கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2010.06

Page 1


Page 2
வேல் அமுதனிடம் இன்று 38 வைத்தியர்கள் QUALIFED DOCTORS
BITdb ஆண் பெண் மொத்தம் 1. Sri Lanka O7 21 28 2. UK O1 O3 O4 3. Australia OO O3 03 4. Canada OO O1 O1 5. USA OO O1 O1 6. Singapoor OO O1 O1 21.07.2010 மொத்தம் 08 30 38 * தெரிவு
வேல் அமுதன் திருமண ஆலோசனையகத்தில் அங்கத்தவராகி, மேலதிக விபரங்களைத் தெரிந்து - தங்கள் மனம் விரும்பும் வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்யலாம்
* தொடர்பு
திங்கள், புதன், வெள்ளி மாலையிலோ; சனி, ஞாயிறு நண்பகலிலோ “சுய தெரிவு முறை முன்னோடி” தனிமனித நிறுவநர், முத்த, புகழ்பூத்த, சர்வதேச, சகலருக்குமான திருமண ஆலோசகர் /ஆற்றுப்படுத்துநர் குரும்பசிட்டியூர், மாயெழு வேல்இமுதனுடன் தொடர்பு கொள்ளலாம்.
* தொலைபேசி
2380488 - (வாடிக்கையாளரின் தொடர்புக்காக ஒதுக்கப்பட்டது) 2360694 / 4873929
* முகவரி
8.3.3 மெற்றோ மாடிமனை (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு எதிராக, நிலப் பக்கம், 33 ஆம் ஒழுங்கை வழி) 55 ஆம் ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு -06.
* சந்திப்பு :
முன்னேற்பாட்டு ஒழுங்கு முறை (Consulation by Appointment)
* குறிப்பு :
அங்கத்தவர்கள் வேல் அமுதனுடன் தொடர்புகொள்ளும்பாது ஆலோசனை யத் தொடர்பு இலக்கத்தைக் குறிபிட்டுத் தொடர்புகொள்ளக் கேட்கப்பட்டுள்ளனர்.
துறித- சுலபமணமக்கள் தெரிவுக்குச் சுயதெரிவுமுறையே ரம்மிய-மகோன்னதமணவாழ்வுக்குக் குரும்பசிட்டியூர் மாலயமுவேல் அமுதனே!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

് 'ബിൾ ഓക്സൈ'
இலக்கியம் இல்லை (്
剑距范 துதிர் *பமிலுவோம் Na 2
ーンsン 。 * விளைச்சல் - 23 குறுங்காவியம்)
>65 TjåBrô : 30.01.2008 < | >kamio
* மனிதத்தைத் தேடுகிறோம் 6 ()
ஆனி 2010 (திவ ஆண்டு 204)| ற்போக்கான சி
D36g, s.60(b( () O . படைதத
கானநதனுக து மணி 22 (ghydffurf : Garraggredit :* @
fIIlưuI #fluff : đưflgäff Gib .
fe O777492861 s 水 நீத்தார் நினைவு 65. Guaf ille :
aagaat E-mail : Croosagyahoo.com k GFGö66õ பெருக்குவோம்-14 தொடர்புமுகவரி: 本 S(5 படைப்பாளனின் மனப்பதிவு-12
திருதகோபாலகிருஸ்ணன்
இல,19, மேல்மாடித்தெரு, விே மட்டக்களப்பு, இலங்கை. * “அருந்தவச்செல்வி” (சிறுகதை)
*"வினை விதைத்தவர்கள்”
Contact: (சிறுகதை)
Mr.T.Gopalakrishnan *“டுப்ளிகேற்”குறுங்கதை) :e * செங்கமலம்-17 (நெடவ) 5
本 அழகு (குறுங்கதை) 6
65 issosoGdf / Telephone 06.2227876, 077.2602634 |* ஆசிரியர் பக்கம் ()2 * அதிதிப்பக்கம் ()3 ósösos;&só / E-mail * கதிர்முகம் senkathirgopal(ogmail.com * கதை கூறும் குறள்-10 ஆக்கங்களுக்கு * விளாசல் வீரக்குட்டி | gefißeBILITEg GaLaTpūlų. + வானவில் 63
és 2010

Page 3
ಲ್ಲ!
2.
雯
40
தமிழகம் கோவையில் நம் தமிழ் மொழிக்குச் "செம்மொழி” மாநாடு நடத்த தமிழக அரசு மிகுந் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் தமிழ்மொழி, செம்மொழியாக உலகோர் பலருக்குத் தெரியவரும் என கருதப்படும் நிலையில் தமிழறிந்தோர் பலர்பார்வையில் இச்செயற்பாட்டின் பின்புலம் அறியப் பட்டு சலித்துக் கொள்ளவும் செய்கிறது. எம் தமிழ்மொழி பழைமையானதும் செழுமையானதுமாகும். காத்திரமான இலக்கியங்களை தன்னகத்தே கொண்டதுமாகும். இந்த உண்மை இரண்டாயிரம் ஆண்டுகளக உணர்த்தப்பட்டது. உணரப்பட்டது. ‘செந்தமிழ்' என்று நாம் அழைத்துப் பெருமைப்பட்டது இன்று நேற்றல்ல. இந்த வளர்ச்சி உலகின் தலைசிறந்த மொழிகளுள் ஒன்றாக தமிழை அடையாளப்படுத்தும் அளவுக்கு மேலோங்கி வந்துள்ளமை ஒட்டுமொத்த வளர்ச்சியின் அடையாளம் எனலாம். தமிழக முதல்வர் தமிழை வளர்ப்பார். தமிழைப் பாதுகாப்பார் என்றெல்லாம் அவர்தம் அபிமானி களல் புகழாரம் சூட்டப்படும் நிலையில் வளரும் தமிழின் பரிமாணங்களில் தன்னையும் இணைத் துக்கொள்ளப்படாதபாடு படுகின்றாரோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. தமிழக அரசியலில் தற்கால வீச்சு அவர் தம் அரசியல் வாழ்க்கை முடிவில்லாததாக அமையலாம். ஆனால் மாறு டத்தின் ஆயுள் எனும் நியதிக்குள் அவரைப் புறந்தள்ளிப் பார்க்க முடியாமையினால் இதை விட்டால் தருணம் வாய்க்காது என்று இம் மாநாட்டைக் கையில் எடுத்துக் கொண்டர்போலும் இந்த நிலையில் இவரால் ஆளப்பட்ட தமிழகத்தின் இறுதிக் காலங்களில் தமிழின் நிலையை நாம் எப்படி எப்பொழுது ஆய்வு செய்யப் போகின்றோம். செந்தமிழ் மொழியின் பேச்சு வடிவத்தை தமிழகம் தொலைத்துவிட்டதா? அல்லது கொன்றுவிட்டதா? என்றல்லவா இன்று எண்ணத் தோன்றுகின்றது. இதைப்பாதுகாக்க அடிமட்டச் சமூகநிலையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட் டது என வினவ வேண்டியது நம் தார்மீகக் கடனல்லவா? இன்றைய தமிழகத்தின் பிரதேசங்கள் தோறும் தமிழ்பேசும் நிலை செம்மொழிக் கோட்பாட்டில் எங்கே நிற்கின்றது. ஆங்கிலத்தினது இன்பச் சிறைக்குள் செம்மொழியை எங்கே தேடுவது. இந்த நிலையில் “செங்கதிர் சொல்லநினைப்பது தமிழ் மொழியை செம்மொழியாகப் பாதுகாக்க என்ன செய்தோம்? என்ன செய்யப் போகிறோம் என்பதனை இம் மாநாடு அடையாளப் படுத்தி எதிர்காலத் திட்டங்களைத் தீட்டாது போனால் செம்மொழியான எம்மொழி எம்மொழிக்குள் தொலைந்துபோகும் என்பது எல்லோருக்கும் புரியும். ஈழத்தில் தமிழ் வளர்க்க நாம் படுகிறபாடுநரிக்கூட்டத்தில் ஆடு வளர்ப்பதுபோல. அதிகாரம் மிக்க தமிழக அரசும் அவர்தம் ஆட்சியாளர்களும் இன்னும் காத்திருந்து மாநாடுகளை மட்டும் நடத்தலாம். ஆனால் யதார்த்தமும், சமகாலமும் எங்கோ போய்க்கொண்டிருப்பதை இவர்கள் பார்த்துக்கொண்டே இருக்கப் போகின்றார்களா? தமிழ்மொழி பேசுபவர்களாகிய நாம், நம்செந்தமிழ் வளர எழுத்தாலும், சொல்லாலும் நெறிபிறழாது அதீத அக்கறையோடு செயற்படுவது இந்த மாநாட்டிலும் ஒருபடி மேலானது குறிப்பாக நம் தமிழின் செம்மை குறையாதவாறு பேசக் கற்றுக்கொள்வதும், பேசுவதும், பேசக் கற்றுக்கொடுப்பதும் எம் மொழியை இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் தனித்துவமாகக் கொண்டு செல்ல உகந்தாகும்.
dedirLigaSat gearó - gamawa Akazy
deaf 200
 
 

செங்கதிர்’ இதழின் இம்மாத அதிதி பாவலர் சாந்த முஹியித்ததின்
அவர்களாவார்.
கவிஞர் சாந்தி முஹியித்தீன் என இலக்கிய உலகில் அடையாளப்படுத் தப்பட்டுள்ள முகம்மது மீராசாகிபு அகமதுலெவ்வை 09.10.1942ல் பிறந்த வராவார். இவர், காத்தான்குடி மெத்ததைப்பள்ளி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்றபோதே முன்னாள் அதிபர் ஜனாப் எம்கே.எம். இஸ்மாயில் அவர்களால் இலக்கிய அறிவூட்டம் பெற்றார். அக்காலகட்டத் தில் நன்னெறி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம், நல்வழி போன்ற வற்றை மனனமிடுவதில் ஆசிரியரால் ஊக்குவிக்கப்பட்டார். சிறுவயதி லேயே பழந்தமிழ் இலக்கியங்களை வாசிப்பதில் ஊறிப்போன கவிஞரை, அவரின் தாயாரின் தாயார் இலக்கியப் பாடல்களைப் பாடுவதில் ஊக் கப்படுத்தி வந்தார்.
கவிஞரின் கல்வி முயற்சிகளுக்கு வறுமை ஒரு தடையாக அமைந்தது. இதன் காரணமாக காத்தான்குடி மத்திய கல்லூரியில் சேர்ந்த மிகக் குறுகிய காலத்தினுள்ளேயே தனது கல்வியைக் கைவிட்டு வியாபார நிலையமொன்றில் விற்பனையாளராகச் சேரவேண்டியதாயிற்று. எனினும் கவிஞரின் இலக்கிய ஆர்வத்தை இந்நிகழ்வுகளால் தடுத்துவிட முடிய வில்லை. இரவுவேளைகளில் குப்பி விளக்கின் வெளிச்சத்தில் பழந்தமிழ் இலக்கியங்களை ஆர்வத்துடன் கற்கத் தொடங்கினார்.
1959ல் காத்தான்குடி நவ - இலக்கியமன்றம் உருவானது மிகச்சிறந்த இலக்கிய ஆர்வலரும் பேச்சாளருமான மர்ஹாம் எம்ஐதாவூத்ஷா ஆலிம் அவர்களுடன் இணைந்து மன்றம் உருவாகுவதற்கு கவிஞர் காலாக அமைந்தார். அவ்வேளையில் காத்தான்குடி பட்டின ஆட்சிமன்றம் வாசிக சாலையொன்றை நடாத்தவில்லை. இதனை நிறைவுசெய்யும் பொருட்டு அப்போதைய பட்டின ஆட்சி மன்றத் தலைவர் மர்ஹம் எம்ஐஎம்.காசிம் ஹாஜியாரின் ஆலோசனையின் பேரில் நவ - இலக்கிய மன்றம் தனது சொந்தச் செலவில் வாசிகசாலையொன்றை ஆரம்பித்தது. அதனை நடாத் தும் பொறுப்ப கவிஞரிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. நான்கு மாதங் களின் பின் பட்டின ஆட்சிமன்றத்தால் வாசிகசாலை பொறுப்பேற்கப் பட்டது. இன்று காத்தான்குடியின் மிக முக்கிய வளங்களில் ஒன்றாக விளங்கும் நகர சபை நூலகத்தின் முன்னோடிகள், காத்தான்குடி நவ
és 200

Page 4
இலக்கிய மன்றத்தினரென்பது மகிழ்வுடன் நினைவுகூரத்தக்கதாகும். |தாவூத்ஷா ஆலிமின் தொடர்பு கவிஞரை வளப்படுத்தியது. 1960ல் 'காத்தான்குடி இஸ்லாமிய கல்விச் சகாய நிதி நிறுவனத்தினரால் கிழக்கி லங்கை ரீதியில் பேச்சுப் போட்டியொன்று இடம்பெற்றது. தாவூத்ஷா ஆலிமின் நெறிப்படுத்தலோடு கவிஞர் நவ இலக்கிய மன்றத்தின் சார்பில் பங்குபற்றி அப்போட்டியில் முதலிடம் பெற்றார். தொடர்ந்து சிறு வயதிலேயே தனது பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டார்.
1962ல் தாவூத்ஷா ஆலிமின் வேண்டுகோளுக்கிணங்க 'சாந்தி முஹி யித்தீன்” என்ற புனைப்பெயரைச் சூடிக்கொண்டார். 14.09.1963ல் வீரகேசரி இஸ்லாமிய உலக மலரில் “வெண்ணிலவே' என்ற கவிஞரின் முதலாவது கவிதை வெளியானது. அதனைத் தொடர்ந்து கவிஞரின் ஆக்கங்கள் தேசியப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்தன. 1963ல் ‘நிம்மதி எங்கே? என்ற நாடகத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்றார்.
கவிஞரின் கலை இலக்கிய பங்களிப்புகளைப் பின்வருமாறு பட்டியல்
படுத்தலாம். 1) கவிஞரால் எழுதிவநறியாள்கை செய்யப்பட்டு மேடையேற்றப்பட்ட வில்லுப்
O டுக்
அ) தரகர் தம்பிலெவ்வை ஆ) காவன்னாமுனா இ) எங்கட தம்பிக்கு என்னதான் தெரியாது? ஈ) மாமா பயப்படலாமா? உ) பதுறுப்போர் ஊ) பால்காரப் பொன்னையா
இவையனைத்தும் நவ இலக்கிய மன்றத்தால் மேடையேற்றப்பட்ட வையாகும். ‘பால்காரப் பொன்னையா” மட்டக்களப்பு மாவட்ட கலா சாரப் பேரவையினால் நடாத்தப்பட்ட மாவட்ட ரீதியிலான வில்லிசைப் போட்டியில் முதலிடம் பெற்ற வில்லிசையாகும். இப்போட்டிக்கு நடுவராகக் கடமையாற்றிய வித்துவான் எப்.எக்ஸ்.சி.நடராசா அவர் கள் கவிஞரின் திறமையைப் பாராட்டி, வில்லிசை சம்பந்தமான புத்தகமொன்றை வழங்கியது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
2) கவிஞரால் வநறியாள்கை செய்யப்பட்டு நவ - இலக்கிய மன்றத்தால்
மேடையேற்றப்பட்ட நாடகங்கள் அ) பரிகாரியார் வீட்டிலே ஆ) காதிக்கோடு இ) காலச்சக்கரம் இதில் காலச்சக்கரம் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற நாடகமாகும்.
4 200

3)
4)
5)
6)
7)
8)
9)
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, கவிஞர் அப்துல் காதர் லெவ்வை, புரட்சிக்கமால், யூ.எல்தாவூத், திமிலைத்துமிலன் போன்ற அறிஞர்கள் தலைமையில் கவிஞர், கவியரங்குகளில் பங்கேற்றுள்ளார்.
கவிஞருக்கு மிகவும் புகழ்தேடித் தந்தவை அவர் தலைமையில் நடைபெறுகின்ற கவியரங்குகளாகும். முப்பதுக்கும் மேற்பட்ட கவிய ரங்குகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கவிஞரின் தலைமையில் நடைபெற்றுள்ளன. கல்லடி சிவானந்த வித்தியால யத்தில் 28.0582ல் பாரதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடை பெற்ற கவியரங்குக்கிற்குத் தலைமைத்துவம் வகித்தது கவிஞர் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும்.
முஸ்லிம் மக்களின் பாரம்பரிய கூத்து வடிவமான களிகம்பாட்டத் திற்கு உயிரூட்டுவதற்காக கவிஞர் இரண்டு முன் முயற்சிகளைச் செய்துள்ளார். ஏறாவூரில் ஒரு குழுவினரையும் காத்தான்குடியில் ஒரு குழுவினரையும் இத்துறையில் ஈடுபடுத்தி வெற்றியும் கண்டுள்ளார். களிகம்பாட்டம் தொடர்பான ஆய்வுக் கட்டுரையொன்றும் கவிஞரால் எழுதப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் உரையரங்குகளிலும் பட்டி மன்றங்களிலும் அடிக்கடி கவிஞர் பங்கேற்பதுண்டு. குறிப்பாக பிரபல தமிழறிஞர்களோடு நூல் விமர்சன அரங்குகளில் சமபங்கேற் பது கவிஞரின் திறமைக்குத் தகுந்த சான்றாகும்.
கவிஞர் தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடுள்ளவராகவும் தமிழ் இலக் கியங்களில் சமகால நிகழ்வுகளை அறிந்தும் வைத்திருப்பதால், பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் ஆய்வுகளுக்காக அவரை அடிக்கடி நாடுவதன் மூலம் பல உபயோகமான தகவல்களைப் பெற்றுச் செல்வதுண்டு.
கவிஞர் உருவாக்கிய அமைப்புக்கள்
அ) நவ இலக்கிய மன்றம் - காத்தான்குடி (தாவூத்ஷா ஆலிமுடன்
இணைந்து)
ஆ) பாவலர் பண்ணை - காத்தான்குடி
இ) இலக்கியப் பேரவை . ஏறாவூர்
ஈ) மட்/மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவை
கவிஞர் அங்கத்துவம் வகிக்கும் அமைப்புக்கள் அ) நவ இலக்கிய மன்றம் - தலைவர் ஆ) பாவலர் பண்ணை - காவலர்

Page 5
இ) மட்டக்களப்பு மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவை - இணைச்
செயலாளர் - ஈ) மட்டக்களப்பு மாவட்ட கலாசார பேரவை - உறுப்பினர் உ) மட்டக்களப்பு ஆரத்தி நிறுவனம் - உறுப்பினர் ஊ) காத்தான்குடி பிரதேச கலாசார பேரவை - உபதலைவர்
10) கவிஞரின் இலக்கிய ஆக்கங்கள்
அ) அரங்கக் கவிதைகள் (மேடைக் கவிதைகளின் தொகுப்பு) ஆ) பதச்சோறு (கவிதைநூல்) இ) நமது முதுசங்கள் (ஆய்வுக்கட்டுரை) ஈ) காரணக்குரிசில் (கவிதை நூல்) இது தினகரனில் தொடராக
வெளிவந்ததாகும். `............... --.. ... ...... ........ ---
I) கவிஞரின் எதிர்கால இலட்சியங்கள்
அ) காத்தான்குடியில் சிறந்த இலக்கியப் பரம்பரையொன்றை
உருவாக்குதல். ஆ) அருகிவரும் களிகம்பாட்டத்தை நவீனப்படுத்திப் புத்துயிரூட்டல் இ) காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தினூடாக வெளியீட்டுப் பணியகமொன்றை உருவாக்கி அருகிப்போன நூல்களையும் புதிய நூல்களையும் வெளியிடல்,
கவிஞரின் சிந்தனைகள் ஆழமானவை. பிரதியமைச்சர் ஜனாப் எம்எல் ஏ.எம்ஹிஸ்புல்லா அவர்களினால் காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டபத்திற்கான ஆலோசனை, கவிஞரால் முன்வைக்கப்பட்ட நவ-இலக்கிய மன்றத்தின் கோரிக்கையாகும்.
எனவே, கவிஞர் காத்தான்குடியின் கலை, இலக்கிய முன்னோடிகளில்
ஒருவர் என்பதற்கு மேற்குறிப்பிட்ட சுருக்கமான தகவல்கள் தகுந்த சான்றுகளாகும்.
பெற்றுக்கொண்ட விருதுகள் : * இலங்கை கலாசார அமைச்சின் 'கலாபூஷண’ விருது - 26.12.2002 * உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் முதறிஞர் கெளரவம்’
22.0.2002 * அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் சாமசிறி விருது - 2002 * மாவட்ட செயலகம் வழங்கிய கலைஞர் கெளரவம்' - 28.08.2002 * மட்/காத்தான்குடி பிரதேச செயலகம் வழங்கிய கலை இலக்கியக்
காவலர்' இலக்கிய விருது - 01.12.2006
0619ಣ್ಣೆ
ஆணி 2010

இலங்கை முஸ்லிம் கலைஞர் ஒன்றியம் வழங்கிய கவிஞர் திலகம்’ - சிறந்த கவிஞருக்கான விருது - 16.12.2007
தென்றல்' சஞ்சிகை வழங்கிய தமிழ்ச்சுடர்' - 06.05.2008 தினச்சுடர் வழங்கிய சிறந்த கவிஞருக்கான விருது’ - 2004 'சிலோன் யுனைட்டட் ஆட்ஸ் நிறுவனம் வழங்கிய சிறந்த கலைஞருக்கான விருது' - 2004
அமுதம்' சஞ்சிகை வழங்கிய சிறந்த கவிஞருக்கான கெளரவம் - 07.10.2007
காத்தான்குடி நகரசபை வழங்கிய சாதனையாளர் கெளரவம் - 28.12.2007
மட்/மாவட்ட எழுத்தாளர் பேரவை வழங்கிய இலக்கியச்சுடர்' இலக்கிய விருது . 17.03.2002
ஜாமியதுஸ் ஸித்தீகிய்யா அரபுக்கல்லூரி வழங்கிய இலக்கிய வித்தகர்' விருது.
நவமணி வித்துவான் M.Aறகுமான் வழங்கிய பாவலர்’ விருது
கள் GOOII
M
ਅ?
தடங்கள்தான் நம்மவர்கள் தலையெழுத்து- அது மூத்த பரம்பரையின் மூலகங்கள் முழுவதுவும் - நம் ஆற்றலினைச் செப்புகின்ற அன்னைக் குறிப்பேடு அண்ணையவளின் அடிவயிற்றில் தோன்றியது - நாம் முன்னேயிருந்தெழுந்த முதல் தடயம் பின்னேயிருந்தெழும்பி பேச்ச நபையின்ற திண்ணையெமதிடண்டாம் திருத்தடயம் ஏன்? கல்விகொண்ட பள்ளி கலைத்தடயம் இணையாக பள்ளி கொண்ட பள்ளி மறுதடயம் உள்ளத்துணர்வுகளை உணர்ச்சிப்பிளம்பாக்கி கள்ள மற எடுத்துரைக்கும் கடதாசியொரு தடயம். கட்டில் நமதில்லக் காதலர்கள் முதலிரவைத் தொட்டுத் துலக்குகின்ற தூயதொரு தடயம். மலட்டு வாழ்வல்ல மலர்ந்த திருவாழ்வுயென புதுக்கித் துலக்குகின்ற புதல்வர்களோ புதுத்தடயம் இப்படியே எம் வாழ்வில் எண்ணற்ற தடங்களுண்டு என்றாலும் தட்டுப்பாடற்றுத் தமிழ் பெருமை பேசிவரும் மட்டக்களப்பு மண்ணின் மடியினிலே தடங்கள் தெரியும் தடவிநாம் பார்ப்போமென
இகநிதிரி saf 200

Page 6
இபங்கள் பலதுக்கு எண்ணத்தைத் துதுவிட்டேன் கடந்தேன் பல காதவழி கண்டயலனொன்றுமில்லை. அடைந்த இடமெதிலும் அடையாளம் தெரியவில்லை தபங்களுமில்லை பெரிய தடயங்களுமில்லை - என்னவிது? எல்லாம் வெளியாய் எக்கறையும் தோன்றாமல் தரைகளெல்லாம் மிகத்தெளிவாய் தகதகக்கக் காரணமென்ன? என்றெண்ணிநடந்தேன் எண்னெதிரில் தோன்றியவன் தடயங்கள் இனிமேல் தரையில் இராதென்றான். ஏனென்றேன்? தடயங்கள் இருந்தால் தடையென்றான். எனக்கோ மீண்டும் வினாக்குறிதான். அவன் சொன்னான். தடங்கள் இருந்தால் தபங்கள் மிகவதிகம். தடயங்கள் தான் மேலிடத்தை தலைகுணிய வைக்கிறது. இலங்கையிலேயெவ்விடத்தும் இனித்தடயம் தோன்றாது ஏனென்றால்? செம்மணித் தடங்கள் செம்மையாய்யெம்மவரின் உண்மையினையுணர்த்த உதவிற்று. ஆதலினால் தடம்தெரியக் கூடாத தடைச் சட்டமொன்று இடைச் சட்டமாக இங்கு வரப்போகுறது. உண்மைதானென்று உள்ளாறயெண்மனது தடயங்கள் பெறுமதியைத் தானுணர்ந்து பார்க்கிறது அம்மனியைச் செம்மணியோ ஆட்டுவதும் அன்று அரசாண்டவரைக் காட்டுவதும் இன்று வரையெம் மவரை வாட்டுவதும் இலக்குயிது என்று கனல் மூட்டுவதும் கலக்கமுறக் கண்சாடை காட்டுவதும் கானகத்தே பேய் முழக்கம் கூட்டுவதும் துலக்கமுறு தடயங்களானதாலே - நாம் தூவிடக் கூடாது தடங்கள் தம்மை. பழந்தமிழன் பெருமையினால் பாடல் பேச பாராண்ட சிறப்பதனை இபங்கள் பேசும் இளந்தமிழில் புதுக்கவிதை எழிமைபேச
இனிய இளம் காதல் சுவை நுதல்கள் பேசும் களங்கண்ட இளைஞர்களைக் காலம் பேச. கவலையுற வாழ்ந்தயெம்மை சேய்கள் பேசும் இளைய தலமுைறையினர்க்கு இவைகளெல்லாம்
o8
(sef 2010

இனியதடம் ஒவ்வொன்றாய் இதயம் பேசும், தடம்பாரத்து நடவென்று அன்ற யார்த்த தமிழ் கூறும் பொன்மொழியை ஆய்ந்து நோக்க இடம்பார்த்து ஆராய்ந்து உனது வாழ்வை இதமாக்கு என்றெல்லாம் விரிந்து செல்லும் தடம்பார்த்த வரலாறு போர்க்களத்தில் இளஞ்சிங்கமிறந்தகதை கேட்டபோது
ஏகியதாய் போர்க்களத்தின் நடுவில் நின்று தடைசாய்ந்த உடல்முழுதும் புரட்டிப்பார்த்து குற்றுயிராய்க் கிடக்கின்ற மகனின் மார்பில் தடமுண்பா என்பதனைத் தடவிப்பார்த்த தாய்சரிதை வேறெங்கு முண்பா சொல்வீர் சரித்திரத்தின் தடயங்கள் எம்மையெல்லாம் சத்தியமாய் எடுத்தோதும் காலங்கொள்ள பிரிந்திடறிப் போவதிலோ தடங்கல் மிஞ்சும் பிணைந்திருந்து வாழ்வதிலோ தபங்கள்கொஞ்சும் உருத்தரித்த நாள்முதலாய்த் தமிழ்த்தாயோடு ஒன்றித்து வாழ்கின்ற இனங்களெல்லாம் இறுக்கமுடனிணைந்திட்ட தபங்களாக இருக்கட்டுமெம்முறவு அதற்காய் நாளும் உரிமையுடன் நாம் கூடி உறவுகொள்வோம் ஒற்றுமைக்குவித்திடுவோம் இனம் மறப்போம். இனத்தையினம் பிரிந்திருப்பின் ஏதுவாழ்வு என்பதற்குத் தமிழ்மொழியே சாட்சியாகும். வல்லினமும் மெல்லினமும் தமிழனங்கு வழங்கிய நல் இடையினமும்மூன்றினங்கள் இனம்பிரிந்தால் தமிழுக்கே இண்பமில்லை இதையுணர்ந்தால் நமக்குள்ளே தொல்ைையில்லை.
பாராண்ட தடமுண்டு தமிழா உந்தன் பண்பாட்டைக் கூறுகின்ற தடங்களுண்டு பேயாட்டமாழயெம்மைப் பிரித்து வைக்கும் பெருத்த இனப்பேய்களுக்கும் தடங்களுண்டு சாவுற்ற எம்மவரக்ள் சமாதியாவும் சரித்திரத்தில் நற்றபங்கள் இதனை வைத்து ஆய்வுற்றுச் செயல்கொள்வாய் தமிழா உண்னை அழியாத நற்றடமாய் ஆக்கிக்கொள்வாய். ப
6a
of 2010

Page 7
கதிர்முகம்
மட்டக்களப்பு பரதகலாலயாவின் மாணவியான விசல்வி வகளதமி, சேவியரின் W பரதநாட்டிய அரங்கேற்றம் 29. வைகாசி 2010 அன்று மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பரத கலாலயா இயக்குனர் பரதகுடாமணி, நிருத்தியவாணி, நர்த்தன சித்தகி நாட்டிய கலாமணி, நிருத்திய பேரொளி முரீமதிசுபித்ரா கிருபாகரனின் நெறியாள்கையில் செல்வி கௌதமி தனது அரங்கேற்றத்தை 15* வயதில் மேடையேற்றினார்.
இவ் அரங்கேற்றத்திற்கு பிரதம விருந்தினராக சலங்கை நர்த்த
னாலயா (மதுரை) அதிபர் நடனக்கலாஜோதி, நாட்டியக் கலாபமயில்,
கலைநன்மணி திருமதி லீலா ஆறுமுகையா (நாராயணன்) கலந்துகொண்
டார். அத்துடன் கெளரவ விருந்தினராக கலைமாமணி பூரீமதி ஷோபனா
ரமேஷ் (சென்னை) கலந்துகொண்டு சிறப்பித்தார். இவர்களுடன் சிறப்பு
விருந்தினராக மட்டக்களப்பு மாநகர சபை மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் கலந்து கொண்டார். செல்வி கெளதமியின் பெற்றோர்களான திரு.திருமதி
02
saf 2010
 
 

சேவியர் அன்புடன் அனைவரையும் வரவேற்றனர். விழா மாலை 4.00 மணி யளவில் ஆரம்பமானது.
அரங்க பூஜையுடன் ஆரம்பமானது நிகழ்வு, புஷ்பாஞ்சலியுடன் கூடிய அலாரிப்பு ஜதீஸ்வர உருப்படிகளை சிறப்பாக ஆடி முடித்தார். அவ ரது நிருத்த பகுதிகளின் திறமை இங்கு வெளிப்பட்டது. பின்னர் இத னைத் தொடர்ந்து பூரீராமரின் மீது பாடப்பட்ட சப்தம் அரங்கேறியது. இவ் வுருப்படியே முதன் முதலில் பாவத்தை வெளிக்கொணரும் நிருத்திய பகுதி யாகும். அவர் அதனைச் சிறப்பாக ஆடினார். அதனைத் தொடர்ந்து வர்ணம் இடம்பெற்றது. அரங்கேற்றங்களுள் நடுநாயகமாகவும் அரங்காற்று |பவரின் முழுத் திறமையை வெளிக்கொணரும் உருப்படியாகவும் வர்ணம் விளங்குகிறது. நன்யாசி ராகத்தில் அமைந்த நீ அந்த மாயம் என்ற வர்ணத்தையை மிகவும் சிறப்பாகவும் அழகாகவும் ஆடினார். இவ் ஆடலில் அவரது பயிற்சி தென்பட்டது. நீண்டநேரம் ஆடும் உருப்படியாக அமைந்தா லும் களைக்காது ஆடி முடித்தார்.
அடுத்து ‘குயிலே'பதமும் அதனைத் தொடர்ந்து ஆண்டாள் திருப் பாவையும் இடம்பெற்றது. முழுக்க முழுக்க பாவத்தை மட்டும் அடிப்படை யாகக் கொண்ட உருப்படியில் சிறப்பாக தனது ஆடலை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து சிவபெருமான் மீது பாடப்பட்ட கீர்த்தனம் இடம்பெற் றது. வலிமையான கால்வீச்சுகளையும், தட்டுகளையும், தாண்டவங்க ளையும் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. கெளதமி மிகவும் சிறப்பாக தனது திறமையை வெளிக்காட்டினார் என்பதில் ஐயமில்லை. இறுதி உருப்படியான தில்லானாவுடன் மங்களத்துடன் நிறைவு செய்யப்பட்டது.
செல்வி. கெளதமி சேவியர் தனது குருவையும் பக்கவாத்தியக் கலைஞர்களையும் கெளரவித்தது சிறப்பம்சமாகும். பக்கவாத்திய கலை ஞர்களாக நட்டுவாங்கமும் நடன அமைப்பும் - பரதகுடாமணி (நாட்டிய கலாமணி, நிருத்திய பேரொளி) முநீமதிசுபித்ரா கிருபாகரன்; வயலின் - சங்கீதபூஷணம் திரு.ஜீவம் ஜோசப், மிருதங்கம் - லய இசைச்செல்வன் திரு.வேல்முருகுழுநீதரன்; பாட்டு - இசைக் கலைமாமணி சுந்தரநாதன் தேவகுமார்; இளங்கலைமாணி சியாமளாங்கி கருணாகரன் ஆகியோர் விருந்தளித்தனர்.
மொத்தத்தில் அம்மாலைவேளையில் எல்லோர் மனதிலும் கெளதமியின் அரங்க நிகழ்வு இடம்பிடித்தது எனலாம். ப
19ಣಾ

Page 8
கழக நூல்கள் கற்பமா?
கற்றல் என்ன கடினமா?
கழகக் கால மாந்தரைக்
86ITaxoT 6ñq5LIb 66èba)06DILITT?
பின்னை நூல்கள் பயில்கிறோம்!
வருமகிழ்ச்சி கொள்கிறோம்!
முன்னை நூலும் அறிவ தெம்
முழுமைக் கல்வி அல்லவா?
எட்டும் பத்தும் என்கிறார்!
எல்லாமே மூ வாறுதான்!
எட்டுத் தொகையும், பாட்டிலே
ஈரைந்தென்றும் சொல்கிறார்!
நற்றினை யாம் - குறுந்தெகை
நல்ல ஐங்குறுநூறு மாம் -
ஒத்த பதிற்றுப் பத்துடன் -
ஓங்கும் பரிபாடலும் -
கற்றறிந்தார் ஏத்திடும்
கலியும் - அகமும் - புறமுமே
முற்றும் எட்டுத் தொகை என
மொழிந்த வாறு கற்பமே!
தாமரைத்திவான்
2ళ్ల
முருகு பொரு நாறுடன் -
முல்லை - பாண் இரண்டுமாம்
பெருகு மதுரைக் காஞ்சியும்பீடுநெடுநல் வாடையும்
குறிஞ்சி - பட்டினப் பாலையும்.
ö D06) LaBLTUpGD!
அறிந்து பத்துப் பாட்டையும் ஆழமாகக் கற்பமே
பாட்டும் உரையும் பழகுவாய்
பயிலக் கேளச் செவிகளை ஓட்டைச் செவியென்றவ்வையார்
உரைத்த தெண்ணிய்பயிலுவோம்!
 

மோட்டார் சைக் கிளில் என் கணவர் பின்னால் நான்-நடுவில் எங்கள் மகள் அருந்த வச் செல்வி பயணம் போய்க் கொண்டிருந் தோம். பல வருடங்க ? ளுக்கு முந்திய அந்த நிகழ்வு என் நினைவுச் சுழற்சியில் குத் திட்டு நின்றது.
ርስርስርስርስርስ
அன்று காலையி லேயே வானம் மப்பும் மந்தாரமாயிருந்தது. அனறைககு என தங் கையின் புதுமனை புகு விழாவிற்குப் போகயிருந் ததால் என் கணவர் துரிதப் படுத்திக்கொண்டிருந்தார். டாரவளையிலிருந்து கேதீஸ்வரன் ஆத இன்னைக்கு காலயி பன்ணெண்டு மணியப்போல வர்றேன் லேயே மழவரும் போல இருக்கு, ! னிருக்கான் அவன வர்றநேரம் நாம் சொணங்காம பொரப்படு. அங்க வீட்டில இல்லாட்டி ஒரு மாதிரியா போய்ச்சேர ஒருமணி நேரம் ஒண் நெனச்சுக்குவான் ணரமணி நேரத்துக்கு மேல ஆகும். “போய்ட்டு சாப்டுட்டு பன்னெண்டு ரோட்டும் அவ்வளவு சரி இல்ல. எத் மணிக்குமுந்தி வந்திர ஏலுமா?” தன மணிக்கு வரச்சொல்லியிருக் காங்க?”
“பத்தரமணிக்கு மேலத்தான்”
“மொதல்ல போவமே. நான் அவ னுக்கு போன் பண்ணி சொல்றேன்”
அவர் மோட்டார் பைசிக்கிளில் “இப்ப பொரப்பட்டாத்தான் போய்ச் ஏதோ செய்துகொண்டிருக்க நான் வீட் சேர சரியாக இருக்கும் பொரப்படு. டில் சின்ன சின்ன வேலைகளைக் கவ பொரப்படு, அதோட இன்னைக்கு பணத்ணித்துடியிட்டு, வீட்டைப் خاطيا டிக்

Page 9
கொண்டு வந்தேன். அவர் பைசிக் கிளை ஸ்டார்ட் செய்து ‘ஏறு’ என்றார்.
“என் தங்கச்சிக்கும் ரெண்டு புள் ளங்களாச்சி” என்றபடி பைக்கில் ஏறி
னேன்.
அவர் ஸ்டார்ட்டை நிறுத்திவிட்டு !
என்னை உற்றுப்பார்த்தார்.
*குமுதா நீ சும்மா சும்மா இதயே சொல்லிக்கிட்டு மனசப் போட்டு கொழப் பிக்கிட்டு என்னையும் குத்திக்காட்
டிட்டு இருக்காத” என்றார் கண்டிப்
பான முகத்துடன்,
“நான் சும்மா ஒரு பேச்சுக்கு சொன் னேன் நீங்க போங்க” என்று நான் தணிவாகச் சொன்னதும் மறுபடியும் ஸ்டார்ட் பண்ணிப்போனார் போகை யில்,
“ரெண்டு மாசம் கழிச்சி இன்டியா போய் நல்ல ஒரு நர்ஸிங் ஹோமா பாத்து கன்சல்ட் பண்ணுவோம். இப்ப எவ்வளவோ புதுப்புது டெக்னிக் எல் லாம் வந்திருக்கு” என்று சொல்லிக் கொண்டு போனார்.
“ஆமா இப்ப என்னா பிரசண்ட் பண்ணப்போறிங்க. சொன்னமாதிரிசல் லியா குடுத்திரப் போறீங்களா?”
“இல்ல யோசிச்சுப்பாக்கக்குள்ள அது சரியில்லாத மாதிரி தெரிஞ்சிச்சி அதுனால மில்லேனியம் பர்னிச்சர்ல ஒரு டைனிங் டேபிள் செட்டுக்கு சல்லி
கட்டிட்டேன். பில்ல கவர்ல போட்டு குடுத்
“எவ்வளவு?” “பதினஞ்சாயிரம் ரூபா’
அவர் வாகனத்தின் வேகத்தை
அதிகரிக்கவே நான் அவர் தேளைப்
பற்றிக் கொண்டேன்.
என் கணவர் சொன்னது சரி ரொம்ப தூரம் நாட்டுக்குள் போகவேண்டி இருந் தது. பாதை குண்டும் குழியும், சேரும் சகதியுமாக இருந்தது. ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகியும் இன்னமும் நாங்
கள் போய்ச்சேரவில்லை. “இன்னும்
கொஞ்சம் தூரம்தான் இருக்கு” என்
றார் கணவர். அவர் வீடு கட்டிக்கொண்
டிருந்தபோது இரண்டு மூன்று முறை போய்வந்திருக்கின்றார். இந்தப் பகுதிக ளில் காணி கொஞ்சம் இலாபமாகக் கிடைக்கின்றது என்று கேள்வி
இப்போது நாங்கள் புதிதாகக் கொன் கிரீட் போடப்பட்டிருந்த, தனியார் தேயி லைத் தோட்டமொன்றை ஊடறுத்துச் செல்லும் பாதையொன்றில் சென்று கொண்டிருந்தோம். காலையில் மழைக் கோலமாக இருந்தாலும் இப்போது வெய்யில் உறைக் கத்தொடங்கியி ருந்தது. பாதையின் இரண்டு பக்கங்க ளிலும் கவனமாகப் பராமரிக்கப்பட்ட தேயிலைச் செடிகள் இடையிடையே இலாடாப்பு மரங்களும் அகன்றுயர்ந்த வாகை மரங்களும், நாலைந்து பெண் கள் கொழுந்து கிள்ளிக்கொண்டிருந் தார்கள். எல்லோருமே அறுபதிலிருந்து எழுபதுவரை மதிக்கக் கூடிய வயோதி பப் பெண்மணிகள் உழைத்து ஓடாகி,
திட்டா சரி அவன் டெலிவரி பண்ணி தோல்சுருங்கி முகம் கறுத்து எலும்பும்
ருவான்’
és 2010
தோலுமாக கண்கள் ஜீவனை இழந்து

இன்னமும் யாருக்காக உழைத்துக் சிறுமிக்கு ஐந்து - ஆறு வயதுக்கு கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் மேல் இருக்காது. சிவந்து ஒல்லியாக எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இருந்தாள். தலைமயிர் சுருண்டு பரட் அவர்களுக்கிடையில் ஒரு சிறுமி டையாக எண்ணெய்ப் பசையற்று s s T. காய்ந்திருந்தது. உடம்பில் அழுக்கு. - குழந்தை என்று சொல்லலாம் தன் &ો5િો நீங்கிப்ே னைவிட உயரமான இந்த தேயிலைச் பழைய, ಊಟLISLIC! பிெல் எடி இழித்துத் தன் ஒன்றை அணிந்திருந்தான் அதில் ேேளாடு,%; இதயத்திற்கு நடுவில் இரண்டு அப்பிள் ("ல்ே இே.ெ பழங்களும் பூக்கொத்தும் கொண்ட டிருந்தாள் டிசைன். சந்தோஷத்தையே கண்டிருக்க மாட்டாள் என்று நினைக்க வைக்கிற
“கொஞ்சம் நிறுத்துங்களேன்” என் முகத்தில் அமைந்திருந்த கரிய கண்க
றேன் என் கணவரிடம். ளில் அதீதமான ஒரு மினுமினுப்பு உத
歌 s s “ஏன் இப்ப என்னா ஒனக்கு? டுகள் இறுக்கமாக மூடியிருந்தன. என்றபடி ஒரு பத்துப் பதினைந்து “ஏம்மா இந்த புள்ளைக்கு எத்தனை
அடிபோய் ஒரு நிழலான இடத்தில் வயசு ஆகுது? கொழுந்தெடுக்க வச்சிக் நிறுத்தினார். கூடிய விரைவில் திரும்பி கிட்டிருக்கீங்க? ஸ்கூலுக்கு போடுறதில் விட வேண்டும் என்று அவர் சொல்லி லையா? இந்தக் கேள்விக்கு அவள் யிருந்தது என் ஞாபகத்தில் இருந்தது. முகத்தில் ஆச்சரியம் படர்ந்தது.
நான் இறங்கிப் போய் “யாரு “இசுக்கூலுக்குங்களா? இந்தப் புள் பம்மா இந்த புள்ள?” என்று கேட்டேன். ளங்களையா? யாருங்க போடுவாங்க?”
“யாங்கம்மா ஏன் பேத்தி தாங் என் கணவர் பைசிக்கிளில் உட் கம்மா” என்றபடி தேயிலைச் செடியை கார்ந்தபடி என்னை பொறுமையிழந்து விட்டு இரண்டடி முன்னுக்கு வந்தாள். பார்த்துக்கொண்டிருந்தார். பருத்த பருந்து அவள் தலையிலிருந்து “போர பேக்” ஒன்று வானில் வட்டமிட்டுப் பறந்து என்று பொதுவாகக் குறிக்கப்படும்; கொண்டிருப்பது இப்போது என் கண் சணல் நார்ப்பை தொங்கிக் கொண்டி டணில் பட்டது. ருந்தது. தேயிலைக் கொழுந்தின் பாரத் தினால் அவள் சற்று முன்னே குனிந்த ርስርስርስርስር`ዃ
படி இருந்தாள். ரெங்கம் es an w
ரங்கம்மாளின் மூன்றாவது மகள்
“ஏன் ரெங்கம்மா தொரயக் கண் தான் தர்ஷனி மொத்தம் ஏழு பிள்ளை டுக்கவா?” பின்னாலிருந்து ஒருத்தி களில் மூன்று ஆண்கள் நான்கு பெண் கேட்டதினால் அவளின் பெயரைத் கள். தர்ஷினியின் அண்ணாவும் அக்கா தெரிந்து கொள்ள முடிந்தது. வும் அவரவர் இஷ்டத்திற்கு திருமணம்
år 2010

Page 10
செய்து கொண்டார்கள். இரண்டு தம்பி களும் தங்கைகளும் படித்துக்கொண் டிருந்தார்கள். அப்பன் முத்துசாமி சரா சரி தோட்டத் தொழிலாளியாகக் குடித்து விட்டு தானுண்டு தன் வேலையுண்டு என்று குடும்ப நலனில் - குழந்தைக ளின் நல் வாழ்வில் அதிக அக்கறை யின்றி வாழ்ந்து வந்த ஒரு ஜடம்.
குடும்பக் கஷ்டத்தினால் தர்ஷினி பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டு ரெங்கம்மாளோடு கொழுந்தெ டுக்க மலையேறினாள். ஐந்து வருஷங் கள் தம்பி, தங்கைகளின் படிப்புக்கு, குடும்பச் செலவுகளுக்கு அவளுடைய உழைப்பு உதவியாக இருந்தது.
அப்போதுதான் வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் சேர்க்கும் மனோ கரன் அந்த தோட்டத்திற்கு வந்து சேர்ந் தான். அவன் ஸ்கூல், லயம், சுரேஷின் மச்சான், தர்ஷினியின் வயதொத்த இரண்டு மூன்று பேர் வெளிநாடு போன தும்தான் தர்ஷிணி மெல்ல அம்மா விடம் கேட்டாள்.
“அம்மாநானும் வெளியூர் போய்ட்டு வர்றேம்மா’.வீட்டுக் கஷ்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருந்தது. பிள்ளைகள் பெரிய வகுப்புக்களுக்குப் போக படிப்புக்கு கணிசமாக செலவ ழிந்து கொண்டிருந்தது. வயசுக்கு வந்த மூன்று பெண்கள் கல்யாணத்துக்கு காத் துக்கொண்டிருந்தார்கள். ரெங்கம்மா ளுக்கு “இளைப்பு நோயினால் அடிக் கடி மருந்தெடுக்க வேண்டியிருந்தது. எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்து விட்டு “சரி” என்று அனுமதி வழங்கி னாள் ரெங்கம்மாள்.
ဗြူး
(64af 2010
“அதுவும் படாதபாடு பட்டுத் தாங்க போச்சி படம் எடுக்க பாசுப் போட்டா எடுக்க, வூசா எடுக்க ஊசிப் போட கொழும்புக்கு ஆயிரம்தரம் போய்ட்டு வரன்னு கொஞ்சம் நஞ்சங் களா செலவு போச்சி? மொதப்ப யணம் சல்லிய வாங்கிக்கிட்டு ஏஜன் சிகாரன் ஏமாத்திப்புட்டான். சரி. இதுக்கு தலயெடுத்துட்டம். தோட்டத்துலயம் கேவலமா பேசுவாங்கன்னு இன் னொரு ஏஜன்சிக்காரணப் புடிச்சி எப்புடியோ அனுப்பிட்டங்க, நக நட்ட அடவு வச்சி, ஆடுமாடுகள வித்து கோழி ஒரு அம்பது கிட்ட வளத்தங்க அவ்வளவயும் வித்தன். எல்லாம் ஒரு அம்பதுணாயிரம் ரூபாகிட்ட போச்சு ஆனா சும்மா சொல்லக்கூடாதுங் கம்மா போன மரு மாசத்தில இருந்தே சல்லி அனுப்பிச்சுங்கம்மா. மூணாம் மாசம் ஆகிறதுக்குள்ள எல்லா கடன யும் அடச்சிட்டங்கம்மா.”
அவள் தலையிலிருந்த சணல் நார்ப்பையைத் தலையிலிருந்து இறக்கி தரையில் வைத்தாள் “வெத்தல போடு நீங்களாம்மா?” என பல்லைப் பார்த்த படி கேட்டாள். நான் வேண்டாமென தலையை அசைத்தேன். அவள் இடுப் பில் செருகி வைத்திருந்த பையை எடுத்து வெற்றிலை போட்டுக்கொண் டாள். “அம்மாவுங்களுக்கெல்லாம் வெத்தல போடுற பழக்கம் இருக்காது” என்று தனக்குத் தானே மெல்லிய குர லில் சொல்லிக் கொண்டாள்.
“ஏண்டி ரெங்கம்மா கதயில மாடு
மேயுறாப்புல இருக்கு இன்னைக்கும்

ஒனக்கு அரப்பேருதான்” என்றாள்! ரெங்கம்மாளைவிட வயது முதிர்ந்தவ ளாகத் தோற்றமளித்த ஒருத்தி அநா
கரிகமாக.
“சித்த இரு அங்கம்மாக்கா வந் துர்றேன்” என்று அவளுக்குச் சொன்ன ரெங்கம்மா வெற்றிலை எச்சிலை ඉO5;
பக்கமாகத் துப்பினாள்.
அந்தக் குழந்தை இதையொன்றை யும் கவனிக்காமல் ஒரு இயந்திரம் போல தேயிலைச்செடிகளைச் சுற்றித் தன் பிஞ்சுக்கைகளுக்கு அகப்படும்! தளிர்களைப் பறித்துத் தன் தோளில் தொங்கும் பையுள் போட்டுக்கொண்டி ருந்தாள்.
நான் குழந்தையைக் கவனிப்பது: தெரிந்ததும் அவள் பக்கம் திரும்பி, “செலுவி கவனம் முத்தின எல போட் டுராத” என்று எச்சரித்தாள்.
“நாலு வருஷங்க. நாலுவருஷம் எம் புள்ள வெளியூர்ல இருந்தா.மாசம் தவறுனாலும் சல்லி வர்றது தவறாது. அப்பனும் புள்ளங்களும் சேர்ந்து குடி யும் கும்மாளமா தின்னு ஆடி அழிச் சாங்க. நாலு வருஷம் கழிச்சி வரக் குள்ள தாங்க இப்படி வாயும் வயிறுமா வந்துட்டா. எந்தப் பாவியோ.”
ரெங்கம்மாளின் மங்கிய கண்க ளின் ஓரத்தில் ஈரம் கசிவதை அவதா னித்தேன். அவள் இருமத்தொடங்கி னாள். தொடர்ந்து சில விநாடிகள் இரு மிக்கொண்டிருந்தாள். இருமல் ஓய்ந் ததும் கஷ்டப்பட்டு மூச்சுவிட்டாள், !
aki 200
முச்சக்கரவண்டியொன்று அந்த வழியாகப் போகவே என் கணவர் பைசிக்கிளை சற்று அப்பால் எடுத்துச் சென்று பாதையின் ஓரமாக ஒரு வசதி யான இடத்தில் நிறுத்தினாள். நல்ல வேளை நான் பார்க்கையில் அவர் வேறு பக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.
“எளப்பு தாங்க இந்த பாழாப் போன எளப்பு வந்தாத்தாங்க தாங்க முடியல. அதோடதாங்க இத்தினி வரு ஷமா மல்லுக்கட்டிக்கிட்டு வாறேன்.
.ம்ம்ம்.அப்புறம்.தோட்டமெல் லாம் ஒரு மாதிரியா பேச ஆரம்பிச்சிட் டாங்க. நம்மாளுங்கல தெரியாதுங் களா..? கைல.னா வாயில.ங்கிறவ னுங்களுக்கு இது போதாதுங்களா? அண்ணன் தம்பி, அக்கா தங்கச்சி எல்லாம் கண்டு காய ஆரம்பிச்சிட் டாங்க. சொந்தக்காரங்க கண்டுங்கா ணாத மாதிரி இருந்தாய்ங்க. என் புள்ள மனசு பேதலிச்சிருச்சிங்க. ஏம் மவ வெளியூர்ல இருந்து அனுப்பின சல்லி யில எல்லா நாய்ங்களுக்கும் ஒதவி செஞ்சவங்கதாங்க நானு.
நன்னி கெட்ட நாய்ங்க நெஞ்சில வச்சித்தாங்க இருக்கேன். கெட்டுச் சீர ழிஞ்சாலும் என் புள்ளய எனக்கு வீச ஏலுங்களா?”
கண்ணிர் அவள் கண்களிலிருந்து இப்போது பொல பொலவென்று வடிந் தது. மூக்கைச் சிந்தியபடி உணர்ச்சிவ சப்பட்டு பேசிக்கொண்டு போனாள். தன் உள்ளத்தில் வைத்துப் புழுங்கு வதை யாரிடமாவது சொல்லியழ

Page 11
வேண்டுமென அவள் நெடுநாளாக
உசிரு போயிருச்சம்மா. உசுரு போயி
எதிர் பார்த்துக் காத்திருக்க வேண்டும். நான் வடிகாலாய் வந்ததனால் மடை திறந்து கொண்டது.
“செல்வி பொறந்தாங்க, தங்க விக் கிரகம் மாதிரி இருந்திச்சிங்க புள்ள.” அவள் பேச்சை நிறுத்திவிட்டு சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டி ருந்தாள் பழைய நினைவுகளில் இல யித்திருக்க வேண்டும்.
“.யப்பா சும்மா சொல்லக் கூடா துங்க எங்க புள்ளங்கவூட்டு அப்பன் உசிரோட இருக்கக்குள்ள எந்த நேர மும் கைலதாங்க தூக்கி வச்சிக்கிட்டு
ரிக்கு கொண்டு போகக்குள்ளேயே
அவள் மேலே பார்த்து கைகளி ரண்டையும் தூக்கிக் கொண்டிருந் தாள். கண்ணிர் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது.
g
. புள்ளைக்கு ஒரு வயசு கூட ஆகலிங்கம்மா பெரிய பயலும் பெரிய
புள்ளயும் எங்களுக்கிருக்கிற புள்ளங்க ளையே எங்களுக்கு பாத்துக்க ஏலாம இருக்கு இது வேறயானுட்டாங்க. மூணு வயசுவரைக்கும் ஏன் எளப்போடயே அல்லாடிக்கிட்டு வளர்த்தேன். அங்
கொஞ்சிக்கிட்டே இருப்பதுங்க புரி கிட்டு இங்கிட்டு வேலைக்கு போறது யம்னா அவ்வளவு புரியம். புள்ள னால ஒரு நாளு சின்னப்பய வூட்டுல
கெடச்ச கொஞ்சநாள்ல எம்மவளுக்கு நல்லா கொணமாறாட்டமாகி பயித்திய மாவே ஆயிருச்சிங்க. என்னடா செய் யிரதுன்னு மருந்து மாயம் செஞ்சிப் பாத்தாங்களா ஒண்ணுக்குமே கேக்க லிங்க. அப்புறம் ஆளுங்கெல்லாம் சொன்னாங்கனுட்டு கல்கடுவ ஆஸ் பத்திரியில பதினெட்டாம் வாட்டில கொண்டு போய்ட்டு நிப்பாட்டினங் களா கொணமாகி வந்து கொஞ்ச நாள் நல்லா தாங்க இருந்திச்சி.”
ரெங்கம்மாள் விம்மினாள்
“என்ன நெனச்சாளே. ஏது நெனச் சாளோ யாரும் ஏதும் சொன்னாங் களோ. திடீர்னு ஒருனா லாம்பெண் ணய தலவழிய ஊத்தி பத்தவச்சிக் கிட்டா. பக்கத்தில ஒருத்தருமே இல்ல.
வுட்டுட்டுப் போனேன். வேலவுட்டு வந்து பாத்தா புள்ள சோர்ந்து போய்ப் படுத்துக்கெடக்கு. ஏன்டான்னு கேட்டா புள்ளயா இது புள்ள? புள்ளன்னா சொல்ற பேச்சி கேக்கணும்னுட்டு என் . . s 8
கண்ணுமுன்னாலேயே ஓங்கி ஒதக்கி
றான். குடிச்சிருந்தான். அட போடா கூறு
கெட்ட முண்டம். ஓங் குடி சூர இந்த பச்சப்புள்ளக்கிட்ட காட்டாத நன்னி கெட்ட நாயேன்னு ஏன் ஆத்திரம் தீர ஏசுப்புட்டு. அவன் பொண்டாட்டி இல்
லிங்க அத்தன்னு என்னமோ சொல்ல
வந்தா அவளயும் நாக்கப் புடுங்கிட்டு சாவுற மாதிரி கேட்டுப்புட்டு புள்ளய
தூக்கிட்டு வந்துட்டேங்க அன்னையி
லிருந்து அந்த நாய்ங்க மொகத்துல நான் முழிக்கிறதே இல்ல. புள்ளய எங்க போனாலும் கூட்டிக்கிட்டே போயிரு
நல்லாவே எரிஞ்சிருச்சி. ஆசுபத்தி வேன். இப்ப கொழுந்தெடுக்கவும் பழக்
Eళ్ల és 2010

கிட்டேன் இன்னும்கொஞ்சகாலம்போன! “என்னம்மா சொன்னிங்க புள்ள கய்ய கால ஊனிப் பொழச்சிக்கும். வூட்டு பேரு?”நான் ரெங்கம்மாளிடம் எனககும கைகால எலாத காலததுல வினவினேன். கஞ்சி ஊத்தும்.
> அவள் கண்ணைத் துடைத்தபடி மனதிலிருந்த பாரத்தை இறக்கி “செல்விங்க முழுப்பேருஅருந்தவச் வைத்துவிட்டரெங்கம்மாள் s வென்று செல்வி” என்றாள். நான் கண்ணைத் பெருங்குரலிட்டு ط29کے ஆரம்பித்துவிட் துடைத்தபடி என் கணவருடன் பைசிக் டாள். சற்றுத் தொலைவில் கொழுந்தெதி ஏறினேன். டுத்துக் கொண்டிருந்த பெண்கள் திகைத் s r stee r is a துப் போய் என்ன செய்வதென்று தெரி தாழவாகப பறநது கிரீச்சிட்டுக் யாமல் பார்த்துக் கொண்டு நின்றார்கள் கொண்டிருந்த அந்தப் பருந்து இப் s & . . போது ஒரு மரக்கிளையில் அமர்ந்து நான் “அழுகாதீங்கம்மா. நாங்க தரையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந் இந்த புள்ளயக்கி எதாவது ஒதவி செய்
த றோம். அழுகாதீங்கம்மா. சொன்னா ğl கேளுங்க” என்று அவளைத் தேற்ற முயன்றேன். இப்போது பதினோரு வயதாகும், என் கணவர் அருகில் ஓடிவந்து மோட்டார் சைக்கிளில் என் கணவருக் “என்னா குமுதா இதெல்லாம்? யார் இந்த கும் எனக்கும் நடுவில் அமர்ந்திருக் அம்மா! தெரிஞ்சவங்களா? சொந்தக்கா கும் அருந்தவச்செல்வியுடன் எங்கே ரங்களா? என்னா நடந்திச்சி இங்ங்ன? போய்க் கொண்டிருக்கிறோம் என ஏன் இந்த அம்மா அழுகுது? என்னா நினைக்கிறீர்கள்? அவள் பாட்டியைப் சரி பிரச்சனையாயிருந்தா வரக்குள்ள பார்க்கத்தான். பாத்துக்குவோம். நேரத்துக்கு போக: க்கக் கள்ளாக வயகிலம் அர் வேணாமா? அங்க பாத்துக்கிட்டு இருப் இந்தத் த திலு a. அந்த ங்க நேரம் கழிச்சி போறது சரியில்ல” அம்மாள் யார் கையையும் எதிர்பாராது பாங்க நேரம து தானாக உழைத்துத்தான் சாப்பிட்டு எனறார. வருகிறார்.
. . . . . . நான் குழந்தையின் பக்கம் பார்த் ப் போய்க்கொண் க்கி தேன். அவள் ஒரு “ரோபோ மாதிரி நேளுேகு.ெ:::
8ğl. o கணவரைப் பார்த்து பரீட்சையில் இலங்கையிலேயே முதல் “போவங்க-வரக்குள்ள பாத்துக்கு மாணவியாகச் சித்தி பெற்றிருப்பதைத் வோம்” என்றேன் ஒருவித உறுதியு தன் பாட்டியிடம் தான் முதலில் சொல்ல டன். அவர் ஒன்றும் புரியாமல் விழித் வேண்டும் என்பதை எங்களுக்கு ஞாப துக்கொண்டிருந்தார். கப்படுத்தியூகே.அருந்தவிச்செல்விதான்.

Page 12
(செங்கதிரோன் ஆற்_ ༄༽
32:3.25eminimisoes - ܫ
یہی شدت:۔ ۳۔
@29ര
أر ) , , .கவிஞர் நீலாவணனின் “வேளாண்மை’க் காவியத்தின் தொடர்ச்சி( ܠ
*சுந்தரம்” என்று செல்லன்
சொன்னதும் குழந்தை காதில் மந்திரம் போலும் பேரை
மறுபடிச் சொல்ல அன்னம் கந்தரும் பொன்னம்மாவும்
கனகமும் அழகி மற்றும் வந்திருந் தாட்கள் எல்லாம்
வரிசையாய் வந்து சொன்னார்.
பார்வதிப் பெத்தா பேரை
பலதரம் சொல்லிப் பார்த்தாள். வேர் அவள் குடும்பத்தார்க்கு.
விழுதினாய் வந்த கொள்ளுப் பேரனின் பேரை எங்கும்
பெருமையாய்ச் சொல்லி சொல்லி ஊரெலாம் வந்தாள் ஓடி
உடம்பும்தான் களைத்துப் போனாள்.
ezá. 2010
 
 
 
 

செல்லனோ கடைக்குச் சென்று
*சில்க் கிலே வேட்டி சால்வை
நல்லதாய் தெரிந்து வாங்கி
நடையிலே ஓடி வந்து
*சொல்லியே வந்தாற்போல
கபநேரம் வந்தீர்” என்று
சொல்லியே நீட்டச் சாமி
“கந்தரம் வாழ்க’ என்றார்.
தட்டிலே வேறாய்ச் செல்லன்
தட்சணைக் காசை வைக்க எட்டியே எடுத்துச் சாமி
இடுப்பிலே செருகிக் கொண்டு கிட்டடிச் சொந்தக்காரர்
கிரமமாய் முன்னேவந்து வட்டமாய் அமரச் சொல்லி
வாழ்த்தியும் விபூதி தந்தார்.
“சாப்பிட்டுப் போகவேணும்
சாமியே” என்று செல்லன் கூப்பிட்டான் பெத்தா ஓடி
குசினிக்குள் இருந்து வந்து *ஏற்பாட்டைப் பண்ணிவிட்டோம்
எழும்புங்கள்” என்றாள். சாமி சாப்பிட்டார் மதியம் பின்னர்
சாய்ந்தரம் திரும்பிப் போனார்.
(இன்னும் விளையும்)

Page 13
முற்போக்கான சிறுகதைகள் படைத்த
ஏ.முருகானந்தனுக்கு
O இது மணிவிழா ஆண்டு
-IIITGOU860flவாகரை பிரதேசத்தில் வயலில் வேலை செய்துகொணர்டிருந்த விவசாயிகள் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டு, அவர்களது மணர்டை ஓடுகள் குவிந்து கிடந்த சம்பவத்தைக் கதையாக்கி, தாயகத்தில் வெளி யான ச.முருகானந்தனி அவர்களின் 'குரூரம்" சிறுக தையை வாசித்தபின்னர்என்மனதுஅதிலிருந்துவிடுபட
முடியாமல் தவித்தமை இப்பொழுது என் ஞாபகத்திலிருக்கிறது. அன்று முதல் சமுருகானந்தனின் வாசகனா கிவிட்ட நான் அவரது கதைகளை விரும்பிப் படிப்பேன்.போர்க்கால அவ லங்களை சிறுகதைகளாக்கியவர்க ளில் இவர் முக்கியமான பங்காற்றியி " ருக்கிறார்.
பின்நாளில் இவரோடு அறி முகமாகி, பழகும் வாய்ப்பும் கிட்டிய பின்னர் இவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டேன். பழக இனியவ ரான இவர், மனிதநேயம்மிக்க படைப ! பாளி மானுட அவலங்களையும் இடர் பாடுகளையும் மனச் சிக்கல்களை யும் கதைகளாக்கி, ஈழத்து சிறுக ! தைக்கு மெருகூட்டியர். தீபம், கனை யாழி காலத்திலிருந்தே இந்திய சஞ்சி கைகளிலும் எழுதியவர். இவ்வருடம் ஆண்டு அறுபது அகவையை எட்டி : யுள்ள இவர் இன்னமும் தொடர்ந்து எழுதி வருகின்றமை சிறப்பம்சமாகும் !
1950ம் ஆண்டு சண்முகம்
இராசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனாகப் பிறந்த இவரது மனைவி
2219ಣಾ?
(La 200
சந்திரகாந்தா முருகானந்தனும் ஓர் எழுத்தாளராவார். இவர் தனது ஆரம்பப் பாடசாலைக் கல்வியை கரணவாய் மணியகாரன் தோட்ட அமெரிக்கன் மிசன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரியிலும் உயர்தர வகுப்பை யாழ்ப் பாணம் இந்துக் கல்லூரியிலும், மருத் துவக் கல்வியை யாழ்ப்பாணப் பல்க லைக்கழக மருத்துவபீடத்திலும் பயின் றவர். நாட்டில் பல்வேறு பகுதியிலும் பணியாற்றியுள்ள இவர், தனது இறுதிக் கால 25 வருட சேவையை வன்னியில் பதிவு வைத்திய அதிகாரியாகப் பணி யாற்றியமை குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலத்திலிருந்தே போருக்குள்சிக்குண்டு சீரழிந்த வன்னி மணிணில் ஆழக் கால் பதித்து, அங்குள்ள ஏழை விவசாய மக் களின் தோழனாகவும், வழிகாட்டியாக வும், நோய்நொடி தீர்க்கும் அபிமான வைத்தியனாகவும் பணியாற்றினார். இக் காலகட்டத்தில் இவர்பெற்ற அனுபவங் கள் இவர் சேவையை மட்டுமன்றி, எழுத்தையும் பணிபடுத்தின. துன்பமும் துயரமும் வாழ்வில் தொடர்கதையாகிப் போன வன்னி மக்களில் ஒருவனாக வாழ்ந்து, அவர்களது துன்பத்தின் பங்
 
 
 
 
 
 

காளியுமாகி இவர் தரிசித்த பல அவ லங்கள் இவரது கதைகளிலும், கவி தைகளிலும் பதிவாகின. ஒரு பார்வை யாளனாக அன்றி பங்காளியாக நின்று இவர் படைத்த கதைகள் யதார்த்தத் தைப் பேசின. மனதைக் கசிந்து உருக வைத்தன. இவர் இதனால் அக்கால கட்டத்தில் விசாரணைகளுக்கு முகங்
கொடுத்தவர்.
டாக்டர் ச.முருகானந்தனர் ஒரு படைப்பாளி என்பதற்கு அப்பால், ! சமூக சேவகரும் கூட. செஞ்சிலுவைச் சங்க ஆளுனர் சபை உறுப்பினர், ! வடக்கு -கிழக்கு அபிவிருத்திப் புனர் வாழ்வு நிறுவனத் தலைவர், யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோ ரில்ல செயலாளர், கிளிநொச்சி தமிழ்ச் சங்கத் தலைவர் எனப் பல்வேறு அமைப்புக்களினூடாக பாதிக்கப்பட்ட, ! துயருற்ற மக்களுக்குச் சேவையாற்றிய வர். வன்னிப் பிரதேசத்தின் பின்தங்கிய சிறார்களின் கல்வி முன்னேற்றத்திற் காகவும் செயற்பட்ட இவர், வன்னி மக் களால் "வன்னேரிஐயா என அன்போடு அழைக்கப்பட்டு வந்தார். யாழ்ப்பா ணத்திலிருந்து பல லட்சம் மக்கள்: வன்னிக்கு இடம்பெயர்ந்து வந்த காலத்தில் இவர் ஆற்றிய பணிகள் இப்போதும் சிலரால் விதந்து கூறப்படு: வதுணர்டு. மருத்துவர்கள் தரித்திருந்து சேவையாற்றிட பின்னடித்த காலகட் டத்தில் வன்னியில் கால்நூற்றாண்டு காலம் பணியாற்றிய இவர் ஒய்வு பெற்று வந்தபோது, இம்மணினும், மக்களும் இவருக்கு மகத்தான பிரிவுப சார விழா எடுத்துச் சிறப்பித்தது.
முருகானந்தனின் எழுத்துல: கப் பிரவேசம் 1976ல் தினகரனில் எழு திய ‘கண்களின் வர்த்தைகள் தெரியாதோ? என்ற சிறுகதையுடன் ஆரம்பித்தது. ஆரம்பத்திலிருந்தே வேகமாகவும் காத் திரமாகவும் எழுத ஆரம்பித்த இவர்,
éSí 200
கைலாசபதி, வன்னியகுலம், சிவலிங்க ராஜா முதலான விமர்சகர்களின் பார் வையில் பட்டதைத் தொடர்ந்து இவர் பலராலும் அறியப்பட்டார். அன்றைய காலகட்டத்தில் தினகரன், 'ayssof', "சிந்தாமணி", "மூநாடு"மூமுரசு முதலான பத்திரிகைகளிலும்,"சுடர், "சிரித்தின்மல் லிகை" முதலான ஈழத்து சஞ்சிகைகளி லும் எழுதினார். அத்துடன் தமிழக சஞ் சிகைகளான "தாமரை, "தீபம்', 'வக்கலர், "சிகரம்", "கணையாழி"முதலான இந்திய சஞ்சிகைகளிலும், இவரது கதைகள் வெளியாகின. 'மீன் குஞ்சுகள் சென்னை இலக்கிய சிந்தனைப் பரிசு பெற்றபோது யார் இந்த ச.முருகானந்தன் என வியப்பை ஏற்படுத்தினார்.
மிக வேகமாக எழுதிவந்த இவரை, வணினி மணிணின் வேலைப் பழுவும், சமூகப் பணியும் சிலகாலம் எழுத்துலகில் அஞ்ஞாதவாசம்கொள்ள வைத்தது. அந்த 15 வருடங்களில் சுமார் பத்து சிறுகதைகளை மாத்திரமே படைத்தார். எனினும், புத்தாயிரமாணி டில் மறுபடி வேகமாக எழுத ஆரம்பித் தார். வெறும் சிறுகதை ஆசிரியராக அறியப்பட்டிருந்த இவர், கவிதை, விமர் சனம், நாவல், மருத்துவம் என பல துறைகளிலும் கால்பதித்து, பல்துறை எழுத்தாளரானார். இதுவரை 200க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவர் ஆறு சிறுகதைத் தொகுதிகளை யும, பலதுறை சாரநத ஏனைய ஆறு நூல்களையும் வெளியிட்டு வாசகர் மனதில் இடம்பிடித்தார்.
"மல்லிகை"யில் எழுத ஆரம் பித்த பின்னர் இவரது எழுத்துக்கள் காத்திரமானவையாக அமைந்தன. "மல்லிகை ஜீவாவை தனது குருவாக இவர் குறிப்பிடுவதுணர்டு.
எழுத ஆரம்பித்து 18 வருடங் களின் பின்னரே இவரது முதலாவது

Page 14
சிறுகதைத் தொகுதியான 'மீன் குஞ்சு கள் வெளியானது. இன்னொரு ஒன்பது வருட இடைவெளியின் பின்னரே இவ ரது இரணடாவது சிறுகதைத் தொகு தியான 'தரை மீன்கள் வெளியானது. மல்லிகைப் பந்தல் வெளியீடாக வந்த இந்நூல் இலங்கை அரசின் சாகித்திய விருதினைப் பெற்றுக்கொண்டது. போர் 1 அவலங்களைச் சித்தரித்து வன்னியில் வெளியிடப்பட்ட இத்தொகுதி, போரின் பல முகங்களைத் தரிசிக்க வைத்தது. பிரகலாத ஆனந்த் வன்னேரிஐயா, வண்ணியன் என்பன இவரது புனைப்பெயர்களாகும்
ஆரம்பத்தில் வறுமை, தொழி: லாளர் பிரச்சினை, சீதனக் கொடுமை, சாதியம், மனித மனச்சிக்கல்கள், !
காதலி, குடும்ப உறவுகள் என்பன இவரது சிறுகதைகளின் கருப்பொருளா கின. பின்னர் இன விடுதலைப் போராட் டமும், அதற்கெதிரான கொடுநாச யுத்தமும் அவரது கருப்பொருளாகின. ஒரு சமூகத்தில் படைக்கப்படும் இலக் கியமானது சமகால சம்பவங்கள் நிறைந்ததாவும், அவை அப்படியே உள்: ளத்தைத் தொடுவதாகவும், யதார்த் தத்தை சித்திரிப்பதாகவும், கருத்தா ளம் கொணர்டவையாகவும் இருக்க வேணர்டும் என்பதற்கமைய, டாக்டர் ச.முருகானந்தனின் படைப்புக்கள் அமைந்தன. சமகாலகட்டத்தின் சமூக பிற்போக்குத் தனங்களையும், முரணி பாடுகளையும் தகர்த்தெறிவதில் பணி யாற்றினார் என்பதற்கு அவரது சிறந்த சிறுகதைகள் ஆதாரமாக உள்ளன.
பேரினவாத அடக்குமுறை கள், இதன் விளைவாக ஏற்பட்ட வன் முறைகள், பாலியல் கொடுமைகள், ! கொலைகள், சிறைச்சாலைக் கொடு மைகள், பத்திரிகையாளர்களின் படு கொலைகள் என்பன ச.முருகானந்த னின் போர்க்கால சிறுகதைகளில் கருப்
a 2010
பொருட்களாகின. போரின் இலைக ளையும், கிளைகளையும் மட்டுமனிறி, வேரினையும் இவரது படைப்புக்கள் பகர்ந்தன. இவரது படைப்புக்களில் தமிழ்த் தேசியத்திற்கான ஆதரவுப் போக்கு இருப்பினும் அமைதியான தீர் வையே வலியுறுத்தின. இனவாத பேரி னவாதத்தைக் கணிடித்தவர். போராளி களின் ஒற்றுமையின்மை, சர்வதிகாரப் போக்கு என்பவற்றையும் கூட தனது படைப்புக்களில் தரிசனமாக்கியுள் ளமை இவரது நடுநிலைமையான பார் வையைக் காட்டுகின்றது. கூடவே, மணி வாசனைமிக்க படைப்புக்கள்.
இவரது போர்க்கால கதைக
aflað “earaol’, ‘Grebb foi uDafgaba’
"ஒருபிடி சோறு", "நெருப்பாறு", "அன்னை என்றொரு தெய்வம் முதலான பல கதை களைக் குறிப்பிடலாம். "நான் சாகமாட் கடன் என்ற இவரது சிறுகதை வெள்ளை வான் கடத்தல்களையும், பத்திரிகையா ளருக்கு எதிரான அராஜகத்தையும் படம்பிடித்துக் காட்டும் உருக்கமான கதையாகும்.
முருகானந்தனினி கதைக ளின் உத்தி, உள்ளடக்கம், உருவகப்ப டுத்தல் போன்றவற்றின் சிறப்பினைப் போலவே அவரது மொழிநடையும் குறிப்பிடத்தக்கதாகும். வடமராட்சி, வணினி, மலையகப் பிரதேச மொழி களை லாவகமாகக் கையாணர்டுள் ளார். இவரது சரளமான மொழியூற்று வாசகர்களை ஈர்க்கும் வல்லமையுடை
LK30.
முருகானந்தன் இதுவரை 12 நூல்களை வெளியிட்டுள்ளார். எயிட்ஸ் பற்றிய இவரது மருத்துவ நூல் வட மாகாண பணிபாட்டலுவல்கள் அமைச் சின் பரிசைப் பெற்றமையும் குறிப்பிடத் தக்கது.

முருகானந்தனின் நூல்கள்: சிறுகதைகள்
1) மீன் குஞ்சுகள் 2) தரை மீன்கள் 3) இது எங்கள் தேசம் 4) இனி வானம் வசப்படும் 5) ஒரு மணமகளைத் தேடி 6) நாம் பிறந்த மணி
"அவர்கள் துணிந்துவிட்டார்கள்" என்ற இவரது மலையக சிறுகதைக ளின் தொகுதி மணிவிழா ஆணர்டு ஞாபகமாக விரைவில் வெளிவரவுள் ளது.
குறுநாவல் லதாகுதிகள்: 1) அது ஒர் அழகிய நிலாக்காலம் 2) நெருப்பாறு
கவிதைத் தொகுதிகள்: 1) நீநடந்த பாதையிலே 2) துளிர்த்தெழும் புதுச்செடிகள்
மருத்துவக் கட்டுரைகள்: 1) நாளை நமதே
கல் பொறாமைப்பட்டது.
ஒலமிட்டது.
2) எயிட்ஸ் இல்லாத உலகம்
வரை 34
டாக்டர் ச.முருகானந்தன் இது தடவைகள் பரிசில்களும், விரு
துகளும் பெற்றுள்ளார். இவற்றில் ஏழு முதற்பரிசுகளாகும் அவற்றிற்சில.
1)
2)
3) 4)
5)
6)
I 7)
சென்னை இலக்கிய சிந்தனைப் பரிசு இலங்கை சாகித்திய மண்டல விருது வடமாகான சாகித்திய விருது
இலண்டன் பூபாள இராகங்கள் பரிசு மல்லிகை, ஞானம், சுடர், தமிழ்
அலை, ஈழநாதம், தினகரன், ஜீவ நதிநடாத்திய போட்டிகளில் பரிசு பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கப் பரிசு முத்தமிழ் விழா சிறுகதைப் போட்டி யில் பரிசு
அகவை அறுபதை நிறைவு
செய்யும் மணிவிழா ஆண்டில் டாக்டர்
ச.முருகானந்தனை “செங்கதிர் ஊடாக நாமும் வாழ்த்துவோம். ப
- நிறைவு - நகைக்கடைக் கண்ணாடிப் பெட்டியில் கண்ணைப் பறித்த இரத்தினக் கல்லைப் பார்த்துத் தெருவில் கிடந்த குறுணிக்
'எனக்கு ஏன் மதிப்பில்லை? நானும் ஒரு கல்தானே. என்று 6
தெருவோரத்தில் கிடந்த கடப்பாரை கூறியது:-
"ஏ குறுணி காலம் முழுதும் உன்னை நீயே பெரிதாக எண்ணிக் கொண்டு பலரும் பார்க்கத் தெருவில் கிடக்கிறாய். ஆனால், இரத்தினக்கல் அப்படியா? நிறைந்து வளர்ந்து இரத்தினமாகும் வரை வெளியில் தலையே காட்டாத அது, *3 எங்கோ மண்ணில் மறைவில் தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டிருந்தது "அப்படியென்றால்.?" என்று இழுத்தது குறுணிக்கல்.
கடப்பாரை சொன்னது:- நன்றி: )நிறைவாகும் வரை மறைவாக இரு". *காசி ஆனந்தன் கதைகள் ܢܠ
25ஜ்
ésű 2010

Page 15


Page 16
நகர் பெற்ற வேந்தர். அப்பா பெயர் குமாரசுவாமி, அம்மா சிவகாமி. ஒரு சகோதரி. ஒன்றியான வாழ்வு - அதாவது திருமணமே இல்லை. பிறந்தது 15.07.1903, படித்தது ஆரம்பப் பாட சாலை சத்வா வித்தியாசாலை. 1914ல் பதினொரு வயதில் படிப்பை நிறுத்திவிட்டு உறவினர் ஒருவரின் கடையில் எடுபிடியானார். காங்கிரஸ் கூட்டங்களின் ஏற்பாட்டாளராக இவர் ஈடு பட்டதால் அந்த வேலை பறிபோனது பதினாறாவது வயதில் தீரர் சத்தியமூர்த்தியை சந்திக்க நேர்ந்தது. அப்புறம் அவரது அடிப்பொடியாக மாறினார். சத்தியமூர்த்தியுடன் இடைவிடாது தொடர்ந்ததால் அகில இந்திய தலைவர்கள் அறிமுகமானார்கள். கனமான உழைப்பைக் கண்ட மகாத்மா இவரைத் தன்னுடன் வருமாறு அழைத்தும் இவர் சத்தியமூர்த்தியை விட்டு அகல விரும்பவில்லை. இவரை வைத்தேசத்தியமூர்த்தி தமிழ்நாட்டில் காங்கிரசைக் கட்டியெழுப்பினார். நேரு குடும்பத்துக்கும் நெருக்கமானார். சத்தியமூர்த்திக்கும் இராஜா ஜிக்கும் தமிழ்நாட்டில் காங்கிரசுள் கருத்து மோதல்கள் உருவானபோது இவர் சத்தியமூர்த்தி பக்கமே சார்ந்துநின்றார். “தமிழ் நாட்டில் ராஜாஜிக்கு எதிராக ஒரு “கிளிக்’ இயங்குகிறது” என மகாத்மா குறிப்பிட்டதை எதிர்த்து போர்க்கொடி தூக்கினார் காமராஜர். மகாத்மாவே நேரில் அழைத்துச் சமாதானப்படுத்தும் நிலைக்கு காமராஜர் உயர்ந்தார். 1930களில் ராஜாஜி தலமையில் நடந்த வேதாரிணியம் உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றதால் அலிப்பூர் சிறையில் இரண்டு ஆண்டுகள் கழிக்க நேர்ந்தது. அப்போது வயது 27. அப்புறம் கல்கத்தா சிறையில் இரண்டு வருடங்கள். அது 31வது வயதில் நடந்தது. 1940ல் ‘வார்தா’ சத்தியாக் கிரகத்தில் பங்கேற்றதால் 9 மாதங்கள் வேலூரில் சிறைவாசம். அப்போது இவர் விருதுநகர் நகராட்சியின் தலைவர். 1942ல் மீண்டும் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். 1952 - 1954 டெல்லி பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். மீண்டும் 1967 - 1975 வரை பாராளுமன்றத்தில் உறுப்பினராகப் பணியாற்றியிருக்கிறார். 1954ல் இருந்து 1963 வரை தமிழகத்தின் முதலமைச்சராகப் பணியாற்றிய காலம் தமிழகத்தின் பொற்காலம் எனலாம்.
இவர் காலத்திலேயே மாணவர்க்கு இலவசக் கல்வித் திட்டமும், மதிய உணவுத் திட்டமும் வந்தன. 180 நாட்களக இருந்த வேலை நாட்களை 200 ஆக உயர்த்தினர். இவரது காலமே தமிழகத்தின் கற்றோர் விகிதம் 7% இருந்து 37% ஆனது. ஒரு நாள் வண்டியில் போய்க்கொண்டிருக்கிறார். ஒரு கிராமத்தைக் கடந்தபோது காட்சியொன்றைக் காணநேர்ந்தது. மர நிழலில் சிறுவன் ஒருவன் புத்தகமொன்றை வைத்துக்கொண்டு உரக்கப் படித்துக்கொண்டிருந்தான். அவனைச் சுற்றி மந்தைகள் மேய்ச்சலில் இருந்தன. இவர் வண்டியை நிறுத்தி இறங்கிப் போனார். அந்தச் சிறுவனை அழைத்தார். “ஏன் பாடசாலைக்குச் செல்லவில்லை” என்றார். “ஐயா, எனக்கு அப்பா இல்லை. அம்மா மாத்திரம்தான். அம்மா வேலைக்குப் போயிட்டா. இன்று காலை எனக்கு உணவு இல்லை. இரவுதான் உண்ண உணவு கிடைக்கும். பாடசாலை போவதானால் மதிய உணவு இல்லை. அதனால் அம்மா மாடு மேய்க்கப் போகச் சொன்னர்” அந்தப் பதில் இவரை உலுக்கியது. கண்களைப் பணிக்க வைத்தது. அவசரமாக அலுவலகம் திரும்பியவர் மறுநாளே உத்தரவை அமுல்படுத்தினர். மதிய உணவு மாணவர்க்கு கிடைத்த வரலாறு இதுதான். தன்னைப் போலவே ஏழையாகவும்

தொண்டனாகவும் இருந்த திருகக்கனை கல்வி அமைச்சராக்கினர். தொழில் துறையை வழிநடத்த வெங்கட்ராமனையும் (இவரே பிற்காலத்தில் இந்தியக் குடியரசுத் தலைவராக ஆனவர்) பொதுப்பணித் துறையைபூவராகவனிடமும் நிதியை சிகப்பிரமணியத்திடமும் (இவர் பிற்காலத்தில் இந்தியாவின் நிதியமைச்சர் ஆனவர்) அளித்து ஆட்சிநடத்தினர். ராஜா ஜியின் குலக்கல்விமுறையைக் குழிதோண்டிப் புதைத்துமூடப்பட்ட 6000 பாடசாலைகளை மீண்டும் திறந்துவிட்டவர் காமராஜர். சமத்துவத்தை தமிழகத்தில் செயலில் காட்டி ஆட்சி நடத்தினார் காமராஜர்.
இவர் ஆட்சியின் போது, ஒரு உயர் அதிகாரி பற்றி அரசியல் வாதிகளிடமிருந்து அடிக்கடி புகார் வந்துகொண்டிருந்தது. ஆனால் மக்களிடமிருந்து அந்த அதிகாரி பற்றி நல்ல செய்திகளே வந்தன. ஒருமுறை திடீர் என அந்த அதிகாரியின் வீட்டினுள் நுழைந்தார் இவர். அதிகாரி வீட்டில் இருக்கவில்லை. முதல்வரின் வருகை கண்டு அந்த வீட்டிலிருந்த அனைவரும் அதிர்ந்து போயினர். இவரோ சாவதானமாக அந்த அதிகாரியின் மனைவியிடம் மோர் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டுப் புறப்பட்டுப் போனர். அந்த வீட்டின் தோற்றம், அங்கிருந்த பாவனைப் பொருட்கள், அவர் துணைவியார் நடந்து கொண்ட விதம், அவரது குழந்தைகள் கல்வி பயிலும் பாடசாலை எல்லாவற்றையும் மனதுள் கணக்குப் போட்டுக் கொண்டார் இவர். இவரது மனத்துள் ஏதோ ஒரு சலனம். கோட்டைக்குத் திரும்பியவர் அதிரடியாக அந்த அதிகாரியைப் பதவி உயர்வு செய்து அறிவித்தார். அப்புறம் அந்த அரசியல்வாதிகள் அடங்கிப்போனர்கள்.
ஆறுமாதங்கட்கு ஒருமுறை தன் அன்னையைப் பார்க்கப் போவார். அப்படி ஒரு முறை போனபோது அந்த இல்லத்துள் புதிதாக ஒரு குடிநீர்க் குழாய் பொருத்தப்பட்டி ருப்பதைப் பார்த்தார். “அம்மா எப்படீம்மா இது.?” என்றார். அவர் சொன்னர்; “நீ அனுப்பும் 120/= ரூபாயில் 13/= ரூபா நீருக்கு வரியாகிப் போகிறது. யாரோ ஊர்ப்பெரியவங்கபஞ்சாயத் துக்காரங்க என்று வந்தாங்க. நான் எவ்வளவு சொல்லியும் இதைப் பொருத்திவிட்டுப் போயிட் டாங்கபோ” என்றார் அம்மா! “இந்தக் குழாய்க்கு எவ்வளவு கட்டணம் கொடுத்தாய்?” என்றார் இவர். “கட்டணம் என்று எதுவும் இல்லை. அரசாங்கம் கொடுத்தது என்னங்க” என்றார் அம்மா. இவரோ அதிகாரிகளை அழைத்துக் கடிந்துகொண்டார். மறுநாள் குடி நீர்க்குழாய் கழற்றப்பட்டுவிட்டது. இவருக்கு ஒரு தங்கை. அவர் விதவை இரண்டு மக்கள் அந்தத் தங்கைக்கு ஒருவன் வேலையில்லாமல் இருந்தான். “தங்கச்சி மகன்தானே ஒரு வேலை போட்டுக் கொடேன்’ எனத் தாயார் கேட்டார். இவரோ மறுத்துவிட்டுச் சொன்னர், அதெல்லாம் முடியாது. அவன் திறமையை வைத்து அவனே சம்பாதித்துக்கொள்ள வேண்டும்” என்று. “ரேசன் அரிசி சாப்பிடமுடிவதில்லை, நெல்லு வாங்கப் பணம் போதவில்லை. 120/= விடக் கொஞ்சம் கூட்டித் தரக்கூடாதா” என்றார் அம்மா. “நெல்லு எல்லாம் வேண்டாம். ஊருக்கு எல்லாம் ஒண்ணு, நமக்கு வேறொண்ணா” என்றார் இவர். அம்மா அப்புறம் பேசவில்லை. சலுகை என்பதைத் தன் பதவிக்காலத்தில் எந்த இடத்திலும் அனுமதிக்கவோ அனுபவிக்கவோ இல்லை இந்த மனிதர்.
2919ಣಾ
és 2010

Page 17
இவர் ஆட்சிக்கு வந்தபோது கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர் சிறையில் அடைக் கப்பட்டிருந்தார்கள். சிலர் தலைமறைவாக இருந்தார்கள். அப்படி இருந்தவர்களில் இவரது அன்புக்கினிய ஏழைப்பங்காளர் ப.ஜீவானந்தமும் ஒருவர். மாநிலத்துள் கம்யூனிஸ்டுகள் மேல் இருந்த தடை அகற்றப்பட்டது. காங்கிரசுக்கு உள்ளேயே எதிர்ப்புக்கள் கிளம்பின.எதையுமே இவர் சட்டை செய்யவில்லை. இலக்கிய மேடைகளில் ஜீவாவின் குரல் மீண்டும் கேட்ட தையும், ஏழைகட்காகவும் தொழிலாளர்களுக்காகவும் அவர் வாதாடத் தொடங்கியதையும் அவரது குடிசைக்குப் போயே வாழ்த்தினர் இவர் தடைசெய்யப்பட்ட நூல்கள் வெளிவந்தன. நாவல்கள் அச்சேறின. ஜீவா தமிழில் மொழிபெயர்த்த பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ என்ற நூலும் இதில் அடங்கும். நவசக்தி மீண்டும் வெளிவரத் தொடங்கியது.
கல்வித்துறைக்கும், தொழில்துறைக்கும் கூடுதல் ஒதுக்கீடுகள் இவர் காலத்தில் இருந்தமையால் நிதித்துறையில் சில சிக்கல்கள் ஏற்படத்தான் செய்தன. ராஜாஜி காலத்தில் இந்தியாவிலேயே முதல் முதலில் மதுவிலக்கு தமிழ்நாட்டில்தான் அமுல்படுத்தப்பட்டிருந்தது. அதை வாபஸ் பெற்றால் பெருமளவு வருமானம் கஜானாவுக்குள் சேரும் என்று இவருக்கு ஆலோசனை சொல்லப்பட்டது. “மது அரக்கனை வாழவைத்துத் தான் எனது ஆட்சி நீடிக்குமென்றால், நான் மீண்டும் போய் விருதுநகர் திண்ணையில் முடங்கிக் கொள்வேனே தவிர அந்த முட்டாள்தனமான காரியத்தைச் செய்யமாட்டேன்’ என்றார் இவர். அரசின் வருமானத்தைப் பெருக்க குடிசைக் கைத்தொழில், சிறு கைத்தொழில் பண்ணைகள் என வங்கி மூலம் கடன் வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தினர். 6000க்கும் மேலான பின்தங்கிய கிராமங்கட்கு விவசாயத்திற்கான மின்சாரம் கிடைத்தது. தமிழ்நாட்டின் தேவைபோக அரிசியும், சோளமும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றப்பட்டன. இந்த வகையில் காமராஜரின் தொழில்துறை வளத்தை வளர்த்தெடுத்தவர் வெங்கட்ராமன் என்பதை மறுக்கமுடியாது. குருவுக்கேற்ற சீடனான வெங்கட்ராமனை நன்கு பயன்படுத்தினார் இவர். மணிமுத்தாறு திட்டம், வைகை மேம்பாட்டுத் திட்டம், அலியாறு திட்டம், பந்தனூர் மற்றும் கிருஷ்ணகிரி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது வளர்ச்சிபெற்ற மாநிலமானது. பல வெளியார் முதலீடுகள் தமிழ்நாட்டில் ஏற்பட வெங்கட்ராமனை நன்கு பயன்படுத்தினார் காமராஜர். நெய்வேலி அணுமின் நிலையம், மணலி சுத்திகரிப்பு ஆலை, பேரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை என்பன அந்த நாட்களில் எழுந்தவைதான்.
இந்த நாட்களில்தான் நேருவின் மறைவு நேர்ந்தது. காமராஜர் காங்கிரசைக் காப்பாற்ற டெல்லியில் பணியாற்றவேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. காமராஜர் முதலமைச்சர் பொறுப்பை பக்தவக்சலம் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு அகில இந்தியக் காங்கிரசின் தலைமைப் பொறுப்பை ஏற்க டெல்லி போனார். காங்கிரசையும் ஆட்சியையும் இவர் காப்பாற்றினார் என அன்றைய சூழ்நிலை ஆய்வாளர்கள் சொன்னார்கள். ஐந்து அடி உயரமும் ஆற்றலுமுள்ள லால்பகதூர் சாஸ்திரி இந்தியாவின் பிரதமராக வர உதவினார் காமராஜர் - அல்ல உயர்த்தினார் காமராஜர். சாஸ்திரி அப்பழுக்கற்ற அரசியல்வாதி. ஆனால் நீண்டநாட்கள் ஆட்சி நடத்தவில்லை. ரஷ்யா விஜயத்தின்போது அகால மரண
5E 2OO

மேற்பட்டது. மீண்டும் இந்தியா சோதனைக்குள்ளானது மீண்டும் இன்னொரு பிரதமரை உருவாக்கும் பொறுப்பு இவர்மேல் விழுந்தது போட்டிகளும், பூசல்களும், வல்லரசுகளின் தலையீடுகளும், வலைவிரிப்புகளுமான நேரத்தில் இவரது “கிங்மேக்கர்’ மூளை வெற்றிகர மாகச் செயற்பட்டது போட்டிகளைத் தவிர்த்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமானால் நேரு குடும்பமே மீண்டும் இந்தியாவை ஆள வேண்டுமென எண்ணினர் இவர். இந்திரா காந்தியை அதற்கான தெரிவாக்கினார். அதன் பலன் போட்டியின்றி இந்திராகாந்தி பிரத மரானார். அதுவே இந்திராதான் இந்தியா இந்தியாதான் இந்திரா என்ற நிலயை உருவாக் கிற்று. ஒரு பெரிய சோதனை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
எனினும் சூழ்நிலை வேறுவிதமாக மாறத்தொடங்கியது. இந்திரா சர்வாதிகாரப் போக்கை மேற்கொண்டார். ஏறிய ஏணியே எட்டி உதைக்கப்பட்டது. பழைய தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். இவரையும் அவர் புறக்கணித்தார். முடிவு காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது. இந்திரா காங்கிரஸ் என்றும், பழைய காங்கிரஸ் என்றுமானது மனமுடைந்து போன காமராஜர் சென்னை திரும்பினர். எனினும் இவர் இருக்கும் வரை இந்திரா காங்கிரஸ் தமிழ் நாட்டில் வேரூன்றவில்லை என்பதுதான் வரலாறு
1967ல் சட்ட மன்றத்தேர்தலில் தனது விருதுநகர் தொகுதியிலேயே ஒரு பல்க லைக்கழக மாணவனால் தோற்கடிக்கப்பட்டார். தி.மு.க அமோக வெற்றி பெற்றது. இவரது தொகுதிக்குள் ‘அண்ணா' பிரசாரம் செய்ய மறுத்திருந்தார். ராஜாஜியும் கலைஞருமே மும் முரமாகப் பிரசாரம் செய்தனர். முடிவு அண்ணாவால் தாங்கமுடியாமல் இருந்தது ஒருநாள் முழுதும் எவருடனும் பேசாமல் இவரைத் தோற்கடிக்கலாமா? எனப்புலம்பினராம் அண்ணா. பெரியார் ஈ.வெ.ரா வோ நன்றி கெட்ட தமிழன்” என்று திட்டினராம். ஆனால் இவரோ, “தேர்தல் என்றால் அப்படித்தானுங்க. - வெற்றிவரும் - தோல்வி வரும் அதற்காற்காக அலட்டிக் கொள்ளலாமுங்கள.” என்றிருக்கிறார். அதன்பின் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றியுடன் லோக சபைக்குத் தெரிவானார். அண்ணா ஆட்சி அமைத்தபோது முதலில் பெரியாரையும் அதன்பின் இவரையும் தேடிப்போய் ஆசிபெற்றார். அதன்பின் இவருக்கு சிலை யும் வைத்தார்.
1975ல் இந்திராவால் அவசரகாலச் சட்டம் அமுலாக்கப்பட்டு அரசியல்வாதிகளும், தொழிற்சங்கவாதிகளும் பழிவாங்கப்பட்டனர். பலர் காணாமற்போயினர். தி.மு.க எம்பியான சிட்டிபாபு சிறையிலேயே அடித்துக்கொல்லப்பட்டார். வேலை நிறுத்த அறிவிப்புக்கொடுத்த 7 1/2 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட இந்திய புகைவண்டி ஊழியர் சங்கம் தடை செய்யப்பட்டது. அதன் தலைவர் ஜோர்ஜ் பெர்னாண்டசை கண்ட இடத்தில் கட்டுத்தள்ளு மாறு உத்தரவு இடப்பட்டது. பெர்னாண்டஸ் தமிழ்நாடுமூலம் நாட்டை விட்டுத்தப்பி ஓடி விட்டார். காமராஜர் கலங்கிப் போனார். தான் உருவாக்கியதை தன் கண்முன்னே சிதைத்த இந்திராவை காரமாக விமர்சித்தார். இவரது உடல் நிலையும் பலமிழந்தது.
தன் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் இரவு பகல் பாராது உழைத்த உடலும்
छiी

Page 18
மனதும் உற்சாகமற்றுப் போயின. 02.10.1975ல் - அதாவது மகாத்மா காந்தி இறந்த நாளில் இந்த மாமனிதரும் அமரானார். படிக்காத மேதை” எனப் பலராலும் போற்றப்பட்ட பெருந் தலைவர் தன் மண்ணைவிட்டுப் புறப்பட்டுவிட்டார். அதன்பின் 1976ல் ‘பாரத ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டது.
“ஆட்சி செய்வோர் தம் செயலில் அப்பளுக்கற்ற தூயராதல் வேண்டும். ஒருவன் தன்னைப் பெற்ற தாயே பசியில் வாடக்கண்டினும் அதைக்காரணமாகக் காட்டி பழிதூற்றும் செயல்களைச் செய்யாது தவிர்த்தல் வேண்டும்” என வள்ளுவம் சொல்லி இருக்கிறது.
இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு மனிதர் நம்மிடை வாழ்ந்திருக்கிறார் என்பதே வியப்பானதுதான். இதோ குறளின் குரலில் பார்ப்போம்.
“என்றாள் பசி காண்பா னாயினும் வசய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை”
(குறள்:656 - 'வினைத்தூய்மை) பூங்காவனம்
2OO (8ıD €ô8ubb — O கலை இலக்கிய சமூக சஞ்சிகை Best Queen Foundation 66Grfluffs
அறிமுகவிழா 30.05.2010 அன்று இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் (காப்பாளர் - உலகத் தமிழ் சிற்றிதழ்கள் சங்க இலங்கைக் கிளை)
dgyp6oit6ofl6Ob6ouilsib (8JJITöf9Jfuujjr aFLIIIr.6hs3uuJJIrafIr துணைத்தலைவர் - விகாழும்புச் சங்கம்) தலை மையில்"விநோதன்'மண்பத்தில்நடைவபற்றது.
தொடர்புகளுக்கு :
“Poongavanam”
21E, Sri Dharmapala Road,
Mount Lavinia,
Sri Lanka.
E-mail : bestqueen 12Gyahoo.com
Webside : www.bestqueen 12.blogspot.com
Phone : 0094 (0) 77 5009 222 0094 (0) 719 200 580
as and
 
 
 

ਛ। finar
சித்தாண்டி தலபுராணம் பாழய அமரர் இலக்கியமணி
ஆரையூர் நல்.அளகேச முதலியார்
கிழக்கிலங்கையின் தவப்புதல்வன், முத்த" மிழ் வித்தகர் விபுலானந்தர் காலத்தில் மட்டக்களப் பில் ஏற்பட்ட தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியும், அதன் காரணகர்த்தாக்களாகிய வித்துவான் சபூபால பிள்ளை, தேசிகமணி அருணாசலம், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை முதலிய தமிழறிஞர்களும், புதியதோர் தமிழ் இலக்கிய பரம்பரை தோன்று வதற்கு உந்துசக்தியாகவும், உறுதுணையாகவும் அமைந்தன.
அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி பண்டிதர் மகாவித்துவான் வி.சி.கந்தையா, மகா வித்துவான் FXC.நடராசா, வித்துவான் சா.இ.கமல நாதன், இலக்கியமணி கலாநிதி க.தா.செல்வராசகோபால், வித்துவான் க.செபரெத்தினம் முதலியவர்கள் மட்டக்களப்பில் அரிய தமிழ்ப்பணி புரிந் தனர். அருகிவரும் இத் தமிழ்ப்பரம்பரை, அறுந்துபோகாமல், அங்கொன்றும், இங்கொன்றுமாக, இலைமறைகாயாக இருந்து தமிழ் இலக்கிய மரபைப் பேணிக்காத்த தமிழ்ப்புலவர்களுள் ஆரையம்பதி நல்.அளகேச முதலியார் முக்கியமானவர்.
தமிழ்த் தாய்க் காவியம், சித்தாண்டித் தலபுராணம், கந்த விரத அம் மானை, ஆரையூர்க் கோவை முதலிய அருமையான நூல்களை இயற்றியவர். மற்றும் அச்சேறாத நூற்றுக்கணக்கான, தனிப்பாடல்களைத் தொகுத்தும், தனது இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்தியவர் அமரர் ஆரையூர் நல்.அளகேச முதலியார்.
மட்/அரசாங்க அதிபரைத் தலைவராகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப் பேரவை விருது வழங்கும் நடைமுறையை ஆரம்பித்த போது, அதன் முதல் "இலக்கியமணி” விருதைப் பெற்றவர் இவர்.
திருநீலகண்ட நாயனாரை நினைவூட்டும், தோற்றப்பொலிவுடன் நீறணிந்த நெற்றியராய், தமிழ்த்தேசிய உடையில், எந்நேரமும் சிவப்பழமாகக் காட்சிதரும் அளகேசமுதலியார், வாய் திறந்தால் தமிழருவி கொட்டும். தமிழ் இலக்கியக் கடலில் முக்குளித்து சைவத் திருமுறைகளில் தோய்ந்து, எந்
వాణిజ్జా

Page 19
நேரமும் தமிழ் இலக்கிய சிந்தனையில் மூழ்கியிருப்பதால், நினைத்த மாத்தி ரத்தே செஞ்சொற் கவிதைகளை யாத்து நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்தவல்ல வர் இவர்.
பழந்தமிழ்ப் புலவர்களை நினைவூட்டும் வகையில் அவர் யாத்துள்ள செய்யுட்கள் யாவும் சொற்சுவை, பொருட்சுவை, அணிநயம் நிறைந்து, படிப்போர் உள்ளத்தைப் பரவசமூட்டுவனவாகும்.
புலவர்மனி போற்றும் புலமை :
புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் இவரது கவிதை
களைப் படித்துப் புளகாங்கிதமடைந்து பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
வசந்தமிழைச் லசந்தமிழ்க்காய்த்தினமும் கற்போன் லசந்தமிழைக்கற்றோர் தம்பால் வந்தனையும் உபசாரமதிப்புமுள்ளேன்
கூலவாணிகனார்னழம் வந்தனையோன்,வாணிபத்தால், உழவதனால்
வாழ்க்கை வளம்செய்வோம், தெய்வ சிந்தனைசேர்ஆரையூர் அளகேச
முதலிபண்பாடுடையவசம்மல்
"கூலவாணிகன் வந்தனையோன்" எனப் புலவர்மணியே, கூறும் அளவுக்கு இவருடைய செய்யுட்கள், பழந்தமிழ்ப் புலவர் பாணியில் அமைந்துள்ளமை ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. புலவர்மணியே மீண்டும் இவரது புலமையைப் பின்வருமாறு போற்றுகிறார். s
லதள்ளமுதஊற்றெனவேதித்தித்துத்
துளும்புதமிழ்ச் வசல்வம் நல்கும் உள்ளுவதாறும் உள்ளன்பு லயருக்குமுனர் வளிக்குமுளம் உருகும் மேன்மை விள்ளுமுயர்திருக்கந்த விரதமான்
மியவறவர்க்கும் விளங்கச்செய்யும் அள்ளுமழலகாழுகுநடை அனகேச
முதலிகவிஅமிர்தமம்மா.
புலவர்மணி மட்டுமல்லாது மகாவித்துவான், பண்டிதர் வி.சி.கந் தையா, காஞ்சிபுரம் இ.நாகராஜன், டாக்டர் ம.வரதராஜன் (மு.வரதராஜன் அல்ல) கரைவையம்பதி டாக்டர் க.குழந்தைவேல் வித்தியாரத்தினம் நவா லியூர் சோ.நடராசன், முதலியோரும் இவரது செய்யுள்களைப் படித்தபின்

உளம் மகிழ்ந்து இறும்பூதெய்தி, உணர்ச்சிமயமான பாராட்டுக்களை அள்ளி வழங்கியுள்ளனர். இவை சம்பிரதாயமான சாற்றுக் கவிகளாக அல்லாமல், உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற, உண்மைக் கருவூலங்களாக அமைந்துள்ளன என்பது உய்த்துணரத்தக்கது.
வாழ்க்கைக் குறிப்பு:
அளகேச முதலியாரது, வாழ்க்கைக் குறிப்பைச் சற்று ஆராய்ந்து பார்த்தால், அவை காரிகை கற்றுக் கவிபாடவந்தவரல்ல, இயற்கையாகவே இறைவனின் அருட்கொடையில் இப்பேற்றினைப் பெற்றவர் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
மட்டக்களப்பு பட்டினத்துக்குத் தெற்கே சுமார் 5 மைல் தொலைவில் அமைந்துள்ள ஆரையம்பதி என்னும் அழகிய கிராமத்தில் 1916ம் ஆண்டு பிறந்தவர். அளகேச முதலியார் 70 வயது நிறைந்த பின்னரும் அவர் இள மைத் துடிப்புடன் பல்வேறு பணிகளில் ஈடுபட்டார்.
இவரது தந்தையார், திரு.நல்லதம்பி, பரம்பரையாகச் சைவப்பணி புரிந்த பெருங்குடியைச் சேர்ந்தவர். உரிய காலத்தில் இவருக்குத் திருமணம் நடந்தது. சகல நற்குணங்களும் நிறைந்த ஞானசெளந்தரி இவரது மனைவியாகும் பாக்கியம் பெற்றார்.
ஆறு பிள்ளைச் செல்வங்கள் இத் தம்பதியினருக்கே கிடைத்தனர். அந்தச் செல்வங்கள் முறையே - தவஞானசெல்வம், திருமலர்ச்செல்வி, சிவஞானசெல்வம், அருள்ஞானசெல்வம், தவஞானசெல்வம், குமுதமலர்ச் செல்வி நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள். ஆண்கள் எல்லோரும் “செல்வம்” என்ற பெயரைத் தாங்கினர். பெண்கள் எல்லோரும் "செல்வி" என்ற பெயரைத் தாங்கினர். (பெயர் வைப்பதிலும் இவர் எவ்வளவு கவனம் செலுத்தியுள்ளார் என்பது மனங்கொள்ளத்தக்கது) பொருட்செல்வம் இல்லாத குறையைப் பிள்ளைச் செல்வம் நிறைத்தது.
இவர்களுள் முத்தசெல்வம் அமரராகிவிட்டார். ஏனைய ஐவரும் வாழ்க்கையில் நல்ல நிலையில் உள்ளனர். திருமலர்ச்செல்வி மனையியல் பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகராகப் பணிபுரிகிறார். சிவஞானசெல் வம் தந்தை வழி நின்று வியாபாரம் செய்கிறார். அருள்ஞானசெல்வம் கணிதப்பாடத்தில் சேவைக்கால ஆசிரிய ஆலோசகராகப் பணிபுரிகிறார். தவஞானசெல்வம், குமுத மலர்செல்வி ஆகிய இருவரும் சுயதொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இவருடைய மருகர் ஒருவர் ஆரையம்பதியில் "அலெக்ஸ் கல்வி நிலையம்” என்ற பெயரில ஒரு நிறுவனத்தை நடாத்திவந்தார். இப்போது
saif 2010

Page 20
அது நடைபெறவில்லை. ஆரையூர்க்கோவை” என்ற நூலை வெளியிடுவ தற்கு இவரே நிதியுதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
PIDuů uarfassí :
பல்வேறு காரணங்களால் இவர் பள்ளிப் படிப்பைப் பூர்த்தி செய்யா விட்டாலும், பழந்தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடுகொண்டு அவற்றைத் தேடிப்பிடித்துப் பெரும் புலவரானார். நிகண்டு முதலிய நூல்களைத் தாமா கவே கற்று பட்டம் பெறாத பண்டிதரானார். சுவாமி விபுலானந்தரை மான சீகக் குருவாகக் கொண்டு, பல நூறு செய்யுள்களை யாத்துப் புகழ்பெற்றார். மட்டக்களப்பின் பெரும்புலவர்களான, வித்துவான் சபூபாலபிள்ளை குமார சுவாமி ஜயர், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை முதலியோரை ஆதர்சமாகக் கொண்டு, அவர்களது பல பாடல்களை மனப்பாடமாகக் கூறவல்ல நினை வாற்றல் படைத்தவர்.
தெய்வபக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்தமையால் சிறுவயதிலி ருந்தே சிவாலயத் தொண்டுகள் செய்வதும், திருமுறைகளை ஒதியும், மக் கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றார். அதனால் பிற்காலத்தில் சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதும், கந்தபுராண விரிவுரை செய்வதும், இவரது இடையராத பணிகள் ஆயின. ஆரையம்பதி திருநீலகண்ட விநாயகர் ஆலயத்தில் விசேட ஈடுபாடு கொண்ட இவர், பொதுப்பணிகளிலும் முன்னின்று உழைத்துப் பிரபலமடைந்தார்.
வியாபார நிமித்தம் இவர் சிறிதுகாலம், சித்தாண்டியில் வாழவேண்டி ஏற்பட்டது. அப்போது சித்தாண்டி முருகன் ஆலயத்துக்குத் தினமும் சென்று வழிபடுவார். அப்போது இவரது தமிழ்ப் புலமையினாலும், சைவப் பணிகளி னாலும் ஈர்க்கப்பட்ட சித்தாண்டி மக்கள் இவரைக்கொண்டு சித்தாண்டியின் வரலாற்றுப் புகழ்பெற்ற சித்தாண்டி சித்திர வேலாயுதர் கோயில் தலம் மீது ஒரு தலபுராணம் பாடும் ஏற்பாட்டைச் செய்தனர். அந்தப் புராண அரங்கேற் றத்தின் போது, சித்தாண்டி மக்கள் வெள்ளம்போல் திரண்டு, நூலாசிரியருக்கு பல்வேறு கெளரவங்களை வழங்கினார். அதன்பின் இவரது தமிழ்ப்புலமை பற்றிய செய்தி எங்கும் பரவியது.
சித்தாண்டி தலபுராணம் : s
ஈழத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய தலபுராணங்கள் வரிசையில் தற்போது “சித்தாண்டி தலபுராணமும்” சேர்ந்துள்ளது. இந்நூலின் முன்னுரையில், அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"சித்தாண்டி, மட்டக்களப்புப் பட்டினத்திற்கு வடபால் பதின்மூன்று கல் தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியின் கண் அடியேன் 1932ம்
ဗြုံး၊ éigi 2010

ஆண்டு பதினாறு வயது தொடக்கம் வளர்ந்துவரும் பாக்கியம் கிடைத்தது. அந்நாளிலிருந்தே ரீ சித்திரவேலாயுத சுவாமியை அனுதினமும் வழிபட்டுச் சிவபக்திப் பாடல்கள் பாடி வந்தேன். அதனால் அப்பெருமான் அடியேன்பால் கிருபா நோக்கங்கொண்டு அவரைப் பாடும் பணிக்கு என்னை ஆளாக்கி னார் போலும்” இவ்வாறு அவர் கூறுகிறார்.
சுமார் 250 விருத்தப்பாக்கள் கொண்ட இந்நூல் 1935ல் கிடைத்த ஒரு ஏட்டில் உள்ள தகவல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். 1973ம் ஆண்டில் வெளிவந்த இந்நூலை சித்தாண்டி மக்கள் சார்பில், அவ்வூர்ப் பிரமுகரான செ.கிருஷ்ணபிள்ளை வெளியிட்டுள்ளார். புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை இந்நூலுக்கு வழங்கியுள்ள சிறப்புப்பாயிரம் ஆறு விருத்தப்பாக்களைக் கொண்டது. அவற்றுள் ஒன்று,
*இனியதமிழ்வமாழிவளரச்சிவசமயவுநறியதிவாக மட்டுநன்னாட்டியற்கை இன்பம் கணியவதன் தமிழ்ப்பண்பும், கவிநடையும், வமாழிமரபும்
கவின் வயற்றோங்கப் புனிதமிகுமிந்நாட்டுக்கோயில்கள் வரன்முறைக்கோர்
புகுமுகமாயமைந்து தோன்றப் புனையுமுயற்சித்தாண்டிப்புராணமிது. தமிழ்வழங்கும் புவணவமலாம் லயாலிந்து வாழ்க"
தமிழ்த் தாய்க் காவியம் :
1972ம் ஆண்டில் வெளிவந்த ஒரு சிறு நூல் இது உண்மையில் பெரி தாக இயற்றி வெளியிட வேண்டுமென யாக்கப்பட்ட இந்நூல் அப்போதைய தேவை கருதி ஒரு பகுதிப் பாடல்களை மட்டும் தொகுத்து அவசரமாக வெளி யிடப்பட்டதே இச்சிறு நூலாகும். நூல் சிறியதானாலும், இதில் இடம்பெறும் செய்யுட்கள் அளகேச முதலியாரின் கவிதைச் செழுமைக்குத் தக்க சான்று பகருகிறது. மாதிரிக்கு ஒன்று,
*சந்ததமுவமந்தனதுயந்தவினை சிந்த
வந்துலவுதந்திமுகன்கந்தமலரடியைச் சிந்தையதுவகாண்டுநிதம்வந்தனைகள் விசய்து சந்தமுடன் பைந்தமிழில் காவியமியற்ற இந்துமதிதங்கிலயாளிதந்த சிவபரனும்
ஏகபரைஈசுவரினந்த வேலவரும் சுந்தரமதானவறிநம்பிதனையும் பரவி
യ്വ് றதந்ததமிழ்த்தாய்ப்புகழிசப்பம்”
(பாடலின் சந்தச் சிறப்பு நோக்கற்பாலது)
saf 2010

Page 21
இன்னொரு பாடல் -
"இசைபரவுகைலைமலை ஈசனருளால் வந்து
இருடிகுறுமுனிவரதுமடியிசை தவழ்ந்து திசைபுகழுமூவேந்தருந்தனைலயடுத்து
திருவேட்டினால் நல்ல தொட்டிலதியற்றி அசைவற்றகூடலம்பதியிலே வைத்து
அன்பாகவே பேணிக் காத்துவருநாளில் இசைத்தமிழியற்றமிழினியநாடகவமன்று
இதமான நாமமிடேவளர்த்தனரே”
அருணகிரிநாதரது சந்தப் பாடல்களைப் போன்று, சந்தச் சிறப்பு டைய இப்பாடல்கள் அந்தாதித் தொடையில் அமைந்தவை. தமிழ் வளர்த்த, பெரியார்கள் சிலரை முதன்மைப்படுத்திச் செய்யுள்கள் யாக்கப்பட்டுள்ளன. அகத்தியர் முதல் சுத்தானந்த பாரதியார் வரை காலத்துக்குக் காலம் தோன்றி, தமிழன்னைக்கு அணிகலன்கள் பூட்டி, அழகுசெய்த எத்தனையோ தமிழ் அறிஞர்கள் இதில் இடம்பெறுகின்றனர்.
ஆரையூர்க்கோவை ?
சுமார் 200 பாடல்களைக் கொண்டது இந்நூல். தான் பிறந்த ஊரான ஆரையம்பதியின் சிறப்புக்களையும் பாரம்பரியங்களையும், பண்பாடுகளை யும் செய்யுள் வடிவில் கூறும் இந்நூல், சித்தாண்டி தலபுராணத்தை விஞ்சும் கவிச் சிறப்புடையது. கோவை, உலா, அந்தாதி, பரணி முதலிய யாப்பு முறைகள் பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடட சில பண்புகளைக் கொண் டிருத்தல் கண்கூடு. இம்மரபுக்கேற்ற ஆரையூர் வரலாறு கூறும் இந்நூல் "கோவை"யாக உள்ளது.
"அறநெறி புரக்கும் ஆரையூர்க்கோவை குறவஞ்சிப் பாவால் கூறு வோம் யாமே" என நூலாசிரியர் இயற்கைவளச் சிறப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நூலின் வளவியலில் முதல் பாடல் -
“லகாட்டுதவில் சங்லகாலிபோல் குயிலிசைக்கும் நாடு
கோதையரும் காளையரும் குலவு தமிழ்நாடு மட்டுநகர்வதன்திசையில் மல்குதிருநாடு
மாலuறியவாவியோடுவாரிதிகழ்நாடு பட்டுமணி நீறுதரும்பழனமிகுநாடு
பங்கயமும் தண்புனலிற்பரந்தவரும் நாடு அய்டதிக்கும் லதய்குபனை அடர்ந்தெழில் கொள்நாடு
அமாருலகெனத் திகழும் ஆரையூலரம் நாடே"
இதிதிர் died 200

இயற்கைவளச் சிறப்பு, திருத்தலச் சிறப்பு, கலைவளச் சிறப்பு முத லிய வெவ்வேறு பகுதிகள், வெவ்வேறு யாப்பு முறைகளில் இந்நூலில் அமைந்துள்ளன. இந்நூலில் இங்குள்ள பல ஆலயங்களைப் பற்றிய பாடல் கள் சிறப்பாக அமைந்துள்ளன. ஆரையூர் முருகன், சித்தி விநாயகர், பரம நயினார், செல்வாநகர் சிவன், கண்ணகித்தாய், மாரியம்மன், பத்திரகாளி முதலிய பல்வேறு தெய்வ முர்த்தங்களைப் பற்றிய பாடல்களில் தத்துவநோக் கும் ஆன்மீக அறிவும் செறிந்துள்ளன. இப்பாடல்கள் பட்டினத்தார், தாயு மானவர், இராமலிங்க சுவாமிகள் முதலியோரது பாடல்களின் பாணியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல்சுவைப் பாடல்கள் :
மேற்குறித்த நூல்கள் தவிர, ஏராளமான தனிப் பாடல்களும், பல்வேறு கோயில்களைப் பற்றிய பாடல் கோவைகளும் பல்சுவைக் கவிதைச் சிதறல் களாக, நூற்றுக்கணக்கில் இவரால் இயற்றப்பட்டுள்ளன. "கோட்டைமுனை ரீ சித்தி விநாயகர் பதிகம்", "சிந்தாமணிப் பிள்ளையார் பதிகம்", "கல்லடி ஈழத் திருச்செந்தூர் முருகன் பாடல்கள்", "பரமநயினார் பதிகம்", "திருநீல கண்டப் பிள்ளையார் துதி” முதலியன அவற்றுள் சில.
பல சந்தர்ப்பங்களில், கூட்டங்களில் ஆற்றும் உரைகளையும், நண் பர்களுக்கு எழுதும் கடிதங்களையும் பாடல்களாகவே யாத்துவிடுவது இவரது தனித்துவம்.
செய்யுள்களில் ஊறித் திளைத்திருப்பதால், உரையைவிட செய்யுள் களே முந்திக்கொண்டு வருவது இவரிடம் இயற்கையாக அமைந்த தனிச் சிறப்பாகும்.
சாதாரணமாக உரையாடும்போதே, செந்தமிழில் பேசும் இவர், பழந் தமிழ்ப் பாடல்களை அவ்வப்போது மேற்கோளாகக் கூறுவார். இவருடன் உரையாடுவதே மறக்கமுடியாத இலக்கிய அனுபவமாகும். இவரது கடிதங் கள் கூட பொக்கிஷமாகக் கருதிப் போற்றப்படுவதற்கு ஒரு உதாரணம் கூறலாம். .
"சித்தாண்டி திருத்தல புராணம்" நூல் தொடர்பாக இவர் காஞ்சிபுரத் திலுள்ள டாக்டர் மா.வரதராஜன் என்பவருக்கு எழுதிய கடிதத்தை, அங்கு நூலகம் ஒன்றுக்குப் பொறுப்பாகவுள்ள இ.நாகராஜன் என்பவர் கண்ணுற்று அதை நூலகத்தின் இலக்கியக் கடிதத் தொகுப்பில் சேர்த்துள்ளதாக எழுதி யுள்ளார்.
இவ்வாறே இலக்கியச் சுவை சொட்டும் இவருடைய கடிதங்களை, நண்பர்கள் பத்திரப்படுத்தி வைத்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல
saf 2010

Page 22
நூல்களுக்கு அணிந்துரையாக இவர் எழுதிய வாழ்த்துக் கவிதைகளும் படித்து இன்புறத்தக்கனவாகும்.
இலக்கியக் குடும்பம் :
இவரது உறவினர்கள் பலரும் இவரைப் போலவே இலக்கியப் புலமை பெற்றவர்கள் ஆவர். டொக்டர் எஸ்.சோமசுந்தரம், தமிழ்ப்பணி விவேகானந்தமுதலியார், செல்விதிருமலர்ப்பாக்கியம் முதலியோரும் சிறந்த கவிஞர்கள். பழந்தமிழ் இலக்கியங்களில் நல்ல பரிச்சயம் உள்ளவர்கள். தமிழ்மணி சிவிவேகானந்த முதலியார் பல தோத்திர நூல்களைத் தொகுத் தவர். “சைவ சமயச்சாரம்” நூலை எழுதியவர். செல்விதிருமலர்ப்பாக்கியம் "சாவித்திரி” எனும் குறுங்காவியத்தை ஆக்கி நூலாக வெளியிட்டவர்.
சிவ.விவேகானந்த முதலியாரும், ஆரையூர் நல்.அழகேச முதலியா ரும் இலக்கிய இரட்டையர்களாவே வாழ்ந்தனர். பரஸ்பரம் இலக்கியப் பரிமாற்றம் செய்து மகிழ்ந்தனர்.
ஆரையூர் நல்.அளகேசமுதலியாரால் இயற்றப்பட்ட நூல்களையும், தனிப்பாடல்களையும் நோக்குமிடத்து, அவை கோவில் தலங்கள் பற்றியும், தெய்வ மூர்த்தங்கள் பற்றியும் ஆத்மீக சார்புடையதாகவும், சமயத் தத்துவங் களை உள்ளடக்கியதாகவும் அமைந்திருப்பதைக் காலணம். இது ஒன்றே இவரது இயல்பை நன்கு எடுத்துக்காட்டுகிறது. தனிப்பட்ட வாழ்வில் நிறைந்த இறைபக்தியும், தத்துவநோக்கும் உடையவராதலால் அவரது ஆக்கங்கள் இவ்வாறு அமைந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. சிறுவயதிலிருந்தே, சமயத் தொண்டுகள், ஆலய வழிபாடு, புராணப்படலம் முதலியவை அன்னாரது ஆற்றலை இவ்வாறு ஆற்றுப்படுத்தின எனக் கொள்வோம்.
- அன்புமணி. விசல்வி : யுத்தம் ஒருமாதிரி முடிவுக்கு வந்திட்ருது தானே. அதாலை அன்ரி நாங்களும் ஊரோடை வந்து செட்டில் பண்ணலாமெனிடு ஒரு யோசினை இருக்குது. தங்கச்சிக்கு ஊரிலை நல்ல இடமொண்டு பார்த்துச் சொல்லுங்கோ அன்ரி
அன்றி : நீங்கள் கொழும்பிலை இருந்து பழகிவிட்டியள் புள்ளை. ஊரோடை செற்றில் பணிணி சமாளிக்கிறது கஷ்டம். அதோடை உவள் புள்ளைக்குத் தோதான மாப்பிளையும் ஊருக்கை இல்லை. எங்கேன் வெளிநாட்டிலை பாத்துக் கட்டிக் குருங்கோ, கதையோடை கதையாய் ஊர்க்கானியள் ஏதும் விக்கிறதெனிடால் எங்களுக்கு ஒரு கதை சொல்லிப் போடுங்கோ,
Seaf 2010
 
 

ஏறுகதை
பொன்னம்பலத்தார் வலு விலாசமான மனிதர். அந்தக் குடும்பத்தில் ராகுல் மூன்றாவது பிள்ளை. அவ னின் தம்பி லண்டன் சென்று இன்று எட்டு வருடங்கள் கடந்த நிலையில் ராகுலின் வயதும் முப்பத்தொன்றைத் தாண்டிக்கொண்டிருந்தது.
தன் தங்கையின் படிப்பும், அவளின் நல்ல தொரு கல்யாணமுமே தன் மூச்சென நினைத்து ராகுல் வாழ்ந்து கொண்டிருந்தான்.
ராகுலின் அப்பா சிறுவயல் ஒன்றின் சொந்தக்
வினை விதைத்தவர்கள்
காரர். அதில் நெல்லோ, தினையோ காலத்திற்குக் காலம் போகம் பார்த்து விதை விதைத்து அதிலிருந்து கிடைக்கும் வருமானங்கள் மூலம் தன் பிள்ளை களை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வளர்த்துவரும் வேளை அவருக்கு கால் முடக்குவாதம் வந்து ஒரு மூலை யில் அடங்கி, ஒடுங்கி படுத்து ஒரு சில வருடங்களில் செத்தும் போனார். அதன் பிறகு அந்தக் குடும்பம் ராகுலின் நெறி யாள் கையில் வழிநடத்தப்பட்டுக்கொண் டிருந்தது.
அதன் பிறகு அவனின் குடும் பச் சுமைகள் அவனை நல்லாகவே
அழுத்தத் தொடங்கிவிட்டன. தம்பிதங்கை
as 2010
"a diffings' arasur nUT.se 5 u GS5RDnroj வல்வெட்டித்துறை.
என்று அனைவருக்குமாக அவன் பட்ட கஸ்ட நஸ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
தன் சகோதரர்களைப் படிப் பித்து, நல்லதொரு நிலைக்கு ஆளாக்கி விட வேண்டுமென தன் எண்ண ஆசை களில் அடிக்கடி மகிழ்ந்து குளித்தான்.
ராகுலின் தம்பி ஏ.எல் படித்த வன். ஆனாலும் அவனின் கூட்டுக்கள் ஒரு உதவாக்கரை. பன்றியுடன் சேர்ந்த கன்றும் பெளவிதின்னும் என்பது போல், உதவாக்கரைகளோடு சேர்ந்த இவனும் படிப்பைக் குழப்பிப் போட்டான்.

Page 23
“டேய் தம்பி. ஒருக்காலெண் டாலும் ஏஎல் சோதனையை எடுத்துப் பாரென்றா? உப்பிடிதிரிஞ்சு என்ன செய் யப் போறாய்.” என்று தன் தம்பியின் எதிர்கால வாழ்க்கையின் கரிசனையில் இப்படி அடிக்கடி கேட்டு நிற்பான்.
ராகுலின் எந்தவொரு சொல் லையும் கேட்டு நடப்பவனாக தம்பி இல்லை. ராகுலின் அறிவுரைகள் என்பது அவன் தம்பிக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு போல்தான் இருந்தன. தம்பிக்காக மனம் நொந்து போனான். நாட்டின் போர்ச்சூழல் இன்னொரு பக்கம் அச்சு றுத்திக் கொண்டேயிருந்தது.
寄・ தங்களுக்குச் சொந்தமான அந்த வயல் உறுதியினை அவ்வூர் வட்டிக்கார ஆறுமுகத்திடம் பிணைவைத்து அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு தன் தம்பியை லண்டன் அனுப்பி வைத்து விட்டான் ராகுல்.
தம்பி லண்டன் போன அடுத் தடுத்த வருடமே அந்தக் குடும்பம் வச திகள் பல பெற்று நல்ல நிலைக்கு முன் னேறிக்கொண்டிருந்தது.
சிலகாலங்களில் பிணை வைத்த உறுதியும் எடுத்தாயிற்று. இப்ப அந்த வயலில் நெல் பயிரிட்டு தன் ஆரம்பகால வாழ்க்கையினை நடத்திக்கொண்டிருந் தான். அவனின் ஆனந்தமான வாழ்வு நிலைக்கு ஒரு அளவேயில்லை. மிகவும் சந்தோஷமாய் வாழ்ந்து கொண்டிருந்தான்
லண்டன் போன தம்பி, குடும் பத்தில் மிகநல்ல அக்கறைகாட்டத் தொடங்கிவிட்டான். தங்கையின் படிப்பு,
és 2010
அவளின் கல்யாணம் இவை பற்றியே தம்பியும் எச்சரிக்கையோடு இருப்பதை ராகுலும் உணர்ந்து கொண்டான்.
தன் சூழல், தன் சமூகம் இவை எல்லாவற்றையும் பிரிந்து வாழும்போது தான் அதன் சுவையை தம்பி உணர்ந்து கொண்டான் போலும். இப்படி தம்பியை நினைத்து அவன் நெஞ்சு ஆனந்தக் கண்ணீராக கண்களிலிருந்து வெளிவந்து கன்ன ஒரமாய் வழிந்தோடுவதை உணர்ந்து கொண்டவன், கைகளால் துடைத்துக் கொள்கிறான்.
ርስዕዕዕዕርስ
காலை உணவினைச் சாப்பிடுவ தற்கு சாப்பாட்டுக் கோப்பைக்குள் கை வைத்து சம்பலில் ஒரு கிள்ளல், முட்டைப் பொரியலில் ஒரு கிள்ளல், கருவாட்டுப் பொரியலில் ஒரு சிறுதுண்டு என எடுத் துப் பிட்டுடன் ஒரு பிசைவு பிசைந்து கொள்கிறான் ராகுல். அதை உருண்டை யாக்கி தன் வாயுக்குள் திணிப்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கையில்.
“தம்பி ராகுல். ராகுல். ராகுல்.! என்று கூப்பிட்டுக்கொண்டே வீட்டிற்குள் உள் நுளைந்து கொள்கிறார் புறோக்கர் அம்பலவாணர்.
சற்றுத் தலையை உயர்த்தி. அது அம்பலவாணர் என இனம் கண்டு கொண்டராகுல் உடன் கை கழுவி எழுந்து விட்டான்.
எழுந்து குனிந்து முதுகினை வளைத்துக்கொண்டவன், தன் சாரத் தலைப்பால் கைகளைத் துடைத்துக் கொண்டே நிமிர்ந்து கொண்டான்.

“வாங்க அம்பலவாணண்ண. உள்ளே வாங்க.”
இதற்கிடையில் வீமன் நாய் இடைவிடாது குரைத்துக் கொண்டேயி ருந்தது.
“வீமன் அங்கால போ.”
அவனின் இந்தக் கட்டளைக் குப் பணிந்த அந்த நன்றியுள்ள ஜீவன் வாலை சுருட்டி முன்னங்கால்கள் மேல் தலையை வைத்து அம்பலவாணரைப் பார்த்துக்கொண்டே படுத்துவிடுகிறது.
“ஏன் அம்பலமண்ண. என்ன இந்தப் பக்கம்.” என்று ராகுல் கதை யைத் தொடக்கி விடுகிறான்.
“இல்லைத் தம்பி. உங்கட கல் யாண விசயமாகத்தான்.” என்று சொல்ல வந்த விடயத்தை முடித்துக்கொள்ளா மல் இழுத்துக் கொள்கிறார் அம்பல வாணர்.
"அம்பலமண்ண நீங்க வந்த விசயம் சரிதான். என் கல்யாணம் இப் பதைக்கில்ல.”
“ஏன் தம்பி. இப்ப உனக்கு என்ன வயது. அந்தந்த வயதில அதை யிதை செய்திடோணும்.
இப்படி அலங்காரமாய் சுற்றி வளைத்துக் கதைத்துவிடும் அம்பல வாணரின் உள்ளத்தைப் புரிந்து கொண்ட ராகுலும்.
"இப்ப கல்யாணம் செய்யும் எந்தவொரு எண்ணமும் எனக்கில்ல அம்பலவாணண்ண. இப்ப நான் ஒருக்
图|器
கால் அவசரமா வயலுக்குப் போகவே ணும்.” என்று கூறி அம்பலவாணரைக் காய்வெட்ட நினைக்கையில் இருவருக் கும் என தேநீர் கொண்டுவந்து பரிமாறிக் கொள்கிறாள் ராகுலின் தங்கை கல்யாணி
உறிஞ்சி. உறிஞ்சி தேநீர் சுவைத்து முடிந்ததும் எழுந்து விடுகிறார் அம்பலவாணர்.
“தம்பி நான் போட்டு வாரன்.” என்று சொல்லி கிளம்பிவிட்டார்.
அம்பலவாணர் நினைத்து வந்த காரியம் பிழைத்துப் போட்டுது எப்படியும் ராகுலை தன் மாப்பிள்ளையாக எடுத்து விட்டால் தன் ஒரே மகள் நல்லாக இருப் பாள் என்று கற்பனைக் கோட்டை கட்டி வந்தவரின் உள்ளம் இடிந்து நொருங்கி தவிடுபொடியான கதையாக மாறியிருந் 535.
அம்பலவாணரின் மகள் பொது நிறமானவள். ஆனாலும் நல்ல அழகி ராகுலும் அப்படித்தான். அது மட்டுமல்ல அவன் பொறுப்புள்ள பண்புள்ள ஒரு ஆண்மகனும் கூட.
அம்பலவாணர் இரவு பகல் வெயில் மழை என்று இல்லாமல் ஓடி ஓடி உழைத்து சேர்த்த அத்தனை சொத்துக்க ளும் தன் ஒரே மகளுக்குத்தான். அந்தச் சொத்துக்களை ஊதாரம் செய்யாமல் கட் டிக் காக்கும் கெட்டித்தனம் ராகுலிடம் இயல் பாகவுள்ளது என்பதை அம்பலவாணரும் நன்கு அறிந்துள்ளார். அதுதான் அவரும் அவர் மனைவி செல்லம்மாவும், தங்கள் மகளுக்கு ராகுலை மாப்பிள்ளையாக எடுத்துவிட திட்டம்போட்டிருந்தனர்.

Page 24
அம்பலவாணர், தன் மகளுக்கு மாப்பிள்ளை கேட்டு வரப்போறார் என்ற விடயம் நேற்றே ராகுல் அறிந்த ஒரு விடயம்தான்.
செல்லம்மாவின் e நன்கு தெரியும். அவள் ஒரு அண்டல் காரி ஒன்றுசேர்ந்து நல்லா இருப்பவர்க ளையும் கொழுவிவிட்டு பிரித்து வைத்து பவனி பார்ப்பவள். இதெல்லாம் ராகு லுக்கும் தெரியாதா. என்ன?
இப்ப ராகுல் வீட்டிலிருந்து வெளியேறிக்கொள்ளும் அம்பலவாணர் பயபிதியுடன்தான் சென்றுகொண்டிருந் தார்.
செல்லம்மாவின் திட்டமிட
லுக்கு எல்லாம் நடந்து முடிந்துவிட வேண்டும் என்பதே அவளின் ஆசை
யாக எப்போதும் இருக்கும். இல்லை
யேல் பத்திரகாளி கொண்டு உலுப்பத் தொடங்கிவிடுவாள். தோற்றுவிட்ட இந் தச் செய்தியை அவரால் எப்படித் துணிந்து சொல்ல முடியும். அதுதான் அம்பலவாணர் தயங்கித் தயங்கி தன் வீடு நோக்கிப் போய்க்கொண்டிருக் கிறார்.
ዕርጎዕርሷዕዕዕ
இன்றும் ராகுல் மனதில் பெரிய தொரு சோகம் தாண்டவமாடிக்கொண் டேயிருந்தது. தங்கையின் இரண்டு நாள் காய்ச்சல்தான் இதற்குக் காரணம்.
நேற்றும் பரம் டொக்டரிட்ட காட்டி மருந்து எடுத்து வந்தவன். அந்த மருந்துக்கு ஓரளவு சுகமாயும் இருந்தது. ஆனாலும் ஓங்காளத்துடன் சேர்ந்த
44
4a. 2010
சத்தி நின்றபாடில்லை. இது இடையி
டையே ராகுலின் உள்ளத்தைப் பிழிந் தெடுத்துக்கொண்டிருந்தது.
ஒரு தாய்போல் தங்கையைக் கவனித்துக் கொண்டிருந்தான். தங்கைக்கு இரண்டு வயதாகும் போதே தாய் இறந்து போனாள். அதன் பிறகு ராகுல் ஒரு தாய் போலவே கல்யாணியையும் கவனித்து வந்தான்.
ராகுல் பாவம் தன் தங்கையின் சுகயினம் நினைத்து நல்லாகக் கலங்கிப் போய் இருந்தான். அந்த இரவு தன்னை அறியாமலேயே கண் கலங்கி அழுதும் விட்டான்.
இரவு 1200 மணிக்கு விழித்துக் கொண்டவன். அந்த நேரத்திலிருந்து விட்டுவிட்டு வந்த அவளின் ஓங்காளத் தால் அவள் நல்லாகவே களைத்துப் போய்விட்டாள். விடிய 430ற்குப் பிறகு தான் ஆட்டோக்காரனும் வருவான். இப்ப நேரம் 3.00 மணிதான். தங்கையைத் தனிமையிலே விட்டுவிட்டு ஆட்டோக் காரனிடம் செல்ல நினைத்து பிறகு மனம் விம்மிக்கொண்டவனாக நின்றுவிட்டான்.
தங்கையின் ஓங்காளச் சத்தம் கேட்டு அயலவர் ஒரு சிலர் வந்து என்ன ஏதென்று வினவுகின்றனர்.
இப்பராகுல் ஆட்டோக்காரனி டம் போக ஆயத்தமாகின்றான். அவ ளும் நல்லாகவே களைத்துப் போய்விட் டாள். இருமலுடன் மெல்ல மெல்ல அனுங் கிக் கொண்டிருந்தாள் கல்யாணி
வலு வேகமாக சைக்கிளை ஒரு உதை உதைத்து ஆட்டோக்காரனிடம்

சென்று சொல்லி விட்டு ஓடி வருகிறான். ஆட்டோ வந்து அவளைச் சுமந்து கொண்டு மந்திகை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அவளுக்கு உதவியாக
செல்லம்மாளின் தங்கை கனகம்மாவும்
போய்க்கொண்டிருந்தாள்.
இப்ப அவளுக்கு நல்ல சுகம். அடுத்தநாள் பின்னேரமே வீடு வந்து சேர்ந்து விட்டாள் அவள்.
அவள் உடலை வாட்டி எடுத்த நோய் எங்கேயோ ஒடி மறைந்துவிட்டது. ஆவணி மாதப் பரீட்சைக்காக தன்னைத் தயார்படுத்தலின் இடைநிறுத்தலை இன் றோடு நிறுத்தி விட்டு பாடங்களைப் படிக் கத்தொடங்கிவிட்டாள். ரியூசன், பாட சாலை என்று போய் வருகிறாள். அவ ளில் எந்த மாற்றமுமில்லை. அவள் அவ ளாகவே உலாவந்து தன் கடமைகளை செவ்வனே சரிவரச் செய்துகொண்டிருந் தாள்.
ராகுல் மட்டும் அந்தக் கதிரை யில் முகம் கருகிப்போய் உட்கார்ந்திருந் தான். அம்பலவாணர் மனைவி செல்லம் மாவினை நினைத்து கோபம் கொண்டு, பின்னர் அதை அடக்கிக் கொண்டவ னாக அமைதியாக இருந்துவிடுகின்றான்.
கல்யாணியும் அந்த ஊர் விதா னையாற்றை மகன் சர்வேஸ்வரனும் காத லிக்கினமாம். இப்ப அவள் இரண்டு மாச மாக முழுகாமல் இருக்கிறாள் என்றும். அதுதான் உந்த ஓங்காளம், சத்தி எடுத்த தும் என்று ஊருக்குள் ஒரு சிலர் குசுகு சுத்தது ராகுலின் காதுகளுக்கு எப்படி யோ எட்டிவிட்டது. நல்ல காலம் இதுபற்றி கல்யாணியின் காதுகளை எதுவும் சென்ற
(of 200
டையவில்லை என்பதை நினைத்து அவன் ஓரளவு நிம்மதியடைந்தான்.
இதெற்கெல்லாம் காரணம் அம் பலவாணர் மனைவி செல்லம்மாள்தான். அவள் ஒவ்வொரு வீடாகச் சென்று இது பற்றிய ஆய்வுகளை நடத்திவந் தாள். பொய்யோ. மெய்யோ கேட்பவர் களும் வலு ஆவலாகவும் ஆனந்தமா கவும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஊர்க்கதைகளை சுவைத்துச் சொல்லி கேட்பவர்களை வசியப்படுத்துவதில் செல்லம்மா ஒரு சாகசக் காரிதான். இத்த னைக்கும் காரணம் ராகுல் தன் குடும்பத் திற்கு மாப்பிள்ளையாக வரவில்லை என்பதே.
செல்லம்மா தான் ஒரு கெட்டிக் காரி என்றுதான் இப்பவும் நினைத்திருப் பாள். பாவம் ராகுல் மனதுக்குள் அழுது கொண்டேயிருந்தான்.
ലബ
கல்யாணியின் பல்கலைக்கழகப் படிப்பு முடிந்து நல்லதொரு அரச தொழி லில் இணைந்து விடுகின்றாள். நல்ல நல்ல இடங்களில் இருந்து மாப்பிள்ளைகளும் தேடி வரத்தொடங்கிவிட்டனர். இறுதி யாக தர்மலிங்கம் ஆசிரியரின் மகன் சுபசு குணன் ஆசிரியருக்கு கல்யாணப் பொருத் தம் சரிவரவே கல்யாண எழுத்தும் இனி மையாய் நிறைவேறிவிடுகின்றது.
கல்யாணியும் சுபசுகுணனும் உல்லாசப் பயணங்களில் ஊர்கோலம் போய்க்கொண்டிருந்தனர். ராகுல் மிக்க மகிழ்ச்சியடைந்தான். அவனுக்கு பலத்த சோதனைகளில் கிடைத்த பாரிய வெற்றி யல்லவோ இது.

Page 25
அந்தப் பசும்பனைத் தோப்புப் பாதை வழியே மோட்டார் சைக்கிள் போய்க்கொண்டிருக்கிறது. அதை ஒட் டிச்செல்வது சுபசுகுணன் ஆசிரியர். அவன் அதை ஒட்டிச்செல்லும் கம்பீர மும் மிடுக்கும் பார்ப்பவர்க்கும் ஓர் அழ கைத் தோற்றுவித்துவிடும். மனதில் ஏதும் வஞ்சகம் இருப்பதில்லை. அவ னின் செஞ்சளிப்பான முகம் எவரையும் உடன் கவர்ந்துவிடும்.
கல்யாணியின் வலது கரம் சுப சுகுணனின் அடி வயிற்றை மென்மை யாகத் தொட்டிருக்க மோட்டார் சைக்கிள் வலு கம்பீரமாகப் போய்க்கொண்டிருந் தது. சுபசுகுணனின் சில்மிஷப் பகிடி களால் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறாள். அவனின் முதுகின் மேல் தன் தலை
யைச் சாய்த்து அழகான புன்னகையுடன்
சென்றுகொண்டிருந்தாள்.
“பொன்னர் குடுத்து வைச்ச வர். ராகுலின் நல்ல மனசுமாதிரி அவன் தங்கைக்கும் நல்ல மாப்பிள்ளை”
“ராகுல் நல்ல பொடியன், உவள் செல்லம்மாள் அறுதலியால்த் தான் ராகுல் மனமுடைஞ்சு திரிஞ்சவன், அந் தக் குடும்பத்தைப் பற்றி கதை கட்டு வதும், எரிஞ்செரிஞ்சி கதைப்பதும் தானே உவளுக்கு வேலை”
"உவ செல்லம்மாள்; ராகுல் தன்ர வீட்டுக்கு மாப்பிள்ளையாக வர வில்லையெண்டுதான் கல்யாணியைப் பற்றிக் கூடாத மாதிரி கதைச்சுத் திரிஞ் சவ. அதுவள் தாய் தேப்பன் இல்லாட்டி யும் என்னமாதிரி வளந்ததுகள்’ இப்ப டியே அந்த ஊர் சனம் புரண்டு
Amasril 2011r
கொண்டு செல்லம்மாளையும் அவள் குடும்பத்தையும் கூடாததாக்கி, தங்களை நல்லவராக்கிக் கொண்டது. தாய் தகப்பன் இல்லாத அனாதைகள். உவையள் எங்கை உருப்படப் போயினம் என்று தட்டிக் கழித்துப் போனவர்களும் சொந்தம் கொண்டாடி பழகிக் கொண்டனர். ராகு லும் பழகிக்கொண்டான். தானாக ஒதுங்கிப் போனவர்கள் விரும்பித் தானாக வரும் போது அரவணைப்பது நல்லதுதான். ராகுல் அன்புடன் வரவேற்றான். ஆனா லும் அவனின் அவதானங்கள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தன.
இப்ப கொஞ்சக் காலமாக செல் லம்மா தன் வீட்டை விட்டு வெளிக்கிட் டுத் திரிவதே இல்லை. புறோக்கர் அம் பலவாணரும் அடங்கி ஒடுங்கி இருந்து விட்டார். "எத்தனை கல்யாணங்களை குழப்பியிருப்பன் நான் புறோக்கராகயிருந்து கல்யாணம் செய்து வைச்சால் நிறையக் காசு வரும். அதை வேறாரும் முடிச்சு வைச்சால் அவனுக்கு அவ்வளவு காசும் போயிடும் எண்டு நினைச்சு இல்லாத பொய்களைச் சொன்னது. முடிவில்லாத என்ர பொறாமைக் குணமும், அதைவிட வலு மோசமாக சொண்டு சாடை சொல்லி குடும்பங்களின் ஒற்றுமைகளைக் குழப்பி வைச்சு தன் மனதளவில் ஆனந்தம் கண்ட என் மனிசி”இவை எல்லாவற்றை யும் நினைத்த அம்பலவாணர் மனது புழுங்கிக் கொள்கிறது.
இத்தனைக்கும் செல்லம்மாளின் ஒரே மகள் எவனோ ஒருவனோடு ஓடி விட்டாள் என்று ஊர் சனம் கதைத்துக்
கொண்டே இருந்தது.
(யாவும் கற்பனை)

ளிம்பெருக்குவோம்()
- Leishony LeoGal Saudith - சொற்களின் மூலங்களாகிய அடிகள் (Roots)பிற உறுப்புக்களுடன் சேர்ந்து நிற்கும். இவற்றின் வேறுபாடுகளை அறியாவிட்டால், சொற்பொருளை உணர்த்த முடியாது. செய்யுள்களிலே வரும் சொற்களின் வேறுபாட்டை நன்கு அறிந்த வர்களே சிறந்த உரையாசிரியர்கள் ஆக முடியும். இராமாயணம், புராணங்கள் என்பவற்றிற்கு உரை சொல்வது வழக்கம் இருந்து வந்தது. இவ்வாறு உரை சொல்வது யாழ்ப்பாணத்து வித்துவ சிரோமணி பூரீலg ஆறுமுக நாவலர் மருகர். இவர் ஓரிடத்தில் ‘கட்டிய' என்ற சொல்லுக்கு அருமந்த உரை செய்தார். அதனால் இராமாயணச் செய்யுள் அடியின் கருத்து எல்
லாராலும் நயக்கப்பட்டது.
*கொம்பு தலை கட்டிய குலக்கரி கடுத்தான்” என்பது கம்பரில் வருவதொரு செய்யுளடி கரன் என்பவன் சிறீராமனை எதிர்க்கின்ற சந்தர்ப்பத் தைக் குறிப்பது இச்செய்யுளடி. கரன் தனது துணையாகிய 'திரிசிரா? ‘தூடணன்' என்னும் இரண்டு பேரையும் இழந்தான். அதனாற் சினமிகுந்தான். தன் உயிரையே வெறுத்தான். காயம் ஊறுபட்டதொரு யானையொன்று சிறீ ராமனை எதிர்க்கின்றான். குலக்கரி என்பது நல்ல குலத்து யானை, கொம் ... . பைத் தலையிற் கட்டிய குலயானை என்றே கம்பராமாயண உரைகாரரும் இரசிகர்களும் உரைகூறி வந்தார்கள். கட்டிய என்ற சொல்லின் (எச்சச் சொல்லின்) அடி “கட்டு’ கொண்டு பிள்ளையவர்களோ ‘கட்டிய”என்பதன் பொருள் “களைந்த” (பிடுங்கிய) என்ற கருத்தைக் கூறினார்கள். கட்டல் - களைதல் = கள் +து + அல் கட்டல் எனவரும் கட்கும் என்றால் களை யும் என்பது பொருள். களைகட்டல் என்றால் களைபிடுங்குதல் என்பது தானே பொருள்.
இனிப் பாட்டின் அடியில் ‘கட்டிய’ என்பதற்கு களைந்த என்ற கருத்தே பொருத்தமாயுள்ளது. இரு துணைவரை இழந்து கொதிக்கின்ற கரனுக்கு
இரு கொம்பையும் களைந்ததொரு குலக்கரியை உவமை செய்ததன் நலம் : நயக்கற்பாலது. அதனை எடுத்துக்காட்டிய வித்துவ சிரோமணியை இலக்கிய
கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை வாயாராப் புகழ்கின்றார்.
ési 2010

Page 26
கல்வி கல்லுதல் என்ற இரு சொற்களை ஆராய்வோம். இரண்டு சொற்களுக்கும் ஒன்றே அடி (கல் பகுதி) எனக் கூறுதல் பொருந்தாது. கற்றான் என்பதன் அடி கல்; கல்லினான் - கிண்டினான் என்பதன் அடியும் கல் இவை உருவத்தால் ஒன்றுபட்ட இரு வேறு அடிகள். வைத்தான் என்பதன் அடி "வை’ ‘வைதான்” என்பதன் அடியும் ‘வை" ஆனால், இவை உருவத்தால் ஒன்றுபட்ட இரு வேறு அடிகள்.
கல்வி பெருகிய இடங்களிலும் பத்திரிகைகளிலும் “ஒளிந்தான்” என்று ஒருவினை உபயோகிக்கப்படுகிறது. ஒளிந்தான் என்பது தன்வினையோ எனின் அன்று. ஒடி ஒளிந்தான் என்று வாக்கியத்தில் உபயோகிப்பது பிழை. "ஒளித்தான்? என்றே இவ்வாக்கியம் அமைதல் வேண்டும். ஓடி ஒளித்தான் என்று கூறுவதே சரி. பிறவினையாகப் பயன்படும்போதும் பொருள்களைப் பதுக்கி ஒளித்தான், என்றே உபயோகித்தல் வேண்டும். 'ஒளி' என்பது தன்வினைக்கும் பிறவினைக்கும் பொதுவான அடி. இரண்டிலும் "ஒளித்தாண்’ என்றே வரும். இதற்கு மேலாக “ஒழி" என்ற அடியைக்கொண்ட ஒழித்தான் என்று சொல்லைப்போட்டுக் குழப்பநிலை அடையக்கூடாது. ஏனெனின் அந்த ஒழித்தான் என்பதன் பொருள் இல்லாமற் செய்தலாகும். பகைவனை வேரோடு ஒழித்தான். என்று அவ்வாக்கியத்தில் அமையும்.
சொற்பிறப்பாராய்ச்சியென்ற பெயரில் வரம்பு வாய்க்கால்களை அதாவது இலக்கண வரம்பு வாய்க்கால்களை அழித்துப் பாய்தல் கூடாது. வினை அடிகள் பற்றி விரிவாகச் சுன்னைக் குமாரசுவாமிப் புலவர் அவர்கள் தமது வினைப்பகுபதம் என்ற நூலில் ஆராய்ந்துள்ளார். இன்றைய கலைச் சொல்லாக்கத்தின் முன்னோடியாக அவர் விளங்குகின்றார். அவரது பணியை மேலும் எடுத்துச் சென்று கலைச் சொல்லாக்கத்தில் காப்போமாக. வேதம், என்ற சொல்லையும் வேய்தல் என்ற சொல்லையும் எடுத்து ஆராய்ந்தார் ஓர் அறிஞர். வேதம் தமிழ் மொழியேயாம் என்று நிறுவவேண்டிய தேவை அவருக்கு இருந்தது. எனவே வித் - என்ற அடியைக் கொண்ட வேதம் என்பதன் அடி ‘வே” என்றார். வேய் என்னும் அடியைக் கொண்ட வேய்தல் என்பதன் அடி ‘வே” எனக்கொண்டார். “வே" என்றால் மூடு என்பது மறை பொருள். எனவே, வேதம், மறை என்பன ஒரு பொருள். ஐயமின்றி வேதம் தமிழ் மொழியே என்றார். வே, வேறு, வேய், வேறு என்பதை அவர் அறிந்திலர். சொல்வளத்திற்கு அதன் அடி பற்றிய அறிவு மிக முக்கியமன்றோ.ா
si: 20
 

(Dnrafo Drigså தொடர்ச்சி.) கவிவலன்
இன்றையக் கவிதைகளின் தோல்விக்கு அகம் புறமென்று பல காரணங்களை முன் வைக்கலாம் தெளிவேயில்லாத அதன் செல்நெறி, வெளிப்பாட்டிலுள்ள சோகைத் தனம் கருத்துத் தெளிவின்மை, புரியாத புரிந்துகொள்ளமுடியாத உருவ, உருவக, படிமச் சேர்க்கைகள், விரசமான, விகற்பமான, அசுத்தமான, அசிங்கமான வெளிப் படுத்தல்கள், கவிதையாகவில்லாது விபரணக் குறிப்புக்களாகவிருக்கின்ற தன்மை. இவையே இன்றைய கவிதையை, அதன் தரத்தை, பெறுமானத்தை மிகத் தாழ்ந்த நிலைக்கு உந்தித் தள்ளிக்கொண்டிருப்பவையாகும்.
இந்த உண்மையை ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். உண்மையான கவிதை அக்கறையுள்ளவர்கள் எவரும் இதை மறுதலிக்கமாட்டார்கள். “பிள்ளைகளைப் லபற்று
அனைத்துக்கொள்ள வேண்டிய மார்பகத்தில் புத்தகங்களை அனைத்துக்லகாண்டு போகிறாயே புத்தகங்கள் உன்மார்பில் பால்குடிக்கின்றதா என்ன?" - (பூத்தவெள்ளி-65)
இது ஒரு புதுக்கவிதை, புதுக்கவிதையின் சொரூபம் இந்தக் கவிதை சொல்வ தென்ன?. இந்தக் கவிதை பிறந்ததன் நோக்கமென்ன?. இதைத்தான் எமது புதிய கவிதைக் கண்டுபிடிப்பு எனலாமா?கருத்தில்லாத பிரசவம், அங்கீகரிக்க முடியாத அகழ்வு.
இனி, இன்னொரு கவிஞரின் தேடலைப் பாருங்கள்.
“இனி உன் மனைவியின் கருவறைக்குள்
சிசு வளராது
உன் ஆண்மைச் சுரப்பிகளை அப்பம் கொதிக்கும் பானைக்குள் அடு. ஆறுமணி நேரம் இருளில்முடி உறையவை
4.
జోళ్ల saf 2010

Page 27
கொழுக்கத் தேவையானால். வகாஞ்சம் முலைப்பால் கறந்து ஊற்று. ஆண் - வயண் என்று பால்அவதி வேண்டாம், நீவிரும்பும் சாதியை யானை அருகிலிருந்து உச்சாடனம் விசய் பதினெட்டு மணிநேரத்தில் உள்யானைக்குள் . . சிசு கத்தும்” இது 'கதிர்’ என்னும் கவிஞர் பூவிழி’ இதழில் எழுதியிருந்த கவிதை.
இந்தக் கவிதைகளின் வெளிப்பாட்டால் ஏற்படுகின்ற பயன்பாடு என்னவென்று கேட்பதில் தவறிருக்கமாட்டாது. ஒரு கவிஞர் பச்சைபச்சையாக 'ஊத்தை' பேசுகிறார். மற்றவர் புதிய ‘சிசுவாக்கம்' ஒன்றை நவீன கவிதையென்று தந்திருக் கிறார். இவைகளை, கவிதையென்று ஏற்றுக்கொண்டு கண்ணியப்படுத்த வேண்டு மென்றும் இவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது தமிழை, தமிழ் மொழியை, இலக் கியத்தை கொச்சைப்படுத்துவையா? அல்லது உச்சத்திற்குக் கொண்டுபோகும் உயர்படைப்பா?
மொழி வளமுமில்லை, பொருள் வளமுமில்லை, ஒரு கவிதைக்குரிய பண்பு
எதுவுமேயில்லாது இந்த ஊத்தைகளைத்தான் எதிர்காலச் சந்ததிக்கும் நாம் நாங்கள் செய்த கவிதைப் புரட்சி ஊற்றுக்கள் என்று காட்டப்போகிறோமா? எங்கே போய்க்கொண்டிருக்கிறது எமது கவிதைப் படைப்பியல்? கவிஞர்களே! நீங்கள் எங்கே நின்று உழவுசெய்து கொண்டிருக்கிறீர்கள், ஓ போடுவதற்கு உங்களுக்கென்றொரு கூட்டம், குழுமம். தேவைதானா இந்தத் தேடல்கள்? சிந்தித்துப் பாருங்கள்
கவிதை என்பது ஒரு மனநிகழ்வு, அது சொல்லும் கருத்தாலும், சொல் லப்படுகிற விதத்தாலும் தனியிடம் பெறும். ஏனெனில். ஒரு படைப்பாளியிடம், கவிஞனிடம் ஏற்படுகிற அகத்தூண்டுதல், புறநிகழ்வுகளாலேயே ஏற்படுகிறது. அவையே கவிதையின் பிறப்புக்கு ஏது.
இதுபோது மறைந்த கவிஞர் நீலாவணன் அவர்களது கவிதையொன்றை முழுமையாக இல்லாவிட்டாலும், ஒருசில வரிகளையாவது பாருங்கள். அதிலுள்ள மொழியழகு, உணர்வழகு, வாசகனுக்கு உணர்த்துகின்ற வெளிப்பாட்டழகு, பொருள் அழகு, அந்தப் பொருள் முழுக்கப் புதைந்துள்ள கருத்தழகு, மானிட கெளரவம் சிதையாமல், கண்ணியமாக அசுத்தப்படாமற் புலப்படுத்துகிறது. ஒரு பெரிய செய்தியல்ல. ஆனால் பேரின்பம் தருவதான படைப்பியல் நுணுக்கம், வெளிப்பாட்டு ஆற்றல். நம்மை அந்தக் கவிதையோடு ஒன்றிவிட வைப்பதை எவராலும் மறுதலிக்க முடியாது. இதையே கவித்துவ ஆளுமை என்பர் ஆய்வாளர்கள்.
éSí 2010
 
 

* உப்லபாழிந்தே போகட்டும்
உணதன்பு லயருக்கெடுக்க
உலையில் தீயால் வெப்பமுனதுடல் புகுந்து முகமதியில் ஒளிர்கின்ற வியர்வை முத்து எப்படியோ கறியுள்ளும் அறங்கிற்றே அதன் இனிமைக் கிந்த உப்பு எப்படித்தான் நிகராகும் இனியவளே சுவையாவும் எனக்கு நீயே"
“குப்பையிலே முளைத்திருந்த சிறுகீரை
தனைப்பிடுங்கிக் கொண்டு வந்தே உப்பின்றிப் புளியின்றி உவப்பூட்டும் , தாளிதங்கள் ஒன்று மின்றி இப்படியோர் சுவைக்கறியை இயற்றிவிடும் திறமைக்காய் ஈவதற்கு எப்பரிசும் தகுதியில்லை, இப்படிவா நானளிப்பேன் இனிய முத்தம்”.
கவிஞர் நீலாவணனது கவிதையிலுள்ள சிறப்பு, நுகர்பயண்கள் என்ன, எதுவென்று விளக்கம் கொடுத்து உணர்த்தவேண்டிய தேவையில்லை. இன்றையக் கவிதைகளின் உருவாக்கத்திலுள்ள பிழை எது, பிழைக்கான காரணி என்னவென்பதை இங்கு தரப்பட்ட கவிதைகளே வெளிப்படுத்தியிருக்கும்.
“லசயல் வேண்டும், வினைகோடி செய்யத் தூண்டும்
திறன் அமைந்த கலைவேண்டும்”. இல்லையா.
எழுதப்படவேண்டிய கவிதை எது என்பது பற்றிய தெளிவு, அதை எழுதுகின்ற திறன், அந்தக் கவிதைக்குள் திணித்துக் கொடுக்கின்ற செய்தி, கருத்து, வடிவாக்க முறை, இதையே கவிஞனின் ஆற்றல் எனலாம். கருத்தும், உரு வாக்கமும் தலைநிமிர்ந்து நிற்கும் ஒரு கவிதைக்கு. எதுகையும் மோனையும் இனிமை சேர்ப்பதில் எந்தவகையில் குறையாகும். அதற்காக எதுவை, மோனை தேடி அலையவேண்டுமென்பது எமது கருத்தல்ல.
மொழியின் அழகியலே கவிதை. அதனை அழகுபடுத்தச் செய்யப்படும் சித் திர வேலைப்பாடுகளாலேயே ஒருசில நல்ல கவிதைகள் சிதைந்து போகின்றன,

Page 28
போகக்கூடும். இன்று அநேகமான கவிஞர்களிடம் நூல் வாசனை’, வாசிக்கும் பழக்கம் குறைவென்று சொல்ல வருத்தமாகவே இருக்கிறது. ஆனால், உண்மை. அதனாலேயே கண்டதையெல்லாம் எழுதிக் கஷ்டப்படுகிறார்கள். கவிதையைக் களங்கப்படுத்துகிறார்கள்.
“காலை வேளையில்
அதுவும் கண்களுக்கு முன்னாள்
கொஞ்சம்கூட லிவட்கப்படாமல்
புணர்ந்து லகாள்கின்றன
பேஸ்டும் பிறஷம்ே"
இது கவிதையா? மனவிகாரமா? இந்தப் பாடுபொருளில் கவிஞன் வெளிப் படுத்துகிற செய்தி, தகவல் என்ன? ஏதாவதுண்டா? இந்தக் கவிஞர்கள் கவி தையை மட்டுமல்ல, மனிதத்தையே கேவலப்படுத்துகிற சிரங்காளர்கள். இப்படி யான இவர்கள் எழுதுவதெல்லாம் விவரணங்களாகவே இருக்கின்றன. கவிதையென்பது சுருக்கப் பிரதி, கடுகைத் துளைத்து ஏழு கடலைப் புகுத் தித் தருகிற சுருக்கப் பிரதி.
ផ្លែ ஒன்றை ஒன்றாக, ஒன்றின் பிறிதாக, பிறிதின் ஒன்றாகப் பார்க்கின்ற பக்கு வம் வரப்பெறாத ஒருவனால். கவிஞனாக, ஒன்றைப் பிறர்க்கு உணர்த்த முடி யாது. அப்படி உயர்த்த உதவுகிற ஊடகமே மொழி. இங்கே அனேகமான இன் றைய கவிஞர்கள் ஊடகமாக வரவேண்டிய மொழியையே எல்லாமாக எடுத்துக் கொண்டு வார்த்தைச் சன்னதமாடுகிறார்கள். இதனாலேயே இவர்களுடை படைக் கும் ஆற்றல் சிதைந்துபோகிறது. தனது பிழைகளை, தனது சரிகளை எதுவென்று இனங்கண்டு தங்களைத் திருத்தம் பெறச் செய்வது பற்றி இன்றைய கவிஞன் சிந்திக்க வேண்டும். இது அவசரமான தேவையும் கூட.
கவிஞன் படைப்பாளி மட்டுமல்ல, அவன் வாழ்க்கையை விமர்சிப்பவன். தத்துவச் சிந்தனைகள் கவிதையாகாது. ஆனால் ‘உள்ஒளி' என்னும் தெளி வும், ஆற்றலும் உள்ள கவிஞர்களிடம் சிந்தனை வீச்சும் உணர்ச்சிப் பெருக்கைச் செப்பமாக வெளிப்படுத்துகிற ஆற்றலும் இரண்டறக் கலந்திருப்பதால்ேயே, அவர்களது கவிதைகள் சோரம் போவதில்லை என்று சாற்றுறுதி தருகிறார் மார்க்கமுல்லர். கருத்துகளின் கனத்தில் கவித்துவத்தின் தணல் வெந்துபோகா மல் காப்பதே கவிஞனின் ஆற்றல், இதையே (Poetric Culture) காவிய உலகின் முகமுத்திரை என்கிறது அறிவுலகம்.
ஒரு கவிஞன், தனது கவிதைகளில் வாழவேண்டும். அவன் கவிதைகள் அவனுடைய அறிவிக்கப்பட்ட லட்சியங்களின் விடையாகும். (Proclaimed Alms) என்பது ஆங்கிலக் கவிஞர் வேட்ஸ்வர்த்தின் கருத்து.
dai 2010
 
 
 
 
 

சொற்சிக்கனம் என்பது இலக்கியத்திற்கு, குறிப்பாக கவிதைக்கு மிகத் தேவை. வளவளா. சளசளா. பாட்டுத்திறன் கவிதையை முடமாக்கிவிடும். ஏனெனில் கவிதை என்பது ஒரு செய்தி. Message. அது எத்தனை ரத்தினச் சுருக்கமாக வும், சுவையாகவும் இருக்கிறதோ, அதுதான் அந்தக் கவிதையைச் சிறப்பிக்கும் உயர் தகுதி.
கவிதை, காலம் திரட்டிய கண்ணியமான கலை. அது அற்பமான, அர்த்தம் புரியாத, படைப்பாளச் சிகரங்களால், சிற்பிகளால், அழிந்துபோகக்கூடாது. அழிந்துபோக விடவும் முடியாது.
கவிதை, கடவுளின் "தேவநற்கருணையாக”மதுவாக இருக்கவேண்டுமென்கிறார் எமர்சன் (RWEmerson's EssaySP-24). வெறும் வர்ன, ஜால வர்த்தைகளும், கிளுகிளுப்பு உத்திகளும் எதுகை, மோனை, உருவக்குட்டிக்கரணங்களும் நவீன நடையலங்காரங்களும், துள்ளிக்குதிக்கும் துண்டு, துணுக்குகளும், கோமாளித் தனங்களும் கவிதையாகிவிடாது என்ற புதுக்கவிதைக்காரர் மேத்தாவின் கருத்தை இன்றைய புதுக்கவிதையாளரக்ள் சிந்தனைக்கெடுக்க வேண்டும்.
Suggestiveஆகச் சொல்வதற்கும் Statement மாதிரி வரைவதற்குமுள்ள வேறு பாட்டை ஒப்புநோக்கும்போதுதான், அல்லது ஒப்புநோக்கிப் பார்க்கும் போதுதான் இளைய கவிதையாளன் ஒருவன், தான் எப்படி எழுதவேண்டுமென்பதைப் புரிந்து கொள்வான். ஏனெனில் இன்று கவிதைகளாக வரையப்படுவதெல்லாம் விபரணங்
களே. கவிதைகளல்ல.
ஒரு கவிதையின் உள்ளார்ந்த சக்திக்கு உண்மை மிகமுக்கியம். மட்டமான உணர்வுத் தூண்டுதல்களும், கொச்சையான உணர்வு வெளிப்பாடுகளும் கவி தையின் மதிப்பையும், மரியாதையையும் கீழிறங்கித் தள்ளிவிடும் காலத்தின் போக் குகளைக் கற்றுக்கொள்ளுகின்ற ஆற்றலும், புதிய நோக்கும் எந்தக் கவிஞனி டம் நிறைந்திருக்கின்றதோ அவனே ஆளுமையுள்ள கவிதைகளைப் பிரசவிப்பான். ஏனெனில் அவன் கையாளுகிற பாஷையே. மனிதன் புரிந்துகொள்ளுகிற மொழியாகும்.
இந்த உலகின் ஒவ்வொரு படைப்பும் எல்லையற்ற வாழ்க்கைமாக்கடலில் எழுந்து மறையும் அலைகள். இந்தத் தெளிவுடன் உலக நிகழ்வைப் பார்க்கத் தொடங்கிவிட்டால் அகழப்படும் கவிதையெல்லாம் வாழுகிற வரப்பிரசாதம் பெற்ற தாகவேயிருக்கும். சுயதரிசனமே. சுயதகுதியை ஏற்படுத்தும் சோகைபிடித்து வெளிறவிடாமல். கவிதைக்கு புதியரத்தம் பாய்ச்சுவோமா. கவிஞனே!. அமைதியாக. ஆறுதலாக சிந்தித்துப்பார்.
ஐ of 200
- மீண்டும் சந்திப்போம்

Page 29
அப்போது நேரம் மதியம் பன்னிரண்டு மணி இருக்கும். நேரத்துடன் சாப்பாட்டை முழத்துக்கொண்டு நானும் மனைவியுமாக கணிழ தேசிய சேமிப்பு வங் கியை நோக்கிச் சென்றுகொணிழருந்தோம். யட்ழஹ லகலவில் இருந்து வந்த பஸ் கண்ணொறுவயைச் சென்றடைந்தது. நாடு கெட்டுப்போய்க் கிடப்பதால் ஒன் பது பவுணி தாலிக்கொழயை அணிய நான் மனை خلاملې வியை அனுமதித்திருக்கவில்லை. ஆயினும் சங்கிலி அணிவதை ஆட்சேபிக்கவில்லை. “இப்ப அமைதி திரும்பிவிட்டுது, கள்ளர் பயம் இல்லை; எத்தினை பொணிடுகள் கழுத் திலை தாலிக்கொழ. சங்கிலி கையிலை விதம் விதமான காப்புகளெல்லாத்தையும் போட்டுக்கொண்டு பயமில்லாமல் திரியுதுகள்; உங்களுக்கு மட்டுந்தான் நரி வெருட்டுகுது” என்று மனைவி முணுமுணுத்தது எனக்கு நன்றாகக் கேட்டது. ஆயினும் எதுவும் கேளா தது போல நான் எட்ழ நடந்துகொண்டிருந்தேன். இதோ யட்ழநுவர வீதியாற் சென்று தேசிய சேமிப்பு வங்கியை அடைந்துவிட்டோம். மனைவியின் பெயரில் நிலையான வைப்பிலிருந்த ஐம்பதினாயிரம் ரூபாவையும் அதற்குரிய வட்டியையும் மீளப் பெற்றுக்கொண்டு மக்கள் வங்கிக்குச் சென்றோம். அங்கும் ஒரு முக்கிய வேலையை முழத்துக்கொண்டு பஸ் நிலை யத்திற்கு வர மாலை ஆறரை மணியாகிவிட்டது. யட்ழஹலகல பஸ் எடுத்து மீண்டும் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போலப் பேராதனையைச் சுற்றிக்கொண்டு கணி ணொறுவை ஊடாக எமது வீட்டழயை வந்துசேர நன்றாக இருட்ழவிட்டது. *கட்டம்பேயிலி ருந்து கண்ணொறுவ ஊடாக பேராதனை வரை மூன்று மாதங்களுக்கு முன் போட்டு (podša5ůůL புதிய கொழும்புப் பாதையில் அமைக்கப்பட்ட தெரு விளக்குகள் அனைத்தும் செயலிழந்து அப்பாதை "வன்னி மக்களின் வாழ்க்கை” போல இருள்மயமாகிக் காட்சிய ளித்தது. பெல் அழத்து பஸ்ஸை விட்டு இறங்கிக் குளத்தழ ஒழுங்கையால் நடந்துகொணி ழருந்தோம். நான் இயல்பாகவே வேகமாகத்தான் நடப்பேன். மனைவி குரலெழுப்பவே மனைவியை நோக்கி ஒழப் போனேன். அதற்குள் கள்ளன் சங்கிலியுடன் பறந்து சென்று இருட்டுக்குள் மாயமாய் மறைந்து போனான். நான் எனது காற்சட்டையின் *சேவ்ற்றி பொக் கெற்றை அமத்திப் பார்த்தேன். மக்கள் வங்கியில் அடகு மீட்ட மனைவியின் ஒறிஜினல் சங்கிலி பத்திரமாக இருந்தது. பறிபோனது ரூப்ளிக்கேற்.
காதவபாலனர்
. - கண்ணொறுவை אייאאאאאאא-א-א-א-אאא *"Gatambe" என்பது ஊர்ப்பெயர் வரதை * “Safety Pocket"
54ಣಾ
agi 200
 

தொடர் நாவல்
“வாங்க கணேசன் आÜ! உங்களுக்கு கல்வி அமைச்சிலி ருந்து ஒரு கடிதம் வந்திருக்கு” கடிதத்தைக் கையளித்தார் அதிபர்.
அக்கடிதத்தைப் பெற்றுக் கொண்டு அதிபரின் அறையை விட்டு வெளியேறினான் கணேசன், கடிதத் தைப் பிரித்துப் படித்துவிட வேண்டு மென்ற ஆவல் உந்த நடந்தபடியே கடிதத்தை அவசர அவசரமாகப் பிரித்தான். கணேசன் வருவதைக் கண்ட பகீரதனும் அவனை நோக்கி விரைந்தான்.
கடிதத்தை கணேசன் பிரித் தான். படித்தான். அவனுக்கு யாரோ
|AQJ i 6F5.
厂 i: VV (1
அந்தத் தகவல் அவனுக்கு அதிர்ச்சி யைத் தந்தது.
பகீரதனும் அவனை நெருங்கி விட அவன் கையில் அக்கடிதத்தைத் தந்தான் கணேசன்.
அவனும் அக்கடிதத்தைப்
படித்தவுடன் அதிர்ச்சியால் உறைந்து
போனான்.
அவன் வத்தளையிலுள்ள பாடசாலையொன்றுக்கு மாற்றம் செய் .
யப்பட்டிருப்பதாகவும், அடுத்த பாடசா
லைத் தவணை தொடங்கும்போது :
பணியை ஏற்குமாறும் அவ்வதிர்ச்சித் தகவல் கடிதத்தில் இருந்தது.
seiaf 2010
(17)
シ
எம்.பி.செல்லவேல் O “கணேசன்!. இது என்ன அநி யாயம். நீங்க இந்தப் பாடசாலைக்கு வந்தே இரண்டு வருடங்கள்தான் பூர்த் தியடைந்துள்ளது. பொதுவாக ஐந்து வருட சேவை முடித்தவர்களைத்தான் மாற்றம் செய்யப் போவதாகப் பத்திரி கையில் படித்திருக்கிறேன். உனக்கு எப்படி மாற்றம் தருவார்கள்"? பகிரத னும் சந்தேகத்துடன் வினவினான்.
"எனக்கு எதுவுமே புரியவில்லை
- பகீரதன்” கணேசனின் பதிலில் ஏமாற்
றம் தென்பட்டது.
“கணேசன் இங்கு இதனுடன் இணைக்கப்பட்டுள்ள மாற்றல் அட்ட வணையைப் பார்த்தீர்களா? செல்வி

Page 30
தேவகி தனபாலசிங்கம் எனும் ஆசி ரியை உமது இடத்திற்காக யாழ்ப்பா ணப் பாடசாலை ஒன்றிலிருந்து மாற்: றம் செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பி : டப்பட்டிருக்கிறது. பகிரதன் கணேச னின் கவனத்தை ஈர்த்தான். V
கடிதத்தைப் பெற்றுப் படித்த கணேசன் மேலும் அதிர்ச்சிக்குள்ளா னான்.
"இங்கும் பிரதேசவாதம் தான் எனது அறிவுக்கெட்டியவரை இருப்ப தாக உணர்கிறேன்" கணேசன் தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினான். :
“ஏன் அப்படிச் சொல்கிறாய்?" பகீரதன் வினா எழுப்பினான்.
"இவ்வளவு காலமும் எங்கள் பாடசாலையில் இருவரைத் தவிர மற்ற ஆசிரியர்கள் அனைவரும் வடபகுதி: யைச் சேர்ந்தவர்கள். அதிலும் நான் : இப்போது மாற்றப்பட்டுவிட்டேன். எஞ் : சியிருக்கும் மற்ற ஆசிரியரது கதியும் விரையில் எந்நிலைமையைத்தான் அடையும். இதனால்தான் நான் அப் படிக் கூறுகிறேன்”. O
"நீ சொல்வது சரியாகத்தான் : போலிருக்கு. எமது பாடசாலைக்கு மாற்:
றலாகிவரும் ஆசிரியை யாழ்ப்பாணத் .
தில் வட்டுக்கோட்டைப் பகுதிப் பாடசா லையிலிருந்து வருகிறார். எங்கள் அதி பரின் ஊரும் வட்டுக்கோட்டைதானே. எனவே இவ்வாசிரியை அதிபருக்கு நெருங்கிய உறவினராகவோ அல்லது : மிக நன்கு தெரிந்தவராகவோ இருக்க வேண்டும். ஊர்ப்பற்று இருக்காமலா : போகும் பகீரதனும் கணேசனது கருத்: துக்கு ஆதாரமளித்தான். :
és 2010
“விசுவாசமாகக் கடமையாற் றும் ஒரு ஆசரியருக்கு ஒரு அதிபர் இழைத்தது குற்றமே. ஒருமுறை எங் கள் பாடசாலையில் வரதன் ஆசிரிய ருக்கு மாற்றம் வந்தபோது அதில்
தலையிட்டு ரத்துச் செய்தவர் எமது
அதிபர்தானே. இப்போது எனது மாற்ற லுக்கு இவரே தூபமிட்டிருக்கிறார் என நினைக்கிறேன் பகிரதன். மந்திரிமாருக் கும் கல்வி அதிகாரிகளுக்கும் பந்தம் பிடித்துத் திரியும் இவரால் இதை ரத்துச் செய்ய முடியாதா?’ கணேசன் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினான்.
"அதிபர் தராதரம் இல்லாத ஒருவர். இப்படியாகப் பெரிய பாடசா லைகளில் அரசியல் செல்வாக்கினால் அதிபராக அமர்த்தப்படும்போது எங்கே நீதி, ஒழுங்கான நிர்வாகம், கல்வி மேம் பாடு பேணப்பட முடியும் பகிரத னம் தனது கருத்தைத் தெரிவித்தான்.
“மாற்றல் கிடைத்ததுபற்றி நான் கவலைப்படவில்லை பகிரதன். ஆனால் அநியாயமாகவும் ஒருதலைப் பட்சமாகவும் இது நிகழ்ந்திருக்கிறதே
என நினைக்கும் போதுதான் வருத்த
மாயிருக்கிறது.
“சரி கணேசன், நாங்கள் பறப படுவோம்" பகிரதன் கூற, இருவரும் பாடசாலையைவிட்டு வெளியேறினர்.
காரணமில்லாத, நீதியற்ற இந்த இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ள கணே சனின் மனம் மறுத்தது. மறுநாள் காலை தனது ஊரில் முன்பு வசித்தவனும், தற்போது கொழும்பிலுள்ள மற்றுமொரு கல்வி வலயக் கந்தோரில் பணியாற்று பவனுமான தன்னுடன் மிக நட்பாயி

ருந்த சகோதர மொழிபேசும் நண்பன்: பெரேராவைச் சந்திப்பதற்காக அங்கு சென்றபோது கணேசனுக்கு ஏமாற்றமே : கிடைத்தது.
அவனது நண்பன் தற்போது அங்கு பணியில் இல்லையெனவும், கல்வி அமைச்சுக்கு இடமாற்றப்பட்டு அங்கு பணிபுரிவதாகவும் தகவல் கிடைத்தது.
ஒருபுறம் அவனது ஏமாற்றம டைந்த மனதுக்கு ஓரளவு தென்பும் கிடைத்தது. கல்வி அமைச்சில் பணி புரிவதால் தனது பிரச்சினைக்கு அவ னைக் கொண்டு தீர்வுகாண முடியும் எனற நம்பிக்கையுடன் கணேசன் உட னடியாக அமைச்சுக்குச் சென்றான்.
அங்கு இலகுவில் ஒருவரை யும் சந்திக்க முடியாது. விண்ணப்பப் பத்திரம் ஒன்றை நிரப்பிக் கையளித்து விட்டுக் காத்திருந்தான்.
ஒருசில விநாடிகள் கழிந்தி ருக்கும். அவனது நண்பனே அவனிடம் • நேரடியாக வந்தான். சந்தோஷத்துடன் கணேசனை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றான்.
சிற்றுணி டிச் சாலைக்குச் சென்று இருவரும் தேநீர் பருகியபடி அளவளாவினர். மூதூரில் நீண்டகாலம் : பெரேரா வசித்தபடியால் தமிழ் நன்கு : பேசுவான். அதேபோல கணேசனும் : தனக்கு நேர்ந்துள்ள முறையற்றதும், அநீதியானதும்மான இடமாற்றம் பற்றி : யும், தனது மனவேதனை பற்றியும் : எடுத்துக் கூறினான். 够
esse of 200
“கவலையை விடு கணேசன். நான் உன்னை நேரடியாகவே அமைச்
சின் செயலாளரிடம் அழைத்துச் செல்
கிறேன். அவரிடம் விடயத்தைக் கூறி ஆவன செய்வோம்" கூறிவிட்டு பெரேரா
கணேசனைச் செயலாளரிடம் அழைத் துச் சென்றான்.
அமைச்சில் பணிபுரிவதால் செயலாளருக்குப் பெரேரா பரிச்சயமா னவராயிருந்தான். அதனால் எந்தவித அனுமதியுமின்றி நேரடியாகவே செய லாளரிடம் கணேசனை அழைத்துச் சென் றான். பொதுவாக அமைச்சுக்களில் அர சங்கத்தின் ஆதரவாளர்கள்தான் உயர்
பதவிகளில் நியமிக்கப்படுவது வழக்கமா
யிருந்தது. அதனால் அரசாங்க அரசி யல் செல்வாக்குடையவர்கள் தங்களது விடயங்களை நீதிக்குப் புறம்பாயிருந்த போதிலும் சாதித்துக்கொள்வது இங்கு சுலபமான காரியமாகும். இருப்பினும் ஒருசில அதிகாரிகள் நீதியையும் நேர்மை யையும் கொணடவர்களாகவே விளங் கவே செய்தார்கள். அந்தவகையில் இந்தச் செயலாளரும் ஒருவராகும்.
கணேசன் தனது இடமாற்றம் பற்றியும், அது நீதிக்குப் புறம்பானதாக இருப்பதையும் சுட்டிக்காட்டினான். பெரே ராவும் தனது நண்பனது நியாயத் தன் மையை விளக்கினான். விடயத்தை நன்கு புரிந்துகொண்ட செயலாளர், "தமிழ்ப் பாடசாலைகளில் இப்படியான செயற்பாடுகள் நடைபெறுவதாக ஏற் கனவே எங்களுக்குப் பல முறைப்பா டுகள் கிடைத்துள்ளன" செயலாளர் கூறியபடி, இடமாற்றம் சம்பந்தமான
தனது மேசையிலிருந்த கோப்பை (File)
திறந்து பார்த்தார்.

Page 31
“எப்படி யாழ்ப்பாணத்திலி ருந்து மாற்றம் பெற்றுவந்த ஒரு ஆசிரி யருக்கு கொழும்பு நகரை அண்மித்த இப்பாடசாலைக்கு நியமிக்க முடியும். பொதுவாகவே கொழும்பு நகரப் பாட சாலைகளில் மேலதிக ஆசிரியர்கள் கடமையாற்றிக் கொண்டிருக்கும் இவ் வேளையில் இவருக்கு இப்பாடசாலை யில் இடம்கொடுக்க முடியும்" கூறியபடி அழைப்பு மணியை அழுத்தினார்.
பணியாள் ஒருவன் உள்ளே வந்தான். உடனடியாக இந்த இடமாற் றத்தை ரத்துச் செய்துள்ளதாகவும், இப் பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட இவ்வா சிரியை மற்றொரு வலயத்துக்கு மாற்றி
யுள்ளதாகவும் கடிதம் தயார் செய்து
கொண்டு வருமாறு பணித்தார்.
சில நிமிடங்களில் கடிதம் வந் தது. அதை வாசித்த பின் பிரதியொன் றைக் கணேசனிடம் கையளித்தார். மற் றைய மூலப்பிரதியை பாடசாலைக்கு உடனடியாக அனுப்பியிடுமாறு பணியா ளருக்குக் கூறினார்.
செயலாளருக்கு இருவரும் நன்றியைத் தெரிவித்துவிட்டு வெளியே றினார்.
“கணேசன்! எனது வீட்டுக்கு
பல விடயங்கள் பேச வேண்டும். எப் போது வரமுடியும்? பெரேரா மிக வாஞ் சையடன் கேட்டான்.
“நண்பா! இன்று நீ எனக்குச் செய்திருக்கும் உதவியை வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன். மூதூரில் தான் குடும்பம் இருக்கிறது. நான் இந்த
இதிேர் 65ń 2010
* சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கு போக இருக்கிறேன். பாடசாலை தொடங்க வருவேன். வந்ததும் ஒரு சனிக்கிழமை உன் வீட்டுக்கு வருகி
றேன்" கணேசன் கூறிமுடித்தான்.
தனது வீட்டு முகவரியை யும், தொலைபேசி இலக்கத்தையும் பெரேரா எழுதிக்கொடுத்தான். அதைப்
பெற்றுக் கொண்டு கணேசனும் புறப்
பட்டான்.
அறைக்கு வந்து சேர்ந்த போது கணேசன் உடல் அசதியாய் இருப்பதை உணர்ந்தான். அத்துடன் களைப்புற்றிருந்ததால் படுக்கையில் சாய்ந்தவன் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டான்.
கண்விழித்த போது நேரம் மாலை ஐந்துமணியாய் இருந்தது. உடனடியாகக் குளித்துவிட்டு நண்பன் ரகுவைக் காணப் புறப்பட்டான். விடுதி யின் வரவேற்புக் பகுதியில் நின்று கொண்டிருந்த ரகு, உள்நுழையும் கணேசனை வரவேற்றான்.
“நண்பா! என்ன! இரண்டு நாட்கள் இந்தப் பக்கமே வரவில்லை. உன்னுடைய செல்லிடப் பேசி இலக்கத்தையும் நீ தரவில்லை. என்ன நடந்தது?” நடந்தவை யாவற்றையும் கணேசன் விலாவாரியாகக் கூறினான்.
O
O
“இப்படியான எண்ணங்க ளைக் கொண்ட நம்மவர்கள் இருக் கும்போது நமக்கு விடிவா பிறக்கும்? வாயளவில்தான் ஒற்றுமை என்று பேசு வார்கள். நடத்தைகளிலோ சுயநலம், பிரதேசநலம், ஊர் நலம்? உறவு நலம்
:

கலந்தேயிருக்கும்". ரகு வெறுப்பை வார்த்தைகளால் தெரி வித்தான்.
"ரகு! செங்கமலத்தின் நிலை எப்படியிருக்கு? விசேட வைத்தியர் என்ன சொல்கிறார்?" கணேசன் ஆவ லுடன் கேட்டான்.
“இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டியி ருக்கு. ஏதோ மின்துடிப்பு மூலம் மூளை யைத் தூண்டிச் செய்யும் சோதனை
辑
O
参
e
象
象
象
es
XX
யின் பெறுபேறு கிடைத்தபின்தான் முடிவு தெரியவரும்" ரகு கூறினான்.
“ரகு! நான் நாளைக்கு ஊருக்குப் போகிறேன். இரண்டு நாட்களில் திரும்பி வருவேன். எனது தொலைபேசி இலக்கத்தைத் தருகி றேன். ஏதும் அவசரமெண்டால் தொடர்பு கொள்ளவும். நான் உடனடி
யாக வந்துவிடுவேன்!" கணேசன் விடைபெற்றான்.
HHHHHHHHHHHHHHHHHHHH (65 frLodb...)
多
VM கவிஞன் இதழ் 003 - வைகாசித்திங்கள் ஊ
முற்றுமுழுதான மாதாந்தக் கவிதைச் சஞ்சிகை
தொடர்பு : “கவிஞன்
། ས་
கூட்டுறவுக் கடை வீதி, புதுக்குடியிருப்பு - 5 (EP) மட்டக்களப்பு - இலங்கை. lâletiersöseö kavignan G2live.com
O கதிரவன்
கல்வி இலக்கிய கலைச் சஞ்சிகை - 4 தாடர்பு: பிரதம ஆசிரியர்,
de R = E (2010) asglif =m 4
*கதிரவன்’
புதுக்குடியிருப்பு. மட்டக்களப்பு - இலங்கை. தொலைபேசி : 065-4903006, 0774651732,0774339087、0776968250
Wps W தென்றல்
தேசிய பல்சுவை குடும்ப சஞ்சிகை
தொடர்பு : 34/1, பழைய கல்முனை வீதி,
asing : os diðjið: 0 (gang as ad) or 200
கல்லடி - மட்டக்களப்பு. தொ.பே 077-6983597 O65-2227542

Page 32
மனிதத்தைத் தேடுகிறோம்
-தரறாவுத் தாஹிர்
எங்கு தொலைந்தது? எங்ஙனம் மறைந்தது? நித்தமும் விழி, மனம்
மனிதர்கள் நாங்கள் தேழக்கொண்டிருக்கிறோம் எங்கள் தொலைந்துவிட்ட மனிதத்தை
மருத்துவமனைகளில், குருத்துவ மடங்களில், அலுவலகங்களில், éjà ിഞ്ഞുണ്ടെങ്കി, வாங்கும், விற்தம் வர்த்தகத் தலங்களில், தெருக்களில், வழிகளில், தெரியாத இடங்களில். வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு,
நாட்டுக்கு நாடாக. தேழக்லிகானர்ழருக்கிறோம் எங்கள் தொலைந்துவிட்ட மனிதத்தை
★
புத்தரும், கர்த்தரும், சித்தரும், நபிகளும் இத்தரை வந்து சொத்மிதனத் தந்தது
கலங்கியவாறு நாம் தேழக்கொண்டிருக்கிறோம் எங்கள் தொலைந்துவிட்ட மனிதத்தை
ஆலயங்களை இறுைகி ஆராய்ந்து பார்த்துவிட்டோம் கோயில்களில் புகுந்து கும்பிட்டுக் கேட்டுவிட்டோம் விகாரைகளுள் விரைந்து விசாரித்தும் தோற்றுவிட்டோம் மசூதிகளை அடைந்து மன்றாடி மீண்டுவிட்டோம் எங்குமே இல்லை இது கண்டதாய் எவருமே விர்ைடதுமில்லை அங்கே ଔdigid -- தேழக்கொண்டிருக்கிறோம் நாங்கள் தொலைத்துவிட்ட மனிதத்தை
 

பெண் பார்ப்பதற்கு வருவதாக வாக்க ளித்த நேரம் பறந்துவிட்டது
பெண் பகுதியினர் கதிரேசன் கோவில் அரசடியில் கால் கடுப்பெடுக்கக் காத்துக்கொண் டிருந்து நல்லாகக் களைத்துவிட்டனர். மணப் பெண் வதனி, படித்தவள். CIMA எக்கவுண்டன் அவள் மணமகன் பகுதியினர் இன்னும் வராத தற்கான உண்மைக் காரணத்தை மணந்து பிடித்து விட்டாள்.
"பிடிக்கவில்லை என்றால் நாகரிகமாக அதைத் தெரிவித்திருக்கலாமே. தண்டிக்கத் தேவை இல் லையே! எம்ம வருக்கு ஏன் இப்படியொரு அடாவடித்தனமோ?” என எண்ணியவள் வேறு சிலரும் பல்வேறு வகையில் தன் னைத் தண்டித்துள்ளனரே என அவள் நினைத்த போது கண் கலங்கியது.
சொல்லப்பட்ட நேரம் கடந்து ஒன்றரை மணித்தியாலம் ஆகிவிட்டது. இப்போது நேரம் மணி ஆறரை ஆட்களோடு ஆளாக வந்த வாட்டசாட்டமான வாலிபன் ஒருவன் வதனியின் தந்தை கந்தையா மாஸ்டரைத் தனிப்பட அழைத்தான். 'மாப் பிள்ளை வரமாட்டான். அவனுக்கு வேற வழியால் அவயின்ர ஆட்களுக்குள் ஒன்று பொருந்திவிட்டது” என்ற செய்தியைச் சற்று தயக்கத்தோடு தெரிவித்தான். சற்று நேரம் தாமதித்த அவன் ஒருகணம் வதனியைத் திரும்பிப் பார்த்தான். அவனுக்கு அவன் அழகியாகத் தெரிந்தது. வதனி நிறம் குறைவு இருந்தும், அவளின் மாந்தளிர்நிறம் - அங்கலட்சணம் - உடல்வாகு - கட்டழகு - முகச் செழுமை - எந்நேரமும் புன்முறுவல் பூக்கும் செவ்விதழ் அவளைச் சிற்பி செதுக்கிய சிலைபோல அழகுபடுத்தின.
அதேநேரம் பேரழகி கிளியோபெற்றா முதல் நடிகை சரோஜாதேவி முதலிய அழகிய பல மங்கையரின் உருவங்கள் மனத்திரையில் ஓடி மன்றந்தன. மறுகணம் தான் வணங்கும் சிவனுடைய உமாவை நினைத்துப் பார்த்தான். “மடைப்பயல்வதனி சிவப்பல்ல எனத் தெரிந்ததும், தன்னையும் பொய்யனாக்கிவிட்டானே” என வருந் தினான்.
கூச்சமும் குற்றவுணர்வோடும் கந்தையா மாஸ்டரைப் பார்த்துச் சொன்னான். "ஐயா! நான் உங்கடை ஊர்தான். நல்லதம்பி ஆசிரியரின் கடைக்குட்டி றோயலில் A/L படித்து, பட்டப்படிப்பைப் பேராதனையில் படித்ததால் உங்களுக்கு அறிமுகம் இல்லாமல் போயிட்டன், ஒரு மிகத் தயவான வேண்டு கோள். உங்களுக்கு எவ்வித மறுப்புமில்லையென்றால், நான் உங்கடை மகளைக் கட்டுகிறன் எனக்கு முழு மனச் சம்மதம்” எனப் பணிவாகத் தெரிவித்தான்.
“இரசனை ஆளுக்கு ஆள் வேறுபடும்” என்ற நினைவோடு கந்தையா மாஸ்டர் ஆறுதற் பெருமூச்சு விட்டார்! ام
St. wsf=ù
亨
to 200

Page 33
“என்னடாம்பி நேத்துத்தான் தைபுறந்து பொங்கல் கொண் டாடினமாதிரியிருக்க. ஆறாவது மாதமும் வந்து நிக்குது
என்ன வேகமாத்தான் இந்தக் காலம் ஓடுது. பூமிட அச்சிக் கழன்டு பொயித்தெண்டு இவன் விசரன் பூபாலி அண்டைக்குச் சொன்
னது சரிதான்.
ஆறு மாதமெண்டாச் சும்மாவா! அர வயது எல்லோருக்கும் கூடிப் பொயித்து
இத்தனை மாசத்துக்கும் நாமென்னதான் செய்தம்? குடிச்சதும், திண்டதும் தான் மிச்சம்!
ஆனாலும் இந்தியாவில் - தமிழர் நாட்டில ஒரு சிறப்பான செம்மொழி மாநாட்ட நடத்தப் போறாங்க. நம்மட தமிழ்மொழி V། செம்மொழியெண்ட அந்தஸ்தப் N பெற்றது எதனால? இத நீங்க சிந்திக்க வேணும்.
தமிழ்மொழியில் ஏற் கனவே எழுதப்பட்ட நம்மட பழந்தமிழ் இலக்கியங்க ளாலதான் இந்தச் சிறப் ܓ
பும், மேன்மையும் வந்தி ருக்கு. இது நம்மட UI பழைய மரபுவழி இலக்கி N யங்களாலதான் ஏற்பட்டிருக்கு. w நீயும் நானும் எழுதுற புதுக்கவித ! (ܠܢ - நவீன இலக்கியங்களால | イ
ಥ್ರಿàಅನ್ದೇಶಿಗ್ಗೆ | 二次) へ_人。 தஸ்து வரல்ல. இத உணர்ந்து நாம, \ ~7グ இனிமேலும் மரப உதாசீனம் செய்யாம எழுதவேணும்.
தமிழ், இந்தியா - தமிழ்நாட்டில வாழுதோ இல்லையோ, ஆனால விழா எடுக்கிறாங்க. அத நாம பாராட்டத்தான் வேணும். இனி மேலாவது இத மனசிலவச்சி நாமெல்லாம் மரபக்கெடுக்காம எழுதி நமது செம்மொழிக்கு உரம் சேர்க்க வேணும்.
சரி நான் வரப்போறன் என்ர தமிழ்மொழி, செம்மொழி அந் தஸ்தப் பெற்றது சரியான சந்தோசமாயிருக்
4. 200
 
 
 
 
 
 
 
 
 
 
 

“இலட்சியம் இல்லாமல் இலக்கியம் இல்லை” எவ்வளவு உண்மை! உங்கள் மார்ச் மாத (2010) “செங்கதிர் ஆக்கங்களைப் படித்து மகிழ்ச்சியுற்ற நிலை யில் இதனை எழுதுகின்றேன். உங்கள் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் மனத்திடத்தையும் தந்தருள்வாராக! அன்புமனி, ஆரையூர் இளவல், திருமதிசத்தியானந்தி நமசிவாயம் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்பதனை மிக ஆணித்தரமாக நிரூபித்துள்ளிர்கள். இப்படைய்பாளி களையும், அவர்கள் ஆக்கங்களையும் பலரும் இலகுவில் அறிந்துகொள்ளும் வகையில் நல்ல தமிழில் எழுதியுள்ளிர்கள். உங்கள் பணி ஒரு சிற்பியின் முயற்சி போல் உள்ளது. பல அரிய விசயங்களைத் தேடிப் பொறுக்கி, பதிப்பித்து தரமான சஞ்சிகை படைத்து வருகின்றீர்கள். சஞ்சிகையின் கட்டமைப்பும், விசயங்களை ஒழுங்குபடுத்தி அலங்கரித்துள்ள முறையும் மனங்கொள்ளத்தக்கதாக உள்ளது. has the potential to grow and be influential மட்டக்களப்பு மண்வாசனையும், மட்டக்களப்புத் தமிழும் இங்கு உயர்வு பெற்று நிற் கின்றது. மட்டக்களப்பு மக்களுக்கு பல நூறு வருடங்கள் தொண்டாற்றிய தமிழ் பரி காரிகளும், முஸ்லிம் பரிகாரிகளும், அவர்கள் மேற்கொண்ட பரிகார முறைகளும் வெளிக்கொணரப்பட வேண்டிய ஒரு முக்கிய அம்சமாகும். இப்பரிகாரிகள் பற்றியும், பரிகார முறை பற்றியும் பேசப் பலர் இருப்பர். அவர்களையும் ஊக்குவித்தால் நல்ல தொரு பணியை செங்கதிர் செய்யும். M.L.A.asrabü தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபக உபவேந்தர். “செங்கதிர்" பங்குனி மாத இதழை நன்றியுடன் பெற்றுக் கொண்டேன். இதில் பிரசுர மாகியுள்ள மூன்று ஆக்கங்கள் தொடர்பில் எனது கருத்துக்களைச் சுருக்கமாகக் கூற விரும்புகின்றேன். பெண்ணியம், ஆணியம் என்ற தலைப்பின் கீழ் பெண், ஆண் ஆகிய இரு சாராரினதும் திரப்புக்காகத் தேவலோக சபை வரை எடுத்துச் சென் றமைனாது நல்லதொரு கற்பனை ஆக அமைந்துள்ளது. பக்கம் (29) "தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகை சான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்” என்று பெண்ணின் பெருமையை எடுத்துக் கூறுகின்றார் வள்ளுவய் பெருந்தகை. இக் குறளின் கருத்தை “கதை கூறும் குறள்”நற்றுணை-(பக்கம் 41)மூலம் நன்கு விளக் கியுள்ளார் கேந்திரன். பெதுவுடமைத் தத்துவத்தை முதன் முதலில் உலகிற்குப் போதித்த தத்துவாசிரியன் ஆசிய சிறப்புவாய்ந்த பெண்மணியாக இருந்துள்ளார்
ਕ
sa 2010

Page 34
என்ற உண்மை பலருக்குத் தெரியாத ஒன்றாகவுள்ளது. திருமதிஜென்னியைப் பற்றி அற்புதமாக எழுதியுள்ளார் கோத்திரன், அவருக்கு வாசகர் சார்பில் எனது பாராட்டுக் களைக் கூறிக் கொள்கின்றேன்.
எந்தவொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறுவார்கள். ஆனால் பெண்ணின் வெற்றிக்காக அவர் பின்னால் இருந்து செயற்படய் பொதுவாக எந்த ஒரு ஆணும் விரும்புவதில்லை என்பதுடன் தானாகக் கிடைக்கும் நன்மைகளுக்கு எதிராக செயற்படவும் செய்வார்கள் என்ற கருத்து “எனக்குப் பிடித்த என் கதை’ என்ற பகுதியில் சக்தி (பக்கம் 34) என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இக்கதையில் பெண் அடக்குமுறைக் கொள்கை எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளது என்ற விடயம் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. நேர்மையும் திறமையும், தகுதியும், சேவை மூப்பும் உள்ளவர்களைப் புறக்கணித்துவிட்டுத் தமது பந்தங்களுக்கும், சொந்தங்களுக் குமே ஆளும் வர்க்கத்தினர் பதவிகளைக் கொடுப்பார்கள் என்ற உண்மையும் இக் கதை மூலம் நன்கு புலப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்க செங்கதிர்! Kதவபாலன் 404A, ARC Qrs., Gannoruwa, Peradeniya. செங்கதிர் 28வது இதழ் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. பல கனதியான கதைகள், கட்டுரைகள், கவிதைகளை உள்ளடக்கி மலர்ந்துள்ளது. ஆசிரியர் செங்கதிரோனுக்கு எனது பாராட்டுகள். எங்களிடை இலைமறைகாயாக இருக்கும் அறிஞர்களையும் கலைஞர்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் "செங்கதிர் இம்முறை பெரிய கல்லாறு பண்டிதர் சீதம்பிராசா அவர்களை நல்ல முறையில் அறிமுகம் செய்துள்ளது. “வேலை வேணும்’ என்னும் கதை சமூகம் இன்று எதிர்கொள்ளும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் ஒரு சோக முகத்தை வெளிக்காட்டுகிறது. ‘வரலாற்றுச் சுவடுகள்’ என்னும் கதையும் சிறப்பாகவுள்ளது. தமிழர் வரலாற்றின் சோக அத்தியாயத்தின் சுவடுகளை நினைவூட்டுகிறது. வாசிக்கும் ஒவ்வொருவரையும் பெருமூச்செறிய வைப் பது கதையின் வெற்றியாகும். சண்முகலிங்கத்தின் ‘சிங்கள இலக்கியமும் பொதுக்களமும் கட்டுரை தமிழ் ஆய்வறிவா ளர்களால் இன்னும் அதிகம் தொடாமல் உள்ள பொதுக்களம்’ பற்றி எடுத்துரைக்கி றது. இந்தக் கருத்தின் வழி ஆராய்ந்தால் தமிழ் நாவல், சிறுகதை, பத்திரிகை மற் றும் சமூக வளர்ச்சியோடு தொடர்புடைய பல அம்சங்களின் தாற்பரியம் வெளிப்படும். மொத்தத்தில் கனதியான கட்டுரை. நீலாவணனின் “வேளாண்மை’ காவியத்தை நிறைவாக்கிக் கொள்ளும் அவாவில் 'விளைச்சலை செங்கதிரோன் தந்துள்ளார். செங்கதிரோனின் மட்டக்களப்பு வாழ்வி யலைக் கவிதையாக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. கவிதைகளில் 'மனிதப் புனிதம்' அழகிய அமைப்பைக் கொண்டு சிறப்பாக அமைந்துள் ளது. வாமனின் 'வித்துவான் சபூபாலபிள்ளை' பற்றிய கட்டுரை இதுவரை வெளி வராத பல தகவல்களைச் சொல்லும் சிறந்த கட்டுரை.
திருவேனிசங்கமம் - காரைதீவு. |ଞ saf 2010

“செங்கதிர்” கட்டன் விபரம் (2010) (அஞ்சல் செலவு உட்பட)
இலங்கை இந்தியா வெளிநாடு
ஓராண்டுக் கட்டணம் 1000/- 500/- USS 20
ஆயுள் கட்டணம் 10,000/- 5000/- USS 100
புரவலர் கட்டணம் 25,000/- 12,500/- USS 250
ஆயுள் கட்டணம் செலுத்துவோருக்கு வாழ்நாள் முழுவதும் “செங்கதிர்” வழங்கப்படும். புரவலர்களுக்கு வாழ்நாள் முழுவதும் "செங்கதிர்” வழங்கப் படுவதுடன் "செங்கதிர்” எதிர்காலத்தில் வெளியிடவுள்ள எல்லா நூல்களும்
இலவசமாக வழங்கப்படும்.
விளம்பரக் கட்டணம்
பின் அட்டை வெளிப்புறம் முழு 5000 500 USS 50 அரை 3000 1000 USS 30 முன் அட்டை உட்புறம் (POP 3000 000 USS 30 அரை 2000 750 USS 20 பின் அட்டை உட்புறம் (ՄXԼք 2000 750 USS 20 அரை 1500 500- USS 15
அன்பளிப்
அன்பளிப்புச் செய்ய விரும்பும் நலன்விரும்பிகள் (உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும் தொகையை ஆசிரியரிடம் வழங்கலாம்.
வங்கி : மக்கள் வங்கி (நகரக்கிளை). மட்டக்களப்பு கனக்கு 3% : Listoolisis.jpg (நடைமுறைக்கல்விக்கு)
காசுக்கட்டளை: அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்பு.
காசோலைகள் / காசுக்கட்டளைகளை த.கோபாலகிருஷ்ணன் என்று
பெயரிடுக. அல்லது பணமாக ஆசிரியரிடம் நேரிலும் வழங்கலாம்.
அன்புடையிர்,
தயவு செய்து 2010ம் ஆண்டுக் குரிய சந்தா 1000/= தைச் செலுத்தி “செங்கதிர் இன் வரவுக்கும், வளர்ச்சிக்கும் உதவுங்கள். நன்றி.
ஆசிரியர் : செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன்.

Page 35
Hana G
எமது சேவைகள்,
கறுப்பு - வெள்ளைப்
புகைப்படத்தை வர்ணமாக்குதல்
புகைப்படத்தில் இருப்பவரை ரேகைச் சித்திரமாக்கி
இது நிறந்தீட்டுதல்
ఖజ్ఞ
மற்றும் தமிழில் 3 மொழிபெயர்ப்பு செ
இல.15, டயஸ் வீ; தொடர்புகளுக்கு : +94 652
| tf6ổi 60Igbg 6ẽ : hơndg
Stri Printers . Batticato
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தரமான
ប្រះ
DEůejnerů பெற்றுக் கொள்ளுங்கள்:
8
உங்கள் புகைப்படத் பொருத்துதல்
சம்மந்தமான விளம்பரங்களை வடிவமைத்தல்
அழைப்பிதழ்களு
3. மற்றும் அனைத்துவிதமான மத்துக் கொடு
ឆ្នា
முறையில் வடிவமைத்துக் கொடுக்கப்படும்
இருந்து சிங்களத்திற்கும் கடிதங்கள் விபரங்கள் ! $trigତି!;
தி. மட்டக்களப்பு. 224 82O I +94 7191O5.237
s21(eyahoo.com