கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிவேதினி 1998.06

Page 1
நிவே
க் கற்
நிலைச்
இத
T6)
ழ் 5 மலர்
(GL 650T 60). LDL 6),
கலாசார ஒடுக்கு
ாலம் நிற்கிறது
பெண்கள் கல்வி
편쉽회피피쉬지지최 兖 穿 笠 穿 妊)察察察*}}}
 
 

கை நெறிச்சஞ்சிகை
1998
ஆனி
『혁TFTFF(F)(F)JFETFTTFTFTFTFTFTFTF려TFTF혁TF혁TF 箕穿辫瑟s, H: HHHHHHH舞蹟 空空空窍 HHHHHHHHHHHHHHHH堂江江 妊’ 工HHHHHHHHHH舞蹟兖穿笠穿 *)
}LDfŤgf6ÖTLE)
து முறைக்குள்ளான
ஆய்வு நிறுவனம்

Page 2
எமது குறிக்கோள்களில் சில
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம் ஒரு அரசாங்கச் g IT ri L 1 pö p பெண் களுக் கான 6it g5 T L 60T L f . சமூகங்களிடையே ஒற்றுமை, சமூக மாற்றங்கள், ஜனநாயக பண்புகளை நிலைநாட்டுதல் போன்ற குறிக்கோள்களைக் கொண்ட இந்நிறுவனம், சகல இன பெண்களின் முன்னேற்றத் திற்காக உழைக்க முற்பட்டுள்ளது.
இலங்கையில் பெண்கள் நிலை பற்றிய பல்வேறு அம்சங்களையும் நன்கு கற்று ஆய்வு செய்தல் இதன் முக்கிய நோக்கம். இலங்கையில் பெண்கள் சம்பந்தமான ஆவணங்கள், வளங்கள் ஆகியவற்றை சேகரிக்கும் இந்நிறுவனம், மூன்றாம் உலகிலே பெண்களின் நிலைபற்றி ஆய்வு செய்யும் அமைப்புகளின் ஒரு பகுதியாக இருக்கும்.
பால் வேறுபாடு காரணமாக ஏற்படும் விளைவுகளைப் பற்றி இந்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல்.
பெண்கள் சம்பந்தப்பட்ட விடயங்களைப் பரப்புதலும், பெண்நலம் சம்பந்தப்பட்ட விடயங்களில் பெண்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, அக்கறையைத் துரண்டுதலும்.
இலங்கையிலுள்ள ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட குழுக்களுக்கான (அகதிகள் , வேலையற்றோர், சேரிவாசிகள் ) மீளக் குடியமர்வு முயற்சிகளில் ஒத்துழைப்பையும், ஊக்கத்தையும் நல்கல்.
(e)
WERC பெண்கள் கல்வி , ஆய்வு நிறுவனம்

பொருளடSழி
ஆசிரியருரை
மேலாதிக்கநிலைமைகளும் பெண்நிலைவாதமும்
கமலினி கணேசன்
பெண்களும் எழுத்தும் சில பிரச்சனை மையங்கள்
தேவகெளரி
சீதையின் கதை ராஜம் கிருஷ்ணண்
பெண் வெறுப்பும் அவற்றின் ஐதீக வெளிப்பாடும்
செல்வி திருச்சந்திரன்
காலம் நிற்கிறது பிரேமா அருணாசலம்
பெண்நிலைவாதமும் பெண் மைய விமர்சனமும்
நதிரா மரியசந்தனம்
கலாசார ஒடுக்குமுறைக்குள்ளான பெண்கள் சார்பாக சில குறிப்புகள்
சூரியகுமாரி பஞ்சநாதன்
13
35
40
70
79
93

Page 3
இச்சஞ்சிகையில் பிரசுரமாகும் கட்டுரைகளை ஆசிரியரின் அனுமதியுடன் மட்டுமே மறு பிரசுரம் செய்யலாம். கட்டுரை களிலும் கவிதைகளிலும் பிரதிபலிக்கும் கருத்துக்கள் அவ்வவ் ஆசிரியர் களின் சொந்தக் கருத்துக் களே , இதழாசிரியருடையவை அல்ல.
பணிப்பாளர் குழு
கலாநிதி குமாரி ஜயவர்த்தனா கலாநிதி ராதிகா குமாரசாமி பேர்னடீன் சில்வா கலாநிதி செல்வி திருச்சந்திரன் அன்பேரியா ஹனிபா
இதழாசிரியர்
கலாநிதி செல்வி திருச்சந்திரன்
58. தர்மராம வீதி கொழும்பு -08 இலங்கை т : 590985 / 595296 Fax No :596313
ISSN: 1391-0353

நிவேதினி ஆசிரியருரை
சாதி, வர்க்க, தேசிய எல்லைகளைக் கடந்த ஒரு பொதுமை நிலையில் உள்ள பெண்கள் எல்லோருமே ஒருபகுப்புக்குள் அடங்குவர். சாதியத்தை, வர்க்கத்தை, தேசியத்ததை விளக்குவதற்கு முன் வைக் கப் பட்ட வாதங்களும் விளக்கங்களும் இப்பொதுமையை பெண்கள் என்று உடல் ரீதியாக பிரிக்கப்பட்ட ஒரு சாராரின் உரிமை மறுப்புக்களின் பொதுமையை, உண்மையை அவர்களின் அந்தஸ்தின் கீழ்நிலையையும் இனங்கண்டதாகத் தெரியவில்லை. அதை விட இந்த உரிமை மறுப்புக்கள் சமூக சட்ட சமய இலக்கிய J5 ou T S T LT அங்கீகரிப் புக் களையும் ஒருங் கே கொண்டிருப்பதையும், அவ்வுரிமை மீறல்கள் இவற்றின் பேரில் காலங்காலமாக நியாயப்படுத்தப்பட்டு வந்தமையும் ஒரு விசித்திரமன்றோ. அலங்கோலம் என்றோ அவற்றைப் பிரகடனப்படுத்தியவர்களுக்குத் தெரியவில்லை. அவை மிகச் சாதாரணமானவையாக சமுதாயத்தை நிலைப்படுத்தவும் அதற்குதேவையான மேம்பாடுகளாகவும் அவர்களுக்குத் தெரிந்தது. தமிழர்களில் கீழ் சாதிப் பெண் என்று கணிக்கப்பட்ட பொன்னிக்கும், உயர்சாதிப் பெண்ணான கிருஷாந்திக்கும், சிங்களப் பெண்ணான மன்னம்பெரிக்கும் இந்தியப் பெண்ணான மதுராவிற்கும், ருப்கன்வாருக்கும், காலில் இரும்புக்கவசம் அணியப்பட்ட சீனப் பெண்ணுக்கும் Chastity Belt அணியப்பட்ட ஐரோப்பிய பெண்ணுக்கும் கால தேச இட சாதிய வர்க்க நிலைகளைக் கடந்த ஒரு பொதுமை உண்டு. இந்தப் பொதுமை கருவளம் படைத்த பெண் என்றபடியால் தான் உண்டானதா? அதனால் தான் Shulaimyth Firestone ம் பெரியாரும் பெண்ணே உனது கருப்பையை அகற்றிவிடு என்று கூற முன்வந்தார்கள். கருப்பையை அகற்றிவிட்டால் பெண்ணுக்கே என்று வகுக்கப்பட்ட அடக்குமுறைகள் அகன்று விடுமா? பெண்ணுக் கிழைக்கப்பட்ட அநீதிகளை நாம் ஓரளவே உடல்ரீதியான விளக்கத்தை வைத்து விளங்கிக் கொள்ளலாம்.

Page 4
நிவேதினி பெண்ணுக்கே சிறப்பாக இருக்கும் உடல் உறுப்புக்கள், கருத்தரிக்கும் இயல்பு (தாய்) பால் ஊட்டும் வளமுடைய அவயஉறுப்புக்களைக் கொண்ட அவளது உடற் கூறும், குழந்தைகளைப் பெறவும், உணவு ஊட்டவும் என அவளை மனைக்குள்ளேயே முடக்கி விட தன்னால் உலகுக்கழிக்கப்பட்ட கையறு நிலையில் உள்ள சிசுக்களை, குழந்தைகளை, சீராட்ட, பாராட்ட, தாலாட்ட, என்று அவளது தொழில்கள் கூடிக் கொண்டே போக அவை பழுவாக அவளது ஏகபோக கடமைகளாக மாறிவிட அந்தக் கணவன் "மனைஞனாக” துணைவனாக இருக்கவிரும்பவில்லை. அவன் படிப்படியாக ஸ்வாமியாக, தலைவனாகக், கடவுளாக மாறிவிட மனைவி கீழ்ப்படிபவளாக மாற்றப்பட்டுவிட்டடாள். அவளது உடல் வாகு ஒரு சில உறுப்புக்களைக் கொண்ட-படியால், இன்ப உறவுகளுக்கு மாத்திரமல்லாமல் , வல்லுறவுக்கும் பலாத் காரத்துடன் கூடிய வன்முறைக்கும் அது உட்படுத்தப்பட்டுள்ளது. ஆணின் வல்லுறவு ஆட்சிக்கு அவள் அடிமைப் படுத்தப் பட்டாள் . கணவனுக்கு அவள் மனைச் சுகம் , சமையல் சாப் பாடு , உடலின் பம் போன்றவற்றை மனைவியான பெண்ணாக நல்குவது அவள் கடமையாகவும் ஏன் சட்டமாகக் கூட மாறி விட்டது. ஆனால் வல்லுறவு, பலாத்காரம் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக சட்டமியற்றப்பட்டபொழுது அவ் வல்லுறவிற்கு சாட்சி காரணங்கள்; அவள் ஏன் அங்கு, அவ்வேளையில் சென்றாள் போன்ற கேள்விகளை எழுப்பி பலாத்காரம் என்பது இணக்கம், அவளது விருப்பம் என்று திரித்துக் கூறப்பட சட்டம் கூட அப் பெண்ணை உடல் உறுப்புமைய நோக்கில், ஆண் நோக்கில் தான் பார்க்க முற்பட்டது.
பெண்ணின் இரண்டாம் பட்ச நிலைக்கு அவளது உடல் உறுப்பு நிலை தான் காரணமா? அப்படி என்றால் அவளுக்கு விமோசனம் கிட்டாது. உடல் உறுப்புக்களை மையமாக அவளைச் சுற்றிக்கட்டி எழுப்பப்பட்ட சமூக நோக்கங்களும் பிரமாணங்களும் சட்டங்களும் கொள்கைகளும் கோட்பாடுகளுமே தான் இவற்றிக்கு காரணம். இவை களைந்தெறியப்பட பெண்ணின் நிலை மாறும். அவளது உடல் வாகு கற்பு என்றும் பழம் பெரும் கோட்பாட்டை
6

நிவேதினி உருவாக்கியது. உடலைத் தொடுவதும் அனுபவிப்பதும் கற்பின் பெருங் கோட்பாட்டுக்கு வழி வகுக்க அது "சிறைகாக்கும் காப்பென் செய்யும் P” என்ற கேள்வியை எழுப்பி மனநிலைக் கற்பு, மனதின் புனிதம் கூடப் பேணப்பட வேண்டும் என்று ஒரு இரு நிலைக் கற்பின் கோட்பாடு உருவாகியது. கைக்கிளை, பெருந்திணை பலாத்கார மணம், வைப்பாட்டி உறவு, பலதாரமணம் போன்றவை கற்பின் கோட்பாடுகளிலிருந்து ஆண்களை விலக்க, சிறுகுழந்தை மணம், விதவை மறுமண மறுப்பு போன்ற சட்டத்தோடு ஒட்டிய கலாசார கோலங்கள் வெளிப்படத் தொடங்கின. இவை ஒரு தலைப்பட்சமான சமூக உருவாக்கங்கள். பின் அவை சட்டமாகக் கூட ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன. இந்த சமூக உருவாக்கங்களுக்குக் கலாசாரம், பாரம்பரியம், சமுதாய விழுமியங்கள், பழம்பெருமை நாகரீகத்தின் சின்னங்கள் என்ற இனிய நாம கரணங்கள் செய்யப்பட்டு விட, பண்டிதர்கள் இவற்றை எப்படியும் நாம் காக்க வேண்டும் , என்று பழமை வாதங்களை எழுப்ப, பெண் நிலைக் கோரிக்கைகள் அபஸ்வரமாக கலாசார அழிவுக்கு வித்திடுவனவாக மேலை நாட்டுக் கலாசார வடிவங்களாக அபத்தமாக ஒலிக்கின்றன.
சமுதாய உருவாக்கங்கள், தேசியத்தின் ,வர்க்கத்தின், சாதியத்தின் எல்லைக்குள்ளும் ஒரு பெண்ணை உருவாக்கி விட்டன. தேசியத்தின் பெண் இத் தேசத்தின் பழம் பெரும் சின்னங்களை தன்னகத்தே கொண்டிருத்தல் வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப் பெண்ணே கூட தேசியத்தின் சின்னமாகக் கொள்ளப்பட்டுவிட்டாள். தமிழ் அன்னை, தமிழ்த்தாய், கன்னித்தமிழ் வந்தே மாதரம் போன்ற உருவாக்கங்கள் பெண்ணின் தூய்மை, மேன்மை, தாய்மை போன்ற குணங்களை அடிப்படையாகக் கொண்ட கற்பிதங்களே.
"எம்முடைய பெண்" எனத் தேசியத்தில் உள்ளடக்கப்ட்ட பெண் பாதுகாப்புக்குரியவள் , ஆனால் அந்நிய தேசத்தக்குரியவள், மாற்றாள், அவள் அழிக்கப்படலாம். அவளை வல்லுறவுக்குட்படுத்தினால் அவளது தேசத்தின்
7

Page 5
நிவேதினி
கண்ணியத்தைச் சின்னாபின்னமாக்கியதை அச்செயல் ஒக்கும். அவள் அந்நிய நாட்டு எதிர் தேசத்தின் சின்னம் ,உடமை. வர்க்க நிலையில் , உயர் வர்க்க நிலைப்பெண்ணுக்குரிய சில நிலைப்பாடுகள் உண்டு. அவள் தனியே போகலாம் அதிகார வர்க்கத்தின் சலுகைகள் சில, அவளை அடையலாம். அவள் சமூகக் கண்காணிப்பிலிருந்து ஒரு வேளை தப்பலாம். சில கட்டுப்பாடுகளை அவள் ஒதுக்கி சுகந்திரத்தை நாடலாம். உயர் வர்க்கநிலை அவளுக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் வீட்டிற்குள்ளேயே அவள் பதுமை நிலை அடைய வேண்டும். அங்கு அவளது வர்க்க நிைையயும் மீறிய கணவனது அதிகாரம் அவளைக் கட்டுப்படுத்தும். மத்திய தர வர்க்கப் பெண்ணுக்கு சமூக கண்காணிப்பும் வீட்டின் கண்காணிப்பும் அலைக்கழிக்கும் ஒரு இரண்டும் கெட்டான் நிலை, வரம்புகளைக் கடக்க முடியும் கடக்க முடியாது, என்ற இருதலைக் கொள்ளி எறும்பு நிலை. கீழ்வர்க்க கீழ்சாதி நிலையில் தள்ளப்பட்ட பெண்ணுக்கு கலாசாரக் கட்டுப்பாடுகள் அருகிய குறைந்த நிலை என்றாலும் அவள் தரங்குறைந்த பெண்ணாகவும் மதிக்கப்படலாம். கலாசார விழுமியங்களில் இருந்து வழுவிய பெண்ணாக அவள் கருதப்பட்டு "இழிகுல" பெண்ணாகி விடுகிறாள். உயர்த்திக் கட்டிய சேலை, பொட்டு, பூ வைக்க நேரமில்லாத பெண் உடல், உரத்த பேச்சு, சிரிப்பு, வீட்டுக்கு வெளியே தள்ளப்பட்டு வருவாய் தேட வேண்டிய நிலையில் அரக் கப் பரக்கத் திரியும் அவள் பெண்களுக்கென்று கலாசார ரீதியில் விதிக்கப்பட்ட சமூக கலாசார விழுமியங்களைத் துறந்து விடுகிறாள். Ф шfї குலப் பெண் பொட்டு, பூ, நகை பட்டணிந்து குனிந்து வேலை செய்து மெல்ல நடந்து புன்சிரிப்பை மட்டும் சிந்தும் காவரியக் கதாநாயா கரியாக தமிழ் த் திரைப் பட வடிவங்களுக்கிணங்க தன்னைப் பாவித்து கலாசார சின்னமாக விளங்கவேண்டி நிர்ப்ந்திக்கப்படுவாள், எதிர்பார்க்கப்படுவாள். இந்த உயர்குல, உயர்வர்க்க பிம்பங்களும் வடிவங்களுமே தேசியத்தின் உருவாக்கங்களாக மாறுகின்றன

நிவேதினி இந்த வரையறைகள் எழுதாச்சட்டங்களாக சட்டத்தின் மாண்பினையும் மதிப்புக்களையும் பெற்று அவற்றை மீறுவது சமுதாயக் குற்றமாக பார்க்கப்படும் நிலைமையை எய்தி உள்ளன. இவ்வரையறைகளை மாற்ற வேண்டும். என்ற கருத்தியலை பெண் நிலை வாதரிகள் வைத்துக் கொண்டிருந்தால் அவற்றை மாற்றிக் காட்டுவதை நடைமுறை சாதனங்களாகக் கொண்டுள்ளனர். அந்த மாற்ற முறைகளை சட்டங்களாகவும் மாற்ற வேண்டும் என்பது அவர்களது அபிலாஷை, eans அணிதல் தலைமுடியை, வெட்டுதல் பொட்டைத் தாலியை அகற்றுதல் போன்ற செயல்களைக் கிரமமாக உண்ஞணர்ச்சியுடன் செய்யும் பெண்களையும் நாம் காணலாம். இந்திய தேசிய வாதிகள் கதர் உடுப்பதையும் (மகாத்மா காந்தி half naked Fakir என்று வின்சன் சர்ச்சிலால் அழைக்கப்பட்ட வரலாற்றில் தேசியத்தின் கதையாக இன்று விளங்கப்படுகிறது). மாக்ஸிச, மற்றும் ஏனைய தீவிரவாதிகள் தாடி வளர்ப்பதும் நடை உடை பாவனை களில் சன் னங் களைத் தேர்ந்தெடுப்பதை ஒக்கும் செயலாகத் தான் நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும் இந்தத் தாலியும் பொட்டும் பூவும் பெண்ணின், உடல் பொருள் ஆவி அத்தனையும் இன்னொருவனுக்கு ஏகபோக உரிமையாக அளிக்கும் தன்மையை மங்களகரமான ஒரு இலட்சிய நோக்கமாகவும் dEs) lil fT அனு க் கிரகங் களுடன் ஒட்டியவையாகவும் , இருப்பதினால், அவற்றை அகற்றுவதும் கலாசார அழிவுகளாகக் கருதப்படுகின்றன. ஆனால் கணவன் என்ற சின்னம் இவ்வுலகில் இருந்து அகற்றப்பட பொட்டும் தாலியும் பூவும் அகற்றப்பட வேண்டும் என்ற சம்பிரதாயம் பெண்ணின விருப்பு வெறுப்புகளை உதாசீனப்படுத்துகின்றது. இங்கு பெண் ஜடப்பொருளாக உணர்ச்சிகளைக் துறந்தவளாக சுகந்திரமற்ற வளாகக் கொள்ளப்படுகிறாள். இது சம்பிரதாயங்களுக்குப் புலப்படுவதில்லை.
அடக்கல் ஒடுக்கல் ஓரங் கட்டல் உதாசீனப்படுத்தல் கீழ்நிலைப்படுதல் வன்முறைக்குட்படுத்தல் உடமையாக கருதப்படுதல் உரிமைகள் மறுக்கப்படுதல் போன்ற
9

Page 6
நிவேதினி இரண் டாம பட்ச நிலைகளின் பெறுபேறுகளும் அனுபவங்களும் பெண்ணை விழிப்படையச் செய்து விட்டன. கருத்தியல் ரீதியில் , கோட்பாட்டு ரீதியல் , அந்த விழிப்புணர்ச்சி இயங்கத் தொடக்க பெண்ணுரிமை இயக்கம் பெண்நிலைவாதம் போன்றவற்றுடன் செயல் திட்டங்களும் லிபரலிசம் , மாக்சிஸ் சம் போன்ற அம்சங்களுடன் பெண்நிலைவாதம் என்று அழைக்கப்படும் Feminism மும் தோன்றியது. முதலாவதாக கருத்தியல் ரீதியில் என்ன தான் இது என்று பார்ப்போம்.
Feminism எனப்படும் பெண்நிலைவாதம் தற்போது ஒரு பாரிய கோட்பாடாக கொள்கைத்தளமாக வளர்ந்துள்ளது. மானிட சமூகவியல் ஆய்வாளர்களின் கோட்பாடுகளும், Plato போன்ற அரசியல் சிந்தனைவாதிகளினதும், Freud போன்றவர்களின் மனோதத்துவ வாதங்களையும், கம்பர் வள்ளுவர், சேஷ்பியர், காளிதாசன் போன்ற இலக்கியப் படைப்பாளிகளினது கதை மாந்தர்களையும், கலாயோகி, ஆனந்த குமாரசாமி போன்ற கலாசார அறிவு விற்பன்னர்களின் வாதங்களும, நம் நாட்டுச் சேரன் ஜெயபாலன் போன்றோரது கவிதையில் இடம் பெறும் ஆண் நிலை நோக்கையும் உலகின் மாபெரும் சிந்தனாவாதியான மாக்ஸ், ஏங்கல் ஸ் போன்ற இடதுசாரிகளது சரிந்தனைகளில் தொனக் கும் பாரபட்சங்களும், பெரும் போக்கு, சிறுபோக்கு என்ற கலாசார மரபுகளில் சமயாசாரங்களில் அனுட்டானங்களில் கிரிகைகளில் பல மட்டங்களில் உள்ள 2000 ஆண்டு கற்பிதங்களை கட்டவிழ்க்கும் பெண்நிலைவாதம் ஒரு அறிவு சார் கற் கை நெறியாகவும் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. இந் நிகழ்வு பெண்களது வரிழிப் புணர் சி சரி துTண் டிய ஒரு ஆய் வறிவாக பரிணமித்துள்ளது. இது பலருக்கு திடுக்கிடும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. 2000 ஆண்டில் வரலாற்றை அந்த தளத்தில் வேரூன்றி நின்ற மரபுவாதி களையும் பண்டிதர்களையும் மட்டுமன்றி மாக்சிஸ் வாதிகள் ஏனைய தீவிரவாதிகள் என்று பலரையும் பெண்நிலைவாதம் சாடி நிற்கிறது. இவ்வாதங்களை ஜீரணித்து ஏற்றுக்கொள்ள
O

நிவேதினி முடியாத ஒரு நிலையையும் பெண்நிலைவாதம் அவர்களிடம் உண்டாக்கி உள்ளது. ஏன் இது பல பெண்களையும் இதே ரீதியில் தாக்கி உள் ளது . மரபுகளைக் களைந்தெறிவதிலும், வேண்டாத கணவனை விலக்கும் பொழுதும் குடும்பத்தை உடைக்கிறோாம், சமூகத்தின் ஆணிவேரை தகர்க்கிறோம் என்றும், குழந்தைகளைத் தகப்பன்மாரிலிருந்து பிரிக்கிறோம் என்றும் வேலைக்குச் செல்லும் பொழுதும், அந்திமாலைகளில் கூட்டம் கருத்தரங்கு என்று செல்லும் பொழுது டபிள்ளைப் பராமரிப்பு போன்றவற்றிலிருந்து வழுவுகிறோம். என்ற குற்ற உணர்வு பல பெண்களை அலைக்கழிக்கிறது என்பதும் உண்மையே. இவையாவும் சரிபாதி உண்மைகளும் உரிமைகள் குழி தோன்றி புதைக்கப்பட்டதின் விளைவு உணர்ச்சி ரீதியாகவும் நடைமுறை ரீதியிலும் அவை உரிமைகளாகக் கொள்ளப்படாததின் விளைவே. அவை வெளிச்சத்துக்கு வரும் பொழுது அவற்றை மனங்கொள்ள, விளங்கிக் கொள்ள, ஏற்றுக்கொள்ள ஒரு பயம். ஆண்களுக்கும் எல்லாமே உடைத் தெறியப்படுகிறது என்ற பயம் அதை விட தாங்கள் காலங்காலமாக அனுபவித்து வந்த உரிமைகள் எனப்பட்ட சலுகைகள் அளிக்கைகள், ஆதிக்கம் அதிகாரம் போன்றன கேள்விக்குள்ளாக்கப்பட்டு, மறுக்கப்பட்டு தங்களது இருப்பே நிலைகுலைந்து விட்டதை ஏற்றுக் கொள்வது சற்று சிரமமாக இருக்கிறது. தங்களை வாய் கூசாமல் ஆதரிக் க வெறியர் , அதிகாரம் தலைக்கேறியவர்கள், வன்முறையாளர் ஏனையோரது உரிமைகளைப் பறித்தோர் என்று பெண்நிலைவாதிகள் கூறாமற்கூறுவதை அவர்களால் ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் தர்மசங்கட நிலையிலும் பல ஆண்கள் உள்ளனர். பாரம்பரியங்கள் பறிபோகின்றனவே என்ற பண்டிதர் கூட்டம் பெண்நிலைவாதிகளைக் கண்டிக்கிறது. மானிடவியல் சமூகவியல், அறிவாளிகளும் மனோதத்துவ வாதிகளும், மாக்சிஸவாதிகளும் தங்களது வாதங்களின் போதாமையை ஏற்றுக்கொள்ளாமல் அவ்வாதங்களை அழுங்குப் பிடியாககப் பிடித்துக்கொண்டு எப்படி பெண்நிலைவாதிகள் எம் வாதங்களில் குறைகாணலாம் என்று பெண்நிலைவாதங்களைத் தெரிந்து கொள்ள, புரிந்து
11

Page 7
நிவேதினி
கொள்ள மறுத்து பெண்நிலைவாதிகளைக் கண்டித்தும் கொச்சைப்படுத்தியும் உள்ளார்கள். மார்க்சிச வாதிகள் வர்க்கநிலைக்குத் தந்த கோட்பாட்டு விளக்கம் சாதியத்தை சமூகவியலாளர் விளங்கிக் கொண்ட விதம் லிபரல் முற்போக்கு வாதிகள் மேற்கொண்ட வாதப் பிரதி வாதங்கள் என்று பல தளங்களில் ஆண் நோக்கு பரவலாக இருப்பதை பெண்நிலைவாதிகள் இனங்கண்டு விண்டுரைத்திருக்கிறார்கள். அவர்களது வாதங்களை தற்போது பல ஆய்வறிவாளர் ஏற்றுக்கொள்ளத் தொடங்கி இருந்தாலும் சில விதண்டா வாதங்களையும் அடிக்கடி கேட்கிறோம். கருத்தரங்குக்குத் தலைமைவகிக்கும் ஒரு பெண்ணைப் பார்த்து ஆண்களில் Chair Person 6T6örg), 9160pógiD போது மொழி வளர்ச்சியில் இருந்த இந்த ஆண்நிலை நோக்கு மாறி விட்டது என்று நாம் கொள்ள முடியா விட்டாலும் சில அறிகுறிகள் தோன்றுகின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
இதழாசிரியர்
12

மேலாதிக்க நிலைமைகளும் பெண்ணிலைவாதமும்.
கமலினி கணேசன்
பெண்ணிலைவாதமானது ஒரே வகையினதா அல்லது வரித் தியாசங் களை ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளதாP “வித்தியாசங்கள் என்ற எண்ணக்கரு பெண்ணிலைவாத மானிடவியலினுTடாக எவ்வாறு வலியுறுத்தப்படுகின்றது, இவ்வெண்ணக்கரு எழுப்பியுள்ள கேள் வரிகள் , அதனுTடாக வெளிப் படுத்தப் படும் முரண்பாடுகள் போன்றவற்றை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். எனினும் இங்கு உபகருத்துக்களாக பெண்ணிலைவாதம் பற்றிய சமூகக் கண்ணோட்டம், ஒரு கல்விப் புல அடிப்படையில் அதன் தாற்பரியமும் அவசியமும் முன்வைக்கப்படுகின்றன.
ஒரு கோட் பாடாகவும் , கல் வரிப் புலமாகவும் , செயல்வாதமாகவும் அபிவிருத்தியடைந்து வருகின்ற போக்கில் பெண்ணிலைவாதம் எழுப்பியுள்ள கேள்விகள் பல்வகைப்பட்டன. ஆயினும் பல சந்தர்ப்பங்களில் எமது சமூகத்தில் தினசரி வாழ்விலும் சரி அறிவார்ந்த உரையாடல்களிலும் சரி நாம் சந்திக்கும் கருத்துக்களிற் II (6) பெண் ணிலை வாதம் ப ற் றரிய தவறான புரிந்துகொள்ளலை எடுத்துக்காட்டுபையாகவே இருக்கின்றன. இவ்வகையில் பார்க்கப்போனால் பெண்ணிலைவாதம் தனக்குள்ளே ஏற்படுத்திக்கொள்ளும் சுவாரசியமான வாதப்பிரதிவாதங்கள் ஒரு புறமாகவும், இவ்வாறான தப்படபிப் பிராயங்களினால் எழுகின்ற குழப்பங்கள் இன்னொரு புறமாகவும் பிரிந்து நிற்பதைக் காணக் கூடியதாகவுள்ளது.

Page 8
நிவேதினி பொதுவாக ஆண்தலைமைத்துவ சமூகத்தின் கருத்தியல் சார்ந்தவையாக பலமட்டங்களில் வெளிப்படும் இத்தப்பபிப் பிராயங்கள் ஒரே மாதிரியானவை. பெண்ணிலைவாதத்தினைக் குறைத்து மதிப்பிடல், பெண்ணிலைவாதிகளை படிமப்படுத்தப்பட்ட உருவகமாகப் பார்த்தல் என்பன இவ்வகையில் பொதுவான கணக்கீடுகளில் அடங்கும். பெண்ணிலைவாதத்தை ஒரு மேற்கத்தைய இறக்குமதியாகவும் நவீனத்துவத்தின் கருவியாகவும் நோக்கி அதனை எமக்கு ஒவ்வாதது என்றும், நமது மரபைப்பழாக்கும் தன்மை அதற்குள்ளது எனவும் கருதும் பழமைவாதிகளும் அதற்குள் அடங்குவர். பெண்ணிலைவாதத்த்தை ஏற்றுக் கொள்பவர்கள் கூட பல சந்தர்ப்பங்களில் அதனைக் குறைத்து மதிப்பிடுவதனைக் காணக்கூடியதாகவுள்ளது. பெண்ணிலைவாதமானது சீதனப்பிரச்சனை, மாமியார் கொடுமை போன்ற பிரச்சனைகளை ஆராய்கின்றது என்ற கருத்தில் சமூகத்தில் பிழைத்துப் போன சில பண்புகளை அதனுTடாகச் சரிப்படுத்தினால் போதும் என்றும் நினைப்பர். இதுவும் ஒரு வகைகுறைத்து மிதிப்பிடலே.
பொருளாதாரப்பங்குபற்றல் என்ற வகையில் பெண்கள் 'முன்னேற்றம் சார்ந்து செயற்பட்டால் போதுமானது என்ற குறைத்து மதிப்பிடலில் ஈடுபடுவோரும் உளர் (Economic rcductionism). இன்னொரு சாரார் பெளதீகரீதியான பால் வேறுபாட் டி ல் அதத நம் பரிக் கையுள்ள வ ராய் அதனைப்பின்னர் சமூகரீதியான பால்வேறுபாட்டிற்கு நீட்டிப்பார்ப்பதன் மூலம் மாற்றத்தினை இயற்கைக்குப் புறம்பானதென்றும் அனாவசியமானதென்றும் கூறி அதனை முடியாத ஒரு காரியமாக வரையறுப்பர் (Physical Reductionism).
இவ்வாறாக பெண்ணிலைவாதத்திற்கு அவசரப்புத்தி வழிப்பட்ட முடிவுகளைக் கொடுப்பதும், அதனைத் தமக்குத் தெரிந்தவகையில் வியாக்கியானப்படுத்திக் கொள்வதும் பெண்ணிலைவாதம் பற்றிய சமூகக் கண்ணோட்டத்தின் பிரதான அம்சங்களாக அமைகின்றன. இதனால் சமூகத்தில்
14

நிவேதினி
பலர் பெண்ணிலைவாதத்தினுள் நடைபெறும் சுவாரசியமான விவாதங்களில் கலந்துகொள்ளாமலும், செயல்வாதத்தில் பங்குகொள்ளாமலும் ஒதுங்கியிருப்பதாலும் கருத்துக்கள் பல சமூகத் தைப் பரந் தள வரில் G) & 6ð sp 60) L u1 fTLD Gú பெண்ணிலைவாத உரையாடல்களிற்குள்ளேயே தங்கி விடுகின்றன. சில சமயங்களில் சமூகவியல், மானிடவியல், வரலாறு, அரசியல் விஞ்ஞானம், மொழியியல் போன்ற கல்விப்புலங்களில் இவ்விவாதங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டாலும் இவை எமது நாட்டில் மிகவும் குறைவாகவே உள்ளன. அதனால் கற்பித்தல் எனும் மட்டத்திலும் பெண் ணிலை வாதத்தின் தாற் பாரியம் வரிளங் கிக் கொள்ளப்படுவது குறைவாகவேயுள்ளது. மேற்கூறிய வாறான தவறான புரிந்துகொள்ளல்களையும் குறைத்து மதிப்பிடும் செயற்பாடுகளையும் காத்திரமான பெண்ணிலை வாத வரிவாதங் களையும் பிரித்தறிதல் என்பது வரித் தரியா சங் கள் " எனும் எண் ணக் கரு வரினை விளங்கிக்கொள்ளதற்கு அவசியமானதாகின்றது. ஏனெனில் பெண்ணிலைவாதத்தினைப் பொறுத்தவரை இவையெல்லாம் இங்கு முன் வைக்கப்படும் மாற்றுக் கருத்தியலுக்கு வெளியேயுள்ள தப்பபிப்பிராயங்களாகும். பெண்ணிலைவாதக் கோட்பாட்டாக்கத்தின் ஒரு விவாதம் எனக் கொள்ளப்படும் 'வித்தியாசங்கள்' என்ற கருத்தை விளங்கிக் கொள்வதென்பது இங்கு 'கருத்தியல்" "மாற்றுக் கருத்தியல் போன்ற பதங்களை தெளிவுபடுத்திக் கொள்வதுமாகும். ஏனெனில் பெண்ணிலை வாதத்தினை கருத்தியல் சார்ந்த போராட்டமாக விளங்கிக் கொண்டாலேயன்றி இவ்விவாதங்களை விளங்கிக்கொள்ள முடியாது.
பெண்ணிலைவாதமானது தனது வளர்ச்சிப்போக்கில் அனுபவ வாயிலாக வித்தியாசங்களை மதித்தல் என்ற கருத்தை விளங்கிக்கொண்டதனால் 'வித்தியாசங்கள்' என்ற எண்ணக்கருவினை உள்வாங்கியதுடன் அது தொடர்பான கோட்பாட்டாக்கத்தின் அவசியத்தையும் உணர்ந்துள்ளது. அதாவது இரண்டாம்பட்சமாக்கல் எனும் செயற்பாடு வெவ்வேறு அளவில் சமூகங்களில் இருப்பினும்
15

Page 9
நிவேதினி
அச் செயற்பாடு உலகளாவிய ரீதியில் பெண்களை எதிர்நோக்கியுள்ளதால் பெண்களை ஒரு சமூகவியற் பொருள் வகுப்பாக கொள்ளக் கூடியதாக இருப்பதுடன் (Sociological Category of women) இப் பொருள் வகுப் பாக்கத் தினை பெண்ணிலைவாதமும் ஏற்றுக்கொள்கின்றது. எனினும் இக்குழுவினுள் உள்ள வித்தியாசங்கள் தொடர்பாக எழும் முரண்பாடுகளும் பிரச்சினைக்குரியனவாகவே இருக்கின்றன. அதனால் உலகளாவியரீதியில் இரண்டாம் பட்சமாக்கல் என்ற செயற்பாட்டின் அடிப்படையில் பெண்களிற்கு இடையேயான ஒற்றுமை வலியுறுத்தப்படுவதாயினும் பெண்களை ஒரு சமூகவியற்குழுவாகக் கொள்வதிலுள்ள பிரச்சனைகளையும் பெண்ணிலைவாதம் அணுகுகின்றது.
வித்தியாசங்கள் என்ற எண்ணக்கரு சமூகவியல், மானிடவியல் போன்ற சமூகவிஞ்ஞானங்களில் வலியுறுத்தப்படுகின்ற ஒரு எண்ணக்கருவாகும்.இத்துறைகள் பல்வேறு பண்பாடு களைப்பற்றி விளங்கிக்கொள்ளல், அவை பற்றிய அறிவைத் திரட்டுதல், அவற்றை மதித்தல் என்கின்ற செயற்பாடுகளை அடிநாதமாகக் கொண்டவை. இங்கு எந்த ஒரு பண்பாடும் இன்னொரு பண்பாட்டை விட உயர்ந்ததல்ல எந்த ஒரு சமூகமும் இன்னும் ஒரு சமூகத்தை விட உயர்ந்ததல்ல. எல்லாமே வித்தியாசமானவை. இவ்வித்தியாசங்கள் ஒன்றில் மற்றொன்று ஆதிக்கம் செலுத்தாத பட்சத்தில் அவற்றைப் பேணுவது அல்லது அவற்றிற்கேற்றவகையில் தனித்தன் மையுடன் வளர்த்தெடுப்பது என்பது சுவாரசியமானதும் அழகியதுமான விடயம். ஒன்றிலொன்று ஆதிக்கம் செலுத்துமாறு ஒரே மாதிரியாக ஏற்கப்பட்டு வரும் பண் பாடுகள் (Homogenization) மேலாதிக் க நிலையை எடுத்துக்காட்டுவதுடன், சுவாரசியமற்ற போக்கை உலகில் ஏ ற் படுத் துவன . இவை யெ ல் லாம் 'பண்பாட்டு வித்தியாசங்கள் தொடர்பாக சமூகவிஞ்ஞானங்களில் எழுந்துள்ள கருத்துக்களாகும்.
பண்பாடுகளிற்கு இடையேயான வித்தியாசங்களை தனது
கருப்பொருளாகக் கொண்ட பண்பாட்டு மானிடவியல்,
பெண் களிற் கும் ஆண் களிற் கும் இடையேயான
16

நிவேதினி வித்தியாசங்களை எடுத்துக்காட்டும. பெண்கள் பற்றிய மானிடவியல்பெண்களிற்கு இடையேயான வித்தியாசங்களைக் கருத்தாகக் கொண்ட பெண்ணிலைவாத மானிடவியல் ஆகியவற்றுக்கிடையேயான தொடர்பையும் வேறுபாடுகளையும் விளங்கிக்கொள்ள வேண்டும் என Henrietta Moore g, sot g Feminism and Anthropology எனும் நூலில் குறிப்பிடுகின்றார். அவரது கருத்து பெண்ணிலை வாதத்திற்கும் மானிடவியலிற்குமான உறவுமுறையினை விளங்கிக் கொள்வதென்பது பெண் ணிலைவாத்தில் வித்தியாசங்கள் என்ற கருத்தை விளங்கிக் கொள்ள உதவும் என்பதாகும்.
பெண்ணிலைவாதத்திற்கும் மானிடவியலிற்குமான உறவு முறையானது மானிடவியல் தொடர்பான பெண்ணிலைவாத விமர்சனங்களுடன் ஆரம்பிக்கின்றது. ஏனைய சமூக விஞ்ஞானங்களைப் போலவே மானிடவியலும் தன்னுடைய துறையில் ஆரம்பகாலத்தில் பெண்களை போதுமான அளவிற்கு உதாசீனப்படுத்தியுள்ளதை நாங்கள் மானிடவியல் ஆய்வுகளில் காண்கிறோம்.
மானிடவியல் பெண்களைப்பற்றியே பேசவில்லை என்று கூறமுடியாது. மரபுசார்ந்த மானிடவியலாளர் குடும்பம், திருமணம், உறவுமுறைகள் போன்ற கருத்துக்களை தமது ஆய்வுகளில் சேர்த்துக்கொண்டதால் பெண்களைப் பற்றிப் பேசுவது தவிர்க்க முடியாததாக இருந்தது. அவர்கள் சமூகங்களில் பெண்களுடைய கடமைகள், சமூகஉறவுகளில் அவர்களுடைய பங்கு போன்றவற்றையும் குறிப்பிட்டி ருக்கின்றனர். எனினும் இவ்வாய்வுகள் பெண்களை எவ்வாறு கையாண்டன என்பதையும் ஆய்வாளருடைய கருத்தியல் தொடர்பாய் அவர்கள் பக்கஞ்சார்ந்திருந்த தன்மையையும் ஆராயுமிடத்து ‘உதாசீனம்" என்று குறிப்பிட வேண்டிய தேவை எழுகின்றது. ஆகவே மானிடவியலில் பெண்கள் எவ்வாறு சித்திரிக்கப்பட்டனர் என்ற கேள்வியை முன்வைத்து பெண்ணிலைவாதம் தனது விமர்சனத்தை மானிடவியல் தொடர்பாக ஆரம்பித்தது.

Page 10
நிவேதினி
ஏனைய சமூகங்கள் பற்றிய அறிவானது எவ்வகையில் ஆண்களிடம் குவிந்திருந்தது என்பதையுைம், அதனூடாக ஆண்கள் மானிடவியல் அறிவை எவ்வாறு கட்டுப்படுத் தினார்கள் என்பதையும், ஆரம்பத்தில் இப் பெண்ணிலை வாதிகள் எடுத்தியம்பினர். மேலும் பெண்கள் மானிடவிய லாளர்களாக இவ்வகை ஆய்வுகளை மேற்கொள்ளுமிடத்து விபரிப்புகள் வேறுபட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மரபுவழிந்த மானிடவியலாளார்கள் தங்களுடைய ஆய்வுகளில் மேலாதிக்க நிலைமைகளை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை. மேலாதிக்க நிலைமை அவர்களிற்கு பிரச்சனை யற்றதாகவே தென்பட்டது. மானிடவியலாளர்கள் விமர்சனங் களை முன்வைக்கமுடியாது என்ற கருத்தையே அவர்கள் கொண்டிருந்தார்கள். உள்ளதை உள்ள படி ஆய்வுகளாக வெளிக்கொணருதல் மட்டுமே அவர்களுக்கு இட்டபணி என வாதிடுவர். ஆனால் விமர்சனவழிவந்த சமூகவியலாளர்/ மானிடவியலாளர் உள்ளதை உள்ளபடி ஆராய்தல் என்ற எண்ணக்கருவானது அவர்கள் அறிந்தோ அறியாமேலா ஆதிக்க சக்திகளுக்கு துணை போவதற்கு உடந்தையாகிவிடும் என்று எண்ணினர். அவ்வகையில்தான் பெண்ணிலைவாதம் மானிடவியல் தொடர்பாகக் கொண்டுள்ள விமர்சனங்களும் மானிடவியலில் உள்ள ஆண்தலைமைத்துவ கருத்தியலை விமர்ச்சிப்பதாகவுள்ளது. (இது போலவே காலனித்துவம் சார்ந்து, வர்க்கம் சார்ந்து, சாதி சார்ந்து விமர்சனங்களை மேற்கொள்ளும் சமாந்தரமான செயற்பாடுகளையும் கோட்பாட்டாக்கங்களையும் நாம் காண்கிறோம்).
மேற்கூறப்பட்டவாறாய் ஆண்தலைமைத்துவ ஆட்சிக் கருத்திய லினுTடாக எழும் மேலாதிக்க நிலைமைகளைக் கருத்திற் கொண்டதாக 60 களிலும் 70 களிலும் பெண்கள் பற்றிய மானிடவியல் தோற்றம் பெற்றது. மானிடவியல் ஆய்வுகளில் பெண்களை முக்கியப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர். பெண் ஆய்வாளர்களை பெண்கள் பற்றிய கற்கைகளில் தெரிவுசெய்வது மானிடவியல் அறிவு வளர்ச்சியில் பெண்களின் வெளிப்பாடுகளை ,
18

நிவேதினி அவர்களது கருத்துக்களைச் சேர்த்தல், ஆய்வுகளில் பால்வாதத்தினைத் தவிர்த்தல் போன்றன பெண்கள் தொடர்பாக மானிடவியல் ஏற்படுத்திய மாற்றங்களாகும்.
பெண்ணிலைவாத மானிடவியலின் தோற்றம் வேறுவகை யானதாக அமைகின்றது. பெண்களிற்கு இடையேயான வித்தியாசங்கள் என்ற கருத்தினை அடித்தள மாக வைத்தே பெண்ணிலைவாத மானிடவியலின் கோட்பாட்டாக்கம் அமைகின் றது . இக் கட்டுரையில் நாங் கள் எடுத்துக்கொண்டுள்ள விடயம் இவ்வாறான பெண்களிற்கு இடையேயுள்ள வித்தியாசங்களை ஆராய்வதாகும் மேற் கூறியவாறு மானிடயவியல் அறிவுறுத்தும் பண்பாட்டு வித்தியாசங்கள் பெண்கள் பற்றிய மானிடவியல் அறிவுறுத்தும் . பெண் களிற் கும் ஆண் களிற்கும் இடையேயான வித்தியாசங்களை கருத்திற் கொண்டாலும் அதனுள் கருத்தியல் சார்ந்த விடயங்கள் ஏதும் இல்லாமல் இருப்பது பிரச்சனைக்குரியதாகவே இருக்கின்றது. வரித் தரியா சங் கள் எண் ற எண் ணக் கரு வரினை பெண்ணிலைவாதக் கோட்பாடு சாாந்த விடயமாக மேலும் ஆழமானதாக விளங்கிக் கொள்வதற்கு கருத்தியல் பற்றிய விளக்கங்கள் சோத்துக் கொள்ளப்படவேண்டியுள்ளது. ஏனெனில் கருத்தியல் சார்ந்ததொரு போராட்டமாக வலியுறுத்தப்படுமிடத்து மட்டுமே வித்தியாசங்கள் என்ற எண்ணக்கருவையும் தப்பபிப்பிராயங்களையும் வேறுபடுத்திப் பார்க்கமுடியும். தவிர பெண்கள் பற்றிய மானிடவியலின் போதாத்தன்மையும் நிவர்த்தி செய்யப்படும்.
11
கருத்தியல் எனத்தமிழாக்கப்படுகின்ற Ideology எனும் ஆங்கிலப்பதமானது ஆரம்பத்தில் கருத்துக்கள் பற்றிய விஞ்ஞானம் என்ற அர்த்தத்தைச் சுட்டிநின்றது. கருத்துக்கள் உணர்வுவளிப்பட்டவை, இவ்வுணர்வுகள் உயிரியல் ரீதியாக எழுவன என்ற விளக்கத்துடன் தொடர்புடையதாக இப்பதம் அப்பொழுது பிரயோகிக்கப்பட்டது. இக்கருத்துக்கள் வர்க்கம்
19

Page 11
நிவேதினி
அதிகாரம் போன்றவற்றை நிலைநாட்டவும் பயன்பட்டதாகவும் கொள்ளப்பட்டன. அவை உண்மையை மறைப்பன பக்கச் சார்பானவை, மூடநம்பிக்கையுடன் தொடர்புடையன எனக் கொள்ளப்பட்டன. விஞ்ஞானரீதியான ஆய்வினுTடாக அவற்றை அணுகவேண்டும் என்ற கருத்தை அறிவொளி இயக்கச் சிந்தனையாளர் முன்வைத்தனர். பாரதூரமான அரசியல் அல்லது பண்பாட்டு விளைவுகளை உண்டு பண்ணக்கூடியதான ஒரு குழு சார்ந்த ஐதீகங்களைக் குறித்து நிற்கின்ற கருத்துக்களாகவும் அவை கருதப்பட்டன. அதனால் கருத்தியல் எனும் எண்ணக்கருவினூடாக இந்நிலைமைகளை விளங்கிக் கொள்ளுதல் சாத்தியமானதாகக் கருதப்பட்டது. இது 18ம் நூற்றாண்டில் இருந்த விளக்கமாகும். Destut de Tracy என்ற டரான்சிய மெய்யியலாளர் 1801 ல் இந்தப் பதத்தனை பரிரயோகித் ததை அறியக் கூடியதாகவுள்ளது.
பின்னர் இவ்வெண்ணக்கரு மார்க்சிய அணுகுமுறையில் பிரபலம் வாய்ந்ததொன்றாக விளங்கியது. மார்க்சினுடைய கருத்தில் உற்பத்தி உறவுகள் கருத்தியலைத் தீர்மானிப் பனவாகவுள்ளன. அதாவது முதலாளித்துவத்தில் மூலதனம் வேலை என்ற இரண்டு காரணிகள் சார்ந்ததாக எழும் முரண்பாட்டு நிலைமையிலேயே கருத்தியல் என்பது விளங்கிக்கொள்ளப்படவேண்டியதாக உள்ளது என மார்க்ஸ் கூறுகின்றார். மார்க்ஸின் கருத்தில் உற்பத்திச் செயற்பாட்டை தொடர்ச்சியானதாக வைத் திருக்கும் நோக்குடன் கருத்தியலானது உயர்வர்க்கம் சார்ந்ததாக, உற்பத்திச் செயற்பாடு சொத் துடைமை என்பவற்றினுTடாக உருவாக்கப்படுகின்றது. அதனால் உயர்வர்க்கத்தின் கருத்தியலே மேலோங்கியதாக இருக்கும். முரண்பாடுகள் இவ்வாறு திரைபோட்டு மறைக்கப்படுகின்றன என்ற கருத்தை மார்க்ஸ் முன்வைத்தார்.
மார்க்ஸினுடைய கருத்தியல் பற்றிய சிந்தனையானது வர்க்கம் சார்ந்ததாக இருக்கின்றது. இன்றைய சூழ்நிலைக்கு
அதனின்றும் பரந்ததான வரைவிலக்கணமே எமக்குத்
2O

நிவேதினி தேவையானதாயுள்ளது. இக்கருத்தை நாம் ஏனைய வடிவங்களிற்கும் பொருத்திப்பார்க்கலாம் உதாரணமாக இனம், பால்நிலை, மூன்றாம் உலகு, சாதி, நிறம் போன்றவை சாாந்து சிந்திப்பது அவசியமானதாகும்.
அவ்வகையில் பால்நிலை சார்ந்த கருத்தியலானது எவ்வாறு தந்தைவழிச் சமூகம் தன்னைத்தக்க வைத்துக் கொள்வதற்கு பெண் களிற்கு இருக்கின்ற பரிரச்சனைகளையும் அவலங்களையும் சமூகத்தில் பால்நிலை சார்ந்ததாகவுள்ள முரண்பாடுகளையும் வெளிக்காட்டாமல் ஆண்மையப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இயங்கி வருகின்றது என்பது சார்ந்த ஒரு விடயமாக அமையும்.
பால்நிலை சார்ந்ததாாக ஒரு சமூகத்தின் கருத்தியலை அறிந்து கொள்வது பெண்நிலை வாதத்திற்கு மிகவும் அவசிய மானதொரு செயற்படாகவுள்ளது. ஏனெனில் வித்தியாசங்கள் இருப்பினும் இன்றைக்கு உலகில் உள்ள சமூகங்கள் எல்லாமே ஆண்தலைமைத்துவ சமூகங்களாகவே இருக்கின்றன. கருத்திய லானது சமூகங்களில் பெண்களிற்கு பாதகமாக அரசு, குடும்பம், கல்வி,பொருளாதாரம், சமயம் போன்ற நிறுவனங் களினூடாக எவ்வாறு மீண்டும் மீண்டும் உற்பத்தியாக்கப்படுகின்றன என்பதையும்; தொடர்புசாதனங்கள், கலை, இலக்கியங்கள் என்பவற்றில் எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டு படிமமாக்கப்படுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. குழந்தை வளர்ப்பில் , பாடசாலைப் புத்தகங்களில் வேலைத்தளத்தில் எனப்பல தளங்களில் இக்கருத்தியல் செயல்படுவதைக்காணலாம்.
ஆண்கள் இவ்வாறானவர்கள் பெண்கள் இவ்வாறானவர்கள் என்ற வரைவிலக்கணங்கள் சமூகத்தினால் எவ்வாறு வரலாற்று ரீதியாக கட்டமைக்கப்படுபனவாக இருக்கின்றன என்பதும் அங்கு நோக்கப்படவேண்டியதாகவுள்ளது. இக்கருத்தியலானது தொழிற்பிரிப்பு என்றவடிவில் வேலைத்தளத்திலும் வீடுகளிலும் இயங்கிவருவதையயும் அவதானிக்கலாம்.
21

Page 12
நிவேதினி பால்நிலைசார்ந்ததான கருத்தியலை இவ்வாறு நோக்கிய பல ஆய்வுகள் வெளியாகி உள்ளன. அவை ஆண்வழித் தலைமைத் துவத் தின் மேலாதிக் க நிலையை கற்கின்றவகையிலும் உணரும் வகையிலும் விமர்சிக்கும் வகையிலும் உள்ளன.
எனினும் நிலவும் சமூகத்தை கருத்தியல் சார்ந்ததாக இனங்காண்பது, விமர்சிப்பது என்பவற்றிற்கு அடுத்தகட்டம் எது என்பதையும் பெண்ணிலைவாதம் யோசிக்க வேண்டி யுள்ளது.
அவ்வகையில் கருத்தியலிற்கு நிலையானதான ஒரு வfளக் கத் தைக் கொடுப் பதாகவோ அல் லது சமூகநிலைமைகளை மாற்ற முடியாதவையாகவோ தொடர்ந்தும் நோக்கமுடியாது உள்ளது. அவ்வகையில் இங்கு கிராம்சி (Antonio Gramsci) யின் கருத்தியல் பற்றிய விளக்கத்தினை கவனத்திற் கொள்வது பொருத்தமானதாகும். அந்தேதானிய கிராம்சி தனது (சிறைச்சாலைக் குறிப்புக்கள்) என்ற நூலில் மேலாதிக்க (Hegemony) என்ற பதத்தினை வரையறுப்பதன் மூலம் கருத்தியலுக்குப்பின்வருமாறு விளக்கம் கொடுக்கிறார்.
"ஒரு பூர்சுவா சமூகத்தில் கருத்தியல் தொடர்பான அதிகாரமானது ஒரு வலிமையுடைய விசையினைப் போன்றது. அது ஒரு நாளும் எல்லோருடைய நன்மையையும் பிரதிபலிக்காது. இது போல இவ்வதிகாரம் எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை".
போட்டியிடும் குழுக்களினால் மறுபடி மறுபடி உருவாக்கப் படுவதாக கருத்தியல் அமைகின்றது. மேலாதிக்கநிலை என்பது எப்பொழுதும் மாறிக்கொண்டிருக்கும். அதனுTடாக அதிகாரமானது தொடர்ச்சியாகப் பராமரிக்கப்படுவதும் (3 Lurru q, u fi - t'i ll uG6 u gjort 55 59/60) Duqub (Gramsci 1971). இவ்வகைt".தான விளக்கத்தினூடாக கிராம்சி கருத்தியலை
22

நிவேதினி விளக்கி உள்ளார். அதனூடாக நாம் கருத்தியலென்பது நிலையானதல்ல என்பதையும் , அது வெவ்வேறு சமூகக்குழுக்களினால், வர்க்கங்களினால் பால்நிலைப்பாட் டி னால் வெவ்வேறு வடிவங்களை எடுக்கிறது என்பதையும் தெரிந்து கொள்கின்றோம் இங்குதான் மாற்றுக்கருத்தியலென்பது சாத்திய மாகின்றது.
கருத்தியல் என்பது குறிப்பிட்ட காலத்தில் நிலவுகின்ற சமூக அமைப்பிற்கிணங்க மேலோங்கி இருக்கின்றதாகவும் மாற்றுக் கருத்தியல் என்பது அதனைக் கேள்விகேட்கின்ற, விமர்ச்சிக் கின்ற, மாற்றியமைக்க விளைகின்ற, அதனுடன் போட்டி போடும் கருத்தியலாகவும் அமையும். இவ்வாறு கருத்தியல் சார்ந்த ஒரு போராட்டமாகவே பெண்ணிலைவாதம் விளங்கிக் கொள்ளப்படவேண்டும்.
இவ்வகையில் பெண்நிலைவாதத்திற்கான மாற்றுக் கருத்திய லானது ஆண்வழித் தலைமைத்துவத்தின் மேலாதிக்கநிலையை வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் ஆதரிப்போரினதும் உறுதிப்படுத்துவோரினதும் நிலைப்பாட்டினை விமர்சனம் செய்து கட்டவிழ்க்கும் செயற்பாட்டினுாடாக வேறுநிலைப் பாடுகளினுடைய சாத்தியக்கூறுகளை முன்வைக்கின்ற ஒன்றாக அமைகின்றது.
இக்கருத்தியலானது பிரக்ஞ்ஞைபூர்வமான வாழ்வினூடாக உருவகிக்கப்படுவதாயும், நிலவுகின்ற அர்த்தப்படுத்தல்களை சவால்களுக்கு உட்படுத்தி மறுபடி உருவகிப்பதாயும் மாற்றிய மைப்பதாயும் அமைகின்றது என பரட் (Barrett 1980) கூறுகின்றார்.
மேற்கூறியவாறான கருத்தியலுடன் தொடர்புபட்டதாக பெண்நிலைவாதத்தினை ஒரு ஆழமான கோட்பாடாகவும் நாம் விளங்கிக் கொள்கின்றோம். இக்கருத்தியலிற்கு வெளியில் அமையும் செயற்பாடுகள் ஆதிக்கச்சக்திகளுக்கு துணை போவனவாகவே அமையும். எனினும் கருத்தியல் சார்ந்ததாக வலியுறுத்திக்கொண்டாலும், ஒரு இயக்கமாக
23

Page 13
நிவேதினி எடுத்துக் கொள்கின்றபோது, பெண்நிலைவாதத்தினுள் ஆதிக் கசக்தியை ஊடுருவ வரிடா திருக் குமுகமாக 'வித்தியாசங்கள்" என்ற எண்ணக்கரு பற்றிய கோட்பாட்டாக்கத்தை விளங்கிக் கொள்வது அவசியமானதாகின்றது.
II
'வித்தியாசங்கள்' என்ற எண்ணக்கருசார்ந்த நிலைப்பாடுகள் பெண் நிலைவாதத்தினுள் பெண்கள் மத்தியிலுள்ள வித்தியாசங்களைக் குறித்து அமைகின்றன. இவை முன்னர் கூறப்பட்ட பண்பாட்டு வித்தியாசங்களும், வர்க்க, இன, சாதி, போன்ற சமூகக் குணாம்சங்களும் எவ்வாறு பெண்களிற் கிடையே வித்தியாசங்களை ஏற்படுத்துகின்றன என்பது தொடர்பாய் அமையும். பல்வகைப்பட்ட சமூக அனுபவங்கள் , வெளிப்பாடுகள் , செயற்பாடுகள் என்பவற்றினூடாகவும் இவை உணரப்படுகின்றன. சமூக யதார்த் தத்தினை ஒவ்வொரு குழுவும் எவ்வாறு அர்த்தப்படுத்துகின்றது என்பது பற்றிய இவ்வித்தியாசங்கள் உணரப்படுகின்றன. சமூகத்தில் அதிகாரம் குறைந்த உறுப்பினர் சமூகயதார்த்தம் தொடர்பாக வேறுபட்ட அனுபவங்களைக் கொண்டிருப்பர் எனவும் அவ்வேறுபட்ட அனுபவங்களும் வலியுறுத்தப்படவேண்டும் என்பது இங்கு 'வித்தியாசங்கள் தொடர்பான ஒரு வாதம்.
ஒவ்வொரு பண்பாடும் தனது வரலாறு அரசியல் சமூக பொருளாதார பின்புலங்கள் சார்ந்து தனித்தன்மை வாய்ந்தன வாகக் காணப்படுகின்றது. குறிப்பிட்ட பண்பாடும் குழுக்களும் தனித்தன்மை வாய்ந்தனவாக இருக்கின்றன. அத்தனித் தன்மைகள் பெண்ணிலைவாதத்தின் தன்மையிலும் வித்தியாசங்களை ஏற்படுத்துகின்றன. அதனால் பல்தன்மை வாய்ந்த பெண்ணிலைவாதம் என்பது தவிர்க்கமுடியாத தாயுள்ளது.
மேலும் பெண்களை இரண்டாம் பட்சமாக்கல் என்கின்ற செயற்பாடு உலகளாவிய செயற்பாடாயினும் இச் செயற்பாடு
24

நிவேதினி சாதி இன மத, சமய வேறுபாடுகளிற்கமைய, பரந்த அளவில் காலனித்துவம் வரலாறு போன்றவை சார்ந்தே அதன் தன்மையில் வேறுபடுகின்றது. இவ்வேறுபாடுகளை அடையா ளங்காணல் என்பது அவை தொடர்பான அறிவை மேலும் வளர்த்துக் கொள்ளவே உதவும். அதனால் பெண் ணிலை வாதத்திற்கான முறைமையியலும் வித்தியாசங்களை வேண்டிநிற்கிறது.
பெண்ணிலைவாதமானது அவ்வச்சமூகங்களிற்கு ஏற்றாற் போல பரிணமிப்பதென்பது அல்லது அதற்கேயுரிய தனித்து வத்துடன் வெளிப்படுவதென்பது தவிர்க்க முடியாததாகும். அதனால் பெண்நிலைவாதத்தில் சர்வதேசரீதியில் தொடர்புகள் ஒற்றுமை என்பன வலியுறுத்தப்படும் அதே வேளை வித்தியாசங்கள் கொண்டாடப்படவேண்டியவையே. எனினும் 'வித்தியாசங்கள் ' என்ற எண்ணக் கரு ஏற்படுத்தியுள் ள கேள் வரிகளும் சரிக் கல் களும் பலவகைப்பட்டன.
உதாரணமாக நாங்கள் தனித்தன்மை பற்றிப்பேசும் போது பாரம்பரியம் தொடர்பான இறுகிப்போன வரைவிலக்கணங் களைக் கேள்வி கேட்கும் தேவையும், நமது பண்பாட்டின் உட்பிரிவுகளில் இருக்கும் தனித்தன்மைகளை மதிக்கும் தேவையையும் கூடவே பேச வேண்டியுள்ளது. பண்பாடு, பாரம்பரியம் போன்ற சொற்பதங்களைப் பிரயோகித்தல் தொடர்பான கவனம் அங்கு அவசியமானதாகும்.
பண்பாடு என்பது இங்கு முடிவாக உற்பத்தி செய்யப்பட்டு மாற்றங்களிற்கு உட்படுத்த முடியாதவாறு கிடக்கும் ஒரு பொருள் அல்ல என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இயக்கங்களாவன சமூகத்தில் அதிருப்தியடைந்தனவாக உருவாகின்ற போது அவை பண்பாட்டினை நெகிழ்வுத் தன்மையுள்ள ஒரு தொடர்ச்சியான செயல்பாடாக நோக்குகின்றன. அவ்வகையில் பெண்நிலைவாதம் ஒரு இயக்கமாக உருவெடுக்கும் போது பண்பாட்டினை மீளவரையறுக்க வேண்டிய தேவையை கருத்திற்கொள்கிறோம்.
25

Page 14
நிவேதினி
பண்பாடு, பாரம்பரியம் போன்றபதங்கள் அனேக சந்தர்பங் களில் பெண்கள் சார்பற்ற தன்மையைச் சுட்டி நிற்கின்றன. அனேக சமூகங்களில் அவை பெண்களிற்கு துரோகம் இழைப்பனவாக இருக்கின்றன. தவிர பண்பாடு என்பது குறைகூறவோ கேள்வி கேட்கப்படவோ முடியாத ஒரு தூய்மையான பொக்கிஷம் என்ற கருத்துத்ததான் சமூகத்தில் பலமானதாக இருக்கின்றது. குழுக்களுக்கு குழுக்கள் எனவும் காலத்திற்குக் காலம் எனவும் பண்பாடு மாறுபட்ட அர்த் தத் தைத் தருகினி றது எனபதைப் பலர் புரிந்து கொள்வதில்லை. ஒவ்வொருவரும் பண்பாடு தொடர்பான தனித்தன்மைகளை ஏற்காமல் மேலோங்கி ஆதிக்கம் செலுத்தும் கருத்துக்களை பண்பாடு சார்ந்தாாக தமக்கேற்றவகையில் மேடைகளிலும் பத்திரிகைகளிலும் உரத்துப்பேசிவருவது பெண்களிற்குப் பிரச்சனனையானதொரு விடயமாகவே உள்ளது. இவை இனமையவாதத்தை முன்வைக்கும் கருத்துக்களாகவே உள்ளன. தவிர இவை பொதுவாக ஆண்தலைமைத்துவ சமூகத்தின் கருத்தியலாகவும் உள்ளன.
பெண்மை என்பது எப்பொழுதும் ஆதிக்கக் கருத்தியலை உள்வாங்கியவர்களால் தமது நன்மை கருதி உருவாக்கப் படுவதாயும் அவர்களால் உறுதிப்படுத்தப்படுவதாயும் காணப்படுகின்றது. காலப்போக்கியல் இவ்வகை விருப்பங்க ளினால் ஏற்படுத்தப்படுகின்ற உருவகம் தான் தொடர்ச்சி போலவும் தொன்மை போலவும் தோற்றமளிக்கின்றது. இம்மாதிரியான உருவகங்களைக்கட்டவிழ்த்து பெண்ணிலை வாதம் சார்ந்ததான ஒரு வரைவிலக்கணத்தை பண்பாடு சார்ந்ததாக உருவாக்கும் தேவையை நாம் இங்கு வேண்டி நிற்கின்றோம். இப்படியான பல சந்தர்ப்பங்களில் பண்பாடு தொடர்பான கருத்துக்களை பெண் நிலை வாதிகள் வெளிப்படுத்தும் போது பலபிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியதாயுள்ளது.
இப்படிப் பாதகநிலைமைகளை வெளிக்காட்டும் இந்தப் பண்பாடு எனும் விடயத்தை பெண்நிலைவாதிகள் ஒதுக்கித்
26

நிவேதினி
தள்ளினால் என்ன? ஏன் அவர்கள் பண்பாடு பற்றிப் பேச வேண்டும் P என்ற கேள் வரிகளும் கூடவே எழுவதாயுள்ளது. குழுந்தையைக் குளிப்பாட்டிய தண்ணிருடன் எறியமுடியாது என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதுபோல நாம் பண்பாட்டையும் ஒரோயடியாகத்துரக்கி எறிய முடியாது. பெண்களிற்கு பாரபட்சம் காட்டாத பட்சத்தில் எமது பண்பாட்டில் எம்மை இருத்திக் கொள்வது சிறந்ததும் அழகியதுமான செயற்பாடாகும். எம்மைச்சுற்றியுள்ளவர்கள் எல்லோரும் நம்மைப்பற்றியும் நமது பண்பாட்டைப்பற்றியும் அதிகம் பேசிக்கொண்டிருக்கும் போது நாம் அது தொடர்பாக உதாசீனமாகவும் இருக்கமுடியாது, உதறி எறியவும் முடியாது என்பதை கருத்திற்கொள்ளவேண்டும். அதனால் பண்பாட்டினைக் கவனமாகக் கட்டவிழ்த்துப் பார்த்தல் என் பதில் பெண் ணிலைவாதிகள் விழிப் பாகவே இருக்கின்றனர்.
கீழைத்தேய மூன்றாம் உலகப் பெண்நிலைவாதிகள் என்ற வகையில் நமது இருப்பே பண்பாடு என்ற பதத்தினால்தான் தீர்மானிக்கப்படுகின்றது. அதனால் மாற்றுக்கருத்து என்பது அதனை மீள வரையறுப்பதனால் தான் அமைய முடியும் அதனை உதாசீனப்படுத்துவதால் அல்ல.
சமூகவியலின் சான்றுகள், சமூக பண்பாட்டுச் செயற் பாடுகளினால்தான் பால்நிலை வேறுபாடுகள் நிர்ணயிக்கப் படுகின்றன என்பதை எடுத்துக்காட்டுவனவாக உள்ளன. பெண் எவ்வாறு இரண்டாம்பட்சமாக்கப்பட்டாள் என்ற கேள்விக்கான பதிலை நோக்கியதாக எமது தேடல் அமைந்திருப்பதால் சமூகமாற்றம் பற்றிய வரலாற்றுரீதியான ஆய்வுகளையும் உள்ளடக்கியதாக பெண்நிலைவாத ஆய்வுகள் அமைகின்றன.
இந்தியப் பெண்ணிலைவாதிகளுள் ஒருசாராரின் வாதத்தின் படி ஆதிசமூகங்களில் உரிமைகள் கடமைகள் தொடர்பாக
பெண்கள் கீழ்நிலைப்பட்ட இடத்தில் வைக்கப்பட வில்லை.
27

Page 15
நிவேதினி இரண்டாம் பட்சமாக்கல் எப்பொழுது ஏற்படுகின்றதென ஆராயுமிடத்து பலபண்பாட்டு ஊடுருவல்கள் பற்றிப்பேச வேண்டியதாய் உள்ளதாய் இவர்கள் கூறுன்றனர். இவை வரலாற்றில் தீர்மானிக்கும் புள்ளிகளாக , முக்கிய காலகட்டங் களாக அமைகின்றதாகவும் இங்கு உயர்வாக்கம் அல்லது உயர்சாதிசார்ந்ததாக ஆண்வழித்தலைமைத்துவம் தனது இடைச்செருகலை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்கலாம் என அவர்கள் கூறுகின்றன. உதாரணமாக சமஸ்கிருதமயமாக்கலை அப்படியான ஒரு இடைச்செருகலாக அனேக இந்தியப் பெண்நிலைவாதிகள் கொள்கின்றனர். இவர்களின் கருத்தில் வேதகாலத்தில் ஒரு பெண்ணிற்கு இருந்த உரிமைகள் அதிகமானவை, பரின் னர் புராணகாலங்களில் ஏற்பட்ட இடைச்செருகல்கள் பெண்ணை அடிமைநிலைக்கு இட்டுச் செல்லத் தொடங்கியதாக அவர்கள் கூறுவர். இன்று புராண இதிகாசவழிவந்த பண்பாடுதான் இந்தியாவிலும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலும் உயர்பண்பாடு எனப்புழக்கத்திலுள்ளதாக அவர்கள் வாதிடுவர்.
இவற்றின் மூலம் எது எமது பண்பாடு என்ற கேள்வியையும் கேட்டுக்கொள்ளலாம். அதற்கானபதிலானது பண்பாடானது மாற்றத்திற்குட்படுவதும் வெவ்வேறுகுழுக்கள் சார்ந்து அமைவதுமாக இருக்கும் என்பதாகவே இருக்கும் அவ்வாறான தொரு தன்மையை விளங்கிக்கொள்வது அவசியமானதாகும்.
இவ்வாறு பண்பாடு என்ற கருத்துச்சார்ந்து பெண்நிலை வாதிகள் மத்தியில் பலவாறான விவாதங்கள் உள்ளன. அவை பண்பாடு தொடர்பான விமர்சனங்களை முன்வைப்பனவாகவும் பண்பாடு என்ற பதத்தினை மீளவரைவிலக்கணஞ் செய்பன வாகவும் உள்ளன. மரபு தொடர்டபாகவும் தனித்துவம் தொடர்பாகவும் நடைபெறும் இவ்வகைச் செயற்பாடுகளினூடாகவே வித்தியாசங்கள் என்ற எண் ணக் கரு பெண் நிலை வாதத்துள் விளங் கிக்கொள்ளப்படுகின்றது. தனித்துவம் மரபு வித்தியாசங்கள்
28

நிவேதினி
என்பவற்றைப் பற்றிப் பேசும் போது இருக்கின்ற வரைவிலக்கணங்களை பெண்நிலைவாதிகளால் அப்படியே ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை.
இது போலவே வித்தியாசங்கள் பற்றிச்சிந்திக்கும்போது நவீனத்துவம் தொடர்பாகவும் முதலாளித்துவம் தொடர்பாகவும் பெண்நிலைவாதிகள் சிந்திக்கவேண்டிய நிலமையிலுள்ளனர். இவை பொருளாதாரம் அரசியல் போன்ற விடயங்களை உள்ளடக்கினவாகவும் அவற்றில் பெண்களின் செயற்பாட்டையும் சிந்தனையையும் வேண்டி நிற்கின்றன.
காலனித்துவம், தாரளமயமாக்கல், ஒரேமாதிரியாக்கல் மானிடவியல் அறிவியல் உள்ள மேற்குத்தொடர்பான சார்புநிலைகள் என்பவைபற்றியும் பெண்நிலைவாதிகள் சிந்திக்கவேண்டியுள்ளது. இவற்றில்பல முன்னேற்றம் தொடர்பான நேர்கோட்டுப்பாதையிலான சமூகமாற்றத்தினை மேற்கு நோக்கியதாக நகர்த்தும் கொள்கைகளையிட்டு எழுவன. ஒருவர் பெண்நிலைவாதியாக இருப்பதனால் மேற்கூறிய ஆதிக்கங்களையிட்டு கவலை கொள்வதில்லை என்ற கருத்து தவறானதாகும்.
இவற்றையெல்லாம் உள்ளடக்கியதாகவே கிழக்கைச் சேர்ந்த மூன்றாம் உலகப்பெண்நிலைவாதம் பலபக்கங்களில் சவாலை எதிர்நோக்கியுள்ளது. அதனால் கிழக்கு/மேற்கு என்ற விவாதத்தில் அல்லது மரபு/நவீனத் ததுவம் என்ற வரிவாதத் தில் பெண் நிலை வாதிகள் ஈடுபடுதல் பெண்நிலைவாதத்திற்கு வெளியே நடைபெறும் இதே மாதிரியான விவாதங்களைப் போன்றதல்ல. சாதாரணமாக சமூக விஞ்ஞானிகள் தனித்தன்மை, வித்தியாசங்கள் போன்ற எண்ணக்கருக்கள் பற்றிப் பேசுவதற்கும் பெண்நிலைவாதிகள் இவற்றைப் பற்றிப் பேசுவதற்கும் வேறுபாடு உண்டு.
அவ்வகையில் பெண்நிலைவாதம் சார்ந்த செயற்பாடுகள் அடிப்படைவாதத்திற்கும் பழமைவாதத்திற்கும் பலியாகிப்
29

Page 16
நிவேதினி போய்விடமுடியாத அதேவேளை முதலாளித்துவம் காலனித் துவம் போன்ற மேலாதிக்க நிலைமைகளிற்கு அடிமைகளாகி வரிட முடி யாது எண் ற சசி ரத் தையையும் காட் ட வேண்டியுள்ளது. இந்தக்கருத்துக்களின் பின்னணியிலேயே வித்தியாசங்கள் என்னும் எண்ணக்கரு விளங்கிக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
வித்தியாசங்கள் எனும் எண்ணக்கருவினைப் பற்றிச் சிந்திக்கின்ற போது எழுகின்ற இன்னுமொரு பிரச்சனை என்னவெனில் வரித்தியாசங் களையும் படி முறை அமைப்புக்களையும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதாகும். படிமுறை அமைப்பு என்பது சமூக சமனின்மையுடன் தொடர்புடையதொரு விடயமாகையால் அங்கு மேலாதிக்க நிலைமை உருவாகக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு. நீண்டகாலத்தில் வேண்டப்படுகின்ற ஒன்றாகவும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகவும் அமைகின்ற போது எது எப்பொழுதும் மேலாதிக்க நிலைமைகளுக்கு முரணான ஒரு விடயமாகவே மனங்கொள்ளப்படும். அவ்வகையில் வித்தியாசங்களும் படிமுறையமைப்புக்களும் பிரித்தறியப்பட வேண்டிய இரு விடயங்களாக உள்ளன.
வித்தியாசங்கள் என்ற எண்ணக்கரு சார்ந்து இன்னுமொரு அவதானிப்பை நாங்கள் இங்கு குறித்துக்கொள்ளலாம்.
அதாவது பெண்நிலைவாதத்தில் பால், பால்நிலை,(Sex, gender) எனும் இருவிடயங்கள் உள்ளதை நாம் அறிவோம். பால் என்பது இயற்கையானது எனவும் பால்நிலை என்பது சமூக உருவாக்கம் எனவும் அங்கு கொள்ளப்படும். பால் என்பதை விடவும் பால்நிலை என்பது வலியுறுத்தப்படுவதாக அமைய வேண்டும் என்ற கருத்துக்களினூடாகவே பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. பால்சார்ந்ததாக பெண்ணைக் கருதும் செயற்பாடுகள் பெண்ணை இயற்கையோடு சேர்த்து குறைத்து மதிப்பிடுகின்ற செயல்களாக அங்கு கொள்ளப் படுகின்றன. பெண்நிலைவாதத்தினுள்ளும் உலகளாவியதன்மை வலியுறுத்தப்படுமாயின் அது பால் சார்ந்ததாகவே
30

நிவேதினி
இருக்கும். பால்நிலை சார்ந்ததாக ஒரு முழுமை ஒன்று கடைசியில் எம்மால் எதிர்பார்க்கப்படுமாயின் அது தனத் துவங் களையும் வரித் தியாசங் களையும் வலியுறுத்துவதாகவே ஒரு முழுமை அடையப்படும். பால்நிலை சார்ந்ததான செயற்பாடுகளும் கோட்பாட்டாக்கங்களும் வர்க்க, சாதி, இன, நிற, (இது போன்ற ஏனையவை உள்ளடங்க) வித்தியாசங்களிற்கு புறம்பாக நடைபெறமுடியாதனவாகும். ஏனெனில் பால்நிலை என்பது சமூகவிடயமாகக் கொள்ளப்படும் போது இவ்வாறான சமூகப்பிரிவுகளும் அதனை ஒட்டிய குணாம்சங்களும் அதனைத் தீர்மானிக் கின்றன . இவ் விடயத்தைக் கருத்திற்கொண்டு வித்தியாசங்கள் என்ற எண்ணக்கரு சிந்திக்கப்படவேண்டிய ஒன்றாக உள்ளது.
இவைதவிர கோட்பாட்டு ரீதியாகவும் பெண்நிலைவாதத்தில் வித்தியாசங்கள் உள்ளன. பெண்நிலைவாதத்தினுள் கோட்பாடு சார்ந்தவர்கள் வித்தியாசமான பெண்நிலைவாத நிலைப்பாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள். உதாரணமாக சோசலிச பெண்நிலைவாதிகளையும் தீவிரக்கருத்துச் சார்ந்த பெண்நிலை வாதிகளையும் குறிப்பிடலாம். ஒரே ஒரு பெண்ணிலைவாதக் கோட்பாடு என்றே பெண்ணிலைவாதப்பயிற்சி என்றோ இருப்பதாக நாம் கூற முடியாது. பல கோட்பாடுகள் பயிற்சிகள் என்பனவே உள்ளன. இவற்றை நாம் பொதுமைப் படுத்தியே கோட்பாடு என்று சொல்கிறோம். மேலும் ஒரு அரசியல் வாதியாக இருக்கும் பெண்ணிலை வாதியின் பயிற்சி ஒரு விலங்கியல் துறையில் இருக்கும் பெண்ணிலைவாதியின் பயிற்சியிலிருந்து வித்தியாசமானதாக இருக்கலாம். இவ்வாறு எமக்கென்று உள்ள துறைகளினுTடாக நாங்கள் பெண்களுடைய பிரச்சனைகளையும், சமூகத்தையும் விளங்கிக் கொள்வதிலும் அணுகுவதிலும் வித்தியாசங்கள் இருக்கும். குடும்பவட்டம், வேலைத்தளம் இவற்றில் ஏற்படும் அனுபவங்களின் பிரதிபலிப்புகள் பயிற்சிகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். இவ்வாறு பல விடயங்கள் சார்ந்து, பெண்நிலைவாதம் என்பது சிக்கல்கள் அற்ற, பிரச்சனைகள் அற்ற
31

Page 17
நிவேதினி முழுமையாக இயங்கிவருகின்றது என்றகருத்தை நாம் ஏற்கமுடியாது. அதனால் வித்தியாசங்கள், தனித்துவங்கள் என்பவற்றை பயிற்சிகளிலும் கோட்பாடுகளிலும் ஏற்றுக் கொள்வது அவசியமானதாகும். இத்தகைய கருத்துக்கள் பெண் நிலைவாதிகளால் முன்வைக்கப்பட்டவண்ணம் இருக்கின்றன. குறிப்பாக மூன்றாம் உலகநாடுகளைச் சேர்ந்தவர்கள், கறுப்பினப்பெண்கள், ஒருபாற்சேர்க்கைப் பெண்கள் எனப் பலர் இத்தகைய கருத்துக்களை வலியுறுத்தும் பெண் நிலைவாதிகளாக இருப்பதை அவதானிக்கலாம்.
இவ்வாறாக 'வித்தியாசங்கள்" என்ற எண்ணக்கரு பலகேள்வி களை ஐயப்பாடுகளை, முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ள தாயினும் அதன் அவசியமும் உணரப்படுவதாகவே உள்ளது. இவ்வெண்ணக்கரு பெண்நிலைவாதத்தினுள் புதிய அர்த்தத்தினைப் பெறுவதனால் கோட்பாட்டாக்கத்தின் அபிவிருத்தியினையும் வேண்டிநிற்கின்றது. இவ்வெண்ணக் கருவினை உள்வாங்கிக்கொண்டதாக பெண்நிலைவாதம் தன்னுடைய வளாச்சிப் போக்கில் பெண்நிலைவாதிகளிற்கு பலதெரிவுகளை முன்வைப்பதுடன் தன்னையும் மாற்றி வருகின்றது. எம்மைப் பல வழிகளிலும் நோக்கியுள்ள மேலாதிக்க நிலைமைகளை உணர்ந்து அம்மேலாதிக்க நிலைமைகளை நமக்குள் ஏற்படுத்தாதவாறு எமது அடையாளங்களை எவ்வாறு வெளிப்படுத்தப்போகிறோம் என்பது தொடர்ச்சியான அனுபவத்தினுTடாகத்தான் சாத்தியமானதொரு விடயமாகும். வித்தியாசங்கள் முதன்மைப் படுத்தப்படும் போதுதான் தொடர்புகள் வலுப்படுத்தப்படும் அத் தொடர்புகளினுாடாக பெண்நிலைவாதத்தில் ஏற்படும் வளர்ச்சி என்பது ஆரோக்கியமானதாய் அமையும்.
இக்கட்டுரை 1997ம் ஆண்டு மார்ச் 8ம் தகதி சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு விபவி நிலையத்தாலும் பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனத்தாலும் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது.
32

நிவேதினி
உசாத்துணை நூல்கள்
1. Henrietta L. Moore (1989) : Feminism and Anthro
pology. Polity press.
2. Gramsci, A (1971) Selections From the Prison Note Books. Hoare, Q and Nowell Smith, G(eds & trs), London , Lawerence & Wishart.
3. Henrietta L. Moore. a. Passion For Difference 1994
Polity Press.
4. Larrain Jorge 1979: The concept of Ideology.
5. Barrett M (1980) Women's oppresssion Today
London: Verso.
33

Page 18
நிவேதினி
சொல்விளக்கம்
வித்தியாசங்கள் - Difference கருத்தியல் - Ideology
Lustgi - Sex
LufT6ißo0)6.) – Gender uD/Tibg)/55Q55g5u6v – Alternate Ideology L16ööTL/TLGB)LD/76of)L6huaij - Cultural Anthropology @LJ GổOTĮß6OGvG) unTg5 DIT GOf 6 fluu aio-Feminist Anthropology Gugësi 36it LibrSu LDIT6oft 6udi) - Anthropology of women. G&LDGUITf6ở555 lo — Hegemony g560f5966/60LD - Specificity
9/g5G6, 167h9u jjúb – Enlightnment Movement படிமுறையமைப்பு - Hierarchy 96076OLDuo) Tg5th - Ethno - Centrism FLDGiv dobg5LDuLDTg56v – Sanskritisation gep.jóG5600TTibgfril 3,6it - Social Characteristics
34

பெண்களும் எழுத்தும்
சில பிரச்சனை மையங்கள்
ஏ. தேவகெளரி
ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெண்களை அவர்களின் நடத்தைகளை அந்த சமூகத்தின் கலாசார விழுமியங்கள் மிக அதிகளவில் பாதிக்கின்றன. அதாவது ஆண்களை பாதிக்கும் அளவிலும் பார்க்க மிகமிக அதிகளவில் பெண்களைப் பாதிக்கின்றன.
உதாரணமாக ஒரு திருமணத்தில் கலந்து கொள்ளும் போது ஆண் வேட்டி கட்டித்தான் செல்லவேண்டும் என்ற அவசியமோ எதிர்பார்ப்போ இல்லை. ஆனால் ஒரு பெண் சேலை கட்டிச் செல்வதையே மிக முக்கியமான நடை முறையாகக் கொள்கின்றனர். இது மனோவியல் ரீதியாக மிக ஆழமாக, அனைவர் மனதிலும் பதிந்துள்ளது.
அடுத்து பாலியல் பற்றி பெண்கள் கதைத்தாலோ அல்லது அது சம்பந்தமான படங்கள் பார்ப்பதோ மிகவும் இழுக்கானது என்ற எண்ணப்பாடு சமூகத்தில் ஆழ வேரூன்றி இருக்கு மளவிற்கு ஆண்கள் செய்தால் அது இழிவாகத் தெரிவதில்லை அது ஆண்களது நடைமுறையில் சர்வசாதாரணம் எனக் கொள்ளப்படுகின்றது.
இப்படி பல விடயங்களை நாம் கூறலாம். இங்கு ஒரு சமூகத்திற்கு இருக்கவேண்டிய பொது கலாசாரம்பாரம்பரிய ஆடை அணிதல், ஒழுக்க முறை எனக் கொள்ளப்படும் பண்பு, பெண்களைப் பாதித்திருக்கும் அளவிற்கு ஆண்களைப் பாதிக்கவில்லை.
இந்த வகையில் பார்க்கின்ற போது எமது தமிழ்ச் சமூகத்தில் ஒரு பெண்ணை கலாசார விழுமியங்கள் எவ்வாறு வழி நடத்துகின்றன என்று அல்லது அவை எவ்வளவு தாக்கம் புரிகின்றன என்று புரிந்து கொள்ளலாம்.

Page 19
நிவேதினி இந்த வகையில் 'பெண்களும் எழுத்தும் " என்று பார்க்கின்ற போது, சில விடயங்கள் தெளிவாகின்றன. அதாவது சில குறிப்பிட்ட வரையறைக்குள் வாழந்துவரும் பெண்ணின் எழுத்து குறிப்பிட்ட சில ஆளுகைத் தன்மைக்கு உட்பட்டதாகவே இருக்கும். உதாரணமாக, இந்தியாவில் ஆனந்தவிகடனில் அறிமுகமாகி பின் கல்கி, கணையாழி, போன்ற பல பத்திரிகைகளிலும் எழுதி பின்னர் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்ட தமயந்தி' என்ற பெண்ணின் சிறுகதைத் தொகுப்பு முன்னுரையில் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் தமயந்தியின் உலகம்' என்பது உள்ளங்கைக்குள் அடங்கிவிடுகிற சிறு உலகம். அது அப்படித்தான் இருக்கமுடியும் திருநெல் வேலியில் ஒரு மத்திய தர குடும்பத்தில் பிறந்து வாழும் ஒரு பெண்ணுக்கு, இங்கு விதிக்கப்பட்டிருக்கிற உலகம் அவ்வளவுதான் என்று குறிப்பிட்டுச் செல்கிறார். இங்கு விதிக்கப்பபட்டிருக்கிற உலகம்' என்ற சொல் கவனத்திற்குரியது எனவே. இந்த விதிக்கப்பட்டிருக்கும் உலகத்துள் இருந்து கொண்டு ஒரு பெண் எந்தளவிற்கு எழுத்தை ஆள முடியும்? எழுத்தை ஆண்டால் 'எழுத்தாளன் .
இங்கு இந்த 'விதிக்ப்பட்டட உலகு குடும்பத்துடனும் அந்த குறிப்பிட்ட வீட்டுடனும் நின்று விடும் போது எழுத்தை ஆள முடியுமா? குடும்ப அமைப்புகூட அசமத்துவ உறவில் அமைக் கப் பட் டி ருக்கும் நிலையில் , தன்னையே அர்ப்பணிக்கும் மனப்பாங்கில் பிறர்நலம் கருதி வாளல் தாயின் பண்பு என்ற நிலையில் வாளும் பெண் எந்தளவிற்கு பிரச்சினைகளைப் புரிந்து கொள்வாள்? அப்படிப் புரிந்து கொண்டிருந்தாலும், எல்லாவற்றையும் வெளிப்படுத்தி விடுவாளா? அவளுக்குள் ஒரு வரையறை. இவற்றை வெளியில் சொல்லலாகாது.
இத்தகைய நிலைப்பாட்டிலும் ஒரு பெண் இலக்கியம் படைக்கிறாள். குறிப்பாக நவீன இலக்கியம் படைக்கிறாள் என்றால், மொத்த சனத்தொகையில் நவீன எழுத்தாளர்களில் மிக சொற்ப வீதமாகவே பெண் இருக்கிறாள். அவளும் குடும்ப உறவில் உள்ள பிரச்சினைகளை மையப்படுத்தியே
36

நிவேதினி தன்னளவில் இனங்கண்டு எழுதுவாள். அதிலும் பாலுறவு சம்பந்தமாக எதுவும் பேசமாட்டாள். ஒரு சில பெண் எழுத்தாளர்கள் அது பற்றிப் பேசியிருந்தாலும் சமூகப் பார்வையில் அங்கீகாரம் கிடைக்காது. கிராமிய மட்டங்களில் இந்த நிலை இன்னும் மாறாத நிலையில் இருக்க, நகர்ப் புறங்களில் ஓரளவிற்கு மாற்றமடைந்துள்ளது என்று குறிப்பிடலாம். அன்று இலங்கைப் பெண்எழுத்தாளரான பவானி பற்றிய பார்வையும் இன்று பவானி பற்றிய கணிப்பும் இதற்கு உதாரணமாக்கலாம். மேலும் எழுதிக் கொண்டிருப் பவர்களுள்ளும், ஏன் தரமான எழுத்துக்ளை எழுத முடிவதில்லை? அதாவது ஒவ்வொரு பெண்ணிடமும் நிறையக் கதைகளுண்டு. ஆனால் சிறுகதைகளாகவோ, நாவல்களாகவோ ஏன் வெளிவரமுடிவதில்லை.
இதற்கு வெளிப்பாட்டு முறைமை அறிவு அவசியமாகிறது அதாவது இந்தக் கதையை எப்படி அமைப்பது? இந்த முறைமை அறிவு பல நல்ல தரமான சிறுகதைகளைப் படிப்பதால் ஏற்படும் எனலாம். நல்ல சிறுகதைகளைத் தேடிப் படிப்பது என்ற "தேர்வும் மிக முக்கியமானது. ஒரு பிரதேசத்தில் வெளியாகும் தரமான இலக்கிய சஞ்சிகைகள் பத்திரிகைகள் இதற்கு கைகொடுக்கின்றன. இவற்றையும் மீறி, பல மொழிபெயர்ப்பு கதைகள் கற்றோர் மத்தியில் விதந்துரைக் கப்படும் கதைகள் என்பன அவசியம் படிக்கப்பட வேண்டி யவை. இதனால் அனுபவப்பரப்பளவு அதிகரிக்கின்றது.
இவ்வாறு பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு அதை வெளிப் படுத்தும் திறமையுடன் ஒரு ஆக்கத்தை வெளிக்கொணர்ந்தாலும், பெண் என்பதால் அவள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் பிரத்தியேகமானவை. உதாரணமாக ஒளவையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள் இவர்களை எடுத்துக் கொண்டால், இந்தப் பிரச்சினை ւյrՈսյւD.
ஒளவையாரை எந்த இடத்திலும் ஒரு இளம் பெண்ணாக யாரும் காட்டியதில்லை. வயதான ஒரு மூதாட்டியாகவே 37

Page 20
நிவேதினி
சித்திரிக்கப்படுகிறாள். அவள் திருமண பந்தத்திலும் நுளைந்ததாக இல்லை.
காரைக்கால் அம்மையார் திருமணபந்தத்தில் நுழைந்தாலும் அவரின் அதீத சக்தியைக் கண்டு கணவனால் கைவிடப் பட்டவர். இறைவனிடம் பேய் வடிவு கேட்டுப் பெற்று பாடல்கள் பாடித்திரிந்தவர் என்று கூறப்படுகிறது. ஆண்டாள் விரகதாபகம் பொங்க பல பாடல்களைப் இறைவன் மேல் பாடியவராகக் காட்டப்பட்டுள்ளார். இறைவனே தனக்கு கணவனாக வரவேண்டும என ஏங்கிப் பாடியவராாகவே காட்டப்பட்டுள்ளார்.
இவர்களது நிலைகளைப் பார்க்கும் போது, பெண்ணின் பாலியல் தன்மையும் இளமையும் கருத்து வெளிப்பாட்டுக்கு தடையாக இருந்துள்ளன எனக்கொள்ள இடமுண்டு. அத்துடன் குடும்ப அமைப்பில் இருந்துகொண்டு இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவது சிறப்பிக்கப்படவில்லை. (காரைக்கால் அம்மையாருக்கு நடந்த கதி) இந்தப் பாரம்பரிய முறைமையினூடாக நாம் இன்று பார்க்கின்றபோது, எழுதிக் கொண்டிருந்தவர்கள் எழுத்கைக் குறைத்துக்கொண்டதற்கும் அல்லது அறவே விட்டு விட்டுவிட்டதற்குமான தாற்பரியம் புரியும். எமது மொழியல் கூறுவதானால் இன்று எழுதிக் கொண்டிருந்த பல பெண் எழுத்தாளர்கள் குடும்ப உறவில் இணைந்து கொண்டதன் பின் எழுதுவதை நிறுத்திவிட்டார்கள் அல்லது குறைத்து விட்டார்கள். கேட்டால் நேரமில்லை என்ற பதில் கிடைக்கும். எனவே இந்த குடும்ப அமைப்பின் அசமத்துவ நிலை பெண்களின் எழுத்தை நசுக்கிவிடுகிறது அல்லது அழித்துவிடுகிறது.
குடும்ப அமைப்பில் இணையும் முன் ஒரு ஆணினால் எழுதிக்கொண்டிருந்தளவு பின்னரும் எழுத முடிகின்றபோது ஒரு பெண்ணினால் அது முடியாமல் போவது ஏன்? குடும்பத்தில் பெண்ணிற்கு கணவனைக் கவனித்தல், வீட்டைக் கவனித்தல் குழந்தைகளைக் கவனித்தல் கடமைகளாக்கப் பட்டுள்ளன. இவற்றுடன் இன்று பொருள் வள மீட்ட வெளியில் சென்று உழைப்பிலும் ஈடுபடவேண்டியவளாகி
38

நிவேதினி விட்டாள் பெண. இந்தளவு பொறுப்புகளுள்ளும் அவளது சிந்தனை குடும்பத்தை விட்டு அகலுவதாக இருக்க முடியுமா? சிந்திக்கும் ஆற்றலுடன் ஏதாவது படிக்கத்தான் முடியுமா? இதனால் தான் பல பெண்கள் தம் உணர்வுக்கு வடிகாலாக இருக்கும் இந்திய காதல் கதைகளையும் அழகுக்குறிபிப்புகளையும், சமையல் பாகங்களையும் படிப்பதுடன் நின்று விடுகின்றனர். அத்துடன் பெண்களுக்கென்ற முத்திரையுடன் மேற்கூறப்பட்டவை பத்திரிகை, சஞ்சிகை வாயிலாகக் கொடுக்கப்படும் போது அவர்களது கவனம் மேலும் அதில்
லயித்துப் போகிறது. அதாவது சிந்தனையை விரிவுபடுத்தாத நிலையில் அப்படியே பெற்றுக் கொள்ளும் நிலையில் - மட்டுமே பெண்கள் வாசிப்பு முறையை
கையாளுகின்றனர்.
பத்திரிகையில் பெண்கள் பக்கத்தை விட இன்று ஈழத்தில் பெண்களுக்கான பல சஞ்சிகைகள் வெளிவந்தவண்ணமுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து நங்கை, மட்டக்களப்பிலிருந்து பெண், கொழும்பில் இருந்து நிவேதினி, பெண்ணின்குரல் என்பன ஒரு சில. இவை இந்திய பெண்கள் சஞ்சிகையில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை அதாவது அழகுக் குறிப்பிலும் சமையலிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளாதவை. அவற்றுக்கு மேலாக ஒவ்வொரு பெண்ணுக்குமான பிரச்சினைகள் சிறப்புகள், தாழ்வுகள் என்பனவற்றை வெளிக் கொணர்வன. ஆனால் இவற்றை எத்தனைபேர் படிக்கின்றனர்? இந்திய "மங்கையர் மலரும் , பெண்ணும்" இலங்கை "நங்கையுடனும் பெண்ணுடனும்" போட்டிக்கு வராமலே கவரப்படுபவையாக உள்னன. ஏன்?
குடும்ப அமைப்பின் அசமத்துவ நிலை மாறாதவரை இந்திய மங்கையும், பெண்ணும்தான் இலங்கைப் பெண்களுக்கு (அறிவு, கற்பனை உலகிற்கு செல்ல) அறிவு புகட்டிக் கொண்டிருக்கப் போகிறது. இதனால் இலங்கையில் பெண் களின் எழுத்து ஆளுமை குறிப் பிட்ட சில பெண்களுடனேயே பன்னெடுங்காவும் பிணைந்திருக்கும் துர்அதிஷ்டம் ஏற்பட்டுவிடுகிறது.
39

Page 21
சீதையின் கதை
ராஜம் கிருஷ்ணன்
இருக்வேதம் நான்காம் மண்டலத்தில் (iv 5-12) ஸிதா என்ற தேவதை துதிக்கப்படுகிறாள். மக்கள், நிலத்தை உழுது பண்படுத்தி, தானியம் விளைவித்து உண்டு வாழும் நாகரிகம் சமுதாயத்தில் வந்து விட்டதை இப்பாடல்கள் பிரதிபலிக் கின்றன.
இங்கே சீதை என்ற சொல்லுக்கு , கலப்பை என்ற பொருள்
கொள்ளலாம். "மங்களமான ஸிதையே! உன்னைப் போற்றுகிறோம்! இந்திரன் ஸிதையைக் கொள்ளட்டும் ! பூஷான் வழிநடத்திச் செல்லட்டும் 1. என்றும் ,
உழுமுனைகள் நிலத்தில் பதிந்து கிளர்த்தட்டும்! வானம் மழை பொழியட் டு மி 1 எ ன் றெல் லாம் அருள் வேண்டப்படுகிறது.
இராமாயண இதிகாசம், இந்த நாகரிக மேம்பாட்டை அடிப்படையாக்கி, சீதையை நாயகியாக்கிப் புதிய மானிட தருமங்களை நிலைநிறுத்துகின்றது. இந்தத் தருமம் , நிலஉடமைச் சமுதாயத்தின் ஆணாதிக்க நீதியாகி பெண்ணின் அடிப் படை மனித உரிமைகளையே கட்டுப்படுத்திவிடுகிறது.
சீதையும் நிச்சயமாக ஒரு தாயின் வயிற்றில் தான் உதித்திருக்கவேண்டும் பூமியில் கிடைத்தாள் என்றால், பூமி நஞ்சுக்கொடியும் நிணமும் குருதியுமாக மகவைப் பிரசவித்ததாP
எனவே அறிவுக்குப் பொருந்தும் வகையில் பார்க்க வேண்டி யிருக்கிறது. குந்தியைப்போல் கன்னி கழியுமுன் கருப்பமாகி, சமுதாய் நிர்ப்பந்தத்தின் காரணமாக கானகத்தில் கிடத்தப்பட்ட தாய் ஒருத்தியின் மகளா?

நிவேதினி
உயர் வர்க்கத்து ஆண், கானகத்தில் வாழ்ந்திருந்த மக்களிடையே பிறந்த ஒருத்தியுடன் கூடி, பிறந்த குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையின் பயனாக பூமிக்கு மகளானாளா?.
எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். உலகில் முதன் முதலில் கற்பிற்கணிகலமாக, நிலஉடமைச்சமுதாய இலட்சிய நாயகியாக தீச்சோதனையில் குளித்தெழும் பொற்றிடைச் செல்வியின் பாரம்பரியம் மொட்டையாகவே விடப்பட்டிருக்கிறது.
ரேணுகையைப் போல் தாய்க் குடிப்பாரம்பரியம் கொடுக்கப் படவில்லை. திரெளபதையைப் போல் தந்தையின் மகளாக, சானகியாகிறாள். குந்தி கைவிட்ட கர்ணன் 'ராதேயன்' என்று வளர்ப்புத்தாயின் பெயரைக் கொண்டதுபோல் இவர்கள் தாய்ப்பெயரை ஏற்றிருக்கவில்லை. சனகனின் மகள் சானகி -மிதிலை நகர் அதிபரின் மகள் மைதிலிவிதேக நாட்டு மன்னன்மகள் வைதேகி என்ற பெயரையே பெற்றுத் திகழ்கிறாள்.
வில் அம்பு கொண்டு வேட்டையாடி வாழ்ந்த நிலையைப்பின் தள்ளி, காடுகளை அழித்து, விளைநிலமாக்கும் வேள்விகள் செய்யப்படுகின்றன. இந்த மாற்றத்தை எதிர்ப்பவர்கள், இந்த நாகரிகத்தை ஏற்க முடியாத அரக்கர்கள் பண்படாதமரபினர், நரமாமிசம் கொள்ளும் மரபிலிருந்து முன்னேறாதவர்கள். இவர்கள் தாய் குடிமரபினர் என்றும் கொள்ளலாம்.
பெண் தன் கூடல் விருப்பத்தை ஆணிடம் கோரினால், அதை நிறைவேற்றுவது அவன் கடமையாக இருந்தது. அவளுடைய விருப்பமும் இணக்கமும் இன்றி ஆண் அவளைத் தொட மாட்டான் என்ற நிலை இராமணயத்தில் போராட்டமாகிறது.
4.

Page 22
நிவேதினி சூர்ப்பனகை அரக்கர் குலத்தினள். இராம லட்சுமணர்களால் அவமானம் செய்யப்படுகிறாள். ஆனால் இராவணன் சீதையை பலவந்தமாகச் சேரத்துணியவில்லை.
சீதையின் நிமித்தமாக, பண்டைய வேட்டையாடி வாழும் வாழ்வின் சின்னமான வில்லே இராமனால் ஒடிக்கப் பெறுகிறது. சீதைக்கு, நில உடமைச் சமுதாயத்துக்கு இன்றியமையாத கற்பொழுக்கம் வலியுறுத்தப்படுகிறது
இராமகதையின் முக்கியத்துவமே, பெண்ணுக்குக் கற்பு என்றதோர் அணிகலத்தை நெறியாக்குவதில் தான் மையம் கொண்டிருக்கிறது. பளிங்கு போன்ற கண்ணாடித்துண்டை மெழுகுபோல் அனலில் காட்டி, வளைப்பதுபோல், பெண்ணை ஆண் நாயகச் சமூதாயத்துக்கு உகந்தவளாக்கும் நெறியாக, ‘கற்பியல் முழுமையாக்கப்படுகிறது.
இராமாயணம் பிறந்த வரலாற்றைச் சிறிது கூர்ந்து நோக்கலாம். வால்மீகி முனிவர், கங்கையில் நீராடுவதற்காக, நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது முன்னே இரு அழகியல் 'க்ரெளஞ்ச்" (நாரை இனம்) பறவைகள் ஆணும் பெண்ணுமாக உலகின் தலையாய இன்பத்தில் மயங்கி இருந்தன. அப்போது ஒரு வேடன் அம்பெய்து, ஆண் பட்சியைக் கொன்றுவிட் டான் . பெண் பறவை பரிதாபத்துக்குரிய குரலில் துடிதுடித்து வீழ்ந்த காட்சியே கவி இதயத்தில் பதிந்து பாதிப்புக்குள்ளாகியது. இந்த மாபெரும் காவியத்தை இயற்ற, உள்ளார்ந்த கிளர்ச்சி பொங்கி வர அதுவே காரணமாயிற்று.
காதல் என்ற உன்னதமான ஆண்- பெண் தொடர்பு, வெறும் உடல் ரீதியானதல்ல. கூடல் தலையாய இன்பம் என்றால், பரிாரிதல் உலகத் துச் சோ கங் களனைத் தைய, ம் உள்ளடக்கியதாகும் என்று கூறப்படுகிறது. ஆண் பறவை வீழ்ந்ததும், பெண் வேறு துணை நாடியோ விடுபட்ட நிலையிலோ பறந்து செல்லவில்லை. சமுதாயத்தில் இராமன்- சீதை பந்தம், முன் எப்போதும் சமுதாயத்தில்
42

நிவேதினி இருந்திராத ஆண்-பெண் தொடர்பாக வரையறுக்கப்படுகிறது. கற்பென்னும் நெறிக்கு இதுவே அடிநிலையாகிறது.
சீதை புதிய யுகத்து நாயகி.
இராமர், இராமருடன் சேர்ந்தவர்கள், முனிவர்கள் ஆகியோர் உயர்ந்த- மனிதர்களாகவும், இராவணனுடன் சேர்ந்தவர்கள் அரக்கர்களாகவும் காட்டப்படுகிறார்கள். புராண காவியங்களில் இவர்களுக்குப் பயங்கர உருவகங்கள் தீட்டப்படுகின்றன.
அக்காலத்தில், சத்திரியரும், பிராமணரும் மாமிசம் புசிக்காதவர்களல்ல, மதுவருந்தாதவர்கள் அல்ல. ஏன்? வரலாற்றுத் துவக்கமாகிய காலத்தில், அகத்திய முனிவர் ‘வாதாபி என்ற அரக்கனைப்புசித்து சீரணம் செய்த வரலாறு, நரமாமிசம் விலக்கல்ல என்று கூடக்காட்டுகிறது. சமண சமயம் தலைதுாக்கிய காலத்தில் தான் துறவு நெறியும் புலாலுண்ணாத பரிணாமமும் இந்திய மனித சமுதாயத்தில் இசைந்தன வெனலாம்.
இராமாயணத்து மனிதர்கள், நரமாமிசம் புசிப்பதிலிருந்து விடுபட்ட நாகரிகம் கொண்டவர்களாக் கொள்ளலாம்.
சீதையில்லாமல் கானகத்தில் அவளைத்தேடி வருந்திய ராமனின்நிலைபற்றி அனுமன் அசோக வனத்துச்சீதையிடம் தெரிவிக்கிறான்.
"ந மாம்ஸ்ம் ராகவோ புங்க்தே, ந சாபி மது ஸே வதே!”
என்ற பாடலடிக்கு, இராமன் மது, மாமிசம் இரண்டையும் தவிர்த்து விட்டான் என்பதுதான் பொருள்.
ஆனால் மதுவும் மாமிசமும், அறவாழ்வுக்குகந்ததல்ல என்ற கோட்பாடு வந்துவிட்ட காலத்தில், இராமனை மாமிசம் உண்பவராகவோ, மதுவருந்துவராகவோ காட்டலாமா?
43

Page 23
நிவேதினி
"மாம்சம் என்றால் மாம்பழத்தின் கதுப்பு, மது என்றால் தேன், இவ்விரண்டையும் எம்பெருமான் தவிர்க்கிறார்" என்று புராண உரையாசிரியர்கள் பொருள் கூறுவதாக காவ்ய இராமயணம் என்ற நூலின் ஆசிரியர் திரு.கே.எஸ் பூரீனிவாசன் விளக்குவது பொருத்தமாக இருக்கிறது.
இதிகாச புராணங்கள் இலக்கியங்கள் எல்லாமே இயற்கை நியதிகளையும் மானிட இயல் புகளையும் , உலக உண்மைகளையும் ஆதாரமாகக் கொண்டே உருவாயின என்பது தான் மெய் என்றாலும் உண்மையான மனித குல வரலாறுதான் கற்பனைகளுக்கும் கற்பிதங்களுக்கும் உடலும் உயிரும் அளிக்கின்றன என்பதை மறுக்க முடியாது.
கைகேயி, தாயச் சமூதாயத்திலிருந்து தசரதனால் கொண்டு வரப்பட்டவள். கைகேயி அறிவிற்சிறந்தவள். தசரதன் மேற்கொண்ட சம்பராசுரன் போரில், முன் நின்று தேரோட்டி அவனை வெற்றி பெறச் செய்கிறாள். அவனின் உளம் கவர்ந்த நாயகி எனவே தன்மகனுக்குத்தான் பட்டம் என்ற உரிமையை இவள் வைத்திருக்கிறாள். இது தசரதனுக்கு உறுத்துகிறது. எனவே தான் கைகேயின் மைந்தனைத் தாய்மாமன் வீட்டுக்கு அனுப்பிவிட்டு உடனே மனைவியரைக் கூடக்கலந்தா லோசிககாமல் இராமனுக்கு இராச்சியபிடேகம் செய்ய முனைகிறான் தசரதன்.
கைகேயி, தன் உரிமையைக் கோரும் போது தசரதன் பரிதாபத்துக்குரிய நியாயவானாகவும் , கைகேயி மிகக்கொடியவ ளாகவும் உருவகப்படுத்தப்படுகின்றனர். உண்மையில் இது 'மாத்ரு வாக்கிய பரிபாலனமாகவே இருந்தாலும் , இராமன் "பித்ரு வாக்கிய பரிபாலனம் செய்யவே காட்டுக்குச் செல்வதாக பிரகடனப்படுத்தப்படுகிறது.
பதினாறு வயசு நிரம்பப் பெறாத ராமனுக்கு, சின்னஞ் சரிறு மரியான வரிளையாட்டுப் பருவச் சீதை,
மணவாட்டியாகிறாள். வில் அதற்கு ஒரு சாக்காகிறது.
44

நிவேதினி
இந்தப் பெண்ணுக்கு, தந்தையாதிக்கம் விதிக்கும் பெற்றவர் பாசம் பழகிய இடங்களிலிருந்து பெயர்த்தெடுத்தல் என்ற
துன்பம் இயற்கையானதாக இல்லை. கனவன் கிடைத் தபரிறகு , "அவனே சகலமும் ' எண் று ஐக்கியமாகிவிடுகிறாள்.
இராமன் கானகம் புகும் நிலை வந்ததும் கானகக்கொடு மைகளை அவளிடம் பலவாறாக எடுத்துச் சொன்ன போதிலும், அவள் அவனுடன் செல்வதைத் தடுத்து நிறுத்தமுடியவில்லை. கணவனே தனக்கு இனி எல்லாம் என்ற நெறி அவ்வளவுக்கு அவளுள் ஊறிவிட்டது.
"என்னை உடன் அழைத்துச் செல்லத்துணிவில்லாமல் நீர் மட்டும் வனத்துக்கு ஏகினால், தந்தை ஜனகன் என்ன நினைப்பார்P என்று கேட்கிறாள் மனைவியைப் பிறரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்லும் கூத்தாடியைப் போன்றவ னென்று மருமகனை நினைத்துவிடமாட்டாரா? என்று அவளே சொல் கிறாள் - இராமன் இருக்குமிடம் கானகமானாலும், அதுவே அயோத்தியாம் அவளுக்கு.
இந்த வசனம், இன்றும் உயிருடன் தெய்வீகவசனமாக வாழ்கிறது. இந்தக் கற்பு நெறி உபதேசம் இன்னமும் அழுத்தமாக, கானகத்தில், அத்ரி முனிவரின் மனைவி அநுசுயையினால் வயதில் இளைய சீதைக்கு அறிவுறுத்தப் படுகிறது. கற்பரசிகளின் புராணங்களில் நிலையாக வாழும் முனிபத்தினி அநுசு யை, மும்மூர்த்திகளைக் குழந்தைக ளாக்கியவள். வானத்துச் சூரியனுக்கும் ஆணையிடும் ஆற்றல் படைத்த மாதரசி அவள், இளையவளான சீதையை, "கானகம் வந்து விட்டாய் , தர்மத்தை உணர்ந்துவிட்டாய். எப்போதும் அந்தக் கணவரைக் கைவிடாமல் இரு! என்று வாழ்த்துகிறாளாம்.
அப்போது சீதை, மிகுந்த உற்சாகத்துடன் தன் திருமண வரலாற்றை அந்த மூதாட்டியிடம் சொல்லுகிறாளாம். முக்கியமான செய்தி யாது?

Page 24
நிவேதினி
உழுநிலத்தில் அவளைக் கண்டெடுத்த சனகர், மகளாக வளர்த்தார். அரசிளங்குமாரியாகவே வளர்க்கப்பட்டாலும், ஒருதாயின் வயிற்றில் பிறந்த விவரங்கள் தெரியாமல் இருக்கையில், அவளுக்குத்தக்கதொரு கணவரை எப்படித் தேர்ந்தெடுப்பார்?
பின்னேர வில்லை வளைத்து நாணேற்றுபவருக்கு அவள் மாலையிடுவாள் என்று முடிவு செய்தார். தாய்தகப்பன் தெரியாத பெண்ணை எவன் கட்டுவான்?. இந்த நியதி இன்னும் நிலைத்திருக்கிறது.
பதினான்காண்டுகள் காடுகளில் அலைந்து திரிந்த வாழ்க்கை ஒரு தசாப்பத்தத்துக்கும் அடுத்த தசாப்தத்துக்குமான இடை நிலையை விள்ளுகிறது எனலாம். இராமன் மானின் பின் சென்ற போது, காவலிலிருந்த இலக்குவனைச் சீதை சந்தேகிக்கிறாள். இராமனின் அபயக்குரல் கேட்டும் அகலாத அவன் உள்ளக் கிடக்கையின் மீது ஐயங் கொண்டு பழிச்சொல்லை வீசுகிறாள்.
இது தமையனின் மனைவியில் உரிமை கொண்டாடும் ஒரு சமூக நிலையைக் குறிக்கிறதென்று ராஹில் ஸாங்க்குத்யாயன் தம் "மாவை சமாஜ் " என்ற நூலில் தெளிவாக்கியுள்ளார்.
இத்தகைய சீதை, இராவணனின் எல்லைக்குள் அசோக வனத்தில் சிறை இருக்கும் நாட்களில், இராமன் வருவான், தன் னை மீட்டுச் செல் வான் எண் று உயிரை வைத்துக்கொண்டு காத்திருக்கிறாள் அவளைச் சுற்றிய அரக்கியர்.
“எங்கள் அரசனுக்கு உகந்தவளாகிவிடு. இல்லையேல் உன்னைப்புசித்து விடுவது எங்களுக்குப் பெரிதல்ல" என்ற அச்சுறுத்தலில் அவர்கள் தன்மை கொடூரமாக்கப்படுகிறது. இராவணன் அவளைப் பலவந்தம் செய்யாமலே அச்சுறுத்திப் பணியவைக்க முனைகிறான்.
46

நிவேதினி மெல்லியலான சீதை, ஒரு துரும்பைக்கிள்ளிப்போட்டு அதற்குச் சமமாக அவனை மதித்துப் பேசுவதாக விவரிக்கப்படுகிறது.
இது சோக சிகரம்தான். இத்தகைய நாயகியை இராமன் சந்தேகப்பட்டானே? அப்போதைய சீதையின் மனோநிலையாது? அது சோக didsglfaia0)aluuri P
அக்கினியில் புகுந்து தன் தூய்மையை நிரூபித்த பின்னரும், குடி மக்கள் சந்தேகப்படுகிறார்கள் என்று, பூரண கருப்பிணியான மனைவியைக் கானகத்துக்கு அனுப்பி, தன் அரசகுல நியாயத்தை நிலை நாட்டிக்கொள்கிறானே, அது சோகத்தின் நெடுமுடியல்லவோP
இன்னும், அவள் உருவாகவே இரண்டு பிள்ளைகளைப் பார்த்துக் கேட்டு உணர்ந்த பின்னரும், முனிவர், அவர்கள் சீதையின் புதல்வர்கள், அவள் உத்தமி என்று நற்சான்று அளித்த பின்னரும், அந்த ஆண் ஆதிக்கம் கனிந்து கொடுக்கவில்லை. அவள் எப்படி இன்னும் தன் உள்ளத்தை நிரூப்பிப்பாள்?
பூமி பிளந்தது, அவள் தாயின் மடியில் ஐக்கியமானாள்,
ஆணாதிக்கம் பெண்ணுக்குப் பூட்டிய விலக்க முடியாத தளையாக இன்னும் இந்த நெறி இறுகிக்கொண்டிருக்கிறது. சொந்த மண்ணிலிருந்து பெயர்த்து எடுத்து வந்து அறிவு வெளிச்சமும் சுதந்திரக் காற்றும் புகாத சூனியத்தில் அவள் உழைப்பதையும், பிள்ளை பெறும் புனித ஆற்றலையும் கொச்சைப்படுத்தி ஆளும் ஆணாதிக்க வரலாறு தான் இந்தியப்பெண்ணின் சமூக வரலாறு.
இராமாயணத்தில் பூரணமான கற்புநெறி, புளுகுப்புராணங் களில், எத்தனை நூற்றாண்டுகள் தேய்ந்த போதிலும், புதிய
வடிவங்களில் பெண்ணை மட்டும் பிணிக்கும் நெறியாக
47

Page 25
நிவேதினி வலிமை பெற்றிருக்கிறது. தாயாகி நின்ற பெண், வெறும் உடமைப் பொருளாக, களங்கத்தைக்குத்தி வீசியெறியப்படும் நிலைக்கு இழிந்து போனாள்.
இந்த இரண்டாம் நிராகரிப்பு, கருப்பிணியாகச் சீதை நடுக்காட்டில் விடப்படும் கொடுமை, அரசு ஏகாதிபத்தியம் என்ற விரிந்த எல்லையில் முன்னேறி நின்ற தந்தைநாயகத்தின் உச்சகட்டத்தைப்பிரதிபலிக்கிறது.
இந்த நிராகரிப்பு, எந்த வருக்கத்தினராலும் நியாயப்படுத்தப் பட்டிருக்கவில்லை. இராமகதை உண்மையில் வரலாற்று நிகழச்சியா, கற்பனையா என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும், நடைபெற்ற சில கூறுகள் இதற்கு ஆதாரங்களாக உதவியிருக்கலாம்.
இந்த மூல இராமாயணக்கதையைப் பின்பற்றி, காலந் தோறுமான பல மொழிகளில், பல பிரதேசங்களில் இராமகதைகள் புனையப்பெற்றிருக்கின்றன.
பலநூற்றாண்டுகளுக்குப் பின்னர் , கம்பர் தமிழில் இக்கதையை தென் தமிழ்நாட்டுக்கே உரித்தாக்கியுள்ளார்.
சீதை இங்கு அறியாச்சிறுமியல்ல. மங்கைப்பருவமடைந்து, இராமன் வடிவிலே தன்னை பறிகொடுக்கும் நிலையி லிருக்கிறாள். பெண்ணின் சமுதாயநிலை, இவ்வாறு பல பாத்திரங்களில் பிரதிபலிப்பதைக் காணலாம். குறிப்பாக, அகலிகை வரலாற்றை எடுத்துக்காட்டாகப்பார்க்கலாம். மூலக் கதையில், இராமலட்சுமணர்களை, கோசிகமுனிவர் வேள்வி முடித்து மிதிலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அகலிகை வரலாறு கூறப்படுகிறது.
வழியில் கோதமர் ஆசிரமம் இருக்கிறது. அங்கு பிறர்கண்களில் படாமல் தூய தவவாழ்வு வாழ்ந்து, முன்பு செய்த தவறுக்குப் பரிகாரம் தேடும் அகலிகையைப்பற்றி அவர்களுக்கு முனிவர் கூறுகிறாள்.
48

நிவேதினி
அப்போது குடிலிருந்து அகலிகை வெளிப்பட்டு , இராமனையும் முனிவரையும் வணங்குகிறாள்.
அவளுடைய மேனி கடும் விரதங்களினால் மெலிந்து சுருங்கி அந்தப் பேரழகி அகலிகையை இவள் என்று சொல்லும்படி மாறி இருக்கிறது.
இவர்களைக்கண்டதனால் பாவமாகிய மாசுகள் நீங்க, அவள் கண்ணிர் மல்க துதிக்கையில், அவளைக் கைவிட்டிருந்த கணவர் கோதமுனி அங்கே வருகிறார். இருவரும் தம்பதியாகத் திரும்பினர் என்பது மூலக்கதை.
பின்னர் பத்மபுராணத்தில் அகலிகை தவறிழைத்ததனால் கல் லாகும் படி கணவராகிய கோதமமு னியினால் சபிக்கப்பெறுகிறாள். ஆண்டாண்டுக் காலம் கல்லாகிக் கிடந்த அவள் இராமனின் பாததுளிபட்டதும் மீண்டும் பெண்ணா கிறாள் என்று மாற்றப்படுகிறது.
இதை ஒட்டியே, கம்பரும் தையலைக்கல்லாக்கி விடுகிறார்! இந்தக்கல் மகத்துவம் 'இராமனின் கால் மகத்துவமாகி எத்தனை எத்தனை கற்பனைகளுக்கும் விளக்கங்களுக்கும் இடம் கொடுத் திருக்கின்றனP இன்றும் திருமண வைபவங்களில் அம்மி மிதிக்கும் சடங்கில், பெண்ணே நீ மனதிலும் துரோகம் நினைக்கலாகாது! அப்படிச் செய்தால், அகலிகையின் கதிதான்! நீ கல்லாவாய்! என்று சூக்குமமாக உணர்த்தப்படுகிறது.
கற்புநெறி காத்தால், இறந்தபின் வானத்து'அருந்ததி போல் தாரகையாகச் சுடர்விடுவாய்!
காவிய நாயகன் மீது எந்த ஒரு கரும்புள்ளியும் விழலாகாது. எனவே, கம்பர் இராமபட்டாபிஷேகத்துடன் கதையை முடித்துவிட்டார். ஆனால் இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில், நவீன மின்னணுஇயல் சாதன வடிவில் இராமாயணம் உயிர் பெற்ற நிலையில், சீதை, பூரண
49

Page 26
நிவேதினி கருப்பிணியாக, இராமனிடம் தானே அவன் நிராகரிப்பை வேண்டி விழைந்து மன்றாடிப் பெற்றாள். இராமன் அது தாளாமல் தானே ஒடுங்கிப் போனதாகச் சித்திரிக்கப் பெற்றது.
இந்தக்காவிய நாயகனின் மீது எந்த ஒர் ஆணாதிக்கப் பழி நிழலும் விழக்கூடாது என்று, சீதை தானே வலிய வந்து காட்டுக்குப்போனதாகத் தட்டை மாற்றிப் போட்ட விந்தையை என்ன வென்று சொல்லP
இது. இன்றைய ஆண் ஆதிக்கம் காட்டும் மாயமல்லாமல் வேறென்னP
50

பெண் வெறுப்பும் அவற்றின் ஐதீக வெளிப்பாடுகளும்
செல்வி திருச்சந்திரன்
ஜதிகங்களும் புனைகதைகளும் பெரும்பாலும் ஒரு சமுதாயத்தின் கலாசாரத்தை பிரதிபலிப்பவையாக இருக்கும். கலாசாரத்தை மானிடவியலாளர் இரு வகையாகப் பிரிப்பர். Gsprir u Gsp 'Siaŭo (Robert Redfield) Ólaiv 6öt friệu gift (Milton Singer) போன்றோர் இந்திய கலாசாரத்தை சிறு பாரம்பரியம், பெரும் பாரம்பரியம் (Litle Tradition) என்று ஒரு பகுப்பை செய்துள்ளார்கள்.
சமுதாயத்தின் மேல்கட்டத்தில் உள்ள உயர் சாதி உயர் வர்க்கதினோர் மட்டத்தில் எழுந்த கலை, இலக்கியம், சாத்திரம் போன்றன. பெரும் பாரம் பரியத்தைச் சார்ந்திருக்கும். கீழ் மட்டத்தில் உள்ளோரால் இயக்கப்படும் கலை, மொழி இலக்கியம், நாட்டுக்கூத்து, நாட்டுக்கதை போன்றன செம்மைப்படுத்தாத ஒரு கலாசாரமாக, பெரும்பாலும் கர்ண பரம்பரையாகவும் எழுதாக்கலாசாரமாகவும் இருந்து வந்தது. ஆகவே இந்தப்பாகுபாடு மேலோர் கீழோர் என்ற சாதி வர்க்கரீதியில் உள்ள வேறுபாடுகளை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. இன்று இந்த பகுப்பு முறையை நிராகரிப்போரும் உளர். ஆனாலும் கீழோர் மேலோர் என்று குணாம்சரீதியில் எழும் பாகுபாட்டை நாம் நிராகரித்தாலும் இன்று சில பல கலை இலக்கியப் பண்புகளைப் புரிந்து கொள்ள இவ்வாறான பகுப்புக்கள் பெரிதும் துணைபுரியும். இந்த நிலையில் பழமொழிக்கும் சில புனை கதை ஐதிகங்களும் இந்த சிறு பாரம்பரியத்திற்குள் அடக்கப்பட்டாலும் இதற்குள் கூட ஒரு பிரச்சனை எழுகிறது.
மகாபாரதம் போன்ற "செந்நெறி" இலக்கியத்தில் தாராளமான கிளைக்கதைகள் பழமொழிகள் ஐதீகங்கள்

Page 27
நிவேதினி நாட்டு தன்மையை அண்டிய கதைகள் என சிறு பாரம்பரியத்தைச் சார்ந்தனவாக இருக்கின்றன. தேவாரத் திருவாசகங்களில் கூட நாட்டுக் கூத்து மெட்டும் சொற்பிரயோகங்களும் உண்டு. இந்தச் சிறு பாரம்பரிய வெளிப்பாடுகள் பெரும்பாலும் பாமர மக்களால் இயற்றப்பட்டவையாக இருப்பதனால் சொற்பிரயோகங்கள் சிதைந்தும் இலக்கண மரபுகளை மீறியவையாகவும் இருக்கும். பாமரமக்களின் உணர்ச்சிக் கூறுகளை தற்போது பிரித்தறிய Subaltern text (ஓரங்கட்டப்பட்டவர்களின் வாக்குகள்) என்ற ஒரு பகுப்பும் தோன்றியுள்ளது. எப்படி பிரிவாக்கம் செய்தாலும் மானிடர் உணர்ச்சிப் பிரவாகம் என்ற ரீதியில் உணர்ச்சிகளைப் பிரித்தறிவது கடினமாகவே இருக்கும்.
எனது இந்த கட்டுரையில் பெண்மை சிறுபாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பழமொழி போன்றவற்றிலும் பெரும் பாரம் பரியத்தில் அடக்கக்கூடிய சமய குரவர் வாக்குகளிலும் எப்படி கீழ் நிலைக்குத்தள்ளப்பட்டு விட்டது என்பதை ஆராய எண்ணி உள்ளேன். பெண்மை என்றால் வஞ்சகம், சூழ்ச்சி வெற்று நிலை, என்பதன் உருவம் என இவ்விரு பாரம்பரியமும் கூறுவது தமிழ் இலக்கியத்துக்கு மாத்திரம் புதினமான செய்தியல்ல. ஏனைய இலக்கியங்களிலும் இது ஒரு சர்வசாதாரண விடயமாகத் தொனிப்பது பெண் எல்லாச் சமூகங்களிலும் எல்லா கலாசாரங்களிலும் இரண்டாம் பட்ச நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதைக் காட்டுகிறது.
பெண்மையில் வெறுப்பு என்ற கோட்பாட்டை இரண்டு ரீதியில் நாம் ஆராயலாம். ஒன்று மனரீதியான உணர்ச்சிகளின் பாற்பட்ட சின்னத்தனங்கள் அவருக்குண்டு என்று ஆண்கள் கருதி அக்குணங்களால் வெறுப்புணர்ச்சி என்ற ஒரு கருத்தியலையே சிருஷ்டித்து விட்டமை. இதை வெறுப்புணர்ச்சிக் கருத்தியல் என நாம் கூறலாம். இரண்டாவதாக செயல் நிலையில் பெண்களது செய்கைகள் அல்பமானவை அருவருக்கத்தக்கன. இவை பெண்களுக்கு இயல்பாகவே அமைந்த செயல்கள் என்று கூறும் ஆணினம்
52

நிவேதினி துர்ச்செயல் பெண்மைக்குச் சமன்பாடு என்று இன்னுமொரு வகையில் பெண்ணை இழிவுபடுத்தி உள்ளது.
இப்படியான எண்ணக் கருத்துக்கள் எப்படி ஒரு சமுதாயத்தின் பிரதிபலிப்புகளாக வெளிவருகின்றன. எப்படி இவை உருவாகின்றன என்பதை கருத்தியலின் மட்டத்தில் ஆராயலாம். இந்த ஆய்வுநெறி பொதுவாக மாக்சீய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகியன சமூகக் கட்டமைப் பின் அடித்தளமாக (base) அமைய, அதன் மேட்கட்டுமானமாக அதன் பிரதிபலிப்புகளாக (Superstructure) இந்தக் கருத்தியல்களை அடிப்படையாகக் கொண்ட கலை, இலக்கியம் சட்டம், போன்றன தோன்றுகின்றனவா,என்பது காலங்காலமாகக் கேட்கப்பட்டு வந்த ஒரு கேள்வி. இந்தக் கேள்விக்குரிய விடைகள் பெரும்பாலும் அனுமானங்களாகவே இருக்கும் என்பது எனது கருத்து. என்றாலுங்கூட உற்பத்திச் சக்திகளின் முழு முற் றான ஏகபோக பிரதிபலிப்புக்கள்தான் ஒரு சமுதாயத்தின் எண்ணக்கருத்துகள் என்ற ஒரு கணக்கியல் அணுகு முறையை நாம்
ஏற்றுக்கொள்ள முடியாது. மானிட உணர்ச்சிகளையும் ஏக்கங்களையும் கூட்டுமொத்தமாக ஒரு கட்டமைப்பின் வெளிப் பாடு என்று கூறுவது மானரிட
ஜன்மங்களைக்குறைத்து மதிப்பிடச் செய்துவிடும். இப்படி கூறும் அதே சமயத்தில் அந்த அடித்தள கட்டமைப்பின் தாத்பரியங்களும் பரிமாணங்களும் கூறுகளும் ஏதோ ஒரு வகையில் எண்ணக்கருத்துக்களுக்கு உந்து சக்தியாக அமையலாம் என்பதையும் நாம் மறுக்க இயலாது.
மேற்கூறிய குறைபாட்டை பழமொழிகளின் கருவை ஆராயும் பொழுது நாம் காணலாம். அமைப்பியல் என்ற அணுகு
முறையில் ஆராய்வதும் ஒரு புதிய நோக்காக இருக்கும்.
இவ்வணுகுமுறை மார்க் சீய அணுகு முறையை நிராகரிக்காமல் அதனுடன் தொடர்பு கொண்டதாக உள்ளது.
அமைப்பியலை Structuralism என்று ஆங்கிலத்தில் அழைப்பர்.
53

Page 28
நிவேதினி
அமைப்பியல் என்றால் ஒரு இலக்கியத்தின் அமைப்பை, அதன் பூரண உருவத்தை, அக்கு வேறு ஆணிவேறாக்கி அதன் கூறுகளையும் பரிமாணங்களையும் மொழியல் அடிப்படையில் நுணிகி ஆராய்வது. இங்கு அமைப்பியல் முறையின் தாத்பரியம் இலக்கியத்தில் உணர்ச்சிபூர்வங்களையும் தர்க்க நெறியையும் ஒன்றுபடுத்தி, இலக்கியத்தின் ஆழந்த தரத்தை உணர்த்தி நிற்பது என்பதையே குறிக்கும்.
பெண்மைக்கு பல உருவங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் இந்த பெண் வெறுப்பு என்பதின் வெளிப்பாடுகளை இக்கட்டுரைப் பொருளாக நான் எடுத்துக்கொண்டேன். பெண் வெறுப்பு என்பது ஒரு கருத்திய லாக, கருத்துக்கோவையாக மேலைநாட்டிலும் தோன்றியிருந்தது என்பதும் ஒரு சுவாரஸ்யமான செய்தி. Misogyny என்ற கிரேக்க நாட்டுச் சொற்பதம் பெண் வெறுப்பு என்பதைக் குறிக்கும் miso என்றால் வெறுப்பு Gyny என்றால் பெண். Gyny என்ற சொல்லே இதன் அடி. இங்கு பெண் என்று கூறும்பொழுது பெண்ணின் உறுப்புக்களை உடைய தன்மை என்று அகராதி கூறுவதும் நோக்கற்பாலது. (The condition of having female organs or pistil the seed bearing organ sovary). பெண்மையின் உறுப்புக்களைத் தொடர்புபடுத்தலின் முக்கியத்துவத்தைப் பின்னர் விளக்குவதற்கு ஒரு முன் உரையாக இந்த மொழியியல் விளக்கத்தை இங்கு தருகிறேன். அதாவது பெண் என் ற தன் மை யை அவளது உடலுறுப்புக்களே முதன்மையாகக் கொள்கிறது என்பது கூட ஒரு கருத்தியல் பரிமாணங்களைக் கொண்டிருக்கிறது.
ஐதீகங்களும் பழமொழிகள் சிலவற்றின் பெண்மை வெறுப்புப் பரிமாணங்கள்
பெரும்பாலும் ஐதீகங்களும் பழமொழிகளையும் தோற்று வித்தவர்கள் தங்கள் கருத்துப்படி சரியென்று தோன்றிய உண்மைகளையும் சில சித்தாந்தங்களையும் தங்களது கூற்றுக்கள் மூலம் வெளிப்படுத்தினார். ஆனால் அவையாவும்
54

நிவேதினி
காலங் கடந்து நிற்கும் தத்துவக்கருத்துக்கள் அல்ல. பொதுவாக நாளாந்த பேச்சுக்களிலும் இலக்கியங்களிலும் எடுத்தாளப்படும் சில சொற்சேர்கைகள் ஒரு தத்துவத்தை விளக்குவதாக எடுத்தாளப்படுவதுமுண்டு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற கூற்று சாதாரணமாக நடைமுறை வழக்கங்களைக் கடந்து ஒரு மனோதத்துவ உண்மையையும் வெளிக்கொண்டிருப்பதாக கொள்ளலாம். இதைக் கூறிய காலகட்டத்தில் மனோதத்துவ உண்மைகள் காரணிகளைக் கொண்டு அறிந்து தெரிந்த ஒரு அறிவு யுகமாக இருக்கவில்லை. ஆகவே இது ஒரு அவதானிப்பின் மூலம் ஒரு அறிவுசால் ஆசானாலன்றி ஒரு சாதாரண பாமரனால் கூடக் கூறியிருக்கமுடியும். இங்கு அவனது அறிவு, அனுபவம், அவதானிப்பு, என்பதனை அடிப்படையாகக் கொண்டு சொற்சுருக்கமும் அறிவுத் தெளிவும் கொண்ட ஒரு கூற்று வெளிப்பட்டிருக்கிறது. அதே போல் பெண்புத்தி பின்புத்தி என்று கூறும் ஒரு ஆண் அவனது குதர்க்கத்தையும் அவனது அறியாமையையும் வெளிப்படுத்துகிறான் என்று நாம் கூறலாமா? இந்தக் கூற்றின் பரிமாணங்கள் யாது. இது சரியான ஒரு கருத்தா என்பதனை ஆராய்வதும் அமைப்பியல் பாற்படும். இக்கூற்றிற்கும் உற்பத்தி முறைக ளுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என மார்க்சீய அணுகு முறை கேட்கக்கூடும் சமுதாய பொருளாதார மட்டத்தில் பெண்ணின் தலைமைத்துவம் நிராகரிக்கப்பட்ட ஒரு கால கட்டத்தில் , பெண் அடுப்பூதும் ஒரு யந்திரமாகக் கணிக்கப்பட்ட பொழுது அறிவும், வெளியுலக அனுபவமும் இன்றி ஒன்றிலிருந்து மற்றதை வேறுபடுத்திப் பார்க்கும் திறமை அவளுக்கு மங்கி இருந்த நிலையில் அவளது புத்தி பின் தங்கிய நிலையில் இருந்திருக்கலாம். அப்பொழுது அவளது புத்தி பின்புத்தியாக இருந்திருக்கலாம். இந்த ரீதியில் இக்கூற்று சரியானது என்று ஏற்பது சரியா என்பது தான் கேள்வி. அதாவது சில பல வெளிக்காரணங்களால் உண்டாக்கப்பட்ட செயற்படுத்தப்பட்ட அவளது பின்தங்கிய நிலை எப்பொழுதும் சாசுவதமாக எக்காலத்திற்கும் பொருந்திய உண்மையாக இருக்குமா? அல்ல என்பதே அதன் விடை. இங்கே வெளிக்காரணிகள் என்ற முக்கிய அம்சங்கள் மறைக்கப்பட்டு விட்டன.
55

Page 29
நிவேதினி அவை விலக்கப்பட வேறு பல கருத்துக்கள் இக் கூற்றினால் வெளிக் கொணரப்பட்டுவிட்டன அவையாவன :
(அ) பெண் என்றால் அவளது படைப்பிலக்கணத்தின்படி அவர் ஒரு பின்புத்திக்காரி என்றும் அவளது மூளையின் இயக்கம் மந்தமானது.
(ஆ) பெண் அவளது படைப் பரிலக் கணத்தினர் படி
பின்புத்திக்காரி
(இ) அவளது மூளையின் கட்டுமான அமைப்பின் ஒரு விளைவுஅல்லது பலன் அவளது பின்புத்தித் தன்மை.
(இ) பெண் என்ற ரீதியில் ஆணிலிருந்து வேறுபட்ட இயக்க
சக்தி அவளுக்குணடு.
இவை இத்தனையும் தொக்கிநிற்கும் ஒரு கூற்றாக இப்பொழுது இப்பழமொழி உபயோகிக்கப்படுகின்றதை நாம் அவதானிக்க வேண்டும்.
இக் கருத்துக்கள் எல்லாம் இப்பழமொழியின் பேருண்மை என நாம் விளக்கம் கூற முடியுமா? உண்மைக்கும் தர்க்கத்திற்கும் புறம்பான இக்கூற்று காலக்கிரமத்தில் ஒரு பொய்மையான கருத்தியலைத் தோற்றுவித்து விட்டது. இங்கு காரணகாரியத் தொடர்புகள் மறைக்கப்பட்டு ஒரு பொய்மை உணர்ச்சி தான் மேலோங்கி நிற்பதை நாம் காண்கிறோம். இதைத்தான் கருத்தியலின் பொய்மை உணர்ச்சிகள் என (Faise Consciousness) கார்ல் மார்க்ஸ் கூறிப்போந்தார்.
இக்கூற்று பொதுவாக பெண்ணை எள்ளி நகையாடி இகழ்வதற்கும் நிந்திப்பதற்கும் கூறப்படும் பொழுது அவளை உணர்ச்சி பூர்வமாக துன்புறுத்துகிறது. அதே சமயம் அவளை அரசியல், பொறுப்பு நிலைகள் மேலான கடமைகள் போன்ற வற்றிலிருந்து விலக்குவதற்கும் உபயோகிக்கப்படுகிறது. பின்னைய நிலை ஒரு கருத்தயிலின் சக்தியையும்
56

நிவேதினி
பலத்தையும் அது எவ்வாறு செய்கை மட்டத்தில் பிரயோகிக்கப்பட்டு ஒரு சாராரைப் பாதகத்திற்குள்ளாக்குகிறது என்பதையும் கூறுகிறது.
கிக்கியு (gikuyu) ஐதீகக் கதை ஒன்று பல உண்மைகளை எடுத்துக்கூறுவதாக அமையும் அதே சமயத்தில் பெண் வெறுப்பையும் கோடி காட்டி நிற்கிறது.
பல்லாண்டுகளுக்கு முன் பெண்களே அரசாட்சி செய்து வந்தனர். ஆனால் காலக்கிரமத்தில் அவர்களது ஆட்சி கொடுங் கோல் ஆட்சியாக மாறிவிட்டது. ஆண்களை அடிமைகளாக்கி விவசாயத்திலீடுபடுத்தியும் மாட்டு மந்தைகளை மேய்க்கப் பண்ணியும் விட்டனர். சகல வீட்டு வேலையையும் குழந்தைப் பராமரிப்புக்கூட அவர்களது தலையில் சுமத்தப் பட்டன. இந்தக் கொடுங்கோன்மையையும் அடிமை வாழ்வையும் விரும்பாத ஆண்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர். பெண்கள் அத்தனை பேரையும் ஒரே சமயத்தில் கர்ப்பந்தரிக்க வைத்தனர். அந்தக் கட்டத்தில் அவர்களது இயலாமையைப் பயன்படுத்தி ஆண்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். அன்று தொடக்கம் அந்நாட்டில் அன்பும் ஐக்கியமும் சாந்தியும் நிலவத்தொடங்கியது.
இக்கதையில் பல தாத்பரியங்கள் அடங்கி இருப்பதாக எனக்குப் படுகிறது. தாய்வழிச் சமூதாயத்தின் எச்ச  ெசா சி சங் களாக பெண் களர் gd - fro760) LD d95 esii Ld Gol) உடையவர்களாகவும் ஆண்களும் பெண்களும் ஏறக்குறைய சமத்துவ நிலையிலிருந்த ஒரு கால கட்டம். அது எப்படி மாறி ஆண் உரிமைச் சமுதாயமாகவும் ஆண்வழிச் சமுதாயமாகவும் மாறிற்று என்பதைக் கருவாகக் கொண்ட கதையாக இது இருக்கலாம் . ஆணாதிக் கத்தின் தோற்றமாகவும் இது இருக்கலாம். நடந்து கொண்டிருந்த ஒரு சமுதாய மாற்றம், வாய்மொழியாக கூறப்பட்டு வந்த வரலாற்று செய்தி ஒன்று, ஆண்கள் வாயிலாக பெண்களது கொடுங்கோன்மை என மாற்றப்பட்டுவிட்டது. சகல ஆதிக்கங்களையும் உரிமைகளையும் பெற்றுக்கொண்ட
57

Page 30
நிவேதினி
காலத்தில் முன்னைய நிலை கொடுங்கோன்மை என்ற பார்வையில் எழுந்து விட்டது. அதே நேரத்தில் பெண்களுக்கு அரசோச்சத் தெரியாது, ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் பெண்களால் நிர்வகிக்க முடியாது, அவற்றை அவர்கள் துஷ்பிரயோகம் செய்து விடுவர் என்பன போன்ற கருத்தியல்களின் தோற்றுவாயாகவும் இக்கதை அமைந்து விட்டதை நாம் அவதானிக்கலாம்.
இன்னுமொரு முக்கிய செய்தி அது பாலியல் சம்பந்தப்பட்டது. பெண்களது உடலுறுப்பை ஒட்டிய பெண்மை அவளுக்கு முட்டுக்கட்டையாக இரண்டாந்தர நிலைக்கு அவளை தள்ளி வரிடுகிறது என்பது பெண்நிலைவாதிகளின் அங்கலாய்ப்பு. கர்ப்பந்தரிக்க வைக்கும் அவளது பெண் உறுப்பு இங்கு பெண்மையாக பரிணமித்து இயலாமை, பலவீனம் , தாய் மை, வீட்டுக்குரியவள் போன்ற பலவற்றுடன் தொடர்புபடுத்தப் படுகின்றது. அது அவளது விதி. அது நிவர்த்தி செய்ய இயலாத குறைபாடு. அதற்கு விமோசனமில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆகவே இந்த உடலுறுப்பு வேறுபாடு எப்போதுமே அவளை இரண்டாந்தாரப் பிரைஜயாக ஆணிலிருந்து வேறுபட்டவளாக ஆணுக்கு குறைந்தவளாக, ஆணுக்கு பணித்தவளாக இருக்கவே செய்யும். இப்படியான எண்ணக்கருத்து பெண்நிலைவாதத் திற்கு எதிராக முன்வைக்கப்படும். இக்கதையும் கூட இக்கருத்துக்களைத் தொட்டு நிற்பதை நாம் காணலாம். அவளது விதியாகிய தாய்மை நிலை எப்படி அவளை பலமிழக்கச் செய்துவிட்டது. அதை எப்படி ஆண்கள் பயன்படுத்தினர். எப்படி சூழ்ச்சியால் அவளைக் கர்ப்பந்தரிக்க வைத்தனர். கர்ப்பம் தரிக்கும் ஏகபோக குறைபாட்டை உடையவள் பெண் . பெண் மை = உடல் கூறு=கர்ப்பம் - தாய் மை= பலவீனம் , என்ற சமன்பாட்டை வலியுறுத்தி நியாயப்படுத்து வதாகவும் இக்கதை அமைகிறது. இந்தப் பெண்மையின் உடலுறுப்பை மு.ண் கூறிய gyny என் ற சொற் பதத்துடன்
58

நிவேதினி தொடர்புபடுத்தினால் அவளது உடல் எப்படி ஒரு கருத்தியலுக்கு அத்திவாரமிட்டுவிட்டது என்பது புலப்படும். தெசோக்கதை (teso) ஒன்று பெண்ணின் அகங்காரத்தையும் நைஜீயிரியக்கதை ஒன்று பெண்ணினது பேராசையையும் கூறுவதாக அமைகின்றன. நிலம் தன்னைத்தானே விவசாயம் செய்து மானிடருக்கு உணவு கொடுத்ததாக ஒரு காலமிருந்தது. புதிதாக மணம் புரிந்த பெண் தனக்குத் தோண்டத் தெரியும் என தனது திறமையை ஏனையோருக்கு விளம்பரப்படுத்தப்போக கோபம் கொண்ட நிலம் விவசாயம் செய்வதை நிறுத்திவிட்டது. அதன் பின்னர் தான் மானிடர் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது ஆக பெண்ணொருத்தின் விளம்பர நோக்கும் சின்னத்தனமும் மானிடருக்கு ஒரு சாபக்கேடாக அமைந்து விட்டது. இங்கு பெண்ணினது தன்னடக்கமின்மையும் விளம்பரமனப்பான்மையும் எப்படி அழிவைத்தேடிதந்துவிட்டது என்பது கதைக் கருவாக அமைய தன்னடக்கமும் பெண்ணுக்கு இன்றியமையாத குணாம்சமாக இருக்கவேண்டும் என்பதும் சொல்லாமல் சொல்லி வலியுறுத்தப்படுகிறது.
பசிக்கும் மானிடருக்கு ஆகாயம் ஒரு காலத்தில் வரப்பிரசாதமாக இருந்து பசியைத்தணிக்க ஆகாயத்தில் ஒரு துண்டை வெட்டித்தின்று பசியாற்றினார்கள் மக்கள். மக்களுக்கு எட்டக்கூடிய தூரத்தில் ஆகாயமிருந்தது என்பது முக்கியமான செய்தியாக இருந்தது. ஆனால் ஆகாயம் ஒரு நிபந்தனை விதித்தது. பேராசையினால் தேவைக்கதிகமானதை வெட்டக்கூடாது என்பதே அந்நிபந்தனை. ஆனால் பெண் என்ற ரூபத்தில் வந்தது பேராசை, அவாவினால் தேவைக்கதிக மானதை வெட்டி எடுத்த ஒரு பெண் பேதை அதனை உண்ண முடியாமல் குப்பை மேட்டில் எறிந்து விட்டாள். அதைக் கண்ட ஆகாயம் உயர உயர எழுந்து, எட்டாத துரத்திற்கு சென்று விட்டது. மானிடமும் எளிதில் கிடைத்த உணவு மலையை இழந்து விட்டது. அன்று தொடக்கம் ஆண்கள் வேலை செய்தால்தான் உணவு என்ற நிலை தோன்ற பெண்ணின் பேராசை பெரு நட்டமாக வந்ததை விளக்கும் ஒரு கதையாக இது அமைந்துவிட்டது.
59

Page 31
நிவேதினி
பேர்ாசை பெருநட்டம் என்பது தமிழ்ப்பழமொழியாக இருக்க பெண்ணின் பேராசை பெருநட்டமானதை நைஜிரியப் பழங்கதை விளக்கி வைத்துள்ளது. பெண்ணுக்கு பேராசை அதிகம் என்று பெண் வெறுப்புக் கருத்து இதில் இழையோடுவதைக் காணலாம்.
மேலே கூறிய கதைகள் பெண்ணினத்தை வெறுத்தொதுக்கும் ஒரு மனப்பாண்மையின் வெளிப்பாடுகளே. இதற்குக் காரணம் யாது என்பது பெரும்பாலும் மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் பொழுது புரியாத புதிராகவே இருக்கும். ஆனாலும் சில காரணங்களை நாம் முன் வைக்கலாம்.
வானம் உணவாகத் தன்னை ஈயந்ததும் நிலம் தன்னைத்தானே விவசாயம் செய்ததும் எப்படி உண்மைக்குப் புறம்பான சம்பவங்களாக இருக்கின்றனவோ அதே அளவு பொய்மை நிறைந்தனவாகவே, பெண் வெறுப்புக்கருத்துக்களும் உள்ளன. ஆடம்பரம் அவையடக்கமின்மை, பேராசை, போன்ற குணாம்சங்கள் உடற்கூறுகளை அடிப்படையாக வைத்து எழுவன அல்ல. பால் ரீதியிலோ இனவர்க்க ரீதியிலோ குணங்களும் இயல்புகளும் பிரிக்கப்பட்டு சாதிப்புத்தி என்றோ இழி குலத்தோர் வழக்கம் என்றோ கூறுவது அநாகரிக செயலாக மமதை நிறைந்த ஒரு செயற்பாடாக இன்று கணிக்கப்படுகிறது. Racism Male Chauvinism போன்ற சொற்பிரயோகங்கள் இந்த அநாகரிக செயல்பாடுகளைக் குறிக்கும் விதமாகவும் இகழ்ந்துரைக்கும் விதமாக பண்பட்டோரால் எழுதாளப்படுவது சகஜம்.
பெண் வெறுப்பின் பல்வேறு கூறுகள்
பெண் வெறுப்பை வெளிப்படுத்திய சமயக்குரவர், பாமர மக்கள் சித்தர் போன்றோர் சில பல குணங்களைத் திரும்ப திரும்பக் கூறி உள்ளனர். இவற்றுள் முக்கியமானவற்றை வரிசைப்படுத்தினால் ஒன்று பெண்களின் குணாம்சங்கள் என்ற ரீதியில் மன உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டதாகவும் மற்றது உடல் உறுப்புக்களையோ அல்லது
60

நிவேதினி செய்கைகளையோ அடிப்படையாகக் கொண்டவையாக இருப்பதை நாம் காணலாம். பெண்களுக்கு என்று பிரத்தியேகமான கீழ்த்தர உணர்ச்சிகளும் மனோநிலைகளும் உண்டு என்று கூறும் பெண்வெறுப்புநிலை, பெண்ணைக் கன் னரியாகவும் , மனைவரியாகவும் வைத் தே அவ்வுணர்ச்சிகளின் இருப்பிடம் அவள் என்று கூறுகிறது. அதே பெண்ணை தாயாகப் பார்க்கும் பொழுது தெய்வத்துக்குச் சமமாக உணர்த்துவது ஒரு முரண்பட்ட gd GöOSTGOLD.
உணர்ச்சி நிலையில் அவளது குணாம்சங்கள் நீலித்தனம், வஞ்சகம், ஆடம்பரம், பொய்மை, சண்டை சச்சரவின் தோற்றம் காரணம் பொறாமை, அகங்காரம் மாயை போன்றவற்றில் அடக்கப்படும். கீழ்வரும் கூற்றுக்கள் பெண்களின் தீய குணாம்சங்களுக்கு உதாரணமாக அமையும்.
பெண் (தீமையின் வடிவம் என்பதைக் கூறும் பழமொழிகளை முதலில் குறித்துக் கொள்வோம் இந்தத்தீமை என்பதை பொய்மை நாசசக்திஉள்ளவள் பயங்கரமானவள் பொறாமை உள்ளவள் என வகுத்து அந்தக் கருத்தை புலப்படுத்தும் சில பழமொழிகளைக் கீழே தருகிறேன்.
பெண்பேய்க்குச் சமம் பேயை நம்பினாலும் பெண்ணை நம்பாதே. (பயங்கரமானவள் நாசசக்தியடையவள்)
ஒரு பெண் இன்னொரு பெண்ணை எப்போதும் புகழுவதில்லை (பொறாமை).
ஒரு பெண் வாழ இன்னொரு பெண் பொறுக்கமாட்டாள். இரு பெண் கூடினால் அங்கு இன்னொரு
பெண் இழித்துரைக்கப்படுவாள் (பொறாமை)
அடுத்து பெண் சண்டைக்காரி வாய்க்காரி, வம்பு, அரட்டை ஊர்க்கதை பேசுபவள் என்பன போன்ற
61

Page 32
நிவேதினி
குணங்கள் அவளது இயல்பான சுபாவம் எனக்கூறும் வேறு சில பழமொழிகளுக்கு உதாரணமாக கீழே வரும் பழமொழிகள் அமையும்.
பெண்ணின் ஒன்றடி நாக்கு ஆறடி மனிதனை கூட கொன்று விடும். (அதிகம் பேசுபவள் வாய்க்காரி கொவைக்காரி)
பெண்கள் கூடினால் சண்டைகள் பெருத்திடும் (சண்டைக்காரி)
பெண்கள் இருக்கும் இடத்தில் பேச்சிருக்கும். வாத்து இருக்கும் இடத்தில் கொக்கரிப்பு இருக்கும (அவளது பேச்சு கொக்கரிப்புக்குச் சமம். - அல்பமானது)
ஊருக்குள் நடக்கிற விடயம் யாருக்குத் தெரியும் உள்ளே இருக்கும் குமருக்குத் தெரியும் - (வம்பளப்பவள் எல்லாவற்றையும் (தீயவற்றை) அறிய விருப்பம் )
உறுதியான செருப்பு வேண்டுமானால் ஒரு பெண்ணின் நாக்கை அடித்தோலாக வைத்துத் தைக்க வேண்டும் அது ஒரு போதும் தேயாது. என்பது ஒரு பிரான்ஸ் நாட்டுப் பழமொழி
ஆண்பிள்ளை ஆயிரம்பேர் ஆனாலும் ஒத்திருப்பர் பெண்பிள்ளை அக்கா தங்கச்சி ஆனாலும் ஒத்திராார் (சண்டை சச்சரவின் காரணம், தோற்றம்)
பெண் நயவஞ்சகி, நீலி, கபடி, ஏமாற்றுக்காரி இயற்கையிலே அவள் இப்படியான குணங்களைக் கொண்டவள் எனக் கூறும் பழமொழிகள் பல இருந்தாலும் சிலவற்றை உதாரணமாகத் தருகிறேன்
62

நிவேதினி நல்லவளாக இருப்பதை விட பெண் அழகியாக இருப்பதையே விரும்புகிறாள்.
எந்தக் கண்ணாடியும் ஒரு பெண் அழகில்லை என்று சொன்னதில்லை. ܚ
அழகான பெண் ஆனந்தப்பட ஆரம்பித்தால் பணப்பை கண்ணிர் விட ஆரம்பிக்கும்.
ஒரு பெண்ணை அழகானவள் என்று சொன்னால் அவள் பத்து முறை சிரிப்பாள்.
பெண்களில் இரண்டு பிரிவினை ஒன்று அழகானவள் மற்றொன்று அழகானவள் என நம்பிக்கொண்டிருப்பவள்.
பெண்ணால் காப்பாற்றக்கூடிய ஒரே ரகசியம் அவளது வயது.
கள்ளிக்குத் தண்ணிர் கண்ணிலே நீலிக்கு கண்ணிர் இமையிலே.
ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள் பெண்கள் உதடுகளால் மட்டுமே சிரிப்பார்கள் என்பது ஒரு அரேபியப் பழமொழி.
நல்ல திராட்சை மதுவைப் போல பெண்ணும் இனிமையான விஷம்.
சீறும் பாம்பை நம்பலாம் சிரிக்கும் பெண்ணை நம்பாதே. பெண்ணின் ஆயுதம் கண்ணிர். கொலையும் செய்வாள் பத்தினி. பெண் மனிதரின் குழப்பம். பெண் ஒரு தேவையான தீமை.
63

Page 33
நிவேதினி
மாற்றானை நம்பினாலும் மாதரை நம்பாதே. அடுத்துக் கெடுப்பான் கபடன் கொடுத்துக் கெடுப்பான் மார்வாடி, தொடுத்துக் கொடுப்பாள் மடந்தை. செல்வமுள்ள கைம்பெண், ஒரு கண்ணால் அழுவாள் ஒரு கண்ணால் சிரிப்பாள்.
பெற்றவள் வயிற்றைப்பார்ப்பாள் பெண்சாதி மடியைப் L. u IT f'L'u L. u f'T657 .
வெற்றுத்தன்மை வீண்ஐம்பம் ஆடம்பரம் அகங்காரம் அலங்காரப்பிரியை, ஆழமற்ற சலசலப்புத்தன்மை போன்ற குணங்களை விளக்கும் பழமொழிகள் சில பெண் வெறுப்பை மிக ஆழமாகச் சித்திரிக்கின்றன.
இரவல் புடவையில் நல்லதொரு கொய்யகமாம் குடல் கூழுக்கழுகிறதாம் கொண்டை பூவிற்கு அழுகிறதாம்.
சமயக் குரவர்களின் பெண் வெறுப்புக் கருத்துக்கள்.
பெண் தீங்கானவள் என்ற ஒரு கருத்தியலின் வளர்ச்சி தமிழர் வரலாற்றில் சங்க காலத்தில் முதன் முதலில் தோன்றியது எனலாம். சங்ககாலத்தில் தனது கருவள ஆற்றலுக்காக போற்றப்பட்ட பெண் தற்போது சமூகத்தின் தீய சக்தி எனக் கருதப்பட்டாள். பெளத்தர்களாலும் சமணர்களாலும் முன்னெடுக்கப்ட்ட துறவு மார்க்கம் வீடு, உறவு, ஆசைகள் யாவற்றையும் துறப்பதை வலியுறுத்தியது இதைச் சாதிப்பதற்கு பாலியல் விருப்பமின்மை பெரிதும் அவசியம் எனக் கருதப்பட்டது. அனேக துறவிகளுக்கு தமது பால்மையைத் துறுத்தல் அதிக சிரமமானதாக இருந்தது. ஆசையைத் துறந்த உறுதியான தவமுனிவர்களின் தவத்தைத் தம் கவர்ச்சியால் கலைத்த கன்னியர் பற்றிய கதைகள் இந்து மரபில் ஏராளமாக உள்ளன. குடும்பத்தளை பால்உணர்ச்சி, உலக இச்சை ஆகியவற்றுக்குப் பெண்கள் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டனர். பெண்ணின் பால்மையுடன் தொடர்புடைய இவை அனைத்தும் துறவு
64

நிவேதினி
மார்க்கத்தினரால் தீவிரமாகத் தாக்கப்பட்டன. புத்தரும் சமணரும் சமண சமயத்தின் தாபகரான மகாவீரரும் பெண்களைப் பொறுத்தவரை ஒரு நல நோக்குடையவர்களாக இருந்தனர். ஆடவர்ளைச் சீடர்களாகக் கொள்ளவும் பெண் துறவியர் மடத்தில் அவர்கள் தங்கவும் அனுமதித்தனர். ஆனாலும் பெண்களின் பால்மையை வெறுத்தொதுக்கும் மனப்பான்மையை அவர்கள் கை விடவில்லை. பெண்கள் துறவு மார்க் கத்தில் இருக்கும் வரை அவர்கள் அச்சுறுத்தலாகக் கருதப்படவில்லை துறவின் எல்லைக்கு வெளியே அவர்கள் ஒரு தடையாகவும் அச்சுறுத்தலாகவுமே 6) îles Thu dŵ60Trfy.
தீட்டானது, தீங்கானது, மாயையானது, பிசாசுத்தன்மை உடையது என்றெல்லாம் விபரிக்கப்பட்ட பெண்மை மானுட இலட்சியத்தின் அழிவுக்கான மூல காரணமாகவும் கருதப்பட்டது. பெண்களின் பால் உறுப்புக்கள் கவனத்தை ஈர்த்து மனிதனை வழி கெடுப்பன எனத் துரற்றப்பட்டன. பெண்மை விசுவாசமற்றது என்றும் காம இச்சை மிகுந்தது என்றும் திருப்திப்படுத்த முடியாத கட்டற்ற தீய பால்மையைத் கொண்டது. என்றும் துாற்றப்பட்டது (காகர் 1991 ; 93). இவற்றுக்கெல்லாம் பெண்களின் பால்மையை பற்றிய அச்சமும் அதனை எதிர்கொள்ள முடியாமையுமே அடிப்படையாகும்.
பெண்கள் சங்கமருவிய காலத்தில் ஒழுக்க நூல்களின் பாடுபொருளாக மாறினார்கள் அவர்கள். தலைவியர்களாக அன்றி பாலியல் கோபம், காம இச்சை, பேராசை நிலையாமை துன்பம் அழிவு போன்றவற்றுடன் தொடர்புபடுத்திப்பாடப்பட்டனர். பாலியல் அழிவுக்குரியதென்றும் உலக துன்பங்கள், குழப்பங்கள் அனைத்துக்கும் காரணம் என்றும் கருதப்பட்டது. (நாலடியார் 54: 60 ஆசாரக்கோவை 51, 65,82, 99) பெண்களின் உடல் தூய்மையற்றது அழுக்கானது என்று கருதப்பட்டது. பெண்களை நாட வேண்டாம் என ஆண்களுக்குப் போதிக்கப்பட்டது. அவர்கள் தரும் உடல் இன்பம்
65

Page 34
நிவேதினி தற்காலிகமானது என்றும் கூறப்பட்டது(சிறு பஞ்சமூலம் 14) பொது மகளிரை நாடவேண்டாம் என ஆண்கள் எச்சரிக்கப் பட்டனர். பெண் களின் நடை உடை பாவனைகளும் வாழ்க்கை முறையும் இழிவுபடுத்தப்பட்டன(சிறுபஞ்சமூலம் 60).
உடல் சார்ந்த பாலியலும் பாலியல் உய்தலும் பற்றற்ற நிலைக்கு ஒரு தடையாகும் என்றும் இந்த இச்சைகள் பெண்களினாலேயே தூண்டிவிடப்படுகின்றன என்றும் நம்பப்பட்டது. ஆகவே இக்கால கட்டத்தில் தமிழர்களால் போஷித்து வளர்க்கப்பட்ட தமிழ்-பெளத்த இலக்கியங்களில் பெண்கள் ஒரு முகமாகத் தூற்றிக் கண்டிக்கப்பட்டனர். இதற்கு மேலும் பல உதாரணங்கள் தரலாம். பெண்கள் மரணத்துடன் ஒப்பிடப்பட்டனர். அவர்களைக் கவனமாகக் கையாள வேண்டும் என ஆண்கள் போதிக்கப்பட்டனர். (நான்மணிக்கடிகை : 82) மது, பொய்மை, கொலை, களவு என்பன பாலியலுடன் ஒப்பிடப்பட்டன. பொதுவாக பாலியல் பெண் மையோடு இனங் காணப் பட்டு அதற்குச் சமதையாக்கப்பட்டது (மணிமேகலை 5056, 59). நாலடியாரில் வரும் பின்வரும் பாடல் பெண்மையின் ஆபத்துப் பற்றிய கருத்தியலுக்கு நல்ல உதாரணமாகும்.
எறி என்று எதிர் நிற்பாள் கூற்றம், சிறுகாலை அட்டில் புகாதாள் அரும்பிணி-அட்டதனை உண்டி உதவாதாள் இல்வாழ்பேய், இம் மூவர் கொண்டானைக் கொல்லும் படை (363)
கணவனை எதிர்த்து நிற்பவள் எமன், அதிகாலையில் சமையலறைக்குப் போய் சமைக்காதவள் பெருநோய், சமைத்த உணவை நேரத்தில் உண்பதற்கு உதவாதவள் வீட்டில் வாழும் பேய். இம்மூவரும் தன்னைக் கொண்ட கணவனைக் கொல்லும் கருவிகள் ஆவர் என்பது இதன் பொருள். கீழ்ப்படியாத மனைவியை எமனாகவும், நோயாகவும், பேயாகவும் உருவகம் செய்கிறது இப்பாடல். இவ்வுருவத்தில் உள்ளார்ந்திருக்கும் கருத்தியல் இங்கு கவனிக்கத்தக்கது. பெளத்த சிந்தனையில் பெண்கள் உடல் இச்சையோடு
66

நிவேதினி சம்பந்தப்பட்டவர்களாயினர். அவர்கள் ஒரு நோய் போல் அழிவுக்குக் குறியீடாக உள்ளனர்.
பெண்களின் மதிநுட்பம் பற்றியும் இதேநோக்குக் கடைப் பிடிக்கப்பட்டது. பெண்கள் சமய ஞானத்தைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் என்பதைப் புத்தர் ஏற்றுக் கொண்ட போதிலும் பெளத்த காவியமான மணிமேகலையில் கூட இதன் செல்வாக்கைக் காணலாம். காவியத் தலைவி
பின்வருமாறு கூறுகிறாள். "இளையஸ் வளையோள் என்றுனக்கு யாவரும் விளைபொருள் உரையார்”
(மணிமேகலை 462-63) இளமையாகவும் பெண்ணாகவும் இருப்பதனால் உனக்கு யாரும் தருமத்தைச் சொல்லித் தரமாட்டார்கள் என்பது இதன் பொருள் அரசகுமாரனுக்கு அறிவுரை கூற முனைந்த அவனுடைய தோழிஅவனிடம் பின்வருமாறு கூறுகிறாள். "உரவோன் மருகற்கு அறிவும், சான்றும் அரசியல் வழக்கும் செறிவளை மகளிர் செப்பலும் உண்டோP" (மணிமேகலை 426-428 ) அறிவு, மானுட இயல்பு அரசியல் திறம் என்பன பற்றி பெண்கள் அறிவுரை கூற முடியுமா? என்பது அவனுடைய வினா. உண்மையில் இவை அந்த யுகத்தின் பிரதிபலிப்புக்களே. சங்க காலத்தில் பெண் புரோகிதர்களும் புலவர்களும் அரசர்களுக்கு ஆலோசனை கூறிய நிலையுடன் இதனை ஒப்பிட முடியாது.
இக்கால கட்டத்துக்குரிய, பொதுவான மனப்பாங்கு திருக்குறளில் 'பெண்வழிச்சேறல்' என்ற அதிகாரத்தில் நன்கு பிரதிபலிக்கின்றது பெண்களின் பேச்சைக்கேட்டும் அல்லது அவர்களின் விருப்பத்துக்கேற்ப நடக்கும் ஆண்களதும் கணவன்மாரதும் துயரம்பற்றி இதில் எச்சரிக்கப்படுகின்றது. (குறள் 900, 902 ) அத்தகையோர் தன்நிலை இழந்து அவமானப்படுவர் என வள்ளுவர் எச்சரிக்கின்றனர். மனைவிக்கு (பெண்ணுக்கு ) பணிவிடை செய்து ஒழுகுவது ஒரு ஆணுக்கு அவமானம் அத்தகைய ஆணை விட நாணமுடைய பெண்ணே பெருமை உடையவள் என மற்றவர் கருதுகிறார்.
67

Page 35
நிவேதினி
பெண் ஏவல் செய்தொழுகும் ஆண்மையில் நானுடையப்
பெண்ணே பெருமை தரும்
என்பது குறள்.
மேலே கூறிய பெண் வெறுப்புக்கள் பாமரராலும் படித்தோ ராலும் கூறப்பட்டவை என்பது மறுக்கமுடியாத உண்மை என்றாலும் கூட இவை சிறு பாரம்பரியம் என்று கலாச்சாரப் பகுப்புக்கள் வாய் மொழி மரபு என்ற ரீதியில் அடக்கப்படும் பொழுது பெண்மை வெறுப்பில் செந்நெறிக்கும் (Classical tradition ) film) LurT T D l 1 Tiffuu gjöfffbgid (Folk tradition) 6T 6őT GOT வித்தியாசம் என்று கேட்கத் தோன்றுகிறது. இலக்கணச் சுத்தமின்றி கொச்சைத் தமிழிலும் பேச்சுத் தமிழிலும் தோன்றிய இப்பழமொழிகள் சில காலக்கிரமத்தில் கற்றோரால் செம்மைப்படுத்தப்பட்டிருக்கலாம் என நாம் நம்பலாம்.
இதே கருத்துக்கள் சமயாசிரியர்களாலும் பண்டிதர்களாலும் எதுகை, மோனை, லயம் ததும்ட கவிதை வடிவத்தில் தோன்றியிருப்பதும் ஈண்டும் கவனிக்கற்பாலது. இங்கு பாமரப் பரம்பரைக்கும், செம்மை நெறிப் பரம்பரைக்கும் பெண் வெறுப்பு என்ற ரீதியில் ஒரு தொடர்ச்சியிருப்பதாகக் காணலாம். இத் தொடர்ச்சியின் முக்கியம் இங்கு வலியுறுத்தப் படுவதற்கு ஒரு காரணமுண்டு.
பெண்ணடிமையும் ஆண்மேலாதிக்கமும் சமய வர்க்க இனரீதியாகப் பிரிக்கப்பட்ட மானிட பகுப்புக்களில் எங்கும் எப்போதும் மேலோங்கி இருந்தன. இருக்கின்றன என்பது பெண்நிலைவாத மானிடவியலாளரின் கருத்து. நாம் மேலே கூறிய தொடர்ச்சியும் இக்கருத்தை மேலும் வலுப்படுத்து கின்றன.
இந்தப் பகுதிக்கு ஒரு முடிவுரையாக லிக்கொக் ( 1981 : 28) இன் அதே கேள்வியை நாமும் இங்கு கேட்கலாம். "பெண் ஓர் உடன்பாடான கருவினைக் குறியீடு என்ற நிலையில் இருந்து அவள் ஒரு தீவினைக்கான தூண்டல்
68

நிவேதினி என்ற நிலை மாற்றம் எப்போது நிகழ்ந்தது? தமிழ் சமூக உருவாக்கத்தின் பெறுபேறான இக்கருத்துக்களை கருத்தியலின் வளர்ச்சியும் நிறுவனங்களின் மேலாதிக்க நிலைகள் பற்றிய ஆய்வும் விளக்கும்.
69

Page 36
காலம் நிற்கிறது.
பிரேமா அருணாசலம்
தினமும் காலேஜிலிருந்து வந்தவுடன் அம்மாவிடம் சொல்ல நிறைய செய்திகள் இருக்கும். ஆனால் அம்மாவுக்குத்தான் கேட்க நேரமிருக்காது. அவளிடம் சொல்ல வேண்டும் என்ற துடிப்பு மட்டும் அடங்கவே அடங்காது. ஏன் அப்படி . அம்மாதான் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் அப்பாவிடம் வாதாடி காலேஜுக்கு அனுப்பியதே. அந்த நாள் நன்றாகவே ஞாபகத்தில் இருக்குது.
"பொட்டக்கழுதைக்கு இன்னும் படிப்பு எதுக்கு P பக்கத்து ஊரு பண்ணையாரு வீட்டுல பிரியப்பட்டு பொண்ணு கேட்கிறாங்க. என்ன சொல்ற. இதுதான் கிராமத்துச் சம்பந்தம் வேண்டாமுன்னா. பட்டணத்தில வியாபாரம் போட்டிருக்கிற கனகராஜ பொண்ணு கேட்கிறாரு. எது பிடிச் சிருக்குதோ. சொல்லு , சட்டுப்புட்டுன்னு கல்யாணத்தை முடிச்சுடுவோம்."
"இப்ப என்னங்க கல்யாணத்துக்கு அவசரம்?"
"என்னடி சொல்லுற , என்ன அவசரமுன்னு வேற கேட்கிறே, அப்புறம் இரண்டு பொண்ணுக இருக்கே. மனசுலே என்னத்தான் நினைச்சிட்டு இருக்க”
"இந்தா பாருங்க. அதுக இப்பதான் எட்டும் ஆறும் படி க்குதுங்க. அதைப் போயி ஒரு காரணமாகக் காட்டாதீங்க. கமலா நல்லா படிக்குறா. இன்னமும் படிக்கணுமுணு எவ்வளவோ பிரயாசைப்படுதா. பெரிய மனசுபண்ணுங்க உங்களுக்கு புண்ணியமாப் போகும். இன்னும் மூணு வருசம் தானே! கமலா காலேஜுக்குப் போவட்டும். அம்மா கெஞ்சிக்கூத்தாடி எப்படியோ அப்பாவைச் சம்மதிக்க வச்சா. அம்மாவுக்கு என்னோட

நிவேதினி
படிப்புமேல் இவ்வளவு அக்கறை எப்படி வந்துச்சுன்னு அன்னைக்குப் புரியல.
அம்மாவிடம் காலேஜூல நடக்கிய சின்னசின்ன செய்திகளையும் சொல்லணுமுன்னு தோணும். ஆனால் அம்மாவுக்கு பொழுது இருக்கவா செய்தது? காலையில் இரண்டு தங்கைகளுக்கும் சடைப் பின்னி சாப்பாடு கொடுத்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைச்சு . பிறகு தம்பிகளைக் கவனிச்சு. அப்புறம் அப்பாவைக் கவனிச்சு
அம்மா, காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டுதான் எப்போதும் இருப்பாள். பகலிலாவது ஓய்வு இருக்குமா? அது எப்படி முடியும்? தம்பிகள் எல்லாம் சிறுசுகள். அவர்களைக் கவனிக்கணும், துணிகளைத் துவைக்கணும்.
காயப்போடணும் மடிச்சு வைக்கணும். பாத்திரம் தேய்க்கணும். மாவாட்டணும் . வீட்டைச் சுத்தம் செய்யணும். பிற்கு காப்பி போடணும். சமையல் செய்யணும். இருபத்திநாலு மணிநேரமும் உழைப்பு உழைப்பு.
"அம்மா இன்னைக்கு நான் காலேஜூ விழாவிலே பேச்சுப் போட்டியிலே பரிசு வாங்குறேன். நீயும் சாயங்காலம் 6) TubLDIT....” r
"நீ சொல்றது நல்லா இருக்கே நாளைக்கு பொங்கலும் அதுவுமா இருக்கு, தலைக்கு மேல வேல. செல்லக் கண்ணுல்ல. அம்மாவைத் தொந்தரவுப்பண்ணாத கண்ணா" அம்மாவைப் பார்க்கப்பரிதாபமாக இருக்கும்.
பரிசு பெற்றவுடன் அம்மாவிடம் காட்ட ஓடோடி வந்தாள். தங்கை சரஸ்வதியிடம் "அம்மா எங்கேடி"ன்னு வீட்டிற்குள் நுழைந்து கொண்டே கேட்டாள்.
"தம்பி வாந்தி எடுத்தான். அம்மா தம்பியைத் துரக்கிக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போயிருக்காங்க"
7

Page 37
நிவேதினி அம்மா வரும்வரை சேலையைக் கூட மாற்றாது அப்படியே வாசல் படியில் உட்கார்நிதிருந்தாள். அதோ அம்மா. தோளில் துவண்டு கிடக்கும் தம்பியுடன். "அம்மா பார்த்தியா எனக்கு எத்தனைப் புத்தகங்கள் பரிசாகக் கிடைச்சிருக்கு”.
"அப்படியா செல்லக்குட்டி , நல்லாயிருக்கே இன்னும் நல்லா படிக்கணும் எல்லாப் போட்டியிலும் பரிசு வாங்கணும். என்ன கமலா. பொங்கல் சேலையை அப்படியே போட்டுட்டுப் போனே, நீ என் ரூம்க்குப்போP சமையல் முடிச்சு பிறகு உன்னைய கூப்பிடுகிறேன்.
ஓடி ஓடி வேலை செய்யும் அம்மாதான் பட்டப்படிப்பை முடிச்ச பிறகும் எம்.ஏ படிக்க அப்பாவிடம் அடிச்சுப் பேசி அனப்பி வைச்சா.
"இந்தா பாருங்க கமலாவுக்கு இப்ப என்ன வயசு ஆகுதுன்னு நினைக்கிறேங்க. இருபது வயசுதானே ஆகுது. இருபத்தி ரெண்டாவது ஆக வேண்டாமா? பாவங்க அவ இப்பவே கல்யாணம் கட்டிக்கொடுத்து என்ன ஆகப் போகுது. அவ படிக்கிற காலேஜுலேயே இன்னும் படிக்க இடம் கிடைக்குமாம். பிறகு என்ன? நம்ப குடும்பத்திலே முதமுதலா நம்ம பொண்ணு இவ்வளவு படிக்கிறான்னா உங்களுக்ப் பெருமையில்லையா? எப்படியெல்லாமோ பேசி அப்பாவை சம்மதிக்க வைச்ச அம்மா.
எந்த நேரமும் குடும்பத்துக்காகவே வேர்வை சிந்திய அம்மா. எப்போ படுப்பாP. எப்போ எழுந்திருப்பான்னே தெரியாதபடி ஓயாத வேலையில மூழ்கிப் போயிருக்கும் அம்மா. அந்த அம்மாவால் கூட எம்.ஏ படிப்பு முடிச்சவுடன் அப்பா, வரனை வாசலில் கொண்டு வந்து நிறுத்திய போது ஒன்றும் பேச முடியவில்லை.
"நான் வேலைக்குப் போறேன் அம்மா. இவ்வளவு படிச்சுட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கணுமா?
72

நிவேதினி அப்பாவிடம் எப்படியாவது சொல்லி இப்ப கல்யாணம் வேண் டான் னு சொல்லுமா! பார் வதியெல்லாம் வேலைக்குத்தான் முயற்சி செய்யப்போறாளாம்."
அம்மா இவ்வளவுக்கு உன் விசயத்தில் செய்ததே பெரிசுன்னு நினைச்சுக்கோ, எல்லாம் நல்லபடியாக அமையும்” அம்மா பிரச்சினைக்கு முடிவு கட்டிவிட்டாள் கமலாவுக்கு அம்மாவை விட்டால் வேறு கதி? புது உலகில் நுழையவும் அம்மாதான் தைரியம் கொடுத்தாள்.
"உன்னைப் புரிஞ்சு நடக்கிற மாப்பிள்ளையாக உனக்கு தாலி கட்டுறவன் இருப்பான். உன்னைப் பூப்போல பாத்துப்பான். அதுனால கவலைப்படாதே".
அம்மாவின் ஆறுதல் மொழிகள் கற்பனையை வளர்த்தது. தான் இரவில் கண் முழிச்சு எழுத, தன் கணவன் ஹார்லிக்ஸ் கலக்கித் தருவது போல கனவுகள் வரத் தொடங் க di O 6) உ ற் சா கமா னாள் . புதிய நம்பிக்கைகளுடன்தான் இந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தாள்.
"இன்னைக்குப் பானு வந்திட்டுப் போனது மனசை ரொம்ப உலுக்கி விட்டதோ, அதுதான் பழைய நினைவில் ஆழ்ந்து விட்டது மனசு, இல்லாவிட்டாலும் அம்மாவைப் பற்றி இப்போதெல்லாம் அதிகமாகத்தான் நினைக்கிறேனோ?
பானு நேற்று எவ்வளவு உற்சாகமாக வந்தாள். ஏதோ பரீட்சைத்தாள் திருத்த மதுரைக்கு வந்திருக்கிறாள். அப்படியே என்னையும் பார்க்க வந்திருக்கிறாள். பார்த்த மாத்திரத்தில் கேட்டுவிட்டாள்.
"என்னடியிது! நண்டுசிண்டுமாக மூணு குழந்தைகளா?
கல்யாணம் ஆகி ஐந்து வருசம்தானே ஆச்சு. அதான் உடம்பு இப்படியிருக்கு. தேவாங்கு குரங்கு மாதிரி. நீயெல்லாம் பெரிய ஆபிசராகவோ.. கல்லூரிப்
73

Page 38
நிவேதினி பேராசிரியையாகவோ இருப்பே. கவிதைகளாக எழுதிக் குவிப்பேன்னுதான் நினைச்சேன். நீ என்னடான்னா. பரிள்ளை களைச் சுமந்து கொண்டு . . . " பானு என்னென்னவோ பேசிக்கொண்டே போனாள்.
பானுவோடு என்னால் தொடர்ந்து மனம் விட்டுப் பேசக் கூட முடியவில்லை. எதுக்குப் பானு வந்தாளுன்னு தோணுச்சு. தன்னிரக்கத்தில் மனம் தவிக்கும் போது இப்படிப்பட்ட பழக்கங்களையும் நெருக்கங்களையும் கூட மனசு வெறுத்து விடுவது இயல்புதானே? கல்லூரி நாட்களில் இந்த பானு, சந்திரா, லதா, சுகி, சசி, பார்வதி எல்லோரும் என்னை சுற்றிச் சுற்றி வருவார்கள். அவர்களுக்கெல்லாம நான் தானே லீடர், சிரிப்பும் கும்மாளமும். கவிதையும் கலாட்டாவும் கிண்டலும் கேலியும் . மேடைப் பேச்சும் விமர்சனமுமாகக் கழிந்த அந்த நாட்கள். பானுக்கே என் நிலைமை அதிர்ச்சியாக இருந்திருக்கும். நிறையப்படிக்கணும் நிறைய எழுதிக்கு விக்கணும். ஆதவும் புதுக்கவிதைகளாக எழுதித் தள்ளணும். பெரிய எழுத்தாளராக வரணும் . இப்படி என்னென்ன வெல்லாம் மனசால் கோட்டை கட்டி அவர்களிடம் பேசியிருக்கேன்.அவளும் இப்படித்தான் கமலா இருக்கப் போறாளான்னு ஒரு பிம்பத்தை மனசில் சிருஷ்டித்துத்தானே இருப்பாள். அதற்குரிய விஷயஞானமும் திறமையும் பணமும் இருக்கத்தானே செய்தது. பிறகு, இப்படிப்பிள்ளைகளை வரிசையாகப் பெற்றுப்போட்டு. சுமைதாங்கியாகி . கூட்டுப் புழுவாய் முடங்கி அமுங்கிப் போனதுக்கு என்ன காரணம் P வீடு நிறைய மனிதர்கள் இருந்தும் தன்னைக் கமலாவாக அடையாளம் கண்டு கொள்ள இந்த வீட்டில் ஒருவருமே இல்லையே. மற்றவர்களைப் பற்றி சொல்ல என்னயிருக்குP என் கணவரே என்னைக் கண்டு கொள்ள வில்லையே. அவர் அல்லவா என்னை அடையாளம் கண்டிருக்க வேண்டும்? அவரு பெரிய முதலாளியாச்சே கண்ணில் படவா செய்யும்? இதுக்கெல்லாம் கொடுத்து வைத்திருக்கணுமோ?
74

நிவேதினி இரண்டாவது மகள் பிரியா பிறந்த பிறகு. என் மன உளைச்சல் அதிகமாகப் போச்சு எப்பவும் ஒரு சூனியம் மனசில் நிறைஞ்சுப் போச்சு.
“என்னங்க பிரியா பிறந்தாச்சு. இரண்டு குழந்தைகளாச்சு. நான் ஆபரேசன் செய்துகிட்டா என்னP பணிவாக உளப் பூர்வமான ஒட்டுதலுடன் தன் கஷ்டத்தை தன் மனச் சுமையைக் கீழே இறக்கி வைப் பாரு என்ற நம்பிக்கையுடன் தானே சொன்னேன்.
"இப்ப என்ன குறை உனக்கு P குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதைக் காட்டிலும் வேறு வேல என்ன எனக்கு P" இதுதானே அவர் பதில்
ஓ. என் கணவரின் மனம் இப்படி வெட்ட வெளிச்ச மானவுடன் நடுங்கிப் போனேன். நிரந்தரமாக ஏதோ சூனியப் பட்டுப் போன உணர்வு அன்றே ஏற்பட்டுவிட்டது. விடிவு இல்லை என்பது நிச்சயமாகிப் போச்சு. மனதில் கனம் உட்கார்ந்துவிட்டது.
பிறகு ரம்யா பிறந்தாள் அவள் பிறந்த பிறகும்.
"பாருங்க முத்துப்போல மூணு குழந்தைகள். நமக்கு இன்னும் குழந்தைகள் எதற்கு P இவர்களை வளர்த்து ஆளாக்கினால் போதாதா? இத்தோடு முற்றுப்புள்ளி வைத்து விடலாம். எப்போதும் ஒரு குழந்தையை மடியில் போட்டு தூங்க வைப்பதும் . பால் ஊட்டுவதும் தொட்டில் ஆட்டுவதும். இடுப்பில் குழந்தையை வைத்துக் கொண்டே வீட்டு வேலைகளைச் செய்வதும் . சங்கடமாயிருக்குங்க தன்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் பேசியதற்கு அவர் கூறியபதில்..?
"நீ என்ன பொம்பளையாP இல்ல பேயா? உனக்கு என்ன கஷ்டம்? சாப்பாட்டுக்கு இல்லையா? அல்லது உடுத்த
துணிமணியில்லையா? எத்தனை குழந்தைகளையும் வளர்த்து
75

Page 39
நிவேதினி
ஆளாக்க என்னிடம் சொத்து இருக்கு பணமிருக்கு அதற்கு மேலே அந்தஸ்து இருக்கு. எனக்கு வயசு என்ன தெரியுமா முப்பத்திரெண்டு. எத்தனையோ பேருக்கு இந்த வயசில் கல்யாணமே நடப்பதில் ல. அப்படியிருக்க . . நீ என்னடான்னா . கடைசியா சொல்லிப்புட்டேன். இத்தோடு இந்தப் பேச்சை விட்டுவிடு. இன்னொரு தடவை இந்தப் பேச்சை எடுத்தே எனக்கு கெட்ட கோபம் வரும். பார்த்துக்கோ. பெரிய இவ புத்தி சொல்ல வந்துட்டா"
என் கணவன் என் உள்ளத்தைப் புரிந்து கொள்ளவே இல்லையே. உணவும் உடையும் வசதியும் இருந்தால் எல்லாம் ஆகிப்போச்சா. எந்தப் பொண்ணுக்காவது பெற்றெடுத்த குழந்தைகள் மேல் அன்பில்லாமல் இருக்குமா? அதற்காக வரிசையாகக் குழந்தைகளைப் பெற்றெடுத்துக் கொண்டே இருந்தால் மனுசனுக்கும் விலங்குக்கும் வித்தியாசம் என்ன இருக்கு ? ஆசை யெ ல் லாம் கொட் டி அன்பையெல்லாம் காட்டிக் கொஞ்சிக்குலாவி வளர்த்து சீராக்க மூன்று குழந்தைகள் போதாதா? நான் எனக்குள்ளே பேசிப்பேசித் தவிக்க முடிந்ததே தவிர என் கணவர் என்னைப் புரிந்து கொள்ளவே இல்லையே? அன்றைக்கு என் மனக் குகைக்குள் அத்தனைக் கனவுகளையும் பூட்டுப்போட்டு பூட்டிவைத்தேன். இருந்தாலும் அப்பப்ப, சிலந்தி வலையாக ஆசைப் பின்னல் என் மனவூஞ்சலில் 'பின்னலிட்டு ஆடத்தான் செய்யும். அப்போ தெல்லாம்
மனம்படும் அவஸ்தை.
மாலையில் அம்மா வந்தாள். அம்மா உள்ளூரில் இருப்பது ஒரு ஆறுதல் தான்.
“ஏண்டி இப்படியிருக்கே! ஒரே மெலிவா தெரியுதே. ஒழுங்கா சாப்பிடுவதில்லையா? அம்மா கனிவாகக்
கேட்டாள்.
"அதெல்லாம் சாப்பிடத்தான் செய்கிறேன்"
76

நிவேதினி
"பிறகு ஏன் இப்படியிருக்கே"
மூணு குழந்தைகளும் சிறுசுகள். அதைக் கவனிப்பதிலேயே உயிர் போய்விடுகிறதே! பிறகு உடம்பு எப்படித் தேறும்! உனக்குத் தெரியாததாP"
"ஏன் உன் மாமியார் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள
DfT"LITIJsJP”
"வயசான காலத்திலே எதுக்கு அவங்களுக்கு கஷ்டம் டி.வி பார்ப்பதற்கே இன்னும் பொழுது போதவில்ல அவர்களுக்கு”
சரி! ஏதாவது டானிக் வாங்கிக்குடி . இப்படிக்காய்ந்த சருகுமாதிரியிருந்தா எப்படிP" "ஆமாம்! லேடி டாக்கடர்கிட்ட போகவேண்டியதுதான்”
"என்னடி சொல்றே எனக்கு ஒன்னும் புரியல்லயே." அம்மாவுக்குப் புரிந்துவிட்டது. ஆனால நான் சொல்லப் போவது உண்மையாகக் இருக்கக் கூடாது என்ற மனத்தவிப்பில் தான் என்னைப்பற்றி பல கனவுகள் கண்டவள் ஆயிற்றே.
"ஏண்டி இப்ப எத்தனை மாசம்” நான்சொல்வதற்குள் அவளே முந்திக்கொள்கிறாள். "இரண்டாவது மாசம் " கண்களில் நீர்க்கோலம்.
"உன் புருசன் கிட்ட சொல்லி ஏதாவது செய்யக்கூடாதா? உடம்பு என்னத்துக்கு ஆகும்"
"ஏன் நீ மட்டும் ஆறு பிள்ளைகளைப் பெத்துக்கில்லையா?” என்னை நானே ஏமாற்றிக் கொண்டு இந்தப் பதிலை
அம்மாவிடம் எப்படி என்னால் சொல்ல முடிந்தது.P
"நீ சொல்றது நல்லா இருக்கே. எங்க காலம் மாதிரியா இருக்கு இந்தக்காலம் அப்ப மருந்து ஏது? மார்க்கம் ஏது?
77

Page 40
நிவேதினி
இப்பத்தான் எத்தனை வசதிகள் வந்தாச்சு. அப்புறம் ஏன் ஒரு மனுசி கஷ்டப்படனும், அத்தோடு அந்தக் காலத்திலே நாங்க படிப் பைக் கண் டோமா? பள்ளிக்கூடத்தைக் கண்டோமா? நீயும் நானும் ஒன்னா P நான் கைநாட்டு நீ காலேஜூ வரைக்கும் படிச்சவ. இவ்வளவுக்குப் படிக்க வச்சும் உனக்கு சமத்துப் போதாது. உன் புருசன்கிட்ட அடிச்சுப்பேச வேண்டியது தானே!
"நீ என்னம்மா சொல்றே. அவருக்கு வயசா ஆயிடுச்சு சொத்து ஏராளமாக இருக்கு. எத்தனைப் பிள்ளைகளையும் அவரால் ஆளாக்க முடியும் பிறகு என்ன?” “ஏண்டி நீ ஆளாகவேண்டாமா? இப்படியே நஞ்சு நொஞ்சுப்போக வேண்டியதுதானேP பணமிருந்தால் ஆகிப் போச்சா? நீ மிசினா அல்லது மனுசியா? யோசிச்சுப் பார்க்கவேண்டாம்P"
அம்மா பொரிந்து தள்ளிவிட்டுப் போய்விட்டாள்.
நன்றி செம்மலர், (1992)
78

பெண்நிலைவாதமும் பெண் மைய விமர்சனமும்
நதிரா மரியசந்தனம்
டெண் நிலைவாதம் அடிப்படையில் ஒரு அரசியல் போட்பாடே. இது சமூக அதிகார அமைப்பில் ஆண் - பெண்ணிற்குரிய அதிகார உறவுபற்றியும் அதன் எதிர்நிலைத் தன்மைபற்றியும் அதிக கவனம் செலுத்துகிறது. ஆணாதிக்கம் தனது அரசியல், பொருளாதார, அதிகார அமைப்புக்களை தக்கவைத்துக் கொள்வதற்காக ஓர் சாதகமான கருத்தியலைத் (Ideology) தோற் று வரிதி துடப் பேணிவந்துள் ளது . இக்கருத்தியலில் குடும்பம், சமூகம் அரசு, மதம், கலை, இலக்கியம் என்பவற்றையும் இவற்றை உள்ளடக்கிய கலாசாரத்தையும் பெரிதும் தீர்மானிக்கிறது. பெண்ணின் உடல் வேறுபாட்டை அடிப் படையாகக் கொண்ட இக்கருத்தியல் பால்நிலை (Gender) என்ற ஒரு கற்பனாவாதக் கருத்துருவாக்கத்தை (Construct) தோற்றுவித்துள்ளது.
இக்கருத்தியலும் கருத்துருவாக்கமும் எவ்வாறு இலக்கியத்தி னுாடாக மீண்டும் வலியுறுத்தப்படுகிறது என்பது பற்றியும் இவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் பெண்நிலைவாதம் ஓர் முழுமையான இலக்கிய விமர்சனத்தை முன்வைக்கிறது.
பெண்நிலை விமர்சனம் ஆணாதிக்க சார்பான எழுத்துக்களில் (ஆண் - பெண் எழுத்தாளர்களது) உள்ள பெண்கள் பற்றிய போலியான சித்திரிப்புக்களை நிராகரித்து அவற்றிக்குப் பதிலாக யதார்த்த வாழ்வில் பெண்களின் ஒடுக்கப்பட்ட நிலையையும் பெண்ணுரிமைக் கருத்துக் களையும் முன்வைக்கிறது.
பெண்நிலைவாதம் ஒரு அரசியல் போட்பாடு என்ற வகையில் பெண்நிலை விமர்சனம் கூட ஒரு எழுத்தாளர்

Page 41
മിഖക്രിബി
எத்தகைய நிலைமைகளில் தமது படைப்பை ஆக்குகிறார் என்பதைக் கவனத்தில் கொள்வது முக்கியமானதாகும். ஒரு பெண்ணெ முத்தாளரின் பால் (Sex), பால்நிலை (Gender) வேறுபாடே அவளது எழுத்துக்களின் தனித்தன்மைக்குக் காரணம் என்றால் இவ்வேறுபாடுகள் எவ்வழிகளில் வெளிப்படுகின்றனP குறிப்பாக பெண்ணின் பால்நிலை எந்தக் காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றதுP இவை போன்ற கேள்விகள் முக்கியமானவை. பெண்ணின் பால்நிலை சமூகத்தில் வழிவழியாக வந்த நம்பிக்கைகள், மதம், இலக்கியமரபு, பொருளாதாரத்தில் அவளது பங்கு, அரசியல் அதிகாரத்தில் அவளுக்குள்ள செல்வாக்கு போன்ற காரணிகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படுகின்ற
கருத்தாக்கமேயாகும். இது தவிர பெண்கள் குடும்பம் என்ற நிறுவனத்தில் தெயவிகத்தாயாக, இலட்சியமனைவியாக, மகளாக உருவகிக்கப்படுகின்றனர். பெண்கள்
பற்றிய மேற்கூறிய கருத்தாக்கங்கள் அனைத்துமே அவளது உடல் வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டவையே. எனினும் இக்கருத்தாக்கம் உடல் ரீதியாக மட்டுமல்லாது மொழி, உளவியல், பொருளாதாரம், கலாசாரம், மதம், இலக்கியம் என்ற ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டு உறுதி செய்யப்படுகின்றன.
சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற அனுபவங்கள், கற்பனை மற்றும் படைப் புகள் ஆண் முதன்மை சார்பானவையே. அதாவது சமூகத்தில் ஒரு ஆக்கம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமாயின் அவ்வாக்கம் ஆண்முதன்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே எழுதுகின்ற பெண்கள் தெரிந்தோ தெரியா மேலா ஆண்முதன்மைச் சமூகக் கருத்துநிலைக்கு ஏற்ப தம்முடைய அனுபவங்களை மொழிபெயர்க்க வேண்டியுள்ளது. அதாவது பெண் நிலை சார்ந்த (ஒடுக் கப் பட்ட) அனுபவங்களை ஆண்நிலை சார்ந்த (ஒடுக்குகின்ற) பொதுவான (common) நிலை பேறுடையவையாக்கப்பெற்ற (Confirmed) மொழி, கற்பனை, கருத்தியல் என்ற ஊடகத்திற்கு மாற் ற வேண் டி யுள் ளது . பல
80

நிவேதினி
பெண்ணெழுத்தாளர்கள் மன நோயாளிகளா னதற்கும் தற்கொலை செய்துகொண்டதற்கும் இந்த முரண்பட்ட, கடினமான பகிரதப் பிரயத்தனமும் பிரதான காரணமாகும். வாய் பேசமுடியாத ஒருவர் (குரல் மறுக்கப்பட்ட பெண்கள்) பார்வையற்ற ஒருவரிடம் (பெண்ணை மனித உயிரியாக பார்க்கத்தவறுகின்ற ஆணாதிக்கச் சமூகத்திற்கு) தனது அனுபவங்களை வெளிப்படுத்த எத்தனிப்பது போன்ற செயலே இது.
நினா டேயும் ( Beyum, 1978 - 11-18) என்ற பெண்நிலைவாத விமர்சகர் 1820 இற்கும் 1870 ற்கும் இடைப்பட்ட அமெரிக்கப் பெண் நாவலாசிரியர்கள் பற்றி ஆராயும்போது இவர்களது நாவல்களில் அநேகமானவை சில வேறுபாடுகளுடன் ஒரே கதையைக் கூறுவனவாக உள்ளன என்கிறார். சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத தங்கள் சுயத்தையும் அவற்றின் வெளிப்பாட்டிற்கான முயற்சியையும் பிரதிபலிப்பதோடு, இவ்வாக்கங்கள் குறிப்பிட்ட எல்லைக்குள் நின்றுகொண்டு ஆணாதிக்கத்தை விமர்சிப்பதாகவும் அமைந்துள்ளன என்றும் கூறுகிறார்.
பெண்களது ஆக்கங்களின் புலப்பதிவு (perspective) அவர்களது ஆண் சகாக்களின் புலப்பதிவுகளிலிருந்து வேறுபடக் காரணம் பெண்களின் வேறுபட்ட வாழ்வனுபவங்களே. யதார்த்தத்தில் பெண்களின் ஒடுக்கப்பட்ட சுயம் அவள் எழுத்துக்களினுாடே வெளிப்படுகின்றது. இன்னொருவகையில் கூறினால் அவளுடைய படைப்பாற் றல் , கற்பனைத்திறன் என்பன பால்நிலை அடிப்படையிலான ஒடுக்குமுறையினை வெளிப்படுத்துகின்றன.
அலிசியா ஒஸ் ரிக்கர் ( Ostriker, 1986 9 ) என்ற பெண்நிலைவாத விமர்சகர் இது பற்றிக் குறிப்பிடும் போது எழுத்தாளர்கள் தேசிய, கால, மொழி உணர்வைத் தவிர்க்க முடியாதபடி தமது எழுத்துக்களினூடாக வெளிப்படுத்துவது போல நிச்சயமாக பால்நிலை சார்ந்த அனுபவங்களையும் வெளிப்படுத்துகின்றனர் என்கிறார்.
8

Page 42
நிவேதினி
பெண்களின் எழுத்துக்களில் கால, பிரதேச வேறுபாடின்றிப் பொதுவாகக் காணப்படுகின்ற தனித்தன்மையானது அவர்கள் ஆணாதிக்க சமூகங்களின் அரசியல் , பொருளாதார, கலாசார சாதனங்களால் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படுவதன் விளைவேயாகும்.
பெண்களின் எழுத்துக்களில் காணப்படுகின்ற பல பொதுவான அம்சங்கள் அவர்களின் பால்நிலையை உறுதிசெய்கின்றன. வரலாற்று, பிரதேச, அரசியல், பொருளாதார, கலாசாரப் பின்னணிகள் ஒரு ஆக்கத்தின் கருத்துநிலையை தீர்மானிக்கின்ற போதிலும் பெண்கள் எழுதுகின்றபோது பாலடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் அவர்களது எழுத்துக்களில் பல பொதுவான தனித்தன்மைகள் காணப்படுகின்றன. எல்லா எழுத்துக்களுமே பால்நிலையினை வெளிக்காட்டுவன என்று பெண் மைய வரிமர்சனம் கருதுவதாக எலெய் ன் ஷோவோஸ்ட்டர் ( Showalter, 1992: 191 ) குறிப்பிடுவர். பெண்களது எழுத்துக்களுக்கும் அவர்களது பால்நிலை அனுபவங்களுக்குமிடையிலான தொடர்பை வலியுறுத்துகையில், சன்ட்றா கில்பர்ட் (Gilbert, 1986; 117) பெண்ணின் பால் அடையாளத்தை எவ்வாறு அவளது இலக்கிய உயிரோட்டத் திலிருந்து பிரிக்க முடியுமென வினவுகிறார். பெண்கள் கையாளும் வடிவம், மோடிமை, அடிக்கருத்து, பாத்திரப் படைப்பு போன்ற அம்சங்கள் அவர்களுடைய பால் நிலையை வெளிப்படுத்துகின்றன. அவர்கள் பயன்படுத்துகின்ற மொழியும் பல்வேறு இலக்கிய உத்திகளும் வாழ்வனுபவங்களின் முத்திரைகளைத் தாங்கியிருக்கின்றன. இவற்றிலிருந்து நாம் பெற்கூடிய முடிவு என்னெவனில் பெண் களது எழுத்துக் களில் காணப் படுகின் ற தனித்தன்மைக்குரிய காரணிகள் அவர்களது உடலியல், மொழி உளவியல், கலாசாரரீதியான வேறுபாடுகளேயாகும் என்பதே.
எலெய்ன் ஷோவோல்ட்டர் பெண்ணிலை விமர்சனத்தை (Feminist Criticism) guatioILITd, 6 (55dipitrift.
82

நிவேதினி
1. பெண்நிலை விமர்சனம் (Women as Reader) 2. Go) u GöOT GOD Du u 6îDfT (F6OTD (Women as Writer)
பெண்நிலை விமர்சனம் பெண் வாசகர் என்ற நிலையில் செய்யும் விமர்சனமாகும். இது பொதுவாக ஆண், பெண் எழுத்தாளர்களின் ஆக்கங்களையும் ஆண்களின் ஆக்கங்களி லுள்ள போலியான பெண் பாத்திரப் படைப்புகளையும் (ஆதர்ஷமாதிரியங்கள் ) கற்பனாவாத பெண் நிலை அனுபவங்களையும் நிராகரிக்கிறது. ஆணாதிக்கச்சமூகத்தில் காணப்படுகின்ற மேலாண்மைக் (dominant) கருத்துக்களையும் கலாசபத்தையும் விமர்சித்து நிராகரிக்கின்ற பெண்நிலை விமர்சனத்தால் முடக்கப் பெற்றுக்கிடக்கும் (Muted) பெண்களைப் பற்றிய கருத்துக்களைப் படைப்பிலக்கியத்தின் மூலம் முன் வைக்க முடியாது போகிறது. எனவே பெண்ணை எழுத்தாளர் என்ற முறையில் ஆராய்கின்ற பெண்மைய விமர்சனம் அவசியமாகின்றது.
பெண் மையவிமர்சனம் (Gynocriticism) என்பது பெண்களின் எழுத்துக்களுக்கும் சமூகத்தில் அவர்களுடைய உடலியல், மொழி, சலாசார ரீதியான ஒடுக்கப்பட்ட நிலைக்குமிடை யேயுள்ள தொடர்பை அங்கீகரித்து ஆய்வுசெய்வதாகும். ஆணாதிக்க சமூகத்தில் இரண்டாம் தரப் பிரஜைகளான பெண்களை எழுத்தாளர்களாகவும் அதனால் அவர்களுடைய எழுத்துக்களில் காணப்படும் தனித்துவத்தையும் பெண் மைய விமர்சனம் ஆராய்கின்றது. எலெய்ன் ஷோவோல்ட்டர் என்ற பெண்நிலைவாத விமர்சகரே "Gyno Criticism" (பெண் மைய விமர்சனம்) என்ற பதத்தை முதன்முதலாக அறிமுகப் LJG) gijgju 6,1 f7. "La Gyno Critique " 67 6of D Lf7G) J(65 grij பதத்திலிருந்து Gyno Critics” என்ற ஆங்கிலப்பதத்தைத் தான் பெற்றதாகக் கூறுவர். பெண் மையவிமர்சனம் என்பது,
“பெண்களை எழுத்தாளர்களாவும் தங்களது எழுத்துக்களின் கருத்து நிலையைத் தீர்மானிப் பவர்களாகவும் கொண்டு அவர்களது எழுத்துக்களின் வரலாறு, அடிக்கருத்து

Page 43
நிவேதினி
க்கள், வடிவம், அமைப்பு ஆகியவற்றை ஆய்வு செய்வதாகும்"
(Showalter, 1979)
என்று விளக்குகிறார். பால்நிலை ரீதியான ஒடுக்குமுறையின் அடிப்படைகள், அவை வெளிப்படுத்தப்படும் முறைகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து எலெய்ன் ஷோவோல்டர் பெண் மைய விமர்சனத்தை நான்கு பிரிவுகளாக பகுக்கிறார். இந்நான்கு அளவீடுகளையும் தனித்தனியாகவும் ஒட்டு மொத்தமாகவும் வைத்து ஒரு பெண் எழுத்தாளருக்கும் அவரது எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்பை ஆராய்தல் இலகு வானதாகும்.
எனவே பெண்களின் ஆக்கங்களில் வேறுபாட்டை உறுதி செய்கின்ற ஆணாதிக்க சார்பான காரணிகளை அடிப்படை யாகக் கொண்டு இவ்விமர்சனம் உடலியல் விமர்சனம் (Biological Criticism), G) DIT fufuu Giv 6 îDfrFGØTLD (Linguistic Criticism), உளவியல் விமர்சனம் (Psychological Criticism), கலாசார விமர்சனம் (Culural Criticism) என நான்கு உட்பிரிவுகளாக பகுக்கப்படுகின்றது. இவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு டையனவாகவும் ஒன்று மற்றையதன் தொடர்ச்சியாகவும் காணப்படுகின்றது.
LGSlusi shunirs soro (Biological Criticism)
ஆண் எழுத்தாளர்களின் எழுத்துக்களிலிருந்து பெண் எழுத்தாளர்களின் எழுத்துக் கள் வேறுபடுவதற்கு முதன்மையான காரணம் அவர்களது உடலியல் வேறுபாடே.
சூசன் கியூபர் ( Gubar, 1979) , சன்ட்றா கில்பர்ட் (Gilbert , 1986) ஆகிய பெண்நிலைவாத விமர்சகர்கள் கூறுவது போல படைப்பாற்றல் ஓர் ஆண்நிலைசார்ந்த தொழிற்பாடாகக் J.(Bg5, Lil'il-g/Tai (Creativity as a male activity) dLib.g. distallisig,6ifoil ஒரு பெண் எழுத முற்படும்போதே பல சிக்கல்கள் தோன்றின. ஆண்கள் மட்டும் படைக்கும் ஆற்றல்
84

நிவேதினி உடையவர்கள் எனவும் பெண் கள் அவர்களால் படைக்கப்படும் பொருட்களாகவும் படைப் பாற்றல் அற்றவர்களெனவும் கருதப்படுவதற்குக் காரணம் லிங்க முதன்மைக் கோட்பாடாகும். பேனாவை ஆணுறுப்பாகவும் எழுதும் தாளைப் பெண்ணுறுப்பாகவும் உடலாகவும் கொள்கின்ற மரபு எல்லாச் சமூகங்களிலும் இருந்து வந்திருக்கின்றது (Gulbar). இந்த மரபு வழிவந்த ஆண்களால் பெண் கள் எழுதுவதென்பது ஒரு பாவமாகவே கருதப்பட்டது.
பெண்களின் உடல் வேறுபாடு அவளது படைப்பாற்றலைப் பொறுத்தவரை பலவீனமாக அமையாது. மாறாகப் பெண்ணின் ஆக்க சக்தி படைப்பிலக்கியத்திற்கு ஓர் பலமாகவே அமையும் எனப் பெண்கள் கருதவேண்டும்.
உடலியல் வேறுபாடு மொழி மூலமாகத்தான் இலக்கியத்துள் வெளிப்படுத்தப்படுகின்றது. இதனால் மொழியியல் விமர்சனத்தின் தேவை ஏற்படுகின்றது.
GLDIT fusi stoir Ford (Linguistic Criticism )
மொழி, யதார்த்தம் பற்றிய எமது பார்வையையும் அதை விளங்கிக் கொள்ளும் முறைமையையும் தீர்மானிக்கின்றது. அதாவது மொழி நம் ஒவ்வொருவரினுடைய சிந்தனைப் போக்கையும் நேரடியாக ஆளுமை செய்கிறது. மொழிமூலம் உணர்வுகள், பொருட்கள் கோட்பாடுகள் மனதில் பதிகின்றன. மொழி ஆணாதிக்கக் கட்டமைப்பின் பல்வேறு வளர்ச் சரிப் படி மநரிலை களையும் உள் வாங் கி முற்றுமுழுதாகவே பெண்களின் அனுபவ வெளிப்பாட்டுக்கு ஒவ்வாததாகி அந்நியமாகிவிடுகின்றது. பெண் மைய விமர்சனத்தின் வகைகளில் மொழியியல் விமர்சனமே மிகச் சிக்கலானது. பிரெஞ்சுப் பெண்நிலைவாதிகள் ஆணாதிக்கத்தின் பிரதான காரணியாக மொழியையே கொள்கின்றனர்.
85

Page 44
நிவேதினி ஜுலியா கிரிஸ்ரேவா, லூஸ் கிரிகாரே, ஹெலன் சிகோ ஆகிய பிரெஞ்சுப் பெண்நிலைவாதிகள் மொழியின் குறியீட்டு ஒழுங்கமைவினால் (Symbolic order ) அதிகார அமைப்பு (Power Structure ) 2 (E56). It dig, Lb GL 1), 6). 605 6 Lydi கொள்கின்றனர். உடலியல் , மொழி, அதிகாரம் ஆகியவற்றுக்கிடையிலான உறுதியான தொடர்பை ஆராய்ந்து லிங்கமுதன்மை (phalic) மொழியை நிராகரித்து, அதன் இருகிளைப்பட்ட எதிர்நிலைத் தன்மைக்கு (binary oppositions) மாறானதாகவும் அதே வேளையில் பெண் உடலின் பன்முகப்பட்ட உணர்வு நிலையைப் பிரதிபலிக்கக் கூடியதுமான மொழியை உருவாக்க வேண்டும் என்பது இவர்களின் கருத்தாகும்.
பிரெஞ்சுப் பெண்நிலைவாதிகளை ஆங்கில அமெரிக்கப் பெண்நிலை வாதிகளிடமிருந்து வேறுபடுத்துவது அவர்கள் மொழிக்குக் கொடுக்கின்ற அதீதமுக்கியத்துவமே. டெரிடா (Derrida ), då J5 IT ( Focault ), GU J5 IT Gðir (Lacan) (3 LJ (T 6ðir sp விமர்சகர்களும் தனிமனித சிந்தனை மீது மொழி அதீத ஆதிக்கம் செலுத்துகின்றது என்று கூறுகின்றனர். மொழி யதாார்த்தம் பற்றிய பார்வையைத் தீர்மானிப்பது மட்டுமன்றி நாம் யார் எப்படி வாழ்கிறோம் என்பதையும் தீர்மானிக்கிறது. ஃபூக்காவின் கருத்துப் படி மொழி பற்றிய விவாதம் முக்கியமானது. ஏனென்றால் அது எமது அதிகார அமைப்பை (Power Structure) பெரிதும் தீர்மானிக்கிறது. இதனால் மேலான்மைக் குழுவினரின் (dominant Group), கருத்துக்கள் முடக்கப் பெற்ற குழுவின் (muted group) கருத்துக்களைத் தொடர்ந்தும் பலவீனப்படுத்துகிறது.
உடலியல், பாலியல் ரீதியாக இருபாலாரதும் இருவேறு g(D6) fia0) aud,00)67 (Binary Opposition) -91 L9-Lil J60)Luni J, வைத்தே ஆண்முதன்மை மொழி ஆதிக்கம் பெறுகிறது. இயற்கையில் காணப்படுகின்ற யதார்த்தங்களை ( சூரியன் சந்திரன், இரவு பகல், தந்தை தாய், அறிவு இதயம், சிந்தனை உணர்வு) என இரு துருவங்களாக மட்டுமே பார்க்கின்ற மொழியை லிங்க முதன்மைச் சிந்தனை
86

நிவேதினி
தோற்றுவித்தது. இதனால் தான் பெண் சாந்த குணமுள்ளவளாக,கண்ணிர் வடிப்பவளாக, பயந்தசுபாவமுள்ள வளாகச் சித் திரிக் கப்படுகின்றாள். அதன் எதிர்நிலையில் ஆண் கோபமுள்ளவனாக வீரமுள்ளவனாக சித்திரிக்கப்படுகின்றான். இதற்கு மாறான நிலையை அசாதாரணமானதாகவும் , வரிகாரமானதாகவும் ஆண்முதன்மைச் சிந்தனை சித்திரிக்கின்றது.
6 லெய் எண் ஷோவோல் ட் டாரின் கருத் துப் படி டெண்நிலைவாதிகள் தனிமையானதொரு (தம் உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்தக் கூடிய) மொழியை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் ஏற்கனவே இருக்கின்ற ஆண்முதன்மை மொழி மீது படிப்படியான ஆனால் திட்டமிட்ட சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மொழிமீது தமக்குள்ள உரிமையைத் தமது ஆளுமைக்குட்படுத்தி மீட்டெடுக்க வேண்டும் (Showalter. 1981 : 193 ).
பெண்ணின் உடல் வேறுபாடும் மொழி அந்நியப்பாடும் அவளுக்கென தனத் துவ மான உள வரிய  ைலத் தோற்றுவிக்கிறது. எனவே உடலியல் விமர்சனம் மொழியியல் விமர்சனத்திற்குக் காரணமானதுபோல் இவ்விரு வகைகளும் உள வரியல் வரி மார் சனத் திற் கான அவ சரியத்தை ஏற்படுத்துகின்றன.
6Telusio stors Goro (Psychological Criticism)
மொழியியல் விமர்சனத்தின் தொடர்ச்சியாகவே உளவியல் விமர்சனம் கருதப்படுகின்றது. மொழி உளவியலை பெருமளவு தீர்மானிக்கிறது. சிக்மன் புறொய்டின் உளவியல் கோட்பாட்டை மையமாக வைத்தே பெண் மைய விமர்சனத்தில் உளவியல் விமர்சனம் இடம்பெறுகின்றது. குடும்பம், சமூகம் ஆகிய நிறுவனங்களில் ஆண்கள் பெறுகின்ற உடல், மொழிfதியான முதன்மை நிலையும், பெண்கள் இரண்டாந் தரப்பிரஜைகளாகக் கருதப்படுவதும்
87

Page 45
நிவேதினி பெண்களின் உளவியலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இந்த அந்நியப்படுத்தப்பட்ட நிலைக்கு எதிரான உளவியல் போராட்டமாகவும் பெண்களின் எழுத்துக்களைப் பார்க்கலாம். ஒரு குழந்தை மொழியனுப வத்திற்குள் அறிமுகமாகும்போதே ஆண்-பெண் பால் வேறுபாட்டையும் அதன் மூலம் தோன்றிய அதிகாரத்து வமுள்ள அந்நியப்படுத்தப்பட்டதாகிய இரு வேறு நிலை களையும் உள்வாங்கிக் கொள்கிறது. இதனால் மொழியியல் விமர்சனமும் உளவியல் விமர்சனமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. ஒரு ஆண் குழந்தை தன்னைத் தந்தையுடனும் மொழிfதியான ஆண் மேலாதிக்கப் போக்குடனும் பெண் குழந்தை தன்னைத் தாயுடனும் மொழிாரீதியான அந்நியப்படுத்தப்பட்ட நிலையுடனும் அடையாளம் காண்கிறது. இவ்வாறு உடலியல் வேறுபாடு மொழி அந்நியப்பாட்டிற்கும் இவை இரண்டு காரணிகளும் சேர்ந்து உளரீதியான தாழ்வு நிலைக்கும் வித்திடுகின்றன. பெண் எழுத்தாளர்களின் ஆக்கங்களை இம்மூன்று வகைகளிலும் பெண்கள் ஒடுக்கப்படுவதன் வெளிப்பாடாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேற்கூறப்பட்ட உடலியல் வேறுபாடு மொழி அந்நியப்பாடு, உளவியல் ரீதியான தாழ்வுநிலை என்ற மூவகை நிலைகளும் கலாசாரம் என்ற ஆணாதிக்க நிறுவனத்தில் பெண்களின் நிலையைத் தீர்மானிக்கின்றது.
கலாசாரம் என்ற பின்புலத்தில் தான் மேற்கூறிய ஒடுக்கு முறைகள் நிகழ்கின்றன. இதனால்தான் பெண்கள் மீதான ஒடுக்குமுறை கலாசாரத்திற்குக் கலாசாரம் வேறுபடுகின்றது. கலாசார ரீதியாகப் பெண்கள் ஒடுக்கப்படுவது அவர்களின் எழுத்துக் களில் வெளிப்படுகிறது. பெண் மைய விமர்சனத்தின் நான்காவது பிரிவாக கலாசார விமர்சனம் இடம்பெறுகின்றது.
88

நிவேதினி
s6UTSFTU விமர்சனம் (Cultural Criticism )
உடல், மொழி உளவியல் ஆகிய மூன்று ஒடுக்குமுறைக் காரணிகளூடாகவும் மற்றுமோர் நிறுவன ரீதியான ஒடுக்குமுறைக்குப் பெண்கள் ஆளாகியுள்ளனர். இதனால் தான் ஒரே கலாசாரத்திற்குட்பட்ட பெண்களின் ஆக்கங்களில் பொதுத்தன்மைகள் காணப்படுகின்றன.
மேற்கூறப்பட்ட உடல் மொழி, உளவியல் ரீதியான ஒடுக்கு முறை பெண்களின் எழுத்துக்களில் வெளிப்படுவதுகூட குறிப்பிட்ட கலாசாரப் பின்னணியில்தான் நிகழ்கிறது. ஒரு குறிப்பிட்ட கலாசாரப் பின்னணியில் பெண்களின் கூட்டான (Collective) அனுபவங்கள் பொதுவானதாகக் காணப்படுகின்றது. ஆணாதிக்கம் எல்லாக் கலாசாரங்களுக்கும் பொதுவானது என்றாலும் பெண்ணடிமைமுறை பல வழிகளில் கலாசாரத்திற்குக் கலாசாரம் வேறுபடுகின்றது.
எலெய்ன் ஷோவோல்ட்டர் "பொதுவான ஆணாதிக்கக் கலாசாரத்திற்குள்ளே தனியான பெண்களது கலாசாரம் (female Culture) ஒன்றை ஏற்படுத்துவது சாத்தியமானது" (Showalter 1992) என்கிறார். உடல், மொழி, உளவியல் ஆகிய ஒன்றுடனொன்று தொடர்புடைய ஆணாதிக்க ஒடுக்கு முறைக் காரணிகள் கலாசாரம் என்ற ஓர் முழுமைக்குள் ளேதான் செயற்படுகின்றன. மொழி, மதம், பண்பாடு, கலை, இலக்கியங்கள் என்பவற்றைக் கலாசாரத்தின் பல் வேறு கூறுகளாகக் கொள் வோ மென?ல் இவையனைத்தினுTடாகவும் ஓர் பெண் ஒடுக்கு முறைக்குள்ளாகிறாள். எனவே அவள் எழுத்துக்களில் கலாசார ரீதியாக ஒடுக்கப்பட்ட நிலை வெளிப்படுகின்றது.
89

Page 46
நிவேதினி
முடிவுரை
பெண் மைய விமர்சனம் எழுத்தாளர் என்ற நிலையில் பெண்களை ஆராயும் போது இலக்கியத்தளத்தில் மட்டும் நின்றுவிடாது சமூகவியல் , மானிடவியல், வரலாறு பொருளியல, அரசியல் ஆகிய தளங்களிலும் செயற்படுகின்றது.
பெண் நிலைவாதம் என்ற கருத்துநிலையிலரிருந்து ஆக்கங்களையே முதன்மைப் படுத் தி (ஆசிரியரின் பால்நிலையைப் பற்றி அக்கறைப்படாது) இலக்கியத்தில் காணப்படுகின்ற ஆணாதிக்கச் சிந்தனைகளையும் இலக்கியப் போலிகளையும் ஆணாதிக்கச் சார்புடைய இலக்கிய வரலாற்றையும் நிராகரிப்பதே பெண்நிலை விமர்சனம் (Feminist Critique) மாறாக எழுத்தாளர் என்ற நிலையில் பெண் குறிப்பிட்ட சமூக, பொருளாதார, கலாசாரம் என்ற உற்பத்திச் சூழலில் தான் ஒடுக்கப்படுகின்ற அனுபவங்களை எவ்வாறு ஆண்முதன்மை மொழியினூடாக ஆணதிகாரத்துவ கருத்தியலோடு இயைபுடைய இலக்கியங்களாகப் படைக்கின்றாள் என்பதை ஆராய்வதே பெண் மைய விமர்சனம். ஒரு பெண்ணெழுத்தாளரால் தனது சகித்துக் கொள்ள முடியாத வாழ்வனுபவங்களை யதார்த்த பூர்வமாக சித்திரிக்க முடிவதில்லை. இதற்குக் காரணம் சமூகத்தின் ஆணாதிக்க கண்ணோட்டமுடைய வாசகர்களின் நிலைநின்றும் அவள் சிந்திக்கவேண்டியுள்ளது. இது பற்றி எலெய்ன் ஷோவோல்ட்டர் குறிப்படும் போது,
“பெண் மைய விமர்சனத்தின் இரண்டாவது அனுமானம் என்ன வென்றால் பெண்களின் எழுத்துக்கள் எப்பொழுதுமே இரு நிலைப்பாடமாக (Bitextual). ஆண் பெண் இருபாலாரின் இலக்கியப் பாரம்பரியத்துடனும் தொடர்பாடல் செய்கிறது" (Showalter, 1992 : 191)
என்பர் . பெண் ணடிமை முறைமையை ஒழித் து சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதே பெண்நிலைவா
90

நிவேதினி தத்தின் முதன்மை இலக்கு என்பதால் பெண் மைய விமர்சனம் இலக்கியப் படைப்புக்களை ஆராய்வதுடன் மடடுமல்லாது இலக்கியத்தின் படைப்புச் சூழல் பற்றி ஆராய் வதிலும் அதிக கவனம் செலுத்துவது பொருத்தமானதே.
91

Page 47
நிவேதினி
உசாத்துணை நூல்கள்
92
Bayum, Nina 1978. Women's Fiction; A Guide to Novels by and about women in America 1820-1970 Cornel University Press, London.
Gilbert Sandra 1979. The Mad women in the Attic, Susan Gilbert and Susan Gubar, Yale University press, New Haven.
Gilbert, Sandra. 1986. "Feminist Criticism in the University" in an Interview in Gerald Graff, Criticism in the University. North Western University press, Evanston .
Ostriker, Alicia. 1986. Stealing the Language, Beacon Press, Boston.
Showalter, Elain 1979. "Towards a Feminist poetics" in Women Writing and Writing about Women. Ed. M. Jacobus Croom Helm, London,.
Showalter, Elain. 1981, “Feminist Criticism in the Wilderness' Critical Inquiry, Winter.
"Showalter Elain 1992." Feminism and Iiterature, Literary Theory today. Ed by Peter Collier and Helga Geyer Ryan.

கலாசார ஒடுக்குமுறைக்குள்ளான பெண்கள் சார்பாக சில குறிப்புகள்
சூரியகுமாரி பஞ்சநாதன்
இன்று நாம் எமது கலாசாரத்தை மீளுருவாக்கம் செய்யும் பணியிலும் அதே வேளை மாற்றுக் கலாசாரத்திற்கான தேடுதலிலும் ஈடுபடுகின்ற முரண்பாடானதொரு சூழலிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
எல்லாவிதமான சடங்காசாரங்களிலும் ஒடுக்குமுறைகளை மிக நேர்த்தியுடன் கடைப் பிடி க்கும் எம்மவர்கள் புலம்பெயர்ந்து செல்லும் நாடுகளிலும் தமது ஆசார அனுஷ்டானங்களை மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இது இவ்வாறிருக்க மக்களுடைய வாழ்வியல் நடைமுறைகள் கணத்துக்குக் கணம் மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சந்தர்ப்பத்தில் இதுவரை காலமும் போற்றிப் பாதுகாத்து செப்பனிட்டு வந்த எமது கலாசாரப் பண்பாட்டு படிமங்கள் எ மது கண் முன் ன மே உடை படுவதனை புடம் நோக்கக்கூடியதாக உள்ளது.
"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என்ற வாக்கிற்கிணங்க, உலகின் மாறுதலுக்கும் புதிய நூற்றாண்டை நோக்கிய வாழ்வியற் கட்டுமானங்களின் நெகிழ்விற்கும் ஏற்ப பழமைக் கட்டுக்களிலிருந்து விடுபட வேண்டியதன் நியாயங்கள் அதிகபட்சமாயுள்ளன.
இதன் தொடர்ச்சியில் பலவிதமான புரட்சி வாதங்களும் நடைமுறை வாழ்வியலை வினாவிற்குட்படுத்தும் கோட்பாடு களும் நாம் விரும்பியோ விரும்பாமலோ எம்மை அறியாம லேயே ஏற்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இட்டுச் செல்கின்றன.

Page 48
நிவேதினி இவ் அர்த்தப்பாட்டில் மிக முக்கியமாக முனைப்புப் பெறுகின்ற ஒரு வாதமே பெண்நிலைவாதம் என்கின்ற பெண்களின் சம அந்தஸ்திற்கு வலுவூட்டலுக்குமான கோட்பாடு.
தற்பொழுது மூன்றாம் உலக நாடுகளில் குறிப்பாக பின் தங்கிய கிராமங்களில் பெண்ணிலைவாதம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் இடையிடையே நடத்தப்பட்டு பெண்களை விழிப்படையச் செய்யும் முயற்சிகளும் நடைபெற்ற வண்ணம் உள்ளன.
நாம் புனிமாகக் கருதுகின்ற எமது பண்பாடுகளும் கலாசார ங்களும் பெண்ணை இல்லத்திற்குரியவளாகவும் ஆணின் உடமையாகவும் கலாசாரத்தைப் பேணிக்காக்கின்ற குறியீடா கவுமே கருதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
திருமணமாகும் வரை தன்னையும் தனது ஒழுக்கத்தின் சாட்சியான கற்பையும் உயரிலும் மேலாகப் பேணிப் பாதுகாக்கின்ற பெண் கன்னிகாதானத்தின் மூலம், தான் இதுவரை காலமும் பேணிக்காத்த 'புனிதங்களை கணவனுக்கு அர்ப்பணிக்கின்றாள். அதன் பின் இல்லறத்தின் முக்கிய பகுதியாக "தாம்பத்யம் குடும்ப அமைப்பினுள் செல்வாக்குச் செலுத்த ஆரம்பிக்கின்றது.
இத்தகையதொரு வாழ்வோட்டத்தில் குடும்ப அமைப்பு தனது சர்வ வல்லமைகளையும் தாங்கிய ஒரு குடும்ப அலகாகப் பரிணமிக்கிறது. இதனடியாகவே ஆணாதிக்க மன இயல்பு வேர்விட்டு பரந்து செறிந்து ஆழப்புதைய ஆரம்பிக்கிறது.
இதன் ஒரு வெளிப்பாடாகவே பெண் கூலியற்ற இயந்திரமாக வீட்டுப் பணிகளைச் செய்வதிலும் மனித உற்பத்தியின் பங்காளியுமாகி அன்பையும் பொறுமையையும் தாராளமாக அள்ளி வழங்கும் பிம்பமாக மாறுகிறாள்.
பெண்ணாகப் பிறந்த அடையாளத்தின் மூலம் படிப்படியாக ஒரு ஆணுக்குத் தன்னை அர்ப்பணிக்கப் போகும் ஏற்பாடுகளை சமூகத்தினதும் கலாசாரங்களினதும் வழிப்ப
94

நிவேதினி டுத்தல் மூலம் தன்னை அத்தகையெதாரு கருத்தாக்கத்திற்குள் முடக்கிக் கொள்கிறாாள்.
பாரம்பரியமாகக் கற்றுத் தரப்பட்ட இந்நடைமுறைகள் ஆண் சம்பாதிப்பதற்கு வெளியே செல்லவும், பெண் வீட்டினுள் உணவு சமைத்துக் குடும்பத்திற்குத் தேவையான ஏனைய விடயங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்துவதில் தவறேதும் இல்லை என்ற நிலையை உருவாக்கிற்று. ஆனால் அதே வேளை ஆண் தனக்காக, தனது சந்தோஷத்திற்காக தனக்குரித்தான சொத்தைப் பகிர தனது உதிரத்திலான குழந்தையைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு கருவியாகப் பெண்ணைப் பயன்படுத்த ஆரம்பித்தான்.
இந்நிலை, மத்தியதரவர்க்கத்தின் எழுச்சி காரணமாக பெண்கள் கல்வி கற்று வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பின்னரும் தொடர்ந்து. பெண்களின் மீது சுமத்தப்பட்ட இரட்டைச்சுமைகளும் அவர்கள் எதிர்கொள்ளும் ஏனைய வன்முறைகளும் அண்மைக்காலங்களிலேயே அரசியல் நிலைப்பட்ட கோஷமாக முன்வைக்கப்பட்டன.
இத்தகையதொரு வாழ்க்கை பற்றிய மறு சீரமைப்புக்களும் பரிசீலனைகளும் நடைமுறைக்கு வந்த போது பெண்களுக்கான சில நடைமுறைச் சிக்கல்கள் பற்றிய வாதங்களும் சர்ச்சைகளும் கூர்மையடையத் தொடங்கின.
இத்தகையதொரு விளிம்பு நிலையிலேயே கணவனை இழந்த பெண்கள் மீதான கலாசார சமூக ஒடுக்குதல் பற்றிய சில மனவியல் சார்ந்த பிரச்சினைகள் மேலெழுகின்றன.
கணவன் இறக்க நேர்கின்ற போது அல்லது நிரந்தரமாகப் பிரிய நேர்கின்றபோது (விவாகரத்து அல்லது வேறொரு திருமணத்திற்காக) அந்தப் பெண் எமது சமூக அந்தஸ்தில் ஒரு சொற்ப கணத்திலேயே செல்லாக்காசாக்கப்படுகின்றாள். இந்தநிலை ஆணுக்கு என்றுமே ஏற்பட்டதில்லை.
ஆணை ஒரு "வாழாவெட்டி" என்றோ தபுதாரன்" என்றோ எமது சமூகத்தில் அழைப்பதில்லை. அத்துடன் மங்கலச்
95

Page 49
நிவேதினி சடங்குகளிலும் இவர்கள் பெண்களைப் போல் அவமதிக்கப் படுவதில்லை.
பெண்நிலைவாதம் தொடர்பான நூலிழையில் இத்தகைய பிரச்சினைகள் அனேக பெண்நிலைவாதிகளால் வாத விவாதங்களுக்கும் உட்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
எமது சமூகப் பாரம்பரியத்தில் கணவனை இழந்த பெண்கள் 'விதவை என்ற பெயர் சூட்டப்பட்டு வாழ்வதற்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் இழந்து நடுவீதிக்குக் கொண்டுவரப்படுகின்றனர். இத்தகைய செயற்பாடு குறித்த கேள்விக்கு எமது கலாசார பாரம்பரியங்களின் பிரம்மையையே காரணமாகக் கூறலாம். உளவியல் ரீதியாக விதவை என்று கூறப்படுகின்ற பெண்களின் மனவுணர்வை பொதுவாக எவராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியும். இல்லறவாழ்வில் இயல்பாக ஈடுபட்ட பெண்ணின் தாம் பத் திய உறவு கன வன?ன் இறப் புடன் துண்டாடப்படுகின்றது. இதன் காரணமாக அவளது அகஉணர்வில் நிறைவேறாத இச்சைகளும் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் மிகுந்து காணப்படும் என்பதும் மறுக்க முடியாத உண்மையே. ஆனால் இத்தகைய உணர்வினை அடிப்படையாகக் கொண்டு கணவனை இழந்த பெண்களை மங்கலச்சடங்குகளில் கலந்து கொள்ள எமது சமூகம் அனுமதி மறுக்கிறது. வாழ்த்த வேண்டிய சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு வாழ்த்த மனம்வராது என்று இவர்கள் கருதுவதே இதற்குக் காரணம். இத்தகையதொரு அவலநிலை ஏன் ஏற்பபடுகின்றது என்பது இங்கு எழுகின்ற முக்கிய வினாவாகும்.
வாழ்த்தலுக்கான உரிமை சகல சீவராசிகளுக்கும் பொது வானது. சந்தோஷங்களை அனுபவிப்பதும் துக்கங்களை பரஸ்பரம் பரிமாறிக்கொள்வதும் காலச்சக்கரத்தின் சுழற்சியில் சகப்பான அனுபவங்களை மறந்து விடுவதும், மீண்டும் பரவசத்தை நோக்கிய தேடலில் ஈடுபடுவதும் சாதாரண மனுதனுக்குரிய இயல்பு.
இது இவ்வாறிருக்க கணவனை இழந்த பெண்கள் சமூகத்தின் ஒடுக்குதலுக்குள் நசிந்து திணறுவது எவ்வகைகளிலும் பொருத்தமானதாகத் தெரியவில்லை.
96

நிவேதினி விதவை என்ற சட்டத்திற்குள் அகப்பட்ட ஆனால் தமது துயரங்களையும் விருப்பு வெறுப்புகளையும் தயங்காது, எது வரித வெட கமு மின் றரி சரி ல பெண் கள் வெளிப்படுத்துகின்றனர்.அதாவது சாதாரண சமயங்களில் பெண்களைப் போல் மங்கல நிகழ்வுகளில் பங்குகொள்ளவும் ஏனையோரைப் போலவே பொட்டிட்டு நிறச்சேலை கட்டவும் விருப்பம் தெரிவிக்கும் இவர்கள் இன்பத்தை அனுபவிக்க எத் தனிக் கின் ற தமது உணர்வுகளுக்கு சமூகம் கடிவாளமிடுவது தம்மைத் துன்பத்தில் ஆழ்த்துகின்றது என்றும் மனந்திறந்து கூறுகின்றனர்.
சகல ஒடுக்குதலுக்கும் எதிராக அரசியல் நிலைப்பட்ட கோஷமெழுப்புவோர் கணவரை இழந்த பெண்களுக்கு 'விதவைகள் என்ற பெயர் சூட்டியிருத்தல் குறித்தும் அச் சொல்லினுாடு, குறித்த அப் பெண் சமூகத்தில் ஓரங்கட்டப் படுமள வரிற் கு அதனை இது வரை காலமும் அனுமதித் திருப்பதும் அதற்கெதிராக வாய் பேசா மெளனிகளாக இருப்பதும் கவலை தருகிறது.
இன்று மேலைத்தேய நாடுகளிலும் சரி, கீழைத்தேய நாடுகளிலும் சரி ஒரு பாலுறவு விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
குடும்ப அமைப்பின் சிதைவு குறித்தும் திருமணம், பாலுறவு தொடர்பான இருபக்க அனுமானங்கள் குறித்தும் இன்று பலத்த விவாதங்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. Homo Sexual Relationship , Lesbianism, living together தொடர்பான தேர்வுகளும் (ஓரினப்புணர்ச்சி, திருமணமாகாது சேர்ந்திருத்தல்) இன்று நடைமுறைக்கு வந்துவிட்டன. இவை ஒவ்வொன்றும் தனிப் பட்ட ஒவ்வொரு வ ரதும்
தேர்வுரிமையாகும். இந்தத் தேர்வுரிமையில் அடுத்தவர் பங்கு பெறவோ அல்லது அதிகாரம் செலுத்தவோ (LDL9 t1/7g j. காரணம் இன்று நாம் ஜனநாயகயுகத்தில் வாழ்கிறோம்.
97

Page 50
நிவேதினி
இவ்வாறான மாற்றுக் கொள்கைகளும் கோட்பாடுகளும் கலாசாரங்களும் இலக்கியரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் எமது வாழ்வில் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன.
ஆனால் நாம் மட்டும் இன்னும் விதவைகள் குறித்து எமது கலாசாரப் போர்வைக்குள் வசதியாகப் புகுந்து கொண்டு மந்திரம் ஜபித்துக்கொண்டிருக்கிறோம். ஒடுக்கப்படுகின்ற இத்தகைய பெண்களின் அந்தரங்க அபிலாசைகளை ஏன் நாம் ஏற்றுக் கொள்ள , மறுக்கிறோம். என்பது புரியவில்லை.
98

நிவேதினி பெண்கள் தொடர்பான ஆய்வுகள், நூல், சினிமா தொடர்பான விமர்சனங்கள் பால்நிலை தொடர்பான கருத்தியல் ஆய்வுகள்
வரவேற்கப்படுகின்றன.
அவை அமையும் விதி
ஆய்வுக்கட்டுரைகள் 20 - 25 பக்கங்கள் அமைதல்- வேண்டும் விமர்சனங்கள் ஏறக்குறைய 500-600 சொற்கள் அடங்குவது நன்று. கட்டுரைக்கு பொருத்தமான வரைபடங்கள் புகைப்படங்கள்
வரவேற்கப்படுகின்றன.
கட்டுரைகள் தட்டச்சில்- கணணி டிஸ்கட்றில் அமைதல் நன்று வசதியில்லாவிடின் தாளுக்கு ஒரு பக்கம் என்ற அடிப்படையில் தெளிவான கையொழுத்தில் அமைதல் வேண்டும்.
150 சொற்கள் கொண்ட கட்டுரைச் சுருக்கம் தனியாக இணைப்பது
வரவேற்கப்படும்.
கட்டுரைகள் ஆசிரியர் பற்றிய தகவற் குறிப்பு ஒன்று தனியாக இணைக்கப்படவேண்டும்.
கட்டுரை எழுதுவோருக்கு ஒரு சஞ்சிகை இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
கடைசிப் பக்கத்தில் உசாத்துணை நூல்களை ஒரு கிரமமாக தொகுத்தல் வேண்டும். நிவேதினிக்கு நாம் வேண்டும் அமைப்பு முறை கீழ்கண்டவாறு அமைய வேண்டும் என எதிர்பார்கிறோம்.
ஆசிரியர் பெயர், வெளிவந்த வருடம் , நூலின் தலைப்பு,
பதிப்பகம் ஊர், இடம்.
99

Page 51
நிவேதினி ஆங்கில நால்களை ஆங்கிலத்திலேயே எழுதப்படவேண்டும்
உதாரணமாக
Singaravelu. 1966. Social Life of the Classical Period. Kuala Lumpur Department of Indian Studies, University of Malaysia.
(புத்தகம்)
Singer, M. 1968. “Indian Joint Family in Modern Industry’. in Structure and Charge in Indian Society. Milton Singer and Bernard, S. Cohn ed. Chicago Aldew. (5 (660)U)
விளக்கங்கள் சுருக்க உரைகள் ஆங்கில, சமஸ்கிருத, பிரான்சிய சொற்கள் பதங்களின் மொழிபெயர்ப்புகள்,
விளக்கங்கள், போன்றன.
உசாத்துணை நூல் குறிப்பிற்கு முதல் வரும் பக்கத்தில், எழுதப்படவேண்டும்.
100

நிவேதினி
வருடாந்த சந்தா - நிவேதினி
North America : USS 30 UK & Europe : USS 20 India, S. Asia USS 10
Sri Lanka SLR 200
சாந்தா விண்ணப்பம் 19.
நிவேதினி சஞ்சிகைக்கு சந்தா அனுப்பியுள்ளேன்.
இத்துடன் காசோலை/ மணிஓடரை மகளிர் கல்வி, ஆய்வு நிறுவனத்தின் பேரில் அனுப்பி வைக்கிறேன்.
Women's Education and Research Centre 58. Dharmarama Road, Colombo-06
Sri Lanka.

Page 52


Page 53
எமது விெ
வார்ப்புகள்
இந்தியர்களது இலங்கை வாழ்க்ை
தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சில் நோக்கு
பெண் நிலைச் சிந்தனைகள்
பெண்ணடிமையின் பரிமாணங்களு விளக்கமும்,
சக்தி பிறக்குது (நாடகம்)
The Political of Gender and Women's A Colonial Sri Lanka
Feminism in Sri Lanka in the Decade
Fragmenrs of a Journey
Some Literary Women of Sri Lanka
Images
Life Under Milk WOOd: Women Worke An Overview
Ideology, Caste, Class and Gender
The Spectrum of Femininity: A Proces
இவற்றை எம் நிறுவனத்திலு நிலையங்களிலும் டெ
ISSN - 1391 - 0.353
Printed by Karunaratne & Sons Ltd.

/ளியீடுகள்
- LITT DJ Jf6
த நிலைமை
மீனாட்சி அம்மாள்
Uவற்றில் ஒரு பெண்நிலை
- செல்வி திருச்சந்திரன்
சித்திரா மெளனகுரு
ம் பெண்ணுரிமையின்
செல்வி திருச்சந்திரன்
சி. மெளனகுரு
\gency in post – Selvy Thiruchandran
- Kumari Jayawardane
- Jean Arasanayagam
- Eva Ranaweera
- Edited by Selvy Thiruchandran
rS in Rubber Plantion, - By Jayadeva Uyangoda
– Selvy Thiruchandran
S of Deconstruction - Selvy Thiruchandran
லும் ஏனைய பிரபல புத்தக 1ற்றுக் கொள்ளலாம்
75/-