கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிவேதினி 2004.06

Page 1
நிவே
பால் நிைைக் குற்aை
இதழ் 9 Daoňr 2
அடி05 ன்கள் கல்வி ஆ
கிறுேதி 3L | PR

தினி
* நெறிச் சஞ்சிகை
2
Seaf 2OO4
ஆய்வு நிறுவனம்

Page 2

நிவேதினி
தொகுப்பு : செல்வி திருச்சந்திரன்
வெளியீடு : பெண்கள் கல்வி ஆய்வு நிலையம் இல, 58 தர்மராம வீதி கொழும்பு - 6 பூரீ லங்கா.

Page 3
நூல்
தொகுப்பு
நூற்பதிப்பு
பதிப்புரிமை
பிரதிகள்
அளவு
அச்சு
பக்கங்கள்
கடதாசி
வெளியீடு
அச்சுப் பதிப்பு
ISBN
நூற் பதிப்புத்தரவுகள்
நிவேதினி
செல்வி திருச்சந்திரன்
ஆணி, 2004
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
2OO
1/8
ஒவ்செற்
92 (iv.+88)
70 கிராம் வெள்ளைத் தாள் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
யுனி ஆர்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட், 48 பீ, புளுமெண்டால் வீதி, கொழும்பு - 13. தெர. பே. 2330195, 2478133
ரூபா 75.00
1391-0353

தொகுத்தாக்கியவரின் உரை
நிவேதினி பல பாராட்டுக்களைப் பெற்றாலும் பெரும் கஷ்டத்துடனேயே வெளிவருகிறது. எழுதுவோர் எம்நாட்டில் மிகக் குறைவு. தரமாக எழுதுவோர் அதிலும் மிகக்குறைவு. பெண்நிலைச் சிந்தனைகளை உள்வாங்கியோரையே நிவேதினி வரவேற்கும். அவர்கள் எண்ணிக்கையில் மிகச் சிலரே ஆனாலும் ஒரு சந்தோஷமான விடயம், பெண்நிலைகளை உணர்ந்து கொண்ட, புரிந்து கொண்ட, ஆண்கள் சிலர் தரமான தகவுகளைத் தருகிறார்கள். இந்த நிவேதினி இதழ் சற்று வித்தியாசமானதாக வெளிவருகிறது. இரண்டு கட்டுரைகள் இலங்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டன. ஒன்று கிழக்கிலங்கை யுத்த காலத்தின் பெறுபேறாகத் தோன்றிய குடும்பச் சிதைவை கருப்பொருளாகக் கொண்டது. மற்றையது மலையகப் பெண்களின் பண்பாட்டு அழுத்தங்கள் பற்றியது. ஆனாலும் இந்த இதழின் சிறப்பம்சம் யாதெனில் மறுபிரசுரம் என்று கூறலாம், வேறு சஞ்சிகை களிலிருந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில கட்டுரைகள் வேறு நூல்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. ஆங்கில மொழியில் வந்த தரமான பொருத்தமான கட்டுரை ஒன்றின் மொழி பெயர்ப்பு என்ற ரீதியில் முக்கிய விடயங்களின் தொகுப்பாக வெளிவருகிறது இந்த இதழ். இனிவரும் இதழ்களிலும் ஆங்கில மூல மொழியிலிருந்து மொழி பெயர்ப்பாக ஒரு கட்டுரையைத் தருவதாக முடிவு செய்துள்ளோம். ஆங்கில மொழியறிவு அருகிய இக்கால கட்டத்தில் அம்மொழியில் வெளிவரும் அரும்பெரும் கட்டுரைகளின் தகவல்கள் எம்மவர் பலருக்குக் கிட்டுவதில்லை. இக்குறையை நிவிர்த்தி செய்யவே இம்முயற்சி.
மேலும் பெண்கள் மூளையில் போதிய அறிவு இல்லையா?, என்ற கட்டுரையும் ஒரு தேவதாசியின் சுயசரிதையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியும் வரலாற்றுப் பொக்கிஷங்கள். பல சமூகவியற் பண்புகளை அவை உள்ளடக்கியுள்ளன.
நிவேதினியை வாசிக்கும் வாசகர்கள் எந்தவித விமர்சனங் களையும் எமக்குத் தருவதில்லை என்பது எமது குறையே. ஆங்கில சிங்கள நிவேதினிக்கு விமர்சனங்கள் வரும்பொழுது ஏன் தமிழ் நிவேதினியைப் பற்றிய குறைநிறைகளை நாம் தெரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் எமக்கு யாரும் எழுதுவதில்லை என்பது எனது
ஆதங்கம்.
செல்வி திருச்சுந்திரன்

Page 4
米
உள்ளடக்கம்
பக்கம்
பெருந்தோட்டப் பெண்கள் கலாச்சார அழுத்தங்களில்
இருந்து மீளல். 01
- மைக்கல் ஜோக்கிம்
பெண்கள் மூளையில் போதிய அறிவு இல்லையா? 09
- திருமகள் இரத்தின சுப்பிரமணியம்
அல்லியின் கதை 14
- காஞ்சனா நடராசன்
வேறு கதையாடல்களின் நோக்கில் : பெண்களினது எழுத்து சுயமரியாதை இயக்கம் பெண்ணிலைவாத
மொழி பெயர்ப்பில் தொக்கி நிற்கும் அரசியல். 35
- கே. சிறீலதா
அஞ்சுகத்தின் சுயசரிதை 59
- செல்வி திருச்சந்திரன்
நூல் விமர்சனம் : மதப் பண்பாட்டின் கோலங்களையும்
கருத்தியலையும் கட்டவிழ்க்கும் ஒரு பால்நிலை
நோக்கு. 73
தொகுப்பு/ ; செல்வி திருச்சந்திரன் நரல் விமர்சனம் : சே.அனுசுயா
நிவேதினியின் குறி இலக்கும் நோக்கும். 81

6535TLů 6|LI5řT355iT 550TdFořng அழுத்தங்களில் இருந்து மீளல்.
- மைக்கல் ஜோக்கிம் தலைவர், பிரிடோ, கண்டி,
பெருந்தோட்டத்துறை இன்னும் நாட்டிற்கு வெளிநாட்டுச் செலாவணியைப் பெற்றுத்தரும் துறைகளில் பிரதான துறையாக விளங்குகிறது. தேயிலை உற்பத்தியில் பெண்கள் ஆரம்ப முதலே பங்களிப்புச் செய்து வருகின்றனர். தேயிலைத் தொழிற்துறையில் பிரேசில், இந்தியா ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக அதிக தோட்டத் தொழிலாளிகளைக் கொண்ட நாடு இலங்கையாகும். (சிவராம் - ஹேரத் 1995). புள்ளிவிபரங்களின்படி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2000 ஆம் ஆண்டில் 886, 936 ஆக இருந்தது. இவர்களில் சுமார் 51% வீதமானவர்கள் பெண்களாயிருப்பினும் இவர்களில் பெரும்பான்மையானோர் கொழுந்து பறிப்பவர்களாக ஆரம்பித்து அதே நிலையிலேயே இறுதிவரை இருக்கின்றனர். இதனால் அவர்களுடைய கீழ்நிலைப்படுத்தப்பட்ட நிலைமை வாழ்நாள் முழுதும் தொடர்கிறது. பெண் தொழிலாளியின் பணி அதிக உடல் உழைப்பைக் கொண்டதும் கடுமையானதுமாகும். பெருந்தோட்டப் பெண்கள் தங்களது கணவர்களைப் போலவே பல்வேறு பொருளாதார, சமூக நிர்வாகத்துறைப் பிரச்சினைகளுக்குட்பட்டிருந்தாலும் இவர்கள் தமது ஆண்களை விட மிகவும் பின் தள்ளப்பட்ட நிலையிலேயே உள்ளனர். இவர்களில் மூதாதையினரான தென் இந்திய பிரபத்துவ விவசாய சமூக ஆணாதிக்கக் கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும் பொருளாதார ரீதியிலும், கலாச்சார ரீதியிலும் குறைந்த சாதியினரைக் கீழ்ப்படுத்தும் பொருளாதார வளத்தைக்கொண்டிருந்தனர். 19 ஆம் நூற்றாண்டில் இப்பெண்கள் இலங்கைக்குக் குடிபெயர்ந்தபோது ஆரம்பத்தில் இருந்த அவருடைய வாழ்க்கை முறையிலும் மாற்றம் ஏற்பட்டன. பெருந்தோட்ட கட்டமைப்பில் பெண்கள் முன்னர் அனுபவித்த சுதந்திரத்தை இழந்ததுடன் மேலும் பல்வேறு அடக்கு முறைகளுக்குள்ளாகினர். பொதுவாகவே மனிதர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்குவதற்கெனவே உருவாக்கப்பட்ட பெருந்தோட்ட கட்டமைப்பு ஆணாதிக்கச் சிந்தனைகளை மேலும் ஊக்குவித்ததுடன் பெண்கள் தாழ்நிலையில் உள்ளவர்கள் என்ற கருத்தை மேலும் வலுப்படுத்தியது. பொதுவாகப் பொருளாதார ரீதியில் பலம்பெற்ற பெண்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் அதிக பேரம் பேசக்கூடிய நிலையில் இருப்பதாகக் கருதப்பட்டாலும் உழைப்பாளர்கள் என்ற முறையில் தமது ஆண்களை விட அதிகமாக உழைக்கும் பெருந்தோட்டப் பெண்கள் இந்த நிலையை
நிவேதினி 1

Page 5
ஒரு போதும் எய்தவில்லை. இதனால் பெருந்தோட்ட சமூகத்தில் பால் சமத்துவ நிலை இருபாலார்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசத்தைக் கொண்டிருப்பதுடன் பெண்கள் சமத்துவமற்றவர்களாகவும் பல சந்தர்ப்பங்களில் முழுமையாக ஆண்களில் தங்கி வாழும் நிலையிலேயே உள்ளனர்.
பெருந்தோட்டப் பெண்களின் இந்த தாழ் நிலை பிறப்பு முதலே பல்வேறு வழிகளில் கலாச்சாரம் பாரம்பரியம் என்ற பெயர்களில் உறுதிப்படுத்தப்படுகின்றது. ஆண் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பெண் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை. ஆணாதிக்கச் சிந்தனைகள் சிறுவயது முதலே இருபாலார் மத்தியிலும் உறுதியாக விதைக்கப்படுகிறது. ஊதிய உழைப்பாளி என்ற வகையில் பெருந்தோட்ட ஆண்கள் தமது ஆணாதிக்க அதிகாரத்தை வேறெங்கும் காட்ட முடிவதில்லை. அவர்கள் அதனை மனைவி குடும்பத்தில் உள்ள பெண் பிள்ளைகள் மீதே காட்டுகின்றனர்.
பெருந்தோட்டப் பெண்கள், ஊடகங்களின் தாக்கம் (பத்திரிகை, இலத்திரனியல் ஊடகங்கள்) வெளித்தொடர்புகள் அதிகரித்தல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்பவற்றால் ஏற்படுத்தப்படும் மாற்றங்களை ஆவலுடன் ஏற்றுக்கொள்பவர்களாகவும், பரந்தளவில் மாற்றங்கள் ஏற்பட வேண்டுமென விரும்புவர்களாகவும் இருந்தாலும் இறுக்கமான பெருந்தோட்டக் கட்டமைப்பும், சமூக முறையும் அவர்களின் சமூக வளர்ச்சிப் பாதையில் பெருந் தடைக்கற்களாகவே இருக்கின்றன. மாற்றங்களை ஏற்படுத்தும் விடயத்தில் வெளித்தொடர்புகள் மேற்குறிப்பிட்டவாறு அதிகமாகவுள்ள பெருந்தோட்டங்களிலே இந்நிலை காணப்பட்டாலும் வெளித்தொடர்புகள் குறைவான நகரங்களில் இருந்து எல்லைப்படுத்தப்பட்ட பெரும்பான்மையான பெருந்தோட்டப் பகுதிகளில் நிலைமை இன்னும் பெண்களைப் பொறுத்தவரையில் கடினமானதாகவும், மோசமானதாகவுமே உள்ளது.
தனது உழைப்பின் பலனை அனுபவிக்க முடியாத நிலையில் பெண்கள்.
அவரவர் ஊதியத்தை அவரவரே பெறுவது மனித உரிமையின் அடிப்படைத் தாற்பரியமாக இருந்தாலும், பெண்களின் ஊதியத்தை அவர்களுக்கே வழங்க வேண்டுமென தோட்ட நிர்வாகங்கள் ஏற்றுக் கொண்டுள்ள நிலைமையிலும், இன்னும் கூட அநேகமான தோட்டங்களில் பெண்களின் ஊதியத்தை ஆண்களே வாங்கும் நிலை உள்ளதால் குடும்பப் பொருளாதாரத்தில் தீர்மானம் எடுக்கும் விடயத்தில் பெண்களின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது. பெண்களின் ஊதியங்களை ஆண்களே பெறுகிறார்கள். மாற்றங்கள் ஏற்பட்டுள்ள சில இடங்களில் பெண்கள் நேரடியாகவே ஊதியத்தைப் பெற்றுக்கொண்டாலும் இரு பாலார் மத்தியிலும் மனப்பாங்கு ரீதியான மாற்றம் ஏற்படாததால் இறுதியாக ஊதியப் பணம் ஆண்களின் கைகளையே சென்றடைகிறது.
2 நிவேதினி

விட்டு வேலைகள் அனைத்தும் பெண்கள் வேலைகளாக வகைப்படுத்தல்.
எல்லாச் சமூகங்களிலும் வேலையில் பால்நிலை வேறுபாடுகள் உள்ளன. பெண்கள் செய்ய வேண்டிய வேலை, ஆண்கள் வேலையென அவை பிரிக்கப் பட்டுள்ளதுடன் ஒரு சிலவேலைகள் மட்டுமே ஆண்களும், பெண்களும் செய்யக் கூடிய வேலைகளாகக் கருதப்படுகின்றன. ஒரு சமூகத்தில் பொருளாதார ரீதியான மாற்றங்கள் ஏற்படும்போது வேலையின் இயல்புகளிலும், பால் அடிப்படை வேலைகள் பகிரப்படுவதிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆயினும் நாட்டுக்கு நாடு இவ்விடயத்தில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. பால் ரீதியாகப் பிரிக்கப்பட்ட வேலைகள் தொடர்ச்சியாகவே ஒவ்வொரு சமூகக் கட்டமைப்பிலும் காணப்பட்டிருக்கின்றன. (கணபதிப்பிள்ளை 1992).
நகரப் பகுதிகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பினும் வீட்டு வேலைகள் அனைத்தும் பெண்களுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் உரித்தான வேலைகளாக இருப்பதுடன், இவ்வாறான வேலைகளில் ஆண்களின் பங்களிப்பு ஆண்களின் கெளரவத்தைப் பாதிக்கும் விடயமாகவும், பெண்களை மரபுகளை மதிக்காத அடங்காப் பிடாரிகளாகச் சித்தரிக்கும் மனப்பாங்கு இன்னும் பெருந்தோட்டப் பகுதிகளில் மேலோங்கியுள்ளது.
குடும்பத்திலும், சமூகத்திலும் உழைப்பு ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பெண்களின் பங்களிப்பு பெருமளவு காணப்பட்டாலும், இவ்விரண்டு அமைப்புக்களிலும் அவர்களுக்கான அதிகாரப் பகிர்ந்தளிப்பு மிகவும் குறைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் முக்கிய பங்கினை வகிக்கும் தொழிற்சங்க விடயத்திலும் கூட இதே நிலை காணப்படுகின்றது. ஒரு பெண் எந்தத் தொழிற்சங்கத்தில் இணையவேண்டும் என்பது கூட ஆண்களாலேயே நிர்ணயிக்கப்படுகின்றது. கணவனும், மனைவியும் வேலை செய்தாலும் வேலையாளுக்காகக் கொடுக்கப்படும் குடியிருப்பு எப்போதும் ஆணின் பெயரிலேயே வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் மேல் வாரியாகப் பொருளாதார ரீதியில் பெண்கள் மீது சுமத்தப்பட்ட அழுத்தங்களாகத் தென்படினும் இவை ஆணாதிக்க, கலாச்சார பின்னணியில் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்களாகும்.
பெருந்தோட்டப் பெண்கள் மேற்குறிப்பிட்ட அழுத்தங்களுக்கு மேலதிகமாக கலாச்சார பண்பாட்டு நிலை அழுத்தங்களுக்குட்பட்டிருக்கிறார்கள். பொதுவாக இவ்வாறான அழுத்தங்கள் பெருந்தோட்டங்களுக்கு வெளியில் வாழும் தமிழ் பெண்களையும் பாதித்தாலும் பெருந்தோட்டக் கட்டமைப்புக்குள் பழைய நடைமுறைகள் இன்னும் இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. பெண்களைப் பொறுத்தவரையில் பிறப்பு, வளர்ப்புமுறை, பருவமெய்தல், திருமணம், இறப்பு ஆகிய எல்லா நிலைகளிலும் கலாச்சார விழுமியங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பவை கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்துகின்றன. இந்த
நிவேதிணி 3

Page 6
  

Page 7
பெருந்தோட்டப் பெண்கள் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சிகள். பெண்ணிலைவாதக் கருத்துக்கள் பெருந்தோட்டப் பகுதிகளில் இன்னும் குறிப்பிடத்தக்களவு கூட உள்வாங்கப்படாதளவிற்குப் பெண்களின் ஒடுக்கப்பட்ட நிலையைத் தொடர்ந்து நிலைநிறுத்தி பாதுகாப்பதில் ஆண்கள், தொழிற்சங்கங்கள், மலையக அரசியல் கட்சிகள், சமய ரீதியான அமைப்புக்கள், தோட்ட நிர்வாகம் அனைத்துமே ஒருமனப்பட்டு செயல்படுவதும் ஒரு முக்கியமானதும் தவிர்க்கமுடியாததுமான காரணியாகும். vn
இந்தப் பின்னணியில் கல்வித்துறையில் முன்னேற்றம் கண்டதால் பெருந் தோட்டப் பகுதிகளில் இருந்து வெளியேறிய விரல்விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கையிலான மலையகப் படித்த பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் இலட்சக்கணக்கான பெண்களின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு, உதாரணமாகக் காட்டுவது எவ்விதத்திலும் பொருத்தமானதல்ல. அந்தளவுக்குப் பெருந்தோட்டப் பெண்களின் நிலைமை மோசமாகவுள்ளது என்பது யதார்த்தமாகும். இந்தப் பின்னணியில் வெறும் பெண்ணிலைவாதக் கருத்துக்களை மாத்திரம் முன்வைப்பதால் மாற்றங்கள் வரப்போவதில்லை என்பதை பிரிடோ நன்குணர்ந்துள்ளது. பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதன் மூலமும் கலாச்சார விழுமியங்கள் என்று கருதப்படுபவற்றிலிருந்து அவர்கள் மீள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத் துவதன் மூலமுமே படிப்படியான மாற்றங்களுக்கான ஆரம்பத்தினை ஏற்படுத்த முடியுமெனக் கருதுகிறது.
மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான முக்கியமான முதற்படி பெருந்தோட்டத் துறையோடு தொடர்பான பங்காளிகள் மத்தியில் இது விடயமாகப் பரந்தளவிலான தாக்கமுள்ள விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதாகும்.
இந்த வகையில் பரந்தளவிலான விழிப்புணர்வு நடவடிக்கை காரணமாகப் பிரிடோ நிறுவனம் பணியாற்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் பால் ரீதியான வேலைப்பாகுப்பாடு படிப்படியாக மாற்றங்களுக்குட்பட்டு வீட்டு வேலைகள், “குடும்ப வேலை” என்னும் மனப்பாங்கு வேரூன்றி வருகிறது. இதன் விளைவாகப் பொது விவகாரங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்திருப்பதுடன் பொறுப்புக்களை ஏற்றுச் செயல்படுத்தக்கூடிய நிலைக்குப் பெண்கள் முன்னேறி வருகின்றனர். இதைவிட வீட்டு வேலைப்பழுவினை குறைக்கும் முகமான உபகரணங்களை அறிமுகப்படுத்துதல், உணவு பாதுகாப்புமுறைகளைப் பயிற்றுவித்தல் என்பவற்றின் மூலமாகவும் அவர்களின் வேலைப்பழுவினை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
6 நிவேதினி

பெருந்தோட்டங்களில் தற்போது பிரிடோ நிறுவனத்தால் நடத்தப்படும் முன்பள்ளிகள் முன்பள்ளி அபிவிருத்தி சபைகளாலேயே நடத்தப்படுகின்றன. அபிவிருத்திச் சபையின் நிர்வாகக் குழுவில் 50% மானவை பெண்களுக்கு வழங்கப்படுதல் கட்டாயமானது என யாப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்து முன்பள்ளி சபைகளின் நிர்வாகக் குழுவில் 50 வீதம் பெண்கள் உள்ளனர். இது தவிர முக்கிய பதவிகளான தலைவர், பொருளாளர், செயலாளர் பதவிகளில் ஒன்றாவது பெண்களுக்கு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக இதன் மூலம் பெண்களின் தலைமைத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாக ஒரு சில முன்பள்ளி அபிவிருத்திச் சபைகளில் முக்கிய பதவிகள் மூன்றுமே பெண்களால் வகிக்கப்படும் நிலை உருவாக்கப்பட்டு அவர்களின் தலைமைத்துவம் ஆண்களால் ஏற்றுக்கொள்ளப்படும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
கோயில் நிர்வாக சபைகளில் பெண்கள்.
கலாச்சார விழுமியங்கள் பழக்க வழக்கங்கள் என்பவற்றின் மத்திய நிலையமாகக் கருதப்படும் கோயிலின் பரிபாலன சபைகளுக்குப் பெண்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டுமென பிரிடோ நிறுவனம் நீண்ட காலமாகக் கோரிவந்துள்ளது. 150 வருட கால நடைமுறை மாற்றப்பட்டு முதலில் கெம்பியன் தோட்ட கோயில் பரிபாலன சபையில் 3 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அக்கரைப்பத்தனை, பிறேமோர், மொனிங்கடன், டயகம் ஈஸ்ட் 15 ஆம்பிரிவு ஆகிய தோட்டப் பரிபாலன சபைகளுக்கு பெண்கள் நியமித்தது மட்டுமன்றி அவர்களில் சிலர் உதவி தலைவர், செயலாளர், பொருளாளர், பதவிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளதானது பெண்கள், ஆண்கள் மத்தியில் பெண்ணிலைவாதக் கருத்துக்கள் வேரூண்டுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் 4 கோயில் பரிபாலன சபைகளில் 15 க்கும் மேற்பட்ட பெண்கள் நியமனம் பெற்றுள்ளனர். ஒரு வகையில் நகரப் பெண்கள் கூட இதுவரை பெறமுடியாத வாய்ப்பினைப் பெருந்தோட்டப் பெண்கள் பெற்றிருப்பது ஒரு சிறப்பம்சமாகும். இவ்வருட இறுதிக்குள் இன்னும் கோயில் நிர்வாக சபைகளுக்குப் பெண்கள் நியமிக்கப்படுவது உறுதியாகியுள்ள நிலையில் இவ்விடயத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.
இதற்கிடையில் பெண்களுக்கிடையில் பெண்களால் உருவாக்கப்பட்டுள்ள சிட்டுக்குலுக்களும் பெண்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்துபவையாக உள்ளன. சீட்டுப் பிடிக்கும் பழக்கம் பெருந்தோட்ட பகுதிகளில் பெண்கள் மத்தியில் நீண்ட காலமாகவே இருந்து வரும் பழக்கமாகும். ஆயினும், சீட்டினால் பெறப்படும் பணத்தை கணவன்மார்கள் முன் கூட்டியே மது சாலைகளுக்கும், பொருட்கள் வாங்கும் கடைகளுக்கும் அடகு வைப்பதன் மூலம் இதன் பலனைப் பெண்கள்
நிவேதினி 7

Page 8
அனுபவிக்க முடியாத நிலையே காணப்பட்டது. இப்போது உருவாக்கப்பட்ட பெண்கள் சீட்டுக்குலுக்கலில், பணம் எவ்வாறு சேகரிப்பது என்பது முதல் எவ்வாறு செலவிடப்பட வேண்டும் என்பது வரையிலான அனைத்துத் தீர்மானங்களையும் பெண்களே எடுக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளதால் இது அவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும் பல்வேறுவிதமாக ஆண்களால் ஏற்படுத்தப்படும் அழுத்தங்களில் இருந்து ஓரளவாவது மீள்வதற்கும் உதவியுள்ளது.
இது தவிர பெண்ணிலைவாதக் கருத்துக்கள் கோயில்கள் முதல் மற்ற எல்லாச் சமுதாய நிகழ்வுகளின் போதும் வலியுறுத்தப்படுகின்றன.
உதாரணமாகப் பருவமடையும்போது பெண்கள் பாடசாலை மாணவிகளாக இருக்கும் பின்னணியில் இது தொடர்பான மூட நம்பிக்கைகளில் இருந்து மீள்வதற்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய சிறப்பான நிலையில் மலையகப் பாடசாலை ஆசிரியர்களும் விசேடமாக பெண் ஆசிரியர்களும் இருக்கும் நிலையில் பெற்றோர்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வையும் அழுத்தத்தையும் ஏற்படுத்துமாறு அவர்கள் தொடர்ச்சியாக கோரப்பட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் சிறப்பான விளைவுகளைத் தந்திருக்கின்றன. பொங்கல் விழாவொன்றின் போதும், கோயில் திருவிழாவின் போதும் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றோருக்குத் தமது வீட்டில் மகள் பருவமடைந்ததன் காரணமாக தீட்டுப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட தாய்மார்கள் இருவர் விழாவிற்கு தலைமை தாங்கி பரிசு வழங்குமாறு கோரப்பட்ட பொழுது அந்த முழுத் தோட்டச் சமூகமும் எவ்வித எதிர்ப்புமின்றி அதனை ஏற்றுக்கொண்டது. பல தசாப்தங்களாகக் கடைப்பிடிக்கப்படும் வழக்கமுறைகள் அதிரடியாக மாற்றப்படும்போது மாற்றங்களை விரைவாக ஏற்படுத்தலாம் என்பதையே இது இங்கு காட்டுகிறது.
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள மாற்றங்களைப் பார்க்கும் எவருக்கும் இவை எந்த வித முக்கியத்துவமுமற்ற மாற்றங்களாகத் தோன்றலாம். ஆயினும் இன்றைய பெருந்தோட்டப் பெண்களின் யதார்த்த நிலையை பரிந்து வைத்துள்ள ஒருவருக்கு இந்த ஒவ்வொரு மாற்றமும் எந்தளவுக்கு முக்கியத்துவமானவை என்பது விளங்கும்.
இறுதியாகப் பெருந்தோட்டங்களில் லயன் குடியிருப்பு முறை முற்றாக மாற்றப்படுதல், தனியான வீடுகள் அமைத்தல், வீடுகளின் உரிமை வழங்கப்படும் பொழுது அவை இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட நடைமுறையில் இருந்து விலகி கணவர், மனைவி இருவர் பெயரிலும் வழங்கப்படுதல், மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படுதல், பெருந்தோட்டங்களில் உள்ள பெண்கள் அமைப்புக்கள் பதிவு செய்யப்பட்டு அவற்றின் மூலமாக நேரடியாக அரசியலில் பங்குபற்றுவதற்கு உரிமை வழங்கப்படுதல் என்பன மலையகப் பெண்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுவதற்கு அவசியமான ஆரம்பக் காரணிகளாகும்.
8 நிவேதினி

6 grassir epistogrufgib
போதிய அறிவு இல்லையா?
திருமகள் இரத்தின சுப்பிரமணியம்
“மாதர் ஐக்கிய சங்க”ச் செயலாட்டியாராகிய திருமகள் தையல்நாயகி சுப்பிரமணியம் என்னை மாதர்மதிமாலிகை”க்கு ஒரு கட்டுரை வரைந்தனுப்புமாறு கேட்டதன் மீது, அவ்வம்மையாரின் கட்டளையையன்போடு ஏற்றுக் கொண்டு, “பெண்பாலார் செயற்பாலனயாவை? என்னும் பெரிய கட்டுரையொன்றனையான் வரைந்துழி, அது தன்கண்பற்பல பொருள்கள் அடங்கக் கொண்டு, நனிமிக நீண்டுப் பெருகிவிடலாயிற்று. அதனால், அதை மாதர் ஐக்கிய சங்கக் கூட்டம் ஒன்றினில் வாசிக்கப்படுவதற்கு அனுப்பலாமென்று கருதி, அதிலிருந்து ஒரு சிறுபகுதியை மட்டும் எடுத்து, அவ்வாறு எடுக்கப்பெற்ற இப்பகுதிக்கு மேற்குறிப்பிட்ட தலைச்சாத்திட்டு, இப்பத்திரிகைக்கு எழுதுவேனாகின்றேன்.
மனிதர் தமக்கு இயற்கையாகவுள்ள உருவ வேற்றுமையினால், ஆண் பெண் என இருதிறத்தினராகப் பகுக்கப்பட்டிருக்கின்றனர். அவ்வுருவ வேறுபாடு பற்றி இருபாலினராகிய மனிதரே அறிவு வேற்றுமையினால் மாக்கள் மக்கள் எனப் பண்டைக்காலத்திலிருந்த தமிழ் அறிஞர்களால் பகுக்கப்பட்டனர். மாக்கள் என்பார் மெய், நா, மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறியறிவு மட்டில் பல்வேறு அளவுகளில் முறையே பெற்று, மன அறிவு என்னும் பகுத்தறிவு பெரிதும் இலராவர். அவர் பறவை விலங்குகளின் நிலைமைகளில் உள்ளவர். மற்று மக்களாவர். அவ் ஐம்பொறியறிவு நன்கு விளங்கப் பெறுதலோடு, மன அறிவு எனப்படும் பகுத்தறிவு விளக்கமும் சால விரியப் பெற்றுள்ளவர். அன்னோர் ஆறறிவுயிர்களென்று சிறப்பிக்கப்பட்டனர். இப்பாகுபாடு இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னரேயே,
மாவு மாக்களும் ஐயறிவுயிரே மக்கள் தாமே ஆறறிவுயிரே.” என்று ஆசிரியர் தொல்காப்பியனாராலும், பின்னர்,
விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல் கற்றாரோ டேனை யவர்.”
இக்கட்டுரை 1927ம் ஆண்டு திருக்கோணமலை மாதர் சங்கத்தினரால் பருத்தித்துறையிலுள்ள கலாநிதியந்திரசாலையில் பிரசுரிக்கப்பட்ட மாதர்மதி மாலிகை எனப்படும் ஆண்டு வெளியீட்டிலிருந்து எடுக்கப்பட்டது.
நிவேதினி 9

Page 9
என்பதனால் ஆசிரியர் திருவள்ளுவரானாலும் முறையே தத்தம் அரும்பெரும் நூல்களாகிய "தொல்காப்பிய'த்தின் கண்ணும், “திருக்குற” எரின் கண்ணும் செவ்விதின் தெளித்தெடுத்துக் காட்டப்படுவதாயிற்று.
இனி, மாக்கள் மக்கள் என்னும் இப்பாகுபாடு, ஆண்பாலாருள்ளும் பெண்பாலாருள்ளும் பொதுவாகக் காணப்படுவதாகும். எனவே, ஆண்பாலில் மாக்களும் மக்களும் இருக்கின்றமை போலவே, பெண்பாலின் கண்ணும் மாக்களும் மக்களும் உளர் என்பது நன்கு வெளிப்படும். இதனால் ஆண்பால் மாக்களும், பெண்பால் மாக்களும் ஒருவகையாரென்பதும், ஆண்பால் மக்களும் பெண்பால் மக்களும் வேறொரு உயர்ந்த இனத்தினர் என்பதும் தெளிவாகும்.
இதுபற்றியே வடஇந்தியாவில் இப்பொழுதைக்கு ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு அறிவும் அன்புமே உருவாய், தமக்கென வாழாது பிறர்க்குரியாளராய் விளங்கிய கௌதம புத்தர் என்னும் பெரியார் ஆண்பால் மக்களையும் பெண்பால் மக்களையும் அறிவிலும் ஆற்றலிலும் சமமாகவே பாராட்டி, அவர்க்கு உயர்ந்த அருள் அறம் போதிப்பாராயினர். அதனால், மற்றைய மாக்களாகிய ஆண்களையும் பெண்களையும் கைவிட்டனரோவெனின், இல்லை. அத்தகையினர் மாட்டும் அன்புமிகுந்து, சிறிய அளவில் இருந்த அவர்கள் தம்பகுத்தறிவை வளர்தரச் செய்து, அவர்களுக்கிசைந்த நலஞ் செய்வாராயினர்.
பண்டைக்காலத்திலும், இடைக்காலத்திலும், வட இந்திய ஆரியருள் பெண்மக்கள் ஆண்மக்களோடு அறிவாதிகளால் சமநிலையெய்தும் உரிமை உடையோராய் இருந்தமையால், அப்பெண் மக்களுள் இருக்கு வேதப்பாட்டுகள் பாடியவர்களும், பிரமசாரினிகளும், சந்நியாசினிகளும், யோகினிகளும், பிரமவாதினிகளும், யுத்த வீரிகளும் இருந்தனர். அதுபோலவே, தன் தாய் நாடாகிய தென் இந்தியாவிலும் பண்டை நாளில், தமிழ்ப் பெண்களுள் மக்களெனப்பட்டார் ஆண்பால் மக்களொடு அறிவாற்றலால் ஒத்த நிலையையடைந்து, பெரிதும் விளக்கமுற்று இன்பத் தமிழ்ப்பாட்டுகள் பாடினர். பல்வேறு நற்கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர். வீரத்திற் சிறந்திருந்தனர். இடைக்காலத்திலும், கடவுள்பால் பேரன்பு செலுத்திய ஞானச்செல்வியரும், தவமகளிருந் திகழ்ந்தனர். பழைய காலத்தில் இயற்றப்பட்ட சம்ஸ்கிருத நூல்களையும் தமிழ் நூல்களையும் ஆராய்ந்து பார்த்தால் இவ்வாண் பெண் சமத்துவநிலை நன்கு புலப்படும்.
அவ்வாறு பெண்பாலார் உயர்ந்த நிலையில் இருந்தபோது, வடஇந்தியப் போலி ஆரியருள் ஒழுக்கச் சீர்திருத்தஞ் செய்யப்புகுந்த ஒரு சாரார் பெண்கள்பால் பொறாமை கொண்டு, அவயவங்களின் வேற்றுமையினால் பெண்களுக்குப் பெரிய மூளையையும், அதன் பயனாகிய அறிவும் ஆற்றலும் இல்லாமையோடு, ஆன்மாவும் இல்லையென்றும், அதனால் அவர்கள் ஆண்பாலாரோடு சமநிலை எய்துதற்கு
10 நிவேதினி

உரியரல்லரென்றுங் கூறிப் பெண்களை அவர்கள் தம் உரிமைகள் பலவற்றினின்றும் விலக்கி, அறியாமை இருட்டினுள்ளும், அடிமைத் தன்மையுள்ளும், உலகப் போகப் பொருள்களின் நிலைமைகளுள்ளும் நிறுத்தலாயினார்கள். நிறுத்தவே, ஆண்பாலாருக்கு ஒரு சட்டமும் பெண்பாலாருக்கு ஒரு சட்டமும் உண்டாயின. அதனால், பொதுவாக, எல்லாச் சாதிப் பெண்களுமேயன்றிப் பிராமணப் பெண்களும் அவ்வாரியருள்ளிருந்து பிரிந்த சூத்திரர்களென்னும் நான்காவது வருணத்தவர் களுக்குச் சமாணர்களாகக் கருதப்பட்டு, கல்வி கற்றலினின்றும்,வேதம் ஒதலினின்றும், அதைக் கேட்டலினின்றும் தடுக்கப்பட்டதேயல்லாமல், ஒமச் சிராத்தாதி வைதீக மந்திரக் கருமங்களுஞ் செய்யத்தகாதவர்களென்றும் ஒதுக்கப்பட்டார்கள். ஈண்டுச் சூத்திரர் என்னும் ஒருவருணத்தார் ஆரியருள்ளிருந்து பிரிந்ததாகக் கூறலாயினேன். அச்சூத்திரரென்னும் வகுப்பார் நந்தென்தமிழ்நாட்டில் பண்டு இருந்திலர். தமிழ்நாட்டில் பிராமணர், கூடித்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் வருணப்பாகுபாடு இலது. அந்நால்வகைச் சாதிப் பாகுபாடு வட இந்திய ஆரியாவர்க்க்த்திலிருந்து தமிழ்நாட்டின் கண் நூதனமாகப் புகுந்ததாகும் என்பதை, என் சகோதரிகள் தம் நினைவில் வைத்துக் கொள்வார்களாக. அவ்வாறு, பெண்கள் தாழ்த்தப்படவே, ஜைனமத்தினருள் திகம்பார் என்னும் ஒரு பகுதியார் பெண் வகுப்பாரெல்லாருமே கொடியர் அறக்கொடியர் அவர்கள் ஆண்களைப் போலத் தத்துவஞானத்திற்கும் மோட்சத்திற்கும் உரியவர்களல்லர் என்று கடிந்து விட்டனர். அப்பொறாமை உணர்ச்சியானது ஆரியர் தம் செல்வாக்கினால் தென் இந்தியத் தமிழருள்ளும் பெரும்பான்மையோரிடத்தில் வேரூன்றிக் குடிகொள்வ தாயிற்று. இந்தியாவில் அத்தகைய பொறாமைக் கொள்கை எழுந்த அவ்விடைக்காலத்தில், மேற்றிசையிலும் கிறிஸ்தவப் பெண்கள் ஆன்மா இல்லாதவர்கள் என்று வாய்ப்பறையடித்துச் சாற்றப்பட்டதுடன், புத்தகங்களிலும் வரையப்பட்டது.
பெண்பாலார் தம் தாழ்நிலையின் வரலாறு இவ்வாறு ஒருபுறம் இருப்ப, பெண்களுக்குப் பெரிய மூளை இல்லையாதலின், அவர்கள் ஆண்பாலாரோடொத்த அறிவும் ஆற்றலும் அடைந்து, உரிமைகள் பலபெறுதற்கு அருகரல்லர் என்று சுழறப்பட்டமையால், மனிதர் தலையின் கண் உள்ள மூளையைப் பற்றிச் சிறிது கூறுவேன். மனிதர் தம் மன அறிவின் முயற்சி நிகழ்தற்கு இடம் மூளையாகும். மூளையானது தன் அளவிலுங்கனத்திலும் மனிதர் உடம்பின் வளர்ச்சிக்கேற்பவும், வயதின் முதிர்ச்சிக்கேற்பவும் வளர்தல் அடைவதாகும். அவ்வாறின்றி, அதன் வளர்ச்சி குறைவாகவிருப்பின், அறிவின் தொழில்களுந்திருத்தமாக இருக்கமாட்டா. ஆனால், அவை குறைகளுங்குற்றங்களும் உடையனவாகவேயிருக்கும். இவ்வுண்மை ப்ரேனாலஜி (Phrenology) என்னும் மேற்றிசை மனோதத்துவ நூலில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றது. ஆயினும், அவ்வாறு மூளை மட்டும் வெறும்பிண்டமாகத் திரண்டு வளமையுற்றுப் பெருத்தால் மட்டுஞ்சாலாது. மூளையின் பலதிறப்பட்ட அறிவு நிகழ்ச்சிக்குக் காரணங்களாகவுள்ள அறைகள் (Cels) என்னும் பகுதிகளும் விருத்தியுறல் இன்றியமையாததாகும். மூளையானது
நிவேதிணி

Page 10
நான்கு முக்கிய மண்டிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை, விலங்கு மண்டிலம், உலகியல் அறிவு மண்டிலம், அன்பு மண்டிலம், தத்துவ அறிவுமன்டிலம் எனப்படும். இரு காதுகளையும் அடுத்துள்ள மூளையின் இருபக்கங்களும் விலங்கு மண்டிலமாகும். அப்பகுதியில், அகந்தை, தற்காப்பு தந்திரம், யோசனை, ஊக்கம், முயற்சி, துணிவு, சுயநலம் முதலானவைகளுக்குரிய அறைகள் உள. முன் மூளையாகிய உலக அறிவுப் பகுதியில், உற்றுநோக்கல், பகுத்தறிதல், சிந்தித்தல், பல்கலை கற்றல், சொற்பொழிதல் முதலான தொழில்களுக்குரிய அறைகள் உள. பின்மூளையாகிய அன்புப் பகுதியில், இல்வாழ்க்கைப்பற்று, அவ்வாழ்க்கையில் தொடர்புபட்டுள்ளாரையும், பசு, ஆடு, குதிரை, நாய், பூனை, கோழி முதலான பிராணிகளையும் அன்போடு பேணல், வீடு, நிலம், தோட்டம் முதலானவைகளை ஒம்பல், பொதுஜன நலந்தேடல், அரசியல் உரிமைநாடல் ஆகிய இந் நல்லொழுக்கங்கள் நிகழ்வதற்குக் காரணங்களான அறைகள் அடங்கி யிருக்கின்றன. நான்காவதாகிய, தத்துவ அறிவுமன்டிலம் மேல்மூளையாகும். அதன்கண், ஆன்மஞானம், பிற இரகசியப் பொருள்களின் ஞானம், கடவுட்பக்தி, பெரியோர் வழிபாடு, நடுநிலை, பரோபகாரம் முதலான மேலான இலக்கணங்களையுடைய அறைகள் அமைந்து கிடக்கின்றன. இவ்வாறு மூளையின் நான்கு பகுதிகளிலும் நாற்பத்திரண்டு அறைகள் அல்லது அந்தக் கரணங்கள் இருக்கின்றன. மூளையின் ஒவ்வொரு பகுதியிலுமுள்ள உட்கருவிகள் வளர்ச்சி பெற்றுச் சமநிலையடைந்தாற்றான் நல்லறிவு முதலானவைகள் வெளிப்படும். ஆகவே மூளையின் வெறும் பெருக்கம் அறிவுவிருத்திக்கு உறைகல் ஆகமாட்டாது என்பதற்கு ஒர் ஆட்சேபனையும் இன்றாம்.
இனி, பெண்கள் உடம்பு சிறியதும் மெலிந்ததுமாக இருத்தலின், அவர்கள் மூளையுஞ் சிறியதாகவும் மெலிவுடையதாகவும் இருக்குமென்றும், ஆண்கள்மூளை 3 பவுண் கனமுடையதென்றும், பெண்கள் மூளை அதனினும், 2 அல்லது 3 அவுன்ஸ் குறைவுடையதென்றும், இக்காரணங்களால் பெண்பாலார் அறிவிற் குறைந்தவர்களென்றும் மனிதர் மூளைகளைப் பரிசோதித்து ஆராய்வாருள் சிறுபான்மையோர் கூறுப. இக்கூற்று மூளையின் பெரும் அளவு அறிவின் விரிவுக்கு உறையாகாதென்று யான் மேலே எடுத்துக்காட்டியதற்கு முரண் ஆகின்றமையால் இது வாய்மையாவதன்று. பெரிய மூளைகளோடுதான் பேரறிவு சம்பந்தப் பட்டுள்ளதென்று பொதுவாகக் கூறப்படினும், 40, 36, 32, 20, 18 அவுன்ஸ் (Ounces) முறையாக உள்ள மூளைகளும் பேரறிவும், பேராற்றலும் உடையனவாய் இருப்பக் காணப்படுகின்றமையாலும், மூளையின் பலபகுதிகளின் தொழிற்பாட்டினாலேயே அப்பேரறிவு ஆற்றல்கள் நிகழ்கின்றனவென்று அறியப்படுகின்றமையாலும் மூளையின் சக்தியானது அம்மூளையின் பருமையைப்பற்றிக் கொண்டிருப்பதன் றென்பது ஒள்ளெனப் புலப்படும். எனவே, பெண்பாலார் மூளையானது பொதுவாகச் சிறியதாகவே இருப்பினும் சிலர் தம் சிறிய மூளைகளிலும் பல்வகைப்பட்ட அறிவு நிகழ்ச்சிக்கும், ஆற்றல்களுக்குங் காரணங்களான கருவிகள் பல உட்காரணங்கள்,
12 நிவேதினி

வெளிக்காரணங்கள் பலவற்றால் விருத்தியுற்றுத் தொழில் புரிதலாகும் என்பதுஉம், அதனால் அவர்கள் ஆண் மக்களோடு ஒத்த அறிவு எய்திச் செயற்கரிய செயல்களைச் செய்யவல்லவரும் ஆவர் என்பதும் பெறப்படும். இதற்கு அறிவு ஆற்றல்களால் சிறந்த முன்னைக் காலத்துப் பெண்மக்களும், இக்காலத்துப் பெண்மக்களுமே சான்றுகளாவர். ஆகவே, ஆண்பாலார் பலருடைய மூளைகள் அறிவாற்றல்களுக்குரிய உட்கருவிகளின் வளர்ச்சியின்றிப் பெரும் பிண்டமாகப் பருத்திருப்பதனாற்றான் என்ன பயன்? மூளையின் பருமை சிறுமை அறிவுக்கும் அறியாமைக்கும் பொதுவான காரணங்கள் அல்ல. இவ்வுண்மைகளெல்லாம், இவ்வாண்டு, லண்டன் நகரத்து இரணப்பரியாரிகள் தம் இராஜகலாசாலையில் ஸெர் ஆர்த்தர்கீத் என்பார் ருஷியா கண்டத்தின் தலைவராக இருந்த லெனின் என்பவருடைய மூளையின் பரிசோதனையைப் பற்றிச் செய்த மிக்க அருமையான உபந்நியாசத்தாலும் நன்கு விளங்குகின்றன.
இன்னோரன்ன நியாயங்களாற் பெண்களுடைய இயற்கையுஞ் செயற்கையுமாகிய அறிவும், அதனால் விளையும் ஆற்றலும் விருத்தியுறாவண்ணம் இயற்கை ஒழுங்கிற்கு மாறாக விரிந்த அறிவும் நெஞ்ச நெகிழ்ச்சியும் இல்லாத ஆடவராலும் மாதராலும் அடக்கி வைக்கப்படுகின்றனவென்பதுTஉம், இயற்கை ஒழுங்கிற்கிணங்க அவை பெரிதும் விருத்தியடையச் செவ்வி (Opportunity) தரப்படுமேல், பெண் மக்கள் ஆண்மக்களுக்கு ஒத்தாராகவும், அவரினும் மிக்காராகவும் பொலிவடைவரென்பதுTஉம் நன்கு அறியக் கிடக்கின்றன. இயற்கை ஒழுங்கோடு கூடிவாழும் வாழ்வே சிறந்த வாழ்வாகும்.
மூளையின் சிறுமைகண்டு ஆண்மைமிகுந்த பெரும்பான்மையோர் இடைக்காலத்து மெல்லியலாரை அவர் தம் உரிமைகளிலிருந்து விலக்கினமையும், அவ்வாறே இக்காலத்தும் மனவன்மையுடையோர் நம்உரிமைகளைத் தாமறுத்துரைக் கின்றமையும் எத்துணைப்பாவச் செயல் என்பதனை, சகோதரிகளே, சிறிது சிந்தனை செய்து பார்மின்கள். நாம் இயற்கையால் உணர்ச்சி (Emotion) வயத்தர். உணர்ச்சி வயத்தாராகிய நம்மிடத்தேதான் பேரன்பும் பேரிரக்கமும் உள் என்று உளநூல் (Psychology) நுவல்கின்றது. ஆகவே, அவ்வுணர்ச்சியால் உள்ளங் கலங்கிக் கண்ணிர் சொரிந்து நம் அன்பையும் இரக்கத்தையும் ஆண்பாலாருக்கு வெளிப் படுத்துவதைவிட வேறு என் செயக் கடவோம்!
பத்தாண்டு நிறைவுற்ற “மாதர் ஐக்கிய சங்கம்" நீடூழி நிலைத்து ஊக்கமுற்றுப் பலநற்றொழில்கள் புரிந்து, மாதர்க்கு மேன்மேலும் நலஞ் செய்வதாக மாதர் தம் நுண்மதியைப் பல்லாற்றானும் விரிதரச் செய்ய முயலும் “மாதர்மதிமாலிகை” யும் நீடூழி நின்று நிலவுவதாக.
நிவேதினி 13

Page 11
இல்லியின் கதை
85IT (ö5öf 6OTIT pb LTT öF Gör மொழிபெயர்ப்பு: நஞ்சுண்டன்
புத்தர் காலத்திற்கு முன்பே எழுதப்பட்டுப் பரவலாகப் படிக்கப்படும் மத - தத்துவச் செவ்வியல் பிரதியான சாந்தோக்கிய உபநிஷத் ஆன்மீகத்தைத் தேடும் ஒருவரது பிரார்த்தனையைக் கூறுகிறது. நான் ஒருபோதும், எப்போதும், பெண்ணின் சிவந்த, வெண்மையான, பற்களற்ற, வழுக்கக்கூடியதும் பிசுபிசுப்பானதுமான யோனியில் நுழையாதிருப்பேனாக” என்று ஒரு பெண்ணின் யோனி, உடல், மற்றும் பாலியல் கவர்ச்சி ஆகியவற்றை வெறுக்கத்தக்கனவாகவும் அவருவப்புக்குரியனவாகவும் அந்தப் பிரார்த்தனை சித்தரிக்கிறது. அனாதி காலத்திலிருந்தே, ஒரு பெண்ணின் பாலியல் கவர்ச்சி பயமுறுத்தக் கூடியதாகவும் தொல்லையும் அபாயமும் கொண்டதாவும் மேல்வர்க்கங்களால் கருதப்பட்டிருக்கிறது. எனவே அது கண்காணிப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் கீழ் வைத்திருக்கப்பட வேண்டியதாகவும் பெண்ணின் உடம்பு ஆண் சந்ததிக்காக ஆணின் விதையை ஊன்றும் களமாகவும் கருதப்படுகிறது. கருப்பை, யோனி, மற்றும் முலைகளைக் கொண்ட உயிரியல் உடம்பைப் பெற்றிருக்கும் தகுதியால், பல ஆண்வழிச் சமூக முறைமைகளில் பெண் கட்டுப்பாட்டுக்குட்பட்ட பாலினப் பாத்திரமாகச் சித்தரிக்கப்படுவதோடு குடும்பத்திற்குள்ளும் சமூகத்திலும் பிறரைச் சார்ந்து வாழும் நிலைக்கும் தாழ்ப்படுகிறாள். மாதவிடாய், குழந்தை பெறுதல் ஆகிய உயிரியல் செயல்பாடுகளைக் கொண்ட உடம்பைப் பெற்றுள்ள தகுதியால், தத்துவப் பாண்டித்தியத்திற்கோ அல்லது விடுதலை போன்ற மேலான ஆன்மீகத் தேடல்களுக்கோ பெண் தகுதியானவளல்ல என்று சம்பிரதாயமான வேத மரபில் காண்பிக்கப்படுகிறாள். இன்றைக்கும்கூட, வேதாந்த மஹா வாக்கி யங்கள் (உச்சபட்ச ஆன்மீகப் போதனைகள்) பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் சொல்லப்படுவதை வேதச் சம்பிரதாயம் அனுமதிப்பதிப்பதில்லை. மனுவிற்கும் பெண்ணின் வெறுப்போடு சட்டம் இயற்றுகிறவர்களுக்கும் இருந்த பெண்ணின் உடம்பு மற்றும் பாலியல் கவர்ச்சி மீதான பார்வைகளை நாம் புறக்கணித்தாலும், நன்கு பாதுகாக்கப்பட்டுவரும் புராணங்கள் என்றழைக்கப்படும்
நன்றி : காலச்சுவடு 47 மே - ஜூன் 2003 காலச்சுவடு அனுமதியுடன் பிரசுரிக்ப்படுகிறது.
14 நிவேதினி

பழங்காலத்தினதும் மத்திய காலத்தினதுமான சமஸ்கிருதத்தின் இலக்கிய வகைமை நம்மை எதிர்கொள்கிறது. அவற்றில் பெரும்பாலானவை நல்ல /கற்புள்ள பெண்கள் மற்றும் கெட்ட / கற்பற்ற பெண்களைப் பற்றிய மேற்கோள்களும் கதைகளும் நிறைந்தவை. கற்பற்ற பெண் கட்டுப்பாடற்ற நாக்கையும் சிற்றின்பப் பற்றுள்ள நடத்தையையும் கொண்டிருக்கையில், அளவாகப் பேசும், பாலியல் கவர்ச்சியையும் ஆண்களால் கட்டுப்படுத்தப்பட அனுமதிக்கிற பெண் நல்லவள் என்று அறிவிக்கப்படுகிறாள். அவள் எல்லாச் சோனைகளையும் மெளனமாக அனுபவிப்பதோடு எப்போதும் ஆண்வழிச் சமூக விதிகளுக்கு அடிமைப்படுகிறாள். இதை விளக்க, பிரம்மவை வார்த்த புராணத்திலிருந்து பாலுணர்வின் அடிப்படையில் பெண்களை மூன்று வகையாகப் பிரிக்கும் ஒரு மேற்கோள் நமக்குக் கிடைக்கிறது. அது அறிவிக்கிறது:
மிக நல்ல, மிக மோசமான, இடைப்பட்ட எல்லாப் பெண்களும் பிரகிருதியிலிருந்து எழுகிறார்கள். மிக நல்ல பெண்கள் சத்துவப் பகுதியிலிருந்து பெறப்படுகிறார்கள், இடைப்பட்டவர்கள், ரஜஸின் பகுதிகள் இன்பத்தை நாடும், தங்கள் தேவையிலேயே கருத்தூன்றியவர்கள். மிக மோசமானவர்கள் முன்னோர்கள் பெயர் தெரியாத தமஸின் பகுதிகள். தீ நாக்கு, கற்பற்ற, சிற்றின்ப பற்றுள்ள, தன்னிச்சையாயியங்கும்,
சச்சரவில் ஆவலுள்ளவர்கள். பூமியிலுள்ள கற்பற்ற பெண்களும் தேவலோகத்தின் காமுகிகளும் வேசிகளும் என்றறியப்படுகிறார்கள். அவர்கள் தமஸின் பகுதிகள்.
இப்படிப்பட்ட சம்பிரதாயமான பார்வைகள், வலிமைமிக்க ஓர் இந்தோ - ஆரிய உறவுமுறை வடிவிலான ஆண்வழிச் சமூகக் கட்டமைப்பை உருவாக்கி, துணைக்கண்டத்தின் பல பகுதிகளிலும் வெகுஜன ஆழ்மனத்தில் பரவியுள்ளன. வடகிழக்கிலும் தென்னிந்தியாவிலும் சில விதிவிலக்குகளுடன், நூற்றாண்டுகளாக இது ஆதிக்கம் செலுத்திய வடிவமாக விளங்கியது. ஆனால் இந்த விதிவிலக்குகள் மாற்றுக் குரல்களை அடிக்கடி நமக்கு வழங்குகின்றன. பெண்கள், தேசிய இனமக்கள், மற்றும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் சாதாரண மக்கள் - பெண்களின் பாலியல் கவர்ச்சி மற்றும் உடம்பு பற்றிய புத்துணர்வூட்டும் புதியதும் மாற்றானதுமான கருத்தாக்கங்களைத் தங்கள் வாய்மொழி, நிகழ்கலைகளின் மூலம் அறிமுகப்படுத்தி, ஆதிக்கம் செய்யும் சமூகப் படிநிலைமுறைகளைப் புத்திசாலித்தனமாக எதிர்த்து நிற்கும் விளிம்பு நிலை மக்கள் - இவர்களின் தெளிவான ஒன்றிணைந்த குரல்களே அவற்றில் பெரும்பாலானவை. நிவேதினி 15

Page 12
கி.பி. நான்காம் நூற்றாண்டின் ஒரு முக்கியமான தத்துவப் பிரதியான ஈஸ்வர கிருஷ்ணாவின் சாம்கியகாரிகா', தமிழின் பிரபலக் கதைப்பாடலான அல்லியரசாணி மாலை" ஆகியவை பெண்ணின் பாலியல் கவர்ச்சி, பெண்ணுடல் போன்றவற்றின் மீது கொண்டுள்ள பார்வைகளுக்கிடையிலுள்ள அடிப்படையான வேறுபாடுகளை இக்கட்டுரை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இந்தியச் சமூக அமைப்பில் பெளதிக மற்றும் சமூகப் பெண் மற்றும் ஆண் கட்டமைப்பின் மீது - ஆதிக்கம் செலுத்தும் சமூகப் படிநிலை முறைகள் மற்றும் சமத்துவமின்மைகளின் நிரந்தரத்தன்மை உட்பட - பிரகிருதி மற்றும் புருஷ பற்றிய சாம்கியப் புரிதல் அளவற்ற தாக்கத்தைக் கொண்டுள்ளது. பண்பாட்டின் ஒப்புதலைப் பெற்ற இந்தக் கட்டமைப்புகள், ஆணின் சிறப்புரிமை சார்ந்து, இயற்கையின் பெரும் வகைமுறையின் பகுதிகளாகவும் அதனாலேயே மீறமுடியாதவையாகவும் பார்க்கப்படுகின்றன. பெளதிக மற்றும் பிரக்ஞை என்னும் ஒன்றுக்கொன்று சார்பற்ற இரு யதார்த்தங்களை உண்மையென ஏற்றுக்கொண்டு ஒரு கூர்மையான இருமை நிலையை உயர்த்திப் பிடிக்கும் தத்துவத்தின் இப்பிரிவு பெண்மையைப் பெளதிக அல்லது பிரகிருதிக்கும் ஆண்மையைப் பிரக்ஞை அல்லது புருஷாவுக்கும் உரித்தாக்குகிறது. ஒழுக்க மேம்பாட்டின் ஒரு நன்னெறிப்பரிமாணம், ஒழுக்க நசிவு, மற்றும் ஒழுக்கமற்ற அக்கறையின்மை என்பவற்றுடன் பொருண்மை அல்லது பிரகிருதியானது சத்வ, ரஜஸ், தமஸ் என்றழைக்கப்படும் மூன்று பகுதிகளாலான வழிமுறையால் அமைக்கப்பட்டது. அறிவுத் தேடலில்லாமை, இச்சை, மற்றும் பாலியல் பிறழ்வு ஆகியன பெண்மைக் குணங்களாவும், அதே நேரம் துறவு, தவம், அறிவுத் தேடல், மற்று ஆன்மீகத் தேடல் ஆகியன ஆண்மைக் குணங்களாகவும் கருதப்படுகின்றன.
ஒவ்வொரு உயிரியல் பெண்ணும் ஆன்மா/ பிரக்ஞை/ புருஷாவைக் கொண்டிருந்தாலும், அதோடு ஒவ்வொரு பெளதிக உடம்பும் பிரகிருதியின் உருவாக்கமானாலும், பல இடங்களில் சாம்கியகாரிகா பிரதி தத்துவக் கோட்பாடுகளை உடலியல் கோட்பாடுகளோடு மங்கலாக்குகிறது. உயிரியல் பெண் பிரகிருதியோடு அடையாளம் காணப்படுகிறாள், அதே சமயம் ஆண்கள் புருஷாவுக்கு இணையாக்கப்படுகிறார்கள். இப்படியாக இவை இரண்டைப் பற்றிய பார்வைகளும் ஏறக்குறைய நிரந்தரமானவையாக அமைகின்றன. மேலும், பண்பாட்டுக் கட்டமைப்புகளுக்கு இயற்கையின் ஸ்திதி வழங்கப்படுகிறது. பிரகிருதியைத் தன் ஆணுக்காக நிகழ்த்திக் காட்டும் நாட்டியக்காரி என்று சொல்லி இந்தப் பிரதி பிரகிருதியைப் பெண்மையாக்குகிறது. ஒரு நாட்டியக்காரியாக பிரகிருதி புருஷர்களிடம்/ ஆண்களிடம் இச்சையைத் தூண்டித் தீநெறிப்படுத்துகிறவள். அவள் இனப்பெருக்கம் செய்யக்கூடியவள். ஆனால் ஒழுங்கற்றவள் - ஆணியக் கோட்பாட்டின்படி கட்டுப்பாடும் ஒழுங்கும் தேவைப்படுகிறவள். மேலும், அவள் மற்றவர்களைப் பேணுகின்ற ஒரு கோட்பாடு; மற்றவர்களுக்குப் பால் தரும் பசுவைப் போலப் பரந்த உள்ளம் உடையவள். தன் நிர்வாணம் வெளிப்பட்டால் ஒடி ஒளிந்து கொள்ளும் நாணமுள்ள கன்னிப் பெண்ணோடு அவள் ஒப்பிடத் தகுந்தவள். 16 நிவேதினி

இந்த அமைப்பிலிருந்து உருவாவது என்னவென்றால் - புருஷாவின் மீது பிரகிருதியின் கட்டுப்பாடு மற்றும் தன்னுடைய முக்கிய அடையாளத்தைக் கண்டுபிடிப்புச் செய்வதற்கான புருஷாவின் போராட்டம் அதன் தொடர்ச்சியாக அவளுடைய ஈர்ப்பிலிருந்து விடுதலை - ஒரு புறம் பிரகிருதிக்கும் புருஷாவுக்கும் மறுபுறம் பெண்ணுக்கும் ஆணுக்கும் வழங்கப்பட்டுள்ள வெவ்வேறான வெளிகள் (Spaces) பிரகிருதியின் சார்பகம் உலகம். அதேவேளை, பெளதிகப் பெண்ணின் சார்பகம் வீடும் அதன் நெருங்கிய சுற்றுப்புறமும், புருஷாவின் இயங்கு கோளம் தெளிவாக இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று பிரகிருதியால் உருவாக்கப்பட்ட உலகம்; மற்றது பிரகிருதி உருவாக்கிய பொறியிலிருந்து விலகிய வேறொரு வெளி; தன்னலமறுப்புப் பாதை இட்டுச் செல்லும் பாழ்வெளி. இது உயிரியல் ஆணின் செயல்பாடாக முறை மாற்றப்படுகிறது. ஆண்களுக்கு இரண்டு வெளிகள் அளிக்கப்படுகின்றன. ஒன்று வீட்டுக்குள் - இங்கே அவர்கள் மனைவியரோடு சேர்ந்து வாழ்ந்து, பாலுணர்வின் மீது கட்டுப்பாடும் ஆளுமையும் செலுத்தி, பாலுணர்வின் இன்பங்களைத் துய்க்கிறார்கள், அதோடு எத்தனை முடியுமோ அத்தனை ஆண் குழந்தைகளைப் பெறுகிறார்கள். இது செயல்பாட்டின் தற்காலியமான அல்லது கற்பனையான தளம். ஏனென்றால், குடும்பத்துக்குள் மற்றவர்களுடன் கலந்து பழகுவது கட்டுப்படுத்துவதாகவும் எல்லைக்குட் பட்டதாகவும் அமையும்போது, இன்னும் சொல்லப் போனால் வீட்டிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு, வீட்டுப் பொறுப்புகளிலிருந்தும் குடும்பம் மற்றும் மணவாழ்க்கையிலிருந்தும் தூர விலகிய துறவுநிலை ஆன்மீகக் கோட்பாடுகளைப் பின்பற்றும் சிறப்புரிமையை ஆண்கள் பெற்றுள்ளார்கள்.
சாம்கியவையும் இந்தியத் தத்துவத்தின் வேறு சில இடங்களையும் பொறுத்தவரையில், இறுதியாக எல்லா இச்சைகளையும் கைவிட்டுக் காட்டிற்குச் சென்று சுயத்துக்கும் பிரகிருதி/ பொருள்/ பாலுணர்வுத் தூண்டலுக்கும் உள்ள வேறுபாட்டைப் பயிலுதல் என்பதே ஆண்மைத்தனம். தன் இன்றியமையாத இயல்பைப் பிரக்ஞையாகப் புத்திசாலித்தனமாக - சாராம்சத்தில் அது பெளதிகத்திலிருந்தது விலகியுள்ளது - புரிந்துகொள்ள அறிவுத் தேடலைப் பயன்படுத்துதல் ஆண்மை. பிரகிருதியிலிருந்து விடுபடுதல் என்பது குறியீட்டளவில் பெண்ணிடமிருந்தும் வீட்டிலிருந்தும் விடுபடுவதைக் குறிக்கும். இங்கே பெண்கள் அடிமைத்தனம், உணர்ச்சிகள், இச்சைகள், அறிவுத் தேடலில்லாமை, ஒழுங்கில்லாமை, மற்றும் தீநெறிப்படுத்துதல் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். ஆகவே, விடுதலையை நாடினால் கட்டாயம் பெண்/பிரகிருதி தவிர்க்கப்பட வேண்டும். ஆண்மை என்பது வீட்டிலிருந்தும் வீட்டு வேலைகளிலிருந்தும் விடுதலை என்றானால், பெண்மை என்பது வீட்டுச் சுவர்கள், மாட்டுத் தொழுவங்கள், திருமணம், ஆண் சந்ததி இவைகளுக்குள் அடைபட்டிருத்தல், மற்று கணவனுக்கும் அவன் உறவினர்களுக்கும் சேவகம்
நிவேதினி 17

Page 13
செய்தல். பெண்மை என்பது இனப்பெருக்கம் செய்யும், பேணும் வல்லமை மற்றும் கணவனுக்குச் சதா பாலுணர்வு நுகர்ச்சியளிக்கத் தயாராயிருத்தல். ஆண்மை என்பது அறிவுத் தேடலைக் குறித்தால், பெண்மை என்பது எல்லா வகையிலும் ஆணுக்குச் சேவகம் செய்வதைக் குறிக்கிறது. ஆனால், தமிழ் நாட்டுப்புறக் கதைப்பாடலான அல்லியரசாணிமாலையில் புரட்சிகரமானதும் விடுதலை யளிப்பதுமான பெண்மையின் ஒரு கட்டுமானத்தை நாம் பார்க்கப் போகிறோம்.
அல்லியரசாணி மாலை பல வகைகளில் புரட்சிகரமானது. முதலாவதாக இரண்டைக் குறிப்பிடலாம்: (அ) அது அநேகமாகப் பெண்ணின் பாலியல் கவர்ச்சியையும் உடம்பையும் பற்றிய சம்பிரதாயமான எல்லாக் கருத்தாக்கங்களையும் தூக்கியெறிகிறது; (ஆ) வலிமைமிக்க பெண்களே எல்லாவற்றையும் நிர்வகிக்கும் - ஆண்கள் அபூர்வமாகச் செயல்படு கிறவர்களாகவும் பெரும்பாலும் திருட்டுத்தனமாக நுழைகிறவர்களாகவும் காட்டப்படுகிறார்கள் - அரசை அது விவரிக்கிறது; பெண்ணின் இச்சையை அழுத்தமாகக் கூறுவதாகவும் பெண்ணை மையமாகக் கொண்டதாகவும் உள்ள கதைப்பாடல் அது.
இக்கதைப்பாடல்,நெருக்கடிக்கு ஆளாகும் குடும்ப அலகுகளின் மாதிரிகளிலிருந்து பெண்களை விடுதலை செய்யச் சனாதனச் சட்டங்களைப் புத்திசாலித்தனமாக மறுவடிவாக்கம் செய்து அவற்றைத் தலைகீழாக்குகிறது. சுரண்டும் தன்மையுடைய எதிரினப் பாலுணர்வுக் குடும்ப முன்மாதிரிக்கு ஒரு வாய்ப்பளிப்பதோடல்லாமல், தன்னிச்சையான, திறன்மிக்க, சுய அங்கீகாரம் கொண்ட ஓரின - சமூக/சிற்றின்ப அலகில் பெண்ணை வைத்து ஒரு மாற்றை இக்கதைப் பாடல் உருவாக்குகிறது. மகாபாரதத்தின் வெல்ல முடியாத நாயகனான அர்ஜுனன் சமஸ்கிருத மரபின் (முதலில் அனுபவித்துவிட்டுப் பிறகு தன் வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்பப் பெண்ணைக் கைவிடும் சாம்கிய மாதிரியின் அடிப்படையில்) சுருக்கமான வடிவமென்றால், தமிழ் நாட்டுப்புற மரபின் அடக்க முடியாத சக்கரவர்த்தினியான அல்லி, வலிமைமிக்க. தனிச் சிறப்புடைய தன் எதிரிகளான நீன்முகன், அர்ஜுனன், பீமன், கிருஷ்ணன் ஆகியோரின் ஆண்மையைத் திட்டமிட்டுத் தகர்க்கத் தன் போர்த்திறன், நுண்ணறிவு, தன் உதவியாளர்களின் வலிமை ஆகியவற்றைப் பயன்படுத்துகிறாள். இப்படி, பிரபலமான மகாபாரதக் காவியத்தின்/ புராணத்தின் பல கதைக்கூறுகள் அல்லியர சாணிமாலையில் பல பெரும் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுத் தமிழ்க் கதையாடல் சூழல்களில் அமைக்கப்படுகின்றன.
நாட்டார் மரபைப் பற்றிய ஏ. கே. ராமானுஜனின் கோட்பாட்டை அல்லியின்
கதைப்பாடல் மாதிரிப்படுத்துகிறது. நாட்டார் வழக்காற்றியல் இன்னொரு மாற்றை வழங்குகிறது. உயர் பண்பாடு என்று சொல்லப்படுவதை முறையான வழிகளில்
18 நிவேதினி

தூக்கி எறிகிறது என்று அவர் சொல்லியிருக்கிறார். பெயர் பெற்ற நாட்டார் வழக்காற்றியலாளரும் மொழிவல்லுனருமான ஏ.கே. ராமானுஜன் மூன்று வகையான நாட்டார் வழக்காறுகளை அடையாளம் கண்டிருக்கிறார்; ஆணை மையமாகக் கொண்டது, பெண்ணை மையமாகக் கொண்டது, விலங்கை மையமாகக் கொண்டது. ஒவ்வொன்றும் வெவ்வேறு பங்குவகிப்புக்களையும் செயல்முறைகளையும் தத்தம் அங்கத்தினர்களுக்கு வழங்கி, வெவ்வேறு குறிகள், விழுமியங்கள், முன்னுரிமைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இப்போதைய நம் நோக்கத்திற்கு, ஏ. கே. ராமானுஜனின் பெண்-மையக் கதைகளின் விவரணை மிக முக்கியமானது. அவர் குறிப்பிடுகிறார், 'பெண்களின் கதைகளென்று கூறும்போது நான் இரண்டு விஷயங்களை அர்த்தப்படுத்துகிறேன்; பெண்களால் சொல்லப்பட்ட கதைகள், பெண்களை மையமாகக் கொண்ட கதைகள்.' முக்கியத்துவமும் பயனுள்ளதுமான பாகுபடுத்தும் இன்னொரு வகைமையை ராமானுஜன் ஆராய்கிறார். பெண்களால் சொல்லப்படும் புராணங்கள் வீட்டையும் அதைச் சுற்றியும் அமைவதோடு பொதுப்படையான மானுட, குடும்ப உறவுகளை விவரிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட பாணியையும் செய்தி சொல்லும் முறையையும் அவை கொண்டுள்ளன. அவர் அவற்றை வீடு அல்லது உட்பகுதி சார்ந்தவை (அகம்) என்றழைக்கிறார். இதை வெளிப்புறம் அல்லது பொதுப் பகுதி சார்ந்தது (புறம்) என்பதற்கு எதிரானதாகப் பார்க்கலாம். இது (புறத்தில்) பொதுவிடத்தில் ஆண்களால் நிகழ்த்தப்படுகிறது. இது சொந்தப் பெயர்களையும் வரலாற்று, புராண, சமூக நிகழ்வுகளையும் குறிப்பாகப் போர்களையும் கொண்டுள்ளது.” நீண்ட காலமாக, கிராம நிகழ்த்துதலை வரலாற்றில், (பெண், ஆண்) எல்லாப் பாத்திரங்களும் ஆண்களாலேயே ஏற்று நடிக்கப்பட்டன. பெண்களை மையமாகக் கொண்ட சில கதைகள் ஆண்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம். அடிக்கடி, செவ்வியல் இலக்கியத்தின் நன்னெறி விழுமியங்கள் முன் பின்னாக மாற்றப்படுகின்றன. ஆண் வழிச் சமுதாயத்தால் பெண்களுக்கென்று ஏற்படுத்தப்பட்ட திருமணம், கற்பு, விசுவாசம் போன்றவைகளின் விதிகளும் விழுமியங்களும் பெண்களின் கதைகளில் வெளிப்படையாக நிராகரிக்கப் படுவதையும் ஆண் விழுமியங்களை அழிக்கப் பெண்கள் செய்யும் சதித்திட்டங்களைப் பெண் பார்வையாளர்கள் சிலாகிப்பதையும் ராமானுஜனின் நாட்டார் புராணங்களைப் பற்றிய ஆய்வு வெளிப்படுத்துகிறது.
இன்றைக்கும் தமிழ் நாட்டின் கிராமப் பகுதிகளில் மிகப் பிரபலமாயிருக்கும் நாட்டார் வழக்காற்றுப் புராணமான அல்லியரசாணிமாலை அப்படிப் பட்டதொரு நிகழ்த்தப்படும் கதைப்பாடல். இந்தப் புராணம் ஒன்றும் அபூர்வமான விதிவிலக்கல்ல என்பதைக் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வலுவான பெண்-மையப் புராணங்கள் வெளிப்பட்டுள்ளன. அவற்றில் சில வில்லுப்பாட்டுக்களாக நிகழ்த்தப்படுகின்றன.
நிவேதினி 19

Page 14
பெண்ணரசியார் கதை" போன்ற சில நாட்டார் புராணங்கள், பிற பெண்களுடன் வாழும், எல்லாம் பெண்களாலேயான கோட்டையை நிறுவி, எதிரினத் திருமணத்தில் ஒருபோதும் ஈடுபடாமல், ஆனால் தெற்கிலிருந்து வீசும் காமாந்தக, பெண்மைத்தனமான தென்றல் காற்றைத் தம் உடம்பைத் தளுவவிட்டுக் கர்ப்பமடைந்து பெண்குழந்தைகளையே பெற்றெடுக்கும் அசாதாரணமான சில பெண்களைச் சித்தரிக்கின்றன. பக்கத்து நாட்டு அரசர்களால் தாக்கப்படும்போது அவர்கள் வீரத்துடன் போரிடுகிறார்கள். தோல்வியை எதிர்கொள்ளும்போது, கர்ப்பிணிப் பெண்கள் ஆண் எதிரிகளால் சிறைபிடிக்கப்படுவதைவிடத் தங்கள் வயிற்றை விாளால் கிழித்துக் கருவை வெளிக்காட்டித் தங்களைத் தாங்களே சாகடித்துக் கொள்வதை விரும்புகிறார்கள். பிற்காலத்தில் தெய்வங்களாக்கப்பட்ட இப்படியான வீர மகளிருக்கும் அரசியருக்கும் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. வருடாந்திரத் திருவிழாக்கள் அவர்களது வீரத்தை நினைவுறுத்துகின்றன. இந்தப் புராணங்களுக்கு வரலாற்று மெய்மை இருக்கும் என்பதை மறுக்க முடியாது. வழக்கத்திலுள்ள எதிரினப் பாலுணர்வு விதிகளை எதிர்க்கும் பெண்களைச் சித்தரிக்கும் மாதர் மஞ்சரி அல்லது பெண்-மையப் புராணங்களின் தொகுப்பு என்னும் வகைமைக்குள் அல்லியரசாணிமாலை அடங்குகிறது.
புராண நாயகியின் பெயரான அல்லி என்பதிலிருந்து பெறப்பட்ட அல்லிராஜ்யம் என்ற சொல் அல்லியின் நாடு எனப் பொருள்படுகிறது. அல்லிராஜ்யம் என்னும் தமிழ்ச் சொல் சமஸ்கிருதத்தின் ஸ்திரிராஜ்ய அல்லது பெண்களின் நாடு - ஆண்களே தேவைப்படாத நாடு - என்னும் கருத்தைத் தெரிவிக்கிறது. பாலுணர்வு இன்பத்திற்கும் அல்லது ஆண்வாரிசுகளுக்காகவும் கூடப் பெண்களுக்கு ஆண்கள் தேவையில்லை. ஆண்கள் தடைசெய்யப்பட்ட வெளியைப் பெண்களுக்காகப் பெண்ணரசியார் கதை, அல்லியரசாணிமாலை ஆகியவற்றின் Guédit UIT55yrile,6ir 9 (56. Töölusir GT60T. Strirajya: Indian Accounts of Kingdoms of Women 6T6&Tp கட்டுரையில் டபிள்யு. எல். ஸ்மித் இந்தியாவின் வடகிழக்கிலும் வடமேற்கிலும் இருந்த ஸ்திரிராஜ்ய அல்லது பெண்களின் நாடு அல்லது பெண்களால் ஆளப்பட்ட சமூகங்களைப் பற்றிய செய்திகளை விவரிக்கிறார். ஸ்மித்தைப் பொறுத்தவரையில், 'ஸ்திரிராஜ்ய என்பதில் உள்ள மிகப்பொதுவான கருத்தாக்கம், அவை தம் இனத்தையே இறையாக்கிக் கொள்ளும் பெண் மந்திரவாதிகளால் ஆளப்பட்டன என்பதாகும். தங்கள் பாலியல் கவர்ச்சியின் மூலம் அப்பெண்கள் தங்கள் நாட்டுக்கு வரும் ஆண்களின் சக்தியை உறிஞ்சி, பெரும்பாலும் அவர்களை விலங்குகளாகவோ பறவைகளாகவோ மாற்றிவிடுகிறார்கள். மேலும், ஸ்மித் பெண்களின் நாடுகள், பெண்கள் ஆதிக்கம் செலுத்திய நாடுகளைப் பற்றிய பல சீனச் சான்றாதாரங்களைப் போகிற போக்கில் தருகிறார். அவரைப் பொறுத்தவரையில் இதில் இரண்டு வகைகள்: (1) புராண அல்லது கனவுருப்புனைவு நாடுகள், (2) வரலாற்று ஆவணங்களில் உள்ள நாடுகள்.
20 ت நிவேதினி

முதல் வகையில், 'ஆண்களற்ற பகுதியில் பெண்கள் வாழ்கிறார்கள்; மனிதக் குரங்குகள், நாய்கள், அல்லது பேய்களுடன் புணர்ந்து, ஒரு குறிப்பிட்ட ஆறு அல்லது கிணற்றில் குளித்தோ அல்லது அதன் நீரைப்பருகியோ அல்லது காற்றைத் தங்கள் உடம்பைத் தழுவவிட்டோ கர்ப்பமடைகிறார்கள்."
பாலியல் கவர்ச்சியைப் பெண்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதைப் பற்றி நாட்டார் கதைப்பாடலான அல்லியரசாணிமாலை மெளனம் சாதிக்கிறது. அதேசமயம், அவர்களது தேர்ந்தெடுப்புக்குரிய துணைகள் ஆண்கள் அல்ல என்பதை உறுதியாகக் குறிப்பிடுகிறது. இன்னொரு கதைப்பாடலான பெண்ணரசியார் கதை, தெற்கிலிருந்து வீசும் மென்மையான தென்றல் தங்களது உடம்பைத் தீண்டுவதால் கர்ப்பமடையும் அரச குடும்பத்துப் பெண்களைப் பற்றிய, திரும்பத் திரும்ப வரும், கதைக்கருக்களைக் கொண்டுள்ளது. இவ்விரு கதைப்பாடல்களிலும் வரும் பெண்கள் ஆண்களைத் தங்களுக்கு இரையாக்கிக் கொள்கிறவர்களல்ல. மனித உருவிலோ அல்லது விலங்கு உருவிலோ ஆணின் நுழைவு தடைசெய்யப்படுகிறது. ஸ்மித்தைப் பொறுத்த வரையில், அமேசான்" கதைக்கரு இந்தியாவில் எடுபடாமல் போனது அது இந்தியக் கதைக்கருவே அல்ல என்பதன் நிரூபணம். அமேசான் கதைக்கரு கிரேக்கர்களிடமிருந்து எடுக்கப்பட்டதாக இருக்கலாம். ஆனால் இந்தியப் பிரதிகள் இதைப் பற்றி எதையும் கூறாததினால் இது தொடர்பாக எதுவும் சொல்வதற்கு வழியில்லை. சீன அல்லது மற்ற ஆசிய மூலங்களிலிருந்தும் அது வந்திருக்கலாம். அவை ஆண் இன முன்முடிவுகளுக்கும் அச்சத்திற்குமான இணை வெளிப்பாடுகள் என்று ஸ்மித் முடிவு செய்கிறார். அடிப்படையில் பெண்கள் சிற்றின்பக் கட்டுப்பாடற்றவர்கள் என்று நம்பப்பட்டதால், நிலங்கள் பெண்கள் மட்டுமே வசிக்கக் கூடியவையாக இருக்குமானால், ஆண்களின் கட்டுப்பாட்டிற்குள் அவர்கள் இல்லையென்றானால், அவர்கள் தங்கள் இனத்தையே இரையாக்கிக் கொள்ளும் பாலியல் கவர்ச்சியுடையவர்களாகியிருப்பார்கள். ஸ்திரிராஜ்ஜியத்தை விவரித்த கதை சொல்லிகள் அதன் ராணுவ விஷயங்களைவிடக் காமாந்தக விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்கள் என்னும் மற்றொரு குறிப்பையும் ஸ்மித் தருகிறார்.
சமஸ்கிருத இலக்கியத்தின் பெருமரபைப் பொறுத்தவரையில் ஸ்மித்தின் முடிவுகள் சரியாக இருக்கலாம். ஆனால் நாட்டார் கதைப்பாடல்களின் பகுப்பாய்வு பெண்கள் ஆளும் நாடுகள் பற்றிய ஒரு மிக மாறுபட்ட கதையாடலைத் திறக்கிறது. தமிழ்க் கதைப்பாடல்கள் பெண்கள் ஆளும் நாடுகள் பற்றி அடிமைத் தளை அகற்றும் ஒரு விரிவான புரிதலைக் குறிப்பவை. இக்கதைப்பாடல்கள் பெண்வழிச் சமூகங்கள் வாழ்ந்த, வரலாற்றின்படியும் பெண்கள் ஆட்சிபுரிந்த மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் தோன்றியவை. மதுரையைத் தலைநகரகக்
நிவேதினி -- - SSSSS 21

Page 15
கொண்ட பாண்டிய நாட்டில் அல்லியின் புராணம் களம் கொண்டுள்ளது. பாண்டிய நாட்டில் அரசு அதிகாரத்துடன் பெண்களுக்கிருந்த தொடர்பின் காரணமாக விஜயா ராமசுவாமியைப்" பொறுத்தவரையில் இது முக்கியமானது. History of South India நூலில் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி தரும் குறிப்பின் மீது அவர் நம்மைக் கவனப்படுத்துகிறார்: வாய்மொழி மரபைப் பொறுத்தவரையில், பாண்டிய நாடு ஒரு பெண்ணால் நிறுவப்பட்டது. ஆகவே அல்லி நாடு என்னும் சித்தரிப்பு, இம்மண்ணைச் சார்ந்தது; கிரேக்கத்திலிருந்தோ மற்ற ஆசியப் புராணங்களிலிருந்தோ கடன் வாங்கப்பட்டதல்ல. மேலும், பெண்களை வலிமைமிக்கவர்களாக, போர்க்கலைகளில் கைதேர்ந்தவர்களாக, சக பெண்களுடன் சேர்ந்து வாழ்கிறவர்களாக, ஒருவரிடமிருந்து ஒருவர் ஆதரவும் ஊட்டமும் பெறுகிறவர்களாக, ஆண்களின் இருப்போ, அறிவுறுத்தல்களோ, அல்லது ஆளுமையோ தேவையற்றவர்களாகச் சித்தரிப்பதில் தமிழ்க் கதைப்பாடல்கள் தனித்தன்மை வாய்ந்தவை. பெண்கள் ஆளும் நாட்டில், பாலியல் கட்டுப்பாடற்ற பெண்கள், ஆண்களின் பாலுணர்வுச் சக்தியை உறிஞ்சும் பெண்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. தமிழ் கதைப்பாடல்கள் நாயகியரின் வீரம், வலிமை, போர்த் தந்திரங்கள் ஆகியவற்றையும் அவர்களுடைய சக வீராங்கனைகளையும் மையப்படுத்துகின்றன; அவர்களது காமாந்தக வாழ்வையல்ல.
நாட்டார் கதைப் பாடல்கள் ஒராசிரியர் பிரதிகளல்ல. ஒரு மக்கள் கூட்டத்தின் சமூக, பண்பாட்டு வரலாற்றில் அவை கூட்டு நிகழ்வுகள். மற்ற ஜாதிகளையும் இனங்களையும் சேர்ந்த பெண்களும் ஆண்களும் நாட்டார் புராணங்களின் செழுமைக்குப் பங்களிப்புச் செய்திருக்கலாம். மகாபாரதத்தின் பெரும் செவ்வியல் அளவுகோள்களிலிருந்து அல்லியரசாணிமாலை பலவற்றைப் பெற்றாலும், அது உள்ளூர் கதைக்கருக்கள், புராணங்களின் ஆழமான செல்வாக்கிற்கு ஆட்படுகிறது. இவ்விடத்தில் ராமானுஜனை நினைவு கூர்வது பயனுள்ளதாக இருக்கும். அவரைப் பொறுத்தவரையில், செவ்வியல் மற்றும் நாட்டார் வழக்காறுகளை முரண்பட்ட பதங்களாகப் பார்க்கக் கூடாது. ஆனால் வடிவத் தொடர்ச்சியின் ஒரு பகுதியாக அவற்றை நாம் பார்க்கலாம்; அவ்வடிவங்களின் இறுதிப் புள்ளிகள் எதிரெதிர் பதங்களாக நமக்குத் தோன்றலாம். அல்லியரசாணி மாலையைப் பொறுத்தவரையில், செவ்வியல் காப்பியமும் நாட்டார் வழக்காறுகளும் எதிரெதிரானவையே. தமிழ்க் கதைப்பாடல் அல்லி என்னும் பெண்ணை வெல்ல முடியாதவளாகச் சித்தரிக்கும் பெண்-மையம் கொண்டது. அதேசமயம், அர்ஜுனனை வெல்ல முடியாத நாயகனாகக் கொண்ட சமஸ்கிருத இதிகாசம் ஒரே சீராக ஆண்-மையம் கொண்டது.
பல்வேறு வகையான தலைப்புகள், கதைக்கருக்கள், மொழிநடைகள், மற்றும் கதையாடல் பாணிகளைக் கொண்ட மற்ற புராணங்களுடன் நாட்டார் புராணமான அல்லியரசாணிமாலையும் 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.
22 நிவேதினி

அடிப்படையில் அதை எழுதிய ஆசிரியர் என்று ஒருவர் இல்லாவிட்டாலும், அது முதல்முறையாகப் பதிப்பிக்கப்பட்டபோது, அப்படைப்பின் பெரும் வீச்சின் காரணமாக அதை ஒர் ஆசிரியர் மீது ஏற்றிக் கூறும் இலக்கியத் தேவை இருந்தது. உண்மையில் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான புகழேந்திப் புலவர் பெரும் எண்ணிக்கையிலான தமிழ்க் கதைப்பாடல்களின் ஆசிரியராக்கப்பட்டார். தமிழ்ச் செவ்வியல் மரபிலிருந்து ஒரு புகழ்பெற்ற கவிஞரைத் தேர்ந்தெடுப்பது வசதியானதாக இருந்திருக்கலாம். புகழேந்தி சொந்தமாக எழுதிய பாடல்கள் வேறுவிதமான நடையை வெளிப்படுத்துகின்றன.
இக்கதைப்பாடல் எல்லாம்வல்ல அல்லியை மையப்படுத்துகிறது. இன்றைக்கும் ஏகச் சக்கரவர்த்தினயாக மீனாட்சி வணங்கப்படும் மதுரையில் அவள் கதை நடக்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, இது ஒன்றும் விதிவிலக்கான நாட்டார் புராணமல்ல. மாறாக, திருமணமாகாத, குழந்தையற்ற, கச்சிதமாக வரையறுக்கப்பட்ட ஆண்பாத்திரங்களை ஏற்கும், பெண்களுக்கென்று விதிக்கப்பட்ட நடைமுறை நெறிகளை ஏற்க மறுக்கும் பெண்களால் சிறப்பிக்கப்படும் புராண வகைமைக்குள் அது அடங்குகிறது. தமிழ்ச் சமூகத்தில் அதிகமாக வலியுறுத்தப்படும் பெண்மையின் நாற்குணங்களான அச்சம், நாணம், வெகுளித்தனம், மென்மை ஆகியன இக்கதைப் பாடல்களில் புறக்கணிக்கப் படுவதில்லை. ஆனால் அவை இடையறாமல் கேலிக்குள்ளாக்கப்படுகின்றன. அவற்றுக்குப் பதிலாகக் கற்பில்லாமை, கூர்மதி, சூழ்ச்சித்திறன், வீரம், தைரியம், கல்வி, எதிரினத் திருமண மாதிரிகளை எதிர்த்தல், தலைமைக்குணமும் நிர்வாகத்திறனும் பெற்றிருத்தல் ஆகியவை தீவிரம்ாகப் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. பெண்களுக்கும் ஆண்களுக்கும் வெவ்வேறு வெளிகள் என்னும் செவ்வியல் மற்றும் பிராமண இலட்சியங்கள் துணிவுடன் குலைக்கப்படுகின்றன.
ஆண்மை சார்ந்த செயல்பாடுகளை வெற்றிகரமாகக் கைக்கொள்வதன் மூலம் உலகம் (ஆண்களுக்கு) வீடு (பெண்களுக்கு) என்னும் தனித்தனியானதும்பாலினம் சார்ந்ததுமான பிராமணிய வலயங்களை மீறுபவர்களும் புனிதமான பெண்மைக்கு வழங்கப்பட்டுள்ள எல்லா மரபுகளையும் தூக்கியெறியவர்களுமான பெண்களைப் பாராட்டுவதன் மூலம் இந்தப் புராணங்களின் வகைமை ஒரு வேறுபட்ட விழுமிய அமைப்பை உயர்த்திப் பிடிக்கிறது. வீடு மற்றும் புற வெளிகள் இரண்டையும் பெண்கள் உரிமையாக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் போரிடுகிறார்கள்; விரிவான வேட்டைப் பயணங்களுக்கும் செல்கிறார்கள். அவர்கள் எதிரினத் திருமணங்களைத் தவிர்க்கிறார்கள். மாற்றாக அரசியல், சமூக, பொருளாதாரத் தளங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள். சிறுமியாக இருக்கும்போது அல்லி பள்ளிக்குச் சென்று, எழுதவும் படிக்கவும் கற்கிறாள்; கணக்கில் நிபுணத்துவம்
நிவேதினி 23

Page 16
அடைகிறாள்; போர்க்கலைகளைப் பயிற்சி செய்கிறாள்; தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் படிக்கிறாள், எழுதுகிறாள். சாதாரண மக்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு, அன்றைய உலகில் இது ஒரு சமூக யதார்த்தமா என்று உறுதி செய்வதற்கு வழியில்லை. இந்தக் கற்பனை உலகின் இருப்பே வாசகர்களுக்குக் கிளர்ச்சியையும் புத்துணர்வையும் உண்டாக்குகிறது.
ஜாதிகளும் புவியியல் பகுதிகளும் சமயக் கிளைகளும் இந்தியப் பெண்களைச் சிக்கலான குழுக்களாகப் பிரிக்கின்றன. ஆனால், இங்கு நாம் பிராமணரல்லாத தமிழ்ப் பெண்களைக் குறிப்பிடுகிறோம். எல்லா இந்தியப் பெண்களையும் ஆழமாக இணைக்கும் ஒரு முக்கியமான காரணி, தனிமைப்படுத்தப்பட்ட,பாலினம் சார்ந்ததும் வெகுவாகப் பாலினம் சார்ந்த ஒழுக்கமுறைமைகளைக் கொண்டதுமான வாழ்க்கை முறையே. நவீன மற்றும் மரபான இந்தியாவின் செயல்பாட்டின் ஒன்றிணைந்த ஒரு பகுதியாகப் பாலின ரீதியாகத் தனிமைப்படுத்தல் இருந்து வந்துள்ளது. இந்தியச் சமூகத்தின் ஒரு பெரும் பகுதி கூட்டுக் குடும்பங்களில் வசிக்கிறது." இது பெண்களுக்கிடையே வலுவான பிணைப்பைப்பரப்புகிறது. வேகமான தொழில் மயமாக்கலையும் நகரமயமாக்கலையும் மீறிப் பண்பாட்டு, சமூக, மத, மற்றும் குடும்ப வெளிகளைப் பாலினம் சார்ந்து பிரித்து வைப்பதைத் தேசம் தொடர்கிறது. நவீனச் சிறு குடும்பங்கள் எதிரினப் பாலியல் உறவுகளைச் சுற்றிக் கட்டமைக்கப்படும்போது, பாலினம் சார்ந்த ஒழுக்கமுறைமைகளைக் கொண்ட வெளிகளின் இருப்புக்கு மரபான கூட்டுக்குடும்பம் உகந்தது.
வெளியை அவ்வாறு அடையாளப்படுத்துவதையும் சுருக்குவதையும் பெண்களின் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்துவதால் அவர்களை வலிமையற்றவர்களாகச் செய்வதாகவோ அல்லது பெண்கள் பரஸ்பர ஆதரவைப் பரிமாறி ஓரினச் சமூக, காமாந்தக வெளிகளை உருவாக்குவதால் பெண்களைச் சமூகத்தில் வலிமையுள்ளவர்களாகச் செய்வதாகவோ புரிந்து கொள்ள இயலும், இரண்டு புரிதல்களுமே வரலாற்று ரீதியாகச் சரியானவையே. பாலின ரீதியாகப் பெண்களைத் தனிமைப்படுத்துதல் பெண்களை மற்றப் பெண்களுடன் கட்டுப்பாடற்றுப் பிணைய அனுமதிக்கிறது என்ற பார்வையை நான் ஏற்றுக் கொள்கிறேன். பெண்களும், ஆண்களும் வெவ்வேறு விதமாக உலகைப் பார்த்து அதன் வெளிகளைப் பயன்படுத்தும் பாலின ரீதியான உலகாயதப் பார்வைகளைக் கட்டமைப்பது பாலின ரீதியாக வெளியைத் தனிமைப்படுத்துதலின் ஒரு பண்பு. கர்நாடகாவில் பெங்களூரின் புறப்பகுதிக் கிராமங்களில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றில் சீமந்தினி நிரஞ்சனா மக்களின் வாழ்க்கையை நெறிப்படுத்தும் ஒளகே - ஒரகே (உள்ளே - வெளியே) என்பதன் வலுவான வெளி - கதையாடலை விவாதிக்கிறார்." இவ்வெளிகள் பாலினங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பெண்மை, பெண்ணுடம்பு, ஒழுக்கம், மற்றும் பெண்களின்
24 நிவேதினி

செயல்பாடுகள் ‘உள்ளே' என்பதற்குள் அடங்கியுள்ளன. பெரும்பாலான சமயங்களில், பெண்களது வாழ்க்கையின் மையமான வீடாக ‘உள்ளே’ சித்திரிக்கப்படுகிறது.
சீமந்தினியின் ஆய்வைப் பக்கத்து மாநிலமான தமிழ் நாட்டுக்கும் விரிவுபடுத்தலாம். இம்மாநிலமும் பெண்ணின் உள்/அகம் என்பதற்கும் ஆணின் வெளி/புறம் என்பதற்கும் இடையே வலுவான பிரிவினையை ஏற்படுத்துகிறது. மேல்வர்க்கப் பெண்கள், உயர் ஜாதிப் பெண்கள், உள்வெளியைத் தங்களுக்கு உரிமையுடையதாக்கிக் கொள்ளும் வேலைக்குப் போகாத பெண்கள் ஆகியோரிடம் வீட்டைப் பற்றிய ஈடுபாடு பரவலாக இருந்தது. இங்கே, படுக்கையிலிருந்து எழுதல், குளித்தல், துவைத்தல், சமைத்தல், சாப்பிடுதல், உறங்குதல், மற்றும் குழந்தைகளை வளர்த்தல் என்று பல வேலைகளில் பெண்கள் இணைந்து பங்கேற்கிறார்கள். அப்படிப்பட்ட குடும்ப அமைப்புகளில், பெண்கள் தங்கள் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளை மற்றப் பெண்களுடன் சேர்ந்து அனுபவிக்கிறார்கள்; தங்கள் இன ஆண்களுடன் அல்ல. மானுடவியலாளர் மார்க்கரெட் எக்னாரைப் பொறுத்த வரையில்", பெண்களுக்கிடையில் ஒற்றுமையின் வலுவான ஒரு பிரக்ஞை இந்த வெளியில் உருவாகிறது. தங்கள் இனத்தில் மனைவியர் என்ற முறையில் பெண்களின் முக்கியமான செயலாக ஆண் வாரிசுகளை உருவாக்குவது என்பதாக இருந்தாலும், இந்தப் பகுதிக்குள், பெண்கள் ஒருவருக்கொருவர் காமாந்தக உறவுகளை வளர்த்துக் கொள்கிறார்கள் என்று எண்ணுவது சாத்தியப்படாத ஒன்றல்ல. ஆகவே, பெண்களுக்கிடையிலான காமாந்தகப் பிணைப்பைப் பற்றிப் பெரும் மெளனம் நிலவுகிறது.
அல்லியரசாணிமாலை பெண்களுக்கான ஒரினச் சமூக வெளியே எதிரொலிக்கிறது. பெண்களுக்கிடையிலான காமாந்தகப் பிணைப்பைப் பற்றி இக்கதைப்பாடல் மெளனம் சாதித்தாலும், தன் தோழியர்களுடன் மட்டுமான பிணைப்புக்கான நாயகி அல்லியின் இச்சையை வாசகர் உணரச் செய்கிறது. மீனாட்சி தன் தோள் சதையைப் பிய்த்து அல்லிக்குளத்தில் வீச, அல்லி அதிலிருந்து பிறக்கிறாள். அல்லி மலரில் இருந்து இறைவி மீனாட்சி குழந்தையை எடுத்து, குழந்தைக்காக கடுந் தவம் புரிந்த ஆயிரம் பாண்டிய அரசர்களுக்கு அளித்தாள். இறைவி,
அல்லி மலரின் மீது அழகான ஆண் குழந்தை இருக்கிறது.
அது ஆணும் பெண்ணும்.
அதை எடுத்துக் கொள்ளுங்கள்." என்று கூறி மறைகிறாள்.
நிவேதினி 25

Page 17
தொடக்கத்திலிருந்து பெண் குழந்தையான அல்லி ஆணாகவும் பெண்ணாகவும் சுட்டப்படுகிறாள். இறைவி மீனாட்சி தன் ஆசையின் மூலம் அல்லியைப் படைக்கவில்லை. மாறாகத் தன் உடம்பிலிருந்து படைக்கிறாள். கதைப்பாடல் நெடுக வேண்டுமென்றே குழந்தையின் பாலினம் அடிக்கடி மங்கலாக்கப்படுகிறது. அவள் பெண்மைமிக்கவள், அழகானவள்; பெண்களை மட்டுமே காதலித்து அவர்களுடன் பிணைப்பைக் கொண்டிருக்கிறாள். அவளுடைய அரசியல் ஆலோசகர்கள் பெண்கள்; பெண்கள் அவளுக்கு அந்தரங்கச் சேவை புரிகிறார்கள். தனக்கு அடங்கிய கொடிய பாம்புகளையும் அவள் வழிபடுகிறாள். ஏ. கே. ராமானுஜனைப் பொறுத்த வரையில், “ஒரு ஆண்மையைக் கதையில்வரும் பாம்பு, நீங்கள் விரும்பினால் கொல்லப்படவேண்டியது; ஏனென்றால் அது ஒரு போட்டிக்குரிய ஆண்குறி. பெண்கள் முதன்மைப்பாத்திரங்களாகவும் பொதுவாகக் கதையைச் சொல்பவர்களாகவும் உள்ள பெண்மையக் கதைகளில் பாம்புகள் காதலர்கள், கணவர்கள், மாமன்மார்கள், கொடையாளிகள், உதவி செய்கிறவர்கள்” அல்லி வயதான ஒரு பிராமணனுடைய அழகான இளம் மனைவியிடம் காதல் கொண்டு அவளுக்கும் தாம்பத்திய வாழ்க்கைக்கு உதவாத அவள் கணவனுக்கும் அடைக்கலம் தருகிறாள். எல்லாம் பெண்களாலேயான அவள் கோட்டைக்குள் நுழைய அப்படிப்பட்ட தோற்றம் தரித்து வந்தவர்கள் கிருஷ்ணனும் அருச்சுனனும் என்று பிற்பாடுதான் உணர்கிறாள். குதிரைகளையும் யானைகளையும் செலுத்துகிறவளாகவும் மூர்க்கமாகப் போரிடுகிறவளாகவும், வேட்டையாடு கிறவளாகவும், போரில் இரக்கமற்றுக் கொல்கிறவளாகவும் அல்லியை இப்புராணக் கதைப்பாடல் சித்தரிக்கிறது. ஏமாற்றுக்காரனான அர்ச்சுனன் உள்படத் தன் எதிரிகள் எல்லோருக்கும் அல்லி பயம் ஏற்படுத்துகிறவளாகவும், அவர்களுக்குச் சவால் விடுகிறவளாகவும் இருக்கிறாள். அர்ச்சுனன்
நான் உன் தொண்டைக்குத் தூண்டில் முள் உன் நாபிக்குக் கூரான ஆணி மண்டைக்குக் கோடரி உன் நெஞ்சுக்கு இரும்பு உலக்கை நான் உன் கழுத்துக்குக் கீழ் உள்ள வாள் தலையணைக்குக் கீழுள்ள பாம்பு.” என்று சொல்லி வஞ்சகமாக அல்லியின் கழுத்தில் தாலி கட்டியிருந்தான்.
அல்லியின் நாட்டையும் சிற்றின்ப வேட்கையால் தூண்டப்பட்ட நாயகனான அர்ச்சுனனின் அலைந்து திரிதல்களையும் பிரித்துக் காட்ட ‘உள்ளே’ மற்றும் வெளியே என்னும் உருவகங்களை இக்கதைப்பாடல் பயன்படுத்துகிறது. எல்லாம் பெண்களேயான கோட்டையைப் பெற்றுள்ள அல்லி'உள்ளே வசிக்கிறாள். உள்ளே நுழைய, தாக்க, கைப்பற்ற, கோட்டையை அடைய, அதன் அரசியைச் சீரழிக்க இடையறாது விரும்பியபடி அர்ச்சுனன் வெளியே இருக்கிறான். ஆனால் அல்லி
26 நிவேதினி

கோட்டையின் உள் வெளியின் வரம்புக்குள் மட்டும் கட்டுப்பட்டிருக்கவில்லை. அவள் குழந்தையாக இருக்கும்போது வித்தைகளைக் கற்கப் பள்ளிக்குச் செல்லும்போதும் பெரும் வேட்டைக்குச் செல்லும்போதும், தன் தந்தையின் நாட்டைக் கைப்பற்றியவன் மீது போர் தொடுக்கும்போதும் வஞ்சகமாகத் தன்னை மணம்புரிந்த அர்ச்சுனனோடு போரிடத் தன் பெண் படையுடன் தெற்கத்தியத் தீபகற்பத்திலிருந்து வடக்கே செல்லும்போதும் வெளிப்பகுதியிலும் நுழைகிறாள். அதேபோல, கோட்டை மற்றும் அரசியின் உள்வெளிக்குள் அர்ச்சுனன் நுழைகிறான். ஆனால் ஏமாற்று, கபடம் மற்றும் அமானுஷ்ய உதவி ஆகிவற்றால்தான் அவனுக்கு அது சாத்தியமாகிறது.
வெல்ல முடியாத பாண்டவ இளவரசனும் வெற்றிகரமான காண்டீபத்தைப் பெற்ற இணையற்ற வில்லாளியுமான அர்ச்சுனன் மகாபாரதத்தின் மகத்தான நாயகன். ஆனால், அல்லியின் புராணத்தில் அவன் சுயநலமிக்கவனாக, கட்டாயப் படுத்துகிறவனாக, கடமை தவறுகிறவனாகச் சித்தரிக்கப்படுகிறான். தன் தோழனான கிருஷ்ணனின் உதவியோ மாயமோ இல்லாமல் அவனால் பகுத்தறிவுள்ள அல்லது பகுத்தறிவில்லாத எந்தச் செயலையும் செய்ய முடியாது. பல மனைவிகளையும் வைப்பாட்டிகளையும் பெற்றிருந்தாலும், சிற்றின்ப வேட்கையுடன் பிற பெண்களின் பின்னால் அலைகிறான். ஆண்மைமிக்க நடவடிக்கைகளான போர் அல்லது வேட்டை போன்றவற்றில் அவனுக்கு ஈடுபாடில்லை. அதோடு அவன் அல்லியிடம் போரில் தோற்கிறான். எல்லாம் பெண்களேயான கோட்டைக்குள் நுழைய முடியாத தன் தோல்வியை அவனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. தன் ஆசை குலைக்கப்படும்போது, தன்னுடைய பாலுணர்வுக்கு அல்லியை இரையாக்கிக் கொள்கிறவனாக மாறுகிறான்.
தன் மூத்த அண்ணன் யுதிஷ்டிரனும் தங்களுடைய பொதுமனைவியான திரெளபதியும் அரண்மனையின் உப்பரிகையில் உடலுறவில் ஈடுபட்டிருப்பதைப் பார்க்க நேரும் அர்ச்சுனன் அந்தப்பாவத்தைக் கழுவ அல்லி பேராட்சிபுரியும் மதுரை உள்ளிட்ட எல்லாப் புனிதத் தலங்களுக்கும் யாத்திரை சென்றுவர முடிவு செய்கிறான். யுதிஷ்டிரனும் பாண்டவர்களின் தாயான குந்தியும் தங்கள் தோழனும் இறைவனுமான கிருஷ்ணனை அழைத்து அர்ச்சுனனுக்குத் துணையாகச் சென்றுவர இரைஞ்சுகிறார்கள். இருவரும் அந்த நீண்ட யாத்திரையைத் தொடங்கி இறுதியாக மதுரையின் புறப்பகுதியை அடைந்து, ஒரு முத்து வியாபாரியிடமிருந்து திருமணமாகாத வலிமைமிக்க அல்லியைப்பற்றிய எல்லாவற்றையும் கேட்டறிகிறார்கள். அர்ச்சுனன் அல்லியிடம் காதல்கொண்டு அவள் தன்னைத்திருமணம் செய்துகொள்ள நிர்ப்பந்திக்க உதவுமாறு கிருஷ்ணனைக் கட்டாயப்படுத்துகிறான். அல்லியைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லிக் கேட்டால் ஏற்படும் பின்விளைவுகளைக் குறித்து முத்து வியாபாரி அர்ச்சுனனை எச்சரிக்கிறான் :
நிவேதினி 27

Page 18
அவள் குதிரைச் சாட்டையால் மணமகனை விளாசுவாள். திருமணத்திற்கு வரும் சொந்த பந்தங்களும் சாட்டையால் அடிக்கப்படுவார்கள். யாராவது திருமணம்” என்று உச்சரித்தாலே அவர்களுடைய கண்கள்
தோண்டப்படும். அரண்மனை வாயிலில் ஆணின் வெட்டப்பட்ட தலையைக் காட்சிக்கு
வைத்திருக்கிறாள். பறக்கும் காகங்கள் தலைதூக்கிப் பார்க்கும் தைரியம் பெறமாட்டா, ஆணின் காற்றுகூட அரண்மனைக்குள் நுழைய முடியாது. அவன் ஆண் குதிரையின் மீதல்ல பெண் குதிரையின் மீதேறுகிறாள். அவள் படை பெண்களால் ஆனாது.
தன் வலிமையையும் அந்தஸ்தையும் திருமணம் பாழாக்கிவிடும் என அல்லி கருதுவதாக அந்த முத்து வியாபாரி அர்ச்சுனனுக்குத் தெரிவிக்கிறான். தன் கைப்பிடிக்க ஆசைப்படும் ஆணுக்குத் தீங்கிழைக்க அல்லி சபதம் செய்துள்ளாள். அவள் அரண்மனையில் போரில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவள் அரண்மனைக்குள் நுழைய எந்த ஆணுக்கும் தைரியமில்லை. ஆண்கள் அங்கே நுழைவதைத் தடுக்க முக்கியமான இடங்களில் பெண் போராளிகள் காவலுக்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லாம் பெண்களேயான அந்த நகரத்தில் பெண்களே நிர்வாகிகள். அல்லியின் நண்பர்கள் பெண்கள். அவள் ஆலோசகர்கள் பெண்கள். அவள் தச்சர்கள், குருமார்கள், தூக்கு தண்டனையை நிறைவேற்றுபவர்கள், வேட்டைக்காரர்கள், பாம்பு பிடிக்கிறவர்கள் அனைவரும் பெண்கள். அரசு யானைகளும்கூடப் பெண் யானைகளே.
அல்லியை மறந்துவிடுமாறு அர்ச்சுனனுக்குக் கிருஷ்ணன் அறிவுரை கூறுகிறான். திருமணம் வேண்டுமென்று அர்ச்சுனன் வலியுறுத்துவதாயிருந்தால், அவன் சொந்த நாட்டில், ஜாதியில், இனத்தில் பெண் பார்ப்பதாகக் கூறுகிறான். ஆனால் அர்ச்சுனன் வேதனைக்குள்ளாவதால், இறுதியாகக் கிருஷ்ணன் அவனுக்கு உதவு முடிவு செய்கிறான். பெரும்பாலும் அர்ச்சுனன் சிரிப்புக்குரியவனாக, மூடனாக, ஏறக்குறைய ஒரு கோமாளியாகச் சித்தரிக்கப்படுகிறான். அல்லி வேட்டைக்குப் போகும்போது அர்ச்சுனன் ஒரு தோழியைப் போல வேடமிட்டு அவளைத் தொடர்கிறான். அவள் எய்த அம்புகளை எடுத்து வந்து தருகிறான். அவள் காலைப் பிடித்துவிடுகிறான். அவள் ஓய்வெடுக்கும்போது கதைகள் சொல்லி மகிழ்விக்கிறான். ஆனால், சுயதம்பட்டமான தன் மகத்துவத்தின் மீது அவள் கவனத்தைத் திருப்புவதற்காக அர்ச்சுனன் தன் சுயசரிதையைச் சொல்லத் தொடங்குகிறான். ஓர் ஆணின் கதையைக் கேட்டு, அல்லி கோபம் கொண்டு கதை சொல்லியின் முகத்தைப்
28 நிவேதினி

பார்க்கிறாள். அவனுடைய ஆண்மையை வெளிக்காட்டும் ஒரு மெல்லிய மயிர்க்கற்றையைப் பார்க்கிறாள். அல்லி தானே சுதாகரித்துக் கொள்வதற்குள் அர்ச்சுனன் காற்றைப் போலக் காட்டுக்குள் பாய்கிறான்.
அர்ச்சுனன் அல்லியின் அரண்மனைக்குள் நுழைய முயல்கிறான். ஆனால் அல்லியின் பெண் பாதுகாவலர்களும் தோழிகளும் அவனை வெளியே தூக்கி எறிகிறார்கள். கிருஷ்ணனின் தெய்வீகச் சக்தியால் ஒரு பெரிய பாம்பின் உருவத்தை அடைந்து அல்லியின் கோட்டைக்கு ஒரு பாம்பாட்டியால் தூக்கிச் செல்லப்படுகிறான். அந்தப் பாம்பாட்டி வேறு யாருமல்ல, வேடம் தரித்த கிருஷ்ணனேதான். பாம்பால் அல்லி வசியப்படுத்தப்படுகிறாள். அதை ஓர் இரவு தன்னிடம் விட்டுச் செல்லுமாறு அல்லி பாம்பாட்டியைக் கேட்கிறாள். வஞ்சகமாக அர்ச்சுனன் அவள் படுக்கையறைக்குள் நுழைந்து, அல்லியைப் பீடிக்கத் தூக்க தேவதைக்குச் சைகை செய்கிறான். அவள் தூங்கும்போது அர்ச்சுனன் அவளைக் கற்பழித்துக் கர்ப்பமடையச் செய்கிறான். பின்னர், அர்ச்சுனன் ஒரு பெண்ணுருவில் அரண்மனைக்குள் நுழைந்து விடுகிறான். நடுஇரவில், அல்லி உறக்கத்திலிருக்கும் போது, அவன் அவள் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டு, தன் சொந்த ஊருக்குக் கிருஷ்ணனுடன் கிளம்புகிறான்.
அல்லி விழித்தெழுகிறாள். தன் கழுத்திலுள்ள தாலியைப் பார்த்துச் சீற்றம் கொள்கிறாள். கத்தியால், வாளால், மேலும் பலவழிகளிலும் அதை வெட்டியெறிய முயன்று அவள் தோல்வியடைகிறாள். கோபம்கொண்டு, அர்ச்சுனனின் சொந்த நாடான ஹஸ்தினாபுரத்தின் மீது போர்தொடுக்க முடிவுசெய்கிறாள். பெண்களாலான அவள் படை தமிழ், தெலுங்கு, கன்னட மற்றும் முஸ்லிம் வீராங்கனைகளை உள்ளடக்கியிருந்தது. அவளுடைய படையும் கர்பிணியான அல்லியும் வெல்லமுடியாதவர்கள். அர்ச்சுனனும் அவனுடைய தெய்வீகத் தோழனும் அவமானத்தால் போர்க்களத்தை விட்டு ஓடுகிறார்கள். படுகாயமடைந்த கிருஷ்ணனின் உடலெங்கும் ரத்தம் வழிகிறது. அவன் தோல்வியை ஒப்புக்கொள்கிறான். பணியவைக்க முடியாத பாண்டவச் சகோதரனான பீமன் தன் ஆயுதங்களைக் கீழே எறிந்து விட்டு, உயிருக்கு பயந்து ஓடுகிறான். அர்ச்சுனன் தன் தம்பி சகாதேவனிடம் ஒடிப்போய், எப்படியாவது ஏதாவது செய்து அல்லியைச் சிறைபிடிக்குமாறு கூறுகிறான். சகாதேவன் கடவுளர்களின் மறைமுக ஆதரவோடு பல அறைகளையும் தடுப்புகளையும் கொண்ட ஒரு மாயக்கூண்டை உருவாக்குகிறான். சண்டையின் போது சகாதேவன் அல்லியை அதற்குள் இழுத்துச்சிக்க வைக்கிறான்.
கூண்டுக்குள் அடைப்பட்டு அதை உடைத்து வெளியேற விரும்பும் மூர்க்கமான சிங்கமாக அல்லி சித்தரிக்கப்படுகிறாள். ஆனால், அல்லி தன் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு அர்ச்சுனனைத் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அவள்
நிவேதினி 29

Page 19
தன் நாட்டுக்குத் திரும்பிப்போக அனுமதிக்கப்படுவாள் என்று அர்ச்சுனனின் மனைவியரில் ஒருத்தியான திரெளபதி அவளிடம் கூறுகிறாள். தன் கணவனின் மகத்துவம், வீரம், பராக்கிரமம் ஆகியவற்றைத் திரெளபதி பெருமையாகப் பாட்டின் மூலம் அல்லிக்கு எடுத்துச் சொல்கிறாள். அல்லி அவை ஒவ்வொன்றையும் மறுத்துக் கேலி செய்கிறாள். ஆனால், விடுதலை அடைவதற்காக அவள் தன் ஆயுதங்களை ஒப்படைக்கிறாள். அர்ச்சுனன் மீண்டும் ஒருமுறை அல்லியை மணக்கிறான். உடனடியாகத் தன் படையினருடன் அல்லி மதுரைக்குக் கிளம்புகிறாள். தன் தந்தையான அர்ச்சுனனைப் பழிவாங்கக் கற்பிக்கப்படப்போகிற ஒரு மகனை அல்லி தக்க காலத்தில் பெற்றெடுக்கிறாள்.
அல்லி தன் பெற்றோர்களுடன் கிராமத்தில் வசிக்கிறாள். அவள் பள்ளிக்குச் சென்று எழுதவும் படிக்கவும் கற்கிறாள். மதிய உணவை அவசரமாகச் சாப்பிட அவள் வீட்டுக்கு வருகிறாள். மேலும் அதிகம் கற்றுக்கொள்ள மீண்டும் அவள் பள்ளிக்குத் திரும்புகிறாள். இப்படியாக, அல்லி ஒன்பதாம் வயதில் தன் ஒன்றுவிட்ட சகோதரனான நீன்முகன் தகாத முறையில் அபகரித்த ராஜ்ஜியத்தைப் பற்றி அறிகிறாள். அல்லி அவனைப் போரில் சந்திக்கிறாள். ராஜ்ஜியத்தை மீட்டு எல்லாம் பெண்களாலான பேரரசை உரிமையோடு நிறுவுகிறாள். அதில் ஆண்கள் புற எல்லையில் இருந்து, பெண்களிடமிருந்து ஆணைகளைப் பெற்று அவர்களைச் சார்ந்து வாழ்கிறார்கள்.
இந்தப் பெண்- வெளி நன்கு கட்டமைக்கப்பட்டதாகவும் தன் தேவையைத் தானே நிறைவேற்றிக் கொள்ளக்கூடியதாகவும் சித்தரிக்கப்படுகிறது. அது அர்ச்சுனனால் தொல்லைக்குள்ளாகிறது. ஒழுங்கற்ற பிரகிருதியின் உலகத்தில் ஒழுங்கை நிறுவுவதைத் தன் செயல்பாடாகக் கொண்ட சாம்கிய புருஷாவுடன் அவனை நாம் இனம் காணலாம். ஆனால் இந்தப் புராணத்தில், அல்லியின் மீது கொண்ட காமந்தக இச்சையால் ஆட்கொள்ளப்பட்ட அர்ச்சுனன் ஒழுங்கற்ற தன்மையின் பெரும் பிரதிநிதியாக இருக்கிறான்.
அல்லியின் மீது கொண்டஇச்சையால் ஆட்டிப்படைக்கப்படும் அர்ச்சுனன் கிருஷ்ணனின் உதவியை நாடுகிறான். வேட்டையாடுதலில் அல்லியின் திறமையை அறிந்த கிருஷ்ணன் அவளுடைய நாட்டைச் சுற்றியுள்ள காடுகளின் கொடிய மூர்க்கமான மிருகங்களை வசியத்துக்கு ஆட்படுத்தி அவள் நாட்டைச் சுற்றி நிறுத்துகிறான். வீராங்கனையான, கன்னிகழியாத அரசியின் சில துளி ரத்தத்தின் மூலம் தன் இச்சையை தீர்த்துக் கொள்ள விரும்பி அவளைக் கொன்று விடவும் அர்ச்சுனன் தயாராக இருப்பதை இக் கொடிய மிருகங்கள் உருவகப்படுத்துகின்றன. காட்டில் இரை தேடி அலையும் விலங்குகளால் அச்சுறுத்தப் பட்டு, காட்டு வாசிகள் அல்லியின் உதவியை நாடுகிறார்கள். ஆண்மைக்கு எடுத்துக் காட்டான, வீரச்
30 நிவேதினி

செயலான வேட்டைக்குச் செல்ல அல்லி தீர்மானிக்கிறாள். இது ஒரு நாட்டின் மீது உரிமை கோரியோ அல்லது அடிமைப் படுத்தவோ அல்ல; ஆனால் இறையாண்மையின் கடமையை நிறைவேற்ற.
ஏராளமான ஆயுதங்கள் தரித்த பெண் போராளிகளின் வலிமையான சுற்றத்தோடு, அல்லி ஆரவாரமாகக் காட்டிற்குச் செல்கிறாள். அர்ச்சுனன் பெண் வடிவம் கொண்டு, அவனுடைய உண்மை வடிவம் கண்டுபிடிக்கப்படும் வரைக்கும், அல்லியுடன் செல்கிறாள். இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆண்மையும் பெண்மையும் தலைகீழாதல். அல்லி பிரகிருதியை பிரதிநிதித்துவப் படுத்தினால், சாம்கிய வரையறைக்கு அவள் நேர் எதிராகிறாள். ஆணியக் கோட்பாடான தன்முனைப்பால் உந்தப்பட்ட அர்ச்சுனன் ஒரு போதும் சுயகட்டுப்பாடோடிருப்பதில்லை. பிராமணிய மாதிரியில் மிக மதிப்பு வாய்ந்ததாகப் போற்றப்படும் பாகுபடுத்திப் பார்க்கும் வல்லமையை அடியோடு கைவிட்டு கனவுருப்புனைவு மற்றும் மாயத்தோற்றம் தருகிற உலகில் அவன் இருக்கிறான். செவ்வியல் சம்பிரதாயத்தில், இச்சை, காமாந்தகம், மாயத்தோற்றம் ஆகியன பெண்மையோடு இனம் காணப்படுகின்றன. ஆனால் இந்த நாட்டார் புராணச் சம்பிரதாயத்தில் அது அங்கதமாகத் தலை கீழாக்கப்படுகிறது. அர்ச்சுனனின் ஒவ்வொரு இச்சையும் கனவுருப்புனைவும் ஒழுங்கோடமைந்த பெண் ராஜ்ஜியத்தில் பெரும் கொந்தளிப்பை விளைவிக்கின்றன. அவனுடைய கனவுருப்புனைவு அல்லியைக் கற்பழித்துக் கர்ப்பமடையச் செய்கிறது. அவனது காமாந்தகம் அவனை நிலைகொள்ளாதவனாக்குவதால் தன் எண்ணத்தை ஈடேற்றிக்கொள்ள அவன் அடிக்கடி தன் பாலினம், வயது, ஜாதி, வர்க்கம் மற்றும் வடிவம் தோற்றம் இவற்றை மாற்றிக் கொள்கிறான். விஷயங்களைப் பாகுபடுத்தி உணரும் திறன் அடியோடு இல்லாததினால், அல்லியைச் சிக்க வைக்கும் வழிகளில் அவன் வெறியோடு கவனம் குவித்தாலும், தன்னைத் தானே சிக்கவைத்துக் கொண்ட மாய வலையை அவனால் காணமுடிவதில்லை.
நெறி பிறழும் அர்ச்சுனனின் பாகுபடுத்தி உணரும் திறன் இல்லாமை, வெளிச்சத்திற்குப் பதிலாக இருட்டையும் அறிவுக்குப் பதிலாக அறியாமையையும் தேடுவது ஆகியவை கதையாடலின் தொடக்கத்திலிருந்தே அங்கதப் படுத்தப் படுகின்றன. தன் மதிப்பிற்குரிய அண்ணனும் தங்கள் பொது மனைவியும் உடலுறவில் ஈடுபட்டிருக்கும் காட்சியைத் தற் செயலாகக் கண்ணுற்ற பாவத்தில் இருந்து கழுவாய்த் தேடியும் நோன்பாகவும் பிரயாணம் மேற்கொள்ள வேண்டியவனான அர்ச்சுனன் தன் புனித யாத்திரையில் புனித நதிகளில் நீராடுகிறான். ஆனால், தன்னிச்சை மற்றும் கனவுருப்புனைவில் மேலும் தன்னைத் தானே மூழ்கடித்துக் கொள்கிறான். பாகுபடுத்தி உணரும் திறன் உள்பட எதை இழந்தும் அடைய வேண்டிய முத்தாக அல்லியை அவன் கருதுகிறான். எல்லாம்
நிவேதினி 31

Page 20
வல்ல கிருஷ்ணன் அவன் பக்கம் இருக்கிறான். அப்படி இருந்தும், அவனிடமிருந்து அர்ச்சுனன் வேண்டும் ஒரே அறிவுரை அல்லியை வஞ்சகத்தாலோ அல்லது கட்டாயத்தாலோ எப்படி வெற்றி கொள்வதென்பதைப் பற்றித்தான்.
சாம்கிய மாதிரியின்படி, பெண் தீநெறிப்படுத்த, ஏமாற்ற, கட்டுப்படுத்த, மற்றும் அழிக்க ஆற்றல் பெற்றிருக்கிறாள். ஆனால் இந்த நாட்டார் புராணத்தில், கன்னியான வீர அரசியை அவளுடைய ஒரினச்சமூக/ ஓரின காமாந்தக வெளியின் உள்ளேயே கற்பழிப்பதில் முடிவுறும் உடல் ரீதியான வன்முறைத் தொடரைத் தொடங்கிவைப்பது. அல்லி கட்டுப்படுத்தப்படுவது அர்ச்சுனன் அவள் கழுத்தில் கட்டும், அவளால் கழற்ற முடியாத, மாயத்தாலியின் அடையாளத்தின் வழியாக உறுதிப்படுத்தப்படுகிறது . அந்தக் கயிறு அவள் உடம்பின் மீதும் அவளுக்குள் அவன் ஊன்றிய குழந்தையின் உடம்பின்மீதும் அவனுக்குள்ள உரிமையை நியாயப்படுத்தப்படுகிறது. அவன் வாரிசு அல்லியின் உள் வெளியின்/ வீட்டில் சிக்குண்டு இருக்கிறது. வெளிப் பார்வைக்கு, பாகுபடுத்தி உணரும் திறனுள்ள ஆண் அறிவுக்காகவும் விடுதலைக்குமான தன் தேடலுக்காகத் துறக்க வேண்டிய குடும்பம் என்ற வெளியின் மிகச் சரியான அடையாளமாக அந்த தாலிக்கயிறு விளங்குகிறது.
பிற்பாடு கதையாடலில், அர்ச்சுனனின் வேண்டுகோளால் போர்க்களத்தில் சகாதேவனால் எழுப்பப்பட்ட மாயக்கூண்டின் உள்வெளிக்குள் அல்லி சிறைப்படுத்தப்படுகிறாள். இப்படியாக மட்டுமே அல்லியின் வலிமை கட்டுப்படுத்தப்படுகிறது. அல்லியை ஏமாற்றும் கற்பழிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் அர்ச்சுனனின் செயல், கோமாளித்தனமானவையும் ரத்தம் தோய்ந்தவையுமான அம்சங்களைக் கொண்டதாக விரிவடைகிறது. அவை தடித்துக்கொண்டே போகும் நோய்க்கூறான கனவுருப்புனைவின் பொய்க்கோலத்தில் பிறரையும் பங்குகொள்ள நிர்பந்தப்படுத்துகின்றன. அர்ச்சுனனுடைய குடும்பம், படை, அவனுடைய சொந்த ஊரான ஹஸ்தினாபுரம் ஆகியவற்றின் தனித்த மற்றும் கூட்டுப் பகுத்தறிவை அந்தக் கனவுருப்புனைவு மங்கலாக்குகிறது.
சாம்கியச் செல்வாக்கு ஆட்பட்ட பாலின ஒழுங்குமுறைகளாலான உலகப் பார்வைகளைக் கேலிக்குட்படுத்தித் தலைகீழாக்குவதில், குடும்பம் மற்றும் உலகம் இவைகளுக்கிடையிலான சமூக எல்லைக்கோடுகளை மங்கச் செய்வதில், ஆண்மை, பெண்மை தொடர்பான பழங்காலத்தைச் சேர்ந்த மாறாத கருத்தாக்கங்களின் புரட்சிக்கரமான மறுவுறுவாக்கத்தில், அதோடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவும் தொடர்ந்தும் இந்துப் பண்பாட்டின் மீது ஆழமான செல்வாக்கு செலுத்திவரும் பிரகிருதி மற்றும் புருஷ இவற்றின் கோட்பாடுகளைத் துணிச்சலாகக் கட்டுடைப்பதில் அல்லியர சாணிமாலைப் புராணத்தின் ஆற்றல் அடங்கியுள்ளது.
32 நிவேதினி

10.
11.
குறிப்புகள்
Chandogya Upanishad, VIII, 14.1, Gita Press, Gorakpur, 2000.
Brahmavaiyartapurana of Krishnadvaipayana Vyasa, Part II, J.L.Shastri (Ed.), Motilal Banarasidass, New Delhi, 1986, Mantras 28-40.
The Tatva Kaumudi, Vachaspati Mishra's Commentary on the Samkhya Karikas, Tr. into English by Ganganath Jha, Oriental Book Agency, Poona, 1965.
Alliyarasanimalai, Pukalenti Pulavar, Longman Green and Co., Madras,
1914.
The Collected Essays of a A.K.Ramanujan, Oxford University Press, New Delhi, 1999.
Ibid.
Another Harmony: New Essays on the Folklore of India, Eds. Stuart H.Blackburn and A.K.Ramanujan, University of California Press, 1989.
Pennarachiyar Katai, Eds. K.Jayakumar and D.Boominaganathan, Tr. into English by Mark Joseph, Institute of Asian Studies, Chennai, 1996.
Vidyarnavandanam, Essaysin HonourofAsko Parpola, Studies Orientalia, Eds. Kalus Karttunam and Pettri Koskikallio, Finnish Oriental Society.Helsinki.
Ibid.
Vijaya Ramaswamy, The Taming of Alli: Mythic Images and Tamil Women
in the Journal of the Inter-University Centre of Humanities and Social Sciences, Indian Institute-for Advanced Study, 5, No. 2, 1998, pp.71-84.
நிவேதினி 33

Page 21
12, Irawati Karve, Kinship Organisation in India, Deccan College, Poona, 1953.
13. Seemanthini Niranjana, "Femininity, Space, and the Female Body: An Anthropological Perspective in Embodiment in Essays on Gender and Identity, Ed. Meenakshi Thapan, Oxford University Press, 1997.
14. Margaret Egnor, “On the Meaning of Sakti to Woman in Tamil Nadu” in
Powers of Tamil Woman, Ed. Susan S. Wadley, Manohar, New Delhi, 1991.
* அமேசான்:மேற்கத்தியக் கதைகளில் வரும் ஆண்மைமிக்க, சண்டை போடும் இயல்புள்ள
பெண் பாத்திரம்.
* இக்கட்டுரையின்மீதுஎன்னைக் கவனப்படுத்திய அரவிந்தனுக்கும் தமிழாக்கத்தின் முதல் படிவத்தைச் செம்மைப்படுத்திய பேருதவிபுரிந்த பேராசிரியர் ஆர்.சிவகுமார் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
- நஞ்சுண்டன்
34 நிவேதினி

வேறு கதையாடல்களின் நோக்கில் : பெண்களினது எழுத்து சுயமரியாதை இயக்கம் பெண்ணிலைவாத மொழிபெயர்ப்பில் தொக்கிநிற்கும் அரசியல்
- கே. சிறீலதா
ஒரு பிரதான கல்வி நிறுவனத்தின் ஆங்கில விரிவுரையாளர் பதவிக்கான நேர்முகத் தேர்வின்போது "அப்ப உங்களுடைய நூலின் தலைப்பு இந்தியாவில் பெண்கள் எழுத்து தொகுதி - 3 என்று பெயரிடப்படுமா?” என ஒருவர் கேலியாகக் கேட்டார். சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த பெண்களின் எழுத்தை நான் மொழி பெயர்த்து வெளியிடவிருந்த நூலைப் பற்றியே அவர் குறிப்பிட்டார். சுயமரியாதை இயக்கம் என்ற சாதியத்திற்கு எதிரான இயக்கத்தை பெரியார் ஈ. வே. ரா. 1926ல் தொடக்கி வைத்தார். “ஆகப் பெண் எழுத்தாளர்களின் படைப்புக்கள் மட்டும் தான் உங்கள் தொகுதியில் இடம்பெறுகின்றனவா? பெண்களின் வாழ்க்கை பற்றி அதே நுண்ணறிவின் ஆழத்துடன் ஒர் ஆண் எழுத முடியாதா? ஏன் தாகூரைப்பாருங்கள்! பெண்களின் எழுத்தில் அப்படி என்ன விசேடம் இருக்கின்றது? ஒர் ஆணும் பெண்ணிலைவாதியாக இருக்கலாம்தானே?” என்று நேர்முகத் தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த முன்னவரின் சகா இடைமறித்துக் கூறினார்.
நேர்முகத் தேர்வுக் குழுவினரின் பகைமை உணர்வு நகைச்சுவை என்ற உருமறைப்பில் வெளிப்பட்டிருந்ததோடு ஆண் பெண்ணிலைவாதியை அவர்கள். தமக்குத் துணையாக வரவழைத்ததைத் தவிர, வேறு இரண்டு அம்சங்கள் எனக்கு முக்கியமாகப்பட்டன. முதலாவதாக “பெண்கள் எழுத்து’ என்பது 'அந்தப் பெண்ணிலைவாதிகளின் ஆட்சிப் பரப்பு என்ற ஓர் எடுகோள் எனக்குத் தோன்றிற்று. இலக்கியத் துறைகளில் கடமையாற்றும் எம்மவரின் ஆட்சிக்கு அது உட்பட்டதல்ல என்பதும் அக்கூற்றில் தொக்கி நின்றது. இரண்டாவதாகப் பெண்களின் எழுத்திற்கு இலக்கியப் பெறுமதி வழங்குவதற்கு அவர்கள் தயாரில்லை என்பதுபோலவும் எனக்கும் தோன்றிற்று. அந்த எழுத்தின் அரசியல் சுடர்முனையைத் தமக்கு இசைவாக்கிக் கொள்வதற்கு அதை ஒரு பகிடிக்கான விடயமாகத் தட்டிக் கழிப்பது போலவும் எனக்குத் தென்பட்டது. 'மாபெரும் இலக்கியம் என்ற எண்ணக்கருவினைப் பாதிக்கவல்ல சங்கடமான கேள்விகளைத்
தட்டிக் கழிப்பதற்கு அது ஒரு பயன்முனைப்பான உபாயமேயாகும்.
மூலம் ஆங்கிலம் மொழிபெயர்ப்பு : எ. ஜே. கனகரட்ணா
நிவேதினி 35

Page 22
என்னைப் பொறுத்தவரையில் இந்நிகழ்வு கற்கை நெறிகளுக்கிடையிலான வேலிகள் என்ற பிரச்சினையை முன்னிலைப்படுத்தியது. இப்பிரச்சினை பத்து ஆண்டுகளுக்கு முன்னரே அமைதியாக இறந்து விட்டதாக நான் எண்ணியிருந்தேன். ஆனால் இப்பிரச்சினை எனது வேலைத்திட்டத்தில் ஈடுபட்டிருந்த காலத்தின்போது பகிரங்கமாகவும் அந்தரங்கமாகவும் இடைக்கிடை மேலே எழத்தான் செய்தது. ஒரு குறிப்பிட்ட எழுத்தாக்கத்திற்கு ஒதுக்கிக் கொடுக்கப்பட வேண்டிய இடம் எதுவென்ற உந்துதல் நிகழ்காலத்தில் விளைபொருளே என்று நான் இனம் கண்டேன்.நான் தொகுத்துக் கொண்டிருந்த நூல்-சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த பெண்கள் எழுத்தின் மொழிப் பெயர்ப்பு இதற்கு இடப்பட்டிருந்த தலைப்பு தேங்காயின் மறுபாதி சுயமரியாதை இயக்க வரலாற்றை பெண்கள் எழுதுதல் இதனை ஒரு மொழிப்பெயர்ப்பு நூல் என்பதா அல்லது பெண்கள் எழுத்துத் தொகுதி என்பதா? (பின்னையதென்றால் அது சில வகைகளில் இலக்கிய நூலே) அல்லது சுயமரியாதை வரலாற்றின் சில ஆவணங்கள் என்பதா? இந்த ஆவணங்கள் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள சுயமரியாதை வரலாறுகளுடன் சாரும் அதே வேளையில் அந்த வரலாறுகளை ஒரளவிற்கு மாற்றம் செய்யவும் கூடும்.
ஒரு புறம் “பெண்கள் எழுத்து,” “இலக்கியம்’ ’மொழிப் பெயர்ப்பு ஆகிய தலைப்புக்கள் வெளிப்படையாகவே சில எல்லைக்கட்டுப்பாடுகளை திணித்தன. நேயர்முகத்தேர்வுக் குழுவினர் என்னை ஒர் இலக்கிய மாணவியாகக் கருதி உண்மையான இலக்கியம் மீது அக்கறை கொள்ளாது பெண்கள் எழுத்து என்ற துறைக்குள் வழிதவறிச் சென்றதாகக் கருதும் அதேவேளை வெளியிட்டாளர்களும் நன்கொடை வழங்கும் முகவர்களும் நான் செய்த வேலையை மொழிப்பெயர்ப்பு என்று முத்திரையிட்டனர். பிரதேச இந்தியமொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்படும் இலக்கியங்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு இருந்தமை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் நான் ஈடுபட்டிருந்த திட்டம் இந்திய எழுத்து என்னும் தலைப்பிற்குள் அடங்காது என்பதை நான் உணர்ந்தேன். என்னை ஒரு மொழிப்பெயர்ப்பாளர் என்று வர்ணிப்பதில் தவறில்லாத போதிலும் எனது படைப்பு ஒரு மொழி பெயர்ப்பு நூல் என்று முத்திரையிடுவதில் ஆபத்துக்களையும் நான் உணர்ந்தேன். மொழிப் பெயர்ப்பு என்பதை சற்று தரம் குறைந்த செயற்பாடாகவே பெரும்பாலானோர் கருதினர். ஒரு சொல்லுக்கு இன்னொரு சொல்லைப் பதிலீடு செய்வதுதான் மொழிப்பெயர்ப்பென்றும் இரு மொழிகள் தெரிந்தால் போதுமானது என்றும் அவர்கள் கருதினர். ஆனால் மொழிப்பெயர்ப்பை ஒரு கனதியான செயற்பாடாகக் கருதியவர்கள் கூட அதாவது அது வெறுமனே இயந்திரப் பாங்கான செயற்பாடல்ல என்பதை உணர்ந்தவர்கள் கூட மொழி பெயர்ப்பாளனின் அடிப்படைப் பொறுப்பு மூல நூலின் கருத்தைச் சிதைக்காத ஒரு மொழி பெயர்ப்பை தர வேண்டும் என்பதோடு மொழி
36 நிவேதினி

பெயர்க்கப்படும் இலக்கு மொழியில் வாசிப்பவர்களுக்கு அழகியல் ரீதியாக உவப்பாக அது இருக்க வேண்டும் என்று கருதினார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதனால் வேறு ஏதும் எண்ணத்தோடு எடுத்துக்காட்டாக, பெண்ணிலைவாதி என்ற முறையில் மொழிபெயர்ப்பது அவர்களைப் பொறுத்தவரை கற்பனை செய்யமுடியாத ஒன்று. அவ்வாறு செய்வதாயின் அதை தெய்வ நிந்தனையாக அவர்கள் கருதியிருப்பார்கள். ஏனென்றால் அவ்வாறு செய்வதாயின் இலக்கிய நிறுவன பீடாதிகளால் அழகியல் என்று வரையறுக்கப்பட்ட அம்சம் சாளரங்களின் ஊடாக வெளியே தூக்கி எறியப்பட்டுவிடும். மொழிபெயர்ப்பு மூலத்தை அச்சொட்டாக பெயர்த்துள்ளதா இல்லையா என்ற கலந்துரையாடல்களில் நாம் புதைந்துவிட்டதாக நான் வெகுவிரைவில் உணர்ந்தேன். சில மொழிபெயர்ப்பு வல்லுநர்கள் எனது ஆங்கில பொழிபெயர்ப்போடு தமிழ் மூலத்தையும் பக்கம் பக்கம் வைத்து வெளியிடவேண்டும் என்று ஆலோசனை கூறினர். பூதக் கண்ணாடியைப் பயன்படுத்தி அறிஞர்கள் எனது மொழிபெயர்ப்பைச் சொல்லுக்குச் சொல் ஆராய்ந்து ஏற்க முடியாத வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் சிவப்புமையால் கோடிடுவதையும் நான் கற்பனை செய்து பார்த்தேன் உடனே எனக்கு உதறல் எடுத்தது. உலகத்திற்கு இதுவரை தெரியாத பெண்களின் எழுத்தை மீண்டும் கண்டுபிடித்து அதனை பெண்ணிலைவாதி என்ற அடையாளத்தின் ஊடாக மறுவியாக்கியானம் செய்தமை முற்றாக தட்டிக்கழிக்கப்பட்டு மறைக்கப்பட்டது. எனக்குத் தரப்பட்ட ஆணை சொல்லுக்குச்சொல் அச்சொட்டாக அமையும் ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்பதாகும். இதன் எடுகோள் யாதெனில் மொழி என்பது மிகத் தெளிவான ஒன்று என்பதும் மூலநூல் அர்த்த ரீதியாக நிலையான மாறாத ஒன்று என்பதுமே. மொழி பெயர்ப்பு வல்லுனர்கள் இதனை உறுதிப்படுத்துவற்காக அவர்களுடைய பார்வைக்கு நான் மூலத்தினைச் சமர்ப்பிக்க வேண்டும் குறிப்பாக வெளியீட்டாளர்களைப் பொறுத்தவரை மொழி பெயர்ப்பு என்ற பதம் நடுநிலையான, அரசியல் சாராத ஒன்றாகப் பொதுவாகக் கொள்ளப்பட்டது என்பதை நான் உணர்ந்தேன். தேஜஸ்வினி நிரஞ்சனா 1992இல் எழுதிய மொழி பெயர்ப்பின் இடஅமைவு : வரலாறு, பின் அமைப்பியல் வாதமும் காலனித்துவச் சந்தர்ப்ப சூழலும் என்ற நூலில், அவர் வால்டர் பெஞ்சமினின் கருத்துக்களைப் பயன்படுத்தி மூலத்தின் ஸ்திரமி ன்மையையும் அதன் துணுக்குத் தன்மையையும் வெளிப்படுத்துவதே மொழி பெயர்ப்பாளனின் பணி என்று வாதிடுகின்றார். இலக்கு மொழியில் புரியும்படியான தன்மையைவிட மூலத்தினைச் சிதைக்காது அச்சொட்டாக அப்படியே தருவதையே பலர் அழுத்துவதை அவர் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார். மொழி பெயர்ப்போடு சம்பந்தப்பட்ட பெரும்பாலான அறிஞர்கள் மெய்ம்மை, அறிவு, எடுத்துக் கூறல் போன்ற எண்ணக்கருக்கள் சிக்கலற்றவை என்று கருதுவதையும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
நிவேதினி 37

Page 23
நான் முன்பு கூறிய கதைக்கு மீண்டும் வருகின்றேன். மூலத்தைப் பொறுத்தவரை எனது பொறுப்புணர்வு வேறுவகையானது என்பதை வற்புறுத்தினேன். ஏற்கனவேயுள்ள சுயமரியாதை வரலாறுகள் பெரும்பாலும் ஈ. வே. ரா. பெரியாரை மையப்படுத்தியுள்ளன" என்பதையும் அவற்றை மாற்றியமைக்கும் வகையில் எனது நூல் பெண்ணிலைவாத அரசியல் குறுக்கீடாக அமையும் என்பதையும் நான் வற்புறுத்தியபோது அவர்கள் அதனைப் புரிந்து கொண்டதாக எனக்குப்படவில்லை.
பெண்களின் எழுத்து என்ற எண்ணக்கருவை ஏற்றுக் கொண்டவர்கள் எனது நூலை வாசித்தபோது நிலைமை ஒரு சிறிதளவுதான் தேறியிருந்தது. சரியோ பிழையோ பெண்களின் எழுத்து என்ற பதம் இலக்கியம் சார்ந்த ஒன்றாகத் தொனித்தது. எனது தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ள யாவும் இலக்கியம் சார்ந்தவை என்று கூறமுடியாது. அதாவது இலக்கியம் சார்ந்தது என்பது அழகியல் உணர்திறன் கொண்டது என்ற குறுகிய வரையறையைப் பயன்படுத்தினால் என்னுடைய நூலுக்குப் பொருந்தாது. எடுத்துக் காட்டாக முதலாவது பகுதி பெரும்பாலும் சஞ்சிகைகளில் வந்த கட்டுரைகளையும், பேச்சுக்களையும் உள்ளடக்கியிருந்தது. இவை மரபுரீதியான வரலாற்று மூலங்கள் என நீங்கள் கொள்ளலாம். தொகுதியில் எஞ்சிய பகுதி புனைவுகளையும், சிறுகதைகளையும் உள்ளடக்கியிருந்தது. நான் மொழி பெயர்த்த பேச்சுக்களும் கட்டுரைகளும் ஜெயகேசரியின் சோஷலிச உலகில் பெண்கள் நீலாவதியின் “சடங்குகள்”, “விதவையாவது பெண்ணின் தலைவிதியா?”, “படித்த பெண்கள் முன் வருவார்களா?” “விடுதலை இன்பம் எமக்கு இல்லையா?”, “பெண்களும் சுயமரியாதைக் கொள்கைகளும்; மரகதவல்லியின் “பெண்களின் முன்னேற்றம்; பெண்கள் இயக்கம்’, "ஆதிதிராவிடர்களின் துயரங்கள்": இவையாவற்றிலும் சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் கருத்தியலும் அறிவொளி காலத்திற்குரிய முன்னேற்றம் பற்றிய கருத்துக்களும் பிரதிபலித்தன). இலக்கியம் சார்ந்த படைப்புக்களோடு ஒப்பிடும்போது அவற்றின் இலாவகத் தன்மையை இவை கொண்டிருக்கவில்லை. இந்த இலக்கியப் படைப்புக்கள் சில வருமாறு: கமலாட்கூழியின் “எமக்கு என்ன நிகழப் போகின்றது”, “கருட சேவைக்கிரியை", ஜானகியின் "வானம் மழையைப் பொழியாது", "தேங்காய்ப்பாதி”, “புல்லுக் கட்டு”, “எது பெரிதாக வளர்ந்தது? - மோதிரமா உடம்பா?” ஜானகி எழுதிய சுயசரிதைப் பாங்கான தேங்காய்ப்பாதி' என்ற படைப்பிலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் பந்தியினைச் சிறிது கவனிக்கவும்:
“எனது அயல் வீட்டுக்காரியான சுப்பம்மாளுக்கு இருபத்தெட்டு வயதிருக்கும். நான் அப்போதுதான் திருமணமாகியிருக்கும் 19 வயதுப் புதுமணப் பெண். ஏறக்குறைய ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் எனது கணவனோடு இணைந்தேன். எனக்கு மாமியார் இல்லை. எனது புதிய வீட்டில் சுப்பம்மாள்தான்
38 நிவேதினி

எப்பொழுதும் எனக்குத்துணை. இருவரும் எமது வேலைகளை முடித்துவிட்டு வெற்றிலைகள் வைப்பதற்கான பெட்டிகளை இழைக்கத் தொடங்குவோம். சிலவேளைகளில் அரிசி, பருப்பு போன்றவற்றை நாம் சுத்தம் செய்வோம். ஆனால் ஒன்றும் செய்யாது சும்மா வம்பளந்து கொண்டிருக்கும் நாட்களும் இருந்தன. அத்தகைய ஒரு நாளில் தொலைவில் வெடிகள் வெடிக்கும் ஒலிகள் எமக்குக் கேட்டன.” (குமரன் ஜுலை - ஆகஸ்ட் 1930 தொகுதி 9 இதழ் 1)
இவ்வரிகளின் முறைசாராப் பண்பும், இயல்புத்தன்மையும் தொனியும், அன்றாட அனுபவத்தில் வேரூன்றி இருத்தலும் இப்படைப்பை எம்முடன் நெருக்கமான உறவைக் கெள்ளச் செய்கின்றது. இந்த நெருக்கத்திற்குப் பதிலாக திருச்சி நீலாவதியின் “விதவைகளாவது தலைவிதியா?” என்ற கட்டுரையில் நாம் வலுவான வாதப் பிரதிவாதங்களைக் காணலாம். அதனை அக்கட்டுரையிலுள்ள பின்வரும் பந்தி எடுத்துக்காட்டுகின்றது.
“ஆண்களுக்கு ஒரு நீதியும் பெண்களுக்கு ஒரு நீதியும் என்பதில் இந்தியா பேர் போனது. வைதீக ஆண்கள் பால் வேறுபாட்டிற்கு ஏற்ற வகையில் நீதி வழங்குவதில் ஒரவஞ்சகமுள்ளவர்கள்.” பிறப்பினாலேயே பெண்கள் தாழ்ந்தவர்கள் என்று கருதப்படுகின்றனர். எனவே பெண்களை சட்டம் அலட்சியம் செய்வதில் வியப்பெதுவும் இல்லை. எமது மக்களின் மனங்களை தெய்வங்களும் கோயில்களும் தலைவிதி என்ற எண்ணக்கருவும் ஆக்கிரமித்துள்ளன. ஒருவரின் தலைவிதிப்படிதான் எல்லாம் நடைபெறுகின்றன என்றும், அதற்கு மாறாக எதுவும் நடைபெறாதென்றும் எமது மதியால் தலைவிதியை வெல்ல முடியாதென்றும் அவர்கள் கூறுகின்றனர். தலைவிதி என்ற ஒரு சொல் எத்தனையோ பேரின் வாழ்க்கையை அழித்துவிட்டது பிராமணர்கள் எவ்வாறு எதற்கெடுத்தாலும் “எமது சமயம் தாக்கப்பட்டு விட்டது” என்று கூறுகின்றார்களோ, அதேபோல எமது மக்களும் எதற்கெடுத்தாலும் தலைவிதியில் பழியைப் போடுகிறார்கள். தலைவிதி எம்மை அடிமைகளாக்கி விட்டது. சுயமரியாதை இயக்கத்தினர் என்ற முறையில் முதன் முதலில் இப்பிரச்சினையைத்தான் நாம் எதிர்த்துப் போராட வேண்டும். தமது கணவரை இழந்த பெண்கள் விதவைகள் என்று முத்திரை குத்தப்பட்டு மூலையில் ஒதுங்கியிருப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். நாவிற்குச் சுவையான உணவு அவர்களுக்குக் கிடைப்பதில்லை. நல்ல ஆடைகளை அணிவதற்குக் கூட அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. தென்றலைக்கூட அவர்கள் அனுபவிக்க முடியாது. அவர்களது வாழ்க்கை முழுவதும் ஒரு குறுகிய எல்லைக்குள்ளேதான். அந்த எல்லைக்குள் அவர்களுக்கு சந்தோஷத்திற்கோ, இன்பம் அனுபவிப்பதற்கோ இடமில்லை. துயரமும் நிறைவேறாத ஆவலுமே அவர்களது கதி. அவர்களுடைய வாழ்க்கை நரக வாழ்க்கைக்கு ஒப்பானது. உலகத்தார் பார்க்காது அவர்கள் தங்கள்
நிவேதினி 39

Page 24
முகங்களை மறைத்துக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அவர்களைச் சுற்றிவர ஒரே களியாட்டமும் மகிழ்ச்சியும். ஆனால் அவற்றில் அவர்கள் பங்குபற்றவோ அவற்றை அனுபவிக்கவோ முடியாது. (நீலாவதி, 1930)
இத்தகைய ஒரு திட்டத்தை நாம் மேற்கொண்டபோது சாராம்சத்தில் வேறுபட்ட மூலங்களை (சுயமரியாதை இயக்கம் தொடர்பாகப் பெண்களின் அரசியல், இலக்கியம் தனிப்பட்ட வரலாறுகளை இணைத்து வரைவதே எனது திட்டமாகும்) நான் கையாள வேண்டியிருந்தது. சஞ்சிகைகள், குறிப்புப் புத்தகங்கள் போன்றவை வரலாற்று ஆசிரியர்களால் விரும்பப்படும் தூசி படிந்த ஆவணக் காப்பகங்களுக்கு உரித்தானவை என்றால் நாவல்கள் போன்றவை, என்னை நேர்முகத் தேர்விற்கு உட்படுத்தியவர்களுக்கு உரித்தானவை. இலக்கியம்தான் எனது கற்கை நெறியாக இருந்ததால் காப்பகங்களைத் துருவி ஆராய்வது எனக்குத் தனிப்பட்ட முறையில் துணிகரச் செயலாக்கப்பட்டது. எனது திட்டம் இலக்கியத்தையும் வரலாற்றையும் உள்ளடக்கியிருந்ததினால் சுயமரியாதை இயக்கம் பற்றிய பெண்ணிலைவாத வரலாற்றை எழுதுவதற்குரிய முக்கியத்துவத்தை நான் உணர்ந்தேன்.
இலக்கியம் என்று அங்கீகரிக்கப்பட்ட நூல்களின் பட்டியல் பற்றியும், இலக்கியத்தன்மை பற்றிய எண்ணக்கரு குறித்தும் மார்க்ஸியவாதிகளும், பெண்ணிலைவாதிகளும் பின்னமைப்பியல்வாதிகளும் விமர்சித்துள்ளபோதிலும் ஒரு மொழி பெயர்ப்பாளன்’ மதிக்கப்பட வேண்டுமாயின் இலக்கியம் என்று மரபு ரீதியாகக் கருதப்பட்ட படைப்புக்களை மொழி பெயர்ப்பதன் மூலம்தான் ஒரு மொழி பெயர்ப்பாளனுக்கு மதிப்பு ஏற்படும் என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன். இலக்கியம் என்ற கற்கை நெறி மொழி பெயர்ப்பையும் தனக்குரியதென உரிமை பாராட்டிற்று. எனவே இலக்கியத்தையும் மொழி பெயர்ப்பு கையாள வேண்டித்தான் இருக்கின்றது. ஓர் ஆண் விமர்சகர், "அழகியல் தன்மையற்றதை மொழி பெயர்ப்பதால் பயன் என்ன? உமது தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள சில படைப்புக்கள் கரடு முரடானவை போல்படுகின்றன” என்றார்" என்னைப் பொறுத்தவரை இலக்கியம் என்று குறுகிய முறையில் வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்கு அப்பால் சுயமரியாதை இயக்கத்தின் வரலாற்றிற்கும் பெண் எழுத்திற்கும் பெண்ணிலைவாத உருவ அமைப்பினைக் கொடுத்தலே மேலாகப்பட்டது. சுயமரியாதை இயக்க வரலாற்றில் தவறிப் போனவற்றைக் கண்டுபிடித்து இடைவெளிகளை நிரப்புவதே எனக்கு உயர்வாகத் தென்பட்டது.
சுயமரியாதை இலக்கியம் எப்பொழுதுமே தனக்கெனச் சிறப்பான எல்லைப் பரப்பை வகுத்துக் கொண்டது. பெரும்பாலான சுயமரியாதை எழுத்துக்கள் சுயமரியாதைப் பத்திரிகைகளான குடியரசு, புரட்சி, குமரன் ஆகியவற்றில் வெளிவந்தன. பத்திரிகை என்ற ஊடக வகை மதிப்பிற்குரிய இலக்கிய
40 நிவேதினி

ஆக்கத்திற்குப்புறம்பானதாகக் கருதப்பட்டது. பிராமணரைச் சாராத சுயமரியாதைப் பத்திரிகைகளைப் பொறுத்தவரை அவற்றின் நிலைமை மிக மோசமானவை. ஏனெனில் அவை ஒரு கட்சி அல்லது பிரச்சார பத்திரிகைகளாகக் கருதப்பட்டன என்பதே இதற்குக் காரணம். இது தவிர சுயமரியாதைப் பத்திரிகைகள் பல முக்கிய அம்சங்களில் அக்காலத்தில் வெளிவந்த பிரதான பத்திரிகைகளிலிருந்தும் சஞ்சிகைகளிலிருந்தும் வேறுபட்டிருந்தன. அக்கால கட்டத்தில் வெளிவந்த மேல்சாதி சுதேசமித்திரன் போன்றவை பிரதான தேசியவாதச் சஞ்சிகைகளாகக் கருதப்பட்டன. ஆனால் சுயமரியாதைப் பத்திரிகைகள் பிரிவினைவாதப் பத்திரிகைகளாக கருதப்பட்டன. இந்த இருவகைப்பத்திரிகைகளிடையே காணப்படும் வேறுபாடுகளை அவதானிக்கும்போது ஒன்றை நாம் மனதில் கொள்ள வேண்டும். அதாவது பெரியார் போன்ற சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் தீவிர கவனம் செலுத்தித் திட்டமிட்டே தமது சுயமரியாதைப் பத்திரிகைகளை வேறுபடுத்தினர் என்பதாகும்.
தென்னிந்தியத் திராவிட இயக்கத்தில் குறிப்பாகச் சுயமரியாதை காலகட்டத்தில் மேல்சாதி தேசியவாதப் பிரதான பத்திரிகைகள், சஞ்சிகைகளான சுதேசமித்திரன், இந்து போன்றவற்றிலிருந்து வேறுபட்ட, குறிப்பாகத் தமிழ் திராவிட பத்திரிகை உலகத்தை உருவாக்கியமை முக்கியத்துவம் வாய்ந்த செயலாகும். பிராமணரைச் சாராத பத்திரிகை உலகை உருவாக்கியமை மிக விரிவான ஒரு அரசியல் நிகழ் தொடரின் ஒரு பகுதியாக நாம் நோக்கவேண்டும். இதன்மூலம் பிராமணர் அல்லாது தமிழ் அடையாளம் உருவாக்கப்பட்டது. இந்தப் புது அடையாளம் வெறுமனே மொழியில் மட்டும் தங்கியிருக்கவில்லை. பண்பாட்டையும் மதத்தையும், நாட்டு வைத்தியத்தையும் ஆதாரமாகக் கொண்டிருந்தது. சுயமரியாதைப் பத்திரிகைகள் பலவற்றைத் தொடங்கியதன் மூலம் - குடியரசு 1925, புரட்சி - 1933. இவற்றுள் மிகப் பிரபல்யமானவை - முதல் தடவையாகச் சுயமரியாதை இயக்கம் பிராமணியத்தைச் சாராத ஒரு பொதுத்துறையை உருவாக்கிற்று. இக்கால கட்டத்தில் பிராமணியத்தைச் சாராத பெருந்தொகையான பத்திரிகைகளும் குறிப்பாகச் சுயமரியாதை பத்திரிகைகள் வெளிவந்தன. ஈரோட்டில் 1925 ஆம் ஆண்டு மேமாதம் 2ஆம் திகதி பெரியார் குடியரசு என்ற தமிழ்வார பத்திரிகையை வெளியிட்டார். ஜஸ்டிஸ் கட்சியின் திராவிடன் எட்டாத பிராமணர் அல்லாத வாசகரை இலக்காகக் கொண்டுதான் இந்த வார ஏடு தொடங்கப்பட்டது. குடியரசு சுயமரியாதை இயக்கத்தின் பத்திரிகையாக இருந்தபோதிலும் ஜஸ்டிஸ் கட்சியின் செய்திகளையும் அது வெளியிட்டது. இந்த வார ஏட்டின் வெளியிடும் சுயமரியாதை இயக்கத்தின் தோற்றமும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1925 அளவில் பிராமணர் அல்லாதோரின் நலன்களை பிதிபலிக்கக்கூடிய பத்திரிகையின் தேவையினை பெரியார் உணர்ந்தார் அவர் பின்வருமாறு எழுதுகின்றார்: “இந்த
நிவேதினி 41

Page 25
நாட்டில் எத்தனையோ பெரிய மனிதர்களும் கெட்டிக்காரர்களும் இருந்த போதிலும் அவர்களைப் பற்றிப் பெரும்பாலும் பொதுமக்கள் அறியமாட்டார்கள். இதற்குக் காரணம் தமிழர்களுக்கு பயன் முனைப்பான, உண்மையைப் பேசும் பத்திரிகை இல்லாதிருப்பதே. தமிழர்களுடைய பெருமைகளைப் பற்றி அறிவதற்கு மகாத்மாகாந்தி கூட ஒரு பிராமணனை விசாரிக்க வேண்டியிருந்தது அல்லதுஒரு பிராமணிய சஞ்சிகையை வாசிக்க வேண்டியிருந்தது. பிராமணர்கள் அல்லாத பெரும்பான்மை மக்கள் தம்மைப் பற்றிய செய்திகளையோ சிந்தனைகளையோ மற்றவர்களுக்குத் தெரியப் படுத்துவதற்குச் சாதனங்கள் அற்ற நிலைபற்றி நாம் என்ன கூறுவது" - (பெரியார் 1925)
பிராமணர் அல்லாதோரின் நலன்களுக்கு பயன்முனைப்பான முறையிலே குரல் கொடுப்பதற்கு பிராமணரைச் சாராத ஒரு பத்திரிகை இல்லாத குறைபாட்டினை உணர்ந்த பெரியார் தமிழ்ப் பத்திரிகை உலகை அடியோடு மாற்றுவதற்கு முனைந்தார். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பத்திரிகை உலகின் பெரும்பகுதியை மேல்சாதியினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அந்தக் கட்டுப்பாட்டினை முறியடிப்பதற்கு பெரியார் முனைந்தார். திட்டமிட்டு அவர் சுயமரியாதைப் பத்திரிகைகளையும் பிராமணரைச் சாராத சஞ்சிகைகளையும் வளர்த்தெடுத்தார். அவற்றை பிராமணிய பத்திரிகைகளுக்கு எதிராக அவர் நிலை கொள்ளச் செய்தார். பிராமணியப் பத்திரிகைகள் திராவிட மக்களைப் பற்றிய உண்மைகளைத் திரித்துக் கூறுபவையாகவோ அல்லது திராவிட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யாதவைகளாகவோ அவர் கருதினார். பிராமணரைச் சாராத இலக்கியத்திற்குத் தேவையான ஓர் இடத்தினை அவர் திட்டமிட்டு உருவாக்கினார். பிராமணரைச் சாராத இந்த இலக்கியம் பிராமணர் அல்லாத மக்களின் அக்கறைகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தியமையினால் கட்டுரை, சுயவரலாறு போன்ற வேறுவகை எழுத்துக்களின் தேவை ஏற்பட்டது. இவ்வாறு தோன்றிய புதிய எழுத்து, மரபுவழி பேணப்பட்டு வந்த இலக்கிய அழகியலுக்கு முற்று முழுதாக முரண்பட்டிருந்தது. பத்திரிகையில் வெளிவந்த இலக்கியத்தைப் பொறுத்தவரை இது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்திருக்கலாம். ஆனால் இதே தன்மை 1936ல் மூவலூர் இராமாமிர்தம்மாள் எழுதிய தாசிகள் மோசவலை என்ற நாவலிலும் தென்படுகின்றது. இந்த நாவலில் சுயமரியாதைப் பிரச்சாரமும் புனைவும் பின்னிப் பிணைந்திருக்கின்றன.
பெண்ணிலைவாதிகளாகிய நாம் சுயமரியாதை இயக்க வரலாற்றினை வேறு விதமாகப் புரிந்து கொள்ள விரும்பினால் அந்த இயக்கத்தின் அரசியலோடு தம்மை நெருக்கமாக அடையாளப்படுத்திக் கொண்ட பெண்களின் கண்களின் ஊடாக நோக்கினால் சம்பிரதாய முறையில் எழுதப்பட்ட வரலாறுகளும் பெரியாரின் கணிசமான படைப்புக்களும் போதா. அந்தப் பரபரப்பானஅமைதியற்ற காலப்
42 நிவேதினி

பகுதியில் வாழ்ந்த பெண்கள் அனுபவித்த உணர்ச்சி அமைப்புக்களை இந்தக் கதையாடல்களால் சிறைப்பிடிக்க முடியவில்லை." எனது தொகுதி எவ்வாறு உருவாகிற்று என்றால் சுயமரியாதை இயக்கம் பற்றிய பெண்களின் வரலாறு ஒன்றினை எழுதுவதின் அவசியத்தைப் படிப்படியாக நான் உணரத் தலைப்பட்டமையே. அதற்கான அடித்தளம் இன்னும் இடர்ப்படவில்லை என்பதையும் உணர்ந்தேன். “பெண்கள் வரலாறு”என்ற பதத்தினைப் பயன்படுத்தும்போது நான் எதைக் கருதுகிறேன் என்றால் சுயமரியாதை இயக்கத்தில் பெண்கள் பங்கு பற்றிய பூரணமான அர்த்தம் நிறைந்த ஒரு வரலாற்றினையே. இதன் ஊடாக பால் நிலைப்பட்ட அரசியல் பற்றிய வளமான, வேறுபட்ட ஒரு புரிந்துணர்வையும் பெற்றுக் கொள்ளலாம். சுயமரியாதை இயக்கத்தில் உறுப்பினராய் இருந்த பெண்களின் விமர்சனப் பார்வைக்கான கருத்துக்களைப் பதியும் நோக்கம்தான் முதற்குறிக்கோளாக இருந்தது. இந்தக் குரல்கள் பெரியாரின் உருவத்தால் நிரப்பப்பட்ட அரசியல் கல்வி சார்ந்த சந்தர்ப்ப சூழ்நிலையால் கேட்கப்படாதிருந்தன. இத்தகைய கருத்துக்களைப் பதிவது சுயமரியாதை இயக்கத்தில் பெண்களின் வகிபங்கு சார்ந்த சிக்கல்களை அறிவதற்கு மிக முக்கியம் என்று கருதுகின்றேன். அதேயளவு முக்கியத்துவம் வாய்ந்தது, சுயமரியாதை இயக்க வரலாறுகள் எழுதப்பட்டதை விமர்சிப்பதாகும். இவ்வரலாறுகள் மற்ற எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டுப் பெரியாரின் சிந்தனை, பணி, தரிசனம் ஆகியவற்றையே குவி மையப்படுத்துகின்றன. இதன் விளைவாகப் பெரியார் எவ்வாறு புரிந்து கொள்ளப்படுகின்றார், வர்ணிக்கப்படுகின்றார் என்பதை விமர்சிப்பதாகவும் அமையும்.
பெண்களின் படைப்புக்களை மீட்பதில் மொழி பெயர்ப்பும் மூல ஆவணங்களும் முக்கியமானவை. பெண்ணிலைவாதி என்ற ரீதியில் மொழி பெயர்க்கும்போது மூலத்தின் திடீர்த் திருப்பங்கள், அதன் பல அடுக்குகளில் பொதிந்துள்ள உபபாடங்கள் ஆகியவற்றை அவதானித்து வருகின்றேன். இவ்வாறு செய்யும்போது பல வழிகளிலே எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டதும் உண்டு. சுயமரியாதை இயக்கத்திற்குரியது என நான் தேர்ந்தெடுத்த ஒர் ஆவணம் வேறு நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருப்பதை நான் அவதானித்துள்ளேன். அத்தகைய ஒர் ஆவணத்தைத்தான் நான் இங்கு பரிசீலிக்கவுள்ளேன்.
மூவலூர் ராமாமிர்தம்மாள் எழுதிய தாசிகள் மோசவலை என்ற நூல் 1936ல் வெளியிடப்பட்டது. தேவதாசிகளில் ஒழுக்கம் தவறியவர்கள், தீயவர்கள் என்ற அச்சுவார்ப்பான பாத்திர அமைப்பால் அது பெரும்பாலும் நேரடியான சுயமரியாதை நூலாகவும் தெளிவான அரசியல் நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளதாகவும் பெரும்பாலும் கருதப்பட்டு வந்தது. தேவதாசி முறையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற மூவலூரின் சொந்த நிலைப்பாடே நாவலுக்கு
நிவேதினி 43

Page 26
பெரும் உந்துசக்தியாக இருக்கின்றது. எமது பரிசீலனையைத் தொடரும் முன் தேவதாசி முறையை ஒழிப்பதற்கான சட்டமூலத்தின் வரலாற்றைச் சற்று நோக்குவது பயனுள்ளதாக இருக்கும். 1913ல் ஆங்கிலேய அரசாங்கம் தேவதாசி முறையை ஒழிப்பதற்கான சட்டமூலத்தை முன்மொழிந்தது. ஆனால் இந்த சட்டமூலம் நிராகரிக்கப்பட்டது. முன்னைய தேவதாசிகளின் புனர்வாழ்விற்கு தெளிவான வழிகாட்டல்கள் முன்வைக்கப்படாமையே நிராகரிப்புக்கு காரணமாகக் கூறப்பட்டது. 1922ல் ஹரிசிங்ஹோர் முதலாம் உலகப் போருக்கு முன்பு நடைபெற்ற விவாதத்திற்கு மீள்உயிர்ப்பு அளிக்க விழைந்தார். சமய வழிமுறைகள் என்ற போர்வையில் வயதாகாத பெண்களை விலைமாதர்களாக வேலைக்கமர்த்துபவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின்கீழ் தண்டனை வழங்கப்படல் வேண்டும் என்பது குறித்தே முதலாம் உலகப் போருக்கு முன் விவாதம் நடைபெற்றது. 1924ல் மத்திய சட்டசபை இந்திய அரசாங்க சட்டம் 18 என்பதனை நிறைவேற்றியது. இந்த சட்டம் பெரும்பாலும் மதறாஸையும் (சென்னை) மும்பாயையும் பாதித்தது. இச்சட்டத்திற்கு அமைய 18 வயதிற்கு உட்பட்ட பெண்களை கேவில்களில் விலை மாதர்களாக அமர்த்துவது தடுக்கப்பட்டது; அவர்கள் சமயம் சார்ந்த நடன மாதர்கள் அல்லர் என்று அறியப்படுமிடத்து தேவதாசிகள் சமூகத்திலிருந்து கோவில்களுக்கு அர்ப்பணிக்கப்படும் - பொட்டுக்கட்டு சடங்கு - பெண்களின் வயதினை உயர்த்த வேண்டும் என்று இன்னொரு சட்டமூலம் மத்திய சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இது 1925ல் நிறைவேற்றப்பட்டு சட்டமாகியது. நவம்பர் 1927ல் கோவில் சேவை என்ற வழக்கம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்று முத்துலட்சுமிரெட்டி சட்டமூலத்தை மதராஸ் சட்டசபையில் சமர்ப்பித்தார். அவர் சமர்ப்பித்த சட்டமூலம் இனாம்களைக் கொண்டிருந்த தேவதாசிகள் சம்பந்தப்பட்டிருந்தது. இந்த இனாம்களுக்குப் பதிலீடாக தேவதாசிகள் தங்களை வேலைக்கு அமர்த்தியிருந்த கோயில்களுக்கு சில சேவைகளை ஆற்ற வேண்டியிருந்தது. ரெட்டி சமர்ப்பித்த சட்டமூலம் இனாம்களை பெறும் தேவதாசிகளை கோவில் சேகைளிலிருந்து விலக்களித்தது. ஆனால் காணிகளால் பெறப்படும் வருமானங்களை இவர்கள் தொடர்ந்தும் அனுபவிக்கலாம். தான் சமர்ப்பித்த சட்ட மூலம் இனாம்களை அனுபவித்து வந்த தேவதாசிகளைத்தான் உள்ளடக்கியது என்பதையும் இப்போது கோவில் சேவை ஆற்றாது விலை மாதர்களாக இருக்கும் ஏனைய தேவதாசிகள் சமூகத்தை உள்ளடக்கவில்லை என்பதையும் தெரிவித்தார். இந்தச் சட்டமூலம் மதராஸ் இந்து சமய ஸ்தாபன சொத்துக்கள் சட்டம் 5 என்று 1929ல் நிறைவேறியது அதே ஆண்டில் ரெட்டி இன்னொரு சட்டமூலத்தையும் சட்டசபையில் சமர்ப்பித்தார். பொட்டுக்கட்டுச் சடங்கை ஒழிக்கும் சட்டமாக இச்சட்டம் இருந்தது. இச்சடங்கின் மூலம் பெண்கள் விலை மாதர்களாவதற்கு வழிவகுக்கப்படுகிறது என்று ரெட்டி கருதினார். இச்சட்ட மூலத்தின் பெயர் மதராசில் உள்ள இந்துக் கோவில்களுக்கு பெண்களை அர்ப்பணிப்பதைத் தடுத்தல். இச்சட்ட மூலத்தை பெரும்பாலான வைதீகப் பிராமணர்களும் எஸ். சத்தியமூர்த்தி
44 நிவேதினி

போன்ற சிரேஷ்ட காங்கிரஸ் காரர்களும் எதிர்த்தனர். நீதிக்கட்சியினரும் இச்சட்ட மூலத்திற்கு அரைகுறை ஆதரவை வழங்கினர். இச்சட்ட மூலத்தை எதிர்த்தவர்கள் முன்வைத்த வாதம் யாதெனில் இச்சட்டமூலம் சாஸ்திரங்களின் உயிர் மூச்சிற்கே எதிரானதொன்று என்பதாகும். பெரியார் இச்சட்ட மூலத்திற்கு ஆதரவாகப் பேசியதோடு பொட்டுக்கட்டுச் சடங்கின் வயதெல்லையை உயர்த்தியபோதே சாஸ்திரங்களின் உயிர் மூச்சிற்கே ஊறு ஏற்பட்டுவிட்தெனச் சுட்டிக்காட்டினார். சாஸ்த்திரங்களின்படி பருவமடைந்த பெண்களுக்கு பொட்டுக்கட்டுதல் பொருந்தாது. சுயமரியாதை இயக்கத்தினர் தேவதாசி முறையை இரண்டு காரணங்களுக்காகக் கண்டித்தனர். முதலாவது காரணம் தாசிகள் பாலியல் அடிமைகளாக இழிவான வாழ்க்கை வாழ வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டமை. அத்துடன் இம்முறையால் பலர் ஒழுக்கம் தவறிய வாழ்க்கைக்குத் தூண்டப்பட்டமை.
இரண்டாவது காரணம். தேவதாசி முறை ஆணாதிக்கப் பிராமண உயர் சாதியினால் பிராமணர் அல்லாத குறிப்பிட்ட சாதியினரை விலைமாதராக பணிபுரிவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டமை பெரியார் தன்னளவில் பெண்கள் இவ்வாறுதான் ஒழுக வேண்டும் என்றோ கற்புடைய மகளிராக விளங்க வேண்டும் என்றோ வரையறை செய்யாத போதிலும் (பெண்கள் கற்புடையவராய் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய சமூகம் ஒழுக்கத்தை மீறிய ஆண்களை கண்டும் காணாதிருப்பதை பெரியார் கண்டித்தார். தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று வாதித்த வேறுபலர் (மூவலூர் ராமாமிர்தம்மாள் அவர்களும் ஒருவர்) தேவதாசி முறையால் ஏற்படும் வரம்பு மீறிய ஒழுங்கீனங்கள் குறித்து தமது வெறுப்பை தெரிவித்தனர். தேவதாசிகளின் வாழ்க்கை மட்டுமல்ல அவர்களைச் சூழ்ந்திருந்தவர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகின்றது என்பதைச் சுட்டிக் காட்டினர். முழு மொத்தத்தில் சுயமரியாதை இயக்கத்தினர் தேவதாசிமுறையை முழுமூச்சுடன் எதிர்த்ததோடு கலாநிதி முத்துலட்சுமியின் சட்டமூலத்தை வரவேற்றனர். தேவதாசி முறையை ஒழிப்பதற்கான சட்ட மூலத்தை சுயமரியாதை இயக்கத்தினர் உக்கிரமாக ஆதரித்தமையை வி. கீதாவும், எஸ். வி. இராஜதுரையும் பின்வருமாறு விளக்குகின்றனர்.
“பிறப்பிலேயே ஒரு மக்கள் தொகையினருக்கு உரிமைகளை மறுத்தல், பிராமணர்கள் அல்லாதவரின் சுயமரியாதையை அரித்தல் அதுவும் அவர்களுடைய உடன்பாட்டுடன் - சுயமரியாதை இயக்கத்தினருக்கு மிகவும் அநீதியான ஒன்றாகவும் ஆத்திரமூட்டும் ஒன்றாகவும் தோன்றிற்று. குறிப்பாக சூத்திர தாய்க்கு ஒதுக்கப்பட்ட பாத்திரம் ஆத்திரத்தை மேலும் கூட்டியது. பிராமண வேதங்களின்படி சூத்திரப் பெண் ஒரு தாசி. அதனால் சூத்திரப் பெண்ணுக்கு பாலியல் சுதந்திரம் இல்லை. நவீன காலமாகிய இன்று இவர்களை அடிமைகளாக்க நிர்ப்பந்திக்க முடியாது. ஆனால் கடந்த காலத்தில் இவ்வாறுதான் நடந்ததென சுயமரியாதை இயக்கத்தினர்
நிவேதினி 45

Page 27
கருதினர். ஆனால் இப்பொழுதும் பிராமணச் சாதியைச் சாராத பெண்கள் தேவதாசிகள் உயிர் வாழ்வதற்காகப் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டியிருந்தது. கோவில்களிலும் பணக் காரர்களுக்கும் பிரமுகர்களுக்கும் தம்மை விற்க வேண்டியிருந்தது. சுயமரியாதை இயக்கத்தின் அகராதியில் தாசி என்ற சொல் ‘வேசி என்ற அர்த்தத்தில் தொனித்தது. எனவே தேவதாசி ஒரு புராதன அவமானத்தினையும் அடிமைத்தனத்தினையும் நினைவூட்டுவதாகக் காட்சியளித்தாள். புராதன அவமதிப்பின் ஒரு காவியாக அவள் நோக்கப்பட்டாள். பிராமணர்கள் அல்லாதோரின், பிரக்ஞையில் இது ஏறக்குறைய மறைந்துவிட்டதென பெரியார் அடிக்கடி குறிப்பிட்டார். ஏனெனில் 'சூத்திரர்’ என்ற சொல்லின் மூலத்தினை ஆராய்வதற்குப் பிராமணர் அல்லாத எவரும் விழையவில்லை. எனினும் தர்மசாஸ்திரங்கள் போன்றவற்றில் பிராமணரல்லாத பெண் பாலியல் அடிமை என்று பதியப்பட்டுள்ளதால் சூத்திரன் தாழ்ந்தவன் என்று கருதுவதற்கும் அவனுடைய தாழ்ந்த நிலை என்றென்றும் நிர்ணயிக்கப்படுவதற்கு வழி கோலிற்று” கீதாவும் இராஜதுரையும் 1998 :376)
தேவதாசி முறையினை ஒழிக்கும் சட்டமூலத்தை எல்லாத் தேவதாசிகளும் வரவேற்றனர் என்று கூறுவதற்கில்லை. இவர்கள் தாம் வேசிகள் அல்லர் என்று வாதித்தனர். தாம் கல்வி கற்றவர்கள் என்றும் கலைஞர்கள் என்றும் நற்பண்புடையோர் என்றும் சுட்டிக்காட்டினர். 1947 வரை முத்துலட்சுமி ரெட்டியின் சட்டமூலம் சட்டமாக நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு தாமதிக்கப்பட்டாலும் 1929ஆம் ஆண்டு மதராஸ் “இந்துசமய அறக்கொடைச்சட்டம் நிறை வேற்றப்பட்டதோடு தேவதாசி முறை ஏறக்குறைய ஸ்தம்பித்து விட்டது.
தேவதாசி முறையை ஒழிப்பதற்கு சுய மரியாதை இயக்கத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மீது பற்றுறுதியும் விசுவாசமும் கொண்டிருந்த மூவலூருக்கு அடிக்கடி பாராட்டுதலை சமகாலத்தவர் தெரிவித்தனர். ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம் : எஸ். வெள்ளைத்துரைச்சி நாச்சியார் மூவலூர் ராமாமிர்தம்மாளின் நாவலுக்கு எழுதிய முன்னுரையில், பெண்களை கடவுளின் பெயரால் வேசிகளாக்கும் கொடுமைகளையும் வேசி முறையை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு முழுச் சமூகத்தை உருவாக்கிய முறைமை பற்றியும் தனது விசனத்தைத் தெரிவிக்கின்றார். பெண்களைக் கடவுள்களாக்கி அவர்களை வழிபடும் ஒரு நாட்டிலே இத்தகைய நிகழ்ச்சி நடைபெறுவது ஒரு முரண்நகை என அவர் வாதிடுகின்றார். சிறிது காலம் தான் தேவதாசியாக வாழ்ந்ததை மூவலூர் ராமாமிர்தம்மாள் அருவருப்பு மேலிட அதனை வெறுக்கின்றார் என்றும் தாசிகளின் தீய சதி நாசவேலைகளை உணர்ந்து அவர்கள் தமது மாய வலைக்குள் ஆட்களை வீழ்த்தும் உத்திகளைப் பற்றி அருவருப்புக் கொண்டு தேவதாசி முறையிலிருந்து தனது கட்டுக்களை அறுத்தெறிந்து தன்னை விடுவித்துக் கொண்டார் என அவர்
46 நிவேதினி

வாதிடுகின்றார். தேவதாசி முறையை ஒழிப்பதற்கு மூவலூரின் அர்ப்பணிப்பைப் பாராட்டி அவரின் நாவல் அவரது சொந்த அனுபவங்களையும் உணர்ச்சிகளையும் தெளிவாகப் பிரதிபலிப்பதால் தேவதாசி சமூகத்தினரைச் சீர்திருத்துவதற்கு அது பெரிதும் உதவும் என அவர் முடிவாகச் சொல்லுகின்றார்.
இன்னொரு முன்னுரையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியரான சோமசுந்தர பாரதியார் நாவலிலே நீண்ட சுயமரியாதை இயக்கப் பிரசாரங்கள் இருந்தபோதிலும் அவை தமிழ்ச் சமுதாயத்தின் நலனை மனதில் கொண்டு எழுதப்பட்டவை என்பதனால் அவை பிரச்சினைக்குரியவை அல்ல என்று கூறினார்.
கூடலூர் மகளிர் பாடசாலை அதிபர் திருமதி குருசாமி குஞ்சிதம் பின்வருமாறு எழுதுகின்றார்: “சமூகத்தின் நலனுக்குப் பங்களிக்க வேண்டும் என்று நம்புபவர்களில் எமது நண்பி ராமாமிர்தம்மாளும் ஒருவர். சாதாரண மக்களின் நலனுக்காக அவர் உழைக்கின்றார். பொது மேடைகளிலே சொற்பொழிவாற்றிய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு சில பெண்மணிகளுள் அவரும் ஒருவர். அவருடைய பேச்சாற்றலை இதுவரையும் உணர்ந்த தமிழ் மக்கள் இப்பொழுது அவரின் எழுத்தாற்றலையும் அறிவதற்கு வாய்ப்புண்டு. (குஞ்சிதம் - 19361)"
தாசிகள் மோசவலை என்ற நாவல் மக்களின் மூடநம்பிக்கைகளான கைரேகை சாஸ்திரம், மந்திரங்கள், தெய்வங்கள், மோட்சம் என்ற எண்ணக்கரு போன்றவற்றைப் பயன் முனைப்பாக அம்பலப்படுத்தி அவற்றிற்காக நேரத்தையும் பணத்தையும் மக்கள் வீணாக்குவது பற்றி விமர்சிக்கிறது என்று குஞ்சிதம் கருதுகின்றார். மக்களை பொட்டுக் கட்டுதல் என்ற காட்டுமிராண்டித்தனமான பழக்க வழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கு முத்துலட்சுமி ரெட்டி மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு இந்த நாவல் பெரிய உந்து சக்தியாக இருக்கும் என்று அவர் ஊகிக்கின்றார்.
மூவலூர் நாவலில் ஒளிவு மறைவின்றிக் கையாளும் சுயமரியாதை இயக்கத்தினரின் பாணி கதைக்கும் நாவலாசிரியரின் அரசியல் நம்பிக்கைகளுக்கும் தாசிமுறையை ஒழித்தல் வேண்டும் என்ற உணர்ச்சிமிக்க அவரின் நிலைப்பாட்டிற்குமிடையே நேரடியான தொடர்புண்டு என்ற கருத்துமுழுவதும் தவறானது என்று கூறுவதற்கில்லை. நாவலில் சில அத்தியாயங்களில் பயன்படுத்தப்படும் மொழி ஒளிவுமறைவு இல்லாத சுயமரியாதைப் பகுத்தறிவுப் பாணிபோல் தோன்றுகின்றது. எடுத்துக் காட்டாக இருளும் ஒளியும் என்று தலைப்பிடப்பட்ட அத்தியாயம் நடராஜன் என்ற செல்வந்த மைனருக்கும் குணபூஷணி என்ற திருந்திய தேவதாசிக்குமிடையில் நடைபெறும் உரையாடலாக
நிவேதினி 47

Page 28
அமைகிறது. குணபூஷணி இப்பொழுது திருமணமாகி முழு மூச்சாக சுயமரியாதை இயக்கச் செயற்பாடுகளில் ஈடுபடுபவள். சம்பிரதாயத் திருமணங்களில் உள்ள சமநிலையற்ற தன்மைபற்றிக் குணபூஷணி பின்வருமாறு நடராஜனுக்குக் கூறுகின்றாள்.
“எம்மைப் படைத்த பிரம்மா எல்லோரும் சமன் என்று கருதியிருந்தால் திருமணங்கள் சமமானவர்களுக்கிடையில் ஒழுங்கு செய்யப்படுவதை உறுதிப்படுத்தியிருக்க மாட்டாரா? அறுபது வயதுக் கிழவன் எவ்வாறு ஆறுவயதுப் பெண்ணைத் திருமணம் செய்யலாம்? இத்தகைய திருமணத்தை பிரம்மா அனுமதித்தால் அறுபது வயதுப் பெண் ஆறுவயதுப் பையனைத் திருமணம் செய்வதற்கு அனுமதிக்கலாம்தானே? பிரம்மா நிச்சயித்த திருமணங்கள் முறிவடையலாமா? பிரம்மா நிச்சயித்த திருமணத்தைச் செய்த ஆண் ஒரு தாசியிடம் செல்ல முடியுமா? ஒரு தாசி எத்தனை ஆடவர்களை வைத்திருக்கலாம் என்று அவர் நிச்சயித்தாரா? பாஞ்சாலி"ஐந்து ஆண்களைத் திருமணம் செய்ய வேண்டும் என்று பிரம்மா நிச்சயித்தாரா? பிரம்மாவே திருமணங்களை நிச்சயிப்பவராக இருந்தால் எவ்வாறு விதவைகள் கருவுறலாம்? வேறு ஆடவரை அவர்கள் உண்மையில் விரும்புகிறார்கள் என்பதா இதன் அர்த்தம்? சீர்திருத்தக் கல்யாணங்களை மேற்கொள்ளும் ஜோடிகளை நீங்கள் அவதனித்திருக்கிறீர்களா? இத்தகைய திருமணங்களைச் சுயமரியாதை இயக்கத்தினரும் ஒழுங்கு செய்துள்ளனர். சொல்லுங்கள், பிரம்மாதான் இந்தத் திருமணங்களை நிச்சயித்தாரா? சில கோவில்களில் அலிகளுக்குக் கூடத் திருமணங்கள் நடைபெறலாம். அத்தகையோரின் திருமணங்களை நிச்சயிப்பவர் யார்? சம்பிரதாயபூர்வமான திருமணத்தின் புனிதத் தன்மை பற்றிக் கூறப்படுவது உண்மையாயின் தெய்வங்களின் முன்னிலையிலும் பிரம்மாவின் முன்னிலையிலும் கட்டப்படும் தாலி அறுக்கப்பட்டு ஒரு பெண் எவ்வாறு விதவை ஆகின்றாள்? அப்பெண்ணிடமிருந்து இன்பங்கள் யாவும் பறிக்கப்பட முடியுமா? அவள் இவ்வாறு நடத்தப்படுவது எங்ங்னம்? தெய்வங்களின் முன்னிலையில் நடத்தப்படும் திருமணத்தில் அப்படித்தான் என்ன விசேஷம் இருக்கின்றது. 'மகாராணி பாதங்களை உயர்த்துங்கள், இந்தப் பானைக்குள் நீரை ஊற்றுங்கள், ஆராத்தி எடுங்கள்". இத்தகைய அறிவுறுத்தல் களைக் கூறித் தமது பணப்பைகளை நிரப்புவதைத் தவிரப் பிராமணர்கள் அப்படி என்னதான் அற்புதங்களைச் செய்கிறார்கள்? இவற்றையெல்லாம் தாமாகவே பெண்கள் செய்ய முடியாதா? பிராமணன் தனது பிழைப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு இச்சடங்குகளைச் செயற்கையாக உருவாக்குகின்றான். சொல்லுங்கள், பொருத்தம் பார்த்தா விலங்குகள் புணர்கின்றன? எமக்குப் பசி எடுத்தால் நாம் எப்பொழுது சாப்பிட வேண்டும் என்று நேரத்தை நிச்சயப்படுத்துமாறு நாம் பிராமணனைக் கேட்கின்றோமா? ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இயல்பான உறவு இருக்கின்றதா என்பதே முக்கியம். 48 நிவேதினி

மற்றச் சடங்குகள் எல்லாம் யாருக்கோ பணத்தை ஈட்டிக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டன என்பதை நீங்கள் முற்றும் முழுதாக நம்பலாம். உமது தாசி ஞானாவதியைப் பாராட்டிய அதேவேளை நீர் உமது மனைவியைப் பற்றி ஏசினிர். இதிலிருந்து உமது திருமணம் பிரம்மாவின் முன்னிலையில் அவரின் ஆசீர்வாதத்துடன் நடைபெறவில்லை என்ற முடிவிற்கு நான் வரலாம்தானே. (ராமாமிர்தம்மாள், 1936 :46-47)
தேவதாசிகளைப் பற்றி அவர் பின்வருமாறு கூறுகின்றார். “தாசிகளிடம் ஒழுக்கமும் இல்லை; மனித இரக்கமும் இல்லை. மனிதர்களுக்கு இருக்கவேண்டிய உணர்ச்சிகளில் ஒரு துளி கூட அவர்களிடம் இல்லை. அவர்களிடம் மனித உணர்ச்சி இருந்தால் தாம் பெற்ற பெண்பிள்ளைகளை அன்னிய ஆண்களுக்குப் பலியிடுவார்களா? அல்லது இத்தகைய இழிதொழில் ஈடுபடுமாறு தூண்டுவார்களா? இத்தகைய தொழிலில் ஈடுபடும் தமது பெண்பிள்ளைகள் கொடிய நோய்களுக்கு ஆளாகியிருப்பதைக் கண்டும் காணாதிருப்பார்களா? (இந்த நோய்கள் அவர்கள் ஈடுபடும் தொழிலின் இயல்பான விளைவுகளே) (ராமாமிர்தம்மாள் 1936: 55)
எனினும், புனைகதைகளுக்கு உரித்தான மரபுகள் மூவலூர் எழுத்திற்கும் பொருந்தும். இதனாலேதான் தாசிகள் மோசவலை என்ற நூலில் பலமான கதையம்சத்தினைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
தாசிகள் மோசவலை' என்ற நாவல் தேவாசிகளுக்கு ஜமீன்தார்களாகிய பிரபுக்களின் ஆதரவு அற்றுப்போன பின்புலத்தைக் கொண்டிருக்கிறது. இந்தப் புதிய உலகத்தில், பண அவாவுள்ள உலகத்தையும் அங்கு தேவாசிகள் சுய கெளரவத்தை இழக்கின்ற ஒரு நிலையும்தான் இருந்தது." எடுத்துக் காட்டாக முதல் அத்தியாயம் தாசி சகோதரிகள் காந்தாவும் ஞானாவதியும் சென்னையிலுள்ள காணசபையில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்குச் செல்வதையும் புகைவண்டியில் நடராஜனை வசியப்படுத்த எடுக்கும் வெளிப்படையான முயற்சிகளையும் வர்ணிக்கின்றது. தாசி சகோதரிகளின் தாயாரான போகசிந்தாமணி இசை நிகழ்ச்சிகள் மூலம்தாம் வருமானம் ஈட்டுவதாகப் பாசாங்கு செய்யுமாறு அறிவுறுத்துகின்றார். அவ்வாறு செய்வதன்மூலம் எல்லோர் முன்னிலையிலும் தாம் மரியாதைக்குரியவர் என்பதை நிலை நாட்டலாம் என்பது அவரின் எண்ணம். இதன் தாற்பரியம் யாதெனில் ஒரு தேவதாசி தனது இசைஞானம் என்ற போர்வையில் இழி தொழில்களை நடத்துகின்றார் என்பதும் இசையில் உண்மையான பற்றில்லை என்பதும்தான். மூவலூர் ராமாமிர்தம்மாள் போன்று தேவதாசிகள் முறையை ஒழிக்க வேண்டும் என்று கருதிய பலர் தாசிகள் உண்மையான கலைஞர்கள் அல்லர் என்றும் அவர்கள் கலை ஞானம் என்று கூறுவதை பொருட்படுத்தத் தேவையில்லை என்றும் கருதினார். அவர்களது
நிவேதிணி 49

Page 29
நோக்கில் தாசிகள் கலைஞர்கள் என்ற பாசாங்கில் ஓர் இழி தொழிலைச் செய்து வந்தனர் என்றும் அவர்களிடம் கெளரவமோ சுயமரியாதையோ இல்லை என்றும் கருதினர். அவர்கள் வஞ்சனை மூலம் அப்பாவி ஆண்களை வசப்படுத்தி அவர்களது செல்வங்களை உறிஞ்சினர். தேவதாசிகள் கலைஞர்கள் அல்லர் என்று நோக்கும்போது இயல்பாகவே அறநெறி ஒழுக்கங்களுக்கு உட்படுத்தப்பட்டு கண்டனத்திற்கு ஆளாகினார்கள். இது வரையிலும் ஒழுக்கம் சார்ந்த கண்டனங்களிலிருந்து விலக்கப்பட்டமைக்கான காரணம் தாசி ஒரு நர்த்தகி, ஒர் இசைக்கலைஞர் அல்லது படித்தபெண் என்ற ஓர் அந்தஸ்த்தைப் பெற்றிருந்தமையே ஆனால் கலைஞர் என்ற அடைமழை நீக்கப்பட்டு விலைமாதர் என்று நோக்கப்படும்போது பாராட்டிற்கும் கெளரவத்திற்கும் பதிலாக ஒழுக்கம் சார்ந்த அருவருப்பு நிலையே மேலோங்குகிறது.
நாவலின் இறுதி அத்தியாயத்தின் தலைப்பு 'மகாநாடு தொடங்குகின்றது. இந்த அத்தியாயத்தில் ஒரு சுயமரியாதை மகாநாட்டின் நிகழ்ச்சிகள் வர்ணிக்கப் படுகின்றன. அத்துடன் நாவலில் வரும் மையப்பாத்திரங்களின் சொற் பொழிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இத்தகைய கதைசார் நகர்த்தலின் மூலம் தாசிகள் மோசவலை என்னும் நாவலின் புனைவு உலகிற்கும் வெளியிலே உள்ள செயல் ஊக்கம்மிக்க சுயமரியாதை இயக்க உலகத்திற்குமிடையே எல்லைகள் இல்லை என்பதனை முனைப்பாகச் சுட்டிக் காட்டுவதே நோக்கமாக இருக்கலாம். இறுதிக் காட்சிக்கு முதல் காட்சியிலே குணபூஷணி அங்கு சமூகமளித்திருக்கும் தேவதாசிகளை இழிதொழிலைக் கைவிட்டு காலத்திற்கேற்ற வகையில் தம்மை இசைவாக்கம் செய்யப் வேண்டும் என அவர்களுக்கு அறிவுரை கூறும்போது அந்தப் பாத்திரத்தினூடாக மூவலூர் பேசுவதை இந்த உத்தியாக அவர் தேர்ந்தெடுத்தார் போல் தோன்றுகிறது :
"நீங்கள் எதை விரும்புகிறீர்கள்? பாராட்டையா அல்லது கெட்ட பெயரையா? பாராட்டை நீங்கள் விரும்புவீர்களானால் உடனடியாகவே இந்த வேசித் தொழிலைக் கைவிடுங்கள் என்று உங்களுக்கு நான் ஆலோசனை கூறுகின்றேன். அவமானத்தையே நீங்கள் விரும்புவீர்களானால் தொடர்ந்தும் ஒவ்வொரு நகரிலும் காதல் தொடர்பை வைத்திருங்கள். இவ்வாறு பழிப்புரையை நாடுவதில் உங்களுக்கு ஏற்படும் பயன்தான் என்ன? நோய்வாய்ப்படுவதைத் தவிர வேறென்ன நன்மையை நீங்கள் காண்பீர்கள்? ஒரு கால கட்டத்தில் லட்சக்கணக்கில் உழைத்தவர்களின் இன்றைய அவல நிலையைப் பாருங்கள். ஒருவனுடன் வாழும் பெண் திருப்தியான வாழ்வு வாழவில்லையா? வேறு என்ன செய்யவேண்டும் என்பது பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்களது தீய பேராசைமிக்க திட்டங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு ஒருவனுக்கு மட்டும் விசுவாசமாக இருங்கள். அப்பொழுது உங்கள் வாழ்க்கை எவ்வித கவலையும் அற்றதாக இருக்கும். மெச்சுதலும் பாராட்டும்
50 நிவேதினி

உங்களைத் தேடிவரும். உலகம் விரைவாக மாறிக்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில் உங்களது பழைய சூழ்ச்சிகள் தோல்வியடைவது திண்ணம். எனவே மாயைகளில் வாழாதீர்கள். காலத்திற்கு உங்களை இசைவாக்கம் செய்யுங்கள் (ராமாமிர்தம்மாள் - 1936 : 282)”
இந்த நாவலில் சுயமரியாதை செயலூக்கமும் தேவதாசி முறையை ஒழிப்பதற்கான முனைப்பும் தொனிப் பொருட்களாக இருக்கின்ற போதிலும் பெண்ணியல் வாசிப்பில் இன்னொரு, அதிகம் வெளித் தெரியாத மையம் வெளிப்படுகிறது. இரண்டு இளம் தேவதாசி சகோதரிகளான காந்தாவும் ஞானாவதியும் உயிர்த்துடிப்பு மிக்கவர்கள். வாழ்க்கையைப் பற்றிய அவர்களது நோக்கு தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று வாதிட்டவர்களின் ஒழுக்கக் கோட்பாட்டிற்கு முரணானது. (ஒழுக்கத்தை முன்னிலைப்படுத்துவது குறித்து பெரியாருக்குச் சில மன ஒதுக்கங்கள் இருந்தன) உண்மையில் நாவலில் இரண்டு கதா மையங்கள் உள்ளன. அவற்றின் விளைவாக ஒன்றுக்கொன்று முரண்படும் மொழி சார்ந்த இரண்டு வகைப்பாடுகள் உள்ளன. என்னைப் பொறுத்தவரையில் செயலூக்கம் மிக்க சுயமரியாதையின் வெளியுலகை வர்ணிக்கும் போதிலும் - சுயமரியாதை மகாநாடுகள் சீர்திருத்தவாதிகள், ஏன் சுயமரியாதை ஆட்சிக்குட்பட்ட கற்பனாவாத ஒரு மாகாணம்கூட இந்த உலகில் அடங்கும் - தேவதாசிகளின் அக உணர்வுகள் பற்றியும் அவர்களது உள்ளங்களிலே நிலவும் முரண்பாடுகள், அவர்கள் எதிர் கொள்ளும் தடுமாற்றங்கள், அவர்கள் அனுபவிக்கும் இன்பங்கள் ஆகியன அடங்கிய அவர்களது அகவுலகு பற்றி எம்மை ஈர்க்கவல்ல ஒரு பரிமாணத்தை அவர் வழங்குகின்றார். தாசிகளின் அகவுலகை வரைவதன் மூலம் மூவலூர் நவீன வாசகர்களாகிய எம்மை மகிழ்வித்து வசியப்படுத்துகின்றார். இதன் பயனாக நாவலாசிரியர் புனைவுகளின் மரபுகளுக்கு அமைவாகவும் எழுதக் கூடியதாகவுள்ளது. உண்மையில் இந்த அம்சம்தான் “தாசிகள் மோசவலை"யை நாவலாக்குகின்றது. இது இல்லாவிடில் அது வெறுமனே அரசியல் கட்டுரையாகவோ, சொற்பொழி வாகவோ அமைந்திருக்கும். காந்தாவினதும் ஞானாவினதும் உயிர்த்துடிப்பையும் சொற்திறனையும் வாசகர்களாகிய எமது கவனத்திற்குக் கொண்டு வருவதன் மூலமும் இரு சகோதரிகளின் வாழ்க்கையையும் சூழலையும் நுணுக்கமாகச் சிற்றின்ப உணர்வுகளைத் தூண்டக்கூடிய முறையில் சித்திரித்ததன் மூலமும் மூவலூர் தன்னை அறியாமலே தேவதாசி முறையை ஒழிக்கும் திட்டத்திலிருந்து ஒர் கணப்பொழுதிற்காவது எமது கவனத்தைத் திசை திருப்புகின்றார். காந்தாவினதும் ஞானாவதியினதும் புத்திக் கூர்மையும் சொற்களைக் கையாளும் திறனும் உயர்சாதி மைனராகிய நடராஜனின் நகைப்பிற்குரிய முட்டாள்தனத்துடனும் அரசவழித் தோன்றல் இளைஞனாகிய சோமசேகரத்தின் சூதுவாதின்மையுடனும் முனைப்பாக வேறுபடுகின்றன. முதல் அத்தியாயத்திலேயே மூவலூர் இரு தாசி சகோதரிகளும் நடராஜனும் சென்னையை
நிவேதினி 51

Page 30
நோக்கிச் செல்லும் புகைவண்டியின் முதலாம் வகுப்பில் சந்திப்பதை வர்ணிக்கின்றார். நடராஜன் முழு முட்டாள் என்ற முடிவுக்கு வரும் சகோதரிகள் அவனுடைய கைக்கடிகாரத்தைப் பெறுவதற்குப் பல தந்திரங்களைக் கையாள்கின்றனர். இந்தச் சம்பவத்தின் முடிவில் வாசகர்களாகிய நாம் பணத்தைப் பற்றியும் இன்னொரு தாசியிடம்தான் எவ்வளவு செலவழித்தார் என்பது பற்றியும் சுயபுராணம் பாடும் நடராஜனிடம் அதிக அனுதாபம் காட்ட முடியாதிருக்கின்றது. மாறாகக் காந்தாவினதும் ஞானாவதியினதும் விரைவான சிந்தனையும், சமயோசிதப் புத்தியும் எம்மனதில் பதிகின்றன.
ஞானாவதி : உங்கள் சிகை அலங்காரமும், நீங்கள் அணிந்திருக்கும் பெண்களுக்கான கைக்கடிகாரமும் உங்களை மலையாளப் பெண்ணைப்போல் தோற்றமளிக்கச் செய்கின்றன. எனினும் நீங்கள் ஆணேதான். ஆனால் செல்வந்தனாகிய நீங்கள் உங்கள் கடிகாரத்தில் தங்கச்சங்கிலியைப் பிணைத்துத் தொங்க விடலாம்தானே. அப்படிச் செய்திருந்தால் உங்கள் பொக்கற்றில் கடிகாரம் தொங்கியிருக்கும்தானே. அவ்வாறு நீங்கள் செய்திருந்தால் இப்படியெல்லாம் நான் உங்களை நையாண்டி செய்திருக்க மாட்டேன். நீங்கள் பெண்ணைப்போல் மணிக் கட்டில் கடிகாரத்தைக் கட்டியிருப்பதால்தான் நான் உங்களை நையாண்டி செய்தேன்.
மைனருக்குத் திடீரென மலைப்பு ஏற்பட்டது. தான் பேசிய முட்டாள்தனமான சொற்களை மீளப்பெற விரும்பினான். “ஏன் ஞானாவதி பெண்கள் தமது மணிக்கட்டில் கடிகாரத்தை அணிவார்கள் என்று கூறினாயே, அப்படியென்றால் நீ ஏன் கைக்கடிகாரம் அணியவில்லை. “நான் திருமணமாகாத இளம் பெண். உங்களைப் போன்றவர்கள் கைக்கடிகாரத்தைப் பரிசாக அளித்தால்தான் நான் அதை அணியமுடியும். எனக்குக் கணவன் இருக்கிறாரா” என்று ஞானாவதி நுணுக்கமாக விடையளித்தாள்.
மைனர் தனக்குள்ளே சந்தோஷமாக நினைத்தான் இவள் அவரைப்போல் உயர்ந்து வளர்ந்திருந்தாலும் எவ்வளவுகெட்டித்தனமாக இருக்கின்றாள். எவ்வளவு அன்பொழுகப் பேசுகின்றாள். அவள் பேசுவதற்கு வாய் திறந்தாலே எனது இதயம் வேகமாகத் துடிக்கிறது. அவளின் பேச்சு பட்டை தீட்டிய வைரம் போல் ஜொலிக்கின்றது. எமது பெண்கள் பேசும்போது அவர்களது குரல்கள் கரடுமுரடாக வெறுப்பைத் தரும் ஒசைகளாகவே இருக்கின்றன. சில ஒலிகளைக்காய்ச்சி காதிற்குள் ஊற்றியதுபோல் இருக்கிறது. தாராள குணம் மேலிட அவன் சொன்னான் : “ஞானாவதி இந்தக் கைக்கடிகாரத்தை நீ விரும்புகிறாய் போலிருக்கிறது. இதோ நீ எடுத்துக் கொள். 52 நிவேதினி

ஞானாவதி :
இதென்ன கொடுமை என்னைப்போல் நீங்களும் ஒரு பயணி. நாம் புகைவண்டியிலிருந்து இறங்கியதும் நீங்கள் ஒரு திசையில் செல்வீர்கள். நான் ஒரு திசையில் செல்வேன். என்னை ஏன் கேலி செய்கிறீர்கள்? புகைவண்டி நட்புறவுகளின் நிலையாமை பற்றி உங்களுக்குத் தெரியாதா? உங்களின் கடிகாரம் எனக்கு வேண்டாம். என்னுடையதை மட்டும்தான் நான் அணிவேன். இலவசமாகக் கிடைத்த கடிகாரத்தை அணிவதில் பெருமைப் படக்கூடியது என்னதான் இருக்கின்றது?. புகைவண்டியில் பயணம் செய்யும் பிரயாணிகள் நேரத்தைப் போக்குவதற்கு வம்பளப்பது வழக்கம். உங்களுடைய கடிகாரம் எனக்கு வேண்டாம். தயவு செய்து என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்.
துரதிஷ்டமான மைனர் இப்பொழுது தான் செய்த சொந்த விளையாட்டில் அகப்பட்டு விட்டிார். மூன்று மாதத்திற்குள் ஒரு லட்சம் ரூபாய் செலவழித்ததாக நான் அவளுக்குத் தம்பட்டம் அடித்தேன். முந்நூறு ரூபா பெறுமதியான இந்தக் கடிகாரத்தை அவளுக்குக் கொடுக்காவிட்டால் அவள் என்னைப் பற்றி இழிவாக நினைப்பாள். அவளுக்கு இதை நான் கொடையாகக் கொடுப்பதே சிறந்தது என்று அவன் தனக்குள் நினைத்தான். உரக்க அவன் சொன்னான். “ஞானாவதி இதோ உனது சாதுரியத்தை மெச்சி இந்தக் கடிகாரத்தை நான் உனக்கு நன்கொடையாக வழங்குகிறேன். உனது பொருளாக இதைக் கருதவும். கையைக் காட்டும். உனது மணிக்கட்டில் கடிகாரத்தை நான் கட்டி விடுகிறேன்.
ஞானாவதி :
மைனர் :
ஞானாவதி :
நிவேதினி
நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதை நன்கு உணர்கிறீர்களா? திருமணமாகாத பெண்ணின் கரத்தைத் தொடுவது சரியா? இப்படியான விடயத்தை இனி ஒருபோதும் கூறவேண்டாம். எனது தாயார் இதைப்பற்றிக் கேள்விப்பட்டால் எனது நிலை என்னவாகும்?
என்னை நம்புங்கள். எனது நோக்கங்கள் தவறானவை அல்ல. மேற்கத்தையக் கலாசாரத்திற்கு நான் அதிகம் உட் பட்டிருக்கிறேன். அதனாலேதான் இவ்வாறு பேசினேன். தயவு செய்து கோபம் கொள்ள வேண்டாம்.
முந்நூறு ரூபா பெறுமதியான கடிகாரத்தை இவ்வாறு மூடத்தனமாக இன்னொருவருக்குக் கொடுக்க வேண்டுமென்று மேற்கத்தியப் பண்பாடு நிர்ப்பந்திக்கிறதா? இவ்வாறுதான் அன்னியர்கள் நடந்து கொள்வார்களா? (ராமாமிர்தம்மாள் - 1936: 16-18)
53

Page 31
தாசி சகோதரிகளின் சூழ்ச்சிகளைப் பிட்டுக் காட்டுவதற்கு மூவலூர் விழைந்திருக்கலாம். எனினும், நடராஜனைப் போன்று எம்மையும் இந்த இளம் பெண்கள் வசியப்படுத்துகின்றனர். அவர்களே இந்த நாவலுக்குச் சக்தியையும் உயிரையும் கொடுக்கின்றனர். உயிர்த்துடிப்புமிக்க இந்த இரு பாத்திரங்களினால் இக்காலத்து வாசகர்களுக்காவது மூவலூரின் தேவதாசிகளுக்கு எதிரான இயக்கத்தின் கூர்மை மழுங்கடிக்கப்படுகின்றது. நாவலாசிரியரின் நோக்கம் என்னவாக இருப்பினும் இந்தத் தாசிகள் எமது உள்ளங்களை ஆட்கொள்கின்றனர். நாவலில் வரும் ஏனைய பாத்திரங்களால் இவ்வாறு எம்மை ஆட்கொள்ள முடியவில்லை. நூலாசிரியரின் நோக்கங்களையும் கட்டுப்பாட்டையும் மீறி இத்தாசிகள் இயங்குகின்றனர்.
பழைய புதியதை ஊடறுக்கும் புள்ளியில் "தாசிகள் மோசவலை அமைகின்றது. சுயமரியாதை என்ற புதிய அலையாலும் மத்தியதர வர்க்க வாதிகளின் முயற்சிகளாலும் அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டிருந்த ஒரு வாழ்க்கை முறையை இந்நாவல் கோவைப்படுத்துகின்றது. இதனாலேதான் போலும் இந்நூலில் பல மட்டங்களை எம்மால் காணக்கூடியதாக உள்ளன. நாவலில் ஒருமுகம் சுயமரியாதை இயக்கத்தினதும், சீர்திருத்தவாதிகளினதும் பாற்பட்டது. ஆனால் தேவதாசிகளின் உணர்ச்சி அமைப்புக்களைச் சித்தரிக்கும் மற்றக் கதை அகம் சார்ந்ததாக இருப்பதோடு பொதுமுகம் சார்ந்த கதைக்கு முரணாகவும் அமைகிறது. காந்தாவும் ஞானாவதியும் விலை மாதர்களாகச் சித்தரிக்கப்படும் போதும் சுயமரியாதை மகா நாட்டில் அவர்கள் தமது தொழிலைக் கைவிடுவதாக அறிவித்த போதிலும் கதையாடலில் உள்ள வெடிப்புக்களின் ஊடாகவே நாங்கள் பெண்களின் கதைகளைக் கண்டுணர முடிகின்றது. புதிய வழிகளில் மொழி பெயர்ப்பு இந்நூல்களில் திறந்து புதிய பெண்ணியல் வரலாறுகளை எழுதுவதற்கு உதவியாக அமையும்.
குறிப்புகள்
1. சுசிதாறு கே. லலிதா ஆகியோர் தொகுப்பாசிரியர்களாக இருந்து வெளியிட்ட “இந்தியாவில் பெண்கள் எழுத்து என்ற இரு தொகுதிகள் (1991, 1993) பற்றியே நேர்முகத் தேர்வுக் குழுவினர் குறிப்பிட்டனர். பதின்மூன்றிற்கு மேற்பட்ட மொழிகளிலிருந்து கி.மு. 600 ஆம் நூற்றாண்டு தொடக்கம் இன்று வரை உள்ளடக்கிய காலப்பகுதியிலிருந்து ஒரு தேர்வே இத்தொகுதிகள்.
2. ஈ. வே. ராமசாமிநாயக்கர் (பெரியார் என்றும் அழைக்கப்படுபவர்) காங்கிரசுடன் முரண்பட்ட நிலையில் 1926 இல் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார். இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைவாசிப் பகுதியில் மதராஸில் தோன்றிய 54 — o'''ჭ: , ,,ჯ. நிவேதினி

பிராமணரைச் சாராத திராவிட இயக்கத்தின் மிக முக்கியமான கட்டமாக சுயமரியாதை இயக்கம் விளங்கியது. சுயமரியாதை இயக்கம் கீழ்ச்சாதியினரை அல்லது 'திராவிடரை திட்டமிட்டு புறக்கணிப்பதையும் 'ஆரியரின்’ வேறானதாய் திராவிடர்கள்', 'பிராமணர்ஆரியர்கள் புறங்கணிப்பதையும் 'ஆரியரின் வேறானதாய் திராவிடர்கள் உருவாக்கப்பட்டதையும் கேள்விக்கு உட்படுத்தியது. புனிதமாவை என்று மேல்சாதியினர் கருதிய தேசத்தையும் வர்ணாச்சிரம தர்மத்தையும் மதத்தின் பெயராலும், இறைவனின் பெயராலும், நடைபெற்ற முறைகேடுகளை பெரியார் சாடினார். பெரியாரின் தீவிர காங்கிரஸ் எதிர்ப்பும், பிராமண எதிர்ப்பும், சமஸ்கிருத எதிர்ப்பும் மேல் சாதியினருக்குப் பெரும் சவாலாக அமைந்தன. தனது கருத்துக்களை கூறுவதால் பெரியார் அச்சு ஊடகத்தைப் பயன்படுத்தினார். 1925 இல் குடியரசு என்ற பத்திரிகையை அவர் ஆரம்பித்தமை காங்கிரசுடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டதை சுட்டுவதாக பரவலாகக் கருதப்பட்டது. இந்தப் பத்திரிகை சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடியாகவும் கருதப்படுகின்றது. 1940 களின் முற்பகுதியில் பெரியார் அரசியலில் பிரவேசித்தமையும் அவர் தலைமையில் திராவிடக் கழகம் உருவாக்கப்பட்டமையும் சுயமரியாதை இயக்க கட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் கருதப்படுகிறது.
3. Kali for Women, New Delhi G6J6f6 1766T6ITgl.
4. பாண்டியன், வெங்கடாசலபதி, ஆனந்தி போன்றோர் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் சமூக அடிப்படையை மாற்றியமைக்க விரும்பிய தன்மையையும் அவர் விட்டுச் சென்ற முதுசத்தையும் ஆதரித்து மெச்சத்தக்க வகையில் எழுதிய போதிலும் முழு இயக்கத்தையும் பெரியாரின் தலைமை, அவருடைய வாழ்க்கை நோக்கு ஆகியவற்றின் ஊடாக நோக்கி, சுயமரியாதை இயக்கத்தை பெரியாராக காண்கின்ற போக்கு தென்படுகின்றது. வேடிக்கை என்னவெனில் சுயமரியாதை இயக்கத்தில் பல பெண்கள் செயலூக்கத்துடன் செயற்பட்ட போதிலும் சுயமரியாதை இயக்கத்தை நாம் வெறுமனே பெரியாராகத்தான் காண்கின்றோம். தேங்காய்ப்பாதி என்ற நூலில் நான் எழுதிய முகவுரையில் எனது நிலைப்பாட்டை விரிவாக விளக்கியுள்ளேன். அதனைப்பார்க்கவும் (ழநீலதா, வெளிவரவுள்ளது).
5. தலித் இலக்கியத்திற்கு எதிராக முன் வைக்கப்படும் பெரும் குற்றச்சாட்டு யாதெனில் அதில் அழகியல் ரீதியான பற்றற்ற தன்மையோ பண்பு நயமோ இல்லை என்பதே. அழகியல் பற்றற்ற தன்மை எதிர் சமூக ஈடுபாடு பற்றிய விவாதம் தலித் இலக்கியத்திற்குள்ளேயே எதிரொலித்தது. சில தலித் விமர்சகர்கள், உதாரணமாக மராத்திய எழுத்தாளர் ஆர். ஜியாஜ் இநன்றோர்
நிவேதினி 55

Page 32
56
ஒர் இலக்கியப் படைப்பின் தனிவேறு தன்மை ஊறு செய்யப்படலாகாது என வாதிட்டார். தலித் இலக்கியம் உட்பட எல்லா இலக்கியமும் இன்பம் பயப்பதையே அடிப்படை நோக்கமாகக் கொண்டிருத்தல் வேண்டும் என்றும் வெறுமனே கொடூரமான யாதார்த்தத்தை பிரதிபலிப்பது மாத்திரமல்ல என்றும் அவர் வாதிட்டார். அவர் பின்வருமாறு கூறுகின்றார் : “இலக்கிய உரையாடலிலே ஒர் இலக்கியப் படைப்பின் தனிவேறு தன்மை முதலில் ஏற்றுக்கொள்ளப்பட
வேண்டும். சமூக விழிப்புணர்வுகூட செம்மையான இலக்கிய வடிவத்திலே
வெளிப்படுத்தப்படும் போதுதான் அது முக்கியத்துவம் பெறுகின்றது. எனினும் இலக்கிய விமர்சனத்தில் உள்ளடக்கம் சார்ந்த அணுகு முறையும் உருவம் சார்ந்த அணுகு முறையும் தனிவேறுபட்டு நிற்கின்றன. உண்மையில் அவை இரண்டும் கைகோர்த்து செல்ல வேண்டும். ஓர் இலக்கியப் படைப்பில் சமூகக் கூறும் உருவக் கூறும் பின்னிப்பிணைந்திருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாதவிடத்து இருநோக்கங்களுமே தோல்வியடைகின்றன.”
வேறு எவ்வகை இலக்கியத்தை விடவும், தலித் இலக்கியம் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு பாடத்திட்டத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளது. காந்தியின் சுயசரிதையை பல்கலைக்கழகத்தில் இலக்கியம் கற்பவர்கள் ஒரு நூலாகப் படிக்கின்றார்கள். ஆனால் அம்பேத்தாரும் வேறு தலித் சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் ஒதுக்கப்பட்டுள்ளனர். இத்தகைய நெகிழ்ந்து கொடுக்காத ஓர் அமைப்பில் நான் ஆசிரியராகப் பணியாற்றும் போது தலித் எழுத்தை கற்பிப்பதென்றால் அதனை கிரகித்தல் பயிற்சியாக உருமறைப்புச் செய்யவேண்டியுள்ளது. என்பதை உணர்ந்தேன். தலித் சுயசரிதைகளை வகுப்பில் கற்பிக்கும் போது பெரும்பாலும் உயர்சாதியினர் வகுப்பில் விநோதமான எதிர்வினைகளை நான் பெற்றேன். முதலாவதாக சுயசரிதை உண்மைகளால் ஏற்படும் அதிர்ச்சி மறுப்பிற்கு இட்டுச் சென்றது. சில மாணவர்கள் தலித் இலக்கியம் இலக்கியமே அல்ல என்று அபிப்பிராயப்பட்டனர். ஏனென்றால் அதில் இலக்கிய நுட்பமோ பரிமாணமோ, சற்று தூரத்தில் நின்று பார்க்கும் தன்மையோ இல்லை என்பது அவர்களது கருத்து.
மூவலூர் ராமாமிர்தம்மாள் சுயமரியாதை இயக்கத்தில் முன்னணி வகித்தவர். தேவதாசி முறையை ஒழிக்கவேண்டும் என்று செயலூக்கத்துடன் அவர் போராடினார்.
றேமன்ட் வில்லியம்ஸ் “உணர்ச்சி அமைப்புக்களை” கரைசல் நிலையிலுள்ள சமூக அனுபவங்கள் என வரையறுத்தார். அவர் அதனை வேறு சமூக உருவாக்கங்களிலிருந்து வேறு படுத்தினார். பின்னையது வீழ்ப்படிவுகளாக படிந்துவிட்டது. என்று அவர் குறிப்பிட்டார். “உலக நோக்கு” அல்லது
நிவேதினி

10.
條 t
k
帐
“கருத்தியல்” என்ற எண்ணக் கருக்கலிலிருந்து அவர் உணர்ச்சிகளை வேறுபடுத்துகின்றார். உணர்ச்சிகள் அர்த்தங்களுடனும் விழுமியங்களுடனும் பின்னிப்பிணைந்தவை என்பது அவரது கருத்து.
மகாபாரதத்தில் வரும் பஞ்சபாண்டவர்களின் மனைவி தான் திரெளபதி. சுயம்வரத்தின் போது அர்ச்சுனன் வில்லை வளைத்து திரெளபதியை மணம் முடிக்கும் உரிமையைப் பெற்றிருந்தபோதிலும் பாண்டவர்கள் அவரை தமது இல்லத்திற்கு அழைத்துச்சென்ற போது அவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரன் தாம் கொண்டு வந்ததை வந்து பார்க்குமாறு தாயாரான குந்திதேவியை அழைக்கிறான். அவர்கள் கொண்டுவந்ததைப் பார்க்காத குந்தி, “கொண்டு வந்ததை ஐவரும் சமமாகப் பங்கிடுங்கள்” என்று கூறுகின்றான். இவ்வாறுதான் திரெளபதி பாண்டவர் ஐவருக்கும் மனைவியானாள்.
கடவுள் சிலைக்குக் காட்டப்படும் கற்பூரத்தீபம்.
ஒரு காலத்தில் தேவதாசிகள் கலைஞராகக் கணிக்கப்பட்டு மதிப்பளிக்கப் பட்டமைக்கான விரிவான விளக்கத்திற்கு சஸ்கியா கேர்சென்பூம்(1987) பூரீ வித்தியா நடராஜன் (1997) ஆகியோரின் நூல்களைப் பார்க்கவும்.
உசாத்துணை நூல்கள்
கீதா.வி.ராஜதுரை எஸ்.வி(1998)பிராமணியம் அல்லாத மிலேனியத்தை நோக்கி கல்கத்தாfoL6tuT
யாதவ் ஆர்.ஜி(1992)“தலித் உணர்ச்சிகளும் அழகியல் பற்றற்ற தன்மையும்’இக்கட்டுரை அர்ஜுன் டங்கில் என்பவரைத் தொகுப்பாசிரியராகக் கொண்ட நஞ்சூட்டப்பட்ட பாண் : நவீன தலித் இலக்கியத்திலிருந்து மொழிபெயர்ப்புகள் என்ற நூலில் வெளியிடப்பட்டது. பக்கம் 288-289, ஹைட்ராபாட்: ஒறியன்ற் லோங்மன்.
ஜானகி-1930 தேங்காய்ப்பாதி, குமரன்,9(1)
கேசன்பூம், ஸ்ரோறி S. C. (1987) நித்திய சுமங்கலி : தென்னிந்தியாவில் தேவதாசி பாரம்பரியம் - P. 82 : மோதிலால் பனாரசிதாஸ், டில்லி.
குஞ்சிதம்திருமதிகுருசாமி(1936) புகழுரை, மூவலூர்ராமாமிர்தம்மாள் தொகுத்த"தாசிகள் மோசவலையில்”மதராஸ்: பேர்ள் பிறெஸ்
நாச்சியார் வெள்ளைத் துரைச்சி (1936) மூவலூர் ராமாமிர்தம்மாள் (தொகுப்பாசிரியர்) தாசிகள் மோசவலையில் முன்னுரை மதராஸ்: பேர்ள் பிறெஸ்.
நிவேதிணி 57

Page 33
* நடராஜன் பூரீவித்தியா (1997) “தேசத்தின் வாழ்வில் இன்னொரு கட்டம் : சதிர், பரதநாட்டியம்,பெண்ணியல் கோட்பாடு (பிரசுரிக்கப்படாத கலாநிதிப்பட்டத்திற்கான ஆய்வு. கல்கத்தா பல்கலைக்கழகம்).
* நீலவதி (1930) விதவைகளாவது தலைவிதியா குமரன்.9 (2)
* நிரஞ்சனா தேஜஸ்வினி (1992) மொழிபெயர்ப்பின் இட அமைவு வரலாறு, பின்னமைப்பியல் வாதம், காலனித்துவ சூழல் - பெர்க்லி கலிபோர்னிய பல்கலைக்கழக அச்சகம்.
* பெரியார் (1925) “சில பிராமணப்பத்திரிகைகளில் தொழில்”குடியரசு, 2 ஆகஸ்ட்
* ராமாமிர்தம்மாள் மூவலூர் (1936) தாசிகள் மோசவலை, மதராஸ் பேர்ள் பிறெஸ்
* ழரீலதா.கே.வெளிவரவுள்ளது தேங்காய்ப்பாதி:சுயமரியாதை இயக்க வரலாற்றை பெண்கள்
6Tuggg56ão Kali for Women, New Delhi
* தாரூ, சுசீயும் லலிதா. கே.யும் தொகுப்பாசிரியர்கள் (1991) இந்தியாவில் பெண்கள் எழுத்து தொகுதி1கி.மு. 600 இல் இருந்து 20 ஆம் நூற்றாண்டு முற்பகுதி வரை. Oxford University, Press
s
米
தாரூ, சுசீயும் லலிதா கேயும் தொகுப்பாசிரியர்கள் (1993) இந்தியாவில் பெண்கள் எழுத்து Gg5 Tg56) II 20.gh BITòpT6ảoTG. Oxford, Oxford University, Press
கட்டுரை ஆசிரியர் பற்றிய குறிப்பு
கே. பூரீலதா ஐ ஐ ரி மதராசில் மானிடவியல், சமூகவியல் துறையில் ஆங்கிலம் கற்பிக்கின்றார். தேங்காய்ப்பாதி சுயமரியாதை இயக்க வரலாற்றை பெண்கள் 67ggi 6Taian Gerejailou Kali for Women Gl26flih 626iang. Seablue Child 6T6ör sin g/62/Wg/ Ȳf7øDogg (Oleg mégglapuu 20026i Brown Critique Calcutta வெளியிட்டுள்ளது.
56örps: (Inter Asia Cultural Studies, Vol.3 No.3, 2002, Routledge Taylor & Francis Ltd. மொழிபெயர்ப்பு-ஏ. ஜே. கனகரட்ன.
Received permission to translate this article into tamid from K. Srilata Asst. Professor, Dept. of Humanities and social science, Chennai, India.
58 நிவேதினி

அஞ்சுகத்தின் சுயசரிதை
- செல்வி திருச்சந்திரன்
உருத்திர கணிகையர் கதாசாரதிரட்டு என்ற க. அஞ்சுகத்தால் இயற்றப்பட்ட ஒரு நூல். பல முக்கிய விடயங்களை கொண்டுள்ளதாக நான் கருதுகிறேன். 1911ம் ஆண்டு கொழும்பில் உள்ள மீனாம்பாள் அச்சுயந்திரசாலையில் பிரசுரிக்கப்பட்ட இந்நூலை, கடந்த ஐந்து வருடங்களாகத் தேடி இறுதியில் பக்கங்கள் கிழிந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்டேன். பாவிப்பிற்கு அந்நூலகத்தில் வைக்கப்படவில்லை. ஆகையால் நான் கேட்கும் பொழுதெல்லாம் இது கிடைக்கவில்லை. இறுதியில் நூலகப் பொறுப்பாளரிடம் அந்நூல் அங்கு இருப்பதாக நான் எண்ணுகிறேன் என்று கூறித் தெரிவித்துப்பார்த்தேன். இந்நூலின் முக்கியத்தை நான் பல நிலைகளிலும் பல பரிமாணங்களிலும் காண்கிறேன்.
அண்மைக் காலமாகப் பெண்களால் எழுதப்பட்ட இலக்கியங்களுக்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முக்கியத்துவம் இலக்கியவகையில் மாத்திரமன்றி சமூகவியல் மானிடவியல் போன்ற துறைகளிலும் அலசப்படுகிறது. பெண்களது சுயசரிதை - கற்பனை இலக்கியமல்ல இது. ஒரு முக்கிய அந்தஸ்தைப் பெறுகிறது. உலகளாவிய ரீதியில் பெண்கள் தங்களது சுயசரிதத்தை எழுதியது எண்ணிக்கையில் மிகக்குறைவாகவே உள்ளது. பெண்களது சுய வெளிப்பாடு நடவடிக்கைகளிலும் உணர்ச்சி நிலையிலும் கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்து வந்ததால் உணர்ச்சி பூர்வமாக ஈடுபட்டு ஒரு சுயசரிதையாக எழுதுவது பெண்களுக்கு மிகவும் கஷ்டமாகவே உள்ளது. அப்படி ஒன்றை எழுதினால் அது பகிரங்க விமர்சனத்திற்குட்பட்டு அவளது எஞ்சிஉள்ள வாழ்க்கையையே சீர்குலைத்தும் விடலாம். இந்நிலையில் அண்மையில் வெளிவந்த “கவலை” என்ற சுயசரிதை மிக முக்கியம் பெறுகிறது. சி. எஸ். லஷ்மி தனது Sparrow என்ற நிறுவனத்தினூடாகப் பல வரலாற்றிலிருந்து விடுபட்ட பெண்களைத் தேடி அலைந்து இனங்கண்டு அவர்களது வாழ்க்கை வரலாற்றை எழுதி சிறுநூல்களாக வெளியிட்டு வரும் முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது. இன்னுமொரு விடயத்தையும் இங்கு கூறலாம். 2001ம் ஆண்டு அஸ்மிதா என்ற ஆந்திரப் பிரதேசத்திலுள்ள நிறுவனம் ஒன்று The Gendered Tongue, Women's Writing and Censorship in India 6T6öTop (5 ET606) வெளியிட்டுள்ளது. அதன் முகவுரையில் கூறப்பட்ட ஒரு விடயத்தைக் கீழே தருகிறேன்.
நிவேதினி 59

Page 34
For most Women writers in the Country, writing remains an isolated, solitary activity often surreptitous, generally unknowledged and under valued. Although the number of women writers may well run into some thousands, they are still invisible, encounter all manner of obstacles in expressing themselves freely.
இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான பெண் எழுத்தாளருக்கு எழுதுவது என்பது ஒரு தனிமைப்படுத்தப்பட்டதும் ஒதுக்கப்பட்டதுமான ஒரு விடயம். திருட்டுத்தனமாகவோ இரகசியமாகவோ செய்யப்படுவதாகவும் உள்ளது. பொதுவாக அவை அங்கீகரிக்கப்படாமலும் அதற்குரிய அந்தஸ்து வழங்கப்படாமல் கீழிறக்கி மதிக்கப்படுவதாகவும் இருக்கின்றன.
ஆயிரக்கணக்கான பெண் எழுத்தாளர்கள் இருந்தாலும் அவர்கள் வெளித் தெரிவதில்லை. தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படையாகத் தெரிவிப்பதற்கு எத்தனை வித தடைகளை எதிர்நோக்குகிறாள்.
இந்நிலையில் இலங்கையில் 1911ம் ஆண்டு வெளிக்கொண்டு வரப்பட்ட க. அஞ்சுகத்தால் எழுதப்பட்ட உருத்திரகணிகையர் கதாசாரத்திரட்டு என்பது பல பரிமாணங்களில் முக்கியத்துவம் பெறுகிறது.
முதல் பக்கத்திலேயே கா. கமலாம்பிகையார் புத்திரி க. அஞ்சுகம் இயற்றியது என்று குறிப்பிட்டுள்ளார். க. என்று தனது தாயாரின் பெயரின் முதலெழுத்தையே தன்னுடைய பெயருக்கு முன்னால் இட்டுள்ளார். கா. கமலாம்பிகையும் தனது தாயாரான காமாட்சியம்பாளின் பெயரைத் தன்னுடன் இணைத்துக்கொண்டார். இவ்விடயம் சுவாரஸ்யமானது ஏனெனில் கணிகை குலத்தவர்கள் ஆணை மணமுடித்து அண்டி வாழ்வதில்லை. ஆகவே தங்களது தாய்மார்களையே இவர்கள் தங்களது வம்சத் தொடர்ச்சியாகக் கொண்டுள்ளார்கள்.
ஒரு கணிகை தங்களது வம்சவரலாற்றை கூறப் புகுந்தது மிகவும் ஆச்சரியப் படவைக்கிறது. “குலப்பெண்கள்” செய்யாத ஒரு விடயத்தை “விலைமாது” என்று கூறப்பட்ட ஒரு பெண் செய்துவிட்டாள். இதில் சில முக்கிய விடயங்களை நாம் இனங்காணலாம்.
முகவுரையில் அஞ்சுகம் தான் ஏன் இம்முயற்சியில் இறங்கினார் என்பதைத் தெளிவாகக் கூறுகிறார்.
60 நிவேதினி

இலங்கையின் தலைநகராயுள்ள கொழும்பிலே திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் பூரீ சிவகாமியம்மையார் சமேத பொன்னம்பல வானேசுரப் பெருமானுக்கடிமை பூண்டவரும், திருக்கண்ணமங்கை அபிஷேக வல்லியாரின் கோத்திரத் துதித்தோருமாகிய மாது பூரீ கமலாம்பிகையார் என்னும் எனது அருமைத் தாயார் எனக்குப் புத்திரப்பேறின்மையால் தமது பெண் வழிச் சந்ததி என்னோடு நின்றுவிடுமென்பதை நன்குணர்ந்து, தம் கோத்திர வரலாற்றை ஒரு புத்தக ரூபமாய்ப் பிரசுரித்து வெளிப்படுத்தும்படி எனக்குப் பன்முறையுங் கட்டளையிட்டு வந்தனர். ஆகலான், அப்பொன்னம்பலவாணேசப் பெருமானுக்கே அடிமைபூண்டு அவர்திருத்தொண்டைப்புரிந்து வரும் சிற்றறிவுடையளாகிய யான், என் தாயாரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு எமது கோத்திர வரலாற்றை யெழுதத் துணிந்தேன். அங்ஙனம் துணிந்தேற்கு, இப்பொழுது சிவந்த ராயுள்ளோரும் இனித் தோன்றுவோருமாயுள்ள, என்குலச் சகோதரிகள் வாசித்துத் தெளிந்து நல்வழியைக் கைக்கொள்ளுமாறு நமது குலவரலாற்றையும், அக்குலத்திலவதரித்துச் சிவபத்தி, சிவனடியார்பத்தி, சிவசின்னபத்தி, மாகேசுரபூசை, தானம், தருமம் முதலியவற்றை விதிப்படி செய்து சிவானந்தப் பேறுபெற்ற திருவருட் செல்வியரும், இயலிசை நாடகமென்னும் முத்தமிழையுங் கற்றுப் பாண்டித்தியம் பெற்றுப் பெருங்கீர்த்தியுற்று வாழ்ந்த உத்தம மாதரும், அறிவிற் சிறந்து ஒழுக்கத்தையே பேரணிகலமாகக் கொண்டு அவ்வொழுக்க வாயிலாற் பேறுபெற்றோரும், இவற்றிற்கு மறுதலையாய தீயொழுக்கம் பூண்டு துன்புற்றோரும் ஆகிய இவர்கள் சரித்திரங்களையுந் திரட்டி ஒரு சிறு நூலாய் வெளிப்படுத்த வேண்டுமென்னும் பேரவா உண்டாயிற்று
அந்த அறிவாற் சிறந்த நல்லோரது பெயர்களை அவர் குறிப்பிடவில்லை. கணிகையுடன் தொடர்பு வைத்திருந்தாலும் அந்தத்தொடர்பைப் பகிரங்கப்படுத்த விரும்பாத அந்நல்லோர் தங்கள் பெயர்களைக் குறிப்பிடவேண்டாம் என்று விண்ணப்பித்திருக்கலாம். ஆனாலும் நன்றி மறக்க விரும்பாத அஞ்சுகம் உதவியைக் குறிப்பிட்டு நன்றி பாராட்டி அவ்விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்று நாம் ஊகிக்கலாம்.
இக்கணிகையும் இவரது தாயாரும் கொழும்பில் உள்ள பொன்னம்பலவாணேசர் கோயிலில் பொட்டுக்கட்டி தேவதாசிகளாக இருந்தார்கள். உருத்திரகணிகையர் என்பது கணிகையர்களின் ஒரு குலப்பெயர். தன்னையும் உள்ளடக்கி 35 கணிகையர்களின் வரலாற்றைத் தந்துள்ளார். அவர் இந்த விபரங்களைப் பல நூல்களிலிருந்தும் காண பரம்பரையாக விளங்கிய பல கதைகளிலிருந்தும் எடுத்துக் கொண்டார் என்று தனது முகவுரையில் கூறி உள்ளார். முகவுரை சாதாரண வருடம் புரட்டாதி மாதம் விஜயதசமி நாள் அன்று எழுதப்பட்டது.
நிவேதினி 61

Page 35
இந்நூலில் மேலும் ஒரு சிறப்பை நாம் காணலாம். முகவுரையில் ஏன் நூலை எழுதினேன், யார் உதவினார்கள் என்பது போன்ற விடயங்களுடன் எடுத்துக் கொண்ட செய்யுட்களில் நூற்பெயர்களும் தரப்பட்டிருப்பது ஒரு ஆய்வு சம்பந்தப்பட்ட தகவல்களை உள்ளடக்கி இருக்கிறது.
பொதுவாகக் குடும்பப் பெண்கள் தகப்பன், கணவன், சகோதரன் என்பவர்களின் பராமரிப்பிலும் பொறுப்பிலும் அடங்கி வீட்டுக்குள் இருப்பதானால் அவர்களது பணிகளும் வீட்டு வேலை குடும்பப் பராமரிப்பு பிள்ளை வளர்ப்பு என்பவற்றுக்குள் அடங்கிவிடும். ஆனால் தேவதாசிகளுக்கோ அப்படி ஒரு கட்டுப்பாடில்லை. ஆடல்கலை, சங்கீதம் போன்றவற்றை முறைப்படி கிரமமாகக் கற்றுத்தேர்ந்து அரங்கேற்றம் கண்டு கலை விற்பன்னர்களாக இருந்தபடியால் அவர்களுக்கு கல்வி கேள்விகளில் சிறப்புப் பயிற்சியும் அறிவுமிருந்தது. அதனால் அஞ்சுகம் போன்றோர் ஒரு வரலாற்றை எழுதும் துணிவும் நம்பிக்கையும் ஆற்றலும் உள்ளவராக இருந்திருக்கிறார். தன் உணர்ச்சிகளையும் அபிலாஷைகளையும் மேலும் விருப்பு வெறுப்புக்களையும் குடும்பப்பாங்காக ஒளித்து மறைத்து குறைத்துப் புழுங்க வேண்டிய நிலையில் கணிகையர் குலப் பெண்கள் இருக்கவில்லை. அதனாலேயே தான் அவர் தன் பேர்த்தி, தாய், தன் தமக்கை போன்றோரது பொட்டுக் கட்டல்களையும் தான் எப்படி க. சின்னையாப்பிள்ளை அவர்களின் “அபிமான ஸ்திரியாயினேன்” என்றும் அவருடன் 25 வருடங்கள் இருந்து அவர் எப்படித் தன்னைப் பராமரித்தார் என்றும் கூறுகிறார்.
இறுதியாக இந்நூல் எங்களுக்கு ஒரு வரலாற்றுச் செய்தியையும் சொல்கிறது.
தேவதாசி மரபு யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் இருக்கவில்லை. கோயில் திருவிழாக்காலங்களில் சதிர் ஆட்டத்திற்கு கோயில் தர்மகர்த்தாக்கள் சிலரை அழைத்து வந்தனர். சிவன் கோயிலைச் சுற்றி அவர்களைக் குடியிருத்தினர். ஆனால் அஞ்சுகத்தின் வரலாறு நமக்குச் சுவையான ஒரு தகவலைத் தருகிறது. கார் காத்த வேளாள மரபினரும் செல்வரும் சிரேட்டத் தலைமைக் காரரென்றும் மணிய உத்தியோகத்தருமாக சிறிமான் காசிநாத முதலியாரையா அவர்களின் குமாரர் வேலுப்ப முதலியார் இந்தியாவிற்குச் சென்றபொழுது தனது தாயாராகிய கமலாம்பிகையின் ஆடல் பாடலின் சிறப்பையும் புத்தி நுட்பத்தையும் வித்தியா விநோதங்களையும் கண்டு வியப்புற்று யாழ்ப்பாணத்திற்கு கைதடி நகருக்கு அழைத்துக் கொண்டு வந்தார். கைதடியில் எந்தக் கோயிலில் அவர் இணைந்தார் என்பது தெரியவில்லை. “தன் தாயார் அக்கோயில் எசமானர்களாலே அபிமானிக்கப்பட்டு நல்வாழ்வடைந்திருந்தார்”என்று கூறியுள்ளார். 1911ம் ஆண்டில் எழுதப்பட்ட இந்நூலில் இந்த யாழ்ப்பாண விஜயம் 60 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தன என்று கூறியுள்ளார். பின்பு சிறிமான் பொன்னம்பலம் முதலியாரின் திருமணத்திற்கு ஆடல் பாடலில் சிறந்த தன் தாயாரை அழைத்ததாகவும் பின் பொன்னம்பலவாணேஸ்வரக் கோயிலைப் ஒட்டித் தாங்கள் தங்கியதாகவும் அவர்
62 நிவேதினி

கூறுகிறார். “பெருங்கீர்த்தி வாய்ந்த பிரபல பிரபுவாய் தர்ம ரூபியாக சிரேட்ட உத்தியோகத்தராயிருந்தவர். இப் பொன்னம்பல முதலியார் என்று கூறும் அஞ்சுகம் பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில் சந்நிதியில் தனக்கு “திருப் பொட்டு தாரணம் செய்து வைத்தார்” எனக் கூறுகிறார்.
இந்நூலுக்கு சிறு அறிமுகமாகவும் வரலாற்றுச் சம்பவங்கள் சிலவற்றையும் தேவதாசி மரபு எப்படி யாழ்ப்பாணத்திற்கு சதிராகவும் முதலில் கைதடியிலும் பின் கொழும்பிற்கும் இந்து சமயக் கோயில் தர்மகர்த்தாக்களால் கொண்டு வரப்பட்டது என்பதற்கு ஆதாரமான சில தகவல்களைத் தரும் பகுதியை இங்கு மறுபிரசுரமாகத் தருகிறேன். கமலாம்பிகையுடன் தொடங்கும் இலங்கைத் தேவதாசி மரபு அதற்குமுன் தென்னிந்தியாவில் தமிழ் நாட்டில் வசித்த 33 தேவதாசிகளின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகிறது. அங்கு அவர்களின் கதைகளைக் கூறிய பல நூல்கள் உள. ஆனாலும் சமூகவியல் நோக்கில் கூறிய விடயங்களுக்கு இந்நூல் உதவி இருக்கமுடியாது. இந்நூல் அவர்களுக்கு எட்டியிருக்கமுடியாது.
இந்நூலில் இருந்து சில பகுதிகள் :
வெள்ளையம்மாள்
“வெள்ளையம்மாள்” என்பவர் அபிஷேகவல்லியாரின் கோத் திரத்திலவதரித்து, கல்வியறிவிற் சிறந்தவராய், திருக்கண்ண மங்கையிலுள்ள திருக்கோயிலிலே தம்குலாசாரத்திருத்தொண்டைச் செய்துவந்தார். அவர் தவவலியால் பர்வதம் என்னும் ஒரு புத்திரியையும் காந்தப்பர் என்னுமொரு புத்திரனையும் பெற்றார். அவருள்
U di Gnug üb
என்பார் தமது தாயார் செய்து வந்த திருத்தொண்டைத் தாமேற்றுக்கிரமமாகச் செய்துவரும் நாளிலே, தாயாராகிய வெள்ளையம்மாள் பரகதியடைந்தார். உடனே அவருக்கு விதிப்படி அபரக்கிரியைகளைச் செய்துமுடித்து, தாயார் இறக்கும்போது இளமைவாய்ந்திருந்த தம்பியாகிய காந்தப்பரைத் தம் புத்திரனைப்போலப் பாவித்து வளர்த்து, உரியகாலத்தில் இயலிசைக் கலைகளைக் கற்பித்து வந்தார். அக்காலையில் தெய்வானுக்கிரகத்தால் தாமும் அழகிற்சிறந்த ஒரு புதல்வியைப் பெற்றார். அப்புதல்விக்கு,
காமாட்சி
என நாமமிட்டு அருமைபெற வளர்த்து, பருவகாலத்தில், முறையே செந்தமிழையும் பரதம் முதலானவற்றையும் பயிற்றுவித்து மனமகிழ்ச்சியோடு வாழ்ந்தார். பின்னர் தம்பியாகிய காந்தப்பருக்கு, திருக்கண்ணமங்கைக்குச் சமீபமான குளிக்கரையில் வசிக்கும் தம்கிளைஞருள் ஒரு பெண்ணையெடுத்து
நிவேதினி 63

Page 36
விவாகஞ் செய்துவைத்தார். காந்தப்பர் விவாகஞ் செய்தபின் அக்குளிக்கரையில் எழுந்தருளியிருக்கும் பூரீவிஸ்வநாதேசர் திருக்கோயிலில் வாக்கியத் தொண்டு செய்து கொண்டு அவ்விடத்திற்றானே வசித்தார்.
பர்வதமென்பார் தம் புதல்வியாகிய காமாட்சியாரைக் கல்வி கேள்விகளால் தேர்ச்சியடையச்செய்து வளர்த்து அவருக்குத் திருப்பொட்டுத் தரிப்பித்தற்குரிய காலத்தே, தாயாராகிய பர்வதம் “வினைப்போகமே யொருதேகங்கண்டாய் வினைதான்முடிந்தால் தினைப்போதளவு நில்லாது” என்றபடி இவ்வுலகவாழ் வொருவிப்பரனடிநீழலையடைந்தார்.
உடனே சகோதரராகிய காந்தப்பர் அவருக்குச் செய்ய வேண்டிய தகனக் கிரியைகளையும், பிறவற்றையும் முறையே செய்து முடித்து, சகோதரியாரை இழந்த துக்கமிகுதியால், அவ்வூரிலும், அவர் வாழ்ந்த வீட்டிலும் வசித்தற்கு மனம்பொறாராய், மருமகளாகிய காமாட்சியாரையுமழைத்துக் கொண்டு தாம் வசிக்கும் குளிக்கரைக்கு வந்து சேர்ந்தார். அங்கு வந்து சிலகாலத்தின்பின், மருமகளாகிய காமாட்சியாருக்கு தாம் வச்சியப்பணிசெய்யும் பூரீ விசாலாட்சிசமேத விஸ்வநாதேசர் சந்நிதியில், அவருக்கே அடிமையென்பதைக் குறிக்குந் திருப்பொட்டுத் தாரணஞ் செய்வித்தனர்.
காமாட்சியார், அன்று முதலாகத் தினந்தோறுந் திருக்கோயிலுக்குப் போய் சிவ தொண்டாகிய ஆடல் பாடல்களைப் பத்தியோடு செய்து வருவாராயினர். அவர் தமக்கு நெடுநாளாக புத்திரப் பேறின்றி வருந்தி தான தருமங்களையும், விரதங்களையுமாற்றி அருந்தவப் பிரயோசனமாக ஒரு புதல்வியைப் பெற்று,
கமலாம்பிகை
என நாமமிட்டார். இவரே எனது அருமை நற்றாய். பாட்டியார், தம் தவப் புதல்விக்கு உரிய காலத்திலே செந்தமிழ்க் கல்வி கற்பித்து, குலப்பணிக்குரிய ஆடல்பாடல்களைக் கற்பிக்கும் பொருட்டு திருவாரூர் பரதசாத்திர வித்துவானாகிய மருதப்ப நட்டுவனாரிடம் அவரை ஒப்பித்தார். தாயாரும் இவ்வாசிரியரிடத்தே ஆடல் பாடல்களைப் பயிலுங்கால் கூர்ந்த புத்தியுடையராய் நாடகத் தமிழ் நூலை நன்கு கற்றுத்தேற, பாட்டியாரும், அவரது பத்தாமாண்டில் குளிக்கரையிலெழுந் தருளியிருக்கும் பூரீ விசாலாட்சி சமேத விஸ்வநாதேசர் சந்நிதியில், அவருக்கே அடிமையென்பதைக் குறிக்கும் திருப்பொட்டுத் தாரணஞ் செய்து வைத்தனர். தாயார் அன்றுதொட்டு, தமது தாயாராகிய காமாட்சியாரோடு திருக்கோயிலுக்குச் சென்று, ஆடல் பாடல்களாகிய சிவ தொண்டியற்றிவந்தனர். இனி என்தாயாரும் பாட்டியாரும் யாழ்ப்பாணத்துக்கு வந்த வரலாற்றைக் கூற முன், இலங்கையின் வரலாற்றையும் சுருக்கிக் கூறுகின்றேன்.
64 நிவேதினி

எவ்விடத்தும் மாணிக்கமணி முதலிய நவமணி இலங்குதலினாலும், பல வளங்கள் பொலிந்து விளங்குதலினாலும், இலங்கையென்னும் பெயரையும்; முன்னே வாயுவினால் பிடுங்கியெறியப்பட்ட மகாமேரு சிகரங்கள் மூன்றினுள் இரண்டாகிய திருக்கேதீச்சரம், 9 திரிகோணசைலம், என்னுந் தலங்களைத் தன்மாட்டுக் கொண்டிருத்தலால், ஈேழமண்டலமென்னும் பெயரையுமுடையது. அன்றியும், குமாரக்கடவுளுக்குரிய திருப்படை வீட்டுத் தலங்கள் I ஆறுக்கும் மேலாய்த் துவாத சாந்தத்தலமாய் விளங்குவதும், இந்துசமுத்திரமென்னும் மகேந்திரக்கடலுக்கு வடக்கே இருப்பதும், சூரபன்மன், சிங்கமுகன், தாரகன் முதலிய அசுரரைக் கொல்வதற்குப் பாடிவீடாகக் கொண்டதும், அருணகிரி சுவாமிகளால் திருப்புகழ் பாடப்பெற்றதுமாகிய கதிர்காம கூேடித்திரத்தை யுடையதும், புரானோக்தமாயுள்ள பல சைவ வைஷ்ணவ ஆலயங்களை யுடையதும், “இலங்கை நேரிடைபோமற்றையிலங்கு பிங்கலையாநாடி’ என்றபடி பூமியின் சரீரத்தினுடைய இடைநாடியாயுள்ளதுமாகிய இலங்கையின் வடபால் இலங்குவது யாழ்ப்பாணம். இவ்வியாழ்ப்பாணம் மதுரையினின்றும் பாண்டியனால் அனுப்பப்பட்ட சிங்கையாரிய சக்கிரவர்த்தியினாலும் அவன் வமிசத்தரசர்களாலும் ஆளப்பட்டது. அச் சக்கிரவர்த்தியோடு பாண்டி மண்டலத்தினின்றும் சோழ மண்டலத்தினின்றும் சென்ற பிராமணர் முதலியநானா சாதியர்களாலே குடியேறப்பெற்றது. இங்ங்ணம் சிறப்புவாய்ந்து செந்தமிழ் நாடாய் விளங்கும் யாழ்ப்பாணத்திலே, கைதடி நகரிலுள்ள புராதன விக்கினேசுராலய தருமகர்த்தரும், கார்காத்த வேளாண்மரபினரும், செல்வரும், சிரேட்ட தலைமைக்காரரென்னும் மணிய உத்தியோகஸ்தருமாகிய பூரீமாந் காசிநாத முதலியாரையா அவாகள் குமாரர் பூரீமாந் வேலப்பா முதலியாரையா அவர்கள் இந்தியாவின் கணுள்ள பல சிவக்ஷேத்திரங்களைத் தரிசித்துக்கொண்டு குளிக்கரையையடைந்தனர்.
அங்கு விஸ்வநாதேசர் உற்சவத்தில் என் தாயாராகிய கமலாம்பிகையாரின் ஆடல் பாடலின் சிறப்பையும், விதிப்படியாற்றும் புத்திநுட்பத்தையும், வித்தியா விநோதங்களையுங்கண்டு வியப்புற்று, பின்னர் என்பாட்டியாரைச் சந்தித்து,நீங்கள்
யாழ்ப்பாணத்திலுள்ள நமது திருக்கோயில் உற்சவத்துக்கு ஒரு தரம் வரவேண்டுமென்று விரும்பிக்கேட்க, பாட்டியாரும் கதிர்காம யாத்திரையின் பேராசையால் பிரபு அவர்களின் கேள்விக்குடன்பட்டு, பதினொரு வயசுவரையிலுள்ள என் தாயாரையுமழைத்துக் கொண்டு, ஏறக்குறைய அறுபது வருடங்களுக்குமுன் யாழ்ப்பாணம் வந்து கைதடி நகரையடைந்தனர்.
1 யாழ்ப்பாணம் இது கதிர்காமத்திருந்த நரசிங்கராசனுக்கு, சோழராசாவின் புத்திரி வயிற்றிற் பிறந்தவனாய்கண்டியிலிருந்து அரசாண்ட பாலசிங்க மகாராசாவினாலே, மதுரையில் நின்றும் வந்த ஓர் யாழ்ப்பாணனுக்குப்பரிசாகக் கொடுக்கப்பட்டமையால்இப்பெயர் பெற்றது
யாழ்ப்பாணத்தைப்பற்றிய விரிவை கைலாசமாலை"யாழ்ப்பாணவைபவம்'முதலியநூல்களிற் காண்க
நிவேதினி 《་ཁཡས་ན་མཁལ་ནད་ སྨན་ཁང་མ་ཡང་ཁ་མ་ 65

Page 37
அங்குவந்து, மேற்குறித்த திருக்கோயில் உற்சவகாலத்தில் ஆடல் பாடலாகிய சிவதொண்டை விதிப்படி செய்யக் கண்டிருந்த ஆதினகர்த்தராகிய பிரபுசிகாமணி அவர்களும், ஏனைய பிரபுக்களும், பெருமகிழ்ச்சி கொண்டு வேண்டிய சன்மானங்களைக் கொடுத்தார்கள். அன்று முதல் ஆடல் பாடலில் அதிக சாதூரிய புத்திநுட்ப முடையாரென்னுங் கீர்த்தி யாழ்ப்பாணம் முழுதும் பரவலாயிற்று அந்நாளில் எனது தாயாரின் ருது கல்யாணம் மிக விமர்சையாக நடைபெற்றது. தாயார், அக்கோயில் எசமானவர்களாலேயே அபிமானிக்கப்பட்டு நல்வாழ்
வடைந்திருந்தார்.
அங்ங்ணமிருக்குங்காலத்திலே இலங்கையின் தலைநகராய், கல்வி செல்வம், நாகரீகம் முதலியவற்றிற் சிறந்துவிளங்கும் கொழும்பிலே, பெருங் கீர்த்திவாய்ந்த பிரபல பிரபுவாய், தர்மரூபியாய், சிரேட்ட உத்தியோகத்தராயிருந்த பூரீமாந் பொன்னம்பல முதலியாரையா, அவர்களின் திருமணத்துக்கு என்தாயாரை, ஆடல் பாடல்களிற் சிறந்தவரெனக் குறித்து, யாழ்ப்பாணத்தினின்றும் வரவழைத்தனர், அப்பொழுது தாயார் கொழும்புக்குவந்து அத்திருமணக்காலத்தில் ஆடல் பாடல்களை நடத்திக் கீர்த்திநாட்டி, பிரபுசிகாமணியவர்களிடம் தக்க சம்மானம் பெற்றுக்கொண்டு, தமது பிரசவநிமித்தமாகச் சுயநாடாகிய குளிக்கரைக்குச் சென்று, சந்தான வல்லியென்னும் என் மூத்த சகோதரியைப் பெற்றார். அங்கேஎன் பாட்டியாராகிய காமாட்சியாரும் சிலகாலத்தின் பின் சிவபதமடைந்தார்.
இச்சம்பவமனைத்தையுமறிந்த கைதடி ஆதீனகர்த்தர், குளிக்கரைக்குத் தம் காரியஸ்தர்களிற் சிலரையனுப்பி தாயாரை அழைப்பிக்க, அவர், குழந்தையையுமெடுத்துக்கொண்டு யாழ்ப்பாணத்துக் கைதடி நகருக்குவந்து, பழமைபோலத் திருக்கோயிற் பணிபுரிந்து, ஆதினகர்த்தரின் சம்ரட்சணையில் குறைவின்றி வாழுங்காலத்திலே, இரண்டாவதாக அன்னம்மா என்னும் ஓர் புதல்வியைப் பெற்றார்.
சந்தானவல்லி
என்னும் என் மூத்த சகோதாரிக்கு எனது தாயார், உரிய காலத்தில் வித்தியாரம்பஞ் செய்து, தமிழ்க் கல்வியைப் பயிற்றுவித்து வருநாளிலே, ஆதினகர்த்தராகிய பூரீமாந் வேலப்ப முதலியாரையா அவர்கள், இனி ஆடல் பாடல்களைக் கற்பிக்க வேண்டுமெனக் கருதி, என்தாயாரின் மைத்துன முறையாயுள்ளவரும், பாட்டு, நட்டுவாங்கம், மிருதங்கம், தவில் முதலியவற்றிலே கீர்த்திபெற்றவருமாகிய பூரீபுன்னைவன நட்டுவனாரவர்களைத் திருப்புக லூரினின்றும் அழைப்பித்து, அவரிடம் ஆடல் பாடல்களைக் கற்கச் செய்தார். சகோதரியாரும் முறையே கற்றுவருவாராயினர்.
66 நிவேதினி

இவ்வாசிரியர் என் சகோதரியாருக்கு ஆடல் பாடல்களைக் கற்பித்துக் கொண்டிருக்குங் காலத்திலே இவரது வித்தியா சாமர்தியத்தைக் கண்டு மகிழ்ந்த அந்நகரவாசிகளாகிய பிரபுக்கள் இவருக்குப் பல சன்மானமளித்தனர். அன்றியும், தமிழ் நாடெங்கும் கீர்த்திப் படைத்தவரும், சைவப்பயிரைத் தமது பிரசங்கமென்னும் விடாமழையினாலே வளர்த்துவந்த சபாப் பிரசங்க சிங்கமும், அதுல்யவித்வ சூடாமணியுமாகிய பூரீ-ல-ழரீ ஆறுமுகநாவலரையா அவர்களின் தமயனாரும், சிறந்த வித்துவானும், சங்கீதத்தில் மிகவல்லுநருமாகிய பூரீ-ல-ழரீ பரமானந்தப் புலவரையா அவர்கள், இவர் தவில்வாசிக்கும் திறமையை வியந்து இவருக்குச் சிங்கமுகச் சீலையும், வெள்ளிக்கழியும் பரிசளித்தார்கள். இவை நிற்க,
பிரபுசிகாமணியாகிய பூரீமாந் பொன்னம்பல முதலியாரய்யா அவர்கள் கொழும்பு நகரில் கட்டுவித்த சிவாலயப்பிரதிஷ்டா கும்பாபிஷேகத்திற்கு என் தாயாரை வரவழைக்க, தாயார் என் சகோதரிமார் இருவரையுமழைத்துக்கொண்டு பரதசாத்திர வித்துவான் பூரீ புன்னைவன நட்டுவனாரோடு கொழும்புக்குவந்து, பிரதிஷ்டா காலத்தும் பின்னும் செய்யவேண்டிய சிவதொண்டுகளைத் தவறாது செய்தனர். எசமானவர்கள் அதுகண்டு மகிழ்ந்து, என் தாயாரை நோக்கி, “உன்னை முன் எமது விவாககாலத்திற்கு வரவழைத்தோம்! அங்ங்னமே தற்போது கும்பாபிடேகத்திற்கும் வரவழைத்தோம்! ஆதலால் இச்சிவாலயத்துக்குரிய கணிகையராக நீயும் உன் சந்ததியாரும் இருக்கவேண்டுமெனப் பணிக்க”தாயார் அப்பணியைத் தலைமேற்கொண்டு, அத்தருணம் நடந்த திருக்கல்யாண சமயத்தில் அக்கல்யாண மண்டபத்திலேயே பூரீ பொன்னம்பலவாணேசருக்கு அடிமை யென்பதைக் குறிக்கும் திருப்பொட்டுத்தாரணத்தை என் சகோதரியாகிய சந்தானவல்லியாருக்குச் செய்துவைத்தனர்.
பிரபு அவர்கள் தங்கள் திருக்கோயிற்பணிக்கும், தங்கள் விவாகாதி சுபசோபனகாலங்கட்கும் கணிகையர் வேண்டியதாயிருந்தமையால், தாயாரை யாழ்ப்பாணஞ்செல்லாது தடுத்து உடனே திருக்கோயிலுக்குப்பக்கத்தில் வீடுகொடுத்து வசிக்கச் செய்து மாசந்தோறுஞ் செலவுப் பொருளுங் கொடுத்துவந்தார்கள். தாயார் அங்ங்னமே என் சகோதரிமார் இருவரோடும் மைத்துனரோடுமிருந்து திருக்கோயிற் பணிகளைச் செய்தார். சகோதரி சந்தானவல்லியாரும் ஆடல் பாடல்களிற் சிறந்த திருக்கோயிற் பணிகளைத் தவறாது செய்து வருவாராயினர். அந்நாளில் எனது இளைய சகோதரியாகிய அன்னம்மா என்பவர் தமது நான்காம் வயசுமுடிந்து ஐந்தாம் வயசினாரம்பத்திற் சிவனடி சேர்ந்தார். அதன் பின் எனது தாயார், ஆண்மகவை விரும்பிக் கலியுகவரதராகிய குமாரக்கடவுளைப் பிரார்த்தித்து, கந்தசஷ்டி முதலிய விரதமாற்றி ஓர் ஆண்குழந்தையைப் பெற்று “சிங்காரவேல்” எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். அக்குழந்தையும் மூன்றரை வயசில் இவ்வுலக வாழ்வை நீங்கிற்று
நிவேதினி 67

Page 38
பின்னும் என்தாயார் குமாரக்கடவுளைப் பிரார்த்தித்து அவ்விரதத்தையே யனுட்டித்து எனது இரண்டாந்தமயனாராகிய குழந்தைவேல் என்பவரைப்பெற்றனர். இவர் பிறந்த நான்கு வருடத்தின் பின் என்னை ஈன்றனர். நானே கனிஷ்டபுத்திரி
இனி முன்னே சுட்டிய என் சகோதரியாகிய சந்தானவல்லியார், தமது தாயாரோடு சென்று ஆடல் பாடலாகிய சிவதொண்டை வழுவாதியற்றி வருங்காலையில் நீலாயதாகூரி, சிவகாமியம்மை என்னும் மக்களிருவரைப் பெற்றார். இவருள் சிவகாமியம்மை மூன்றாம் மாசத்தில் வானுலகெய்தினாள். நீலாயதாகூழி அறிவொழுக்கங்களிற் சிறப்புற்று, கீர்த்திபெற்ற மாயபுரம் பூரீகந்தசாமி நட்டுவனாரவர்களாலே ஆடல்பாடலிரண்டையும் கிரமமாகக்கற்பிக்கப்பட்டு, அப்பால் பத்தாமாண்டில் பொன்னம்பல வாணேசுரருக்கே அடிமையென்பதைக் குறிக்கும் திருப்பொட்டணியப்பெற்று, அவர் சந்நிதானத்திலே சிவ தொண்டியற்றிச் சில பகல் கழித்து பருவதசையில் இவ்வுலகை நீத்தாள்.
ஈசுரபத்தி அடியார்பத்தியிற் சிறந்த என் சகோதரியாகிய சந்தானவல்லியார், எனக்கு நற்றாய்போன்றிருந்து என் இளமை தொடக்கம் எனது கல்வி, ஊண்,ஒழுக்கம் முதலியவற்றிற் கண்ணுங் கருத்துமாயிருந்தார். இவர் நல்லாசிரியர் போன்று அன்பாற் கடிந்து நீதிமொழிகளைக் போதித்துவருவார். ஈசுரவழிபாட்டுக்குரியதோத்திரங்களை மனனஞ்செய்வித்து அவ்வழிபாட்டை கிரமமாக நடத்தி வரும்படி செய்தார். பெரும்பாலும் அவர் கற்பித்த தோத்திரங்களே இன்றும் என்னாற் பாராயணஞ் செய்யப்பட்டு வருகின்றன. யோசிக்குமிடத்து, என் நல்வாழ்வுக்கு இவரே காரணர். எந்நாளும் என் நெஞ்சைவிட்டு நீங்காத அன்பிற்சிறந்த ஆருயிர்போன்ற இவ்வுத்தமியும், சீர்பெற வாழ்ந்து நாற்பதாம் வயதிற் சிவனடிசேர்ந்தார்.
எனது தாயார், என்னைப் பெற்ற பின்னும் சிலகாலம் பூரீ பொன்னம்பல வாணேசர் சந்நிதியிலே தாம்செய்யவேண்டிய சிவதொண்டை வழுவின்றி நடாத்தி வந்து, தமது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அச்சிவதொண்டைப் பங்கிட்டுக்கொள்ள, ஏறக்குறைய இருபத்தேழு வருடங்களுக்கு முன், தாமியற்றிய சிவதொண்டினின்றும் இளைப்பாறினர். பிரபுசிகாமணியும், அத்திருக்கோயில் தர்மகத்தருமாயிருந்த பூரீமான் பொ. குமாரசாமி முதலியாரையா அவர்கள், இவரது உத்தம ஊழியத்தை மறவாது, மாதந்தோறுஞ் சம்பளமும், வருடந்தோறும் ஒவ்வொரு சேலையும் உபகாரமாகக் கொடுத்து வந்தார்கள். மேற்கூறியவாறு இருபத்தேழு வருடம் உபகாரச்சம்பளம் பெற்றுவருங்காலத்தும், துவச ஆரோகண அவரோகண காலத்திலே சிவாலயத்திற் செய்யவேண்டிய சிவதொண்டைத் தாமேயாற்றிவந்தனர்.
சென்ற பராபவ வருஷம் பங்குனிமாசம் பொன்னம்பலவாணேசுரருக்குத் துசாரோகணமாகிய இரண்டாம்நாள் வியாழக்கிழமை சப்தமித்திதியில் அற்பசுகவீனங்காண, “பொன்னம்பலம்’ என்னுந் திருநாமத்தை இடைவிடாது
68 நிவேதினி

உச்சரித்துக்கொண்டு, கரங்களுஞ் சிரமும் நிருத்த பாவனையைக் காட்ட, எழுபத்துமூன்றாவது வயசில் பொன்னம்பலவாணேசுரப் பெருமானரது திருவடிவ நிழலை எய்தினர். அவர் சிவதொண்டியற்றிய பேரன்பைக்குறித்து பொன்னம்பல வாணேசர் திருக்கோயிலிலிருந்து தீர்த்தமும், இரட்டைப் பரிவட்டமும், திருமாலையும், சந்தனக்காஷ்டமும், இருபத்தைந்து ரூபாவும் அனுப்பப்பட்டன. அவருடைய அபரக்கிரியைகள் சிறிதும் குறைவின்றி எனது தமையனாராலும் என்னாலும் கிரமப்படி நடப்பிக்கப்பட்டன. என் தாயாருக்கு நடத்திவந்த உபகாரச் சம்பளம் முதலியவற்றை அத்திருக்கோயில் ஆதீனகர்த்தரும் பிரபுசிகாமணியுமாகிய பூரீமான் இராமநாத முதலியாரையா அவர்கள் எனக்கே தந்து வருகின்றார்கள். நானும் என் தாயாரியற்றி வந்தபடி அச்சிவதொண்டை வழுவாதியற்றி வருகின்றேன்.
தற்காலத்தில் எனது தமயன் குழந்தைவேல் என்பவர் -வந்தராயிருக்கிறார். இவருக்குத் தொழில் நட்டுவாங்கமே. இவருடைய ஏகபுத்திரன் சண்முகம், பாட்டு, வீணை, நாகசுரம் மூன்றிலும் பேர் வாய்ந்து விளங்குகின்றனன்.
அஞ்சுகம்
எனது சீவியகாலத்திலே என் தாய், சகோதரி, குருமுதலானோர் எனக்குச் செய்த நன்மைகளையும், அவர்கள் காட்டிய மாறா அன்பையும், அவர்களை என் உள்ளத்திருத்தி அன்போடு அருச்சித்து வழிபட்டுவருமுண்மையையும், நான் வெளியிடுதற்கு இதுவே தருணமாதலின், ஈண்டு என் உள்ளக்கிடக்கையைச் சுருக்கிக் கூற விரும்பினேன்.
யான் முன்னே கூறியபடி, பொன்னம்பலவாணேசுரப் பெருமானின் திருவடிக் கடிமைபூண்டு அப்பெருமானின் திருத்தொண்டியற்றிவந்த கமலாம்பிகையாருக்கு, ஐந்தாவது புத்திரியாகப் பிறந்தேன். கீழ்வேளூரிலே திருக்கோயில் கொண்டு அதைச் சூழவிருக்கும் ஐந்து வட்டாரங்கட்கும் தாமே ஏகநாயகியாய் வீற்றிருப்பதினால் அஞ்சுகவல்லியாரென்னுந் திருநாமங்கொண்ட பிராட்டியாருக்கு, என் தாயார்; யான் பிறப்பதற்கு முன்னரே செய்து கொண்ட பிரார்த்தனைப்படி, அஞ்சுகம் என எனக்கு நாமகரணஞ்செய்து, மிக்க அன்பாக வளர்த்துவந்தனர்.
ஐந்தாண்டு நிரம்பவே என் தாயார், செந்தமிழ்க்கல்வி கற்பித்துவைக்க நானும் அங்ங்னமே கற்றுவருங்காலத்து, எனது குலுவொழுக்கத்துக்கு வேண்டிய பரதவித்தையைக் கற்பிக்கக்கருதிய தாயும், சகோதரியும், மாயூரம் பரதசாஸ்திர வித்துவான் பூரீ. கந்தசாமி நட்டுவனாரவர்களிடம் என்னை ஒப்புவிக்க, அவரிடம் ஆடல் பாடல்களைக் கற்றுவந்தேன்.
நிவேதினி 69

Page 39
எனது பன்னிரெண்டாம் வயதில், மதுரையிலே சோமசுந்தரப்பெருமானுக்கும் மீனாட்சி அம்மையாருக்கும் கும்பாபிடேகமாகித் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்ட தினமாகிய ஈசுர வூல் தை மீ உஅ-ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு, பூரீ பொன்னம்பல வாணேசுரர் சந்நிதியில் எனக்குத் திருப்பொட்டுத்தாரணஞ் செய்துவைத்தனர். யானும் அன்று தொட்டு அப்பெருமானுக்கே ஆளாகி அவர் திருவடித்தொண்டு பூண்டொழுகினேன். இக்காலத்தில் எனது தாயார், என் ஜனனத்துக்கு முன் என்னைக் குறித்துச் செய்த அஞ்சுகவல்லியாரின் பிரார்த்தனையை முடித்தற்பொருட்டு, என்சகோதரி முதலானாரோடு என்னை இந்தியாவுக்கழைத்துச் சென்றனர். அங்குசென்று, மதுரை முதலிய கூேடித்திரங்களைத் தரிசித்துக்கொண்டு அஞ்சுகவல்லியார் சந்நிதானமடைந்து பிரார்த்தனைப் பிரகாரம் செய்யவேண்டிய அனைத்தையுஞ் செய்து தேவியாரை வழிபட்டு விடைபெற்று, அங்குநின்றும் புறப்பட்டு வைத்தீசுரன்கோயில், சிதம்பரம் முதலிய பல கூேடித்திரங்களைத் தரிசித்துக் கொண்டு, திருவொற்றியூர்ப் பெருமானைத் தரிசிக்கும் பொருட்டுச் சென்னை மாநகரடைந்து தியாகராசப் பெருமானையும் வடிவுடையம்பாளையுந் தரிசித்தோம்.
அங்கு, பொன்னம்பலவாணேசுரர் சிவாலய அதிபராகிய எங்கள் எசமானவர்கள் எங்களைத் தாழ்க்காதுடறப்படும்படி விடுத்த தந்தி நிருபங் கிடைக்கவே, யாவரும் அவ்விடம்விட்டுப் புறப்பட்டு இக் கொழும்பு நகரெய்தி, மீட்டும் குறித்த சிவாலயத் திருத்தொண்டைக் கைக்கொண்டோம். இக்காலத்தில் எனது ருது கல்யாணம் மிகவிமரிசையாக என் பெற்றாராலும், என் அருமைச் சகோதரி சந்தானவல்லியாராலும் நடத்தப்பட்டது. அந்நாளில் வேண்டுவார்க்கு வேண்டுவதை வரையாது கொடுக்கும் கருணை வள்ளலாகிய பொன்னம்பலவாணேசுரப் பெருமானாரது திருவருள்வயத்தால், நாம் தொண்டுபூண்டொழுகும் ஆதினம் எசமானவர்களுடைய அபிமானத்தையடையப் பெற்றேன். அதன் பின் கீர்த்திவாய்ந்த யாழ்ப்பாணம் சங்கீத வித்துவான் பூரீ நாகலிங்கமவர்களிடம் இந்துஸ்தானி யாடலையும், மைசூர் சமஸ்தானவித்துவான், ழரீமத் கிருஷ்ணசாமி முதலியாரவர்களிடத்தும், திருசிரப்புரம் பூரீமத் அழகிரிசாமிச் செட்டியார வர்களிடத்தும், பாடலையும் திருநெல்வேலி பிர்மழரீ சீதாராம் பாகவதரவர்களிடம் வீணையையும் பயின்றுவந்தேன்.
அங்ங்ணம் சிலகாலஞ் சென்றதன்பின், “போகம் புவனம் பொருந்து மிடமெங்குந் தேகங் கரணந்திரியும்” என்ற மெய்வாக்கின்படி என்னை ஆட்கொண்ட பொன்னம்பலவாணேசர் திருவருளால் இக் கொழும்புநகரில், பிரபல வர்த்தகராய், செல்வச் சீமானாய், விளங்கிய பூரீமான் க. சின்னையாபிள்ளை அவர்களின் அபிமான ஸ்திரீயாயினேன். அவ்வாறாயபின் எனது பதினாறாவது வயதில் வேதாரணியம் பூரீலழரீ. சொ. சுந்தரேசக்குருக்களையா அவர்களிடம்
70 நிவேதினி

சிவதீகூைடி பெற்றுக்கொண்டு, அவர்களிடத்தும், யாழ்ப்பாணம் பூரீமத் குழந்தை வேற்பிள்ளை உபாத்தியாயரவர்களிடத்தும் இயன்றவரையில் பல நீதி நூல்களைப் பாடங்கேட்டு வந்தேன்.
இவ்விரு குரவர்களின் நற்போதனையாலும், ஆசீர்வாதத்தாலும் யான் பெற்ற மனப்பாக்கியமாகிக பெரும்பயனை உணர்ந்து அவர்கள் திருவடிகளை அன்போடு அனவரதம் நமஸ்கரித்து வருகின்றேன்.
சிறியேன் இருபத்தைந்து வருடம் மேற்கூறிய கனவானவர்களின் அபிமான ஸ்திரீயாயிருந்து வாழ்ந்த செல்வ வாழ்க்கையின் அருமை பெருமையும், மனமகிழ்ச்சியும் இத்துணையதென எடுத்துச்செல்லுந் தரத்தவரன்று. இப்பிரபு, என்னை அபிமான ஸ்திரீயாய் மதிக்காது சொந்தப் பாரியாகவே மதித்து வந்தமையால், யான் அவருக்குமுன் இவ்வுலக வாழ்வை விட்டு நீங்க வேண்டுமென்னும் பேரவாப் பூண்டிருந்தேன்.
கருணை வள்ளலாகிய சிவபெருமான் எனக்கு அவ்வாறே அருள்புரியாது அப்பிரபுவையே முன்னர்த் தமது திருவடியிற் சேர்ந்துக்கொண்டனர். அது யாது திருவுளங்கருதியோ சிறியேன் அறியேன்.
'ஊழிற் பெருவலி யாவள மற்றொன்று சூழினுந் தான் முந்துறம்” என்பதையே சிந்திக்கத் தக்கதாயிற்று
இக்கனவான் இவ்வுலகவாழ்வை யொருவிரையினும் எனக்கு யாதொரு குறைவுக்கும் இடம் வைத்தவரன்று. இன்றைக்கும் யான் உண்பதும், உடுப்பதும், அணிவதும், அக்கனவானளித்த அன்னவஸ்திர ஆபரணாதிகளே. இவ்விஷயத்தை இன்னும் விரிபில் மிகப் பெருகுமாதலால் இவ்வளவில் விடுத்தேன்.
பூரீ பொன்னம்பலவாணேசுரர் திருவருளால் எவ்வகைச் சிறப்புக்களையடைந்து மகிழ்ந்தேனாயினும், புத்திரப்பேறில்லாக் குறைவொன்றே என்னை வருத்தியது. பின், புத்திரவாஞ்சை மேலிட்டமையால் பல குழந்தைகளைத் தத்தயுத்திரிகளாய்க்கொண்டு வளர்த்தும், அவர்களிலொருவராவது என் குலப்பெருமையை நாடி நிறுத்த அருகரல்லாதவர்களாய் நீங்கினர். முதல் யானெடுத் தத்தபுத்திரி பெரியநாயகம். முதல்யாளெடுத்தத இம்மாது தற்காலம் குலசேகரம் பட்டணத்தைத் தன் உறைவிடமாகக் கொண்டு சட்டமுத்து என்னும் தன் புத்திரியோடும், தர்மசவர்த்தனி, அஞ்சுகம் என்னும் பேர்த்திமாரோடும் குறைவின்றி வாழ்ந்து வருகின்றாள். பின்னர் தத்தெடுத்த பவானி, ஞானம்பாள், மரகதம், பத்மாவதி முதலாயினோர் எனக்குதவாதவர்களாய் நீங்கினர். இவரில் பவானி என்பவளுக்கு சீவரத்தின மென்றும் அருணாசலமென்றும் இரண்டு குழந்தைகளிருக்கின்றார்கள்.
நிவேதினி 7

Page 40
இவ்வாறு நிகழுங்காலத்திலே நெடுநாளாக யான் கொண்டிருக்கும் புத்திரவாஞ்சையையும், அதுபற்றிச்செய்யும் தானதர்ம விரதாதிகளையும் நன்கறிந்த என் அபிமான நாயகர், இக்குழந்தையை உன் பிள்ளையைப் போல் வளர்த்துவரக்கடவாயென ஆறுமாசப் பெண்குழந்தை ஒன்றை என்கைத் தந்தனர். அப்புத்திரியை மிக அருமையாக வளர்த்து ருக்மணி என நாமகரணஞ்செய்தேன். இவ்வரிய செல்வி, அழகிலும், கல்வியிலும், நற்குண நற்செய்கைகளிலும், தெய்வபக்தியிலும் சிறந்து விளங்கினாள். இவளுடைய குணாதிசயங்களைக் கண்டு நாளுக்கு நாள் இவளிடம் எனக்குப் பெருகிவளர்ந்த அன்புக்களவில்லை. உண்மையாக இவள் எனக்கு புத்திரியாகவும், “யான் இவளுக்கு தாயாகவும் உலகில் என்னை பட்டோம்.”இச்செல்லப்புத்திரிக்கு இளமையில் சிவதீகூைடி செய்வித்து. ஆன்மநாதராகிய பரமசிவத்துக்கு அடியானென்பதைக் குறிப்பிக்கும் திருப்பொட்டுத் தரிப்பித்தேன். ஐயையோ இச்சுந்தரியும் இளமையிலேயே என்னைவிட்டுப் பிரிந்து நடராசப்பிரான் சேவடி சேர்ந்தனள்.
நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வ நீரிற் சுருட்டு நெடுந்திரைக - னி லெழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே வழுத்தாத தெம்பிரான் மன்று.
என்றயடி இளமை, செல்வம், யாக்கை யாதிய வனைத்தும் நிலையற்றன வென்பதை, கருணைவள்ளலாகிய பரமசிவம், நூன்முறையானேயன்றி அனுபவவாயிலாகவும் அடியேற்கறிவிக்கும்பொருட்டு, பேரழகாலும் கல்வியறிவொழுக்கங்களாலும் ஈசுர பத்தியாலும் சிறந்த இப்புத்திரியையும் பிறவற்றையும் ஏதுவாகக் கொண்டு அறிவுறுத்தருளினார். அப்பெருமான் அனுக்கிரகிப்பதனைத்தும் நம்மையெல்லாம் ஆண்டருளும் நோக்கமே யன்றிப் பிறிதன்று. ஆகலான் எளியேன் இளமை தொட்டு விரும்பிய கங்காஸ்நானப் பேற்றைத்தந்து, மனமாதி திரிகரணங்களைப் பரிசுத்தமாக்கியருளும்படி, அகண்டாகார சச்சிதானந்த நிர்மல மெஞ்ஞானப் பிரகாச அருள்வள்ளலாரைப் பிரார்த்தித்து அவரது பூரீபாதார விந்தங்களை நமஸ்கரிக்கின்றேன்.
W ヘ曹/ MSN シ“* M'N
72 நிவேதினி

நூல் விமர்சனம்
“மதப் பண்பாட்டின் கோலங்களையும் கருத்தியலையும் கட்டவிழ்க்கும்
ஒரு பால்நிலை நோக்கு’
தொகுப்பு செல்வி திருச்சந்திரன் விமர்சனம் செ. அனுசுயா
செல்வி திருச்சந்திரனால், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் மூலம் தொகுத்து வெளியிடப்பட்ட இந்நூல் 147 பக்கங்களைக் கொண்டுள்ளதுடன் ஆறு முக்கிய கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து பிரசுரிக்கப்பட்டுள்ளது. அவையாவன முறையே, பெண்களின் உரிமைகள் நெறிகள், சமயத் தத்துவங்கள், சமய சடங்குகள், சித்தர் எண்ணங்கள், துறவறம் போன்றவற்றின் இஸ்லாமிய, பெளத்த இந்து சமய, சித்தர்மய, வழிபாட்டுவழி, துறவறம் சார்ந்த கருத்துக்களை , முறையே முன்ஷிதா மீராலெவ்வை, வை.கா.சிவப்பிரகாசம், விஜித்தா இரங்கநாதன், சித்திரலேகா மெளனகுரு, செ. யோகராசா, றுாபி வலன்ரீனா ஆகியோர் ஆக்கித் தந்துள்ளார்கள்.
செல்வி திருச்சந்திரன் தனது முகவுரையில் பெண்களின் கடந்த கால நிகழ்வுகளை நினைவுபடுத்தி, பெண்கள் சமய வழியில் கட்டுக் கோப்பாகவும், மதம் சேர்ந்த ஸ்தாபனங்கள் மூலமாகவும் சமூக அந்தஸ்துடன் கூடிய ஆன்மீகத் தன்மையை கொண்டிருந்தார்கள் என்பதாகவும், ஆண்களிடமிருந்து விலகியே தங்கள் வாழ்க்கையை ஒட்டினார்கள் என்றும் விவரித்து, பெண்கள் “கட்டுடைத்து வெளியேறினார்கள்” என்பதை பல சான்றுகளுடன் சமர்ப்பிக்கிறார்.
கட்டுரைகளைப் பார்க்குமிடத்து மேற்கூறிய விடயம் துலாம்பரமாக வியாபித்து இருக்கின்றது. தனித் தனிக் கட்டுரையாக விமர்சிப்பதிலும் பார்க்க, கட்டுரைகளின் கருத்துக்களை ஒப்பிட்டு நோக்கி ஆசிரியர்களின் எண்ணக் கருத்துக்களை ஆதார பூர்வமாக வெளிக் கொணர்தல் சமயசாரங்களின் அடிப்படையில் பெண்கள் எவ்வித நோக்குக் கொண்டிருந்தார்கள், பெண் அபிவிருத்தி அல்லது பெண் அடிமை எவ்விதம் ஊற்றெடுத்தது, அவை தற்போது அஸ்தமித்ததற்கு காரணம் என்ன, என்பதை விவரமாகக் கண்டு கொள்ள ஏதுவாக இருக்கும்.
ஆசிரியர்களின் கருத்துக்கள் பல்வேறு இலக்குகளைக் கொண்டிருந்தாலும் முக்கியமாக பெண்களின் மனோநிலையினையும், அவர்கள் வாழ்ந்த சூழ்நிலையினையும், அவர்கள் அடங்கி வாழும் தன்மையற்ற நிலையினையும்,
நிவேதினி . 73

Page 41
அவர்கள் அடிமை வழக்கத்தினை அறுத்தெறிந்து வாழும் மனப்பான்மையையும், அல்லாது போனால், துறவறம் சென்று மக்களுக்கு மனிதத் தன்மையான சேவையையும், மதபோதனையையும், நல் வாழ்க்கைக்கு உகந்த வழிகாட்டல்களையும் மேற்கொண்டார்கள் என்பதை இந்நூல் வாயிலாக அறிய முடிகின்றது.
மேலெழுந்த வாரியாக அவற்றைச் சீர்தூக்கிப் பார்க்குமிடத்து அவர்கள் ஆராய்ந்தவைகள் உண்மையாகவே படுகின்றது. அவை அன்றுள்ள சூழலியலில் யதார்த்தமாக இருப்பினும் அவை இன்றும் போற்றப்படவேண்டியவையா அல்லது தூற்றப்படவேண்டியவைதானா என்பதை நாம் ஆராய்ந்து அறியவேண்டியது அவசியமாகின்றது. எனினும் அவற்றை அச்சு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து அவதானிப்பதால் யதார்த்த பூர்வமான அறிவினையும் முடிவையும் பெற்றுக் கொள்ள முடியும். ஆசிரியர்கள் கூறிய காத்திரமான கருத்தின் யதார்த்தமான தன்மைகளை கீழ்வரும் தலையங்கங்களில் ஆராயப்படுகின்றன.
ஆண் ஆதிக்கத்தில் பெண்கள் நிலை
திருக்குர்ஆனின் அடிப்படையில் ஆண்களும், பெண்களும் இறைவனால் படைக்கப்பட்ட சம அந்தஸ்து உடையவர்கள், பெண்களிடமிருந்து கடமைகளை எதிர் பார்க்கும் சமூகம் அவர்கள் உரிமைகளையும் வழங்க வேண்டும் என திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது. ஆனால் நடைமுறையில் பலவந்தமாக உரிமைகள் மறுக்கப்பட்டு திசை திருப்பப்படுகின்றன என்கிறார் மீராலெவ்வை. மக்களுக்கு வழிகாட்டுவதற்காக இறக்கப்பட்ட திருக்குர்ஆனை எல்லோரும் தெளிவாக ஆய்ந்தறிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர். “பெண்கள் சட்ட உரித்துடையோர்” என்பதை தெளிவாக விளக்கி அவர்கள் விவாகம், விவாகரத்து, சொத்துக்கள், வாரிசுரிமை, சாட்சியம், சன்மானம் மற்றும் தண்டனை என்பவற்றில் அவர்களிற்குப் பூரண உரிமை வழங்கிக் கெளரவிக்கின்றது என்பதை இவர் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.
அன்று காணப்பட்ட சில பெண்கள் கன்னிநிலை வாழ்க்கையை உடையவர்கள் என்கிறார் சிவப்பிரகாசம். பெரிய புராணத்தில் சில பெண்கள் கருத்துச் சுதந்திரத்தையும், எதிர்ப்புணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் கருத்தை எடுத்துரைக்கின்றார். இங்கு பெண்ணிலை வாதச் சிந்தனைகளுக்கு மதிப்பளிக்கப் பட்டுள்ளன.
ஆனால் தற்காலப் பெண்கள் வாழ்க்கையில் பல்வேறு துறைகளிலும் முன்னேறிய ஆண்களுடன் போட்டியிடுபவர்கள். சில சமயங்களில் மனிதத்துவத்தில் ஆண்களைவிட மேலானவர்களாகக் காணப்படுவார்கள். இங்கு சாட்சியத்தின்
74 நிவேதினி

தன்மை பற்றிக் குறிப்பிடப்படவேண்டுமே தவிர, ஆணா, பெண்ணா என்பதல்ல எனக் குறிப்பிடுகிறார் மீராலெவ்வை, அவர்களின் தலைமைத்துவ உரிமையில் பெண்கள் சட்டத்தின் முன்பு, சுயவெளிப்பாட்டு உரிமை, சட்டத்தின் முன் நீதியாகவும், சமத்துவமாகவும் நடத்தப்படுவதற்கான உரிமை என்பன அடங்கும். அரசியலில் பெண்களின், தலைமைத்துவ பங்களிப்பிற்கு பங்கம் வகிப்பது அரசியல் வாதிகளின் அதிகாரத்தன்மையே. ஷரிஆ, மற்றும் குர்ஆனிய சட்டங்களில் ஆண்களிற்கிருக்கும் அதே உரிமைகள் பெண்களிற்கும் இருக்கின்றன. ஆனால் அரசியல் தலைமைத்துவம் என்பது இதற்கு முரணாக அமைகிறது. சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர் சில வேளைகளில் அவளுக்கு முன் கொலையோ, கற்பழிப்போ நடந்தால் அவளது சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் பெண்களை விட ஆண்கள் எந்தவகையில் இதற்குத் தகுதியுடையவர்கள் என்பது தெரியவில்லை.
பெண் உரிமை மறுக்கப்பட்ட பெண்கள்
திருக்குர்ஆனின் அடிப்படையில் ஆண்களும், பெண்களும் இறைவனால் படைக்கப்பட்ட சம அந்தஸ்து உடையவர்கள். பெண்களிடமிருந்து கடமைகளை எதிர் பார்க்கும் சமூகம் அவர்கள் உரிமைகளையும் வழங்க வேண்டும் என திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது. ஆனால் நடைமுறையில் பலவந்தமாக உரிமைகள் மறுக்கப்பட்டு பெண்கள் திசை திருப்பப்படுகின்றனர் என்கிறார் மீராலெவ்வை.
இங்கும் பெண்களின் வளர்ச்சியை விரும்பாத, ஆணாதிக்கம் கொண்ட சமூகத்தில் பெண்கள் இம்சைகள், அச்சுறுத்தல்கள், அநீதிகள், சட்டங்கள், சமூக எதிர்பார்ப்புப் போன்றவற்றை 2300 ஆண்டுகளிற்கும் மேலாக எதிர் நோக்கினர் என்று எடுத்துக் காட்டுகிறார் விஜித்தா இரங்கநாதன். சமயச் சடங்குகளும், கிரியைகளும் பெண்களை ஒடுக்கும் குறியீடாகப் பயன்படுவதை, தற்கால ஆய்வுகள் காட்டியுள்ளன. இதில் இந்து மதமும் விதிவிலக்கல்ல. அது பல்வேறு பாரம்பரியங்களைக் கொண்டதுடன், பிரதேசம், வர்க்கம், சாதி, என்பவற்றுக்கேற்ப இப் பாரம்பரியங்கள் மாறுபட்டு அமைகின்றன என்கிறார் சித்திரலேகா.
எனவே, இங்கு சமஸ்கிருத மயமாக்கப்பட்ட சமயப் பாரம்பரியத்தில் பெண்ணிற்கு இருக்கும் செயற்பாட்டுப் பங்கு இல்லாமல் போகின்றது. அத்துடன் ஆணாதிக்க முள்ள தந்தைவழிக் கருத்தியல்புகள் மூலம் பெண்கள் சடங்குகளில் பங்குபற்றுதல், மேலும் குறைவடைந்து செல்கின்றது. இது பெண்கள் ஆண் சமுதாயத்தினால், சமய வழிபாட்டு முறைகளிலும், அடக்கு முறைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது என்கிறார் சித்திரலேகா.
நிவேதினி 75

Page 42
பெண் கல்வி மறுக்கப்பட்ட நிலை
பெண் கல்வியைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய கலாச்சாரத்தின் அடிப்படையில் அவளின் உரிமைகள் மறுக்கப்பட்டு வீட்டிலிருத்தி வைக்கப் பட்டுள்ளார்கள். இது அவர்களை உள, உடல் ரீதியாகக் கட்டுப்பாடுகளைத் திணித்தலாகும். “கல்வியைத் தேடிக் கொள்வது முஸ்லிம் ஆண்களினதும் முஸ்லிம் பெண்களினதும் கட்டாயக் கடமையாகும்” என நபி (ஸல்) அவர்கள் கல்வியறிவைப் பற்றி வலியுறுத்தியுள்ளார். ஆனால் ஆணாதிக்கச் சமூகச் சூழலில் பெண்கள் கல்வி பயின்றால் தம்மிலும் அறிவாளியாகித் தம்மில் தங்கியிருக்க மாட்டார்கள் என்ற பயத்தினால் “முஸ்லிம்கள்’ என விழித்திருப்பது ஆண்களை மட்டுமே என அர்த்தப்படுத்தி உள்ளனர். ஆனால் இதைத் தடுப்பதற்காகவே கல்வியின் அவசியத்தை ஆண்களிற்கும், பெண்களிற்கும் தனித்தனியே நபிகள் கூறியிருப்பதை முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர் என்கின்றார் மீராலெவ்வை.
பொதுவாக உள்ள கருத்து யாதெனில் பெண்கள் ஆண்களிற்கு அடங்கியவர்கள் என்பதே. பெளத்த மதத்தில் பிக்குணிகள் மாத்திரமல்ல, சாதாரண பெண்களும் ஆணாதிக்கத்திற்கு அடங்கிச் செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. பெண்கள் தொடர்பான இம்சைகள், அச்சுறுத்தல்கள், அநீதிகள், சட்டங்கள், மற்றும் சமூக எதிர் பார்ப்புக்கள், 2300 ஆண்டுகளிற்கு முன்னர் எவ்வாறு இருந்ததோ,(சிறிய முன்னேற்றம் இருந்தாலும்) அவ்வாறே இக்காலத்திலும், பெண்கள் சமூக அந்தஸ்து குறைவானவர்களாகக் காணப்பட்டனர் என்கிறார் விஜித்தா.
பெண்கள் ஆண்களின் போகப் பொருட்கள்
உண்மையான குர்ஆனிய ஆன்மீகத் தன்மையைப் பெண்கள் உணரவில்லை. நபிகள் நாயகம் மனப்பூர்வமாக ஆராய முற்பட்டுள்ளார்கள். அவர்கள் “ஜாஹிலிய்யா’க்காலப் பெண்கள் எக் காரணத்திற்காக அடக்கி ஒடுக்கி இழிவாக நடாத்தப்பட்டார்கள் என்றும், பின்பு நபியின் வருகைக்குப் பின்னர் அவர்கள் என்ன காரணத்திற்காகப் பெண் பிள்ளைகளைக் கொலை செய்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் இஸ்லாமிய சமூகப் பெண்கள் பாரிய மாற்றத்திற்குள்ளானார்கள். இச் செயல்கள் நபியினால் கண்டிக்கப்பட்டு பெண்களின் அந்தஸ்து உயர ஆரம்பித்தது. அத்துடன் கணக்கற்ற மனைவியரையும் வைத்துக் கொள்ளலாம், என்ற நிலைமை மாறி எண்ணிக்கை நான்காக மாறியது என்பதான கருத்தை மீராலெவ்வை முன்வைத்துள்ளார். இஸ்லாமியச் சட்டப்படி முஸ்லிம் ஆண்களால் நான்கு மனைவிமாரை வைத்திருக்க முடியும் எனக் கூறுகின்றனர். ஆனால் முதல் மனைவியின் அனுமதியைப் பெறுவது அவசியமாகின்றது. ஆதரவற்ற பெண்களைக் கருத்திற் கொண்டே இவ் அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன் பல தார மணத்தின் போது பெண்களுடன் நிதானமாக
76 நிவேதினி

நடக்க முடியாதென்றால் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். இது ஒரு சமூகப்பிரச்சனையை தீர்த்து வைப்பதாகும்- திருக்குர்ஆன் அத்தியாயம் 4 வசனம் 3 விருப்பமான பெண்களை இரண்டாகவோ மூன்றாகவோ நான்காகவோ திருமணம் செய்கின்றனர். ஆண்கள் அவர்களைப் பார்ப்பது கடினம் என்பதால் இதனைப் புறக்கணிக்கின்றனர். இது மார்க்கத்திற்கு இழுக்கானது என்ற மீராலெவ்வை மேலும் கூறுகின்றார்.
பெண் உடன்கட்டை ஏறும் துயர்நிலை
“பெரிய புராண வரலாற்று நவிற்சிக் காலத்தில் சைவ நெறியிற் பெண் நிலை” என்ற கட்டுரையின் ஆரம்பத்தில், சமயத்தைப் பற்றிய வரைவிலக்கணங்களையும், பின்பு இந்து மதம் ஒரு பல்கோணி என்ற அமைப்பு என்பதை சேர் மோனியர் வில்லியம்ஸ் விளக்குவதையும், பின்பு மகாத்மாகாந்தியின் சமயம் பற்றிய சிந்தனையையும் விபரிக்கின்றார் வை. கா. சிவப்பிரகாசம். கணவனை இழந்த பெண் உடன்கட்டை ஏறும் முறை எவ்வாறு இந்தியாவில் தோன்றி வளர்ச்சியடைந்து பின்பு பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் தடை செய்யப்பட்டது என்பதை விளக்கி, இவ்வழக்கம் எவ்வாறு வட பாரதத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் வேறுபட்டதென்பதை எடுத்துக் காட்டுகின்றார் கட்டுரை ஆசிரியர்.
இங்கு சொல்லப்பட்டுள்ள பெண்களில் சிலர், “உடன் உயிர் நீத்தார் ” மற்றும் “கணவனாரோடு சென்றார்கள்” “உடன் கட்டையேறல்” என்ற செயலையே செய்தனர்.ஆனால் இவற்றிற்கு அதிர்ச்சி தந்த திடீர்மரணம், மாரடைப்பு என்ற காரண விளக்கம் காட்டி இவர்கள் உடன்கட்டை ஏறவில்லை என்பதை நிருபிக்கப் படுகின்றனர். பெரிய புராண காலத்தில் வாழ்ந்த பெண்கள், பல்வேறு சூழ்நிலைகளிற்குட்பட்டு வாழ்ந்தாலும் கொள்கை, நம்பிக்கை, சாதி, வர்க்கம், மனநிலைசார் அந்தஸ்து, சமூக ஒழுக்கநிலை, பொருளாதாரம் என்பவற்றில் வேறுபட்டுக் காணப்பட்டாலும், ஆணாதிக்கத்திற்குட்பட்டு, பல்வேறு இன்னல்களை அடைந்தும், கொடுமைப்படுத்தப்பட்டும் காணப்பட்டார்கள். சிலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இது சிவப்பிரகாசம் கூற்று.
6L6ðI6(65) FIDUIpib
இப் பெரிய புராணக் காலத்தில் வாழ்ந்த பெண்கள் பல்வேறு சூழ்நிலைகளிற்குட்பட்டு வாழ்ந்தாலும், கொள்கை, நம்பிக்கை, சாதி வர்க்கம், மனநிலசார் அந்தஸ்து, சமூக ஒழுக்கநிலை, பொருளாதாரம் என்பவற்றில் வேறுபட்டுக் காணப்பட்டாலும், ஆணாதிக்கத்திற்குட்பட்டு, பல்வேறு துன்பங்களை அடைந்தும் கொடுமைப்படுத்தப்பட்டும் காணப்பட்டார்கள். சிலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர் என்கிறார் சிவப்பிரகாசம். இவர் சேக்கிழார், எழுதிய பெரிய புராணத்தில் சொல்லப்பட்டுள்ள பெண்களின் சமூக மதிப்பு மற்றும், சமயத்தின் பெண்நிலை என்பவற்றைத் தகுந்த உதாரணங்களுடன் பரிசீலிக்கின்றார். பெரிய
நிவேதினி 77

Page 43
புராணத்தில் சிலு பெண்கள் கருத்துச் சுதந்திரத்தையும் எதிர்ப்புணர்வுகளையும் வெளிப்படுத்திய தீரத்தை எடுத்துரைக்கின்றார். இங்கு பெண்ணிலை வாதச் சிந்தனைகளிற்கு மதிப்பளிக்கப்பட்டுள்ளன. ஆகம மயப்படுத்தப்படாத வழிபாட்டு முறைகளிலும் புராதன வழிபாட்டு முறைகளிலும் பெண்களின் பங்குபற்றலிற்குச் சிறிதளவு இடம் உள்ளது. ஆனால் ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட சமஸ்கிருதமயமாகி வரும் சமயத்தில் பெண்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றது என்பது அவர் வாதம்.
பெண்கள் தெய்வமாகுதலின்போது தற்காலிகமாகவேனும், பலம், சக்தியுடையவர்களாகக் கருதப்படுகின்றனர். ஆனால் இது பெண்களின் நிரந்தர வாழ்க்கையில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அத்துடன் அவர்கள் அனுபவிக்கும் ஒடுக்கு முறைகள் நிரந்தரமாக அகற்றப்படவில்லை என்பதும் கண்கூடு என்கிறார் சித்திரலேகா. பெளத்த மதம் குறிப்பாக ஆண்களிற்கு நிகராகப் பெண்களை மதித்தது. அத்துடன் அவர்கள் மதம் பரப்புவதிலும் ஈடுபட்டார்கள். பெளத்த மதம் முக்கிய குறிப்பாக ஆண்களிற்கு நிகராகப் பெண்களை மதித்தது. அத்துடன் அவர்கள் மதம் பரப்புவதிலும் ஈடுபட்டார்கள். பெளத்த மதத்தைத் தழுவுவதற்கு அங்கு காணப்பட்ட குறைந்த கட்டுப்பாடுகளே முக்கிய காரணமாக இருந்தது. இதனால் பெளத்த மதம் மக்களிடையே சிறந்த பிரபல்யம் பெற்றுக் காணப்பட்டது. பெளத்த மதத்தில் பெண்கள் முதன்முதலில் இணைந்து கொள்வதற்குக் காரணமாக இருந்தவர் கௌதம புத்தரின் சிற்றன்னையான பிரஜாபதியே. இவர் ஆனந்த தேரரிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கௌதம புத்தருடன் கலந்துரையாடி, பெளத்த மதத்தில் பெண்களிற்கான இடத்தை எடுத்தார் என்கிறார் விஜித்தா.
சித்தர் பார்வையில் பெண்கள்
சித்தர்கள் பெண்களைப் பற்றிவைத்திருந்த கருத்தும், உலகத்துடன் ஒத்துப் போவதாகவும், அவர்கள் யதார்த்தமாகச் சிந்தித்து, பெண்கள் பற்றிய கருத்துக்களை வெளியிட்டார்கள். வேத காலங்களில், வைதீகர்கள் பெண்களை வீட்டில் விலக்கி வைத்தனர். பல்வேறு சூழ்நிலைகளில் அவளின் உரிமைகளை மறுத்தனர். தீண்டப்படாதவளாகக் கருதினார்கள் என்கிறார் செ.யோகராசா. ஆனால் சித்தர்கள் உலக சிருஸ்டியில் பெண்கள் முக்கியமானவர்கள் என்பதை ஒப்புக் கொள்கின்றனர். உடல் பற்றிய கருத்துக்களின் தர்க்க ரீதியான வளர்ச்சியடிப்படையிலும், படைப்புக் கடவுளை ஒப்புக் கொள்ளாத சித்தர்கள். ஆண், பெண் சேர்க்கையாலே உலகத்தில் எத்தொழிலும் நடைபெறுகின்றது என்றனர். ஆணும், பெண்ணுமே உலகத்தைப் படைப்பவர்கள். உலகத்திற்கு மூலகாரணம் சிவம்சக்தி. சிவம் என்பது ஆண், சக்தி என்பது பெண். இதுவே சித்தர்கள் கருத்து என்பது யோகராஜாவின் வாதம். மக்களின் தோற்றுவாயாக இருப்பவள் பெண் என்பது சித்தர்களின் கொள்கை. அவர்கள் பெண்கள் அனைவரும் தமக்கு நன்மைதரும் நிலையிலேயே
78 நிவேதினி

இருக்கின்றனர் என்றனர். பெண்ணும் இல்லாமல் ஆணும் இல்லை. எனவே பெண்ணைப் பேணிப் பாராட்ட வேண்டும் என்றனர். எனவே பெண்கள் தான் படைப்புச் சக்தி. பெண்கள் இல்லையேல் ஆண்கள் இல்லை என்கிறார் யோகராஜா.
எனவே சித்தர்கள், பெண்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களுக்குச் சமூகத்தில் சம அந்தஸ்து கொடுத்துள்ளனர் என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.
துறவறத்தில் பெண்கள்
மாதவியும் அவர் மகளான மணிமேகலையும் துறவற நிலையில் பெளத்த மதத்தினைப் பரவலாக்கினர். மாதவி தனக்கேற்பட்ட துயரத்தால் துறவு வாழ்க்கை வாழ்ந்தாள். எனினும் இக்குல மரபினர் துறவுக்கோலம் பூண்டது நாணத்தக்கது என்றும் கூறப்பட்டது. துறவறத்தை மேற்கொண்டபோதும் தனதும் தனது மகளினதும் துறவுநிலையைத் தொடர்ந்தும் பேணுவதில் பல இடர்பாடுகளையும் எதிர்ப்புக்களையும் மாதவி சந்திக்க வேண்டியிருந்தது. மாதவி துறவியான பின்னரும் அவளைத் துறவியாக சமூகம் அங்கீகரிக்கவில்லை. மாதவியினது துறவைப்போல் அவளது குலத்தினரும் மற்றும் அரச குலத்தினரும் மணிமேகலையின் துறவையும் ஏற்றுக்கொள்ளாமை தெரியவருகின்றது. எனவே மாதவியும் மணிமேகலையும் துறவிகளாயினும் பற்றற்ற துறவுநிலைத் தகுதியை பெறாதவர்களாகவும் பந்த பாசங்களுக்குட்பட்டவராகவும் இருந்தனர் எனலாம். எனவே துறவுநிலையினும் கூட பெண் ஆணைவிட மேன்மையும், ஞானமும், போதனைத்திறனும், முக்திப்பேறும் பெற்றவளாகக் கருதப்படவில்லை என்பதை உணர முடியுமென ஆசிரியர் குறிப்பிடுகிறார். இங்கு சித்தரிக்கப்பட்டிருந்த மாதவியும் மணிமேகலையும் கணிகையர் குலத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். சமூகத்தில் காணப்பட்ட மற்றைய சாதாரண பெண்களைப் போன்று எல்லாவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடமுடியாது என்கிறார் றுபி வாலன்ரீனா.
இருந்தாலும் புத்தர், பெண்கள் பிக்குணியாவதற்கு எட்டு நிபந்தனைகளை விதித்தார். அதில் ஒன்று இளவயது பிக்குணியானாலும் வயது முதிர்ந்த பிக்குணியானாலும் கட்டாயமாக பிக்குகளிற்கு மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்கிறார். இதிலிருந்து பெளத்த சமயத்திலும் பெண்கள் ஆண்களிற்கு கட்டுப்பட்டவர்களாகவே காணப்பட்டனர் என்ற தன்மை புலப்படுகிறது. பெளத்த மதத்தில் காணப்பட்ட ஜாதகக் கதைகளிலும் பெண்களின் அந்தஸ்து குறைவாகவே மதிக்கப்படுகின்றது. ஆண்களிற்குப் பெண்கள் அடங்கிப் போகிறவர்களாகவும் பெண்கள் ஆண்களிற்கு அடிமையானவர்கள் என்ற தரக்குறைவான கருத்துக்களும் காணப்பட்டது என்றார் விஜித்தா.
திருமணமாகாத பெண்களின் வரலாற்றை நோக்கும் போது அவர்கள் சிவனடியார்களாக வாழ்ந்திருக்கின்றனர். அத்துடன் நாயன்மார்களின் மகள் போன்றவர்களாகக் கணிக்கப்பட்டனர். கன்னிகள் மீது ஆலாலசுந்தரர் கொண்ட
நிவேதினி 79

Page 44
மையல் பெண்களை ஏமாற்றும் ஆண்களிடமிருந்து விழிப்புணர்ச்சி அடையச்செய்யும் தன்மைகளைக் கொண்டன. அவர்களின் கருத்துச் சுதந்திரம் உரிமைகள் என்பவற்றிற்கு முதன்மை அளிக்கப்பட்டது. பெண்ணின் கண்ணியத்திற்கும் அவசியம் ஏற்பட்டது. ஆண்கள் பெண்களிற்கு கொடுமை செய்தார்கள் என்ற உண்மையும் கூறப்பட்டுள்ளது.
இக்கட்டுரைகளில் காணப்படும் வெவ்வேறு சமய சமூகங்களில் பல அம்சங்கள் பெண்களின் ஆளுமைக்குச் சவாலாக அமைந்துள்ளன.
பெரிய புராணத்தில் காணப்படும் சில அன்னையர், பல்வேறு விதமான துன்பங்களிற்கு ஆளாக்கப்பட்டனர். அத்துடன் பல்வேறு விதமான கடமையுணர்வுகள் மிக்கவர்களாக காணப்பட்டனர்.
எதிர் காலத்தில் பெண்ணைக் கெளரவமாக மதிக்கும் சமுதாயம் ஏற்படுமெனில் பெண்கள் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். பெண்கள் தம்மைத் தற்காத்துக் கொள்ளும் அதேவேளை, ஆண்கள் தம்முரட்டுக் குணங்களையும் மாற்றவேண்டும். ܗܝ
கல்வியறிவு பெற்று ஆணுக்குச் சமமான குடும்பத் தலைவியாக பெண்கள் இருத்தல் சிறப்பு பெண்ணிற்கு உயர் கல்வியறிவு கொடுத்து குடும்பத் தலைவியாக ஆக்குவதற்குத் தேவையான குணாம்சங்களை வளர்த்துக் கொள்வதிலேயே எமது சமூகம் அக்கறை காட்ட வேண்டும்.
ஒரு பெண் தனது இயற்கையான தன்மைகளிலும் ஒழுக்கக் கட்டுப் பாட்டுத்தன்மையிலும் ஆணைவிடக் குறைந்தவள் எனவும், அவள் உரிமைகள் வரையறுக்கப்பட வேண்டும் என்பது மடமை.
இறைவன் பெண்களிற்குச் சமவுரிமையைத் தாராளமாக கொடுத்துள்ள Gurrýấyyih g6ivT SGOTg. Chauvinistic (Superiority) 56óTGOLONGOTTáò g6Mg தக்க வைத்துக் கொள்கின்றான்.
பெண்களின் அறிவுக்கூர்மையும், சாணக்கியத்தையும் மறுப்பது இறைவன் பார்வையில் மிகவும் பாவமாகவே கணிக்கப்படும்.
பெண்களில் “படித்தரம்” உண்டு என்ற பதத்தை உபயேகிப்பதன் மூலம் ஆண்களின் அகங்காரத்தைத் திருப்திபடுத்துவதாக அமையும் என்ற கருத்தும் வேறு எழுத்தாளர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
Na Na ※ 7?ᎳᏚ aN WYN
80 நிவேதினி

நிவேதினியின் குறிஇலக்கும் நோக்கும்
Iல்நிலை சார்ந்த பிரச்சினைகள் அவற்றுடன் தொடர்புடைய ஊடகங்கள், உழைப்பு, பூகோள பின்னணியில் பண்பாடு ஆகியவை பற்றி தென்னாசிய பிராந்தியத்தில் உரையாடல் நடைபெற வேண்டும் என்று நிவேதினி கருதுகின்றது. இத்தகைய கலந்துரையாடல் பல்வேறு கற்கை நெறிகளின்/பரிமாணத்தின் ஊடாகவும் உள்ளூர் பிரதேச உறவுகளில் வேரூன்றிய கோட்பாட்டு ரீதியான செயலறிவு சார்ந்த வரலாற்று ஆராய்ச்சிகளை சிறப்புக் கூறுகளாகக் கொண்டிருக்கும். ஒன்றுக் கொன்று தொடர்புடைய பொருள்கள் பற்றிய ஆய்வுகளையும் உள்ளடக்கும்.
பால்நிலை சார்ந்த பின்வருவனவற்றைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
* கருத்தினதும் அறிவினதும் உற்பத்தியும் புரிந்து கொள்ளலும். * பண்பாட்டு நிறுவனங்கள், நடைமுறைகள், கொள்கைகள், அதிகாரங்கள். * ஊடகத்துறையிலும், பண்பாட்டுத்துறையிலும் தொழில்நுட்பம். மாற்றம்,
அபிவிருத்தி, பூகோள மயமாக்கல். * அறிவு சார்ந்த, வெகுஜனம் சார்ந்த, வர்த்தக அமைப்புச் சார்ந்த,
பண்பாட்டின் ஒன்று குவிதல். * அதிக கவனத்திற்கு உட்படாத பிரதேசங்களைப் பற்றியும் ஆய்வுத்துறை
பற்றியும் மேற்கொள்ளப்படும் பண்பாட்டு ஆய்வுகள். * பண்பாட்டு ஆய்வுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வு முறைகளும், ஆய்வுக்கு உட்படுத்தப்படும் பொருள்களும் வெவ்வேறு கற்கை நெறி மரபுகள் பற்றிய நிறைவு, எதிர்காலம் பற்றிய விவாதங்கள்.
ஒரு குறிப்பிட்ட ஆய்வுப் பொருள் பற்றிய கருப்பொருளான ஆய்வில் வேரூன்றிய கட்டுரைகளை இச்சஞ்சிகை வெளியிடும் அதேவேளை இத்தகைய ஆய்வுகள் புதிய மார்க்கங்களையும், கருத்துக்களையும் ஆய்வு முறைகளுக்கும் வழிசமைத்து புதிய தலைமுறை ஆய்வாளருக்கும் வாசகர்களுக்கும் புத்தூக்கம் அளிக்க கூடியதாக இருத்தல் வேண்டும். சஞ்சிகையின் சில பகுதிகள் விவாதங்களுக்கு உற்சாகம் அளிப்பதோடு மகாநாடுகள், சஞ்சிகைகள், நூல்கள், திரைப்படங்கள் ஆகியவை பற்றிய விமர்சனங்களையும் தாங்கி வரும்.
நிவேதிணி 81

Page 45
கட்டுரை ஆசிரியர்களுக்கான குறிப்புகளும் வழி காட்டல்களும்.
சகல கற்கை நெறிகள் பற்றிய கட்டுரைகளை சஞ்சிகை வரவேற்கும் அதே வேளை பால்நிலை சார்ந்த பிரச்சினைகள் பற்றி ஒன்றுடன் ஒன்று பிணைந்த கற்கைநெறி அணுகுமுறையில் அமைந்த கட்டுகளுக்கு சிறப்பு வரவேற்பு உண்டு.
SM YYN
YAM ZYN.
&/ YYN
ア
s
82
ஆய்வுக் கட்டுரைகள் A4 அளவிலான தாளில் 15-20 பக்கங்கள் வரை அமைதல் வேண்டும். விமர்சனங்கள் ஏறத்தாழ 500-600 சொற்களில் அமைதல் வேண்டும். * கட்டுரைகள் தமிழில் எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.
கட்டுரைகள்/ விமர்சனங்கள் A4 தாளில் இரட்டை இடைவெளி விட்டு தட்டச்சு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். கட்டுரையின் தலையங்கம் வேறுதாளில் தட்டச்சு செய்யப்பட்டு அதில் கட்டுரை ஆசிரியரின் பெயர், விலாசம், தொலைபேசி எண், தொலைநகல் எண், மின்னஞ்சல் விபரம் ஆகியன குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். 100 சொற்களுக்கு மேற்படாத சுருக்கம் சமர்ப்பிக்கப்படலாம். வேறு தாளில் ஒவ்வொரு கட்டுரை ஆசிரியர் பற்றிய குறிப்பு இரண்டு அல்லது மூன்று வரிகளில் தட்டச்சு செய்து கட்டுரையுடன் இணைக்கப்படல் வேண்டும். கட்டுரை ஆசிரியருக்கு கொடுப்பனவு செலுத்தப்படமாட்டாது. ஒவ்வொரு கட்டுரை ஆசிரியருக்கும் சஞ்சிகையின் ஒவ்வொரு பிரதி அனுப்பி வைக்கப்படும். கட்டுரைகள், விமர்சனங்கள் பின்வரும் விலாசத்திற்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
ஆசிரியர்
நிவேதினி, பால்சார் ஆய்வுகளுக்கான சஞ்சிகை பெண்கள் கல்வி ஆய்வு நிலையம் இல, 53தர்மராம வீதி கொழும்பு-6யூரீலங்கா. தொலைபேசி: 2596826/2595296 தொலைநகல் 2596313 lóliraté5érsó: womedre(2Sltnet. Ik
நிவேதிணி

வருடாந்த சந்தா - நிவேதினி
North America : US$ 15 UK & Europe : US$ 10 India, S. Asia : US$ 05 Sri Lanka : SLR 125/-
சந்தா விண்ணப்பம் - 2OO4
நிவேதிணிக்கு சஞ்சிகைக்கு சந்தா அனுப்பியுள்ளேன்.
0L0LLLLLLL LSL LLLLLLLLSLLLLLSLLLLLLLL LLLLLL LLLLLLLLSLLLLLLL0SLLLSLLLLLLLL LLLLLLLLSLLLLL LSLLLLL LSLLLLLLLLLLSLLLLLSLLLLLSLLLLLLLL LLLLL LLLLLLLLSLLLL LL LLLLLLLLSLLLLLLLL LLLLLLLL0SLLL LLLLLLLLL
இத்துடன் காசோலை / மணிஓடரை பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் பெயரில் அனுப்பி வைக்கிறேன்.
Women's Education and Research Centre 58, Dharmarama HOaCl, WeslaWatte Colombo - O6,
Sri Lanka.

Page 46
伊多
召 ~ ~

கையெழுத்துப் பிரதி ஒப்புவித்தல்
ஆசிரியர் தன் பிரதியை வைத்துக் கொண்டு இரு நகல் பிரதிகளை னக்கு செய்து அனுப்ப வேண்டும். ஒரு பக்கத்தில் A4 காகிதத்தில் இரு ரிகள் விட்டு அச்சடித்து இருக்க வேண்டும். 9 ஹாவேர்ட் ஒழுங்கு முறையை (Harward System) உபயோகித்த
அகரவரிசைக் குறிப்பில் பிரதான பகுதியைத் தொடரவேண்டும்.
Wட்டவணை
புறம்பானதாளில் இரு வரிகள் விட்டு அச்சடித்து அதன்நிலையைப் க்க விலக்கு அளித்திருக்க வேண்டும். எல்லா அட்டவணைகளின் ழும் விளக்கமான தலைப்புகளுடன் அடியில் எழுதப்படும் குறிப்புகள், அதன் மூலகாரணம் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும்.
GO)
புரியாத சொற்கள் உபயோகிக்காமல் தெளிவாக வாசிக்கும்
டையைப் பாவிக்கவும். பிரத்தியேகமாகப் பாவிக்கும் வார்த்தைகளை முதலில் தவிர்க்கவும். பன்மையானதும் பாகுபாடு அற்ற எதிர் முறையானதுமான சொற்களை உபயோகிக்க வேண்டும்.
1ழுத்துக் கட்டுதல்
ஐரோப்பிய நாட்டுப் பாவனையிலுள்ள அகராதியைத் (Oxford Ey. Dictionary) 2G96576Gujázonth.
நிறுத்தக் குறியீடுகள்
* 'இரட்டை மேற்கோள் குறிகள் தனியேற்கோல் குறிகள் உபயோகிக்கவும். திகதிகள் முதலில் திகதி, மாதம், வருடம் (1வைகாசி 002) வருமாறு எழுதப்பட வேண்டும். தட்டத்தகடு வெளியிடுவதற்கு கையெழுத்துப் பிரதி ஏற்கப்பட்டதும் கடைசிப் பிரதியை விரும்பின் ாட்டத்தகடில் கொடுக்கலாம்.
ஆசிரியர் பிரசுர உரிமை
ஆசிரியர் தங்கள் பிரதிகளைப் பிரசுரிக்கமுன், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் பிரசுர உரிமை பெறவேண்டும். இதன் மூலம் 1ங்கள் பிரதிகளை ஒரு வருடத்திற்குப் பின் வேறு வெளியீடுகளில் பிரசுரிக்க முடியும்.

Page 47
67ZD-2/ 6262,
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், இல, 58 தர்மராம விதி கொழும்பு 06 67தாலைபேசி: 2595296, 2596826
1O.
பெண்கள் கல்வி ஆய்வு நிறு
LD6O)6WouLJö5 LDösö5c656O)LuU GSş6OTğ5 கமலினி, கணேசன்
சமூகக் கோட்பாட்டுத் தளத்தில்
வர்த்தகம் சாதி பெண்நிலைப் ட செல்விதிருச்சந்திரன்
பெண்நிலைச் சிந்தனைகள் சித்திரலேகா மெளனகுரு
பெண்களின் வாய்மொழி இலக் ஒப்பாரி தாலாட்டு பற்றிய சமூக செல்விதிருச்சந்திரன்
Gendered Subjects (English) Ed. By Selvy ThiruChandran
Subjectivities and Historicism By Selvy Thiruchandran
Feminine Speech Transmissio An Exploration into the Lulla By Selvy Thiruchandran
Writing an Inheritance : W 1860 - 1948, Vol. 1
Celebrating Sri Lankan Wom Volume II
PRINTED BY UNIE ARTS (PVT) LTD., C

எரிமfடுகள்
றுவன புத்தக வெளியீடுகள்
துவ இருப்பில் பால்நிலை
ல் பால்நிலை
பண்பாடு பற்றிய நோக்கு
ங்கியம் கவியல் நோக்கு
S pies and Dirges of Women
lomen's Writing in Sri Lanka
2n's English Writing
OLOMBO 13. TEL: 2330195, 2478133