கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளங்கதிர் 1957-1958

Page 1
龔
ஆ
©
, !s )- |- *
 

வலுப்பி
汤 இர
-
_、__、二、

Page 2
DIAL, 281 Cables, JEWELLERS
VISIT
GOLD HOUSE
GUARANTEED BRILLIANTS
AND
FASHIONABLE JEWELS
L. K. S. JEWELLERS
(THE BIGGEST MANUFACTURING JEWELLERS IN CEYLON)
JAFFNA.
女
உத்தரவாதமுள்ள வைரங்களுக்கும், அழகிய பவுண் நகைகளுக்கும் திக்கெல்லாம் திலங்கும்
தங்கமாளிகை
30 வருட நற்சேவையில் அமோகப் புகழ் பெற்ற இலங்கையின் மிகப்பெரிய நகை வியாபாரிகள்
எல். கே. எஸ். ஜூவல்லர்ஸ் யாழ்ப்பாண ம
கிளைகள் : கொழும்பு, ಕ್ಲಿಲ್ರಕ್ಕಿ, சென்னை, காயல்பட்டணம்,

SOVEREIGN GOLD JEWA446816, FASHIONABLE TEff LES
RADIOS do R
**twa.
NAGALINGAMS
RENOWNED FOR RELIABILITY
MOST REASONABLE PRICE
WIDEST CHOICE
JEWELLERY DEPT. 97, COLOMBO STREET,
T'Phone 7108
TEXTILE DEPT: 101, COLOMBO STREET,
T'Phone 7246
★
V. K. M. Nagalingam & SONS
KANDY

Page 3
DANAS
Sensational offer of Tennis, Hockey and all
other Outdoor and Indoor Games.
at Most competitive
prices. Special rates to Schools, Colleges and Clubs.
DIANA & CO., LTD.
24, Ward Street, KANDY.
Tel: DIANA Phone: 573
WE ARE STOCKSTS OF
SPARES AND ACCESSORIES FOR ALL MAKES OF,
MOTOR VEHICLES
* Tyres
Batteries * Cycles
M. ISMAYL 8 (OMDANY
KANDY.
Dial: 334.
S. FERNANDO & CO.,
HOUSE OF QUALITY
58, ESPLANADE STREET,
f
KURUNEGALA.
WHENEVER YOU ARE IN KURUNEGALA PLEASE PAY US A VISIT FOR ALL YOUR REQUIREMENTS OF FOREIGN LIQUOR, STORES AND PATENT MEDICINES. SPECIAL PRICES OF NUWARA - ELIYA BEERS AND STOUTS FOR
FUNCTIONS.
S. FERNANDO & CO,
58, ESPLANADE STREET, KURUNEGALA.

Paivas IT Room
PROVIDES : A Homely atmosphere congenial and quiet
Is just the Right place
for Good Lunches, Short Eats, Cool Drinks, Delicious Ices Etc.
Meet your friends A
Paivas T Room
KANDY. PHONE: 565
INSIST ON
PRODUCTS
FLAT SHEETS 4'x4' x 3/16"
4' x 4' x 1/4"
SEMI CORRUGATED SHEETS IN LENGTHIS OR 6, 7, 8, 9 & 10 FEET x 3' 8" WIDE x ." THICK. CORRUGATED SHEETS IN LENGTHS OF 6, 7, 8, 9 & 10 FEET x 3' 6" WIDE x ." THICK. ALSO RIDGES AND RAIN WATER GOODS AVAIL ABLE FROM STOCK.
MASCONS LIMITED
175 ARMOUR STREET,
ELEPHANT BRAND ASBESTOS CEMENT
COLOMBO - 12.

Page 4
SAqSqSLLLSqSALSLASLSALSLSSMSSSLSSLALSLSSLASLLALALALSLALSSSSSSASSASSLALSLSALSSMSSASSASSASSASSqqSLLSLLSASALSLSSqSqLSLSqS
MISKIN TAILORING MART
GENTS OUT-FITTER
NO. 27, GRAND BAZAAR STREET,
JAFFNA.
Stylist Cut
Expert Tailoring
Up - to Date Fashion
Moderate Charges
Prompt Delivery
For All Your Requirements
PLANTATION TOOLS TEA PACKING MATERIALS BUILDING MATERIALS & CEMENT PIPINGS AND FITTINGS SANITARY FIXTURES
Please contact.
STATE SUPPLIES CORPORATION TD.
Phone: 448 KAND) Y GramS: “ESCO”

பேக்கரி
தேநீர்ச்சாலை
மரவியாபாரம்
சகல விதமான
சாப்புச்சாமான்களும் மருந்து வகைகளும்
எம்மிடம் கைவசம்
உண்டு.
“WIGA" (CKD ( 6TšGEST)
ரேடியோ விநியோகஸ்தர்கள்
கே. எம். மூசா. அன் கோ.
நிக்காவரட்டி.

Page 5
Osirah) Glug:- 389 தந்தி:- "ச்ெல்வன்'
வை. த. செல்லையா, அன் கொம்பனி;
34, கச்சேரி றேட், குருணுகல.
-acrease 3ro
நம் காட்டின் மூலதனத்தைக் கொண்டும், 15ம் நாட்டின் கைதேர்ந்த தொழிலாளர்களைக் கொண்டும் பல ஆண்டு களுக்கு முன்னதாகவே யாழ்ப்பாணத்திற் தோன்றி யதும், காரம், குணம், மணம், யாவுமொருங்கே யமைங்த தும், தினசரி ஏழை முதல் பணக்காரர் வரை ஆதரவு பெற்ருேங்கி வருவதுமான எங்கள்
"v. T. s."
அடையாளச் சுறுட்டையே கேட்டு வாங்கி உபயோகியுங்கள். கேட்கும் போது
W. T. S. என்றே கேளுங்கள்.
எங்கும் கிடைக்கும் ! கொடுக்கும் பணத்திற்குப் பெறுமதியானது!
உற்பத்தியாளர் வை. த. செல்லையா அன் கொம்பனி புலோலிச்சுறுட்டுத் தொழிற்சாலை, பருத்தித்துறை,
Gh
s

இலங்கையின் எழில் மிகுந்த நகர் கண்டிக்கு நீங்கள் விஜய்ம் செய்வீர்களேயானல்
உங்களுக்கு அறுசுவை உணவு தேவையல்லவா? அப்படி யானுல் கண்டி வார்ட் வீதியிலிருக்கும் எங்களின் சந்திரவிலாஸ் ஹோட்டலுக்கு விஜயம் செய்து உங்களுக்குத் தேவையான உயர்ந்த உருசிகரமான பதார்த்தங்களையும் சாப்பாடு வகையறக்களையும் எல்லோரும் விரும்பி அருந்தும் எங்களின் இந்தியன் காப்பியை யும் அருந்தி அகமசிழ்வோடு
செல்வீர்களாகவும். சந்திர விலாஸ் ஹோட்டல் நிர் 50. வார்ட் வீதி, Φουστις ,
ھے۔۔۔۔۔۔۔۔۔ع
O கண் ண ன் கபே பிராமணுள் ஹோட்டல் - ப ம் பல ப் பி ட் டி - சைவ உணவுக்கு பெயர் பெற்ற இடம் சூடான பலகாரங்களும் எப்பொழுதும் கிடைக்கும். (விசேஷ ஆடர்கள் கவனிக்கப்படும்) அன்பர்களின் வரவே எங்கள் தேவை. KANNAN CAFE BRAHMIN HOTEL
BAMBALAPITIYA FAMOUS FOR:
Vegetarion Meals and Sweets
AT MODERATE CHARGES.

Page 6
சுதந்திர இலங்கையின் வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகின்றது. எத்தனையோ புதிய புதிய கட்டிடங்கள் கோபுரங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றைக் கட்டுவோர் சிக்கனத்தையும் அதிகப்படியான பலத்தையும் விரும்புகிறர்கள்.
ଐ$;
կի Mն
篆 * ខ្មែj// ★
燃 ֆէն: $ჭiff A II
M'Calls it. AOAR Sz WELDED FABRIC R E INFORCEMENT
உங்களுடைய கட்டிடங்கள் அநேக வருடங்களுக்கு பழுதின்றி இருக்கவேண்டு மென்றல்லவா நீங்கள் விரும்புகிறீர்கள். Jos படியானுல் நீங்கள் செய்யும் ஒவ்வொரு கொங்கிறீட் வேலைக்கும்
“LD G3L mi Lu FT f''' இணைத்த கொங்கிறீட்வலை பாவித்து உங்களுடைய கட்டிடங்களுக்கு நீடித்த ஆய்சு அளியுங்கள் சாமுவேல், சன்ஸ் அன் கோ., லிமிட்டெட், 371, பழைய சோனகத் தெரு, கொழும்பு 12. இ2ள ஸ்தாபனம் : ஆஸ்பத்திரி ருேட், யாழ்ப்பாணம்,
LSLSLSSLSLSSLSLSSLSLSGSLSLSL LSLSLSGGGSGS
 
 

SQUARE BEAUTY
Gift Sets
for
Ladies, Gents ck
Kiddies
SELNG proDUC's LID.
MAIN STREET, COLOMBO.
Me-wax
BUYING FILMS
DEVELOPING THEM
PRINTING YOUR RESULTS ENLARGING YOUR SUCCESSES
STUDIO PHOENIX
KANDY.
Highest Satisfaction

Page 7
ஏ.கே.எஸ். & சன்ஸ்
★
நகைகள், வைரங்களுக்கு நகை மாளிகைக்கு விஜயம் செய்யுங்கள் ஏ. கே. எஸ். & சன்ஸ்
“நகை மாளிகை” :: யாழ்ப்பாணம் స్క్రీఠోసి
Stock Breeding
POULTRY & ANIMALS
For greater Productivity in Stock breeding Feed your Animals on vitamin enriched food stuffs
Available at
MAHENDRA STORES
Specialists in Forage Whole Sale & Retail to FARMS & DARTIES
Please Contact: . . Phone: 7087 MAHENDRA STORES
178, Colombo Street,
KANDY.

வேண்டுமா?
வாருங்கள்! செக்கோசிலேவேக்கியாவிலிருந்து வந்திருக்கின்றன.
கைலேஞ்சிகள் (" eே)ெ ஒற்ருடைகள் (lowells)
மேலும் எல்லாவிதமான ஜவுளித் திணிசுகளும்
கிடைக்கும்.
--- எங்கே தெரியுமா ?
OFÜS STOR
157, Second Cross Street, COLOMBO.
SLLLS
FOR
Roofing Materials
Hardware Estate Supplies Tea Chests Paper
CHETTINAD CORPORATION
------- PRIVATE LIMITED -
KANDY

Page 8
ONLY THE BEST FILMS ARE SCREENED
IN
Who for the past 33 Years have entertained Countless Thousands with the finest films in English, Sinhalese, Tamil and Hind
CEYLON THEATRES LTD
are always desirous of providing their Patrons in all parts of the Island with the latest and best in Screen entertainment, and as they have Provided in the Past, so would they in the future.
For the Latest de Best in Screen Entertainment
always rely on
Ceylon Theatres Ltd

இளங்கதிர்
பேராதனைப்
பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம்
பத்தாவது ஆண்டு மலர்

Page 9

*கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை"

Page 10
* எனப்பல பேசி
இறைஞ்சிடப் படுவதாய் நாட்பட நாட்பட
நாற்றமும் சேறும் பாசியும் புதைஞ்ச
பயன் நீர் இலதாய் நோய்க்களமாகி
அழிகெனும் நோக்கமோ? விதியே! விதியே?
தமிழ்ச் சாதியை என் செயக் கருதி
யிருக்கின்ற யடா?*
'தமிழ்ச்சாதி’ என்னும் கவிதையில் பாரதியார்

பொருளடக்கம்
கனவு நனவாகுமோ -ஆசிரியர்
மனக்கோட்டம், செல்வம் வேண்டாம்
தமிழர் வரலாற்றுப் பரப்பிலே 11 - 24
இரரசராசனும் இராசேந்திரனும் LD 650i) tub '' பல்லவ காவியம் *ஆனந்தன்' நாகரிகம் பரப்பிய தமிழன் * 'வேல் முருகு'
சிறுகதைக் கொத்து 25-43 சிறுவிழி குறுநகை -ஏ. பி. வி. கோமசு சைக்கிள் சவாரி! --மு. தளையசிங்கம் காற்றேடு வந்தவன். -மு. கணேச சுந்தரம் நச்சுக் கோப்பை –Lift G).6ór
கவிதைக் கோவை 44-50 என் ஆசிரியன் 'அமுது' தெய்வமே(ா?)! - க. கணபதிப்பிள்ளை இன்பத்தமிழ் -சி. தில்லைநாதன் வைகறை -பேராசிரியர்: க. கணபதிப்பிள்ளை
இலக்கியச்சோலை 51-94 திருமாலை -மாலன் பன் காரைக்காலம்மையாரும் தமிழிலக்கியமும் -வி. சிவசாமி இலக்கியமும் சமுதாயமும் --கு. நாராயணசாமி
சிலப்பதிகாரமும் சங்க இலக்கியமும்
-ச. தனஞ் செயராசசிங்கம் B. A. (HONS)
பாரதி சபதம்" --கலாநிதி. சு. வித்தியானந்தன் கடலோசை டவி. செல்வநாயகம் M. A.
நவீன கலம்பகம் 95-109 இசைக்கருவி -ஞான சிவசுப்பிரமணியம் ‘நவீனகோவை? -நாதன்
விஞ்ஞானமுறையில் கொள்கைகளின் தோற்றம் - ஆ. வே. தமிழில் வேர்ச் சொற்கள் --கலாநிதி. அ. சதாசிவம் பொன் மொழிகள்
ஈழத் தமிழகத்தில் 111-171 நிலமும் வளமும் -பேராசிரியர்: கா. குலரத்தினம் விடுதலையும் தமிழரும்
-கலாநிதி: ஜெயரத்தினம் வில்சன் சமயமும் கல்வியும் --கலாநிதி: சு. வித்தியானந்தன் விஞ்ஞானமும் அகராதியும்
-பேராசிரியர்: க. கணபதிப்பிள்ளை
இலக்கியமும் சிற்பமும் -** கலைமகிழ்நன்' .
பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழச் சங்கம்
பக்கம்
0
18 22
25 30 36 41
44 46 47 49
5 57 62
67
86
95
99 丑04 O
19 130
1 45 155 172

Page 11
சங்கக் காப்பாளர்
பெருந்தலைவர் - பேராசிரியர் க. கணபதிப் பிள்ளை பெரும் பொருளாளர் - கலாநிதி சு.
தலைவர் - நா. இராசரத்தினம் துணைத் தலைவர் - சு. சிவானந்தன்
செயலாளர் - ஏ. பி. வி. கோமசு
இதழாசிரியர் - ஆ. வேலுப்பிள்ளை
பொருளாளர் - சு. சண்முகபவா
உறுப்பினர் - செல்வி, ஞா. சிவசுப்பிரமணியம்
செல்வி. சு. சபாரத்தினம்
திரு. டி. பாலசிங்கம்.

கனவு நனவாகுமோ?
இலங்கைப் பல்கலைக் கழகத்திலுள்ள எமது தமிழ்ச் சங்கத்திற்கு இப்பொழுது வயது முப்பத்திரண்டாகிறது. பல்கலைக்கழகம் பல்கலைக்கழகக் கல்லூரியாயிருந்தபோதே அக்காலத்திற் பேராசிரியராயிருந்த திரு. செ. சுந்தரலிங்கம் போன்ருேர் முயற்சியால் எங்கள் சங்கம் தோற்றுவிக்கப் பட்டது. தமிழ்ச் சங்கத்திற்கு இருபத்திரண்டு வயதாகும் போது “இளங்கதிர்' தோன்றியது. இப்பொழுது இளங்கதி ருக்குப் பத்து வயது. அரசாங்க அரிசிப்பங்கீட்டுப் புத்தகக் கொள்கைப்படி, பத்து வயதெய்திய இளங் கதிர் "சாதாரண" மனிதனுகி விட்டான்.
இந்தப் பத்தாண்டுக்காலத்தில், வெளிவந்துள்ள 'இளங் கதிர்" இதழ்களைப் புரட்டிப்பார்க்க எண்ணினுேம். 'பாலன் பஞ்சம் பத்து வயது' என்று நம் நாட்டிற் பழமொழி யொன்றுண்டு. குழந்தையின் அருமைக் காலம் பத்து வயது வரையுமே என்பது பழமொழியின் பொருள். பத்தாண்டுக் காலத்தைத் தாண்டும் கட்டத்தில் நிற்கும் நா ம் நமது வளர்ச்சிப்படிகளை, பின்னேக்கிப்பார்ப்பது இயல்பே.
"நமது சங்கம் தமிழ்மொழியையும் தமிழர் நாகரிகம் பண்பாடு ஆகிய இவற்றை வளர்ப்பதற்காகவும், எம்மோடு தொடர்புடைய ஏனைய பண்பாடுகளைக் கற்றறிந்து கொள்ளு வதற்காகவும் நிறுவப்பட்டது." 1 சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்களின் மரபில் வந்ததினலோ என்னவோ, நமது தமிழ்ச் சங்கத்தினரும் அன்று தொட்டுத் "தமிழ்’ ‘தமிழ்" என்று துடித்திருக்கின்றனர். கடந்த காலத்து இளங்கதிர் இதழ்களேப் புரட்டிப்பார்க்கும் பொழுது இதுவே நம் மனதில் எழும் கருத்தாகும்.
சுருங்கக் கூறின், 'தமிழை எப்படி வளர்ப்பது?’, 'பல் கலைக்கழகம் எவ்வாறு தமிழ்த்தொண்டு புரியலாம்?’ என்னும் பிரச்சினைகளே வருடாவருடம் இளங்கதிர் ஆசிரியர்களின் பேணுவிற்கு வேலை கொடுத்துள்ளன எனத்தோற்றுகிறது.
l இளங்கதிர் மலர் 1 இதழ்! 1948-49.

Page 12
"ஆங்கிலம், ஆரியம், இலத்தீன், கிரேக்கு முதலிய மொழி களைத் தமிழ் வாலிபர் விருப்பத்திற்கேற்றவாறு பயின் று அவற்றிற் காணப்படும் அரும்பயனுள்ளவற்றைத் தமிழாக்க வேண்டும். பொருளாதாரம், சரித்திரம் மேலைத்தேசத்துப் பூத, பெளதிக, யந்திர சாத்திரங்கள் முதலியவற்றைக் கற்றுத் தமிழிலாக்கி அறிவைப் பரப்பல்வேண்டும், புதுப்புதுக் கருத் துக்களை உணர்த்தப் புதுப்புதுச் சொற்கள் மொழியிற் புகுத் தல் வேண்டும்.அவர்களே தமிழாராய்ச்சியிலிறங்கி, ஆராய்ச்சி செய்தல் வேண்டும். இவற்றிற்குப் பல்கலைக்கழகத் தமிழ் இலாகா தக்கவசதிகள் அளித்து ஆர்வம் ஊட்டவேண் ®ùb”” 2
தமிழாராய்ச்சியின் அவசியம் இளங்கதிர் ஆசிரியர்களால் வேண்டிய அளவு உணரப்பட்டுள்ளது. இளங்கதிர் இதழ்கள் பல. தமிழாராய்ச்சியின் அவசியத்தை எடுத்துக் கூறுகின்றன. "சென்னைப் பல்கலைக்கழகத்திற்போல இங்கும் தமிழ் ஆராய்ச் சிக்கென ஒரு பிரிவு ஏற்படுத்திப் பழங்காலத் தமிழர் சரித் திரம், தமிழ் இலக்கிய வரலாறு போன்றவைகளைப் பற்றி ஆராய்ச்சி ஏன் நடத்தக் கூடாது?
பண்டைக் காலத்துத் தமிழ் மன்னர் நிறுவிய புலவர் கூடும் அவையொன்று இக்காலத்திலும் அமைக்கலாமென் முல், அதற்கு ஆதரவளிக்கக் கூடிய வள்ளலை எங்கே தேட (Մ)ւգ պւb? ..... e o is so a இந்த நிலையில் ஒரு சடையப்ப வள்ளலோ, சீதக் காதியோ தோன்றுவது சாத்தியமல்ல. எனவே, அர சாங்க உதவிபெற்று இயங்கும் பல்கலைக்கழகம் ஒரு வள்ள லாக அமையமுடியும்.
பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சிப் பிரிவு வெகு விரைவில் தோன்றுவது இன்றியமையாதது; வேண்டற் பாலது. 3
தமிழாராய்ச்சி தமிழிலக்கிய ஆராய்ச்சியாக மாத்திரம்
இருந்தால் போதாது. தமிழ்ப்பின்னணியுடன் பல துறை களிலும் நடைபெறுவதே தமிழாராய்ச்சி, உயர் கலைகளைத்
2 இளங்கதிர் மலர் 3 இதழ்! 19 50-5 Ꮮ. 3 இளங்கதிர் மலர் 5 இதழ்! I 952・53。

தமிழிற் பயிற்றத் தமிழில் நூல்களில்லையே என்பர் ஒரு சார் அறிஞர். அவர்களுக்குப் பதில் கூறுகிறது, அடுத்த இளங் கதிர் இதழ்.
"தமிழ் மூலம் கல்வி கற்பிப்பதற்கு ஏற்ற நூல்கள் இல்லை யென்பார் எவ்வளவு காலத்திற்குத்தான் இந்த 'இல்லை" இருந்து கொண்டுவருமோ? தமிழிற் கல்வி கற் பிக்க ஏற்ற நூல்கள் எப்படி உண்டாவது? நாங்கள் முயற்சி செய்வதா அல்லது தமிழ்மொழி இந்நூல்களே ஆக்கித் தரட்டும். என்று கூறுவதா?
“இன்றைக்கு எத்தனையோ தமிழ்ப்பாவலரும் நாவலரும், இளம் எழுத்தாளர்களும் தம் ஆற்றலக் காட்ட முடியாது இருக்கிருர்கள். சிலர் தாங்கள் எழுதிய பாக்களையும் நூல் களையும் வெளியிட முடியாது ஆதரவற்றவர்களாக இருக்கின் றனா.
"இலக்கியத் துறையோடமையாது ஏனைய பலதுறை களிலும் ஆராய்ச்சி நடத்துவதற்குப் பல்கலைக்கழகங்கள் முயற்சி செய்தல் வேண்டும். ஆராய்ச்சித் துறைகளில், ஆர்வ மும் திறனும் உள்ளவர்களுக்கு உபகாரச் சம்பளம் முதலி யன கொடுத்து. .
"பல்கலைக்கழகங்களிலுள்ள தமிழாராய்ச்சிக் கழகங்கள் விஞ்ஞானமுறைப்படி ஆராய்ச்சிகள் நடத்தி, அவற்றின் உண்மைக் கருத்துக்களைப் பலமொழிகளிலும் வெளிப்படுத்த வேண்டும்." 4
மேஞட்டு முறைகளில் தமிழராய்ச்சி நடைபெறவேண் டிய அவசியததை இளங்கதிர் அப்பொழுதே உணர்ந்து விட்டான். தமிழ் கற்பதெனில், சுவையுள்ள தமிழ்ச் செய் யுட்களை மனனஞ்செய்து, பண்டைக்காலத்திற்குரிய இலக் கணச் சூத்திரங்களை ஒப்புவிப்பது, செய்யுட்களுக்கு விநோத முறையில் உரை கூறுவது போன்றவற்றுடன் மாத்திரம் நின்று விடக்கூடாது. ஆராய்ச்சிகளுக்கு இன்றியமையாத
4 இளங்கதிர் மலர் 6 இதழ் 1953-54,

Page 13
பரந்த கல்விபெறப் பல்கலைக்கழகத்தில் வசதிகள் பலவுண்டு. ஆராய்ச்சியின்றி, தமிழின் உண்மையான தொன்மையையும் பெருமைகளையும் அறிய முடியாது. தமிழின் பெருமையாக, வரலாற்றுக் கெட்டாத, நம்ப முடியாத, கட்டுக்கதைகளை நாம் கூறிக்கொண்டு வருவோமானல், அறிஞருலகமும் வெளி யுலகமும் நம்மைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கும்.
தமிழ் ஆராய்ச்சியை வற்புறுத்தி வந்த இளங்கதிரின் போக்கில், நம்நாட்டுச் சூழ்நிலை பெரியதோர் மாற் றத்தை ஏற்படுத் தி வி ட் ட து. தே சீ ய ம் எ ன் று கூறப்படும் பெரும்பான்மை இன உணர்ச்சி, அரசியலிலும் பொது வாழ்விலும் புகுந்து, இன்று நாட்டில் புரட்சிகரமான மாறுதல்கள் நடைபெறுகின்றன. மக்களாட்சி பெரும்பான் மையினர் ஆட்சியென்பதற்கு இன்று விநோத வியாக்கியானங் கள் கொடுக்கப்படுகின்றன. சிறுபான்மையினரான தமிழர் போன்ருே ரைப் பொறுத்தவரை, அவர்களது அரசியல், பொ ருளாதார நிலைமை நிலையற்றதாய்க் காணப்படுகிறது. பெரும் பான்மையினர் மொழி மாத்திரம், அரசியல் மொழியானது போதாது, பல்கலைக்கழகப் போதனமொழியாகவும் வேண்டும் என்னுங் கூக்குரல்கள் கேட்கின்றன. மக்கள் தொகை விகிதப் படி இனவாரியாக, பல்கலைக்கழக மாணவர் தொகை வகுக்கப் படவேண்டும் என்று சிலர் கோருகின்றனர். இந்நிலையில் தமி 49ர்களுக்குத் தனிப் பல்கலைக் கழகம் வேண்டும் எ ன் னு ம் கோரிக்கை சிலரால் தோற்று விக் க ப் பட்ட து. தமி ழர்களின் தேவைகளுக்கு ஒரு தனிப் பல்கலைக் கழகம் வேண் டும் என்று தொடங்கப்பெற்ற இயக்கம் இன்று மக்களின் இயக்கமாக மாறி வருகிறது. தமிழ்ப்பல்கலைக் கழகமே, "சரித்திர நூல் குறைந்த யாழ்ப்பாணத்தின் வரலாற்றினை ஆராய்ச்சியின் படி எழுதி" 5 தொண்டாற்றக் கூடும்
தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அவசியத்தைச் சென்றவருட ஆசிரியரும் வற்புறுத்தியுள்ளார். 6 நாம் எல்லோரும் இந் நாட்டு மன்னராக மாறிவிட்ட இக்காலத்தில், நம்மொழியை யும் கலாசாரத்தையும் பேண, நாம் ஒரு பல்கலைக்கழகம்
5 இளங்கதிர் மலர் 7 இதழ் 1: 1954-55 6 இளங்கதிர் மலர் 9, இதழ்1. 1956-57
8

கேட்பது தவரு காது. தகுதியும் ஆர்வமுமுடைய தமிழ் மாண வர் பலர், தற்போதிருக்கும் ஒரே பல்கலைக்கழகத்தில் புக முடியவில்லை. ஆயிரக் கணக்கான தமிழ் மாணவர்கள் தங்கள் உயர்தரக் கல்விக்காகப் பிறநாடுகளுக்குச் செல்ல வேண்டி யிருக்கிறது. அரசாங்கம் பல்கலைக்கழகத்தில் சுய மொழி மூலம் கல்வி கற்பிக்கத் திட்டமிட்டிருக்கிறது. ஒரே பல்கலைக் கழகத்தில், பல சுயமொழி மூலம் கல்வி கற்பிக்க இயலாது. இத்திட்டம் நடைமுறையில் பல தொந்தரவுகளுக்கு இட மளிக்கும். மேலும் இலங்கையளவு மக்கள் எண்ணிக்கையுள்ள அவுத்திரேலியா போன்ற நாடுகளில் எத்தனையோ பல்கலைக் கழகங்களுண்டு. தமிழ்மொழி வளருவதற்கும் தமிழ்க்கலா சாரச் சூழ்நிலை எவ்வளவோ உதவி செய்யும். வேண்டிய வசதி கள் யாவும் நிறைந்த ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழ் வளர்ச்சிக்கு எண்ணரிய தொண்டுகள் செய்யலாம். ஆகவே தமிழர்களுக்குத் தனிப் பல்கலைக்கழகம் வேண்டு மென்பது
எமது கருத்து w
இன்று பல்கலைக் கழகத்தில் தமிழ் ஒரு பாடமாக இருந்து வருகிறது. பல தமிழ் மாணவர் தமிழை ஒரு பாடமாகக் கற்ப தில்லை. தமிழ் பேசும் விரிவுரையாளர் பலருக்குத் தமது பாடங்களைத் தமிழிற் போதிக்கப் போதிய தமிழ் அறிவு இல்லை. ஆகவே பல சாத்திரங்களையுங் கற்றுணர்ந்தார் தங் கள் கருத்துக்களைத் தமிழிலாக்கித் தமிழ்த் தொண்டு புரிய முடியாதவர்களாயிருக்கிருர்கள். தமிழ்மொழியைப் பல்கலைக் கழகத்தில் கட்டாயபாடமாக்கினல், இந்நிலை நீங்குமென்று நம்புகிருேம். விரிவுரையாளர் பலர், தமிழ்த் தொண்டு புரிய விருப்பமிருந்தும், ஓய்வு ஒழிவில்லாத வேலை யிருப்பதால், வாளாவிருக்கின்றர்கள். அவர்களுடைய பல்கலைக்கழக வேலையைக் குறைத்து, அவர்களை உளக்கினல், தமிழுக்கு நல்ல காலம் பிறக்கும் என்பது எமது நம்பிக்கை. விரிவுரையாளர்க ளும் மாணவர்களும் தமிழ்த் தொண்டு செய்ய முன் வரும் போது, பல்கலைக்கழகம், அவர்களுக்குப் பண உதவி போன் றன செய்தால், அதுவும் தமிழ் வளர்ச்சிக் குப் பெருமளவு உதவியாயிருக்குமென்று கருதுகிருேம்.

Page 14
O
மனக்கோட்டம்
தனிப்பட்டவர் வாழ்க்கையிலும் மக்கள் கூட்டு வாழ்க்கையிலும் காணப்படும் பலவகைக் குழப்பங் களுக்குங் காரணம் மனக்கோட்டமே. உயர்ந்த நோக்கத்தோடு உள்ளம், உரை, செயல் - அறிவு, செயல் - விழைவு ஆகியவற்றையும் ஒரு முகப்படுத்தி
வாழ்க்கையை அமைத்துக்கொண்டால், ம ன ம் செம்மையுறும்.
Gast6i6nud? G36n 6oT LT id !
1. ஒருவன் தன் வாழ் நாட்களில் நிறையப்
பணம் சம்பாதிப்பதின் மூலம், நிறைய விரோதி களையும், ஏற்படுத்திக் கொள்கிருன்.
2. செல்வம் முட்டாளுக்கு அழிவைத் தரும்,

தமிழர் வரலாற்றுப் பரப்பிலே.
இந்திய வரலாறு, மிக நீண்ட காலமாக, கங்கை பாயும் சம வெளியிலிருந்தே ஆரம்பித்துக் கற்கப் பட்டு வருகிறது. ஆனல், கிருஷ்ணு, காவேரி, வைகை முதலியவற்றின் படுக்கைகளிலிருந்தே, இந் திய வரலாறு ஆரம்பிக்கப்பட வேண்டும்.
-பேராசிரியர் சுந்தரம்பிள்ளை
பொருள் திரட்டும் வழியமைந்துள்ள இடங்களி லெல்லாம் தமிழர்களைக் காணலாம்; சோம்பேறி களாய், நகத்தில் அழுக்குப் படாமல் வாழ விரும்பும்
அணியணியாகக் காணலாம். இஃதொன்றைக் கரு தின், தமிழர்களைக் கீழைத்தேய கிரேக்கர்கள் அல் லது ஸ்காட்சுகள் என்று கூறலாம் போலும்,
-கால்டுவெல் ஐயர்

Page 15

இராசராசனும் இராசேந்திரனும்
-“LD600fluib"-
ண்டைக் காலத் தமிழகம் முடிவேந்தர் மூவரின் உரிமை. முக்குல மன்னருள். சோழகுலம் ஒன்று. வற்ருத காவிரி, வளம் பெருக்கும் காவிரி, பரந்து பாயும் காவிரி, தமிழகத்திற் பேராறு காவிரி சோழநாட்டை நீர்ப் பாய்ச்சுகிறது; மண்ணெல்லாம் பொன்னக்கி, விளைவெல் லாம் பொன்னக்கி, பொன்னியென்னும் பெயர் கொள்கிறது. வாழ்ந்தாரை மகிழ்வித்து, வந்தாரை வாழ்விக்கும் சோழ வளநாடு சோறுடைத்து என்னும் புகழ் எட்டுத் திசைகளுக் கும் எட்டுகிறது. திரைகடலோடித் திரவியந் தேடிய சோழ மாலுமிகள் இந்து மகாசமுத்திரக் கடற் செலவில் பெற்றி ருந்த அறிவை அராபியர் போற்றிப் புகழ்கிறர்கள். இங்ங் னம் திருமகள் கொலுவீற்றிருந்த சோழநாட்டிற்கே, தமிழன் புகழையும் வீரத்தையும் தரணியெல்லாம் எடுத்துக் காட்டும் சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும்; ஏன் கிடைத்ததென்றே கூறலாம். சோழத் திருநாட்டின் மணி வயிற்றிலே, கிட்டத் தட்ட ஆயிரம் வருடங்களுக்கு முன், முதலாம் இராசராசன் (985-1014 கி. பி.) முதலாம் இராசேந்திரன் (1014-1042) என்றழைக்கப்படும் இரு தனயர் தோன்றினர்.
சங்க காலத்தின் பின், தமிழகத்தை இருள் கெளவிவிட் டது. கலியரசர் களப்பிரர் எங்கிருந்தோ வந்தார். அவர் கொடுத்த அடியிலிருந்து, தமிழகம் மீளப் பல நூற்ருண்டுகள் தேவைப்பட்டது. சங்க காலத்தில் புகழுடன் ஆண்ட சோழ ரைக் காணக்கூடவில்லை. கி. பி. ஆரும் நூற்றண்டுப் பிற்பகு தியில், சோழநாட்டுக் களப்பிரரைப் பல்லவர் வென்று, சோழநாட்டாட்சியைத் தமதாக்கினர். சோழர், பல்லவரின் கீழ் சிற்றரசராக, காவிரிக் கரையின் வடபால் ஆண்டு வந்த னர். கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டின் நடுப்பகுதியில் விசயா லய சோழன், பிற்காலச் சோழப் பெருமன்னர்களின் உயர் வுக்கு அத்திவாரமிடுகிறன், சிற்றரசராயமுத்தரையரைத் தஞ் சையிலிருந்து விரட்டிவிட்டுத் தஞ்சாவூரைத் தன் தலைநக
1

Page 16
ராக்குகிருன். மகன் முதலாம் ஆதித்யன், பல்லவ அபராசி தனக் கொன்று, பல்லவ சாம்ராச்சியத்தைச் சோழநாட்டுட னிணைத்தான். முதலாம் பராந்தகன், பாண்டிய நாட்டைக் கைப்பற்றிப் பாண்டியனை ஒழித்தோடச் செய்தான். இலங் கைக்கும் படையெடுத்து வந்தான். இந்நேரத்தில், சோழ அரசுக் குழந்தையை, இராட்டிர கூடப் பேரரசன் மூன்ரும் கிருஷ்ணன் தூக்கியடித்து விட்டான். குழந்தையின் உயிர் ஊசலாடலாயிற்று. சோழர் கட்டியெழுப்பிய பேரரசு இராட்டிரகூடப் பேரரசின் கீழ் வந்து விட்டது. கிருஷ்ணன் 'தஞ்சையும் கச்சியும் கொண்டவன்’ என்னும் பட்டங் கொண் டான், சோழநாடு திமிறிப் பார்த்தது; கிருஷ்ணனின் பிடியி லிருந்து விடுபட முடியவில்லை. சோழ அரசின் தென்பகுதியி லிருந்த சிற்றரசர் யாவரும் சோழராட்சிக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். சோழப் பேரரசு "பொய்யாய்க் கணவாய்ப் பழங் கதையாய்’ப் போய்விட்டதோ என்று ஐயுறவேண்டியாயிற்று. தமிழ் நாடெங்கும் குழப்ப ம் குடிகொண்டது. அரசியல் வானம் இருண்டிருந்தது. சோழர் பகல் கனவு கண்டவர் போலானர். அவர்கள் கட்டியெழுப்பிய அரசு சிதறி விட்டது. கி. பி. 985 அல்லது சகாப்தம் 907. சோழநாட்டையும் தமிழ் நாட்டையும் சூழ்ந்திருந்த கும் மிருட்டு நீங்க, அரசியல் வானிலே உதயதாரகை தோன்றி யது இந்த ஆண்டிலே. இந்த ஆண்டு தமிழர் வரலாற்றிலே பொன்னெழுத்துக்களாற் பொறிக்கப்பட வேண்டிய ஆண்டு. சோழநாட்டின் பொற்காலந் தொடங்கும் ஆண்டு. எல்லா வற்றிற்கும் காரணமாக இராசராச சோழன் அரசு கட்டி லேறிய ஆண்டு இது.
திருமகள் போலப் பெருநிலச் செல்வியையும் உரிமை பூண்டான் இராசராசனென, அவன் கல்வெட்டுகள் கூறும். “வந்தான், கண்டான், வென்ருன்" என்று யூலியஸ் சீசர் சொன்னமாதிரி, இவனும் கூறத்தக் கவனஞன். படையெடுக்க வேண்டியதுதான் தாமதம். அவன் படை செல்லும் நாடுகளி லிருந்து வெற்றிச் செய்திகள் வந்து குவிந்த வண்ணமாகவே யிருக்கும். சேரரும் பாண்டியரும் சிங்களவரும் சோழர் இராசராசன் கீழ்ப் பெற்றுள்ள வலிமையை உணர்ந்து, கூட்டு அமைத்தனர்.
படை புறப்பட்டது. பாண்டியநாடு கைப்பற்றப்பட் டது. படை ‘காந்தளூர்க் கலமறுத்தருளி, விழிஞத்தையும்
12

தாக்கி முன்னேறியது. சேரநாடு சோழன் காலடியில் வீழ்ந்
252
கடற்படை ஈழத்தை நோக்கியது. அநுராதபுரம் அழிந் தது. வட இலங்கை, புலத்திய நகரைத் தலைநகராகக் கொண்டு சோழர் கைக்கு மாறியது.
படை தற்போதைய மைசூர்ப்பக்கம் திரும்பியது. நுளம்ப பாடி, கங்கை பாடி, தடிகை பாடி சோழப் பேரரசில் சேர்த் துக் கொள்ளப்பட்டன.
இராட்டிர கூடப் பேரரசில், கிருஷ்ணன் இறந்ததைத் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டது. வலிமையற்ற மன்னர் களே ஆட்சிக்கு வந்தனர் அங்கே அரசகுலம் மாறுகிறது. அங்கே, கல்யாணி மேலைச் சாளுக்கியர்களின் ஆட்சியை, ஆகவ மல்ல தைலப்பிரச என்பவன் தொடக்கி வைக்கிருன். புதிய குல மன்னர் தங்களாட்சியை நிறுவச் சில காலம் பிடிக்கும். இத்தருணத்தை உபயோகித்துப் பழைய சோழப் பேரரசின் வடபாலாட்சி புரிந்த இராட்டிர கூடப் பேரரசுக்குரியவர் களைச் சோழர் துரத்தி விடுகின்றனர்.
தென்னிந்திய அரசியல் படம் முற்ற க மாறிவிட்டது. துங்க பத்திரா நதிக் கரையிலிருந்து இலங்கையின் மத்திவரை, சோழப் பேரரசின் ஆட்சிக்குள் வந்து விட்டது.
சோழர் கப்பற்படை சும்மா இருக்குமா? பன்னிராயிரம் தீவுகளை இராசராசன் கைப்பற்றினுனென அவன் கல்வெட் டுக் கூறும். இலக்க தீவு, மாலதீவு என்பவையே அவை யென்று இக்கால ஆராய்ச்சியாளர் கருதுவர்.
இந்திய உப கண்டம் பூகோள ரீதியில், மூன்று தனிப் பெரும் பிரிவுகளையுடையது. இந்து-கங்கைப் பள்ளத்தாக்கு, தட்சணப் பிரதேசம், தென்னிந்தியா என்பவையே. அவை. இராசராசனைப் பொறுத்தவரை, தென்னிந்தியாவில் காரியம் முடிந்து விட்டது. அக்கால நிலையில், விருத்தியடையாத போக்குவரத்துச் சாதனங்களுடன், சோழப் பேரரசின் வட எல்லைக்கு அப்பாலுள்ள தட்சணப் பிரதேசத்தில், சோழப் பேரரசின் தென்கீழ்ப்பகுதியிலுள்ள தஞ்சாவூரிலிருந்து ஆட்சி புரிவது சுலபமல்ல. மேலும் சோழநாடு அதற்கு ஏற்ற அளவு பெரியதோ, வளமுடையதோ அல்ல. தட்சிணப் பிரதேசம் அக்காலத்தில் சாளுக்கியர்களால் ஆளப்பட்டு வந்தது. சாளுக்

Page 17
கியப் பேரரசு நேரடியாக மேலைத் தட்சணத்தையாள, வெங்கியென்னும் கோதாவரிவரை பரந்த தெலுங்கு நாட் டைக் கீழைச் சாளுக்கியர்கள் அவர்கள் கீழ்ச் சிற்றரசரா யிருந்து ஆண்டு வந்தனர். கோதாவரிக்கு வடபாலுள்ள கலிங் கத்தைக் கீழைக் கங்கர்கள் சிற்றரசராக ஆண்டு வந்தனர். வலிமை பொருந்திய மேலைச் சாளுக்கியப் பேரரசு சோழப் பேரரசின் ஜன்ம விரோதி; ஆகவே சோழர் கவனம் கீழைத் தட்சணப் பிரதேசத்திற்குத் திரும்பிற்று. இராசராசன் வெங் கியின் உள்நாட்டுக் கலகத்தில் தலையிட்டு, முதலாம் சக்தி வர் மனைத் தன் கீழ்ச் சிற்றரசனுக்கி, அவன் சகோதரனுசிய விம லா திங்தனுக்குத் தன் மகள் குந்த வையை மணம் முடித்து வைத்தான். சோழப் பேரரசு கோதா விரிக் கரைவரை போவதை, மேலைச் சாளுக்கியர்கனால் சகிக்க முடியவில்லை. அவர்கள் கீழைச் சாளுக்கிய அரசு கட்டிலிற்குத் தங்கள் அபேட்சகர்களை நியமித்து, கி. பி. 1070 வரையில், சோழப் பேரரசு வெங்கியை ஆள்வதைக் குழப்பிக் கொண்டே வந்த னர். சோழர்களும் தங்கள் உரிமையை விட்டுக் கொடாமல், வெங்கி அரச பரம்பரையுடன் தங்களுக்குள்ள தொடர்பை வளர்த்துக் கொண்டே வந்தனர். w
கால வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. இராசராசனும் காலன் வாய்ப்பட்டான். அவனது அபிலாஷைகள் முற்ரு கப் பூர்த்தியாக வில்லை. செல்வம் புரளும் சோழ நாடு, பலம் வாய்ந்ததும் பழக்கப்பட்டதும் எப்பெரும் போர்க்கும் தயா ரானதுமான கடற்படை தரைப்படை, யுவராசனுகக் கடமையாற்றிய தந்தைக்கேற்ற மகன் இராசேந்திரன்இவைகளை விட்டுச் சென்றவனின் முயற்சி பூர்த்தியா காது விடுமா? சிறு சோழ அரசு சோழப் பேரரசாக மாறி விட் டது. அதற்கேற்ற முறையில் ஆட்சியைச் சீர்ப்படுத்தி, வென்ற நாடுகளைச் சோழ மத்திய அரசுடன் இணைக்கும் வேலையை இராசேந்திரன் செய்தான். இலங்கையின் தென் பகுதியிலாண்ட சிங்களவர் வடபகுதியிலிருந்த சோழராட் சிக்குத் தொந்தரவு கொடுத்து வந்தனர். பாண்டிய அரசின் மூடி பாண்டியனல் சிங்கள மன்னனிடம் கொடுக்கப்பட்டு, ஐந்தாம் மிகிந்தனிடமே இப்பொழுது இருந்து வந்தது. இராசேந்திரன் இலங்கைக்குப் படை யெடுத்துச் சென்று, நாடு முழுவதும் கைப்பற்றி, மிகிந்தனிடமிருந்த பாண்டியர்
14

முடியைப் பெற்று, மிகிந்தனைச் சிறைப் பிடித்துச் சோளுட் டுக்கேகினன்
இராசேந்திரனது தரைப் படை அடைந்த வெற்றிகளைப் பற்றித் திருவலாங்காடுத் தகடுகள் விரிவாகக் கூறும். அவ “னது திருமளைத் தூண் கல் வெட்டு அவனுக்குக் கங்கை கொண்ட சோழன் என்ற பட்டம் வந்த வரலாற்றைக் கூறும் இக் கல் வெட்டுகளிலுள்ள மெய்க் கீர்த்திகள், தஞ்சைப் பெருவுடையார் கோவிலிலுள்ள கல் வெட்டுகள் இராசராச “னது வெற்றிகளைக் கூறுவதைப்போல, இராசேந்திரனது வெற்றிகளைக் கூறும். தமிழர் சங்க காலத்திலிருந்தே வட நாட்டில் வெற்றி கொள்வதைப் பற்றிச் சிந்தித்துள்ளனர். பாண்டியனெருவன் பெயர் ஆரியப் படை கடந்த நெடுஞ் செழியன். கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி நாட்டினனம். செங்குட்டுவன் கனக விசயரென்னும் ஆரிய மன்னரை வென்று, அவர் தலையில், இமயத்திற் கல்லெடுத்து வந் தான். சங்க காலத்தில் தமிழ் நாட்டரசுகள் மிகச் சிறியன வாயிருந்தமையாலும் அவற்றின் வட எல்லையில் ஆந்திரரின் சாதவாகனப் பேரரசிருந்தமையாலும் அக் காலத்தில் தமிழ் மன்னர் இத்தகைய காரியங்களைச் செய்திருக்க முடியாது. பிற் காலத் தமிழகத்திலே சோழப் பேரரசு தான் மிகப் 'பெருந் தமிழரசு. ஆகவே, தமிழர் வட நாட்டில் போர் செய்தல் சோழப் பேரரசர் காலத்திலேயே சாத்தியம். இராசராசன் வைத்துவிட்டுச் சென்ற படையும் மகாவீரன் இராசேந்திரனும் இருக்கும் பொழுது அது அதிக சாத்தியம். மேலும் இக் கால வட இந்தியா கலியாணி மேலைச் சாளுக்கிய ரினதும் அராபியரதும் தாக்குதலுக்குள்ளாயிருந்தது தவ மிருந்து கங்கையைத் தருவித்த பகீரதனைப் பார்த்து இரா சேந்திரன் ஏளனஞ் செய்து, தன் படை வலிமையாலே *கங்கை நீரைக் சோணுட்டுக்குக் கொணர்ந்தான் என அவன் ஈகல் வெட்டுக் கூறும். மேலைச் சாளுக்கியருக்கெதிராகப் போரிட வெங்கிக்குச் சென்ற சோழப் பெரும் படையை இராசேந்திரன் வடக்கேயனுப்பினுன். கங்கை நோக்கிச்
போல மன்னனும் எதிர்த்தார்கள் அவர்கள் அணிந்திருந்த முடிகள் சிதறுண்டன. ஆனல் சிலர் உயிருடன் திரும்பி யிருக்கலாம். கங்கைக் கரையை யடைந்த படை கங்கை நீரை மொண்டு அங்கிருந்த பிராமணரில் சிலரையும் அழைத்
S

Page 18
துக் கொண்டு நாடு திரும்பியது. காவிரியின் கரையிலே, சிதம்பரத்தின் அயலிலே, கங்காபுரி அல்லது கங்கைகொண்ட சோழ புரம் சோழப் பேரரசின் தலை நகராகக் கம்பீரமாப் எழுந்து நின்றது. இராசேந்திரன் "கங்கை கொண்ட சோழன்" ஆனன்.
கங்கை கொண்ட சோழன் கடாரங் கொண்ட சோழனன தைப் பார்ப்போம். கிழக்கிந்தியத் தீவுகள், மலாயா தீப கற்பம்-இவைகளைத் தன்னகத்தே கொண்டதாய் விளங்கி யது சைலேந்திரப் பேரரசு, சுவர்ண தீப என்னும் பெயரைப் பெற்றிருந்த இத் தீவுகள் உண்மையிலேயே பொன் கொழிக், கும் பூமிகளாக விளங்கின. சீன, இந்தியா, அரேபியா முத லிய நாடுகளுடன் செய்த வணிகம் சைலேந்திரப் பேரரசரி டம் செல்வத்தைக் கொணர்ந்து குவித்தது. இராசேந்திர சோழன் சீன வணிகத்தைப் பெருக்குவதில் பேரார்வம் கொண்டிருந்தானதலால், சைலேந்திரப் பேரரசு க் கும் சோழப் பேரரசுக்கும் பகையுண்டாகியிருக்கலாம். அன்றி யும் சோழர் கடற்படைக்கும் பரிசோதனை வேண்டு மல் லவா? கடல் கடந்து நாடுகளை வெல்லும் புகழ் இராசேந்திர னுக்கு வேண்டாமா? சோழர் கடற்படை பகையரசின் நாடுகளுக்குப் படை வீரரைக் கொண்டு சென்று சேர்த்தன; போர் நடந்தது; வெற்றி வந்தது. கடாரம் மலாயாத் தீப கற்பத்தில் பெரியதோர் துறைமுகம். அத் துறையில் சோழர் படை யிறங்கிப் பெரு வெற்றி பெற்றது.
இராசராசனும் இராசேந்திரனும் வெறும் போர் வீரர் மட்டுமல்ல, அவர்கள் சைவப் பழங்கள்; தமிழ் அபிமானி கள்; கலாதேவியின் சிஷ்யர்கள். தமிழ் இலக்கிய வரலாற்றி லும் இராசராசன் புகழ் பெறுகிருன். அப்பரும் சுந்தரரும் ஆளுடைய பிள்ளையாரும் சைவமும் தமிழும் வளர்க்க உப யோகித்த தேவாரப் பாமாலைகள் ஒவ்வொரு தலத்திலும் அத்தலத்திற் குரியது மாத்திரம் இருந்து வந்தது. அவற்றை முழுவதும் அறிந்தவர் யாரும் இலர். அவற்றுட் பெரும் பாலான, தில்லையில் ஓரறையில், கறையானுக்கு இரையாகி வந்தன. இராசராசன் நம்பியைக் கொண்டு தேவாரப் பதி கங்களைத் தொகுப்பித்தான். தமிழ்த் தாய் இழந்துகொண்டி ருந்த பேரணி யொன்றைப் பெற்று, அவள் காலடியில் சமர்ப்பித்தான் இராசேந்திரனது தமிழறிவு, அவனுக்குப் பண்டித சோழனென்னும் பெயரைப் பெற்றுத் தந்தது.
16

இவர்களின் பெயர்கள், தமிழ் நாட்டுக் கட்டிடக்கல்ை, சிற்பக்கலை போன்றவற்றின் வரலாற்றிலும், ஒளிவிட்டுப் பிர காசிக்கின்றன. பல்லவர் காலத்திதிருந்து தமிழ் நாட்டில் கற் கட்டிடங்கள் தோன்றலாயின. பல்லவர் காலம் கலை கள் வளர்ந்த காலம். கட்டிடக் கலை, சிற்பக் கலை போன்: றன பல்லவர் காலத்தில் பெருமளவு வளர்ச்சியடைந்தன. இராசராசன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோவில் இந்தியாவிலேயே மிகப் பெரியதும் மிக உயர்வானதுமாகும். தென்னிந்தியக் கட்டிடக் கலை, சிற்பக்கலை என்பன அடைந்த மிகச் சிறந்த விருத்தி இங்கே காணப்படுகிறது. கங்கா புரி யில் இராசேந்திரன் ஒரு சிவன் கோவில் கட்டினன். தந்தை கட்டிய கோவிலை வென்றுவிட இராசேந்திரன் விரும்பினன் போலக் காணப்படுகிறது. இக் கோவில் தஞ்சைக் கோவிலி: லும் பெரிதாயிருக்கும்படி திட்டமிடப்பட்டது. ஆனல், அதளவு உயரமில்லை, சோழப் பேரரசு இம் மன்னர்கள் கீழடைந்த சிறப்பிற்கு இக் கோவில்கள் உதாரணங்களா யிருக்கின்றன.
தமிழகத்தை வாழ்விக்க வந்த இம் மன்னர்களின் புகழ் சொல்லுந் தரத்ததோ?
இது நாம் கூறவில்லை. கல்வெட்டுகள் கூறுகின்றன. இது புராணமல்ல; வரலாறு.
தேசபக்தி
'நான் உணவோ, தங்குமிடமோ அளிக்கமாட்டேன். நான் பசி, தாகம், கட்டாய அணிவகுத்துச் செல்லல், போர், மரணம் என்பவைதான் அளிக்கிறேன். எவஞெரு வன் நாவால் பேசுவதன்றி இதயபூகவமாகத் தன் தேசத்
தில் பக்தியுள்ளாஞே, அவன் என்னைத் தொடரட்டும்"
17

Page 19
பல்லவ காவியம்
-'ஆனந்தன்”-
1 உற்பத்திச் சருக்கம்
காலம் கி.பி.ஆரும் நூற்ருண்டாகிறது. களப்பிரராட்சி யில் ஒளி மங்கியிருந்த பல்லவ குலம் களப்பிரரை வென்று தொண்டை மண்டலத்தையும் தெலுங்கு நாட்டில் ஒரு பகுதியையும் ஆள்கிறது. பல்லவப் பேரரசிற்கு வடக்கே சாளுக்கியப் பேரரசும், தெற்கே பாண்டியப் பேர ர சும் விளங்கி வருகின்றன. பல்லவ நாடு தெற்கே காவிரியின் கரை வரை பரந்து கிடக்கிறது. தொ ன் டை மண்டலம் வட பெண்ணையாறு, பாலாறு முதலிய ஆறுகளால் வளம்பெற் றிருக்கிறது. பாலாற்றின் ஒரு கரையில், கற்ருேர் புகழ் கச்சி மாநகரம், பல்லவர் தலை நகராயமைந்திருக்கிறது. பாலாற் றின் வாயில், தமிழ் நாட்டின் பழைய காலத் துறைமுகங்களில் பிரசித்தமான மாமல்லை (மாமல்லபுரம், மகாபலிபுரம், மாபவி புரம்) இருக்கிறது. வணிகப் பொருள் வந்து போய்க்கொண் டிருக்கின்றது. சிம்மவிஷ்ணு தாபித்த பல்லவ ஆட்சி பல திசைகளிலும் விரிவடைகிறது.
2. படையெடுப்புச் சருக்கம் சிம்ம விஷ்ணுவின் மகன் மகேந்திர வர்மன்1 பட்டத்துக்கு வருகிருன். குணபரன், விசித்திர சித்தன் என்றெல்லாம் பெயர் பெற்ற இவன் புகழ் எல்லாவகையிலும் எல்லாத் திசை களிலும் பரந்து செல்லுகிறது.
மேலைத் தட்சன பூமியில் பிறந்த சாளுக்கியப் பேரரசு வளர்ந்து வருகிறது. புலிகேசி1 அரசு கட்டி லேறியவுடன், ஈசாளுக்கியப் பேரரசு வெற்றிமேல் வெற்றி யீட்டுகிறது. வட இந்தியப் பேரரசனய ஹர்சா, புலிகேசியிடமே, தோற்பது எப்படி என்று அறிகிருன். மிக விரைவாக, விந்தைய மலைக்குத் தெற்கில், பல்லவப் பேரரசுக்கு வடக்கிலுள்ள அவ்வளவு பிர தேசமும் புலிகேசியைத் தங்கள் ரேரரசனுக ஏற்றுக்கொன் டது. இந்திய தீபகற்பத்தில் கிட்டத்தட்ட எழுபது வீத
遵8

நிலம் சாளுக்கியப் பேரரசின் கீழ் வந்துவிட்டது. புலிகேசி பல்லவ நாட்டில் கண்போட்டான்
புலிகேசியின் படை காஞ்சியை நோக்கி முன்னேறியது. காஞ்சியிலிருந்து பதினைந்து கல் தொலைவில், பல்லவர் எதிர்த் துப் போர் செய்தனர். முடிவு எதிர்பார்க்கப்பட்டதே. பல்ல வர் சாளுக்கியரிடம் தோற்றனர். ஆனல் காஞ்சிக் கோட்டை *யைப் பகைவரிடமிருந்து பாதுகாப்பதில் பல்லவர் வெற்றி கண்டார். வட பெண்ணைக்கு வடபால் பல்லவர் ஆண் ட தெலுங்குப் பிரதேசங்கள். புலிகேசி கைக்கு மாறுகின்றன. புலிகேசி தன் நாட்டிற்கு மீள் கிருன்.
3 வாதாபி தகனச் சருக்கம்
புலிகேசி பெற்ற வெற்றி புலிகேசிக்கே திருப்தியளிக்க
வில்லை. முழு வெற்றி பெறுவதற்காக இன்னுெரு முறை படையெடுக்க விரும்பினுன்
தமிழ் நாட்டின் தெற்குப் பகுதியை ஆண்ட பாண்டியர் பல்லவ அரசுப்பிரதேசத்தில் கிட்டத்தட்ட அரைவாசியளவை யாண்டு வந்தனர். அயலார் பேரரசாய் வாழ்வது தமக்கு ஆபத்தாகலாமென்று கருதியோ, பெருமை காரணமாயோ, பாண்டியர் பல்லவரை எதிர்த்தனர். தங்களுடைய பிர தேசத்தை, பல்லவ பிரதேசத்துள் விஸ்தரிக்கவும் விரும் பினர். பல்லவர் வீழ்ந்தால், சாளுக்கியரின் அடுத்த களப் பலி தங்களில் தான் என்பதைப் பாண்டியர் உணரவில்லை. பல் லவருக்கெதிராகப் போரிட, பாண்டியர் சாளுக்கியரின் உதவியைக் கோரினர். "எரிகிற வீட்டில் பிடுங்கியது இலா .பம்" என்பது அவர்கள் கொள்கை.
பல்லவரும் சாளுக்கியர் தங்கள் நாட்டில் செய்த கொடு -மையை மறக்க வில்லை. மகேந்திர வர்மனின் மகனகிய நர சிம்மவர்மன்1 மாமல்லன் பட்டத்திற்கு வந்திருந்தான். பல் உலவ அரசருள் இவன் மிகப் பெரு வீரனெனல் பொருந்தும்:
வெள்ளம் வருமுன் அணை கட்டியிருந்தான் அவன்.
வெள்ளம் வந்தது. புலிகேசியின் படை பல்லவ சிற்றர சராய வாணரைத் தோற்கடித்துக் காஞ்சியை நோக்கி முன் னேறியது. நரசிம்மவர்மன் புறப்பட்டான், சிம்மத்தைப் புலி வெல்லுமா? .
19

Page 20
ஆயினும் புலிகேசியின் படை இப்படித் தோற்கும் என்று நரசிம்மனே எதிர்பார்த்திருக்க மாட்டான். நரசிம்மனுக்கு வெற்றி மேல் வெற்றி. ஆதிக்க வெறிபிடித்த புலிகேசிக்கு சிறிய நாடாயிருந்த பல்லவ நாட்டைச் சுலபமாகக் கபளி கரம் செய்ய நினைத்த புலிகேசிக்குத் தோல்விமேல் தோல்வி.
காஞ்சிக்கு வந்தானே புலிகேசி வாதாபிக்கு நரசிம்மன் போக வேண்டுமல்லவா! நரசிம்மன் படை, சாளுக்கிய தலை நகராகிய வாதாபிக் குச் சென்றது. புலிகேசியின் நாமதேயங்களைக் காணவில்லை. புலிகேசி வானுலகில் ஆட்சி செய்யச் சென்றதாகக் கேள்வி. நன்றியறிவுள்ள நரசிம்மன், புலிகேசியின் தலை நகராகிய வாதாபியை அக்கினி பகவானிடம் கொடுத்து வானுலகிற்கு அனுப்பினன். வாதாயில் வெற்றித் தூண் நட்டு, கல் வெட்டு வரைந்து, தன் நாட்டிற்குத் திரும்பி வந்தான்.
4. பழி வாங்கு சருக்கம் புலிகேசியின் மகன் விச்ரமாதித்யன்1 சாளுக்கியப் பேர ரசனுஞன். வாதாபி தகனம் சாளுக்கிய குலத்திற்கு நேர்ந்த பெரிய அவமான மாகக் கருதப்பட்டது. வாதாபிதகனம் பற் றிய ஞாபகம் வந்ததும், சாளுக்கியரின் இரத்தம் கொதித் தது. பல்லவரை முறியடிக்க வேண்டும், காஞ்சியைக் கைப் பற்ற வேண்டும் என்றெல்லாம் வாதாபியிலிருந்தாண்ட சாளுக்கியர் கங்கணங் கட்டிக் காரியஞ் செய்தனர். பழி வாங்கி, தங்களுக்கு தேர்ந்த அவமானத்தைத் துடைக்க வேண்டும் என்பது சாளுக்கிய மன்னர்களின் வாழ்க்கை. இலட்சியமாய்ப் போய்விட்டது.
விக்கிரமாதித்யன் படையெடுத்தான். பல்லவ மகேந் திரவர்மன்1 தோற்றன். பாண்டியரும் பல்லவரின் பிரதேசத் தில் கண்வைத்துச் சாளுக்கியருடன் சேர்ந்து கொண்டனர். பல்லவருக்கு இரண்டு பக்கமும் நெருக்கம்.
சிவன் தலையிலுள்ள பாம்பு, கருடனைப் பார்த்து நகைப் பது போல, சாளுக்கிய ஆதரவுடன் பாண்டியர் பல்லவரை எதிர்த்தனர்.
பல்லவ இராசசிம்மன் தன் நாட்டைப் பகைவரிட மிருந்து மீட்டுக் கொண்டான்
பல்லவ அரசின் மேல் பழி வாங்குவது இலகுவல்ல; வாதாபி தகனத்தின் பின், நூருண்டுகள் சென்ற பின்னரே

சாளுக்கியர்கள் தங்கள் இலட்சியத்தை யடையச் சந்தர்ப் பம் கிடைக்கிறது. விக்கிரமாதித்யன் காஞ்சியை மூன்று தரம் தாக்குகிருன். இரண்டாவது தரம் நந்திவர்மன்
யுள் பிரவேசிக்கிருன் பெருந்தன்மை வாய்ந்த சாளுக்கியன் காஞ்சியை அழியாமல், ஒரு கல் வெட்டு வரைந்து விட்டுத்
5. முத்திச் சருக்கம்
மையை நிலை நாட்டி வந்த பல்லவர், வாதாபிச் சாளுக்கிய குலத்திலும் பார்க்க, ஒன்றரை நூற்றண்டு காலம் அதிகமாக ஆட்சி புரிந்தது விதியா, இறையருளா அல்லது அவர் எதிர்ப் புச் சக்தியா தெரியவில்லை. சோழ ஆதித்யனின் வாளுக்கு, பல்லவ அபராசிதன் இலக்காகியபோது, பல்லவர் குல வாழ்வு முடிவுற்றது;
மதமும் மனிதனும்
"மனிதனின் உயர்மனமானது தனக்கப்பாலுள்ள பொருளை நெருங்குவதன் பொருட்டுத் தன்னுலியன்ற வரையில் செய்யும் முயற்சியே மதம் மதம் மக்களினத் தின் விழுமிய வேலைப்பாடுகளில் ஒன்றெனக் கருதியும் மனிதனலாக்கப்பட்ட எவ்விஷயங்களிலுமே குறைகள் உண்டென்பதை உணர்ந்தும், அது மானிட ஆர்வத்தி னின்றும் எழுந்த தொன்று எனத் தெளிவாயானல், மதம் உன் அத்தியாத்ம வாழ்வில் ஒரு உதவியாயிருக்கக் கூடும், நீ ஒரு மதக்கோட்பாட்டைக் கடைப்பிடித்து, இவ்வுல கில் அது ஒன்றே உண்மையெனக் கொண்டு, அதற்குப் பந்தப்படுவதுடன் நின்று விடுவாயாகில், உனது சீவன் வளர்ச்சியும் விரிவும் அடைவதை நீ தடை செய்வாய்."

Page 21
நாகரிகம் பரப்பிய தமிழன்
'வேல்முருகு”
மிழ் நாகரிகத்தின் முதன்மையான தொன்மையையோ தி அன்றி வரலாற்றுக் கெட்டாக் காலத்தில் தமிழன் தாகரிக ஒளியை உலகெல்லாம் கொண்டு திரிந்த கதை யையோ, போதிய ஆதாரங்களின்மையால், இங்கே நாம் ஆராயப் புகவில்லை. இந்துநதி நாகரிகம் தமிழரது முன்னே ரது என்று ஓரளவு சான்று காட்டிப் பல வரலாறு வல்லார் தீர் மானித்தாலும், ஆராய்ச்சியாளரில் ஒரு சாரார் சண்டைக்கு வருகிறர்கள். ஆகவே சந்தேகத்துக்கிடமில்லாமல் நிறுவ வல்ல, தமிழரது சென்ற இரண்டாயிரவருட காலத்தை எடுத். துக் கொள்வோம். தமிழ்நாட்டின் கடற்கரை மிகவும் நீண் டிருக்கிறது. இக் கடற்கரையில் மிகப் பிரசித்தி பெற்ற துறை முகங்கள் சங்க காலத்திலிருந்து இருந்து வருகின்றன.
இந்திய உபகண்டத்திற்கும் சீ ஞ விற் கும் இடையில் இந்தோ-சீன, இந்தோனேஸ்யா என்று இரு பூமிசாஸ்திரப் பரப்புகள் இருந்து வருகின்றன. இந்தோ-சீனவில் வியட்நாம், லேஓஸ், கம்போடியா, சையம், மலாயா, பர்மா முதலிய தேசங்களிருக்கின்றன. இந்தோனேஸ்யா, யாவா, சுமத்திரா, போர்ணியோ, பாலி முதலிய கிழக்கிந்திய தீவுகளை உண்; டாக்கி ஒரேதேசமாய் விளங்குகிறது. இவ்விருபகுதி மக்களின் வாழ்க்கை யுயர்வுக்கு, இந்தியர்கள் செய்த சேவையின் பய ஞகவே, இந்தோ என்னும் அடைமொழி இப்பெயர்களின் முன் அமைந்திருக்கிறது. அகண்ட இந்தியாவின் அங்கங்களே. இவ்விரு பகுதிகளும். கி. பி. இரண்டாம், மூன்ரும் நூற். ருண்டுகளிலிருந்து இந்தியர்கள்-இந்துக்கள் அல்லது பெளத், தர்கள்-முஸ்லிம்கள் அல்லது மேல் நாட்டார் இப்பகுதிகளை மிகப் பிற்காலத்தில் கைப்பற்றும் வரை ஆண்டு வந்தனர். கிறிஸ்து அப்தத் தொடக்க காலத்திலேயே, இந்தியர்கள் இப் பகுதிகளில் குடியேறியிருத்க வேண்டும்; சங்ககால வணிகம், துறைமுகம், கடற்செலவு பற்றிச் சங்க இலக்கியங்களும் யவ னரும் எழுதி வைத்த குறிப்புகள், அந்நாட்களிலேயே தமிழர்
22

இந்நாடுகளுக்குப் போயிருக்கலாம் என்பதற்குச் சான்றுகள். புகாரும் கொற்கையும் முசிறியும் தொண்டியும் தமிழ் நாகரி கம் இப்பகுதிகளுக்குப் போவதற்கு வாய்க்கால்கள். இந்தோ -சீன சுவர்ண பூமியென்றும் இந்தோனேஸ்யா சுவர்ண தீப என்றும் பெயர் பெற்றிருந்தன. பொன் கொழிக்கும் பூமியா கக் கருதப்பட்ட இந்நிலக்களுக்கு வணிகத்திற் பெரிதும் ஈடு; பட்ட சங்ககாலத் தமிழர் சென்றது வியப்பாகாது.
திராவிட நாகரிகமும் ஆரிய நாகரிகமும் சேர்ந்து உரு வாகியதே இந்திய நாகரிகம். தமிழருட்பட இந்தியாவி லிருந்து சென்றவரனரை வரும், இந்திய நாகரிகத்தையே கொண்டு சென்றனர். ஆகவே, இந்நாடுகளின் நாகரிகம் தமிழ் நாகரிகத்திற்கு எவ்வளவு கடமைப்பட்டது என்று கூறுவது இலகுவல்ல.
தமிழரில் ஒரு சாரார் மேல்நாட்டவர் வருகைக்கு முன், பல காலமாகத் திரைகடலோடினர் என்பது வரலாற் றுண்மை. இந்து சமுத்திரத்தில் அராபியருக்கு வழிகாட்டி யது சோழநாட்டு மாலுமிகளே. பல்லவர் காலத்தில் மாமல் லையும், சோழர் காலத்தில் நாகபட்டினமும், பாண்டியர் காலத்தில் காயலும் தமிழ் நாட்டின் மிகப் பெருந் துறைமுகங் களாக விளங்கின. பபிலோன் கி. மு. ஏழாம் நூற்றண்டி லேயே சீனவுடன் கடல் வர்த்தகம் செய்யத் தொடங்கி விட் டது. இவ்விரு நாடுகளுக்குமிடையில் பிரயாணஞ் செய்யும் அக்காலக் கப்பல்களுக்கு இந்தியத் துறைமுகங்களில் இறங்கு வது எவ்வளவு அவசியம் என்பதை ஒரு உலகப் படத்தைப் பார்த்து அறிந்து கொள்ளலாம். இந்தியரும்-தமிழரும்அவர்களைப் பின்பற்றிச் சீன வணிகத்திலீடுபட்டிருக்கலாம்: சீனுவுக்குச் செல்லும் வழியிலுள்ள இந்நாடுகள் தமிழரை ஈர்த் திருக்கலாம்.
சுவர்ண பூமியிலும் சுவர்ண தீப விலும் இந்தியர் பெருந், தொகையாகக் குடியேறித் தங்கள் நாகரிகத்தை வளர்த்து வந்தனர். அந்நாடுகளில் நாகரிகத்தில் மிகத் தாழ்ந்த படியி " லுள்ள மக்களை உயர்த்தப் பெரும்பாடு பட்டனர். கம்புசா யம்பா, வூ-என், சைலேந்திரப் பேரரசு என்பன இவ்வாறு தோன்றிய அரசுகளில் மிக முக்கியமானவை. இவ்வரசுகளின் வரலாற்றையும் பெருமையையும் சீனரும் அரபியரும் எழுதி வைத்த குறிப்புகள் காட்டுகின்றன. பல சமஸ்கிருத, பிரா
23,

Page 22
கிருத மொழிக் கல்வெட்டுகளும் உடைந்தனவும் புதைந்தனவு மான இந்துக் கோவில்களும் பெளத்த விகாரங்களும் பழைய வரலாறுகளை எடுத்தோதுகின்றன.
தமிழர்களின் செல்வாக்கு இந்நாடுகளில் ஓங்கியிருந்த தற்கு இன்னும் பல தனியான சான்றுகளுள. தமிழ்க் கல் வெட்டொன்று சுமத்திராவில் கண்டெடுக்கப்பட்டது. ஒரு மொழியை முற்றுமறியாதவர்கள் மத்தியில், அம்மொழியில் கல்வெட்டு யாரும் எழுதார். பல்லவ நாட்டு வர்த்தகர்கள், மூன்ரும் நரசிம்மனின் பட்டப் பெயரான அவனி நாரண னென்பதை ஒரு குளத்துக்குப் பெயராக வைத்து, அதனரு "கில் ஒரு தமிழ்க் கல்வெட்டை, தாய்லந்து தேசத்தில் விட்டுச் சென்றிருக்கின்றனர். இந்தோனேஸ்யாவும் இந்தோ சீனுவில் தாய்லந்து தவிர்ந்த நாடுகளும் அந்நியருக்கு அடிமையாகி, தங்கள் பழைய நாகரிகத் தொடர்ச்சியை இழந்து விட்டன. தாய்லாந்து மாத்திரம், தன் பழைய நாகரிகத்தைப் பிற நாக ரிகங்களின் மோதுதல்களுக் கிலக்காகாமல் பாதுகாத்து வரு *கிறது. தாய்லாந்து மன்னர்களின் முடிசூட்டு விழாவில் இன் றும் திருவாசகத்தில் திருவெம்பாவையில் ஒரு பா ஒதப்பட்டு வருகிறது. சோழன் முதலாம் இராசேந்திரன் சைலேந்திரப் பேரரசின் மேல் படையெடுத்ததைத் தகடுகளில் எழுதி வைத்து விட்டுத் திரும்பினன். அது ஒல்லாந்தர்களின் கையில் பட்டு, இன்று லெய்டன் தகடுகளென்று அழைக்கப்படுகிறது. லெய்டன் தகடுகளின் மூலங்கள் இன்றும் ஒல்லாந்திலேயே இருக்கின்றன. அகத்திய முனிவரைத் தமிழ் முனி என்று "போற்றி வணங்கிய தமிழன், அகத்திய வணக்கத்தையும் கிழக் *கிந்தியத் தீவுகளுக்கு எடுத்துச் சென்ருன்கு அகத்தியரின் சிலை கள் அங்கே கண்டெடுக்கப்படுகின்றன. கங்கைக் கரையில் மதுரை என்ற ஊர்ப்பெயரைக் கண்டதமிழன் கூடலை மதுரை யாக மாற்றியும் ஈழத்தில் இரு இடங்களுத்கு மதுரையென்று பெயரிட்டும் திருப்தியடையவில்லை. அப்பெயரைக் கிழக்கிந் தியத் தீவுகளுக்கும் கொண்டுபோய் விட்டான்.
இவ்வாறு, இந்தோ-சீன, இந்தோனேஸ்யா குடியேற்ற கலாசார வரலாற்றில், தமிழர் பெரும் பங்கு வகித்துள்ளனர். இந்தோனேஸ்ய மக்கள் இஸ்லாத்தைத் தழுவ, ஐரோப்பிய ராய பிரித்தானியர், பிரஞ்சுக்காரர், ஒல்லாந்தர் முதலி யோர் இந்தியாவையும் இந்நாடுகளையும் பங்குபோட, பழைய கலாசாரத் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
24

சிறுகதைக் கொத்து
சிறு கதையின் ஜீவநாடி ஒன்று. அதில் எடுத்தாளப் படும் சம்பவம், அல்லது நிகழ்ச்சி தனிப்பட்ட ஒன் ருக இருக்க வேண்டும்.
சிறு கதையில் ரூபம் கதை எழுதுபவரின் மனேதர் மத்தைப் பொறுத்தது. இவ்வாறு அகன்ற எல்லைக் கோட்டிற்குள் தான் இலக்கியத்தின் சிறு கதைப் பகுதி அடங்குகிறது. சிறு கதை என்ருல் அளவில் சிறியதாக இருப்பது என்பதல்ல; எடுத்தாளப்படும் சம்பவம் தனி நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். சிறு கதை வாழ்க்கையின் சாளரம்.
-புதுமைப் பித்தன்

Page 23

சிறுவிழி குறுநகை
ஏ, பி. வி. கோமசு
JLLMMLLSMOLMeOSLMOOLeOOLekOOeLeLMLeOLMOLMLeeS
றைச்சாலையையும் வந்தடைந்தோம். பிரமாண்டமான கட்டிடம் சுமார் எண்ணுாறு கைதிகள் அங்கிருப்ப தாக என் நண்பன் சொன்னன். என் நண்பன் தி பாகு, ‘சமுக சேவை' சங்கத்தைச் சேர்ந்தவன். சிறைக் கைதிகளுக்குப் படித்துக் கொடுப்பது வழக்கம். எஸ். எஸ். சி. படித்துத் தேர்ச்சி பெற்ற எத்தனையோ கைதிகள் இருப்பதாகவும் சொன்னன். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே சிறைச் சாலைக் காவலாளர் மூவர் சுமார் இருபது கைதிகளைக் கூட்டி வந்தனர். போடப்பட்டிருந்த பெஞ்சுகளில் அவர்கள் வரிசை யாக அமர்ந்தார்கள். என் நண்பன் பாடம் சொல்லிக் கொடுத்தான்.
புத் தரைப் பற்றிய பாடம். "புத்தர் ஆட்டுக் குட்டிக்குக் கருணை காட்டியது' என்ற தலைப்பின் கீழ் பாடம் நடந்தது. அப்பொழுது பெஞ்சியின் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த கைதியின் கண்களில் கண்ணீர்த் துளிகளைக் கண்டேன் நான். என் நண்பனிடம் சென்று விடயத்தைச் சொன்னேன். விடை பெற்ற நீான் அக் கைதியிடம் சென்று கைதியை அழைத்துக் கொண்டு கொஞ்சம் நகர்ந்து சென்றேன். அவரை உட்காரச் சொல்லி நான் பக்கத்தில் அமர்ந்தேன். அவர் ஒரு சிங்கள வர்; நாற்பது வயதிருக்கும். கைதியின் நெஞ்சு குமுறும் எரி மலையாய் இருக்கிறது என்பதை அவர் விட்ட அந்தச் சூடான பெரு மூச்சு பிரதிபலித்தது. 'ஏன் அழுகிறீர்கள்" என் றேன். "ஏஞ" என்று மீண்டும் ஒரு நெடிய பெருமூச்சு விட் டார். நான் எனக்குத் தெரிந்த சிங்களத்தில் பேசத் தொடங் இனேன்.
அவரும் தொடங்கினர் தன் கதையைச் சொல்ல, "நீங் கன்" என்ன குற்றம் செய்தீர்கள்? என்று ஒரு கேள்வியை
25

Page 24
எழுப்பினேன். 'தம்பி, எல்லாவற்றையும் நான் சொல்லு கிறேன். கேட்டு விட்டு, குற்றவாளி யாரென்று சொல். நீயோ படித்தவன் நாளைக்கு வாழப் போகிறவன், எங்களை ஆளப் போகிறவர்களும் நீங்கள்" என்று சொல்லிவிட்டு அவர் அவரின் கதையைச் சென்னுர். s
"கனத்த ரோட்டில் தான் என் வீடும்-இல்லை--குடிசை யுமிருக்கிறது. ஆமாம் அந்த விகாரைக்கு எதிராக இருக்கும் அந்தக் குடிசைதான் நீயும் கண்டிருப்பாய். குடிசையின் நிலையைப் பார்த்தாலே அங்கு வாழ்பவர்களின் நிை தெரிந்து விடும் அடை மழை பெய்தால் குடிசை எல்ஞாம் தண்ணீர்-வெள்ளம் நான், என் மளைவி, ஒரு குழந்தை அவளுக்கு வயது ஒன்பதாகிறது. அவள் பெயர் சந்திரா.
இப் பெயரைச் சொன்னவர் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார். கன்னத்தில் வழிந்த கண்ணிரைத் துடைத்துச் கொண்டு மீண்டும் தொடர்ந்தார்.
1 ஏதோ சொல்கிருர்கள் புத்த ஜயந்தி கொண்டாடு திருர்களாம். இரண்டாயிரத்துக் கதிகமான வருஷங்களா கக் கொள்கைகளைப் பரப்பி வருகிருர்கள். ஆனல் இன்றும் இந்தப் புண்ணிய பூமி, கொலைக் குற்றத்தில் முதலிடம் வகிக்கிறது. ஆம் நான் சொல்ல மறந் திட்டேன். ஒருவரை கொலை செய்து இந்தத் தண்டனை அடையவில்லை. திருடத் தான் செய்தேன். அதுவும் சரியாக செய்ய முடியவில்லை. திருடுவது குற்றம்தான் நான் ஒப்புக்கொள்கிறேன். ஆஞல் அந்நேரத்தில் என் நிலை அப்படியிருந்தது. யாருக்காகத் திருட எண்ணினேன் எனக்காகவா? இல்லை புனிதமான சுய நலமற்ற அன்புக்காக என் அன்பின் சின்னத்துக்காக."
'ஏன், தம்பி நீயும் பத்திரிகையில் படித்திருப்பாய். படத் தோடும் போட்டிருந்தார்களே. அந்தப் பந் த லைத்தான் சொல்லுகிறேன். கொழும்பில் பஞ்சிகாவத்தைப் பாதையில் நிருமானித்திருந்தார்களே அந்தப் பந்தல்தான். செயந்தி கொண்டாட்டத்துக்காகப் போட்டிருந்தார்கள் அல்லவா அதே பந்தல் தான். அதற்குச் செலவு எவ்வளவு தெரியுமா? ரூபாய் இரண்டாயிரம், அதுவும் எங்களைப் போன்ற ஏழை களின் பணம். அந்தப் பணத்தை எப்படிச் சேர்த்தார்கள்
26

தெரியுமா? என் மகளைப் போன்ற சிறு பள்ளிக்கூடப் பிள்ளை களிடம் சொல்லி, அவர்களைத் தெருத் தெருவாக அலைய வைத்துத்தான் சம்பாதித்தார்கள். என் ம க ரூ ம் பணம் சேர்க்க மற்றப் பிள்ளைகளுடன் சென் ருள். வெயிலிலே அலைந் தாள். ஏன் என்னிடமும் வந்தாள். என்னிடமிருந்த இரு பத்தைந்து சதத்தையும் கொடுத்தேன். காரணம் என் மனைவி. புண் ணியம் தேடிக் கொள்ள வேண்டும் என்ருள். நானும் பணத்தைக் கொடுத்து விட்டேன்.
"அதே இரவு. என் மகள் என்னிடம் வந்தாள். என் மடியில் அமர்ந்தாள். முதலில் அவள் கன்னத்தை என் கன் னத்தோடு இணைத்தாள். பின் காதோடு காதாக, "அப்பா" என்று குழைந்தாள். பேசினள். 'அப்பா நானும் புத்த செயந்தியன்று பாட்டுகள் பாடப் போகிறேன். எனக்கு ஒரு வெள்ளைநிறக் கவுன்-சட்டை வேண்டுமென் ருள்." கையிலோ பணம் இல்லை. நாளையப் பொழுதை எப்படிக் கழிப்பதென்றே தெரியவில்லை, கடன் தரக்கூடியவர் ஒருவருமில்லை. ஆணு லும் இந்த இளம் மனதின் இன்பக் கனவைச் சிதைக்கக் கூடாது என்று "சரி" என்று எண்ணி ' ஆகட்டும்" என்றேன். அன்றிரவு அதே நினைவாய்ப் படுத்தேன். நான் கண்ட கனவு கள். என் மனதில் ஒரு நேரம் புத்தர் உருவில் ஒருவர் வந்து "திருட்டைப் பற்றி நினைக்காதே" என்று சொல் வார். மறு வினுடி 'ஏன் புத்தரே சொல்லியிருக்கிருர் முதலில் வயிற்றுக் குக் கொடுங்கள் பின் போதனை செய்யுங்கள் என்று' என்று யாரோ சொல்வது போலிருக்கும். இப்படியாக என் மனதில் ஒரு போர் நடந்தது. கடைசியில் என் அன்பு மகளின் முகம் என் அகக் கண் முன் வந்து நின்றது. நான் விழித்துத் திரும் பிப் பார்த்தேன். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது அந்தப் பதுமை. ‘அப்பா - வெள்ளைக் கமுசை, நானும் பாடுவேன்" என்று வாய் முணு முணுப்பது என் காதில் விழுந்தது. என். கண்களில் நீர்மல்கியது. உற்று நோக்கினேன் என் சந்திராவை சிறு விழிகளைப்பட்டு இதழ்கள் மூ டி யி ரு ந் த ;ை குறுநகை" மழலை மொழிபேசும் வீணைகளாம் உதடுகளின் ஒரங்களில் விளையாடின, எண்ண எண்ண இன்பந்தரும் வண்ண மலரமு தாம் அவள் சந்திர முகத்தில் ஆனந்த ரேகைகள் படர்ந்திருந் தன. "
*எழுந்தேன். நடந்தேன். அந்தப் பணக்காரர்; சமுக சேவையாளர் - திருவாளர் சேனநாயகா வீட்டை நோக்கித்
27

Page 25
தான் புறப்பட்டேன், ஆம் தம்பி. அவர்தான் அந்தப் பத் தலைக் கட்ட முன்னுக்கு நின்று மும்முரமாக வேலை செய்தவர். சுவரேறிக் குதித்தேன். உள்ளுக்குப் போனேன். அது அவ ரின் சயன அறை. நான் தவறுதலாகப் பக்கத்திலிருந்த தண் ணிர்க் குழாயைத் தட்டி விட்டேன். அது விழுந்து உடைந்தது. திடுக்கிட்டெழுந்தார் அவர். கள்ளன் கள்ளன் என்று கூச்ச லிட்டார். அங்குத் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் விழித் தெழுந்து வந்தார்கள். ஒட எத்தனித்தேன். ஆனல் பல னில்லை. நான்கு பேர்கள் சூழ்ந்து என்னைப் பிடித்திருந்தனர். கெஞ்சினேன். கூத்தாடினேன். பலனில்லை. என் சோகக் கதையை எடுத்துச் சொன்னேன். ஆணுல் அன்பை வளர்க்க" பண்பைப் பெருக்க, கருணைக் கடல், அன்பின் இருப்பிடம், அகிம்சாமூர்த்திக்கு விழா வெடுக்க முன்னுக்கு நிற்கும் மகாப் பிரபு என்னை நையப்புடைத்தார். அடி வாங்கினேன். அந்த ஆடம்பரத்தில் செலவாகப் போகும் பணத்தில் என் மகளின் சிறுபிறை நெற்றியிலிருந்து சேர்ந்த வேர்வைத் துளிகளும் இருக்கின்றன என்பதையும் மறந்தார். அப்பொழுதெல்லாம் என் உடல், பொருள், ஆவி மூன்றும் சொன்ன ஒரே வார்த்தை 'சந்திரா!' 'சந்திரா!” என்பது தான்.
'தம்பி இதற்குப்பின் நடந்தவைகளை நான் ஏன் சொல்ல வேண்டும். இதோ கம்பி எண்ணுகிறேன். என் மகள் இந் நிலையில் செயந்தி விழா கொண்டாடுவதாவது? அவளின் ஆசைக் கனவுகள் சிதைந்தன! ஆம் தம்பி, இளம் மனது என்ன பாடுபட்டிருக்கும். அவள் என்னைப்பார்க்க வரவில்லை."
அந்நேரம் மணியடித்தது. 'நாங்கள் வேலை செய்ய போக வேண்டும்" என்று சொல்லிச் சென்ருர். என் மடியில் கிடந்த அந்தப் புத்தகத்தின் கண்ணிருந்த படத்தைப் பார்த்தேன். புத்தர் படம்; ஆட்டுக் குட்டியைச் சுமந்த வண்ணமிருந் தார். படத்தில் கண்ட புத்தரின் புனிதப் பாதங்கள் நனைந் திருந்தன.
திரும்பிப் பார்த்தார் அந்தக் கைதி. 'குற்றவாளி யார்?" என்று கேட்பது போலிருந்தது.
குற்றவாளி யார்? ஒரு கேள்வி" என் மனதில் ஒரு மூலை யிலிருந்து ஒரு குரல் எழுந்தது. "சமூகம்! சமூகம்! ஏழையை மதிக்காத ஆடம்பரத்திற்கு அடிமையாகி விட்ட சமூகம்! துன்
28

4பப்படுவோரின் துயரைப் போக்க வழிகாணுது வீண் சடங்கு *களுக்கும், சம்பிரதாயத்திற்கும், அடிமையாகிக் கிடக்கும் சமூகம்" என்றது; ஆம். குற்றவாளி சமூகம்தான். எல்லா விதத்திலும் ஏற்றத் தாழ்வு என்னும் ஆணிவேரை, சமதர்மம் சன்மார்க்கம், சுபீட்சம் என்னும் ஆயுதங்களால் களைந் தெறி யாமல், சட்டமென்னும் கோடரியால் கள்ளன், கொலைஞன், குற்றவாளி என்னும் கிளைகளை மாத்திரம் வெட்டி வீழ்த்தி விட்டு அதேநேரத்தில் வறுமை என்னும் நீரைப் பாய்ச்சி, வேலையில்லாத் திண்டாட்டம் என்னும் உரமிட்டு, சமூகம் என்னும் மரத்தை வளர்த்து வரும் பெரியோர்கள், ஆளவந் தார்கள் இவர்கள் தான் குற்றவாளிகள்!!
உளநூல் கொள்கைகள்
1. அகு யை, அரு வருப்பு, பயம்-மக்கள் மனத்தைக் குழப்பிப் பலவீனப்படுத்துவன.
2. நீ எங்கு அதிகம் எதிர் பார்க்கிருயோ, அங்கே உனக் குக் கோபமேற்பட இடமிருக்கிறது.
3. மன அமைதியின்மையே சண்டைகளின் காரணம்
4. மனிதனிடம் ஆசை இருக்குமளவில் சதி சஞ்சீவியா கும்.
5. அருவருப்பு பலவீனத்தின் ஒரு விருத்தியாகும். அது *உனக்கு விருப்பமில்லாத அல்லது வருத்தம் தரும் ஒரு பரிசத் தினுலும் உனக்குத் தீங்கிழைக்கும் ஒரு பொருளினின்று நீ பயத்துடன் பின் வாங்குவதாலும் ஏற்படுகிறது.

Page 26
சைக்கிள் சவாரி
(மு. தளையசிங்கம் )
லகே மாயம் வாழ்வே மாயம். '* புத்தம் புதிய 9) சைக்கிளில் தொத்திச் சென்ற சத்திய மூர்த்தியின் வாயிலிருந்து கிளம்பிய சோக கீதம் அது. என்று நளினி அவனைக் கைவிட்டாளோ அன்று தொட்டு அவனுக்கு எல்லாம் மாயமாகவே பட்டது. அவளுக்காக வேண்டி எத்தனை நாட்கள் அவன் தவம் கிடந்தான்! ஆனுல் அதைச் சற்றும் யோசித்துப் பார்க்காமல் ஏளனமாய் அவள் அப்படி எடுத், தெறிந்து பேசிவிட்டாளே! சத்திய மூர்த்தி சர்வகலா சாலைக்கு வந்த பின் அவன் முதன் முதலாய்க் கண்ட பெண் நளினிதான். கண்டதும் காதலிப்பது சரியோ பிழையோ அவனுக்குத் தெரியாது, ஆனல் நளினியைக் கண்டதும் அவனுக்கு அவள்மேல் காதல் ஏற்பட்டது என்பது மட்டும். உண்மை. நேர் வகிடு விட்டு இழுத்த தலைமயிருக்குக் கீழே அந்த நீலவானம் போன்ற நெற்றியிலே இட்டிருக்கும் கரிய, கோணல் பொட்டும் எலிவால் போல் மெலிந்து சிறுத்து ஏறி ஏறிக் குதிக்கும் அந்த இரட்டைப் பின்னலும் அவன் மன திலே அழியாத தாஜ்மஹாலாய் மாறிவிட்ட அழகிய சின் னங்கள். இருதயத்தையே பிய்த்து எடுத்து எறிய முடியுமான லும் முடியும். ஆனல் அவற்றை மட்டும் அவன் இதயத்தை விட்டு எடுத்துவிட முடியாது. ஆனல் என்ன செய்வது. அவள்தானே தன் இதயத்தில் அவனுக்கு இடங் கொடுக்க மறுத்துவிட்டாளே!
வந்த புதிதில் பழைய மாணவன் ஒருவன் கொத்துப் பூ ஒன்றைக் கொடுத்து "அதோ அந்தப் பச்சைச் சேலை உடுத்து வரும் பெண்ணிடம் கொடு" என்று அவனுக்குக் கட்டளை யிட்டபோது "இது என் அன்புப் பரிசு’ என்று சொல்லி அதை அவளிடங் கொடுத்ததுமல்லாமல் கிடைத்த சந். தர்ப்பத்தை நழுவவிடாமல் மெதுவாக அவளின் பெயரை யுங் கேட்டுக்கொண்டான். அவள் தன் மெல்லிய கொவ், வைக் கணிஇதழ்களை அ ைசத்து வின ட பகர்ந்த டோது 'நளினி”
3O

என்று மட்டும் அவன் காதுகளில் விழவில்லை. கூட வே கொத், துக் கொத்தாய்த் தேனும் வந்துபாய்ந்தது. எத்தனை அழ. கான பெயர்! அன்று தொட்டு அவனுக்கு நளினிமேல் பைத்
தியம் பிடித்து விட்டது. ‘நளினி மஜ்னு’ என்று நண்பர்கள்
கூடக் கேலியாகச் சொல்லிக் கொள்வார்கள்.
கட்டுரை வகுப்பைத்தான் தவறவிட்டாலும் நாள் தோறும் நளினியை மட்டும் பார்க்க அவன் தவறமாட்டான். சதா அவளையே சுற்றிச் சுற்றித் திரிவதிலும் பரக்கப் பரக்க அவளைப் பார்த்து விழிப்பதிலும் அவனுக்கு பரம ஆனந்தம், "அடுத்து அடுத்து அடித்தால் அம்மியும் அதிரும்" என்னும் முது மொழியில் அவனுக்கு அசாத்திய நம்பிக்கை. அதுவும் அவனைக் கைவிட வில்லை. நாளடைவில் அந்த நளினியும் அவ னைப் பார்த்து மெல்லச் சிரிக்கத் தொடங்கினுள். சிரிப்பு: கதைப்பர் ய் மாறிப்பின் கண்ணுல் கதை பேசும் அளவுக்கு முற்றியும் விட்டது. ஆனல் அது அதிக நாள் நீடிக்கவில்லை. இடையிலே தெறித்துவிட்டது. பால் திரண்டு வெண் ணெயாக மாறும்போது தான பானை உடைய வேண்டும்?
‘எல்லாம் இந்தப் பாழாய்ப்போன சைக் கிளால் வந்த, மோசம் பாட்டை நிறுத்திக்கொண்டு தன்னைச் சுமந்து செல்லும் சைக்கிளைப் பார்த்துக்கொண்டான். ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. வந்த ஆத்திரத்தில் பெடலை அமத்தி அமத்தி மிதித்தான். சைக்கிள் "ஜிம்" என்று காற்ரு ய் பறந், தது. கூடவே அவன் எண்ண அலைகளும் போட்டி போட்டுப் பாய்ந்தன.
அன்றும் இன்றுபோல் அதே சைக்கிளில் சென்று கொண் டிருந்தான்.  ைசக்கிள் எப்படிப் புதிதோ அதுபோல் அதில் ஓடுவதும் அவனுக்குப் புதிது. சேர்ட்டின் "கொலரை உயர்த்தி விட்டபடி குதிரை ஓட் டிபோல் நான்காய் வளைந்து சைக்கிளில் சவாரி செய்வதில அவனுக்கு அலாதி யான பிரியம். அப்படித்தான் அன்றும் அவன் ஒடும்போது தூரத்திலே “டேன்ஜர் சிக்னலைப் போல் சிவப்புச் சாரி ஒன்று தெரிந்தது. அது வேறு யாரு மில்லை. அவனது உள் ளத்தைக் கொள்ள கொண்ட அதே நளினிதான். வேறு யாரோ தோழி ஒருத்தியுடன் விரிவுரை வகுப்புக்குச் சென்று. கொண்டிருந்தாள்.
31

Page 27
அவனது இதயம் ஏனே என்றுமில்லாததுபோல் பட 'படத்துக்கொண்டது. புத் தம் புதிய சைக் கிளில் தன் சித்தத் *தைக் கலக்கும் பெண் முன்னே ஓடுவது எல்லோருக்குமே கிடைத்துவிடக்கூடிய பாக்கியமா, என்ன? அந்தச் சாலை "யின் வளைவிலே அவள் செல்லும் ஒரமாகச் சென்று ஒரு வெட்டுப் போட வேண்டும் மென்று மனம் துடித்தது. கைகள் ஆட்டங் கொடுக்க அவளையே பார்த்த வண்ணம் வேகமாய்ப் பெடலை மிதித்தான். அடுத்த கணம்.
"த டால்" என்ற சத்தம் கோரமாய்க் கிளம்பியது அதைத் தொடர்ந்து அந்தச் சிவப்புச் சாரி சிவப்புக் காற் ருடியாகப் பறந்து அருகே நின்ற மரத்தின்மேல் மோதித் தெறித்தது. அதன் கையிலிருந்த மணி மணியாய் எழுதப் பட்ட பொருளாதாரக் குறிப்புகளைக் கொண்ட கட்டுக் கட தாசி காற்றில் பறந்து சாலையிலே அன்று பெய்த மழை "யினல் ஏற்பட்டிருந்த நீர்த் தேக்கத்தில் வீழ்ந்து நனைந்தது. "பார்க்கர் குயிங் வாச பள் ப்ளு இங்க் சீலைக்குப் போடும் நீலம்போல் தண்ணீரில் கரைந்து படர்ந்தது.
கூட வந்த தோழி வெடித்துவந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு சோக ரேகைகளைத் தன் முகத்தில் படரவிட முயன்று கொண்டிருந்தாள்.
எங்கிருந்தோ நான்கைந்து மாணவர்கள் நரி போல் ஊளே இடுவதும் கேட்கத்தான் செய்தது.3
ஆனல் சத்திய மூர்த்தி மட்டும் தன் சைக்கிளைக் கீழே விழ விட்டுவிட்டு லாம்புக் கம்பத்துக் கருகே காலை உயர்த்தும் நாயைப்போல் அழகாய்த் தன் காலைத் தூக்கிக் கொண் டான். அப்படிக் கூடத் தன்னல் செய்ய முடியுமென்பதை அன்றுதான் அவன் அறிந்தான். அந்தச் சந்தோசத்தில் நடந்ததை மறந்து நளினியைப் பார்த்துச் சிரித்தான்.
மரத்தில் மோதித் தன்னை ஒரு வாறு ச மாளித் து க் கொண்டு நின்ற நளினிக்கு அந்தச் சிரிப்பு அடக்க முடியாத ஆத்திரத்தைத்தான் கொடுத்தது. நாயைப்போல் தன்னையே சுற்றிச் சுற்றி வந்து குரங்குச் சேட்டை விடுபவன் இன்று வேண்டுமென்றே தன்மேல் வந்து மோதிவிட்டான் என்று அவள் எண்ணிக் கொண்டாள்.
32

"சீ, மாடுமாதிரி வந்து ஒரு பெண்மேல் மோதிவிட் டாயே! உமக்கு வெட்கமென்பது இல்லையா?* பொங்கி வந்த ஆத்திரம் வார்த்தைகளில் வெளிப்பட்டது. இன்னும் என்னென்னவோ வெல்லாம் பேசியிருப்பாள். ஆணுல் சத் தியமூர்த்தி அங்கு இருந்தால்தானே! நளினி கண்ணகிரூபம் எடுத்த மறுகணமே அவ்விடத்தைவிட்டு அவன் காற்ருய்ப் பறந்து விட்டான்,
அதற்குப்பின் அவனுக்கு நளினி மேல் விழிக்கவே வெட் கம். அவளும்தான் இன்னும் அந்தக் கண்ணகி ரூபத்தைக் களையவில்லை. வாழ்வே அவனுக்கு வரண்ட பாலைவனமாகி விட்டது.
சிந்தனை கலைந்தது.
'உலகே மாயம், வாழ்வே மாயம். "" அவன் வாயி லிருந்து மீண்டும் அச் சோக கீதம் வெளிக் கிளம்பிற்றுக சைக்கிள் பெடல்களுடன் இணைந்திருந்த பாதங்கள் வேக மாகச் சுற்றிக் கொண்டன "ஹில்டா"வைத் தாண்டி "முத்தமிடும் திருப்பத்"தில்-சர்வகலாசாலைச் சாலையின் அந்தக் கோர வளையலில்-சைக்கிள் கன வேகமாய்ச் சென்று கொண்டிருந்தது.
அந்த வேளையில்தான தன்னந்தனியளாய் நளினியும் அந்த வளைவில் நடை போட்டு வந்து கொண்டிருக்க வேண் *டும்! சத்தியமூர்த்திக்குச் சந்தோசமும் பயமும் ஒரே சம யத்தில் ஏற்பட்டன. சைக்கிளின் பிறேக்கை அமத்திப் பிடித்தான். அவசரத்தில் முன் பிறேக்கைப் பிடித்து விட் டேன் போலும். அடுத்த கணம் ரஸ்ஸிய சர்க்கஸ் காரனைப் போல் குத்துக்கரணம் ஒன்று போட்டு சாலையின் ஓரத்தில் போய் விழுந்தான்.
அடுத்து என்ன நடந்தது என்று அவனுக்கே தெரியாது. இரண்டொரு நிமிடங்கள் சென்று மயக்கம் கலைந்து கண் விழித்தான். அம்மம்மா, என்ன இன்பமான எழிற் காட்சி) வானத்துச் சந்திரன்தான் தன்னருகே உறவாட வந்து விட்டதோ என்று எண்ணினன். அவனை அணேத்துக் கொண்டு உற்றுப்பார்த்த வணணம் இருந்தாள் நளினி! இடது கையால் அவனது தலையைத் தூக்கி அணைத்த வண்ணம்
33

Page 28
வலது கையால் அவன் முகத்தில் தண்ணிர் தெளித்துக் கொண்டு இருந்தாள். என்ன இன்பமான காட்சி சொர்க் கத்தில் இருக கிருேமோ என்ற நினைப்பு. அப்படியே யுகம் யுகமாய் இருக்க வேண்டுமானுலும் இருக்கலாம். அதற்காக ஒன்றல்ல பத்துக் குத்துக் கரணமும் அடிக்க அவன் தயார். திறந்த கண்களைத் திரும்பவும் மூடிக்கொண்டான். அந்த இன்ப நிலையைக் குலைக்க அவன் விரும்பவில்லை.
* மிஸ்டர் சத்தியமூர்த்தி" என்று அவள்தான் குயில் கூவுவதுபோல் அழைத்து அந்த மெளனத்தைக் குலைத்தாள். அவனும் கண் விழித்தான். ஏதோ பேச வேண்டும்போல் இருந்தது. ஆனல் முடியவில்லை. தொண்டையை ஏதோ ஒரு பசை ஒட்டிப் பிடிப்பது போல் அவன் உணர்ந்தான்.
அதற்குள் வேறு நாலைந்து மாணவர்கள் உதவிக்கு வந்து விட்டார்கள். நளினிக்கு நன்றி தெரிவிக்கக்கூட அவகாசம். கிடைக்க வில்லை. வைத்திய சாலைக்கு அவன் இட்டுச் செல் லப்பட்டான்.
இரண்டு நாட்கள் கழிந்து வைத்திய சாலையை லிட்டு வந்ததும் வராததுமாய் நளினியைக் கண்டு நன்றி தெரி விக்க ஒடிஞன். அவளுந் தான் அவனுக்காகக் காத்திருந் தாள் போலும் அவள் முகத்தில் படர்ந்து இருந்த சோகம் கலந்த ஏக்கம் அப்படித்தான் அவனுக்கு உணர்த்தியது:
"தங்களுக்கு என் இதயம் கலந்த நன்றி. தாங்கள் அன்று இருந்திருக்காவிடில் என் நிலை எப்படி இருந்திருக் குமோ தெரியாது" என்று தட்டுத் தடுமாறி மென்று விழுங்கியபடி அவளிடம் சென்ருன்,
‘நானுந் தான் தங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண் டும் தெரியாமல் தங்களை அன்ருெரு நாள் பேசி விட்டேன்: சைக்கிள் ஓட்டம் தங்களுக்குப் புதிது என்பது இப்போது தான் எனக்குத் தெரியும், தயவு செய்து இனிமேல் தாங் கள் சைக்கிள் ஓட வேண்டாம். தங்களை நினைத்தால் எனக் குப் பயமாக இருக்கிறது" என்று நளினி தன் இதயத்தைத் திறந்து சொன்னுள்.
* ஏ ன் பயப்பட வேண்டும்?" சத்தியமூர்த்தியின் இத. யத்தில் மட்டுமே எழுந்து வாயினூடாக வெளிவராத
34

கேள்வி அது: "எனக்காக இவளேன் பயப்பட வேண்டும்?"
மீண்டும் அதே கேள்வி நீண்டு எழுந்தது.
அவளைச் சற்று உற்றுப் பார்த்தான்.
"பள பள" வென்று பிரகாசிக்கும் அவளது கரிய 6úgó களைத் திரை போட்டு மறைத்திருந்த கண்ணீர் அந்தக்
கேள்விக்கு விடை பகர்ந்தது.
(யாவும் கற்பனை)
மனம்
1. ஒவ்வொரு மனமும் தனித் தனியாகப் பிரிந்திருக்கும் உலகம், ஒவ்வொன்றும் தனக்குள்ளேயே அடைபட்டும், பெரும்பாலும் வேருென்றினிடம் நேரடியான tunt G.5 TC5 g Lib பந்தமும் வைத்துக் கொள்ளாமலும் இருக்கிறது.
2. மனக் கவலை உடல் நலத்தை அதிகரித்து எரிக்கும் நஞ்சு.
3. நோய்க்குக் காரணம் நம்முடைய செய்கைகள் Lo srš திரமல்ல; நமது எண்ணங்களும் அதற்குக் காரணமாகும்.
4. சொர்க்கத்தை நரகமாக்கி விடுவதும் மனதுதான்; நரகத்தைச் சொர்க்கமாக்கி விடுவதும் மனதுதான் s
5. பரிசுத்தமான மனமுடையவன் எல்லாவற்றையும் பரிசுத்தமானதாகவே நினைக்கிருன்.
35

Page 29
மு. கணேசசுந்தரம்
காற்ருேடு வந்தவன்.
LSLqALqALLLAALLLLLAALLLLLAALLLLLALAALLLLLALAAMLLLLSSSLAMLAMLTALAMALLALLLL LLLLLLLAMMLLMLqA
ன்று ஞாயிற்றுக்கிழமை, விடியற்காலைப் பணியோ 9 கொட்டிக் கொண்டிருந்தது. பகலவன் தோன்றுவ தற்கு அறிகுறியாக நிலம் சற்றே தென்பட்டது. அந்நே ரத்தே இந்து மாணவ சங்கத்து அங்கத்தினரும் வேறு சிலரும் சம்பந்தன் பாடலால் ஏற்றிய கோணமாமலை இறைவனைத் தரிசிப்பதற்கு எம் பிரயாணத்தைத் தொடங்கினேம். காடு களையும் களனிகளையும் கடந்து பல காத தூரம் சென்று பதி ஞெரு மணியளவில் திருமலையை அடைந்தோம் கன்னியா வில் சிவனே என்று கை கால்களை அலம்பிக் கொண்டு அடியார் கள் ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் எம்பெருமான் எழுந் தருளியிருக்கும் மலைக் கோயிலை அடைந்தோம்.
கோட்டையின் வெளியே மோ ட் டா ர் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே நடந்து சென்ருேம். கதிரவன் உச்சி வானத்திலே த கித்துக் கொண்டிருந்தான். ஐரோப்பியர் போட்ட தார்த் தெருவோ அவன் வெம்மையைத் தாங்க ாட்டாமல் உருகி எங்கள் பாதங்களைப் பதம் பார்த்தன. காதல் பாதை தான் கரடு முரடு என்று சொல்லுவார்களே. ஆனல் இந்தப் பக்திப் பாதையோ பாலைவனத்தூடே செல் வது போன்றிருந்தது: அன்று நந்தனர் தில்லை நடராசனைத் தரிசிக்க நெருப்பில் புகுந்து சென்ருராம் அது போல் நாங் களும் தகிக்கும் வெப்பத்தில் கசிந்து கொண்டே நடந்தோம்.
அப்பாடா! கடைசியாகப் பெரியோர் போற்றும் தலத்தை, இராவணன் வழிபட்ட தெய்வத்திருக்கோயிலைச் சேர்ந்தோம். அவ்விடத்தின் அழியா அழகும் வருணிக்க இயலாத எழிலும் ஒரு கொலைஞன் மனத்தையே பண் படுத்தியிருக்கும். இந்தச் சூழ்நிலை தந்த இன்பத்தைத் தானே இறைவனென உருவகப்
36

படுத்தியுள்ளார் சம்பந்தர். எவ்வளவு தான் வெயில் தன. லெனத் தகித்த போதும் அவ்வியற்கைத் துறைமுகத்தின் எழிற் தோற்றம் சற்றேனும் குன்றவில்லை. இயற்கை தந்த, இன்பத்திலே ஈடுபட்ட நான் பாறையின் உச்சிமீதே நின்று விட்டேன்.
மற்றைய நண்பர்கள் எல்லோரும் கோவிலுக்குள்நுளைந்து விட்டனர். மணி டாண் டாண்1 என ஒலித்தது. மறைய. வன் ஏதோ புரியாத பாஷையில் விடாது அலறிக் கொண்டிருந், தான். அவ்வேளையிலே என்னுடைய கண்கள் இராவணன் வெட்டு என்று தமிழிலும் "லவ்வேர் ஸ்லீப் (lowers leap) என்று, ஆங்கிலத்திலும் பெயர் பெற்ற எழில் நிறை ந் த பாறை, வெடிப்பை நோக்கின. நூற்றுக் கணக்கான அடி உயரத்திலே, பாறை நிமிர்ந்து நின்றது. அதன் அடித்தளத்திலே அலைகன் ஓயாது மோதி ஆரவாரம் செய்தன. அவ்வலைகளின் ஒலத் திற்கோ அன்றிக் குழைதலுக்கோ சற்றும் மனமுருகாது நின்ற, பாறை அன்று அமரர்களின் அலறலுக்குச் செவிசாய்க்காத அரக்கனை ஒத்திருந்தது. என் கண்களுக்கு,அப்பெரும் பாறை, யின் நெடிய தோற்றம் சாட்சாத் இராவணனையே நினைவூட்டி யது. பாறையின் அடியிற்றன் அலைகள் ஒலமிட்டன. அடித் தன, ஓய்ந்தன. ஆனல் சற்றுத் தூரம் பார்த்தாலே கடலின் நீல நிறமும், அதற்கு மேலாக அதன் அமைதியும் அன்று ஆல. காலத்தை உண்ட மணி கண்டனை நினைவூட்டியது இயற்கை இன்பப் போதையிலே மயங்கினேன். இவ்வுலகத்தை மறந் தேன். கோணமாமலையில் கோயில் கொண்டிருப்பவனே, ஒரு கம்பனை இப்போ ஆக்கு வித்தாயானல் உன் திருத்தலத் தின் தோற்றத்தை ஆயிரமாயிர மாண்டுகளுக்கும் அழியா இலக்கியம் ஆக்கித் தருவானே என ஏங்கியவாறே உட்கார்ந், தேன்.
அவ்வேளையிலே, மனத்தைப் பிளிந்து வரும் ஓசை, இத யத்தைப் பிய்க்குமோர் விசும்பல் ஒலி கேட்டது. யாருடை யது அத்துன்பக் குரல் என அறியாது விழித்தேன். அப்பொ. ழுது அப்பாறையின் மீது ஒரு மங்கை - இல்லை ஒரு தேவகன்னி உட்கார்ந்திருந்தாள். அவளின் திருவுருவைக் கண்ட பொழுது தான் ஒரு வேளை வள்ளுவர் 'அணங்குகொல் ஆய் மயில் கொல்லோ கனங்குழை." என ஒதினர் போலும், அழகைப் பன்டத்த பிரமன் அந்த அழகிலே என்றும் அழியாத் துன்ப;
37.

Page 30
மும் கலந்திருக்க வேண்டுமென நினைத்தானே அந்த எழி லரசி சோகத்தின் எல்லையைத் தாண்டி அதன் உச்சியிலேயே நின்ருள். வயது பதினெட்டுக்கு மேலிராது. செக்கச் செவே லென்ற நிறம். ஐரோப்பிய பாணியிலே உடை. ஏதோ பறி கொடுத்தவள் போல, முகபாவம், தடைப்படாத ஜீவ ஊற் றைப் போன்று கண்களில் வழிந்த கண்ணிர். இவையனைத் தும் கண்டவுடன் எனக்கு மெய் சிலிர்த்தது. ஏதோ இனம் தெரியாத உணர்ச்சி உந்தித்தள்ள அவளை நெருங்கினேன்.
இவ்வளவு நேரமும் என்னைக் காணுதிருந்தவள் என்னை நோக்கினள், உடனே அவள் சோகவதனம் மாறி அதிலே கோபம், வெருட்சி ஆத்திரம் தாண்டவமாடியது. வாயில் வந்தபடியெல்லாம் என் ஆன வைதாள்; தூற்றினுள்; நிந்தித் தாள். வஞ்சனையின் வடிவு ஆண். கொடுமையின் உருவம் ஆண், நன்றி கெட்டு நம்பிக்கைத் துரோகம் செய்யும் வர்க் கம் ஆண் குலம் பெண்களைத் தங்கள் காமப் பசிக்குப் புசிக் கும் ய்ேகள் அவர்கள் என்று ஏதேதோ பேசினுள். நான் செய்த கொடுமை ஆண் குலத்தில் பிறந்ததுதான இறைவா? எனப் பேசாது இருந்தேன். W
அவள் ஒருவாறு ஒய்ந்துவிட்டாள். எனக்கோ அவளின்
சோகப் புலம்பலின் காரணத்தை அறிய அடக்க முடியாத ஆவல் எழுந்தது பெண்ணே ஆண் குலத்தையே தூாற்று திருயே அது அவ்வளவு கெட்டதில்லையே’ எனப் பேச்சைத் தொடங்கினேன். ஆண் ‘குலமா தூய்மையானது? இன்று நான் ஏன் இந்தக் கோலத்திலே இருக்கிறேன் தெரியுமா?" எனப் பேசத் தொடங்கினள். அவள் வார்த்தைகள் ஒவ் வொன்றும் நெஞ்சின் அடித்தளத்தில் நின்று சோக மூச்சுடன் வெளிவந்தது. யான் அசையாது அவள் திருமுகத்தைப் பார்த்த வண்ணமே இருந்தேன்.
நான் ஒல்லாந்த நாட்டைச் சேர்ந்தவள். என் த கப்ப ஞர் இத்துறைமுகத்திலே பெரும்வேலையில் அமர்ந்திருந்தார். ஆகவே எனக்கு அடிக்கடி இங்குவரும் சந்தர்ப்பம் கிடைத் தது. இவ்விதம் ஒருநாள் துறைமுகத்துக்குச் சென்ற பொழுது ஒரு புதிய போர்த்துக்கேய நாட்டுக் கப்பல் வந்து நிற்பதைக் ண்டேன். அதைப் பார்த்துக் கொண்டே இப்பாறையின் மீது ஏறி வரும் பொழுது சற்றே கால் இடறிவிட்டது. ஐயோ! செத்தேன் என அலறிக் கொண்டே அறிவிழந்தேன்
ar ,

என் முகத்தை யாரோ வருடுவது போன்ற உணர்ச்சியிலே கண் விழித்தேன். என்ன வியப்பு யான் ஒரு இளைஞன் மடி யின் மீது சாய்ந்திருந்தேன். அவனே என்னை விழுங்கி விடு வது போன்று உற்று நோக்கிக் கொண்டிருந்தான். நானும் அவர் முகத்தை நோக்கினேன். என்னை மறந்தேன். இது ஒரு கண நேரம் தான். நான் பெண் தானே? இயற்கையான வெட்கம் கெளவிக் கொள்ள உடனே எழுந்தேன். கதையை வளர்ப்பானேன். காதலிலே கட்டுண்டோம். இடறியதால் கடலில் மாய்ந்திருக்க வேண்டிய நான் மாயாது தப்பியது அப் போர்த்துக்கேய இளைஞனல் அன் ருே? எனவே எனக்கு உயி ரளித்த உத்தமருக்கு என் உயிரையும் உடலையும் அர்ப்பணம் செய்ததில் என்ன ஆச்சரியம்?
எங்கள் அன்பைப் பிறர் அறிந்தனர். தாய் வெறுத்தாள் தந்தை வை தார். உற்ருர் நிந்தித்தனர். ஊரார் பழித்தனர் அவர் வேறு தேசத்தவராம், வேறு மதத்தவராம். அவர் போர் விர ராதலாலே தேசத்துக்குத் தேசம் செல்பவராம். என்னு டன் குடும்ப வாழ்க்கை நடத்த முடியாதவ ராம். எனப் பலப் பல சொல்லி என்னைத் துன்புறுத்தினர். காதலுக்குக் கட்டுப் Lin C) உண்டோ என யான் கலங்கினேன். என் அன்பின் ( வத்திற்காக என் தாயை, தந்தையை, உற்ருர் உறவினரை, ஏன் இந்த உலகத்தையே துறக்கத் துணிந்தேன். என் காத லன் என்னைக் கைவிட மாட்டான் என்ற நம்பிக்கை எனக்கு உறு துணையாக இருந்தது.
இரண்டொரு நாட்களாக நான் என் காதலனைக் காண லில்லை. மூன்ருவது நாள் எனக் கொரு கடிதம் கிடைத்தது அதில் இரண்டே வரிகள் . "என்னை மறந்து விடு யான் இன்று புறப்படுகின்றேன்!” ஐயோ! இது என் காதலன் அனுப்பிய ஒலையா? இதை விட "உன் உயிரை மாய்த்து விடு, என எழுதியிருக்கலாமே. யார் யாரை மறுப்பது? உடல் உயிரை மறப்பதா? எனக்கு உயிர்ப் பிச்சை தந்த தெய் வத்தை நான் மறப்பதா? இனியும் எனக் கொரு வாழ்வா? பல்வாறு கதறினேன். அவரைக் கண்டு கேட்பதற்காக வில் விழுந்து கதறுவதற்காக இப்பாறையடிக்கு ஓடி வந் தேன். ஆஞல் இங்கு கண்ட- காட்சியோ என் இதயத்தைச் கக்கு நூருக உடைந்தது. நீல நிறக் கடலிலே என் காதலன் வந்த கப்பல் விரைவாகச் சென்று கொண்டிருந்தது. காற்
39

Page 31
ருேடு வந்தவன் திரும்பவும் காற்ருேடு செல்கின்றன், இங்கு ஒரு பேதையின் இதையத்தைச் சுக்கு நூருக்கிவிட்டு. நான் என் செய்வேன்? திரும்பவும் வீடு செல்ல முடியுமா? ஊரார். உறவினர் பழிக்க பெற்றேர்கள் ம்னம் வருந்த யான் வாழ்ந்து தான் என்ன பயன்? எனக்கு இனி நிம்மதி சாவில் தான் என்று என் இதயம் ஓலமிட்டது. என் காதிலே உலகத்த வர் எல்லோரும் பழிப்பதும் ஏசுவதும் ஒலித்தது. யான் என்னை மறந்தேன். என் வாழ்வு மலர்ந்த இடத்திலேயே " மாயட்டு மெனக் குன்றினுச்சியில் இருந்து கடலில் பாய்ந்தேன். காத லன் அணைப்பை இழந்த நான் கடலின் அணைப்பிலேயே கட் டுண்டேன். எனக்கு இக் கதியை தந்தது ஒரு ஆணல்லவா? அப்படி இருக்க இதயமே இல்லாத ஆணினத்தை தூற்று வதில் என்ன பிழை"யென விம்மிக்கொண்டே அவ்விடத்தை விட்டெழுந்தாள். நான் அவளைத் தொடர்ந்து "தனியொரு வன் செய்த பிழைக்காக ஆண் குலமே இழிந்தது எனக் கொள்ளாதே" என உரக்க என்னையும் அறியாமல் கூவி னேன்.
"என்னப்பா பகற் கனவு சுாண்கிருய்" என்று என் நண் பன் கேட்பது என் காதிலே ஒலிக்க திடுக் குற்று எழுந்தேன் நண்பர்கள் அளை வரும் திருக் கோயிலை விட்டு வெளியே வந் துகொண்டிருந்தனர். அவர்கள் முகங்களிலே மகிழ்ச்சியும் சாந்தமும் மிளிர்ந்தது. ஆனல் என் உள்ளத்திலே இனம் தெரியாத ஒரு சோகம் கவ் விக் கொண்டது. ஒரு பெருமூச் சுடன் எழுந்து கடலை நோக்கினேன். எழிலையே கொண்டு நிற்கும் கடலா ஒரு மங்கையிள் வாழ்வை முடித்தது? அழகைக் கொடுத்த இக்குன்று மா ஒரு தூய காதலைச் சாகடித் தது? முதலில் எனக்கு நீலகண்டனை நினைவூட்டிய நீலக்கடல் இப்பொழுது அவன் உண்ட கொடும் ஆலகாலத்தை நினைவூட் டியது. அதற்கு மேல் என்னல் நிற்க முடியாது திரும்பினேன். உள்ளச் சாந்தியைத் தேடி எம் பெருமான நாடிய நான் மனத் திலே என்றும் மறக்க முடியாத சோகத்தை ஏற்றிக் கொண்டு திரும்பினேன்.
40

நச்சுக் கோப்பை
- பாலன்
னுலா தேவி மன நிம்மதி யின்றிப் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கிருள். அவள் அநுராதபுரத் 9۔ திலிருந்து ஈழத்தை யரசாண்ட சோற நாகரின் பட்டத்து இராணிதான். சோற நாகனுக்கும் எந்தத் துன்பமும் வந்த தாகத் தெரியவில்லை. மேலும் சோற நாகன் அனுலாவைத் தன் உயிராகவே கருதி வருகிருன். ஆகவே, கணவன் மூல மாக, அவளுக்குத் துன்பம் ஏற்பட நியாயமில்லை. அவள் இரு தயம் கனத்தது. உடல் வெந்தது. தண்மதி காய்ந்தது அவள் தவித்தாள். மாரன் தான் மலரம்புகளால் அவளை வருத்துகிமுன், கட்டிய கணவன் மலைபோல இருக்கிருன் அவன் அனுலாவைப் பிரிந்த நாளே இல்லை எனலாம்.
மாலை போய், நடு யாமம் வருகிறது. அரசியற் கருமங் களை முடித்துக்கொண்டு, சோற நாகன், அந்தப் புரத்திற்கு விரைந்து செல்கிருன். அனுலாவின் லீலைகளில் எப்பொழு தும் சொக்கிப் போகும் சோற நாகன், இன்று அளவு கடந்த மகிழ்ச்சியுடன் அவள் வந்து தன்னைக் கட்டித் தழுவுவாள் என்று நினைத்துக் கொண்டு செல்கிருன் அனுலாவின் அறை பூட்டப்பட்டிருந்தது. அரசன் கதவைத் தட்டினன். பதி லில்லை. அவள் பெயரைக் கூவிஞன். அனுலாவுக்குச் சோற நாகன் கூப்பிடுவது கேட்டது. எத்தனை தாளைக்கு இவனது தொல்லை யென்று சிந்தித்தாள். பதிவிரதை யெர்ருத்தி பரபுருஷனின் உடலைத் தொடுவதை எவ்வளவு வெறுப் பாளோ, அவ்வளவு வெறுப்பு சோற நாகன் வரவால், அனு லாவுக்கு உண்டாகியது. திட்டம் ஒன்று உருவாகியது அனுலா தன்னைச் சமாளித்துக் கொண்டாள். மன்னனுக்குத் தன்னைக் காட்டிக் கொடுத்தால், கொன்று விடுவாடு கதவை விரைவாகத் திறந்து, தூக்க மயக்கத்தால் தன் இத்துணை நேரம் தாமதித்து விட்டதற்கு மன்னிப்புக் கோரி ஞள். மன்னன் எதிர்ங்ார்த்தபடி அன்று அவள் லீஜலகள்
41

Page 32
அதிகமாயிருந்தன. அனுலா மகுடி ஊத, மன்னன் பாம். பாகி ஆடினன்
பாவம், மன்னன். தான் பிள்ளை யார் பிடிக்க, அது குரங்: காகி முடிந்த கதை அவனுக்குத் தெரியாது. தான் கிணறு, வெட்டப் பூதம் புறப்பட்டதை அவன் அறியான். அனுலா வுக்குச் சித்திர வேலைப்பாடமைந்த ஒரு சிறந்த படுக்கை செய்ய விரும்பிய சோற நாகன், அன்றுதான் வாதுகன் என் னும் பிரசித்தி பெற்ற தமிழ்த் தச்சனை அழைத்து வந்தான். சோற நாகனும் வாதுகனும் படுக்கை எப்படி யிருக்க வேண் டும் என்று விவாதித்தார்கள். வாதுகன் வாலிபன்; கட்டழ. கன், சோற நாகனுக்கு அயலிலிருந்த அனுலா தேவி தன்னைப் பறி கொடுத்துவிட்டாள். வாதுகன் அரண்மனையிலிருந்து திரும்பிய பொழுது, அனுலாவின் இதயத்தையும் கொண்டு சென்று விட்டான். அவனை நினைத்துத் தான் வாதுகன் நினைவு அவள் அகக் கண் முன் தோன்றிச் சித்திரவதை செய்தது. அவள் வாதுகனை யடைவதற்குக் சோற நாகன் தடையாயிருப் பதை உணர்ந்தாள். சோற நாகன் படுக்கை யறையிலே, மது உண்ட வண்டு. திட்டத்தை நிறைவேற்றத்தக்க தருணமிது. அனுலா தன் தாகந் தீர்ப்பதற்குப் பணிப் பெண்ணை அழைத் துப் பால் எடுத்துவரச் செய்தாள், இரு கிண்ணங்களில் வார்த்தாள்; சேர்க்க வேண்டியதைச் சேர்த்தாள், கனவ. னும் மனைவியும் பால் அருந்தினர். இந்த நேரத்தில், சோற, நாகனுக்கு, பாலிற் கலந்த நஞ்சு புலப்படும் என்று எதிர் பார்ப்பது வீண். சிறிது நேரத்தில், அனுலா அவலக் குரல். கொடுத்தாள், கணவன் திடீரென இறந்து விட்டதாய்க் கூறி: ஞள். அனுலாவின் தடை நீங்கிற்று.
வாதுகன் கட்டில் செய்து வந்து கொடுத்தான். அனுலா பெற்றுக்கொண்டாள். அதே படுக்கையை, தானும் வாது, கனுமே முதலில் உபயோகிக்க வேண்டும் என்பது அனுலா வின் ஆசை. வாதுகனுக்குத் தன் காதலைத் தெரியப் படுத்தி, ஞள். வாதுகன் முதலிற் பயந்தான். பின்பு, அவளின் காத, லனுகச் சம்மதித்தான். "கரும்பு தின்னக் கூலியா வேண் டும்?' வாதுகன் சிறந்த சைவன்; தினமும் கோயிலுக்குச் சென்று வருபவன். அவன் இல்லறக் கிழத்தியாய் விட்ட அனு, லாவும் அவனை மகிழ்விப்பதற்காகச் சைவக் கோவிலுக்குச். செல்ல ஆரம்பித்தாள். வாதுகனுக்குப் யோகம் அடித்து,
42

விட்ட தென்று எல்லாரும் கதைத் கார்கள். அனுலாவின் உணர்ச்சி வேகம் நிறைந்த காதற் பிரவாகத்திலே வாதுகன் திளைத்தான்;
கோவில் அர்ச்சகர் நிலியா என்னுப் பிராமணர் இத் தமிழ்ப் பிராமணர் தென்னிந்தியாவிலிருந்து அப்பொழுது தான் வந்திருந்தார். வயது முப்பதிற்கு மேலிராது. கட்டு மஸ்தான, வாளிப்பான உடலுடையவர். அவர் விபூதியும் பிரசாதமும் கொணர்ந்து கொடுக்க அனுலாவின் இதயம் படபடென அடித்துக் கொண்டது; கை பதறிற்று. பிரா மணரின் கையைத் தட்டியே விட்டாள். பி ரா ம ன ர் நிமிர்ந்து பார்த்தார். கண்களும் கண்களும் சந்தித்தன கதைத்தன. அனுலாவின் காதல் நோக்கைப் பிராமண ரறிந்து கொண்டார். அந்த வினடி தொடக்கம் பிராமணர் நடக்கும் முறையைக் கொண்டு, தன் காதலுக்கு அவர் சம்ம தத்தை அனுலாவும் அறிந்து கொண்டாள். அவர்கள் காதல் நிறைவேற வாதுகன் தடை. அனுலாவுக்குத்தான் பழைய அனுபவம் இருக்கிறதே. ஒரு நஞ்சுக் கோப்பை வாதுகனின் உயிரைக் குடித்து விடுகிறது.
அனுலா நிலியாவை மணந்து கொள்ளுகிருள் மன மான புதிதில், அனுலா நிலியாவின் மேல் உண்மையான காதலே வைத்திருந்தாள். ஆணுல் காலஞ் செல்லச் செல்ல பழையபடி புளிப்பு வந்துவிட்டது. வாலிபப் பருவமடைத் திருந்த சிங்கள இளவரசன் மகலன் தீசனென்பவனிடத்தில் அனுலா காதல் கொண்டு விட்டாள். பின்பு என்ன? நச்சுக் கிண்ணந்தான் இருக்கிறதே? நிலியாவின் மரணச் செய்தி பரவியது.
எல்லாரையும் எல்லா நாளையும் ஏமாற்ற முடியாது இந்தக் குட்டு ஒரு நாளைக்கு வெளிப்பட்டுத்தானே தீர வேண்டும். மக்கள் யாவரும் அனுலாவைச் சந்தேகிக்கவும் தூசிக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். மகலன்தீசன் அனுலா வைத் தன் வாளுக்கு இரையாக்கி விட்டு, மக்கள் ஆசியுடன் ஆட்சியைத் தொடங்கியதாக மகாவம்சம் கூறுகிறது.
43

Page 33

கவிதைக் கோவை
கவிதை என்பது ஒரு கலை; ஒரு சிருஷ்டி சாதனம். அது மக்களிடையே இயல்பாகவே நிலவி வருகிறது. அழகை வடித்துக் காட்டுவதே அதன் தொழில். அதுவே அதன் இலட்சியம். கவிதை என்பது உண் மையும் ஆகாது; ஞானமும் ஆகாது. ஆனல் உண் மைக்கு அழகைக் கொடுப்பது; ஞானத்திற்கு ஒழி யைக் கொடுப்பது. ஒன்றைப் பார்த்தால், அது போன்ற ஒரு மாதிரியைத் திரட்டுங் குணமும் தாள இயல்பு படிந்த சந்தப் போக்கில் ஈடுபடுங்குனமும், கவிதையின் ஆரம்பத்துக்குரிய காரணங்களாக, மனித இயல்பில், பொருந்தி யிருக்கின்றன.
உண்மைக் கவிஞன் யார்?-அவனே நீதிச் சுரங்கம், கற்பனைக் களஞ்சியம், உணர்ச்சிச் சிற்பம், வருங் கால ஞானி, மொழியரசு, புரட்சி வீரன், இயற்கை யோடு ஒன்றி வாழ்கின்ற, இயற்கைக் கொடியே தாங்கி நிற்கின்ற அருளாவேசம் கொண்டி மாபெரும் மனித தெய்வம்!
-கவிஞன் ஷெல்லி.

Page 34
என் ஆசிரியன்
("அமுது”)
கந்தானை மலையடுக்கின் உக்சியிலே ஏறிக்
கவிஞன நீரோடை மலை குலங்கள் நடுவில்
நந்தாத கலையரசின் நிலைய மெலாங் கண்டு
நானிருந்த வேளையிலோர் நடுங்குகுரல் கேட்டேன்.
எண்ணுத எண்ணமெல்லாம் ஒரு கோடி எண்ணி
இதயத்தில் மனக்கோட்டை எழுப்பிடுமவ் வேளை
கண்ணுலே என்னை மிகக் கணிவினெடு நோக்கிக்
கை நீட்டி அழைத்தானக் காலனென்ற ஆசான்.
வாய் மூடிக் கை கட்டி அவன்பின்னே சென்றேன்
வழிநீளம் அவன் விரித்த மரண வலை கண்டேன் ஈபோல அதில் விழுந்த மனிதகுலம் காட்டி
"இவ்வுலக வாழ்க்கைதனின் இயல்பினைப்பார்" என்ருள்.
பொன்னலே சோடித்து வாசனைகள் பூசிப்
பொட்டிட்டு மெல்லென்ற புடவைகளு மனிந்து எந்நாளும் இவ்வுலகம் நிலைக்குமென்ற கன்னி
இருவிழியும் நீர் சொரிய மரணவலை வீழ்ந்தாள்.
ஆடுவதிற் பாடுவதில் அருங்கலையில் வல்லாள்
ஆடவர்கள் கண்களுக்கோர் அதிமதுர விருந்து
சோடிகட்டி ஒரு வாரம் சுகமாக வாழ்ந்தாள்
சோக மொடு பிடிபட்டாள் மரண வலையாலே.
சோற்றுக்கோ பஞ்சமில்லைக் காசு பணம் உண்டு சுகமாக வாழ்ந்துவர மாடமனை உண்டு
கூற்றவனை வெல்லுதற்கு வைத்தியரும் உண்டு
குறையொன்று மில்லையென்ற கோமாளி வீழ்ந்தார்.
44

உண்ணுமல் தேடியவர் பசித்திருக்க உண்டோர்
ஒப்பற்ற அறுசுவையில் தசைசுமந்த செல்வர்
சுண்ணும்பு கொடுத்தறியார் புகழுக்கே ஈந்தோர்
சோபனஞ் சொல் சேர்ப்பட்டம் ஆவலுடன் பெற்ருேர்,
ஆற்ருேர மரம்போலப் பொலுபொலென வீழ்ந்தார் ஆரணங்கும் பாலர்களும் அகதிகளும் மாய்த்தார்
காற்றடித்தால் மரங்களிலே கனிவகையும் உதிரும்
காலமற்ற காய்பூவும் கனியோடு வீழும்:
நேற்றுவயல் உழுத வரும் இங்குவந்து விட்டார்
நெல்லுவிதை தூவியவர் இங்குவருவார் பார்
நாற்றுநடும் கமக்காரன் நாளைக்கு வருவார்
நானிலமோர் நாடகத்தின் மேடையடா தம்பீ!
சூத்திரத்தில் ஆடுகின்ற பாவையடா நீ தான்
சுற்றுபவன் நில்லென்ருல் நீயென்ன செய்வாய்
பாத்திரத்தை தூய்மையோடு பேணிக்கொள் அங்கே
பயிராக்கு புண்ணியங்கள் பலனை அறுப் பாயே.
கவனிக்க வேண்டியவை
1. நல்ல யோசனைப்படி நடக்காவிடில் அதற்கும் கெட்ட யோசனைக்கும் வேறுபாடில்லை.
2. தனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டும் மனிதன் பேச ஆரம்பித்தால், உலகில் பூரண நிசப்தமே நிலவும்.
3. நீ உயர்ந்த மனிதனுக விரும்பின், யாண்டும் இழிந்த மொழிகளைப் பேசாதே.
4. துன்பம் விளைவிப்பவர் இழிந்தவரே
45.

Page 35
தெய்வமோ?)
-க. கணபதிப்பிள்ளை
பித்தனெனக் கேட்டிருந்தும் பிரம்படியைப் பெற்றிருந்தும் செத்தபிணக் காட்டிலாடும் சிவனுமுன்றன் தெய்வம்மோ? பத்தருக்காய் அருள் புரியப் பலகோலங் களைப்பூண்டு நித்த நித்தம் நடனமிடும் நிமலணெங்கள் தெய்வம்மே!
மெச்சு பல வர்ணமிந்த மேதினியி லேயிருந்தும் பச்சைவர்ண மேவிரும்பும் பார்வதியுன் தெய்வம்மோ? இச்சகங்கள் முழுவதையும் ஈன்ற தன்மை எமக்கருளப் பச்சை பூண்டு பயமொழிக்கும் பார்வதியெம் தெய்வம்மே!
விண்ணுலகத் தமுதிருக்க வேறுலகிற் களவெடுத்து வெண்ணெயுண்டு மகிழ்ந்திருக்கும் கண்ணனுமுன்
தெய்வம்மோ? எண்ணமின்றி ஏழைகட்காம் வெண்ணெ யெலாம்
ஒளித்துவைத்தோர் கண்யமின்மை காட்டிவைத்த கண்ணனுமெம் தெய்வம்மே!
பானைவயிற னயிருந்தும் பலகையுடை யனயிருந்தும் பூனையஞ்சும் எலியை நண்ணும் பிள்ளையாருன் தெய்வம்மோ? ஆனைமுகத்த ஞயிருந்தும் அரணின் மைந்த ஞயிருந்தும் தானே விடுத் தெலியைநண்ணும் தந்திமுகமெம்
தெய்வம்மே!
தேவமாதர் பலரிருக்கத் திணைப்புனத்தில் வள்ளிதனை ஆவலாக மணம்புரிந்த அறுமுகனெம் தெய்வம்மோ? தேவநாட்டிற் சாதியில்லைச் செகமதிலே ஏணிதென்று காவனிக்கி மணம்புரிந்த கைவேன்முருகன் தெய்வம்மே!
46

இன்பத் தமிழ்
( சி. தில்லைநாதன் )
தென்றல் வீசிவரும் இன்பங்கண்டே அந்தத் தேன் மலர்ச் சோலையில் நா னிருந்தேன்-என்றும் துன்றியே தேனைச் சுவைத்திட்ட வண்டுகள் தூய இசைபாடித் துள்ளினவே.
இன்ப சுகந்தருந் தென்றலும் அங்குள எழின்மலர் மேவிடு வண்டுகளும்-குன்ரு. அன்பிற் கலந்து மகிழ்ந்து ரையாடிய அவ்வொலி கேட்டு மகிழ்ந்திருந்தேன்.
தேன் மிக உண்டு வெறிகொண்ட வண்டுண். தேனுக்கு நிகரேது மில்லையென்று-அங்கு தான்வந்த தென்றலைத் தாவி நகைசெய்து தன்னுரவாரம் பறந்ததுவே.
சோலை மலரின் சுகந்த மளாவியே
சொட்டிடும் தேனெடு வந்த தென்றல்-தான். வாரியே வந்திட்ட வாசனைக்கே நிகர்
வையத்தி லேதென்று பேசியதே.
தருக்கம் வளர்ந்து தகராறு முற்றியே தமக்குள்ளே சண்டை யிடும்வேளை-வந்து உருக்கும் தமிழ்க்கீதம் ஒன்றினக் கேட்டதும், ஒன்ரு ய்ச் சுவைத்து மகிழ்ந்தனவே.
பண்ணிசை செந்தமிழ்ப் பாடலுக்கே நிகர் பகர இனியநற் றேனுமுண்டோ- வண்டே உண்மையுரைத்திடு என்றது தென்றலும் உள்வெறி நீங்கியே வண்டுரைக்கும்.

Page 36
"மலர்களும் பற்பல கண்டுவந்தேனங்கே
மருவிடும் தேன்சுவை உண்டுவந்தேன்- என்றும் மனமள்ளும் தமிழோசை மாண்பினைக் கண்டிலேன்
வையத்தி லிஃதுண்மை என்று கண்டேன்.
எல்லையில் நல்வளம் எய்துமின்பம் தமிழ் சொல்கையில் கேட்டவர் சொக்கு மின்பம்-இதை வல்ல சுவைஞர் சுவைத்திடு வாரெனில் வண்டும் சுவைத்திட வல்லதுவோடு
உண்மை உரைத்தனை ஒகோவண்டே தமிழ் வண்மை உணர்ந்தனம் ஆகா வண்டே-இசை தன்னைச் சுமந்து மகிழ்ந்ததன்றித் தமிழ்க் கன்னல் சுவ்ைத்து மகிழ்ந்ததில்லை.
சண்டை மறந்தன. சாந்தி யடைந்தன தமிழிற் கலந்திசை பாடிநின்ற-அந்த
வண்டொடு தென்றலும் வண்டமிழுக்கிணை வையத்திலில் லென்று வாழ்த்தினவே.
"சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே துஞ்சிடோம்;-இனி-அஞ்சிடோம்: எந்த நாட்டினும் இந்த அநீதிகள் ஏற்குமோ?-தெய்வம்-பார்க்குமோ?"
"சுதந்திரம் வேண்டுமா? புத்தகக் கல்வி வேண்டுமா?என்ற கேள்வி எழும்போது, சுதந்திரமே புத்தகக் கல்வியைவிட, ஆயிரம் மடங்கு பெரியதென்று கூருதவர் யார்?"
48

வைகறை
(பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை)
கடன் மே லெழுந்தான் காற்றுத் தேவன் திடமாக நின்றே திசையெலாம் நோக்கினன் இடமெங்கு மூடி இருந்திடு பனித் திரைப் படல மதுத னைப் பாங்கர்க் கண்டனன்.
உடனே யதனை உற்றுமே நோக்கி மடமே யின்னுமோ மாதுயி லென்று சடசட வென்னத் தட்டி யெழுப்பித் திடமுடன் விரைந்து சென்றுசேண் படர்ந்தான்:
புரவிபோல் நீர் மேற் பெருமித மாக நிரையா நின்றிடும் நாவாய் தமக்கு வரையா வன்பொடு வணக்கம் செலுத்தி விரைவா யெழுப்புவன் மாலுமி மாந்தரை.
விடிந்தது பொழுது துயின்றது போதும் படிவா யெழுந்தே பாய்தமைப் பரப்பி நெடிதே நீர் செலுந் துறைதனை நாடி மடியா வுளத்தொடு வழிச்செலீ ரென்றனன்.
நின்ற வ ராங்கு நீங்கிய பின்பு துன்று தரையதைத் துகளற நோக்கிச் சென்றுமே பகர்வன் செகத்திரே விழீமின் நன்முய்ப் புலர்ந்தது பொழுதினி யெழுமின். வானை யளாவி வனப்புட னுேங்கும் கானை நோக்கிக் கவினெடு மொழிவன் ஊன மிலா வுன் னுெலிதனைப் பெருக்கி ஈன மில் விலைமலி கொம்பரை யுயர்த்தாய்.
காட்டுச் சேவலை நாடி யெழுப்பிக் கூட்டிய சிறகரைத் தட்டி விரித்து
49

Page 37
நீட்டிக் கழுத்தை நிரப்பிய ஒலியொடு பாட்டுப் பாடெனப் பணித்துச் சென்றனன்,
வீட்டுச் சேவலை விரைவா யழைத்தே ஒட்டுநின் றுாக்க முடனே விழித்திடு வீட்டிக் கங்குலைக் கதிரவன் வந்தான் கூட்டித் தொண்டையைக் கூவுதி யென்றனன்
நெல்லு விளைந்திடு நிலத்தினை யடைந்து சொல்லுவன் காதிற் சொன்றிசேர் பயிர்க்கே எல்லவன் விரைவி லெழுந்திடு மவற்கு மல்லார் நுந்தலை தாழ்த்தி வணங்குதிர்.
ஓங்கிக் கோயிலி னுயர்ந்து மனிதனைத் தாங்கு கோபுரம் சார்ந்தே கூறுவன் நீங்கா வைகறை நேரம் வந்தது பாங்கா யியம்புதி பரமனின் பூசனை.
கோயின் மணியை யெழுப்பிய பின்னர் தாவி ஊர்ந்தான் தரைவழி யாக அப்தோ தாங்கண் ணமர்ந்து படர்ந்து நீள்பொழி லாக நெருங்கி நின்ற சவுக்க மரங்கள் சாய்ந்து மூடிய சுடலை யொன்றனைக் கண்டனன் கலுழந்தான் கருதி நோக்கித் தலைதனை யசைத்துத் துயிலுன ராதே நன்று நீ தூங்கு வேளை யீதில் விழித்தல் தகாது கால மின்னும் சால வுண்டு மாவும் புள்ளு மருவு மாந்தரும் இனிது களித்தே இன்புற்று நெடுநாள் வாழுதல் வேண்டும் யானு மவர்தமக் குயிரா நின்றே உயிர்த்தல் வேண்டும் எல்லோரு மின்புற்று வாழக் கண்டு யானு மின்பற வேண்டு மிதுவே என்றனன் வாழ்க்கைக் குறிக்கோ ளென்று வானு டெழுந்து நோக்கிப் பார் மீ தெங்கணும் பரந்தனன் படர்ந்தே

இலக்கியச் சோலை
"இலக்கிய நூல்கள் நாட்டின் செழும் பருவங்களி லேயே பெரும்பாலும் தோன்றும் இயல்புடையன வெனினும், வளர்ந்து தேயும் பருவ இயல்பு அவற் றிற்கில்லை. ஆண்டுகளோடு பருவங்கள் தோன்றித் தோன்றி மறையும். பருவ நலனைத் துய்த்து மயங் கும் உயிர்கள், நலன் மாறித் தேய்ந்து மறையும்; ஊழியூழியும் பெயரும்; ஆனல் இலக்கிய நூல்கள் தம் நலன் மாருது நிலைபெற்று நிற்கும். தோன்றி மாறி மறையும் பொருள்களும் உயிர்களும் மேவிடும் இப்பாரில், வேண்டியவற்றைப் பெறலாகாத இவ் வுலகில், துன்பந் தோயாத இன்பத்தை எய்தலாகாத சமூகத்தில், சாயாத நலன் நிரம்பக் கொண்ட இன்ன பொருள்களையும் உயிர்களையும் நல்கும் இலக்கியம் கற்பகமேயாகுமன்றே"

Page 38

ASLqLALALAAA LqALAAA LLA ALAAiALALALAALLLLLAALLLLLALALAL ASALALALALAAAAALLALA LAALA AMLALALALLALLAMA LALALALALLALALALM LAAAAALLALAY
திருமாலை
-மாலன்பன்
KKESLLLLLAALLLLLAAAAAA ALA ALALASLLALAAAMLLLLLLLLAAAASLLLAAA AAALLLLLLLLeeSLLMLALAALLLLLAAS AAALLAAAAALLAALAAAAALLAAAAALLALMALLAqAAAA
ருமாலை தமிழ்க் கன்னிக்குக் கிடைத்த ஒரு அரும் தி பெறல் மாணிக்கம்; பல்லவர் காலப் பக்திப் பிரவா கம் தமிழுக்கு விட்டுச் சென்ற விலை மதிப் பற்ற அணி. உரு வத்திற் சிறியதாய், நாற்பத்தைந்து பாடல்களேயுள்ள போதும், சுவையின் தமிழிலுள்ள எந்தப் பக்தி பாடும் பிரபந் தத்திற்கும், அது இளைத்ததல்ல. அரங்கத்தானுக்கும் அவனடி யாருக்கும் தொண்டு செய்த தொண்டரடிப் பொடியாழ் வார் தமிழுக்கும் தொண்டு செய்து சென்ருர். பக்தி மார்க் கம் பிறந்த தமிழகத்திலேயே, இந்நூல் இத்துணை சிறப்பாகப் போற்றப்படல் இதன் சிறப்பை யுணர்த்துகிறது. தொண்ட ரடிப் பொடியின் வாழ்க்கை யநுபவங்களை யெடுத்துக் கூறும் இந் நூல், சாதாரண மக்களுக்கு வழி காட்டியாயமைந்திருக் கிறது. தொண்டரடிப் பொடியாழ்வார் உலக மாயையில் கட்டுண்டு வாழ்ந்து தடுத்தாட் கொள்ளப்பட்டராகவே காணப்படுகிருர் . அவரது பழைய வாழ்க்கை, வைணவ சம் பிரதாயக் கதைகளால் மட்டுமன்றி, அவர் பாடலிலேயே தோன்றுகிறது.
'சூதனுய்க் கள்வனுய்த் தூர்த்தரோடிசைந்த காலம் மாதரார் கயல் கண்ணென்னும் வலையுள் பட்டழுந்து வேனை,
அவர் நெஞ்சம், "இரும்புபோல் வலிய நெஞ்சம், மரங்கள் போல் வலிய நெஞ்சம்” விஷ்ணு அவர் அறிவில் புகுந்து நின்று "போதரே யென்று கூறித் தன் பால் ஆதரம் பெருக வைத்தார். தி ரு மா லைப் பிரபந்தமே, தொண்டரடிப் பொடியை விஷ்ணு மாயைத் துயிலிலிருந்து எழுப்பியதைக் காட்டுகிறது என்று வைணவ சம்பிரதாயம் கூறும்
திருமாலின் மேல் தொண்டரடிப் பொடியாழ்வார் கொண்ட பக்தியே திருமாலையாக உருவெடுத்தது. திருமாலை என்று நெஞ்சிலும் நாவிலும் வைத்திருந்தவர் இப் பெரியார்,
5

Page 39
திருமாலடியார்கள் அநேகமாக வேங்கடத்தையும் அரங்கத் தையும் போற்றினர். இவர் அரங்கத்தானை மாத்திரமே பாடு கிருர். இவர் இதயம் அரங்கத்தால் நிறைந்திருக்கிறது. அவர் பரடல்கள் சிலவற்றில், அவன் திருவுருவும், அவற்றின் மேல் தொண்டரடிப் பொடியாழ்வார் கொண்ட ஈடுபாடும் புலனுகின்றன;
"பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண் அச்சுதா அமரரேறே ஆயர் நம் கொழுந்தே யென்னும் இச்சுவை தவிர யான்போ யிந்திரலோக மாளும் அச்சுவை பெறினும் வேண்டேனரங்கமா நகருளானே' "குடதிசை முடியைவைத்துக் குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி கடல்நிறக் கடவுளெந்தை யரவணைத் துயிலுமா கண்டு உடலெனக் குருமாலோ வென்செய்கே னுலகத்தீரே" "கனியிருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள், பணியரும்பு திருமாலோ" இப்பாடல்கள் உணர்ச்சியின் ஆழத்திலிருந்து பிறக்கின்றள. அன்பு மிக உயர்ந்தபடியிலிருந்தால், உதவி அல்லது தொண்டு செய்ய மனம் எப்போதும் விழையும் எவ்வளவு தான் செய், தாலும், செய்வபருக்குத் திருப்தி ஏற்படாது இதையுணர்ந், தால், தொண்டரடிப் பொடியின் அடுத்த பாடலுக்கு. அர்த்தம் விளங்கும்.
போதெல்லாம் போது கொண்டுன் பொன்னடி புனையமாட்டேன். தீதிலா மொழிகள் கொண்டுன் திருக்குணம் செப்பமாட்டேன். காதலால் நெஞ்சமன்பு கலந்திலேன்'
தொண்டரடிப் பொடிக்கு விருப்பமான தொண்டு என்ன, அவர் செய்த தொண்டு என்ன என்ற கேள்விகளுக்கு மேலே, விடை காணப்படுகிறது அவற்றைக் செய்வதில், அவருக் குள்ள ஆசையும் புலனுகின்றது. இவர் செய்யாவிடின், தான் ஏன் பிறந்தேனென்றே வருந்துகிருர். அரங்கத்தானின் சேவைக்குத் தன்னே அர்ப்பணித்த, தொண்டர்களுளொருவ ராகிய இவர், அவர்களியல்பைப் பாடுவத மூலமாகவே, தன் இயல்பையும் புலப்படுத்துகிருர்,
*மேம்பொருள் போகவிட்டு மெய்ம்மையை மிக வுணர்ந்து, ஆம்பரிசறிந்து கொண்டு ஐம்புலனாகத் தடிக்கி
52

காம்பறத் தலைசிரைத் துன்கடைத் தலையிருந்து வாழும் சோம்பரை யுகத்திபோலும் சூழ்புனலரங்கத்தேேன"
இத் திருமாலடியாருக்குப் பெரு வருத்தம் இராமனுக்காகச் கடலை இறைக்க முற்பட்ட அணில் செய்த தொண்டு கூட தான் செம்யவில்லையே என்று
"குரங்குகள் மலையை நூக்கக் குனித்துத்தாம் புரண்டிட்டோடி தரங்க நீரடைக்கலுற்ற சலமிலா அணிலம் போலேன்' உலக வாழ்க்கையைப் பொறுத்தவரை, தொண்டரடிப் ஒரு துறவி. அவர் "ஊரிலேன், காணியில்லை, உறவு மற்ருெரு வரில்லை யென்று பாடுகிருர், ஆணுல் அரங்கத்தான் தனக்கு இன்னும் கதியருளவில்லையே என்று கதறுகிருர். இக் கதறல் கல் நெஞ்சையும் கரைத்துவிடுமே, இவற்றிற்கு உருகாதார் உருகா தாரே.
ஆழ்வார் உய்யும் வழி கண்டு கொண்டார். உலகம் பாழ்ங் கிணற்றில் விழப்போகிறது. அதற்கு உணர்வே இருப்பதாய்க் காணவில்லை. தனது கதியை நோக்கி, அது கவ லைப்பட்டதாயில்லை. உலகம் சிற்றின் பத்தில் அமிழ்ந்திக் கிட க்கிறது. மறுமையைப் பற்றிய கவலையோ, செத்த பின் வை குண்டம் போவதைப் பற்றிய எண்ணமோ, சாதாரண மனி தருக்கு இல்லை. ஆகவே, இவர் சில பாடல்கள் வழியாக, உலக மக்கள் கடைத்தேற வழி காட்டுகிருர்.
"பெண்டிரால் சுகங்களுய்ப்பான் பெரிய தோரிடும்பை பூண்டு உண்டிராக் கிடக்கும்போது உடலுக்கே கரைத்து நைந்து
...தொழும்பர் சோறு கக்குமாறே" *மறம் சுவர் மதிளெடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு புறம் சுவரோட்டை மாடம் புரளும் போதறியமாட்டீர் .புறஞ்சுவர் கோலஞ்செய்து புள்கெளவக் கிடக்கின்றீரே'
"மற்றுமோர் தெய்வமுண்டே மதியிலா மாளிடங்காள்"
"சிலையினுலிலங்கை செற்ற தேவனே தேவனுவான்'
W திருமாலுக்கு மாரு அடிமையாவதே இவர் காட்டும் வழி.
பல்லவர் கால நாயன்மார், ஆழ்வார்களில் இறைவனடி
யார்களையும் இறைவனுகப் போற்றியவர்கள் பலர். சுந்தர
மூர்த்தி நாயனுர், திருமங்கையாழ்வார், சேரமான் பெருமா
ஞயஞர் என்போர் இவர் க்ளுள் முக்கியமானவர்கள். ஆனல்
53

Page 40
திருமலையாசிரியருக்கே தொண்டரடிப் பொடி ஆழ்வார் என் னும் காரணப் பெயருண்டாகி விப்பிரநாராயணர் என்னும் அவர் இயற் பெயரையும் மறைத்து விட்டது. இறைவன் முதற் சாதியினராகிய பிராமணருக்கு அருளிச் செய்தானும்:
* இழிகு த்தவர்களேலு மெய்யடியார்களாகில் தொழுமினீர் கொடுமின் கொள்மினென்று நின்ணுேடுமொக்க வழிபடவ்ருளினுய்" மெய்யடியார்கள் இழிந்த குலத்தில் பிறந்திருந்து, அவர்கள் நிழல் பட்டால் தீட்டு என்று உத்தேசிக்கவில்லை. அவர்களை உங்களில் ஒரு சாரராகக் கருதுங்கள் என்கிருர் "கொடுமின் கொள் மின்" என்பது கொடுக்கல் வாங்கலைக் குறிக்கிறது. ஆழ்வார் உணர்ச்சி வேகத்தில் இன்னும் போகிருர், "நின் னெடுமொக்க வழிபடவருளினய் என்றே கூறுகிருர். பிரா மணர்கள் எவ்வளவு சிறந்தவர்களாயிருந்தாலும் அவர்கள் திருமாலடியார்களைப் பழித்தால், "நொடிப்பதோரளவில், ஆங்கே அவர்கள் தாம் புலையர் போலும்" என்கிருர். இவர் தொண்டர் பக்தி வியப்பிற்குரியதே.
பல்வ வர் காலம் சமயத்துறையில் புரட்சி நடந்த காலம்; நாட்டில்ே, விரைவாகப் பரவிய சம்ண, பெளத்தி சமயசங்களை யெதிர்த்துச் சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் போர் செய்த காலம். காலச் சூழ்நிலையைப் பிரதி பலிக்கும் பண்பு இவர் பாடல்களில் காணப்படுகிறது. புறச் சமயங் களான சமணமும் பெளத்தமும் அறிவுக் கொவ் வாதன என் பது இவர் கருத்து.
'புலையறமாகி நின்ற புத்தொடு சமண மெல்லாம் கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோதாம்." இச்சமயத்தார்கள் வைணவ தூஷணையில் ஈடுபடுவது ஆழ் வாருக்குத் தாங்க முடியாது.
"வெறுப்பொடு சமணமுண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரிய னகள் பேசில் போவதே நோயதாகி குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை ஆங்கே அறுப்பதே கருமங் கண்டாய ரங்கமா நகருளானே.”
தொண்டரடிப் பொடியின் பக்தி வைராக்கியம் வியப்பிற் குரியது. அவருக்குப் பிறவி இனி வேண்டவே, வேண்டாம்
54.

கணித முறையில், மனித வாழ்வைத் தத்துவக் கண்கொண்டு
பார்க்கிருர்,
"வேதநூல் பிராயம் நூறு மணிசர் தாம் புகுவரேனும் பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம் ஆதலால் பிறவி வேண்ாடன ரங்கமா நகருளானே."
வாழ்க்கையின் பயனை ஆராய்ந்து தீர்மானித்து, அரங்கத்தா னிடம் தன்னை ஒப்படைத்து விட்டார்.
சர்வ வல்லமையுள்ள இறைவன் அடியார்க் கெளியன். ஆழ்வார் அடியார், தொண்டரடிப்பொடி யாழ்வார், பயன் கருதாது தம்மை முற்ருக அவன் சேவைக்கே அர்ப்பணிக்கும் பிரபத்தி முறையைக் கைக் கொண்டுள்ளார். நாயன்மார் களிடத்தில் அப்பர் பாடல்களில் காணப்படும் பக்தியால் விளைந்த வைராக்கியம், ஆழ்வார்களிடத்தில் இவரிடம் இருந் தது போலக் காணப்படுகிறது. "நாமார்க்குங் குடியல் லோம் நமனை யஞ்சோம்" என்ருர் அப்பர். திருமாலையில் முதல்பாட் டிலேயே நமன் படும்பாடு பரிதாபமாயிருக்குறது
'நாவலிட்டுழி தருகின்றேம் நமன்தமர் தலைகள் மீதே se s y g' si 8 se s» s ) o g Y நின் நாமங் கற்ற ஆவலிப்புடைமை கண்டாய்.”*
நமன் தலைகளிலேறி நின்று, நாவலோ நாவலென்று கூத்தாடு கிருராம். காரணம் இறைவனின் நாமங்களைப் படித்த மதர்ப் புத்தானும்
இவ் ஆழ்வாரின் பாடற் பகுதிகள் சில, சைவ சமயாசாரி யரின் பாடற் பகுதிகளை நினைவூட்டுகின்றன. இறைவனின் அருட் செயல் வரலாறுகளை யெடுத்துக் கூறி, அவனருளைச் சிறப்பாக அப்பரும் சம்பந்தருமே கோருவதை அவர் தேவா ரங்களிலிருந்து அறியலாம், அரியும் அயனும் அறியாத சிவனை நாயன்மார் போற்ற, அவனும் சிவனும் அறியாத அரியை, ஆழ்வார் போற்றுகிருர்,
“பெண்ணுலாம் சடையினுனும் பிரமனு முண்ணைக் காண்பான் எண்ணிலாவூழி யூழி தவஞ் செய்தார் வெள்கி நிற்ப விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கன் றருளையீந்த கண்ணற, உன்னையன்றே களைகளுக் கருதுமாறே."
55

Page 41
திருஞான சம்பந்தர் தேவாரங்களில் இயற்கை வருணனைகள் மலிந்திருக்கும். இப்பிரபந்தத்திலும் அரங்கத்து இயற்கை வருணனைகள் சில காணப்படுகின்றன.
“வண்டின முரலுஞ்சோலை மயிலின மாலுஞ்சோலை கொண்டல் மீதணவுஞ்சோலை குயிலினம் கூவுஞ்சோலை அண்டர் கோனம ருஞ்சோலை." "கங்கையிற் புனிதமாய காவிரி நடுவுபாட்டு பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழி லரங்கம்" “சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கம்."
சுந்தரரைப் போல, தொண்டரடிப் பொடியும் தன் பாட லொன்றில் இறைவனைப் பித்தனென்றே அழைக்கிறர். அப் பர் சுவாமிகளைப் போல, இவரிடமும் கழிவிரக்கமும் தாழ்வு மனப்பான்மையும் இருப்பதாய்க் கொள்ளலாம். இவர் பாடல்களில் 'பொய்யன்" "மூர்க்கன்" "பாவியேன்” என்றெல் லாம் வருவது மணிவாசகரை நினைவூட்டுகிறது. "மாநிலத் துயிர்களெல்லாம் வெருவுறக் கொன்று சுட்டீட்டிய வினைய ரேனும் அருவினைப் பயனதுய்யார்" என்று இவர் கூறுவது தேவாரத்தில் "ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கை வார் சடைக்கரந்தார்க் கன்பராகில், அவர் கண்டீர் யாம் வனங்கும் கடவுளாரே" என்று விருத்தியடைந்திருக்கலாம்.
தொண்டரடிப்பொடி யாழ்வாரின் பக்தியனுபவங்கள் நிறைந்த பிரபந்தமிது. பொருளாழமும் தெளிவுமுடைய இப்பிரபந்தம் பக்தி ரசமும் கவிச்சுவையும் நிறைந்துள்ள தொன்று
56

காரைக்காலம்மையாரும் தமிழிலக்கியமும்
வி. சிவசாமி
மிழகம் கண்ட தலைசிறந்த பெண்பாற் புலவர் பெரு
占 மக்களில் காரைக்காலம்மையாரும் ஒருவர். அவர் நிறைந்த கவித்துவம் வாய்ந்தவர். சிவனையே என்றும் எப் பொழுதும் சிந்திப்பவர். தமது கவித்துவ வன்மையால் இறைவன் மீது வாடாத பக்தி மாலைகளைச் சார்த்தியுள்ளார்) கி. பி. ஆரும் நூற்ருண்டின் பிற்பகுதியில் அம்மையார் தமி ழகத்திலே பக்தி ஞாயிறு உதயம் செய்ததுபோலத் தோன்றி ஞர். இவர் இயற்றிய நூல்கள் அற்புதத்திருவந்தாதி. திரு வாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள். திருவிரட்டைமணி மாலை என்பன. இவைகள் எல்லாம் மொத்தமாக நூற்று நாற்பத்திமூன்று பாக்களைக் கொண்டவை. ஆனல் அம்மை யாருக்குத் தமிழிலக்கிய வரலாற்றிலே பெரியதோரிட முண்டு.
தமிழகத்திலே இவருக்கு முந்திய காலத்தில், திருமுரு காற்றுப்படை, பரிபாடல், சிலப்பதிகாரம் முதலிய நூல்கள் முருகப் பெருமான், திருமால் போன்ற கடவுளரைப் போற்று கின்றன. ஆனல் முதன் முதலாக, உணர்ச்சி வேகம் மிகுந்த பக்திப்பாடல்கள் பாடும் பரம்பரை காரைக்காலம்மையார் கால்த்தோடுதான் தொடங்குகிறது. இவர் ஏற்றிவைத்த பக்தி விளக்கு சைவம் வைணவம் என்ற இரு சுடர்களை இவ ரிலும் இவர் காலத்தில் வாழ்ந்த முதலாழ்வார்களிலும் பெற்றுத் தமிழகத்தில் ஞான ஒளியைப்பரப்பி அஞ்ஞான அந்தகாரத்தை அகற்றியது. பல்லவர் காலத்திலே இவ் விளக்கு மிகுந்த பிரகாசத்துடன் மேற்கூறிய இரு சுடர் களாகக் கொழுந்துவிட்டெரிந்து, அக்காலத்தைப் "பக்தியின் பொற்காலம்" எனப் போற்றச்செய்தது. அன்னை வழிபாடு குன்ருத தமிழ் நாட்டிலே இறவாத பேரின்பத்தைக் காட் டும் பக்தி விளக்கு 'மனைவிளக்காகிய வாணுதல்" என்று சங்கப் புலவனல் புகழப்பட்ட பெண்மணியினல் ஏற்றிவைக் கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சங்க காலத்தில் உலக
5芷

Page 42
சிற்றின் பங்களை இலக்கியத்தில் பொறித்த தமிழன் பேரின் பத்தையும், பிற்காலத்தில் இலக்கியத்திலே வெளிப்படுத்த எண்ணினன். அத்தகைய முயற்சிக்கு வழிகாட்டியாக அமைந்த பெருமை அம்மையாருக்கே சாரும். அம்மையார் காலத்தில் சமயப் பூசல் கிடையாது. அவரே, சிவபெருமா னுக்கு உருவமில்லை என்று கூறுகிருர், ஏனெனில் சிவனு டைய அரைப்பங்கும் உமையம்மை யாம், மற்றைய அரை வாசியும் திருமாலாம். மேலும்,
"எக்கோலத்தெவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத் தவ்வுருவேயாம்"
என்ற அடிகளும், சைவம் வைணவம் என்ற இரு சமயங்க, ளும் ஊற்றெடுக்குமிடம் ஒன்றே என்னுங்கொள்கையை வற். புறுத்துகின்றன. எனவே பக்தி ஆறு ஊற்றெடுக்குமிடமும் ஒன்றேயாகும். அவ்விடம் அம்மையார் திருப்பாடல்களே யென்பதில் ஒர் ஐயமில்லை.
அம்மையார் காலத்தில் வெண்பாயாப்பே அறம் போதிப் பதற்காக மிகவும் பிரயோகிக்கப்பட்டது. எனவே, அம்மை. யார் அவ்வழக்கத்திற்கேற்பத் தமது கரை கடந்த பக்தியநு பவத்தை அப்பாவின் வழியாகவே "அற்புதத் திருவந்தாதி” என்னும் நூலில் கூறியுள்ளார். இந்நூலில் அவர் வெண்பா யாப்பைச் கிறிதளவு இளகச் செய்து தமது நோக்கத்தை நிறைவேற்றினர்; வெற்றியும் ஒரளவு கண்டுள்ளார்.
*ஆர்வல்லார் காண அரனவனை அன்பென்னும் போர்வை அதனுலே போர்த்தமைத்துச்-சீர் வல்ல தாயத்தால் நாமும் தனி நெஞ்சினுள்ளடைத்து மாயத்தால் வைத்தோம் மறைத்து' என்னும் திருப்பாடலை நோக்கலாம்.
ஆனல், இத்தகைய புதுப்பொருளை அறப்போதனைக் குகந்த யரப்பினுல் புலப்படுத்தி முழு வெற்றிகாணமுடியாது. எனவே, அம்மையார் 'தேவையே மனிதன் கண்டு பிடிப் பதற்கெல்லாம் தாய்" என்னும் முதுமொழிப்படி, தற்செய லாக, ஒரு புதிய பாவினத்தைத் தமது பக்தியநுபவம் புலப் படுத்தப் பரீட்சித்துப்பார்த்துள்ளார். இதுதான் கட்டளைக் கலித்துறை. இஃது இவருடைய திருவிரட்டை மண்ணிமாலைட்
58

ஜில் வெண்பாவோடு விரவி வருகிறது. இப்பரவினம் பல்ல, வர் காலத்தில் பெரிதும் போற்றப்பட்டது.8 மணிவாசகர் தமது திருக்கோவையாரில் இப்பாவினத்தையே கையாண் டுள்ளார். அடுத்தபடியாக அம்மையார் ஒரு புதிய பா அமைப்பையும் கண்டு. பிடித்துள்ளார். இதுதான் பதிகம். திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்களில் இவ்வமைப்பைக்” கானலாம். இவ்விரண்டு திருப்பதிகங்களிலும் இருபத்தி ரண்டு செய்யுட்கள் உள்ளன. இறுதிச் செய்யுட்கள் இரண் டும் முத்திரைச் செய்யுட்களாக விளங்குகின்றன. இவை களைப் பாடியவர் 'காரைக்கால் பேய்" என்று குறிப்பிடப் ப்ட்டுள்ளது. பதிகங்கள் எல்லாவற்றிலும் காலத்தால் முந்தியதாகையால் இவைகனை மூத்த திருப்பதிகங்கள் எனக் கூறினர். பல்லவர் காலத்தில் பெருவழக்காய்ப்.பக்தியநுப வம் வெளிப்படுத்தப் பாவிக்கப்பட்ட பா அமைப்பு இதுவே யாகும். திருஞானசம்பந்தப் பெருமான் முத்திர்ைச் செய் யுட்கள் பொறிப்பற்கு வழிகாட்டியாக அம்மையாரே நின் றுள்ளார்.
பிரபந்தங்கள் தமிழிலக்கிய வரலாற்றின் இடைக்காலத் தில் போற்றப்பட்டன. நாயக்கர் காலம் தமிழிலக்கிய வர லாற்றில் "பிரபந்தங்கள் காலம்' என இலக்கிய வரலாற்று ஆசிரியர் கூறுவர். முதன் முதலாகப் பிரபந்தங்களை தமிழி லக்கியத்தில் உட்புகுத்தியவர் அம்மையாரே. திருவிரட்டை மணிமாலை, அற்புதத்திருவந்தாதி என்பன இவர் பாடிய இரு பிரபந்தங்களாகும். இவைகள் இறைவன் திருக் கழுத் தில் விளங்கும் வாடாத சொன் மலர் மாலைகளாக இலங்கு கின்றன.
அம்மையார் திருப்பாடல்களில் பக்திச் சுவையோடு இலக்கிய நயங்களும் விரவி வந்துள்ளன. புலவன் சொல் லும் விதத்தில்தான் அவன் கவிதைச் சிறப்புத் தங்கியுள் ளது. சிவபெருமான் மயானத்திலே திருக்கூத் தாடுகிருர், ஒரு நடனத்திற்கு அரங்கு, பாடல் பக்க வாத்தியங்கள், தேவை பிணங்கள் சுடப்படும் காடே அரங்கு, அரங்கின் பக் கங்களில் சூரை காரை முதலிய முட் செடிகள் உள்ளன. அங்கே, பேய்கள் முழவுப் பறையை அடிக்கின்றன. கூளிகள் பாடுகின்றன. நடமாடுபவன் யார்? இறைவன் தான். இவ் வாறு வாசகர் மனக் கண்ணெதிரே நடனக் காட்சி தோன்று கிறது. எடுத்துக்கொண்ட பொருளுக்கேற்ப வல்லோசை
59.

Page 43
மிகுந்து நிற்கிறது. காடு ஆகையால், நரகத்தில் போல செயற்கை, மென்மை ஒன்றுங் கிடையாது. எல்லாம் வன்மை பெற்று விளங்கும். இனிப் பார்க்கலாம் அம்மையார் செஞ் சித்திரம்,
"எட்டியிலவை மீகை சூரை காரை படர்ந் தெங்குஞ் சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சேர்ந்த இடங் கெளவப் பட்ட பிணங்கள் பரந்த காட்டில் பறை போல் விழிகட் கொட்ட முழவங் கூளி பாடக் குழக ஞடுமே" (பேப்
அம்மையாருக்கு பார்க்குமிடந்தோறும் நீக்க மற அப் பெரு மானே காட்சியளிக்கிருன் காலதேவன் இறைவனுகத் தோன்றுகிருன் பொழுது விடிந்தாலென்ன, மத்தியான வேளை யென்ரு லென்ன, மாலை நேரமென்ருலென்ன, இருட் டென்ருல் என்ன எல்லாம் சிவன் மயமாகவே இருக்கிறது.
"காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணிறு-மாலையின்
ருங்குருவே போலும் சடைக் கற்றை மற்றவர்க்கு
வீங்கிருளே போலும் மிடறு" என்பது அவர் திருவாக்கு. மேலும் சிவபெருமான் சிவந்த திருமேனி யுடையவர். அவருடைய ஒரு திருக் கரத்தில் சங் காரத்தைக் குறி க்கு ம் நெருப்பு இருக்கிறது. இறைவன் இதனைத் திருக் கரத்தில் ஏந்திக் கொண்டு கூத்தாடுகின் ருன்.
நெருப்பும் சுவா ைவிட்டு எரிந்து ஆடுகிறது; சிவப்பாய்த் தெரிகிறது. இதனை அகக் கண்ணில் காண்கிருர் காரைக்கா லம்மையார். ஒன்றும் அறியாதவர் போல, அப்பனே தேவரி *ருடைய திருக்கரத்திலுள்ள நெருப்பின் நிறத்தினுல் திருக் கரம் சிவப்படைந்ததோ? அல்லது தேவரீருடைய திருக்கை யழகினுல் நெருப்புச் சிவந்ததோ? என நகைச் சுவைபட வின aySqrts
"அழலாட அங்கை சிவந்ததோ அங்கை
அழகாலழல் சிறந்தவாருே" என்பது அவர் செஞ்சொற்கவி. அவருடைய பெரும் பாலான *உபாடல்களில் பிறமொழிச் சொற்கள் மிகக் குறைவு. காலத்தி ஞல் முந்தியதனுலோ தெரியவில்லை; தமிழின் தூய்மையை அம்மையார் பாடல்களிலும் காணலாம்.
م......سس-سی
(60

இவ்வாறு தமிழிற்கும் சைவத்திற்கும் அம்மையார் செய்த தொண்டினைத் தமிழகம் மறக்க முடியவில்லை. அறு பத்திமூன்று நாயன்மாரது பக்திச் சிறப்புகளைப் பாடிய சேக்கிழார் பெருமான் தமது பெரிய புராணத்தில் அம்மை யாரது வரலாற்றைக் "காரைக்காலம்மையார் புராணம்" என்ற பகுதியாக, அறுபத்திஆறு பாக்களில் பாடியுள்ளார் அம்மையார் திருப்பாடல்கள் எல்லாம் பதினுெராந் திரு முறையில் சேர்க்கப்பட்டுச் சைவ உலகத்தில் நல்ல இடம் பெற்றுள்ளன:
பொன் மொழி
"நானிலத்தில், பொல்லாதவர்களே அல்லற்படு வார்களென்றும் நல்லவர்கள் இன்பம் துய்த்து வாழ் வார்களென்றும் ஒரு கருத்து உலவி வருகிறது. இது மனிதனது விருப்பத்தைக்குறிப்பதேயல்லாமல், உண் மையை உணர்த்துவதாகாது. உலக நன்மைக்காகப் பாடுபடும் தூயோர், துன்புற்றுத் தீமித்துத் தியாகம் பல புரித்துதான் தமது குறிக்கோளை அடைகின்ற
w"p
6

Page 44
இலக்கியமும் சமுதாயமும் @。 நாராயணசாமி
லக்கியம் என்பதில் தனிநிலைச் செய்யுள், தொsர் நிலைச் செய்யுள், உரைநடை, நாடகம் முதலிய அனைத்தும் அடங்கப் பெறும். விரிந்த பொருளில் இலக்கியம் என்பது மக்களால் ஆக்கப்பெற்ற சரித்திரம், சாஸ்திரம். கவிதை, கதை முதலிய எல்லாவற்றையும் குறிக்கலாம்: ஆனல் மிகச் சுருங்கிய பொருளில் இலக்கியம் என்பது அழ குணர்ச்சி, கலையுணர்ச்சி ததும்ப எழுதியனவற்றையே குறிக் கும். மனிதன் தன் உள்ள அனுபவங்களை உணர்ச்சி ததும்பக் கவிதையாகவோ கதையாகவே சிருஷ்டித்துத் தரும்பொழுது அதை நாம் இலக்கியம் என்ருேம் 'இலக்கியம் உண்மையும் அழகும் நிரம்பிய சொற்களால் வாழ்க்கையைப் புலப்படுத்து கிறது. அது மனிதனது ஆன்மாவையும் அவன் கருத்துக்கள் உணர்ச்சிகள் தலை நோக்கங்கள் முதலியவற்றையும் சொல் வடிவிலே காட்டும் குறிப்பாகும் ஆன்மாவின் உண்மைச் சரித்திரமாக உள்ளது அதுவே." என்ற பேராசிரியர் வையா புரிப்பிள்ளையின் கூற்றும் உற்று நோக்கற்பாலது.
இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்கும் நெருங்கிய தொடர் புண்டு. சமுதாய வளர்ச்சி, தேய்வுகளுக்கிணங்கவே இலக்கி" யமும் வளர்ந்தும் தேய்ந்தும் வந்திருக்கின்றது. சமுதாயச் சூழ்நிலையே ஒரு கவிஞனை உருவாக்குகின்றது. கவிஞன் தான் காணும் சமுதாயத்தைத் தன் சக மக்களின் வாழ்க்கை அனுபr வத்தை எண்ணத் துடிப்பை, கலைத்திறனுடன் தீட்டுகின்றன். இதற்கு தமிழிலக்கிய வரலாறு சான்று பகரும்.
தமிழிலக்கிய வரலாற்று ஆரம்பகாலமாகக் கொள்ளப் படும் சங்க காலத்திலே முடியுடை மூவேந்தர் மாண்புடை ஆட்சி செலுத்தி வந்தனர். இவர்களுக்கிடையே போரும் பூசலும் ஏற்படுவது வழக்கமாக இருந்தது. ஒருவர் மேல் ஒரு வர் படையெடுப்பதும் நாட்டைக் கைப்பற்றுவதுமாக இருந்: தனர். இந்தச் சூழ்நிலையில் அறப்போர் வீரர் என்றுமே போரில் மடிய ஆயத்தமாயிருந்தனர். உயிர் போகினும் மானமே பெரிதென்ற கொள்கையை உடைய இவர்கள்
62

போரில் புறம்காட்டி ஓடிய செய்தியை சங்க இலக்கியங்களைத் துருவித் துருவித் தேடினும் காணமுடியாது. இத்தகைய மாண்பு மிக்க வீரர்கள் போரிலிறந்தால் அவர்களின் காதல் மனைவியர் தம்மவர்களின் தலைவர்கள் நாட்டுக்குச் செய்த சேவையை நினைத்து பூரிப்படைவார்கள். அதுமாத்திர மா? கணவனையிழந்தாலும் தனையன் உண்டென ஆறியிருந்தவ *ளல்ல பண்டைத் தாய் மகள். w
'வேல்கைக் கொடுத்து வெளிது விரித் துடீஇப் பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி. செருமுக நோக்கிச் செல்கென.
தன் ஒரே மகனையும் போருக்கனுப்பிய வீரத்தாய் வாழ்ந்த காலமது. அக்காலத்தின் கண்ணுடியாக மிளிர்கின்றது புற நானூறு. சமுதாயத்தில் வீரத் தாய்மார்கள், அறப்ப்ோர் வீரர்கள் வாழ்ந்ததாலேயே புலவன் கவிதையும் அவர்களின் சீரிய வாழ்க்கையைச் சித்திரிக்க முடிந்தது. சமுதாயத்தின்
bபிதானே புலவன். எனவே சொல் என்னும் உளிகொண்டு -M"rum. -- 9l டு
கவிதை என்னும் ஓவியத்தைச் செதுக்கித் தந்திருக்கின்முன் சிற்பி என்னும் புலவன்.
அரசியல் எந்தக்கால இலக்கியத்தையும் பாதிக்கும்; தமிழ் வேந்தருக்குள்ளேயே பூசலிருந்தபடியால் தான் அறப் போர் வீரரின் அவசியமும் அவர்களைப் பற்றிப் பாடவேண் டிய நிர்ப்பந்தமும் புலவனுக்கு ஏற்பட்டது.
தமிழர் சரித்திரத்திலேயே தனிச் சிறப்புடன் அரசாண் வர்கள் சோழர்கால மன்னர்கள். வடவேங்கடம் தென் குமரி வரையுமுள்ள தமிழகத்தைத் தமதாக்கியது மாத்திர மல்லா மல், கடல் கடந்து நாடுகள் கைப்பற்றி செங்கோலோச்சிய :ஒரிய பெருமை சோழமன்னர்க்கே உரியது. இத்தகைய செந் தமிழ் வேந்தரின் செயல் தீரத்தை தீந்தமிழ் சொற்களாலா இய கவிதைகளால் வடித்துத் தந்திருக்கும் அக்காலப் புலவர் களின் பெருமை பாராட்டற்குரியது. கலிங்கத்துப் பரணி போன்ற நூல்கள் சோழர் போரில் காட்டிய தீரத்தை எடுத் தியம்புகின்றன. போரில் வென்று திரும்பிய வீரன் உலாவரு வதையும் புலவர்கள் பாடி அவனைப் போற்றினர்கள். அர.
சியல் சூழ்நிலை கவிஞனைப் படைக்கும் விந்தையை இங்கும்.
--w
நாம் காண முடிகிறது.
63.

Page 45
அடிமை வாழ்வில் அழுந்தி அல்லல்பட்ட தமிழ் மக்களின் அரசியல் நிலையின் பிரதி பிம்பமல்லவா அமரகவி பாரதியா ரின் தேசிய கீதங்கள். இருபதாம் நூற்றண்டு மக்கள் அடிமை வாழ்வை வெறுக்க, அவர்களுக்குச் சுதந்திர தாகத்தை ஊட்ட அவர் கவிதை புனைவது இன்றியமையாததாயிற்று.
அவ்வக் காலத்து அரசியல் அலைகள் எவ்வாறு இலக்கியப் படைப்புகளுக்குக் காரணமாக இருந்தனவோ அதேபோன்று சமயச் சூழ்நிலையும் இலக்கியங்கள் தோன்றுவதற்குக் காரண மாயிருந்தது. சைவமும் வைணவமும் ஆதிக்கம் செலுத்தி வந்த தமிழ் நாட்டிலே சமணமும் பெளத்தமும் தலையெடுக்க ஆரம்பித்தன. இதன் விளைவால்தோன்றியதே வைதீக சம யத்தின் மறுமலர்ச்சி. நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றி வைதீக சமயங்களை நிலைநாட்டினர். பக்திப் பிர வாகம் கரைபுரண்டோடப் பதிகங்களையும் தேவாரங்களை பும் பண்ணுடன் பாடி மகிழ்ந்தனர். இதன் பயனுல் தமிழ் இலக்கியத்தில் புதுப்புது இலக்கியங்கள் தோன்றின. தேவா ரப் பதிகங்களும் திவ்விய பிரபந்தங்களும் தோன்ற லாயின; இதைப் போலவே சோழர் காலத்திலும் நாயக்கர் காலத்திலும் சமய இலக்கியங்கள் தோன்றக் கூடியதாக சூழ் நிலை-சமுதாய நிலை-இருந்தது. பல்லவர் காலத்தில் தம் முள் ஒன்ருேடொன்று முரண்பட்டிருந்த சமயங்கள். சோழர் காலத்தில் பகைமையின்றி வளர்ச்சியுற்றன. சோழப்பெரு மன்னர் சமயங்கள் எல்லாவற்றையும் ஒப்பாக மதித்து நடத்தி வந்ததால் சமயப் பூசல்கள் எழவேண்டிய அவசியம் ஏற்பட வில்லை. பல சமயங்களையும் ஆதரித்த போதும் சோழமன் னர் சைவ மதத்தவராகவே இருந்தனர். எனவே அவர்கள் கற்கோயில்கள் கட்டியும் நித்திய பூசைகள் நடப்பித்தும் பல வாருகச் சமயத் தொண்டு செய்து வந்தனர். இதன் விளைவே இக்காலத்தில் தோன்றிய பெரிய புராணம், திருவிசைப்பா போன்ற நூல்கள். புவியரசர் ஆதரவில் வளர்ந்த சமயத்தை கவியரசர் ஆதரித்து ஆக்க நூல்கள் இயற்றித் தந்தனர். பிற சமயங்களின் வளர்ச்சிக்குத் தடை இல்லாமல் போகவே அச் சமயங்களின்சாயல் படிந்த இலக்கிய நூல்களும் எழலாயின; கம்பராமாய்ண்ம். சீவகசிந்தாமணி, குண்ட்லகேசி போன்ற சிறந்த இலக்கிய நூல்கள் தோன்றுவதற்கு உதவிபுரிந்தவை, அக்கால அரசரின் நடுவுநிலைமையும், அக்காலச் சமுதாயத் தின் சூழ்நிலையுமேயாகும்.
64

சோழப் பெருமன்னர் காலத்தில் தமிழ் நாட்டில் நிலவிய: அமைதி நாயக்கர் காலத்தில் சிதறுண்டது. முகம்மதியரின் தடையெடுப்பால் அமைதியிழந்திருந்த மக்கள் மனதில் இறை வன்மேல் பற்றும் இவ்வுலக வாழ்க்கையில் வெறுப்பும் தோன் றத் தொடங்கியது. மக்களை ஆண்ட அர்சர் தமிழரல்லாதா ராகையால் மக்களின் ஆசைகளை நிறைவாகப் பூர்த்தி செய், பும் மன்னர்களாக இருக்கவில்லை. எனவே மன்னர்மேல் வாழ்த்துக் கவிகளுக்குப் பதிலாக வசைக் கவிகள் எழுந்தன. இறைவனுக்குப் பாமாலைகள் சூட்டினரே தவிர கோமகனைப் பாராட்டினரல்லர். இலக்கியம் சமுதாயத்தின் எதிரொலி என்பதை நாயக்கர் காலத்தில் தோன்றிய பிரபந்தங்கள், தர்க்க நூல்கள் சயய நூல்கள் முதலியன நன்கு தெளிவுறுத்து கின்றன.
மக்கள் சமுதாயத்தின்-நிலைக்குத் தக்கபடியேதான் கற்.
பனைச் சித்திரங்கள் மொழி நடை முதலியன அமைகின்றன. இயற்கையில் பிறந்து, இயற்கையில் வளர்ந்து மக்கள் உள் ளதை உள்ள வாறு கூறும் பண்பு மிக்கவர்களாயினர். இயற்கையில் கண்டு அனுபவித்தவற்றையே புலவரும் கவிதை, வடிவில் வடித்து வைத்தனர். அவர்களின் கற்பனைச் சித்தி ரங்களும் சமுதாயத்திற் கேற்றதாய் அமைந்திருந்தன; உதாரணமாக அகநானூற்றுச் செய்யுள் ஒன்றினை நோக்கு, Gaunruh:-
"தூமலர்த் தாமரைப் பூவினில் அங்கண்
மாயிதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன
திருமுகத் தலமரும் பெருமதர் மழைக்கண்.
அக்கால மக்களுக்குத் தாமரையைத் தெரியும். குவளை யையும் தெரியும். எனவே புலவரின் கற்பனைச் சித்திரமும். இவை இரண்டின் பிணைப்பில் எழுந்ததாகக் காணப்படுகிறது. தாமரையை முகத்திற்கும் குவளையை விழிகட்கும் ஒப்பிடுவது காணப்பட்டது. இதே நிலை, சமுதாய நிலை மாறிய காலத்தி: லும் நிலைத்திருக்க முடியாது. எனவே இருபதாம் நூற்ருண் டுச் சூழ்நிலையில் பாரதி புதுப்புதுஅவமைகளை உபயோகிக்க வேண்டி நேரிடுகிறது. பழையTஉவமைகளைப் படித்துப் படித்து மணஞ் சலித்த இன்றைய மக்கள் புதுப்புது உவமை, கள், புதிய கருத்துக்கள் முதலியவற்றையே விரும்புகின் றனர். எனவேதான் புதுமைக் கவி பாரதியும் சமுதாயத்
65

Page 46
தின் நிலைக்கேற்ப கற்பணைச் சித்திரங்களைப் படைத்திருக் கிருர்,
'வட்டக் கருவிழி-கண்ணம்மா வானக் கருமை கொல்லோ"
என்ற பாரதியார் கூற்றுக்கும் அக நானுாற்றுப் புலவரின் கற் *பனைச் சித்திரத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் படிப் போர் மனதில் தெற்றெனப் புலப்படுகின்றன. 'குவளை போன்ற கண்' என்று எத்தனையோ முறை கேட்டுச் சலித்த மக்களின் உள்ளத்தில் இன்றைய சூழ் நிலையில், அதே உவமை சலிப்பதைத் தருவது இயற்கை. புதுமைநாடும் உள்ளத்திற்குப் புது விருந்தளிக்கின்ருர் புலவர். "குவளைக் கண்‘ என்று கூறுவதிலும் பார்க்க, "வானக் கருமை கொல்லோ" என்று கூறும் பொழுது அதிலே ஓர் புதுமை -சமுதாயத்தின் தேவைக் கேற்ற புலமை-காணப்படுகிறது.
'காமன் தன் வாழ்வோ கற்பக தருவோ" என்பது சோழர் காலக் கவிஞனின் கற்பனையாக இருக்கின்றது. சம் யம் நன்கு வளர்ச்சி யுற்றிருந்த சோழர் காலத்தில் மக்கள் மறுமையைப் பற்றிய சிந்தனையிலும் அதனையடையச் செய்ய வேண்டிய முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார்கள். அக்கால -மக்கள் தம் கற்பனை உலகில் 'காமன்' 'கற்பக தரு' என் றெல்லாம் பல விதமான மறு உலகக் காட்சிகளை திருஷ் டித்து வைத்திருந்தனர். எனவே கவிஞனின் கற்பனையும் காலத்திற் கேற்றதாய் அமைந்திருக்கிறது.
கவிஞனின் மொழி நடை கூட சமுதாயத்தின் தேவைக் கேற்ப அமைவதை நாம் காணலாம். சமுதாய வளர்ச்சி யுற்றிருந்த காலத்தில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் முதலிய பண்பு, புலவரால் கையாளப்பட்டது. அக்கால மக்களுக்கு அது புலப்படுவதாயிற்று. இன்றைய சூழ்நிலையில் எளிய நடை, எளிய சொற்கள் அவசியமாகின்றது. எனவே தான் பாரதியார், பாரதிதாசன் போன்ற கவிஞர்கள் எளிய
ܝܡܬܐ-ܫܝܚܝܝܝ
நடையைக் கையாண்டிருக்கின்றனர்.
ஒவ்வொரு காலத்து இலக்கியமும் அவ்வக்கால மக்களின் சமுதாய நிலையைச் சீரிய முறையில் சித்திரிக்கின்றது. கவி ஞனின் கற்பனைச் சித்திரங்கள், மொழி நடை முதலியன எல் லாம் சமுதாய நின்-சூழ்நிலைகளுக் கேற்பவே உருவாக்கப் பட்டிருக்கின்றன.
$66

சிலப்பதிகாரமும்
சங்க இலக்கியமும் ச. தனஞ்செயராசசிங்கம், B. A. (Hons)
மிழிலக்கிய வரலாற்றில் பொற்காலம் எனப் போற்
றப்படும் காலம் சங்ககாலமாகும். சங்க காலத்தி லெழுந்த நூல்கள் எட்டுத் தொகை, பத்துப்பாட்டென்ற இரு தொகுதிகளுள் அடங்குவன. எட்டுத்தொகையுள்ளடங் திய தனிப் பாடல்களிற் பெரும்பாலன, அடிகளின் எண் முறைபற்றித் தொடுக்கப்பட்டுள்ளன. பத்துப் பாட்டில் உள்ள செய்யுட்கள் எட்டுத் தொகையிற் காணப்படும் செய் யுட்களிலும் பார்க்க நீண்ட அடியளவும் கற்பனையுமுடைய தாகக் காணப்படுகின்றன. அவை வாழ்க்கையைப் பல *கோணங்களின்றும் சித்திரிக்கும் புலவரது ஆற்றலுக்குச் சான் சுருக விளங்குகின்றன. இத்தொகுதியுள் மிகவுஞ் சிறிய பாட் "டுக்களாகிய முல்லைப் பாட்டும், நெடுநல் வாடையும் தலைவ *னப் பிரிந்த தலைவியினது ஆற்ருமையையும், தலைவனது வினை வயிற்பிரிவையும், ஈற்றிற் தலைவன் வினை முடிந்து வருவதால் தலைவி அடையும் இன்பத்தையும் ஒரு சிறுகதை போல நிகழ்ச்சிக் செறிவுடன் கூறுகின்றன. பட்டினப்பாலை, மது ரைக் காஞ்சி முதலிய பாடல்கள் நீண்ட இயற்கை வருண &னப் பகுதிகளைக் கொண்டு விளங்குகின்றன. இவற்றை நோக் குங்கால், பத்துப்பாட்டுத் தொகுதியிலுள்ள பாடல்கள் எட் டுத் தொகையிற் காணப்படும் பாடல்களெழுந்த காலத்திற் குச் சிறிது பின்னரே தோன்றியிருக்க வேண்டுமென்று நாம் துணியலாம். இவ்விரு தொகை நூல்களியற்றப்பட்ட சங்க காலத்தில் ஏறக்குறைய ஐயாயிரமடிகளில் ஒரு 'கதையைச் சமயக் கருத்துக்களுடன் விரித்துக் கூறுகின்ற சிலப்பதிகாரம் எழுந்திருக்க முடியாது. ஆனல் சிலப்பதிகாரத்தை இளங் கோவடிகள் இயற்றுவதற்குச் கங்க இலக்கியங்கள் பெரிதும். துணை செய்துள்ளன. சிலப்பதிகாரக்கதையே சங்க இலக்கியங் களில் ஒரு சில மாற்றத்துடன் காணப்படுகிறது.
எட்டுத் தொகை நூலிலொன்ருகிய புறநானூற்றில் 444-ம் பாட்டு வையாவிக் கோப்பெரும் பேகன் என்னும்
67

Page 47
குறுநில மன்னனைப் பற்றியது. இப் பாட்டில், பரணர் தம் மைப் பாணனுகப் பாவித்து, தனது மனைவியாகிய கண்ணகி யைப் பிரிந்து பரத்தையொழுக்கம் கொண்ட பேகனை, மீண் மனைவியை அடையுமாறு குறிப்பாக வேண்டுகிருர், பரத்தை யொழுக்கம் பூண்ட கணவஒெருவனையும், தண்ணகி என்ற, கற்புடைய பெண்ணுேருத்தியையும் முதன் முதலாகிப் புறநா னுாறு எமக்கு இவ்வாறு கூறுகின்றது. எல்லையற்ற துன்பத்தி ஞல் தனது முலைகளிலொன்றைத் திருகிய-பெண்ணைப் பற்றி நற்றினை பின்வருமாறு கூறுகின்றது.
"எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும் குருகார் கழனியின் இதணத் தாங்கண், ஏதிலாளன் கவலை கவற்ற ஒருமுலை யறுத்த திருமா வுண்ணி w
(நற்றிணை 26) புறநானூறு, நற்றிணை முதலிய சங்க. இலக்கியங்களிற். காணப்படும் இச் செய்திகளைத் திரட்டி தம்புலமைத் திற, னுக்கேற்பக் கற்பனையை நீட்டியும், விரித்தும் இளங்கோ வடிகள் சிலப்பதிகாரக் கதையைப் புனந்தாரென்று நாம் கொள்ளலாம்.
மேலும் சிலப்பதிகாரத்திற் காணப்படும் கற்பனை, காவி சிப்பூம் பட்னடிம் பழந் தமிழர் நாகரிகம் பற்றிய செய்திகள், யாவும் சங்க இலக்கியங்களிற் கூறப்பட்டிருப்பவற்றுடன் ஒத்திருக்கின்றன. சில சொற்ருெடர்கள் ஒரு வித, மாற்றமு, மின்றி ஈரிடத்திலும் காணப்படுகின்றன:
"கருந்தொழிற் கலிமாக்கள்
மலதலை கனறத்துப் பலருடன் குழீஇக். கையினுங் கலத்தினு. மெய்யுறத்தீண்டிப் பெருஞ் சினத்தாற், புறக்கொடா அது. இருஞ்செருவின் இகன் மெய்ம்பினுேர், கல்லெறியும் கவண்வெரீஇப் புள்ளரியும் புகர்ப், பேரந்தை." 69-74 பட்டினப்பாலை- ܖ "மருவூர் மருங்கின் மறங்கொள் வீரரும் பட்டின மருங்கிற் படைகெழு மக்களும்,

சுல்அமிழ் கவணினர் கழிப்பிணித் கறைத்தோல் பல்வேற் பரப்பினர் மெய்யுறத் தீண்டி"
?ھ82-76 ,5 (56 سبب 'நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான்'-புறம்.189,9 "அரையிருள் யாமத்தும் பகலுந் துஞ்சார்'ட்சிலப்.38 "வடவர் தந்த வான்கேழ் வட்டம்"-நெடுநல்வாடை51 *வடமலைப்பிறந்த வான்கேழ் வட்டத்து'-சிலப்.4,37 "நிலவுபயன் கொள்ளு நெடுவெண் முற்றத்து
"நிலவுபயன் கொளும் நெடுநிலா முற்றத்து-லெம். "கானுயார் மருங்கிற் கவலை ༤. வானம் வேண்டா வில்லே ருழவர்'-அகம் 193 "ஆரிடை யத்தத் தியங்குந ரல்லது மாசிவளம் பெரு வில்லே ருழவர் உஒல. 1,209-20 "நிலனகழ் உனியர் கலனசைஇக் கொட்டும் கண்மா முடவ ரொடுக்க மொற்றி"
--மதுரைக் காஞ்சி, 139. 4. "நிலனகழ் உளியன் நீலத் தானேயன் கலன் நசை வேட்கையிற் கடும்புலி போன்று"
- -சிலப். 16,204-205 "ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன் போற் புதல்வர்ப் பெரு அதிரும் எம்மம்பு கடி விது நும்மரண் சேர்மினெை அறத்தாறு துவலும் பூட்கை"-புறம், 9,1.6. "பார்ப்பா ரறவோர் பசுப்பத் திணிப் பெண்டிர் மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று'-சிலப். 21,53-55
சிலப்பதிகாரம் சங்க காலத்திற்குப் பின்னெழுந்த இலக் கிங் மென்பதற்கு இன்னும் பல சான்றுகளுள. சங்க நூல்கள் சமயத்தைத் தமக்கு அடிப்படையான பொருளாகக் கொள்ள வில்லை. பத்துப் பாட்டிலோ எட்டுத் தொகையிலே உள்ள பாடல்களில் எவற்றையாவது இன்ன சமயக் கொள்கை
69

Page 48
ககளக் கூறுகிறதென்று நாம் துணியமுடியாது. ஆனல் சிலப் பதிகாரமோ ஊழ்வின் கொல்லாமை,"புலாலுண்ணுமை,
دهست. مدت ۰۶ؤسسه as s ... سیrmيمېنېسپتامبهمه نه؟ : துறவு முதலிய SF LI) GT SF A) LS கருத்துக்களைக் கவுந்தியடிகள் போன்ற பாத்திரங்களின் வRயிலாக் விள்கிகுகிறது. அருகக் கடவுளது சிறப்பியல்களையும் மிகவும் விரித்துக் கூறுகிறது.
: \\ ክ ‹‹‹፡ ጳ
ஆரிய நாகரிகம் திரர்விட்"நாகரிகத்துட்ன் அதிகம் கல வாத காலத்திலேய்ே சங்கி இல்க்கிய்ங்கள் எழுந்தமையால், அவற்றின் மொழி நடிையில்விேல்லமெrழியின் செல்வாக்கை நாம் மிகவும் குறைவாகவே காணலாம். இந் நூல்களில் நூற்றுக்கு மூன்று அல்லது நான்கு விழுக்தாலே சங்கச் சொற் களாக விருப்பன. ஆனல் சிலப்பூதிகதgத்திலோ ஏராள மான வட மொழிச் சொற்கள் வந்துள்ளத் ང་ཚོ་
'அறிவன், அறவோன், அறிவு செறிவன், சினேந்திரன், சித்தன், தரும முதல்வன், தலைவன், தரும பொருளன், புனிதன். புர்ாண்ன்புலவன், சினவரன், தேவன், சிவகதிநாய்கன் به نماً رنال பரமன், குணவதன். பரத்தில் ஒளியோன், தத்துவன், சாதுவன், சர்ரணன் காரணின்டி சித்தன், பெரியவன், செம்மல், திகழ்ஒளி)
சங்கரன், ஈசன், சயம்பு, சதுமுகன், அங்கம் பயந்தோன், அருகன், அருள்முனி.ஃஎன்ற
சிலப்42,176 187. அடிகளில் அருகக் கடவுளது தன்மை யக் கூறுவதற்கு இளங்கோவடிகள் ஏராளமான வடமொழிச்சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.
சங்க காலத்து மக்களது மண வினையில் பார்ப்புரன் இடம் பெற்றதாகச் சங்க நூல்கள் கூறவில்லை. மணமக்கள் தீயை வலம் வந்தார்களென்ற செய்தியும் காணப்படவில்லை. சிலப் பதிகாரத்தில் உள்ள ':' - ४-, « ', ५- ` ' . ‘ ’.
"மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது காண்பார்கள்." சிலப் 1852-53
என்ற அடிகள் ஆரிய நாகரிகம் நன்கு தமிழ் நாட்டிற் பர்விய் கால்த்தே சிலப்பதிகாரம் எழுந்ததென்பதை 'ல்லியுறுத்து கிறது. we -. - - wys; . His
7Ο
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வடமொழிக் கதைகளையும்அவற்றினுல் பெறும் நீதிகன் யும் சிலப்பதிகாரம் கூறுகின்றது: “அடைக்கலக் கதையில் (54-75) கீசியைக் கொன்ற பார்ப்பணியைப் பற்றியும் இராமன் தந்தை கட்டளைப்படி காட்டிற்குச் சென்ற இரா மாயணச் செய்தியையும், தமயந்தியைக் காட்டிலே விட்டுச் சென்ற நளனைப் பற்றியும் கூறப்பட்டிருக்கிறது.
சங்க காலத்தில் ஆடல், பாடல் முதலியவற்ருலே தம்மையடைந்தோரைப்பரத்தையர் மகிழ்வித்தனர். சிறிது காலஞ் செல்லவே ஆடல் பாடலுக்கன்றிச் சிற்றின்பத்திற் கெனப் பரத்தையிடம் மக்கள் சென்றனர். எனவே புரத்தை யொழுக்கம் நன்ருக நிலைத்துவிட்ட பிற் காலத்திலேயே சிலப் பதிகாரம் எழுந்திருக்கிறதென்பதை நாம் மாதவி வரலாற்ரு லறியலாம். "ሏ
எனவே சங்க இலக்கியங்களின் கற்பனை, சொற்ருெடர் முதலியவற்றையும், அவற்றிற்கு ஒவ்வாத சமயப் பான்மை யையும், அளவு கடந்த வட சொற்களையும், வட நூற் கருத் துக்களையும், வட நாட்டு நாகரிகத்தையும் கொண்டுள்ளது சிலப்பதிகாரமெனக் கொள்ளலாம்.
சிலம்புச் செய்தி
"சிலப்பதிகாரக் காவியம் நமக்குத் தெரிவிக்கும் செய்திகள் மிகப்பல. அவ்வவர் பயிற்சியின் திற்கும் நுண்மாண் நுழைபுலத்திற்கும் ஏற்றவாறு சிந்தையைத் திறைகொள்ளும் அச்செந்தமிழ்க் காப் பியம் நற்செய்திகள் பலவற்றைப் புலப்படுத்திக் கொண்டே செல்லும். கவில் தொறும் நயந்தரும் நூல் சிலப்பதிகாரம்." Moun „Mr. ۹
71

Page 49
பாரதி சபதம்'. (கலாநிதி சு. வித்தியானந்தன்)
ஒப்பிரமணிய பாரதிக்கு மனித கூட்டத்தின்மீது அளவு கடந்த அன்புண்டு. மனித உணர்ச்சிதையே நடு நாயகமாய் வைத்துக் காவியங்கள் அமைத்தவர் அவர் மனித சமுதாயம் இப்பொழுதுள்ள நிலையிலிருந்து ஒரு சிறி தேனும் உயரவேண்டுமென்பதும் அவர்அவா. எனவே உயர் தற்குரிய உணர்ச்சிகளை உண்டாக்கக் கூடிய கவிதைகளையே அவர் பாடிஞர். இப்பொழுதுள்ள நிலைமையில் வெறுப்பும், உயர்ந்த நிலையில் விருப்பும் உண்டாகச் செய்வதே அவர்
வோர் ஆளப்படுவோருக்கிடையிலும், ஏற்படுத்திய அதர்ம முறையை உணர்த்துவதும் அவர் நோக்கமாயிருந்தது. தமது உள்ளத்தில் உண்மையாக எழுந்த உணர்ச்சியின் பயனகத் தாம் கண்ட ஆண் பெண் சமத்துவம், ஆளப்படுவோருக்குரிய சுய நிர்ணய உரிமை, ஆள்வோர் நன்மை ஆளப்படுவோர் நலத்தில் அடங்கியுள்ளதென்ற உண்மை, இவ்வுலக வாழ்வின் தூய நிலைமை பொதுவுடைமைச் சிறப்பு-இவற்றை எழுத்திற் பொறிப்பதற்கு அவர் பயன்படுத்திய கருவியே பாஞ்சாலி சபதம்.
இச்சபதம் அடிமைப்பட்ட தமிழ்ச் சமுதாயத்திற்கு /ஆண்மை ஊட்டும் என அவர் எதிர்பார்த்திருந்தார். பார தத் தாயின் விடுதலைப் போரிற் பற்றுக் கொண்ட பாரதியின் உள்ளத்தினை இச்சபதம் கவர்ந்தது. "அன்னமூட்டிய தெய்வ மணிக்கைகள் ஆண்ைகாட்டில் அனலையும் விழுங்குவோம்" என்று வீரமுழக்கம் செய்த பாரதியார், அன்னை திரெளபதி யின் சபதமும் வீழ்ந்து கிடக்கும் தமிழர் சமுதாயத்தைத் தட்டி எழுப்புமென்று நன்கு அறிந்திருந்தார். எனவேதான், சூதுபோர்ச் சருத்கமென வில்லிபுத்தூரரால் அமைக்கப்பட்ட பகுதியை அப்பெயரால் அமையாது, பாஞ்சாலியின் சபதத் தின் பெயரால் அமைத்தார். சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற காவியங்கள் பெண்ணின் தொடர்பினுற் பெயர் பெற்றமையை நன்கறிந்த பாரதி-பெண்ரமைக்கு ஏற்றம்
72

கொடுப்பதையே தமது குறிக்க்ோளாகக் கொண்ட பாரதிப்ென்னின் பெய்ரால் இக்காப்பியத்தைப் பெயரிட்டதில் ஒரு வியப்பு மில்லை. பாஞ்சாலியின் சபதமே பாரதப் போரி ன்ேக் கிளறிவிட்டது. ஆகவே, சிறையிருந்தாள் ஏற்றங்கூற வந்த சிலப்பதிகாரம் போல, பெண்ணின் பெருமையைக் கூற வந்த இந்நூலும் பாஞ்சாலி சபதம் எனப் பெயர் பெற்றது.
உண்மையிலே, இங்கு கூறப்படும் சபதம் பாஞ்சாலியின் சபதமன்று. பாரதியின் சபதமே. இது பாரதநாட்டு மக்கள் ஒவ்வொருவரின் சபதமெனிலும் மிகையாகாது.
அரசவையிலெனையேற்றியஞ்சாமற்றுகிறீண்டியளகந்
残 s s536diruவிரைசெயளியினம்படிதார்வேந்த ரெதிர்தகாதனவே
விளம்புவோரை பொருசமரின்முடிதுளித்துப்புலானறுவெங்குருதி
பொழியவெற்றி * بر முரசறையும் பொழுதல்லால் விரித்தகுழலினியெடுத்து
முடியேன் என்பது வில்லிபுத்தூராரின் திரெளபதி சபதம்.
தேவி திரெளபதி சொல் வாள்-ஓம் தேவி பராசக்தி யாணை யுரைத்தேன் பாவி துச்சாசனன் செந்நீர்-அந்தப் பாழ்த் துரி யோதனன் ஆக்கை யிரத்தம் மேவி யிரண்டுங் கலந்து-குழல் மீதினிற் பூசி நறுநெய் குளித்தே சீவி குழல்முடிப் பேன் யான்-இது செய்யு முன்னே முடியேன்"
இது பாரதியின் பாஞ்சாலி சபதம். ஆத்திரம் பொங்கி எழும் கவியின் கூற்று இஃது; "கட்டுண்டோம், பொறுத்திருப்போம் காலம் மாறும்" என்று பொறுமையைப் பாராட்டி வந்த கவி ஞன், பொறுமையின் எல்லையைத் தாண்டி ஆவேசத்தினுற் கொட்டிய சபதமொழி
சமுகத்திலே காணப்படும் ஊழல்கள், அரசியலிற் காட்சி யளிக்கும் கொடுங்கோன்மை முறைகள் முதலியவற்றை ஆணித்தரமாக எடுத்துக்கூறி, மக்களிடையே இன எழுச்சியும்
73

Page 50
சமுதாய எழுச்சியும் தேசபக்தியும் உண்டாகக் கூடிய முறை யில் இச் சபதத்தைப் பயன்படுத்துகிருர் பாரதி. தொடக் கத்திலேயே அத்தினுடபுரத்தின் சிறப்புக்கூற வந்த கவிஞர், "அவனியிலே அதற்கிணே யிலேயாம்' என்று கூறிவிட்டு, நல்ல வர் வாழும் மத்தியிலே கெட்டவரும் வாழ்வது இயல்பு என்ற உண்மையை,
சிந்தையி லறமுண் டாம்-எளிற் சேர்ந்திடுங் கலிசெயு மறமு முண்டாம் மெய்த்தவர் பலருண் டாம்-வெறும் வேடங்கள் பூண்டவர் பலருமுண் டாம் உய்த்திரு சிவஞானங்-கனிந் தோர்த்திடு மே லவர் பலருண் டாம்; பொய்த்த விந்தி ரசாலம்-நிகர் பூசையுங் கிரியையும் புவேநடை யும் கைத்திடு பொய்மொழி பும்-கொண்டு கண்மயக் காற்பிழைப் போர்பஸ் ராம்
என்னும் அடிகளிற் புலப்படுத்துகின்ருர், உள்ளத்திலே புன்மை தெரிவார் புல்த்தொழிலில் ஈடுபடுவர்; மனிதத் தன்மை, சால்பு இவையில்லாதவர் அவர்கள். இத்தகைய புலேத் தொழில் படைத்தவர் ஒருவர் இருந்தாலே அந்தச் சமு கம் அழியும். இதனே ஆசிரியர் சகுனியின் மேலேற்றி விளக்கு கின்ருர், துரியோதனன் குலம் அடியோடு அழியக் காலாக இருந்த சகுனியை,
அந்தப் புல் நடைச் சகுனியும் புறமிருந்தார் என அறிமுகப்படுத்துகின்ருர்,
பழமை பழவினை எனக்கூறி முயற்சி எதுவும் செய்யாமற். சோம்பேறிகளாகத் திரியும் மூடரை வெறுத்தவர் பாரதி. துரியோதனன் தரும்னே இகழ்வதாக அமைந்துள்ள பகுதியில், இதைக் காணலாம்.
கிழவியர் தபசியர் போல்-பழங் கிளிக்கதை படிப்பவன் பொறுமை யென்றும் பழவினே முடிவென்றும்-சொவிப் பதுங்கிநிற் போன், மறத் தன்மை யிலான் வழவழத் தருமன்
4. "

என்பது அப்பகுதி. நாட்டிலே ஒருவர் நன்கு உண்டு உடுத் தலைக் கண்டு, இன்னுெருவர் பொருமை கொள்தலேப் பொறுக் காதவர் பாரதி; இத்தகைய சுபவரால் நாடு எவ்வித நிலையை அடையுமோ என்று ஓரங்கியவர் அவர்.
எப்படிப் பொறுத்திடு வேன்? இவன் இளமையின் வளமைக ளறியேணுே என்று வரும் பாடல்கள் துரியோதனன் பொருமை, பொது வாக உடுப்பதுவும் உண்பதுவும் பற்றிய தென்பதை விளக்கு. கின்றன; - நிதிசெய் தாரைப் பனிகுவர்
மானிடர் மாமனே! எந்த நெறியி னுவது செயினும்
நாயென நீள் புவி துதிசெய் தேயடி நக்குதல்
கண்டனே மாமனே! வெறுஞ் சொல்லுக் கேயற நூல்க
ரூரைக்குத் துணிவெ லாம்
என்ற அடிகள், ஏழையென்றும் அடிமையென்றும் எவருமில் லாத நாட்டைக் காண விழைந்த பாரதியின் உணர்ச்சியைக் குறிப்பன.
தம்மிடத்திலே இன்பம் அனுபவித்தற்குரிய எல்லாமிருந் தும் அவற்றைவிட்டுப் பிறரின்பத்தை அழிக்கத் திட்டம் வகுக் கும் உலகியல் எதிர்த்த பாரதி,
இனம் பொற்கொடி மாதரைக் களிப்பதினும் இன்னும் பலின் பத்தினும்-உள்ம் பூசைய விட் டேஇதை மறந் தி டடா என்று திருதராட்டிரன் மூலம் கெஞ்சுகின்ருர்,
சூதுக்கு வரும்படி விதுரன் மூலம் தூது அனுப்புகின்று?ன் தந்தையாகிய திரிதராட்டிரன், "வெல்லக் கடவர் எவ ரென்ற போதும் வேந்தர்கள் சூதை விரும்பிடலாமோ?" என்று பதில் கூறிய தருமனே, பின்பு,
கருமமொன்றே யுனா தாம்-தங்கள் கடன்; அதை நெறிப் படி புரிந்திடுவோம் தந்தையும் வரப்பணிந் தான்; சிறு ,
|-
75.

Page 51
தந்தையுந் தூதுவந்ததையுரைத் தான்; சிந்தை யொன்றினி யில்லே என்றுரைத்துச் சம்மதிக்கின்ருன் மருமங்கள் எவை செயி "ணும், மதி மருண்டவர் விருந்தறஞ் சிதைத்திடினும், கடன் "செய்தே தீர வேண்டும், குரவர் சொல் தட்டலாகாது என்ப தைப் பாரதி தம் உள்ளத்தினுட் கொண்டே இதைப் படைத் தார்:
நெடுங்கரத்து விதி காட்டும் வழியில் நின்று நீங்கி அகன் றிட முடியாதென்பதைச் சிறந்த புதிய உவமை மூலம் விளக்கு தின் ருர் பாரதி.
விதி வகுத்த போழ்தினில்,
நரிவகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம் நழுவிவிழும் சிற்றெறும்பால் யானை சாகும் வரிவகுத்த வுடற்புலியைப் புழுவுங் கொல்லும் வருங் கால முணர்வோரு மயங்கி நிற்பார்
என்று கூறுவதனுல் விதியின் வலிமை வற்புறுத்தப்படுகின்றது. சிலப்பதிகாரத்திற்போல் இங்கும் விதியே இறுதியில் வெல் கின்றது.
முன்பு நம்மவர் ஆடியது குது; எனவே சூதிற்கு வருக என்று பழமையின் பெயரினுல் அழைக்கின்ருன், பழிக்கவற்றை 'யொரு சாத்திரமென்று பயின்ற சகுனி, இந்தச் சந்தர்ப்பத் தைப் பயன் படுத்துகின்ருர், பழமைக்கு அடி கொடுக்கும் until 5.
முன்பி ருந்ததொர் காரணத் தாலே மூடரே பொய்யை மெய்யெ னலாமோ? முன்பெனச் சொலுங் கால மதற்கு மூடரே யோர் வரையறை யுண்டோ?
என்று கேட்ட பாரதியார், பழமையென்ற காரணத்தினுற் சாத்திரங்களில் நம்பிக்கை வைத்து அழிந்தோரை எண்ணி,
பொய்யொ முக்கை யறமென்று கொண்டும்
பொய்யர் கேலின்யச் சாத்திர மென்றும் ஐயகோ, நங்கள் பாரத நாட்டில்
அறிவி லாரறப் பற்றுமிக் குள்ளோர் நொய்ய ராகி அழிந்தவர் கோடி , என இரங்குகின்ருர், ,י" *罪
76

தீயோர் நட்பிலும் நல்லோர் வெறுப்பே நன்மை பயக்கு
மென்பது சான்றேர் கொள்கை. இதனைப் பாரதியாரும் விதுரன் மூலம் வற்புறுத்துகின்ருர், துரியோதனன் புலேச் சகுனியை வளர்த்தமையை வெறுத்து, அவனே விரட்டி ஒட்டி விட்டுப் பாண்டவரை நட்புக் கொள்ள வேண்டுமென்பதை அழுத்தந்திருத்தமாக அறிவுறுத்துவதற்கு விதுரன்,
வீட்டு னேநரி யைவிடப் பாம்பை
வேண்டிப் பிள்ளே யெனவளர்த் திட்டோம்
நாட்டு ளேபுக ழோங்கிடு மாறிந் நசியை விற்றுப் புலிகளேக் கொள்வாய்
எனச் சொல்வான் நரியானது வஞ்சத்தை உள்ளத்தில் அடக்கி நட்புடையது போலப் பாசாங்கு செய்யும். ஆனு ற் புவி அவ்வாறு வஞ்சமாக நடவாது வெளிப்படையாக எதிர்க் கும். விழிப்புடன் இருக்க முடியுமாயின், புவியின் அருகிலே இருப்பது நன்றே என்பது இதன் பொருள்.
பிறர் வீழ்ச்சியிலும் துன்பத்திலும் மகிழ்ச்சி கொள்ளும் கயவரை எண்ணும் தோறும் பாரதிக்கு ஆத்திரம் ஆத்திர மாகப் பொங்கும். ஓரிடத்தில் ஆத்திரம் ஆவேசமாக மாறித் துரியோதனனை நாய்க்கு உவமையாக்குகின்ருர், பாஞ் சாவியைப் பணயம் வைத்தால், தோற்றதனேயும் மீட்டுக் கொள்ளலாம் என்று சகுனி கூறியதைக் கேட்ட துரியோ
தனன்,
நாயொன்று தேன்கல சத்தினே-எண்ணித் துன்று மூவகையில் வெற்றுநா-வினேத்
தோய்த்துச் சுவைத்து மகிழ்தல் போல் ஒன்றுரை யாம லிருந்திட்டான் என்று வருணிக்கிருர், பிறர் பொருளே வெளவக் கருதி, அத குல் தாம் எங்தக் கூடிய இன்பத்தைக் கருதிக் கொட்டாவி விடுவோர்க்கு எவ்வளவு பொருத்தமான உவமை
பேச்சிலே மட்டும் அன்பு காட்டிச் செயலிலே அதனேக் காட்டாத மாந்தரைப் பாரதியார் முற்ருக வெறுத்தார்; ஒருவர் மற்குெருவருக்குத் துன்பம் இழைக்கும் போது, பலர் "கொடுமை கொடுமை" யென்று கூறி வாயன்பு காட்டுவர்; ஆணுல், அதைத் தடுக்க முன்வராரி இத்தகையோர் அன்பு பாரத நாட்டிற்கு என்ன பயனேத் தரப் போகின்றது? பெட்
זרד

Page 52
டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ? பாண்டவர் த
தேவியை, அவள் நீண்ட கருங் குழல் பற்றி இழுத்துச் செ கின்ருன், கள்ளின் சார் பின்றியே வெறி சான்ற துச் சா னன். அப்பொழுது "நெடு மாநகரிற் சனமனேத்து "நேயம் பெறக் கண்டு" பல கூறி இரங்கினுர் என்று கூறுகின்ரு வில்லிபுத்தூரார், மகா பாரதத்தில், குது போர்ச் சருக்கத் தில் (228). ஆணுற் பாரதிக்கு ஆவேசம் பொங்குகின்றது, வாயால் அன்பு காட்டுவதோடு நில்லாது அவளத் துச்சாத னனிடமிருந்து விடுவித்திருக்கலாமே? அவ்வாறு செய்யாது நெட்டை மரங்கள் போல நின்று புலம்புவதஞல் என்ன பயன் என்று கேட்கின் ருர்,
ஊரவர்தங் கீழ்மை உரைக்குந் தரமாமோ வீர மிலா நாய்கள் விலங்காம் இளவரசன் தன்னே மிதித்துத் தராதலத்திற் போக்கியே பொன்னேயவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல் நெட்டை மரங்களென நின்று புலம்பினுர் , பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?
என்பன ஆத்திரமும் ஆவேசமும் கலந்த மொழிகள்.
துகிலுரிதற் சருக்கத்திலே பாரதியின் புதுமைப்_பெண் ஃணக் காண்கின்றுேம். பாரதியார் பெண் ஃணப் பாரத நாட் டின் தவப்பயணுக, ஆவியிலினியவளாக, தேவியாக், நிலத் திருவாக, எங்குந் தேடினுங் கிடைப்பருந் திரவியமாகக் கரு தியவர். எனவேதான் பெண்ணேப் பணயமாக வைத்து இழந் தானே தருமன் என்று கேட்டதும் கவிஞருக்கு ஆத்திரம் உச்ச நிலயை அடைகின்றது
வேள்விப் பொருளினயே-புலே நாயின் முன் மென்றிட வைப்பவர் போல் நீள்விட்டப் பொன் மாளிகை- கட்டிப் பேயினே
நேர்ந்து குடியேற்றல் போல் ஆள்விற்றுப் பொன்வாங்கியே-செய்த பூணேயோர்
ஆந்தைக்குப் பூட்டுதல் போல் கேள்விக் கொருவரில்லை-உயிர்த் தேவியைக் கீழ்மக்கட் காளாக்கினுன்
என்று கவிஞர் உள்ளத்திலிருந்து படபடப்போடு வெடித்து வரும் சொற்கள், அவரின் உள்ளத்தோடு ஐக்கியப்பட்டு
. . .
78

I = 1 է: i
கள்விக்கு ஒருவருமில்லைய.?' என்று எம்மையும் கேட்கச் சய்கின்றன.
கணவர் நில சாயப் புலத் தொண்டு செய்தால் அவர்க் தி தாரமுடைமை இல்லே என்பது பாரதி கொள்கை. இது பாரதி கண்ட புதுமைப் பெண்.
-"அவர்
தாயத்தி லேவிலேப் பட்டவர்-புவி
"தாங்குந் துருபதன் கன்னி நான்-நில் சாயப் புல்த் தொண்டு சார்த் திட்டால்-பின்பு
தார முடைம்ை அவர்க் குண் டோ?" ன்று துரியோதனனக் கேட்டது பாரதியின் புதுமை ம் ண், ஒவ்வொருவரும் தமது சார்பர்கச் சாத்திரத்தை ரைத்துக் கொள்வர். எனவே சாத்திரத்ன் த எடுத்துக் காட் * கொள்வதற் பயனில்லை யென்பது,
L. "பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்" என் றும் அடியினுற் பெறப்படுகின்றது.
"பெண்டிர் தமையுடை பீர் பெண்களுடன் பிறந்நீர் பெண்பாவ மன்ருே பெரிய வசை கொள்வீரோ? கண் பார்க்க வேண்டும்!" .
று சபையை நோக்கிக் கையெடுத்துக் கும் பிடுகின் ருள்
பாரதி. ஆகவே பாஞ்சாலியையும் பெண்மையின் பெயராற் பிச்சை கேட்க வைக்கின் ருர், எவ்வளவு உருக்கமான பகுதி ஃது. கரும்புத் தோட்டத்திலே, பீஜித் தீவினிலே பெண் ள் விம்மி விம்மி அழுங் குரலேப் பற்றிப் பாடிய போதும் தே கருத்தைத் தான் காண்கின்குேம்.
'எந்தையர்தம் மனேவியரை விற்ற துண்டோ
இதுகாறும் அரசியரைச் குதில் தோற்ற விந்தையை நீர் கேட்ட துண்டோ." ன்று விகர்னன் கேட்கும்போது பாரதியே தமது பாணியிற் கட்பது போல இருக்கின்றது. -
வீமனுடைய கூற்றிலே பாரதியின் உணர்ச்சி உச்சத்தை ாய்துகின்றது. "அண்ணு, நீ நாட்டை யெல்லாம் தொலைத் தாய், பொறுத்திருந்தோம். எம்மை அடிமை செப்தாப், "
79

Page 53
மேலும் பொறுத்திருந்தோம். ஆனல் துருபதன் மகளைப் பணயம் வைத்து இவர்க் கடிமை செய்தாயே, இது பொறுப்ப தில்லே, GTGCT GEA
-தம்பி
எரி தழல் கொண்டு வா
கதிரை வைத் திழந்தான்-அண்ணன்
கையை எரித் திடுவோம்." என்று வீமன் கூறும் போது, பெண்ணிற்குக் கொடுமை இழைத்ததைக் கண்ட பாரதியின் ஆவேசக் குரலேக் கேட்கின் ருேம். ஈற்றிலே, மான பங்கத்தைப் பொறுக்க இயலாது. பாஞ்சாலி செய்த சபதம், பாரதி பெண்மையின் பெயராற் செய்த சபதமாகும். -
சமுதாயத்தில் ஊறிப்போய்க் கிடக்கும் ஊழல்களேக்
கிளறிக் காட்டித் தமது சமூகச் சீர்திருத்தக் கொள்கை. சுளேப் பாரதியார் பாஞ்சாலி சபதத்திற் புலப்படுத்து
மாற்றை இதுவரை கூறினுேம், அரசியலிற் காட்சியளிக்கும் கொடுங் கோன்மை முறைகளைக் கண்டித்து, திமது அரசியற் கொள்கைகளைப் புலப்படுத்தித் தேச பக்தியைத் தூண்டு மாற்றை இனிக் கவனிப்போம், மன்பதையைக் காக்கும் அரச குடியிற் பிறத்தல் பெரும்பான்மையையும் துன்பத் தையே அளிக்கும். இன்று எம்மை ஆளும் ஒற்றை ஆட்சி அமைச்சர்கள் படும் பாட்டை நோக்குமிடத்து இஃது, இனிது புலனுகும். இதனே நன்கறிந்தே பாரதியாரும் அத் தின புரத்தின் வளம் கூறுமிடத்து,
புவி ஆளுமோர் கடுந்தொழில் இனிதுணர்ந்த ஆரிய வேல் மறவர் என அரசரைக் குறிப்பிடுகின்ருர். இத்தகைய கடுந் தொழில் மேற் கொண்ட அரசர் தம் குற்றத்தை நீக்கிப் பிறர் குற்றம் காணும் ஆற்றல் பெற்றிருத்தல் வேண்டும். ஆளுவோருக் கும் ஆளப்படுவோருக்கும் நீதி_ஒன்றே என்பதை உணர்தல் வேண்டும். இதுவே. பழந் தமிழர் கண்ட அரசியல்; பாரதி கான விரும்பிய ஆட்சி முறையும். ஆணுல் அதற்கு மாரூக,
மன்னருக்கு நீதி யொருவகை-பிற மாந்தர்க்கு நீதிமற் ருேர்வகை என்ற முறையில் நாட்டில் ஆட்சி நடப்பதைப் பாரதியார் துரியோதனன் தீ மொழி மூலம் புலப்படுத்துகிருர், பிறரை 80
* 。

உறிஞ்சி உறிஞ்சிப் பொருளேச் சேகரித்து அவரைத் தாழ்த்து வதில் மேலோங்கி நிற்கும் அரசைத், துரியோதனன் திரித. ராட்டிரனுக்குக் கூறிய பகுதி மூலம் காட்டுகின்ருர்,
"குழைத லென்பது மன்னவர்க் கில்ஃற கூடக் கூடப்பின் கூட்டுதல் வேண்டும் பிழையொன் றேயர சர்க்குண்டு கண்டாய் பிறரைத் தாழ்த்து வதிற்சலுப் பெய்தல்," பிறரை வருத்தித் தன் வாழ்வை உயர்த்தும் அரசியல் அடிப் படையை இங்கு பாரதியார் எதிர்க்கின்ருர், பிற நாடுகளேச். சுரண்டி அவற்றை அடிமைப்படுத்திய மேனுட்டாரைப் பாரதி இங்கு குறிப்பாகத் தாக்குகின்ருர், பிறருக்கு இடைஞ், சல் செய்யாது தன்னே உயர்த்துவதைவிடப், பிறருக்கு உதவித்/ தானும் உயரும் கோட்பாட்டினேயே பாரதியார் பரப்ப, முயன்ருர்,
தம்பி விதுரனே மன்னன் அழைத்து, பாண்டவரிடம் சென்று, "கொம்பினே பொத்த மடப் பிடியோடும் வந்து, விருத்துகளிக்கக் கெளரவர் கோமான் அழைத்தான்" என்று உரை செய்யுமாறு வேண்டுகின்முன், அந் நி3லயில் விதுரன்,
'போச்சுது! போச்சுது பாரத நாடு! போச்சுது நல்லறம்! போச்சுது வேதம்! ஆச்சரி யக்கொடுங் கோலங்கள் காண்போம்" என்று கூறுகின்ருன். பாரதநாட்டின் நன்மையிற் கண். னுங் கருத்துமாக இருப்போர் உள்ளத்தில் இக் கூற்று எவ், வித உணர்ச்சியைக் கிளறும்? இவ்விதுரன், பாண்டவர் நகருக்குச் செல்லும் வழியிடையே, எண்ணமுறலாகித், தன் இதயத்துள்ளே, சூதால் அழியப்போகும் நாட்டின் பெரு, மைகளேக் கூறி இரங்குகின்ருன்.
"பேரறமும் பெருந்தொழிலும் பிறங்கு நாடு பெண்க னெல்லாம் அரம்பையர் போல் ஒளிரும் நாடு விர மொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி வேள்விஎனும் இவையெல்லாம் விளங்கு நாடு சோர முதற் புண்மையெதுந் தோன்ரு நாடு தொல்லுலகின் முடிமணிபோல் தோன்றும்நாடு" இத்தகைய பெருமை சான்ற நாடு, கொடுங்கோன்மை, ஆட்சி முறைகளாலும் கியமையாலும் நாசமெய்தப்
81,

Page 54
போவதை எண்ணிப் பாரதியார் பாடியதை உணர்பவர்க் குத் தம் பாரத நாட்டின் மீது அன்பும் ஆர்வமும் அடங் காது எழுந்து, அதன் வருங்காலம்பற்றிய கவ&லயும் உண் டாதல் இயல்பே.
விதுரன் தருமனிடம்வந்து "அன்போடு நும்மை அழைத் தனன் வேந்தன், வெய்ய புன் சூது களித்திடச் செய்யும் மந்திரமொன்று மனத்திடைக் கொன்டான்' என்று அழைத்த போது, வீமன்
"போரிடச் செல்வ மடா!-மகன் புலேமையுந் தத்தையின் புலமைகளும் யாரிட மவிழ்க்கின்ருர்? இதை எத்தனே நாள்வரை பொறுத்திருப்போம்" என்று வீரப் பேச்சுப் பேசுகின் மூன். கொடுமைகளின் வன்மையைப் பொறுக்கமாட்டாத பாரதியின் முழக்கமிது,
பின்பு தருமபுத்திரனின் முடிவுரை கேட்டு "தின் சொல் வழிச் செல்வோம்" என வனங்கி யாவரும் அத்தினமாநகரத் திற்கு வந்தனர். சபைக்கு வந்ததும், நன்றறியாச் சகுனி, வல்லுறு குதெனும் போர்தனில் வலிமைகள் பார்க்குதும் வகுதி" என்று குதுக்கழைத்தான். இவ்வழைப்பைக் கேட்ட தும், நூல் விலக்கிய செய்கைகள் அஞ்சும் நோன் பிரூேனுஸ் தருமன்
"ஜய செல்வம் பெருமை இவற்றின் காத லாவர சாற்றுவி ன ல்வேன்;
காழ்த்த நல்லறம் ஓங்கவும் ஆங்கே ஓத இாணும் உணர்த்துத வானும்
உண்மை சான்ற கஃத்தொகை யாவும் சாத லின்றி வனர்ந்திடு மாறும்
சகுனி, யானர சாளுதல், கண்டாய். என்னே வஞ்சித் தென் செல்வத்தைக் கொள்வோர்
என்ற னக் கிடர் செய்பவரல்லர் பின்னே என்னுயிர்ப் பாரத நாட்டில்
பீடை செய்யுங் கவியை அழைப்பார் நின்னே மிக்க பனிவொடு கேட்பேன் நெஞ்சிற் கொள்கையை நீக்குதி" என்ருன். மன்னன் உயிர்த்தே மலர்தலே உலகம். எனவே நல்லரசையும் அதனே ஆள்வோரையும் அழிப்பதால் நாட்
82

டிற்குப் பல்வகை நலிவுகளும் ஏற்படும் என்பதனே இங்கு பாரதியார் குறிக்கின்ரூர். நல்லாட்சி அணி செய்த பாரதம் பிறருக்கு அடிமையாகி அடைந்த இன்னல்களேக் கவிஞர் மறைமுகமாக இவ்விடத்திற் புலப்படுத்துகின்ருர்,
விதியினுற் தருமனும் வீழ்ந்தான். மாயச் சூதினுக்கு அவன் இணங்கிவிட்டான். தாயம் உருட்டலானுன் தரு மன். பீடிழந்த சகுனி, "நாடிழக்கவில்லே, தருமா. நTட்டை வைத் திடு" என்ருன். அப்போது விதுரன்,
"கடுஞ் சொற்கள் பொறுக்காத மென்மைக் காதும் கருங்கல்லில் விடத்தோய்ந்த நெஞ்சுங்கொண்டோர் படுஞ்செய்தி தோன்றுமுனே படுவார் கண்டாய்" என்று, நெடும் பச்சைமரம்போல வளர்ந்துவிட்ட துரி யோதனன்ன ப் பார்த்துக் கூறுகின்றன். செவிசைப்பச் சொற்பொறுக்கும் பண்பு அரசருக்கு வேண்டும் என்ற கருத்தை இங்கே பாரதி அமைத்திருக்கின்ருர், அறிவில் மேம்பட்டவரும் தம்மை எதிர்த்து நின்றேரும் கடுஞ்சொற் களேக் கூறும் போது, அவற்றை வெறுக்காமல் மதித்து ஆராய்வதே நல்லரசின் பண்பு. ஆகவே நல்லரசின் நெஞ்சு மென்மையாகவும், காது வன்மையாகவும் இருத்தல் வேண் டும்,
ஆணுல் விதுரன் அங்கு ஏதுரைத்தும் பயனில்லே; எனவே, வாய்மூடித் தலே குனிந்தே இருக்கை கொண்டான். இதைப்படிக்கும்போது எங்கள் உள்ளத்தில் அரசர் செய்யும் கொடிய ஆட்சி முறைகளில் வெறுப்பு மிகுந்து தோன்றுகின் நறது. நாட்டிலே துன்பம் மல்கியிருப்பதற்குக் கால், அரசரின் படை பலமும் சூதுமே. ஆணுல் தர்ம நெறியின் எதிரே இவை நிலைக்கமாட்டா; ஈற்றில் அழியும்; உலகமும் இன் புறும். இவ்வுண்மையையே
பதிவுறுவோம் புவியிலெனக் கவிம கிழ்ந்தான் பாரதப் போர் வருமென்று தேவ ரார்த்தார் என்ற கவிஞர் சுற்றுப்புலப்படுத்தும்
சூதினை மீட்டும் தொடங்குகின்று ர். காய் உருட்டவா ஞர். தருமன் தேயம் வைத்து இழந்தான். இவ்விடத்தில் புதுமைக் கவிஞருக்கு ஆத்திரம் பொங்குகின்றது. தானே கதைக்குள் குதித்துவிடுகின்ருர், நாடு தம்மிடத்துக் "காவ
83

Page 55
லுக்காக ஒப்படைக்கப்பட்ட தென்பதை மறந்து அது தமது சொத்து எனத் தருமன் கருதியதை எண்ணுந்தோறும் பார திக்குச் சினம் மூழ்கின்றது.
கோயிற் பூசை செய்வோர்-சிலையைக்
கொண்டு விற்றல் போலும் வாயில் காத்து நிற்போன்-வீட்டை
வைத் திழத்தல் போலும் "ஆயிரங்க ளான-நீதி
யவை உணர்ந்த தருமன் தேயம் வைத்திழந்தான்-சீச்சீ சிறியர் செய்கை செய்தான் என இரு உவமைகளால் இதனைக் கண்டிக்கிருர் ஆவேசம் மேலும் பொங்குகின்றது.
நாட்டு மாந்த ரெல்லாம்-தம்போல்
நரர்க ளென்று கருதார் ஆட்டு மந்தை யாமென்-றுலகை
அரச ரெண்ணிவிட்டார் என்று அரசர்மீது சீறி விழுகின்றர்.
ஒரஞ் செய்திடாமே-தருமத்
துறுதி கொன் றிடாமே சோரஞ் செய்திடாமே-பிறரைத்
துயரில் வீழ்த் திடாமே ஊரை யாளும் முறைமை-உலகில்
ஓர் புறத்து மில்லை. எனக்கூறுமிடத்துப் பாரதியின் ஆத்திரம் தணிகின்றது: பிறரைத் துன்பத்தில் மூழ்கச்செய்து ஊரையாளும் முறை பாரத நாட்டிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கும் இயல்பானது. எனவே சாரமற்ற மொழிகளைப் பேசிப்பயனில்லை; மேலே சரிதை சொல்லுவோம் எனப் பாடுகிருர் பாரதி; r
தன் தம்பியரையும் தன்னையும் பணயமாக வைத்திழக் கின்ருன் தருமன்: ஈற்றில், வடிவுறு பேரழகைச் குதினிற் பனயமென்றே அறக்கோ மகன் வைத்திடல் குறித்துவிட் டான். உடனே,
செருப்புக்குத் தோல் வேண்டியே இங்குக் கொல்வரோ செல்வக் குழந்தையின?
84

என்று கேட்கின்ருர் பாரதி.
திரெளபதி சூதில் வசமானதும் அவளைச் சபைக்கு அழைத்துவரும்படி ஆணை பிறக்கின்றது. அரசன் காவல் *செய்யாத இடத்துப் பெண்கள் நோன்பும் இன் மும் என்ற
அரசியற் கோட்பாட்டை,
தருமம் அழிவெய்தச் சத்தியமும் பொய்யாக பெருமைத் தவங்கள் பெயர்கெட்டு மண்ணுக மோன முனிவர் முறை கெட்டுத் தாமயங்க சீதேவி தன் வதனம் செம்மைபோய்க் காரடைய ஆதி பர்ாசக்தி-அவள் நெஞ்சம் வன்மையுற சோதிக் கதிர் விடுக்கும் சூரியனந் தெய்வத்தின் முகத்தே இருள் படர என்னும் அடிகளில் ஆவேசத்துடன் புலப்படுத்துகின்ருர்.
பாஞ்சாலியைச் சபைக்கு அழைத்துவா என்று விதுர -ணிடம் கூற, பெரியோன் விதுரன் சினங்கொண்டு,
பாண்டவர் தாம் நாளைப் பழியிதனைத் தீர்த்திடுவார் மாண்டு தரைமேல் மகனே கிடப்பாய் நீ. -என வருங் காலத்தை உணர்த்துகின்றன். பாரத நாட்டு மக்களை வருத்துவோர் கதியும் இதுவாகும் என்பதே பாரதி கருத்து இங்கு நாட்டு விடுதலையிற் பாரதிக்கிருந்த நம் பிக்கை புலப்படுகின்றது,
தேர்ப் பாகனை அழைத்து, "பாண்டவர் தம் தேவிதனைப் பார் வேந்தர் மன்றினிலே ஈண்டழைத்துவா" என இயம் பினன் பாரதர்க்கு வேந்தனகிய துரியோதனன். "மாத விடாயிருக்கிருள், அந்த மாதரசு" என்று இருமுறை சென்று வந்த பாகன் கூறினன். பாகனைச் சினத்துடன் பார்த்து, இடிபோல் உரை செய்கின்றன் துரியோதனன்
ஏழு கணத்தில் வரச்செய் வாய்-உன்னைச் சாக மிதித்திடு வேனடா!
இவ்வாறு, . . . . .
தார் மன்னன் சொல்லிடப் பாகனும்-மன்னன் வேகந் தனைப் பொருள் செய்திடான்' அங்கு வீற்றிருந்தோரை நோக்கி,
கூறும் பணிசெய வல்லன் யான்-அந்தக் கோதை வராவிடில் என் செய்வேன்?
85

Page 56
எனக் கேட்கின் ரூன். இவ்விடத்தில், பாம்புக் கொடிய வனின் சீற்றத்திற்கு அஞ்சாத பாகனின் துணிவைப் பாராட்டு கின்ருர் பாரதி. இறுதி பயப்பினும் அஞ்சாது அரசனுக்கு உறுதி பயக்கும் தன்மையராக இருத்தல் வேண்டும் தூதுவர் என்பதை இங்கு நினே ஆட்டுகிருர் கவிஞர்
தேர்ப் பாகன் இவ்வாறு கூறியதும் துரியோதனன் தம்பி துச்சாதனன்ன விழித்து "நீ அங்கு போய் அப் பொற்ருெடி யோடும் இங்கு வா" என ஆஃணயிடுகின்றன். இத் துச்சாதன னின் செவ்வியைச் சிறிது செப்புவோம் என்கின்ருர் கவிஞர். காரணம், வல்லரசுகளின் இயல்புகளே இவன் மூலம் வடித்துக் காட்டலாம் என்பதே. அவ்வியல்புகள் பின்வருமாறு:
புத்தி விவேகம் மில்லாதவன்-புவி போல உடல்வலி கொண்டவன்-கரை தத்தி வழியுஞ் செருக்கினுல் - கள்ளினின் சார் பின் றியேவெறி சான்ற வன்-அவ சக்தி வழிபற்றி நின்ற வன்-சிவ சக்தி நெறி உன ராத வன்-இன்பம் நத்தி மறங்கள் இழைப்ப வன்-என்று நல்லவர் கேண்மை விலக்கி னுே ன். தேவி தி  ெர ன ப  ைத ஆடை குஃவுற்று நிற்கின் ருள் ஆவென்று அழுது துடிக்கின் முள். வெறும் மாடு நிகர்த்த துச் சாதனன் அவள் மைக் குழல் பற்றி இழுக்கின் ரூன், இந்தப் பீடையை நோக்கிய வீமனுக்குக் கரை மீறி எழுந்தது சினம். அதைக் கண்டு வில் விசயன் சொல்வான்! سيسي"
'ಶ್ಶಟ್ಟಿ வாழ்வதனச் சூது கவ் வும்
தருமம் மறுபடி வெல்லும்' எனு மியற்கை மருமத்தை நம் மாவே உலகங் கற்கும்
வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான் கருமத்தை மென்மேலும் காண்போம்; இன்று | கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம். இது பாரதியின் அடி உள்ளத்திலிருந்து எழுந்த உணர்ச்சி. நீங்கு செய்தோர் பிழைத்ததில்ஃ; கடைசியில் தருமமே: வெற்றி சூட்டும். பொறுமையைக் கடைப் பிடித்துக் காலம் வரும்போது முறையான ஆட்சியை நிறுவுவோம் என்று பாரதியார் உறுதிமொழி பகருகின் ருர் .
83

பாவி துச்சாதனன் அன்னே துகிலினே மன்றிடை உரிதலுற் புருன். அப்போது,
உட்சோ தியிற் கலந்தாள்-அன்னே உலகத்தை மறந்தாள் ஒருமை புற்ருள் "ஹரி, ஹரி, என்ருள்-கண்ணு அபய மபயமுனக் கபய மென்ருள் துக்கங்கள் அழித்திடுவாய்-கண்ணு தொண்டர் கண்ணிர்களேத் துடைத்திடுவாய் நம்பி நின் னடிதொழு தேன்-என்ஃன நானழியா திங்கு காத்தருள் வாய்
-என்ருள் பாஞ்சாலி. வண்ண பொற் சேலேகள் வளர்ந்தனர் வளர்ந்தன. துன்னிய துகிற் கூட்டம் கண்டு தொழும்பத் புதுச்சாதனனும் வீழ்ந்து விட்டான். அந்நிலையில்,
தேவர்கள் பூச் சொரிந்தார்-"ஓம் ஜெய ஜெய பாரத சக்தி" என்றே ஆவலோ டெழுத்து நின்று-முன்னே ஆரிய வீட்டுமன் கைதொழு தான் சாவடி மறவரெல் லாம்-"ஓம் சக்தி சக்தி சக்தி" என்று கரங்குவித்தார் அதர்மம் தோல்வியுற்றுவிட்டது; தருமம் வெற்றி பீட்டி -விட்டது. இங்கு பாரதி குறிப்பால் உணர்த்துவது யாதெ
ஆணுல் அறத்தைத் துணேக் கொள்வோமாயின் அந் நிைேய மாற்றி வெற்றியை அமைத்திடலாமென்பதே.
அடுத்துவரும் சபத மொழிகளிற் பாரதியின் ஆவேசம் படிப்படியாக உச்ச நிஃயை அடைகின்றது. வீமன் ஆஃண
:பிட்டி ஃதுரை ப்பான்:
இந்த
நாய்ம க ரூந் துரி யோதனன் தன்ஃன தொடைப் பிளந் துயிர் மாய்ப்பேன்-தம்பி சூரத் துச் சாதன் தன்னே யு மாங்கே கடைப்பட்ட தோள்க&ளப் பிய்ப்பேன்-அங்கு கள்ளென உனறு மிரத்தங் குடிப்பேன் நடைபெறுங் காண்பீர் உலகீர்-இது தான் சொல்லும் வார்த்தையென் றெண்ணிடல்
Gall GÅTT
8.
பணில், நமது பாரதத் தாய் இழிநிலையை அடைந்து விட்டாள். |

Page 57
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை-இது. சாதனை செய்க பராசக்தி பொது நலம் தேடும் பாரதியின் வீர சபதம் இஃது.
பார்த்தன் எழுந்து உரை செய்வான்:
இந்தப் பாதகக் கர்ணனைப் போரில் மடிப்பேன் தீர்த்தன் பெரும் புகழ் விஷ்ணு-எங்கள் சீரிய நண்பன் கண்ணன் கழலாணை கார்த்தடங் கண்ணி எந் தேவி- அவள் கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை போர்த் தொழில் விந்தைகள் காண்பாய் -ஹே பூத லமே! அந்தப் போதினில் முதலில், வெற்றிதரும் கடவுள் மேல் ஆணை, அடுத்து அறவழியிற் செலுத்தும் மனைவியாகிய பாஞ்சாலி கண்ணில் ஆணை, இறுதியில் அறத்து வழியிற் சென்று வெற்றி பெற அருந்துணையாய் நிற்கும் தர்ம சக்தியாகிய காண்டீபத்தின் மேல் ஆணை. நமது விடுதலைப் போரில் ஆண்டவன் துணை யாய் நிற்பான், தேவி அறங் காட்டுவாள், தருமம் வெற்றி தரும் என்பதே இதன் உட்பொருள்.
கடைசியாகவுள்ள பாஞ்சாலி சபதம் நெஞ்சை உருக்கும். வன்மையுடையது. உணர்ச்சியின் சிகரமாக அமைந்துள்ளது. தேவி திரெளபதி தேவி பராசக்தி மேல் ஆணையிட்டுக் கூறு: கிருள்:
பாவி துச்சாதனன் செந்நீர்-அந்தப்
பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம் மேவி இரண்டுங் கலந்து-குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே சீவிக் குழல் முடிப் பேன் யான்-இது
செய்யு முன்னே முடியேன். இச் சபதம் வீழ்ந்து கிடக்கும் பாரத சமுதாயத்தைத் தட்டி எழுப்புகின்றது; வருங் காலத்தில் நம்பிக்கை கொள்ளச் ச் செய்கின்றது. இச் சபதத்தைக் கேட்டதும்,
ஒமென் றுரைத்தனர் தேவர்-ஓம்
ஒ மென்று சொல்லி உறுமிற்று வானம் இந்த நானிலம் முழுவதும் நல்லின் பத்தில் மூழ்குவதைக் காண விரும்பிப் பாரதியாரும் இத்துடன் கதையை முடிக்கின்றர். இதுவே பாரதி சபதம்". 88

கடலோசை
— 6. GSF dåvaurs|Tuusuh M. A.-
Um ego அய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் என் னும் நூலிலுள்ள உரைப்பகுதி ஒன்றினை எடுத்து, அதன் கண்ணுள்ள நயச் சிறப்புக்களை ஆராய்ந்து கூறுதலே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும். நயச் சிறப்புக்கள் பாட் டில் இருத்தல்போல உரைநடையிலும் உண்டு. ஒன்றைத் தர்க்க முறைப்படி ஆராய்ந்து, காரண காரியத் தொடர்பு உளதேல் அதனை எடுத்துக் காட்டித், தெளிவாகக் கட்டுரைத் தற்கு உரைநடை பெரும்பாலும் கையாளப்படுகின்றதெனி னும், கவிதையைப்போல் கற்பனையுருவங்களை அமைத்தற் கும் உணர்ச்சி பேதங்களை வெளிப்படுத்துதற்கும் பயன்படுத் தப்படுகின்றது. அத்தகைய இடங்களில் அது பாட்டின் பண்பு கள் சிலவற்றைத் தன்னகத்தே கொண்டு விளங்குதலைக் கான லாம் உரைநடை, பாட்டு என்பனவற்றிற்கிடையேயுள்ள பேதம் யாது என்னும் விஞவிற்கு விடைகூறுதலிற் பல கஷ் டங்கள் உள. அவ்வினவிற்கு விடைகாண முற்பட்ட மேனட் டுத் திறனுய்வார் பலர். அவர் தம் ஆராய்ச்சியின் முடிபாகக் கூறியிருப்பன படித்து அனுபவித்தற்குரியவை. அவற்றை நாம் படிப்போமாயின் உரைக்கும் பாட்டுக்கும் உள்ள பேதத் தைக் கண்டறிய நாமும் முற்படுவோம். பயனும் அதுவே ште, ић.
நாவல் இலக்கியம் காவியத்தை ஒத்தது. உணர்ச்சிப் பிர வாகம் பெருக்கெடுத்தோடும் இடங்கள் பலவற்றை நல்ல நாவல்களில் நாம் காணலாம். அத்தகைய இடங்களில் அவ் வுணர்ச்சி பேதங்களைத் தகுதிக்கு ஏற்றவாறு சந்தர்ப்பங் களைத் துணைக் கொண்டு வெளிப்படுத்தும் வகையிலேதான் நாவலாசிரியனுடைய கற்பனைத் திறன் தங்கியிருக்கிறது. கற் பனை வளமுள்ள ஆசிரியன் அத்தகைய இடங்களிலே ஒரு கவி யாக உருப்பெற்று நிற்பான். நாம் இப்பொழுது ஆராய எடுத் துக் கொண்ட உரைப்பகுதி நாவலாசிரியன் ஒரு கவியாக நின்று உரைக்கும் சந்தர்ப்பத்திற் காணப்படுவது, சோகம் நிறைந்த உள்ளம் உடைய ஒருவன் கடலைப்பார்த்துக் கூறுவ தாக உள்ளது. அது வருமாறு:
86

Page 58
"கடலோசை விடபுருஷர்களின் விளையாட்டரவமல்ல; வாலிப ஸ்திரீகளின் வம்புக் கூப்பாடல்ல; இனிய வீணையாதி களின் கானம் அல்ல; வெற்றித் தம்பட்டத்தின் ஓசையுமல்ல. அந்தக் குரலில் களியாட்டத் தொனி கிடையாது; சோகரசம் உண்டு. ஆணுல் புத்திரனை யிழந்த பிதாவின் சோகம், புரு ஷனை யிழந்த மனைவியின் சோகம் முதலிய சோகங்களுக்கும் அதன் சோகத்துக்கும் சம்பந்தமில்லை. புலையன் வயிற்றிற் பிறந்து "தஸ்மாத் ஜாக்கிரத ஜாக்கிரத" என்றுபறையறைந்த புண்ணிய புருஷருடைய இரக்கங் கலந்த சுய ஞாபகமற்ற சோகத்துக்கும் 'சுகமற்ற இப்பாழுலகத்தில் பந்துக்களையும் கொன்று சுகமனுபவிக்கக் கருதுவார்களா' என்று சோகித்த அர்ச்சுனனுடைய சோகத்துக்கும் காம்பீரியத் தன்மை மய மான கடலோசையின் சோகத்துக்கும் நிரம்ப நெருக்கமான சம்பந்தமுண்டு. ஆனல் அவர்களுடைய பறையோசையை யும் குரலோசையையும் போன்று சிறுத்திராமல் அழிவற்று ஆகாயமட்டுமளாவி அநேக ஆயிரம் சிரசுகளையுடைய தாய் எள்ளருந் திசைகளோடிப் பரமாத்மாவே மூர்த்தி கரித்து நின் ருற்போல் நிற்கும் ஹிமோத்பர்வதமானது திடீரென்று ஒரு நாள் தனது மெளனப் பிரசங்கத்தை நிறுத்தி வாய்திறந்து பேசிஞல் எப்படியோ அப்படிப் பெரிய, கம்பீரமான பொருள் நிறைந்த வேதரகசிய தத்துவார்த்தத்திற்குத் தக்கதோர் குரலுடனே கடலானது நம்முடன் இடையருது வசனிக்கின் றது. ஐயோ கடவுளின் மகிமையே மகிமை. ஆகா! என்ன கம்பீரம் என்ன விஸ்தீரணம் ஐயோ, இதில் எத்தனகோடி ஜீவ ஜெந்துக்கள் இருக்கின்றன. இதுவே தனியாக ஒரு உல கம் போலிருக்கிறது. இது ராத்திரிக்கூட தூங்காதே-ஸ்வா மிக்குத் தூக்கம் உண்டோ. இதுவும் அவரைப் போலவே (மாயையாகிய காற்றினல் அலைகளை) சிருஷ்டிப்பதும் அழிப் பதுமாயிருக்கிறது. நாம் கடைசியில் ஈசுவரனைப் போய்ச் சேருவதுபோல அலைகளும் சமுத்திரத்தில் கலக்கிறது: இந்த அலைகள் பிறப்பதும், குதிப்பதும், சிரிப்பதும், ஒடுவதும் ஒன் றையொன்று அடிப்பதும், முட்டுவதும், மோதுவதும், இறப் பதுமே தொழிலாயிருக்கின்றன. இவைகளுடைய வீணுர வாரத்தினுல் விளையும் கடைசி ஓசையோ இவைகளுடைய சிரிப்பு விளையாட்டுக்கு முற்றும் விரோதமாய் “ஐயோ ஏன் இப்படி வீணுகக் கூப்பாடிட்டும் கெட்டுப் போகிறீர்கள்" என்று சொல்லுவதுபோல் சோகத் தொணியை உடையதா யிருக்கிறது. இப்படித்தான் உலக வாழ்க்கையும்."
90

இது ராஜம் அய்யருடைய கற்பனையில் உருவான ஒரு வரு *ணனை கடலைப் பற்றிய வருணனை அவர் உள்ளத்தில் எழுந்த எண்ணக் கருத்துக்களோடு இணைக்கப்படுகின்றது. இலக்கியங் களிற் பொதுவாகக் காணப்படும் வருணனைப் பகுதிகளை நாம் இரண்டாக வகுக்கலாம். ஒரு காட்சியை அல்லது நிகழ்ச் *சியை வருணிக்கும்போது, அதன் கண் காணப்படுகின்ற அம் சங்களுள் முக்கியமானவையாகக் கருதப்படுவனவற்றை எடுத் துக் கூறுதல் ஒன்று. அக்காட்சியை அல்லது நிகழ்ச்சியைக் கண்டவிடத்துத் தமக்குண்டான எண்ணக்கருத்துக்களே அதன்மேல் ஏற்றிக் கூறுவது இன்னென்று. இவ்விருவகை வருணனைகளும் இலக்கியங்களிற் காணப்படுவன. இவற்றுள் (piroorg (Objective description) 6T air gy th air Gorgi (Subjective description) என்றும் கூறப்படும். இந்த இரண்டாவது வகை யினைச் சேர்ந்ததே மேலேயுள்ள வருணனை. அது ஆசிரியரு டைய மனத்தில் எழுந்த ஆழ்ந்த நுண்ணிய கருத்துக்களைத் தெளிவுபடுத்துதற்கு உரிய கருவியாக அமைந்திருக்கின்றது.
மேலேயுள்ள உரைநடைப் பகுதியில் ஆசிரியர் கடலையோ அல்லது கடல் நீரில் உண்டாய அலைகளையோ அல்லது அவ்வை களால் உண்டாய ஓசையின் பண்பையோ விவரித்துக் கூற வில்லை. கடலைக் கண்டதனுலும் கடலோசையைக் கேட்டதன லும் அவர் மனத்தில் எழுந்த நினைவலைகளையே வெளிப்படுத்து கின்றனர். அவர் உள்ளத்தில் உருவான அனுபவம் ஒன்றினை வெளிப்படுத்த அக்கடலோசை தக்க கருவியாக அவருக்கு அமைகின்றது. கடலோசையைக் கேட்டு அனுபவித்த புலவர் கள் பலர் தத்தம் மனநிலைக்கு ஏற்ப அதனைப் பல வாழுக வரு னித்திருக்கின்றனர். சங்கப் புலவர்கள் தொடக்கமாகத் தேவியவர்கள் ஈருக எத்தனையோ தமிழ்ப் புலவர்கள் கடலோ சையைக் கேட்டு அனுபவித்து, அந்த அனுபவத்தைச் செய் யுள் வடிவத்திலே தந்திருக்கின்றனர். அது அப்புலவர்கள் எல் லோருடைய உள்ளத்திலும் ஒரு எண்ணக் கருத்தை அல்லது ஒரு உணர்ச்சியைத்தான் உதிக்கச் செய்திருக்கும் எனக் கொள்ள முடியாது. அந்த ஒரு பொருள் பலவகை அனுபவங் களை வெளிப்படுத்த ஒரு கருவியாக விளங்கிற்று. ஆகவே ராஜம் அய்யர் தமக்கு எத்தகைய அனுபவத்தை அக்கட லோசை உருவாக்கியது என்பதை ஆராய்ந்து நிர்ணயிக்க (define) வேண்டியிருந்ததால், அத்தொழிலில் அவர் உள்ளம் முதலில் ஈடுபடுகின்றது; மனித உள்ளத்தில் எழும் உணர்ச்சி
9t

Page 59
யின் வெளியீடாக மக்கள் வாயிலிருந்து வெளிவரும் ஓசை விகற்பங்களுள் எதனை அக்கட்லோசை ஒத்திருக்கின்றது என்
பதை நிர்ணயித்தற் பொருட்டே முதலிற் கடலோசை இன்
னது அன்று எனப் பலவற்றை மறுத்து, அதன்பின் அவ் வோசை அர்ச்சுனன் வார்த்தைகளை ஒத்திருக்கிறது என்று கூறுகின்றனர். குதூகல உணர்ச்சி முதலியவற்றையும் வெளிப் படுத்துதற்குக் கடலோசை ஏற்றதொன் முகப் புலவர்களால்
கொள்ளப்பட்டபோதும், அது சோகவுணர்ச்சியைப் புலப்
படுத்துதற்கு ஏற்ற தொன்றகவே ஆசிரியருக்குக் காணப்படு
கின்றது. அதனல், அவ்வோசையிலே தொனிக்கும் சோகச்
சுவையினைச்'சோக ரசம் உண்டு" என்ற சிறு வாக்கியத்தில்
தெளிவாகக் கூறுகின்றனர். ஆனல் சோகம் என்ற சொல்
அவர் உள்ளத்தில் தெளிந்து நின்ற உணர்ச்சியைக் குறிப்பிட
ஏற்றதொன்ருக அவருக்குக் காணப்படவில்லை. சோகம் பல
வகைப்படும். ஆகவே, ஒரு பரந்த , தெளிவற்ற (vague) உணர்ச்சி நிலையினைக் குறிக்கும் அச்சொல்லால் கடலோசை
யிற் பிரதிபலிக்கின்ற உணர்ச்சியைச் சரிவர எடுத்துக் கூற முடியாதிருக்கிறது. எத்தனை விதமான சஞ்சலம் மனித உள்
ளத்தில் வந்து மோதுகின்றன அவற்றுள் ஆசிரியருடைய உள்
ளத்தில் மோதுவது எதுவாக இருத்தல் கூடும் என்பதை நாம்
நிட்சயித்தற் பொருட்டே அர்ச்சுனன் உற்ற பெருந்துயரத் துக்குக் கடலோசையை ஒப்பிடுகின்றனர். 'சுகமற்ற இப்பா
ழுலகில் பந்துக்களையும். .சுகம் அனுபவிப்பார்களா"
என்று சோகித்த அர்ச்சுனனுடைய சோகத்துக்கும், காம்பீரி யத் தன்மை மயமான கடலோசையின் சோகத்துக்கும் நிரம்ப நெருக்கமான சம்பந்தமுண்டு என்று கூறித் தெளிவுபடுத்து
கின்றனர்.
சோகங்களுக்கிடையேயுள்ள வேறுபாடு (Contrast) இப் பந்தியிலே குறிப்பாகச் (Implied) சொல்லப்படுகின்றது. புத் திரனை இழந்த பிதாவின் சோகமும்’, 'புருஷனை இழந்த மனைவியின் சோகமும் சுய நலத்தை அடிப்படையாகக் கொண்டவை. அது தனி மனிதனது தனித் துயரம் (individ ual grief). அர்ச்சுனன் போர்க்களத்தில் அடைந்த சோகம் மகத்தானது; அது சர்வத்தையும் இழந்த அல்லது இழக்கப் போகின்ற ஒருவனது பெருந்துயர் (Universal griet). கடலிலி ருந்து மழு, u \, சாகக் குரலுக்கும் தனிப்பட்டவ்ர்களை (Individ. uals) இழந்தவர்களது சோகத்துக்கும் ஒற்றுமை இருக்க,
る6

முடியாது. ஆனல், அர்ச்சுனனுடைய கேள்வியிலோ எல்லை பற்ற சோகம் தொனிக்கிறது. 'சுகமற்ற இப் பாழுலகில் சுற்றத்தார் பலரைக் கொன்று இன்பம் அனுபவிக்க முடி யுமா” என்ற விஞவிலே நம்பிக்கையை இழந்த ஒருவனது பரந்த சோகம் தென்படுகிறது. இதற்கும் "காம்பீர்யா தன்மை மயமான கடலோசையின் சோகத்துக்கும் ஒப்புமை காண்கின் ருர் ஆசிரியர். எல்லையற்ற சோகக் குரலைக் கட லோசையிற் கண்ட ஆசிரியருக்கு அக் கடல் துன்பம் நிறைந்த மனித வாழ்க்கையை ஞாபகப்படுத்துகின்றது. நிலையற்ற அம்மனித வாழ்க்கைக்கு ஆதாரமாக என்றுமுள்ள இறைவனை யும் அது ஞாபகப்படுத்துகிறது. கடல் ஒரு பொழுதும் உறங் குவதில்லை; இறைவனும் அவ்வாறே. ஆகவே உறங்காத கட லுக்கும் "துயிலாத சுவாமிக்கும்’ ஒப்புமை காண்கின்ருர் ஆசி ரியர். இங்ங்ணம் ஒரு எண்னக் கருத்து அதனேடு தொடர் புடைய இன்னுெரு எண்ணக் கருத்தைத் தோற்றுவிக்க, அது அதனேடு இயைந்து செல்லும் வேறென்றைப் பிறப்பிக்க, இவ்வாறே ஒரு அனுபவ அடிப்படையிலிருந்து பல எண்ணக் கருத்துகள் தொடர்ச்சியாக வருதலை நாம் இவ்வுரைப் பகுதி யிற் சிறப்பாகக் கானலாம் , அதன்கண் கற்பனைத் தொடர்ச்சி சிதைவுரு த வகையில் ஆழ்ந்த எண்ணக் கருத்துக் கள் வந்துகொண்டிருக்கின்றன. கடலோசையிலிருந்து கட லுக்குச் சென்ற கற்பனை, அதிலிருந்து கடவுளிடம் செல்கின் றது. இங்ஙனம் உவமைகள் ஒன்றை விட்டு ஒன்றுக்குச் சென்றபோதும் கற்பனைத் தொடர்ச்சி சிறிதும் பாதிக்கப் படவில்லை. தூக்கத்திலே கடலுக்கும் கடவுளுக்கும் ஒப்புமை கண்ட ஆசிரியர் படைத்தல், காத்தல், அழித்தலாகிய இறை வனுக்குரிய முத்தொழிலும் கடலிடத்தில் இருத்தலைக் காண் கிருர். ஆகவே, “இதுவும் அவரைப் போலவே சிருஷ்டிப் பதும் அழிப்பதுமாயிருக்கின்றது' என்று கடலைப் பார்த் துக் கூறுகின் ருர், மக்கட் பன்மை இறைவனிடத்திலிருந்து தோன்றி அவரிடத்தில் ஒடுங்குதல் போலவே அலைகள் கட லிலே தோன்றி அதனிடத்தில் ஒடுங்குகின்றன. அந்த அலை கள் மக்களாகவே ஆசிரியருக்குக் காட்சியளிக்கின்றன. அத. ஞல் அவை "பிறப்பதும், குதிப்பதும். சிரிப்பதும்" என இவ்வாறு வருணிக்கப்படுகின்றன. இங்ங்ணம் உவமைகள் ஒன்றன் பின் ஒன்ரு கச் சென்றுகொண்டிருந்தபோதும், ஆசிரி யருடைய உள்ளத்தில் அழுந்திக் கிடந்த சோகச் சுவை கலைந்து விடல்லை. அது மீண்டும் வேருெரு உருவத்தில் தோன்
93.
y

Page 60
றுகின்றது. மக்களுடைய வீண் ஆரவாரக் கொந்தளிப்பைப் போன்று அலைகளின் தனித்தனி ஒலிகள் காணப்பட்டபோதும் அவ்வொலிகளின் முடிவாக உண்டாகின்ற ஓசை சோகரசம் உடையதாகவே ஆசிரியருக்குத் தென்படுகின்றது. அவர் மனநிலையை மேல் வரும் வாக்கியம் தெளிவுபடுத்துகிறது: *இவைகளுடைய வீண் ஆரவாரத்தினுல் விளையும் கடைசி ஓசையோ இவைகளுடைய சிரிப்பு விளையாட்டுக்கு முற்றும் விரோதமாய் "ஐயோ ஏன் இப்படி வீணுகக் கூப்பாடிட்டுக் கெட்டுப் போகிறீர்கள்" என்று சொல்லுவதுபோல் சோகத் தொணியை உடையதாயிருக்கிறது". மக்கள் கேளிக்கைகளில் அவர் கொண்ட வெறுப்பு, கடலின் கடைசி ஓசையில் அவருக் குப் பிரதிபலிக்கின்றது.
'இப்படித்தான் உலக வாழ்க்கை" என்னும் வாக்கியத் தோடு அவ்வுரைப் பகுதி முடிவடைகின்றது. உலக வாழ்க்கை சோகம் நிறைந்தது என்பதை அனுபவ வாயிலாக அறிந்து
அதைக் கூறவே ஆசிரியர் கடலோசையை ஒரு கருவியாகக் கொண்டனர்; இந்த உரைப் பகுதியின் முக்கிய அம்சம் (Theme) அது கடலை அவர் வர்ணித்ததன் நோக்கம் இறுதி வாக்கியத்தோடு முடிவடைகின்றது. மனிதன் பிறந்து, சிரித்து, சத்தம்போட்டு ஆடிப் பாடிப் கடைசியில் ஒடுங்கு கிருன் என்பதை விளக்கக் கடல் கருவியாயிற்று. தம் உள் *ளத்தில் எழுந்த சோகத்தை ஆசிரியர் கடலோசையிற் காண் கின்ருர், வாக்கியங்களில் அமைந்து கிடக்கும் ஒசையிலே "சோகச் சுவை தொனிக்கிறது. இது வசன நடையில் அமைந்த போதும் பாட்டின் பண்பு அமைந்ததாக உள்ளது. உரைக் கும் பாட்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் எப்படிக் காண் பது? இந்த உரைப் பகுதியிலுள்ள அனுபவத்தை நோக்கும் 'போது இது பாட்டு ஆகின்றது. ஆனல் அது யாப்பில் அமையவில்லே. யாப்பில் அமைந்தவை எல்லாம் பாட்டு ஆகா. யாப்பில் அமையாதன எல்லாம் உரையாகா

நவீன கலம்பகம்
"பலவகை மலர்களும் கலந்த மாலையைக் கலம் பகம் என்பர். அதனைப் போன்று அகப்புறத் துறை களிற் பலவும் பலவகையாப்புகளும் விரவிவர அந்தா தித் தொடையால் இயற்றப்படுவது கலம்பகம் என் னும் பிரபந்தம்..”

Page 61

இசைக் கருவி ஞான சிவசுப்பிரமணியம்
இ°. ஓர் உன்னதமான கலை உலகிலுள்ள சிறந்த கலைகளுள் ஒன்ருய இசைக் கலையானது ஓரறிவு உயிர்கள் முதல் ஆறறிவு உயிர்கள் வரை, எல்லோரையும் தன் வசப்படுத்தி இன்பந் தரக்கூடியது. பழந் தமிழன் இக் கலையினைப் பெரிதும் விழுமி, அதனை ' ஆழ்ந்து ஆராய்ந்து 'பயின்ருன். அவன் சாதாரண வாழ்க்கைக்கும் இசைக் கலைக் கும் ஒரு நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. தாத வடி வாய் விளங்கும் இறைவனை வழிபடவும், அவனை அறியவும் உதவி புரிகின்றது இசை. இதனலன் ருே தமிழன், சகல கலா வல்லி சரசுவதியின் கையில் வீணையும், மாயக் கண்ணன் கையில் குழலும், உமைபங்கன் சிவபெருமான் கையில் டம ருகமும் இருப்பதாகக் கற்பனை செய்து வழிபட்டான்; .
இசைக் கலை இரண்டு அம்சங்களைக் கொண்டது: ஒன்று மிடற்றினின்றும் எழும் இசை, மற்றது கருவியினின்றும் எழும் இசை. இசை பெருக்கும் முழு உரிமையும் கொண்ட குர்லே மனிதனின் முக்கிய இசைக் கருவியாகும். ஆயினும், இந்த இசை ஞான வளர்ச்சிக்கு, இசை வாத்தியங்களின் உதவி இன்றியம்ையாது வேண்டும். கிரக ப்ேத்த்தால் புதிய புதிய இராகங்களைக் கண்டு பிடிக்கவும், நுட்ப்சுருதிகளையும், கமக வேறுபாடுகளையும் தெரிந்து கொள்ளவும், இசையின் நுண் பணிய சாஸ்திரங்களை அறிந்து கொள்ளவும் உதவி புரிவது இசைக் கருவிகளேயாம்.
இசைக் கருவிகளைச் சாத்திர முறைப்படி முதன் முதல் வகுத்தவர் நான்காம் நூற்ருண்டில் வாழ்ந்த பரதரே யாவர். இவர் தமது "நாட்டிய சாத்திரம்" என்ற நூலில் நாதத் தின் உற்பத்திக்கு காரணமாக உள்ள மூல தத்துவத்தை ஆதாரமாகக் கொண்டு, வீணை, யாழ் போன்ற தந்திக் கரு விகளை நரம்புக் கருவிகளெனவும், புல் லாங்குழல் நாகசுரம் ஆகிய வாத்தியங்களைத் துளைக் கருவிகள் என வும், மத்தளம், தப்பட்டை ஆகியவற்றைத் தோற் கருவிகள் எனவும், சல தரங்கம், சப்ளாக்கட்டை போன்றவற்றைக் கஞ்சக் கருவி கள் எனவும் அழைத்தார்
95

Page 62
இவ் வாத்தியங்களை மீண்டும், அவற்றின் உபயோகங் களைக் கொண்டு மூன்று பிரிவுகளுக்குள் அடக்கலாம். தம் பூரா, ஒத்துப் போன்ற கருவிகள் தனியே சுருதிக்கு மட்டுமே பாவிக்கப்படும். மத்தளம், கடம், சாலரா, போன்றவை லய அல்லது தாள வாத்தியங்களாகும்3 கோட்டு வாத்தியம் நாகசுரம், ஆகிய இராக ஆலாபனை செய்யக் கூடிய கருவிகள் சுவரம் அல்லது சங்கீத வாத்தியங்களாகும்;
இனி இவற்றுள் புல்லாங்குழல், வீணை, போன்றவை பிரதான வாக்கியங்களாகும். இவ் விசைக் கருவிகளால் வாத்தியக்காரர், பிற வாத்தியங்களின் உதவியின்றித் தனியே ச்சேரி பண்ண முடியும். ஆனல் மோர்சிங், மிருதங்கம், கஞ். சிரா ஆகிய கருவிகள் பக்கவாத்தியங்களாகவே கருதப்படும். பண்டைக் காலந் தொட்டு இசைக் கருவிகள் வெவ் வேறு கிாரணங்கள் பற்றி வெவ்வேறு இடங்களில் வாசிக்கப்பட்டு வந்தன. குழல், பிடில், வீணை ஆகியவைகளைக் கொண்டு மண்டபங்களில் கச்சேரிகள் நிகழ்த்தினமையால் அவை இசையரங்கு வார்த்தியங்கள் என வழங்கப்பட்டன. சங்கு தாரை, திருச்சின்னம், குடமுழா ஆகிய வாத்தியங்கள் கோயில்களில் வாசிக்கப்பட்டு, ஆலய வாத்தியங்களாக விளங்கின. வீரமுரசு, பேரி, துந்து பி ஆகியவை யுத்தகள இசைக் கருவிகளாக உபயோகிக்கப்பட்டன. தமுக்கு, பறை போன்ற கருவிகள் பாம ரசனகான வாத்தியங்களாக. வாசிக்கப்பட்ன. .
இப்படியாகப் பல வகைப்பட்ட இசைக் கருவிகள் நம். தமிழ் நாட்டில் அன்று தொட்டு இன்றுவரை வழங்கப்பட்டு வந்தன. தமிழன் யாழ், வீணை, குழல் போன்ற தன் சொந்த இசை வாத்தியங்களுடன் பிடில், கிளாரினட், ஏக் தார் போன்ற அயல் நாட்டு இசைக் கருவிகளையும் ஏற்றுத் தன் இசைக்கு ஏற்றபடி திருத்தி அமைத்துக்கொண்டான். ஆயினும் அன்று தமிழன் பயின்ற நூற்றுக் கணக்கான இசைக் கருவிகளில் இன்று வழங்கப்பட்டு வருவன ஒரு சிலவேயாகும். இசைக் கலைதான் ஒரு நாட்டின் நாகரிகமும், புகழும். முன்பது யாவரும் அறிந்த விஷயம். ஆகவே தமிழ் நாட்டி லுள்ள இசைக் சருவிகள் யாவற்றிற்கும் புத்துயிரளித்து, இன்று மலர்ச்சியடைந்து வரும் தமிழிசையில் அவற்றிற்கு உரிய இடத்தை மீண்டும் அளித்து உலகெங்கும் இசைத் தேன் பெருக்குவதே ஒவ்வொரு தமிழனின் கடனகும்.
96

“rses ன கோவை' ஈாதன்
மிழனுக்கு அகப் பொருள் இலக்கியத்தில் பற்று அதி கம். அகப்பொருட் பாடலே இலக்கியம் என்று
தமிழன் ஒரு காலத்தில் கருதி வந்தான். இறைவன் மேற் பாடிய பத்திப் பாடல்களிலும் அகப்பொருள் மரபைப் புகுத் திப் பார்த்தான். அகப்பொருட் பாடல்களைப் பெரும்பான், மையாகக் கொண்ட சங்ககால இலக்கியத்தில் உயிரை விடு கிருன் . பல்லவகாலத் தமிழன் அகப்பொருட்டுறைகள் யாவற்றையும் கோவை செய்து கோவை யென்னும் பிரபந் தம் அம்ைத்தான். காலத்துக் கேற்றவகையில் கோவையும் மாறுபட்டுச் செல்ல வேண்டுமல்லவா!
"மாலை நேரத்து மங்கிய ஒளியினிலே மலைச் சாரலிலுள்ள பூங்காவினிலே ", தலைவன் தலைவியைக் காண்பது மரபு. இன்று தமிழர் பெரும்பான்மையாக் வாழும் பகுதிகளில் ம.ை களுக்குப் பஞ்சமேற்பட்டாலும், பரவாயில்லே. ஈழத்து, அரசியல் சுதந்திர இயக்கத்திற்கு வழி காட்டி, பொருளாதா ரத்திற்கு அத்திவாரமிட்ட குற்றத்திற்காக மொழியுரிமையை யும் பிரசாவுரிமையும் இழந்து தவிக்கும் நாடற்ற "மக்கள்" மலைநாட்டில் வாழ்கருா கள். ஆயினும் கடற்கரைக்கும் கல்லூ ரிகளுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் கோவைப் பிரபந்தத்தில் முக்கிய இடம் வேண்டும். வாழ்க்கை முறை மாறுபடுவதற். இணங்க, இலக்கியமும் மாறுபட வேண்டும், தினைப்புணத் துக்குக் கோவையில் கொடுத்த இடத்தில் இக் காலத்தில் கலை பயிலிடத்தை வைக்கலாம். தினை முற்றப்போகிறதே என்று அக் காலக் காதலர் கவல்வதுபோல. இக் காலத்தில் படிப்புக் காலம் முடியப் போகிறதே என்று கவலைப்படுகிருர்கள்.
அக்காலத்துத் தலைவி ஆடை ஆபரணங்களை நிறைய அணிந் ததால், தலைவனுக்கு அவள் உருவத்தைத் தூரத்தில் கண்ட தும் ஐயம் ஏற்பட்டுப் பின் உறுப்புக்களைக் கண்டதும் தெளி வேற்படும். இக் காலத்துத் தலைவி ஆடை, ஆபரணங்களை அதி கம் மதிப்பதில்லையாதலால், தலைவனுக்கு ஐயமின்றியே தெளி
கண்கள் கண்களேக் கெளவ வேண்டியதுதான்."அவள் அகத்திலுள்ள பசியைப் புறக்கண்கள் காட்டிவிடும். இரு வரும் பசியைத் தீர்த்துக் கொள்வார்கள். . . .. ،- ܀ 7 ܆
97

Page 63
"கண்ணுளைக் கண்டேனே! என் கண்ணுளைக் கண்டேனே காதல் கொண்டேனே! நான் காதல் கொண்டேனே" என்றெல்லாம், தலைவன் நலம் பாராட்டுவான். ஆனல், அவ னுக்கு முற்காலப் புலவர்கள் போல வர்ணனைகளை அடுக்கத் தெரியாது. S.
காதலனும் காதலியும் பிரியவேண்டி வரும் பிரிவு எக் காலத்திலும் துன்பத்தைக் கொடுக்கும்.இக்காலத்தில் தகல வன் தான் பின்பு வந்து தலைவியைச் ச்ே ே தில்லை. தலைவியும் தலைவனைச் சென்று "ச்ே முகவரி தெரிந்தால் முடங்கல் அனுப்பல் ஒல்லது இக் காலத்துப் போக்கு வரவுச் சாதனங்களே கிக்கலாம். ஆகவே, அடுத்ததாக முகவரி ஒருவரை யொருவர் கேட்பார் கள். "என் தன் ஊர்க்கும் உன்தன் ஊர்க்கும் எத்தன் கல் தூரம்' என்ற பாவனையில் கேள்விகள் அமைந்திருக்கும்.
தேனைக் கண்ட் வண்டு போல, காந்தத்தால் இழுக்கப் பகடி இரும்பைப் போல், தலைவனும் த்லைவியும் ஒன்று சேர் வர்; இன்ப சாக்ர த்தின் எல்லேயில் நின்று கரிக்கூத்தாடு aurif; 8 ' ' ' ... . . . . s.
W
'பழைய காலக்கோன்ல்ப் பிரபந்தங்களுக்குப் பாங்ல என்ருல் உயிர் பாங்கியின்றி ஒன்றும் நட்ைபெழுது. பாங்க னும் ஒரு முக்கிய பாத்திரம் மனிதன் அனுபவத்தால் அறிவு பெற்றத்ஞற் போலும் இக்காலத்துத் தலைவர் தகலவியர் பாங் கன்பாங்கிகளிடம் முற்கால்த்தவர்கள் வைத்த நம்பிக்கை வைப்பதில்லை. பாங்கள் பாங்கிகளின் செல்வாக்குப் பெரு மளவு குறைந்து காண்ப்ப்டுவதால், நவீன கோவை நீண்ட தாகப் பாடுவது கஷ்டம்.
மேலும் அக்காலத்துப் பெண்கள் ‘கர் நாடகங்கள்"; முன் னேற்றமில்லாதவர்கள்; சமுதாயப் பழக்கங்கள் (SociatBehav. io) தெரியாதவர்கள். நாணம் என்று ஒன்றைக் கட்டியாண் டிருக்கிருர்கள். பெண்களுக்குரியதாய்க் கூறப்பட்ட இக் குணத்தைப் பழைய தமிழ் இலக்சியங்களிலிருந்து ஆராய்ந்து கண்டு பிடிக் கலாம். இந்த ஒரு குணத்தை வைத்துக் கொண்டே, கோவைக்குரிய நானூறு பாடல்களில் ஒரு பகுதியைத் தமிழ்ப் புலவர்கள் பாடியிருக்கிருரர்கள்.
கோவை இலக்கிய மரபு இவ் வகைகளில் மாறுபட்டால் தான், அது காலத்துக் கேற்றதாக அமையும். '
98
 
 
 
 
 
 
 

விஞ்ஞான முறையில் கொள்கைகளின் தோற்றம்
-ஆ. வே.-
ஞ்ஞானமுறையின் முக்கிய நோக்கம் உண்மைகளுக்கு
புழக்கம் கூறத்தக்க நிலையை அடைவதே இயற் கையின் திருவியைாடல்களுக் கெல்லாம் அது காரணங் கூற வேண்டும். இயற்கைப் பொருட்கள் மாறுபாடுகளுக்குள்ளா புவதால், இயற்கையில் பன்மை காணப்படுகிறது. உண்மையை உணர்வதற்கு இந்த விபரங்கள் பற்றிய அறிவு மிக அவசியம் விபரங்களைப் பற்றிய அறிவில்லாமல், எந்த விஞ்ஞானியும் விளக்கம் கொடுக்க முடியாது: விபரங்களைப் பற்றிய அறிவை உபயோகித்து, விஞ்ஞானி ஓர் அபிப்பிராயத்திற்கு வரலாம். அந்த அபிப்பிராயம் நிரூபிக்கப்படும்வரை, அது விளக்கமா கக் கருதப்படாது. ஆகவே, நிரூபித்து விளக்குவதே விஞ் ஞான விளக்க முறையாகும் .
நிரூபிப்பதற்கு ஆதாரம் வேண்டும். ஆதாரம் இதஞல் இது ஆகிறது என்று காட்டுவதுடன் நின்றுவிடக்கூடாது. இதில்லாவிட்டால், இது ஆகாது என்றுங் காட்ட வேண்டும். விஞ்ஞான முறைக்கு இருவழி ஆதாரங்களும் அவசியம். ஒரு கொள்கை நிரூபிக்கப்பட்டால், இயற்கையிற் காணப்படும் வேறு உண்மைகள் அதற்கு எதிரானவையல்ல என்று காட் டப்பட வேண்டும். ஒரு கொள்கை நிறுவப்படும்வரை, அது அபிப்பிராயமாகவே இருந்து வருகிறது. நிறுவப்படின், அது சட்டமாகிறது; நிறுவப்படாவிடின், அது கைவிடப்படுகிறது. இப்படிப்பட்ட அபிப்பிராயம் பகுத்தறிவுக் கொவ்வாததா யிருக்கப்படாது. அது ஏற்கனவே ஏற்கப்பட்ட கொள்கை களுக்கு முரணுக அமையக் கூடாது. மிகச் சில சந்தர்ப்பம் களில், இவ்விதி பொருந்துவதில்லை. கொப்பெர்ணிக்கஸின் அபிப்பிராயம் அப்பொழுதிருந்த ரொலமேய்க் கொள்கை களுக்கெதிராகவே யிருந்தது. இப்படிப்பட்ட அபிப்பிராயம் உண்மையாயிருப்பதற்கு நியாயமான இடம் வேண்டும். இப் படிப்பட்ட உண்மையையே, நிரூபிக்கவும் பரிசோதிக்கவும், விஞ்ஞானி முனைகிருன்.
99.

Page 64
யோண்ஸ் ரூவாட் மில் "பரிசோதிக்கும் வழிகள்" என்ற நூலில், நிரூபிப்பதற்கு ஐந்து வழிகள் கூறுகிருர். பரிசோதனை நடத்த முடியாதவை-இவைகளில் பெரும்பாலானவற்றுக்கு, அவர் வழிகள் உபயோகமானவை. . .
காரணமும் காரியமும் தொடர்புடையவை. இரு, பொருள்களுக்கிடையில் இத்தொடர்பிருந்தால், காரணத், தைத் தொடர்ந்து காரியம் தோன்ற வேண்டும். ஓர் உணவு சமியாமலிருக்கும். சில இடங்களில் அதைக் கண்டால், அந்த உணவு சமியாது என்ருெரு அபிப்பிராயம் ஏற்படலாம். இந்த அபிப்பிராயம் கொள்கையாக மாறுவதற்கு நிரூபிக்கப்பட வேண்டும். விஞ்ஞானி தானும் உண்டு பார்த்து, வேறு மனி" தரையும் உண்ணச் செய்து, அதைக் கொள்கையாக நிரூ, பனஞ் செய்வான் இது மில்லின் வழிகளுள் முதலாவது. இது அதிகம் திருத்திகரமானதன்று. காரணம் தோன்றும் பொழுது காரியம் என்று கருதப்படுவதும் தோன்றுகிறது. வேறு படாமை காரண காரியத் தொடர்புக்கு முக்கிய பண்பாயி, னும், வேறுபடாத வகையிற் காணப்படும் தொடர்புகள், யாவும் காரண காரியங்களாகா. க்ாரணம் அத்தியாவசிய, மான, வேறுபடாத முன்னேடி. காரணமில்லாதபோது காரி, யம் நடைபெருது என்று காட்ட வேண்டும்.
மில் காட்டும் அடுத்த வழி இங்கே உதவி செய்கிறது. மரங்கள் சுவாசித்தலுக்குக் காற்று இன்றியமையாதது என்று ஓர் அபிப்பிராயம்இருக்கிறது. இருபாத்திரங்களுள், ஒவ்வொரு, செடி வைக்கப்பட வேண்டும். இவ்விரு செடிகளும் உயிர்வாழ், வதற்கு வேண்டிய ஏனைய பொருள்களாய நீரும் சூரிய வெளிச் சமும் இரு பாத்திரங்களுக்கும்கிடைக்கச் செய்தல் வேண்டும். ஒரு பாத்திரம் சாதாரணமாகக் காற்றுடையதாயிருத்தல், வ்ேண்டும் மற்றதில் காற்று இல்லாமற் செய்தல் வேண்டும். சில மணித்தியாலங்களின் பின் பரீட்சித்தால், உண்மை புலப் படும். காற்றில்லாத பாத்திரத்திலிருந்த செடி வாடி வதங்கி விடும். ஆனல் இப்படிப்பட்ட பரிசோதனைமுறை எல்லாச் சாத்திரங்களிலும் கைக்கொள்ளக் கூடியதன்று. கட்டுப்பாட் டுள் அடக்கத்தக்க பொருள்களில் இப்பரிசோதனை நட்த்த லாடி இந்த முறையை எந்த சாஸ்திரங்களுள் உபயோகிக்க லாமோ, அங்கே விரைவான முடிபுகளுக்கு வரலாம். அத னலே தான், சில சாத்திரங்கள் மிக விரைவாக முன்னேறிவரு,
مهنة 88" . فلم
கின்ற்ன. மனிதனுட்ைய உடல், மனம் சம்பந்தப்பட்ட சாத்,
V ܘܢ
100.

*திரங்களில், என்ன நடக்குமோ என்னும் பயத்தால் இப்படிப் *பட்ட பரீட்சைகள் விரும்பியபடி நடத்த முடியாது. ஆகவே,
அபிப்பிராயங்கள் சரியெனவோ, பிழையெனவோ, விரைவா கத் தீர்மானிக்க முடியாது. இயற்கையோடியைந்த சாத்தி "ரங்கள் வெகு விரைவாக வளர்ந்ததற்கும், மனிதனுடன் சம் பந்தப்பட்ட உளநூல் போன்றவை அத் துணை வளர்ச்சியடை டியாததற்கும், அது ஒரு முக்கிய காரணம். பரிசோதனையால் , நேர்வழியாலும் எதிர்மாற்று வழியாலும் ஒன்றை நிரூபிக்க (முடிந்தால், வேறு முயற்சி வேண்டியதில்லை. அது சரியான தாகவேயிருக்கும்.
இயற்கையில் நடைபெறுவதைக் கவனித்து, ஆதரவாக வுேம் எதிராகவுமுள்ள ஆதாரங்களைச் சேர்த்து, ஒரு முடிவுக்கு வருதல் மற்ற முறை. இம்முறை மேற் கூறிய இரு வழி களின் கலவை. இப்படி ஏற்படும் முடிவு மிகப் பொருத்த் மானதாயிருக்கலாம். ஆனல் நிரூபிக்க முடியாது. ஒரு சமூக நூலான் ஒரு கிராமத்தில் அதிகமாய் நடக்கும் கொலைக் குற் றத்தின் காரணத்தை அறிய விரும்புகிருன். ஆராய்ச்சிச் ஈசாலைப் பரிசோதனை இங்கே பயன்படாது. அவன் ஆதாரங் களைச் சேர்க்கிருன். இங்கே கணக்கெடுக்கும் முறையைக் கையாள்கிருன். இம்முறையால் வந்த ஆதாரங்கள், வருங் காலத்தில் என்ன நடக்கலாம் என்று அவன் கணிக்க உதவு “கின்றன. சில கிராமங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கி யும், அவை போன்ற வேறு சில ஏன் அப்படியின்றியும் இருக் கின்றன என்று ஒருவர் கேட்டால், பொருளாதார நூலான் விடையிறுக்க வேண்டும். ஆராய்ச்சிச் சாலைகளும் செயற்கை முறையான பரிசோதனைகளும் இங்கே உதவா விஞ்ஞானி எல்லா அமிசங்களுக்குரியவுமான ஆதாரங்களைச் சேர்ப்பான். பல விதங்களில் ஆதாரங்களை அலசிப் பார்ப்பான். ஆதாரங் *களைப் பண்பின் படியும் தொகையின் படியும் பல கூட்டங் களாகப் பிரிப்பான். ஒரு கிராமத்தை எடுத்துக் கொள்கிரு னென்று வைப்போம். அதன் பூமிசாத்திரம் முதல் கவனிக் கப்பட வேண்டும். எத்தனைபேர் விளைபூமியிலும், எத்தனை பேர் வேறுநிலத்திலும் குடியிருக்கிருர்கள் என்று பார்க்க வேண்டும். இதிற் சனங்களின் தொகையையும் குறிப்பிட ஈலாம். அடுத்தபடியாக, அக்கிராம மக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆண்கள்-பெண்கள் தொகை, வேலை செய்யக் கூடியவர்கள் - வேலை செய்ய மாட்டாதவர்கள்.
01

Page 65
வயது சென்றவர்கள், இயற்கையிலேயே, சோம்பேறிகள்சுறுசுறுப்பானவர்கள் எத்தனை யென்றெல்லாம் கணக்கெடுக் கப்படல் வேண்டும். இந்தக் கிராமத்திற்கு உணவு உற்பத்தி அதிகாரி வருகிருரா, கிராமத்தார் அவரிடம் புத்திமதி கேட் கிருர்களா, மக்களின் தொழில் வாழ்க்கைமுறை போன். றவை யெல்லாம் குறிக்கப்படல் வேண்டும். ஆனல் இதே நம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுது
உண்மைகளை அறிவதற்கே இது உதவும். புதிய அபிப் பிராயங்கள் ஏற்படுவதற்கும் இது உதவலாம். அபிப்பிரா யம் கூறுதல் விடை கூறுதலாகது. அபிப்பிராயங்களை நிறுவு, வதற்கு, நேரிய வழி. நேரியதல்லாத வழியென. இருமுறை களுண்டு. நேரியவழி, ஆராய்ச்சிச் சாலைகளிற் பரிசோதனை தடத்தத்தக்க சாத்திரங்களிற் கையாளப்படும். பரிசோதனை கள் நடத்த முடியாத சாத்திரங்களில் நேரியதல்லாத வழி கையாளப்படும். நேரியதல்லாத வழி என்றும் நிச்சயமான முடிபைத் தர முடியாது. சாத்திரத்தில் நிரூபணம் என்பது முடிவுக்குக் காரணம் இதுதான் எனத் திட்டமாகக் கூறுவது.
இவ்வழிகளைக் கூற முன்பு, காரணம் என்ருல் என்ன என்று மில் விளக்குகிருர், பொதுவாகக் காரணம் என்று மக், கள் கருதுவதற்கும் விஞ்ஞானிகள் கருதுவதற்கும் வேறுபாடு காணப்படுகிறது. இரணடு காரியங்கள் ஒன்ருக நடந்தால், அவைகளுள் காரண காரியத் தொடர்புண் டென்று சாதார ரண மனிதன் கருதுகிருன். ஒரே முடிபு பற்பல காரணங்களா லேற்படலாமென்று அவன் நினைக்கிருன். பொருள்களின் இயற்கையிலேயே காரணம் இல்லை யென்றும், அவை வெளி யிலிருந்து தோன்றலாமென்றும் அவன் கருதுகிறன். அதனு, லேயே, பேய், அதிட்டம், தற்செயலாய் நடப்பது இவை களில் அவனுக்கு நம்பிக்கை. வேறுபடாமல் நடப்பவை யாவும் காரணகாரியத் தொடர்புடையனவாகாவென்றும், அப்படி நடக்க வேண்டிய அவசியமுடையனவே காரண. காரியத் தொடர்பாமென்றும் விஞ்ஞானங் கருதுவதால், அங்கே அதிட்டத்திலோ, தற்செயலாய் நடப்பதிலோ, இயற் கைக்கு அதீதமான பொருள்களிலோ நம்பிக்கைக்கு இட மில்லை. ஒரு காரியத்திற்குக் காரணப் பன்மையை விஞ்ஞா னம் ஏற்பதில்லை. மேலெழுந்தவாரியாய்ப் பார்ப்பவர்
家”
102

களுக்கே, காரணப்பன்மை புலப்படும். ஆழ்ந்து கவனித்தால் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு காரணம் இருப்பதை புணரலாம்.
விஞ்ஞானத்தில், ஒரே காரியத்தைப் பற்றிப் பல கொள் கைகள் இருக்க முடியாது. ஓர் அபிப்பிராயம் சரியென நிரூ பித்தால் வேறு அபிப்பிராயங்களுக்கு அங்கே இடமில்லை. இன்று, பரிசோதனைகளால் நிரூபிக்க முடியாத பல பகுதி களிலும் விஞ்ஞான முறையைக் கையாள்கின்றனர். மனித சம்பந்தமான பல சாத்திரங்களின் கொள்கைகள் நிரூபிக்கப் படாமலேயே இருந்து வருகின்றன. ஆகவே, நிரூபிக்கப் படு தலின் அவசியத்தை இன்று விஞ்ஞானம் இழக்கிறது. விஞ் ஞானம் வர வரத் தத்துவமாக மாறி வருகிறது. தத்துவக் கொள்கைகளுக்கும் விஞ்ஞானச் சட்டங்களுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. விஞ்ஞானம் எங்கிருக்கிறதோ அங்கே வேறுவிதமான விளக்கங்கள் தோன்றுகின்றன. விஞ் ஞானத்தின் பரப்புச் சுருங்கியது. விளக்கங்களை மூன்று வகை யாகப் பிரிக்கலாம். அஞ்ஞான விளக்கம், விஞ்ஞான விளக் கம், விஞ்ஞானம் கடந்த விளக்கம் என்பன. சமயமும் தத் துவமும் விஞ்ஞானம் கடந்த விளக்கத்தைக் கொடுக்சின்றன. இவற்றின் முக்கியம், இன்னும் வேண்டிய அளவுக்கு உணரப் படவில்லை.
mത്ത്--
வள்ளுவன் அறிவுரை
1 வெள்ளத் தனைய மலர் நீட்ட மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு.
2 கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து.
3 நிலத்தியல்பா னிர்திரிந் தற்ருகு மாந்தர்க்
கிணத்தியல்ப தாகு மறிவு.
4 என வகையாற் றேறியக் கண்ணும் வினவகையான்
வேருகு மாந்தர் பலர்.
5 ஞ7 லங் கருதினுங் கைகூடும் காலம்
கருதி யிடத்தாற் செயின்.
103

Page 66
தமிழில் வேர்ச் சொற்கள்
கலாநிதி அ. சதாசிவம்
ரு மரத்தைத் தாங்குவது அதன் வேர், வேர் இன்றி மரம் இல்லை. அதுபோல் ஒரு மொழிக்கும் அதன் வேர் போன்று நிற்கும் சொற்கள் அத்தியாவசியமானவை. மரத்தின் வேர்கள் எல்லாம் ஒரு வகையானவையல்ல; மரத் தைத் தாங்கும் வேர் "மூலவேர்" எனப்படும். இதற்குப் பக்க பலமாய் நிற்கும் வேர்களைப் பக்கவேர்” என்பது வழக் கம். மூலவேர் பக்கவேர் ஆகிய இவற்றினின்று சிறிது சிறி தாய்க் கிளைத்து நிற்கும் வேர்களைச் 'சல்லி வேர்" என்பர். இது போன்றே ஒரு மொழியிலுள்ள வேர்ச்சொற்களை மூன்று வகுப்புக்களுள் அடக்கலாம். மூலவேர்ச்சொற்கள் பக்க வேர்ச் சொற்கள், சல்லிவேர்ச்சொற்கள் என்பவை அவை. தமிழ் மொழியிலுள்ள வேர்ச்சொற்களை இவை, இவை, எனப் பகுக்குமுன் வேர்ச்சொல்" என்பதன் பொருளைக் காண் GLunt b.
உலகத்திலுள்ள மொழி வகுப்புக்களுள் தமிழ் மொழி “ஒட்டு" அல்லது கொளுவு நிலை மொழியினத்தைச் சேர்ந் தது. இவ் வொட்டு நிலை மொழிகளில் உள்ள சொற்களின் பல்வேறு பகுதிகள் இவை எனத் தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக செல்கின்றன்" என்ற வினைமுற்றில் உள்ள *செல்" என்பது போதல் என்ற பொருள்படும் வேர்ச் சொல் என்றும் "கின்று’ என்பது நிகழ்காலம் காட்டும் இடை நிலை என்றும், "ஆன்" என்பது உயர்திணை ஆண்பால் சுட் டும் விகுதி என்றும், பிரித்துப் பொருள் காணக் கூடியதாய் இருக்கின்றது. இச் சொல்லில் உள்ள மூன்று உறுப்புக்களா கிய செல், கின்று, ஆன் என்பன தனித்தனி நின்று பொருளை விளக்காது ஒரு சொல்லாக "ஒட்டி" அல்லது *கொளுவி நின்று பொருளை விளக்குகின்றன8 தமிழ்மொழி ஒட்டு நிலையில் இருப்பதால் வேர்ச் சொல்லாகிய "வினை அடி" யைச் சிதையாமல் பாதுகாத்திருக்கிறது. போனுன், போகின்றன், போவான் என்னும் முக்கால வினைச் சொற் களில் "போ' என்னும் வேர்ச்சொல் சிதையாது நிற்கின்றது. இங்ங்ணமே போவான், போவேன் போன்ற வினையாலனையும்
104.

(பெயர்களிலும், போகான், போகின்றிலன் போன்ற எதிர் 4மறைச் சொற்களிலும், போதல் போக்கு என்பன போன்ற தொழிற்பெயர்களிலும் போ" என்பது சிதையாமலே நிற் கின்றது. இங்ங்ணம் தமிழில் வேர்ச்சொற்கள் சிதையாமல் இருப்பதற்குக் காரணம் உண்டு. இவ் வேர்ச்சொற்களாகிய வினையடிகள் முற்காலத்தில் தனிச்சொற்களாக நின்று மொழி யில் வழங்கியவை. இன்றும் ஏவல்வினைச் சொற்கள் வினையடி யாகவே உள்ளன. உதாரணமாக "நீ போ" என்ற வசனத் தில் உள்ள “போ" என்பது ஏவல்வினைமுற்ருக நின்று பொருள் தருகின்றது. இதிலிருந்து அறியக்கிடைப்பது யாதெனில் தமிழ்மொழி வளர்ச்சியின் ஆரம்ப காலத்தில் வேர்ச்சொற்களாகிய வினையடிகள் முழுச்சொற்களாக விளங்கின என்பது. காலஞ் செல்லச் செல்லத் தெளிவின் பொருட்டுக் காலம், திணை, பால் முதலியவற்றை உணர்த்தும் இடைச்சொற்களையும் விகுதிகளையும் வினையடிகள் தம் பின்னே சேர்த்துக் கொண்டன. சேர்த்துக் கொண்ட போதும் தம் உருவம் மாருமல் இன்றும் வாழ்ந்து வருவது தமிழ் வேர்ச்சொற்களாகிய வினையடிகளில் உள்ள ஒரு புதுமை. ஆனல் இந்தோ-ஐரோப்பிய ஆரிய மொழிகளில் -உள்ள வேர்ச்சொற்களின் தன்மை அப்படியன்று. இம் மொழிகளில் உள்ள வேர்ச்சொற்கள் எக்காலத்திலாவது எவராலாவது பேச்சுவழக்கில் பாவிக்கப் படாதவை என் மொழிநூல் வல்லார் கருதுகின்றனர். உதாரணமாக வட மொழியை எடுத்துக்கொண்டால், அம் மொழியில் உள்ள வேர்ச்சொற்கள் அல்லது தாதுக்கள் 1706 என வென் பி (Benfey) என்னும் ஆசிரியர் கூறுகிறர். இந்த 1706 வேர்ச் சொற்களிலிருந்தே வடமொழியிலுள்ள சொற்களத்தனையும் -பிறந்தவை. ஆனல் இந்த வேர்ச்சொற்கள் எல்லாம் இலக் கண ஆசிரியர்களின் படைப்பே. தமிழ்மொழியில் உள்ள “போ, வா, இரு போன்ற ஏவல்வினைமுற்றுக்கள் போன்று வட மொழியில் உள்ள வேர்ச் சொற்கள் ஏவல்வினை முற்றுக் களாகவோ அன்றி பிற வினைமுற்றுக்களாகவோ எக்காலத் திலாவது வழக்கிலிருந்தவை என இதுவரை எவரும் கூறி ை ரில்லை. போகிமுன்" என்னும் பொருள்படும் 'கச்சதி" (gaccati) என்னும் வடசொல்லை எடுத்துக் கொண்டால் அதன் வேர்ச்சொல் கச் (gac) ஆகும். இது "கம் (gam) என்னும் அடியிலிருந்து பிறந்தது என்பர் வடமொழி இலக் ஆகன ஆசிரியர். இந்த "கச்' அல்லது "கம்" என்னும் வினை
105

Page 67
படியானது "கச்சதி" என்னும் முற்றின் பகுதியாக நிற்கின் றதே தவிர போ, வா, என்பன போன்று தனித்து நின்று ஏவல்வினை முற்றுப் பொருள் தரும் ஆற்றல் அதற்கில்லை. இங்கினம் வடமொழி போன்ற பிற மொழிகளில் உள்ள வினையடிகளாகிய வேர்ச்சொற்கள் தனித்து நின்று இயங்கும் ஆற்றல் அற்றவையாய் இருக்கத் தமிழ்மொழியில் உள்ள வினை யடிகள் இன்றும் தனித்து வாழ்வது குறிப்பிடத்தக்கதே. இனிச் சீனமொழியில் உள்ள சொற்களை எடுத்துக்கொண்டால் அவையெல்லாம் வேர்ச்சொற்களே. அம் மொழியில் உள்ள சொற்களெல்லாம் ஓர் எழுத்தாலாய வேர்ச் சொற்கள். இச் சொற்கள் ஒன்றன்பின் ஒன்ருகத் தொடர்ந்து நிற்கும்நிலையில் பொருள் விளங்கும். போ, கின்று, ஆன் என்னும் மூன்று உறுப்புக்கள் சேர்ந்து, போகின் முன் என்னும் தமிழ்ச்சொல் பிறப்பது போன்று சீன மொழியிற் பிறப்பதில்லை. ஏனெனில் அம் மொழியிலே கின்று, ஆன், போன்ற இடைச்சொற்கள் இல்லை. சொற்களெல்லாம் பெயர்ச்சொல் அல்லது வினைச் சொல் ஆகையினலே வேர்ச்சொற்களே பெயராக அல்லது வினையாக நிற்கின்றன. எனவே வினையடிகள் சொற்களின் பகுதியாய் ஒட்டி நிற்கும் பண்பு சீன மொழியில் கிடையாது: இங்கனம் வடமொழி வினையடிகளாகிய வேர்கள் தனித் தியங்கும் ஆற்றல் அற்றவையாகவும், சீனமொழியில் உள்ள வேர்கள் ஒட்டி நின்று பொருள் உணர்த்தும் ஆற்றல் அற்ற வையாகவும் இருப்ப, தமிழ் வேர்ச்சொற்கள் தனித்து நின் றும் ஒட்டி நின்றும் பொருளை விளக்குவது தமிழ்மொழியின் சிறப்பியல்புகளுள் ஒன்ருகும்.
இனி, தமிழ் வேர்ச்சொற்களின் பண்பினை நோக்கு, வோம். தமிழ் இலக்கண ஆசிரியர்கள் சொற்களைப் பெயர், வினை, இடை, உரி என நான்காக வகுப்பர். ஆசிரியர் தொல் காப்பியஞர் “சொல்லெனப்படுப பெயரே வினை என்ருயிரண் டென்ப அறிந்திசினேரே (சொல் 158) என்பர். இடைச் சொல்லும், உரிச்சொல்லும், பெயர் வினையைப்போல் முக்கி யத்துவம் வாய்ந்தவை அல்ல ஆகையால் அவற்றை வேருயோ துவர். பெயர்ச்சொல் ஒரு பொருளைச் சுட்டுவது. வினைச் சொல் தொழிலைச் சுட்டுவது. இடைச்சொல் இவ்விரண்டின் தன்மையும் சார்ந்து வருவது. உரிச்சொல் என்பது பண்பு அல்லது குணம் சுட்டும் பெயர். மொழிநூற் கண் கொண்டு நோக்கின் இலக்கண ஆசிரியர்கள் பகுத்த இப்பகுப்புசரியன்று,
106

என்று தோன்றுகிறது. தமிழில் உள்ள சொற்களே அவற் றின் பிறப்பு நோக்கி மூன்முக வகுக்கலாம்.
1 வினையடியினின்றும் பிறந்தவை 2 பண்படியினின்றும் பிறந்தவை. 3 சுட்டடியினின்றும் பிறந்தவை.
வினை, பண்பு. கட்டு என்பன தமிழ்ச்சொற்களின் மூல அல் லது வேர்ப்பொருளாகும். பெயர், வினை, இடை, உரி ஆகிய. நால்வகைச் சொற்களும் வினை, பண்பு, சுட்டு ஆகிய மூவகை. வேரினின்றும் தோன்றிய வரலாறு மிக விசித்திரமானது.
முதலாவதாக இடைச்சொற்களின் பிறப்பை எடுத்துக் கொள்வோம். வேற்றுமையுருபுகள், இனட் நிலைகள், விகுதி கள் என்பனவே இடைச் சொற்கள். இவை எங்கிருந்து: தோன்றின என்பதை இலக்கண ஆசிரியர்கள் எவரும் விளக்க வில்லை. ஏனெனில் இலக்கண ஆசிரியர்கள் நூல்களை எழுதிய காலத்தில் இந்த இடைச்சொற்களின் ஆதி உருவங்கள் எவை என அவர்களுக்குத் தெரியவில்லை. இடைச்சொற்கள் ஆதி: யில் முழுச்சொற்களாக இருந்தன என்றும் காலஞ் செல்லச் செல்ல இவை குறுகி ஒரெழுத்தாய், அல்லது ஈரெழுத் தாய் மாறின என்றும் "ஜெஸ்பேர்சன்" (Jesperson) போன்ற, மேல்நாட்டு மொழிவிற்பன்னர் கருதுகின்றனர். "கத்தியால் வெட்டினன்" "கத்தி கொண்டு வெட்டினன்" என்னும் இரு வசனங்களில் முன்னையதில் கத்தி என்ற பெயர்ச் சொல்லோடு மூன்ரும் வேற்றுமை "ஆல்" உருபு சேர்ந்து நிற்கின்றது. பின் னேயதில் கொண்டு" என்னும் சொல்லுருபு சேர்ந்து நிற்கின் றது. இவற்றுள் "கொண்டு" என்பது ஒரு வினைச்சொல். "ஆல்" என்பது ஒரு இடைநிலை. இரண்டும் ஒரே தொழி லேயே செய்கின்றன. இது போன்ற உதாரணங்கள் மூலம் பழந்தமிழிற் சொற்களே நின்று உருபுகள் செய்யும் தொழி லைச் செய்தன என்பதை உணரலாம். தமிழ்மொழியின் அமைப்பை நோக்கும்போது இடைச்சொற்களின் பிறப்பைப் பற்றி மொழி நூலார் கூறுவன உண்மையே என்பது தெரிகின் றது. எனவே இடைச்சொற்கள் ஆதியில் பெயராகவோ வினையாகவோ இருந்தன என்பது போதரும். இடைச்சொற்)
களுக்கு அடுத்ததாக உரிச்சொற்களின் பிறப்பை நோக்கு மிடத்து, இசை, குறிப்பு பண்பு ஆகிய மூன்று நிலைக்களஞக
10.

Page 68
உரிச்சொல் பிறக்கும் என்பர் தொல்காப்பியர் இவற்றுள் "இசை" என்பது ஓசை, ஓசையே பொருளாகப் பிறக்கும் சொற்கள் குறிப்பு, அல்லது பண்பு என்ற பகுதியுள் அடங்கும்.
வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா வெளிப்பட வாரா உரிச்சொன் மேன (தொல், சொல் 298) என ஆசிரியர் தொல்காப்பியர் கூறுவதை நோக்கும்போது தம் காலத்தில் வழக்கிறந்த உரிச்சொற்களின் பொருளேயே கூறுகின் ருர் என்பது வெளிப்படை. இந்த உரிச்சொற்கள் 'பெரும்பாலும் பண்பை உணர்த்துவன. இவை தமிழில் உள்ள தாதுக்கள் அல்லது வேர்ச்சொற்கள் என்பர் தெய்வச்சிஐ "யார். எனவே ஆசிரியர் தொல்காப்பியர் உரியியலிற் கூறிய வேர்ச்சொற்களைப் பண்படியினின்றும் பிறந்த சொற்களென 'மேலே கூறிய பிரிவினுள் அடக்கலாம்.
"குறிப்பினும் வினேயினும் நெறிப்படத் தோன்றிக் கால மொடு வரூஉம் வினேச் சொல் எல்லாம்." என்ற தொல்காப்பியச் சூத்திரப் பகுதியை நோக்கும்போது குறிப்பு, வினே என்ற இரண்டுமே தமிழ் வினேச்சொற்களின் மூலங்கள் என்பது தெரிய வருகின்றது. குறிப்பு-பண் பு: வினே. 'தொழில். 'கசியன்" என்பது பண்பு பற்றிப் பிறந்த குறிப்பு வினே முற்று. "செய்வான்" என்பது தொழில் அல்லது விஜன பற்றிப் பிறந்த தெரிநிலவினேமுற்று. எனவே இவ்விருவகை வினேச்சொற்களும் பண்பு, வினே ஆகிய மூலங்களிலிருந்து பிறந்தவை என்பது விளங்குகின்றது. இறுதியா சு பெயர்ச் 'சொற்களின் மூலங்களே ஆராயுமிடத்து, தொழிற்பெயர், வினேயாலஃணயும் பெயர் போன்றன விரேயடியினின்றும் பிறந் தவை என்பது பெறப்படும். அது, இதுபோன்ற சுட்டுப் 'பெயர்களெல்லாம் சுட்டடியினின்றும் பிறந்தவை. மூவிடப் பெயர்களில் படர்க்கைப் பெயர்களாகிய அவன், இவன் போன்றன சுட்டடியினின்றும் பிறந்தவை. தன்மை முன்னி லேப் பெயர்களும் சுட்டடியினின்றே பிறந்தவை என்பது மொழிவிற்பன்னராகிய கால்டுவெல் ஐயர் போன்ரூேரின் கருத்து. தன்னுT லார் "இடுகுறி" என்னும் பெயரால் அழைக் கும் பெயர்ச்சொற்களெல்லாம் உண்மையிற் காரணப்பெயர் கீளே "நிலம்" என்பது நிற்றல் என்னும் பொருள்படும் "நில்" என்னும் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்த தென்றும், "கடல்" என்பது கடக்கப்படுவது என்னும் பொருள்படும் "கட" என் னும் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததென்றும் கூறுவர்
108

மொழியாராய்ச்சியாளர். இங்ஙனம் ஆதியில் காரணப்பெய. ராக வழங்கிய சொற்கள் பிற்காலத்தில் அவை Gas காரணம் புலப்படாமையால் இடுகுறி" என வழங்க வாயின.
"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன் ரு"
என்னும் தொல்காப்பியச் சூத்திரங்களின் பொருஃா நோக் கும்போது, தமிழ்ச்சொற்களெல்லாம் காரணம் கொண்டு. பிறந்தவை என்பதும் காலப் போக்கில் அச்சொற்கள் சிலவற். நின் பொருள் வெளிப்படையாகத் தோன்று தாயிற்று என்ப தும் தொல்காப்பியருக்கு உடன்பாடு என்பது விளங்குகின் றது. இதுகாறும் கூறியவற்றிலிருந்து தமிழில் உள்ள பெயர். வினே, இடை, உரி ஆகிய நால்வகைச் சொற்களும், வினே, பண்பு, சுட்டு ஆகிய மூவகை வேர்களினின்று பிறந்தவை என் பது போதரும். -
இனி. தமிழில் உள்ள வேர்ச்சொற்களின் வகையிரே ஆராய்வாம். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்க இலக்கியங்களே ஆராய்ந்த விடத்து அங்கு ஏறக்குறைய 1000 வேர்ச்சொற்கள் காணப்படுகின்றன. இத்தொகையினுள் மூலவேர்ச்சொற்கள், பக்கவேர்ச்சொற்கள், சல்லி வேர்க் சொற்கள் ஆகிய மூவகை வேர்ச்சொற்களும் அடங்கும். இம் மூவணிக வேர்ச்சொற்களேயும் இரு பெரும் பகுதியுள் அடக்க ଈunt wh.
I (pgy Guglassir (Primary roots),
2 as A. L. glas it (Secondary roots)
தமிழிலுள்ள 1000 வேர்ச்சொற்களுள் இருதாற்றுக்கு உட் பட்டவையே முதலடிகளாகும். இவை எல்லாம் ஒர் அசைக் சொற்கள். மிகுதியாகிய எண்ணுாறு வேர்ச்சொற்களும் வழி: யடிகளாகும். முதலடிகளிலிருந்து பிறந்தவையே வழியடி கள். எனவே இவ்வழியடிகள் பெரும்பாலும் FFT), JTF னவை. "அசைதல்" என்னும் பொருள்படும் துள் என்னும் வேர்ச் சொல்லே "முதலடி'க்கு உதாரனமாகக் கொள்ளலாம். முதலடியாகிய 'துள்' என்பதிலிருந்து பிறந்த துள்ளு, துள "துளங்கு' 'துளக்கு" என்பவற்றை வழியடிகளுக்கு உதாரண மாகக் கொள்ளலாம். இங்ஙனம் முதலடிகளிலிருந்து வழியடி கள் பெருகிய வரலாற்றைப் பற்றி அடுத்த இதழில் ஆரTப் வாம்,
109,

Page 69
O
பொன் மொழிகள்
"இலக்கியத்தின் தன்மைதான் என்ன? காலத்தை வென்று நிற்பது இலக்கியம். அழியும் சமுதாயத்திலே அழியாதிருப்பது இலக்கியம் சூழ்நிலைகள் மாறும் போது நிலத்து நிற்பது இலக்கியம்."
ᎤᎠ Ο s OC) . ᎤᏅ too
*எந்நாட்டினர்க்கும், எக்காலத்திலும் போற் றக்கூடிய பல உண்மைகளை உரைப்பவர்களே உயர்ந்த புலவர்கள். ஒரு நாட்டில் உள்ள உயர்ந்த அறிஞர் களின் கருத்து, பல நாட்டு அறிஞர்களின் கருத் தோடு ஒத்திருப்பது இயற்கை. இச்சிறப்பைத் திரு வள்ளுவரிடம் காணலாம்."

ஈழத் தமிழகத்தில்
"யாழ்ப்பாணம் வீறுபடைத்த தமிழர் நிலம்; அதற்குச் சொற்றிறனும் உண்டு, விற்றிறனும் உண்டு; ஆதிமுதலே அது அன்னியர் அட்டூழியங்களை எதிர்த்து எதிர்த்து வந்திருக்கிறது. யாழ்ப்பாணத் தமிழர் மற் றெவருக்கும் சளைக்கவில்லை. எல்லாக் துறைகளிலும் அவர்கள் முந்தி நிற்கிருர்கள்."
-யோகி பூத்தானந்தர்.

Page 70

நிலமும் வளமும் பேராசிரியர் கா. குலரத்தினம்
1. இலங்கையும் இந்தியக் குடாநாடும் ஒரே கண்ட மேடையில் அல்லது திடலிலேயே அமைந்துள்ளன. இலங் கைத் தீவைச் சுற்றிச் சராசரி பன்னிரண்டு மைல் அகலத்தை *யுடையது இக்கண்டத் திடல் இதன் (மிகக் குறைந்த) நீரா ஆழம் முப்பத்தாறு பாகங்களே இருக்கும். இத்திடலின் விளிம் பிற்கு அப்பால் இரண்டு மைல்களிற்கு 500 பாகங்களிற்கு ஒரு திடீர் இறக்கம் உண்டு.
இத்தீவு, தான் அமைந்துள்ள கண்டத்தில் அல்லது பீடத் தில் இருந்தே தன் வடிவத்தைப் பெறுகிறது. நாம் முன்பு குறிப்பிட்டபடி இப்போதைய கரையோரத்திலிருந்து அநேக இடங்களில் 12 மைல்கள் தள்ளியுள்ள கண்டத் திடலின் விளிம்பு, தீவின் நிலப்பரப்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்து வதால், இத்தீவின் அளவும் திடலின் அளவிஞலேயே தீர் மாணிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இத்தீவின் அளவும் வடி வும் கண்டத் திடலினலேயே நிச்சயிக்கப்பட்டிருக்கின்றன.
2. இந்தச் சந்தர்ப்பத்தில் அவதானிக்கப்பட வேண்டிய சில புள்ளி விபரங்கள் பின்வருமாறு: இலங்கையின் பரப்பு இங்கிலாந்தும் வேல்சும் சேர்ந்ததன் அரைப்பங்கு, இந்தியா வினதின் எழுபதிலொன்று, அதாவது சுமார் 25000 சதுர மைல்கள். தீவின் ஆகக் கூடிய நீளமும் அகலமும் முறையே 270 மைல்களும் 140 மைல்களுமே.
3. பெளதிக இயலின்படி மட்டுமல்லாமல் மண்ணியல் பின் படியும் புவியியல் பின் படியுங்கூட இலங்கை இந்தியக் குடாநாட்டின் தொடர்ச்சியே. ஆக 20 மைல்கள் ஆழமற்ற நீரினலேயே அதிலிருந்து இலங்கை பிரிக்கப்பட்டுள்ளது. இத் தீவும் இந்தியக் குடாநாட்டைப் போலவே மிகப் பழைய காலப் படினப் பாறைகளைப் பெரும்பாலும் கொண்டுள்ளது. ஆகவே அவை பண்டைய உருமாற்றங்கள் (Ancient Metamor. phics) எனப்படும். இவைகளினூடேயும் கூரிய தீப்பாறை களாகக் கருங்கற்கள் ஊடுருவியுள்ளன. மண்ணியல் பின்படி

Page 71
மிக அண்மைக் காலத்திலேயே இலங்கை இந்தியாவினின்றும் பிரிபட்டிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது; ஆகக் குறைந். தது ஏறக்குறைய 30 அல்லது 40 கோடி வருடங்களுக்கு முன் எனலாம்.
4. இப்போது நாம் தீவின் நில உயரத்தையோ அல்லது தரைத் தோற்றத்தையோ மேலெழுந்த வாரியாகக் கவனிப் போம். இலங்கை தரைப் பிரிவுகளிலே தென்மத்தியில், அமைந்துள்ள ஒரு மலைநாட்டுப் பெருந்திரளையுங் கொண்டது. இது மலைமுகடுகளையும் பள்ளத் தாக்குகளையும் உடைய ஒர் இடைப் பிரதேசத்தால் ஏறக்குறையச் சூழப்பட்டுள்ளது. திரும்பவும் இந்தப் பிரதேசம் ஒரு சுற்றுப் பிரதோத்தால் அல்லது உள்ளும் புறமுமுள்ள ஒரு கரையோரத் தாழ்ந்த பிர தேசத்தாற் குழப்பட்டுள்ளதாகக் கருதலாம். கரையோரத் தாழ்ந்த பிரதேசங்கள், எல்லாவிடங்களிலும், சிறப்பாகத், தென்மேற்கிலும் தெற்கிலும், நன்கு வியாபித்திருக்கவில்லை. மேட்டுநிலம் உயர் செங்குத்து வடிவில் நேரடியாகக் கடலி னுள் நீளும் இடங்களில் இவை முற்றிலும் இருப்பதே இல்லை. வேறு இடங்களில் கரையோர விளிம்பு; கடல் நீர் ஏரிகளையும் மணற்பாறைகளையும் குடாநாடுகளையும் மணல் மேடுகளையும் சதுப்பு நிலங்களையும் அதோடு சேர்ந்த வேறு உறுப்புக்களை யும் ஒரு தொடர்ச்சியாகக் கொண்டுள்ளது.
5. 7360 அடி உச்சத்தையே அடையும் உலகை உதறிய அடம்ஸ் மலைச் சிகரத்தைவிடக் கிட்டத்தட்ட 1000 அடிகள் உயர்ந்த பீதுறுதாலகாலையை நோக்கித் தரையமைப்பானது, கடல் மட்டத்திலிருந்து மிதந்து சென்று மிகக் கூடிய உயரமா இய 8300 அடியை அடைகிறது. இத்தீவின் அதிகம் நீண்ட ஆருண மகாவலிகங்கை 207 மைல்களே நீளமானது. மற். றைய ஆறுகள் யாவும் 100 மைல்களுக்குக் குறைவான நீளமே
od 600 til 6õT.
6. இத்தீவின் தரைத் தோற்றப் படம் கீழ்க்கண்ட தரை, யமைப்புப் பிரிவுகளைத் தெரிவிக்கும். அவையாவன:
(1) மத்திய மலைப்பிரதேசம், (2) தென் மேல் பிரதேசம், (3) கிழச்கு நாடு,
2

(4) தாழ்ந்த வடக்குப் பிரதேசமும், குடாநாடும், தீவு
களும், (5) கரையோரக் கடல்நீர் ஏரிகளும் மணல் மேடுகளும்
பிறவும். 7 மேலுள்ள ஒவ்வொரு பிரதேசத்தையும் இன்னும் பல உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவதாக மத்திய மலைப் பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் கீழ்க் கண்ட அதன்பகுதி களை உடனே தெரிந்து கொள்ளலாம்:
(அ) மையமான மத்திய மலைப் பெருந்திரள், (ஆ) நக்கிள்ஸ் (Knuckles) பிரதேசம்,
(இ) இரக்வான அல்லது பலுத்தோட்டத் தொடர்.
8 இவற்றுட் சுமாராக நெருங்கிய பகுதியான மத்திய மலைப் ப்ெருந்திரள், தெற்கிலே, தென் மலைச் சிவர் எனப் பொதுவிற் கூறப்படும் செங்குத்தான மலையினலும், வடக் கிலே கண்டி தொடக்கம் மிணிப்பைவரை மகாவலிகங்கையின் குறுக்குப் பள்ளத் தாக்கினலும் சூழப்பட்டுள்ளது. வேறு பட்ட நிலத் தோற்றங்களையுடைய மேட்டுப் பிரதேசமான மத்திய மலப் பெருந்திரள், உயர் சமபூமிகள் போன்று 'திடர்களை'யும் செங்குத்தான பக்கங்களையும் உடையது. அரிப்பின் மிச் சங்களான எஞ்சிய குன்றுகளால் இப்பிரதேசம் புள்ளியிடப்பட்டுள்ளது. திடர்களுள் அட்டன் சமபூமி, மூன் சமபூமி (Moon Pains) எல்க், கண்டபொல, அம்ப வெல சம பூமி போன்றவையைக் குறிப்பிடலாம். எஞ்சிய குன்றுகளின தும் மலைச் சிகரங்களினதும் உதாரணங்கள் பேதுருதாலகாலை (828 1 அடி) தோட்டம் பால (7741 அடி) கிரிகாலப் பொத்த (7857 அடி) முதலியன.
9. நக்கிள் சும் இரக் வானப் பருமமும் மத்திய மலைப் பருமத்தினின்றும் பிரிபட்ட பகுதிகளே. மூன்றும் ஒருமித் ததே மத்திய மலைநாட்டுப் பிரதேசமாகும்.
10. தென் மேற்குப் பிரதேசம் ஒரு தனிவகை நிலவ மைப்புப்பிரிவு. இது நன்கு நீர் பாய்ச்சப்படுகிறது. பள் ளத் தாக்குகளும் நீளப்பள்ளத் தாக்குகளும் இடையிடை வர இணையாய் ஓடும் நீண்ட மலைமுகடுகளின் தரையமைப்பை இது கொண்டுள்ளது. இந்த மலை முகடுகளின் சரிவுகள் கிழக்கு
13

Page 72
நோக்கிச் சாதாரணமாகவும் மேற்கு நோக்கிச் செங்குத்தாக வும் உள்ளன. இங்கு ஒடும் ஆறுகளினதும் சிற்ருறுகளினதும் அமைப்புக் கம்பி வலையை ஒத்திருக்கிறது; இது நீள்சதுர வடிகால் என அழைக்கப்படும்
11. கிழக்கிலும் தென் கிழக்கிலும் ஒத்த வரட்சிப் பிர தேசமே காட்சியளிக்கும். ஓடும் நீரின் செயலால் இது ஒரு சுருளான அல்லது பதிந்து மிதந்துவரும் சம பூமியாக ஆக்கப் பட்டுள்ளது. ஆனல் இதன் தரைமீது உயர் சம பூமியில் உள்ளன போலப் பல எஞ்சிய குன்றுகளும் (Residual hills) மலைச் சிகரங்களும் சிதறுண்டு காணப்படுகின்றன ஆளுல் கிழக்கு நாட்டு மலைகள் உயரத்திற் குறைந்தவை.
12. ஆகவே இலங்ே சிறியதாய் இருந்த போதிலும், அது பல நிலவமைப்புப் பிரிவுகளாகவும் உட்பிரிவுகளாகவும் பிரியவைக்கும் பெரும் இயற்கை அமைப்பு வேறுபாட்டை யுடைய தீவெனக் கண்டோம். இதே நேரத்தில் இதன் அங்க மான பகுதிகளின் ஒழுங்கிலே ஒற்றுமை யுண்டென்பதை இயற்கை காட்டுகிறது. இயற்கை யமைப்பிலே "வேற்றுமை யில் ஒற்றுமை" உண்டு. இயற்கை யமைப்பு வேற்றுமை யோடு சேர்ந்து, தட்ப வெப்ப நிலை, மண்தன்மை, தாதுப் பொருட் செறிவு முதலியவற்றிலும் வேற்றுமை உண்டு; இத ஞல், இத்தீவின் வெவ்வேறு பகுதிகளும் மனிதஞல் உபயோகப் படும் வகையிலும் பயன்படக் கூடிய முறையிலும் வேறுபடும். இதனுல் மக்கள் செய்யும் தொழிலிலும் அவரவர்களின் வெளித் தோற்றத்திலும் வேற்றுமைகள் உண்டு.
13. இனி நாம் பதிந்த பிரதேசங்களை நோக்குவோம். தீவின் வடக்கிலும் கிழக்கிலும், முக்கியமாக வட மாகாணத் திலும் கீழ் மாகாணத்திலுமே பதிந்த பிரதேசங்கள் விருத்தி செய்யப்பட்டுள்ளன. இது ஓரிடத்திலும் சராசரியாக 300 அடிகளுக்குக் கூடாத உயரங் குறைந்த பிரதேசம். தரை யமைப்பு சாதாரணச் சரிவாக அல்லது தட்டையாக உள்ளது. இப் பகுதிகளே இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் பரம் பரைத் தாயகமாகும். வரலாற்றின் இன்பதுன்ப மாற்றங் களிடையேயும் என்றும் தமிழ் பேசும் மக்களாகவே அவர்கள் தொடர்ந்து இருக்கின்றனர். வேறு இடங்களிலே, உதாரண மாகத் தெமல கத்பத்துவ (Demala hatpattuwa) விலும் மேற்
4

குக் கரையோரத்திலும், அவர்கள் பொருளாதாரச் சூழ்நிலை கள் காரணமாகக் காலப்போக்கிலே தமிழ் பேசுவதை விடுதி துச் சிங்களத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். பானந் துறைக்கு அருகாமையிலுள்ள நல்லூருவ, வேலன (வேலணை) போன்ற இடங்களின் பெயர்கள் இதை விளக்கும்.
தட்ப வெப்ப நிலையைப் பொறுத்தவரையில் இலங்கை யின் வடக்குக் கிழக்குப் பதிந்த பகுதிகள் வரட்சிப் பிரதேசத் துள்ளேயே அடங்கும்; வருடாந்த மழை வீழ்ச்சி ஒரு வரு டத்தில் 50 அங்குலத்துக்கும் 75 அங்குலத்துக்கும் இடைப்பட் டிருந்த போதிலும் இப் பிரதேசத்தை ஈரலிப்புப்பகுதி எனக் கொள்ள முடியாது. இங்கு இயற்கைத் தாவரவகைகள் வரட் சிப் பிரதேசக்காடு முதல் முட்புதர்கள், குறுங்காடுகள் வரை மாறுபடும். இதற்குச் சில தன்மைகளே காரணம். அவை யாவன.
1. மழை வீழ்ச்சி முறையாக இல்லாமல் வருடத்தின் ஒரு குறுகிய காலப் பகுதியிலேயே முழுவதும் பெய்கிறது. மழை வீழ்ச்சியிற் பெரும்பகுதி ஐப்பசி, கார்த்திகை, மார் கழி ஆகிய மூன்று மாதங்களிலுமே உண்டு.
2. அநேகமாக மழை நீர் மண்ணிலே தங்கி அதை நிை யாக ஈரமாக்காமல் சூரியனினுல் ஆவியாக்கப் படுகிறது.
3. தரைவழி ஓட்டத்தாலும், ஓடைகளாலும் வேறுபல் நீரசைவுத் திசைகளாலும் ஒரு கணிசமான பகுதிநீர் இழக் கப்படுகிறது. எனவே சரியான மழை வீழ்ச்சிக் காலத்தைத் தவிர்ந்த காலத்தில் மிகக் குறைந்த நீரே முடிவில் தாவரங் களுக்குக் கிடைக்கிறது.
இவை யெல்லாம் மனதில் மயக்கம் தரத் தேவையில்லை. ஈடு செய்யும் வகையிலே பல நன்மைகளும் இக் காலநிலையி லிருந்து கிடைக்கின்றன. 1. ஈரலிப்பான காலநிலையிலும் பார்க்க வரண்ட கால நிலை என்றும் மனிதனுக்குக் கூடிய சுகாதாரமானது. இது அயன மண்டலத்திற்கே முக்கியமாக உண்மையாகும்,
2. மேலும் அந்த மண் வள முடையது. வருடத்தில் 50 அங்குலம் முதல் 70 அங்குலம் வரை மழை வீழ்ச்சித் தொகை இலாபகரமான விவசாயத்துக்குப் போதாதல்ல. உண்மையில், இதிலும் குறைந்த தொகை மழை வீழ்ச்சியி
5

Page 73
லுள்ள பல வெப்ப நாடுகள் தங்கள் விவசாயத்தில் பெரும் வெற்றியை ஈட்டியுள்ளன. இஸ்ரேலில் வரண்ட காலநிலை இருந்தபோதிலும் அவர்கள் நாட்டிலே தேனும் பாலும் சொல்லுக்குச் சொல் சரியாகப் பாயச் செய்திருக்கிருர்கள் மழை பெய்யும் காலங்களிலே மேலதிகமாக உள்ள நீரைத்
தேவைப்படும் போது பயணுகும் வண்ணம் சேமித்து வைப் பதே நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம். அதனுல் நீர்
வீணே ஓடி ஒழிவதைக் குறைக்கலாம். இது நீர்ப்பாசன
முறையிலேயே தங்கியுள்ளது. இதனுலேதான் சென்ற காலத்
திலே வரண்டபிரதேசத்திலே குளங்கள், அணைக்கட்டுக்கள், கால்வாய்கள் முதலியன எம் மூதாதையரால் விருத்தி செய் யப்பட்டன. இவற்றின் புனர் நிர்மாணத்தினலும் புதியன வைத் தோற்றுவிப்பதாலும் வரண்ட பிரதேசத்தைத் திரும்ப வும் ஒரு செழுமையான குடியிருப்பாக்குதல் சாத்தியமாகும்.
இலங்கையில் மட்டுமல்லாமல் உலகின் மற்றுமிடங்களி லுமுள்ள வரண்ட பிரதேசங்களின் தன்மைகளை ஆராய்ந்த தோர் அவை எதிர்காலத்தில் இலாபகரமான விருத்தியைத் தரக்கூடியனவென முடிவுசெய்திருக்கிருர்கள். கவனமாகத் திட்டமிடப்பட்ட ஒரு விஞ்ஞான விவசாய அமைப்பில் இலங்கையின் வரண்டபிரதேசம், உணவு உடை முதலிய துறைகளில் மட்டுமல்லாமல் மற்றும் துறைகளிலும், மூலப் பொருட்களிலும் பிறவற்றிலும், அதன் சனச் செறிவின் இரு மடங்கிற்குச் சுயதேவையைப் பூர்த்தி செய்யும். ஏற்றுமதிக் கும் குறிப்பிடத்தக்க அளவிற்கு மிகுதி இருக்கக்கூடும்.
தாதுப்பொருட் செல்வங்களைப் பொறுத்தவரையிலுங் கூட வரட்சிப்பிரதேசம் வறுமையானதல்ல. சீமந்து தயாரிக்க இலங்கையிற் கிடைக்கும் சிறந்த சுண்ணும்புக்கல் முழுவதை யும் இது தன்னகத்தே கொண்டுள்ளது. கண்ணுடி செய்யத் தக்க தலைசிறந்த மணல் அம்பனிலும், இல் மனைற்று மணல் புல்மோட்டைக்கருகிலும் கொக்கிளாயிலும், காரீயம் வவனி யாவிலும் உண்டு. மைக்காவு (mica) வரட்சிப்பிரதேசத்தில் உண்டு. இல்மனைற்று ஏற்றுமதியும், டைட்டேனியம் (Titanium) தொழிலும், பிறநாடுகளில் உற்பத்தி செய்யப் படும் பொருட்களை வாங்க அதிக வருமானத்தைக் கொடுக் கும். நீர்ப்பாசன விருத்தியோடு ஒன்றி நீரியக்க மின்சார மும் விருத்தியாகித் தொழிற்சாலைகளின் உபயோகத்திற்கும்
6

வாகனங்களை ஒட்டவும், ஒளிதர வும் இன்னுேரன்ன வேறு
துறைகளிலும் பயணுகும். சிலவகைகளில் நீர்ப்பாசனக் கால் வாய்கள் மூலம் பாரமான பொருட்களையும் ஏற்றிச் செல்ல 'art th
வரட்சிப்பிரதேசத்திலுள்ள ஆழமற்ற கடல்களும் கடல் நீர் ஏரிகளும் மிகச் சிறப்பான மீன்பிடித் தொழில், சாதாளைத் தொழில் ஆகியவற்றின் செழிப்பிற்குத் தகுதியான வைகளாகும். இதேபோலக் கடல்நீரின் மூலம் ஒரு மிக இலாப கரமான இரசாயனத் தொழிற்சாலையையும் ஏற்படுத்தலாம்3 *வரட்சிப்பிரதேசக் குட்டைகளிற் கடல்நீர் இயற்கையாகக் குவிந்துதங்குவதால் அது மிகச் சிக்கனமான உப்பு விளைவைத் தருகிறது. சலவைச்சோடா, பேதிஉப்பு, பாரிஸ் பிளாஸ்டர், குளோறின் (Chlorine), டி. டி. ரி, முதலியனவெல்லாம் சூரிய ஆவியாதல் முறையின் மூலம் குறைந்த செலவில் தயாரிக்க லாம். இந்த வகையிலே, வருடத்தில் ஒன்பது மாதங்கள் வரை மழையில்லாதது ஒரு வரப்பிரசாதமே. ஈரலிப்புப் பிர தேசத்தில் அடிக்கடி பெய்யும் மழை உப்புப் பள்ளங்களி லுள்ள நீரைச் சுத்தப்படுத்துவதால் இலங்கையின் உப்பளங் கள் முழுவதும் வரட்சிப் பிரதேசத்திலேயே உள்ளன.
யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் அதை அடுத்த தீவுகளி ஆலும் தரையிலே சரிவுகள் (பள்ளங்கள்) இல்லாதது குளங்கள் கட்ட ஒரு குறைதான். ஆனல் அதிஷ்டவசமாக அங்குள்ள சுண்ணும்புக்கல் பெரும் அளவு சுத்தமான மழைநீரை ஆவி யாகப் போய்விடாமல் நிலமட்டத்தின் கீழ்ச் சேமிப்பதால் கிணறுகள் மூலம் நீரை மேலே பெறமுடிகிறது. இடைப்பரப்பு நீரைத் தேவையான அளவு உயர்த்திப் பெருமளவு கிணற்று நீர்ப்பாசனத்தைச் சிக்கனமாக்க அமெரிக்காவிலும் வேறு இடங்களிலும் அண்மையில் தொழில் நுணுக்க முறைகள் விருத்தி செய்யப்பட்டுள்ளன.
மனிதனையும் அவனது உயிரினங்களையும் துன்பத்தில் விடுத்து யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் அதை அடுத்த தீவு *களிலுமுள்ள கிணறுகள் அடிக்கடி வற்றிவிடுவதுண்டு. எமது முன்னேர் கையாண்ட வழிவகைகளுக்குத் திரும்புவதாலே இதற்குப் பரிகாரம் தேடலாம். இந்நிலம் பல குளங்களை ஆஉடையதாயிருக்கிறது. மழைநீர் அவற்றுள்ளே திரண்டு
7

Page 74
பின்பு கீழ்ச்சென்று இடைப்பரப்பு நீருடன் சேர்வதால் வரண்டமாதங்களில் அது தேவைக்குக் கிடைக்கிறது. முன்
ஞேர் இந்த நுணுக்கமுறையை அறிந்து விருத்தி செய்தனர்.
இந்நீர் தரைக்குக் கீழே செல்வதற்குக் குளங்களின் அடிப் பாகத்தில் அடைக்கும் வண்டல் இல்லாது செய்யவேண்டும்.
முன்னேர் இந்த வண்டலை நீக்கி வயல்களில் பசளையாகப் பயன்படுத்தினர். இதை வரட்சியான மாதங்களிலே செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் அதிக மழை நீரைக் கடலி லும் வெள்ளச்சேதத்திலும் இழந்துவிடாமல் பயன்படுத்த
லாம். இங்கே நிலத்தின் தட்டைத்தன்மை காரணமாக அணை களுடன் நீர்த்தேக்கங்கள் அமைப்பது சாத்தியமல்ல. குளங்: களே இடைப்பரப்பு நீருக்குப் புனல்கள் போலியங்கி இவ்
விடங்களில் பயன்படும். இங்குள்ள சுண்ணும்புக் கற்பாறை கள் கரையுந்தன்மையனவாகையால் அவை கோறைகள்
தோன்ற இடங்கொடுத்து நிரம்ப இடை வெளிகள் உடையன வாய் இருக்கும். தரையின் கீழ் மழைநீரைச் சேமிப்பதைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணம் அதிட்டமானது. மேற். பரப்பிலுள்ள நீர்ப்பாதுகாப்பிடங்கள் போல, நீரை ஆவியாக இழந்துவிடாமல் இங்கு சேமிக்கலாம்.
வரட்சிப்பிரதேசத்திற்கு இயற்கையின் பெருங்கொடை பனைமரம் நிலம் வேறு இலாபகரமான பயன்களுக்கு உத வாத இடங்களில் பனை வளருகிறது. மனிதருக்கும் ஆடு மாடு, களுக்கும் உணவு தருவதிலும், வீடமைப்பிற்கும் கைத் தொழிலுக்கும் தேவையான மரம், ஒலைகள், கள்ளு. சீனி முத, லிய பொருட்களைத் தருவதிலும் இதுபெரும் மூலச்செல்வ மாகத்திகழ்கிறது. பயிர்ச்செய்கைக்குப் பயன்படாத இடங் களிலெல்லாம் பனை நாட்டவேண்டும்; வெட்டி வீழ்த்துவம் தோடு சேரத்திருப்பி நடுதலும் நடைபெறல்வேண்டும்.
18

விடுதலையும் தமிழரும் -கலாநிதி ஜெயரத்தினம் வில்சன்
இலங்கை அரசியற் சீர்திருத்த இயக்கம் எழுந்த காலத்தில் கூடிய அளவு அரசியற்சட்டச்சீர்திருத்தத் திற்காக உழைத்தவர்கள் தமிழர்களே. இத்துறையில் முதன் முதலிற் கவனஞ் செலுத்தியவர் சேர் முத்துக்குமாரசாமி எனலாம். அக் காலத்தில் இந் நாட்டில் வாழ்ந்த தலையாய தேசியவாதி அவரே. அக் காலத்தில் இல்ங்கை வந்திருந்த ஜப்பானிய யுத்தக் கப்பலின் தளபதி ஒருவர் கொழும்புத் துறைமுகத்திற் கப்பல் நின்றபொழுது சேர் முத்துக்கு மார சாமி அவர்கள் இல்லத்திற்குச் சென்று தனது சக்கரவர்த்தி யின் பேரில் மரியாதையைத் தெரிவித்துக்கொண்டார். சேர் முத்துக்குமாரசாமிக்குப் பின்னர் சேர் பொன். இராம நாதன் வந்தார். 1885-1890-ம் ஆண்டுகட் கிடையில் அவர் இலங்கைத் தேசீய சங்கம் என்ற ஸ்தாபனத்தைத் தொடங்கிஞர். மத்திய தரவர்க்கத்தின் அரசியற் கருத்துக், கள் இச் சங்கத்தில் தமது இடத்தைப் பெற்றன. 1930-ம் ஆண்டிலே தமது மரணகாலம் வரை சேர் இராமநாதன் இலங்கையின் அரசியல் வாழ்வில் முக்கியமானதொரு இடத்தை வகித்து வந்தார். சிங்களவர்களினதும் தமிழர் களினதும் நம்பிக்கையைப் பெற்றிருந்த அவர் கல்வி கற்ற இலங்கையரின் முதற் பிரதிநிதியாக விளங்கினர் சட்டி சபையில் வீற்றிருந்த காலையில் தேசநலனின் பாதுகாவலனுக அவர் விளங்கினர். நாட்டு மக்களின் உரிமைகளை அரசாங் கம் அபகரிக்காது கண்காணித்து வந்தார். எனினும் 1915-ம் ஆண்டில் நடந்த கலகத்தின்போதே அவரது உண்மையான தேசீயப் பண்பு தெரிய வந்தது. அச்சமுற்று அவசர நட வடிக்கைகள் எடுத்த குடியேற்ற ஆட்சியினல் அநீதியாக நடத்தப்பட்ட சிங்கள மக்களின் கட்சியை வன்மையாக எடுத் துரைத்தார். "இலங்கையின் கலகங்களும் இராணுவச் சட்ட மும்" என்ற தலைப்பில் பின்னர் அவர் வெளியிட்ட நூல் குடியேற்ற ஆட்சியின் குறைபாடுகளை வெளிப்படுத்தும் நோக்கமாக எழுதப்பட்டதாகும். இதற்காகச் சிங்கள மக் கள் அவரை என்றும் மறவாது போற்றி வந்துள்ளனர். இன் றும் மதித்து வாழ்த்துகின்றனர்.
9.

Page 75
ஆயினும் தனது சகோதரர் அருளுசலத்தைப் போலல் “லாது இராமநாதன் தனது வாழ்நாளிலேயே மனமுடைந்து போக நேர்ந்தது. சிங்கள மக்கள் தமிழர்களைக் கைவிட்டு விட்டதையும், சட்ட சபையில் பிரதிநிதித் தத்துவத்தைப் பொறுத்தளவில் தமிழருக்கு உரிய ஸ்தானத்தைத் தர விரும்பவில்லை என்ற கசப்பான உண்மையையும் அவர் உணர்ந்தார். டொனமூர்ச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப் பட்டபொழுது அவற்றின் குறைபாடுகளை உணர்ந்தார். எதிர் "கால ஞானமுள்ள இராமநாதன். தமிழருக்குப் போதிய பாதுகாப்பில்லாத இடத்தில் அளிக்கப்படும் பொதுஜன வாக் குரிமை அவர்களுக்கு நாசம் விளைவிக்கும் என்பதை அவர் கண்டு கொண்டார். "கீழ்த் தரமான ஜனக் கூட்டம்" அதிகாரத்திற்கு வருவதை அவர் தனது முழுச் சத்தியுடனும் கண்டித்தார். ஆயினும் பிற்கால வாழ்வில் இவருக்கு எந்த விதமான வெற்றியும் கிட்டவில்லை.
இராமநாதனின் சகோதரர் அருணசலம் இருபதாம் நூற் ருண்டிலே இலங்கையிற் ருேன்றிய பெருமக்களுள் ஒருவர். *சிவில் சேவையிலிருந்த அவர் மிகப் புகழ்வாய்ந்து விளங் கினர். ஒருமுறை சட்டசபையில் உத்தியோக பூர்வமான அங்கத்தவராக வீற்றிருந்த அவர் அரசாங்கத்திற்கு எதிரா கவே வாக்களித்தார். இது முதலாவது உலகப்போர்க் காலத் திலாகும், உலகப்போரும் கலகமும் தேசீய வாதிகள் உள் ளத்தில் நிலைத்தன. அநீதியான அடக்கு முறைகள் தேசீய உணர்ச்சியைத் தட்டி எழுப்பிவிட்டன. மேலும் அயல் நாடா கிய இந்தியாவில் நிதானமான அரசியற் சீர்திருத்தங்கள் ஏற்படுத்துவதாகப் பிரிட்டிஷ் அரசாங்கம் வாக்களித்திருந்தது. இந் நிலையில் தேசிய வாதிகள் ஸ்தாபனரீதியில் ஒன்று சேர்ந் தனர். இராமநாதன் நிறுவிய இலங்கைத் தேசீயசங்கம் இதில் வழிகாட்டியது. முதல் நடவடிக்கையாகச் சேர் பொன். அரு >ணுசலத்தைச் சொற்பொழிவாற்றும்படி அழைத்தது. 1917-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ம் திகதி நடைபெற்ற வருடாந்த மாநாட்டில் இவர் சொற்பொழிவாற்றினர். தேசீய இயக்க வளர்ச்சியில் இது, மிகவும் முக்கியமான சரித்திர நிகழ்ச்சி யாகும். ஆங்கிலம் கற்ற மத்தியதர வர்க்கத்தினரிடையே இது புதிய விழிப்பை உண்டுபண்ணியது. சீர்திருத்த இயக் கத்தின் பிரகடனமாக இது விளங்கியது.
120

1833-ம் வருடத்திற்குப் பின்னர் நாட்டின் கல்வி, வர்த் தகம், சனத் தொகை ஆகியவற்றில் ஏற்பட்ட வளர்ச்சியைசி சுட்டிக் காட்டிய அருஞசலம் நாட்டின் குறைகள் பலவற்றை எடுத்துரைத்தார். இவற்றிற்கு மூல காரணமான முடிக்குரிய குடியேற்ற ஆட்சி முறையைக் கண்டித்தார். சட்ட சபையில் மட்டுமல்லாது எதிர் காலத்தில் மக்களும் அரசியல் சீர்திருத் தத்தில் பங்கெடுத்தல் அவசியம் என வற்புறுத்தினர். மத்திய அரசாங்கத்திற் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தினர்கள் பெரும் பான்மையினராக உள்ள சட்டசபை ஒன்றைக் கோரிய அவர் நாட்டின் நிர்வாகத்திலே கூடியளவு இலங்கை யர்மயம் அவசியம் என்ருர்,
அருஞசலத்தின் வார்த்தைகள் உடனடியாகப் பயனைய ளித்தன. 1917-ம் வருடம் மே மாதம் 17-ம் திகதி இலங்கைச் சீர்திருத்த லீக் நிறுவப்பட்டது. நாட்டின் அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை ஆராயவும் அரசியற் சீர்திருத் தத்திற்காக உழைக்கவும் நிறுவப்பட்ட இந்த லீக்கின் தலைவ ராக அருணுசலம் அமர்ந்தார். 1917-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந்திகதி இலங்கைத் தேசீய சங்கமும் இலங்கைச் சீர்திருத்த லீக்கும் அரசியற் சீர்திருத்தம் பற்றிப் பொது மாநாடொன்று நடத்தின. இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் இதற்குப் பிரதிநிதிகள் வந்திருந்தனர். இம் மாநாடு சரித்திரப் பிரசித்தி பெற்றதாகும். ஏறத்தாழ 100 ஆண்டுகளாக இத்தகைய மாநாடு எதுவும் இதற்குமுன் நடந்ததில்லை. மீண்டும் ஒரு முறை தலைமையுரை நிகழ்த்து மாறு அருணுசலம் அழைக்கப் பட்டார்.
1918-ம் வருடம் டிசம்பர் மாதம் 13-ம் திகதி இரண்டா வது மாநாடு நடந்தேறியது. மீண்டும் ஒரு முறை தேசீய இயக் கத்தினர் அருணுசலத்தைத் தமது தலைவராக ஏற்றனர். மீண் டும் அவரே தலைமையுரையை நிகழ்த்தினர். இவ்வுரையின் போது முதன் முறையாக இலங்கையின் அரசியற் சீர்திருத்தத் திற்கு உழைப்பதற்காகத் தேசிய காங்கிரஸ் ஒன்றை நிறுவு வது பற்றி அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் 1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ம் திகதி சட்டசபையில் இராமநாதன் அரசியற் சீர்திருத்தம் கோரும் தீர்மானம் ஒன்றையும் பிரேரித்தார். அக் காலத்
2

Page 76
தில் இலங்கையின் அரசியற் சட்டச் சீர்திருத்த இயக்கத்திற் குத் தலைமை தாங்கியவர்கள் தமிழ்ச் சமூகத்தின் புதல்வர் இருவர் என்பதே இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
1919-ம் வருடம் டிசம்பர் மாதம் 11-ம் திகதி இலங்கைத் தேசீய காங்கிரஸின் முதற் கூட்டம் நடந்தது. ஈடு இணை யற்ற முறையில் அருஞசலம் அதன் தலைவராக அமர்ந்தார். காங்கிரஸின் உதயம் நாட்டின் அரசியல் வளர்ச்சியில் முக்கிய மான ஒரு படியாகும். அடுத்த சில வருடங்களுக்கு அதுவே சீர்திருத்த இயக்கத்தின் தலைமைக் குரலாக இருந்து வந்தது. நாட்டு மக்கள் யாவரும் காங்கிரஸை ஆதரித்தனர். தேசாதி பதியே அதனை மக்களின் பிரதிநிதியாகக் கருதிக் காரியங்களை ஆற்றினர்.
ஆயினும் காங்கிரஸ் விரைவிலேயே தனது தேசீயத் தன் மையை இழந்தது. மேல் மாகாணத்திலே தமிழருக்கு 9ரு ஸ்தான த்தை ச் சிங்களவர்கள் கொடுக்க மறுத்தனர். இரு சமூ கங்களுக்குமிடையில் பிளவு தோன்றுவதற்குக் காரணம் இதுவே. ஆயினும் தமிழருக்கு இது கொடுக்கப்பட்டிருந் தாலும், அதன் பின்னர் சட்டசபையில் பிரதிநிதிகளைப் பொறுத்தளவிற் சச்சரவு தோன்றியிருக்கும் என்றே அக்கால நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. சிங்களவர்கள் கலப்பற்ற முறை யில் பிரதேசப் பிரதிநிதித்துவத்தை விரும்பினர்; தமிழரோ ஏற்கனவே தமக்கிருந்த நிலைமையைப் பாதுகாக்கவிரும்பினர்; சிங்களவர் முன்னர் விரும்பிய தேசீய ஒற்றுமையை இதில் காட்ட வேண்டும் என்றனர். ஆயினும் பெரும்பான்மையான சிங்களத் தலைவர்கள் இவ்வாறன கருத்துக்கு இடமளிக்க வில்லை. இதன் விளைவு என்ன? இருசமூகங்களுக்குமிடையி: அலுள்ள பிளவு அகன்றது: இன்றே தமது தன்மானத்தையும், சம அந்தஸ்தையும் பாதுகாப்பதற்குத் தாம் பெரும்பான்மையினர் ராக வாழும் பகுதிகளில் சுய நிர்ணய உரிமை வேண்டுமென் பதைத் தமிழ் மக்கள் உணர்ந்துவிட்டனர். தேசத்தின் விடு தலைப் பாதைக்குத் தமிழர்கள் தடையாக இருந்தனர் என்ற, குற்றச்சாட்டுப் பொய் என்பது புலனுகிறதன்றே!
1926-ம் ஆண்டில் ஏற்பட்ட தமிழர் சிங்களவர் ஒப்பந். தம் போன்று அன்று சிங்களத் தலைவர்கள் உடன்பட்டிருப்பா ராயின் தேசீய இயக்கம் இன்னும் வலுவடைந்திராதா? விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையற்ற சிங்களத் தலைவர்
22

கள் தேச விடுதலைக்கு முட்டுக்கட்டைய்ாகப் பிடிவாதம் பண் எனினர்.
மேல் மாகாணத்தில் தமிழருக்கு ஒரு ஸ்தானம் தரச் சிங் களவர்கள் மறுத்த பின்னர் காங்கிரஸில் இருந்த பல தமிழர் களும் அருணுசலமும் ஸ்தாபனத்திலிருந்து வெளியேறினர்: அன்றிருந்து காங்கிரஸின் இறுதி காலம் வரை அது சிங்கள மக் களின் ஸ்தாபனமாகவே இருந்தது மேல் மாகாணத்திலே தமிழருக்கு ஒரு ஸ்தானம் வேண்டித் தமிழர் தனிப்பட்ட முறையில் போராடத் தொடங்கினர். காங்கிரஸ் இதற்குப் பதில் நடவடிக்கை எடுக்கத் தவறவில்லை. இது மட்டுமல்ல; அருணுசலத்தின் பெயருக்கே மாசு கற்பிக்க முனைந்தது காங் கிரஸ். 1923-ம் ஆண்டு மே மாதம் 23-ம் திகதி குடியேற்ற நாடுகள் காரியதரிசிக்குச் சமர்ப்பித்த நிரூபணத்தில் அருளுச லம்பற்றி அபாண்டப் பழிகள் சுமத்தப்பட்டன. சர் ஜேம்ஸ் பீரிசுக்கும் அருணுசலத்துக்கும் ஏற்பட்ட போட்டியின் விளை வாகவே அவர் காங்கிரஸை விட்டு விலகினர் என்றெல்லாம் கூறப்பட்டது:
தனது தனிப்பட்ட ஆசைகள் நிறைவேருதபடியால் அரு ணுசலம் கட்சியை விட்டு விலகினர் என்பது நம்ப முடியா மலிருக்கிறது. அவர் விரும்பினல் வடபகுதியில் ஒரு ஸ்தா னத்திற்குப் பிரதிநிதியாக அமர்ந்திருக்கலாம். ஆயினும் அவர் ஒரு கொள்கைக்காகப் போராடிஞர். தேசிய இயக்கத் தைக் கட்டி வளர்த்த ஒருவர்மீது இத்தகைய குற்றத்தைக் சுமத்துவது அழகல்ல. நாட்டிற்குச் செய்த சேவைக்குப் பின் னர் சிங்கள மக்களால் தூவிக்கப்பட்ட முதல் நபர் அவர் ஆயினும் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம், திரு. சி. தருமலிங்கம் ஆகியோரும் பின்னர் இக்க திக்கு ஆளாகினர். வஞ்சகமற்ற ஒத்துழைப்பின் பின்னர் விரக்தியும், நம்பிக்கைத் துரோக மும் ஏற்பட்டன அவர்களுக்கு.
மனமுடைந்த அருணசலம் 1924இல் கால மாஞர். அவ ரின் மரணத்தின் பின்னர் திரு. சி.ஈ. கொறியாவின் யோசனைப் படி காங்கிரஸ் தமிழர் சிங்களவர் பிளவை நீக்க முயன்றது. திரு கொறியா 1924-25-ம் ஆண்டுத் தலைவராக இருந் தார். காங்கிரஸ் செயற் கமிட்டி இலங்கைத் தமிழ் மகாஜன சபைப் பிரதிநிதிகளைக் கலந்து பேச ஒரு கமிட்டியை நியமித்
23.

Page 77
தது. 1924-ம் வருடம் ஆனி மாதம் 28-ம் திகதி இரு ஸ்தா பனப் பிரதிநிதிகளும் கூட்டறிக்கை ஒன்றை விடுத்தனர். பல தரப்பட்ட உடன்பாடுகளுடன் பிரதிநிதித்துவம் பற்றிப் பின்வருமாறு சமரசம் காணப்பட்டது: 'இன்றிருக்கும் நிலை யில் இலங்கையின் பிற பாகங்களில் உள்ள பிரதிநிதிகளுக்கும் வட கிழக்கு மாகாணங்களிலும் மேல் மாகாணத்திலுமுள்ள தமிழரது பிரதிநிதிகளுக்கும் 211, விகிதாசாரம் இருக்கும்.'
பண்டாரநாயகா - செல்வநாயகம் ஒப்பந்தம் போற் றப்பட்டது போன்று அன்று இந்தச் சிங்களவர் - தமி ழர் ஒப்பந்தம் புகழப்பட்டது. ஆயினும் அருணசலம் மன முடைந்தது போலவே இந்த ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்ட வர்களும் மனமுடைந்தனர். தேசீய காங்கிரஸ், ஒப்பந்தத்தை விவாதித்து அங்கீகரிக்க முன்வராது அதனைப் பின் போட்டு வந் 点垒j·
இந்நிலையில் க்ாங்கிரஸின் தலைவர்களே கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தின் பேரில் விடுதலைப்போரில் ஒத்துழைக்க மறுத்து விட்டனர் தமிழர்கள். தேசிய காங்கிரஸைத் தமது தலை வர்கள் கட்டி வளர்த்ததைக் கண்ட தமிழர்கள், அது சிங்கள ஸ்தாபனமாக இயங்கும் பொழுது அதனுடன் எவ்வாறு ஒத் துழைப்பர்? விடுதலை இயக்கத்தைத் தமிழர்கள் தாமதப் படுத்தி வந்தனர் என்ற குற்றச்சாட்டு அடிக்கடி கூறப் பட்டுள்ளது. ஆயினும் மேலே கூறப்பட்ட காரணங்களால் அது தவறென்பது புலனுகின்றதன்ருே தேசிய வளர்ச்சி யின் ஒவ்வொரு கட்டத்திலும் சிங்களத் தலைவர்களும் தமது பிடிவாத மனப்பான்மையினல் தமிழருக்கு நம்பிக்கைத் துரோ கஞ் செய்தனர். இதனல் ஒத்துழைப்பதென்பது முடியாத காரியம் என்னுமளவிற்குத் தமிழர் வந்துள்ளனர். விடுதலைக்கு எதிராகத் தமிழர்கள் எப்பொழுதுமே இருந்ததில்லை யென் பது தக்க சான்றுகளாற் புலப்படுவதொன்ரு கும். தேசிய, இயக்க வரலாறு முழுதும் தமிழர்கள் கேட்டது ஒன்றுதான். பெரும்பான்மையினரின் அதிகாரத்தைத் தடுப்பதற்குரிய பாதுகாப்பை மட்டுமே அவர்கள் கேட்டனர். தேசிய இயக் கத்திற் பங்கு பற்றத் தயங்கவில்லை அவர்கள்.
1931-1947-ஆண்டுவரை உள்ள காலப் பகுதி தமிழர் களைப் பொறுத்தளவில் அச்சமும் நம்பிக்கையின் மையும் நிறைந்ததொன் ருகும்.டொனமூர் அரசியற் சட்டமானது நாட்
24

டிலே சிங்களப் பெரும்பான்மையினரின் ஆட்சி வெள்ளத்தை, உடைத்து விட்டது. இப்பெரும் வெள்ளத்தைத் தடுக்கப் பெரியார் இராமனுதன் இறுதி முறையாகப் பாடுபட்டார். ஆயினும் பலன் காணவில்லை. அன்று புதிய அரசியற் சட்டத் தின் கீழ் நடந்த பொதுத் தேர்தலை வடமாகாணத் தமிழர் கள் பகிஷ்கரித்தனர். யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் தலைமையில் இது நடைபெற்றது. விடுதலை விரும்பியவர் களின் நோக்கத்தையும் அபிலாஷைகளையும் சீர்திருத்தங்கள் நிறைவேற்றவில்லை என்று இவ்வாலிபர் காங்கிரஸ் கருதியது. ஆயினும் பிரதேச ரீதியில் சர்வஜன வாச்குரிமையின் பயன. கத் தமக்குக் கிடைத்த பல அனுகூலங்களைப் பெரிதாக மதித் தனர் சிங்களவர். இக்காரணத்தால் இலங்கையின் தென்பகு தியில் வாலிபர் காங்கிரஸின் கொள்கைக்கு ஆதரவு கிட்ட வில்லை. வடமாகாணத்தில் வாலிபர் காங்கிரஸை ஆதரித்த வர்கள் பற்பல காரணங்களுக்காக அதனை ஆதரித்தனர். ஆயினும் பிரதிநிதித்துவத் துறையில் குடியேற்ற அரசாங்கம் போதிய முன்னேற்றம் அளிக்கவில்லை என்ற விரக்தியும் ஒரு காரணமாகும்.
ஆயினும் பகிஷ்காரம் பெரியதொரு தவருக அமைந்தது. நாட்டின் ஆட்சியில் தமிழுக்குப் பங்குகிடைக்காதுபோயிற்று. முதலாவது ஸ்டேட் கவுன்சிலில் சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதிகள் இருவர் அமைச்சர்களாக இருந்தனர். திரு. பெரிசுந்தரமும் சேர். மொகமத் மாக்கான் மார்க்காரும் அவ் விருவராவார். தமிழரும் தேர்தலைப் பகிஷ்கரிக்காது இருந் திருப்பின் ஆட்சியிற் பங்கு கிடைத்திருக்குமன்ருே.
புதிய அரசியற் சட்டம் அமுலுக்கு வந்த சில காலத்திற். குள்ளே சிங்களத் தலைவர்கள் மீண்டும் அரசியற் சீர்திருத்தம் கோரினர். அமைச்சர் சபை எவ்வாரு க இருப்பினும் சபை களுக்குள் பிளவுகள் காணப்பட்டன. சிறுபான்மைச் சமூக அமைச்சர்கள் பூரணமாக ஒத்துழைக்கவில்லை. தாம் பூரரை மாக-மனமார-ஒத்துழைப்பதற்குமுன் சில பாதுகாப்புக் கள் அளிக்கப்படல் வேண்டும் என அவர்கள் கருதினர். ஆயி னும் சிங்களத் தலைவர்கள் இதனை ஒப்புவதாக இல்லை. இச் சூழ்நிலைமையைப் பயன்படுத்திய குடியேற்ற நாடுகளின் காரியதரிசி அரசியற் சட்டச் சீர்திருத்தத்திற்கு மறுத்துவிட் டார். அமைச்சர் சபையில் ஒற்றுமை இல்லை என்று அவர்
'25

Page 78
எடுத்துக் கூறினர். இதற்கு விடை இறுப்பதுபோல 1936ம் ஆண்டில் தனிச் சிங்கள அமைச்சர் சபை அமைக்கப்பட்டது. செயற்கையாக எழுப்பிக் கட்டப்பட்ட ஒற்றுமையைக் காட் டிப் புதிய சீர்திருத்தங்கள் கோரப்பட்டன.
தனிச் சிங்கள அமைச்சர் சபை அமைக்கப்பட்டதன் விளை வாகத் தமிழர்-சிங்களவர் உறவு மேலும் மோசமாகியது. இந்நிலையில் தமிழர்கள் சமப் பிரதிநிதித்துவம் வேண்டி நின்ற னர். தமிழ்ச் சமூதாயத்தைப் பொறுத்தளவில் இக் கட்டத்தி லேயே திரு. ஜி. ஜி. பொன்னம்பலம் அரசியல் உச்சிக்கு வந் தார். இராமநாதனது மறைவிற்குப்பின் சில காலம் தமிழர் -களுக்குத் தலைவர் இல்லாதிருந்தது. 1936-ம் ஆண்டிற்குப் பின்னர் திரு. ஜி. ஜி. பொன்னம்பலம் இக்குறையை ஒருவாறு நிவிர்த்தி செய்தார். இலங்கைத் தேசீய சமுதாயத்தில் தமி ழருக்கும் முக்கிய பங்குண்டு என்ற உணர்ச்சியை அவர் தமிழ ருக்கு உணர்த்தினர்; உணர்ச்சியை ஊட்டினர்; உற்சாக மளித்தார்
தனிச் சிங்கள அமைச்சர் சபை அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழருக்குப் பல அநீதிகள் இழைக்கப்பட்டன: அரசாங்க சேவையில் இருந்து தாம் ஒதுக்கப்படுவதைத் தமி ழர் உணர்ந்திருந்தனர். இந்நிலையில் தமிழர்கள் பலர் திரு. பொன்னம்பலம் தலைமையில் சமப்பிரதிநிதித்துவம்கோரினர். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டதுடன் இவ்வியக்கம் வலுவடைந்தது. திரு. பொன்னம்பலம் காங் கிரஸின் தலைவரானர். இயக்கத்தை வழிநடத்தப் பல திறன் மிக்க துணைவர்கள் அவருக்கிருந்தனர்.
1939-ம் ஆண்டில் உலகப் போர் கிளம்பியபொழுது அமைச் சர் சபையினர் புதிய அரசியற் சட்டத் திருத்தங்கள் வேண் டினர். போரின் போது ஒத்துழைப்பதற்குப் பதிலாகச் சட்டத் திருத்தங்கள் கோரினர். இதற்கிசைந்த பிரிட்டிஷார் 1943-ல் அமைச்சர் சபையைப் புதிய அரசியற் சட்டத்தை உருவாக்கு மாறு கேட்டுக் கொண்டனர். சில நிபந்தனைகளும் விதிக்கப் பட்டன. சிறுபான்மையினரின் அங்கீகாரத்தையும் பெற்ற தற்குச் சான்முகச் சட்டதிட்டம் ஸ்டேட் கவுன்சிலிலுள்ள 75 சத வித அங்கத்தினர்களின் அனுமதியைப் பெறல் வேண்டும்
அமைச்சர் சபை இரகசியமாகத் திட்டமிட்டது. திரு. பொன்னம்பலம் போன்ருரின் கருத்துக்களைக் காலத்துக்குக்
26

அகலம் கேட்டனராயினும் தமது மனக் கருத்தை வெளிக் காட்டவில்லை அவர்கள். இந்நிலையில் சகல விஷயங்களையும் தீர ஆராய்வதற்காகக் கமிஷன் ஒன்றை நியமிக்குமாறு தமிழ்க் காங்கிரஸ் குடியேற்ற நாடுகள் காரியதரிசிக்கு விண் சைப்பித்தது.
இதற்கிடையில் தமது திட்டத்தைக் குடியேற்ற நாடுகள் காரியதரிசிக்குச் சமர்ப்பித்தனர் அமைச்சர் சபையினர். பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தளவில் ஓர் உடன்பாடு காண் பதற்காகப் பல மாநாடுகள் நடந்தேறின. ஆயினும் திரு. பொன்னம்பலம் இணங்காது "ஐம்பதுக்கு-ஐம்பது" என்ற வாதத்தைக் கைவிட மறுத்தார். இதன் பயஞக எந்தவித மான உடன்பாடும் ஏற்பட இடமில்லாது போயிற்று. இவற் றின் விகளவாக பிரிட்டிஷ் அரசாங்கம் சோல்பரிக் கமிஷனை நியமித்தது.
இந்த முடிவு சிங்களத் தலைவர்களுக்கு மனக் கசப்பை ஆண்டு பண்ணியதாயினும் அவர்களின் தலையாய தளபதியா கிய திரு. டி. எஸ். சேனநாயக்கா கலங்கவில்லை. உத்தியோக ரீதியாக அமைச்சர் சபை கமிஷனப் பகிஷ்கரித்தது. ஆயி னும் அந்தரங்கமாக அவர்கள் சோல்பரிப் பிரபுவுடன் ஓர் உடன்பாட்டுக்கு வந்தனர். நாட்டின் பெரும்பான்மைச் சமூ கத்தினர் கையில் அரசியல் அதிகாரத்ன்த ஒப்படைப்பதற்குப் பதிலாக பிரிட்டிஷாருக்கு திரு. டி. எஸ்*சேனநாயக்கா விமான, கடற்படைத் தளங்களை விக்டுக்கொடுக்க இசைந் தார். பலனற்ற சில சலுகைகள் சிறுப்ான்மையினருக்குக் காட்டப்படுவதாக இருந்தது. பிரிட்டிஷ் வர்த்தகத்திற்கும் பாதுகாப்பு உறுதி கூறப்பட்டது. ஆமாம்! மற்றுமொரு முறை தமிழர்கள் அடித்து வீழ்த்தப்பட்டனர்.
ஆயினும் சோல்பரி அரசியற் சட்டத்தை ஸ்டேட் கவுன் ஸிலில் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு திரு. டி. எஸ். சேன நாயக்காவுக்கு இருந்தது. நாட்டின் சகல சமூகத்தவரும் அர சியற் சட்டத்தை ஆமோதிப்பதாக பிரிட்டிஷ் அரசாங்கத் திற்குக் காட்டவேண்டியிருந்தது. தமிழர்கள் எதிர்த்து ஒத் துழைக்க மறுத்தால் சுதந்திரம் பின்தள்ளப்பட நேரிடும்g மீண்டும் ஒருமுறை தமிழர்கள் சிங்களவரின் உதவிக்கு வந்த னர். சோல்பரி அரசியற் சட்டம் ஸ்டேட் கவுன்ஸிலில் வாக் கெடுப்பிற்கு வந்தபோது அங்கு பிரசன்னமாயிருந்த சகல
27

Page 79
தமிழ்ப் பிரதிநிதிகளும் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர். திருவாளர்கள் எஸ். நடேசன் ஜே. தியாகராசா. வி. நல் ஐயா, சேர் அருணுசலம் மகாதேவா ஆகியோர் இவர்கள். திரு. ஜி. ஜி. பொன்னம்பலமும், திரு. எஸ். தர்மரத் தினமும் நாட்டிவில்லே. ஆயினும், சட்டத்தைத் தாம் ஆதரிப்பதாகப் பின்னர் திரு. தர்மரத்தினம் திரு. சேனநாயக்காவிற்குத் தெரிவித்தார்.
விடுதலையை நோக்கிய வளர்ச்சியில் சோல்பரி அரசியற் சட்டம் ஒரு படியே. எனவே அது நிறைவேறத் தமிழர் ஒத் துழைப்பு அவசியமாயிருந்தது. 1947-ல் நடந்த பொதுத் தேர்தலின்போது சோல் பரிச் சட்டத்திற்கு வாக்களித்த சகல வடமாகாண அங்கத்தவர்களும் தோல்வியடைந்தனர். திரு. ஜி. ஜி. பொன்னம்பலம் தலேமையில் தமிழ்க் காங்கிரஸ் வட மாகாணத்தில் உள்ள 9 ஸ்தானங்களில் ஏழு ஸ்தானங்களக் கைப்பற்றியது. யாவரையும் வெட்டி வீழ்த் திய காங்கிரஸை எதிர்த்து வெற்றி கண்டவர் திரு. சுந்த விங்கம் ஒருவரே . காங்கிரனைபச் சேராத திரு. சிற்றம் பலமும் காங்கிர வின துனே யுடனேயே வெற்றி பெற்று ர்.
புதிய அரசியற் சட்டத்தின் கீழ் திரு. டி. எஸ். சேனநா யக்கா பிரதமராக நியமிக்கப்பட்டார். பூரண விடுதலே இனித்தான் பெறவேண்டியிருந்தது. அதற்குத் தமிழர் ஒத் துழைப்பு அவசியமாக இருந்தது. இந் நிலேயில் "காட்சிப் பொருட்களாகவேனும்" அவர் அரசாங்கத்தில் இருந்து ஒத் துழைக்கச் சில தமிழர்கள் முன்வந்தனர். சார மற்ற வர்த் தக, தபால் தந்தி அமைச்சுகள் தமிழர் இரு வருக்கு வழங்கப் பட்டன. திரு. சிற்றம்பலம் திட்டவட்டமாக பூ என். பிக்கு எதிராகப் பிரசாரஞ் செய்து தெரிவு செய்யப்படடவர். திரு. சுந்தரவிங்கமோ டி. எஸ். சேனநாயக்காவின் வேண்டுகோ வரின் பேரில் பதவி ஏற்றதாகக் கூறியுள்ளார். சுதந்திரம் பெறுவதைச் சுலபமாக்க இவ்வாறு செய்தனர். இவ்விரு தமிழ் அங்கத்தவரும் ஒத்துழைக்காது விட்டிருப்பின் டி. எஸ். சேனநாயக்கா பாடு கஷ்டமாகவே இருந்திருக்கும்.
இதுதான் நமது நாட்டின் சுதந்திர வரலாறு. வளர்ச்சி யின் ஒவ்வொரு படியிலும்-கட்டத்திலும் தமிழர்கள் சிங்கள வருக்குப் பெருமளவில் உதவியுள்ளனர் என்பது புலனுகும். ஆயினும் எல்லாரும் வெவ்வேறு காலத்தில் மனமுடைந்துள்
28

ளனர் எனவே நாட்டின் சுதந்திரத்திற்குத் தடையாகத் தமிழர்கள் இருந்தனர் எனக் கூறுதல் பொருந்தாது. உண் மையுமல்ல. நீதியுமல்ல. நியாயமான உரிமைகளும், பாது காப்புகளும் வழங்கப்படாத போதும் தமிழ்த் தலைவர்கள் சிலர் நாட்டு முன்னேற்றங் கருதிச் சிங்களவருடன் ஒத்துழைத் துள்ளனர். ஆயினும் இந்த விதிகள் உடனுக்குடன் மறக்கப் பட்டு விட்டன. இக் கருத்தை டாக்டர் என் எம். பெரே ராவே அழுத்தந் திருத்தமாகக் கூறியுள்ளார். மொழிப் பிரச் சி&னயின் போது அவர் பின்வருமாறு கூறிஞர்."
"உண்மையைக் கூறப்போனுல் நம் நாட்டு வரலாறு முழு வதிலும் சிறுபான்மையினருக்கு நம்பிக்கைத் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. திரு டி. எஸ்" சேனநாயக்கா காலத் தில் டொனமூர் அரகியல் சட்டம் அமுலுக்கு வந்ததிலிருந்து சிறுபான்மையினர், குறிப்பாக இந்தியர், பலமுறை ஏமாற்றப் பட்டனர். பின்னர் சோல்பரி கமிஷன் வந்த தைத் தொடர்ந் தும் பல வாக்குறுதிகள் காற்றில் விடப்பட்டன. இந்தியர் குடியேற்ற வெளியேற்ற சட்ட அமைப்பிலே பல சலுகைகள் காட்டப்பட்டன. ஆயினும் நடைமுறையில் அவை கைவிடப் பட்டன. இந்நிஃபில் நமது வாக்குறுதிகளைச் சிறுபான்மை பினர் நம்ப மறுப்பதில் ஆச்சரியமுண்டோ?"
இது காறும் கூறியவற்ருல் நாம் அறிவதென்ன? இலங் கையில் சிங்களவர்-தமிழர் உறவானது நம்பிக்கைத் துரோ கத்தின் வர வாரு கும். ஆயினும் உதை பட்ட போதும் நாட் டின் விடுத&லக்காகத் தமிழர்கள் ஒத்துழைக்க முன்வந்துள்ள னர். முறைக்கு முறை ஏற்பட்ட ஏமாற்றம், நம்பிக்கை வரட்சி ஆகியவற்ருல் இன்றைய தமிழர்கள் தாம் வாழும் பிர தேசங்களில் பிரதேச சுயாட்சி கோருமளவிற்கு வந்துள்ளதில் வியப்புண் டோ? இது மறுக்கப்பட்டால் பாகிஸ்தான், தெற்கு அயர்லாந்து போன்றவற்றின் பாதையைத் தமிழர் வகுப் பரோ? அடுத்த சில வருடங்களில் நடப்பவைகள் இக்கேள் விக்கு விடை பகர வல்லனவாக இருக்கும்.
29

Page 80
சமயமும் கல்வியும்
கலாநிதி சு. வித்தியானந்தன்
ரலாற்று நூல் இயற்றுவதில் கீழ் நாட்டார் காலதேச நிகழ்ச்சிகளேச் சரிவரக் கணித்தறிந்து, உள்ளது உள்ளபடியே தோன்றும்வண்ணம் எழுதுவதில்ஃலயென மேனுட்டு வரலாற்றுசிரியரும் சாத்திர அறிஞரும் பீறுவர். இந் நிவேயில் ஈழத்துத் தமிழரின் வரலாறு ஒழுங்கான முறை யில் எழுதப்பட்டிருக்குமென நாம் எதிர்பார்க்க முடியாது. மேலும், பல நாட்டினரின் படையெடுப்புக்களால் சாதனங் கள் பல காணுமற் போய்விட்டமையால் ஈழத்துத் தமிழர் வரலாறு தொடர்ச்சியாக எழுதப்படாமல் இருப்பதில் ஒரு வியப்புமில்லை. இவை எவ்வாருயினும் பண்டைக் காலந தொட்டே-விசயன் இங்கு காலெடுத்து வைப்பதற்கு முன் பிருந்தே தமிழர் ஈழத் திருநாட்டில் வாழ்ந்து வந்திருகின்ற ரெனத் திடமாகக் கூறலாம்.
பழங்குடி மக்களாகிய தமிழரின் சமய வாழ்க்கையை நோக்குமிடத்து இரண்டு வகையான சமய வழிபாட்டு முறை கள் இருந்து வந்தனவெனத் தெரிகின்றது. இவற்றுள் ஒன்று ஆகம வழிபாட்டு முறை: மற்றது கிராமிய வழி பாட்டு முறை. சிவன் திருமால் முதலிய கடவுளரைப் பற்றி யும், அவர்களே வழிபடும் முறைகளேயும், அவ்வழிபாட்டினுல் அடையக் கூடிய பயன்களேயும், அவற்றின் காரண காரியங் களையும் எடுத்துக் கூறுவன ஆகமங்கள். இவை சுடறும் முறை யைப் பின்பற்றியே தமிழர் வழிபாட்டு முறை பெரும்பாலும் அமைந்திருந்தது. இதற்கேற்ப, ஈழத்தில் மிகவும் பழைமை யான கோயில்கள் பல காணப்படுகின்றன. சிவ வழிபாடும் முருக வழிபாடுமே பெருவழக்கில் இருந்தனவென இக் கோயில்களேக் கொண்டு அறியலாம். இக் கோயில்களுள் மன்னுர்ப் பகுதியிலிருக்கும் மாதோட்டத்திலுள்ள திருக்கே தீச்சரமும், திருக்கோணுமலேயிலுள்ள கோனேசர் ஆலயமுமே இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள மிகப் பழைய கோயில் கள். இவ்விரு தலங்களுக்கும் சமய குரவர் திருப்பதிகம் LfT [q- யருளியிருப்பதனுல் இவை பாடல் பெற்ற தலங்கள் ofsir I சிறப்புப்பெற்று விளங்குகின்றன.
30

ஈழத்தை அரசாண்ட இராவணன், கோணேசுவரப் பெருமானே நாள்தோறும் வழிபட்டு வந்தான் என்பர்; இராவணனின் மாமனுகிய மயன் கட்டியதே திருக்கேதீச்சரக் கோயிலாகும் என்றுங் கூறுவர். இராமன் இராவணனே வென்று அயோத்திக்குத் திரும்பிச் செல்லும் வழியில் திருக் கேதீச்சரப் பெருமானேயும் வழிபட்டுச் சென்ருன் எனத் தகதிண கைலாச புராணம் இயம்பும், அருச்சுனன் தீர்த்த யாத்திரை நோக்கமாக ஈழத்தை அடைந்தபோது திருக்கே தீச்சரக் கோயிலுக்குச் சென்று அங்கு கோயில்கொண்டருளிய திருக்கேதீச்சரப் பெருமானே வணங்கினுனென்பர்.
பல்லவர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த திருஞானசம்பந்த சுவாமிகளும் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் திருக்கேதீச்சரத் தைப் பற்றித் திருப்பதிகம் பாடியுள்ளார்கள். மாதோட்டத் திலுள்ள பாலாவியின் சிறப்பைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது பதிகத்திற் குறிப்பிடுகின்ருர், பதிகச் செய்யுள் ஒவ் வொன்றிலும் "பாலாவியின் கரைமேல்" என்னுந்தொடர் ஆளப்பட்டிருக்கின்றது. "மாதோட்டத்தார் மன்று பாலா வியின் கரையிற் கேதீச்சரம்' எனச் சம்பந்த சுவாமிகளும் குறிப்பிடுவர், இக் குறிப்புக்களிலிருந்து தொலமி பிளினி முதலியோர் குறிப்பிட்ட (Palasi mundi oppidum) என்னும் இடம் பாலாவி மண்டலமெனப்படும் திருக்கேதீச்சர நகரே என்பது தெரியவருகின்றது. இத்தகைய பழமை வாய்ந்தது இத்தலம்.
இராவணன் வழிபட்ட கோணேசர் கோயிலேச் சோழ நாட்டரசஞகிய வரராமதேவன் திருகோணமலே உச்சியில் எடுத்தான் எனவும், அவன் மகன் குளக்கோட்டன் இத் திருப் பனியை நிறைவேற்றி ஈழத்து இராசகுமாரியாகிய ஆடக சுந் தரியை மனஞ் செய்து வாழ்ந்து, சோதியிற் கலந்தா னெனவும் தகதிண கைலாச புராணங் கூறும். கண்ணகிக்குச் சிலே எடுத்த கயவாகு அரசன் இங்கு பூசை ஒழுங்காக நடப் பதற்கு வேண்டிய பூசகரை அமர்த்திக் கோயிலேயும் திருத்தி அமைத் தானெனக் கோணேசர் கல்வெட்டுக் கூறும், திரு ஞானசம்பந்த சுவாமிகள் இத்தலத்தைப் பற்றித் தாம் பாடிய பதிகத்தில் இத்தலத்தின் சிறப்பினேக் "கோயிலும் சுனேயும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலையமர்ந்தாரே' எனக் குறிப்பிட்டுள்ளார். புவனேக வீரபாண்டியன் கோன
3.

Page 81
மலையில் தன் இரு கயல் எழுதிக் கோயிலுக்குரிய நிலங்களை இறையிலி நிலமாக்கினன் என்று குடுமியாமலைச் சாசனம் குறிப்பிடும். அருணகிரி நாதரும் கோணேசருக்குத் திருப் புகழ்ப் பாக்கள் பாடினர்.
முருகனுக்குக் கட்டி எழுப்பப்பட்ட கோயில்களுள் நல் லூர்க் கந்தசாமி கோயில், செல்லச்சந்நிதி கோயில், கதிர் காமக் கோயில் முதலியன ஈழத்துத் தமிழரின் முருக வழி பாட்டினை உலகிற்கு எடுத்து இயம்புவனவாய் அமைந்துள் ளன. முருகன் குர பன்மனைச் சங்கரிக்கும் நோக்கத்தோடு கதிர்காமத்தை எய்தி மாணிக்க கங்கையின் அருகிலே பாசறை அமைத்து வீற்றிருந்தானெனவும், அவ்விடம் எம கூடம் எனப்பட்டது எனவும், பின்னர்ச் சூரபன்மனை வென்று மீண்டபோது கதிர்காம மலையில் நவகங்கா தீர்த்த முண்டாக் கிச் சிந்தாமணி ஆலயத்தில் வீற்றிருந்தானெனவும் புராணங் கூறும். வள்ளியம்மையைக் கண்டு காதலித்து மணம் செய்த இடம் கதிர்காமம் என்றுங் கூறுவர்.
ஈழத்தை ஆண்ட விசயன் கதிரை யாண்டவருக்கு ஒரு கோயில் அமைத்தானென யாழ்ப்பாண வைபவமாலை கூறும், தேவ னும்பியதீசன் ஆட்சியில் அசோகனின் மகள் சங்கமித்தை வெள்ளரசுடன் அநுராதபுரத்தை அடைந்தபோது இலங்கை அரசனுக்கு அடுத்தபடியாகக் கஜரகாமத்துப் பிரபுவை மகா வமிசம் குறிப்பிடுகின்றது. இவ்வரசின் கொப்பொன்று இப் பிரபுவாற் கதிர்காமத்துக்கும் கொண்டுவரப்பட்டுக் கோயி லில் நடப்பட்டதெனவும் அந்நூல் கூறும்.
இக் கோயிலிற் பெரிய கோபுரமோ விமானமோ கிடை யாது. கர்ப்பக் கிரகமும் சிறுமண்டபமுமே இக் கோயிலின் உறுப்புக்கள். கர்ப்பக் கிரகத்தின் வாசலில் திரை இடப்பட் டிருக்கின்றது. வெளிமண்டபத்திலிருந்தே மக்கள் வழிபடு வர். முருகனுக்குப் பூசை செய்வோர் கப்புராளைமார் எனப் படுவர்டு இவர்கள் இங்கே பூசை நடத்தும் முறை இக் காலச் சைவ முறைக்கு மாறுபட்டது. கப்புராளைமார் தம் வாயைமஞ் சள் நிறத்துணியினுற் கட்டி, அமுதினை உள்ளே காவிச் சென்று வைத்த பின்னர் வெளியே வந்து திரைச்சீலை முன்னர் நின்று ஓங்கார வடிவாகக் கையிரண்டையும் கூப்பி வழிபாடியற்று வர். ஒரு பற்று மற்று அருவாய்த்தானே திற்கும் தத்துவங் கடந்த பொருளை வழிபடும் கந்தழி வழிபாடே கதிர்காமத்து
132

வழிபா டென்பது சிலர் துணிபு. அருணகிரிநாதர் இக் கோயி லைப் பற்றிப் பாடிய பாக்கள் இத்தலத்தின் மகிமையை விளக் குவன. தொண்டைமானற்றிலுள்ள செல்லச் சந்நிதியிலும் கதிர்காமத்திலுள்ள முறைப்படியே வழிபாடு நடைபெறும் சாதி வேறுபாடில்லாது ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து முருகனை வணங்குவர். இங்கும் பிராமணப் பூசாரியோ மந்திரங்களோ கிடையா. வாயைத் துணியினல் மூடியே இங் கும் பூசை செய்வர்.
இவைபோன்ற கோயில்களில் ஆகமமுறைப்படி வழிபாடு ஆற்றிப் பல நூற்ருண்டுகளாகத் தமிழர் தமது வாழ்க் கையை நடாத்தி வந்தனர். பதினரும் நூற்ருண்டிலிருந்து நான்கு நூற்ருண்டுக் காலமாகப் போத்துக்கேயர், ஒல்லாந் தர், ஆங்கிலேயர் ஆகிய மேனுட்டார் ஆதிக்கத்தில் ஈழத்துத் தமிழர் இருந்த காலத்து, வைதிக சமயத்திற் பற்றுக் குறை யத் தொடங்கியது. பலர் தமது பழைய சமயத்தை விட்டுப் புதிதாக வந்தோர் சமயத்தைத் தழுவினர். இந்நிலையில் பத்தொன்பதாம் நூற்றண்டின் இறுதியிற் சமயத் தலைவர் பலர் தோன்றித் தமது சமயத்தைச் சீர் செய்யத் தொடங்கி னர். அவருள் முதன்மை பெற்றவர் ஈழத்தைச் சேர்ந்த ஆறு முகநாவலர். சங்க மருவிய காலத்திலே பெளத்தம் சமணம் போன்ற சமயங்கள் தென்னுட்டிற் செல்வாக்குப் பெற்றுச் சைவத்தை அடியோடு அழித்துவிட முயன்ற காலை, அப்பர் சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சமயகுரவர் தோன்றிச் சைவத்தை மீண்டும்நிலைநாட்டியதுபோல, மேலைத் தேசத்தினின்றும் கிறித்தவ வாதம் என்னும் சண்டமாருதம் சுழித் தடித்து ஆரவாரித்த காலத்தில், ஆறுமுக நாவலராகிய சைவப் பெரியார் யாழ்ப்பாணத்து நல்லூரிலே தோன்றிச் சைவசமயத்தை மீண்டும் உயர்ந்த நிலையில் அமர்த்த முயன் ருர். எனவே அந்நிய சமயத்து அரசரின் ஆதிக்கத்தினுலே தன் உன்னத நிலை குன்றிய சைவத்தைத் தொன்மைபோல் ஓங்கச் செய்த பெருமை-சைவத்தை மேனுட்டாரின் பிடியி லிருந்து விடுதலை செய்து அதற்குப் புத்துயிர் கொடுத்த பெருமை-ஈழத்தைச் சேர்ந்த நாவலர்க்கே உரியதென்பதை நாம் மறத்தல் கூடாது. இதனலேயே.
ஆறுமுகநாவலர் போல
அவதார புருஷன் ஆருமில்லை யினிமேலே
33

Page 82
என்றும், "அவநெறியாய வனைத்துங் களைந்து, சிவநெறி வளர்க்கும் திவ்விய குணத்தர்" என்றும், 'சைவமென் னும் பயிர் வளர்க்கும் எழிலி போல்வார்" என்றும் இவரைப் பாராட்டிக்கூறுவர். w
சிங்கள மக்களின் வாழ்க்கையைப் பண்படுத்தி, அவர்கள் வழிபாட்டு முறைகளிற் சைவ முறைகளையும் புகுத்திப் புத்தசமயத்திற்குப் புனிதத் தன்மையை அளித்தனர். தமி ழர், சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எடுத்த, காலத்து ஆங்கு நின்ற ஈழத்தரசன் கயவாகு என்பான் ஈழம் திரும்பி வந்ததும் ஈழத்திலும் ஆண்டுதோறும் பத் திணிக் கடவுளுக்கு விழாவெடுக்கும் வழக்கத்தைத் தொடக்கி வைத்தானெனச் சிலப்பதிகாரம் கூறும். இதுவே கண்டியில் ஆடி மாதத்தில் நடக்கும் பெரகராவின் தொடக்கம். பெர கரா என்பது பிரகாரம் என்னும் வடமொழிச் சொல்லின் திரிபு. முதலில் பெரகரா கண்ணகிக்கே எடுக்கப்பட்டது. பின்னர் கதிர்காமத்தெய்யோ போன்ற பல தெய்வங்களும் கலந்து அண்மையில் புத்தர் பல்லையுங் கொண்டு செல்லும் வழக்கம் உண்டாகிவிட்டது. கண்டியிற் கண்ணகி கோயில் மாளிகாவைக்குள் இருப்பதும் கவனித்தற்குரியது.
பல சிங்கள அரசர் சைவ சமயத்தை ஆதரித்ததோடு நில்லாமல், பிராமணப் பூசாரிமாரை வேலைக்கு அமர்த்தித், திராவிடக் கடவுளரை வழிபட்டும் வந்தனர். நாலந்தை யில் உள்ள கோயில் (கெடிகை) பல்லவர் சிற்ப முறையில், சிங்கள அரசராற் கட்டப்பட்ட சைவக்கோயில். கி. பி. 790 இல் ஈழத்தின் தென்கோடியிலுள்ள தொண்டிரு, என். னும் இடத்தில் விட்டுணுவின் உருவம் ஒன்று அமைக்கப்பட் டது மக்களின் வீட்டுச் சடங்குகளிலும், வழிபாட்டு முறை, களிலும் பிராமணருக்கு அதிக செல்வாக்கு இருந்தது. பதினைந்தாம் நூற்ருண்டுவரையில் இவர்கள் சிங்களவரின் சமய வாழ்க்கையில் வைதிக வழிபாட்டு முறைகளைப் புகுத் தி: விட்டனர். கண்டி அரசன் இராசசிம்மன் பெளத்தர்களுக்குச் சமயக் கொடுமைகள் இழைத்துச். சைவசமயத்தை அரசரின் சமயமாக நிலைநாட்டினுன் என்பர். சிங்கள அரசர்கள் சைவ வைணவக் கோயில்களைக் கட்டி எழுப்பினர். உதாரண மாக ஆரும் பராக்கிரமபாகு அலுத்துவரை என்னும் இடத், தில் வைணவ ஆலயம் ஒன்று கட்டினன், மேலும் புத்த,
34

விகாரைகளிலும், அவ்விகாரைகளுக்கு அண்மையிலுள்ள தேவாலயங்களிலும் இந்து சமயக் கடவுளரை வழிபடத் தொடங்கினர். கம்பளைக்கு அண்மையில் உள்ள இலாங்கா திலக விகாரையில் கட்டிடத்தின் உட்சுவருக்கும் வெளிச் சுவ ருக்கும் இடையே இந்துத் தெய்வங்களின் உருவச் சிலைகளை அமைத்தனர். சிங்களப் புலவர்கள் புத்தருக்கு வணக்கம் செலுத்தியவுடன் பிரமன் சிவன் போன்ற தமிழ்க்கடவுள
ருக்கும் வாழ்த்துக் கூறினர்; இன்று கதிர்காமத்து முருகன்
தங்கள் தெய்வ மென்று சிங்களவரும் கூறும் அளவிற்கு, வைதிக சமயம் அவர் வாழ்க்கையைப் பாதித்துவிட்டது.
இதுவரை ஆகம வழிபாட்டு முறைகளைப் பற்றிக் கூறி னுேம், அடுத்து ஈழத்துத் தமிழரின் கிராமியத் தெய்வவழி பாட்டு முறைகளைச் சிறிது நோக்குவோம். மாரியம்மன், காளி, வைரவர், ஐயனுர், அண்ணமார், கண்ணகி அம்மன் சத்த கன்னியர், திரெளபதை அம்மன், முதலிகள், பூதராயர் முனியப்பர், பெரியதம்பிரான், கிங்கிலியர், நாகதம்பிரான் போன்ற கிராமியத் தெய்வங்களை ஈழத்தில் உள்ள பொது: மக்கள் பெரிதும் வணங்கி வந்தனர். மாரியம்மன் கோயில் கள் தெல்லிப்பழை, அல்வாய், அனலைதீவு, வன்னி, விளாங் குளம் முதலிய இடங்களில் உள. பாலை நிலத் தெய்வமாகிய கொற்றவையின் மரபைச் சேர்ந்த தெய்வம் இது. இதற்கு, ஆண்டுதோறும் பொங்கல் போட்டு வேள்வி நடத்துவர். அக் காலங்களில் ஆடு, கோழி முதலியவற்றைப் பலி கொடுத் தலும் உண்டு. இக் கோயிலில் வைரவர், காத்தவராயர், கழுவேறி முதலிய தெய்வங்களும் உண்டு. அவற்றிற்குப் போடும் மடைகளில் கள், சாராயம், இறைச்சி, முட்டை, மீன் முதலியவற்ருேடு பிட்டு வகைகளும் அவித்து வைப்பர், கருவாடும் சுட்டுப் படைப்பதுண்டு. பண்டைய முறைப்படி பறை மேளமே அடிப்பர். இக் கோயிலுக்கு முக்கியமாக எடுதது வருவது கரகம். அவ்வூரிலுள்ளவர் ஒருவரே பூசை நடத்துவர். இப் பூசாரியார் யாதொரு மந்திரமும் செல்வ தில்லை.
காளி கோயில், வைரவ கோயில், ஐயனர் கோயில்களி லும் இத்தகைய வழிபாடே நடைபெறும். ஐயனர் கோயில், களிலே சில இடங்களில் அண்ணமார் தெய்வ்ங்களுமுள. ஐயம் ஞர் #ோயிலுக்குச் கிறிது தூரத்தில் நிற்கும் மரத்தடியிலே
35.

Page 83
இவற்றை வழிபடுவர். கண்ணகை அம்மன் கோயில் வழி பாடும் பெரு வழக்காயுள்ளது. பொங்கல் பெரும்பாலும் வைகாசித் திங்களில் நடைபெறும். பொங்கலுக்குச் சில நாட்களுக்கு முன் கோயிலைத் திறந்து கண்ணகை அம்மன் கதை படிப்பர். இப் பொங்கல் மட்டக்களப்புப் பகுதியில் மிகவும் சிறப்புற நடைபெறும். அங்கு அந் நாட்களில் கட லோட்டுக் காதை படித்துப் பொங்கிப் பின் குளிர்த்தியும் போடுவர்.
வன்னி நாட்டை அரசாண்ட தலைவியர் எழுவர் அக் காலத்து ஒல்லாந்தரோடு பொருது, தோல்வியுற்று, நஞ்சுண் டிறந்தனர். அவர்களை ஈழத்துத் தமிழர் வீரத் தெய்வங் களாக்கி வணங்கி வருகின்றனர். இந் நாய்ச்சிமார் கோவில் களில் வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் விளக்கேற்றுவர். பறையை நிறுத்தி ஏழு முறை முழக்குவர். இக் கோயில்களை யாழ்ப்பாணத்திலும் வன்னி நாட்டிலும் ஆங்காங்கு காண லாம். திரெளபதை அம்மன் வணக்கம் திருக்கோளுமலை யிலும் மட்டக்களப்பிலும் உண்டு. விழாவின் இறுதி நாளில் பஞ்சபாண்டவர் வேடம் கொண்ட ஐவர் திரெளபதை வேடம் கொண்டவரோடு கோயில் முன்னுள்ள தீப்பள்ளயத் தில் நடந்து தீமிதி முடிந்ததும் கடலிற் சென்று முழுகுவர். வீர வணக்கத்துடன் தொடர்புடையது முதலிகள் வணக்கம் இது பெரும்பாலும் கரவெட்டி போன்ற இடங்களில் நடை பெறும். ஏழு பூவரச மரங்களுக்கடியில் அமர்ந்துள்ள கல்லு களில் தண்ணிரூற்றிப் பூ வில்வம் சாத்தி இவ் வழிபாட்டை நடத்துவர். துன்னலை, பருத்தித்துறை போன்ற இடங்களில் நடைபெறும் வழிபாடு பூதராயர் வழிபாடு இது வீரபத்திரன் மூர்த்தங்களில் ஒன்று.
முனியப்பர் வழிபாடும் எங்கும் உண்டு, யாழ்ப்பானப் பட்டனத்திலுள்ள கோட்டைக்கருகிலுள்ள முனியப்பர் கோயிலிலும், வல்லை வெளியிலும் இவ் வழிபாடு சிறப்பாக நடைபெறும். பருத்தித்துறைப் பகுதியில் உயிலங் கன்ற டி முனி, திக்கத்து முனி, சக்கோட்டை முனி, தாமரைக்குளத்து முனி, சந்தைப் புளியடி முனி எனப் பல முனிகள் உண்டென் *பர். பெரிய்தம்பிரான் வணக்கம் கரவெட்டிச் சண்டிற்குளத் தடிக் கருகில் உண்டு. இங்கு பெரிய தம்பிரான் கோயிலில் சூலம் வைத்து வணுங்குவர்.
36

ஈழத்திரு நாடெங்கும் நாகதம்பிரான் வணக்கம் உண்டு. திராவிட மக்களின் பழைய வனக்கங்களில் ஒன்று நாக வனக் கம். ஈழத்திலே நாகர் கோயில், பொன்னலை, செம்பியன் பற்று, மருதடிச் சேனையூர், கோட்டைக்கல்லாறு போன்ற இடங்களில் நாகதம்பிரான் கோயில்கள் இருக்கின்றன. இக் கோயில்களில் நாகபாம்புகள் அடிக்கடி வந்து நடமாடித் தமக்கு வைக்கப்பட்ட பால் பழம் அருந்திச் செல்லும்.
கோயில் கட்டி வழிபடுந் தெய்வங்களை விட வீடுகளிலும் தெய்வங்களை வைத்து வழிபட்டனர் ஈழத் தமிழர். வீட்டுத் தெய்வம் அல்லது குல தெய்வம் என இவை வழங்கின. இவ் *வணக்கம் பண்டைத் திராவிட வணக்கத்தைச் சார்ந்தது. இவ்வழிபாட்டிற் காளி வழிபாடே பெருவழக்காய் இருக்கிறது. வீடுகளில் ஒருமூலையில் ஒரு மரத்தின் கீழே செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் விளக்கு வைத்துப் பழமும் பாக்கு வெற்றிலையும் படைத்துக் கர்ப்பூரங் கொளுத்தி வணங்கு வர். ஆண்டுக் கொருமுறை பொங்கலும் நடைபெறும். வீட்டிலுள்ளவர் களுச்கு நோய் வந்த காலத்து இங்கு நேர்த்திக் கடன் செய் வதுமுண்டு. வீட்டில் சாந்த நல்ல காரியத்தையும் செய்யத் தொடங்கு முன் காளியை வழிபட்டே தொடங்குவர். எவ் விதத் துன்பத்திலிருந்தும் குடும்பத்தினரை இத் தெய்வம் காக்கும். ஈழத்துத் தமிழ் மக்களிடையே பரம்ப ைர பரம் பரையாக இருந்துவரும் பொது மக்கள் வழிபாடுகளில் இஃது ஒன்ரு கும். இது போன்று இன்னும் எத்தனையோ உள. அவற்றை இங்கு கூறின் விரியும்.
சமயத்தோடு தொடர்புடையது கல்வி. சமயத்தையும் கல்வியையும் இரு கண்களாகக் கருதியவர் தமிழர்; இவை யிரண்டும் ஒளி குன்ரு மல் இறுதிவரை காத்துப் பயன் கொள் வதையே தமது கடனுகக் கொண்டவர். பண்டைக் காலத் தில் வழக்கிலிருந்த கல்வி அமைப்பைப் பற்றியும் கல்வி முறை களைப் பற்றியும் அறிவதற்குப் போதிய சான்றுகள் இல்லை S எனினும், தென்னுட்டில் சேர சோழ பாண்டியரால் கிறித்து வுக்கு முன் நிறுவப்பட்ட சங்கத்தில் ஈழத்தைச் சேர்ந்த பூதந் தேவனரும் வீற்றிருந்து பாடல்கள் இயற்றிஞர் என்பதிலி ருந்து அக் காலத்திலே ஈழத்திலும் தமிழரின் கல்வி சிறப்புற் றிருந்ததெனக் கொள்ளலாம். .x ' . . . .
37

Page 84
சங்க காலத்துக்குப் பின் பதின்மூன்ரும் நூற்ருண்டுவரை புள்ள காலப் பகுதியில் ஈழத்துத் தமிழரின் கல்விநிலை எவ் வாறிருந்ததெனக் கூற இயலவில்லை. ஆயினும் மன்னர்ப் பகுதியிலுள்ள திருக்கேதீச்சரம், கிழக்கு மாகாணத்திலுள்ள திருக்கோணுமலை முதலிய இடங்களிலுள்ள திருக்கோயில் களேப் பற்றித் திருஞானசம்பந்த சுவாமிகளும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பதிகங்கள் பாடியிருப்பதிலிருந்து பல்லவர் காலத்திலும் இப் பாடல்களைப் படித்துப் பயனடையக்கூடிய முறையிற் கல்வி சிறப்புற்றிருந்திருக்க வேண்டுமெனக் கொள்
ளலாம்.
பன்னிரண்டாம் நூற்ருண்டு வரையில் ஆரியச் சக்கர வர்த்திகளின் அரசு யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டதன்மேல் தமிழரின் கல்வியும் விருத்தியடைந்தது. முன்னுள் மூன்று சங்கங் கொண்டு தமிழ் வளர்த்த (பாண்டியர் போல், யாழ்ப் பாணத்திற் சங்கம் நிறுவியவர் ஆரியச் சக்கரவர்த்திகளே. இவர்கள் நல்லூரைத் தலை நகராக்கி அரசு செய்தனர். இவ ருடைய அரச மாளிகையும் பிறவுங் இருந்த விடம் இப் பொழுது ‘சங்கிலித்தோப்பு" என்னும் பெயரால் வழங்கும். நிலப்பரப்பாகும்.
இவ்வரச மரபிலே தோன்றிய பரராசசேகரன், செகராச
சேகரன் என்போர் செந்தமிழ்ச் சங்கம் ஒன்று நிறுவித் தமிழ்க்
கல்வியை விருத்தி செய்தனர். இவ்விரு அரசரும் தம் பெய. ரால் முறையே வைத்திய நூலும் சோதிட நூலும் யாத்துள் ளனர். ஏனைய சங்கப் புலவர் இயற்றிய நூல்களும் சமத், தான வித்துவான்கள் இயற்றிய நூல்களும் யாழ்ப்பாணம் போத்துக்கேயர் கைப்பட்டபின் சிதைந்து போயின. செக. ராசசேகரன் ஊர்கள் தோறும் தமிழ்ப் பாடசாலைகளே நிறுவி யும் புலவர்களை ஆதரித்தும் தமிழ் வளர்த்தான். பரராச சேகரனின் மருகன் அரச கேசரியும் புலவர் பெருந்த கையாய் விளங்கினன். இவன் காலத்தில் வடமொழியும் தமிழ் மொழியும் நன்கு பயிற்றப்பட்டன வென்பது இக் காலத்து எழுந்த நூல்களிலிருந்து அறியலாம். எனவே ஆரியச் சக்கர வர்த்திகள் காலத்திலே பல துறைகளிற் கல்வி கற்றுக் கொடுக் கப்பட்டதென்பது துணிபு.
தமிழ் மன்னர் மட்டுமன்றிச் சிங்கள மன்னரும் தமிழ்க் கல்வி வளர்ச்சியில் ஊக்கம் காட்டினர், தம்பதேனியாவில்
38

இருந்து அரசு செலுத்திய eup is clb பராக்கிரமபாகு என்ப வ்ன் காலத்தில் சரசோதிமாலை என்னும் சோதிட நூ&லப் பாடி அவ்வரசன் சபையில் அரங்கேற்றினர் போசராச பண்டிதர். கண்டியிலிருந்து ஆண்ட இறுதி அரசனுகிய பூரீ விக்கிரமராசசிங்கனும் தமிழ்க் கல்வி விருத்தியில் கவனஞ் செலுத்தினன்.
தமிழரசு குலைந்த பின் போத்துக்கேயரும் அவருக்குப்பின் ஒல்லாந்தரும் ஆட்சி செய்தனர். ஒல்லாந்தர் யாழ்ப்பாணத் திலும் கொழும்பிலும் பாடசாலைகளை அமைத்து கிரேக்கு இலத்தீன் தமிழ் முதலிய மொழிகளைப் படிப்பித்தனர். அச் சியந்திரம் ஒன்று நிறுவிக் கல்வியை அபிவிருத்தி செய்தன்ர். அவர்கள் கலாசாலையிற் கற்றுத் தேர்ந்த தமிழர் பலர். அவ ருள் ஒருவர் மெல்லோப் பாதிரியார். அவர் கிரேக்க Guong -யிலிருந்து புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த் தனர்,
ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் ஈழத்துத் தமிழரின் கல்வித் துறையிலே சிறந்த இடம் வகிக்கின்றது. இக் காலத்தில் ஐரோப்பியப் பாதிரிமார் இங்கு வந்ததன் பயணுகக் கல்வித் துறையிற் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இலங்கைக்கு Gዖፊው லில் வந்த அமெரிக்க மிசன் பாதிரிமார் யாழ்ப்பாணத்திவி ருத்து கல்வி விருத்தி செய்தனர். அக்காலத்தில் தமிழ்ப் பாட சாலைகள் மிகச் சிலவே இருந்தன. Ljug-gës Guri தொகையைக் கூட்டும் நோக்கத்துடன் பல கிராமங்களிலும் இவர்கள் கல் அலூரிகள் நிறுவினர். 1823.ம் ஆண்டில் வட்டுக்கோட்டையிற் பல்கலைக் கழகத்தரத்துக் கல்வி H கட்டும் கல்லூரி ஒன்றைத் தொடக்கி வைத்தார்கள். ஆங்கில அறிவினைப் 4கிட டுவதும் தமிழ் இலக்கியத்தை வளர்ப்பதுமே இக் கல்லூரியின் நோக்க மாய் இருந்தது. தமிழ் மக்களுக்குத் தத்துவம், விஞ்ஞானம் போன்ற துறைகளிற் கல்வி புகட்டும் நோக்கத்துடன் இப் ‘ 4 u fTL— tÄi asähI7ğ A5u6?gjb eup any lib கற்பிக்கத் தொடங்கி, இவற்றை மாணவர் படிப்பதற்குரிய நூல்களையும் தமிழில் ஆக்கினர் இக் கல்லூரியிற் பல தமிழர் 14-ös iš G3střÈ SA யடைந்தனர்g அவர்களுட் குறிப்பிடத்தக் கவர் நெவின்ஸ் சிதம்பரப்பிள்க சி. வை. தாமோதரம்பிள்ளை (P56C3untíř.
கிறித்தவப் பாதிரிமார் மதச் சார்பான கல்லூரிகளே நிறு வித் தமிழருக்குப் பல துறைகளிலும் கல்வி 4கிட்டி வந்த
39

Page 85
காலத்தில் சைவசமயத் தொடர்பான பாடசால்ைகளை நிறு: வித் தமிழ்ப் பண்பாட்டு அடிப்படையில் தமிழருக்குக் கல்விச் செல்வத்தை அளிக்க முன்வந்தனர் சைவப் பெரியார்கள். இவர்களுள் தலைசிறந்தவர் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக, நாவலர் அவர் காலத்தில் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் எல்லாம் ஒவ்வொரு உபாத்தியாயரால் தெருத் திண்ணைகளிலும் கொட்டில்களிலும் வைத்துப் பிள்ளைகளின் சம்பளம் பெற்றுப் படிப்பிக்கும் இடங்களாய் இருந்தன. படிப்பிக்கப்படும் நூல் களோ ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம்,
நல்வழி முதலிய நீதி நூல்களும், சேந்தன் திவாகரம், எண்சு, வடி முதலிய கருவி நூல்களுமே யாம். கற்பிக்கும் ஆசிரி யரோ உபாத்தியாயரின் பிரதிநிதிகளாகிய சட்டாம்பிள்ளை களேயாவர். சைவசமய நூல்கள் அங்கே கற்பிக்கப்பட
வில்லை. இவற்றை யெல்லாம் அனுபவித்துணர்ந்த ஆறுமுக. நாவலர் தமிழர் வாழுமிடங்களில் பாடசாலைகளை நிறுவிப் பிள்ளைகளுக்குச் சமய நூல்களையும் அவற்றிற்கு வேண்டிய
உப நூல்களையும், லெளகிக நூல்களையும் கற்பித்தல் அவசிய மென றெண்ணிக் கற்றறிந்த பெரியோரை ஆசிரியராக நிய மித்து, யாழ்ப்பாணத்திலே வண்ணுர்பண்ணையில் இலவச வித்
தியாசாலை ஒன்றை நிறுவினர். அது"சைவப் பிரகாச வித்தியா சாலை என்னும் பெயருடன் விளங்குவதாயிற்று.
யாழ்ப்பாணத்தார் உதவிய பொருள் கொண்டு சிதம் பரத்திலும் ஒரு சைவப்பிரகாச வித்தியாசாலை ஏற்படுத்தி ஞர். இவருடைய பெருமுயற்சியினல் யாழ்ப்பாணத்தி லுள்ள கொழும்புத்துறை கந்தர் மடம் பருத்தித் துறை, இணுவில் போன்ற இடங்களில் வித்தியாசாலைகள் நிறுவப் பட்டன. இப் பாடசாலைகளிலே தருக்கம், வரலாறு வான சாத்திரம், பூமிசாத்திரம், கணிதம், வைத்தியம் சிற்பம் முத லிய பாடங்களைத் தமிழிற் கற்பித்தனர். இவ்வாறு இவர் செய்ததன் நோக்கம் தமிழ்மக்கள் பல்கலைக்குமுரிய அறி: வைத் தமிழில் பெறல்வேண்டும் என்பதே. மேற் படிப்புத் தமிழ் மூலம் கற்பிக்கப்பட்டால் அது தமிழருக்குப் பெரிதும் பயன் படுமெனவும் மக்களின் உண்மையான ஆற்றலை வெளிப் படுத்த அத்தகைய கல்வியே இயற்கையோடு பொருத்த மானதெனவும் அவர் உணர்ந்தார். ஆகவே, பல்கலைகளுக்கு, முரிய கல்வி பெறுவதற்குத் தகுதியுடைய மாணவரை உருப்,
40

படுத்தும் குறிக்கோளுடனேயே பல இடங்களிலும் பாடசாலை) களை நிறுவினர்.
இப் பாடசாலைகளிற் படித்துத் தேர்ச்சியடைந்த மான வர் மேற்படிப்புப்படிப்பதற்குப் பல்கலைக்கழகமொன்றுநிறுவு வதே ஆறுமுகநாவலரின் நோக்கமாக இருந்தது. அந் நோக் கம் நிறைவேறமுன் அவர் காலமாகி விட்டார். அவர் குறிக் கோளைப் பின்பற்றி, 1898-ம் ஆண்டில் யாழ்ப்பாணத்துச் தமிழ்ச் சங்கம் என ஒரு சங்கத்தை திரு. த. கைலாச பிள்ள்ை "யவர்கள் நிறுவினர். தமிழ்க் கல்வியை அபிவிருத்தி செய்வ தற்காகத் தேர்வுகள் ஏற்படுத்திப் பட்டங்களும் பரிசுகளும் வழங்கப்படுவதே இச் சங்கத்தின் நோக்கமாயிருந்தது. ஆண்டு தோறும் ஆவணித் திங்களில் ஐந்து தேர்வுகளை நடாத் திப் பால பண்டிதர், பண்டிதர், புலவன், ஆசிரியன் போன்ற பட்டங்களை வழங்கினர் இத் தேர்வுகளுக்குரிய பாடங்கள் இலக்கணம் இலக்கியம் தருக்கம் சமஸ்கிருதம் சமய சாத்தி ரம், வைத்தியம், சிற்பம் முதலியன்.
மதுரைச் சங்கம் நிறுவப்பட முன் இச்சங்கம் நிறுவப்பட். டது என்பது கவனித்தற்குரியது. இச் சங்கத்தினர் செய்த முயற்சி தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவுவதற்கு வழிகோலிற்று. இக்கருத்துப் பற்றியே ஆறுமுகநாவலர் ஓர் அச்சியந்தி சாலையை நிறுவினர் என்பதும் குறிப்பிடுதல் வேண்டும். இக் காலத்திற் பல்கலைக் கழகங்களிலுள்ள பல்கலைக் கழக அச்சகவ் sair (University Press) G3Luft Gavši, 5 Tub அமைக்க இருந்த பல் கலைக் கழகத்திற்கும் ஓர் அச்சகம் நிறுவிப் பாடப் பொத்த, கங்களையும் ஆராய்ச்சி நூல்களையும் வெளியிடுவதே அவர் நோக்கமாக இருந்தது. ஆயினும் ஆங்கிலக் கல்வியிலே தமி ழருக்கு இருந்த மோகத்தினல் தமிழை யாவரும் புறக்கணித் தனர். இதனுலே தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவுதலும் போடப்பட்டது.
ஆறுமுகநாவலரைப் பின்பற்றி வேறு பல பெரியோரும் வீமன்காமம், கந்தரோடை, மாதகல், மல்லாகம், வேலஐன காரைதீவு போன்ற இடங்களில் தமிழ்ப்பாடசாலைகளை நிறு வினர். பாடசாலையிற் கல்வி புகட்டுவற்குத் தகுதி வாய்ந்த ஆசிரியரைப் பயிற்றுவதற்கென ஓர் ஆசிரிய கலாசாலையும் இ}
மலையில் திரு.கைலாசபிள்ளையால் நிறுவப்பட்டது. மேலும்
14th

Page 86
அக் காலத்தில் பெரும் பணி செய்து வந்த இந்து வாலிப சங் கத்தின் தூண்டுதலினுல் சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் சைவப் வித்தியாபிவிருத்திச் சங்க மொன்றைத் தொடக்கி வைத்தார். இச் சங்கத்தின் பொறுப்பை ஏற்றுச் சைவப்பாடசாலைகளையும் நடத்தி வருகிறர் வழக்கறிஞர் திரு.
சு. இராசரத்தினம் அவர்கள். ,
ஈழத்திலிருந்து பெரியார் பலர் தாயகம் சென்று கல்வி புகட்டி வந்த மையும் இங்கு குறிப்பிடல் வேண்டும். இவருள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர் சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள். சென்னையிலுள்ள பிறெசிடென்சிக் கல்லூரி யில் இவர் தமிழ் விரிவுரையாளராகக் கடமையாற்றினர். சென்னைப் பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட முதல் கை மாணிப் பட்டத் தேர்வில் முதலாவதாகத் தேர்ச்சி யடைந்த வர் தாமோதரம்பிள்ளையே. இத் தேர்வில் இருவரே தேர்ச்சி யடைந்திருந்தனர். ஒருவர் தாமோதரம்பிள்ளை, மற்றவர் வட்டுக்கோட்டைக் கல்லூரியைச் சேர்ந்தவரும் தாமோதரம் பிள்ளையின் ஆசிரியருமான கறல் விசுவநாதபிள்ளை அவர்கள் எனவே சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டத்தாரிகள் இருவரும் ஈழத் தமிழர் என்பட சிறப்பாகக் குறிப்பிடற்குரி யது. திருக்கோணமலையைச் சேர்ந்த கனகசுந்தரம்பிள்கள அவர்களுக்கும் இந்தியாவில், பெரும் மதிப்பு இருந்தது. பொதுவாக இவரைச் சார்ந்து உசாவி அறிந்து கொள்ளாத வித்துவான்கள் இந்தியாவில் சிலர் என்றே கூறலாம். சென் ஆணப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் கந்தசாமி முதலியார், தமிழ்ப் பண்டிதர்மணி திருநாவுக்கரசு முதவி யார், கிறித்தவக் கல்லூரித் தமிழ்ப் பண்டிதர் சுப்பிரமணிய சிவா முதலியோர் இவரிடம் கற்றவர். இவர் பல ஆண்டு களாகச் சென்னைப் பல்கலைக்கழகப் பரீட்சகராகவும், நான்கு ஆண்டுகள் பரீட்சா சங்கத் தலைவராகவும் இருந்தார். மேலும் மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வு காரருள் ஒருவராக வும் கிறித்தவக் கல்லூரியிலும் பச்சையப்பன் கல்லூரியிலும் தமிழ்த் தலைமைப் புலவராகவும் இருந்தனர்.
நாவலருக்குப் பின் நாவலராககவும் இருமொழிப் பெரும் புலவராகவும் சிறந்து விளங்கியவர் மேலைப் புலோவி நா. கதிரவேற்பிள்ளை அவர்கள். இவர் நீண்ட காலம் சென் ஆனயில் வாழ்ந்து தமிழ்க் கல்விக்கு அரும்பணி செய்து வந்
142

தார். இவரிடம் கல்வி பயின்று பெரும் புலமையுடன் விளங் கியவருள் ஒருவர் திரு. வி. கல்யான சுந்தரஞர் அவர்கள், *கதிரைவேற்பிள்ளை அவர்கள் திருவருட்பாவுக்கு எதிராகச் *சொற்பெருக்கி வந்த காலத்தில் திரு. வி. க. அவர்களும் தம்முடைய ஆசிரியரோடு சேர்ந்து அவர் சார்பாகச் சொற் பொழிவாற்றிஞர் எனக் கூறுவர் இவர்போல இன்றும் பலர் தாயகம் சென்று தமிழ்க் கல்வியை விருத்தி செய்து வந்தனர்.
இருபதாம் நூற்ருண்டிலே தமிழரின் கல்வியிற் கண் ணுேட்டம் செலுத்தியவருள் ஒப்பற்றவராக விளங்குபவர் சேர். பொன்னம்பலம் அருணுசலம் அவர்களே. ஆரம்பக் கல்வி முறையின் அடிப்படையான குறை ஆங்கிலத்தின் மூலம் புயிற்றப் படுதலே என இவர் நன்குணர்ந்தார். எனவே 1900-ம் ஆண்டில் இது தொடர்பாகக் கல்வித் தலை வரிடம் எழுதிய ஓலையிற் பின்வருமாறு கேட்கிருர். "இங்கி லாந்திலுள்ள ஆரம்பப் பாடசாலைகளில் ஆங்கிலத்தைப் தள்ளிவிட்டு செருமானிய மொழியைப் போதன மொழியாக் கினல் எவ்வாறு இருக்குமென எண்ணிப் பாருங்கள்! ஆங்கி லத்துக்கும் சிங்களத்துக்கும் (அல்லது தமிழுக்கும்) இருக்கும் ஒற்றுமையிலும் பார்க்கச் சேர்மானிய மொழிக்கும் ஆங்கிலத் துக்கும் அதிக ஒற்றுமை இருக்கிறது. எனவே, சிங்களச் சிழு ரும் தமிழ்ச் சிருரும் ஆங்கிலம் கற்பதை விடை ஆங்கிலச் சிருர் சேர்மானிய மொழியை இலகுவிற் கற்க முடியுய்."
உண்மையிலே சேர் பொன்னம்பலம் அருணுசலம் அவர் கள்தான் ஈழத்தில் தாய் மொழிக் கல்வி இயக்கத்தின் தந் தையாவர். அவர் 1900-ம் ஆண்டு சித்திரைத் திங்கள் 30-ம் நாள் தேசாதிபதிக்கு விடுத்த அறிக்கையில் ஈழத்தில் ஒரு பல்கலைக் கழகத்தை நிறுவ வேண்டு மென்றும், இதைச் செய்ய முடியாத விடத்து ருேயல் கல்லூரியை ஒரு பல்கலைக் கழகக் கல்லூரியின் நிலைக்கு உயர்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இவ்விதம் ஒரு கழகம் அமைத்தால் அது மக்களுக்கு அழியா நன்மை பயக்குமென அவர் வற் புறுத்தினர். இவரே இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பிதா வெனின் அது மிகையாகாது. அவரது பெருமுயற்சியாலேயே 1906-ம் ஆண்டு வைத்தியங்கள் இலங்கைப் பல்ககை கழகச் சங்கம் தொடங்கப்பட்டது; இன்று கொழும்பிலும் பேராத னையிலும் உருப்பட்டு இயங்குகின்றது,
|43

Page 87
ஈழத்துத் தமிழ்ப் பெருந்தகை ஒருவர் முயற்சியால் உரு. வாகிய பல்கலைக் கழகத்திலே தமிழருக்கு வருங்காலத்தில் இடமிராதென்ற பயம் சென்ற சில ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் உள்ளத்தில் குடி கொண்டிருக்கின்றது. 1956-ம் ஆண்டில் தேசிய மொழிகள் மூலம் உயர்தரக் கல்வி புகுட்டு வது பற்றி ஆராய அரசாங்கத்தால் நியமிக்கப் பெற்ற குழு வினர் மாணவரின் திறமையை நோக்காது, மக்கள் தொகையை நோக்கியே உயர்தரக் கல்வி அளிக்கப் பட வேண்டுமெனக் கூறினர். இதன் பயனகத் தமிழ் பேசும். ஐதிகத்தையும், பண்பாட்டையும், மொழியையும் பாது காக்க உடன்படிக்கையான நடவடிக்கைகள் மேற்கொள் ள்ாது விடின் அவற்றை முற்ருக இழந்து விடுவரென்ற உண்மை துலக்க முற்றது. அந் நாட்களில் இலங்கை வாழ், தமிழ் பேசும் மக்களின் எதிர் காலத்தை நன்கு ஆராய்ந்த ஒரு சில தமிழன்பர்கள் தமிழ் பேசும் மக்கள் தமது தொழிற் சத்தியைப் பெருக்கவும் தமது பண்பாடு மொழி யாகியவற். றைப் பேணவும் வேண்டுமாயின் தமக்கென ஒரு பல்கலைக்கழ கத்தைப் பெறுதல் அவசியம் என்று கண்டனர். இதன் பயன. கத் தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கம் 1956-ம் ஆண்டு ஆணித் திங்களில் செயலாற்றத் தொடங்கியது. இவ்வியத்திற்குத் தமிழ் மக்களின் சிறந்த ஆதரவும் கிடைத் திருக்கின்றது. இயக்கம் உருவாகி ஓராண்டுக்கிடையில் முதற்படியாகக் கொழும்பில் நாவலர் கழகமும் நிறுவப்பட்டு விட்டது. தமி ழருக்கென ஒரு பல்கலைக் கழகம் அமைக்கும் காலமும் கிட்டி விட்டது. அரசாங்க உதவியில்லா விட்டாலும் பொது மக்க, ளின் உதவியினல் விரைவில் இப்பல்கலைக் கழகம் நிறுவப்படு மென்பதில் ஓர் ஐயமுமில்லை; கனவு நனவாகப் போகின் si) gil -
44

விஞ்ஞானமும் அகராதியும் -பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை.
ரோப்பியர் தமிழ் நாட்டுக்கு வந்ததன் பயஞய்த் 원2 தமிழ் மொழிக்குப் பல துறையிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டது. அவர் தமிழ் நாட்டிற் காலடி வைத்தது பதினைந் தாம் நூற்றண்டில். இதுகாறும் தமிழ் மக்கள் இலக்கியத் துறையில் மட்டும் பெரும்பாலும் தமது மொழிக்கு வேண்டிய ஆக்க வேலையைச் செய்து வந்தனர் வானநூல் சோதிடம் வைத்தியம் முதலிய துறைகளிலும் சங்கதத்தில் இருந்த நூல் களைப் பின்பற்றி ஓர் அளவுக்கு நூல்கள் இருந்தன. ஆனல் மேஞட்டு முறையில் விஞ்ஞானக் கல்வி தமிழ்நாட்டில் எழுந் தது சென்ற நூற்றண்டிலேதான். இத்துறையிலும் மேனுட் டாரின் உதவியினலேதான் தமிழ்மொழியில் நூல்கள் ஒரள வுக்கு எழுந்தன.
முதன் முதல் தமிழ்மொழியில் விஞ்ஞானத்துறையில் நூல் எழுதப்பட்டது யாழ்ப்பாணத்திலேயே. சென்ற நூற் முண்டு தமிழ்மொழியின் மறுமலர்ச்சிக்கு ஒரு முக்கியமான காலம் தென்னகத்திலேயுள்ள தமிழ்மக்கள் தூங்கிக்கொண் டிருக்கத் தமிழ் மறுமலர்ச்சி ஈழத்திலிருந்தே வீறுபெற்றெழுந் தது. அதுமட்டுமன்றித் தென்னகத்திலுள்ளாரையும் தட்டி எழுப்பிற் று. இலக்கியம் சமயம் ஆகிய துறைகளில் ஆறுமுகநா வலர் தொண்டு செய்தார். பண்டைத் தமிழ்நூல்களைச் செல் லுக்கிரையாகி மாண்டு விடாது சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் அக்சு வாகனமே ற்றி அவற்றிற்குப் புத்துயிரளித் தார். சுவாமிந "த பண்டிதர் மடங்களில் மறைத்து வைத்தி ருந்த சைவ சாத்திரங்களை அச்சு வாகன மேற்றினர். வட்டுக் கோட்டையிலுள்ள செமினரியிலிருந்து மிசனரிமாரின் உதவி கொண்டு அறிஞர் பலர் மேலைநாட்டு விஞ்ஞான நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து உலகுக்களித்தனர். மேனுட்டு முறையில் தமிழ் அகராதியும் உருப்படுத்தினர். யாழ்ப்பானத் ல் விஞ்ஞான நூல்களும் அகராதிகளும் எழுந்த வகையினைக் சிறிது நோக்குவாம். s சென்ற நூற்ருண்டில் மிசனரிமார் தமது கிறிஸ்தவ சம யத்தைப் பரப்பும் நோக்கமாக இலங்கை வந்து அடைந்தனர்.
. . .
45

Page 88
அவரில் அமரிக்க மிசனரிமாரே இங்கு முதன் முதற் கால் வைத் தது. அவர் யாழ்ப்பாணத்தைத் தம் இருப்பிடமாகக் கொண் டனர். நாட்டிலே ஊரெங்கணும் தமிழ்ப் பள்ளிக்கூடங்களை எழுப்பித் தமிழ்மொழியை நன்கு கற்பித்தனர். பின்னர் 1823-ம் ஆண்டு வட்டுக்கோட்டையில் பல்கலைக்கழகங்களிற் புகட்டப்படும் கல்வி கற்பிக்க வேண்டி ஒரு கல்லூரியை நிறுவி னர். 1827-ம் ஆண்டு அதற்குச் செமினரி எனப் பெயர் இட் L-Garri.
ஆங்கிலக்கல்வியையும், தமிழ்க்கல்வியையும் இக் கல்வி நிலையத்தில் உயர்ந்த முறையில் மாணவருக்குக் கற்பித்து வந் தனர். இதன் நோக்கம் என்னவெனின் நன்ருக ஆங்கிலம் பயின்ற மாணவர் தமிழிலும் பாண்டித்தியம் பெறுவாராகில் ஆங்கிலத்தில் இருக்கும் வேதிநூல், பூத நூல், விலங்கியல் நூல், வானநூல், கணிதம் முதலியவற்றைத் தமிழில் நூலியற் றியோ மொழிபெயர்த்தோ அச்சாத்திரங்களின் அறிவைத் தம் நாட்டவருக்குள் பெருக்குவர் என்று எண்ணியே. இக் கருத்தை மனதில் வைத்துக்கொண்டு விஞ்ஞாள சாத்திரங் களைத் தமிழில் எழுதும் பணியில் மிசனரிமாரும் இச்செமினரி யில் கற்றுத் தேர்ந்த மாணவரும் இறங்கினர்.
இத்தொண்டில் ஈடுபட்ட அமரிக்க மிசனரிமா ரில் முதலி டம் பெறுபவர் சாமுவேல் பிஷ் கிறீன் இடாக்குத்தர் (Dr. Samuel Fish Green). அவர் 1822-ம் ஆண்டு அமெரிக்காவிற் பிறந்தார். அங்குள்ள பல்கலைக்கழக மொன்றில் 1845-ம் ஆண்டு மருத்துவக் கலையிற் பட்டம் பெற்றர். இந்தியாவிலே பணியாற்றத் தனக்கு ஓர் இடம் தருமாறு அமரிக்க மிசனரி மார் சங்கத்துக்கு மனுச் செய்தார். அதற்கு அச்சங்கம் அவரை இலங்கைக்குப் போகுமாறுபணித்தது. அதனுல் அவர் 1847-ம் ஆண்டு இலங்கை வந்திறங்கி வடடுக்கோட்டையி லுள்ள செமினரிக்கு அண்மையிலுள்ள மருத்துவ நிலையத்தில் பணியாற்றத் தொடங்கினர். 1848-ம் ஆண்டு இவ்வைத்திய சால மானிப்பாயுக்கு மாற்றப்பட்டது. சில ஆண்டுகளின் பின் இவ்வைத்தியசாலைக்குக் கிறீன் இடாக்குத்தரே தலைவரா னர். இவ்வளவு காலமும் பொதுமக்களோடு கூடிப் பழகிய தன் காரணத்தாலும் நூல்களைக் கற்றதன் காரணத்தாலும் அவர் தமிழ்மொழியில் சிறந்த அறிவு பெற்றனர். மருத்துவ நிதலயத்துக்கு வரும் நோயாளிகளுடன் தமிழிலே அளவளா
46

விப் பேசும் ஆற்றல் பெற்ருர் அன்றியும் மருத்துவ வேலை யில்லா நேரங்களில் கோயிலிற் சென்று வேதாகமப் பிரசங்கம் செய்யும் வன்மையும் படைத்திருந்தனர். அவரினும் சிறந்த ஆங்கில மருத்துவர் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இல்லை
தமது மருத்துவ வேலையைப் பார்த்துக்கொண்டே அவர் மாணவர் சிலருக்கு வைத்தியக் கல்வி புகட்டி வந்தார். அவ ருடைய காலத்திலே இலங்கையில் மருத்துவக் கல்லூரி இருக்கவில்லை. ஆகவே அவராற் பயிற்றப்பட்ட மருத்துவ ரையே இலங்கை அரசாங்கம் அரசினர் வைத்தியசாலைகளில் மருத்துவராய் அமர்த்தியது. அவரின்கீழ்ப் பயின்று மருத்துவ ராய்த் திகழ்ந்த இடான் போர்த்துப் பெரியதம்பி என்பார் அமரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் எம். டி. பட்டம் பெற் ருர் .
தொட்க்கத்தில் ஆங்கில மொழி மூலமே தமது மாணவ ருக்கு மருத்துவக்கலை பயிற்றி வந்தார். சிறிது காலத்தின் பின் மாணவர் தமது மொழியில் பாடஞ் சொல்லி வந்தால் இலகு. வில் பாடப்பொருளை அறிந்து கொள்வார் என எண்ணித் தமிழ்மூலம் கற்பிக்கத் தொடங்கினர். அப்பொழுதுதான் தமி ழிலே மருத்துவ நூல்கள் இல்லாத குறையை அறிந்தார். இக் குறையை நிவிர்த்தி செய்யும் பொருட்டு அக்காலத்து மருத்து வக் கலையிலுள்ள சிறந்த நூல்களைத் தமிழில்ம்ொழிபெயர்க்கத் தொடங்கிஞர். முதன்முதல் கற்றர் (Cutter) என்பவர் எழு 3ш ош-fђ за риђ D-u-dvibov (pth (Anatomy, Physiology and Hygiene) என்னும் நூலை மொழிபெயர்த்தார். அந்த நூலை 1856-ம் ஆண்டு மொழிபெயர்த்து முடித்தார். அதை அச்சிட்டு வெளியிடும் செலவைப் பொறுக்கும் வண்ணம் இலங்கை அர சினரைக் கேட்டார். அதற்கு ஆங்கிலமல்லாத பிறமொழி களில் எழுதும் நூல்களுக்குத் தாம் உதவிப்பனம் கொடுப்பது இல்லை என்று கூறி அரசாங்கம் அவர் மனுவை நிராகரித்து விட்டது. அரசினர் என்ன விடை கூறுவர் என்று இடாக்குத் தர் கிறீனுக்கு ஏற்கனவே தெரியும். ஆகையால், சென்னையி லுள்ள ஏ. எம். சி அச்சியந்திர சாலையில் அதை அச்சிட்டு அடுத்த ஆண்டே வெளியாக்கினர்.
கிறின் இடாக்குத்தர் மட்டும் இந்நூல்களை மொழி பெயர்க்கும் வேலையில் ஈடுபட்டாரென எண்ணுதல் கூடாது. தனக்குக் கீழே கற்ற மாண வரையும் இவ்வேலையைச் செய்யு
47

Page 89
மாறு தூண்டினர். இம் மொழிபெயர்ப்பு வேலையை அவ ரோடு நடத்திய மாணவருள் சாப்மன் (Chapman) இடான் போது (Danforth) எவாட்சு (Ewarts) என்போர் தலைசிறந்தவ ராவர். தமது மர்ணவரின் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளி
வரமுன் அவரே அவை
யாவற்றையும் பார்த்து வேண்டிய
திருத்தங்களையும் மாற்றங்களையும் செய்து கொடுப்பர்.
முன்னே காட்டிய நூல்களை விட மேல்வரும் மருத்துவ நூல்களும் கிறீன் இடாக்குத்தராலும் அவர் மாணவராலும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டன.
இரண வைத்தியம்
அங்காதிபாதம்
வைத்தியாகரம்
கெமிஸ்தம்
மனுஷசு கரணம்
இந்து பதார்த்தசாரம்
148.
(Druitts Surgery) gll-Iroir Gunrig, மொழிபெயர்த்துக் கிறீன் இடாக் குத்தர் பதிப்பித்தது. வெளியீடு -அமெரிக்கமிசன் அச்சியந்திரசாலே மானிப்பாய் 1867, பக்கம் 504.
(Grays anatomy) FrTÜLID Gär Go luontyf? பெயர்த்தது. 1872. பக்கம் 838.
(Hoopers physicians Vademecum) 69 dij லியம் போல் மொழிபெயர்த்தது. கிறீன் இடாக்குத்தர் பதிப்பித்தது. அச்சிட்டது இலண்டன் மிசன் அச்சியந்திர சாலை நாகர்கோயில். 1872. šs b 838.
(Wells Chemistry) S. FTL5 is T56ir, D. W. சாப்மன் என்போர் உதவி யுடன் கிறீன் இடாக்குத்தர் மொழி பெயர்த்தது. நாகர்கோயில் இலண் டன் மிசன் அச்சியந்திர சாலையில் அச்சிடப்பட்டது. 1875. பக்கம் 576. (Daltons Physiology) 1883 Luish 550.
(Warring's Pharmacopoeia of India) W. D. சாப்மன் மொழிபெயர்த்துக் கிறீன் இடாக்குத்தர் பதிப்பித்தது, மாணிப்பாய் இலங்கை அமரிக்கன்

அச்சியந்திர சாலையில் அச்சிடப்பட் டது. 1884. பக்கம் 574,
இச் செமினரியிற் கற்றுத்தேறிய கருேல் விஸ்வநாதபிள்ளை யென்பார் வீச கணிதம் (algebra) என்னும் நூலை 1855-ம் ஆண்டு எழுதி வெளியிட்டனர். அன்றியும் வேறு பலரும் நிலக்கணக்கியல், அளவைநூல் முதலிய துறைகளில் நூல்களி யற்றி வெளியிட்டனர். ஞானச் சகோதரர் பிலிப்பு 1905-ம் ஆண்டு அளவை நூலொன்றை வெளியிட்டனர். சின்னத் தம்பி என்பார் நில அளவைச் சாத்திரத்தைப் பழைய இலக் கண முறைப்படி சூத்திரங்களால் யாத்து ஒரு நூல் வெளி 'யிட்டனர். -
தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றேடு வேறு பல பாடங்களை 'யும் செமினரியிற் படிப்பித்தனர். பூதநூல், வேதி நூல் முத "லிய அறிவியற்றுறையோடு தத்துவ நூலையும் திறம்படப் போதித்து வந்தனர். அதனல் இத்துறைகளில் வல்ல கற்ற றிந்தோர் பலர் இக் கலைப் பீடத்தினின்று வெளியேறினர். இங்கு படித்துத்தேறியவருள் நெவின்சு சிதம்பரப்பிள்ளை யும் ஒருவர். கணித நூலில் மிக வல்லுநர். தருக்கம் நன்கு பயின் றவர். இத் துறையில் அவருக்கு இந்திய தருக்க முறையும், ஐரோப்பிய தருக்க முறையும் தெரியும். அதனுல் நியா இலக் கணம் என்னும் நூலை இயற்றினர். இது 1850-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
அமரிக்க மிசனரிமார் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டு இதனேடு நிற்கவில்லை. கிறித் தவ சமயத்தைப் பரப்ப இங்கு வந்தாரா கையின் இந்நாட்டு மக்கள் பேசும் மொழியாகிய தமிழை நன்கு கற்ருலன்றி மக்க ளோடு பேசவும் சமயப் பிரசாரம் செய்யவும் முடியாதெனக் கண்டனர். தமிழ் மக்களின் பழைய முறையில் நிகண்டு நெட்டுருப் பண்ணித் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளுதல் இயன்றதல்லவென எண்ணினர். ஐரோப்பிய முறையில் தமிழ்மொழிக்கு அகராதி ஒன்றன ஆக்கினுற் பெரும் பய னைத் தரும் என நினைத்தனர். எனவே 1833-ம் ஆண்டு தமிழ் ஆங்கில அகராதி ஒன்றனையும் ஆக்கத் திட்டமிட்டனர். இத் திட்டத்தின்படி வண. G. நைற்று என்பார் கபிரியேல் திசேரா வண. பீற்றர் பெசிவல் ஆகியோருடையஉதவியோடு இந்நூல்
49

Page 90
களுக்குச் சொற்கள் சேர்க்கத் தொடங்கினர். இவ்வாறிருக்க, வண. நைற்று அவர்கள் 1838-ம் ஆண்டு காத்திராத வண்ணம் உயிர் நீத்தார். அதனுல் இவ்வேலை சிலகாலம் தடைப்பட் டிருந்தது.
அதன் பின்னர் பெரிய அகராதிக்கெனச் சேர்த்த சொற் களைக் கொண்டு பண்டிதர் சந்திரசேகரம் என்பார் ஒரு கை யகராதியை ஆக்கினர். இது 1842-ம் ஆண்டு வண. இலெவி 6iv G3Lumt där q-š (Rev. Levi Spaulding) 6T 6ör Lu Guptnr 6ão Go Gu Gifufu - L'Ú', பட்டது. இதனை "யாழ்ப்பாண அகராதி' என்றும் "மாணிப் பாய் அகராதி" என்றும் அழைத்தனர். சொற்கள் யாவும் பழைய நிகண்டுகளைப் போலல்லாது அகர வரிசைப்படுத்தி, இருந்தன. இந்நூல் 58,500 சொற்கள் கொண்டது.
இஃது இவ்வாறிருக்க ஆங்கிலத் தமிழ் அகராதியின் சொற் GITySS al6007. & trupGasi så-Stålsiv (Rev. Samuel Hutchings) என்பவர் கையில் ஒப்படைக்கப்பட்டது. அவர் அதனை வரி சைப்படுத்தி நூல் ஆக்கினர். அது 1842-ம் ஆண்டு வனசி. எம். வின் சிலோவால் (Rev. M. Winslow) வெளியிடப்பட்டது அதனை வண. எஸ். ஸ்போல்டிங் (Rev. L. Spaulding), 1852-ம் ஆண்டு புதுக்கியமைத்து வெளியிட்டார். அது இன்றும் நின்று நிலவுகிறது.
சிறிது காலத்தின் பின் அமெரிக்க மிசன் முன்னே நைற். றின் கீழ்த் தொடங்கிய தமிழ் ஆங்கில அகராதி வேலை யைத் துரிதப்படுத்தியது. அதற்குப் புதிதாகக் கச்சிங்ஸ் என் பவரையும் ஸ்போல்டிங்ஸ் என்பவரையும் அகராதிக் குழுவிற் சேர்த்தது. ஈற்றில் வண. எம். வின்சிலோ அதனை ஒழுங்காக்கி 1862-ம் ஆண்டு சென்னையில் அச்சிட்டு வெளி யிட்டார் யாழ்ப்பாணத்தில் இருந்த தமிழ்ப் பண்டிதர்களே அவ்வகராதியிற் காணும் சொற்கள் யாவற்றையும் தேடி எடுததுச் சேர்த்தவர். சென்னையில் அச்சிடும்போது அக்கா லத்திலிருந்த தமிழ் வித்துவான்களாய இராமானுசக் கவிரா யர் விசாகப் பெருமாளையர், வீராசாமிச் செட்டியார் ஆகி யோரும் உதவி புரிந்தனர்.
இப் பெரிய தமிழ் ஆங்கில அகராதி, தமிழ்மொழியி லுள்ள பேச்சுவழக்கு மொழிச்சொற்களையும் செய்யுள் வழக்குமொழிச்சொற்களையும் தன்னகத்தே அடக்கியுள்
50

ளது. அதனுேடு வானநூல், சோதிடநூல், பயிர்நூல், வேதிநூல், பூதநூல், விலங்கியல்நூல், புராணம் ஆகியவற். றில் வழங்கும் சொற்களையும் கொண்டது. நூலாசிரியர், புலவர், இலக்கியங்களில் வரும் கதாபாத்திரங்கள் தேவர் ஆகியோரின் பெயர் முதலியவையும் அங்கு சேர்க்கப்பட்டுள் ளன. இதுகாறும் வெளிவந்த அகராதிகளில் வெளிவராத பல முறைகள் அங்குள்ளன. தமிழரின் சமயம் சாத்திரம் பழக்கவழக்கம் ஆகியன பற்றியுள்ள பல செய்திகளையும் அறிந்து கொள்ளலாம். இவ்வகராதியில் 67,000 சொற்கள்
அடங்கியுள்ளன. தமிழில் வழங்கும் வடசொல் யாவற்றிற். கும் உடுக்குறி போடப்பட்டிருக்கும். இதனல் வடசொல்
எது தமிழ்ச்சொல் எது என்று எளிதில் அறிந்து கொள்ள லாம்.
ஆகவே கிறிஸ்து சமயத்தைப் பரப்புதற்கு ஒரு கருவி நூலாக எழுந்த போதும் ஈற்றில் யாவருக்கும் பயன் படும் ஒரு பெருநூலாக அது முடிந்தது.
மானிப்பாய் அகராதியின் பின் தமிழ்த் தமிழ் அகராதி ஒன்றும் தமிழ்நாட்டில் வெளிவரவில்லை. பல குறைகள் இருந்த போதிலும் இவ்வகராதி சென்னையில் பல முறை, அச்சு வாகன மேறிற்று. ஏனெலில் ஆங்கிலம் அறியாத, தமிழருக்கு அதுவே ஒரேயொரு அகராதியாய் இருந்தது. ஒவ்வொரு பதிப்பிலும் இதற்குச் சொற்களைச் சேர்த்துப் பெருக்கினர். சொற்களைக் கூட்டக் கூட்டக் கடைசியில் இருந்த அளவினின்றும் அது மிகப் பெரிதாய் வளர்ந்தது. அத. ஞல் ஈற்றில் "யாழ்ப்பாண அகராதி" அல்லது “மாணிப்பாய் அகராதி" என்ற அதன் பெயர் மாறிப் "பேரகராதி" அல் லது "விரிவகராதி" என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு பதிப்பிலும் பிழைகள் மலிந்து மலிந்து ஏறின.
இத்தறுவாயில் இவ்வகராதியை அடிப்படையாகக் கொண்டு நா. கதிரைவேற்பிள்ளை அவர்கள் ஒர் அகராதியை 1905-ம் ஆண்டு வெளியிட்டனர். இது பிழையில்லாது தூய தாய் வெளிவந்தது.
இஃது இவ்வாறிருக்க கு. கதிரவேல்பிள்ளை என்பார் தமது ஆராய்ச்சியினுல் ஓர் அகதிராதியைத் தொடங்சினர். அவ ரும் வட்டுக்கோட்டைச் செமினரியிற் கற்ற மாணுக்கருள் ஒரு

Page 91
ஈவர். "சங்கத மொழியின்ரின்று எடுத்துத் தமிழில் வழங்கிய °சொற்களை எல்லாம் இதிற் சேர்த்துள்ளார். அன்றியும் சங் கத மொழி நிகண்டுகளிலுள்ள, தமிழ் மொழியில் வழங்காத, சொற்களையும் எடுத்துள்ளார். மிகச் சிறந்த தமிழ் அகராதி எதுவும் தற்பவமாகவோ, தற்சமமாகவோ சங்கத மொழியி லுள்ள சொற்களை உள்ளடக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கம். இக்குறைபாட்டைத் தவிர அவர் அகராதி ஏனைய “வகையில் மிகச் சிறந்து விளங்கிற்று. மருத்துவம், சைவசித் தாந்தம் வேதாந்தம், தத்துவம் அளவை, அலங்காரம் சோதி டம், வானநூல், வேதி நூல் ஆகியவற்றில் வரும் சொற்களே எலலாம் அதிலே தொகுததனர். சொற்களுக்கு உதாரணங் காட்டும்முகமாக இலக்கியங்களினின்று அவை வரும் சொற் ருெடர்களைக் காட்டியுள்ளார். சங்கதத்தினின்று எடுத்து “வழங்கும் சொற்களின் சங்கத உருவத்தைக் கிரந்த எழுத்திற் தந்திருக்கிருர். சொற்களின் பொருளை அகரமுறைப்படுத்தி வரையப்பட்டுள்ளது. சிற் சில இடங்களில் சொற்களின் பிறப்பு வரலாறும் வந்துள்ளது.
இப்பெரியார் தான் பாடுபட்டுத் தொகுத்த அகராதி முழுதையும் அச்சிட்டு வெளியிடு முன்பே இறந்துவிட்டனர் அவர் உயிருடன் இருக்கையில் அகர வரிசை மட்டுமே வெளி “வர ஆயத்தமானது. அவர் தொகுத்த நூல் மதுரைத் தமிழ்ச் சங்கத்திடம் ஒப்பு விக்கப்பட்டது. அதனல் அது சங்க அக ராதி என்ற பெயரோடு வெளிவந்தது. முதலாம் கட்டம் 1910-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஏனைய இரண்டு கட் டங்களும் 1923-ம் ஆண்டு வெளிவந்தன. முதலாம் கட்டத் தில் 17, 600 சொற்களும், இரண்டாவதில் 18, 100 சொற் *களும், மூன்ரு வதில் 28,200 சொற்களும் மொத்தம் 63,900
சொற்கள் உள்ளன.
இவ்வகராதி வெளிவந்து கொண்டிருக்கையில் கற்றறிந் தோர்க்கென ஓர் அகராதியும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளி “வந்தது. அதன் பெயர் இலக்கியச் சொல்லகராதி. சுன்னு கம் அ. குமாரசுவாமிப் புலவர் செய்தது. நிகண்டுகளிலும், இராமாயணம், பாரதம், கலித் தொகை, சிந்தாமணி முதலிய இலக்கியங்களிலும் வரும் பெயர்ச்சொற்களையே பெரும் பாலும் அடக்கியுள்ளது. இதுகாறும் வெளிவந்த அகராதி களிற் காணுத 1500 புதுச்சொற்களைக் கொண்டது. இப்
152

புதுச்சொற்கள் யாவும் உடுக்குறியினல் காட்டப்பட்டுள்ளன இது வெளிவந்த காலம் 1914-ம் ஆண்டு. »
இவ்வகராதிகளைவிட நாவலர் கோட்டம் முத்துத் தம்பிப் பிள்ளை அவர்கள் ஆங்கில ஆங்கிலத் தமிழ் அகராதி ஒன்றனை 1911-ம் ஆண்டு வெளியிட்டனர். யாழ்ப்பாணத்திலுள்ள
நாவலர் அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்துப் பருத்தித்துறையில் வாழ்ந்த சி. சுப்பிர மணியசாத்திரியார் அவர்கள் சொற்பொருள் விளக்கம் என் :னும் கையடக்கமான அகராதி ஒன்றனை 1924-ம் ஆண்டு வெளி யிட்டார். இது சிறிய அகராதி எனினும் மாணவருக்கு மிகப் பயன்படக்கூடியது. இவ்வகராதி ஒரு பதிப்போடு நின்றுவிட் டது மிக வருந்தத் தக்கது. ய | ழ்ப்பாணத்து நல்லூர் வண. சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் இதுகாறும் தமிழ் அகராதி ஆக்குவோர் கைக்கொள்ளாத முறையில் ஓர் தமிழ் ஆங்கில அகராதியை ஆக்க முயன்ருர். பன்மொழிகளை ஆராய்ந்தறிந்த அறிவினைப் பயன்படுத்தித் தமிழுக்கு ஒரு சொற் பிறப்பு ஒப்பி -யல் அகராதியை ஆராய்ந்து அகர வரிசைப்படுத்தினர். சில பாகங்களை 1935-ம் ஆண்டு அச்சிட்டும் வெளியாக்கினர். போதிய உதவியின்மையால் வேலை நிறுத்தப்பட்டது. சில ஆண்டுகளில் அவரும் காலமாகியதால் அவர் சேர்த்த சொற் ருெகுதி வெளிவராது கிடக்கின்றது.
இங்கு ஆராய்ந்த வற்றிலிருந்து புத்தம் புதிய கலையாகிய விஞ்ஞானத்துறையில் தமிழகத்துக்கு வழிகாட்டியாய் நின் றது ஈழநாடு என்பது விளங்கும். அமரிக்கரும் ஈழநாட்டவ ரும் சேர்ந்து ஆற்றிய விஞ்ஞானப் பணியைப் பின் தொ டர்ந்து தமிழ் நாடெங்கணும் இத்துறையில் பணியாற்றியிருந் தால் பாரதியார் “புத்தம் புதிய கலைகள் மெத்த வளருது மேற்கே" என்ற ஒலியை எழுப்பியிரார். தமிழ் நாடும், ஈழ நாடும் இன்று பாடி வரும் கலைச்சொற்கள் சேர்க்கும் படல மும் எழுந்திராது. என்னே தமிழன் செய்த பாவம் வீணுக ஒரு நூற்ருண்டு கழிந்துவிட்டது.
தமிழ் நாட்டில் நிகண்டுகள் எழுந்தன. ஐரோப்பியர் வந்த தன் பின் சதுர் அகராதி, மலபார் அகர தி ஆகிய இரண் டுமே முதன் முதல் எழுந்தவை. பின்னர் உருே ற்லர் (Dr J.
53

Page 92
P. Rotler) என்பார் ஒரு தமிழ் ஆங்கில அகராதியை ஆக்கி ஞர். சென்னை அரசினரின் உதவியோடு அது பல திருதி தங்க ளுடன் 1841-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. எ னினு ம் அதிற் காணப்படும் சொற்கள் பலதுறையிலும் பயிலுவோர்க் குப் போதாதிருந்தன; ஆகையால் அது வேண்டிய தேவை களுக்குப் போதா தெனக் கைவிடப்பட்டது. அதன்பின் னரே யாழ்ப்பாண அகராதியும் வின்சிலோ அகராதியும் தோன்றின. அவற்றின் பின் வெளிவந்த அகராதி யாவும் யாழ்ப்பாணத்திலிருந்தே வெளிவந்தன.
ஆகையால் விஞ்ஞானத்துறையிலும், அகராதித் துறையி லும் ஈழநாடே தமிழ்நாட்டுக்கு வழிகாட்டியாய் நின்றதென் பது சொல்லாமலே அமையும்3
-----------《མཁས་
விவாதம்
“விவாதத்தில் நேரங்கழித்தல் நிழலுடன் போரா டுவதற்கு நிகர். வீண்வாதம் புரிய எவரேனும் உன் னிடம் நெருங்கினல், நீ மரியாதையாக விலகிக் கொள். கெட்டிக்காரந்தனமில்லாதவன் சமரசமா கப் போகப் பழக வேண்டும்."
Lu T6n :D!
"முகிழ்த் திடும் ஒவ்வொரு மின்னலின் மடியிலும்
மறைந்திருக்கிறது. ஒவ்வொரு இடி-சிரிக்கும் மணி தன் சிந்திக்க மறுப்பது இதையே."
54

இலக்கியமும் சிற்பமும்
('கலைமகிழ்நன்”)
மிழ் மொழியின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாத தி பல துறைகளில் ஈழநாட்டுப் பெரியார் தமிழ் நாட்ட வர்க்கு வழிகாட்டியிருக்கின்றனர். தமிழ்நாடு தமிழின் உயர் வினை மறந்த காலங்களில் அதனை நினைவூட்ட ஈழத்திலிருந்தே அறிஞர் தோன்றினர். கடைச் சங்கத்தில் தமிழ் வளர்த்தும், அதன் பின்பு சங்கம் நிறுவியும், கவிச்சுவை நிரம்பிய இலக்கி யங்களை யாத்தும் தொண்டாற்றியிருக்கின்றனர் தமிழர், இவர்களுட் குறிப்பிடத்தக் கவர் ஈழத்துப் பூதந்தேவனுர், பர ராசசேகான், செகராசசேகரன், சின்னத் தம்பிப் புலவர், சேஞதிராய முதலியார், நா. கதிரவேற்பிள்ளை, உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர், நவாலியூர் சோமசுந்தரப்புலவர் முதலி -Gutrff.
கடைச்சங்க காலத்திலே ஈழநாட்டிலிருந்த தமிழகத்திற் குச் சென்று அங்கு நிறுவப்பட்ட சங்கங்களில் நூல்கள் அரங் கேற்றியவருள் ஒருவர் ஈழத்துப் பூதந்தேவனுர். இவர் செய் யுட்களை நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு என்னும் மூன்று தொகை நூல்களிற் காணலாம். இச்செய்யுட்களி லிருந்து இவர் அகப்பொருட்டுறைகளை அழைத்துச் செய்யுள் பாடுவதில் வல்லுநர் என்பது தெரிகின்றது. பன்னிரண்டாம் நூற்ருண்டில் யாழ்நகரிற் சங்கமொன்று நிறுவித் தமிழ் வளர்த்த ஆரியச் சக்கரவர்த்திகள் மரபிலே தோன்றிய է 1ցr ராசசேகரன், செகராசசேகரன் என்போர், தம்பெயரால் முறையே பரராசசேகரம், செகராசசேகரம் என்னும் நூல் களை இயற்றினர். பரராசசேகரனின் மருகர் அரசசேகரி மகாகவி காளிதாசன் சங்கதத்திற்பாடிய இரகுவமிசம் என் னும் காவியத்தைத் தமிழிற் பாடினன்
மருதப்பக் குறவஞ்சி என்னும் நூலைப் பாடியவர், ஒல் லாந்தர் காலத்து வாழ்ந்த டிமெல்லோ என்னும் தமிழ்ப் ւյ6ծ வர். தேசவளமை என்னும் நியாயப் பிரமான நூலைத் திருத்தி அமைத்த வில்லவராய முதலியாரின் மகன் சின்னத் தம்பிப் புலவர். இவர் இளமையிலேயே கலைவாணியின் அருள் சிறக்கப்பெற்று, மறைசையந்தாதி, கல்வளையந்தாதி,
155

Page 93
கரவை வேலன் கோவை, பருளை விநாயகர்பள்ளுப் போன்ற, நூல்கள் இயற்றினர். வேதாரணியத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது பாடிய அந்தாதியே மறைசை அந்தாதி, சண்டிருப்பாயிலுள்ள கல்வளை என்னும் ஊரிற் குடிகொண் டுள்ள விநாயகர்மீது பாடப்பட்ட அந்தாதி கல்வளை அந்தாதி. கரவை வேலன் கோவை யாழ்ப்பாணத்துக் கரவெட்டியிற். செல்வராய்த் திகழ்ந்த வேலாயுதம்பிள்ளைமேற் பாடப்பட்ட கோவைப் பிரபந்தமாகும் பருளையிற் கோயில் கொண்ட விநாயகப் பெருமான் மேற் பாடப்பட்ட பன்ஞப் பிரபந்தமே. பருளை விநாயகர் பள்ளு.
ஆறுமுகநாவலரின் ஆசிரியர் இருபாலையைச் சேர்ந்த சேஞதிராய முதலியார். புராண விரிவுரைகள் செய்து பிற. ருக்கு வழிகாட்டிய பெருமை இவருக்குரியது. நல்லூர் கந்த ச மிக் கடவுள் மீது நல்லை வெண்பா, நல்லை அந்தாதி, நல்லைக் குறவஞ்சி முதலிய பிரபந்தங்களும், நீராவியடிப் பிள்ளையார் மீது ஒரு கலிவெண்பாவும் பல தனிக் கவிதைகளும் இவர் பாடியுள்ளார். மாவிட்டபுரம் சுப் பிரமணியக் கடவுள் மீதும் ஊஞ்சற் பதிகம் முதலியனவும், வேறு பல தலங்கள் மீது ஊஞ் சற் ப்திகங்களும் பாடியவர் இவரே. மேலும் மானிப்பாயில அச்சிடப்பட்ட தமிழ் அகராதி தொகுத்தபோது முதல்வரா யிருந்து இவரே தொகுத்தனர்.
வடமொழியிலும் தமிழ் மொழியிலும் வல்லுநராக விளங் கியவர் மேலைப்புலோலி நா. கதிரைவேற்பிள்ளை. சென்னையிற். பல ஆண்டுகள் வாழ்ந்து, அங்கு பல இடங்களுக்குச் சென்று பிரசங்கங்கள் செய்து, தமக்கு ஈடாகப் பேச வல்லார் இல் லாது இவர் விளங்கினர். 'மாயாவாத தும்ச கோளரி" என்ற பட்டத்தைப் பெற்ற இவர், ஆரணிந சுர் சமத்தான வித்துவா" ஞகவும் இருந்தார். இவரியற்றிய நூல்கள் கூர்மபுராண் விரி வுரை, பழனித்தல புரானவுரை, சைவசந்திரிகை, சைவசித் தாந்தச் சுருக்கம், சிவாலய மகோற்சவ விளக்கம், சுப் பிர மணிய பராக்கிரமம் என்பன். ஒரு தமிழ் அகராதியையும் தொகுத் து வெளியிட்டார்.
ஈழத்திலே பிரபந்தம் பாடியவருள் அதிகமான பிரபந்தங் கள் பாடியவர் உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர். இராம நாதபுரம் இரவிகுலமுத்து விஜய இரகுநர்த பாஸ்கர சேது
56
 

பதி மகாராசாவின் மீது. கல்லாடக்கலித்துறையும், நான்மணி மாலையும், இரட்டை மணிமாலையும் வேறு தனிக்கவிகளும் mr Lq 60 i . பாண்டித்துரைத் தேவர் மீதும் ஒரு நான்மணி மாலை பாடினர். மேலும் இந்தியாவிலும் ஈழத்திலுமுள்ள கோயில்கள் சிலவற்றின் மீதும் வேறு பிரபுக்கள் மீதும் பிரபந் தங்கள் பாடியுள்ளார். இவர் இயற்றிய பிரபந்தங்கள் ஏறக் குறைய அறுபது இருக்கும். பாடும் திறமை நோக்கி இவருக் குப் புலவர் என்னும் பெயரை, வளங்கினர்.
செந் தமிழ்த் தாயைத் தெய்வக்கோலத்திற் கண்டு உள் ளம் உருகப் பாடிய பெருமை நவாலியூர்ச் சோமசுந்தரப் புல வர்க்கு உரியது. பதினைந்தாம் வயதிற் பாடத் தொடங்கிய இப்புலவர் பதினையாயிரம்பாக்கள் வரை பாடியுள்ளார் இவர் இயற்றிய நூல்களில் இப்பொழுது அச்சிடப்பட்டு வெளியாகி யுள்ள நூல்கள் உயிரிளங் குமாரன் நாடகம், கந்தவனக் கடவை நான்மணிமாலை, கந்தப்புராண நுண்பொருள் விளக் கம், நல்லை முருகன் திருப்புகழ், நல்லையந்தாதி, சுகாதாரக் கும்மி, மருதடி விநாயகர் பரமாலை, கந்தவனநாதர் திருப் பள்ளி யெழுச்சி, கல்லுண்டாய் வைரவர் பதிகம், செந்தமிழ்ச் செல்வி ஆற்றுப்படை, சிறுவர். செந்தமிழ், நாமகள் புகழ் மாலை, இலங்கை வளம், தாலவிலாசம் முதலியன. இவற்றுள் இலங்கை வளமும் தாலவிலாசமும் சிறந்த இலக்கியப் படைப் புகளாகக் கருதப்படுகின்றன. நாமகள் புகழ்மாலை செந். தமிழ்த் தாயைத்தேடி அழைத்து உள்ளம் குழைந்து பாடிய நூல். சிறுவர் செந்தமிழ்க் குழந்தை உள்ளத்துடன் எழுதப் பட்ட இலக்கியம். " ،۔
ழேத்திலே நாடக இலக்கியம் எக்காலத்தில் முதன் முத லாகத் தோன்றியதென வரையறுத்துக் கூற இயலாது. கிடைத்துள்ள நாடகங்களைக் கொண்டு பதினேழாம் நூற். ருண்டுக்குப் பின்பே இவை தோன்றியிருக்கக் கூடுமெனக் கொள்ளளாம். இதற்கு முன்னரும் இருந்திருக்கக் கூடும்; ஆஞல் நூல்களோ சான்றுகளோ கிடைத்தில. ஈழத்தில் நாடகங்களை முதன்முதல் இயற்றியவர் கணபதி ஐயர், எனச் சிலர் கொள்வர். இவர் இயற்றிய நாடகங்கள் நான்கு அவையாவன: வாளபிமன் நாடகம், அலங்காரரூப நாடகம், மலேய கந்தினி நாடகம், அதி ரூபவதி நாடகம். இவற்றுள் வாளபிமன் நாடகம் அர்ச்சுனர் மகன் அபிமன்யு, ஸ்ரா மன் மகள் சுந்தரியை மண்ம் முடித்ததை விவரித்துக் கூறும்.
57ו

Page 94
ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட இறுதிக் காலங் *களிலிருந்தவர் இணுவிற் சின்னத்தம்பி என்பவர் இவர் கோயிற் சட்டம்பியாய் இருந்து நெண்டி நாடகம், அநிருத் தன் நாடகம், கோவலன் நாடகம், என்னும் மூன்று நாட கங்களைப் பாடியுள்ளார். இவற்றுள் நொண்டி நாடகம் பெரி தும் போற்றப்பட்டு வந்தது. அநிருத்தன் கிருட்டினரின் பேரன்; கமனின் மகன்; பாணுசுரன் மகள் உஷை என்பவள் இவனைக் காதலித்து அதனல் அடையும் இன்னல்களை அநிருத் தன் நாடகம் கூறும். இக் கதை தென்மோடி நாடகமாகவே எழுதப்பட்டிருக்கிறது. வட்டுக்கோட்டையிற் பிறந்து அச்சு வேலியில்வாழ்ந்த விசுவநாத உடையார் மகன் இன்னுசித்தம்பி பாடிய வசை நாடகம் ஆறுமுகச் செட்டியார் நாடகம் ஆகும். வண்ணுர்பிண்ணையிலிருந்த தனவானன ஆறுமுகச் செட்டியா ரைப் பற்றி எழுந்த இந்நாடகம் குத்தகைக்காரர் கொடு மையை எடுத்துக் காட்டும். பத்தொன்பதாம் நூற்ருண்டின் தொடக்கத்தில் வண்ணுர்பண்ணைச் சிதம்பர உடையார் மகன் இராமசுந்தரம் என்பவர் எழுதியது விசயதர்ம நாடகம். இதில் மாந்தையைப் பற்றிப் பல செய்திகள் கூறப்படுகின் றன.
இராம நாடகம், தருமபுத்திர நாடகம் என்ற பெருமை மிக்க இரு நாடகங்களையும் இயற்றியவர் மாணிப்பாயைச் சேர்ந்த சுவாமிநாதர். நாடக சுவாமிநாதர் என்ற பெயரும் இவருக்குண்டு. இராமாயணத்திலுள்ள இராமரது வரலாற் றையும், பாரதத்திலுள்ள தருமபுத்திரராசனது வரலாற்றை யும் இவர் இந்த நூல்களில் நாடகமாக அமைத்துள்ளார். இராமநாடகத்தைப் பதிப்பித்தவர் சண்டிலிப்பாயை சேர்ந்த முருகேசு உபாத்தியாயர், தருமபுத்திர நாடகத்தை அச்சு வாகனம் ஏற்றியவர் அச்சுவேலி தம்பிமுத்துப் புலவர்.
பூதத்தம்பி விலாசத்தைப் பாடியவர் மாதோட்டத்துச் சுவான் கொஸ்தான் தாவீது என்பார். இஃது ஒரு சரித்திரத் தொடர்பான கதையை அடிப்படையாகக் கொண்டது. பூதத் தம்பி நாடகம் எனப் பெயரிய இன்னெரு நாடகம் பரிமளம் என்ற புலவரால் 1830-ல் பாடப்பட்டதாகவும் கூறுவர். இது எவ்வாறயினும், பூதத்தம்பி விலாசம் முதன் முதலாக 1888-ம் ஆண்டில் அச்சேற்றப்பெற்றது. தெல்லிப்பழை வாசி பார்குமாரகுலசிங்கமுதலியரால் இயற்றப்பட்டது பதிவிரதை விலாகம் என்னும் நாடகம், 1859-ம் ஆண்டளவில் அரங்
58

கேற்றப்பட்ட இந் நாடகத்தை 1909-ம் ஆண்டில் சுதேச நாட்டிய அச்சியந்திர சாலையில் சுதேச நாட்டியப் பத்திரிகை ஆசிரியர் திரு க. வேலுப்பிள்ளை அவர்கள் பதிப்பித்தார்.
3. மதுரைத் தமிழ்ச்சங்க அகராதி இயற்றித்தந்த உ9வமன் கதிரவேற்பிள்ளையின் தந்தையரான குமாரசாமி முதலியார் பாடியது இந்திரகுமார நாடகம். அர்ச்சுனன் சுபத்திரையை மனம் முடித்த பாரதக் கதையே நாடகமாக அமைந்துள்ளது இந்நாடகம். முதன் முதல் அச்சுவேலியிலும் பின்னர் ஊர்கா வற்றுறையிலும் ஆடப்பட்டது. சொல் நயம் பொருள் நயம் மிக்கப் பாட ல் களை க் கொண்டது. இதனை அச் சேற்றியவர் அச்சுவேலித் தம்பிமுத்துப் புலவர். தம்பிமுத் துப்பிள்ளை தாமும் பல நாடகங்களை இயற்றியுள்ளார். பல நாடகங்களைப் பழக்கியும் உள்ளார். இவர் இயற்றிய நாட கங்கள் எஸ்தாக்கியார் நாடகம், எஸ்தாக்கியார் சபா, ஞான செளந்தரி நவரச சபா, சத்தியோகுமையோர் சகாய «Ри ит, அலசு சரித்திர சபா, சங்கிலி இராசன் டிருமசு, யோசேப்பு டிரு மா, தூ மரத நாடகம் என்பன. இவர் புதுக்கியும், திருத் தியும் வெளியிட்ட நாடகங்கள் பல. அவை வேதசகாயம் பிள்ளை நாடகம், சுவீன கன்னிசபா, பிலோமின கன்னிடிரு மா வரப்பிரகாசன் நாடகம், sel-G96602stilasesir" [5frasib, ஞானதச் சன் நாடகம், தருமபுத்திர நாடகம். இந்திரகுமார நாடகம் முதலியன
இவை போன்று இன்னும் பல நாடகங்கள் நாட்டுக் கூத்து முறையில் எழுதப்பட்டன. அவற்றுள் தியாகராசையரின் சாவித்திரி நாடகம், கதிராமர் கனகசபை எழுதிய நற்குணன், வட்டுக்கோட்டை க. சிதம்பரநாதன் எழுதிய மனையாட்சி வினை மாட்சி, ஞானச் சகோதரர் யோன் மேரி எழுதிய புனித சீவி, சுகுணவாசகன், கனவிற் கண்ட மாளிகை முதலியன குறிப்பிடத்தக்கவை. வசனமும் பாட்டும் விரவி ஆங்கில முறைப்படி செய்யப்பட்ட டிருமா நாடகங்களில் ஆரோக்கி யம் டியஸ் விதான எழுதிய ஆரோக்கியநாதர் டிருமா. பூலோகசிங்கம் எழுதிய வர்த்தகன் டிருமா, இன்னசிமுத்து எழுதிய மூவிராசாக்கள் டிருமா முதலியன அடங்கும்.
விலாசங்களுள் இராமலிங்கம் பிள்ளை எழுதிய மாணிக்க வாசகர் விலாசம், தளச் சக்கர வர்த்தி விலாசம், ஏரம்பையர்
59

Page 95
எழுதிய மிருகாவதி விலாசம், தா. சின்னத்தம்பி எழுதிய மதனவல்லி விலாசம், கொடிகாமம் ஆ. முத்துத் தம்பிப் பிள்ளை எழுதிய அரிச்சந்திர விலாசம், ஆனைக் கோட்டை வை. இராமலிங்கம் எழுதிய தமயந்தி விலாசம், அளவெட்டி கணபதிப்பிள்ளை யெழுதிய மதன காம விலாசம், மானிப் பாய் சொர்ணலிங்கம் எழுதிய நல்லதங்காள் விலாசம் மூத லியன குறிப்பிடத்தக்கன.
வசன நாடகங்களும் பல ஈழத்துத் தமிழரால் எழுதம் பட்டன. அசோகமாலாவும் நவமணியும் மு. இராமலிங்கம் எழுதியவை. இடாக்குத்தர் சின்னையா அரியநாயகம், சிவப் னந்த முதலியார், பிள்ளைச்தாச்சி நாடகம், காமாளை நுளம்பு நாடகம் முதலிய நூல்களை இயற்றினர். அவனுவதி அல்லது உபகாரியான உருவச்சிலை சா. வை. மு. விசுவரத்தினம் என் பவரால் எழுதப்பட்டது. பொன்னலை கிருஷ்ணபிள்ளை கண் ணகி தேவி, கற்பகத்தரு நாடகம், மாருதப் புரவீகவல்லி என் னும் நாடகங்களை இயற்றினர். கண்டி சு. செல்வநாயகம் காதலின் வெற்றி, கமலகுண்டலம் என்னும் நாடகங்களை வெளியிட்டார். இணுவில் சி. ஆறுமுகதாசன் எழுதிய நாட கங்கள் திருநீலகண்ட நாயனர், பக்த சக்குபாய், மாமனுக வந்து வழக்குரைத்த படலம் முதலியன. நமசிவாயம் அல் லது நான் யார் என்பது மட்டுவில் க. இராமலிங்கம் அவர்க ளாலும், நல்லதங்காள் மானிப்பாய் சொர்ணலிங்கம் அவர்க ளாலும், பனை இராசன் நாடகம் S. D. தம்பு அவர்களாலும் இயற்றப்பட்டவை. J. S ஆழ்வாப்பிள்ளை என்பவர் திரு அவதாரம், ஊதாரி, இளைய மகன், பக்த யோபு, அக்கினி மூர்த்திகள், கண்டியரசன் நாடகம், ஒட்டக முனிவர் முத லிய நாடகங்களை எழுதினர்.
பேச்சு வழக்குத் தமிழில் நாடகங்கலை எழுதிப் பிறருக்கு வழிகாட்டிய பெருமை பருத்தித்துறையைச் சேர்ந்த பேரா சிரியர் க. கணபதிப்பிள்ளை அவர்களுக்கு உரியது. இவர் எழுதிய உடையார் மிடுக்கு, முருமன் திருகுதாளம், கண் ணன் கடத்து, நாட்டவன் நகர வாழ்க்கை என்னும் நான்கும் நானுடகம், என்னும் பெயருடனும், பொருளோ பொருள், தவருண எண்ணம் என்னும் இரு நாடகங்கள் இரு நாடகம் என்னும் பெயரிலும் வெளிவந்துள்ளன. சுந்தரம் எங்கே, துரோகிகள் என்னும் நாடகங்கள் இன்னும் அச்சில் வரவில்ை
60

இந் நாடகங்கள் யாவும் இலங்கைப் பல்கலைக்கழக நாடக அரங்கிலும் வேறு இடங்களிலும் நடிக்கப்பட்டுப் புகழ் பெற் றுள்ளன. மாணிக்க மாலை என்னும் நூல் வசனமும் செய் யுளும் விரவ எழுதப்பட்ட நாடகம், யாழ்ப்பானத்து அர சன் சங்கிலியின் வரலாற்றை யுப் இவர் நாடகமாக அமைத் துள்ளார். இது உயர்ந்த செந்தமிழ் நடையில் யாக்கப்பட் هانری ساسا
ஈழத்துத் தமிழ்ப் பெரியார் பலர் பழைய இலக்கண நூல் களைப் பதித்தும், அவற்றிற்கு உரை யெழுதியும், புதிய இலக் கண நூல்கள் எழுதியும் சிறந்த தொண்டாற்றியிருக்கின்ற னர். தமிழ் மொழியின் சீர் குலையாமல் இருப்பதற்குத் தமிழ் இலக்கண நூல்கள் சிலவற்றை அச்சு வாகனமேற்றி அவற்றை மக்களுக்குப் பயன்படும் வண்ணம் செய்தவருள் தலே சிறந்த வர் சி. வை. தாமோதரம்பிள்ளை. இலக்கண நூல்களைப் பொது மக்கள் கற்க மாட்டார். அந் நூல்கள் விலை போவதும் மிகக் குறைவு என்ருலும் தமிழ்மேல் உள்ள பற்றினுல் இவர் அச்சிடப் பெருத அருமையான பழந் தமிழ் நூல்கள் பலவற் றைப் பனையோலைச் சுவடிகள் கொண்டு பரிசோதித்து வெளி யிட்டார். தமிழின் தொன்மைக்கும், செம்மைக்கும் ஒரு தனிச்சான் ருக நிற்பது தொல்காப்பியம். இதில் நச்சினுர்க் கினியர் உரை யெழுதிய எழுத்ததிகாரத்தையும், ஐந்தியல் நச்சினர்க்கினியர் உரையையும் ஏனைய பேராசிரியர் உரையு மாயுள்ள பொருளதிகாரத்தையும் இவர் பதிப்பித்தார். ஆறுமுகநாவலராற் பரிசோதிக்கப்பட்ட சொல்லதிகாரம் சேனவரையர் உரையையும் பதிப்பித்தார். தொல்காப்பி யம் முழுவதையும் முதலிற் பதிப்பித்த தனிச் சிறப்பு இவ ருக்கே உரியது. பழங் காலத் தமிழ் உரைநடைக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ள இறையனர் அகப் பொருள் உரை யும் இவர் பதிப்பித்ததே. இடைக் கால இலக்கியத்திற்கு இலக்கணம் என்று கருதப்படும் வீரசோழியத்தையும் இவரே பதிப்பித்தார். புதுக் கோட்டையில் நீதிபதியாக இருந்த போது இவர் அச்சிட்ட இலக்கண விளக்கம் "குட்டித் தொல் காப்பியம்’ எனக் கற்றறிந்தோர் போற்றுதற்குரிய ஏற்றம் வாய்ந்தது.
இலக்கண நூற்பதிப்பாசிரியருள் அடுத்தபடியாக குறிப் பிடத்தக் கவர் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவர்.
6

Page 96
தொல்காப்பியம் சேனவரையர் உரை, இலக்கணக் கொத்து, தொல்காப்பிய சூத்திர விருத்தி, பிரயோக விவேகம், நன் னுால் விருத்தியுரை முதலியன இவர் பதிப்பித்த இலக்கண நூல்கள். இவர் பேரால் வழங்கும் நன்னூற் காண்டிகையுரை, இன்று கற்ருே ரால் போற்றப்பட்டு வழக்கிலிருந்து வருகின் றது. நாவலர் பதிப்பு என்ருலேயே நல்ல பதிப்பு என்று தமிழ் நாடு முழுவதும் கூறும் பெருமை வாய்ந்தவர். இப் பெரி யார். திருகோணமலையைச் சேர்ந்த தி. த. கனகசுந்தரம் பிள்ளை அவர்களால் ஏட்டுப் பிரதிகள் பல கொண்டு ஆராய்ந்து சூத்திரங்கள் சில திருத்தப்பட்டு உரையிலுள்ள உதாரணங்களுக்கு இடங் காட்டப்பட்டுமுள்ள தொல்காப் பியம் எழுத்ததிகாரம் நச்சினர்க்கினியர் உரையும் சொல்லதி காரம் சேஞவரையர் உரையும் சைவ சித்தாந்த நூற் பதிப் பும் கழகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளன. சுன்னுகம் அ, குமாரசாமிப் புலவரோடு சேர்ந்து நம்பியகப் பொருளுக்கு ஒர் உரையும் இவர் எழுதி வெளியிட்டார்.
புலோலியைச் சேர்ந்த வ. குமாரசாமிப் புலவர் "இலக், கணக் கொட்டர்" எனப்பட்டம்பெற்றவர். இருவரும் நன்னூற். காண்டிகை உரையைத் திருத்தி அச்சிட்டனர். யாப்பிலக். கணம் கூறும் யாப்பருங்கலக்காரிகையைப் பதிப்பித்தவர் உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர். இன்று ஈழத்தில் உயிருடன் வாழும் தமிழ் வானருள் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல், லாது விளங்கும் சி. கணேசையர் தொல்காப்பியம் முழுவ, தையும் தனது விளக்கவுரைக் குறிப்புக்களுடன் எழுதித் தமிழ் அன்னைக்குத் தொண்டாற்றியுள்ளார். s
இலக்கண நூல்களைப் பரிசோதித்துப் பதிப்பதோடு நில் லாது இலக்கண நூல்களும் எழுதினர் ஈழத்துப் பெரியார் கள். பழங்காலத்தில் எழுதப்ட்ட இலக்கண நூல்கள் வட மொழிப் பண்பினைப் பின் பற்றிச் சூத்திரங்களால் இயற்றப் பட்டவை. எனவே, யாவரும் எளிதில் கற்றறிவதற்கு ஏற்ற, உரை நடையில் இலக்கண நூல் எழுத முன்வந்தார் ஆறு. முகநாவலர். இவர் எழுதிய இலக்கணச் சுருக்கம் மாணவு, ரிடையே பெரிதும் பயின்று வருகின்றது. இலக்கண விஞ விடையும் இவரால் இயற்றப்பட்ட நூலாகும். சங்குவேலி யில் வாழ்ந்த சிதம்பரம்பிள்ளை (உவில்லியம் நெவின்சு), என்பவர் இலக்கண விதிகள் சிலவற்றைத் திரட்டித் தமிழ்,
l62
ሰr• •

*வியாகரணம் என்னும் நூலை இயற்றினர். இந் நூலின் மூன் tரும் பருவமாகிய வசன இலக்கணம் வாக்கியங்களை எழுது வோருக்குப் பெரிதும் பயன் படும்.
சுன்னகத்துக் குமார சுவாமிப் புலவர் நடவா மடிசீ முத லாக நன்னூலார் வகுத்துக் கூறிய இருபத்துமூன்றிற்றுள் ஈளும் அடங்கிய வினைப் பகுதங்களுக்கும் அவ்வவற்றின் அடி யாகப் பிறந்த பெயர்ப் பகுதங்களுக்கும் பகுதி விகுதி முத லிய உறுப்புக்களைப் பகுத்துக் காட்டி, ஒரு நூல் இயற்றி அதனை "வினைப்பகுபத விளக்கம்" என்னும் பெயரோடு அச் சிட்டு வெளியிட்டார். ஆறுமுகநாவலரின் தமையனின் மகனு கிய த. கைலாசபிள்ளை அவர்கள் வசனநடை எழுதுவோர்க்கு உதவியாக ஒரு வசன இலக்கண நூல் எழுதி அச்சிட்டார். பவணந்தி முனிவரது சூத்திரங்களைத் தழு வி இலகுவான உரைநடையில் இலக்கண நூல் எழுதினர் கெளரவ திரு. பொன்னம்பலம் இராமநாதன். இது செந்தமிழ் இலக்கண மென விளங்கும். பன்மொழி அறிஞரும், தமிழ் மொழியே உலகம் தோன்றியபோது உண்டான மொழியென்று வாதாடி யவருமான நல்லூர்ச் சுவாமி ஞானப்பிரகாசர் தமது பரந்த அறிவின் துணைகொண்டு "தமிழ் அமைப்புற்ற வர *லாறு" என்ற நூலை எழுதிஞர் சொற் பிறப்பு ஆராய்ச்சி என்ற நூலையும் இவர் தன்னந் தனியாக எழுதிவந்தார். *சொற்கலைப் புலவர்" என்ற பட்டமும் பெற்ருர்,
இலக்கண நூல்களை வெளியிடுவதோடு நில்லாது வேறு பல நூல்களையும் பதிப்பித்து தமிழின் அரும் பெருஞ் செல் வங்களைக் காத்து வந்தனர் ஈழத்துத் தமிழர். அவர்களுட் சி. வை. தாமோதரம்பிள்ளை எட்டுத் தொகை நூல்களில் ஒன்ருகிய கலித்தொகையையும், திரிசொற்களால் யாக்கப் பட்ட தணிக்கைப் புராணத்தையும், ஐஞ்சிறு காப்பியங் களில் ஒன்ருகிய சூளாமணியையும் பதிப்பித்தார். ஆறுமுக நாவலரும் இத்தகைய பல நூல்களைத் திருத்தி வெளியிட் டார். அவை கந்தபுராணம், பெரிய புராணம், சேது புரா னம், திருக்குறள், பரிமேலழகர் உரை, திருக்கோவை *உரை முதலியன.
ஆறுமுகநாவலரே கல்லாதாரும் எளிதில் விளங்கக்கூடிய தெளிவான முறையில் முதன் முதல் செந்தமிழ்ச் சொல்ல
163

Page 97
மைந்த வசனநடையைக் கையாண்டனர். நாவலரின் சிறப்பும். பெருமையும் ஆற்றலும் கட்டுரை...வரைவதிலேயே புலப்பட் டன. சமயப் போட்டியிலே அவர் விடுத்த துண்டுக் கட்டுரை களே அவரின் வசன நடைக்கு அடிகோலின. நாவலர் காலத். திற்கு முன் வசனநடையில் நூல்கள் இயற்றுவது மிக அருமை. மேலும் அவர்காலத்தில் வசனநடையில் எழுத முன்வந்த ஆசிரியர்கள் பொருள்மயக்கத்தினை உண்டாக்கும் கடுஞ். சொற்களை வழங்கினர். சங்கதச் சொற்களை மிகுதியாக அமைத்தும் இலக்கணப்புணர்ச்சிகளைப் போற்றியும் பிறருக் குப் பொருள் விளங்காத வண்ணம் எழுதி வந்தனர். அத்த. கைய கட்டுரைகள் பொதுமக்களுக்கு எத்தகைய பயனும் அளிக்கவில்லை.
ஆஞல் ஆறுமுகநாவலர் அத்தகைய உரைநடையைக் கையாளவில்லை. அவர் கட்டுரை எழுதியது சைவசமயத். தைப் பாதுகாத்தற்பொருட்டு, கற்றறிந்தோரிலும் கல்லாத பொதுமக்களுக்கே சமயக் கல்வியறிவு புகட்டவேண்டியிருந், தது. இந்நோக்கத்துடனேயே நாவலர் எழுதியமையால், யாவரும் எழுதில் விளங்கிக் கொள்ளக்கூடிய தெள்ளிய முறை. யில் பெரும்பாலுஞ் செந்தமிழ்ச் சொல் நிறைந்த உரைநடை யில் எழுதினர். மேலும் பொருளில் தெளிவு கருதி மேனுட் டார் வழங்கிவரும் முழுத்தரிப்பு முதலிய குடுயீடுகளையும் கையாளத் தொடங்கினர். முதன் முதல் தமிழில் குறியீடு களைக் கையாண்டவர் ஆறுமுகநாவலரே. இக்காரணங்கள் பற்றியே பரிதிமாற் கலைஞனும் நாவலரை "வசனநடை கை. வந்த வல்லாளர்" எனப் போற்றிச் சென்றனர்.
தென்னிந்தியவரலாறு, திராவிடநாகரிக வரலாறு, தமிழ்ப் புலவர் வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, இசைவர லாறு முதலியவற்றிற்கு அடிகோலி வழிகாட்டியவரும் ஈழ நாட்டவரே. தமிழரின் பண்டைக்கால நாகரிகச் சிறப்பினைத் தமிழ் நூல்களின் ஆதரவு கொண்டு ஆராய முன்வந்தோர்க்கு, முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் திரு. வி. கனகசபைப்பிள்ளை. ஈழநாடு தமிழ்க் கல்வியின் இருப்பிட்ம் என்ற புகழை வளர்த் த வருள் ஒருவராகிய யாழ்ப்பாணத்து மல்லாகத்தைச் சேர்ந்த விசுவநாதபிள்ளையின் மகன இவர். சேர். இராம நாதன், சேர். பொன்னம்பலம் முதலியோருடன் சென்னை அர சாங்கக் கல்லூரியிற் கற்று சிறு வயதிலேயே கலைமாணிப் பட்
64
霞,·

டம் பெற்றனர். இவரைப் பலரும் "பட்டதாரிப் பையன்" என்பர். தமது தமிழ்க் கல்வி அறிவு, தேசவரலாற்று உணர்வு சமுதாயவரலாற்று அறிவு, சாசன ஆராய்ச்சி ஆங்கிலக் கல் வித்திறன் ஆகியவற்றையெல்லாம் பயன்படுத்திச் சிறந்த நூல் ஒன்றினை எழுதினர்.
இந்நூல் "ஆயிரத்து எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்" எனப் பெயரியதாகும். இந்நூலில் தமிழ் நாட்டின் நிலை, அதன் எல்லைப்புறத்திலுள்ள நாடுகனின் நிலை, தமிழ்நாடு பிறநாடுகளுடன் நடத்திய வணிகத்தின் நிலை, சேர சோழ பாண்டியர் குறுநில மன்னர் ஆகியோர் வரலாறு, தமி ழர் பண்பாடு முதலியவற்றை விரிவாக ஆராய்ந்து கூறியுள் ளார். பொதுமறை நூலாகிய திருக்குறள், பெருங்காப்பி யங்களெனச் சிலர் கருதும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இவற்றின் தன்மையும், சங்கப் புலவரின் வரலாறு, தமிழ் நாட்டில் வழங்கிய சமயங்களின் நிலை, தமிழ்மக்களின் வாழ்க்கை இயல்புகள் ஆகியனவும் மிகவும் தெளிவாக அறி வுறுத்தப்பட்டுள்ளன. பிற்காலத்தில்" எழுந்த ஆராய்ச்சி களிற் பல இந்நூலிற் கண்ட கொள்கைகளையே அடிப்படை யாகக் கொண்டன.
கனகசபைப்பிள்ளை எழுதியதை மொழிபெயர்த்தும், பின் னிருந்த புலவர் வரலாறுகள் சிலவற்றைச் சேர்த்தும் சதா சிவம்பிள்ளை என்பவர் பாவலர் சரித்திர தீபம் என ஒருநூல் வெளியிட்டார். அபிதான சிந்தாமணி முதலிய கலைக்களஞ் சிய நூல்கள் இந்நூலிலிருந்தே புலவர் வரலாறுகள் பல வற்றை எடுத்தாண்டுள்ளன. சதாசிவம்பிள்ளைக்குப் பின்னர் சுன்னுகம் குமாரசுவாமிப் புலவர் தமிழ்ப் புலவர் சரித்திரம் என்னும் நூலை வெளியிட்டார். இது புலமை சான்ற தமிழ்ப் பெரியாரின் வரலாற்றைக் கூறும் சிறந்த நூலாகும். இதில் ஏறக்குறைய நானுாறு புலவரின் வரலாற்றைக் கூறியுள்ளார். புலவர்களின் ஊரும், பேரும், குலமும், செயலும், தெளிந்த அளவிற் காலமும் கூறப்பட்டுள்ளன. சிற்சில புலவர் பாடிய அருஞ் செய்யுட்களும் காட்டப்பட்டுள்ளன. இந்நூல் தமிழ் இலக்கிய வரலாற்றிற் சிறந்த இடம் பெறுகின்றது. தமிழ்ப் புலவர் சரித்திரம் எழுதுவது மிகவும் பொறுப்பானது. எனெ னில் புலவர் சிலருடைய நகர், குலம், சமயம், காலம், நூலு ரிமை, கவி, கவிப்பாடம், கதை முதலியவற்றில் சரித்திர
65

Page 98
காரர் பலர் தம்முள்ளே முரணுவர். இவற்றையெல்லாம் முறைப்படி ஆராய்ந்து பிழையற்ற வரலாற்றை எழுதுவது பொறுப்பானதே. அத்தகைய ஒரு வரலாற்றினையே குமார சாமிப் புலவர் தமது புலவர் சரித்திரம் மூலம் தந்துள்ளார்.
ஏனைய சிறப்பு வாய்ந்த மொழிகள் போலன்றி இக்கதை வரம்பிலும் காவியச் சிறப்பிலும் அருட்பாப் பெருமையிலும் வடமொழிக்கு இணையாக விளங்கும் தமிழ் மொழியில் உள்ள நூல்களிற் சிறந்தவற்றைச் செவ்வையாக விளக்கி, அவற்றின் முறைமையையும், பயனையும் எடுத்துக் காட்டும் நூல் திரா விடப் பிரகாசிகை. இதனை இயற்றியவர் யாழ்ப்பாணத்திலே பிறந்து தமிழ் நாடெங்கும் புகழ் கொண்ட சபாபதி நாவலர் அவர்கள்.
இந்நூல் தமிழின் தெய்வப் புலமை மரபியல், இலக்கண மரபியல், இலக்கிய மரபியல், சாத்திர மரபியல், ஒழிபியல் என ஐவகைப் பிரிவு பெற்று விளங்குகின்றது; இவற்றுள் முதல் இயலுள் எழுத்து ஒலிக்கும் இசைஒலிக்கும் உள்ள வேற் றுமையும், “தமிழ்" "தென்மொழி" என்பவற்றின் மெய்ப் பொருட்டுணிபும் , தமிழின் தெய்வத்தன்மையும் விளக்கப் பட்டுள்ளன. அகத்தியம் தொல்காப்பியம் ஆகியவற்றின் சீரும், முச்சங்க வரலாறும், ஏனைய சிறந்த இலக்கண நூல்க ளின் பான்மையும் இலக்கண மரபியலில் இடம் பெறுகின்றன. தமிழ் நூல்களை அநேகமாகத் தொகுத்தும் விரித்தும் கூறுவது இலக்கிய மரபியல். பதினெட்டு வித்தைகள் இவையென்றும், மற்றும் வைதிக சாத்திரம், வேதாந்த சாத்திரம், சைவசித் தாந்த சாத்திரம் முதலிய நூல்கள் இவையென்றும், சாத்திர மரபியல் கூறும். கல்விப் பயிற்சியே மக்களுக்கு இன்றியமை யாத அழியாச் சிறப்பு என்பதனைப் பலவாறு வலியுறத்துகின் றது ஒழிபியல். இத்தகைய அரிய பெரிய வரலாற்றுநூலைத் தமிழ் நாட்டிற்கு அருளினர் ஈழத்துச் சபாபதி நாவலர்.
"தமிழே உலகத் தாய்மொழி" என்று பறையடித்தோதிய பன்மொழிப் பண்டிதர் என்று பாராட்டப்பட்ட சுவாமி ஞானப்பிரகாசர் மானிப்பாயிற் பிறந்தவர். இவருக்குப் பதி னெட்டு மொழிகளில் நல்ல ஞானம் இருந்தது. இந்தப் பரத்த அறிவினைக் கொண்டு "தமிழ் அமைப்புற்ற வரலாறு" என்ற நூலை எழுதினர். யாழ்ப்பான வரலாற்றில் ஈடுபட்டுள்ள
I66

இவர் எழுதிய நூல்கள் யாழ்ப்பாண வைபவ விமர்சனம்”, *யாழ்ப்பாண அரசர்கள்" என்பவையே.
தமிழ் இலக்கிய வரலாற்றைச் சங்க காலம் சங்க மரு விய காலம். பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம் எனக் காலப் பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு காலப் பகுதியையும் வரையறுத்து அக் காலப் பகுதியின் சரித்திரம், சமயய நிலை, இயற்றப்பட்ட நூல்கள், அவற்றின் பண்புகள் முதலியவற்றை முறையாக வகுத்துக் கூறித், தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலை எழுதிப் பிறருக்கு அத்துறையில் வழிகாட்டிய பெருமை இலங் கைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த திரு வி செல்வநாயகம் அவர்களுக்கு உரியது. தமிழ் உரை நடை வரலாற்றையும் காலவரையறைப் படுத்தி மேற் கோள்களுடன் விளக்கந் தந்து தமிழ் உரை நடை வரலாறு என்னும் நூலையும் அண்மையில் இப்பெரியார் வெளியிட்டுத் தமிழ் அன்னைக்கு அரும் பெருந் தொண்டாற்றியுள்ளார்.
இசைத் தமிழுக்கு ஒப்பிலாப் பணி செய்தவர் உயர் திரு. விபுலானந்த அடிகள். தில்லையின் எல்லையிலுள்ள அண்ணு மலைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக வும், ஈழத்துப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரி யராகவும் அமர்ந்து தமிழ் மொழிக்குப் புத்துயிர் கொடுத்த இப் பெருந்தகை, மட்டக்களப்பு. காரைதீவு என்னும் பகு தியிற் பிறந்தவர். துறவு பூணமுன் இவரின் பெயர் மயில்வாகனம் என்பதாகும். இவர் ஆராய்ந்து வெளியிட்ட நூலே யாழ் நூல். பன்னெடுங் காலமாகத் தமிழ் இசையை யும், தமிழ் இசைக் கருவிகளையும் தமிழ்மக்கள் கையாண் டிருந்தனர் என்பதை இந் நூலிற் பல சான்று கொண்டு நிறுவி யுள்ளார். வடிவுகூடத் தெரியாதபடி மறைந்த பண்டைய யாழின் நுட்பங்களை யெல்லாம் உலகறிய வைத்தது இவர் செய்த தொண்டாகும். சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதையினுள்ளே யாழ் ஆசிரியரின் அமைதி கூறும் இருபத் தைந்து அடிகளுக்கு ஏற்றதொரு விரிவுரையாக இந்நூல் அமைந்துள்ளது. இசைத் தமிழ் நூல்களெல்லாம் வழக்கற்று மறைந்தன எனப் பழைய வரலாறு கூறி இரங்கிய கவற்சியை இந் நூல் நீக்கிற்று. பல காலமாகச் சிலப்பதிகாரத்தைப் பயில்வோர் அதன் கண் கூறப்பெற்ற இசைப் பகுதிகள் நீங்க
67

Page 99
லாகப் பயில்வது வழக்கம். அங்ங்ணம் ஒதுக்கப்பெற்ற இசை நூற் பொருள்களை விளங்க எடுத்துரைக்கும் இசைத் தமிழ் முதல் நூலாக யாழ் நூல் அமைந்துள்ளது. இசைத் தமி ழுக்குப் புதிய இலக்கணம் வகுத்து, அதனை விஞ்ஞானமுறை யில் எடுத்துக் காட்டிய விபுலானந்த அடிகளுக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.
இவ்வாறு பண்டைத் தமிழ்ச்சங்க நூல்களை அரங் கேற்றியும், யாழ்ப்பாணத்திற் சங்கம் நிறுவி நூல்கள் யாத் தும், கவிச் சுவை ததும்பும் பாடல்களை இயற்றியும், தமிழ் மொழியின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாத பல துறை களில் வழிகாட்டியும், தமிழ் இலக்கியத்தை விருத்தி செய்து தமிழ் அன்னைக்கு அழியாச் சிறப்பு அளித்துள்ளார் ஈழத் தமிழர்.
அடுத்துச் சிற்பக் கலை வளர்ச்சியை நோக்குவோம். ஈழத் தில் சிற்ப வளர்ச்சிக் காலத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரிக் கலாம். அவை அநுராத புரக் காலமும், பொலநறுவைக் காலமும், அநுராதபுரத்தில் பல்லவ சிற்ப முறையும் ஈழத் தில் வரத் தொடங்கியது அநுராதபுரத்திற்கு அணித்தா யுள்ள ஈசுர முனி விகாரையிலுள்ள பல சிற்பங்களிலிருந்து இதனை அறியலாம். இங்கு “குதிரையும் மனிதனும்" என்னுஞ் சிற்ப வடிவம் சிறப்பாய் அமைந்துள்ளது. இவ்வுருவங்கள் அநு சாதபுரத்திலுள்ள ஏனைய சிற்பங்கள் போலப் புத்த சமயத் தொடர்பு உடையன அல்ல. இங்குள்ள மனிதன் கபில முனி வன்; அவன் நரக லோகத்துப் புற்றரை ஒன்றில் இருந்து கொண்டு அசுவமேதயாகத்தில் பலியிடப்படவிருக்கும் தனது அருகிலுள்ள குதிரையைப் பற்றி எண்ணிக் கொண்டிருக் கிருன். இவ் வடிவங்கள் மாமல்ல புரத்திலே காணப்படும் சிற்ப முறைகளையே தழுவியுள்ளன. நாலந்தையிலுள்ள "கொடி கை”க் கோயிலும் பல்லவ சிற்ப முறைப்படி கட்டப்
- ģ.
அநுராதபுரத்திலே துட்டகைமுனு "லோகபாசத' என் னும் பித்தளை மண்டபத்தைக் கட்டி எழுப்பினன். ஒன்பது அடுக்கு மாளிகைகளை உடையதாய் இருந்தது. இஃது இப் பொழுது அடித்தளமும் ஆயிரத்து நூறு கற்றுாண்களுமே மிஞ்சியுள்ளது. இது புத்த சந்நியாசிகளின் உறைவிடமாய் இருந்தது. ஞான ஒளி படிப்படியாகக் கூடக் கூடப் புத்த குரு,
68

வும் படிப்படியாக ஏற்றி வைக்கப்பட்டார். இவ்வடுக்கு
மாளிகையின் மேற் கட்டிடம் மரத்தினற் கட்டி, மாணிக்கம், யானைத் தந்தம் முதலியவற்றினல் அழகு செய்யப்பட்டுப்,
பித்தளையினல் வேயப்பட்டிருந்தது. கி.பி. நான்காம் நூற்ருண் டில் தீக்கிரையானது. இதனுல் ஐந்தடுக்கு மாளிகையாகத் திரும்பவும் கட்டப்பட்டது. பல்லவர் மாமல்லபுரத்தில்
கட்டி யெழுப்பிய தர்மராஜ ரதத்தின் கட்டிட முறையை
இஃது ஒத்திருக்கின்றது.
சோழப் பெருமன்னர் காலத்தில் ஈழத் திரு நாடெங்கும் பல கோயில்கள் எழுந்தன. பொலநறுவையிலுள்ள வான வன் மாதேவி கோயில் இதற்குச் சான்று. பொலநறுவை யிலுள்ள பெளத்த ஆலயங்களும் சோழர் காலச் சிற்ப முறை யைத் தழுவி எழுந்தன. இவை யாவும் தமிழ்ச் சிற்பிகளின் கைத்திறனல் எழுந்தன. பாண்டிய விசய நகர காலத்திலும் கட்டிடங்கள் எழுந்தன. பொலநறுவை அரண்மனைக்கு முன் னுள்ள சிவன் கோயிலும், கம்பளைக்கு அண்மையிலுள்ள இலங் காதிலக விகாரையும் இக் காலப்பகுதியில் எழுந்தன. கண்டித் தாலதா மாளிகைக்குப் பக்கத்திலுள்ள பழைய ஒலக்க மண் டபம் விசய நகர கட்டிட முறைப்படியும் சிற்ப முறைப்படி யும் கட்டப்பட்டது.
தாலதா மாளிகாவிலிருக்கும் கோயிலிலுள்ள கண்ணகை உருவம் சந்தனக் கட்டையாலாயது. பல்லவர் காலத்துக்கு. முன் கட்டப்பட்ட கோயில்களில் மரத்தாலாகிய விக்கிரகங் களையே வைத்து வணங்கினர். சந்தனக் கட்டையாலாகிய கண்ணகி உருவமும் இதனையே நினைவுறுத்துகின்றது. சோழப் பேரரசர் காலத்தில் ஈழத்தில் கட்டப்பட்ட கோயில்களில் சிலர் விக்கிரகங்களையும், தாமிர விக்கிரகங்களையும் வைத்து வணங்கினர். தமிழன் கைபட்டுத் தலை சிறந்து விளங்கும் இச். சில விக்கிரகங்களிற் பலவற்றைக் கொழும்பு நூதனசாலை யிற் காணலாம். இவற்றைப் போன்ற கம்பீரமும் களையும் பொருந்திய வெண்கலச் சில கள் உலகத்தில் எவ்விடத்தும், இலை எனக் கூறுவர். இத்தகைய சிறப்பு வாய்ந்தது ஈழத் தமிழரின் சிற்பக் கலை, R
ஈழநாட்டுச் சிற்பக் கலையின் உச்சத்தை அங்குள் ன கோயில்களிலேயே காணலாம். திருக்கோயில் அமைப்பு,
69

Page 100
அவற்றுள்ள கடவுளர் உருவம் முதலிய யாவற்றிலும் சிற்பக் "கலையின் திறனைக் காணலாம். அவற்றுள் ஒன்று அக் கோயில் களிற் காணப்படும் வாகனங்கள். ஈழத்தில் உள்ள கோயில் களுக்கு வாகனம் அமைப்பதற்காக அத் தொழில் வல்லார் பலர் இருக்கின்றனர். இங்கு செய்யப்படும் வாகனங்களில் மிகச் சிறந்தது. கைலாய வாகனம் ஒரு மலை உருவத்தை
ஆக்கி அதனை முழந் தாளிட்டிருந்தது கைகளாற் பற்றி இரா
வணன் கிளப்பி உயர்த்துகின்ற பாவனையாய் இதை அமைப் 'all IT.
வாகனங்களுடன் கேடகம் என்ற தனையும் கோயிலில் வைத்திருப்பர். இது கோயில் விமான உருவத்தில் மரத்தால் அமைந்து நுண்ணிய வேலைப்பாடு கொண்டது. இதற்குள்ளே சுவாமியை எழுந்தருளப் பண்ணிக் கோயிலுக்கு வெளியே கொண்டு உலாவப் போவர். இதுபோலவே சப் பர மு ம் அமைந்தது. யாழ்ப்பாணத்துக் கோயில்களிலுள்ள சப்பரங் "கள் பலவகையாய் அமைக்கப்பட்டவை. மாவிட்டபுரம், நல் லூர் போன்ற கோயில்களிலுள்ள சப்பரம் தட்டுத் தட்டாய் ஓவியங்கள் அமைந்த சேலைகளால் ஆயது. கோபுரம் போன்ற வடிவுற்றது. சில கோயில்களிற் சப்பரங்கள் கண்ணுடியிலே தீட்டிய ஓவிய வேலைப்பாட்டுடன் ஆக்கப்பட்டுள்ளன. இவையே கண்ணுடிச் சப்பர மென்பர். பருத்தித்துறைச் சித்தி விநாயகன் கோயிலில் இத்தகைய சிறந்த சப்பரம் ஒன்று இன்னும் இருக்கின்றது.
வேருெருவகைச் சப்பரம் முத்துக்காற் சப்பரம். இஃது உருவத்தில் ஒரு மாளிகை போல் இருக்கும். கண்ணுடி பதித்து அழகிய முறையிற் செய்த குத்துக்காலை நாட்டி வீடு போலாக்கி அதற்கு மேல் விமானத்தைப் போன்ற உரு வத்தை அமைத்து அதன் தலையிலே மூன்று கலசம் போன்ற உருவங்களை வைப்பர். இதற்குள் பல தேவ கனங்களின் உரு வங்கள் போலப் பாவைகளை அமைத்து எங்கும் வைத்து அழ குறச் செய்வர். இவ் வேலைகள் கண்ணுடி, கஞ்சத் தகடு, கண் ணுடிச் சிறுமணி, இரதக் குண்டு முதலியவற்ருல் செய்யப் du L-l60) al.
"ஈழத்தவர் தேர்கள் செய்வதிலும் பேர் போனவர்கள், தேரின் அடிப்பக்கத்தை மரத்தாலே செய்வர். தேருக்கு
370

தாலு சில்லுண்டு. சில்லுக்கு மேலே சதுரமாக இருக்கும். இதிலி ருந்து மேலே வட்ட வடிவமாய் உயர்ந்திருக்கும். நடுவிலே, சுவாமி எழுந்தருளும் தேர்த்தட்டு இருக்கும். மேலே செப் புக் கலசம் ஒன்று இருக்கும். இப்பாகம் முழுவதும் சிவப்புச். சேலைகளால் அழகுறப் புனையப்படும். இவ்வாரு ய தேர்களில்
மாவிட்ட புரக் கந்தசுவாமி கோயிலிலுள்ள தேர் சிற்ப வேலைப்பாட்டிற்குப் பேர் போனது. மேற்பக்கத்திலே சேலை. கட்டாது முழுவதும் மரத்தாலாய தேர்கள் மஞ்சம் எனப் படும். நல்லூர்க் கந்தசுவாமி கோயிலிலும், இணுவில் கந்த
சுவாமி கோயிலிலும் உள்ள மஞ்சங்களில் சிறந்த உருவங், கள் உண்டு.
கண்டி, மட்டக் களப்பு, யாழ்ப்பாணம் போன்ற இடங்க
வில் வெண்கல வேலையாளர் அருமையான வேலைகலைச் செய்து வருகின்றனர். அவர்கள் குடம், விளக்கு, வட்டில், தட்டம், படிக்கம், சந்தனக்கும்பா, பன்னீர்ச் செய்பு முத
லியவற்றை இன்றுஞ் செய்கின்றனர். சைவ சமயக் கோயில்
களுக்கு அழகிய உரு நாடுகளும் வார்ப்பார். ஈழத்துத் தமிழ, ரால் வார்க்கப்படும் உருநாடுகள் இந்தியாவில் வார்க்கப்படு பவற்றிற்கு இகளத்தவையுல்ல. இவ்வாறு சிற்பக்கலையை
வளர்த்து வந்திருக்கின்றனர் ஈழத்துத் தமிழர். எந்தக், கலைக்கும் இருப்பிடமாகத் திகழ்கின்றது ஈழத், திருநாடு. .
7,

Page 101
பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கம்.
ஆண்டறிக்கை 1957-1958.
32 நடந்தேறிய நிகழ்ச்சிகளே நோக்குமிடத்து இவ்வாண்டு சிறந்ததோர் ஆண்டாகத் திகழ்ந்துள்ள தெனக் கூறலாம். முத்தமிழாம் இயல், இசை நாடகம் ஆகிய மூன்றிற்கும் இயன்றளவு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டில் சொற்போர்கள் சொற்பொழிவுகள் கலந் துரையாடல், கவிேழா முதலிய பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இனிவரும் ஆண்டுகளிலும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று, தமிழ்ச் சங்கம் நல்ல முறையில் முன்னேறும் என நம்புதற்கு இடமுண்டு. செய்யும் வினேதனே உணர்ந்து, அறிந்து செய்தால் எவ்வினையும் நல்வினையாக முடியுமென் பதில் ஐயமில்லை. அதற்கு உடன் மாணவரின் தளராத ஊக்க மும் சலியாத உழைப்பும் தேவை.
சங்கத்தின் நிகழ்ச்சிகளில் முதலாவதாகப் "புதிய மாணவ சின் சொற்போர்" நடைபெற்றது; எடுத்துக் கொள்ளப்பட்ட பொருள் சமுக முன்னேற்றத்திற்குச் சமயம் அவசியம்" என் பதே. பெண்கள் மூவரும் ஆண்கள் மூவரும் தர்க்கித்து, விவாதத்திற்குத் தனியான ஓர் உயர்ந்த நிலேயை வழங்கினர்.
அடுத்து, இம்முறை இரண்டு பெரியார்கள் எம் சங்கத் தைப் பெருமைப்படுத்தியுள்ளனர். ஓவியக் கலைஞர் திரு. பெனடிக்ற் அவர்கள் 'ஓவியம்" என்னும் பொருள்பற்றிப் பேசிச் சங்கத்தின் அங்கத்தவரையே அசையாத ஓவியங் களாக மாற்றியது ஒரு புறம்; தமிழ்நாட்டிலிருந்து வந்திருத்த திரு. டி. கே. சீனிவாசன் அவர்கள் "தத்துவஞானம்" என் னும் பொருள் பற்றி யாவரும் எளிதில் அறியும்படி பேசியது மறுபுறம். இப்படி இரு சிறந்த பேச்சாளரைக் கேட்கும் பாக் கியத்தை எம் செவிகள் செய்திருந்தன.
172
黎
蜀

_=--~~~~== ----- ) -------
"(七長95TFTA****):원후월德宮主트n "原업 (七大成仁皇帝rm 복3)正eanuss : gs ·연 :us「ミョモgkm鞋*圈
horis Einī£ftog, sẽ "( ) je ulls gò una sg) uren §1ựse - No‘(它已翻唱唱卢姆?g间图igueg *p:电egns學5T "(七長德57rTA『대)
sıcss&offsiri f ' + osoɛsɛ os suo ulo Ø urneyTQTE)*咀區nn風后。馬風風n己暗
*( 4. stologo) qıloğșúfusē - usī ‘s go greșkogo) ¿oebiziler assassaegs\s*:', os sunsargs
ஏபி கு)Ito lygıņğnıɛɛsɛ sɛ는m토神德uwing)'(+ 1,9577 s-a)(simus&ns5īņ:FfisegநிEosoɛ ɔ : * two sprisஓரி

Page 102

"பண்டாரநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம்" ஏற்ற 'தொரு பொருளாக அமைந்தது எங்கள் கலந்துரையாடலுக்கு தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சியிற் கண்ணும் கருத்துமாயிருந்து வரும் கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்கள் தொடக்கி வைக்க, மிகவுஞ் சிறந்த தர்க்க ரீதியான பேச்சுக்கள் பல தொடர்ந்தன. வாதி பிரதிவாதிகள் தங்கள் வார்த்தைச் சாலங்களாலும் பேச்சு வன்மையாலும் அங்கு கூடியிருந்த பல பேராசிரியர்களையும் மாணவர்களையும் மகிழ்வித்தனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் நாவன்மைப் போட்டி இம் முறை சிறந்த முறையில் நடைபெற்றது. ஏழுபேர் கலந்து கொண்டனர். ஏற்றமுடைய பேச்சுகளைக் கேட்டோம். திரு மு. கணேசசுந்தரம் முதலிடத்தையும், திரு. கே. சி. லோகேசு வரன், இரண்டாமிடத்தையும் பெற்றனர். இப்போட்டியின் போழ்து எம் அழைப்புக் கிணங்கி நடுவர்களாக இருந்து எம் *மைப் பெருமைப்படுத்திய வண. பிதா. தனிநாயகம் அடிகள், திரு: கே. நேசையா, திரு. தனஞ்செய ராசசிங்கம் ஆகிய மூவர்க்கும் எம்.நன்றி உரித்தாகுக.
இவ்வாண்டு, சென்ற ஆண்டு நடைபெருத கொழும்பு பேராதனைப் பல்கலைக்கழகங்களின் சொற்போர் நடைபெற் றது; திருவாளர்கள். ஏ. பி. வி. கோமசு, எம் கணேசசுந் தரம், கே. சி. லோகேசுவரன் ஆகிய மூவரும் இச்சங்கத்தின் சார்பில் வாதித்தனர். "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை? என்னும் பொருள்பற்றி நடந்த இவ்விவாதத்தில் பல பொருட் செறிந்த பேச்சுக்களைக் கேட்கும் சந்தர்ப்பம் கிட்டியது எமக்கு.
"கலைவிழா"-சங்கம் என்றும் கண்டிராத முறையில் நடை பெற்றதொரு நிகழ்ச்சி. சங்கத்திற்கென ஒரு தனிக்கொடியை -ஏடு, யாழ், கண் ஆகிய மூன்று சின்னங்களையும் தன்னகத்தே கொண்டு, இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழையும் பிரதிபலித்த கொடியைக்-கண்டோம். இம்முறை பெரும் \பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்ற காலை நிகழ்ச்சியிற் கலாநிதி. அ. சதாசிவம், திரு. க. இரத்தினம் போன்ருேரின் சிறந்த சொற்பொழிவுகளைக் கேட்டு மகிழ்ந்தோம். மாலை நிகழ்ச்சிகளில் நாட்டியமும் நாடகமும் இடம் பெற்றன. வெள்ளவத்தை இசைக்கை
73

Page 103
மன்றர் தாரின் சிறந்த நாட்டியமும், காங்கேசன்துறை வசந்த கான சபாவினரின் 'அரிச்சந்திரன்" கொட்டகைக் கூத்தும், கண்ணுக்கும் காதுக்கும் விருந்தாய் அமைந்து களிப்பூட்டின. இவ்விழாவிற்குத் தனிச்சிறப்பை அளித்தது இக்கொட்டகைக் கூத்தேயாம். பழைய நாட்டுக் கூத்தினைப் புதிய முறையிலே தயாரித்து அளித்தவர் கலாநிதி சு. வித்தியானந்தன். இவர். இலங்கைக் கலைக்கழகத்தின் நாடகக் குழுவின் தலைவர். எனவே, அக்குழுவின் சார்பாக, எல்லாச் செலவுகளையும். பொறுத்து, இக்கூத்தினை அரங்கேற்றி எமது கலைவிழாவைச் சிறப்பித்தமைக்கு அவருக்கும், இலங்கைக் கலைக்கழகத் தமிழ். நாடகக் குழுவினருக்கும் எமது உளம் நிறைந்த நன்றி உரித் தாகும். முத்தமிழை வளர்க்க முன்வரும் எம்போன்ருேர்க்கு, இவை போன்ற இசை, நாட்டியம், நாடகம் முதலியவற்றை வளர்ப்பதற்கு இத்தகைய ஊக்கம் பிறரும் அளித்தல் வேண் GSi.
இவ்வாண்டின் நிகழ்ச்சிகளை இவ்வளவு சிறப்பாக நடத்தி முடிக்க எமக்கு ஊக்கமளித்து, உற்ற உதவிசெய்து, உறுதுணை யாய் நின்ற பல பெரியாருக்கும், பேராசிரியர்களுக்கும், ஆற். றல் மிக்க நண்பர்களுக்கும் ஏனையோர்க்கும் எம் அன்பு கனிந்த, நன்றி உரித்து.
ஏ பி. வி. கோமசு,
(செயலாளர்)
74

டைமன் மார்க் கோப்பி பதிவு இலக்கம் 10522 இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் மிகவும்முன் னேற்றமாகி பொது மக்களின் ஆதரவை அமோக மாகப் பெற்ற டைமன் மார்க் கோப்பியை யாவரும் வேண்டிப் பாவித்து இன்பமடையுங்கள். உற்பத் தி ஸ்தானம்: DIAMOND COFFEE Company டைமன் கோப்பிக் கொம்பனி 178, பழைய சோனகத் தெரு, கொழும்பு 12
லேகியங்களுக்குளெல்லாம் சிறந்தது
O - O ஒட்டக மார்க் லேகியம் பதிவு நெம்பர் 13782 யூனணி வைத்திய முறைப்படி உயர்ந்த கடைச் சரக்குகளி னலும் மூலிகைகளிலுைம் வைத்திய மு  ைற யி ல்  ைக தேர்ந்தவராலும் இந்திய அரசாங்க அத்தாட்சி பெற்ற வராலும் தயாரிக்கப் பட்டது.
திரேகத்திற்கு ஆரோக்கியத்தையும் புஷ்டியையும் வனப்பையும் வலிமையையும் தருகிறது. ஒரு முறை பரீட்சித்தால் உண்மை விளங்கும்.
ஹக்கீம் S. P. Z. மாலிமார் (இந்தியன் மெடிக்கல் பிறக் டிசனர்) எங்கள் லேகியம் இலங்கை அரசினர் பரிசோதகர் அவர்களால் சோதிக்கப் பெற்றது. லுக்மான் லேகிய ஸ்டோர் (கன்ன தோட்ட, று வான்வெல்ல)

Page 104
மல்லிகா ஸ்டோர்ஸ்
=======
நவதானிய மாளிகை
அன்புடையீர் !
எங்களிடம் எல்லாவிதமான பலசரக்குச் சாமான்களும், அரிசி, மா, சீனி முதலிய பொருட் களும் மொத்தமாகவும் சில்லறையாகவும் நியா யமான விலைக்குப் பெற்றுக்கொள்ளலாம்.
மற்றும் சாய்ப்புச்சாமான்கள், பீடி, சிகறெட் சுருட்டு, பு ைகயிலை முதலானவைகளும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கப்படும். - எண்ணெய், கரி முத லானவைகள் எந்நேரமும் மொத்தமாகவோ சில்லறை யாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
வீட்டுப் பாவனையாளர்களுக்கு பல சரக்குச் சாமான்கள் விஷேட கவனமாக விற்பனை செய் வதற்கு ஒழுங்குகள் செய்துள்ளோம்.
No. 59, பிரவுண்ரிக் வீதி, கண்டி,
MALLIKA STOREs.
No 59, Brown Rigg Street,
- Kandy.
 
 

FOR ALL YOUR REQUIREMENTS IN HIGH CLASS BISCUITS CONSULT
MAN BSCUTS
GEM, DINNER, BABY, MARY, FEB, GINGFRNUT, COMBINATION, CREAM, BABY RUSK, BUTTER PUFF, WEDDING CAKES ETC,
R. SUBRAMANIAM Thopputhota,
Dankotuwa.
| MANIl BISCUITS
மணி விஸ்கோத்துகள் உங்கள் தேவைகளுக்கு உயர்தர விஸ்கோத்துகளுக்கும் மணி விஸ்கோத்துகள் வாங்குங்கள். ஜெம், டின்னர், பேபி, மேரி, பெப்பருமெண்ற், ஜின்சர் நற், கொம்பிநேசன், கிறீம், பேபி றஸ்க், பட்டர் பப், கலியான கேக்குகள், முதலியவற்றிற்கு, R. சுப்பிரமணியம்
தொப்பு தோட்ட, தங்கொட்டுவ,
SLSLSLS SL SLS SSSCSCSSSSLS

Page 105
|
யானை மார்க் சுருட்டு 1
பதிவு இலக்கம் 12949.
கால் நூற்கு ன்டுகளுக்கு : மேல் பிரசித் தி பெற்றதும்
Li
LOT ர் தொழில் நிபுணரால் நற்சாட்சிப் ர் 品 | க்
பத்திரம் வழங்கப்பெற் றதும்,
ரு காரம், மணம், குணம், ஒருங்கே ரு
' டை அமையப் பெற்றதுமாகிய ஐட யே யே ா நீ டிஸ் யான அடையாள
LUT LT வி முள்ள சுருட்டுகளே பாவித்து வி
내 甲 ங் உற்சாகமடையுங்கள.
T
உற்பத்தியாளர்கள்: மு. சின்னப்பு சகோதரர்கள்
அளவெட்டி வடக்கு,
யாழ்ப்பாணம்.

Now Showing at
KINGSLEY
★ PLAZA
THE UNPARALLED
SIWAJI
PLAY'S ADUAL
ROLE WITH
THE E WER FRESH
PADMINI
WN
VENUS PICTURES
MAMMOTH
PRODUTION ଝୁଟ୍ରୁ
UTTHAMA PUTIHIRAN
-A Cinelas Ltd. Release
PRINTED AT THE SUTANTIRAN PRESS, COLOMBO - 12.

Page 106
All over
more an
people a
பிரிஜ்ஸ்டோ6
? TUCK
JAFFNA DEALERS : - 4
 
 

Ceylon di more 'e Using
ன் டயர்ஸ்
ERS of course
عليه سيتيييييييييييييييييشتنشتي.
AUTTOS LTD.