கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாதம் 2002.01-06

Page 1

rண்பாடும்

Page 2
iБmiji
சமுக விஞ்ஞானிகள் சங்கத்தின் அரையாண்டுச் சஞ்சிகை
தொகுதி - 1 ஜனவரி - ஜூன் 2002
ஆசிரியர்
எம் ஏ நஃமான்
ஆசிரியர் குழு என் சண்முகரத்தினம் சித்திரலேகா மெளனகுரு செல்வி திருச்சந்திரன்
தொடர்பு முகவரி பிரவாதம், சமூக விஞ்ஞானிகள் சங்கம் 425/15, திம்பிரிகஸ்யாய வீதி, கொழும்பு - 5, இலங்கை. தொலைபேசி: 501339, தொலைநகல்: 595563 Lósö9ígjai: ssaClureka.lk
விலை : தனிப்பிரதி ரூபா 100/-
அச்சு: யுனி ஆர்ட்ஸ் (பிறைவேற்) லிமிற்றட், 48B, புளுமென்டால் வீதி, கொழும்பு - 13.
ISSN - 1391 - 7269

ஆசிரியர் குறிப்பு
பிரவாதம் சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் தமிழ்ச் சஞ்சிகை. சமூக
விஞ்ஞானிகள் சங்கம் இலங்கையின் மிக முக்கியமான ஆய்வறிவாளர் நிறுவனங்களுள் ஒன்றாகும். 1970களின் பிற்பகுதியிலிருந்து சமூக முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டுவரும் இச்சங்கம், சமூக நீதி, சமத்துவம், இன நல்லுறவு, மனித உரிமைகள், பெண்விடுதலை, பண்பாட்டுப் பன்மைத்துவம், ஜனநாயக மேம்பாடு போன்ற விடயங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள், கருத்தரங்குகள், வெளியீடுகள் மூலம் முற்போக்கான சிந்தனைகளைப் பரப்பி வருகிறது.
ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் முக்கியமான பல நூல்களை வெளியிட்டுள்ள இச்சங்கம், கடந்த பல ஆண்டுகளாக ப்ரவாத என்ற இரு மாத சஞ்சிகையை ஆங்கிலத்திலும், அதே பெயரில் ஒரு காலாண்டு இதழைச் சிங்களத்திலும் வெளியிட்டுவருகிறது. ஆரம்பத்திலிருந்தே இதே போன்ற ஒரு இதழைத் தமிழிலும் வெளியிடவேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் பல்வேறு காரணங்களால் அது தாமதமாயிற்று. இப்போது தமிழ்ச் சஞ்சிகை வெளிவருவது மகிழ்ச்சிக்குரியது. இப்போதைக்கு அரையாண்டு இதழாக வெளிவரும் பிரவாதம் விரைவில் காலாண்டு இதழாக மலரும் என எதிர்பார்க்கிறோம்.
பிரவாதம் என்ற சொல் தமிழ் வாசகர்களுக்கு அதிகம் பரிச்சயமானதல்ல; எனினும், தமிழுக்கு அந்நியமானதுமல்ல. வடமொழிமூலத்தைக் கொண்ட இச்சொல் முக்கியமான தமிழ் அகராதிகள் எல்லாவற்றிலும் இடம்பெற்றுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) இதற்குத் தரும் பொருள் காற்று, Wind, ஊர்ப் பேச்சு, talk of the town என்பனவாகும். ஆங்கில, சிங்கள இதழ்களுடன் பெயர்ப்பொருத்தம் கொண்டிருப்பது மட்டுமன்றி, பொருட்பொருத்தம் காரணமாகவும் தமிழ் சஞ்சிகைக்கும் இப்பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.

Page 3
சமூக விஞ்ஞானம்,பண்பாட்டுத்துறைகள் சார்ந்த, சமூக முன்னேற்றத்துக்கு உதவுகின்ற ஆராய்ச்சிகள், விவாதங்கள், கலந்துரையாடல்களுக்குப்பிரவாதம் ஒரு திறந்த களமாக இருக்கும். தேசிய, சர்வதேசிய விவகாரங்கள் தொடர்பான அறிவுபூர்வமான உரையாடல்களுக்கு வழிவகுக்கும். உள்நாட்டு அறிஞர்களின் கருத்துக்களை மட்டுமன்றி, உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் பெற்ற முற்போக்குச் சிந்தனையாளர்களின் கருத்துக்களையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தும். அவ்வகையில் தமிழ்க்கட்டுரைகள் மட்டுமன்றி, பிறமொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்படும் கட்டுரைகளும் பிரவாதத்தில் இடம்பெறும்.
உயர் கல்வி கற்கும் மாணவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள், அறிவு நாட்டமுடைய பொது வாசகர்கள் முதலியோரின் ஆய்வறிவுத் தேவைகளைப் பிரவாதம் நிறைவு செய்யும் என்று நம்புகிறோம்.
வாசகர்களிடமிருந்து சஞ்சிகை தொடர்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் எதிர்பார்க்கிறோம்.
இச்சஞ்சிகையை வெளிக்கொண்டுவருவதில் பலவகையிலும் உதவிய சமூக விஞ்ஞானிகள் சங்க அலுவலர்களுக்கும், குறிப்பாக திருமதி மோகனா பிரபாகரன், ஆங்கிலத்திலிருந்து கட்டுரைகள் சிலவற்றை மொழிபெயர்த்து உதவிய மு. பொன்னம்பலம், புஷ்பா சிவகுமாரன் ஆகியோருக்கும் எமது நன்றி.
ஆசிரியர்

உலகமயமாக்கலும் மனித சுதந்திரமும் ஒரு அரசியல் பொருளாதாரப் பார்வை
என். சண்முகரத்தினம்
விங்கும் உலகமயமாக்கல் என்பதே பேச்சு. உலகம் ஒரு கிராமம் போல் சுருங்கிவிட்டதெனும் வார்த்தைகள் பிரபல்யம் பெற்றுவிட்டன. இதில் உண்மையுண்டு. தொடர்பு தொழில்நுட்பங்களின் வளர்ச்சி உலகத்தைப் பற்றி அறிந்துகொள்ள உதவுகின்றது. இத்துறையில் நவீனமயமாக்கல் ஆற்றிய சாதனைகளோ பல. இவற்றின் முக்கிய விளைவுகளில் ஒன்று தூரத்தை மனிதர் நேரத்தால் வெற்றி கொள்ள முடிவதாகும். இந்தவகையில் உலகம் ஒரு “கிராமம்’ போல் சுருங்கிப் போய் விட்டதெனலாம். ஆனால், இந்த உண்மையின் மறுபுறத்தில் அதைவிடப்பெரிய உண்மைகளைக் காண்கிறோம். உண்மையில் உலகம் எவ்வளவு பரந்தது என்பதை, அந்த உலகின் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை, அங்கே பலம்வாய்ந்த அணிகள் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய அதிகாரத்தை, மனித உரிமை மீறல்களை, இனவாதத்தை, நிறவாதத்தை, பால் ரீதியான பாகுபாட்டை
மறுபுறத்தில் காண்கிறோம்.
எங்கும் ஜனநாயகம் என்பதே பேச்சு. மனித வரலாறு மனித விடுதலை எனும் இறுதி நிலையத்திற்கு வந்துவிட்டது, அல்லது அதை நோக்கி துரிதமாக வந்து கொண்டிருக்கிறது என்று உலகமயவாதிகள் சொல்கிறார்கள். “கம்யூனிசத்தின்’ தோல்வி ஜனநாயகத்தின் வெற்றி, இனி சுயபோட்டிச் சந்தை உலகில் மனிதர்கள் சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் அநுபவிக்கமுடியும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
உலகமயமாக்கல் பற்றி விமர்சன நோக்கில் பார்ப்போர் இக்கருத்துக்களை ஏற்கவில்லை. ஆகவே, உலகமயமாக்கல் பற்றி வேறுபட்ட விளக்கங்கள் வளர்கின்றன; விவாதங்கள் தொடர்கின்றன. இந்தக் கட்டுரையில் உலகமயமாக்கலின் அரசியல் பொருளாதாரத் தன்மைகள் பற்றியும், மனித சுதந்திரத்தை நோக்கிய ஜனநாயகப் போராட்டங்களின் அவசியம் பற்றி சில அவதானிப்புக்களையும், விமர்சன ரீதியான அபிப்பிராயத்தையும் முன்வைக்க விரும்புகிறேன்.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 1

Page 4
நாம் முன்னெப்போதும் இல்லாதவகையில் மூலதனத்தின் ஆட்சிக்குள்ளாகியிருப்பதை அநுபவரீதியில் காண்கிறோம். உலகம் கிராமம் போல சிறிதாகி விட்டதென்னும் போது மூலதனத்தின் வரலாற்றுச் சாதனையைத்தான் குறிப்பிடுகிறோம். முதலாளித்துவத்தின் வரலாறு மூலதனத்தின் சர்வதேச மயமாக்கலின் வரலாறு என்றால் மிகையாகாது. இந்த வரலாற்றின் இன்றைய காலகட்டம் சில விசேட தன்மைகளைக் கொண்டுள்ளது. இது தகவல் புரட்சியின் யுகம் என்றும், தொடர்பு தொழில்நுட்பத்தின் யுகம் என்றும் பலர் சொல்வதைக் கேட்கிறோம். இந்தப் புரட்சியே உலகமயமாக்கலின் இன்றைய காலகட்டத்தின் ஊடகம். இந்தப் புதிய தொழில்நுட்பம் பண மூலதனத்தின் துரித நகர்ச்சிக்கும், உலக ரீதியான தொடர்புகளுக்கும் உதவுகிறது. ஆயினும் இந்தத் தொழில்நுட்பத்தினை மட்டும் வைத்து இன்றைய உலகமயமாக்கலின்
முழுத்தன்மைகளையும் விளக்கிவிட முடியாது.
அந்த விளக்கத்தை உலக அரசியல் பொருளாதாரப் போக்குகளில் தேட வேண்டும். விஞ்ஞான, தொழில்நுட்பப் புரட்சிகளின் முக்கியத்துவத்தை அத்தகைய ஒரு தேடலுக்கு ஊடாகவே முழுமையாகக் கிரகிக்க முடியும். இந்த வகையில் 1980-90களில் எற்பட்ட சர்வதேச அரசியல் மாற்றங்கள் முக்கியமாவை, சோவியத் முகாமின் மறைவு உலக அரசியல் சக்திகளின் சமநிலையை அடிப்படையாக மாற்றியது. சீனாவின் உள்நாட்டு மாற்றங்களும் இதற்கு உதவின. இந்த அரசியல் மாற்றங்கள் முதலாளித்துவத்திற்கு மேலும் சார்பான பொருளாதார சூழ்நிலைகள் வளர உதவின. மூலதனத்தின் இயக்கத்திற்கு அரசியல் அமைப்பு ரீதியான சவால்கள், தடைகள் பெருமளவில் அகற்றப்பட்டன. பொருளாதார பலத்தாலும் இராணுவ பலத்தாலும் அமெரிக்கா உலகின் தலைமையைப் பெற்றுக் கொண்டது. ஐரோப்பிய ஒன்றியமும் ஜப்பானும் அமெரிக்காவின் தலைமையைத் தொடர்ந்தும் ஏற்றன. இப்படிச் சொல்வதால் இந்தக் கூட்டுக்குள் முரண்பாடுகள் இல்லை என்பதாகாது.
மாறிய சர்வதேச அரங்கில் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்களின் பங்கு மேலும் முக்கியத்துவம் பெற்றது. வளர்முக நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதில் இவை முக்கிய பங்கினை வகித்து வந்துள்ளன. 1970 களிலிருந்து இந்நிறுவனங்களினால் வகுக்கப்பட்ட சுயபோட்டிச் சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளை மேலும் பரவலாகவும் பலப்படுத்தவும் புதிய சர்வதேச நிலைமை உதவியது. இப்போது கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் அந்தப் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டன.
2 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

ஆகவே, மூலதனத்தின் சர்வதேசமயமாக்கலை ஒரு குறிப்பிட்ட போக்கில் வழிநடத்தும் கொள்கைகளை அமுல்நடத்தச் சாதகமான அரசியல்நிலைமை உருவாகிற்று. இன்றைய உலகமயவாதமெனும் கருத்தமைவின் பொருளாதார அடிப்படை சுயபோட்டிச் சந்தைக் கோட்பாடாகும். ஆனால், உலகமயமாக்கல் ஒரு பொருளாதாரப் போக்கு மட்டுமல்ல; அதற்கு அரசியல், சமூக, கலாசார, சூழல் பரிமாணங்கள் உண்டு. உலகமயமாக்கலின் இன்றைய கட்டம் நவீனத்துவத்தின் தொடர்ச்சியே. அரசியல் மட்டத்தில் இன்றைய காலகட்டம் உலகின் ஜனநாயகமயமாக்கலின் காலகட்டம் என ஜனநாயகவாதிகள் கூறிவருகின்றார்கள். மனித சுதந்திரங்கள் பற்றிய பிரசாரங்களை அவர்கள் தமது நிலைப்பாட்டிலிருந்து செய்து வருகிறார்கள். சிவில் சமூகமே மனித சுதந்திரத்தின் உறைவிடம் எனும் கருத்து பலம் பெற்றுள்ளதைக் காண்கிறோம். அதேவேளை தாராளவாதத்தின் பொருளியலுக்கும் அரசியலுக்கும் இடையிலான முரண்பாடுகளையும் நடைமுறையில் சகல நாடுகளிலும் காண்கிறோம். இந்த முரண்பாடுகள் பற்றி நான் வேறு கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன்.
இங்கு மனித சுதந்திரத்திற்கு ஒரு சுருக்கமான வரைவிலக்கணத்தை முன்வைத்து உரையாடுவது பயன்தரும். பொதுவாக மனித சுதந்திரம் என்னும் போது தனிமனித சுதந்திரமே முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு நபர் தனக்கு பெறுமதி மிக்கதெனக் கருதும் செயற்பாட்டினை, இருப்பினைத் தேர்ந்தெடுக்கவும் அநுபவிக்கவும் இருக்கும் உரிமை, ஆற்றல்தான் மனிதசுதந்திரம் எனலாம். இக்கருத்திற்கு ஒரு வரலாற்றுப் பின்னணியுண்டு. இதனை தாராளவாத மரபுடன் இணைத்தல் சுலபம். தாராளவாதம் தனிமனித சுதந்திரம் பற்றிப் பலம் வாய்ந்த தத்துவமரபை உள்ளடக்கியது. இந்த மரபில் இக்கருத்திற்கு விளக்கம் தேடும்போது தனிநபர் வாதத்திற்கே அது இட்டுச் செல்லலாம். ஆயினும் இக்கருத்திற்கு நவீன தாராளவாதத்தின் வரலாற்றையும்விட நீண்ட பின்னணியுண்டு. உதாரணமாக அரிஸ்டாட்டிலிய சிந்தனை மரபில் மனித ஆற்றல் உடைமையை இவ்விதமாக வரைவிலக்கணப்படுத்தலாம். மனித சுதந்திரம் பற்றிய மேற்கூறிய வரைவிலக்கணத்தை சமீபகாலத்தில் வலியுறுத்தி வருபவர் அமர்த்தியா சென் ஆவார். அவரின் விளக்கங்கள் தாராளவாத மரபுசார்ந்ததெனினும் சமூக ஜனநாயக விழுமியங்களை உள்ளடக்கியன.
தனிமனித சுதந்திரம் பற்றிய இவ் வரைவிலக்கணத்தை மார்க்சின் மனித விடுதலை பற்றிய சிந்தனையுடன் இணைக்கமுடியும். தனிமனிதனின் பூரண விடுதலையே வரலாற்றின் இறுதி என மார்க்ஸ் கருதினார். அவருடைய கனவில்
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 3

Page 5
இவ்விடுதலையானது, “நான் இன்று ஒன்றையும் நாளை பிறதொன்றையும் செய்வதைச் சாத்தியமாக்குகிறது. எனது மனதில் இருப்பது போல் காலையில் வேட்டையாடி மதியநேரம் மீன்பிடித்து பிற்பகல் கால்நடைகளைப் பராமரித்து மாலை உணவுக்குப் பின் விமர்சனத்தில் ஈடுபடும் அதேவேளை ஒரு வேட்டைக்காரனாகவோ, மீன்பிடியாளனாகவோ, மந்தைக்காவலனாகவோ,
விமர்சகனாகவோ மாறாத சுதந்திர மனிதன்"
இது மனித விடுதலையின் பூரணத்துவம் பற்றிய கவித்துவமான கனவு. இதை இளையமார்க்சின் அதிஇலட்சியவாத மனோகரக்கனவு என ஒதுக்கிவிட முடியாது. இந்த இலட்சியம் மார்க்சின் முக்கிய ஆக்கங்களில், குறிப்பாக மூலதனத்தில் இழையோடிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். மனிதர் தம் அன்றாட வாழ்வின் அவசியத்திலிருந்து விடுபட்டு, இருப்பிலும் செயற்பாட்டிலும் சுதந்திரத்தை அனுபவிக்கும் நிலைமைகளை உருவாக்குதலே மணிதவிடுதலைப் போராட்டத்தின் நோக்கமாகும். முதலாளித்துவம் பற்றி மாாக்ஸ் கொடுத்த விமர்சனம் இந்தப் பார்வையில் அமைந்ததாகும். உழைப்பு மனிதவாழ்விற்கு இன்றியமையாதது; ஆனால், உழைப்பினை நிர்ணயிக்கும் சமூக உறவு சுரண்டலற்றதாகவும் சுதந்திரத்தைப் பேணுவதாகவும் இருக்கவேண்டும். மூலதனத்திற்கும் உழைப்பிற்குமிடையேயான உறவின் நிராகரணத்திலேயே இத்தகைய சுதந்திரம் பிறக்க முடியுமெனக் கருதியபோதும், மார்க்ஸ் முதலாளித்துவ அமைப்பிற்குள் உழைப்பாளர்கள் உரிமைகளுக்காகப் போராடுதலை ஆதரித்தார். இந்தவகையில் வர்க்கப் போராட்டங்களும், மற்றைய சமூகப் போராட்டங்களும் மனித சுதந்திரதிற்கான போராட்டத்தின் அம்சங்களே. வர்க்கங்கள் மட்டுமன்றி இனம்,
நிறம், பால், சாதி போன்றவையும் இங்கு முக்கியத்துவமடைகின்றன.
இன்றைய உலக அமைப்பில் தனிமனிதர்கள் அனுபவிக்கும் உரிமைகள் கூட்டுச் செயற்பாடுகளுக்கும் போராட்டங்களுக்கும் ஊடாகவே பெறப்பட்டன. இந்தப் போராட்டங்கள் உலகின் பல பாகங்களில் பலமட்டங்களில் பலவித வடிவங்களில் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. ஒரு சந்தர்ப்பத்தில் வர்க்கம், இன்னொரு சந்தர்ப்பத்தில் பால், பிறிதொரு இடத்தில் சாதி, வேறொரு கட்டத்தில் சூழலுக்கான உரிமை, இனத்தின் கூட்டுரிமை இப்படியாகப் பலவேறு காரணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அத்துடன் இவற்றுள் பலகாரணிகள் ஒன்றிணைவதையும் முரண்படுவதையும் காண்கிறோம். இவை எல்லாவற்றையும் இங்கு ஆராய்வது எனது நோக்கமல்ல. அதேவேளை இந்தப் பல்வேறுபட்ட
4 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

பரிமாணங்களையும் உள்ளடக்கிய ஒரு உலகப் பார்வை அவசியம் என்பதை அழுத்திக் கூறுதல் தகும். இன்றையப்போராட்டங்கள் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்கள். நாம் இன்னமும் ஜனநாயகப் புரட்சியின் சவால்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலையிலேயே உள்ளோம். உலகமயமாக்கலின் அரசியல், பொருளாதார அம்சங்கள் சிலவற்றை சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
உலகமயமாக்கலின் முக்கியதன்மைகள்
கடந்த மூன்று நூற்றாண்டுகளில் நவீன யுகத்தின் சிந்தனையாளர்கள் பலர் முதலாளித்துவத்தின் தன்மைகள் பற்றியும், சுயநலத்தினால் உந்தப்படும் தனிநபர்களின் செயற்பாடுகளுக்குச் சுயபோட்டிச் சந்தை உதவுவது பற்றியும், சிவில் சமூகத்தின் சுயாதீனம் பற்றியும் விளக்கங்களை முன்வைத்தனர். ஆயினும், முதலாளித்துவத்தின் சர்வதேசியத் தன்மை பற்றியும், உலகனைத்தையும் ஆட்கொள்ளவல்ல மூலதனத்தின் உள்ளார்ந்த ஆற்றல் பற்றியும் தீர்க்கதரிசனப் பார்வையைக் கொண்டிருந்தவர் மார்க்ஸ் ஒருவரே எனலாம். 1848ம் ஆண்டில் மார்க்சும் ஏங்கல்சும் எழுதிய கம்யூனிஸ் கட்சி அறிக்கை எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்ட பின்வரும் மேற்கோள் இதனை விளக்குகிறது.
“உலக சந்தையின் சுரண்டலுக்கு ஊடாக முதலாளிவர்க்கம் ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் ஒரு பல்கலாச்சாரத் (cosmopolitan) தன்மையைக் கொடுக்கிறது. அது பிற்போக்காளருக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கும் வகையில் இதுவரை ஆலைத்தொழில் காலூன்றி நின்ற தேசியப்புலத்தினை (National ground) பின்னிழுத்து விடுகிறது. நிலைபெற்றிருந்த எல்லா ஆலைத் தொழில்களும் அழிக்கப்பட்டுவிட்டன, அல்லது தினந்தோறும் அழிக்கப்படுகின்றன. இப் புதிய ஆலைத் தொழில்களின் அறிமுகம் நாகரிகம் அடைந்த சகல தேசங்களுக்கும் ஒரு ஜீவ மரணப் பிரச்சனையாகின்றது.
.பழைய உள்ளூர்த் தேசிய, தனித்து நின்ற சுயபூர்த்திக்குப் பதிலாக நாம் சகல திசைகளிலும் உறவு கொள்ளலையும், தேசங்களுக்கிடையே பரஸ்பரமான தங்கிநிற்பினையும் கொண்டுள்ளோம். இது பொருள்ரீதியான உற்பத்தியில் மட்டுமல்ல அதே போன்று அறிவு உற்பத்தியிலும் தான். ஒவ்வொரு தேசத்தினதும் அறிவுரீதியான ஆக்கங்கள் (உலகின்) பொதுச் சொத்தாகின்றன. தேசிய ரீதியான ஒரு பக்கச்சார்பு நிலையும் குறுகிய மனப்பான்மையும் அசாத்தியமாகின்றன. எண்ணற்ற உள்ளூர்த் தேசிய இலக்கியங்களிலிருந்து ஒர் உலக இலக்கியம் பிறக்கிறது"
iyansib - gaar - gosi 2002 5

Page 6
153 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த வார்த்தைகள் இன்றைய உலகநிலை பற்றிய விவரணம் போன்று இருக்கின்றது. சுவாரசியமான விடயம் என்னவென்றால், இதைத்தான் உலகமயமாக்கலுக்கு நியாயப்பாடு வழங்கும் தாராளவாதிகளும் சொல்கிறார்கள். ஆனால், உலகமயமாக்கல் பற்றிய மார்க்ஸின் விளக்கத்தில் இன்னொரு மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதாவது, முதலாளித்துவத்தின் மாற்றமும் கம்யூனிசத்தின் வருகையும் மனித ஆளுமையின் முழுமையான மீட்சியுமாகும். இன்று உலகமயமாக்கலை விளக்கும் தாராளவாதிகள் சிலரின் கருத்தில் வரலாறு எனும் இரதம் இறுதி நிலையத்தை வந்தடைந்துவிட்டது. இதற்கு அப்பால் ஒரு மாற்று அமைப்பு இருக்கமுடியாது என அடித்துக் கூறுவோரும் உண்டு. உலகமயமாக்கலின் இன்றையப் போக்குகளைப் பார்க்கும் போது இத்தகைய கருத்துக்களின் அகச்சார்பு நிலையும் வெறுமையும் வெளிப் படையாவதுடன் ஜனநாயகப் புரட்சியின் உலகமயமாக்கலே இன்றைய சர்வதேசத் தேவை எனும் அரசியல் முடிவும் மேலும் தெளிவாகிறது.
இனி உலகமயமாக்கலின் இன்றைய போக்குகளை நோக்குவோம்.
நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கை
உலகமயமாக்கல் ஒரு வரலாற்றுப்போக்கு என்பதைக் கண்டோம். ஆயினும் இன்றைய காலகட்டத்தில், குறிப்பாக 1970 களிலிருந்து உலகமயமாக்கலை வழிநடத்துவதற்கென ஒரு சர்வதேசரீதியான கொள்கை பல மட்டங்களில் அமுல்நடத்தப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் இது நிறைபோட்டிச் சந்தை (அல்லது சுயபோட்டிச் சந்தை) எனும் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் OECD இன் தலைமைத்துவ நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ் இயங்கும் உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் ஆசிய, ஆபிரிக்க, தென்அமெரிக்க (லத்தீன் அமெரிக்க) கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மீது நவதாராளவாதக் கொள்கையை நேரடியாகவும் மறைமுகமாகவும் திணித்துள்ளன. இந்தப் பொருளாதாரக் கொள்கையின் மிகப் பிரதான நாயகன் அமெரிக்கா ஆகும். இந்தக் கொள்கை முன்வைக்கும் அபிவிருத்தி மாதிரியின் பிரதான அம்சங்கள் பின்வருமாறு.
* கட்டுப்பாடற்ற சுயபோட்டிச் சந்தை, சர்வதேச, உள்ளூர் வர்த்தகத்தின் தாராளமயமாக்கல், தனியுடைமையாக்கல், அதாவது அரசின் உடைமைகளாக இருக்கும் உற்பத்திச்சாதனங்களின் தனியுடைமையாக்கல்.
* குறைந்தபட்ச அரசு. அதாவது, பொருளாதாரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்காத பொருளாதார உற்பத்திமற்றும் சேவைத்துறையில் முடிந்தவரை ஈடுபடாத அரசு. இந்த அரசு சந்தை மீதான கட்டுப்பாடுகளை நீக்கி, தனியுடைமையாக்கலை
6 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

அமுல் நடத்தி, முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தொழிற்சங்கங்களை நெறிப்படுத்த வேண்டும். அரசின் சமூகநல செலவீனங்களைக் குறைந்தபட்ச மட்டத்தில் வைத்திருக்க வேண்டும். வறுமைக் குறைப்புத் திட்டங்கள் சுயபோட்டிச் சந்தைக்கு ஏற்ற சூழலைப் பாதிக்காத வகையில் அமுல் நடத்தப்பட வேண்டும்.
குறைந்தபட்ச அரசும், சுயநெறிப்படுத்தப்படும் சந்தையும் தனிமனிதனின் பொருளாதார சுதந்திரத்தை உயர்ந்தபட்சமாக்கும் எனும் கருத்து இக் கொள்கையின் நியாயப்பாடுகளில் அடங்கும். சுயநலத்தினால் உந்தப்படும் தனிமனிதர் தமது பொருளாதார நோக்கை அடைவதற்குரிய நியாயமான சூழ்நிலையை நிறைபோட்டிச் சந்தை கொடுக்கின்றதென்பதால் இத்தகைய கொள்கை எல்லா தனிமனிதரும் சமமாகப் போட்டியிட்டு சமூகத்தின் மொத்த நலனை உயர்ந்தபட்சமாக்க உதவுகிறது. சமூகம் என்பது தனித்தனியான மனிதரின் சாதாரணக் கூட்டே. ஆகவே, ஒவ்வொரு தனிநபரும் தனது சுயநலனை அதிகரிக்கும் முடிவுகளை எடுத்துச் செயற்படுவது சாத்தியமாகும் பொருளாதார சூழலிலேயே முழுச் சமூகத்தின் நலனும் அதிகரிக்க முடியும். இத்தகைய சூழ்நிலைகளை எல்லா நாடுகளிலும் உருவாக்கினால் எல்லாத் நாடுகளும் முழு உலகமும் பயன்பெறும். இது எல்லோரும் வெல்லும் (win-win) கொள்கை. வறியநாடுகள் இக் கொள்கையை அமுல்நடத்துவதன் மூலம், உலகப் பொருளாதாரத்தில் மேலும் பங்குபற்றி அத்துடன் ஒருங்கிணைவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியைப் பெறலாம். ஒவ்வொரு நாட்டின் அரசினாலும் இதைச் சாத்தியமாக்க முடியும். இது நவதாராளவாதக் கொள்கையின் உலகப் பார்வையின் ஒரு சுருக்கமான, சற்று இலகுவாக்கப்பட்ட விளக்கமாகும். இந்தக் கொள்கையின் கருத்தியலை உலகமயவாதம் எனக் கூறலாம். அப்படியானால் தேசிய அரசு முக்கியத்துவமிழந்து போகிறதா? இந்தக் கொள்கை பற்றிய விவாதங்கள் தொடர்கின்றன. தேசிய அரசு தனது நாட்டின் பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் சுதந்திரத்தை பெருமளவு இழந்து விடுகிறது என்பது உண்மை. அதே வேளை சர்வதேச முதலீட்டிற்கும் தனியுடைமையாக்கலுக்கும் உதவும் கொள்கைகளையும் சட்டங்களையும் செவ்வனே அமுல்நடத்தும் பணியை தேசிய அரசு மேற்கொள்ள வேண்டும்.
வரலாற்றுரீதியில் இத்தகைய தூய சந்தை அடிப்படைவாதக் கொள்கை நீண்டகாலமாகத் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. தூயபோட்டிச் சந்தை அடிப்படையில் மட்டுமே பொருளாதார விருத்தி பெற்ற நாடுகள் இல்லை என்பது பல பொருளியல்
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 7

Page 7
வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். ஆயினும் இக்கொள்கை இடைக்கிடை தலைதூக்கியது. இன்று முன்பைவிடப் பலமாகவும் பரவலாகவும் இது மேலாதிக்கம் பெற்றுள்ளது.
மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான உறவை சந்தை மட்டுமே நெறிப்படுத்துவதென்பது தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளைப் பாதிக்கின்றது. இப்போது வட அமெரிக்காவிலிருந்து இலங்கைவரை சுயபோட்டிச் சந்தையைக் காட்டி தொழிலாளர்களின் ஊதிய உயர்வுப் போராட்டங்களும் உரிமைப் போராட்டங்களும் நசுக்கப்படுவதைக் காணலாம். இதனால் பெரிதும் பாதிக்கப்படுவோர் உடல் உழைப்பாளர்களும், இலங்கை போன்ற நாடுகளின் சுதந்திர வர்த்தக வலையங்களில் தொழில் செய்வோர்களும் ஆவர். இங்கு பெண் தொழிலாளர்கள் ஆண் தொழிலாளர்களையும் விட அதிகமாகச் சுரண்டப்படுகின்றனர்.
ஆயினும், மேலாதிக்கம் செலுத்தும் நவதாராளவாதம் நடைமுறையில் உழைப்பினை முற்றாகத் தாராளமயமாக்கவில்லை. தொழிலாளர்களின் புவியியல்ரீதியான நகர்ச்சி தேசிய எல்லைகளைத் தாண்டிச் செல்ல பல புதிய பாரியதடைகள் விதிக்கப்பட்டுள்ளன. உலகச்சந்தை, உலகமயமாக்கல் என்று பேசப்பட்டாலும் தொழிலாளர்கள் தமது உழைப்புச் சத்தியை தாராளமயமாக்கப்பட்ட ஒரு உலக சந்தையில் விற்கவில்லை. மூலதனத்திற்குத் தேசிய எல்லைகள் கிடையாது. ஆனால் உழைப்பிற்கு அவை உண்டு. இந்த வேறுபாடு சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. மலிந்த உழைப்பைத் தேடி மூலதனம் நகரும் சுதந்திரத்திற்குத் தடையில்லை. ஆனால் கூடிய ஊதியத்தைத் தேடி உழைப்பாளர் வேறு நாடுகளுக்குக் குறிப்பாக செல்வந்த நாடுகளுக்குச் செல்வதற்குப் பல தடைகள். இது நவதாராளவாதத்தின், உலகமயவாதத்தின் இரட்டை நியமங்களில்
ஒன்று.
பணமூலதனத்தின் அதிவேக நகர்ச்சி
இன்றைய கணினியுகத்தில் பணமூலதனம் ஏறக்குறைய ஒளியின் வேகத்தில் பூகோளத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்கிறது. இப்படியாக நகரும் பணமூலதனம் உற்பத்தி மூலதனமாக மாறுவது குறைவு. இப்போது ஊகம் (speculation) முன்னெப்போதையும்விடப் பெரியளவில் இடம்பெறுகிறது. அதுவும் பணத்தை விற்று பணத்தை சம்பாதிக்கும் போக்கே இன்றைய ஊகத்தின் பிரதான தன்மையாகும். உலகின் அந்நிய நாட்டுச் செலாவணி பற்றிய விதிகளை வகுத்த Breton Woods, ஒப்பந்தம் 1970 களில்
8 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

கைவிடப்பட்டு, வளைந்து கொடுக்கும் அல்லது நெகிழ்ந்து கொடுக்கும் அந்நிய செலாவணிக் கொள்கை பின்பற்றப்படுகிறது. பெறுமதி ஏறிச் செல்லும் அந்நிய பணத்தின் வாணிபமே ஊகத்தின் பொருளாகிறது. கணினித் தகவல் தொழிநுட்பம் அதை உலகரீதியில் சாத்தியமாக்குகிறது. இதன் வளர்ச்சியை பின்வரும் உதாரணம் சுட்டிக் காட்டுகிறது.
1973இல் உலக அந்நிய செலாவணிச் சந்தையின் ஒரு நாள் சராசரி வர்த்தகம் 15 பில்லியன் US டொலர்களாக இருந்தது. 1992 இல் இது 900 பில்லியன்களாக அதாவது 60 மடங்காக அதிகரித்தது. இன்று மேலும் பல மடங்குகளாகிவிட்டதென்பதில் சந்தேகமில்லை. இந்தப் போக்கின் முக்கிய அம்சமென்னவெனில் ஊகத்தில் ஈடுபடும் பணத்திற்கும், உற்பத்தி சார்ந்த அடிப்படைக்கும் இடையிலான தொடர்பு தொடர்ச்சியாகப் பலவீனமடைவதாகும். பண ஊகத்தின் புலம் ஒரு கணினிப்புலம். இந்த ஆறாந்திணைப்பொருளாதாரத்தின் போக்குகள் உற்பத்திப் பொருளாதாரங்களைப் பலவகையில் பாதிக்கின்றன. இங்கு ஒரு சில தனிமனிதர்கள் கையாளும் உத்திகள் பெரும்பரவலான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. சமீபகாலங்களில் தென்கிழக்காசிய, கிழக்காசிய நாடுகளில் பொருளாதாரங்கள் ஸ்திரமிழந்து வீழ்ச்சி பெற்றதை இங்கு நினைவுகூரலாம். அதே போன்று சிங்கப்பூரில் இயங்கிவந்த ஆங்கிலேய வங்கியொன்று அதன் இலிகிதர் ஒருவரின் கையாடல் உத்திகளால் திடீரென ஒரு பில்லியன் பவுண்டுகளை இழந்த சம்பவத்தையும் நினைவுகூரலாம்.
கட்டுப்பாடற்ற செலாவணிச் சந்தையின் விளைவுகள் இவை. தனிநபர்களின் குறுகியகால பணலாபம் தேடல்களின் மொத்தமான விளைவு உற்பத்தியையும் தேசிய பொருளாதாரங்களையும் ஸ்திரமிழக்கச் செய்கிறது. இப்போது நீண்டகால நோக்கிலான நேரடி முதலீடுகள் எதிர்பார்ப்பது போல் இடம் பெறுவதில்லை என்பது பற்றி உலக வங்கி கூட விசனிக்கிறது.
புதிய அறிவு மூலதனத்தின் எழுச்சி
தகவல் புரட்சியினதும் மற்றைய நவீன விஞ்ஞான தொழில்நுட்பப் புரட்சிகளினதும் விளைவாக முன்னெப்போதுமில்லாதவகையில் இன்று அறிவுமூலதனம் மேலோங்கியுள்ளது. இதன்விளைவு மூளை உழைப்பின் முக்கியத்துவம் மேலும் வளர்வது ஆகும். உற்பத்திப் போக்கிலும் பொருளாதார சமூக சேவைகளிலும் கணினிமயமாக்கல் நிரந்தரமாகத் தொடர்கிறது. தொழில் நுட்பத்தின் வளர்ச்சி முன்னர் மூலதனத்தால் முற்றாகக் கைப்பற்றமுடியாத பலதுறைகளை இப்போது கைப்பற்ற வழி செய்கிறது. உதாரணமாக மரபு
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 9

Page 8
அணுக்களைப் பிளக்கும் தொழில்நுட்பமும் அவற்றின் தகவல்களை புரிந்து கொள்ளும் அறிவும் இப்போது உயிரியல் வளங்களை மேலும் தனியுடைமையாக்குவதை சாத்தியமாக்கியுள்ளன. இத்துறைகள் சார்ந்த ஆய்வும் 9ứì6íìJ5öölu|[h Trans National Corporations (TNCs) 56ifì6öT 6uGuntré6lu46ỉT6ITgl. இத்தகைய அறிவு மூலதனத்தின் எழுச்சியின் விளைவுகள் பலவிதமானவை. முதலில் உழைப்பின் தன்மையிலான மாற்றங்கள் குறிப்பிட்ட ஆற்றல்கள் இல்லாதோரை தொழிற் சந்தையிலிருந்து வெளியேற்றுகின்றன. உழைப்பாளிகளின் கூட்டுப்பலம் குறைவதும், அவர்களின் தொழிற்சங்கங்கள் ஒரப்படுத்தப்படுவதும் பொதுவான போக்காகியுள்ளது. இன்று உலகரீதியில் பின்பற்றப்படும் சுயபோட்டிச் சந்தைக் கொள்கை தொழிற்சங்கங்களின் இப் பலவீனமாக்கலை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இன்னொரு மட்டத்தில் அறிவு மூலதனத்தின் குவியலும் கட்டுப்பாடும் ஒரு சில நாடுகளிலும், TNC களிடமும் இருப்பதால் பல நாடுகள் தமது இயற்கை வளங்கள் மீதான உடைமையை இழந்து விடுகின்றன. இந்தப் போக்கினை குறிப்பாக மரபு அணுவளங்களின் தனியுடைமையாக்கலில் காணலாம். உதாரணமாக நவீன விதைத் தொழிநுட்பத்தினாலும் அதன் தனியுடைமையாக்கலாலும் TNC க்கள் பெருமளவு இலாபம் பெறும் அதேவேளை ஆசிய ஆபிரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகள் மரபணுக்களை தமது தேசிய அபிவிருத்திக்கு பயன்படுத்தும் உரிமையை இழந்துவிடுகின்றன. ஆபிரிக்க ஆசிய கண்டங்களிலேயே பெருமளவிலான தாவர மரபணு வளங்கள் இயற்கையாகச் செறிந்துள்ளன. இவ்வளங்களைப் பயன்படுத்தியே மேற்கத்தைய நாடுகளின் ஆய்வு நிலையங்கள் நவீன விதைகளை உருவாக்குகின்றன. இந்த விதைத்தொழிநுட்பம் இன்று பெருமளவில் TNCகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இதற்கு உதவும் வகையில் சர்வதேச சட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இது பற்றிய விவாதங்கள் முடிவு பெறவில்லை. ஆயினும் தொழிநுட்பத்தின் உதவியால் TNC கள் பெருலாபம் பெறுகின்றன. இவ்வாறாக அறிவு மூலதனத்தின் எழுச்சி, உழைப்பாளர்களின் உரிமைகள், இலாபத்தின் பங்கீட்டு வளங்கள் மீதான உடைமை, உரிமைகள் பற்றிய பல பிரச்சினைகளை எழுப்பியுள்ளது.
அறிவு மூலதனத்தின் வளர்ச்சி சர்வதேச ரீதியில் அசமத்துவங்களைக் குறைக்க உதவும் என உலகமயமாக்கல்வாதிகள் கூறிவரும்போதும் இதுவரை நடைமுறையில் அவ்வளர்ச்சி சர்வதேச அசமத்துவத்தையும் தேசியங் களுக்குள்ளேயான அசமத்துவங்களையும் அதிகரிக்கவே உதவியுள்ளது. அத்துடன் மூளை உழைப்பாளர்களின் உயர் நடுத்தரமட்டத்தினர் மூலதனத்தின் முகாமையில் பங்குவகிக்கும் சந்தர்ப்பங்களும் கூடியுள்ளன. பொதுவான அடிப்படைக் கல்வியிலும் குறிப்பாக விஞ்ஞான தொழிநுட்பத் துறைகள் சார்ந்த கல்வியிலும் நீண்டகால
10 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

முதலீடுகளைச் செய்யத் தவறிய நாடுகள் இன்றைய உலக அமைப்பின் வெளி எல்லைகளுக்கு ஒரப்படுத்தப்படுவதைக் காண்கிறோம். மறுபுறம் இத்தகைய கல்வித்துறை விருத்தி பெற்றுள்ள வளர்முக நாடுகளிலிருந்து பயிற்சி பெற்ற திறமையாளர்களின் சர்வதேச ரீதியான சமூக நகர்ச்சி பெருகியுள்ளது. இவர்கள் உலகமயமாக்கலினால் நன்மைபெறுவோரில் அடங்குவர். அதேவேளை இவர்களுக்கு தொழில் வழங்கும் நிறுவனங்களும் நாடுகளும் பெரும் பயனைப் பெறுகின்றன. இவர்கள் கொண்டுள்ள மனித மூலதனத்தின் உற்பத்தி பெருமளவில் இவர்களின் சமுதாயத்தின் செலவிலேயே செய்யப்பட்டுள்ளது. இதனால் இத்தகையோர் குடியேறும் நாடுகளுக்குப் பெரும் சேமிப்பாக உள்ளனர்.
TNC களின் ஆதிக்க வளர்ச்சி
உலகப் பொருளாதாரத்தின் மூலதனக் குவியலில் TNC களின் பங்கு துரிதமாக அதிகரித்துவருகிறது. இன்றைய உலகின் முதலாவது 100 பொருளாதாரங்களில் 51 TNC களாகவும் 49 நாடுகளாகவும் உள்ளன. 1970ல் 7000 TNC கள் மட்டுமேயிருந்தன. இன்று இவற்றின் தொகை 40000 ஆக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியின் மறுபக்கம் பல உள்ளூர் நிறுவனங்களின் வீழ்ச்சியும் மரணிப்புமாகும். உலகின் முழு முதலீட்டின் மூன்றில் ஒருபங்கு 100 TNC களின் உடைமையாகும்.
இன்று வெளிநாட்டு முதலீட்டிற்கான கேள்வி அதன் நிரம்பலையும் விடப் பெரிதாக இருப்பதால் TNC களின் அதிகாரமும் சுதந்திரமும் கூடியுள்ளன. உலகின் பெருந்தொழில் உற்பத்தி, இயற்கைச் சுரங்கங்கள், (எண்ணெய், நிலக்கரி, வாயு Minerals) மோட்டார் வாகன உற்பத்தி, விமான உற்பத்தி, தொடர்பு சாதனங்கள் (communicationsatellites உட்பட) கணினிகள், இரசாயனங்கள், மருந்துகள் போன்ற பொருட்களின் உற்பத்தி, விவசாயத்திற்குப் பயன்படும் விதைகளின் உற்பத்தி போன்ற துறைகளில் TNC கள் முதலிடத்தைப் பெற்று வருகின்றன.
உலக வங்கி, சர்வதேச நாயணய நிதி போன்ற நிறுவனங்களின் ஆலோசனைக்கும் நிர்ப்பந்தங்களுக்கும் ஏற்ப அரசாங்கங்கள் அமுல்நடத்திவரும் தனியுடைமையாக்கலைத்ாNC க்கள். தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன அதேவேளை தமது இலாப அதிகரிப்பிற்குப்பாதகமான சட்டங்களைத் தவிர்க்கும் வழிவகைகளையும் இவை நன்கு அறிந்துள்ளன. உதாரணமாக குறிப்பிட்ட ஒரு நாட்டின் சூழல், வருமானவரிச் சட்டங்களிருந்து தப்பிக் கொள்ள TNC கள் சர்வதேச நிலைமைகளைப் பயன்படுத்துகின்றன. மலிந்த கூலி கிடைக்கும் சுதந்திர வர்த்தக வலையங்களில் முதலீடு செய்து, இலாபத்தினை
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 11

Page 9
வரிகள் மிகவும் குறைவாயுள்ள நாடுகளுக்கு மாற்றுவது பல நிறுவனங்களும் கையாளும் ஒரு யுக்தியாகும். அதே போன்று சூழலை அசுத்தம் செய்யும் தொழிற்போக்குகளை இறுக்கமான சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் இல்லாத அல்லது இருந்தும் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படாத நாடுகளுக்கு மாற்றுவது பல TNC கள் பயன்படுத்தும் ஒரு குறுக்குப்பாதையாகும். இதனால் சூழலின் அழிவு பரவிப் பெருகி வருவதற்குப் போதிய ஆதாரங்களுண்டு. ( இது பற்றி பிறிதொரு கட்டுரையை எழுதிக் கொண்டிருப்பதால் இதை இங்கு அதிகம் விளக்க முற்படவில்லை) அதே வேளை, TNC முதலீட்டினைக் கவரும் நோக்குடன் பலநாடுகளின் அரசாங்கங்கள் தமது சட்டங்களையும் விதிகளையும் மாற்றி வருகின்றன. தனியுடைமையாக்கலில் வெளிநாட்டு முதலீட்டாளர் பங்குபற்ற வசதி செய்யும் சட்டம், வருமானவரிக் குறைப்பு அல்லது வருமான வரியிலிருந்து முற்றாக விடுதலை, தொழிற்சங்க நடவடிக்கைகளுக்குப் புதிய தடைகள், கட்டுப்பாடுகள், இலாபத்தை வெளியே எடுத்துச் செல்ல உதவும் சட்டங்கள் போன்ற பல சீர்திருத்தங்களை ஆசிய ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகள் செய்துள்ளன. ஆயினும் TNCகளின் பெரும்பாலான முதலீடும் அதன் வளர்ச்சியும் விருத்தி பெற்ற நாடுகளிலேயே இடம் பெறுகின்றன. அத்துடன் TNCகள் தேசிய தளங்களையும் கொண்டுள்ளன. உதாரணமாக யப்பானிய, அமெரிக்க, பிரஞ்சு, சுவிஸ், யேர்மனிய TNC கள் தமது நாடுகளில் பாரிய விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் திட்டமிடல் தளங்களைக் கொண்டுள்ளன. விருத்தி பெற்ற நாட்டு அரசாங்கங்களும் TNC களின் முதலீட்டைக் கவரும் நோக்கில் பல வழிகளைக் கடைப்பிடிக்கின்றன. மேற் குறிப்பிட்ட நாடுகளுடன் வேறு சில விருத்தி பெற்ற நாடுகளையும் அங்கத்தவர்களாகக் கொண்டுள்ள OECD அமைப்பு TNC களின் முதலீட்டிற்கு உதவும் கொள்கைகளை வகுக்கின்றது. OECDயில் உலகின் அதிக பணம் படைத்த 29 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இன்றைய உலகப் பொருளாதாரத்தில் சென்றடையும் முதலீட்டின் 85 வீதமானது OECD அமைப்பிற்குள்ளிருந்தே செல்கிறது. அதேவேளை இந்த முதலீட்டின் 65 வீதம் OECD நாடுகளுக்குள்ளேயே இடம்பெறுகிறது. மிகுதியில் கணிசமானபகுதி வளர்முக நாடுகளுக்குப் போகிறது. இந்த முதலீடுகளில் பெரும்பங்கு TNC களினாலேயே செய்யப்படுகின்றன.
வளர்முக நாடுகளிலும் விருத்தி பெற்ற நாடுகளிலும் TNC களினால் அரசியல் ஊழல்கள் பன்மடங்காக அதிகரித்துள்ளன. தனியுடைமையாக்கல் திட்டங்களில் இலஞ்சம் பெரும் பிரச்சனையாகியுள்ளது. அதேபோல பல நாடுகளில் சூழல் சட்டங்கள், தொழிலாளர்களின் பாதுகாப்புச் சட்டங்கள் போன்றவற்றை மீறும் TNC களும் மற்றைய நிறுவனங்களும் அரசியல்வாதிகளுக்கும் உயர்மட்ட அரச
12 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

நிர்வாகிகளுக்கும் இலஞ்சம் வழங்குதலும் பெரும் பிரச்சினையாகியுள்ளது. சந்தைப் பொருளாதாரக் கொள்கை ஊழல்களை இல்லாதொழிக்க உதவும் என்னும் உலக வங்கியின் வாதத்தை இந்த ஊழல்கள் அர்த்தமற்றதாக்கியுள்ளன.
சந்தை அடிப்படைவாதமும் ஜனநாயக உரிமைகளும்
சந்தை உறவுகள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஜனநாயக உரிமைகளுக்கு விரோதமானவை அல்ல. நிலவுடமை உற்பத்தி உறவுகளுடன் ஒப்பிடும்போது முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் மனித சுதந்திரத்திற்கு சாதகமானவை எனப் பொதுப்படையாகக் கூறலாம். இதில் மார்க்ஸியவாதிகளும் தாராளவாதிகளும் ஒத்த கருத்தைக் கொண்டிருப்பதைக் காணலாம். உழைப்பாளர்களைப் பலாத்காரமாகக் கட்டுப்படுத்தி வைக்கும் உற்பத்தி உறவு மனித உரிமையை மறுக்கும் உறவாகும். உற்பத்தியாளரைப் பலாத்காரத்திலிருந்து விடுவித்து சுதந்திரமான உற்பத்தி உறவில் பங்குபற்ற வைப்பதற்கு முதலாளித்துவம் சந்தை உறவுக்கு ஊடாக வழிசெய்வதை மார்கஸ் முற்போக்கானமாற்றம் எனக் கருதினார். இன்று நடைமுறைப்படுத்தப்படும் சந்தைச் சீர்திருத்தங்கள் அத்தகைய முற்போக்கான ஜனநாயகரீதியான மாற்றத்திற்கு உதவுகின்றன என நவதாராளவாதிகள் வாதிடுகின்றனர். நடைமுறையில் இது எப்படி என்ற கேள்வி முக்கியமானதாகும்.
பலாத்காரமற்ற உற்பத்தி உறவுகள் வரவேற்கப்படவேண்டியவை. ஆனால் நடைமுறையில் சந்தைச் சீர்திருத்தங்களால் மட்டுமே மரபுரீதியான பலாத்கார உறவுகளை மாற்ற முடிவதில்லை என்பதற்குப் பல ஆதாரங்கள் உண்டு. தென்னாசியாவில் பல இடங்களில் பழைய அடிமை உழைப்பு உறவுகளை நவீன முதலீட்டாளர்கள் பயன்படுத்தி வருவதை பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் கடன் அடிமைமுறை உழைப்பை பயன்படுத்தி செயற்கை இரத்தினக் கற்களை ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்வதையும், வேறு மாநிலங்களில் செங்கல் உற்பத்திக்கு இது போன்ற உற்பத்தி உறவுகளைப் பயன்படுத்துவதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இத்தகைய உற்பத்தி உறவுகள் மற்றைய தென்ஆசிய நாடுகளிலும் இருக்கின்றன. இந்தியாவின் சட்டப்படி இத்தகைய உழைப்பு உறவுகளைப் பயன்படுத்துவது குற்றமாகும். ஆயினும் அவை நவீன உற்பத்தி தொழிநுட்பங்களைப் பயன்படுத்தும் ஆலைகளில் தொடர்ந்தும் இடம் பெறுகின்றன. இந்தியாவின் தாராளமயமாக்கல் இப்படியாக சுரண்டப்படும் உழைப்பாளிகளுக்கு விடுதலையைக் கொடுக்கவில்லை. மறுபுறம் தாராளமயமாக்கல் ஏற்படுத்தியுள்ள இலாப சந்தர்ப்பங்களைப் பயன்படுத்த இந்தச் சட்டவிரோதமான முறைகள் உதவுகின்றன. இது தாராளமயமாக்கலின் தவறல்ல
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 13

Page 10
எனும் வாதத்தில் நியாயம் இருப்பினும், இங்கு நாம் கவனத்தில் எடுக்க வேண்டியது என்னவெனில் சந்தைச் சீர்திருத்தமும் சட்டமும் குறிப்பிட்ட உழைப்பாளர்களின் சுதந்திரத்தை இதுவரை உத்தரவாதப்படுத்தவில்லை என்பதாகும். இது ஒரு அரசியல் போராட்டத்திற்குரிய பிரச்சனை. உழைப்பாளர்களுக்கு தொழிற்சங்க உரிமை, அடிப்படைக்கூலி உத்தரவாதம் போன்றவற்றிற்கான போராட்டங்களின்றி
சந்தைச் சீர்திருத்தம் விமோசனம் தரப்போவதில்லை.
அப்படியானால் சந்தைச் சீர்திருத்தத்தை எதிர்ப்பதை விட்டு அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுதல்தானே சரியான அணுகுமுறை என்ற வாதத்திலும் நியாயம் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இங்கு வேறொரு முரண்பாட்டைக் கணக்கில் எடுக்க வேண்டும். சந்தைச் சீர்திருத்தத்தின் நோக்கம் சுயபோட்டி நிலைமைகளை ஏற்படுத்தி உற்பத்திக் காரணிகளை அதிகபட்ச பயன்தரும் வகையில் ஒதுக்க வழிவகுப்பதாகும். இங்கு பிரதான நோக்கமாக அமைவது பொருளாதாரத் திறன், அதாவது சந்தை விலைகளுக்கூடாக வெளிபடுத்தும் சைகைகளுக்கு அமைய வளங்களை(உழைப்பு உட்பட) ஒதுக்கி இலாபத்தை அதிகரிப்பதாகும். உழைப்பின் ஒதுக்கலைக் கட்டுபாடற்ற சந்தையிடம் விடுவதை தொழிலாளர்கள் வரலாற்றுரீதியில் கூட்டாக எதிர்த்து நியாயமான ஊதியத்திற்காக, பாதுகாப்பான வேலைத்தள சூழலுக்கான சமூகப் பாதுகாப்பிற்காகப் போராடி வந்துள்ளனர். விருத்தி பெற்ற நாடுகளில் இப்போராட்டங்களின் விளைவாக ஊதியத்தின் நிர்ணயிப்பு கூட்டு ஒப்பந்தங்களினூடாக இடம்பெறும் முறைமை நிறுவனமயமாக்கப்பட்டது. பல வளர்முக நாடுகளிலும் இந்த முறைமையைப் பின்பற்றும் துறைகள் உண்டு. தொழிலாளர்களின் உரிமைகளை, நலன்களைப் பொறுத்தவரை பின்வருவன முக்கியமானவற்றுள் அடங்கும்.
* வாழ்க்கைச் செலவுக்கேற்ப நிர்ணயிக்கப்படும் நியாயமான கூலியும்
உற்பத்தித் திறனும் அதன் நியாயமான வளர்ச்சியும்
* சுகாதாரமான வேலைத்தல சூழல்
* வேலையற்றிருக்கும் காலத்தில் சமூகப் பாதுகாப்பு
* ஓய்வூதியம்
* கல்வி சுகாதார சேவை வசதி
* தொழிற்சங்க உரிமை, எழுத்து, பேச்சுச் சுதந்திரம்
9 இன, பால், சாதி, நிற அடிப்படையிலான பாகுபாடு எதுவுமில்லாமை
* சமூக நகர்ச்சிக்கான வசதிகள்
14 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

இத்தகைய அம்சங்களை உள்ளடக்கிய, பார்வையில் கட்டுபாடற்ற உழைப்புச் சந்தையில் தொழிலாளர்களின் பல உரிமைகளுக்குப் பாதகமான நிலைமைகள் உருவாகும் என்பது தெளிவாகிறது. சர்வதேச ரீதியில் தொழிற்சங்கப் போராட்டங்களின் நீண்ட வரலாறு இதை ஊர்ஜிதம் செய்வதுடன் ஊதியம் மற்றும் உரிமைகளைப் பொறுத்த வரை முதலாளிகள் - தொழிலாளிகள் - அரசு ஆகிய மூன்றும் கூட்டு ஒப்பந்தங்கள் செய்வதே மரபாகி விட்டது. இன்று இந்த மரபு தாக்கப்படுகிறது. கட்டுபாடற்ற உழைப்புச் சந்தையை தேசிய மட்டத்தில், அதாவது நாடுகளுக்குள்ளே அமுல்படுத்தும் போக்கு தலைத்தூக்கியுள்ளது. இது Լ]6Ս நாடுகளில் தொழிலாளர்கள் இதுவரை பெற்ற உரிமைகளின் இழப்புக்கு வழி கோலியுள்ளது. குறைந்தபட்ச அரசு என்னும் கொள்கையுடன் இது இணையும்போது அரசின் சமூக ரீதியான பொறுப்புக்களும் குறைகின்றன். இந்தப் போக்கினால் தனியுடைமையாக்கப்படும் நிறுவனங்களில் கடமையாற்றும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பலர் வேலையிழந்துள்ளனர். கூலி உயர்வுகள்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
உழைப்பின் தற்காலிகமாக்கலும் பெண் தொழிலாளர் மீதான சுரண்டலும்
இந்தப் பொருளாதாரக் கொள்கையின் பின்னணியில் வேறு பல பிரதான போக்குகளை இனங்காணுதல் அவசியம். இன்றையக் காலகட்டத்தில் உழைப்பு ஒப்பந்தங்கள் தற்காலிகமாக்கப்படலும், இத்தகைய உற்பத்தி உறவுகள் பெண்களையும் பல இடங்களில் சிறுவர்களையும் உள்வாங்கி வருவதையும் காணலாம். சம்பிரதாய பூர்வமான தொழில் ஒப்பந்தங்கள் இப்போது அருகி வரும் துறைகள் அதிகம். சர்வதேச ரீதியில், குறிப்பாக வளர்முகப் பொருளாதாரங்களில் தொழிற்சங்கங்களின் அங்கத்துவ வீதம் கடந்த இருபது வருடங்களாக வீழ்ச்சியடைந்து வருகிறது. இன்று மிகப் பெரும்பான்மையினர் தற்காலிக அடிப்படையிலேயே தொழில் பெறுகிறார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள். மரபு ரீதியான தொழிற்சங்கங்ளில் இத்தகைய தொழிலாளர்கள் சேர முடியாது. இவர்களுக்கான அமைப்புக்கள் பல நாடுகளில் இன்னும் தோன்றவில்லை. மூலதனத்திற்கு மிகவும் சாதகமான வகையில் தற்காலிக ஒப்பந்தங்கள் அமைகின்றன. பொதுவாக இவ் ஒப்பந்தங்கள் எழுத்தில் போடப்படுவதில்லை. வேலை செய்த நேரத்தின்படி அல்லாது உற்பத்தி செய்யும் வெளியீட்டிற்கமைய ஊதியம் வழங்குதல் வழக்கமாகி விட்டது.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 15

Page 11
உழைப்பைப் பெறுவதற்கு மூலதனம் உப ஒப்பந்த முறையையும் பயன்படுத்துகிறது. உதாரணமாக ஒரு தொழிற்சாலை முகாமையாளர் தனக்குத் தேவையான கூலியாட்களை வழங்கும் பொறுப்பினை ஒரு உழைப்பு ஒப்பந்தக்காரரிடம் விட்டு விடுகிறார். இவரே தொழிற்சாலைக்கு வேண்டிய தொழிலாளர்களைக் கொடுக்கிறார். தொழிலாளரின் ஊதியம் பற்றிய விடயங்களை இவருடனேயே முகாமையாளர் பேசித் தீர்த்துக் கொள்கிறார். உழைப்பு ஒப்பந்தக்காரர் ஒரு தரகர். தொழிலாளர்களை தொழிற்சாலை முகாமை மலிந்த கூலிக்குப் பெறுவதற்கு இவருக்கு தொழிலாளருக்குச் சேரவேண்டிய வருமானத்தின் ஒரு பங்கு தரகாகக் கிடைக்கிறது.
வேறு உப ஒப்பந்த முறைகளும் உண்டு. வெளிநாட்டு முதலீட்டாளர் உள்நாட்டு உப ஒப்பந்தக்காரரை வைத்துத் தொழில் செய்வதைக் காணலாம். பல சிறிய தொழிற் கூடங்களில் பெண்களை வேலைக்கு அமர்த்தி ஏற்றுமதிக்கென சில வகையான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உதாரணமாக சப்பாத்து, பின்னல் பொருட்கள், இலத்திரன் சம்பந்தப்பட்ட பொருட்கள், பூக்கள் போன்றவை இத்தகைய முறையில் உற்பத்தி செய்யப்படுவது உண்டு. இத்தகைய தொழிற்கூடங்களின் முகாமையாளர்கள் உள்நாட்டவர்கள். ஆனால், உரிமையாளர்கள் பெரும்பாலும் வெளிநாட்டவர்கள். பெண் தொழிலாளர்கள் ஒரு முதலாளிக்கோ ஒரு தொழிற்சாலைக்கோ வேண்டிய பொருட்களைத் தமது வீட்டிலேயே உற்பத்திசெய்து அவற்றின் தொகைக்கும் தரத்திற்குமேற்ப கூலி பெறும்
முறையையும் பல இடங்களில் காணலாம்.
இப்படியாகத் தொழிலாளர்களின் அனுமயமாக்கல் ஒரு பெரும் போக்காகியுள்ளது. இன்று இந்தியாவில் 90 வீதத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் அங்கத்தவர்களில்லை. இவர்களில் பெரும்பான்மையினர் பெண்களும், தலித்துக்களும் ஆவர். இலங்கையில் 80 வீதத்திற்கு மேலானோர் தொழிற்சங்கங்களில் அணிதிரட்டப்படவில்லை. தற்காலிகமயமாக்கப்பட்ட உழைப்பாளர்கள் மரபுரீதியான தொழிற்சங்கங்களில் சேருவதற்குச் சட்டரீதியான தடைகளுண்டு. இத்தொழிலாளர்களின் உரிமைகளுக்குப் போராடும் அமைப்புக்கள் அங்கும் இங்கும் தோன்றியுள்ளன. ஆயினும், இவர்களை அணிதிரட்டுதல் சுலபமல்ல. “Hire and fire" எனும் விதிப்படி வேலை கொடுத்தல் பரவிவரும் இன்றைய காலகட்டத்தில் தொழிலாளர் உரிமைகளும் அவர்களின் மனித சுதந்திரமும் உதாசீனம் செய்யப்படுகின்றன.
16 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

இத்தகைய வழிகளைச் சட்டபூர்வமாக்கி மூலதனம் உழைப்பின் மீதான சுரண்டலை அதிகரிக்க அரசுகள் உதவுகின்றன. இந்த வழிகள் ஒன்றும் புதியவையல்ல. முதலாளித்துவத்தின் ஆரம்ப காலகட்டங்களில் இவை போன்ற உறவுகளை மூலதனம் பயன்படுத்தியது. இங்கு நாம் கவனத்தில் எடுக்கவேண்டியது என்னவெனில் தொழிலாளர் முன்னர் பல போராட்டங்களுக்கூடாக வென்றெடுத்த உரிமைகள் படிப்படியாக மறையும் போக்காகும். இன்றைய பல வளர்முக நாடுகளிலும் காணப்படும் சுதந்திர வர்த்தக வலையங்கள் மற்றும் தொழிற்பேட்டைகள்
போன்றவற்றில் தொழிலாளர் மீதான கட்டுப்பாடுகள் நிறுவனமயமாக்கப்பட்டுள்ளன.
தாராளமயமாக்கல் கொள்கையின் ஒரு விளைவான சுதந்திர வர்த்தக வலையயங்களில் தொழிலாளர்கள் பலவிதமான உரிமை மறுப்புக்களுக்கு ஆளாகியுள்ளனர். இலங்கையில் சுதந்திர வர்த்தக வலையங்கள் 20 ஆண்டுகளாக இயங்குகின்றன. 1979 இல் இரண்டாக இருந்த இவ்வலயங்கள் இப்போது 12 ஆக அதிகரித்துள்ளன. இங்கு வேலைசெய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களில் பெரும்பான்மையினர், ஏறக்குறைய 88 வீதத்தினர் பெண்கள். அவர்களில் பெரும்பான்மையினர் கிராமப்புறத்தவர். இங்குள்ள தொழிலாளர்களுக்கு இதுவரை தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. ஒரு வேலைத்தளத்தின் 40 வீதமானோர் சம்மதித்தால் தொழிற்சங்கம் அமைக்க முடியும் எனும் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆயினும், இந்த விதிப்படி தொழிற்சங்கம் அமைப்பதற்கும் முதலாளிகளும் முகாமையாளர்களும் பல தடைகளை நடைமுறையில் ஏற்படுத்துகிறார்கள். இதனால், இவ்வலையங்களில் தொழிற்சங்கங்கள் இயங்குவது மிகவும் கடினமாகியுள்ளது. பெண் தொழிலாளர்கள் மோசமாகச் சுரண்டப்படுகின்றார்கள். அவர்களில் பலர் பாலியல் வன்செயலுக்கு ஆளாகியுள்ளனர். மனித சுதந்திரம் பற்றிப் பேசும் தாராளவாதத்தின் மற்றைய முகத்தை சுதந்திர வர்த்தக வலையங்கள் காட்டுகின்றன. “சுதந்திர வாத்தக வலையம்” என்னும் பெயரில் நிறைய அர்த்தம் உண்டு. இலங்கையில் வகுக்கப்பட்டுள்ள தொழிலாளர் உரிமைச் சட்டங்கள் செல்லுபடியாகாத ஒரு தனிப்பிரதேசத்தை உருவாக்கி அங்கு முதலீட்டாளர்கள் தொழிலாளர்களை சுதந்திரமாகச் சுரண்டுவதற்கான சட்டதிட்டங்களை நிறுவனமயமாக்கியுள்ளனர். இங்கு தொழிலாளர்களின் சுதந்திரத்தை மறுக்கும் “சுதந்திரத்தை” முதலாளிகள் கொண்டுள்ளனர். இத்தகைய சுதந்திர வர்த்தக வலையங்கள் தாராளவாதத்தின் அரசியல் விழுமியமான தனிமனித சுதந்திரத்தின் மறுப்பாகியிருப்பது இன்றைய
உலகமயமாக்கலின் முரண்பாடுகளில் ஒன்றெனலாம்.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 17

Page 12
சென்ற வருடம் (2000) நான் சுவீடனிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் அபிவிருத்தி பற்றி உரையாற்றிய போது இலங்கையின் சுதந்திர வர்த்தக வலையம் பற்றிக் குறிப்பிட்டேன். அங்கு இடம் பெறும் உரிமை மீறல்களைப்பற்றி நான் குறிப்பிட்ட போது சபையிலிருந்து ஒருவர் “சுதந்திர வர்த்தக வலையம் பலருக்கு தொழில்வாய்ப்புச் செய்து கொடுத்துள்ளது, தேசிய பொருளாதாரத்திற்கு உதவியுள்ளது. இத்தகையதொரு கொள்கையை நீங்கள் ஏன் இப்படி விமர்சிக்கிறீர்கள்” எனக் கேட்டார். நான் எனது கருத்தினை மேலும் விளக்கினேன். அத்துடன் வேலையில்லாமை மிகவும் அதிகமாகவுள்ள இலங்கையின் சுதந்திர வர்த்தக வலையத்தில் 15000 தொழிலாளர் பதவிகள் நிரப்பப்படாதிருப்பதையும் இந்த தொழில்களுக்கு விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை என இலங்கையின் முதலீட்டுச் சபையின் தலைவர் பத்திரிகைகளுக்கு அறிக்கைகள் விட்டுள்ளார் என்பதையும் கூறினேன். சுதந்திர வர்த்தக வலையத்தின் நிபந்தனைகளைப் பலர் ஏற்கத் தயாராகவில்லை. அதைவிட அவர்கள் தங்கள் பெற்றோருக்கோ குடும்பத்தவருக்கோ பாரமாயிருக்க விரும்புகிறார்கள். இவற்றையெல்லாம் கூறியபின் என்னிடம் கேள்வி கேட்டவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன்.
“சுவீடனில் இலங்கையில் இருப்பது போன்ற ஒரு சுதந்திர வர்த்தக வலையம் உருவாக்கப்படுவதை நீங்கள் ஆதரிப்பீர்களா?” கேள்விகேட்டவர் மட்டுமன்றி வேறு பலரும் “அது சாத்தியமில்லை” எனும் கருத்தையே வெளிப்படுத்தினர். அவர்களிடம்
நான் மீண்டும் கேட்டேன்.
“சுவீடன் சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளமுடியாத உரிமை மறுப்புக்கள் மிகுந்த பொருளாதார நிறுவனத்தை ஏன் இலங்கைச் சமூகம் ஏற்றுக் கொள்ளவேண்டும்? மனித உரிமைகள் சர்வலோகத்துவமானவை என்றால்
இலங்கையில் இது இருப்பது எப்படி நியாயமாகும்?”
உலகரீதியில் உழைப்பிற்கும் மூலதனத்திற்கும் இடையிலான அடிப்படை முரண்பாட்டின் விளைவுகளை, அவை இப்போது முன்பையும்விட தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாய உரிமைகளைப் பாதிக்கின்றன என்பதை விளக்க மேற்கூறிய உதாரணங்கள் உதவுகின்றன. அதேவேளை, இதே உதாரணங்களைத் தத்தமது நிலைப்பாட்டிற்குச் சாதகமாக நவதாராளவாதிகள் பயன்படுத்துவதைக் காணலாம். அவர்களின் பிரதானவாதம் பின்வருமாறு: உதாரணமாக, சுதந்திர வர்த்தக வலையத்தில் கூலியாளராக உழைக்கும் பெண்களுக்கு வேறு வேலைவசதி கிடையாது. இந்த வேலையில்லாவிடில் அவர்கள் வேலையில்லாதோர்
18 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

படையில்தான் இருப்பர். அப்போது அவர்களுக்கு ஒரு ஊதியமும் இல்லை. இப்போது அவர்கள் ஊதியம் பெறுகின்றார்கள். இதனால் அவர்களின் சுதந்திரம் கூடியுள்ளது. வேலையற்றிருக்கும் அவர்களின் சகோதரிகளைவிட அவர்கள் அதிஷ்டசாலிகள். இந்த வாதத்தை மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது நியாயமாகவேபடுகிறது. சற்று ஆழமாகப் பார்த்தால் அதன் பலவீனங்கள் தெளிவாகின்றன. இங்கு பிரச்சினைக்குரிய விடயம் வேலையற்றிருந்த பெண்கள் கூலிஉழைப்பாளர்களாக மாறியதல்ல. அவர்கள் கூலியாளராக இருக்கும் உற்பத்தி உறவுகளின் தன்மைகளும் அவர்களின் உரிமைகளும்தான் இங்கு வாதத்திற்குரியவை. அவர்களின் உழைப்புச் சக்தியை வாங்குவதற்கு முதலாளிகள் வைக்கும் முன்நிபந்தனைகளும், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமும், அவர்கள் வேலைத்தளத்தில் கட்டுப்படுத்தப்படும் விதமும் அவர்களின் மனித உரிமைகளையும் தொழிலாளர் என்ற வகையில் அவர்களின் தொழிற்சங்க உரிமைகளையும்
மீறுகின்றன.
வேலையற்று இருப்பதைவிட சுதந்திர வர்த்தக வலையத்தின் நிபந்தனைகளை ஏற்றுக் கூலிபெறும் வாய்ப்பினை பெறுதல் நல்லதெனும் வாதத்தை இந்த நூற்றாண்டில் உலகமயமாக்கலுக்கு ஆதரவாகக் கேட்பது பலருக்கு ஆத்திரத்தை ஊட்டுவதில் நியாயம் உண்டு. ஏனெனில், அத்தகைய ஒரு தர்க்கரீதியான வாதம் அடிமை முறையைத் தொடரக்கூடப் பயன்படலாம். அடிமை விடுதலை பெற்றால் உணவின்றி, வீடின்றி வாடிச் செத்துமடிவதைத்தவிர வழியில்லை. ஆகவே, உயிரைக் காப்பாற்றுவதற்காக அடிமை அடிமையாக இருப்பதைத்தவிர வேறு வழியில்லை. இத்தகைய வாதம்தான் அது. உலகமயவாதம் மனித சுதந்திரத்திற்கு எத்தகைய முக்கியத்துவத்தினைக் கொடுக்கிறதென்பதை இது காட்டுகிறது. இங்கு மீண்டும் உலகமயமாக்கல் என்னும் வரலாற்றுப் போக்கிலிருந்து உலகமயவாதம் என்னும் கருத்தியலை, பொருளியல் கருத்துப்போக்கினை வேறுபடுத்திப் பார்த்தல் அவசியமென நினைவூட்டுதல் தகும். மூலதனத்தின் இயக்கத்திற்கு அதிகபட்ச சுதந்திரத்தை ஏற்படுத்துதலை நோக்கமாகக் கொண்டு செல்வந்த நாடுகளின் ஆளும் வர்க்கங்களும் TNCகளும் உலக பணமூலதனத்தின் நிறுவனங்களும் (குறிப்பாக பெரிய தனியார் வங்கிகள்), உலக வங்கி, சர்வதேச நாணய நிதி போன்றவையும் பல கொள்கை வழிகளைக் கையாண்டு வருகின்றன. இந்த வழிகளில் தொழிலாளர்களின் கூட்டுப்பலத்தினை தாக்கும் வழிகளும் அடங்கும். இதற்கு எதிரான போராட்டங்கள் இன்னும் போதிய தேசியமட்டப் பலத்தையோ சர்வதேசிய பலத்தையோ பெறவில்லை.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 19

Page 13
உலகமயமாக்கலும் அதற்குப் பயன்படும் தொழில்நுட்பமும் சர்வதேசிய தொழிற்பிரிவில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் கவன்த்தில் எடுத்தல் அவசியம். அறிவு மூலதனத்தின் எழுச்சி பற்றி ஏற்கனவே பார்த்துள்ளோம். மூளை உழைப்பு உடலுழைப்பு வேறுபாடு பற்றியும் குறிப்பிட்டேன். தொழில்நுட்பத்தின் உதவியுடன் பலதுறைகளில் உடலுழைப்பாளர்களுக்கு நிரந்தரவேலை வழங்கும் வழக்கம் மாற்றப்பட்டு வருகிறது. இப்படிச் சொல்லும்போது உடல் உழைப்பின் முக்கியத்துவம் குறைந்துவிட்டதென்றாகாது. உடல் உழைப்பாளர்களைச் சுரண்டும் விதிமுறைகள் மாறிவருகின்றன. செல்வந்த நாடுகளில் டிடலுழைப்பாளர் கூட்டத்தில் ஒரு கணிசமான பிரிவினராக மூன்றாம் உலகத்திலிருந்து வந்தோர் விளங்குகின்றனர். அவர்கள் இந்த நாடுகளில் மிகவும் மலிந்த ஊதியம் பெறுவோராக உள்ளனர். ஆகவே, தொழிலாளரின் புவியியல் ரீதியான நகர்ச்சியையும் நாம் கணக்கிலெடுக்கவேண்டும். ஏற்கனவே கூறியதுபோல் இந்த நகர்ச்சி பல கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. சமீபகாலங்களில் ஆசிய ஆபிரிக்க நாடுகளிலிருந்து செல்வந்த நாடுகளுக்குச் சென்றவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோத உள்வரவாளர்களாகவே கருதப்படுகின்றனர். இதனால் இவர்கள் உரிமைகளற்ற“கறுப்புச் சந்தை”தொழிலாளர்களாயிருக்கிறார்கள். சட்டபூர்வமாக குடியேறியுள்ள மூன்றாம் உலகத் தொழிலாளர்கள் உடல் உழைப்பாளர்களின் இன்னொரு பிரதான பகுதியாகும். வருமானத்தை அதிகரிக்க நீண்டநேரம் வேலை செய்வதும் ஒன்றுக்கு மேற்பட்ட தொழிலைச் செய்வதும் பல வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கையாளும் வழிகளாகும். அதேபோன்று உள்நாட்டு உடல் உழைப்பாளரும் கூடுதலான நேரம் வேலை செய்வது சகஜம். வட அமெரிக்காவில் இந்தப் போக்கு வளர்ந்துள்ளது.
இன்னொரு சர்வதேசப் போக்கு வறிய நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் அரபு நாடுகளுக்குச் செல்வதாகும். இந்நாடுகளில் இவர்கள் பெறும் ஊதியம் தமது சொந்த நாட்டு ஊதியமட்டத்துடன் ஒப்பிடும் போது உயர்வாக இருப்பினும் உரிமைகளைப் பொறுத்தவரை இத்தொழிலாளர்கள் மிகவும் பலவீனமான அந்தஸ்தையே கொண்டுள்ளனர். குறிப்பாக வீட்டுப் பணியாளராகச் செல்லும் பெண்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளார்கள்.
தேசிய, சர்வதேச ரீதியில் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை உலகமயமாக்கல் வலுப்படுத்தவில்லை, அதற்கு மாறாக பலவீனமாக்கியுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் உண்டென்பதை மேற்குறிப்பிட்ட உதாரணங்கள் காட்டுகின்றன. குறிப்பாக வளர்முக நாடுகளில் உரிமை மறுப்புக்களும் மீறல்களும்
20 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

அதிகரித்துள்ளன. மனித உரிமை மீறல்களைப் பற்றி சர்வதேச மன்னிப்புச் சபை வருடந்தோறும் வெளியிடும் அறிக்கைகளும் வேறுபல அறிக்கைகளும் ஆய்வுகளும் இந்த முடிவுக்குப் போதிய சான்றுகளைத் தந்துள்ளன.
சந்தை அடிப்படைவாதப் பொருளாதாரக் கொள்கை விவசாயிகளை, கிராமப்புறத்துத் தொழிலாளர்களை, வறியவர்களை பாதித்திருப்பதற்கான ஆதாரங்கள் நிறைய உண்டு. சிறிய விவசாயிகளில் கணிசமானவர்கள் வறியவர்களாகியுள்ளனர். பொதுவாக நகர்ப்புறத்தைவிட கிராமப்புறங்களில் வறுமை அதிகம் என்பதை சர்வதேசரீதியான புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 2001 ல் வெளியான IFAD இன் அறிக்கைகளின்படி இன்று 12 பில்லியன் மக்கள் “ஒரு நாளுக்கு ஒரு டொலர்” என உலக வங்கி வகுத்துள்ள வறுமைக் கோட்டிற்குக் கீழேயே வாழ்கிறார்கள். இவர்களில் 75 வீதமானோர் கிராமவாசிகள். 44 வீதத்தினர் தென் ஆசியாவிலும் 24 வீதத்தினர் கிழக்கு ஆசியாவிலும் 24 வீதத்தினர் சகாரவிற்கு கீழுள்ள ஆபிரிக்க நாடுகளிலும் வாழ்கின்றார்கள். இந்த வறுமையின் பெரிய சுமையைப் பெண்களே தாங்குகிறார்கள். வறுமைக்கோட்டின்படி எடுக்கப்பட்டுள்ள இந்தக் கணக்கு வறுமையின் சில முக்கிய தன்மைகளை உள்ளடக்கவில்லை. குறிப்பாக இந்தக் கோட்டிற்கு எவ்வளவு தூரம் கீழே ஒருவர் இருக்கிறார் என்பதையோ பல்வேறுபட்ட மனிதர்களின் அடிப்படைத் தேவைகளின் வேறுபாடுகளையோ இத்தகைய மதிப்பீட்டினால் அறிந்து கொள்ளமுடியாது. ஆயினும் இந்தக் கணக்கெடுப்பின்படி கூட வறுமை ஒரு பெரிய பிரச்சனையாகத் தொடர்வது தெளிவாகிறது.
கிராமிய வறுமைக்கான காரணங்களில் பிரதானமானவை:
0 பல நாடுகளில் விவசாய நிலத்தின் பங்கீடு மிகவும் அசமத்துவமாக இருப்பதும் இதனுடன் இணைந்து நீர் வளங்களின் பங்கீட்டின் அசமத்துவமும் போதாமையும் - இந்த அசமத்துவம் கிராமிய அதிகார அமைப்பின் ஒரு முக்கிய அம்சமாகும்.
e கிராமிய உட்கட்டுமானங்களின் விருத்தியின்மை.
கல்வி, சுகாதார வசதிகள் இல்லாமை அல்லது போதாமையும் அவற்றின் உயர்ந்து வரும் விலையும். மனித உரிமைகளும் தனி மனிதருக்கான பாதுகாப்பும் இல்லாமை.
e உற்பத்தியாளர்களுக்கு உள்ளீடுகள் பெறும் வசதியின்மையும் உற்பத்திசெய்யும்
பொருட்களின் விலை வீழ்ச்சியும். இயற்கை வளங்களினதும் சூழலினதும் சீரழிவு. நிலமற்றவர்கள் பெருமளவில் தற்காலிக கூலி உழைப்பில் தங்கிநிற்றல் வேலைவாய்ப்பின்மை, பெண் தொழிலாளர்களின் குறைந்த கூலி.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 21

Page 14
வறுமையைப் போக்கவேண்டிய அடிப்படையான மாற்றங்களைச் சந்தைச் சீர்திருத்தம் இதுவரை வழங்கவில்லை. கிராமப்புறத்தில் அதற்கு மாறாக அது ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
நிலச் சொத்தின் அசமத்துவங்களை மாற்றியமைக்கவல்ல நிலச் சீர்திருத்தங்கள் இப்போது குறைவு. சந்தைச் சக்திகளுக்கூடாக நிலச் சீர்திருத்தத்தை ஏற்படுத்த முயற்சிகள் செய்யப்படுகின்றன. தென்னாபிரிக்காவில் இந்தக் கொள்கையை அமுல் நடத்தி வருகிறார்கள். இந்தச் சீர்திருத்தத்தால் பணமுள்ள கறுப்பினத்தவர்கள் சிலர் நில உரிமையாளர்களாகியுள்ளனர். ஆயினும் உற்பத்தித்திறன் மிகுந்த விவசாய நிலங்களின் பெரும் பகுதி இன்னமும் ஒரு சில வெள்ளையர்களின் சொத்துக்களாகவுள்ளது.
கல்வி, சுகாதார வசதிகளின் சந்தைமயமாக்கல் சகல நாடுகளிலும் சமூகத்தின் கணிசமான பகுதியை ஒரப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக இந்தப் பகுதியினர் மலிந்த அல்லது இலவசமாகக் கிடைக்கும் தரம் குறைந்த கல்வி, சுகாதார சேவைகளில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் நீண்டகால விளைவு சமூக அசமத்துவங்களின் அதிகரிப்பாகும். உதாரணமாக, ஒரு தரமான பாடசாலையில் ஐந்து வருடம் கல்வி கற்றவருக்கும், ஒரு தரம் குறைந்த பாடசாலையில் அதேயளவு காலம் கல்வி கற்றவருக்கும் இடையிலான தராதரம் தன்மை ரீதியில் வேறுபடுகிறது. இலங்கை போன்ற நாடுகளில் ஆங்கிலமும் விஞ்ஞானமும் கற்றவருக்கும், தாய் மொழியில் கலைப்பிரிவில் கற்றவருக்கும் கிடைக்கும் தொழில்வாய்ப்புக்கள் சமமானவையல்ல. கிராமப்புறத்தில் இத்தகைய பல வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன. இதற்குக் காரணம் பொருளாதார வேறுபாடுகளே.
கல்வி, சுகாதார வசதிகள், உணவு, உடை, உறைவிடம் போன்று அடிப்படை மனித உரிமைகள் எனப்படும் இக்காலத்தில் இச் சேவைகளின் தனியுடைமையாக்கலும், விலையேற்றமும் பலருக்குத் தரமான கல்வியையும் சுகாதாரத்தையும் எட்டாக்கனிகளாக்கியுள்ளன.
உலகமயமாக்கலும் உலகமயமாக்கத்தின் நடைமுறைகளும் மக்கள் ஜனநாயகப் புரட்சியை இன்றைய நிலைமைகளுக்கேற்ப மீள்வியாக்கியானம் செய்யவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளன. இங்கு அரசு, சிவில் சமூகம், அரசியல் இயக்கங்கள் பற்றிய கேள்விகள் எழுகின்றன. அது பற்றிப் பார்க்க முன் கலாச்சாரத்தின் உலக மயமாக்கல் பற்றி ஒரு சிறு குறிப்பு.
22 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

கலாச்சார உலகமயமாக்கல்
கலாச்சாரத்தின் பண்டமயமாக்கல் - அதாவது சந்தைமயமாக்கல் - புதிய நிகழ்வல்ல. ஆயினும் புதிய தகவல்புரட்சி கலாச்சாரத் தொடர்புகளையும் கலாச்சாரத்தின் சந்தைமயமாக்கலையும் மிகவும் துரிதப்படுத்தியுள்ளது. கலாச்சாரங்களுக்கிடையிலான தொடர்புகள் மனித நாகரீகத்தின் ஆரம்பத்திலிருந்தே இடம்பெற்று வருவது. ஒரு கலாச்சாரம் மறுகலாச்சாரத்தின் செல்வாக்குக்கும் ஆதிக்கத்திற்கும் ஆளாவதும் வரலாற்று அனுபவங்கள். இன்று கலாச்சார உலகமயமாக்கலில் பலபோக்குகளைக் காணலாம். ஒரு பிரதானபோக்கு தொடர்பு சாதனங்களுக்கூடாக பல்வேறுபட்ட விளம்பரங்கள், நிகழ்ச்சிகள் நம் மத்தியில் ஏற்படுத்தி வரும் நுகர்வு சம்பந்தமான விழுமிய மாற்றங்கள் ஆகும். உடை, உணவு, பொழுது போக்குப் போன்ற அன்றாடத் தேவைகளின் நுகர்வு உலக சந்தையுடன் மேலும் பின்னிப் பிணையப்பட்டுள்ளது. ஒரு புறம் உற்பத்தி மறுபுறம் நுகர்வு-இவை இரண்டுமே கலாச்சார உலகமயமாக்கலுடன் ஒருங்கிணைகின்றன. கவர்ச்சிகரமான விளம்பரங்களை நுகர்வாளர் பெறுகிறார்கள். இவ்விளம்பரங்கள் நுகர்வாளர்களின் கேள்வி பற்றிய முடிவுகளை நிர்ணயிப்பதில் பெரும் செல்வாக்குடையன. விளம்பரங்களின் மனோவியல் ரீதியான தாக்கங்கள், நுகர்வாளர் இறைமை (Consumer Sovereignty) எனும் தாராளவாத பொருளியல் கோட்பாட்டினை என்றோ காலாவதியாக்கிவிட்டன. ஆகவே, நுகர்வாளர் தமது விருப்பின் அடிப்படையிலேயே சுதந்திரமாக தமது கேள்வியைச் சந்தைக்கூடாக வெளிப்படுத்துகிறார்கள் என்னும் கருத்து கட்டுக்கதையாகும். கடந்த சில தசாப்தங்களாக நுகர்வுவாதம் (Consumerism) உலகமயமாக்கப்பட்டு வருகிறது. பண்டங்கள் பற்றிய விளம்பரங்கள் தரும் தகவல்கள் பூரணமாக இருப்பதில்லை. குறிப்பாக மனித சுகாதாரத்தை, சூழலை குறிப்பிட்ட பண்டங்கள் எப்படி பாதிக்கின்றன என்பது பற்றிய தகவல்களை வர்த்தக விளம்பரங்கள் முடிந்தவரை தவிர்த்துக் கொள்கின்றன. அதே வேளை நுகர்வுப் பொருட்களின் இரசாயன உள்ளடக்கம் பற்றிய, அவற்றின் உற்பத்தி சூழலைப்பாதிப்பது பற்றிய தகவல்களை நுகர்வாளர்கள் தேடும் மரபு இப்போது வளர்ந்து வருகிறது. ஆயினும் இத்தகைய தகவல்களை வேறு வழிகளுக்கூடாகவே பெறமுடிகிறது. இன்று சூழல்பாதுகாப்புப் பற்றி சமூக கலாச்சார விழுமியங்கள் பரவத் தொடங்கியுள்ளன. இதற்குத் தகவல் தொழில்நுட்பம் உதவுகிறது. சூழல் பாதுகாப்பின் அவசியம் பற்றிய உணர்வு உலகமயமாக்கப்படுகிறது. இது ஒரு அரசியல் கலாச்சாரப் போக்காகும். இதன் விளைவாக நச்சுப்படுத்தப்பட்ட சூழலைப் புனரமைக்கும் தொழில்நுட்பத்திற்கான கேள்வி வளர்வதைக் காணும் TNCகள் சூழல் தொழில்நுட்ப உற்பத்தியிலும் ஈடுபடத்
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 23

Page 15
தொடங்கியுள்ளன. இலாப நோக்கினால் உந்தப்படும் மூலதனம் தனது இயக்கத்தின் விளைவாக வரும் வியாதிக்கான மருந்தினையும் இலாப நோக்கத்திற்குப் பணிய வைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது ஒன்றும் புதிய கதையல்ல.
கலாச்சார சந்தைக்கூடாக, கல்விக்கூடாக மேற்கத்திய-குறிப்பாக வட அமெரிக்க கலாச்சாரத்தின் மேலாதிக்கம் பலம் பெற்றுள்ளது. பொழுது போக்கு சந்தைமயமாகியுள்ள நிலையில் மலிவான கலாச்சார உற்பத்திகளைச் செய்வதில் அமெரிக்கா முன்நிற்கிறது. இன்று ஐரோப்பாவிலும் திரைப்படம், இசை போன்ற துறைகளில் அமெரிக்கச் செல்வாக்கும் ஆதிக்கமும் எழுவதைக் காணலாம். அமெரிக்காவின் கலாச்சார ஏகாதிபத்தியம்பற்றி தெற்கத்திய நாடுகளில் மட்டுமல்ல ஐரோப்பாவிலும் கேள்விப்படுகிறோம். கடந்த நூற்றாண்டிலிருந்து கலாச்சாரத்தைச் சந்தைமயமாக்குவதில் அமெரிக்கா முன்னணியில் இருந்து வருகிறது. கலாச்சாரத்தின் சந்தைமயமாக்கலும் மேற்கத்திய மேலாதிக்கமும் பிரதான போக்காயிருக்கும் அதேவேளை கலாசாரங்களின் சங்கமிப்பையும், புதியகலை இலக்கிய வடிவங்களின் கண்டுபிடிப்புக்களையும் காண்கிறோம். இப்போது இங்கிலாந்தில் Asian rap பிரபல்யமாகி வருகிறது. உபகண்டத்திலிருந்து பிரித்தானியாவிற்குச் சென்று குடியேறியவர்களின் இளைய சந்ததியினர் Asianrap இசையை உருவாக்கியுள்ளனர். சில காலத்திற்கு முன்னர் Peter Brook மகாபாரதத்தை ஒரு நீண்ட ஆங்கில நாடகமாக்கினார். இதில் உலகின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் தமக்கே உரிய ஆங்கில உச்சரிப்புடன் பேசி நடித்தார்கள். இந்த நாடகத்திற்குப் பரவலான வரவேற்பு இருந்தது. ரஷ்சியாவில் பிறந்தவரும் பிரான்சில் வாழ்பவருமான Ariane Mnouchkive ஷேக்ஸ்பியரின் நாடகத்தை ஜப்பானிய கபுக்கி (Kabuki) முறையில் பாரிசில் அரங்கேற்றியுள்ளார். பிரபல நோர்வேஜிய நாடகாசிரியர் இப்சனின் “மக்கள் விரோதி” எனும் நாடகத்தை வங்காள மொழியில் மேற்குவங்கத்து நிலைமைகளுக்கு ஏற்ப உருவாக்கியுள்ளார் ஒரு வங்காளக் கலைஞர். இப்படியான பல முயற்சிகள் இடம்பெறுவதையும் காண்கிறோம். இவை வரவேற்கப்பட வேண்டியவையே. அதே போன்று நவீன தொழில்நுட்பங்களை கலாச்சார ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் பயன்படுத்தும் வாய்ப்புக்களும் கூடியுள்ளன. ஆயினும் கலாச்சாரத்தின் சந்தைமயமாக்கல் விமர்சன மரபுசார்ந்த காத்திரமான கலை இலக்கியச் செயற்பாடுகளை மேலும் கடினமாக்கியுள்ளதென்பது வருத்தம் தரும் உண்மையாகும். மேற்கத்திய நாடுகளில் இந்த நிலையைப் பொதுவாகக் காணலாம். இலாபம் பெறமுடியுமாயின் விமர்சனக் கலாச்சாரச் செயற்பாடுகளையும் சந்தைமயமாக்க பல நிறுவனங்கள்
24 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

தயாராயிருக்கின்றன. எழுத்துத்துறையில் இதைக் காண்கிறோம். அதேபோன்று இடைக்கிடை ஒரு தரமான திரைப்படம் வெளிவருவதையும் காண்கிறோம். திரைப்பட உற்பத்தியிலும் ஐரோப்பா சுயபோட்டிச் சந்தைக் கொள்கைகளையே பின்பற்ற வேண்டுமென அமெரிக்கா நிர்ப்பந்திப்பதால் ஐரோப்பிய நாடுகளில் முன்பு போல் திரைப்பட உற்பத்தியாளர்களுக்கு இப்போது அரசமான்யங்கள் கிடைப்பதில்லை. அதேவேளை அமெரிக்க திரைப்படங்களுக்கு ஐரோப்பாவில் பெரியகிராக்கி.
கலாச்சார ஏகாதிபத்தியதிற்கு எதிராக கலாச்சார சர்வதேசியத்துவமும், பல்கலாச்சாரங்களின் விருத்தியும், குறிப்பிட்ட கலாச்சாரங்களின் செறிவான வளர்ச்சிக்கான சுதந்திரமும் தேவை என்பதையே இன்றைய உலகநிலை காட்டுகிறது. இதற்கு புதிய தகவல் தொழிநுட்பம் பயன்படும்.
அரசும் சிவில் சமூகமும்
சந்தை அடிப்படைவாதம் குறைந்தபட்ச அரசுவாதத்தை நியாயப் படுத்துகின்றது. இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. அதே வேளை அரசின் ஆதிக்கம் குறைக்கப்படுவது சிவில் சமூகத்தினை உண்மையான சுயாதீன சமூகமாக்க உதவுவதாகும். அதனால், மனித சுதந்திரம் வளரும் அடிப்புலம் விரிவுபெறுவதாகவும் உலகமயவாதிகள் சொல்கிறார்கள். இவர்களில் ஒரு குழுவினர் உலகமயமாக்கல் தேசிய எல்லைகளையும் அரசுகளையும் கலாவதியாக்கிவிட்டது அல்லது காலாவதியாக்கிவருகிறது எனக் கூறுகின்றனர். இது மிகைப்படுத்தப்பட்ட ஒரு பொதுமையாக்கல் என்பதற்கான சில காரணங்களை ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன், சுருங்கக்கூறின் மூலதனத்திற்குத் தேசிய எல்லைகள் தடையில்லை, இயற்கை வளங்களின் ஏற்றுமதி இறக்குமதிக்கும் அவை தடையாக இல்லை. நுகர்வுப் பொருட்களின் நகர்ச்சிக்கும் அவை தடையில்லை. ஆனால் மனிதரின் நடமாட்டத்திற்கு, சுதந்திரமான நகர்ச்சிக்கு அவை பெருந்தடைகளாகியிருக்கின்றன. இங்கேதான் தேசிய அரசுகளின் அல்லது தேசிய அரசுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றின் தேசியத்துவத்தை நாம் நேரடியாகச் சந்திக்கிறோம். இது பற்றி பார்க்குமுன் தெற்கத்திய நாடுகளின் அரசு-சிவில் சமூகம் பற்றிப் பார்ப்போம்.
இன்று சிவில் சமூகம் பற்றிப் பேசாதவர்கள் இல்லை. ஒரு மீள்கண்டுபிடிப்புப் போன்று அது முக்கியமாகிவிட்டது. சிவில் சமூகத்திற்கு முரண்பட்ட விளக்கங்களைக் காண்கிறோம். வரலாற்றுநோக்கில் பார்க்கும் போது ஆரம்பகால தாராளவாதிகள் சிவில் சமூகத்தினை அரசிடமிருந்து தனிமனிதரைப் பாதுகாக்கும்
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 25

Page 16
ஒரு பகுதியாகக் கருதினர். தாராளவாதக் கோட்பாடுகளின்படி சிவில் சமூகமானது மனித உரிமைகளும் சட்டத்தின் அமுலாக்கமும் இடம்பெறும் சமூகப்புலமாகும். இதன் இருப்பிற்கு அரசு உத்தரவாதம் கொடுக்கிறது. தாராளவாத தத்துவத்தினைச் சார்ந்தோராகவும் 18ம் நூற்றாண்டின் அறிவொளி (Enlightenment) யுகத்தின் அரசியல் பொருளியல் சிந்தனையாளராகவும் விளங்கிய அடம்ஸ்மித் போன்றோர் சிவில் சமூகத்தை நவீன பொருளாதார செயற்பாடுகளின் உறைவிடமாகவும், மனிதர் பகுத்தறிவின் உதவியுடன் தமது சுய நலன் சமூக விதிகளுக்கமைய அனுபவிக்கும் புலமாகவும் கருதினர். இந்தச் சிந்தனை மரபில் சிவில் சமூகத்தின் வருகை தனிமனிதரின் பொருளாதார சுதந்திரத்தையும் பகுத்தறிவுவாதத்தின் மேலாட்சியையும் நிரந்தரமாக்குகிறது. ஹெகல் சிவில் சமூகத்தை அரசின் சர்வலோக தர்க்கவியலுக்கும் குடும்பத்திற்கும் இடையேயுள்ள ஒரு கட்டமாகக்கருதினர். மார்க்ஸ் சிவில் சமூகத்தினை சுயாதீனம் கொண்ட ஒரு புலமாகவும், அங்கு பண்ட உற்பத்தியின் விதிகளுக்கேற்ப பரிமாற்றங்கள் இடம் பெறுவதாகவும் குறிப்பிட்டார். இந்தக் கருத்தில் பொருளாதாரமும் அரசியலும் ஒன்றிணைந்த பழைய சமூகங்களின் நிலைமாறி, நவீன சமூகத்தில் பொருளாதாரம் பெற்றுள்ள சுயாதீனத்தின் பிரதிபலிப்பாக சிவில் சமூகம் விளங்குகிறது. கிராம்சியின் கருத்தில் சிவில் சமூகமானது அரசு தனது மேலாட்சியை (Hegemony) செலுத்தும் புலமாக இருக்கிறது.
இப்படியாக சிவில் சமூகம் பற்றிப் பல விதமான விளக்கங்கள் உள்ளன. இன்று சிவில் சமூகம் அரசிற்கும் குடும்பத்திற்கும் இடையே அமைந்துள்ள பகுதியாகவே பரவலாகக் கருதப்படுகிறது. இந்தப் புலமானது அரசுசாரா அமைப்புக்கள் இயங்கும் புலமாகவும் பல விதமான சமூக இயக்கங்கள் செயற்படும் புலமாகவும் கருதப்படுகிறது.
இன்று வழக்கத்தில் இருக்கும் கருத்தின்படி சிவில் சமூகத்தை நோக்குவோமாயின் அங்கு அரசின் ஆதிக்கம் பலவகையில் இருப்பதை மட்டுமன்று சிவில் சமூகம் பலவிதமான பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வுகளையும் கொண்டிருப்பதையும் காண்கிறோம். இங்கே மரபுரீதியான சாதிய அமைப்புக்களால் தொடர்ந்தும் நசுக்கப்படுவோரைக் காண்கிறோம். வர்க்க வேறுபாடுகளையும் அவற்றின் அடிப்படையிலான அந்தஸ்து, மற்றும் அதிகார வேறுபாடுகளைச் சந்திக்கிறோம். இங்கு உரிமை அமைப்புக்கள் புதிய சமூக இயக்கங்கள் புரட்சிகர அரசியல் அமைப்புக்களை மட்டுமன்றி மத அடிப்படைவாத அமைப்புகளையும், இனவாத நிறவாத அமைப்புக்களையும் காண்கிறோம். இங்கே பெண்ணுரிமை இயக்கங்களைக் காணும் அதேவேளை ஆணாதிக்கம் மிகுந்த நிறுவனங்களையும் காண்கிறோம்.
26 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

இவற்றையெல்லாம் மனதில் கொள்ளும் போது சிவில் சமூகம் மனித சுதந்திரங்களின் இயற்கையான உறைவிடம் என்றோ அங்கு ஜனநாயக உரிமைகளுக்கான செயற்பாடுகள் மட்டுமே முக்கிய பங்கினை வகிக்கின்றன என்றோ கருத இடமில்லை. ஆயினும் பலர் சிவில் சமூகம் பற்றி அத்தகைய சுலோகங்களை முன்வைப்பதைக் காண்கிறோம். நடைமுறையில் சிவில் சமூகம் ஒரு போராட்டக்களமே. சிவில் சமூகத்திலேயே தனிநபர்கள் தமது சமூகத்தன்மையைப் பெறுகின்றனர். உணர்கின்றனர். ஜனநாயக அரசு இல்லாத நாட்டின் சிவில் சமூகத்தில் ஜனநாயகம் இருப்பது சாத்தியமில்லை. ஆனால் அங்குதான் ஜனநாயகத்திற்கான போராட்டங்கள் இடம் பெற வேண்டும். சிவில் சமூகத்தை மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களின் புலமாக மாற்றுவது ஒரு அரசியல், சமூக கலாசார சவாலாகும்.
சிவில் சமூகத்தின் மீது தனது அரசியல் கலாசார ரீதியிலான மேலாட்சியை நிலைநாட்ட அரசு தொடர்ச்சியாக முயற்சித்த வண்ணமிருக்கிறது. ஆயினும் இன்று தேசிய அரசுகளை தமது அரசியல் கலாச்சார மேலாட்சிக்குள்ளாக்கவே அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய அணிவிடாமுயற்சி செய்துவருகிறது. நவீன தொடர்புசாதன தொழிநுட்பத்தின் உதவியுடன் அரசின் அனுமதியின்றி மக்கள் மீது அரசியல் கலாச்சார செல்வாக்கினைச் செலுத்தக்கூடிய நிலையில் உலக மூலதனம் இருக்கின்றது. அதேவேளை தேசிய அரசுகள் விரும்பாத கருத்துக்கள், சிந்தனைகள் மக்களைச் சென்றடையும் வாய்ப்புக்கள் கூடியுள்ளன. இந்த நிலையில் சிவில் சமூகம் மீதான தனது மேலாட்சியை நிலைநாட்ட அரசு சட்டங்களையும், அரசு இயந்திரத்தின் கலாச்சார நிறுவனங்களையும் மேலும் பலமாகப் பயன்படுத்த முனைகிறது. சிவில் சமூகத்தின் சில அமைப்புக்களுக்கு அரசு உதவிகளைச் செய்வதையும் காணலாம். அரசின் தன்மையைப் பொறுத்து இந்த அமைப்புக்கள் தெரியப்படுகின்றன. அரசின் கருத்தியலை அரசியல் கொள்கையை ஆதரிக்கும் அமைப்புக்களுக்கு உதவி கிடைக்கிறது. அரசு சாரா நிறுவனங்கள் அரசினால் உருவாக்கப்படுகின்றன. சுயமாக இயங்கும் நிறுவனங்களை பல உதவிகளைக்
காட்டி தன்பால் ஈர்க்கிறது அரசு.
இன்று சிவில் சமூகத்தில் அரசின் மேலாதிக்கம் பற்றிப் பார்க்கும் அதேவேளை, ஏற்கனவே குறிப்பிட்ட உலகப்போக்குகள்ையும் அவற்றுடனான அரசின் உறவுகளையும் புரிந்துகொள்ளல் அவசியம். சிவில் சமூகத்தில் அரசின் மேலாதிக்கத்தை மட்டுல்ல மனித சுதந்திரத்தைப் பாதிக்கும் சர்வதேச போக்குகளின் மேலாதிக்கத்தையும் இனங்காணுதல் அவசியம். இந்த மேலாதிக்கத்தை எதிர்க்கும்
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 27

Page 17
போராட்டமும், அரசியல் சமூக கலாசார பரிமாணங்களைக் கொண்டிருக்க வேண்டும். இன்று பல நாடுகளில் உலகமயமாக்கலுக்கான எதிர்ப்புக்கள் பிற்போக்கான ш05 அடிப்படைவாதிகளிடமிருந்தும் கலாச்சார தேசியவாதிகளிடமிருந்தும் பலமாக எழுகின்றன. இவை மனித சுதந்திரத்திற்கான போராட்டங்களை மழுங்கடிக்கவே பயன்படுகின்றன. இப்படிச் சொல்வதால் நான் இனங்களின் தனித்துவத்திற்கோ அல்லது அவற்றுக்கிடையிலான சமத்துவத்திற்கோ, சுயநிர்ணயத்திற்கோ எதிர்ப்பு என்ற முடிவுக்கு வருவது தவறு. இவற்றையெல்லாம் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் உள்ளடக்கங்களாக மீண்டும் சிந்திக்க வேண்டும். உலகமயமாக்கலின் மனித சுதந்திர மறுப்புத்தன்மைகளை எதிர்த்து உள்ளூர், தேசிய, சர்வதேசிய மட்டங்களில் போராடுதல் அவசியம். வேறு விதமாகச் சொல்வதனால் உலகமயமாக்கலைப் பின்னோக்கிய குறுகிய கலாச்சார தேசியவாத நோக்கில் எதிர்ப்பது மனித விடுதலைக்கு உதவமாட்டாது. மக்கள். ஜனநாயகப் புரட்சியை உலகமயமாக்குதலே இன்றைய கடமையாகும். உள்ளூர் தேசிய மட்டத்திலான மக்கள் ஜனநாயகப் போராட்டங்கள் சர்வதேசிய இணைப்புக்களைத் தேடுவதன் மூலம் ஜனநாயகப் புரட்சியின் உலகமயமாக்கலுக்கு உதவமுடியும். இந்த இணைப்புக்கள் அயல் நாடுகளுககிடையே ஆரம்பித்து பிராந்திய இணைப்புக்களாக மேலும் சர்வதேசத் தொடர்புகளை ஏற்படுத்த முடியும்.
என்.சண்முகரத்தினம் நோர்வே விவசாயப்
அபிவிருத்திக் கற்கை நிலையத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
&
28 uigeningbb - gewslf - gg'96zit 2002

உள் முற்றம்: இலங்கையில் சாதி, நீதி, சமத்துவம் பற்றிய அரசியல் சொல்லாடல்
g/Z/62562/277/7675/7Z
அறிமுகம்
பீமூக சீர்திருத்தத்தை நோக்கிய, சமூக அல்லது அரசியல் முயற்சி பற்றிய பிரக்ஞை இன்மை இலங்கையின் அரசியற் கலாச்சாரத்தின் ஆவலைக் கிளறும் ஒரு முக்கிய அம்சமாகும். சென்ற வருடம் (1999) பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் சம வாய்ப்பு பற்றிய பொதுக் கொள்கைச் சட்டம் ஒன்றுக்கான சட்ட மூலத்தை அறிமுகப்படுத்தும் தனது திட்டத்தைக் கைவிட்ட போது, இலங்கையின் சமகால அரசியலிற் காணப்படும் இத்தனியியல்பு, பலரதும் தீவிரமான கவனத்தை ஈர்த்தது. அரசாங்கத்தின், சம வாய்ப்புச் சட்டமூல வரைவு, அகில இலங்கைப் பெளத்த காங்கிரஸ், பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய இயக்கம் என்பன போன்ற சிங்களத் தேசியவாதச் சக்திகளினால் எதிர்க்கப்பட்டது. அவர்களுடைய எதிர்ப்பு, சமவாய்ப்பு என்ற கருத்து, சிங்கள பெளத்த பெரும்பான்மைச் சமூகத்திற்கண்றி, சிறுபான்மை இனத்தவருக்கும் மதத்தினருக்குமே சாதகமாக அமையுமென்ற வாதத்ததை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இவ்வெதிர்ப்பின் காரணமாகப் பொதுத்துறையில் சமூக சமத்துவத்திற்கான இச்சட்டவாக்கத்தை அரசாங்கம் ஏன் கொண்டுவர முற்பட்டது என்பது பற்றிய விளக்கத்தைக் கொடுப்பதற்குக் கூட எவ்வித முயற்சியும் செய்யாது, இச்சட்டவரைவைக் கைவிடுவதென அமைச்சரவை, முடிவு செய்தது. சமவாய்ப்புச் சட்டவாக்கத்தை, ஒரு காரணமாகக் கொண்டு பெளத்த பிக்குகள் அரசாங்கத்திற் கெதிராகக் கிளர்ச்சி செய்யக் கூடிய சாத்தியப்பாடு பற்றி அமைச்சரவையைச் சேர்ந்த பல அமைச்சர்கள் கவலையுற்றிருந்ததாக அறிக்கைகள் உணர்த்தின. இவ்வுத்தேசச் சட்டம், கல்வி, தொழில் வாய்ப்பு என்பவற்றில் சிறுபான்மை இனத்தவர்களுக்குச் சாதகமாக அமையுமெனப் பெளத்த சக்திகள் கருதியிருக்கலாம் என்பதே அவர்களுடைய அச்சமாகும். நவீன இலங்கைப் பெளத்தம் சமத்துவத்திற்கு எதிரானதா என்ற கேள்வியை எவரும் கேட்க முற்பட்டதாகத் தெரியவில்லை. சீர்திருத்தங்களைச் செய்வதில் ஈடுபாடு கொண்டிருந்த ஒரு நிர்வாகம், அமைச்சரவை மட்டத்தில் கலந்துரையாடிய பின்னர், சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புக்காட்டும் பழைமைவாத
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 29

Page 18
சமூக சக்திகளுக்கு முன் சரணடைந்ததென்ற உண்மை, இலங்கையின் பொது அரங்கில், நீதி, சமத்துவம், நேர்மை என்பன போன்ற பிரச்சினைகள் பற்றிய அடிப்படை வினாக்கள் சிலவற்றை எழுப்புகின்றது.
இலங்கையைப் பொறுத்தளவில், சமூக அமைப்புக்களில் பிணைந்து கிடக்கும் சமத்துவமின்மைகளை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட, சமத்துவம், சமூக நீதி என்பன தொடர்பான சமூக சீர்திருத்தங்கள் பொது மக்களின் தலையீட்டை வேண்டிநிற்கின்றன. சிங்கள, தமிழ் சமூகங்களில், சமத்துவமின்மையின் மிகத்தீவிரமான வடிவங்கள் சாதி உறவுகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. பின்காலனித்துவ அரசு, பின்காலனித்துவ முதலாளித்துவம், சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றும் தாராள அரசுகள் ஆகிய நிபந்தனைகளின் கீழ் இவை தம்மை மறு உற்பத்தி செய்து கொள்கின்றன என்று தோன்றுகின்றது. எனினும் சாதியை அடிப்படையாகக் கொண்ட சமத்துவமின்மை, அநீதி, சமூகரீதியாக ஒரங்கட்டுதல் முதலிய பிரச்சினைகள் முன்னேற்றத்துக்கான நாட்டின் அரசியல் வேலைத்திட்டத்தில் பகிரங்கமாக விவாதிக்கப்பட வில்லை என்பது இலங்கை அனுபவத்தின் விசேடதன்மைகளில் ஒன்றாகும். சமூகத்தின் பல் வகைச் சாதி அமைப்பு, அரசியல் பன்மைத்துவத்திற்கு ஏற்புடைய தளமென்று கருதப்படவுமில்லை. பன்மைத்துவ அரசியற் கற்பனை இனத்துவத்தில் ஆரம்பித்து, இனத்துவத்திலேயே முடிவடைகின்றது. இங்கு சாதி பற்றிய குறிப்பெதுவும் இல்லை. இலங்கையில், சமூக நீதி பற்றிய அரசியல் சொல்லாடலில் தொடர்ந்து இடம்பெறும், தெற்றெனத் தெரியும் ஒரு முரண்பாட்டை ஒருவர் இதில் காணலாம். முன்னேற்றம் பற்றிய பின்காலனித்துவச் சொல்லாடலில் வர்க்க சமத்துவமின்மை பற்றிய பிரச்சினை எப்போதும் விரிவாக விவாதிக்கப்பட்டுவந்துள்ளது போல் சாதி, இனத்துவம் என்பவற்றிலிருந்து உருவாகும் சமூக அநீதி முறைகள் விவாதிக்கப்படவில்லை. சாதி வேறுபாடுகள், சமூக சமத்துவம் பற்றி இலங்கையின் பொதுச் சொல்லாடலில் ஏற்பட்டுள்ள நிலைமாற்றங்களே இக்கட்டுரையின் குவிமையமாகும்.
சமத்துவமும் அதன் வகைமைகளும்
சமூக சமத்துவம் பற்றிய இலங்கையின் பொதுச் சொல்லாடல் மூன்று கருத்துநிலை மூலங்களிலிருந்து பிறந்தவை. அவை சோசலிசம், சமூக நலவாதம், பெளத்தம் என்பனவாகும். சமாஜ சமானாத்மதாவய (சமூக சமத்துவம்) என்ற சிங்களச் சொற்றொடர், மதம் மற்றும் மதச் சார்பற்ற இக்கருத்து நிலைகளில் உள்ளார்ந்திருக்கும் சமூக சமத்துவம் பற்றிய நியமங்களின் கூட்டிணைப்பாகும்.
30 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

எனினும், சமூக சமத்துவம் பற்றிய அரசியல் சொல்லாடல், சாதி உறவுகள் சம்பந்தப்பட்ட சமத்துவத்தைப்பற்றிக் குறிப்பாக எதுவும் கூறவில்லை. சாதி விடுதலை பற்றியும் கூறவில்லை. சமத்துவம் பற்றிய கருத்துநிலையில் காணப்படும் சமத்துவம், நீதி முதலிய வகைமைகள் வர்க்க, சாதி பேதங்களையும் உள்ளடக்குகின்றன என்று கருதப்படுகின்றது. வர்க்க அடிப்படையில் காணப்படும் சமத்துவமின்மையையும் அநீதியையும் பற்றிய பகிரங்க உரையாடல்களைச் சமூகம் அனுமதிக்கும் போதிலும், சாதி அடிப்படையிலான சமத்துவமின்மைகளையும் அநீதிகளையும் பற்றிய உரையாடல்களை அனுமதிப்பதில்லை. இதன் விளைவாக, சாதிக்கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை என்றகருத்து சமத்துவம்பற்றிய சமூக வர்க்கப்பெருஞ் செயற்றிட்டத்தில் ஒரு மெளனப் பங்காளி என்ற நிலைக்குத் தரம் குறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, அடக்கப்பட்ட கிராம மக்கள்’ (பீடித்த கமி ஜனதாவ), அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள்'(பாகென ஜனதாவ), வறிய கிராமமக்கள் (துகி கமிஜனதாவ) என்பன, வறிய கிராமப்புறத்துமக்களைக் குறிக்கும் பொதுவான சொற்களாகும். இவர்கள் சமூக ரீதியில் ஒருமுகப்பட்ட, சாதி சார்பற்ற சமூக அலகாகக் கட்டமைக்கப்பட்டுள்ளனர். அல்லது, சாதி அடக்குமுறையை நேரடியாகக் குறிப்பிடாமல், ஒடுக்கப்பட்ட சாதிகளைக் கொண்ட சமுதாயங்களைச் சேர்ந்த வறியோரை விபரிப்பதற்கு உருவாக்கப்பட்ட மேலோட்டமான வகைமைகள் என்றும் இவற்றைக் குறிப்பிடலாம்.' அப்படியாயின், ஒரங்கட்டப்பட்ட சாதிகள் தொடர்பாக, சமூக முன்னேற்றம், சமூக விடுதலை பற்றிய சிங்கள அரசியல் சொல்லாடல் ஏற்படுத்தக் கூடியதாக இருந்த ஒரேஒரு சமூக சீர்திருத்தக் கருத்து, அடக்கி ஒடுக்கப்பட்ட கிராம மக்களை மேம்படுத்தலாகும். இப்பின்னணியில் சாதிவிடுதலைக்கான ஒரு அரசியல் மொழியின் இன்மை இலங்கையின் அரசியல் கலாச்சார மாணவனொருவனின் கவனத்தை ஈர்க்க வேண்டிய முக்கிய விடயமாகும்.
சாதியை அடிப்படையாகக் கொண்ட சமூக சமத்துவமின்மையையும் பாரபட்சங்காட்டுதலையும் பகிரங்கமாக எதிர்க்கக் கூடிய அரசியல் இயக்கமொன்று சிங்களச் சமூகத்தில் உருவாகவில்லை என்பதே, இலங்கை அரசியலின் சமூகவியலில் காணப்படும் ஒரு தனியியல்பாகும். வர்க்க அடிப்படையிலான விடுதலை பற்றிய சமதர்ம வகைமையில் மறைந்திருக்கும் சமூக சமத்துவம் பற்றிய அவர்களுடைய அரசியல் செய்திகள், ஒடுக்கப்பட்ட சாதியினரைக் கொண்ட சமுதாயங்களின் கவனத்தையும் ஆதரவையும் ஈர்த்தெடுத்த போதிலும் இடதுசாரி இயக்கமோ,தீவிரமான மக்கள் விடுதலை முன்னணியோ கூட சாதி ஒடுக்குமுறைப் பிரச்சினையைத் தமது அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தின் வெளிப்படையான கூறாகக் கொள்ளவில்லை. தேர்தல்கள், பயங்கரவாதக் கலகங்கள் போன்ற தீவிரமான
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 31

Page 19
அரசியல் நடவடிக்கைகள் இடம்பெறும் காலங்களில், கிராமப்புறங்களில் மிக அதிக அளவில் அரசியல் வன்செயல்கள் ஏன் காணப்படுகின்றன என்பதற்குச் சமூக சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியற் செயற்றிட்டத்துடன் நேரடியாகத் தொடர்புபட்ட ஒரு சமூக விடுதலைச் சொல்லாடல் இல்லாமை ஒரு வேளை விளக்கமாக அமையலாம். சிங்களச் சமூகத்தின் இந்த அரசியல் அனுபவம், சாதி ரீதியான பாரபட்சங்களுக்கெதிராக இலங்கையில் தமிழர் சமூகம் மேற்கொண்ட அரசியல் போராட்டங்களிலிருந்து ஒரளவு வேறுபட்டதாக அமைகின்றது. கொம்யூனிஸ்ட் கட்சியின் தலையீட்டுடன், 1950களிலும் 1960களிலும் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த சமுதாயத்தினர் இந்துக் கோயில்களுக்கும் உணவகங்களுக்கும் செல்வதற்கான உரிமை கோரியும், மரபு வழியாக மேற்சாதியினர் மட்டும் பயன்படுத்திய கிணறுகளை இவர்களும் பயன்படுத்துவதற்கான உரிமைகோரியும் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன: எவ்வாறெனினும், சிங்களச் சமூகத்தின் அரசியலில் காணப்பட்ட அதே முரண்பாடு, தமிழ் அரசியலிலும் கூட இடம்பெற்றது. எந்தவோர் அரசியற் கட்சியோ அல்லது இயக்கமோ, நோரடியாகவும் பகிரங்கமாகவும் சமூக விடுதலைக்கான அரசியற் செயற்றிட்டமொன்றில் ஒடுக்கப்பட்ட சாதிகளை அணிதிரட்டவில்லை. தமிழரின் கிளர்ச்சிகர இளைஞர் அரசியலிற் கூட, சாதி அடக்கு முறையும் விடுதலையும் ஆரவாரம்மிக்க தேசிய விடுதலைக்கு இரண்டாம் பட்சமானதாகவே அமைகின்றன.
காலனித்துவ சமூகத்தில் சாதி அரசியல்
1920ஆம் ஆண்டு முதல், இனச்சிறுபான்மையினரும் சாதிச் சிறுபான்மையினரும் தத்தமது அரசியல் எதிர்காலத்தைக் காலனித்துவ சட்ட சபையிலிடம்பெறும் அரசியல் பிரதிநிதித்துவத்தினூடாகக் கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்தனர். காலனித்துவ அரசின் அதிகார அமைப்புகளுள் நுழைதல் என்பது பொதுவான அடையாள நலன்களைக் கொண்ட சமுதாயங்கள் அரசியல் அங்கீகாரத்தைப் பெறுவதைக் குறித்தது மட்டுமன்றி, பொருளாதார வளங்களின் பகிர்விலும் தொழில் வாய்ப்புக்களிலும் கூடக் காலனித்துவ அரசின் மீது செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையையும் குறிப்பதாக அமைந்தது. இனம்','சாதி என்பவற்றின் அடிப்படையிலமைந்த குழு அடையாளம் இக்காலப்பகுதில் குழுக்களுக்கிடையே - பெரும்பான்மை, சிறுபான்மை உறவுகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது போல் தோன்றுகின்றது. இனம் மற்றும் சாதி அடிப்படையிலமைந்த பெரும்பான்மையினர் பிரதிநிதித்துவ நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்துவர் என்ற பீதி, இனம் மற்றும் சாதிச் சிறுபான்மையினர் மத்தியில் நிலவியது. சட்டவாக்க அரசியலில், சிங்களப் பெரும்பான்மையினர்,
32 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

சிறுபான்மையினர் மீது ஆதிக்கம் செலுத்துவர் என்ற பயம், அதை நீக்கும்வகையில் ஏற்கனவே நிலவிவந்த பிரதிநிதித்துவ முறைமையை மாற்றியமைக்குமாறு காலனித்துவ அரசிடம் விண்ணப்பிக்கும்படி தமிழ் அரசியற் தலைவர்களைத் தூண்டியது. சமநிலைப் பிரதிநிதித்துவம்' என அழைக்கப்படும் அவர்களுடைய பிரேரணை, சட்டவாக்கச் சபையில் சிங்களப் பெரும்பான்மையினரின் பிரதிநிதிகளை 50 சதவீதமாகக் கட்டுப்படுத்தி, எஞ்சிய அரைப் பங்கினரை ஏனைய சிறுபான்மையினர் மத்தியில் பகிர்ந்து கொள்வதை அடிப்படையாகக் கொண்டது. இதே போன்று, சிறுபான்மைச் சாதியினரும் கூட, பெரும்பான்மை ஆதிக்கத்திற்கெதிராகக் காப்பீடுகளைத் தேடினர்.
உதாரணமாக, சிங்கள ‘கரவா’ சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி, குடியேற்றச் சட்டவாக்கச் சபையில், சாதிச் சமூகங்களுக்கு விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமென்று பிரேரித்த அதேவேளை ஓரங்கட்டப்பட்ட சாதிச் சமூகங்கள் பல, குறிப்பாக, கரவா', 'துராவ', 'வகும்புர என்பன, தமது நலன்களைப் பேணுவதற்காகப் பிரத்தியேகமான விஷேட பிரதிநிதித்துவம் வேண்டுமென்று கோரின. அத்தருணத்தில் முன்னணி ஆய்வறிவாளராக இருந்த கரவா’ சாதியைச் சேர்ந்த கேட் முதலியார்ா டபிள்யூ எஃப். குணவர்த்தனவிடமிருந்தே சாதி அடிப்படையிலான சிறுபான்மை அந்தஸ்த்துக் கோரிக்கை எழுந்தது. 1920களில், இன அடிப்படைப் பிரதிநிதித்துவத்தை ஒழிக்க வேண்டுமென்றும் அதற்குப் பதிலாக, பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டுமென்றும் கோரும் ஒர் இயக்கம் உருவாகிய போது, “ஒவ்வொரு சிறுபான்மைச் சாதிக்கும் அல்லது குழுவிற்கும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்” சட்டவாக்கச் சபையில் இடம் பெற வேண்டுமென்ற கோரிக்கையை குணவர்த்தன 1922ஆம் ஆண்டில், குடியேற்ற நாட்டுச் செயலாளருக்கு அனுப்பினார்.
இலங்கைச் சமூகத்தில் சாதி முறை நிலவுகின்றமையை உத்தியோக பூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமென்று குணவர்த்தன வாதாடியமை சுவாரசியமான விடயமாகும். “ஹேமியோபதி சிகிச்சைமுறையின் முதற் கட்டமாக, ஒவ்வொரு சாதியும் அல்லது சிறிய அளவிலான சாதிகளைக் கொண்ட குழுக்களும் அரசதுறையின் கவனமும் ஆதரவும் வழங்கப்படவேண்டிய, தமக்கே உரித்தான நலன்களைக் கொண்ட ஒன்றிணைக்கப்பட்ட அமைப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டும்” என்றும் இவர் ஆலோசனை கூறினார். சிறுபான்மைச் சாதியினர் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற.இத்தகைய தீவிர நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்தது, பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம், அரசியலில் பெரும்பான்மைச்
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 33

Page 20
சாதியினரின், அதாவது, கொயிகம சாதியினரின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் என்ற அச்சமாகும். “பிரதேசவாரி வாக்குரிமை நாட்டிலுள்ள அதிகாரம் அனைத்தையும் - அதாவது, அரசாங்கத்தை நெறிப்படுத்தும் அதிகாரம் அைைனத்தையும் சிங்களச் சாதி ஒன்றினது கைக்கு மாற்றிவிடும். இச்சாதியினரின் தொகை ரீதியான பலம், அரசியல் ரீதியாகப் பயனுறுதிவாய்ந்த, நாட்டின் ஏனைய மொத்த மக்களின் பலத்திற்குச் சமமானதாகும். இச்சாதியினர், தமது பலம்மிக்க, சாதி அமைப்பின் உதவியுடன் எந்நேரத்திலும் மிக்க பலம் வாய்ந்த அரசியல் பொறியமைப்பாக மாற்றமடையக்கூடும்” " என்று குணவர்த்தன எழுதினார். 1929இல் டொனமூர் ஆணைக்குழுவிற்கும்1944இல் சோல்பரி ஆணைக்குழுவிற்கும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகளில் சிறுபான்மை இன, மற்றும் சாதிப்பிரதிநிதிகள், பெரும்பான்மை ஆதிக்கத்திற்கெதிராகத் தேர்தல் காப்பீடுகள் வேண்டுமெனத் தீவிரமாக வாதிட்டனர். இவ்விடயம் தொடர்பாக டொனமூர் ஆணைக்குழுவின் அறிக்கையில் பின்வருமாறு கூறப்படுகின்றது: ,
இனப்பிரதிநிதித்துவம் அவசியம் என்று கூறப்படுவது தொடர்பாக, அளவில் குறைவு ஏதாவது உண்டென்று ஏதாவது சான்றிருந்தால், இனப்பிரதி நிதித்துவத்தை விரிவாக்குவதற்கான யோசனையை முன் வைப்பதற்கு நாம் ஊக்குவிக்கப்பட்டிருக்கலாம். எனினும், இன அடிப்படையில் ஆசனங்களை ஏற்கெனவே கொண்டிருப்பவர்கள், தமக்கான ஆசனங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென விரும்புவது மட்டுமல்லாது தற்பொழுது பிரதிநிதித்துவப் படுத்தப்படாத சமய, சாதி, மற்றும் விஷேட நலன்களைக் கொண்ட வேறு பல சமூகத்தினரும் சட்டவாக்க மன்றத்தில் தமக்கும் ஆசனங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியம் என்றும், ஏற்கெனவே இச்சலுகையை அனுபவிப்பவர்கள் போன்று தமக்கும் அதற்கு உரிமை உண்டென்றும் எம்முன்வந்து கோரிக்கை விடுத்தனர்."
1944இல் சோல்பரி ஆணைக்குழு வந்த போதும் சாதிக்குழுக்களும் பிரத்தியோகமான சட்டசபைப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தின. * சிங்கள, தமிழ் சமூகங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியினரையுள்ளடக்கிய சமுதாயங்கள், சங்கங்கள் என்பவற்றின் பேராளர்கள் ஆணைக்குழுவின் முன்னிலையில் சமுகமளித்து, தமது மனக்குறைகளையும், இயலாமைகளையும் பற்றி முறைப்பாடு செய்ததுடன், உருவாகிவரும் யாப்புத்திட்டத்திலும் அரசியல் முறையிலும் தமக்கு ஒர் இடத்தைக் கோரினர். தமிழ்ச் சமூகத்தின் தாழ்த்தப்பட்ட சாதியினரின் சங்கமாகிய அனைத்திலங்கை சிறுபான்மைத் தமிழர் சபை, வயது வந்தோர் வாக்குரிமை, தமது மனக்குறைகளை நிவிர்த்தி செய்யும் வகையில் சட்டவாக்கச் சபையில் செல்வாக்குச்
34 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

செலுத்துமளவிற்குத் தமக்கு உதவவில்லை என்ற அடிப்படையில் நியமனத்தின் மூலம் தமக்கு விசேட பிரதிநிதித்துவம் கோரியது. தாழ்த்தப்பட்ட சாதியினரின் அனைத்திலங்கை ஒன்றியம் பெருந்தோட்டத் தமிழர் சமுதாயத்தின் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அங்கத்தவர்களுக்குத் தனித் தேர்தல் பதிவேடுகளுடன், தனி வாக்காளர் தொகுதிகளை அமைக்கும்படி கோரிக்கை விடுத்தது. தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோர்,யாப்புக் கணிப்பீடுகளைப் பெறும், வேறான தனிப்பிரிவாகக் கணிக்கப்படுவதுடன் சட்டவாக்கச் சபையில் அவர்களுக்குப் பிரிதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமென்பதே அவர்கள் முன்வைத்த பரிகாரமாகும். கரவா சமுதாயமும், தனது பிரதிநிதிகள், விருப்பத் தேர்வடிப்படையில் சட்ட சபைக்குத் தெரிவுசெய்யப்படுவதற்குரிய ஒரு பிரத்தியேகத் திட்டத்தைக் கோரியது. கொயிகம சாதியின் தேவைகள் தமது சாதியினரின் தேவைகளை விஞ்சி நின்றனவென்று, மத்திய கடற்றொழில் ஒன்றியம் தனது மனக்குறையை வெளிப்படுத்தியது. கடற்றொழில் துறை அரசாங்கத்தின் மிகக் குறைவான கவனத்தைப் பெற்ற அதே வேளை, விவசாயத் துறைக்குப் பெரும் அனுகூலங்கள் வழங்கப்பட்டனவென ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஆணைக்குழுவிடம் கூறினர். சட்டசபையில் ஆதிக்கம் செலுத்திய 'கொயிகம'சதியினர், “பிரதானமாக மீனவர்களை உள்ளடக்கியகரவா சாதியினர் சுபீட்சமடைந்து தமது ஏற்றத்திற்கு அச்சுறுத்தலாக அமைவதை விரும்பவில்லை" என்பதைச் சுட்டிக் காட்டி, கடற்றொழில் துறை, சமய, சாதி அடிப்படைகளிலமைந்த பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதென்று ஒன்றியம் சுட்டிக் காட்டியது. 'கரவாசமுதாயத்தினருக்கு, 15 முதல் 20 வரையாக ஆசனங்கள் கிடைப்பதை உத்தரவாதம் செய்யும் விதத்தில் தேர்தல் தொகுதிகளுக்கு எல்லை குறிக்கும் முறைமையொன்றை கடற்றொழில் ஒன்றியம் முன் வைத்தது. பத்கம, வகும்புர சாதிகளைச் சேர்ந்த பிரிதிநிதிகள், தாம் அனுபவிக்கும் இயலாமைகள், பாரபட்சங்கள், சமத்துவமின்மை என்பன பற்றி ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்தனர். இந்த இரண்டு சாதிகளைச் சேர்ந்தவர்களும் மொத்தச் சிங்கள சனத் தொகையின் மூன்றிலொரு பங்கைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை அவர்கள் சுட்டிக் காட்டினர். பத்கம', 400,000 மக்களையும் 'வகும்புர ஒரு மில்லியன் மக்களையும் உள்ளடக்குகின்றது என அவர்கள் கூறினர். டொனமூர் அரசியல் யாப்பில் பிரதேசவாரித் தோதல் தொகுதிகள் எல்லை குறிக்கப்பட்டுள்ள விதத்தின் படி, சட்ட சபைக்குத் தமது அங்கத்தவர் ஒருவரேனும் தெரிவுசெய்யப்பட முடியவில்லை என்று அவர்கள் முறையிட்டார்கள். தமக்கு விசேட பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமென்பதே இவர்களுடைய கோரிக்கை. இதேவேளை கத்தோலிக்கரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் பிரதேசங்கள் விசேடமாக எல்லை குறிக்கப்பட வேண்டுமென்று இலங்கைக் கத்தோலிக்க
tħJeannabib - page Teasuf - gbei 2002 35

Page 21
ஒன்றியம் ஆலோசனை கூறியது. இத்தகைய எல்லைகளைக் குறிக்கும்போது, ஏறத்தாழக் கத்தோலிக்கரல்லாத சனத்தொகையைக் கொண்ட உட்பிரதேசங்களுடன் மாவட்டங்களை இணைப்பதற்குப் பதிலாக அம்மாவட்டங்களைக் கரையோரம் நெடுகிலும் விரிவாக்குதல் வேண்டுமென்றும் கத்தோலிக்க ஒன்றியம் பிரேரித்தது"
எவ்வாறெனினும் சட்டசபைப் பிரதிநித்துவத்தை இன நீக்கம் (decommunalize) செய்யச் சங்கற்பம் கொண்டிருந்ததனால் சிறிய சிறுபான்மையினரால் முன்வைக்கப்பட்ட தனியான பிரதிநிதித்துவம் அல்லது தனியான தேர்தற் தொகுதிகள் பற்றிய கோரிக்கைகளுக்கு சோல்பரி ஆணைக்குழு சாதகமாக இருக்கவில்லை. தனியான பிரதிநிதித்துவத்திற்கான, சிறுபான்மைச் சமுதாயங்களின் கோரிக்கைகள், “சந்தேகத்திற்கிடமின்றி வகுப்பு வாதம் (Communal) சார்ந்தவை” என்று கூறி வகுப்புவாத அடிப்படைப் பிரதிநிநித்துவத்திற்குத் திரும்புவதை ஊக்குவிக்கலாகாதென்ற தனது அவாவை” ஆணைக்குழு வலியுறுத்தியது. இருந்தபோதிலும், பல அங்கத்தவர் தொகுதிகைைள உருவாக்குவதன் மூலம் சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் பலப்படுத்தப்படலாம் என்று தமக்கு வழங்கப்பட்ட யோசனைக்கு, ஆணைக்குழு சாதகமான விதத்தில் துலங்கியது. அத்தகையதொரு தேர்தல் தொகுதியில் சிறுபான்மையினர் தமது முழுப்பலத்தையும் திரட்டி, தமது சொந்தத் தெரிவுக்குரிய வேட்பாளர்களைத் ஆதரிப்பதே சிறு சிறுபான்மையினருக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கக் கூடிய ஒரேயொரு வாய்ப்பாகும் என்பதே பல அங்கத்தவர் தொகுதிக்குரிய நியாயப்பாடாகும். “சிற்சில பிரதேசங்களில், இம்முறையிலமைந்த பிரதிநிதித்துவத்தைப் பின்பற்றுவது நன்மை பயக்கலாம். உதாரணமாகக் கொழும்பு நகரம், யாழ்ப்பாணக்குடா நாடு மற்றும் குறிப்பாக ஒரே சமுதாயத்தில் சாதி வேறுபாடுகள் தெட்டத் தெளிவாக இருக்கும் இடங்கள்” என்று ஆணைக்குழு சிந்தித்தது. பொருத்தமான பிரதேசங்களில் அத்தகைய தேர்தல் தொகுதிகளை அமைக்கும் பணியை தொகுதி நிர்ணய ஆணைக்குழு மேற்கொள்ள இருந்தது.
சுதந்திரத்திற்குப் பிற்பட்ட அரசியலில் சாதி
சுதத்திரத்தை உடனடியாகத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், இலங்கையின் அரசியல் ஒழுங்கு மதச் சார்பற்றதாக இருந்தது. உள்ளூர் அரசியல்சார் உயர் குழாத்தின் உடன்பாட்டுடன், பிரித்தானிய அரசியல் யாப்பு நிபுணர்களால் வரையப்பட்ட, சுதந்திரத்திற்குப் பிந்திய முதலாவது அரசியல் யாப்பு, அரசு எந்தவோர் இனத்துடனோ மதத்துடனோ தன்னை இனங்காட்ட மாட்டாது என்ற தத்துவத்தை உள்ளடக்கியிருந்தது. அந்த அர்த்தத்தில் பார்த்தால், சோல்பரி அரசியல் யாப்பு,
36 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

காலனித்துவ நீக்கம் செய்யும் தேசியவாத அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகவோ, வெளிப்படுத்துவதாகவோ அமையவில்லை. சிறுபான்மையினருக்குப் பாரபட்சம் காட்டுவதாக அமையக்கூடிய சட்டங்களை செல்லுபடியாகாததாக்குவதன் மூலம் குழுக்களுக்கு எதிரான ஒருதலைப் பட்சமானவற்றை சட்ட ரீதியற்றதாகச் செய்ய இந்த யாப்பு நிச்சயமாக முனைந்தது. இதே போன்று, இன அல்லது சமூக ரீதியில் பின்தங்கிய சிறுபான்மையினருக்கு விஷேட வாய்ப்புகளை வழங்கும் கோட்பாட்டினையும் இந்த அரசியல் யாப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. சமூகச் சிறுபான்மையினருக்குச் சட்டவாக்கப் பிரதிநிதித்துவம் வழங்குதல் பற்றிய பிரச்சினை, மறைமுகமான விதத்தில் இரண்டு பொறி முறைகளினூடாகக் கவனத்தில் கொள்ளப்பட்டதென்று கருதலாம். குறிப்பிட்டதொரு சாதியினர் பெருமளவில் செறிந்திருக்கும் பிரதேசங்களில், அவர்கள் தம் சாதியைச் சேர்ந்த ஒருவரைப் பாராளுமன்ற அங்கத்தவராகத் தெரிவு செய்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் விதத்தில், பல அங்கத்துவத் தேர்தல் தொகுதிகளை எல்லை குறித்தல் முதலாவது உத்தியாகும். அம்பலாங்கொட - பலபிட்டி தொகுதியும் பின்னர், பெந்தர - எல்பிட்டி தேர்தல் தொகுதியும், கரவா', சலாகம', 'வகும்புர சாதிக்குழுக்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதற்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டன. மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு அல்லது மேற் சபைக்கு (செனற்), நியமன அங்கத்தவர்களைத் தெரிவு செய்தல் இரண்டாவது உத்தியாகும். எனினும், இங்கு சாதிப் பிரதிநிதித்துவம் என்ற கோட்பாடு தெளிவாக முன்வைக்கப்படவே இல்லை. பிரதிநிதித்துவப்படுத்தப்படாத சாதிக் குழுக்கள், தமது பிரச்சினையை அரசியற் தலைமைத்துவத்திற்குச் சமர்ப்பித்தால், அத்தகைய சமுதாயங்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கும் வாய்ப்பு உண்டு என இது புரிந்துகொள்ளப்பட்டது. தொடரும் அரசியல் யாப்புச் சிந்தனையில் மொழி அல்லது சமூக சமத்துவ வகைமைகளின் இன்மை மிக முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். சமூக சீர்திருத்தச் சொல்லாடல் இன்மைக்குச் சமாந்தரமாக, சாதி அடக்குமுறைப் பிரச்சினை தொடர்பான ஒரு பொதுக்கொள்கை பற்றிய மெளனமும் தொடர்ந்து நிலவிவருகின்றது. இந்த இன்மையைப் பல்வேறு மட்டங்களிற் காணலாம். முதலாவதாக சாதி அடக்குமுறை பொதுவாக, நாட்டின் சமூக முன்னேற்றத்திற்கு ஒரு சமூக, அரசியற் தடையாகவுள்ளதென்று பொதுவாகக் கருதப்பட்ட போதிலும் சுதந்திர இலங்கையின் சட்ட சபை, சாதி அடக்குமுறையின் காரணமாக எழுகின்ற பொதுக்கொள்ளகைப் பிரச்சினைகளைப்பற்றிப்பேசுவதற்கு குறிப்பான ஆர்வம் எதையும் காட்டவில்லை. தனிப்பட்ட நிலையில் அடிக்கடி ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு முரணானவகையில், பொதுத்துறையில் வெளிப்படுத்தப்படும் சிங்கள நம்பிக்கை என்னவென்றால் கடந்த காலத்தில் இருந்தது போல் அல்லது தமிழ்ச் சமூகத்தில் இருப்பது போல் இப்பொழுது சிங்கள சமூகத்தில் சாதி ஒரு
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 37

Page 22
பிரதான பிரச்சினையல்ல என்பதாகும். சிங்கள சமூகத்தில் நிலவும் சாதி தொடர்பான இப்பொது மனப்பாங்கு இலங்கையின் அரசியல் யாப்பு, சட்டவாக்கம், நிர்வாகம் என்ற துறைகளின் பொதுக் கொள்கைச் சொல்லாடலிலும், மறைமுகமாகச் செல்வாக்குச் செலுத்தியது. இந்தியாவில் இருப்பதுபோல சாதி அடிப்படையிலான சமூக இயலாமைகளை அங்கீகரிக்கின்ற ஒரு யாப்பியல் கொள்கை இலங்கையில் இல்லை. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் யாப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நிவாரணமும் சலுகையும் வழங்கும் கொள்கைகளும் இல்லை. அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் உள்ள பாரபட்சம் காட்டாமை என்பது பற்றிய பிரிவே இலங்கையின் அரசியல் யாப்பு, சாதியை ஒரு வகைமையாக அங்கீகரிக்கும் ஒரே ஒரு சந்தர்ப்பமாகும். 1978ஆம் ஆண்டு யாப்பின் உறுப்புரை 12, “சட்டத்தின் முன் யாவரும் சமம்" எனப்பிரகடனப்படுத்தியபின்னர், பாரபட்சம் காட்டாமை என்ற கொள்கையைப் பின்வருமாறு விபரிக்கின்றது “இனம், சமயம், மொழி, சாதி, பால், அரசியல் அபிப்பிராயம், பிறப்பிடம் என்ற அடிப்படையில் அல்லது, இவற்றுள் எவையேனும் ஒன்றின் அடிப்படையில் எந்தவொரு பிரஜைக்கும் பாராபட்சம் காட்டப்படலாகாது.” அத்துடன், உறுப்புரை 12இன் உபபிரிவு (3), பொதுத்துறையில் பாரபட்சம் காட்டப்படுதல் எவ்வாறு தவிர்க்கப்படலாம் என்பதை பின்வருமாறு கூறுகின்றது. "இனம், சமயம், மொழி, சாதி, பால் என்ற அடிப்படையில் அல்லது, இவற்றுள் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில், கடைகள், பொதுச் சிற்றுண்டிச்சாலைகள், ஹோட்டல்கள், பொதுக் களியாட்ட இடங்கள், தனது மதத்திற்குரிய பொது வழிபாட்டிடங்கள் என்பவற்றுக்குச் செல்வதற்கு எவரேனும் தடுக்கப்படவோ, கட்டுப்படுத்தப்படவோ நிபந்தனைக்கு ஆளாக்கப்படவோ கூடாது. எனினும், பாரபட்சம் காட்டப்படும் துறைகளில் திருத்தச் செயற்பாடுகளுக்காக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உதவும் உபபகுதியில், ஆச்சரியமான முறையில் சாதி, தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடு பின்வருமாறு கூறுகின்றது. “பெண்கள், பிள்ளைகள் அல்லது உடல் ஊனமுற்றோரின் முன்னேற்றத்திற்காகச் சட்டத்தின் மூலம், துணைச்சட்டத்தின் மூலம் அல்லது நிறைவேற்றுச் செயல்களின் மூலம், விசேட ஏற்பாடுகள் இடம்பெறச் செய்வதை இவ்வுறுப்புரையிலுள்ள எதுவும் தடுத்து நிறுத்தக் கூடாது' 1971, 1978ஆம் ஆண்டுகளில் அரசியல் யாப்புச் சட்ட மூலங்களின் வரைவில் அடிப்படை உரிமைகளுக்கான ஏற்பாடுகள் பற்றிய விவாதம், பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட பொழுது, சாதியானது பாரபட்சம் காண்பிக்கப்படுவதற்கு ஒரு காரணமாகின்றது என்று வெறுமனே குறிப்பிடப்பட்டமையைத்தவிர, சாதி ரீதியான பாரபட்சம்பற்றி விசேடமான விவாதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
38 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

சுதந்திரத்திற்குப் பிற்பட்ட இலங்கைப் பாராளுமன்றத்தில், இழிவான விதத்தில், அவ்வப்போது சாதி பற்றிக் குறிப்பிடப்பட்ட போதிலும், சாதி வேறுபாடு காட்டுதல் பற்றிய பிரச்சினை, சட்ட சபையின் கொள்கை ரீதியான கவனத்தை ஈர்ப்பதற்குத் தகுதியுடையது என்பது மூன்று சந்தர்ப்பங்களிலேயே வெளிப்பட்டன. முதல் இரண்டு சந்தர்ப்பங்களிலும், இடதுசாரிச் சார்புடைய சிங்கள, தமிழ் மேற்சபை உறுப்பினர்கள், சாதி அடிப்படையிலான பாரபட்சங்களைத் தடை செய்வதற்கு வேண்டிய சட்டப் பிரேரணைகளை நிறைவேற்ற முயன்ற போதிலும் அப்பிரேரணைகள் தோற்கடிக்கப்பட்டன. மூன்றாவது சந்தர்ப்பம், 1957இல் இடம் பெற்றது. சாதியை அடிப்படையாகக் கொண்ட சமூகப் பாரபட்சங்களை சட்டத்திற்குப் புறம்பானவையாக்கும் நோக்கத்துடன் மேற்சபை சட்ட மூலமொன்றை முன் வைத்தது. சமூக இயலாமைத் தவிர்ப்புச் சட்டம் என்ற பெயரில் இது சட்டமாக்கப்பட்டது. இச்சட்டம், பிரதானமாக, தமிழ்ச் சமூகத்தில் சாதி வேறுபாட்டுப் பிரச்சினையை அணுகுவதாகவே அமைந்திருந்தது. இச்சமூகத்தில் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் கோயில்கள், உணவகங்கள், அரசாங்க அலுவலகங்கள், தொழில் பார்க்கும் இடங்கள், பொது வாகனங்கள், பாடசாலைகள் போன்ற பொது இடங்களுக்குச் செல்லுதல் தடுக்கப்பட்டிருந்தது. தமிழ்ச் சமூகத்தைச் சீர்திருத்துவதற்கு அரசின் தலையீடு அவசியம் என்பதே இச்சட்டத்தின் முழுத்தாற்பரியமாக அமைந்தது"
இதேவேளை, சிங்களச் சமூகத்தில், சாதி அடிப்படையில் நிகழ்ந்த அநீதிகளை வெளிப்படையாகச் சீரமைப்பதற்கு நிர்வாக நடவடிக்கைகள் எதையும் அரசு மேற்கொள்ளவில்லை எனலாம். அரசியல் மற்றும் சட்டத்துறைச் சொல்லாடல் போன்று, நிர்வாகச் சொல்லாடலிலும், ரொடியா, கின்னர' ஆகிய வெளிஒதுக்கப்பட்ட இரண்டு சாதிகள் நீங்கலாக, வேறுசாதிகளைப் பொறுத்தவரை சாதி அடிப்படை அநீதிகள் நிலவுவது மறுக்கப்பட்டே வந்துள்ளது. 1957ஆம் ஆண்டின் கண்டி விவசாய ஆணைக்குழுவின் அறிக்கை இதனை விளக்குகின்றது. இலங்கை சுதந்திரம் பெற்ற ஒராண்டிற்குள், அதாவது, 1949 இல், கண்டிச் சிங்கள விவசாயிகளின் மனக்குறைகள் பற்றி விசாரிப்பதற்கும் அவர்களுடைய பொருளாதார, சமூக நிலைமைகளை மேம்படுத்துவதற்கான விதப்புரைகளை வழங்குவதற்குமென, இவ்வாணைக்குழு நியமிக்கப்பட்டது. கண்டிய விவசாயிகளின் நிலைமைகள் பற்றிய தகவவல்களை வேண்டி, ஆணைக்குழு அனுப்பிய வினாக்கொத்தில், சமூக நிலைமைகள்' என்ற ஒரு பிரிவு இடம்பெற்றிருந்தது. இப்பிரிவில், சாதி பற்றிய ஒரு வினாவும் உள்ளடக்கப்பட்டிருந்தது. ஆணைக்குழுவின் அறிக்கையில் இடம் பெற்ற சாதி பற்றிய ஒன்றரைப்பக்க
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 39

Page 23
விபரத்தில் “சகல கிராமப்புறப் பிரதேசங்களிலும் வெளிப்படையான சாதி வேறுபாட்டு வடிவங்கள் மிகப் பெருமளவிற்கு மறைந்து விட்டன. எஞ்சியிருப்பவையும் வேகமாக மறைந்து வருகின்றன" என்பதை ஆணைக்குழு அங்கத்தவர்கள் மகிழ்வுடன் அவதானித்துள்ளதாக ஆணைக்குழு தமது முடிவைத் தெரிவித்தது. ரொடியா கின்னர் சமூகங்களின் அந்தஸ்து தொடர்பாக மட்டுமே அரச தலையீடு வேண்டப்பட்டதாக ஆணைக்குழு கருதியது. அறிக்கையின் வாசகம் பின்வருமாறு:
ரொடியா (நகரசுத்தி செய்வோர்), அல்லதுகின்னர'(பாய் இழைப்போர்) ஆகிய சமூகங்களைத்தவிர, சாதியானது, குறிப்பிடக்கூடிய அளவிற்கு ஊனம் விளைவிக்கும் நிலை தற்போது இல்லை என்பது அவதானிக்கக்கூடிய ஓர் அம்சமாகும். குறிப்பாகப் பின்தங்கிய இந்த இரண்டு சமூகத்தினரும் சுரண்டப்படுவதைத் தடுப்பதற்கும், பிரத்தியேகமான பாதுகாப்பு வழங்குவதற்கும் அவர்களுடைய தற்போதையப் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் சில விசேட உதவிகள் வழங்கப்பட்டு, கவனஞ் செலுத்தப்பட வேண்டியுள்ளது"
கண்டிய மாவட்டங்களிலுள்ள ஏனைய கீழ்ப்படுத்தப்பட்ட சாதியினரின் நிலைமைகள் தொடர்பாகப் பொதுக் கொள்கைத் தலையீடு அவசியமில்லை என்பதே இவ்வாய்வில் உள்ளடங்கியிருக்கும் எடுகோளாகும். “கல்வியின் பரம்பலும் அபிவிருத்தியின் நவீன போக்குகளும் சம சந்தர்ப்பம், சம உரிமைகள் என்ற நிலைமைகளை உருவாக்கியுள்ளன. இவை, தன்னளவிலேயே சாதி வேறுபாடுகளை ஒழிப்பதை நோக்கிப் பெரிய முன்னேற்றமாய் அமைந்தன என்று ஆணைக்குழு நம்பியது". சிங்களச் சமூகத்தில் சாதிபற்றிய, கண்டிய விவசாய ஆணைக்குழுவின் முடிவுகள், சிங்களப் பொது அரங்கில், தொடர்ச்சியாக மீள் உருவாக்கம் செய்யப்படும் ஒரு பெரிய அரசியற் கட்டுக்கதையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. சிங்களச் சமூகம் சாதி அநீதிகளிலிருந்து சார்பளவில் விடுபட்டுள்ளதென்றும், நவீனத்துவத்தின் முகவர்களான இலவசக் கல்வி, நலன்புரி அரசு, சனநாயகம் என்பன, சமூகச் சீர்திருத்தங்களை ஆரம்பிப்பதற்கு அரச தலையீட்டுக் கொள்கையின் அவசியத்தை அடிப்படையில் பொருத்தமற்றதாகவும், தேவையற்றதாகவும் செய்து விட்டனவென்று இக்கட்டுக்கதை முன்னூகஞ் செய்கிறது. இக்கட்டுக்கதை பிறிதொரு ஆணைக்குழுவினால் கேள்விகளாக்கப் படுவதற்குக் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்கள் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. இளைஞர் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு இதனைச் செய்தது. சிங்கள சமூகத்தில் 1987 - 1989 க்கு இடையில் இடம்பெற்ற மக்கள் விடுதலை
40 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

முன்னணியின் இரத்தக்களறி மிக்க இரண்டாவது கலவரத்தைத் தொடர்ந்து இவ்வாணைக்குழு நியமிக்கப்பட்டது. இவ்வாணைக்குழு தனது அறிக்கையில் சாதி ஒடுக்கு முறை, சாதி ரீதியான பாரபட்சங்கள்’ என்ற சொற்றொடர்களை, சிங்கள சமூகத்தின் வன்முறை மோதல் நிலைமைகள் தொடர்பாகப் பயன்படுத்தியது. இது சிங்களச் சமூகத்தின் சமூக நிலைமைகள் பற்றி ஆதிக்கம் செலுத்தி வந்த நிர்வாகச் சொல்லாடலில் இருந்து தெளிவானதொரு விலகலாகும். இவ்வறிக்கை, வகும்புர பத்கம’ என்ற இரண்டு சிங்களச் சாதிகளையும் குறிப்பிடுகின்றது. கலவரத்தின் போது இவர்களுடைய கிராமங்களிலேயே மிக உக்கிரமான சண்டை இடம்பெற்றது. திஸ்ஸமகராமையிலிருந்து சப்பிரகமுவா மாகாணத்தினூடாக மாத்தளை வரையான பிரதேசத்தையும், அம்பாறையின் சில பகுதிகளை உள்ளடக்கிய வட மத்திய மாகாணத்தையும் சேர்ந்த கொயிகம'அல்லாத சாதியினரும் கலகத்திலீடுபட்டதாக இவ்வறிக்கை இனங்கண்டது. சாதியானது, “சமகால இளைஞர் அமைதியின்மைக்கும் பங்களிப்புச் செய்த ஒரு காரணியாக உள்ளது” என்று முடிவு செய்த ஆணைக்குழு,தனது அவதானிப்பைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. “சில சாதியினர் இன்னமும், சமூக, அரசியல் அடக்குமுறைகளால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள், குறிப்பிட்ட இடங்களில் செறிந்து வாழும் போக்கைக் கொண்டுள்ளனர். அடிக்கடி இத்தகைய பாரபட்சங்களால் பாதிக்கப்படும் இளைஞர்களிடம் கலகப்போக்கு சுலபமாக வருகின்றது"
எனினும் இலங்கையின் அரசியற் பொதுக்கலாசாரம், இன்றும் கூட பொதுக் கொள்கையோடு சம்பந்தப்படுத்த வேண்டிய விடயங்கள் என்ற வகையில், சிங்கள சமூகத்திலுள்ள சாதி ஒடுக்கு முறைகளையும் சாதிப் பாரபட்சங்களையும் ஏற்றுக் கொள்வதற்கு உரிய நிலையில் இல்லை. கீழ் நிலைச்சாதிக் குழுக்களுக்கு குறைந்தபட்சமேனும் நீதி வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கு கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகள், சாதி சார்ந்த அசமத்துவம் காரணமாக ஆரம்பிக்கப்பட்ட அரச கொள்கை என்று வெளிப்படையாக இனங்காணப்படவில்லை என்பது சுவாரசியமான ஒரு விடயமாகும். 1947 முதல் 1972 வரை நடைமுறையில் இருந்த சோல்பரி அரசியல் யாப்பின் கீழ், மேற்சபைக்கு அங்கத்தவர்களை நியமிக்கும் போதும் பாராளுமன்ற ஆசனங்களுக்கு அபேட்சகர்களைத் தெரிவுசெய்யும் போதும், பாராளுமன்றத்தில் சாதி அடிப்படைப் பிரதிநிதித்துவம் உண்மையில் கவனத்திற்கெடுக்கப்பட்டது. எனினும் இவ்வழக்கம் எழுதப்படாத ஒர் அரசியற் சட்டமாகவே இருந்தது. பிரதிநிதித்துவம் தொடர்பாகச் சமத்துவத்தைக் கருத்திற் கொண்ட அரசியல் யாப்பின் ஆணையைப் பெற்றதொன்றாகவோ, வேறேதாவதொரு எழுதப்பட்ட சட்டத்தின் ஆணையைப் பெற்றதொன்றாகவோ இருக்கவில்லை. தேர்தல் தொகுதிகளின் சாதி அடிப்படை சனத்தொைைகக்கு ஏற்ற விதத்தில்
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 41

Page 24
வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நடைமுறை இன்றும் கூட எல்லா அரசியல் கட்சிகள் மத்தியிலும் காணப்படுகின்றது. கட்சிகளின் தேர்தல் வெற்றியைக் கருத்தில் கொண்டு எழுதப்படாத அதே அரசியல் சட்டத்துக்கிணங்க இது நடைபெறுகின்றதே அன்றி, சமூக ரீதியாக நியாயமான அரசியற் பிரதிநிதித்துவத்தை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. இது தொடர்பாக இளைஞர் பற்றிய ஆணைக்குழு, பாராளுமன்றத்தில் சாதிப் பிரதிநிதித்துவம் பற்றிச் செய்த விதப்புரைகளுள் ஒன்று, முக்கிய அரசியல் கருத்தொன்றைத் தெரிவிப்பதாக இருக்கின்றது. பாராளுமன்றத்தில் சிறுபான்மைச் சாதியினரின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கக்கூடிய விதத்தில், சில பிரதேசங்களின் தேர்தல் தொகுதி எல்லை, குறிப்பாக வட,தென் மாகாணங்களிலும் மத்திய மாகாணத்திலும் வகும்புர, பத்கம சாதியினர் செறிந்து காணப்படும் இடங்களில் மீள்வரையறை செய்யப்படவேண்டும் என இவ்வாணைக்குழு பரிந்துரைத்தது" ஆனால் இப்பிரேரணை செயற்படுத்தப்படவில்லை. இது செயற்படுத்தப்படுமென்றும் எண்ணுவதற்கில்லை. ஏனெனில், இலங்கையின் அரசியற் கலாசாரத்தில், சாதி, மறைமுகமான சக்தியாகவே இருந்து வருகின்றது.
சாதி நீதி பற்றிய கோட்பாடு, அவ்வப்போதேனும் மறைமுகமாக நிலவிவருவதை, 1978 -1993 க்கு இடையில் ஆர். பிரேமதாஸ் பிரதம மந்திரியாகவும் ஜனாதிபதியாகவும் இருந்த காலப்பகுதியில் அவர் நடைமுறைப்படுத்திய சில சீர்திருத்தக் கொள்கைகளை உதாரணமாகக் கொண்டு எடுத்துக்காட்டலாம். பிரேமதாஸஆதிக்கம் செலுத்தாத சாதியொன்றிலிருந்து வந்து, இலங்கையில் உயர் அரசியற் பதவியை வகித்த முதலாவது உறுப்பினராவார். விசேடமாகக் கிராம சமூகத்தை இலக்காகக் கொண்ட, ‘கிராம எழுச்சி' எனப்பட்ட நிகழ்ச்சித் திட்டமொன்றை இவர் செயற்படுத்தினார். கிராமப்புறங்களில் வாழும் வறியோரிலும் வறியோருக்கு உறையுள் வசதிகளையும் சில பொருள் வளங்களையும் வழங்குவதே இத்திட்டத்தின் குறிக்கோளாகும். ஏறத்தாழப் பதினைந்து வருடங்களாக, சமூக மேம்பாடு, கிராம அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு என்பவற்றுக்கான சட்ட ரீதியான ஒரு பொதுக் கொள்கையைத் தலையீடு என்ற வகையில் தனது திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு அரச இயந்திரத்தையும் பொது வளங்களையும் பிரேமதாஸ் பயன்படுத்தினார். ஆயினும் சிங்களக் கிராமப்புறங்களில் வாழும், மோசமாக ஓரங்கட்டப்பட்ட வறுமையில் உழலும் சாதியினருக்குத் தான் பிரக்ஞை பூர்வமாக வேண்டுமென்றே உதவுவதாகப் பிரேமதாச பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதில்லை.
இலங்கை அரசியலில், சாதியும் அரசியலும் ஊடாடும் பின்னணியை மேலேயுள்ள ஆய்வு விரித்துரைக்கின்றது. இலங்கை அரசியலில் ஒரே சமயம் சாதி இருப்பதும் இல்லாதிருப்பதும் ஒர் முரண்நகையாகும். அரசியல் பற்றிய
42 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

வெளிப்படையான சொல்லாடலில் அது இல்லை; குழுத்தனித்துவம், சமூக நீதி தொடர்பான மறைமுகமான சொல்லாடலில் அது உண்டு. அரசியல் போட்டியிலும் மோதலிலும் சாதி இடம்பெறவில்லை என பொது அரங்கத்தில் மறுக்கப்படுவதனால் அரசியலில் சாதி இல்லை என்றாகாது. பொது அரசியல் நடைமுறையில் சாதி மறுக்கப்படுவதன் மூலம் அரசியலில் சாதியின் இடம் வலியுறுத்தப்படுகின்ற தென்பதே கருத்தாகும்.
அரசியலில் சாதியின் முக்கியத்துவம் மறுக்கப்படுதலின் மூலம் வலியுறுத்தப்படுகின்றதென்ற இத்தர்க்கம், அண்மை ஆண்டுகளில் இலங்கை அரசியற் கலாசாரத்தில் இரண்டு பிரதான பரிமாணங்கள் எழுச்சி பெறுவதற்கு வழிவகுத்துள்ளது. முதலாவதாக, பல்சாதித் தேர்தல் மாவட்டங்களில் ஆதிக்கஞ் செலுத்தும், எண்ணிக்கையில் பலம் வாய்ந்த துணைநிலைச் சாதியினர் மத்தியில் பிரதிநிதித்துவத்திற்கும் அரசியல் அதிகாரத்திற்குமான போட்டி வன்முறை சார்ந்ததாகிவிட்டது. அம்பாந்தோட்டை, மாத்தளை, குருநாகலை, கேகாலை, மாத்தறை, காலி, கம்பஹா, இரத்தினபுரி மாவட்டங்களில் இப்போக்கு வெளிப்படையாகக் காணப்படுகின்றது. விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையின் கீழும், தனித்தனி வேட்பாளர் தேர்வுக்கான விருப்பு வாக்கு முறையின் கீழும் துணைநிலைச்சாதிகள் சட்டவாக்க சபைகளுக்கு தங்கள் சொந்தப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இதன் மூலம், கிராமப் புறங்களில் கொயிகம'சாதியைச் சேர்ந்த அரசியல் உயர் குழாத்தின் மரபுரீதியான தலைமைக்குச் சவால் விடுக்கப்பட்டுள்ளது. தேர்தற் பிரசாரங்களின் போது, இரகசியமாகவும் நாசூக்காகவும் சாதி ஆதரவைத் திரட்டுதலினால் - இது பொது அரங்குகளில் அரிதாகவே இடம் பெறும் - அரசியல் ரீதியாகச் செயலூக்கம் மிக்க சாதிக் குழுக்களிடையே மோதல்களும் வன்செயல்களும் இடம் பெறுவதற்கான சூழலும் ஏற்படுத்தப்படுகின்றது"
சமகால இலங்கை அரசியலில் இன அடையாளத்தின் தீவிரத்தன்மையுடன் இரண்டாவது பரிமாணம் தொடர்புற்றுள்ளது. சிங்கள, தமிழ் சமூகங்களில் தீவிரவாத இனத்துவ எழுச்சியின் தலைமைத்துவம், துணைநிலைச் சாதிச் சமூகங்களின் கைக்கு மாறி விட்டது. தேசியவாதத் தலைமைத்துவத்தின் சமூகச் சேர்க்கையில் ஏற்பட்ட இப்பெயர்வு நிலை வேளாளர் ஆதிக்கம் மிக்க தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் வீழ்ச்சியுடனும், யாழ்ப்பாணக் கரையார்’ (மீனவர்) சமூகத்தைப் பிரதான அடிப்படையாகக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எழுச்சியுடனும் தமிழர் சமூகத்தில் ஏறத்தாழ முற்றுப்பெற்றுவிட்டது.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 43

Page 25
கொயிகமசாதியைச் சாராத பல சாதிக்குழுக்கள் தீவிரவாத இனத்துவ அரசியலில்
மும்முரமாகப் பங்குபற்றுவதுடன், சிங்ளத்தேசியவாத அரசியலிலும் சமாந்தரமானதொரு பெயர்வு நிலை உருவாகிக்கொண்டிருக்கின்றது. பிரதானமாகக் கரவா, துரவா, வகும்புர, பத்கம சாதிகள் இதில் அடங்கும். இச்சாதிகள் அனைத்தையும் சேர்ந்த ஆய்வறிவாளத் தலைவர்கள், ஒவ்வொரு சாதியினதும் தோற்றம் பற்றிய அரைகுறை வரலாற்று விளக்கங்களுடன் கூடிய சாதிசார்பான கருத்து நிலைகளையும் உருவாக்கினர். சமகாலச் சூழலில் நிறைவேற்றப்பட வேண்டிய வரலாற்றுக் கடமைகளையும் இவர்கள் முன்வைத்தனர். கரவாசாதியினரின் வரலாற்று ஐதீகம் இலங்கையில் இச்சாதியே ஆளும் சாதியாக (சத்திரியர்) இருந்து வந்தது என்பதாகும். அதேவேளை துரவா'சாதியைச் சேர்ந்த வரலாற்றாசிரியர்கள் தமது சாதிக்கும் சத்திரிய'அந்தஸ்தைக் கொடுக்கின்றனர். சிங்கள சமூகத்தில், கரவாதுரவா'சாதியினரைவிட, பெருமளவில் ஓரங்கட்டப்பட்ட வகும்புர' பத்கம சாதியினர் தாம் ஆட்சி அந்தஸ்தைப் பெற்றிருந்ததாகக் கோராவிட்டாலும் தாம் மேதகு மரபில் வந்த போர்த்தொழில் சாதியினரென்றும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பெளத்தத்தைப் பாதுகாப்பதே தமது வரலாற்றுப் பணி என்றும் நம்புகின்றனர்.
பல்வேறு சிங்களச் சாதியினர்களிடையே மேலாதிகத்துக்கான வாதப்பிரதிவாதங்கள், 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஆரம்பித்து, 20ஆம் நூற்றாண்டின் இரண்டாம் மூன்றாம் தசாப்தங்களில் தீவிரமடைந்தது. இச்சாதிகளைச் சார்ந்த ஆய்வறிவாளர்கள் மத்தியில் அண்மைக் காலங்களில் சாதி வரலாறுகளை உற்பத்தி செய்வதிலும் மீள் உற்பத்தி செய்வதிலும் ஒரு புத்தார்வம் தோன்றியுள்ளது. இவற்றுள் சில பிரசுரிக்கப்பட்டுள்ளன; ஏனையவை வாய்மொழி வரலாறாகவே இன்னமும் இருக்கின்றன. ஆங்கிலப் பத்திரிகைகளில் சாதி பற்றிய வாதப்பிரதிவாதங்களில் - சிங்களப் பத்திரிகைகள் இவ்வாதப்பிரதிவாதங்களில் இடம்பெறுவதில்லை- 'கொயிகம, கரவா, சலாகம நவந்தன்ன' ஆகிய சாதிகளின் சித்தாந்திகள்- தத்தமது சாதிகளின் அந்தஸ்து தொடர்பான நம்பக நிலைப்பற்றி ஏட்டிக்குப் போட்டியான வாதங்களை முன்வைத்துள்ளனர். சாதிபற்றிய இவ் எழுத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய சில உதாரணங்கள் பின்வருமாறு தர்மபந்து, டி.எஸ். 1962, கெளரவ வங்ஸ் கதாவ(கெளரவ வம்ச கதை), மொறட்டுவை. டி. டி. தொடங்கொடை கம்பனி, டி சில்வா, டி. டபிள்யூ ਲੰਲ , 1995, லமேனி ராஜ குலய(லமேனி என்னும் அரச குலம்) கொழும்பு: சஹான வெளியீடு; குருக்ஷேத்ர என்ற சஞ்சிகையின் எல்லா இதழ்களும்; பெர்னாண்டோ, மிகுந்து
44 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

குலசூரிய சுசந்த், ஹலாவத்த உருமய (சிலாபத்தின் முதுசொம்) சா கருனவ்னி, சாவ்வியாஸ், 1991. அமுனு தொலஹ, வறக்காபொல: ஆசியா வெளியீடு. இறுதியாகக் குறிப்பிடப்பட்டது. 'சலாகம'சாதியின் தோற்றம் பற்றிய ஐதீகத்தை முன்வைக்கும் ஒரு நாவலாகும். 'சலாகம'சமுதாயத்தினர், வட இந்தியாவிலிருந்து வந்த பிராமணக் குழுவொன்றிலிருந்து தோன்றியவர்களென்றும், இப்பிராமணர்களை 11ஆம் நூற்றாண்டில், தனக்கு அறிவுரை கூறுவதற்காக விஜயபாகு மன்னன் வரவழைத்தானென்றும் இந்த ஐதீகம் கூறுகின்றது. இந்த ஐதீகத்துக்கு சமகாலத் தொடர்பொன்றை வழங்குவதற்காக, தென் இந்தியாவிலிருந்து வந்த தமிழ்ப் படையெடுப்பாளர்களைத் தோற்கடிப்பதற்கு இப் பிராமணர்கள் விஜயபாகு மன்னனுக்கு உதவினரென்றும் இந்நாவல் கூறுகின்றது.
ஒரு நிலையில், சாதி பற்றிய ஐதீகங்களை வரலாறாக உற்பத்தி செய்தமை இச் சாதியினர் அனுபவித்து வந்த சமத்துவமின்மை, அநீதி, ஓரங்கட்டப்பட்ட நிலை ஆகிய சமூக அமைப்பு நிலைமைகளுக்கு இவர்களது நேரடியான துலங்கலாக அமைந்துள்ளன. தப்ப முடியாத ஒடுக்குதல்களுக்கு ஆளாகியுள்ள தற்போதைய நிலையுடன் தம்மை இணக்கப்படுத்துவதற்காக கீர்த்திமிக்க, பொன்னான இறந்த காலத்தில் நம்பிக்கை கொள்வது ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் கையாளும் ஒரு வழமையான உத்தியாகும். எனவே தான், முனைப்பான தன்னுணர்வுடைய தடுக்கப்பட்ட சாதி, இனத்துவ சமுதாயங்களின் கருத்துநிலைகள் வரலாற்று வீழ்ச்சி என்னும் கருத்தை முன் வைக்கின்றன. குறிப்பிட்ட இந்தக் கருத்துநிலைத் தர்க்கத்தில் காலனித்துவ காலத்திற்கு முற்பட்ட கடந்த காலத்தில், தாம் பெற்றிருந்த பெரும் அந்தஸ்து பற்றிய வரலாறாக்கப்பட்ட நம்பிக்கையினூடாக, தற்போதைய சமத்துவம் நிராகரிக்கப்பட்ட நிலை சமன் செய்யப்படுகின்றதெனலாம். மற்றொரு நிலையில் நோக்கினால், இத்தகைய ஐதீகங்கள் தேசியத் தன்மையுடன் சம்பந்தப்பட்ட சமகால அரசியற் செயற்றிட்டங்களாக உருவெடுக்கின்றன. இங்கே, ஒவ்வொரு சாதி தொடர்பாகவும், தேசத்தை உருவாக்கும் அல்லது தேசத்தைப் பாதுகாக்கும் ஒரு புதிய வரலாற்றுப்பாத்திரம் கற்பிதம் செய்யப்படுகின்றது. பொது அரங்கில், சாதி சார்ந்த அரசியலுக்கெதிராக, அரசியல் - கலாசாரத்தடை இருக்கும் போது, தேசியம் என்ற கருத்து, ஏற்றுக்கொள்ளக்கூடிய சட்டரீதியான வாதமுறையான வகைமையாக எடுத்தாளப்படுகின்றது. இத் தர்க்கத்தில், தன்னுடைய சொந்தச் சாதியினர், அனுபவிக்கும் பொது அநீதிகள் பற்றி ஒருவர் பேசுவதில்லை; தேசம் எதிர்நோக்கும் அபாயங்கள் பற்றி மட்டுமே அவர் பேசுவார்.
பிரவாதம் 2 ஜனவரி - ஜூன் 2002 45

Page 26
சாதியும் பிரதிநிதித்துவமும் இன்றையச் செல்நெறிகள்
இன்று, இலங்கையில், விகிதாசாரப் பிரதிநிதித்துவம் அதன் ஒரு கூறான விருப்பு வாக்கு என்பவற்றின் மூலம் சாதி அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் கீழ், தேர்தல் அலகுகளின் அடிப்படையிலேயே, பிரதிநிதித்துவம் பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகின்றது. பாராளுமன்றம், மாகாண சபை ஆகியவற்றுக்கான பிரதிநிதிகள் தேர்வைப் பொறுத்த வரை முன்னையத் தேர்தல் முறைமையின் கீழ் இருந்த, பல தேர்தற் தொகுதிகளை உள்ளடக்கிய நிர்வாக மாவட்டமே, அடிப்படை அலகாகும். உள்ளூராட்சித் தேர்தல்களில், முழுமையான உள்ளூர் ஆட்சிப் பிரதேசமே பிரதிநிதித்துவ அலகாக அமைகின்றது. சாதி அடிப்படையிலமைந்த சமூகங்கள் பரந்து வாழும் குறிப்பிடத்தக்க அளவிலான பெரியதொரு பிரதேசத்தின் தேர்தல்சார் அரசியலில், அச்சமூகங்கள் தமது பொதுவான நலன்களை இனங்காண்பதற்கும் செயலாற்றுவதற்கும் இது வழிவகுக்கின்றது. விருப்பு வாக்கு முறைமையானது இப்போக்கை மேலும் உறுதிப்படுத்துகின்றது. ஒரு தேர்தல் மாவட்டம் முழுவதிலும் அல்லது ஒர் உள்ளூராட்சிப் பிரதேசம் முழுவதிலும் பரந்து வாழும் ஒரு சாதிக்குழு இப்பொழுது தனக்கென ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து, அவரைச் சூழ்ந்து செயற்படலாம். இதே போல, வேட்பாளர்கள் சாதி அடையாளம், சாதி அபிமானங்கள் என்பவற்றின் அடிப்படையில் மக்களை
ஈர்த்தெடுக்கும் வழக்கத்தை விருத்தி செய்துள்ளனர்.
சாதி அடிப்படையில் தேர்தல் அணிதிரட்டல் என்ற மறைமுகக் கலாசாரம் ஒன்று உருவாகியுள்ளதை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் நடத்தப்பட்ட கடந்த தேர்தல்களினூடாகப் பெற்ற அனுபவம் எடுத்துக் காட்டுகின்றது. பாராளுமன்ற, மாகாண, உள்ளூர்த் தேர்தல்களில், சாதிஈர்ப்புக்கள், தேர்தற் பிரசாரத்தின் இறுதிச் சில நாட்களில் தீவிரமடைவது பொதுவானதொரு போக்காக இருந்து வந்துள்ளது. ஒரே கட்சி வேட்பாளர்களுக்கிடையே கூட விருப்பு வாக்குகளுக்காக ஏற்படும் போட்டி தீவிரமடையும் போது, கட்சிக்குள்ள ஆதரவுக் குறைபாட்டை ஈடுசெய்யும் வகையில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சாதி அபிமானங்கள் தூண்டிவிடப்படுகின்றன. சாதி அடிப்படையில் ஆதரவு தேடுதல் பாதகமாகவும் சாதகமாகவும் அமையலாம். குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஒரு வேட்பாளர், தனது சொந்தச் சாதி வாக்களர்களிடையே, ஏனைய சாதிகளைச் சேர்ந்த போட்டி வாக்களர்களுக்கெதிராகப் பாதகமான விதத்தில் பிரசாரம் செய்யலாம் என்ற வகையில் இது பிரதிகூலமாக அமையலாம். சாதகமான சாதிப்
46 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

பிரசாரம், வழமையாக ஒரே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கும் வாக்களர்களுக்குமிடையில் நடைபெறுகிறது. சாதி அடையாளம் பற்றிய ஓர் எளிமையான மொழியும், சாதி அடிப்படையில் ஆதரவைத் திரட்டுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. சிங்களச் சொற்களான அபே எக்கனா, அபே கெனக் (நம்ம ஆள்) என்பன இதன் பொருட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. இலங்கையில் ஏறத்தாழ எல்லா மாகாணங்களிலும், மாவட்டங்களிலும் இப்போக்கை அவதானிக்கலாம். கொழும்பு மாவட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல. உதாரணமாகக், கொழும்பு கிழக்கு, கொழும்பு மேற்கு, தெஹிவளை, இரத்மலானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த துரவா'வாக்காளர்கள், தமது விருப்பு வாக்குகளைத் தமது சாதிக்கு வெளியில் அளிக்க மாட்டார்கள் என்பது துரவா வேட்பாளர்களுக்கு நன்கு தெரியும். அதேபோல மொரட்டுவை, இரத்மலானை, தெஹிவளை போன்ற பிரதேசங்களில் கரவா’விருப்பு வாக்குகள் தமக்குக் கிடைப்பது நிச்சயம் என்பது கரவா’வேட்பாளர்களுக்குத் தெரியும். குருனாகலை, கம்பஹா, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களில், சாதி அடிப்படைப் பிரசாரம், பிரதானமாக கொயிகம, வகும்புர பத்கம வேட்பாளர்கள் மத்தியில் இடம்பெறுகின்றது. மாத்தறை, காலி, களுத்துறை, அம்பாந்தோட்டை ஆகியமாவட்டங்களில், சாதி விசுவ்ாசங்களின் வீச்சு கரவா, கொயிகம, துரவா, சலாகம, வகும்புர'சாதிகளையும் அவற்றின் வேட்பாளர்களையும் வாக்காளர்களையும் உள்ளடக்கி மேலும் பரந்ததாகக் காணப்படுகின்றது. மாகாண சபைகளிலும், மத்திய அமைச்சரவையிலும் தாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சர் பதவிகளின் எண்ணிக்கை பற்றிச் சில சாதியினர் அதிருப்தி அடைந்துள்ளார்கள். சப்பிரகமுவ மாகாணத்திலும் வட மேல் மாகாணத்திலும் பத்கம சாதியினர் இப்போக்கிற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றனர். இந்த இரண்டு மாகாணங்களிலும்பத்கம’ சமூகத்தினர் கணிசமான அளவில் செறிந்து காணப்படுகின்றனர். இச்சாதியைச் சேர்ந்த அரசியல் மயமாக்கப்பட்டவர்கள் விகிதாசாரப்பிரதிநிதித்துவ முறைமையின் கீழ், எண்ணிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியோ, பொதுஜன முன்னணியோ தம்முடைய எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதத்தில் தமக்குப் பதவிகளை வழங்கவில்லை என்பது பத்கம சாதியினரின் மனக்குறைகளுள் ஒன்றாகும். உண்மையில், 1994இல் அமைக்கப்பட்ட பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவையில், மூன்று பிரதி அமைச்சர்களைத் தவிர, பத்கம'பிரதிநிதித்துவம் எதுவும் இருக்கவில்லை. பத்கம'சாதிச் சங்கங்கள், உடனடியாக, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. பின்னர் ஏற்பட்ட அமைச்சரவை மாற்றத்தில் பிரதி அமைச்சர்களுள் ஒருவர் அமைச்சரவை அமைச்சராக்கப்பட்டார்.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 47

Page 27
(plg. 6)6ODJ
இலங்கை அரசியலில் சாதி, குறிப்பிடத்தக்களவு வலிய சக்தியாக இருந்து வந்துள்ளது. பொதுச் சொல்லாடலில் சாதி மறுக்கப்பட்ட போதிலும், தேர்தல் ஜனநாயக நடைமுறைகளுடன், சாதி மிக நெருக்கமாகத் தொடர்புற்றுவந்துள்ளது. முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடனும் நலன்புரி அரசின் தலையீட்டுனும் சாதி வேறுபாடுகள் மறைந்துவிடும் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடிய தொன்றல்ல. ஜனநாயகத்தைச் சாதி தன் வசப்படுத்திக்கொண்டது என்பதையே இலங்கையின் ஜனநாயக அரசியல் நவீனத்துவ அனுபவம் எடுத்துக்காட்டுகின்றது. ஆனால், இதில் ஒரு முரண்பாடும் காணப்படுகின்றது. அரசியல் செயற்பாட்டிலும், அணிதிரட்டலிலும் சாதிக்கு உரிய இடம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனாலேயே, ஜனநாயக அரசியலில், சாதி, தலைமறைவாக இருக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. அரசியற் பன்மைத்துவத்துக்கு, சாதியும் ஒரு சட்டரீதியான அடிப்படையாக ஏற்றுக்கொள்ளப்படவுமில்லை. அதனால் தான் சாதி அரசியலில் வன்முறை இடம் பெறுகின்றது. நவீனத்துவ ஜனநாயக அரசியலின் வன்முறைக்காளான நிலையில் மறுப்பும் சட்ட அங்கீகார நீக்கமும் - அசமத்துவம், அநீதி, அ-ஜனநாயகம் என்பவற்றுக்கு எதிரான சாதி அடிப்படையிலான சொல்லாடல்களையும் நடைமுறைகளையும் மேலும் சட்டபூர்வமற்றதாக்கும் வகையில் சாதி நலன்களும் சாதி அரசியலும் அடிக்கடி செயற்படுகின்றன.
: கலாநிதி ஜயதேவ உயங்கொட கொழும்புப் பல்கலைக்கழக அரசறிவியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.
குறிப்புக்கள்
1. உதாரணமாக, முன்னாள் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவும், முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவும் நசுக்கப்பட்ட கிராமிய மக்களுக்குச் சேவை செய்தனர் என்று கூறும் போது, இந்த இரண்டு அரசியற் தலைவர்களும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த சமுதாயங்களின் நலனுக்காக உழைத்தனர் என்பதே உண்மையான கருத்தாகும்.
2. யாழ்ப்பாணத்தில் சாதிப் போராட்டங்கள் பற்றிய விபரங்களுக்கு, பார்க்கவும் Shanmugathasan, N. 1993, "Caste Struggles in Northern Sri Lanka", Pravada, Vol. 2 No.3, March/April, PP19-23
3. Gunawardena W. F. 1922, " Ceylon Council Reform and Minorities'
reproduced in Kurukhestra, 1975, Vol. I and II, PP 46-65.
48 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

11.
12.
13.
14.
15。
Ceylon: Report of the Special Commission on the Constitution, 1929, P. 99. சிறு சாதிச் சிறுபான்மையோர் பற்றிய தரவுகள் Rees, 1955-56 இலிருந்து பெறப்பட்டன.
Rees, Sir, Frederick ué55th 44.
Rees, Sir Frederick pp. 31-32
Soulbury Commission Report p. 83 Soulbury Commission Report p. 73-74 untifies The Senate Debate on the Prevention of Social Disabilities Bill, Parlimentary Debates Vol. 10, Senate Office Report , February 19, 1957, Columns 1283 - 1301. Government of Ceylon, 1951, Report of the Kandian Peasantry Commission - Sessional Paper XVIII. 1951 p. 214 அதே நூல் பக்கம் 214 Government of Sri Lanka, 1990, Report of the Presidential 14 Commission on Youth, sessional paper - No.1- 1990 - p. 84. Government of Sri Lanka 1990. p. 85 இந்த அவதானிப்பு, 1995 இலும் 1996 இலும் நான், குருனாகலையிலும் கேகாலையிலும் மேற்கொண்ட களநேர் காணல்களை அடிப்படையாகக் கொண்டவை.
ܢܠ
விரைவில் வெளிவருகிறது
உழைப்பால் கல்வியில் உயர்வோர் அஞ்சலா டபிள்யூ லிற்றில்
தமிழாக்கம் சோ. சந்திரசேகரம்
Angela W. Little
எழுதிய lobouring to learn நூலின் தமிழாக்கம்
வெளியீடு: சமூக விஞ்ஞானிகள் சங்கம் 一ノ
PyraKTg5b - ggG3Hearf - ggosir 2002 49

Page 28
50
விலை ரூபா. 150
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002
 

இலங்கையின் இன முரண்பாடும் சமாதானத் தீர்வு முயற்சிகளும் ஜி. பார்த்தசாரதி முதல் எரிக்சொல் ஹெய்ம் வரை
அம்பலவாணர் சிவராஜா
இலங்கையின் இன முரண்பாட்டிற்குச் சமாதானத் தீர்வு காண்பதற்கான முதல் முயற்சி இந்தியாவால்தான் மேற்கொள்ளப்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கெதிரான வன்முறைக் கலவரங்களின் போது அப்போதைய இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி தனது வெளிநாட்டு அமைச்சராக இருந்த திரு. நரசிம்மராவை நேரடியாக உண்மைகளைக் கண்டறிய இலங்கைக்கு அனுப்பிவைத்தார். தனது இலங்கை விஜயத்தின் பின் இந்தியாவுக்குத் திரும்பிய திரு. ராவ் இலங்கையின் சூழ்நிலை கொடூரமானதாக உள்ளது என்றும், இன வன்முறையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதில் இலங்கை அரசாங்கம் தோல்வி கண்டு விட்டது என்றும் இலங்கை அரசாங்கம் ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, பாகிஸ்தான், வங்காளதேசம் என்பவற்றிடமிருந்து இராணுவ உதவியை நாடியது என்றும் ஊர்ஜிதம் செய்து தனது பிரதம மந்திரிக்கு அறிவித்தார்.
இலங்கையில் இடம் பெற்ற இனக் கலவரங்களை அடுத்து திருமதி இந்திராகாந்தி ஜனாதிபதி ஜயவர்த்தனாவுக்கும் மிதவாத தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை நடத்த உதவுவதற்கு முன்வந்ததோடு நல்லிணக்கத்தினை முன்னேற்றுவதற்காகத் தனது விசேட தூதுவராக திரு. ஜி. பார்த்தசாரதியைக் கொழும்புக்கு அனுப்பி வைத்தார்.
1. இந்தியாவின் மத்தியஸ்தமும் பார்த்தசாரதியின் சட்டகமும்
இந்தியாவின் மத்தியஸ்தத்தின் முதல் முயற்சி திரு. ஜி. பார்த்தசாரதி அவர்கள் கொழும்புக்கும் புது டெல்லிக்கும் இடையில் பல தடவைகள் பயணம் செய்து இன முரண்பாட்டிற்கு ஒரு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான ஒரு தளத்தினை ஆயத்தம் செய்த போதே ஆரம்பித்தது. அத்தோடு திருமதி இந்திரா காந்தி ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் தனிப்பட்ட தூதுவரான கலாநிதி எச். டபிள்யு. ஜெயவர்த்தனாவுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அப்போது கலாநிதி ஜெயவர்த்தனா இலங்கை, தமிழ்த் தலைவர்களோடு பேசுவதற்க்குத் தயாராக இருக்கிறாதெனவும், இந்தியாவின் மத்தியஸ்தத்தை வரவேற்கிறது
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 51

Page 29
எனவும் அறிவித்தார். இதன் பின்னர் திருமதி இந்திரா காந்தி தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. அ. அமிர்தலிங்கத்துடன் இரண்டு கூட்டங்களை நடத்தினார். அப்போது திரு.அமிர்தலிங்கம் எவ்வித முன்நிபந்தனைகளும் இன்றி இலங்கை அரசாங்கத்துடன் பேசத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.1983 நவம்பர் மாதத்தில் பொதுநலவாயத்தின் மகாநாட்டின் போது திருமதி இந்திரா காந்தி, திரு. ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுடன் பேச்சுக்களை நடத்தினார்.
இலங்கையின் ஜனாதிபதி, இலங்கையின் வெளிநாட்டமைச்சர், மற்றைய அமைச்சர்கள், அரசியற் கட்சிகளின் தலைவர்களோடு ஆழமான கலந் துரையாடல்களை நடத்திய பின்னர் பார்த்தசாரதி இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்குமிடையில் பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையாக அமையக் கூடிய ஒரு சட்டகத்தினை உருவாக்கினார். பின்னிணைப்பு"C" எனவும் அழைக்கப்பட்ட பார்த்தசாரதியின் சட்டகம் சர்வ கட்சி மாநாட்டில் கவனத்துள் எடுக்கப்படுவதற்காக பிரேரிக்கப்பட்டதாகும். இது ஒரு மாகாணத்திலுள்ள மாவட்ட அபிவிருத்திச் சபைகள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரதேசச் சபைகளாக இணைவதற்கு வாய்ப்பளித்தது*
ஜனாதிபதி ஜெயவர்த்தன இந்தியாவின் மத்தியஸ்தத்தை ஏற்றுக் கொண்ட போதிலும் இலங்கை அரசாங்கம் இலங்கையின் இன முரண்பாட்டில் இந்தியா தலையிடுவது பற்றி ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் ஒரு தனியான அரசினை உருவாக்கும் நோக்குடன் இலங்கையின் ஆயுதப் படைகளுடன் கெரில்லாப் போரில் ஈடுபட்ட தமிழ்த் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி வசதிகளையும் தங்குமிட வசதிகளையும் இந்தியா வழங்குகின்றது என இலங்கைத் தலைவர்கள் சந்தேகப்பட்டனர். இருந்த போதிலும் 1983 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜனாதிபதி ஜெயவர்த்தனா பார்த்தசாரதியின் பிரேரணைகளைக் கலந் துரையாடுவதற்காக ஒரு சர்வ கட்சி மகாநாட்டினைக் கூட்டினார். இலங்கையின் பிரதான எதிர்க் கட்சியான பூரீ லங்கா சுதந்திரக் கட்சியும், சிறிய சிங்களத் தேசியவாதக் கட்சியான மகாஜன எக்சத் பெரமுனவும் சர்வ கட்சி மகாநாட்டிலிருந்து வாபஸ் பெற்றதோடு, மாநாடு தனது சர்வ கட்சித் தன்மையை இழந்துவிட்டது. ஆகவே, ஜெயவர்த்தன அதன் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளுமாறு மத ஒழுங்கமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தார். மகாநாட்டின் இறுதிக் கூட்டத்தில் ஜனாதிபதி முன்வைத்த பிரேரணைகள் ஜி. பார்த்தசாரதி தயாரித்த பிரேரணைகளைவிட மிகவும் குறைவாக இருந்தன. ஜனாதிபதியின் பிரேரணைகள் நடைமுறையிலிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஒருங்கிணைப்பதற்கு வாய்ப்பளித்தது. ஒருங்கிணைக்கப்பட்ட அத்தகைய சபைகளுக்கு எத்தகைய
52 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

அதிகாரங்கள் வழங்கப்படும் என்பதை அவர் விளக்கவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி ஜனாதிபதி முன்வைத்த பிரேரணைகளை ஏற்க முடியாது என அறிவித்தது. பூரீ லங்கா சுதந்திரக்கட்சி, பெளத்த ஒழுங்கமைப்புக்கள், ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் சில பிரபல்யமான அங்கத்தவர்கள் அப்பிரேரணை தமிழர்களுக்கு மிக அதிகமானவற்றை வழங்குகின்றதென்பதால் எதிர்த்தனர். ஜனாதிபதி, சர்வ கட்சி மகாநாடு தோல்வியடைந்தமைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியினைக் குற்றம் சாட்டியதோடு, அது தனி நாட்டுக் கோரிக்கையினைக் கைவிடும் வரை அதனோடு மேற்கொண்டு தான் எவ்வித பேச்சுக்களையும் நடத்தப் போவதில்லை என அறிவித்தார்.
2. திம்புப் பேச்சு வார்த்தைகள்
தனது தாயாரின் அகால மரணத்தையடுத்து திரு. ராஜிவ் காந்தி இந்தியாவின் பிரதம மந்திரியாகியதோடு தாயாரின் கொள்கையான இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழர் தலைமைத்துவத்திற்குமிடையில் மத்தியஸ்தம் செய்தல் என்பதைத் தொடர்ந்தார். 1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜனாதிபதி ஜெயவர்த்தன புது டெல்லிக்கு விஜயம் செய்த போது ராஜிவ் காந்தி அவருடன் இலங்கை இனப் பிரச்சினை பற்றிக் கலந்துரையாடினார். அதன் விளைவாக இலங்கையின் இனப் பிரச்சினைக்கான ஒரு அரசியல் தீர்வு எழுச்சியடைந்தது. இப்பேச்சுவார்த்தைகள் இலங்கை அரசாங்கத்தின் ஆயுதப்படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் ஒரு மோதல் தவிர்ப்புக்கும், அதனைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்க் குழுக்களின் பிரதி நிதிகளுக்குமிடையில் பூட்டானின் தலைநகரமான திம்புவில் இரு சுற்றுப் பேச்சுவார்த்தைக்கும் வழிவகுத்தன. பூட்டானின் தலைநகரமான திம்புவில் 1985 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 8 ஆம் திகதி முதலாவது சுற்றுப் பேச்சுக்கள் ஆரம்பமாகின. இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழு ஜனாதிபதியின் சகோதரர் எச். டபிள்யூ. ஜெயவர்த்தனாவால் தலைமைதாங்கப்பட்டது. அது எந்த விதமான புதிய பிரேரணைகளையும் முன்வைக்கவில்லை. ஒரு முதலமைச்சரால் தலைமைதாங்கப்படும் மாவட்ட சபையையே அதிகாரப் பகிர்வின் அடிப்படை அலகாகப் பிரேரித்தது. தமிழ்க் குழுக்களுக்கு இப் பிரேரணை ஏற்புடையதாக இருக்கவில்லை. தமிழ்த் தூதுக்குழு ஏகமனதாகத் தமிழர் பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு பின்வரும் தத்துவங்களை முன்வைத்தது.
(அ) தமிழர்களைத் தனித்துவமான தேசிய இனமாக அங்கீகரிப்பது: (ஆ) அவர்களுடைய பாரம்பரிய தாயகக் கோட்பாட்டை அதாவது இலங்கையின்
வடக்கு, கிழக்கு மாகாணங்களை அங்கீகரிப்பது;
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 53

Page 30
(இ) தமிழர்களது சுய நிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது; (ஈ) இலங்கைத் தீவிலுள்ள சகல தமிழர்களுக்கும் இலங்கைப் பிரசாவுரிமையை
வழங்குவது;
தமிழ்க் குழுக்களுடைய மேற்சொன்ன பிரேரணைகளுடன் திம்புப் பேச்சு வார்த்தைகளின் முதலாவது கட்டம் முடிவுக்கு வந்தது.
1985ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் இரண்டாவது கிழமை திம்புப் பேச்சுவார்த்தைகளின் இரண்டாவது சுற்று ஆரம்பித்தது. இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழு தமிழர் குழுக்கள் முன்வைத்த நான்கு தத்துவங்களுள் முதல் மூன்றினையும் நிராகரித்து, நாலாவது கோரிக்கை இலங்கை அரசாங்கத்துக்கும் திரு. எஸ். தொண்டமான் தலைமை தாங்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்குமிடையில் ஏற்கனவே தீர்க்கப்பட்டு விட்டது எனவும் குறிப்பிட்டது ".
பகைமை நீக்கத்தினை மோதல் தவிர்ப்பினை இலங்கை மீறியதோடு இலங்கை இராணுவம் தமிழ்க் குடிமக்களைக் கொலை செய்தமையைக் கண்டித்து கூட்டத்திலிருந்து தமிழ்க்குழுக்கள் வெளிநடப்புச் செய்ததால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
3. சிதம்பரம் தூதுக்குழுவும் டிசம்பர் 19 பிரேரணைகளும்
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காண்பதற்கான மத்தியஸ்தம் செய்யும் முயற்சியைத் தொடர்ந்த ராஜிவ் காந்தியின் அரசாங்கம் 1986 ஆம் ஆண்டு மே மாதத்தில் உள்ளூர்ப் பாதுகாப்பு இணை அமைச்சரான பீ. சிதம்பரத்தின் தலைமையில் ஒரு தூதுக்குழுவினை இலங்கைக்கு அனுப்பிவைத்தது. சிதம்பரம் தூதுக்குழுவுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கு மிடையில் நடந்த பேச்சுக்கள், இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குமிடையில் இரண்டு சுற்றுப் பேச்சுக்களுக்கு வழி வகுத்தன. பொருள் பொதிந்த இந்த இரு சுற்றுப் பேச்சுக்களின் பயனாக மாகாண சபைகளை அமைப்பதற்கான பிரேரணைகள் எழுந்தன. அதிகாரப் பகிர்வுக்கான அடிப்படை அலகு மாகாண சபைகள் என்பதை இலங்கை அரசாங்கத்தினை ஏற்கச் செய்வதில் இக்குழு வெற்றியடைந்தது.
1986ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி மேற் சொன்ன பிரேரணைகளைப் பற்றிக் கலந்துரையாட அரசியற் கட்சிகளின் மகாநாடு ஒன்றைக் கூட்டினார். 1986 ஆம் ஆண்டு ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் தமிழர்
54 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

ஐக்கிய விடுதலைக் கூட்டணி இலங்கை அரசாங்கத்தோடு பேச்சுக்களை நடத்தியது. ஆனால் காணிப் பகிர்வு போன்ற பிரதானமான பிரச்சினைகளில்
கருத்தொருமைப்பாட்டினை எட்டமுடியவில்லை.
1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் பீ. சிதம்பரம் அமைச்சர், நத்வார்சிங் என்போர் அடங்கிய இந்தியத் தூதுக்குழு பேச்சுக்களுக்காக மீண்டும் கொழும்புக்கு விஜயம் செய்தது. அப்பேச்சு வார்த்தைகளின் போது டிசம்பர் 19 பிரேரணைகள் என்ற புதிய பிரேரணையும் உருவாக்கப்பட்டது.
அடிப்படையில் இப்பிரேரணைகள் சிங்களப் பெரும்பான்மைப் பிரதேசங்களை நடைமுறையிலிருந்த கிழக்கு மாகாணத்திலிருந்து (அம்பாறை தேர்தல் மாவட்டம்) அகற்றுவதன் மூலம் ஒரு புதிய கிழக்கு மாகாணத்தினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இதனால் இரண்டு தமிழ் மாகாண சபைகளை - வடக்கிலும், புனர்நிர்மாணிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திலும் உருவாக்கவும் பிரேரிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் பொருட்டு இவ்விருசபைகளும் ஒருங்கிணைப்புக்காக ஸ்தாபன ரீதியான தொடர்புகளையும் கொண்டிருக்கும் எனப் பிரேரிக்கப்பட்டது".
4. இந்திய - இலங்கை உடன்படிக்கை ஜூலை 29, 1987
1987 ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணக் குடா நாட்டின் மீது பொருளாதார, தொடர்புகள் தடையினை விதித்ததோடு இலங்கையின் இன முரண்பாடு ஒரு புதிய கட்டத்தை அடைந்தது. இத்தடை யாழ்ப்பாண மக்களுக்குப் பெருமளவு கஷ்டங்களை ஏற்படுத்தியது. யாழ்ப்பாணத்தின் நிலை சீர்குலைந்து வந்தபோது இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தனது தனிப்பட்ட தூதுவராக தினேஸ் சிங்கை 1987 மார்ச் மாதம் 3ஆம் திகதி இலங்கைக்கு அனுப்பிவைத்தார். அவர் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவைச் சந்தித்து யாழ்ப்பாண நிலைமை குறித்து இந்தியாவின் கடுமையான விசனத்தைத் தெரிவித்தார். இருந்த போதிலும் 1987 மே மாதம் ஜனாதிபதி ஜெயவர்த்தனா யாழ்ப்பாணக் குடா நாட்டில் “விடுவிக்கும் போரை” ஆரம்பித்தார். ஆறு நாட்கள் நடந்த விடுவிக்கும் போரில் பல அப்பாவிக் குடிமக்கள் இறந்ததோடு முழு வடமராட்சிப்பிரதேசமும் இலங்கையின் ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
1987 ஜூன் மாதம் 1 ஆம் திகதி இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகர் ஜே.என். டிக்சித் இலங்கையின் வெளிநாட்டமைச்சர் சாஹுல் ஹமீத்தைச் சந்தித்து 1987 ஜூன் 3 ஆம் திகதி தொடக்கம் மிகவும் அவசரமாகத் தேவைப்படும் நிவாரணப்
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 55

Page 31
பொருட்களை இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் யாழ்ப்பாணத்துக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர் என அறிவித்தார். கடல் மூலம் தோணிகளில் கொண்டுவரப்பட்ட உணவுப் பொருட்களை இலங்கைக் கடற்படை வழிமறித்துத் திருப்பி அனுப்பியதால் அடுத்தநாள் ஜூன் மாதம் 24 ஆம் திகதி 25 தொன் எடையுள்ள உணவுப் பொருட்களை இந்தியா வானிலிருந்து யாழ்ப்பாணத்தின் மீது போட்டது. இந்த நடவடிக்கை பல நிகழ்வுகளுக்கு வழி வகுத்ததோடு இந்தியாவும் இலங்கையும் ஜூலை மாதம் 29ஆம் திகதி சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில் முடிவடைந்தது. இவ்வொப்பந்தத்தின் விதிகளின் பிரகாரம் இந்திய அமைதி காக்கும்படை இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணத்தை வந்தடைந்தது.
5. பிரேமதாச - விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சு
வார்த்தைகள் - 1989
1988ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு திரு. ஆர். பிரேமதாசா புதிய ஜனாதிபதியானார். இத்தேர்தல் பிரசாரத்தின் போது தான் ஜனாதிபதியானால் இந்திய அமைதி காக்கும் படையினைத் திருப்பி அனுப்புவதாக உறுதியளித்தார். அதனால் தனது ஆரம்ப உரையின் போது தீவிரவாதிகளை ஜனநாயக வழியில் இணையுமாறு அழைப்பு விடுத்ததோடு 1989ஆம் ஆண்டு சிங்கள - இந்து புதுவருட தினத்தின் போது நாடு முழுவதும் இலங்கை ஆயுதப் படைகளின் தற்காலிகப் போர் நிறுத்தத்தினையும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அமைதி காக்கும் படையும் தனது பிரதேசத்தில் யுத்த நிறுத்தத்தை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 1989ஆம் ஆண்டு ஏப்பிரல் 15ஆம் திகதி அப்போதைய பாதுகாப்பு இணை அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேரத்னவிடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்தைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்து ஒரு அறிக்கை விடுத்தார்.
லண்டனிலிருந்த விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் இதற்குச் சாதகமாகப் பதிலளித்தது. இதன் காரணமாக 1989 மே மாதம் ஒன்பது சுற்றுப் பேச்சுகளில் 1வது இடம் பெற்றது. பாலசிங்கம், யோகி, லோரன்ஸ் என்போர் விடுதலைப் புலிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். இரண்டாம் சுற்று ஜூன் மாதம் 16ம் திகதி ஆரம்பித்து ஜுலை மாதம் 2ஆம் திகதி முடிவடைந்தது. இதனிடையே ஜனாதிபதி பிரேமதாசா இந்திய அமைதிகாக்கும் படையினரை வாபஸ் வாங்குமாறு வலியுறுத்தினார்.
56 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் பேச்சு வார்த்தைக் குழுவுக்கு வெளிநாட்டமைச்சர் ஜனாப் ஏ. சீ. எஸ். ஹமீத் தலைமை தாங்கினார். ரஞ்சன் விஜேரத்தினாவும் வேறு பல அமைச்சர்களும் அவருக்கு உதவியாக இருந்தனர். பேச்சு வார்த்தையின் ஒவ்வொரு நாள் இறுதியின் போதும் ஒரு பத்திரிகை அறிக்கை விடுக்கப்பட்டது.
(1) முதலாம் சுற்றின் போது இடம்பெற்ற பேச்சுக்களின் அடிப்படை நோக்கம் இந்திய அமைதி காக்கும் படையை இலங்கையிலிருந்து வாபஸ் பெறச் செய்வது சம்பந்தமாகவிருந்தது.
(2) அரச உதவியுடனான குடியேற்றத் திட்டங்கள், இந்திய அமைதி காக்கும்
படை பயிற்சி வழங்கிய தமிழ் சிவில் பாதுகாப்புப்படை பற்றியும், ஈழ மக்கள்
புரட்சிகர விடுதலை முன்னணி பலாத்காரமாக இளைஞர்களை அப்படைக்குச் சேர்ப்பது பற்றியும் ஆராயப்பட்டது.
(3) இலங்கையினது அரசியல் யாப்பின் ஆறாம் திருத்தத்தை நீக்குவது. விடுதலைப் புலிகளும் போட்டியிடத் தக்கவாறு வட - கிழக்கு மாகாண சபையைக் கலைப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இந்திய அமைதிகாக்கும்படையின் இறுதி வீரர் இலங்கையை விட்டுச் சென்றதோடு இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான தொடர்புகள் சீர்குலைந்தன. 1990 ஆம் ஆண்டு ஜூனில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்தின் ஆயுதப் படைகளுக்குமிடையிலான போர் மீண்டும் ஆரம்பித்தது.
6. சந்திரிக்கா குமாரதுங்க - விடுதலைப் புலிகள் சமாதானப்
பேச்சுவார்த்தைகள், 1994 - 1995 1994 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் இலங்கையில் நடந்த பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது திருமதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள் தனது கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணி வெற்றிபெற்றால் இன முரண்பாட்டுக்குச் சமாதனத் தீர்வுகாண முயற்சிக்கும் என உறுதியளித்தார். இத்தேர்தலில் அவர் சிறிய பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற போதிலும் தொடர்ந்து நடந்த ஜனாதிபதித் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஜனாதிபதியானார்.
பதவியேற்றதனைத் தொடர்ந்து 1994ஆம் ஆண்டு ஒக்டோபரில் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. கொழும்பிலிருந்து பேச்சுவார்த்தைக்காகச் சென்ற தூதுக்குழு மிகவும் விமரிசையாக யாழ்ப்பாணத்தில் வரவேற்கப்பட்டது. இருந்தும் பரஸ்பர விரக்திகள் வளர்ச்சியடைந்தன. பிரதான
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 57

Page 32
பேச்சுவார்த்தையாளருக்கு அமைச்சரவை அந்தஸ்து இருக்கவில்லை எனவும், மற்றய அங்கத்தவர்களுக்கு உத்தியோகப்பற்றற்ற அந்தஸ்து மாத்திரமே இருந்தது என்றும், அவர்களுள் இருவர் அரசாங்க உத்தியோகத்தர்களாகக் கூட இருக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. அரசாங்கத் தரப்பில் விடுதலைப் புலிகளின் கோரிக்கையான இராணுவம் பிரதான நிலைகளிலிருந்து வெளியேற வேண்டும் என்பது விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுக்களை தீவிர கவனத்திற் கொள்ளவில்லை என்பதைக் காட்டியது என்று குறிப்பிடப்பட்டது. அத்தோடு அரசாங்கத்தின் அரசியல் யாப்புப் பிரேரணைகளை விடுதலைப் புலிகள் கவனத்திற் கொள்ள மறுக்கின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டியது. இவ்வாறு மாதங்கள் பல சென்ற போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் ஜனாதிபதி சந்திரிகாவுக்குமிடையில் பல கடிதங்கள் பரிமாற்றப்பட்டன. ஜனாதிபதி இக்கடிதங்களின் சாராம்சத்தை புதினத்தாள்களுக்கு வெளியிட்டார். போர் நிறுத்தத்துடன் ஆரம்பித்த இப் பேச்சு வார்த்தைகள் 1995 ஏப்பிரல் மாதம் 19ஆம் திகதி இலங்கையின் கடற்படைக் கப்பல்களை விடுதலைப் புலிகள் தாக்கியழித்த தோடு முடிவுக்கு வந்தது. அடுத்த 5 நாட்களுள் இரண்டு விமானப்படை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இத்தோடு இச்சமாதானப் பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இலங்கையில் சமாதான முயற்சிகள் குறைந்தது மூன்று காரணிகளுடன் சம்பந்தப்படுகின்றது.
(1) அரசாங்கத்துக்கும் தீவிரவாதத் தமிழ்க் குழுக்களுக்கும், குறிப்பாக
விடுதலைப் புலிகளுக்குமிடையேயான இராணுவப் பலப்பரீட்சை
(2) அரசியல் யாப்பு மற்றைய ஒழுங்குப்பாடுகள் பற்றிய சிறுபான்மைக்
குழுக்களுடனான பேச்சுவார்த்தைகள்
(3) மேற் சொன்ன ஒழுங்குப்பாடுகள் பற்றிச் சிங்கள சமூகத்தினரிடையே ஒரு
கருத் தொருமைப்பாட்டை ஏற்படுத்துவதும் பராமரிப்பதும்.
சமாதானத்தை ஏற்படுத்துவோர் மேற்சொன்ன 3 அம்சங்களையும் ஒரே நேரத்தில் முகாமை செய்யத் தக்கவர்களாக இருக்க வேண்டும். 1994 - 95 பேச்சுக்கள் மேற்சொன்ன பிரதானமான சமாதானத்தை ஏற்படுத்தும் 3வழிகளையும் கவனத்திற் கொண்டது".
இராணுவ முன்னரங்கு நிலைகளில் ஆயுத மோதல்களை நிறுத்தாமலே விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளுக்கு முற்பட்ட தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தனர். பின்னர் 1995 ஜனவரி 8ம் திகதி அவசரமான தெளிவற்ற மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத்துக்கு வந்தனர். அது மூன்றுமாத காலத்துமோதல்களை நிறுத்தியது"
58 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

மேற்சொன்ன தளர்ச்சியான ஒழுங்குகள் அடிக்கடி தவறான புரிந்துணர்வுக்கான மூலகாரணமாக மாறிப் பரஸ்பரம் சந்தேகங்களை உண்டு
பண்ணின.
7. நோர்வேயின் அனுசரணையுடனான - சமாதான முயற்சிகள்
2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி வருடாந்த மாவீரர் தின உரையின் போது, புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கை அரசாங்கத்தோடு ஒழுங்கமைப்பு நிபந்தனைகள் எதுவுமற்ற சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கு ஆயத்தமாக இருப்பதாக அறிவித்தார். இருந்தும் அத்தகைய பேச்சு வார்த்தைகளுக்கு அனுசரணையாக இருக்கும் பொருட்டு போரை நிறுத்துதல், வழிமுறை - நல்லெண்ண சூழ்நிலைக்கான சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதை வலியுறுத்தினார். மேலும் தமிழர் தாயகத்தில் வழமை நிலையினை ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். பொருளாதாரத் தடைகளை நீக்குவது, தமிழ் மக்கள் மீதான மற்றைய கட்டுப்பாடுகளை நீக்குவதன் மூலம் - இயல்பான வாழ்க்கையினைத் திரும்பவும் ஏற்படுத்த வேண்டும் எனவும் - வேண்டுகோள் விடுத்தார். திரு. பிரபாகரன் நோர்வே அரசாங்கம் முரண்பாட்டில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் நம்பிக்கையை ஏற்படுத்தும் நல்லெண்ண நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டுமென ஆலோசனைகளைத் தெரிவித்திருப்பதாகவும் தெரிவித்தார். அது போரின் தன்மையை தணிக்கைப்படுத்தி போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டார். “அரசாங்கம் ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்தால் நாம் சாதகமான முறையில் பதிலளிப்போம் எனவும் குறிப்பிட்டார்”
மேற்கு நாட்டு இராஜதந்திரிகள் நோர்வே நாட்டின் பிரதிநிதி எரிக் சொல்ஹெய்மின் இணக்கப்பாட்டினை ஏற்படுத்தும் முயற்சிகளை வரவேற்றனர். இருந்த போதிலும் இலங்கையிலுள்ள சில ஒழுங்கமைப்புக்களும், அரசியற் கட்சிகளும் நோர்வே சமாதானத் தூதுவரின் விஜயத்தை பெருமளவு வரவேற்கவில்லை.
அதே வேளை இந்திய உள்துறை அமைச்சர் பிரபாகரனைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார். இது இலங்கை அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் பேச்சு வார்த்தை மேசைக்குக் கொண்டு வரும் முயற்சியைக் குழப்பத்துக்குள்ளாக்கியது. இதனிடையே பிரித்தானிய, அரச அமைச்சரான பீற்றர் ஹெய்ன் பிரித்தானிய, அரசாங்கம் பயங்கரவாத குழுக்களைப் பட்டியலிட்டு அவற்றைத் தடை செய்வதற்கு ஆயத்தம் செய்கிறது என
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 59

Page 33
அறிவித்தமையும் - சமாதானப் பேச்சுக்களை பின்னடையச் செய்தது. அது மாத்திரமன்றி இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பாராளுமன்றத்தில் பேசும் போது (11 வது பாராளுமன்றக் கூட்டத் தொடரின் போது) போரை நிறுத்தி முரண்பாட்டுக்குத் தீர்வுகாண வேண்டுமென்பதை வலியுறுத்தினார். ஆனால் அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருக்கின்றபோதிலும் விடுதலைப்புலிகளின் கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை என்று குறிப்பிட்டார்.
இருந்த போதிலும் 2001 பெப்ரவரி மாதம் 30 ஆம் திகதி எரிக் சொல்ஹெய்ம் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஒரு புரிந்துணர்வு உடன் படிக்கையினை தயாரித்துள்ளதாக அறிவித்தார். அதன்படி விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கம் பொருளாதாரத் தடைகளை நீக்கவேண்டுமென எதிர்பார்த்தனர். ஆனால் அரசாங்கம் பொருளாதாரத் தடைகள் எதுவுமில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்தது. உணவு விநியோகம் எவ்வித தடைகளுமின்றி இடம் பெறுவதாக அறிவித்தது.
2001ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதற் கிழமை நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியுடனும் எதிர்க்கட்சித் தலைவருடனும் மற்றும் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், கொழும்பிலுள்ள அமெரிக்க மற்றும் இந்திய தூதுவர்களுடனும் ஒரு தொடர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் - சமாதானப் பேச்சு வார்த்தைகள் இடம் பெறுவதற்கான நம்பிக்கை அதிகரித்தது. ஜனாதிபதி சந்திரிகா, நோர்வே தூதுவராலய அதிகாரிகள், புதிய நம்பிக்கையளிப்பதாக குறிப்பிட்டனர்; 2001 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ம் திகதி சொல்ஹெய்ம் மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்தார். அன்ரன் பாலசிங்கம் விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த அறிவித்தலுக்கு அரசாங்கம் சாதகமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்; 2001 ஆம் ஆண்டு ஜனவரி 12இல் போர் நிறுத்த அறிவிப்புக்கு அரசிடமிருந்து சாதகமான சமிக்ஞைகளைப் பெறுவதில் சொல்ஹெய்ம் அக்கறையுடன் வந்தார். ஆனால் அதே தினத்தில் நோர்வே தூதுவரின் தனிப்பட்ட நடத்தைகள் குறித்து சிஹல உறுமய பாராளுமன்றத்தில் தாக்கிப் பேசியது.
ஜனவரி மாதம் 11ம் திகதி போர் நிறுத்தம் தொடர்பிலான முட்டுக்கட்டையை அகற்றும் முயற்சியில் சொல்ஹெய்ம் இறங்கி வன்னி சென்று பிரபாகரனைச் சந்தித்தார்.
60 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

அரசாங்கத்திடமிருந்து ஆக்க பூர்வமான சமிக்ஞை எதுவும் வெளிவராததன் காரணமாக சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடை பெறுவதற்கான வாய்ப்பு கைநழுவிப் போகக் கூடிய சூழ்நிலை தென்படுவதாக இலங்கை தேசிய சமாதானப் பேரவை எச்சரித்தது.
விடுதலைப் புலிகளின் ஒரு தலைப் பட்சமான யுத்த நிறுத்தத்திற்கு அரசாங்கம் சாதகமான பதிலை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ள சமாதானப் பேரவை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டுமெனவும் கோரியது. 1994-95இல் நடைபெற்ற சமாதானப் பேச்சு வார்த்தைகள் முறிவடைந்தமைக்குக் காரணமான தவறுகள் மீண்டும் இடம் பெறாமல் இருப்பதற்கு நோர்வேயின் அனுசரணை முயற்சி போன்ற ஒன்று அவசியமானது.
நோர்வேயின் அனுசரணையுடனான - சமாதான முயற்சிகள் II
நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடனான இரண்டாவது முயற்சி
2002ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி விடுதலைப் புலிகள் பிரகடனம்
செய்த ஒரு மாத காலப் போர் நிறுத்தத்தை அடுத்து ஆரம்பித்தது.
இவ்வாறு விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்த ஒரு மாதகாலப் போர் நிறுத்தத்தை நாடு எதிர்கொண்டுள்ள அதிமுக்கிய பிரச்சினையான இன நெருக்கடிக்குப் பேச்சுவார்த்தை மூலம் இணக்கத் தீர்வொன்றைக் காணவேண்டு மென்ற அதன் விருப்பத்தை நிறைவேற்றுவதற்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாக ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் கருதியது. இருந்தும் விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் புலிகள் மீதான தடைநீக்கப்பட்டு தமிழ் மக்கள் சுமுகமாக வாழும் ஒரு சூழ்நிலை தோன்றும் போதுதான் அரசாங்கத்துடனான நேரடிப் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றார்".
தற்போது தற்காலிக போர் நிறுத்தத்தை நீண்ட காலப் போர்நிறுத்தமாக நீடிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு இரு தரப்பினரும் ஒப்பமிடத் தயாராகவுள்ளது.
முடிவுரை
இலங்கையின் இன முரண்பாட்டிற்குச் சமாதானப் பேச்சு வார்த்தைகளினூடாகத் தீர்வு காண்பதற்காக இந்தியாவின் மத்தியஸ்தத்தோடு 1985ஆம் ஆண்டில் இந்திரா காந்தியின் விஷேட தூதுவரான G. பார்த்தசாரதி
பிரவாதம் - ஜனவளி - ஜூன் 2002 61

Page 34
தொடக்கம் 2001ஆம் ஆண்டு நோர்வேயின் விஷேட தூதுவரான சொல்ஹெய்மின் அனுசரணையுடன் எடுக்கப்பட்ட தீர்வு முயற்சிகளைக் கண்டோம். இத்தீர்வு முயற்சிகள் ஏன் வெற்றிபெறவில்லை என்பதே எம்முன்னுள்ள கேள்வியாகும். இந்தியாவின் மத்தியஸ்தத்தை ஜனாதிபதி ஜெயவர்த்தன ஏற்றுக் கொண்ட போதிலும் ஐ. தே. கட்சி அரசாங்கத்தின் தலைவர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், வேறுசில சிங்களத் தேசியவாதக் கட்சிகளும் அதனை விரும்பாததாலேயே பார்த்தசாரதி தீர்வு முயற்சி தோல்வியில் முடிந்தது. 1987ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை சமாதான ஒப்பந்தம் தோல்வியடைந்தமைக்கு அவ்வொப்பந்தத்தின் விதிகளை இலங்கை அரசாங்கம் சரியாக நடைமுறைப்படுத்தப் பின்னின்றமையும், விடுதலைப் புலிகள் இயக்கம் அவ்வொப்பந்த விதிகளுக்கேற்ப ஒத்துழைத்துச் செயற்படாமையுமே காரணங்களாகும்.
1989ஆம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாச அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்தைகள் தோல்வியடைந்தமைக்கான பிரதான காரணம் இவ்விருதரப்பினரும் இந்திய அமைதிகாக்கும் படையைத் திருப்பி அனுப்புவதில் ஆர்வம் கொண்டிருந்தனரே தவிர இனப்பிரச்சினைக்குச் சமாதான முறையில் தீர்வு காண்பதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. மேலும் பரஸ்பரம் நம்பிக்கையற்ற நிலையிலேயே இப்பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றன.
1994 - 95 பகுதியில் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுக்கள் தோல்வியடைந்தமைக்கான காரணங்கள் பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் பேச்சுவார்த்தைக் குழுவில் கலந்து கொண்ட கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளரான கலாநிதி ஜயதேவ உயங்கொட பின்வருவனவற்றைக்
குறிப்பிட்டுள்ளார்.
(1) வடக்கிலோ, தெற்கிலோ பொதுஜன ஆர்வமின்மை (2) ஜனாதிபதி சந்திரிக்கா முழுச் சூழ்நிலையையும் தவறாகக் கையாண்டமை (3) அரசாங்கத்தின் சமாதானத் தூதுக்குழு அனுபவமற்றவர்களையே கொண்டிருந்ததோடு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்த பணிக்குழு ஆட்சியினரையும் தனிப்பட்டவர்களையும் கொண்டிருந்தமை (4) விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளில் ஆர்வமற்றிருந்தமையும், ஒரு
தனியான அரசினை வற்புறுத்தி நின்றமையும்
62 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

2001ம் ஆண்டு நோர்வேயின் அனுசரணையுடன் திரு. சொல்ஹெய்ம்
அவர்களின் முயற்சியால் இடம் பெற்ற பேச்சுக்கள் தோல்வியடைந்தமைக்கு
அரசாங்கமும், விடுதலைப்புலிகளும் தத்தமது நிலைப்பாடுகளை விட்டுக்
கொடுக்கத் தயாராக இல்லாதிருந்தமையே காரணமாகும்.
ஆனால் தற்போதைய பேச்சுவார்த்தை முயற்சிகளில் மேற் சொன்ன
தவறுகள் இல்லாதிருப்பதும், இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் தத்தமது நிலைப்பாடுகளை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கின்றமை நல்லதொரு
அறிகுறியாகும்.
குறிப்புகள்
1. P. Venkateshwar Rao, "Ethnic Conflict and Perception in Sri Lanka and India's Role", Asian Survey Vol. XXVIII, 1988, p 1., 427
2. V. P. Vaidik, Ethnic Crisis in Sri Lanka India's Option (New Delhi:
National Publishing House, 1986, p. 215
3. Sri Lanka, Ministry of State, The Thimpu Talks. The Stand taken by the Sri Lankan Government, (Sri Lanka: A Ministry of State Publication, 1985, p 14.
4. P: Venkates war Rao, op. cit, p. 429
5. The Island, 17 June, 1989
б. Ibid
Z Robert I Rotbers (ed) Creating Peace in Sri Lanka ( Washington:
World Peace Foundation 1999) p 132
8. Ibid, p. 132
9. Thinakkural 12 - 1 - 2001
10. Virakesari 20 - 1 - 2002
அம்பலவாணர் சிவராஜா பேராதனைப் பல்கலைக் கழகத்தில் அரசறிவியல்துறைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 63

Page 35
மனச்சாட்சியின் மரணமும் இனவாத அரசியலும்
67சல்வரி திருச்சந்திரன்
1. சனநாயகத்தின் இடர்கள்
சீனநாயகம் செழித்தோங்கும் நாடு என மார்தட்டும் இலங்கையின் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட வரலாற்றை நோக்கும் எவரும் சனநாயகத்தின் இடர்களைக் கருத்திற் கொள்ளத் தவறார். சனநாயக ஆட்சி இலங்கையில் தடம் புரண்டு விட்டதென்பதே உண்மை. நாட்டின் தலைவர்கள் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒருங்கிணைந்து தாம் அரசியற் குட்டையில் உழலும் மட்டைகள் என்பதைத் திரும்பத் திரும்ப எண்பித்துள்ளார்கள். எமது ஆட்சியாளர்களில் நீதிவழுவா நெறி முறையாளர் எவரையும் இதுவரை காலமும் கண்டோமில்லை. இந்த நிலமை உருவாகுதற்கு ஆளுங்கட்சி, எதிர்கட்சி ஆகிய இருதரப்பு அரசியல்வாதிகளும் பொறுப்பாளிகளாவர்.
எமது வரலாற்றிலே, சுதந்திரத்துக்குப் பிற்பட்ட யுகத்தில் ஆளும் தரப்பினர் இனப்பிரச்சினை எனப்படும் விடயத்தில் ஒளித்து விளையாடும் ஆட்டம் ஆடி எல்லோரையும் ஏமாற்றி வந்துள்ளனர். 1977ல் ஐக்கிய தேசியக் கட்சியினர் அதிகாரத்துக்கு வருமுன்னர் தேர்தல் விஞ்ஞாபனத்திலே பரிகாரங்களை முன் வைத்தனர். ஆனால், ஆட்சிப் பொறுப்புக் கைக்கெட்டியதும் அவற்றைச் செயற்படுத்த இயலவில்லை. தமிழர்களுக்கு அவர்களின் உரிமைகளை வழங்கினால் தம் அரசியல் அவாக்கள் ஈடேறாமற் போகலாம் என்று நினைத்தார்கள். நாடும் மக்களும் எக்கேடு கெட்டாலும் தாம் பதவியில் தொற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்பதே அவர்களின் இலட்சியமாயிற்று. பூரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பதவியேற்ற போதும் இவ்வாறே நடந்தது. எனவே, தத்துவார்த்த அடிப்படையிலான பரிகாரங்கள், இரகசிய ஒப்பந்தங்கள் மூலமான தீர்மானங்கள், திருத்தச் சட்டங்கள், இணைப்புகள், பாராளுமன்றச் செயற்குழு விதப்புரைகள் யாவும் செல்லாக் காசாக்கப்பட்டன. அல்லது, அழித்தொழிக்கப்பட்டன. ஏன் இவ்வாறு நிகழ்ந்தது? அரசாங்கம் சிங்கள மக்களைப் பலிக்கடாக்களாக்கியது. அரசாங்கம் ஆக்க பூர்வமான செயற் பாடெதனையும் மேற்கொள்ளப் பின்வாங்கியமைக்கு, தமிழ் மக்களுக்கு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை வழங்க எத்தனித்தால் சிங்கள மக்கள் அல்லது சிங்களப் பெளத்த மக்கள் அதனை எதிர்ப்பார்கள் என்று ஊகித்தமையே ஏதுவாயமைந்தது.
64 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

சிங்கள மக்கள் ஆட்சியாளர்களைத் தூக்கியெறிந்து அவர்களின் அதிகாரங்களைப் பறித்துவிடுவார்கள் என்று அறிந்தோ அறியாமலோ வாதிடப்பட்டது. விரைவில் லங்கா சமசமாஜக் கட்சிபோன்ற அரசியற் கட்சிகள் கூட “சம உரிமை” என்ற நிலைப்பாட்டைக் கைநெகிழவிட்டன. “சம உரிமை” என்ற சொற்றொடருக்கு இல்லாத பொல்லாத அர்த்தங்கள் எல்லாம் கற்பிக்கப்படலாயின. இங்கு கூட, சிங்கள மகா சனங்களே இக் கட்சிகளின் கொள்கைப் புரட்டலுக்கு காரணர் என்று நம்பப்பட்டது. இதனால் இலங்கைத் திருநாடு தேசியச் சிற்பிகள் பலரைப்பரிதாபகரமான முறையில் இழக்க நேர்ந்தது. ஏனென்றால், இந்த அரசியல் மேதைகள் பெரும்பான்மை மக்களை, அதாவது சிங்கள மகாசனங்களைத் திருப்திப் படுத்துதலே தம் தலையாய கடமை என்று கருதினர். ஆயினும் இந்த வரிசையில் இருந்து விடுபட்ட வாசுதேவ நாணயக்கார, சரத் முத்தெட்டுவேகம, விஜய குமாரதுங்க ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். தன்மானம், நேர்மைத் திறன், அரசியல் மதிநுட்பம் ஆகியவற்றை இழந்து அரசியற் பிழைப்பு நடத்த இவர்கள் விரும்பவில்லை. இதில் விசனிக்கத்தக்க விடயம் என். எம். பெரேரா, கொல்வின் ஆர். டி. சில்வா, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க போன்ற அரசியல் மேதைகளும் அரசியற் சாக்கடையில் விழுந்து தம்மை அவமானத்துக்குரியவர்களாக்கியமையாகும். இவர்களை நேரில் அறிந்தவள் என்ற முறையிலும், இவர்களோடு நெருங்கிப் பழகியவர்கள் மூலமாக இவர்களின் இலட்சிய வேட்கையைத் தெரிந்து கொண்டவள் என்ற வகையிலும் இவர்களின் மனித நேய மனச்சாட்சி பல தடவை இவர்களை வருத்தியிருக்கும் என்பதை அறிவேன். “சிங்களம் மட்டும்” என்ற கொள்கையின் கர்த்தாவான எஸ். டபிள்யூ ஆர்.டி. பண்டாரநாயக்கவையும் ஏனையோருடன் சேர்ப்பதா? மஞ்சட் துணிகளைக் கண்டதும் படபடத்து, விதிர் விதித்து பண்டா - செல்லா ஒப்பந்தத்கை கிழித்தெறிந்த மகானல்லவா? என்று சிலர் தம் புருவத்தைச் சுருக்கி வினவக்கூடும். கோழைத்தனமான அந்தச் செயல், யாழ்ப்பாணத்தில் வைத்து சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிக்கும் சம அந்தஸ்து வழங்குவேன் என்று சொன்ன சேர் ஜோன் கொத்தலாவலையின் வாக்குறுதிக்கு எதிரான செயற்பாடாக அமைந்தது என்று சரியாகவே விமர்சிக்கப்பட்டது. ஆயினும், எஸ். டபிள்யூ. ஆர் . டி. பண்டாரநாயக்கவுடன் அன்னியோன்னியமாகப் பழகியவர்கள் அவர் மனித நேயம் மிக்க அறிவாளி என்பர். ஆனால், அவரும் சந்தர்ப்பவாதியாக மாறினார். ஐக்கிய தேசியக் கட்சியினரைத் தோற்கடிப்பதற்கு “சிங்களம் மட்டும்” என்பதைத் தன் தந்திரோபாயமாக அவர் கையாண்டார். அது பிழையானது, அநியாயமானது என்பதை அறிந்திருந்தார். அவர் அதனை ஒரு சாதனையாகக் கருதாமல் சாதனைக்கு வழிகாட்டும் மார்க்கமாகக் கருதியிருக்கலாம். வில்மட் பெரேரா
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 65

Page 36
அவர்கள், எஸ். டபிள்யூ ஆர். டி. பண்டாரநாயக்க தன்னோடு தனிப்பட்ட முறையில் உரையாடிய சந்தர்ப்பங்களில், மொழிப் பிரச்சினைக்குத் தான் ஒரு பரிகாரம் காண, தமிழ் மக்களுக்கு மன நிறைவை அளிக்க வல்ல பரிகாரம் காண, உறுதி பூண்டுள்ளதாகச் சொன்னதாகச் சொல்லியுள்ளார். அவரைப் பொறுத்த வரையில் “சிங்களம் மட்டும்” என்பது முடிந்த முடிபன்று. ஆனால் “சிங்களம் மட்டும்” ஏற்படுத்திய அநர்த்தங்களைத் தடுக்க அவருக்கு இயலவில்லை. எந்தச் சீவர ஆடைகளுக்கு அடிபணிந்தாரோ, அதே மஞ்சள் அங்கியினர் அவரைச் சுட்டு வீழ்த்தினர். இந்த அரசியல் மேதாவிகள், புலிகளின் தோற்றத்திற்குத் தாம் ஒருவகையில் பொறுப்பாளிகள் என்பதை உணராதிருந்திருக்கலாம்.
தமிழ் விடுதலை அமைப்புகள், வரலாற்று நிகழ்ச்சிகளின் விளைவாகவே உருவாகின என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். அவை இரவோடிரவாக உருப்பெற்றவை அல்ல. தமிழர்கள் உத்தியோக வாய்புப் பெறுவதைத் தடுத்த “சிங்களம் மட்டும் சட்டம்", தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகக் கல்வி பெறும் வாய்ப்பைச் செம்மையாகக் கட்டுப்படுத்திய தரப்படுத்தற் திட்டம், அப்பாவித் தமிழ்க் குடிமக்கள் மீது தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாத நடவடிக்கைகள், தமிழர்களுக்கு எதிராகத் தூண்டிவிடப்பட்ட பல்வேறு இனக்கலவரங்கள், யாழ்ப்பாண நூல்நிலையத்துக்குத் தீ வைத்தமை இவை யாவும் அரச அமைப்புகள் மீதும், கெளரவமான, நல்ல சிங்கள மக்கள் மீதும் தமிழர்கள் நம்பிக்கை இழக்கச் செய்தன. அதே வேளையில் சனநாயக ஆட்சிமுறை மீதும் அவர்கள் நம்பிக்கையிழந்தனர். இந்த வரலாற்றுப் பின்னணியிலே தான் ஆயுதப் போராட்டம் உருப்பெற்றது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். ஆயினும், இந்த விளக்கமானது, தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று, சிங்கள, முஸ்லிம் குடிமக்களுக்கு இழைக்கும் வன்செயல்களை அங்கீகரிப்பதாகப் பொருள் கொள்ளக் கூடாது. தமிழ்ச் சமுதாயம் அனுபவித்து வரும் பாகுபாடுகள், இழப்புகள் ஆகியன பற்றிப் பேசுவதற்கும் விடுதலை இயக்கத்தினர் கட்டவிழ்த்துவிடும் கொடுமைகளை நியாயப்படுத்துதல் அல்லது அவற்றுக்குச் சமாதானம் காணுதல் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு.
கெளரவமானவர்கள் என மதிக்கப்படும் ஆண்களும், பெண்களும் அறிந்தும் தவறு செய்யும் போது அந்தத் தவறு பாமர மக்களின் தவறைப் பார்க்கிலும் ஆழமாப் பொது மனச்சான்றைத் துன்புறுத்தும். கே. எம். பி. ராஜரத்ன, சிறில் மத்தியு போன்றவர்கள் நாசகார வகுப்புவாதக் கும்பல்களைத் தூண்டிவிட்ட வேளைகளில் அவர்கள் அறிவிலிகள் அல்லது கொடியவர்கள் என்று ஒதுக்கப்பட்டார்கள்.
66 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

அவர்களின் அடாவடித்தனங்கள் மன்த குலத்தின் மீதிருந்த நம்பிக்கையைச் சிதைக்கவில்லை. ஆனால், நல்லவர்கள் கெட்டவர்கள் அல்லது சந்தர்ப்பவாதிகளாக மாறும் போது நாம் அங்கலாய்ப்படைகிறோம்.
அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியாகஅரசியல் மாறும் போது சனநாயகம் பிழைக்கிறது. சனநாயகம் என்பது இணங்குவித்தல், பெரும்பான்மையினரின் ஒப்புதலைப்பெறல் போன்ற சில பொதுப்பண்புகளை உள்ளடக்கியதாகும். இணங்குவித்தல் இரு வழி நடைமுறையாகும். மக்கள் அரசாங்கத்தையும், அரசாங்கம் மக்களையும் இணங்கவைத்தல் வேண்டும். இலங்கையிலே ஆட்சி அதிகாரம் பெற்ற அரசாங்கங்கள் மக்களை இணங்க வைப்பதில் தோல்வி கண்டுள்ளன. சிங்களத் தேசியவதாதிகள் அரசாங்கத்தை இடையறாது இணங்க வைத்துள்ளனர். சனநாயக அமைப்பிலே பெரும்பான்மை என்பது அரசியற் பெரும்பான்மை அல்லது தத்துவார்த்தப் பெரும்பான்மையாகும். ஆனால், அநேக தென்னாசிய நாடுகளிலே பெரும்பான்மை என்பது இன அல்லது மத அடையாளங்களினால் தோற்றுவிக்கப்படுகிறது. இவ்வாறான பெரும்பான்மை வாதம் நிலைபெறும் போது சனநாயகம் என்னும் கருத்தே வலுவிழந்து விடுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் சனநாயகம் என்னும் பெயரில் பெரும்பான்மையினரின் குரூர மேலாதிக்கத்துக்குள் அகப்பட்டிருக்கிறோம். இனவாரியான இந்தப் பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை ஆளுகின்றனர்; ஒப்பந்தங்களை மீறுகின்றனர்; அவர்களுக்குப் பாதகமான சட்டங்களை நிறை வேற்றுகின்றனர். விவேகம், புத்திக்கூர்மை படைத்த தலைவர்கள் கூடப் பெரும்பான்மையினரின் கொடுமைகளுக்குத் துணைபோகிறார்கள். கொள்கையளவில் அவர்கள் பெரும்பான்மையினரின் கொடுமைகளுக்கோ அடக்கு முறைகளுக்கோ உடன்படாதவர்களாயினும் எதிர்த்துக் குரல் எழுப்பத் தயங்குகிறார்கள். மக்களால் மக்களுக்காக நடைபெற வேண்டிய மக்களாட்சியாம் சனநாயகம் பெரும்பான்மை இனத்தவர்களால் பெரும்பான்மை இனத்தவர்களுக்காக நடைபெறும் பெரும்பான்மை இன அரசாட்சியாக மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கட்டத்திலே சிறுபான்மை இனத்தவர்கள் அரசின் அதிகார எல்லைக்கு வெளியே தள்ளப்படுகிறார்கள்; பிரிவினை, சுயாட்சி என்றெல்லாம் பேசத் தலைப்படுகிறார்கள்; அரசாங்கத்தின் மீது பழி சுமத்துகிறார்கள். அரசாங்கமும் சில சமயங்களில் நேரடியாகவும் வேறு சில சமயங்களில் மறைமுகமாகவும் பழியை அவர்கள் மீதே திருப்பிவிடுகிறது. இதன் விளைவாக மக்களில் ஏனைய பிரிவினர் பாகுபாடுகளுக்கும், துன்பங்கள், இழப்புகளுக்கும் உள்ளாகிறார்கள். இறுதியில் சிங்கள மக்கள் அனைவரும் பழிச்
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 67

Page 37
சொல் கேட்கிறார்கள். கொல்வின் போன்ற இலட்சியவாதிகள் பெரும்பான்மை மேலாதிக்கத்துக்குப் பணிய நேர்ந்தமை இலங்கை வரலாற்றில் கறை படிந்த கதையாகும்; சனநாயகம் தோல்வியுற்ற கதையாகும்.
2. தனித்துவம் பற்றிய மறுசிந்தனை
பொதுமக்களை நாம் பழி சொல்லக் கூடாது என நினைக்கிறேன். ஏனென்றால் அதிகார மோகம் கொண்ட அரசியல்வாதிகளும், போலிஅறிஞர்களும், கல்விமான்களும் ஒருங்கிணைந்து பொதுமக்களைப் பொய்யான வழியில் திசைதிருப்பிவிட்டிருக்கிறார்கள்; பொய்த் தகவல்களை வழங்கி அவர்களின் புத்தியைக் குழப்பிவிட்டிருக்கிறார்கள். இன்று நமக்குத் தேவைப்படுவதெல்லாம் அவரவர் மனச்சாட்சிக்கு விரோதமில்லாத, அறிவு பூர்வமான சிந்தனையே. நம் நாட்டின் பிரச்சினைகளை உணர்வு பூர்வமாக நோக்காமல், அறிவு பூர்வமாக, மனச்சான்றின் வழியில் நின்று நாம் அணுகுதல் இன்றைய கட்டாயத் தேவையாகும். சிங்கள மக்கள் யார்? சிங்கள வெகுசனங்கள் அடிப்படையில் குறுகிய நாட்டுப்பற்றுடையவர்கள் என்னும் இனவாதக் கொள்கையில் எனக்கு உடன்பாடில்லை. எந்த மனிதப் பிறவியும் பிறப்பிலேயே இனவெறியனாகவோ, தேச வெறியனாகவோ இருப்பதில்லை. இனவாதமும், தேசியவாதமும், வெளியுலக நிகழ்ச்சிகள், சம்பவங்கள், வார்த்தைகள், சொற்பொழிவுகள், வரலாறு, அல்லது பாடங்களால் மனதில் தோற்றுவிக்கப்படுவன. எனவே, எவரோ ஒரு சிலரோ கலாசார, சமூக, அரசியல் அடிப்படையில் ஒரு வேறுபாட்டைத் தோற்றுவித்துள்ளனர். இந்தக் கூட்டான வேறு பாட்டினைத் தமிழர்கள், சிங்களவர்கள் இருசாராரும் தோற்றுவித்தார்கள். இந்த வேறுபாடு ஒன்றுக் கொன்று முரணானது. செயற்கையாக உருவாக்கப்பெற்ற இந்த வேற்றுமை மொழியின் ஒரேவகையான தன்மையினை ஆதாரமாகக் கொண்டதாகும். தமிழர்களும், சிங்களவர்களும் கலாசார அடிப்படையில் வெவ்வேறு சமுதாயங்களைச் சேர்ந்தவர்களென்றோ, ஒருவரின் சமய ஒழுக்கங்களுக்கு மற்றவர் விரோதமானவர் என்றோ நான் ஒரு கணமும் ஒப்பேன். ஏனென்றால் சாதாரண மக்கள் இந்து மதத்தையும் பெளத்த மதத்தையும் பண்பாட்டு அடிப்படையில் ஒன்றாகவே நோக்குகிறார்கள். தமிழர்களுக்கு விரோதமான சிங்கள பெளத்த இனவாதம் என்பது உண்மையில் தவறான பிரயோகமாகும். அந்தச் சொற்றொடரிலே இரண்டு அர்த்தச் சாயல்கள் மருவி நிற்கின்றன. மொழி வாரியாகத் தமிழர்களுக்கு எதிராக நிற்கும் சிங்களவர்களையும், மத அடிப்படையில் கிறிஸ்தவர்களையும், இந்துக்களையும், எதிர்க்கும் சிங்களவர்களையும் “சிங்கள பெளத்தர்” என்னும் சொற்றொடர்
68 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

உள்ளடக்குகிறது. இதன்படி சிங்கள மக்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள் எனவும் பெளத்தர்கள், கத்தோலிக்கர்கள், இந்துக்கள் ஆகியோருக்கு எதிரானவர்கள் எனவும் பொருள்படுகிறது.
ஒரு சில சிங்கள பெளத்தர்கள் பெளத்த மதம், சிங்கள மக்கள் ஆகியோர் சார்பாகப் பெளத்த தர்மத்துக்கும் ஒழுக்க நெறிக்கும் புறம்பான வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள். சில சிங்கள மக்கள் மலையகத் தமிழ் மக்களைச் சிங்களக் கிராமமக்களின் விரோதிகளாகச் சித்திரித்துக் காட்டுகிறார்கள். மலையகத் தமிழ்த் தொழிலாளர்களே சிங்களக் கிராமவாசிகள் ஒடுக்கப்பட்டும் புலம்பெயர்ந்தும் வாழ்வதற்குக் காரணர் என்று சொல்லி வருகிறார்கள். சில அப்பாவிச் சிங்கள மக்கள் இதை நம்பி,தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகச் செயற்படுகிறார்கள். அவர்களுக்குச் சொல்லவேண்டிய உண்மை என்னவென்றால், தமிழர்களாய் இருந்தால் என்ன சிங்களவர்களாய் இருந்தால் என்ன மனிதப் பிறவிகள் என்ற வகையிலே சிங்களக் கிராமவாசிகள் சரி தோட்டத் தொழிலாளர்களான மலையகத் தமிழர்கள் சரி இரு சாராருமே பரிதாபகரமான நிலைமையில் வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதாகும். ஒருவரின் துயரைப்போக்குவதற்காக மற்றொருவரை நாம் வஞ்சிக்கலாகாது. இரு சாராருக்கும் பொதுவான எதிரி, அன்று பிரித்தானிய ஏகாதிபத்தியம்; இன்று உள்ளூர் நில உடைமையாளர்கள். இந்த மக்களை ஏமாற்றிப், பிரச்சினையைக் கட்டுமீறாமல் பேணிக்கொள்ளும் பொருட்டு ஒருவரை மற்றவருக்கு எதிராக ஏவிவிட்டுக் கூத்துப் பார்ப்பது முதலாளிவர்க்கத்தின் வழக்கமாகிவிட்டது. இதன் மூலம் இருசாராரும் அதாவது சிங்களக் கிராமவாசிகளும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களும் தத்தமது உரிமைகளை வென்றெடுக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு வல்லமை வழங்கப்படவேண்டும். அப்பொழுது தான் அவர்கள் ஒன்றிணைந்து தம் உரிமைகளுக்காகப் போராடுவார்கள். இன்று தமிழ்ப் பிரச்சினையின் காரணமாக அரசாங்கம் வறுமை, தொழில் வாய்ப்பின்மை, போதிய பிழைப்பின்மை, சமூகக் கொந்தளிப்பு போன்ற சமூக - பொருளாதாரப் பிரச்சினை எதனையும் தீர்க்க இயலாதிருக்கிறதென்று சிங்கள மக்களுக்குப் பிரசாரம் செய்யப்படுகிறது. தமிழர்கள் தாய்நாட்டைப் பிளவுபடுத்துகிறார்கள்; பயங்கரவாதிகள் எமது சிங்கள ராணுவவீரர்களைக் கொன்று குவிக்கிறார்கள்;. நாம் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. போராளிகளல்லாத தமிழர்கள் பலர் கொல்லப்படுவதும் அங்கவீனர்களாக்கப்படுவதும் சிங்கள மக்களிடமிருந்து மறைக்கப்படுகின்றன. அரசாங்கத் தலைவர்கள் திரும்பத் திருப்பச் சொல்லி வருவதைப் போல,
பயங்கரவாதப் பிரச்சினையை மட்டுமே அவர்கள் காண்கிறார்கள்.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 69

Page 38
சிங்களவர், தமிழர் என்னும் தனித்துவம் சில சமூகவியலாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் கட்டமைப்பாகும். மேற்குறித்த சமூகவியலாளர்களும் அரசியல்வாதிகளும் சமுதாயத்திலே ஓரளவு செல்வாக்குடையவர்கள். இவர்கள், சிங்கள மக்களிடம் இலங்கையின் ஆட்சி அமைப்பு முறையிலே அவர்கள் உள்ளமைந்த ஓர் இனம் என்றும், தமிழ் மக்கள் இலங்கையர் என்னும் உரிமை பாராட்டத் தகுதியற்ற புறத்தியார்’ என்றும் சொல்லியிருக்கிறார்கள். தமிழர்கள் இலங்கைக்கு வெளியே வாழும் ஏனைய தமிழர்களுடன் பொதுவான அடையாளமுடையவர்கள். மொழியை அடிப்படையாகக் கொண்டு பிறர் உருவாக்கிய ஒரு விடயமாக இந்த தனித்துவ அடையாளத்தை இனங்காண்கிறார்கள். இந்தத் வகையான பகுப்பின் போது, இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் உள்ள கலாசார வேறுபாடுகளையோ, இலங்கைத் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் உள்ள கலாசார ஒற்றுமைகளையோ கருத்திற்கொள்வதில்லை. இலங்கைத் தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே வரலாற்றை, ஒரே நிலத்தை, ஒரே வகையான மதங்களை, கடவுளர்களை, நம்பிக்கைகளை, வசிய முறைகளை, சூனியங்களை நம்புகின்றவர்கள், சாதியமைப்புப் போன்ற ஒடுக்கு முறைகளுக்கு உட்பட்டவர்கள். இவ்வாறு குறியீடுகளும் அடையாளங்களும் இரண்டு இனத்தவர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுள்ள போதிலும் அவர்கள் பேசும் மொழிவேற்றுமையை உருவாக்க ஏதுவாயிற்று. மொழிகளைக் கொண்டு எல்லைகள் வகுக்கப்பட்டன. இந்த ஒரேயொரு வேற்றுமையை சில வரலாற்றாசிரியர்களும், சமூகவியலாளர்களும் அரசியல்மயமாக்கினர். இலங்கையில் பல அரசியல் கல்விமான்கள் தோன்றி, சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் வித்தியாசமான வரலாற்றை வரைந்தனர். (போலிப் பண்டிதர்களின்) அரசியல் பாண்டித்தியம் வேற்றுமையை ஆழமாக்கியது. கலாசாரப் பாரம்பரியத்தினுள் அரசியல் அர்த்தங்கள் புகுத்தப்பட்டன. நீ-நான், நாங்கள் - அவர்கள் (சில சமயங்களில் சீனா, தானா என்ற) சொற்பிரயோகங்கள் அரசியல், கலாசாரம் ஆகிய இரண்டு துறைகளிலும் நுழைந்தன. சமாளிக்கத்தக்கதாக இருந்த போட்டா போட்டி பிணக்குகளாகவும், கலவரங்கள், இனவாரி மோதல்களாகவும் வெடித்தன. எல்லைகள் தீர்க்கமாக நிர்ணயம் பெற்றன. உயர்ந்தோர் / தாழ்ந்தோர், முதலில் வந்தோர் / ஆக்கிரமிப்பாளர்கள், வரலாற்று வாரியான எதிரிகள் என்னும் புதிய வேறுபாடுகளைத் தோற்றுவிக்கும் பொருட்டு மக்களின் கலாசாரத் தனித்துவங்களின் பொதுப்பண்புகள் மூடி மறைக்கப்பட்டன. வேறுபாடுகள் பெருகின. புதிய பிணக்குகளைத் தோற்றுவிக்கும் பொருட்டு மறந்துபோன வரலாற்றுப் பகைமை மீண்டும் பற்றவைக்கப்பட்டது. தமிழரசுக் கட்சியினர் பழைமையும் தூய்மையும் வாய்ந்த தமிழ் மொழியின் பெருமையைப் பறைசாற்றியதன்
70 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

மூலம், சிங்கள மொழிக்கு, மறைமுகமாக ஓர் அந்நியத்தன்மையை வெளிப்படுத்தினர். எப்போதோ வரலாற்றுச் சகதியில் புதைந்து மறக்கப்பட்டிருந்த ஆரிய, திராவிட இனப்பகைமை மீண்டும் தூண்டிவிடப்பட்டது. இதன் விளைவாக ஏலவே நிலவிய வெறுப்புணர்வு மேலும் கொழுந்துவிட்டெரியலாயிற்று. கருத்தியற் பாங்கான இவற்றையடுத்து, அறிவறிந்த திட்டங்கள் உருவாக்கப்பட்டன. சிங்களம் ம்ட்டும் சட்டம், அரச அணைவுடனான வகுப்புக் கலவரங்கள், அவ்வாறான கலவரங்களைத் தடுப்பதிற் சுணக்கம். குடிமக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதம் என்பன இவ்வாறான திட்டங்களிற் சிலவாம். தார்சிவித்தாச்சி அவர்கள் எமேர்ஜென்சி 58 என்ற நூலிலே இந்தக் கேள்வியை எழுப்பினார். “சிங்களவர்களும், தமிழர்களும் பிரியும் கட்டத்தை எட்டிவிட்டார்களா?” தமிழீழ விடுதலைப் புலிகள் பிரியும் காலம் வந்துவிட்டதென்று இப்போது பதில் சொல்கிறார்கள்.
3. இன்றைய நிலை
இன்று நாட்டின் அரசியல் யதார்த்தம் அருவருக்கத்தக்க இழிநிலையை எய்தியுள்ளது. அரசியல் வாழ்விலும் சமூக வாழ்விலும் மனித விழுமியங்கள் புரையோடிய புண்ணாகியுள்ளன. சகல வகையான வன்செயல்கள், குரூரங்கள், ஊழல்கள், பாலியல் வல்லுறவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு உணர்வுகள் மரத்துப்போயுள்ளன. இந்தப் பரிதாப நிலைமைக்கு நாம் எல்லோரும் பொறுப்பேற்றல் வேண்டும். நம்மிற் பலர் மெளனிகளானோம். எமது பேச்சுரிமையைப் பறிகொடுத்தோம். தீமைகளை எதிர்க்கும் எமது உரிமைகளையும், மனச்சாட்சியையும் பிறர் அபகரிக்க இடமளித்தோம். அநியாயங்கள் பெருகிய வேளையில் நாம் வாளாவிருந்தோம். பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள். அங்கவீனர்களாக்கப்படுகிறார்கள். வடக்கிலும், கிழக்கிலும் மக்கள் இழப்புகள், பாதுகாப்பின்மை, அச்சம், விமானக் குண்டு வீச்சு, ஆரோக்கிய வாழ்க்கை வசதியின்மை ஆகிய துயரங்களுக்கு மத்தியில் உயிரைக் கையிற் பிடித்தபடி வாழ்கிறார்கள். பிள்ளைகள் மன அதிர்ச்சியடைந்து வருகிறார்கள். பெருந்தொகையான ஆண்களும், பெண்களும், விரக்தி, சோகம் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். பிரச்சினைகள் பூதாகாரமாக வளர்ந்துள்ளமையால் உளவியலாளர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். குழந்தைகள் எடை குறைந்தனவாகவும், ஊனமடைந்தனவாகவும், பார்வையற்றனவாகவும் பிறக்கின்றன. கமக்காரர்கள் தற்கொலை செய்வதென்பது அதிர்ச்சி தரும் நிதர்சனமாகியுள்ளது. இலங்கைத் தேசம் வன்செயல்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றில் மட்டுமல்லாமல் தற்கொலையிலும் முதன்மை இடத்தைப்
Tarrasb - ggooTearr - ggosi 2002 71

Page 39
பெற்றிருக்கிறது. மக்கள் தற்கொலை செய்வதற்குக் காரணம் அரசாங்கத்திலும், பாராளுமன்றப் பிரதிநிதிகளிலும், அயலவர்களிலும், தம் சகாக்களிலும் நம்பிக்கை இழந்துள்ளமையே. அவர்களின் துயர் துடைக்க அரசாங்கம் என்ன செய்கிறது? தன் மக்களில் ஒரு பகுதியினரோடு போர் புரியும் பொருட்டு ஆயுதங்களில் செலவிடும் பணம் தேச மக்கள் அனைவருக்கும் பல்வேறு சேமநலத் திட்டங்களை நிறைவேற்றப் போதுமானதாகும். உயர்பதவி வகிப்போர் சட்ட விரோதமாகக் கையாளும் பணமும், மக்களுக்குச் சொந்தமாக இருந்தும் ஊழல் நடவடிக்கைகள் மூலமாக விரயமாகும் பெருந்தொகைப் பணமும் விவசாயிகள், தொழிலாளிகள், சேரி வாழ் மக்கள் ஆகியோரின் வறுமையைப் போக்கப் போதுமானவையாம். சிங்களச் சாகியத்தை அழுத்தும் அதே இலட்சிய தாகம், அதே எண்ணப்போக்கு, அதே மனச்சாட்சி ஆகியனவே சிறுபான்மை யினரையும் அழுத்தி நசித்து வருகின்றன. இது போலவே, சில சுயநல நாட்டங் கொண்ட, அதிகார மோகம் பிடித்த அரசியல்வாதிகளும் போலி அறிவாளிகளும் தமிழ் மக்கள் மனதிலே தாம் அந்நியர் என்னும் உணர்வை மிக ஆழமாகப் பதித்துள்ளார்கள். அது போலவே அவர்கள் சிங்கள மக்கள் மத்தியிலும் மனச்சாட்சி மழுங்க வழி வகுத்தார்கள். இதனால் அவர்கள் ஆழமாக வேரூன்றிவிட்ட திரிபுவாதங்களைச் சட்டைசெய்யா திருக்கிறார்கள். இந்த மனப்போக்கு மகாவம்ச காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் சமாளிக்கக் கூடியதாக விளங்கியது. ஆனால் இன்று அது மீண்டும் மீண்டும் கொழுந்துவிட்டு எரியும் படி சுய இலாபமும் அரசியல் கீர்த்தியும் பெறுவதில் நாட்டமுடையவர்கள் தூண்டிவருகிறார்கள். நாம் உண்மையான பிரச்சினைகளை இனங்காண்பதற்கும், அதிகாரத்தில் உள்ளவர்களைப் பார்த்து “எத்தனை சிங்கள வீரர்கள் உயிரிழந்தார்கள்? எத்தனை வீரர்கள் அங்கவீனரானார்கள்? என்று கேட்பதற்கும் காலம் வந்துவிட்டது. "எத்தனை குடும்பங்கள் தம் பிள்ளைகள், சகோதரங்கள், கணவன்மாரை இழந்துள்ளன? இந்த வீரர்கள் யார்?" முதிர்ச்சி பெறாதவர்களும், அரைகுறைப் பயிற்சி பெற்றவர்களும் வேலை வாய்ப்பற்றவர்களுமான் சிங்கள இளைஞர்கள் தேசியத்தின் பெயரால் பலியிடப்படுகிறார்கள். மற்றவர்களின் உயிரைப் பறிப்பதற்கும், அவர்களால் கொல்லப்படுவதற்கும் வேலைவாய்பற்றவர்களும் வறியவர்களுமான சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் தம்முயிரை விற்கிறார்கள். இவர்களைப் போர் முனைக்கு அனுப்பும் சிங்களத் தேசியவாதிகள், அரசாங்கத் தலைவர்கள் மந்திரி சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தம் பிள்ளைகளை வெளிநாடுக்குப் பல்கலைக்கழகங்களில் படிக்க அல்லது கொழுத்த வருமானமீட்டத் தக்க தொழில் செய்ய அனுப்பிவைக்கிறார்கள். அவர்கள் குண்டுத் தாக்குதல்களும் போர்நெருக்கடியும் இல்லாத பாதுகாப்பான இடங்களில் கைநிறைந்த பணத்தோடு
72 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

சொகுசான வாழ்க்கை நடத்தும் பொருட்டு வெளிநாடுகளிலுள்ள எமது தூதரங்களில் உத்தியோகம் பெறுவதற்காகப் போட்டியிடுகிறார்கள். மக்களின் மனச்சாட்சியைத் தூண்டி, நாட்டின் உண்மை நிலைமை இன்னதென்பதை உணர்த்த வேண்டிய வேளை வந்துவிட்டது. அவர்களின் மெளனத்தை, வாளாவிருக்கும் மெளனத்தை கொடுமையை அங்கீகரிக்கும் மெளனத்தை, அறியாமை மெளனத்தைக் கலைக்கும் வேளை வந்துவிட்டது. "உங்கள் பரிகாரம் என்ன? அதை
எவ்வாறு செயலாக்குவீர்கள்?” எனக் கேட்கும் வேளை வந்துவிட்டது.
4. கற்றறிந்தோர், அக்கறையுள்ள பிரசைகள் ஆகியோர்
ஆற்றக்கூடிய பணி
பட்டங்கள் பெற்றவர்கள், கல்விக் கூடங்களில் படிப்பிப்போர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மந்திரி சபை அங்கத்தவர்கள், கலாநிதிப்பட்டங்களுடன் அரசாங்கச் செயலாளர்களாகப் பதவி வகிப்போர் ஆகியோரைக் கற்றறிந்தோர் எனக் கணமேனும் கருதேன். கற்றறிந்தோர் என்போர் கல்வித்துறையில் ஈட்டிய சாதனைகள் ஒருபுறமிருக்க விழுமியங்கள், நிதானம், நியாயம் ஆகியவிடயங்களில் அக்கறையுடையோராவர். பல்கலைக் கழகங்களிலும் பாடசாலை வகுப்பறைகளிலும் பிற சமூகத்தின் மீது குரோதம் பாராட்டக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கல்லெறிபட்டபோது, பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திரா தாக்கப்பட்டபோது, யாழ்ப்பாணப் பொது நூலகம் கொழுத்தப்பட்ட போது எல்லோரும் நாணித்தலை குனியும் படியான மெளனம் இந்தநாட்டில் நிலவியது. அந்த மெளனம் எம் வருங்காலச் சந்ததியினர் மனித தர்மங்களை மறந்து நடக்க வழிகோலியது. கற்றறிந்தோரும் இந்த மெளனத்திற் கலந்துகொண்டார்கள். வெட்கக் கேடான இந்தக் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்க வேளை வந்துவிட்டது. சுமார் 30 வருட காலமாக நடைபெற்ற இரத்தக் களரி, வன்செயல்கள், மனச்சாட்சிக்கு விரோதமான, செயற்பாடுகள் ஆகியவற்றின் பின் தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கப்பட்டது. அதிகாரப் பரவலாக்கல், ஏனைய உரிமைகள் வழங்குதல் ஆகியனவும் இதே போக்கில் தான் கைகூட வேண்டுமா? ஐக்கிய தேசியக் கட்சி, பூரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோருடனும் ஏனையோருடனும் பொதுமக்களாகிய நாம் பேச்சுவார்த்தை நடத்த வேளை வந்துவிட்டது.
இவ்வளவையும் சொல்லும் போது கல்வி மான்கள் என்று சொல்லப்படுவோர் மத்தியிலே சில தோல்தடித்த சிங்களப் பெளத்தர்களும், தமிழ்த் தேசியவாதிகளும் இருக்கிறார்கள் என்பதை நான் மறக்கவில்லை. இத்தகையோர் மக்களை ஓயாமல் திசைதிருப்புவதிலும், பிழையான கருத்துகளைப் பரப்பிவருவார்கள் என்பதில் ஐயமில்லை. இவர்களை நாம் தனிமைப்படுத்தி, அரசியல், சமூக வாழ்க்கையின் விரோதிகள் எனப்புறக்கணித்தல் வேண்டும்.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 73

Page 40
இலங்கைத் திருநாட்டை சமாதானம், சுபீட்சம், சாந்தி நிறைந்த நாடாக மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நடைமுறை சாத்தியமான ஒரு மார்க்கத்தை நாம் காண வேண்டும். இவ்வாறான ஒரு வழியைக் காண்பதற்குச் சிங்கள மக்களினதும், தமிழ் மக்களினதும் கருத்தொருமைப்பாடு அவசியம். இதனை உரையாடல்கள் மூலமும் பேச்சு வார்த்தைகள் மூலமுமே நாம் சாதிக்கலாம். ஒரு பரிகாரத்தைக் காண்பதற்கு எம்வசமுள்ள சகல வளங்களையும் நாம் ஒன்று திரட்டுதல் வேண்டும். இலங்கையர்களை வெளி உலகோர் நாகரீகமறியாக் காட்டுமிராண்டிகளாக நோக்குகிறார்கள். எமது வன்செயல்களின் வகையும் தொகையும் கண்டு அவர்கள் திகைப்படைந்துள்ளனர். எமது மானத்தை, நற்பெயரை மீட்டெடுக்க வேண்டியது அவசியம்.
சிறையிலிருந்து எழுதும் கடிதம்
அம்மா நண்பர்கள் என்னைத் தேடி வந்து கதவில் தட்டும் போதெல்லாம் நீ வெம்பிக் கண்ணிர் மல்குவதை எண்ணி நான் வேதனைப்படுகிறேன்.
ஆனால் வாழ்க்கையின் சிறப்பு என் சிறையிலே பிறக்கிறதென்று நான் நம்புகிறேன் அம்மா. என்னை இறுதியில் சந்திக்க வருவது ஒரு குருட்டு வெளவாலாய் இருக்காதென்றும் நான் நம்புகிறேன். அது பகலாய்த்தான் இருக்கும். அது பகலாய்த்தான் இருக்கும்.
சமீஹ் அல் காசிம் (பலஸ்தீனக் கவிதைகள் தொகுப்பில் இருந்து)
74 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002
 

இலங்கையில் முஸ்லிம் சட்டமும் பெண்ணுரிமை விவாதங்களும்
சுல்ட்ரிகா
இலங்கை முஸ்லிம் சட்டம் தொடர்பான விடயத்திற்குச் செல்வதற்கு முன் “முஸ்லிம் சட்டம்” என நான் வரையறுப்பதற்கான காரணத்தையும், "இஸ்லாமிய சட்டம்” என்பதை நான் “முஸ்லிம் சட்டம்” என்பதிலிருந்து எவ்வாறு வேறுபடுத்திக் காண்கிறேன் என்பதையும் இங்கு தெளிவுபடுத்தவேண்டிய அவசியமுள்ளது.
தொடர்ச்சியாக எனது கட்டுரையில் முஸ்லிம் சட்டம் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகின்றது. முஸ்லிம் சட்டம் என்பது இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றுகின்ற முஸ்லிம் மக்களினால் உருவாக்கப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகளைக் குறிக்கின்றது. சமய நியமங்களுடன் இணைந்து இம்மக்களின் ஆட்சியான கருத்தியல்கள், வழக்கு, சம்பிரதாயம், நியமங்கள் போன்றனவும் இச்சட்டத்தில் பங்களிப்புச் செய்கின்றன. இதனாலேயே முஸ்லிம் சட்டங்கள் இடத்திற்கிடம் வேறுபடுகின்றன.
மறுதலையாக, இஸ்லாமிய சட்டம் என்பது குர்ஆனை அடிப்படையாகக் கொண்ட சட்ட ஏற்பாடுகளாகும். இவை நீதி, கருணை, ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த குர்ஆனிய சட்டங்களாகும். பலசந்தர்ப்பங்களில் முஸ்லிம் சட்டங்களும் இஸ்லாமிய சட்டங்களும் ஒரேமாதிரியாக அமையாமல் இருப்பதை நாம் காணலாம். இஸ்லாமிய சட்டங்கள் மாற்ற முடியாதவை. குர்ஆனில் அல்லாஹ்வினால் எடுத்துரைக்கப்பட்டவை.
இலங்கையில் குடும்ப விவகாரங்கள் தொடர்பாக இரு வகையான சட்டங்கள் காணப்படுகின்றன.
(1) பொதுச் சட்ட ஏற்பாடுகள் (2) தனியாள் சட்ட மூலங்கள்
பொதுச் சட்டத்திலுள்ள குடும்ப விடயங்கள் தொடர்பான ஏற்பாடுகளை, தனியாள் சட்ட மூலங்களுக்குள் அடங்காத குழுக்கள் மாத்திரமே பயன்படுத்த முடியும். அதாவது, தனியாள் சட்ட மூலங்கள் குறித்த குழுக்களுக்காக
tiyananasib - gastarr - gosis 2002 75

Page 41
வரையப்பட்டனவாகும். உதாரணமாக, கண்டியச்சட்ட மூலம் கண்டியச் சிங்களவர்களுக்காகவும், முஸ்லிம் தனியாள் சட்டமூலம் இலங்கை முஸ்லிம்களுக்காகவும், தேச வழமைச் சட்டமூலம் யாழ்ப்பான பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கைத் தமிழர்களுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும். இக்குழுக்களைத் தவிர்ந்த ஏனையோர் பொதுச் சட்ட ஏற்பாடுகளைப் பயன்படுத்த முடியும்.
இலங்கையிலுள்ள தனியாள் சட்ட மூலங்கள் யாவும் பின்வரும் அம்சங்களின்
அடிப்படையில் அமைந்தவையாகும்.
(அ) சமய விடயங்கள், கட்டளைகள் (ஆ) நீண்டகால வழக்குகள், பழக்க வழக்கங்கள் (இ) சம்பிரதாயங்கள், பண்பாடுகள், விழுமியங்கள்
இஸ்லாம் மதத்தினை பின்பற்றுபவர்கள் குடும்ப விவகாரங்களுக்காக முஸ்லிம் தனியாள் சட்ட மூலத்தினால் ஆளப்படுகின்றனர். இலங்கைச் சட்ட வழக்கின் பிரகாரம் தனியாள் சட்டமூலங்கள், பொதுச் சட்ட ஏற்பாடுகளை மீறிச் செயற்படும் அதிகாரம் கொண்டவையாகும்.
இலங்கை முஸ்லிம் தனியாள் சட்டமூலம் பிரதானமாகப் பின்வரும் குடும்ப
விவகாரங்களை உள்ளடக்குகின்றது.
1. திருமணம்
(அ) திருமண வயது
(ஆ) பாதுகாவலர், பாதுகாப்புரிமை
(இ) பாதுகாவலரின் விருப்பு
(ஈ) திருமணம் தொடர்பாகத் தடை செய்யப்பட்ட விடயங்கள்
1. எண்ணிக்கை 2. வயது 3. தடை செய்யப்பட்டவர்கள் 4. ஏனையவை
(உ) திருமணப் பதிவு
(ஊ) திருமண அறிவித்தல்
(எ) பதிவுக்குரிய கையொப்பதாரர்களும் பதிவுப் பத்திர விடயங்களும்
2. விவாக ரத்து
(அ) விவாகரத்து அடிப்படைகள் (ஆ) விவாகரத்து வகைகள்
76 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

(இ) விவாகரத்துச் செயன்முறைகள் (ஈ) விவாகரத்தின் போது கணக்குத் தீர்த்தலும் திருமணத்தினைக்
கலைத்தலும்
3. பராமரிப்பு
(அ) மனைவிக்கான பராமரிப்பு (ஆ) பிள்ளைகளுக்கான பராமரிப்பு (இ) விவாகரத்தின் போது பராமரிப்பு (ஈ) பிள்ளையின் பாதுகாப்பும் பாதுகாப்புரிமையும்
முஸ்லிம் விவாகம் விவாகரத்து சட்டமூலத்திலுள்ள ஏற்பாடுகளும் அது தொடர்பான பெண்ணுரிமை விவாதங்களும்
சில தனியாள் சட்டமூலங்கள் சமய அடிப்படைகளைக் கொண்டவை. இதனைக் காரணமாகக் காட்டிச் சட்டமூலத்திலுள்ள நீதியற்ற விடயங்களைக் கூட, சமயத்திற்குப் புறம்பான அல்லது எதிரான விடயங்களைக் கூடக் கேள்விக்குட் படுத்த முடியாத நிலையுண்டு. எனினும், குடும்ப விடயங்களில் ஏற்படும் பிரச்சினைகள் பெண்களையே அதிகம் பாதிப்புக்குட்படுத்துவதால் நடைமுறையில் பெண்களே அவற்றைக் கேள்விக்குட்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இலங்கை முஸ்லிம் தனியாள் சட்டமூல ஏற்பாடுகளிலுள்ள குறை பாடுகளையும் அவற்றை நிவர்த்தி செய்வதற்காக வேறுபல முஸ்லிம் நாடுகளில் இடம் பெற்றுள்ள குர்ஆர்னியச் சட்ட அடிப்படையிலான முற்போக்குச் சட்ட மூலங்கள் சிலவற்றையும் பார்ப்போம்.
1. விவாகம் : (அ) திருமணத்தின் போது வயது :
1. முஸ்லிம் விவாகம் விவாகரத்துச் சட்ட மூலத்தின் பிரகாரம் திருமணத்தின்போது பெண் பிள்ளை 12 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். ஆண்பிள்ளைக்கு வயதெல்லை இல்லை. மேலும் 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட பிள்ளையை பாதுகாவலர் விரும்புமிடத்து அப்பிரதேச காதியின் அனுமதியுடன் திருமணம் முடித்துக் கொடுக்கலாம். 2. பொதுச் சட்டமும், சர்வதேச மனித உரிமை ஏற்பாடுகளும், 16 வயதினை சிறுவர் வயதெல்லையாகக் கணிப்பிடுகின்றன. எனவே
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 77

Page 42
இவ்விடயம் பால்ய திருமணம் என்ற விடயத்தின் கீழ் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியுள்ளது. மேலும் முதிர்ச்சி வயது இலங்கையின் எல்லாப் பிரஜைகளுக்கும் 18 ஆகும். அதற்கு கீழ்ப்பட்டோர் தீர்மானம் மேற்கொள்ள முடியாதவர்களாதலால் திருமணம் செய்யமுடியாது. ஆனால் முஸ்லிம் விவாகம், விவாகரத்து சட்டமூலத்தின் பிரகாரம் பால்ய / முதிர்ச்சி என்ற நிலை இல்லை.
3. இலங்கையில் 12 வயதிற்குக் கீழ்ப்பட்ட பெண் பிள்ளைகளின் திருமணமோ அல்லது ஆண் பிள்ளைகளின் மிகக் குறைந்த வயதுத் திருமணமோ பெருமளவில் இடம் பெறாத போதிலும், சட்டப் பாதுகாப்பின் கீழ் ஒருவருக்குச் சிறுவர் உரிமைகளை மீறுவதற்கான சந்தர்ப்பத்தினையும் சட்டத் துஷ்பிரயோகம் செய்வதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்குகின்றது. அவ்வாறான சம்பவங்கள் சில இடம் பெற்றுள்ளன.
4. மேலும் முஸ்லிம் விவாகம், விவாகரத்துச் சட்டமூலத்தின் இவ்வேற்பாடு குறித்து முன்வைக்கப்படுகின்ற இஸ்லாமிய சட்ட அடிப்படையிலான வாதமும், நம்பகமானதும், தகுதியானதுமல்ல. “வயது முதிர்ச்சியடைந்தவுடன் உங்கள் குழந்தைகளை திருமணம் முடித்துக்கொடுங்கள்”என்று குர்ஆன் கூறுகின்றது (சூறா 2: 2 ). அதாவது முதிர்ச்சி வயது என்று இங்கு குறிப்பிடப்படுகிறதே தவிர குறிப்பிட்ட வயது குறிப்பிடப் படவில்லை. அத்துடன் முதிர்ச்சி வயது என்பதற்கான விளக்கம் குடும்பத்தாபனத்தினுள், ஒர் ஆண், அல்லது பெண், தமக்குரிய பல்வேறு பாத்திரங்கள், பொறுப்புக்களை ஏற்று நடாத்துவதற்கான முதிர்ச்சி எனக் கொள்ளப்படுவதே மிகப் பெர்ருத்தமானதாகும். எனவே, சுகாதார, உடல் நல, சமூக, அறிவு முதிர்ச்சி நிலைகளைக் கருத்திற் கொண்டதாக இவ்வயதெல்லை தீர்மானிக்கப்படலாம் என்பதையே இக் குர்ஆனிய வசனம் எடுத்துரைக்கின்றது என்பது வெள்ளிடை மலையாகும்.
இந்த விளக்கத்தின் அடிப்படையில் அநேக முஸ்லிம் நாடுகள் சட்டவாய்ப்புக்களை ஏற்படுத்தியிருப்பதையும் காணலாம். உதாரணமாக சவூதி அரேபியா, ஈரான், பாக்கிஸ்தான், மலேசியா, பங்காளதேஷ் போன்ற நாடுகளில் ஆண், பெண் இருபாலாருக்கும் 18 வயது முதிர்ச்சி வயதாகக் கொள்ளப்படுகின்றது.
78 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

(ஆ) பாதுகாவலரின் சம்மதம்
1. இலங்கை முஸ்லிம் சட்டப்படி எந்த வயதினராயினும் சரி எல்லா முஸ்லிம் பெண்களும், தமது பாதுகாவலரிடம் திருமணத்தின் முன் திருமணத்திற்கான அனுமதி பெறல் வேண்டும். இங்கு வயது முதிர்ச்சி என்பது கருத்திற் கொள்ளப்படவில்லை. பாதுகாவலரின் சம்மதம் இல்லாவிட்டால் திருமணம் சட்ட ரீதியானதல்ல; மேலும் தகுதியானதும் அல்ல. மேலும் ஆண் பாதுகாவலர் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுவார்; அவர்கள் எந்த வயதினராகவும் இருக்கலாம். அதாவது திருமணம் முடிக்காத அல்லது விதவையான அல்லது விவாகரத்துப் பெற்ற எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் ஆண் பாதுகாவலர் எந்த வயதினராயினும் அவர் எந்த நிலையிலிருந்தாலும் அவருக்கும் கீழ்நிலை அந்தஸ்துடையவராகவே கணிக்கப்படுகின்றார். சட்டப்படியான இந்தப் பாதுகாவலர் வயதில் இளையவராகவோ அல்லது ஒரு போதுமே பெண்ணைப் பராமரிக்காதவராகவோ, அல்லது சமூக, பொருளாதார ரீதியாக குறித்த பெண்ணின் பராமரிப்பின் கீழ் உள்ளவராகவோ இருக்கவும் கூடும். ஷாபி பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு பாதுகாவலரின் சம்மதம் எந்நிலையிலும் கட்டாயமாகும். ஹனபி பிரிவுப் பெண்களைப் பொறுத்தவரை கன்னித்தன்மையில்லாத அதாவது விதவை அல்லது விவாகரத்துப் பெற்றவர் போன்றவர்களுக்கு பாதுகாவலர் சம்மதம் அவசியமற்றதாகும். இங்கு சட்ட அடிப்படை இரு வேறுபட்ட நிலையிலுள்ளதைக் காணலாம்.
(இ) பெண்ணின் சம்மதம்
1. இலங்கை முஸ்லிம் தனியாள் சட்டமூலம், திருமணச் சடங்கின் முன் மணமகளின் சம்மதம் பெறப்படல் வேண்டும் எனக் குறிப்பிடுகின்ற போதிலும், சம்மதத்தினை உறுதிப்படுத்துகின்ற கையொப்பம் பெறப்படுதல் முஸ்லிம் விவாக, விகாரத்துச் சட்டத்தின் கீழ் அவசியமானது எனக் கொள்ளப்படவில்லை. பதிவுப் பத்திரத்தில் அதற்கான இடம் ஒதுக்கப்படவுமில்லை. இந்த விடயம் குறித்த குர்ஆனியச் சட்டம் மிகத் தெளிவானது. “திருமணத்திற்கான சம்மதம் பெறப்படல் வேண்டும்”. சம்மதம் பெற்றுக் கொள்ளப்பட்டதற்கான சான்று எழுத்து மூலம் இருக்கும் போது மட்டுமே நம்பத்தகுந்த ஆதாரமாக அமையும் என்பது புத்திஜீவிகள் எவராலும் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றேயாகும். மேலும், குர்ஆன் திருமணம் என்பதை இரு தனிமனிதர்களுக்கிடையிலான சமூக ஒப்பந்தம் என்று கூறி
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 79

Page 43
(FF)
80
உள்ளது (சூறா 5:5). இது ஒரு தலைப்பட்சமான முடிவாக அமைய முடியாது. இருவரின் இணக்கப்பாட்டின் பேரிலேயே ஒப்பந்தம் இடம் பெறல் வேண்டும். இணக்கப்பாட்டிற்கான ஆதாரமாகக் கையொப்பங்கள் கொள்ளப்படல் வேண்டும். 2. தான் சம்பந்தப்படாத ஒப்பந்தம் ஒன்று பெண்ணின் மீது திணிக்கப்படுவதன் மூலம் பெண்ணின் உயிரியல் இருப்பு மறுக்கப்படுவதுடன் கண்ணியமும் புறக்கணிக்கப்படுவதாகவும் அமைகின்றது. 3. உலகில் பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் கையொப்பமிடுதல் சம்மதத்திற்கான கட்டாயமான சாட்சியாகக் கருதப்பட்டு, பெறப்படுகின்றது. மேலும் ஈரான் போன்ற நாடுகளில் திருமணப் பதிவு (உடன்படிக்கைப் பத்திரம்) ஏறக்குறைய 17 பக்கங்களைக் கொண்டது. குடும்ப விடயம் தொடர்பான பல அம்சங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. குழந்தைப் பராமரிப்பு, மனைவியின் பராமரிப்பு, விவாகரத்து இடம்பெறுமிடத்து கணக்கு வழக்குகளைத் தீர்த்துக் கொள்ளல் போன்ற விடயங்களுடன், மணமகளால் முன்வைக்கப் படக்கூடிய மஹர் தொடர்பான கோரிக்கைகளும் உள்ளடக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் மணமகனும், மணமகளும் கைச்சாத்திடுதல் வேண்டும். குர்ஆனிய ஏற்பாட்டிற்கிணங்கவே இந்தச் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பலதார மணத்தின் மீதான நிபந்தனைகள் : முஸ்லிம் தனியாள் சட்ட மூலம் ஒரே நேரத்தில் நான்கு மனைவிமாரை திருமணம் முடிக்க ஒரு ஆணுக்கு அனுமதியளிக்கின்றது. 5வது திருமணம் பிழையானதாகவும் தகுதியற்றதாகவும் கொள்ளப்படும். ஆணுக்குள்ள ஒரே கட்டுப்பாடு, அவர் அல்லது அவரது மனைவி வசிக்கும் பிரதேசக் காதியாருக்கு (குடும்ப விவகார நீதிபதி) அறிவித்தல் கொடுத்தல் வேண்டும். மேலும் திருமணம் முடித்த எல்லா மனைவிமாரதும் சம்மதம் பெறப்படுதலும் வேண்டும் (வாய்மொழியாகவும் இருக்கலாம்). மனைவியின் அல்லது மனைவிமாரின் சம்மதம் இல்லாமல் மணமுடிக்கும் ஒருவருக்கு யாது நிகழும் என்பது பற்றி எதுவும் சட்ட மூலத்தில் இல்லை. இதன் காரணமாக நடைமுறையில் சம்மதம் பெறுதலும், அறிவித்தல் கொடுத்தலும் இடம்பெறுவதில்லை. அவை முக்கியமான விடயங்களாகக் கொள்ளப்படுவதுமில்லை. சட்டத்தில் சம்மதம் பெறாமைக்கான தண்டனை அல்லது கட்டுப்பாடு எதுவுமில்லாமையே இதற்குக் காரணமாகும்.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

1. இது தொடர்பான குர்ஆனிய சட்டம் மிகத் தெளிவானது. (சூறா 4:2,3) இதன் பிரகாரம் பலதாரமணத்திற்கான உரிமை நிபந்தனையுடன் கூடியது. அதாவது மணமுடிக்கும் மனைவிமாரை சமத்துவமாகவும், நீதியாகவும் நடத்த முடியும் என்ற நிபந்தனைக்குட்படும் பட்சத்திலேயே இவ்வுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதாவது மணமுடிக்க விரும்பும் ஆண், பெண்களை சமத்துவமாகவும் நீதியாகவும் நடத்துவதற்குரிய பொருளாதார, உடல், உள ரீதியான தகுதிப்பாட்டை நிரூபிக்கும் பட்சத்தில் மாத்திரமே பலதார மணமுடிப்பதற்கான உரிமையுடைய வராகின்றார். இந்நிபந்தனைகள் முஸ்லிம் தனியாள் சட்டமூலத்தில் வலியுறுத்தப்படவுமில்லை. அதற்கான ஏற்பாடுகள், தண்டனைகள், கட்டுப்பாடுகள் எதுவும் எடுத்துரைக்கப்படவுமில்லை. இது ஆண்களுக்குச் சாதகமாக உரிமைகள் அத்துமீறி எடுத்துக் கொள்ளப்படுவதையும் பெண்களுக்குப் பாதகமாக நிபந்தனைகளைக் கைவிட்டு மறைக்கப்பட்டு விடுவதையும் மிகத் தெளிவாகக் காட்டுகின்றது.
2. பலதாரமணத்திற்கான நிபந்தனை நீதியாகவும் சமத்துவமாகவும் பராமரிப்புச் செய்வதற்கான தனது தகுதிப்பாட்டை நிரூபிப்பதாகும். உலகின் பல்வேறு நாடுகளில் இது குறித்த நீதிமன்றக் கட்டளை அவசியப்படுத்தப்பகின்றது. உடல், உள, பொருளாதார ரீதியான தகுதிப்பாடு குறித்து நீதிமன்றம் அளிக்கும் சான்றிதழ்கள் உள்ளபோது மாத்திரமே பலதார மணமுடிக்கும் அனுமதி வழங்கப்படுகின்றது. மலேசியா, ஈரான், எகிப்து போன்ற நாடுகளில் இவை மிகத் தெளிவாக சட்ட மூலத்தில் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. சில நாடுகளில், பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் பின்தங்கிய நாடுகளில் மிகப் பெரும்பாலானவர்களுக்கு இந்நிபந்தனையை நிறைவு செய்ய முடியாத நிலையுள்ளதால், சட்டத்தில் பலதார மணத்திற்கான ஏற்பாடுகூட தேவையற்றது என சட்டவாக்கக் குழுக்கள் அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளன. (உ-ம்) வங்காளதேசம்)
2. விவாகரத்து
(அ) விவாகரத்து வகைகள்:நிலைமைகளும் அதன் நடை முறைகளும்.
சட்டமூலத்தினை மேலோட்டமாகப் பார்க்குமிடத்து விவாகரத்துப் பெறுவதற்கான, அதனைத் தொடக்குவதற்கான உரிமை ஆண், பெண், இருபாலாருக்கும் உண்டு. எனினும், சட்டத்தின் பிரகாரம் ஆண்கள் எந்தக் காரணமும் கூறாமலே விவாகரத்துப் பெறும் உரிமையையும், பெண்கள் காரணம் கூறி அதனை இரு சாட்சிகள் மூலம் நிரூபித்தே விவாகரத்துப்
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 81

Page 44
பெறும் உரிமையையும் கொண்டுள்ளனர். இது மிகவும் பாரபட்சமான ஏற்பாடாகும். இதனை நியாயப்படுத்த இது குர்ஆனிய ஏற்பாடு எனக் கூறப்படுகின்றது. இவ்விடயத்தினைத் தெளிவாக விளங்கிக் கொள்ள குர்ஆனிய ஏற்பாடு குறித்துப் பார்ப்போம் .
குர்ஆனிய ஏற்பாட்டின் பிரகாரம் பலவகையான
விவாகரத்து முறைகள் உள்ளன.
(1)
(2)
(3)
(4)
(5)
82
தலாக் - விவாகரத்துமுறை ஆண்கள் காரணம் கூறாமலேயே விவாகரத்துப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை. ஒரு தலைப்பட்சமாக இடம் பெறுமிடத்து நஷ்ட ஈடு வழங்குதல் வேண்டும். ●
பஸாஹ் - விவாகரத்துமுறை பெண்கள் காரணம் கூறி விவாகரத்துப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை, முபாரத் - விவாகரத்து முறை இரு பிரிவினருக்கும் விவாகம் திருப்தியில்லாத போது கணவன் - மனைவி இருபிரிவினரும் விரும்பிக் கோரும் விவாகரத்து முபாரத் எனப்படும். குலாஹ் - விவாகரத்துமுறை பிழைகள் இல்லாத போதும், மனைவி திருமண வாழ்க்கையில் திருப்தியில்லாத போது நஷ்டஈடு கொடுத்து தானே விவாகரத்துப் பெறக்கூடிய உரிமையாகும்.
தலாக் - ஏ - தவ்பித் - விவாகரத்துமுறை வாக்களிக்கப்பட்ட விவாகரத்து உரிமை. காரணமின்றி விவாகரத்து செய்கின்ற, தலாக் விவாகரத்து உரிமையை கணவன் மனைவிக்கு அளிக்க முடியும். திருமணத்தின் போது அல்லது அதற்குப் பின், நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அவை மீறப்படும் பட்சத்தில் விவாகரத்துப் பெறுகின்ற உரிமையை மனைவிக்குக் கணவன் வாக்களிக்கலாம். (சூறா 33 : 28 - 29)
1. இலங்கையில் முஸ்லிம் தனியாள் சட்டமூலம் இவைகளில் குறிப்பிட்ட சிலதை தெரிவு செய்துள்ளது. அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட முறைகளில் சிக்கலான செயன்முறைகளைக் கொண்டவை பெண்களுக்கும், அதேவேளை மிக இலகுவாக விவாகரத்தினைப் பெறுகின்ற முறைகள் ஆண்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவ்வாறான இலகுவான முறை தெரிவு செய்யப்படுமிடத்து பெண்ணுக்கு, ஏற்படக்கூடிய பாரபட்ச நிலைமையைக் கருத்திற் கொண்டு குர்ஆனில் கூறப்பட்டுள்ள ஏனைய விடயங்கள் கவனத்திற் கொள்ளப்படாமல் விடப்பட்டுள்ளன.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

2. முஸ்லிம் தனியாள் சட்டமூலம் பெண்கள் ஆரம்பிக்கக்கூடிய முறையாக பஸாஹ் முறை விவாகரத்தையும், ஆண்கள் ஆரம்பிக்கக்கூடிய முறையாக தலாக் முறையையும் கொண்டுள்ளது. தலாக் முறையில் கணவன் காரணம் கூறாமலே விவாகரத்தை 3 மாத கால இடை வெளியில் பெறக்கூடிய வாய்ப்புண்டு. இவ்வாறு நிகழும் போது மேலும் பெண் தனது எதிர்ப்பை அல்லது அது தொடர்பான கருத்தினை முன்வைப்பதற்கான சட்ட வாய்ப்புக்கள் எதுவும் இல்லை. 3. பஸாஹ் முறையில் விவாகரத்தினைப் பெறுகின்ற பெண் காரணம் காட்டுதல் வேண்டும். மேலும் அக் காரணங்கள் சாட்சிகளால் நிரூபிக்கப்படல் வேண்டும். நடைமுறையில் மிக நெருங்கிய உறவினர்களின் சாட்சியங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் நிலையும் இல்லை. மேலும், இந்நிலை காரணமாக அந்தரங்கமான பல விடயங்களை வெளிப்படுத்த வேண்டிய இக்கட்டான கட்டம் பெண்களுக்கு மட்டுமே ஏற்படுகின்றது. 4. முஸ்லிம் தனியாள் சட்டமூலத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் குடும்ப விவகார நீதிபதியாக முஸ்லிம் ஆண் ஒருவரே இருக்க முடியும். இவ்வாறான நிலைமையில் அந்நிய ஆணின் முன்னிலையில் தங்களது அந்தரங்கங்களை வெளிப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலை பெண்களுக்கே ஏற்படுகின்றது. 5. விவாகரத்து நடைமுறைகள் பல இருந்த போதும் பெண்களுக்குச் சாதகமான நடைமுறைகள் தவிர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக வாக்களிக்கப்பட்ட தலாக்குரிமை சட்டத்தில் தவிர்க்கப்பட்டுள்ளமை பெண்களுக்கு எதிரான பாரபட்சமாகவே கொள்ள வேண்டியுள்ளது.
விவாகரத்தின்போது கொடுக்கல் வாங்கல் தொடர்பான கணக்குத்
தீர்த்தல் :
(அ) மஹர் : வெகுமதி
இது திருமணத்தின் போது கணவனால் மனைவிக்குக் கொடுக்கப்பட வேண்டிய பணம், பொருள் ஆகியவற்றைக் குறிக்கும். முஸ்லிம் சட்டமூலத்தின் பிரகாரம் திருமண முறிவுக்குப் பின் எந்த நேரத்திலும், எற்கனவே மஹர் செலுத்தப்படாமல் இருந்தால் அதனைக் கோரும் உரிமை பெண்ணுக்குண்டு. மூன்று வருட காலத்தினுள் இது செலுத்தப்படல் வேண்டும். (குர்ஆன் சூறா : 4:4) 1. சட்டத்திலுள்ள இவ்வேற்பாட்டைச் செயற்படுத்துவதற்கான
நடைமுறைகள் எதுவும் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 83

Page 45
(ஆ)
84
2. குர்ஆனிய சட்டப்பிரகாரம் 'மஹர்' என்பது பெண்ணினால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கையாகும். இது பணம், பொருள், சேவையாக அமைய முடியும். திருமணத்தின் போது இது வழங்கப்படல் வேண்டும். அல்லது திருமணத்தின் பின் எந்த நேரத்திலும் அதனைக் கோரமுடியும்.
3. பெண்ணினால் முன்வைக்கப்படுவதற்கான எந்தச் சட்ட ஏற்பாடுகளும் இலங்கை முஸ்லிம் தனியாள் சட்டமூலத்தில் இல்லை. உலகில் பல்வேறு முஸ்லிம் நாடுகளில் இதற்காக சிறந்த பல ஏற்பாடுகள் உள்ளன. குறிப்பாக ஈரானிலுள்ள திருமணப்பதிவுப் பத்திரத்தில் இதற்காக தனிப் பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவை திருமணத்தின்போது இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆணும், பெண்ணும் கையொப்பமிடுகின்றனர். திருமண முறிவின் போது இவை மீளப் பெறப்படுவதற்கு இச் செயன்முறை இலகுவானதாக அமைகின்றது.
பராமரிப்பு முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் திருமணத்தின்போது மனைவி, பிள்ளைகளுக்கான பராமரிப்புக் கடமை கணவனைச் சேருகின்றது எனக் கூறுகின்றது. விவாகரத்தின் பின் பெண் பிள்ளையின் பராமரிப்பு திருமணம் முடிக்கும் வரை எனவும், ஆண் பிள்ளையாயின் முதிர்வு வயதினை அடையும் வரை எனவும் குறிப்பிடுகின்றது. ஆனால், ஏனைய சட்டங்களைப் போலல்லாது முஸ்லிம் சட்டம் நீதிமன்றத்திற்கு குடும்ப பராமரிப்பு விடயம் குறித்து கணவனுக்கு கட்டளையிடும் அதிகாரம் உண்டா என்பது பற்றிக் குறிப்பிடவில்லை. எனவே பெண்கள் காதியின் விருப்பிலும், கருணையிலும், நீதியான தீர்ப்புக்களுக்காக தங்கியிருக்க வேண்டியவர்களாயுள்ளனர். உண்மையில் சட்டப்பிரகாரம் காதி இது குறித்து தீர்மானிக்கவும் முடியாது. காதி இது குறித்து தீர்மானிக்க முடியாது என எழுத்து மூலம் அறிவிக்குமிடத்து பெண் மாவட்ட நீதிமன்றத்திற்கு முறைப்பாடு செய்யலாம். இது மிக நீண்ட செயன்முறைகளையும் செலவுகளையும் கொண்டதால் பெண்கள் இதனையும் அடைய முடியாதுள்ளனர். பராமரிப்புக்கான அளவைத் தீர்மானிப்பதற்கான எந்த நியமங்களும் சட்டத்தில் இல்லை. இதனால் காதி தீர்மானிக்கும் தொகை சில வேளைகளில் கேலிக்கிடமானதாகவும் யாதார்த்தத்தில் பெறுமான மற்றதாகவும் அமைகின்றது. முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டப் பிரகாரம் திருமணக் காலத்தின்போது பராமரிப்பு கணவனைச் சாருகின்றது. பல ஆண்டுகள் கைவிடப்பட்ட மனைவி கூட, கைவிடப்பட்டதாக பராமரிப்பு வழக்குத் தாக்குதல் செய்யும் நாளிலிருந்தே (விவாகரத்து வரை) செலவுபெறும் தகுதியுடையவராகின்றார்.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

இதன் காரணமாக மனைவி வழக்குத் தாக்குதல் செய்வதை அறிந்ததும், அக்கணவன் விவாகரத்து வழக்கினை உடன் பதிவு செய்யும் நிலை அநேகமாக இடம்பெறுகின்றது. இதன் பின் பாராமரிப்பு வழக்கு என்ற சொல்லுக்கே இடமில்லாமல் போய்விடுகின்றது. இதனைத் தவிர்ப்பதற்கான நுட்பமும், கைவிடப்பட்ட கால அளவு பரிசீலிக்கப்பட்டு நிரூபிக்கப்படுகின்ற பட்சத்தில் பராமரிப்புத் தொகையை அறவிடுவதற்கான ஏற்பாடுகளும் முஸ்லிம் சட்டத்தில் இல்லை. இவ்வாறான ஏற்பாடுகள் பொதுச் சட்டத்திலும், ஏனைய முஸ்லிம் நாடுகளின் பராமரிப்புச் சட்டங்களிலும் காணப்படுகின்றன.
4. இலங்கை முஸ்லிம் சட்டப் பிரகாரம் விவாகரத்துப் பெற்றபின் இத்தாக் காலத்திற்கான பராமரிப்பும் பெண்ணுக்கு வழக்கப்பட வேண்டும். இது குர்ஆனிய ஏற்பாடுமாகும். இதற்கு எதிராக இவ்வாறான விடயம் ஒன்று உண்டு என்பதே பெண்களுக்கு ஒரு போதும் தெரியப்படுத்தப் படுவதுமில்லை. அவ்வாறு பெண்கள் கோருமிடத்தும் இத்தாக் காலம் இரண்டு கிழமை என கூறப்படுகின்றது. இது இப்பராமரிப்புத் தொகையைச் செலுத்துவதற்கான நிர்ப்பந்தத்திலிருந்து கணவனை விடுவிப்பதற்காகவே இடம் பெறுகின்றது. சட்டத்திலும் இக்காலத்தின் அளவையும் செலவையும் கட்டாயப்படுத்துவதற்கான நுட்பங்கள் எதுவும் இல்லை. இக்காலம் உண்மையில் குர்ஆனிய சட்டப்படி (சூறா 2:240 - 241) மூன்று மாதமாகவும், இக்காலத்திற்கான பராமரிப்புத் தொகை முழுமுதலாக செலுத்தப்படக் கூடியதாகவும், அத்தொகை பெண்ணினால் தீர்மானிக்கப்படக் கூடியதாகவும் உள்ளது. இந்த ஏற்பாடு எல்லா முஸ்லிம் நாடுகளிலும் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஏனெனில், இஸ்லாமிய அனுஷ்டானமும் இதில் இணைந்திருக்கின்றது. எனினும், இலங்ககையில் குர்ஆனுக்கு எதிராக, இவ்வனுஷ்டானம் கணவன்மாருக்குச் சாதகமாகக் கைவிடப்படுவதைக் காணலாம்.
5. ஈரான் போன்ற நாடுகளிலுள்ள சட்டங்கள் இவ்விடயம் தொடர்பாக மிகவும் அக்கறையுடையனவாகவுள்ளன. குர்ஆனிய சட்டமூலத்தின் பிரகாரம் திருமண வாழ்வில் கணவனால் நிறைவேற்றப்பட்டிருக்கும் குடும்ப வேலை அளவைத் (கணவனது பராமரிப்பு, வீட்டு வேலைகள், குழந்தைகள் பராமரிப்பு போன்றன) தீர்மானித்து அதற்கு ஏற்றவாறான தொகையை நஷ்ட ஈடாகச் செலுத்தும்படி நீதிமன்றம் கட்டளையிடலாம். மேலும், ஒரு தலைப்பட்சமாக விவாகரத்துப் பெறப்படுமிடத்து (ஈரான், மலேசியா, எகிப்து, சவூதி அரேபியா போன்ற நாடுகளில்) குறிப்பிட்டளவு நஷ்ட ஈட்டுத் தொகை (மத்தாஹ்) வழங்கப்பட வேண்டும் (சூறா 33:49). ஈரானில் இருவருடத்திற்கான பராமரிப்புத் தொகையும், சவூதி அரேபியாவில் இரண்டரை லட்சம் றியாலும், மலேசியாவில் நீதிமன்றத் தீர்மானமுமாக இத்தொகை அமைகின்றது.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 8S

Page 46
குர்ஆனிய ஏற்பாட்டின் படி மஹர் தொகை பெண்ணினால் தீர்மானிக்கப்பட்டு பெண்ணுக்கு வழங்கப்படல் வேண்டும். எந்த நேரத்திலும் பெண் இதைக் கோரலாம். உண்மையில் விவாகரத்தின் பின்னுள்ள வாழ்க்கைக்கான ஓர் உத்தரவாதமாக பெண் இதனைப் பயன்படுத்தக்கூடிய நிலை இதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கைச் சட்ட நிலைமை எந்த வித வாய்ப்பினையும் கொண்டதாக இல்லை. அதாவது சட்டம் மஹர் என்பதை சரியாக வரையறுக்கவில்லை. திருமண முடிவின்போது மஹர் மீளப் பெறப்படலாம். என குறிப்பிடுகின்றபோதும், இலங்கை நடைமுறைப்பிரகாரம் இது கணவனால், தீர்மானிக்கப்பட்ட மிகச் சிறிய தொகைப் பணமாக அமைவதால் இந்த விடயத்தின் அர்த்தமே இல்லாமல் போய்விடுகின்றது.
வாரிசுரிமை இலங்கை முஸ்லிம் சட்டப் பிரகாரம் மரணசாசனம் எழுதப்படாதவிடத்து
வாரிசுரிமை ஆண் : பெண் - 2:1 என்ற விகிதமாக அமையும். இது உண்மையில் குர்ஆர்னிய ஏற்பாடேயாயினும், சொத்து தொடர்பான ஏனைய குர்ஆர்னிய ஏற்பாடுகள், குறிப்பாக பராமரித்தல், மஹர் கொடுத்தல், மஹர் எடுத்தல் என்ற விடயங்கள் சரியாக இடம் பெறாத பட்சத்தில் பெண்களுக்கு இது பாரபட்சமாக அமையும்.
மேற்கூறிய விடயங்களைக் கூர்ந்து ஆராயும் போது சில உண்மைகள்
தெளிவாகின்றன.
(1)
(2)
86
குர்ஆனிய ஏற்பாடுகள், சர்வதேச மனித உரிமை நியமங்களுக்குச் சமமான சிலவேளை அவற்றை விடவும், பலமான நியாயங்களையுடைனவாக உள்ளன. எனினும் அவை முஸ்லிம்களால், (சட்ட வரைஞர்களால்) முஸ்லிம் பெண்களுக்கு மறுக்கப்படுள்ளன என்பதையறிய முடிகிறது.
இலங்கை, விவாக விவாகரத்து சட்டமூலம் பின்வரும் குறைபாடுகளைக்
கொண்டுள்ளது.
1. பெண்களின் விடயங்களைக் கையாள்வதற்கான நியாயமான
ஏற்பாடுகளைக் கொண்டதாக அமைக்கப்படவில்லை. 2. இருக்கின்ற சில ஏற்பாடுகளும் கூட, சரியான முறையில் நடைமுறைப்
படுத்துவதற்கான நுட்பங்களையும் கொண்டதாக இல்லை.
3. நடைமுறைப்படுத்துவதற்கான, கட்டளையிடுவதற்கான அதிகாரம்
வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளில்லை. 4. முற்றுமுழுதாகப் பெண்களுக்கும் குர்ஆனுக்கும் எதிரான அல்லது மிகப் பாரபட்சமான சில ஏற்பாடுகளையும் சட்டமூலம் கொண்டுள்ளது.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

எனைய குர்ஆனிய ஏற்பாட்டின்படியும், முஸ்லிம் நாடுகளிலுள்ள சட்ட ஏற்பாடுகள், அவற்றின் அனுபவங்களின் படியும் இவற்றை மாற்றியமைக்க வேண்டிய கடப்பாடு முஸ்லிம் அறிவாளருக்குண்டு. இந்த வகையில் பின்வரும் விடயங்கள் மீது கூடிய கவனம் செலுத்தப்படுதல் வேண்டும்.
1. திருமண வயது
2. திருமண ஒப்பந்தத்திற்கான விரிவான ஏற்பாடும் பெண்ணின் விருப்பினை
பதிவு செய்தலும் மஹர் குறித்த வரைவிலக்கணம் பலதார மணத்திற்கான நிபந்தனைகளும், தண்டனைகளும் பராமரிப்பு ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரமும், நுட்பங்களும்
6. விவாகரத்தின் வகைகள், சாட்சியங்கள் குறித்த நீதியான ஏற்பாடுகள்
பெண் குடும்ப நீதிபதிகளின் நியமனம் விவாகரத்தின் போது நஷ்ட ஈட்டுக்கான ஏற்பாடுகள்.
இந்த மாற்றங்களைப் பொறுத்தவரை முஸ்லிம் உலகில் முற்போக்குச் சட்டமூலங்கள் பல இந்த வகையில் உருவாகியுள்ள நாடுகளின் உதாரணங்கள் நமக்கு நன்மையளிக்கக்கூடியவையாகும். இவை உலகில் மனித உரிமை தொடர்பான முன்னுதாரணங்களாகக் கொள்ளப்பட்டு வருவதும் இங்கு
குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ᎧᏱ?
உசாத்துணை l. Asgar Ali Engineer (1999) Equity, Social Justic and Muslim Women,
MWRAF, Sri Lanka. 2. Between two worlds (1999), MWRAF / ULUMN, MWRAF, Sri Lanka. 3. For our selves: Women Reading the Quran (1999) Women living
Under Muslim Laws, Franch. 4. Gooasekera Savitri (2000), Muslim Personal Law in Sri Lanka: Some
Aspects of Law on Family Relations: MWRAF, Sri Lanka.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 87

Page 47
Kodikara Chulani (1999) Muslim Personal Law in Sri Lanka: Theory, Practice and Issue of Concern to Women, MWRAF, Sri Lanka. Muttetuwagama, Ramani (1997), Parallel Systems of Personal Law in Sri Lanka, MWRAF, Sri Lanka. இஸ்லாமிய உலகில் பெண்கள், சட்டங்கள், தொடக்க முயற்சிகள் (1999) (மொழிபெயர்ப்பு) முஸ்லிம் சட்டங்களின் கீழ் வாழும் பெண்கள் MWRAF geori60)85. சமறுதீன்கான் (1996) இஸ்லாத்தின் மகளிர் நிலை (மொழிபெயர்ப்பு) முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி முன்னணி, இலங்கை.
ཡོད། சுவர்க் கடிகாரம்
எனது நகரம் எதிரியிடம் வீழ்ந்தது எனினும் கடிகாரம் இன்னும் சுவரில் ஒடிக் கொண்டிருந்தது
எனது சுற்றாடல் வீழ்ந்து எனது பதாகையும் வீழ்ந்தது எனினும் கடிகாரம் இன்னும் சுவரில் ஒடிக்கொண்டே இருந்த்து
எனது வீடும் வீழ்ந்து நொறுங்கிற்று எனினும் கடிகாரம் இன்னும் சுவரில் ஒடிக்கொண்டே இருந்தது
பின்னர் சுவரும் வீழ்ந்தது ஆயினும் கடிகாரம் தொடர்ந்தும் ஒடிக் கொண்டே இருந்தது
சமீஹ் அல் காசிம்
(பலஸ்தீனக் கவிதைகள் தொகுப்பில் இருந்து) M ..............................ސ(
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

ஒரு பெயரில் என்ன இருக்கிறது? குடிசன மதிப்பீட்டைப் பன்மைப்படுத்துதல்
தரன7ராஜசிங்கம் சேனநாயக்க
ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற கடைசிக் குடிசன மதிப்பீட்டிற்கு முன்னர், தனிப்பட்ட, தேசிய அடையாளம் பற்றியும், அது தொடர்பான வகைப்பாடு பற்றியும், தேசிய மட்டத்தில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. ஒரு பகுதி ஆபிரிக்க அமெரிக்கராகவும், ஒரு பகுதி ஆசிய (தாய்லாந்து) நாட்டவராகவும், ஒரு பகுதி பிறப்புரிமை அமெரிக்கராகவும், ஒரு பகுதி ஆங்கிலேயச் சார்புடையவராகவும் இருக்கும் குழிப்பந்தாட்டச் சம்பியன் டைகர் வுட்ஸ், இது தொடர்பாக அடிக்கடி குறிப்பிடப்பட்டார். அமெரிக்கக் குடிசன மதிப்பீட்டில் டைகர் வுட்ஸ் எந்த இன வகைப்பாட்டுக்குள் இடம்பெறுவார்? டைகர் வுட்ஸ் போன்ற கலப்பினத்தவர் தாம் சார்ந்த எல்லா அடையாளப்பெட்டிகளையும் குறியிட்டுக் காட்ட வேண்டுமா அல்லது வுட்ஸ் ஒரேயொரு அடையாளப் பிரிவை மட்டும் (அப்படியானால், அது எதுவாக இருத்தல் வேண்டும்) தெரிவு செய்ய வேண்டுமா? அல்லது, அவர் வெறுமனே ஏனைய என்ற அந்தஸ்த்தைக் கோர வேண்டுமா? என்பதுபற்றி சர்ச்சை நிகழ்ந்தது.
அடையாளம் பற்றிய எத்தனை பெட்டிகளை நிரப்ப முடியுமோ அத்தனையையும் நிரப்பலாம் என்ற முதலாவது தெரிவு, அமெரிக்கக் குடிசன மதிப்பீட்டில் எண்ணிக்கை ரீதியான முரண்பாட்டிற்கு வழிவகுக்கும். மொத்த மக்கட் தொகையை விட அடையாளங்கள் அதிகமாக இருக்கும் என்பதே ஆட்சேபனையாக அமைந்தது. கலப்பு அல்லது பல்பண்பாட்டு மரபுவழி வந்தோர், எத்தனை அடையாளங்களைக் கோர விரும்புகின்றனரோ அத்தனையையும் கோரலாம் என்று இறுதியாக முடிவு செய்யப்பட்டது. இவ்வாறாக, அமெரிக்கக் குடிசன மதிப்பீடு பன்மைப்படுத்தப்பட்டது. எண்ணிக்கை ரீதியான முரண்பாடு வேறு வழிகளில் சீராக்கப்படலாம். உலகின் சகல பகுதிகளிலுமிருந்தும் புலம்பெயர்ந்து வந்து குடியேறியோரைக் கொண்ட நாடாகிய அமெரிக்காவில் கலப்பின மக்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதையும் அவ்வரிசையில் எவ்வளவை எதிர்பார்க்கலாம் என்பதையும் இறுதியில் அமெரிக்கா அறிந்துகொள்ளும். இலத்தீன் அமெரிக்க சிறுபான்மையினரின் துரித அதிகரிப்பையும் சில நகரங்களில் வெள்ளையர்கள் சிறுபான்மையினராக இருக்கின்றனர் என்ற செய்தியையும் குடிசன மதிப்பீடு வெளிப்படுத்தியது.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 89

Page 48
இலங்கையும் குடிசன மதிப்பீடும்
இருபது வருட இடைவெளியின் பின்னர், ஏறத்தாழ இருபது வருட ஆயுத மோதலின் பின்னர், 2001 ஜூலை மாதம் இலங்கையில் குடிசன மதிப்பீடு இடம்பெற்றது. கடைசிக் குடிசன மதிப்பீடு 1971 ஆம் ஆண்டு நடைபெற்றது. வடக்கிலும் கிழக்கிலும் நிலவிய மோதல்கள் காரணமாக, 1981 இல் நடைபெற வேண்டியிருந்த குடிசன மதிப்பீடு நடைபெறவில்லை. முன்னர் குடிசன மதிப்பீடு ஒரு தேசிய நிகழ்வாக இருந்தது. அரசாங்க நிர்வாகத்துறை பத்து வருடங்களுக்கொருமுறை சனத்தொகையைக் கணித்தது. குடிசன மதிப்பீட்டுத் தகவல்களின் அடிப்படையிலேயே சமூகக் கொள்கையும் நிகழ்ச்சித் திட்டங்களும் வடிவமைக்கப்பட்டன. 1981 இல் சனத்தொகை மதிப்பீடு இடம்பெறாமையும், குறிப்பாகப் போரினால் ஏற்பட்ட சனத்தொகைப் பெயர்ச்சியும், இட மாற்றங்களும் தேசியக் கொள்கைத் திட்டமிடலை ஒரு வரையறைக்குட்படுத்தியது.
பலருக்கு குடிசன மதிப்பீடு, அதிகாரித்துவம், உத்தி, புள்ளிவிபரம் என்பன தொடர்பான நடவடிக்கையாகவும், அன்றாட வாழ்வுடன் தொர்பற்ற ஒரு செயற்பாடாகவும் தென்படுகின்றது. நாட்டில் வாழும் பல்வேறு தரப்பட்ட மக்கள் பற்றிய கூட்டு மொத்தக் கணக்கெடுப்பை அரசாங்கம் மேற்கொள்வதற்கு உதவும் வகையில் சில எளிமையான வினாக்களுக்குப் பதிலளித்தலை இது உள்ளடக்குகின்றது. இவ்வினாக்கள் பெயர், வயது, பால், கல்வி மட்டங்கள், எழுத்தறிவு, இனம், சமயம், மொழி என்பன போன்ற ஒருவருடைய தனித்தன்மை பற்றியதாகவும் அதனுடன் தொடர்புற்ற பல்வேறு அடையாளங்கள் பற்றியதாகவும் அமையும். (சாதியைப் பற்றித் தற்பொழுது கேட்கப்படுவதில்லையெனினும் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இடம்பெற்ற குடியேற்ற ஆட்சிக் காலக் குடிசன மதிப்பீடுகளில் சாதி பற்றிய விபரம் இடம்பெற்றது). குடிசன மதிப்பீடு சம்பந்தமான வினாக்களுக்கான விடைகள், புள்ளிவிபரப் பகுப்பாய்வின் அடிப்படையில், தேசிய முன்னேற்றத்தை அல்லது பின்னடைவைப் பற்றிய தனி ஆள் விபரங்களையும் கூட்டு மொத்தமான தகவல்களையும் எடுத்துக்காட்டும். இது சமூகக் கொள்கையை வகுப்பதற்கான அடிப்படையாகப் பயன்படும். சுருக்கமாகக் கூறினால், குடிசன மதிப்பீடு, புறவயமான உண்மைகளை நிறுவும். அடையாளம், அடைவு என்பன பற்றிய உண்மைகள் எவ்வளவு தூரத்திற்குப் புறவயமானவை என்பது சமகால மோதல்கள், அரசியல், வரலாறு என்பவற்றின் பின்னணியில் ஒரு விவாத விடயமாகலாம்.
இலங்கைக் குடிசன மதிப்பீட்டின் வரலாறு
பொதுவாகக் கூறுவதாயின், குடிசன மதிப்பீடு என்பது பெரும்பாலும்
பன்மைத்தன்மையற்ற, ஒருமை முறையிலான அடையாளத்தை நிறுவுவதன் மூலம்
கடந்தகால, நிகழ்கால மனிதப் பண்பாட்டின் பன்முகத்தன்மையை விஞ்ஞான
90 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

ரீதியாகப் புரிந்து கொள்ளும் ஒரு முயற்சியே எனலாம். அவ்வகையில் குடிசன மதிப்பீடு என்பது சாராம்சத்தில் நொய்மையான அடைளம் அல்லது பண்பாட்டினைத் திட்டவட்டமானதாக, எண்ணிக்கை ரீதியாகப் புரிந்து கொள்ளவும், வகைப்படுத்தவும் முயல்வதாகும். மதிப்பீடு தொடர்பான இப்பிரச்சினை இலங்கைத் தீவின் முதல் குடிசன மதிப்பீட்டை வடிவமைத்த பிரித்தானியர்களை ஈர்த்தது போல இன்னமும் இன்றைய இனத்துவ மற்றும் அடையாள அரசியல் தொடர்பான புலமையாளர்களையும் ஈர்த்து நிற்கின்றது. இயற்கை நிகழ்வுகளைப் போலன்றி, மனித அலடயாளம் ஒரே நேரத்தில், பன்முகமானதாகவும் ஊடறுத்துச் செல்வதாகவும் இருப்பதுடன், பால், இனத்துவம், மொழி, மதம், சாதி போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது. (இனத்துவம் போன்ற) சில வகையான அடையாளங்கள் எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகின்றன என்பதும், வர்க்க வகைப்பாடுகள் போன்ற ஏனையவை குடிசன மதிப்பீட்டில் இழக்கப்பட்டு விடுகின்றன என்பதும் ஒரு சுவாரசியமான பிரச்சினையாகும். இது ஒர் அரசியற் பிரச்சினையுமாகும்.
பிரித்தானியக் காலனித்துவ குடிசன மதிப்பீட்டு வகைமைகள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டன, பழைய பாகுபாட்டு முறைமைகளை எவ்வாறு மாற்றியமைத்து, காலனிகளில், விசேடமாக இந்தியாவில் புதியவற்றை உறுதிப்படுத்தின என்பதை பேர்னார்ட் கூன் உட்பட பல புலமையாளர்கள் அவதானித்துள்ளனர். இன அடிப்படையிலான பிரதிநிதித்துவ அரசாங்கத்தை நிர்ணயிப்பதற்கு அது அடிப்படையாக அமைந்ததால், காலனித்துவ இலங்கையில் புதிய இனத்துவக் குழுக்களை நிறுவுவதற்கும், அவற்றை சமூக யதார்த்தங்களாக்குவதற்கும் குடிசன மதிப்பீடு ஒரு கருவியாகப் பயன்பட்டமையை அவர்கள் அவதானித்திருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக பிரதிநிதித்துவம் என்பது, அறிவு பற்றிய பிரச்சினை (வகைப்படுத்தல்) அதிகாரம் (அரசியற் பிரதிநிதித்துவம்) ஆகிய இரண்டையும் உள்ளடக்குகின்றது. குடியேற்றவாதமும் ஆளும் முறைமையும் பற்றிய கோட்பாட்டாளர்கள் அறிவிற்கும் அதிகாரத்திற்கும் இடையேயுள்ள தொடர்பை அவதானித்துள்ளனர். அதன்படி, மற்றவரை அறிந்து கொள்ளல் என்பது, மற்றவரை எப்படி ஆளலாம் என்பதை அறிந்து கொள்வதுமாகும். உள்ளூர் உயர் குழாத்திற்கும் பிரித்தானிய நிர்வாகிகளுக்கும் இடையில் அமையக்கூடியதான சிற்றளவிலான பிரதிநிதித்துவ அரசாங்கத்தை உருவாக்குவதற்குக் குடிசன மதிப்பீடும் நிலப்படமும் முக்கிய கருவிகளாக அமைந்தன.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 9.

Page 49
மரபினம் (Race) பற்றிய கட்டமைப்பு
பெரிய பிரித்தானியாவிலும் வட அயர்லாந்திலும் குடிசன மதிப்பீடு எடுக்கப்பட்ட அதே சமயம், 1871 இல், இலங்கையில், முதலாவது நவீன குடிசன மதிப்பீடு நடத்தப்பட்டது. அதற்கு முன்னர், 1789 இல், ஒல்லாந்தத் தேசாதிபதி வன்டெர் கிராஃபின் காலத்தில் இலங்கையில் குடிசன மதிப்பீடு, கண்டிய மலைப்பிரதேசத்தின், கிராமத் தலைவர்களின் கணக்குகளை அடிப்படையாகக் கொண்ட சனத்தொகைக் கணக்கெடுப்பை, இலங்கையின் கரையோர மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புடன் சேர்ப்பதன் மூலம் பெறப்பட்ட கணக்கீடுகளைக் கொண்டதாக இருந்தது. 1814, 1824 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீடுகள் இலங்கையில் காணப்பட்ட சாதிகளையும் சமயங்களையும் பற்றிய தகவல்களை வழங்கின. ஆரம்ப ஆண்டுகளில், 1827 க்கும் 1871 க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் இடம்பெற்றது போலவே, இலங்கையிலும் வெவ்வேறு சமூகங்களை வேறுபடுத்துவதற்கு சாதி அடிப்படையிற் செய்யப்பட்ட வகைப்பாடே பிரதான வகைப்பாடாக அமைந்தது. 1911வரை குடிசன மதிப்பீடுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. 1911ன் குடிசன மதிப்பீடே இலங்கையில் இடம்பெற்ற நியாயமான மதிப்பீடாக அமைந்தது.
1824ஆம் ஆண்டு வரை சிங்களவரும் தமிழரும் பிரதானமாக, வெவ்வேறுபட்ட பருமனில் அமைந்த பல்வேறு சாதிக்குழுக்களின் உறுப்பினர்களாகக் கருதப்பட்டனரேயன்றி திட்டவட்டமான இனக்குழுக்களாகக் கணிக்கப்படவில்லை. கிராமத் தலைவர்களினால் பேணப்பட்ட கணக்கெடுப்புக்களையும் பிறப்பு, இறப்புப் பதிவேடுகளில் காணப்பட்ட விபரங்களையும் ஆதாரமாகக் கொண்டு, 1935இல் சனத்தொகை பற்றிய விபரமான அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டது. இங்கு சனத்தொகை பின்வரும் தலைப்புக்களில் வகுக்கப்பட்டது: 'வெள்ளையர்கள் (9,121), சுதந்திரமான கறுப்பர்கள்’ (1,194,482), 'அடிமைகள்’ (27,397), ‘வெளியாரும் வதியும் பிறத்தியாரும் (10,825), இவ்வகைப்பாடுகள் சாதியை அடிப்படையாகக் கொண்டவையல்ல. ஆனால் குடியேற்ற ஆட்சி நிலைமைகளில் ஊடுருவிக் காணப்பட்ட உள்ளடக்குதல் - வெளியொதுக்குதல் தன்மையை அதிக அளவில் வெளிப்படுத்தின. 1871 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டிலேயே மரபினம்’ என்ற பதம், தேசியம் என்ற வகைப்பாட்டுடன் முதற் தடவையாக இடம் பெற்றது.
1871 இல், பதிவு செய்யப்பட்ட 24 இனங்கள் இலங்கையில் இருந்தன. இவ்வகைமைகளில் கணிசமான அளவு பொருத்தமின்மை காணப்பட்டது. “சிங்களவர்”, “தமிழர்” என்பன மரபினங்களாகவும் தேசிய இனங்களாகவும் இருந்தன. தேசிய இனம் என்னும் சொல் அபிசீனியர், மேற்கிந்தியர் போன்ற,
92 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

“இனங்கள்” என அழைக்கப்பட முடியாத அளவிற்கு எண்ணிக்கையில் சிறு தொகையினராக இருந்த குழுக்களை விபரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. எனினும் சிங்களவரைத் கரை நாட்டுச் சிங்களவர், மலைநாட்டுச் சிங்களவர் என்று பிரித்த குடிசன மதிப்பீட்டின் அமைப்பானது, குடியேற்ற ஆட்சிக் காலத்தில் சிங்களவர், தமிழர் என்று புவிசார் - அரசியல் ரீதியான பிளவு குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெறவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது. மாறாக, அது ஒரே மொழியைப் பேசும் குழுக்களிடையே காணப்படும் பிராந்திய வேறுபாடுகளைக் குறிப்பிடுகின்றது. உதாரணமாக, கரையோரத் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையேயான வேறுபாடுகளை விட, கரைநாட்டு, மலைநாட்டுச் சிங்களவர்களுக்கிடையேயானவை முனைப்பாகவுள்ளன. முனைப்பான புவியியல் - அரசியல் எல்லைகள் குடியேற்ற ஆட்சியாளர்களினால் வகுத்துருவாக்கப் பட்டதெனினும், அவை பாளி வம்சநூல்கள் மெய்யானவை என வாதிப்பது போல இனத்துவ - தேசிய அடிப்படையிலானவையாகவோ வடக்கிற்கும் கிழக்கிற்குமிடையிலானவையாகவோ, இருக்கவில்லை. ஆனால், கரையோரம், மலைநாடு என்ற அடிப்படையிலேயே அமைந்தன.
புலமையாளர்களும், பிரித்தானிய காலனித்துவ நிருவாகிகளும் இந்நாட்டு மக்களதும் பண்பாடுகளது பன்முகத்தன்மையைத் திட்டவட்டமான முறையில் எளிமைப்படுத்தியிருக்கிறார்கள் என்பதை காலனித்துவ குடிசன மதிப்பீடுகள் வெளிக்காட்டுகின்றன. அதே வேளை, 1871இற்கு முற்பட்ட குடிசன மதிப்பீடுகளிற் காணப்பட்ட வகைப்பாட்டுக் குழப்பம், நிச்சயமற்ற தன்மை என்பவை ஒரு நவீன ‘விஞ்ஞான ரீதியான- அதாவது மனித பண்பாட்டு வேறுபாடுகளை மரபின அடிப்படையில் வகைப்படுத்தும்- முறைமை ஒன்று இருக்கவில்லை என்பதையும் காட்டுகின்றது. பின்னர் வந்த குடிசன மதிப்பீடுகளை, அடுத்தடுத்து வைத்துப் பார்க்கையில், வேறுபாடுகளையும் உறவுகளையும் சுட்டுவதற்காக மீளமைக்கப்பட்ட உள்ளூர் வகைமைகளுடன் இணைந்து குடியேற்றவாத மரபினக் கற்பனை எவ்வாறு விருத்தியடைந்து உறுதிப்பட்டது என்பது வெளிப்படுகின்றது.
காலனித்துவ குடிசன மதிப்பீட்டில் வகுப்பு வாரியான வேறுபாடுகளும் மரபினக் கற்பிதமும் 1881 அளவில் தெளிவாக நிறுவப்பட்டுவிட்டன. ஐரோப்பியர், சிங்களவர், தமிழர், சோனகர், மலாயர், வேடர் ஏனையோர் என்ற ஏழு இனங்களுமே எஞ்சி நின்றன. தேசிய இனங்களின் தொகை 78 இலிருந்து 71ஆகக் குறைந்தது. இக்கால கட்டத்திலிருந்து நாட்டின் இனங்களுக்கிடையே ஊசலாடிய பன்முகத்தன்மை ஏறத்தாழ நிலைபெற்று விட்டமையினால் மரபினங்கள் வகைப்பாட்டின் பிரதான கூறாயிற்று.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 93

Page 50
குடியேற்றவாத மனப்பாங்குகள்
குடிசன மதிப்பீட்டு அத்தியட்சகர், ஈ.பீ. டென்ஹாம், இலங்கையின் 1911ஆம் ஆண்டுக் குடிசன மதிப்பீடு பற்றிப் பின்வருமாறு எழுதியிருப்பதில் ஆச்சரியமேதும் இல்லை:
நாட்டு மக்களின் நடத்தை, சம்பிரதாயங்கள் என்பவற்றில் இடம்பெற்று வரும் மாற்றங்கள் எவ்வளவுதான் தீவிரமானவையாக இருப்பினும், கீழைத்தேய மக்கள் கூட்டமொன்றின் இனவியல்பு, மனத்தடைகள், உலகப் பார்வை என்பவற்றை விளங்கிக் கொள்வதற்கான முயற்சி, கிழக்கின் உள்ளார்ந்த பழமை வாதம் பற்றிய புரிதலை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
ஆசிய சமூகங்கள் பற்றிய ஐரோப்பியரின் பொதுவான எதிர்வினை மாற்றத்தை மறுத்தலாகும் என்று எட்வேர்ட் சைத் குறிப்பிட்டுள்ளார். கீழைத்தேய வாதச் சொல்லாடலில் ஆசியாவின் பழமை வாதம் ஒரு பொதுப்பண்பாக இருந்தது. இது குடியேற்ற நாட்டு மக்களை காலம், வரலாறு என்பவற்றிற்கு அப்பால் வைப்பதற்குதவியது. கீழைத்தேய புனையுரு அமைப்புக்களை சைத் பரிசீலித்துள்ளார். புற பல்வகைமையும் மாற்றமும் என்ற பின்னணியில் சர்வதேச ஒருமைத்தன்மையை உண்மையென ஏற்றுக் கொள்ளும் இனம் பற்றிய கருத்தானது, ஐயத்திற்கிடந்தராத பண்பாட்டுக் கலப்பும் நிலைமாற்றமும் என்ற பின்னணியில் ஆசிய மாற்றமின்மையை உண்மையென ஏற்றுக் கொள்வதற்கும் உதவியதென்றும் வாதிக்கலாம். குடியேற்ற நாடுகளிற் புறவயமான மாற்றங்கள், கலப்புத்தன்மை அல்லது இனக்கலப்பு என்ற பின்னணியில் உள்ளக அல்லது பிறப்புரிமை அலகின் ஒத்த தன்மையை உண்மையென ஏற்றுக்கொள்வதற்கு, இனம் பற்றிய கருத்துக்கள் ஆழ்ந்த, கண்ணுக்குப் புலப்படாத காலக்கோடாகச் செயற்பட்டுள்ளன என்று தரணி ராஜசிங்கம் சேனநாயக்க வாதித்துள்ளார்.
இலங்கையின் எந்தவொரு மொழியிலும் ஐரோப்பிய எண்ணக்கருவான இனம் (Race) என்பதற்கு இணையான எந்தவொரு பதமும் இருக்கவில்லை. இனத்தைக் குறிக்கும் ஜாதி/ ஜாதிய என்ற சிங்களச் சொல் அன்றும் இன்றும் மரபினத்தையும், இனத்துவக் குழுமத்தையும் (Ethnic), தேசிய இனத்தையும் (Nation), சாதியையும் கூடக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. Race’ என்பதை ஜாதி என்று சிங்கள மொழியில் மொழிபெயர்த்தமை வகைமை சார் பிழையொன்றிற்கு வழிவகுத்தது. இது சமய, மொழி, பண்பாட்டு வேறுபாடுகளை இனம் என்ற ஒரே சட்டகத்தின் கீழ் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கின்றது.
94 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

தந்தை வழியும், தாயின்அழிப்பும், பன்மை அடையாளங்களும்
தந்தைவழி (Patriarchy) என்பதன் வெளிப்படையான பொருள் தந்தையின் ஆட்சி என்பதாகும். அன்னையைத் துடைத்தழித்தல் என்பது இதன் உட்பொருளாகும்-பலரைப் பொறுத்தவரை அவர்களின் நாளாந்த வாழ்வில் சமூக, உயிரியல் அடையாளத்தினதும் பண்பாட்டு அடையாளத்தினதும் முக்கிய அம்சமாகும். அடையாளத்தை நிறுவுவதில், வரலாற்றடிப்படையில் தந்தை மரபு வழியைப் பின்பற்றுவதே ஐரோப்பிய - அமெரிக்க உலகின் வழக்காறாக இருந்து வந்துள்ளது. ஒருவர் தன்னுடைய தந்தையின் பெயர், சமயம் முதலியவற்றையே பின்பற்றுவார். இலங்கையில், ஆங்கிலச் சட்டத்தினால் மீள் வலுவூட்டப்பட்ட
ஆணாதிக்க உரோமன் - டச்சுச் சட்டம் அன்னையைத் துடைத்தழித்துள்ளது.
கலப்புச் சனத்தொகையைப் பற்றிய விடயம் சுவாரசியமானதொன்றாகும். ஒருவருடைய தந்தை சிங்களவராகவும், தாய் ஐரோப்பியராகவோ, பறங்கியராகவோ, தமிழராகவோ, முஸ்லிமாகவோ இருந்தால், பிள்ளைகள் சிங்களவராவர். அன்னை, துடைத்தழிக்கப்படுகின்றாள். கலப்பு அதே விதமாக அமைந்து. இங்கு (சிங்களவர்/ ஆங்கிலேயர் ), தந்தை ஆங்கிலேயராகவும் தாய் சிங்களவராகவும் அமையின், பிள்ளைகள் ஐரோப்பிய-ஆசியர்' (Eurasian) எனக் கொள்ளப்படுவர். இவ்விதி சிங்கள/தமிழ்/ முஸ்லிம் கலப்புத் திருமணங்கள் பலவற்றிற்கும் பொருந்தும். இங்கு பிள்ளைகளின் இன வகைப்பாட்டில் ஆணாதிக்கமே நிலவுகின்றது.
இதுவும் ஆணாதிக்கத்தின் ஒரு அடிப்படைக் கூறாகுமென்று பெண்ணிலைவாதிகள் விவாதிக்கின்றனர். எப்படியிருப்பினும், குடியேற்ற ஆட்சிக்காலத்தில் நிலைநிறுத்தப்பட்ட தந்தை வழி நடைமுறைகள் பண்பாட்டுக் கலப்புத் தன்மை, இனக் கலப்புத் தன்மை, பல்பண்பாட்டுத் தன்மை என்பவற்றை அழித்து, தூய இன அடையாளம் என்ற பொய்மையை நிலைநிறுத்துவதற்கு உதவியுள்ளன.
குடியேற்ற ஆட்சிக் காலத்தில் தொடங்கிய நிலைமாற்றப்போக்கு இலங்கையில், அடையாள அரசியல் வடிவத்தின் அறிவுசார் கட்டமைப்புக்களை நிறுவியது. இங்கு சிங்களவரும், தமிழரும் தனித்தனி இனக் குழுக்களாக உருமாற்றம் பெற்றனர். குடியேற்ற ஆட்சிக்குப் பிற்பட்ட காலத்தில் வகுப்பு வாத, அல்லது இன்று குறிப்பிடப்படுவது போல இனத்துவ அல்லது தேசிய அடையாளங்கள் மரபின எண்ணக் கருக்களோடு பின்னிப் பிணைந்தன.
iyensraub - geosaurr - goa 2002 95

Page 51
நடைமுறையிலிருந்த அடையாள வடிவங்களை மாற்றின. குடியேற்ற ஆட்சிக்குப் பிற்பட்ட இலங்கையில் மொழி வகைப்பாடும், சமய வகைப்பாடும் இனத்துவ-மரபின (ethno - racial) அடிப்படையில் வலுப்படுத்தப்பட்டன என்பது தெளிவாகின்றது. எனவே இந்துக்களும் பெளத்தர்களும் பொதுவான கடவுளர்களையும் பொதுவான பல சமய வழக்கங்களையும் கொண்டிருந்த போதிலும் அவர்கள் வெவ்வேறு சமயத்தவர்கள் என்ற வகையிலேயே நோக்கப்படுகின்றார்கள். அதேபோல, கடந்த பல நூற்றாண்டுகளாகச் சிங்களவரும் தமிழரும் கலப்புத் திருமணங்கள் செய்து கொண்டுள்ள போதிலும், குடிசன மதிப்பீட்டில், சிங்களவரும் தமிழரும் தனித்தனி
வகைமைகளாகவே கட்டமைக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே இலங்கை மக்களின் பல்வகைமை, கலப்பு, பல்பண்பாட்டியல்பு என்பவற்றைப் பிரதிபலிக்கும் வகையிலும், இன முரண்பாட்டுத் தீர்வுக்கொரு வழி என்ற வகையிலும் இலங்கையின் குடிசன மதிப்பீடு பன்மைப்படுத்தப்படல் வேண்டியது அத்தியாவசியமாகும். கலப்புற்றவர்கள் மற்றவருக்குத் தீங்கிளைக்கும் சாத்தியப்பாடு மிக அபூர்வமாகும். ஏனெனில், அந்த மற்றவர் வெளியில் இருக்கும் எதிரியல்ல; அவர் நம் முள்ளேயே இருக்கிறார், என்று விவாதிக்க முடியும். காலனித்துவ, விஞ்ஞான ரீதியில் தவறான, மரபின அடிப்படையிலான அடையாள வகைப்பாட்டை நீக்குவதற்கும், நம்முள்ளும் நமக்கு வெளியிலும் பல்வகைமை உண்டென்பதைக் கற்றுக் கொள்ளும் வகையிலும், சமரசம், முரண்பாட்டுத் தீர்வு என்பவற்றை நோக்கிச் செல்வதற்கான ஒரு சிறு முன்னேற்றப்படி என்ற வகையிலும்
நீண்டகாலத்தந்திரோபாயமாகக் குடிசன மதிப்பீட்டை நாம் பன்மைப்படுத்தவேண்டும்
வகைப்பாட்டின் பொய்மைகளும் உண்மைகளும்
அண்மையில் வெளிவந்த மலையாளச் சிறுகதையொன்றை அடிப்படையாகக் கொண்ட குடிசன மதிப்பீடு' என்ற சிங்களத் திரைப்படத்தை நாம் விதந்துரைக்கின்றோம். இத்திரைப்படம் பற்றிய ஓர் அறிமுகம் பின்வருமாறு கூறுகின்றது: கரூர் நீலகண்டபிள்ளையின் மரப் பொம்மைகள்' (1963) என்ற கதையில், இடம்பெறும் ஒரு குடிசனமதிப்பாளர், தான் செவ்வி காணும் பெண்ணான நளினியிடம், குடிசன மதிப்பீடு'உண்மையுடன் தொடர்புற்றது என்று கூறுகின்றார். பிரஜைகளின் வாழ்வு பற்றிய விபரங்களை, அவர்களுடைய குடியியல் அந்தஸ்து, தொழில்கள், வயது, பெற்றோர் என்ற நிலை, உள்நாட்டுப் பயணப் பாங்குகள் முதலியன பற்றி அரசாங்கம் அறிய வேண்டியுள்ளது. ஆனால், குறிப்பாக, கேரளத்தில் கிராமமொன்றில் வாழும் இந்த ஏழைப் பெண்ணின் வாழ்வைப்
96 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

பார்க்கையில் உண்மை எது? இங்குதான், பெண்களைப் பிரத்தியேகமான வழிகளில் பாகுபாடு செய்யும், காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் தந்தைவழி முறையின் செல்வாக்கிற்குட்பட்டு, தொழிற் பிரிப்பைப் பாலடிப்படையிலும் அன்றாட வாழ்வின் வகிபாகங்களை ஆண், பெண் அடிப்படையிலும் உள்ளடக்கும் குடிசன மதிப்பீட்டுப்
படிவமானது, சம்பந்தப்பட்ட பெண்ணைப் பொறுத்தளவில் மேலும் 'உண்மை
யானதான மற்றுமொரு யதார்த்தத்துடன் மோதுகின்றது. கரூரின் சிறுகதையில் குடிசன மதிப்பீட்டாளருக்கும் நளினிக்குமிடையில் நிகழும் உயிர்த் துடிப்பான, கூர்மதிமிக்க, காரசாரமான உரையாடலின் மூலம் இந்த முறைகேட்டை, நாசூக்கான கேலியுடன் கலந்து, மிகத் தெளிவாக அவர் எடுத்துக் காட்டுகிறார்” இது, உள்ளூர்ப்
பின்னணியில், ரொபேர்ட் குரூஸினால் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.
56irgi Pravada, Vol. 7 No. 3
ܝܠ
தளபதியின் சொத்து (ஏரியல் ஷரோனுக்கு)
தளபதியின் மேசையில் ஒரு பூச்சாடி
அந்தச் சாடியில் ஐந்து ரோஜாப் பூக்கள் |
தளபதியின் டாங்கிக்கு ஐந்து வாய்கள் அந்த டாங்கியின் கீழே ஒரு ஐந்து வயதுச் சிறுவன் ஒரு ரோஜாப் பூ
ஒரு சிறுவனும் ஐந்து நட்சத்திரங்களும் தளபதியின் தோளுக்கு அலங்காரம் அவரது பூச்சாடியில் ஐந்து சிறுவர்களும் ஒரு ரோஜாவும் அவரது டாங்கியின் கீழ் ஐந்து சிறுவர்களும் ஐந்து ரோஜாப் பூக்களும்
அந்த டாங்கிக்கு எண்ணற்ற வாய்கள்
சமீஹ் அல் காசிம்
(பலஸ்தீனக் கவிதைகள் நூலில் இலிருந்து)
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002
97

Page 52
98
ܐ݇
dia saat Tai, பெண்ணியலாளர்களின் கண்ணோட்டம்
பதிப்பாசிரியர் மோகனா பிரபாகரன்
விலை ரூபா. 300
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002
 

முடிவற்ற நீதியின் அட்சரகணிதம்
g2/25/2545.46A7A
உலக வர்த்தக நிலையத்தின் மீதும் பென்ரகன் மீதும் செப்ரம்பர் 1ம் திகதி இடம் பெற்ற மனச்சாட்சிக்கு விரோதமான தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்கச் செய்தி அறிவிப்பாளர் ஒருவர் “நல்லதும் தீயதும் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதுபோல் மிக அருந்தலாகவே தம்மை இவ்வாறு துல்லியமாக வெளிப்படுத்திக்கொள்கின்றன. நாம் முன்னர் அறியாத மக்கள், நாம் அறிந்த மக்களைப் படுகொலை செய்தனர். வன்மம் மிகுந்த மகிழ்வுடன் அதை அவர்கள் செய்தனர்”. இவ்வாறு கூறிய அவர் மனம் உடைந்து தேம்பத் தொடங்கினார்.
இங்கே ஒரு விடயத்தை நாம் தெரிந்து கொள்கிறோம். அமெரிக்கா தான் அறியாத மக்களோடு யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இவர்களை ஏன் அது அறியாது எனில், அவர்கள் தொலைக்காட்சியில் தோன்றுவதில்லை. எதிரியின் தன்மையைத் தெரிந்து கொள்வதற்கு முன்னர், அமெரிக்க அரசாங்கம் அவசர அவசரமாக அசெளகரியத்தை ஏற்படுத்தும் வாய்வீச்சின் மத்தியில், பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேசக் கூட்டணியை உருவாக்கி, தனது இராணுவம், விமானப்படை, கடற்படை, ஊடகங்கள் அனைத்தையும் திரட்டி யுத்தத்திற்குச் சித்தங்கொண்டது.
அமெரிக்கா யுத்தமொன்றுக்குச் செல்லும் பட்சத்தில் அந்த யுத்தத்தில் ஈடுபடாமல் அதனால் திரும்பமுடியாதென்பதே இங்கு பிரச்சினைக்குரிய விஷயமாகும். அது எதிரியை இனங்காணாத நிலையில், கோபமுற்றிருக்கும் தமது நாட்டு மக்களின் திருப்திக்காக ஒரு எதிரியை உற்பத்தி செய்கிறது. போர் ஒருக்கால் தொடங்கிவிட்டால், அது தனக்கே உரிய இயங்கு சக்தியையும், தருக்கத்தையும், நியாயங்களையும் உருவாக்கிக் கொள்ளும்போது, நாம் ஏன் இந்த யுத்தம் நடைபெறுகிறது என்பதையே முதலில் மறந்து விடுகிறோம். உலகின் மிக வலிமைமிக்க நாடு, தன்னிச்சையாகவும் கோபத்தோடும், பழைய இயல்பூக்கத்தின் வயப்பட்டு புதியவகை யுத்தத்தில் ஈடுபடும் காட்சியையே நாம் இங்கு காண்கிறோம்.
திடீரென அமெரிக்கா தன்னையே பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்படும் போது அதன் பெரிய யுத்தக் கப்பல்களும், குரூஸ் ஏவுகணைகளும், F16 விமானங்களும் எதற்கும் உதவாத பழமையானவையாகப் போய்விடுகின்றன.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 99

Page 53
அமெரிக்காவின் பயங்கரமான அணு ஆயுதக் களஞ்சியத்திற்கு அதற்கான எடைக்குரிய பெறுமதிகூட அற்றுப் போய்விடுகிறது. புதிய நூற்றாண்டின் யுத்தங்கள் சிறு வெட்டுக்கத்திகள், பேனாக்கத்திகள், வஞ்சினம் ஆகியவை கொண்டே செய்யப்படவுள்ளன. இங்கு வன்மமே பயங்கர ஆயுதம். அது சுங்கப்பகுதியால் கவனிக்கப்படாமல் நழுவிச் செல்கிறது. மூட்டை முடிச்சுப் பரிசோதனைகளின் போதும் அது தன்னைக் காட்டிக் கொள்வதில்லை.
அமெரிக்கா யாரோடு போரிடுகிறது? விமானக் கடத்தல்காரர்கள் யார் என்பது பற்றி தமக்குச் சந்தேகங்கள் உள்ளதாகச் செப்ரம்பர் 20 ம் திகதி எஃப். பி.ஐ. தெரிவித்தது. அதே நாளில் ஜனாதிபதி புஷ், விமானக் கடத்தல்காரர் யார் என்றும், அவர்களுக்கு உதவும் அரசுகள் எவையென்றும் தனக்குத்தெரியும் எனத் தெரிவித்தார். எஃப்.பி.ஐ க்கும் அமெரிக்க மக்களுக்கும் தெரிந்ததைவிட ஜனாதிபதிக்கு அதிகமாகத் தெரிந்திருக்கிறது என்பதை இது காட்டுவதுபோல் தோன்றுகிறது.
எதிரி
செப்ரெம்பர் 20ம் திகதி காங்கிரஸில் நிகழ்த்திய உரையின் போது அமெரிக்காவின் எதிரிகள் சுதந்திரத்தின் எதிரிகள் என்றும், அவர்கள் ஏன் எங்களை வெறுக்கிறார்கள் என்று அமெரிக்கர்கள் கேட்பதாகவும் புஷ் கூறினார். அவர்கள் எங்களது சுதந்திரங்களை, அதாவது மத சுதந்திரத்தை, பேச்சுச் சுதந்திரத்தை, வாக்களிக்கும் சுதந்திரத்தை, கூட்டங் கூடுவதற்கும் ஒருவரோடு ஒருவர் கருத்து முரண்பாடு கொள்வதற்கும் உரிய சுதந்திரத்தை வெறுக்கிறார்கள் என்று மேலும் கூறினார். இதன் மூலம் மக்கள் இரண்டு வகையான நம்பிக்கைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனக் கேட்கப்படுகின்றனர். முதலாவது, எதிரி யார் என அமெரிக்க அரசு கூறுகிறதோ, அதையே எந்தவித ஆதாரங்கள் இல்லாத போதும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவது, எதிரிகள் என்ன நோக்கத்தைக் கொண்டவ ர்களாக இருக்கின்றனர் என அமெரிக்க அரசு கூறுகின்றதோ அதையே மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு ஆதாரமாகவும் எந்தச் சான்றும் இருக்கவேண்டியதில்லை.
தந்திரோபாய, இராணுவ மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காகச் சுதந்திரம், ஜனநாயகம், அமெரிக்க வாழ்க்கை முறை ஆகியவற்றுக்கான தமது அர்ப்பணம் யாவும் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருப்பதாக மக்களை நம்பச் செய்யவேண்டிய தேவை அமெரிக்க அரசாங்கத்திற்கு உள்ளது. துன்பமும் ஆவேச மும் அமெரிக்காவில் நிலவும் இன்றைச் சூழலில் இது சாத்தியமான ஒன்றே.
100 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

அமெரிக்காவின் இக்கருத்து உண்மையே எனில் அமெரிக்காவின் பொருளாதார, இராணுவ ஆதிக்கத்தின் குறியீடாகவுள்ள உலகவர்த்தக நிலையம், பென்ரகன் ஆகியன ஏன் தாக்குதல் இலக்குகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன? ஏன் சுதந்திரச் சிலை தாக்கப்படவில்லை? ஏனெனில், அத்துமீறிய ஆத்திரத்தின் வயப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கான ஆணிவேர் அமெரிக்காவின் சுதந்திரத்திலும் ஜனநாயகத்திலும் இருந்துவந்ததல்ல. மாறாக அமெரிக்க அரசாங்கம் இவற்றுக்கு முற்றிலும் எதிரானவற்றுக்குத் தந்த ஆதரவே இதற்குக் காரணமாக அமைந்தது. அமெரிக்காவுக்கு வெளியே, இராணுவ பொருளாதார பயங்கரவாதத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது. கிளர்ச்சி, ராணுவ சர்வாதிகாரம், சமயக் கட்டுப்பெட்டித்தனம், கற்பனை பண்ண முடியாத மனிதப் படுகொலைகள் ஆகியவற்றுக்கும் ஆதரவளிக்கிறது. அண்மையில் இழப்புகளைச் சந்தித்ததன் பின், கண்ணிர் நிறைந்த கண்களுடனும், துயரத்துடனும் உலகைப் பார்க்கின்ற சாதாரண அமெரிக்க குடிமக்களுக்கு சர்வதேச சமூகம் பாராமுகமாக இருப்பதாகத் தோன்றக் கூடும். எனினும் இது உதாசீனம் அல்ல. இது ஒரு சகுனம் தான். ஒரு ஆச்சரியமின்மை, வெளியே நிகழ்பவையெல்லாம் இறுதியில் உள்ளேயும் நிகழும் என்பதை உணரும் களைத்த ஞானம். தாங்கள் வெறுக்கப்படவில்லை, தங்களுடைய அரசாங்கத்தின் கொள்கைகளே வெறுக்கப்படுகின்றன என்பதையே அமெரிக்க மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அமெரிக்க மக்களுக்கு அது தாங்கள் தான் என்ற சந்தேகம் எழத்தேவையில்லை. அவர்களது மேலான இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், பிரமிக்கத்தக்க விளையாட்டு வீரர்கள், அவர்களது சினிமா ஆகியவை சர்வதேச ரீதியாக வரவேற்கப்படுபவை. தாக்குதல் நடந்த நாட்களைத் தொடர்ந்து அவர்களது தீயணைக்கும் படைவீரர்கள், L ட்புப் பணியாளர்கள், சாதாரண அலுவலக உத்தியோகத்தர்கள் காட்டிய துணிவும் கச்சிதமும் எம் அனைவரது இதயங்களையும் தொட்டவையாகும்.
அன்று நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தால் அமெரிக்கா அடைந்த துயர் பெரிது. அது முற்றிலும் வெளிப்படையானது. இத்துயரத்தை அது ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் என எதிர்பார்ப்பது இங்கிதமற்றதே. ஆயினும் இதனை ஒரு வாய்ப்பாகப் பாவித்து செப்ரெம்பர் 11 சம்பவங்கள் ஏன் நிகழ்ந்தன என்பதை அறிந்துகொள்வதற்குப்பதிலாக அமெரிக்கா இதை முழு உலகிற்குமான துயரமாகக் கிளப்பிவிட்டு தங்களுடைய பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலை பரிதாபத்துக்குரியது. ஏனெனில், இது எஞ்சியிருப்பவர்களான எங்களைக் கடுமையான கேள்விகளைக் கேட்பதற்கும், கடுமையான சிலவற்றைச்
tiyanasib - gawsart - goei 2002 101

Page 54
சொல்வதற்கும் இடமளித்துவிடும். எங்களுடைய வேதனைகள், எங்களுடைய கெட்ட காலம் காரணமாக நாங்கள் வெறுக்கப்பட்டு, உதாசீனப்படுத்தப்பட்டுக் கடைசியில்
மெளனிகளாக்கப்படுவோம்.
அந்தக் குறிப்பிட்ட விமானக் கடத்தல்காரர்கள் அவ்வாறு அந்தக் குறிப்பிட்ட சில கட்டடங்களை நோக்கி விமானங்களைச் செலுத்தவைத்த நோக்கம் என்ன என்பதை உலகம் அநேகமாக ஒருபோதும் தெரிந்துகொள்ளப் போவதில்லை. அவர்கள் பெருமைக்காக சாகசம் செய்தவர்களல்ல. அவர்கள் தற்கொலைக்கான குறிப்புகளையோ, அரசியல் தகவல்களையோ விட்டுச் செல்லவில்லை. எந்த அமைப்பும் தாக்குதலுக்கு உரிமை கோரவில்லை. எங்களுக்குத் தெரிவதெல்லாம், சாதாரண மனித சுபாவத்தில் உள்ள வாழ வேண்டும், நினைவுகூரப்பட வேண்டும் என்ற ஆசையை மிஞ்சிநிற்கும் எதையோ ஒன்றைத் தாங்கள் செய்வதாக அவர்கள் நம்பினர் என்பதே. அவர்களை உலுக்கிய கோபாவேசத்தின் பேரளவு அவர்கள் மேற்கொண்ட செயலை விடச் சிறியதான எதனோடும் ஒப்பிடப்படக்கூடாது. அவர்களின் செயல் நாம் அறிந்த உலகைத் தகர்த்து அதில் ஓர் துளையைப் போட்டுள்ளது. இது பற்றிய சரியான தகவல்கள் இல்லாதவரை அரசியல் வாதிகளும், விமர்சகர்களும் என்னைப்போன்ற எழுத்தாளர்களும் தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்கு அமைய இதனை வியாக்கியானப்படுத்தும் செயலிலும் யூகங்களிலும் ஈடுபடுவர். தாக்குதல்கள் நடைபெற்ற அரசியல் சூழல் பற்றிய இந்த யூகங்கள், இந்தப் பகுப்பாய்வுகள் மட்டுமே இதிலுள்ள நல்ல அம்சமாகும்.
ஆனால், யுத்தம் அச்சுறுத்தும் அளவு பெரிதாகிக் கொண்டு வருகின்றது. என்ன சொல்லப்பட வேண்டியுள்ளதோ அது சீக்கிரமாகச் சொல்லப்பட்டே ஆக வேண்டும். அமெரிக்கா தன்னைப் பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேசக் கூட்டணியின் முதன்மையாளராக நிறுவுவதற்குமுன், அது எல்லா நாடுகளையும் முடிவற்ற நீதிக்கான போர் என்னும் தனது கடவுள் போன்ற செயற்பாட்டில் பங்குபற்றுமாறு அழைப்பதற்குமுன் (கட்டாயப்படுத்துவதற்கு முன்), அமெரிக்காவின் முடிவற்ற நீதிக்கான போர் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு அவதூறு விளைவிக்கும் என்றும், அவர்களின் நம்பிக்கைப்படி அல்லாவால் மட்டுமே அத்தகைய முடிவற்ற நீதி வழங்கப்பட முடியுமென்றும் சுட்டிக்காட்டி, அதற்கு நிலைத்து நிற்கும் சுதந்திரத்திற்கான போர் என்று மறுபெயர் சூட்டப்படும் வரை சில விடயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்வது உதவியாக இருக்கும், உதாரணமாக, முடிவற்ற நீதி அல்லது நிலைத்து நிற்கும் சுதந்திரம் யாருக்காக? அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த யுத்தம் அமெரிக்காவுக்கு
102 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

உள்ளிருக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரானதா? அல்லது பொதுவாகப் பயங்கரவாதத்திற்கு எதிரானதா? உண்மையில் இங்கே எதன்பொருட்டுப் பழிவாங்கப்படுகிறது? 7000 மக்களின் துன்பகரமான இழப்புக்கா? மன்ஹற்றணில் உள்ள ஐந்து மில்லியன் சதுர அடி அலுவலக நிலப்பரப்பின் அழிவுக்கா? பென்ரகனின் ஒரு பகுதியின் அழிவுக்கா? லட்சக்கணக்கான உத்தியோகங்களின் இழப்புக்கா? சில விமானக் கம்பனிகள் வங்குறோத்து நிலைக்குத் தள்ளப்பட்டமைக்கா? அல்லது நியுயோர்க் பங்குச்சந்தையின் வீழ்ச்சிக்கா அல்லது இவற்றைவிட மேலானவற்றுக்கா? 1996ல் அமெரிக்க அரசின் செயலாளராயிருந்த மடலெயின் ஆல்பிறைற்றைத் தேசிய தொலைக்காட்சி பேட்டி கண்ட போது, அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையினால் 500,000 ஈராக் நாட்டுப்பிள்ளைகள் இறந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு இது மிகவும் கடினமான தெரிவாக இருந்தது. ஆயினும், சகலவற்றையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இந்த விலை பெறுமதியானதே எனக் கூறினார். இவ்வாறு கூறியமைக்காக அவர் தனது வேலையை இழக்கவில்லை. அவர் அமெரிக்க அரசாங்கத்தின் நோக்கங்களையும் அபிலாசைகளையும் பிரச்சாரம் செய்தவாறு உலகெங்கும் தொடர்ச்சியாகச் சுற்றுப்பயணம் செய்தார். ஈராக்கிற்கு எதிரான பொருளாதாரத் தடை இன்னும் தொடர்கிறது. சிறுவர்கள் தொடர்ந்தும் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வேறுபாடுகள்
இங்கு நமக்கு ஒன்று தெரிகிறது. கலாசராத்திற்கும், காட்டுமிராண்டித் தனத்திற்கும் இடையிலான தெளிவற்ற வித்தியாசம். அல்லது அப்பாவி மக்களின் படுகொலைக்கும் அல்லது நீங்கள் விரும்பினால் நாகரீகத்தின் மோதல்களுக்கும் மேலதிகச் சேதத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம். ஏமாற்றுத்தனமான, படு பாரபட்சமான அமெரிக்காவின் முடிவற்ற நீதியின் அட்சரகணிதம் இது. உலகத்தை நல்ல நிலைக்கு ஆற்றுப்படுத்த எத்தனை ஈராக்கியர் இறக்க வேண்டும்? இறந்துபோன ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் எத்தனை ஆப்கானியர் இறக்க வேண்டும்? ஒவ்வொரு இறந்த மனிதனுக்கும் எத்தனை பெண்கள், பிள்ளைகள் இறக்க வேண்டும். இறந்த ஒவ்வொரு முதலீட்டு வங்கியாளனுக்கும் எத்தனை முஜாகிதீன்கள் இறக்க வேண்டும்? உலகெங்கும் விரியும் நிலைத்து நிற்கும் சுதந்திரத்திற்கான யுத்தம் பற்றிய தொலைக்காட்சியைப் பார்க்கும் நாம் அப்படியே ஸ்தம்பித்துப் போகிறோம். செம்ரம்பர் 11 தாக்குதலுக்குரிய சூத்திரதாரியெனக் கருதப்படும் ஒசாமா பின்லேடனுக்குத் தஞ்சமளித்துள்ள, தலிபான்களால் ஆளப்படும், உலகிலேயே மிக வறிய, மிகமோசமாக யுத்தத்தால் சின்னா
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 103

Page 55
பின்னமாக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மீது உலகின் வல்லரக் கூட்டணி ஏவப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் அடகுப் பொருளாகக் கணிக்கக்கூடியதாக இருப்பது அங்குள்ள குடிமக்களே. (அவர்களுள் ஐந்து லட்சம்பேர் ஊனமுற்ற அநாதைகளாவர். இத்தகையோர் வாழும் போக்குவரத்து வசதிகள் அற்ற பின்தங்கிய கிராமங்களில் செயற்கைக் கால்கள் விமானத்திலிருந்து போடப்படும் போது மக்கள் முண்டியடித்து நெரியுண்டு போவதுபற்றிப் பல கதைகள் உண்டு). ஆப்கானின் பொருளாதாரம் சிதறிப்போயுள்ளது. உண்மையில், ஆப்கானிஸ்தானைக் கைப்பற்ற முன்னேறும் ராணுவத்திற்கு உள்ள பிரச்சினை, அதன் ராணுவ வரைபடத்தில் இதுதான் ஆப்கானிஸ்தான் எனக் கூறுவதற்கான அடையாளப் பலகைகள், இணைப்புகள் எதுவும் அங்கே இல்லை என்பதுதான். பெரிய நகரங்களோ, நெடுஞ்சாலைகளோ, கைத்தொழிற் பேட்டைகளோ, நீர் சுத்திகரிக்கும் நிலையங்களோ அங்கு இல்லை. பண்ணைகள் எல்லாம் பெரும் புதைகுழிகளாக மாற்றப்பட்டுள்ளன. நாட்டுப் புறமனைத்தும் கண்ணிவெடிகளால் நிரப்பப்பட்டுள்ளன. அண்மைக்கால மதிப்பீட்டின்படி 10 மில்லியன் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. முதலில் அமெரிக்க ராணுவம் இவற்றை அப்புறப்படுத்திவிட்டு வீதிகளை அமைத்த பின்னரே தனது ராணுவ வீரர்களை உள்ளே அனுப்ப முடியும். அமெரிக்காவிடமிருந்து வரவிருக்கும் தாக்குதலுக்கு அஞ்சி, லட்சக்கணக்கான மக்கள் வீடுகளைவிட்டு இடம்பெயர்ந்து பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் உள்ள எல்லைகளில் வந்து குவிந்துள்ளனர். ஐ.நா. சபையின் கணிப்பின்படி, 80 லட்சம் ஆப்கான் பிரஜைகள் அவசர உதவி அளிக்கப்படவேண்டிய நிலையில் உள்ளனர். விநிநோகிப்பதற்கான பொருட்கள் தீர்ந்துவிட்டதால், உணவும் உதவியும் வழங்கும் முகவர் நிலையங்கள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமெனப் பணிக்கப் பட்டுள்ளனர். பி.பி.சியின் அறிக்கையின் படி மிகவும் மோசமான மனிதநலப் பேரழிவுகள் அண்மைக் காலத்தில் தலைவிரித்தாடத் தொடங்கியிருக்கின்றன. புதிய நூற்றாண்டின் முடிவுற்ற நீதியைத் தரிசிக்கின்றன. குடிமக்கள் கொல்லப்படுவதற்காகக் காத்திருக்கையில் பசியினால் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானை கற்காலத்திற்கு இட்டுச் செல்லும் குண்டுவீச்சுக்கள் குறித்து அமெரிக்காவில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆப்கான் ஏற்கனவே கற்காலத்திலே தான் இருக்கிறது என்ற செய்தியை யாராவது தயவு செய்து அமெரிக்காவுக்குச் சொல்லுங்கள். மனம் தேறுதல் அடைய விரும்பினால், ஆப்கானிஸ்தானை இந்த நிலைக்குத் தள்ளியதில் அமெரிக்காவுக்குப் பெரும்
104 tres Tabib - gorwearf - gecir 2002

பங்குண்டு என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அமெரிக்க மக்களுக்கு ஒருவேளை ஆப்கானிஸ்தான் எங்கே இருக்கிறது என்பது பற்றித் தடுமாற்றம் இருக்கலாம். (ஆப்கானிஸ்தான் வரைபடத்தைப் பெறுவதற்கான போட்டி நிலவுவதாகச் செய்திகள் கூறுகின்றன). ஆனால், அமெரிக்க அரசும் ஆப்கானிஸ்தானும் பழைய நண்பர்கள்.
1979ல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த பிறகு, சி.ஐ.ஏ யும் பாகிஸ்தானின் ஐ. எஸ்.ஐயும் (Inter Service Intelligence)சேர்ந்து சி.ஐ.ஏயின் வரலாற்றிலேயே மிகப்பெரிய மறைவான யுத்த நடவடிக்கையில் ஈடுபட்டன. ஆப்கானிஸ்தான் மக்களின் எதிர்ப்பு உணர்வலைகளை சோவியத் யூனியனுக்கு எதிரான புனிதப் போராக (ஜிஹாத்) மாற்றுவதும், அதன் மூலம் சோவியத் யூனியனைப் பலவீனப்படுத்துவதுமே சி.ஐ. ஏயின் நோக்கமாக இருந்தது. யுத்தம் தொடங்கியதும் அது சோவியத் யூனியனின் வியட்னாமாக மாறியது. அதையும் விட இன்னும் பெரிய வடிவத்தை எடுத்தது. பல வருடங்களுக்கு மேலாக சி.ஐ.ஏயினதும் ஐ. எஸ்.ஐ யினதும் நிதி வழங்கலில், ஒரு லட்சம் வரையிலான கிளர்ச்சிக்கார முஜாகிதீன்கள், 40 முஸ்லிம் நாடுகளிலிருந்து அமெரிக்காவின் நலனுக்கான யுத்தத்திற்குத் திரட்டப்பட்டனர். அடிமட்ட முஜாகிதீன்களுக்கு தாங்கள் சாம் மாமாவுக்காகவே (Uncle Sam - அமெரிக்காவுக்காகவே) ஜிகாத் புனிதப் போரில் ஈடுபட்டுள்ளோம் என்பது தெரியாது. (தனக்கெதிரான எதிர்கால யுத்தம் ஒன்றிற்கு தானே நிதி வழங்குகிறேன் என்பதை அமெரிக்காவும் அவர்களைப்போல் அறிந்திருக்கவில்லை என்பதே இதன் பிறிதொரு முரண் நகையாகும்).
1989ல் ஒய்வொழிச்சலற்ற 10 வருட இரத்தக்களரிக்குப் பின்னர், ஒரு நாகரிகம் சின்னா பின்னப்படுத்தப்பட்ட நிலையில் சோவியத் யூனியன் அங்கிருந்து வாபஸ் பெற்றது.
உள்நாட்டுப் போர் ஆப்கானில் பற்றியெரிந்தது. செச்சினியாவுக்கு ஜிகாத் பரவியது. பின்னர் கோசோவாவுக்கும் அதன் பின்னர் காஷ்மீருக்கும் படிப்படியாகப் பரவியது. சிஐஏ. பணத்தையும் ராணுவத் தளபாடங்களையும் அள்ளி இறைத்துக் கொண்டிருந்தது. ஆயினும் செலவினம் அபரிமிதமாக அதிகரித்ததால் மேலதிக பணம் தேவைப்பட்டது. முஜாகிதீன்கள் விவசாயிகளுக்குப் புரட்சிகர வரியாக அபினியைப் பயிரிடும்படி கட்டளையிட்டனர். எஸ்.ஐ.எஸ் ஆப்கானிஸ்தான் எங்கும் நூற்றுக்கணக்கான ஹெரோயின் போதைவஸ்து உற்பத்தி நிலையங்களை நிறுவியது.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 105

Page 56
சி.ஐ.ஏ நுழைந்து இரண்டு வருடங்களுக்குள், உலகத்திலேயே மாபெரும் ஹெரோயின் (போதைவஸ்து)உற்பத்திநிலையமாகப் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லைப்பிரதேசம் மாறிற்று. அமெரிக்கத் தெருக்களில் கிடைக்கும் பெருந்தொகையான ஹெரோயின் இங்கிருந்தே வந்தது. இதன் விற்பனை மூலம் ஆண்டொன்றுக்கு 100 மில்லியன் முதல் 200 மில்லியன் டொலர்வரை லாபம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இப்பணம் முழுவதும் கிளர்ச்சிக்காரர்களுக்குப் பயிற்சியும் ஆயுதமும் வழங்கப் பாவிக்கப்பட்டது. 1995ல் அதுவரை சிறு குழுவினராகவும் ஆபத்தான அடிப்படைவாதிகளாகவும் இருந்த தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் போரிட்டனர். அந்த அமைப்புக்கு, சி.ஐ.ஏயின் பழைய கூட்டாளியான ஐ.எஸ்.ஐ. நிதி வழங்கியது. பாகிஸ்தானின் அநேக அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கின. தலிபான்கள் பயங்கர ஆட்சியைக் கட்டவிழ்த்துவிட்டனர். அதனுடைய முதல் பலிக்கடாக்களாக மாறியவர்கள் அவர்களின் சொந்த மக்கள், குறிப்பாகப் பெண்கள் ஆவர். பெண்கள் பாடசாலைகள் அனைத்தையும் மூடி, அரசாங்க வேலைகளில் இருந்த பெண்களைப் பதவியிலிருந்து விலக்கியதோடு ஷரியா சட்டங்களையும் அமுல்படுத்தினர். அதன்படி ஒழுக்கம் தவறியவர்கள் என்று கருதப்பட்ட பெண்கள் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டனர். பிற ஆண்களோடு தொடர்பு வைத்திருந்த விதவைப் பெண்கள் உயிரோடு புதைக்கப்பட்டனர். தலிபான் அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை யுத்தத்தினாலோ, அல்லது மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதனாலோ சரிப்படுத்த முடியாது.
கடைசியாக அது நடந்துவிட்டது. ஆப்கானிஸ்தானை மீண்டும் அழிப்பதற்கு ரஷ்யாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்துள்ளது போன்ற ஒரு முரண்நகை வேறெதுவும் இருக்குமா? அழிந்ததை அழிக்க முடியும்ா என்பதுதான் நமது கேள்வி? ஆப்கான் மீது கொட்டப்படும் குண்டுகள் ஏற்கனவே சிதைந்தவற்றை சிதறடிக்கவும் பழைய கல்லறைகளைச் சிதைக்கவும், செத்துப் போனவர்களின் நிம்மதியைக் குழப்பவுமே உதவப்போகின்றன.
தரிசு நிலமான ஆப்கானிஸ்தான் சோவியத் கம்யூனிசத்தின் புதை குழியாகவும், அமெரிக்காவின் ஆதிக்கத்திற்குட்பட்ட ஒருமுகப்படுத்தப்பட்ட உலகத்தின் தொடக்கப்புள்ளியாகவும் அமைந்தது. அமெரிக்க ஆதிக்கத்திற்குட்பட்ட நவ முதலாளித்துவத்திற்கும் பூகோளமயமாக்கலுக்கும் அதுவே வழியமைத்தது. இன்று ஆப்கானிஸ்தானே இந்த யுத்தத்தில் அமெரிக்காவுக்காகப் போராடி வெற்றியை ஈட்டிக்கொடுக்கும் அமெரிக்க ராணுவ வீரர்களின் புதைகுழியாகவும் மாறுவதற்கு தயாராக இருக்கிறது.
1896 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

பாகிஸ்தான்
அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய சகாவின் நிலை என்ன? பாகிஸ்தானும் பெரியளவில் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த நாட்டில் ஜனநாயகம் என்னும் கருத்து வேரூன்றுவதற்கு இடங்கொடாத ராணுவச் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவு அளிப்பதற்கு அமெரிக்க அரசு வெட்கப்படவில்லை. சி.ஐ.ஏ. பாகிஸ்தானுக்கு வருகை தருவதற்கு முன்னர் அங்கு கிராமங்களில் அபினிக்கு சிறிதளவு சந்தை இருந்தது. ஆனால், 1979க்கும் 1985க்கும் இடைப்பட்ட காலத்தில் அங்கு ஹெரோயினுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியத்திலிருந்து 1.5 மில்லியனாக உயர்ந்தது. செப்ரெம்பர் 11 க்கு முன்னரே 3 மில்லியன் ஆப்கான் அகதிகள் பாகிஸ்தான் எல்லையோரமாக இதற்கெனப் போட்ட கூடாரங்களில் வாழ்ந்து வந்தனர். பாகிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ந்து கொண்டிருக்கிறது. குழுக்களுக்கிடையிலான வன்முறை, பூகோளமயமாக்கலின் அமைப்பு மறுசீராக்கத் திட்டம், போதைவஸ்துப் பிரபுக்கள் யாவும் சேர்ந்து நாட்டைச் சின்னாபின்னப்படுத்திக் கொண்டிருக்கின்றன. சோவியத்திற்கு எதிராகப் போரிடுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் நாடுபூராகவும் பிடாரனின் பற்களாய் விதைக்கப்பட, அவை பாகிஸ்தானுக்குள்ளேயே ஏகோபித்த மக்கள் ஆதரவோடு அடிப்படைவாதிகளை உற்பத்தி செய்யும் நிலையங்களாக மாறியுள்ளன. பாகிஸ்தான் அரசாங்கத்தால் ஆதரவும் நிதியும் வழங்கப்பட்டு பலவருடங்களாகப் போஷிக்கப்பட்டு வந்த தலிபான், பாகிஸ்தானின் அரசியல் கட்சிகளோடு தந்திரோபாய, பொருளாதார கூட்டிணைவை வைத்திருக்கிறது.
பாகிஸ்தான் தனது பின்தோட்டத்தில் தன் கையணைப்பில் கனகாலமாக வளர்த்த செல்லப்பிராணிகளை கழுத்தை நெரித்துக் கொல்லும்படி இப்பொழுது அமெரிக்கா கேட்கிறது. அமெரிக்காவுக்கு ஆதரவு தருவதாக வாக்குக் கொடுத்திருக்கும் ஜனாதிபதி முஷாராவ், உள்நாட்டுப் போர் போன்ற ஒன்றுக்கு இலக்காகும் நிலையில் இருக்கிறார். இத்தகைய ஒரு சூதாட்டத்திலிருந்து இந்தியா, தனது புவியியல் ரீதியான வடிவமைப்பினாலும் தனது முந்திய தலைவர்களது தரிசனத்தினாலும் இதுவரை அதிர்ஷ்டவசமாகத் தப்பியுள்ளது. இதற்குள் அதுவும் இழுக்கப்பட்டிருந்தால், எங்களுடையய ஜனநாயகம் இன்றிருக்கிற நிலையில் தப்பித்திருக்க மாட்டாது. இன்று இந்திய அரசாங்கம் மிக மூர்க்கத்தனமான நிலையில் பாகிஸ்தானில் தளங்களை அமைப்பதை விட, தனது நாட்டில் அமைக்குமாறு அமெரிக்காவிடம் இடுப்பு வளைத்து இரந்து கேட்டு நிற்பதை நம்மில் சிலர் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 107

Page 57
பாகிஸ்தானின் கேவலமான விதியைத் தெரிந்துகொண்ட இந்தியா இவ்வாறு கோருவது அசெளகரியம் தருவதென்பதைவிட, நினைத்துப்பார்க்கவே முடியாததாகும். ஒரு நொய்மையான பொருளாதாரத்தையும் சிக்கலான சமூக அடித்தளத்தையும் உடைய எந்த ஒரு மூன்றாம் உலகநாடும், அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசை உள்ளே அழைப்பது, ஒரு செங்கல்லை, தனது ஜன்னல் கண்ணாடியூடாக விழவைப்பது போன்றதாகும் என்பதை இதுவரை தெரிந்திருக்க வேண்டும்.
நிலைத்து நிற்கும் சுதந்திரத்திற்கான யுத்தமானது அமெரிக்க வாழ்க்கை முறையை வெளிப்படையாகவே தூக்கிநிறுத்த நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், அது பூரணமாக அதை அழித்தொழிப்பதிலேயே முடிவுறும். இது உலகம் முழுவதும் மிகுந்த கோபத்தையும் மிகுந்த பயங்கரத்தையும் விளைவிப்பதாயிருக்கும். அமெரிக்காவில் வாழும் சாதாரண மக்களைப் பொறுத்தவரை நிச்சயமற்ற துன்பந்தரும் சூழலில் வாழும் ஒரு வாழ்க்கையாகவே இது அமையும். பாடசாலையில் எனது மகன் பாதுகாப்பாக இருப்பானா? நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நச்சு வாய்வு சுரங்கப் பாதையில் இருக்குமா? சினிமாத்தியேட்டரில் குண்டு வெடிக்குமா? இன்று எனது காதலன் வீடு வந்து சேருவானா? மேலும், உயிரியல் ரீதியான யுத்தம் பற்றிய பெரியம்மை, பிளேக், அன்திறாக்ஸ் போன்ற நோய்களைப் பரப்பும் உயிரியல் யுத்தம் பற்றிய எச்சரிக்கை என்பவற்றுக்கு மத்தியில் அவர்கள் வாழ வேண்டியிருக்கும். அணுக்குண்டால் ஒரேயடியாக கூட்டுமொத்தமாக செத்தொழிவதைவிட, இவ்வாறு கொஞ்சப்பேராக பொறுக்கி எடுக்கப்படுதல் மிகக் கொடுமையானதாக இருக்கும்.
அமெரிக்க அரசாங்கமும் சந்தேகமில்லாமல் உலகின் ஏனைய அரசாங்கங்களும் இந்த யுத்த சூழலைப் பயன்படுத்தி, மக்களின் சுதந்திரங்களைக் கட்டுப்படுத்தலாம். பேச்சுச் சுதந்திரத்தடை, தொழிலாளரை வேலையிலிருந்து நிறுத்துதல், சிறுபான்மைச் சமயத்தவர், இனத்தவர் துன்புறுத்தப்படுதல், பொதுமக்களுக்கான செலவினங்கள் வெட்டப்பட்டு, அதில் தேறும் முதல் பாதுகாப்பு ராணுவச் செலவு போன்றவைக்குப் பாவிக்கப்படுதல் இடம்பெறலாம். என்ன நோக்கத்துக்காக? ஞானிகளால் நாட்டை நிறைப்பதை விட தீவினையாற்றுவோரை இல்லாதொழிப்பது ஜனாதிபதி புஷ்ஷினால் முடியாத காரியம். அமெரிக்க அரசாங்கம் அதிக அடக்கு முறையாலும் வன்முறையாலும் பயங்கரவாதத்தை இல்லாமல் செய்ய முடியும் என்ற எண்ணத்தோடு விளையாடுவது அபத்தமாகும். பயங்கரவாதம் நோயல்ல, நோயின் அறிகுறி. பயங்கரவாதத்திற்கு ஒரு நாடு இல்லை. கோக், பெப்சி, நைக் போன்றவை எவ்வாறு உலகம் பூராவும் வியாபார வியாபிப்பை
108 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

உடையனவாய் மாறிக்கொண்டிருக்கின்றனவோ அவ்வாறே பயங்கரவாதமும் ஒரு பல்தேசிய பூகோள தொழில் முயற்சியாகும். எங்கே இடர் தரும் சிக்கல்கள் ஏற்படுகிறதோ அங்கிருந்து பயங்கரவாதிகள் தமது தொழிற்சாலையை அப்புறப்படுத்தி, தமது வியாபாரத்திற்கு நல்ல லாபம் தேடி நாட்டுக்கு நாடு நகர்த்துகின்றனர். இன்றைய பல்தேசியக் கொம்பணிகளின் செலவை ஒத்ததே இது.
பிழைத்துப் போன உலகு
பயங்கரவாதம் என்னும் தோற்றப்பாடு ஒருபோதும் அகன்றுவிடாது இருக்கலாம். ஆனால், அதைக் கட்டுப்படுத்த அமெரிக்கா விரும்பும் பட்சத்தில், இந்தப்பூமியில் ஏனைய நாடுகள் போல் தானும் ஒன்றென்றும், ஏனைய மனிதர்களும் தம்மைப் போன்றவர்கள் - அவர்கள் தொலைக்காட்சியில் தோன்றாவிடினும் - அவர்களும் காதலும் சோகமும் பாடலும் கதைகளும் துயரும் உரிமைகளும் உடையவர்கள் என்றும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளரான டொனால்ட் றம்ஸ் பெல்ட்டிடம் (Donald Rumsbeld) அமெரிக்காவின் இப்புதிய யுத்தத்தில் அதன் வெற்றியை எவ்வாறு பார்ப்பீர்கள் என்ற கேட்ட போது, அமெரிக்கா தமது வாழ்க்கை முறையைத் தொடர்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டால் அது வெற்றியே என்றார்.
செப்ரெம்பர் 11ல் நிகழ்ந்த தாக்குதல் மிக மோசமாகப் பிழைத்துப்போன உலகிலிருந்து வந்த மிருகத்தனமான ஒரு தகவல் அட்டையாகும். அதன் செய்தி பின்லேடனால் எழுதப்பட்டிருக்கலாம் (யாருக்குத் தெரியும்?). அவரது தூதுவர்கள் அதைச் செயற்படுத்தியிருக்கலாம். ஆனால், அது உண்மையில் அமெரிக்காவின் பழைய யுத்தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் ஆவிகளாலேயே ஒப்பம் இடப்பட்டிருக்க வேண்டும். கொரியாவிலும், வியட்நாமிலும், கம்போடியாவிலும் கொல்லப்பட்ட லட்சக்கணக்கானோர், 1982ல் அமெரிக்காவின் ஆதரவோடு இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமித்தபோது கொல்லப்பட்ட 17,500 பேர், பாலைவனப் Ludo u55ößsör GLImg (Operation Desert Strom) Spß5 200.000 FFTITééluff, மேற்குக்கரையை இஸ்ரேல் ஆக்கிரமித்தபோது இஸ்ரேலை எதிர்த்து உயிர் துறந்த ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர், மேலும் கொடுங்கோலர்களினதும், சர்வாதிகாரிகளினதும், பயங்கரவாதிகளினதும் கைகளில் யூக்கோஸ்லேவியா, சோமாலியா, ஹைற்றி, சிலி, நிகராகுவா, எல்சல்வடோர், டொமினிக்கன் குடியரசு, பனமா முதலிய இடங்களில் கொல்லப்பட்ட மில்லியன் கணக்கான மக்களின்
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

Page 58
ஆவிகளாக இருக்கலாம். இவற்றுக்கெல்லாம் அமெரிக்க அரசாங்கம் நிதிவழங்கி, ஆயுதம் வழங்கி பயிற்றுவித்து, ஆதரவளித்து பின்நின்றிருக்கிறது. உண்மையில் இங்கே காட்டப்பட்ட பட்டியல் பூரணமானதல்ல.
இவ்வளவு யுத்தங்களிலும், மோதல்களிலும் சம்பந்தப்பட்ட நாடான அமெரிக்காவில் வாழும் மக்கள் அதிர்ஸ்டசாலிகளே. செம்ரெம்பர் 11ல் நடைபெற்ற தாக்குதல் ஒரு நூற்றாண்டு காலத்தில் அமெரிக்க மண்ணில் இடம்பெற்ற இரண்டாவது தாக்குதலே. முதலாவது தாக்குதல் பேள்ஹாபரில் இடம் பெற்றது. இதற்குரிய பழிவாங்கல் நீண்ட வழியில் தொடர்ந்து இறுதியில் ஹிரோஷிமா, நாகசாகியில் முடிவடைந்தது. இந்த முறை நடந்த தாக்குதலுக்கு என்ன நேரப் போகின்றதோ என்ற பயங்கர எதிர்பார்ப்பில் மூச்சைப்பிடித்தபடி உலகு காத்திருக்கிறது.
உண்மையில் பின்லேடன் என்ற ஒருவர் வாழ்ந்திருக்காவிட்டாலும், அமெரிக்கா அவரை உருவாக்க வேண்டியிருந்திருக்கும் என்று அண்மையில் ஒருவர் சொன்னார். ஆனால் ஒரு விதத்தில் அமெரிக்காதான் அவரை உருவாக்கியது. காரணம் 1979ல் சி.ஐ.ஏ தனது புத்தத்தை ஆப்கானிஸ்தானில் தொடங்கியபோது அப்கானிஸ்தானுக்குள் சென்ற ஜிகாதிகளில் பின்லேடனும் ஒருவராக இருந்தார். சி.ஐ.ஏ ஆல் உருவாக்கப்பட்டு எஃப்.பி. ஐயால் (FB.I) தேடப்படும் பெருமை பின்லேடனுக்கு உண்டு. இரண்டு கிழமைக்குள்ளேயே அவர் சந்தேகப் பேர்வழியென்ற நிலையிலிருந்து, பிரதான சந்தேகப் பேர்வழியாக உயர்த்தப்பட்டார். பின்னர் எந்தவித ஆதாரங்கள் இல்லாதபோதும் உயிருடனோ, பிணமாகவோ வேண்டப்படும் நிலைக்கு ஏற்றப்பட்டார்.
எந்த நிலையிலிருந்து பார்த்தாலும் (நீதிமன்றத்தில் துருவி ஆராயப்படுவதற்குரிய ஆதாரங்களுடன்) பின்லேடனை செப்ரெம்பர் 11 தாக்குதலில் சம்பந்தப்படுத்துவது அசாத்தியம். இதுவரை அவருக்கெதிரான ஆதாரம் காட்டுவதற்கு ஏதாவது கிண்டக்குமானால் அது அவர் செப்ரெம்பர் 11 தாக்குதலைக் கண்டிக்காதது மட்டுமே.
இன்று பின்லேடன் மறைந்திருந்து செயற்படுவதாகக் கொள்ளப்படும் இடத்தையும் செயற்படும் சூழ்நிலையையும் பார்க்கையில், அவர் இத்தாக்குதலை ந்ேரடியாகத் திட்டமிட்டுச் செய்யவில்லை என்பது நிரூபணமாகும். பின்லேடனை வெளியேற்றுமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு தலிபான்கள் அளித்த பதில் ஒருவகையில் நியாயமானதே. அதாவது, ஆதாரங்களைத் தாருங்கள், நாங்கள் அவரைக் கையளிக்கின்றோம். ஜனாதிபதி புஷ்ஷின் பதிலோ இதில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்பதே.
10 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

(தற்போது இவரை வெளியேற்றுவதற்கான பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், 1984ல் போபால் நகரில் நச்சுவாயுக் கசிவை ஏற்படுத்தி 16,000 இந்திய மக்களை கொல்லுவதற்குக் காரணமான யூனியன் கார்பைட் தலைவரான வரன் அன்டர்சனை தமக்குத் தருமாறு இந்தியா வேண்டுதல் விடுக்கமுடியுமா? தேவையான ஆதாரங்களை நாம் திரட்டியுள்ளோம். எல்லாம் கோவையில் உள்ளன. அவரை இங்கு அனுப்பமுடியுமா ? பீளிஸ்)
உண்மையில் யார் இந்த பின்லேடன்? இதை வேறு விதத்தில் கேட்கலாம், ஒசாமா பின்லேடன் என்பது என்ன? அவர்தான் அமெரிக்காவின் குடும்ப ரகசியம். இவரே அமெரிக்க ஜனாதிபதியின் இருண்ட பேயுரு.
அழகானதாகவும், நாகரிகம் மிகுந்ததாகவும் இருப்பதுபோன்ற தன்மையை இந்தக் காட்டுமிராண்டி இரட்டையரில் ஒருவர் காட்டிக்கொள்கிறார். அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையால் வீணடிக்கப்பட்ட உலகின் உதிரி விலா எலும்பிலிருந்து செதுக்கி எடுக்கப்பட்டவர் ஒசாமா. அமெரிக்காவின் துப்பாக்கி முனை ராஜதந்திரத்தால், அதன் அணு ஆயுதக் கிடங்கினால், அதன் அசிங்கமான Աp(Ա) ஆதிக்கக் கொள்கையால், அமெரிக்கப் பிரஜைகளல்லாதவர்களின் உயிர்களையிட்டுக் காட்டும் நெஞ்சை உறைய வைக்கும் அதன் உதாசீனத்தால், அதன் மிலேச்சத்தனமான ராணுவத் தலையீடுகளால், கொடுங்கோலருக்கும் சர்வாதிகாரிகளுக்கும் அது கொடுக்கும் ஆதரவால், வெட்டுக்கிளிகள் மாதிரி ஏழை நாடுகளின் பொருளாதாரத்தை உள்ளரிக்கும் அதன் இரக்கமற்ற பொருளாதாரத் திட்டங்களால், நாம் சுவாசிக்கும் காற்றையும், நாங்கள் நிற்கும் நிலத்தையும், நாங்கள் குடிக்கும் நீரையும் எமது சிந்தனைகளையும் தமதாக்கிக் கொள்ளும் அதன் கொலைகாரப் பல்தேசியக் கம்பனிகளால் உருவானவர்தான் ஒஸாமா. தற்போது குடும்பரகசியம் வெளியே கொட்டப்பட்டு, இரட்டையர்கள் ஒருவரில் ஒருவர் மறையக் கூடியவராகவும், ஒருவரையொருவர் தமக்குள் மாற்றிக் கொள்ளக்கூடியவராகவும் மாறியுள்ளனர். துப்பாக்கிகள், குண்டுகள், காசு, போதைவஸ்து யாவும் இப்போ ஒரு சுற்று வட்டத்தில் சென்றுகொண்டுள்ளன. (அமெரிக்காவின் ஹெலிகொப்டர்களை வரவேற்கும் ஸ்ரிங்கர் ஏவுகணைகள் சி.ஐ.ஏ யால் வழங்கப்பட்டவையே. போதைவஸ்துக்கு அடிமைகளான அமெரிக்கர்களால் பாவிக்கப்படும் ஹெரோயின் ஆப்கானிஸ்தானில் இருந்துதான் வருகின்றது. போதைவஸ்துக் கெதிரான யுத்தத்திற்காக அமெரிக்கா அண்மையில் ஆப்கானிஸ்தானுக்கு 43 மில்லியன் டொலர் மானியத்தை வழங்கியிருக்கிறது).
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 111

Page 59
தற்போது புஷ்ஷம் பின்லாடனும் ஒருவருக்கொருவர் தமது வாய்வீச்சுக்களால் பயமுறுத்தத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொருவரும் மற்றவரை பாம்பின் தலை எனக் கூறுகின்றனர். இருவரும் கடவுளைச் சாட்சிக்கிழுத்து, நல்லது தீயது பற்றி தமது பேச்சுக்களில் பிரஸ்தாபிக்கின்றனர். இருவரும் மிகத் தெளிவான அரசியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் ஆபத்தான ஆயுதங்களைக் கொண்டுள்ளனர். ஒருவர் மிக அசிங்கமான ஆற்றல்மிக்க அணு ஆயுதத்தையும் மற்றவர் முற்றிலும் நம்பிக்கை இழந்தோரின் அழிவுச் சக்தியையும் கொண்டுள்ளனர், தீப்பந்தமும் பனிக்கட்டியும், குண்டாந் தடியும் கோடரியும், இதில் எதுவும் மற்றதற்குப் பதிலீடாக ஏற்றுக்கொள்ளப்படத் தக்கதல்ல என்பதே இங்கு கவனிக்கப்படவேண்டிய முக்கிய விஷயமாகும்.
நீங்கள் எங்களுடன் இல்லாவிட்டால் நீங்கள் எங்களுக்கு எதிரானவர்கள் என்று ஜனாதிபதி புஷ் உலக மக்களுக்கு விடுத்த இறுதி எச்சரிக்கை தன்னிச்சையான ஆணவத்தின் பாற்பட்டதாகும். மக்கள் விரும்புவது, அவர்களுக்குத் தேவைப்படுவது, அல்லது அவர்கள் செய்யவேண்டியிருப்பது ஒரு தெரிவு அல்ல.
நன்றி
The Gurdian ( London) Sept. 2001 Aravada, Vol. 7 No 5 & 6 -2001
12 frenimõib -- gaousarf - gesör 2002
 

அடிப்படைவாதம் பற்றிய பிரச்சினை
உம்ரி7பட்டோ ஈக்கோ
Llo நூற்றாண்டு காலமாக இரத்தம் சிந்தப்படுவதற்குக் காரணமாய் இருந்த மதப் போர்கள் அனைத்தும் நாங்கள் - அவர்கள், நல்லது - கெட்டது, கறுப்புவெள்ளை என்கிற மாதிரியான அழுத்தமான உணர்வுகளினாலும், அர்த்தமற்ற எதிர்நிலைகளாலுமே ஏற்பட்டன. மேற்கத்திய கலாசாரமானது வளமானது எனக் காட்டப்படுகிறதென்றல் அதற்குக் காரணம், அது அறிவொளிக்காலத்துக்கும் முன்னரே தீமைதரத்தக்க எளிமைப்படுத்தல்களையெல்லாம் விசாரணை மூலமாகவும், விமர்சன மனப்பாங்காலும் கரைத்துவிட முயன்றமையாகும். நிச்சயமாக எல்லாக் காலத்திலும் அது இவ்வாறு செய்ததில்லை. புத்தங்களை எல்லாம் எரித்த ஹிட்லர் சீரழிந்த கலையைக் கண்டித்ததோடு, கீழான இனத்தவர்களையும் கொன்றொழித்தார். நான் பாடசாலையில் படித்த காலங்களில் "ஆங்கிலேயர்களைக் கடவுள் சபிப்பாராக, ஏனெனில் அவர்கள் ஒரு நாளைக்கு ஐந்துவேளை சாப்பிடுகிறார்கள், பேராசை பிடித்தவர்கள், சிக்கனமான இத்தாலியர்களைவிடத் தாழ்ந்தவர்கள்” என ஒப்பிக்கும்படி பாஸிசம் எனக்குக் கற்பித்தது. இவையெல்லாம் மேற்கத்திய பண்பாட்டு வரலாற்றின் பகுதியாகும்.
சிலவேளைகளில் நமது சொந்த வேர்களுடன் நம்மை அடையாளம் காண்பதற்கும், வேறு வேர்களையுடைய மக்களைப் புரிந்துகொள்வதற்கும், நல்லது கெட்டது எது என்று தீர்மானிப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டைக் கிரகிப்பது சிரமமாக இருக்கிறது. மொஸ்கோவில் வாழ்வதைவிட லிமோகெஸில் வாழ்வதற்கு நான் முன்னுரிமை கொடுக்கவேண்டுமா? மொஸ்கோ நிச்சயமாக ஒரு அழகிய நகரம். ஆனால், லிமோகெஸில் வழங்கும் மொழியைத்தான் என்னால் விளங்கிக் கொள்ள முடியும். தாம் வளர்ந்த கலாசாரத்தோடுதான் ஒவ்வொருவரும் தம்மை இனங்காண்கின்றனர். வேர் இடமாற்றங்கள் நிகழ்ந்தாலும் அவை சிறுபான்மையாகவே நிகழ்கின்றன. அராபிய லோறன்ஸ் (Lawrence of Arabia) ஒர் அராபியன் போல் உடை உடுத்திக் கொண்ட போதிலும் தனது இறுதிக் காலத்தைத் தன் சொந்த நாடான இங்கிலாந்திலேயே கழித்தார்.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 113

Page 60
மேற்குலகு, பெரிதும் தனது பொருளாதார வியாப்தியின் காரணமாகப் பிற நாகரீகங்கள் பற்றிய அக்கறை உடையதாய் இருந்து வந்திருக்கிறது. தமது மொழியைப் பேசாதவர்களைக் காட்டுமிராண்டிகள், கதைக்கவே முடியாத திக்குவாயர்கள் என்றே கிரேக்கர்கள் கருதினர். ஆனால், காட்டுமிராண்டிகள் வேறு சொற்களைப் பயன்படுத்தினாலும் அதன்மூலம் அவர்கள் ஒரே சிந்தனையையே குறித்தனர் என ஸ்ரொயிக்ஸ் (Stoics) போன்ற சில முதிர்ந்த சிந்தனையாளர்கள் கருதினர்.
19ஆம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப் பகுதியிலிருந்து ஏற்பட்ட பண்பாட்டு மானிடவியலின் வளர்ச்சியானது மேற்குலகு மற்ற இனங்களுக்கு இழைத்த குற்றத்தை, குறிப்பாக, காட்டுமிராண்டிகள், வரலாறு எதுவும் அற்ற சமூகங்கள், ஆதிவாசிகள் என்றெல்லாம் வரைவிலக்கணப்படுத்தப்பட்டவர்களுக்கு இழைத்த குற்றத்தைத் தணிப்பதற்கு எடுத்த முயற்சியாகவே அமைந்தது. மேற்கின் நம்பிக்கைகளிலிருந்து வித்தியாசப்பட்டவற்றை எடுத்துக் காட்டுவதே பண்பாட்டு மானிடவியலாளர்களின் பணியாக இருந்தது. இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி சர்ச்சைக்குரிய விதத்தில் கூறியது போல ஒரு கலாசாரம் இன்னொரு கலாசாரத்தைவிட மேன்மையானதா என்பதை அறிய இதற்கென அளவுகோல்கள் ஏற்படுத்தப்படவேண்டும்.
இந்த மக்கள் இம்மாதிரித்தான் நடந்து கொள்கிறார்கள் என்ற வகையில் ஒரு கலாசாரத்தைப் புறநிலையாக விபரிக்க முடியும். உதாரணமாக, இவர்கள் ஆவிகளை நம்புகிறார்கள் அல்லது இயற்கை அனைத்திற்கும் ஒரே தெய்வம் உள்ளோடி இருப்பதாக இவர்கள் நம்புகிறார்கள்; இந்த விதிகளுக்கேற்பவே இவர்கள் குடும்ப இனக் குழுமங்களைச் சந்திக்கிறர்கள்; தங்களுடைய மூக்குகளைத் துளைத்து வளையமிடுதல் அழகாய் இருப்பதாய் இவர்கள் நினைக்கிறர்கள் (இது மேற்கத்திய இளைஞர் கலாசாரம் பற்றிய விபரணமாக இருக்கலாம்); பன்றி இறைச்சியை இவர்கள் அசுத்தமாக நினைக்கிறார்கள்; தங்களது பால் உறுப்புகளை இவர்கள் விருத்தசேதனம் (circumcision) செய்து கொள்கிறார்கள்; அல்லது பிரஞ்சுக்காரர் தவளை சாப்பிடுவதாக அமெரிக்கரும் ஆங்கிலேயரும் இன்னும் சொல்வது போன்றவை.
பல காரணிகளால் புறநிலைத் தன்மை வரையறைக்குட்படுகிறது என்பதை மானிடவியலாளர் நன்கறிவர். தீர்வின் பிரமாணங்கள் எமது சொந்த வேர்கள், விருப்புகள், பழக்கவழக்கங்கள், உணர்வு நிலைகள், எமது விழுமிய முறைமை (system of Value), ஆகியவற்றில் தங்கியிருக்கின்றன. உதாரணமாக நாம் நமது
14 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

சராசரி ஆயுளை 40 வயதிலிருந்து 80 வயதுக்கு நீடிப்பது பிரயோசனமானது எனக் கருதுகிறோமா ? நான் தனிப்பட்ட முறையில் அப்படித்தான் நம்புகிறேன். ஆனால் 80 வயதுவரை வாழும் ஒரு சாப்பாடு ராமனைவிட 23 வயதுவரை வாழ்ந்த ஞானி லுய்ஜி கொன்சகா (SaintLuigi Gonzaga) பூரண வாழ்வு வாழ்ந்தார் என ஒருமறை ஞானி சொல்லலாம்.
தொழில் நுட்ப வளர்ச்சி, வியாபார விஸ்தரிப்பு, அதிவிரைவான போக்குவரத்து என்பன பெறுமதி வாய்ந்தவை என நாம் நம்புகிறோமா? பலர் அவ்வாறே நம்புகின்றனர்; நமது தொழில் நுட்ப நாகரீகத்தை மேலானதாகக் கருதுகின்றனர். ஆனால், அதேநேரத்தில் மேற்குலகுக் குள்ளேயே சீரழிவுக்குள்ளாகாத இயற்கைச் சூழலில் இணைந்து வாழ்வதையே பிரதானமாகக் கருதுவோர் உள்ளனர். அவர்கள் விமானப் பயணம், கார், குளிர்சாதனப் பெட்டி ஆகியவற்றைக் கைவிட்டு, ஒசோன் வெளியில் துவாரம் ஏற்படாதவரை கூடைகளை, இழைத்து, ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்கு நடந்து போவது விரும்பற்பாலது என்றும் கருதுகின்றனர்.
ஆகவே, ஒரு கலாசாரம் பிறிதொரு கலாசாரத்தைவிட மேலானதா எனத் தீர்மானிக்க மானிடவியலாளர் கூறுவதுபோல் விபரிப்பது மட்டும் போதுமானதல்ல. ஆனால், எம்மால் கைவிட முடியும் என்று உணரமுடியாத விழுமிய முறையைப் பேணுவதற்கான நியாயப்பாட்டைத் தேடிக் கொள்வதே புத்திசாலித்தனமானது. இந்தக் கட்டத்தில் நமது கலாசாரம் நமக்குச் சிறந்தது என்றுமட்டுமே நம்மால் சொல்ல முடியும்.
எந்த அளவுக்குத் தொழில்நுட்ப அபிவிருத்தி அளவுகோல் இறுதியானது? பாக்கிஸ்தானிடம் அணுகுண்டு இருக்கிறது. ஆனால், இத்தாலியிடம் அது இல்லை. அதனால் இத்தாலி தாழ்ந்ததா? நாங்கள் இஸ்லாமிய உலகுக்கு மதிப்பளிக்கிறோம். காரணம் அவிசென்னா (இவர்ஆப்கானிஸ்தானுக்கு அண்மையிலுள்ள புக்காராவிலேயே பிறந்தார்), அவெறோஸ், அல் கிந்தி, அவென்பேஸ், அவிஸ்புரன், இப்னு துஃைபல், சமூக விஞ்ஞானங்களின் தந்தையாக மேற்குலகு கருதும் 14ம் நூற்றாண்டின் மாபெரும் வரலாற்றாசிரியரான இப்னு கல்தூன் ஆகியவர்களை இஸ்லாமிய உலகே நமக்குத் தந்தது. கிறிஸ்தவ உலகம் புவியியல், வானியல், கணிதம், மருத்துவம் ஆகியவற்றில் பின்தங்கிக் கிடந்த காலத்தில் ஸ்பெயினில் இருந்த ஆராபியரே இவற்றை வளர்த்து வளப்படுத்தினர். நாம் சேரிகள் பெருக வழிவகுத்த அதேவேளை ஸ்பானிய ஆராபியர் கிறிஸ்தவர்களையும் யூதர்களையும்
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 115

Page 61
அதிக சகிப்புத்தன்மையோடு நடத்தினர் என்பதை நாம் நினைவு கூரலாம். மேலும் கிறிஸ்தவர்கள் ஜெருசலேத்தைக் கைப்பற்றியபோது சரசானியருக்குச் செய்ததைவிட, சலாதீன் ஜெருசலேத்தை மீழக் கைப்பற்றியபோது அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு அதிக கருணை காட்டவே செய்தான். இவையெல்லாம் உண்மையே. ஆயினும், இன்று இஸ்லாமிய உலகில் உள்ள அடிப்படைவாதத்தையும், மத ஆட்சியாளர்களையும் கிறிஸ்தவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. பின்லேடனும் நியூயோர்க் நகருக்குக் கருணை காட்டவில்லை. தலிபான்கள் பெரும் புத்தர் சிலைகளைப் பீரங்கிகளால் அழித்தனர். அவ்வறே புனித பாத்தலோமா தினப் படுகொலைகளைப் பிரஞ்சுக்காரர் செய்தனர். ஆனால் இன்று அவர்களைக்
காட்டுமிராண்டிகள் என்று சொல்லும் உரிமையை இது யாருக்கும் வழங்காது.
வரலாறு என்பது இரண்டு பக்கமும் கூருடைய வாள் போன்றது. துருக்கியர் எதிரிகளைக் கழுவிலேற்றிக் கொன்றனர் (இது கெட்ட செயலே). ஆனால், பழமை வாதிகளான பைசாந்தியர் தமக்கு ஆபத்தான உறவினர்களின் கண்களைத் தோண்டி எடுத்தனர். கத்தோலிக்கர்கள் ஜியோர்டானோ புறுனோவை (Giordano Bruno) எரித்தனர். சரசானிய கடற்கொள்ளைக்காரர் பல தீய வேலைகளைச் செய்தனர். ஆனால், பிரித்தானிய மன்னரின் கடற் கொள்ளைக்காரர் கரிபியன் தீவுகளிலிருந்த ஸ்பானிய காலணிகளுக்குத் தீ வைத்தனர். பின்லேடனும், சாதம், ஹாசைனும் மேற்கத்திய நாகரீகத்தின் பரம எதிரிகள். ஆனால் அதே நாகரீகத்துக்குள்தான் ஹிட்லரும் ஸ்டாலினும் இருந்தனர்.
இல்லை; அளவுகோல்பற்றிய பிரச்சினை வரலாற்றுக்குள் இருந்து எழுவதல்ல. அது எங்கள் காலத்துக் குரியது. மேற்கத்திய கலாசாரத்தின் பாராட்டுக்குரிய அம்சங்களில் ஒன்று (சுதந்திரம், பன்மைத்துவம் இத்தகைய விழுமியங்களே எம்மால் அடிப்படையானவையாகவும் அவசியமானவையாகவும் கொள்ளப்படுகின்றன) என்னவெனில், ஒரே நபரே வெவ்வேறு விஷயங்களில் ஒன்றோடொன்று முரண்படும் வெவ்வேறு அளவுகோல்களைப் பயன்படுத்தலாம் என்னும் கருத்து நீண்டகாலமாக நிலவிவருவதாகும். உதாரணமாக, ஆயுளை நீடிப்பது நல்லதாகவும், சூழலை மாசுபடுத்துவது தீயதாகவும் கருதப்படுகிறது. ஆனால், ஆயுளை நீடிப்பதற்கான ஆய்வுகள் பெரிய ஆய்வுகூடங்களில் நடைபெற அங்கே பாவிக்கப்படும் மின்சக்தி இயக்கமுறைகள் சூழலை மாசுபடுத்துவனவாக
இருக்கலாம்.
116 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

மேற்கத்திய கலாசாரம் தன் சொந்த முரண்பாடுகளையே சுதந்திரமாக அம்பலப்படுத்துவதற்குரிய திறனை வளர்த்திருக்கிறது. இம்முரண்பாடுகள் தீர்க்கப்படாதவையாக இருக்கலாம். எனினும், இவற்றை எல்லாம் அறிந்திருக்கிறார்கள்; ஒப்புக்கொள்கிறார்கள். சாதகமான பூகோளமயமாக்கலை மேற்கொள்ளும் அதேவேளை எவ்வாறு அதன் மூலம் ஏற்படும் ஆபத்துக்களையும் அநியாயங்களையும் நாம் தவிர்க்கலாம்? எயிட்ஸ் நோயினாலும், பசியினாலும் மக்கள் சாகவும், மாசடைந்த உணவை நாம் சாப்பிடவும் காரணமாயுள்ள பூகோளமயப் பொருளாதாரத்தை ஏற்றுக்கொள்ளாமலே (எங்களுடைய வாழ்நாளை நீடித்துக்கொண்டே) எவ்வாறு எயிட்ஸினால் செத்துக்கொண்டிருக்கும் லட்சோப லட்சம் ஆபிரிக்கர்களின் வாழ்நாளை நீடிக்கலாம்?
ஆனால், மேற்குலகு ஊக்கப்படுத்துகின்ற, பின்பற்றுகின்ற அளவுகோல் பற்றிய இந்த விமர்சனப் பார்வைதான் நாம் மேற்கொள்ளும் விஷயம் எவ்வளவு சிக்கல்தன்மை உடையது என்பதை நமக்குப் புலப்படுத்துகிறன்றது. வங்கியின் இரகசியங்களைப் பாதுகாப்பதென்பது நியாயமானதும் சரியானதுமா? அப்படித்தான் பலர் நினைக்கிறார்கள். ஆனால் இந்த இரகசியம் பேணலே லண்டன் நகரில் பயங்கரவாதிகளும் தம் பெயரில் வங்கிக் கணக்குகளைத் திறக்க வழிவகுக்கின்றது. அப்படியென்றால், இந்த இரகசியம் பேணலைப் பாதுகாப்பதென்பது சாதகமான ஒரு விழுமியமா அல்லது ஐயத்துக்குரியதா? நாம் எப்போதும் நமது அளவுகோல்களைக் கேள்விக்குட்படுத்த விரும்புகிறோம். இன்றைய மேற்குலகு இதனைச் செய்கின்ற அளவில் தனது சொந்தப் பிரஜைகள் தொழில்நுட்ப வளர்ச்சி அனைத்தையும் துக்கி எறிந்துவிட்டு பெளத்தர்களாகமாற அல்லது டயர் பயன்பாட்டில் இல்லாத, அல்லது குதிரை வண்டிகள் கூட இல்லாத தேசத்தில் போய் வாழ அனுமதிக்கிறது. மேற்குலகு மற்றைய சம்பிரதாயங்களையும் நடைமுறைகளையும் பற்றிக் கற்பதற்குப் பணத்தையும் உழைப்பையும் செலவிடத் தீர்மானித்திருக்கிறது. ஆனால், எவருமே மற்றைய மக்கள் மேற்கின் சம்பிரதாயங்களையும் நடைமுறைகளையும் கற்பதற்குச் சந்தர்ப்பம் அளிப்பதில்லை. தம்முடைய நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்த வெள்ளையர்களால் நடத்தப்படும் பாடசாலைகளில் அல்லது ஒக்ஸ்போர்ட் அல்லது பாரிஸ் முதலிய இடங்களில் வேறு கலாசாரத்தைச் சேர்ந்த வசதிபடைத்தவர்கள் படிப்பது ஒரு புறநடையாகும். இந்த நிலையில் இவ்வாறு கல்வி கற்றவர்கள் தம்நாடு திரும்பியதும் அங்கே அடிப்படைவாத இயக்கங்களை அமைக்க முற்படுகின்றனர். தாம்பெற்ற கல்வியைப் பெற வாய்ப்பற்ற தம் சகநாட்டவர்கள் மீது அவர்கள் ஒரு பற்றை உணர்வதே இதற்குக் காரணமாகும்.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 117

Page 62
நாடு கடந்த பண்பாடு (Transcultura) என்னும் ஒரு சர்வதேச அமைப்பு சில ஆண்டுகள் மாற்று மானிடவியல் ஒன்றின் தேவைக்காகப் பிரசாரம் செய்துவந்தது. மேற்குலகுக்கு ஒருபோதும் போயிராத அபிரிக்க ஆய்வாளர்களை அழைத்துவந்து பிரான்சின் மாகாணப் பகுதியையும் பொலொங்காவில் (Bolonga) இருக்கும் சமூகத்தையும் விபரிக்குமாறு கேட்டது. இருபகுதியினரும் ஒருவரை ஒருவர் பார்க்கத் தொடங்கினர். அத்துடன் சுவாரசியமான கலந்துரையாடலும் இடம்பெற்றது. தற்போது மூன்று சீனர்கள் - ஒரு மெய்யியலாளர், ஒரு மானிடவியலாளர், ஒரு கலைஞர் - மார்க்கோபோலோவின் பயணத்தைப் பின்னிருந்து முடிக்கவுள்ளனர். இது நவம்பரில் பிரசல்ஸில் (Brussels) நடைபெறும் மாநாட்டில் முடிவடையும். முஸ்லிம் அடிப்படைவாதிகள் கிறிஸ்தவ அடிப்படைவாதம் பற்றி ஆய்வுசெய்ய அழைக்கப்படுவதாகக் கற்பனை செய்துபாருங்கள். (இம்முறை கத்தோலிக்கர் அல்ல; அமெரிக்கப் புரட்டஸ்தாந்து பிரிவினரே சேர்க்கப்பட வேண்டும். இவர்கள் அயாத்துல்லாக்களைவிட மதப்பித்தர்கள். டார்வினைப்பற்றிய எல்லாக் குறிப்புகளையும் பாடசாலைப்புத்தகங்களிலிருந்து அகற்றவேண்டும் என்று முயற்சிப்பவர்கள்). எனது அபிப்பிராயத்தில் மற்றவர்களின் அடிப்படைவாதம் பற்றிய மானிடவியல் ரீதியான ஆய்வு நமது சொந்த அடிப்படைவாதத்தை விளங்கிக்கொள்ள நன்கு உதவும். புனிதப்போர் பற்றிய நமது எண்ணக்கருவை அவர்கள் வந்து படிக்கட்டும். மிக அண்மைக் காலத்தவை உட்பட நான் அவர்களுக்கு மிகச் சுவாரஸ்யமான பிரதிகள் பற்றிக் கூறுவேன். அவர்கள் புனிதப்போர்பற்றிய கடுமையான விமர்சனப் பார்வையுடன் தமது நாட்டுக்குத் திரும்பிச் செல்லக்கூடும்.
நாம் பன்மைத்துவ நாகரீகம் உடையவர்கள், அதனாலேயே நமது நாட்டில் பள்ளிவாசல்களைக் கட்டுவதற்கு அனுமதித்திருக்கிறோம். கிறிஸ்தவ பாதிரிமார் காபூலில் சிறைகளில் தள்ளப்பட்டதற்காக நாம் இதை நிறுத்தப்போவதில்லை. அப்படி நாங்கள் செய்தால் நாங்களும் தலிபான்களாகவே மாறுவோம். வேறுபாட்டைச் சகித்துக்கொள்ளும் அளவுகோலே மிகவும் வலிமையானது. மிகக்குறைவாக விவாதிக்கப்பட்டதும் அதுதான். நாம் நமது கலாசாரத்தை முதிர்ச்சியுடையதாகக் கருதுகிறோம். ஏனெனில் அது வேறுபாட்டைச் சகித்துக்கொள்ளத்தக்கது. நமது பண்பாட்டுக்குள் இருந்து கொண்டே அதேவேளை வேறுபாட்டை நிராகரிப்பவர்கள் நாகரீகமற்றவர்களாகவே இருக்க வேண்டும், நாங்கள் நமது நாட்டில் பள்ளிவாசல்களை அனுமதித்தால் ஒரு நாள் கிறிஸ்தவ கோயில்கள் அவர்களுடைய நாட்டில் தோன்றலாம்; அல்லது குறைந்தபட்சம் புத்தர் சிலைகளாவது அங்கு சிதறடிக்கப்படாமல் இருக்கும் என்று நாம் நம்புவோம், எமது அளவுகோல்கள் சரியாக இருக்கவேண்டும் என்று நாம் நம்பினால் சரி.
118 garasib - gararr - gosis 2002

ஆனால் இங்கே பெரிய அளவிலான குழப்பம் இருக்கிறது. வேடிக்கையான விடயங்கள் இக்காலத்தில் நடைபெறுகின்றன. மேற்கத்திய விழுமியங்களுக்கு அதரவளிப்பது வலதுசாரிகளின் சிறப்புரிமையாகவும் இடதுசாரிகள் இஸ்லாத்தின் ஆதரவாளர்களாகவும் கருதப்படுவதாகத் தோன்றுகின்றது. இப்போது மூன்றாம் உலக ஆதரவு சக்திகளுக்குப் புறம்பாக சில வலதுசாரி மற்றும் கத்தோலிக்க செயற்பாட்டாளர் வட்டத்தின் அராபிய ஆதரவு நிலைப்பாடும் காணப்படுகின்றது. நாம் எல்லாரும் பார்க்கக் கூடியதாக உள்ள ஒரு வரலாற்று நிலைமையை இது
புறக்கரிைக்கிறது.
விஞ்ஞான விழுமியங்கள், தொழில்நுட்ப அபிவிருத்தி, பொதுவாக நவீன மேற்குலகக் கலாசாரம் என்பற்றுக்கு ஆதரவு வழங்குதல் எப்போதும் மதச்சார்பற்ற முற்போக்கு வட்டாரங்களின் பண்பாக இருந்து வந்திருக்கிறது. பொதுவுடமை ஆட்சியாளர்கள் ஒரு தொழில்நுட்ப விஞ்ஞான முன்னேற்றக் கருத்துநிலையிலேயே நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். பூர்ஷ்வாக்களின் வியாபகம் பற்றிய பக்கச்சார்பற்ற பாராட்டுதலோடேயேt848ஆம் ஆண்டின் கம்யூனிஸ்ட் அறிக்கை ஆரம்பிக்கிறது. திசையை மாற்றி ஆசிய உற்பத்திமுறைக்குப் போவது அவசியம் என்று மார்க்ஸ் கூறவில்லை. தொழிலாளர்கள் இந்த விழுமியங்களையும்
சாதனைகளையும் கற்றுத் தேறவேண்டும் என்றே அவர் சொல்கிறார்.
இதற்கு மறுதலையில் முன்னேற்றம் பற்றிய மதச்சார்பற்ற கருத்து நிலைக்கு எதிரானதும் மரபு ரீதியான விழுமியங்களுக்குத் திரும்பிச் செல்வதை முன்வைத்த பிரஞ்சுப் புரட்சியை நிராகரித்ததில் இருந்து தொடங்குவது எப்போதும் (அதன் உண்மையான அர்த்தத்தில்) பிற்போக்குச் சிந்தனையாகவே இருந்து வந்திருக்கிறது. ஒருசில நவ நாசிக் குழுவினரே மேற்கைப்பற்றிய ஐதீக எண்ணத்தைக் கொண்டிருக்கின்றனர். ஸ்ரோன்ஹெஞ்சில் (Stonehenge) உள்ள முஸ்லிம்களின் குரல்வளையை வெட்டுவதற்கும் தயாராய் உள்ளனர். மிகக் கூர்மையான மரபுவழிச் சிந்தனையாளர்கள் ஆதிவாசிகளின் சடங்குகள், ஐதீகங்கள், பெளத்த போதனைகள் என்பற்றுடன் இஸ்லாத்தை எப்போதும் ஒரு மாற்று ஆத்மீக நெறியின் ஊற்றுமூலமாகவே பார்த்துவந்திருக்கின்றனர். நாங்கள் மேலானவர்கள் அல்ல என்றும் முன்னேற்றம் பற்றிய எமது கருத்து நிலையால் வறுமைப்பட்டவர்கள் என்றும், உண்மையை நாங்கள் முஸ்லிம் சூபி ஞானிகளிடம் இருந்தோ, அல்லது இஸ்லாமியத் துறவிகளிடமிருந்தோ தேடவேண்டும் என்றும் எமக்கு நினைவூட்டுவதை அவர்கள் எப்போதும் கருத்தில் கொண்டிருந்
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 119

Page 63
திருக்கின்றனர். புதுமையான இரட்டைத்தன்மை இப்போது இவ்வாறு வலது பக்கம் திறக்கிறது. ஆனால் இது இப்போது உள்ளது போன்ற பெருந்தடுமாற்றத்தின்போது ஏற்படும் ஒரு அடையாளம் மட்டுமாக இருக்கலாம். தாங்கள் எங்கு நிற்கிறோம் என்பது யாருக்குமே தெரியவில்லை.
ஆனால், இத்தகைய தடுமாற்ற காலங்களில்தான் நம்முடையதும் பிறரதும் மூட நம்பிக்கைகளின் மீது பிரயோகிப்பதற்குரிய ஆயுதமாக பகுப்பாய்வும் விமர்சனமும் தாமாகவே வந்து நமக்குக் கைகொடுக்கின்றன.
120 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002
 

தமிழ் மொழி பெயர்ப்பில் சிங்கள இலக்கியம்
67Z ഉ മf o് മ06ര്
1. அறிமுகம்
இலங்கையில் பல நூற்றாண்டுகளாகத் தமிழும் சிங்களமும் பல்வேறு சமூக சந்தர்ப்பங்களில் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு வந்துள்ளன. பீட்டர் சில்வா (1961), ஹெட்டியாராச்சி (1969) போன்ற சிங்கள அறிஞர்கள் தமிழ் மொழி சிங்கள மொழியின் அமைப்பிலும் அதன் சொற் தொகுதியிலும் செல்வாக்குச் செலுத்தி வந்திருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளனர். சுகதபால டி சில்வா (1969), கொடகும்புற (1950) ஆகியோர் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிங்கள மொழியின் முதல் இலக்கண நூலான சிதத் சங்கராவ'தமிழ் இலக்கண நூலான வீரசோழியத்தின் செல்வாக்கை வெளிக்காட்டுவதாகக் கூறுவர். இதுபோல் தமிழ்மொழி மீது சிங்கள மொழியின் செல்வாக்கும் குறிப்பாக அதன் சொற்தொகுதியில் ஓரளவு
காணப்படுகின்றது.
இலங்கையில் சிங்கள, தமிழ்ச் சமூகங்களுக்கிடையில் இன்று நிலவும் அரசியல் முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் மத்தியிலும் இவ்விரு மொழிகளும் குறைந்தபட்சம் இந்நாட்டின் இருமொழிப்பிரதேசங்களிலாவது (Bilingual Areas) அன்றாடத் தொடர்பாடல் தேவைகளுக்குப் பரஸ்பரம் பயன்படுத்தப்படுவதைக்
காணலாம்.
சிங்களமும் தமிழும் தத்தமக்கென்று நீண்ட இலக்கிய வரலாற்றைக் கொண்டிருந்த போதிலும், மத்திய காலப் பகுதியில் தமிழ் இலக்கியம் சிங்கள இலக்கியத்தின் மீது மிகுந்த செல்வாக்குச் செலுத்தியுள்ளது. பீட்டர் சில்வா (1963), சாள்ஸ் டி சில்வா (1964), ஹிஸ்ஸல்ல தம்மரத்தின தேரர் (1963), சுனில் ஆரியரத்தின (1995)ஆகியோர் சிங்கள இலக்கியத்தின் மீது தமிழ் இலக்கியத்தின் செல்வாக்கைச் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆயினும், அண்மைக் காலம் வரையில் தமிழ் இலக்கியம் சிங்கள இலக்கியத்தில் இருந்து எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. பண்டைக் காலத்திலும் இடைக் காலத்திலும் தமிழ் மொழி இப்பிராந்தியத்தில் அரசியல் ரீதியிலும் இலக்கிய ரீதியிலும் மேலாதிக்கம் பெற்றிருந்தமை இதற்குக் காரணமாக இருக்கலாம்.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 121

Page 64
சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கையில் இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. அண்மைக் காலங்களில் அவ்வப்போது நிகழ்ந்த இனத்துவ மோதல், இன வன்செயல்களுக்கு அப்பால் இலங்கைத் தமிழ்ப் பேசும் சமூகத்தினர், சிங்கள மொழியைக் கற்பதிலும், சிங்கள இலக்கியங்களை வாசிப்பதிலும், அவற்றைத் தமிழில் மொழி பெயர்ப்பதிலும் அக்கறை காட்டி வந்துள்ளனர். அவர்கள் சிங்களத்தைப் படிப்பதற்குப் பிரதானமான காரணம் 1950களின் நடுப்பகுதியில் அது அரசகரும மொழியாக்கப்பட்டமையும், அதனால் அது பெற்ற சமூக மேலாதிக்கமும் ஆகும். அதனால், தமிழ்ப் பேசும் மக்கள் தங்கள் அலுவலக இருத்தலுக்காக அதனைக் கற்கும் கட்டாயம் இருந்தது. சிங்கள மொழியைக் கற்பதற்கான காரணம் எதுவாக இருப்பினும் அது பெரும்பான்மைச் சமூகத்தின் பண்பாட்டுக்கான ஜன்னல்களைத் திறந்து விட்டது எனலாம்.
சிங்கள மொழியைக் கற்ற தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள் ஒரு கணிசமான அளவு சிங்கள இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். பெரும்பாலான இந்த மொழிபெயர்ப்புகள் ஒரு நோக்கத்துடனேயே மேற்கொள்ளப்பட்டன. அதாவது இலக்கியத்தின் மூலம் இரண்டு சமூகங்களுக்கும் இடையே ஒரு உரையாடலை ஏற்படுத்தி அதன் மூலம் இனத்துவப் புரிந்துணர்வையும், இன ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தலாம் என இவர்கள் நம்பினர். மிக அண்மைக் காலம்வரை இது ஒரு வழிப் பாதையாகவே இருந்தது. ஏனெனில் 1970களின் பிற்பகுதிவரை மிகச்சில சமகாலத் தமிழ் இலக்கியங்களே சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டன. இடைக்காலத்தில் இந்நாட்டில் தமிழ் மொழி பெற்றிருந்த சமூக, அரசியல் முக்கியத்துவத்தை அது இழந்து விட்டது என்பதே இதன் பொருளாகும். ஆயினும், 1983இல் நிகழ்ந்த பாரிய இன வன்செயலுக்குப் பின்னர் இனத்துவ முரண்பாடு கூர்மை அடைந்தமையும், தமிழ்த் தீவிரவாதத்தின் எழுச்சியும், உள்நாட்டு யுத்தத்தின் தீவிரமும் காரணமாக சில முற்போக்கான சிங்கள எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும், ஆய்வறிவாளர்களும் இலக்கியத்தின் மூலம் சிறுபான்மைச் சமூகத்துடன் ஒரு உரையாடலை ஏற்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சமகாலத் தமிழ் இலக்கியங்களை, விசேடமாக இலங்கைத் தமிழ்க் கவிதைகளை சிங்களத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கினர். அவர்களுடைய இந்த அர்த்தமுள்ள முயற்சிகளுக்கு தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள் சிலர் உணர்வு பூர்வமான ஒத்துழைப்பு வழங்கினர். மாவத்த, விவரண,ராவய, யுக்திய போன்ற சில முற்போக்கான சிங்கள சஞ்சிகைகள் கடந்த பத்தாண்டுகளில் சிங்கள மொழியில் தமிழ் இலக்கிய மொழி பெயர்ப்புகளை ஊக்குவிப்பதில் பிரக்ஞை பூர்வமாக முயற்சி எடுத்தன."
122 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

இப்பின்னணியில் சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழில் நிகழ்ந்த சிங்கள இலக்கிய மொழிபெயர்ப்புகள் பற்றி ஒரு கணக்கெடுப்புச் செய்வதற்கும், மொழிபெயர்ப்புகளின் தரத்தை மதிப்பிடுவதற்கும், சிங்கள ஆக்க இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்ப்பதில் உள்ள சில பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டுவதற்கும் இக்கட்டுரை முயல்கின்றது.
2. சிங்களச் சிறுகதை மொழி பெயர்ப்புகள்
இக்கால கட்டத்தில் சுமார் நூறு சிங்களச் சிறுகதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. மூன்று சிங்களச் சிறுகதைத் தொகுதிகளும் வெளி வந்துள்ளன. கனகரத்தினம் (1979) மொழி பெயர்த்த சேதுபந்தனம் வெவ்வேறு சிறுகதை எழுத்தாளர்களின் பன்னிரண்டுகதைகளைக் கொண்டுள்ளது. 1982இல் தமிழ் நாட்டில் பிரசுரிக்கப்பட்ட 'சிங்களச் சிறுகதைகள்' வெவ்வேறு எழுத்தாளர்களின் பத்துக் கதைகளைக் கொண்டுள்ளது. இக்கதைகள் எட்டுமொழி பெயர்ப்பாளர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இவை அவ்வப்போது மல்லிகை சஞ்சிகையில் வெளிவந்தவை. மடுலுகிரிய விஜேரத்தின (1994) மொழி பெயர்த்து வெளியிட்ட வலை’ என்னும் சிறுகதைத் தொகுதி, மொழி பெயர்ப்பாளரதும், வேறு சிலரதும் ஐந்து சிறுகதைகளைக் கொண்டுள்ளது. இத்தொகுப்புகளில் இடம் பெறாத ஏனைய சிறுகதைகள் கடந்த முப்பது ஆண்டு காலத்துள் அவ்வப்போது வெவ்வேறு சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.
இந்த மொழிபெயர்ப்புகள் மூலம் பெரும்பாலான முக்கியமான சிங்களச் சிறுகதை எழுத்தாளர்கள் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுள் சிலரின் பெயர்கள் பின்வருமாறு ஆரியரத்ன விதான, தயசேன குணசிங்க, எதிரிவீர சரத்சந்திர, குணதாச அமரசேகர, குணசேன விதான, குணதாச லியனகே, கே. ஜயதிலக்க, ஜயசேன ஜயக்கொடி, ஜயலத் மனோரத்ன, ஜயதிலக்க கம்மலவீர , கருணா பெரேரா, லக்கி போம்புவல, கே. லயன் பெரேரா, லில் குணசேகர, மடவல எஸ். ரத்னாயக்க, மடுளுகிரிய விஜேரத்ன, மார்ட்டின் விக்கிரமசிங்க, ஒஸ்வின் டி அல்விஸ், பியசோம பெரேரா, சரத் விஜேசூரிய, சோமரத்னபாலசூரிய, ஏ.வி. சுரவீர,
திலக் குடாஹெட்டி"
3. மொழி பெயர்க்கப்பட்ட சிங்கள நாவல்கள்
மொழி பெயர்ப்பு மூலம் பின்வரும் சிங்கள நாவலாசிரியர்கள் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளனர். டி. பி. இலங்கரத்ன, கே. ஜயதிலக்க, கருணாசேன ஜயலத், லீல் குணசேகர, மார்ட்டின் விக்கிரமசிங்க, மெரில் காரியவாசம், ஆர். ஆர். சமரக்கோன்.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 123

Page 65
புகழ்பெற்ற சிங்கள நாவலாசிரியரான மார்ட்டின் விக்கிரமசிங்கவின் மூன்று நாவல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. கம்பரெலிய, கிராமப் பிறழ்வு என்ற தலைப்பில் எம்.எம். உவைசினால் மொழிபெயர்க்கப்பட்டு 1964 இல் இலங்கை சாஹித்திய மண்டலத்தினால் வெளியிடப்பட்டது. விராகய (பற்றற்ற வாழ்வு), மடொல்துவ (மடொல் தீவு) ஆகியவை சுந்தரன் செளமியனால் மொழி பெயர்க்கப்பட்டு முறையே 1992, 1993ஆம் ஆண்டுகளில் திசரா வெளியீட்டு நிறுவனத்தினால் வெளியிடப்பட்டன. ஜே. ஜயதிலகவின் சரித துனக் - மூன்று பாத்திரங்கள்’ என்ற பெயரில் தம்பிஜயா தேவதாசியினால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இது 1979இல் இந்தியாவில் பிரசுரிக்கப்பட்டது. இவர் கருணாசேன ஜயலத்தின் கொழுஹதவத்த (ஊமை இதயம்) நாவலையும் மொழிபெயர்த்துள்ளார். சரோஜினிதேவி அருணாசலம், ஆர். ஆர். சமரக்கோனின் கே குருல்லோ என்ற நாவலைசிட்டுக்குருவிகள்' என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். இது 1992இல் வெளிவந்தது. இவரே இலங்கரத்னவின் அம்ப யஹலுவோ என்ற நாவலையும் ஹத்பன, ஹீன்சரய, மகுள்கேம என்னும் குமாரதுங்க முனிதாசவின் சிறுவர் கதைகளையும் தமிழாக்கியுள்ளார். ஜூனைதா ஷெரிப்1986இல் லீல் குணசேகரவின் பெத்சம என்ற குறுநாவலை ‘பெட்டிசம்' என்ற பெயரில் மொழி பெயர்த்து வெளியிட்டார். மெரில் காரியவாசத்தின் தறுவன்கே கெதர' என்ற நாவல் சின்னையா கனகமூர்த்தியினால் 'பிள்ளைகளின் வீடு' என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டு சமூக - பண்பாட்டு ஒருங்கிணைப்பு (திட்ட) அமைச்சினால்
வெளியிடப்பட்டது.
4. சிங்களக் கவிதைகள், நாடகங்கள் மொழிபெயர்ப்பு
சிங்களக் கவிதைகளும் நாடகங்களும் மிகக் குறைந்த அளவிலேயே தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. மத்திய கால சிங்களச் செவ்வியல் இலக்கியமான சிறிராகுல தேரரின் செலலிஹினி சந்தேசய நவாலியூர் நடராசன் அவர்களால் பூவை விடு தூது’ என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டு 1963இல் இலங்கை சாஹித்திய மண்டலத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் செவ்வியல் கவிதையைத் தவிர மிகச் சில தற்காலச் சிங்களக் கவிதைகளே தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இதற்கு மறுதலையாக 1970களின் பிற்பகுதியிலிருந்து நூற்றுக்கு அதிகமான நவீன தமிழ்க் கவிதைகள் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பராக்கிரம கொடித்துவக்கு சிங்கள வாசகர்களுக்குத் தமிழ்க் கவிதையை அறிமுகப்படுத்திய முதலாவது சிங்களக் கவிஞர் என்ற பெருமைக்குரியவர். இந்தியாவையும் இலங்கையையும் சேர்ந்த இருபது தமிழ்க் கவிஞர்களின் முப்பத்தி மூன்று கவிதைகளை மொழி பெயர்த்து 1979இல் இந்து
24 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

சக லங்கா’ என்ற ஒரு தொகுப்பாக இவர் வெளியிட்டார். இதற்கு அடுத்து சிங்களத்தில் வெளிவந்த முக்கியமான தமிழ்க் கவிதைத் தொகுதி சீத்தா ரஞ்சினி (1993) மொழி பெயர்த்து வெளியிட்ட ‘தோங்காரய’ ஆகும். இத்தொகுதியில் பதினெட்டு சமகால இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் முப்பத்தி நாலு கவிதைகள் இடம் பெற்றுள்ளன. நிலார் எம். காசிம், மடுலுகிரிய விஜேரத்தின ஆகியோரும் பல இலங்கைத் தமிழ்க் கவிதைகளைச் சிங்களத்தில் மொழி பெயர்த்து அவ்வப்போது சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் வெளியிட்டு வந்துள்ளனர். எனினும், இதுவரை சிங்களக் கவிதைத் தொகுதி ஒன்று கூடத் தமிழில் வெளிவரவில்லை. அண்மையில் இந்த இடைவெளியை நிரப்ப றோகன லக்ஷ்மன் பியதாச (1995) முயன்றுள்ளார். அவரது இணைப்போம் கரங்கள் - அத்வலக் தனமு அபி என்ற இரு மொழிக் கவிதைத் தொகுப்பு ஒவ்வொரு மொழியில் இருந்தும் பத்துப் பத்துக் கவிதைகளாக இருபது கவிதைகளைக் கொண்டுள்ளது. இத்தொகுப்பின் மூலம் பின்வரும் பத்து சிங்களக் கவிஞர்கள் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளனர். கொங்கஸ்தெனிய ஆனந்ததேரர்,மொனிக்கா றுவன்பத்திரன, சிறிலால் கொடிகார, ஜயவது விதான, தயசேன குணசிங்க, பராக்கிரம கொடித்துவக்கு, ரத்னசிறி விஜேசிங்க, புத்ததாச கலப்பதி, தர்மசிறி ராஜபக்ச, செனரத் கொஸ்சல் கோரள.
தற்காலத் தமிழ் நாடக அரங்கில், சிங்கள நாடக அரங்கின் செல்வாக்கு வெளிப்படையாகத் தெரியும் போதிலும் இதுவரை மூன்று சிங்கள நாடகப் பிரதிகள் மட்டுமே தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தயானந்த குணவர்த்தனவின் நரிபேனா (நரி மாப்பிள்ளை) என்ற நாடகமே முதலில் மொழி பெயர்க்கப்பட்ட நாடகமாகும். சின்னையா சிவனேசன் இதனை 1971இல் மொழிபெயர்த்தார். இது மேடையேற்றப்பட்டதுடன் நூலுருவிலும் வெளிவந்துள்ளது.
இதற்கு இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு இரண்டு சிங்கள நாடகங்கள் - எஸ். கருணாரத்னவின் கங்கட உடின் கொக்கு கியா', சுனந்த மகேந்திரவின் சோகிரடீஸ்- மடுலுகிரிய விஜேரத்னவினால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவை இன்னும் நூலுருப் பெறவில்லை.
5. மொழி பெயர்ப்பின் தரம்
சிங்கள இலக்கியப் படைப்புக்களைத் தமிழாக்கம் செய்யும் பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்கள் அரசாங்க ஊழியர்களாவர். இவர்கள் ஆசிரியர்கள் அல்லது எழுதுவினைஞர்களாகப் பணிபுரிகின்றனர். இவர்களின் சிங்கள மொழித்திறன் வரையறைக்குட்பட்டது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டது போன்று உத்தியோகத் தேவைகளுக்காகவே இவர்கள் சிங்களத்தைக் கற்றனர். இவர்களது சிங்கள
tysanræúb - gsneuf - gestir 2002 125

Page 66
இலக்கிய அறிவும் வரையறைக்குட்பட்டது. மடுலுகிரிய விஜேரத்ன போன்ற மிகச் சில சிங்களவர்களும் தமிழ் மொழிபெயர்ப்பில் ஈடுபடுள்ளனர். ஆயினும், அவர்களது தமிழ்த் திறன் மிகவும் வரையறைக்குட்பட்டதாகவே உள்ளது. இப் பின்னணியில் மொழி பெயர்ப்பிலும், மொழி பெயர்ப்புக்கான படைப்புக்களின் தெரிவிலும் உயர்தரத்தை நாம் எதிர்பார்க்க முடியாது. மொழி பெயர்ப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பல படைப்புக்கள் தரம் உயர்ந்தவை என்று கூறுவதற்கில்லை. தெரிவுகள் பரவலானதாகக் காணப்படினும் அத்தெரிவுக்கு ஏதாவது அடிப்படைகள் பின்புலமாக உள்ளனவா என்று கண்டறிவது சிரமமாக உள்ளது. மொழி பெயர்ப்புக்கான தெரிவு படைப்பின் தரத்தில் மட்டும் தங்கியிருக்கவில்லை. எழுத்தாளருடைய பிரபலம், இலக்கிய முக்கியத்துவம், கருத்துநிலை போன்றவை தெரிவுக்குக் காரணமாக இருக்கலாம். தமிழில் மொழி பெயர்க்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்கள எழுத்தாளர்கள் மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒன்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறமுடியும். எனினும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மொழி பெயர்க்கப்பட்ட படைப்புகள் குறிப்பிட்ட சிங்கள எழுத்தாளர்களையோ,தற்கால சிங்கள இலக்கியத்தையோ போதிய அளவு பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்று கூறமுடியாது. மிகச் சிறந்த சிங்களச் சிறுகதைகளும், நாவல்களும், கவிதைகளும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன என்று நாம் கருத முடியாது. சில நல்ல சிங்கள நாவல்கள் உதாரணமாக கம்பெரெலிய, விராகய - மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால் துரதிஷ்டவசமாக அவை நல்ல
மொழி பெயர்ப்புகள் அல்ல.
பெரும்பாலான சிங்கள இலக்கிய மொழி பெயர்ப்புகள் நேர் மொழி பெயர்ப்புகளாகத் (literal) தோன்றுகின்றன. அதாவது மொழி பெயர்ப்பாளர்கள் மூல மொழியின் வாக்கிய அமைப்பு, நடை ஆகியவற்றுக்கு அதிக விசுவாசமாக இருக்கிறார்களே தவிர, இலக்கு மொழியின் வாக்கியவியல், நடையியல் அம்சங்களுக்கு அல்ல. அதனால் அவர்களது மொழிபெயர்ப்புகள் தற்காலத் தமிழ்ப் புனைகதை உரைநடைக்கு அந்நியமாகத் தோன்றுகின்றன. உதாரணமாக, கம்பரெலிய தமிழ் மொழிபெயர்ப்பின் ஒரு பந்தியை இங்கு தருகின்றேன். மூலத்தின் தமிழ் எழுத்துப் பெயர்ப்பு பின்வருமாறு:
“தெமசகட்ட பமண பசு ஜேமிஸ் யலித் மஹ கெதறட்ட பமினியே வெடி ஹிட்டியன் தெதனக்கு பிரிவர கொட்டகத் தறுணயக்கு சமங்கய. ஏதறுணயா அணிக்கக்கு நொவ ஜினதாஸ லமாஹேவாய. ஒஹ பெமினியே மனமாலிய நொஹொத் நந்தா (b) பலனு பினிசய. அமுத்தன் முஹந்திரம் கென் த (b) பிரிந்தகென் த (b) புலத்வலின் ஹா சுருட்டுவலின் ஹா தேபணின் த சங்றஹ லபூ
126 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

பஸ மாத்தற ஹாமினே ஹொந்தின் அந்த பெலந்தாகென சறசுனு நந்தா சமக கொஸ் சாலயே ஏத்தின் வூ அசுனக வாடிகத்தாய’ (மார்ட்டின் விக்கிரமசிங்க 1967 பக். 71).
மொழி பெயர்ப்பாளர் இப்பந்தியைத் தமிழில் பின்வருமாறு மொழி பெயர்த்துள்ளார்:
“இரண்டு மாதங்களுக்குப் பின்னர் ஜேமிசு மீண்டும் பெருவளவுக்கு இரு பெரியவர்கள் சூழவரும் ஒரு வாலிபனுடன் வந்தான். அவ்வாலிபன் ஜினதாச லமாஹேவா அன்றி வேறொருவனும் அல்லன். அவன் மணவாட்டியை, அதாவது நந்தாவைப் பார்க்கவே வந்தான். விருந்தாளிகள் முகந்திரத்தினாலும் பாரியாராலும் வெற்றிலையாலும் சுருட்டுக்களினாலும் தேநீரினாலும் உபசரிக்கப்பட்ட பின்னர், மாத்தறை அம்மையார் நன்கு உடுத்து ஆபரணங்கள் அணிந்திருந்த நந்தாவுடன் போய் சாலையில் அதிக தூரத்தில் இருந்த ஓர் ஆசனத்தில் அமர்ந்தார்" (மாட்டின் விக்கிரமசிங்க 1964 : 69)
இது மூலப் பிரதியின் வார்த்தைக்கு வார்த்தையான நேர் மொழி பெயர்ப்பு என்பது வெளிப்படை. இங்கு மொழி பெயர்ப்பாளர் தமிழ் மொழிக்கு அந்நியமான சிங்கள வாக்கிய, இலக்கண அமைப்புகளை அப்படியே பின்பற்ற முயன்றுள்ளார். ஒரு தமிழ் வாசகனைப் பொறுத்தவரை இது ஒரு புனைகதை நிகழ்வு பற்றிய கலைத்துவமான விபரணம் அல்ல. மேலும் கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழில் மிகவும் செழுமையாக வளர்ச்சியடைந்துள்ள புனைகதை உரைநடைக்குரிய பொருத்தமான நடையிலும் இது அமையவில்லை.
மூலப் பிரதி நான்கு வாக்கியங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் ஒருவகையில் தற்காலத் தமிழ் வாக்கிய அமைப்புக்குப் புறம்பான வெவ்வேறு அமைப்பைக் கொண்டுள்ளன. மொழிபெயர்க்கப்பட்ட பிரதியும் சிங்கள மூல வாக்கிய அமைப்புகளை ஒத்த நான்கு வாக்கியங்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக, கடைசி வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள வினை அடை வாக்கியத் தொடரான "அமுத்தன் முஹந்திரம் கென் த பிறிந்தகென் த புலத்வலின் ஹா, சுருட்டுவலின் ஹா தேபனின்த சங்க்றஹ லபூ பசு.” என்பது செயப்பாட்டுவினை வடிவத்தில் உள்ளது. மேலும் அமுத்தன் என்பது தவிர்ந்த ஏனைய பெயர்த் தொடர்கள் எல்லாம் நீங்கல் மற்றும் கருவி வேற்றுமைகளைப் பெற்றுள்ளன. இந்த அமைப்பு தமிழுக்கு முற்றிலும் அந்நியமானது. ஏனெனில் கருவி வேற்றுமை ஏற்ற பெயர்கள் தமிழில் உபசரி போன்ற வினைகளுடன் இணைந்து வருவதில்லை. ‘விருந்தாளிகளைத்
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 127

Page 67
தேனீரால் உபசரித்தார்கள்’ என்பது தமிழில் ஏற்புடைய வாக்கியமல்ல. ‘விருந்தாளிகளை தேனீர் கொடுத்து உப சரித்தார்கள்’ என்பதே ஏற்புடைய வாக்கியமாகும். எனினும் மொழி பெயர்ப்பாளர் சிங்கள வாக்கிய அமைப்பை அப்படியே தழுவி அதனைத் தமிழாக்கியுள்ளார். அதனால் அம்மொழி பெயர்ப்பு தமிழுக்கு அந்நியமானதாக, பொருத்தமற்றதாக உள்ளது. மேலே தரப்பட்ட பிரதியைப் பின்வருமாறு தமிழில் மீள்மொழி பெயர்ப்புச் செய்யலாம்:
“இரண்டு மாதங்களுக்குப் பின்னர் ஜேமிஸ் மீண்டும் பெருவளவுக்கு வந்தான். அவனுடன் இரண்டு பெரியவர்களும், ஒரு வாலிபனும் வந்தனர். ஜினதாஸ லமாஹேவாதான் அவ்வாலிபன். அவன் நந்தாவைப் பெண்பார்க்கவே வந்தான். விருந்தாளிகளை முகாந்திரமும் மனைவியும் உபசரித்தனர். தேனிரும் வெற்றிலையும் வழங்கினர். சுருட்டும் பரிமாறப்பட்டது. நந்தா அழகாக உடுத்து நகைகளும் அணிந்திருந்தாள். மாத்தறை அம்மையார் அவளோடு போய் மண்டபத்தில் சற்றுத் தொலைவில் இருந்த ஒரு ஆசனத்தில் அமர்ந்தார்"
இப்பந்தி ஒன்பது வாக்கியங்களைக் கொண்டுள்ளது. தமிழில் வளர்ச்சியடைந்துள்ள விபரண நடைக்குப் பொருத்தமான வகையில் ஒரு புனைகதை நிகழ்வு இங்கு விபரிக்கப்பட்டுள்ளது.
இரசனையற்ற நேர் மொழிபெயர்ப்புக்குப் பிறிதொரு உதாரணமாக விராகய மொழி பெயர்ப்பில் இருந்து ஒரு பந்தியை இங்கு தரலாம். மார்டின் விக்கிரமசிங்கவின் நாவல் பின்வருமாறு தொடங்குகின்றது:
“மா சமங்க எக்க பந்தியே உகனிமின் எக்கட்ட கெலி செல்லம் கள விவாக ஜிவிதயட்ட அத்துலுவூ பசுதமா அசுறு கல சிறிதாச ஜயசேன தக்கிமட்ட மேவற மா கின்பத்தலியே ஒஹாகே நிவசட்ட கியே அவறுத்தகட்ட பசுய"
மேல் தரப்பட்ட பந்தி ஒரே ஒரு கலப்பு வாக்கியத்தினால் அமைந்தது. இக்கலப்பு வாக்கியம் ஒரு பிரதான வாக்கியத்தையும், நான்கு துணைநிலை வாக்கியத் தொடர்களையும் கொண்டுள்ளது. தமிழ் மொழி பெயர்ப்பாளர் இதே வாக்கிய அமைப்பைப் பின்பற்றி சொல்லுக்குச் சொல் பின்வருமாறு மொழி பெயர்த்துள்ளார்:
“என்னோடு ஒன்றாக ஒரு வகுப்பில் படித்து ஒன்றாகவே ஒடிப்பிடித்து விளையாடி தாம்பத்திய வாழ்வில் ஈடுபட்ட பின்பும் என்னோடு பழகிய சிறிதாச ஜயசேனவைக்
காண இம்முறை நான் கின்பத்தலியவில் உள்ள அவனுடைய வீட்டுக்கு ஒரு வருடத்துக்குப் பின்பே சென்றேன்.” (மார்டின் விக்கிரமசிங்க 1992 பக்.1)
128 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

நமது முன்னைய உதாரணத்தைப் போலவே இந்த மொழிபெயர்ப்பும் முற்றிலும் நேர்மொழி பெயர்ப்பாக உள்ளது. அதனால் தமிழ் புனைகதை நடைக்கு அந்நியமாகவும் வாசிக்க முடியாததாகவும் உள்ளது. ஆஷ்லி ஹல்பே (19851) இதே பந்தியை ஆங்கிலத்தில் ஆங்கில மொழி மரபுக்கும், இலக்கிய நடைக்கும் உரிய முறையில் ஆக்குதிறன் மிக்கதாகப் பின்வருமாறு மொழி பெயர்த்துள்ளார்.
"Sridasa Jayasena and I had been friends ever since we had gone to School together and his marriage to Sarojini had not altered our relationship. It was more than a year since I had last visited him in Ginpataliya".
இந்த ஆங்கில மொழி பெயர்ப்பு மூலத்தின் நேர்மொழி பெயர்ப்பு அன்றி சுதந்திரமான மொழி பெயர்ப்பு என்பது வெளிப்படை, மூலப் பிரதியில் இல்லாத சரோஜினி என்ற பெயரையும் ஆசிரியர் மொழி பெயர்ப்பில் கொண்டு வந்துள்ளார். படைப்பிலக்கிய மொழி பெயர்ப்பாளனுக்குள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்தி அதன் மொழி நடைக்குப் பொருத்தமான வாக்கிய அமைப்புகளை அவர் பயன்படுத்தியுள்ளார். மார்டின் விக்கிரமசிங்கவின் சிங்கள மூலப் பிரதியை தமிழ்ப் புனைகதை நடைக்கு ஏற்ப நாம் பின்வருமாறு மொழி பெயர்க்கலாம்:
“சிறிதாச ஜயசேனவும் நானும் ஒரே வகுப்பில் படித்தவர்கள்; ஒன்றாக விளையாடியவர்கள். அவனது திருமணத்தின் பின்பும் எங்கள் நட்புத் தொடர்ந்தது. ஒரு வருடத்திற்குப் பின்னர் இம்முறை அவனைக் காண்பதற்கு கின்பத்தலியவில் உள்ள அவனது வீட்டுக்குச் சென்றேன்.”
எந்த ஒருமொழிபெயர்ப்பிலும் இரண்டு நடைமுறைகள் உள்ளன. முதலாவது மூல மொழிப் பிரதியைக் கட்டவிழ்ப்புச் செய்து அதில் பொதிந்துள்ள தகவலை அல்லது பொருளைக் கிரகித்துக் கொள்வது. இரண்டாவது அந்தத் தகவலை அல்லது பொருளை இலக்கு மொழியின் வாக்கிய அமைப்புக்கும் நடையியல் நியமங்களுக்கும் ஏற்ப அம்மொழியில் மீள்கட்டமைப்புச் செய்வது. சிங்களத்தில் இருந்து தமிழுக்கு மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் தகுந்த முறையில் மீள்கட்டமைப்புச் செய்யப்பட்டவை அல்ல. தமிழுக்கும் சிங்களத்துக்கும் இடையே உள்ள அமைப்பு மற்றும் நடையியல் வேறுபாடுகள் பற்றிய புரிந்துணர்வும் பிரக்ஞையும் மொழி பெயர்ப்பாளர்களிடம் காணப்படவில்லை. அதன் விளைவாக அவர்களது மொழி பெயர்ப்புகளின் தரம் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுகின்றது.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 29

Page 68
ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்பது இலக்கு மொழியில் சுயமாக எழுதப்பட்டது போன்ற தற்புதுமையுடன் காட்சிதர வேண்டும். சிங்களத்திலிருந்து தமிழுக்குச் செய்யப்பட்டவற்றுள் அத்தகைய சில நல்ல மொழிபெயர்ப்புக்கள் இல்லாமல் இல்லை. ஆர். ஆர். சமரக்கோனின் கே குறுல்லோ வின் தமிழ் மொழி பெயர்ப்பான சிட்டுக்குருவிகள் இத்தகைய நல்ல மொழி பெயர்ப்புக்கு உதாரணமாகக் கூறக்கூடியது. இதனை மொழி பெயர்த்தவர் சரோஜினிதேவி அருணாசலம்.
6. மொழி பெயர்ப்புப் பிரச்சினைகள்
சிங்கள இலக்கியப்படைப்புக்களைத் தமிழில் மொழிபெயர்ப்பது தொடர்பாகச் சில மொழிசார் பிரச்சினைகளும் மொழி சாராப்பிரச்சினைகளும் உள்ளன. மொழி பெயர்ப்பு என்பது அடிப்படையில் ஒரு மொழியியல் நடவடிக்கையாகும். மொழிபெயர்ப்பின் போது ஒரு குறிப்பிட்ட மொழியின் சொற்குறிகள் அல்லது மொழியியல் அலகுகளில் சங்கேதப்படுத்தப்பட்ட ஒரு தகவலை பிறிதொரு மொழியின் மொழியியல் அலகுகளில் சங்கேதப்படுத்துகிறோம். இவ்வகையில் ஒரு பிரதியை அதன் மூலமொழியில் இருந்து இலக்கு மொழிக்கு மொழிபெயர்ப்பதற்கு அம்மொழி பெயர்ப்பாளர் இரண்டு மொழிகளிலும் உள்ள சமமான மொழியியல் அலகுகளை அல்லது ஆக்கங்களைக் கண்டறிய வேண்டும். சமமான ஆக்கங்கள் (constructions) மட்டுமே பரஸ்பரம் மொழி பெயர்க்கக் கூடியவையாகும். அவ்வகையில் சமனானவை அல்லது சமனி என்பது பரஸ்பரம் மொழி பெயர்க்கக் கூடிய ஆக்கங்களுடன் உள்ளார்ந்த தொடர்புடைய ஒரு கருத்தாகும் (Krzeszowski 1971 : 37). இரண்டு மொழிகளில் உள்ள இரண்டு அல்லது பல ஆக்கங்கள் ஒரே பொருளைக் கொண்டிருக்குமாயின் அவை மொழி பெயர்ப்புச் சமனிகள் (Translation Equivalents) எனப்படுகின்றன. ஆகவே, மொழி பெயர்ப்புச் சமனிகள் என்ற கருத்தாக்கம் எந்த ஒரு மொழி பெயர்ப்புக் கோட்பாட்டிலும் மிகவும் முக்கியமானதாகும் (Catford 1965 : 21, 27 - 31).
மொழி பெயர்ப்புச் சமனிகளைக் கண்டறிவதே மொழி பெயர்ப்புச் செயல்முறையில் உள்ள அடிப்படையான பிரச்சினையாகும். ஆக்க இலக்கிய மொழி பெயர்ப்புக்களில் ஆக்க இலக்கியம் அல்லாத மொழிபெயர்ப்புகளில் இருப்பதை விட இது மிகவும் சிக்கலானதாகும். ஏனெனில், இலக்கியம் அல்லாத மொழிப் பயன்பாட்டை விட இலக்கியத்தின் மொழி மிகவும் சிக்கலானதும், அழகியல் ரீதியில் ஊட்டம் பெற்றதுமாகும். இதனாலேயே அனேகர் கவிதை மொழி பெயர்க்கப்பட முடியாதது எனக் கருதுகின்றனர். றோமன் ஜெகோப்சனின் கருத்துப்படி (1987 : 434) கவிதை மொழி பெயர்க்க முடியாததாகும். படைப்பு ரீதியான ஒரு புத்தாகம்
130 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

(acreative transposition) மட்டுமே சாத்தியமானதாகும். எனினும் நடைமுறையில் நாம் தொடர்ந்தும் இலக்கியப் படைப்புக்களை மொழி பெயர்க்கின்றோம். அவற்றை முற்றிலும் ஒரு புத்தாக்கமாக நாம் கருதுவதில்லை. அது மூலத்துக்கு மிகக் கிட்டியதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் அதனை மொழி பெயர்ப்பு என்றே கருதுகின்றோம்.
எந்த ஒரு படைப்பிலக்கிய மொழிபெயர்ப்பும் மூலத்தை அவ்வாறே ஒத்திருக்க முடியாது என்ற உண்மையை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். கற்ஃேபாட் (Catford1965:93) குறிப்பிடுவதுபோல “மூல மொழியில் உள்ள பிரதிகள் முற்றிலும் அவ்வாறே மொழி பெயர்க்க முடியாதவை என்று கூறுவதை விட, கூடுதலாகவோ குறைவாகவோ மொழிபெயர்க்கப்படக் கூடியவை” என்று கூறுவது பொருத்தமாகும். மொழி பெயர்ப்பில் குறிப்பாக, ஆக்க இலக்கிய மொழி பெயர்ப்பில் நாம் எப்போதும் எதையாவது இழந்து விடுகின்றோம் என்பதே இதன் பொருளாகும். ஆகவே, ஆக்க இலக்கியப் படைப்பு ஒன்றின் மொழி பெயர்ப்பு என்பது மூலத்தின் வடிகட்டப்பட்ட ஒரு வடிவமே என்று நாம் கூற முடியும். மொழியியல் அல்லது பண்பாட்டுக் காரணங்களால் இலக்கு மொழியில் மொழியியல் சமனிகளைக் கண்டுபிடிக்க
முடியாத நிலையிலேயே வடிகட்டல் நிகழுகின்றது.
மொழியியல் ரீதியான வடிகட்டல் அல்லது மொழி பெயர்க்க முடியாமை சில இலக்கண வகைமைகள் அல்லது இலக்கணக் கூறுகள் காரணமாகவே நிகழ்கின்றது. இலக்கு மொழியில் ஒரு குறிப்பிட்ட இலக்கணக் கூறு இல்லாவிட்டால் "அந்த மொழியில் ஒரு குறிப்பிட்ட பிரதியை மொழி பெயர்க்கும்போது மூலத்துக்கு விசுவாசமாக இருப்பது மிகவும் சிரமமானதாகும்” (Roman Jakobson 1987:432). தமிழும் சிங்களமும் இலக்கணத்திலும் பண்பாட்டுக் கூறுகளிலும் பெருமளவு ஒற்றுமை கொண்டிருப்பினும் சில முக்கியமான வேறுபாடுகளும் உள்ளன. இவ்விரு மொழிகளிலும் உள்ள மூவிடப் பெயர் அமைப்பு இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும்.
தமிழ் மொழியில் இரண்டு முன்நிலை இடப் பெயர்களே உள்ளன. ஆனால் சிங்கள மொழியில் இருபது வேறுபட்ட வடிவங்கள் உள்ளன. இவை வெவ்வேறு அளவில் மரியாதைக் குறிப்பினையும், எண், பால், வேறுபாடுகளையும் காட்டுகின்றன. (Nuhman, 1994) இந்த இடப்பெயர்கள் தம்முள் கொண்டிருக்கும் சமூக - உளவியல் பொருண்மையை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ மொழி பெயர்ப்பது மிகவும் சிரமமாகும். உதாரணமாகப் பின்வரும் சிங்கள வாக்கியங்கள் ஒயா கன்னதமுசேகன்ன, உம்ப காப்பங், தோ காப்பியதம்முள் பொருள் வேறுபாடு உடையன. இது அம்மொழியில் காணப்படும் - சமூக - மொழியியல் சூழலின்
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 131

Page 69
விளைவாகும். இதை ஒத்த நிலைமை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ கூட இல்லை. ஆங்கிலத்தில் மேற்காட்டிய நான்கு வாக்கியங்களுக்கும் சமனாக You eat என்ற வாக்கியம் மட்டுமே உண்டு. ஆனால் நான்கு வேறுபட்ட சிங்கள வாக்கியங்களும் உணர்த்தும், நான்கு வேறுபட்ட மரியாதைக் குறிப்புக்களை இந்த ஆங்கில வாக்கியம் வெளிக்காட்டாது. மேலுள்ள நான்கு வேறுபட்ட சிங்கள வாக்கியங்களுக்கும் சமனாக தமிழில் இரண்டு வாக்கியங்களே உண்டு. நீங்கள் சாப்பிடுங்கள்' என்பது ஒயா கன்ன என்பதற்குச் சமனியாகும். ஏனைய மூன்று வாக்கியங்களுக்கும் 'நீ சாப்பிடு' என்பது மட்டுமே சமனியாகும். நீங்கள் என்பது தமிழில் முன்னிலைப்பன்மைக்கும் முன்னிலை மரியாதை ஒருமைக்கும் பயன்படுத்தப் படுகின்றது. நீ என்பது அல் - மரியாதை ஒருமை வடிவமாகும். தமிழ் மொழி மரியாதை, அல் - மரியாதை என்ற இரண்டு மரியாதை நிலைகளையே வெளிக்காட்டுகின்றது. ஆனால் சிங்களம் குறைந்தது நான்கு மரியாதை நிலைகளை வெளிக்காட்டுகின்றது. இத்தகைய இலக்கணப் பிரச்சினைகளைக்
கடந்து செல்வது மொழி பெயர்ப்பில் எப்போதும் சிரமமாகும்.
சிங்கள மொழியில் அவதானிக்கக் கூடிய பிறிதொரு அம்சம், உரையாடலில் முன்நிலை இடப்பெயர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் போக்காகும். வயதில் அல்லது தகுதியில் கூடியவர்களை அல்லது புதிதாகக் காணும் அந்நியர்களை விழிப்பதற்கு முன்நிலை இடப்பெயர்கள் சிங்களத்தில் பெரிதும் தவிர்க்
கப்படுகின்றன.
பதிலாக, சிங்களம் பேசுவோர் ஒருவரை விழித்துப் பேசுவதற்கு ஒரு உறவு முறைப்பெயரை அல்லது இயற்பெயரை, அல்லது இயற் பெயரோடு உறவுமுறைப் பெயரை இணைத்து அல்லது ஒரு பொதுப் பெயரை பயன்படுத்துகின்றனர். விளிக்கப்படுவோரின் மரியாதை நிலைக்கு ஏற்ற பொருத்தமான முன்னிலைப் பெயரைத் தெரிவு செய்வதில் உள்ள பிரச்சினையைத் தவிர்க்கும் முகமாகவே சிங்களம் பேசுவோர் இத்தகைய மொழியியல் நடத்தையைப் பின்பற்றுகின்றனர். (Nuhman 1994) உதாரணமாக, சுனில் கொஹெத யன்னேளன்ற சிங்கள வாக்கியம் இது பேசப்படும் உரையாடற் சூழலைப் பொறுத்து வெவ்வேறு விதமாகப் பொருள் கொள்ளப்படலாம். பேசுவோன் சுனில் என்பவரின் செல்கை பற்றி பிறிதொருவரிடம் கேட்பதாயின் சுனில் படர்க்கை இடத்துக்குரியதாகும். அப்போது இந்த வாக்கியத்தின் பொருள் “சுனில் எங்கே போகிறான்/ர் என்பதாக அமையும். பேசுவோன் சுனிலிடம் நேரடியாக அவனின் செல்கை பற்றிக் கேட்பதாயின் சுனில் முன்நிலைக்குரியதாகும். இவ்விரு நிலையிலும் இவ்வாக்கியத்தில் மரியாதைக்
32 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

குறிப்புக்குரிய அடையாளம் இல்லை. ஆனால் இது தமிழில் சாத்தியம் இல்லை. வினைவிகுதிகள் காரணமாக ஒரு தமிழ் வாக்கியம் மரியாதைக் குறிப்பைக் கட்டாயமாக உணர்த்துகின்றது. அவ்வகையில் மேல் குறிப்பிட்ட சிங்கள வாக்கியம் அதன் உரையாடல் சந்தர்ப்பத்தைக் பொறுத்து தமிழில் நான்கு வேறுபட்ட மொழிபெயர்ப்புச் சமனிகளைக் கொண்டுள்ளது. சுனில் படர்க்கை இடத்துக்குரியதாயின் இவ்வாக்கியம் தமிழில் “சுனில் எங்கே போகிறான்” என்றோ “சுனில் எங்கே போகிறார்” என்றோ மொழி பெயர்க்கப்பட வேண்டும். முதல் வாக்கியம் அல்-மரியாதை வழக்கு; மற்றது மரியாதை வழக்கு. போ என்ற வினைச் சொல் ஆன் அல்லது - ஆர் என்ற விகுதியைக் கட்டாயமாகப் பெறுகின்றது.
சுனில் முன்நிலைக்குரியதென்றால் இதே வாக்கியம் தமிழில் 'சுனில் (நீ) எங்கே போகிறாய்' என்றோ, அல்லது 'சுனில் (நீங்கள்) எங்கே போகிறீர்கள்’ என்றோ மொழிபெயர்க்கப்பட வேண்டும். முதலாவது அல் - மரியாதை வழக்கு; மற்றது மரியாதை வழக்கு.
தமிழில் நீ, நீங்கள் ஆகிய இடப்பெயர்கள் மேற்காட்டிய சூழலில் இடம் பெறுவது கட்டாயம் இல்லை எனினும் (அதனாலேயே அவை அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளன) - ஆய் - ஈர்கள் ஆகிய விகுதிகள் வினையில் இடம் பெறுவது கட்டாயமாகும். சிங்கள வினைமுற்றுக்கள் (பேச்சுச் சிங்களம்) திணை, பால் விகுதிகளைப் பெறுவதில்லை. ஆனால் தமிழ் வினைகள் எப்போதும் கட்டாயமாகக் திணை, பால் விகுதிகளைப் பெற்றே வரும். சிங்கள நாவல்களையும் சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்த சில மொழிபெயர்ப்பாளர்கள், இத்தகைய வாக்கியங்களை மொழிபெயர்க்கும் போது இம்மொழியியல் உண்மையைப் புறக்கணித்து சிங்கள மூல வாக்கிய அமைப்புக்கு விசுவாசமாக இருக்க முயன்றுள்ளனர். அதன் விளைவாக ஏற்புடைமையற்ற செயற்கையான தமிழ் வாக்கியங்களை உருவாக்கியுள்ளனர். அது இவர்களது மொழிபெயர்ப்புத் தரத்தை ஊறுபடுத்தியுள்ளது. இங்கு கம்பெரலிய தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து சில உதாரணங்களை மட்டும் தருகிறேன்.
1. அம்மையார் இவ்வாறு செயலாற்றத் தலைப்பட்டால் எமக்கும்
பிள்ளைகளுக்கும் அபாயம்தான் வரும்.
2. அம்மணிக்குக் கூறியிருந்தால் திருட்டைப் பிடிக்க முடியாமற் போயிருக்கும். அதனாற்தான் அம்மணியிடம் இதனை ஏற்கெனவே
சொல்லாமல் விட்டது.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 133

Page 70
3. “ஜேமிசு சொல்வது பொய்” என நந்தா சிரித்துக் கொண்டு கூறினாள்.
சட்டம்பியார் இப்பொழுது கொந்திராத்து வேலை செய்வது என்பது உண்மையா?
5. அவ்வாறு கூட்டிச் செல்வதாயிருந்தால் நான் அவனை பாலதாசவுடனாவது
உலாத்தச் செல்லவிடமாட்டேன்.
6. சொல்லியிருந்தால், திஸ்ஸவை விட ஏச்சுக் கேட்க வேண்டி இருந்திருக்கும்
எனக்கு. அனு மிகப் பொல்லாதவள் போல இருக்கிறாள். அதனாலல்லவா அனு மிக விரைவாக வயது முதிர்ந்திருக்கிறது.
மேலுள்ள வாக்கியங்களில் இடம் பெறும் அம்மையார், அம்மணி, ஜேமிசு, சட்டம்பியார், பாலதாச, திஸ்ஸ, அணு ஆகிய பெயர்ச் சொற்கள் மூலமொழியில் முன்நிலை இடப்பெயர்களுக்குப்பதிலாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் மொழி மரபில் இவை படர்க்கைப் பெயர்களாகும். மொழிபெயர்ப்பாளர் இந்த உண்மையைப் புறக்கணித்து மூல மொழியின் மரபுகளுக்கு விசுவாசமாக இருந்ததனால் இத்தகைய கருத்து மயக்கமுடைய செயற்கையான வாக்கியங்களை உருவாக்கியுள்ளார். மொழிபெயர்ப்பாளருக்கு மொழி பெயர்ப்புச் சமனி பற்றிய பிரக்ஞை அவசியமாகும்.
இதுவரை நாம் நோக்கிய மொழியியல் கூறுகளைப் போன்றே, குறைந்த அளவே மொழிபெயர்க்கப்படக் கூடிய அல்லது மொழிபெயர்க்க முடியாத சில பண்பாட்டுக் கூறுகளும் உள்ளன. இவை எப்போதும் மொழியில் பிரதிபலிக்கின்றன. கலாசார ஊட்டம் பெற்ற சொற்கள், மரபுத் தொடர்கள், பழமொழிகள் போன்றவை இப்பிரிவுடள் அடங்கும். உதாரணமாக சில், பிரித், போயா போன்ற சிங்களச் சொற்கள் பெளத்த மதப் பண்பாட்டில் ஆழமாக வேர் கொண்ட குறிப்பான பொருண்மை உடைய மொழியியல் குறிகளும் அதேவேளை பண்பாட்டுக் குறிகளும் ஆகும். இப்பொருண்மைகளை அவற்றின் முழுமையான அர்த்தத்தில் தமிழ் போன்ற ஒரு மொழியில் பெளத்தர் அல்லாத வாசகர்களுக்குப் புலப்படுத்த முடியாது. இச் சொற்களுக்கு நிகரான மொழி பெயர்ப்புச் சமனிகள் தமிழில் இல்லை. ஆகவே அவற்றை அவ்வாறே கடன்வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. இலக்கணம் கூட சில பண்பாட்டுக் கூறுகளைப் பிரதிபலிக்கின்றது. முன்னர் நாம் விவாதித்த மூவிடப் பெயர் அமைப்பு இதற்குச் சிறந்த உதாரணமாகும். அங்கு இலக்கணமும் பண்பாடும் ஒன்றிணைந்திருப்பதைக் காண்கிறோம். கற்ஃேபாட் (Catford 1965 : 103) கூறுவது போல நாம் எதிர்நோக்கும் பண்பாட்டு ரீதியான மொழி பெயர்ப்புப் பிரச்சினை இறுதியில் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் மொழியியல் ரீதியான மொழி பெயர்ப்புப் பிரச்சினைகளேயாகும்.
134 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

இதுவரை நாம் நோக்கிய மொழியியல் பிரச்சினைகளுக்குப்புறம்பாக சிங்கள இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்ப்பது தொடர்பான சில மொழிசாராப் பிரச்சினைகளும் உள்ளன. அத்தகைய இரண்டு பிரச்சினைகளை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.
திறமையுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் இன்மை முதலாவது பிரச்சினையாகும். ஒரு தொகையான தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் உள்ள போதிலும் அவர்களுள் பெரும்பாலோர் சிங்கள மொழியிலும் இலக்கியத்திலும் மொழி பெயர்ப்பு நுட்பங்களிலும் போதிய புலமையும் திறனும் அற்றவர்களாவர். நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல தமிழ் மொழிபெயர்ப்பில் ஈடுபாடுகொண்ட சில சிங்களவர்களும் உள்ளனர். ஆயினும் அவர்களது தமிழ் மொழி அறிவு போதுமானதல்ல. மொழி பெயர்ப்பாளரின் படைப்புத்திறன், படைப்பு இலக்கியங்களை மொழி பெயர்ப்பதில் மிகுந்த முக்கியத்துவம் உடையது. ஒரு படைப்பிலக்கியத்தை மொழி பெயர்ப்பதும் ஒரு படைப்பு நடவடிக்கைதான். ஒரு படைப்புத் திறனுள்ள மொழிபெயர்ப்பாளன் மட்டுமே ஒரு கவிதையை அல்லது ஒரு புனைகதையை அதன் உள்ளடக்கத்தைத் திரிபுபடுத்தாது, அதன் அழகியல் பெறுமானத்தை ஊறுபடுத்தாது, இலக்கு மொழியில் மொழிபெயர்க்க முடியும். இரண்டு மொழிகளைத் தெரிந்திருப்பது மட்டும் ஒரு இலக்கியப் படைப்பை மொழி பெயர்ப்பதற்கான தகைமை ஆகாது. ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளன் பிறப்பதில்லை; ஆனால் மொழிபெயர்ப்புநுட்பங்களில் தகுந்த பயிற்சியின் மூலம் உருவாக்கப்படுகிறான். இந்த நாட்டிலே மொழிபெயர்ப்பில் பயிற்சி வழங்குவதற்குரிய நிறுவனங்களோ அமைப்புக்களோ இல்லாதிருப்பது ஒரு பெரும் குறைபாடாகும்.
இரண்டாவது முக்கியமான பிரச்சினை, தமிழ் மொழி பெயர்ப்பு வேலைகளுக்கு அனுசரணையான நிதி மற்றும் நிறுவன உதவிகள் இன்மையாகும். இதுவரை மொழி பெயர்ப்பு முயற்சிகள் தனிநபர்களின் ஆர்வத்திலேயே தங்கியுள்ளன. தமிழில் மொழி பெயர்ப்பு முயற்சிகளை ஊக்கப்படுத்தும் நிறுவனங்களோ, வெளியீட்டு நிலையங்களோ இல்லை.
இந்தியாவில் அரசு ஆதரவு பெற்ற இரண்டு பெரிய நிறுவனங்கள் உள்ளன. இந்திய சாஹித்திய அக்கடமி, இந்திய தேசிய புத்தக ட்றஸ்ற் என்பனஅவை. இவை இந்திய மொழிகளில் இலக்கிய மொழிபெயர்ப்புகளை ஊக்குவிப்பதற்கென்றே நிறுவப்பட்டவை. அவை நூற்றுக் கணக்கான மொழி பெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளன.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 135

Page 71
1960 களில் இலங்கை சாஹித்திய மண்டலமும் சிங்கள, தமிழ் மொழிகளில் பரஸ்பர மொழி பெயர்ப்புக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தது. அவ்வகையில் சிங்கள இலக்கியங்களான செலலிஹினி சந்தேசய, கம்பெரெலிய ஆகியவற்றைத் தமிழிலும் திருக்குறளைச் சிங்களத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டது. ஆனால் அம்முயற்சி தொடரவில்லை. நிறுவன ரீதியான ஆதரவு இல்லாமல் இக்கட்டுரையில் குறிப்பிட்டவாறான மொழிபெயர்ப்பு முயற்சிகளில் முன்னேற்றம் காண்பது சாத்தியமில்லை எனலாம்.
சிங்களத்தில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து சிங்களத்திற்கும் இலக்கியப் படைப்புக்களை மொழி பெயர்ப்புச் செய்வது என்பது முற்றிலும் ஒரு இலக்கியச் செயற்பாடு மட்டுமல்ல; இன்றைய நமது அரசியல் பின்னணியில் அது ஒரு சமூக - அரசியல் நடவடிக்கையுமாகும். இனத்துவ அடிப்படையில் பிளவுண்டு கிடக்கும் ஒரு நாட்டில், இன ஒருமைப்பாட்டையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஊக்குவிப்பதில் பரஸ்பர மொழிபெயர்ப்புகளும் கணிசமான அளவு பங்களிப்புச் செய்ய முடியும். அவ்வகையில் தேசிய மொழிகளில் பரஸ்பர மொழி பெயர்ப்புகளை ஊக்குவிக்க தேசிய நலனில் அக்கறையுள்ள அனைவரும் சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அடிக்குறிப்புகள்
1. சிங்களத்தில் இருந்து தமிழுக்கு ஆக்க இலக்கியப் படைப்புக்களை மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டுவரும் சிலரது பெயர்கள் பின்வருமாறு அல் - அசூமத், எம். எம். உவைஸ், த. கனகரத்தினம், மு. கனகராஜன், சரோஜினிதேவி அருணாசலம், சின்னையா கனகமூர்த்தி, சின்னையா சிவநேசன், சிவா சுப்பிரமணியம், சுந்தரம் சௌமியன், தம்பிஐயா தேவதாஸ், நீள்கரை நம்பி, நிலார் எம். காசிம், எம். ஏ. நுஃமான், மடுளுகிரிய விஜேரத்ன, ராஜ சிறிகாந்தன், ப. ரத்னசபாபதி ஐயர், எஸ். எம். ஜே. ஃபைஸ்டின், ஜுனைதா ஷெரிப், எம். எச். எம். ஷம்ஸ்.
2 1950 க்கும் 1970 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் சில சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சிறி சாள்ஸ் டி சில்வா (1964) மிஸிஹாமி கொறகாகொட (1961a/1961b) ஆகியோர் திருக்குறளை மொழி பெயர்த்துள்ளனர். மிஸிஹாமி கொறகாகொட (1968) நாலடியாரையும் சிங்களத்தில் மொழி பெயர்த்துள்ளார். அமரக்கோன் தசாநாயக்க (1956) ஹிஸ்ஸல்ல, தம்மரத்ன தேரர் (1959) ஆகியோர் சிலப்பதிகாரத்தை மொழி பெயர்த்துள்ளனர். ஹிஸ்ஸல்ல, தம்மரத்ன தேரர் (1950) மணிமேகலையையும் மொழி
1136 பிரவாதம் - ஜனவரி 2 ஜூன் 2002

பெயர்த்துள்ளார். இக்காலப்பகுதியில் நவீன தமிழ் இலக்கியம் என்ற வகையில் மு.
வரதராஜனின்கள்ளோ காவியமோ என்ற நாவல் மொழிபெயர்ப்புப் பற்றிய தகவல்
மட்டும் கிடைத்துள்ளது. இதனை 'நாரிசுறாவ என்ற தலைப்பில்
மொழிபெயர்த்தவர்கள் எம். சி. எம். சாயிர், பி. டி. விஜேதாச ஆகியோர்.
3. 1970க்குப் பிறகு பின்வரும் ஐந்து தமிழ் சிறுகதைத் தொகுப்புக்கள் சிங்கள மொழி
பெயர்ப்பில் வெளிவந்துள்ளமை பற்றிய தகவல் திரட்ட முடிந்தது. இவற்றில்
மொத்தம் 64 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு:
(1) குலஹினயோ, சி. ராஜகோபாலாச்சாரி (1970)யின் 17 சிறுகதைகள். மொழி
பெயர்த்தவர் டி. டி. நாணயக்கார
(2) அலுத் சட்டன்பாட்ட, செ. கணேசலிங்கனின் 12சிறுகதைகள்.
மொழிபெயர்த்தவர் ரஞ்சித் பெரேரா
(3) ‘தெமள கெட்டிகதா 12 எழுத்தாளர்களின் 12 சிறுகதைகள்
மொழிபெயர்த்தவர் த. கனகரத்தினம் (1974)
(4) 'காளிமுத்துகே புறவசி பாவய வெவ்வேறு எழுத்தாளர்களின் 11 சிறுகதைகள். மொழி பெயர்த்தவர்கள் இப்னு அகுமத், புஷ்பா றம்லனே ரத்நாயக்க (1991)
(5) தெமள கெட்டி கதா எஸ். தில்லை நடராஜனின் (1994) 12 சிறுகதைகள்.
மொழிபெயர்ப்பாளர் விபரம் தரப்படவில்லை.
இப்பட்டியல் முழுமையானதல்ல என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். வேறு பலரும்
மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம். விபரம் கிடைக்கவில்லை.
உசாத்துணை:
அசூமத்,இப்னு பி. ஆர். ரத்நாயக்க (1991)
காளிமுத்துகே புரவசிபாவய (தமிழ்ச் சிறுகதை தொகுதி ) நுகேகொட,
ஆரியரத்ன, சுனில் (1995)
சிங்ஹல சாஹித்யஹிதிஸ்வன தெமல சாஹித்ய சலகுன, கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு.
கனகரத்தினம், த, (1979)
தெமல கெட்டி கதா (தமிழ்ச் சிறுகதைகள்) கொழும்பு, பிரதீபா பப்ளிஷர்ஸ் சேதுபந்தனம் (சிங்களச் சிறுகதைகள்) கொழும்பு, தமிழ்ச் சங்கம்
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 137

Page 72
கணேசலிங்கன், செ. (1974)
அலுத் சட்டன் பாட்ட (தமிழ் சிறுகதைத் தொகுப்பு) மொழிபெயர்ப்பு-ரஞ்சித் பெரெரா), கொழும்பு குணசேகர, லீல். (1988) பெட்டிசம் (பெத்சம நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு
ஜுனைதா ஷெரிப்) தமிழ் மன்றம், கல்ஹின்ன, கண்டி, கொறகொட, மிஸிஹாமி (1961 a ), திருவள்ளுவர்கே குறள் கொழும்பு,
அனுலா அச்சகம் w (1961b) திருக்குறள் (தர்மகாண்டய) குணசேன, கொழும்பு
(1968) நாலடியார், நுகேகொட சமரக்கோன், ஆர். ஆர். (1992), சிட்டுக்குருவிகள் (கே குறுல்லோ நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு - சரோஜினி தேவி அருணாசலம்) குணசேன, கொழும்பு சிறிராகுல (1963), பூவை விடுதூது-(செலலிஹினி சந்தேசய, தமிழ் மொழிபெயர்ப்பு
- நவாலியூர் எஸ். நடராஜன்) சிறிலங்கா சாகித்திய மண்டலய, கொழும்பு சீத்தாரஞ்சினி (1993) தோங்காரய (தமிழ்க் கவிதைத் தொகுப்பு) இரத்மலானை டி. சில்வா, சிறி சாள்ஸ் (1964), சிறிகிய (திருக்குறளின் தமிழ் மொழிபெயர்ப்பு)
இலங்கை சாஹித்திய மண்டலம், கொழும்பு தசாநாயக்க, அமரக்கோன் (1956), பத்தினி உபத்த ஹெவத் சிலப்பதிகாரம்
மஹாகாவ்ய கதா சாரய - நுகேகொட தம்மரத்ன தேரர், ஹிஸ்ஸல்ல (1959), பத்தினி தெய்யோ, மஹரகம wo (1950) மணிமேகலா சம்பு ஒரியண்டல் அச்சகம், கொழும்பு w (1963) சிங்ஹலயே திரவிட பலபேம் கொழும்பு நடராஜன், தில்லை (1994) தெமல கெட்டிகதா (தமிழ்ச் சிறுகதை தொகுப்பு)
ராஜகிரிய, குறுலுபொத் பியதாச, றோகண லக்ஷ்மன் (ப.க) (1995) இணைப்போம் கரங்கள் (தமிழ் சிங்களக்
கவிதைத் தொகுப்பு) கொழும்பு விக்கிரமசிங்க, மார்ட்டின் (1964) கிராமப்பிறழ்வு (கம்பரெலிய நாவலின் மொழி
பெயர்ப்பு எம். எம் . உவைஸ்) இலங்கை சாஹித்திய மண்டலம் - கொழும்பு (1967) கம்பெரெலிய வெஸ்லி அச்சகம், வெள்ளவத்தை (1992) பற்றற்ற வாழ்க்கை (விராகய நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு - சுந்தரம் சௌமியன்) தெஹிவலை (1993) மடொல்தீவு(மடொல் தூவ நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு - சுந்தரம் சௌமியன்) தெஹிவலை விஜேரத்ன, மடுலுகிரிய (1994) வலை (சிங்களச் சிறுகதைகள்) கொழும்பு
138 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

ஜயதிலக்க, கே. (1979) மூன்று பாத்திரங்கள் (சரிதக துனக் நாவலின் தமிழ் மொழி
பெயர்ப்பு - தம்பிஐயா தேவதாஸ்) சென்னை Catford, J. C. (1965) A Linguistic Theory of Translation.
Oxford University Press, London. De Silva, M. S.W. (1969) "Sinhalese" in Current Trends in Lingиistics. Vol.5, Linguistics in South Asia, Thomas A Sebeok (ed)Mouton. Godakumpura C. E. (1946) "The Dravidian Elements in Sinhala" in
Bullein of the School of Oriental and African Studies Vol. I 1943-46 OO (1950) Sinhalese Literature - Colombo Hettiaratchi, D. E. (1969) "Linguistics in Ceylon" Current Trends in
Linguistics Vol. 5, Linguistics in South Asia, Thomas A. Sebeok (ed.) Press. Mouton Jakobson, Roman (1987) Language in Liturature Servard University
Press, Boston. Krzeszowski, Tomasz P (1969) "Equivalence, Congruence and Deep Structure" in Papers in Contrastive Linguistics. Gerherd Nicken (ed.) Cambridge University Press, Cambridge.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 ... 139

Page 73
x
:
வெளியீடு: சமூக விஞ்ஞானிகள் சங்கம் விலை ரூபா.125
140 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002
 

சாதுக்களின் படை
۶z27zzo 2277z/zzی zzzzo/rریA6
ட்ெடே வயது நிரம்பிய சுரேஷ் சமன் குமார தன் பெயருக்கு முன்னால் வணக்கத்துக்குரிய என்னும் அடைமொழியை இணைத்துக் கொள்ளும் தகுதியைப் பெறும் வயதை இன்னும் எட்டவில்லை. ஆனாலும் அவன் தற்போதிருந்து புத்தபிக்குவிற்குரிய காவியுடை, மழித்த தலை, பிச்சைப் பாத்திரம், குடை என்பவற்றோடு கந்தேகம ரஞ்சித்தவன்ஸ் லங்கார என்னும் பெயரையும் ஏற்றுக் கொள்வான். இம்மாத முற்பகுதியில் மதகுருவாகச் சமயப்பணியாற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட 18 பையன்களில் இவனும் ஒருவன். ( இவர்களுள் ஐந்தே வயது நிரம்பிய பச்சிளம் பாலகனும் உள்ளான்) இவ்வைபவம் வடமத்திய இலங்கையில் உள்ள பெலநறுவைப் பகுதியில் திம்புலாகல பெளத்த கோவிலில் இடம் பெற்றது.
புதிதாகச் சேர்க்கப்பட்ட இவர்கள் பாடசாலைகளில் தாம் கற்க வேண்டிய அனைத்துப் பாடங்களுடனும் பெளத்த சமய நூல்களையும் கற்பார்கள். சேர்ந்து கொண்ட முதல் நாளிலிருந்தே இவர்கள் மதியத்திலிருந்து விடியும் வரை விரதம் இருந்து பசியை அடக்குவது உட்பட உள, உடல் கட்டுப்பாட்டைப் பயில்வதற்கும் கற்பிக்கப் படுகிறார்கள்.
பிக்குவாகப்பட்டம்தரிக்கும் இவ்விழா பிக்குமார் வரிசையை அதிகரிப்பதற்கு பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்காவின் தலைமையில் பெளத்தமத விவகார அமைச்சினால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முயற்சியின் ஒரு பகுதியாகும். இலங்கையில் 37, 000 புத்தபிக்குகள் இருக்கிறார்கள். இத்தொகை மிகவும் குறைவானது; இங்கு பெளத்த மதம் அருகி வருவதற்கு இதுவே முக்கிய காரணம் எனப் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கா நம்புகிறார். பிரதமரின் தகவல் அதிகாரி திரு. சீலரத்தன செனரத் இந்த முயற்சி இதுவரை 700 பேரை இப் பணிக்கு ஈர்த்திருக்கிறது என இந்துப் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.
“இச்சிறுவர்கள் இலங்கையின் தலைவிதியை வழிப்படுத்துபவர்களாக வளர்வார்கள். பிக்குமார்தான் எங்களுடைய மக்களின் முக்கிய தலைவர்கள். எவ்வளவுக் கெவ்வளவு பிக்குமார்கள் இருக்கிறார்களோ அவ்வளவுக் கவ்வளவு
Jarrasid - ggooGarf - ggo Gir 2002 14

Page 74
மக்களுக்குச் சேவை செய்ய முடியும். ஆதலினால் நாங்கள் நாட்டின் நலன் கருதி இப்பிரசாரத்தில் இறங்கியுள்ளோம்” என்று புத்த சாசன அமைச்சின் செயலாளர் திரு. எல். சுகணதாச தெரிவிக்கிறார்.
ஆயினும் இந்த ஆட்சேர்ப்பு விவகாரம் பலரது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. “ இலங்கையில் பெளத்த சமயம் வீழ்ச்சி பெற்று வருவதற்கு பிக்குகளின் எண்ணிக்கைக் குறைவு காரணமல்ல; பிக்குகள் உலகாயத விவகாரங்களில் அதிகம் ஈடுபடுவதும், மக்களுக்கான மதப்பணியாற்றும் பாத்திரத்தை ஏற்பதில் அவர்கள் அதிக அக்கறை காட்டாததுமே காரணம் எனப் பேராசிரியர் கணநாத் ஒபேசேகர தெரிவிக்கிறார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் கற்பிற்கும் இவர், இலங்கையில் பெளத்த சமயம் பற்றிப் பல புத்தகங்களும், கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
வங்கிகளில் பங்குதாரராவது முதல் ஆடம்பரக் கார்களைப் பரிசாகப் பெற்றுக் கொள்தல், தொழிற் சங்கங்களுக்குத் தலைமை தாங்குதல் வரை புத்த பிக்குகள், விசேடமாக மத குருமாரின் நகர்ப்புறத் தலைவர்கள் உலக வாழ்வில் உறுதியாகக் காலூன்றியுள்ளார்கள். இலங்கையின் அரசியற் செயற்பாட்டில் தங்களை முக்கி பங்குதாரராகவும், அதன் அதிகார உயர் குழாத்தின் முக்கிய அங்கத்தவர்களாகவும் அவர்கள் தங்களைக் கருதுகின்றனர். குறிப்பாகச் சிங்கள அடையாளத்துக்கு ஆபத்து என்று உணரும் போது குரல் கொடுப்பவராகவும், நாட்டின் சிறுபான்மையினருக்கு அரசியல் சலுகைகள் வழங்குவதற்கெதிரான போராட்டத்தில் முன்னணி வகிப்போராகவும் அவர்கள் திகழ்கின்றனர்.
“இத்தகைய சூழ்நிலையில் கெடுதிவிளைவிக்கக்கூடிய பிக்குகள் பலர் இருப்பதிலும் பார்க்கச் சொற்ப அளவில் நற்குணமுள்ள பிக்குகள் இருப்பது சாலச்சிறந்தது” என்கிறார் பேராசிரியர் ஒபேசேகர.
இந்தப் பாரிய ஆட்சேர்ப்பால் பெளத்த கோட்பாடுகளுக்கு ஆத்ம பூர்வமாகத் தம்மை அர்ப்பணித்துக்கொள்வோரை ஈர்க்க முடிந்துள்ளதா? குறிப்பாகத் தம் உள்ளத்தை நன்றாகப் புரிந்து கொள்ளக்கூடியவர்கள் என எதிர்பார்க்க முடியாத வயதில் உள்ள இந்தச் சிறுவர்களை மனங்கொண்டு விமர்சகர்கள் இவ்வாறு வினா எழுப்பியுள்ளார்கள். ஐலண்ட் பத்திரிகையில் புதன்தோறும் வெளியிடப்படும் Cat's Eye என்னும் பெண்ணியலாளர்களின் பகுதியில் தற்காலத்தில் பிக்குவாகச் சேர்வதற்குரிய குறைந்தபட்ச வயதெல்லை 18 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் எனக்
142 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒருவரின் தொழில் தேர்வுக்குரிய ஜனநாயக உரிமை பேணப்படுவதற்கு இது அவசியமாகும். தற்போது பிக்குவாதற்குக் குறைந்த வயதெல்லை எதுவும் இல்லை.
வரண்ட, நெருக்கடி நிலவும் பிரதேசமான, அடிக்கடி விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்படும் வடகிழக்கு எல்லையில் வாழும் ஜிவனோபாயத்துக்கு மிகுந்த கஷ்டப்படும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளே திம்புலாகலவில் நடந்த குருப்பட்டம் தரிக்கும் இந்த விழாவில் நிறைந்து காணப்பட்டனர்.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்துக்கும் பத்துக்கும் இடைப்பட்ட வயதுக்குரிய மூன்று சகோதரர்களும் இருந்தனர். அவர்களது பெற்றோர்கள் இவ் வைபவத்தில் கலந்துகொள்ளவில்லை. சுரேஷ்குமாரவின் தாயார் தயாவதி அன்றாடம் நாட்கூலிக்கு வேலை செய்பவர். அவர் அன்றைய சம்பளத்தைத் தியாகம் செய்து மகனின் குருப்பட்ட விழாவிற் கலந்து கொண்டார். ஆனால், அவரது கணவரோ மார்புநோயினால் படுக்கையில் இருப்பதால் வரமுடியவில்லை.
சுரேஷ் குமாரவின் கிராமத்திலிருந்து 18 சிறுவர்கள் வரை அன்று பிக்குவாக மாற்றம் செய்யப்பட்டார்கள். “இவர்களது குடும்பத்தார் இவர்களை வளர்க்க முடியாமல் வறுமையில் உழல்கின்றனர். தமது பிள்ளைகளுக்கு உண்ண உணவும், நற்கல்வியும் கிடைக்கும் என்பதால் அவர்களை இங்கே அனுப்பியுள்ளார்கள்” என அக்கிராமத்தின் பாடசாலை ஆசிரியர் திரு. H. W. ஆரியரட்ண கூறினார்.
வருங்காலத்தில் இதில் சேர்ந்து கொள்ளும் எத்தனை பேர் தொடர்ந்தும் பிக்குவாக இருப்பார்கள் என்பதை எவருமே எளிதில் யூகிக்கலாம். “இதிலிருந்து நீங்கள் விலகுவதாயிருந்தால் கூட ஒரு தகுந்த கல்வி அறிவைப் பெற்றபின்னரே அதைச் செய்ய வேண்டும். அப்போதுதான் அங்கிருந்து வெளியில் வரும்போது வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கக் கூடியதாக இருக்கும் என எனது பாடசாலை மாணவருக்கு அறிவுறுத்தியிருக்கிறேன்” என திரு. ஆரியரட்ண கூறினார்.
இத்தகைய பிக்கு மாற்ற ஆட்சேர்ப்பு ஊக்குவிப்பு, வறுமையில் உழல்பவர்களுக்கு வாழ்வில் உயர்வைக் கொண்டு வர உதவலாமே தவிர பெளத்த சமய வளர்ச்சிக்கு எவ்வகையிலும் உதவாது எனவும் இது முற்றிலும் அரசியல் உள்நோக்கமுடையது எனவும் விமர்சகர்கள் நம்புகின்றனர். "அரசியல் பிக்குகளின் எண்ணிக்கையை உயர்த்துவதே இவ்வாட்சேர்ப்பு ஊக்குவிப்பின் சாத்தியமான ஒரு விளைவாக இருக்கும். அதாவது, சரித்திரத்தில் என்றுமே நிலவாத ஒற்றையாட்சி,
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 143

Page 75
சிங்கள கீர்த்தி, மேலாண்மை, முதன்மை முதலிய கருத்துக்களைப் பிரச்சாரப்படுத்துவதில் அரசியல் வாதிகளின் கையாட்களாகவும், அழுத்தக் குழுவாகவும் செயற்படும் ஒரு கூட்டத்தைச் சேர்ப்பதாகும் ’ என்று பேராசிரியர் H. L. செனவிரட்ண தெரிவிக்கிறார். இவர் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் மானிடவியல் கற்பிக்கின்றார். The work of Kings என்ற இலங்கையில் பெளத்தமதம் பற்றிய புகழ்பெற்ற நூலின் ஆசிரியர்.
அண்மையில் பிரதமர் சிங்கள மக்களை நிறையப் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளும் படியும் அதன் மூலம் இராணுவத்துக்கும் பிக்கு சமூகத்துக்கும் விருப்பார்வத்துடன் பலர் வந்து சேர்வர்கள் என்று கூறிய பின்னணியில் இராணுவ ஆட்சேர்ப்பும், பிக்குகள் ஆட்சேர்ப்பும் பேராசிரியர் செனவிரட்ணவின் பார்வையில் இரட்டைக் குழந்தைகளாகத் தென்படுகின்றன. இது “பிக்குகளை படைவீரராக எண்ணும் மகாவம்சக் கருத்தை நினைவுறுத்துவதோடு, தமிழரும், முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் எண்ணிக்கையில் கூடிவிட்டார்கள், சிங்களவரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைகிறது என்ற சிங்கள மனப்பீதியையும் எதிரெலிக்கின்றது”எனக் கூறும் செனவிரத்ன திரு. விக்ரமநாயக்கவின் இந்த அறைகூவல் பொருளாதாரப் பேரழிவையும், சமூகத்தில் மேலும் பிளவுகளையும் ஏற்படுத்தி, நாட்டைக் கட்டியெழுப்புதலைத் தடை செய்யும் எனவும் கூறுகிறார்.
திம்புலாகல விகாரையில் பளு நிறைந்த ஆரஞ்சு நிற காவியுடையுள் தடுமாறிக் கொண்டுபுத்தம் சரணம் கச்சாமி” என்று ஒதக் கற்றுக் கொண்டிருக்கும் இச்சிறுவர்களுக்கு, தங்களுடைய பாரிய ஆட்சேர்ப்பானது இலங்கையின் மீதோ, பெளத்தம் அல்லது சிங்கள சமூகம் என்பவற்றின் மீதோ ஏற்படுத்தப் போகும் தாக்கத்தையோ அல்லது அது தம்மீது ஏற்படுத்தப் போகும் தாக்கத்தையோ, உணர்ந்து கொள்ள வாய்ப்பில்லை. வைபவ இறுதியில் தமது குடும்பத்தினரிடம் விடைபெறும் போது தான்அவர்களது கண்களில் கண்ணிர் உருண்டோடியது.
நன்றி
The Hindu July 2001 Aravada Vol 7 No.3
144 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

இலங்கையில் அரசியலின் புலமைத்துவமும்
புலமைத்துவத்தின் அரசியலும்
இனக்குழும மோதல்களில் வரலாறெழுதியல் பெறும் இடம்பற்றிய ஒரு விமரிசிப்பு
கார்த்திகேசு சிவத்தம்பி
கலாநிதி எம். ஏ. நுஃமானின் தமிழாக்கத்துடன் வெளி வந்துள்ள இன முரண்பாடும் வரலாற்றியலும்" எனும், பேராசிரியர் லெஸ்லி குணவர்த்தனவின் தனிப் பொருள் ஆய்வு வழிக்கிளம்பும் சில சிந்தனைகள்.
இவ்வாய்வுத் தமிழாக்கத்தினை இரண்டு மட்டங்களில் வைத்து நோக்க
வேண்டும்.
1. தனியாய்வுப் பொருளாக பேரா. குணவர்த்தன எடுத்துக் கூறுவன 2. இம் மொழி பெயர்ப்பில் கலாநிதி நுஃமான் பயன்படுத்தியுள்ள கலைச்
சொற்கள் சில பற்றி ஒரு கருத்துப்பகிர்கை.
முதலில் இன்றுள்ள இன மோதல்களுக்கு நியாயங்காட்டும் வரலாறு எழுதுகை பற்றி
உலக நிலைப்பட்ட வரலாறெழுதியல் வளர்ச்சிகளை மனங் கொண்டு, குறிப்பாக, இத்துறையில் மார்க்சிய சிந்தனையின் பங்களிப்புக்கள் பற்றிச் சிந்திக்கும் பொழுதும், கருத்துரைகள் கூறும் பொழுதும் இலங்கை மட்டத்தில் உலகநிலை வரலாற்றாசிரியர்களின் சிரத்தை பூர்வமான கவனத்தைப் பெறுபவர்களில் பேரா. லெஸ்லிகுணவர்த்தன முக்கியமானவர். இலங்கை வரலாறு பற்றிய அவர் பங்களிப்புகள் தென்னாசிய நிலையில் பெரிதும் போற்றப்படுபவை. அவரது மாணவர்கள் சிலர் தமிழக வரலாறு எழுதுகைகளில் தடம் பதித்துள்ளனர்.
பேரா. குணவர்த்தன இலங்கையில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனத்துவ (இனக்குழும) மோதல்களுக்கான ஒரு புலமைக்காரணியாக்வும் சிங்க்ள் மேல்ாண்மைவாத நோக்கர்களின் புலமைத்துவ நியாயப்பாடாகவும் அமைகின்ற வரலாறெழுதியல் முறைமையை மிக நுண்ணிதாக ஆராய்ந்துள்ளார்.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 145

Page 76
மரபினம் என்ற (Race) எண்ணக்கருவின் நிலையில் நின்று இனத்துவம் (இனக்குழுமம் - Ethnicty) என்ற கருத்து எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதைக் காட்டி, காலனித்துவ, பின் காலனித்துவ நிலையில் அது எவ்வாறு முதிர்வு உற்ற ஒரு கருத்து நிலையாகப் பரிணமித்துள்ளது என்பதை எடுத்துக் கூறிவிட்டு, இந்த முதிர்வு நிலை இனத்துவ உணர்வு வரலாற்று மூலங்களை வாசிப்பதில் ஏற்படுத்தும் புலமைச்சாய்ப்புக்களை வல்லிபுரச் சாசன வாசிப்பினடிப்படையில் எடுத்து ஆராய்கிறார். அந்தச் சாசனத்தை ஆதாரமாகக் கொண்டு சிங்கள முதன்மைக்கு பேரா. தர்மதாஸ் தரும் வியாக்கியானங்களையும், பேரா. வேலுப்பிள்ளை தரும் வியாக்கியானங்களையும் எடுத்து ஆராய்ந்து வரலாற்றுக்கு முரணான வாசிப்பில் எவ்வாறு இருவரும் ஈடுபட்டனர் என்பதை மிகத் துல்லியமாக விளக்குகிறார். நுஃமானின் தெள்ளிய மொழிபெயர்ப்பில் அந்த வாதங்கள் மிகத் துல்லியமாக வெளிவருகின்றன. எனவே இக்குறிப்பில் அந்த வாதங்கள் பற்றி மீள் குறிப்புச் செய்ய விரும்பவில்லை.
இன்று இலங்கையில் நடைபெறும் இனத்துவ, இனக்குழும போராட்டத்துக்கான நியாயத்தை கி. பி. முதலாம் நூற்றாண்டு வரலாற்றுச் சாசனங்களின் வாசிப்புக்களினால் போராட்டத்தின் தேவைக்கான ஆன்மதிருப்தியை நாடும் புலமை முயற்சிகளின் புலமையின்மையை (புலமைவறுமையை) தகைசான்ற ஒரு வரலாற்றாசிரியன் என்ற நிலையில் நின்று நூலாசிரியர் விளக்கிச் செல்கின்றார். இத்தகைய நோக்கு பிண்டப்பிரமாணமாக நமது கண்முன்னே நடைபெறும் (வரன்முறையான யுத்தமாகிவிட்ட) ஒரு மோதலுக்கான நியாயப்பாட்டை பேரா. தர்மதாஸ் செய்யும் வாசிப்பை அடியொட்டியோ, அல்லது பேரா.வேலுப்பிள்ளை செய்யும் வாசிப்பை அடியொட்டியோ சென்று பார்க்கக் கூடாது என்பதும், பார்ப்பது தவறு என்பதும் மிக நுண்ணிதாக
வெளிவருகின்றன.
உண்மையில் இந்த விவாதம் பேரா. தர்மதாஸவினுடைய பத்திரிகை நிலை ஆய்வுகளுக்கு மறுப்பாக எழுதப்பட்டுள்ள ஒன்றாகும். 1982இல் சமூக விஞ்ஞானிகள் சங்கம் வெளியிட்ட இனத்துவமும் சமூகமாற்றமும் என்ற நூலில் வெளிவந்த பேரா. குணவர்த்தனவின் கட்டுரையுடன் இது தொடங்குகிறது. அந்தக் கட்டுரையில் அவர் சிஹல, சிங்கள என்ற பதங்கள் இன்றுள்ளதுபோல் எல்லாக் காலங்களிலும் இன ஒருமையைச் சுட்டவில்லை என்றும், அது ஒரு காலத்தில் ஓர் அரசபரம்பரையைக் குறித்ததென்றும், பின்னர் சமூக அதிகாரத்தையுடைய குழுமத்தைக் குறித்ததென்றும், காலனித்துவ காலத்திலே சிங்கள பெளத்த
146 ıfyarıasab - gGMarf - gibGöı 2002

கோவுஷத்துக்கான உணர்ச்சி வேகத்தைப் பெற்றதென்றும் அவர் விரிவாக ஆராய்ந்தார். இவ்வாய்வு சிங்கள இனவுணர்வு கொண்ட அறிஞர்கள் பலரை எதிர்முனைப்படுத்திற்று. அதனைத் தொடர்ந்து நடந்த விவாதங்களின் ஒரு தொடர்ச்சிதான் இந்த நூல்.
இலங்கை வரலாற்றை சிங்கள வரலாறெழுதுகை எவ்வாறு பாதித்துள்ளது பாதிக்கின்றது என்பதை அறிவதற்கு இச்சிறுநூல் பெரிதும் உதவுகிறது. இந்த நூலை வாசிக்கும் போது இலங்கையில் தமிழில், பிரதானமாக தமிழர்களின் நுகர்வுக்கென எழுதப்படும் சில வரலாறு எழுதுகை முயற்சி பற்றி சிந்தனை தூண்டப்படுவது இயல்பே, இந்தத் தமிழ் நிலை வரலாறெழுதுகைகளில் ஒரு உண்மையான, நேர்மையான புலமைச்சிக்கல் உண்டு. அதாவது தமிழ்நிலைப்பட்ட பல மூலச்சான்றுகள், குறிப்பாகக் கல்வெட்டுக்கள் நன்கு ஆவணப்படுத்தப்படாத ஒருநிலை உண்டு. அத்துடன் தென்னிந்தியாவில் இலங்கை பற்றி உள்ள வரலாற்றுச் சான்றுகளை காய்தல் உவத்தலின்றி முனைப்புறுத்தும் முயற்சிகளும் நடைபெறவில்லை. இதனால் இலங்கையில் தமிழ், தமிழ் மக்கள், தமிழர் சமூகம் பெறும் இடம் பற்றிய வாதவிவாதங்கள் நிறைய உண்டு. இலங்கையில் தமிழர், சிங்களவரின் நல்லுறவுகளையும் பண்பாட்டுநிலை ஊடாட்டங்களையும் முன்ைப்பு உறுத்திக்கூறும் வரலாறெழுதியல் ஒரு புறமாகவும் (பேரா. லியன கமகே) சிங்கள தமிழ் எதிர்வு எனக் கொள்ளப்பட்ட பிரசித்த சம்பவங்களை (எல்லாள, துட்டகெமுனு யுத்தம்) அவ்வாறு கொள்வது தவறென மறுபுறமாகவும் (பேரா. பூரீ வீர) சிங்கள அறிஞர்கள் சிங்கள இனவாத வரலாறெழுதுகைக்கான எதிர்ப்புக்களைத் தெரிவித்துள்ளனர். அவற்றை வரலாறெழுதுகை நியமங்கள் தவறாத வகையில் ஆய்வுக்கட்டுரைகளாக முக்கியமாக ஆங்கிலத்தில் வெளியிட்டும் உள்ளனர்.
இப்பின்புலத்தில் நோக்கும் போது வடகிழக்கில் கண்டெடுக்கப்பட்ட சான்றுகளை அவற்றுக்குரிய முறையில் அவற்றை வரலாற்றாய்வாளர்கள் வெளியிட்டுள்ளனரா என்பது ஒரு பிரதான வினாவாகிறது. ரகுபதியின் பூர்வகுடியேற்றங்கள் பற்றிய ஆங்கில நூலைத்தவிர யாழ்ப்பாணத்தின் அண்மைக்கால தொல்லியல் அகழ்வாராய்வுகள் பற்றி வரன்முறையான ஆய்வுநெறிமுறை நின்ற ஆய்வுகளை குறிப்பாக ஆங்கிலத்தில் வெளிக் கொணராதிருப்பது ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். அண்மைக்காலத்தில் பேரா. சி. பத்மநாதனின் கல்வெட்டாய்வுகள் பற்றிய கட்டுரைகளும், குறிப்பாக இலங்கையின் சிவன்கோயில்கள் பற்றி அவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்த குறிப்புக்களும் உற்சாகமூட்டுவனவாக உள்ளன.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 147

Page 77
ஆனால், தமிழ் நிலைச்சான்றுகள் வெளிக் கொணரப்பட வேண்டியளவிற்கு கொண்டுவராதிருப்பது கவலைக்குரிய விடயமே. பல்கலைக்கழகம் அல்லாத சிங்களப் புத்திஜீவிகளினிடையே சிங்கள மேலாண்மைவாத கருத்துக்களை எதிர்த்து கருத்துக்கள் வந்துள்ளன. எடுத்துக்காட்டாக அண்மையில் வெளிவந்த லயனல் சரத்தின் 'இலங்கையில் சிங்கள - தமிழ் உறவு' பற்றிய நூலை உதாரணமாகக் காட்டலாம். அந்தப் பின்புலத்தில் இந்தநூல் ஒரு முக்கியமான புலமைப்பங்களிப்பாக அமைகின்றது.
இலங்கையில் இன்றுள்ள சமூகப் பிரச்சினைகளின் நிஜத்தை நிராகரிக்காமல், ஆனால் அந்தப் பிரச்சினைகளுக்கு சமூக விஞ்ஞான பூர்வமான தீர்வு காண வேண்டுமென்பதில் புலமை அக்கறை காட்டும் சமூக விஞ்ஞானிகள் சங்கம் இந்நூலை ஏற்கனவே ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் வெளிக்கொணர்ந்திருந்தது. இப்போது இந்நூல் தமிழிலும் வெளிவந்துள்ளது. பல்லின வாழ்வின் பின்புலத்தில் இனத்துவ/ இனக்குழும பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்பும் எவரும் இதனை வரவேற்பர். இந்நூலின் மொழிபெயர்ப்பினைப் பற்றி ஒரு சிறுகுறிப்புரையைக் கூறுவதற்கு முன்னர், Ethnicty (இனத்துவம் / இனக்குழுமம்) எனும் இக்கருத்து நிலையின் அண்மைக்காலத் தோற்றம்பற்றிய ஒரு தரவினை இங்கு சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன். உலக மொழிகள் பற்றி டேவிட் கிறிஸ்ரல் 90களில் வெளியிட்ட ஒரு கலைக்களஞ்சிய நூலில் (கேம்பிறிட்ஜ்) 1960களிலிருந்து ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்காவிற்குள் வந்த பெரும்பாலும் திறனில் (Unskilled) தொழிலாளர்களாக இருந்த குழுமங்களைச் சுட்டுவதற்கு Ethnic என்ற சொல் பயன்படுத்தத் தொடங்கியமையையும் அவர் பதிவுசெய்கிறார். குறிப்பாக ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குப் பெருந்தொகையினராக வந்த துருக்கிய, ஆபிரிக்க தொழிலாளர்களை வகைப்படுத்தவும் பின்னர் அமெரிக்காவிற்குள் தொழில் தேடிச் சென்ற மத்திய கிழக்கு நாட்டினர், கிழக்கைரோப்பிய நாட்டினரைக் குறிக்கவும் Ethnic, Ethnic culture என்ற
சொற்கள் பயன்பட்டன.
இந்தச் சொற்பிரயோகத்தின் உள்ளர்த்தங்கள் சுவாரசியமானவை. வந்தவர்கள் நாட்டிற்கு உரிமையானவர்களிலிருந்து வேறானவர்கள் என்றும் இந்தப் பண்பாடுகள் வேறானவை என்றும் மிகவும் நாசூக்கான ஐயந்திரிபற்ற முறையில் கூறப்பட்டது. மூன்றாவது உலக நாடுகளில் இந்தக் கருத்துநிலை உள்வாங்கப் பெற்று முன்னர் சாகியங்கள் (Communities) எனக் கொள்ளப்பெற்றவை இப்போது Ethnos ஆக கொள்ளப்பட்டனர். முன்னர் வகுப்புவாத அடிபிடிகளாக (Communal Clashes) இருந்தவை இப்போது இனத்துவ/இனக்குழும போர்களாயின.
148 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

முதலாளித்துவத்தின் பூகோளமயவாக்கப் போக்கு கருத்துநிலைகளையே திசை திருப்பின (பின்னர் இது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளப் பயங்கரவாதம் என்ற இன்னொரு கோஷத்தைப் பயன்படுத்தி வரும் முறைமை செப்ரெம்பர் 11 இலிருந்து முன்னிலைப் பட்டுள்ளது)
மேற்கு நாடுகளிலுள்ள அந்நாடுகளில், வாழும் இனக்குழுமங்களுக்கான ஊடகங்கள் Ethnic media என்றே கூறப்படுவதுண்டு. தமிழ் உலகெலாம் பரவுகிறதென்று நாம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்க அதற்கு அவ்வந்நாட்டு அரசுகள் தரும் வகைபாடு முக்கியமானதே.
கலாநிதி நுஃமானின் தமிழாக்கம் நூலின் மூல உயிர்ப்பைத் தமிழில் தருகின்றது. மூலத்தின் புலமைக்கனதி சிறிதும் குறைவுபடாமல் ஆனால் நல்லோட்டமான வாசிப்பு நடையில் நுஃமான் இதனை மொழிபெயர்த்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துக்கள். ஆனால் இரண்டொரு கலைச் சொற்கள் பற்றிய அவரது தமிழாக்கம் பற்றி குறிப்பிடுவது அவசியம் என்று கருதுகிறேன்.
பிரதானமாக Historiography என்பது உண்மையில் வரலாற்றியல் என்று கூறுவதிலும் பார்க்க வரலாறெழுதியல்'என்றே கூறவேண்டும். மூலச்சொல் அந்தத் தெளிவுபாட்டின் அத்தியாவசியத்தை உணர்த்துகிறது என்றே கருதுகிறேன். வரலாற்றியல் என்னும் போது வரலாற்றின் தன்மை என்ற கருத்து முனைப்புறுமேதவிர வரலாறு எழுதுகின்ற முறைமை பற்றி (வரையப்படுகின்ற முறைமை - Graphein) அழுத்தம் வராது.
நூற் பெயரிலுள்ள Ethnic Conflict ஐ முரண்பாடு என்று கூறுவதிலும் பார்க்க மோதல் / மோதுகை என்று கூறுவதே பொருத்தமானதாகவிருக்கும். முரண்பாடு என்பது Contradiction எனும் பதத்துக்குப் பயன்படுத்தப்படும் மொழிபெயர்ப்பாகும். இறுதியாக நூலின் பல இடங்களில் இனக் குழும என்ற சொற்றொடரும் ஊடாடுகின்றது. Ethnicity ஐ இனத்துவம் என்பதிலும் பார்க்க இனக்குழுமம் இனக்குழுமத்துவம் என்று சொல்வது அதன் உயிர் மூச்சு கைக்குள் பிடிபடுவது போல இருக்கின்றது. இச்சிறு குறிப்புக்கள் இத் தமிழாக்கத்தின் வாசிப்புக் கவர்ச்சியைக் குறைத்துவிடவில்லை என்றே கருதுகிறேன்.
இக்கட்டுரைக்கானபடியுருவாக்கத்தின் பொழுதுஉதவியசெல்விவே மாகறிற்றாவுக்கு என் நன்றி உரித்து (காசி)
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 149

Page 78
வெளியீடு: சமூக விஞ்ஞானிகள் சங்கம்
விலை ரூபா. 100
150 பிரவாதம் -ஜனவரி - ஜூன் 2002
 

பெண்களின் கொள்கை விளக்க அறிக்கை - 2002
இருபதாம் நூற்றாண்டின் இறுதித் தசாப்தங்களில் இலங்கைப் பெண்களின் வாழ்வில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சட்டங்களிற் சீர்திருத்தம், பெண்களின் பொருளாதார சமூக அந்தஸ்தில் முன்னேற்றம் காணல் மற்றும் சமூகத்தின் பல துறைகளிடையே பால்நிலை விழிப்புணர்வு அதிகரிப்பு என்பவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. பெண்களின் எழுத்தறிவு கிட்டத்தட்ட 90 வீதமாக அதிகரித்துள்ளது. பெண்கள் பொதுவாழ்க்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவு பிரவேசித்துள்ளார்கள். இலங்கைதான் உலகின் முதற் பெண் பிரதமரையும், ஜனாதிபதியையும் பெற்றுக்கொண்டது. மிக அண்மையில் முதலாவது பெண் உபவேந்தர், உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் அமைச்சின் செயலாளராகப் பெண்கள் இந்நாட்டில் பதவியேற்றுள்ளனர். அரச பணித்துறை, தனியார்துறை, மருத்துவம், சட்டம் மற்றும் கலை போன்ற பல துறைகளிற் பெண்கள் இங்கே முக்கிய பங்காற்றுகின்றனர். குறைத்தேர்ச்சிபெற்ற, தேர்ச்சி பெறாத பணிகளில் ஈடுபடும் பெண் ஊழியரின் விகிதத்திலும் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது.
எனினும், வறுமையின் சுமைகளைத் தாங்குவதோடு, பல்வேறுவகையான பொருளாதாரச் சுரண்டல், அரசியலில் இருந்து ஒதுக்கப்படுதல், சட்டரீதியான பாரபட்சம் மற்றும் சமூக அடக்குமுறை என்பவற்றிற்குப் பெண்கள் இன்னமும் முகங் கொடுக்க வேண்டியுள்ளார்கள். மேலும், பெண்களுக்கெதிரான வன்முறை, ஆணாதிக்க நடைமுறை, பெண்கள் தொடர்பான பாதகமான பாரம்பரிய மனப்பாங்கு என்பன இன்னமும் நிலவிவருகின்றன. இனப்பிரச்சனை ஏற்படும் காலங்களில் பெண்கள் தமது ஆண் உறவினரை இழப்பதனால் மட்டுமன்றி பெருமளவில் அகதிகளாக்கப்படுவதனலும்,
LysanTZ5b - ggoor Garf - ggos 2002 151

Page 79
அதிகரித்த பாலியல் வல்லுறவு, பாலியல் சேஷ்டை போன்றவற்றாலும் பாதிக்கப் படுகிறார்கள். தேர்தற் காலங்களில் பெண்கள் சுதந்திரமாகவும், முழுமையாகவும் பங்கேற்க முடியாமல் வன்முறைகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளார்கள்.
சனத்தொகையில் அரைப்பங்கினராக பெண்கள் இருக்கிறார்கள். அத்துடன் அவர்களுக்கு 1931ஆம் ஆண்டிலிருந்தே வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டு விட்டது. எனினும், இலங்கையின் ஆட்சி அமைப்பின் சகல மட்டங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் மிக மிகக் குறைவாகவே காணப்படுகிறது. 1994ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இவர்களின் தொகை 4.8% ஆக இருந்து 2000இல் 4% ஆகக் குறைந்துள்ளது. நாடாளுமன்றத்தின் பெண் பிரதிநிதித்துவ விகிதாசார புள்ளிவிபரப்படி, தெற்காசியா உட்பட உலகிலேயே இலங்கையில்தான் மிகக் குறைவான பெண்பிரதிநிதிகள் உள்ளனர்.
வெளிநாட்டில் வேலை பார்க்கும் தொழிலாளருக்கு- இவர்களில் அநேகர் பெண்கள். வாக்குரிமை மறுக்கப்படுவதன் மூலம் வாக்களிப்பில் அநீதி இழைக்கப்படுகிறது. வாக்காளர்களில் அரைப்பங்கினர் பெண்கள் என்பதால், தேர்தற் காலங்களில் பெண்களின் வாக்குப்பலம் பெரிதும் உணரப்படுவதோடு, தேர்தல் வெற்றிக்கு அவர்கள் முக்கிய காரணிகள் என்பதும் ஏற்றுக் கொள்ளப் படுகிறது. பெண்கள், வாக்காளர் என்ற நிலையில் இருந்தாலுங்கூட தேர்தற் பிரசாரங்களின் போது பெண்களின் நல்வாழ்வுக்கான கோரிக்கைகளை வேட்பாளர்களும் பொதுமக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அவர்களின் பிரக்ஞையை மேம்படுத்துவது அவசியமாகும்.
பெண்களைப் பாதிக்கும் பல பிரச்சினைகளை முன்வைப்பதற்கும், தேசிய, சர்வதேசிய நலன் சார்ந்த விடயங்களில் பால்நிலை சார்ந்த நிலைப்பாட்டை எடுப்பதற்கும் பாராளுமன்றத்திலும் உள்ளூராட்சி நிறுவனங்களிலும், குறிப்பாகத் தீர்மானம் எடுக்கும் மட்டங்களில் அதிக பெண்கள் இடம் பெற வேண்டிய தேவை உள்ளது.
இத்தகைய நோக்கங்களுக்காக, பின்வரும் பெண்கள் கொள்கை விளக்க அறிக்கையைப் பெணகள் நிறுவனங்கள் பல ஒன்றிணைந்து தயாரித்துள்ளன.
152 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

அரசியல்
பிரதானமாக தேர்தல் காலங்களில் , சுறுசுறுப்பான ஏற்பாட்டாளர்களாகவும் பிரச்சாரகர்களாகவும் பெண்கள் திகழும்போது, அரசியலில் அவர்களுடைய பங்கேற்றல் வேண்டப்படுகிறது. ஆனால், சில பெண்களுக்கே வேட்பாளர் நியமனம் கொடுக்கப்படுகிறது. 1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட 225 அங்கத்தவரில் 11 பேரே பெண்கள் (4.8%). தேசியப் பட்டியலில் நியமனம் பெற்ற 29 நாடாளுமன்ற அங்கத்தவரில் ஒருவர் மட்டுமே பெண் . 2000ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டோரில், பெண் அங்கத்தவரின் தொகை 9 ஆக அல்லது மொத்தத்தில் 4% ஆக மேலும் வீழ்ச்சி அடைந்தது. மாகாண மட்டத்தில், 1993 ஆம் ஆண்டுத் தேர்தலுடன் 1999 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, தெரிவு செய்யப் பட்ட பெண் அங்கத்தவரின் எண்ணிக்கை 12 (3.1%)லிருந்து 13 (3%) ஆக ஒரேயொரு பெண் அங்கத்தவரால் மட்டுமே உயர்ந்துள்ளது. அப்படி இருந்துங்கூட, இத்தேர்தலைத் தொடர்ந்து, உவா, வடமத்திய மாகாண சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு பெண் உறுப்பினர்கள் தமது கணவன்மாருக்கு இடமளிக்கும் பொருட்டு ராஜினாமாச் செய்தனர். பின்னர் அவ்விரு கணவன்மாரும் முதலமைச்சர் பதவியை ஏற்றனர். இதன் விளைவாகத் தற்போது மாகாணசபைகளில் 11 (3%) பெண் அங்கத்தவர்களே உள்ளனர். தேசிய, மாகாண சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருக்கும் அதேவேளை, உள்ளூராட்சியில் துரதிஷ்டவசமாக, இவர்களுடைய பங்காற்றல் இன்னும் மோசமடைந்துள்ளது . கடைசியாக நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலின் படி (மார்ச் 1997), தற்போதிருக்கும் பெண் அங்கத்தவரின் எண்ணிக்கை சதவீதமானது, மாநகரசபைகளில் 3.4% ஆகவும், நகராட்சிசபையில் 2.6% ஆகவும், பிரதேச சபைகளில் 1.7% ஆகவும் உள்ளது. சலிப்பூட்டும் இத்தகைய சூழ்நிலையில், நாம் பின்வருமாறு பரிந்துரை செய்கிறோம்:
1. (அ) உள்ளூராட்சி நிலையில் அதாவது, பிரதேச சபைகள், மாநகர, நகர மற்றும் மாகாண சபைகளில், குறைந்தபட்சம் 30% ஆசனங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்தல் வேண்டும். (ஆ) பாராளுமன்றத்தில் குறைந்த பட்சம் 30% பெண்களுக்கு ஒதுக்கீடு செய்தல். மேலும் தேசியப் பட்டியல் நியமனத்தில் 50% பெண்களுக்கு வழங்கல்.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 153

Page 80
2. அதிக எண்ணிக்கையில் பெண்கள், அமைச்சர்களாகவும் பிரதிஅமைச்சர்களாகவும், மந்திரி சபை அமைச்சர்களாகவும் நியமிக்கப்படுவதுடன், அமைச்சின் செயலாளர், நிறுவனத் தலைவர்கள் மற்றும் நீதித்துறையிலும் நியமிக்கப்படல்.
3. அரசியற் கட்சிகள், சகல மட்டங்களிலும் குறைந்த பட்சம்
30% பெண் வேட்பாளரைாத் நியமனம் செய்தல்.
4. பெண் வேட்பாளர்களுக்குத் தகுந்த பயிற்சியுடன் ஏனைய
ஆதரவும் அளித்தல்.
5. பாராளுமன்றத்திலும் உள்ளூராட்சி மன்றத்திலும் பெண்கள் செயற்திறனுடன் இயங்குவதற்கு உதவும் வகையில் ஆய்வுகளும் பிற உதவிச் சேவைகளும் வழங்கப்படல்.
6. பெண்கள் பிரச்சினைகளை குவிமையப் படுத்துவதற்காக் சட்டவாக்க அமைப்புக்களில் கட்சி அரசியலுக்கப்பால் செயற்படும் பெண்குழுக்களை அமைத்தல்.
7. அரசியலிலும் தீர்மானம் எடுக்கும் பதவிகளிலும் இன்னும் அதிக எண்ணிக்கையிற் பெண்கள் இடம்பெற வேண்டும் என்பதை, ஊக்குவிக்கும் முகமாக நாடளாவிய ரீதியிற் பிரசாரம் செய்தல்.
8. வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து தொழில்புரியும் இலங்கையருக்கு வாக்களிக்கும் உரிமை. (சுமார் 1 மில்லியன் பேர் வரை உள்ளார்கள்.இவர்களில் பெரும்பான்மையோர் பெண்கள்)
சட்டச் சீர்திருத்தம்
1995 இல் குற்றவியல் சட்டத்தில் குறிப்பிட்ட அளவு மாற்றம் கொண்டுவரப்பட்டது. பாலியற் தொந்தரவு குற்றமாகக் கொள்ளப்பட்டது; பாலியல் வல்லுறவுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டன; பாலியல் வல்லுறவுக்கான நியதிச் சட்ட வயதெல்லை 16 ஆக உயர்த்தப்பட்டது; திருமண வயது எல்லை 12 இலிருந்து 18 ஆகக் கூட்டப்பட்டது (முஸ்லிம்கள் தவிர). இது ஒருபடி முன்னேற்றமாக இருப்பினும், செய்யப்பட வேண்டியவை அநேகம் உள்ளன. நாம் வலியுறுத்துவது: 1. அடிப்படை உரிமைகளுக்கு மாறான, பெண்களுக்கெதிரான சகல சட்டங்களும் நீக்கப்பட அல்லது திருத்தப்படல் வேண்டும். அடையாளத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில் பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படாதிருப்பதற்கு அரசியலமைப்பு, உத்தரவாதம் வேண்டும்.
154 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

0.
குற்றவியல் மற்றும் குடியியல் பரிகாரத்துடன், பாதிப்புற்றோருக்குத் துரித நிவாரணமும், ஆலேசனை, புகலிடம் போன்ற சேவைகளும் வழங்கும் புதிய வீட்டுவன்முறைச் சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். பெண்கள் குழுக்களால் வரைபு செய்யப்பட்ட வீட்டுவன்முறைச் சட்டம் இதற்கு அடிப்படையாக அமையலாம். பாலியல் துன்புறுத்தல் பற்றிய சட்டத்தை வலுப்படுத்துவதோடு இழப்பீட்டுடன் கூடிய குடியியல் நிவாரணம் வழங்குதல் வேண்டும். தனியார்துறையில் இருப்போரையும் சேர்த்து சகல வேலை வழங்குவோரும், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்ய நடவடிக்கைகள் எடுப்பதோடு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்துதல் வேண்டும். சகலரதும் திருமண வயதெல்லையைப் பதினெட்டாக உயர்த்துதல்; சமத்துவமான தனியாள் சட்டங்களை அறிமுகப்படுத்துதல். பாலியல் வல்லுறவால், முறைதகாப்புணர்ச்சியால் கருவுற்றதால் அல்லது கருத்தரித்ததனால் ஒரு பெண்ணுக்கு உடல் அல்லது உள ரீதியாக ஆபத்து ஏற்படும் பட்சத்தில் கருச்சிதைவு செய்து கொள்ளச் சட்டத்தில் நெகிழ்வுகளை ஏற்படுத்துதல் வேண்டும். வயதுவந்தோர் தன்னினச் சேர்க்கையை விரும்புவரே யானால் நவீன சட்டங்களுக்குப் பொருந்துமாறு அதை குற்ற நீக்கம் செய்தல். தற்போதுள்ள, குற்றம் சாட்டுதலை அடிப்படையாகக் கொண்ட விவாகரத்துச் சட்டங்களில் திருமணமுறிவு என்ற எண்ணக்கருவை உள்ளடக்கிய சீர்திருத்தத்தைத் துரிதப்படுத்துதல். இலங்கைப் பெண்ணை மணம் முடித்த வெளிநாட்டு ஆண், கட்டுப்பாடுகள் எதுவுமின்றி இலங்கையில் பாரபட்சமின்றி வாழவும் தொழில் புரியவும் அனுமதித்தல். வெளிநாட்டவரைத் திருமணம் செய்த ஒரு இலங்கைப் பெண், தனது தேசிய அடையாளத்தை தனது பிள்ளைகளுக்கும் வழங்கக் கூடியதாக இருத்தல். தற்போது, குறிப்பாக அரசு காணி வழங்குகையில் ஆண்களுக்குச் சாதகமாக உள்ள அரசகாணி பட்டுவாடாச் சட்டங்களை பாரபட்சமற்றதாக்குதல்.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 155

Page 81
11. கணவன் மனைவி இருவரையும் குடும்பத்தின் தலைவர்களாக
அங்கீகரித்தல்.
12. பெண்களை அடக்கி வைக்கும் பழமை வாய்ந்த நாடோடிச் சட்டங்களை மாற்றியமைத்து, சிறுவர் விபச்சாரம், பலவந்த விபச்சாரம், கள்ளக்கடத்தல் என்பவற்றிற்கு எதிராகச் சட்டத்தை வலுப்படுத்துவதுடன், இப் பிரச்சினைகள் தொடர்பான சர்வதேச நியமங்களுக்கும் கொள்கைகளுக்கும் இணக்கமாக இருத்தல்.
13. பெண்கள் தம்முடைய சட்ட உரிமை பற்றிய விழிப்புணர்வை அதிகரித்துக் கொள்ளவதற்கான சட்ட அறிவூட்டும் நிகழ்ச்சிகளை நடாத்தல்.
வன்முறை
இலங்கையில் அநேக பெண்களும் யுவதிகளும் காணாமற் போதல், கொலை, அடித்துத் துன்புறுத்தல், பாலியல் வல்லுறவு, முறைதகாப் புணர்ச்சி, பாலியற் தொந்தரவு போன்ற பலரக வன்முறைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவராகிறார்கள். பல பெண்கள், இல்லங்களிலும், வேலைத்தலங்களிலும் பயணம் செய்யும்போதும் வார்த்தைகளாலும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார்கள். இளம் பெண்கள் தற்கொலை செய்யும் விகிதம் உச்சத்தில் உள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்றகும். ஆண்கள் மது, போதைவஸ்துக்கு அடிமைப்படுதலால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகளையும் பெண்கள் தாங்க வேண்டியுள்ளது. யுத்தம், அரசியல் காடைத்தனம, மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளால் சமூகத்தில் வன்முறைகள் அதிகரித்திருக்கிறது. நாம் பரிந்துரைப்பது:
1. பெண்களுக்கெதிரன சகலவிதமான வன்முறைகளையும் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு வளங்களையும் பிரசாரங்களையும் அதிகரித்தல்.
2. பெண்களையும் யுவதிகளையும் தாக்கியவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளையும் வேறு தடுப்பு முறைகளையும் மேற்கொள்தல் - உதாரணமாக வேலைக்கமர்த்துவோரிடம் முறையீடு செய்தல், பொலிஸ் மற்றும் இராணுவ சேவையில் புகுதலைத் தடுத்தல் அத்துடன் அவர்களுக்கு அறிவுரையும் புனர்வாழ்வும் அளித்தல்.
156 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

3. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவசச் சட்டஉதவி
வசதிகளை அதிகரித்தல்.
4. கஷ்டங்களால் உருக்குலைந்த பெண்களுக்கு, நாடளாவிய ரீதியில் அரசாங்க ஆதரவில் புகலிடமும் ஏனைய வசதிகளும் வழங்கல்.
5. புகலிடம், சட்டம் மற்றும் உளவியல் ஆலோசனைகளை ஒழுங்கு செய்வதில் அரசாங்க முகவர்களும், பெண்கள் நிறுவனங்களும் இணைந்து செயற்படல்.
6. இல்ல வன்முறை, பாலியல் வல்லுறவைப் புலனாய்வு செய்தல், பாலியல் தொந்தரவு, பால்நிலை சம்பந்தப்பட்ட வேறு வன்முறைகள் என்பவற்றைப் பொலிஸாரின் பயிற்சி நெறியில் ஒரு பகுதியாக உள்ளடக்கல்; பெண்களின் முறையீடுகளை ஏற்றுப் பரிகாரம் அளிப்பதற்குப் பயிற்சி பெற்ற ஆட்களுடன் போதியளவு உட்கட்டமைப்புகளைக் கொண்ட தனிப் பிரிவுகளை ஏற்படுத்தல்.
7. பெண்களுக்கெதிரான வன்முறை பற்றிய விடயங்களில் கூருணர்வூட்டுவதற்கு நீதிபதிகளுக்கும், குற்றவியல் வழக்கறிஞர்களுக்கும் பாடநெறிகள் நடத்தப்படல்.
8. பஸ் சாரதிகளும், நடத்துனர்களும் பெண்களுக்குத் தொந்தரவு கொடுப்போருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கான வழிவகைகளை உறுதிப்படுத்துதல்.
9. பெண்கள் சகல விதமான வன்முறைகளிலிருந்தும் விடுதலை பெறும் உரிமையை அரசியலமைப்பில் மிகத் தெளிவாக அங்கீகரித்தல். தனிப்பட்ட ரீதியிலோ, பொது இடத்திலோ ஒரு பெண் வன்முறைக்காளானால், அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் வாய்ப்பை அவருக்கு வழங்குதல்.
பொருளாதாரம்
போராட்டங்களிலும், ஊழியர் படையிலும் முக்கிய பங்கை
வகிக்கும் பெண்களுக்கு, ஆண்களுடன் ஒப்பிடுகையில் பல துறைகளில்
பாரபட்சம் காட்டப்படுகிறது. குறிப்பாக, கிராமிய, ஒழுங்குமுறை
படுத்தப்படாத, தொழிற்சங்கம் சாராத் துறைகளில் பெண்கள் மிகக்
குறைந்த சம்பளம் பெறுவதோடு, தேர்ச்சி குறைந்தவராகவும்
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 157

Page 82
கணிக்கப்படுகிறார்கள். பெருந்தோட்டம், தொழிற்சாலைகள் மற்றும் வெளிநாடுகளில் குறைந்த ஊதியம் பெறும் பெண்கள் நாட்டிற்குத் தேவையான அந்நிய செலாவணியின் பெரும்பகுதியை உழைத்துத் தருகிறார்கள். பெண்களின் சம்பளம், தொழில்புரியும் மணித்தியாலங்கள் மற்றும் வேலை, வாழ்க்கைத்தரம் என்பன பற்றி விசேட கவனம் செலுத்தவேண்டிய அதேவேளை - தம்மை ஒழுங்கமைத்துக் கொள்ளும் உரிமை, உடல்நல வசதி, குழந்தை பராமரிப்பு நிலையம் மற்றும் ஏனைய வசதிகளுக்கான அவர்களது உரிமைகளை அரசியல்வாதிகளும், வேலைக்கமர்த்துவோரும் கருத்திற் கொள்ளல் வேண்டும். வேலையற்றிருப்போரில் பெண்களே பெரும்பகுதியினர். வெளிநாடுகளில், குறிப்பாக மத்திய கிழக்கில் பெண்கள் சுரண்டப்படுவதையும், கடுமையாக நடாத்தப்படுவதையும் பற்றி அதிகம் பேசப்பட்டபோதிலும், இதில் இன்னமும் செய்ய வேண்டியவை அதிகம் உண்டு. வீட்டுப் பணிப்பெண்கள், மற்றும் முறைசாராத் துறைகளில் பணிபுரியும் பெண்களின் நலன்களைப் பாதுகாப்பதற்குச் சட்டங்களோ நிறுவனங்களோ இல்லை. பெண்கள் செய்யும் வேதனமற்ற பலரக வீட்டுப் பணிகள், கவனத்திற்கெடுத்துக் கொள்ளப்படுவதில்லை. நாம் பரிந்துரை செய்வது:
1. தேசிய ரீதியில் குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயித்து
நடைமுறைப்படுத்தல்.
2. விவசாயத்தில் ஈடுபடும் பெண்கள் உட்பட சமமதிப்புடைய உழைப்பை வழங்கும் பெண்களுக்குச் சமசம்பளம் வழங்குதல்.
3. குறிப்பாகத் தாபனமயப்படுத்தலை ஊக்கப்படுத்தாத துறைகளில் தொழிற்சங்கம் அமைக்கும் பெண்களின் உரிமைகளையும் கூட்டாகப் பேரம் பேசும் சக்தியையும் பலப்படுத்தல்.
4. தந்தையருக்குரிய குழந்தை பராமரிப்பு விடுமுறையையும் உள்ளடக்கியதாக பெற்றோருக்குரிய விடுமுறைக் கொள்கையை அங்கீகரித்தல்.
5. தொழில் புரியும் ஸ்தலங்களில், குறிப்பாகப் பெருந்தோட்டம், தொழிற்சாலைகள் மற்றும் காரியாலயங்களில், குழந்தை பராமரிப்பு நிலையங்களுடன் போதியளவு பராமரிப்பு வசதிகள் செய்து கொடுத்தல்.
6. ஏற்றுமதி உற்பத்தி வலயங்களிலும், அத்தகைய பிற தொழிற்சாலைகளிலும் வேலை, சம்பளம் தொடர்பான
158 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

10.
11.
12.
13.
நிலைமைகளை மேம்படுத்துதல், தொழிற்சங்கங்களையும், கூட்டான பேரங்களையும், சுயவிருப்புடன் செய்யும் மேலதிக வேலை, தகுந்த தங்குமிடம், போக்குவரத்து வசதி மற்றும் இரவு வேளைகளில் கூடிய எண்ணிக்கையில் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தல் என்பவற்றையும் அங்கீகரித்தல். வெளிநாட்டில் பணிபுரியும் பெண்களுக்கு: ஆட்சேர்ப்புக்குரிய குறைந்தபட்சத் தரங்களுடன் கூடிய, தரப்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களை அமுல்படுத்துவத ற்காகவும், தொழில்புரியும் சூழல், தாயகத்திற்குத் திருப்பியனுப்புதல் தொடர்பாக அரசாங்கத்துக்கும் தொழில் வழங்கும் நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளுதல், தொழில் வழங்கு நாடுகளில் புலம்பெயர்ந்த தொழிலாளருக்காக மேலதிக தொழில் மற்றும் நலன்புரி அலுவலகங்களை அமைத்தல், இலவச சட்ட உதவிகளும், ஆலோசனைகளும் வழங்குதல், சமூகப்பாதுகாப்பு முறை ஒன்றை உருவாக்குதல். வீட்டுப் பணியாளருக்கு: மேம்படுத்தப்பட்ட வசதிகள், பாதுகாப்புகள். குறைந்கதபட்ச சம்பளத்துடன் சமவேலைக்கு சமசம்பளம், மாதாந்த மற்றும் வருடாந்த விடுமுறை; உடல்நல வசதிகள் மற்றும் ஊழியர் சேமலாபநிதி (EPF) போன்றவை வழங்கப்படுதல். இல்லங்களில் கைத்தொழில் மற்றும் சுயதொழில் புரியும் பெண்களின் உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கும் முகமாக, தொழிற்சட்டங்களை விரிவுபடுத்தல். சர்வதேச தொழில் அமைப்பின் (ILO) உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளல். பெண்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லையை 55 இலிருந்து 65 ஆக உயர்த்துதல். விதவைகளினதும் அநாதைகளினதும் ஓய்வூதியத்தை, அவர்களைச் சார்ந்து வாழும் மற்றைய பெண்களுக்கும் வழங்குதல். வேலையற்ற, குடும்ப ஆதரவற்ற விவாகம் செய்யாத மாதர்களுக்குத் தகுந்த தொழிற் பயிற்சியளிக்க விசேட வசதிகள் செய்தல். பெண்கள் தலைமைத்துவம் தாங்கும் குடும்ப அமைப்பை அங்கீகரித்து அவர்களது அக்கறைகளை உறுதிப்படுத்தும் கொள்கைகளை உருவாக்கல்.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 159

Page 83
961. 6tb
ஆணாதிக்க அமைப்புகளாலும் மனப்பாங்குகளாலும் இலங்கையிலுள்ள பெண்கள் இன்னமும் கீழ்மைப்படுத்தப் படுகிறார்கள். விசேஷமாக தேர்தற் காலங்களில் ஊடகத்துறையில் இதை நாம் தெளிவாகக் காணக் கூடியதாக இருக்கிறது. பெண் அரசியல்வாதிகள் பற்றிய ஆபாச வசைகள் பரவலாக இடம்பெறுகின்றன. ஆயினும், பெண்களைப் பற்றிய சாதகமான படிமங்களை உருவாக்கவல்ல, ஆற்றல்மிக்க கருவியாக பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலிகள், தொலைக் காட்சிகள் என்பன விளங்க முடியும் . ஆனால் , துரதிர்ஷ்டவசமாக விளம்பரங்களில், கேலிச்சித்திரங்களில், கட்டுரைகளில், ஆசிரிய தலையங்கங்களில் பால்வாதம்(Sexism) இன்னமும் நிலவிவருகிறது. தொலைக்காட்சித் தொடர்களில் இன்னமும் பெண்களுக்கெதிரான வன்முறைகளும், பாலியல் மனப்பாங்குகளும் சித்திரிக்கப்படுகின்றன. மேலும், இவை பெண்களை மனைவி, தாய் அல்லது பாலியல் காட்சிப் பொருட்களாகவே எடுத்துக் காட்டுகின்றன. ஊடகத் தயாரிப்புத் துறைகளில், குறிப்பாக, தீர்மானம் எடுக்கும் மட்டங்களில் பெண்களுக்குப் போதிய அளவு பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை. நாம் பரிந்துரை செய்வது:
1. ஊடகத்துறைகளில் விசேஷமாகத் தயாரிப்பு மற்றும் தொகுப்புத் துறைகளில் பெண்களுக்கு கூடிய பயிற்சியும் தொழில் வாய்ப்பும் வழங்கல்.
2. பெண்கள் பற்றிய சாதகமான மனப்பாங்கை ஊக்கப்படுத்தவும், ஊடகங்களில் பால்வாதத்தையும் பெண்களைப் படியாக்கம் செய்வதையும் எதிர்த்துப் போராடவும் ஊடகவியலாளருக்கு ஒழுங்குவிதிகளை ஏற்படுத்தல்.
3. பால்நிலைக் கூருணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டங்களை
ஊடகவியலாளருக்கு வழங்குதல்.
4. பத்திரிகைக் கட்டுரைகள், கேலிச்சித்திரங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், குறிப்பாகத் தொலைக்காட்சி நாடகங்கள் என்பவற்றில் பால்வாதத்தைக் கண்காணிக்கவும் அம்பலப்படுத்தவும் மும்மொழிகளிலும் தொடர்ச்சியாக ஊடகக் கண்காணிப்புக்கு உதவுதல்.
5. ஊடகத்துறையில் பால்வாதத்திற்கு எதிராகச் செயற்படும்படி பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலிநிலய முகாமையாளர்,
160 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

பத்திரிகை ஆசிரியர், விளம்பர முகாமையாளர், ஊடகக் கண்காணிப்புக் கவுன்சில் போன்றவற்றைத் துாண்டும் பிரசாரங்களை மேற்கொள்ளல்.
உடல்நலம்
இலங்கையில் சுகாதார வசதிகளையும், சேவைகளையும் குறைக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும்போது அது மாதரையும், யுவதிகளையுமே பெரிதும் பாதிக்கிறது. உடல் நலக்கேடு என்னும் பெருஞ்சுமையைக் கிராமத்துப் பெண்களும், குறைந்த வருமானம் பெறும் பெண்களுமே தாங்க வேண்டியவராகின்றனர். குறிப்பாக, தொழிலையும் வீட்டுப் பணிகளையும் செய்யும் இரட்டைச் சுமைகள், தொழில் புரியும் பெண்கள் மீதே சுமத்தப்படுகிறது. நாம் வலியுறுத்துவது:
1. பெண்களின் பிரசவ இறப்பு, குழந்தைகளின் இறப்பு வீதங்களையும், நோயுறும் வீதத்தையும் குறைத்தல். பெருந்தோட்டங்களில் வாழும் பெண்கள், யுவதிகளிடையேயும், கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் வாழும் ஏழ்மை யுற்றோரிடையேயும், இடம் பெயர்ந்தோர் நிலையங்களில் உள்ளோரிடையேயும் இரத்தசோகை, போஷாக்கின்மை என்பவற்றைக் குறைத்தல்
2. நாடளாவிய ரீதியில் பெண்களுக்கான "நலன்புரி” மருத்துவ நிலையங்களை விரிவுபடுத்தல். புற்றுநோய் மற்றும் பெண்களைப் பாதிக்கும் வேறு நோய்களை கிரமமாகப் பரிசோதித்துக் கண்டறிய வசதிகளை செய்து கொடுத்தல்.
3. தொழிற்துறை சார்ந்த உடல்நிலை மற்றும் பாதுகாப்பு விதிகளைக் கடுமையாகப் பின்பற்றுவதுடன் தகுந்த முதலுதவி, உணவுச் சாலைகள், கழிப்பறை வசதிகளைப் பெண் ஊழியருக்கு வழங்குவதன் மூலம், பெண்களின் உடல்நலத்துக்கான பொறுப்பை வேலைக்கமர்த்துவோர் ஏற்றுக்கொள்ளல்.
4. இனவிருத்தி உரிமைகளைச் சகல பெண்களுக்கும் அளிக்கும் முகமாகப் பிரசார நடவடிக்கையைக் கைக்கொள்ளுதல். மேலும் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளில் நன்கு அறியப்பட்ட மிக எளிதில் கிடைக்கக் கூடிய தெரிவுகளைச் செய்ய அவர்களுக்கு வசதிசெய்து கொடுத்தல்.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 161

Page 84
5. பெண்களிடையே எயிட்ஸ் HIV/AIDS தடுப்பு முறைகளை
பலப்படுத்தல்.
6. வறிய ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தினருக்கும் முதியோருக்கும் சுகாதார வசதிகள், போக்குவரத்து, மற்றும் அடிப்படைச் சேவைகள் வழங்குவதில் சலுகை அளித்தல்.
7. மன அழுத்தம் அல்லது நெருக்கடிச் சூழ்நிலையில் இருக்கும் பெண்களுக்கு ஆலோசனை வழங்கும் திட்டங்களை உருவாக்குதல். யுவதிகள் மத்தியில் உயர் வீதத்தில் காணப்படும் தற்கொலை உட்பட மனநோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஆராய்ந்து செயற்படல்.
8. பெண்களுக்கு எதிரான வன்முறையை ஓர் உடல்நலப்
பிரச்சனையாக அணுகுதல், உடல்நலக் கொள்கைகளுள் பரிகார மற்றும் தடுப்புவழி முறைகளையும் உள்ளடக்குதல்.
கல்வி
இலங்கையில் பெண்களதும், யுவதிகளினதும் கல்வி மற்றும் எழுத்தறிவு மட்டம் சாதகமான நிலையில் அமைந்துள்ளது. ஆயினும் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் உள்ள, பெண்களிடையேயும் குறைந்த வருமானமுள்ள கிராம, நகர்ப்புற பெண்களிடையேயும் இன்னமும் குறைந்த எழுத்தறிவு நிலவி வருகிறது. பெண்கள் பற்றிய எதிர்மறையான மனப்பாங்குகள் பாடசாலைகளிலும் பாடநூல்களிலும் ஊக்குவிக்கப் படுகின்றன. நாம் வலியுறுத்துவது:
1. ஆரம்ப, இடைநிலைக் கல்வி மட்டங்களை முன்னேற்றுவதுடன் வசதிகள் வழங்கும் போது - பெருந்தோட்டத்தைச் சார்ந்த பெண் பிள்ளைகளிடையேயும் மற்றும் வறிய கிராமப்புற, நகர்ப்புறப் பெண்பிள்ளைகளிடையேயும் பால்நிலை பாரபட்சம் காட்டுதலை ஒழித்தல்.
2. நாடு முழுவதிலும் 16 வயதுவரை கட்டாயக்கல்வியை
வலியுறுத்திச் செயற்படுத்தல்.
3. பாடநூல்களிலும், கலைத்திட்டங்களிலும் பால்வாதம், இனவாதம் என்பன நீக்கப்பட்டு பால்நிலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விடயங்கள் உள்ளடக்கப்படுதல்.
162 பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

4. தொழில், தொழில்நுட்ப, விஞ்ஞான, மற்றும் முகாமைத்துவப் பயிற்சித் திட்டங்களுக்கான ஆட்சேர்ப்பின்போது பால்நிலை சமமின்மையைக் குறைத்தல்.
5. எழுத்தறிவற்ற, வேலையிழந்த, வேலையற்ற பெண்களுக்கு முதியோர் கல்வி, நடைமுறை எழுத்தறிவு செயற்திறன் வளர்ச்சித் திட்டங்களை ஸ்தாபித்தல்.
6. ஆசிரியர், பாடசாலை மாணவர் மற்றும் பல்கலைக்கழக மாணவர் மத்தியில் பால்நிலை சமத்துவம் பற்றிய விஷயங்களில் கூருணர்வை ஏற்படுத்தல்.
7. பால்நிலை சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பாடசாலைக் கலைத்திட்டங்களில் உள்ளடக்ககுதலும் பல்கலைக் கழகங்களில் பால்நிலைக் கல்வியை விரிவுபடுத்துதலும்.
பண்பாடும் சமூகமும்
பண்பாடு, மரபு, சம்ரதாயச் சட்டம் என்ற அடிப்படைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் அடக்குமுறைச் சமுதாய வழக்கங்களினால், பெண்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். படிநிலையையும், அசமத்துவத்தையம் அடிப்படையாகக் கொண்ட சாதிமுறை, பெண்மக்களை சுமையாக மாற்றும் சீதனமுறை போன்ற பழங்கால மனப்பாங்குகளும் நிலமானிய சமூகமுறையின் எச்சசொச்சங்களும் இவற்றுள் அடங்கும். இல்லங்களிலும், சமுதாயத்திலும் சட்டத்துறையிலும் நிலவிவரும் ஆண் தலைமைத்துவ முறைமை பெண்களின்மேல் பல்வேறுவகையான பாராபட்சம், ஆண் ஆதிக்கம், மகனுக்கு முன்னுரிமை வழங்குதல் போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது. பெண்களுக்கு எதிரான அநேக சமூகத் தடைகள், மூடநம்பிக்கைகள் எதிர்மறையான மனப்பாங்குகள் இன்னமும் நிலவி வருகிறன. நாம் வலியுறுத்துவது:
1. மாதருக்கும் யுவதிகளுக்கும் கேடு தரும் சமூக நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தாமை. (உம்: கன்னித் தன்மையைப் பரிசோதித்தல், விதவைகளைப் பற்றிய மனப்பாங்குகள், பெண்ணுறுப்பை
உருச்சிதைத்தல்)
2. பெண்களை எதிர்மறையாகப் பாதிக்கும் சம்ரதாயச் சட்டங்களை
மாற்றியமைத்தல்.
3. மகனுக்கும், மகளுக்கும் பரம்பரைச் சொத்தில் சமபங்கு
அளிப்பதுடன் சீதனமுறையை ஊக்கப்படுத்தாமை.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 163

Page 85
தேசிய ஊடகங்கள் மூலமாகவும், அறிவூட்டுதல் மூலமாகவும்
4.
நாடளாவிய பால்வாத சமுதாய பழக்கவழக்கங்களுக்கு எதிராகத் தேசிய ஊடகங்களையும் கல்வியையும் பயன்படுத்தல்.
5. மது மற்றும் போதைவஸ்துக்கு அடிமைப்படுவதை ஒழிப்பதற்கான
நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தல்.
யுத்த நெருக்கடி
யுத்தத்தினால், பாதிப்புக்குள்ளானவர்கள் பெண்களே!
பேச்சுவார்த்தை மூலமான சமாதானத்தை அவர்கள் மிகவும் விரும்புகிறார்கள். யுத்தத்தினால் பாதிப்புற்ற இருபகுதியைச் சேர்ந்த பெண்களின் நன்மைக்காக நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும். நாம் பின்வரும் தேவைகளை விசேஷமாக அழுத்திக் கூறுகிறோம்:
அகதிகளான பெண்களுக்கும் யுவதிகளுக்கும் வேலை, கல்வி என்பவற்றிற்கு வழிவகை செயப் து சகல வித தொந்தரவுகளிலிருந்தும் பாதுகாப்பு வழங்கல். யுத்த விதவைகள் உட்பட மோதலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நலன்புரித் திட்டங்கள், வேலை மற்றும் தொழிற்பயிற்சி என்பன வழங்கல். இடம்பெயர்ந்து அகதிகளான பெண்களுக்கும் யுவதிகளுக்கும் பாதுகாப்பான மீள்குடியமர்வுக்கு உரிமை. பொலிஸ் நிலையங்களிலும், சோதனைச் சாவடிகளிலும் பெண்களுக்கும் யுவதிகளுக்கும் பாதுகாப்பு வழங்கல். யுத்தப்பகுதியைச் சார்ந்த, மனவதிர்ச்சி அடைந்த பெண்களுக்கு ஆறுதல், ஆலோசனைகள் வழங்கல். நெருக்கடித் தீர்வு நடைமுறைகளில், அதிக எண்ணிக்கையில் பெண்கள் ஈடுபடுதல்.
தணை நடவடிக்கைகள்
1.
164
சகல பரிந்துரைகளையும், சீர்திருத்தங்களையும் நிறைவேற்றப் போதிய அளவு மூலவளங்களும் வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடும். அத்துடன் பெண்கல்வி, சுகாதாரத் துறைகளுக்கு கூடிய தொகையை செலவு செய்தல்.
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

2. பெண்கள் சம்பந்தமான சகல பரிந்துரைகளையும் சீர்திருத்தங்களையும் நிறைவேற்றுவதை முதன்மை இலக்காகக் கொண்டு செயற்பட சம்பந்தப்பட்ட அரச மற்றும் தனியார் ஸ்தாபனங்களுக்கு கால அட்டவணை வழங்கல்.
3. பாரபட்சம் பற்றிய முறையீடுகளை விசாரிக்கவும், கல்வித் திட்டங்களை நடைமுறைப் படுத்தவும், சட்ட நடவடிக்கைகள், மேற்கொள்ளவும், ஆராய்ச்சி மேற்கொள்ளச் செய்யவும் அதிகாரம் உள்ள சுயாதீனமாக இயங்கும் பெண்களுக்கான தேசிய ஆணைக்குழு ஒன்றை உருவாக்குதல்.
4. பெண்கள் விவகார அமைச்சு: பெண்களின் விடயங்கள் மற்றும் பால் சமத்துவத்தின் தேவைகள் என்பவற்றில் பரிச்சயம் உள்ள ஒரு அமைச்சரை நியமித்தலும், சகல பால்நிலை விடயங்கள் சம்பந்தமாக அமைச்சின் அதிகாரிகளுக்கு மேலும் பயிற்சி வழங்கலும்.
5. F66) சமூகத்தையும் சார்ந்த பெண்களை, கொள்கைகளும் திட்டங்களும் எவ்விதம் பாதிக்கின்றன என்பதை மதிப்பீடு செய்யும்பொருட்டு, பால்நிலைத் தாக்கத்தை மதிப்பிடும் குழு ஒன்றைத் தேசிய திட்டமிடல் திணைக்களத்தில் நிறுவுதல். அரசாங்கத்தின் கொள்கைத் திட்டமிடல், நடைமுறைப் படுத்தல் தொடர்பான சகல மட்டங்களிலும் எல்லா அமைச்சுக்களிலும் பால் நிலைப் பிரச்சினை தொடர்பில் பயிற்சியுள்ள அலுவலர்
ஒருங்கிணைத்தல்.
6. பால் நிலை பற்றிய ஒழுங்குபடுத்தப்படாத தரவுகள்
பொருளாதாரத்திலும் குடும்ப நிர்வாகத்திலும் பெண்களின் பங்களிப்புக் குறைவாகவே கணிக்கப்பட்டிருப்பதால், பொருளாதார மற்றும் சமுதாயப் புள்ளி விபரங்களிலுள்ள இடைவெளிகள் நிரப்பப்பட வேண்டிய தேவையுள்ளது.
7. பொதுமக்களிடையே பெண்கள் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தலும்,1995 பீஜிங் சர்வதேச பெண்கள் மகாநாட்டுத்
தீர்மானங்களை நடைமுறைப்படுத்தலும்
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002 165

Page 86
1166
பெண்களின் கொள்கை விளக்க அறிக்கையை தமிழ், சிங்களம், ஆங்கிலம்
ஆகிய மொழிகளில் வெளியிட்டோர்.
பெண்கள் அரசியல் அமைப்பு இலங்கைப் பெண்களின் அரச சார்பற்ற நிறுவன அமைப்பு பெண்களுக்கான ஆராய்ச்சிமையம் (CENWOR) முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி, செயல் முன்னணி பெண்களும் ஊடகமும் கூட்டமைப்பு பெண்கள் கல்வி ஆய்வு மையம் (WERC) பெண்களின் குரல்
காந்தா சக்தி இனத்துவ தயவுக்கான சர்வதேசநிலையம் - பால்நிலை அலகு உதவி தேடும் பெண்கள் (WIN) சமுக விஞ்ஞானிகள் சங்கம் - பால்நிலை அலகு சமாதானத்திற்கான பெண்களின் கூட்டமைப்பு
மேலதிக விபரங்களுக்கு: பெண்கள் அரசியல் அமைப்பு 425/15, திம்பிரிகஸ்யாய வீதி, கொழும்பு - 5 தொலைபேசி: 501339 தொலைநகல்: 595663 lfsir ge(6556) SSaGeureka.lk
பிரவாதம் - ஜனவரி - ஜூன் 2002

ஒரு கடிதம்
அகா ஷஹித் அலி
அன்புள்ள ஷஹீத் உன் தொலைதூரத் தேசத்திலிருந்து உனக்கு இதை எழுதுகிறேன். இங்கு வாழும் எங்களிடமிருந்துகூட மிகத் தொலைவிலுள்ள தேசத்திலிருந்து நீ இனி ஒருபோதும் இல்லாத இடத்திலிருந்து. எல்லாரும் தம் பைகளில் விலாசத்தைக் கொண்டு திரிகின்றனர், தம் உடலேனும் வீட்டுக்குப் போய்ச் சேர்வதற்காக.
நகரத்தில் வதந்திகள் எங்களை வந்து சேர்கின்றன. எல்லைப் புறங்களிலிருந்து சொற்கள் இன்னும் எங்களை வந்து சேர்கின்றன: ஆண்கள் இராமுழுவதும பணி நீரில் வெறுங்காலுடன் நிற்குமாறு பணிக்கப்படுகின்றனர். வீட்டுக்குள் பெண்கள் தனியே. படையினர் வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகளை அடித்து நொறுக்குகின்றனர். வெறுங் கையினால் எங்கள் வீடுகளை துண்டுதுண்டாய் கிழித்து வீசுகின்றனர்.
றிஸ்வான் கொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருப்பாய். றிஸ்வான். சொர்க்கத்தின் பாதுகாலன். பதினெட்டு வயதுதான். நேற்று மறைவிடக் கடையில் (எல்லோரும் அங்கு உன்னைப்பற்றித்தான் கேட்டனர்) விசாரணை மையத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு பதினாறு வயதுப் பையனுக்கு மருத்துவம் செய்த டாக்டர் சொன்னார் "சோதிடனிடம் நான் கேட்கவேண்டும். அவனது கைரேகை அனைத்தும் கத்தியால் வெட்டப்படும் என்று அவனது விதிரேகையில் ஏதாவது அறிகுறி தென்பட்டதா?”
இன்ஷா அல்லா, இந்தக் கடிதம் உனக்குக் கிடைக்கும். நாளை தென்பகுதிக்குப் போகும் எனது சகோதரன் இதனைத் தபாலில் சேர்ப்பான். இங்கு ஒரு முத்திரை வாங்கக் கூட யாருக்கும் முடியாது. இன்று நான் தபாலகத்துக்குப் போனேன். ஆற்றைக் கடந்து. பொதிகள், பொதிகள், நூற்றுக் கணக்கான கன்வஸ் பொதிகள். எல்லாமே சேர்க்கப்படாத தபால் பொதிகள். தற்செயலாகக் கீழே பார்த்தபோது உனக்கு எழுதப்பட்ட இந்தக் கடிதம் நிலத்தில் கிடக்கக் கண்டேன். அதை இத்துடன் அனுப்புகிறேன். அது நீ செய்திக்காக ஏங்கும் யாரோ ஒருவர் எழுதியதாய் இருக்கலாம்.
எப்போதும் நாங்கள் உன்னைப் பற்றிப் பேசிக்கொண்ட போதிலும் இங்கு நிலைமைகள் வழமைப்படியே. நீ விரைவில் திரும்பி வருவாயா? உனக்காகக் காத்திருப்பது வசந்தத்துக்காகக் காத்திருப்பது போன்றது. வாதுமை மலர்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். ஒ இறைவன் நாடினால் நாம் எல்லோரும் இன்புற்றிருந்த அந்த அமைதியான சமாதான நாட்கள், நாம் சென்ற இடமெல்லாம் மழை எங்கள் கைகளில் பெய்த அந்த நாட்கள் மீண்டும் வரும்.
அகா ஷஹித் அலியின் தபாலகம் இல்லாத நாடு என்ற தொகுதியிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு வ்சன் கவிதை. ஷஹித் அலி, கஷ்மீர் நாட்டுக் கவிஞர். பல விருதுகள் பெற்றவர். கடந்த டிசம்பரில் σ πσυμDrτ 65τΓτfτ.

Page 87
உலகமயமாக்கலும் ມີເຖິງ काjā
சுப்ரமணியம் சதுக்களின் படை
PRINTED BY UNIE ARTs (e.