கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிவேதினி 1995.04

Page 1
நிவே
பெண் நிலை6
மலர் 2 இதழ்
பெண்கன் கல்வி,
tot 5
அற ”
 

தினி
பாத சஞ்சிகை
சித்திரை 1995
ஆய்வு நிறுவனம்

Page 2
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம் ஒரு அரசாங்கச் சார்பற்ற பெண்களுக்கான ஸ்தாபனம். சமூகங்களிடையே ஒற்றுமை, சமூக மாற்றங்கள், ஜனநாயக பண்புகளை நிலைநாட்டுதல் போன்ற குறிக்கோள்களைக் கொண்ட இந்நிறுவனம், சகல இன பெண்களின் முன்னேற்றத் திற்காக உழைக்க முற்பட்டுள்ளது.
இலங்கையில் பெண்கள் நிலை பற்றிய பல்வேறு அம்சங்களையும் நன்கு கற்று ஆய்வு செய்தல் இதன் முக்கிய நோக்கம். இலங்கையில் பெண்கள் சம்பந்தமான ஆவணங்கள், வளங்கள் ஆகியவற்றை சேகரிக்கும் இந்நிறுவனம், மூன்றாம் உலகிலே பெண்களின் நிலைபற்றி ஆய்வு செய்யும் அமைப்புகளின் ஒரு பகுதியாக இருக்கும்.
**sisnyawa 8ss
o
பால் வேறுபாடு காரணமாக ஏற்படும் விளைவுகளைப் பற்றி இந்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல்.
பெண்எழுத்தாளர்களையும் ஆராய்ச்சியாளர்களையும், ஊக்குவித்தல், அத்துடன் பெண்களால் எழுதப்படும் சிங்கள, தமிழ், ஆங்கில நூல்களை வெளியிடுதல்.
பெண்கள் சம்பந்தப்பட்ட விடயங்களைப் பரப்புதலும், பெண்நலம் சம்பந்தப்பட்ட விடயங்களில் பெண்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, அக்கறையைத் துண்டுதலும்.
இலங்கையிலுள்ள ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட குழுக்களுக்கான (அகதிகள், வேலையற்றோர், சேரிவாசிகள்) மீளக்குடியமர்வு முயற்சிகளில் ஒத்துழைப்பையும், ஊக்கத்தையும் நல்கல்.
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
 
 
 

இதழாசிரியரின் முன்னுரை
பெண்கள் தினம் எப்படி உருவானது?
விருந்தோம்பல் பண்பாடு - ராஜம் கிருஷ்ணன்
மாயை - சுக்கிரிவி
இலக்கியத்தில் பெண் வெறுப்பு - ஒரு விளக்கம் செல்வி திருச்சந்திரன்
சந்திப்பு - பவானி ஆழ்வாப்பிள்ளை
மூன்று சினிமாக்கள் - யமுனா ராஜேந்திரன்
முகாமைத்துவப் பதவிகளில் பெண்கள் அமரத் தயங்குவது ஏன்? - அன்னலட்சுமி இராஜதுரை
தமிழ்த் தினப் பத்திரிகைகள் காட்டும் மகளிர் நிலை - பாத்திமா சுல்பிகா
திருமணப்பாட்டு - புனரபி பாரதி
இலங்கைப் பாராளுமன்ற அரசியலில் பெண்கள் - ந. சரவணன்
பெண்களுடன் ஒரு பட்டறை
தமிழாக்கம் சாரு நிவேதிதா
10
12
20
23
34
43
54
61
88
92
14

Page 3
இச்சஞ்சிகையில் பிரசுரமாகும் கட்டுரைகளை ஆசிரியரின் அனுமதியுடன் மட்டுமே மறு பிரசுரம் செய்யலாம். கட்டுரைகளிலும் கவிதைகளிலும் பிரதிபலிக்கும் கருத்துக்கள் அவ்வவ் ஆசிரியர்களின் சொந்தக் கருத்துக்களே, இதழாசிரியருடையவை அல்ல.
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம்
58 தர்மராம வீதி கொழும்பு -06 இலங்கை
: 5909 85
ISSN. 1391 - 0.353
 

இதழாசிரியரின் முன்னுரை
மூன்றாவது தமிழ் நிவேதினி வெளிவரும் பொழுது இலங்கையின் சமகால வரலாற்றில் ஒரு மாற்றம் தோன்றியிருப்பதைக் காண்கிறோம். எல்லோரும் வரவேற்கும் இந்த சமாதானக் குரல் எம்மையும் புல்லரிக்கத்தான் செய்கின்றது. பொதுவாக எல்லாவித அடக்குமுறைகளும் சுதந்திர மறுப்புக் களும் உரிமை மீறல் களும் ஒருங்கிணைந்துதான் செயல்படும். ஒன்றின் தொடர்ச்சி மற்றதைத் தொடர ஒன்றின்தாக்கம் ஏனையதைத்தாக்க ஒரு முழுமையான சர்வாதிகார அடிப்படையில் அரசு அதிகாரத்தைப் பலப்படுத்தும். இத்தகைய ஒரு அரசே தற்போது மக்களின் சாத்வீக கரங்களினால் முறியடிக்கப்பட்டு விட்டது. இனவொடுக்கமும் இலஞ்சம் வாங்கலும் கூட ஒருமைப்பட்ட வக்கிரபுத்தியின் பிரதிபலிப்புக்கள் தான். ஆத்மசுத்தி என்று வரும் பொழுது அது எங்கும் ஒரே தன்மையாகவே வெளிவரும். வர்க்க, இன, மொழி வேறுபாடுகள் நிதர்சனமான தரிசனங்கள். ஆனால் மேல், கீழ் என அவை வகுக்கப்படும் பொழுது எனது, உனது, அது மற்றையது, அந்நியப்பட்டது என்று ஓரங்கட்டப்படும் பொழுது தோன்றுவது தான் பகை உணர்ச்சி, குரோதம், பொறாமை போன்ற உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட இனவாதம் இந்த ஒடுக்குமுறைக்கும் பெண் அடக்குமுறைக்கும் அதிக வித்தியாசம் இல்லை. அவள் பெண், கீழ்ப்பட்டவள், வேறுபட்டவள், அவள் ஒதுங்கி நடக்க வேண்டும்-குனிந்து நடக்க வேண்டும், - அடங்கிப் போக வேண்டும், அவள் எனது உடமை, சேவகி, அடிம்ை, அடித்தால் உதைத்தால் புணிந்தேற்க வேண்டும் என்பனவெல்லாம் இன, வர்க்க ஒடுக்குமுறைகள் அடங்கிய கட்டளைப் பட்டியலை ஒக்கும். இனரீதியிலும், வர்க்க ரீதியிலும் ஒடுக்கப்படும் ஆணும் கூட பெண்ணை ஒடுக்குவதில் தப்பைப் காணுவதில்லை. அதனால் பெண், தனிநாடு போல தன்னியக்கக் கொள்கைகளை

Page 4
-5-
முன்வைக்கும் பொழுது எள்ளி நகையாடப்படுகிறாள். ஆனாலும் தனிநாடு கோராமல் பூரண உரிமையுடன் நாம் சமாதானம் தான் வேண்டுகிறோம். ஆயுதம் ஏந்தி யுத்தம் புரியவில்லைநாம். நீதித்துாய்மையுடன் அர்த்தமுள்ள பல பரிமாணங்களை அடக்கி அறிவு சார்ந்த வாதங்களையே முன்வைக்கிறோம். செவிடன் காதில் சங்கு ஊதும் நிலைமை தொடரக்கூடாது.
குடும்பம்.
பெண்ணியம் சம்பந்தமான சில விடயங்கள் அதி தீவிரக் கொள்கைகளை அடக்கியவையாகக் வெளிவரத் தொடங்கி விட்டன. அதில் ஒன்று குடும்பம் என்ற அமைப்பு தேவைதானா என்பது. அதற்கு விடை கூறுவதற்கு முன்பும் இந்தக் கேள்வி சரிதானா என்று கேட்பதற்கு முன்பும் ஏன் இந்தக் கேள்வி எழுந்தது என்ற கேள்விக்கு விடை காணுவது முக்கியம்.
தெய்வீகக் குடும்பம் என்ற கூட்டுக்குள்ளேயே, பெரும்பாலான வன்முறைச் செயல்களும் அடக்குமுறைகளும் கலாசாரம், மதஆசாரம், பண்பாடு, வழக்கு முறைகள் விழுமியங்கள் என்ற பெயரில் நடைபெறுகின்றன. இவற்றின் அழுந்திய பாரங்கள் பெண்ணை அலைக் கழித்து அவலங்கொள்ள வைத்ததின் பெறுபேறாக பல பெண்கள் வீடு என்னும் சிறைக் கூடத்திலிருந்து வெளிவந்துவிட வேண்டும் என்று துடித்தார்கள். இந்தத் துடிப்பை நடைமுறையாக்குகினோர் சிலர். இதை ஒரு வேண்டுகோளாக வைத்தனர் வேறு சிலர். இதை பெண்விடுதலையின் ஒரு வாதமாக்கி பல்வேறு கருத்துக்களைக் கோவையாகத் தொகுத்தனர். சிலர் குடும்பமும் வீடும் ஒரு பிரச்சினையாகக் கூட வந்து விட்டது. குடும்பத்தைத் தொலைக்க வேணும் என்று ஒரு ஆவேசக்குரல் கூட ஒலிக்கத் தொடங்கியது. தனிமனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத் தினை

-6- அழித்திடுவோம். என்ற பாரதியின் ஆவேசக் குரலும் இதைப் போன்றதே. பல தனிமனிதருக்கு இன்னும் உணவு கிடைக்கவில்லை. ஆனால் ஜகம் தொடர்ந்து இயங்குகிறது.
நாம் எழுப்பும் கேள்விகள் அவை-அது விடையாகக் கூட அமையலாம்-இந்தக் குடும்பத்துக்கு ஒரு மாற்று கண்டுபிடித்து விட்டோமா? மனிதரின் அத்தியாவசிய தேவைகளையும் உணர்ச்சிகளையும் பூர்த்தி செய்ய பகிர்ந்து கொள்ள வேறு ஒரு அமைப்பும் உண்டா? குடும்பத்தை அது ஈடுசெய்யுமா? Communes என்று அழைக்கப்பட்ட ஒரு வித கூட்டுக்குடும்ப அமைப்பு - உட்டோபியன் சோஷலிச வாதிகளால் (Utopian Socialist) முன்வைக்கப்பட்டது. என் குடும்பம் என் பிள்ளை எனது உடைமைகள் என்றில் லாமல் எல்லாமே எல்லோருக்குமே பொது உடைமை. இங்கு பிள்ளைப் பராமரிப்பு, சமையல், கூட்டுதல், போன்ற சகல காரியங்களுக்கும் பங்கு போட்டு பலராலும் பகிர்ந்து செய்யப்பட்ட ஒரு கூட்டுக் குடும்ப ஒழுங்குமுறை அனுட்டிக்கப்பட்டது ஆனால் பல காரணங்களால் அவ்வமைப்பு தோல்வி கண்டுவிட்டது.
வாதங்களும் நியாயங்களும் பெரும் பாலும் நடைமுறையனுபவங்களிலிருந்தே தோன்றுகின்றன. குடும்பம் கொடுமைகளின் இருப்பிடம், ஆகவே அதை நீக்க வேண்டும் என்ற கூற்று எனது அனுபவத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்றாக அமையவில்லை. அன்பும் பண்பும் நிலவிய எனது சிறுபிள்ளைப் பராய குடும்ப அமைப்பில் தந்தையில் தாய்மையைக் கண்ட (தாயில்லாதபடியால்) எனது அனுபவம் என்றென்றும் அந்த குடும்ப அமைப்பை நாடும் . ஆனாலும் அக்கம் பக்கத்தில் நிலவிய சம்பவங்கள் அவற்றை பார்த்த அனுபவங்கள் குடும்பத்தின் அர்த்தமின்மையையும் அதே சமயம் புலப்படுத்துகின்றது. இதனால் பெறப்படுவது யாதெனில் வாதங்கள் ஒரு பிரத்தியட்ச பூரண உண்மை நிலையை எப்போதும் அடித்தளமாகக் கொள்வதில்லை. ஆனாலும் குடும்பம் என்பது என்றுமே எப்பொழுதுமே ஒரு இலட்சிய அமைப்பாக விளங்கும் என்று கொள்வது

Page 5
-7-
முடத்தனம். அது கலையலாம், பின்பும் நிர்மாணிக்கப்படலாம். அதன் அங்கத்தவர்கள் மாறலாம், பிறர் சேரலாம். அதே போல அவ்வமைப்பு எப்பொழுதும் அக்கிரமங்களை உள்ளடக்கத் தொடங்குகின்றதோ, எப்பொழுது அவற்றை அகற்ற, மாற்ற, இயலாது என்று ஒருவருக்குத் தோன்றுகிறதோ அப்பொழுது அவர் அதை விட்டு விலகலாம் என்ற எண்ணம் இலகுவில் ஏற்கக் கூடியதாக இருக்க வேண்டும். குடும்பம் என்ற கட்டுக் கோப்பு குலையக் கூடாதென்பதற்காக அதற்குள்ளிலிருந்து ஒருவர் அவஸ்தைப்பட வேண்டும் என்ற நியதி மாற வேண்டும். மானிடரின் சந்தோஷத்திற்காகவே கட்டமைப்புகளும் நிறுவனங்களும் இருக்க வேண்டுமே அன்றி கட்டமைப்புக்களினதும் நிறுவனங்களினதும் ஸ்திரநிலைக்காக மானிடன் தன் சந்தோஷங்களைத் தியாகம் செய்யக்கூடாது.
மதமும் பெண்ணும்
மாத்தளை திருச்சி சாமியாரின் ஏமாற்று வித்தைகளுக்கும் அவரது கீழ்த் தர செய்கைகளுக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் பற்றிய சமீபத்திய செய்திகள் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. பொதுவாக மதம், ஆன்மீகம், சடங்குகள், பூஜைகள் என்று பெண்கள் தங்களை அவற்றில் ஈடுபடுத்தி சாந்தி தேடுகின்றனர். தற்போதைய அல்லல் தொல்லைகள், வறுமை, விரக்தி போன்றனவும், குமர் கரையேற வேண்டும் என்ற வேணவா, சீதன நெருக்கடி போன்ற குடும்பப் பாரங்களும் பெண்ணைப் பிரத்தியேகமாகத் தாக்குகின்றன. இதனால் கோயில்களில் பெண்களின் கூட்டம் அதிகரிக்கின்றது. வீட்டின் சாமி அறையிலிருந்து வெளிப்பட்டு வீதி ஒரமிருக்கும் கோயிலுக்கு வரம் வேண்ட வந்த பெண்களுக்கு , புனித ஆச்சிரமங்கள் என்று நினைத்து உள்ளே நுழைந்த பெண்களுக்கு , சாமியார் வேடத்தில் பாலியல் துன்பங்கள். பாவியர் போகுமிடமெல்லாம் பள்ளமும் திட்டியுமாக இருக்கும் என்பது பழமொழி- ஆனாலும் அப் பெண்கள் ஏன் பாவிகளாக

-8- எப்பொழுதும் இருக்கிறார்கள்? புதுமொழி பல சொல்லி வைத்துள்ளோமே! படியுங்கள் சிந்தியுங்கள். தெளிந்த மனங்களுடன் தெளிவுபடுத்துங்கள் மற்றையோருக்கும்.
யுகாந்தா-(ஒரு யுகத்தின் முடிவு) என்ற புத்தகத்தில் ஐராவதி கார்வே மகாபாரதத்தை ஒரு புதிய கண்ணோட்டததில் ஆய்வு செய்துள்ளார். சமூக அரசியல் நோக்கங்களில் மகாபாரதத்தின் கதைகளுக்கு சிறந்த வியாக்கியானங்களும் விளக்கங்களும் தந்துள்ளார். திரெளபதி, குந்தி காந்தாரி ஆகிய பெண் பாத்திரங்களின் படைப்பை அவர் விளக்கியிருப்பது ஒரு சுவாரஸ்ய மதிப்பீடு.
அதே ரீதியில் பகவத்கீதை ஒரு முரண்பாடுகள் நிறைந்த குழப்பம் மிகுந்த ஒரு உறுதியான நிலைப்பாட்டுக்குச் இட்டுச் செல்லாத, வழி காட்டாத நூல் என்று கூறியுள்ளார். அது சாதித்துவத்தையும், உயர்ந்தோர் ஆதிக்கத்தையும், சமகால சமூகவர்க்க வேறுபாடுகளையும் நிலைநிறுத்தும் ஒரு நூல் என்றும் ஒரு கருத்து உண்டு. இத்தகைய மதிப்பீடுகள் தெளிவுக்கும் பகுத்தறிவிற்கும் ஒரு உதாரணம். பெண் எப்பொழுதும் ஒரு கருத்துடன் உடன்படும், ஒத்துழைக்கும் பதுமையாக இருக்கக்கூடாது. இந்நிலைமை அவளை தங்கி நிற்கும் ஒரு மனப்பான்மைக்கு இட்டுச்செல்லும். சுயகருமி என்ற நிலையிலிருந்து கருவியாக்கப்படுகிறாள். விழுமியங்கள், நிலைப்பாடுகள் என்று சிலவற்றை ஏற்கப் பழக்கப்படுத்தப்படும் பொழுது அவற்றை பகுத்து அறியும் அறிவும் மழுங்குகின்றது. அடிமை, சேவகன் போன்றோருக்கும் அதே மனப்பான்மை தான் ஏற்படுகிறது. பெண் தன்னைத் தானே அடிமையாக்கப் பழக்கப் படுத்தப்பட்டுவிட்டாள். வீட்டில் தொடங்கிய இந்தப்பாடம் இப்பொழுதும் வெளியேயும் வந்து விட்டது. இது அவள் "இயற்கை" என்ற நிலையும் தோன்றி விட்டது. எப்பொழுது தீரும் இந்த மயக்கநிலை?

Page 6
-9- இந்த இதழைப் பற்றி . . . . .
இவ்விதழில் ஆய்வும், சிறுகதையும், விமர்சனமும் ஒண்றிணைந்துள்ளன. தமிழ்த்தினப்பத்திரி கைகள் காட்டும் மகளிர் என்ற தலைப்பில் சுல்பிகா இஸ்மைல் எழுதிய கட்டுரை நீள் ஆய்வின் ஒரு பகுதி. தொடர்பு ஊடகங்களில் பிரதிபலிக்கும் பெண்கள் எவ்வளவுக்கு யதார்த்த படைப்புக்களாக இருக்கின்றன, அவை எவ்வளவுக்கு பெண்களை இழிவு நிலைக்குத் தள்ளுகின்றன என்பதையிட்டு பல்வேறு துறைகளையும் பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம் ஆய்வு செய்தது. அதன் ஆங்கில ஆய்வுகள் The Image என்ற புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன சிங்கள தமிழ் ஆய்வுகள் நிவேதினியில் பிரசுரிக்கப்படுகின்றன. புகழ் பெற்ற எழுத்தாளர்கள் கூட சில சமயங்களில் பெண் நிலைவாதத்தைப் தப்பாகப் புரிந்துகொள்கிறார்கள் என்பதை யோகநாதனின் அந்திப்பொழுதும் அந்தாறு கதைகளும் என்ற சிறு கதை தொகுதியின் ஒரு கதைக்கு விமர்சனம் எழுதுவதன் மூலம் தெரிவித்துள்ளோம். பவானி ஆழ்வாப்பிள்ளையின் "சந்திப்பு", மனைவி ஒருத்தியைப் பார்த்துக் கணவன் மிக எளிதாக "விபசாரி கேடு கெட்டவள் வெளியே போ” என்று கூறுவதன் அனர்த்தங்களை அவருக்கே உரிய பாணியில் கூறி விளக்குகிறது. ராஜம் கிருஷ்ணனின் விருந்தோம்பல் என்ற கட்டுரை விருந்தோம்பல் பண்பு வரலாற்று ரீதியாக எப்படி வளர்ச்சியுற்றது, அது எப்படி பெண்ணை அதற்கு முழுப்பொறுப்பாக ஆக்கிவிட்டது என்றும் "விருந்தோம்பல்" என்பதன் வரையறை எப்படி நீண்டு விசித்திரமான பண்புகளைப் பெற்று விட்டது என்பதையும் மிக சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது. தமிழ் இலக்கியத்தின் செந்நெறியில் இருக்கும் பெண்வெறுப்புக் கொள்கைகளைத் திரட்டித் தருகிறது இன்னுமொரு கட்டுரை. வாசகர்களின் கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கின்றோம்.

பெண்கள் தினம் எப்படி உருவானது ?
பெண்கள் தினம் எப்படி உருவானது? பெண்களது பிரச்சினை, பெண்ணிலை வாதம் போன்றவற்றைப் பற்றிப் பேசும் போது நாம் கிளரா செற்கினை மறந்துவிடமுடியாது. ஜேர்மன் சோஷலிச பெண்கள் இயக்கத்தின் ஆரம்பகாலத் தலைவியாகவும், தொழிலாளர்கள் போராட்டத்தில் அவரின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகள் மூலமாகவும் அவர் பெண்கள் மத்தியில் என்றும் அழியாப்புகழைப் பெற்றுள்ளார்.
பெண்களுக்காக உழைத்து, போராடி, தியாகங்கள் L I @) செய்து, சமூக ரீதியாகப் பல சாதனைகளை இவர் படைத்தார். ஜேர்மனிக்கு உள்ளே ம்ட்டுமின்றி ஜேர்மனிக்கு வெளியில் உள்ள சோஷலிஸப் பெண்கள் அமைப்புக்களிலும் செல்வாக்குப் பெற்றிருந்த கிளரா செற்கின். அவற்றை வழிநடத்துவதிலும் பெரும் பங்காற்றினார்.
1907 இல் ஒரு சர்வ தேசப் பெண்கள் மகாநாட்டை ஸ்ருட்காட் நகரில் கூட்டுவதற்கு அவர் முன்னின்று உழைத்தார். இந்த மாநாட்டில் 15 நாடுகளில் இருந்து 59 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
1910ல் கோப்பன்காகனில் (டென்மார்க்) நடைபெற்ற இரண்டாவது பெண்கள் சர்வேதச மாநாட்டில் பெண்களுக்கு சர்வஜன வாக்குரிமையை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த மாநாட்டிலேயே கிளரா செற்கின் மார்ச் மாதம் 8ம் திகதியை சர்வேதசப் பெண்கள் தினமாக ஆக்க வேண்டும் என்றும் வேலை நேரத்தை 8 மணித்தியாலம் ஆக்கப்படவேண்டும் என முன்மொழிந்தார்.
முதலாளித்துவ வாக்குரிமை இயக்கத்துக்கு எதிராகவும் 1908 ஆம் ஆண்டு நியூயோர்க் நகரில் அமெரிக்க சோஷலிஸப் பெண்கள் நடத்திய ஊர்வல நாளான மார்ச் 8ம் திகதி

Page 7
-11தேர்ந்தெடுக்க்பபட்டது. இப் பிரேரணை மாநாட்டினால் பேராதரவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 

-12விருந்தோம்பல் பண்பாடு.
ராஜம் கிருஷ்ணன்.
தந்தையாதிக்கம் நிலைப்படுவதற்குமுன் திருமண ஒழுக்கம் என்பது வழக்கில் வந்திருக்கவில்லை என்பதை, மராத்திய சமூகவரலாற்றறிஞர் காலஞ்சென்ற ராஜ்வாடே தம் பாரதியத்திருமண முறைகளின் வரலாறு என்ற நூலில் குறிப்பிடுகிறார். வேறு குழுக்களில் இருந்து பெண்கள் கட்டாயமாகத் துரக்கி வரப்பட்டனர் என்பதற்குச் சான்றாக, சொற்களின் மூலங்களை இவர் ஆய்ந்து கூறுகிறார்.
பித்ரு- அல்லது பிதா- (தந்தை) அப்பா. இச்சொல்லுக்கு 'பா' என்ற சொல்மூலம் பா என்றால் பாவித்தல் அல்லது குழுவை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றல்- அதற்காகப் போராடக்கூடியவர்.
மாத்ரு அல்லது மாதா (தாய்) அம்மா 'மா' என்ற சொல் உணவைக் குறிக்கிறது. ஒரு தாய் -அம்மா தன்னிலிருந்தே பெற்ற சேய்க்கு உணவளிக்கிறாள். தாயின் மார் பில் சுரக்கும் பாலை, இன்றளவும் குழந்தைக்கு"மம்மம்' என்றே குறிப்பிடப்படுகிறது. அம்மா, மாதா, மம்மா, போன்று உலகின் மொழிகளில் எல்லாம் 'மா' என்ற சொல் உணவாக வியாபித்து அந்த உணவை அளிக்கும் முதல்வியாக அன்னையைக் குறிக்கிறது எனலாம். எனவே தானிய உணவோ, இறைச்சி உணவோ, எது வானாலும் குழுவினருக்குப் பகிர்ந்தளிக்கும் பொறுப்பை இந்த தாய் ஏற்றிருக்கிறாள்.
ப்ராத்ரு அல்லது ப்ராதா-குழுவுக்குத் தேவையான பொருட்களைப் பெற்று வந்து ஆதரிப்பவன்.
பாத்ரு அல்லது பர்த்தா பெண்களை வேறு குழுக்களில் இருந்து பலவந்தமாகக் கடத்தி வருபவன்.

Page 8
-13துஹித்ரு-துஹிதா(Daughter) என்ற ஆங்கிலச் சொல்லின் எழுத்துக்கள் இந்த மூலத்தில் நிலை கொண்டதே) பால் சுரந்தளிப்பவள் குழுவுக்கான மந்தையில் இருந்து பால்சேகரிக்கும் பணியை இவள் மேற்கொள்கிறாள்.
Luigi தனியாக ஒரு வீடமைப்பவன். சுகந்திரமாக வாழ முற்படுபவன்
பத்ணி இந்த வீட்டை ஒழுங்கு செய்வபள். இந்த இரு சொற்களும், குழுவாழ்வை விடுத்துத் தனிக்குடும்பமாக வாழத்தொடங்கிய பின்னரே பிறந்தவை.
பார்யா என்ற சொல்லுக்குக் கடத்திக் கொண்டு வரப்பட்டவள் என்பேத பொருள்.
பதி-பத்ணி பதி தனிக்குடும்பக்காரன் பத்னி-பதியை உடைய ஒரு பெண் 'பத்தினி' என்று இந்நாட்களில் குறிக்கப்பெறும் கற்புப் பொருளுக்கும், இந்த மூலத்துக்கும் தொடர்பை ஊகிக்கலாம். இவ்வாறாக தந்தையாதிக்கம் நிலைப்படுவதற்கு ஆண்-பெண் உழைப்புப் பிரிவினை அடித்தளம் அமைத்தது.
ஆடவர் வெளியே சென்று வேட்டையாடினர், விலங்குகளை உயிருடன் பிடித்தப் பழக்கினர். கொட்டிலில் கொண்டுவந்து கட்டினர். காடுகளை அழித்து நிலம் சீராக்கி விளைநிலமாக்கினர். நீர்பாய்ச்சி, தானிய உற்பத்தியில் ஈடுபட்டனர். பெண் ஓரிடத்தில் தங்கி நிலையாக நெருப்பைக்காத்தாள். கன்று காலிகளைப் பேணினாள். நீர் கொண்டு வந்து உணவு தயாரிக்கும் பொறுப்பை ஏற்றாள். கன்னிப்பெண்கள் பால்கறந்து தயிர் , மோர் தயாரித்தளித்தனர். தோல், கம்பளி ஆடைகளைத் தயாரித்தனர். இந்தத்துவக்கம் பின்னர் பருத்தி-பட்டு நெசவு வேலையையே பெண் களுக்குரியதாக வளர்ந்தது எனலாம். வீட்டுக்குத் தேவையான

-14அடுப்பும் பாண்டங்களும் கூட இவள் கைகளினால் உருவாயின.
இல்லத்தில் இருந்த படியே செய்யும் பணிகளனைத்தும் இவள் செய்ததால், இல்லத்து நாயகி, மனைவி என்று முக்கியத்துவம் பெற்றாள்.
தந்தையாண் சமுதாயம், பெண்ணைத் தாய் மக்களிடம் இருந்து பிரித்து தங்களிடையே கொண்டுவந்து ஊன்றச் செய்யும் நிகழ்ச் சரியையே திருமணச் சடங் காக உறுதிப்படுத்தியது.
பலவந்தமாகப் பற்றி வராமல், அன் போடும் அணிகலன்களோடும் பரிசில்களை வழங்கி,மக்ளுக்குப் பெற்றோர் பிரியாவிடை கொடுத்து அனுப்ப, மணமகன் அவளைத்தன் இல்லத்துக்கு அழைத்து வந்தான்.
இங்கு இந்த இல்லத்தின் அரசியாக நீ வாழ்வாயாக, இந்த இல்லத்ததுக்குச் சொந்தமான கன்று காலிகளுக்கும் நீயே எஜமானி ! இந்த வீடு, சுற்றம், வண்மைகள், எல்லாம் உனக்கு உரியவை என்று புதிய வீட்டுக்கு அவளை பொற்றோரணங்கள் வளைத்து, மங்கல வாசகங்க்ள் சொல்லி வரவேற்றார்கள். ருக்வேதம் காட்டும் திருமணச்சடங்கின் சாரம் இதுவே.
பிறந்த மண்ணில் இருந்து பிரிக்கப்பட்ட இவள், இப்படி பூவாரங்களாலும், பொன்னாபரணங்களாலும் போற்றப்பட்டாலும், இவளுக்கும் இவள் உடமைகளுக்கும் உரியவன் 'ஆண்' என்று தீர்ந்தது. மண்ணும் பெண்ணும் ஓர்ஆணின் உடமைகள் என்றாயின பின் மனித வாழ்க்கையில் இனங்களுக்களுக்கிடையே மோதலும், போர்களும், கொடுக்கல் வாங்கல் சமரசங்களும் விரிவு பெறலாயின.

Page 9
-15
கொடுக்கல் வாங்கல் சமரசங்களில் "பெண் 1 அடிமைகளாக இருந்த நிலையிலும், அரசிளங்குமாரிகளாக இருந்த நிலையிலும், எந்த வேற்றுமையும் இல்லாமலே பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டனர். தாழ்ந்தகுல அடிமைகளும் யவனம் மிசிரம், போன்ற நாடுகளில் இருந்து வந்த அரசிளங் குமாரிகளும் இந்தியக் கலப்பினத்துக்குத் தங்கள் வண்ணங்களையும் வனப்பையும் நல்கியிருக்கிறார்கள். இத்தகைய சமுதாய முன்னேற்றம் ஒரு புறம் இருக்கையில் இன்னொரு மரபும் தோன்றி வந்து இணைந்தது. இனக்குழுக்களிடையை ஒரு பெண்ணணைத் தன் வாழ்க்கைக்கு உரிமையாக்கிக் கொண்டு ஒவ்வொருவரும் பயனடைய முடியாத நிலையும் இருந்தது. உடல் வலிமை, பொருள்வலிமை, இரண்டும் இல்லாத சிலர் போருக்கும் மோதலுக்கும் வாழ்க்கையில் இடமில்லை என்று முடிவு செய்தனர். கானகங்களில் தனியிடங்களாக நாடிச் சென்றனர். புலன்கள் பால் சென்ற மனதை ஒடுக்கி, மேலாம் அறிவொளியைப் பெறச் சிந்தனை செய்தனர். புதிய தத்துவங்களைக்கண்டனர். இவர்களின் படைப்பாற்றல், கவினுறு ஒலிக் கோவைகளாக அற்புதப் பாடல்களாக வெளிப்பட்டன.
பல்லாண்டுகள் இயற்கையின் மடியிலே தவவாழ்வு வாழ்ந்து உள்ளொளி காணப்பயின்ற இச்சான்றோர். தாம் பெற்ற அனுபவங்களை , அறிவை, குழுக்களுடன் பகிர்ந்து கொண்டு பயன்பெற முன்வந்தனர். இவர்கள் தலைமையில் குருகுலங்கள் தோன்றின. இவர்களே ருஷி 'முனி" என்ற சிறப்புச் சொற்களால் வழங்கப்பெற்றனர்.இவர்கள் துறவிகள் அல்லர். இத்தகைய சான்றோருக்குப் பெண்ணைக்கொடுத்து, அவர்கள் வாயிலாகச் சந்ததிபெறச்செய்வது மேலாம் புண்ணியமாகக் கருதப்பட்டது. 'கன்யாதானம்' என்ற சொல்லே இந்த மேன்மையைக் குறிக்கிறது. பிரும்மமுறை, தெய்வமுறை பிரஜாபத்திய முறை, அர்ஷமுறை ஆகிய திருமண முறைகள் எல்லாமே ஓர் ஆணுக்கு இல்லறம்

-16
நடத்தி சந்ததி பெருக்குவதற்காக, வாழ்க்கைத்துணையாக ஒரு பெண்ணை அளிப்பதாகவே உணர்த்துகின்றன.
தந்தையாதிக் கம் தொடக் க காலங் களில் பெண்ணைச் சுதந்தரமே இல்லாதவளாக்கிவிடவில்லை என்றாலும், பெண் மனையையும் பேணி, மக்களைப் பெற்று சமுதாய உற்பத் திக்கு இன்றியமையாத வளாகக் கருதப்பட்டதால் விருந்தினருக்கும், தேவைப்பட்டவருக்கும் இவள் சந்ததிக்காக வழங்கப்பெற்றாள்.
மனித வாழ்க்கையில், சாதனங்களும், பயன்படு பொருட்களும் கூடிய பிறகு, "தாய்மை" என்ற இலட்சிய நோக்கம் இழிந்து, போகம் என்ற உணர்வு தலைதுாக்கியது.
இந்த நிலையை, மகாபாரத இதிகாசத்தில் வரும் பல வரலாறுகள் விளக்குகின்றன. அனுசாயன பர்வம் இரண்டாம் அத்தியாயத்தில் சுதர்சன் வரலாறு காணப்படுகிறது.
இல்லற தருமத்தில் முக்கியமான பண்பாடு விருந்தோம்பலாகும். சுதர்சன முனிவர் தம் மனைவி ஒகவதியிடம் இக் கடமையை வலியுறுத்துகிறார் . விருந்தோம்பும் தருமம், எப்போதும், எந்த நிலையிலும் ஆற்ற வேண்டியதாகும் . உடலையும் கூட விருந்தினருக்கு அளிப்பதற்கு நீ தயங்கலாகாது" என்று அறிவுறுத்துகிறார்.
சோதனைக் காலமும் வருகிறது. முனிவர் வெளியே சென்றிருக்கும் தருணத்தில் ஒரு விருந்தினர் ஆச்சிரமத்துக்கு வருகிறார். ஒகவதி, விருந்தினருக்குரிய அனைத்து மரியா தைகளையும் உபசாரங்களையும் அளிக்கிறாள். விருந்தினரோ,அவளுடைய உடல் போகத்தையும் வேண்டு கிறார். கணவரின் அறிவுரைகளைச் சிரமேற்றாங்கிய அந்த மனைவி விருந்தினரின் விருப்பத்தையும் நிறைவேற்றுகிறாள்.

Page 10
-17
முனிவர் ஆசிரமம் திரும்பியதும் நடந்ததைச் செவியுற்று மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறார். இத்தகைய விருந்தோம்பல் மேன்மையினால் சுதரிசனரின் புகழ் மூவுலகிலும் பரவியதாம். ஆனால் மகாபாரத்தில் சாந்திபருவம் 266ம் அத்தியாயத்தில் சிரகாளி என்பவரின் வரலாறு வருகிறது. சிரகாளியின் தந்தை, கோதமர். ஒரு சமயம் அவர் ஏதோ பணி நிமித்தமாக ஆச்சிரமத்துக்கு வெளியே சென்றிருந்தார். அப்போது விருந்தினர் வடிவில் வந்த இந்திரன் ஆச்சிரமத்துக்கு வந்தான். சிரகாளியிடம் , அவனுடைய அன்னையை அனுபவிக்க விரும்பியதைத் தெரிவித்தான். விருந்தோம்பல் தருமத்தை உயர்வாகக் கருதிய சிரகாளி, தாயை விருந்தினருக்கு அளித்தான். (ஒகவதி தானே அத்தருமத்தை நிறைவேற்றினாள். இங்கு சிரகாளியினால் அளிக்கப்பெறுகிறாள். எனவே பெண் வெறும்சடப் பொருளின் நிலையில் உறுதியாக்கப்பட்டிருப்பதைக் கவனிக்கலாம்.)
கோதமர் ஆசிரமம் திரும்பினார். இதைக் கேள்விப்பட்டதும் அவருக்குச் சினம் மூண்டது. சிரகாளியை வலிந்து, அன்னையை உடனே கொன்றுவிடும்படி பணித்தார். மன அமைதி நாடி வெளியேறினார். தனிமையில் சென்றமர்ந்து ஆற அமர யோசனை செய்தார். "சிரகாளி விருந்தோம்பல் தருமத்தையன்றோ செய்தான் இதில் ஒரு தவறும் இல்லையே? சினத்தால் அறிவு குருடாகி விட ஒரு தாய்க் கொலைக்குக் காரணமாகி விட்டேனே என்று வருந்தினர். உடனே முனிவர் விரைந்து ஆசிரமம் திரும்பினார்.
சிரகாளி அன்னையைக் கொன்றிருக்கவில்லை. அவள் நின்ற இடத்திலேயே சிலையாக நின்றிருந்தாள். அவனும் தாயைக் கொல்லத்துணிவின்றி அதே இடத்தில் நின்றான். கோதமர் மன மகிழ்ந்து அகம் குளிர்ந்து இருவரையும் வாழ்த்தினர் சிரகாளியின் புகழ் இதனால் ஓங்கியதாக இந்த

-18
வரலாறு கூறுகிறது. இதே மகாபாரதத்தில் வரும் ஒரு வராற்றுக்குறிப்பை, ராஹ "ல ஸாங்க்ருத்யாயன் தம் மனித சமுதாயம் என்ற நூலில் (பக்23) இவ்வாறு குறிப்பிடுகிறார். திருமணம் என்ற ஒழுங்குமுறை நெறியாக வழக்கில் வராவிட்டாலும், ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விரும்பிச் சேர்ந்து வாழத் தொடங்கியதும் ஓரளவில் அது ஒருவன்-ஒருத்தி என்ற ஒழுங்கில் வரலாயிற்று. ஆனால் 'திருமணம்' என்ற அழுத்தமான நெறிவரம் பு வந்துவிடவில்லை.
சுவேதகேது என்பவரால் தான்திருமண ஒழுக்கம் விதிக்கப்பட்டதாகஅவர் கூறுகிறார்.
சுவேதகேதுவின் தாயை ஒரு ருஷி விரும்பி உறவு கொள்ள அழைத்துச் சென்றார். இது சுவேத கேதுவின் முன்னிலையில் நிகழ்ந்தது ஆனால் சுவேதகேதுவின் தந்தைக்கு இது விரோதமாகத் தோன்றவில்லை . விரும்பிய விருந்தினர் கூடலுக்கு அழைத்துச் செல்வது, அன்றைய மனித சமுதாயம் மதித்து ஒப்புக் கொண்ட தர்மமாக இருந்தது. அப்போது சுவேதகேது, இத்தகைய நடைமுறைக்கு முடிவு கட்டுவதாக உறுதிபூண்டார். பின்னர் அவர் 'ருஷி' என்ற மேன்மைக்கு ஏற்றம் கண்ட பிறகு 'திருமணம்' என்ற புதிய ஒழுக்க நடைமுறையை அழுத்தமாக விதித்தாரம்.
கிரேக்க அறிஞர் ஸாகரடீஸைப் பற்றி அநேகமாக எல்லாரும் அறிவார்கள். இவருடைய வரலாற்றில், இவருடைய மனைவி, அறிவிலி, கணவரையும் அவர் அறிவார்ந்த நண்பர்களையும் இகழ்ந்துரைத்தாள், மேல் மாடியிலிருந்து இவர்கள் மீது அழுக்கு நீரைக் கொட்டினாள் என்ற விவரங்கள் அழுத்தமாகக் கூறப்பட்டிருக்கின்றன. இந்த ஞானி ஸாக்ரடீஸ் "இடி இடித்தது, மழை பெய்தது , என்று நகைச் சுவையுடன் அதை ஏற்றதையும் குறிப்பதாக முதன்மைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ஸாக்ரடீஸ்,

Page 11
-19தம் மனைவி 'ஜான்டிப்"பை தம் நண்பர்கள் அனுபவிக்க வழங்கினார் என்ற செய்தி எப்போதும் கூறப்படுவதில்லை. அது அக்கால தருமம். அந்தப்பெண்மணி ஏன் அகங்காரியாக ஆத்திரப்பட்டிருப்பாள் என்பதற்கு நியாயங்களை யாருமே தேடவில்லை. பெண் மனித மதிப்பை அப்போதே இழந்து விட்டாள்.
Published by W E R C
Book 夔
Avaliable at W.E.R.C and in other leading
shops in Colombo.
Edited by Sely Thiruchandran
Sinhala
The Articulation of Genderin Cinematic Address. 'a as::::::::::::: 2 - Malathi de Alwis :
Neluka Silva မွို
Womens as Gendered Subject and othe Discourses in One temporary Sri Lankan Fiction in English - Nelufur de Mel
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுக்கிரிவி
அந்திப் பொழுதும் ஐந்தாறு கதைகளும் என்ற சிறு கதை குறு நாவல் தொகுப்பில் மாயை என்ற சிறு கதையே இங்கு கட்டுரைப் பொருளாகதேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. “மாதர் விடுதலை இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட ஒருத்தியைக் கதைத் தலைவியாகக் கொண்ட கதை இது. மாதர் விடுதலை இயக்கம் பலபோரல் பிழையாக விளங்கப்பட்டுவிட்ட ஒரு துர்ப்பாக்கிய நிலையை பல தரம் சந்தித்த அனுபவம் எனக்குண்டு. அவ்வியக்கம் சார்ந்த கொள் கைகளும் , நடப்புகளும் ஆக்கங்களும் கொச்சைப்படுத்தப்பட்டும் உள்ளன. இக் கதையிலும் அதன் சாயல் தெரிவதாக நான் நினைக்கிறேன். மாயை என்ற தலைப்புக் கூட ஒரு ஸ்திரமற்ற நிலையற்ற ஓடி மறையும் ஒரு வஸ்துவை நினைவூட்டுவதாக அமைந்து விட்டதும் ஒரு உண்மையே.
பெண்நிலைவாதிகளது உடை, நடை, பாவனை, செயல்முறைகள் போன்றன பொதுவாக கண்டனத் திற்குள்ளாவது உண்டு. சம்பிரதாய, சமுதாய மரபுகள் பெண்ணுக்கென்று வகுக்கப்பட்டனவற்றை எதிர்க்க முன்வரும் பெண்நிலைவாதிகளிற் சிலர் அவ்வெதிர்ப்பை சில சின்னங்கள் epa) (p b (Signs & Symbols ) (35plufG 561 Cyp gu (plb வெளிப்படுத்துவர். ஆறு முழச் சீலையில் பெண்மை கட்டுப்படுத்தப்பட்டு விடுகிறது. துள்ளிக் குதிக்க முடியாமல் சைக்கிளை இலகுவாக ஓட்டமுடியாமல் சீலை கட்டுப்பாடு விதிப்பதை சில பெண்கள் விரும்பவில்லை. பெண்ணுக்கு சீலை மரபின் சின்னமாகவும் கலாசாரத்தின் பண்பாகவும் கொள்ளப்பட்டு விட்டபின் அவள் அச்சேலையைக் கட்டாயமாக உடுத்தவேண்டும் என்று வற்புறுத்தலும் பண்பாட்டு அடிப்படையில் அவளுக்கு இடப்பட்டுள்ளது. ஆண்மகன் தான் மாத்திரம் வேட்டி கட்டாமல் கால் சட்டை

Page 12
-21
அணிவதை தனது சுதந்திரமாக எடுத்துக் கொள்வதை ஒரு தலைப்பட்சமான ஒரு நடைமுறை என்று பெண்நிலை வாதிகள் தட்டிக் கேட்க ஆரம்பித்தார்கள். ஆண்களைப் போல தங்களுக்கும் உடைச்சுதந்திரம் வேண்டும் என்பதையே ஒரு சின்னமாகக் காட்ட அவர்கள் ஜீன்சும் கால் சட்டை அணியத் தொடங்கினார். நாளடைவில் அது ஒரு இலகு உடையாகவும் செளகரியமாகவும் தோன்றத் தொடங்கிற்று. நாளடைவில் பெண் நிலைவாதியென்றால் வேறுபட்ட மாறுபட்ட உடையில் தோன்றுவாள் என்ற ஒரு ( Stereo typical)கருத்தைத் தோற்றுவித்து விட்டது அதுவுமல்லாமல் எள்ளல் தொனியும், நகைப்பும் ஒருங்கே தோன்ற அவள் ஒரு காட்சிப் பொருள் போல கணிக்கப்படுவதும் சகஜமாகியது. பண்பிழந்த பவித்திரமிழந்த ஒரு உருவம் என்ற ஒரு கருத்தும் இதனோடு இணையத் தொடங்கி விட்டது.
சில சமூக மரபுகள் பெண் ணுக் கென்று ஒதுக்கப்படுவதையும் அவை பெண்களின் சுகந்திரத்தைக் கட்டுப்படுத்துவதையும் எதிர்க்க முன் வந்த பெண்கள். அந்த எதிர்ப்பைக் காட்ட உடை, நடைமுறை போன்றவற்றை மாற்றிக் கொண்டனர். ஐரோப்பிய உடையணிவது காலனித்துவ அதிகாரத்தை ஏற்றுக் கொள்வது போல ஆகிவிடும் என்று சுதேசிகள் சுதேச உடையில் தோன்றுவதும் கடுங்குளில் கால்சட்டை மேற்சட்டையணியாமல் வந்திருந்த SrTjögføDouluu Luntrigg (Half naked fakir ) GT GOT (Winston Churchill) வின்சர் சாச்சில் சொன்னதும் தற்போது வரலாற்றுச் செய்தியாக புரட்சியின் சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. இதே நடைமுறையைப் பெண்கள் பின்பற்றும் போது அங்கே புரிந்துணர்வு இல்லாமல் போய்விட்டது விந்தையல்ல. ஏனென்றால் பெண்ணுக்கு ஒரு நீதி ஆணுக்கு ஒரு நீதி என்பது இன்னும் உடைத் தெறியப்படவில்லை. இத்தகைய ஒரு பட்ச மனப்பான்மை மானிடரின் அக உணர்வில் மிகமிக ஆழமாக வேரூன்றிவிட்டது.

-22
கதாநாயகி சங்கரி புகை பிடிப்பதும், நைட் கவுனில் இருப்பதும், படுக்கை அறைக்கு அவனை வரச் சொல்லி அங்கு அவனை வரவேற்பதும் கொச்சையாகப் பேசுவதும் எல்லாம் பெண்நிலைவாதிகளைக் கொச்சைப்படுத்தும் முயற்சிகள். பெண்நிலைவாதி என்றால் இப்படித் தான் இருப்பாள். இப்படித்தான் அவள் இருக்க வேண்டும் என்ற ஒரு எண்ணக கருத்தை வலியுறுத்துவதாக அக் கதா பாத்திரப்படைப்பை ஆசிரியர் படைத்திருக்கிறார்.
எக் காரணத்தினாலும் ஒரு பெண் நிலை வாதி நைட் கவுனில் அந்நியர் முன் தோன்றி இதோ நான் பெண்நிலைவாதி எனக்கு அச்சம் மடம், நாணம், இல்லை என்று தனது உடை மூலம் பறை சாற்ற மாட்டாள். படுக்கை அறையில் தான் அந்நியர்களை அவள் வரவேற்க வேண்டும் என்பது போன்ற ஒரு "புரட்சியை" அவள் செய்யமாட்டாள். புகைபிடிக்கிறேன் நான் ஏனென்றால் நான் பெண்நிலைவாதி என்று கூறமாட்டாள். பெண்நிலைவாதியாக இல்லாதோரும் பலர் இதைச் செய்யலாம் ஆகையால் பெண்நிலைவாதிக்கு கட்டாயமாக இப்படி ஒரு நடை , உடை, பாவனை, செய்கை இருக்கவேண்டும் என்ற நியதி இல்லை. ஆனாலும் சில செய்திகளை அவள் செயல் மூலம் உணர்த்தக்கூடும். அவற்றைப் புரிந்து கொள்ள விசால மனப்பான்மை புரிந்துணர்வு போன்றன தேவைப்படும். பவித்திரம் இழந்த ஒரு பெண் தான் பெண்நிலைவாதியாக இருக்க முடியும் என்று கூறாமல் கூறும் கூற்றுக்கு வரைவிலக்கணமாக ஒரு கதாபாத்திரத்தை யோகநாதன் இங்கு படைத்து விட்டது விசனத்துக்குரியது. ஆகவே பலர் யோகநாதனின் விமர்சனப்பார்வையும். "தெளிந்த ஞானத்தையும்" சிலாகித்துப் பேசும் பொழுது எம்மில் சிலர் இத்தகைய ஒரு கதாபாத்திரப் படைப் பை ஏற்றுக் கொள்ளாது அவரை க் குற்றஞ்சாட்டுகிறோம். ஒரு எழுத்தாளனின் சமூகப் பிரக்ஞையில் நாம் குற்றங்காண்பது ஏன் என அவர் புரிந்த கொள்வார் என நம்புகிறோம்

Page 13
தமிழ் இலக்கியத்தில் பெண் வெறுப்பு
ஒரு விளக்கம்
செல்வி திருச்சந்திரன்
பெண்மையை மாய மோகினியாகவும், மாயப் பிசாசா கவும் வர்ணிக்கும் மரபு சங்கம் மருவிய காலத்தே தோன்றியதாகும். இம் மரபின் அடி யொற்றிய நாயனார் ஒருவர் பெண்ணைப் பயங்கர மோகினியாகக் காட்ட விழைந்தார். இக் காலப் பகுதியிலே முக்தி வழிக்குப் பெண்கள் முட்டுக்கட்டைகளென்று கருதப்பெற்றனர். ஜீவாத்மா பரமாத்மாவுடன் சங்கமமாகி முக்திபெறுவதற்கு பெண்கள் இடையூறாக விளங்கினரென்று காட்டப்பட்டது. பக்திச் சுவைக்கும், சொல்லாட்சிக்கும் புகழ்பெற்றதான திருவாசகப் பாடல்களிலே பெண்களின் சாகசங்கள் உலக சிற்றின்பச் சுழலின் சின்னங்களென்று மாணிக்கவாசகர் சிந்தித்தார். பெண்களின் மாய வலையிலிருந்து தன்னை மீட்டருளுமாறு அவர் சிவனை இறைஞ்சுகிறார். பெண்ணின் அங்க அழகின் மாயையில் மயங்கிச் செய்வதறியாது தவிப்பதாகப் பிரலாபிக்கிறார். நீத்தல் விண்ணப்பம் அடைக்கலப்பத்து, அற்புதப்பத்து போன்ற திருவாசகப் பாடல்களில் காணப்படும் பின்வரும் அடிகள் இப் பண்பினைப் புலப்படுத்துகின்றன.
"கொள் ஓர்(பு) அளவு) அகலாத்தடங் கொங்கையர் செவ்வாய் விள்ளேன் எனினும.
(நீத்தல்விண்ணப்பம்)
"கொழுமணியேர் நங்கை யார் கொங்கைக் குன்றிடைச் சென்று குன்றி விழுமடியேனை. yy)
(நீத்தல் விண்ணப்பம்) "முதலைச் செவ்வாய்க்கியர் வேட்கை வெந்நீரிற் கழப்ப

-24மூழ்கி விதலைச் செய்வேனை. yy
(நீத்தல் விண்ணப்பம்) என வரும் வரிகள் இப் போக்குக்குச் சான்று பகர்கின்றன.
இவ்வாறே அடைக்கலப்பத்தில் :
"சுருள்புரி கூழையர் சுழலிற் பட்டுன் திறம்மறந்திங் கருள்புரி யாக்கையிலே கிடந்தெய்தத்னன். " என்று குறிப்பிடுகிறார். பெண்ணின் அவயவங்களை அக்குவேறு ஆணிவேறாகச் சித்திரிக்கும் பான்மை அவரை அச்சுறுத்தும் சிற்றின்ப மாயையைச் சுட்டிக்காட்டுவதாக விளங்குகிறது. இறைவனோடு இணையும் பேரின்பம் ஒரு புறமாகவும் பெண்ணின் சிற்றின்பம் மறுபுறமாகவும் ஒன்றுக்கு மற்றொன்று எதிரியாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.
பெண்ணை இவ்வாறு இழிவு செய்யும் திருவாசகம் சைவர்களின் வேதநூலாகக் கோயில்களிலும் வீடுகளிலும் ஒதப்படுகிறது. திருவாசகமும் ஏனைய பத்துப் பாடல்களும் பாடவிதானத்தின் ஒரு பகுதியாக இந்து சமயம், தமிழ் இலக்கியம், ஆகிய வகுப்புகளிற் படிப்பிக்கப்படுகின்றன. ஆயினும் ஒரு முரண்பாட்டையும் இங்கு சுட்டிக்காட்டுதல் அவசியம். இலக்கிய நயம் மிக்க நூலாகக் கருதப்படும் திருக்கோவையாரிலே இதே மாணிக்கவாசகர்தம்மை ஒரு காதலியாகப்பாவனை செய்து இறைவனுடன் இணைந்து கொள்கிறார். விடுதலை தேடி அலையும் ஆதரவற்ற ஆன்மாவாக அவர் தம்மை உருவகிக்கின்றார். காதலியின் குணாதிசயம் பாசமும் உணர்ச்சிப் பிரவாகமும் கொண்டதாகும். பெண்மையின் மென்மையையும் உணர்வு நெகிழ்ச்சியையும் அங்கீகரிக்கும் மாணிக்கவாசகர் ஆன்ம விடுதலையை நாடும் போது அதே பெண்மையை மாயையாகவும் மாயப் பொறியாகவும் காட்டுகிறார். திருக்கோவையாரில் கற்பு நெறி தவறாகக் காரிகையாகக் சித் திரிக்கப் பெறும் பெண் , திரு வாசகத்திலும்

Page 14
-25பத்துப்பாடல்களிலும் பரத்தையாக இழிவுபடுத்தப்படுகிறாள்.
இக்காலப் பகுதியிலே சித்தர்கள் என்னும் துறவிகள் சிலர் தோன்றினர். நிரானுகூலப் போக்குடைய இவர்களின் ஆக்கங்களை எவரும் முறையாக ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. இவர்கள் வாழ்ந்த காலமும் முறையாக நிர்ணயிக்கப்பட்டிலது. இவர்களின் வாழ்க்கை வரலாறுகள் மர்மம் சூழ்ந்தனவாயுள்ளன. பதினெண் சித்தர்களும் ஒரே வகையான அனுபவங்களைச் சித்திரிக்கும் பாடல்களை எவ்வாறு எழுதினர் என்பதும் வியப்புக்குரியதே. பதினென் சித்தர் பாடல்கள் என்னும் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் சில சித்தர்களின் பெயர்கள் சங்க சால சங்கம் மருவிய காலங்களில் வாழ்ந்த புலவர்களின் பெயர்களை ஒத்தனவாயுள்ளன. இவர்களிற் சிலர் பண்டைய புலவர்களின் பெயர்களையே தாமும் சூட்டிக்கொண்டனர் போலும், பலருக்கு சித்தர் எனும் அடை மொழி பாடல்களைத் தொகுத்தவர்களால் வழங்கப்பட்டிருக்கலாம் இச் சித்தர் பாடல்கள் அக் காலச் சமூக அமைப்பையும் சாதிமுறையையும் மறுபிறப்புக்கொள்கையையும் சாடுவனவாக அமைந்தன சில பாடல்கள் நாத்திகத்தின் விளிம்பில் நின்று கடவுள் என்று ஒன்றில்லை என் வாதிடுகின்றன. ஒட்டு மொத்தமாகப் பார்க்குமிடத்து சித்தர்களின் கொள்கை சமூக அமைப்பு, சடங்குகள் ஆசாரங்கள், வர்ணாச்சிரமம் , பிராமண மந்திரங்கள், தொழுகை, ஆகமங்களுக்கு முரணான துறவறம் ஆகிய யாவற்றையும் வன்மையாகக் கண்டித்தன. சமூக அமைப்புகள் பகுத்தறிவுக்கு அப்பால் தர்க்க நியாயங்களை மீறிச் செயற்படுவதைச் சுட்டிக்காட்டும் பாங்கில் அமைந்த சித்தர் பாடல்களில் அங்கதச் சுவை விர விக் காணப்படுகின்றது. இறைவனையும் முத்தியையும் அடைவதற்குப் புரோகிதர்களாகிய இடைத் தரகர்கள் அவசியமற்றவர்கள் என்றும் சமய ஆசார அனுட்டானங்கள் யாவும் பொய்யும் புனைகருட்டும் என்றும் சித்தர்களிற் பலர் வாதிட்டனர்.

-26
பெண்ணின் கொடுமையை இவர்கள் அவளின் காம உணர்ச்சியுடன் தொடர்புறுத்தினர். தீராத காமப் பசியுடையவர்களாகப் பெண்ணைச் சித்திரித்துக்காட்டினர். மாய வலை வீசும் பரத்தையரே மனித குலத்தின் துன்பத்துக்கெல்லாம் காரணமென்றும் முத்திவழிக்கு முட்டுக்கட்டையாக விளங்குவோரென்றும் கண்டனம் செய்தனர். எல்லாச் சித்தர்களும் இதே கொள்கைப் போக்குடையவர்களாகச் காணப்பட்டாலும் பட்டினத்தார் இவர்கள் எல்லோரையும் மிஞ்சியவராக விளங்கினார். பாம்பாட்டிச் சித்தர் என்பவர் பெண்ணாசை விளக்கம் என்னும் தலைப்பில் பெண்ணைக் கீழ்க்கண்டவாறு சித்திரிக்கின்றார்.
"வட்டமுலை யென்றுமிக வற்றுந் தோலை மகமேரு என உவமை வைத்துக் கூறுவார் கெட்ட நாற்றமுள்ள யோனிச் கேணியில் வீழ்ந்தார் கெடுவர் என்றே துணிந்து ஆடு பாம்பே.
மலஞ்சொரி கண்ணை வடி வாழுக்கொப்பாக வருணித்துக் சொல்வார் மதிவன்மை இல்லாதார் குலநலம் பேசுகின்ற கூகை மாந்தர்கள் கும்பிக்கே இரையாவர் என்று ஆடுபாம்பே
சிக்குநாறுங் கூந்தலையே செழுமை மேகமாய்ச் செப்புவார்கள் கொங்கைதனைச் செப்புச் கொப்பதாய் நெக்கு நெக்கு உருகிப் பெண்ணை நெஞ்சில் நினைப்பார். நிமலனை நினையார் என்று ஆடுபாம்பே.
நாறிவரும் எச்சில்தனை நல்லமுதென்றும் நண்ணுஞ்சளி நாசிதனை நற்குமிழ் என்றும் கூறுவார்கள் புத்தியில்லாக் கூகை மாந்தர்கள் கோன்நிலையை அறியார் என்று ஆடுபாம்பே".
பட்டினத்தார் பாடல்களோ பெண் மீது அவருக்கிருந்த அளவற்ற வெறுப்பைக் காட்டுகின்றன. காஞ்சித்திரு அகவல் என்ற பகுதியிலே பெண்ணைக்கீழ்க்கண்ட வாறு இகழ்கிறார்.

Page 15
-27"திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து மலைமகள் கோமான் மலர் அடி இறைஞ்சிக் குலவிய சிவபதங் குறுகாது அவமே மாதரை மகிழ்ந்து காதல் கொண்டாடும்.
மானிடர்க் கெல்லாம் யானெடுத் துரைப்பேன் விழிவெளி மாக்கள் தெளிவுவுறக் கேண்மின் முள்ளும் கல்லும் முயன்று கடக்கும் உள்ளங்காலைப் பஞ்சென உரைத்தும் வெள்ளெலும்பாலே மேவிய கணைக்கால்
துள்ளும் வரால் எனச் சொல்லித் துதித்தும் தசையும் எலும்புந் தக்கபுன் குறங்கை இசையுங் கதலித் தண்டென இயம்பியும் நெடும் உடல் தாங்கி நின்றிடும் இடையைத் துடிபிடி யென்று சொல்லித் துதித்தும்
மலமும் சலமும் வரும்பும் குரையும் அலையும் வயிற்றை ஆலிலை யென்றும் சிலந்தி போலக் கிளைத்துமுன்னெழுந்து திரண்டு விம்மிச் சீப்பாய்ந்து ஏறி உகிரால் கீறல் உலர்ந்து உள் உருகி
நகுவார்க்கு இடமாய் நான்று வற்றும் முலையைப் பார்த்து முளரி மொட்டென்றும் குலையும் காமக் குருடர்க்கு உரைப்பேன் நீட்டவும் முடக்கவும் நெடும் பொருள் வாங்கவும்
ஊட்டவும் பிசையவும் உதவி இங்கியற்றும் அங்கையைப் பார்த்துக் காந்தள் என்றுரைத்தும் வேர்வையும் அழுக்கும் மேவிய கழுத்தைப் பாரினில் இனிய கமுகெனப் பகர்ந்தும் வெப்பும் ஊத்தையும் மேவிய வாயைத்
துப்பும் முருங்கின் தூய்மலர் என்றும் அன்னமுங் கறியும் அசைவிட்டியுங்கும் முன்னிய பல்லை முத்தென மொழிந்தும் நீரும் சளியும் நின்று நின்று ஒழுகும்

-28கூரிய மூக்கைக் குமிழ் என்று கூறியும்
தண்ணிர் பீளை தவிராது ஒழுகும் கண்ணைப் பாாத்துக் கழுநீர் என்றும் உளளுங் குறும்பி ஒழுகுங் காதை வள்ளைத் தண்டின் வளம் என வாழ்த்தியும் கையும் எண்ணையும் கலாவாது ஒழியில்
வெய்த வதரும் பேனும் விளையத் தக்க தலையோட்டில் முளைத்து எழுந்த சிக்கின் மயிரைத் திரள்முகிலென்றும் சொற்பல பேசித் துதித்து நீங்கள் நச்சிச் செல்லும் நரக வாயில்
தோலும் இறைச்சியும் துதைத்து சீப்பாயும் காமப் பாழி கருவிளை கழனி துரமைக் கடவழி தொளைபெறுவாயில் எண் சாண் உடம்பும் இழியும் பெருவழி மண்பால் காமம் கழிக்கும் மறைவிடம்.
நச்சிக் காமுக நாய்தான் என்றும் இச்சித்திருக்கும் இடைகழி வாயில் திங்கள் சடையோன் திருவருள் இல்லார் தங்கித் திரியும் சவலைப் பெருவழி புண்இது என்று புடவையைழுடி
உள்நீர் பாயும் ஒசைச் செழும்புண் மால் கொண்டு அறியாமாந்தர் புகும்வழி நோய் கொண்டு ஒழியா நுண்ணியர் போம்வழி தருக்கிய காமுகர் சாரும் படுகுழி செருக்கிய காமுகர் சேரும் சிறுகுழி
பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே சலம் சொரிந்து இழியும் தண்ணிர் வாயில் இத்தை நீங்கள் இனிது என வேண்டா பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி
மெச்சிச் சிவபத வீடருள் பவனை

Page 16
-29முத்தி நாதனை முவா முதல்வனை அண்டரண்டமும் அனைத்துள புவனமும் கண்ட அண்ணலைக் கச்சியிற் கடவுளை ஏக நாதனை இணையடி யிறைஞ்சுமின்
போக மாதரைப் போற்றுதல் ஒழித்தே! இதனை அடுத்து வரும் திரு ஏகம்ப மாலை என்னும் பிறிதொருவகையாகப் பெண்ணை ஏளனம் செய்கிறார். அதன் சில அடிகள்:
“கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையையெடுத்து அப்புறந் தன்னில் அசையாமல் முன் வைத்து அயல் வளவில் ஒப்புடன் சென்று துயில் நீத்துப் பின் வந்து உறங்குவளை எப்படி நான் நம்புவேன் இறைவா கச்சி ஏகம்பனே!"
“காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டி என் கண்ணெதிரே மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலி விட்ட தூதென் றெண்ணாமல் சுகமென்று நாடும் இத்துற்புத்தியை ஏதென் றெடுத்துரைப்பேன் இறைவா கச்சி ஏகம்பனே!"
பெண்ணாகி வந்தொரு மாயப்பிசாசம் பிடித்திட்டென்னைக் கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப் புண்ணாங் குழியிடைத் தள்ளி என் போதய் பொருள் பறிக்க
எண்ணாதுனை மறந்தேன் இறைவா கச்சி ஏகம்பனே!"
எனினும் பட்டினத்தார் கண்ட பெண்ணின் முழுமை யான உருவம் இதுவன்று. அவரைப் போன்ற இருமனப் போக்குடைய வேறொருவரைக் காண்பதரிது. மாயப்பிசாசமாகக் கண்ட அதே பெண்ணைத் தெய்வத் தாயாகவும் அவர் வந்தித்தார். நிந்தனைக்கும் வந்தனைக்கும் உரியவளாகப் பெண்ணை உருவகித்த முரண்பாட்டினை தாயாருக்குத் தகனக் கிரியை செய்யும் போது பாடிய வெண்பாக்கள் புலப்படுத்துகின்றன. அப்பாடல்கள் வருமாறு:
"ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச்- செய்யஇரு

-30
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி
"முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாள் அளவும் அந்தி பகலாச் சிவனை ஆதரித்துச்- தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல் மூட்டுவேன்.
“வட்டிலிலும் தொட்டிலும் மார்மேலும் தோள் மேலும் கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து-முட்டச் சிறகிலிட்டுச் காப்பாற்றும் தாய்க்கோ விறகிலிட்டுத் தீ மூட்டுவேன்.
“நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே-அந்திபகல் கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ மெய்யிலே தீ மூட்டுவேன்.
"அரிசியே நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு வரிசையிட்டுப் பார்தது மகிழாமல்-உருசியுள்ள தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ மானே என அழைத்த வாய்க்கு
"அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல் கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல்-மெல்ல முகமேல் முகம் வைத்து முத்தாடி என்றன் மகனே என அழைத்த வாய்க்கு
“முன்னை இட்ட தீமுப்புரத்திலே பின்னை இட்ட தீ தென் இலங்கையில் அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே யானும் இட்ட தீ மூள்க மூள்கவே
"வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல் ஆகுதே பாவியேன் ஐயகோ-மாகக் குருவி பறவாமல் கோதாட்டி என்னைக் கருதி வளர்த்தெடுத்த கை
“வெந்தாளே சோணகிரி வித்தகா நின்பதத்தில்

Page 17
-31வந்தாளோ என்னை மறந்தாளோ-சந்ததமும் உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்துஎன் தன்னையே ஈன்றெடுத்த தாய்
விற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள் நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள்-பால்தெளிக்க எல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல் отеvouTub flou upu Guo umio "
இங்கு பெண்ணின் வயிறு, வாய், பெண்குறி, மார்பகம், யாவும் உயிர் கொடுக்கும் உறுப்புகளாகச் சித்தரிக்கப்படுகின்றன. அவளின் அன்பு, தன்னலமற்ற, தியாக சிந்தையுள்ள அன்பாகக் காட்டப்படுகின்றது. தன் குழந்தைக்காக அவள் துன்பம் அனுபவிக்கிறாள் என்னும் உண் மை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவளின் மறைவை எண்ணி பட்டினத்தார் அழுது புலம்புகிறார். இந்தப் பாசமும் இந்த உடற் கூறுகளும் வீடுபேறடைவதற்கு இடையூறாகக் காணப்படவில்லை. மாறாக இங்கே பெண் மறைமுகமாகத் தெய்வாம்சம் பெறுகிறாள். இவ் விடத்தில் பெண்ணுறுப்பானது "உள்நீர்பாயும் ஒசைச் செழும்புண்ணாக இல்லாமல் உயிர் கொடுக்கும் அவயவமாக விளங்குகிறது. நகுவார்க்கு இடமாய் நான்று வற்றும் முலை' கைப்புளத்தில் ஏந்திப் பாலூட்டும் கனகமுலையாகிறது.
இந்த முரண்பாட்டினை அறிவுபூவர்மாக விளக்குதல் சிரமம். எனினும் Kakar(1981) என்பாரின் கருத்து இவ்விடயத்திற் பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது. இந்து சமய இதிகாசங் களிலும் புராணங்களிலும் சூழ்ச்சிக்கும் காமாந்தகாரத்துக்கும் பெண்ணே காரணமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளமையை இனங் கண்டKakar உளப்பகுப்பு மனேதத்துவத்தின் அளவு கோல் கொண்டு இந்த முரண்பாட்டை ஆராயமுற்படுகிறார். "மானிடவியல் வரலாறுகள், சமூகவியல் ஆய்வுகள், இதிகாசம், நாடோடிக் கதைகள், உளப்பகுப்புச் சிகிச்சை அனுபவங்கள்,
gifti, kakar, S. 1981. The Inner World, A psychoanalytic study of Childood and Society in India) Oxford University prees, Delhi

-32வரலாற்றுச்சிந்தனைகள், "ஆகியவற்றிலிருந்து தமது முடிவுகளைத் தீர்மானித்ததாகக் கூறுகிறார்.Kakar 1981:2) தமது முடிவுகளை அவர் ஏனைய நாட்டுச் கலாசாரங்ளுடன் ஒப்பிட்டுச் சீர்தூக்கியுள்ள போதிலும் இந்தியப் பகைப் புலத்துக்கே அவை சிறப்பாகப் பொருந்துவனவாகும்.
இந்தியப் பெண்ணின் பாலுணர்வை அடித்தளமாக வைத்து அவர் தமது ஆய்வை ஆரம்பிக்கிறார். பெண்ணானவள் படிப்படியாகத் தன்னலத்தை மறக்கச் செய்யும் வகையிலே பாலுணர்வைக் கட்டுப்படுத்துவதற்குச் சமுதாயம் அவளை நிர்ப்பந்திக்கிறது. தன் குழந்தையைப் பராமரிப்பதில் முற்றுமுழுமையாகத் தன்னை ஈடுபடுத்த வேண்டுமெனச் சமுதாயமும் ,குடும் பத் தளைகளும் அவளுக்கு கட்டுப்பாடு விதிக்கின்றன. பிரசவத்தின் பின்னர் நெடுங்காலத்துக்குக் கணவனிடமிருந்து விலகியிருக்க வேண்டுமெனவும் சமூகக்கட்டுப்பாடு வலியுறுத்துகிறது.
இவ்வாறான பிரிவின் விளைவாக இளம் தாயானவள் தன் காம உணர்வுகளை ஆண் குழந்தையின் பால் திரும்ப நேர்கிறது. இவ்வாறாக கணவனிடம் காட்ட வேண்டிய தன் காம உணர்ச்சிகளை மகனிடம் வெளிப்படுத்துவதனால் அந்த ஆண்பிள்ளைக்கு ஏற்படும் பிரச்சினைகள் மிகச் சிரமமானவை என வைத்திய அனுபவங்கள் நிரூபித்துள்ளதாக Kakar குறிப்பிடுகிறார். தாயின் இந்த உணர்ச்சி வெளிப்பாடு தன்னைத் திக்குமுக்காடச் செய்வதாக அந்தச் சிறுபையன் கருதுகிறாான். தாய்ப்பாசம் தன்னை விழுங்குவதாகக் கருதும் பிள்ளை தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென எண்ணுகிறான்("முதலை செவ்வாய்ச்சியர், “தருக்கிய காமுகர் சாரும் படுகுழி" போன்ற வருணனைகள் இங்கு மனங்கொள்ளத் தக்கன.)
இந்தச் சிறுபராய எண்ணமே காலக்கிரமத்தில் "கண்ணால் வெருட்டி முலையாய் மயங்கிக் கடிதடத்துப் புண்ணாங் குழியிடைத் தள்ளி. போதப் பொருள் பறிக்கும் பெண்ணாகி வந்த . மாயப் பிசாச ” ஆகிறது என்பது Kakar கருத்து. சிவ புராணக் கதைகள் பலவற்றில் இந்த அம்சம் குறிப்பிடத் தக்கதாகக் காணப்படுகிறது. இந்திய ஆண் மகனின் மனதிலே தாய்மையின்

Page 18
-33உருவகம் ஒன்றுக் கொன்று முரண்பட்ட குணாம்சங்களைக் கொண்டதாக நிரந்தர இடத்தைப் பெற்றிருக்கிறது. அன்பைச் சொரிந்து அமுதூட்டும் தாயாக ஒரு சமயமும் "காதென்று மூக்கொன்று கண்ணென்று காட்டி கண்ணெதிரே மாதென்று சொல்லி வருமாயை " யாக மற்றொரு சமயமும் பெண் அவனுக்குக் காட்சியளிக்கிறாள். பட்டினத்தார் தாயாருக்குத் தகனக் கிரியை செய்யும் போது பாடிய பாடல்களிலே பெண் “முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாயாக" விளங்குகிறாள். "வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் வைத்து . காதலித்த தாய் ' என்றும் குறிப்பிடுகிறார். இந்த அன்பு வெளிப்பாடுகள் யாவும் பட்டினத்தாரைத் திக்குமுக்காட வைத்து செய்வதறிய உணர்வு நிலையை உண்டாக்கிற்று என்று நாம் கொள்ளலாமா? இந்த உண்ர்வே "உள் நீர் பாயும் ஒசைச் செழும்புண் " என்றும் தாயென்றும் , நரியென்றும் பலவாறாகப் பெண்ணை நிந்தனைசெய்யத் தூண்டிற்று என்று நாம் கருத இடமுண்டா?
அப்படியாயின் பெண்ணானவள் பிள்ளைகளைப் பெறுவ தற்கே படைக்கப்பட்டவளென்று தள்ளி வைக்கும் ஆணாதிக்கமே மனிதகுலத்தின் முரண்பாடுகளுக்கும் இருமனப் போக்குக்கும் அடிப்படைக் காரணமென நாம் முடிவு செய்தல் வேண்டும். ஆணாதிக்கம் தன் தாய் மீது சுமத்திய பளுவின் விளைவாக, எழுந்த எதிர்ப்பு அனுபவமாகவே பட்டினத்தாரின் பெண் நிந்தனைப் பாடல்களை நாம் நோக்க வேண்டும்.
இவை பெண்ணை இரு வேறுபட்ட குணாம்சங்கள் உடையவளாகச் சித்திரிக்கின்றன. ஒன்று, கற்பின் பிறப்பிடமாகவும் தாயாகவும் தோன்றும் கதாநாயகி, மற்றயது மாதவி குணாம்சங்கள் பொருந்திய ஆணை அலைக்கழிக்கும் காமுகி. மொத்தத்தில் தமிழ் இலக்கியங்களும் திரைப்படங்களும் மேற் சொன்ன சிந்தனைப் போக்குகளின் விளைவு என நாம் கொள்ளலாம்.
இக் கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து தமிழ்ப்படுத்தித் தந்த காவலூர் ராஜதுரைக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சந்திப்பு
பவானி ஆழ்வாப்பிள்ளை
சண்முகம் பாதி யெரிந்த சிகரெட்டைத் தட்டில் போட்டு நசுக்கி அணைத்தான். தன் இதய உளைச்சலைப் போக்க முயல்வது போல் நெடுமூச்செறிந்தான். சுந்தரம் சொன்ன செய்தி உண்மையாய் இருக்குமோ என்று மீண்டும் மீண்டும் தன்னைத் தானே கேட்டுக்கொண்டான். நேற்று மாலை சுந்தரம் அந்த விஷயத்தைச் சொன்னது முதல் அவன் இதயத்தைக் கணம் கணமாய் அரித்து வந்த கேள்வி இது தான். கோமதி அப்படிச் செய்வாளா? சீச்சீ அவள் அப்படிப்பட்டவளல்ல. இருந்தும். சுந்தரம் தன் கண்ணால்கண்டதாகச் சொல்கிறானே! இல்லை சந்தேகம் தான் அவனுக்கு உடன் பிறந்த நோய் ஆயிற்றே! நன்றாய் அனுபவப்பட்ட பின்பும் அவசர புத்தியா? கண்ணால் காண்பதும் பொய்யாகக் கூடுமல்லவா? அப்படியல்லாமல் உண்மையாய் இருந்தாலும் அது அவள் குற்றமா? சண்முகம் தன் சட்டைப்பையிலிருந்து ஒரு கடுதாசித் துண்டை எடுத்தான் . இல 24 அலோ அவெனியூ, கொழும்பு என்று சுந்தரம் அதில் எழுதி இருந்தான். கோமதிக்கு நேர்ந்த கதிக்குத் தானே காரணம் என்று எண்ணிய சுந்தரம் அவளைத் தேடுவதில் முழுமூச்சாய் நின்றான். நேற்று மாலை முழுவதும் அவளைப் போய் பார் பாரென்று, சண்முகத்தை அரித்தெடுத்தான். சண்முகம் அவளை இனிக் காண்போம் என்ற ஆசையை என்றோ விட்டுவிட்டான். அதோடு என்றாவது உள்ள அமைதி பெற முடியும் என்ற நம்பிக்கையையும் இழந்திருந்தான். ஆனால் இப்போது!. சண்முகத்தின் உள்ளம் நிலை கொள்ளாமல் தவித்தது. இதயத்தில் பொங்கிய பரபரப்பை, ஆவலை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. அணைந்து விட்ட அவன் ஆசைகளும் வேட்கைகளும் தணிந்து மடியும் நெருப்பு

Page 19
-35
காற்றின் வீச்சினால் ஜுவாலைவிட்டு மூண்டெழுவது போல் மூண்டெழுந்தன. அவளைக் காணத் துடியாய்த்துடித்தான். ஆனால் அத்தனை ஆவலிலும் ஒரு தயக்கம் ஊடோடியது. அவன் கோமதிக்கு அளித்த வாழ்வுக்காக அவனை அவள் வரவேற்கப் போகிறாளா? வரவேற்கிறாளோ இல்லையோ, மனதில் சந்தோஷம் இல்லாவிட்டாலும் அமைதியாவது வேண்டாமா? இரவு பகலாய், கனவு நினைவாய் அவனை விரட்டி வந்த குற்ற உணர்வைத் தொலைப்ப தென்றால் அவைளப் போய்ப் பார்க்கத் தான் வேண்டும்.
ஐந்து வருடங்களில் அவள் முகம் கணமும் மறந் தறியாத கோமதியின் அழகுருவைத் தன் மனக் கண்களால் மேய்ந்தான். சண்முகம் உதயத்திலே மலரிதழ்மேல் கூடி நிற்கும் பனித்துளிபோல மென்மையும் புதுமையும் கொண்டவளாய்க் காப்பற்றவளாய் நின்ற கோமதியைக் கதியற்றவளாக்கிவிட்டான். அவள் திரண்ட அங்கங்களில் வாளிப்பான உடற் கட்டில் பொதிந்த கவிதை, சலனமற்ற நீர்க்குளம்போல் ஆழ்ந்து அமைதியுற்ற கண்களின் அழகு, அவன் உணர்ச்சியைச் சுண்டியிழுக்கும் உதடுகளின் கீழேயமைந்த கரியமச்சத்தின் கவர்ச்சி அவன் ஆண்டு அனுபவித்துப் போற்றிப் பேணியிருக்க வேண்டிய அழகு! அநியாயமாய்ப் போக்கிவிட்டான்! ஐந்து வருடங்களில் அவளிடத்து என்ன மாறுதல் ஏற்பட்டிருக்கும்?. சண்முகம் கதிரையை விடடெழுந்து திரைச் சீலையை ஒதுக்கிச் சாளரத்தின் வழியே பார்த்தான் பலபலவென வானம் வெளுத்துக் கொண்டிருந்தது. இன்றைக்குக் கந்தோருக்கு லீவு போட்டுவிட்டு எப்படியாவது அவளைப் பார்க்கத்தான் வேண்டும் என்று முணுமுணுத்தவன் பெருமூச்சோடு சாளரத்தை விட்டகன்றான்.
சண்முகம் தெருவோடு அவசர அவசரமாக விரைந்து கொண்டுடிருந்தான் சற்றுத் தயங்கினாலும் மேலே நடக்கத் தைரியம் வராது என்றோ என்னவோ

-36ஓட்டமும் நடையுமாக விரைந்தான். அலோ அவெனியூவுக்குள் திரும்பித் தயங்காது நடந்தான். சுந்தரம் சொல்லியிருந்தான் , வலது பக்கத்தில் ஆறாவது வீடு என்று இதோ இல. 24 சிறிய அடக்கமான வீடு. சண்முகம் நடையைத் தளர்த்தாது அதே வேகத்தில் வீட்டையடைந்து கதவைத் தட்டினான் வாசற்படியில் நின்ற அந்த ஒரு கணத்தில் திடீரென அவன் தைரியம் எல்லாம் வடிந்து திரும்பி விடட்டுமா என்று நினைத்தான். அதற்குள் வேலைக்காரன் கதவைத்திறந்தான். சண்முகம் உலர்ந்த உதடுகளில் நாவை ஒட்டிவிட்டுக் கேட்டான்.
"ஐயா.இருக்கிறாரா?” “இல்லை . கந்தோருக்குப் போட்டார்” சண்முகம்
தயங்கினான். "அம்.அம்மா இருக்கிறாவா? "இருக்கிறா. உக்காருங்க ஐயா. உங்கள் பேர் என்ன?
"பேரா?.பேர். சண்முகம் சண்முகம்" அவன் யாரென அறிந்த பின்னும் அவனைப் பார்க்க அவள் சம்மதப்படுவாளா? ஏன் பெயரைச் சொன்னோம் என்று ஆயிற்று சண்முகத்திற்கு. இல்லை அவனைக்கான வேண்டுமென்ற ஆவல் அவளுக்கிருக்காதா? அவன் எதற்காக வந்திருக்கிறான் என்றறிய விரும்பாளா? இந்த இதயம் ஏன் இப்படி அடித்துக்கொள்கிறது. அறையெங்கும் எதிரொலிப்பது போல் என்று எண்ணினான் சண்முகம் . சண்முகம் அறை வாசலையே வெறித்துப் பார்த்தான். ஒசைப்படாமல் நடந்ததால் கோமதி திடீரென வாசலில் தோன்றினாள். சண்முகம் கதிரையை விட்டுப் பாதியெழுந்தான். அவள் அமைதியாக நடந்து வந்து அவனுக்கு எதிரே ஒரு கதிரையில் அமர்ந்தாள். அவளைக் காணும் ஆவலில் துடித்தவன் ஏனோ தலையைக் குனிந்து கொண்டான். ஆனால் கோமதி மெளனத்தைக் கலைக்கப் போவதாய்த் தெரியவில்லை. இந்த மெளனத்தின் நெருக்கத்தைத் தாங்க

Page 20
-37
இயலாதவளாய்த் தலை நிமிர்ந்தாள். முன்னை விடச் சற்று மெலிந்திருந்தாளே தவிர அவள் உருவத்தில் வேறு மாறுதலில்லை. ஆனால் அவள் கண்கள் தான் அவன் இதயத்தைக் தாக்கின. அந்த ஆழ்ந்து அமைதியுற்ற கண்களில் தெரிந்த விரக்தி- இல்லையில்லை -வெறுமையைக் கண்டு அவன் உள்ளம் அதிர்ந்தது. அதை அவனால் தாங்க முடியவில்லை. எதையாவது பேசித் தொலைக்க வேண்டும் போலிருந்தது. w
"கோமதி, அன்று நடந்ததற்கு."
"அன்று நடந்ததற்கு?. அவள் கேள்வியில் ஏளனத்தின் மெல்லிய இழையோடியது.
“என்னை மன்னித்துவிடு என்று கேட்பதில் அர்த்த மில்லைத் தான் ஆனாலும் என் உள்ளத்தின் அடியிலிருந்து கேட்கிறேன். என்னை மன்னித்துவிடு. என் ஆத்திரம் அடங்கிய பின் தான் சுந்தரத்திடம் உண்மையை அறிந்தேன். உன்னை அன்று முதல் தேடிக் கொண்டேயிருக்கிறேன்." கோமதி சண்முகத்தைப் பார்த்தாள். முன் நெற்றி மயிர் வெகுவாக உதிர்ந்து அவன் நெற்றி மேலும் அகன்றிருந்தது. அவனுடைய தீட்சண்ணியமான கண்கள் ஒளி மங்கிப் புதைந்திருந்தன. இறுக, அழுத்தி மூடிய உதடுகள் உள்ள உணர்ச்சிகளை அடக்கி அடக்கி வந்ததன் அறிகுறி போலும்.
அன்று நடந்ததற்கு.
இருவரும் மெளனத்தில் மூழ்கினர். இருவர் மனதிலும் அதே நிகழ்ச்சிகள் நிழலாடின. அன்று ஐந்து மணிக்கெல்லாம் சுந்தரம் வந்துவிட்டான்.
“என்ன கோமதி, சண்முகம் இன்னும் வரவில்லையா?- என்று கேட்டவன் சாய்வு நாற்காலியில் அமர்ந்தான். சுந்தரம் சண்முகத்தின் நெருங்கிய நண்பன் மணமாகாதவன்.

-38"இவன் எங்கே தொலைந்தான்? ஒரே பசியாய் இருக்கிறதே, கோமதி” என்று புறுபுறுத்தான் சுந்தரம்.
"அவர் வரட்டும். நீங்கள் சாப்பிடுங்களேன்! நேற்று அவர் ஆப்பிள் வாங்கி வந்தார்" மோமதி ஒரு தட்டில் மூன்று நான்கு பழங்களும் கத்தியும் கொண்டுவந்து கொடுத்தாள்.
"கத்தி சரியான கூர், கவனம்!"
நறுக்! அவன் சொல்லி முடியக் கத்தி அவன் விரலைப் பதம் பார்த்துவிட்டது. விரலிருந்து இரத்தம் பெருக்கெடுத்தது. அதைப் பார்த்ததும் சுந்தரத்திற்கு உடலெல்லாம் சோர்ந்து தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது. அவன் அப்படியே மயக்கமாய்ச் சாய்ந்து விட்டான். நல்ல வேளை அது சாய்வு நாற்காலி. கோமதிக்கு கைகால் ஓடவில்லை. சுந்தரத்தின் முகம் வெளிறிப் பயங்கரமாய். அவன் சட்டைப்பையில் தலை நீட்டிய கைக்குட்டையை எடுத்து மேசையிலிருந்து கிளாஸ் தண்ணிரில் தோய்த்து இவன் விரலுக்குக் கட்டுப் போட்டாள் அவனை விட்டகலவும் பயம். அப்படியே பிரேதம் மாதிரிக் கிடந்தான். மோமதி தன் முந்தானையின் ஒரு மூலையைத் தண்ணிரில் தோய்த்து சுந்தரத்தின் முகத்தைத் துடைக்கலானாள். அறைக்குள் நுழைந்த சண்முகம் இந்தக் காட்சியைக்கண்டு மலைத்து நின்றான். அவன் நெற்றி நரம்பு புடைத்தெழுந்தது. அவன் முகத்தில் பொங்கியசினத்தைக் கண்ட கோமதி வெலவெத்துப் போனாள். அவன் அவளையே வெறித்துப் பார்த்தான். அதைத் தாங்க இயலாது அவள் தலை குனிந்தாள். அப்பொழுது தான் அவளுக்குத் தண்ணிரில் தோய்ந்த முந்தாணையைக், கையிலிருந்த கிளாசைப் பற்றிய உணர்வு ஏற்பட்டது. அவளுக்கு பேச நாவெழவில்லை. சண்முகம் பேசாமல் அவளைத் தாண்டி உள்ளே தன் அறைக்குள் போனாள். கோமதி சுந்தரத்தின் வெளிறிய முகத்தைப்

Page 21
-39பார்த்தாள். தயங்கித் தயங்கிச் சண்முகத்தின் அறை வாசலை அடைந்தாள்.
"அ.த்தான், அவர் மயக்கமாய்க் கிடக்கிறார், வந்து பாருங்களேன்" சண்முகம் ஆத்திரத்தோடு அவளருகே வந்து முரட்டுத்தனமாகத் தோளைப்பிடித்து அவளை வெளியே தள்ளிவிட்டு அறைக் கதவைச் சாத்தினான். கோமதிக்கு அடிவயிற்றிலிருந்து அழுகை பொங்கியெழுந்தது. வாய்விட்டுக் கதற வேண்டும் போல் . சுந்தரத்தை நினைத்தவள் அவனிடம் போனாள். சுந்தரம் எழுந்து உட்கார்ந்திருந்தான்.
"கோமதி, எனக்குச் சின்ன வயசிலிருந்து இப்படித்தான். இரத்தத்தைக் கண்டால் தாங்க முடியாது. நான் வீட்டுக்குப் போய் படுக்கப் போகிறேன்."
"தனியாய் எப்படிப் போவீர்கள்?
"நான் டாக்ஸிசியில் போகிறேன். சண்முகம் வந்தால் சொல். கோமதி உயிரற்றவள் போல் தலையசைத்தாள். சண்முகம் அவன் போகும் வரை காத்திருந்தவன் போல் வெளியயே வந்தான். கோமதியின் இதயத்தில் பீதி சூழ்ந்திருந்தது.
"அத்.தான், அவர் விரலை வெட்டிக்கொண்டு மயக்கமாய் விழுந்திட்டார்."
"வாய்ப்பான மயக்கம் தான்" வார்த்தைகளைக் கக்குவது போல் சொன்னான்.
"அத்தான்"
"சீச்சீர் கேடு கெட்டவள் வெளியே போ! விபசாரி!"

-40"ஆபத்துக்குப் பாபமில்லை அத்தான். இந்தச் சின்ன விஷயத்துக்கு." அவள் குரலில் கோபம் தலை தூக்கியது.
"விபசாரி வேண்டுமென்றே சொன்னான். "இந்த வீட்டில் உனக்கு இடமில்லை. போ வெளியே!” அவள் கெஞ்சக் கெஞ்ச அவளைப் பிடித்து வெளியே தள்ளி வாசற் கதவை மூடினான்.
கோமதி இமைகளுடே சண்முகத்தைப் பார்த்தாள். துரியோதனன் கூட எடுக்கவோ கோக்கவோ என்று கேட்கும் அளவுக்குப் பண்பு படைத்தவனாயிருந்தான் என்று நினைத்தாள். அன்று அவள் யாராவது சிநேகிதியிடம் அடைக்கலம் புகுந்திருக்கலாம்- ஏன் சுந்தரத்தையே உதவி கேட்டிருக்கலாம். ஆனால்
"நீ பிடிவாதக்காரி, கோமதி" கோமதி சற்று ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தாள்.
"எப்படியாவது உன்னைக் கண்டு பிடித்து உனக்கிழைத்த அநீதிக்கு ஈடுசெய்ய வேண்டுமென்ற ஆசை தான் என்னை இயக்கி வருகிறது. உன்னை எங்கெல்லாம் தேடினேன்."
"நான் என்ன ஆனேன் என்று அறியவேண்டுமா?" கோமதி சிரித்தாள்- வரண்ட சிரிப்பபு. "என் ஐந்து வருட வாழ்க்கையைப்பற்றித் தெரிய வேண்டாமா?
“வேண்டாம் கோமதி. அதைப்பற்றி நான் ஒரு நாளும் கேட்கமாட்டேன். நீ மட்டும் என்னை மன்னித்து ஏற்றுக்கொள் கோமதி அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
"உண்மை தெரிந்தால் இப்படிச் சொல்லமாட்டீர்கள். அன்று ஒரு குற்றமுமறியாத என்னை விபசாரி என்று சொல்லித் தெருவில் தள்ளி விட்டீர்கள். ஆனால் இன்று

Page 22
-41
தான் உண்மையில் விபசாரி."
"கோமதி!' தன்னையறியாமல் கூவிவிட்டான். அவன் தொட்டுத் தாலி கட்டிய பெண் இவள்- அவன் மனைவி. அவள் சொல்லு முன்பே அதைப்பற்றி அவனுக்குத் தெரியுமென்பது உண்மைதான். ஆனால் அதை அவள் வாயிலிருந்தே கேட்கும் பொழுது அவனால் அந்த இதயவலியைத் தாங்க முடியவில்லை. அவளுடைய வெறிச்சோடிய கண்களை நோக்கினான் . ஒரு காலத்தில் அவனைக் காதலோடு கனிவோடு நோக்கிய கண்கள். ஆனால் இப்போது அவை அவனைக் கண்டதாகவே படவில்லை. அவளைப் பார்க்கப் பார்க்க அவள் உள்ளமும் ஆன்மாவும் கூடியது. அவள் உடல் இங்கிருந்தது. ஆனால் அவன் இங்கில்லை.கோமதி உணர்ச்சியற்றுச் சிரித்தாள்.
"உங்கள் மனதைப்புண்படுத்தச் சொல்லவில்லை ஆனாலி நீங்கள்அறிந்துதீர்மானிக்கவேண்டுமென்பதற்காக."
"கோமதி, நடந்ததைப் பற்றி நான் கவலைப்பட வில்லை. முழு மனத்தோடு கேட்கிறேன். என்னோடு வந்துவிடு கோமதி" கோமதி யன்னல் வழியே நீலவானத்தைப் பார்த்தாள். தன்னந்தனியே வெண்முகிலொன்று மிதந்து கொண்டிருந்தது. ஏகாம்பரத்தின் மெலிந்து நெடிதுயர்ந்த உருவம் கோமதியின் நினைவில் எழுந்தது. நரை பாய்ந்த அடர்ந்த கேசம். சுருக்கம் விழுந்த நெற்றி. காருண்ய விழிகள். குழந்தையினது போன்ற மிருதுவான நிறைந்த உதடுகள். கோமதி பலவகையான மனிதர்களைப் பார்த்திருந்தாள். ஆனால் ஏகாம்பரத்தைப் போல் பரிவும் அன்பும் மிக்கவரை அவள் கண்டதில்லை. மூன்று நாள் அவளிடம் அடுத்தடுத்து வந்தார். நான்காவது நாள் தயங்கித் தயங்கிக் கேட்டார். "என் மனைவி பல ஆண்டுகளுக்குமுன் இறந்து விட்டாள். ஒரு மகன் தான். அவன் என்னோடு இருப்பதில்லை. எனக்கு உன்னை

-42நன்றாகப் பிடித்து விட்டது. உனக்கு விருப்பமென்றால் என்னோடு வந்துவிடேன் " கோமதி உடனேயே இணக்கம் தெரிவித்தாள். ஏகாம்பரத்திறகுத் தன்னிடம் உண்மையிலே அன்பு உண்டு என்பதைச் சில நாட்களில் கோமதி உணர்ந்து கொண்டாள். அவள் போய்விட்டால் அவர் நிச்சயம் வருந்துவார். கோமதி சண்முகத்தைப் பார்த்தாள். அவளைப் பழியேற்றிப் புறக்கணித்தவன். இருந்தும் கணவன்.
"நான் வர முடியாவிட்டால்?.."
'வர முடியாதா? சட்டபூர்வமாக நீ என் மனைவி உன்னை யார் தடுக்க முடியும்? கோமதி ஒரு கணம் யோசித்தாள்.
“சரி, நான் வர விரும்பாவிட்டால்?-"
"கோமதி!' ஒலியற்றுச் சொல்லைக் கூட்டின அவன் உதடுகள்.
" ஆமாம் எப்படி வாழ்ந்தாலும் இனி எனக்கு ஒன்று தான்." அதைச் சண்முகம் நம்பினான். இனி அவளை எதுவுமே தொடமுடியாது. அவள் உள்ளமும் உணர்வும் இந்த வாழ்க்கையின் புறத்தே, அதன் பிடிக்கு அப்பால் நின்றன. அதோடு அவன் புரிந்தும் கொண்டான் அவளைச் சகதியில் தள்ளிவிட்டது அவன், அவள் கணவன். ஆனால் அவளுக்குக் கைகொடுத்து உதவியது வேறொருவன் தான். சண்முகம் எழுந்தான். இதயச் சுமையை இறக்கி விட வந்தவன் அதைவிடப் பெருஞ் சுமையை ஏற்றிக் கொண்டு விட்டான் அவனுடைய வேதனை விழிகளும் அவளுடைய வெறுமை விழிகளும் ஒரு கணம் சந்தித்தன. சண்முகம் திரும்பி வீட்டை விட்டு வெளியேறினான்.

Page 23
மூன்று சினிமாக்கள்
யமுனா ராஜேந்திரன்
இல்மஸ் குணேயின் மறைவினால் மூன்றாம் உலக சினிமாவுக்கு மிகப் பெரிய சோகம் நிகழ்ந்திருக்கிறது. தனித்துவமான இலட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்த வெகுஜன இடதுசாரி சினிமாவின் பிதாமகன் அவன். இடதுசாரி கலை இலக்கிய சினிமா வரலாற்றுக்கு நேர்ந்திருக்கும் இன்னொரு மகத்தான சோகம் அவருடைய படைப்புக்கள் துருக்கி ராணுவ அடக்குமுறை அரசினால் அழிக்கப்பட்டு விட்டது என்பதுதான்.
வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட அவருடைய 10 Lu Liuseo67ğ g56îr, g`ğaü The Herd, Yol, The Wall மூன்றும் அடங்கும். பிற அவரது 300க்கும் மேற்பட்ட படங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இல்மஸ் குணே சினிமா இயக்குனர். கம்யூனிஸ்டு போராளி. துருக்கி மக்களின் கதாநாயகன்.
குனேவின் மூன்று படங்கள்தான் மேற்குலகுக்கு பரவலாகக் காணக் கிடைத்த படங்கள் . மற்றவை பார்க்கக் கிடைப்பது மிகமிக அரிது. குணே பற்றிய மேற்கத்தியர்களின் பார்வையும் இந்த மூன்று படங்களில் அடிப்படை கொள்கிறது.
குனேவின் படைப்புக்களில் பல்வேறு பார்வையு டையோர் பல்வேறு தனித்தன்மைகளைக் காண்கிறார்கள்.
பிரபஞ்சமயமான குறியீட்டுத்தன்மை, யதார்த்தை மறுபடைப்புச் செய்யும் அவர் பாணி, அரசியலின் சாராம்சத்தை மனித உறவுகளுக்கிடையில் வெளியிடும் நுட்பத்தன்மை, இயற்கைக்குள் முகிழ்த்த மனிதர்கள் என இவ்வாறு அற்புதமான கலாசிருஷ்டிக்குத் தேவையான

-44அனைத்துக் கூறுகளையும் இவர் படங்களில் தரிசிக்கிறார்கள்.
கிராமியம் சார்ந்த சூழலில் வடிவமைக்கப்பட்ட சித்தார்ந்தம் அவரது இளமைக்கால உலகநோக்கு. தனது பள்ளி நாட்களிலேயே ஒரு சிறுகதை எழுதியதற்காக ராணுவத்தினால் கைது செய்யப்பட்டார். ஆரம்ப காலத்தில் தான் சந்தித்த கம்யூனிஸ்ட்டுகள் அனைவருமே தனக்கு ஏமாற்றத்தையயே தந்தார்கள் என்கிறார் குணே. தனது திரைப்படங்கள் உலக திரைப்பட விழாக்களில் பரிசு பெற்ற ஏற்பு விழாக்களில் தன்னை அவர் எப்போதும் ஒரு கம்யூனிஸ்ட்டு என்றும் மார்க்ஸிய லெனினியவாதி என்றும் அடையாளம் காட்டிக்கொண்டார்.
மாவோவின் மறைவுக்குப் பின் கலாச்சாரப் புரட்சி தொடர்பாக மாவோ மீது வீசப்பட்ட அவதூறுகளை எதிர்த்து விவாதித்தார் குணே. சிறையிலிருந்த காலங்களிற்தான் தன் வாழ்க்கைப் பார்வை முழுமையாக வடிவமைக்கப்பட்டது என்கிறார். மார்க்ஸ், லெனின், மாவோ போன்றவர்களின் புத்தகங்களை அவர் சிறை வாழ்வில்தான் படித்தார்.
தான் நடித்த எல்லா படங்களும் ஜனநாயக ரீதியா னதே புரட்சிகரமானது என்றோ அவர் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. ஆயினும் எல்லாப் படங்களும் வெகுஜன தளத்தை எட்டிய பிரபலமான படங்கள் என்கிறார்.
எப்போதும் குறிப்பிட்ட உயர்ந்த தர ரசிகர்களுக்காகப் படம் எடுப்பதை அவர் மறுதலித்தார். எவ்வளவுதான் உயர்மட்ட ரசனை கொண்டிருந்தாலும் அந்தச் சிறுபான்மையும் தங்களளவில் வெவ்வேறு உலகப் பார்வைகளைக் கொண்டவர்கள் தான் என்கிறார்.
1968 துவங்கிய 1970 வரை ராணுவ சேவையில் இருந்தார்

Page 24
-45குனே. அப்போதும் அவர் மார்க்ஸிய நூல்களைப் படித்துக் கொண்டுதான் இருந்தார். 1970 ராணுவ சேவையின் முடிவில் அவரது முதல் படத்தை நம்பிக்கை (The Hope) எனும் சினிமாவைத் தயாரித்தார். ஒரு தயாரிப்பாளராக அந்தப் படத்தைத் தயாரிப்பதற்காக அவர் கேங்ஸ்டர் படங்களில் நடித்து பணம் ஈட்டினார்.
அக் கால கட்டத்தில் அவர் பல்வேறு அரசியல் குழுக்கேளாடு தொடர்பு கொண்டார். மாணவர் எழுச்சிகளில் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்களில் கலந்து கொண்டார். சோவியத் நாடு ஒரு சோசலிச நாடு அல்ல எனும் நிலைப்பாட்டுக்கு வந்திருந்தார்.
‘நண்பன்" (The Friend) எனும் ஒரே ஒரு படத்தை தயாரித்திருந்த அக்கால கட்டத்தில் மறுபடியும் அவர் 1974 முதல் 1981 வரை சிறையிலடைக்கப்பட்டார். இக்கால கட்டத்தில் திரைப்பட கருத்துருவம் பற்றி இறுதியான புரிதலுக்கு வந்திருந்தார். சிறையில் நாவல்களும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டிருந்தார். ஐந்து முறை திரைப் படங்கள் எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இரு முறை தோல்வியில் முடிந்த அவர் முயற்சி பிற மூன்று முறை வெற்றிபெற்றது. அந்த மூன்று படங்கள் தான் அவர் இறுதிப்படங்களான The Herd, Yol மற்றும் The Wall போன்றவை.
சிறையில் இவரோடு இருந்தவரும் 1974-1981 கால கட்டங்களில் இவரது படைப்புக்களை நாவல், சிறுகதை, திரைப்படங்கள் போன்றவற்றை வெளியுலகுக் கொண்டு வந்தவருமான நிஹாத் பஹரம் எனும் சக துருக்கிய எழுத்தாளர் தனது நினைவுகளில் குணே பற்றி இன்னும் சில தகவல்களைத் தருகிறார்.
புரட்சிகர கலை வடிவங்களை உருவாக்க வேண்டும்

-46
என்பவர்க்கு ஆதர்ஷமாக இருந்தார் குணே. கம்யூனிஸ்ட் என்று ஒரு வார்த்தை சொன்னாலே சட்டவிரோதம், ஏழு ஆண்டு சிறைவாசம் என்றொரு சூழல் துருக்கியில் அன்றிருந்து. அந்தச் சூழலில்தான் நான் ஒரு கம்யூனிஸ்ட் ஒரு மார்க்ஸிட் லெனினிஸ்ட் என்றொரு கட்டுரை எழுதினார் குனே. அக் கட்டுரைக்காக ஏழு ஆண்டு சிறைவாசம் (1974-1981) புகுந்தார் குணே.
சிறை அனுபவத்திற்குப் பின்னால் திரைப்படத் தொழிலாளியாக சினமாவுக்குள் நுழைந்தார் குணே. ஒரு சினிமா கொட்டகையிலிருந்து பிறிதொரு கொட்டகைக்கு திரைப்படச் சுருள்களை எடுத்துக் கொண்டு திரிந்தார். மிக அழகான பூச் சுடன் படைக் கப் பட்ட திரை மாந்தர்களுக்கிடையில் சாதாரண பொதுஜன முகத்துடன் குனே இருந்தாார்.
ஏனெனில் சாதாரண மக்களில் ஒருவனாகத்தான் அவர் இருந்தார். 1960 தொடங்கி 5 ஆண்டுகளில் 100 சாகசப்படங்களில் அவர் நடித்திருக்கிறார். மிகமிகப் பிரபலமான நாடறிந்த நடிகராக அவர் வெற்றிபெற்றார்.
இரண்டாவது காலகட்டத்தில் பூமியின் மணமகள் (Bride of Earth 1968), "Ludggs prfisair' (Hungry Wolves) நம்பிக்கை (The Hope) போன்ற படங்கள் அக்கால கட்டத்தவை (1968-1970). இக் கால கட்ட படங்கள்தான் துருக்கிய கலை வரலாற்றில் சோசலிச யதார்த்தத்தின் துவக்கப்புள்ளி என்கிறார் பஹ்ரம்.
இந்தப் படத்தில் கதாநாயன் . இதுவரை வெற்றி யாளனாக இருந்த கதாநாயகன் (குணே) நையப்புடைக்கப் படுகின்றான். தனது நம்பிக்கைகள் அனைத்தும் பொடிப்பொடியாக, பைத்தியக்காரன்மாதிரி அலைகிறான். எலியா காஸன் இந்த படத்தை முதன் முதல் பார்த்த

Page 25
-47போது "மிகச் சக்தி வாய்ந்த சினிமா இயக்குனர் இதோ" என்றார். உடனடியாக இது மத விரோதமான துருக்கிய எதிர்ப்புப் படமென துருக்கியில் தடை செய்யப்பட்டது. நம்பிக்கை’ படம் வெனிஸ் திரைப்பட விழாவுக்கு கடத்தப்பட்டு திரையிடப்பட்டு பரிசு பெற்றது. குணே மீது இதற்காக வழக்குத் தொடுக்கப்பட்டது.
குணே 'குணே பிலிமிஸ்" எனும் தனது சொந்த திரைப்பட நிறுவனத்தை இப்போது தொடங்கினார். 20-30 திரைக்கதை வசனங்கள் எழுதினார். அனைத்தும் புத்தகங்களாகப் பதிக்கப்பெற்றது.
இக்காலகட்டத்தில் 1968- அமெரிக்காவில் வியட்நாமிய தலையீட்டுக் கெதிரான மக்கள் எழுச்சி, பிரான்ஸில் மாணவர் எழுச்சி, "சேருவோர-மாவோ' படம் ஏந்திய ஐரோப்பிய இளைஞர் எழுச்சி போன்றவை அலையடித்தன.
1971 ராணுவக் கலகத்தில் இடதுசாரி அமைப்புக்கள் தடை செய் யப் பட்டன . மக்கள் தெருக் களில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இக் கால கட்டத்தில் ராணுவத்துக்கெதிரான இளைஞர் கலகத்தோடு சேர்ந்து நின்றார் குணே. இளைஞர்களுக்கு அடைக்கலம் அளித்தார். அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அடைக்கலம் அளித்ததற்காக குணே கைது செய்யப்பட்டு இரண்டரை ஆண்டுகள் மறுபடி சிறையிலடைக்கப்பட்டார்.
இக்காலகட்டத்தில் சிறையின் பெயரால் (Name of the Prison) என்றொரு புத்தகம் எழுதினார் குணே. தனது நடவடிக்கைகள் அனைத்தும் நியாயமானவை. நான் புரட்சிகர இயக்கத்தின் ஒரு அங்கம். துருக்கியில் நடக்கும் மக்கள் போராட்டத்தில் ஒரு அங்கம் நான் என்று எழுதினார். குனே.

-48கலை அதனளவில் புரட்சி செய்யாது. ஆனால் சரியான அரசியல் நிலைப்பாடுள்ள கலைஞன் உலகு பற்றி சரியான அலசியல் நிலைபாடுள்ள தனது படைப்பு மூலம் பரந்துபட்ட பலமான உறவை மக்களோடு கொள்ள முடியும் அந்தக் கண்ணி, அரசியல் தன்மை வாய்ந்ததாகலாம். அந்த அர்த்தத்தில் அரசியல் பிரசாரத்துக்கு அரசியல் எழுச்சிக்கு கலை உபயோகமாகும், ஆனால் அதன் வறட்டு அர்த்தத்தில் பிரச்சாரத்திலும் போராட்டத்துக்கும் பயன்படேவண்டுவது என்று சொல்வதை நான் மறுக்கிறேன், என்கிறார் குனே.
1974இல் எக்விட் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார் குணே. அவரோடு சிறைத்தோழர் பஹ்ரமும் விடுவிக்கப்பட்டார். அதன் பின் 45 நாட்கள் தான் சிறைக்கு வெளியிலிருந்தார் குணே. இந்நாட்களில் நகர வாழ்க்ககை பற்றிய நண்பனி'(The Friend), பருத்தித்தோட்ட தொழிலாளர் வாழ்வுபற்றிய ஆவல்’ (The Anxiety) என்ற இரு படங்களுக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படப்பிடிப்பின் போது ஒரு மதுவிடுதியில் ஏற்பட்ட தகராறில் ஒரு நீதிபதி கொல்லப்பட்டார். குணே கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார் சிறையில் அவரைக் கொல்லவும் முயற்சி நடந்தது.
இந்த ஆண்டில் " எமக்கு ஒரு அடுப்பு, ஜன்னல், மற்றும் பிராட்டி வேண்டும் என்னொரு நாவல் எழுதினார் குணே. இந்நாவலின் இறுதி 50 பக்கங்களில் சோவியத் சமூக அமைப்பை கடுமையாக விமர்சித்தார்’ குணே.
இந்த நாட்களில் பஹ்ரம் இல்மஸ் குணேவை அடிக்கடி சிறையில் சந்தித்தார். அதன் விளைவாக "குணே" எனும் கலாசார மாத இதழ் வெளிவரத்துவங்கியது.
18 இதழ்கள் வெளிவந்த பின் வெளிவந்த ஒவ்வொரு இதழும் ராணுவத்தினாால் தடை செய்யப்பட்டது. அதன்

Page 26
-49பின் பஹ்ரம் குனேவின் சினிமா நிறுவனப்பொறுப்பை ஏற்றார். இதன் விளைவாகவே அவரின் இறுதி மூன்று படங்கள் வெளியுலகை எட்டின.
இப்படங்களின் திரைக்கதையை சிறையிலிருந்த படி குணே எழுதினார். பஹ்ரம் வெளியில் மக்களைச் சந்தித்து நேர்முகங்கள் எடுத்து குனேவுக்குக் கொடுக்க, அதை ஆதாரமாக வைத்து உருவானது திரைக்கதைகள்.
1980இல் 'குணே' பத்திரிகை ராணுவத்தால் மூடப் பட்டது. 1980இல் பஹற்ரம் துருக்கியிலிருந்து வெளியேறினார். பிற்பாடு குணே துருக்கியிலிருந்து தப்பி பிரான்சுக்கு வந்து சேர்ந்தர்ர். சர்வதேச திரைப்பட விருதுகளை ஏற்கும் போது தனது முஷ்டியை இறுக்கி கையுயர்த்தி கம்யூனிஸ்ட் மனிதக் குறியீட்டை வெளிப்படுத்தினார் குணே.
இவரது அரசியல் நிலைப்பாட்டையும் கலை பிரக்ஞை யையும் மதிப்பீடு செய்யும் துருக்கிய மார்க்லிஸிட் லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏடி(AD) என்பவர் குணேவின் நிலைப்பாடு மத்திய தரவர்க்க புரட்சிகர ஜனநாயக நிலைப்பாடு என்கிறார். சில மார்க்ஸிய லெனினிய நிலைப்பாடுகளை குனே கொண்டிருந்தாலும் தனது மத்திய தரவர்க்க நிலைப் பாட் டி லிருந்து துரு க் கிய சமூகத் தரின் தனித்தன்மைகளைப் புரிந்து கொள்ளத் தவறினார் குணே என்கிறார். அதன் பிரபஞ்சமயமான உண்மையையும் கிரகிக்கத் தவறினார் என்கிறார்.
சித்தாந்த ரீதியில், அரசியல் ரீதியில், அமைப்பு ரீதியில், இவர் தனது படைப்புக்களை ஒருங்கிணைக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார். துருக்கியில் நிலவிய அகப்புறத் தன்மைகளை கம்யூனிஸ்ட் இயக்கம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவேதான் குணே கம்யூனிஸ்ட் இயக்கத்தை முற்றிலும் தழுவிக் கொள்ளவில்லை என்று விளக்குகிறார் இவர்.

-50குணே அரசியல் பற்றியும் கலைவெளியீடு பற்றியும் தெளிவான நிலைபாடுகளைக் கொண்டிருந்தார். eggil தான் அவரை ஒரு வறட்டுத்தனமான பிரச்சாரக்காரராக இல்லாமல் கலைஞனாக ஆக்கியிருக்கிறது.
“பாதை" "மதில்" "ஆட்டியன்” படங்களில் யதார்த்தம் பற்றிய கேள்விகளுக்கு அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பதிலளிக்கிறார். இம்மூன்று படங்களில் ஆக்கபூர்வமான அரசியல் விமர்சனம் தெளிவாக இருக்கிறதா எனும் கேள்வி, வாழ்க்கை இருக்கிறவாறு அவ்வாறே சொல்லப் பட்டிருக்கிறது, பெண்கள் மீதான அடக்குமுறை விமர்சன மற்று உள்ளபடி சொல்லப்பட்டிருக்கிறது எனும் விமர்சனம், துயரத்தையும் விரக்தியையும் அவநம்பிக்கையையும் வெளியிடுகிறது எனும் குற்றச்சாட்டு படங்கள் முழுக்க எதிர்மறையாக முன்வைக்கப்படுகிறது எனும் வாதம், இவைகளுக்குத் தெளிவாக பதிலிறுத்தார் குணே. இது தான் வாழ்வுக்கும் கலைக்குமான உறவு பற்றிய முழுமையான பார்வை என்று நான் கருதுகிறேன்.
அவர் சொல்லுகிறார் : முரண்பாடு ஒவ்வொரு நிகழ்விலும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இது தான் முரண்பாடுகளின் இணைவு என்றும் நாம் புரிகிறோம். மனிதனும் வாழ்வும் இத்தகையதுதான்.
"பாதை" படத்தில் வருகிற 'ஸயத” பாத்திரத்தை எடுத்துக்கொள்வோம். அவன் தன் மனைவியைப் பணியில் சாகவிடுகிறான். இறுதி நேரத்தில் காப்பாற்றவும் ஒடுகிறான். காப்பாற்ற வேண்டும் எனும் உள்விருப்பம் அவனுக்கு இருக்கிறது. அவள் இறந்த பின்னால் அதற்காக மிகவும் துயரமுறுகிறான். அவனுக்குள் உறுத்தல் இருக்கிறது அவனுக்குள் இருக்கும் அந்த 'உறுத்தல்" ஒரு தனிநபராக அவனைச் சீரழிக்கிறது. அவன் ஆன்மாவை உடைக்கிறது. இதுதான் எனக்கு மிகவும் ஆக்கபூர்வமானது.

Page 27
-51அந்தப் பொய்யன், திருடன் "மொஹமத்’தை எடுத்துக் கொள்வோம் . 'தான் கைவிட்டதனால்தான் எனது மைத்துனன் இறந்தான்’ என ஒப்புக் கொள்கிறான். இந்த உறுத்தல் இந்த மனிதப் பண்புதான் எனக்கு ஆக்கபூர்மானது. முக்கியம் !
இந்தக் குர்திஸ் பையனை எடுத்துக்கொள்வோம். அவன் சிறைக்குத் திரும்பிப் போக மறுக்கிறான். சுட்டுக்கொல்லப்பட்ட தமையனைத் தொடர்ந்து தானும் போராடப் போவதாகச் சொல்கிறான். அத்தனை சிரமங்களையும் ஏற்பதாகச் சொல்லுகிறான்!.
என்னளவில் ஆக்கபூர்வமானது என்று நான் காட்ட விரும்புவது, வாழ்வு மாறிக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் , மனிதன் மாறிக் கொண்டிருக்கிறான் செழுமைப்படுகிறது வேறுவிதமாக வளர்கிறது. இயங்குகிறது எனபதைத்ததான்.
புரட்சிகர இயக்கத்தில் உங்கள் கலையின் பங்கு என்ன என்பது ஒரு கேள்வி. எனது நோக்கம் தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பது. இதற்கு l. அரசியல் 2. பொருளாதாரம் 3.கருத்துருவ கலாச்சார களம் என்று மூன்று உண்டு.
கலாசாரப் போராட்டம் என்பது கருத்துருவப் போராட்டமும் தான் , ஒரு வகையில் அரசியல் போராட்டமும்தான் ஆனால் அரசியலின் எல்லாக் கூறுகளையும் அது கொண்டிருக்க வேண்டுமென பாசாங்கு செய்ய முடியாது.
கலையின் பங்களிப்பைஅரசியல் போராட்டமும் நிறைவு செய்யவேண்டும். கலையின் வீச்சை, அதோடு சேர்ந்த அரசியல் வேலை நிறைவு செய்ய வேண்டும்.

-52கலைப்படைப்புக்குள் அரசியல் போராட்டத்தின் அனை த்துக் கூறுகளையும், அனைத்து இலட்சியங்களையும் தேடிக் கொண்டிருப்பது சரியல்ல. கலைப்படைப்பு அரசியல் இயக்கத்தையும் எளிமையானதாக்கும். அரசியலின் முழு வேலையையும் கலைப்படைப்பின் மீது ஒருவர் சுமத்த (Լpւգ-աո Ցi].
கலைப் படைப்பு, சில ஸ்தூலமான அரசியல் நடவடிக் கைகள் , எழுத் துக் கள் , விளக்கங்கள் , வியாக்கியானங்கள் மூலம் நிறைவு செய்யப்பட வேண்டும்.
சில தோழர்கள் என்மீது அரசியல் தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் வைக்கிறார்கள். அந்த விமர்சனங்கள் எனக்கு அவ்வளவு முக்கியமானவை அல்ல.
கலை அதனளவில் புரட்சி செய்யாது. ஆனால் சரியான அரசியல் நிலைப்பாடுள்ள கலைஞன், உலகு பற்றி சரியான அரசியல் நிலைப்பாடுள்ள கலைஞன் தனது படைப்பு மூலம் பரந்துபட்ட பலமான உறவை மக்களோடு கொள்ள முடியும் அந்தக் கணணி அரசியல் தன்மை வாய்ந்ததாகலாம். அந்த அர்த்தத்தில் அரசியல் பிரச்சாரத்துக்கு அரசியல் எழுச்சிக்கு கலை உபயோகமாகும். ஆனால் அதன் வறட்டு அர்த்தத்தில் பிரச்சாரத்திலும் போராட்டத்துக்கும் பயன்படவேண்டுவது கலை என்று சொல்வதை நான் மறுதலிக்கிறேன்" என்கிறார் குணே.
குணே மேலும் சொல்லுகிறார் "இந்த அர்த்தத்தின் படி புரட்சிகரமான கலையை நீங்கள் கொண்டிருக்கும் போது நீங்கள் மக்களை மட்டும் ஆகர்ஷிப்பதில்லை. பிற கலைஞர்களையும் ஆகர்ஷிக்கிறீர்கள். அரசியல் பிரக்ஞைக்கு களத்தை நீங்கள் தயார் செய்கிறீர்கள். இந்த அர்த்தத்தில் கலை ஒரு ஆயுதம், ஒரு படைக்கலம் போன்றது.
ஆனால் கலை தனக்கேயுரிய தனிமொழி கொண்டது. கலைக்கேயுரிய மொழி அது. முழுமையாக (Totaly)முற்று

Page 28
-53முழுதாக (Absolutely) அந்த மொழியை எவரும் மதிக்க வேண்டும். இதை நீங்கள் மதிக்கவில்லையானால் இந்த மொழியை நீங்கள் மதிக்கவில்லையானால், பிறகு அந்த ஆயுதம் உங்களைக் கொல்லும்படி அது திருப்பித் தாக்கும் வலு கொண்டது.
1984ஆம் ஆண்டு செப்டம்பர் 9, துருக்கி அரசியல் அகதியாக பாரிஸில் கான்ஸர் நோயினால் மரணமுறும் விநாடியில் குணேயின் இறுதி வார்த்தைக்ள் இவை தான்.
" எனக்குக் குளிருகிறது. பாரிஸ் கம்யூன் தோழர்களின் போர்வையை எனக்குப் போர்த்துங்கள”
அவர் விருப்பப்படியே பாரிஸ் கம்யூன் தோழர்களின் கல்லறைக்கு அருகில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவன் நிரந்தர மனிதன்.
நன்றி : தாகம் (சித்திரை 1994)

முகாமைத்துவப் பதவிகளில் பெண்கள் அமரத்தயங்குவது ஏன்?
அன்னலட்சுமி இராஜதுரை
இவ்வையகம் அறிவோங்கி சிறப்புற்றிருக்க வழி என்ன? ஆண்மக்களும் பெண்மக்களும் சமமாகக் கருதப்பட்டு சகலதுறைகளிலும் அவ்விதமாக அமையப் பெறுவதுதான் இதற்கு ஒரே வழியாக அமையமுடியும் இதனைத்தான் புதுமைக் கவிபாரதியும், "ஆணும் பெண்ணும் சமமெனக் கொள்வதால் அறிவோங்கி இவ்வையகம் தழைக்குமாம்" எனக் குறிப்பிட்டார்.
இத்தகையதொரு சமத்துவநிலை பேணப்படாத காரணத்தினால் உலகம் திக்குமுக்காடுவதும், அதன் 65 மெல்லியலாளர் என்று வர்ணிக்கப்படுகின்ற பெண்மக்கள் திரவியங்களை அனுபவித்து வருவதும் கண்கூடு. உலக சனத்தொகையில் சரிபாதியினராகப‘ பெண்கள் இருக்கி ன்றார்கள்.ஆகவே அவர்களதுகுறைபாடுகள் அலட்சி யப் படுத் திவிடக் கூடியதல்ல இதுவுமன்றி, பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடிய உலகத் தொழிலாளர்களில் 37 சதவிகிதமானவர்கள் பெண்களாக உள்ளனர். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்களில் 42 சதவிகிதமானவர்கள் பெண்களாவர். இது ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் உலகத் தொழிலாளர் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் இருந்து தெரியவந்தது.
முன்னைய காலகட்டங்களில் பெண்கள் விவசாயம் போன்ற சில துறைகளில் ஈடுபட்டு வந்ததை அறிவோம். ஆயின் அவர்கள் தற்போது பல்வேறு துறைகளிலும் பிரவேசித்து பணிபுரிவருவதை அவதானிக்க முடிகின்றது. ஆசிரியத் தொழில், வைத்தியம் , பொது சுகாதாரத்துறை, லிகிதர் சேவை, தொழில்நுட்பத்துறைகள் போன்றவற்றில்

Page 29
-55கணிசமான அளவிலும் தற்போது பாதுகாப்புத்துறையிலும் வேலை பார் க் கின் றனர் . கல் வித் துறையிலும் , சுகாதாரத்துறையிலும் 50 சதவிகிதமான மங்கையர் பணியாற்றுகின்றனர்.
காரியாலயங்களிலும் , தொழிற்சாலைகளிலும் தோட்டங்களிலும், பாடசாலைகளிலும் , வைத்திய நிலையங்களிலும் மற்றும் இடங்களிலும் தொழில் பார்க்கின்ற பெண்கள் பல்வேறு சிரமங்களையும் எதிர்நோக்கி, சமாளித்து, சகித்து பணிபுரிகின்றனர். சம்பள ஏற்றத்தாள்வுகள், பாரபட்சங்கள், சிற்சில இடங்களிலும் பாலியல் இம்சைகள், ஆணாதிக்க சேஷ் டைகள் போன்ற பல் வேறு முரண்பாடுகளுக்கு அவர்கள் முகம் கொடுக்க வேண் டியவர் களாக இருப் பதாகக் குறைகள் தெரிவிக்கப்படுகின்றன.
இது ஒருபுறமிருக்க, மகளிர் எங்கு தொழில் பார்ப்பினும் முகாமைத்துவத்துறைக்கும் முடிவுகள் எடுத்து செயற்படுத்தும் உயர் அதிகார மட்டத்திலும் தொழில் புரிவது மிகக் குறைந்த அளவிலேயே இருப்பது அவதானிக்கப் பட்டிருக்கிறது. தொழில் பார்க்கும் இடத்திலாயினும் வீட்டிலாயினும் முக்கிய விடயங்களிலும் இது செய்யலாம், இது செய்யக்கூடாது, அல்லது இவ்விதமாக செயற்படலாம் என முடிவுகளை எடுப்பது பெரும்பாலும் ஆண்களாகவே இருக்கின்றனர். மேலும் விசேடமாகக் குறிப்பிடுவதனால் தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்கள் ஆண்களாகவே உள்ளனர்.
வீட்டிலாயினும், நாட்டிலாயினும் அதன் பொருளாதார சுபிட்சத்துக்கும், அபிவிருத்திக்கும், சிறப்புக்கும் ஆணும் பெண்ணும் இணைந்து முடிவுகளை எடுத்து முகாமைத்துவம் செய்து முன்னேறுவது பெரிதும் வரவேற்கப்படும் ஒன்றாகும். முகாமைத்துவத்துவப்

-56பதவிகளுக்கும், முடிவுகளை மேற்கொள்ளுகின்ற ஒரு நிலைமைக்கும் பெண்கள் குறிப்பிடத்தக்க அளவுக்குச் செல்லாததற்குக்காரணம் என்ன? அதற்குப் பெண்கள் தயக்கம் காட்டுவது ஏன்? என்பவை ஆராயப்படவேண்டிய விடயங்களாகும்.
ஆண்- பெண் சமத்துவமின்னமையில் அமைந்த மரபுவழிக் கோட்பாடுகள் பெண்களின் சுய ஆளுமையை மட்டுப்படுத்தி வடிவமைக்கின்றன.
மரவுவழியானசமூக நம்பிக்கை இதற்கு முழுமுதற் காரண்மாக இருக்கின்றது எனலாம். பெண்கள் இல்லத்துக்கு உரியவள் என்பது காலங்கலாமாகப் பேணப்பட்டுவருகின்ற கோட்பாடாகும். இல்லத்தின் தலைவியாகவும், தாயாகவும் அவள் போற்றப்படுகின்றாள். வெளியில் சென்று உழைத்து வருபவன் ஆண்மகனாக இருக்கின்றான் . அவன் கொண்டு வரும் பொருளை வைத்து குடும்பத்தை நிருவகிப்பவள் பெண்ணாக இருக்கின்றாள். அவள் மகளாய், மனைவியாய், சகோதரியாய் தாயாய் நின்று ஆற்றும் பணியே சிறப்பானவையாக காலங்காலமாகப் போற்றப்பட்டு வருகின்றன. இக்கட்டுப் கோப்பை மீறும் பெண் குறைவாக மதிப்பிடப்படுகின்றாள். “இல்லாள் அகத் திருக்க இல்லாதொன்றில்லை" என்பன போன்ற பெரியார் கூற்றுக்கள் இந்த நிலையை வலியுறுத்தும் . இத்துடன் தந்தை, சகோதரன், கணவன் என்ற உறவுமுறையில் உள்ள ஆண்களின் சொற்கேட்டு நடத்தல், அதாவது கீழ்ப்படிதலே பெண்ணுக்கு சிறப்பானது என்ற மரபுவழிவரும் கோட்பாடும் அவளின் வீச்சைக் குறைத்துவிடுகின்றது எனலாம் எனவே அவள் காரியங்களைத் தானே முடிவெடுத்தச் செய்வதைவிடுத்து, சொன்ன வேலையைச் செய்யும் பதுமையாகிவிடுகின்றாள் என்றாலும் தவறில்லை.
அச்சம், மடம், நாணம் பயிர்ப்பு பெண்ணுக்குரிய குணங்களாக எக்காலத்தும் போற்றப்பட்டுவந்துள்ளன.

Page 30
-57
இவற்றை மீறும் பெண் அவமரியாதைக்குரிவளாகின்றாள். நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்" என்று புரட்சிக்கவிஞன் பாரதி ஊக்கம் கொடுத்தாலும், தயக்கமும், அச்சமும் மகளின் அரிய இயல்பாகக் கருதப்படுவதை மறுதலியலாது பயங்கொள்ளும் ஒருத்தி, எப்படித் துணிவோடு முடிவுகளைத் தனியாக மேற்கொள்ளுவாள்? எப்படி பிறரைவைத்து அதனைச் செயற்படுத்துவாள்? அம்மாதிரி விடயங்களில் விட்டுக்குள்ளேயே அவளுக்குப் போதுமான ஆதரவு ஆண்களிடமிருந்துகிடைப்பதில்லை.
சில பெண்களைப் பொறுத்தவரை அவர்களது சேவை மூப்பின் காரணமாகவே அல்லது படிப்பு, அனுபவம் காரணமாகவோ முகாமைத்துவம் செய்யும் உயர்பதவிகள் கிடைத்து விடுகின்றன. ஆயினும் அவர்கள் அப்பதவியை விரும்பிச் செய்யமுற்படுவதில்லை. உதாரணமாக ஒரு தலைமை ஆசிரியர் பதவியோ அன்றி அதிபர் பதவியோ கிடைத்தாலும், அதை மனமுவந்து ஏற்காதிருக்கின்ற ஆசிரியைகளும் உள்ளனர். "பள்ளிக்கூடத்து வேலையுடனேயே நாள் முழுக்க மூழ்கிக்கிடக்க வேண்டும். நான் வீட்டைப் பார்ப்பேனா? என்று கூறி அதிலிருந்து விலகிப் பொறுப்புக் குறைந்த கடமைகளைக் கவனிப்பர். வீட்டையும் வேலையையும் ஒருங்கே சமமாகக் கவனிக்க முடியாத காரணத்தினால் இந்நிலைமை எழுகின்றது.
இது ஒரு புறமானால் உயர்கல்வி இன்மை போதிய தொழில்நுட்ப அறிவின்மை, போதிய பயிற்சியின்மை, கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் போன்றவற்றில் ஒழுங்காகப் பங்குபற்ற முடியாத சூழ்நிலைகள் ஆகியவை பெண்கள் முகாமைத்துவப் பதவிகளுக்கு ஏற்படாமைக்குச் சில காரணங்களாக விளங்குகின்றன. மேலும் கூறுவதானால், உயர் பதவியில் பெண்கள் அமர்வதை விரும்பாத ஆண் அதிகாரிகள் சாதுரியமாக அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிடும் சந்தர்ப்பங்களும் உள்ளன.

-58
எந்தவொரு நாடும் பெண்களை அலட்சியப்படுத்தி ஒதுக்கி, முன்னேற்றம் காண்பது என்பது முடியாத காரியம். நாட்டின் புதல்விகள், புதல்வர்கள் என்ற உயர்நோக்கைக் கொண்டு, இருவரும் வீட்டிலும் நாட்டிலும் சமபங்காளர்கள் என்ற உன்னத கோட்பாட்டில் வீறுநடைபோட்டாலே சுபிட்சமும் அமைதியும் நிச்சயமாகும். பெண்ணின் உயர்வுக்கு வழிவகுப்பதென்பது ஆண்பாலாரை பின்தள்ளிடுவது என்பது ஆகாது.
சமத்துவமான சலுகைகளும், உரிமைகளும் பெண்களு க்கும் இருத்தல் வேண்டும். பெண்ணின் பொறுப்புக்கள் மடடுமல்ல, அவரது உரிமைகளும் சலுகைகளும் குறித்து அவருக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். இதுவுமன்றி பால் சமத்துவம் சமூகத்துக்கு உணர்த்தப்படுதல் வேண்டும். இதற்கு தேசிய ரீதியில் சில நடவடிக்கைகள் மேற்காட்டப்படுவது வரவேற்க தகுந்ததாகும். இவ்விடயம் குறித்து இலங்கை குடும்பத்திட்டச் சங்கமும் மகளிருக்கென நடத்திய கருத்தரங்கொன்றில் மேற்கொண்ட சிபாரிசுகளையும் குறிப்பிடுவது பொருத்தமானது.
ஆண், பெண்பால் சமத்துவத்தை உணர்த்த அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரச ஊழியர்கள், கருத்தை உருவாக்கும் தலைவர்கள், அரச சார்பற்ற ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள், வெகுசனத் தொடர்பு சாதனங்களைத் சார்ந்தோர், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் சார்ந்தோருக்கு கருத்தரங்குகளை நடத்துவது நனறு.
பொருத்தமான கல்வித்தராதரமும் திறமையும் அனுப வமும் உள்ள மங்கையருக்கு அவர்களின் திறமையை கணக்கிலெடுத்து தீர்மானங்களை மேற்கொள்ளும் முகாமைத்துவப் பதவிகள் வழங்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

Page 31
-59
பெண்களின் தலைமைத்துவப்பங்கு வளர்க்கப்படுதல் அவசியமானதாகும். இதன்மூலம் அவர்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் தமது சிறந்த பங்களிப்பை வழங்குதல் இயலும். இந்த நோக்கத்திற்காக அரசாங்கத்துறை, தனியார் துறை மற்றும் அரச சார்பற்றதுறை ஆகியவற்றைச் சேர்ந்த பெண்களுக்கு தலைமைத்துவம் தீர்மானங்களை எடுத்தல் முகாமைத்துவ தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் விரிவான பயிற்சிகள் வழங்கப்படுதல் வேண்டும். இதுவுமின்றி அவர்களது தொழில் சம்பந்தப்பட்ட விடயங்களிலும் இது கட்டாயமாக வேண்டும்.
நாளாந்தம் வீட்டுக் காரியங்களில் பெண்கள்அதிக நேரத்தைச் செலவிட வேண்டி இருப்பதினால் கூடுதல் பொறுப்பையும் நேரத்தையயும் வேண்டிநிற்கும் வேலைகளை ஏற்கத்தயக்கம் காட்டுகின்றார்கள். என்பது வெளிப்படை எனவே அவர்களுக்கு உதவும் வகையில் அரசுசார்பற்ற ஸ்தாபனங்களும் உட்பட சேவை ஸ்தாபனங்களும் அரசாங்கங்களும் நல்வாழ்வுத்திட்டங்களை உருவாக்கி அமுல்படுத்த வேண்டும். அந்த வகை நல்வாழ்வுத் திட்டங்களில் பெண்கள், மனைவி தாய், என்ற வகையில் அவர்களது உடலியல் ரீதியான உரிமைகள், கடைமப்பாடுகள் என்பனவும் கருத்தில் கொள்ளப்பட்டு வசதிகள் செய்யப்பட வேண்டும்.
பாதுகாப்பான பிரயாண வசதிகள் உத்தியோகத்தர்
களுக்கு தகுந்த தங்குமிட வசதிகள் நல்ல முறையிலான சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இதில் அடங்கும்.
ஆண் பெண் சமத்துவத்திற்கு குந்தகமாக இருக்கக் கூடிய சட்டங்களிலுள்ள குறைபாடுகள் நீக்கபட வேண்டியதும் தேவையான ஒன்றேயாகும். உதாரணமாக ஜனசவிய உதவிப்பெறுவோரைத் தெரிவுசெய்தல், காணி விவகாரங்கள், கடன்வசதிகள் போன்றவற்றினை குறிப்பிடலாம்.

-60
பள்ளிக்கூடப் பாடவிதானங்களிலும், வெகுசனத் தொடர்புச் சாதனங்களிலும் இன்னமும் காலாவதியாகிப் போனதும், பெண்களைப் பற்றி எதிர்மறையானதுமான கருத்தோட்டங்களே எடுத்துக்காட்டப்படுகின்றன. இவை மாற்றப்படவேண்டும். அவற்றுக்குப் பதிலாக முன்னேற்றத்தில் சமமான பங்காளர் என்ற கருத்துநிலை உருவாகும் படி மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். பால் சமத்துவ விடயங்கள் குறித்து மக்களுக்கு மீளப்போதனை செய்யும் பொருட்டு புதிய நிகழ்ச்சித் திட்டங்கள் செயற்படுத்தப்படுவது வரவேற்கத்தகுந்தது. வாழ்க்கைத் தரத்தின் பொதுப்படை யான முன்னேற்றத்தினை துரிதப்படுத்த இது ஒரு வழியாக அமையலாம்.
பெண்கள் தொழில் கல்வியைக் கற்பதில் ஆர்வம் காட்டி அதில் பெருமளவில் சேருவதற்கு முன்வருதல் வேண்டும். இதற்கு பெற்றோரும் ஆசிரியர்களும் ஊக்கப்படுத்தல் வேண்டும். தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட தொழில்களை மகளிர் மேற்கொள்ள அரசாங்கம் ஊக்கம் அளிப்பேதாடு ஊக்குவிப்புக்களையும் வழங்க வேண்டும்.
தொடர்ச்சியான சமூக பொருளாதார சட்ட கலாசார
மாற்ற்ங்களை தொடர்ச்சியான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் கல்விக்கூடங்கள், கருத்தரங்குகள் கலந்துரையாடல்கள் மற்றும் வெகுஜனத் தொடர்பு நிகழ்ச்சி மூலமாக அடைவதற்கு பெண்கள் ஒன்றிணைந்து ஒரமைப்பினை உருவாக்குதல்
வேண்டும். இது ஓர் வற்புறுத்தல் குழுவாக இயங்க
வேண்டும். இந்தக் குழு பாரளுமன்ற வழிவகைகள் மூலமாக பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவக் கூடியதாக அரசியலில்
மேலும் கூடுதலான பெண்கள்சேர உதவ முடியும்.
இவ்விதமான செயற்பாடுகள் மகளிர் சமூகத்தில்சமத் துவ நிலையைப் பெறவும் முகாமைத்துவம் பணிகளில் சிறப்புறவும் உதவிபுரியும் என நம்பலாம்.

Page 32
தமிழ்த் தினப் பத்திரிகைகள் காட்டும்
மகளிர் நிலை
பாத்திமா சுல்பிகா
தற்போது காணப்படுகின்ற மனித தொடர் பாடலுக் குரிய தொடர்பு சாதனங்களில் மிகப் பழமையானவை பத்திரிகைகள் ஆகும். இவற்றின் முக்கியத்துவம் காரணமாக அவை தொடர்ந்தும் வளர்ந்து நிலைத்து வருவன. ஏனெனில் இவை சமகால சமுதாய வாழ்வியலையும் இதன் போக்கினையும் உடனுக்குடன் படம்பிடித்துக் காட்டுவன. இவ்வகையில் சமகால மகளிர் நிலையையும் அவை காட்டுகின்றன. இவ்வாறு இலங்கைத் தமிழ் தினப் பத்திரிகைகளான வீரகேசரி, தினகரன் ஆகியன காட்டும் மகளிர் நிலை, இங்கு ஆய்வுப் பொருளாக அமைகின்றது.
ஆய்வின் பரப்பும் நோக்கமும்
1992ஆம் ஆண்டு ஜுலை மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரையான 4 மாத காலப்பகுதியில் வெளியிடப்பட்ட தமிழ்த் தினசரிகளான வீரகேசரி தினகரன் ஆகியவற்றில் இடம்பெற்ற பெண்கள் தொடர்பான செய்திகளை ஆய்வதாக அமைகின்றது, தினசரிப் பத்திரிகைகள் பரந்துபட்ட விடயங்களையும் பல வகையான வாசகர்களையும் கொண்டவையாகும். அத்துடன் அன்றாட செய்திகளை உடனுக்குடன் வாசகர்களை ஈர்க்கும் வகையில் வழங்குகின்றன. இதற்காக பத்திரிகைகள் பல்வேறு உத்திகளையும் கையாள்கின்றன. பொதுவாக சமூகத்தில் ஆட்சி செலுத்தும் கருத்துக்களை வலியுறுத்துவதாகவும் இவை அமையும். எளிமையாகவும், பலரும் சுவைக்கக் கூடியதாகவும் பல அம்சங்களையும் கொண்டிருக்கும். மிக எளியதும், உடனடியானதும், விலைகுறைவானதும் ஆன தகவல்

-62
சாதனமாக இருப்பதோடு மிக்க கூடிய தொகையினரையும் இவை வாசகர்களாகக் கொண்டுள்ளன. பல்வேறு கண் ணோட்ட முடைய வர் களின் அறிவையும் அனுபவங்களையும் கருத்துக்களையும் நோக்குகளையும் பத்திரிகைகள் எடுத்துக்கூறுகின்றன, சித்திரிக்கின்றன. சமூகத்தினூடு கடத்துகின்றன. இவ்வகையில், மகளிர் பற்றிய புலக்காட்சிகள் எண்ணக்கருக்கள், நோக்குகள், போக்குகள், அவர்களளைப் பற்றிய எதிர்பார்ப்புகள், வலியுறுத்தல்கள் ஆகியனவும் இடம்பெறுகின்றன. இவற்றினையே எமது கட்டுரை பல்வேறு வகைப்பட்ட நோக்கு நிலைகளிலிருந்த ஆய்வு செய்கிறது
பத்திரிகைகளில் இடம்பெறுகின்ற அம்சங்களை நாம் இருவகையாக வகைப்படுத்தி நோக்கலாம். ஒசை புனைவுகள் அதாவது ஒருவரின் சிந்தையிலிருந்து தோற்றம் பெறுகின்றன. இவை கவிதைகள், சிறுகதைகள், தொடர் கதைகள், குறுநாவல்கள் என்பவற்றை உள்ளடக்குகின்றன. மற்றயது புனைவுகளல்லாதன. படங்கள், விளம்பரங்கள், தலைப்புச் செய்திகள், ஆசிரியர் கருத்து, துணுக்குகள், விமர்சனங்கள், கேள்வி பதில் கட்டுரைகள், வாசகர்கடிதம் கண்ணோட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கும்.அவற்றுள் மகளிர் பற்றிய விளம்பரங்கள், கட்டுரைகள் புனைகதைகள்,துணுக்குகள், குடும்பச்சச்சரவு, மகளிர் சம்பந்தப்படுகின்ற பலாத்காரம் மற்றும் சமூக அரசியல் விடயங்கள் ஆகியன ஆழ்ந்து நோக்கப்படுகின்றன.
பத்திரிகைகளினூடாகக் காட்டப்படும் மகளிர் நிலையை எடுத்துக்காட்டுவதும் மகளின் உண்மையான நிலையையும் அந்தஸ்தையும் பற்றிய பத்திரிகைகளின் நிலைப்பாட்டையும் விமர்சன நோக்கில் ஆய்வு செய்வதுமே இவ்வாய்வின் நோக்கமாகும். பத்திரிகைகள் சித்திரிக்கும் பெண்ணின் நிலையை எடுத்துக்காட்டும் அதேவேளை விமர்சனம் செய்வதன் மூலமாக மதிப்பீடு செய்தலும்

Page 33
-63இவ்வாய்வின் நோக்கமாய் அமைகின்றது. அத்துடன், பத்திரிகைகள் இடம்பெறும் அம்சங்களில் காணப்படும் இனசார்பு நோக்கம் வன்முறையைத் தூண்டக்கூடிய அம்சங்களையும் இனங்காணுதலும் இதன் நோக்கமாகும்.
ஆய்வின் பின்னணி
பெண்களும், ஆண்களும் இணைந்தே மனிதகுலத்தை உருவாக்குகின்றனர். எனவே இருவரும் ஒருவரை ஒருவர் மிகை நிரப்புகின்றவர்களாகவே உள்ளனர். (Complementary individual) இதுவே உயிரியல் ரீதியான உண்மையாகும். அத்துடன் இவ்வகையில் சில தொழிற்பாடுகள் இருவரிடையே பங்கிடப்பட்டுள்ளதும் உண்மையாம். இவ்வுயிரியல் வேறுபாடுகளில், உயர்வு-தாழ்வு என்பதற்கு இடமில்லை. எனினும் சமுதாய நோக்குகள், கலாச்சார பண்பாடுகள் காரணமாக சில உயர்வு-தாழ்வு பற்றிய எண்ணக்கருக்களும், அவற் றரின் பாற் பட்ட வேலைப் பிரிவினைகளும் உருவாக்கப்பட்டு, சமூகத்தில் இடம்பெற்றும் வந்துள்ளன. தனியாட்கள் அவரவர் கருத்து நிலைப்பாடுகளுக்கேற்ப இவற்றிக்கு முக்கியாத்துவம் வழங்கியும் வந்தனர். இன்றைய நாட்களில், இவற்றில் கருத்து வேறுபாடுகளும், எழுச்சியான, மறுமலர்ச்சிக் கண்ணேட்டங்களும், ஏற்பட்டதன்பின் இவற்றில் மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. எனினும், உயர்வு-தாழ்வு பற்றிய சிந்தனையோட்டங்களில் கட்டுண்டுள்ளோர், அவற்றினால் அனுகூலமடைவோர், கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும் நிலைப்படுத்தவும், வலியுறுத்தவும் முனைகின்றனர். இவற்றின் வெளிப்பாடுகள் பத்திரிகைகளிலும் இடம்பெறுவது சாத்தியமானதே. பத்திரிகைகள் போன்ற தொடர்பு சாதனங்கள், சமுதாயத்தின் சமகால வாழ்வு நிலைகளையும், நிகழ்வுகளையும், கருத்துக்களையும் சித்திரிக்கும் வரலாற்றுப் பதிவேடாக அமைகின்றன. உண்மை எதுவாக இருப்பினும் சமூகத்தில் இடம்பெறுகின்ற ஆட்சியான கருத்துக்களின் அடிப்படையிலேயே இவை பதிவாகின்றன.

-64எனவே அவற்றினை புறநிலை நின்று மெய்நிலைத் தெரிவாய்வு செய்வதும், மதிப்பீடு செய்வதும் அவசியமாகின்றது. ஆய்வு செய்வதற்கு இலகுவாக, பத்திரிகைகளில் இடம்பெறும் செய்திகள், அவற்றின் தன்மைக்கு ஏற்ப பின்வருமாறு வகைப்படுத்தப்படலாம்.
1. கதைகளில் மகளிர்நிலை 2. கட்டுரைகளில் மகளிர்நிலை 3. துணுக்குகளில் மகளிர்நிலை
கதைகளில் மகளிர் நிலை
கதைகள், வாழ்க்கையில் அன்றாடம் கண்டும், கேட்டும் உணர்ந்தும் உள்ளவற்றைக் கொண்டு கற்பனையாகப் படைக்கப்படுபவையாகும். யதார்த்த உண்மைகளை அடிப்படையைாகக் கொண்டு இலக்கிய நயத்துடன், தீர்வுகளை முன்வைக்கின்ற சமூகவியல் சாதனமாக கதைகள் கொள்ளப்படும் போது இவை பெறுமானமுடைய இலக்கியமாகின்றன. இது இலக்கிய நியதிகளினதும் பாற்பட்ட உண்மையாகும். இதனை நலோமிலோன் பாப்சன் என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"புனைவுகள் அல்லது ஆக்கங்கள் வெறும் கருத்து க்களை அல்லாமல் மனிதனுடைய அனுபவங்களையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கும், கதைகளில் பல நிலைகள், பல தொனிகள் பிறக்கின்றன. பாத்திரங்களும் நிகழ்சிகளும் பல்வேறு அன்றாட சமுதாய வாழ்க்கைப் போக்குகளைப் பிரதிபலிக்கின்றன. வாசகர்கள் இவற்றுடன் ஏதோ வகையில் ஊன்றிப் போகின்றார்கள். கதைகளில் இடம்பெறும் மனிதர்களின் அனுபவங்களும், கருத்துக்களும் நோக்குகளும், படிப்பவர்களின் அனுபவங்களயுைம் உணர்ச்சிகளையும் ஏதேனும் ஒருவகையில் பாதிக்கின்றன". ஆகவே வெகுசன

Page 34
-65தமிழ் இதழ்களில் வெளிவந்துள்ள புனைவுகளில், மகளிர்நிலை, எவ்வாறு காண்பிக்கப்படுகின்றது என்பது மகளிர் நிலைபற்றி ஆசிரியர்களின் நோக்குகளையும், கண்ணோட்டங்களையும் அறிந்துகொள்ள உதவும். அதேவேளை வாசகர்களில் எவ்வாறான பெறுமானங்களை ஏற்படுத்த அவை முனைகின்றன என்பதையும் அறிந்துகொள்ள உதவும். இலங்கையின் தமிழ் தினசரிப்பத்திரிகைகளில், தினப் பதிவேடுகளில் சிறுகதை, தொடர்கதை போன்ற புனைவுகள் பெரும்பாலும் இடம்பெறுவதில்லை. அது வாரவெளியீடு, வாரமஞ்சரி எனப்படுகின்ற ஞாயிற்றுக்கிழமைக்குரிய விசேட பதிப்புக்களில் இடம்பெறுகின்றன. வீரகேசரி வாரவெளியீடு ஒரு தொடர்கதையையும் மாத்திரமே இக்காலப்பகுதியில் வெளியிட்டுள்ளது. வாரவெளியீடு, வாரமஞ்சரி போன்ற ஞாயிற்றுக்கிழமை விசேட பதிப்புக்களில் இரண்டு அல்லது மூன்று சிறுகதைகள் இடம்பெறுகின்றன. இவற்றில் ஒன்று இரண்டு குட்டிக் கதைகளாகவோ அல்லது உருவக் கதைகளாகவோ அமைகின்றன. எல்லாக் கதைகளும் கற்பனை பூர்வமான யதார்த்தத்திற்கு சிறிது அப்பாற்பட்வையாகவே அமைந்துவிடுகின்றன என்பது குறிப்படத்தக்கது. பெண்கள் விடயங்கள் இடம்பெறாத சில இலக்கியப் பெறுமானமுள்ள கதைகளும் தொடர்கதைகளும் இடம்பெற்றபோதிலும், பெண்கள் அக் கதையின் பாத்திரங்களாக அமையும்போது சிறிது மிகைப்படுத்தும் கற்பனைப்போக்கு வந்துவிடுவதும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. பெண்களின் தனிப்பட்ட உடலமைப்புக்களையும், கவர்ச்சிகளையும் விபரிப்பதும் இங்கு சற்று அதிகமாகே காணப்படுகின்றது.
எது எப்படியிருப்பினும் கதைகள், பத்திரிகைப் பதிப்பு அம்சங்களில் முக்கிய அம்சங்களாகும் என்பதை பாப்சனின் கருத்து மூலம் விளங்கிக் கொள்ளலாம். இவற்றின் முக்கிய கூறான புனைகதைகள் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்படுகின்றன. புனைகதைகள் மகளின் பல்வேறு நிலைகளைச் சித்திதிக்கின்றன. அவ்வகையில் பின்வரும்

-66
வகைப்பாட்டையும் உருவாக்கிக் கொள்ள முடியும். மகளிரின் வாழ்வு நிலைகள் மற்றும் சிக்கல் அடிப்படிடையில் இவை மகளிர் வாழ்வைச் சித்திரிக்கின்றன. பெரும்பாலும் குடும்ப உறவுநிலை, காதல், திருமணம், அலுவலக மகளிர் நிலை என்பன முன்னுரிமை பெறுவதை உணர முடிகின்றது. மகளின் அடிப்படைப் பிரச்சினைகள், இரண்டாம் தரநிலை, ஆதரவற்றநிலை என்பன பற்றிய கதைகள் குறைவாகவே காணப்படுகின்றன.
இன்றைய சமுதாய அமைப்பில் குடும்பம் என்பது அடிப்படையான சமூகக் கூறாக அமைகின்றது. அதில் முக்கிய பங்காற்றுபவள் பெண் ணாகும். இதற்கு அடிப்படையான ஒரு சமூகவியற் காரணத்தை பேராசிரியர் சிவத்தம்பி பின்வருமாறு கூறுகிறார். "பாரம்பரிய பண்பாட்டின் தொடர்ச்சி முறிவைச் சித்திரிக்கும் குடும்பம் என்னும் சமூக நிறுவனத்தின் அச்சாணியான பெண் (தாய், மனைவி, தமக்கை, தங்கை) முதன்மைநிலைப்பட்டது ஆச்சரியமன்று. மேனாட்டுச் சமூகத்தாக்கங்கள், பாரமாக முதன் முதலில் கவனத்தை ஈர்ந்தது இந்திய சமூகத்தில் பெண்ணின் நிலையேயாகும். புனைகதைகளில் பெண் தனியாக அல்லாமல் தாய், மகள், சகோதரி, மருமகள், மாமியார், மச்சாள், காதலி என்ற உறவு நிலைகளில் வைத்தே சித்திரிக்கப்படுகின்றாள். பெரும்பாலான கதைகள் காதலி, மனைவி, தாய் நிலைகளுக்கு முதலிடம் கொடுப்பதைக்க காணலாம்.
இனி நாம் தினப்பத்திரிகைகளில் இடம்பெற்ற சில கதைகளை நோக்குவோம். c
"வரவது வந்தது" என்னும் சிறுகதையில் ஒரு கர்ப்ப முற்ற பெண் வாந்தி காரணமாக சிறிது கஷ்டப்படுவதாக காட்டப்படுகின்றது. அவ்வேளையில் அவளது உதவிப் பெண் னொரு த் தி பரின் வருமாறு கூறுகிறாள் :

Page 35
-67
“பொம்பிளையென்மால் பொறுமை என்பதுதான் அர்த்தம், நல்ல வடிவான ஆம்புளப்பிள்ளையை பெத்து குடுத்திட்டுப் பாரன் உன்ட மனிசன் புறகு கொஞ்ச நாளைக்கு உன்னையே சுத்தி சுத்தி வருவார். குடுமப்மென்டா அதுதான் சந்தோசம்." இங்கு பெண் கும்பத்துடன் வாழ்வதுதான் அவளுக்கு சந்தோசமான விடயம் என்பதையும் பெண் பொறுமையோடு வாழ வேண் டும் என்பதையும் வலியுறுத் துவதே நோக்குதற்குரியது.
இக்கதையில் இன்னொரு அம்சத்தையும் நோக்குதல் வேண்டும். "ஆம்புளப்புள்ைைளயப் பெத்துக் குடுப்பது" அவளுக்கு பெருமை தரும் ஒன்றாகக் கூறப்படுவது மறுதலையாக பெண் பிள்ளையைப் பெறுவதுகூட இழுக்கான, குறைவான செயலாக கொள்ளப்படுவதைக் காணலாம். இது சமூகத்தில் பேணப்படும், வெவ்வேறு காரணிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஓர் அம்சமாகும். குறிப்பாக தமிழர் மரபுகளில் தற்காலத்தில் காணப்படுகின்ற சீதனப் பிரச்சனை காரணமாக பெண் குழந்தை பெற்றோருக்குப் பாரமாக அமைகின்றாள். அதே வேளை ஆண்குழந்தை செல்வத்தை, சீதனத்தின் மூலமாக பெற்று பெற்றோ ருக்கு வழங்கக் கூடிய பாக்கியசாலியாக இருப்பதினாலேயே இவ்வாறான மனப் போக்குகள் காணப்படுகின்றன. கணவனதும், சமூகத்தினதும் அடாத செயல்களை பொறுத்துக் கொள்ளும்போது அவை பெண்ணுக்கு வெற்றியைத்தரும் என்பத போல் சில கதைகள் போதனைகள் தருகின்றன. ஆனால் அத்தகைய போதனைகள் கணவன்மார்களுக்கு கூறப்படவில்லை. பொறுமை, சகிப்பு, விட்டுக்கொடுப்பு யாவும் இருபாலாருக்கும் இருகக்வேண்டிய நற்பண்பேயாயினும், அவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என பெண்களே அடிக்கடி உபதேசிக்கப்படுகின்றனர்ஓரு தலைப் பட்சமானதும், பெண்கள் இரண்ட்ாம் தர பிரஜையாக நோக்கும் போக்கையும் இவை எடுத்துக் காட்டுகின்றன. இது உண்மையில் பெண்ணுக்கு "பொறுமையாளி” என்ற

-68கெளரவத்தை வழங்கி அடக்கியிருப்பதை உறுதிப்படுத்தும் அம்சமாகவே கொள்ளப்பட வேண்டும். பொறுமையாளி என்ற கொரவத்தை பெற விரும்பும் மகளிர் பலர் தம்மை அறியாமலே இவ்வாறான அடிமை விலங்கினுள் தம்மை மாட்டிக் கொள்கின்றனர். இதனை அவர்கள் தம்மை அறியாமலேயே, அதாவது உணர்வு அற்ற நிலையிலே (Uncommnicty) gjpgJj,GJIT GjoTGib விடுகின்றனர் என்பதை பெண்களால் எழுதப்படும் இது போன்ற கதைகள் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது. துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கு சரியான தீர்வுகளைத் தரும்வகையில் அனேகமாக சிறுகதைகள் இடம்பெறவில்லை. காதல் தோல்வி, கருவுறுதல் ஆகியன தொடர்பாக பெண்களே குற்றத்திற்குரிய முழுப் பொறுப் பாளிகளாகக் காட்டப்படுவதாக சில சிறுகதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறான கதைகளில் ஆண்கள் காட்டப்பட்ட போதிலும் ஓரிடத்திலாவது அவர்களது கற்பிளப்பு ஓர் பிழையான அம்சமாக வலியுறுத்தப்படவில்லை. உதாரணமாக தினகரன் வாரமஞ்சரியில் இடம்பெற்ற ஜீ. பன்னீர்ச்செல்வனின் "ஊஞ்சலாடும் உள்ளங்கள்ள்ன்ற கதையில், ஒரு பெண் பலருடன் காதல் கொள்ளுவதாகவும் அதனால் பிழையாகிப் போய் அப் பெண் கருவுறுவதாகவும் காட்டப்படுகின்றது. அவள் தடுமாறுவதற்கு காரணமாக அவளது தாய் நடத்தையும் கூறப்படுகின்றது. அவளது தகப்பனும் அவளுடன் தொடர்புகொள்ளும் பல ஆண்களும் அவ்வாறு பல தொடர்புகள் கொண்டவர்கள் எனினும், அவர் ஓரிடத்திலாவது குற்றமாகக் கூறவில்லை. மாறாக அவளது தகப்பன் ஒழுக்கம் பற்றி மிகக் கட்டுப்பாடுடைய நல்ல மனிதராகவும் நல்ல போக்குடையவராகவும் காட்டப்படுகின்றார். அத்துடன் இறுதியில் அவளுக்கு கைகொடுக்கும் ஒரு தலைப்பட்சமாக காதல் கொண்ட கார் டிரைவர் மிக உன்னத ஸ்தானத்தில் வைத் தே காட்டப்படுகின்றார். இக் கதையில் பெண்கள் தொடர்பான இழிவான செயற்பிரயோகங்களும் காணப்படுகின்றன. "தாம்பத்தயத்திற்கு முந்தி விரிந்து குழந்தைக்குத் தாயாகிவிட்ட

Page 36
-69பிரதீபா" என கூறப்படுவது இதன்பாற்பட்டு நோக்குதற்குரியது. கதையின் போக்கு துன்புறுத்தும் ஆண்களுக்குத் தீர்வுகளை முன்வைக்கவில்லலை. அத்துடன் "போற்றப்பட வேண்டிய பெண்ணினத்தில் பிறந்தவள் ஒழுக்கத்துடன் வாழவேண்டும்" என்று பெண்களுக்கு மாத்திரமே ஒழுக்க வரம்பொன்றையும் இட்டுக்காட்டுகிறது.
இன்னும் சிறுகதைகளில் கணவனிடம் மனைவிக்கு வெறுப்பு ஏற்படுவதற்கு பெரும்பாலும் அவளது உளவியல் காரணங்களே பொறுப்பானதாகக் காட்டப்படுகின்றன. தாழ்வுணர்ச்சியே அவளை கோபத்திற்கு இட்டுச் செல்கிறது என்பதாக அமைகிறது. கதைகளில் முடிவுகள் அனேகமான பெண்களின் அவல நிலை பலசந்தர்ப்பங்களில் ஆண்கள் பாதிக்கப்படுவதாக எடுத்துக்காட்டப்படவில்லை.
இலக்கிய ரீதியின் அடிப்படையில் நோக்கும் போது அனேக புனைகதைகள் தீர்வுகைள முன்வைக்காததாக அமைகின்றன. எனேவ அவை இலக்கியங்களாக இன்றி சமகால நிகழ்வுப் பதிவுகளாக மாத்திரம் பெறுமானம் பெறுகின்றன. இச்சமகால நிகழ்வு எனும் போது கூட அவை யதார்த்த பூர்வமாக அமையாது அனேகமாக அதீத கற்பனை வயப்பட்ட நிகழ்வுகளாக அமைகிறது. அல்லது தீர்வுகள் வைக்கப்படும் போதும் அவை அதனை கற்புடன் கூடிய "அலாவுதீனின் அற்புத விளக்கை ஒத்த " தீர்வுகள் வைப்பனவாகவும் அமைந்துவிடுவதைக் காணலாம்.
ஊஞ்சலாடும் உள்ளங்களில் டக்ஸி றைவர் பிரதீ பாவின் களங்கத்திற்கு முற்றுப்புன்னி வைக்கும் வகையில் தன் தூய காதலை அவளது கால்களில் அாப்பணம் செய்வதாகக் காட்டப்படுகின்றது. அவ்வாறே" ஒரு விடிவெள்ளி உதயமாகிறது என்ற சிறுகதையில், தாயின் கட்டாயத்தின்பேரில் மணமுடித்து வைக்கப்பட்ட பெண்ணை வெறுத்து நடத்தும் கணவன் காட்டப்படுகின்றான். எனினும்

-70
அவனை அவள் நன்றாகக் கவனித்து பணிவிடைகள் செய்கிறாள். அவனுக்கு சுரம் வந்தவேளை ( அவனுடைய முன்னாள் காதலி வேறு ஒருவனுடன் சென்றுவிட்ட நிலையிலுள்னபோது தாயினால் மணமுடிக்கப்பட்ட பெண்) அவனை நன்கு கவனிக்கிறாள். அவனது வாந்தியை அவள் கைகளில் தாங்கி எடுத்ததால் மனம் திருந்துவதாக காட்டப்படுகிறது. இது சற்று மிகையான கற்பனையாகவே தோன்றுகிறது.
பாலுணர்ச்சி என்பது அண், பெண் இருபாலாருக்கும் இயல்பான ஒன்றேயாயினும் சூழல், மரபு வழிக் கண்ணோட்டங்கள் , சம்பிரதாயங்கள், அவற்றைச் சிக்கலான விடயங்களாக்கி விடுகின்றன. பொதுவாக நடைமுறையில் சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டு பாதிக்கப்படுபவர்கள் பெண்களேயாகும். பெண்களை நோக்கியே அநேக பாலுணர்ச் சரி சம்பந்தமான கட்டுக் கோப்புகள் முன்வைக்கப்படுவதே இதற்கு காரணமாகாகும். அவற்றை இயல்பான ஒன்றாக எடுத்துக்காட்டும் கதைகள் அனேகமாக அமைவதில்லை. எனினும் வியாபார நோக்கில் பாலுணர்வை கவர்ச்சி நிலைக்கு தள்ளி அதை அணுஅணுவாக உருவகப்படுத்தி வெளிப்படுத்துவதன் மூலம்,வாசகர்களை கவரும் போக்கு ஒன்று அநேக கதைகளுக்கு உண்டு.
கல்குடா க - பரமானந்தராஜா எழுதிய "ஒரு விடி வெள்ளி உதயமாகிறது" என்ற சிறுகதையில் முதலிரவு கனவுகள் பற்றிய வர் ணனைகள் பெருமளவு மிகைப்படுத்தப்பட்டு, கவர்ச்சி நிலைக்கு தள்ளும் ஒரு முயற்சியாகவே உள்ளது. ஒரு சில கதைகள் பெண்கள் எதிர்நோக்கும் இரட்டை வேலைப்பளுவையும் சித்திரிக்கின்றன. அதற்கான மனிதாபிமான முறையிலான சில தீர்வுகளையும் முன்வைக்கின்றன. அதாவது புரிந்தணர்வுடன் சில விட்டுக்கொடுப்புக்கள், சலுகைகள் வழங்கப்படலாம் என்பதாக அது அமைகிறது. த.சிவராசாவின் அது என் கடைம சிறு

Page 37
-71
கதையில் குடும்ப பாரத்தைச் சுமக்கும் வேலை செய்யும் பெண் ணொருத்தியின் வீட்டுப் பிரச்சனைகளைத் தெரிந்துகொள்ளும் உயரதிகாரி, சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தி சில சலுகைகள் அவளுக்கு வழங்குகிறார். உதாரணமாக கந்தோருக்கு பிந்தி வருதல் அவள் மீது அனுதாபம் காட்டும் இளைஞன் குமார் அவளைத் திருமணம் செய்வதற்கு விரும்புதல். எஸ் ஏ எம். நம்ஸாகின் இப்படியும் ஒரு மீலாத என்னும் சிறுகதை விதவை மறுவாழ்வுப் பிரச்சனைகளையும், பிள்ளைப் பராமரிப்புக் கஷ்டங்களையும் எடுத்துக் கூறுகின்றது.
மேலே கூறப்பட் அம்சங்களிலிருந்து சற்று வித்தியா சமான ஒரு சிறுகதையாக மாலினி சுப்பிரமணியத்தின் நாம் மீண்டும் புதிதாய்ப் பிறப்போம்சிறுகதை அமைகின்றது. பெண்களின் அடிப்டைப் பிரச்சினையும் அதற்கான நிலைமைகளையும் எடுத்துக்காட்ட முயல்கிறார். இவரது புனைவு, இலக்கியம் என்ற வகையில், யதார்த்த்திற்கு அப்பாற்பட்டதாக சிறிது கற்பனை பூர்வமாக அமைந்தாலும் கூட அவர் கருத்தில் தமது நிலைப்பாட்டை எடுத்துக்கூற விழைகின்றார். அடிமைநிலைமை, பேச்சு, செயல், கருத்து சுதந்திரமின்மை, கட்டுக்கேகாப்புக்கள், தீர்மானம் எடுக்கும் அதிகாரமின்மை என்பதாக கோடிட்டுக்காட்டுகின்றார். பெண்குழந்தை பிறந்து முதல் இறப்பு வரை பெற்றோர் முதல் கணவன் வரை பின் தான் பெற்று வளர்த்த ஆண்குழந்தை ஆகியோருக்கு அடிமைப்பட்டு வாழ்கிறாள் என்றும் கூறுகின்றார்.
கதை பின் வரும் கவிதை மேற்கோள்களுடன் ஆரம்பமாகின்றது.
"அடிமை ஒப்பந்தத்தின் அடையாளமாகத்தான்
கழுத்தில் தாலியைக் கட்டி வைத்தனர். அது
கனத்தது,வலித்தது கண்களை நனைத்தது.” மு.மேத்தா

-72பெண்களின் தனிப்பட்டதும் சமூகவியல் ரீதியானதுமான பல்வேறு பிரச்சினைகளையும் இவர்தொட்டுச் செல்கிறார்.
சாதிப்பிரச்சினை, சீதனப்பிரச்சினை, ஆண்தன்மைப் போக்கில் பெண்கள் தொடர்பான மனப்பாங்குகள், இரட்டைப்பளு போன்றவை இவ்வாறு காட்டப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் தீர்வாக தனது மகனைப் புதியதொரு சூழலில் வளர்த்தெடுக்க நினைத்து கணவனைப் பிரிந்து செல்கிறாள் அப்பெண். பாதை புரியாத மகளிடம் " வேகமாகப் போனால் தூரம் அதிகமில்லையடா’ என்று கூறி தனது இலட்சியத்தை எடுத்துக் கூறுகிறார் ஆசிரியர்.
(pig.6)
பெண் விடயங்களை முன்வைப்பதில் கதைகளில் பின்வரும் போக்குகளை அவதானிக்கலாம்.
1. உள்ளதை உள்ளபடியே எடுத்துக்கூறுதல் அதாவது பெண்களின் பிரச்சினைகளை எடுத்துக்கூறுதல்
2. யதார்த்தத்திற்கு அப்பால் கற்பனையான கட்டுக்கதைகளை
அமைத்தல்.
3. சில நிகழ்வுகளுக்கு காரணங்கள் சிலவற்றை எடுத்துக்கூற
முனைதல்.
4. நிகழ்வுக்கான காரணங்களையும், தீர்வுகளையும்
முன்வைத்தல்.
பெண்கள் தொடர்பாக எழுதப்பட்ட கதைகளில் அநேகமான கதைகள், காதல் திருமணம், குடும்பம், தாம்பத்தியம், தாய்மையுடன் தொடர்பானவையாகவே காணப்படுகின்றன. இவை உண்மையில் பெண்களின் அந்தஸ்து நிலமை இதுதான் என எடுத்துக் கூறவே அதிகம் முனைவதாக தோன்றுகிறது. சில பெண்களின் பிரச்சினைகள் சிலவற்றை எடுத்தியம்புகின்றன. இவையும் கூட காரணங்களை எடுத்துக்கூறுவதிலும் தீர்வுகளை முன்வைப்பதிலும்

Page 38
-73
பெருமளவு தவறிவிடகின்றன. சில கதைகள், பெண்களின் சிரழிவுக்கு அவர்கள் மரபுகளையும் கட்டுக்கோப்புகளையும் மீறியதே காரணம் என்று அடித்துக்கூற முனைகின்றன. இதிலும் இருபக்கம் சார்ந்த விடயங்களை நோக்காது விடுவது இவற்றின் பெரும் குறைபாடாகும். எனினும் இறுதியாக குறிப்பிட்ட சிறுகதை பெண்களின் அடிப்படைப் பிரச்சனை தொடர்பான அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மனப்பாங்கு மாற்றங்களை எடுத்துக்காட்டுகின்றது. அது பெண் ஒருவராலேயே வெளிப்படுத்தப்படுவது சிறந்த அறிகுறியாகும். ஏனெனில், பெண்ணடிமை நிலையை
பெண்களே உணராது வாழ்வது விசனத்திற்குரிய விடயமாகவுள்ளது.
பெரும்பாலும் கதைகள் காதல் கொள்வதை வரவேற்கின்றன. எனினும் கல்யாணத்திற்கு முன் பெண்கள் பாலுறவில் ஈடுபடுவதை பெரும்பாலான கதைகள் வரவேற்கவில்லை என்பதை அறிய முடிகிறது. அதே வேளை ஆண்கள் திருமணத்திற்கு முன் பாலுறவில் ஈடுபட்டாலும் கூட அதில் குறையேதும் கூறாது இயல்பான ஒரு விடயமாகவே கொள்ளப்படுவதும் இங்கே அவதானிக்கத்தக்கது.
கட்டுரையில் மகளிர் நிலை
உலகியல் நடப்புக்கைள அறியச்செய்யும் கூறாகக் கட்டுரைகள் அமைகின்றன. இவை புனைவுகளல்லாதவை. இவை சமகாலத்திற்கரிய யதார்த்த நிலமைகளை உடனுக்குடன் எடுத்துக்கூறுவனவாய் அமைகின்றன. எனினும் எழுதுபவரின் கருத்தக்களுக்கும் நோக்குகளுக்கும் உட்பட்டே இவை அமைகின்றன.
"நடப்பு நிகழச்சிகளைப் புரிந்து கொள்வதற்காகவும் தம்முடன் தொடர்பில்லாத, உலகில் பல பகுதிகளில்

-74இடம்பெறும் நிகழவுகள் பற்றி தகவல்களைத் தருவதற்காகவும், புனைவுகளில் அக்கறையில்லாத அறிவு தேடும் வாசகர்களை கவர்வதற்காகவும் பத்திரிகைகள், இதழ்கள், ஆகியன கட்டுரைகளைச் சார்ந்திருக்கின்றன" என பத்திரிகை அறிஞரான ரோலஸ்ட் கு உல்ஸ்கி கூறுகிறார். அத்துடன் அவர்" அறிவுறுத்தல்கள் அறிக்கைகள், அறிவூட்டல், அல்லது மகிழ்வூட்டல் ஆகியவற்றிக்காக கருத்துக்களையும் , உண்மைகளையும் தெரிவிப்பதற்கு வேறுபட்ட சமாச்சாரமே கட்டுரை ஆகும்” என்றும் அவர் கூறுகின்றார்.
பிரித்தானிய கலைக்களஞ்சியம் கட்டுரை என்பதைப் பின்வருமாறு வரையறை செய்கிறது. “கட்டுரைத் தொடரான ஒரு செய்தி அல்லது பொதுவான வாழ்க்கை பற்றி, நகைவச் சுவைமிக்கதாக, மொழிநடை முக்கியமில்லாததாக அல்லது நடத்தை நீதிகளின் அல்லது பிற சுவையான விடயங்களின் மீதான சிறப்பு அறிவுரைகளை அதிகமாகக் கொண்டதாக இருக்கக்கூடும். அத்துடன் ஒரு கட்டுரைத் தொடரானது பெண்களின் பெருமை அயல்நாட்டுக் கொள்கை அல்லது கங்கு மார்க்கம் என எதனுடனும் தொடர்பாய் இருக்கலாம். எனினும் கட்டுரையாளரின் தனிப்பட்ட சுவையையும் நோக்குகளையும் பிரதிபலிப்பதாக இருக்கும்.
இந்த அடிப்படிடையில் அமைந்த கட்டுரைகளில் பெண்கள் விடயங்கள், பெண்களின் நிலை எவ்வாறு சித்திரிக்கப்படுகிறது என்பதை நாம் ஆய்வோம். மகளிர் நிலைகள் பல்வகைப்பட்டதாக அமையலாம் , விடயங்களைத் தொகுத்தளிக்கலாம், அல்லது பெண்கள் விடயங்கள் மதிப்பீடு செய்யலாம். அல்லது விளக்கங்களைத் தரலாம், அல்லது குறைநிறைவுகளை எடுத்துக்கூறும் விமர்சன நோக் குடையதாகவே அமைக்கப்படலாம். இவ்வகையான கட்டுரைகளை விவரித்தலுக்கு வசதிக்காக பின்வருமாறு வகைப்படுத்தலாம். 1. மகளிர் சிறப்புநிலைகள் 2. மகளின் அடிப்படைப் பிரச்சுனைகள்.

Page 39
-75மகளிர்க்கான பொழுதுபோக்கு விடயங்கள். சமையல் விடயங்கள். அழகியல் குறிப்புக்கள். மகளிருக்கான ஆலோசனைகள்
:
இவ்வாறான ஒவ்வொரு தலைப்பின் கீழும் பத்திரிகைகளில் இடம்பெற்ற பல்வேறு விடயங்களை நாம் குறிப்பிட்டுக் கூறமுடியும்.
மகளிர் சிறப்பு நிலைகள்.
கலைத்துறை, சமூகசேவை, அலுவலகசேவைகள், அரசியல் ஈடுபாடு ஆகியன பற்றி இவை எடுத்துக் கூறுகின்றன.
பெண்களின் அடிப்படைப் பிரச்சினைகள்.
காதல், திருமணவிடயங்கள், குடும்ப உறவு, பெண்ணு ரிமை, பெண்ணுக்குப் பாதுகாப்பின்மை, அலுவலக மகளிர் பிரச்சினை, நடிகைகள் பிரச்சினைகள் தொடர்பாகவும் கூறுகின்றன.
மகளிர்க்கான பொழுதுபோக்கு
முக்கிய பொழுதுபோக்கான அம்சங்களாக சுய அலங்காரம், வீட்டு அலங்காரம் , தோட்டம் அமைத்தல், முடி அலங்காரம், கைவினைப் பொருட்கள் அமைத்தலும் கையாளுதலும், உணவைப்பாதுகாத்லும் பேணுதலும், தையல் வேலை ஆகியன பற்றி எடுத்துக்கூறப்படுகின்றன. கைவினை செய்வதையும், தையல் சமையல் வேலைகளையும் சிறந்த உழைப்பு தரக்கூடிய பொழுது போக்குகளாக இக்கட்டுரைகள் எடுத்துக்காட்டுகின்றன.

-76மகளிர்க்கான ஆலோசனைகள்.
பெண்கள் சிறப்புடன் திகழ்வதற்கான அறிவுரை களையும் , தேக நலத் துடன் வாழ் வதற்கான ஆலோசனைகளையும், குடும்பநலனைப் பேணுவதற்கு பெண்கள் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் ஆலோசனைகளை வழங்குவதாகவும், இவை அமைகின்றன. அறிவுரை, மருத்துவ ஆலோசனைகள் ஆகியன மிக முக்கியமாவையாக இடம்பெறுகின்றன.
சமையல் விடயங்கள்.
பாரம்பரியமாக குடும்ப அமைப்பில் சமையல் பெண்களுக்கான விடயமாகவும் கடமைக்கூறாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போக்கினை நிலைப்படுத்துவதற்காக அல்லது மேலும் உறுதிப்படுத்துவதற்காக சமயல் விடயங்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் மகளிர் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
சிறப்பு மகளிர் பற்றிய விடயங்கள் வாசகர்கள் அவர் களை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும் என்ற நோக்கிலேயே எழுதப்படுகின்றன. மகளிர்க்கான பொழுது போக்குவிடயங்கள் எந்த நோக்கில் எழுதப்படலாம், சில திறன்களையும் வேலை வாய்ப்புக்கான சில ஆற்றல்களையும் வழங்குவதும் இங்கு குறிப்பிடத்தக்கதே. எனினும் இங்கு கொடுக் கப்படும் பொழுது போக்கு விடயங்கள் முன்னேற்றகரமான பொழுதுபோக்கு விடயங்களையோ அல்லது அறிவியல் சார்ந்த பொழுதுபோக்கு விடயங்களையோ பெண்களுக்கும் உரியதாக கருதப்படாதமை பெண்களின் "கீழ் நிலமை” அல்லது "கீழ் அந்தஸ்தை” சுட்டும் போக்கினை காட்டுகிறது.
பெண்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றிய

Page 40
-77
கட்டுரைகள் அதிகளவில் இடம் பெறுவதில்லை என்றே கூற வேண்டும். எனினும் மிகக்குறைவான சில கட்டுரைகள் சில சிறந்த கருத்துக்களையும் முன்வைக்கின்றன என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும் அவ்வாறே சில கட்டுரைகள் பெண்களின் அந்தஸ்து நிலை தொடர்பாகவும், கடமைக்கூறு தொடர்பாகவும் மிகக் குறைவாக கருத்துக்களை முன்வைப்பதையும் குறிப்பிட வேண்டும். இப்பகுதியின் இறுதிப்பகுதியில் அவற்றுக்கான சில உதாரணங்களை சிறிது விரிவாக குறிப்பிடவுள்ளேன்.
நடைமுறையில் மாதர்கள் எதிர்நோக்கும் பல்வேறு
பிரச்சினைகள் இருப்பினும் அவை குறைந்த பட்சம் மாதர்கள் கட்டுரைகளிலாவது எடுத்துக் கூறப்படாதிருப்பது கவலைக்குரிய விடயமாகும். இதற்கான காரணத்தை நாம் பின்வருமாறு குறிப்பிடமுடியும். சமூகத்தில் நிலையூன்றியுள்ள ஆண்முதன்மைப் போக்கும், அதன் அடிப்படையிலான கருத்துக்கள் கட்டுக்கோப்புக்களும் பெண்களினால் உள்வாங்கப்பட்டு அவர்களின் நடத்தைகளையும் தீர்மானிப்பதால், தமது நிலை பற்றிய உண்மையான நிலையை புரியமுடியாதுள்ளது.
பத்திரிகைகளில் இடம்பெற்ற சில கட்டுரைகளின் விபரங்களை இப்போது பார்ப்போம். " காதலில் முடிபு எடுப்பதில் பெண்களே வேகம்" என்ற தைலப்பில் இடம் பெறும் கட்டுரை தினகரனில் வெளியிடப்பட்டுள்ளது. பாலினக் கவர்ச்சியை காதல் என்ற சொல்லில் அடக்கும் நிலையொன்று யதார்த்தத்தில் காணப்படுகின்றது இக் கவர்ச்சியை பாலியல் உணர்வுள்ள இருபாலாரிடமிருற்தும் உருவாக சந்தர்ப்பம் உண்டு. அவ்வாறே இடம்பெறுவதும் உண்டு. அதே வேளை மரபு ரீதியான இடர்பாடுகளும் கட்டுப்பாடுகளும் பெண்களுக்கு இது விடயத்தில் சில வரையறைகளை வழங்குவதும் யதார்த்தத்தில் உண்டு. உண்மை இவ்வாறு இருக்க இக்கட்டுரை பெண்களே

-78
பாலுணர்வு தூண்டலுக்கு அதி விரைவாக உட்படுவதாகக் கூறவும் , அதை உறுதிப் படுத்தவும் முனைவதை கட்டுரையாளரின் நோக்கினை எடுத்துக்காட்டுகிறது.அத்துடன் அதனுடன் இடம்பெற்றுள்ள படமும் பெண்ணே ஆணை அணைக்க முயல்வது போன்று அமைந்துள்ளது இங்கு குறிப்பிட வேண்டும்.வீரகேசரியில் இடம்பெற்ற சீதனப் பிரச்சினை பற்றிய உறாஜாரா நோனாவின் கட்டுரை சிறிது விவாதத்திற்கு பதிலளிப்பது போல் அமைந்துள்ளதால், இது விடயமாக தொடர் வாரத்தில் இன்னொரு கட்டுரை வர ஏதுவாக்கிற்று. ம்கேஸ்வரி ராம்தாஸ் இதைத் தொடர்ந்து இது பற்றிக் குறிப்பிடுகிறார்.
உறாஜாரா நோனாவின் கட்டுரை பெற்றோரே சீதனப்பிரச்சினையின் சூத்திரதாரிகள் எனவும், இதற்கு தீர்வாக சீதன ஒழிப்பு இயக்கங்கள் விழிப்படைந்து அதனை ஒழிக்க முன்வர வேண்டும் என்றும் கூறுகிறது. ஆனால் மகேஸ்வரி ராம்தாஸ் தனது கட்டுரையில் சமாதான முயற்சியில் சற்று இறங்கி சீதனப் பிரச்சினைக்கு யாரையும் குற்றம் கூற முடியாது, சமூக பொருளாதார அமைப்பும், சூழ்நிலையும், அப்பிரச்சினைக்குட்படும்படி சம்பந்தப்பட்ட எல்லோரையும் நிர்ப்பந்திக்கின்றன என்பதை எடுத்துக்கூற முனைகிறார். எனினும் அவர் தீர்வுகளை முன்வைக்க அதிகம் முனையவில்லை.
பெண்களின் சுய அலங்காரம் பற்றிய கட்டுரைகள் பெருமளவு இடம்பெறுகின்றன. இவ்வாறான கட்டுரைகளாக முகவடிவத்திற்கேற்ப முடியலங்காரம், மருதாணியிடல் ஆகியவற்றைக் குறிப்பிட முடியும். இக்கட்டுரைகள் அழகியல் நோக்குடன் அமையும் போது அதற்கென ஒரு பெறுமானம் உண்டு. எனினும் இவை பொதுவாக ஆண்களைத் திருப்திப் படுத்துவதற்காக பெண்கள் அழகுடன் திகழவேண்டும் என்ற நோக்கில் எழுதப்படுகின்றன.இங்கு அழகியல் பெறுமானத்தையும் விஞ்சி பெண்களை பாலியல்

Page 41
-79பொருட்களாக பாங்கு ஒன்று காணப்படுகின்றதுரண்பதை அறிய முடிகிறது.
சரிகா சாதிக்கின் " குடும்பத்தலைவி குல விளக்கு" என்னும் கட்டுரையில் ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்ற கருத்தினை வலியுறுத்தி, விட்டுக்கொடுப்பு, அடக்கம் அன்பு, சகிப்பு, பொறுமையைக் கடைப்பிடித்து, மெழுகுவர்த்தி போன்று தான் வருந்தி பிறர்க்கு ஒளிகொடுக்க வேண்டும் " என்ற கருத்தை முன்வைக்கிறார். இது முன்னர் குறிப்பிட்டது போன்று தங்களை அறியாமல் தாங்கள் கட்டுண்டுள்ள கோட்பாட்டின் அடிப்பைடயில் முனவைக்கப்பட்ட கருத்துக்கள் வைக்கினறனர் என்பது கண்கூடு.
அம்புஜம் மூக்கையாவின் சற்று வித்தியாசமான கட்டுரை ஒன்று வீரகேசரியில் இடம் பெற்றுள்ளது. பெண்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி ஆராய்கின்றது. கல்வி அறிவு, நல்ல ஆளுமை, வளர்ச்சியும், தொழிற்தகமையும் அவர்களது அடிமை நிலையைப் போக்கவல்ல சாதனங்கள் என அவர் எடுத்துக் கூறுகிறார். பொருளாதார சுதந்திரமின்மையே பெண்களின் இரண்டாம் தர நிலைக்கு முக்கிய காரணம் என்பதையும், தொழிலை பெண்கள், பொருளாதார சுதந்திரத்திற்கான கருவியாகவும் ஆளுமை வளர்சிக்கான சாதனமாகவும் பயன்படுத்த வேண்டும் என அவர் அக்கட்டுரையில் வலியுறுத்துகிறார். தெரிவு செய்யப்பட்ட காலவரையறைகள் ஒன்றாக இதனைக் கொள்ள முடியும்.
அழகு குணசீலனின் "பெண் உருவிலான ஆண்கள்" என்னும் கட்டுரை சுவீடன் எதிரணித் தலமைத்துவத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் ஊர் என்றும் அங்கிருக்கும் ஆணர் களுக்கும் பெண்களுக்கும் பெண் களுக்கும் மனவலிமையையும் திறமையான ஆளுமையையும் உண்டு

-80என்று குறிப்பிடுகின்றது. அத்துடன் அங்குள்ள அரசியல் நிலைமகளுடன் சேர்த்து இப் பெண்ணின் இயல்புகள் விபரிக்கப்பட்டுள்ளன. எனினும் அவளை பெண் உருவிலான ஆண் என்றே விபரிப்பது நோக்குதற்குரியது. சுவீடன் தலைமைத்துவம் ஆணுக்கா, பெண்ணுக்கா என வினவுவது போன்று கட்டுரை அமைந்திருப்பதும் பால் பாகுபாட்டினை காட்டுவதாகவே அமைகின்றது
ஏ.யூ.எம். ஜெலில் எழுதியுள்ள "இல்லறத்தில் இன்பம் நிலவ" என்ற கட்டுரையில் அனாதிக்கப்போக்கினை இங்கு ஆண் முதன்மைப் போக்கு என்றுகூட இதனைக் கூற முடியாதுள்ளேன்) மிகவும் லாவகமாக முன்வைக்கின்றார். பலரின் ஆதாரங்களுடன் தனது கருத்துக்களை முன்வைப்பது குறிப்பிடத்தக்கது. அவர் பின்வருமாறு எழுதுகிறார். "தன் கணவன் மீது கோபத்தை காட்டகூடாது. இன்முகத்துடன் உரையாடி மகிழச் செய்யேவண்டும். கோபங் கொண்ட மனைவியுடன் வாழ்வதைவிட சிறைச்சாலையில் இருக்கலாம். தீய உள்ளம் கொண்ட வீட்டில் இருப்பதைவிட நடோடியாக அலைவது மகிழ்சிதரும் என்று அறிஞர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் என்று தொடர்கிறது அக்கட்டுரை. ஒரு தலைப் பட்சமான சார்பு நோக்குகளை நியதியாக முன்னெடுத்து வைப்பது அவரது சார்பு நோக்கினையும் எடுத்துக்காட்டுகிறது.
அத்துடன் பேராசிரியர் சீஈ எம்.ஜோட் என்பவர் இதுபற்றி குறிப்பிடுவதாகவும் பின்வருமாறு எழுதுகிறார். “பெண்களுக்கு சிறந்த இடம் வீடுதான். அன்றி சமூக வட்டார மல்ல. பெண்கள் தங்கள் வீடுகளையும் பிள்ளைகளையும் பராமரித் துக் கொள்ளதிலும் திருப்திகான்பார்களாயின் வாழ்க்கைத்தரம் கொஞ்சம் குறைந்தாலும் பரவாயில்லை. இந்த ரகம் மிகவும் மகிழ்ச்சிகரமான இடமாக அமையும் என நம்புகிறேன் "

Page 42
-81 -
அதாவது பெண்ணின் திருப்தி என்பது பெண் சார்பான அம்சமில்லை. அது ஆண் சார்பாகவும் குடும்பம் சார்பாகவும் நோக்கப்படுவது இங்கு நோக்குதற்குரியதுஅத்துடன் அவர் நல்ல பெண் ணுக்கு சில ஆலோசனைகளையும் முன்வைக்கின்றார். அவை பெண் குடும்பத்துக்காக அர்ப்பணிக்கப்பட வேண்டிய ஓர் உயிரியாக இருப்பதற்குரிய ஆலோசனைககேளாயாகும்.
இதற்குப் பதிலளிப்பதுபோல், 23.8.92 இல் தினகரனில் "சுந்தரமதி" என்ற புனைபெயரில் எம்.ஐ.எஸ் சுல்பிகாவின் கட்டுரை வெளியாகியிருந்தது. திருப்தி, பொறுமை, அன்பு, பாலியல் உணர்வு, குடும்ப நலன் பேணல் ஆகியன இருபாலாருக்கும் இருக்கின்ற, இருக்கவேண்டிய உணர்வுகளும் நற்பண்புகளுமேயாகும். இது ஒரு பக்கச் சார்பாக நோக்கப்படுவதாலேயேதான் அனேக பிரச்சினைகள் எழுகின்றன. புரிந்துணர்வு, பகுத்தறிவுநிலை, சிந்தனை, கடமையுணர்வும் பொறுப்புணர்வும் ஆகியனவே இன்பம் நிலவ வழிவகுக்கும் என்பேத இவரது கட்டுரையின் சாரம்சமாக அமைகின்றது.
திருமதி பங்கஜா தவயோகநாதனால் எழுதப்பட்ட *குமுறிக் கொதிக்கும் குடும்பத் தலைவி குதூகலத்திட" என்னும் கட்டுரை மிகவும் பிற்போக்கான நிலைப்பாட்டைச் சித்திரிப்பதாகப்படுகின்றது. இவரது கட்டுரையின் சாரம் இவ்வாறு அமைகிறது. ஆணுக்குச் சரிநிகர் பெண் எனக் கண்டபின் பிரச்சினை வருவதற்கான காரணம் பெண் தனது கைக்குள் அதிகாரத்தை வைத்துக்கொள்வதற்கு முனைவதுதான். அதாவது அதிகார ஆசை காரணமாக தானே பிரச்சினைகளை அள்ளித் தன் தலைமீது போடுகிறாள் என்பது போலவும், கணவனிடம் பகிர்ந்தளிக்கும்போது அதிலிருந்து விடுபட்டு குதுரகலமாக வாழலாம் என்பது போலவும் அமைகிறது. இவரது வார்த்தையில் அதைக் குறிப்பிடும்போது அது மேலும் விளக்கத்தை அளிக்கக்கூடும்.

-82"நான் சொல்லுகிறபடிதான் நீங்கள் நடக்கவேண்டும் என்று அதிகார மனப்பான்மையை விட குடும்பத் தலைவியானவர் அனைவரையும் கலந்தாலோசித்து அங்கத்தவர்களின் விருப்பு, வெறுப்புக்களுக்கு இடம் கொடுத்து வாழப்பழகினால் குமுறல்கள் அடங்கி குதூகலித்து வாழலாம்" என்கிறார் அவர்.
ஆழ்ந்து நோக்குமிடத்து, பெண்களே பெண்கள் பற்றிய கட்டுரைகளை அதிகளவில் எழுதுகின்றனர். அதிலும் ஆண் முதன்மைக் கருத்துக்கள் மேலாங்கியிருப்பதை இனங்காண முடியும் இவ்வாறான பெண்களின் "இரண்டாம் தர நிலை" நோக்கு களையப்படுவதற்கு பெண்களை அறிவுள்ளவர்களாக வளரவும், வளர்க்கப்படவும் சமுதாய உணர்வுள்ள மனிதாபிமான நோக்குள்ளவர்கள் முன்வரல் வேண்டும்.
துணுக்குகளில் மகளிர் நிலை
கட்டுரைகளைப் போல உலக நடப்புக்களைத் தெரிவிப்பனவாய், ஆனால் அளவிற் சிறியனவாய் இருப்பவை துணுக்குகளாகும். இதழ்களில் புனைகதைகளையும் , கட்டுரைகளையும் படித்துவரும் வாசகர்களுக்கு இவை சற்று நிறுத்தம் போல் அமைகின்றன. மேலும் பக்க அமைப்புக்கும் (Page Make up )இவை உதவுகின்றன. பத்திரிகைகளில் பக்க அமைப்பின்போது உண்டாகும் இடைவெளிகளை நிரப்ப இவை பயன்படுவதால் நிரப்பிகள் (Fillers ) என்னும் பெயர்பெறும். இவை ஆங்கிலத்தில் “titbits" எனப்படுகின்றன. இவற்றின் தன்மைகள், இயல்புகள் பற்றி எல்மோ ஸ்கோட்வாட்சன் பின்வருமாறு கூறுகிறார்.
"வாசகர்களுக்கு ஓய்விடம் அளிப்பது, நீண்ட பகுதி களின் தொடர்ச்சியிலிருந்து ஒரு சிறு மாறுதைலத் தருவது,

Page 43
-83ஒரு வெளியீட்டினை உருவாக்கும் போது ஒரு பக்கத்தின் சிறு பகுதியை நிரப்புவதற்காக வேறுபட்ட அளவுகளில் சிறிய தகவல்களைக் கொடுப்பது என்பதே நிரப்பிகளின் நோக்கமாகும்".
பொதுவாக துணுக்குகளை இருவகையாகப்பிரிக் கலாம். அவை செய்தித் துணுக்குகள், நகைச்சுவைத் துணுக்குகள் என்பனவாகும் . எனினும் பத்திரிகைகளில் நகைச்சுவைத்துணுக்குகள் அதிகளவில் இடம்பெறுவதில்லை. செய்தித் துணுக்குகளாகவே அமைகின்றன.
மகளிர் பற்றிய துணுக்குகள், அனேகமாக மகளிர் இயல்புகளை விபரிப்பனவாக அல்லது சிறுசிறு நடப்புத் தகவல்களைத் தருவனவாக அமைகின்றன. துணுக்குகள் குறுகிய அளவில் இருந்தாலும் வாசகர்களின் கவனத்தை ஈர்க்கவல்லன. ஏனெனில் அதிகளவு நேரத்தையும் சரிந்தனை யையும் செலவரிடாது Ф - ц- 60т цg- ш гт 45 உள்வாங்கக்கூடியளவு விடயத்தை தருவனவாக அமைவதால், இவை எல்லோராலும் படிக்கப்படுகின்றன. இதனால் இதன் தாக்கம், அல்லது தொடர்பாடல் தக எண்ணிக்கையிலும் பண்பிலும் அதிகமாகும். அநேக சிறு துணுக்குகள் ஒரு குறித்த குறிக்கோளை நோக்கியதாகவே எழுதப்படுகின்றன. அக்குறிக்கோளை அல்லது கருத்தை சிறிது விளக்கமாக எடுத்துக்கூறும் சில துணுக்குகள் குறித்த விடயம் தொடர்பான ବୃତ୍ତft தொகுப்பாகவும் அமைதல் கூடும். உதாரணமாக திவுளானை கே.எல்.எம். சுவாகிர் எழுதிய பெண்கள் பற்றி பல்வேறு நாடுகளும் கூறுவதென்னளன்று துணுக்கினைக் கூறலாம். இத்தொகுப்பில் அமையும் அநேக கூற்றுக்கள் பெண்ணைப் பற்றி குறைவான சார்பு நோக்கில் எழுதப்பட்டனவாகவே அமைதலையும் நாம் நோக்கமுடியும்.
"பெண்புத்தி பின்புத்தி' - இந்தியா “ஒரு பெண்ணால் இன்னொரு பெண் புகழ்வதில்லை-1
எஸ்தோனியா

-84
"பெண்ணால் காப்பாற்ற முடிந்த ஒரே இரகசியம் அவள்
வயது” -பிரான்ஸ் "பெண்கள் இருக்கும் இடத்தில் பேச்சு இருக்கும்" “ஒரு விஷயத்தை நீ விளம்பரம் செய்ய வேண்டுமா. அதை இரகசியமாக ஒரு பெண்ணிடம்சொல்" அயர்லாந்து. "நாற்பது பெண்களில் ஒரு பெண்ணின் சொற்களைக் கவனிப்பது நல்லது" -துருக்கி “மணம் செய்த பெண்கள் எல்லாம் மனைவிகளல்லர்"-
ஜப்பான் "நாணமில்லாத பெண் உப்பில்லாத உணவு மாதிரி" -உறங்கேரி
மேற்குறிப்பிட்ட எல்லாக் கூற்றுக்களும், பெண்கள் பற்றிய இழிவான நோக்குறிகளை எடுத்துக்கூறுவதால், இதனைத் தொகுத்தளித்தவரின் நோக்கு நிலையை அவை காட்டுகின்றன என்றே கொள்ளவேண்டியுள்ளது. இவ்வாறான தவறான தகவல்கள்களை விஞ்ஞான ரீதியாக விளக்கமளிக்க முடியாத, கற்பனை பூர்வமாக கட்டுக்கதைகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி தமது கருத்தை நிலைநாட்ட முனைகின்றனர் என்றே கொள்ளவேண்டும். சக்கரவண்டியில் போன மனிதன் அதன் பயன்பாடு வினைத்திறனையும், அதிலுள்ள குறைபாடுகளையும் கண் டறிந்த பரின் , மின் சார புகைவண்டிக்கும், மீ ஒலி ஆகாய விமானங்களுக்கும் தமது சிந்தனையை விரிந்து நோக்கும் காலகட்டத்தில் வாழும் நாம் இவ்வாறான பழைய சக்கரங்களை உருள வைத்துப்பார்பபது அர்த்தமுள்ளதாகத் தெரியவில்லை.
பெண்கள் தொடர்பான துணுக்குகளில் ஆலோ சனைகள், வீட்டைப் பேணுதல், உணவுப்பொருட்களைப் பாது காத் த ல் , அறிவுரைகள் , போன் றனவும் காணப்படுகின்றன. இவை மகளிர் நிலையினைக் கிண்டல் செய்வதிலும் பார்க்க "இதுவே மகளிர் நிலை" என எடுத்துக் கூற முனைகின்றன என்றே கொள்ளவேண்டியுள்ளது.

Page 44
-85இவற்றை விட மிக அரிதான துணுக்குகள் சிலவற்றையும் நான் இங்கு எடுத்துக்கூற முடியும்.
"பெண்கள் அரசாங்கம்" என்ற ரைலப்பில் 6.7.92 இல் வீரகேசரியில் வெளியான துணுக்கு பின்லாந்து அரசாங்கத்தில் 17 அங்கத்தவர்களில் , 6 பெண்கள் உள்ளனர் எனவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் 2000 பேரில் 1 பங்கினர் பெண்கள் எனவும் எடுத்துக்கூறகின்றது. துணுக்கு வெளியான வாரம் அனேக ஆண்கள் விடுமுறை பெறுவதால், கூட்டு அமைச்சரவையில் தலைமைப் பொறுப்பு பெண்களிடம் வருவதாக எடுத்துக் கூறுகின்றது.
இவ்வாறான நிலையில் ஆண்கள் இருந்தபோதிலும், அவை எடுத்துக்கூறப்டுவதில்லை. எனவே இதற்கான காரணம் பெண்களின் அந்தஸ்து நிலையில் ஏற்பட்ட மாறுநிலைகளை குறிப்பிடுவதாக மட்டுமல்லாமல், ஓர் மறைமுகமான கிண்டல் தொனியும் காணப்படுகின்றது. ஆண்களின் எதிர்பார்ப்புக்கள் என்ற தலைப்பில் அமைந்த துணுக்கு ஒன்று 25.10.92 வீரேகசரியில் இடம்பெறுகின்றது. பெண்களிடம் ஆண்கள் எதிர்பார்ப்பது என்ன என்பது பற்றி ஆய்வு செய்ததன் பெறுபேறுகளின் அடிப்படையில் அமைந்த தகவல்கள் என அவை காட்டப்படுகின்றன. இதில் மூன்று விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன.
1. செக்ஸ் பற்றிய பெண்களின் மேலைத்தேய பண்பாட்டு போக்கு மாறுவதாகவும், 10/8 பங்கினர் தாயாக வேண்டு மென விரும்புவதாகவும்.
2. பெண்கள் புத்திசாதுரியம், குடும்பபாசம், தன்னம்பிக்கை
யுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும் என விரும்பு வதாகவும்.
3. சிலர் உணர்ச்சிமிக்கவர்களாக இருக்கவேண்டும் எனவும், சிலர் இலட்சியப் பெண்களாக இருக்கவேண்டுமெனவும் விரும்புவர்

-86
சமூகத்தில் வேரூன்றியுள்ள ஆண் முதன்மைப்
போக் கும் அதன்பாற்பட்ட பெண்ணின் துணைநிலையும் இவ்வாய்வு மூலம் எடுத்துக்காட்டப்படுகின்றது.
11.10.92 வீரகேசரியில் வெளியான இன்னெரு துணுக்கு, சீனாவில் பெண்களை முச்சச்தியில் நிறுத்தி விற்கப்படும் தொழில் அதிவேகமமாக முன்னேறிவருவதாக எடுத்துக் கூறுகின்றது. இதில் புள்ளி விபரங்களும் தரப்படுக்கின்றன.
1986, 1987, ஆண்டு கிச்சுவன் உறியூபு என்னுமிடத்தில் 323 பேர் விற்கப்பட்டதாகவும், 19 வயதுப் பெண் 4 சகோதரர்களுக்கு பொதுமனைவியாக விற்கப்பட்டதாகவுதம் எடுத்துக் கூறுகிறது.
“தொடரும் பெண்ணடிமை” என்ற தலைப்பில், அது இடம்பெறுவதால், இந் நிலமையை கண்டிக்கும் மனப் பாங்கு ஒன்று இதனுள் தென்படுவது வரவேற்கத்தக்தேயாகும்.

Page 45
-87அடிக்குறிப்புக்கள்
01. கார்த்திகேசு சிவத்தம்பி, இலக்கியமும் கருத்து நிலையும்,
ப : 88 தமிழ்ப் புத்தகாலயம், சென்னை 02. திமிலை மகாலிங்கம் "வருவது வந்தது” ப: 12 வீரகேசரி
வாரவெளியீடு 1840/92 03. பன்னீர்ச்செல்வன் ஜீ. "ஊஞ்சலாடும் உள்ளங்கள்" ப: 12
வீரகேசரி வாரவெளியீடு 640/92 04. பரமானந்தராஜா, க."ஒரு விடிவெள்ளி உதயமாகிறது"
ப 28 வீரகேசரி வாரவெளியீடு 05. சிவராஜா சி. “அது என் கடமை" ப - 12 தினகரன் வார
மஞ்சரி 1140/92. 06. றம்ஸான் எஸ் ஏ.எம் "இப்படியும் ஒரு மீலாத் ”
ப : 9 தினகரன் வாரமஞ்சரி 1140/92 07.மாலினி சுப்பிரமணியம் “நாம் மீண்டும் புதிதாய்ப்
பிறப்போம்" ப : 14 வீரகேசரி வாரவெளியீடு 23/20/82 10. Roland E. Wolsely, The Magazine World, p 28
Prentice Hall, Inc Newyork 1955 (3rd Print)
11. Encyclopaedia Britanica vol 6 p 117 Inc Chicago 1970 12. உறாஜராநோனா “பெற்றோரே சீதனப் பிரச்சினையின்
சூத்திரதாரிகள்' வீரகேசரி.4/10/92

திருமணப்பாட்டு
புனரபி பாரதி
தாலிக் கயிறெனும் தூக்குக் கயிறு தாங்கிடத் தானோபெண் எனும் உயிரு?
‘எப்படித் திருமணம் செய்வதுP என்றும், ‘எப்படியாச்சும் செய்யணும் என்றும், அப்பனும் அம்மையும் கப்பிய சோகமாய் அங்கமும் உள்ளமும் அதிரடிபட்டு, தங்கமும் வெள்ளியும் அழித்துப் போட்டு, சொத்தென இருந்த சொத்தை நிலத்தை விற்றதை வைத்து முன்பே முடித்த முந்தையமகளின் திருமணக்கடனே முடிந்த பாடில்லை என்றிடும் நிலையில், சம்பளத்தில் பிடித்துக் கொள்ளும் தம்பிரான் காலில் மறுபடி விழுந்து, பெண் பெற்ற நெஞ்சம் புண்பட்டுப்புண்பட்டு, கண்பட்ட இடம் எல்லாம் கடன் பட்டு, என்றோ வாங்கிய சுவர்க்கடிகாரம் அடகு கடையில் அடங்கி முடங்க, காரிருள் துரத்தக் கதிரவன் இறங்க, பேரூர் உறங்க, பிச்சைக்காரரும் உறங்க, பெண்ணைப் பெற்றோர் வீட்டில் மட்டும் பார்த்துப் பார்த்துச் சேர்த்த பித்தளைப் பாத்திரம் மாத்திரம் நித்திரை செய்ய, பெற்ற மனசுகள் முற்றிய விழிப்பில் கவலைக் கண்கள் சுவரைப் பார்க்க.
அவலம்! அவலம்! எத்துணை அவலம்! எத்துணை துயரம் எத்துணை சிறுமை! இப்படி அப்படி எப்படி என்று செப்பிட முடியா கடனடி பட்டு, செப்பிடு வித்தை செய்வது போல

Page 46
-89எப்படியாகிலும் பணத்தைச் சேர்த்து, ஊரைக் கூட்டி, உறவினர்சேர்த்து, ஆனந்தக் கண்ணிரில் அழுகையும் சேர்ந்து, பொன்னைப் பார்த்த பின் பெண்ணைப் பார்த்த புல்லன் கையில் புதல்வி கொடுத்து, "இனி அவன் பாடு! இனி அவன் பாடு! பெற்ற நம் பொறுப்பு முடிந்தது இன்று; ஏதோ, திருமணம் நடந்ததே! நன்று; பெண்களுக்கிது தான் மங்கலம்" என்று எத்தனை பெற்றோர் என்ணுகிறாரோ? எத்தனை சிறுமை எத்தனை மடமை! வெண்கலம், பொன்கலம் பேசிடும் போது மங்கலம் ஏதுP மங்கலம் ஏதுP பொன்னைச் சேரும் ஆணைச்சேரும் பேதைப் பெண்ணின் பேரில் சேரும் மானம் ஏது? மாண்பு தான் ஏது? பணமகன் மணமகன் விலை மகன் அன்றோ? இதைப் பார்த்தும் பாரார் பாவிகள் அன்றோ? கற்புகற்பெனக் கதைப்பார் திருமணம் விற்பனைப் பொருளாய் இருப்பதும் கற்போ? பொருளோ பொருள் எனப் பேசிடும் மனிதர் பொருள் இல்லாப் பெண்டிரை நினைத்ததும் உண்டோ? மாசிலாக் கற்பும் மலரின் மென்மையும் துரசிலாமணமும் துலங்கிய போதும் காசிலாக் கொடுமையில் கண்ணகி கூட்டம் கன்னிப் பருவம் முதுமையில் முடிந்ததும் கன்னிகளாகக்கருகுகிறாரே!
பெண்மை வாடுதல் ஆண்மைக்கழகோP
கற்பினில் பருகும் கன்னியர் ஓர் புறம் கற்பழிந்து உருகும் கன்னியர் ஓர் புறம் கற்பிலாத் தந்தையும் கற்பிலா மாமனும், கற்பிலா அண்ணனும், கற்பிலாத் தம்பியும், கற்பிலாக் காதலன், கணவனும் என்று கற்பிலா ஆண் இனம் ஆனதனாலே, திருமண, மறுமண வாய்ப்புகள் இன்றி,

-90எடுத்து வளர்க்கவும் யாரும் இன்றி, எழுத்தறிவிக்கவும் எவரும் இன்றி, குடலைக் குடையும் பசியில் குன்றி, உடலை விற்று உயிரை வளர்க்கும் பரத்தையின் வாழ்வும் ஒருத்திக்கேனோP பெண்மை பிறழ்தல் ஆண்மைக் கழகோP அலைமகள் மலைமகள் கலைமகள் உருவம் விலைமகளாக விட்டிடலாமோ? பெண் உரு என்பது தன் உரு அன்றோ? தனக்கெனப் பிறக்கும் மகள் உரு அன்றோ? தனக்கென வாழாத்துணைவியும் அன்றோ? தாய் உரு அன்றோP தங்கையும் அன்றோ? கோயிற் சிலையாய் கும்பிடும் உருவம்
வாயிற் படியாய் மதிபடலாமோ? குங்குமம் நீறு அன்பினில் குலவி, சிவன் உமையாக எழுந்திடும் கலவி, சவச் சுமையாக இருந்திடலாமோ? வாலிபம், ஆண்மை, உண்மை உணர்ந்தவன் தாலி என்கிற மங்கல வேலி தானே வந்து போடணும் ஐயா! தாலியைப் போடக் கூலியைக் கேட்பார், கொடுப்பதற்கில்லார் யாரிடம் கேட்பார்P கோயிலில் சென்று திரியிடுவாரோ? குறைதீர்' என்று முறையிடுவாரோ? கோயிலில் தொழுதும் அழுதும் அயர்ந்து கோயில் குளத்தில் உயிர் விடுவாரோP கேளும்/கேளும் செவிடரே, கேளும்!
திருமணம் என்பது தெய்வப்பயிரு தேவியின் ஆவி, தாலிக் கயிறு! சாதிகள் என்றும் சாத்திரம் என்றும் சாதிப்பாரே பெருகிடும் போது, ஒருவனும் ஒருத்தியும் பார்த்துப்பழகி அழகில், பண்பில், அன்பில் உருகி இரு மணம் ஒரு மனம் ஆக விடாது

Page 47
-91திருமணம் வணிகம் ஆகிடும் போது, சுற்றமும் நட்பும் குதும் சூழ பெற்றவர் பேரம் பேசிடுமு போது தேவியர் ஆவி பிரிவது போலும் தேம்பித் தேம்பி அழுவது கேளும் ! தேம்பித் தேம்பி அழுதிடும் கண்கள் தேம்பித் தேம்பி அழுதிடும் மனசு தேம்பித் தேம்பி ஆழுதிடும் மார்பு தேம்பித் தேம்பி அழுதிடும் வயிறு
பாரும் பாரும் குருடரே தேம்பிய தேவியர் திருமுகம் பாரும்! தேம்பிய கண்கள் தேம்பியமனசு தேம்பியமார்பு தேம்பிய வயிறு தாங்கிட முடியா வேதனைப்பயிரு தாலிக் கயிறெனும் தூக்குக் கயிறு! தூக்குக் கயிறெனும் தாலிக் கயிறு தூக்கிடத் தானே பெண் எனும் உயிருP
நன்றி : அமெரிக்கக் கூட்டுச் தமிழ்ச் சங்க மூன்றாம் ஆண்டுச் சிறப்பு மலரில் இருந்து எடுக்கப்பட்டது

இலங்கைப் பாரரளுமன்ற அரசியலில் பெண்கள்
ந. சரவணன்
இன்றைய இலங்கையின் சனத்தொகையில் 40% த்தினர் பெண்களாவர். இது ஏறத்தாள நாட்டின் சனத்தொகையில் சம பங்கினர் என்றும் கூறலாம் . இருப்பினும் இவ்வீதாசாரத்திற்கேற்ப பெண்கள் நிர்வாகத்துறைகளில் இல்லாமல் இருக்கின்றனர்.
பாராளுமன்றத்தில் இதுவரை பெண்களின் பிரதிநிதித் துவ வீதாசாரம் என்பது 5% க்கும் குறைவானதாகவே இருந்துள்ளது. இவ்வாறு அரசியலில் பங்கு கொள்ளும் பெண்களின் விகிதாசாரம் குறைவானதாகவே காணப்பட்ட போதும் இதுவரை இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை பெண்கள், மூன்று தடவைகள் கைப்பற்றி அதிகாரம் செலுத்தும் அளவிற்கு முன்னேறியுள்ளனர். அத்துடன் காலத்துக்கு காலம் அமைச்சரவைகளிலும் பல பதவிகளை வகித்து அமைச்சு விவகாரங்களிலும் பங்காற்றி இருக்கின்றனர்.
ஆனாலும் இது வரை காலம் பெண்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட்தா? அரசியலுக்கு வந்த பெண்கள், பெண்களைத்தான் பிரதிநிதித்துவப்படுத்தினார்களா என்ற கேள்வியை எழுப்பினால் சூனியமே மிஞ்சும்.
அந்த வகையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கான அன்றைய கால கோரிக்ககைகள் கடந்து வந்த பாதைகள், மற்றும் இன்றும் சமூகத்தில் பெண்களின் பின்தங்கிய நிலை என்பவற்றை ஒரு கண்ணோட்டம் செலுத்துவது பொருத்தமானதாகும்.
இலங்கையின் சுகந்திரம் "கத்தியின்றி இரத்தமின்றி
பெறப்பட்டது. என்று கூறப்படுவதைப் போல் இலங்கையில் பெண்கள்,அரசியலில் பங்குபற்றுவதற்கான வாக்குரி

Page 48
-93மையையும் நீண்டகால முயற்சிப்படி நிலைகள் இன்றி பெற்றுக்கொண்டனர்.
பெண்களின் அரசியல் சமவுரிமை என்பது பெண்நிலைவாத கருத்தியல் விலியுறுத்திப்படும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக காணப்படுகிறது. என்றாலும் அவ்வுரிமைக்கான எவ்வித முயற்சிகளுமின்றி ஓடுமாற்றில் கூடச்சேர்ந்தோடும் கிளைநதி’ போல இயல்பாக ஒடும் அரசியல்நடத்தைகளுடன் சேர்ந்து கொள்வதே நடைமுறையில் பழக்கமாகி விட்டது என்பதை மறுக்க முடியாதுள்ளது.
பெண்கள் வாக்குரிமை
இலங்கைப் பெண்களின் வாக்குரிமைப் போராட்டம் தொடர்பாக கண்ணோட்டம் செலுத்துவதற்கு ஏனைய உலக நாடுகளில் அப்போராட்டத்தின் பின்னணித்தன்மையை இங்கு ஒப்பிடுவது பொருத்தமானதாகும்.
பொதுவாக இன்று நடைமுறையிலுள்ள தந்தைவழிச் சமூக ஆணாதிக்கசூழ்நிலையானது குடும்ப அமைப்பு முறையின் மூலம் பெண்களிடம் பொறுப்புக்களைச் சுமத்திவிட்டுள்ளது. அச்சுமைகளிலிருந்து ஆணினம் தான் விடுதலையடைவதற்காக பெண்களளைக் குடும்பச் சூழலை விட்டு வெளியேற விடாமல் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஆதிக்கம் செலுத்தும் உரிமை ஆணிடமிருந்து பெண்களின் கைக்கு மாறிவிடும் என்ற பயத்தாலும் அடக்கி ஆளும் அதிகாரத்தை ஆண்மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்ற மரபுவழி சிந்தனையாலும் இப்படி ஆனது எனக் கூறலாம்.
மேற்படி கருத்தோட்டத்தில் இருந்தே பல நாடுகள் பெண்களுக்கான வாக்குரிமை வழங்குவதில் மறுப்பு தெரிவித்திருந்தன அல்லது தாமதமளித்தன.

-94உலகிலேயே பெண்களுக்கு முதல் முதலில் வாக்குரிமை வழங்கிய நாடு நியூசிலாந்து. இங்கு 1918ம் ஆண்டு
பெண்களுக்கான வாக்குரிமை வழங்கப்பட்டது.
ஜனநாயகக் கோட்பாடுகளை உலகிற்கு அறிமுகப் படுத்திய மேற்கத்தேய நாடுகள் கூட பெண்களுக்கு பால் அடிப்படையிலான பாரபட்சத்தை காட்டத் தவறவில்லை.
பாராளுமன்றம் தோன்றிய நாடான பிரித்தானி யாவில் பல ஆண்டுகளாக "வாக்குரிமைப் போராட்டம்' நடந்து வந்துள்ளது. பல ஆண்டுகாலமாக அங்கு சொத்து படைத்தவருக்கும், கல்வியறிவு படைத்தவர்களுக்கும் மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தது. இங்கிலாந்தில் 1918இல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் கூட 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கும் 21 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தது. 1928இல் கொண்டு வரப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் மூலமே 21 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் வாக்குரிமை பெற்றனர்.
உலகில் பல நாடுகள் பெண்களுக்கான வாக்குரிமை வழங்குவதில் மிகவும் தயக்கம் காட்டியிருந்தன. பிரான்ஸ் நாட்டில் பெண்கள் 1945 இலேயே வாக்குரிமையயைப் பெற்றுக்கொண்டனர்.
ஜப்பானில் இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின் 1947இல் அமெரிக்காவின் தலையீட்டுடன் நடந்த தேர்தலிலேயே ஜப்பானியப் பெண்கள் முதன்முதலில் வாக்குரிமையைப் பெற்றுக் கொண்டனர். அதற்கு முன் ஜப்பானில் எழுதப்படிக்கத்தெரிந்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது. அவர்கள் தங்களுக்கு எழுதப்படிக்கத் தெரியும் என்பதை தெரிவிப்பதற்கு தேர்தலின் போது வாக்குச் சீட்டில் அவர்களின் பெயரை எழுதி நிருபிக்க வேண்டும்.

Page 49
-95ஜனநாயகம் பற்றிப் பேசிய பல மேலைத்தேய முதலாளித்துவ நாடுகள் பல ஜனநாயக ரீதியில் பெண்களுக்கான சம வாக்குரிமை வழங்குவதில்-தயக்கம் காட்டின-தாமதித்தன.
இலங்கைப் பெண்களின் வாக்குரிமைப் போராட்டம்.
இலங்கையை இறுதியாக ஆண்ட காலனியாதிக்க ஆங்கிலேயர்கள் (1796-1948) தனது காலனித்துவ நாடுகளில் எழுந்த தேசியவாத எழுச்சி காரணமாக அவர்களுக்கு சில சில்லறை சலுகை வழங்கி தேசிய உணர்ச்சிகளை தணிக்க முயன்றனர். அந்த வகையில் இலங்கையின் பிரச்சினனைகளை ஆராய்ந்து அரசியலமைப்பு சீர் திருத்தத் தை ஏற்படுத்துவதற்காக “டொனமூர்" என்பவரின் தலைமை யிலான குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பி வைத்தது.
1927 டிசம்பர் தொடக்கம் 1928 ஜனவரி வரை அவர் கள் ஆணைக்குழுவொன்றை அமைத்து விசாரணை நடத்தி அறிக்கையொன்றை சமர்ப்பித்தனர். இவ்வறிக்கை யின்படி இலங்கைக்கு "சர்வஜன வாக்குரிமை (Universal franchise) வழங்கினர். பிரித்தானியாவின் குடியேற்ற நாடுகளில் சர்வஜன வாக்குரிமையயைப் பெற்ற முதல் நாடு இலங்கை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
டொனமூர் அறிக்கையில் பெண்களுக்கான வாக்குரிமை வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும் அது "ஆண்களாயின் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பெண்களாயின் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் என மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கான காரணம் அன்று டொனமூர் குழுவின் முன் பெண்கள் வாக்குரிமையைப் பற்றிய சிபாரிசை முன் வைப்பதில் தேசிய தலைவர்கள் எனக் கூறப்படுவோரில் பெரும்பாலோனார் தயக்கம் காட்டியிருந்ததுடன் பெண் களின் வாக்குரிமைக்

-96கெதிரானவர்களும் இருந்தார்கள். இலங்கை தேசிய காங்கிரஸ் போன்றன கூட ஆண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுவதையே வலியுறுத்தியிருந்தன". இவ்வமைப்போடு சில அமைப்புகள் சேர்ந்தே பிற் காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது.
சேர். பொன்னம்பலம் இராமநாதன் ஆகியோர் கூட பெண்களுக்கு வாக்குரிமை வழங்கத் தேவையில்லை என டொனமூர் குழுவினரிடம் முறையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி "தேசபக்கதன் " (13-4-1928) இதழில் மீனாட்சியம்மாள் இவர் மலையகத்தின் பழம் பெரும் தலைவர் கோ. நடேசய்யரின் மனைவி) எழுதிய கட்டுரையில்
"இந்தியாவை விட முற்போக்கடைந்திருப்பதாக கூறப் படும் இலங்கையில் ஸ்திரிகளுக்க சுகந்திரம் கொடுக்கக்கூடாது என்றால் இலங்கை எவ் விதத்தில் முற்போக்கடைந்திருக்கிறது.? சேர் இராமநாதன் போன்றோர்க்கு இலங்கையில், பெண்கள் பொதுசன சேவையில் ஈடுபடக்கூடாதென்றால் ஒரு பெண் கூட எக்காலத்திலும் வெளியில் வரக்கூடாது என்று ஒரு சட்டத்தை நிரந்தரமாக ஏற்படுத்த முயற்சித்தல் மேலாகும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையின் அரசாங்க சபை, சாவஜன வாக்குரி மையை உள்ளடக்கியிருந்த டொனமூர் யாப்பை 2 மேலதிக வாக்குகளாலேயே நிறறைவேற்றியிருந்தது. சேர் பொன்னம்பலம் இராநாதன் உட்பட பலர் எதிர்த்தே வாக்களித்திருந்தனர்.
1928ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி அரசாங்க சபையில் "டொனமூர் யாப்பு தொடர்பான விவாதத்தின் போது பொன்னம்பலம் இராநாதன் கீழ் வருமாறு

Page 50
-97பேசியிருந்தார்.
"சர்வஜன வாக்குரிமையானது எமக்கு எது வித நன்மையையும் அளிக்காதுஎன்று கூறிக் கொள்கிறேன".
"ஆணையாளர் வயது வந்தவர்களுக்கான வாக்குரிமை யைப் பற்றி கூறுகிறார்கள். இவர்கள் எதற்காக இந்த நாறிப் போன தத்துவத்தை எமக்குப் போதிக்கிறார்கள். எதற்காக எமது தொண்டைக்குள் இவற்றைத் திணிக்கிறார்கள".
இந்த "டொனமூர் விசாரணைக் காலப்பகுதியில் வெளி வந்த பெரும்பான பத்திரிகைகள் கூட பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுவதை எதிர்த்தும், நையாண்டி புரிந்தும் செய்திகள், கட்டுரைகள் என்பவற்றைப் பிரசுரித்திருந்தன.
ஈழகேசரி 1930-09-10 இதழில் பெண்களும் வாக்குரிமை யும் என்ற ஆசிரியத் தலையங்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிட்டிருந்தது.
".தமக்கென்று ஓர் சொந்த அபிப்பிராயத்துடன், விஷயங்களைப் பூரணமாக ஆலோசனை செய்து சரி பிழையறியவும் ஆற்றலும் பெண்களிடத்திலிருக்கிறதா? ஆண்களே வாக்குரிமையைப் பற்றி சரியாக அறியாதிருக்க பெண்கள் எப்படி அறியப் போகிறார்கள்? பெண்களுக்கு இதனை வழங்கியதன் மூலம் நன்மையைக் கொண்டு வரும் என்பது ஐயத்துக்கிடமானதாகும்."
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த "இந்து சாதனம்” பத்திரிகையின் 8-11-1928 பத்தரிகையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது.
"...கொழும்பிலுள்ள ஆண்தன்மை பூண்ட தன்னிஷ்டப் பெண் ஜென்மங்கள் சிலரின் கேள்விக்கிசைந்ததே விசாரணைச்

-98சபையாரும் "பெண்ணென்றால் பேயுமிறங்கு" மென்னும் பழமொழிப்படி உடன் பட்டு விட்டார்கள். இது எங்கள் சமயம், சாதி தேசம், பழக்க வழக்கம், கொள்கை என்று சொல்லப்படுவன எல்லாவற்றிற்கும் முழு மாறானதாகும். மேலும் பறங்கியர், ஒல்லாந்தர் முதலான அந்நிய சமயத்தினர் இலங்கையைப் பரிபாலித்த போது கூட சமய நிஷ்டூரம் செய்தனரேயன்றி இந்த விதமாக எங்கள் சாதிக் கட்டுப்பாட்டையழித்து இங்குள்ள பெண்களைப் பொதுமக்களிற் பிரவேசிக்கச் செய்து "பொதுமகளிராக்கி" விடவில்லை".
இவ்வாறு அன்றைய பத்திரிகைகள் கூட "பெண்களுக்கு வாக்களிக்கும் ஆற்றல் இல்லை" என்றும் வாக்குரிமை கோரிய பெண்களை 'தன்னிஸ்ட பெண் ஜென்மங்கள் என்றும் பொது கருமங்களில் ஈடுபடும் பெண்கள் “பொது மகளிர்" என்றும் அதிகளவு ஏளனம் புரிந்து எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
பெண்களின் வாக்குரிமைக்காக போராடியவர்கள்
ஒரு பக்கம் பெண்களின் வாக்குரிமைக்கு எதிராக பலர் குரல் கொடுத்து வந்த அதே நேரம் பெண்களுக்கான வாக்குரிமையயைக் கோரியும் அதற்கு ஆதரவளித்தும் சில முயற்சிகள் நடந்தன.
கோ - நடேசய்யர், பெரி, சுந்திரம், ஆகியோர் (முறையே
சாட்சியம் எண் 36, 38) 07 ம் திகதி டிசம்பர் 1927இல் டொனமூர் குழுவின் முன் சாட்சியமளிக்கையில் “பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும்" என்பதை வலியுறுத்தியிருந்தார். (டொனமூர் சீர் திருத்தம் அமுலுக்கு வரு முன் அறிக்கைவெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தில் "டொனமூர் அறிக்ககை வெளிவந்தது, பெண்களுக்கு வாக்குரிமைhன

Page 51
-99س தேசபக்தனில் மிகவும் பாராட்டியிருந்தார். ஆனால் அவர் பாராட்டிய பெண்களுக்கான வாக்குரிமை அம்சம் என்பது “வயது 31 க்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே” எனும் அம்சமாகும்)
இன்னொரு புறம் 1928 ஜனவரியில் "பெண்கள் வாக்குரிமைச் சங்கம்" என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தின் ஸ்தாபக அங்கத்தவரில் திருமதி ஈ.ஆர்.தம்பிமுத்துவும் ஒருவர் ஆவர். இவரது கணவர் 1923 இல் கிழக்கு மாகாணத்துச் சட்டசபைப் பிரதிநிதியாக இருந்த போது பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்ற பிரேரணையயை அறிமுக்படுத்தியவர். ஆனால் அப்போது அப்பிரேரணை சட்டசபையில் ஆதரவு பெறவில்லை. (TheHansadCNC-6499) பின்னர் "பெண்கள் வாக்குரிமைச் சங்கம்" நிறுவப்பட்ட போது அதன் உப தலைவர் களில் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டார். 1927ஆம் ஆண்டு டிசம்பர் 7ம் திகதி முதன் முதல் இச்சங்கத்தை ஸ்தாபிப்பதற்காகப் பெண்கள் கூடிய போது திருமதி தம்பிமுத்துவே பெண்கள் வாக்குரிமைச் d is sld. Womens Franchise Union 6T6arp G. Jugopt 'i பிரேரித்தார்.
டேஸி பண்டாரநாயக்காவின் (இவர் பின்னாளில் பிரதமராக பதவி வகித்த எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்காவின் தாயார்) தலைமையில் ஆரம்பிக்கப் பட்டிருந்த இவ்வமைப்பில் திருமதி ஈ.ஆர். தம்பிமுத்து உட்பட திருமதி நல்லம்மா, டபிள்யூ ஏ. டி. சில்வா, அக்னஸ் டீ சில்வா, கேராட் வீரக்கோன் ஆகியோரும் அங்கம் வகித்தனர். அவ்வமைப்பின் முதல்தலைவியாகவும் டேஸி பண்டாரநாயக்கா இருந்தார். பெண்களுக்குவாக்குரிமை வேண்டுமெனக் கோரி 1928ஆம் ஆண்டு ஜனவரி 14ம் திகதி இவ்வமைப்பு சாட்சியமளித்த (டொனமூர் குழுவிடம் இறுதியாக இவ்வமைப்பே சாட்சியமளித்திருந்தது. சாட்சியம் இலக்கம்- 141)

-100இதை விட டொனமூர் Aச்ரீண்ை கால பகுதியில் Guairast 9thusi, fii stewöméfis Politică) Union), மற்றும் அகில இலங்கை பெண்கள் சம்மேளனமl (Al Ceylon Women's Conference) egy fiu s960) LDüLIá45Giblb பெண்கள் வாக்குரிமைக்காக போராடியிருந்தபோதும் இவை பெரிய அளவில் செயல்பட்டிருக்கவில்லை.
டொனமூர் குழுவின் முன் சாட்சியமளித்தவர்களில் பெண்களின் வாக்குரிமையைப் பற்றி குரலெழுப்பியோர் குறைவாகவே காணப்பட்டனர். குறிப்பாக தமிழ் தலைவர்களில் பலர், ஏனைய இனத்தவர்களையும் விட பெண்களின் வாக்குரிமைக்கு எதிராக குரலெழுப்பியிருந்தனர். இது பற்றி டொனமூர் அறிக்கையில் கீழ் வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
"தமிழ் (இந்து) சமூகத்தின் தலைவர்கள் பலர் வாக்கு ரிமை மேலும் விஸ்தரிக்கப்படுவதை விரும்பவில்லை.
ஆனாலும் பெண்களின் சாட்சியங்களைத் தொடர்ந்து டொனமூர் குழுவினர் பெண்களின் வாக்குரிமைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். எமது நாட்டுப் பெண்களின் வாக்குரிமையின் அவசியத்தை வேற்று நாட்டவர் நியாயப்படுத்திப் பேச வேண்டிய மோசமான நிலை அன்றிருந்தது எனலாம்.
அவர்கள் "பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதன் மூலம் இலங்கையில் குழந்தை இறப்பு வீதம் வீடமைப்பு, சுகாதாரம் , குழந்தை சார் நலம், மருத்துவம் , கற்பிண்களுக்கான நடவடிக்கைகள் என்பவற்றில் வளர்ச்சி ஏற்படும்." என வாதிட்டனர். அதன் படி அவர்கள் பெண்களுக்கான வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டாலும் அது 31 வயது என மட்டுப்படுத்தினர். ஆனால் இது நடைமுறைக்கு வந்த போது அன்றிருந்த

Page 52
-101அரசாங்க காரியதரிசியால், தேசாதிபதி சேர் கேர்பற்ஸ் ஸ்டேன்ஸி என்பவருக்கு முன்வைத்த சிபாரிசு காரணமாக பெண்களுக்கும் 21 வயதில் வாக்குரிமை வழங்கப்பட்டது.
பிரித்தானியாவில் சகலருக்கும் 1918ல் வாக்குரிமை வழங்கப்பட்ட போது பெண்களின் வாக்குரிமை வயது 30 ஆகவே இருந்தது. 10 வருட போராட்டத்தின் பிறகு 1928இலேயே பெண்கள் 21 வயதில் வாக்களிகும் உரிமையைப் பெற்றுக் கொண்டனர்.
ஆனால் இலங்கையில் 1931இலேயே இலங்கைப் பிரஜைகளுக்கு சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட போதே பெண்களுக்கும் ஒரே நேரத்தில் வாக்குரிமையைப் பெற்றுக் கொண்டனர்.
இலங்கைப் பெண்களின் வாக்குரிமைப் போராட்டம் என்பது சந்தர்ப்பத்திற்கமைய குரலெழுப்பி அந்த உடனேயே பெற்றுக்கொணர்டதனாலேயே, பெண்கள் எவ்விதப் போராட்டப் படிநிலைகளுமின்றி வாக்குரிமையைப் பெற்றுக் கொண்டனர் என இலகுவாக கூறக்கூடியதாகவுள்து.
பெண்களுக்கான வாக்குரிமை வழங்கப்பட்ட முதன்மை நாடுகளில் இலங்கையும் அடங்குகின்றது. அதே போல் வாக்குரிமை வயதெல்லை 21இலிருந்து 18க்கு குறைந்த முதன்மை நாடுகளில் இலங்கையும் ஒன்று. இன்று இலங்கைப் பெண்கள் 18 வயதிலேயே வாக்களிக்கத் தகுதி படடைத்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் பெண்கள்
முதன் முறையாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பெண் லேடி எட்லின் மொலமூரே இவரது

-102தந்தையான "ஜோன் ஹென்றி மீதெனிய அதிகாரம் என்பவரின் மரணத்தைத் தொடர்ந்து அவரது தொகுதியான 'ருவன்வெல்லவில் 1931 நவம்பரில் நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் அவரது மகளான மொலமூரே அம்மணி போட்டியிட்டு அரச சபைக்கு தெரிவு செய்ய்பட்டார்.
அரசியலைப்பற்றிய இலங்கைப் பெண்களின் அக்கறை யற்ற அக்காலத்தில் அவர் தெரிவு செய்யபபட்டமை பெண்கள், அரசியலில் பங்கு பற்றுவதற்கான துணிவையும் ஆரம்பத்தையும் கொடுத்தது.
1931 இலேயே அரச சபைக்கு இன்னொரு பெண்ணும் தெரிவு செய்யப்பட்ட போதும் அவரும் இடைத் தேர்தலொன்றின் மூலமாகவே தெரிவு செய்ய்பட்டார். கொழும்பு வடக்கை பிரதிநிதிப்படுத்தி ரத்ன ஜோதி சரவணமுத்துக்கு எதிராக செய்யப்பட்ட தேர்தல் முறைப்பாட்டைத் தொடர்ந்து கொழும்பு வடக்கில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அவரது மகள் நேசம் சரவணமுத்து போட்டியிட்டு அரச சபைக்கு தெரிவு செய்யப்பட்டார்.
1936இல் இரண்டாவது அரச சபைக்கான பொதுத் தேர்தலில் மூன்று பெண்கள் முன்வந்து போட்டியிட்ட போதும் கொழும்பு வடக்கில் போட்டியிட்ட நேசம் சரவணமுத்து மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். இவரைவிட ஹெட்டன் தொகுதியில் சீ.எஸ்.ராஜரட்னம், ருவன்வெல்ல தொகுதியில் எட்வின்மொலமூரே ஆகியோர் போட்டியிட்ட போதும் வெற்றி பெறவில்லை.
இத்தேர்தலின் மூலம் இலங்கையின் முதன் முதலில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட பெண் என்ற பெருமை நேசம் சரவணமுத்துவைச் சாரும்.

Page 53
-103
அரச சபை முறை நீக்கப்பட்டு பாராளுமன்ற முறை கொண்டு வரப்பட்டது. 1947ல் நடந்த முதலாவது பொதுத்தேர்தலில் மூன்று பெண்கள் போட்டியிட்டனர். மத்திய கொழும்பிலிருந்து ஆயஷா ரவுப் பலப்பிட்டி தொகுதியிலிருந்து பூரீமதி அபய குணவர்த்தன கிரிஎல்ல தொகுதியிலிருந்து பிளாரன்ஸ் செனநாயக்கா மட்டுமே தெரிவு செய்யப்பட்டார். முதலாவது பாராளுமன்றம் கலைக் கப்படுவதற்குள் இன்னும் இரு பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டனர். அவிஸ்ஸாவெலயில் பிலிப் குணவர்த்தனவின் ஆசனத்துக்குப் பதிலாக அத்தொகுதியில் 1948 ஏப்பிரலில் நடந்த இடைத்தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட குசும்கிறி குணவர்த்ன (பிலிப் குணவர்த்தனாவின் மனைவி) அடுத்து கண்டி தொகுதியில் டி.பி இலங்கரத்னவின் ஆசனத்திற்கு பதிலாக 1949 யூனில் அத்தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட இலங்கரத்தினாவின் மனைவி தமராகுமாரி தெரிவு செய்ய்பபட்டார்.
1952ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது பொதுத் தேர்தலில் 12 பெண்கள் போட்டியிட்டனர். (முதலாவது பொதுத் தேர்தலில் மூவரே போட்டியிட்டிருந்தனர்.) இவர்களில் இருவர் மட்டுமே தெரிவு செய்ய்பட்டனர். ஒருவர் அவிஸ்ஸாவெல தொகுதியில் குசும்சிறி குணவர்த்தன மற்றும் அகுரண தொகுதியில் டொரின் விக்கிரமசிங்க இவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் டொக்டர் "எஸ். ஏ.விக்கிரமசிங்கா"வின் மனைவி. இவர் விப்லவகாரி சமசமாஜபக்ஷய' சார்பில் போட்டியிட்டார்.
அத்துடன் இவர் ஆசியாவிலே பாராளுமனறத் தேர்த லில் போட்டியிட்டு முதன் முறை பிரதிநிதத்துவம் பெற்ற மேற்கத்தேய பெண்ணுமாவர்.
பிரித்தானியாவில் இவர் கிறிஸ்தோபர் கல்லூரியில்

-104பிரபல்யமான கம்யூனிஸ்டான பேராசிரியர் லஸ்கியின் மாணவியாக இருந்தார். அந்த வேளை வீ.கே. கிருஷ்ணமேனன் இங்கிலாந்தில் வரலாற்றுத்துறை விரிவுரையாளராக இருந்தார். பிற்காலத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சரானர். கலாநிதி என்.எம். பெரேரா எஸ்.ஏ. விக்கிரசிங்க ஆகியோருடன் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்ததனால் ஏகாதிபத்திய விரோத, விடுதலைப் போராட்ட கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார்.
இதன்காரணமாக காலனியாதிக்கத்துக்குள்ளாகியுள்ள குறிப்பாக இந்தியாவுக்குச் சென்று முற்போக்கு அரசியல் சீாசிருத்த வேலைகளில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தார். இந்தியாவில் வேலை செய்வதற்கான சாத்தியம் இல்லாத போன போது இலங்கைக்கு வந்து சேர்ந்தார்.
இலங்கையில் 1933 ஏப்பிரலில் எஸ்.ஏ.விக்கிரசிங்கவை திருணம் செய்து கொண்டார். இலங்கையில் இடதுசாரி அரசியலில் தீவிரமாக ஈடுபடவும் தொடங்கினார். சூரியமல் இயக்கத்தில் முக்கிய பாத்திரம் வகித்து செயல்பட்டார். பிரித்தானியா தனது சொந்த நாடாக இருந்த போது அதன் ஏகாதிபத்திய செயற்பாட்டுக்கெதிராக இலங்கையருடன் சேர்ந்து போராடினார். இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி 1935 இல் ஆரம்பிக்கப்பட்ட போது அதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் குறிப்பாக பெண் அரசியலில் திருப்பமாக 1960 தேர்தலைக் குறிப்பிடலாம். முதன் முதலில் பெண் ஒருவர் பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருந்தது இத்தேர்தலிலேயே. மேலும் இத் தோதலில் போட்டியிட்ட ஐந்து பெண்களில் நால்வர் தெரிவு செய்ய்பட்டிருந்தனர். தெடிகம தொகுதியில் போட்டியிட்ட விமலா கன்னங் கரா மட்டுமே தோல்வியடைந்தார்.

Page 54
-105கொழும்பு வடக்கில் இருந்து விவியன் குணவர்த்தன அவிஸ்ஸாவெல தொகுதியிலிருந்து கிளோடா ஜயசூரிய மிரிகம தொகுதியில் இருந்து விமலா விஜயவர்த்தன மற்றும் கிறிஎல்ல தொகுதியிலிருந்து குசுமா குணவர்த்தன ஆகியோரே இத்தேர்தலில் வெற்றி பெற்றிருந்தனர்.
இவ்விரண்டாவது பாராளுமன்றத்தின் போது-மக்கள் ஜக்கிய முன்னணி அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக விமலா விஜயவர்த்தன தெரிவு செய்யப்பட்டார் . இலங்கையில் மட்டுமன்றி தென் ஆசியாவிலே அமைச்சராக பதவி வகித்த முதல் பெண் இவராவர்.
மேலும் இத்தேர்தலில் தம்பதிகளான இரு சோடிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவானார். விலியன்-லெஸ்லி குளுவர்த்தன குசுமா- பிலிப்குணவர்த்தன ஆகியோரே அவர்கள்.
1956 தேர்தலில் வெலிமட தொகுதியில் வெற்றி பெற்ற 'கே.எம்.பி. ராஜரட்னாவின் ஆசனம் நீதிமன்றத் தீர்ப்பொன்றின் மூலம் இரத்துச்செய்யப்பட்டதால் 1957 செப்டம்பரில் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் அவரது மனைவி குசுமா ராஜரத்னா' போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1959ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் திகதி அன்றைய பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கா பெளத்த மதகுரு ஒருவரினால் சுடப்பட்டு மரணமடைந்தார். அதன் காரணமாக அவரது தொகுதியான அத்தனகலையில் நடந்த இடைத் தேர்தலில் திருமதி பூரீமாவோ பண்டாரநாயக்கா போட்டியிட இருந்த வேளை அன்றைய இடைக் காலபப் பிரதமர் த ஹாநாயக் காவினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

-1061960ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த நான்காவது பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 14 பெண்கள் போட்டியிட்டனர். என்றாலும் இத்தேர்தலில் மூவர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர்.
தெகியோவிட தொகுதியில் இருந்து சோமா விக்கிரம நாயக்க, கலிகமுவ தொகுதியில் இருந்து விமலா கன்னங்கரா, ஊவா-பரணகம தொகுதியிலிருந்து குசுமா ராஜரத்னா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இலங்கையின் நான்காவது பாராளுமன்றம் 33 நாள் ஆயுட்காலத்தையே கொண்டிருந்தது. பாராளுமன்றத்தில் வாக் கெடுப் பொன் றின் Gt I n gil அரசாங் கம் தோற்கடிக்கப்பட்டதனால் பாரரளுமன்றம் கலைந்தது. 1960 யூலையில் ஐந்தாவது பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்ட போது பெண்களில் நால்வர் மட்டுமே போட்டியிட்டனர். ஊவா-பரணகம தொகுதியிலிருந்து குசுமா ராஜரத்னா தெகியோவிட தொகுதியிலிருந்து விமலா கன்னங்கரா சோமா விக்கிரமநாயக்கா கொழும்பு வடக்கிலிருந்து விலியன் குணவர்த்தன ஆகியோர் போட்டியிட்டனர்.
இத்தேர்தலில் மூவரும் தெரிவு செயய்பட்ட போதும் பூரீ.ல.சு. கட்சித்தலைவர் கே.பி.டி. சில்வா பாராளுமன்ற ஆசனத்திலிருந்து விலகி சிறிமாவுக்கு ஒப்படைத்தார். கட்சித்தலைவர் என்ற ரீதியில் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா அப்பொதுத் தேர்தலிலும் முன்னின்று உழைத்தார் இருந்தாலும் அவர் தேர்தலில்போட்டியிட்டு வெற்றி பெறாததனால் எதிர் தரப்பின் காரசாரமான எதிர் நிலை விமர்சனத்திற்கு உள்ளானார். சோல்பரி அரசியல் திட்டத்தின் படி தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் திருமதி பண்டாரநாயக்காவுக்கு பிரதமர் பதவி வழங்குவதில் தடையெதுவுமில்லை என சிறிமாவின் தரப்பினர் பகிரங்கமாகக் கூறினார்.

Page 55
-107அதன் படி 1960 யூலை 21ம் திகதியன்று திருமதி சிறிமா ஐந்தாவது பாராளுமன்றித்தின் பிரதமராக அன்றைய தேசாதிபதி ஒலிவர் குணதிலக முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து உலகின் முதல் பெண் பிரதமர் எனும் ஸ்தானத்தைப் பெற்றுக்கொண்டார்.
இத் தேர்தலில் தெ கியோ விட்ட ‘சோமா விக்கிரமநாயக்காவும் ஊவா பரணகம தொகுதியிலிருந்து குசுமா ராஜரட்ண ஆகிய இருவருமே தெரிவுசெய்ய்பட்டனர். 1964இல் டொக்டர் டபிள்யூ.ஏ.டி.சில்வா' வின்மரணம் காரணமாக அவரது தொகுதியான பொரல்லையில் 1964 ஜனவரியில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் திருமதி 'விவியன் குணவர்தன போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர் உள்ளூராட்சி நிர்வாக அமைச்சராக இருந்த துடன் பதில் பிரதமராகவும் இருந்ததார்.
இலங்கையின் ஆறாவது பாராளுமன்ற தேர்தலில் 13 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டளர். இவர்களில் நால்வர் மட்டுமே தெரிவு செய்ய்பட்டனர்.
முதற் தடவையாக திருமதி 'சிறமாவோ பண்டார நாயக்கா’ பாராளுமன்ற தேர்தலில் அத்தனகல்ல தொகுதியில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டார். ஊவா பரணகம தொகுதியிலிருந்து ‘குசுமா ராஜரட் ன' மீாகம தொகுதியிலிருந்து 'சிவா ஒபேசேகர கலிகமுவ தொகுதியிலிருந்து 'விமலா கன்னங்கரா' போன்றோர் தெரிவு செய்ய்பட்டனர். அத்துடன் பாராளுமன்றத்தின் காலம் முடிவதற்குள் மேலும் இரு பெண் கள் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தனர்.
ஒருவர் பலங்கொட தொகுதியிலிருந்து ஒக்டோபர் 1966 இல் நடந்த இடைத்தேர்ாலில் தெரிவு செய்யப்பட்ட

-108மல்லிகா ரத்வத்த ( இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் "கிளிபர்ட் ரத்வத்த'யின் மனைவி) அடுத்தவர் தொடங்கஸ்லந்த தொகுதியில் 1967 ஜனவரியில் நடந்த இடைத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட ரடீசியா ராஜபக்ஷ (இவர் தொடகஸ் வத்த தொகுதி உறுப்பினர் ஆர். சூஆர்.டபிள்யூரா ஜபக்ஷவின் மனைவி)
1970 ஆம் ஆண்டு 17வது பாராளுமன்றப் பொதுத்
தேர்தல் நடந்தது இதில் 14 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 6 பேர் தெரிவு செய்ய்பட்டனர். அத்தனகல்ல தொகுதியிலிருந்து சிறமா பண்டாரநாயக்க, பலாங்கொட தொகுதியிலிருந்து மல்லிகா ரத்வத்த மிரிகம தொகுதியிலிருந்து தமரா குமாரி இலங்கரத்ன, பொரல்ல தொகுதியிலிருந்து குசுமா அபேவர்தன, தெகிவளை - கல்கிஸ்ஸ தொகுதியிலிருந்து விவியன் குணவர்த்தன ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இத்தேர்தலின் பின் இரண்டாது தடவையும் சிறி மாவோ பிரதமராக தெரிவானார். 10 ஆண்டுகளுக்குள் இரு தடவை பிரதமராகவும் ஒரு தடவை எதிர்க்கட்சித் தலைவியாகவும் இக்காலப்பகுதியில் திருமதி சிறிமா இருந்ததால் உலகம் முழுவதும் அன்று அறிந்த நபராக கணிக்கப்பட்டார்.
இலங்கையின் 8வது பொதுத்தேர்தல் 1977 இல் நடந்த போது 14 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். என்றாலும் நால்வரே தெரிவு செய்யப்பட்டனர்.
அத்தனகல்ல தொகுதியிலிருந்து திருமதி சிறிமா, வலபன தொகுதியிலருந்து ரேணுகா ஹேரத், வாரியபொல தொகுதியிருந்த அமரா பியசிலி ரத்னாயக்க, கலிகமுவ தொகுதியிலிருந்த 'விமலா கன்னங்கர' ஆகியோர் வெற்றி பெற்றனர்.

Page 56
-109ஆசனம் காலியானால் இடைத்தேர்தல் வைக்காமலேயே தெரிவு செய்யப்படக்கூடிய முறை 1977க்குப் பின் கொண்டு வரப்பட்டமையினால் 1977க்கும் 1984க்கும் இடையில 6 பெண் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தனர்.
பொத்துவில் தொகுதியிலிருந்து எம்.கனகரத்தினத்தின் ஆசனம் காலியானதையிட்டு அவரது சகோதரி ரங்கநாயகி பத்மநாதனும் (சுகந்திரத்திற்குப் பின்னர் முதன் முதல் பாராளுமன்றத்துக்கு பிரவேசித்த தமிழ்ப் பெண் இவர்) கரந்தெனிய தொகுதியில் பந்துல சேனாதீரவின் மரணத்தைத் தொடர்ந்து அவரது மனைவி சேபாலி சேனாதீரவுக்கும் ஹேவா ஹெட தொகுதியிலிருந்து அனுர டேனியல் இன்இராஜினாமாவைத் தொடர்ந்து அவரது சகோதரி நிருபா பூரீயானிடேனியலுக்கும் ஹரிஸ்பத்துவ தொகுதியில் ஆர்.பி விஜேசிறியின் இராஜினாமாவைத் தொடர்ந்து அவரது மனைவி எல்.எம்.விஜேசிறி யும் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்க முடிந்தது.
இதைவிட தெகிவளை தொகுதியிலிருந்து எஸ்.டி.எஸ் ஜயசிங்கவின் மரணத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அவரது மகள் சுனேத்திராரணசிங்க போட்டியிட்டு வெற்றி பெற்றார். பாராளுமன்றத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கொல்லப்பட்ட தெனியய பாராளுமன்ற உறுப்பினர் கீர்த்தி அபயவிக்கிரவுக்குப் பதிலாக அவரது சகோதரி கீர்த்திலதா அபயவிக்கிரவும் ரம்புக்கன தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் சமூக சேவைகள் அமைச்சராகவுமிரு ந்த அசோக கருணாரத்னவின் மரணத்தைத் தொடர்ந்து அவரது மகள் "சமந்தா கருணாரத்தவும் பாராளுமன்றத்திற்கு பிரவேசித்தனர்.
எட்டாவது பாராளுமன்றத்திலிருந்த திருமதி 'சுனேத்
{ திரா ரணசிங்க சுகாதார இராஜாங்க அமைச்சராகவும் பின்னர் சுகாதார அமைச்சராகவும் பதவி வகித்தார்.

-1 10இதன் பின்னர் மகளிர் விவகார அமைச்சராகவும் கல்விச் சேவைகள் அமைச்சராகவும் தொடர்ந்து பதவிகளுக்கு நியமிக்கப்பட்டார். s
திருமதி "ரேணுகா ஹேரத் சுகாதார மகளிர் விவகார அமைச்சராகவும் நுவெரலியா மாவட்ட அமைச்சராகவும் பதவி வகித்தார். திருமதி 'அமரா பியசீலி ரத்நாயக போக் குவரத் து ராஜாங் க அமைச் சராகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சராகவும் பதவி வகித்தார்.
திருமதி "ரங்கநாயகி பத்மநாதன் மட்டக்களப்பு மாவட்ட அமைச்சராகவும் திருமதி "சமந்தா கருணாரத்ன" சமூகசேவைகள் புனர்வாழ்வு அமைச்சராகவும் பதவி வகித்தார்.
ஒன்பதாவது பாராளுமன்றம்.
198ஆம் ஆண்டு பொதுத்தேர்தலானது விகிதாசார
பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் பின் முதற் தடவையாக நடத்தப்பட்ட பொதுத் தேர்தலாகும்.
இவ் ஒன்பதாவது பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஏழு பேரும் பூரீ லங்கா சுகந்திரக் கட்சியின் சார்பில் நான்கு பேருமாக மொத்தம் 11 பெண் உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்குப் பிரவேசித்தனர்.
ஐக்கியதேசியக் கட்சி
சுனேத்திரா ரணசிங்க
சமந்தா கருணாரத்ன ரேணுகா ஹேரத்

Page 57
-111அமரா பியசீலி ரத்னாயக்க சுஜாதா தர்மவர்தன ராசமனோகரி புலேந்திரன் சந்திரா கருணாரத்ன
நிலங்கா சுதந்திரக்கட்சி
சிறிபால பண்டாரநாயக்கா சுமித்திரா பிரியங்கனி அபேவீர குணவதி திசநாயக்க ஹேமாரத்ணாயக்க
இவர்களுடன் வேட்புமனுத் தாக்கலின் பின் கொல்லப்பட்ட களுத்துறை "இந்திரபால அபேவீர'வுக்குப் பதிலாக அவரின் மகள் 'சுமித்திரா பிரியங்கனி அபேவீர'வும் பதுளை மாவட்டத்தில் 'பி.பி. இரத்னாயக்க தேர்தல் நடப்பதற்கு முன் கொல்லப்பட்டதால் அவருக்குப் பதிலாக அவரது மனைவி "ஹேமா ரத்னாயக்காவும் மொனாராகலை மாவட்டத்தில் 'சுமேத ஜயசேன நோய்வாய்பட்டு இறந்ததன் பின் அவரது ‘மனைவி குணவதி திசநாயக்கவும் பாராளுமன்றம் சென்றனர்.
மேற்படி பெண்கள், வேட்புப்பட்டியலுக்கு அவர்களின் பெயர்களை சேர்த்ததன் மூலம் பாராளுமன்றத்துக்கு செல்ல முடிந்தது.
1994-10 வது பாராளுமன்றம்.
1994 ஒகஸ்ட் 16 ம் திகதி நடந்த பொதுத் தேர்தலின் மூலம் இலங்கையின் இரண்டாவது பெண் பிரதமரையும் 10வது பாராளுமன்றம் தோற்றுவித்தது. இத்தேர்தலின் சந்திரிகா குமாரணதுங்க பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

-1 1210வது பாராளுமன்றப் பொதுத் தேர்தல் மொத்தம் 1440 வேட்பாளர்கள் போட்டியிட்னர். இவர்களில் 45 பேர் பெண் வேட்பாளர்கள் இது மொத்த வேட்பாளர் தொகையில் 3.12 வீதமாகும். -
தலா 249 வேட்பாளர்களைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி , பொது ஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் முறையே 6.7 என்ற வீத்தில் பெணகள் தேர்தலில் பங்கு கொண்டனர். இத் தேர்தலில் அதிக பெண் வேட்பாளர்களை போட்டியிடச் செய்த கட்சி பூரீலங்கா முற்போக்கு முன்னணி. இக் கட்சி 15 பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருந்ததது. என்ற போதும் ஒரு வேட்பாளரும் வெற்றி பெறவில்லை.
இலங்கைப் பெண்கள்' அரசியலில் ஏற்பட்ட இன்னொரு திருப்பமாக இத் தேர்தலையும் குறிப்பிடலாம் இத் தேர்தல் பெண் விடயங்களில் பின்வருமாறு முக்கியத்துவம் பெறுகிறது.
அதிக பெண் உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்ய்பட்டனர். மொத்தம் 12 பேர்.
1. சந்திரிகா குமாரணதுங்க(கம்பஹா) 2. பூரீமணி அத்துலத்முதலி (கொழும்பு) 3. சுமேதா ஜயசேன (மொனராகலை) 4. சுமிதா பிரியங்கனி அபேவீர (களுத்துறை) 5. ஹேமா ரத்னாயக்க (பதுளை) 6. நிருபமா ராஜபக்ஷ (ஹம்பாந்தோட்டை) 7. பவித்திரா வன்னிநாராச்சி (இரத்தினபுரி) 8. அமரா பியச்சி ரத்னாயக்க (குருநாகல்) 9. ரேணுகா ஹேரத் (நுவரெலியா) 10. சிறிமா பண்டாரநாயக்க (தேசியப்பட்டியல்) 11. ராச மனோகரி புலேந்திரன் (வன்னி)

Page 58
-113* பிரதமத் தந்தையின் -பிரதமத் தாயின்- மகள் பிரதமராக தெரிவு செய்யப்பட்டமை.
* தாய்-மகள் (சிறிமா-சந்திரிகா) ஆகிய இரு பெண்கள் ஒரே பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர். அதேபோல் ஒரே அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கின்றனர்.
* விகிதாசார பிரதிநிதித்துவமுறை அறிமுகப்படுத்த ப்பட்ட பின்னர் நடந்த தேர்தல்களில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று ஒரு பெண் (சந்திரிகா) தெரிவானார். அதுவரை கால தேர்தலில் லலித் அத்துலத்முதலியே கூடிய விருப்பு வாக்குகள் பெற்றவராகத் திகழ்ந்தார். 1989 பொதுத் தேர்தலில் லலித் இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். 1994ல் சந்திரிகா (4,64,558) நான்கு லட்சத்து அறுபத்தி நான்காயிரத்து ஐந்றுாற்றி ஐம்பத்தெட்டு விருப்பு வாக்குகளைப் பெற்றார்.
இலங்கையின் முதல் பெண் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கா என்பதைப் போல் இலங்கையின் முதலாவது பெண் முதலமைச்சராக அவரது மகள் சந்திரிகா 1193 இல் நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் மேல்
மாகாணத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.)
V E R C Publication
Life Uner Milkwood: Women Workers in the Rubber
. Plantion, An Overview
 
 
 
 

பெண்களுடன் ஒரு பட்டறை*
போவாலுடன் ஒரு உரையாடல் JAN COHEN- CRUZ & MADY SCHUTZMAN
தமிழாக்கம் : சாரு நிவேதிதா
கோஹன் : பெண்களின் பிரச்சினைகளில் எப்போது கவனம் செலுத்த ஆரம்பித்தீர்கள்?
போவால் : 1976-77ல் இத்தாலியில் இருந்தபோது தான் முதன் முதலில் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். ஒவ்வொரு மதியமும் வேறு வேறு நாடகங்களை சுமார் பத்து நிமிட அளவு வருமாறு தயாரித்தோம். ஒவ்வொரு இரவிலும் அதை வீதிகளில் நிகழ்த்தினோம் ஒரு முறை ஒரு வேடிக்கையான அனுபவம் ஏற்பட்டது. வீட்டின் ஜன்னல்களின் வழியே நாடகத்தைப் பார்ததுக் கொண்டிருந்த ஆண்களையும் பெண்களையும் கீழே இறங்கி வருமாறு நாடகத்தில் பங்கு பெறச் சொல்லியும் அழைத்தேன். ஆனால் அவர்கள் ஜன்னல் வழியாகப் பார்க்க மட்டுமே செய்வோம் என்று சொல்வி விட்டார்கள்.
Workshop என்பதை பட்டறை என்று பலர் மொழி பெயர்த்துள்ளார்கள். பட்டறை என்ற சொல்லாட்சி கொல்லன் பட்டறை என்பதை நினைவுபடுத்துகின்றது. Workshop என்பதற்கு பட்டறை என்பதை விட இன்னுமொரு அர்த்தமுமுண்டு பயிற்சிகளையும் தேர்வுகளையும் செய்யுமிடம் என்பதே அதன் இரண்டாவது அர்த்தம். ஆகவே பயிற்சிக்களம் என்றே நாம் இச் சொல் லை மொழிபெயர்த்து அரங்கேற்றியுள்ளோம். மொழிஇயலாளர் இதை உறுதிப்படுத்தல் வேண்டும்.

Page 59
-115
வீட்டுச் சடங்குகள் தான் அன்றைய நாடகம். நாடகத்தில் மூன்று பெண்கள். பைகளோடு முதல் பெண் வீட்டுக்கு வருகிறாள். ஃப்ரிஜ்ஜில் சாமான்களை வைக்கிறாள். பிறகு சமையல், சமைத்த உணவை மேடையில் கொண்டு வந்து அடுக்குகிறாள். இரண்டாவது பெண்ணும் அதே வேலைகளைச் செய்கிறாள். மூன்றாவது பெண்ணும் இதையே செய்கிறாள். பிறகு முதல் ஆண் வருகிறான். (பெண்ணே ஆணைப்போல்,உடையணிந்திருக்கிறாள்) அவன் டி.வி பக்கம் போகிறான். பியர் அருந்துகிறான் இதே போன்ற காரியங்களைத் தொடர்கிறான்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளன் ஒருவன் கலாட்டா செய்யும் நோக்கத்துடன் நாடகத்தில் புகுந்து மூன்று பெண்களும் செய்வதை தானும் செய்கிறான். அவ்வளவுதான். அதுவரை தத்தம் வீட்டு ஜன்னல்வழியே பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பெண்களும் அவனுக்கு எதிர்ப்பாக வந்து விட்டார்கள். ரொம்பவும் துணிச்சலான பெண்கள் இப்படியாக இது ஒரு ஃபோரம் தியேட்டராக மாறியது.
பிறகு ஃப்ரான்ஸில் 'குடும்பத்திட்டம்' என்ற ஒரு அமைப்பு என்னை அழைத்தது. அங்கே மருத்துவமனைகளில் பெண்களின் பிரச்சினை, கருச்சிதைவு, பெண்கள் நுகர்பொருட்களைப் போல் கருதப்படும் நிலை, ஊதியப் பிரச்சினை, ஒரே வேலைக்கு ஆணுக்கு ஒரு ஊதியம்-பெண்ணுக்கு ஒரு ஊதியம் என்பது போன்ற பல பிரச்சினைகளை நாங்கள் எடுத்துக் கொண்டோம்.
இத்தாலியில் முழுக்கவும் பெண்களேயான குழுக்க ளுடன் பணியாற்றினேன். ஆண்கள் பார்வையாளர்களாக வருவார்கள். நாடகத்தில் ஆண் பாத்திரங்களையும் பெண்பாத்திரங்களையும் பெண்களே செய்வார்கள். ஆனால் அதை யதார்த்தமாக செய்யமாட்டார்கள். ஆண்களை

-1 16விமர்சிக்கும் நோக்கிலேயே அதைச் செய்வார்கள். உதாரணமாக ஆண்களின் அதிகாரத்தைக் காட்டுவதற்காக, நாடகத்தில் ஆணாக வரும் பெண் மிகப் பெரிய ரப்பர் ஆண் குறியைக் கட்டிக்கொண்டு வருவாள். வீரதீர சாகசங்கள் படைக்கும் ஆண் (Machismo) என்னும் கருத்தாக்கத்தை நாடகத்தின் வார்த்தைகளாலேயே விமர்சிப்பாள்.
ஷீட்ஸ்மன் : இமேஜ் தியேட்டரில் பெண்களின் பங்கு பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறேன். கலாச்சாரத் துற்ைபயில் பெண்களின் நிலையான பிரதிநிதித்துவம் பற்றி பெண்கள் அடிக்கடி குற்றம் சாட்டுகிறார்கள். இமேஜ் தியேட்டரில் பெண்களுக்குப் பிரச்சினை இருப்பதாக நினைக்கிறீர்களா?
போவால் : இல்லை சமயங்களில் பெண்கள் ஆண்களைப் பற்றிய தமது கருத்துக்களையும், தங்கள் மீது செலுத்தப்படும் வன்முறையையும் படிமங்கள் மூலமாக வெளிப்படுத்த தயாராக இருக்கிறார்கள். நாம் ஒரு பெண்ணாதிக்க சமூகத் தில் ஒடுக் கப் பட் டவர் களாக வாழ் ந் து கொண்டிருக்கவில்லை. ஆனால் பெண்கள் ஒரு ஆணாதிக்க சமூகத் தில் ஒடுக் கப் பட் டவர் களாக வாழ் ந் து கொண்டிருப்பதால் அவர்கள் ஒரு படிமத்தைச் செய்யும்போது அவர்களின் பிரச்சினையை மிகத் தீவிரமாக வெளிப்படுத்துகிறார்கள். ஏனென்றால் இங்கே செளகரியங்களையெல்லாம் ஆண்களே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக, இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் பெண்களின் கலை வெளிப்பாடுகள் கடுமையான விமர்சனத்தைக் கொண்டதாகத்தான் இருக்கும்.
G35m 5mp6ăr : Off our Back Luģfnf6 35ufaio Berenice Fisher நீங்கள் ஃப்ரான்ஸில் "குடும்பத்திட்டம்" இயக்கத்தில் இருந்தது பற்றி எழுதியிருக்கிறார். மொழி என்பது பல சமயங்களில் ஆண்களுக்கான மீடியமாக இருக்கிறது

Page 60
-117
என்பதால் தான் பெண்கள் படிப்பதை மிக முக்கியமாக் கருதுகிறார்கள் என்று எழுதுகிறார். அதில் அவர் தனது அனுபவங்கள் பற்றி எழுதும் போது ஒரு பிரச்சினையை முன் வைக்கிறார். அதாவது தனிநபர் அனுபவம்- பிரச்சினை என்ற நிலையிலிருந்து கூட்டுச் செயல்படாக-குழுவாக அது மாறும் போது ஒரு பிரச்சினை வருகிறது என்கிறார். ஏனென்றால் ஒடுக்கப்பட்டவர்களின் தியேட்டரில் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்துக்குப் பெண்களே பங்கு பெறுகிறார்கள். எனவே இது தனிநபர் பிரச்சினை என்கிற போது வெற்றிகரமாகவும், ஆனால் ஒரு கூட்டுப் பிரக்ஞையை உருவாக்குதல் என்கிறபோது அவ்வளவாக அது உதவவில்லை என்றும் எழுதுகிறார்.
போவால் : தெரியவில்லை. நாம் யாரையோ பற்றிப் பேசிக் கொண்டிருந்தாலும் யதார்த்தத்தில் நாம் நம்மைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறோம். தனிநபர் என்பதிலிருந்த குழு என்பதற்கான மாற்றம் ஒரே ஒரு நபரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது கூட நிகழ முடியும். ப்ரஃலின் ஏழ்மையானாலும் சரி, பாரீஸின் ஏழ்மையானாலும் சரி, ஏழைகளின் பொதுப் பிரச்சினை என்பது வறுமை, போலீஸ், வீடு இல்லாத நிலை, வன்முறை, பாலியல்-இனம் வயது ரீதியான வன்முறை என்று இப்படித்தான் இருக்கிறது. மத்தியத்தர வர்க்கம் அல்லாது பணக்கார வர்க்கம் என்று எடுத்துக் கொண்டால் தனிமை ஓரினப் புணர்ச்சி, விரக்தி போன்ற பிரச்சினைகளைத் சந்திக்கிறோம். ஐரோப்பாவின் பிரச்சினைகள் பெரும்பாலும் தத்துவரீதியானதாகவும், metaphysical ஆக இருக்கிறது. லத்தீன் அமெரிக்காவில் இது வன்முறை, குரூரமான வாழ்க்கை நிலை, ஏழ்மை, பட்டினி என்பதாக இருக்கிறது. அங்கே மக்களுக்கு உளவியல் பிரக்சினைகளைப் பற்றி (உ- ம் ஏக்கம் அல்லது தவிப்பு) தத்துவ ரீதியாகயோசிப்பதற்கு இடமோ நேரமோ இல்லை.
கோஹன் : மத்தியதர வர்க்கம் அல்லது உயர் மத்தியதர

-1 18
வர்க்கத்தைச் சேர்ந்தவர்களோடு நீங்கள் பட்டறைகள் நடத்திய போது அங்கே அரசியல் விவாதங்களும் இடம் பெற்றதா? நீங்கள் ஒரு முறை சொன்னீர்கள் , அவர்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டால் உதவிக்கு அவர்கள் ஒரு குழுவை நாடுவதில்லை. தனிப்பட்ட முறையிலேயே தீர்வு காண விரும்புகிறார்கள் என்று. அப்படி அவர்களுடன் கூட்டு அரசியல் செயல்பாடு பற்றி விவாதித்திருக்கிறீர்களா?
போவால் : நான் எனது குழுவை பாரிஸில் ஏற்படுத்தியபோது அவர்களிடம் பால்லோ ஃப்ரையிரேவின{ Pedagogy of the Oppressed யையும் ஸ்டானிஸ் லாவ்ஸ்கியையும் அவசியம் படிக்க வேண்டுமென்று சொன்னேன். ஸ்டானில் லாவ்ஸ்கியை நாம் படித்தாக வேண்டும். அதெல்லாம் என்ன என்று நமக்குத் தெரிய வேண்டும். அவர்களுக்கு ப்ரெஷ்டைப் பற்றி ஏற்கனவே தெரிந்திருந்தது. அவர்களும் ஆலோசனைகள் தந்தார்கள். ஆக நாங்கள் லத்தீன் அமெரிக்கா பற்றியும் ஏகாதிபத்தியம் பற்றியும் நிறைய படித்தோம். படித்துக்கொண்டே நாடகப் பட்டறையிலும் ஈடுபட்டோம். ஒரு குழுவை உருவாக்க வேண்டியிருந்ததால் இதையெல்லாம் நாங்கள் ஆரம்பத்தில் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் பல சமயங்களில் குறைந்த கால இடைவெளியில் பட்டறைகள் ஏற்பாடு செய்யப்படுவதால் படிப்பதற்கு நேரம் இல்லாமல் போய்விடுகிறது.
ஷீட்ஸ்மன் : நியூயார்க் பல்கலைக்கழகத்திலும் தொழிற் சங்கங்களிலும் பட்டறைகள் நடத்தியதில் என்ன வித்தியாசங்கள் தெரிந்தன.
போவால் : தொழிற் சங்கத்தில் பெண்களுக்கு வீட்டு வாடகை கட்ட பணம் இல்லை. மருத்துவமனைகளில் மோசமாக நடத்தப்படுகிறார்கள். தொழிலாளர்களுக்கு வேலையை விட்டு நீக்கப்படும் அபாயம். இதெல்லாம் ரொம்பவும் அவசரமான வெளிப்படையான பிரச்சினைகள்.

Page 61
-1 19
நியூயார் க் பல்கலைக் கழகப் பட்டறையில் -எய்டஸ் ஓரினப்புணர்ச்சி, இனவாதம் மற்றும் குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், (உ-ம்) மகளைப் புரிந்து கொள்ளாத தந்தை, இப்படி, இந்த வித்தியாசத்திற்கான காரணம் உங்களுக்குத் தெரியும். மேலும் பல்கலைக்கழகத்தில் பார்தத பிரச்சினைகள் தொழிலாளர் பிரச்சினைகளைப் போல் அவ்வளவு அவசரமானதும் அல்ல.
கோஹன் : நான் ஃபோரம் தியேட்டரில் கதையாடல் தன்மை பற்றி யோசித்து வருகிறேன். பெண்ணியவாதிகளுக்கு இதில் சில பிரச்சினைகள் இருக்கலாம். ஏனென்றால் கதையாடல் அமைப்பில் ஒரு வித(Sadism) இருக்கியது. மேலும் ஒருவரின் விருப்பம் மற்றவரின் மேல் திணிக்கப்படுகிறது.
ஷ"ட்ஸ்மன்: கருத்தை வெளிப்படுவத்துவது (தகவல் தொடர்பு) என்பதை நாம் கற்று கொண்ட முறையிலேயே நிறைய ஆண் பெண் வித்தியாசங்கள் இருக்கின்றன. அதில் கதையாடல் என்பது ஆண் தன்மையுள்ள வெளிப்பட்ட முறையாக இருக்கிறது. ஒரு தொடக்கம் -ஒரு மத்திய நிலை- ஒரு முடிவு என்கிற நேர்க்கோட்டு (Linear) அமைப்பாக இருக்கிறது. ஹீரோவுக்கான ஒரு துப்புரவாக்கும் g; 600T Lb (Cathartic moment) SAG så gø0607. å g; Li Lil L–, ஒன்றுக்கொன்று தொடர்புள்ள கதை என்பதையெல்லாம் ஆண் கொண்ட கதையாடல் என்று கூறலாம். ஆனால் சில பெண்ணிய வாதிகள் பெண்களின் அனுபவம் இதிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது என்கிறார்கள் . பெண்கள் காலனிய அடிமைகளாக்கப்பட்டிருக்கிறார்கள். இருந்து கொண்டிருக்கும் கதையாடல் தன்மைக்கு ஏற்ப தங்கள் அனுபவங்களை வெளிப்படுத்த வேண்மென்று அவர்கள் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது என்னுடைய கேள்வி என்ன வென்றால் ஃபோரம் தியேட்டர் அதன் கலந்துரைடல் வடிவத்தின் காரணமாக பெண்களுக்குப் பிரச்சினைக்குரிய ஒன்றாக இருக்குமோ என்பது தான்.

-120போவால் : விஷமுறி (catharsis) பற்றிய அரிஸ்டாட்டிலிய கோட்பாட்டுக்குப் பதிலாக நாமும் கூட ஆணர்கள் சம்பந்தப்பட்ட Orgasm -த்தைத்தான் விவரிக்கிறோம் என்கிறீர்கள்?
கோஹன் : ஆமாம் அப்படித்தான் அதை அப்படி ஒப்பிடலாம். மேலும் பெண்களின் பாலியல் என்பது மிகவும் பரவலானது (diffuse) உடலின் பல உறுப்புக்கள் சம்பந்தப்பட்டது. அங்கே ஒரே ஒரு உச்சக்கட்டம் (Orgasm) என்பது கிடையாது. பல உச்சக்கட்டங்கள்.
போவால் : ஆமாம். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவில் எந்தப் பயனும் இல்லை என்று பெண்கள் சொன்னால் அவர்களையே அவர்கள் மதிக்க வில்லை என்று தான் சொல்வேன். இன்னும் தெளிவாகச் சொல்வதானால், அன்பு என்பது இல்லை, அது ஒரு இல்லாத பொருள். எனவே ஏதொ ஒன்று தேவையாக இருக்கிறது, நீங்கள் முழுக்க முழுமை பெற்றவராக இருந்தால் நீங்கள் அடுத்த மனிதரை நேசிக்க மாட்டீர்கள். நம்மிடம் இல்லாததைத் தான் நாம் அடுத்த மனிதரிடம் தேடுகிறோம். இந்த வகையில் நான் ஒரு hetcrOSeamal, நான் ஒரு பெண்ணிடத்தில்தான் என்னைப் பார்க்கிறேன். இது ஒரு வகையில் narcissism தான். ஒரு வேளை இது ஒரு ஆணின் கருத்தாகவும் இருக்கலாம். ஆனாலும் ஆண்-பெண் உறவைத் தான் நம்புகிறேன்.
ஷாட்ஸ்மென் : நாம் ஒரு பெண்ணியக் கோட்பாட்டைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இதில் பாலியல் பற்றியும் பெண்கள் வெளிப்படுத்தும் பவ்வேறு கருத்துக்களை நான் சுருக்கிவிட விரும்பவில்லை. ஆண் அழகியலை ஒருமையான Cathartic male orgasm ஆகவும் பெண் si pálu606) non-linearfemale orgasm g56ljub Ligojavit607 தன்மை கொண்டதாகவும் அர்த்தப்படுத்த விரும்பவில்லை.

Page 62
-121அப்படி அர்த்தப்படுத்தினால் கலாச்சார சாத்தியக்கூறுகளை நமது உடலின் வரையறைகளோடு குறுக்கி விடுவதாக ஆகிவிடும்.
போவால் : இது உயிரியல் ரீதியான விஷயம் மட்டடுமல்ல, கலாசார விஷயமும் தான். ஏனென்றால் ஆண்களுக்கு அரிஸ்டாட்டிலிய வடிவத்தை ஒத்த சமூகக் கடமைகள் தரப்பட்டிருக்கின்றன. ஆனால் பல கலாச்சாரங்களில் பெண்கள் செய்வதற்கென ஒரே விஷயத்தில் மையப்படுத்தாமல் பல்வேறு வகைப்பட்ட விஷயங்கள் தரப்பட்டிருக்கின்றன, ஆண்கள் யதார்த்தரீதியாகவும், பெண்கள் impressionistic ஆகவும் இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.
கோஹன் : விருப்பம் (Will) என்பதை நீங்கள் பயன்படுத்தும் விதம் சில பெண்ணியல்வாதிகள் பயன்படுத்தும் விதத்திலிருந்து வேறுபட்டிருக்கிறது. கதையாடலில் விருப்பம் என்பது Sadism இல்லாமலேயே நீங்கள் குறிக்கோள் அல்லது விருப்பம் கொண்டவராக இருக்கலாம். எப்படியோ கதையாடலுக்கு எதிரான கோட்பாடு அதற்கு இடம் கொடுக்கவில்லை.
போவால் : ஒடுக்கப்பட்டவர் தன்னுடைய விருப்பத்தை தற்காத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு பதிலடி. யாரோ தனது விருப்பத்தை நம்மீது திணிப்பதற்கு எதிரான ஒரு போராட்டம் இது. அது ஒர் அதிகாரியாக இருக்கலாம் ஆக, விருப்பம் என்பதை நான் பயன்படுத்துவது சமீபத்தில் புழக்கத்தில் இருக்கிற விருப்பம் அல்ல. நான் சொல்லும் விருப்பம் திருப்பித் தாக்கும் விரும்பம். Sadism - த்திலிருந்து அந்த Sadism சமூக ரீதியானதாக இருந்தாலும் சரி-நம்மை காப்பாற்றிக் கொள்ள நாம் நமது விருப்பத்தை பாதுகாத்துக் கொண்டாக வேண்டும்
கோஹன் : ஆக நீங்கள் பெண்கள் மற்றும் சார்ந்த

-122
பிரச்சினைகளில் வித்தியாசமாகச் செயல்படுவதில்லை?
Gunfortal) : ஆமாம் ஏனென்றால் நான் எப்போதும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைச் சொல்வதில்லை. கேள்விகளை மட்டுமே எப்போதும் நான் முன்வைக்கிறேன். கறுப்பின மக்களை, பெண்களை நான் கேள்வி கேட்கிறேன். நாம் ஒரு இயங்கியல் ரீதியான விவாதத்தை உருவாக்குகிறோம். பதில்களைச் சொல்வதற்கு பதிலாக நான் கேள்விகளை முன் வைக்கிறேன். ஆனால் வேடிக்கை என்னவென்றால் இப்போது முதல் முறையாக அம்மாதிரி ஒரு கேள்வி என்னிடம் கேட்கப்படுகிறது) நான் 15 வருடங்களாக இயங்கி வருகிறேன். அதிகமாக பெண்களுடன். தான் செயல்பட்டு வருகிறேன். அநேகமாக 'விருப்பம்" பற்றிய உங்கள் கேள்விகள் அமெரிக்கச் சூழலுக்கு உரியதாக இருக்கலாம். அதையெல்லாம் தெரிந்து கொள்வதில் எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.
கலாச்சார வித்தியாசங்கள் என்பவை மிகவும் முக்கியமானவைதான். ஆனால் உயிரியல் வித்தியாசங்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. நியூயார்க் பல்கலைக்கழகப் பட்டறையில் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. என்னவென்றால் பட்டறையில் கலந்து கொண்டவர்களில் பாதிப்பேர் ஓரினப் புணர்ச்சியாளர்கள்.
கோஹன் : தியேட்டர் என்கிற தொழிலில் இது ஒரு அங்கீ கரிக்கப்பட்ட விஷயம்.
போவால் : தொழிற் சங்கப் பட்டறைகளில் இதை நான்
பார்த்ததில்லை.
ஷ"ட்ஸ்மன் : அதை வெளியே சொல்ல அவர்கள் வெட்கப் பட்டிருக்கலாம். பல்கலைக்கழகப் பட்ட்றையில் எல்லோரும் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்தவர்கள். மேலும் இந்தப்

Page 63
-123பல்கலைக்கழகத்தில் ஓரினப்புணர்ச்சி என்பது ஒரு ஒடுக்கப்பட்ட விஷயமும் அல்ல.
போவால் : ம்ம்ம். சில சமயங்களில் ஒடுக்குமுறை என்பது அதைப்பற்றிப் பேசக்கூட முடியாத அளவுக்கு கடுமையான வன்முறையைக் கொண்டிருக்கிறது.
ஷ"ட்மன் : பல்கலைக்கழகப் பட்டறையில் நான் ஒன்றைச் செய்ய நினைத்தேன், ஆனாலும் செய்யவில்லை. ஏனென்றால் அந்த ஒடுக்குமுறைக்கு காரணமாக இருப்பவரே அங்கே இருந்தார். இப்படி இரண்டு தரப்பினருக்கும் நடுவே ஒரே சமயத்தில் செயல்பட்டிருக்கிறீர்களாக? உதாரணமாக, நிர்வாகம்-தொழிலாளர்கள்.
போவால் : செயல்பட்டிருக்கிறேன். ஆனால் அது திட்டமிட்டு நடந்ததல்ல. பிரச்சினை என்பது ஆண்-பெண் சம்பந்தப்பட்தென்றால் பங்கேற்பவர்கள் எந்தப் பக்கமென்று முடிவெடுத்துவிடுகிறார்கள். நிர்வாகம்-தொழிலாளர்கள் என்று எனக்கு அனுபவம் இல்லை. சில சமயங்களில் பள்ளிகளில் நடக்கும் பட்டறைகளில் குழந்தைகள் நாடகத்தில் ஈடுபட்டிருக்கும்போது அங்கே ஆசிரியர்கள் வருவதுண்டு. பொதுவாக நாங்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே பட்டறைகள் நடத்துவதால் சில சமயங்களில் அப்படி நடந்திருக்கிறது.
கோஹன் : நடிப்புப் பயிற்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
போவால் : தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏனென் றால் நடிகர்கள் எல்லாவற்றையும் கலையாக மாற்றிவிட முயற்சி செய்கிறார்கள். நடிகருக்கு பிரச்சினைகள் பற்றிக் கவலையில்லை. அது அவரைப் பொறுத்தவரை அந்தப் பாத்திரத்தின் பிரச்சினை. ஆனால் நடிகர்களாக இல்லாதவர்களுக்கோ அந்தப் பிரச்சினை அவர்களின்

-124வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
ஷ"ட்ஸ்மன் : நீங்கள் எதற்கு முதன்மை கொடுப்பீர்கள்? தியேட்டருக்கென்று நாடகங்களை உருவாக்குவதா? அல்லது பட்டறைகளா? அல்லது ஒரு குழுவுடன் நீண்ட நாட்கள் தங்கிச் செய்யப்படுவதிலா? மக்களை அரசியல் செயல்பாட்டை நோக்கி இட்டுச் செல்ல எந்த முறை மிகவும் உகந்ததென்று நினைக்கிறீர்கள்?
போவால் : எல்லாமே தான். இது எல்லாவற்றையுமே நான் தொடர விரும்புகிறேன். ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் வேறுபட்ட விஷயங்களை நான் செய்ய விரும்புகிறேன். 1986-ai) 1517 air The King's Pirate (le Coursair du Roi) 6Taörp நாடகத்தை ப்ரஸிலில் இயக்கினேன். மேடையில் இரண்டு நகரும் படகுகள்-மாலுமிகள் ஒரு படகிலிருந்து மற்றொரு படகிற்கு குதித்து கடலின் நடுவே போரிடுகிறார்கள். ரியோ தி ஹனயிரோவின் மீது பிரெஞ்சுக்காரர்கள் படையெடுத்தது பற்றிய கதை அது. 1500 பேர் அமரக்கூடிய, அரங்கு அது. 35 நடிகர்கள். 15 இசைக் கலைஞர்கள். ஏகப்பட்ட டெக்னீஷியன்கள். துப்பாக்கிச் சண்டை, குண்டுவெடிப்பு. புகை பீரங்கிக் குண்டுகள். எல்லாம் இருந்தன. இன்னொரு இடத்தில் கார்ஸியா லோர்க்காவின் The public என்ற நாடகத்தை இயக்கினேன். இந்த நாடகம் அதுவரை எந்த இடத்திலும் யாராலும் அரங்கேற்றப்படாத, அதுவரை பிரசுரமும் செய்யப்படாத ஒரு சர்ரியலிஸ் நாடகம். சில சமயங்களில் தனி மனிதப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவேன். நான் என்னுடைய சொந்த நாட்டை விட்டு வெளியேறியது பற்றிய என்னுடைய நாடகம் ஒன்றில் ஆறு பாத்திரங்கள். நாடகத்தில் வருவது அவர்களுடைய பெட்டிகள் மட்டும் தான். அவர்களுக்குத் தேவையான அத்தனையையும் அவர்கள் தங்கள் பெட்டியிலிருந்தே எடுத்துக் கொள்கிறார்கள். நாட்டை விட்டு வெளியேற வேண்டி வந்த போது நான் நாடு நாடாகச் சுற்றினேன்.

Page 64
-125
ஒவ்வொரு நண்பரிடமாகச் சென்றேன். எப்போதேனும் ஒரு நாள் நம்மால் ப்ரஸிலுக்குத் திரும்பிச் செல்ல முடியுமா என்கிற என்னுடைய தவிப்பைப் பற்றிய நாடகம் அது. இப்போது நான் Without Skin என்ற நாடகத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். திரும்பவே முடியாது என்று சொல்லும் நாடகம் அது. நான் ப்ரஸிலை விட்டு வெளியேறிய வெளிநாடுகளில் வாழ்ந்த போது ப்ரஸிலுக்குத் திரும்ப முடியுமா என்று நினைத்தேன். ஆனால் திரும்பிய போது அது ப்ரஸிலாக இல்லை. நானும் நானாக இல்லை. கோஹன் : ஆனால் நீங்கள் ரியோவில் தானே தங்கி ஒரு மையத்தை உருவாக்குவதாக இருக்கிறீர்கள்?
போவால் : அதைத்தான் நான் விரும்புகிறேன். ஆனால் அது அவ்வளவு சுலபமானதல்ல. ஏனென்றால் ஆட்சியில் இருப்பது வலது சாரி அரசாங்கம். அவர்கள் அதை விரும்பமாட்டார்கள்.
இப்போது ரியோவின் மேயர் அவ்வளவு மோசமானவர் அல்ல. துணை மேயர் எனக்குமிகவும் பரிச்சயமானவர். ஆனால் அவர்களிடம் பணம் இல்லை. நாட்டின் செல் வெமல்லாம் கடன்களைச் செலுத்துவதற்காக வெளிநாட்டு வங்கிகளுக்குப் போய்விடுகிறது.
கோஹன் : சரி, ஆனால் வாய்மூடி மெளனமாக ஒடுக்கு முறையை அனுபவித்துக்கொண்டிருக்கும் மக்களைப் பற்றி என்ன சொல்லலாம்? உதாரணமாக, எனக்கு வீடு இருக்கிறது. எனவே என்னிடம் அவ்வளவு எதிர்ப்புத் தன்மை கிடையாது. ஆனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஒடுக்குமுறையைக் கவனித்துக் கொண்டிருப்பதும் ஓர் ஒடுக்குமுறைதான்.
போவால் : இதெல்லாம் நாம் இன்னும் ஆய்வு செய்ய
வேண்டிய தளங்கள். இப்படி நாம் ஆய்வு செய்ய வேண்டிய பிரச்சினைகள் எத்தனையோ இருக்கின்றன.

-126அடிக்குறிப்பு
1. போவாலின் இமேஜ் தியேட்டரில் மொழியற்ற பல உத்திகள் மூலம் பாத்திரங்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. இமேஜ் தியேட்டர் என்பதை போவால் இப்படி விளக்குகிறார். ஒரு விஷயத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு மொழியின் மூலமாக அல்லாமல் , நடிகர்களின் உடல்களையே பயன்படுத்தி, பல சிலைகளை “செதுக்கி" காட் டுவதன் மூலம் நமது பார் வைகளை வெளிப்படுத்தவதுதான் இமேஜ் தியேட்டர். இந்த நிலையான இமேஜ்கள் கண்களால் பார்க்கக் கூடிய ஒரு மொழி என்று சொல்லாம்.
நன்றி : நாடகவெளி (ஜலை-ஆகஸ்ட் 1995)

Page 65

வருடாந்த சந்தா - நிவேதினி
North America : USS 30
UK & Europe US $ 20
India, S. Asia US $ 10
Sri Lanka : SLR 200
சாந்தா விண்ணப்பம் 19. . . . . . . . . .
நிவேதினி சஞ்சிகைக்கு சந்தா அனுப்பியுள்ளேன்.
பெயர் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
விலாசம் .
இத்துடன் காசோலை/ மணிஒடரை மகளிர் கல்வி, ஆய்வு நிறுவனத்தின் பேரில் அனுப்பி வைக்கிறேன்.
Women's Education and Research Centre 58, Dharrmarama Road Colombo -6
Sri Lanka.

Page 66


Page 67
எமது ல்ெ
නන්දිමිත්‍ර - රොස්ලින්ඩ් මැන්ඩිස් ඩොරින් වික්‍රමසිංහ, ශ්‍රී ලංකාවේ අරගලයෙහි පුරෝගාමී වූ බටහිර
- කුමාරි ජයවර්ධන ලුහසුකාංගේ පතිවත ඉබ්සන්ගේ බො - පරිවර්තනය ධර්මසි ඇගේ ලෝකය - මොනිකා රුවන් ස්ත්‍රීවාදය අද සමාජයට උචිතයි ( - ස්ත්‍රීවාද අධ්‍යයන ක
பெண்விடுதலை வாதத்தின் பி அது ஒரு மேலைத்தேய கோ
- செல்
வார்ப்புகள் - பார இந்தியர்களது இலங்கை வாழ் - ΙδσοτΠ
பெண்களின் சுவடிகளில் இரு - சாந்த மக்கள் தொடர்பு சாதனமும்
- சந்தி பெண் நிலைச் சிந்தனைகள்
- சித்தி பெண்ணடிமையின் பரிமாண விளக்கமும். - செல் கடவுளரும் மனிதரும் -பவானிஆ (சிறுகதை Doreen Wickramasinghe, A We Radical in Sri Lanka – Kumari J Feminism in Sri Lanka in the De Kumari Jayawardane Fragments of a Journey – Jean A Some Literary Woman of Sri La The Dilemma Of Theorie S. a Fen
The Janasaviya Poverty Alle via Case Study from Palenda Villag
இவற்றை எம் நிறுவன புத்தகசாலைகளிலும்
ISSN : 1391-0353

ජනත9 ක0න්තයාවක්
jනික්කී
'රි ජයකෙ0ඩි
2න්පතිරණ - ඉතිහාසය හා ආර්ථික වය
பிரச்சனைமையம் ட்பாடா? வி திருச்சந்திரன் தி
க்கை நிலைமை ட்சி அம்மாள் குந்து சில அடிகள் தி சச்சிதானந்தன் மகளிரும் ரிகா சோமசுந்தரம்
ரா மெளனகுரு ங்களும் பெண்ணுரிமையின் வி திருச்சந்திரன் ஆழ்வாப்பிள்ளை
த் தொகுதி)
Stern
aya Wardena
cade
raSanayagam nika – Eva Ranaweera ninist. Perspective - Selvy
Thiruchandran tion Programme and Womr" ge - Sepali Kottegrada
A.
த்திலும் ஏனைய பல
பெற்றுக்கொள்ள6
Printed by Karunaratne & Sons Ltd.