கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாதம் 2002.07-12

Page 1


Page 2
figGirith
சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் அரையாண்டுச் சஞ்சிகை
தொகுதி - 2 ஜூலை - டிசம்பர் 2002
ஆசிரியர் எம். ஏ. நஃமான்
ஆசிரியர் குழு என் சண்முகரத்தினம் சித்திரலேகா மெளனகுரு செல்வி திருச்சந்திரன்
தொடர்பு முகவரி: பிரவாதம், சமூக விஞ்ஞானிகள் சங்கம் 425/15, திம்பிரிகஸ்யாய வீதி, கொழும்பு - 5, இலங்கை.
தொலைபேசி: 501339, தொலைநகல் 595563 (ógöT gyá356ü:ssageurekalk
விலை: தனிப்பிரதி ரூபா 100/-
அச்சு: யுனிஆர்ட்ஸ் (பிறைவேற்) லிமிற்றட், 48B, புளுமென்டால் வீதி,
கொழும்பு - 13.
ISSN 1391. 7269

ஆசிரியர் குறிப்பு
ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இலங்கையின் சமாதான முயற்சி ஒரு முக்கியமான, ஆரோக்கியமான திருப்பத்தை அடைந்திருப்பதாகத் தோன்றுகின்றது. ஒற்றை ஆட்சி நிலைப்பாட்டில் இருந்து அரசு தரப்பும், தனிநாடு என்ற நிலைப்பாட்டிலிருந்து புலிகள் தரப்பும் இறங்கி சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுபற்றிப் பரிசீலிக்க இணக்கம் கண்டுள்ளன. நீண்டகால இனமுரண்பாட்டுக்கும், நீடித்த யுத்தத்துக்கும் சமாதானத் தீர்வுகாணும் முயற்சியில் இது ஒரு பாரிய முன்னேற்றம் என்பதில் ஐயம் இல்லை. சர்வதேச சமூகம் தனது அங்கீகாரத்தையும் பலமான ஆதரவையும் இதற்குத் தெரிவித்துள்ளது. அனைத்து இன மக்கள் மத்தியிலும் எதிர் காலம் பற்றிய நம்பிக்கையையும் இது தோற்றுவித்திருக்கின்றது.
ஆயினும், சமாதான முயற்சி வெற்றிகாண்பது அவ்வளவு இலகுவானதல்ல என்பதை நாம் அறிவோம். பலவகையான இடையூறுகளையும் தடைகளையும் அது எதிர்நோக்கியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும், ஏனைய சிங்கள தீவிரவாதக் கட்சிகளும் சமாதான முயற்சிகளுக்கு எதிராகவே உள்ளன. அரசைக் கவிழ்ப்பதற்கான சந்தர்ப்பத்தை அவை எதிர்பார்த்துள்ளன. ஜனாதிபதிக்கும் அரசுக்கும் இடையிலான முரண்பாடும் தொடர்கிறது. ஜனாதிபதி எச்சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்தைக் கலைக்கலாம் என்ற அச்சம் நிலவுகின்றது. பாராளுமன்றத்தைக் கலைக்காமலே ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர முயலப்போவதாகவும் ஜனாதிபதியின் சகோதரர் அனுரா பண்டாரநாயக்கா தெரிவித்திருக்கிறார். இதேவேளை பாராளுமன்றத்தில் அரசின் முக்கிய பங்காளிக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபட்டுள்ளது. இதற்குப் பின்னால் பிரதான எதிர்க்கட்சியின் கை இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.
அரசு, குறிப்பாகப் பிரதம மந்திரி இவற்றையெல்லாம் எவ்வாறு சமாளிக்கப் போகின்றார் என்பதிலேயே சமாதான முயற்சியின் எதிர்காலம் தங்கியுள்ளது. நீண்ட காலமாக நம்நாட்டில் பிரதான கட்சிகள் இரண்டும் சந்தர்ப்பவாத அரசியலே நடத்தி

Page 3
வந்துள்ளன. நாட்டின், மக்களின் நீண்டகால நலனைவிட பாராளுமன்ற அதிகாரத்தைக் கைப்பற்றுவதே இவற்றின் பிரதான குறிக்கோளாக இருந்து வந்துள்ளது. தேசியஇனப் பிரச்சினையை இதற்கான ஒரு பகடைக் காயாகவும் இனவாதத்தை ஒரு ஆயுதமாகவும் இவை பயன்படுத்தி வந்துள்ளன. அதன் விளைவே கடந்த இருபது ஆண்டுகால யுத்தமும் பேரழிவும்.
இனியும் அது தொடரமுடியாது என்ற நிலமைக்கு நாடு வந்துள்ளது. இனியும் இந்தச் சந்தர்ப்பவாத அரசியல் தொடருமானால் அது தேசியத் தற்கொலை முயற்சியாகவே அமையும். ஆகவே சமாதான முயற்சிகள் எதிர்த்திசைக்குத் தள்ளப்படாத வகையில் முரண்பாடுகள் அரசியல்ரீதியில் முகாமைத்துவம் செய்யப்பட வேண்டியது அவசியமாகும். சிவில் சமூகம் இதில் கண்காணிப்பாக இருக்க வேண்டும். அரசும் எதிர்க்கட்சிகளும் சமாதான முயற்சிகளில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்கள் இயக்கங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதில் முற்போக்குப் புத்திஜீவிகளின் பங்கு கணிசமானது. இவ்வகையில் பிரவாதம் தனது சகோதர ஆங்கில, சிங்கள இதழ்களுடன் இணைந்து முற்போக்குப் புத்திஜீவிகளின் குரலை ஓங்கி ஒலிக்கும்.
பிரவாதம் முதலாவது இதழுக்குக் கிடைத்த வரவேற்பு எமக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகின்றது. முதல் இதழில் நாம் குறிப்பிட்டதைப் போன்று சமூக விஞ்ஞானம், பண்பாட்டுத் துறைகள் சார்ந்த, சமூக முன்னேற்றத்திற்கு உதவுகின்ற ஆராய்ச்சிகள், விவாதங்கள், கலந்துரையாடல்களுக்குப்பிரவாதம் தொடர்ந்தும் ஒரு திறந்த களமாக இருக்கும். முதல் இதழ் போலவே இந்த இதழிலும் உள்நாட்டு, வெளிநாட்டு அறிஞர்களின் முக்கியமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வாசகர்கள் இவை தொடர்பான கருத்துக்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கட்டுரையாளர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் எமது நன்றிகள்.

சமாதான முயற்சியும் வடகிழக்கு முஸ்லிம் அரசியலும்
எம். ஏ. நுஃமான்
இலங்கையின் சமாதானப் பயணம் நெளிவு சுழிவான, கரடு முரடான பாதையில்தான் தட்டுத்தடுமாறி முன்னேறிச்சென்றுகொண்டிருக்கின்றது. நம்பிக்கையும் அவநம்பிக்கையும் சமாதான நாணயத்தின் இருபக்கம் போல் தோற்றம் காட்டுகின்றன. எனினும், தடைகளை ஒவ்வொன்றாகத் தாண்டி சமாதானப்பயணம் முன்னேறிச் செல்வதான ஒரு நம்பிக்கை இன்றைய சூழலில் எல்லோருக்கும் பயனுடையது.
கடந்த செப்டம்பரில் தாய்லாந்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் வெற்றி சமாதானப் பாதையில் ஒரு மைல்கல் என்றுதான் சொல்ல வேண்டும். கவனமாகத் திட்டமிட்டுத் தயாரித்து மேடையேற்றிய ஒரு நாடகத்தின் வெற்றி போன்றது அது. பங்கேற்றவர்களுக்கும் பார்வை யாளர்களுக்கும் பெருமளவு திருப்தியளித்த ஒரு நாடகத்துக்கு ஒப்பானது என்று அதைச் சொல்லலாம். முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து செப்டம்பர் மாத இறுதியில் அரசும் புலிகளும் அரசியல் கைதிகளைப் பரிமாறிக் கொண்டமை சமாதானப் பயணத்தின் பிறிதொரு முக்கிய நிகழ்வாக, நம்பிக்கை தருவதாக அமைந்தது. இரு தரப்பினர் மத்தியிலும் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் வளர்ப்பதாக மட்டுமன்றிப் பொதுமக்கள் மத்தியிலும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை விதைகளைத் தூவுவதாகவும் அது அமைந்தது.
ஆயினும், ஒக்டோபர் மாத நிகழ்வுகள் பல இந்த நம்பிக்கையைச் சிதறடிப்பனவாக அமைந்தன. திருகோணமலைப்பகுதியில் புலி இயக்க உறுப்பினர் இருவர் இராணுவத்தாலும், ஏழு இராணுவ வீரர்கள் புலிகளாலும் கைது செய்யப்பட்டமை சமாதானச் சூழலை நெருக்கடிக்குள்ளாக்கியது. அதேவேளை, களுத்துறைச் சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் இருந்த அரசியல் கைதிகளின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியது. இந்த நெருக்கடிகள் தணிந்த சூடு ஆறமுன் காஞ்சிரங் குடாவில் புலிகளுக்கும் அதிரடிப்படையினருக்கும் இடையே நிகழ்ந்த சிறு தகராறு ஆறுபேரின் அநியாயச் சாவுக்கு இட்டுச் சென்றதும், அதைத் தொடர்ந்த ஹர்த்தாலும்,திருகோணமலையில்
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 1

Page 4
இருவர் கொல்லப்பட்டதும், அக்கரைப்பற்றில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதான நாடகமும் நடந்து முடிந்தன. இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் சமாதான முயற்சியின் ஒர் அங்கமாக அரசு கொண்டுவர முயன்ற 19வது அரசியல் யாப்புத் திருத்த மசோதாவை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் அரசுக்கும் இடையிலான முரண்பாடுகள் தொடர்கின்றன. முஸ்லிம் காங்கிரஸுக்குள் தலைமைத்துவத்துக்கான தீவிரமான அரசியல் நெருக்கடியும் தொடர்கின்றது.
இவையெல்லாம் சமாதானப் பாதையின் தடைகளாக இருப்பினும் இவற்றையெல்லாம் தாண்டிச் செல்லும் வகையில் சமாதான முயற்சிகள் இன்னுமொரு புறத்தில் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. தாய்லாந்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்பார்த்ததைவிட வெற்றிகரமாக முடிவுற்றது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உட்பட பல முக்கியமான உலகநாடுகள் இதனைப் பெரிதும் வரவேற்றன. நவம்பர் மாத இறுதியில் ஒஸ்லோவில் நடைபெற்ற இலங்கைக்கு உதவிவழங்கும் நாடுகளின் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர்தின உரையும், டிசம்பர் முதல் வாரத்தில் நோர்வேயில் நடைபெற்ற அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையும் சமாதானப்பாதையில் மிகுந்த நம்பிக்கையூட்டும் நிகழ்வுகளாகும்.
இது எவ்வாறாயினும், இலங்கையின் சமாதான முயற்சிகள் எதிர்நோக்கும் பிரதான சவால்களுள் ஒன்றான கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பிரச்சினை இப்போது ஒரு மையப் பிரச்சினையாக மாறிவருவதை புரிந்துணர்வு உடன்படிக்கைக்குப் பிந்திய நிகழ்வுகள் பல உணர்த்துகின்றன. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது கிழக்கு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சமும் அவநம்பிக்கையுமே இதற்குப் பிரதான காரணிகளாகும். கடந்தகால அனுபவங்களும், தற்போதைய கள நிலமைகளும் இதற்கான பின்புலமாக உள்ளன.
புலிகள் இயக்கத் தலைவரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ஏற்கனவே வன்னியில் சந்தித்துச் செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கை இந்த அச்சத்தையும் அவநம்பிக்கையையும் களைந்து முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே ஆரோக்கியமான நல்லுறவைக் கட்டி வளர்ப்பதற்குரிய அடித்தளமாக அமைந்தது. ஆயினும், புலிகள் அந்த வாய்ப்பைத் தவறவிட்டு விட்டார்கள் என்றே கூறவேண்டும். கடந்த ஜுலை மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக
2 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

மூதூரிலும் வாழைச்சேனையிலும் நடந்த வன்செயல்கள் நிலமையை மேலும் மோசமடையச் செய்துவிட்டன. இதன் பாரதூரமான அரசியல் பின்விளைவுகள் இப்போதுவெளிப்படத்தொடங்கியுள்ளன. கிழக்கு முஸ்லிம்கள் தமது தனி அலகுக் கோரிக்கையை மீள வலியுறுத்தி வருகின்றனர். இடைக்கால நிர்வாக அமைப்பு உருவாகுமானால் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகளுக்குத் தனியான இடைக்கால நிர்வாக அமைப்பு வேண்டுமென்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில் பிரதமரின் வாக்குறுதியை வேண்டி வட, கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் எம். பிக்கள் சிலர் சுமார் ஒருமாத காலம் பாராளுமன்ற அமர்வுகளையும் பகிஸ்கரித்துவந்தனர். இந்தப் பகிஸ்கரிப்பு மிதவாதத் தலைமைக்கு எதிரான கிளர்ச்சி என்றும், தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதற்கான முயற்சி என்றும் கருதப்பட்டது. இந்தப் பகிஸ்கரிப்புத் தொடருமானால் ஏற்கனவே பிளவுண்ட கட்சி மேலும் பிளவுபடும் என்றும், சமாதானத் தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களின் பலத்தை உடைத்துவிடும் என்றும் கிழக்கு முஸ்லிம்கள் சிலர் அச்சம் தெரிவித்தனர். ஆயினும், இப்போது கட்சி இரண்டாக உடைந்துள்ளது.
பிரதமரின் வாக்குறுதியின் பேரில் பாராளுமன்றப் பகிஸ்கரிப்பைக் கைவிட்ட முஸ்லிம் காங்கிரஸ் கிளர்ச்சிப்பிரிவினர் இப்போது கட்சியின் தலைமைத்துவத்தைத் தாம் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் வடகிழக்கு முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் மீண்டும் ஒருமுறைகேள்விக்குறியாகியுள்ளது.
கிளர்ச்சிக் குழுவிற்குப் பின்னால் பிரதான எதிர்க்கட்சியின் கரம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. எதிர்க்கட்சி இந்தக் குழப்பநிலையைப் பயன்படுத்தி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயல்வதாகத் தோன்றுகின்றது. முஸ்லிம் எம். பிக்கள் சிலர் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்த வேளையில், கிழக்கு முஸ்லிம்களுக்குத் தாங்கள் தனி அலகு தருவதாக எதிரணிப் பிரமுகர் சரத் அமுனுகம ஒரு பத்திரியையாளர் மாநாட்டில் தெரிவித்தமை முக்கிய கவனத்துக்குரியது. மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அவர்கள் பொதுஜன முன்னணி அரசில்பலம்வாய்ந்த அமைச்சராக இருந்த காலத்தில் கிழக்கு முஸ்லிம்களுக்கு வாக்குறுதியளித்த கரையோர மாவட்டதைக்கூட அவரால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்பதும் இங்கே நினைவுகூரத் தக்கது.
துரதிஷ்டவசமாக அஷ்ரப் அவர்களின் மறைவுக்குப் பின்னால் கிழக்கு முஸ்லிம்களுக்கு ஒரு வலுவான அரசியல் தலைமைத்துவம் இல்லாது போய்விட்டது. இப்பொழுது அரசியல் களத்தில் குதித்துள்ள கிழக்குமாகாண முஸ்லிம்பிரதிநிதிகள்
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 3

Page 5
சிக்கலான காலகட்டத்தில் சமூகத்தை வழிநடத்திச் செல்லக்கூடிய அரசியல் முதிர்ச்சியும் தொலைநோக்கும் உடையவர்கள் என்று கூறமுடியாது. இவர்கள் எல்லோருமே அரசியலுக்குப் புதியவர்கள். தங்கள் சொந்த அரசியல் ஆளுமை காரணமாக அன்றி கட்சியின் செல்வாக்கினால் பாராளுமன்றத்திற்கு வந்தவர்கள்.
சிக்கலான கொந்தளிப்பான இன்றைய அரசியல் சூழ்நிலையில் கிழக்கு முஸ்லிம்கள் நிதானத்துடனும் தொலைநோக்குடனும் நடந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. சமாதான முயற்சியைக் குழப்பிக்கொள்ளாது, பாமர உணர்வுகளுக்குக் குரல் கொடுக்காது தங்கள் பாதுகாப்பையும் சமத்துவத்தையும் உறுதிப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி ஆழமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டிய கடப்பாடு முஸ்லிம் புத்திஜீவிகளுக்கு உண்டு.
அதேவேளை, முஸ்லிம்களின் அச்சத்தைப் போக்கி அவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டிய கடப்பாடு விடுதலைப் புலிகளுக்கும் உண்டு. சமாதான முயற்சியில் இது புறக்கணிக்கப்பட முடியாத அம்சம் என்பதை புலிகளின் உயர்பீடம் உணர்ந்திருப்பதாகத் தெரிகின்றது.
தாய்லாந்தில் நடைபெற்ற முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது இது வெளிப்பட்டது. வடக்கும் கிழக்கும் தமிழர்கள் - முஸ்லிம்கள் இருவரதும் தாயகம் என்ற கருத்தைப் புலிகளின் ஆலோசகர் திரு. அன்டன் பாலசிங்கம் அறிவித்தார். இத்தாயகக் கோட்பாடு முஸ்லிம்களின் சம உரிமையை உள்ளடக்குவது. இரண்டாவது சுற்றுப்பேச்சில் புலிகள் மேலும் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி யிருக்கின்றனர். இடைக்கால நிர்வாகக் கோரிக்கை கைவிடப்பட்டுள்ளது; அல்லது பின்போடப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கூட்டுச் செயலணிக்குப் பதிலாக (Joint Task Force) முஸ்லிம் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய விரிவான உபகுழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. சமாதானத்தில் எல்லா சமூகத்தினருக்கும் சமபங்கு உண்டென்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் ஈழத்துக்குப் பதிலாக உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு குறித்துப் பரிசீலிக்கவும் புலிகள் முன்வந்துள்ளனர். இவை சமாதானம் நோக்கிய பயணத்தில் பாரிய முன்னேற்றங்கள் என்பதில் ஐயமில்லை.
எவ்வாறெனினும், அரசியல் தீர்வுத்திட்டத்தில் வடகிழக்கு முஸ்லிம்களின் சம உரிமையை உறுதிப்படுத்துவதிலேயே சமாதானத்தின் வெற்றி தங்கியுள்ளது. இரு பகுதியினரும் விட்டுக்கொடுப்புடன் செயற்படுவதற்குத் தயார்நிலையில் இருப்பதே அதற்கான முதற்படியாகும். 4. பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

தாய் மொழிக் கல்விக்கான நியாயம்: நேற்று, இன்று, நாளை
சி. சிவசேகரம்
பேராசிரியர் அ. துரைராஜா நினைவுப் பேருரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 11 ஜூன் 2002
பேராசிரியர் துரைராஜா ஒரு உன்னதமான மாணவராக, ஒரு போற்றத்தக்க ஆய்வாளராக, ஒரு சிறந்த ஆசிரியராக, பலரதும் மதிப்புக்குரிய ஒரு பீடாதிபதியாக, தகைமை சார்ந்த ஒரு துணைவேந்தராக அறியப்பட்டவர். ஆயினும், அனைத்திலும் மேலாக, அவர் சக மனிதர் மீது அக்கறைமிக்க ஒரு நல்ல மனிதராக, அடக்கமும் எளிமையும் மிக்கவராக, எவரும் எளிதில் அணுகக்கூடிய ஒருவராக இறுதிவரை வாழ்ந்தார். இதனாலேயே அவர் பணியாற்றிய பேராதனைப்பல்கலைக் கழகத்திலும், திறந்த பல்கலைக்கழகத்திலும், யாழ்பாணப் பல்கலைக் கழகத்திலும் அவருடன் பழக வாய்ப்புக் கிடைத்தவர்களால் மிகவும் நேசிக்கப்பட்டார். பிறரிடமிருந்து நன்றி உட்பட மாற்றாக எதையும் எதிர்பாராமல் அவராற் பிறருக்கு உதவ இயலுமாயிருந்தது.
அவர் எல்லாராலும் நேசிக்கப்பட்டவரல்ல. ஏனெனில் கொள்கைப் பிடிப்புள்ளவர்களால் அவ்வாறு வாழ முடியாது. அவர் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அவர் அவை பற்றிய விளக்கத்தை அவரிடம் கேட்ட நண்பர்கட்குக் கூறினாரே ஒழியத் தன்னைப் பற்றிய ஒரு பொது விவாதத்துக்கு இடமளிக்கவில்ல்ை. இது அவரது சிறப்பான பண்புகளில் ஒன்று. அவர் இறந்த பின்பு திட்டமிட்ட அவதூறுகள் பல பரப்பப்பட்டன. அவர் அவற்றை எதிர்கொண்டிருக்கக் கூடிய விதமாக அவரை அறிந்தவர்களால் அவற்றைப் பொறுக்க முடியவில்லை. ஒவ்வொரு குற்றச்சாட்டும் திட்டவட்டமாக மறுக்கப்பட்டது. அவை பொய்ப்பிக்கப்பட்டபோதும். அவை மூலம் அவரது சிங்கள நண்பர்கள் சிலரது மனதில் அவர் பற்றி ஏற்படுத்தப்பட்ட தவறான எண்ணம் இன்னமும் களையப்படவில்லை. அதன் விளைவுகள் பேராசிரியர் துரைராஜாவைவிடத் தமிழ்ச் சமூகத்தையே அதிகம் பாதித்தன. இதுபற்றி அந்த அவதூறுகளைப் பரப்பியபடித்த தமிழர்கள் அன்று உணர்ந்திருந்தார்களோ தெரியாது. அது பற்றி அவர்கள் இன்றுங்கூட உணர்ந்துள்ளார்களோ என்பதும் நிச்சயமில்லை.
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 5

Page 6
நான் பேராசிரியர் துரைராஜாவுடன் பல விடயங்களில் உடன்பட்டாலும் சில கடுமையான கருத்து வேறுபாடுகளை உடையவனாகவும் இருந்தேன். கருத்து முரண்பாடுகள் ஏற்படுகிறபோது அவற்றைக் கூறுவதற்கு நான் தயங்கியதுமில்லை. அதனால் அவருக்கும் எனக்கும் இருந்த நல்லுறவு எவ்வகையிலும் பாதிக்கப்படவுமில்லை. உண்மையில், என்றும் அவருக்கு மறுப்பே சொல்லாத நண்பர்களைவிட அவர் என்னை அதிகம்மதித்திருப்பார் என்றே நம்புகிறேன். 1989ம் ஆண்டு இறுதியில் லண்டனிலிருந்து நீண்டகால இடைவெளிக்குப் பின்பு இலங்கை வந்த போது அவர் என்னுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, இலங்கை திரும்பும்போது யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் நானும் பிரேமிளாவும் பணியாற்ற வர வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொறியியற் பீடமொன்றை நிறுவிநடத்தும் அவரது திட்டத்தில் வெகு விரைவிலேயே மண் விழுந்துவிட்டது.
யாழ்ப்பாணத்தில் பொறியியற் பீடமொன்றை நிறுவுவது 1977 முதல் அவரது கனவாக இருந்தது. 1989ல் அவர் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற போதும் பொறியியற் பீடத்தை நிறுவுவதற்கான அதிகாரத்தை முன்நிபந்தனையாக வைத்தே அப் பொறுப்பை ஏற்க உடன்பட்டார். ஆயினும், அதற்கான தொடக்க நடவடிக்கைகள் சிலவற்றை அடுத்து யாழ்ப்பாணச் சூழலே தலைகீழாகி விட்டது. அதன் பின்பு, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தை ஒழுங்காக நடத்துவதற்குத் தடையாக இருந்த சக்திகளுடன் மன்றாடி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தை மீண்டும் தலைநிமிர வைப்பதற்கு அரும்பாடுபட்டார். பேராசிரியர் துரைராஜாவை அறிந்திருந்த அளவுக்கு வேறெந்தத் துணைவேந்தரையும் யாழ்ப்பாண மக்கள் தங்களுள் ஒருவராக அறிந்திருந்தனர் என்று சொல்வது கடினம். ஆய்வறிவாளர் எவரதும் தகுதியையோ பணியையோ குறைவாகக் காட்டும் நோக்கில் இதை நான் கூறவில்லை. ஆயினும், அன்றைய நெருக்கடி மிக்க சூழலில் பல திசைகளிலும் இருந்து வந்த நெருக்கடியைச் சமாளிப்பதில் அவருக்கு மக்களுடன் இருந்த நல்லுறவு மிகவுங் கைகொடுத்தது என்பதை மனதிற் கொண்டே கூறுகிறேன்.
அவர் வாழ்ந்த எளிமையான வாழ்க்கையும் கடமையுணர்வும் சமூகப் பற்றும் பற்றி என்னைவிடச் சிறப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் அறிவர் என்பதால் அவை பற்றி மேலும் பேசுவது தேவையற்றது என்று கருதி, நான் இந் நினைவுப் பேருரைத் தலைப்பைத் தெரிவதற்கான காரணத்தைச் சுருக்கமாகக் கூறி, எனக்கு விதிக்கப்பட்ட பணிக்குவருகிறேன்.
6 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

இலங்கையில் இலவசக் கல்வி மூலம் பெரும் பயனடைந்த அறிஞர் பரம்பரையில் பேராசிரியர் துரைராஜாவும் ஒருவர். அவர் வறுமைப்பட்ட குடும்பத்திற் பிறந்தவரல்லவெனினும், பிறப்பால் வசதியான ஒருவருமல்லர். இலவசக் கல்வியின் வருகை இலங்கையின் நடுத்தர வகுப்பினரின் சமூக மேம்பாட்டுக்குப் பெரிதும் உதவியது. நானும் அதனாற் பயனடைந்தவன் என்றே எண்ணுகிறேன். இலவசக் கல்வியைவிடப் பெரிய அளவில் இலங்கையின் அறிவுத் தரத்தின் உயர்ச்சிக்கு உதவியது தாய்மொழிக் கல்விக் கொள்கையாகும்.
ஆங்கிலத்திற் படிக்க வசதியிருந்த பலர் தாய்மொழிக் கல்வி அவசியமற்றது என்றே கருதி வந்தனர். அவர்கள் தமது சமூக மேம்பாட்டுக்கு ஆங்கிலம் உதவியது என்பதை மனதில் வைத்துத் தமது சூழலை நோக்கினர். அவர்கள் மட்டுமன்றித் தாய் மொழிக் கல்வியால் அறிவில் உயர்வுபெற்றுப்பின் ஆங்கிலங்கற்றுத் தேர்ந்த சிலர் கூட இன்று ஆங்கிலமே கல்விக்கு உகந்த மொழி என்று பேசக் கேட்கிறோம். பேராசிரியர் துரைராஜா தாய்மொழிக் கல்விக்கு ஆதரவாய் பேராதனைப்பல்கலைக் கழகத்தின் பொறியியற் பீடத்திற்குரல் கொடுத்து முதலாம் ஆண்டில் இரு மொழிக் கல்வி என்ற நடைமுறைக்கு உதவியவர்களில் ஒருவர்.
பேராசிரியர் துரைராஜா தமிழ்ப் புலமையாளர்களில் ஒருவரல்ல. ஆனால், தாய் மொழியின் முக்கியத்துவத்தை அறிந்த ஒருவர்; தாய் மொழிக் கல்வி மூலம் மாணவர்கள் பயனடைவர் என்ப்தை ஏற்றவர்களுள் ஒருவர். எனினும் 1970 களின் நடுப்பகுதிவரை ஏற்பட்ட மூன்றாமுலகத் தேசிய விடுதலை எழுச்சி அதன் பிறகு நவகொலனிய எழுச்சியின் முன்பு தடுமாறத் தொடங்கியது. நவகொலனிய உலகமயமாக்கல் திட்டமிடப்பட்ட முறையில் மூன்றாமுலக நாடுகளின் இறைமைக்கு ஒவ்வொரு வகையிலும் குழிபறிக்கத் தொடங்கியது. பண்பாட்டுத் துறையும் கல்வித் துறையும் விலக்கில்லாது அதற்கு இரையாகின.இதனையே கடந்த மூன்று தசாப்தங்களில் மேநாட்டுமோகமாகவும் ஆங்கில மோகமாகவும் நாம் காணுகிறோம்.
இந்தச் சூழலிலேயே தாய் மொழிக் கல்வியின் இன்றையப் பங்கு என்ன என்ற கேள்விக்கு நாம் முகங் கொடுக்கிறோம். அதன் எதிர்காலம் என்ன என்ற கேள்வி அதனோடு ஒட்டி எழுகிறது. அது மட்டுமன்றி வளர்ச்சி, முன்னேற்றம், அறிவு, தொழில்நுட்பம் ஆகியன பற்றிய நமது பார்வையையும் நாம் மீளாய்வுசெய்ய வேண்டிய தேவையும் எழலாம். அனைத்தையும் ஆய்வதற்குத் தனி ஒருவருக்கு இயலமாட்டாது. எனக்குள்ள ஆற்றலும் எனக்காக ஒதுக்கப்பட்ட நேரமும் கருதித் தாய் மொழிக் கல்விக்கான தேவை பற்றி மட்டும் பேசுகிறேன்.
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 7

Page 7
தாய் மொழி என்றால் என்ன?
தாய்மொழி என்பது சில அரசியல், சமூகத் தேவைகள் காரணமாக ஒருவரது பெற்றோரின் அல்லது பெற்றோரில் ஒருவரின் பிறப்பால் அடையாளங் காணப்பட்டு வந்துள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டால், ஆங்கில மூதாதையரைக் கொண்ட அனைவருக்கும் ஆங்கிலமே தாய் மொழியாகவும், தமிழரை மூதாதையராகக் கொண்ட அனைவருக்கும் தமிழே தாய் மொழியாகவும் இருக்க வேண்டும். புலப்பெயர்வு, ஆங்கிலேயர் அல்லாதோரை மொழியால் ஆங்கிலேயராக்கிவிட்டது. கொலனி ஆட்சி தென்னாசியாவில் தம் மொழியை ஆங்கிலமாகக் கொண்ட பலரை உருவாக்கிவிட்டது. ஸ்கொட்லாந்து, அயர்லாந்து மக்களும் வேல்ஸ் மக்களிற் பெருவாரியானோரும் தமது மொழி அடையாளத்தை இழந்து ஆங்கிலம் பேசுவோராகிவிட்டனர். ஒரு சில ஆங்கிலேயர் பிற நாடுகட்குப் பெயர்ந்து அந்த மண்ணின் மொழியைத் தமதாக்கியும் உள்ளனர். இன்று தமிழ் பேசும் மக்களிடையே தெலுங்கு வம்சாவழியினர் கணிசமாக உள்ளனர். இன்னும் பல உதாரணங்களை என்னாற் தர இயலும். ஆயினும் முன்சொன்னவற்றினின்று தெளிவாகத் தெரியும் ஒரு விடயம் ஏதெனின், தாய் மொழி என்பது தனியே வம்சாவழியால் நிருணயமாகும் அடையாளமல்ல. வம்சாவழியால் நிருணயமாகும் அடையாளமாக மொழி இருப்பின் மொழிகள் அழிவதும் மொழிகள் உருவாவதும் நிகழ்ந்திரா.
அப்படியானால் மொழி அடையாளம் என்பது பொருளற்ற ஒன்றா? அது ஒரு மாயையா? தாய் மொழி என்பது எவ்வாறு மனிதருடன் உறவு பூணுகிறது? இக் கேள்விக்குரிய விடையை இறுக்கமான பழமைவாத மொழிக் கொள்கைக்குள் தேடினால், மொழி அடையாளம் பொருளற்ற ஒன்றாகவே வந்து முடியும். மறுபுறம் மொழி என்பதன் சமூக முக்கியத்துவத்தைப் புறக்கணித்து, அதை வெறுமனே ஒரு கருத்துப் பரிமாறற் கருவியாக மட்டுமே கொண்டால் அது இன்னொரு கருவியால் எளிதாக மாற்றீடு செய்யக்கூடிய ஒரு உற்பத்திப் பண்டம் போலாகிவிடும்.
மொழி என்பது காலத்துடன் மாறிவருகிற ஒன்று. அதன் இருப்பு அதன் பயன்பாடு சார்ந்தது; சமூகம் ஒன்றினுள் இயங்கும் வரையில் அது உயிருடன் இருக்கும். அந்தச் சமூகம் அழியும் போதோ, ஏதாவது நெருக்கடிக்கு உள்ளாகிச் சீரழியும் போதோ ஒரு மொழி அழிய இடமுண்டு. பரந்துபட்ட சமூக மட்டத்தில் இயங்குகிற மொழிகள் தொடர்ச்சியான மாற்றங்களை உள்வாங்கி வாழ்ந்து வளர்கின்றன. அவ்வாறு செயற்படத் தவறுகிறமொழிகள் சிறுபாலோரது வழக்காகி, இறுதியில் வழக்கொழிந்து சாகின்றன. ஒரு மொழியின் வளர்ச்சியை அது வழங்கும்
8 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

சமூகம் அல்லது சமூகங்களின் வரலாற்று வளர்ச்சியை வைத்தே நம்மாற் சரிவர அடையாளங் காணமுடிகிறது. எனவே, ஒருவரது தாய்மொழி என நாம் கூறுவதை அவரது வம்சாவழி அடையாளமாக அல்லாமல், அவர் வாழுகிற சமூகச் சூழலால் விதிக்கப்பட்ட ஒரு அடையாளமாகக் காணுவதே பொருந்தும்.
எந்தப் பண்பாட்டு அடையாளமும் நிலையானதல்ல. மொழி அடையாளமும் அவ்வாறே. நிரந்தர அடையாளங்களை நீக்கி வரலாற்று வளர்ச்சி வழியான அடையாளமாகக் காணும்போது, மொழி அடையாளம் பொருளுடையதாகிறது. ஒரு மொழிக்குத் தனது சமூகத்தின் சமகால இருப்புடன் மட்டுமன்றி, அதன் கடந்த கால அனுபவங்களுடனும் அவற்றின் வழிப்பெறப்பட்ட தகவல்கள், அறிவுத்திரட்சி சிந்தனைமுறைகள், அணுகு முறைகள் என்பனவற்றுடனும் நெருக்கமான உறவு உண்டு. மொழி பெயர்ப்பின் பிரச்சினைகள் மொழியின் இந்தச் சமூகப் பண்பினின்றே பெரிதும் எழுகின்றன எனலாம்.
தாய் மொழிக் கல்வியின் தேவையை மொழி அடையாளத்துடன் ஒட்டிய சமூகத் தன்மையினின்று பிரித்து நோக்க இயலாது. ஒரு சமுதாயத்தின் சிந்தனை வளர்ச்சியினின்று மொழியைப் பிரித்து நோக்க இயலாது எனும் போது நாம் “சான்றோர் வழக்கு” எனப்படும் சிந்தனையையும் மொழியையும் மட்டுமே கருதுவோமாயின் தவறான முடிபுகளையே காணநேரும். சமூகமும் மொழியும் நலிவு கண்ட வேளைகளில் அவற்றை மீள வளப்படுத்த உழைத்த சான்றோர் உள்ளனர். ஒவ்வொரு சமூகத்தினுள்ளும் அவர்களுட் சிலர் நெடுங்காலமாகப் போற்றப்பட்டுள்ளனர். எனினும் ஒரு மொழி சமூக வளர்ச்சியினூடு மட்டுமன்றிச் சமூக நெருக்கடிகளுடும் வளர்ச்சி கண்டு நிலைப்பதிற் சமூக வழக்கே அடிப்படையானது. இதனாற் தமது அன்றாட வாழ்விற் தாய் மொழிக்கு முதன்மை கொடுக்கும் மக்களே தாய்மொழி நிலைத்து நீடிக்க வகைசெய்தோராவர்.
சமூக மேம்பாடு பெற்றோரிடையே, குறிப்பாகப் புலமை மூலம் தம் சமூக மேல் நிலையைப் பேணுவோரிடையே மொழிப் பற்று என்பது அவர்களது தொழிலுடன் தெடர்பானதாவே இருக்கக் காணலாம். பல ஐரோப்பிய நாடுகளில் லத்தீன் மொழி அரச கருமங்கள், கல்வி, சமயம் ஆகிய துறைகளில் பல நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்திவந்தது. ரஷ்யாவில் நீண்டகாலமாகப் பிரெஞ்சு மொழி அரசவை மொழியாயிருந்தது. இலங்கையில் கண்டி ராச்சிய காலத்தில் அரசவையில் தமிழ் மொழி ஆதிக்கம் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. தமிழர் சமுதாயங்களில் இன்னும் சமய அலுவல்களில் சமஸ்கிருத ஆதிக்கம் உள்ளது. இச் சூழல்களில்
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 9

Page 8
எல்லாம் தாய் மொழியும் தாய் மொழி சார்ந்த இலக்கிய மரபும் உயிருடன் இருந்ததாயின், அது சாதாரண மக்கள் மூலம் நடந்ததே ஒழியச் சான்றோரால் நிகழ்ந்ததல்ல. வாய் மொழி மரபே தமிழின் வரலாற்றுத் தொடர்ச்சியான நிலைப்புக்குக் காரணமாக இருந்தது எனலாம்.
எனவே ஒரு சமூகம் சுயமாகவோ, சூழலின் நிர்ப்பந்தங்களாலோ தனது மொழியின் செல்திசை பற்றி மட்டுமன்றி, தனக்குரிய மொழி எது என்ற தெரிவையும் செய்கிறது. ஐரிஷ் மக்களின் கெல்ற்றிக் மொழியும் ஸ்கொட்லாந்தின் கேலிக் மொழியும் அம்மக்களால் தாமாகவே கைவிடப்பட்டவையல்ல. முதலாளிய சமூகத்தின் உருவாக்கமும் ஆங்கிலேய மேலாதிக்கமும் அந்த மொழிகளின் அழிவை இயலுமாக்கின. மறுபுறம், 400 வருடக் கொலனி ஆட்சி சிங்களத்தையோ தமிழையோ அழிக்கவில்லை. சிங்களம் மட்டும் சட்டத்தின் வருகையின் பின்பு இலங்கைத் தமிழரிடையே தமிழை வளர்க்கும் முனைப்பு வேகம் பெற்றது. மறுபுறம் சில தமிழ்ச் சமூகங்கள் சிங்களத்தைத் தமது மொழியாக்கியுள்ளன. துருக்கிய அடக்கு முறையாட்சி குர்திய மொழிக்கு விதித்த தடையால் குர்திய மொழி அழியவில்லை. எனவே எந்த மொழியினதும் இருப்பு அம்மொழிக்கும் சமூகத்துக்கும் உள்ள உறவின் மீதே தங்கியுள்ளது எனவும், தாய் மொழி என்பது ஒரு சமூகம் தனக்காகத் தீர்மானிக்கும் ஒரு விடயம் எனவும் நாம் காணலாம். தனிமனித அளவில் நிகழும் மொழி மாற்றம் தனிப்பட்ட சூழ்நிலைகளால் முடிவாகிற ஒருவிடயமே. அந்தளவில் ஒருவரது மொழிபிறப்பால் மட்டுமே முடிவாகுவது இல்லை என நாம் காணலாம்.
தாய் மொழியும் கல்வியும்
மாணவர்கட்குக் கல்வியூட்டுவதற்குத் தாய் மொழியே அதி சிறந்தது என்ற கருத்து கல்வியியலாளராற் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதன் பொருள் ஒரு குழந்தைக்குப் பிறவியிலேயே தன் தாய் மொழியில் இயல்பான ஒரு ஆற்றல் உள்ளது என்பதல்ல. மாறாகக் கல்வி என்பது பாடங்கள் மூலம் மட்டுமே புகட்டப்படும் ஒன்றாக இல்லாமல் ஒருவரது சமூக நடைமுறை மூலம் விருத்தி பெறுகிற ஒன்றாகவும் இருக்கிறதால் ஒரு குழந்தை, தன் சமூகச் செயற்பாடுகளிற் பயன்படுத்துகிற மொழி மூலம் புதிய தகவல்கள் வழங்கப்படும் போது அவற்றை எளிதாக உள்வாங்கிக் கொள்கிறது என்பதே தாய்மொழிக் கல்வியின் ஆற்றலுக்குக்
8SrTTauUTLOITéfsgpg5I.
O பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

அடிப்படைக் கல்விக்குத் தாய் மொழியே சிறந்தது என்றாலும் உயர் கல்விக்கு விருத்திபெற்ற வேற்று மொழியே பொருத்தமானது என்று சிலர் வாதிப்பர். இங்கே தாய் மொழி மூலம் உயர் கல்வியைப் பெறுவது இயலாதது அல்லது மிகவுங் கடினமானது என்ற ஊகத்தை நாம் அடையாளங் காணலாம். இத்தகைய பார்வை தென்னாசியச் சமூகங்களில் சமூக மேம்பாடு பெற்றோரிடையே வலுவாக உள்ளதுடன், சமூக மேம்பாட்டை வேண்டுகிற கீழ் அடுக்குக்களிலும் கணிசமான பாதிப்பைச் செலுத்துகிறது.
ஆங்கிலக் கல்வியே கல்வி என்ற மனோபாவம் கொலனிய ஆட்சிக் காலத்தில் மட்டுமன்றி அதன் பின்பும் தொடர்ந்துள்ளது. இதை விளங்கிக் கொள்வதற்குக் கொலனிய சிந்தனை முறை நமது சிந்தனை மரபில் எவ்வளவு ஆழமாக வேரோடி உள்ளது என்பதை நாம் ஆராய வேண்டும். எவ்வாறாயினும் தாய் மொழியின் மீதான பற்றும் அதன் ஆற்றல் பற்றிய ஐயமும் நம்முள் தாய்மொழி பற்றிய ஒரு இரண்டக மன நிலையை உண்டாக்கியுள்ளது என்று கூறநியாயமுண்டு. இது மொழி பற்றி மட்டுமன்றிப் பண்பாடு, மரபு, மதம் என்பன தொடர்பாகவும் அயல் ஆதிக்கத்திற்கு ஆளான மூன்றாமுலகச் சமூகங்கள் பலவற்றில் நாம் காணக்கூடிய ஒரு பண்பாகும்.
எந்த மொழியும் தன் சமூகத்தின் வளச்சியை ஒட்டியே விருத்தி பெறுகிறது. பொருட் பேர்களில் உள்ள நுண்ணிய வேறுபாடுகள், வாக்கிய அமைப்புக்களின் நுண்ணிய வேறுபடுகள் போன்ற யாவுமே சமூக நடைமுறையிலிருந்து எழுவன. ஒரு பொருளையோ ஒரு கருத்தையோ குறிக்கும் வசதி ஒரு மொழியில் இல்லையெனின் அப்பொருளோ கருத்தோ அம்மொழி பேசும் சமூகத்துகுப் புதியதும் அயலானதும் ஆகும் என்று நாம் கூறலாம். அதனால், அவற்றைக் குறிக்கும் ஆற்றல் அந்த மொழிக்கு இல்லை என்று ஆகிவிடாது. சமூகத் தேவை மொழியிற் புதிய சொற்களும் புதிய வாக்கிய அமைப்பு முறைகளும் இலக்கண விதிகளும் உட்பட்ட புதிய சாத்தியப்பாடுகளை இயலுமாக்குகிறது.
மாற்றங்கள் மரபை ஒட்டியும் வெட்டியும் ஏற்படலாம். ஆயினும் அவை மொழியின் வளர்ச்சிக்கு இன்றியமையாதன. மாற்றத்தை மறுப்பது வளர்ச்சியை மறுப்பதாகும். ஒரு மொழியிற் கூற இயலாதது என்பது ஒரு மொழிக்கு மறுக்கப்படுவதே ஒழிய மொழியின் அடிப்படைக் கோளாறு அல்ல என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 1

Page 9
தாய் மொழி மூலம் மரபு சார்ந்த அறிவையோ, ஆக்க இலக்கியத்தையோ, ஆன்மீகத்தையோ கற்பிக்க இயலாது என்று யாருங் கூறுவதில்லை. தமக்கு அயலான விடயங்களைக் கற்க நமது மொழி தக்கதல்ல என்பதே தாய் மொழியின் போதாமை பற்றிய பிரதானமான வாதமாகும். இந்த வாதம் உயர் கல்வி, விஞ்ஞானம், நவீன மருத்துவம், தொழிநுட்பம், சமூக விஞ்ஞானம் போன்ற துறைகளில் உயர் கல்வி தொடர்பாக முன்வைக்கப்பட்டு வருகிறது. தாய்மொழிக் கல்விக்கு எதிராகத் தென்னாசியாவில் முன்வைக்கப்படும் வாதங்களில் முக்கியமானவை:
() தாய் மொழியில் படித்துப்பட்டம் பெற்றால் உள்நாட்டில் மட்டுமே வேலை
கிடைக்கும். வெளிநாடுகளில் அதற்கு மதிப்பில்லை.
Ο தேசிய இன ஒடுக்குமுறை உள்ள சூழலில் தாய் மொழிக் கல்வியால் சிறுபான்மைத் தேசிய இனத்தவருக்கு வேலை வாய்ப்புக்கள் மறுக்கப்படும்.
() நவீன அறிவுத் துறை ஆங்கிலத்திலேயே பிரதானமாக வளர்ச்சி பெறுகிறது. எனவே உலகின் முன்வரிசை மொழி அல்லாத எந்த மொழி மூலமும் நவீன அறிவைப் பெறமுடியாது.
() இது தகவல் யுகம். இன்று ஆங்கிலம் மூலமே அவசியமான தகவல்கள் அனைத்தயும் நாம் பெறமுடியும். நம் மொழிகளின் போதாமை அதிகமாகி வருவதால் தாய் மொழிக் கல்வி நம்மை மேலும் பின்தங்கினோராக்கிவிடும்.
இந்த விதமான வாதங்கள், நாம் எதிர்கொள்ள வேண்டிய சமூக, அரசியற் பிரச்சினைகள் பற்றிக் கூறுவனவே ஒழியத் தாய் மொழியின் போதாமை பற்றிய ஆதாரங்கள் அல்ல. தாய் மொழி மூலம் இன்று இயலாது என்பதால் தாய் மொழிக் கல்வியை மறுப்பது தாய்மொழி மூலம் என்றுமே இயலாத நிலைக்கு இட்டுச் செல்லக் கூடும்.
கூர்ந்து நோக்கினால், தாய் மொழிக் கல்விக்கு எதிரான வாதங்களில் தொக்கி நிற்பது ஒரு தனிமனிதப் பார்வையே. ஒருவர் தனது உயர்வும் தனது எதிர்காலமும் அயல்மொழி ஒன்றின் மூலமே இயலும் என்று எண்ணலாம். ஆனால் அது சமூகத்தின் உயர்வுக்கும் எதிர்காலத்துக்கும் ஏற்றதா என்ற கேள்வியே தாய் மொழிக் கல்வி பற்றிய அடிப்படையான கேள்வியாக இருக்கமுடியும்.
எனவேதாய்மொழிக் கல்வி பற்றிய கேள்வி ஒரு சமூகம் தன்னை எவ்வாறு கருதுகிறது, தனக்கு எத்தகைய எதிர்காலத்தை வேண்டி நிற்கிறது என்பதையொட்டிய கேள்வியே ஒழிய வேறல்ல. மொழியும் கல்வியும் பற்றிய அடிப்படைப் பிரச்சினைகள் சமூக - அரசியற் பிரச்சினைகள் அல்லாது விஞ்ஞான
12 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

- தொழிநுட்பப் பிரச்சினைகளும் அல்ல; தனிமனிதப் பிரச்சினைகளுமல்ல. எனவே கல்வி, உயர் கல்வி பற்றிய பிரச்சினைகள் சமூக நோக்கிலேயே கருதப்பட வேண்டும்.
ஆங்கில வழிக்கல்வியின் பயன்கள்
ஆங்கிலமே கல்வி மொழியாக இருக்க வேண்டும் என்று வாதிப்பவர்கள் முன்வைக்கும் சில வாதங்கள் தவறான தகவல்களின் அடிப்படையிலானவை. தென்னாசியாவுக்கு வெளியே வட ஆபிரிக்கா முதல் ஜப்பான் வரையிலான நாடுகளின் ஏகப் பெரும்பாலான மக்கள் தம் நாட்டின் பிரதான மொழியிலோ தாய் மொழியிலோதான் தமது கல்வியைப் பெறுகின்றனர். ஆங்கிலம் உலகப் பொது மொழியாகப் பெற்ற பின்னருங்கூட, இந்த நாடுகளில் அதை எல்லாருங் கற்க வேண்டும் என்ற தேவை உருவாகவில்லை. இது அவ்வாறு நம் வாழ்நாளில் நிகழும் என்பதும் ஐயமே. சீனா, ஜப்பான், அரபு நாடுகள், ஈரான், தாய்லாந்து, கொரியா போன்ற நாடுகளில் நவீன விஞ்ஞான, தொழில் நுட்ப அறிவை மக்கள் தமது தாய் மொழியிலேயே பெறுகின்றனர். அமெரிக்க சார்பு இஸ்ரேலில் கூட,1948க்குப்பிறகு புத்துயிரூட்டப்பட்ட ஹீப்று மொழியிலேயே பல்கலைக்கழகக் கல்வி வழங்கப்படுகிறது.
உயர் கல்வி ஆங்கிலத்தில் வழங்கப்படும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் ஆங்கிலக் கல்வி மூலம் நன்மையடைவோர் பெரும்பாலும் படித்த உயர்-நடுத்தர வர்க்கத்தினரும் நடுத்தர வர்க்கத்தின் ஒரு சிறுபிரிவினருமேயாவர். ஆங்கிலமே கல்விமொழியாக வேண்டும் என்போர், எல்லாருக்கும் ஆங்கிலத்தையே போதனா மொழியாக்கலாம் என்ற தீர்வை முன் வைக்கின்றனர்.
இது எவ்வளவு தூரம் நடைமுறைக்கு ஏற்றது என்பதும் சமூகத்தின் மீது இதன் பாதிப்பு என்ன என்பதும் பற்றிகொலனி ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாடுகளில் நடந்தவற்றை வைத்துப் பயனுள்ள முடிவுகட்கு நாம் வரலாம். இது விரிவான ஒரு ஆய்வுக்குரியது என்றாலும் ஆங்கிலமும், பிரெஞ்சு மொழியும், ஸ்பானிய மொழியும் இன்று ஆபிரிக்காவிலும் அமெரிக்கக் கண்டங்களதும் அவுஸ்திரேலியாவினது பல்வேறு தீவுகளதும் பழங்குடிகளது மொழிகளின் இடத்தைப் பிடித்துள்ளன. சில இடங்களில் ஐரோப்பிய மொழியே தாய்மொழியாகிவிட்டது. மற்ற இடங்களில் தாய் மொழியின் பாவனை மிகவும் வரையறுக்கப்பட்டுவிட்டது. இந்த இடங்களிலெல்லாம் அயல்மொழி ஆதிக்கம் அடிமைப்பட்ட மக்களில் ஒரு சிறு பகுதியினர் போக மற்றவர்களை மேலும் அடிமையாக்கி உள்ளது அல்லவா.
பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002 13

Page 10
எனவே ஆங்கில மொழிக் கல்வியின் தேவை முழுச் சமூகத்தினதும் மேம்பாட்டுக்கானது என்பதோ, நமது மொழிகளால் ஆங்கிலத்தாற் போல நவீன தகவல்களை வழங்க இயலாது என்பதோ செல்லுபடியாகும் வாதங்கள் அல்ல. நமது மொழிகளுடைய இடத்தில் ஆங்கிலத்தைப் பிரதியிடுவதன் மூலம் நமது மொழியின் வளர்ச்சிக்கு உதவமாட்டோம் என்பது மட்டும் உறுதி.
அதே வேளை, எவரும் ஆங்கில மூலம் கற்பதும் ஆங்கிலத்தில் புலமை பெறுவதும் அப்படியே தீயன என்றோ பயனற்றன என்றோ நான் கூறவில்லை. சில சூழ்நிலைகளில் ஆங்கில மூலமே சில துறைகளில் பயிற்சி பெறமுடிகிறது. நமது தாய் மொழியிற் போதியளவு நுால்களும் நவீன அறிவும் தொழில்நுட்பமும் சார்ந்த செயற்பாடும் இல்லாத போது ஆங்கிலத்தில் புலமை பெற்றோர் மூலமே நமக்கு வேண்டிய விடயங்களை நமது சமூகத்திற்குப் பெற்றுத்தர முடிகிறது.
நமது பின்தங்கிய பொருளாதார, தொழில் வளர்ச்சி என்பன காரணமாக மட்டுமன்றிச் சமூக அநீதிகள் காரணமாகவும், தாய் நாட்டிற் தொழில் வாய்ப்புப் போதாத நிலை, படித்த, பயிற்சி பெற்ற இளவயதினருக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தொழில் தேடி அயல் நாடுகட்குப் போகுமாறு கட்டாயத்திற்குள்ளாகின்றனர். இச் சூழ்நிலைகளில் ஆங்கில அறிவு அவர்கட்குக் கைகொடுக்கிறது. தாய்மொழி உட்பட இரு மொழிப் புலமையுடையோரால் அயல் மொழிகளினின்று பயனுள்ள பல விடயங்களை நமக்குக் கொண்டுவர முடியும். இன்று உலகிற் பன்மொழிப் புலமையுடைய பெரும்பாலோருக்கு ஆங்கிலப் புலமை உள்ளது. எனவே ஆங்கிலம் வாயிலாகவே உலக இலக்கியங்கள் பலவும் அயல் நாட்டுத் தகவல்களும் நம்மை வந்தடைகின்றன.
பன்னாட்டு வணிகம், தொலைத் தொடர்பாடல் போன்ற விடயங்களிலெல்லாம் ஆங்கில அறிவு பயனுள்ளதாக இருப்பதை நாம் மறுக்க இயலாது. இவ்வாறு பொதுப்படவே ஒரு அயல் மொழிப் புலமையாற் கிட்டும் நன்மைகளில் ஆங்கிலம் அந்த அயல் மொழியாயிருப்பது ஒரு படி கூடுதலான நன்மை தருகிறது என்பதையும் ஏற்க வேண்டும். ஆயினும், மேற்குறிப்பிட்ட காரணங்கள் தாய் மொழிக் கல்வியின் இடத்தில் ஆங்கிலத்தைப் புகுத்தப்போதியனவா?
சற்றுக் கூர்ந்து நோக்குவோமாயின் முற்குறிப்பிட்ட நன்மைகள் யாவும் குறுகிய கால நோக்கிலோ தனிப்பட்ட ஒருவரது உடனடியான பிரச்சனைகளின் நோக்கிலோ செல்லுபடியானவை. அவற்றை நீண்டகால நோக்கில் நன்மையானவையென்று கொள்ள இயலாது.
14 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

தாய் மொழி மூலமே உயர் கல்வி கற்பிக்கப்படும் போது அயல் மொழியில் அறிவியல் தொழிநுட்பத் தகவல்களைத் தாய் மொழிக்கு மாற்றுவதன் தேவை ஏற்படுகிறது. அதன் விளைவாக மொழிபெயர்ப்பு முயற்சிகளும் அயல் மொழி மூலம் பெற்ற தகவல்களைத் தாய் மொழியில் மீள வழங்கும் முயற்சிகளும் பெருகுகின்றன. கலைச் சொல்லாக்கம் மொழி நடைமுறைக்கு நெருக்கமாகின்றது. இவற்றின் விளைவாக மொழி வெவ்றுே அறிவுத் துறைகட்கு ஏற்ற வளர்ச்சியைப் பெறுகிறது.
இந்த அணுகுமுறை ஒரு தென்னாசிய அரசாங்கக் கொள்கையாகும் போது ஆங்கிலப் புலமையுடையவர்கள் அனுபவித்துவந்த சில வசதிகள் அவர்கட்கு இல்லாது போகின்றன. இது தனிப்பட்ட முறையிலும் சமூகஅளவிற் சிறிதும் பாதகமானதுதான். ஆயினும், ஆங்கிலம் மூலமே கல்வி என்ற கொள்கை சமூகத்தில் எந்தளவு பெரிய பகுதியினருடைய உயர் கல்வி வாய்ப்பை மறுக்கிறது என்பதையும் நாம் நினைவிலிருத்த வேண்டும்.
ஒரு நாட்டு மக்கள் அயல் நாடொன்றிற் தம் உழைப்பை விற்க வேண்டிய நிலை குறை வளர்ச்சியின் அடையாளமே ஒழியச் சமுதாய விருத்திக்கான தளமல்ல என்பதைக் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக நாம் அனுபவ வாயிலாகக் கண்டுள்ளோம். சமூகத்தின் ஒரு பகுதி அயல் நாட்டு வேலைவாய்ப்பில் தங்கியிருப்பது, ஒரு சமூகத்தின் சீரான வளர்ச்சிக்கோ மேம்பாட்டுக்கோ வழிகாட்டாது. எனவே கல்வி பற்றிய முடிவுகளை இவ்வாறான விடயங்களின் அடிப்படையில் எடுக்க இயலாது.
சில துறைகளில் தாய் மொழியினது பின்தங்கிய நிலைக்கும் சமூகத்தின்
பின்தங்கிய நிலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இப் பின்தங்கிய நிலைகள்
ஒவ்வொன்றினின்றும் மீள்வதற்குத் தாய் மொழிக் கல்வியின் புறக்கணிப்பு எவ்வகையிலும் உதவப்போவதில்லை.
ஆங்கில வாயிலான கல்வியும் ஆங்கில மொழிக் கல்வியும்
ஆங்கிலத்தினூடாகவே பல தகவல்களைப் பெறவேண்டிய தேவை அல்லது பெறக்கூடிய வாய்ப்பு இருக்கின்ற ஒரு உலகச் சூழலில் மூன்றாமுலக நாடுகளில் ஆங்கில அறிவுக்கான தேவை தொடர்ந்தும் இருக்கும். இதற்கு முகங் கொடுக்க அத்தகைய தகவல்கள் தேவைப்படும் ஒவ்வொருவரும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். அல்லது அவை கிரமமாகத் தமிழ் மொழிக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 15

Page 11
தாய்மொழிக் கல்வி முதன்மைப்படுத்தப்படும் நாடுகளில் இரண்டு விதமான அணுகுமுறைகள் செயற்படுகின்றன. ஒவ்வொரு துறையிலும் பரவலாக அறியப்பட வேண்டிய தகவல்கள் தொகுக்கப்படு நூல்களாகவோ கட்டுரைகளாகவோ தாய் மொழியிற் கிடைக்கின்றன. அரிதாகவே பயன்படும் தகவல்களை அறிய விரும்புவோர் நேரடியாகவோ இன்னொருவர் உதவியுடனோ தகவல்களை ஆங்கிலத்திற் பெறுகின்றனர். இதன் மூலம் நாம் காணுவது ஏதெனில், தாய்மொழி வழிக் கல்வி என்பது வேறு எந்த அயல் மொழியையும் கற்பதற்கு மாறான ஒரு கோட்பாடல்ல என்பதே.
சமூக மட்டத்திற் கல்வி தாய் மொழி வாயிலாகவே வழங்கப்படும் அதே வேளை, பயனுள்ள எந்த அயல் மொழியையும் கற்பதற்கு மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவது சமூகத்துக்கு மிகவும் பயனுள்ளது. கற்கப்படும் அயல் மொழிகளில் ஒன்றாக ஆங்கிலம் இருக்கும் என்பது நமது சூழலில் எதிர்பார்க்கக் கூடியதே. ஆயினும் அது ஆங்கிலமாக மட்டுமே இருப்பது நமது சமூகத்திற்கும் பிற சமூகங்களுக்குமிடையே விருத்தி செய்யக் கூடிய உறவிற்கு அதிகம் உகந்ததல்ல. ஒவ்வொரு மொழி பெயர்ப்பும் தகவல்களின் இழப்புக்கோ திரிபுக்கோ இடம் தரும் என்பதால் பிறமொழிகளினின்று நேரடியாக நமது மொழிக்குத் தகவல்கள் கொண்டு வரப்படுவது பயனுள்ளது.
ஆங்கிலமே கல்விக்கான மொழியாக இருக்க வேண்டும் என்போர் தமது குறுகிய தேவைகளதும் அனுபவத்தினதும் அடிப்படையில் கல்விப் பிரச்சினையைப் பார்க்கின்றனர். அத்துடன் தாய் மொழிப் பாவனை மூலம் மக்கள் பெறக்கூடிய நலனையும், நவீன சிந்தனைகள் தாய் மொழியில் விருத்தி செய்யப்பட வேண்டிய தேவையையும், இவற்றின் வழியே சமூகச் சிந்தனை காணும் வளர்ச்சியையும் மறுக்கின்றனர். இவர்கள் எவ்விதமான புதிய நியாயங்களை முன்வைத்தபோதும், இவர்களது அணுகுமுறை கொலனிய யுகத்தின் ஆங்கில மோகத்தையும் மேலாதிக்கத்தையும் சார்ந்தே உள்ளது.
மறுபுறம், ஆங்கிலமே வேண்டாம் என்பது ஒரு கிணற்றுத் தவளை மனோபாவமாகும். தாய் மொழியிலேயே நமக்கு வேண்டிய எல்லாமே உண்டு என்பதோ, தாய் மொழியில் மட்டுமே இயங்கித் தமது சமூகத்தின் தேவைகளை நிறைவு செய்யலாம் என்பதோ நமது சூழலின் யதார்த்தத்துக்குப் பொருந்தாது. ஆங்கிலம் ஒரு விருப்பப் பாடமாகவோ, சில சூழ்நிலைகளில் ஒரு கட்டாயப்
16 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

பாடமாகவோ சகல மாணவர்கட்கும் கற்கக்கிடைப்பது நல்லது. நவீனத்துவத்துக்கு முகங்கொடுக்கும் ஆற்றலைச் சமுகத்துக்கும் தாய்மொழிக்கும் இயலுமாக்க இன்று இது தேவை.
ஆங்கிலம் இல்லாமல் இயலாது என்பதும், ஆங்கிலம் இருப்பது கூடாது என்பதும் ஒரே அளவு தவறானவை. இளம்பருவத்தில் அயல் மொழிகளைக் கற்பது இலகு. எனவே ஒன்றுக்கு மேற்பட்ட அயல் மொழிகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை நாம் ஊக்குவிக்க வேண்டும். அந்த மொழிகள் யாவை என்பது சமூக நலன் சார்ந்த ஒரு முடிவாகவே அமையக்கூடும்.
தாய் மொழிக் கல்வியின் நிலை
1948 இன் சுதந்திரத்தின் பின்பு தாய் மொழி வழிக் கல்வி மிகுந்த உற்சாகத்துடன் மேற்கொள்ளப்பட்டதை அறிவோம். 1960 - 1970 கால கட்டத்தில் தாய் மொழி மூலம் உயர் கல்விக்கான ஊக்குவிப்பு உச்சத்தை எட்டியது எனவுங் கூறலாம். தாய்மொழிவழிக் கல்விக்கு உதவியாகப்பல்கலைக்கழகப்பாடநூல்களை மொழி பெயர்க்கும் முயற்சியிலும் தாய் மொழியில் நுால்களை எழுதுவதிலும் போதியளவு சாதிக்கப்படாமைக்கு நல்ல காரணங்களும் அல்லாத காரணங்களும் இருக்கலாம். ஆயினும் 1960 அளவில் தமிழ் சிங்களக் கலைச் சொல்லாக்கத்தில் இலங்கையிற் செய்யப்பட்ட அரும்பணி பின்னர் மங்கிவிட்டது.
புனையப்பட்ட கலைச்சொற்களிற் குறைபாடுகள் இருந்தாலும் அவையாவும் களையக் கூடியனவே. தாய் மொழியிற் சிந்தனையை விருத்தி செய்ய ஆங்கிலப் பதங்களுக்குரியதாய்மொழிப்பதங்களைத் தீர்மானிப்பதை விட முக்கியமான பணி தாய் மொழியிலேயே நவீன சிந்தனையை விருத்தி செய்வதாகும். இவ்வாறன நோக்கத்துடன் அறிவொளி, பின்னர் ஊற்று போன்ற ஏடுகளும் சிந்தனை போன்ற ஆய்வு ஏடுகளும் தமிழில் வந்துள்ளன. கலைக்கதிர் தமிழகத்தில் நீண்ட காலமாக ஒரு நற்பணியைச் செய்து வந்துள்ளது. தமிழகத்திற் பல விஞ்ஞானச் சிற்றேடுகள் காலத்துக்குக் காலம் வந்துள்ளன.
எனினும், ஆங்கிலத்திற் கற்காவிட்டால் எதிர்காலம் இல்லை என்ற மனநிலை 1960 களின்போதே இலங்கையில் மீள உறுதிப்பட்டுவிட்டது. இதன் விளைவாக, தொழில் நுட்பம், மருத்துவம், வேளாண்மை, விலங்கு மருத்துவம், பல் மருத்துவம் போன்ற துறைகளில் தாய் மொழியில் உயர் கல்வி என்ற அரசாங்கக் கொள்கை நடைமுறையிற் கைவிடப்பட்டது.
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 17

Page 12
தாய் மொழிக் கல்வி திட்டமிட்ட புறக்கணிப்புக்கு உள்ளாகியது என்பது என் வாதமல்ல. ஆயினும் நமது சமூகங்களில் ஆதிக்கஞ் செலுத்தும் தேசியவாதம் குறிப்பிட்ட சில சமூக அடுக்குகளின் நலன் சார்ந்தது. அதன் முக்கிய பண்பு சகோதரச் சமூகங்களுடனான போட்டியும் பகையுமே என்று கூறலாம். ஏகாதிபத்திய விரோத முனைப்பு குறுகிய கால இடை வெளிகளிற் தலை தூக்கிய போதும், அது நிச்சயமாக 1970 களின் பிற்பகுதியில் இல்லாது போய்விட்டது.
திறந்த பொருளாதாரக் கொள்கையுடன் சேர்ந்து அந்நியப் பொருட்கள் மீதான மோகமும் ஆங்கில மோகமும் ஊக்கம் பெற்றன. 1956 க்குப் பின்பான தேசியவாத எழுச்சிகளின் பின்னணியில் அடங்கிக்கிடந்த கொலனிய காலத்துச் சிந்தனைகள் பேரினவாத, குறுகிய தேசியவாதச் சிந்தனைகளுடன் இணைந்து வெளிப்பட்டன.
“சிங்களம் மட்டுமே அரச கரும மொழி’ என்ற கொள்கையின் நோக்கங்களில் சிங்கள மொழி பேசுவோரது நலன் பேணுவதைவிடச் சிங்களவர் அல்லாதோரை ஓரங்கட்டுவதே மேலும் முக்கியமாகி வந்தது. இது கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தெளிவாகியுள்ளது. இன்று நடைமுறையில் வணிகம், அரச நிருவாகம் போன்ற துறைகளில் ஆங்கிலமே உண்மையில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதே வேளை சிங்களம் ஆதிக்கம் செலுத்திய காலத்தைவிட அதிகளவில் இன ஒதுக்கற்கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது.
தென்னாசிய அரசியலில், 1947 க்குப் பின்பு, தேசிய முதலாளியத் தலைமையின் மொழிப்பற்று கசப்பானது என்று இன்று பல பிரதேசங்களிலும் நிருபணமாகி வருகிறது. இதன் காரணம், ஏகாதிபத்தியம் 1975 க்குப் பின்பு கண்ட மீளெழுச்சிக்குத் தென்னாசியத் தலைமைகள் பணிந்ததன் விளைவாகப் பழைய கொலனிய யுகத்தின் விழுமியங்களும் எழுச்சி பெற்றன என்பதே.
இவை அனைத்தினும் மேலாக, மொழிக் கல்வி மிகவும் புறக்கணிப்புக்கு உள்ளாகி வந்துள்ளது. இது கல்வித் துறையின் சீரழிவுடன் தொடர்புடையது. ஆங்கிலமே பாடசாலைக் கல்வி மொழியாக இருந்த போது தமிழ் இலக்கணம் கற்கப்பட்ட அளவுக்கு இன்று கற்கப்படுகிறது என்று கூறுவது கடினம். ஒரு மொழியின் இலக்கண விதிகளை நன்கு கற்ற ஒருவர் எளிதாக இன்னொரு மொழியைச் செம்மையாகக் கற்க முடியும். நமது சூழலில் பாடசாலைகளில் எந்த மொழியுமே செம்மையாகக் கற்பிக்கப்படுவதாகக் கூற இயலாதுள்ளது.
18 பிரவாதம் - ஜ"லை - டிசம்பர் 2002

தாய் மொழிக் கல்வியின் சரிவுக்கு இன்னொரு காரணம், அரசாங்கமே பாடநூல்கள் அனைத்தையும் வெளியிட்டு விநியோகிப்பது என்பதோடு ஒவ்வொரு பாடத்திட்டத்துக்கும் ஏற்ற ஒரு நூல் மட்டுமே பாடநூலாக விதிக்கப்பட்டமை எனலாம். இதன் விளைவாக நமது சந்தைப் பொருளாதாரச் சூழலில் 1970 களின் நடுப்பகுதியின் பின்னர் மாணவர்களது வாசிப்புக்கான மாற்றுப்பாட நூல்கள் வருவது நின்றுவிட்டது. w
சோதனையிற் தேறுவதை மட்டுமே முதன்மைப்படுத்துகிற போட்டா போட்டி, பாடசாலைக் கல்வியைப் பொருளற்றதாக்கி ரியூட்டறிகள் மூலம் அறிவை வளர்க்க உதவாத, பரீட்சைக்கான ஒரு பயிற்சி முறையை வளர்த்துவிட்டது. இதனால் மாணவரிடையே வாசிப்புப் பழக்கம் அருகிவிட்டது. தொலைக்காட்சியின் வருகை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
இன்று நாம் வாழும் சூழலில் தாய்மொழிக் கல்வி மட்டுமன்றிநாட்டின் கல்வி முழுவதுமே நலிந்துள்ளது.
தாய் மொழிக் கல்வியின் எதிர்காலம்
இன்று தாய் மொழிக் கல்விக்கு எதிரான அலை வலுவாக வீசுகிறது. நமது கல்வி முறையின் நலிவுக்கான காரணங்கள் இலவசக் கல்வியும் தாய் மொழிக் கல்வியுமே என்று சிலராற் கூசாமற் பேசமுடிகிறது. தனியார் பாடசாலைகள், சர்வதேசப்பாடசாலைகள் என்றபேரில் புகுத்தப்பட்டுள்ளன. இவை ஆங்கில மூலமே கல்வி புகட்டுகின்றன. தனியார் பல்கலைக் கழகங்கட்கான அத்திவாரமும் இடப்பட்டுள்ளது. எனவே ஆங்கில மூலம் கல்வி கற்ற ஒரு சிறுபான்மையை உருவாக்கி ஆங்கில மொழி ஆற்றல் கொண்டு பிறர் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு நவ கொலனிய எசமான வர்க்கம் உருவாகி வருகிறது.
எல்லோருக்கும் ஆங்கிலக் கல்வி, ஆங்கிலமூலம் பாடசாலைக் கல்வி என்பதன் மூலம் நாட்டின் மிகப்பெரும்பான்மையான பாடசாலைகளில் ஆங்கிலமும் இல்லாமல் கல்வியும் இல்லாமல் கல்வியை மேலும் சீரழிக்கும் வாய்ப்பே அதிகம். ஆயினும் இன்று, இந்த நாட்டில் வசதியுடன் வாழ்வோருக்கு அது மிகவும் பொருத்தமானது.
தாய் மொழிக் கல்வியின் புறக்கணிப்புத் தொடருமேயானால், இந்த நாட்டில் ஒரு சிறுபான்மை, அயலார் தயவில் அந்நிய மேலாதிக்கத்துக்குத் துணையான ஒரு சக்தியாக ஆதிக்கம் செலுத்தும் நிலை மேலும் உறுதிப்படும். எனவே இன்றைய
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 19

Page 13
நிலைமைகளும் இன்றைய போக்கும் தாய் மொழிக் கல்வியின் விருத்திக்குப் பகையானவையே.
நான் சுட்டிக்காட்டியவற்றினின்று கல்வி பற்றிய பிரச்சினை ஒரு சமூக அரசியற் பிரச்சினை என்பதை அடையாளங் காணலாம். நம் முன் உள்ள பெரிய சவால் அயல் ஆதிக்கத்துக்கு, குறிப்பாக ஏகாதிபத்தியத்துக்கு முகங் கொடுப்பதே. இதைச் செய்வதாயின் மக்களின் நலன்களைப் பாதிக்கிற விடயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். எனவே, தாய் மொழிக் கல்வி உரிமைக்கான கோரிக்கை வலுப்பெற வேண்டும். உயர் கல்வியைத் தாய் மொழியிலேயே வழங்குவதற்கான காரியங்களை நாம் மேற்கொள்ளத் தயங்கும் அளவுக்கு நமது மொழிகளின் ஆற்றலும் நமது சமுதாயங்களின் ஆற்றலும் நலிவடையும்.
நமது இலங்கையின் எல்லாத் தேசிய இனங்களும் சமூகங்களும் சமமாக வாழக்கூடிய ஒரு தீர்வை நாங்கள் வேண்டி நிற்கிறோம். அந்தத் தீர்வின் மூலமே இந்த நாட்டில் நிலையான அமைதி ஏற்படும் எனவும் நம்புகிறோம். அந்தத் தீர்வு எல்லாத் தேசிய இனங்களும் சமூகங்களும் சமமான அடிமைகளாக, அந்நியரது மேலாதிக்கத்துக்கு உட்பட்டோராக வாழும் ஒரு தீர்வாக இருக்குமாயின் அது தீர்வுமல்ல, அதன் மூலம் கிட்டுவது அமைதியுமல்ல என அறிவோம்.
நமது எதிர்காலம் கல்வியின் பரவலாக்கத்திலும் கல்வித் தரத்தின் மேம்பாட்டிலும் தங்கியுள்ளது. நமது தாய் மொழி நமது அடையாளத்தின் ஒரு முக்கியமான அடிப்படையான அம்சம் என நாம் நம்பினால், அம் மொழியிற் பொதிந்துள்ள பண்பாட்டுக் கூறுகளும் ஞானமும் அறிவும் நமது எதிர்காலத்துக்கும் முழு மானுடத்துக்கும் பயனுடையனவும் பேண வேண்டியனவும் என நாம் நம்பினால், நமது மொழியின் வளமும் நமது மக்களது வாழ்வின் தரமும் நெருங்கிய உறவுடையன என நாம் நம்பினால் தாய் மொழிக் கல்விக்காகப் போராடுவதையும் கடுமையாக
உழைப்பதையும்விட வேறுவழியில்லை.
20 பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002
 

பின்நவீனத்தவம் ரஷ்யாவிற்கு வந்த பொழுத.
ഖിന്നമ് മിഖബീമീ
'ஒரு சமுதாயத்தில் குவிந்துவிட்ட முரண்பாடுகளை அதன் முற்போக்குச் சக்திகள் தீர்க்காவிட்டால், அந்த வேலை பிற்போக்குச் சக்திகளால் செய்து முடிக்கப்படுகிறது என்று கார்ல் மார்க்ஸ் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டத்தில் வரலாறு அதன் தவறான திசையில் வளர்கிறது. இதே போன்ற ஒன்று ரஷ்யாவிலும் நடந்தேறியுள்ளது. சோவியத் சமுதாயத்தில் எந்த முரண்பாடுகளுக்கு அதன் தொழிலாளர்கள் தீர்வு காணத்தவறியதோ, ரஷ்ய அதிகார வர்க்கம் அவற்றைத் தனக்குச் சாதகமான முறையில் தீர்த்து வைத்துள்ளது. இந்தப் பின்னடைவின் விளைவாக மக்கள் திரளின் பொருளாதார, பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் மாபெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இதற்குச் சோவியத் உழைக்கும் வர்க்கம் மாபெரும் விலை கொடுத்துள்ளது. உடலும் பண்பும் சீரழிந்து, அரசியல் சரணாகதிக்கும், அடிப்படைத் தேவைகளுக்கே ஆலாய்ப்பறக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. ஆயினும் முடிச்சு வெட்டப்பட்டுவிட்டது; முட்டுச் சந்திலிருந்து விடுபட்டு, வரலாறு மீண்டும் நகரத் தொடங்கிவிட்டது - அதன் தீய பக்கத்தை நோக்கி
பெர்லின் சுவர் வீழ்ந்து பத்தாண்டுகள் கடந்த பின்னர் வரலாற்றுப் பொருள் முதல் வாதிகள் காணும் யெல்த்சினின் ரஷ்யாவை ஒரே சொல்லில் மீண்டும் ஒரு “ஜாரிச மீட்பு" என்று விவரிக்கலாம். 1917 அக்டோபரில் தத்துவத்திலும் நடை முறையிலும் மனித குலத்திற்கே முன்னோடியாக மாறிய ரஷ்யா இன்று அவ்விரண்டிலும் தனது கடந்த காலத்தினும் பின் தங்கிய நிலைக்குப் போய்விட்டது. வரலாற்றின் கடிகாரத்தில் ரஷ்யாவின் 1989, பிரெஞ்சு நாட்டின் 1789 அல்லாமல் வேறென்ன? அதன் ஆகஸ்ட்1991,1848 பெப்ரவரியின் கேலிக்கூத்தல்லவா? அதன் 1993 அக்டோபர் எழுச்சி, 1848 ஜூன் பாரிஸ் கலகத்தின் குருதி வழியும் நையாண்டிதானே! முதலாளித்துவப் புரட்சியின் போது அவ்வர்க்கம் முழங்கிய கொள்கைகளை அதனால் நிறைவேற்ற இயலாது என்பதை, பாரீஸ் நகரத் தொழிலாளர்களைப் படுகொலை செய்தபின்பே, அதாவது அறுபதாண்டுகளுக்குப் பின்பே, புரிந்து கொள்ள முடிந்தது. உலகளாவிய மனித மதிப்பீடுகளைவிட கவசப்படைகளே முக்கியமானவை என்பதை ரஷ்ய சமுதாயம் உணர்ந்துகொள்ள
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 21

Page 14
ஆகஸ்ட் 1991 லிருந்து அக்டோபர் 1993 வரையிலான இரண்டு ஆண்டுகளே போதுமானதாயிருந்தது. இது கேலிக்கூத்தின் கேலிக்கூத்து, நையாண்டி செய்யப்படும் நையாண்டி. ரஷ்யாவின் நவீன வரலாறே கடந்த கால வரலாற்றுக் கட்டங்களின் பாவைக்கூத்தாக மாறிவிட்டதா? மேற்கத்திய பின்நவீனத்துவத்தின் மட்டரக வடிவமான ரஷ்யப் பின்நவீனத்துவத்தின் கற்பனைக்குப் பொருத்தமான நிழற்கூத்தாக மாறிவிட்டதா? ஆனால் இந்தப்பைத்தியக்காரத்தனத்திற்கு அடியில் ஒரு தெளிவானமுறை உள்ளது. இந்த ரஷ்ய வரலாற்று நாடக நடிகர்கள் வேஷத்தை மாற்றிக்கொள்வதிலும் ஒரு விதி கடைப்பிடிக்கப்படுகிறது. அவர்கள் உடைகளையும் மேடை அமைப்பையும் பின்னோக்கிய கால வரிசைப்படி மாற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தெருவில் எளிமையான ஜனநாயக மேலாடைகளில் தொடங்கி கிரெம்ளின் அரங்குகளில், சீமான் சீமாட்டிகளுக்கேற்ற அலங்கார ஆடைகளுக்கு முன்னேறுகின்றனர். பத்தாண்டுகளுக்கு முன்பு, “முடிவு வழியை நியாயப்படுத்துகிறது” என்று போல்ஷ்விக்குகள் கருதுவதாக ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்த அதே போலி நெறியாளர்கள் இன்று ரஷ்யாவில் நாகரிகத்தைக் காப்பாற்ற ஒரு ரஷ்ய பினோசெட்டை வேண்டுகிறார்கள்.
சுருக்கமாகச் சொன்னால், ரஷ்ய ஆளும் கும்பல் தனக்குப் பொருளாதார சுதந்திரமும் அதற்குப்பரிசாக சமுதாயத்தில் அனைவருக்கும் அரசியல் மீட்சியும் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்தது. ஆனால், இன்று அது அரசியல் மீட்சியல்ல-ரஷ்ய சமுதாயத்திற்கு அரசியல் அடிமைத்தனமே பொருத்தமானது என்ற முடிவிற்கு வந்துள்ளது. ஏனெனில், அதன் எதிரி அறுதிச் சிறுபான்மையான நிலப்பிரபுத்துவச் சமுதாயம் அல்ல, அறுதிப் பெரும்பான்மையான நவீன ரஷ்ய சமுதாயத்தின் கூலித்தொழிளாலர்கள். அவர்களின் பின்னே விரிந்திருப்பதும் புனித வரலாறல்ல, ரஷ்ய மற்றும் சர்வதேச பாட்டாளிவர்க்கப் போராட்ட வரலாறு. அதனால்தான் ரஷ்ய முதலாளித்துவ ஆளும் கும்பல் தனது நவீன எதிரியைச் சந்திக்க தனது புராதன எதிரியை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதலாளித்துவ மிலியுக்கோவால் தூக்கியெறியப்பட்டு ரோமோனோவ் உயிர்த்தெழுப்பப்பட்டு முதலாளித்துவ யெல்த்சினால் பிரம்மாண்டமாக்கப்படுகிறார். அழகியல் தேடும் அப்பாவிகளுக்கு ரஷ்யா ஒரு வரலாற்று நிழற்கூத்து நாடகமாகத் தோன்றலாம். சாவு மணி அடிக்கப்போகும் தருணத்தில் உயிர்த்தெழுந்துவிட்ட முதலாளித்துவம் என்று மார்க்சீயர்கள் இதனை தர்க்கரீதியாக விளக்குகின்றனர்.
முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள், ரஷ்யாவின் கொள்ளைக்கார முதலாளித்துவத்தை அதன் புனிதத் தந்தையான, மேற்கத்திய, குறிப்பாக - அமெரிக்க முதலாளித்துவத்தின் கடந்த கால கொள்ளைக்காரப்
22 பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002

பின்னணியைச் சுட்டிக்காட்டி நியாயப்படுத்துகின்றனர். அவர்கள் குறிப்பிட மறந்த ஒன்றும் உள்ளது. நாம் ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் கடந்த காலத்தை மட்டுமல்ல எதிர்காலத்தையும் காண்கிறோம். ஏனெனில், உலக முதலாளித்துவ சிந்தனையாளர்கள் அனைத்து வரலாறுகளும் முடிந்துபோகின்ற காலமென்று வரையறுத்துள்ள காலகட்டத்தில்தான் ரஷ்ய முதலாளி வர்க்கம் தனது வரலாற்றைத் தொடங்க விழைகிறது. "ஃபாஸ்ட்” ஆணையிட்டதுபோல் ரஷ்ய முதலாளித்துவ வர்க்கமும் வெற்றிக் களிப்பில் “காலமே அசையாது நில்” என்று வீணே அலறிப் பார்க்கிறது. காலம் முன்செல்லத் தவறினால், பிறகு பின்செல்லத் தொடங்கும், அதுவும் அதன் தீய கூறுகளில். இந்தப் பொருளில் முதலாளித்துவம் இன்று ரஷ்யாவில் தன் கொள்ளைக்கார கடந்த காலத்தை மட்டுமல்லாது, காட்டு மிராண்டித்தனமான எதிர்காலத்தையும் காண்கிறது. முதலாளித்துவ அமைப்பின் தொடக்கத்தையும் முடிவையும் காண்கிறது. முதலாளித்துவ வர்க்க உலகிற்கு அதன் வரலாற்றின் எதிர்மறையான கூறுகள் அனைத்தையும் காட்டும் கண்ணாடியாக இன்றைய ரஷ்ய சமுதாயமும் அரசும் விளங்குகின்றன. மார்க்ஸ் கூறுவதுபோல அவை உரிமைகளை விட்டுவிட்டு அடிமைத்தனத்தை மட்டும், ஆக்கபூர்வ கூறுகளை விட்டுவிட்டு உற்பத்தி சக்திகளின் அழிவுகளை மட்டும், சமூக உறவுகளில் பண்புகளை விட்டுவிட்டு மிருகத்தனத்தை மட்டும், பண்பாட்டை விட்டுவிட்டு காட்டுமிராண்டித்தனத்தை மட்டும் வெளிப்படுத்துகின்றன. ரஷ்யாவின் இந்த நிலைமைகளின் மீது போர் தொடங்க வேண்டுமா? இந்த நிலமைகள் தொலைதூர, கடந்த காலத்திற்கும் அடியில் உள்ளன. விமர்சனங்களுக்கெல்லாம் எட்டாத ஆழத்தில் உள்ளன. ரஷ்யாவில் வரலாற்றுப்பொருள் முதல்வாதத்தின் பணி எதிரியோடு வாதிடுவது அல்ல; அழித்தொழிப்பதே ஆகும்.
பின்நவீனத்துவத்தைப் பற்றிய குறிப்புகள் எழுதுவதற்கு அண்மையில் வெளிவந்த இரண்டு கட்டுரைத் தொகுப்பு நூல்கள் காரணமாகும். ஒன்று சார்லஸ் ஜென்ஸ் - ஜேசன் ரிக்பை அட்டைப்படம் வடிவமைத்த “சோவியத்திற்குப் பிந்திய கால ஓவியமும் கட்டடக்கலையும்” (1994 அகதாமி பதிப்பு) மற்றது “குறியீட்டிற்குள் மீண்டும் நுழைதல்” (எல்லன்பெர்ரி - அனிசா மில்லர் பொகாகா ஆகியோரால் தொகுக்கப்பட்ட 1995 ஆம் ஆண்டுமிச்சிகன் பல்கலைக்கழக பதிப்பு). பண்பாட்டுத் துறைகளைப்பற்றிப் பெதுவாகவும், ரஷ்ய கலைத்துறையின் புதிய கூறுகள் பற்றிக் குறிப்பாகவும் பேசும் பல்வேறு கட்டுரைகளை தாங்கியுள்ள இந்த இரு தொகுப்புகளிலும் சுமார் 40 ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில்
பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002 23

Page 15
பெரும்பாலோர் ரஷ்ய நாட்டவர். என்றாலும் மேற்கத்திய கலைஞர்களும் விமர்சகர்களும் இடம் பெற்றுள்ளனர். இக்கட்டுரைகளில், பெரும்பாலானவற்றின் - குறிப்பாக ரஷ்ய ஆசிரியர்களின் கட்டுரைகளில் - விமர்சனத்தன்மை அவ்வளவு உயர்வானதல்ல என்றாலும் அவற்றின் முக்கியத்துவம் வேறொரு அம்சத்தில் உள்ளது. ரஷ்ய புதிய தாராளவாத படைப்பாளி அறிவு ஜீவிகளின் அழகியல், கருத்தியல் மற்றும் அறிவியல் பற்றிய முழுமையான சித்திரத்தை அளிக்கும் இத்தனை கூட்டுக்குரல்கள் இதற்கு முன் வேறெங்கும் ஒலித்ததில்லை. மேலும் இந்தத் தொகுப்பு மேலை பின்நவீனத்துவத்திற்கும் அதன் ரஷ்ய ஆதரவாளர்களுக்கும் இடையே நிலவும் உறவின் புதிய மட்டத்தை உணர்த்துவதுடன் ரஷ்ய ஆதரவாளர்களின் திட்டங்களை வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் அவர்களின் அரசியல், சமூக இயல்புகளைத் தெளிவாக உணரவும் உதவுகிறது. இறுதியாக, ரஷ்ய பின் நவீனத்துவம் என்ற ஒரு புதிய பண்பாட்டு நிறுவனம் உருவாகிக் கொண்டிருப்பதை இத்தொகுப்பு அழுத்தமாகத் தெரிவிக்கிறது. சோவியத்திற்குப் பிந்திய ரஷ்யாவில் மேலை முதலாளித்துவத்தின் பொருளியல், பண்பாட்டு, அரசியல் நிறுவனங்களை ரஷ்ய மண்ணில் நட்டு, ரஷ்ய மயமாக்கும் முயற்சியே இது எனலாம்.
உலகளாவிய முதலாளித்துவத்தின் விளிம்பு நாடுகளிலும் அரை விளிம்பு நாடுகளிலும் திணிக்கப்படும் மேற்கு நாடுகளின் மேலாண்மையைப் பயிரிடும் மற்ற நிறுவனங்களைப் போலவே ரஷ்ய பின்நவீனத்துவத்திலும் மேல்நாட்டு நிபுணர்கள் (ஸ்லாவிய அமெரிக்க கும்பல்), மேல்நாட்டு உயர்தத்துவம்(பிரெஞ்சு பின் அமைப்பில்) மற்றும் மேலை கட்டமைப்புடன் தாராளமான தொடர்பு (மேலை பதிப்பகங்கள், பத்திரிகைகள், படிப்புதவித் தொகைகள், நிதிக்கொடைகள், சர்வதேச கூட்டங்கள், மின் அணு ஊடகங்கள்) அனைத்தும் உண்டு. இதன் ரஷ்யப்பிரிவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த கலைஞர்களும் விமர்சகர்களும் உள்ளனர். கம்யூனிச எதிர்ப்பு புதிய தாராளவாதம், கலையிலும் இலக்கியத்திலும் எதார்த்தவாத எதிர்ப்பு ஆகியவை மட்டும்ே இவர்களை ஒன்றினைக்கும் பண்புகள். ரஷ்ய பின் நவீனத்துவ கலை உண்மையில் எவ்வளவு பின்நவீனத்துவமானது என்ற கேள்வி ஏற்கனவே எழத் தொடங்கிவிட்டது. இந்த ஐயம் நியாயமானதே. ஆயினும் இரண்டாம் பட்சமானதே. அழகியல் தொடர்புடைய இந்த நுட்பமான பிரச்சனைகளையெல்லாம் இத்தொகுப்பின் கட்டுரையாசிரியர்களுக்கு, (மேல் நாட்டினர், ரஷ்யர்கள் அனைவருக்கும்) இப்பொழுது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரியவில்லை. உண்மையில் அவர்கள் அரசியல் தத்துவங்கள் மற்றும் பண்பாட்டு அரசியல் ஆகியவை பற்றியே முழுக்கக் கவனம் செலுத்துகின்றனர். நானும் இந்தக்
24 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

களத்தில்தான் அவர்களோடு விமர்சன ரீதியாக மோத விரும்புகிறேன். முதலாவதாக ரஷ்ய அரசியலிலும் பண்பாட்டிலும் மேலைநாட்டுக் குறுக்கீடுகள் பற்றிய சார்லஸ் ஜென்க்ஸின் கருத்துக்களை விவாதிக்கப் போகின்றேன். பின்பு இத்தொகுப்பின் ரஷ்ய எழுத்தாளர்கள் அனைவரையும் இணைக்கும் பண்பாகவும், ரஷ்ய பின்நவீனத்துவத்தை நிறுவனமாக்க உதவும் சமூக அரசியல் நிலைமைகளுக்கும் அடிப்படையிலான யதார்த்தவாத எதிர்ப்பைப் பற்றி விவாதிக்க
உள்ளேன்.
II
பின்நவீனத்துவ மதிப்பீடுகளில் சில பொதுவான அடிப்படைக் கருத்துக்களையும், அவற்றை ரஷ்யாவிற்கு சார்லஸ் ஜென்க்ஸ் பயன்படுத்தும் முறையைப் பற்றியும், முதலாவதாக சில கேள்விகளை எழுப்பப்போகிறேன். சார்லஸ் ஜென்க்ஸ் இந்த முதல் தொகுப்பின் முக்கியமான கட்டுரையை எழுதியதுடன் முகப்பு அட்டைக்கு ஒளிப்பட வடிவமைப்பும் செய்ததன் மூலம் இத்தொகுப்பிற்கு மேலைநாட்டு மதிப்பையும் அதிகாரத்தையும் தருகிறார். பின் நவீனத்துவ கட்டடக் கலைத்துறையின் முன்னோடி நிபுணரும் அசைக்க முடியாத பின் நவீனத்துவ வாதியுமான ஜென்க்ஸ் வரலாற்றுக் கால கட்டங்களைக் கணிப்பதில் மிகுந்த ஆர்வமும், ஆனால் பரிதாபமான திறமையும் உடையவர் என்பது நீண்ட காலமாகத் தெரிந்த விஷயமே. 1972 ஆம் ஆண்டு ஜுலை 15ம் நாள் சரியாகப் பிற்பகல் 3. 32 மணியளவில் புனித லுாயி நகரில் ஏழைகளுக்கான ப்ரூயிட் - ஈகோ வீட்டு வசதித்திட்டம் தகர்க்கப்பட்டதோடு நவீனத்துவம் இறந்து போனதாக அறிவித்தார். அந்த நற்செய்தியும் ஒரளவு மிகைப்படுத்தப்பட்டதே. ஏனெனில், நோயாளியானாலும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு விடாப்பிடியாகப் போராடும் நவீனத்துவத்தை ஜென்க்ஸ் கடிகாரமும் கையுமாக விடாது கவனித்துக் கொண்டிருந்தார்.
1993 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மாஸ்கோ ட்ரெட்யாகோவ் கலையரங்கில் நடந்த பின்நவீனத்துவமும் தேசிய கலைகளும் பற்றிய சர்வதேச மாநாட்டிற்கும் கண்காட்சிக்கும் ஜென்க்ஸ் சென்றிருந்தார். இந்த மாநாடு நடந்து கொண்டிருந்தபோதுதான் யெல்த்சினின் கலகமும் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 3, 4ஆம் தேதிகளில் ஒஸ்டாங்கினோ தொலைக்காட்சி நிலையப்படுகொலைகளும், அதன்பின் சுப்ரீம் சோவியத் கட்டடங்களை இராணுவம் குண்டு வீசித் தாக்கியதும் நடந்தது. இந்த இரத்தம் சொட்டிய நிகழ்ச்சிகளை
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

Page 16
சி. என். என்.(CNN) நேரடியாக ஒளிபரப்பியது. அருகில் இருந்த புகழ்பெற்ற காவுட்ஸ்கி வீதியிலிருந்து அரசு ஆதரவாளர்களும் இந்த நாடகத்தை நேரடியாகக் கண்டனர். ஜென்க்ஸ்-ஐப் பொறுத்தவரை அது நழுவிட முடியாத அரிய சந்தர்ப்பம். பின்நவீனத்துவவாதிக்கு அத்துணை பொருத்தமில்லாத - மதபோதகரைப் போன்ற அமைதியான குரலில் அன்று ஜென்க்ஸ் இப்படி அறிவித்தார் : “மாஸ்கோ , அக்டோபர் 4, 1993 காலை 10.10 நவீனத்துவம் இறந்துவிட்டது"
எனக்குத் தெரிந்தவரை சாதரணமாக ஜென்க்ஸின் எழுத்துக்களைக் கூர்ந்து கவனித்துவரும் பத்திரிகைகளும் விமர்சன வட்டாரங்களும் கூட இதே தலைப்பில் ஜென்க்ஸ் எழுதிய சிறிய கட்டுரைகளைப் பற்றி கருத்துக்கள் எதையும் வெளியிடவில்லை. இது துரதிஷ்டவசமானது. ஏனெனில் சமுதாயம் சமநிலையில் இருக்கும் பொழுது வெளிவராமல் மறைந்திருக்கும் சில பின் நவீனத்துவ கூறுகள், கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் விளம்பரமயமான மேல்நாட்டுச் சூழலில் அமுக்கி வைக்கப்பட்டிருக்கும் பின்நவீனத்துவக் கூறுகள் சமுதாயம் கொந்தளிப்பான கட்டத்தை அடையும்பொழுது பீறிட்டு வெளிவருகின்றன. ரஷ்யா இன்று அத்தகைய நிலையில் உள்ளது. அறிவு ஜீவிகளின் எந்த ஒரு குறுக்கீடும் அவர்கள் விசுவாசத்தையும் சிந்தனைத் திசையையும் காட்டும் பரிசோதனையாகிறது. ரஷ்ய எல்லைக்குள் நுழைந்து இந்தப் பரிசோதனைக்கு ஜென்க்ஸ் தன்னை உட்படுத்திக் கொண்டதும் சாதரணமாக தத்துவ முடிவுகளைத் தவிர்க்கும் பின் நவீனத்துவம் தனது முற்போக்கு ஜனநாயக வேடத்தையும் நாசூக்கையும் உதிர்த்துவிட்டது. மேட்டிமைத்தனமாக பின்' என்ற அடைமொழியை விட்டுவிட்டு குழப்பமற்ற எதிர்ப்பு என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொண்டது. சாதரண பொதுவுடமை எதிர்ப்பையும் தனது நவீனத்துவ எதிர்ப்பையும் சரிசமமாக்கியது.
மற்ற எந்த நாட்டையும்விட நவீனத்துவத்தாலும், நவீனத்துவமாதிரிகளாலும் மிகவும் தொல்லையடைந்த நாடு ரஷ்யா என்பது ஜென்க்ஸின் கருத்தாகும். "சீனா தவிர்ந்த வேறெந்த நாட்டையும்விடமிருகத்தனமான அதன் பொருள் முதல்வாதம் தெளிவாக முறைப்படுத்தப்பட்டிருந்தது. குறிக்கப்பட்ட பகுத்தறிவு வாதமும், எந்திரமயமான கருத்துக்களும் ஆழமாக ஊடுருவியிருந்தன”. ரஷ்யப் பண்பாட்டைப்பற்றி இத்தகைய ஆழமான சிந்தனை ஜென்க்ஸின் வரலாற்றுக் கடமை பற்றிய கருத்துக்களை மேலும் வலுப்படுத்தியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. காட்டுவாசிகளை அவர்களது முட்டாள்த்தனமான பொருள் முதல் வாதத்திலிருந்து எப்படியாயினும் - சிலுவையிலோ தேவைப்பட்டால் வாள்முனையிலோ -
26 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

மீட்டெடுக்கும் லட்சியதாகம் படைத்த ஸ்பானிய பாதிரியார் போலவே ரஷ்யாவை இருளிலிருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் லட்சியதாகம் படைத்த பின் நவீனத்துவத்திற்கு யெல்த்சினின் டாங்குகள் மற்றுமோர் பயனுள்ள கருவியாக ஜென்க்ஸ் கருதுகிறார். கடைசி சுப்ரீம் சோவியத் மீதான வன்முறைத் தாக்குதலையும், அவர் “அக்டோபர் கலகம்” அல்லது “இரண்டாவது அக்டோபர் புரட்சி” என்று அழைக்கும் எழுச்சி நசுக்கப்பட்டதையும், அவர் “ரஷ்யா முழுவதும் உள்ள பிற்போக்கு நவீனத்துவவாதிகளுக்குத் தங்களது கதை முடிந்துவிட்டது தெரியும். பின்நவீனத்துவ முறை இன்று பவனிவரத் தொடங்கிவிட்டது. மரணங்களின் மீது கால் பதித்து மரண ஊர்வலங்களை இடிக்கப்பட்ட கட்டடங்களால் அடையாளம் காட்டி உலா வருகிறது” என்று மிரட்டலாக அறிவிக்கிறார். (நம் ஊர் அரைகுறை பின் நவீனத்துவ வாதிகளான அ. மார்க்ஸ் போன்றவர்களும் இப்படித்தான் மிரட்டப் பார்த்தனர் - மொழிபெயர்ப்பாளர்).
ஜென்க்ஸின் பித்தலாட்ட தத்துவ அரசியலில் நவீனத்துவம் என்றால் சோசலிசம், சோசலிசம் என்றால் அதிகார வர்க்கத்தின் மேலாண்மை, அதிகாரவர்க்க மேலாண்மை என்றால் பிற்போக்கு. பின்நவீனத்துவத்தின் மாபெரும் சிறப்புகளாக அவர்கள் இதுவரை பெருமையடித்துக் கொண்டிருந்த பன்முக மதிப்புக்கள் வேறுபாடின்றி பிணைவு போன்ற மயிர்பிளக்கும் வாதங்கள், மற்றவர்களிடம் வெளிப்படையாகவும் மென்மையாகவும் நடந்து கொள்ளுதல், மைய விலகல் தத்துவங்கள், கேலிகள், சுயகேலிகள், ஜென்க்ஸின் பங்களிப்பான அனைத்தும் தழுவியதன்மை, இது அல்லது அது என்பதற்குப்பதிலாக இரண்டும் அதற்கு மேலும் என்ற கருத்துக்களெல்லாம் இன்று அடையாளம் தெரியாமல் மறைந்துவிட்டன.
அக்டோபர் துயரத்தை ஜென்க்ஸ் குத்தலாகக் கையாளும் விதத்திலிருந்து பின் நவீனத்துவ விமர்சகர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டிய பின் நவீனத்துவ தத்துவத்தின் ஆழமற்ற தன்மை, சமுதாய நிகழ்வுகளை அறிவுபூர்வமாகப் புரிந்து கொள்வதைத் திட்டமிட்டு புறக்கணித்தல், அழகியலுக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை மறைத்துவிடப் பார்க்கும் ஆர்வம் ஆகிய கூறுகள் இன்று வெட்ட வெளிச்சமாகின்றன. ரஷ்யாவில் ஜென்க்ஸின் இந்த துணிச்சலான பாய்ச்சல் வேறொன்றையும் உணர்த்துகின்றது. பின் நவீனத்துவத்தின் மூலம் அப்பட்டமான வன்முறையைக் கண்டும் நம் உணர்வுகள் துடிக்காமல் மரத்துப்போகச் செய்வது மட்டுமல்லாமல், அவ்வன்முறையைப் பயன்படுத்தும் சக்திகளின் சுயரூபத்தைப் பற்றிக் கவலைப்படாமல், வன்முறையைப் பயன்படுத்துவதை மட்டும் மகிழ்ச்சியோடு
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 27

Page 17
அனுமதிக்கிறது. இறுதி சுப்ரீம் சோவியத்தின் தகர்ப்பிற்குப்பின் உள்ள சக்திகளைப் புரிந்து கொள்வதற்கு அதற்கு இணையான கட்டடக்கலை ரீதியான எடுத்துக்காட்டுக்களாக பெர்லின் நகரில் 1933ஆம் ஆண்டு ரீச்ஸ்டாக் கொளுத்தப் பட்டதையும், சிலி நாட்டு சாண்டியாகோவில் 1973ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் மாளிகை சுற்றி வளைக்கப்பட்டு, பீரங்கிகளால் தகர்க்கப்பட்டதையும் நினைவு கூரலாம். இந்த ஒப்புநோக்குடன் பிற்போக்கு நவீனத்துவத்திற்கு கட்டடக்கலை உவமையாக சிலி மற்றும் ரஷ்ய பின் நவீனத்துவவாதிகள் சித்திரவதைக்கும், கூட்டங் கூட்டமாகக் கொன்று குவிப்பதற்குமாகப் பயன்படுத்திய அரங்கத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நான் ஜென்க்ஸை இவ்வாறு கடுமையாக விமர்சிப்பதைச் சிலர் ஜென்க்ஸிக்கு ஒரு வேளை ரஷ்ய அரசியல் பற்றிய அறிவில்லாதிருக்கலாம் என்ற காரணத்திற்காக மறுக்கலாம். (கம்யூனிச எதிர்ப்பாளர் ருஷ்டோக்கியை நவீனத்துவவாதி என்று அழைப்பதற்கும், அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற முயல்வதைக் கலகம்' என்று முத்திரை குத்துவதற்கும் ஒருவர் அறிவிலியாகத்தான் இருக்க வேண்டும்.) ஆனால், கட்டடக் கலையின் உலகப் புகழ் பெற்ற நிபுணரான ஜென்க்ஸ் எவ்வாறு சுப்ரீம் சோவியத்தை தகர்ப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்ட இடத்தின் கட்டடக்கலை குறியீட்டைக் காணாதிருக்க இயலும்? உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவருக்கு நன்கு தெரிந்த ரஷ்ய - ஜெர்மன் கலை வடிவிலான க்ரெம்ளின் மாளிகையாயிற்றே1யெல்த்சின் கும்பலால் பாதுகாக்கப்படும் புதிய ரஷ்ய முதலாளித்துவ கும்பலுக்காகத் தற்பொழுது அந்த நிலப்பிரபுத்துவ கட்டட வடிவம் போன்ற சிறிய நினைவுச் சின்னங்கள் ரஷ்ய வீதிகளில் விற்கப்படுகின்றன. ஜென்க்ஸின் வகைப்படுத்தலின்படி, கடைசி சுப்ரீம் சோவியத்தும் அதன் கட்டடமும் நவீன காலத்தைக் குறித்தன என்றால், பின்பு யெல்த்சினின் க்ரெம்ளின் மாளிகை எதன் சமூக - வரலாற்றுக் குறியீடாக வருகிறது? இந்த கும்பலின் பின்னேயுள்ள வர்க்கத்தையா, அதன் கட்டடக்கலை விருப்பத்தையா?
கட்டடக்கலைக் கனவுகள் போன்ற சிறிய விஷயங்களை ஒருபுறம் ஒதுக்கி வைப்போம். அக்டோபர் கலகம் இந்த மறுசீரமைப்புக் கும்பலின் பாசிச உருவத்தை முதல் முறையாக அம்பலப்படுத்தியது. இனப் படுகொலைப் போராக அது செசென்யாவில் வெடித்தபோது, அதன் சுயரூபம் வெட்ட வெளிச்சமாகியது. ஆலைத் தொழிலாளிகளை உடலாலும் உள்ளத்தாலும் ஒடுக்கிவைத்தல், அரசியல் எதிரிகளை துணை ராணுவக் கும்பல்களை ஏவித் தாக்குதல் ஆகியவற்றை இக்கலகம்
28 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

தொடக்கிவைத்தது. இதன் மூலம் நாட்டைக் கொள்ளையடிப்பதற்கும், சிறிய ஆளும் கும்பலின் கையில் நாட்டின் பொதுச் சொத்துக்களைச் சட்ட விரோதமாகக் குவிப்பதற்கும், ஏகபோக நிதி-தொழில் மூலதனம் உருவாவதற்கும் வழி வகுக்கப்பட்டது. பாசிச அரசியலின் செவ்வியல் வடிவங்கள் இவை. ஜென்க்ஸ் இவற்றை அரசியல் வடிவங்களாகக் காட்டுகிறார். “பழைய பாசிசத்தின் மேல் பின் நவீனத்துவத்திற்கு உள்ளதாகக் கூறப்படும் அருவருப்பைத் தீவிரமாக கேள்விக்குள்ளாக்க வேண்டியதில்லை என்று பலர் கூறிய கருத்துக்களை இன்று ஜென்க்ஸின் புதிய கருத்துக்களோடு சேர்த்து மீளாராய்ச்சி செய்ய வேண்டும் என்பது எனது கருத்தாகும்.
இதற்கு மாறாக யெல்த்சினின் ரஷ்யாவின் சமூக யதார்த்தத்தைக் கலை வடிவில் கொண்டுவரும் ஒவியர்களுக்கு எடுத்துக்காட்டாக, ஜென்னடி ஜிவோட்டோவைக் குறிப்பிடலாம். முன்னோடிப்பாரம்பரியத்திலும் (அவன்த் கார்ட்) மிகை யதார்த்த வடிவத்திலும் கலகத்திற்கு முன்புவரை ஒவியங்கள் தீட்டிவந்த ஜிவோட்டோவ் இப்பொழுது ஒரு அரசியல் கலைஞராகிவிட்டார். ஜெர்மானிய உணர்வு வெளிப்பாட்டு வடிவில் (எக்ஸ்பிரஷனிசம்) இந்த ஓவியர்கள் கலகத்திற்கு பிந்திய ரஷ்ய முதலாளித்துவ கும்பலை முழுமையும் விபச்சாரமயமாகிப்போன, ஊழல் மயமான, சமூக விரோத கொள்ளைக் கும்பலும், அரசு எந்திரமும் ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப்பிணைந்து மக்கள் மீது மிருகத்தனமான வன்முறையைப் பயன்படுத்துகின்ற சமூகமாகச் சித்திரிக்கிறார்.
இனி, ரஷ்யப்பின்நவீனத்துவத்திற்கும், அந்நாட்டின் அண்மைக்கால சமூக பொருளியல் மாற்றங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை அலசப் போகிறேன். இவை பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன அல்லது மேலோட்டமாகவே குறிப்பிடப்படுகின்றன. ரஷ்ய மீட்சி மற்றும் அதன் சமூக முரண்பாடுகளின் நடுவே வைத்து பின்நவீனத்துவத்தைப் பார்க்கும் பொழுதுதான் அதன் சுய புராணத்தை தோலுரித்து ஏன் அது இன்றைய ரஷ்ய புதிய தாராளவாத அறிவு ஜிவிகளின் பண்பாட்டு அரசியலில் மேலும் மேலும் முக்கியத்துவம் பெற்று வருகிறது என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். ரஷ்யா மற்றும் சோவியத் பண்பாட்டின் முக்கிய பாரம்பரியமாக கலை இலக்கியங்களும் எதார்த்தவாதமும் சமூக உணர்வும் சமூக வெளிப்பாடும் நிரம்பியிருந்தன. இதனை உடைத்துக் கொண்டு வருவதில் எவ்வாறு பின்நவீனத்துவம் ஆர்வம் காட்டுகிறது என்பது அதனைப் புரிந்து கொள்ள உதவும் முதற்படியாகும். இனி வரும் பத்திகளில், “குறியீட்டில் மீண்டும் நுழைதல்” தொகுதியை பயன்படுத்தப் போகிறேன்.
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 29

Page 18
இத் தொகுதியின் மரபு எதிர்ப்புக் கருத்துக்களை நெருங்கிய தொடர்புடைய இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். "ஆஸ்ச்விஸிற்குப் பின் கலை” என்ற அடோர்நோவின் ஆய்வை மையமாகக் கொண்ட 'குலாக் கருத்துக்கள்” என்று அழைக்கப்படத் தகுந்த பிரிவு இதில் முதலாவதாகும். ஸ்டாலின் காலத்திய பயங்கரங்களைப்பற்றி மறுசீரமைப்புக்குப் பின் வெளிவந்த எண்ணற்ற நூல்களின் அடிப்படையில் சோவியத் கலைஞர்கள் மனிதனின் நிலமைகளைப் பற்றிப் பொதுவாகவும் சோவியத் சமூகத்தைப்பற்றிக் குறிப்பாகவும் மீளாய்வு செய்யத் தொடங்கினர். இந்த மரபு சோவியத் மற்றும் ரஷ்ய செவ்வியல் பாரம்பரியத்தின் அடிப்படையிலிருந்து வந்ததே ஆயினும், பின்பு அந்த மரபை காலத்திற்கு ஒவ்வாததென்றும் போதுமானதல்லவென்றும் குறைகூறித் தூக்கியெறிந்தது. இரண்டாவது பிரிவோ, "மாபெரும் நாட்டுப்பற்றுமிக்க போர்”, “சோவியத் மனிதன்", “வர்க்கப் போராட்டம்’, ‘மக்கள்’ போன்ற பொதுமைக் (மொத்தத்துவ) கருத்துக்களை உருவாக்குவதன் மூலம் பழங்கலை, பண்பாட்டு அடையாளங்களைத் தருவதற்கு முயல்கிறது என்று எதார்த்தவாத மரபைத் தாக்குகிறது. ஆனால், எதார்த்தத்தின் மீது, அதாவது சமுதாயத்தின் மீது, ரஷ்ய மற்றும் சோவியத் இலக்கியங்கள் வழிவழியாக அக்கறை கொண்டிருந்தது தவறான வழிகாட்டல், ரஷ்யப் பண்பாட்டுக்கும் சமுதாயத்திற்கும் அது நல்லதல்ல என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
அண்மைக் காலங்களில் எதார்த்தவாத மரபு செயல்பட்ட விதத்தைக் கூர்ந்து கவனித்தால், நாம் மேற்கூறிய இரு பின்நவீனத்துவ பிரிவினரும் அதிலிருந்து உடைத்துக்கொண்டு சென்றதற்கு நிலையான காரணங்கள் எதையும் காண இயலாது. பின் நவீனத்துவவாதிகளே ஏற்றுக்கொள்வதுபோல், அவர்களுக்கு உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கிய அனைத்து இலக்கியப் படைப்புக்களும் ரஷ்ய இலக்கியத்தின் எதார்த்தவாத மரபை - குறிப்பாக நெடுங்கதை மரபைச் சேர்ந்தவையே. மனித வரலாற்றிலேயே மிகக் கொடுமையான அனுபவங்களைப் பதிவுசெய்த இந்தப்படைப்புகள் நமது விமர்சகர்களில் முழுமையான செல்வாக்கைச் செலுத்தியிருப்பதும், தங்களது சமுதாயத்தை நன்கு வளர்த்துக் கொள்ள உதவிய ஒளியாக விளங்கியதும் உண்மை என்றால், பின்பு அதை எதிர்ப்பதற்கு பதில் இவர்கள் எதார்த்த வடிவத்தின் நீடித்திருக்கும் சக்தியைப் பாராட்டி புதிய ஜனநாயகப் பண்பாட்டிற்கு அதனைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். உண்மையில் எதார்த்தவாதக் கலை மனிதாபிமான, தாராளவாத விழுமியங்களை (மதிப்பீடுகளை) தனித்தன்மையுடன் பேரளவில் பரப்புவதில் தனக்குள்ள ஒப்பற்ற அழகியல் திறமையை நிரூபித்துள்ளது. புகழ்பெற்ற மரபு வழி எழுத்தாளர்களான வாசிலிக்ரோஸ்மேன், சொல்ஸினிட்சன், ரைபாகாவ், டுபின்ட்சேவ் போன்றவர்களின்
30 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

எழுத்துக்கள் நமது விமர்சகர்களின் சிந்தனையைச் செழுமைப்படுத்தியது மட்டுமல்லாமல், ரஷ்ய மக்கள் திரள்மீதும் பெரும் செல்வாக்குச் செலுத்தியதன் மூலம் கோர்ப்பச்சேவின் சீர்திருத்தங்களுக்கு மக்கள் ஆதரவைப் பெற்றுத்தந்தன. இப்பொழுது நாம் தவிர்க்க முடியாமல் இன்னொரு கேள்வியும் கேட்டாக வேண்டும். இந்தச் சாதனையில் கால் தூசியையாவது பின்நவீனத்துவக் கலையால் சாதிக்க முடிந்ததா? 'காபாகோவின்'கொம்யூனல்காஸ், பெட்ரூஷேவ் ஸ்கலாசின்"கொடிய உரைநடை” டிராகோ மோஸ் சென்கோவின் “நெடுங்கவிதை” ஆகியவை மக்கள் திரளை சமுதாயப் பணிக்குத் தூண்டுவதாகவோ, அவர்களது மனச்சாட்சியையும் அரசியல் உணர்வுகளையும் தட்டி எழுப்பவோ இயலுமா? ஜனநாயக வடிவமுடைய யதார்த்தவாதக் கலையால் மட்டுமே இதைச் சாதிக்க முடியும், சாதித்தது. ரஷ்யாவின் பின் நவீனத்துவத்திற்கோ ஜனநாயகம் என்பதே ஒத்துவராது. மேலை மரபிலிருந்து கடன் வாங்கிய நவீனத்துவ எதிர்ப்புடன் கடுமையான எதார்த்தவாத எதிர்ப்பையும் சேர்த்ததே ரஷ்யப் பின்நவீனத்துவ அழகியல் மற்றும் கருத்தியலின் சிறப்புத் தன்மையாகும்.
மரபுவாதிகளின் மீதான இந்தக் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உண்மையான காரணம் அவர்களது யதார்த்தவாத நெடுங்கதையின் அழகியல் குறைபாடு அல்ல. இந்த இலக்கியங்களின் உதவியோடு சாதிக்கப்பட்ட சமூக மாற்றங்களின் உண்மைநிலை அவ்விலக்கியங்களின் தாராளவாத மனித நேயத்திற்கு எதிராக உள்ளதால் ஏற்படும் சங்கடமே. கட்சிப் பழமைவாதிகளை எதிர்த்துநின்ற கம்யூனிச எதிர்ப்புக் கூறுங்குழு அதன் மறுசீரமைப்புக் காலங்களில் (1985-1991) இந்தக் கருத்தியலையே தனது ஆஸ்தான கருத்தியலாகப் பயன்படுத்தியது. இந்தக் கருத்தை கோர்ப்பசேவ் சுருக்கமாக பொருள் முதல்வாத, வர்க்கம் சார்ந்த புரிதல்களுக்கு அப்பாற்பட்ட, அதற்கு மாறான பொதுவான மனித விழுமியங்களின் முதன்மை' என்ற முழக்கத்தின் மூலம் குறிப்பிட்டார். 1989 இல் பழைய ஆட்சியாளர்களை எதிர்த்து, பொதுமக்களின் லட்சியவாதியினர் போராடிய அதே கொடியின் கீழேதான், 1989 இல் முதலாளித்துவ சார்புக்கும்பல் தாராளாவாத அறிவுஜீவிகளுடன் கூட்டாக நின்று அரசு அதிகார வர்க்கத்தை, சர்வாதிகாரத்தை எதிர்த்தது. இந்த அப்பாவித்தனமான ஒத்த தன்மை உண்மையில் ஒருமுறை மட்டும் நிகழ்ந்த விபத்தல்ல.
“சாதாரண மனித மதிப்பீடுகள்" என்ற பசுமையான, தூய எளிமையான களத்தில் நின்றுகொண்டு ஸ்டாலினது குற்றங்கள், அதிகார வர்க்கத்தின் அநியாயங்கள் ஆகியவற்றை விவரிக்கும் எதிர்ப்புணர்வுப் பண்பாடு மொத்தமும் கோர்ப்பச்சேவின் தாராளவாத சீர்திருத்தங்களுக்கு மிகப்பொருத்தமாய் இருந்தது.
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 3.

Page 19
இதன் அடிப்படைகளைக் கேள்வி கேட்கவோ, அதன் எதிர்கால அரசியல், சமூக விளைவுகளை உணர்ந்து கொள்ளவோ திறனற்ற, அரசியல் அனுபவமோ அரசியல் அடையாளமோகூட இதுவரை இல்லாத மக்கள் திரள் இந்த நீதி போதனைகளை எளிதில் ஜீரணித்தது. ரஷ்ய தாராளவாத அறிவு ஜீவிகளுக்கோ இது அவர்கள் தெய்வீக நிலைக்கு உயர்ந்த தருணம், ரஷ்யப் படைப்பாளி அறிவுஜீவிகள் தாம் அனைத்து சமூக வர்க்கங்களுக்கும் அப்பாற்பட்ட உயர்ந்த நிலையை எட்டிவிட்டதாகவும் ஒட்டு மொத்த ரஷ்ய சமூகத்தின் மனசாட்சியாக தாங்கள் மாறிவிட்டதாகவும் அறிவித்துக்கொண்டனர். ஆனால், இந்தத் தாராளவாத கோலாகலங்களெல்லாம் கொஞ்ச நாட்களே நிலைத்தன. 1990 க்குப்பின் உண்மையான வரலாற்றுச் சக்திகளான உழைக்கும் வர்க்கமும் புதிய முதலாளித்துவ வர்க்கமும் அரசியல் களத்தில் குதித்த பின், அறிவு ஜிவிக் கூட்டத்தால் இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் பின்தொடர முடியும் என்ற கட்டாய நிலை ஏற்பட்டது. அனைவருக்கும் பொதுவான நலன்களின் காவலனாகத் தன்னை இனியும் காட்டிக்கொள்ள இயலவில்லை. w
அக்டோபர் கலகத்தின் பொழுது உண்மை வெளிப்பட்டது. அண்மைக்கால வரலாற்றில் அறிவு ஜீவிகள் கொள்கையளவில் இது போன்ற ஒரு அந்தர்பல்டி அடித்ததைக் கண்டிருக்கவே முடியாது எனலாம். அக்டோபர் நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்து வந்த போரிஸ் காகர்லிட்ஸ்கி பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“பிரபல செய்தித் தாள்களிலும் பத்திரிகைகளிலும் மக்களுக்கு எதிரான அசிங்கமான பிரச்சாரங்களும் ரத்தவெறி பிடித்த அறை கூவல்களும் நிறைந்திருந்தன. ஒரு காலத்தில் “தூசி படிந்த ஹெல்மட் அணிந்த” அரசு அதிகாரிகளை பெருமிதமாகக் குறிப்பிட்ட கவிஞரும் மனிதாபியுமான “புலாட் ஒஹூட்ஸாவா" கூட அக்டோபர் 4 ஆம் நாள் துப்பாக்கிச் சூடு தமக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்ததாகவும் ஆயுதமற்ற மக்கள் மீது தமக்குத் துளியும் இரக்கம் ஏற்படவில்லையென்றும் விவரித்தார்"
உலகு தழுவிய மனிதநேயக் கடமையாற்றும் தாராளவாத மனிதாபிமானம், சாதாரண மனித மதிப்பீடுகளைப் பிரதிபலித்தல் போன்ற கருத்துக்களின் பணி முடிந்துபோனது. அவை இடத்தைக் காலி செய்தாக வேண்டும். ரஷ்ய அறிவு ஜீவிகளின் இளைய தலைமுறைப் பிரதிநிதி ஒருவரது மேற்கோளின் மூலம் அறிவு ஜீவிகளின் தீய மரபிலிருந்து' கருத்தியல் முறிவு ஏற்படும் தருணத்தை காகர்லிட்ஸ்கி படம் பிடித்துக் காட்டுகிறார்.
32 பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002

பட்டினியால் மடியும் ஒரு பிச்சைக்காரப் பெண்ணைப்பார்த்து நவநாகரீகப் பத்திரிகையாளரான வெரோனிகா குட்சில்லோ எழுதுகிறார்: “மக்களின் முன் அறிவு ஜீவிகளின் குற்றங்களாகக் காட்டப்படும் இந்த ஒப்புமைகள் அனைத்தும் எனக்கு எரிச்சலூட்டுகின்றன. இந்தப் பரிதாபகரமான ஒன்றையும் (பிச்சைக்காரியையும்) ஒரு வேடிக்கையான மிருகத்தைக் காண்பது போலவே காண்கிறேன். இதில் எனக்குக் குற்ற உணர்வு எதுவும் ஏற்படவில்லை. நானோ எனது நண்பர்களோ அவ்வளவு கீழே ஒருபொழுதும் விழமாட்டோம் என்று நீங்கள்
நிச்சயமாக நம்பலாம்"
ரஷ்ய தாராளவாதத்தின் மனித நேயமும், அதற்கு உகந்த இலக்கிய வடிவமான எதார்த்தவாத நெடுங்கதை வடிவமும் யெல்த்சின் ஆட்சியில் வெளிப்படையான முதலாளித்துவ மீட்சி தொடங்கியதிலிருந்து நெருக்கடிக்கு உள்ளாயின. வர்க்கப் போரின் முதல் கட்ட மோதல் தொடங்கியெல்த்சினின் கலகம், ஒஸ்டாண்டிகோ படுகொலைகள், ரத்த வெள்ளத்தில் தள்ளப்பட்ட கடைசி சுப்ரீம் சோவியத் ஆகியவற்றோடு அவையும் முடிவுக்கு வந்தன. அன்றிலிருந்து மீட்சி கட்டுப்பாடற்று முன்னேறத் தொடங்கியது. இரக்கமற்ற, சக்திவாய்ந்த புதிய முதலாளித்துவ வர்க்கம் உருவாகியது. இந்தக் கட்டத்தில்தான் பண்பாட்டு அரங்கில் ரஷ்யப் பின்நவீனத்துவம் முன்னணிக்கு வந்தது. புதிய தாராளவாதத்திற்கு இணையான பண்பாட்டு வடிவமாக நிறுவனமயமாக்கப்பட்டது.
வரலாற்றில் இணையான காட்சிகள் தட்டுத்தடுமாறி வருகின்றன. அக்டோபர் 1993இல் பாட்டாளி வர்க்க மறுஎழுச்சி எதுவும் ஏற்படவில்லை. அரசியல் ரீதியாக முதலாளித்துவ சார்பு அதிகார வர்க்கத்தின் பல்வேறு குழுக்களுக்கும், அரும்பத் தொடங்கிய முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையே மீட்சியை முன்னெடுத்துச் செல்லும் வழிபற்றிய போராட்டமே அது. தங்களது சொந்தக் கொடியின்கீழ் போராட்டத்தில் குதிக்கும் வலிமை அன்று புதிய முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இல்லை, தொழிலாளர்களுக்கும் இல்லை. ஆயினும், மின்னல் காட்சி போல, “பொதுவான மனிதநேய மதிப்பீடுகளின்” பின்னே மறைந்திருந்த சமூக எதிர்ப்புணர்வுகளின் ஆழம் 1848 ஜூன் மாதம் பாரிசில் வெளிப்பட்டது போலவே மீண்டும் மறைக்க இயலாதவாறு அக்டோபர் சம்பவங்களால் மாஸ்கோவில் வெளியானது. பல்வேறு இலக்கியக் கோட்பாட்டாளர்கள் 1848 இல் பிரெஞ்சு இலக்கியத்தில் அதன் கடந்தகால இலக்கிய வடிவங்கள் அனைத்தும் சமரசம் செய்து கொண்டதால் ஏற்பட்டதாகக் கூறும் “பிரதிநிதித்துவ நெருக்கடி” போன்ற ஒன்று
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 33

Page 20
தாராளவாத மனிதாபிமானத்தின் மறைவால் ரஷ்யாவிலும் வெடித்தது. மக்கள் தொடர்பிற்காக எழுதும் சாத்தியக்கூறே அன்று ‘இயற்கையான' அல்லது பொதுவான உண்மைகளாக அறிவொளிவாதத்தால் அறிவிக்கப்பட்டு, நல்ல சமுதாயத்தின் அடிப்படை விதிகளாகப் பிரெஞ்சுப் புரட்சியால் அங்கீகரிக்கப்பட்ட கருத்துக்களைச் சார்ந்தே இருந்தது. ஆனால், 1848 இல் பாட்டாளி வர்க்க எழுச்சியை முதலாளித்துவ வர்க்கம் கொடூரமாக அடக்கிய பொழுது இந்த விதிகளின் முகமூடி கிழிந்து அவை வர்க்கம் சார்ந்த தத்துவங்களே என்பது வெட்ட வெளிச்சமாகியது. அதன் விளைவாக நிறுவனமயமாக்கப்பட்ட இலக்கியத் துறைக்கு எழுந்த நெருக்கடியை ரோலண்ட் பார்த் "பூஜ்ய மட்டத்தில் எழுதுதல்” என்ற தத்துவமாக்கினார். எழுத்தளர்கள் இனி"ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும்", அல்லது “மனித குலத்திற்கும்’ எழுதுவதாகக் காட்டிக்கொள்ள முடியாது. ஏனென்றால், அச்சொற்களே அர்த்தமிழந்துவிட்டன. அதனால், எழுதுவதன் நோக்கமும், முடிவும் எழுத்தே என்று தன்னுள்ளேயே ஒடுங்குகிறது. எழுத்தாளர் எதார்த்தத்தை மையமாகக் கொள்ளாமல் அதிலிருந்து விலகி மொழி நடையையே எழுத்தின் சரியான, ஒரே முடிவாகக் கொள்கிறார்.
ரஷ்ய நவீனக் கலையிலும் இதேபோன்ற மாற்றத்தையும் தத்துவத்தையும் இன்று காண்கிறோம். எதார்த்வாதிகளையும், சமூக உண்மை நிலை பற்றிய அதன் அக்கறைகளையும் ஏகமனதாகத் தூக்கி எறிந்ததை நான் முன்பே குறிப்பிட்டேன். உண்மையில், இன்றைய, புதிய, எதார்த்தவாத எதிர்ப்பு மற்றும் மொழி ஆராதனை வடிவங்களை அவை உண்மையான சமூகச் சூழலிலிருந்து விலகிச் செல்லும் தன்மைகளிலிருந்தே வளப்படுத்தலாம். அரூபவிலகல், 'சுய குறிப்புடைய மொழி விளையாட்டுக்கள்', 'வெற்றெழுத்துக்கள் ஆகியவை அவற்றில் சில. ஆனால் பிரெஞ்சு எழுத்தாளர்களுக்கும் ரஷ்ய எழுத்தாளர்களுக்கும் இடையேயான இந்த வரலாற்று ஒற்றுமையில் ஒருமிகப் பெரிய வேறுபாடு உண்டு. அது ஒரு புதிய அனுபவம். வரலாற்றுத் திருப்புமுனையால் தண்டிக்கப்பட்டவர்கள், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை எச்சரிக்கை செய்யும் கடந்தகால அனுபவம் எதுவும் பெற்றிருக்கவில்லை. அவர்களது அதிர்ச்சிகள், பெரும்பாலும் உண்மையான நம்பிக்கையிழப்புக்கள் நியாயமானவை. அதுவரை மறைத்து வைக்கப்பட்டிருந்த, சமூக எதார்த்தத்தின் அரசியல்-சமூக அடிப்படைக் காரணிகளை உணர்ந்து கொள்ளும் வேதனையான தேடுதல் அனுபவம். ரஷ்ய அனுபவமோ இதற்கு மாறானது. ரஷ்ய மீட்சி என்ற மாபெரும் வரலாற்று நகைச்சுவை நாடகம், அதன் படைப்பாளி அறிவு ஜீவிகளுக்கு இந்த உண்மையான வரலாற்று அனுபவத்தை மறுக்கிறது. அவர்களது சக பிரெஞ்சுக்காரர்களைப் போலல்லாமல், பொதுவான மனிதநேயம் என்ற கொடியின் கீழே உண்மையில் மறைந்திருந்தன. என்ன என்பது
34 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

ரஷ்ய அறிவு ஜீவிகளுக்குத் தெரிந்தேயிருந்தது, கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இந்தத் தீய நம்பிக்கையின் எடுத்துகாட்டாக அலட்சியமான, வெளிப்படைத் தன்மையுள்ள ஒரு மேற்கோளைக் காண்போம்.
"தாராளவாத மனிதநேய” ஆதரவாளரும், 'புக்கர் பரிசு பெற்றவரும், புகழ்பெற்ற ஓசோனிக்’பத்திரிகையின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவருமான "அலெக்சாண்டர் டெரக்கோவ்" அழிந்துவரும் நூலகங்களுக்கு ஆதரவாக 1992 இல் எழுதிய ஒரு கட்டுரையில் சோசலிசத்திற்கு முடிவுகட்ட முடிவெடுத்துவிட்ட கட்சியின் இடைநிலைத் தலைவர்களுக்கும், தந்தை நாட்டின் சிந்தித்துணரும் திறனுள்ள மகன்களுக்கும் (அதாவது படைப்பாளி அறிவுஜீவிகளுக்கும்) இடையே உருவாகியுள்ள ஒரு புதிய புனித ஒப்பந்தத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். புதிய ஆட்சியாளர்களுக்கு ஆதரவு தந்தது மக்கள் திரளல்ல, நூலகங்களே என்று அவர்களை எச்சரிக்கிறார்.
"புதிய புனித ஒப்பந்தத்தின் பொருள் அமைதியானதும் எளிமையானதும் ஆகும். உங்களது லட்சங்களையும், மாளிகைகளையும், உல்லாசப் படகுகளையும், அதிகாரத்தையும், தங்கக் கழிப்பறைகளையும் தாராளமாக வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நூலகங்களின் பச்சை விளக்குகளை, இசை அரங்குகளை, கலைகளின் சுதந்திரத்தை, அருங்காட்சியகங்களின் அமைதியை நீங்கள் பாதுகாக்க வேண்டும். பணமும் அதிகாரமும் உங்களுடையது. முடிவற்ற ஆன்மா, நீதி, கல்வி இவை நூலகத்திற்கு. முதலாளித்துவ வர்க்கத்திற்கு வெற்றிதேடித் தந்த புதிய “புனித ஒப்பந்தம்'இதுதான். இதுவரை இது ஒரு தரப்பில் மட்டுமே மதிக்கப்படுகிறது"
அறிவு ஜீவிகள் வரலாற்றிலிருந்து பாடம் கற்கும் திறனும் ஆர்வமும் உடையவர்களாக இருந்திருந்தால் இந்தச் சோக முடிவை முன்கூட்டியே எதிர்பார்த்திருக்க முடியும். 1990 ஆம் ஆண்டுச் சீர்திருத்தங்களால் உதிரிகளாகவும் ஒட்டாண்டிகளாகவும் மாற்றப்பட்டுவிட்ட ரஷ்ய எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் இன்று அவல நகைச்சுவை நிலைக்குத் தள்ளப்பட்டு, பிரெஞ்சு எழுத்தாளர்களைப் பற்றி சாத்ரே எழுதியுள்ளதை நினைத்துப் பார்க்கின்றனர். சாத்ரே கூறினார், “எழுத்தாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றி முழக்கம் அவர்களது வாழ்நிலையையே மேலிருந்து கீழ்வரை உலுக்கியெடுத்ததோடு, இலக்கியத்தின் சாரத்தையே கேள்விக்குள்ளாக்கியது. அவர்களது கடும் முயற்சியால் கிட்டிய பலன், தங்களது அழிவைத் தாங்களே தொடங்கி வைத்ததுதான் எனலாம்"
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 35

Page 21
புதிய "புனித ஒப்பந்தம்" நடைமுறைக்கு வரவில்லை. ஆன்மீக ஒளிபுதைந்து அணைந்து போனது. முடிவற்ற ஆன்மா 1990 அக்டோபரில் இரண்டே நாட்களுக்குள் முடிந்து போனது. தாராளவாத அறிவுஜீவிகள் மண்ணில் புதைந்து பின் புதிய தாராளவாதிகளாக மறுப்பிறப்பெடுத்தனர். இப்புதிய தாராளவாத அறிவு ஜீவிகளுக்கு அவர்களை முன்பு கருத்தியல் ரீதியாகக் கவர்ந்த தாராளவாத மனிதநேயம் எவ்வாறு தொல்லையாகிப் போனதோ அதேபோல், எல்லா வகை எதார்த்த வாதங்களும் அழகியல் ரீதியில் தொல்லையாகிப் போயின. “குறியீட்டுக்குள் மீண்டும் நுழைதல்’ தொகுப்பில் பேராசிரியர் பெர்ரி குறிப்பிட்டுள்ளது இன்று போல் “சுவீகரித்துள்ள கருத்தியல் வாதங்கள் வெற்றுத்தன்மையை வெட்ட வெளிச்சமாக்கும் கலையும், நவீனத்துவ முன்னோடிகள் முடிக்காமல் விட்டுச்சென்றுள்ள பணிகளை முடித்துவைக்க ஏற்புடைய கருத்தியலும்" அவர்களது தேவைகளாகும். ஜென்க்ஸின் விறுவிறுப்பான பின்நவீனத்துவம் அவ்விரண்டையுமே அள்ளித் தருகிறது. பின் நவீனத்துவ அழகியலும், கருத்தியலும் பழைய அழகியலையும், கருத்தியலையும் புதைப்பதில் மீண்டும் மீண்டும் தோல்வியடைவதால் வலிமையான வேறு மருந்துகளைப் பயன்படுத்த ஜென்க்ஸின் பின்நவீனத்துவம் தாராளமாக அனுமதிக்கிறது.
பின் குறிப்பு
இந்தக் கட்டுரையை எழுதி மூன்றாண்டுகள் கழிந்த பின், ரஷ்யப் பின்நவீனத்துவம் கிட்டத்தட்ட இறுதி மூச்சு விட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. இதற்கு ரஷ்யப்பின்நவீனத்துவத்தின் ஆன்மீக வறுமையை விட ரஷ்ய படித்த வர்க்கத்தவரின் அரசியல் சார்பையும் கருத்தியல் பார்வையையும் மாற்றிய ரஷ்ய சமூகப்பொருளாதாரத்தின் விரைவான சீரழிவே முக்கிய காரணம் எனலாம்.
1990-ஆம் ஆண்டிலிருந்து ரஷ்ய அரசின் வரவு செலவு (பட்ஜெட்) பத்து மடங்கு சுருங்கி நியூயார்க் நகர வரவு செலவை விட குறைந்து போய்விட்டது. நவீன ஆலை உற்பத்திகள் ரஷ்யாவில் இன்று அநேகமாக துடைத் தெறியப்பட்டு விட்டன. உயர் தொழில் நுட்ப ஏற்றுமதிகள் இன்று அதன் மொத்த ஏற்றுமதியில் ஒரு விழுக்காடே. ரஷ்யப் பொருளாதாரம் இன்று கச்சாப் பொருட்கள் ஏற்றுமதியையே நம்பியுள்ளது. ஏகாதிபத்திய மையத்திற்கும் நவகாலனிய விளிம்பு நாடுகளுக்கும் இடையிலான வேலைப் பிரிவினையில் இன்று சுருங்கி வரும் ரஷ்யத் தொழிலாளர் பட்டாளத்தின் பெரும்பகுதியினர் குறைந்த மதிப்பீட்டையே உற்பத்தி செய்யும் துறைகளுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் ரஷ்யர்கள்
36 பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002

40 விழுக்காடாகும். நாற்பது லட்சம் ரஷ்யக் குழைந்தைகள் வீடற்றவர்களாகி உள்ளனர். 1990ஆம் ஆண்டின் பிறப்பு வீதம் இன்று பாதியாய்க் குறைந்தும், இறப்பு விகிதமோ பாதி அதிகரித்தும் மக்கள் தொகை விரைவில் அருகிப்போகும் அபாயத்தில் ரஷ்யா உள்ளது.
தேசியக் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டுத் துறைகளில் ஏற்பட்டுள்ள சரிவு இவற்றிற்குச் சற்றும் குறைந்ததல்ல. பாலர் பள்ளிகள் 27 விழுக்காடு குறைந்ததுடன், அதில் படிக்கும் குழந்தகளின் எண்ணிக்கையிலும் 43 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50 இலட்சம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர். புத்தக வெளியீடு 400 விழுக்காடு குறைந்துள்ளது. நாடக, கலை அரங்குகளுக்கு வருவோரின் எண்ணிக்கை சரிபாதியாகக் குறைந்துவிட்டது. அறிவியல் ஆய்விற்கு நாட்டு மொத்த வருமானத்திலிருந்து ஒதுக்கப்படும் தொகை போர்ச்சுகல், சிலிபோன்ற நாடுகள் ஒதுக்கும் தொகையைவிட 0. 32 விழுக்காடு குறைவாகும். பொருளாதாரம் தனியார் மயமாக்கப்பட்டதால் உழைக்கும் வர்க்கமும் விவசாயிகளும் ஒட்டாண்டிகளானதற்குச் சற்றும் குறைவில்லாமல் அரசு மான்யங்கள் ரத்துச் செய்யப்பட்டதால் படித்த வர்க்கமும் இன்று பஞ்சத்தில் வாடுகிறது. ரஷ்ய முதலாளித்துவம் என்ற வீரம் செறிந்த புதிய உலகத்தின் தேவைகளைவிட எண்ணிக்கையில் மிதமிஞ்சிப் போய்விட்ட அறிவுஜீவிகள், இன்று பெருந்திரளாகப் பாட்டாளி மயமாக்கப்படுகின்றனர்; உதிரிகளாக்கப்படுகின்றனர் என்று கூடச் சொல்லலாம். முன்னாள் இயற்பியலாளர்களும், கணித மேதைகளும், மொழியியல் வல்லுனர்களும், வரலாற்று அறிஞர்களும், எழுத்தாளர்களும், மருத்துவர்களும் இன்று சிறுவியாபாரிகளாக மாறியுள்ளனர். “கலை அரங்குகளில் அமைதியையும்” நூலகங்களின் பச்சை விளக்குகளையும் இழந்துவிட்டு இன்று சந்தடி மிகுந்த கடைவீதிகளில் தரங்கள் விருப்பத்திற்கெதிராக மக்களோடு மீண்டும் ஐக்கியமாக்கப்பட்டுவிட்டனர். கலை வரலாற்றுத் துறையில் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற ஒருவர் இன்று இஸ்ரேலிய ராணுவ விபச்சார விடுதிகளிலோ அல்லது ப்ரூக்ளின் நகர ஆடை அவிழ்ப்பு மதுபானக்கடையிலோ “பாஸ்டர்நாக்” அல்லது "அக்மடோவா" வை ஒப்பித்துக் காட்டி வயிற்றைக் கழுவலாம். ஆனால், இருபது வருட அனுபவம் நிறைந்த ஆசிரியை தொடர்ந்து அரைப்பட்டினியால் வகுப்பில் அடிக்கடி மயங்கி விழலாம். இல்லையேல் தன் வகுப்பு மாணவர்களிடம் தேர்வில் வெற்றி பெறச் செய்ய குறிப்பிட்ட தொகை கேட்டு வசூல் வேட்டையில் இறங்கலாம். “குமாஸ்தாக்களின்
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 37

Page 22
துரோகம்"ரஷ்ய அறிவுஜீவிகளின் சுய அழிவில் (கருத்தளவில் மட்டுமல்ல) முடிந்து போனது. அந்த புதிய புனித ஒப்பந்தம் உண்மையில் இருபுறமும் கூரான ஏமாற்று வித்தைதான். வரலாற்றில் நியாயம் கிடைப்பது அரிது. ஆனால் கிடைக்காமலே போய்விடுவதும் இல்லை.
அறிவுஜீவிகள் கூட்டம் திரளாக பாட்டாளி வர்க்கமாக்கப்பட்டுவிட்டதால், பின்நவீனத்துவ முன்னோடிகள் உட்பட அனைத்து மரபு வழி இலக்கிய அறிவு ஜீவிகளின் கருத்தியல் செல்வாக்கும் அதிகாரமும் அநேகமாக மாயமாகிவிட்டது. இந்த அதிகாரத்தையும் செல்வாக்கையும் நிலைநாட்டி வந்த தடித்த புத்தகங்கள் என்று அழைக்கப்பட்ட பதிப்புகள் 1989 - 91 ஆம் ஆண்டுகளை விட 100 மடங்கு சிறியதாகிவிட்டன. அவை தங்களைத் தாரளமாக சுதந்திர வெளியீடுகள்’ என்று தம்பட்டம் அடித்துக்கொண்டதைக் கண்டு யாரும் ஏமாந்து விடவேண்டாம். அவை தம் வாசகர்களை என்றோ இழந்துவிட்டன. எதிர்ப்புரட்சிக்கு அவை ஒரு காலத்தில் ஆற்றிய சேவைகளுக்குக் கைமாறாகக்கிடைத்த அரசு மான்யங்களையும் திருட்டுத்தனமான மேலை நாட்டு உதவித் தொகைகளையுமே நம்பியிருந்தன.
"குரோஸ்மேன்” அல்லது 'சோல்யுனிட்சினின் புதினங்களால் ஒரு சராசரி ஆசிரியரோ, பொறியியலாளரோ துடித்தெழுந்து சோவியத் சர்வாதிகாரத்திற்கு எதிராகத் தெருவிலிறங்கி முழக்கமிடும் காலங்களெல்லாம் நிரந்தரமாக மறைந்து போயின. நாட்டின் போர்க்குண முள்ள தொழிற் சங்கங்களில் எல்லாம் ஆசிரியர் தொழிற்சங்கங்களே முதன்மையானவை என்பது இதைப் புரியவைக்கும். நிர்வாகத்தினரை அடைத்து வைத்தல், சாலை மறியல்கள், பிணைக்கைதிகளைப் பிடித்தல் ஆகியவை இவர்களது சாதாரண நடைமுறைகளாகும். 1998 ஆம் ஆண்டு ‘ரயில் விபத்தின் பொழுது சுரங்கத் தொழிலாளர்களும், ஆசிரியர்களும், மருத்துவர்களும் இணைந்து சைபீரிய குறுக்கு இரும்புப் பாதையை அடைத்தனர். மரபுவாதிகளின் தாராளவாத மனிதாபிமானத்தைப் பற்றியோ அல்லது ரஷ்ய பின்நவீனத்துவவாதிகளின் பண்பாட்டுத் தழுவல் பற்றியோ இவர்களுக்குத் துளியும் அக்கறையில்லை. இந்தப் புதிய அறிவுஜீவிகள் என்ன இருந்தாலும் 'இருத்தல் தான் தன் உணர்வுக்கு முற்பட்டது என்பதைக் கஷ்டப்பட்டுக் கற்றுக் கொண்டு வருகின்றனர்.
அதோடன்றி, ரஷ்யப் பின்நவீனத்துவம் அதன் மிக மதிப்பு மிக்க வாடிக்கையாளரான புதிய நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளையும் இழந்துவிட்டது. உலக சமுதாயத்தோடு யெல்த்சினின் ரஷ்யாவை இணைப்பதற்கான தொழிநுட்ப மற்றும் கருத்தியல் பணிகளை செவ்வனே ஆற்றுவதின் மூலம் ஏகாதிபத்திய
38 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

அமைப்பின் ஒரு ஓரத்தில் வசதியான வாழ்க்கை நடத்திவந்த, மேல் நோக்கி நகரும்
இயல்புள்ள இந்தக் கும்பல் 1998 ஆம் ஆண்டில் நிதி நெருக்கடியில் நசுங்கிப்போனது. தங்களது வேடிக்கையான போலி வாழ்க்கையை மேலும் தொடர இயலவில்லை. அதனின்று அரசியலில் அக்கறை காட்டத் தொடங்கியுள்ளது. இன்று அரசியலில் வலிமை வாய்ந்த ஒரு கும்பலான நாட்டுப் பற்று மிக்க அரசு அதிகார வர்க்கத்தின் பின்னே இதுவும் அணிதிரள்கிறது.
இறுதியாக வெந்தபுண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் கடந்த ஆகஸ்ட் மாதம் “சாஸ்சிதா (தற்காப்பு)" என்ற போர்க்குண மிக்க தொழிற்சங்கத்துடனும் பல்வேறு மார்க்சிய குழுக்களுடனும் இணைந்து ஒரு தொழிற் கட்சியை உருவாக்கு வதற்கான இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர். இவர்கள் ரஷ்ய பின்நவீனத்துவ வாதிகளின் சிம்ம சொப்பனத்தின் மறு உருவம், ரத்தத்தாலும் சதையாலுமான ஒரு வரலாற்றுப் பெருங்கதையாடல்.
குறிப்புக்கள்
1. இக்கட்டுரையின் வெவ்வேறு பகுதிகள் 1996 இல் "ஸ்லேவிய ஆய்வுகள்" பற்றிய தென் பகுதிக் கருத்தரங்கிலும், 1997ஆம் ஆண்டுமாஸ்கோவில் நடந்ததற்கால மார்க்சிசம்" பற்றிய கருத்தரங்கிலும் சமர்பிக்கப்பட்டது.
2. பண்பாட்டின் தத்துவம், அறிவியல் ஆய்வுமுறை, தர்க்கமுறை ஆகியவை பற்றி விரிவாக எழுதியுள்ள ஒரு ரஷ்ய தத்துவ அறிஞரின் சோசலிசம் பற்றிய உரையாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் குறியீட்டிற்குள் திரும்புதல் தொகுதியில் பங்கேற்றுள்ள எழுத்தாளர்களின் தத்துவ மட்டத்தையும், கருத்தியல் தன்மையையும் புரிந்து கொள்ள இது ஒரு சான்று. சிறிது நாட்களுக்கு முன்பு ஒரு பொருளியியல் அறிஞரோடு நான் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவரை நான் “சோசலிசத்தின் முழுமையான பயனை அடைய வேண்டுமென்றால் சோசலிசத்தை எவ்வாறு வரையறுப்பது என்று வினாவினேன். “மனிதனை மனிதன் சுரண்டாத சமுதாயம்” என்று அவர் பதிலளித்தார். “சரி, அப்படியானால் 1927 லிருந்து 1961 வரை விவசாயிகள் நடத்தப்பட்ட விதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள். அது சுரண்டல் இல்லையா?” என்று கேட்டேன். “இல்லை. அது சுரண்டல் இல்லை. சுரண்டல் என்பது உபரிப்பொருளை அபகரிப்பது- அதுவோ அத்தியாவசியப் பொருள்களை அபகரிப்பது" என்று பதிலளித்தார்.
பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002 39

Page 23
40
எனவே நாம் மற்றொருவனது உழைப்பின் பலனை அபகரிப்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். "மற்றொருவர் உழைப்பின் பலனை” அபகரிப்பது என்றால் என்னவென்று எந்தச் சட்டப் புத்தகத்தை வேண்டுமானாலும் புரட்டிப்பாருங்கள். அதன் சிறிய உதாரணம் திருட்டு, பெரிய உதாரணம் கொள்ளை. எனவே நாம் இதுவரை வாழ்ந்து வந்த - இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சமுதாயத்தை மற்றவர் உழைப்பை அபகரிப்பதை அடிப்படையாகக்
கொண்ட சமுதாயமாக வரையறை செய்யலாம்"
ரஷ்யப் பின்நவீனத்துவத்திற்கும்; ரஷ்ய அரசியல் அதிகாரத்திற்கும் உள்ள நெருக்கத்தை, குறிப்பாக நடப்பு ரஷ்ய அரசியலில் பயங்கரமாகக் கவரும், ரஷ்யப் பின்நவீனத்துவ தத்துவ விளையாட்டுக்களைத் தமது அரசியல் பிரச்சினைகளுடன் வெளிப்படையாக இணைப்பவருமான "விளாடிமீர் சிரினோவ்ஸ்சி” போன்றோரைப் பற்றி அலெக்சாண்டர் ராப்போபோர்ட் அதிர்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.
பின்நவீனத்துவ அழகியலின் இடிபாடுகளிலிருந்து “புதிய எதார்த்த வாதம்” தோன்றுவதாக 1998ஆம் ஆண்டிலேயே பிரபல கம்யூனிச எதிர்ப்பு விமர்சகரான
நாடாலியா ஐஸனோவா குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் : மோகன் இண்டர்நெட் கட்டுரை
நன்றி காலக்குறி ஜனவரி - 2002
பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002

சமஸ்டி முறையும் கூட்டுச் சமஸ்டி முறையும்
ஒர் அறிமுகம்
அம்பலவாணர் சிவராஜா
1. அறிமுகம்
திற்கால உலகின் அரசாங்கங்களை அவற்றின் வேறுபடும் மாதிரிகளைக் கொண்டு நாம் பாகுபடுத்த முடியும். உதாரணம்: பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி முறைகளைப் பின்பற்றும் நாடுகள், இராணுவ ஆட்சி நடைபெறும் நாடுகள், கொம்னியூசஆட்சி இடம்பெறும் நாடுகள், தனிக் கட்சி ஆட்சி நடைபெறும் நாடுகள், மன்னராட்சி/முடியாட்சி இடம்பெறும் நாடுகள், சர்வாதிகாரிகளின் ஆட்சி இடம் பெறும் நாடுகள். அதே போன்று, அரசியல் அதிகாரம் எவ்வாறு பகிரப்பட்டுள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டும் அவற்றைப் பாகு படுத்தலாம் உதாரணம்: ஒற்றையாட்சி முறை, சமஸ்டி ஆட்சி முறை, அரை குறைச் சமஸ்டி முறை, கூட்டுச் சமஸ்டி முறை (Confederation). இவற்றுள் நாம் சமஸ்டி ஆட்சி முறை என்றால் என்ன, கூட்டுச் சமஸ்டி முறை என்றால் என்ன, இவை எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை கவனத்துள் எடுப்போம். சமஸ்டி முறை, கூட்டுச் சமஸ்டி முறை என்பவை பற்றிய விளக்கங்களுக்குப் போகு முன்னர் ஒற்றையாட்சி முறை என்றால் என்ன என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளுதல் அவசியம். ஏனெனில், சமஸ்டி ஆட்சி முறையும் கூட்டுச் சமஸ்டி ஆட்சி முறையும் ஒற்றையாட்சி முறையிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதே பிரதானமாகும். அது மட்டுமல்ல இவையிரண்டும் எவ்வளவு தூரம் அதிகாரத்தினைப் பகிர்ந்து கொள்வதில் வேறுபடுகின்றன என்பதும் பிரதானமாகும்.
2. ஒற்றையாட்சி முறை
ஒற்றையாட்சிமுறையில் ஒரு நாட்டின் சகல பிராந்தியங்களையும் தனியொரு இறைமையுள்ள அரசாங்கம் கட்டுப்படுத்தும். ஒரு ஒற்றையாட்சி அரசில் அதிகாரங்களும் பொறுப்புக்களும் மத்திய அரசாங்க அதிகாரிகளிடம் மத்தியமயப் படுத்தப்பட்டிருக்கும். அத்தகைய நாட்டின் அரசியல் யாப்பின்படி மத்திய அரசாங்கமே இறைமை கொண்டது. சிறிய இணைந்த அரசாங்கங்கள் - மாநகர சபைகள், கவுண்டிகள், அல்லது திணைக்களங்கள் நடை முறையிலிருக்கலாம்.
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 41

Page 24
ஆனால் இவற்றின் பொறுப்புகள் மத்திய அரசாங்கத்தின் சட்டங்களினுடாக வழங்கப் படுகின்றன. இவற்றினது கடமைகள் சட்டம் இயற்றுதலை விடக்கூடியளவு நிர்வாகத்தன்மை கொண்டனவாயிருக்கும் இவற்றுக்கான பெரும்பாலான வருமானங்கள் மத்திய அரசாங்கத்தின் மானியங்கள் மூலமே கிடைக்கின்றன. ஒரு ஒற்றையாட்சி முறையில் யாப்பினுரடாக, குறிப்பிட்ட அதிகாரங்கள் கொண்ட மாகாணங்களையோ சம அரசுகளையோ உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை.
பெரிய பிரித்தானியா ஒரு ஒற்றையாட்சி முறை அரசாங்கத்தை கொண்டிருக்கிறது. அதுபோல் பிரான்ஸ், கொலம்பியா, யப்பான், சுவீடன் போன்ற மற்றைய தற்கால அரசுகளும் ஒற்றையாட்சி முறையைக் கொண்டனவாகும். மேற்சொன்ன நாடுகளில் தேசீய அசெம்பிளி, காங்கிரஸ், பாராளுமன்றம், டயற் என்பனவே முழு நாட்டினையும் ஆட்சி செய்கின்றன. உள்ளூராட்சி அமைப்புக்களது அதிகாரம், மத்திய அரசாங்கத்தினது பொறுப்புகளும் நிர்வாகமும் எந்தளவுக்கு வழங்கப்படுகின்றன என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு கணிசமானளவு நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. மத்திய அரசாங்கத்தின் வரையறைக்குட்பட்ட சட்ட ஆக்கப் பொறுப்புக்களை பிராந்திய அதிகார சபைகளுக்கு வழங்குதல் அதிகாரப்பரவலாக்கத்துக்கான ஒருபடியாகும். ஆனால் பிராந்திய அரசாங்கங்கள் பற்றியாப்பில் குறிப்பிடப்படுவதில்லை. அவை மத்திய அரசாங்கத்தின் சட்டத்தினால் உருவாக்கப் படுவதோடு அது போன்று திருத்தியமைக்கப்படலாம். அல்லது இல்லாதொழிக்கவும் படலாம்.
1921 ஆம் ஆண்டுக்கும் 1972 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டகால வடஅயர்லாந்து அரசாங்கம் இதற்கு உதாரணமாகும். 1920 ஆம் ஆண்டின் அயர்லாந்து அரசாங்கச் சட்டத்தின் கீழ் பிரித்தானியர் உள்ளூர் பொறுப்புக்களுடன் ஸ்ரோமொன்ரில் (Stormont) ஒரு பாராளுமன்றத்தினை உருவாக்கினர். இப் பரிசோதனை 1972 இல் முடிவுக்கு வந்தது. ஏனெனில், புரட்டஸ்தாந்து பெரும்பான்மையினருக்கும் றோமன் கத்தோலிக்க சிறுபான்மையினருக்கும் இடையிலான வன்முறை அச்சமூகத்தை ஆட்சி செய்ய முடியாததாக்கிவிட்டது. இவ்வாறு அப்பாராளுமன்றம் நீக்கப்பட்டதென்ற உண்மை ஒரு அதிகாரப்பகிர்வு முறையின் கீழ் பிராந்திய அரசாங்கங்கள் மத்திய அரசாங்கத்திலேயே முழுமையாகத் தங்கியுள்ளன என்பதைக் காட்டுகின்றது. பிரித்தானிய மந்திரி சபையின் ஒரு தலைப்பட்சமான தீர்மானத்துக்கு யாப்பு ரீதியான தடை எதுவுமில்லாதிருந்தமையும், அதாவது ஸ்ரோமொன்ற்பாராளுமன்றத்தை பிரித்தானிய அரசாங்கம் நீக்கியமையும் வடஅயர்லாந்துக்கான அதன் அரசுச் செயலாளரின் கீழ் வடஅயர்லாந்தைக் கொண்டு வந்தமையும் இதை மேலும் உறுதிப்படுத்தின.
42 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

1970 களின் மத்திய பகுதியில் ஸ்கொத்திலாந்திலும் வேல்சிலும் அதிகாரப் பகிர்வினை ஏற்படுத்துவதற்குப் பெருமளவு ஆதரவு இருந்தது. இதனை ஆதரித்தோர் வடஅயர்லாந்து உதாரணத்தைப் பின்பற்றி பாராளுமன்றங்களை அவ்வாறு வடிவமைக்கலாம் எனப் பிரேரித்தனர். ஆனால், இப் பிரேரணைகள் நடமுறைப்படுத்தப்படவில்லை. ஏனெனில், 1979 இல் நடத்தப்பட்ட ஆலோசனை பெறுவதற்கான மக்கள் தீர்ப்பில் ஸ்கொத்லாந்து வாக்காளர்கள் அதிகாரப் பகிர்வினை நிராகரித்தனர். ஆகவே, ஒரு ஒற்றையாட்சியினுள்ளே பிராந்திய வேறுபாடுகளுக்கு இடமளிக்க பல வழிகள் உண்டு என்பது தெரிகின்றது.
3. FIDGible (p600
ஐக்கிய நாடுகள் சபையின் 185 அங்கத்துவ நாடுகளுள் கிட்டத்தட்ட 20 நாடுகள் மட்டுமே சமஸ்டிமுறையான அரசாங்கங்களைக் கொண்டுள்ளன என ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. அவற்றுள் 15 நாடுகள் சமஸ்டி யாப்புக்களை கொண்டன எனவும், 5 கூட்டுச் சமஸ்டி முறைகளைக் கொண்டவை எனவும் தெரியவருகின்றது. அவ்வாய்வு சமஸ்டி அரசுகளாகவும் கூட்டுச் சமஸ்டி அரசுகளாகவும் பின்வருவனவற்றை இனங் கண்டுள்ளது.
சமஸ்டி முறை நாடுகள்:
1. ஆஜன்ரைனா 9. இந்தியா 2. அவுஸ்திரேலியா 10. மலேசியா
3. ஒஸ்ரியா 1. மெக்சிக்கோ 4. பெல்ஜியம் 12. செயின்றதிறஸ் நெவிஸ் 5. GLTssusuffsöIII 13. சுவிற்சலாந்து 6. பிறேசில் 14. ஐக்கிய அமெரிக்கா 7. 956OTLIT 15. வெனிசூலா 8. ஜேர்மனி
கூட்டுச் சமஸ்டி நாடுகள்:
1. ருஸ்ய சுதந்திர அரசுகளின் பொதுநலவாயம் 2. ஐரோப்பிய சமூகம் 3. செனகம்பியா (செனகல் & கம்பியா) 4. ரினிடாட் & ரொபேக்கா 5. ஐக்கிய அரேபிய எமரிற்றஸ்
அரை குறைச் சமஸ்டி ஸ்பெயின்
பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002 43

Page 25
கே. சி. வியர் என்பவர் சமஸ்டி அரசாங்கம் என்பது அரசுகளின் ஒரு கூட்டாகும் என விளக்கியுள்ளார். அது சில பொதுத் தேவைகளுக்காக உருவாக்கப் படுகிறது. ஆனால் அதில் சேரும் அங்கத்துவ நாடுகள் தமது ஆரம்ப சுதந்திரத்தின் பெருமளவினை தொடர்ந்தும் வைத்துக் கொள்கின்றன என்றார். சமஸ்டி பற்றி எழுதியவர்கள் பலர் மேற் சொன்ன விளக்கத்தினை ஏற்றுக் கொண்ட போதிலும் சிலர் குறிப்பிட்ட மாதிரியான அரசுகளின் கூட்டாட்சி என்பதில் வேறுபடுகின்றனர். உதாரணமாக ஐக்கிய அமெரிக்காவின் யாப்பு அதிகாரங்களை - ஒப்பந்தங்கள் செய்வது, தாள் நாணயம் அச்சிடுவது என்பன - சமஸ்டி அரசாங்கத்திற்கும் மறுபுறம் வேசில விடயங்கள் மாகாண அரசாங்கங்கள் செயற்படுத்தக் கூடியவாறும் ஒழுங்கு படுத்தி உருவாக்கியுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர். இந்த விடயம் பற்றி ஆர்வம் கொண்ட எல்லா ஆய்வாளர்களும் சமஸ்டித்தத்துவம் பற்றிய மேற்சொன்ன வரைவிலக்கணத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்கள் பொது அரசாங்கம் நடைமுறைப் படுத்தும் அதிகாரங்கள் எவை என்பது திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டும் எஞ்சிய அதிகாரங்கள் பிராந்திய அரசாங்கங்களுக்கு விடப்பட்டதாகவும் அதிகாரங்கள் பிரிக்கப் படுவதையே சமஸ்டித் தத்துவம் உள்ளடக்கியுள்ளது என்பதை முன்வைக்கின்றனர். ஒரு சமஸ்டி அரசாங்கம் பொது, பிராந்திய அரசாங்கங்கள் இரண்டும் மக்கள் மீதே நேரடியாகச் செயற்படுகின்றன என்றும், ஒரு கூட்டுச் சமஸ்டியில் பிராந்திய அல்லது சம அரசு அரசாங்கங்கள் மட்டுமே மக்கள் மீது நேரடியாகச் செயற்படுகின்றன என்ற இன்னொரு விளக்கமும் உண்டு. ஆகவே சமஸ்டிவாதம் என்பது ஒரு சட்டப்படியான விளக்கம் எனலாம். அதன் இருப்பு அரசியல் யாப்பினை அடிப்படையாகக் கொண்டது. சமஸ்டிவாதம்
அரசியல் அதிகாரத்தை பிரதேச ரீதியிப் பிரிக்கிறது.
கனடாவின் சமஸ்டி ஒரு இணக்கப்பாடு ஆகும். இக் கூட்டுச் சமஸ்டியின் பெரும்பாலான ஆங்கிலேய முன்னோடிகள். புதிய பாராளுமன்றத்தின் கைகளில் சகல அதிகாரங்களையும் ஒப்படைக்கும் ஒரு ஒற்றையாட்சி அரசாங்கத்தையே விரும்பினர். இருந்த போதிலும் இவர்களை இரு குழுக்கள் எதிர்த்தன. இன்று குயிபெக் என அழைக்கப்படும் கிழக்குக் கனேடிய பிரேஞ்சுக் கனடாப் பிரதிநிதிகளிடமிருந்தே கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. இவர்கள் தமது நலன்களைப் பாதுகாக்கத்தக்க மிகவும் தயக்கமான வழி சமஸ்டிக் கூட்டாட்சி என நம்பினர். இம்முரண்படும் போக்குக்களுக்கு தேவையான இணக்கம் சமஸ்டிவாதமாக இருந்தது.
44 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

கனேடிய சமஸ்டியின் இயல்புகள்
1. மற்றைய மாகாணங்களைவிட ஒன்ராறியோ, கியூபெக் மாகாண
அரசாங்கங்கள் கனேடிய சமஸ்டியில் கூடிய பலமுள்ளனவாகும். 2. கனடாவில் செனேற் சபையில் பிராந்திய பிரதிநிதித்துவத்தின் சமஸ்டித் தத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது. மந்திரி சபை அங்கத்தவர்களைத் தெரிவு செய்வதிலும் மற்றைய சமஸ்டி நியமனங்களிலும் பிரதம மந்திரியால் நுட்பமாகச் செயற்படுத்தப் படுகிறது. பிரதிநிதித்துவம் வழங்குவதிலும் இடமளிப்பதிலும் கனடிய சமஸ்டி தோல்வி கண்டுள்ளது என ஒரு கருத்து நிலவுகிறது. 3. மற்றைய எல்லா மாகாணங்களிலிருந்து சேர்ந்து தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்களை விட ஒன்ராறியோ, கியூபெக் என்பவற்றிலிருந்து தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்கள் தொகை அதிகம் என்பது ஒரு பிரச்சினை. 4. மேற்கின் பொருளாதார பலத்துக்கும் அரசியல் பலவீனத்துக்குமிடையிலான
வேறுபாடு இன்னொரு பிரச்சினையாகும்.
கனேடிய அரசாங்கத்தின் முறைப்படி அமைந்த ஒழுங்கமைப்பு
சட்ட சபை நிர்வாகம் நீதித்துறை
(plg. மகாதேசாதிபதி பிரதம மந்திரி மந்திரி சபை
பொது மக்கள் செனேற் கனடாவின் மறறைய
FU உயர்நீதிமன்றம் சமஸ்டிகளால்
தெரிவு செய்யப்படும் நீதிமன்றங்கள் பணிக்குழு ஆட்சி (திணைக்களங்கள்) முகவர்கள் (கூட்டுத்தாபனங்கள்)
சமஸ்டி முறை தோன்றுவதற்கு ஆகக்குறைந்தது மூன்று காரணங்களாவது உண்டு. (1) சமஸ்டி வாதம் விரிவடைந்து வரும் அரசாங்கங்கள் என்ற பிரச்சினைக்கு தீர்வுகாணும் ஒரு வழி. (2) ஏகாதிபத்திய சக்தியினால் உருவாக்கப்பட்ட பெரும் சாம்ராஜ்யங்களுக்கு சமஸ்டிமுறை மாற்று. (3) பரவலாக்கல் மிகத்தூரத்தில் அமைந்துள்ள பிராந்தியங்கள் மத்தியில் எல்லாத் தீர்மானங்களும்
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 45

Page 26
தமக்குத் தொலைவிலுள்ள தலைநகரத்தில் எடுக்கப்படுவதில்லை என்ற உணர்வை ஏற்படுத்தும். பெரும்பாலான சமஸ்டி அரசுகள் புவியியல் ரீதியில் பெரியன. உதாரணம்: அவுஸ்திரேலியா, இந்தியா. பன்மைத் தன்மை கொண்ட சமூகங்களிலேயே சமஸ்டி முறைகள் உருவாக்கப்பட்டன. இவற்றில் கணிசமானளவு மொழி, மத, கலாசார சுயாட்சி நிலவுகின்றது. இது சுவிற்சலாந்தில் சமஸ்டிவாதம் செயற்பாட்டில் உள்ளமையை விளக்குகிறது. சமஸ்டி முறை அரசாங்கத்தில் சட்டங்கள் இயற்றும், வரிவிதிக்கும் அரசியல் யாப்பு அதிகாரம் தேசீய அரசாங்கத்துக்கும் சில பிராந்திய அரசாங்களுக்குமிடையில் பிரிக்கப்படுகிறது. தனிப்பட்ட ரீதியில் தேசீய அரசாங்கமோ, பிராந்திய அரசாங்கங்கள் இணைந்தோ மற்றைய மட்டத்திலான அரசாங்கத்தின் அதிகாரத்தை மாற்ற அதிகாரமற்றவை. தத்தமது அரசியல் யாப்புப் பரப்பினுள் அவை சுதந்திரமானவையாகும். ஒரு சமஸ்டி அரசின் பிரசைகள் இரண்டு அரசியல் சமுதாயங்களின் அங்கத்தவர்களாவர். ஒன்று தேசீயம், மற்றையது மாகாணங்கள், சம அரசு அங்கத்தவர்களாவர்.
4. கூட்டுச் சமஸ்டிமுறை
1861 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மொன்கோமெறி (Montgomery) அலபாமா (Alabama) என்பன தமது சொந்த அரசாங்கத்தினை ஒழுங்கு படுத்திய போது அவை அமெரிக்காவின் கூட்டுச் சமஸ்டி அரசுகள் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டன. 1860 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆபிரகாம் லிங்கன் தெரிவு செய்யப்பட்டால் அடிமைகள் பிரச்சினையில் தாம் விரும்பியவாறு நடக்கும் உரிமைகளில் கட்டுப்பாடுகள் ஏற்படக்கூடுமென்று பயந்ததால் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து பிரிந்து சென்ற அரசுகளே இவையாகும். 1860 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் திகதியன்று முதலில் விலகிய சம அரசு தென் கரோலினா ஆகும். மிசிசிப்பி, புளோரிடா, அலபாமா, ஜோர்ஜியா, லூசினியா என்பனவும் 1961 ஆம் ஆண்டு ஜனவரியில் ரெக்சாசும், வேர்ஜினியா, ஆர்கனஸ், வட கரோலினா, ரெளசி என்பனவும் விலகி பதினொரு சம அரசுகளைக் கொண்ட கூட்டுச் சமஸ்டி அரசுகளாயின. கூட்டுச் சமஸ்டி என்பது தீர்மானம் எடுக்கும் நிரந்தரமான அமைப்பு அல்லது காங்கிரசுக்கு கூட்டுச் சமஸ்டியின் அங்கத்துவ அரசுகள் தமது பிரதிநிதிகளை அனுப்பும் இயல்புகளைக் கொண்ட இறைமை கொண்ட அரசுகளின் கூட்டு ஆட்சியாகும். தாம் உடன்படாத எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்க முடியாது எனக் கூட்டு சமஸ்டியின் அங்கத்தவர்கள் மறுக்கலாம். போதுமானளவு பாதுகாப்பினை கூட்டுச் சமஸ்டி ஏற்பாடுகள் வழங்கவில்லை என உணர்ந்தால் கூட்டுச் சமஸ்டி ஒப்பந்தத்தில் இடம் பெறும் அரசுகள் அதிலிருந்து விலகலாம். ஆகவே கூட்டுச் சமஸ்டி என்பதை நிபந்தனைகளுடன் கூடியதொரு கூட்டாட்சி
46 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

எனலாம். ஒரு நிரந்தரமான ஒப்பந்தம் எனக் கொள்ளப்படும் கூட்டுச் சமஸ்டியில் சில சம அரசுகள் அரசாங்க ஸ்தாபனங்களை சிலவேளைகளில் பகிர்ந்து கொள்ளலாம். உதாரணமாக பொதுவான பிரசாவுரிமை. இவ்வாறு அவை ஒரு இரண்டாம்தர கூட்டு ஆளுமையையும் பெயரையும் பெற்றுக் கொள்ளலாம். இது கூட்டுச் சமஸ்டியாகும்.
இன்றைய காலத்தின் யதார்த்தங்களுக்கு இடமளிக்கும் கட்டாயத்தின் காரணமாகவும், குறிப்பாக, அரசியல் ரீதியில் இறைமை கொண்ட அரசுகளை இணைப்பதற்கும் நவீனத்துவத்திற்குப்பிற்பட்டகால சமஸ்டி வாதத்தின் மாதிரியாக கூட்டுச் சமஸ்டியும் கூட்டுச் சமஸ்டி ஒழுங்குப்பாடுகளும் வளர்ச்சி அடைந்துள்ளன. புதிய தேசங்களாக ஒன்றிணையத் தேவையற்ற அரசுகளினதும் மக்களினதும் விருப்பங்களையும், அரசியல் இறைமை கொண்ட அரசுகள் பரஸ்பரம் தங்கியிருக்க வேண்டியதன் அவசியத்தையும், தமது தனித்துவமான வேறுபட்ட அடையாளங்களையும், இருப்பினையும் பாதுகாப்பதையும், இனத்துவ தனித்துவத்தினையும் சில நேரங்களில் முரண்பாடுகளையும் அங்கீகரிப்பதையும் உள்ளடக்கும் முறைமையே கூட்டுச் சமஸ்டி மாதிரியாக வளர்ச்சியடைந்துள்ளது.
சம காலத்தில் மூன்று சூழ்நிலைகளில் கூட்டுச் சமஸ்டி முறை ஒரு கோட்பாடாக புனரமைப்புப் பெற்றுள்ளது.
1. புதிதாகச் சுதந்திரம் பெற்ற அரசுகளுக்கிடையிலான தொடர்புகளின்
அபிவிருத்திக்கு சமஸ்டித் தீர்வினை பயன்படுத்தும் போது
2. நடைமுறையிலுள்ள அரசுகளுக்குப் பதிலீடாக பன்முகப்படுத்தலை அமுல்
படுத்தும்போது
3. பொருளாதார அபிவிருத்தி, சுற்றாடல் பாதுகாப்பு, திறமையான சேவைகளை வழங்குவது, உயர்ந்தளவு பெளதீகப் பாதுகாப்பு என்பவற்றை அடைவதற்காக முறைப்படி அமைந்த அரசியல் யாப்பு கூட்டாட்சிகளைவிடக் குறைந்த அளவில் ஒரு அரசியல் முறையினை உருவாக்க விரும்பும்போது
கூட்டுச் சமஸ்டி என்பது புதிய சமஸ்டி முறையினைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றது. இத்தகைய கூட்டுச் சமஸ்டிகள் உலக வர்த்தகம் அல்லது பொருளாதார விவகாரங்கள் சிறப்பான நிலையை அடைவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. அதே வேளை தேசிய, இனத்துவ அடையாளங்கள் எல்லாக் கூட்டுச் சமஸ்டி முறைகளும் தோன்றுவதற்குப் பெரும் பங்கு வகித்துள்ளன.
பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002 47

Page 27
5. (1966)
இவ்வாய்வு தற்கால அரசாங்கங்களின் வேறுபடும் தன்மைகள் பற்றி விளக்குவதற்கு குறிப்பாக சமஸ்டி முறைக்கும் கூட்டுச் சமஸ்டி முறைக்குமிடையிலான வேறுபாடுகளை விளக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டதாகும். இவ்வேறுபாட்டினை விளக்குவதற்காக முதலில் ஒற்றையாட்சி முறை என்றால் என்ன. ஒற்றையாட்சி முறைக்குள் எவ்வாறு அதிகாராப் பரவலாக்கம் அல்லது அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப் படலாம் என்பது விவரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சமஸ்டி முறையின் பிரதானமான அம்சங்கள் விளக்கப்பட்டன. குறிப்பாக, கனேடிய சமஸ்டி முறை பற்றி விளக்கப்பட்டது. இறுதியாக கூட்டுச் சமஸ்டிமுறை என்றால் என்ன அது சமஸ்டி முறையிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றது என்பது விளக்கப்பட்டுள்ளது. உண்மையில், கூட்டுச் சமஸ்டி என்பது சமஸ்டி முறையிலிருந்து பின்வரும் விதங்களில் வேறுபடுகின்றது.
1. கூட்டுச் சமஸ்டி ஒப்பந்தத்தில் இடம் பெறும் அரசுகள் அதிலிருந்து தாம்
விரும்பினால் விலகலாம். 2. கூட்டுச் சமஸ்டி என்பது நிபந்தனைகளுடன் கூடியதொரு சமஸ்டியாகும். 3. கூட்டுச் சமஸ்டியில் சில சம அரசுகள் அரசாங்க ஸ்தாபனங்களைப் பகிர்ந்து
கொள்ளலாம். w 4. கூட்டுச் சமஸ்டியின் கீழ் தமது தனித்துவமான அடையாளங்களையும்
இருப்பினையையும் பாதுகாக்க முடியும்.
உசாத்துணை நூல்கள் 1. Mark O. Dickerson & Thomas Flanargan, An Introduction to Government
and Politics (Toronto: Methven Publications, 1986) 2. Stephen Brooks, Canadian Democracy An Introduction (Canada: Oxford
University Press, 2000) 3. Tom Chambers, Canadian Politics: An Introdution (Canada: Thompson
Educational Publishing Inc, 1940) 4. Richard J. Van Loon & Michael S. Whittington, The Canadian Political
System (Toronto: Macgraw Hill Limited, 1987)
48 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002
 

வகுப்புவாதம் உருமாறி
விட்டதா?
இம்தியாஸ் அகமது
குஜராத்தில் சமீபத்தில் நடந்ததை, நடந்துகொண்டிருப்பதை வகுப்புவாதம் என்று வருணிக்க முடியுமா? இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வழமையாக நடந்து வரும் வன்முறைகள் நமக்குப் பரிச்சயமானவை. இதைக் குறிப்பிடத்தான் வகுப்பு வாதம் என்ற சொல் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அந்தச் சொல் குஜராத்தில் தற்போது நடந்து வரும் சம்பவங்களுக்குப் பொருந்தாது. குஜராத் படுகொலை வரலாற்றுரீதியாக நாம்புரிந்து கொண்டிருக்கும் வகுப்பு வாதம் என்பதிலிருந்து வேறுபட்டது என்ற வாதத்திற்கு அடிப்படை என்ன? மாநில அரசின் வித்தியாசமான பங்குதான் அந்த அடிப்படை காலனி ஆதிக்கத்தின் போது இரண்டு சமூகத்தினர் அடித்துக் கொள்ளும்போது ஆட்சியாளர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட காலகட்டத்தில் நடந்த மதக் கலவரங்களைக் குறிப்பிடுவதற்காக வகுப்புவாதம் என்ற சொல் அறிமுகமானது. அது போன்ற சூழலில் மதக் கலவரம் சிவில் சமூகத்தைச் சார்ந்ததாகவும் அரசு அதைக் கட்டுப்படுத்தும் நிலையிலும் இருக்கிறது. ஆனால் நெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் அந்தக் கோட்பாட்டிலிருந்து அரசு தடம்புரண்டு ஒரு சமூகத்தின் பக்கம் சேர்ந்து கொண்டதுதான் குஜராத் நிகழ்விலுள்ள வித்தியாசம்.
இந்த வித்தியாசத்தின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர, பெரும்பான்மை வகுப்புவாதத்தையும் சிறுபான்மை வகுப்புவாதத்தையும் பிரித்துக்காட்டும் நமக்குப் பரிச்சயமான அளவுகோலைப் பார்க்கவேண்டும். பெரும்பான்மை வகுப்புவாதத்தால்தான் சிறுபான்மை வகுப்புவாதம் தலையெடுக்கிறது. பெரும்பான்மை மதத்தவர் வகுப்பு வாதத்தைக் கைவிட்டால் சிறுபான்மை வகுப்பு வாதம் நீடிப்பதற்கான காரணம் எதுவும் இல்லாமல் மறைந்து போய்விடும் என்பது பல காலமாக முன்வைக்கப்படும் வாதம். ஆனால், சிறுபான்மை - பெரும்பான்மை வகுப்புவாத வித்தியாசத்தை வரையறுப்பதற்கு இந்தக் காரணம் போதாது என்பதை உணரப் பலர் தவறிவிட்டார்கள். ஒரு குறிப்பிட்ட மனநிலையின் உருவாக்கத்தையும் சிவில் சமூகத்தின் மீதான கட்டுப்பாட்டையும் சார்ந்துதான் வகுப்புவாதம் செயல்படுகிறது.
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 49

Page 28
அந்த வகையில் பார்த்தால் பெரும்பான்மை வகுப்புவாதத்திற்கும் சிறுபான்மை வகுப்புவாதத்திற்கும் இடையில் எந்த வகையிலும் அழுத்தமான வேறுபாடு எதையும் குறிப்பிட முடியாது. பெரும்பான்மையின் வகுப்புவாதம் தேசியவாத சக்தி என்ற முகமூடியை அணிந்து கொள்ளும், அரசு நிர்வாகத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும். சிறுபான்மை வகுப்புவாதத்திற்கு இந்த வாய்ப்பு இல்லை. இரண்டுக்கும் உள்ள வேறுபாடு இதுதான். சமூக அடையாளத்திற்கான அச்சுறுத்தல் இருப்பதான உணர்வுதான் சிறுபான்மை வகுப்பு வாதத்தை வளர்க்கிறது. சிறுபான்மையினரிடையே ஜனநாயக உணர்வை உருவாக்குவது லிபரல் சக்திகளுக்கும் கடினமான காரியமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
அரசு அதிகாரத்தைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயலும் இயல்பு பெரும்பான்மை வகுப்புவாதத்தின் பிறவிக்குணம். காலனியாதிக்க காலத்திலும் அதன் பிறகு வந்த பல ஆண்டுகளிலும் இந்தப் போக்குக் கட்டுக்குள் வைக்கப்பட்டு வந்ததென்றால் அதற்குக்காரணம், அரசின் பாரபட்சமற்ற அணுகுமுறை. வகுப்புவாதம் என்பதை - அது சிறுபான்மை வகுப்புவாதமோ பெரும்பான்மை வகுப்பு வாதமோ - தனது பொறுப்பில் இருக்கும் சிவில் சமூகத்தின் ஒரு நிகழ்வாக அரசு கருதியது. சட்டம், ஒழுங்கு, சட்டத்தின் ஆட்சி, அனைவருக்கும் சமநீதி ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையிலேயே வகுப்புவாதத்தை அது அணுகியது. அரசுக்கும் சிவில் சமூகத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வரையிலும் வகுப்பு வாதத்தை அது சகித்துக் கொண்டது.
எனினும், எல்லாச் சமயங்களிலுமே அரசு நடுநிலையைக் கடைப்பிடிக்க முடியவில்லை. தற்போது நடக்கும் பிறழ்வுகளுக்கும், வக்கிரங்களுக்கும் முதல் 50 ஆண்டுகளிலும் அதற்குப்பின்னரும் இப்போதும் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்று வரும்பிறழ்வுகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்று பல ஆய்வாளர்கள் கூறத் தலைப்படுகிறார்கள். ஆனால், ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. சிவில் சமூகத்திற்குள் இயல்பாக இருந்துவரும் வகுப்புவாதப் போக்குகளுக்கு முந்தைய அரசுகளும் இரையாகியிருக்கின்றன. ஆனால், அதிகார அமைப்பின் எல்லைக்குள் - வகுப்பு வாத சக்திகள் சிறுபான்மை/பெரும்பான்மை என்ற எந்தச் சக்தியாக இருந்தாலும் சரி - ஊடுருவ முடியாதபடி ஒரங்கட்டி வந்தன. இப்போதோ, அரசு பெரும்பான்மை வகுப்புவாதச் சக்தியின் (சரியாகச் சொல்வதானால் பெரும்பான்மையினரின் பெயரால் குரல் எழுப்புபவர்கள், ஆனால் உண்மையில் சிறிய பிரிவினர்) கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டது. வகுப்புவாதச் சத்திகள் தன்னை வழிநடத்த அரசு விருப்பத்துடன் அனுமதிக்கிறது. அன்னியர்கள் என்று தாங்கள் கருதுபவர்களுக்கு எதிராகச் செயல்படுத்தும் படுகொலைத் திட்டங்களுக்கு
50 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

வேண்டிய பாதுகாப்பை அளிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின் கீழ் நடந்த மீரட் கலவரம், சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை (1984) ஆகிய சமயங்களில் நடந்த பிறழ்வுகளையும் வக்கிரங்களையும் தற்போதைய நிலையோடு ஒப்பிடுபவர்கள் முக்கியமான இந்த வித்தியாசத்தைப் பூசி மெழுகி விடுகிறார்கள்.
வகுப்புவாத சக்திகள் அரசு அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்வதன் மிருகத்தனமான வெளிப்பாடுதான் குஜராத் சம்பவம். திட்டமிட்டரீதியில் செயல்படும் கும்பல்கள் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய அமைப்பின் கண்முன்னால் வன்முறையை அரங்கேற்ற அரசு அனுமதித்தது. அரசு கலவரத்தை நியாயப்படுத்திப் பேசுவதைப் பார்த்தால், எந்தக் கலவரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்; எந்தக் கலவரம் அனுமதிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்புக் கூறுவதுதான் அரசின் வேலையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. வகுப்புவாத வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் நடுநிலை வகிக்க வேண்டும் என்ற கோட்பாடு பகிரங்கமாகக் காற்றில் பறக்கவிடப்பட்டது.
குஜராத் வன்முறையை விளக்க, சமீபத்தில் தொடர்ச்சியாக நடந்த சில அரசியல் காரணங்களை எண்ணிப்பார்க்க வேண்டும். சமீபத்திய மாநிலத் தேர்தல்களில் பெரும்பான்மை வகுப்புவாத சக்திகளுக்குக் கிடைத்த பேரிடி முதல் காரணம். தங்கள் ஆதரவு மேலும் சரியாமல் தடுக்கத் தங்களது வழக்கமான ஆயுதத்தை - மதரீதியான பிளவை ஏற்படுத்துதல் - பிரயோகித்தார்கள். உத்தரப் பிரதேசப்படுதோல்வியை அடுத்து, மத்தியில் அரசியல் சக்திகள் இடம்மாறும், ஆட்சி கவிழும் என்று பெரும்பான்மை வகுப்புவாத சக்திகள் கணித்தன. அரசு கவிழ்ந்து தான் தீரும் என்றால் எந்தக் கொள்கை அவர்களைப் பதவியில் அமர்த்தியதோ அதே கொள்கைக்காக அரசு விழவேண்டும் என்பது அவர்கள் கணக்கு. ராமர் கோவில் விஷயத்தில் மத்திய அரசின் மிதவாத அணுகு முறைதான் சட்டமன்றத் தோல்விகளுக்குக் காரணம் என்றும் கருதின. அயோத்தியில் ராமருக்குக் கோவில் எழுப்புவது ஆட்சியைத் தக்கவைப்பதை உறுதி செய்யும் என்றும் சமுதாயத்தை மதரீதியில் கூறுபோட உதவும் என்றும் அவை நம்பின. அவர்களது தர்க்க ரீதியான கணக்கு இதுதான் சமுதாயத்தைக் கூறுபோட வேண்டும்; அதன் மூலம் தேர்தலில் ஆதாயம் பெற வேண்டும். ஆட்சி மீதான கட்டுப்பாட்டை வசப்படுத்திக் கொள்ள வேண்டும். பெரும்பான்மையினரின் நோக்கில் தேசத்தையும் சமுதாயத்தையும் வடிவமைக்க வேண்டும்.
ஆனால், இதையெல்லாம் சிறுபான்மை மதத்தினர் கையைக் கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. இன்றோ நாளையோ அவர்களிடமிருந்தும் வெறித்தனமான குழுக்கள் உருவாகி வரும்; அரசைக்
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 5

Page 29
கட்டுப்படுத்தும் பெரும்பான்மை மதவாதத்தின் மேலாண்மையை அவை தகர்க்க இயலும். இது போன்ற சம்பவங்கள் பெருகப் பெருக இந்தத் தேசமே மதக் காழ்ப்புணர்ச்சியிலும் வன்முறையிலும் பற்றி எரியும். வகுப்புவாதத் தெருச் சண்டைகளை அரசு ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்க்கும் என்பதால் வன்முறைத் தீ இன்னும் கொழுந்துவிட்டெரியும். இந்தப் போக்கு அதிகரித்த பிறகு அரசு இப்போது காட்டிவரும் சிறிதளவு நடுநிலையின் பாவனைகூட காணாமல் போய்விடும். அரசு பெரும்பான்மை வகுப்புவாத வன்முறைக்கும் சிறுபான்மை வகுப்புவாத வன்முறைக்கும் இடையே பராபட்சம் காட்ட ஆரம்பிக்கும். அரசின் பாரபட்சமான போக்கு, அடக்குமுறையை எதிர்க்க வன்முறைதான் ஒரே வழி என்று சிறுபான்மை வகுப்புவாதச் சக்திகள் தங்கள் வன்முறைக்கு நியாயம் கற்பித்துக் கொள்ள உதவும். அரசின் இந்தப் போக்குப் பெரும்பான்மை வகுப்பு வாதத்தை வலுவான தேசிய உணர்வின் நியாயமான வெளிப்பாடு என்று ஏற்றுக்கொள்ளும். சிறுபான்மை வகுப்புவாதத்தை அரசுக்கு எதிரான பயங்கரவாதம் என்றும் சொல்லித் தண்டிக்கும். இதன்மூலம் சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை அதிகரிக்கும். பெரிய அளவில் இனப்படுகொலைகள் நடக்கும். அரசு பகிரங்கமாகவே பெரும்பான்மை வன்முறையை அங்கீகரிக்கும்.
உதாரணமாக, அயோத்தி பிரச்சினையை இந்து-முஸ்லிம் மோதலாக முன்னிறுத்துவதன் மூலம், அதன் அரசியல் நோக்கங்கள் மறைக்கப்படுவதுடன் பெரும்பான்மை வகுப்புவாதம் தன்னை வலுப்படுத்திக் கொள்ளவும், தனது சமூக ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்திக் கொள்ளவும் வழி ஏற்படுத்தப்படுகிறது. அயோத்திப் பிரச்சினையில் ஏற்படும் முட்டுக்கட்டைகளுக்கு முஸ்லீம்கள் மீது பெரும்பான்மைச் சக்திகள் பழி போடுவதற்கும் இது வழி செய்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால், பெரும்பான்மை வகுப்புவாதச் சக்திகள் தேசம் மற்றும் சமூகம் பற்றிய தமது கனவை நடைமுறைப்படுத்துவதற்கான வியூகத்தின் ஒரு பகுதியாக (குஜராத்) அரசின் செயல்கள் அமைந்துவிட்டன.
அரசு இயந்திரத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரப் பெரும்பான்மை வகுப்புவாத சக்திகள் தீவிரமாக ஆசைப்படுகின்றன. இந்த ஆசையின் எல்லைக்குள்தான் சமகால வகுப்புவாதம் செயல்படுகிறது. இது 1990களிலேயே ஆரம்பித்துவிட்டது. பொருளாதாரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து அரசு இயந்திரத்தின் அந்தஸ்து குறித்த ஆழ்ந்த நெருக்கடியின் விளைவாக இது உருவாயிற்று. ஆனால் பெரும்பான்மை வகுப்புவாத சக்திகளை ஆட்சியிலிருந்து இறக்குவதன் மூலம் மட்டும் இந்தவகை வகுப்பு வாதம் ஒழிந்துவிடாது. சமுதாய, கலாசாரத் தளங்களில் அவற்றிற்கு இருக்கும் ஆதிக்கத்தையும் அதன் மூலம்
52 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

குறைத்துவிட முடியாது. அதற்கு நவீன சிந்தனைக்கும் 'அன்றாட வாழ்க்கை பார்வைக்குமுள்ள தொடர்பை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இதை நம்மால் எதிர்கொள்ள முடியும்,
சுதந்திரம் அடைந்ததிலிருந்தே இந்திய தேசிய நிர்மாணத்தின் அடிப்படையாக மதச்சார்பின்மையே இருந்து வந்திருக்கிறது. இந்தியாவின் நவீன மயமாக்கல் முயற்சிகள் மதம், மொழி, மற்றும் சாதி ரீதியான இடைவெளிகளைக் குறைப்பதைத் தம் மையப் புள்ளியாகக் கொண்டிருந்தன. மதச் சார்பற்ற அரசையும் ஒன்றுபட்ட தேசத்தையும் உருவாக்கி நிலை நிறுத்துவதன் மூலம் இந்த இடைவெளிகளைக் குறைப்பதற்கான முயற்சிகள் நடந்துவந்தன. ஆனால் வரலாற்றைச் சற்றே திரும்பிப்பார்க்கும்போது ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. காலனி ஆட்சிதான் மேற்கத்தியபாணி நவீனமயமாக்கலை இந்தியாவிற்குக் கொண்டுவந்தது. சமூக ரீதியான வேற்றுமைகளால் தெளிவாகப் பிரிக்கப்பட்ட இந்திய சமூகம் பற்றிய, தற்போது ஒப்புக்கொள்ளப்பட்ட பார்வையைக் கண்டுபிடித்ததும் காலனி ஆட்சிதான்.
சிவில் சமூகம் பற்றிய நவீன மேற்கத்திய கருத்தாக்கத்தை முன்னுதாரணமாகக் கொண்டு மதச்சார்பற்ற தேசம், அரசு ஆகியவற்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைமுறை சார்ந்த காரணங்களால் தடைபட்டு வருவதை இந்தியாவில் நிலவும் வகுப்புவாதம் காட்டுகிறது. வகுப்புவாதம் என்பது மதக்குழுக்களிடையே நடக்கும் மோதல் என்று கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது; அல்லது மதத்தின் போர்வையில் மதத்திற்குத் தொடர்பற்ற சக்திகளிடையே நடக்கும் மோதல் என்று எளிமைப்படுத்தப்பட்டு விளக்கப்படுகிறது. உண்மையில் நன்கு படித்தவர்கள்தான் வகுப்புவாதத்தை ஆதரிக்கும் நவீன மனப்பான்மையைக் கொண்டிருக்கிறார்கள். வகுப்புவாதத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் மதக் குழுக்களுக்கிடையே சுயநல நோக்கத்துடன் நடக்கும் மோதலாக அதைப்பார்க்கும் பார்வையை விடுத்து, வரலாற்று ரீதியாக மதிப்பிடவேண்டும். அப்போதுதான் காலனியாதிக்க காலத்திலிருந்து நம்மை ஆக்கிரமித்து வந்திருக்கும் நவீன சிந்தனையின் குறைபாடுகள் புரியும்.
நவீன சிந்தனையின் தவிர்க்க முடியாத அம்சமான அனுபவங் கடந்த கண்ணோட்டத்தின் ஆதிக்கம் தினசரி வாழ்க்கைக் கண்ணோட்டத்தை அமுக்கி விடுகிறது. அமுக்கப்பட்ட இந்த உணர்வுதான் வகுப்புவாதம் உருவாகக் காரணமாகிறது. நவீன சமூகம் பகுத்தறிவு சார்ந்த புறவயமான பார்வைக்கு
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 53

Page 30
அழுத்தம் கொடுக்கிறது. இது பகுத்தறிவுக்கு ஒவ்வாத அகவயமான பார்வையின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. ஜப்பானிய அறிஞர் கெனிச்சி மிஷிமாவின் கருத்தை இங்கு நினைவுகூர்வது பொருத்தமானது: "மரபு வழிப்பட்ட வாழ்க்கை முறைக்குப் பிந்தைய சமூகம் பகுத்தறிவின் அபாயங்களை உணர்த்துகிறது. பகுத்தறிவுக்கும் அறிவு கடந்தவற்றுக்கும் இடையே முறையான சமநிலையை உருவாக்க வேண்டியிருக்கிறது.”
பனிப்போர் முடிவுக்கு வந்த பிறகு பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட நவீன மயமாக்கல் என்ற இலக்கும் வலுவிழந்திருக்கிறது. இதன் விளைவுதான் தற்போது நிலவும் வகுப்புவாதம். பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களின் சக்தி கட்டவிழ்த்து விடப்பட்டதால் உருவான மாற்றம் இது. இது இந்தியாவுக்கு மட்டும் உரிய பிரச்சினை அல்ல; உலகம் முழுவதற்கும் பொதுவானது. நவீனமயமாக்கலின் தேக்க நிலை, பனிப்போரின் முடிவுக்குப்பிறகு உலகம் முழுவதிலும் தோன்றிய மத எழுச்சி ஆகியவற்றின் பின்னணியில்தான் இதைப்புரிந்து கொள்ள வேண்டும். மதச்சார்பின்மை வாதத்தில் பகுத்தறிவு மதத்தைக் கட்டுப்படுத்துகிறது. வகுப்புவாதம் சமய எழுச்சியின் வாயிலாகப் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களைக் கட்டவிழ்த்து விடுகிறது. இரண்டுமே நவீனயுகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள்தான். இரண்டுமே நவீனத்துவத்திலிருந்து பிறந்து நவீனத்துவச் சிந்தனையின் எல்லைக்குள் செயல்படுகின்றன.
என்றாலும், மதச் சார்பின்மைக்கும் வகுப்புவாதத்திற்கும் இடையிலான இந்தப் போராட்டத்தைப் பகுத்தறிவுக்கும் அறிவுகடந்த விஷயங்களுக்கும் இடையே ஒரு சமநிலை காணும் முயற்சியின் ஊசலாட்டமாகக் கருதமுடியும். இந்த ஊசலாட்டம் பின்நவீன சிந்தனைக்கு வித்திடக்கூடும். 1990 களில் தோன்றிய வகுப்புவாதத்தின் புதிய அவதாரத்திற்குப் பொருளாதார தாராள மயமாக்கலைக் காரணமாகச் சொல்லலாம். தாராளமயமாக்கல் நுகர்வு கலாச்சாரத்தைக் கொண்டு வந்தது. புதிய ஊடகங்கள் - குறிப்பாக தொலைக்காட்சி - வளர்ந்தன. கிராமப் புறங்களிலும் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களிலும் தொலைக்காட்சி மிக வேகமாகப் பரவத்தொடங்கியது. இது இந்திய சமூகத்தின் தகவல் சூழலைப் பெருமளவில் மாற்றிவிட்டது. தொலைக்காட்சியின் பரவலால் தகவல் பரிமாற்ற அமைப்பு நாடு தழுவிய அளவில் ஒன்றிணைக்கப்பட்டிருக்கிறது. தொலைக்காட்சிக்கு முன்பே அச்சுஊடகம் இருக்கத்தான் செய்தது. ஆனால் தொலைக்காட்சிதரும் காட்சிப் படிமங்கள் மிக சுலபமாக எல்லாப்பிரிவு மக்களையும் சென்று எட்டியது. எல்லாப்பிரிவு மக்களும் ஒரே தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
54 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

உள்ளூர் பார்வையாளர்கள் தேசிய மற்றும் உலகளாவிய கண்ணோட்டத்தில் விஷயங்களைப் பார்க்கத் தொலைக்காட்சி தரும் காட்சிப்படிமங்கள் வழிசெய்தன. இதன் விளைவாக மக்களுக்கு இரண்டு வகையான தகவல்கள் கிடைக்க ஆரம்பித்தன. ஒன்று, நேரடி அனுபவத்தின் மூலம் பெறுவது. இரண்டு, தொலைக்காட்சி மூலம் பெறுவது. ஒரு சம்பவம் எவ்வளவு தொலைவில் நடந்தாலும் அதன் காட்சியைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது அது நேரடியாகப் பார்த்து அறிவது போன்ற பாவனையை ஏற்படுத்துகிறது. இந்த நிஜ பிம்பங்கள் தினசரி வாழ்க்கை கண்ணோட்டத்திற்கும்', 'அனுபவங்கடந்த கண்டோட்டத்திற்கும், இடையே இருக்கும் எல்லைக்கோட்டை மங்கலாக்கிப் பார்வையாளர்களைக் குழப்பிவிடுகின்றன. இந்த இரு கண்ணோட்டங்களையும் ஒன்றாக்கிவிடும் இந்த மாயம் இரு வழிகளில் வகுப்புவாதத்தை உருவாக்குகிறது; ஒன்று, எல்லாவற்றையும் வகைப்படுத்தும் மாயம்; இரண்டு, நடுத்தர வர்க்கத்தின் தாக்கத்தால், அதிகரித்துவரும் வகுப்பு வாதத்தை ஆர்வத்துடன் நுகரும் பண்பு.
நாட்டின் எந்த மூலையில் உள்ள சமூகக் குழுவை வைத்தும் இந்த வகைப்படுத்தும் மாயத்தை விளக்கலாம். தொலைதூரத்தில் இருக்கும் ஒரு குக்கிராமத்து மக்களைப்பொறுத்த வரை அயோத்தி என்பது அவர்கள் அன்றாட வாழ்வோடு தொடர்பில்லாத ஒரு இடம். ஆனால், பாபர் மசூதி இடிக்கப்பட்ட காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்த பிறகு அயோத்தி அவர்களோடு தொடர்புள்ள இடமாக மாறிவிடுகிறது. குறைந்தபட்சம் அவர்கள் மன அளவில் இந்தத் தொடர்பு சாத்தியமாகிறது. இதன் விளைவாக, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான வகுப்பு வாதமாகச் சித்தரிக்கப்படும் இந்த நிகழ்வு, பொதுவான கலாச்சார சூழலில் இருக்கும் உள்ளூர் இந்து-முஸ்லிம் சமூகத்தினரிடையே தன் தாக்கத்தைச் செலுத்த ஆரம்பிக்கிறது. இந்தியாவில் சகல பாகங்களிலும் இருக்கும் மக்களிடமும் இதே காட்சிப்படிமங்கள் போய்ச் சேருகின்றன. தொலைக்காட்சியில் பரப்பப்படும் நவீன சிந்தனை, மக்களை அவர்களது அன்றாட வாழ்வை, 'அனுபவங் கடந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில் பார்க்கவைக்கிறது. இந்தக் கண்ணோட்டம் மக்களிடையே பரவலாக்கப்படுகிறது. பெரும்பான்மை வகுப்புவாதம் வளர இது உதவுகிறது.
இதுதான் வகைப்படுத்தும் மாயம் என்று இங்கே குறிப்பிடப்படுகிறது. இது அனுபவங் கடந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில் மக்களை வகைப்படுத்தும் போக்கு. இந்தப் போக்குத் தனி நபர்கள், தங்களை ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களாகவும் பொதுவான அடையாளம் கொண்டவர்களாகவும்
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 55

Page 31
அனுமானித்துக் கொள்ள வழிசெய்து அவர்களிடையே நெருக்கத்தை வளர்க்கிறது. உதாரணமாக, தன்னை இந்து என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒருவருக்கு, அது போலவே அடையாளப்படுத்திக் கொள்ளும் மற்றவர்களுடன் - தொலை தூரத்தில் இருக்கும் அன்னியர்கள் உள்பட - உடனடியாக நெருக்கம் ஏற்பட்டு விடுகிறது. இதை வகைப்படுத்தும் மாயம்' என்று சொல்லலாம். ஏனென்றால் தினசரி வாழ்க்கைக் கண்ணோட்டத்தில் ஒருவர் தனக்கு முன்பின் தெரியாத ஒருவரை அன்னியராக நினைக்கிறார். ஆனால், இந்த எண்ணம் அனுபவங்கடந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் அனுதாப உணர்வால் அமுக்கப்படுகிறது. இதன் விளைவாக மற்றவர்களை நண்பர்களாகவோ எதிரிகளாகவோ வகைப்படுத்திப் பார்க்கும் போக்கு உருவாகிறது. ஒரு குறிப்பிட்ட பிரிவுக்குள் இருக்கும் வித்தியாசங்களை பொருட்படுத்தாத அளவுக்கு இந்த வகைப்படுத்தல் இறுக்கமாகி விடுகிறது. வகைப்படுத்தும் மாயம் இப்படித்தான் வகுப்புவாதத்தை உருவாக்குகிறது. இந்தப் பொறியில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதுதான் வகுப்புவாதத்தைக் கட்டுப்படுத்தச் சிறந்த வழி என்றாலும் பகுத்தறிவுக்கும் அறிவு கடந்த விஷயங்களுக்கும் இடையே சமநிலையை உருவாக்குவது குறித்த பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கிறது. இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க நாம் பொருட்களையும் மக்களையும் வகைப்படுத்திப் பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளவேண்டும். ஒற்றைப் பரிமாணம் கொண்ட, நீக்குப்போக்கற்ற, மாறாமல் இருக்கும் தன்மையை வலியுறுத்துகிற அடையாளங்களை நாம் துறக்கவேண்டும். தேசப்பிரிவினைக்குப் பிறகு நவகாளியில் வன்முறைகோர தாண்டவம் ஆடிய போதுகாந்தி கூறிய வார்த்தைகள் இதைத்தான் குறிப்பிட்டிருக்கும் என்று தோன்றுகிறது:இந்துக்கள் முஸ்லிம்களைக் கொல்கிறார்கள்; முஸ்லிம்கள் இந்துக்களைக் கொல்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். நான் ஒரு இந்து. ஆனால் நானே முஸ்லிமாகவும் கிருஸ்துவனாகவும் சீக்கியனாகவும் இருக்கிறேன். நீங்களும் அப்படித்தான் இருக்கிறீர்கள்.”
நன்றி: காலச்சுவடு - 14 மே - ஜூன் 2002. தமிழில் அரவிந்தன், செந்தில்
56 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002
 

அறியாமையின் மோதல்
- எட்வேர்ட் டபிள்யூ சையிட்
8F supGoué) spoir frillsit (Samuel Huntington) Tygu நாகரிகங்களின் மோதல்" என்ற கட்டுரை 1993ஆம் ஆண்டு Foreign Afairs என்ற சஞ்சிகையின் கோடை இதழில் வெளிவந்தது. உடனேயே அது வியக்கத்தக்க அளவு கவனத்தையும் எதிர்வினையையும் ஈர்த்தது. பனிப்போர் முடிவுற்ற கால கட்டத்தில் உலக அரசியலில் ஒரு புதிய கட்டம் பற்றிய தற்புதுமை வாய்ந்த கருத்தினை இக்கட்டுரை மூலம் அவர் அமெரிக்கர்களுக்கு வழங்கினார். கட்டுரையின் நோக்கமும் அதுவே.
ஹன்ரிங்டன் முன்வைத்த வாதத்தில் பயன்படுத்திய சொற்றொடர்கள் விசாலமானவையாகவும், துணிகரமானவையாகவும், ஏன் தீர்க்கதரிசன மானவையாகவும் தோற்றின. கோட்பாடுகளை வகுப்பவர்களில் தனக்குப் போட்டியாக இருப்பவர்கள் மீது அவர் கண் வைத்திருந்தார் என்பது தெட்டத்தெளிவு அத்தகைய கோட்பாட்டாளர்களில் ஒருவர் பிரான்சிஸ் ஃபுக்குயாமா (Francis Fukuyama). இவர் 'வரலாறு முடிவுற்று விட்டது என்ற எண்ணக்கருவை முன்வைத்தார். பூகோளமயவாதம், குலமரபுப்பற்று, அரசின் அழிவு ஆகியவற்றைக் கொண்டாடிய எண்ணற்றவர்கள் மீதும் ஹன்ரிங்டன் கவனஞ் செலுத்தினார். இப்புதிய கால கட்டத்தில் சில அம்சங்களை மட்டுமே இவர்கள் புரிந்திருந்தார்கள்
என்பதை அவர் ஏற்றுக்கொண்டார்.
வருங் காலத்தில் பூகோள அரசியலின் முக்கியமான, மையமான ஒரு அம்சத்தைத் தான் அறிவிக்கப் போவதாக அவர் குறிப்பிட்டார். தயக்கம் எதுவுமின்றி பின்வருமாறு அவர் கூறினார்: “இந்தப் புதிய உலகத்தில் பிணக்குகள் ஏற்படுவதற்கான மூலம் அடிப்படையில் கருத்தியல் சார்ந்ததாகவோ அல்லது பொருளியல் சார்ந்ததாகவோ இருக்கமாட்டாது என்பதே எனது கருதுகோள். பதிலாக, பண்பாடே மனித இனத்தில் பாரிய கூறுபாடுகளுக்கும் பிணக்குகளுக்கும் அடிப்படையான மூலமாகவும் இருக்கும். உலக விவகாரங்களிலே தேசிய அரசுகளே
பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002 57

Page 32
மிகச்சக்தி வாய்ந்தவையாக விளங்கும். ஆனால் பூகோள அரசியலில் முக்கிய பிணக்குகள் நாடுகளுக்கிடையிலும் வெவ்வேறு நாகரிகங்களைச் சார்ந்த குழுக்களுக்கிடையிலும் நிகழும். நாகரிகங்களுகிடையிலான மோதல்களே பூகோள அரசியலில் மேலாதிக்கம் செலுத்தும், நாகரிகங்களுக்கிடையே காணப்படும் ஒத்திசைவு இல்லாமையே எதிர்காலப்போருக்கு வழிவகுக்கும்" அவர் தொடர்ந்து வாதிடும்போது நாகரிக அடையாளம் (Civilization Identity) என்ற தெளிவற்ற எண்ணக்கருவிலும் ஏழு அல்லது எட்டு முக்கியமான நாகரிகங்களுக்கிடையே ஏற்படும் ஊடாட்டத்திலுமே வாதம்தங்கியிருந்தது. இவற்றில் இரண்டிற் கிடையிலான பிணக்கே, அதாவது மேற்கு உலகமும் இஸ்லாமுமே அவருடைய கவனத்தைப் பெரிதும் ஈர்க்கின்றன. இத்தகைய போர்க்கோலம் மிக்க சிந்தனை ஒட்டத்திற்கு அவர் பேர்னாட் லூயிஸ் (Bernard Lewis) என்ற துறைபோன கீழ்த்திசைவாணர் (Orientalist) 1990 ஆம் ஆண்டு எழுதிய ஒரு கட்டுரையில் பெரிதும் தங்கியுள்ளார். லூயிஸின் கட்டுரையின் தலைப்பிலிருந்தே - முஸ்லிம் ஆவேசத்தின் வேர்கள்’- அவரின் கருத்தியல் சார்பு தெளிவாகப் புலப்படுகின்றது. இருவரது கட்டுரைகளிலுமே மேற்குலகு, இஸ்லாம் என்ற பதங்கள் அசட்டையாகப் பயன்படுத்தப்படுகின்றன. அடையாளம், பண்பாடு என்ற மிகச் சிக்கலான விடயங்கள் கேலிச்சித்திர உலகிலே காணப்படும் பாத்திரங்களை ஒத்தவைபோல் உள்ளன. ஒரு பாத்திரம் மற்றவனைவிட நற்பண்பு வாய்ந்தனவாக இருப்பதால் அவன் எதிரியை ஒவ்வொரு தடவையும் தோற்கடிப்பது போலவும் இக்கட்டுரை ஆசிரியர்கள் தமது வாதங்களை முன்வைக்கின்றனர். ஒவ்வொரு நாகரிகத்தின் உள்ளக இயக்க ஆற்றலைப் பற்றியோ பன்மைத் தன்மை பற்றியோ இருவருமே பொருட்படுத்தவில்லை. பெரும்பாலான நவீன பண்பாடுகளில் எழும் முக்கிய போட்டி ஒவ்வொரு பண்பாட்டினது வரையறை பற்றியதோ அல்லது வியாக்கியானம் பற்றியதோ என்பதை இரு கட்டுரை ஆசிரியர்களும் கவனத்தில் எடுக்கவில்லை. ஒரு சமயம் அல்லது பண்பாடு பற்றி முழுமையாகப் பேசும் போது அது உணர்ச்சிகளைக் கிளறுவதாகவோ அல்லது அறியாமையைச் சார்ந்ததாகவோ இருக்கின்றது என்பதை அவர்கள் நினைத்தும் பார்க்கவில்லை. இவர்களுடைய நோக்கில், மேற்குலகு மேற்குலகுதான், இஸ்லாம் இஸ்லாம்தான்.
ஹன்ரிங்டனின் நோக்கிலே மேற்குலகைச் சார்ந்த கோட்பாட்டை வரையறுப்பவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் யாதெனில், மேற்குலகம் மேலும் பலம் பெற்று மற்ற எல்லோரையும், குறிப்பாக இஸ்லாமைத் தட்டி விலக்கக்கூடிய நிலையில் இருப்பதை உறுதி செய்வதே. ஹன்ரிங்டனுடைய
58 பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002

கருதுகோளில் எம்மைக் குழப்புவது, தனது நோக்கே சரியான ஒன்று என்றும் ஏனையோர் தான் ஏற்கெனவே கண்டுபிடித்த விடைகளைக் காண்பதற்கு ஒடியாடித் திரிகிறார்கள் என்றும் அவர் கருதுவதாகும். அவரது நோக்குக் கோணம் சாதாரண பற்றுக்களில் இருந்தும், மறைந்திருக்கும் விசுவாசங்களில் இருந்தும் விடுபட்ட ஒரு கோணத்திலிருந்து அமைவது போல் அவர் கருதுகின்றார் போலும். உண்மையில் ஹன்ரிங்டன் கருத்தியல் சார்ந்தவரே. அவர் நாகரிகங்களையும் அடையாளங்களையும் அவையல்லாதவையாக மாற்றுவதற்கே விழைகின்றார். மனித வரலாற்றிலே காணப்படும் எண்ணற்ற ஒட்டங்களும், எதிரோட்டங்களும் நீக்கப்பட்டவையாகவே பண்பாடுகளையும் அடையாளங்களையும் அவர் காண்கின்றார். இந்த ஓட்டங்களும் எதிரோட்டங்களுமே வரலாற்றிலே எத்தனையோ நூற்றாண்டுகளாக மதப் போர்களையும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்களையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு மட்டுமல்ல, பரிமாற்றத்திற்கும், உரமூட்டுவதற்கும், பங்கீட்டிற்கும் வழிவகுத்தன. இந்த வரலாறு அதிகம் புலப்படுவதில்லை. அதுவும் பண்பாடுகளின் மோதலே. உண்மை என்ற புனைவு அதற்கு இடம் கொடுப்பதில்லை. 1996ல் பண்பாடுகளின் மோதல்’ என்ற அதே தலைப்பில் ஹன்ரிங்டன் நூலாக வெளியிட்டபோது அவர் தனது வாதத்தைச் சற்று நுட்ப நுணுக்கமாக முன்வைத்ததோடு மேலும் பல அடிக்குறிப்புக்களையும் சேர்த்துக் கொண்டார். ஆனால் அவர் சாதித்தது தன்னை மேலும் குழப்பமடையச் செய்ததோடு, தான் ஓர் அலங்கோலமான எழுத்தாளன் என்பதையும், நயமற்ற சிந்தனையாளன் என்பதையுமே நிரூபித்தமைதான்.
மேற்குலகம் எதிர் ஏனையோர் என்ற அடிப்படை மாதிரி (பனிப்போர்க் காலத்தில் முன்வைக்கப்பட்ட எதிரெதிர் துருவங்களைச் சற்று மாற்றி அமைத்ததாகவே) அப்படியே மாற்றுப்படாமல் இருந்தது. செப்டம்பர் 11ஆம் திகதி நிகழ்ந்த பயங்கர சம்பவங்களுக்குப் பின்னர் இந்த மாதிரியே தொடர்ந்தும் நயவஞ்சகமாகவும், உள்ளடக்கமாகவும் கலந்துரையாடல்களில் அடிக்கடி தலை தூக்கிற்று. மூளைக் கோளாறினால் பாதிக்கப்பட்ட சிறு குழுப் போராளிகள் மிகக் கவனமாகத் திட்டமிட்டு நடத்திய படுபயங்கரமான தற்கொலைத் தாக்குதலும் அதனால் ஏற்பட்ட பெருமளவிலான படுகொலைகளும் ஹன்ரிங்டனுடைய அடிப்படைக் கருத்திற்கு நிரூபணமாகிவிட்டன. உண்மையில் இச்செயல் மூலம் பெரிய எண்ணங்களை (எண்ணங்கள் என்ற பதத்தினை இறுக்கமான அர்த்தத்தில் நான் பயன்படுத்தவில்லை) பைத்தியம் பிடித்த ஒரு சிறு மதவெறிக்குழுவினர் குற்றவியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினர். இதனை அதன் உண்மைக்
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 59

Page 33
கோணத்தில் நோக்காது முன்னாள் பாக்கிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவிலிருந்து இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லூஸ்கொனி (Silvio BerluSconi) வரையிலான சர்வதேச புகழ் பூத்தவர்கள் இஸ்லாமின் இடர்கள் பற்றி தான்தோன்றித்தனமாக கருத்து வெளியிட்டார்கள். இத்தாலியப் பிரதமர் ஹன்ரிங்டனின் கருத்துக்களைப் பயன்படுத்தி வசைமாரி பொழிந்தார். மேற்குலகத்தின் மேன்மை பற்றியும், எவ்வாறு நாம் மொசாட், மைக்கல் அஞ்சலோ போன்றவர்களுக்கு உரிமை பாராட்டுபவர்கள் என்றும் அவர்களுக்கு அவ்வாறான அருகதை இல்லையென்றும் பிதற்றினார். (பின்னர் இத்தாலியப் பிரதமர் இஸ்லாமை அவமதித்ததற்காக அரைகுறை மன்னிப்பு கோரினார்).
ஆனால், ஒஸாமா பின்லாடனுக்கும் அவரது சீடர்களுக்கும் பிறாஞ்ச் டவிடியன்ஸ் என்ற வழிபாட்டாளருக்கும் (Branch Davidians) அல்லது கையனாவின் வண. ஜிம் ஜோன்சினது (Rev. Jim Jones) சீடர்களுக்குமிடையே அல்லது ஜப்பானிய ஓம் சின்றிகியோ போன்றவர்களுக்குமிடையே ஏன் ஒப்புவமைகளைக் காணமுடியாது? பின்லாடனும் அவரது சீடர்களும் விளைவித்த அழிவுகளோடு ஒப்பிடும்போது, இவர்களுடைய அழிவுகள் காட்சிப்பகட்டானவை அல்ல என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். வழக்கமாக நிதானப் போக்குடைய úlfill,636. Tryggypr60T The Economist sí.L. GatúGLibUri 22 - 28 ggylló விசாலமான பொதுமைக் கருத்தினை வழங்குவதில் தயங்கவில்லை. இஸ்லாமைப்பற்றி ஹன்ரிங்டனின் ‘கூர்மையான ஆனால் கொடூரமான அவதானிப்புக்களை’ அது மிதமிஞ்சிப் பாராட்டுகின்றது. ஹன்ரிங்டன் கூறுகின்றார்: “உலகத்தின் நூறு கோடி முஸ்லிம்கள் தமது பண்பாட்டின் மேன்மைபற்றி உறுதியாக நம்புகின்றனர். அதேவேளை அவர்களின் பலத்தின் தாழ்வு அவர்களின் மனத்தை உறுத்துகின்றது.” நூறு இந்தோனேஷியர்கள், இருநூறு மொறக்கோ நாட்டவர்கள், ஐந்நூறு எகிப்தியர், ஐம்பது பொஸ்னியர்கள் ஆகியோரிடமிருந்து ஹன்ரிங்டன் அபிப்பிராயங்களைப் பெற்றிருந்தாரா? அப்படி அவர் செய்திருப்பினும் இந்த அபிப்பிராய மாதிரி எந்த வகையைச் சாரும்.?
அமெரிக்க, ஐரோப்பிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்த ஆசிரிய தலையங்கங்கள் எண்ணற்றவை. இத்தலையங்கங்கள் பயன்படுத்திய வார்த்தைகள் அரக்கத்தனத்தையும் ஊழிக்காலத்தையும் குறித்துநின்றன. இவற்றின் வெளிப்படையான நோக்கம் வாசகன் மேற்குலகத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் அவனது ஆவேசத்தைத் தூண்டுவதும் நாம் என்ன செய்ய
60 பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002

வேண்டும் என்பது பற்றி அவனுக்கு உணர்ச்சி ஊட்டுவதுமே ஆகும். தாமே மேற்குலகத்தினதும், குறிப்பாக அமெரிக்காவினதும் போராளிகள் என்று பாவனை செய்து, தம்மை வெறுப்பவர்கள் மீதும் அழிப்பவர்கள் மீதுமான போரில் சேர்ச்சிலுக்குரிய பேச்சு வன்மையை பொருத்தமற்ற முறையில் பயன் படுத்தினார்கள். சிக்கல் வாய்ந்த வரலாறுகளை இவர்கள் பொருட் படுத்துவதில்லை. அவற்றை குறுக்கிப் பார்க்கின்றனர். ஒரு நிலப்பரப்பிலிருந்து இன்னொரு நிலப்பரப்பிற்கு இவ்வரலாறுகள் கசிந்துள்ளன என்பதையோ அவ்வாறு கசியும்போது ஆயுதம் தாங்கிய முகாம்களாக எம்மைப் பிரித்து நிற்கும் எல்லைகளை அவை பொருட்படுத்தவில்லை என்பதையோ இவர்கள் கவனத்தில்
கொள்ளவில்லை.
'இஸ்லாம் - மேற்குலகு என்ற மேம்பாடுறச் செய்யாத முத்திரைகளால் எழும் பிரச்சினைகள் இவையே. அவை தவறான வழியில் எம்மை வழி நடத்துவதோடு மனதையும் குழப்புகின்றன. புறாக் கூட்டறையில் அடைக்கப் படுவதற்கோ, பட்டியில் கட்டப்படுவதற்கோ மறுக்கும் மெய்ம்மையை மனம் புரிந்து கொள்வதற்கு முனையும்போது இக்குழப்பம் மேலும் அப்பணியைச் சிக்கலாக்குகின்றது. 1994 ல் மேற்குக்கரையில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் நான் சொற்பொழிவு ஆற்றுகையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகின்றது. எனது சொற்பொழிவு முடிந்ததும் ஒருவர் எழுந்து எனது எண்ணங்கள் மேற்குலகைச் சார்ந்தவை எனச்சாடினார். தான் கண்டிப்பான இஸ்லாமிய எண்ணங்களையே ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். "நீர் ஏன் காற்சட்டையும் டையும் அணிந்திருக்கிறீர்” என்று நான் அவரிடம் திருப்பிக் கேட்டேன். “அவையும் மேற்குலகைச் சார்ந்தவைதானே” என்றேன். அவர் தடுமாற்றச் சிரிப்புடன் ஆசனத்தில் அமர்ந்தார். செப்டெம்பர் 11 ஆம் திகதி ஏற்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் நான் மேற்படி பல்கலைகழகச் சம்பவத்தை நினைவு கூர்ந்தேன். உலக வர்த்தக மையத்தையும், பென்டகனையும் தாக்கி அழிப்பதற்கும், எத்தனையோ உயிர்களைக் கொல்வதற்கும் தேவையான தொழில் நுட்பங்கள் எல்லாவற்றையும் இவர்கள் எவ்வாறு துறைபோகக் கற்றார்கள்? விமானத்தைக் கடத்தி ஒட்டுவதற்கான பயிற்சியை எங்கிருந்து பெற்றார்கள்? மேற்குலகின் தொழிநுட்பத்திற்கும் இத்தாலியப் பிரதமர் கூறிய நவீனத்தில் இணைவதற்கு இஸ்லாமால் முடியாமைக்கும் இடையே எங்கு கோடு கீறுவது?
பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002 61

Page 34
அவ்வாறு இலகுவில் கோடு கீற முடியாது. ஈற்றில் முத்திரைகளும், பொதுப்படையான கூற்றுக்களும் பண்பாடு சார்ந்த துணிபுரைகளும் தங்கள் போதாமையை வெளிக்காட்டுகின்றன. உதாரணத்திற்கு ஒரு மட்டத்தில் நாகரிக முதிர்ச்சியற்ற காலத்தைச் சார்ந்த உணர்ச்சிகளும் மிக முன்னேற்றமடைந்த காலத்திற்குரிய தொழில்நுட்பமும் ஒன்றிணைந்து மேற்குலகு - இஸ்லாம் என்பவற்றிற்கும், கடந்தகாலம் - நிகழ்காலம் என்பவற்றிற்கும், நாம் - அவர்கள் என்பவற்றிற்கும் இடையே இறுக்கமான நெகிழாத அரண் செய்யப்பட்ட எல்லைக் கோடு என்ற எண்ணத்தைப் பொய்ப்பிக்கின்றன. அத்துடன் அடையாளம், தேசியத்தன்மை என்ற எண்ணக்கருக்களிடையேயும் இவ்வாறு நெகிழாத எல்லைக் கோடு இல்லை. இந்த எண்ணக்கருக்கள் பற்றிய விவாதங்களும் உடன்பாடின்மையும் எல்லையற்று நீடித்துக் கொண்டே போகின்றன. மணலிலே கோடுகளைக் கீறி, புனித யுத்தங்களை மேற்கொண்டு, அவர்களுடைய தீமையை எமது நன்மையால் எதிர்த்து, பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிந்து சில நாடுகளை முற்றாக அழித்துவிட வேண்டும் என்ற ஒருதலைப்பட்சமான முடிவு நிலைமையை சீர்செய்ய உதவாது. கூட்டு உணர்ச்சிகளைத் தட்டிஎழுப்புவது எவ்வளவு சுலபம் என்பதையே இத்தகைய உணர்ச்சிகள் காட்டுகின்றன. சிந்தித்தல், பரிசீலனை செய்தல், நாம் யதார்த்தத்தில் எதனைக் கையாள்கிறோம் என்பதை இனங்காணுதல் - இவை சற்று கடினமான முயற்சி. எமது உயிர்களும் அவர்களது உயிர்களும் ஒன்றோடொன்று பிணைந்திருப்பதை இத்தகைய முயற்சிகள் மூடி மறைக்கின்றன.
1999 ஜனவரி - மார்ச்சுக்கிடையில் காலஞ்சென்ற இக்பால் அகமட் குறிப்பிடத்தக்க மூன்று தொடர் கட்டுரைகளை பாகிஸ்தானில் வெளிவரும் மதிப்பு வாய்ந்த Dawn (உதயம்) என்னும் வார இதழில் வெளியிட்டார். அவரது கட்டுரைகள் முஸ்லிம் வாசகர்களுக்கு எழுதப்பட்ட போதிலும் அவர் மதம் சார்ந்த வலதுசாரிகளின் வேர்களை ஆராய்ந்தார். அக்கட்டுரைத் தொடரில் அவர் மதத்தை ஒரு போர்வையாகப் பயன்படுத்திய சர்வாதிகாரிகளையும் மதவெறியர்களையும் மிகக் காரசாரமாகக் கண்டித்தார். இத்தகையோர் தனிப்பட்டோரின் நடத்தையைக் கட்டுப்படுத்துவதில் தமது முழுப்புலனையும் செலுத்தியதால் இஸ்லாமை வெறுமனே தண்டனைச் சட்டக் கோவையாகக் (Penal Code) குறுக்கிவிட்டார்கள் என்றும், இஸ்லாமிய மதத்தில் காணப்படும் மனிதத்துவம், அழகியல், அறிவு நாட்டம், ஆன்மீகப் பக்தி
62 பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002

ஆகியவற்றைக் கிழித்தெறிந்து விட்டார்கள் என்றும் சாடினார். இதன் விளைவாக சமயத்தின் ஒர் அம்சத்தை முதன்மைப்படுத்தி, அதுவும் அதனை முழுச் சந்தர்ப்பத்திலிருந்து பிடுங்கியெடுத்து மற்ற அம்சத்தை முற்றாக தவிர்த்து விட்டார்கள் என்று சுட்டிக்காட்டினார். இதன் விளைவாக மதம் திரிபுபடுத்தப்பட்டது; மரபு சீரழிக்கப்பட்டது; அரசியலும் திரிபுபட்டது. இதற்கு உதாரணமாக அகமட் ஜிகாத்' என்ற பதத்திற்கு முன்பிருந்த செழுமையான பன்மைத் தன்மை வாய்ந்த அர்த்தங்கள் எவ்வாறு இழக்கப்பட்டு, அது எதிரிகள் என்று கருதப்படுபவர்களுக்கு எதிராகக் கண் மூடித்தனமாக மேற்கொள்ளப்படும் யுத்தம் என்ற அர்த்தத்தில் தற்பொழுது பயன்படுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டி, இதனால் இஸ்லாமிய மதம், சமுதாயம், பண்பாடு, வரலாறு, அரசியல் ஆகியவற்றில் முஸ்லிம்கள் காலம்காலமாக அனுபவித்து வந்ததை இன்றைய அர்த்தத்தில் இனங்காணமுடியாது என்றும் குறிப்பிடுகின்றார். அவருடைய முடிவு யாதெனில், நவீன இஸ்லாம் வாதிகள் ஆன்மாவைப்பற்றியல்ல, அதிகாரத்தைப்பற்றியே அக்கறை கொண்டுள்ளனர். அரசியல் நோக்கங்களுக்காக மக்களைத் திரட்டுவதில் கவனம் செலுத்துகின்றார்களே தவிர அவர்களின் துன்ப துயரங்களில் பங்குபற்றி அவற்றைத் தனிப்பதற்கோ, துடைப்பதற்கோ அல்லது அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கோ முனைவதில்லை. நவீன இஸ்லாம்வாதிகள் மிகக் குறுகிய காலத்துக்கு கட்டுண்ட அரசியல் நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளனர் என்று அவர் கூறுகிறார். யூத, கிறீஸ்தவ உரையாடல்களில் காணப்படும் இதையொத்த திரிபுகளும் உணர்ச்சிமிக்க
விடாப்பிடிக்கொள்கைகளும் நிலமைகளை மிகவும் மோசமாக்கியுள்ளன.
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாவலாசிரியர் கொன்றாட் (Conrad) என்பவர்தான் நாகரிகமிக்க லண்டனுக்கும் "இருளின் மையம்’ என்பவற்றுக்குமிடையே உள்ள வேறுபாடுகள் அதிதீவிர சூழ்நிலைகளில் விரைவில் அழிந்துவிடும் என்றும், ஐரோப்பிய நாட்டின் உச்சங்கள் ஒரு நொடிப் பொழுதில் காட்டுமிராண்டி நடைமுறை மட்டத்திற்கு வீழ்ந்துவிடும் என்றும் மிக நுட்பமாக உணர்த்தினார். இதே கொன்றாட்தான் The Secret Agent (1907) என்ற நாவலில் தூய விஞ்ஞானம் போன்ற வெறும் எண்ணக்கருக்களுக்கும் (இதைச் சற்று விரிவாக்கினால் இஸ்லாம் அல்லது மேற்குலகு என்ற பதங்களுக்கும்
பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002 63

Page 35
பொருந்தும்) பயங்கரவாதத்திற்கும் உள்ள உறவினை வர்ணித்தார். இது எவ்வாறு இறுதியில் பயங்கரவாதியின் ஒழுக்கச் சீரழிவிற்கு இட்டுச்செல்கின்றது என்பதையும் அவர் வர்ணித்தார். வெளித்தோற்றத்தில் ஒன்றோடொன்று பொருதும் நாகரிகங்களுக்கிடையே நெருங்கிய உறவுகள் இருப்பதை எம்மில் பலர் காண்பதில்லை. பிறாய்டும் (Freud), நீட்சேயும் (Nietzsche ) மிக கண்காணிப்புக்கு உட்பட்ட எல்லைகளுக்கு ஊடாக போக்குவரத்துக்கள் மிக எளிதாக நடைபெறுவதைச் சுட்டிக்காட்டினார்கள். ஆனால் பல அர்த்தங்களைத் தரவல்ல, நாம் பற்றிக் கொண்டுள்ள எண்ணங்கள் குறித்து ஐயுறவைத் தரவல்ல இந்த நெகிழ்ச்சியான எண்ணங்கள், நாம் இன்று எதிர்கொள்ளும் நிலைமைகளுக்கு ஏற்ற பொருத்தமான நடைமுறை சார்ந்த நெறிப்படுத்தல்களை தரவல்லவை அல்ல. எனவேதான் எமக்குத் தென்பளிக்கும் வகையில் போர் ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன. ஒரு புனிதப்போர், நன்மை எதிர் தீமை, சுதந்திரம் எதிர் அச்சம்; இந்த எதிர்ச்சோடிகள் ஹன்ரிங்டன் இஸ்லாமையும் மேற்கையும் எதிரெதிர் வைப்பதால் அவற்றிலிருந்துதான் செப்ரெம்பர் 11 ஆம் திகதி நடைபெற்ற தாக்குதலுக்குப் பின்னர் உடன்வந்த சில நாட்களில் உத்தியோகபூர்வ உரையாடல்களில் தமது பதங்களை கையாண்டனர். ஆனால் அதற்குப்பின்னர் அந்த உரையாடலில் இந்த அம்சம் கணிசமான அளவு குறைக்கப்பட்டது. இருப்பினும் அராபியருக்கும், முஸ்லிம்களுக்கும், இந்தியருக்கும் எதிராக நாடுமுழுவதும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்கள் என்பதும் அவர்களுக்கு எதிராக வெறுப்பைக் கக்கும் பேச்சும், நடவடிக்கையும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றை நோக்கும் போது இஸ்லாம் பற்றிய மாதிரி பெரும்பாலும் தொடர்ந்து பேணப்படுகின்றது என்பது தெளிவு. இது தொடர்வதற்கான இன்னொரு காரணம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் முஸ்லிம்களின் தொகை பெருகியிருப்பதே. இன்று பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, ஸ்பெயின், பிரித்தானியா, அமெரிக்கா, சுவீடன் முதலிய நாடுகளை எடுத்துப்பார்த்தால் இஸ்லாம் ஒரத்திலல்ல மேற்கின் மையத்தில் உள்ளது என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். ஆனால் அவர்களின் இருப்பினால் என்ன ஆபத்து? கூட்டுப்பண்பாட்டில் புதைந்திருப்பது முதல் அராபிய - இஸ்லாமிய வெற்றிகளின் ஞாபகமே. இவை 7 ஆம் நூற்றாண்டில் தொடங்கின. இதனால் புகழ்பூத்த பெல்ஜியன் வரலாற்று ஆசிரியர் ஹென்றி பிரென் (Henri Pirenne),
64 பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002

முகமதுவும் சார்லிமேனும் (Mohammed and Charlemagne 1939) என்ற குறிப்பிடத்தக்க நூலில் கூறியதுபோல் இவ்வெற்றிகள் பண்டைக் காலத்திலிருந்த மத்திய தரைக்கடற்பகுதியின் ஒற்றுமையை உடைத்தது. கிறிஸ்த்தவ உரோம கூட்டுச் சேர்க்கையை அழித்தது. வடக்கில் ஒரு புதிய நாகரிகத்தின் எழுச்சிக்கு வழிவகுத்தது. இப்புதிய நாகரிகத்தில் ஜேர்மனியும் கரோனியல் பிரான்சும் ஆதிக்கம் செலுத்தின. இந் நாகரிகத்தின் பணி மேற்குலகை அதன் வரலாற்று பண்பாட்டு எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதே என்று பிரென் கூறுவதுபோல் தெரிகின்றது. ஆனால் பிரென் தவறவிட்டது எதையென்றால் இப்புதிய பாதுகாப்பு அரண்களைக் கட்டியெழுப்பும் போது இஸ்லாமின் மனிதாபிமானத்திலிருந்தும் விஞ்ஞானத் திலிருந்தும் மெய்யியலில் இருந்தும், சமூகவியலில் இருந்தும் வரலாற்றியலில் இருந்தும், மேற்குலகு கடன் பெற்றது என்பதையே. சாளுமையின் உலகத்திற்கும், கிரேக்க பாரம்பரியத்திற்குமிடையே இஸ்லாம் ஏற்கெனவே தன்னை இடையில் நிலைநிறுத்திக் கொண்டது. ஆரம்பத்திலிருந்தே இஸ்லாம் உள்ளேதான் நின்றது. ஆனபடியால்தான் இத்தாலியின் பெருங்கவிஞரான தாந்தே முகமதுவைப் பெரிய எதிரியாகக் கருதிய போதிலும் நரகம்’ என்ற தனது நூலிலே தீர்க்கதரிசி முகமதுவை அதன் மையத்தில் நிறுத்தினார்.
மேலும் ஆபிரகாமின் மதங்கள் (Abrahamic Religions) எனப்படும் ஒரு கடவுட் கோட்பாடு என்ற முதுசம் இருக்கின்றதே. யூத மதம், கிறிஸ்த்தவ மதம் ஆகியவை தமக்கு முன்சென்ற மதங்களின் ஆவியினால் அலைக்கழிக்கப் படுகின்றன. முஸ்லிம்களைப் பொறுத்தவரை இஸ்லாம் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றி அதை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்த மூன்று மதங்களைப் பின்பற்றுவோரிடையே ஏற்பட்டுள்ள பல்வேறு போட்டிகள் குறித்து செம்மையான வரலாறு இதுவரையும் வெளிவரவில்லை. இம் மூன்று மதங்களும் பலஸ்தீனிய பிரச்சினையில் சம்பந்தப்பட்டு இரத்தம் சிந்தியமை இவற்றுக்கிடையே இணக்கம் ஏற்படாததற்கான மதம் சாராத ஒர் எடுத்துக்காட்டு.
மேற்குலகத்தாரும், முஸ்லிம்களும், ஏனையோரும் ஆழமான நீரில் நீந்துகிறோம். இந்த நீர் வரலாறு என்னும் சமுத்திரத்தில் ஒரு பகுதியாக இருப்பதால் அவற்றைப் பிரிக்க முனைவது பயனற்றது. இக்கால கட்டம் முறுகல் நிறைந்த காலகட்டமே. அதிகாரம் உள்ள அதிகாரமற்ற சமூகங்கள் பற்றிச் சிந்திப்பது
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 65

Page 36
மேலானது. அதே போன்று அறிவு அறியாமை பற்றிய மதச்சார்பற்ற அரசியல் பற்றி நினைப்பது மேலானது. நீதி, அநீதி பற்றிய சர்வதேச கோட்பாடுகள் குறித்துப் பேசுவது சிறப்பானது. இவற்றை விட்டு பொதுமைப் படுத்தப்பட்ட பெரிய கூற்றுக்களைத் தேடி அலைவது எமக்குச் சிறிது நேரம் திருப்திதரலாம். ஆனால் இதன் மூலம் நாம் எம்மை அறியவோ அல்லது அறிவுசார்ந்த நெறியில் ஆய்வுகளை மேற்கொள்ளவோ முடியாது. நாகரிகங்களின் மோதல் என்பது மிகவும் கவர்ச்சிகரமான மோசடி, உலகங்களுக்கிடையே போர் (War of the World) என்பது போல இத்தகைய சொற்பிரயோகத்தால் நாம் எமது தற்காப்பு சுயபெருமையை மேலும் அரண்செய்கிறோமே தவிர, எமது காலகட்டத்தில் ஒன்றோடொன்று பிணைந்திருக்கும் தன்மையை ஆய்ந்தறிவதற்கு அது உதவாது.
தமிழில்: ஏ. ஜே. கனகரத்தினா
66 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002
 

இலங்கையில் இடதுசாரி இயக்கம் தோல்வி கண்டுள்ளதா?
செல்வி திருச்சந்திரன்
மு. கார்த்திகேசன் நினைவுப் பேருரை கொழும்பு இராமகிருஷ்ணமிசன் மண்டபம் 08 செப்டம்பர் 2002
முதலில் தன்னுணர்ச்சி நிலையில் என்னுடைய இரண்டு கருத்துக்களைக்கூற விரும்புகிறேன். கார்த்திகேசன் நினைவுப்பேருரையை ஒரு செயற்திட்டமாக முன் வைத்து அதைத் தொடக்கி நடத்த முற்பட்ட, அவரது கருத்தியலைத் தெரிந்த அபிமானிகள், ஆதரவாளர்கள் என்ற மட்டத்தில் இதை முன்னெடுத்தவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
இரண்டாவது இந்நிகழ்ச்சியின் தொடக்கத்திற்கு என்னை இனங்கண்டு இந்தப் பேருரையை நிகழ்த்தக் கேட்டமையை ஒரு பேறாகவும் பெருமையாகவும் நான் நினைக்கிறேன். அதையிட்டு எனக்குள் ஒரு பேரானந்தமும் மிடுக்கான ஒரு பெருமையும் தோன்றுகிறது. நினைவுப்பேருரை நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
கார்ல்மார்க்ஸ் இறந்த பொழுது, 1883 பங்குனி மாதம் 17ம் திகதி அவரது சவ அடக்கத்தில் பதினொரு பேர்கள் மட்டுமே சமூகமளித்திருந்தனர். அவரது ஆத்மீகத் தோழர் ஃபிரட்றிக் எங்கல்ஸ் அங்கு நடத்திய இறுதி உரையில் “இவரது பெயரும் இவரால் எழுதப்பட்டவைகளும் காலாதி காலமாக நின்று நிலைக்கும்” என்று கூறினார். இது தீர்க்கதரிசனமான வார்த்தைகள். ஆனாலும் அந்தப் பதினொரு பேர்கள் என்றதின் தாற்பரியத்தை நாம் சற்று ஆழமாகச் சிந்திக்கவேண்டும். மார்க்ஸின் தத்துவத்தை அவரது சிந்தையினில் உதித்த சீரிய கருத்துக்களை விளங்கினோர், ஜீரணித்தோர், ஆதரிப்போர் என்று இருப்பவர்கள் அன்றும் இன்றும் மிகச்சிலரே. சாத்தானின் கருவி என்றும், பேய்களால் பீடிக்கப்பட்டவர் அவர் என்றும் கூறியவர்களை விட அவரை விளங்கிக்கொள்ள முடியாதவர்களே அநேக எண்ணிக்கையில் உள்ளனர். இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுது இடதுசாரிக் கொள்கைகளைக் கடைப்பிடிப்போர் சிலராகத்தான் எங்கும், எப்பொழுதும், இருந்தார்கள்
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 67

Page 37
இருக்கிறார்கள் என்பதனை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நடந்து முடிந்த சில வரலாற்றுப் புரட்சிகளின் பெறுபேறுகளும் கூட சிதைவுற்றுப்போய்விட்டது துரதிஷ்டமே. ஆனால் அப்புரட்சிகளை உந்திய சிந்தனைப் போக்கும் கருத்தியலும் நின்று நிலைக்கும் என்பது உண்மை.
இலங்கையின் வரலாறும் ஏனைய உலக வரலாற்றுப் போக்குகளை நினைவு படுத்துவதாக உள்ளது. மார்க்ஸிச கொள்கையில் பிடிப்பும், கடைப்பிடிப்பும் ஸ்திரமான தன்மையை இழந்து ஒரு அசைவியக்கப் போக்கை உலகளாவிய ரீதியில் கொண்டுள்ளது. அத்தன்மை எம் நாட்டிலும் இருக்கிறதாக நாம் கொள்ளலாம். தனது காலத்திலேயே சிலர் தன்பெயரை உபயோகித்து மார்க்சிஸவாதம் என்ற அடிப்படையில் எழுதியதை வாசித்த மார்க்ஸ் தன் கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டிருப்பதை உணர்ந்து அப்படியாயின் நாம் மார்க்ஸிசவாதியே அல்ல, என்று கூறியது இதன் உண்மையைப் புலப்படுத்தும்.
இடதுசாரி என்று நாம் இங்கு எதனைக் கருதுகிறோம்? இடதுசாரி என்பதற்கு வரலாற்றுப்பொருள் ஒன்று உண்டு. பிற்போக்காளர்களிடமிருந்து விலகி வேறுபட்டு இடது பக்கம் போய் சிலர் இருந்தார்கள். அவர்கள் lefists எனப்பொதுவாக அழைக்கப்பட்டனர். அதனால் அதன் அர்த்தம் சிலவற்றிலிருந்தும், சிலரிடமிருந்தும் வேறுபடல் என்று ஒரு மறுப்புத் தொனியை அடக்குவதாகவே தோற்றம் பெற்றது.
The individuals and groups pursuing generally egalitarian political goals by reformist or revolutionary means in opposition to broadly conservative established or reactionary interests என ஆங்கிலத்தில் இதற்கு விளக்கம் கூறுவர்.
இடதுசாரி என்பது பழமைவாத அல்லது பிற்போக்குவாத நலன்களுக்கு எதிராக, புரட்சிகர அல்லது சீர்திருத்த வழிமுறைகள் மூலம் சமத்துவ அரசியல் குறிக்கோள்களை முன்னெடுக்கும் தனி ஆட்கள் அல்லது குழுக்களைக் குறிக்கும் என்று நாம் இதனை மொழி பெயர்க்கலாம். இப்பிரயோகம் பிரான்சியப் புரட்சி தொட்டு சோஷலிஸ் அல்லது முற்போக்கு இயக்கங்களைக் குறிப்பதாகவே உபயோகிக்கப்பட்டு வந்தது. இந்தப்பதத்தின் அர்த்தம் அடிப்படையில் ஒன்றாக இருந்தாலும், மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், டிரஸ்கி, மாவோ, சேகுவரா போன்றோர் முன்வைத்த கோட்பாடுகளை உள்ளடக்குவதாக பிற்காலத்தில் அதன் அர்த்தப்பாடு விரிவடைந்தது. ஆனால்
68 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

அத்தத்துவத்தின் செயற்பாடுகளைப் பல மட்டங்களில் நாம் இனங்காணலாம், வரிசைப்படுத்தலாம். அதற்கு ஒரு திட்டவட்டமான வரையறையோ வரைவிலக்கணமோ கூறமுடியாது. ஒரு கருத்தியலை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அதன் பிரமாணங்களும் நடைமுறை செயல்முறை மாதிரிகளும் பெரிதும் வேறுபட்டன. அந்தக் கருத்தியலை உள்வாங்கியவர்கள் பல்வேறு நாமகரணங்களை அதற்கு அளித்தனர். மார்க்சிஸம் என்பதை அடிப்படையாகக் கொண்டு லெனினிஸம் ட்றொட்ஸ்கியிசம் மாஒஇசம் என சீனாவையும் ரஷ்யாவைப் பின்பற்றிய கருத்தியல்களும் எம்மிடையே முட்டி மோதின. இந்த மோதல்களில் அடிப்படைக் கொள்கைக்கான சோஷலிஸம், மார்க்சிஸம் என்ற நிலை மறைந்து ஒளிந்துகொள்ள நடைமுறை செயற்திட்டங்கள் முன்னுக்கு வந்தன. பிரிவுகளும் பிளவுகளும் எமது இடதுசரி இயக்கத்தில் முக்கிய அம்சங்களாகின. அவை இயக்கத்தின் சாபக்கேடா, இயக்கத்தைப் பின்னடையச் செய்ததா அல்லது கருத்து மோதல்கள் முற்போக்கானவையென்று கணிப்பதா என்பது தீர்க்கப்படாத விடயமாகவே இருக்கும். ஆனாலும் அதற்குப் பலியானது (vicim, Casuaty) இடதுசாரி இயக்கமே. இடதுசாரி இயக்கம் எதைக் குறிக்கிறது? அதில் அடங்கிப் போகும் போக்குகள் யாவை என்ற கேள்வி முக்கியமானது.
கைத்தொழில் தேசியமயப்படுத்தல், நிலம் காணி உடமைகளைப் பங்கிடுதல், பொருளாதார மூலவளங்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல், வருமானவி போன்றவற்றை கீழ் வர்க்கத்தில் உள்ளோருக்குச் சாதகமாக்குதல், கல்விப்பேற்றுச்சாதனங்கள் வைத்திய உதவி போன்றவற்றை எல்லோருக்கும் பகிர்ந்தளித்தல், சாதி வர்க்க நிலையின் கீழே உள்ளோருக்குச் சலுகைகள் வழங்குதல் போன்ற பல செயற்திட்டங்கள் இடதுசாரி என்ற கருத்தியலில் அடங்கும். மூன்றாம் உலகநாடுகளில் தொழிலாளர்-விவசாயிகள் நலன்கள் உட்பட்ட மனித உரிமைக் கொள்கைகளும் உலகமயமாதலுக்கு எதிர்ப்பு என்ற கொள்கைகளும் உள்ளடக்கப்பட்டன. இப்படிப் பரந்து விரிந்த செயற்திட்டங்களும் கருத்தியலும் சமதர்மம், சோஷலிஸம் என்பதன் விவாக்கமே என்பதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். லிபரல் கருத்தியலும் இதனுடன் மோதுவது வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஒன்றாக வந்துவிட்டது. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற கோஷத்தில் உள்ள சர்வாதிகாரத்தின் அர்த்தப்பாடு குறையத்தொடங்க அதிகாரப் பகிர்வு (power Sharing) தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. சமூக ஜனநாயகம் (Social Democracy)
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 69

Page 38
என்ற ஐனநாய கத்தையும் சோஷலிஸத்தையும் இணைத்த ஒரு பெருங்கோட்பாடு ஒன்று இடது சாரிகளால் ஏற்கப்பட்டுவிட்டது. இதன் அடிப்படையிலேயேதான் நாமும் இடதுசாரி என்பதனைப் புரிந்து கொள்ளவேண்டும். இப்புரிதலையே நானும் இடதுசாரித் தத்துவம் என்று ஏற்றுக்கொள்ளுகிறேன்.
இடதுசாரி என்ற பதத்திற்கு விளக்கம் கொடுத்தபின் என்னுள் எழும் இரண்டாவது முக்கிய கேள்வி எங்குதான் இடதுசாரி இயக்கம் பூரண வெற்றியடைந்தது என்பதாகும். இப்படிக் கேட்கும்போது எண்பதுகளில் மார்க்சிஸம் அழிந்துவிட்டது என்று குதூகலிக்கும் குரலுடன் இந்த என் கேள்வியையும் தயவு செய்து சேர்த்து விடாதீர்கள். கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் சிதறல்களையும் சோவியத் யூனியனின் வீழ்ச்சியையும் முன்வைப்பேர் அங்கு தோன்றிய அரச அதிகாரத்தையும் உள் முரண்பாடுகளையும் கவனத்திற் கொள்ளாமல் இப்படி ஒரு முடிவுக்கு வந்தது கவலைக்குரியது. இதனால் ஒரு சமத்துவ சோஷலிஸ சமுதாயத்தைக் கட்டி எழுப்ப முடியாது என்பதல்ல, என்னுடைய இந்தக் கேள்விகளின் அர்த்தப்பாடு. அதற்குரிய காரணங்களைத் தேடுவதும் அலசுவதும் அவற்றை எதிர்காலத்தில் எப்படித் தடுக்கலாம் என்பதும் இவ்விசாரணை பற்றிய எமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
அதேசமயம் ஏகாதிபத்தியத்துவத்தையும், காலனித்துவத்தையும், புதிய காலனித்துவத்தையும் (neocolonialism) இடதுசாரி இயக்கங்களின் வீழ்ச்சிக்குக் காரணமாகக் கொள்வோருடன் எனக்கு உடன்பாடில்லை. இத்தகையேர் சமூக இயக்கத்தை மாறுபாடற்ற நிலையான (static) ஒருவஸ்து என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார்கள். எப்போதும் மாறித்தேறி பின் மாறி வரும் ஒரு நடைமுறைத்தொடர் என்ற ரீதியில் அதை ஒரு dynamic process ஆகப்பார்க்கத் தவறிவிட்டனர். எனது இவ்வுரையின் மையக்கட்டுக்குள் நான் வரும் இவ்வேளையில் இரண்டு கேள்விகளையும் பிரித்து இரண்டு பகுதிகளாக இத்தலைப்பை ஆக்கி விடை காண நாம் முயலலாம் என நினைக்கிறேன்.
முதலாவதாக எம் நாட்டில் எமது சமூகப் பொருளாதார கட்டுமானங்களுக்கூடாக அரசியல் நிலைமைகளின் பாற்பாட்டு இயக்கரீதியில் இடதுசாரிகள் தோல்வி கண்டார்களா? ஆம். ஆயின், அதற்குரிய காரணங்கள் யாது என்பதை ஒரு பகுதியாகவும் இடது சாரிக் கருத்தியல் எம் நாட்டில்
70 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

கொள்கை ரீதியில் சமூகக்கலாச்சாரப் பொருளாதார அரசியல் ரீதியில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லையா? ஆம் ஆயின், எப்படிப்பட்ட மாற்றங்களை அது செய்துள்ளது என்பதை வரலாற்றுக் கண்ணோட்டத்திற் பார்ப்பதை இரண்டாம் பகுதியிலும் எடுத்து ஆராய விளைகிறேன்.
இடதுசாரிகளின் கருத்து மோதல்களும் பிளவுகளும் இயக்கத்தைப் பலவீனப்படுத்தியது என்பது உண்மையே. 50 களில் குருஷேவும், மாவோவும், ரஷ்யாவிலும் சீனாவிலும், இருந்து எடுத்தோதிய பிரணவ மந்திரங்கள் இடதுசாரி உலகம் பூராவும் ஒரு இயக்கப் பிரிவுகளைத் தோற்றுவித்தது. நம்நாட்டு உள் விவகாரங்களில் சாதிப் பிரச்சனைகள், தொழிலாளர், விவசாயிகள், பெண்ணடிமை நிலை, போன்றன அவற்றின் பரிமாணங்களுக்கு இணங்க அவற்றை அறிவு பூர்வமாகவும், இயக்கரீதியிலும் பார்க்கப்படவில்லை. சாதியும் வர்க்கமும் இணைந்துருவாக்கிய சமூகப் பொருளாதாரக் கட்டுமான இயல்புகளைக் கண்டறிய முற்பட்டோர் ஒரு சிலரே. இடதுசாரி இயக்கத்தில் இது ஒரு குறைபாடாகவே இருந்தது. சாதிப் பிரச்சனை இன்றும் எம் சிறு நாட்டில் தீவிரமாக இயங்குவதற்குக் காரணமாக இடதுசாரிகளில் இயக்கரீதியான நடைமுறைகள் குறைவாக இருந்தமை ஒரு காரணம் என்பதையும் நாம் தயங்காமல் முன்வைக்கலாம். ஒரு சில போராட்டங்களை மாத்திரம் நடத்திவிட்டு அதன் அடிநாதத்தைத் தொடாமல் வேரறுக்காமல் விட்டுவிட்டார்கள். செயற்திட்டங்கள் அதற்குப் போதிய அளவில் எடுக்கப்படவில்லை. இன்று யாழ்ப்பாணத்தில் தமிழன் என்ற ரீதியில் அடிவாங்கி, உதைபட்டு, வீடு மனை பணம் சொத்து இழந்து அகதிகள் முகாமில் வசிக்கும் தமிழர்கள், நளவர் அகதிமுகாம், பள்ளர் அகதிமுகாம், என்ற சாதி வரிசையில் சாதிப்பேரில் பிரிக்கப்பட்டு நிற்கின்றனர். தமிழ்த் தேசியத்துக்கப்பால், வர்க்கத்துக்கப்பால், சாதியே இன்று தமிழர் இருப்பை நிர்ணயிக்கிறது என்பதற்கு இது ஒரு சாட்சி. இவ்வகதி முகாம்கள் சமூகப் பொருளாதாரக் கட்டுமானங்களுக்கூடாக இயங்கும் இந்த சாதிய இருப்பை, அறிவு நிலையில் விளங்கிப் புரிந்து அதற்கேற்ற செயல்முறைத் திட்டங்களும் பிரச்சார உரைகளும் போதியளவு எடுக்கப்படவில்லை என்பது
உண்மையே.
சமத்துவமே சோஷலிஸ், மார்க்சிஸ் வாதங்களின் அடிப்படையாகும். வர்க்க ரீதியில் ரஷ்யாவும் சீனாவும் உலகத்தொழிலாளர் புரட்சியைப்பற்றிப் பேசினால், நாம் வர்க்கத்தையும் சாதியையும் இணைத்து ஒரு கொள்கைப்பிரகடனம் அல்லது அறிவுசார்ந்த ஒரு வரைவிலக்கணத்தை
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 71

Page 39
வகுத்து, அதற்கேற்றவாறு செயற்பட முனைந்திருக்க வேண்டும். வர்க்க முரண்பாடு தீர்ந்தால் சாதிமுறைமகளும் அழிந்துவிடும் என்ற வாய்ப்பாட்டு விளக்கம் ஒன்றை எமது சூழலில் நாம் கொடுக்கமுடியாது. ஆலைகளும் தொழிற்சாலைகளும் தோன்றாத காலகட்டத்தில் வர்க்கம் பேசுவதில் அதிகம் அர்த்தமிருக்காது. கோட்பாட்டு ரீதியில் நாம் அதை விளங்கி சாதியையும் விவசாயிகளையும் முன் வைக்கவேண்டிய ஒரு காலகட்டம் பொதுவாக நம்நாட்டுத் தமிழ்ச்சூழலிலிருந்தது. இங்கு விவசாயிகளை (Peasants) ஒரு முக்கிய கண்ணோட்டத்தில் நாம் பார்க்கவேண்டும். நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் 6561& Tifa,6ft 66.15mgh (The peasant question) Lorridorsig. 52(5 முக்கிய பிரச்சனையாக இருந்தது. கம்யூனிஸ்ட்திட்ட அறிக்கை (Communist Manifesto) பின்பகுதியில் தோன்றிய இது அவரது பிற்கால எழுத்துக்களில் அதிமுக்கியத்துவம் பெற்றது. அவர்களை எப்படிப் புரட்சிப்பாதையில் ஒழுங்காற்றுப்படுத்த வேண்டும் என்பது பற்றி தீவிர சிந்தனை எம் மத்தியில் இருக்கவில்லை. முயற்சிகள் தொடர்ச்சிமுறையில் கடைப்பிடிக்கப்படவில்லை.
கலினின் (Kalinin) என்ற ருஷ்யத்தலைவர் கூறியபடி விவசாயி என் போனுக்கு இரண்டு ஆத்மாக்கள் என்பதும் சரியே. ஒன்று நடத்துவோனுடையது- Proprietor- மற்றது தொழிலாளியினுடையது. வர்க்க ரீதியில் பார்த்தாலும் விவசாயிகளிடையே குடும்பத்தில் பல வர்க்கங்கள் உண்டு. The Class Struggle in France (1848-1850) 6Tsip BJT656) 6 Cith மார்க்ஸின் கூற்று மிகப்பொருத்தமாகப் படுவதால் அதை அப்படியே இங்கு தருகிறேன்.
The French workers could not take a step forward, could not touch a hair of the bourgeois order, until the course of the revolution had aroused the mass of the nation, the peasants and petty bourgeois standing between the proletariat and the bourgeoisie, against this order, against the rule of capital, and had forced them to attach themselves to the proletarians as their protagonists.
புரட்சிப் பாதை நாட்டின் மக்கள் கூட்டமான விவசாயிகளையும் தொழிலாளர்க்கும் நடுத்தர வர்க்கத்திற்கும், இடையில் உள்ள கீழ்த்தர வர்க்கத்தோரையும், முதலாளித்துவ ஆட்சிக்கெதிராக அதன் நடைமுறை
72 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

விதிகளுக்கு எதிராகத் தொழிலாளர்களின் முக்கிய பங்காளிகளாக இணைத்துக் கொள்ள கட்டாயப்படுத்தப்படும் வரை, பிரான்சிய நாட்டுத் தொழிலாளர் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. நடுத்தர வர்க்க நடைமுறை விதிகளின் விளிம்பைக்கூட அவர்களால் தொடமுடியவில்லை.
எமது இடதுசாரிகள் கோட்பாட்டளவில் இதன் தாற்பரியத்தைப் புரிந்து கொண்டார்கள். ஆனால் நடைமுறைச் செயற்திட்டங்களில் போதிய அளவில் ஈடுபாடிருக்கவில்லை. ஏட்டுச் சுரைக்காயாகவே இது போய்விட்டது. சாதியில் பிரிந்து நின்ற தொழிலை அடிப்படையாகக் கொண்ட பிளவுகள் தச்சன், கொல்லன், மீனவன், பறையன் என்ற சாதிகளும் விவசாயத் தொழிலாளராகப் பிரிந்து நின்ற கோவியன், நளவன், பள்ளன் போன்றோரையும் புரட்சிப்பாதையில் இழுப்பது கஷ்டமாயிருந்தாலும், அடிப்படைத் தத்துவமான இந்த சாதி sisus, Tui 605 (caste question), 3L-5 girfissi false consciousness நிலைக்குத் தள்ளி அது ஒரு பொய்மையான உணர்ச்சி நிலை என்று பிழையாக விளங்கிக் கொண்டுவிட்டனர். இன்று தலித் போராட்டமாக, பூதாகாரமாக வெளிவந்திருக்கும் இயக்கத்தை நாம் வர்க்க நிலையில் மட்டும் பார்க்க முடியுமா? இது புரட்சிப்பாதையும் பிளவுபட்டுவிட்டது. இதை நாம் நவீனத்துப் பின்னயத்தின் சாபக்கேடு என்று லேசாக ஒதுக்கி விடமுடியாது. ஏனென்றால் பல மானிட ஜன்மங்களின், ஒதுக்கப்பட்ட, சீரழிக்கப்பட்ட, கொடுமைப்படுத்தப்பட்ட, ஆத்மாவின் குரல்கள் அதில் பிரதிபலிக்கின்றன. அதை வர்க்க விளக்கத்துடன் இணைக்க இடதுசாரிகள் தவறிவிட்டார்கள்.
செயற்திட்டங்களிலிருந்தும் சற்று விலகி இடதுசாரிகளாக இயங்கிய, உணர்ச்சியும், அறிவும் உள்ள இடதுசாரி அரசியல்வாதிகளைப் பார்த்தால், மிகவும் ஒரு துன்பமான படலம் விரிவதைப் பார்க்கலாம். யாழ்ப்பாண வாலிபர் சங்கம்தான் இலங்கையின் இடதுசாரிகளின் இயக்கத்துக்கு முன்னோடி என்று சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் சிலரும், சீலன் கதிர்காமரும் கூறியுள்ளார்கள். அதன் படிக்கட்டுகளைத் தாண்டியே பல பிற்கால இடதுசாரிகள் தங்கள் பயணத்தைத் தொடங்கியதாகக் கூறுவர். யாழ்ப்பாணத்தில் சிற்றம்பலம், தர்மகுலசிங்கம், பி.நாகலிங்கம், வைத்திலிங்கம், கார்த்திகேசன் போன்றோர் இதன் தாக்கத்துக்குட்பட்டவர்கள். ஆனால் அந்த முன்னோடிகளின் தீர்க்கதரிசனம், தீவிரம், கொள்கைப்பிடிப்பு, இலட்சியங்கள், யாவும் அந்தப் பரம்பரையுடன் கரைசேர்ந்துவிட, பிற்கால இடதுசாரி முற்போக்குவாதிகளும், சந்தர்ப்பவாதிகளாக, அரசியல் இலாபம் தேடுவோராக மாறிவிட்டார்கள்.
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 73

Page 40
அமிர்தலிங்கம், ஆனந்தசங்கரி, சிவசிதம்பரம் தீவிர கொம்யூனிஸ்டாக இருந்த வி.பொன்னம்பலம் போன்றோர், இடதுசாரிக் கொள்கைகளைத் துறந்து குறுகிய அரசியல் நோக்குடன் தங்கள் அரசியல் பயணத்தைத் தொடங்கிய காலம்தொட்டு, இது இடதுசாரி இயக்கத்துக்கு ஒரு சாபக்கேடாகவே இருந்துவந்தது. தலைவர்களின் அரசியல் நேர்மை இல்லாவிட்டால் எந்த ஒரு இயக்கத்தையும் கட்டி எழுப்ப முடியாது. மக்கள் நம்பிக்கை அருகிக்கொண்டே வரும். அந்த அரசியல் தலைவர்களின் கொள்கை மாற்றம் இடதுசாரி இயக்கத்தைப் பிளவுபடுத்தி இயக்கத்தின் பலத்தைக் கெடுத்துவிட்டது. இப்பண்பு எமது 50 ஆண்டுகள் குறுகிய வரலாற்றில் அடிக்கடி தோன்றியது. முற்போக்காளர்கள் என்று தம்மைக் கூறியவர்கள் சாதி ஆசாரம் பார்ப்போராகவும் மாறிவிட்டனர். தாழ்ந்தோர் என்று கருதப்படும் தமிழ்மக்கள் அகதி முகாம்களில் வாடி வதங்கும்போது, மிகமிகப் பெரிய அனுமான் சிலையைக் கட்டி எழுப்பித் தூக்கி கடல் கடந்த நிலையில், இச்சடங்குகள் தங்கள் தங்கள் கர்ம பலத்தைப் போக்குவதற்காகச் செய்யப்படுகிறது என்று அவர்கள் கூறும்போது எப்படித்தான் இடதுசாரிக் கொள்கைகளில் மக்களுக்கு நம்பிக்கைவரும்?
அடுத்ததாக நான் கூறப்போகும் விடயம், இடதுசாரி இயக்கம் எப்படித் தேசிய வாதத்திற்கும் தேசியம் என்பதை ஒட்டி எழுந்த கருத்தியலுக்கும் அடி பணிந்துவிட்டது என்பது ஆகும். இடதுசாரித் தத்துவம் தேசியத்தில் தன்னை இழந்துவிட்டது. சிங்களத் தமிழ்த் தலைவர்கள் இருபாலாரும் ஒத்து ஒருங்கே தேசீயக் கொடிக்குக் கீழ் ஒன்று திரண்டது நம் நாட்டின் சோகமான வரலாற்றுத் திருப்பம்.
எதுவித சந்தேகத்துக்கிடமளியாமல் பாதகன் அல்லது ஒரு வில்லன் என்று கூறக்கூடிய சதாம் ஹுசைன், மிலோசேவிக், பின்லாடன் போன்றோர் தோன்றும்போது, எந்தவொரு ஜனரஞ்சக எண்ணப்போக்கும் வலது சரிகளினால் தங்களுடைய செயலி நோக்கை கீ காரணமாகக் கொணி டே முன்னெடுக்கப்படுகிறது என்பதை மிக நன்றாகவே அறிந்திருந்தும், தனிமைப்படுத்தப்பட்ட, (அமெரிக்க) இடது சாரிகள் தங்களது (தேசியக்) கொடிக்குக் கீழ் ஒன்று திரண்டது விநோதமான செயல் அல்ல. திடீரெனத் தோன்றும் இந்தத் தேசிய ஐக்கிய உணர்வு முற்றாய் வந்த மணஉறுதியற்ற ஒரு அனுபவம். இது ஒரு பழக்கமாக வழக்கமாக, வந்துவிட்டதா என்று Gal (gascissi (Kurt Jacobson) 6676.jálprit. 74 பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002

(When an indisputable villain like Saddam Hussein or Milosevic or Bin Laden turns up, it is no wonder many lonely leftists rally round the flag even if they know very well that every popular notions is processed by the right to serve its own purpose. This sudden feeling of national unity is a giddy experience. Has it become habit forming?) (Kurt Jacobsen) Economic and Political Weekly (January 19, 2002)
வர்க்க முரண்பாடுகளுக்கு மேலாகச், சாதீய முரண்பாடுகளுக்கு மேலாக, இனத்துவம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. ஒரு இனம் இன்னொரு இனத்துக்கு அநீதி இழைக்க, ஒடுக்க, கொடுமைப்படுத்த, உரிமைகளைப் பறிக்க, இனவாதம் உருவெடுக்க அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட இனம் தனது தனித்துவம், தனது இருப்பு, தன் மொழி, தன் சமயம், என்பன தனது இருப்பிடத்தின் தன் பண்பாட்டில்தான் தங்கி இருக்கிறது என்ற, ஒரு கிறங்கு நிலைக்குத் தன்னைத் தள்ளி விடுகிறது. இக்கால கட்டத்தில் இடதுசாரிகள் தாமும் விதி விலக்கல்ல என்று காட்டிக்கொள்ளத் தொடங்கினர் என்று கூறுவது, சரியாக இருந்தாலும் சோஷலிஸ் மார்க்சிஸ் வாதம் இனம், மொழி, பண்பாடு போன்றவற்றுடன் கூட பெண்ணுரிமையும் கோட்பாட்டு ரீதியில் பின்னுக்குத் தள்ளிவிட்டதையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். மக்களின் அபிலாஷைகள் விருப்புக்கள் நாளாந்த வாழ்க்கை அனுபவங்கள் என்ற ரீதியில் மொழி பண்பாடு போன்றவற்றில் ஈடாட்டம் மக்களின் தன்னுணர்ச்சி நிலையில் இரண்டறக்கலந்ததொன்று. வர்க்க முரண்பாடு தீர்க்கப்பட, வயிற்றுச் சோறு கிடைக்க, மேற் கூறிய பிரச்சனைகள் தனி வழியே தீர்க்கப்பட்டுவிடுமா? அவை போலி உணர்வுகள் (false consciousneSS) என்று கூறுவதை மறுதலிக்கும் விதத்தில் நமது வரலாறு ஒரு புதிய உண்மையை இடதுசாரிகளுக்குப் புகட்டிவிட்டது. இன உயர்வு, மனித உரிமைகள், சுயகெளரவம், (dignity) மானம், மரியாதை என்பவற்றுடன் சேர்ந்து இனத்துவ தேசியம் (ethnic nationalism) என்பது முக்கிய கவனத்திற்கெடுக்க வேண்டிய ஒரு நோக்கில் வந்துவிட்டது. இதன் மறு உருவாக்கமாக மத அடிப்படைவாதம், இனத்துவேஷம், மனித உரிமை மறுப்பு, இன ஒடுக்கல், போன்றன தோன்றியதும் எமது வரலாற்றுக் காலகட்டத்தில் ஒரு துரதிஷ்டவசமான உண்மை.
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 75

Page 41
இந்த இனவாத சக்திக்குள்ளும் இனத்துவேஷக் கருத்தியலுக்கும் இடதுசாரிகள் விழுந்துவிட்டார்கள். முன்னய இடதுசாரிகள் “தமிழ் அரசு” பேசியதும் சோஷலிசத்தில் தந்தை என்று கூறப்பட்ட பிலிப் குணவர்தனா, அவரது மகன் தினேஷ் குணவர்தனா, இ.பி.ஆர்.எல்.எப். இன் அதிதீவிர உறுப்பினராக இருந்த டயான் ஐயதிலகா போன்றோர் சிங்கள தேசியவாதத்திற்குப் பலியாகிவிட்டனர். சுசந்த குணதிலகா போன்றோர் வாலையும் தலையையும் அங்கங்கு தேவைப்படும் பொழுது காட்டுவர். இவை யாவும் கசக்கும் உண்மைகள். இவை இடதுசாரி இயக்கத்தை வலுவிழக்கச் செய்துவிட்டன. இந்த முன்னோடிகளைப் பின்பற்றி அவர்களது “தோழர்களும்” பாதை மாறிவிட்டார்கள். இனத்துவேஷம் என்பது தேசியவாதத்தின் மறுபக்கமாக மாறிவிட்டது. சிங்களவர்களைப் பொறுத்தும் தமிழர்களைப் பொறுத்தும் இது உண்மையான ஒரு விடயம் என்பதை நாம் மறுக்க முடியாது. மதம் மட்டுமல்ல இனத்துவமும் ஒரு அபினாக மாறிவிட்டது. சோஷலிஸத்திற்கு எதிரியாகவும் மாறிவிட்டது. இன உணர்வை முற்போக்கான ஒரு கருத்தியலில் அடக்கி உரிமை கோரும் ஒரு விழுமியமாக ஆக்காமல் இனத்துவேஷம் என்ற சகதிக்குள் மக்கள் விழுவதை இடதுசாரிகளால் தடுக்கமுடியவில்லை. காலனித்துவ எதிரியாக இருந்த தேசியத்திற்கும் உள்நாட்டுத் தேசியத்திற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் போன்றாகிவிட்டது. இப்போக்கைத் தடுத்து நிறுத்த இடதுசாரிகளாலும் முடியவில்லை. “உலகத் தொழிலாளர்களே ஒன்றிணையுங்கள் புரட்சிப்பாதையில்” என்ற கோஷம், உள்நாட்டு முரண்பாடுகளைத் தீர்த்து முற்போக்குப் பாதையில் செலுத்த உதவவில்லை.
இடதுசாரிகள் என்று தங்களை அரசியற் கட்சி மட்டங்களில் கூறிக்கொண்டோர் என்றும், இடதுசாரி அறிவாளிகள், கட்சியிலிருந்து விலகி இருந்தோர் என்றும், இடதுசாரிகளில் இருபகுதியினர் உண்டு. இதில் அறிவாளிகள் பல விமர்சனங்களை முன் வைத்தனர். அவை பொதுவாக எடுபடவில்லை. வரலாற்றுரீதியில் இடதுசாரிக்கட்சிகள் முதலாளித்துவ இனவாதக் கட்சிகளுடன் அரசியற்கூட்டுச் சேர்ந்தது பலவிதங்களில் இடதுசாரி இயக்கத்தின் வீழ்ச்சிக்கு வழி கோலியது. ஆவணி 1953ல் மக்களை ஒன்று திரட்டி வழிப்படுத்திப் பொருளாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து இடதுசாரிகளால் பொது வேலை நிறுத்தம் நடாத்தப்பட்டது. சிறிலங்கா சுதந்திரக்கட்சி பெளத்தத்தையும் சிங்கள மொழியையும் முன்வைத்து தோற்றம் பெற்றது. இது சிங்கள மக்களை வேறு திசையில் திருப்பியது.
76 பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002

இது இடதுசாரிகளுக்குப் பெரும் சவாலாக இருந்தது என்பது உண்மையே. ஆனாலும் அவர்கள் இச்சந்தர்ப்பத்தில் தேர்ந்தெடுத்த வழிப்பாதை ஒரு வரலாற்றுத் தவறைத் தோற்றுவித்தது. என்.எம்.பெரேராவும், பிலிப் குணவர்தனாவும், ஐக்கிய தேசியக் கட்சியையும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியையும் தேடி ஓடியபொழுதே இத்தவறு நடந்தது. பின் இது ஜனதா விமுக்தி பெரமுனையின் தோற்றத்திற்கும் இ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ், போன்ற கட்சிகளின் ஆயுதப்போராட்டத்திற்கு இடதுசாரி இயக்கத்தைத் தள்ளிவிட்டது. இதற்கு முன்னைய காலகட்டத்திலேயே இடதுசாரிக் கட்சிகள் பாராளுமன்றத்தில் தங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கத் தொடங்கிவிட்டனர். இ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் போன்ற இடது சாரிக்குழுக்களுக்குத் தேசிய விடுதலையே முக்கிய பணியாக, கொள்கையாக இருந்தது. இடதுசாரிக் கொள்கைகளுக்கு முக்கியம் கொடுத்ததால் நடைமுறைப் பிரச்சனைகளில் தங்களை அவர்கள் ஈடுபடுத்தவில்லை.
இன்னுமொரு விடயத்தை நான் கூறாமல் விடமுடியாது. அதுதான் பெண்களின் பங்களிப்பு. தொழிலாளர்களையும் சுரண் டலையும் ஒடுக்குமுறைகளையும் அகற்றுவதை முழு நோக்காகக் கொண்ட இடதுசாரிகள், இன்னுமொரு வகைத் தொழிலாளிகளை, வீட்டுத் தொழிலாளர்களைக் கவனத்தில் எடுக்கவில்லை. அவர்களது பிரச்சனைகளை உணரவில்லை. இன்றும்கூட எந்த ஒரு இடதுசரிக்கூட்டத்திற்கும் பெண்களின் பங்களிப்பு 5 வீதத்திற்குக் குறைந்தே உள்ளது. இடதுசாரிகளின் மனைவிகளும் மகள்களும் இங்கு காணப்படுவதில்லை. அவர்களுக்கு வீட்டில் வேலை. நாள் பூராவும் வீட்டு வேலை செய்த களைப்பு, இரவு உணவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் என்று அவர்கள் மனைக்குள் முடக்கப்பட்ட மனைவியாகவும் மனையாட்டியாகவும் இருக்கிறார்கள். இந்நிலையை அகற்ற இடதுசாரி இயக்கம் என்ன செய்தது? என்ன செய்கிறது? என்பது கேட்கக்கூடிய கேள்விகள்தான். இப்பொழுது சற்று நிலமை மாறி வருகிறது.
நுஃமான், சிவத்தம்பி, நீர்வை பொன்னையன், சிவகுருநாதன், உயாங்கொட திஸ்ஸ வித்தாரண என்ற சிலர் பெண்நிலைவாதத்தை ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ள சிவசேகரம் முரண்டு பிடித்து சச்சரவு செய்து மெல்ல மெல்ல காலத்தின் கட்டாயத்தின் பேரில் விமர்சனத்துடன் பெண்நிலைவாதத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளார். இது ஏட்டுச்சுரைக்காய் பெண்நிலைவாதமே. இது கொள்கையளவில் கருத்தியல் ரீதியில் உலகளாவிய ரீதியில் இடதுசாரியின் குறைபாடு எனக்கொள்ளலாம்.
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 77

Page 42
இடதுசாரிகளின் இயக்கம் ஒரு விளையாட்டா? வெற்றி தோல்வி என்ற இருநிலைப்பண்பு பொதுவாக விளையாட்டுச் சொற்பிரயோகங்கள். ஒரு இயக்கத்தை வெற்றி தோல்வி என்று இலகுவாக நிர்ணயித்து விடமுடியாது. அதுவும் ஒரு போராட்டம், தொடரவேண்டிய போராட்டம் தவறுகளை இனங்கண்டு எடைபோட்டுத் தன்னைத் திருத்தவேண்டும்.
சில பல நன்மைகளை இடதுசாரி இயக்கம் தந்துள்ளது என்பதை மறுக்கமுடியாது. இடதுசாரிகளின் சமூக அரசியல் கலாச்சாரப் பெறுமானங்கள் என்று பல விடயங்களை நாம் முன் வைக்கலாம். அரசியல் பெறுமானங்களை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று நேரடியாகவே இடதுசாரிகளால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் சட்டமாக்கப்பட்டவை.
நெற்காணிமசோதா, சிறார்களுக்குப் பாடசாலைகளில் மதிய உணவு, போக்குவரத்துச் சாதனங்கள், பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்டது, என்பதைக் கருத்தியல் ரீதியில் இடதுசாரி மாற்றுக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. பீற்றர் கெனமன், பிலிப் குணவர்த்தனா போன்றோரது செயற்திட்டங்கள் இடதுசாரிக் கொள்கைகளை முன்வைத்து பிரேரிக்கப்பட்டவையே. 1970 ல் நடைபெற்ற தேர்தலின் பின் ஐக்கிய முன்னணி வெற்றிபெற்றபோது பீற்றர் கெனமென் வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். முதலாளித்துவக் கட்சியுடன் இணைந்து இடது சாரிகளின் கொள்கைகளில் நடந்த ஒரு தோல்வி என்று நாம் திட்டவட்டமாக வாக்குமூலம் கொடுக்கலாம். ஆனாலும் இங்கு ஒரு கருத்தியல் முரண்பாடு தெரிவதை அவர் முன்வைத்த செயற்திட்டங்களில் நாம் காணலாம். முதலாளித்துவ கட்டளையின்கீழ் இயங்கியவாறே இடதுசாரிக் கருத்தியலை முன்வைக்கும் செயற்திட்டங்களை முன்வைத்தமை ஒரு விசித்திர முரண்பாடே. அவரால்கொண்டுவரப்பட்ட வாடகை வீட்டில் குடியிருப்போரைப் பாதுகாத்தல் சட்டத்தினால் வாடகை வீட்டிலிருந்தோர் பலர் வீட்டுச் சொந்தக்காரர் ஆயினர்.
பாலா தம்பு போன்றோர் தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளுக்கும் சலுகைகளுக்கும் இனமத வேறுபாடின்றி உழைத்தனர். மேலும் தொழிலாளர் போராட்டங்களினால் அவர்களது உரிமைகள் பல வென்றெடுக்கப்பட்டது. இலவசக் கல்வி, இலவச உடல்நலசேவை, போன்ற மக்கள், நலன் பேணும் கொள்கைகளும், பிரகடனங்களும் சட்டமாக்கப்பட்டது, இடதுசாரிகளின் கொள்கையின் பாற்பட்டவையே.
78 பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002

மற்றையது ஐக்கியதேசிய முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட நடுநிலை வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும், தங்கள் கொள்கைப்பிரகடனங்களில் இடதுசாரிகளின் செல்வாக்கினால், தவிர்க்கமுடியாத காரணத்தினால், பொதுமக்களுக்குச் சாதகமான இடதுசரித் தத்துவங்களை ஏற்றுக்கொண்டமை. வறுமை ஒழிப்பு, சமுர்த்தி, ஜனசவிய, போன்ற வறிய மக்களைக் கருத்திற் கொண்ட திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டன.
அடுத்ததாக இடதுசாரிகளின் பாரிய தாக்கம் சிங்கள கலை இலக்கியங்களிலும் பார்க்கத் தமிழ் கலை இலக்கியத்தடங்களில் அவர்கள் பதித்த செல்வாக்கும் மாற்றுத்தளங்களைப் புகுத்தியமையும் ஆகும். இடதுசாரி இலக்கியம், இடதுசாரி மாற்றுக் கலைவடிவங்களாக நாடகம் கூத்துப் போன்றவையும், சிறுகதை, நாவல், கவிதை போன்ற இலக்கிய வடிவங்களும் இவற்றின் கருப்பொருளும் அவைமுன் வைத்த கருத்தியலும் மக்களை விழிப்புறச்செய்தன. கந்தனும், சுப்பனும், வள்ளியும், கதாநாயக நாயகிகளாக, சேரிப்புறமும் வயல்வெட்டுகளும் இடப்பொருளாக இவ்விலக்கியங்களில் கொள்ளப்பட்டன. வர்க்கம், சாதி, பெண்நிலை, போன்ற மட்டத்தில் இவ்விலக்கியங்களும் நாடகங்களும் பல கேள்விகளை எழுப்பின. பிரச்சாரத்தையும் மீறிய ஒரு அழகு நயம் இவற்றில் தோன்றின. இது இன்றும் தொடரவேண்டும். போர்க்காலம் கடந்து போகக் கருப்பொருள் மீண்டும் மாறலாம் என்று நாம் எதிர்பார்க்கலாம். இடதுசாரி இலக்கியத்தில் டொமினிக் ஜீவா, டானியல், ரகுநாதன் நுஃமான், பிரேம்ஜீ, முருகையன், நீர்வைப்பொன்னையன், சுபத்திரன், சாருமதி, சண்முகம் சிவலிங்கம், சிவத்தம்பி, கைலாசபதி, சிவசேகரம் போன்றோரின் பங்களிப்பு எடுத்துரைக்கப்படவேண்டும். இயக்க ரீதியில் இயங்கிய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இவ்வகை இலக்கியத் தேடலுக்கு ஒரு மைல் கல்லாக இருந்து வளர்ந்தது.
எனது முடிவுரையில் எனக்குள் தோன்றும் சில கருத்துக்கள்: மார்க்சிஸம் தோல்வி கண்டுவிட்டது, இடதுசாரிகள் தோற்கடிக்கப்பட்டர்கள், பண்பாடுகளின் GLDTg56) (clash of civilizations) 6Tsiig. 2D6 fill-sir (Huntington) கூறியதன்படி இனி இனம் மதம் போன்றவையே வருங்கால வரலாற்றில் முக்கிய காரணிகளாக (determinants) வரலாற்றை இயக்கும் என்று கூறுவோர் எல்லாரும் இதையிட்டு மகிழ்ச்சி கொள்வோராகவும் குதுகலிப்போராகவுமே இருக்கிறார்கள். தோல்வி, வீழ்ச்சி என்பது நிரந்தரமல்ல. அவை ஒரு போராட்டத்தில் தவிர்க்கமுடியாத படிக்கற்கள். தற்காலிக பின்னடைவு அந்த
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 79

Page 43
வீழ்ச்சியிலிருந்து மேற்கிளம்ப நாம் எதைச் செய்யலாம். எப்படி செயற்திட்டங்களை அமைக்கலாம் என்பதனையே நாம் இப்போது முன் எடுக்கவேண்டும். கருத்தரங்குகள், செயல் அமர்வுகள் செயற்திட்டங்கள் போன்றவை திரும்பவும் திரும்பவும் தொடர்ச்சி ரீதியில் முன் எடுக்கப்படவேண்டும். இரு வேண்டுகோளுடன் இவ்வுரையை முடித்துக்கொள்கிறேன். இடைக்கால நிர்வாகம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படும்பொழுது ‘சிவியார் தெரு’, “வண்ணார்பண்ணை’ போன்ற சாதிப்பெயர்களை அடிப்படையாகக்கொண்ட இடப்பெயர்களை நீக்கி வேறு பெயர்களை அத்தெருவிற்கும் குறிச்சிக்கும் இடப்படவேண்டும்.
இரண்டாவதாகப் போரினாற் தாக்கப்பட்டுக் கணவனை இழந்து தனிப்பெண்களாக வாழும் பெண்களைத் திருமணம்செய்ய ஆண்கள் முன்வரவேண்டும். மறுமணம் விரும்பாத பெண்களுக்கு வேலை செய்வதற்குத் தேவையான பல்வேறு பயிற்சி முறைகள் ஒழுங்கு செய்யப்பட்டு நிறுவனரீதியில் அவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும்.
ஒரு பூரண விடுதலையை நாம் மனதிற் கொண்டால் வர்க்கம், சாதி, பெண்கள், விவசாயிகள் என்ற மட்டத்தில் அவர்களுக்கு இழைக்கப்படும் உரிமை மறுப்புகளைக் கவனத்திற் கொள்ள வேண்டும். ஐனநாயகப் பண்புகளை நிராகரிக்காமல் இத்திட்டங்களில் அவை இரண்டறக் கலந்து மக்களது பங்களிப்பையும் அத்துடன் இணைக்கவேண்டும். இதுவே பூரண புரட்சியாக விடுதலைக்கு வழிகோலும்.
80 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002
 

பூகோள மயமாக்கமும் அதன் விளைவுகளும்
மு. சின்னத்தம்பி
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய காலப் பகுதியில் கடந்த இரு தசாப்தங்களிலேயே முன்னொரு போதும் இல்லாத வகையில் உலகம் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் துரிதமான மாற்றங்களை அடைந்து வந்துள்ளது. மேற்படி மாற்றங்களின் விளைவாக, உலகப் பொருளாதாரம் ஒரு பக்கத்தில் போட்டித்தன்மை நிறைந்ததாகவும், மறுபக்கத்தில் நாடுகள் அதிகரித்தளவில் பரஸ்பரம் ஒன்றிலொன்று தங்கியிருக்கும் தன்மை கொண்டதாகவும் மாறி வருகின்றன. தகவல்துறையில் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றங்கள், உற்பத்தி சார்ந்த தொழில் நுட்பங்களிலேற்பட்டுள்ள அதிநவீன அபிவிருத்திகள் என்பவற்றின் நன்மைகளை இப்பொழுது பெரும்பாலான உலக நாடுகள் அனுபவிக்கக் கூடியதாக உள்ளது. அதாவது தொழில் நுட்பம் சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதிகரித்து வரும் தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல், அவற்றின் விளைவாக ஏற்படும் பூகோள மயமாக்கல் என்பவற்றின் செல்வாக்கிற்குட்பட்டதாக இன்றைய உலகம் மாற்றமடைந்து வருகின்றது. தாராள மயமாக்கல் என்பது நாடுகளுக்கிடையே பொருட்கள், சேவைகள், முதலீடுகள்,மூலதனம் என்பவற்றின் பாய்ச்சல்களின் மீது இருந்துவரும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை அல்லது நீக்கப்படுவதைக் குறிக்கும். இவற்றின் மீது அரசாங்கங்கள் விதிக்கும் நிர்வாகக் கட்டுப்பாடுகள், இவற்றிற்கு அரசாங்கம் வழங்கு மானியங்கள் என்பன அகற்றப்படுவதையும் இது உள்ளடக்கும். அரசுக்குடமையான தாபனங்களின் உரிமை, கட்டுப்பாடு என்பவற்றைத் தனியார்துறை நபர்களுக்கும் தாபனங்களுக்கும் மாற்றுவது தனியார் மயமாக்கல் எனப்படும். இவ்விரண்டினதும் மொத்த விளைவாக ஏற்படுவதே பூகோள
மயமாக்கலாகும்.
பூகோள மயமாக்கல் : தொழில்சார் நிபுணர்கள் இப்பதத்தை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வேறுபட்ட கருத்துக்களில் கையாளுவதனால் இதனை வரையறுக்க முயலும்போது சிக்கல்கள் எழுகின்றன. இருந்தபோதிலும், பொருளாதாரத்தின்
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 81

Page 44
பல்வேறு துறைகளிலும் அதேபோன்று, பொருளாதாரம் சாராத ஏனைய துறைகளிலும் உலகம் இன்று பண்புசார்ந்த புதியதொரு ஒருங்கிணைப்பினைக் கண்டு வருகின்றது என்ற பொதுவான கருத்து இவற்றில் பரவலாகக் காணப்படுகின்றது. மேற்படி கருத்து இரு முக்கிய பரிமாணங்களைக் கொண்டிருப்பதும் அவதானிக்கப் பட்டுள்ளது. இவற்றுள் முதலாவது, உலக வர்த்தகம், நாடுகளுக்கிடையிலான மூலதனப் பாய்ச்சல்கள் என்பன தாராள மயமாக்கப்பட்டு வருவதாலும், தகவல் துறையிலேற்பட்டு வரும் வியத்தகு தொழில் நுட்ப முன்னேற்றங்கள் காரணமாகத் தகவல், அறிவு என்பவற்றின் பரிமாற்றம் உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருவதாலும் நாடுகளுக்கிடையே பூகோள மட்டத்தில் இடம்பெற்று வரும் துரிதமான ஒருங்கிணைப்பைக் குறிக்கும். மற்றது, இவ்வித மாற்றங்களின் விளைவாகப் பூகோள மட்டத்திலும், பிராந்திய மட்டத்திலும் உள்ளூர் மட்டத்திலும் ஏற்பட்டுவரும் தாபன ரீதியான மாற்றங்களைக் கருதும். பூகோள மயமாக்கம் பற்றிய மேற்படி விளக்கத்திற்கு மாறாக, கடந்த சுமார் இரு தசாப்த காலப்பகுதியில் தேசிய நிதிச் சந்தைகள் தாராள மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து அவை ஒன்றுடனொன்று இணைக்கப்பட்டு பூகோள ரீதியான நிதிச் சந்தையொன்று உருவாகியுள்ளமையே
பூகோள மயமாக்கல் எனக் கருதுவோருமுண்டு.
பூகோளமயமாக்கல் என்ற பதம் எண்பதாம் ஆண்டுகளில் உபயோகத்திற்கு வந்து தொண்ணுாறாம் ஆண்டுகளிலேயே பிரபல்யமடைந்த போதும், இப்பதம் நடைமுறை உபயோகத்திற்கு வரமுன்னரே பூகோளமயமாக்கல் இடம்பெற்று வந்துள்ளதால், உலகிற்கு இது ஒன்றும் புதிய நிகழ்வன்று. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆரம்பித்த பூகோளமயமாக்கலானது முதலாம் உலகப் போரின் பின்னரும், பெருமந்த காலத்திலும் ஒரளவு தளர்ச்சியடைந்தது. எனினும், 1980th ஆண்டுகளின் பின்னர் பல்வேறு நாடுகளில் அமுலாக்கப்பட்டு வரும் அமைப்புசார் சீராக்கல் கொள்கைகள் காரணமாக அது புத்துயிர் பெற்றுள்ளதோடு, அதனுடன் தொடர்புபடுத்தப்படும் பல்வேறு பொருளாதார, சமூக நிகழ்வுகளின் பண்பும் வேகமும் இன்று புதிய பரிமாணங்களைப் பெற்று விட்டன. முதலாளித்துவ அமைப்பின் புதிய சமகால அபிவிருத்தியே பூகோள மயமாக்கல் என்றும் கூறலாம். பூகோள மயமாக்கல் இவ்வாறு துரிதமடைந்தமைக்கு பல்வேறு காரணிகள்
பங்களித்துள்ளன. அவற்றுள் பின்வருவனவற்றை விசேடமாகக் குறிப்பிடலாம் :
82 பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002

1 சோவியத் யூனியனின் தலைமையில் செயற்பட்டு வந்த
திட்டமிட்ட, கட்டுப்படுத்திய பொருளாதாரங்களின் வீழ்ச்சி.
2. தொழில் நுட்ப - விஞ்ஞானப் புரட்சி பூகோள ரீதியாக
ஏற்படுத்தியுள்ள தாக்கம்.
3. இந்தியா, சீனா, வியட்நாம் போன்ற நாடுகளின் சந்தைகள்
வெளிநாடுகளுக்குத் திறந்துவிடப்பட்டமை.
4. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பலவற்றில் அமைப்புசார் சீராக்கல்
கொள்கைகள் அமுலாக்கப்பட்டு வருகின்றமை,
5. ஆசியான், சார்க், ஏபெக், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அரசியல்
பொருளாதார பிராந்தியக் கூட்டுக்கள் உருவாக்கப்பட்டமை.
6. வர்த்தகம், இறுப்புக்கள் என்பன தொடர்பான பொது உடன்படிக்கையின் கீழ் நடைபெற்ற உறுகுவே சுற்றுப் பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடிவுற்று, 1995 ஜனவரியில் உலக வர்த்தக தாபனம் தாபிக்கப்பட்டமை. இத்தாபனத்திற்கு அடிப்படையாகவிருக்கும் மறக்காஷ் (Marrakesh) உடன்படிக்கை (1994) உலக வர்த்தகத்திற்குத் தடையாகவிருக்கும் இறுப்புக் கட்டுப்பாடுகளைப் படிப்படியாக 35.0 வீதத்திற்குக் குறைப்பதோடு, இறுப்புக்களல்லாத ஏனைய தடைகளை அகற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏற்கனவே, செயற்படத் தொடங்கிவிட்ட இது உலகை கட்டற்ற வர்த்தகத்திற்கு இட்டுச் செல்வதை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.
பொருட்கள், சேவைகள், மூலதனம், முதலீடு என்பன நாடுகளுக்கிடையே கட்டின்றிப்பாய்வதற்குத் தடையாகவிருக்கும் காரணிகள் நீக்கப்பட்டு வருவதனால் அவற்றின் பாய்ச்சல் அதிகரித்து வருகின்றது. உதாரணமாக, 1990க்கும் 1998க்குமிடையே மொத்த உலக வர்த்தகம் 4,300 பில்லியன் டொலரிலிருந்து 6,700 பில்லியனாக 550 வீதத்தாலும், வளரும் நாடுகளில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 34.4 பில்லியன் டொலரிலிருந்து 155.0 பில்லியனாக 350.0 வீதத்தாலும் உயர்ந்தன. வர்த்தகத்தில் ஏற்பட்ட இத்துரித வளர்ச்சியானது பல்வேறு வகையான நுகர்பொருட்கள் முன்னரிலும் பார்க்க அதிகரித்த அளவில் நுகர்வோருக்குக் கிடைப்பதை உறுதி செய்வதோடு, உற்பத்தி நிறுவனங்களையும் தொழிலாளரையும் அதிசிறந்த சர்வதேச நடைமுறைகளுக்கு முகங்கொடுக்கச் செய்வதனூடாக மூலதனம், ஊழியம் என்பன திறமையான முறையில் உற்பத்திக்குக் கையாளப்படுவதைத் தூண்டுகின்றது. மேலும், இயந்திரங்கள், மூலப் பொருட்கள்
பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002 83

Page 45
போன்ற உள்ளீடுகளின் கிடைக்குந்தன்மையை அதிகரித்து உற்பத்தித் திறனையும் இது உயர்த்துகின்றது. சுருங்கக் கூறின் உற்பத்தியும் நுகர்வும் சர்வதேச மயப்படுத்தப்பட்டு விட்டன. உற்பத்தியிலேற்படும் அதிகரிப்பு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதனால் இதனுடாக வளரும் நாடுகள் தமது வறுமையைக் குறைத்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியுமென்று கருதப்படுகின்றது.
மேற்கூறியவாறு பல நன்மைகளை ஏற்படுத்தும் பூகோளமயமாக்கலானது, பாதகமான சில விளைவுகளையும் ஏற்படுத்துகின்றதென்பதை மறுக்க முடியாது. உள்ளூர் உற்பத்தியை சர்வதேசப் போட்டிக்கு உட்படுத்துவதன் மூலம் அது உற்பத்தி நிறுவனங்களுக்கும் தொழிலாளருக்கும் பெரும் அச்சுறுத்தலாகவிருக்கின்றது. மேலும், நிதிச் சந்தைகள் சர்வதேச முதலீட்டிற்குத் திறந்து விடப்படுவதும், மூலதனப் பாய்ச்சல்களின் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதும், அவற்றை வெளிநாட்டுச் சக்திகளின் செல்வாக்கிற்குட்படுத்தி, பல்வேறு நாடுகளில் நாணய - நிதி நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ளதென அஞ்சப்படுகின்றது.
இந்த விதத்தில் நாம் இரு விதமான மூலதனப் பாய்ச்சல்களை இனங் காணலாம். ஒன்று பல்தேசியக் கம்பனிகள் ஏனைய நாடுகளில் மேற்கொள்ளும் நேரடி முதலீடுகளும், மற்றது உத்தேச நோக்கத்திற்காகப் பல்வேறு பிரிவினரால் மூலதனச் சந்தைகளில் வைக்கப்படும் குறுங்கால நிதிகளுமாகும். இவையிரண்டிற்குமிடையே ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. பின்னைய வகையைச் சார்ந்த நிதிகளை இப்பொழுது மின்னல் வேகத்தில் நாடுகளுக்கிடையே கொண்டு செல்லக் கூடியதாக இருக்கின்றது. இதன் விளைவாக, அண்மைய ஆண்டுகளில் நாடுகளுக்கிடையிலான இவ்வித குறுங்கால மூலதனப் பாய்ச்சல்கள் அதிகரித்துள்ளதுடன், உலக மூலதனச் சந்தைகளை இலகுவில் நிலைகுலையச் செய்யும் ஆபத்துக்களும் அதிகரித்துள்ளன. முதலீட்டாளர்கள் மந்தைகளைப் போன்று நடந்து கொள்வதாலேயே அதாவது, ஒருவரைத் தொடர்ந்து மற்றையோரும் தமது குறுங்கால நிதிகளை நாடுகளுக்குள்ளேயும் வெளியேயும் கொண்டு செல்ல முயலுவதாலேயே மூலதனச் சந்தைகள் இவ்வாறு பலவீனமடைகின்றன. பாரியளவிலான இவ்வித குறுங்கால மூலதனப் பாய்ச்சல்களினால் பொருட்களின் உற்பத்தி, விற்பனை என்பவற்றிற்குத் தொடர்பில்லாத வகையில் சந்தை விலைகள் தளம்புகின்றன. அத்துடன் மூலதனத்தை வெளிநாட்டு நிதிச் சந்தைகளுக்குக்
84 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

கொண்டு செல்வதற்கு வெளிநாட்டு நாணயத்தைக் கொள்வனவு செய்ய வேண்டியிருப்பதால், இம்மூலதன அசைவுகள் நாணய மாற்றுச் சந்தையிலும் பெரும் தளம்பல்களை ஏற்படுத்துகின்றன. மூலதன உட்பாய்ச்சல் தொடர்ந்து சடுதியாக அது வெளியே கொண்டு செல்லப்படுவதும் உற்பத்தி நிறுவனங்களையும் வங்கிகளையும் படுகடன் நிலைக்கு உள்ளாக்குவதோடு, அவற்றை வங்குறோத்தடையவும் செய்கின்றன. இவ்வாறான ஒரு நெருக்கடி நிலையே 1997 இல் கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்டது. இது போன்ற நெருக்கடிகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் ஏனைய நாடுகளிலும் காணப்படுகின்றன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
வாஷிங்டன் நிலைப்பாடு
வர்த்தகப் பேச்சு வார்த்தைகளிலும், உலக வங்கி-சர்வதேச நாணய நிதியம் என்பவற்றின் ஆளுனர் சபைக் கூட்டங்களிலும் ஐக்கிய அமெரிக்கா வலியுறுத்தும் கொள்கைகளால் ஏற்படும் ஒரு விளைவே பூகோள மயமாக்கலெணலாம். மேற்படிக் Gaitsir Goss, it autoshilair fansuliut(6' (Washington Consensus) Tsirp பதத்தால் அழைக்கப்படுகின்றது. கட்டில்லாத சந்தைகள் உருவாக்கப்படுவதையும் பொருளாதார நடவடிக்கைகளில் அரசாங்கங்களின் பங்கு குறைக்கப்படுவதையும் எல்லா உலக அரங்குகளிலுமே அமெரிக்கா இன்று வலியுறுத்தி வருகின்றது. இந்த வாஷிங்டன் நிலைப்பாடானது பத்து அம்சங்களை உள்ளடக்கியதாகும்.
1 அரசாங்கச் செலவீட்டில் இறைக் கட்ப்பாட்டைக் கையாளுதல். 2. அரசாங்கச் செலவீடுகளை மானியங்கள் அளிப்பதற்கு கையாள்
வதினின்றும் திசை திருப்புதல். 3. வட்டி வீதங்களின் மீதான கட்டுப்பாடுகளை அகற்றுதல். 4. எல்லை நிலை வரி விகிதங்களைக் குறைத்தல்.
5.
நாணயமாற்று விகிதங்களை நிலையான மாற்று விகிதங்களிலிருந்து சந்தையால் நிர்ணயிக்கப்படும் மாற்று விகிதங்களாக மாற்றுதல். வெளிநாட்டு நேரடி முதலீட்டின் உட்பாய்ச்சலைத் தாராண்மைப்படுத்தல். வர்த்தகத்தைத் தாராண்மைப்படுத்தல். அரசுக்கு உடமையான தாபனங்களைத் தனியார் மயப்படுத்தல். உற்பத்திச் சந்தைகளில் கட்டுப்பாடுகளை அகற்றுதல். 10. தனியார் சொத்துரிமைகளை உறுதிப்படுத்தல்.
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 85

Page 46
ஏனைய சமூக நிறுவனங்களை ஒதுக்கிவிட்டுச் சந்தைகளின் பங்கினை ஊக்குவித்தலே இவற்றின் அடிப்படை நோக்கமாகும். சந்தையில் பங்குபற்றும் பல்வேறு சாரார்களுக்கு குறிப்பாக, பல்நாட்டுக் கம்பெனிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் அதி உயர்ந்த சுதந்திரத்தை வழங்கும் இந்த வாஷிங்டன் நிலைப்பாடானது அந்நிறுவனங்களின் சுயவிருப்பினையே பிரதிபலிக்கின்றதெனக் கூறின் அது தவறன்று.
வாஷிங்டன் நிலைப்பாட்டின் சில அம்சங்கள் சிறப்பாகச் செயற்பட்டுள்ளன. உதாரணமாக, வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் மீதான கட்டுப்பாடுகளை அகற்றுவது ஒரு சில நாடுகளிலேனும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தியுள்ளது. அதே போன்று, வர்த்தகத்தைத் தாராளமயப்படுத்தியமை ஏற்றுமதி, இறக்குமதிகளை ஊக்குவித்து உலகின் எல்லாப் பகுதிகளிலுமே நுகர்வோரின் நலன்களை மேம்படுத்தியுள்ளது. இதற்கு மாறாக, பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் பங்கினைக் குறைப்பது ஏறக்குறைய எல்லாச் சந்தர்ப்பங்களிலுமே சிறப்பாகச் செயற்படத் தவறிவிட்டது என்றே கூறலாம். குறிப்பாக, ஊழியம், நிதிச் சந்தைகள் என்பவற்றைப் பொறுத்தவரை அதன் பலவீனம் இப்பொழுது தெரிய வந்துள்ளது. வாஷிங்டன் நிலைப்பாடு தோல்வியடைந்துள்ள விடயங்களில் அது திருத்தியமைக்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாததாகும். பூகோள மயமாக்கல் நிலைத்திருப்பதற்குச் சமூக பாதுகாப்பு வலையானது (Social Safety Network) பலவீனமடைவதற்குப் பதிலாக அது வலுப்படுத்தப்படுவது இன்றியமையாததாகும். வர்த்தகத்தில் ஈடுபடுவது சமூக ரீதியாக ஒரு நாட்டிற்கு நன்மைகளை ஏற்படுத்தினாலும் சில விடயங்களிலாவது அது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தவல்லது கட்டில்லா வர்த்தகமானது ஒருநாட்டிற்கு எத்துறைகளில் ஒப்பீட்டு நலன் கூடுதலாகக் காணப்படுகின்றதோ அத்துறைகளுக்கு உற்பத்தியை நகர்த்துவதும், ஒப்பீட்டு நலன் இல்லாத துறைகளை நலிவடையச் செய்வதும், அவ்வாறு நலிவடையும் துறைகளில் தொழில் புரிவோர் தவிர்க்க முடியாத வகையில் பாதிப்பிற்குள்ளாகுவதும் சகஜமாகும்.
சர்வதேச வர்த்தகம் ஏற்படுத்தும் இவ்விதப் பாதிப்புக்களைச் சீர்ப்படுத்துவதற்கு ஒரு வழி, நன்மையடைவோர் அதன் ஒரு பகுதியை ஏதேனுமொரு
நட்டஈட்டு அடிப்படையில் இழப்புக்களை அடைவோருடன் பகிர்ந்து கொள்வதேயாகும் என்பது சர்வதேச வர்த்தகக் கோட்பாடுகளைக் கற்கும் அனைவருக்கும் தெரிந்த
86 பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002

ஒரு விடயமாகும். பாதிக்கப்பட்ட தொழிலாளருக்கு மீள் பயிற்சியளித்தல், அவர்களுக்குத் தற்காலிக வருமான ஆதாரங்களை வழங்குதல், தொழில்களைப் பாதுகாக்கும் வகையில் அவற்றின் அமைவிடத்தை மாற்றியமைப்பதற்காக வரி சார்ந்த நன்மைகளை அளித்தல் போன்றன சர்வதேச ரீதியாகச் சந்தை ஒருங்கிணைப்பால் தனிப்பட்டோருக்கு ஏற்படும் பளுக்களைக் குறைப்பதற்கான வழிகளாகும். ஆனால் இவ்வித பாதுகாப்பு வலையொன்றை, ஏற்படுத்துவதற்கு வாஷிங்டன் நிலைப்பாட்டில் இடமில்லாதிருப்பதே இதில் காணப்படும் முக்கிய பிரச்சினையாகும். எனவே, இவ்வித சமூக வலையொன்றினை அமுலாக்கும் வகையில் இது மாற்றியமைக்கப்பட வேண்டும்.
நிதி மூலதனத்தினது கட்டில்லாப் பாய்ச்சல்களிலும் அரசாங்கத்தின் தலையீடு தேவைப்படுகின்றது. ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, குறுங்கால நிதிகளின் கட்டற்ற பாய்ச்சலானது நெருக்கடிகளை ஏற்படுத்தவல்லது என்பதை ஏற்போமாயின், இதிலும் அரசாங்கத்தின் தலையீடு தேவைப்படுவதை உணர்ந்து கொள்ளலாம்.
சுருங்கக் கூறுவோமாயின், தாராள மயமாக்கலானது ஒரு முடிவான செயலாகவன்றி, சிறந்ததொரு நிதியமைப்பினை ஏற்படுத்துவதற்கான ஒரு வழியாகவே கருதப்படவேண்டும். மேற்படி விடயங்களில் வாஷிங்டன் நிலைப்பாட்டினின்றும் விலகுவது பூகோள மயமாக்கலை எந்த விதத்திலுமே தாமதப்படுத்தமாட்டாது என்பதைத் திட்டவட்டமாகக் கூறலாம். இந்த வகையில், நிதித்துறையில் தோன்றும் பீதிகளினாலேற்படும் உற்பத்தி இழப்புக்களை தவிர்த்துக் கொள்வதன் மூலம் இவ்விதத்தலையீடு கூடிய நன்மையைப் பயக்குமெனக் கூறலாம்.
பூகோள மயமாக்கலானது நன்மை தரக்கூடிய ஒரு செயல்முறையாக (அதாவது, வருங்காலப் பொருளாதார அபிவிருத்திக்கு ஒரு திறவுகோலாக) விருக்கும் அதேவேளையில், நாடுகளுக்குள்ளேயும் நாடுகளுக்கிடையேயும் ஏற்றத்தாழ்வுகளை விரிவடையச் செய்து சமூக முன்னேற்றத்திற்கு ஒரு முட்டுக்கட்டையாக இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். பூகோள மயமாக்கல் கணிசமான நன்மைகளை ஏற்படுத்தக்கூடியதாகவிருந்த போதும், தவிர்க்க முடியாத வகையில் அது சில எதிர்மாறான விளைவுகளையும் கொண்ட தாகவிருக்கின்றது. அமைப்பு ரீதியாகப் பலவீனமான வளரும் நாடுகளையும், வறியோர், வேலையற்றோர், குறைந்த வேதனம் பெறுவோர் அடங்கலாக வேறும் பல்லாயிரக் கணக்கானோரையும் அது அபிவிருத்திச் செய்முறையினின்றும் புறக்கணிக்கக் கூடுமென்ற அச்சமும் நிலவுகின்றது.
பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002 87

Page 47
பூகோள மயமாக்கலானது நாடுகள் ஒன்றிலொன்று தங்கியிருக்கும் தன்மையை அதிகரிப்பதால், நாடுகளுக்கிடையே கொடுக்கல் - வாங்கல்களி லேற்படும் அதிகரிப்பின் ஒரு விளைவே பூகோளமயமாக்கலெனவும் கூறப்படுகிறது. வர்த்தகம், முதலீடுகள், மூலதனம் என்பவற்றின் பாய்ச்சலின்மீது விதிக்கப்படும் நிர்வாக ரீதியான கட்டுப்பாடுகள் அமைப்புசார் சீராக்கல் கொள்கைகளின்கீழ் துரிதகதியில் தளர்த்தப்பட்டுவருவது இதனை மேலும் ஊக்குவிக்கின்றது. முன்னர் பாதுகாக்கப்பட்டிருந்த பல துறைகள் இப்பொழுதுதாராளமயமாக்கப்பட்டு வருவதும், தேசிய சந்தைகள் ஒருங்கிணைக்கப்படுவதும், தனியுரிமைகள் உடைத்தெறியப் படுவதும், அரச மானியங்கள் மீளாய்வு செய்யப்படுவதும் உலக வர்த்தகத்தின் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த அடிப்படையில், பூகோள மயமாக்கலைச் சந்தைகளின் விரிவாக்கம் என்றும் கூறலாம். மறுபக்கத்தில், சந்தைகளின் விரிவாக்கமானது உற்பத்தி நிறுவனங்களுக்கிடையிலும், நாடுகளுக்கிடையிலும் கடும் போட்டியை ஏற்படுத்திப் போட்டித் தன்மையை உலக வர்த்தகத்தின் பிரிக்க முடியாத ஒரு அம்சமாக மாற்றி வருகின்றது. இவ்வித சர்வதேசரீதியிலான போட்டித்தன்மையைப் பின்வரும் காரணிகள் தவிர்க்க முடியாத தாக்கியுள்ளன :
1 உலக வர்த்தக நிறுவனம் தாபிக்கப்பட்டமையும் வர்த்தகத்தைத்
தாராண்மைப்படுத்தும் அதன் நோக்கும்.
2. இதுவரை காலமும் மூடப்பட்டிருந்த பல பொருளாதாரங்கள் திறந்து
விடப்பட்டுள்ளமை,
3. தொழில்நுட்பம் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளமையும், தொலைத் தொடர்பு போக்குவரத்து வசதிகள் என்பவற்றில் எற்பட்டுள்ள புரட்சி கரமான மாற்றங்களும்.
4. நாடுகளுக்கிடையே ஏற்பட்டுவரும் தனியார் முதலீட்டின் அதிகரித்த பாய்ச்சலும் உத்தியோகபூர்வ வெளிநாட்டு உதவியில் ஏற்பட்டுவரும் வீழ்ச்சியும்.
சர்வதேச போட்டித்தன்மையும் தொழிற் சங்கங்களும்
போட்டித் தன்மை என்பதை உற்பத்தித் திறனிலேற்படும் பேண்தகு அதிகரிப்பு எனவும் கூறலாம். உண்மையான தனியார்துறைக் கம்பெனிகள் உண்மையான தொழில்களில் போட்டியிடுவதனூடாகவே உற்பத்தித்திறன் அதிகரிக்கின்றது. போட்டியினூடாக உற்பத்தித்திறனில் ஏற்படும் இவ்வித அதிகரிப்பு
88 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

வரவேற்கத்தக்க ஒன்றே என்பதையும், கம்பனி முகாமையாளர் தமது தொழில்களில் சீர்த்திருத்தங்களையும் புதுமைகளையும் புகுத்துவதற்குத் தீவிரமான போட்டியே தூண்டுகோலாக அமைகின்றது என்பதையும் ஏற்றுக்கொள்ளும் தொழிற்சங்கங்கள், போட்டித் தன்மை எவ்வாறு அடையப்படவேண்டும் என்பது தொடர்பாக முகாமையாளருடன் முரண்படுகின்றன. தொழிலாளரது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதன் மூலமும், சிறந்த வேலை நிலைமைகளை உருவாக்குவதன் மூலமும், தொழிலாளரின் சுயவிருப்புடன் கூடிய பங்கேற்றலையும், ஒத்துழைப்பையும் உறுதி செய்து கொள்வதே போட்டித் தன்மையை உயர்த்திக் கொள்வதற்கான அடிப்படைகளாக அமைய வேண்டுமென அவை கருதுகின்றன. இதற்கு மாறாக, தீவிரமடைந்து வரும்பூகோள மயமாக்கலானது தொழிலாளருக்கும் அவர்கள் சார்ந்த தொழிற்சங்கங்களுக்கும்பல்வேறுவிதமான அச்சுறுத்தல்களையும் சவால்களையும்
ஏற்படுத்தி வருகின்றது.
65TGIT EDIDisg 056)TGTSlb
தீவிரமடைந்து வரும் பூகோள மயமாக்கலினால் உருவாகி வரும் பிரச்சினைகளுள் தொழிலாளரின் கவனத்தை ஈர்க்க வேண்டிய விசேட
பிரச்சினைகளாகப் பின்வருவனவற்றை இங்கு குறிப்பிடலாம் :
தொழிற் சங்க உரிமைகள் மறுக்கப்படுதல் அல்லது நசுக்கப்படுதல். அரசாங்கத்தின் சமூக சேமநலன் மீதான செலவீடுகள், வீட்டுத் துறையினருக்கான வருமான மாற்றல்கள் என்பவற்றில் அண்மைக் காலத்தில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சிப் போக்கு. 3. வருமானப் பங்கீட்டில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும், அவற்றால் வருமான
ஏற்றத்தாழ்வுகளில் ஏற்பட்டு வரும் அதிகரிப்பும். 4. தொழில் வாய்ப்புக்களினது கட்டமைப்பிலும் ஒழுங்கமைப்பிலும் ஏற்பட்டு
வரும் மாற்றங்கள். 5. சர்வதேச ரீதியிலான ஊழிய அசைவும் புலம் பெயர்ந்த ஊழியம் எதிர்
கொள்ளும் பிரச்சினைகளும். 6. பல்தேசிய நிறுவனங்களின் அதிகரித்துவரும் செயற்பாடுகளினாலேற்படும்
வேறு பிரச்சினைகள்.
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 89

Page 48
1. தொழிற் சங்க உரிமைகள்
தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல், பூகோள மயமாக்கல் என்பன தொழிற் சங்கங்களை அமைத்தல், கூட்டுப் பேரம்பேசல், இரு பக்க, முப்பக்க அடிப்படையிலான பிரதிநிதித்துவம் போன்ற தொழிற் சங்க உரிமைகளின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கும் அவ்வுரிமைகள் நசுக்கப்படுவதற்கும் இடமளித்துள்ளன. உதாரணமாக, வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்கும் நோக்கமாகப் பல்வேறு நாடுகளில் தாபிக்கப்பட்டு வரும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் தொழிலாளர் நலன் தொடர்பான சட்டங்களின் அமுலாக்கம் தளர்ச்சியடைந்துள்ளது அல்லது அவற்றின் அமுலாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், அங்கு வேலை செய்யும் தொழிலாளருக்கு வேலை நிறுத்தம் செய்யும் உரிமை மறுக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. உதாரணமாக 1977ம் ஆண்டு இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட அமைப்புசார் பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகளில் நாட்டின் தொழிலாளர் தொடர்பான வேதனச் சபைச் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம், தொழிற் சங்கச் சட்டம், தொழில் பிணக்குகள் சட்டம், தொழிலாளரை தொழிலிலிருந்து இடைநிறுத்தும் சட்டம் போன்றவற்றில் தொழில் வழங்குநருக்குச் சார்பான சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதற்கான சில பிரேரணைகளும் காணப்பட்டன. இவற்றிற்கெதிராகத் தொழிற் சங்கங்கள் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகள் காரணமாக இம்முயற்சி கைவிடப்பட்டது. எனினும், இவற்றிற்குப் பதிலாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட சில நிர்வாக ரீதியான கட்டுப்பாடுகள் தொழில் ஆணையாளரது அதிகாரங்களைக் கட்டுப்படுத்தியதோடு, தொழிற் சங்க நடவடிக்கைகளைத் தவிர்ப்பனவாகவும் இருந்தன. உதாரணமாக: தொழிலமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் இவ்வலயத்திற்குட்பட்ட தொழிற் சாலைகளுக்குச் செல்வதற்கு அனுமதி அட்டை (Gate Passes) வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, முன்னறிவித்தலின்றி அவர்கள் அங்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதன் மூலம் தொழிலதிகாரிகள் அங்கு செல்வதன் முக்கிய நோக்கம், அதாவது, திடீர்ச் சோதனைகள் மேற்கொள்ளும் நோக்கம் முறியடிக்கப்பட்டது. முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களை மேற்பார்வை செய்வதற்காகத் தாபிக்கப்பட்ட பாரிய கொழும்பு பெருளாதார ஆணையம் (GCEC) தொடர்பான ஆரம்பத்திட்டத்தில் முக்கிய தொழிற் சட்டங்களுக்கு விலக்களிக்கவும் வேறு சிலவற்றில் திருத்தங்களை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், தொழிலாளரின் தொழிற் சங்க உரிமைகள் சில பறிக்கப்படுவதைச் சட்ட நடவடிக்கைகளால் தடை செய்ய முடியாது போயிற்று என்பதற்கு 1980ம் ஆண்டு
90 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

ஜூலை வேலைநிறுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான தொழிலாளர் வேலைநீக்கம் செய்யப்பட்டமை சான்றாக உள்ளது. மேலும், தொடர்ந்து அமுல் செய்யப்பட்ட அவசரகாலச் சட்டத்தின் கீழ் வேலை நிறுத்தங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. தொழிலாளர் தொழிற் சங்கங்களை அமைத்துக் கொள்வதற்கான சுதந்திரம் பற்றிய 1948ம் ஆண்டு சர்வதேச தொழில் தாபனத்தின் 87வது பிரகடனத்திற்கு இவை முரணானவை என்பதை இங்கு நினைவுப்படுத்திக் கொள்வது அவசியமாகும். மேற்படி நடவடிக்கைகளின் காரணமாகத் தொழிற் சங்க இயக்கம் இக்காலப் பகுதியில் ஓரளவிற்கு வலுவிழந்தது என்பதற்குத் தொழில் திணைக்களத்துடன் பதிவு செய்யப்பட்ட தொழிற் சங்கங்களின் எண்ணிக்கை, தொழிற் சங்க அங்கத்தவர்களின் எண்ணிக்கை என்பவற்றில் ஏற்பட்ட வீழ்ச்சி சான்று பகருகின்றது.
2. சமூக சேமநலன் மீதான அரசாங்கச் செலவீடுகள், வீட்டுத் தறைக்கான வருமான மாற்றல்கள் என்பவற்றிலேற்பட்டு வரும் வீழ்ச்சி
படுகடன் நிலையிலுள்ள அபிவிருத்தியடையும் நாடுகள் பல நுகர்விற்கு உயர்ந்தமானியங்களை அளித்துவருவதோடு,தேவைக்குமதிகமான பொது நிர்வாக சேவையொன்றையும் பொதுச் சேவைகளையும் பராமரித்து வருவதால், அவை தமது வரவு செலவுத் திட்டங்களில் குறைநிலையை அனுபவிப்பதாகக் குறைகூறும் சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும், இந்நாடுகள் இவற்றின் மீதான தமது செலவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பொருளாதாரத் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியுமென்றும், இதன் மூலம் சேமிக்கப்படும் பணத்தைத் தமது கடன்களை அடைப்பதற்குக் கையாள முடியுமென்றும் கூறிவருகின்றன. எனவே,பொது நிர்வாக சேவையைச் சீராக்குவதுடன் கல்வி, சுகாதாரம் போன்ற சமூக சேமநலன் துறைகளில் அரசாங்கங்கள் தமது ஈடுபாட்டைக் குறைக்க வேண்டுமென்பதும் அவற்றினது ஆலோசனைகளாகும். மேலும், இத்துறைகளில் செலவை மீளப்பெறும் வகையில் சேவைகளைத் தனியார் மயப்படுத்த வேண்டுமென்றும் அவை வலியுறுத்துகின்றன. மேற்படி ஆலோசனைகளுக்கமைய பல நாடுகளில் அரசாங்கங்கள் சமூக சேமநலனை இலக்காகக் கொண்டு சந்தையில் தலையிடுவதினின்றும்பின்வாங்கியுள்ளன. அதாவது, நிர்வாக ரீதியிலான விலைக் கட்டுப்பாடுகளை விதித்தல், நுகர்வுக்கு மானியம் வழங்குதல், வீட்டுத்
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 91

Page 49
துறையினருக்கு வருமான மாற்றல்களை வழங்குதல் என்பவற்றைப் பெருமளவிற்கு கைவிட்டுள்ளன. இதன் விளைவாக நுகர் பொருட்களினதும், சேவைகளினதும் விலைகள் உயர்ந்து தொழிலாளர் அதிலுங்குறிப்பாக, குறைந்த வேதனம் பெறுவோர் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிற் சங்கங்களின் கவனத்தை ஈர்க்க
வேண்டிய விடயங்களுள் இதுவும் ஒன்றாகும்.
3. வருமானப் பங்கீடு
அதிகரித்து வரும் பூகோள மயமாக்கலானது பல நாடுகளில் வருமானப் பங்கீட்டில் ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்து, தொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மோசமடையச் செய்துள்ளது. பல நாடுகளில் இன்று வசதி படைத்தோருக்கும் வறிய மக்களுக்குமிடையேயும், மூலதன உரிமையாளருக்கும் தொழிலாளருக்குமிடையேயும் காணப்படும் இடைவெளி விரிவடைந்து வருகின்றது. அத்துடன் படித்த அல்லது வினைத்திறன் மிக்கத் தொழிலாளருக்கும் படிப்பறிவு குறைந்த அல்லது வினைத்திறன் குறைந்த தொழிலாளருக்குமிடையேயும், ஆண் தொழிலாளருக்கும் பெண் தொழிலாளருக்குமிடையேயும் வேதன ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
அண்மைக் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியானது பல நாடுகளில் மக்களுக்குப் போதுமான வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும், அதனூடாக அந்நாடுகளில் நிலவும் மோசமான வறுமை நிலையைக் குறைப்பதற்கும் போதுமானதாக இருக்கவில்லை. மேலும், இந்த வரையறுக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியினது நன்மைகள்கூட சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே சமமாகப் பங்கிடப்படாததால், வருமான ஏற்றத் தாழ்வுகள் விரிவடைந்துள்ளன. உதாரணமாக, ஐக்கிய அமெரிக்காவில் 1986 முதல் செல்வந்தருக்கும் வறியோருக்குமிடையிலான இடைவெளி அதிகரித்து வந்துள்ளது. கீழ்மட்ட வருமானம் உழைக்கும் 20.0 வீதமானோரது வருமானங்கள் 20.0 வீதத்தால் அதிகரித்த அதேவேளையில், உயர் வருமானம் பெறும் 200 வீதமானோரின் வருமானங்கள் 440 வீதத்தாலும், அதிஉயர் வருமானம் பெறும் உச்சமட்ட 50 வீதமானோரின் வருமானங்கள் 600 வீதத்தாலும் உயர்ந்தன. வருமானப் பங்கீட்டிலேற்பட்ட சார்பு அடிப்படையிலான இம்மாற்றங்கள் செல்வந்தருக்கும் வறியோருக்குமிடையிலான இடைவெளியை மேலும் விரிவடையச் செய்துள்ளன. 1979ம் ஆண்டின் பின்னர் ஐக்கிய இராச்சியத்திலும் இதே விதப்
92 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

போக்குகள் காணப்பட்டன. 1980 களில் வேகமாக உயர்ந்த வறுமை மட்டம் 1990களிலும் தொடர்ந்தது. 1979க்கும் 1999க்குமிடையே நாட்டினது சராசரி வருமானத்தில் அரைவாசியிலும் குறைவான வருமானத்தைப் பெறுவேரின் பங்கு 10.0 வீதத்திலிருந்து 25.0 வீதமாக மட்டுமே அதிகரித்தது. வளர்ச்சியடைந்த நாடுகளில் மேற்குறிப்பிட்டவாறு வருமானப் பங்கீட்டில் சார்பு அடிப்படையிலான வேறுபாடுகள் அதிகரித்த அதேவேளையில், அமைப்புசார் சீராக்கல் திட்டங்களின் கீழ்தாராளமயமாக்கும் கொள்கையை அமுலாக்கிவரும் லத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட வேறு பல அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலும் கடந்த சுமார் இருபது ஆண்டுகளில் வருமானப் பங்கீட்டில் ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்துள்ளதோடு முழு வறுமை நிலையும் அதிகரித்தது. உதாரணமாக, இலங்கையில் அமைப்புசார் சீராக்கலின் முதலாவது கட்டத்தில் விரிவடையத் தொடங்கிய வருமானப்பங்கீட்டுச் சமமின்மை 1990/91க்கும் 1995/96க்குமிடையே மேலும் அதிகரித்தது. குறைந்த வருமானம் பெறும் 50.0 வீதமான வீட்டுத்துறையினரின் வருமானப்பங்கு 212 வீதத்திலிருந்து 19.5 வீதமாகச் சுமார் 8.0 வீதத்தால் குறைந்தது. இலங்கை உட்பட அபிவிருத்தியடைந்துவரும் பல நாடுகளில் முழு வறுமையில் வாடும் மக்களது விகிதாசாரம் அதிகரித்ததனாலேயே இந்நாடுகளில் உலக வங்கியின் அனுசரணையுடன் வறுமை ஒழிப்புத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. எனவே, பூகோள மயமாக்கத்தினால் அதிகரித்து வரும் சமூக ஏற்றத் தாழ்வுகள் தொழிற் சங்கங்களின் கவனத்தை ஈர்க்க வேண்டிய முக்கியமானதொரு விடயமெனக் கருதலாம். சமூகத்தில் ஒரு பகுதியினர் ஆடம்பர வாழ்க்கை நடத்திவரும் அதேவேளையில் இன்னொரு பகுதியினர் முழுவறுமை நிலையில் வாழ்வது தொழிற் சங்கங்களின் அடிப்படையான நோக்கங்களுக்கு முரணானதாகும்.
4. தொழில் வாய்ப்புக்களின் கட்டமைப்பிலும் ஒழுங்கமைப்பிலும்
ஏற்பட்டு வரும் மாற்றங்கள்
(அ) தொழில் வாய்ப்புக்களின் கட்டமைப்பு
அண்மைக் காலத்தில் தொழில் வாய்ப்புக்களினது கட்டமைப்பிலும்
ஒழுங்கமைப்பிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. அவையாவன:
(i) மரபு ரீதியாக விவசாயத் துறையே வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தும் பிரதான துறையாக இருந்துவந்துள்ளது. எனினும், இந்த நிலை இப்பொழுது
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 93

Page 50
94
(ii)
மாறி வருகின்றது. பூகோள அளவில், விவசாயத்துறை வேலை வாய்ப்புக்களின் பங்கு வீழ்ச்சியடைந்துள்ளது. கைத்தொழிற்றுறை வேலை வாய்ப்புக்களிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதும், அதன் வீழ்ச்சி வேகம் முன்னையதிலும் பார்க்கக் குறைவானதாகும். இதே வேளையில், வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதில் சேவைகள்துறை இன்று முன்னணியில் நிற்கின்றது. உதாரமாக, ஐக்கிய அமெரிக்க நாட்டினது மொத்தத் தொழிற்படையில் சேவைகள் துறைத் தொழிலாளரின் பங்கு அதிகரித்து வருவதோடு, அத்துறையில் பெண்கள் கணிசமான பங்கினராக விருக்கின்றனர். மேலும், இத்துறையில் முகாமையாளருக்கும் ஊழியருக்குமிடையிலான வேறுபாடு மங்கிவருவதாகவும், இதனால் தொழிலாளர் வகுப்பினரின் வழமையான பிரச்சினைகளான வேதனங்கள், வேலைநேரம், தொழில் பாதுகாப்பு என்பவற்றை மையமாக வைத்துத் தொழிற் சங்கங்கள் அங்கத்தவர்களைத் திரட்ட முடியாதிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஊழியச் சந்தையில் பெண்களின் பங்கு அதிகரித்து வருகின்றது. ஆனால், அவர்களிற் பெரும்பாலானோர் ஊழியச் சந்தையின் கீழ் மட்டங்களிலேயே இருக்கின்றனர். அவர்கள் செய்யும் தொழில்கள் குறைந்த வேதனம் பெறுவனவும், மோசமான வேலை நிலைமைகளைக் கொண்டனவுமாக உள்ளன.
(i) தொழில்நுட்பத்திலேற்பட்டு வரும் துரித முன்னேற்றம் காரணமாக ஊழியச்
(iv)
சந்தையில் பயிற்சியும் வினைத்திறனும் கொண்ட தொழிலாளருக்கே இப்பொழுது கேள்வி உயர்ந்து காணப்படுகின்றது. எனவே, தொழிலாளரது பயிற்சியையும் வினைத்திறனையும் உயர்த்துவதற்கான கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அண்மைக் காலங்களில் வேகமாக வளர்ச்சியடைந்துள்ள முறைசாராத் துறையானது வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதில் இப்பொழுது முக்கிய பங்கு வகிக்கின்றது. எனினும், இத்துறையில் பணிபுரிவோர் தொழிற் சங்கங்களில் அங்கத்துவம் வகிக்காததாலும் சட்டப் பாதுகாப்பைக் கொண்டிராததாலும் அவர்களின் ஊழியம் சுரண்டப்படுகின்றது. பெண்களும் சிறுவர்களுமே இத்துறையில் பெருமளவினராகவிருப்பதால் அவர்களே கூடுதலான பாதிப்புக்குள்ளாகின்றனர். இலங்கையில் 10-14 வயதுப் பிரிவில் இருக்கும் 1.9 மில்லியன் சிறுவர்களுள் 2,50,000 பேர் இத்துறையில் தொழில் புரிவதாக ஒரு கணிப்பீடு கூறுகின்றது.
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

(ஆ) தொழில் வாய்ப்புக்களின் ஒழுங்கமைப்பு
(i)
(ii)
பூகோள மயமாக்கத்தின் கீழ் வேலை வாய்ப்புக்களின் முறையான தன்மை மாற்றப்பட்டு (deformalisation) அவை ஒப்பந்தவடிப்படையிலான வேலைகளாகவும்(அதாவது, ஒப்பந்த அடிப்படையில் தொழில் வழங்குநருக்கு வேலை செய்தல் அல்லது தொழில் வழங்குநரால் அமர்த்தப்பட்ட ஒப்பந்தக்காரரின் கீழ் வேலை செய்தல்), பகுதிநேர வேலைகளாகவும், சமயா சமய அல்லது தற்காலிக வேலைகளாகவும் மாற்றப்படுவதால் வேலை வாய்ப்பினது பாதுகாப்பிற்கான உத்தரவாதம் இழக்கப்பட்டு வருகின்றது. ஒருவனது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும் தொழில் முறைக்கு (Lifelong employment pattern) g56ir eypoth955igligi) (Jiu GiroTg).
சர்வதேச ரீதியிலான ஊழிய அசைவும் புலம் பெயர்ந்த ஊழியமும் : தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும் இடங்களுக்கு (நாடுகளின் எல்லைகளுக்கு அப்பாலுங் கூட) ஊழியம் அசைவது பூகோளமயமாக்கலின் இன்னொரு முக்கிய பண்பாக உள்ளதால், பல நாடுகளினது ஊழியச் சந்தைகளில் இன்று புலம் பெயர்ந்த ஊழியம் கணிசமான பங்கு வகிக்கின்றது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவ்வூழியம் மோசமான சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றது. அவர்களுக்குக் கொடுக்கப்படும் Golgogue, it 3-D G6.50a)856it (915st Gugs), dirty, dangerous and difficult) என வர்ணிக்கப்படுகின்றன. எமது பிராந்தியத்தைப் பொறுத்தவரை புலம் பெயர்ந்த தொழிலாளர்களுட் பெரும்பாலானோர் பெண்களாவர். அவர்களுக்குக் குறைந்த வேதனங்கள் வழங்கப்படுவதுடன், அவர்கள் வேலை செய்யும் சூழலும் மோசமானதாக உள்ளது. தொழில் வழங்குநரால் இப் பெண்கள் பாலியல் ரீதியான இம்சைகளுக்கு உட்படுத்தப்படுவதும் பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்சினையாகும்.
(ii) முறைசாராத்துறை ஊழியத்திலும் புலம் பெயர்ந்த ஊழியத்திலும் சர்வதேச
ஊழியத்தர நிர்ணயங்கள் மதிக்கப்படுவதில்லை.
(iv) செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் தொழிலுறவுப்பிரச்சினைகளினின்று
விடுபடுவதற்குமாக உற்பத்தியாளர் உற்பத்திச் செய்முறைகளில் தன்னியக்கக் கருவிகளைக் (automation) கையாள்வது அதிகரித்து வருகின்றமை வேலை வாய்ப்புக்கள் தொடர்பான இன்னொரு அண்மைக்கால அபிவிருத்தியாகும். இது வேலை வாய்ப்புக்களைக் குறைப்பதால் இதுவும் தொழிற் சங்கங்களின் கவனத்தை ஈர்க்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 95

Page 51
5. பல்தேசீயக் கம்பனிகளின் அதிகரித்து வரும் நடவடிக்கைகளும் பண்டங்களின் உற்பத்திச் செய்முறை நாடுகளுக்கிடையே பிரிக்கப்படுதலும்
பல்தேசியக் கம்பனிகளே பூகோளமயமாக்கலை ஏற்படுத்தும் பிரதான தாபன அமைப்புக்களாக விளங்குகின்றன. தொழில் நுட்பத்திலேற்பட்டு வரும் துரிதமான முன்னேற்றங்களினாலும் பேரளவு உற்பத்தியினாலும், மிகை சேமிப்புக்கள் அதிகரிப்பதனாலும் தவிர்க்க முடியாத வகையில் அவை தமது உற்பத்தியளவைப் பெருக்கிக் கொள்கின்றன; அல்லது தம்மைப்பூகோளமயப்படுத்திக் கொள்கின்றன. மூலதனமானது சர்வதேச அடிப்படையில் திரட்டப்படும் அதே வேளையில், பூகோள ரீதியான தொழிற்சாலைகளில் (Global Factories) அவை உற்பத்தியை மேற்கொள்வதாகக் கூறப்படுகின்றது. மோட்டார் வாகன உற்பத்தியிலிருந்து இதற்குச் சிறந்த உதாரணங்களைக் காட்டலாம். ஜெனரல் மோட்டார்ஸ் (General Motors) கம்பனியானது யப்பானின் டொயோட்டா, சுசூக்கி என்பவற்றுடன் கூட்டு முயற்சியில் ஈடுபடுவதோடு, சுவீடனின் Saab கம்பனி, கொரியாவின் டெய்வூ கம்பனி, யப்பானிய சுசூக்கி, இசூசு என்பவற்றிலும் பங்குடமையாளராக உள்ளது. தமது உற்பத்தி நடவடிக்கைகளுக்கு உள்நாட்டுச் சந்தைகள் போதுமானதாக இல்லாததாலேயே பல்நாட்டுக் கம்பபெனிகள் கட்டுப்பாடுகளற்ற வெளிநாட்டுச் சந்தைகளைத் தேடுகின்றன. மேலும், இக்கம்பனிகள் தமது உற்பத்தி நடவடிக்கைகளைப் பல்வேறு கட்டங்களாகப் பிரித்து அவற்றை வெவ்வேறு நாடுகளில் மேற்கொள்கின்றன. உதாரணமாக, 1993 இல் அமெரிக்காவினது ஏற்றுமதிகளில் 360 வீதமும், இறக்குமதிகளில் 43.0 வீதமும் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட பல்தேசியக் கம்பனிகளுக்கும், அக்கம்பனிகளது வெளிநாட்டுக் கிளைகள், உபகம்பனிகள் என்பவற்றுக்குமிடையே நடைபெற்ற வர்த்தகமாக இருந்தமையை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். அரசியற் புவியியல் நோக்கில் இவ்வித வர்த்தகம் வெளிநாட்டு வர்த்தகமெனக் கூறப்பட்டபோதும், பொருளாதார நோக்கில் இது ஒரே கம்பெனிக்குள்ளேயே நடைபெறும் கொடுக்கல் வாங்கல்களேயாகும். இவ்வித நடவடிக்கைகளின் மூலம் பல்தேசியக் கம்பனிகள் பூகோள ரீதியான தொழிற்சாலைகளை உருவாக்குவதாகக் கூறப்படுகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, போக்குவரத்துச் செலவுகளும் தொலைத் தொடர்புச் செலவுகளும் வெகுவாகக் குறைந்துள்ளமை இதற்குச் சாதகமாக உள்ளது. பேரளவு உற்பத்தி, ஏனைய நிறுவனங்களை இணைத்துக் கொள்தல் என்பவற்றினூடாகத் தமது பூகோள அளவிலான உற்பத்திப் பங்கையும் இவை பெருப்பித்துக் கொள்கின்றன.
96 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

6. உற்பத்தியின் சமூக நோக்கத்திற்கும் பொருளாதார நோக்கத்திற்கு
மிடையிலான முரண்பாடு
இறுதியாக, பூகோள மயமாக்கத்தினால் தீவிரமடைந்து வரும் ச்ர்வதேசப் போட்டித் தன்மையானது உற்பத்தியின் சமூக நோக்கங்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் தொழிலாளருக்குப் பாதுகாப்பானதும், சுகாதாரமானதும், போதுமான வருமானத்தைத் தருவதுமான வேலைச் சூழலை உறுதிப்படுத்துவதற்கும், தொழிலாளரது தொழிற் சங்க உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கட்டாய ஊழியத்தைத் தடைசெய்வதற்கும், வேலையில் அமர்த்துவதற்கான ஆகக் குறைந்த வயதெல்லையை நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான உத்திகளைக் கையாள வேண்டிய கட்டாயம் தொழிற்சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் இவற்றைச் செயற்படுத்த முயலும்போது உற்பத்திச் செலவுகள் உயர்வதால் உற்பத்தியாளர், ஊழியத்தைச் சிக்கனப்படுத்தும் தொழில் நுட்பங்களைக் கையாள முயலுகின்றனர். இது வேலை வாய்ப்புக்களைக் குறைக்குமென்பதையும் தொழிற் சங்கங்கள் கவனத்திற் கொள்ள வேண்டி இருக்கின்றது.
இன்றைய பூகோள நிலைமையில் தொழிற் சங்கங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பதற்கும், சமூக நீதியினை நிலை நாட்டுவதற்கும் பொறுப்பு வாய்ந்த முகவர்களாகவும், சமூக மாற்றங்களை முன்னெடுத்துச் செல்லும் தாபனங்களாவுமிருக்கும் தொழிற் சங்கங்கள் இன்றைய சூழ்நிலையில் ஒரு பெரும் பொறுப்பினைக் கொண்டனவாக இருக்கின்றன. உண்மையிலேயே அவை, வரலாற்றில் முன்னொருபோதும் எதிர்கொள்ளாத சவால்களுக்கு முகங் கொடுத்து வருகின்றன எனலாம். பூகோளfதியாக ஏற்பட்டு வரும் மேலே குறிப்பிட்ட மாற்றங்களில் தொழிலாளரும் தொழிற் சங்கங்களும் தமது நேரடியான செல்வாக்கைச் செலுத்துவதோடு, அதன்மூலம் ஏற்படும் நன்மைகளில் நியாயமான பங்கினைத் தொழிலாளர் அனுபவிப்பதை உறுதி செய்து கொள்வதற்கு அவை தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, மேற்படி மாற்றங்களைப்பெரும் சவால்களாகக் கருதும் அதேவேளையில், அவற்றைத் தமக்குக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்புக்களாகவும் கருதி அவை செயற்பட வேண்டும்.
இதற்கான வழிவகைகள் யாவை?
இன்றைய பூகோள நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்குத் தொழிற் சங்கங்கள் இரு விதமான வழிமுறைகளைக் கையாளலாம். தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல், இவற்றின் விளைவாக ஏற்படும் பூகோள
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 97

Page 52
மயமாக்கல் என்பவற்றின் பாதகமான விளைவுகளை எதிர்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்தல், அதாவது, அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்குத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளுதல் முதலாவது வழியாகும். மற்றது, இன்று நடைபெற்று வரும் மாற்றங்களுக்கு மாற்று வழிகளை முன்வைத்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்குப் பொறுப்பானவர்களைத் தூண்டுதலுமாகும். முதலாவது வழியைப் பின்பற்றுவதாயின், தமது முழுச்சக்தியையும் கொண்டு இம்மாற்றங்களை அவை எதிர்க்கலாம் அல்லது அவற்றிற்கு விட்டுக் கொடுத்து அவற்றின் விளைவுகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள முயலலாம். இரண்டாவது வழியைப் பின்பற்றுவதாயின், தாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை நன்கு பரிசீலித்து, அவற்றை முறையான வேலைத் திட்டங்களாகத் தயாரித்துக் கொண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாற்றங்களைத் திசைதிருப்ப முயலலாம். அதாவது, அம்மாற்றங்களைத் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்து அவை ஏற்படுத்தும் மாற்றங்களையும் வாய்ப்புக்களையும் தெரிவு செய்த அடிப்படையில் ஆதரித்துப் பயன்பெற முயலலாம். திட்டமிட்ட தலையீடுகளின் மூலம் இம்மாற்றங்களில் செல்வாக்குச் செலுத்த வேண்டுமாயின், அவற்றின் பலம், பலவீனங்கள், அவை உருவாக்கும் வாய்ப்புக்கள், அச்சுறுத்தல்கள் என்பவற்றைக் கவனமாகப் பரிசீலனை செய்து மதிப்பீடு செய்ய வேண்டும். தொழிற்சங்கங்கள் தமது சமூகப் பங்காளிகளால் முன்வைக்கப்படும் எல்லாத் திட்டங்களுக்குமே எதிர்ப்புத் தெரிவிக்காது அவற்றிற்கு மாற்றுத் திட்டங்களை முன் வைப்பதோடு அவை அமுல் செய்யப்படுவதைத் தூண்டவும் வேண்டும். அரசாங்கங்கள் அமுலாக்கும் கொள்கைகள், திட்டங்கள் என்பன தொடர்பான தகவல்களைத் திரட்டி ஆராய்ச்சிகளை மேற்கொள்வதன்
மூலமே அவை பற்றிய சரியான மதிப்பீட்டைச் செய்து கொள்ளலாம்.
மேலும் தொழிலாளரும் அவர்களது பிரதிநிதிகளும் ஒரு நாட்டினது பொருளாதாரம் எவ்வாறு செயற்படுகின்றது, பல்வேறு கொள்கைகளும் செயல் திட்டங்களும் அதனை எவ்வாறு பாதிக்கின்றன என்பன பற்றிய தெளிவான விளக்கத்தைக் கொண்டிருப்பதும் இன்றியமையாததாகும். தமது நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், தொழில் வழங்குநருடனும், சில சந்தர்ப்பங்களில் அராசங்கத்துடனுங் கூட அர்த்த புஷ்டியுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் இது அவசியமானதாகும். பல்வேறு கொள்கைகள் தம் மீதும், தமது தொழில் நிலைமைகளின் மீதும் எவ்வாறான தாக்கங்களைக் கொண்டிருக்கும், இக்கொள்கைகளால் தோன்றும் பாதகமான விளைவுகளை எவ்வாறு தணித்துக் கொள்ளலாம் என்பன பற்றியும் அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம்
98 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

இருக்கின்றது. சுருக்கமாகக் கூறுவோமாயின், தொழிற் சங்கவாதிகளிடையே தொழில் சார்பண்பும் (Professionalism), அணுகுமுறையும் வளர்ச்சியடைவது ஒரு இன்றியமையாத தேவையாகும். இன்றைய தலைவர்களிடையே இது போதியளவு இல்லையென்பதை ஏற்று அவர்கள் தமது திறைமைகளை உயர்த்திக் கொள்ளும்
முயற்சிகளில் தாமதமின்றி ஈடுபட வேண்டும்.
தொழிற் சங்கங்களுக்கிடையே ஒற்றுமையின் முக்கியத்துவம்
இறுதியாக, இன்றைய சூழ்நிலையில் தொழிற் சங்கங்கள் தமக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்திக் கொள்வது தவிர்க்க முடியாத ஒரு தேவையாகும். தொழிற் சங்கங்களின் எண்ணிக்கை அதிகமாகவிருப்பதும், அவை தமக்கிடையே பரஸ்பரம் பகைமையுணர்வைக் கொண்டிருப்பதும், தொழில் வழங்குநருக்கெதிராகத் தம்மைப் பலவீனப்படுத்தும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும். எனவே, தொழிற் சங்கங்கள் தமக்கிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்திக் கொள்வது ஒரு கட்டாய தேவையெனக் கூறலாம். ஆனால், துரதிஷ்டவசமாகத் தொழிற் சங்கங்கள் ஒன்றுபடுவதற்குப் பதிலாக அவை மேலும் மேலும் பிரிந்து செல்லும் ஒரு போக்கினை இன்று நாம் காணக்கூடியதாக உள்ளது. பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழிற் சங்க இயக்கம் இதற்குச் சிறந்த உதாரண மாக விளங்குகின்றது. ஏற்கனவே சிதறிக் கிடக்கும் அது அண்மைக் காலத்தில் தலைவர்களிடையே காணப்படும் புரிந்துணர்வின்மை, தலைமைத்துவத்திற்கான போட்டி என்பன காரணமாக மேலும் பிளவுபட்டு வருகின்றன. பலம் வாய்ந்த தனியார் கம்பனிகளது நிர்வாகத்தின் கீழ் தொழில்புரியும் தோட்டத் தொழிலாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இச்சங்கங்கள் ஏற்கனவே சிதறுண்டு காணப்படுகின்றன. சிதறிக் கிடக்கும் இத்தொழிற் சங்கங்கள் ஒன்றிணைவதற்குப் பதிலாக, மேலும் மேலும் உடைந்து சிறு சிறு சங்கங்களாக மாறிவருகின்றன. தோட்டத் தொழிலாளருக்கு இது எந்த விதத்திலும் சாதகமாகவிருக்க மாட்டாது என்பதை இப்போதாயினும் உணர்ந்து ஒன்றுபடுவதன் மூலமே இத்தொழிற் சங்கங்கள் தமது நோக்கங்களை அடைவதில் வெற்றி காண முடியுமென்பதில் கருத்து வேறுபாடுகளுக்கு இடமிருக்க முடியாது. தோட்டத்துறை சார்ந்த தொழிற் சங்கங்களுக்கு மட்டுமன்றி பொதுவாக இது எமது நாட்டின் எல்லாத் தொழிற் சங்கங்களுக்குமே பொருந்தக் கூடிய ஒன்றாகும்.
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 99

Page 53
பல்வேறு நாடுகளின் தொழிற் சங்கங்களுக்கிடையே சர்வதேச ரீதியான ஒற்றுமையின் அவசியம்
இறுதியாக, பூகோள மயமாக்கல், நாடுகள் பரஸ்பரம் ஒன்றிலொன்று தங்கியிருத்தல் என்பவற்றால் எழும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு பல்வேறு நாடுகளிலும் செயற்பட்டுவரும் தொழிற் சங்கங்களுக்கிடையே சர்வதேச ரீதியில் ஒற்றுமை ஏற்படுவது இன்றியமையாததாகும். பூகோளமயமாக்கப்பட்டு வரும் கம்பனிகளைப் பற்றியும், அவை செயற்படும் விதம் பற்றியும் தொழிற் சங்கங்கள் தெளிவான விளக்கங்களைக் கொண்டிருக்க வேண்டியிருப்பதால், அவை தொடர்பான தகவல்களைத் திரட்டி அவற்றை ஆய்விற்குட்படுத்த வேண்டிய கட்டாயத் தேவை தொழிற் சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ளது. பொருத்தமானதொரு சர்வதேச வலையமைப்பினுாடாகவே இவ்வித தகவல்களைத் திரட்டிக் கொள்வது சாத்தியமாகும். இந்த வகையில், தொழிற் சங்கங்களுக்கிடையே சர்வதேச ரீதியில் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் ஏற்படுவது இதற்கு வாய்ப்பாகவிருக்குமெனலாம். எனவே, தேசீய தொழிற் சங்கங்கள் சர்வதே தொழிற் சங்க இயக்கத்திலும் தொழிற் சங்கச் சம்மேளனங்களிலும் இணைந்து கொள்வது இன்றைய காலத்தின் பொதுவான தேவையெனலாம். பரஸ்பரம் தங்கியிருக்கும் தன்மை அதிகரித்துவரும் இன்றைய உலகில் பூகோளமயமாக்கலின் விளைவுகளை எதிர்கொள்வதற்கு இதுவே சிறந்த தொழிற் சங்க அணுகு முறையுமாகும்.
References
1. Dunning, John H. 1993, Multinational Enterprises and the Economy, Addison
Wesley. 2. Felipe Gonzales, Antonio Guterres et al. 1998. Shaping Globalization, Friedrich
Ebert, Stiftung, Bonn, Germany. 3. South Centre, 1996, Liberalization and Globalization: Drawing Conclusions for
Development, Atar, Geneva. 4. Williamson, J. G. 1997, “Globalization and Inequality: Past and Present". World
Bank Research Observer 12 (2): 117-35.
100 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002
 

“பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்” அடுத்த இலக்காக ஃபிலிப்பின்ஸ்
- அய்ஜாஸ் அகமது
(Apppgih சட்டபூர்வமாகத் தெரிவுசெய்யப்படாத அமெரிக்கச் சனாதிபதியான ஜோஜ்புஷ் (ஜூனியர்), செப்தெம்பர் 11 நிகழ்வுகளுக்குப் பத்து நாட்கள் பின்னர் ஆற்றியமுக்கியமான கொள்கை விளக்க உரையொன்றின் போது, “பயங்கரவாதத்திற்கெதிரான போர்” உலகளாவியதும் என்றென்றைக்குமானதும் ஆகும் என்று பிரகடனஞ் செய்தார். சுமார் அறுபது நாடுகளுக்குச் சென்று, அது “என்றுமே முடியாத பணி” என்றும் அவர் கூறியுள்ளார். இவ்வாண்டு ஜனவரி 20ம் நாள் ஆற்றிய தனது "அமெரிக்க ஒன்றியத்தின் நிலை” (State ofthe Union) குறித்த பேருரையின் போது, ஆகக்குறைந்து ஒரு விடயம் பற்றியேனும் மேலும் வெளிப்படையாக அவர் கூறினார்: “மிகவும் புலனான ராணுவ நடவடிக்கை ஆஃப்கனிஸ்தானில் நிகழ்ந்தாலும், அமெரிக்கா வேறு இடங்களிலும் காரியத்தில் இறங்கியுள்ளது. இப்போது ஃபிலிப்பின்ஸில் நமது படைகள் உள்ளன.” இங்கு முக்கியமான சொல் "புலனான” என்பதாகும். ஏனெனில், அன்று வரை அந்தப் பாவப்பட்ட நாட்டில் அமெரிக்கப்படைகள் போயிறங்கியதாக யாரும் கேள்விப்படவில்லை என்பதோடு, இன்றுங்கூடத், தென்ஃபிலிப்பின்ஸில் உள்ள பஸிலான், சம்போன்கா நகரங்கட்கு இவ்வருடம் பெப்ரவரியிலேயே அவர்கள் போகத் தொடங்கினர் என்று ‘புலனாகக் கூடிய’ விதமாக விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அச்சமயம் அவ்வாறு கருத்துக் கூறியவர் B"ஷ் மட்டுமல்ல. அயல் உறவுச் செயற்குழுவில் பங்குபற்றும் அமெரிக்க ஸெனற்றர் ஸாம் பிறவுண் பாக் 'ஆஃப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியான இலக்கு ஃபிலிப்பின்ஸ் என்றே தோன்றுகிறது” என்று ஊடகங்கட்குக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
ஃபிலிப்பினிய அரசியல் யாப்பு, அந்நாட்டில் அயற் படைகள் நிலைகொள்வதைத் தடை செய்துள்ளமையால், அபு ஸய்யாஃப் இயக்கத்துடன் போரிடுவதற்கும், “கூட்டுச் செயற்பாடுகள்” மூலம் ஃபிலிப்பினிய ராணுவத்தைப் “பயிற்றவும் ஆதரிக்கவும்” மட்டுமே அமெரிக்கப் படைகள் வரும் என்ற புனைவு உருவாக்கப்பட்டது. ஏற்கனவே பாகிஸ்தானில் நான்கு விமானத்தளங்களை அமெரிக்கப் படைகள் பொறுப்பேற்றதுடன் அந்த நாட்டின் வட பிரதேசங்களூடு
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 01.

Page 54
பரவியுள்ளனர் என்பதைக் கருத்திற் கொள்ளும் போது, மத்திய ஆசிய நாடுகள் பலவற்றின் எண்ணெய் வளங்களைக் குறிவைக்கும் நோக்குடன் அந்நாடுகளில் அமெரிக்கா துரிதமாக இராணுவத் தளங்களையும் வசதிகளையும் தனக்காகப் பெற்றுள்ளது என்பதைக் கருத்திற்கொள்ளும் போதும்; இறுதியாக, அதேவேளையில் முழு அளவிலான போரொன்றில் ஈராக்கைத் தமது உடனடி இலக்காக்குவதையும் 'ஆட்சி மாற்றத்தையும் ஆதரித்து அதியுயர்ந்த அமெரிக்க அதிகாரிகளும் முக்கியமான அமெரிக்கக் கொள்கை நிபுணர்களும் உணர்வுபொங்க வாதிப்பதையுங் கருத்திற் கொள்ளும்போது, ஏறத்தாழ கற்பனையான ஒஸாமா பின்லாடனுக்கு எதிரான போரிலும் B"ஷ் “உலகம் முழுவதையும் எட்டவல்ல பயங்கரவாதம்” என்பதற்கு எதிரான போரிலும் "அடுத்த இலக்கு” என்று ஃபிலிப்பின்ஸுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம், குறைந்தபட்சம், மிகவியப்பளித்தது.
அங்கு தனது இராணுவ நோக்கங்களின் சார்பாக அமெரிக்கா முன்வைத்துவரும் நியாயங்கள் அற்பமானவையும் அசாத்தியமானவையும் வேண்டுமென்றே தவறாகக் காட்டுவனவுமாகும். அதாவது சில மாதங்கள் முன்னர் ஒரு கொள்ளைக் கூட்டம் இரண்டு அமெரிக்கர்களைப் பணயக்கைதிகளாகக் கொண்டு சென்ற காரணத்தை முன்னிறுத்தி, "நாம் (அமெரிக்கர்கள்) இப்போது ஃபிலிப்பின்ஸில் நமது படைகளை வைத்திருக்கிறோம்” என்ற மொட்டையான கூற்றுடன் தனது அரசியல் யாப்பில் அயற்படைகளை தனது மண்ணில் நிலை நிறுவுவதைத்தடை செய்துள்ள ஒரு நாட்டை "ஆஃப்கானிஸ்தானுக்கு அடுத்த இலக்கு” என்று பிரகடனஞ் செய்ய முடியும் என்றவாறு அது அமைந்துள்ளது.
“அடுத்த இலக்கு” என்ற சொல்லணி முதலிற் தொடங்கிய வேளை, ஃபிலிப்பினிய சனாதிபதி Gளோறியா மகபGல் - அறோயோ அவர்களே " பண வெறிபிடித்த குற்றச்செயல் கும்பல்”அன்றி இஸ்லாமிய தீவிரவாதிகள் அல்ல என்று கருதுகிற, கப்பத்துக்காகப் பணயக்கைதிகளைப்பிடிக்கும் குழுவான அB"ஸய்யாஃப் தான் அமெரிக்கப் பணயக் கைதிகளான மாரின், Gளோறியா Bேண்ஹம் ஆகிய இருவரையும் பிடித்து வைத்திருந்தது என்பது இப்போது நிச்சயமான உண்மை. இந்தப் பணயக் கைதிகள் ஒரு வருடம் முன்னரே பிடிக்கப்பட்டவர்கள், எனினும், பிற அமெரிக்கப் பணயக் கைதிகள் உட்பட அB"ஸய்யாஃப் குழுவினால் கடந்த பல ஆண்டுகளிற் பிடிக்கப்பட்டவர்களில் இவர்களே மிக அண்மையிற் பிடிக்கப்பட்டவர்களாவர். இக்குழுவெகு பிரசித்தமான முறையில் வெளிப்பட்டு ஆறு ஆண்டுகளின் பின்னர் 1997 - 1998 அளவில்தான் அது அமெரிக்க அரசுத் திணைக்களத்தாற்தன் “பயங்கரவாத அமைப்புக்கள்’ பட்டியலில்
102 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

உள்ளடக்கப்பட்டது. செப்தெம்பர் 11 வரை அது Bன்லாடனுடன் எவ்வகையிலும் தொடர்புபடுத்திக் கூறப்பட்டதுமில்லை. 1990 களின் முற்பகுதியில் அB"ஸய்யாஃப், Bன்லாடனிடம் நிதியுதவிபெற்றிருக்கலாமெனினும், 1995க்குப்Bன்பின்லாடனுக்கு அB"ஸய்யாஃப் குழுவுடன் தொடர்புகள் இல்லை என செப்டெம்பர் 11க்குகுப்பின்பு கூட சனாதிபதியின் சார்பாகப் பேசுபவரான றிGோBேTோ TGலாஒ (Rigoberto Tigao) பிரகடனஞ் செய்திருந்தார். அவர் தொடர்ந்து, "Bன்லாடனின் ஆட்கள், அB"ஸய்யாஃப் குழுவினர் அறியாமை மிக்கோரும் கூலிப்படை மனப்பான்மை மிக்கோரும் என்று நினைத்தனர்”என்று வேவுச் செய்தி அறிக்கை ஒன்றைச்சான்று கூறினர்.
தனது "பயங்கரவாதத்திற் கெதிரான போரை” ஃபிலிப்பின்ஸுக்கும் விஸ்தரிக்கப் போவதாக அமெரிக்கா விடாப்பிடியாக நின்று, அB"ஸய்யாஃப் குழுவை அதற்கான சாட்டாகப் பாவித்த பின்னரே ஃபிலிப்பினிய அரசாங்கம், அக்குழுவை வெறும் “கொள்ளைக்காரர்”, “கொடுஞ்செயலர்”என்று குறிப்பிடுவதை நிறுத்தியது. அப்படியிருந்தும், சிறியதொரு ஆதாரத்தைக்கூட முன்வைக்காமல், அல்கைடா மைய நிலையம் ஒன்று ஃபிலிப்பின்ஸில் இயங்குவதாகவும், உள்ளுர்ப் படையினருடன் சேர்ந்து போரிடுமாறு, மேம்பாடுடைய சிறப்புப்படையினரில் 160 பேர் உட்பட்ட அமெரிக்கத் துருப்புக்களை உடனடியாக அனுப்பவேண்டுமெனவும் அமெரிக்கா பிரகடனஞ் செய்தது.
எவ்வாறாயினும், ஃபிலிப்பினிய அரசியல் யாப்புதன்நாட்டு மண்ணில் அயற் படையினர் நிலைகொள்வதை தடைசெய்கிறது. எனவே, "கூட்டுப் பயிற்சிச் செயற்பாடுகள்’ மூலம் ஃபிலிப்பினிய ராணுவத்தைப் பயிற்றுவிக்கவும் ஆதரிக்கவும்” மட்டுமே அமெரிக்கப்படைகள் வருகின்றன என்றும், ராணுவ நடவடிக்கைகளின் போது ஆலோசனை வழங்கும் முறையிலேயே செயற்படுவன என்றும் ஒரு புனைவு உருவாக்கப்பட்டது. இதுவும் பல காரணங்களுக்காக வியப்பூட்டுவதாக இருந்தது. ஒருபுறம், தனியே அB"ஸய்யாஃப் என்ற சிறு குழு மட்டுமல்லாமல் அதனிலும் மிகவலிய மொறோ தேசிய விடுதலை முன்னணி (MNLF), மொறோ இஸ்லாமிய விடுதலை முன்னணி (MLF) எனும் இரு பெரும் கிளர்ச்சிச் சக்திகளின் படைகளையுங் கொண்டதான ஒரு பிராந்தியத்தில், அயற்படைகள், உண்மையான போர்ப்பிராந்தியத்தில் போர் நடவடிக்கைகளின் போதுங்கூடப், பயிற்றுவித்தலையும்” “பயிற்சிச் செயற்பாடுகளையும்” மட்டுமே மேற்கொள்ளும் என்பது வெகுவினோதமாகவே இருந்தது. மேலும், இவ்வருடம் மார்ச்மாதம், இக்கட்டுரையாளர் முன்னிலையில், சர்வதேச அமைதித் தூதுக்குழு ஒன்றிடம், Bஸிலானில் நிலையமைந்த ஃபிலிப்பினிய ஆயுதப்படைகளைச் சேர்ந்த,
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 03

Page 55
மேஜர் ஸல்வடோர் கலனோய், அB"ஸய்யாஃப் குழுவின் ஆள்வலு, 'ஆக மிஞ்சினால் 40 முதல் 60 உறுப்பினர்கட்குள்ளாக” சுருங்கிவிட்டது என்று கூறினார் ஆனால் அதேவேளை 17,000 ஃபிலிப்பினிய ராணுவ, துணைராணுவப் பிரிவினர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அB"ஸய்யாஃப் குழுவுக்கு எதிராகப் போரிட்டு வந்துள்ளனர். இதன்படி, நாலைந்து “ கொள்ளைக்காரர்களுக்கு” ஏறத்தாழ ஆயிரம் படையினர் என்ற விகிதமாகிறது.
மேற் சொன்ன வரையறுக்கப்பட்ட மோதல் போக, அதைவிட எவ்வளவோ பெரிதான அளவில் 30 ஆண்டுகளாக மின்டனாவோ வாசிகளான மொறோ மக்களின் எழுச்சியை அடக்கவும் அதைவிட நீண்டகாலமாக நாடளாவிய முறையில் மாஒவாதக் கிளர்ச்சியை அடக்கவும் ஃபிலிப்பினிய ராணுவம் முழுவதும் போரிட்டு வந்துள்ளது. எனவே, சிறப்புப்படையினர் 160 பேர் உட்பட்ட 1200 அமெரிக்கப் படையினர் ஏன் இந்த மாபெரும் ஃபிலிப்பினியப் படையினருக்கு ஒரு மேலதிக இணைப்பாகத் தேவைப்படுகின்றனர் என்பது தெளிவாகவே இல்லை. அது போக, பிரதேசத்தையோ மொழியையோ எதிரியையோ’ அந்த எதிரி கரைந்து மறையக்கூடிய சனத்திரளையோ அறியாத அமெரிக்கர்களிடமிருந்து போராற் புடமிடப்பட்ட இந்த அனுபவமிக்க ராணுவம் எத்தகைய ‘பயிற்சியை’ பெற முடியும் என்பதும் தெளிவாக இல்லை. ஃபிலிப்பினிய சனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான றொய்லோ Gொலெஸ், இந்தப்பயிற்சிச் செயற்பாடுகள் என்பவற்றை அமெரிக்கர்களுக்கு “வேலை மூலமான பயிற்சி” என்று விவரித்தது உண்மைக்கு மிக நெருக்கமானது.
எனவே, அதுதான் முதலாவது காட்டு: அதாவது, அB"ஸய்யாஃப் என்பது இரண்டு அமெரிக்கர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்துள்ள ஒரு இஸ்லாமிய தீவிரவாதக் குழுவும் அல்கைடா மைய நிலையங்களில் ஒன்றுமாகும்; எனவே ஃபிலிப்பினிய ராணுவத்தைப் பயிற்றுவிக்கவும் பணயக் கைதிகளை விடுவிக்கவும் அமெரிக்கச் சிறப்புப்படைகள் தேவைப்பட்டன. Bன்லாடனுடனான தொடர்பு எதுவும் ஃபிலிப்பினிய அரசாங்கத்தின் அதிஉயர்ந்த மட்டத்தில் மறுக்கப்பட்டதுடன் பணயக் கைதிகளின் பிரச்சினை, ஏககாலத்தில், அபத்தமானதும் அவலமானதுமான முறையில் தீர்க்கப்பட்டது. ஜூன் முற்பகுதியில், ஃபிலிப்பின்ஸில் அமெரிக்கப் படைகள் இருப்பதை B"ஷ் அறிவித்து ஐந்து மாதங்களின் பின்பு, அமெரிக்கப் படைகளால் பயிற்றுவிக்கப்படாததும் அB"ஸய்யாஃப் குழுவைத் தேடிக் கண்டுபிடிக்க (ஆனால் அதனுடன் மோதாதிருக்க) அனுப்பப்பட்டதுமான ஃபிலிப்பினிய ராணுவத்தின் முன்னோடிக் கோஷ்டியொன்று தற்செயலாக அB"ஸய்யாஃப் குழுவை எதிர் கொண்டு அடையாளங் காணப்பட்டு துப்பாக்கிச்
104 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

சூட்டுக்குட்பட்டுத் திருப்பித்தாக்கியதில் மாரின் Bேண்ஹமையும் ஃபிலிப்பினியத் தாதி ஒருவரையுங் கொன்றதோடு Gறாஸியா Bேண்ஹமைக் காயப்படுத்தியது. அவரைக் கைவிட்டுவிட்டு அB"ஸய்யாஃப் குழு தப்பியோடிவிட்டது. இதுதான் பயிற்சியினதும் மீட்பினதும் லட்சணம்!
இந்த மீட்சிப்பணி 'அதி வெற்றிகரமானது என்று அமெரிக்க அதிகாரிகள் பிரகடனம் செய்ததுடன் இவையாவும் அமெரிக்கப் பயிற்சியின் பயனானவை என்றும் உரிமை கோரினர். ஆனால் “காப்பாற்றப்பட்டவரான” (ராணுவத்தாற் சுடப்பட்டுக்) காயப்பட்ட Gறாஸியா Bேண்ஹம், தன்னைக் கடத்தியோர் “வெறும் குற்றச் செயற்காரர்களே” என்று கூறி அவர்கட்கும் இஸ்லாமிய சிந்தனைக்கும் எதுவித தொடர்பும் இருப்பதாக ஏற்க மறுத்தார். இதுதான் இதன் முரண்நகை. சமயப் பிரசாரகரான அவரால் மற்றவர்களுடைய சமய நம்பிக்கைகள் பற்றிச் சொல்வது தெளிவாகவே இயலுமானது என்பதுபோக, அவர் தனது நாட்டின் அரசாங்கத்தை விடவும் வாய்மையாளராகவும் காணப்பட்டார்.
அசாத்தியமானவை என்று விரைவிலேயே காட்டப்பட்டதான அB"ஸய்யாஃப் பற்றிய அதிகார பூர்வமான வாதங்களையொட்டி (சி. என். என், Tைம் சஞ்சிகை, நியூயோர்க் Tைம்ஸ், Fார் ஈஸ்ரேன் இகொனாமிக் றிவ்யூ ஆகியன சம்பந்தப்பட்ட) அதிகாரபூர்வமற்ற ஒரு ஊடகப் பிரசாரமும் தொடங்கியது. ஃபிலிப்பின்ஸில் “உண்மையான பயங்கரவாத அபாயம்” அB"ஸய்யாஃப் என்ற சிறுகுழுவிடமிருந்து அன்றி அதினும் மிகப்பெரிதான MLF இடமிருந்தே தோன்றுகிறது என இவை கூறின. இவ்வருடம் மாச் மாதம் அளவில் MILF தலைவர்கள் சிலரை நான் சந்தித்தபோது மேற்குறிப்பிட்டவாறு அவர்களுக்கு இலக்கு வைப்பது விரைவிலேயே நடக்கக் கூடும் என்றும் அமெரிக்காவின் யுத்ததந்திர திட்டங்கள் மின்டனாஒவில் நிலை கொள்ளுமாயின், MILF எவ்வளவுதான் தவிர்க்க விரும்பினாலும் அமெரிக்கப் படைகளுடனான மோதல் தவிர்க்க இயலாததாயிருக்கும் என்றும் எச்சரித்திருந்தேன். சர்வதேச ஊடகப் பிரசாரம் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பதை அதன் பின்னரே உணர்ந்தேன்.
அமெரிக்க அரசாங்கம் வெளிவெளியாவே அந்த நிலைப்பாட்டை மேற்கொள்ளாத போதும், ஃபிலிப்பினிய அரசாங்கத்தில் உள்ள முக்கியமான சக்திகளும் மின்டனாஒவில் MLF செயற்படும் மாகாணங்களில் உள்ள (முஸ்லிம் பிரமுகர்கள் உட்பட்ட) பிரமுகர்களும், அமெரிக்காவைப் போரிற் சம்பந்தப் படுத்துவதை விரும்புகின்றனர். யாருமே அB"ஸய்யாஃபின் “இஸ்லாமிய மிரட்டலைக்” கண்டுகொள்ளாத போது, “கூட்டுப் பயிற்சிச் செயற்பாடுகள்’
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 105

Page 56
முடிவுக்கு வரவுள்ள ஜூலை 31 க்கு அப்பால் தனது படைகளை ஃபிலிப்பின்ஸில் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு அதைவிடப்பெரியதும் நின்று பிடிக்கக் கூடியதுமான நியாயம் ஒன்று தேவையாகிறது.
அமெரிக்காவின் மற்றைய நோக்கங்களுக்கு உடன்பாடாக, MILF இன் அதிகாரபூர்வமற்ற கரமென இப்போது சித்தரிக்கப்படும் அB"ஸய்யாஃப் குழுவுடனும் (தவிர்க்க முடியாதபடி) Bன்லாடனுடனும் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஸியா ஆகிய நாடுகளிலும், சிலர் கூறுவதுபோல மின்டனாஒவிலும் செயற்படும் ஒரு பிராந்தியக் குழுவான ஜெமாஃ இஸ்லாமியாவுடனும் MILFஐத் தொடர்புபடுத்தும் பிரசார முயற்சிகள் மும்முரமாகியுள்ளன. MILFக்கு எதிராக மணிலா அரசாங்கம் விட்டுவிட்டுத் தொடுக்கும் போரில் அமெரிக்கா தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புமேயாயின், “சர்வதேசப்பயங்கரவாதத்துடன்" சாட்டப்பட்டுள்ள இந்த உறவு மிகவும் பயனுள்ளதாயிருக்கும்.
அB"ஸய்யாஃப் குழுவினதும் MILF இனதும் தோற்றுவாய்களையும் வரலாற்றுப்பாத்திரங்களையும் தெளிவுபடுத்துவதற்கு முன்னம், முதலில் MILFக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் செல்லுபடியாகாத தன்மையைத் தெளிவுபடுத்த வேண்டும். அது அB"ஸய்யாஃபின் இரகசியமான தாய் இயக்கம் என்ற குற்றச்சாட்டைப் பொறுத்த வரை, மரித்தெஸ்டா ஜூலியான்விற்று G, கிளென்டா, எம். கிளோறியா ஆகியோர் “பிறை நிலவின் கீழ்: மின்டானாஒவில் கிளர்ச்சி” (Under the Crescent: Rebellion in Mindanao, Ateneo Centre for Social Policy and Public Affairs, Quezon City, 2000) Tsiro ETSlso sirth மேற்கொண்ட வரையறுத்த ஆய்வில் முன்வைத்துள்ள விவரமிக்க வாதங்கள் கூடுதலானளவு சாத்தியமானவை. அவற்றின்படி, அB"ஸய்யாஃபின் பழிப்புக்குரிய வெற்றிகளின் தோற்றுவாய்களில் குறைந்தபட்சம் ஒன்றாவது, MILF போன்ற பிற இஸ்லாமியக் குழுக்கள் மீது களங்கம் கற்பிக்கும் நோக்குடனும், மணிலா அரசாங்கத்துக்கு எதிரான குழுக்களிடையே பகைமையை விளைவிக்கவும் ஃபிலிப்பினிய ராணுவமே அB"ஸய்யாஃப் குழுவை அவற்றுக்கு எதிராக பயன்படுத்தியதுடன் தொடர்புடையது.
அதுபோக, அந்தக் குழுவின்"ஆட்கடத்தலும் மீட்புப்பணமும்” வேலைகளில் பல குடிசார் அலுவலர்களும் இராணுவ அலுவலர்களும் பங்குபற்றிப் பொருளிட்டியதற்கும் கணிசமானளவு ஆதாரம் உண்டு. அதுமட்டுமல்ல அB"ஸய்யாஃபின் ஆட் கடத்தல் வேலைகளை MILF இன் அரசியற் தலைமை மிகவும் வன்மையாகக் கண்டித்ததுடன் MILF உடன் தொடர்புடைய உலெமாவும் நுணுக்கமான சமயக் கொள்கை அடிப்படையில் அவற்றைக் கண்டித்தது. மேலும், அB"ஸய்யாஃப் போலன்றி, தென் மின்டனாஒவின் பல மாகாணங்களில் வாழும்
106 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

முஸ்லிம் சமூகத்தினரின் பெரும் பகுதியினரிடையே ஆழமாக வேரூன்றியுள்ள மிகப்பெரிய ஒரு அமைப்பான MLFக்கு மீட்புப்பண வருமானம் தேவையானதோ அதனால் சரியென ஏற்கப்பட்டதோ இல்லை.
அல்கைடா தொடர்பைப் பொறுத்தவரை, உண்மை ஏதெனின், 1960களில் தமது மாணவப்பருவத்திலிருந்து அடுத்தடுத்து ஏற்பட்ட மணிலா அரசாங்கம் ஒவ்வொன்றையும் எதிர்த்துவந்த ஒரு கேந்திரமயமான குழுவேMLFக்குத்தலமை தாங்குகிறது என்பதாகும். இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான முடிவுகளைத் தற்போது மேற்கொள்ளும் இரண்டாவது மட்டத் தலைமையும் இவ்விடயங்களிற் கால் நூற்றாண்டுக் காலமாக சி.ஐ.ஏ.யின் கண்ணில் Bன்லாடனின் சாயை கூட விழமுன்னரே, செயற்பட்டுவந்துள்ளது. அவர்களில் சிலர் ஆப்கானிஸ்தானில் கம்யூனிசத்துக்கு எதிரான அமெரிக்காவின் 'ஜிகாத் தினுடைய தொடக்க காலத்திற் செயற்பட்டவர்கள் என்பதோடு அமெரிக்காவின் காலாட்படையில் ஒரு சிப்பாயாக பின்லாடன் இருந்த காலத்தில் அவரிடமிருந்து சிறிது பணம் பெற்றதைப் பற்றி MLF எதையுமே மறைக்கவில்லை. எனினும் 1980 களின் நடுப்பகுதிக்குப் பின்னர் எதையுமே பெறவில்லை என்பதற்கு மாறாக எவருமே எதுவித ஆதாரத்தையும் முன் வைத்ததில்லை. அது பத்தாயிரக் கணக்கான தனது ஆதரவாளர்களிடமிருந்து தனக்கான நிதியைத் திரட்டுகின்றது. ஃபிலிப்பினிய ராணுவத்தின் ஊழல் மிக்க ராணுவ அதிகாரிகளே அதன் ஆயுதங்களின் தோற்றுவாய். அதற்கும் மேலாக ஏறத்தாழ 30 ஆண்டுகட்கும் முன்னர் கிளர்ச்சி தொடங்கிய காலத்திலிருந்து, மலேசியாவின் ஸBா மாகாணத்தினூடாகச் செயற்பட்டு வரும் பழைய கடத்தல் வலையமைவுகளையும் அது பயன்படுத்துகிறது.
றொக்கெற் வீசு பொறிகள் வரையிலான தனது ஆயுதங்கள் பலவற்றை அது தனது பாசறைகளிலேயே உற்பத்திசெய்கிறது. MLF தனது போராளிகளின் எண்ணிக்கையைப் பெரிதும் மிகைப்படுத்தி 80,000 என்கிறது. ஃபிலிப்பினிய ராணுவ உளவுத் தகவலின்படி அது 15,000 எனினும், அதுவும் ஒரு கணிசமான தொகையே. அதைப்போல் அல்கைடாவின் ஒரு கேந்திர மையமென்பது அறிவுக்குப் பொருந்தாது. அதேவேளை அண்டை நாடுகளில் இயங்கும்"ஜெமாஹ் இஸ்லாமியாஹ்” MLF உடன் அதிகார பூர்வமற்ற சில உறவுகளைப் பேன இடமுண்டு எனினும், இரண்டுக்குமிடையே அடிப்படையான அரசியற் கருத்து முரண்பாடு உள்ள்து. ܫ
MLF கொள்கையளவில் மின்டானாஒ முழுவதிலும் சுதந்திரமான இஸ்லாமிய அரசு ஒன்றை வேண்டி நின்றாலும், தென் ஃபிலிப்பின்ஸில் முஸ்லிம்கள் பெருந்தொகையாக வாழும் எட்டு மாகாணங்களிலும்,
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 07

Page 57
ஃபிலிப்பின்ஸின் பிறமாகாணங்களுடனும் தளர்வான ஒரு கூட்டாட்சி எனும் அடிப்படைக்கீழ், ஒரு முழுமையான சுயாட்சியை ஏற்க ஆயத்தமாக உள்ளது. ஆனால் ஜெமாஹ் என்பது ஒரு இஸ்லாமியப் பொற்காலம் பற்றிய இலக்கையுடையதும் மலேசியா, சிங்கப்பூர், மின்டனாஒ ஆகியன உள்ளடங்கிய ஒரு பெரும் இஸ்லாமிய அரசு பற்றிய கற்பனைகளையுமுடையதுமாகும். ஜெமாஹ் போலல்லாது, MILF இன் சொந்த வலிமை பெரிதாக உள்ளதும் தன் சொந்த மண் என்று கருதுவதுமான பிரதேசத்துக்கு வெளியே ஆயுதத்தாக்குதல்களை அது நடத்தியதாகவோ திட்டமிட்டதாகவோ அறியப்படவில்லை. இறுதியாக, தென் ஃபிலிப்பின்ஸில், MLF இன் சொந்த நடவடிக்கைகட்கு மிரட்டலாக அமையும் முறையில் அமெரிக்கா தளங்களை நிறுவ முற்படாதவரை, ஃபிலிப்பின்ஸில் கால்பதித்திருக்கிற அமெரிக்கர்களுடன் சகஜீவனம் நடத்துவது பற்றி MLF க்கு மகிழ்ச்சியே.
மேற்குறிப்பிட்டவாறான ஒரு மோதலைத் தவிர்க்குமுகமாகவே, மணிலாவிலும் மின்டனாவோவிலும் உள்ள மேல்தட்டு ஃபிலிப்பினிய சமூகத்தினர், தம்மால் இயலாதுபோனதான MILF ஐச் சுற்றிவளைத்து நொறுங்கடிக்கும் காரியத்தைத் தமது நாடு பற்றிய அமெரிக்காவின் இராணுவத்திட்டங்கள் மூலம் நிறைவேற்ற வேண்டுகிற போதிலும், MILF மணிலா அரசாங்கத்துடன் அமைதிப் பேச்சுக்களைத் தொடங்கும் முயற்சிகளைப் பன்மடங்காக்கியுள்ளது. அதே அடிப்படையில், முழு அளவிலான சண்டை தொடங்கின், மணிலாவின் MILF விரோதப்போரில் அமெரிக்கா பங்குபற்றுதல், கட்டாயமாக மேலும் ஆழமானதும் பரவலானதுமான இன்னும் அதிககாலம் நீடிக்கும் மோதலுக்கே வழிவகுக்கும். சில நிலவரங்களின் கீழ், MILFக்கும் அதிலும்கூடுதலாகப் பதப்பட்டுள்ள மாஒவாதிகட்கும் இடையே செயற்பாட்டளவில் ஒருங்கிணைவு ஏற்படும் வாய்ப்பையும் புறமொதுக்க இயலாது. MLFஇலும் பழைய, அரசாங்கம் மணிலாவுக்கு அருகே அதிபாதுகாப்புச் சிறையொன்றில் வைத்துள்ள நூர் மிஸுவாரியின் தலைமையின் கீழான, மற்ற மின்டனாஒ முஸ்லிம்களின் இயக்கமான MNLF ஐ மணிலா அரசாங்கம் பிளவுபடுத்தியதன் விளைவாக நிலவரங்கள் மேலுஞ் சிக்கலாகியுள்ளன. அவருக்குக் கணிசமான ஆதரவு உள்ளதோடு, MILF அவரையே MNLF இன் உண்மையான தலைவராக ஏற்கிறது. அதுமட்டுமன்றி, gaugurtLGu Loir SITG Spj6) 60th (Organization of Islamic Conference, OC) அவரையே மொறோ முஸ்லிம்களின் ஏகப்பிரதிநிதியாக அங்கீகரித்துள்ளது.
1996ல் MILFக்கும் மணிலா அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுப் பின்னர் முறிவடைந்த உடன்படிக்கையில் OC நேரடியாக சம்பந்தப்பட்டிருந்து. மணிலா அரசாங்கத்தால் முடக்கப்பட்டுள்ள அவரும்,
108 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

பெருந்தொகையான ஆயுதப் போராளிகளை உள்ளடக்கிய அவரது ஆதரவாளர்களும், MILF உம் முடக்கப்படக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு நெருக்கமாவதை வசதியானதாகக் காணக்கூடும். இது வெவ்வேறு குழுக்களில் உள்ள ஆயுதம்தாங்கிய போராளிகளின் எண்ணிக்கை பத்தாயிரமா - இருபதாயிரமா - முப்பதாயிரமா என்ற பிரச்சினையுமல்ல. எவ்வளவு திடசங்கற்பமுடையோராயினும், அவர்களால் அமெரிக்கத்துப்பாக்கி வலிமைக்கும் தானியங்கிப் போர்களத்துக்கும் ஈடுகொடுக்க இயலாது. அவர்களது வலிமை வேறெங்கோ உள்ளது.
தென் ஃபிலிப்பின்ஸ் கெரில்லாப் போராட்டத்துக்கு இலக்கணமான பூமி, அதுபோகத் தமது பிரதான தளம் ஃபிலிப்பினியராணுவத்தால் அழிக்கப்பட்ட பின்பு உண்மையான போர் மூளுமாயின் கெரில்லாத் தந்திரோபாயங்களை மீண்டும் பாவிப்பதற்கு வேண்டிவரும் என்பதை MILF கற்றிருக்கும். புவி அமைப்புக்கும் மேலாக, (MLF ஆகட்டும், MNLF ஆகட்டும், மாஒவாதிகளாகட்டும் வலிமை குறைந்து போன போதும்) பிரதான கிளர்ச்சிக்கார இயக்கம் ஒவ்வொன்றும் தனக்கு அனுதாபமான மக்கள் திரளிடையிலேயே செயற்படுகின்றமை அவற்றைப் ஃபிதானமாக ஆதரித்து நிற்கிறது. இதானாலேயே, அனுபவமிக்க பிலிப்பினிய ராணுவத்தால் முப்பது வருடங்களாக அவற்றைத் தோற்கடிக்க முடியவில்லை.
முற்றாகவே மணிலா அரசாங்கத்துடன் இணங்கிப் போய்த் தமது பகுதிகளிற் கணிசமான அதிகாரம் செலுத்துகிற மொறோ மேட்டுக் குடிகள் உள்ளனர். எனினும், சமூகப்பண்பாட்டு அடிப்படையில் மட்டுமன்றி, ஆண்டுகளும் தசாப்தங்களும் கடந்து போகையில் மேலும் மேலும் மோசமாகிற வரலாற்றுத் தொடரான வேதனை பற்றிய ஆழமான உணர்வின் அடிப்படையிலுமே இந்த இயக்கங்களுக்குப் பொதுமக்களின் பெரும் பகுதியினரிடையே பரவலான விசுவாசம் உள்ளது. முதலாவதாக, ஃபிலிப்பின்ஸின் மத்திய, வட பிரதேசங்களைத் தனது கொலனியாக்கி ஆண்ட ஸ்பெயின், மக்களைக் கிறிஸ்துவராக்கிய போது, தென்ஃபிலிப்பின்ஸ் பெருமளவு சுயாதீனமாகவும் ஏறத்தாழ முற்றிலும் முஸ்லிம்களைக் கொண்டதாகவும் இருந்தது பற்றிய, பகுதி கற்பனையானதும் பெருமளவும் வரலாற்றுச் செம்மையுடையதுமான, பன்னெடுங்காலம் பழமை சார்ந்த உணர்வு இன்று மொறோ என்று அறியப்படும் அவர்களது பேரும் ஸ்பானியராலேயே வழங்கப்பட்டது. அமெரிக்கர்கள் ஸ்பானியர்களை விரட்டி, ஆசியாவில் தமது ஒரே கொலனியாகிய ஃபிலிப்பின்ஸில் ஸ்பானியரின் இடத்தில் தம்மைக் கொலனி ஆட்சியாளர்களாக்கிய பின்னரே அமெரிக்கா தனது படைகளை தென் ஃபிலிப்பின்ஸினுள் அனுப்பியபின் 1903 முதல் 1913 வரை நடத்திய உக்கிரமான பத்தாண்டுப் போரில் மொறோக்கள் வீழ்ந்ததை அடுத்து அவர்களது பிரதேசம் அயலாரால் முழுமையாகக் கைப்பற்றப்பட்டது.
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 109

Page 58
எளிதாகத் தீராத மின்டனாஒ பிரச்சினை” ஒன்று உண்டு என்று அமெரிக்கர்கள் அப்போதே முடிவுக்கு வந்துவிட்டனர். எனவே, மண்ணுக்குரிய மக்களின் தொகைக்கு ஈடுகட்டக்கூடிய விதமாகப் பெருந்தொகையான குடியேற்றக்காரர்கள் கொண்டுவரப்பட்டனர்.
தமது கொலனியை நிறுவுவதற்கு ஸிம்பாப்வேயையும் ஆர்ஜன்ற்றினாவையும் பற்றி ஆலோசித்த அதே காலத்தில், ஐரோப்பியஸியோனிஸ்ற்றுக்கள் மெய்யாகவே மின்னாடஒ பற்றியும் கருதிய ஒரு குறுகிய கால இடைவெளியுமிருந்தது. பிரித்தானியர்கள் அவர்கட்குப் பலஸ்தீனத்தை வழங்க முன்வந்ததால் அரியல் ஷரொன் போன்றோரின் சினத்தினின்று மின்டனாஒ முஸ்லிம்கள் காக்கப்பட்டனர். எனினும், லுZொன், விஸாயாஸ் ஆகிய வட, மத்திய பகுதிகளினின்று குடியேற்றக்காரர்கள் வந்து சேர்ந்தனர். அவர்களது வரவின் அரசியல் நோக்கம் 1935ம் ஆண்டின் ஒழுங்கு படுத்தப்பட்ட நிலக் குடியேற்றத்திற்குரிய மூலாதாரப் u"Luigir (Organic Charter of Organised Land Settlment) epauhssirou5Long தொகுத்துரைக்கப்பட்டுள்ளது. "நிலக் குடியேற்றமே மின்டனாஒ பிரச்சினைக்கு ஒரு விளைபயனுள்ள தீர்வைப் பெற்றுத்தரவல்ல ஒரே அரசாங்க நடவடிக்கையாகும்.”
1948 வரை இச் செயற்பாடு மூலம்மந்தகதியிலேயேநடந்த குடியேற்றம் அதன் பின் வேகம் கண்டது. ஃபிலிப்பினிய தேசத்தினுள் உருவாக்கப்பட்ட குடியேற்றக்காரர்களது கொலனிகளின் உருவாக்கமே அண்மைக்கால கிளர்ச்சிகளின் பின்னணியாகும். 1948 ல் 2.5 மில்லியனாக இருந்த தென் ஃபிலிப்பினிய சனத்தொகை 1974ல் 8.7 மில்லியனுக்கு உயர்ந்தது. நான்கு மடங்கு எனக்கூடிய இச் சனத்தொகை வளர்ச்சியிற் குடியேற்றக்காரர்களே பெரும் பங்கினராவர். 1913ல் அமெரிக்க ராணுவத் தாக்குதல் வெற்றி பெற்ற போது 98% ஆக இருந்த முஸ்லிம்களின் விகிதம் 1967ல் 40% க்கு இறங்கிவிட்டது. கொலனியாக்கத்தின் முன் நிலம் அனைத்தும் அவர்களுடையதாயிருந்தது. இன்று அது பருமட்டாக 15% ஆக உள்ளது. விடயங்களை மேலும் மோசமாக்கும் விதமாக, வந்தேறு குடிகள், களவு கொண்டோர் மட்டுமன்றி இன்னொரு மதத்தவராயும் இருந்தனர்; மண்ணின் மக்கள் தொகை முஸ்லிம்மாயிருக்க வந்தேறு குடிகள் அனைவரும் கிறிஸ்த்தவர்களாயிருந்தனர். குடியேறிய 4 மில்லியன் தொகையினரில் மிகச்சிறிய ஒரு பகுதியினரே பெருந்தோட்டங்களில் உடமையாளர்களாகவும் பெரும் வணிகர்களாகவும் அவை போன்றோராயும் இருந்தார்கள். சில ஆயிரம்பேர் குடிசார், ராணுவ நிருவாக சேவையிலோ தொழில்சார், வர்த்தகத் துறைசார் குட்டி முதலாளி வர்க்கத்தினராகவோ இருந்தனர். பன்னாட்டுச் செயற்பாடுகள் தொடங்கி யதையடுத்து, இவையாவும், விவசாய வர்த்தகம், சுரங்கத் தொழில், மரம் - மரப்பலகை ஒப்பந்தங்கள் என்பன மூலம் பெருமளவில் நன்மை கண்டன.
110 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

ஏகப் பெரும்பான்மையான மக்களோ அன்றாடங்காய்ச்சிகளாக அடி நிலையிலிருந்தனர். இல்லாதோரின் சினத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையில் இந்தச் சொத்துடமையற்றவர்களுக்கும் சொத்தும் வசதிகளுமுடைய வர்க்கத்தினருக்குமிடையே வர்க்க வேறுபாடு கடந்த மத அடிப்டையிலான கூட்டு ஒன்று உருவானது. வர்க்கமும் உள்நாட்டுக் குடியேற்றமும் தொடர்பான கேள்விகளை, அவற்றின் ஆழமான சித்தாந்தப் பண்பாட்டு மட்டங்களில், மதமும் பண்பாடும் சார்ந்த பிரச்சினையாக அனுபவிப்பதற்கான சூழ்நிலை முதிர்ந்தது.
1970 களின் முற்கூற்றில் கிளர்ச்சி வெடித்தெழுந்தபோது கிறிஸ்தவர்களினிடையே குட்டி முதலாளி வர்க்கத்தின் கீழ் அடுக்குகளினின்றும் வறுமைப்படுத்தப்பட்ட வந்தேறு குடிகளிடையினின்றும் அவர்களது சந்ததியினரிடமிருந்துமே ஃஸ்பானிஸத் தோற்றமும் குற்றவியற் பண்பும் கொண்ட விழிப்புணர்வுக் கும்பல்களும், ஊர்காவற் படைகளும், இராணுவப் பாங்கான குழுக்களும் பிறவும் தோன்றின. இது ஃபேடினான்ட் மாக்கொஸ் உடைய ராணுவச்சட்ட ஆட்சியின் தோற்றத்துடன் கிட்டத்தட்ட அச்சொட்டாகப் பொருந்தும் உடனிகழ்வாகும். அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான மாக்கொஸ் பதிலடியாக முழு அளவிலான போரைத்தொடுத்தார்.
அந்தப்போர் பற்றிய விவரங்கள் ஒருபுறமிருக்கப், பல மொறோக்களை ஃபிலிப்பினிய அரசினின்று வெகுவாக அன்னியப்படுத்திய கொடூரத்தைப்பின்வரும் இரண்டு புள்ளி விவரக்கோவைகள் விளக்க உதவும். 1972 க்கும் 1976 க்கும் இடையே, ராணுவ செலவு 700% அதிகரித்தது; 1975 அளவில், ராணுவத்தினரில் முக்காற்பங்கினருக்கும் மேலானோர் தெற்கிலேயே நிலை நிறுத்தப்பட்டனர். மறுபுறம் அரசாங்கத்திற்குரிய சமூக நலன் திணைக்களத்தின் அறிக்கைப்படி 1972 - 1973 காலத்தில் மட்டுமே 15 மில்லியன் அகதிகள் இருந்தனர்; இதன் மூலம் 4.5 மில்லியன் முஸ்லிம்களில் மூவரில் ஒருவர் போர் தொடங்கி அதன் உச்சத்தை எட்டு முன்னமே, வீடற்றவராகிவிட்டார். பின்னைய ஆண்டுகளில் மேலுஞ் சிக்கலான விருத்திகள் ஏற்பட்டன. சுருங்கக் கூறின், கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது, ஆயினும் அதற்கு அடிப்படையாக இருந்த பிரச்சினைகள் தீரவில்லை.
1972 ல் தோன்றிக் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய MNLF இரண்டு பிரிவுகளாக உடைந்தது. அவற்றிற் கூடுதலான பழமைவாதப் பிரிவே MLF, எனினும் இரண்டுமே தம் போரிடும் ஆற்றலையோ சமூகத்தளத்தையோ இழக்கவில்லை. மறுபுறம் 1991ல் வந்த அB"ஸய்யாஃப், அBடுரஜ்ஜாக் ஜன்ஜலானி அB"பகர் எனும் இளம் முன்னாள் MNLF உறுப்பினரால் நிறுவப்பட்டது. அவர்
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 11

Page 59
1980 களில் ஆஃகனிஸ்தானில் நடவடிக்கைகளில் இறங்கியவராவர். அதற்கு MNLF க்கோ MLF க்கோ இருந்து வந்துள்ள சமூகத்தளம் இல்லாததோடு, அதினும் பெரிய, மூத்த அமைப்புக்கள் இரண்டுமே அதைக் கண்டித்து ஒதுக்கின. குடியேறிய சமூகங்களிலோ சமூகத்திற் பொதிந்துள்ள அறவிழுமியங்களிலோ நவீனக் கல்வியிலோ பரிச்சயமற்றவர்களையே பெரும்பாலும் கொண்ட, போராற் பாதிக்கப்பட்ட மிக இளைய தலைமுறையினரிடையினின்றே அது தன் உறுப்பினர்களைச் சேர்த்தது.
அதன் விளைவாக, இஸ்லாமிய வற்புறுத்தலினின்று இராணுவத்தால் இயக்கி வைக்கக்கூடிய நிலைக்கும் முடிவில், பெருமளவில் உள்ளூர் மேட்டுக்குடிகளினதும் அதிகாரிகளினதும் ஒத்துழைப்புடன், வெறுங் குற்றச் செயல்கட்குமான பெயர்ச்சி மிகக் குறுகலான ஒன்றாகவே அமைந்தது. குறுகிய காலத்தில் அழியக் கூடுவதாக இருப்பது இந்தக் கும்பலே, எப்படியும், இராணுவத்தின் அரவணைப்பின்றி இதனால் நிலைத்திருக்க முடியாது. அந்த ஆதரவை இல்லாமற் செய்வதில் அமெரிக்கர் அனேகமாக வெற்றி பெறுவர். சமூக, வரலாற்று அடிப்படைகளில் அதனைவிட ஆழமாக வேர் கொண்ட அதனினும் பெரிய MNLF, MILF என்பன தமது சமூகத் தளத்தின் வளங்காரணமாகப், "பயங்கரவாதத்துக்கு எதிரான போரின்” உண்மையான பிரச்சினையாக அமையும்.
வேறுவிதமாகக் கூறின், வலிதாகப் பொங்கியெழ இயலாதளவுக்குத் தளர்ந்துள்ள ஆனால் விடாது கனன்று கொதித்துக் கொண்டிருக்கும் எரிமலையின் வாய் மீது அமெரிக்கர்கள் குந்தியிருக்கின்றனர். அB"ஸய்யாஃப் குழுவின் இறுதியான எச்சங்கள் வெருண்டோடி அழிவின் விளிம்பில் உள்ள நிலையில், வெற்றியைப் பிரகடனஞ்செய்து விலகிப் போவதற்கான தெரிவு அவர்கள் முன் உள்ளது. இதுவே அறிவார்ந்த தெரிவுமாகும். மாறாகத் தொடர்ந்து நின்று தமது இருப்பை மேலும் ஆழப்படுத்தி, புதிய தளங்களை நிறுவிபழையனவற்றை மீளப்பெற அவர்கள் விரும்பின், இப்போதையதினும் பெரிய, மேலும் பிடிவாதமான, எளிதில் முறியடிக்க இயலாத ஒரு எதிரிக்கு இலக்கு வைக்கவேண்டும். இதுவே அவர்களது சங்கடம் தமது யுத்ததந்திர நோக்கங்களைத் துண்டித்துக் குறுக்கிக் கொண்டு விலகி ஃபிலிப்பினோக்களைத் தமது பிரச்சினைகளைத் தமக்குள் தீர்த்துக் கொள்ள அனுமதிப்பதா? மாறாக, தமது நோக்கங்களுடன் மேலும் தொடர்ந்து, ஃபிலிப்பின்ஸில் நடைமுறையிலுள்ள சட்ட அரசியல் யாப்பு ஏற்பாடுகளை மீறித், தமது இருப்பை மேலும், ஆழப்படுத்தி குறுகிய காலத்திலேனும், வெல்லற்கரிய ஒரு போரில் இறங்குவதா?
112 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

அப்படியெனின், அவர்களது யுத்ததந்திர இலக்குக்களென்ன? முதலாவதாக, தமது முன்னாள் கொலனியான ஃபிலிப்பின்ஸில், மாக்கொஸ் சர்வாதிகார ஆட்சி தூக்கியெறியப்படமுன்பு தாம் அனுபவித்துவந்த சலுகைகளான இராணுவத்தளங்கள், பல்வேறு இராணுவ வசதிகள், அங்கு நிலைகொண்டிருக்கும் தமது படையினருக்கு அந்த நாட்டின் கட்டுப்பாடுகளை மீறிய உரிமைகளும் அங்குள்ள பூகோளமயமாதல் எதிர்ப்புப் பண்புடைய சனநாயக இயக்கத்தைப் பின்னோக்கித் தள்ளுவதும் ஆகும். இவையாவுமே குறிப்பாக அம்மண்ணில் அயற்படைகள் நிலைபெறல், அந்தச் சனநாயக இயக்கத்தின் சாதனைகளில் ஒன்றானதும் ஃபிலிப்பின்ஸை மீண்டும் கொலனியாக்குவதைத் தடைசெய்வதுமான 1987 ம் ஆண்டின் அரசியல் யாப்புடன் முரண்படும்.
“(இஸ்லாமிய) பயங்கரவாதத்துக்கெதிரான போர்” என்ற முகாந்திரத்தில் ஒரு தளமோ (தளங்களோ) பெறப்படுவது அரசியல் யாப்பிற் கணிசமான மறுவாசிப்பையோ குறைந்தளவில் கணிசமான மறுவிளக்கத்தையோ வேண்டி நிற்கும். அத்துடன் பல்வேறு இருதரப்பு உடன்பாடுகள் சேரும் போது, முன்னைய ஆண்டுகளின் க்ளார்க், ஸுBச்குடா தளங்களை மீளப்பெறல் எளிதாகும்.
இரண்டாவதாக, முழுப்பிராந்தியத்திற்குமான போர்தொடுத்தற் தளமாக ஃபிலிப்பின்ஸை வென்றெடுப்பது, அB"ஸய்யாஃப் போன்ற சிறு அமைப்புக்களையோ பெரிய, ஆனால் உள்ளூர் இயக்கங்களான MILF போன்றவற்றையோ அன்றி மலேசியாவிலோ உலகின் பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேஸியாவிலோ நிகழக்கூடிய கிளர்ச்சிகள் எண்ணெய் பற்றிய பிரச்சினையை மையப்படுத்தி முன்னிறுத்துவன. பசுபிக்மா கடலையும் இந்து மாகடலையும் இணைக்கும் கடல் ஒழுங்கைகட்குக் குறுக்காக அமைந்துள்ளதால் வளங்கள் மிக்க தென்கிழக்காசியா எதிர்காலத்தில் போட்டியாளர்களாக வரக் கூடிய சீனாவுக்கு, ஏன் ஜப்பானுக்கும் தான், கேந்திர முக்கியமானதாகும். அமெரிக்காவுக்கு வரலாற்று அடிப்படையிலும் நிலையாகவும் அக்கறைக்குரிய அப்பிரதேசம், புரட்சிகர இயக்கங்கள் எழக்கூடியதுமாகும். இன்று "இஸ்லாமிய அடிப்படைவாதம்” எனப்படுவதனால் தொல்லைப்படுத்தப்படுகிறதாகக் கூறப்படும் ஃபிலிப்பின்ஸ், மலேசியா, இந்தோனேஸியா ஆகிய நாடுகள் அண்மைக் காலத்தில் கணிசமான அளவிலான கம்யூனிஸ்ட் கிளர்ச்சிகளைச் சந்தித்தவை. எனவே, அப்பிரதேசத்தில் வந்து தங்கிநிற்கக் கூடிய ஒரு தளம் இருப்பது பிரதேசம் முழுவதையும் கட்டுப்படுத்துவதற்கு மிக முக்கியமானதாகும். அதுபோக, சீனா பற்றிய பிரச்சினையும் இருக்கிறது.
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 113

Page 60
வட அத்திலாந்திக் உடன்படிக்கை நிறுவன (NATO) அமைப்புள் ரஷ்யாவை உள்ளிழுத்துக் கொள்வதையும் மத்திய ஆசியாவில் தளங்கள் பலவற்றை நிறுவுவதையும் வட பாகிஸ்தானுக்கு அமெரிக்கப் படைகள் மீண்டும் வரவேண்டியமையும் இமயமலைப் பகுதியில் அமெரிக்க, இஸ்ரேலியப் படைகள் கணிசமான அளவில் செயற்படும் அளவுக்கு அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே விரிவான அளவில் மும்முனை ராணுவ உறவுகள் உண்டானமையும் அவசியமாக்கிய புதிய போர்த்தந்திரத் திட்டங்களில் சீனாவுக்குப் பெரும் முக்கியத்துவம் உள்ளது என நாம் நியாயமாக ஊகிக்கலாம். தென்கிழக்கு ஆசியாவில் பெரும் இராணுவத் தளங்களும், தாய்வானில் பின்வரிசையில் உள்ள படைகளை முன்வரிசைக்கு கொண்டு வருவதும் சீனாவைச் சூழும் வட்டத்தை முழுமைப் படுத்திவிடும். முழுப் பிரதேசத்துக்குமான தளங்களென வரும்போது, ஃபிலிப்பின்ஸிலேயே அதுபற்றிக் கருத இடமுண்டு.
அமெரிக்காவை எதிர் நோக்குகிற பிரச்சினை ஏதெனின், குறிப்பிடத்தக்க வலிமையுடைய ஒரு இஸ்லாமிய இயக்கத்தை அடையாளங்கண்டு பின்னர் அதனுடன் மெய்யாகவே போரிட்டு"இஸ்லாமிய பயங்கரவாதத்தை” தடுப்பது என்ற பேரில், ஃபிலிப்பின்ஸில் நிசமானதும் நிலைக்கக் கூடியதுமான ராணுவத் தளங்களைக் கட்டியெழுப்புவதாயின், அமெரிக்க முயற்சி, வெறுமனே தென் ஃபிலிப்பின்ஸில் உள்ள முஸ்லிம் இயக்கங்கட்கு எதிராக மட்டுமன்றி, முன்னர் மாக்கொஸ் சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி அண்மையில் எஸ்ற்றாடா ஆட்சியைத் தூக்கின்றியத்தெருவில் இறங்கியவையான வட, மத்திய ஃபிலிப்பினிய சனநாயகச் சக்திகளுக்கு எதிராகவும் அது முன்னிறுத்தப்பட வேண்டும். சனநாயகச் சக்திகளைப் பொறுத்தவரை, அரசியல் யாப்பு சனநாயக இயக்கத்தின் விளைவான ஒன்று என்ற வகையில், அத்தகைய ராணுவத்தளங்களை பிலிப்பினிய மண்ணில் நிறுவுவதைத் தடைசெய்கிறது என்ற காரணத்தால், அரசியல் யாப்பே ஒரு ஆயுதமாகும். அடுத்துவருஞ் சில மாதங்களில் அமெரிக்கா இந்த இக்கட்டான நிலைக்கு ஒரு தீர்வு கண்டாக வேண்டும்.
தமிழாக்கம் சி. சிவசேகரம் இன்டர்நெற் கட்டுரை
114 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002
 

குட்டித் தேவதை - புஞ்சி சுரங்கனாவி - ஒரு வியாக்கியானம்
சித் திரலேகா மெளனகுரு
குட்டித் தேவதை என்ற திரைப்படம் சமீபத்தில் திரையிடப்பட்டது. சோமரட்ன தரிசாநாயக் க என்ற இயக் குனர் இதை இயக் கயுள்ளார். இலங்கை யரின இன த துவ நெருக கடியை இது கையாளர் வதால இக் காலகட்டத்தில் இத் திரைப்படத்திற்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது. எனவே இது எமது முக் கய கவனிப்புக்குள்ளாகிறது.
குட்டித தேவதை என்ற படத்தின் கதை இப்படிச் செல்லுகின்றது. ஒரு சிங்களவரான முதலாளி, அவருக்கு ஒரு சினின மகன், அவனுக்குப் பேசும் ஆற்றல் இல்லை. சிறு வயதில் பெற்றோர்களிடையே ஏற்பட்ட குடும்பச் சண்டைகளால் அவன் உள ரீதியாகப் பாதிப் படைந்தவன். அதனால் அவன் பேசுகின்ற சக்தியை இழந்துவிட்டான். இந்தப் பையனைத் தந்தை பல மருத்துவர்களிடம் காட்டுகின்றார். அவர்கள் எல்லோரும் அவனுக்கு உள நோய் ச் சிகிச்சை தேவை எனச் சொல்கின்றனர். தந்தைக் கோ அதில் அவ்வளவு நம்பிக்கையில்லை. சிறுவனைப் பாடசாலைக்கும் அனுப்ப முடியாத நிலை. அந்தப் பையனைப் பார்த்துக் கொள்வதற்குத் தாதிமார்களை அவர் வேலைக்கு அமர்த்துகின்றார். அந்தத் தாதிமார்களும் அந்த வீட்டு நிலைமை காரணமாக அடிக்கடி மாற வேண்டி ஏற்படுகின்றது. தந்தை முழு நாளுமே தொழிற்சாலையில் இருப் பார். மகன் கோபம் வந்தால் உறுமிக் கொண்டு வீட்டிலிருக்கின்ற, உடையக் கூடிய பொருட்களையெல்லாம் போட்டுடைப்பான். தந்தை "வலியத்தைக் கொடு, அவன் நித் திரையாகுவான், எழும்பியவுடன் சரியாகிவிடும்” என்று சொல்லுவார். ஆனாலி மருத்துவர்கள் "அடிக் கடி வலியம் கொடுக்காதே’ என்று கூறுவார்கள். இத்தகைய முரண்பட்ட நிலையில் அந்தத் தாதியர்கள் அங்கு வேலை செய்ய விரும் பரியதில்லை. இதன் காரணமாக அவர்கள் அடிக்கடி மாற்றப்படுகிறார்கள் அந்த வீட்டில் ஒரு தமிழ் வேலைக் காரன். அவனுக்கு வேலு என்று பெயர். அவன் மலைநாட்டுத் தோட்டப் புறத்தினைச் சேர்ந்தவன். அந்த வீட்டிலிருந்த சமையற்காரி அந்த வீட்டை விட்டுப் போய்விட இன்னுமொருவரைக் கூட்டி வரும்படி முதலாளி வேலுவிடம் சொல்கின்றார்.
பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002 5

Page 61
வேலு தன்னுடைய 7 வயதுப் பெண்ணைக் கையுதவிக்காக அங்கு அழைத்து வருகின்றான். "ஒருவரும் வேலைக்கு வர விரும்புகின்றார்கள் இல்லை. என்னுடைய மகள் வருகின்றாள், அவள் படித்து என்ன பிரயோசனம்? எனக்கு உதவியாக இருக்கட்டும் என்று அழைத்து வந்தேன்" என்று அவன் சொல்லுகின்றான்,
அன்றிலிருந்து அந்தச் சிறுமி தன்னுடைய தகப்பனுக்கு வேலைகளில் உதவியாக இருக்கின்றாள். அவளுடைய வேலைகளில் ஒன்று, காலையில பத்திரிகை வாங்குவது. விட்டிலுள்ளவர்கள் வாசிப்பதற்காக அவள் சிங்களக் கடையில் சிங்களப் பத்திரிகை வாங்கி வருவாள் பக்கத்திலுள்ள தமிழக் கடைக்குப் போய் அவளுடைய கையில் எஞ்சியிருக்கும் சிறு நாணயங்களுக்கு இனிப்பு வாங்குவாள். இந்தச் சிறுமி தகப்பனுடன் சேர்ந்து செடிகளுக்குத் தண்ணீர் விடுவதையும், ஆங்காங்கே ஒடித் திரிவதனையும் இந்த முதலாளியின் மகன் பார்க்கின்றான். ஒரு நாள் அவள் பூமரங்களுக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் போது தணிணீரில் அவள் விளையாடுவதை அவன் யன்னலூடாகப் பார்க்கின்றான். இவர்கள் இருவரும் சேர்ந்து விளையாடத் தொடங்குகின்றனர். இலங்கையின் அரசியல் நிலவரங்கள் தமிழருடைய போராட்டங்கள் குரிப்பாக விடுதலைப் புலிகளினுடைய தாக்குதல் நடவடிக்கைகள் பற்றியெல்லாம் அடிக்கடி ஊடகங்கள் மூலம் முதலாளி அறிந்து கொள்கின்றார். வழக்கம் போலவே சிங்களச் செய்தி ஊடகங்கள் மூலம் வருகின்ற பேரினவாதக் கருத்துக்களை அவரும் உள்வாங்குகின்றார். தமிழர்களை அவரும் பயங்கரவாதிகளாகப் பார்க்கின்றார். இந்தப் பின்னணியில் காலம் நகர்கின்றது. அவருடைய மகன் வேலைக்காரச் சிறுமியுடன் சேர்ந்து விளையாடி அவளுடன் நட்புக் கொள்கின்றான். சிறுமி அடிக்கடி ஒரு பாட்டுப் பாடுவாள். "குட்டித் தேவதை ஒன்று வானத்திலிருந்து பூமிக்கு வந்தது, வரும்போது புயலில் அகப்பட்டது" என்ற கருத்துப்பட ஒரு பாட்டு. இந்தப் பாட்டுத்தான் அந்தப் படத்தில் வருகின்ற ஒரேயொரு பாட்டு அது ஒரு தமிழ்ப் பாட்டு,
இந்த நிலையில் இந்தத் தமிழ்ப் பிள்ளையுடன் சேர்ந்து பழகுவதாலும், விளையாடுவதாலும், இயற்கைப் பொருட்களுடன் பழகுவதனால் ஏற்படுகின்ற மனத் தளர்வினாலும், அவனுடைய உளநெருக்கடி குறைகின்றது. இதனால் அவன் மீண்டும் வாய் திறந்து பேசக் கூடிய நிலைக்கு வருகின்றாள். அவன் பேசுகின்ற முதல் வார்த்தை தமிழ் வார்த்தை. இது iட்டிலுள்ள அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியினைக் கொடுக்கின்றது. சிங்களக் குழந்தை,
பிரவாதம் - ஜ"னஸ் - டிசம்பர் 2007

இவ்வளவு காலமும் பேசும் ஆற்றலை இழந்திருந்த அந்தக் குழந்தை முதல் முதல் பேசுகின்ற வார்த்தை தமிழ் வார்த்தையா என்று தகப் பன் கொதிப்படைகின்றார். வீட்டில் வேலை பார்க்கின்ற சிங்களச் சமுகத்தினைச் சேர்ந்த வேலைக் காரியும் அவ்வாறு கூறுகின்றாள். இந்த நிலையில் வைத்தியர்கள் கூறுகின்றார்கள், "அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவன் பேசுவதுதான் முக்கியம் எந்த மொழி என்பதல்ல. மொழியினை பிறகு கற்றுக் கொள்ளலாம், ஆனால் பேசும் சக்தியினை அந்தப் பிள்ளை பெறுவதுதான் மிக முக்கியமான விஷயம்" என்று. தகப்பனும் அதை ஏற்றுக் கொள்கின்றார். காலம் நகர்கின்றது. திரைப்படத்தின் இறுதிக் கட்டம். 1983 ஆம் ஆண்டுக் கலவரம் வெடிக்கின்றது.
அந்த முதலாளி ஒருநாள் அவசர அவசரமாக வீட்டிற்கு வருகின்றார். வந்து "வேலு, எங்கே உன்னுடைய மகள்" என்று கேட்கின்றார். "அவள் பத்திரிகை வாங்குவதற்குக் கடைக்குப் போய்விட்டாள்" என்று வேலு சொல்கின்றான், "உனக்குத் தெரியாதா நாட்டில் என்ன நடக்கிறது என்று. எல்லா இடமும் கலவரம் வெடிக்கின்றது. சிங்களவர்கள் தமிழர்களைக் கொல்கிறார்கள். அடிக்கிறார்கள். வெட்டுகிறார்கள், உனக்குத் தெரியாதா? ஏன் அனுப்பினாய்? போ அவளைக் கூட்டி வா" என்று சோல்கின்றார். அவன் மகளைத் தேடி ஓடுகிறான். வேலுவும் ஒரு தமிழன. அவனுக்கும் ஆபத்து வரும் என்பதைத் திடீரென்று அவர் அப்பொழுதுதான் உணர்கின்றார்.
பிரவாதம் - ஜ".3 - டிசம்பர் (ப2 דן ן

Page 62
முதலாளி மீண்டும் தன்னுடைய காரில் கலவரம் மூண்டுள்ள சிறு நகரத்திற்குள் வேலுவையும் மகளையும் தேடிப் போகிறார். அங்கு கலகக்காரக் 'கும்பல் அட்டகாசம் செய்கிறது. இவருடைய காரை மறித்து, “தமிழர்களுடைய கடையினைத் தீயிடப் போகின்றோம். பெற்றோல் தா” என்று கேட்கின்றனர். போகவிடாமல் தடுக்கின்றனர். வானத்தை நோக்கிச் சுட்டுவிட்டுப், பிள்ளையைத் தேடிப் போகின்றார். அப்பொழுது ஒரு சிங்களக் கடைக்காரர் “மாத்தையா இங்கே வாருங்கள் பிள்ளை இங்கே தான் இருக்கின்றது” எனத் தான் ஒழித்து வைத்த பிள்ளையை அவரிடம் கொடுக்கின்றார். முதலாளி அவளுடைய நெற்றியிலிருந்த பொட்டினை அழித்துவிட்டுப, பிள்ளையைத் தூக்கிக் காருக்குள் போட்டு, கதவை அடைத்துவிட்டு, மீண்டும் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டுவிட்டு வீட்டிற்குத் தப்பிச் செல்கின்றார். அவருடைய காருக்கு இரண்டு, மூன்று அடி விழுகின்றது. மீண்டும் வேலுவைத் தேடிச் செல்லுகின்றார். ஆனால் வேலு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டது அவருக்குத் தெரிந்துவிடுகின்றது. அதே நேரம் “தமிழருக்கு உதவி செய்கின்றான்” என்று அவரையும் அந்தக் கும்பல் தாக்குகின்றது. அவர் உடைகள் கிழிந்த கோலத்துடன் வீட்டிற்கு நடந்து திரும்புகின்றார்.
இறுதிக் காட்சி; வரவேற்பறையில் எல்லோரும் இருக்கின்றார்கள. சிறுமியினுடைய தாய் உள்ளே வருகின்றாள். அங்கு நிசப்பதம். அவள் சொல்கின்றாள் "நான் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு போகின்றேன்” என்று. முதலாளி யோசிக்கின்றார். சிறுமியும் தன்னுடைய மகனும் நெருக்கமாக இருக்கின்றார்கள். இருவரும் சேர்ந்து படிக்கிறார்கள். இந்த நிலை குழம்பப் போகின்றது. இவர்களைப் பிரிக்காதீர்கள் என்று வைத்தியர்கள் சொல்லியிருக்கிறார்கள, தர்மசங்கடமான நிலை.
அவர் கூறுகின்றார். “இல்லை, இந்தப் பிள்ளைக் கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கின்றேன். அவளைப் பாடசாலைக்கு அனுப்புகின்றேன், அவளைப் பாதுகாக்கின்றேன். இவள் இங்கேயே இருக்கட்டும்” இந்த உரையாடல் சிங்களத்தில் நடக்கின்றது. முதலாளி சிங்களம் கதைக் கின்றார். அவருக்குத் தமிழ் தெரியாது. ஆனால் சிறுமியினுடைய தாயோ தமிழ் கதைக்கின்றாள். அவளுக்குச் சிங்களம் தெரியாது. சிறுமிதான் இருவருடைய மொழியையும் இணைக்கின்ற பாலமாக இருக்கின்றாள். தமிழிலிலும் சிங்களத்திலும் இருவருக்கும் மொழி பெயர்ப்புச் செய்கிறாள். இந்த நிலையில் தாய் சொல்கின்றாள் "ஐயா காலம் சரியில்லை. உயிர் போனால் மீண்டும் வராது. எல்லாம் நன்றாக வந்ததன் பின்னர்
118 பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

நாங்கள் வருவோம்” என்று சிறுமியைக் கூட்டிப் போகின்றாள். இவ்வளவு உரையாடலையும் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இருந்த சிறுவன் உள்ளே போகின்றான். மீண்டும் பொருட்கள் உடைபடும் சத்தம் கேட்கின்றது. இந்தச் சிறுமி திரும்பிப் பார்க்கின்றாள். அவள் கண்களில் கண்ணீர், படம் முடிகின்றது. இது இறுதிக் காட்சி.
இந்தப் படத்தில் நான் கவனித்த சில முக்கியமான அம்சங்கள் உள்ளன.
ஒன்று இந்தப் படத்தின் பெயர் தியேட்டர்களில் சிங்களத்திலும் தமிழிலும் எழுதப்பட்டிருந்தது. படம் முழுவதும் தொடர்ந்து சிங்களம் கதைக்கும் போது தமிழிலும். தமிழில் கதைக்கும்போது சிங்களத்திலும் சப்டைட்டில் இடம் பெற்றது. அந்த வகையில் இது சிங்கள தமிழ் பார்வையாளர்களுக்கான ஒரு படமாக வடிவமைக்கப் பட்டிருந்தமை ஒரு முக்கியமான விடயம்.
இரண்டாவது இந்தப் படத்தில் இடம் பெறுவது ஒரேயொரு பாடல் தான். அந்தப் பாடல் தமிழ்ப் பாடல். 'குட்டித் தேவதையொன்று இறங்கி வந்தது" என்று தொடங்குகின்ற தமிழ்ப் பாடல்.
மூன்றாவது விடயம்; இத் திரைப்படத்தின் செய்தி. இந்தப் படம் மொழியை இழத்தல், மொழியைப் பெறுதல் என்ற ஒரு விடயத்தினை மையப்பொருளாகக் கொண்டிருபது போல் எனக்குத் தோன்றுகின்றது. இது என்னுடைய வியாக்கியானம். மொழியை வைத்து சோமரத்தினா அவர்கள் இதனைச் செய்திருப்பது ஒரு முகி கியமான விடயம் என்றுதான் நான் நினைக்கின்றேன். இலங்கையின் இனமுரண்பாடு அதன் உக்கிர வடிவமான போர் முதலியவற்றின் தொடிக்கமாக இருந்தது மொழிப் பிரச்சினைதான். தமிழர்களுடைய மொழி உரிமை பறிக்கப்பட்டதும், சிங்களம் மட்டும் சட்டமும், இந்த நிலையில் ஒரு சிங்களச் செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன்; அதாவது ஒரு ஆணி மொழி இழப்புக்கு ஆளாகி பின் தமிழ் மூலம் மீண்டும் மொழியைப் பெறுவதை இப்படம் சித் திரிக்கிறது. அதிகாரம்(power), மேலாதிக்கம் என்ற எண்ணக் கருவைப் பிரயோகித்து இந்தப் படத்தினை நாங்கள் விவரிப்போமானால் இலங்கையில் உயர் அதிகாரத்தில், உயர்ந்த நிலையில் இருக்கின்ற ஒருவருடைய குறியீடு அந்தச் சிறுவன . இனவர்க்க பால ரீதியாக மேலாதரிக் கதி தை பிரதிநிதித்துவப்படுத்துபவன். இந்தச் சிறுமியோ தமிழர்களிடையே மிகவும்
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 119

Page 63
ஒடுக்கப்படுகின்ற சமூகமான மலைநாட்டுத் தொழிலாளி; அதுவும் வீட்டு வேலை செய்கின்ற ஒருவனுடைய மகள் . ஒரு பெண் . ஒரு சிறுமி. அதிகாரப்படிநிலையில் இரு முரண்பட்ட நிலைகள். அதிகாரப் படிநிலையில் மிக அடிமட்டத்திலும் உயர்மட்டத்திலும் இருப்பவர் என்று இருவர் இங்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால் அந்த உயர் ஸ்தானத்தில் இருப்பவர் மொழியற்றவராக இருக்கின்றார். அதாவது ஒடுக்குபவர் மொழியற்றவராக, மொழியினை இழந்தவராக இருக்கின்றார். ஒடுக்கப்படுகின்ற பகுதியினைச் சேர்ந்த பெண் மொழி உள்ளவளாக இருக்கின்றாள். அதேவேளை இந்த ஒடுக்குபவர்களுடைய மொழியாற்றலை மீண்டும் உருவாக்குபவள் இந்த ஒடுக்கப்படுகின்ற சமூகத்தைச் சேர்ந்த அதிகார மட்டத்தில் தாழ்த்தப்பட்ட நிலையில் உள்ள இந்தப் பெண்.
ஓரங்கட்டப்பட்ட சமூகத்துச் சிறுமி; தன்னுடைய மொழியினை அவனுக்கு அளிக்கிறாள். அவனுடைய வாழ்க்கையின் சந்தோஷங்கள், அனுபவங்கள், மற்றவர்களுடன் தொடர்பாடல் ஆகியவை யாவும் அந்த மொழிக்கூடாகத்தான் வருகின்றன. ஆகவே சோமரத்தினா அவர்கள் மொழியை இவ்வாறு வியாக்கியானப்படுத்தியது மிக முக்கியமான விஷயம் என்று நான் நினைக்கிறேன்.
அது மாத்திரமல்லாமல் இந்தப் படத்தினை இந்தக் காலகட்டத்தில் இந்த முறையில் அவர் எடுத்திருப்பதும் மிக முக்கியமான விஷயம். அவரது சரோஜா என்ற முதல் படத்தினைப் பார்க்க எனக் குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் சரோஜா பற்றிய விமர்சனங்களை நான் பார்த்தேன். ஆனால் குட்டித் தேவதை என்கிற இத் திரைப்படம் நீண்ட காலமாக ஓடிக்கொண்டிருக்கின்றது திரையரங்குகளில், நான் கொழும்பில் இந்தப் படத்தினைப் பார்த்தபோது கிட்டத்தட்ட திரையரங்கு நிறைந்திருந்தது. குடும்பம் குடும்பமாக வெவ்வேறு இனங்களைச் சார்ந்தவர்கள் பார்வையாளர்களாக இருந்ததையும் நான் கண்டேன். நான் பார்த்த திரையரங்கில் இதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இந்தத் திரைப்படம் பற்றி விமர்சனங்கள் இரு வகைப்பட்டதாக இருப்பதைக் காண்கின்றேன். ஒன்று, எப்பொழுதும் போல மாமூலான ஒரு விமர்சனம், தமிழ்ச் சினிமா பார்ப்பவர்களிடம் இருந்து எழுந்தது. சிங்கள இயக்குனர்கள் எல்லோரும் தமிழர்களைத் தங்களது கதாபாத்திரங்களாக வைத்துக் கொண்டால் வேலைக்காரர்களாகவே காட்டுகின்றார்கள். இது அவர்களுடைய மேலாதிக்க மனோபாவத்தினைக் காட்டுகின்றது. இந்தப் படமும் அதிலிருந்து விதிவிலக் கல்ல என்கின்ற கருத்தினைச் சிலர் முன்வைத்தார்கள். ஆனால் எனக்கு இது எத்தகைய அடிப்படையுமற்ற
120 பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002

கருத்தாகவே தோன்றுகிறது. தமிழர்களை யெல்லாம் இப்படித் தங்களுக்கு மிகவும் குறைந்தவர்களாக, தாங்கள் வேலை வாங்குபவர்களாகச் சித்திரிக்கும் சினிமா மரபில், ஒரு பகுதிதான் சோமரத்தினாவின் இந்தப் படமும் என்ற விமர்சனம் ஒரு உயர்வர்க்க நிலைப்பட்ட பார்வை என்றுதான் நான் கருதுகின்றேன்.
ஏனென்றால் இது யதார்த்தத் தினையும், இலட்சியத்தினையும் , அபிலாசைகளையும் கலக்கும் ஒரு திரைப்படமாகத் தெரிகின்றது.
தமிழர்களிடையே ஒடுக்கப்பட்ட, ஒடுக்கப்படுகின்ற, அதிகாரப்படி நிலையில் மிகவும் தாழ்த்தப்பட்ட நிலையில் அதிகமானோர் உள்ளனர். சுமார் 65% - 75% வீதத்தினர் சாதியால் தாழ்த்தப்பட்டவர்கள், பெருந்தோட்டத் தொழிலாளராக, சிறு நில விவசாயரிகளாக, கூலி விவசாயிகளாக, நிலமற்றோராக, அகதிகளாக, கூலித் தொழிலாளிகளாக உள்ளனர். அந்த விடயத்தை மறந்து எம்மையும் முதலாளிகளாக, எம்மையும் ஆள்பவர்களாகக் காட்ட வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு வர்க்கப் பார்வை சார்ந்ததாக அல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்? இந்த உயர் மனோபாவ உளவியல் தான் அத்தகைய ஒரு விமர்சனத்திற்குள் செயற்படுகின்றது என நான் நினைக்கின்றேன்.
என்னுடைய பார்வையில் இந்தத் திரைப்படம், தமிழர்கள் எல்லோரும் தோட்டப்புறத்தார். தமிழர்கள் எல்லோரும் ஏழைகள். தமிழர்கள் எல்லோரும் வீட்டு வேலைக் கே தகுதியானவர்கள் என்ற அந்த வகைமாதிரியை நிலைநிறுத்துவதாக இல்லை. மாறாக மொழி என்கின்ற விடயத்தினை வைத்துக் கொண்டு ஒடுக்குபவர்களுக்கு, ஒடுக் கப்படுபவர் மொழியை அளிப்பதாக, ஒடுக்குபவருடைய விடுதலையை ஒடுக்குமுறைக்கு உட்படுபவர் அளிப்பதாக அமைகிறது. இத்தகைய வித்தியாசமான உருவாக்கத்தைச் சாதாரண அர்த்தத்தின் ஒரு தலை கீழ் மாற்றத்தை இந்தப் படம் உருவாக்குகின்றது என்று நான் நினைக்கின்றேன்.
இரண்டாவது விமர்சனம் சில சிங்கள நண்பர்கள் கூறிய விமர்சனம. இது அந்த முதலாளியினுடைய மனமாற்றம் அவர் தமிழர்களைக் காப்பாற்றுவது போன்ற விஷயம் பற்றியது. ஆரம்பத்தில் அவர் தமிழர்களை, தமிழர்களுடைய விடுதலை இயக்கங்களைப் பயங்கரவாதமாகத் தான் பார்க்கின்றார். திடீரென வேலுவைக் காப்பாற்ற வெளிக்கிடுகின்றார். குழந்தையைக் காப்பாற்றிக் கொண்டு வருகின்றார். சிங்களக் கும்பலை
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002

Page 64
எதிர்க்கின்றார். இப்படியான விடயங்கள் எல்லாம் அவருடைய மன மாற்றத்தினைப் பிரதிபலிக்கின்றன. இந்த மன மாற்றம் எப்படி ஏற்பட்டது? யதார்த்தம் இல்லை என்று ஒரு விமர்சனம், இந்த விமர்சனம் கவனம் செலுத்த வேண்டிய, விவாதத்துக்குரிய ஒன்று என நான் நினைக்கின்றேன்
ஏனென்றால் இந்த விமர்சனம் கலை என்றால் என்ன? கலை ஊடகம் மூலம் ஒரு பிரச்சினையை எப்படி அணுகலாம் என்பது பற்றிய விவாதங்களை எழுப்புகிறது. இந்த யதார்த்தத்தினை யதார்த்தமாகச் சித் திரித்துக கொண்டிருப்பது போதுமா? யதார்த்தம் என்றால் என்ன? யாருடைய பார்வையில் எது யதார்த்தம்? இப்படியான கேள்விகள் இன்றைய பின்நவீனத்துவ காலகட்டத்தில் எழுப்பப்படுகின்ற கேள்விகள். அதற்காக மாத்திரமல்ல உண்மையும் அதுதான். யதார்த்தம் என்பது எது? யாருடைய யதார்த்தம்? அந்த முதலாளியினுடைய யதார்த்தமா? வேலுவினுடைய யதார்த்தமா? அல்லது வேலுவினுடைய மகளுடைய யதார்த்தமா? யாருடைய யதார்த்தம்? தகவல்கள் இருக்கின்றன; உண்மைதான். ஆனால் நாம் இவற்றினை எவ்வாறு உள்வாங்கிக் கொள்கின்றோம். எவ்வாறு அவற்றைக் கருத்துக்களாக உருவாக்குகின்றோம் என்பதெல்லாம் ஆழமான விவாதத்திற்கு இட்டுச் செல்லக் கூடிய விஷயம். இந்த வகையில் யதார்த்தத்தினைக் கலையாக்குவது எப்படி? இன்று வெவ்வேறு வகையான யதார்த்தத் தினைப் பற்றிக் கதைக்கின்றோம். இந்த நிலையில் சிங்கள முதலாளிக்கு ஏன் மனம் மாறியது என்ற காரணங்களை யெல்லாம் விளக்குவது, சமுகவியலாளருடைய, அரசியல் சிந்தனையாளருடைய அல்லது இலக்கிய விமர்சகர்களுடைய வேலையாக இருக்கலாம். சோமரட்ன அந்த விடையத்தை இத்திரைப்படத்தின் மையப் பொருளாகக் கொள்ளவில்லை. ஒரு சினிமா இயக்குனருடைய வேலை என்ன? இது ஒரு மிக முக்கியமான கேள்வி. இங்கு சோமரட்ன தன்னுடைய கருதி தையும் தனி னுடைய அரசியல நிலைப் பாட்டையும் இந்த யதார்த்தத்தையும் எவ்வாறு கலக்கலாம் என்கின்ற ஒரு கேள்வியை நாங்கள் இங்கு எழுப்ப வேண்டும். அந்த வகையில் எவ்வாறு மனம் மாறியது என்பதல்ல, எங்களுக்குத் தெரிய வேண்டிய விஷயம் ஒரு சிறுகதை ஊடாக எவ்வாறு இவர் சம்பவங்களை எடுத்துக் கோர்த்து எவ்வாறு ஒரு கருத்தினை வெளிக்கொண்டு வருகின்றார் என்பதாகும். ஏனென்றால் இந்தப் படம் நகர்ந்த முறையில் கிட்டத்தட்ட இறுதிக்கட்டம் வரையும் 83ம் ஆண்டு கலவரத்தினைக் கொணி டு முடியப் போகன் றது என்று எந்த விதமான உணர்வும் பார்ப்பவர்களுக்கு இருந்திருக்க முடியாது. ஆக முதல் காட்சியில் ஒரு இடத்தில் மாத்திரம் படம் ஆரம்பிக்கும் போது 1983 கலவரம் பற்றிய மிகச்சிறிய காட்சி சுமார் ஒரு நிமிடநேரம் இடம் பெறுகிறது. பிறகு திடீரென்று
122 பிரவாதம் - ஜூலை - டிசம்பர் 2002

இந்தக் கதை நகர்கின்றது. ஒரு குடும்பக் கதை போல, இரு சிறுவர்களின் கதை போல, ஒரு சிதைக்கப்பட்ட சிறுவனின் கதை போல இந்தக் கதை நகர்கின்றது.
படத்தின் இறுதிப் பகுதியில் கதை திடீரென்று 1983 ஆம் ஆண்டு தமிழர் மீதான வெறித் தாக்குதலுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. அந்த வகையில், கதையை அவர் நகர்த்திய முறை, காட்சிகளை அவர் நகர்த்திய முறையினுடைய உள்ளார்ந்த இயக்கப்பாடு எங்களுக்கு யதார்த்தம் பற்றிய கேள்வியையன்றி யதார்த்தத்தையும் ஒரு கருத்தையும், யதார்த்தத்தையும் ஒரு இலட்சியத்தையும் எப்படி கலையில் இணைக்கலாம் என்கின்ற கேள்விகளைத் தான் முன் வைக்கின்றது.
இன்னொரு வகையான விமர்சனமும் வந்தது. இதுவும் சில சிங்கள நண்பர்களிடமிருந்தே. சிங்கள முதலாளி ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டுத் தன்னுடைய வேலைக் காரனைத் தேடிப் போகின்றார். தான் அடி வாங்கி ஏன் அவரைக் காப்பாற்ற ஓடுகின்றார். ஏனென்றால் அவர் ஒரு சிறந்த வேலைக் காரனை இழந்து விட அல்லது இழக்க விரும்பவில்லை. ஆனபடியால் தான் அவர் காப்பாற்றப் போகின்றார் என்று சிலர் கூறினர். அதில் ஓரளவு உண்மை இருக்கலாம். ஆனால், அதே சமயம் மனிதரில் இருக்கின்ற கொஞ்சநஞ்சமான மனிதாபிமானத்தை, கொஞ்சநஞ்சமான மன ஈரத்தை நாம் மறுதலிக்கின்றோமா? நாம் என்ன விரும்புகின்றோம்? என்ற ஆழமான கேள்விகள் எங்களுக்குள் எழ வேண்டுமெனி நு நாணி நினைக்கின்றேன். சிங்களவரோ, தமிழரோ இன்னொருவர் கொலையுறும்போது கொஞ்சமாவது மனம் துணுக்குறாமல் இருக்க முடியாது, நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டவரைத் தவிர, நேரடியாகத் துப்பாக்கிகளைத் தாங்கியவரைத் தவிர நேரடியாக வானத்திலிருந்து குண்டு பொழிபவர்களைத் தவிர மற்றவர்கள் கொஞ்சமாவது கொலைகளை நேரில் காணும் போது மனம் துணுக்குறவே செய்வார்கள். இன்னுமொரு மனித உடல் அழியும் போது பேதலித்துப் போகவே செய்வார்கள். இது மனித இயல்பு. அவ்வாறு நேரடியாக யுத்தத்தில் ஈடுபடுபவர்கள் கூட, பின்நாளில் அது பற்றி மனம் பேதலிப்பது, விரக்தியுறுவது, வேதனைப்படுவதெல்லாம் நாம் வரலாற்றில் காணுகின்ற யதார்த்தங்கள்.
இந்த வகையில் அந்த மன ஈரத்தை முற்று முழுதாகவே மறுதலித்து தனி னுடைய வேலைக் காரணுக் காக, தான் ஒரு வேலைக் காரனை இழந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் போகிறார் எனக் கூறுவது எவ்வளவு தூரம் பொருத்தமானதோ எனக்குத் தெரியாது. அத்தகைய காரணத்தினால்
பிரவாதம் - ஜுலை - டிசம்பர் 2002 123

Page 65
காப்பாற்ற முயல்வதும் பிழையாகத் தெரியவில்லை (சில சமயம் சிங்கள உளவியஸ் , சரிங் கள வரிமர்சகர்களுக குதி தான அத கமா கத தெரிந்திருக்கும் போலும்.)
இந்தவகையில் கலை, யதார்த்தம், மொழி, சினிமாவினுள்ளே காட்சித் தொகுப்பு (Editing) இப்படிப் பல்வேறு வகையான விடயங்கள் பற்றிய ஆழ்ந்த சிந்தனையை எழுப்பக்கூடியதாக இந்த சினிமா இருப்பது ஒரு முக்கியமான விடயம் என்று நான் கருதுகின்றேன். இந்தப் படம் திருகோணமலையிலும், வவுனியாவிலும் நீண்ட நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. இன்னுமொரு முக்கியமான விடயம் நாம் Art Film அல்லது கலைச் சினிமா என்று அடிக்கடி கதைக்கின்றோம். அல்லது மாற்றுச் சினிமா என்று கதைக்கின்றோம். இந்த மாற்றுச் சினிமாவும், கலைச் சினிமாவும் சமூகத்தில் மிகக் குறைந்தவர்க்ளுக்குத்தான் உரியது. அவர்கள் தான் அவற்றைப் பார்ப் பார்கள் என்ற பிரபலமான நம்பக கை இருந்து கொண்டிருக்கின்ற கால கட்டத்தில் நீண்ட நாட்களாக புஞ்சி சுரங்கனாவி என்ற இத்திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து ஓடுவது மிகவும் முக்கியமான ஒரு விடயம், பாட்டுக்கள் இல்லை, நடனக் காட்சிகள் இல்லை. காதலி காட்சிகள் இல்லை. அந்த மாமூஸ் விடயங்கள் எதுவுமேயில்லை. எனினும் ஏன் நீண்ட நாட்டகளாக இந்தப் படம் திரையரங்குகளில் ஓடுகிறது என்பது முக்கியமான ஒரு கேள்வி. கலை பற்றிய, சினிமா பற்றிய மட்ட ரசனை என்று நாங்கள் சொல்லுகின்ற சாதாரண மக்களினுடைய ரசனை பற்றி நாம் மீண்டும் ஒரு முறை சிந்திப்பதற்கு இது எமக்கு உதவலாம். நாமாகவே இத தகைய ரசனை பறி றய கருதி து க கன வி உருவாக்குகின்றோமா? அல்லது உண்மையில் ரசனை எப்படி இருக்கின்றது என்பது பற்றிய கேள்விகள் எழுவதற்கும் இந்தப் படம் வழிசமைக்கின்றது. இந்தத் திரைப்படத்தினுடைய வசூல் அது எத்தனை நாட்கள், எங்கெங்கு ஒடியது? எந்த இன, எந்த வர்க்க, எத்தகைய பின்னணி கொண்ட மக்கள் இதைப் பார்க்கின்றார்கள்? மக்களுடைய கருத்துக்கள் எத்தகையவை? என்கின்ற ஆராய்ச்சியினை யாராவது செய்தால் அது மிக உபயோகமாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்.
F凸、 F.F.
*: Tes
. பிரவாதம் - ஜ"ாஸ் - டிசம்பர் 2002
 

URINGTO LEARN
a W. Little
ர்
வெளியீடு: சமூக விஞ்ஞானிகள் சங்கம் விலை ரூபா. 500/-
பிரவாதம் - ஜ"ாலு - டிசம்பர் 22

Page 66
© oraz =
• •
Culture crossings and
Lh
வெளியீடு: சமூக விஞ்ஞானிகள் சங்க
W
விலை ரூபா. 650
காது - டிசம்பர் 2002
பிரவாதம் - 8
2.
 

iЈhiji
சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் அரையாண்டுச் சஞ்சிகை
ஆண்டுச் சந்தாவிபரம்
தபால் செலவு உட்பட
இலங்கை: ரூபா 200.00
வெளிநாடுகள் (விமானத்தபால் மூலம்)
இந்தியா இந் ரூபா 175.00.
Gunsup|TGs, it : USS 10.00
தயவு செய்து PraYada Pபblications என்ற பெயருக்கு காசோலை அல்லது காசுக்கட்டளை அனுப்பவும்.
பெயர்
விலாசம்:
Pravada Publications 425/15, Thimbirigasyaya Road Colombo - 5, Sri Lanka. Tel: 501339, Fax: 595563, E-IInail: 55a (Gcurcka.lk

Page 67
igliji
ஜூலை - டிசம்பர் 2002
ঢাfD. ত্যে, நுஃமான் சமாதான முயற்சியும் வடகிழக்கு
சி. சிவசேகரம்
தாய்மொழிக் 6.jळाक्ष நியாய
விளாடிமீர் பிலேன்கின் பின்நவீனத்துவம் ரஷ்யாவிற்கு வ
அம்பலவாணர் சிவராசா சமஸ்டி முறையும் கூட்டுச் சமஸ்டி
இம்தியாஸ் அகமது வகுப்புவாதம் உருமாறிவிட்டதா?
எட்வேர்ட் சையிட்
செல்வி திருச்சந்திரன் இலங்கையில் இடதுசாரி இயக்கம்
(UD. சின்னத்தம்பி பூகோளமயமாக்கலும் அதன் விை
эungлба அகமது பயங்கரவாதத்துக்கு எதிரான ே அடுத்த இலக்காக ஃபிலிப்பின்ஸ்
சித்திரலேகா மெளனகுரு குட்டித்தேவதை - ஒரு வியாக்கிய
SSN-3
PRINTED BY UNIE ARTS (PVT)
 

D. COLOMBO-13. T.P.: 33095