால் கண்ணிரண்டும் ஒன்றையே காண்” இனி இவற்றை விடுத்து ஆசிரியரது கவித்துவத்தை யும் கற்பனை வளத்தையும் காண்போம். தமிழகத்துத்தோன் றிய புலவர் பலருள்ளும் நம் சிவப்பிரகாசருக்கோ " கற்பனைக் களஞ்சியம்’ என்ற பெயர். இவர் கற்பனை ஆற்ற%லப்பற்றிப் புகழாத புலவர்கள் இல்லை எனலாம. சங்கத்துச் சான்றேர் கள் வாழ்ந்து இலங்கியம் சந்தபிறகு, நாயன்மார் அழ்வார் களின் தேவார திருவாசக திவ்விய பிரபந்தங்களின் பிறகு, காப்பியக் கற்பனைகளைக்கண்ட பிறகுதான் தமிழகம் சிவடபிர காசர் பாடல்களைக் கண்டது. இருந்தும் கற்பனைக் களஞ் சியம’ என்ற பெயர் சிவப்பிரகாசருக்கே கிலைத்துவிட்டது இது ஒன்றே கவிதா உலகில் இவருக்கு இருக்கும் தனிமதிப் பைப் புலப்படுத்தப் போதுமானதாகும். சிவப்பிரகாச சுவாமி கள ஒனறினை அணிசெய்வது என்ருல் அதற்காகப் பல செய்யுட்கள் வ ை"ந்து கற்போர் காலத்தை வீணுகக் கழியு மாறு செய்யார். தாம் கூறிய பொருள் கற்போர் உள்ளத்தே அமைந்து கிடககுமாறும், அதனே அவர் பன்முறை கினேந்து நினேந்து இன்புறுமாறும் பாடும் தெய்வப்புலமை வாய்ந்தவர்.
20

திறனமைந்த ஒரு புலவன் ஒரு செய்யுள் செய்வதாயின் அச்செய்யுளில் அணி அமையுமாறு பாடுதல்வேண்டும்.
* பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போல் பல சொல்லாற் பொருட்கிட ஞக உணர்வினின் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்” என்பத ஞல் நன்கு அறியலாம். அணியிலாக் கவிதை பணியிலாவனிதை என்பது யாம் அறிந்ததன் ருே?
கற்பனைத்திறன் அற்புதமாக அமைந்த கவிஞர் அடிக ளாகையால் அவரது கறபனைகளும் உவம உருவகச் சிறப்புக் களும் நூணுகி அதுணுகி ஆராய அவற்றின் கருத்து நுண்மை வளர்ந்துகொண்டே போகக் காணலாம். நுண்ணிய புலமை யுள்ளோருக்கே இன்பம் பயக்கும் கற்பனைகளே அடிகள் மேற் கொண்ட வீர சைவமதத்தின் விழுமிய கருத்துக்களைக்கொண்டு அவர் படை த் த அரும் பெரும் சாப்பியம் பிரபுலிங்கலீலை யிற் கண்டு தெளியலாம். அவற்றுள் ஒன்று பின்வருமாறு.
மாயை என்ற தலைவி பிறந்தாள். அவளை வளர்த்தனர் என்று கூறத்துவங்கிய ஆசிரியர், எவ்வாறு வளர்த்தனர் என்பதை உவமத்தாற் சுட்டி உணர்த்திப் போக்தார். அதுவே பின்வரும் பாடலாகும்.
மிடிய னெருசெய் யாளனச் செய்
விளையக் காக்கும் செயல் போலப் படியில் கல்வி விரும்பினுேன்
பாடம் போற்றும் அதுபோல ஓடிவில் செங்கோல் மனுவேந்தன்
உலகம் புரக்கும் முறைபோலக் கொடிய நோன்பு செய்தீன்ற
கொடியை வளர்த்தாள் மோகினியே
இன்னுெரு கற்பனை கூறிமுடிப்போம். குடும்பத்தில் நிக ழும் அன்ருட நிகழ்ச்சிதான் அது. குழந்தைகள் கிறைந்த குடும்பத்தில் மழலை மொழி பேசிவரும் குழந்தைகள் விளே யாட்டாக ஒன்றுடன் ஒன்று சண்டைசெய்து நிற்றல் வழக் கன்ருே? இதனை விலக்கிச் சந்துசெய்து வைத்தலிற் பேரா னந்தம் அடையும் பெற்றேர் உள்ளம். இ ங் த ச் சாதாரண நிகழ்ச்சி சிவப்பிரகாசர் உள்ளத்தில் அழகொழுகும் கற்பனை
3
21

Page 13
யாக முகிழ்க்கிறது. தேவ உலகத்துக் குடும்பம் பாவனை பண் ணப்படுகிறது. அம்மையும் அப்பனுமே அங்கு தங்தை தாயார். வியைகனும் அறுமுகனும் குழந்தைகளாகிச் சண்டைசெய்து அப்பனிடம் முறையிடுகின்றனர். அ ம் மையும் அப்பனும் பிணக்குத் தீர்த்து அழுதிடும் குழந்தைகளை அருகணைத்து மகிழ்கின்றனர் இந்தக் காட்சி அழகுறச் சித்திரிக்கப்டுகிறது, அது பினவருமாறு:
அரணவ னிடத்திலே யைங்கரன் வந்துதா
னையவென் செவியை மிகவும் அறுமுகன் கிள்ளினு னென்றே சிணுங்கிடவும்
அத்தன்வே லவனை நோக்கி விரைவுடன் வினவவே யண்ணனென் சென்னியில்
விளங்குகண் ணெண்ணின னென வெம்பிடும் பிள்ளையைப் பார்த்துநீ யப்படி
விகடமேன் செய்தா யென மருவுமென் கைந்நீள முழமளங் தானென்ன
மயிலவ னகைத்து நிற்க மலையரைய "னுதவவரு முமையவளை நோக்கிநின்
மைந்தரைப் பாரா யெனக் கருதரிய கடலாடை யுலகுபல வண்டங்
கருப்பமில் பெற்ற கன்னி கணபதியை யருகழைத் தகமகிழ்வு கொண்டனள்
களிப்புட னுமைக் காக்கவே. இப்படியான அருமையான கற்பனைத்திற்னும் கவித்துவ மும் வாய்க்கபபெற்ற அடிகளின் பாடல்களுள், சிறப்பாகத் தோத்திரப் பாடல்களுள் அடிகளின் துாய அதுறவுள்ளம் கிழ லாடுவதையும் பாடல்களை ஊன்றிப் படிப்போன் கவனிக்க லாம். இல்லறத்தில் ஈடுபடுத்தித் துறவிகளுக்குத் துன்பம் செய்ய வல்லவர்கள் பெண்களேயாதலால் அவர்தம் முயக்கத் தைப் பெறவிழையும் மனத்தினே வெறுத்துத் துறவு நிலையைப் போற்றும் அடிகள் திறம் கண்டு மகிழத்தக்கது. அவர் துற வுள்ளம் மற்றும் ஞானியருள்ளம் போன்றே பெண்டிர் முயக் கத்தை விரும்பிற்றிலகு.
"சுடரிலை நெடுவேற் கருங்களுர்க்குருகி துயர்ந்துகின் றல
(மரு மனநின் நடநவில் சரண பங்கய நினைந்து நைந்துருைந் துருகுநா
(ளுளுதோ"
22

என்ற அடிகளின் பாடல் யாரையும் உருக்கி அவரின் தூய துறவுள்ளத்தைக்கண்டு போற்றச்செய்ய வல்லது
இதுகாறும் கூறியவை சிவப்பிரகாசரது அருட்பாடலுள் போந்த சிற்சில நயங்களேயாகும். அவற்றின் நயங்களனைத் தையும் தொகுத்துரைப்பதற்கு ஆற்றலும் இடமும் போதா. உள்ளமெய்த்துறவும், வீரசைவத்தில் விழுமிய உறுதியும், திருக்தொண்டின் உறைப்பும், சிவனடிப் பேரன்பும், அவனடி யார்மீதனபும், அளப்பரும் வித்தகச் சிறப்பும் கைவரப்பெற்ற சிவப்பிரகாச சுவாமிகள் பாடல்கள் சிந்தைக்கு விருந்துபடைக் கும் சிறப்புவாய்ந்தவையாக அமைந்துள்ளன.
LAL ALLLLL LLLLLLLAMLALALALALALALALALALALALMLMMMLML LL LALAL LALAMLALALALALALAALLLLLAAJ
அல்லது செய்தல் ஒப்புமின்
'இந்த நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவு கீர்த்தி வெளியுலகத்திலே பரவாமல் இருப் பதை நான் அறிவேன். போன நிமிஷம் தமிழ் ஜாதியினர் அறிவொளி சற்றே மங்கியிருந்த தையும் நானறிவேன். ஆனல், போன நிமி ஷம் போய்த்தொலைந்தது! இங் த நிமிஷம் ஸத்தியமல்லை. நாளை வரப்போவது ஸத்தியம். மிக விரைவிலே தமிழின் ஒளி உலகமுழுவதி லும் பரவாவிட்டால் என் பெயரை மாற்றி அழையுங்கள். அதுவரையில் இங்குப் பண்டி தர்களாக இருப்போர் தமக்குத் தமிழ்ச் சொல் வராவிட்டால் வாயைமுடிக்கொண்டு வெறுமே இருக்கவேண்டும். தமிழைப் பிறர் இழிவாகக் கருதும்படியான வார்த்தைகள் சொல்லாதிருக்க வேண்டும். இவ்வளவுதான் என்னுடைய வேண்டுகோள்".
- பாரதியார்.
W WAMW-WWWW3-WW1MWWWWWW1/www.vS
23

Page 14
பட்ட ம கிமை
* மலைவாணன் '
ஒன்று பெரிசு’, மற்றது சிறிசு", ஒன்று "சடியன்", மற் றது மெல்லிசு" ஒரே பெயருடன் ஒரே வகுப்பிற் படித்த இருவரை மாணரும், சிறப்பாகப் பேராசிரியர்களும், வேறு படுத்தியவிதமே இது. ஊரில் ஒரு பெயருடன் பலர் வாழ்க் தால் அவர்களுக்கு அடைமொழி கொடுத்து வழங்குவது போன்றது இது. சின்னத்தம்பி என்ற பெயருடன் பலர் வாழ்ந் தால் குல்லான் சின்னத்தம்பி, பூனைச் சின்னத்தம்பி, கேசட் டுப்புலி சின்னத்தப்பி, மூக்குவெட்டி சின்னத்தம்பி என்று அழைப்பது வழக்கந்தானே ! 'தடியன்" பற்றிக் கூறும்பொழுது 'உருளே’யின் ஞாபகம் வருகின்றது. "குண்டு என்னும் அரிய சிறப்புப் பெயரும் இவருக்குண்டு. இதற்குச் சோடியாகக் குறள்" ஒன் அறும் இருந்தது-திருக்குறள் அல்ல; அந்நூலுக்கு எவ்வாறு அப்பெயர் அமைந்ததோ அதே காரணத்தினுல் இந்த ஆண்பிள்ளைக்கும் இப்பெயர் பொருத்தமாக அமைக் தது. அதுவும் "பத்தை சேட் அணிவாராயின் "கன் ருக? இருக்கும். குட்டி பாலாவும் இவரைப்போலத்தான்.
பெரிசு’பற்றிக் கூறியபோது துதிக்கை இல்லாத யானே? பற்றிக் கூறியிருக்கவேண்டும். இதைக் கற்பனைசெய்து பாருங் கள். அதுவும் அதுரிதமாக நடக்கத்தொடங்கிவிட்டால் "பப்பி ளிக் நீயூசன்ஸா’க இருப்பார். இவர் புதிதாக வந்தபோது எறிகுண்டு வீசியதும் நீங்கள் அறிவீர்கள். இவரைப்போல ஒரு 'அம்மா”வும் இருக்கின் ருரர். இன்னெரு 'அம்மாவும் இப் பொழுது தோன்றியிருப்பதாகக் கேள்வி. இவ்வம்மாவைச் சுருட்டுச் செல்வி என்றும் அழைப்பார்கள். கொவ்வைக் கனியைப் பாடிய புலவர்கள் மடையர்கள். பல்கலைக் கழகக் கவி உலகிலே பேர்போனவர் தாம் பாடும் பாக்களிலாவது சுருட்டை மறக்கமாட்டார்களென எதிர்பார்க்கிருேம்,
பல்கலைக்கழகக் காத்தைப்பற்றிப் பலரும் கேள்விப்பட் டிருப்பார்கள். இதைத்தான் ஆங்கிலத்தில் Gas என்பது. மிகவும் பொருத்தமான மொழிபெயர்ப்பல்லவா? காத்து இப் போது "கேற்ருே’ ஆகிவிட்டது. யாழ்ப்பாணத்தில் நில விவ ரக் கணக்கு" அடங்கிய பத்திரத்தைத் தோம்பு’ என் பார்கள்.
24

காணிகள் பற்றிய விபரங்கள் யாவற்றையும் இதிற் காணலாம். அத்தகையதொரு தோம்பு" இங்குமுண்டு. மாணவரைப்பற் றியோ, ஆசிரியர்களைப்பற்றியோ, அன்றேல் வேறு எந்தப் பேர்வழியைப்பற்றியோ, என ன செய்தியை அறியவேண்டுமோ, *தோம்பு சொல்லிக்கொடுக்கும். தெலிபோன் பொத்தகம்? என்றும் அழைப்பதுண்டு.
அருந்தும் உணவு, உண்ணும்முறை, உண்பதனல் ஏற் படும் சிக்கல்-இவையும் மக்களுக்குச் சிறப்புப் பெயர்கள் அளித்துள்ளன. உணவினுற் பெயர்பெற்றவர் இடியப்பம் என்னும் பெண்முத்து. ஆண்வர்க்கத்தைச் சேர்ந்தவர் ஒரு வர் சாப்பிடும்போதே ஏவறை" விடுவார். இந்த ஏவறை"- பாரதியாரின் குயிற் பாட்டில் வரும் குரங்கைப்போல, சைவ சுத்த போசனம்’ என்ற விருதுப் பெயரும் சேகரித்துள்ளது. ஒருவர் அழகிலும் உருவ அமைப்பிலும் தன்னை ஒப்பர் ரும் மிக்காரும் இல்லை, இழிந்தோரல்லது? என்ற கொள்கை யுடையவர். இக்காரணத்தினுல் இவருக்குக் காளி' என்ற பெயர் உண்டு. பாலைநிலத்தை அடுத்த சுடலையில் பேய்கள் சூழ, அங்கிலத் தேவியாக விளங்குபவளே இத்தெய்வம். "இரண்டு பக்கங்களும் உள்ளே குழிந்து, ஒன்ருக ஒட்டிக் கொண்டு, ஒட்டுவிடாத துபோன்ற கன்னங்கள் மலையின் குகை யில் தோன்றும் கொள்ளிக் கட்டைகளைப்போல விளங்கும் விழிகள்’ எனக் காளியை வருணிக்கும் கலிங்கத்துப்பரணி.
*காக்கையிற் கரிது களம்பழம்” என் பார்கள். கருமை முகலாயின ஒரு நிகரண வன்மையிற் காக்கையோடு சார்த்திக் களம் பழத்தை விதந்தார்” என்பர் சேனவரையர். அணுல் எங்கள் "அமாவாசையைப் பார் த் தால் 'அமாவாசையிற் கரிது." என் அறு இலக்கண ஆசிரியர்கள் கட்டாயம் கூறி யிருப்பார்கள். ஆனல் இந்த அமாவாசை, "இருண்டாற் கறுப் பும் சிவப்பும் ஒன்று தானே? என்று சமாதானம் கூறிக்கொள் ளும். இவரைப்போல இன்னுெருவர்-ஆனல் ஆண்மகன்இருந்தார். பொலிவுக்கும் குறைவில்லை. இவர் "பொன் வண்டு ஆகிவிட்டார். "பொவர் சன்’ (Bore Shun) என்றும் இவரை அழைப்பர். இப்பெயர் பிற்காலத்தில் "பருப்பு சன்' என மருவிவிட்டது.
பல்கலைக் கழகத்திற்கு வந்ததும், சில ர் குழு’க்கள் அமைத்துக்கொள்வார்கள. அத்தகைய குழுக்களுள் இரண்டு
25

Page 15
சிறப்பர்கக் குறிப்பிட்த்தக்கவை. ஒரே பள்ளியிலிருந்து வந்த மூவர் கொண்ட குழு ஒன்று. "பிக் திறி' என்ற சிறப்புப் பெயர் இதற்குண்டு. இவருள் ஒருவர் ஈடன், இன்னுெருவர் "மாம்பழம், மற்றவர் ‘சுண்டல்" ஈடனின் தோற்றமும் நடை யும் பேர்போனவை. மாம்பழத்தைப்பற்றி யாழ் 5கர் மக்களுக் குச் சொல்லவும் வேண்டுமா-அதுவும் காதலியாற்றுப்படைத் தலைவியின் பகுதியினருக்கு. "சுண்டல் பாவம்; மொலெற் என்று நீங்கள் எண்ணக் கூடும். ஆனல் இதன் அரசாங்கம் அசையாது
மற்றக்குழு - அதைப்பற்றி ஏன் பேசுவான்! ஈழத்தில் முதன்முதல் இறக்குமதியான குதிரைகள் அரேபியாவிலிருந்து வந்தனவாம். அதில் ஒன்றுதான் இந்தக் குழுவுக்குத் தலை, மைதாங்குபவர் (சீமைப் பூனேயைப்பற்றிக் கேள்விப்பட்டிருப பீர்கள். சீமையிலிருந்து சிறப்பாக வரவழைக்கப்பட்டதாகக் கருதும் பூனைதான் சீமைப் பூனே). முதல் மந்திரி விதவை யாக விளங்கும் கொத்தலாவலை--எ ண் ணு மற் பேசுவதற்கு உலக ப் புக ழ் பெற்றவர்-சவாரி செய்த நெடு ந் தீவு க் குதிரை மற்றது. அந்தப் பகுதிப் போனிகளுக்குக் கழுத்து வாங்கிப்போவதுமுண்டு. "போனி' பல்கலைக் கழகம விடடுச் சென்றதும் அதன் இடத்தை இப்பொழுது இன்னெரு மூர்ததி பெற்றிருப்பதாகக் கேள்வி. பெண்ணப் பாடிய நாயனுர் பகுதி யைச் சேர்ந்தவர் இவர்.
சாத்திரக் குருவி பிடித்துவைத்த பிள்ஃளயார் மாதிரி ஒரே போசில்” இருக்கும். தலையை அசைப்பதே கிடையாது. சாத்திரம் கூறக் கூட்டிற்கு வெளியே வந்து தலையைக் குனிந்து சீட்டை எ டு த் து க் கொடுத்ததும் த லை கிமிர்ந்துவிடும் சாத்திரக் குருவி. அதுபோலவே மறந்தும் தலகுணியாது இந் தச் சாத்திரக் குருவி”யும. உருவ அமைப்பும் தலை இறுக் கத்திற்கு ஏற்றமாதிரியே இருக்கும். நாமகளுக்கு இக்குருவி யிற் பிடிப்பதில்லை (தன் மாமியார் உள்ள கூட்டத்தில் நாம களுக்கு வெறுப்பிருப்பதில் வியப்பில்லையே!). ஆனல் மாம பழம் இலக்கம் இரண்டுக்கும் இதற்கும் தேவையில்லை.
இல குழந்தைகளைத் தாய்மார் "லக்ரொசின் மாக் கரைத் துக் கொடுத்துப் பேணி வளர்ப்பர். இக்குழந்தைகளுக்குத் தேகப் பொலிவுக்கும் சொக்கை வீக்கத்திற்கும் குறைவிலஜல. அத்தகைய 'லக்ரொசின் பேபி பல்கலைக் கழகத்திலும் இருக்
26

கின்றது. குழந்தைகள் மாவை முகத்திற் பூசி அகமகிழ்வு கொள்வதுண்டு. இவர்களைப்போலவே ஒருவர் தம்மைப் பவு டரால் வெள்ளையடித்துக்கொள்வார். வியர்வை படிந்தால் அறல்போல இருப்பார் இப் பவுடர் பேபி"! அதுவும் கருங்கா லிப் பவுடர் பேபி இஃது.
பழக்க வழக்கம், நடை, செயலாற்றும் முறை இவற்றைக் கொண்டு மகிமைதேடியவரும் பலர். ஓர் ஆண்மகன்-எப் பொழுது பார்த்தாலும் தூக்கம் குலைந்து வருபவர்போலத் தோற்றமளிப்பவர் - காலை எறிந்து கையை வளைத்தடித்து நடப்பதைப்பார்த்து, அக் கலைவாணருக்குக் கலை ரசிகர்கள் "பரத காட்டியம்’ என்ற பட்டத்தை ஒரே மனதாக அளித்த னர். இவர் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்றவருக்குக் *கோப்பை" அளித்தவர். இன்னுெருவரது நடை க்ாளயேகத் தின் கற்பனையைக் கவர்ந்த கழுதை நடையாயிற்று. 'தவில்? உம் நடையால் பெயர்பெற்றவர். தவில் அடிப்போர் மேளத் தைக் குறுக்காலே தொங்கவிட்டு, அதை அடிக்கும்போது காட்சி அளிக்கும் தோற்றமும், அத்தோற்றத்திற்கேற்ற நடை யும் இவரிடம் கடன் வாங்கியவையே. WM
சொல்லின் செல்வன்? இசையின் செல்வன்? என்பன் கவிஞராலும் அறிஞராலும் வழங்கப்படும் சிறப்புப் பெயர்கள். அதுபோன்றதொன அறுதான் மாணவ அறிஞரால் வழங்கப் பட்ட வேர்வைச் செல்வன்?. இப்பட்டதாரியை ஒரு மாணவி பார்த்துச் சிரித்தால் அவருக்கு உடனே உடல் வியர்க்கும். வகுப்பில் ஆசான் என ன மாரியப்பா? எனறு விஞவவேண் டியதுதான் அவர் அணிந்திருக்கும் சட்டை உடனே ஈரமாகி விடும். 'உங்களூரிற் கடற்கரை எப்படி? என் அ கேட்டாற் போதும், அவரது சட்டையை ஈரம் புளியலாம்.
“காவாலி’ என்ருற் பொருள் என்ன தெரியுமா? இப் பட்டதாரியின் "பார்வைக் கண்ணுடியும் உதறு நடையும், எடுப்புக் குடையும், டோச்? விளக்கும் பேர்போனவை. பழங் காலத்தில் கூந்தலை ஐவகையாக முடிப்பார்கள். இப்பொழுது நாளுக்கு இரண்டுவிதமாக ஒவ்வொருகாளும், "பாசனுககுத் தக்கமாதிரி, புதுப்புதுமுறையாக முடிப்பர். இந்தக் கலையி லேயே அறுபத்து நான்கிற்கு மேற்பட்ட வகைகள் உண்டு. இத்தகைய கலைவாணருட் பேர்பெற்ற தலையலங்காரம்? ஒன்று எமமிடமும் உண்டு. குதிரை வால்களுக்குப் பஞ்சமே இல்லை.
27

Page 16
ஆண்களைக் கேட்டாற் சொல்லுவார்கள் இந்தத் ‘தலையலங் காரமும் குதிரை வால்"களும் எவ்வளவு நன் ருகக் காட்சி அளிக்கின்றவென்று.
பெண்கள் ஒன்றுசேர்ந்து கதைக்கப்பிடித்தால்-அதுவும் ஆண்களைப்பற்றி (வேறென்ன அவர்களுக்குப் பொலிவாகக் கதைக்கத் தெரியும் !) - மீன் கடைபோலத்தான் இருக்கும். அதுவும் சிலருடைய குரல் தடிப்பாக ஒன்றரைக் கட்டைக் குக் கேட்கும். பெரும் விடுதிச்சாலையில் வதியும் ஒரு பெண் கதைத்தாற் புறம்பாகத்தெரியும். அவரின் சண்டை ஒலி சில வேளைகளில் செயத்திலாக்கா விடுதிச் சாலையையும் தாண்டி வடக்கெல்லைவரை ஒலிக்கும். இப்படிக் கஃனப்பவர்தான் குழறி.
காலத்திற்குக்காலம் பெண்கள் உடை அணியும்வகை மாறிக்கொண்டேபோகும். சமுதாயம் இடம் கொடுக்குமாயின் சமண துறவிகள் போலக் காட்சியளிக்கவும் தயாராக இருக்கின் றனர் சிலர். நகர மடந்தையர்கூடச் செய்யக் கூசுவதைச் செய்வதில் தனி ஆசைகொண்டவர்சிலர் "அழகான" இடையை எவ்வளவு தூரத்திற்கு வெளியாக - மறையாமல் - விட முடி யுமோ அவ்வளவிற்கு இடைவெளி விடுவர். மத்தியானச் சாப்பாட்டிற்குச் சிறிதுநேர இடைவேளையும், இராச் சாப்பாட் டிற்கு அதிலும்கூட இடைவேளையும் விடுவதுபோல இருக் கும் இவர்கள் தொழில். இதனைச் சகிக்கும் ஆற்றல்கொண்ட ஆண்கள் - கலையை ரசிக்கத்தெரிந்த புருடோத்தமர்கள்"இராச் சாப்பாட்டு இடைவேளை' என்று அழகுசுந்தரி ஒருவ ருக்குக் குறிசுட்டுவிட்டார்கள். பா வம், யாழ்ப்பாணத்தில் வேர்வை அதிகம்; இங்கும் வேர்வை அப்படித்தான் இருக்கு மென்று எண்ணியோ என்னவோ அந்தப் பாவை இவ்வாறு செய்கின்றதுபோலும். இவரைப்போலத்தான் ஆறு இஞ்சி நூலர் விழுங்கியவர்; தெருவாற் போகிறவர் வருகிறவரை அறிய மறுத்துவிடும் அவரின் நிமிர்ந்த தலை.
குணத்தினுல் பெயர்பெற்றவர் சூட்டுத் தட்டு (கொற் பிளேட்). அவருக்குச் சடுதியாகச் சூடேறுவதுண்டு. இதனுற் கொதியென்றும் இப் பெண்திலகத்தை அழைப்பர். முழி யாண்டி கொஞ்சக்காலத்துக்குமுன் பல்கலைக் கழகத்திற் படித் தவர். பெண்களைப் பார்க்கும்பார்வை இப்பட்டத்தை உருப் படுத்தியது. வகுப்பு கடந்துகொண்டிருக்கிறது; மாதவி கற் பிற்கரசி என்று ஆசிரியர் சான்றுகொடுத்து மாணவர் காது
28

களேப் பதம்பார்த்து முழங்குகின்ருர். திடீர் என்று பொத்த கம் ஒன்று கீழே விழுக்க சத்தம்கேட்டது. எல்லோரும் அப் பக்கம் நோக்கினர்கள். அப்பொழுதுதான் ஒருவர் கணுக்கண்டு முடிந்து, கித்திராதேவியிடம் விடைபெற்று, மயக்க நிலையில் இடுக்கிட்டுக் கண்விழித்தார். அன்று காலை விடுதிச்சாலை யிற் காலை உணவு தோசை என்பதும் அவரின் நண்பர்களுக் குத் தெரியும். 'கித்திரை கொண்டாலென்ன? இவர்கள் ஏன் என்னே ஏற இறங்கப் பார்க்கிருர்கள்’ என்று பக்கத்தில் இருக்கவர்களை வினவினர். அன்று முதல் ‘கித்திரை'ப் பட்ட மும் பட்ட வரிசையில் இடம்பெற்றுவிட்டது.
புதிதாக மாணவர் பல்கலைக் கழகத்திற்கு வரும்பொழுது, சிலர் தமக்கும் நகைச்சுவை உண்டு என்று காட்டப் பெரிதும் விழைவர். ஆசான் பெயர் சொல்லிக் கூப்பிடுகின்ருர், அங்கு சமுகமளித்தவர் கையை உயர்த்தித் தாம் அங்கிருப்பதைத் தெரிவித்துக்கொண்டனர். இருந்தாற்போல 'வந்தேன்’ என்று ஒரு முழக்கம் முழங்கியது. அன்றிலிருந்து அவர் "வங்தேன்? ஆகிவிட்டார். மாணவர் படிக்கும் பாடத்தைக் குறித்துத் தரும்படி தர்ள் ஒன்று கொடுபட்டது, ஒருவர் இரண்டு பாடங் களின் பெயரைமட்டும் குறித்திருந்தார். ஆசிரியருக்கு வியப் பாக இருந்தது. உடனே கடா எழுப்பினர், "இரண்டு பாடங் கள் மட்டும், படிப்பவர்களும் பல்கலைக் கழகத்தில் உண்டோ? என்று. உடனே அவர் பொருளாதாரம் படிக்க அனுமதி கிடைக்கவில்லை. அதுதான் குறிக்கவில்லை' என்ருர், இந்தப் *பொருளாதாரம் கட்டுரை ஒன்றில் "மாட்டுக்குப் பின்னல் கந்தன் சென்ருல், அது மாட்டின் சிறப்பைக் குறிக்கும்" என்று எழுதியிருந்தார். அன்று தொடங்கி இவர் 'மாட்டுப் பள்ளிப் பொருளாதாரம்? என்ற பெயரைத் தேடிக்கொண்டார். (3LDGD) y 62 Git 6Tr London School of Economies 2. Li es GnjišGg5ë தெரியுமோ என்னவோ?) பண்டைக்காலத்தில் மட்டுமல்ல இன்றும் தமிழர் கடல் கடந்து சென்று (Overseas போதல்) *புகழ் நாட்டுகின் ருர் என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகம் பெருமையுடன் வரவேற்குமென நம்புகிருேம, சவரக் தொழில்? பற்றிக்கேள்விப்பட்டீர்களோ தெரியாது. சீவக சிந்தாமணியிலி ருந்து செய்யுள் ஒன் அறு கலன் ஆராய் தற்குக் கொடுபட்டது. அச்செய்யுளில் நாவிதன் (மயிர் வினைஞன்) என்ற சொல் வழங் கப்பட்டிருப்பதைக் கண்டதும் இப்பெரியார், "அக்காலத்தில்,
29

Page 17
அதாவது திருத்தக்க தேவர் வாழ்ந்த பத்தாம் நூற்ருண் டிலே, சவரத்தொழில் இருந்ததென்பது ஆரசய்ச்சி” என அப் பாட்டிற்கு கலன் கூறினர். இவ்வர்ராய்ச்சியின் பயணுக அன்அ தொடக்கம் 'சவரத்தொழில் இவருக்கே சிறப்பாக உரியதா யிற்று. சுருக்கம் கருதிப் "பரியாரி" (பாபர்) என்று அழைப்ப தும் உண்டு
சில மாணவருக்குரிய ஆராய்ச்சித்திறன் மெச்சத்தக்கதே. இவர்கள் காணும் முடிபுகள் பொன்னெழுத்தில் பொறிக்கத் தக்கவை. கூட்டமொன்றில் ஆண்சிங்கம ஒருவர் - நாவுக்கு அரசன், சிறந்த பேச்சாளன்-பெண்களின் குறைகளை மூடி மறைப்பதற்காக வழங்கப்படுவதே சீதனம் என் ருரர். இதைக் கேட்டதும் சீறி எழுந்தார் சுந்தரி ஒருத்தி. சிலையை ஓர் இழுவை இழுத்துச் செருகினர். முன்வரிசையில் இருந்த ஆண்களும் கொடுக்குக் கட்டினர்கள்-சண்டைக்கல்ல, ஒட் டம்பிடிக்க. எச்சரிககைக் குறியாக விரல்கள் கோற்றமளிக்க, ஆவேசத்துடன், "சீதனம் என ருல். சி தனம், அதாவது கெட்ட தனம்" என்று ஓர் ஆராய்ச்சிக் குண்டு வீசினர், சித னம்’ என்ற வெற்றிப்பட்டமும் சூடினர். இந்தச் சீமாட்டி (சி மாட்டிக்கு அவர் கொண்ட பொருளேயே கொள்ளுங்கள்) நிலைநாட்டிய ஆராய்ச்சியின்படி சீதேவி-கூடாததேவி, சிமதி -கூடாததேவி, பூரீ (திருமகள்) கெட்டவள். நல்லவேளை, திரு மகள் அவர் விடுதிச்சாலையில் இல்லை; இருந்திருந்தால்.
தொண்டரடிப்பெர்டி ஆழ்வாரை உங்களுக்குக் கெரியுங் தானே? அவரைப்பற்றிப் பேசும் படம் ஒன்றும் திரையிற் காட்டப்பட்டது. பல்கலைக் கழகத்திலும் "தொண்டரடிப்பொடி? ஒருவர் இருந்தார்; பேராசிரியர் ஒருவரின் வால், அவர் காற் று சினை வணங்குபவர் என்ற காரணங்தான், வேறல்ல. மணிமேகலை படித் கவர்கள் களிமகன்" பற்றி அறிவார்கள். பல்கலைக்கழகக் களிமகன், பாவம், நல்ல பிள்ளை. பழுத்த அனுபவசாலி ஒருவரின் நன்கொடையால் இப்பெயர்பெற்ற வர். அந்தப் பழம், கொழுமடற் பனையின் விளை பூந்தேறல உண்டு தெளிந்து, அவ்யோகத்து உறுபயன் கண்டவர். இம் மையும் மறுமையும் இறுதியிலின்பமும் தன்வயிற் கொண்ட சேறலின் மகிமையை நண்பருக்கும் அறிவுறுத்துவான் வேண்டி, அமுதினை அவருக்கு உளம் நிறைந்த அனபோடு
30

உவந்து அளித்தார். "சும்மா வருகிற மாட்ட்ைப் பல்லைப்பிடித் துப் பாராதே" என்பதற்கிணங்க அவரும் நன்றி பல கூறி எற்றுக்கொண்டார். அதன் ப யன் வசுவைக் கேட்டாற் சொல்லும்
நாடகத்தில் ஏற்ற பாகங்களாற் பெயர்பெற்றவர்கள் சக்க டத்தார்? பிறக்கிருசியார்? “தரகர்? அப்பு" விதானே யார்’ ‘ஆய்ச்சி? "றயித தார் "நாவேந்தன்? என்பவர்கள். வரலாற்று நாடகமொன்றில் ஒரு பண்டிதர் சரியான வாசகத்திற்குப் பதி லாக முதலியார் மாட்டு வாலைப் பிடித்தார்’ என்று சொல்லி விட்டார். அன்றுதொடங்கி அவர் "மாட்டுவாற் பண்டிதர்' என்ற பட்டம் தரித்துவிட்டார். அவரைக் குளிசை என்றும் சொல்வதுண்டு. கட்டியங்காரணுக நடித்த ஒருவர் "பண்டா ரம்" ஆகிவிட்டார். அவரைப் 'பூசை என் அறும் அழைப்பர். நாயக்கர்’ என்ற பட்டமும் அவருக்கே சிறப்பாக உரியது. நாய்கள் விட்டுக்கலைப்பதுபோல் அவரும் விட்டுக்கலைப்பார். சுதிப்பெட்டி டேர்போன பர்டகர். ஆனல் நாடகத்தில் நல்ல வேளை சுதிப்பெட்டி அசைப்பதோடு கின்றுவிட்டார். பாடி யிருந்தால் இன்னும் பெயர்போயிருக்கும், 'சுக்குமாந்தடியை நீங்கள் இவ்வளவு விரைவில் மறந்திருக்கமாட்டீர்கள். தவருன எண்ணம் நிலைக்கும்வரை அவர் பெயரும் நிலைக்கும், பவானி யையும் இலேசாக மறப்பதற்கில்லைப் போலை”.
பாட்டைப்பற்றிக் கூறியபொழுது காடகப் புகழ்பெற்ற இரு பாடகரை-இசைவாணரை-உ ங் க ஞ க்கு அறிமுகப் படுத்தி இருத்தல்வேண்டும்; ஒருவர் 'ஆசைமுகம்", மற்றவர் க&ள. 'ஆசைமுகம் மறந்துபோச்சே என்ற பாரதி பாடஆல யும், "கலைகள் நிறைந்த" என்ற இனிய பாடலையும் இவர்கள் பாடியபொழுது கிடைத்த கைதட்டுக் கொஞ்சம் நஞ்சமல்ல. இவர்கள் பாடுவதற்கென்றே இப்பாடல்கள் இயற்றப்பட்டன போலும், இப்பாடல்களை இயற்றிய பெரியார் இப்பாடல்களே இவர்கள் பாடுவதை நேரிற் கேட்டிருந்தால் இன்னும் எத்தனை பாடல்களைப் பாடியிருப்பார்கள்; இவர்களும் வேறு நாடகங் களில் நடித்து இன்னிசை விருக்கு அளித்து என்றுமழியாப் புகழை ஈட்டியிருப்பார்கள்!
உதைபந்தாட்டு வீரன் "தாடிவாலா", "தேர்வில் தேர்ச்சி அடையும்வரை சவரம்பண்ணுவதில்லை’ என்ற சபதத்தினுல்
3.

Page 18
தோன்றியது இந்தத் தாடி, இறைவன் அருளால் இந்தத் தாடிக்குப் பல்லாண்டு வாழ்க்கை கிட்டியது. என்ருலும் ஒவ் வொரு ஆண்டும் அதற்குத் தத்து இருந்தே வந்தது. இப் பட்டம் "தாடிவால்" என இப்பொழுது மருவிவிட்டது. பாட்டு இயற்றும் ஆற்றல், சிறுகதை எழுதும் மகிமை, கலை உல கில் சிறப்புடன் "விளங்கும்’ பேறு இவற்ருல் பெயர்பெற்ற வர் கவிஞர் "அறிஞர் கலைஞர்” என்போர். இவர்கள் டோல இன்னும் பல பட்டதாரிகள்--சோப்பிளாண்டி’ ‘நன்றியுாை? போன்றவர்-இருக்கின்ருர்கள். அவர்களே ப்பற்றியும் கூறுவ தாக இருந்தால் இக்கட்டுரையை இதழ் ஆசிரியர் ஏற்க மறுத்துவிடவும் கூடும்.
சங்ககாலத்தின் இறுதியில் அரசியலிலோ அன்றேல் போர் முனையிலோ சிறப்புடன் விளங்குபவருக்குப் பட்டம் அளித்தல் மரபாக இருந்தது. காவிதி எனுதிபோன்ற பட்டங்கள் அக் காரணங்களினுல் வழங்கியவையே. சிறப்புக்கு அறிகுறியாக இப்பட்டதாரிகள் நெற்றியிலணரிவதற்குப் பொற்றகடுகளும் அளிக்கப்பட்டன. பட்டதது கிலேயங்கி-உடை-அணிதலும் மரபாக இருந்தது. மேலும் பட்டத்துக்குப் படிக்கும் வழக்க மும் கிறித்தவர் தொடர்பினுல் பிற்காலத்தில் ஏற்பட்டது. ஆனல் இங்கு குறித்த பட்டதாரிகள் பட்டத்துக்கு அறிகுறி யாக அணிவதற்குப் பொற்றகடோ, உடையோ கிடையாது, தேவையுமில்லை; பட்டத்துக்குப் படிக்கவேண்டிய வில்லங்க மும் இல்லை. மக்களின் நகைச்சுவைக்கு அறிகுறியாக அமைந்த வையே இப்பட்டங்கள். ஈழம் சுதந்திரம் பெற்றதன் பயணுக ஆங்கிலேயர் அளித்த பட்டங்களைப் பலர் தமக்கு வேண்டா மெனத் திருப்பி அளிக்கின்றனர். ஆனற் பல்கலைக் கழகத்தில் வழங்கப்பட்ட இப்பட்டங்களே இவர் வேண்டாமென்று திருப்பி அளித்தாலும் அவற்றைத் திருப்பி வாங்க ஒருவரும் இல்லைஅவர்கள் திருப்பி அளித்தாலும் பட்டம் வழங்காமற் போவது மில்லை. பெயர்களை மறந்தாலும் பட்டத்தை மறவார் மக்கள். பல்கலைக் கழகத்திற் படிப்போர் சிலர் கலைமாணிப் பட்டம் பெருமற் போகக்கூடும்.சிலருக்கு அது கைகூடாது போவது முண்டு. என்ருலும் பட்டதாரி”களாகப் போகின்ருேமே என்ற மன ஆறுதலாதல் இருக்கும்.பட்டத்தின் மகிமைதான் என்னே!
32

* பெறுதல் வழக்கோ’?
* குண ன ர்”
மாவலிக்கரையில் கிற்பானுேர் தமிழ் மகன், சமுத்திரத் துடன் சங்கமமாக விரைந்திடும் அவ்வாற்றினே கோக்கிச் செய்தி கேட்பதாக அமைந்த கற்பனையிது.
- ஆசிரியர். மாவலி மாவலி வளமார் மாவலி உயர்மலை பிறந்து குறுநடை பயின்று தாவிக் குதித்து மேவியங் கோடிக் கல்லுப் பெயர்த்து எல்லை யிகந்து பண்ணை வயல்களைத் தண்ணென் றனைத்துத் தென்றற் காற்றுகின் சேலை குலைக்கவும் கயல்க ளோடிநின் கடைக்கண் காட்டவும் மலர்கள் குடிகின் வளிமணர்க் கூந்தலில் ஆடுகள மகள்போ லாடுவை யசைந்தே காதலர்த் தழுவிட மீதூர் ஆவலாற் கடுகிடும் காதல் மாவலி மடந்தாய் ! நின்வர வெண்ணி யுள்ளம் விம்மிடத் தரங்கக் கைகள் தழுவ எழுந்திடப் பொங்கும் புணரி வங்கப் பெருமகன் முன்னம் பலமுறை மோக மிகுதியாற் கபாட புரமும் கவிஞர் மதுரையும் கொண்ட குமரிக் கொடுங்கட லாமவன் தன்னை யுறவாம் தன்மைய ஞதலாற் பண்டை யெம்மனுேர் பனுவல் வரைந்த தண்டமி ழேடும் தரள மணிகளும் கையுறை யாகக் காத லவனிடம் பெறுதல் வழக்கோ பேசுதி யெமக்குச் சங்கம மாகும் சமைய மாங்கே நுங்கும் நுரையுமாய்த் தழுவிப் பொங்கும் புணரிகிற் புணர்வோ னிடத்தே,
33

Page 19
சங்க இலக்கியச் சிறுகதை
ம ர் ம ம்
" காயத் தி ரி'
உவமையிலேயே உள்ளுறக் கருத்தமைத்துப் பாடுவதில் சங்கங்கண்ட ஐங்குறு நூற்றுப் புலவரே தலைசிறந்தவர். அவர் கள் பாட்டில் மறைந்திருக்கும் மர்மங்களோ பல. அவற்றில் ஒன்றே இந்த "மர்மம்’.
- ஆசிரியர். * கண்ணுடிக் கன்னத்தால் அவனுடைய இதயத்தைப் புண்ணுக்கிப்போட்டேனே' என்று அவள் இரங்கியிருக்கவேண் டும் ! எனவேதான் அவள் தன் வேல்விழிகளே அவனுடைய விலாப்புறத்தில் எறிந்தாள்போலும் !
இதைப் பார்த்ததும் அந்தக் குறும்புக்காரத் தோழிக்குச் சிரிப்புத்தான் வந்தது. விழிபாய்ந்த புண்ணுக்கு 'ரணமருந்து பூசுவதுபோல அவள் கொல்’ என்று சிரித்தாள். அவளு டைய கோதிச்செருகிய கொண்டையில் எத்தனை மர்மங்கள் மறைந்துகிடந்தனவோ, அத்தனே மர்மங்கள் அந்தக்கிண்டல் சிரிப்பிலும் மறைந்துகிடந்தன.
செச்சே! இந்தப் பெண்கள் சிரித்துப் பேசுவதிலும் பார்க்க கொஞ்சம் சினந்து பேசினல் ஓரளவு நன்ரு யிருக்கும்! என்ருலும் என்னசெய்வது? வரண்டுபோன வாலிபப் பாலை யிலே நின்று அந்தப் பெண்மைப் பூங்காவில் நுழைய உரி மைச் சீட்டுப்பெருமல் உள்ளத்தை உருகிவிட்டுக்கொண்டிருந் தவன் மருதவேள். எனவேதான் சிரித்துச் சிரித்துச் சித்திர வதை செய்யும் அந்தப் பொல்லாத தோழியின் துணை அவ னுக்குத் தேவைப்பட்டது.
அவளும் அத் சனே பொல்லாதவளல்ல! கபாடந்திறக் காத காதற்குகையிலே மோதி மீண்டும் புறப்பட்ட இடத் துக்கே திரும்புகிற ஒரு ஜீவக்குரலுக்கு அர்த்தங்காண முடி யாத முட்டாளுமல்ல! என்றலும் என்னசெய்வது ?
மருதவேள் மீதும் குறை கூறமுடியாது! " பாடாததேனி; உலவாத தென்றல்; பசியாத நல்வயிறு", இவைகள் இருக்கக்
84

கூடுமானல் அவன் குற்றவாளிதான். அப்படியானுல் குற்றம்? சந்தேகமென்ன, குற்றம் அந்த மருதநாட்டைத் தான் சார்ந்தது! வந்தாரையெல்லாம் ஏமாறச்செய்யும் ஒரு மாயசக்தியை அந்த நாடு பெற்றிருந்தது. வயல்களிலே கரும்புகள் வளர்ந்திருக்கும்; புதிதாக வருகின்றவர்கள் அவற்றை மூங்கிலென்று நினைத்து ஏமாந்துவிடுவார்கள். இதனுல், அந்த காட்டுக் கரும்புகளுக்கு 'வயல் மூங்கில்" என்று பெயர். (இலக்கியத்தில் இதனைப் பழன வெதிரி’ என்பர்; பழனம்-வயல்; வெதிரி-மூங்கில்) ஏன்..... அந்த நாட்டுப் பெண்கள் கூட இப்படித்தான்! பத்து வயதுச் சிறுமிகளெல்லாம் இருபது வயதுக் குமரிகள் போலக் காட்சியளிப்பர் ! கிலவளத்தால் உடயபு குழுகுழுத்திருந்தது! இவர்களில் ஒருத்திதான் நமது தலைவி "கிலவழகி"? அவளு டைய வழுவழுத்த கழுத்திலே ஒரு 'கருப்புப் பூமாலை" கெளிந்து கொண்டிருந்தது. அந்த நாட்டு ஆடவருக்கு அது அபாய அறிவிப்போ என்னவோ யார் கண்டார்? அணுல், நமது தலை வன மருதவேளுக்கு அந்த "மர்மம தெரிந்தால்தானே! கரும் புப் பூ குடலையாக இருக்கும்; அது எனேய பூக்களைப்போல இகழ் விரிவதில்லை: அதல்ை அதற்கு மணமுமில்லை; சந்தான விருத்திக்கேற்ற மகரந்தங்களும் கிடையாது. அதாவது, பூப்படையாத பெண்களேப்போல 1.தானும் அப்படிப் பட்டவள் என்பதைக்காட்டத்தான் கிலவழகி கரும்புப் பூமாலை அணிந்திருந்தாள். இந்த மர்மம் அவனுக்கெங்கே தெரியப் போகிறது? எனவேதான், அந்தத் தோழி தன்னுடைய கிண் டல் சிரிப்பை ஒருவாறு அடக்கிக்கொண்டு அவனேடு பேச முயற்சிசெய்த7ள. இந்த மர்மத்தைப் பெண்ணெருத்தி ஓர் ஆடவனிடம் கூறுவதென்றல் முடிந்த கருமமா? பெண்மைக் கோட்டையின் காணக் கதவு திறந்தாலல்லவா கருத்துக்கள் வெளிப்படும் !
"அந்த மர்மத்தை அப்படியே அச்சரசுத்தியாகச் சொல்லி விடலாமா? அல்லது, வளத்து நெளித்து...ஐயையோ வேண்டாமே ! அதை எப்படிச் சொல்வது?’ இப்படியெல்லாம் சிந்தித்த பிற்பாடு தோழி ஒரு முடிவுக்கு வந்தாள். தலைவ னுடைய காதலை ஏற்றுக்கொள்ளக்கூடிய "முதிர்ச்சி தலைவி யிடமில்லை; எனவே இதைத் தடைப்படுத்தவேண்டும் என்பது தான தோழியின் நோக்கம்.
நோக்கங்களை நிறைவேற்ற எத்தனையோ வழிகளைக் கை யாளலாம். சிலசந்தர்ப்பங்களில் உண்மையான காரணங்களே
35

Page 20
மறைத்து வேறு காரணங்களைக் கற்பிக்கவேண்டிய குழ்நிலை யும் ஏற்படுவதுண்டு. நோக்கமும் பலனும் ஒன்ருயிருந்தால் எவ்வழியாலும் செல்லலாந்தானே! எனவேதான், தலைவன் பயப்படக்கூடியதாக எதையும் கற்பித்துக் கூறிஞல் அவன் தலைவியைவிட்டு நீங்கிவிடுவான் என்று அவள் நினைத்தாள்! அதேநேரத்தில் அவளுடைய சிந்தனையை வேறென்றுறுத் தியது. வாலிப உள்ளம் விசித்திரமானது; எதிர்மறையில் தொழிற்படுவது- அது காற்றடித்த இறப்பர் பந்துபோன்றது என்று குறிப்பிடலாம். நாம் அதை எத்தனையடி உயரத்தி லிருந்து கீழே எறிகிருேமோ அது இரண்டுமடங்கு மேலே கிளம்புகிறது !
* தலைவியின் தந்தை மிகப் பொல்லாதவன்; அவனே நீ காதலிப்பதாக அறிந்தால் உடனே அவனுன்னேக் கொன்று விடுவான்’ என்று தலைவனிடம் கூறியிருந்தால் 'சரி. அதையும் ஒருகைபார்த்துவிடுவேசமே” என்று கிளம்பினுலும் கிளம்புவரன் ...எனவே வேறுவழியில் கதையை "காசுக்காக? ஆரம்பித்தாள்.
'தலைவ!. உன்னல் காதலிக்கப்பட்ட பெண் இருக்கி ருளே அவள் இந்த நாட்டுக் கழனியூரனுடைய மகள்! "
ஓ அது ஏற்கனவே தெரிந்ததுதானே!"
* இந்த காட்டிலே வாழ்பவர்கள் மிகப் பொல்லாதவர்கள்! அதோ, அந்தத் தடாகத்திலுள்ள அறல்பட்ட கொம்புகளே யுடைய கன்னங்கரேலென்ற எருமைகளைப் பாரும். அப்பப்பா! அந்தக் கொம்புகளைப் பார்க்கும்போதே பயமாயிருக்கிறது!. முட்டாள் எருமைகள்! அந்தத் தடாகத்திலுள்ள மணம் வீசும் நீலோற்பலங்கள் அவைகளுக்கு என்ன குற்றத்தைச் செய்த னவோ? மலர்களைக் கடித்து அழிக்கின்றன. நல்லது தீயது பார்க்க அவைகளுக்கு அறவிருந்தால்தானே! இந்த எருமை களேபபோன்ற பொல்லாதவர்கள்தான் எங்கள் காட்டவரும்." என்று நேரடியாகப் பயமுறுத்தாமல் சுற்றிவளைத்து ஒரு பீடிகை போட்டாள்.
தலைவனுக்கு விளங்கிவிட்டது. மடலேறி வரை பாய்ந்து மனங்கொண்ட பரம்பரையிலல்லவா அவன் பிறந்திருக்கிறன்! குருதிப் பலிகொடுத்தாவது குமரியைக்கொள்ளத் தயாரா
36

யிருந்தான் அவன்! பெண்மையென்பது விசித்திரமான ஒரு மர்மச் சுரங்கம்’ என்பது அவனுக்கெங்கே தெரியப்போகிறது? "சரிதான்,. அதைப்பற்றி உனக்கேன் கவலை? நில வழகி என்னை விரும்புகிருளா என்பதைமாத்திரம் அறிந்து சொல்லிவிடு, மற்றவைகளை நான பார்த்துக்கொள கிறேன்’ என ருரண் தலைவன்
தோழியின் டாடு தர்மசங்கடமாய்விட்டது. தலைவி இன்னும் பூப்படையாதவள் என்ற அந்த மர்மத்தை அப்படியே கூறு வதைவிட இனி வேறு வழியில்லே.
பெண்மை’ என்பது மென்மையின் இருப்பிடம். எனவே கரன் அவர்கள் எதை மறைக்க முற்பட்டாலும் அது இத யத்தை வெட்டிப் பிழந்து கொண்டு வெளிவந்துவிடுகிறது. கொண்டைக் குத்தியைக் கழற்றிவிட்டால் குலைந்து கிமிரும் கூந்தலைப்போல !
மேற்படி கூறப்பட்ட சிக்கலான மர்மக் கதையைச் சங்க காலக் கவிஞர் கொஞ்சமும் ஆபாசமின்றித் தோழியின் வாயி லாக எவ்வளவு நுட்பமாக விளக்கியுள்ளாரென்பது இரசிக் கற பாலது.
நெறிமருப் பெருமை நீல விரும்போத்து வெறிமலர்ப் பொய்கை யாம்பன் மயக்கும் கழனி யூரன் மகளிவள் பழன வெதிரின் கொடிப்பினை யலளே (ஐங் 91)
அவர்கள் காட்டும் வழி
حــسـ -سمحمـــــــــــ
* ஆங்கில நூல்கள் யாவும் முதல் நூல் களல்ல. அவைகளிலும் மொழிபெயர்ப்பு நூல் களிலிருக்கின்றன. ஜெர்மானியன் ஒருவன் ஏதாயினும் ஒரு புது  ைம காண்பனேல், அவன் அதை ஆங்கிலத்திலோ எழுதுகிருன்? ஆங்கிலேயர் அதைத் தமது தாய்மொழியில் பெயர்த்தெழுதிப் பயில்கிருர். இவ்வாறு தமி ழர் ஏன் செய்தலாகாது ?"
- தமிழ்த் தங்தை திரு வி. க.
3.

Page 21
கல் நார் உரித்த கவி. * முருகையன் ' நல்ல கவிஞரென் நண்பர் 'முருகையன்’ வல்ல இவர்க்கே வர விலையாம் - வல்லவர்க்கே *கல்நார் உரித்த கதையே கவியென்னில். தொல்லையே யிந்தத் தொழில், - ஆசிரியர்,
“வேண்டும் கவிதை; விரைந்தனுப்பித் தாரும்' என நாண்டுகொண்டு நிண்டார்கம் மாசிரியர் - ஆண்டவனே! என்ன கரைச்சல் இயலாது பாட்டெழுதல். பன்னம் இழைத்தாலும், பாய் கூடை - பின்னற் கடகம், இவற்றுக்கும் காசு கிடைக்கும். வடகம் 'இணக்குதல்’வற் ருளைக் - கொடிகள் புதைத்துப் பயிர்த்தொழிலிற் போய்ப்புகுதல், என்றிவற்றில் எதிலேதான் இல்லை இலாபம்? - கதையளந்து, பாட்டுக், கவிதை, - பணியாரம் போலினிதென் றேட்டுச் சுவடி, எழுதும்தாள் - நீட்டுப் பவுண்டன், இவைசகிதம் பார்த்திருப்பேன் சும்மா கவிழ்ந்து நிலத்தைச் சிலபோ(து) - அவிழ்ந்ததொரு கட்டறுத்துக் கொண்டோடும் கற்பனையின் வால்பிடித்துக் கொட்டமடக்கிக் குதித்தேறித் - தட்டி உரப்பி விடநினைந்தால், உட்கார்ந்தால், மேலே மரப்பலகைச் சீலிங்கைப் பார்க்கும் - திருத்தொழிலே அன்றி எதுவும் அடியேன் அறிந்திலனே! நன்று! கவிதையெனும் நங்கையும் - கொன்றுருவும் மந்தச் சிரிப்போடு மார்பு முனைகாட்டிச் சிங்தை கவர்ந்து, சிறைபிடித்துச் - சுந்தரள்ே கண்ணைச் சிமிட்டிக் கடலின் கரையோரம் எண்ணச் சிமிழில், எவைஎவையோ - கண்ணும் படிக்குக் கவிதைவெறி பாய்ச்சவர வில்லை. அடக்க முடியா தவமானம். - அடிச்சீ! என்ன எழுத? எதைத்தான் எழுதுவது? மின்னல் இடைகளினை, விண்மீனைக் - கன்னியரின் பார்வைச் சிறக்கணிப்பைப், பால்வெண் மதிக் கதிரைக்,
38

கார்வக் துலவும் ககனத்தைச், - சீர்ததும்பும் சொல்லில் வடித்துச் சுவைமிக்க பாட்டென்று வல்லமைகள் பேசிடவும் வாய்ப்பொன்றும் - இல்லாது போச்சே! இவையெல்லாம் எத்தனைபேர் போட்டடித்துக் காய்ச்சி வறுத்த கவிப்பொருட்கள்? - சாச்சாய்! பென்னம் பெரிய பிரிட்டன் எகிப்தோடு சின்னத் தனமாகச் சீண்டியதைப் - பொன்னுண பாட்டில் எழுதிப் பலபேர் மதிக்கின்ற தாட்சணிய மூர்த்தி தனைப்போல - நாட்டிற் தலையை நிமிர்த்தத் தடையென்ன என்ரு நலமிக்க தோழா 15வின்ருய்? - கலகலத்துச் சீறிச் சினந்து செகப்போராய் மூளாமல் ஆறிக் குளிர்ந்தே அணைந்ததாம் - கூறிட்டுப் பாரைப் பிளக்கும் பகைமை மனப்பான்மை நீர்பட்ட தீப்போலே நின்றுவிட்ட - காரணத்தால் வையப் பெரும்போரை வைத்துக் கவி எழுதிச் செய்தற் கரிய செயல்புரிய - மெய்யாய் நினைத்திருந்ததான நினைப்பும் விடியற் பனிப்போல் மறைந்து பாழ்ஆச்சே - தினைப்புனத்தில் வள்ளிக் “குறமணிசி வாய்த்தகரம் பற்றியவேற் "கள்ளக் குமரன் கதையளக்க - வெள்ளைநிற வெண்ணெயுண்ட நீல விளையாட்டுப் போக்குடைய கண்ணன் செயலைக் கவிதைசெய - எண்ணம் எனக்குச் சிறிதேனும் இல்லை; எதைஎதையோ கனக்கக் கதைத்தென்ன காணும்? - மினைக்கேடு போகும் பொழுது: புதுமை ஒன்றும் பூக்காது. காகம்ஒன்றெங் கேயோ கரைகிறது - சீகழுதை! பாட்டும் வராதாம், பயித்தியமும் வாராதாம் சாட்டுக்கேதேனும் சரிக்கட்டி - நீட்டுமைக்கண் வீச்சடிப்புப் பாட்டோ, வெறும் ‘உளறற் றீங்கவியோ'. மூச்சில் எதற்கும் முனைப்பில்லை - சிச்சி! என்ன எழுத எனுங்கேள்வி தானேஇக் கல்நார் உரித்த கவி,
39

Page 22
பிச்சை வேண்டாம் நாயைப் பிடி
* பரதேசி' "பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ என்பது அனுபவஞானி கள் கண்ட தத்துவம். இந் த த் தத்துவத்தின் மகிமையை பல்கலைக் கழகமும் நன்கறியும் போலும்.
- ஆசிரியர். பிச்சை எடுப்பது ஒரு தனிக் கலை. இது தொன்று தொட்டு வளர்ந்துவரும கல களில் ஒன்று இதை வளர்த்து வந்தவர்களுக்கு எமது நன்றி. இக்க%ல இபழமியிலிருக்து மங் காமல் பாதுகாக்கும் பல விறபன்னர்கள் இக்காலத்திலும் உளர். காலம் இக்கலைக்கு பலவிதமான பூச்சைப்பூசி சிறப பிததுள்ளது. கேட்காமலே பிச்சை எடுப்பது இக்கால வழக் கம். "... கிதிக்காகப் பணம் சேர்க்கின் ருேம்? என் ருரல் அது பிச்சை நிலையின் உச்சநிலை. ஆனல் கொடைத்தன்மை மிகவே இக்கலையில் ஒருவித வெறுப்பு உண்டாகிவிட்டது. இதற்குப் பல்கலைக்கழகம் ஒரு விதிவிலக்கல்ல
பல்கலைக்கழகத்தில் பொதுத்தேர்தல்கள் நடப்பதுண்டு. இத் தேர்தல்மூலம் புதுப் புதுப் பாடங்களை மாணவர் கற்ப துண்டு முக்கியமாகஒருபாடத்தினை Under cutting Gr65r (p. 9ă கிலத்தில் அழைப்பார்கள். எல்லோரையும் சந்தோஷப்படுத் தும் ஒரு ஆற்றல்தான் இதற்கு முக்கிய காரணம. இந்த ஆற்றல் மிகவு. இலேசானது, இனிமையானது. தேர்த க்கு ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்கு முன்பே இது ஆரம்பமாகும் போகும்போதும் வரும்போதும் பலர் முகங்க ல் என்றுமில்லாத புன்னகை மலரும். அத்துடன் வழியில் போஇன்ற ஒருவரை 'மச்சரன்-எப்படிச் சுகம்? கண்டாலும வணிக்கிறீரில்லை ' 'என்ன மிகவும் மெலிந்துவிட்டீர்? 'நீர் விரிவுரைக்குப் போகவிலலையா- உப்படித்தான செய்யவேண் டும்-எப்போதும் எப்படித்தான் படிக்க முடியும்?’ இபபடியான கேள்விகளை அள்ளி வீசுவார்கள். நூணுக்கமாக ஆராய்ந்தால் அவர்கள் தேர்தல் அபேட்சகர்கள் எனத் தெரியும். முக்கிய மாகத் தமகு எதிரிகளைக் கண்டால் "தேநீர் அருந்துவோமா? டு சே! ஏன் மழையில் இப்படி நனை கின்றீர்? "உமக்கு பூமி சாஸ்திர விரிவுரை உண்டல்லவா? எனது சைக்கிளில் வாரும், லிப்ட் தருகின்றேன்-நானும் அப்பக்கமே செல்கின்
40

றேன்” என்று வருந்தியழைப்பார்கள். இவர்களுடைய முகத் திலோ என்றும் மறையாத ஒருவகைப் புன்னகை. வாக்கா ளர் இவ்விதிக்கு விலக் கல்லவே. கதவைத்தட்டும் அபேட்ச கர்களை இன்முகத்துடன் வரவேற்பார்கள். அவர் கதையைத் தொடங்குமுன்பே 'நீர் ஏன் தான் என் அறையில் நேரத்தை வீணக்குகின நீர்? கிட்சயமான வாக்குத் கானே? என் பார்கள். "இருந்தாலும் என் கடமையல்லவா?’ என்று அபேட்சகர் கூறு வார். இருவரும் ஒருவரையொருவர் ஏமாற்றியதிலும் தம்மைத் தாமே ஏமாற்றியதிலும் ஒரு உன்னத களிப்பைக் காண்கிருரர்கள். தேர்தல் வரும். இப்போதுதான் சான்ருேர் வகுத்த கற்பழக்க ldi Su Under cutting -9) stagil Undering GoalsifiGuplib. அதாவது ஒரு அபேட்சகரை பிரேரிக்கும் ஒருவர் தன் அபேட் சகருக்கே எதிராகத் தன் வாக்கைப் போடுதல், திரு. கா.-- at 507 Luauctij60) lul Polling agent ஆகயிருப்பவர் தன் அபேட்சக ரின் போட்டியாளர் திரு ச.அவர்களுக்கே தன் வாக்கைப் பிரயோகித்தல். இதுவே அந்த 5ற்குணம். எனவே பெரிய எண்ணிக்கையோடு வெல்லும் நோக்கம் உடைய அபேட்சகர் தோல்விமாலை குட்டிக்கொள்வார். அதிலே ஒரு தனியின்பம். இந்த இன்பத்தைத் தருவதே இந் நற்குணம். இனி இத் கரு ணத்தில் சில அபேட்சகர்கள் பெருந்தன்மையுடையவர்களா யிருப்பதையும் நாம் காணலாம். தமக்கே சேரவேண்டிய தம் முடைய வாக்கின் மூலமே இதைத் தெரிவிப்பார்கள். தமது
விடுவார்கள். இது காலத்தின் கோலமோ அன்றித் தேர்த லின் ஆரவாரமோ தெரியாது. இப்படித் தேர்தல் முடியும், தோற்றவர்கள் "நான் வென்றிருந்தால்." என்று கற்பனு சக்தியை விருத்தி செய்தும், தம்மை ஏமாற்றியவரைப் போற் றியும் நேரத்தைக் களிப்பார்கள். இந் நிலையில்தான் 6 பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” என்ற ஞானம் உதயமாகும். இதன் படியே எனக்குத் தேர்தலும் வேண்டாம்-உலகமும் வேண் டாம் படிப்பே வேண்டும்” என்று இரண்டு மூன்று நாட்க ளுக்கு உண்டும் உண்ணு தவர்போல் இருப்பார்கள்.
கடன் வாங்குவதும் அதை உடனேயே மறப்பதும் நாம் வாழ்வில் கற்கவேண்டிய ஒருமுக்கிய பாடம். மூன்று மாதங் களுக்குப் பிந்திய, மாற்றமுடியாத ஒரு பத்து ரூபா ‘மணி ஒடர்’ நம்மிடம் இருக்கவேண்டும். யாரிடம் பணம் இருக்கிறது எனத் தெரிந்துகொண்டு அவசரமாக அவரைப் பார்த்து "ஒரு சிறிய
41

Page 23
விடயம். கடனுக ஒருபத்து ரூபாய் தருகின்றீரா? மணி ஒடர் வந்திருக்கு - பின்னேரம் மாற்றித் தருகின்றேன்" என்று மணி ஒடரைக் காட்டிக் கேட்கலாம். பணம் இல்லையென் ருல் 'ஐந்து ரூ பாயாகிலும் கொடு? அதுவும் கிடைக்காவிட்டால் "கண் டிக்குப் போக இருபது சதமாகிலும் கொடு” என்று பிடித்து விடலாம். அவரும் கொடுத்துவிடுவார். ஒருவருக்குப் பிச்சை கொடுத்த மகிழ்ச்சி, மற்றவருக்குப் பிச்சை பெற்ற களிப்பு-- மகிழ்ச்சி வாழ்க்கைக்கு வேண்டியதுதானே? ஒவ்வொரு மாதமும் நடுப்பகுதிகளில் அbேகமானவர்கள் மிகவும் பணக்காரர்களாக இருப்பார்கள். பணம் நிறைய இருக்கும் இந்நிலையில் வீட்டுக் குக் கடிதம் எழுதப பத்துச் சதம கிடையாவிட்டாலும் வெள ளேச் சுருட்டுக்கு எட்டுச் சதம் இருந்தே தீரும், வெளளே ச் சுருட் டுக்கு இந்நேரத்தில் "அமிர்தம்’ என்ற பெயரைச் சூட்டுவார்கள். இந்த அமிர்தத்தையும் சூறையாட்ப் பலர் வந்துவிடுவாாகள பற்களைக் காட்டி அதைப் பெற்றுக்கொள்வார்கள். அ5ேக மாக ஒன்றை நால்வர் ரசிப்பார்கள்-ஐவர் ரசிப்பதும் உண்டு. சிலசமயம் அதை வைத்திருந்தவருக்கே அதை ரசிக்கும் பாக் கியம் கிட்டாது. இங்கிலையில் கித்திரையாயிருக்கும் ஒருவரைத் தட்டி எழுப்பி "நீர் கித்திரையோ என்று பார்த்தேன்” என்று கூறினல் எப்படி அவர் மனநிலை இருக்குமோ அபபடியே இவர் மனநிலையும் இருக்கும். உடனே,
'தூக்கக் கரிமுகத்துத் தூமணியே - நீ யெனக்குப்
பீக்கொக் சிகறெட் ஒன்று தா? என என்றுமில்லாத ஒரு வகைப் பத்தியோடு கடவுளே வேண்டிக்கொள்வார். எவரோ ஒருவரிடம் ஒரு குடை கடன் எடுத்து வந்தால் அதை எம் மிடம் கடன் எடுக்கப் பலர் வருவார்கள். அதை ஒருவரிடம் கொடுத்தால் அவரிடம் ஒருவர் அதைப் பெற்றுக்கொள்வர். இப்படிக் கடைசியில் அது உரியவருக்கே போய்ச் சேர்ந்து விடும உடமைக்காரரோ "குடைபேனல் போகின்றது, ஆனல் என்னிடம் கடன் கேட்க மாத்திரம் வரவேண்டாம்” என்று இரப் பார். இதைத் தவிர சேட், ரூத் பேஸ்ட், கிறீம், பேப்பர்கள், பூட்பொலிஷ், பிளேட் முதலியன கடனுக்கு இதர பொருள்கள். இவற்றைக் கொடுப்பவர்களும் வாங்குபவர்களும் ஆங்காங்கே இவைகளே மறந்துகொள்வார்கள். s
அழகை ாசிப்பவர்களில் நானும் ஒருவன், உலகத்துட னேயே நாமும் வாழவேண்டும். உண்மைதான், ஒரு நவநாகரீக
42

s
உருவம் ஒன்றைக் கண்டேன். கழுவாத முகத்தைப் பவுடரால் மெழுகி கண்களுக்குக் கண்ணுடி போட்டு, போணி டெயில்’ ஒன்று செய்து (இது ஒரு விசித்திரமான தலை அலங்காரம்) கரி போன்ற உடலைக் கண்ணுடிச் சேலையால் ‘மறைத்து", உயர்ந்த சப்பாத்துக்களே அணிந்து அவ்வுருவம் திண்டாடியது. அவ் வுருவத்தின் காதணி அழகின் பொக்கிஷம். இரண்டு உருண். வளே யங்கள், இங்வளையங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பறவை அமர்ந்திருந்தது. இப்பறவைகளைக் கொண்ட வளையங் சுளேக் காதுகளில் தொங்கவிட்டிருந்தது அவ்வுருவம். ஒவ் வொருமுறை அசையும்போதும் ஒருவகை இனிமையான ஒலிபறவைகள் பேசிய ஒலியோ?-மிகவும் அழகான காட்சிதான். சுருங்கக்கூறின.
*கண்டேன் அதனது காதை - நான் கண்டறியாதன கண்டேன்.' மேலும் அதைக் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர். எனக்கு வயிற்றை வலித் தது "தெய்வமே! அழகுப் பிச்சை இவ்ரசிகனுக்கு, வேண் டாம். ஆனல் இவ் அலங்கோலம் என்னும் நாயைப் பிடித் துக்கொள்’ என்று அழகுத் தெய்வத்தை வேண்டிக்கொண் டேன். இப்படிப் பல நாட்கள், பல காட்சிகள் எனக்கு அழகுத் தெய்வத்திடமிருந்த பக்தியை மேலும் மேலும் வளர்த்தன.
பல்கலைக் கழகத்தில் போஸ்" என்று ஒருவகை நோயுண்டு, இது பெண்களிடம் பரவும் ஒரு கொடிய வியாதி. இந்நோய்க்கு இலக்கானவர்களை "போஸ் அடிப்பவர்கள்’ என்று கூறுவர். மீன்கடையில் பண்டைமாற்றைப போல மெதுவாகப் பேசும் பெண்கள் கூட்டம் ஒன்றில் சடுதியாக ஒரு ஆடவன் வந்து விட்டால் எங்கிருந்தோ அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, வந்துவிடும். இதையே போஸ் என்பார்கள். 'பல்கலைக் கழகத் துக்கு வந்து இங்குள்ள ஆடவரைப் பார்த்தபின், எனக்குக் கல்யாணமே வேண்டாம் எனத் தோன்றுகின்றது' என்று புதிதாக வந்த ஒரு பெண் கூறும்போது அதுவும் ஒரு போஸ் தான். ஏதோ அங்குள்ள ஆடவர்கள் எல்லோரும் கல்யாணம் செய்துகொள்ளத்தான் அங்கு வந்திருக்கிருர்களோ? அப்படி எனருல் அது ஒரு துக்கமான செய்திதான். "இஞ்சே இன் றைக்கீஇஈ.. ' " ஒமப்பா நானும் கவனிச்சனுன்' என்று செந்தமிழில் பேசிக்கொண்டது ஒரு மாதர் கூட்டம். இதை ரசித்த படியே பின்னுல் வந்த ஒரு தமிழ் ஆடவனே எப்படியோ
43

Page 24
ஒரு பெண் கண்டு உடனேயே கிள்ளியும், அடித்தும் இச்செய் தியை கூட்டத்திற்கு அறிவித்து விட்டாள். செந்தமிழ் காற் அறுடன் சென்றது. "Yes.’ என்று ஆங்கிலம் புகுந்தது. ஆங்கிலம் கொலையுண்டதை விசாரணைசெய்ய இங்கு நேரமில்லை
இடமுமில்லை. ஆனல் பழையது கழிந்து புதியது புகுந்ததே அது காலவரையினுலல்ல, போஸ் என்னும் நோயால்த்தான். "மங்கையர் திலகங்களே! செந்தமிழை எனக்குத் தரவேண்டாம். நீங்கள் ஏன் தான் இப்படிப் போஸ் அடித்துக் கொள்கிறீர்கள்? என்று மனதில் அவ்வாடவன் கேட்டுக்கொண்டான்
கொலை செய்யப்படும் ஆங்சிலத்தைப்பற்றியும் இங்கு கூற வேண்டியது அவசியம். ஒருநாள் நண்பருடன் தேநீர் அருங் தியவண்ணம் இருந்தேன். பலவகைப் பேச்சுக்கள் வளர்ந்தன. ஒரே சிரிப்புத்தான். இதை ஒருவர் பார்த்துக்கொண்டேயிருந் தார். தானும் பேச்சில் கலந்துகொள்ளவேண்டும் என்ற விருப் பமோ அன்றித் தம் வீரத்தைக் காட்டவோ எம்முடன பேச வந்தார். ஒரு கட்டத்தில் ஒருவரைப்பற்றிப் பேசும்போது "Yes, Yes, I know him, he is a very good type writer.' என்று கூறினர். அவர் பேசாமலே இருந்திருக்கலாம். பேசி விட்டார். பேச்சுக்கு அமோக வரவேற்பு. குலுங்கி நகைத் தோம். அக்கதையைத் தந்த அண்ணலை அஞ்சலிசெய்து *ஆங்கிலத்தை எமக்கு பிச்சையாய்த் தரவேண்டாம். ஆனல் தயவுசெய்து அதைத் துண்டம் துண்டமாக நசுக்கிக் கொல்ல வேண்டாம். அதுவே எம் பிரார்த்தனே' என்ருேம். அவர் 62 digids (ost air at $6%). 'No! No, you disint held my point' என்று கூறிக்கொண்டார்.
பலநேரத்தில் பல சூழ் கிலையில் இவ்வாறு பிச்சைக்கலை யைக் காண்கின்ருேம். ஏனுே சில சந்தர்ப்பங்களில் அக் கலை யைப் பேணமுடியவில்லை. எனவேதான் ' பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ என் அறு கேட்கின்ருேம். ஆயினும் அக் கலைக்கு என வாழ்த்துக்கள். r*
44.

கலையும் சிலை யும்
'அம்பலத்தான்'
கண்ணகியைச் சிலையென்று கோவலன் விட்டொழித்தான். பாவம், மாதவியால் அவனுக்கு அந்நிலை நேரும் என்று 6 rü Ugஅவஞல் எதிர்பார்க்க முடியும்? கானல்வரியாகி விதி அவனைப் பார்த்துச் சிரித்தது தென் திசை யாத்திரைதான் மனுேதத்துவக் கண்ணுேட்டத்தில் பழைய கதை புது மெருகு பெறுகிறது.
- ஆசிரியர்.
பூ ம் புகார்
பொழுது சாய்ந்துவிட்டது. எனினும் காவிரிப்பூம்பட்டினம் வழக்கம்போலக் கோலாகலத்துடன் விளங்கியது. உலகின் காலா திசைகளிலிருந்தும் வந்த கலங்களின் கூம்புகளில் அவ் வவற்றின் நாட்டுக்கொடிகள் பறக்கத் துறைமுகம் கிறைந்தது. காவிரியின் வடகரையில் அகன்ற நெடுங் தெருக்களைப்போல உயர்ந்த மேடையும் அவற்றினருகே பண்டசாலைகளும் தீப ஒளியில் பிரகாசிக்கின்றன. பட்டினத்தின் ஒரு பகுதியில் யவ orர் குடியிருப்பு யாவர் கண்ணையும் கருத்தையும் கவரும வகை யில் கேளிக்கைச் சப்தங்களுடனும் இரைச்சலுடனும் விளங்கு கின்றது.
இவ்வாறு இரவு பகலென்ற வித்தியாசமின்றி மனித நட மாட்டம் நிறைந்த புகார், வணிகர் விரும்பி வரும வளமிகு நகரா யிருப்பதற்கும் இங்ககராள் அரசன் பெயர் "நாகரிகமடைந்த? உலகின் எல்லாப் பகுதிகளிலும் பிரசித்திபெற்றிருப்பதற்கும் காரணர்களான - கொழுங்குடிச் செலவரான சோழநாட்டுப் பெருங்குடி வணிகர் மாடமாளிகைத் தெரு தனிச் சிறப்புடன் பொலிந்துகொண்டிருந்தது. ஆமாம். பூம்பு காரை ஆள்பவன் சோழனல்லன். அரசனும விருமபி ஏங்கும் அளவிலாச் செல் வம் படைத்த பரதவர்; கடலோடிய வணிகர்.
வணிகர் தெருவில் உயர்ந்தெழுந்தோங்கிய மாளிகையொன் றின் மேல் தளத்தில் துறைமுகத்தைப் பார்த் கபடி கின்று கொண்டிருந்தான் தனிப் பெருஞ் செல்வனு ன மாசாத்துவான் மகன் கோவலன். அதுறைமுகத்தைப் பார்கதபடி கின்ருலும்
6
45

Page 25
அவன் கண்கள் துறைமுகத்தைத் தாண்டி அடிவானத்தை யும் ஊடுருவி அப்பாலும் பாய்ந்துகொண்டிருந்தன.
மணமாகிய முதலிரவு. இன்னுஞ் சில விநாடிகளில் கண் ணகி மேலே அறைக்கு வந்துவிடுவாள். கணவனுக்குத் தன கையால் பாலும் பழமும் எடுத்து வருவாள்.
கண்ணகி
கோவலன் மனம் பின்னிக்கொண்டிருந்தது; நினவுகளும் சிந்தனைகளும் உறவுகொண்டாடின . நீல விகானத்து கித் திலப் பூம் பந்தர்க்கீழ் மாமுதுபார்ப்பான் மறைவழி காட்டித் திருமணம் நடக்கையில் அவளே விட்டு விட்டுப் பார்த்தான். அழகிற்குக் குறைவில்லை. ஆனல் அழகை மூடி மறைக்கும் ஆடையாபரணங்கள். காவிரிப்பூம் பட்டினத்து விழாக்களிற் கண்ட அழகிகள் மனத்தில் இடைவெட்டினர்!-வசங் கமாலை, அங்கயற்கண்ணி, மழ%லச்சிலம்பு மற்றும் பலர். கண்ணகி எப்படி நடந்துகொள்ளுவாளோ? அதிகம் சிரித்துப் பேசமாட் டாள் போலிருக்கிறது.ஏதோ பின்னுல் அரவம் கேட்டுத் திரும்பினன். ஒருவருமில்லை. மனத்தின் சலனம. அறையி னுள்ளே மூலையில் தீபந்தாங்கி கிற்கும் யவனப் பாவை கண் ணிற்பட்டது. இடது கையை இடுபயில் ஊன்றி தோளுக்கு மேலே வலதுகையில் தீபத்தட்டில் தாங்கும் உருவம்; வளேந்து நெளிந்த இடையிலிருந்து வழு கி விழுந்துகொண்டிருக்கும் ஆடை, அவ்வல்லியிடைக்கு மேலே ஓங்கி முன்னெழுந்து கிற்கும் ஏந்திள முலைகள் இரண்டனுக்கும அசாதாரணமான மிடுக்கையும் வீறையும் பெய்திருந்த7 ன் சிற்பி .இந்த யவனரின் கைத்திறந்த சன் என்ன? பளிங்கில் செதுக்கும் வடி வங்கள் கூடச் சிலவேளைகளில் உயிர்த் துடிப்புடன் கண்களையே ஏமாற்றிவிடுகின்றன. ஏன் யவனப் பெண்கள் என்ன குறைவா? அவர்களது வனப்பின் சாயல் தானே இச் சிலைகள்! அன்ருெரு நாள் துறைமுகத்தில் கண்ட அந்த யவனக் குமரி. - தமிழ் நாட்டு வெண் துகில் இடையில் சுற்றி மார்பிலே வார்மட்டும வரிந்து வாரியணைக்கத் துவண்ட அக்கொடி கெரியாமலா அரசன் யவனப் பெண்களை சயனக் கிருகத்தில் வேலையாட்க ளாக அமர்த்தியிருக்கிருன்..கோவலனே வறியாமலே கலை யவனர் குடியிருப்புப் பக்கம் மெல்லத் திரு பிது. தூரத்தில் தீவட்டிகள் அங்குமிங்கும் அசைக்துகொண்டிருந்தன. அங்கு இந்நேரம் பெண்களும் ஆண்களும் கைகோத்து நடனமாடிக்
46

கொண்டிருப்பார்கள். என்ன கினைவு வந்ததோ-திடீரென அவன் கண்கள் வானவெளியிலே அருந்ததியைத் தேடின. அதே சமயத்தில் மணப்பந்தலின் கினேவு...ம்ம் உ. கீழே இவ் வளவு நேரமும் என ன செய்துகொண்டிருக்கிருள்?.
அவளே வந்துவிட்டாள். கையிலே பொன்னுலாய வட்டி லிலே பாற்கிண்ணம, பனிக்கனிகள்; கண்களிலே பேதமை தோய்ந்த மருட்சி; இதழ்களுக் கிடையிலே நாணம்பூசிய முறு வல்; உடலிலே கட்டுப்பாட்டுக்குள் ஒளிக்கும் பூரிப்பு.
கோவலன் கண்ணகியைத் தழுவிப் பிணித்து அணைத்தான்.
கண்ணகியை நாணம் அமுக்கி மூடிப் போர்த்தது.
2 கோ வலன்
நடுச்சாமத்தைப் புள்ளியிடச் சங்கு விம்மி ஒலித்து வீழ்ந் தது. பட்டினத்தின் பெரும் பகுதி பாயல் கொள்ளுகிறது, கோவலனுடன கித்திரை கண்ணுமூச்சி விளையாடியது. அறி வும உணர்ச்சியும் துவங் கயுத்தம் புரிந்தன. சே! என்ன மனம்! ...கட்டிய கணவனிடம் என்ன வெட்கப்படவேண்டியிருக் கிறது. கனி கண்டவன் தோலுரிக்கக் காத்திருப்பனேரி அம்மி மிதித்து அருந்ததி பார்த்துப் பெரியோர் சம்மதத்துடன் சதிபதி யான பின்பும் ஒப்புக்குக் காட்டும் இந்த காணமெதற்கு? எவ் வளவு ஆசையுடன் அவளே இறுக அணேத்து முத்தமிட்டேன். மனைவியென ருல் மனதிற்குப் பூட்டுப்போட்டு விடவேண்டுமா? உணர்ச்சிகளே வெளிக்காட்டாது ஆமைபோல உள்ளிழுத்துக் கொள்ளவேண்டுமா? என்ருலும் அவள் என்ன பரத்தையர் சேரியிலுள்ளவளா? மாகாய்கன் மகளல்லவா? மனைவியானவுட னேயே தாய்மை பிறந்துவிடுகிறது போலும். சீ! யாருக்கு வேண்டுமிக்தத் தாய்மை. கிலாமுற்றத்தில் அவளே மார்புறத் தழுவி, கன்னங்களிலும், அதரங்களிலும், கழுத்திலெல்லாம் முத்தமிட்டபொழுது ஏதோ வேண்டா வெறுப்புடனல்லவா Sav7 Gaggir. 96ör - ... ... பின்பு. மெத்தையில்..இவளிலும் யவனரியற்றும் வினே மாண்பாவைகள் மனத்தில் உணர்ச் சியை யூட்டவல்லன. இன்பக் களிப்பில் சுழித்துப் புரண்டு அணு அணுவாக அநுபவிப்பதற்குப் பதிலாக மரச்சிலைபோலல் லவா கிடந்தாள்! உணர்ச்சியற்ற சிலை க்கு வீட்டிலென்ன
47

Page 26
தேவை? கோயிலில் விக்கிரகமாக வைத்தால் யாராவது கும் பிடுவார்கள். சீ! என்ன வாழ்க்கை! கடுகளவேனும் கலைப் பண்பற்ற பேதை, இப்படி எத்தனே நாட்கள் வாழ்வது? இப்படி முடியாது.கோவலன் மனம் உருண்டு புரண்டது.
மெல்ல கித்திரை மூடிக்கொண்டது. முதலிரவே மனம் கசந்தது கண்ணகி அனறே 'சிலே'யாகிவிட்டாள்.
3 LDr gb så
பின்பு என்ன நடக்கவேண்டும?
தாதவிழ் புரிகுழல் மாதவியினுடைய ஆடலும் பாடலும் அழகும் இளமையும் கோவலனுக்குப் புகலிடமாக அமைக் தன. தலைக்கோல் எய்தித் தலைவரங்கேறிய மாதவிக்கு விலை யான பசும்பொன் மாலையை ஆயிரத்தெட்டுப் பொன் கழஞ்சு கொடுத்து வாங்கினுன் கோவலன் மாதவி மனை புகுந்தான், தவிப்பைத் தணிக்க முனைக்தான். மனத்தில் நிறைந்த அமைதி, விடுதலறியா விருப்பினனுக வீட்டையும் மனைவியையும் மறந்து மாதவி மடியிலும் மார்பிலும் தேைன மறந்து புதைந்துகிடக் தான், காலம் கண்ணை மூடிச் சென்றுகொண்டிருந்தது. இந் திர விழாக்கள் வந்து வந்து போயின. ஆருவது விழாவிற்கு இன்னுஞ் சிலநாள்கள் இருக்கின்றன. அன் அறு பகல் மாதவி யைப் பார்க்கச் சிலர் வந்திருந்தனர். வரும் விழாவில் அவள் ஆடவேண்டும் என் அறு கேட்டனர். மாதவி மறுக்கவில்லை, வந்தவர் போய்விட்டனர். கோவலனின் கோபத்திற்கு எல்லை தெரியவில்லை. மாதவி ஒன்றும் கூறமுடியாதபடி கடுஞ்சொற் களை இறைத்துக்கொண்டிருந்தான.
அன் அறு இரவு.
கேர்வலன் அழ்ந்த கித்திரை. மாதவி மனம் நிலைகொள்ள வில்லை. மெல்ல எழுந்து நிலாமுற்றததிற்கு வந்தாள். பொங்கு கட&லத் தவிர எங்குமுறங்குகின்ற இராக்காலம்.
எத்தகைய மோகன அமைதி ! ஆாரத்தே துறைமுகத்தில் கலங்கரை விளக்கம் ஒளிவீசிக்கொண்டிருந்தது. பிற கட்டிடங் களினின் அறும் உயர்ந்தெழுந்து பெருமிதத்துடனும் பிரகாசத்
48

துடனும் சிரித்து கின்ருள் கலங்கரைப் பெண். . . அந்தக் கலங்கரை விளக்கம் எங்காவது வீட்டிற்குள் அல்லது மாளி கைக்குள் இருந்தால் பயனுண்டா? அன்று ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன் கொடுத்து அவர் என்னிடம் வந்தபொழுது எனது கலையுணர்ச்சி தற்பெருமையில் மூழ்கியது. எனது கலையையும் கலை பரிமளிக்கும் உள்ளத்தையும உற்சாகப்படுத்த ஒருவர் கிடைத்ததில் கரைகாணுத மகிழ்ச்சி. ஆனல் எனது கலையையும் உள்ளத்தையும் விட்டு உடலை மட்டும விலைகொடுத் துப் பெறுகிருர் என் அறு கனவிலும கருதவில்லை. ஆமாம். கோவலனின் புகழுரைகளும் அவற்றை மிஞ்சிய நிதி கிரைக ளும் என்னைச் சிலகாலம் அமுக்கி மூடிவிட்டனதான், என்ரு லும் எப்பொழுதோ என் மனம் கோணிவிட்டது. சே! என்ன உணர்ச்சியற்ற மனிதன்! ஆரம்பத்தில் எனது ஆடலையும் பாடலையும் பார்த்தும கேட்டும் பரவசமடைவதாகச் சொன்னர் நானும் அது உண்மையென நம்பினேன். அவ்வளவும் பொய் போலி எனக் கெதியில் அறிந்துவிட்டேன். இரண்டு ஆண்டு களுக்குமுன் இந்திர விழாவில் நான் ஆட விரும்பியபொழுது மனமொருப்படாது அதுயரப்பட்டார். பாவம் என்னையே தஞ்ச மாகக்கொண்டவர் மனதை ஏன் துன்பு அறுத்தவேண்டும் என்று விட்டுவிட்டேன். அது கான் செய்த பெரிய தவறு. இவ்வளவு காலமும் என் கலேயை வளர்க்காது இளமை கழிய விணே இருந்துவிட்டேன். கலையின் தன்மையைக் கடுகளவுமறியாத பேதை, எனக்கு விலங்கிட்டுவிட்டார். கலை தனித்து ஒருவரி டம் நெடுநாள் வாழமுடியா அது. அது பூரணத்துவம் பெறவேண் டுமாயின் பரிமாறப்படவேண்டும். பலரறியும்பொழுதுதான் அதன் மதிப்பு உயர்கிறது என்பதை இப்பொழுது நன் உணர்ந்துவிட்டேன்.
தாளமும் பண்ணும் சரிவரப் பயிலாத மலர்விழி இன்று எவ்வளவு பெயருடனும் புகழுடனும் வாழ்கின்ருள். அன்று அவர் மலர்விழியின் ஆடலைப்பற்றி ஊரார் புகழ்வதாகக் கூறியபொழுது எனக்கு ஆத்திரமும் அழுகையும் வந்தது. என் வாழ்க்கையை கானே இஅது காலவரை பாழ்படுத்திக்கொண் டேன். என் கலையையநுபவிக்கத் தெரியாத ஒரு சிலையைக் கட் டிபபிடித்திருந்தது போதும். இன்று பகல் பன்னிரண்டாம் நாளிரவு ஆடுவதாக ஒப்புக்கொண்டதற்கு எப்படியெல்லாம் கொதித்துப் பேசினர்; கூத்தாடினர். அவ்வளவும் தன்னலம்; பொருமை; கீழ்மை; கலையறியாக் கயமை, வரிக்கணக்கும் வட்
49

Page 27
டிக் கணக்கும் பார்ப்பவரிடம் கலைச்சுவையை எதிர்பார்த்தது எனது மடமை. வருவது வரட்டும் இம்முறை விழாவில் பிர மாதமாக ஆடவேண்டும். மலர்விழி தேன்மொழியெல்லாரை யும் வந்த இடங்தெரியாமல் ஒடியொழியச் செய்கிறேன். உலக மறிந்த பின்னுவது அவர் உணரட்டும. பின்புறத்தில் ஏதோ அரவம்கேட்டது. திரும்பினள். கோவலன் வந்துகொண் டிருந்தான். மாதவி மனம் மெல்ல அடித்துக்கொண்டது. ஏறிட்டு அவன் முகத்தைப் பார்க்க விரும்பவில்லை. கோவலன் பின்புறமாக வந்து, "என்ன தனிமையில் இந்தவேளையில். என்று இழுத்தான். கித்திரைத் தூக்கத்தில் சொற்கள் தள்ளாடின.
ஒன்றுமில்லை. நித்திரை வரவில்லை ?
'இன்று பகல் கடுமையாகப் பேசிவிட்டேன். கோபமா?
மாதவி எதை கினேத்தோ தலையசைத்தாள். கோவல னுக்கு மேலே பேசத்தெரியவில்லை. மாதவியைத் தேசள் பிடித் துத் திருப்பியணத்து முத்தமிடக் கு னிங் தான். அவள முகத்தை ஒருபுறம் திருப்பினுள். இதழ்கள் கவ்வவில்லை. அரைகுறையாக அதரங்கள் பொருந்தின. ஒன்றையொன்று உண்ணும் உயிர்த்துடிப்பும் உத்வேகமும் இல்லை. அவள் சிலையாகி கின் ருள். மனக்கதவுகள் மூடிக்கொண்டன. கோவ லன் அவளைப் படுக்கைக்கு அணைத்துச் சென்றன். மாதவி வாய் கசந்தது; இதழ்களில் அருவருப்பு. கட்டிலையடைந்ததும் அவளையும் மீறி ஏனே அழுகை பிய்த்துக்கொண்டு பாய்ந் தது. குப்புற வீழ்ந்தாள்.
4. கானல்வரி
முதலில் மாதவி ஆடுவதை எவ்விதமும் தடுத்துவிடவே முயற்சிசெய்தான் கோவலன். மாதவி சற்றும் தளரவில்லை, எனவே கோவலன் தோல்வியை வெற்றியாக்க முனைந்தான், மாதவி ஆடும் இரண்டு இரவுகளிலும் மகோன்னதமான விருந்து வேடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தான்.
மாதவியும் கோவலனும் விழாவைப்பற்றி இன்பமாகக் கதைத்துக்கொண்டனர் இருவரும் "நாடகம்” நடித்துக்கொண் டனர். உள்ளூற உறவில்லை; உபசாரத்திற்காக உண்மையை நேர் நோக்க விரும்பாததற்காக; உலகத்திற்காக,
விழாவின் முதல் நாள்.
50

மாலையில் மன்னவன் விழாவைத் தொடக்கி வைத்ததும், வணிகர் பெருமக்கள் ஒருவரையொருவர் சந்தித்து முகநகைத் அதுக்கொண்டு அவரவர் பொழுதுபோக்கிற்குக் கடற்கரையிற் பிரிந்தனர். அன்று அணிவதற்கென மாதவிக்குக் கோவலன் கவரத்தின மாலையொன்று கொடுத் திருந்தான், கடற்கரையில் கோவலனுக்குரிய வேனில் மண்டபத்தில் வெண்மணல் பரப் பிய வெளிமுற்றத்தில் இருவரும் அமர்ந்திருக்தனர். அரு கருகே உடல்கள் அணைந்திருந்தாலும் அவரது உள்ளங்கள் எங்கெங்கோ திரிந்து வந்தன, பேச்சுக்கு இடமில்லை, அமை தியைக் குலேக்கக் கோவலன் யாழைக் கையிலெடுத்தான். குமைக்க மனத்தின் குமுறலுக்கு அமைதியாக அவன் பாடி ஞன. மாதவியை வாய் திறக்கப்பண்ண வழிதேடினன், அவள் மனத்திற் தைக்கும்படி பாடினன். அது அவனுக்கு இதமாக விருந்தது.
வளைவளர் தருதுறையே மணம் விரி தருபொழிலே தளையவிழ் கறுமலரே தனியவள் திரியிடமே முளை வளர் இளநகையே முழுமதி புரைமுகமே இளேயவர் இணைமுலையே எனயிடர் செய்தவையே
ஒன்று இரண்டு மூன்று. .எத்தனேயோ பாட்டுக்கள், எல்லாம் கனவுப் பெண் ஒருத்திபற்றி, காண்தகு எழில் பற்றி: காைவுபற்றி; கற்புபற்றி மாதவி மனத்தில் சிந்தனைகள் தெறித்து வீழ்ந்தன. புண்பட்ட அவள் 5ெ ஞ் சம் மேலும் நெரிந்தது; எரிந்தது. கோவலனே மிஞ்சிப் பாட விரும்பினுள.
Kr
...நான் என்ன அவ்வளவு சளேத்தவளா? 367 &ort பற்றி அவ்வளவு கர்வங்கொண்டிருக்கிருரா. அந்தக்இறுக்கை இனருேடு ஒழித்துவிடுகிறேன. அவரைவிடக்கூ உறவும்
உரிமையுங்கொண்ட ஆடவர் ஒருவர் எனக்கிருSதாக ங் செய்கிறேன். அது ஒன்றே அளேச் சித் திரஇதே ெ வாட்டி எடுத்துவிடும். அவர் அணு அணுவாகத் துடிப்பூதப்
Lu Tifś 5 6D1Tid ......... இந்த விசித்திர ஆSைஒரு க தில் வித்தாகி, முளையாகி வேரூன்றிச் செடியாகிSடுமரமா ரந்து விரிந்தது. கோவலன் வரட்டுப் புன்மு லுடன் ாழைக் கீழே வைத்தான். மாதவி அதனே ந்தாள். ல்வரி பாடத்தொடங்கினுள்.
5.

Page 28
எடுத்த எடுப்பிலேயே அவள் தனக்கு எதிர்ப் பாட்டுப் பாடியது கோவலனைத் திணற அடித்தது. பணிவற்ற அவள் கிறுக்கு சிலகாலமாகவே அவனை உறுத்திவந்தது. இப் பொழுது திரண்ட வெறுப்பாக அது மாறத்தொடங்கியது.
கன்னித் திலத்தின் பூணணிந்து
நலஞ்சார் பவளக்
கலேயுடுத்துச் செந்நெற் பழனக் கழனிதொறுங்
திரையுலாவு
és l-Áb (34Fiúu............
காமம் வைத்தாளும் கண்களை எங்கோ பதிய வைத்துத் தன்னே மறந்து பாடிக்கொண்டிருந்தாள் மாதவி. கோவலனை வெட்டிப் பாடத்தொடங்கிய காரிகை பின்னர் தன் கலையிலேயே ஆழ்ந்துவிட்டாள். அவள் பாடல் வருணிக்கும் இனந்தெரி யாத ஆண் உருவம் ஒன்று கேசவலன் முன் தோனறியது. அது பெரிது பெரிதாகிப் பினனர் பூ தாகாரமாக வளர்ந்து கோவலனேப் பார்த்துக் கைகொட்டிப் பேய்ச் சிரிப்புச்சிரித்தது கோவலன் கண்ணை மூடிக்கொண்டான். மனக்கண்ணை மூட முடியுமா?. சிரிப்பொலி காதைத் துளேத்தது. .யார் அவன்.யார் அந்த ஆடவன்? யார் அவன்?.
வாரித்தரள நகைசெய்து
வண் செம்பவள
வாய் மலர்ந்து சேரிப் பரதர் வலைமுன்றில்
திரையுலாவு
கடற் சேர்ப்ப.
மாதவி ஒய்வதாயில்லே. கோ வல ஞ ல் அவ்விடத்தில் இருக்கமுடியவில்லை. விரக்தியடைந்த உள்ளத்தின வேதனை யில் 'தத்துவம்? பிறந்தது. மாயப்பொய் பல கூட்டும் மாயத் தாள் இவளை நம்பி இத்தனே காலம் கபோதியரயிருந்தேனே! பரத்தை பரத்தைதான்.
கோவலன் கின்று சிந்திக்கவில்லை.
தன் வீடு கோக்கி கடந்துகொண்டிருந்தான்.
5忍

5 ஊ ழ் வினை
மாமலர் நெடுங்கண் மாதவியைப் பிரிந்து மனையாளைச் சேர்ந்ததும் யாவும் நலமாகிவிடுமென நினைத்தான் கோவலன். என்னசெய்யலாம். என்னை யவன் அடியோடு மறந்துவிட்டான். எனக்குச் சிரிப்பாயிருந்தது. சிரித்தேன. கண்ணகி அவனே அன புடன் வரவேற்ருள். ஒரு கணம் ஏதோ சொன ஞள். எனி அனும எதிர்பார்க்காதது நடந்தது அவளைத் தூககியடித்து விட்டது. பாவம் கண்ணகியுடன சில நாட்கள் வாழ்ந்திருக்க லாப ஆனல் அது எபபடி முடியும். இன் பத்திற்கே எல்லை காண முற்பட்டி கோவலனுக்கு இனித் துன்பங் தான். அவள் மனம் உடைந்த கண்ணுடி, அவன நிலையுமப்படியே இருவ ரும் அமைதியுடன் குற்றமற்ற நெஞ்சுடன் வாழுதல் முடியாது. என் முறையில் இரக்க த்திற்கு இடமில்லை. அப்படியா யின்,. பாண்டியன் நெடுஞ்செழியன் காத்துக்கொண்டிருக்கிருன்.. அங்கு கோவலன் போகவேண்டியிருக்கிறது.
事 毫 杂
புகாரிலிருந்து இரவோடிரவாக இரண்டு மனித உருவங் கள் மதுரை நோக்கி விரைந்துகொண்டிருந்தன.
தெற்கு நோக்கிய யாத்திரைதான்.
ஒருவன் கோவலன.
பின்னுல் கண்ணகி.
பாப்பாவின் சிரிப்பு
பாப்பா துயிலும்போது அவன் இதழ்க ளிலே துடிக்கின்ற சிரிப்பு அது எங்கிருந்து வருகிறது என்று எவருக்காவது தெரியுமா? தெரியும் பணித் துளிகளில் குளித்துக்கொண் டிருந்த அருணுேதயக் கனவில், கொடியில் மறையும் இலையுதிர் கால மேகமொன்றின் விளிம்பை, வளர்பிறையின் இள வெண்கிரண மொன்று தொட்டதாம். அவன் இதழ்களில் தவழும் சிரிப்பு, அந்தக் கனவில் தோன்றிற்று என்றுதான் வதந்தி, - தாகூர்.
53

Page 29
ஆன ங் த க் கூ த் து சோ. செல்வநாயகம்
ஒரு கால் தூக்கி உலகு உய்ய நடனம் ஆடுகின்முன் இறை வன். இந்த அண்ட சராசரங்களும் சேர்ந்து அவனுடன் ஆடு கின்றன. இந்த ஆனந்தக் கூத்திற்குக் கலை விளக்கம் மட்டுமின் றித் தத்துவ விளக்கமும் உண்டு. இரு வேறு விளக்கங்களும் இழையோடி நிற்கத் தமிழ் உணர்ந்த விளக்கம் தரப்படுகிறது ஈங்கு
- ஆசிரியர்.
கலைகள் யாவற்றிலும் சிறந்தது நடனம், உலகில் முதன் முதலாகத் தோன்றியதும் மிகப் பழமைவாய்ந்ததும் இக் கலை தான். உள்ளத்தில் உணர்ச்சி தோன்றுமபொழுது ஏற்படு வது சலனம். எனவே மனதில் ஏற்படும் இனபப் பெருக்குத் தான் இவ்வானந்தக் கூத்திற்குக் காரணமாகின்றது. மனித காகரிகம் வளர்ச்சியுரு தவக்காலத்தில் மக்கள் வெறுமசைவு முதலியவற்றினலேயே தமது உணர்ச்சிகளை-கருத்துக்களே வெளியிட்டு வந்திருக்கின் ருர்கள். இந்தவடிப்படையிலே சிங் திக்குமபொழுது மணிதவினத்தில் மாத்திரமல்ல - மற்றைய வுயிரினங்களிடையேயும் இவ்வற்புத கடனம்தான் அடிநாத மாக வியங்கிக்கொண்டிருக்கின்றது.
இக் காரணம்பற்றியே உலகில் யாவற்றிற்கும் முதலாக நடனக் கலைக்கு நம நாடு பெருமதிப்புக்கொடுத்து வந்திருக் கின்றது. உலகிலுள்ள சக ல பொருட்களிலுமேயிஷ்வின்ப நடனமிழையோடிச் செ ைஅறுகொண்டிருக்தாலும் இவை யாவற் றிற்கும் மூலாதாரமாக விளங்குவது சிவ நடனம் ஒன்றுதான். உலகில் எத்தனை தெய்வங்கள் கடனமாடினும் நடமாடும தெய் வமெனக் குறிக்கப்படுவது சிவன, ஒருவன் தான். நடனத்திற் குத் த்லைவன்- அதிபதி சிவன். இக் காரணமபற்றியே இறை வனே நடராஜர் என்னும் சிறபடிப் பெயர் சூட்டி அழைக்கின ருேம். அவன இயக கம்தான் இவ்வகிலாண்டங்களினியக்கத் திற்குக் காரணம். அவன் நடமாடுமிடமே இப்பிரபஞ்சம்,
சிவ நடனங்களிலும் பலவகைப்பட்ட நடனங்களுள்ளன. இவைபற்றிய சித்தாங் தம் முழுவதையும் தெரிந்து கொள் வ தென்பது இயலாத காரியம். எனினும் ஆண்டவனது நடனங்
、54

கள் யாவற்றிற்கும் அடிப்படைக் கருத்து ஒன்றுதான். காலஞ் சென்ற டாக்டர் ஆனந்தக் குமாரசாமி அவர்கள் ஆண்டவ னின இவ்வற்புதக் கூத்துப்பற்றி மிக விரிவாக விளக்கம் செய்துள்ளார்.
இப்பிரபஞ்சத்தின் தோற்றமே இவ்வானந்தக் கூத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. உலகில் யாவற்றிற்கும் மூலகாரணமாய்-முதற்பொருளாய் சிவ கர்த்தனம் அமைக் அதுள்ளது நடராஜ கர்த்தனத்தின் தோற்றம் எதுவாகவிருந் தாலும் காலப்போக்கில் இது க ட வு விரி ன் தொழில்களைக் (Activity of God) குறிப்பதாகவேயமைந்துள்ளது. இக்காரணம் பற்றியே சிவ கர்த்தனம் கலைகள்-சமயம் யாவற்றிலும் சிறந்த தோர் தத்துவமாகப் போற்றப்பட்டு வந்துள்ளது.
சிவபெருமான் ஆடிய நடனங்கள் அனந்தம். ஆயின் யாவற்றிலும் சிறந்ததும் தத்துவப்பொருள் நிறைந்ததுமாகக் கருதப்படுவது நடராஜமூர்த்தியின் காதாந்த கடனம் ஒன்று தான். சிதம்பரத்தில் தில்லைவெளியில்-பொன்னம்பலத்தில் நடமாடிக்கொண்டிருக்கின் ருன் சிவன். ஆண்டவன் ஆனந்தக் கூத்தாடுமிவ்வரங்கு கனகசபையென்றும அச்சபா முதல்வ ஞய்விளங்கும் சிவன் சபாபதியென்றும் அழைக்கப்படுகின்றனர்.
சிவபெருமானின் திவ்விய கடனத்திற்குக் காரணமாக ஓர் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. ஓர் நாள் ! தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தையடக்குவதற்காகச் சிவன் ஓர் ரிஷி வேடம் தரித்துத் தாருகாவனத்திற்குச் செல்லுகின் ருர், கூடச் சென்ற விஷ்ணு அழகிய மோகினியாக வடிவங் தாங்கிச் செல்லுகின் ருர். ரிஷிவடிவந்தாங்கிய சிவனில் தாருகர்வன ரிஷிபத்தினி களும் மோகினி பேரில் முனிபுங்கவருமாக மோகங் கொள் கின்றனர். இவ்வாறு தமது தவத்தைக் குலேக்கவந்த சிவ விஷ்ணுவைத் தகிக்கும்வண்ணம ஒமகுண்டம் செய்மவாரம் பித்தனர் தசருகாவன ரிஷிகள். இவர்களது ஒமகுண்டத்தி லிருந்து எழுந்தன புலியும் பாம்புகளும். ஆயின் நஞ்சுண்ட கண்டனய சிவனே புலியை உரித்து அரையில் அணிந்து கொண்டதோடு, பாம்புகளையும் ஆபரணமாகக் கழுத்திலும் சட்டையிலும் அணிந்துகொண்டார். இங்கிலையிலே கோபமும் இன்பமும் மாறிமாறிவர சிவபெருமான் தனது நடனத்தை ஆரம்பித்து மிகவற்புதமாகக் கூத்தாடினர். இஅதியாக ஒம குண்டத்திலிருந்து எழுந்தது முயலகன் என்னும் பூதம் நம்
55

Page 30
மானந்தக் கூத்தனே அப் பூதத்தைத் தம் பாதம் ஒன்றினல் அமுக்கியபடியே தமது திருக்கூத்தைத் தொடர்ந்தாடினர். தேவர்கள் முனிவர்கள் யாவருமே இறைவனது இவ்வினப நடனத்தைக்கண்டு உள் ள ம் களிகொண்டனர். தாருகா வனத்து ரிஷிகளும் தங்கள் அறியாமையையெண்ணி மனம் வருந்தினர். ஆதிசேடன ஆண்டவனது அற்புகக் கூத்தைக் காணவேண்டி அவனேப் பிரார்த்தித்துகிற்க அவனும் தனது இன்ப நடனத்தைத் தில்லையில் தொடர்ந்தாடினன. சிவபெரு மான் இவ்வாறு தில்லைமனறிலே கடனம' டினும் அவனது நடனம் இப்பிரபஞ்சம் முழுவதிலுமே வியாபித்திருக்கின்றது. அவன் ஆடாதவிடமேயில்லை. எனவே எல்லாம வல்ல எமமீச னுக்கு ஆகாசவெளி முழுதுமே உடம்பாகவிருக்கின்றது. பிர பஞ்சத்தின் உச்சிதான அவன் கிரீடம. பெரிய மலைகள் யாவும் அவன் திண்ணிய புஜங்கள். அவன் வில்லோ மகாமேருமலை, இந்த நிலையிலே பிரபஞ்சம் யாவும் நிறைந்து ஆடுகின்றன சிவன். இத்தகைய பாரிய உருவம் படைத்த நடராஜ மூர்த்தி எங்ங்ணம் தில்லை மன்றுள் கடம்புரியமுடியும? இல்லை. பரந்தும் குறுகியும் ஆடல்புரியும அவனது நடனம் எத்துணை வியப் புடைத்து. இவ்வாஅ ஆசீசரியபபட்டுப் பாடுகின்றர் குமர குருபர சுவாமிகள்!
* வேதண்டமே புயங்கள்
விண்ணே திருமேனி மூதண்ட கூடமே
மோலியாம் - கோதண்டம் ஒற்றை மாமேரு
உமாப தியார் நின்றடப் பற்றுமோ சிற்றம் பலம்?? ஆண்டவனது ஆனந்தக்கூத்து அடிப்படையில் அவனது தொழில்களையே குறிக்கின்றதென்பதை முன்னரே கூறினுேம். ஆண்டவனின் ஐந்தொழில்களையும் விளக்கும் அரிய தத்து வம்தான் தில்லைமன்றுளாடும் சிவ நடனம். சிவபெருமான தனது படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்னுமைக்தொழில்களையும் ஆன்மாக்கட்குச் செய்கினருர், ஆண்டவன் முறையே பிரமா விஷ்ணு உருத்திரன் மகேஸ்வ ரன் சதாசிவன் என்ற வடிவங்களில் இத்தொழில்களைச் செய் கின்ருன் ,
56

நடராஜமூர்த்தியின் வலது கையொன்றில் கர்ணப்படும் உடுக்கைதான் பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்குகின்றது. உடுக்கை ஓசையை உண்டுபண்ண வல்லது. கடவுள் நாதப் பிரமமான வர். ஒசை ஒலி எல்லாம் அவர்தான். இத்தகைய மாதம் என்னும் விந்துவிலிருந்துதான் உலக*னத்தும் உண் டாயிற்று. ஆண்டவனது உடுக்கைதான் உலகின் தோற்றக் திற்குக் காலாகவிருக்கின்றது. நாதமற்ற நிலையிலே பிரபஞ் சமே யொடுங்கிவிடும் !
ஆண்டவனது இடது கரமொன்றில் அக்கினிகாணப்படு
கின்றது. அது ஞானத்தின் சின்னம், சிவஞானம் என்னும் அக்கினி பிரபஞ்ச வாழ்வை எரித்து சிவாமிர்தத்தை உண் டாக்குகின்றது. எனவே இஃது பெருவாழ்விற்கும் பேரானந்தத் திற்கும காலாகவிருக்கின்றது. மற்ருெரு கரம் "பயப்படாதே" என்றவொரு தத்துவத்தைக் குறித்து கிற்கின்றது. இன் னுெரு கரம் முயலகனேச் சுட்டிக்காட்டி முக்குணமாயுள்ள மாயைக்கு அடிமைப்படாதேயென்ற அரிய பண்பை விளக்கு கின்றது. இவ்வாறே அாக்கிய பாதமும் இன்னெரு கேசட் பாட்டை விளக்குகின்றது. பிரகிருதியின் ஆதிக்கத்தைப் புறக்கணித்து ஞான வாழ்க்கைக்குச் சாதகமாகும்பொழுஅது தான் உண்மையான ஆனந்தத் தாண்டவம் தொடங்குகின் றது. இதற்ைருன் ஆன்மா உண்மையில் விடுதலையடைகின் றது. குஞ்சிதபாதம் இக்கோட்பாட்டை விளக்குகின்றது. இவ் வாறு சிவனது திருக் கூ தி அ அடிப்படையில் இவ்வைக் தொழிலையுமே குறிக்கின்றது. அன்றியும் இப்பிரபஞ்சத்திற்கு மூலகாரணமாயமைந்துள்ளதும் இக்கடனம்தான் . இதற்கமை யவே அண்டசராசரங்களின் இயக்கங்கள்-உயிரினங்களின் வாழ்க்கைமுறைகள் யாவும முறைபிறழாது நடைபெற்றுவரு கின்றன. மேலும் மலையென் அறும் கல்லென்றும் அணுவென் றும் இருக்கின்ற அத்தனையும் பரம்பொருளின் ஆனந்த கடி னமதான் எனபதை உணர்ந்துகொண்டால் இவ்வகிலாண்டம் யாவுமே இறைவன நடமாடும் பொன்னம்பலமாகவே தெரிந்து விடும். இக் கருத்தையே திருமூலரும்
அண்டம் எழுகோடி
g பிண்டம் எழுகோடி
தெண்திரை சூழ்ந்த
திசைகள் எழுகோடி
57

Page 31
எண்திசை சூழ்ந்த
இரங்கம் எழுகோடி அண்டன் நடம் செயும்
ஆலயம்தானே. மேலும் இவ்வுலகிலே இறைவனது ஆ 6ன ங் த கடனம் ஒன்றுத்ான் உண்மையானது. அழிவில்லாதது. இக்கடனம் தான் உயிர்களா துவும் உயிர்களின் வடிவங்களாகவும் விளங்கு கின்றது. இறைவன் ஆடுகினறன. அவனேடு சேர்ந்து சசல மும் ஆடுகின்றன நாமும் அப்படிக் தான் இச்சிறந்த தத்து வத்தை விளக்குகின் ருர் திருமூலர் !!
ஆதி பரன் ஆட f அங்கைக் கனல் ஆட
சடை ஆட فاوع و
உன்மத்தம் உற்ருடப் பாதி மதிஆடப்
பார் அண்டம் மீதாட நாதமோ டாடினன்
நாதாந்த நட்டமே.
குழந்தையின் ஆசை
ஆலமரமே 1 இலேகள் சலசலக்கும் உன் இ2ளகளிலே புகுந்து விளையாடும் காற்ருகிவிட வேண்டும். பொழுது சாயச்சாய நீண்டுவந்து நீரில்படியும் உன் நிழலாகிவிடவேண்டும். உன் உச்சாணிகி கிளையில் இருக்கும் ஒரு பறவை யாகிவிடவேண்டும். நிழல்களுக்கு இடையே யும் நாணல்களுக்கு இடையேயும் வாத்துக் க%ளப்போல மிதந்து வரவேண்டும் என்றெல் லாம் நான் ஆசைப்பட்டதை எவராலும் அள
* - தா கூ ர்.
, , , ,

சோழர்காலக் காப்பிய வளர்ச்சி
F. தனஞ்செயராசசிங்கம், B. A. (HOns)
தமிழ் வளர்ந்து நெகிழ்ந்து குழைந்து பூரண வளர்ச்சி பெற் துப் பூத்துக் குலுங்கிப் புதுமைப் பூஞ்சோலையாக விளங்கிய காலம் காவிய காலம் என்று அழைக்கப்பெறு சோழர் காலமே. பூங்கா இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாரோ கூறி யதை மாதிரியாகக் கொண்டு பூங்கா எல்லாவற்றையும் அக்கண் ணுற் பார்த்தல் சரியோ பிழையோ? அது வேறு ஆராய்ச்சி. ஆணுல் இப்படித்தான் இருக்க வேண்டும் எ ன று வைத்துக் கொண்டு தமிழர் சமைத்த காவியப் பூங்கா ஒப்பு நோக்கி எடை போடப்படுகின்றன ஈங்கு.
re ஆசிரியர்.
சோழப் பெருமன்னராட்சிக் காலத்தில் தமிழ் இலக்கியம் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சியடைந்ததெனலாம. பெருங் காப்பினங்கள் இயற்றுவதிலோ, உலா பரணி முதலிய பிரபங் தங்களில் அரசரின் புகழை மறைமுகமாகப் பாடுவதிலோ, இலக்கண நூல்களை ஆக்கி அவற்றிற்குச் சிறந்த உரைகள் எழுதுவதிலோ, அல்லது வேறு எந்தத்துறையிலுமோ சோழர் காலப் புலவர்கள், இ கற்குமுன் தமிழ்நாடு அடைந்திராதி சிறப்பை அடையும்வண்ணம பல இலக்கியங்களே இயற்றித் தந்தனர். இதனலன்ருே தமிழ் இலக்கிய வரலாற்றில் சோழப் பெருமன்னர் தமிழ்நாட்டை ஆண்டகாலம் குப்தமன்னரினது பொற்காலத்திற்கும் (Gupta Golden Age), இங்கிலாந்தில் எலிச பெத் காலததிற்கும் (Elgabethan Age), அதெனஸ் என்னும் நகர் சிறப்புடன் விளங்கிய ஓ க ஸ் றிய ன் காலத்திற்கும் , (Augustian Age) உவமிக்கப்பட்டுவருகிறது.
ஒரு மொழியைப் பேசும் மக்களின் பண்பாடு உயர் நிலை யெய்தும காலத்தில் அம்மொழியில் உயர்ந்த இலக்கியங்கள் தோன நுமென்ற இலக்கிய வரலாற்றுண்மைக்குப் பொருந்தச் சோழர் காலத்தில் தமிழில் பல காவியங்கள் எழுந்துள்ளன. சோழர் காலத்திற்கு முன்னர் தமிழில் எழுந்த காவியங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையுமாகிய இரண்டுமே. காவியம் எனற சொல்லே வடமொழிப் பதமாகும், "காட்டுதும் யாமோர்
59

Page 32
பாட்டுடைச் செய்யுள்’ என்றே இளங்கோவடிகள் கூறுகின் ருரர். மணிமேகலையும் சிலப்பதிகாரமும் தொடர்நிலைச் செய்யுள் என்றே மு கல் வழங்கப்பெற்றுப் பின்ன்ர் மயிலைநாதரால் கன்னூலுரையில் காபபியங்களெனக் குறிக்கப்பட்டு உள்ளன. இவ்விரு காப்பியங்களுக்கும் சோழர் காலத்திலெழுந்த காப்பி யங்களுக்கும் அதிக வேற்றுமை உண்டு. எனவே இவற்றிற் கிடையேயுள்ள வேற்றுமையிலேயே யாம் சோழர்காலக் காப் பியங்களினது வளர்ச்சியைக் காணலாம். சிலப்பதிகாரமும், மணிமேகலையும் தமிழ் நாட்டுக் கதைகளைக் கூறுவன. ஆனல் சோழர்காலத்தில் எழுந்த காப்பியங்களில் பெரிய புராணத்தை யொழிந்த பிற எல்லாம், வடநாட்டுக் கதைகளைத் தழுவியே எழுதப்பட்டுள்ளன. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஆசிரி யப்பாவிலியற்றப் பெற்றிருக்கின்றன. சோழர் காலக் காவியங் களோ விருத்தப் பாக்களால் பாடப்பட்டுள்ளன. சமயப் பண் பில் காப்பியம் பாடினர்கள் என்ற ஒரு பண்பிற்ருன் இப் புல வர்கள் யாவரும் ஒத்திருக்கின்றனர்.
சோழர் காலத்தில் முதன்முதல் எழுதப்பெற்ற காவியம் சீவகசிந்தாமணியாகும். இந்நூலைத் திருத்தக்க தேவரென்னும் சமணமுனிவர் கி. பி. பத்தாம் நூற்ருண்டளவில் இயற்றினர். வடமொழியில் உள்ள அணியிலக்கணமாகிய காவிய தர்சனம் கூறும் காப்பிய இலக்கணங்கள் யாவும் சிறப்பாக அமையப் பெற்று இந்நூல் விளங்குகிறது. சீவகன் என்னும் அரசன், பல பெண்களை மணம்செய்து; ஈற்றில், சோலையில் ஒருநாள் உலாவச் செல்லுகையில் ஆங்கு ஒரு குரங்கு இனிய பலாச் சுளேயைப் பெண் குரங்கிற்கு ஊட்டும் வேளையில், காவற் கம ர ஞல் விரட்டப்படும் காட்சியைக்கண்டு, வாழ்க்கையினது நிலை யாமையையுணர்ந்து சமணத துறவுபூணுவதைக் கூறுகிறது இக்நூல் பதின் மூன்று இலம்பகங்களில். இலம்பகம் என ற சொல் இந்நூலிலேயே முதன முதல் "இயல்’ என்னும் பொருள் பெற்று வழங்கப்படுகிறது. காப்பியத் தலைவனுகிய சீவகன அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான் கையும் ஒருங்கே பெறுகிற காகக் கூறுகின்றது. பிற்காலக் கவிகள் சிறபடிடன கையாணட அணிகளேக்கொண்டதாயும், சோழர்கால இலக கி யப் பண்பாகிய இல்லது புனேதல்", "மிகைபடக் கூறல்" முத லியவற்றிற்கும் இந்நூல் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கு கின்றது. வடமொழியில் வாதீபசிம்மன் என்பவர் எழுதிய
60

சத்திர சூடாமணியையும், கத்திய சிந்தாமணியையும் இந்நூல் தழுவியுள்ளதென்பர் :
* பொற்சிறு தேர்மிசைப் பைம்பொற் போதகம்
நற்சிரு ரூர்தலி னங்கை மார் விரீஇ உற்றவர் கோழிமே லெறிந்த வொண்குழை மற்றத்தே ருருள் கொடா வளமை சான்றவே " என்ற பாட்டில் ஏமாங்க தநாட்டு மகளிர் நெல்லேத் தின்ன வரும் கோழிகளே விரட்டத் தமது காதணிகளைச் கழற்றி எறி வார்களென்றும், அக் காதணி 52ள மீண்டும அணிப எடுக்கா மையால், அவை சிறுவர்கள உருட்டுகின்ற தேர்ச் சில்லுகள் உருளாவண்ணம் கடையாக விருக்கினறன எனறும் திருத்தக்க தேவர் பாடுகின் ருர்,
*வியத்தகு செல்வமு மேம்படு முள்ளமும் உயர்ச்சி புனைந்துரைப்ப துதார்த்தமாகும்" -- என்ற தண்டியலங்காரச் சூத்திரத்திற்கிணங்கத் திருத்தக்கதேவர் ஏமாங்கத நாட்டினது செல்வத்தைப் பாடுவதற்கு ஓர் செல்வ மிகுதி அணியை இப் பாட்டில் கையாளுகிருர், இத்தகைய அணிகளைப் பண்டைய காவியங்களாகிய சிலப்பதிகாரத்தி லும் மணிமேகலையிலும் காணமுடியாது. ஏனெனில் இவ் விரண்டு காப்பியங்களிலும் பெரும்பாலும் உவமை அணிே கூறபபட்டுள்ளது
திருத்தக்கதேவரே விருத்தப் பாவினுல் முதன்முதல் காப் பியம் பாடிய புலவராகும். காரைக்காலம்மையாரால் முதற் கையாளப்பட்ட விருத்த யாப்பு திருத்தக்கதேவரது புலமைத் திறனை அளவிடும ஓர் அளவு கோலாகவே சோழர் காலத்தில் விளங்கியது. திருத்தக்கதேவரைப் பின்பற்றியே மற்றைய சோழர்காலக் காப்பியக் கவியரசர்கள் விருத்த யாப்பினுல் தத் தம காப்பியங்களே யியற்றினர். எனவே வடமொழி மரபைப் பினபற்றியதிலும், விருத்த யாப்பில் காப்பியம் பாடியதிலும், வடமொழி அணிகளைக் கணக்கின்றிக் கையாண்டதிலும் சிவச சிந்தாமணி ஆசிரியர் ஒர் புதுவழியைத் தமிழ் இலக்கியத்திற் தொடக்கி வைத்துள6ாாரென லாம
சீவகசிந்தாமணி எழுந்த காலத்தையொட்டியே குண்டல கேசியும், வஃளயாபதியும எழுந்துள்ளன. ஆனல் இவ்விரு காப்பியங்களைப் பற்றியும் போதிய வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கவில்லை எனலாம்.
8
6.

Page 33
திருத்தக்கதேவரையடுத்துக் காப்பியம் சோழர் காலத்தில் இயற்றியவர் கம்பராகும். வட மொழியில் வால்மீகி என்னும் புலவர் இயற்றிய இராமாயணத்தைத் தழுவி இந்நூல் எழு தப்பட்டுள்ளது. அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், பால காண்டம், யுத்த காண்டம் முதலிய ஆறு காண்டங்களாகவும், படலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. வால்மீகி இரண்டடிச் சுலோகங்களாக நாலாயிரம் பாடல்களில் இராமாயணத்தைப் பாடினர். ஆனல் கம்பரோ பத்தாயிரத்துக்கு மேற்பட்டதாய காலடி கொண்ட விருத்தப் பாக்களில் இராமாயணத்தைத் தமிழ்நாட்டிற் களித் துள்ளார். வால்மீகி கூறியவற்றில் தமிழ் காட்டுப் பண்பாட் டிற்கு முரணுனவற்றை நீக்கியும், வர்ணனயை நீட்டியும் கம்பன் தன கற்பனேக்கு ஓர் எல்லே வகுத்துள்ளான், தனது நூலில். திருத்தக்கதேவரை விடப் பன்மடங்கு கூடுதலாகக் கம்பன் வடமொழி அணிகளைத் தனது சாவியத்தில் கையாண் டுள்ளான். கம்பனது காவியத்தில் அலங்காரமே முக்கியமான அம்சம் பெஅறுகின்றது. உவமை மட்டுமே உபயோகிக்கப்பட்ட சங்ககாலப் பாடல்களுக்கும், அலங்காரத்திலும் மிதமிஞ்சிய அணிகளிலும் மூடப்பட்டிருக்கும் கம்பனது பாடல்களுக்கு முள்ள வேற்றுமையை நாம் எளிதிற் காணலாம். கம்பன் முக் கியமாக உபயோகிப்பது தற்குறிப்பேற்ற அணியேயாகும்.
*மையறு மலரினீங்கி யான்செய்மா தவத்தின் வந்து செய்யவ ளிருந்தா ளென்று செழுமணிக் கொடிகளென்னுங் கைகளை நீட்டியந்தக் கடிநகர் கமலச் செங்க ணையனை யொல்லை வாவென் றழைப்பது போன்றதம்மா? என்ற பாட்டில் இராமன் மிதிலேக்குப் போகும்போது கொடி கள் ஆடியது இராமனேத் தமது கைகளே நீட்டி வரவேற்றது போல இருக்கின்றதெனப் பாடுகிருன் கம்பன், சீதையின் விரகதாபத்தைக் கற்பனேமூலம் காட்டுமபோது அதன் சூடு தன்னையும் சுடுமெனப் பயந்து சூரியன் மறைந்தான் எனக் காட்டுகிருன். சில இடங்களில் அலங்காரம் அளவு கடந்து போகிறது எனலாம். அலங்காரம் அளவுகடந்துபோய்த் தம் வித்தையைத் திறம்படப் புனேந்து காட்டும் ஏழாம் நூற்ருண் டுச் சமஸ்கிருத உலகைப் பின்பற்றிய கம்பன் தான் கையாளும் அலங்காரத்தின் மூலம் மகிகள் கருத்துக்கு உணவு கொடுக் கிருன், கம்பனஅ கற்பனை இரசிகர்களே ஈடுபடுத்தக்கூடிய
62

முறையிலேயே உபயோகிக்கப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணி மூவாயிரத்து முன்னுாற்று நாற்பத்தைந்து பாக்களைக் கொண் டிருக்க, இராமாயணம பத்தாயிரத்துக்கு மேற்கொண்ட பாக் களால் பாடப்பட்டிருப்பது, கம்பனது காவியம் செய்யுட்தொகை யிலும் வளர்ந்து சிறப்புற்றிருப்பதை விளக்குகிறது போலும், விருத்தப்பாவினல் பாடக்கூடிய பல்வேறு சக்தங்களிலும் ஓசையமைப்புக்களிலும் கம்பன் தனது காவியத்தைப் ւմն է: யமையால் அவனுக்குப் பின்னர் தோன்றிய சேக்கிழார், கச்சி யப்பர்போன்ற காவியக் கவியரசர்கள் பாடிய பாடல்களில் விருத்தயாப்பின் வண்மை குன்றிவிட்டதென்றே கூறவேண்டும். கம்பனது இராமாயணத்தில் சோழர்காலக் காவிய வளர்ச்சி, உன்னத நிலையை அடைந்து, அவனுக்குப் பின்னர் சிறிது சிறிதாக அவ்வளர்ச்சி குன்றி நாயக்கர்காலத்துத் தல புரா ணங்களில் முற்ருக வீழ்ச்சியடைகிறது.
கம்பனுக்குப் பின்னர் சேக்கிழார் சுவாமிகள் "திருத் தொண்டர் புராணம்" என்னும் காப்பியத்தை இயற்றியுள் ளார். தமிழ்நாட்டுச் சைவ நாயன்மார் ஆகிய அஆறுபத்துமூவ ரது வாழ்க்கையைக் காவிய அமைப்பில் சித்திரித்தபெருமை சேக்கிழாாைச் சார்ந்ததாகும். பொருளமைதியிலும் காவிய அமைப்பிலும் வடமொழியைப் பின்பற்றிய ஏனைய புலவர்களி லும பார்க்கச் சேக்கிழார் ஒரு வழியில் உயர்ந்து விளங்குகின் ருர் அதாவது சமயப் பொருளேக் காவியமாக அமைத்த சோழர்காலப் புலவர் சேக்கிழார்; தமிழ் நாட்டுச் சைவ நாயன் மாரையே தமது காவியத்துக்குப் பொருளாகக்கொண்டை யால், சிறந்து விளங்குகின்ருர். இதனுல் "பக்திச் சுவை தனி சொட்டப் பாடிய கவிவலவ” என்று மீனட்சிசுந்தரம்பிள்ஜ அவர்கள் சேக்கிழார் பிள்ஃளத் தமிழ்" என்னும் பிரபந்தத்தில் போற்றுகிருர், திருட்டுச் சிந்தாமணியினது இலக்கிய கயத் தில் ஆழ்ந்த அபோயச் சோழனேச் சேக்கிழார் அவ்வரசன் அசசைன காவியத்தைப் போற்றும் வழக்கத்தை ஒழிக்கு மாறு திருத்தொண்டர் புராணத்தைப் பாடிஞர் என்பது பொருந்தாததாகும். ஏனெனில் சேக்கிழார் சுவாமிகள் தாமே சீவகசிந்தாமணியைப் படித்துச் சுவைத்ததுமன்றி. அதன் கண் காணப்படும் சில காப்பிய நலங்களைத் தாமுத ھلاقیہI நூலில் கையாண்டுள்ளார் என்பது இவ்விரு காப்பியங்கஇ யும் படித்தி எவருக்கும் புலணுகும். காமகன் இலம்பகம் முதல்
63

Page 34
முத்தி இலம்பகம்வரை சீவகசிந்தாமணியில் பதின்மூன்று இலம்பகங்கள் உள்ளன. சேக்கிழார் தமது காப்பியத்தைத் திருமலைச்சருக்கம் முதல் வெள்ளானைச் சருக்கம் ஈருகப் பதின் மூன்று சருக்கங்களாகச் சீவகசிந்தாமணியாசிரியரைப் பின பற்றியே வகுத்துளளார். மேலும் சேக்கிழார் பற்பல வட மொழி அணிகளைக் கையாண்டிருப்பதும, சிற்சில வர்ணனைச் சொறருெடர்கள் ஒத்து இருப்பதும் சேக்கிழார் சீவகசிந்தா மணியை நன்கு கற்றவரென்பதை வலியுறுத்துகின்ற சான்று களாவன. சோழர் காலத்துப் பெருமக்கள் காவியங்களை விரும பிப் படித்தனர். எனவே மக்கள் விரும்பிப் படிக்கும் காவிய அமைப்பில் சேக்கிழார் சைவத்தின் தொன் மையையும் பெரு மையையும் சைவநாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு மூலம் விளக்குகின் ருர் :
* கேடும் ஆக்கமும் கெட்ட திருவினும்
ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினிற் கும் பிடலே யன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினர்" என்ற பாட்டொன்றே இவருடைய தெ விரிவு ம் இனிமையும் ஒருங்கேயமைந்த செய்யுள் நடைக்குப் போதிய சான் ருகும். காப்பியத் தலைவராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளது நாடாகிய திருமுனைப்பாடி நாட்டைப்பற்றி அதிகம் பாடாது இரு பாடல் களுடன் ஒழித்ததும் சோழ காட்டைப் பாடியதும், சுந்தரரது கதை நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாகக் கூறப்படாததும் சேக்கி ழாரது நூலைக் காப்பியமெனக் கொள்வதற்குத் தடையாக இருக்கின்றன. ஆனல் காப்பியம் இதுதானென வரையறுத் துத் தமிழில் கூறுவது தண்டியலங்காரத்திலுள்ள பெருங் காப்பியச் சூத்திரமொன்றேயாகும், அதைக்கொண்டு நாம் சேக்கிழாரது நூலினது காப்பிய நலன்களே ஆராய்தல் ஏற் புடைத்தன்று. மேலும் காப்பியங்களின் இலக்கணம் தமிழ் காட்டில் நாடோறும் மாறிக்கொண்டு வருவதை நாம் காண்கி ருேம். எனவே சேக்கிழாரது நூலே காம் எ டு த் து, அது தோன்றிய காலத்துள்ள இலக்கணவரம்பை அடிப்படையாகக் கொண்டு ஆராயின் அது ஓர் காப்பிய ம என்பதில் எவ்வித ஐயமுமெமக்குத் தோன்ருது.
திருத்தொண்டர் புராணத்தையடுத்துத் தோனறிய காவி யம் கந்தப்புராணமாகும், வடமொழியிற் காணப்படும் ஸ்கந்த
64

புராணத்தின் ஒரு பகுதியாகிய சங்கரசங்கிதையிற் கூறப்படும் சுப்பிரமணியக் கடவுளின் அவதாரத்தையும், அவர் சூசன் முதலாய அசுரரை வென்று தேவர்களைக் காப்பாற்றிய வர லாறுகளேயும் இந்நூல் கூறுகிறது. உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திரகாண்டம், யுத்தகாண்டம், தேவகாண்டம், தச்சகாண்டம் என்கின்ற ஆறு காண்டங்களாகப் பிரிக்கப்பட் டும் 10346 பாடல்களையுமகொண்டதாக விளங்குகிறது. பெரிய புராணத்திற்கும் சீவகசிந்தாமணிக்கும் உள்ள ஒற்றுமைகளே விடப் பன்மடங்கு அதிகமாகக் கந்தப்புராணமும், கம்பராமா யணமும் ஒன்ருேடொன் அறு பாத்திர சிருஷ்டி முதலிய பல் வேறு அம்சங்களில் ஒத்திருக்கின்றன. இராவணன் குரனை யும், சூர்ப்பனகை அசமுகியையும், அனுமன் வீரவாகுவையும், சிறையிருந்த சீதை சிறையிருந்த சயந்தனேயும் ஒத்திருத்தலை, கம்பராமாயணத்தையும் கச்சியப்பரது கந்தப்புராணத்தையும் ஒப்பிட்டுப் படிக்கும்போது நாம் காணலாம். சைவசித்தாந்தக் கருத்துக்கள் செறிந்ததாயும், முருகனது பெருமையைப் பாடு வதாயும் இந்நூல் அமைந்து உள் ளது இதன் சிறப்பிற்குச் சானறு கூறும ,
சோழர்காலச் சமுதாயத்தின் நிலையே அக்காலத்துக் காவிய இலக்கியத்தின் தன்மைக்குப் பொறுப்பாகவிருந்தது. மாட்சிமிக்க ஆட்சியுடன் திகழ்ந்த அரசரைத்தவிரச் சமயமும் வடமொழிக் கலப்பும் இலக்கியத்தைப் பாதித்தது. அக்காலத் துக் காப்பியங்களாகிய சீவகசிந்தாமணி, இராமாயணம், திருத் தொண்டர் புராணம், கந்தப்புரணம் ஆகிய நான்கும சமயத் தால் கட்டுப்படுத்தப்பட்டன. மன்னரும் மக்களும் தத்தம் ஆதரவினல் எந்தச் சமயத்தைப் பாடினர்களோ, அதைப் பின்பற்றியே காவிய இலக்கியம் எழுந்தது. இதற்கு உதார ணமாக முன்பு கூறப்பட்ட நான்கு காவியங்களுமமையும். சிவக சிந்தாமணி சமணத்தையும், இராமாயணம் வைஷ்ணவத்தை யும், திருத்தொண்டர் புராணம் கந்தப்புராணமாகிய இரண் டும் சைவத்தையும் பாராட்டிக் கூறுகின்றன.
காவியத்திற்குக் கதை முக்கியமன்று. அக்காலத்துத் தோன்றிய காவியங்களில் நாலின் மூனறு வடமொழி மரபைத் தழுவிவந்துள்ளன. இதற்குக் காரணம் மக்களது சமயப்பற்றும் வடமொழி ஆர்வமுமேயாகும். இக்காலத்தில் மணிப்பிரவாள கடைக்குத் தனிமதிப்புக் கொடுக்கப்பட்டது. வடமொழிக்கு ஆதரவு மக்களிடையே கிடைக்க, மன்னரவையில் வடமொழி
65

Page 35
விற்பன்னர்களால் வடமொழி ஆராய்ச்சி நடத்தப்பட, வடமொழி தமிழில் தங்கு தடையின்றிப் புகுந்தது. ஆல்ை அக்காலத துப் புலவர்கள் தாம் காவியத்துக்குப் பொருளாகக்கொண்ட கதை பழையதென்ருலும் அதைத் தமது நாகரிகத்துக்கும் மக்களது விருப்பத்திற்கும் ஏற்க மாற்றிப் பாடினர். மக்சள் விரும்பிய பழங்கதைகளுக்கு ஊடாகப் புதிய கருத்துக்களைப் புலவர்கள் புகுத்தினுர்கள். இதனுல் இவர்களது காவியங்கள் இன்றும் சிறப்புற்று விளங்குகினறன.
ஈழத்தின் மணிவிளக்குகள் ஈழநாட்டிலே பிறந்து, தறிழ் நாட்டிலே வாழ்ந்து தமிழ்த் தொண்டுபுரிந்த பேரறிஞர் பலராவர். மெய்வருத்தம்பாராது பழைய ஏட் டுச் சுவடிகளை ஆராய்ந்து சிறந்த இலக்கண நூல்களையும், இலக்கிய நூல்களையும் முதன் முதலாக அச்சிட்டுத் தமிழகத்தார்க்கு உதவிய பெருமை யாழ் ப் பா ன த் தி ல் தோன்றிய தாமோதரம்பிள்ளையவர்களுக்கே உரியதாகும். நற்றமிழ்ப் புலமையும் நாவன்மையும் ஒருங்கே வாய்ந்து தமிழ் மொழிக்கும் சிவநெறிக்கும் அரும்பெரும் தொண்டு செய்த ஆறுமுக நாவ லரை அறியாதார் தமிழ் கூறும் நல்லுலகத்தில் உளரோ? இக்காவலர்பெருமான் யாழ்ப்பாணத்து நல்லூரிலே பிறந்து தில்லையம்பதியிலே வாழ்ந்து எல்லையற்ற புகழெய்தினர். இன்னும் முத்தமி ழில் நடுநாயகமாக விளங்கும் இசைத் தமி ழுக்கு விழுமிய தொண்டுசெய்த விபுலானந்த அடிகளும் இந்நாட்டவரேயாவர். பழந் தமிழ் நாட்டில் சிறந்த இசைக் கருவியாக விளங்கிய யாழின் திறத்தையும் தமிழிசையின் நலத்தையும் ஆராய்ந்து யாழ்நூல் என்னும் பெயரால் இசை யுலகத்திற்கு அரியதொரு விருந்தளித்த அறிஞர் பெருமானை அறியாதார் அறியாதாரே.
- ரா. பி சேதுப்பிள்ளை
66

ஆறுமுகநாவலரும் தமிழ்ப் பல்கலைக் கழகமும் கலாநிதி சு. வித்தியானந்தன்
இலங்கை வாழ் தமிழருக்கெனப் பல்கலைக் கழகமொன்று அமைப்பதற்குத் தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கத்தினர் முயன்று வருகின்றனர். யாழ்ப்பாணத்திலுள்ள கல்லூரி ஒன்றினைப் பல்கலைக் கழகமாக மாற்றி அமைக்கலாமென அரசாங்கத்திற் குக் கல்வி மந்திரி ஆலோசனை கூறியுள்ளார். ஆனல் இற் றைக்கு நூறு ஆண்டுகளுக்குமுன்பே தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்று நிறுவுவதற்கு ஆறுமுக காவலர் திட்டம் போட்டிருந்தா ரென பதைப் பலர் அறியார்.
ஆறுமுக நாவலர் பொது அறிவு படைத்தவர். மேலும், தமிழ் மட்டும் கற்பதோடு கில்லாது ஆங்கிலமும் சங்கதமும் கற்றதனுல் இவர் விரிந்த மனப்பான்மை உடையவராகவும் திகழ்ந்தார். இவ்வாஅது பல மொழிகளிலும் வல்லுநராக இருக் தமையாலேயே பாதிரிமாருடன் தோல்வியறியாப் போர் தொடுக் கக்கூடியதாக இருந்தது. ஏனேய பண்டிதரைப்போலத் தமிழ் மட்டும் படித்தவர் எனப் பிறர் இவரை ஒதுக்கவில்லை. இவர் கற்றறிந்த சங்கத நூல்களும் ஆங்கில அால்களுமே இவருக்கு உறுதுணையாக இருந்தன. தமிழ் மக்களின் எதிர்கால முன் னேற்றத்திற்கு எத்தகைய கல்வி வேண்டற்பாலதென்பதை இவர் ஒருவராலேதான் அக்காலத்தில் திட்டமிட முடிந்தது.
தமிழர் முன்னேறி ஏனைய மக்களுடன் தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமாயின் அவருக்கு மேற்படிப்பு அவசியம் என்பதை நாவலர் கன்கு உணர்ந்தார். இம் மேற்படிப்புத் தமிழ் மூலம் கற்பிக்கப்பட்டால் அது மக்களுக்குப் பெரிதும் பயன்படு மெனவும், மக்களின் உண்மையான ஆற்றலே வெளிப்படுத் அதுவதற்கு அத்தகைய கல்வியே இயற்கையோடு பொருத்த மானதெனவும் அவர் கண்டார். மேலும் ம க் களு  ைடய வாழ்க்கை சமயத்தோடு இணைபிரியாத முறையில் தொடர்புற் றிருந்தமையால், சமயக்கல்வி இன்றியமையாததென் பதையும் அவர் உணர்ந்தார். கிறித்தவரால் அக்காலத்திலே தமிழில் எழுதப்பட்ட சாதாரண இதிகாசம், வீசுகணிதம், அங்காதி
6

Page 36
பாதம், கெமிஸ்தம் போன்ற நூல்களைக் கண்ட இப் பெரியார் தமிழ் மக்கள் பல்கலைக்குமுரிய அறிவைத் தமிழிலே பெற வேண்டுமென விரும்பினர். ஆனல், திடீரெனத் தமிழ்ப் பல் கலைக் கழகமொன்று நிறுவுவதற்குத் தகுதியுடைய மாணவர் தொகை மிகக் குறைவாக விருந்தது. எனவே பல்கலைக் கழ கக் கல்விபெறுவதற்குத் தகுதியுடைய மாணவரை உருப் படுத்துவதே தமது முதற் கடமை எனக்கொண்டார். இக் குறிக்கோளுடனேயே சிதம்பரம், வண்ணுர்பண்ணை, கோப்பாய், புலோலி, முல்லைத்தீவு முதலிய இடங்கள் பலவற்றில் தமிழ்ப் பாடசாலைகள் நிறுவப்பட்டன. இப்பாடசாலைகளில் தருக்கம, வரலாறு, வானசாத்திரம், பூமி சாத் திசம், பிரகிருதி சாத்திரம், கணிதம், வைத்தியம், சிற்பம் முதலிய பாடங்களைத் தமிழிற் கற்பித்தனர்.
இந்தப் பாடசாலைகளிலே படித்துத் தேர்ச்சியடையும் மாணவர் மேற்படிப்புப் படிப்பதற்குப் பல்கலைக் கழகம் ஒனறு நிறுவுவதே ஆறுமுகநாவலரின் நோக்கமாகவிருந்தது. ஆனல் அந்நோக்கம் கைகூடமுன் அவர் காலமாகிவிட்டார். ஆறு முக நாவலரின் குறிக்கோளைப் பின்பற்றி 1898-ம் ஆண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்ச் சங்கம்’ என வொரு சங்கத்தை திரு. த. கைலாசபிள்ளை அவர்கள் நிறுவினர். தமிழ் மொழியை அபிவிருத்தி செய்வதற்காகத் தேர்வுகள் ஏற்படுத்தி, பட்டங் களும் பரிசுகளும் வழங்குவதே இச்சங்கத்தின் நோக்கமான இருந்தது. பததுப்பேரைக்கொண்ட இச்சங்கத்தின் தலைவர் திரு த. கைலாசபிள்ளை அவர்கள. யாழ்ப்பாணம் வண்ணர் பண்ணைச் சைவப்பிரகாச வித் தி யா சாலை முதலாசிரியர் LDr. வைத்தியலிங்கபிள்ளை அவர்கள் செயலாளராகக் கடமை யாற்றிர்ை. திருவாளர்கள் அ. குமாரசுவாமிப்பிள்ளை, ở#.. (3T "Lô பையர், ம. க. வேற்பிள்ளே, ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, அ. அருணுசல ஐயர், ஆ. சிதம் பரப்பிள்ளை சு. சரவணமுத் துப்பிள்ளை, ச. சிவப்பிரகாசபிள்ளே ஆகியோர் இச்சங்கத்திற் குரிய ஏனைய உறுப்பாளர்.
ஆண்டுதோறும் ஆவணித்திங்களில் ஐந்து தேர்வுகளே வண்ணுர்பண்ணையிலும், குறிக்கப்பட்ட பிற இடங்களிலும் இச் சங்கத்தார் நடாத்தினர். முதலாவது தேர்வுக்கு வருபவர் இருபத்தொராவது வ ய அது முற்றப்பெருதவராயிருந்தனர். இதிலே தேர்ச்சிபெற்றவருக்குப் பால பண்டிதன் என்ற பட்
68

டம் வழங்கினர். இதற்குரிய பாடங்கள் இலக்கணம், இலக்கி யம், பிரகிருதி சாத்திரம், கணக்கு, இதிகாசம், பாட்டை வச னமாக்கல், குறித்த ஒரு விஷயத்தைப்பற்றி எழுதுதல், வைத் தியம் சோதிடம் சிற்பம் என்பவற்றுள் இட்டபடி ஒன்று
என்பவை.
மூன்ருங் தேர்வுக்கு வருபவர் இருபத்தேழாவது வயது முற்றுப்பெருதவராய் இருந்தனர். இதிலே தேர்ச்சிபெற்ற வருக்குப் பண்டிதன் என்னும் பட்டம் வழங்கினர். இதற்கு ரிய பாடங்கள் இலக்கணம, இலக்கியம், தருக்கம், செய்யுளி யற்றல், சரித்திரம் எழுதுதல், சமஸ்கிருதம், வைத்தியம் வானசாத்திரம் சிற்பம் என்பவற்றுள் இட்டபடி ஒன்று என் பவை. நாலாங் தேர்வுக்கு வருபவர் முப்பதாவது வயது முற் அறுப் பெருதவராய் இருந்தனர். இதிலே தேர்ச்சிபெற்றவருக் குப் புலவன் எனனும் பட்டம் வழங்கினர். இதற்குரிய பாடங் கள் இலக்கணம், இலக்கியம், தருக்கம், கிர்க் தேச விஷய மெழுதல் (வருணனை), செய்யுளியற்றல், சமஸ்கிருதம், தரும சாத்திரம் சிற்பம் என்பவற்றுள் இட்டபடி ஒன்று என்பவை. ஐந்தாங் தேர்வுக்கு வருபவர் முப்பத்தைக்தாவது வயது முற் நுப்பெருதவராய் இருந்தனர். இதிலே தேர்ச்சிபெற்றவருக்கு ஆசிரியன என்ற பட்டம் வழங்கினர். இதற்குரிய பாடங்கள் இலக்கணம், இலக்கியம், தருக்கம், செய்யுளியற்றல், தர்க்க விஷயமெழுதல், சமஸ்கிருதம், சமயசாஸ்திரம் என்பன.
மேலே கூறிய பாடங்களன்றியும் அவரவர் தகுதிகண்டு வித்துவான், கவிராசன், பெளராணிகன், நாவலன் என்ற தொடக்கத்துப் பட்டங்களும் இச்சங்கத்தினராற் கொடுக்கப் பட்டன. இத்தேர்வுகளிலே தேர்ச்சி அடைபவருள் முதல்வ ராய் வருபவருக்கு வெள்ளி பொன் முதலானவைகளால் செய் யப்படும் விருது முத்திரையும் வழங்கினர். தேர்வுகளுக்குரிய வினுக்கள் இச்சங்கத்தாருள்ளும் இலங்கையிலும் இந்தியாவிலு முள்ள பிற வித்துவான்களுள்ளும் இருந்து இச்சங்கத்தாரால் வரிக்கப்பட்டவரால் வினவப்பட்டன. மாண வர் எழுதிய விடைகளைப் பார்த்து மதிப்பிடுதலும் அவ்வாறு வரிக்கப் பட்டவராலேயே செய்யப்பட்டன.
மதுரைச் சங்கம் கிறுவப்படமுன் இச்சங்கம் நிறுவப்பட்ட தென்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சங்கத்தின் போஷகராக நியமிக்கப்பட்டி சேர். பொன்னம்பலம் அருணசலம் அவர்கள்
69

Page 37
1898-ம் ஆண்டு ஆனித்திங்கள் ஆரும் நாள் சங்கத் தலைவர் திரு. த. கைலாசபிள்ளே அவர்களுக்கு ஓர் ஒலே வரைந்தனுப் பினர். அதிற் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் : 'சங்கத்தின் நோக்கம் சிறந்ததே, தேர்வுகள் நடத்துவதாலும், பட்டங்கள் வழங்குவதாலும் சங்கம் (நேர்மையாகவும் ஊக்கமாகவும் அலு வல்களைச் செய்துவந்தால்) தமிழ்க் கல்வித்துறையில் ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கும். எனினும், பழையனவற்றைக் கற்பிப்பதோடுநில்லாது, மொழிபெயர்ப்பாகவோ, தழுவலா கவோ ஆங்கில நூல்களேத் தமிழில் அமைத்துப் புதியதோர் இலக்கியத்தை உண்டாக்கவும் சங்கம் முயலுதல்வேண்டும். இத்தகைய கல்வியே யப்பான் தேசத்தைக் குறுகியகால எல் லைக்குள் உலக தே சங் க ளி டையே சிறந்த இடம்பெறச் Gallusgil.........'
இச்சங்கத்தினர் செய்த முயற்சி தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவுவதற்கு வழிகோலிற்று. ஆயினும் ஆங்கிலக் கல்வி யிலே தமிழ் மக்களுக்கு இருந்த மதிப்பினுல் தமிழை யாவரும் புறக்கணித்தனர். இதனலே தமிழ்ப் பல்கலைக்கழகம் கிறுவுதல் பிற்போடப்பட்ட அது. இன் அறு பலா சிங்களப் பல்கலைக் கழகமும் தமிழ்ப் பல்கலைக்கழகமும் அமைத்தல் வேண்டுமென முழங்கு கின்றனர். ஆனல் இவ்விஷய திதிற்கு வித் திட்டவர் ஆறுமுக நாவலர் என்பதை கசம் மறத்தல் கூடாது. தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவுவதற்கு அக்காலத்திலேயே அவர் வழிகோலித் தந்தார். அப்பெரியாரின் நோக்கத்தை நிறைவேற்ற காம கூடிய விரைவில் தமிழ்ப் பல்கலைக்கழகமொன்று நிறுவுவதே சாலச் சிறந்ததாகும். தமிழ் மக்கள் பலதுறைகளிலும் முன் னேறி மானத்துடன் வாழ்வதற்கு அவர்களுக்கென ஒரு பல் கலைக் கழகம் அவசியம்வேண்டும். ' அத்தகைய பல்கலைக்கழகம் நிறுவுவதற்குத் துணைக் கருவிகளாகவே பல சைவப் பாடசாலை களை காவ ல ர் தொடங்கிவைத்தார். இப்பாடசாலைகளிற் பயின்றுவரும் மாணவரிலிருந்து மேற்படிப்புக்குத் தகுதியுடை யோரைத் தெரிக்தெடுத்துப் பல்கலைக்கழகத்தை கடத்துவதே அவர் கருத்தாக இருந்தது. மேலும் இக்கருத்துப் பற்றியே அவர் ஓர் அச்சியந்திரசாலையையும் கிறுவினர். இக்காலததில் பல்கலைக் கழகங்களிலுள்ள பல் கலைக் க ழ க அச்சகங்கள் (University Press) போலத் தாம் அமைக்க இருந்த பல்கலைக் கழகத்திற்கும் ஒர் அச்சகம் கிறுவிப் பாடிப் புத்தகங்களை
O

யும் ஆரர்ய்ச்சி நூல்களையும் வெளியிடுவதே அவர் நோக்கமாக
இருந்தது. ஆாறு ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய முற் போக்கான திட்டங்கள் வகுத்திருந்தார் ஆறுமுக நாவலர்.
ஆறுமுக நாவலரைப் பின்பற்றி அவர் நோக்கங்கள் கை கூடுவதற்குப் பல பெரியார் ( வீமன்காமம், கந்தரோடை, மல் லாகம், மாதகல், வேலணை, சாரைதீவு முதலிய இடங்களில்) தமிழ்ப் பாடசாலைகளே நிறுவினர். பாடசாலைகளில் கல்வி புகட்டத் தகுதிவாய்ந்த ஆசிரியரைப பயிற்றுவதற்கென ஓர் ஆசிரியர் கலாசாலை வேண்டுமென்பதனை உ ண ர் ங் த திரு. கைலாசபிள்ளை அவர்கள் அத்தகைய கலாசாலை ஒன்றனேக் கீரிமலையில் நிறுவினர். அங்கு சமஸ்கிருக பாடசாலை ஒன்ற னேத் தொடக்கி வைத்தவரும் இபபெருந்தகையே. மேலும் அக்காலத்திற் சைவசமத்திற்காகப் பெருங் தொண்டாற்றி வந்த இந்து வாலிபர் சங்கத்தின் தூண்டு கலினுல் சேர் பொன் னம்பலம் இராமநாதனவர்கள் சைவவித்திய7 பிவிருத்திச் சங்கம் என்னும் சங்கத்தைத் தொடக்கி வைத்தார். இச்சங்கத்தின் பொறுப்பை ஏற்றுச் சைவப் பாடசாலைகளையும் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலைகளையும் நடத்திவருகின் ருர் வழக்கறிஞர் திரு. சு. இராசரத்தினம் அவர்கள்.
இவ்வாறு காவலரைப் பின்பற்றித் தமிழ்க் கல்வியின் முன்னேற்றத்தின் பொருட்டுப் பணிசெய்து வருபவரும், மற் அறும் கலாசாலை முதல்வர்களும், முகாமைக்காரரும் ஒன்றுசேர் தல் வேண்டும்; ஒன்று சேர்ந்து, தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று நிறுவுவதற்கு ஆவன செய்தல்வேண்டும். இன்று உல கம் விஞ்ஞானத்துறையில் நாளுக்குநாள் முன்னேறிக்கொண்டு செல்கின்றது. தமிழரும் முன்னேறிச் செல்லவேண்டுமாயின் விஞ்ஞான அறிவை மக்கள் பெறுவதற்குச் சாதகமான பாடங் கள் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் ‘முதல் இடம் பெறு தல் வேண்டும். அதற்கு ஆங்கிலக் கல்வியும் இன்றியமையாத தென்பதை நாம் மறத்தல் கூடாது. இவை யாவற்றையும் செவ்வனே ஆராய்ந்து, தமிழ் மக்களுக்குப பயனளிக்கக்கூடிய தமிழ்ப் பல்கலைக் கழகத்தை உடனடியாக நிறுவுவதற்கு முயற்சிசெய்தல் தமிழ்ப் பெரியாரின் கடனுகும்.
71.

Page 38
பல் கலை க் கழகங்கள் கலாநிதி ஆ. சதாசிவம்
“பல்கலைக் கழகம் என்றல் என்ன? என்னும் கேள்வி க்கு விடை காண்பது மிக இலகு. ஒரு நாட்டு மக்களுக்கு உயர்ந்த கலைகளில் பயிற்சி அளிப்பதும் அந்நாட்டுக் கலாச் சார பண்பாடுகளேப் பாதுகாத்து அவற்றை வளர்த்துவரு வதும் ஆகிய கலாபீடமே பல்கலைக் கழகம் என்ற பெயரைத் தாங்கவேண்டும் என்பது அறிஞர் கருத்து இப்பண்புகளுள் எவ்வெவற்றைக்கொண்டுள்ளது எம் இலங்கைப் பல்கலைக் கழகம் என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் கோக்கம்,
இலங்கை வாழ் சிங்கள தமிழ் மக்களின் கலர்ச்சார பண் பாட்டு வளர்ச்சிக்கு இலங்கைப் பல்கலைக் கழகம் எதுவித தொண்டும் ஆற்றவில்லையென்பது எல்லோரும் அறிந்த ஒரு பெரிய உண்மை. எத்தனை ஆராய்ச்சி நூல்கள் இதுவரை இங்கிருந்து வெளியாயிருக்கின்றன? சேர். ஐவர் ஜென்னிங்ஸ், மலலசேகரா, ராய், சரச்சந்திரா, சுவாமி விபுலானந்தா, செல் வநாயகம் என்போர் எழுதிய சில நூ ல் க ள் மாத்திரமே ஆராய்ச்சி நூல்கள் என்ற வகுப்பைச் சார்ந்தவை. ஒக்ஸ் போட் கேம்பிறிச்? கோர்வாட் "கல்கத்தா” போன்ற பல்கலைக் கழகங்களிலிருந்து உயர்தர வகுப்பைச்சேர்ந்த ஆராய்ச்சி நூல் கள் தினமும் வெளிவருகின்றனவே; அங்கனமாகவும் எம் பல் கலைக் கழகத்திலிருந்து மாதமொரு நூலாவது வெளிவருகின் றதா? இல்லை; இதுவரை கால எல்லையில் எத்தனே தலைவர் களே, அறிவாளிகளே, ஞானிகளே தத்துவ சமய விற்பன்னர் களே, இரசாயன பெளதிக நிபுணர்களே எம் பல்கலைக் கழகம் உருவாக்கியிருக்கின்றது? இங்ஙனம் பற்பல கேள்விகளைக் கேட்பதால் பயன் ஒன்றுமேயில்லை; பல்கலைக்கழகம் வரண்ட பாலைவனமாய்க் காட்சியளிப்பதன் காரணங்களே ஆராய்வாம்.
இலங்கைப் பல்கலைக்கழகம் ஒரு வளர்ந்துவரும் இளங் குழந்தை. சாதாரணமாக உலகிலே குழந்தைப் பிள்ளைகள் தம் வயதுக்கேற்ப தறுகுறும்புகளில் ஈடுபடுபவர்களாயும், அனுபவக் குறைவினல் பல பிழையான செயல்களில் ஈடுபடு பவர்களாயும் காணப்படுகின்றனர். மற்றும் இப்பிள் ஃளகள் செய்யும் பிழைகளுக்கும் சேட்டைகளுக்கும் அவர்கள் பெற்
72

ருேரும் ஒருமுறையில் பொறுப்பாளிகளாகின்றனர். அதாவது பெற்ருேரிற் சிலர் தம்பிள்ளைகளுக்கு ஏராளமான சட்டங் களேப் பிறப்பித்து அவர்களை அச்சட்டங்கட்கு உட்பட்டு நடக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதனுல் பிள்ளைகளிற் சிலர் சட் டங்களே அறவே மீற முற்படுவதையும், ஏனேயோர் பயந்து ஏங்கி நடப்பதல்ை தாமாகவே ஒன்றை யோசித்துச்செய்யும் சுதந்திர மனப்பான மையை இழந்துவிடுவதையும் நாம் நாளாந்த வாழ்க்கையில் காண்கின்றேம். ஆகவே பெற்றேர்கள் செய்ய வேண்டியது பிள்ளைகளுக்கு ஏராளமான சட்டங்களே விதித்து அவர்களது சுதந்திர உணர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக் காது அவர்களைக் கட்டுப்படுத்தவேண்டிய இடங்களில் மாத் திரம் கட்டுப்படுத்துவதே. (உவமையை விரித்துக்கொள்க) இவ்வுண்மையை இலங்கைப் பல்கலைக் கழக வளர்ச்சியிலும் வைத்து நாம் ஆராயலாம்.
பல்கலைக்கழக மாணவர்கள் அறிவிலும் அனுபவத்திலும் ஆரம்ப, மத்திய பாடசாலை மாணவர்களைவிட மிகக் கூடிய வர்கள். இவர்கள் விரிவுரையாளர்களாலும் விடுதிச்சாலை அதி காரிகளாலும் மிகக் கண்ணியமாகவும் சுதந்திரத்துடனும் நடத் தப்படவேண்டியவர்கள். பல்கலைக் கழகப் படிப்பு பாடப்புத்த கப் படிப்பல்ல; ஆசிரியர்கள் ஒரு பொருளைப்பற்றி விளங்கப் படுத்திவிட மாணவர்கள் கவனமாகக் கேட்டுத் திருப்பிச் சொல்லும் கிளிபபிளளே ப் பேச்சுமுறை ஆரம்ப மத்திய பாட சாலேகளில் உள்ளது. பல்கலைக் கழகமுறை அத்தகையதன்று. மாணவர்கள் தங்கள அறின் வத் தாங்களாகவே வளர்ப்பதற் குச் சாதகமாக அமையும் இடமே பல்கலைக் கழகம். இந்த அறிவு வளர்ச்சிக்கு வகுப்பறைப் படிப்புபபோலவே வகுப்பு அறைக்கு வெளியே மாணவர்கள் வாழும் விடுதிச்சாலை அனு பவமும் உதவிசெய்கின்றது. உலகில் உள்ள பெரிய பல்கலைக் கழகங்களெல்லாம் இயற்கை அழகுள்ள பெரிய நதிக்கரை யேரங்களில் அல்லது நதிப்படுக்கையிலிருந்து சில மைல் துரரத்தில் திகழுகின்றன. பேராதனைப் பல்கலைக் கழகம் Di l" , வலி ஆற்றங்கரையில் திகழுவது போலவே "ஒகஸ் போட் (Oxford) “35UD L9A3 j” (Cambridge) 'GOD 35 tạ.6áid Guiřiš” (Heidel burg) பல்கலைக் கழகங்கள் ஆற்றுபபடுக்கைகளில் அமைந்துள்ளன. தலைநகரங்களில் கட்டபபட்ட 'சோபோண்’ (Sobourne வீயன்னு? (Wienna) பல்கலைக் கழகங்கள் கூட முறையே சின் ‘டான்யூப' கதிகளிலிருந்து இரண்டொரு மைல் தூரத்தில் உள்ளன. බ්‍රගුණ
10
3.

Page 39
நாட்டின் வருங்காலத் தலைவர்களாகவும் தலைவிகளாகவும் திக் ழும் ஆண்களும் பெண்களும் தேகாரோக்கியம் உடையவர்க ளாய் இயற்கை வனப்போடு கூடிய அ ழ கி ய சூழ்நிலையில் வாழ்ந்து கல்வி பயிலவேண்டுமென்ற நோக்கம் பற்றியே பல் கலைக் கழகங்களை அமைத்தோர் ஆற்றங்கரைகளே நாடினர் என்பது எவருக்கும் இலகுவில் விளங்க முடிவதொன் அறு.
இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்கள் இயற்கை அழ கோடு கூடிய சூழ்நிலையில் வாழ்ந்து கல்வி கற்கின்றபோதும் அவர்களிற் பலர் அறிவு வளர்ச்சிக்காகப் படிக்கின் ருர்க ளில்லை, சோதனைகளில் விசேஷ சித்தி அடைவதற்காகப படிப்பதில் பல்கலைக் கழக வாழ்நாட்களைக் கழிக்கிருர்கள். இது பெரிய தவறு. கலைமாணிப் பட்டம் (B. A.) போன்ற பட்டங் களுக்கு விதிக்கப்பட்ட பாடப் புத்தகங்களே மனனம்பண்ணு வதில் நேரத்தைக் கழிக்கி ருர்கள். பல்கலைக் கழகப் பட்டம அரசாங்க உத்தியோகத்தை அடைவதற்கு வழிகாட்டியாக இருப்பதனுலேயே இலங்கை மாணவர்கள் பட்டதாரிப் பயித் தியம்பிடித்தவர்களாய்க் காணப்படுகின்றர்கள். பெரிய அர சாங்க உத்தியோகங்களில் அதுழைவதற்கு கலைமாணிப்பட்டம போதுமானதாகையால் எம் பல்கலைக்கழகத்தில் முதுமாணி (M. A.) As av TÉSR (Doctor) போன்ற ஆராய்ச்சிப் பட்டங்களைப் பெறுவதற்கு முயற்சிக்கும் மாணவர் எவரையும் காணுேம். இவற்றிலிருந்து நாம் அறிவது யாதெனில் ஆராய்ச்சி மனப் பான்மையோடு கூடிய மாணவர்கள் கூட ஆராய்ச்சி ഖt களில் ஈடுபட முயற்சிக்காது உயர்பதவியை அடைய வாயி லாகும் பட்டத்தை அடையும் குஅறுக்கு வழியையே தேடுகின Coifa air என்பது. மாணவர்களது மனப்பானமை இத்தகைய தாயிருப்பதற்கு அவர்கள் மாத்திரம் பொஅலுப்பாளிகள் அல் லர்; இலங்கை ஆட்சிபீடமும் பல்கலைக்கழக அதிகார பீடமும் மாணவர்களது ஆராய்ச்சி அவாவைத் தூண்டாக் கருவிக ளாகின்றன. மற்று, எத்தகைய கல்விமுறை இலங்கைப் பல் கல்க் கழகத்தாரால் கைக்கொள்ளப்படவேண்டும் என ஒருவர் கேட்பின அதற்கு விடையாக உலகில் உள்ள சில பல்கலைக் கழகங்கள் கொண்டுள்ள கல்வி போதிக்கும் பிற முறைகள் சிலவற்றை ஈங்குத் தருவாம்.
மத்திய ஐரோப்பிய பல்கலைக் கழகங்களிற் கல்வி கற்போ ரிற் பலர் அரசாங்க உத்தியோகத்தை மாத்திரம் நம்பிக்
4.

கல்வி கற்பதில்லை என்பது பலருமறிந்தது. "கைடில் பேர்க்? "வீயன்ன? 'பிராக்” போன்ற மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழ கங்களில் நம் நாட்டிலுள்ளதைவிட மிக வித்தியாசமான முறை யில் கல்வி போதிக்கப்படுகின்றது. இப்பல்கலைக் கழகங்களில் "கலைமாணி" "முதுமாணி போன்ற தரப் பட்டங்கள் கிடைக் கவே கிடையா. பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வில் சித்தி பெற்று உயர்தரப் படிப்புக்குச் செல்வோர் பல்கலைக் கழகத் திற் செய்யும் வேலே ஆராய்ச்சி நூல்கள் எழுதுவதுதான். அவர்களுக்கு அப்பல்கலைக் கழகங்கள் வழங்கும் ஒரே ஒரு பட்டம் "டாக்டர்" அல்லது ‘கலாகிதிப் பட்டம். மாணவர்கள் ஏறக்குறைய ஐந்து வருடங்களின் பின்பே இப்பட்டத் ைகப் பெறத் தகுதியுடையவர் ஆகின்றனர். பல்க்லேக் கழகத்தில் தொடர்ந்து படிக்கமுடியாததின் நிமித்தம் இவ்வைந்து வருடி எல்லைக்குள் பல்கலைக் கழகத்தினின்று நீங்குவோர் எதுவித தராதரப் பத்திரமுமின்றியே செல்கின்றனர். இவ்விதம் நீண்ட காலப் படிப்பின் பின் ஒரே ஒரு பட்டம் வழங்கும்முறை மத்திய ஐரோப்பிய பல்கலைக் கழகங்களில் இருந்து வருவதனல், அம் முறையினுல் பல நன்மைகள் எற்படுகின்றன. முதலாவதாக, ஐக்து வருடங்கட்குத் தொடர்ந்து ஆராய்ச்சிசெய்த பின்பும் எழுதும் ஆராய்ச்சி ஆால்கள் பட்டம் வழங்கத்தக்க தரா தரத்தை அடையாதவிடத்து மாணவர்கள் எதுவித பtடமு மினறிப் பல்கலைக் கழகங்களே விட நேரிடுமாகையால், உண்மை யாகவே ஆராய்ச்சியில் ஈடுபாடுள்ள சிறுதொகையினரே பல் கலைக் கழகப் படிப்பை நாடுகின்றனர். பல்கலைக் கழகத்தில் பட்டத்தைப் பெற்றபின்பும் தாம் கடத்திவந்த ஆராய்ச்சி யைத் தொடர்ந்து கடத்தவேண்டுமென்ற மனப்பான்மை இவர் களிடத்திருப்பது இயல்பே. இக்காரணத்தினலேயே நுண்கலை, மொழிநூல், சமயம், தத்துவம், இரசாயனம், பெளதிகம் போன்ற எந்தக் கலைகளிலும் உலகில் மேதாவிகளாய் விளங் குபவர்களுள் ஜேர்மனியர் தலைசிறந்து விளங்குகின்றனர். இந்நாடுகளில் பல்கலைக்கழகப் படிப்புக்குச் செல்லும் சிறு தொகையினர் தவிர ஏனையோர் ஆரம்ப மத்திய கல்லூரிகளி லிருந்து நேராகவே தொழிற்கல்வி நிலையங்களுக்கும் தொழிற் பயிற்சிச் சாலைகளுக்கும் செல்கின்றனர். ஐந்துவருட காலங்க ளில் மாணவர்கள் தொழில் நிலையங்களில் பெறும் அனுபவம் வாழ்க்கையில் ஏராளமான பொருளேத் திரட்டுவதற்கு உதவி செய்கின்றது. மேலும் சிறுபகுதியினர் பல்கலைக் கழகப்படிப்பை
75

Page 40
நாடுவதனல் இந்நாடுகளில் கல்வியின் தரமும் அதி உயர்ந்த தாய்க் காணப்படுகின்றது. அன்றியும், மாணவர்கள் எதுவித சோதனைகள் பற்றிய கவலை அற்றவர்களாய் தம் ஆராய்ச்சி யில் மாத்திரம் முனைந்து நிற்பதால், கல்வித்துறையில் புதி தாகக் கண்ட எவ்விஷயத்தையும் அல்லது உண்மையையும மற்றவர்கள் முன்னிலையில் நிலைநாட்டும் சுதந்திர தாகமுடைய வர்களாய்க் காணப்படுகின்றனர். இத்தகைய கல்விமுறை எம மிலங்கைப் பல்கலைக் கழகத்திற் கைக்கொள்ளப்படின் இன் னும பத்து, பதினேந்து வருடங்களில் காட்டில் நூற்றுக் கணக்கான மேதாவிகள் பிரகாசிப்பார்களன்ருே?
மத்திய ஐரோப்பிய பல்கலைக் கழகங்களிலுள்ள கல்வி முறையினின்றும் வேறுபட்ட முறை ஆங்கில காட்டிலுள்ள "ஒக்ஸ்போட் "கேம்பிறிச் ஆகிய இரு பல்கலைக் கழகங்களிலும் கிலவிவருகிறது. இவற்றுள் ஒக்ஸ்போட் பல்கலைக் கழகத்துக் கல்விமுறையினை ஆராய்வாம். 21 ஆண்கள் கல்லூரிகளும் 5 பெண்கள் கல்லூரிகளும ஆகிய 26 கல்லூரிகளின இணைபபே "ஒக்ஸ்போட் பல்கலைக் கழகம்’ என்ற பெனர்பெறும். இங்கு விரிவுரையாளர்கள் பல்கலைக் கழகத்தினரால் நியமிக்கப்படுவர். மாணவர்களுக்குக் கட்டுரைப் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் (Tutors) கல்லூரி அதிகாரிகளால் கியமிக்கப்படுபவர். இவ் விரு பகுதியினரது கடமைகளும் வேறு பல்கலைக்கழக வேத னம் பெறும் விரிவுரையாளர்கள் மேற்கூறிய 26 கல்லூரி மாணவர்களும் வந்து சந்திக்கத்தக்க ஒரு இடத்தில் விரிவுரை யாற்றுவர். இவர் க ஞ க் கு மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பு பெரும்பாலும் ஏற்படுவதில்லை. பல்கலைக் கழகத் தேர்வு வினுப்பத்திரங்களைத் தயாரிப்போரும் இவ்விரிவுரையா ளர்களே. கல்லூரிகளினது வேதனம்பெற்றுக் கல்லூரிகளில் வாழும் கட்டுரைப் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு ஒரே ஒரு பொறுப்பு மாத்திரம் உண்டு. இவர்கள் பெரும்பாலும் விரிவுரை ஆற்றுவதில்லை. தேர்வு விம்ைபத்திரங்கள் தயாரிப் பதில்லை; மற்றும், தம்பொறுப்பில் விடப்பட்ட ஏறக்குறைய பத்து மாணவர்களைக் கிழமைதோறும் குறிபபிட்ட நேரத்தில் தனிப்பட்டமுறையில் சந்தித்து அவர்களுக்குக் கட்டுரைப் பயிற்சி அளிப்பர். உதாரணமாக 'தற்கால சரித்திர ஆசிரிய’ rras (Tutor in Modern Hostory) 5-60 LDuróp36uirir sólo 62rfil யில் அபபாடிங் கற்கும் பத்து மாணவர்ாளுக்கு அப்பாடங்கற்பிக்
76.

கும் பொறுப்பை ஏற்பர்.இவர்களேஒவ்வொருவராகத் தன் அறை யில் கூப்பிட்டு அப்பாடத்தில் கிழமைதோறும் கட்டுரை எழுது விப்பர். மாணவனும் ஆசிரியரும் ஒருசேர இருந்து விஷயத்தை அலசி ஆராய்வர். மூன்றுபாடங்களைத் தேர்வுக்கு ஆயத்தப்படுத் அதும் ஒரு மாணவன் கிழமைதோறும் அம்மூன்று பாடங்களில் மூன்று கட்டுரைகள் எழுதி தம் மூன்று கட்டுரைப்பயிற்சி அளிக் கும் ஆசிரியர்களுக்கும் சமர்ப்பிப்பன். இப்பழக்கத்தினுல் மாண வன் மற்றவர்களேப் பின்பற்ருது தனது அறிவைத் தான் விரும் பியவாறு பெருக்கிக்கொள்ள அவகாசம் ஏற்படுகிறது. அன் றியும் விரைவில் அவன் தானே ஒரு எழுத்தாளகை மாறு கிருன, ஆங்கில காட்டில் இன்று பேரும் புகழும்பெற்று வாழும் ஆராய்ச்சியாளர்களும் தத்துவ, சரித்திர மேதாவிக ளும் கேம்பிறிச் "ஒக்ஸ்போட்" பல்கலைக் கழகப் பழைய மரண வர்கள் என்பதைக் கூறவும் வேண்டுமா ?
இனி, கம் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்விமுறையினைப் பற்றி ஆராய்வாம். இங்கு கல்வி கற்பிப்போரில் விரிவுரை யாளர், கட்டுரைப் பயிற்சி அளிக்கும் ஆசிரியர் என்ற இரு பிரிவினைகள் இல்லை. ஒருவரே விரிவுரையாளராகவும், மாண வர்களது கட்டுரைகளே ப் பரிசீலனை செய்யும் ஆசிரியராகவும் கடமையாற்றுகிருரர். அன்றியும் பத்து அல்லது பன்னிரண்டு மாணவர்களுடைய கட்டுரைகள் ஒருமணிக்தியால நேரத்தில் பரிசீல%ன செய்யப்படுகின்றன. எனவே ஒரு கட்டுரையைப் பரிசிலனை செய்வதில் ஆசிரியரால் 5, 6 கிமிடங்களே செல வளிக்கமுடிகின்றது. சில விரிவுரையாளர்கள் கட்டுரைகளேப் பரிசீலனைசெய்யாதே தெளிவாகக் கைச்சாத்திட்டுக் கொடுக் கின்றனர். ஏனைய மாணவர்கள் முன்னிலையில் ஒரு மாணவன் எழுதிய கட்டுரையில் உள்ள குறைகளே வெளிப்படையாக எடுத்து விளக்குவதனல், சிற்சில வேளைகளில் மாணவனுக்கு மனச்சோர்வு ஏற்பட்டுப் படிப்பில் ஊக்கங் குன்றுகின்றது. "ஒக்ஸ்போட்’ அல்லது "கேம்பிறிச் பல்கலைக் கழகங்களிற் போன்று ஒருமணித்தியால நேரத்தில் ஒரு மாணவனது கட் டுரை பரிசீலனை செய்யப்படுமாயின் மேற்கூறிய குறைகளே யெல்லாம் நிவர்த்தி செய்யலாமல்லவர்?
இன்னும் இங்கு சில விரிவுரையாளர்கள் கைக்கொள்ளும் முறையிலும் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. சிலர் மாணவர்கள் கையில் அகப்படாதனவெனத் தாம கருதும்
11
ץ'ף

Page 41
சில நூல்களிலிருந்து குறிப்புக்களேச் சேகரித்துத் தம் சொக் தச் சரக்காக மாணவர்களுக் க வழங்ககின் ருர்சள் பாட மணி அடித்த நேரம் தொடக்கம் முடிவு மணி அடித்துச் சில நிமிடங் கள் செல்லும்வரைகூடத் தசம உரத்து வாசிக்கும் குறிப்புக் களே மாணவர்களேக்கொண்டு எழுதுவிக்கிருரர்கள். இந்தக் குறிப்புக்கள் எடுக்கப்பட்ட புகதகங்களின் பெயரை அவர்கள் மாணவர்கள் முன்னிலையில் மறந்தும் உச்சரிப்பதில்லை. அன் றியும் மாணவர்கள் வாசித்துப் பயனடையும்பொருட்டுப் பிற உதவி நூல்களின் பெயரையாவது தம் குறிப்புடன் சேர்த்து மாணவர்களுக்கு வழங்குவதில்லை. ஏன்? இப்பேரலி விரிவுரை யாளர்கள் தாம் கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உல களவு என்பதை உணராமல் தம்முடைய எண்ணக் கருத்தே பரிபூரண உண்மை என்ற போலி நம்பிக்கையினுல் உந்தப் பட்டுத் தம் கருத்தை மாணவர்களது பச்சை உள்ளத்தின் மீது திணிக்கிருரர்கள். அவர்தம் சுதந்திர உணர்ச்சிக்கு முற் நுப் புள்ளி வைக்கிருர்கள். இன்னுஞ் சில விரிவுரையாளர் மாணவர்கள் கேள்வி கேட்பதற்கு நேரம் கொடுக்காதுவிடுவ தோடமையாது, இரண்டொரு மாணவர் கேள்விக்ள் கேட்டு விட்டால் அதனைப் பாரதூரமான பிழையாகக் கருதுகின்ற னர். கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்’ என்ற கொள்கைபூண்ட மாணவரிற் சிலர் அத்தகைய விரிவுரையா ளர்களுக்கு அஞ்சி ஒடுங்கி, சோதனையிலிருந்து தம்மைத் தப்பு வித்துக்கொள்ளும் நோக்கமாக விரிவுரையாளர்களது கருத் துச் சரியோ பிழையோ ஏற்றுக்கொள்கின்றனர். ஆசிரியர் கொள்கைகளே எதிர்த்தால் சோதனைக் கடதாசிகளில் கை வைக்கப்பட்டுவிடுமோ என்று எங்குகின்றனர் அம் மாணவர் கள். இவையெல்லாம் ஆரம்ப மத்திய பாடசாலைகளிற்கூடக் காணப்படாத இழிந்த முறைகளல்லவா? அறிவுத் தாகங் கொண்டு பல்கலைக்கழகப் படிப்பை நாடும், எம் நாளைய சமு தாயத்தின் அறிவுச் சுடர்களாய் விளங்கவிருக்கும் மாணவ மாணவிகள் பல்கலைக் கழகத்திலன்றி வேறு எங்கே தம் தாகத் தைத் தணிக்க முயல்வர்? இத்தகைய கிலே எம் சமுதாயத் தில் நிலவுவதையொட்டி யாம் மனக் கோகின் முேம், மாண வர்களுக்குக் கட்டுரைப் பயிற்சி அளித்தல், விரிவுரையாற்று தல், தேர்வு வினுப்பத்திரங்கள் தயாரித்தல் ஆகிய முத்தொ ழில்களையும் ஆற்றுபவர் விரிவுரையாளர்கள் ஆதலினலேயே அவரிற் சிலர் மாணவர்களைப் பயப்படுத்தவும், மாணவரிற்
8

சிலர் அத்தகையோருக்கு ஆண்டிான் - அடிமை முறையில் பயந்து ஒடுங்கி நடக்கவும் முடிகிறது. வீயன்னு" அல்லது "ஒக்ஸ்போட் பல்கலைக் கழகத்தில் உள்ள கல்விமுறை எம் இலங்கைப் பல்கலைக் கழகத்திலும் அனுட்டிக்கப்படுமாயின் மேலே காட்டிய ஊழல்களிற் சில ஏற்படுவதற்குச் சந்தர்ப்பங் கிடிையாதல்லவா?
விளக்கை ஏற்று
ஒளி. ஒளி எங்கேயிருக்கிறது? ஆசையின் ஆர்வநெருப்பால் அதைத் தூண்டு. இதோ இருக்கிறது விளக்கு, ஆனல் அதில் ஒரு போதும் ஒளி சுடர்விடவில்லை; என் இதயமே இதுவே உனது கதி.
இடி இடிக்கிறது; வெட்ட வெளியில் ஒல மிடுகிறது காற்று. இரவு கருங்கல்போல இருள் செறிந்துள்ளது. இருட்டிலே நேரம் வீணுய்க் கழியவேண்டாம். காதல் விளக்கை உன் உயிர்ச்
சுடரால் ஏற்றிவை.
- தா கூ ர்.
இன்பத்திற்குத் துணையாக யாராலும்முடி யும். ஈ எறும்பாலும் முடியும்; தேவையானது கிடைக்கும்போது ஈயும் எறும்பும் நம்மைக் கேளாமலே வந்து மொய்க்கின்றன. அது போல் இன்பம் உள்ளபோது யார் வேண்டு மானுலும் வந்து மொய்த்துக்கொள்வார்கள். ஆகையால் இன்பத்திற்குத் துணையாக வல்ல வரை நம்பாதே. துன்பத்திற்குத் துணையாக இருக்க வல்லவரைத்தேடு. உறவானுலும் கட் பானுலும் காதலானலும் இப்படித்தான் தேட வேண்டும்.
- டாக்டர் வரதராசன்.
79

Page 42
க ட ல்
வி. செல்வநாயகம்
இருபதாம் நூற்ரு:ண்டுக் கவிதைகளுள் ஆங்கிலக் கவி மரபைத் கழுவி எழுந்தவை பலவுள. தேவியவர்கள் பாடிய வற்றுட் பல அத்தகையன. அவற்றுட் கடலைப்பற்றி அவர் பாடிய பாட்டு ஒன்றை எடுத் து ஆராய்வதே இக்கட்டுரை யின் நோக்கமாகும் பாட்டுக்குப் பொருளாக அமைந்த இயற் கைப் பொருள்களுள்ளே கடல் முக்கியமானதொன் ருகும். ஆங்கிலக் கவிகளுட் பைறன் முதலான பெரும் புலவர்கள் கடலேப்பற்றிப் பாடியிருக்கும் கவிதைகள் சிறப்பாகப் பாராட் டப்படுகின்றன. அத்தகைய செய்யுட்கள் தமிழிலும் பலவுள எனினும், கடலைமட்டுமே பொருளாகக்கொண்ட தனிக் கவி தைகள் 20-ம் நூற்ருண்டிற்குமுன் தமிழில் எழவில்லை என்றே கூறலாம். பேரிலககியங்களை இயற்றிய கம்பன் முதலான பெரும் புலவர்கள் தத்தம் நூல்களிலிே ஆங்காங்கு கடலை வருணித்திருக்கின்றனர்; எனினும், அவற்றின் கண் கடலைப் பற்றிய விரிவான வருணனைகளை நாம் காணமுடியாது. புலவன் தான் எடுத்துக்கொண்ட கதைக்கு அல்லது சந்தாப்பத்துக்கு உதவக்கூடிய வகையிலே கடலை வருணித்திருப்பாரிேயன் றிக் கடலை வி ரி வா க வருணித்திருக்கமாட்டான். அத்தகைய விரிவான வருணனைகளை நாம் காணவேண்டுமாயின் தேவி யவர்கள் புனைந்த கவிதையிலேயே காணலாம்.
உலகிலுள்ள பொருள்களுட் புலவன் பாட்டுக்குப் பொரு ள ஃகொள்வது னது என்ற வினவுக்கு விடைகாண முற்படு வோமாயின், அவன் கொள்ளாத பொருள் உலகத்தில் யாது மில்லை என்பதைக் காணலாம். புலவனுடைய உணர்ச்சியைத் தூண்டவல்லது எதுவோ அதனே அவன் வருணித்துக் கூறுதல் அவனுடைய பிறப்புரிமை, இயற்கைக் காட்சிகள் அழகு உள்ளவை; புலவனுடைய உணர்ச்சியைத் தூண்ட வல்லவை; ஆகவே, அவை கவிதையில் வருணிக்கப்படுகின் றன. ஒரே விஷயத்தைப்பற்றிப் பல புலவர்கள் பலவகையா கப் பாடியிருக்கினறனர். குறித்த ஒரு விஷயத்தை ஒரு புல வன் வருணிப்பதுபோல இன்னுெரு புலவன் வருணிப்பதில்லை. இருவரும் காணும் பொருள் ஒன்றுதான்; எனினும், அதனைக்
80

காணும் வகையிலே அவர்களுக்கிடையே வேறுபாடு உண்டு. அதனுலேதான், அவர்கள் அதனை வெவ்வேறுவகையில் வரு ணித்துக் கூறுகின்றனர். காணும் பொருள் ஒன்ருக இருக்த போதும் காண்போருடைய மனுேபாவம் வேறுபடுதலிஞலே, அப்பொருளை வெவ்வேறுவகையிற் புலவர்கள் கூறுகின்றனர். இயற்கைப் பொருளை ஒருவர் காண்பதுபோல இன்ஞெருவர் காணமுடியாதிருப்பதிஞலேதான் இயற்கை எப்பொழுதும் புதிதாகவும் அளந்தறிய முடியாததாகவும் இருக்கின்றது.
தமிழிலே கடலைப் பொருளாகக்கொண்ட பாட்டுக்கள் பலவுள. அவற்றையெல்லாம் நாம் ஒருங்குவைத்து ஆராய்ந்து பார்ப்போமாயின், அவற்றுள் ஒன்றைப்போல இன்னென்று இருத்தலேக் காணமுடியாது. எனவே, அவற்றுள் எது கல்லது னஅது கூடாதது என்பதை எப்படிக் காண்பது என்ற வினு உங் கள் உள்ளத்தில் எழுதல்கூடும். இந்த விஞஷக்கு விடை கூறுதற்குமுன் சிலருடைய மனத்தில் எழும் ஐயப்பாடு ஒன் றினே எடுத்துக்காட்டுதல் பொருத்தமுடையதாகும். இயற் கைக் காட்சியொன்றைப் படம்பிடித்துக் காட்டுவதுபோலக் க்ாட்டும் பாட்டுத்தான் சிறந்தது எனறு சிலர் கூறுவார்கள். படம்பிடித்துக் காட்டுவதுபோலக் காட்டுதல் புலவனுடைய தொழிலுமன்று, கோக்கமுமன்று. ஒரு பொருளின் படத்தைப் பார்ப்பதிலும் அப்பொருளை நேரிற் கண்டு மகிழ்தல் சாலச் சிறந்தது. படம் எவ்வளவு அழகாக இருந்தபோதும் அதற்கு ஆதாரமாக இருந்த பொருள் அதனினும் சிறந்து காணப் படும் என்பதில் ஐயமில்லை. கடலைப் படம்பிடித்துக் காட்டும் பாட்டிலும் க பட ல் சிறந்ததாகல்வேண்டும். அங்ஙனமரயின் அப்பாட்டைப் படித்து அனுபவிபபதிலும் அக்கடலே கேரிற் கண்டு அனுபவித்தல் கல்லது. பாட்டே தேவையில்லை என்று கூடச் சொல்லலாம். ஆணுல், கடலைப் பார்த்து அனுபவிப்ப திலும் பன்மடங்கு சிறப்பாக நாம் கடலை வருணிக்கும் பாட் டைப் படித்து அனுபவிக்கின்ருேம். அதற்கு காம் ஒரு கார ணம் கூறலாம். இயற்கைக் காட்சி புலவனுடைய கற்பனே யைத் தூண்டுவதனுலே அவனுக்கு உண்டான உணர்ச்சியனு பவத்தை வெளிப்படுத்த அக்காட்சி ஒரு கருவியாக அமை கின்றது. ஆகவே, அக்காட்சி வருணனையிலே காக் அவனு டைய அனுபவத்தைகி காணமுடிகிறது. அது எம்முடைய உணர்ச்சியைத் தூண்டுதலினுல், அக்காட்சியினும் அக்காட் Respay ಇಂಗಿಹಿಹಿ கவிதை எமக்குப் பயன்படுகிறது. அத
8.

Page 43
ஞல், கடலிலும் பார்க்க கடல் வருணிக்குசி கவிதைrை ASATub பெரிதும் விரும்புகில 'pe.
புலவன் கடலை வரு50 க்கும்போது அவன காட்சிக் 9, அகப்படும அம்சங்கள் எலை சவற்றையும் வருணிப்பதில்&ல. தின னுடைய உணர்ச்சியை புலப்படுத்த எது எது பயன் படுமோ அதை அதை அ என வருணித்துப பயன்படுத்திக் கொள்ளுகின்றன். அதற்கு களவெண்பாவிலுள்ள ஒரு செய் யுக்ள உதாரணமாகக் காட்டலாம. நளன் கடலேப் பார்த்துக் *அவதாக அது அமைக் துள்ளது. அதன் கண் அவனுடைய மனுேபாவம் பிரதிபலிக்கின்றது.
போவாய் வருவாய் புரண்டு விழுந்திரங்கி காவாய் குழற நடுங்குறுவாய் - தீவா பரவகற்று மென்போல வார்கலியே மாதை இரவகற்றி வந்தாய்கொல் இன்று,
என்பது அப்பாட்டு. நளன் தன் காதலியைக் கானகத்திற் காரிருளிற் கைவிட்டுப் பிரிந்து செல்கின்றன். அவளேவிட்டுப் பிரிய முடியாமையால் மீண்டு போதலும் வருதலும் புரண்டு விழுதலும் இரங்குதலும் குழஆறுதலும் நடுங்குதலுமாகிய பல தொழில்களைச் செய்கின் முன். பின்னர் அவன் செல்லும் வழி யிலே கடலைக் காண்கின்றன். கண்டபோது, தன்னுடைய மனேகிலையை வெளிப்படுத்தும் நோக்கமாக அக்கடலின் காட் சியை இந்தச் செய்யுளிலே வருணித்துக் கூறுகின்றன். அவ் வருணனை அவனுடைய மன ஒருமைபபாட்டையும் துன்பத் தையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. கடல் அலகளின் தொழிலுக்கும் அவனுடைய மன நிலைக்கும் உள்ள தொடர் பினே நாம கண்டு இன்புறமுடிகின்றது, அதஞல், காம் இதனே ஒரு கல்ல பாட்டு என்று கூறுகின்றேம், இந்த முறையிலே நாம் தேவியவர்களுடைய பாட்டையும் ஆராய்வோமாஞல் அதன் கண் காணப்படும் சிறப்புக்களே அல்லது சிறப்பின் மைகளைக் கண்டுகொள்ளலாம். பாட்டு வருமாறு:
எல்லை அறியாப் பெருங்கடலே - தோன்
இரவும் உறங்கா யோகடலே
அல்லும் பகலும் அலகடலே - உனக்கு
அலுப்பும் இலையோ கருங்கடலே.
82

உருண்டு திரண்டு வருங் கடலே - உடைக்கு
ஓடிப்போவ தேன் கடலே
வெருண்டு மதிகெட் டாய்கடலே - பாறை
விலகிப் போகு மோகடலே.
பொங்கு திரைக ளோகடலே - அவை
புரவி கிரைதா மோகடலே
எங்கும் உண்தொளி போகடலே - அன்றி
இடியின் முழக்க மோகடலே.
ஒடம் எடுத்தெறி யுங்கடலே - தயை
உனக்குச் சற்றில யோகடலே
ஆடல் வீடித னைக்கடலே - யுேம்
அழிப்ப தழகா மோகடலே.
மலேயை வயிற்றடக் குங்கடலே - எண்ணில்
மகர மீனுஸ் வுங்கடலே
விெைகாள் முத்தளிக் குங்கடலே - சிப்பி
விளையா டற்குத வுங்கடலே.
மழைக்கு மூலமும் கேடலே - அதை வாங்கி வைப்பதும் கேடலே
வழுத்து மகிமையெல் லாங்கடலே - எவர்
மதித்து முடிக்கவ லார்கடலே.
ஒரு பாட்டை நல்லதா அல்லது கூடாததா என்று மதிப் பிடமுன் அதை நாம் பலமுறை உணர்ச்சியோடு படித்துப் பார்த்தல்வேண்டும். பா ட் டி லுள் ள ஓசை அப்பாட்டில் அமைந்துகிடக்கும் உணர்ச்சியனுபவத்தை வெளிப்படுத்தும் கருவியாகலின், ஒன்றைப் படிக்கும்பொழுது ஓசையுடன் சேர்த் துப் படித்தல்வேண்டும். பாட்டிலுள்ள அனுபவப் பொருளே நாம் பெறுவதற்கு ஏற்ற மனுேகிலையை ஏற்படுத்திக்கொள் னாவிடின், பாட்டைப் படித்துப் பயனடையவும் முடியாது, அது நல்லதா அல்லது கூடாததா என்று மதிப்பிடவும் முடி யாது. எனவே, இப்பாட்டைப் படித்தற்கு வேண்டிய மனே விக்லயை ஏற்படுத்திக்கொண்டு இதனைப் படித்துப்பார்க்கும் பொழுது இது ஒரு கல்ல பாட்டு அன்று என்ற முடிபிற்கே வசவேண்டியிருக்கிறது. ஒரு பாட்டைக் கூடாதது என்று
83

Page 44
இலேசாகச் சொல்லிவிடலாம். அது ரன் கூடாதது என்று கிரூபிப்பதுதான கஷ்டமானது. ஒரு பாட்டிலே அதாவது பல செய்யுட்களைக்கொண்ட ஒரு கவிதையிலே காணப்பட வேண்டியது ஒரு மனுேபாவம் அதாவது ஒரு உணர்ச்சிநிலை. ஒரு உணர்ச்சியனுபவத்தில் ஒன அறுக்கு மேற்பட்ட மெய்ப்பாடு க்ளேக் காணமுடியாது. ஒரு மலல கவிதையாயின் அதற்கு உயி 77 ஒரு அனுபவம் அமைதல் இன்றியமையாததாகின்றது. அனுபவமி இல்லாததொன்று பாட்டாகாது. ஆகவே, இந்தப் பாட்டில் அனுபவப்பொருள் உண்டா என்பதை ஆராய்ந்து பார்க்கும்போது, அதில் அது இல்லை எனபதைத்தான் காண முடிகிறது.
புலவன் தன்னை ஒரு விளையாட்டுப் பிள்ளையாகப் பாவித்து இப்பாட்டைப் பாடியிருக்கின்றன் என்பது பாட்டைப் படிக் கும்போது தெரிகிறது. ஆகவே, அப்பிள்ளே யின் அனுபவம், மன ஒருப்பாடு, அதன் விருப்பு அல்லது வெறுப்பு முதலியன இப்பாட்டில் அமைந்திருத்தல்வேண்டும். இரண்டொரு கண் ணிகளிலே அப்பிள்ளையின் மனுேகிலை புலப்படுகின்றது.
"ஆடல் வீடித (னேக்கடலே-யுேம்
அழிப்ப தழகாமோ கடலே, என்றும் சிப்பி - விளையாடற் குதவும் கடலே’ என்றும் கூறு வனவற்றைக் கொண்டுதான் அப்பிள் ஃளயின் மெய்ப்பாட்டை நாம் அறியவேண்டியிருக்கிறது. ஆடல் வீட்டை அழிக்கும் கடலில் பிள்ளைக்கு ஒரு வெறுப்புணர்ச்சி ஏற்படுதல் இயல் பாகும. இது ஒரு நல்ல பாட்டாயின் அவ்வுணர்ச்சி பாட்டு முழுவதிலும் செறிந்திருத்தல்வேண்டும். பாட்டு அவ்வாறு அமையவில்லை முதலிலுள்ள இரண்டு செய்யுட்களிற் காணப் படும் பொருள், மனே பாவம் முதலியவற்றை நோக்கும்போது, புலவன் ஒரு பிள்ளையாக கின்று பாடவில்லை எனபது தெரி கின்றது. கெய்தற்றிணைப் பாட்டுக்கள் சிலவற்றிலே தலைவ னைக் காணப்பெருக தலைவி இரவிலும் பகலிலும் உறங்கா திருத்தலும, அங்ஙனம் இருக்கும்போது கடலின ஒலியைக் கேட்டு "நீயும் என்னைப்போலக் கவலை கிரமபிய காரணத்தால் துயிலபபெரு திருக்கின்றயோ" என்று கடலைப் பார்த்துக் கூறு தலும் வழக்காருகும், அங்ங்னம் விஞவுதலால் அவளுடைய துன்பம் வெளிபபடுத்தப்படுகின்றது. இரவும் பகலும் உறங் காத ஒருவருக்கு மட்டுக்தான் கடலேபபார்த்து "நீ இரவும்

பகலும் உறங்காயோ? " என்று விஞவுதற்கு உரிமையுண்டு. அங்ஙனம் வினவும்போதும் அது ஒரு பயன் கருதி-அதா வது தனனுடைய மனேநிலையை வெளிப்படுத்துதற்பொருட்டு விஞவப்படுவதாதல்வேண்டும். அங்ங்ணமின்றி வாளா வினவுத லால் ஒரு பயனும் உண்டாகாது.
இனி ஓர் உணர்ச்சியனுபவத்தை ஒரு கவிதையிற் புலப் படுத்துவதென்றல், அஆதி சிறிது சிறிதாகப் புலப்படக்கூடிய வகையிற் செய்யுட்கள் ஒன்றனபின் ஒன்ருக அமைதல்வேண் டும். அந்த அனுபவம் சிதைந்துவிடக்கூடிய வகையிலே செய் யுட்கள் அமைதல் பொருந்தாது. ஒரு பிள்ளை யின் உணர்ச்சி கிலையை வெளிப்படுத்துதல் தான் புலவருடைய நோக்கமாயின், ஆடல் வீடதனை அழித்ததனுல் உண்டான வெறுபடிணர்ச் சிக்கு மாறுபட்ட வியப்புணர்ச்சி முதல் மூன்று செய்யுட்களி லும் அமைதல் பொருத்தமில்லை. கடலின திரைகளைக் குதி ரைப் படைக்கு ஒப்பிடுதலும், கடல் ஒலிக்கு இடிமுழக்கத்தை உவமையாகக் கூறுதலும் கவிமரபாயினும், பிள்ளையின் அனு பவத்தை வெளிப்படுத்த அவை கருவிய சக அமையவில்லை. ஒடத்தை எடுத்தெறிதல், மலையை வயிற்றடக்குதல், முத்து அளித்தல், மழைக்குமூலமாக இருத்தல், மழை நீரை வாங்கி வைத்திருத்தல் முதலியன கடலின் தொழில்கள். கடலின பெருமையை வியந்து கூறு கற்கு அவையெல்லாம் வேண்டி யவை அவற்றைக் கூறுதல் நோக்கமாயின. இக் கவிதை ஒரு கட்டுரையாகுமண்றிக் கவிதையாகாது அது கவிதையாயின அப்பிள்ளையின் வெறுப்புணர்ச்சி புலப்படக்கூடிய வகையில அக்கவிதை முழுவதும் அமைதல்வேண்டும். அங்ஙனம் அமை யாதபோது அதை காம ஒரு நல்ல பாட்டு என அறு எப்படிக் கூறமுடியும் ?
ஒரு நல்ல பாட்டிற்கும் ஒரு கூடாத பாட்டிற்குமிடையே உள்ள பேதத்தைக் கண்டுகொளவது இலேசனறு. பாட்டிற்கு உயிராக உள்ள உணர்ச்சியனுபவம் அமையவேண்டிய வகை யிலே ஒரு பாட்டில் அமைந்திராவிடின அதை ஒரு நல்ல பாட்டு என்று கூறமுடியாது. இக காலத்துப புலவர்கள் பாடும பாட்டுகளுட் பல நாம் இபபொழுது ஆராய்ந்த பாட் டைப் போன்றவை. சுப்பிரமணிய பாரதியார் கையாண்ட யாப்பு வகைகள் கடினமானவையல்ல. அ வ ற் ஆறு ள ஒன்றைக்
13
85

Page 45
கையாண்டு யாதேனும் ஒரு விஷயத்தைப்பற்றிச் சில செய் யுட்களே இயற்றிவிடின் கவிதை புனந்ததாகும் எனச் சிலர் கருதிக்கொள்ளுகின்றனர். காடு, மலை, ஆறு முதலியனவற் றைப் பொருளாகக்கொண்ட பாட்டுக்கள் பல ஆங்கிலத்தில் உள. அவற்றை இலேசான செய்யுள் கடையில் மொழி பெயர்த்துவிட்டால் பாட்டாகிவிடும் என்று சிலர் எண்ணுகின் றனர். ஆங்கிலப் பாட்டுக்களுக்கு உயிராக உள்ள உணர்ச்சி யனுபவம் எத்தகையன என்பதைக்கண்டு அவற்றையும வெளிப்படுத்தத் தெரியாத காரணத்தினுலேதான் காம மேலே காட்டிய பாட்டுக்கள போன்றவை வெற்றுடம்புகளாகக் கிடக்கின்றன.
நான் உணர்கின்றேன்
என் குழந்தாய் ! உதய ஒளியில் விண் னின்று பொங்கிவரும் ஆனந்த வெள்ளம் எத்தகையதென்பதையும், கோடைகாலத்தில் இனிய காற்று எப்படிப்பட்ட இன்ப உணர்ச் சியை என் உடலுக்களிக்கிறது என்பதையும் நீ சிரிக்க நான் உன்னை முத்தமிடும்போதெல்
லாம் உணர்கிறேன்.
- தா கூ ர்.
புதிய ஒளி
"புதிய சகாப்த்தத்தின் தூய ஒளியை நோக்கி மனிதர்களின் கண்கள் திரும்ப முனை கின்றன. இந்தத் தூய ஒளி மேதைகளின் கண் களுக்கே ஆரம்பத்தில் தட்டுப்படலாம். தனக் குப் புலப்படும் அந்த ஒளியை அவன் தனது கலாசிருஷ்டியின் மீது திருப்பி அதனைப் பிரதி பலிப்பதன் மூலம் அந்த ஒளியைச் சாதாரண மனிதர்களின் கண்களுக்கும் புலப்படச்செய்ய
வேண்டும்."
- பெர்ணுர்ட் ஷா ?
86

உடன் போ க்கு
'இறையனர் ” இதழில் வனப்பார் இதழ்மை தீட்டிப் பதனெடு சொக்கினிற் பன்னரு செங்கிறச் சாந்தை எடுத்துத் தடவியே மெழுகிப் புருவத் தெழுதரும் புரைமயிர் நீக்கிக் கரியவொண் வில்லைப் பயின லமைத்தே உருவ5ல் வானத் தொளிர்ந்தே எறிக்கும் இளங்கதிர் போன்முகம் விளங்கித் திகழ மேல்நாட் டுடைதனை மேவிகன் கணிந்த உரவோ னுெருத்தன் அருகிலே சேரப் பாய்ந்தும் நகைத்தும் பலவாக் களித்தும் பாங்காய் விரைந்திடும் பண்புறு காரிகாய் ! என்னரும் புதல்வன் இனியா ளொருத்தி உருத்திடுங் காதல் பெருத்திடக் காட்டக் கடிதி லவள்பெருங் * காறிணி லேறி விழைநும் மொழுக்கம் விருப்பொடு பூண்டே தொடர்ந்துடன் சென்ருன் தெரிவையான் ஏங்க, புணர்ந்துடன் வந்திடும் பொருவிலீர் நும்மைக் கண்டதும் யானுமோ காதலர் திரும்பினர் என்றே உவந்தேன் எதிர்நும் வழியில் அவர்தமைக் கண்டதோ அன்பொடு கூறுதிர், அடல்மிகு மாதினை அண்ணலே கோக்கினன்; மடமிகு காளையை மறுகிடைக் கண்டே உரைசில பேச உன்னினேன் அவனே நாணினல் யாதும் நவின்றிடா தன்னுய் ஏகினன் ஏந்திழையாள் பின், இஃது தலைவியோடு உடன்போய தலைவன் பின சென்ற அவன் தாய் மறுகிடையில் புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி என்னுற் தேடப்படுகின் ருர் மீண்டார் என்று கருதி மகிழ்க் தேன்; அது கிடக்க, இவ்வாஅ அம்மோடொத்த ஒழுக்கததி னராய் முன்னே இருவரைப் போகக் கண்டீரோ என அவரை வினய அது.
* Car
- க. கணபதிப்பிள்ளை,
87

Page 46
என் இன்பமான நாட்கள். பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை
நான் 1980-ம் ஆண்டில் அண்ணுமலைப் பல்கலைக் கழகத் திலே தமிழ் வித்துவான வகுப்பில் மாணவனுகச் சேர்ந்தேன். அப்பொழுது விபுலானந்த அடிகள் தமிழ்ப் பேராசிரியராக அங்கு இருந்தார்கள். பல ஆண்டுகளாக உயர்தரக் கல்விக் குச் சென்னைப் பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட்டிருந்த ரீ மீனுட்சிக் கல்லூரி அக்காலத்துக்குச் சில ஆண்டுகளுக்கு முனனர்தான அணணுமலைப் பல்கலைக்கழகமாக மாற்றி அமைக் கபபட்டது. அப்பொழுது தில்லையிலேயிருந்த சங்கதக் கல்லூரி யும தமிழ்க் கல்லூரியும திருவேட்களமாகிய அண்ணுமலை நக ருக்கே கொண்டுசெல்லப்பட்டன. போதிய கட்டிடங்கள் இல் லாமையால் கொட்டில்கள் சில அமைத்து, அங்கே மாணவரை வைத்துப் படிப்பித்தனர். சங்கதக் கல்லூரிக்கு இராம பிசா ரடி என்பார் தலைமைதாங்கினர். தமிழ்க் கல்லூரிக்கு விபுலா னந்த அடிகள் பேராசிரியராக இருந்தனர். இராம பிசாரடியா ருடன் மகாமகோபாத்தியாயர் தண்டபாணி தீட்சிதர் அவர்க ளும் சங்கதக் கல்லூரியில் கட்மை ஏற்று நடத்திவந்தனர்.
விபுலானந்த அடிகளோடு அக்காலத்திலே திறமை வாய்ந்த செந்தமிழ்க் கலைச்செல்வர் மாணவருக்குக் கல்வியூட்டி வந்தனர். அபபெரியார்களுள் இப்பொழுது சென்னேப் பல் கலைக் கழகத்துத் தமிழ்ப் பேராசிரியராகக் கடமையாற்றிவரும் திருவாளர் ரா பி. சேதுப்பிள்ளே அவர்களும் ஒருவர். திருவா வடுதுறை வித்துவசன் பொன்னே துவார் மூர்த்திகள், இராம நாதபுரம் சர்க்கரை இராமசாமிப் புலவர், திருச்சி இறையொளி சிவப்பிரகாசம்பிள்ளை, சோழவந்தான் கிண்ணிமடம் கந்தசாமி யார், மீனுட்சிசுந்தரம்பிள்ளையவர்களின் மாணு க்கரான பலரா மையர் முதலிய பெருமக்கள் அந்நாட்களில் பல்கலைக் கழகத் தமிழ்க் களரியை வலங்கரித்து வந்தனர்.
சர்க்கரை இராமசாமிப் புலவர் அவர்கள் புராண இதிகா சங்களுக்குப் பொருள் சொல்லிவந்தார். பொனனுேதுவார் மூர்த் திகள் தொல்காப்பியம் செய்யுளியல், யாப்பருங்க லவிருத்தி,திருக் கோவையார் நன்னூல் விருத்தியுரை முதலியவற்றை அருமை மாக மாணவருக்கு அறிவு அறுத்தினர். கந்தசாமியார் அவர்கள்
88

இலக்கணப் பாடங்களே நடத்திவந்தார். பலராமையர் அவர்கள் திருக்குறள், புறநானூறு முதலிய சங்க நூல்களுக்குப் பாடஞ் சொல்லிவந்தாா. இப்பெருமக்கள் யாவரும் தத்தம் கல்வித் துறைகளில் ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்துவந்தனர். இக்காலத்துப் புலவர்கள் போலப் பட்டத்துக்காகப படித்தவர் அல்லர். கல்வியின்மேல்வைத்த அவாவினுல் அதைக் கருத் தூன் றிப் படித்தறிவுமிக்கவர். ஆடு த%ள கடித்தாற்போன்ற புலமையன்று அவர் புலமை. தாம் எடுத்துக் கொண்டவற் றைத் துறைபோகக் கற்றவர். இப்புலவர் பெருமக்களின் உரு வங்கள் இன்றும் என் கண்முன் கின்று கிலவும். அவர் கூறிய அருமையான பொருள் செறிந்த இன்சொற்கள இன்றும் என் காதுகளில் நின்ருெலிக்கும்.
இப்பெரியார் யாவரும் வகுப்புகளிலே இருந்து கல்வியூட் டுவதோடமையாது, மாணுக்கரோடு ஒனறு பட்டு நல்லாயப் பழகிவந்தனர். வாழ்க்கையில் தமக்குற்ற இனனல் ஃளே மாணு க் கர் அடிகளிடம் கூறி, அவற்றை அகற்றுவதறகு அவர்கள் மொழியும் நல்லுரையைக் கேட்டு ஒழுகுவர். கந்தசாமியார் கல்விங்லையத்தைவிட்டுத் தம் இருப்பிடமாகிய தில்லைக்கு ஏகும் பொழுதும் மாணவர் அவரிடம் இலககண விடயங்களே பபற் றியே பேசிக்கொண்டுபோவர். பொன்னுே துவார் மூர்த்திகளின் இல்லம் எகினலோ அவர்கள் அவரை அன்பா தர வாய வர வேற்றுத் தமிழ்நாட்டுப் பழை ய வித்துவான களேபபற்றிய செய்திகளை எல்லாம் எடுத்துக் கூறக் கேட்கலாம. ஒருமுறை நான் அவர்கள் இல்லத்துக்குச் சென்றேன: அபபொழுது வவர்கள் பல விடயங்களோடு தம்முடைய வாழ்க்கை வரலாற்
றிலும் ஒரு சிறு பகுதியை எடுத்துக் கூறினர்.
ஒதுவார் மூர்த்திகள் திருவாவடுதுறையிலுள்ள ஓதுவார் ஒருவரின் புதல்வர். இளம் வயதிலே திருவாவடுதுறை மடத் இலேயே கல்வி பயின்றுகொண்டிருந்தார்கள் ஒருமுறை ஆறுமுக நாவலர் அவர்களின் மருகரான பொனனமபல பிள் ஆள அவர்கள் (பொன்னையா உபாத்தியார் ) திருவாவடு துறை செனறனர். அங்கு போகும்போதெல்லாம அவர் பலப் பல பொருள்களைப்பற்றியும் விரிவுரைகளாற்றுவது வழக்கம. அதுமட்டுமன்றி, ஆதீனத்தில் அவர் தங்கியிருக்கும்போது மாணவர் அவரிடம் சென் அறு தம்முடைய சந்தேகங்களைக் கேடடுத் தெளிவர். அவர்களோடு ஒதுவார் மூர்த்திகளும்
89

Page 47
சென்று தாம் படித்த பாடங்களிலுள்ள சந்தேகங்களைக் கேட் டுத் தெளிந்தார். அப்பொழுது பொன்னம்பல பிள்ளேயோடு சிலநாள் இருந்து பாடங்கேட்கவேண்டுமென்ற அவா ஓதுவார் மூர்த்திகளுக்குண்டாயது. பொன்னையா பிள்ளை அவர்கள் இருப்பது யாழ்ப்பாணத்தில். யாழ்ப்பாணம் எங்கே திருவா வடுதுறை எங்கே? அன்றியும், தங்தைக்கு ஒரே ஒரு மகன்; தம்மைவிட்டுச் சிறிதும் பிரியவொட்டார். இதை எல்லாம் எண்ணிவிட்டுப் பிளளேயவர்கள் யாழ்பபாணம் திரும்பியதன் பின, தன் நண்பன் ஒருவனத்தவிர வேருெவருக்கும தெரி யாது ஒளித்து யாழ்ப்பாணம் சென்று அவாகளிடம் சில காலம் கல்விபயினறதாகக் கூறினர். இத்தகைய ஆசை அப் பெரியாருக்குக் கல்வியில் இருந்தது.
சர்க்கரைப் புலவர் அவர்களோ நகைச்சுவைக் களஞ்சியம். அவர் உரையாடலைக் கேட்பதற்காக மாணவர் எப்பொழுதும் அவரைச் சுற்றி நிற்பர். சேதுப்பிள்ளை அவர்களும் புலவர் அவர்களும் நாளதோறும் பின்னேரவேளைகளில் மடேசப்டெரு மானைத் தரிசிப்பதற்குத் தில்லைக்குப்புோவது வழக்கம. அப பொழுது அவ்விரு பெரியார்களுடன் மாணவர்களும் கூடிச் சென்று புலவர் அவர்களின் ககைச்சுவை கிரம்பிய உரையாடல் கண்க் கேட்டு மகிழ்வர்.
இறையொளி சிவப்பிரகாசம்பிள்ளை அவர்கள், இப்பெரியார் கள் யாவருக்கும் வேருண ம்னப்பான்மை உடையவுர். மாணிக்க நாய்க்கர் கூட்டத்தைச் சேர்ந்து தமிழுக்காக மிகவும் உழைத் தவர். ஆங்கிலமும் நன்கு கற்றவர். புதுமுறையான எண்ணங் க&ள உடையவராகையினல் அவர் கொள்கைகள் அக்காலத்து மக்கள் கொள்கைகளுக்கு முரண்பாடாக இருந்தன; எனினும தமது கொள்கைகளை நிலைநிறுத்தி மிகுக்த நகைச்சுவையோடு சொல்லாடும , வன்மையுடையவர்.
சிறிது காலத்தில் கொட்டில்களிலிருந்த தமிழ்க் கல்லூரி யும் சங்கதக்கல்லூரியும பல்கலைக் கழகக் கட்டிடத்துள்ளேயே போய்ச் சேர்ந்தன. அதனல் அக்கல்லூரிகளில் பழையமுறைப் படி வேட்டி சால்வை அணிந்து வந்து கல்வி கற்பித்த ஆசி ரியர்களுக்குப் பெரிய இடர்ப்பாடாக இருந்தது; ஏனெனில், அவர்கள் தாம் வழக்கமாக அணியும் வேட்டிசால்வையோடு தம்முடலை மறைக்கச் சட்டையும அணியவேண்டி வந்தது. தமது உடையில் பழைய முறையையே இதுகாறும் தழுவி
90

வந்த பொன்னுேதுவார் மூர்த்திகளும் கந்தசாமியாரும் சட்டை அணிந்து தலைப்பாகை தரித்துப் பல்கலைக் கழகத்துக்கு வந்த முதல்நாள் அவர்களைப் பார்க்க எமக்கும் எம்மோடு
படித்த மாணவர்களுக்கும் பெருவியப்பசய் இருந்தது.
நான் அண்ணுமலைப் பல்கலைக் கழகத்துக்குச் சென்ற முதல் ஆண்டிலேயே அங்கு கடந்த ஒரு சிறப்பான கிகழ்ச்சி என கினேவுக்கு வருகின்றது. இதுகாறும் பாரதியார் பாடிய பாடல்கள் யாவும் புலவர்களால் இலக்கண வழு கிறைந்தவை என்றும், பழைய யாப்பு அமைதிக்கு அமையாதவை என் அறும் ஒதுக்கபபட்டு வந்தன. ஆணுல் விபுலானந்த அடிகள் போன்ற அறிஞர்கள் பாரதியாரின் பாடல்களின் உண்மைத் தன்மைகளே அறிந்திருந்தனர். அதனுல் விபுலானந்த அடிக ளின் தலைமையில் அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் பாரதி யார் சங்கம் என்னும் பெயருடன் ஒரு கழகம் கிறுவப்பட்டது: இதன் முதற் கூட்டம் நிகழ்ந்தது சங்கீதக் கல்லூரியில், விபுலானந்த அடிகள் பாரதியாரைப்பற்றி ஓர் அரிய சொற் பொழிவு ஆற்றிக் கூட்டத்துக்குத் தலமை தாங்கினர். அடிகள் விரிவுரை ஆற்றும்போது தமது கோட்பாட்டுக்கு மேற்கோ ளாகப் பாரதியாரின் பாடல்களைப் பாடுவித தார்கள். அவற் றைப் பாடியவர்கள் பல்கலைக் கழகத்தில் ஆங்கில மொழி விரிவுரையாளர் மயிலேறு என்பாரும விசுவநாதன் என்பாரும் ஆவர். அன்று தொடக்கம் பாரதியார் சங்கம அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் ஓங்கி வளர்ந்து வங் த அது. அதனேடு பாரதியாரின் புகழும் தமிழ் நாடெங்கணும் பரவியது.
அங்காட்களில் சாதிவேற்றுமை மிகக் கடுமையான நிலையி லிருந்தது. அண்ணுமலை நகருக்கருகிலுள்ள ஆதித் திராவிட மக்கள் குடியிருக்கும சேரிகளுக்கு மேல சாதியாரென எண்ணிக் கொள்வோர் போவது வழக்கமில்லை. அப்படி எவரும அங்கு செல்லநேரிடின், திரும்பி வந்தவுடன் உடைமாற்றி முழுகுதல் வேண்டும். அவ்வாறு முழு காதுவிடின் தீட்டுக் குற்றத்துக்கு ஆளாவார். அதனல் அச்சேரிகளுக்கு ஒருவரும போவதில்லை. இதைக்கண்டு அடிகளும் சில முற்போக்கான மாணவரும் ஒன்றுகூடி, அச்சேரிகளில் வதியும் சிறுவர்களே அண்ணுமலைப் பல்கலைக் கழகத்துக் கட்டிடத்துள்ளேயே கொண்டுவந்து ஆசனங்களிலிருத்தித் தமிழ் சொல்லிக்கொடுத்தனர். அவ்
91

Page 48
வாஆறு தமிழ் சொல்லிக்கொடுக்கும்போது அவர்களுக்கு முதன் முதற் சொல்லிக்கொடுத்தது மேல்வரும பாரதி பாட்டாகும். அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத் துளோரெலாம் எதிர்த்துவந்த போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. கான் பல்கலைக்கழக விடுதிச்சாலையில் இருந்து வந்தேன். பார்ப்பனரல்லாதார், உண்ணும் உணவில் லத்திலேயே எனக்கு உணவு. அங்கு கிருஷ்ணையர் என்பவர் உணவு அளித்தார். அவரே பல்கலைக் கழகத்துத் தலைமை அட்டலாளர். அடிசில் ஆக்குவதில் கைதேர்ந்தவர். அவர் ஆக்கும் இரசமும் பாயச மும் மிகச் சுவையுள்ளவை என்று எவரும் பாராட்டுவர். அன பும் ஆதரவும் உள்ளவர். மற்றைய உணவு இல்லங்களில் வழங்கப்படும அடிசிலிலும் பார்க்க எங்கள் உணவில்லத்தில் வழங்கப்படும் அடிசில் மிகத் திறமானது என்பதன் கிமித்தம் எம் உணவு இல்லத்துக்கு ஏனைய உணவு இல்லங்களினின் ஆறும் மாணவர் பலர் அடிக்கடி வந்து அடிசில் அருந்துவர்.
பின்னேர வேளைகளில் பெரும்பாலும் நடராசர் கோயிலுக் குச் செல்வோம். அங்கு சென்று திரும்புமபோது தில்லைக் கோயில் வீதியிலேயுள்ள உணவுக்கடையொனறில் பகோடா வாங்கி வருவோம். முதலியார் ஒருவர் அவ்வுணவுக் கடையை நடத்திவந்தார். அ த ஞ ல் அப்பகோடாவை "முதலியார் பகோடா” என அழைப்பர். அக்கடையிலே செய்யும் பகோடா அங்காட்களில மிகப பேர்பெற்றது. கழக விடுதிச்சாலைக்கு நாம் தில்லையிலிருந்து திரும்பிவரும்போது எமது நண்பர் யாவரும் எம்மைச் சூழ்ந்து கின்று 'பகோடா வாங்கி வந்தீர்களா? எனறு தொந்தரவு செய்வர்.
இராக்காலம வந்ததும் உணவருந்தியபின் கூட்டம் கூட்ட மாகச் சேர்ந்து படிபபோம். தெரியாதவற்றை மறுநாள் எம் மாசிரியரைக் கேட்டுத் தெளிந்துகொள்வோம். நான் கல்வி பயிலுமபோது எனக்குப் பல்கலைக் கழகத்தில் நண்பர் பலர் இருந்தனர். அவரோடு கான் கழித்த நாட்கள் மிக இன்பமr னவை. அந்த மாட்களைப்போல் இன்பமான நாட்கள் என்
வாழ் நாளில் இனி வருமோ ?
92

தமிழ்ச் சங்கச் செயலாளர் அறிக்கை.
தமிழ்ச் சங்கத்தின் இந்த ஆண்டு அறிக்கையைச் சமர்ப் பிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சென்ற ஆண்டுகளை விட இவ்வாண்டு எங்கள் சங்கம் சிறந்தமுறையில் தமிழ்த் தொண்டு செய்துளளது. இதற்கு முக்கிய காரணம் தலைவர் அவர்களது ஆர்வமும் செயற்குழுவினரின் ஒத்துழைப்புமா கும். இவ்வாண்டு நாம் சிறந்த சொற்பொழிவாளர்களை வர வழைத்துச் சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு அவர்கள் பேச் சைக் கேட்கும் வாய்ப்பை அளித்தது மட்டுமல்லாமல் சொற் போர், கலந்துரையாடல் முதலியவற்றின் மூலமும் அறிவு வளர்ச்சிக்கு உதவிபுரிந்தோம்.
இவ்வாண்டு நிகழ்ச்சிகள் புதிய மாணவரின் சொற்போரு டன் ஆரம்பமாயின. இச்சொற்போர் இமமுறை சிறந்தமுறை யில் நடைபெற்றது. இதன் வெற்றிக்குக் காரணமாகிய இந் நிகழ்ச்சியிற் பங்குபற்றிய மாணவ மாணவிகளுக்கு நன்றி கூறுகின்றேன்.
தமிழ்ச் சங்கத்திற் சொற்பொழிவாற்றியவர்களில், கலா கிதி ஆ. சதாசிவம் அவர்கள் தமது 'ஒக்ஸ்போட் அனுப வங்கள்’ பற்றிப் பேசினர்கள். முனனையநாள் மந்திரி திரு. சு. நடேசன் அவர்கள் தமிழ் இலக்கியங்களும் தத்துவங்களும் என்னும் விஷயம்பற்றியும, திரு மனேகரன 'குடியரசு" என னும் விஷயமபற்றியும் சொற்பொழிவாற்றினர்கள். இவர்க ளுக்கு எங்கள் சங்கத்தின் நனறியுரியது.
"தமிழில் நாவல் இலக்கியத்தின் வளர்ச்சி? என்னும் பொருள் பற்றித் திரு. ந. சுந்தரம பிள்ளை அவர்கள் ஓர் கலங் துரையாடலைத் தொடக்கிவைத்தார். இக் கலந்துரையாடல் சிறந்தமுறையில் நடைபெறற அது அடுத்த தவணை இது போன்ற கலந்துரையாடல் பலவற்றை கடாத்த எணணியுள் ளோம. இவ்வாண்டு நிகழ்சிகளில் மகார கம ஆசிரிய கலா சாலையுடன நிகழ்ந்த சொற்போரும் குறிப்பிடத்தக்கது. திரு. K. நல்லசிவம் பிள்ளை, திரு. N. சுந்தரமபிள்ளை, திரு. T பரராச சிங்கம் ஆகியோர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பேசினர்.
இவ்வாண்டு "முத்தமிழ் ஆரம்' என்ற வி ய த் த கு விழா வெடுத்தோம. எல்லாவற்றையும விடப் பெருமைக்குரிய நிகழ்ச்சி இதுவே. எத்தனையோ இடையூறுகளுக்கிடையிலும் அதனை
14.
9

Page 49
  

Page 50
நாடகத்தில் நடித்த ஆடவர் அரிவையர் (நாடக அரங்கிலே தோன்றிய முறைப்படி) 米 将 来 Gupi (pig. .சமூகச் சீர்திருத்தத்திற்கும்
உழைக்கும் இளைஞன்.இ. சுந்தரலிங்கம் பிரகலாதன் . படித்துப பட்டம்பெற்றவன்;
உத்தியோகம இல்லாதிருப்பவன். க. சிவப்பிரகாசம் இமயவரம்பன். உதவிப் பத்திராசிரியன் . க. கைலாசபதி
தில்லைச்சியார் . இமயவரம பன் தாயார் .செல்வி சத்தியானந்த ஈசுவரி செல்வத்துரை
மின்னிடை .முற்போக்குள்ள பெண் .செல்வி இந்திராணி
வஞ்சி afsir2OT unt இரும்பொறை.கமஞ்செய்யும் இளைஞன் . சா. இம்மானுவேல்
கமலநாதன் கருணுகரன் . வைத்திய மாணவன், மின்
னிடை வஞ்சியின் அண்ணன்.ந. சுந்தரம்பிள்ளை கலிப்பகை ..இளைப்பாறியபோர்வீரன்,
மோட்டார்வண்டி திருத்துபவன்.க. தியாகராசா துப்பாக்கி. கலிப்பகையின் வேலையாள். லோ. சு. குணாத்தினம்
.கா. சிவத்தம்பி ஆடவல்லார் .சாமியார்; அரசியல்
விழிப்புள்ள தீவிரவாதி.ஏ. பி. வின்ஸ்கோமஸ் கூற்றுவன் கள்ளர் பிரான் .பொலிசு இன்ஸ்பெக்டர்.க. மு. அபூபக்கர்
} மு. லெ. ஹனிபா
மு. ச. மு ஹாசைன் மழஜலச்சிலம்பு.மின்னிடைவஞ்சியின் .செல்வி தங்லெட்சுமி
பொலிசு வீரர்.
கூட்டாளி காகேந்திரம்
சக்கட்த்தார் . .மு. விருத்தாசலம் கோட்டுப்
பணியாள் . ...Cur. கதிர் வேலாயுதபிள்ளை 8 Gaius F i ••• .கா. இராசரத்தினம் எதிரிதரப்பு நியாயவாதி . .செ. மு. அ. ஜப்பார் முடிக்குரிய 5ura sur2 --- se•gji, UEJ IJ Tefëmijasib
கதை நிகழிடம் : 6ů smT G.

பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தினர்
ந டி த் த
துரோகிகள்
956-9-2 ܘ ܢ யாழபபாணம நகரசபை மணடபம : 22-9-956
கண்டி: திரித்துவக் கல்லூரி மண்டபம்: 3-10-1956
kana.--. .---. . ... 27-0-956 கொழும்பு லயனெல்வென்ற் மண்டபம்: L;
9-12-1956 • ؟ ۔ ۔ ۔ ۔ --سٹ * ۔ ۔ ۔“۔ --سم- - - மடடககளபபு நகரசபை மணடபம: ;
நாடக ஆசிரியர்: பேராசிரியர் க. கணபதிப்பிள்2ள
தயாரிப்பு: கலாநிதி சு, வித்தியானந்தன்

Page 51
து ரோ கி கள்
*இந்த நாட்டிலே சிந்திக்கத் தெரிந்த ஒரு தமிழனிருந் கால் அந்த ஒருவனுக்காவது இது பயன்படட்டும்’ என்ற சேவை மனப்பான மைனோடு தமிழினத்தின் இன்றைய நிலை யைக் கருவூலமாக வைத்து எழுதப்பட்ட இந்த நாடகத்தின் மூலம் நாடக ரசிகர்களின் உள்ளங்களிலே வாடாத கருத்துக் &ள சிலவற்றை மலரவிட்டிருக்கிருேம்.
இக்கருக்துக்களைப் புதுமைத் தமிழிலே, கேலியும் கிண்ட லுமாகப் பின்னிப் பிணைத்து, ஏட்டிலே தீட்டிய பெரும் ur fr சிரியர் க. கணபதிப்பிள்ளேயவாகளின் எழுத்தாணியை 鑫5禹了芭一á5 உலகம் என்றுமே மறந்துவிடாது! நாடகம் உருவாகுங்காலத் தில் பெற்றுவிட்ட பாசத்தோடு, பக்கத்திருக்து எம்மை ஊக்கு 6 கத பேராசிரியர் அவர்கட்கு முதற்கண் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிருேம்!
இத்தோடு ஆச்சரியமான வேருெரு விஷயத்தையும் இங்கு குறிபபிடவேண்டியிருக்கிறது. வளேந்து நெளிந்து செல்லும் மலைநாட்டுப் பாதைகளிலே-அறுபது கட்டை வேகத்திலேமோட்டாரை ஓட்டிக்கொண்டே கித்திரைசெய்யும் ஒரு அபூர்வ மனிதரை நீங்கள் எங்காவது பார்த்திருக்கிறீர்களா?... பகல் முற்ருக விரிவுரை கிகழ்த்துவது; உடனே கண்டியிலி ருந்து கொழும்பிற்குப்போவது; அங்கே மாலை ஆறு மணி தொட்டுப்பத்து மணிவரை ‘ரிக்கட் விற்பனைகளேக் கவனிப்பது: (அப்பாடா! அந்தக் கறுவாக்காட்டு அல்ஸஸன்’ நாய்களை நிகனத்தால் இப்போதும் தொடை கடுங்குகிறது) பத்து மணி தொடக்கம் நடுச்சாமம்வரை தெருக்களில் விளமபரம் ஒட்டுவது (விடியும்வரை ஒட்டிய காலமும உண்டு;) பின்னர் இரவோடிர வாய்க் கண்டிக்கு வருவது; இடையில் கித்திசை?. அது தான் முன்பு குறிபபிட்டேனே, மோட்டாரை ஒட்டிக்கொண்டு நித்திரை செய்வதென்று! இப்படியாகப் பலமாதங்கள் அய ராது உழைத்த அபூர்வ மனிதர் யார் தெரியுமா? அவர்தான நமது நாடகத்தை அசுரவேகத்தில் தயார்செய்த கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்கள்! இந்தத் தனிமனிதரின் சக்தி தான் எமஅ நாடிகத்தின, வெற்றி? என்று குறிப்பிடுவதுகூட மிகையாகாது! எனவே, இவரது தொண்டினை இலகுவில் மறக்கக்கூடிய அளவிற்குத் தமிழகம் நன்றிகெட்டதல்ல! அன் னருக்கு எமது தமிழ்ச்சங்கம் என் அறும் கடப்பாடுடையது.
98

மூன்று, நாலு மாதங்களர்கப் பழகவேண்டிய நாடக மொன்றை ஒன்பது நாட்களில் மேடையேற்றுவதென் ருரல் அதைக் கண்டிப்பாக ஒரு அசுர சாதனை" என்றே குறிப்பிட வேண்டும். மேற்படி முயற்சியை உடலினுற் பலராயினும உள் ளத்தால் ஒருவராகிக் கடமையுணர்ந்து தயாரிப்பாளரோடு ஒத்துழைத்த நடிகர் நடிகைகளின உயர்ந்த பண்பினுக்குத் தலை வணங்குகிருேம்.
தொண்டு செய்யச் சந்தர்ப்பமில்லையே என் அ பலர் அங்க லாய்ப்பர்; ஆனல் சந்தர்பபங்கொடுக்கப்பட்டால் ஓடி ஒளிப் பர்; அல்லது எந்த நல்ல முயற்சிக்கும குறைகூறிக்கொண்டே இருப்பர். அதே நேரத்தில் தமிழ்த் தொண்டென்ருல் துடி யாய்த் துடிக்கும் பெரும் மனிதர்களும் இருக்கவே இருக்கிரு?ர் கள் என்பதை அறியும்போது பெருமகிழ்ச்சியடைகிருேம். இத் தகைய பெரியோர்களில் ஒருவர்தான் கண்டியைச் சேர்ந்த திரு. சு. செல்வநாயம் அவர்கள்! அண்டுதோறும் ஆயிரக் கணக்கான ரூபாய்களுக்கு பிரிக்கட் விற்கத் துணைபுரிந்த அப் பெரியாருக்கு நமது மனங்கனிந்த நன்றிகள்!
கங்கள் நாடகம் சிறப்படையவேண்டுமென்ற நோக்கத் தோடு "ரிக்கட் விற்பனை', நாடக மலருக்கு விளம்பரங்கள் சேக ரித்தல் முதலிய பணிகளைச்செய்து தொண்டாற்றிய உடன் மாணவர்களும எமது பாராட்டுக்குரியோராவார்! ... '
நாடகம் அரங்கேறிய இடங்களிலெல்லாம் பழைய பல் கலைக் கழக மாணவர் பலர், சிறப்பாக எமது முன்னுளைய நாட கங்களிற் பங்கு பற்றியவர், காட்டிய ஆர்வமும் தொண்டும் எமமை மென மேலும் ஊக்குவனவாகும்! இவ் வருட நாடகத்தில் ‘விருந்து நடிகராக" (Guest Artist) கலந்துகொண்ட பழைய மாணவர் திரு கா. சிவத் கம பி அவர்களுக்கு எமது நன்றி.
மலைநாட்டுத் தமிழர்-சிறப்பாகத் தோட்டச் சொந்தக்கா ரர்-தமிழுக்குத் தொண்டு செய்கிருேம என்ற பேரார்வத் தோடு பல நூறு ரூபாய்களே அளவித்தந்து எமது நாடகங்களை ஆதரித்துள்ளார்கள். அவர்களது தமிழ்ப் பற்றை நாம் மறப் பதற்கில்லை! - ! ` ' • • • • ** *
நாடகத்திற்குத் தேவையான பின்னணிப் பாடல்களேக் கண்டியிலும் கொழும்பிலும் பாடிய அன்பர் M. வர்ணகுலசிங் கம் அவர்களுக்கு நாம் என்றும கடப்பாடுடையோம!
எங்கள் நாடக முயற்சியை நல்ல முயற்சி என்று ஒரே குரலில் பாராட்டுரைகள் விழங்கி, இலங்கைப் பல்கலைக்கழகத்
99

Page 52
தின் நாடகப் பணியைத் தமிழ்கூறும் கல்லுலகமெங்கும் பரப்பி எமக்கு உற்சாகமூட்டிய சுதந்திரன், வீரகேசரி, தினகரன் ஆகிய செய்தித்தாள்களுக்கு நன்றி கூருதுவிட்டால் நாம் கமது கடமையில் தவறியவர்களாவோம.
இம்முறை எங்கள் நாடகத்தின் மூலம் கிடைத்த மிகுதித் தொகையாகிய நாலாயிரத்து அஅறுநூற்றெழுபத்தேழு ரூபாய் காற்பத்துநான்கு சதத்தினைத் (ரூபா 4,677-44) தமிழ் மாணவு ரின் உபகார நிதிக்காகப் பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் முத லீடு செய்துள்ளோம். தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கம், பாட சாலைப் புனருத்தாரண நிதிபோனறவற்றிற்காகத் தமிழ்ப் பேசும் ஒவ்வொருவரும் மாதா மாதம பணங்கொடுக்கவேண்டி யிருக்கும இன்றைய சூழ்நிலையோடும , எமக்குக் கிடைத்த கால நீட்சியின் குறைபாட்டோடும ஒப்பிட்டுப்பார்க்கும்போது இது நமக்குக் கிடைத்த பெரியதொரு வெற்றியென றே குறிப பிடவேண்டும். ஆயினும் இந்த மகிழ்ச்சியை இதயத்தில் குடி புகவிட்டு விழாவெடுக்கமுடியாதபடி தடுத்துவிட்டது. எங்கள் குணசித்திர ந டி க ர் லோ. சு. குணரத்தினம் அவர்களின அகால மரணம்! இலங்கைப் பல்கலைக்கழகம் நாடக நங்கைக் குப் பெருமையோடு குட்டவிருந்த மலரொன்று காலையரும்பி மாலையாக முன்பு மடிந்துவிட்டது! குமுறும் இதயத்தைக் கையினுல் அமுக்கிப் பிடித்துக்கொண்டு அன்னுரின் குடும்பத் தாருக்கும் கண்பர்களுக்கும தமிழ்ச் சங்கத்தின ஆழ்ந்த அநு தாபத்தைப் பணிவோடு சமர்ப்பிக்கிருேம்.
திருகோணமலை, வவுனியா, நீர்கொழும்பு, சிலாபம் முக லிய இடங்களிலுள்ள பல தமிழ் வளர்ச்சிக் கழகக் கார் எங் கள் நாடகத்தைத் தங்கள் மத்தியிலும் அரங்கேற்றவேண்டு மென்று துடியாய்த் துடித்துக் கடிதமெழுதுகிருர்கள். எங்களை எதிர்நோக்கியிருக்கும் பரீட்சையின் காரணமாக அந்த அன பர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாமைக்கு வருந்து 3Gmptb. அதே கே ரத் தி ல், கலைத்தேவி அருள் புரிந்தால் அடுத்த ஆண்டிலே எங்களது நாடகங்களே உங்கள் சொந்த மேடைகளில் கண்டுகளிக்கலாம் என்பதையும் சொல்லி வைக் கிருேம்.
வாழ்க நாடகத் தமிழ்!
சா. இம்மானுவேல் கமல5ாதன், தமிழ்ச் சங்கத்துஃணத் தலைவர்.
100

செய்தித் தாள்களின் பாராட்டுரை
"...தமிழர் தம் வாழ்வை-அவர்கள் அரசியல் கிலே மையை-ஆதாரமாகக்கொண்டு உருவாக்கப்பட்டது இக்காட கம், கதை, உரையாடல், வேஷங்கள், யாவும் கன்ருக இருக் கின்றன. இந்நாடகம் கித்திரைகொள்ளும் தமிழர் சமுதா யத்தைத் தட்டி எழுப்புகின்றது. தமிழ்பேசும் மக்கள் ஒவ் வொருவரும் கட்டாயமாகப் பார்க்கவேண்டிய ஒரு அருமை யான காடகம் துரோகிகள் !" Awasawu சுதந்திரன், 30-9-56.
" .கருத்தைத் தொட்டு, தமிழினத்தை விழிப்படையச் செய்யும் குத்தலும் கிண்டலும் நாடகத்தின் ஒவ்வொரு கட்
டத்திலும் கிரமபக் காணப்பட்டன. இந்நாடகத்தில் பெரும் பாலும எல்லாருமே தங்கள் தங்கள், பாகங்களே கன் ருக 5டித்தார்கள்." - சுதந்திரன், 4-11-56.
". . . . . . பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை எழுதிய இந்த மாட கத்தை, க ட ங் த வாரத்துச் சனிக்கிழமையன அறு பார்த்த பொழுது, தலைசிறந்த தமிழ் அரசியல் நாடகப் பிரம்மா ஒரு வர் நம்மிடையில் இருக்கின்ருரென்று சந்தோஷப்படமுடிக் தது. துரோகிகள் போற்றத்தக்க, வரவேற்கத்தக்க காட கம். இந்த நாடகத்தின் தயாரிப்பில் கலாநிதி சு. வித்தியா னந்தனின் அனுபவ முத்திரை பதிந்த கைவண்ணம் ஆங் காங்கே மிளிர்ந்தது. அவசியமான ஒரு சமயத்தில், மிக அவ சியமான கருத்துக்களையும், யோசனைகளையும் வெளியிடும் ஒரு அத்தியாவசியமான நாடகம் இது.” -வீரகேசரி, 4-11-56.
*. ஈழத் தமிழகத்தின் இன்றைய நிலையைச் சித்திரிக் கும் "துரோகிகள் ? என்னும் நாடகம் மேற்று முன் தினம் மாலை கண்டி திருத்துவக் கல்லூரி மண்டபததில் நடைபெற்றது. அவ்வப் பாத்திரங்களுக்கேற்ற நடிக நடிகைகள் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் தங்க ள் பாத்திரத்தை உணர்ச்சியுடன் நடித்துள்ளனர். இக்காடகம் ஒரு நல்ல முயற்சி. தமிழ் பேசும் மக்களிடம் ஒரு எழுச்சியை உண் டாக்குகின்றது என்று கூறவேண்டும். தற்போதைய சூழ் நிலையில் இக்நாடகத்தை எழுதிய பேராசிரியர் க. கணபதிப் பிள்ளை அவர்களுக்கும், தயாரித்து நடத்திய கலாநிதி சு. வித் தியானந்தன் அவர்களுக்கும் தமிழ் மக்கள் கடமைப்பட்டவர் களாவார்கள்." - தினகரன், 16-10-56,
15
101

Page 53
வராதது போலவந்த மாமணியைத் தோற்றேமே !
லோறன்ஸ் சுகுர்ணராசன் குணரத்தினம் பிறப்பு: 19-2-1937 இறப்பு: 1-11-56 எழில்பொருந்து முகையொன்று சிறிதுகாலம் எங்களுக்குள் நடுவிருந்தே யின்பம்கல்கி பொழுதினுக்கு முன்பதனே மலர்ந்துகின்று
புதுமையாய் மகரந்தம் பொலிந்துவீசி அமுதரற்றி உரியவர்கள் கதறிவீழ
அழகுசெறி மலரதுவும் கூம்பிற்றங்தோ அழுதழுது ஆவதென்ன ஒன்றுமில்லை
அன்பினையாம் நினைவுக்காச் சமர்ப்பிப்போமே.
- ஆசிரியர்
 

996 !!
oso-Tuoj — ), 19 o sp u do 15 „

Page 54
கருத்து வேற்றுமை உருவாகிறது.
 

குளிர்ச்சியும் கொதிப்பு
நண்பர்களே கலகம்
'856) so,

Page 55
o, O S s
 
 
 

பிள்ளைப் பாசமும் கொள்கைப் பற்றும்
இருட்டறையில் இரகசியத் திட்டம்

Page 56
*鲁鲁鲁鲁鲁•••• șlagoređuns每硕崛m@取
 

qıłoņss函爵)...............

Page 57

பாரதிக்குப் பின்.
ஆற்றல் மிக்க இலக்கிய நூலாசிரியன் ஒரு வன் தோன்றி அவன் காலத்தினின்றும் வேறுபட் டுப் புதுமை இலக்கியம் செய்ய அவனைப் பின்பற்றி அவன் காலத்து மற்றைய கவிஞர்களும் அவன் பின்வந்தோரும் இலக்கியம் செய்தல் இலக்கிய வரலாற்றுண்மை. பெரும் புலவன் வழிகாட்டிச் செல்ல, மற்றையோர் அவனை ப் பின்பற்றியும், அவன் ஆரம்பித்ததை வளர்த்தும், புதுமுறைகள் பேணியும் புது மரபு வளர்த்தும் நிற்றல் காணலாம்.
பாரதி ஒரு சகாப்தத்தின் கவிஞன், பெருங் கவிஞன். தமிழ் இலக்கியத்தில் புதுமை புகுத்திப் புது வழிகாட்டிய கவிஞன். அவன் வளர்க்காத, புது மெருகுதராத, துறைகள் தமிழ்-இலக்கியத் திலேயே இல்லை எனலாம். காலத்தின் கண்ணுடி யாகவும், அதன் கதியைத் திசைகாட்டிய கால மானியாகவும் திகழ்ந்த அவனை வைத்துக்கொண்டே அவன் பரம்பரையினரின் இலக்கிய முயற்சிகள் ஒவ்வொரு துறைதுறையாக எடை போடப்படு கின்றன. இளங்கதிரைப் பொறுத்தமட்டில் இது
புதிய முயற்சி; துணிந் து இறங்கியுள்ளோம்.
தோல்வியென்றலும் வெற்றியே. புதுத்துறையில்
ஆராய்ச்சியொன்றை ஆரம்பித்த பெருமையுண் டல்லவா ?
- ஆசிரியர்
16
103

Page 58
^பாரதிக்குப் பின். 8 a AMN AWAMWAM MAMS. AMMs MAMMMMMMa MaMa
தேசியக் கவிதைகள்
அமுக்கப்பட்ட ஒரு சமுதாயம் தனது மொழியை, தனது கலாச்சாரத்தை, தனது உரிமைகளேப் பாதுகாக்கும் முகமாக நடத்தும் ஒரு சீவமரணப் போராட்டத்தின் இகயத் துடிப்பும் அதன் அங்கலாய்பபுக்களுமே தேசியக் கவிதைகளாக உருப பெறுகின்றன எனறு குறிப்பிடலாம. தேசியக் கவிதைகள் எக்காலத்தில் உருப்பெறுகின்றனவோ அக்காலத்தின் தேவை கள் நிறைவேறியதும் மேற்படி கவிதைகளுக்குரிய மதிப்பும் குறைந்துவிடுகின்றதென்பது ஓரளவு உண்மையே. அயினும் ஆபத்துக் கா லத் தி ல் தமது உயிரைத் தியாகஞ்செய்து நாட்டினைக் காப்பாற்றும் போர்வீரர்களுக்கு எவ்வளவு மதிப பினைக் கொடுக்கமுடியுமோ, அவ்வளவு மதிப்பினேத் தேசியக கவிதைகளுக்கும கொடுக்கலாம்.
பாரதியின் காலக்தொடங்கி இன்றுவரை வளர்ந்துவக் துள்ள தேசியக் கவிதைகளை மூன் அறு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை, இந்திய தேசியக் காங்கிரசின் ஐக்கிய இந்தியக் கொள்கைகளைப் பிரதிபலிக்கும் விடுதலைக் கவிதை கள், தமிழியக்கக் கவிதைகள், பா கி த் தா ன பிரிவினைக் கொள்கை வேரூன்றியபின்பு ஏற்பட்ட திராவிட நாட்டுப் பிரி வினையை வற்புறுத்தும கவிதைகள் என்பன.
பாரதி தொடங்கிவிட்ட தேசியக் கவிதைகள் காங்கிர சின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் கவிதைகளாகவே அமைக் திTை. ஆரம்பகாலத்துக் காங்கிரசுக்காரர்கள் "குடியேற்ற நாட்டு உரிமைபெற்று ஆங்கிலேயருடன கூடிவாழலாம’ என றனர் எனவேதான் வேல்சு இளவரசருக்கு வரவேற்புப் பாடக்கூடிய அளவிற்குத் தேசிகவிநாயகம்பிள்ளை போன்றேரின் ஆரம்ப லக் கவிதைகள் அமைந்திருக்கின்றன. காலஞ் செல்லச் டுசல்ல "பூரண சுதந்திரம்’ என்ற கொள்கை காங்கிரசில் வலுப்பெறத் தொடங்கியது. இதனைப் பின்தொடர்ந்த கவிஞர் களின் தேசிய நோக்கிலும் மாற்றமேற்படத்தொடங்கி "பூரண சுதந்திரம் பெற்ற ஐக்கிய இந்தியா” என்ற பரந்ததொரு கொள்
104.

கையில் கவிதைகள் மலர்ந்தன. காந்தியக் கவிஞர் என்று கூறமபடும் நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை அவர்கள் 'இந்திய தேவியைப் பூசை செய்வோம்- நாம்
இந்திய ரெல்லோரும் ஒன்றேயடி எந்த மதத்திற்கும் எந்தக் குலத்திற்கும் சொந்தமடி அவள் சொந்தமடி" என்றும் 'பாரதநாடு எங்தன் பாட்டன் சொத்து" என்றும் தென்னுடு, வடநாடு என்ற பிரிவினையற்ற பரந்ததொரு தேசி யத்தைக் காணுகிருர். இன்று திராவிடநாட்டுக் குரலெழுப் பும் பாரதிதாசனும் தனது ஆரமபகாலத்தில் தன்னைப் பரந்து கிடக்கும் பாரதநாட்டின் புத்திரனென்று உரிமை பாராட்டிய வாதான மானபதை,
"தேர்நின்ற வீதிச் செயபேரிகை முழங்கப்
போர்நின்ற வீரர்குலம் பூத்தநிலம்-பார்கின்று அடல் வளர்த்துப் பாரதநற் புத்திரன் கான்ஆக உடல்வளர்த்த நாடுஎன் உயிர்” என்று முழங்கியிருப் பது அக்காலத்தில் கவிஞர்கள் எல்லோரும பிரிபடா இந்தி யாவையே தமது தேசிய நோக்கமாகக்கொண்டிருந்தனர் என பதற்கு ஒர் எடுத்துக்காட்டாகும். ஆயினும், அதுவே அவர் களின் நிரந்தர நோக்கமாய் இருந்திருக்கவில்லை. பொது எதிரி யாகிய பிரித்தானியன் வெளியேறியபின்பு பூரண உரிமை பெற்ற தமிழகம் உருவாக்கப்படவேண்டுமென்ற இதய நாதம் ஆங்காங்கு பல கவிதைகளிலே அனு வகிக்கொணடிருந்ததை நுட்பமாகக் கவனிக்கும்போது தெரிந்துகொள்ளலாம. "தமிழ னென்று பெருமையோடு, தலைநிமிர்நது கிலலடா” என்று அழைத்த நாமக்கல்லார் "திருமுடி சூட்டுவோம், தெய்வத் தமிழ் மொழிக்கு” என் அறு அனுபல்லவி பாடுவதும், எழுந்துவரும இளைஞர்களைப் பார்த்து, -
"பண்டிருந்தார் சேர சோழ
பாண்டிமன்னர் நினைவெல்லாம் பாயுதடா உன்னையின்று பார்க்கும்போது நெஞ்சினில் கொண்டகொள்கை அறம்விடாமல்
உயிர்கொடுத்த வீரர்கள் கோடிகோடி தமிழர்வாழ்ந்த கதைகள் வந்து குத்துது
105

Page 59
மண்டலத்தே இணையிலாத
வாழ்வுகண்ட தமிழகம் மகிமைகெட்டு அடிமைபட்டு மதிமயங்கி நிற்பதேன்’ என்று கேட்கும்போது, அவர் கினைவிலே தனியாட்சி செலுத்திய பண்டைத் தமிழக கினேவுகள் வந்து உறுத்துவதைப் பார்க்கிருேம்.
'சங்கமிருந் துல்கினிலே பொங்கிவந்த காலம்
சாய்ந்ததடி, என்னரசும் தோய்ந்ததடி வஞ்சி; செங்குட்டுவன் நெடுஞ்செழியன் திருவளவன் முதலோர்
சேனை கொண்டுன் அரியணையை ஆண்மையுடன் காத் இங்குவரும் அன்னியர்கள் என்னுயிரை மாய்த்தார் (தார்
இன்னுெருத்தி வந்துவிட்டாள் என்னசெய்கு வாளோ கொங்குமலர்க் கண்ணருவி கொட்டுகிறேன் காணுய்
குறியொன்று சொல்லடியே காலக்குற வஞ்சி' என்று கேட்கும் சுத்தானந்த பாரதியின் நினைவலைகளிலே
"எங்கள் செந்தமிழ் நாட்டை நினைக்கையில்
ஏறுது உள்ளத்தில் இன்பக் கனல் வெறி” என்று தமிழக கினேவுகள் நுரையிடுவதும் குறிப்பிடற்பாலன
பின்னர் இந்திய அரசியலிலே சின் னு வின் பாகித் தான் பிரிவினே இயக்கம் வலுப்பெறத்தொடங்கியது. அத் தோடு ஐக்கிய இந்தியா உருவாகமுடியாதென்ற எண்ணமும் படிப்படியாக வளரத்தொடங்கியது
"ஒட்டிவரும் இந்துமுஸ்லீம்
ஒற்றுமையும் உறுதியாமோ? மொட்டத்தலை குடுமியோடு
முடிக்கமுயன் றதுவாமோ?" என்று தேசிய விநாயகம் பிள்ளே மறைமுகமாகக் கேட்பது இதனை நன்கு வெளிப்படுத்துகிறது. சின்னுவின் பிரிவினை இயக்கத்தோடு ராமசாமிப் பெரியாரின் திசாவிட நாட்டுக் கோரிக்கையும் உருப்பெற்று வளர்ந்து வருவதைப் பார்க்கிருேம். இந்த இயக் கத்தில் ஏனைய கவிஞர்கள் ஒதுங்கிக்கொள்ள, பாரதிதாச னின் கவிதைப் பேரிகையில் திராவிட நாட்டு முழக்கம் கட்டு மீறிக் கிளம்புகிறது. வடகாட்டார், தென்னுட்டை நசுக்குகிருர் கள் என்ற உணர்ச்சி அவர் உள்ளத்தை உறுத்தியிருகக வேண்டும். எனவேதான,
t06

என்னருமை மக்களே இன்பத் திராவிடரே இன்னல் வடக்கர்களை எள்ளளவும் நாட்ாதீர். உங்கள், கலையொழுக்கம் மிக்க உயர்ந்தனவாம் பொங்கிவரும் ஆரியத்தின் பொய்க்கதைகள் ஒப்பாதீர் என்று ஆரியத்தைக் கண்டித்துவிட்டு,
"குன்ருத செந்தமிழும் குன்றும் மணியாறும்
தொன்று தொட்டச்ரும் உடைய திராவிடத்தை இன்று விடுதலைச்சீர் எய்துவித்தல் உன்கடனே" என்று கூறக்கூடிய அளவிற்குப் ப்ாரதிதாசனின் தேசிய நோக்கம் மாறுபட்டுக் காணப்படுகிறது. இவரின் கருத்துக் ககளப் பின்தொடர்ந்த கவிஞர்களில் இவர்தம் மாணவனகிய புதுவைச் சிவப்பிரகாசத்தையும், வாணிதாசனேயும குறிப்பிட லாம். ஆனல், இவர்களின் தேசியக் கவிதைகளில் உத்வேகம்" காணப்படவில்லை.
"ஆரியத்தின் கலப்பதனலே
அடங்கியதே தமிழ் புவிமேலே ' என்று ஆரிய எதிர்ப்பிலே பாரதிதாசனைப் பின்தொட்ர்கிற 'வாணிதாசன், தனித் திராவிட நாட்டுக் கோரிக்கைக்கேற்ற சூழ்நிலை அரசி யற் போக்கில் மாறிவிட்டதெனக் கண்ட்தும் திராவிடநாட்டுக் கொள்கையை மாற்றி,
'தமிழர் நாட்டைத் தமிழராளத்
தக்ககாலம் வந்தது தைரியங்கொண் டேவிரைந்து தலைநிமிர்ந்து நில்லடா” என்று தமிழரசை ஆதரிக்கிருர், இவர் பாடிய தேசியக் கவிதைகளை விரல்விட்டு எண்ணிவிட லாம். தேசிய அமுக்கம் வரவாத் தளர்ந்து வருகிறதென்ப தையே இது காட்டுகிறது. । ।
1908-ம் ஆண்டு வ. உ. சிதம்பரனர் சுதேசிக் கப்பல் கொம்பனி கொடங்கிய காலம் முதலாய் உறுக்கியப பொருட் களைப் பகிஸ்கரிக்கும் இயக்கம் இந்தியாவில் வலுப்பெறத் தொடங்கியது. பம்பாயிலே அந்நியர் அணியை ஏற்றிச் செனற "லொறியின் முன் படுத்து பாபுகனு என்பான உயிர்விட்ட தும் நாடெங்கும் கதரியக்க உணர்ச்சி கொழுந்துவிட்டெரிங் எனவே பாரதிக்குப் பின்வந்த கவிஞர்களும் R பாரதி ماتیک قک யைப் பின்பற்றி கதரியக்கத்தை ஆதரித்துக் கவிதைகள் இயற்றதொடங்கினர். ر. . . . . . ، ۰ یا
107

Page 60
"அன்னியர்கள் நூல்கொடுத்து ஆடைகொடுத்து-நம் அங்கத்தை மூடுகின்ற பங்கம்ொழியும் -- கன்னியர்கள் நூற்கப்பல காளைகள்நெய்ய-நர்ம் காத்துக்கொள்வோம் மான்மென்று ஆடுராட்டே' எனற நாமக்கல்லார் கவிதைகள் சாதாரண காடக்க் கொட்ட கைகளில் கூட முழங்கத் தொடங்கின. தேசிகவிகாயகம்பிள்ள்ை, சுத்தானந்த பாரதியார், பாரதிதாசன் முதலியோரும் இக் கத ரியக்கத்தில் முன்னேடிகளாய் அமைந்தனர்.
"குறுக்கு முறிய நெய்த கதராடை -கும்பிக்
கொதிப்பை அடக்கி கெய்த கதராடை மறுத்து நீர் தள்ளாமல் கொள்ளுவீரே-எங்கள் வயிற்றினில் எரிதணியச் செய்குவீரே" என்று தேசிக்விநாயகம்பிள்ளை குரலெழுப்பும் நேரத்தில்,
கூழுக்குப் பஞ்சமில்லை - நல்ல
கோடிக்குப் பஞ்சமில்லை வாழ்வுக்குப் பஞ்சமில்லை - நூற்க
வாருங்கள் குமரிகளா" என்று துறவியான் சுத்தானந்த பாரதியார் குமரிகளை அழைக்க,
*கூட்டமுதம் நானுனக்கு
ராட்டினப் பெண்ணே - அடி கொஞ்சுகிளி நீயெனக்கு - − & ராட்டினப் பெண்ணே என்று இராட்டி னத்தையே தனது காதலியாகக் காணுகிருர் இல்லறக் கவி ஞன் பாரதிதாசன்.
அடுத்ததாகக் கவிஞர்களைக் கவர்ந்தது தமிழியக்கமாகும். இத&னத் தனித் தமிழ் இயக்கம், தமிழிசை இயக்கம், இந்தி எதிர்ப்பு இயக்கம் என அறு மூ ன் அ பெருங் கூறுகளாகப் பிரிக்கலாம்.
தமிழில் கலந்துள்ள வடமொழிச் சொற்களை இயன்றளவு நீக்கவேண்டுமென்பதே தன்த் தமிழ் இயக்கத்தின் நோக்கம்ா கும். மறைமலையடிகளாரால் ஜீரேக்குவிக்கப்பட்ட இந்த இய்க் கத்திலும் ஏனைய கவிஞர்கள் "ஒதுங்கிநிற்க பாரதிதாசன்ே மும்மூரமாக ஈடுபடுகிருtர்
108

"திருடர்கள் ஜாக்கிரதை, இதைத்
திருடருண்டு விழிப்போடிருங்கள் என்ருல் வருந்தீமை என்ன? நியாயஸ்தலத்தை
அறமன்றம் என்னில் வாய்க்காதோ?” என்று கேட்பது இவரின் கருத்துக்களைத் தெளிவாக்குகிறது. இந்தி மொழியே அரசாங்க மொழியாகவேண்டுமென்று காங்கிரசு தீர்மானித்தபோது இந்தியெதிர்ப்புக் கவிதைகள் பிறந்தன. பாரதிதாசன் வெளியாகவும், ஏனைய கவிஞர்கள் மறைமுகமாகவும் இந்தியை எதிர்க்கச் சுத்தானந்த பாரதியார் இந்தியை ஆதரித்துச் சில கவிதைகளே ஆக்கியுள்ளார் என் பது இங்கு குறிப்பிடத்தக்க அது.
அடுத்தபடியாகத் தமிழிசை இயக்கத்தைக் குறிப்பிடி லாம். தெலுங்கு மொழியிலமைந்த தியாகராசர் கீர்த்தண்க ளும் "உபபாச் சங்கீகம்" எனப்படும் வடநாட்டு "ஜனரஞ்சக கீதங்களும் தமிழிசையை அமுக்கக்கூடிய சூழ்கிலே அண்மைக் காலங்களிலே உருவாகிக்கொண்டிருந்தது. இதனைத் தடுக்கும் முகமாக நாமக்கல் கவிஞர், தேசிகவினயகம்பிள்ளே, பாரதி தாசன், சுத்தானந்த பாரதியார், பாபநாசம் சிவன், உடுமலே நாராயணகவி, சுரபி, பெரியசாமிதூரன் முதலி யோர் பல தமிழிசைப் பாடல்களே ஆக்கினர்.
தமிழன் என்ற வகையில் பாரதிதாசனின் தேசியக் கவி தைகள் சில கட்டங்களில் இதயக்குமுறலின் இறுதிக் கட் டத்தையே முட்டிவிடுகிறது. அவருடைய அப்பழுக்கற்ற தேசிய உணர்ச்சியைக் கீழ்வரும் பாடல் கன்கு உணர்த்துகிறது.
"எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனமீன்ற தமிழ்நாடு தனக்கு மென்னல் தினையளவு நீலமேனு மிருக்கு மென்ருற்
செத்தொழியும் நான்ெனக்குத் திருநாளாகும்? தாழ்ந்து கிடக்கும் தமிழினத்தின் நரம்புகளுக்கு முறுக்கேற்ற இத்தகைய உணர்ச்சிக் கவிதைகள் இன்றியமையாதன.
109

Page 61
*Yurvšejů sisir... .MM'MM2
காதல் இலக்கியம் :
ఓంx @· நாராயணசாமி ovovyovy!«Avvvvvvv S
கட்டுக்கிடையாய்க் கிடந்த தமிழ் மொழிக்கு விடுதலை அளித்து, தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே ஒரு புது யுகத்தை உண்டாக்கிச் சென்ருர் அமரகவி பாரதியார். பண்டிதர்க்கே உரியதாய் இருந்த கவிதைச் சொத்தை பாமரர்க்கும் உரிய சாய் ஆக்கிச் சென்ற புதுமைக் கவிஞன் பர்ரதி கமிழ் இலக் கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டுச் சென்ருன் என்றே கூற வேண்டும். அவுன் விதைத்த வித்து இன்று முளைத்துச் செடியாய் மரமாய் வளர்ந்து வருவதற்குக் காரணம் அவன் தொடக்கிவைத்த கவிதா பரம்பரைதான் என்று நாம் துணிந்து கூறலாம். •
பாரதியின் பாடல்களெல்லாம் அவரின் எளிமைக்கும், இனிய எளிய சொல்லாட்சிக்கும், ஆழ்ந்த கற்பன சக்திக் கும் சிறந்த எடுத்துக்காட்டுக்களாம். அவரின் பாடல்களுக் குப் பொருளாக அமைந்தது இருபதாம ஆாற்ருண்டுச் சூழ் நிலையே என்றல் அது மிகையாகாது. இருபதாம் நூற்ருண் டுச் சூழ்நிலையில் பாரதியார் இயற்றிய காதல் கவிதைகளுக் கும், அவருக்குப் பின்வந்த சந்ததியினர் இயற்றிய காதற்சித் திசங்கட்கும் உள்ள ஒற் அறு மை வேற்றுமைகளை எடுத்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
காதலையும் வீரத்தையும் சிறப்பாகப் போற்றிய சங்ககால மரபில் வந்த இருபதாம் ஆாற்ருண்டுப் புலவரான பாரதியின் காதல் பாடல்களில், வேறெந்தக்காலத்துப் பாட்ல்களிலும் காணமுடியாத ஒரு புதுவேகம்-புத்துணர்ச்சி காணப்படுகின் றது. சோதிகளில்லையடி பாப்பா" என்ற அதே கவிஞர் சாதிக் கட்டுப்பாடுகளால் காதலர்கள் இன்னலுறுவதைச் - M. சகித்துக் கொண்டிருப்பாரா! இல்லை! காதலர்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களானலும் சரி, அவர்கள் காதலித்துவிட்டால் கலியாண்ம்பண்ணித்தான் ஆகவேண்டும்! என்னவித கட்டுப் பாடுகளும் அவர்களின் காதலுக்குக் குறுக்கே நிற்கக்கூடாது. ஏன்? காதலின்றேல் சாதல்’ என்று ப்ர்டிய புலவரல்லவா அவர்! " * , "
110

பாரதியின் பரம்பரையில் வந்த பாரதிதாசனும் சாதிமதக் கோட்பாடுகளுக்குள் காதலைக் கட்டிவைக்கமுடியாதென்றும் காதலடைவதும் சாதலிலே என்றும் உள்ளத்துணர்ச்சியுடன் குமுறுகிருரர்.
'காதல் அடைதல் உயிரியற்கை!-அது கட்டில் அகப்படும் தன்மையதோ-அடி சாதல் அடைவதும் காதலிலே’ என்று அவர் கூறும்பொழுது பாரதியின் மனநிலையைத்தான் பிரதி பலிக்கின்றரோ என்று ஐயப்படவேண்டி இருக்கின்றது. பாரதி தாசன் மாத்திரமல்ல அவரைப்போனற அநேக இருபதாம் நூற்ருண்டுக் கவிஞர்கள் பாரதியின் அதே பல்லவியைத் தான் பாடி இருக்கின்றனர். 'காதலென்னும்
அப்பொருள் அடைந்திலாதார் சாதலே மேலாம்-என்றுசாற்றுவான்' என்று பாத்திரம் மூலமாகத் தன் உயரிய கொள்கையை அறிவுறுத் தும் நாமக்கல் கவிஞரும்,
"காதல் கண்டோம் சாதல் இலை.” பாடிய ச. து. சு. யோகியாரும்,
என்று
ஏற்றத்தாழ் வெதுவும் காதற்கில்லை” என்று கூறும் கம்பதாசனும்,
*கண்ணிலே ஒளிகாட்டும் அழகியர் -
காதல் என்றிடில் சாதலுக்கஞ்சிடேன்? என்று முழங்கும் பெ. தூரனும் பாரதியாரின் வாரிசுகள்தான் என் பதை எவரும் மறுக்கவோ அன்றி மறைக்கவோ Փգամ Ցյl சிறந்த ஒரு புலவன் வழிகாட்டிச்செல்ல அவனேப் பின்பற்றிப் பலரும் கவிதை புனையும் செய்தியைத் தமிழ் இலக்கிய வர லாற்றிலே நாம் பரக்கக் காணலாம். இந்த நியதிக்குப் பாரதி யும் அவர் விட்டுச் சென்ற கவிதா பரம்பரையும் விதிவிலக் குகள் அல்ல. எனவேதான் மக்கள் கவிஞன் பாரதி கூறிச் சென்ற காதல் தத்துவங்களேயெல்லாம் அவருக்குப்பின் வந்த பல புலவர்கள் மேலும் விரித்துரைக்கின் முர்கள்.
பாரதி ஒரு புதுக் கவிதா பரம்பரையையே உண்டாக்கிச்
சென்றபோதும் அவரின் வழிவந்த கவிஞர்கள் எல்லோரும்
அவரை முழுக்க முழுக்கப் பின்பற்றித்தான காதல் கவிதை
18
111

Page 62
கள் இயற்றியிருக்கின்றர்கள் என்று நாம் கூறமுடியாது. மொழி நடையிலே பாரதியை எல்லோருமே பின்பற்றித்தான் இருக்கின்றர்கள் என்பதை ஒருவரும் ஆட்சேபிக்கமுடியாது. ஆனல் பொருளைப் பொறுத்தவரையில் பாரதியாருக்குப்பீன் வந்த கவிஞர்கள் சிலர் வேறுபட்டுத்தான் இருக்கின் ருர்சள். எனினும் முழுக்க முழுக்க வேறுபட்டிருக்கிருர்கள் என்று கூறுவதற்கில்லை. w
பாரதியார் போற்றும் காதல் தெய்வீகமானது. உடல் பற்றிற்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்காதது. ஆனல் அவருக்குப் பின்வந்த கவிஞர்கள் பலர் களங்க மற்ற ஆத்மீ கக் காதலைப் போற்றுபவர்களாகக் காணப்படவிலலை. a. * “நின்னேயவன் நோக்கினன், நீயவனை நோக்கி நின்றப்
அன்னதொரு நோக்கினிலே ஆவிகலந்துவிட்டீர்" என்று பாடும் பாரதிக்கும், w
* : ‘. (; ; g T *
*தாமரைபோயச் சந்தனத்தில் புதைந்ததைப் போல்
தமிழ்ச் சுவடிக்கன்னத்தில் இதழ் உணர்வை நேமமுறச் செலுத்தி நறுங்கவிச் சுவைகள் நெடுமூச்சுக் கொண்டமட்டும் உறிஞ்சி நின்று மாமியவள் பால் கறந்துமுடிக்க, இங்கு மருமகனும் இச்சென்று முடித்தான் முத்தம் ” என்று கூறும் பாரதிதாசனுக்கும் எவ்வளவு வித்தியர்ச்ம்வேற்றுமை-காணப்படுகின்றது. பாரதியார் காதல் உணர்ச் சிக்கு இடம் கொடுத்தபோதும் அதற்கு ஒரு ஆெங்வீகத் தன்மையையும் வளித்திருக்கின்றர். ஆனல் "பாரதிதாசனின் காதல் கவிதைகளோ தெளிந்த உடல் இன்பத்தை வெளிப் படுத்தும் கனிந்த உணர்ச்சிச் சித்திரங்கள் !
"புளித்திடும் காய் இன்கனியாய்ப் பொங்கிடல்போல களித்தயிதழ் ஒத்தடத்தால் சுகங் கொடுத்தாளே." என்று பாடும் கம பதாசனும் பாரதியாரைவிடப் பாரதிதாச னைத் தான் அதிகமாகப் பின்பற்றியிருக்கின்றர் என்பது கண் கூடு! . .
"காதலே உயிராம், காசினி உடலம்
உயிர்இலா உடலால் உறுபயன் யாதோ.” என்று முழங்கும் ச. து சு. யோகியார் "காதலின்றேல் சாதல்” என்ற ஒரு உயரிய பண்பை-ஒரு தத்துவக் கொள்கையை
112

r*
எடுத்தாண்ட பாரதி மரபில் வந்தவர். எனவேதான் காத லுக்கும் உயிருக்கும் அவ்வளவு நெருங்கிய உறவை-ஒன்றை ஒன்று விட்டுப்பிரியாத ஒரு ஆத்மீகத் தொடர்பை உண்டு பண்ணி இருக்கின் ருர். இவர்தான் பாரதியின் உண்மையான சீடர்.
இருபதாம் நூற்ருண்டுக் கவிஞர்கள் சிலர் காதல் தத் துவத்தை வருணிக்கும் திறன் போற்றத்தக்கது. ஆழ்ந்த, சிறந்த, கவிதை நயம்மிக்க உவமைகழே எல்லாம எடுத்தாண்டு தாம் எடுத்துக்கொண்ட விஷயத்தைச் சிறப்பாகவும் தெளி வாகவும விளங்கப்படுத்தும் ஆற்றல் பாரதிக்குப்பின் தோன றிய அநேக கவிஞர்க்ளிடையே காணப்படுகிறது. ஆணுல் இதற்கு வித்திட்டு-வழிகாட்டிச் சென்றவர் பாரதியாவர்.
உதாரணமாகப் பாரதியையும் அவரின் வாரிசான பாரதி தாசனையும் பார்ப்போம் :
*தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும் வான மறந்திருக்கும் பயிரும்-இந்த வைய முழுதுமில்லை தோழி ? என்று பாடிச் சென் ருர் பாரதியார். அவரின் திாசனுன பாரதிதாசனும்
"பாடாத தேனீக்கள், உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்ததுண்டோ" என்று பாடுகிருரர். உவமைகளே எடுத்தாளும் விதத்தில்கூட பாரதியின் சந்ததி யினர் அவரைப் பின்பற்றித்தான் இருக்கின்றனர். சிறந்த புலவனைப் பின்பற்றிப் பலர் கவிதை புனேவது இலக்கியம் கண்ட உண்மைதானே ! கவிதையில் புதுமை, கற்பனையில் புதுமை, மொழி நடையில் புதுமை, என ஒரு புதுமை உலகைச்
" சிருஷ்டித்த பாரதி, பாமரருக்காகவும் பாட்டாளி மக்களுக்காக
வும் பாடிக் களத்த பாரதி, பழமை மரபை முற்ருக மீற முடிந்ததா? இல்லை என்றே பதில் கூறவேண்டும்! சங்ககாலம் தொட்டு இன அறுவரை காதல் நிகழ்ச்சிகள் எல்லாம் (மாஞ்)
சோலைகளிலும, ஆற்றங்கரையோரங்களிலும் நிலாமுற்றங்களி
லுமதான் நடந்தன, கடக்கின்றன என நாம் படிக்கின்ருேம்
கேட்கின் ருேம்! பாட்டாளிகளுக்காகப் பரிந்து பாடிய பாரதி
கூட இந்த மரபை மீறமுடியவில்லை. சாலைகளிலே கூடங்க
ளிலே காதல் நிகழ்ச்சிகள் கடப்பதை எல்லாம் பாரதியே
பாடத் தவறிவிட்டான். என் பழமை மரபு புதுமைக் கவி
13

Page 63
ஞனே விட்டுவைத்தால்தானே! ஆனல் பாரதியின் வழித்தோன் நில்களான பாரதிதாசனும், பெ. அாரனும் ஓரளவிற்கு மரபை மீறுகிரு:ர்கள் என்றே சொல்லவேண்டும்.
"கூடத்திலே மனப்பாடத்திலே-விழி
கூடிக் கிடந்திட்ட ஆணழகை ஒடைக்குளிர் மலர் நோக்கினினுல்-அவள் உண்ணத் தலைப்படும் வேளையிலே பாடம் படித்து நிமிர்ந்த விழி-தன்னில் பட்டுத் தெறித்தது மானின்விழி ஆடைதிருத்தி கின்ருள் அவள்தான்-அவன் ஆயிரமேடு திருப்புகின்றன்" என்று பாடும் பாரதிதாசஓ’
ஓர் இள நங்கை
அழகுக்கு அழகுசெய்யும் அழகி மதனனே மயங்கிவிழும் வனப்புடையாள்
சிற்ருேடை ஒன்றில் சேலை துவைத்திருந்தாள்
கட்டழகன் காளை காவலனும் கண்ணுற்ருன் காதலித்தான் எனப் பாடும் பெ. அாரனும் இன்றைய உலகில் காதல் நிகழ்ச்சிகள் மடக்கும் இடங்களே அப்படியே கூசாமல் கூறியி ருக்கின்றனர். இந்த இடத்தில் இவர்கள் குருவைவென்ற சிஷர் களாகிவிடுகிறர்கள்! எனினும் சாலைகளிலும் சாக்கடை ஒரங் களிலும் பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நடக்கின்ற காதல் நிகழ்ச்சிகளேச் சித்திரிக்க மக்களுக்காக மக்கஅளப்பற் றிப் பாடிய இருபதாம் அாற்றண்டுப் புலவர்கள் தவறிவிட் டார்கள் என்றே கூறவேண்டும். சூழ்நிலைக்குத் தகுந்த கவி தைகள் இயற்றிய இ ரு ப தா ம் ஆாற்ருண்டுக் கவிஞர்கள் கோடிக்கணக்கான பாட்டாளி மக்களின் அல்லல்களைப்பற் றிப் பாடியபோதும் அதே மக்கள் தங்கள் துன்பங்களைத் துடைப்பதற்காக, இன்பமாகக் களிக்கும் ஒரு சில இன்ப நேரங்களை-காதல் உலகிலே உல்லாசமாய் உலவித்திரியும் வேளைகளை-கவிதை வடிவில் வடித்துத் தரத் தவறிவிட் Lifesair
பாரதிக்குப்பின் தோன்றிய கவிஞர்கள் பலருள் அவரின் பரம்பரையில் வந்தவர்களெனத் தம்மைப்பற்றிக் கூறித்திரியும்
114

போலிக் கவிஞர்கள்தான் அதிகம் ! பாரதியின் பரம்பரை என்ற பெயரில் அ வரி ன் பெயருக்கே இழுக்கைத் தேடித் தரும் இப்போலிக் கவிஞர்கள் கவிதை புனையாமல் இருப்பதே தமிழுக்கும் சிறப்பாகப் பாரதியின் உண்மையான வழித்தோன் றல்களுக்கும் செய்யக்கூடிய அரும் பெரும் தொண்டாகும். பாரதியைப் பின்பற்றிக் கவிதைபுனேந்த-சிறப்பாகக் காதல் கவிதைகள் புனைந்த-இருபதாம் நூற்ருண்டுப புலவர்களில் மேற்குறிப்பிட்ட சிலரைத் தமிழ் கூறும் கல்லுலகம் என்றுமே மறக்கமுடியாது! பாரதியின் வழித் தோன்றல்களானுலும் இவர்கள் எல்லோரும் பாரதியை எல்லாவிதத்திலும் பின்பற்ற வில்லை. பல இடங்களில் பின்பற்றியும், சில இடங்களில் மாறு பட்டும் கவிதைகள் ஆக்கித் தந்திருக்கும் இக்கவிஞர்கள் தமக்கே உரித்தான உண்மை கடையைக்கொண்டிருக்கின்ற னர் என்பதற்கு இவர்களின் கவிதைகளே சான்று பகர் வனவாம் !
Cup lg. It gil
உன் பாத மலர்களுக்கு ஏற்ற பொன் மனை இங்கேயிருக்கிறது. ஆனல், உன் பாதங் களை இங்கே காணுேம். தீனர், திக்கற்றவர், தாழ்ந்தோரிடையே உன் மலர்த்தாள்கள் தங்கு கின்றன. தீனர், திக்கற்றவர். தாழ்ந்தோரி டையே கங்தை உடுத்தித்திரியும் நின்னடிகளைச் செருக்குடையவர்கள் எ ன் றும் சேரவே (P1-liff'Sle
- தா கூ ர்.
115

Page 64
$~பாரதிக்குப் tai... . M MMO , . ; : ; பெண்மைபற்றிய இலக்கியம் :
ZruAVVMMW MMW MMV "MVW MVMWMMW MMW வி. இ. MM -vM Ms
தமிழ்ச் சமுதாயத்தின் விடுதலைக்குக் கவிதை புனைந்த பாரதி அச்சமுதாயத்தின் ஆணிவேராக அமைந்துள்ள பெண் இனத்தின் விடுதலைக்கும் பாடல் செய்தான். அருள் நெறி வாய்ந்த கவிஞன் சிருஷ்டியின ஒரு பகுதியான மாதர்கூட்டம் மரியாதையிழந்து மிதிபடுவதைப் பார்த்துச் சிப்பான? உரி மையிழந்து, அடிமையாகி, வாடிவதங்கிய/ 'ண்ணினத்தின் உள் ளக்கொதிப்பே பாரதியாகப் பரிணமி.து என்று கூறு வது மிகையாகாது. அன்றைய புரையோடிய சமுதாயத்திலே பாரதி மங்கையர் மனக்குமுறலாம எரிமலையாகவே விளங்கி ஞன். இன்றும் அவன் கவிதைகள் இதற்குச் சான்று பகரு கின்றன. ܫ"
பழைய மூடப் பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடுகளினின் அறு மடந்தையர் விடுதலைபெற்றுய்யவேண்டுமென்று விருமபினன பாரதி. எனவே, கவிஞன் எடுத்துக்காட்டாக ஒரு புதுமைக் தமிழ்ப் பெண்ணைக் கவிதையிற் காட்டியுள்ளான. புதுமைப பெண் சிருஷ்டியில் பாரதி பழமையை வேண்டாமென்று ஒதுக்கவில்லை, புதுமையைப் புகுத்தத் தவறவுமில்லை. புது மைப் பெண்ணைப் பழமையும் புதுமையும் குழைத்துத்தான உருவாக்கினன்.
சேலை கட்டிய மாதரை நம்பினுர் தெருவில் நின்று தவிப் பர்” என்ற வாசகம் சமுதாயத்திலே தலைவிரித்தாடிய நாளிலே தான் பாரதி தோன்றினன். பாரதி பெண்மை எப்படிப்டட் டது என்கிருன் பாருங்கள்.
உயிரைக்காக்கும் உயிரினச் சேர்த்திடும் உயிரினுக்குயிராய் இன்ப மாகிடும், உயிரினுமிந்தப் பெண்மை யினிதடா ஊது கொம்புகள் ஆடுகளிகொண்டே' "பெண்மை என்ற வாசகத்தில் பாரதியின் குதூகலம், எக் களிப்பு எப்படி? எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என்று ஆண்டவனே வேண்டி கின்ற பாரதி, எது தலையாய
16

இன்பம் என்று. பறைசாற்றியுள்ளான் தெரியுமா? பெண்ணின் ப5தான . . . s
உலகத்தீரே. அஃதன்றே இவ்வுலகத் தலைமையின்பம் காதலிஞல் சாகாமல் இருத்தல்கூடும் V கவலையோம் அதஞலோ மரணம் பொய்யாம்? என்று மரணத்தை வெல்லும் மருந்து மாதரிடமுண்டு என்கிருன்.
செண்ணின் பெருமை பேசி அவள் விலங்கு தவிர்க்க எழுந்த காவியம் "பாஞ்சாலிசபதம் ". இவ்வாறெல்லாம் மாதர் சுதந்திரம பாடிய, பாரதி இததுறையிலும் தனக்கு ஒரு ப7 ம பரை ஏற்படுத்தியே செனறிருக்கிருன். பாரதி பரம்பரை யில் வந்துள்ள புலவர்களில் பாரதிதாசன் குறிபபிடத்தக்க வர். இவருடைய “பெண்மை" சிருஷ்டி தனிச் சிறப்புவாய்ந் தது: பாரதியின் 'புதுமைப் பெண்" எவ்வளவு கொதித் த்ெமுந்தபோதிலும் பெண்மை வரம்பை மீறவில்லையோ என லாம். பாரதிதாசன் சிருஷடித்துள்ள பெண்ணே, பெண் ணுக்கு இயல்பாயுள்ள வீரத்திலும் மிஞ்சியே காணப்படுகி ருன். வாள் கையிறகொண்டு கொடு மோசக்காரரை கற்பைக் கெடுக்கவரும் கயவரைச் சங்காரஞ்செய்கிருள்: வெருட்டி ஒட் டு கிருள். இவருடைய கழிழச்சியின் கத்தி’யில் வரும் சுப் பம்மாள் இத்தகைய வீரப்பெண் சித்திரமேயாகும். 'வீரத் தாய்’ என்ற சிருஷ்டியும இத்தகையதே. இந்நூலிலே, அரி வையர் அறிவிலர் அல்லர் வீரம்பொருந்தியவர்' என்பதை
* * रate * -
"அரிவையர் கூட்டமெல்லாம்
፵፵፩ ጣ w T፲፩ ነG፡ ;
அறிவிலாக் கூட்டமென்பார் புரிவ ரோவிஜய ராணிேபுரிந்த 设 ’ இச் செயல்கள் மற்ருேர்’ ’ என்று திட்டவட்ட மாகக் கூறியுள்ளார். இப்படி "ஒரு மறப்பெண் குல்மாகவே, தமிழ் மாதர் மாறவேண்டுமென்பது அவர் விருப்பம்
பாரதிய்ாரைப்போலவே ப்ர்திதாசரும் ஆண் பெண் நிகர் என்கிருர், மர்தர் வியாபார்ம் செய்யலாம்: மோட்டார்வண்டிய ஆகாயவிமானம் ஒட்டலாம் என்று கூறுவதை
ஆணுயர் வென்பதும் பெண் உயர்வென்பதும், ir நீணில்த் தெங்கணும் இல்லை
வாணிகம் செய்யலாம் பெண்க்ள் நல்ல' வானூர்தி ஓட்டலாம் பெண்கள்' என்னுமடிகளிற் Sir 600T6tt,
117

Page 65
பாரதியாசைப்போலவே, இவரும் காதல் மணத்தை ஆத ரிப்பவர். ஆனல் கூறும் முறையில் இவர் உணர்ச்சிமிக்கக் கூடியவராகவே காணப்படுகிருர் மூடத் திருமணத்தைப்பற் றிக் குறிப்பிடுகையில், "மனம்பொருந்தா மணம் மண்ணுய்ப் போக, சமூகச்சட்டமே, சமூக வழக்கமே, நீங்கள் மக்கள் அனை வரும் ஏங்காதிருக்க மண்ணுய்ப்போகவே” என்று சமூகத்து டன் வெகுண்டெழுகின்ருர், காதல் மணத்தில் முட்டுக்கட்டை யாய் நிற்பவரைச் சினப்பர்.
"காதலிருவர் கருத்தொரு மித்தபின்
வாதுகள் வம்புகள் ஏன் சூதுகிறை உலகமே 1 துட்ட இருட்டறையே
கண்ணும் ஒளியும் பூவும் மணமும்போல ஆண்களும் பெண்களும் ஒன்றுசேர்ந்து குளிர்ந்த கடலேயொத்த அன்பி ஞல் சமானத்தராகித் தமிழ்நாட்டில் வாழ்ந்த நாளிலேதான் தமது இலட்சியம் நிறைவேறுமென்கிருரர். பாரதியார் பெண் னின் பெருமைபேசப் பழைய இந்தியாவைப்பார் என் ருர், பாரதிதாசர் புதிய ஆங்கில நாட்டைப்பார் " என்பவர்போல அறிஞர் பெர்னட்சோ"வின் பொன்மொழிகளைத் தமிழாக்கி யுள்ளார். ( , ,
*உவந்தொருவன் வாழ்க்கை சரியாய் நடத்த உதவுபவள் பெரும்பாலும் மனைவி ஆவாள் அவளாலே மணவாளன் ஒழுங்கு பெற்ரூன் அவளாலே மணவாளன் சுத்திபெற்றன்.” "ஆண் பெண் என்ற இரண்டுருளையால்
நடக்கும் இன்ப வாழ்க்கை” என்ற அடிகளிற் கவிஞர் கருத்துக்கள் தெளிவாகின்றன.
பாரதியாரைப்போலவே, பாரதி தாசனும் 'பெண் கல்வி" பற்றி மிக அழகாகப் பாடியுள்ளார். "படித்த பெண்" "படி யாத பெண்”களால் விளையும் நன்மை தீமைகளை "குடும்ப விளக்கு" "இருண்ட வீடு” எனற நூல்களில் எடுத்துக்காட்டு களுடன் விளக்கியுள்ளார். இவ் இரு நூல்களும் பெண்களைப் பற்றிய புதிய ஆக்கங்கள் என்றே கூறலாம். படித்த பெண் தான் குடும்ப விளக்கு, படியாத பெண் இருண்ட வீடு. நல்ல படித்த குடும்பம் ஒரு பல்கலைக் கழகமெனக் கருதுபவர் பாரதி தாசர். "இருண்ட வீட்டில்" வரும் பின்வரும் அடிகள் கவனிக் கத்தக்கன.
118

*எந்ாநலமும் ஈந்திடுங் கல்வி இல்லாவீட்டை
இருண் டவீ டென்க, படிப்பிலார் நிறைந்த குடித்தனம் நரம்பின் துடிப்பிலார் நிறைந்த சுடுகாடென்க, அறிவே கல்வியாம் அறிவிலாக் குடும்பம் நெறி காணுது கின்றப டிவிழும், சொத் தெலாம் விற்றும் கற்ற கல்வியால் விளைவன மேன்மை! இன்பம்!" பாரதிதாசர் கைமமை, குழந்தைமணம் முதலியவற்றின் கொடுமைகளை உணர்ச்சி ததும்பக் கவிதையில் காட்டியுள் ளார் பாருங்கள், அழகும் இளமையுள்ள பெண் மறுமணம் இல்லா ஒழுங்கினல், கைம்மைத் துயரால் வருந்துகிருள், சணவன் அவள் மூப்படையுமுன் இறந்துவிட்டான். என் செய்வது, அவள் கிலேயெப்படியிருக்கிறது,
*கோரிக் கையற்றுக் கிடக்கு தண்ணே
இங் குவேரிற் பழுத்தபலா - மிகக் கொடிய தென்றெண்ணிடப் பட்டதண்ணே குளிர் வடிகின்ற வட்டநிலா? "சீரற்றிருக் குதையோ குளிர் தென்றல்
சிறந்திடும் பூஞ்சோலை - சீ சீ! என்றிகழப் பட்ட தண்ணே நறுஞ்சீ தளப் பூமாலை" இவ்வாறு இயற்கையில் ஏற்றிச் சொல்லுக் திறன் எவ்வ ளவு நயமாயிருக்கிறது. கணவன் இறந்த துயரம் ஒருபுறம் போக, கைம்மை என்ற புதிய பாரத்தைப் பெண்ணின் மேல் சுமத்துவது பாரதிதாசருக்குப் பொறுக்கமுடியாமலிருக்கிறது. பெண் இழந்த ஆண் பிறிதொரு பெண்ணைத் தேடலாம். ஏன், ஆணை இழந்த பெண் வேருெரு மணவாளன நாடக் கூடாது என்று கேட்கிருர்,
காதல் சுரக்கின்ற நெஞ்சத்தில் கைமையைத் தூக்காதீர்" என்று அறிவுரை கூறுகிருர், கணவனை இழந்த கங்கையின் உள்ளத்தை ஆடவர் அறி வதில்லையென்றும், அம மங்கை நெஞ்சில் 'கைமை’ என்ற வேலாற்குத்தி வருத்தப்படுத்துவதாகவும் கூறிக் கவலையுறு கிருர், மேலும் தமிழ்மொழி சிறக்கவேண்டுமாயின் "கைமை”
19
119

Page 66
என்ற சொல் வழக்கினின்று நீங்கி அகராதியினின்றுமே நீக்கிப் படவேண்டுமரம்.
"பைங்தமிழைச் சீராக்க கைமை
யெனுஞ் சொல் நீங்க? என்பது அவர் வாசகம். சுருங்கச் சொன்னுல் கைமைத் துயர் பாடவே பாரதிதாசன பிறந்தார் எனலாம். பெண்ணுக்கொரு நீதி பேசும் புல்லரைக் கண்டித்துள்ளார். !
பெண் குழந்தை பிறந்தவுடன் பெருமூச்சுவிடுபவரல்லர் கவிஞர். உவகை குதூகலம்கொள்ளுபவர் அவர் தால'டுப் பாடல்கள் சில பார்க்கலாம்.
'வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம் பெண்மையினுல் உண்டென்று பேசவந்த பெண்ணழ கே" "நாய் என்று பெண்ணை நவில்வார்க்கு
இப்புவித்தாய் என்றுகாட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே’ "மின்னல் ஒளியே, விலையாய ரத்தினமே கன்னல் பிழிந்து கலந்த கணிச்சாறே" பாரதியார் கண்ணன் பாட்டில் கண்ணனேக் "கண்ணம்மா? என்று சிறு குழந்தையாகச் சிறப்புடன் பாடியுள்ளார். ஆனல் அப்பாடலில் தெய்வச்சாயல் உள்ளது. பாரதிதாசர் குழந் தைத் தாலாட்டுப் பாடல் அப்படிப்பட்டதன் அறு. . ;
பாரதியாரைப்போலவே, இவரும் பெண்ணடிமையுற்றமை மால்தான் நாடு பிறருக்கு அடிமையுற்றதென்கிருரர். "சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ என்ற நூலில் "பெண்ணடிமை தீரு மட்டும் பேசுக் திருநாட்டு மண்ணடிமை தீர்தல் முயற் கொம்பே' என்கிருர், w
கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளையின் பெண் உரிமைப் பாடல்களில் பாரதியின் செல்வாக்கு இருக்கின்றபொழுதிலும அதில் ஒரு தனிச் சிறப்பும் தனிப் பண்பும் விளங்குகின்றன. கவிமணி,
மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவஞ் செய்திட வேண்டுமம்மமா ?? என்று தொடங்குகிருர். பெண்ணுய்ப் பிறப்பதற்கே, பெ ரு ங் த வ ஞ் செய்யவேண்டு மென்று இவர்போல வேருெருவரும் சொல்லவில்லை. இந்தக் கருத்தை ஆதரிப்பனபோலவே இதற்குப பின்வரும் பாடல் கள் அமைந்துள்ளன. அவைளுட் சில.
120

'அல்லும்பகலும் உழைப்பவரார் - உள்ளத்து
அன்பு ததும்பி எழுபவரார்? கல்லுங் கனியக் கசிந்துருகித் தெய்வ கற்பனை வேண்டித் தொழுபவர் யார்!’
"அன்பினுக்காக வேவாழ்பவ ரார்-அன்பின்
ஆவியும் போக்கத் துணிபவ ரார்! இன்ப உரைகள் தருபவரார்-வீட்டை இன்னகையா லொளி செய்பவரார்" என் றிவ்வாறெல்லாம பெண்கள் பெருமைகளை எடுத்துக்கூறி அவர்கள் வசட்டத்திற்கு வருந்துகிருரர். 'மங்கைய ராகப் பிறந்ததஞல்
மனம் வாடித் தளர்ந்து வருந்துவதேன்? தங்குபுவியில் வளர்ந்திடும் கற்பகத் தருவாய் நிற்பதும் நீர் அலவோ? என்பது அவர் பரிந்துரைகளாகும. பெண்களே விரும்பிய கொடுக்கும் கற்பக தரு என அற குறிப்பிட்டுள்ளமை கவனித்தற்குரியது.
நாமக்கல் கவிஞர் “பெண்மை’ சிருஷ்டி வேருெருவகை யில் அமைந்துள்ளது. அவர் காந்தீயவாதியல்லவா? எனவே அவர் பாரதி வழியில்வந்தபோதும், அவர் "பெண்மையில்’ காந்திய மணம் கமழுகிறது. "அவனும் அவளும்’ என்ற நூலில் வரும் *கமலம்', காமக்கலது தனிச் சிருஷ்டியாகும். அவள் உரிமையுள்ள, உரிமைகிகுப் போராடும் பெண்ணுகவே விளங்குகிருள். "வாழ்வின் கண்களிலொன்றைக் குத்திக்கரித் திடச்செய்தார்” என்று பெண்ணுரிமை கேட்கிருள். மேலும் தேசத்தின் நாசத்திற்குக் காரணம் பெண்கள் உரிமையிழந்து உறுமணல் தேரைபோல இருப்பதுதான் என்கிருள். பெண் கள் ஆண்களோடு கூச்சமின்றிப் பழகவேண்டும. ஆனல் அப்படிப் பழகுவதில் ஒருவராவது, தமது கற்பையிழக்கக் கூடாது. காதல் மணம் வளரவேண்டும்; காதல் கருத்தொரு மித்தவராக விளங்கவேண்டும். கணவன் மனைவியல்லாதவரி நெருங்கிப் பழகுமபோது அவர்களுக்கிடையில் தப்பெண்ணம் அணுவளவும் நிலவக்கூடாது. நட்பு நிலவவேண்டும் என்பதே கவிஞர் ஆசை. கசந்தீய வழியும் இதுவேயாகும்.
அருள்நெறிச் சுத்தானந்தர் பாரதியின் பாதையில் வந்த வர்தான் என்ருலும் சிலவிடங்களில் சிறப்புக் கருத்துக்களேப் புகுத்தியுள்ளார். "பெண்மையில்" "பெண்’ என்ருல் என்ன?
21

Page 67
"பத்துமாதஞ் சுமந்தே பாலூட்டிப் பொன் மடியில்"
வைத் தும்மைச் சீராட்டும்
வான் கருணை பெண்ணன்ருே?" என்று பாரதி கருத் தைத் தழுவியே சொல்லுகிருரர். மேலும்,
"வீட்டிற் கரசியும் பெண்ணன்றே - வீரன்
விளைந்த கற்பகம் பெண்ணன்றே A ', நாட்டிற் சரிபங்கு பெண்ணன்ருே-பொ, நலவலக்கரம் பெண்ணன் ருே” என்/ பெண்ணின் பெருமைகளே எடுத்து ஒதியுள்ளார். பாரதி டாலவே ஆண் பெண் நிகர் என்கிருர், பெண்கள் கல்வி கற்கவேண்டும: கற்றபின் மனத்திற்குகந்த மணுளனே மணஞ்செய்யவேண்டும. கைமை ஒழியவேண்டும் என்று விரும்புவர் சுத்தானந்தர்.
"படிப்பெமக்கு வேண்டாம் பாமரராய்ப் பொங்கும் அடுப்பங்கரைப் புகைக்கே ஆளாய் மடிவதோ'
"கற்பது பெண்ணுக்குக் கற்பென்போம்”
"பெண்கள் தலை நிமிர்ந்தோம்
பேதை மைகளைக் களைந்தோம் கற்றுக் கலைவளர்ப்போம் பின்பே காதல் மணம் புரிவோம் கைம் பெண்மை யில்லையினி மூல காக்குங் கொடுமையில்லை" என்ற அடிகளில் கவிஞரது கருத்துக்கள் தெளிவாகினறன. பெண்களுக்குக் கல்வியே கற்பென்பது ஒரு புதிய கருத்தேயாகும். மேலும்
"காதல் வளர்வது பெண்ணுலே கதை வளர்வது பெண்ணுலே ஆதாரமான மனையறம் பூத்து அன்பு கணிவதும் பெண்ணுலே? என் அறு பெண் தத் துவ விளக்கம் கொடுத்துள்ளார்.
கம்பதாசன் * பெண்ணுரிமைப் பாடல்கள் ? மற்றெரு வகையில் அமைந்துள்ளன. பாரதி கருத்துக்கள் வந்தபொழு ஒலும் அவைகளிற் தனி அம்சங்கள் சில வந்துள்ளன. பெண் உரிமை மறுப்போர் காவைத் துண்டாக்குபவர்போலச் சிறு
122

கிருன் கம்பதா சன். " பெண்ணுக் குரிமை இல்லையென்று
பேசிடும் நாவைத் துணிப்போம்"
என்று கொதிக்கிருண். கண்ணுக்கு ஒளி இயற்கையாக இருப் பதுபோலப் பெண்ணுக்கு இயற்கையாக உரிமைகள் உள் ளன. ஏன் மறுக்கவேண்டும் எ ன் கி ரு ர். ஆண் பெண் தொடர்பை விளக்கும் விதத்தைப்பாருங்கள்.
"நல்ல வீணையது ஆண்களென்ருல் சுவை
நாதந்தரும் விரல் பெண்களென்போம்
தில்லையிலாடிய தேவ தேவன்
பெண்ணைச் சேர்த்துடன் கொண்டதைச்
சிந்தித் தீரோ ?? என்று பாரதிபோலவே கூறுகிருன். ஆனல் கூறுமவிதம மிகவும் வேகமாயுள்ளது. இரவும் பக லும் ஒன்றுசேர்ந்துதான் நாளாகும். பூமியில் ஆண் பெண் சேர்க்கையால்தான் சுகம் நிலவுகிறது. உச்சிக் கிளையில் கின்று கொண்டு தன்னைத் தாங்குவதும், தான் மேலே ஏறத் துணை புரிந்ததுமான அடிமாத்தை வெட்டுவதுபோல, ஆடவரும் தம்மை ஈன்ற தம்மை ஆதரிக்கும் மங்கையர் கூட்டத்திற்குப் பொல்லாங்கும் செயது, வெட்டுவோனும் மரமும் அழிவது போல, ஆண் பெண் என்ற இருபகுதியும் தீங்கையனுபவிக் கின்றன என்று புதியமுறையில் மாதர்க்காகப் பரிந்துரைக் கிருர் கம்பதாசர்.
பாரதி பரம்பரையில்வந்த இனனுெரு கவிஞர் ச. து. யோகி யார். இவரது “பெண்" சிருஷ்டி ஆாதனமானது. ஆடவரசல் கிறையிழந்து, நெறியிழந்து பின்னர் பிழையுணர்ந்து மனக் திரும்பி விளங்கிய பெண்களைப்பற்றிப் பாடியுள்ளார்."அகல்யா? "மேரி மக்தலீன” பாடல்கள் இத்தகைய புதிய ஆக்கங்களா கும். பலாத்காரமாகக் கற்பழிக்கவந்த இந்திரனைப பார்த்து அகலிகை கூறுகிருள்.
a
"கற்புக்கனல் நான் காமச்சிறு புழுநீ
அற்பம்நீ என்பால் அன்புரைக்கவந்தாயோ?” ஆனல் கயவன் சூழ்ச்சியினல் அவள் கற்பிழக்கிருள். எனவே, ஆடவரே பெண்கள் கற்பழிதற்குக்காரணம் என்கிருர் கவிஞர்.
"பெண் பிழைத்த தில்ல்ை அவள்
பிறன் பிழைக்கப் பிழையுற்ருள்" என்பது அவர் வாக்கு. "மேரி மக்தலீனு" பற்றிய பாடல்களுக்குத் தமிழிலக்
123

Page 68
கியத்தில் தனி இடம் உண்டு. இதற்கு முன்னர் ஒரு தமிழ்ப் புலவராவது மேலே நாட்டிலே கற்புநெறி தவறிப்பின் திருந்திய பெண்மணியைப்பற்றிப் பாடவில்லை. நிறை அழிக் த பெண் ணுக்கும் சமூகத்தில் விமேசனம் உண்டு. அவளை ப்பற்றிக் கவிதை பாடலாடி என்பதே கவிஞர் கருத்து.
இப்படியாகப் பர்ரதிக்குப்பின் பல கவிஞர் "பெண்களே*ப் பற்றிப் பாடியுள்ளனர். இனனும் பல கவிஞரைப்பற்றிக் குறிப் பிடப் போதிய இடம இல்லை. இளங் கவிஞர் பலர் எழுந்து கொண்டிருக்கிருர்கள். இப்பொழுது முக்கியமான ' ஞர் சில ரது கருத்துக்களே குறிப்பிடப்பட்டுள்ளன. தி எனற பெரிய புலவன் பாதையைக் காட்டிவிட்டான். அவன் காட்டிய வழியில் கின அறு இப்புலவர் பெருமக்கள் கவி மழ்ை பொழிந் துள்ளனர்; பொழிகின்றனர் சிலர். பாரதி கூறிய கருத்துக் களேயே திருப்பித் தமது கவிதையில் பொறித்துள்ளனர். சிலர் அவன விட்டனவற்றை விரிவாகப் பாடியுள்ளனர். ஒவ் வொருவரது "பெண்மை”ப் பாடல்களும் ஒவ்வொரு தனிச் சிறப்புடன் விளங்குகின்றன. , ......
மனிதனின் இயல்பு யுகங்தோறும் புதிய புதிய சிருஷ்டிகளால் தன்னுடைய வளர்ச்சியைக் காட்டுவதே மனி தனின் இயல்பாகும். பழைய வழக்கங்கள் என்ற சிறைக் கூண்டில் அவன் சதா உழன்று கொண்டிருக்க முடியாது.
w . . . . . . 4 - தா கூர்,
سسسسسس من مصسم
A
- வா ழ் வு
வாழ்வ்ே ஒரு ரஸ'கதம்பம். பல சரக்கு கள் குழைத்த ஒரு கலவை. வாஸ்தவமும், கற்பனையும், இல் லாத தும் பொல்லாததும் சேர்ந்ததோர் விசித்திரக் கூட்டு.
- தா கூ ர்.
24

”பாரதிக்குப் issir...... 0 ལ་ལ་འཆལ་ཡལ་ཨལ་ལམ་ཨ་ குழந்தை இலக்கியம் !
2" MAMWMMWMVMV MMW MAMW செல்வி செ. சின்னையா
கவிதையுலகில் புரட்சியை உண்டுபண்ணிய பாரதி, குழந்தை இலக்கியம் என் னு ம் புதிய சகாப்தத்தையும் தொடக்கிவைத்தான பாரதியின 'பாப்பா’ பாட்டு குழந்தை இலக்கியத்தின் முதல் படி என்று கூறலாம். குழந்தையுள் ளத்தைக் கவியுள்ளம் எளிதில் புரிந்துகொள்ளும், குழந்தைக் கும், கவிஞனுக்கும் கல்லும், புல்னும் கதைசொல்லும். அவை கள் கூறும கதைகளைக் கவிதையாகக் கவிஞன் தீட்டித் தர, குழந்தை அதைப் படி க்து மகிழும். குழந்தைக்குக் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டை முதன்முதல் பாடித் தந்தவன் பாரதி, ! بو!?ع வி &ள யா டு பாப்பா. நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா" என்ற பாரதியின் பாப்பாப் பாடடு, பல குழந்தை களின் மனதைக் கவர்ந்திருககின்றது. பாரதிக்குப் பின்வந்த புலவுர்கள், பாரதி பரம்பரையினர் என்று அழைக்கப்படு வோர் அவன் தொடக்கிவைத்த, குழந்தை இலக்கியத்தை மேலும், மேலும் வளர்த்தனர் என்றே கூறலாம். ? ۔ ۔ ۔
ஆவேசக் கவிகள் பாடும் புரட்சிக்கவி பாரதிதாசனும் குழந்தைகளை மறக்கவில்லை. குழந்தைகளுக்கெனி " எ க்hையோ பாடல்களை இவர் பாடியிருக்கினருர், பெரும்பாலும், புத்திழுதி கள்ே இவரின் குழந்தைப் பாக்களுக்குப் பொருளாய் அ ைபங் துள்ளன. இயற்கையில் குழந்தைகளுக்குள்ள ஈடுபாடுகளைப் பற்றியும இவர் பாடியிருக்கிருச். மழை என்ருல் சிறுவர்களுக் குக் குதூகலம், அவர்களின் குஆாகலத்தைப் புலவர் பாட் டாக வரிக்கின் ருர் :
மழையே. மழையே, வா, வா, வா, நல் வானப்புணலே வா, வா, வா, ... தகரப் பந்தல் தண, தண வென்னத் தாழும் குடிசை சள, சள, என்ன நகரப் பெண்கள் செப்புக் குடங்கள் நன்றெங்குந் தங்கும் பயனென்ன (மழையே.) அடுத்தபடியாக வரும் க வி மணி தேசிக விநாயகம் பிள்ளே, குழந்தை இலக்கியத்தை அதிகம் வளர்த்தனர் என்றே கூற
125

Page 69
லாம், கவிமணியவர்களின் குழந்தையுள்ளம், அவர் கவிகளுக் குக் குழந்தைத் தன்மையை அளித்திருக்கின்றது. எந்தப் பொருள்பற்றி அவர் பாடினும், அவரின் நடை குழந்தை இலக் கியத்துக்கேற்ற, எளிய, இனிய, நடையாகவே அமைந்திருக் கின்றது. "மலரும் மாலையும் ' என்ற நூலில் உள்ள பாக்கள் செந்தமிழ்நாட்டுச் சிறுவர், சிறுமியருக்கிந்தவை என்று கவி மணியவர்களே கூறியதிலிருந்து, அவர் பாக்களின் தன்மை யையும் நோக்கையும் அறியலாம். இந்நூலில், " த்ரியமாக மழல் மொழி என்ற தல்ப்பில் சேர்க்கப்பட்ட பு" குழந்தைகளுக்கென, அவர்கள் பாடிக் களிப்பத்.
/ ா யாவும் கன இயற்
(Dulut a 606.1.
கவிமண்ணியவர்களின் பாக்களில், ஆறும், மலையும், கோழி யும், குருவியும், பூனையும், எலியும் கதைக்கின்றன. குழந்தை யின் கற்பஞ்சக்தியைத் தூண்டவல்லன இப்பாடல்கள். மேலும், கவிமணியவர்கள், ஆங்கிலத்திலுள்ள அரிய கவிகளை யெல்லாம், குழந்தைக் கவிகளாக ஆக்கித் தந்திருக்கின் ருர், குழ்ந்தையின் கற்பனேக் கண்ணுக்கு, சடப்பொருள்களும் உயி ருள்ளனபோல்த் தோன்றுவது இயற்கை. ஆற்றைப் பாடப் புகுந்த புலவர், அதன் வரலாற்றை, அது கூறுவதாகவே கூறுகின் ருர், − கல்லும், மலையும் குதித்துவந்தேன்-பெரும் காடும், செடியும் கடந்து வந்தேன்; எல்லை விரிந்த சமவெளி-எங்கும்நான் இறங்கித் தவழ்ந்து, தவழ்ந்து வந்தேன். கிளியைக் கண்டவுடன், குழந்தைக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. அதைப்பிடித்து வைத்திருக்கவேண்டுமென்ற ஆவல் எழுகின் றது. இதைக் கவியுள்ளம் கன்கு அறியும. அது பாட்டாக அமைகிறது:
பச்சைக் கிளியே வா, வா, வா. பாலும் சோறு முண்ண வா கொச்சி மஞ்சள் பூச வா GlsmEhé of8T ur- 6) m ..... புலியைக் கண்டதும் குழந்தைகளுக்குக் கிலிபிடிப்பது இயற்கை. கூட்டிலிருக்கும் புலியைக் கண்டு குழந்தைகள் கொண்ட அச் சமும், வியப்பும், பாட்டாகப் பரிணமிக்கின்றது :
பந்தமெரியு தோடி - கண்களைப்
பார்க்க நடுங்குதடி
126
 

குந்தம் வாளிட்டியெல்லாம் - கூடவே
கொண்டு திரியுதடி, 米 将 来 வாயைப் பிளக்குதடி - கையுறை
வாளும் உருவுதடி பேயைப் படைத்தபின்னுே - இதனையும் பிரமன் படைத்தாண்டி. இன்று, குழந்தைக் கவிஞர் என்று எல்லோராலும் போற் றப்படும் திரு. அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கியத்துக்கு மகத்தான தொண்டு செய்திருக்கின் ருர், குழந்தைகளுக்கென இவர் இயற்றிய பாக்கள் "மலரும் உள்ளம்’ என்னும நூலாக வெளிவந்துள்ளது. இந்த ஆாலே ஓர் சிறந்த குழந்தை இலக் கியமெனத் தேர்ந்தெடுத்து, அதற்குப் பரிசு வழங்கி, குழந் தைக் கவிஞரைக் கெளரவித்திருக்கின்றது இந்திய அரசாங் கம், இதில் குழந்தைகள் பாடி மகிழ்வதறகென அவர்களுக் குப் புரியும் சொற்களால், அன்ருட வாழ்க்கையில் நடக்கும் சம பவங்கள், சந்திக்கும் ஆட்கள், மிருகங்கள், பறவைகள் எல்லாவற்றையும் வைத்துக் கவிகள் பாடியிருக்கின் ருர் கவி ஞர். குழந்தைகளின் வயது, ஆற்றல், இவைகளுக்குத் தகுந்த படி, "மலரும் உள்ளத்திலுள்ள பாக்கள் ஐந்து பிரிவுகளுக் குள் அடக்கப்பட்டுள்ளன. முதலிரண்டு பிரிவுகளில் பாலர் களுக்குரிய சிறுவர் செய்யுள் வரிசைகள் (Nursury Rhimes) அடக்கப்பட்டுள்ளன. உதாரணமாக :
கப்பல் நல்ல கப்பலாம் கடலில் செல்லும் கப்பலாம் அக்கரைக்குச் செல்லவே ஆட்க ளேறும் கப்பலாம்.
வட்ட மான தட்டு
தட்டு நிறைய லட்டு
லட்டு மொத்தம் எட்டு
எடுத்தான் மீதம் கிட்டு,
அடுத்துவரும் பகுதிகளில், உயர் ங் த உண்மைகளே ப்,
பிள்ளையுள்ளத்துக்கேற்பப், படிப்படியாக உணர்த்துகின் ருர் கவி ஞர். அருமையான தமிழ்ச் சொற்களே, எளிமையாக எடுத்தாண் டிருக்கின்றர். பெரியோர்களைப்பற்றியும், அவர்களின் போதனை கரேயும்,ஒழக்கைகளும் இலகுவாக விளங்கும்படி எடுத்துரைக்
127

Page 70
கின்ருர் கவிஞர். முதலில், பாரதியை, குழந்தைகளுக்குக் கவிஞர் அறிமுகம்செய்து வைக்கின் ருர் : "பாப்பா பாட்டைப் பாடித்தந்த
பாரதியாரைப் போற்றிடுவோம் கேட்போம் அவரது வார்த்தைகளை
கேட்டபடியே நடந்திடுவோம். "குன்றெனத் தலைநிமிர்" என்றிடுவார்
கொடிமை தொலைந்திட வேண்டுமென்பார் ஒன்றுபட்டாலே வாழ்வு என்பார்
உலகிலே யாவரும் ஒன்று என்பார். கவிஞர் காட்டுப்பற்றைக் குழந்தைகளுக்கு ஊட்டும் விதமே அலர்தி:
ஒன்று கூடி நாட்டுக் காகத்
தொண்டு செய்வோமே - நாமும் தொண்டு செய் வோமே.
நாளை வாழ்வு தன்னில் நாமே
காட்டை ஆள்பவர் - நமது நாட்டை ஆள் பவர்.
பாரதம் போல் உலகிலேயே
பண்புள்ள பூமி - மிக்கப் பண் புள்ள பூமி வேறு இல்லை என்றே
விளங்க வைப்போமே - என்றும் ...விளங்க வைப் போமே مم குழந்தை சிறியவனுய் இருக்கும்போது, அப்பாவைப் போல் இருக்க அவனுக்கு ஆசை. கவிஞர் இதை நன்ருக அறிவார். அதைப் பாடுகின் ருர்,
அப்பாவைப் போல் பெரியவனுய் ஆனவுடனே நானும்.
மாட்டைக் கொண்டு கலப்பை பூட்டி மண்ணை நன்கு உழுவேனே நாட்டில் உள்ள பஞ்சம்போக
நானும் உதவி செய்வேனே திரு. அழ. வள்ளியப்பாவின் வேடிக்கைப் பாடல் க ள் குழந்தைகளுக்கு மட்டுமன்றி, மற்றவர்களுக்கும் இன்பம் பயப்
128

பன. பிஞ்சு மனத்துக்குகந்த, செஞ்சொற் கவிகள் இயற்றும் திரு. அழ. வள்ளியப்பா, குழந்தை இலக்கியத்தில் ஓர் உன் னத இடம் பெற்றுள்ளார். இவரின் இத்தொண்டு மேலும், மேலும் வளருமென்று தமிழுலகம் எதிர்பார்க்கின்றது.
குழந்தைகளுக்கென்று கவிதைபுனேயும் இன்னுெரு கவி ஞர் பெரியசாமித்துாரணுவர், அவர்களுக்கு உளதத்துவம் தெரியும். ஆகவே குழந்தை உள்ளத்தை நன்கு விளங்கியவர் அவர் என்று கருதலாம். ஆயினும் அவரது கவிதைகள் பலவற்றில் உள்ள கருத்துக்கள் பெரியவர்க்கே அறிந்து, விளங்கத்தக்கனவாக அமைந்துள்ளன. அதனுல் அவர் பாடல் களைக் குழந்தைக் கவி என்று வைத்துப்பார்க்கும் பொழுது அவற்றில் ஒருவித "கனத் தன்மை’ இருக்கக்காணலாம்.
அடுத்தபடியாக, ஈழத்திருகாட்டின் இன்பத் தமிழகத்தி லும், குழந்தைக் கவிகள் இல்லாமலில்லை. தனிப் பாடல்களா கப் பலர் நல்ல பாடல்கள் பாடியுள்ளனர்.
நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பாடிய பாடல்கள் சில குழந்தை உள்ளத்தைப் பிரதிபலிக்கத்தக்க நல்ல JimTL-6bis Gir.
'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே கூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே" என்ற பாடல் அவற்அள் மிகச் சிறந்தது என்அது பலர் கருது வர். குழந்தைகளின் குதூகல உள்ளத்தையும், பண்டிகைப் பெருநாட்களில் அவர்கள் அடையும் மகிழ்ச்சியையும் 9/p காகச் சித்திரித்துவிடுகிருர் புலவர்.
இவர்களேவிடப் பெரியதம்பிப் புலவர், முத்துத்தம்பிப் புலவர், யாழ்ப்பாணன் முதலியோரும் பல குழந்தைக் கவிகள் பாடியுள்ளனர். இவர்கள் எல்லாரும் நல்ல குழந்தைக் கவிகள் பாடியுள்ளனர். இவர்களேவிட இன்னும் பலர் குழச்தைப் பாடல்கள் பாடியுள்ளனர். இவை எல்லாம் நல்ல குழந்தைக் கவிகள் என்று சொல்வதற்கில்லை. ஆயினும் , குப்பையுள் மாணிக்கங்கள்போல சில நல்ல கவிகளும் அவற்றுள் இல்லா மலும் இல்லை.
ஆகவே, பாரதிக்குப்பின் குழந்தை இலக்கியம் வளர்க்கு கொண்டே வந்திருக்கிறது. இனி யும் வளர்ந்துகொண்டே போகும் என்று எண்ண இடமுண்டு.
129

Page 71
şMırrâğsü tadir... Mğ வ ச ன இ லக் கி யம்
േ ♔ ഞ9 സെif (r !, தி ovyovy oveo Avvvvvvv S இருபதாம் ஆாற்ரு?ண்டில் தமிழ்க் கவிதைக்குப் புதுமை யும் புத்துயிரும் கொடுத்த பாரதியார் வசனநடைக்கும புதிய ஒளியும் உயிரோட்டமும் அளித்தார் எனபது இன்று யாவ ராலும் ஒப்புக்கொள்ளப்படுவதொன்றே. அதனுலேயே பார திக்குப் பின்னெழுந்த க விதை க் செல்வங்களைப்போலவே வசனவளத்தையும் அலசியாராய்வது அவசியமானதாகின்றது. இங்கு நான் ஆராயும் " வசன இலக்கியம்? எத்தகை யது என்பதை முதற்கண் தெளிவாக்கு சல்வேண்டும். வசனம் அல்லது உரைநடை தொன்றுதொட்டே தமிழில் வளர்ந்து வந்திருக்கிறது. ஆணுல் கடந்த இரு நூற்ருண்டுக் காலத் திலேதான வசனத்தையொரு கருவியாகக்கொண்டு, உயர்ந்த இலக்கிய வடிவங்களே ஆக்கும் கிலேமை ஏற்பட்டது. இலக் கியப் படைப்பிற்குப் பயன்படும் வசனம் சாதாரண உரை நடையினின் அறும் வேறுபட்டது. இலக்கிய நயஞ் செறிந்த அதாவது செய்யுள் நடையையொத்த " இலக்கிய வசனம்’ பொதுவாகத் தமிழில் வளர்ந்துள்ளது. அவ்வாறன்றி மனித வாழ்வின் அநுபவ உணர்ச்சிகளை, அதன் இனப துன்பங்க ளைக் கூறுவதற்கு வலுவுள்ளதொரு கருவியான ' வசன இலக்கியம்' அருகியே காணப்படுகின்றது.
வசன இலக்கியத்திற்கு காமகொண்ட விளக்கத்தைப் பற் அறுக்கோடாகக்கொண்டு பாரதிக்குப்பின் வளர்ந்த வசன வளத்தைச் சுருக்கமாக ஆராய்வோம.
பாரதியார் எழுதிய "ஞானரதம்’ "சந்திரிகையின் கதை?? "நவதந்திரக் கதைகள் ?? “கதைக் கொத்து’ முதலிய புனை கதைப் பட்ைடப்புக்களும், ‘வசன கவிதை' என்ற பொருந்தாப் பெயரில் உலவும் அழகிய வசனச் சிதறல்களும், சில மொழி பெயர்ப்புக்களும் அவரது முக்கியமான வசன இலக்கிய ஆக் கங்கள். சந்திரிகையின் வருணைோ, சிட்டுக்குருவி வருணனை முதலிய பகுதிகள் பாரதிக்குப்பின் வந்தார் மனதைக் கவர்ந் துள்ளன என்பது அவர்கள் எழுத்துக்களினின்றும் அறிய முடிந்ததாகும். ஞான ரதத்தில் வரும் பர்வத குமாரியின் வரு ணனை எப்படியிருக்கிறது என்அ பாருங்கள்.
30

"சந்திர கலை வீசும் முகம். அதன் மீது சிறியதும் மூன்று விரல் உயரமுடையதுமாய், மலர்களாற் செய்யப்பட்ட ஓர் கீரீ டம். உயிரென்ற வண்டு வீழ்ந்து சிறகிழந்து தள்ளாடும் கள் ளூற்றுக்களாகிய இரண்டு கரிய விழிகள். தின் பதற்கல்லாது, தினனப்படுவதற்கமைந்தன போன்ற பற்கள்.
எனினும் இன்று பார்க்கும்பொழுது பாரதியின் வசனத் தில் சில குறைபாடுகளைக் காணலாம். அவருடைய வடமொழிச் சொல்லாட்சி சிற்சில இடங் களி ல் மணிப்பிரவாளத்தைக் தொட்டுவிடுகிறது. நடையின போக்குப் பல இடங்களில் "கேளுமையா ஜெனமேஜெய மகாராஜனே என்று வைசம்பா யனர் சொல்லத் தொடங்கினர்" என்ற இதிகாச கடையில் அமைந்துள்ளது. ஆயினும், * வசன கவிதை” எனப்படும் வசனக் கருத்தோவியங்கள, ஞானரதம், சந்திரிகையின் கதை ஆகியன பாரதியின் திறமைக்கு என அறும் நின்று சான்று Lust 666 607. V
தற்காலத் தமிழிலக்கியத்தில் நன்கு வளர்ந்துள்ள சிறு கதையிலக்கணத்தின் தந்தையெனத்தக்கவர் விமர்சக மேதை வ வே சு. ஐயர். புதிய இலக்கிய வடிவமான சிறுகதையைத் தமிழில் உருவாக்குமுகத்தால் வசனத்தை வளர்த்தவர் அவர், பிறமொழியினின்று கதைகள் சிலவற்றையும் மொழிபெயரித்த வர் ஐயர். பன்மொழிப் புலவராகத் திகழ்ந்த அவரது நடை யில் பிறமொழிச் சொல்லாட்சியைக் காணலாம். அது அவர் நடைக்கு ஒருவிதமான கம்பீரத்தைக் கொடுத்தது. "மங்கை யர்க்கரசியின் காதல் ? 'குளத்தங்கரை அரசமரம் ? : லைலர் மஜ்னு? முதலிய சிறுகதைகளில் ஐ ய ர து உயிரோட்டம் பொருந்திய வசனநடையைக் காணலாம். &
பத்திரிகையுலகில் பல புது முறைகளைக் கண்ட கல்கி நகைச்சுவை எழுத்தாளராகத் தொடங்கியவர். பழகு தமிழைத் தமது படைப்புக்களுக்குப் பயன்படுத்தினர் அவர். பிற்காலத் தில் சரித்திர நவீனங்கள் முதலியன எழுதியபோதுக் கல்கி யின் நடை எளிமையானதாகவே இருந்தது. தமிழகத்தில் மிகப் பரந்ததொரு வாசகர் கூட்டத்தைப் பெற்றிருந்த s961 ரின் நடையைச் சிறந்த தமிழ் வசனநடை என்பதற்கில்லை.
பாரதி பரம்பரையிலேயே வசன இலக்கியத்தின் மூத்த பிள்ளையாக வந்தவர் புதுமைப்பித்தன். கவிதைகளில் உள்ள தைப்போல வசனத்திலும் தாளலயம் உண்டு, உணர்ச்சி வேகம் உண்டு, ஆற்றல் உண்டு என்ற உண்மையை இலக்
131

Page 72
கியப் படைப்புக்களின் வாயிலாக முதன்முதல் நிலை நிறுத்தி யவர் புதுமைப்பித்தன். மனித மனத்திலெழுந்த உணர்ச்சி களும் கருத்துக்களும் எண்ணிறந்தன. நமது பண்டைய இலக் கண ஆசிரியர்கள் இவற்றைச் சுவைகளாக வகுத்தனர். ஆனல் உணர்ச்சிகளும் கருத்துக்களும் இவ்விலக்கணங்களுள் அடங்கிவிட்டனவெனக் கொள் வ தற் கி ல் லை, நுட்பமான உணர்ச்சி வேறுபாடுகள், கருத்துச் சாயைகள் (Nuances) இவற்றிற்குத் தக்கபடி இக்கால வசனநடை அமைதல்வேண் டும். இத்தகைய ஆற்றல்மிக்க நடையிலே தமது ஒப்புயர் வற்ற இலக்கியங்களைப் படை த் த வர் புதுமைப்பித்தன். அன்று இரவு? “கபாடபுரம்" "சாப விமோசனம்’ ‘நாசகா ரக் கும்பல்" "கவந்தனும் காமனும்" "நினைவுப் பாதை" "துன் பக் கேணி” 'கயிற்றரவு" முதலிய கதைகளில் அவரது கடைச் சிறபபைக் கண்டுகொள்ளலாம். பேச்சுத் தமிழிலும் தாள லயமும் அழகுங்கண்டு அதைத் தமது படைப்புச் சக்தியால் பண்பட்ட வசனமாக்கும் ரசவாதஞ்செய்து வெற்றிபெற்றவர் புதுமைப்பித்தன்.
பாரதிக்கேற்பட்ட பாம்பரையைப்போலப் புதுமைப்பித்த னுக்கு ஏற்பட்ட பரம்பரையில் தலைசிறந்தவர் சிதம்பர ரகுநா தன் பலவகைகளில் இவர் குருவைமிஞ்சிய சீடர் எனலாம். புதுமைநோக்கும் விக்தையான கற்பனையும் படைத்த புது மைப்பித்தன் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தமது கடைக்குப் போதிய கவனஞ்செலுத்தினர் என்று கூறமுடியாது. ரகுநா தனே எப்பொழுதும் கடைக்குப் போதிய கவனஞ் செலுத்து பவ்ர். மேனுட்டு இலக்கிய விமரிசர்களின் மொழியாற் கூறு வதானுல் ரகுநாதன தனி நடையொன்றுடையவர் (Stylist). ெேவன்றிலன் என்றபோதும்" "ஞானே தயம்" 'ஆனைத்தி? முதலிய சிறுகதைகளிலும் 'கன்னிகா? 'பஞ்சும uguyud." முதலிய நாவல்களிலும் அவரது மோகனமான வசன நடை யைக் காணலாம்.
புதுமைப்பித்தன் பரம்பரையில் புகழ்பெற்ற இன்னுெரு வர் கு. அழகிரிசாமி. * வெந்தழலால் வேகாது? *ராஜா வந்தி ருக்கிருர்’ தவப்பயன்? கிரிக்கவில்லை" முதலிய கதைகளில் இவரது டைச் சிறப்பைக்காணலாம். இங்கு குறிப்பிட்டவர் க&ளத் தவிர வேறு சிலரும் ஆங்காங்கு சில நல்ல வசன இலக்கியங்களைப் படைத்துள்ளனர். பி. எஸ். TiróOdudur, ப. பூரீனிவாசன், அகிலன், தி. ஜானகிராமன் ஆகியோர்
182

காலத்துக்குக் காலம் ஆற்றல்வாய்ந்த வசன நடையைக் கை யாண்டிருக்கின்றனர்.
தற்காலம் வசன இலக்கியத்தின் காலம். எனவே 15மது வசன இலக்கியங்களே ப்பற்றிச் சில குறிப்புகள் கூறுவது பொருத்தமாகின்றது. தற்காலத்தில் வளர்ந்த இலக்கியங்கள் பெருமபாலானவை பத் திரி கை க ளே ப் பற்றுக்கோடாகக் கொண்டுவந்தன என்பது அறிந்ததே. பத்திரிகைகளுடன் தொடர்புபூண்ட இவ்வெழுத்தாளர்கள் அன்ருடத் தேவைக ளுக்காக, அவசரத்திற்காக எழுதிய வசனம் ஒருவகை; அமைதி கிடைத்த சமயங்களில் தமது சொந்த மன நிறைவிற்காக எழுதிய வசனம் பிறிதொருவகை; கூர்ந்து கவனியாதுவிடின் இரண்டினுக்கும் வேறுபாடு காண்பது கடினம்.
மேனுடு இலக்கிய விமரிசகர்கள் வசனநடையைப் பல வாருகவும் ஆராய்ந்து தரம்பிரித்துப் பெயரிட்டுள்ளனர். பத் திரிகைக்காரர் சாதாரணமாக எழுதும் நடையை "பத்திரிகை நடை' (Journalese) என அழைப்பர். பாரதியும் அவருக்குப் பின்வந்த ஒவ்வொருவரும் இத்தகைய 'பத்திரிகை கடையி லும் இலக்கியம் படைத்திருக்கின்றனர். ஆனல் அவையாவும் எவ்விதத் தரக்குறைவுங் காணப்படாது உண்மையில் உயர்ந்த நடை இலக்கியங்களுடன் கலந்து கின்று உலவுகின்றன. இங் நிலைமை நமது சுவைக்குறைவையும் கலையுணர்வின்மையையும் தெளிவர்கக் காட்டுகின்றது என்பதைத் தவிர வேறு என்ன கூறமுடியும் ? ر
* மறுமலர்ச்சி" எழுத்தாளர் கிலேமை இவ்வாறிருக்க, படித்த பேராசிரியர்கள் பண்டிதர்கள் குழாத்திடையிருந்தும் ஒரு சில வசன இலக்கிய கர்த்தாக்கள் தோன்றினர். பேராசிரி யர்கள் அ. சீனிவாசகராகவன், க. கணபதிப்பிள்ளை, மு. வர தராசன் ஆகியோர் நாடகம், சிறுகதை, நாவல் முதலிய துறை களில் உழைத்திருக்கின்றனர். இம் மூவருடைய எழுத்துக்க ளில் மேனுட்டு இலக்கியச் சாயல்களே ஆங்காங்கு காணலாம்" எனினும் தமக்கமைந்த ஆழ்ந்த தமிழிலக்கிய அறிவாலும் பயிற்சியாலும் தம்மைக் கவர்ந்த மேனுட்டுக் கருத்துக்களேத் தமிழ் மரபிற்குள் இழுத்து மடக்கும் ஆற்றல் வாய்ந்திருக் கின்றனர்.
இதுவே பாரதிக்குப்பின் வளர்ந்த வசன இலக்கியத்தின் சுருக்கமான வரலாறு ஆகும்.
1.33

Page 73
BHARATT STITUDO
н Best Photographers for all CCCasion
大 கல்யாணப் படங்கள், குடும் பப் படங்கள் மற்றும் எல்லாவிதமான போட்டோ த் தேவைகளுக்கும் சிறந்த படம் பிடிப்பவர்கள்.
* என்லார்ஜ்மெண்டுகள், சினிமா சிலை டுகள் பிளாக்குகள் தயாரிப்பவர்கள்.
* புகைப்படக் கரு விகள், காட்சிப்
படங்கள் விற்பனையாளர்கள்.
நீங்கள் LIL Ub பிடித்துக் கொள்ளத் தேவைப்படும்போது மறவாதீர்கள்.
பாரத் ஸ்ரூடியோ
படம் பிடிப்பவர்கள்
O 82-1, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.

கண்ணன் கபே பிராமணுள் ஹோட்டல் பம்பலப்பிட்டி சைவ உணவுக்கு பெயர்பெற்ற இடம் சூடான பலகாரங்களும் எப்பொழுதும் கிடைக்கும். (விசேஷ ஆடர்கள் கவனிக்கப்படும்.)
அன்பர்களின் வரவே எங்கள் சேவை.
KANNAN (AEPAHMINHOILI.
BAMBALAPTYA FAMOUS FOR:
ÚEzeÉT ÁééÁK KíEÁts Áíúb sűze1/s SPECIAL ORDERS WILL BE TAKEN
AT MODERATE CHARGES.
MISKIN TAILORING MART
GENTS OUT FITTER No 27, GRAND BAZAAR STREET.
JAFFNA. Stylist Cut
Expert Tailoring Up-to-Date Fashions ܫ ܙ Moderate Charges
Prompt Delivery,

Page 74
FOR ALL YOUR REQUIREMENTS
N RADIOS A TEXTILES
y GUNS Etc. Visit,
s9áBásoú áit 'Éírí soirf6f8Ezso 276, MALIN STREET, : : VEYANGODA.
சாதாரண சிறுவர் முதல் பல்கலைக்கழக மாணவர் வரைக்கும் உபயோகிக்கும் நூல்கள் எவை தேவையோ-அவையாவும் கொடுத்து உங்களைத் திருப்திசெய்யும் இடமே
கலைவாணி புத்தக நிலையம் 130, திருக்கோணமலை விதி, : கண் டி.
சகல விதமான y போட்டோக்களுக்கும் ஒருமுறை விஜயம் செய்யுங்கள்
Xஞானம் ஸ்ரூடியோ
17, ஸ்ரான்லி ருேட் - யாழ்ப்பாணம்,
 

BUYING FILMS
DEVELOPING THEM PRINTING YOUR RESULTS ENLARGING YOUR SUCCESSES STUDIO PHOENIX KANDY. HIGHEST SATISFACTION:
உங்கள் கலியாணம் நெருங்கிவிட்டதா?
அ ப் படி யா ன ல்
சிறந்த நகைகள் செய்வதற்குத் தகுந்த இடம்
O பொ. மாணிக்கம்,
103, கொழும்பு வீதி, க ண் டி.

Page 75
O O Mylan Biscuits For All Your Requirements ln High Class Biscuits Consult
GEM, DINNER, BABY, MARIE, Feb. GINGERNUT, COMBINATION, CREAM, BABY RUSK, BREAD AND WEDDING CAKES Etc.
S. P. S. Mylvaganam,
Mylan Bakery, KATUGASTOTA.
மைலன் விஸ்கோத்துகள் உங்கள் தேவைகளுக்கு உயர்தர விஸ்கோத்துகளுக்கு
6წაlpიoიმr பேக்கறியாரை ஆலோசியுங்கள்.
ஜெம், டின்னர், பேபி, மேறி, பெப், ஜிஞ்சர் நற். கொம்பினேசன், கிறீம், பேபி றஸ்க், பாண் 8 கலியான கேக்குகள் முதலியவற்றிற்கு
S. P. S. மைல்வாகனம், மைலன் பேக்கறி, கடுகாஸ்தோட்டை.
 
 

(O)
அறுப த் தி  ையங் த ரம க
ఆ; ఈ లో ఈ &&ు
9.
SA, FUT G H I KOM I U is úd
226, காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம்.

Page 76
இளங்க
DIAL
Gold
. M. E. A.
FOR GUARANTIEE A N . FASHONABL
★
THE BIGGEST MA JEWELLERS II
) PNM. IN K, S,
JAFEN Éranch
154-151, G. Bazaar, R C HY.
158-Big Bazaar. TR C H Y.
இலங்கைப் பல் கலேக்கழகத் தமிழ்ச்
வெளியிட்ட ஆசிரியர்: ' அச்சுப் பதிவு ஆனந்தா
擎。 上

திர்
Cables. JEWELLERS
louse
NS
D BRILLIANTS
E JEWELS.
NUFACTURING N CEYLON.
ROS.
ers :
157-2nd Cross St., COLOMBO,
5, N. S C. Bose Road
ܢܠ
M A D R A S.
சங்கத்திற்காக அச்சிடுவித்து ச. குணரத்தினம், அச்சகம், யாழ்ப்பர்னம்,