கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாதம் 2005.07

Page 1


Page 2
பிரவாதம்
சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் அரையாண்டுச் சஞ்சிகை தொகுதி - 4 ஜூலை 2005
ஆசிரியர் எம். ஏ. நுஃமான்
ஆசிரியர் குழு என். சண்முகரத்தினம், சித்திரலேகா மெளனகுரு செல்வி திருச்சந்திரன்
தொடர்பு முகவரி பிரவாதம், சமூக விஞ்ஞானிகள் சங்கம் 12, சுலைமான் ரெறஸ்,கொழும்பு-5.
Social Scientists' Association 12, Sulaiman Terrace, Colombo - 5. TP: 2501339, Fax: 2595563
E-mail : SSaGureka.lk
விலை: தனிப்பிரதி ரூபா 100/=
ISBN. 1391-7269

ஆசிரியர் குறிப்பு
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரவாதம் இதழ் 4 வெளிவருகின்றது. தவிர்க்க முடியாத பல்வேறு காரணங்களால் இந்தத் தாமதம். பிரவாதம் இனி கிரமமாக வெளிவரும் என்று நம்புகின்றேன்.
இந்த இதழ் எட்வர்ட் சயித் சிறப்பிதழாக வெளிவருகிறது. சயித் 2003 செப்டம்பரில் இறந்தார். உலகப் பிரசித்திபெற்ற பெரும் சிந்தனையாளர் அவர். பின்காலனித்துவ சமூக அரசியல் சூழலில் வாழும் நமக்கு அவரது எழுத்துகள் ஆதர்சமாகவும் உந்துதலாகவும் அமையக் கூடியவை. எனினும், தமிழ்ச் சூழலில் அவரைப்பற்றி அறிந்தவர்கள் மிகச் சிலரே. பல சிரேஷ்ட பேராசிரியர்கள் கூடியிருந்த ஒரு சபையில் எட்வர்ட் சயிதின் மரணச் செய்தியை நான் அறிவித்தபோது ஒருவர் மட்டுமே தன்னுடைய கவலையை என்னுடன் பகிர்ந்துகொண் டார். ஏனையோருக்கு அவரைப்பற்றித் தெரிந்திருக்கவில்லை. பிரவாதம் நான்காவது இதழ் சயித் சிறப்பிதழாக வரவேண்டுமென்று அப்போதே தீர்மானித்தேன். சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகுதான் அது சாத்தியமாகின்றது. சயிதின் கட்டுரை ஒன்று (அறியாமையின் மோதல்) ஏற்கனவே பிரவாதம் இதழ் 2ல் பிரசுரமாகியுள்ளது என்பதை வாசகர்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

Page 3
உலகப் புகழ்பெற்ற கவிஞர் பாப்லோ நெரூடாவின் (19041973) பிறந்த நூற்றாண்டு கடந்த ஆண்டு உலகெங்கும் நினைவு கூரப்பட்டது. இடதுசாரிச் சிந்தனை மரபின் வலுவான ஆதரவாளராக இருந்தவர் அவர். நெரூடாவின் கவிதைக் கொள்கை பற்றிய கட்டுரை ஒன்றும், அவரது இரண்டு கவிதைகளும் இவ்விதழில் வெளிவருகின்றன. சமூகம், வரலாறு, அரசியல், கல்வி ஆகிய துறைகள் பற்றிய கட்டுரைகளும் இவ்விதழுக்குச் சிறப்பூட்டுகின்றன. கட்டுரையாசிரியர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர் களுக்கும் எமது நன்றிகள்.
கடந்த ஆண்டு சுனாமிப் பேரழிவு நாட்டை உலுக்கியது. அதிலிருந்து நாம் விடுபட இன்னும் பல ஆண்டுகள் செல்லும். சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் புனரமைப்பது தொடர்பான பொதுக் கட்டமைப்பு பற்றிய சர்ச்சை பாரிய அரசியல் ஊசலாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இவைபற்றிய ஆய்வுரீதியான கட்டுரைகள் சில அடுத்த இதழில் வெளிவர உள்ளன.
முன்னைய இதழ்களை வரவேற்று சில வாசகர்கள் கடிதம் எழுதியிருந்தனர். அவர்களுக்கு நன்றி. தொடர்ந்தும் வாசகரின் ஆதரவு பிரவாதத்துக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
ஆசிரியர்

எட்வர்ட் சயித் - சில குறிப்புகள்
எம். ஏ. நுஃமான்
“நம்மைப் பற்றிய புனைவுகளையும், பிறரைப் பற்றிய நமது விளக்கங்களில் உள்ள புனைவுகளையும் அவிழ்ப்பதற்கும், நம்மையும் பிறரையும் பற்றிய நமது பார்வையை மீள் உருவாக்கம் செய்வதற்குமே அவர் தனது புலமைத் துறைசார்ந்த எழுத்து முயற்சிகள் அனைத்தையும் அர்ப்பணித்தார்’ என எட்வர்ட் சயித் (1935-2003) பற்றி உலகப் புகழ்பெற்ற பிறிதொரு சிந்தனையாளரான நோம் சொம்ஸ்கி கூறுகிறார். இது சயித் இறந்ததன் பின் எழுதப்பட்ட இரங்கல் உரையல்ல, அவர் இறப்பதற்குச் சில ஆண்டுகளுக்குமுன் கூறப்பட்டது. உலகெங்கும் மிகவும் பாராட்டப்பட்ட, மரியாதையுடன வரவேற்கப்பட்ட ஒரு அறிஞர் எட்வர்ட் சயித், அவரது கருத்துக்கள் உலகெங்கும் ஆய்வாளர் மத்தியில் மிகுந்த செல்வாக்கையும் அங்கீகாரத்தையும் பெற்றன. ஆய்வறிவாளரின் தீர்க்கதரிசி’ என அவர் இறந்தபின் ஓர் ஆங்கிலப் பத்திரிகை அவரைப் பற்றி எழுதியது. அதேவேளை அவர் தொடர்ச்சியான தாக்குதலுக்கும் விமர்சனத்துக்கும் இலக்காக இருந்தார். அவருடைய வெளிப்படையான அரசியல் நிலைப்பாடே அதற்குக் காரணமாகும்.
எட்வர்ட் சயித் துப்பாக்கி ஏந்தாத ஒரு பலஸ்தீன விடுதலைப் போராளியாகச் செயற்படடவர் என்று கூறலாம். பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக சுமார் நாற்பது ஆண்டுகளாகக் குரல் கொடுத்துவந்தவர் அவர் பலஸ்தீன மக்களின் அவலத்துக்குக் காரணமாக அமைந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் சியோனிசத்தையும் தீவிரமாக விமர்சித்தவர் அவர் மதச்சார்பற்ற மனித நீதிக்காகப் போராடியவர். பலஸ்தீன தேசிய கவுண்சில் உறுப்பினராக இருந்து பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைமைப் பீடத்துடன் ஏற்பட்ட கருதது முரண்பாடு காரணமாக அதிலிருந்து விலகியவர். யாசிர் அரபாத்துடன் நெருக்கமாக இருந்தவர். ஆயினும், அரபாத் இஸ்ரேலுடன் செய்துகொண்ட ஒஸ்லோ உடன்படிக்கையையும் அரபாத்தையும் தீவிரமாக விமர்சித்தவர். அதேவேளை இஸ்ரேலிய முற்போக்கு சக்திகளுடன் கருத்துப் பரிமாற்றத்தை வரவேற்றவர். பலஸ்தீன விடுதலைப் போராட்டத்துடன் அவருக்கு இருந்த உணர்வுபூர்வமான ஈடுபாடு காரணமாகவே ஒரு பயங்கரவாதப் பேராசிரியர் (Professor ofTerror) என வலதுசாரி ஆங்கில சஞ்சிகை ஒன்று அவருக்குப் பட்டஞ் சூட்டியது.
பிரவாதம் - ஜூலை 2005

Page 4
சயித் ஒரு பலஸ்தீன அராபியர். 1935 நவம்பரில் ஜெருசலேத்தில் ஒரு கிறிஸத்தவ குடும்பத்தில் இவர் பிறந்தார். சயிதின் தகப்பன் எட்வர்ட் வாடி ஒரு வர்த்தகர். தாய் ஹில்டா மூசா இலக்கியத்திலும் இசையிலும் ஈடுபாடு மிக்கவர். சயிதின் இலக்கிய, இசை ஈடுபாட்டுக்கும், அழகியல் உணர்வு விருத்திக்கும் தாயே இளமையில் பெரிதும் காரணமாக இருந்தார். தனது ஒன்பது வயதிலேயே தாயுடன் சேர்ந்து ஷேக்ஸ்பியரின் “ஹம்லட்டை அவர் வாசித்திருக்கிறார்.
மிகப் பெரும்பாலான பலஸ்தீனக் குடும்பங்களைப் போலவே சயித் குடும்பமும் 1948 யுத்தத்தின்போது இடம்பெயர்ந்தது. சிலகாலம் சயித் குடும்பத்தினருடன் கெய்ரோவில் வாழ்ந்தார். 1948ல் கெய்ரோ விக்டோரியா கல்லூரியில் சேர்ந்து கல்வி பயின்றார். தனது அரசியல் நடவடிக்கை காரணமாக அவர் அக்கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தனது பெற்றோருக்கு இருந்த அமெரிக்கத் தொடர்பு காரணமாக 1951ல் சயித் அமெரிக்கா சென்றார். சிறிது காலம் கெய்ரோவிலும் அமெரிக்காவிலுமாக அவரது வாழ்வு கழிந்தது. அமெரிக்காவில் பிறின்ஸ்ரன், ஹவார்ட் ஆகிய பல்கலைக் கழகங்களில் அவர் கல்வி பயின்றார். ஜொசப் கொன்ராட்டின் நாவல்களைப் பற்றி ஆராய்ச்சிசெய்து ஹவார்ட் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். 1963ல் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் அவருக்கு போதனாசிரியர் (lnstructor) பதவி கிடைத்தது. அதன்பின் அமெரிக்காவே அவரது இரண்டாவது தாயகமாயிற்று. அவர் இறக்கும்வரை சுமார் 40 வருடங்கள் அதே பல்கலைக் கழகத்திலேயே பணியாற்றினார். ஒரு போதனாசிரியராகப் பணியைத் தொடங்கிய அவர் பல பதவி உயர்வுகளும் விருதுகளும் பெற்று ஆங்கிலம் மற்றும் ஒப்பியல் இலக்கியப் பேராசிரியராக மரணமடைந்தார்.
1967ல் நடைபெற்ற அரபு-இஸ்ரேல் யுத்தம் பலஸ்தீன அரசியலில் மட்டுமன்றி சயிதின் சிந்தனையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஏழுநாள் யுத்தத்தில் அரபு உலகை இஸ்ரேல் முற்றாகத் தோற்கடித்தது மட்டுமன்றி, மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்துக்கும் வழிவகுத்தது. அராபியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், பலஸ்தீனர்களுக்கும் எதிரான இனவாதமும் துவேசமும் மேலோங்குவதற்குக் காரணமாகியது. இந்தச் சமூக, அரசியல் சூழலிலே தானும் ஒரு ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பலஸ்தீன அராபியன் என்ற சுய பிரக்ஞை சயிதுக்கு ஏற்பட்டது. அவரது பிற்கால எழுத்துகளும். பேக்சுகளும், அரசியல் நடவடிக்கைகளும் இப்பிரக்ஞையின் விளைவே எனலாம்.
2 பிரவாதம் - ஜூலை 2005

சயிதின் வாழ்நாளில் அவரது 20 நூல்கள் வெளிவந்தன. எனினும், அறிவுலகில் அவருக்கு அழியாப் புகழையும். நிரந்தர இடத்தையும் பெற்றுக்கொடுத்த நூல் கீழத்திசைவாதம் (Orientalism). இது 1978ல் முதலில் பிரசுரமானது. இதுவரை ஆங்கிலத்தில் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. உலகில் 35 மொழிகளில் இதுவரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கீழைத்தேய நாடுகளை, குறிப்பாக இஸ்லாத்தையும் இஸ்லாமிய உலகையும் ஐரோப்பிய அறிவுலகம் எவ்வாறு கட்டமைத்தது என்பதே இந்நூலின் ஆய்வுப் பொருளாகும். இது அவரது பரந்த, ஆழமான வாசிப்பினதும் அவரது உறுதியான அரசியல் நிலைப்பாட்டினதும் விளைவாகும். இப்பொருள் பற்றி ஏற்கனவே பலரும் எழுதியிருந்த போதிலும், அதை ஒரு கருத்து நிலையாக, கோட்பாடாக வடிவமைத்துத் தந்த பெருமை சயிதுக்கே உரியது. மிஷேல் ஃபூக்கோ வின் கருத்தாக்கத்தைப் பயன்படுத்தி அறிவுக்கும் அதிகாரத்துக்கும் இடையிலான உறவை இந்நூலில் சயித் மிக விரிவாக, மிக வெளிப்படையாக ஆராய்ந்துள்ளார். சயிதின் “கீழத்திசைவாதம் உலகெங்கும் அநேக இளம் ஆய்வாளர்களுக்கு ஆய்வறிவுத்துறை ஆதர்சமாகவும், உந்துதலாகவும் அமைந்தது.
கீழ்த்திசைவாதம் மத்திய கிழக்கு அரசியல் பிரச்சினை பற்றிய அவரது உறுதியான நிலைப்பாட்டின் ஆரம்பத்தைக் குறித்தது எனலாம். புலமைத் துறைசார்ந்த ஒரு விசாரணையாக அது அமைந்தது. அதன் பின்னர் பலஸ்தீனப் பிரச்சினை தொடர்பாக அவர் ஏராளமாக எழுதினார். பலஸ்தீன மக்களின் விடுதலை குறித்து அறிவுலகின் கவனத்தை ஈர்த்தவர்களுள் சயித் மிக முக்கியமானவர். இது தொடர்பாக அவர் எழுதிய நூல்கள் சிலவற்றை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
o Covering Islam: How the Media and the Experts Determine
How We See the Rest of the World (1981) After the Last Sky: Palestinian Lives (1986) O Blaming the Victims: Spurious Scholarship and the Palestinian
Question. (1988) W o The Politics of Dispossession: The Struggle for Palestinian Self
Determination 1969-1994 (1994) O Peace and Its Discontents: Essays on Palestine in the
Middle East Peace Process (1995) o The End of Peace: Oslo and After. (2000)
பிரவாதம் - ஜூலை 2005 3

Page 5
சயித் ஒரு தீவிர அரசியல் விமர்சகராக இருந்த அதேவேளை ஒரு முக்கியமான இலக்கிய-பண்பாட்டு விமர்சகராகவும் திகழ்ந்தார். அவரது (p56) 516) Joseph Conrad and the Fiction of Autobiography (1966) அவரது டாக்டர் பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டது. கொன்றாட்டின் நாவல்களுக்கும் அவரது சொந்த வாழ்வுக்கும் இடையிலான உறவை அது ஆராய்கிறது. பிற்காலத்தில் அரசியல் பிரக்ஞையோடு வளர்ச்சியடைந்த சயித் ஒரு சிறந்த இலக்கியப் புலமையாளராகவும் விமர்சகராகவும் பிரசித்திபெற்றார். கிழத்திசைவாதம் அவரது இலக்கிய விமர்சன நோக்குக்கும் ஒரு சிறந்த உதாரணமாகும். பண்பாடு, சமூகம் ஆகியவற்றுள் உள்ளார்ந்திருக்கும் அரசியல் பிரச்சினைகளை ஆராய்வதற்கு நவீன விமர்சனக் கோட்பாட்டை அவர் அந் நூலில் பயன்படுத்தியிருப்பதாக Edward Said and the Work of the Critic: Speaking Truth to Power என்ற நூலின் தொகுப்பாசிரியரான ஆங்கிலப் பேராசிரியர் Paul Bove கூறுகிறார். இலக்கியம், சமூகம், பண்பாடு, அரசியல் ஆகியவற்றுக்கிடையே உள்ளார்ந்திருக்கும் உறவை வெளிப்படுத்துவது சயிதின் விமர்சனத்தின் முக்கிய அம்சமாகும். இலக்கியம் பண்பாடு தொடர்பான அவரது பின்வரும் நூல்கள் முக்கியமானவை.
The World, the Text and the Critic (1983) Culture and Imperialism (1993) Reflections on Exile and Other Literary and Cultural Essays (2001)
எட்வர்ட் சயித் ஒரு சிறந்த பியானோ இசைக் கலைஞர் என்பது பலருக்குத் தெரியாது. தனது ஆறு வயதிலிருந்து அவர் பியானோ பயிற்சியில் ஈடுபட்டார். தாயும் தகப்பனும் அவருக்கு அத்துறையில் ஊக்கம் அளித்தனர். இக்னாஸ் தியேகெர்மன் என்னும் ஒரு போலந்து யூத இசைக்கலைஞரிடம் இவர் இளமையில் பியானோ பயின்றார். தன் வாழ்வுக் காலம் முழுவதிலும் அவரிடம் இசை ஆர்வம் இருந்தது. பிற்காலத்தில் ஐரோப்பிய செவ்வியல் இசையில் அவர் மிகுந்த ஆர்வமும் அக்கறையம் கொண்டிருந்தார். இசை பற்றி அவர் தொடர்ச்சியாக எழுதிவந்தார். The Nation சஞ்சிகையில் 1984ல் இசை பற்றி ஒரு பத்தி எழுத ஆரம்பித்தார். அவரது கடைசிக் கட்டுரைகளுள் ஒன்று "பீத்தோவன்’ பற்றியது. அவரது மரணத்துக்கு ஒருமாதம் முன்பு அது ‘நேசன் சஞ்சிகையில் பிரசுரமானது. அவரது பாரம்பரிய இசை ரசனைக்கும் அவரது அரசியல் தீவிரவாதத்துக்கும் இடையே உண்மையான இடைவெளி
4 பிரவாதம் - ஜூலை 2005

இருக்கவில்லை என ஹவார்ட் பல்கலைக்கழக அச்சக மனிதப் பண்பியல் துறை நிருவாக இயக்குனர் லின்டசே வோட்டர் கூறுகிறார்.
எட்வர்ட் சயித் 25 செப்டம்பர் 2003ல் இரத்தப் புற்றுநோய் காரணமாக தனது 67ம் வயதில் மரணமடைந்தார். சுமார் பத்து வருடங்கள் அவர் இந்த நோயுடன் போராடினார். அது ஒரு உயிர்கொல்லி நோய் என்று தெரிந்திருந்தும், தன் மரணத்தைப் பற்றி நிச்சயமாகத் தெரிந்திருந்தும் அவர் அதை எதிர்த்து தற்துணிபுடன் போராடினார். அந்தப் பத்தாண்டு காலத்துள் ஏராளமாக எழுதினார். நிறைய விரிவுரைகள், சொற்பொழிவுகள் ஆற்றினார். சுமார் பத்து நூல்களை வெளியிட்டார். பலருக்கு விரிவான பேட்டிகள் வழங்கினார். ஆய்வறிவாளரின் சமூகக் கடப்பாட்டுக்கும் தற்துணிபுக்கும் எடுத்துக்காட்டாக இருந்து இறுதியில் மரணமடைந்தார்.
எட்வர்ட் சயித் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த, உலகப் புகழ்பெற்ற, உலகின் கவனத்தை ஈர்த்த மிக முக்கியமான சிந்தனையாளர்களுள் ஒருவர். அரசியல் மேலாதிக்கத்துக்கு எதிராக, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, அரசியல், சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிராக, பரந்துபட்ட பொதுமக்களின் விடுதலைக்காக, சமூக நீதிக்காக தன் எழுத்துக்களை ஆயுதமாகக் கொண்டு அயராது போராடியவர். அதிகாரத்தின் முன் உண்மையைப் பேசியவர்; பேசுமாறு கூறியவர். ஆய்வறிவாளர்களதும் எழுத்தாளர்களதும் சமூகக் கடப்பாட்டை வலியுறுத்தியவர். இத்தகைய அறிஞர்கள் மரணம் அடைவதில்லை. மரணத்தின் பின்னும் அவர்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். எட்வர்ட் சயிதின் குரல் பலஸ்தீன விடுதலையின் குரலாக, அடக்கு முறைக்கு எதிரான குரலாக, மனித விடுதலையின் குரலாக என்றும் ஒலிக்கும்.
பிரவாதம் - ஜூலை 2005 5

Page 6
பொதுவாழ்வில் எழுத்தாளர்களினதும்
எட்வர்ட் சயித் எனக்குப் பரிச்சயமான மொழிகளிலும் பண்பாடுகளிலும் ‘எழுத்தாளர்’ என்ற பதம் அன்றாட வழக்கில் இலக்கியத்தைப் படைப்பவர்களைக் குறிக்கும். அதாவது, ஒரு நாவலாசிரியரை அல்லது கவிஞரை அல்லது நாடகாசிரியரைச் சுட்டும். எல்லாப் பண்பாடுகளிலும் ஆய்வறிவாளர்களை விட எழுத்தாளருக்குத் தனி வேறான, கெளரவமான இடமுண்டு என்பது பொதுப்படையான உண்மையென நான் நினைக்கின்றேன். படைப்பாற்றல் என்ற பரிவேடம் புனிதமான ஒன்றாய்க் கருதப்படும் தற்புதுமை ஆற்றல் இது எதிர்வுகூறவல்ல தன்மையுடையது) ஆகியவை ஆய்வறிவாளர்களைவிட எழுத்தாளர்களையே சாரும் எனக் கொள்ளப்பட்டது. இலக்கியத்தைப் பொறுத்தவரை ஆய்வறிவாளர்கள் சற்று மதிப்புக் குறைந்த ஒட்டுண்ணி வர்க்கத்தைச் சார்ந்த விமர்சகர்களாகக் கருதப்படுகின்றனர். எனினும், 21ஆம் நூற்றாண்டு புலரும் வேளையில் எழுத்தாளன் ஆய்வறிவாளனுக்குரிய எதிராளித்தன்மைகளைப் பூணத் தொடங்கியுள்ளான். அதிகார பீடத்திற்கு உண்மையை எடுத்துரைத்தல், துன்புறுத்தலுக்கும், துயரத்திற்கும் சாட்சி பகர்தல், அதிகார பீடத்துடன் பிணக்குகள் ஏற்படும்போது மாறுபட்ட குரலாக ஒலித்தல் போன்ற நடவடிக்கைகளை இப்பொழுது எழுத்தாளர்களே மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். ஆய்வறிவாளர்களும் எழுத்தாளர்களும் இப்பொழுது வகிக்கும் பணி ஒன்றிணைந்திருப்பதற்கான அறிகுறிகளுள் சல்மான் ருஷ்டியின் விவகாரமும் அது பல்கிப் பரவியமையும் ஒன்றாகும். சகிப்பின்மை, பண்பாடுகளின் ஊடாட்டம், டிொஸ்னியா, அல்ஜீரியா போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் பூசல்கள், பேச்சுச் சுதந்திரமும், தணிக்கையும், தென்னாபிரிக்கா, ஆர்ஜென்ரினா, அயர்லாந்து போன்ற நாடுகளில் உண்மையைக் கண்டறிதலும் இணக்கப்பாடும் முதலிய பிரச்சனைகள் தொடர்பாக பல்வேறு எழுத்தாளர் பாராளுமன்றங்களும் பேரவைகளும் கூடி அலசியிருக்கின்றன. ஒரு நாட்டின் அல்லது ஒரு பிரதேசத்தின் அனுபவத்தினை சான்றுபகரும் ஆய்வறிவாளரைப் போன்று எழுத்தாளருக்கும் ஒரு சிறப்பான குறியீட்டுப்பாங்கான பாத்திரம் உண்டு. இவ்வாறு சாட்சி பகர்வதன் மூலம் அந்த அனுபவத்திற்கு ஒரு பொது அடையாளம் இடப்படுவதுடன் பூகோள ரீதியாக மேற்கொள்ளப்படும் சொல்லாடலில் அது என்றென்றும் பொறிக்கப்படும்.
6 பிரவாதம் - ஜூலை 2005

இதை எண்பிப்பதற்கான மிகச் சுலபமான வழி அண்மையில் நோபல் பரிசு பெற்ற சில எழுத்தாளர்களின் (எல்லா எழுத்தாளர்களினதும் அல்ல) பெயர்களை பட்டியலிடுவதே. அவ்வாறு பட்டியல் இட்ட பின்னர் ஒவ்வொரு பெயரையும் மனதிலே ஒரு பிரதேசத்தின் சின்னமாகச் செயற்பட அனுமதிக்கும்போது அந்த எழுத்தாளர் அதன் பின்னர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இலக்கிய உலகிலிருந்து வெகு தொலைவிலுள்ள வாக்குவாதங்களில் ஒரு குறுக்கீடாகத் தென்படும். இவ்வாறு நடீம் கொடிமர் (Nadime Gordimer) QG56ôTFGgpT FuS (Kenzaburo Oe), QALQIpės GJITGoQasrs) (Drek Walcott), Gordo Glamu“lijСап(Wole Soyinka), вLSlfGudo 6ртélum LDTřf&su Gaio (Gabriel Garcia Marguez), F&sȚITGŚNGSuurT UITGiv (Octavio Paz), GTGólefŠGlas 6ão (Elie Wiesel), GLJL JJ6óTL' TQas 6ão (Bertrand Russell), (356örpff égpsT6io (Gunter Grass), sßG5ff G_LL-ff QLDS5& (Rigoberta Mench) GLJff6TP எழுத்தாளர்களை நாம் எடுத்துக்காட்டாகக் காணலாம்.
பஸ்காலே கஸனோவா (Pascale Casanova) எழுதிய நூலில் கடந்த 150 ஆண்டுகளிலே பூகோளம் சார்ந்த இலக்கிய அமைப்பொன்று உருவாகியிருப்பதை மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றார். அந்த இலக்கிய அமைப்பிற்கு அதற்கே உரிய இலக்கியத் தன்மையும், விசையும், பொது ஒழுங்கும், சர்வதேசியமும், சந்தைப் பெறுமானமும் உண்டு. அந்த ஒழுங்கமைப்பின் பயனுறுதி யாதெனில், அவர் குறிப்பிடும் எழுத்தாளர் வகையினரை உற்பத்தி செய்தமையே, ஒருவகையினர் உள்வாங்கப்பட்டவர்கள். இன்னொரு வகையினர் கருத்து முரண்பட்டவர்கள். மூன்றாவது வகையினர் மொழியாக்கம் செய்யப்பட்ட எழுத்தாளர்கள். இந்த வகையினைச் சார்ந்த எல்லோரும் தனித்தன்மை வாய்ந்தவர்களாகவிருக்கும் அதேவேளை, வகைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படக் கூடியவர்களாகத் தென்படுகின்றனர். அவர் விளக்குவது போல் இந்த ஒழுங்கமைப்பு பயனுறுதிமிக்க ஒன்றாகவும் பூகோளமயப்படுத்தப் பட்டதாகவும் ஒரு சந்தை முறையை ஒத்ததாகவும் காணப்படுகிறது. அவருடைய வாதத்தின் போக்கானது இந்தச்சக்தி மிக்க, எங்கும் பரவி நிறைந்த அமைப்பு ஜோய்ஸ், பெக்கற் போன்ற எழுத்தாளர்களை அவ்வமைப்பை மீறி சுதந்திரமாகச் செயற்படுவதற்குத் தூண்ட வல்லது என்பதே. இந்த இரு எழுத்தாளர்களதும் மொழியும், எழுத்து இலக்கணமும் அரசினதோ அல்லது ஒழுங்கமைப்பினதோ விதிகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பவை.
கஸனோவாவின் நூலை நான் எவ்வளவு தான் மெச்சினாலும் முழு மொத்த நோக்கில் அது முரண்பட்ட ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது. பூகோளமயப்படுத்தப்பட்ட ஒழுங்கமைப்பு என்ற ரீதியில் இலக்கியத்திற்கு ஒரு முழுமையான தன்னாட்சி உண்டு என அவர் வாதிடுவது போல்
பிரவாதம் - ஜூலை 2005 7

Page 7
தோன்றுகிறது. இதனால், அரசியல் நிறுவனங்களினதும் சொல்லாடல்களினதும் நாகரிகமற்ற யதார்த்தங்களுக்கு அப்பால் இலக்கியம் உள்ளது என்பது அவரது உட்கிடை. இது ஓரளவிற்குக் கோட்பாட்டு ரீதியாக நம்பத்தக்கது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். குறிப்பாக, அவர் முன்வைக்கும் வடிவில். சர்வதேச இலக்கியத்திற்கு அதற்கே உரித்தான வியாக்கியான விதிகள், தனிப்பட்ட படைப்புகளுக்கும் முழு மொத்த படைப்புத் தொகுதிக்கும் இடையே உள்ள இயங்கியல், தேசியவாதம், தேசியமொழிகள் ஆகியவற்றிற்கே உரித்தான கருத்துருவ இயல் என்பனவற்றை அவர் முன் வைக்கின்றார். ஆனால், நவீனத்துவத்தின் முத்திரைகளில் ஒன்று மிக ஆழமான மட்டத்தில் அழகியல் துறைக்கும் சமூகத் தேவைக்கும் இடையே இணக்கம் காண முடியாத இழுவிசை உண்டு என அடோர்னோ போன்று நானும் குறிப்பிடுவேன். ஆனால், கஸனோவா இந்த அம்சத்தினைக் கணக்கில் எடுக்கவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட கெடுபிடி யுத்தத்திற்குப் பின்னர் உலகின் அரசியல் அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டன. இதன் விளைவாக பண்பாட்டுப் போட்டிகள் நிகழலாயின. இப் போட்டிகளில் இலக்கியமும் எழுத்தாளரும் எவ்வாறு சிக்க வைக்கப்பட்டனர் என்பது பற்றியோ, அல்லது திட்டமிட்டு திரட்டப்பட்டனர் என்பது பற்றியோ அவர் அதிகம் பேசவில்லை.
இந்தப் பரிமாணத்திலிருந்து நோக்கும்போது சல்மான் ருஷ்டி பற்றிய வாதப் பிரதிவாதங்கள் 'சாத்தானின் செய்யுள்கள்’ நூலின் இலக்கிய இயல்புகள் பற்றியவையல்ல. மாறாக, சமயம் சார்ந்த பொருளை இலக்கியம் கையாளும்போது சமய உணர்ச்சிகளைப் பகிரங்கமாகத் தொட்டு, அவற்றைக் கிளறச் செய்யாதுவிட சாத்தியப்படுமா என்பது பற்றியதே. என்னைப் பொறுத்தவரையில் அத்தகைய சாத்தியப்பாடு இருக்கவில்லை. ஏனென்றால், அயத்தெல்லா கொமேனி மதத் தீர்ப்பை (Fatwa) வழங்கிய கணத்திலிருந்து அந்த நாவலும் அதனை ஆக்கியோனும் அதன் வாசகர்களும் தள்ளப்பட்ட சூழல் அரசியல் மயப்படுத்தப்பட்ட விவாதங்களுக்கே இடமளித்தன. இந்த விவாதங்களில் அணுகப்பட்ட பொருள்கள் தெய்வ நிந்தனை, மதச் சார்பற்ற கருத்து முரண்பாடு, நாட்டின் எல்லைகளைக் கடந்த கொலை அச்சுறுத்தல்கள் ஆகியன. இவை சமூகத்தையும் சமயத்தையும் ஒரே வேளையிலே சார்ந்த பிரச்சனைகள் ஆகும். நாவலாசிரியர் என்ற முறையில் ருஷ்டியின் வெளியீட்டுச் சுதந்திரம் மட்டுப்படுத்தப்படலாகாது என்று வலியுறுத்தல் இஸ்லாமிய உலகைச் சார்ந்த எம்மில் பலர் வலியுறுத்தியது போன்று) உண்மையில் இலக்கியத்தின் விலகி நிற்றலை முற்று முழுதாக விழுங்கிவிட்ட ஆக்கிரமிப்புச் (புவியியல் அர்த்தத்தில்) சொல்லாடலுக்குள் இலக்கியச் சுதந்திரம் என்ற பிரச்சனை குறித்து விவாதித்தலே.
8 பிரவாதம் - ஜூலை 2005

இத்தகைய விரிந்த பின்னணியில் எழுத்தாளருக்கும் ஆய்வறிவாளருக்குமிடையே அடிப்படை வேறுபாடு காண வேண்டிய தேவை இல்லை. இரு சாராரும் உலகமயமாக்கல் ஆதிக்கம் செலுத்தும் புதிய பொதுத் துறையில் செயற்படுபவர்களாக இருப்பதனால் இத்தகைய பொதுத் துறை உள்ளது என்பதை கொமேனியின் மதத் தீர்ப்பை ஆதரிப்பவர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்) எழுத்தாளர்களினதும் ஆய்வறிவாளர்களினதும் பொதுவாழ்வு வகிபங்கு ஒன்றாகக் கருதப்பட்டு ஆராயப்படலாம். இதனை இன்னொருவகையில் சொல்வதானால் பொதுத் துறையில் எழுத்தாளர்களும், ஆய்வறிவாளர்களும் குறுக்கிடும்போது அவர்களுக்கிடையேயுள்ள பொதுத்தன்மைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும் எனலாம்.
முதலாவதாக, இன்று அறிவு சார்ந்த குறுக்கீட்டின் தொழில் நுட்பத்தன்மைகளை நாம் கணக்கில் எடுக்கவேண்டும். கடந்த தசாப்தத்தில் தொடர்பாடல் மிக வேகமாக விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த வேகத்தை நாம் உணரவேண்டுமாயின் 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஜொனதன் சுவிவ்றின் (Jonathan Swift) பொதுத்துறைக் குறுக்கீடுகளை எமது கால குறுக்கீடுகளுடன் ஒப்பிட வேண்டும். சுவிவ்ற் அவரது காலத்தில் எதிரியைத் துவம்சம் செய்யும் துண்டுப் பிரசுரங்களை வெளியிடுவதில் பிரபலம் பெற்றிருந்தார். அத்துண்டுப் பிரசுரங்களின் மூலம் பொது வாழ்வில் பயனுறுதி மிக்க முறையில் குறுக்கிடலாம் என்பதையும் அவர் நன்கு உணர்ந்திருந்தார். 1711-12 ல் மால்பறோ கோமகனுக்கு எதிராக வெளியிட்ட துண்டுப் பிரசுரம் இரண்டு மாதங்களில் 11ஆயிரம் பிரதிகள் விற்பனை ஆகிற்று. இத் துண்டுப் பிரசுரம் கோமகன் வீற்றிருந்த உயர் பீடத்திலிருந்து அவரை இழுத்து வீழ்த்திற்று. எனினும், சுவிவ்றின் சோர்வுமனப்பாங்கினை இது மாற்றவில்லை. 1704 ஆம் ஆண்டு தொடக்கம் அவர் தனது எழுத்து அடிப்படையில் தற்காலிகமானது, அதுவும் சுற்றில் இருக்கக்கூடிய காலப்பகுதியில் மட்டுமே என்று எண்ணினார். இந்த மனப்பாங்கிற்குப் பின்னணியாகப் பண்டைய காலத்து எழுத்தாளர்களுக்கும் நவீன கால எழுத்தாளருக்குமிடையே தொடர்ச்சியான சண்டை இருந்தது. ஹோமர், ஹொறஸ் (Homer, Horace) போன்ற கண்ணியமான பண்டைய எழுத்தாளர்கள் றைடென் (Dryden) போன்ற நவீன கால எழுத்தாளர்களிலும் பார்க்க நிரந்தரத்தன்மை வாய்ந்தவர்கள் என்ற கருத்து நிலவியது. பண்டைய காலத்து எழுத்தாளர்கள் வெளியிட்ட கருத்துக்களின் நீடித்த வாழ்வு அவ் எழுத்தாளர்களுக்குச் சாதகமாக அமைந்தது.
இன்றைய எலக்றோனிக் ஊடக உலகத்தில் இத்தகைய எண்ணங்கள் பொருத்தமற்றவை. ஏனென்றால், ஓர் இணையத்தைப் பயன்படுத்தக் கூடிய எவரும் சுவிவ்றைவிட இலட்சக்கணக்கான மக்களை எட்டக் கூடிய வாய்ப்பு
பிரவாதம் - ஜூலை 2005 9

Page 8
உண்டு. அது மட்டுமல்ல, முன்பு கற்பனை செய்யப்படாத வகையில் எழுதப்பட்டவை பேணப்படத்தக்க வாய்ப்பும் உண்டு. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பூக்கோ(Foucault) மிகக் கஷ்டப்பட்டு சொல்லாடல் என்ற பதத்தையும், காப்பகம் என்ற பதத்தையும் வரையறுத்தார். இன்று இவை பற்றிய எண்ணங்கள் அடிப்படை மாற்றங்களுக்கு உட்பட்டிருப்பதால் அவரின் வரையறைகள் செல்லுபடியாகா. ஒரு பத்திரிகைக்கு அல்லது ஒரு சஞ்சிகைக்கு இன்று எழுதும் ஒருவரின் ஆக்கம் கணினி மூலம் பிரதியாக்கம் செய்யப்பட்டு எண்ண ரீதியாகவேனும் காலவரையறையின்றிப் பேணப்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதால், உண்மையான வாசகர் தொகைக்கும் உண்மையான என்று கொள்ளக்கூடிய வாசகர் தொகைக்கும் வேறுபாடு காணவிழையும் எண்ணக்கருவைத் தவிடு பொடியாக்கிவிட்டது. இவை ஆபத்து வாய்ந்தவை என்று ஆட்சியாளர் கருதும் எழுத்தைத் தணிக்கை செய்யும் அல்லது தடைசெய்யும் அதிகாரத்தை இது நிச்சயமாகக் கட்டுப்படுத்தியிருக்கின்றது. எனினும், நேரடிக் கணினிச் செய்முறையை(online Print) நிறுத்துவதற்கு அல்லது மட்டுப்படுத்துவதற்கு சில முரட்டுத்தனமான வழிவகைகள் உண்டு. இவற்றின் மூலம் நேரடிக் கணினிச் செய்முறையின் சுதந்திரமான தொழிற்பாடு பாதிக்கப்படலாம். மிக அண்மைக் காலங்களில் உதாரணத்திற்கு சவூதி அரேபியாவும், சீரியாவும் இணையத்தையும் செய்மதி தொலைக்காட்சியைக் கூட வெற்றிகரமாகத் தடை செய்தன. இன்று இந்த இரு நாடுகளும் இணையத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நுழைவு உரிமையை அனுமதிக்கின்றன. அதேவேளை, மேற்படி இரு நாடுகளும் தமது கட்டுப்பாடுகளைத் தக்க வைப்பதற்கு மிக நுட்பமான நீண்டகால நோக்கில் அதிக செலவு வாய்ந்த தொழில்நுட்பக் கருவிகளையும் நிறுவியுள்ளன.
இன்றைய நிலையில் நான் நியூயோர்க்கிலிருந்து பிரிட்டிஷ் பத்திரிகைக்கு எழுதும் ஒரு கட்டுரை தனிப்பட்ட இணைய தளங்களில் அல்லது மின் அஞ்சல் மூலம் அமெரிக்கா, யப்பான், பாகிஸ்தான், மத்திய கிழக்கு, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் கணினித் திரைகளில் மீள்தோற்றம் அளிக்கலாம். ஆசிரியர்களும் வெளியீட்டாளர்களும் இவை மறுபிரசுரம் செய்யப்படுவதையும் மறுசுற்றுக்கு விடப்படுவதையும் கட்டுப்படுத்த முடியாதவர்களாக இருக்கிறார்கள். நான் ஓரிடத்தில் சொன்னது அல்லது எழுதியது அதிக தாமதமின்றி உலகின் அரைவாசிப்பாகத்தில் தோன்றுவதைக் கண்டு வியப்படைவது உண்டு. இது குறித்து நான் கோபப்பட வேண்டுமா அல்லது புளகாங்கிதம் அடைய வேண்டுமா என்பது கூட எனக்குத் தெரியாது. அவையோரைத் திட்டவட்டமாகச் சுட்ட முடியாதவிடத்து யாருக்காக நாம் எழுதுகின்றோம் என்ற வினா தோன்றுகிறது. பெரும்பாலானோர் எந்த ஊடகம் அந்த
10 பிரவாதம் - ஜூலை 2005

ஆக்கத்தை வெளியிடக் கோருகின்றதோ அதனையும் அல்லது நாம் எட்ட விரும்பும் வாசகர்களையும் தான் குவிமையமாக மனதில் வைத்திருக்கின்றோம் என நினைக்கிறேன். கற்பனைசார் சமூகம் என்ற எண்ணம் நேரடியான பரிமாணத்தைத் திடீரெனக் கொண்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அராபியர்களுக்கென நான் ஒரு அரபு வெளியீட்டில் எழுதத் தொடங்கிய போது எனது அனுபவம், வாசகர் தொகுதியை நாம் உருவாக்கி வடிவம் கொடுக்க முனைகின்றோம் என்பதே. சுவிவ்றின் காலத்தை விட இது இன்று மிக மிகத் தேவைப்படுகின்றது. சுவிவ்ற் தான் இயல்பாகவே ஆங்கிலத் திருச்சபையைச் சார்ந்தவன் என்று அணிந்த முகமூடி உண்மையில் தனது சிறிய நிலையான வாசகர் வட்டத்திற்குரியது என்று கருதினார்.
எனவே, நாம் எல்லோரும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் எட்டக்கூடிய தொகையினரை விட பன்மடங்கு கூடுதலான தொகையினரை எட்டக்கூடியதாக இருக்கின்றது என்ற எண்ணத்துடன் செயற்பட வேண்டும். ஆனால், இத் தொகையினரை நாம் தக்கவைக்க முடியுமா என்று திட்டவட்டமாகக் கூற முடியாது. இது சித்தத்தின் நன்னம்பிக்கை மனப்பான்மை சார்ந்த விடயமல்ல. இன்று இது எழுத்தின் இயல்போடு தொடர்புற்றிருக்கின்றது. எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்குமிடையே பொதுக் கருதுகோள்கள் நிலவுகின்றன எனக் கொள்வது கடினமே அல்லது மறைக் குறிப்புக்கள் உடனடியாகப் புரிந்து கொள்ளப்படும் என்று கருதவும் முடியாது. ஆனால், பரந்து விரிந்த இப் புதிய வெளியில் எழுதுவதால் வழக்கத்திற்கு மாறான ஆபத்தான விளைவுகளுக்கும் வழிகோலலாம். ஒன்றில் முற்றிலும் புரியாத அல்லது முற்றிலும் தெளிவான விடயங்களைக் கூறுவதற்கும் நாம் உற்சாகப்படுத்தப்படலாம். (அறிவு சார், அரசியல்சார் பற்றுறுதி எமக்கிருந்தால் முற்றும் தெளிவானவற்றையே கூற வேண்டும் என்று சொல்ல வேண்டியதில்லை)
ஒரு புறம் விரல்விட்டு எண்ணக்கூடிய பிரமாண்டமான பல்தேசியக் கூட்டுத்தாபனங்கள் ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு உலகத்திற்கு வழங்கப்படும் பிம்பங்களினதும் செய்திகளினதும் பெரும்பாலானவற்றை தமது ஆதிக்கத்தில் வைத்திருக்கின்றன. மறுபுறத்தில் சுதந்திரமான ஆய்வறிவாளர்கள் இவர்கள் உடல் ரீதியாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் ஒரு சமூகமாக உருவாகக் கூடிய சாத்தியங்கள் உண்டு. இந்த ஆய்வறிவாளர்கள் பிரதான ஊடகங்களால் புறக்கணிக்கப்படும் செயலூக்கம் மிக்க பல்வேறு சமூகங்களுடன் பல்வேறு வகைகளில் தொடர்புற்றிருக்கின்றனர். இச் செயலூக்கச் சமூகங்கள் புறக்கணிப்பிற்கு உட்பட்டிருந்த போதிலும் சுவிவ்ற் நையாண்டியாக குறிப்பிட்ட சொற்பொழிவு இயந்திரங்களைத் தம்வசம் கொண்டிருக்கின்றனர். ஒரு சிலவற்றை மட்டும் குறிப்பிடும்போது மனதைக்கவரவல்ல வாய்ப்புகளை நாம் உணரலாம்.
பிரவாதம் - ஜூலை 2005 11

Page 9
சொற்பொழிவு மேடை, துண்டுப் பிரசுரம், வானொலி, மாற்றுச் சஞ்சிகைகள், நேர்காணல்கள், பேரணி, தேவாலயச் ளசொற்பொழிவு மேடைகள், இணையம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய வாய்ப்புக்கள் இருக்கின்ற போதிலும் இவற்றைப் பயன்படுத்துபவர்கள் பிரதான ஊடகங்களில் பங்கேற்குமாறு பெரும்பாலும் அழைக்கப்பட மாட்டார்கள். அவ்வாறு அழைக்கப்பட்டாலும் ஒருசில நிமிடங்களே அவர்களுக்கு ஒதுக்கப்படும். ஆனால், வேறு சமயங்களில் வேறு ஊடகங்களில் கூடுதலான நேரம் இவர்களுக்கு ஒதுக்கப்படும்.
எனவே, வேகவிரைவு இரண்டு பக்கக் கூர் ஆயுதம் போன்றது. *வல்லுநர் சொல்லாடலுக்குரிய வேகம், குறுக்கல்வாதத்திற்குரிய சுலோகப் பாங்கில் வாய்ப்பாடாகக் கோக்கப்படுகின்றது. ஆய்வறிவாளருக்குரிய வேகம் வேறு வகையானது. அது விரிவாக மாற்று நோக்குக் கோணங்களை முன்வைப்பதற்கு ஏதுவானது. வெவ்வேறு வகை மேடைகளைப் பயன்படுத்துவது ஆய்வறிவாளனைச் சார்ந்தது. இதன் மூலம் பரவலான கலந்துரையாடலைத் தொடக்குவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.
இந்தப் புதிய நிலைமையின் உள்ளார்ந்த விடுதலைக்கான சாத்தியப் பாட்டையும் அதே நேரம், அதற்கு எதிரான அச்சுறுத்தலையும் நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. இது குறித்து ஒரு வலுவான உதாரணத்தை நான் இங்கு முன்வைக்கின்றேன். ஏறக்குறைய 400 இலட்சம் பலஸ்தீன அகதிகள் உலகெங்கும் சிதறுண்டு வாழ்கின்றனர். அவர்களின் கணிசமான தொகையினர் பெரிய அகதி முகாம்களில் லெபனானிலும் இங்குதான் 1982 இல் ஷப்றா, ஷாத்தீலா என்னும் அகதி முகாம்களில் படுகொலைகள் நடைபெற்றன.) ஜோர்டானிலும் சிரியாவிலும், காஸாவிலும் மேற்குக் கரையிலும் வாழ்கின்றனர். 1999 இல் துணிச்சலும் ஊக்கமும் மிக்க இளம், கல்வி கற்ற அகதிகள் (இவர்கள் மேற்குக்கரையில் பெத்லேமிற்கு அண்மையிலுள்ள தேய்சே அகதிமுகாமில் வாழ்ந்தார்கள்) இப்தா நிலையத்தினை நிறுவினர். இதன் பிரதான கருத்திட்டம் யாதெனில் புரட்சிகரமான முறையில் கணினி மூலம் பல முக்கிய அகதிமுகாம்களில் வாழ்ந்த அகதிகளைத் தொடர்பு கொள்ள வழி சமைத்தலாகும். இக்கருத்திட்டத்தின் பெயர் எல்லைகளைக் கடந்து செல்லல் என்பதே. இதன் மூலம் பூகோள ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தடைகளால் பிரிக்கப்பட்டிருந்த அகதிகளை ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ள வழிவகுத்தனர். 1948 இல் இவர்களுடைய பெற்றோர்கள் சிதறடிக்கப்பட்டனர். முதல் தடவையாக இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த பலஸ்தீன அகதிகள் பெய்ரூட்டிலிருந்தோ அம்மானிலிருந்தோ பலஸ்தீனிலிருந்த தம்மை ஒத்தவர்களோடு இப்போது தொடர்பு கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. இந்த கருத்திட்டத்தில் பங்குபற்றியவர்கள் இரண்டாம்
12 பிரவாதம் - ஜூலை 2005

தலைமுறை அகதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலியக் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டதும் தெய்சேயில் வாழ்ந்தவர்கள் பலஸ்தீனில் உள்ள தமது முன்னைய கிராமங்களைப் பார்வையிடச் சென்றனர். பின்னர் தமது உணர்ச்சிகளையும் தாம் நேரே கண்டவற்றையும் இவ்விடங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தும் அங்குசெல்ல முடியாதிருந்த அகதிகளுக்கு வர்ணித்தனர். ஒருசில வாரங்களில் இவர்களுக்கிடையே குறிப்பிடத்தக்க ஒற்றுமை உருவாகியது. இந்தச் சமயத்திலேதான் பலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இஸ்ரேலுக்குமிடையிலான பேச்சுவார்த்தையின் இறுதி நிலை கட்டத்தை எட்டியிருந்தது. அப்பொழுது பேச்சுவார்த்தையில் அகதிகள் பற்றியும் அவர்கள் தமது சொந்த இடத்திற்குத் திரும்புவது பற்றியும் ஜெருசலேம் பற்றியும் பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இவைதான் சிக்கல் நிலையில் இருந்த சமாதான நிகழ்வுத் தொடரில் இணக்கம் காண்பதற்குக் கடினமான மையமாக இருந்தன. எனவே சில பலஸ்தீன அகதிகளைப் பொறுத்தவரை முதல் தடவையாக அவர்களது பிரசன்னமும் அரசியல் சித்தமும் நிதர்சனமாயிற்று. அரை நூற்றாண்டாக அவர்களது விதி மற்றவர்களது கைப்பொம்மையாக இருந்தமையே. இப்பொழுது பண்புரீதியாக அவர்களுக்கு ஒரு புதிய அந்தஸ்து கிடைத்திருந்தது.
2000 ஆண்டு ஆகஸ்ட் 26ல் தெய்சேயில் இருந்த அத்தனை கணினிகளும் அழிக்கப்பட்டன. இந்த இழிவான அரசியல் செயலின் அர்த்தம் என்னவென்றால், ஐயத்திற்கிடமின்றி அகதிகள் அகதிகளாகவே தொடர்ந்திருக்க வேண்டும். அதாவது, இப்பொழுது இருக்கின்ற நிலையினைக் குழப்பலாகாது. இப்போதைய நிலையின்படி அகதிகள் குரலற்ற அகதிகளாகவே இருக்க வேண்டும். இந்த அழிவிற்குக் காரணமாக இருந்த சந்தேக நபர்களை பட்டியலிடுவது கடினமல்ல. ஆனால் இவர்களது பெயர்களைப் பிரசித்தமாக்கி அவர்கள் கைது செய்யப்படலாம் என எண்ணுவது கடினமானது தான். இது எவ்வாறாயினும் இப்தா நிலையத்தை மீளமைக்கும் பணியில் தெய்சே முகாமில் வாழ்ந்தவர்கள் உடனடியாக ஈடுபட்டனர். அதில் ஓரளவு வெற்றியும் கண்டனர். தனிப்பட்டவர்களும், குழுக்களும் மெளனம் சாதிக்காது ஏன் எழுதுவதையும் பேசுவதையும் விரும்புகின்றார்கள் என்ற வினாவிற்கு விடை அளிப்பது பொதுவாழ்வில் ஆய்வறிவாளனும் எழுத்தாளனும் எதிர்கொள்வதைக் குறிப்பிடுவதற்குச் சமனாகும்.
தமிழில் ஏ.ஜே க
பிரவாதம் - ஜூலை 2005 13

Page 10
அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்
எட்வர்ட் சயித்
நிபுணத்துவம் பற்றியும் தொழில்சார் மனப்பான்மை பற்றியும் அதிகாரம், ஆதிக்கம் என்பனவற்றை அறிவுஜீவிகள் எவ்விதம் எதிர்கொள்கிறார்கள் என்பது பற்றியும் இங்கே பரிசீலிக்க விரும்புகிறேன். அறுபதுகளின் மத்தியில் வியட்நாம் யுத்தத்தை எதிர்த்த போராட்டங்கள் தொடங்குதற்குச் சற்று முன்னர் கொலம்பியாவில் என்னை ஒரு மாணவர் சந்தித்தார். அப்போது குறிப்பிட்ட சில நபர்களுக்காக ஒரு கருத்தரங்கு ஏற்பாடாகியிருந்தது. அதில் அவரும் கலந்து கொள்ள அனுமதிக்கும்படி என்னிடம் கேட்டார். அவர் போர்க்காலத்தில் விமானப் படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவரெனத் தெரிந்தது. நாங்கள் உரையாடிக்கொண்டிருந்தபோது அவர் பேசிய விதத்தில் தொழில்சார் மனப்பான்மை எப்படியிருக்கும் என்பதற்கான உதாரணத்தை நான் கண்டு கொண்டேன். அது பெரும் அதிர்ச்சியை தந்தது. அதிலிருந்து இப்போதும் கூட என்னால் விடுபடமுடியவில்லை. “நீங்கள் விமானப்படையில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?’ என்று நான் கேட்டேன். “டார்கெட் எக்யூஸிஷன்” இலக்கை அடைதல்) என்று அவர் பதில் சொன்னார். உண்மையில் விமானத்திலிருந்து குண்டு வீசுவதுதான் அவரது வேலையென்பதும் அதைத்தான் அவர் தொழில் ரீதியான வார்த்தைகளால் என்னிடம் தெரிவித்தார் என்பதும் எனக்குப் புரிய பல நிமிடங்கள் ஆயின. அவர் கூறிய விதம் அவரது வேலையைப் பற்றி வெளிஆட்கள் ஆராய்வதைத் தடுத்து அந்த வேலையைப் பற்றிய விவரங்களைப் பூடகப்படுத்துகிற நோக்கத்தோடிருந்தது.
உங்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டுமென வைத்துக் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு நீங்களும் உங்களது குழுவும் அரசாங்கத்தின் உள்துறை அமைச்சுக்கோ அயலுறவு அலுவலகத்துக்கோ போஸ்னியாவைப் பற்றி ஒரு கொள்கை திட்டத்தை அடுத்த வாரத்துக்குள் தயாரித்துத் தரவேண்டுமென்று வைத்துக் கொள்வோம். நீங்கள் உங்களைச் சுற்றிலும் விசுவாசமான, உங்கள் கருத்துக்கு ஒத்து வருகிற, உங்களைப் போலவே சிந்திக்கிற, பேசுகிற நபர்களை வைத்துக் கொண்டாகவேண்டும். இப்படியான அறிவுஜீவிகள் இப்படியான தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள் அதாவது அதிகாரத்திற்கு சேவகம் செய்துகொண்டு அதனிடமிருந்து வெகுமதிகளைப் பெற்றுக்கொண்டிருக்கும் அறிவுஜீவிகள் ஒருபோதும் விமர்சனபூர்வமான
14 பிரவாதம் - ஜூலை 2005

ஆய்வுகளில் ஈடுபடவோ அதன்மூலம் ஒப்பீட்டளவிலான சுதந்திரத்தைப் பெறவோ மாட்டார்கள். என்னைப் பொறுத்தவரை அப்படி விமர்சனபூர்வமான அணுகுமுறையைக் கொண்டு ஆய்வதுதான் அறிவுஜீவிகள் இந்த சமூகத்துக்கு செய்யும் பங்களிப்பாகும். வேறு வார்த்தைகளில் சொன்னால், அரசாங்கத்தின் அல்லது ஏதோ ஒரு பெரிய நிறுவனத்தின் கொள்கை இலக்குகளை அடைவதற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள, அதற்கு ஊழியம் செய்கிற ஒருவரை நாம் அறிவுஜீவி என்று கூறவே முடியாது. பெரும்பாலான அறிவுஜீவிகள் இத்தகைய கவர்ச்சிகளுக்குப் பலியாகிவிடுகின்றார்கள். ஓரளவுக்கு நாம் எல்லோருமே அந்த நிலைக்கு ஆளாகியுள்ளோம். சுயச்சார்போடு இருப்பவர்கள் ஒருத்தருமில்லை. சுதந்திரப் புருஷர்களாகக் கூறிக்கொள்பவர்களும்கூட இதில் அடக்கம்தான்.
நான் முன்பே கூறியிருக்கிறேன். ஒரு அறிவுஜீவி ஒப்பீட்டளவில் சுதந்திரம் கொண்டவராக இருக்க வேண்டுமெனில் அவர் தொழில்சார் மனப்பான்மையை விட்டுவிட்டு அந்தத் தொழிலை ஒரு பொழுதுபோக்காகச் செய்வதாக எண்ணிக் கொள்ள வேண்டும். இதை நடைமுறை ரீதியாக வைத்து பார்ப்போம். கடந்த இரண்டு ஆண்டுகளில் பலமுறை தொடர்பு சாதன நிறுவனங்கள் தங்களுக்கு ஆலோசகராக இருக்கும்படி என்னை அழைத்துள்ளனர், அவற்றை நான் மறுத்து வந்துள்ளேன். ஏனென்றால் அது ஒரு டெலிவிஷன் நிறுவனத்திற்குள் நம்மை முடக்கிப் போட்டுவிடும். அவர்களுடைய அணுகு முறைக்குள், அவர்களது அரசியல் மொழிக்குள் நம்மைக் குறுக்கிவிடும். அதுமட்டுமன்றி அரசாங்கத்துக்கோ அல்லது அரசு சார்பான நிறுவனங்களுக்கோ சம்பளம் வாங்கிக் கொண்டு ஆலோசகராக இருப்பதில் எனக்கு முற்றிலும் ஆர்வமும் இல்லை. ஏனென்றால் நீங்கள் சொல்கின்ற ஆலோசனை அங்கே என்ன விதமாக பயன்படுத்தப்படும் என்பது உங்களுக்கு தெரியாது. இன்னுமொன்று, பணம் வாங்கிக் கொண்டு அறிவை விநியோகிப்பது என்பது இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. ஒரு பல்கலைக்கழகம் உங்களை அழைத்து ஒரு சொற்பொழிவாற்றச் சொல்வதற்கும், சில குறிப்பிட்ட அதிகாரிகளின் குழுவில் சென்று பேசுவதற்கும் வேறுபாடிருக்கிறது. என்னளவில் நான் எப்பொழுதும் பல்கலைக் கழகங்களில் சொற்பொழிவாற்றுவதையே விரும்புவேன். மற்றதை நிராகரித்து ஒதுக்கிவிடுவேன். அடுத்து, இன்னும் அதிக அரசியல் ஈடுபாடு வேண்டுமென்பதற்காக, எந்த நேரத்திலும் ஒரு பாலஸ்தீனக் குழு உதவி கேட்டு வந்தால் அதை நான் செய்து தருவேன். அது போலவே நிறவெறியை எதிர்த்தும் கல்வியில் சுதந்திரத்திற்காகவும் பேசும்படி தென்னாபிரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்று அழைத்தால் நான் உடனே ஏற்றுக் கொள்வேன்.
பிரவாதம் - ஜூலை 2005 15

Page 11
நான் ஆதரிக்க விரும்பும் கருத்துக்களும் பிரச்சினைகளும்தான் என்னைப் பாதிக்கின்றன. ஏனென்றால் நான் நம்புகிற மதிப்பீடுகளை, லட்சியங்களை அவை ஒத்திருக்கின்றன. எனவே இலக்கியத்தோடு தொடர்புகொண்ட எனது தொழிலுக்குள் நான் கட்டுண்டுகிடப்பதில்லை. விரிவான பல விஷயங்கள் குறித்து நான் பேசவும் எழுதவும் செய்கிறேன். ஏனென்றால் எனது தொழிலை நான் பொழுது போக்காக எடுத்து கொள்வதால் அதன் குறுகிய எல்லைகளைத் தாண்டியுள்ள பிரச்சினைகள் குறித்து என்னால் கவனம் செலுத்த முடிகிறது. ஒரு வகுப்பறைக்குள் இப்படியான கருத்துக்களை நான் பேசியதில்லை. இத்தகைய அணுகு முறைகளுக்குப் பரந்துபட்ட புதிய பார்வையாளர்களை உருவாக்கும் பிரக்ஞைபூர்வமான முயற்சியை நான் மேற்கொண்டிருக்கிறேன்.
தொழிலை பொழுது போக்காகக் கொள்ளும் இத்தகைய நபர்கள் பொது மக்கள் பரப்புக்குள் (public Sphere) என்னவிதமான தாக்கத்தை உண்டு பண்ணுகிறார்கள்? அறிவுஜீவிகள் தங்களது இனம், மதம், மக்கள் போன்றவற்றுக்கு விசுவாசமாக இருக்கவேண்டுமென்கிற உணர்வால் அறிவார்ந்த காரியங்களில் ஈடுபடும்படி தூண்டப்படுகிறார்களா? அல்லது பிரபஞ்சம் தழுவிய பகுத்தறிவு சார்ந்த வேறு ஏதேனும் விதிகள் அவர்களது பேச்சையும், எழுத்தையும் ஆளுகின்றனவா? இங்கே நான் அறிவுஜீவிகள் பற்றிய அடிப்படையான கேள்வியினை எழுப்புகின்றேன். ஒருவர் உண்மையை எப்படிப் பேசுகிறார்? என்ன உண்மையை பேசுகிறார்? எங்கே யாருக்காக பேசுகிறார்?
துரதிர்ஷ்டவசமான நிலை என்னவெனில் இந்தக் கேள்விகளுக்கு நேரடியான பதில்களைத் தரும் அமைப்போ அணுகுமுறையோ எதுவும் கிடையாது என்பதிலிருந்துதான் நாம் தொடங்க வேண்டியிருக்கிறது. மதச்சார்பற்ற உலகில் அறிவுஜீவியானவர் மதச்சார்பற்ற முறையில் தான் பணியாற்ற வேண்டியுள்ளது. தனிப்பட்ட வாழ்வில் புரிதலைத் தருவதாயிருக்கும் தரிசனம், உத்வேகம் போன்ற விஷயங்கன் அனைத்தும் கோட்பாட்டு ரீதியில் பார்க்கும் நபர்களால் கையாளப்பட்டு முன் வைக்கப்படுகையில் மிகப்பெரும் கேடுகளையும் காட்டு மிராண்டித்தனமான விளைவுகளையுமே உண்டு பண்ணுகின்றன. ஆகவேதான் புனிதமான நோக்கு, புனிதம் வாய்ந்த பிரதிகள் என்பவற்றோடு தன் வாழ்நாள் முழுதும் முரண்பட்டுப் போராடுபவராக அறிவுஜீவி இருக்க வேண்டுமென்கிறேன். ஏனென்றால் அத்தகைய புனித நோக்கும், புனிதப்பிரதிகளும் ஏற்படுத்தியுள்ள அழிமதிகள் ஏராளம். அவற்றோடு முரண்படுவதை, பல்நோக்குப் பார்வையோடிருப்பதை முற்றாகத் தடுத்து அழித்துவிடுவதைத்தான் அவை
16 பிரவாதம் - ஜூலை 2005

தமது அடிப்படையாகக் கொண்டுள்ளன. சமரசமற்ற முறையில் தமது கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியதுதான் ஒரு மதச்சார்பற்ற அறிவுஜீவியின் பிரதானமான வேலையாயிருக்கிறது. இதைவிட்டுக் கொடுத்து விடுவதோ, இதன் அடிப்படைகளைத் தகர்க்கின்ற எந்தவொரு செயலையும் சகித்துக் கொண்டிருப்பதோ அறிவுஜீவி தன் கடமைக்குச் செய்யும் துரோகமாகவே முடியும். இதனால்தான் சல்மான் ருஷ்டியின் “சட்டானிக் வெர்ஸஸ்' நூலை ஆதரிப்பது ஒரு மையமான பிரச்சனையாக இருக்கிறது. இது அறிவுஜீவிகள் தமது தற்காப்புக்காகச் செய்கிற காரியம் மட்டுமல்ல, பத்திரிகையாளர்கள், நாவலாசிரியர்கள், கவிஞர்கள், வரலாற்றறிஞர்கள் என எல்லோருடைய கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்றவும் செய்கிற பணியாகும்.
இது இஸ்லாமிய நாடுகளுக்கு மட்டுமான பிரச்சினையல்ல. யூத கிறிஸ்தவ நாடுகளிலும் கூட இது பிரச்சினைதான். கருத்துச் சுதந்திரமென்பது g3 (5 நாட்டில் காப்பாற்றப்பட்டு இன்னொரு பகுதியில் அலட்சியப்படுத்தப்படுகிற விஷயமல்ல. புனிதத் தீர்ப்புக்களை ஆதரிக்க மதச்சார்பற்ற உரிமையை கோரும் ஆதிக்கச் சக்திகளோ எந்தவொரு விவாதத்தையும் அனுமதிப்பதில்லை. அது எந்த விஷயமாக இருந்தாலும் சரி, ஆனால் அறிவுஜீவிகளுக்கோ தீவிரமான தேடல்மிக்க விவாதமே அவர்களது செயல்பாட்டின் மையமாக இருக்கிறது. நாம் மீண்டும் பழைய கேள்விக்கே திரும்புவோம். எந்த உண்மையை, இலட்சியங்களை ஒருவர் ஆதரிப்பது, உயர்த்திப் பிடிப்பது, பிரதிநிதித்துவம் செய்வது? இது அறிவுஜீவிகள் தற்போது எந்த நிலையிலிருக்கிறார்கள் என்பதை மதிப்பிடுவதற்கான முக்கியமான கேள்வியாகும். இதன்மூலம்தான் அவர்கள் எவ்வளவு மோசமான அடையாளம் தெரியாதபடி கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பிரதேசம் தம்மைச் சூழ்ந்துள்ளது என்பதை அறியமுடியும்.
இந்த விஷயத்தில் இருந்து தொடங்குவோம். 1988 இல் அமெரிக்க வரலாற்றறிஞர் பீட்டர் நோவிக் ஒரு பெரிய புத்தகத்தை வெளியிட்டார். அதன் தலைப்பு ‘அந்த மிகச் சிறந்த கனவு’ (That Noble Dream) என்பதாகும். அமெரிக்காவில் நூற்றாண்டுகளுக்கு மேலாகச் செய்யப்பட்ட வரலாற்று ஆய்வுகளிலிருந்து விவரங்களை எடுத்துப் பயன்படுத்தி எழுதியிருந்த நோவிக், வரலாற்று ஆய்வின் கருப்பொருளானது உண்மைகளை யதார்த்த பூர்வமாகவும் துல்லியமாகவும் புறவயமான நிலையில் நின்று ஒரு வரலாற்றறிஞர் முன்வைக்கிற நிலையிலிருந்து மாறி எதிரும் புதிருமான முடிவுகளைக் கூறுகின்ற ஒரு புதைக்குழி போன்ற நிலைக்கு எவ்வாறு வந்துவிட்டது என்பதை அதில் விளக்கியிருந்தார். புறவயமான அணுகுமுறை
பிரவாதம் - ஜூலை 2005 17

Page 12
யுத்த காலங்களில் நாம், ‘நம்முடைய’ என்கிற நிலையை எடுத்துவிடுகிறதுஅதாவது “பாசிச ஜெர்மனியை எதிர்க்கிற அமெரிக்கா” என்பதே உண்மை என பார்க்கிறது. சமாதானக் காலங்களில் அமெரிக்காவுக்குள்ளேயே முட்டிமோதும் தனித்தனியான பல்வேறு குழுக்களின்-பெண்கள், ஆபிரிக்க- அமெரிக்கா, ஆசிய-அமெரிக்கா, ஹோமோ செக்ஷ0வல்கள், வெள்ளையர்கள் இப்படிப் பல்வேறு குழுக்களின் உண்மையாக, மார்க்சியக் கலாச்சார, கட்டுடைப்புவாத, அமைப்பு சார்ந்த என்று பல்வேறு சிந்தனைப் போக்குகள் சார்ந்த உண்மையாக அது ஆகிவிடுகிறது. இப்படியான பிதற்றல்களுக்குப் பிறகு அறிவு கூடிக்குலவுகிற நிலை எப்படிச் சாத்தியமாகும் என்று கேட்கிறார் நோவிக். இப்படிக் கேட்ட பின்பு மிகவும் துக்கத்தோடு அவர் கூறுகிறார். “பொதுவான குறிக்கோள்களும் பொதுவான இலட்சியங்களும் பொதுவான அளவு கோல்களும் கொண்டு இயங்கிவந்த அறிஞர்களின் சமூகமும் வரலாறுமென்கிற துறையும் மறைந்து போய்விட்டன. வரலாற்றுப் பேராசிரியர் என்பவர் இப்படிச் சொல்லப்பட்டது போல் ஆகிவிட்டார். ” “முற்காலத்தில் இஸ்ரேலில் அரசனென்று தனியாக யாருமில்லை. அப்போது ஒவ்வொரு மனிதனும் தனக்கு
1
நல்லதெனத் தோன்றுவதைச் செய்தான்.”
நான் முன்பே கூறியபடி, நமது நூற்றாண்டில் அறிவுஜீவிகளின் முக்கியமான நடைமுறையில் ஒன்று - கேள்வி கேட்பது, ஆதிக்கத்தை வீழ்த்துவது. நோவிக் கூறியவற்றோடு சேர்த்துக் கூறினால் மேலே கண்ட பொதுக் கருத்துக்கள் மட்டும் மறைந்து போகவில்லை. வழக்கமான ஆதிக்கச் சக்திகளும் கூட - கடவுள் உட்பட - துடைத்தெறியப்பட்டுவிட்டன. இதைவிடவும் மேலே செல்கிற சிந்தனையாளர்கள் உண்டு. அவர்களுள் மிஷேல் ஃபூக்கோ முதன்மையானவர். ஒரு பிரதியின் ஆசிரியரைப் பற்றி பேசுவதே கூட அதிகப் பிரசங்கித்தனமென்கிறார் அவர்.
இப்படி நம்மை அச்சுறுத்துகின்ற கருத்துக்களின் எதிரில் நாம் கையைக் கட்டிக்கொண்டு நபும்சகத்தனத்தோடு சும்மா இருப்பதோ அல்லது மரபான மதிப்பீடுகளால் ஈர்க்கப்பட்டு பரவுகிற உலக அளவிலான பழமைவாத இயக்கத்துக்குள் சென்று விடுவதோ சரியல்ல. ஆதிக்கத்தையும் நடுநிலையான நோக்கு என்பதையும் பற்றிய விமர்சனம் ஒரு சாதகமான காரியத்தைச் செய்யுமென்று நினைக்கிறேன். மதச்சார்பற்ற உலகில் எவ்விதம் மனித உயிரிகள் தமது உண்மைகளைக் கட்டமைத்துக் கொள்கின்றன என்பதை அது கோடிட்டுக் காட்டும். அதுபோலவே நடுநிலையான உண்மை என்பதன் தன்மையையும் வெளிப்படுத்தும். அதாவது, காலனியப் பேரரசுகளால் கட்டியெழுப்பிக் காப்பாற்றப்பட்டு வரும் வெள்ளை மேலாண்மை என்கிற
18 பிரவாதம் - ஜூலை 2005

கருத்தாக்கமானது ஆபிரிக்கர்களை, ஆசியர்களை வன்முறையால் ஒதுக்கித்தான் சாதிக்கப்பட்டுள்ளது என்பதும் உண்மைதான் என்கிற விஷயத்தை, அவர்கள் தம்மீது திணிக்கப்பட்டுள்ள வெள்ளையர்களின் உண்மையை எதிர்த்துப் போராடித் தமக்கேயான, சுதந்திரமான உண்மையைக் கட்டமைக்கிறார்கள் என்கிற விஷயத்தை அது புலப்படுத்தும்.
தற்போது எல்லோரும் புதிது புதிதான, சிலசமயம் வன்முறை சார்ந்த எதிரும் புதிருமான உலகப் பார்வைகளோடு வந்து நிற்கின்றனர். ஆபிரிக்காவை மையப்படுத்திப் பார்க்கும் மதிப்பீடுகள் பற்றி, முஸ்லிம்களின் உண்மைகளைப் பற்றி, மேற்கு நாடுகளின் உண்மைகளைப் பற்றி, ஏராளமான பேச்சுக்களை ஒருவர் இப்போது கேட்கமுடிகிறது. ஒவ்வொன்றும் மற்ற எல்லாவற்றையும் முற்றாக விலக்கிவிட்டு ஒரு பூரணமான திட்டத்தை முன்வைக்கின்றது. முன்னெப்போதைவிடவும் மிக அதிகமான, எந்தவொரு அமைப்பும் தீர்த்துவைக்க முடியாத அளவில் சகிப்பின்மையும் அதிகார நாட்டமும் எங்கும் நிலவுவதைப் பார்க்கிறோம்.
இதன் விளைவு இன்று, உலகளாவிய விஷயங்கள் எதுவுமில்லை என்று ஆகிவிட்டது. ஒவ்வொருத்தரும் தமது மதிப்பீடுகளே உலகளாவிய மதிப்பீடுகள் என சொல்லிக் கொண்ட போதிலும் இதுவே யதார்த்தம். இன்னொரு கலாச்சாரத்திலுள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டுவதும் அதேவிதமான தவறுகள் தமது கலாச்சாரத்தில் நடந்தால் அதை மன்னித்துவிடுவதும்தான் இன்றைய அறிவுஜீவிகளின் சூதாட்டத்தில் மிகவும் இழிவான நடைமுறையென்று கூறுவேன். இதற்கு ஓர் அற்புதமான உதாரணம், அலெக்ஸி தெ தொக்குவில் (Alexisde Tocqueville). அவர் மரபான மேற்கத்திய ஜனநாயகத்தில் தேர்ச்சியும் புலமையும் பெற்றவர். அந்த மதிப்பீடுகளைப் பற்றி அற்புதமாக எழுதியவரென்று தான் நாம் அறிவோம். அமெரிக்க ஜனநாயகம் பற்றிய அவரது மதிப்பீட்டை எழுதுகையில், அங்குள்ள பூர்வீக இந்தியர்களை, கறுப்பின அடிமைகளை அமெரிக்க அரசாங்கம் கொடுமைப்படுத்தியது பற்றி கடுமையாக அவர் விமர்சித்துள்ளார். அவர் அல்ஜீரியாவில் ஃப்ரெஞ்ச் காலனி அரசாங்கம் நடந்து கொண்ட விதங்கள் பற்றி எழுதவேண்டி வந்தது. 1830களில், 1940களில் அல்ஜீரியாவை ஆக்கிரமித்திருந்த ஃப்ரெஞ்ச் ராணுவமானது அதன் தளபதியாயிருந்த மார்ஷல் ஃப்ரெஞ்ச் பொகுந்தின் (Marshell Bugeand) தலைமையில் அல்ஜீரிய முஸ்லிம் மக்களுக்கெதிராகக் கொடூரமான யுத்தத்தை நடத்தி அவர்களைப் பணியவைத்தது. அல்ஜீரியாவைப் பற்றித் தொக் ல் எழுதியவற்றை நாம் படித்துப் பார்த்தால், திடீரென்று அவரது gisag
பிரவாதம் - ஜூலை 2005 19

Page 13
எப்படி மாறிவிட்டது என்பது தெரியும். அமெரிக்காவின் செயல்களை விமர்சிக்க அவருக்கு உதவிய மனிதாபிமானம் ஃப்ரெஞ்ச் அரசாங்கத்தின் செயல்களை பற்றி பேசும்போது எப்படிக் காணாமல் போய்விட்டது என்பதை நாம் பார்க்கலாம். அதற்கான காரணங்களை அவர் கொடுக்காமலில்லை. அவர் காரணங்களைக் கொடுக்கத்தான் செய்துள்ளார். ஆனால் அவையாவுமே ஃப்ரெஞ்ச் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துகிற தேசியப் பெருமிதங்கள் தவிர வேறில்லை. படுகொலைகள் அவரைப் பாதிக்கவில்லை. முஸ்லிம்கள் தாழ்ந்ததொரு மதத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என அவர் கூறுகிறார். சுருங்கக் கூறினால், அமெரிக்காவைப் பற்றிப் பேசும்போது இருந்த அவரது மொழியின் உலகளாவிய பார்வை அவரது சொந்த நாட்டைப் பற்றிப் பேச வரும்போது புறக்கணிக்கப்பட்டுவிட்டது. வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளது. அவரது சொந்த நாடான ஃப்ரான்சும் அதேவிதமான மனிதத் தன்மையற்ற காரியங்களைச் செய்தபோது அவர் அந்த உலகளாவிய பார்வையைப் பயன்படுத்தவில்லை?
இத்துடன் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். தொக்குவில் வாழ்ந்த காலத்தில் - உலகளாவிய விதிகள், மதிப்பீடுகளென்று கூறினால் அவை ஐரோப்பியர்களின் அதிகாரமென்றுதான் உண்மையில் பொருள் தந்தன. ஜான் ஸ்டூவர்ட் மில் இங்கிலாந்தில் ஜனநாயக உரிமைகள் பற்றிய தமது கருத்துக்கள் இந்தியாவுக்கு பொருந்தமாட்டா எனக் கூறியதையும் இந்த இடத்தில் கவனிக்க வேண்டும்) உலகில் வெள்ளையினத்தை சேராத பிற மக்களின் உரிமைகளும் பிரச்சனைகளும் அவர்களைப் பொறுத்தவரை இரண்டாம் பட்சமானவைதான். மேலும், பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த மேற்கத்திய நாட்டவர் ஒருவரைப் பொறுத்தவரை கறுப்புத்தோலோ பழுப்புத்தோலோ கொண்ட மக்களின் மீது ஏவப்பட்ட கொடூரமான காலனிய அடக்கு முறையை எதிர்த்த சுதந்திரமான ஆபிரிக்க நாட்டவரோ ஆசிய நாட்டவரோ எவருமே இல்லையென்பதுதான் முடிவான அபிப்பிராயமாக இருந்தது. அந்த மக்களின் தலைவிதி அவர்கள் மற்றவர்கனால் ஆளப்பட வேண்டும் என இருந்தது என்பதாகவே அந்த மேற்கத்திய நபர் நம்பி வந்தார். ஃப்ரான்ஸ் ஃபேனன், அய்ம் ஸெஸேர், சி. எல்.ஆர். ஜேம்ஸ்- ஏகாதிபத்தியத்தை எதிர்த்த கறுப்பின அறிவுஜீவிகளில் மூவரை மட்டும் குறிப்பிடுகிறேன் - யாருமே இருப்தாம் நூற்றாண்டு வரை பிறக்கவுமில்லை, வாழவுமில்லை, எழுதவுமில்லை. எனவே காலனிய ஆதிக்கத்தின் கீழ்வைக்கப்பட்டிருந்த மககளின் அரசியல் மற்றும் கலாச்சார ரீதியான உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் அவர்களும், அவர்கள் பங்கெடுத்த இயக்கங்களும் செய்தவை என்னவென்பது பற்றிய விவரங்கள் தொக்குவில்லுக்கோ ஸ்டூவர்ட் மில்லுக்கோ கிடைத்திருக்க
20 பிரவாதம் - ஜூலை 2005

நியாயமில்லை. ஆனால் தற்காலத்திய அறிவுஜீவிகளுக்கு அவை கிடைக்கின்றன. இருந்தபோதிலும், நீங்கள் மனித உரிமைகளை உயர்த்திப் பிடிக்க வேண்டுமாயின், உங்கள் பக்கமுள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் அந்த உரிமைகளை கேளுங்கள். “நமது கலாச்சாரம் நமது தேசம் இவை சுட்டுகின்ற விஷயங்கள் மட்டும் சரியானவையாக இருக்குமென நினைப்பது தவறு” என்கிற தவிர்க்க இயலாத முடிவுக்கு அவர்கள் இன்னமும் வந்துசேரவில்லை.
ஒருவர் தன்னுடைய அடையாளத்தை, கலாச்சார, சமூக வரலாற்று நடைமுறைகளை மற்றவர்களது அடையாளங்கள், கலாச்சாரங்கள் ஆகியவற்றின் யதார்த்தத்தோடு எவ்விதம் ஒத்திசைய வைப்பது என்பதே தற்போதைய அடிப்படையான பிரச்சினை. தம்முடைய கலாச்சாரத்தின் சிறப்புகளையும் தம்முடைய வரலாற்றின் வெற்றிகளையும் பேசி ஆரவாரம் செய்வது அறிவுஜீவிகளின் வேலையாக இருக்க முடியாது. நான் இங்கே சுட்டிக்காட்டியது போல அறிவுஜீவிகள் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்ளும் பொது மக்கள் பரப்பு என்பது இப்போது மிகவும் சிக்கல் நிறைந்ததாக, தொந்தரவுதரும் கூறுகள் கொண்டதாக உள்ளது. அந்தப் பரப்பில் ஒருவர் தீவிரமாகக் குறுக்கீடு செய்வது என்பதன் பொருள் நீதிக்கும் சமத்துவத்துக்குமான விட்டுக்கொடுக்காததொரு போராட்டத்தை அவர் நடத்துவதிலேயே தங்கியுள்ளது. அது தேசங்களுக்கு இடையே, தனி மனிதர்களுக்கிடையே உள்ள வேற்றுமைகளை அங்கீகரிக்கிறது. அதே நேரத்தில் தேசங்களின், தனி நபர்களின் அதிகாரப்படி நிலைகளை, அவற்றின் வளர்ச்சியை, அவற்றின் முன்னுரிமைகளை அந்தப் பெயரில் அது அங்கீகரிப்பதில்லை. இன்று எல்லோருமே “அனைவருக்கும் நீதி, அனைவருக்கும் சமாதானம்” என்று தாராளமாகப் பேசுகிறார்கள். இப்படியான பேச்சுகளுக்கும் நடைமுறையின் யதார்த்தத்துக்கும் இடையில் மிகப்பெரும் இடைவெளி உள்ளது.நீதி, சமத்துவம் போன்ற கருத்தாக்கங்களை யதார்த்தமான சூழல்களில் அருகில் கொண்டுவந்து நிறுத்துவது அறிவுஜீவியின் பிரச்சினையாகும்.
இது சர்வதேச உறவுகளில் எளிதில் புலப்படும்படி உள்ளது. சமீபத்திய சில உதாரணங்கள் நான் கூறவிரும்புவதை வெளிப்படுத்துமென்று நினைக்கிறேன். சட்டத்துக்குப் புறம்பான முறையில் ஈராக் குவைத்துக்குள் நுழைந்து அதை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து சில காலம்வரை மேற்குலகில் மக்கள் மத்தியில் நடந்த விவாதங்கள் அந்த ஆக்கிரமிப்பைச் சகித்துக்கொள்ள முடியாது என்பது பற்றியே இருந்தன. ஈராக்குக்கு எதிராக ராணுவத் தாக்குதலை மேற்கொள்வதுதான் அமெரிக்காவின் நோக்கம் என்பது வெளிப்படையாகத்
பிரவாதம் - ஜூலை 2005 21

Page 14
தெரிந்ததும், பொதுமக்களின் பேச்சுக்கள், ஐக்கிய நாடுகள் சபையில் அதற்கான தயாரிப்புகளைத் துதிதப்படுத்த வேண்டின. ஈராக்குக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்கவும் தேவையெனில் ராணுவத் தாக்குதல் நடத்தவும் கோரின. ஈராக்கின் ஆக்கிரமிப்பையும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளையும் ஒன்றுசேர எதிர்த்த ஒருசில அறிவுஜீவிகளிலும்கூட குவைத்தை ஆக்கிரமித்த ஈராக்கின் நடவடிக்கையை மன்னிக்கக்கூடிய ஒருவரும் இருக்கவில்லை.
ஆனாலும், ஜனவரி 15இல் தாக்குதல் தொடங்குவதற்கு முன்பு ஈராக்கோடு பேசித் தீர்த்துக்கொள்ளப் பலவாய்ப்புகள் இருந்தும் அதைச் செய்யாமல், ஐக்கிய நாடுகள் சபையை யுத்தத்தை நோக்கிப் புஷ்ஷின் நிர்வாகம் தள்ளியபோது அமெரிக்காவின் நியாயம் அடிப்பட்டு போய்விட்டது. அதுபோலவே அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் செய்துள்ள சட்டத்துக்குப் புறம்பான ஆக்கிரமிப்புக்கள் குறித்த ஐ. நாவின் பிற தீர்மானங்கள் பற்றிப் பேசவும் அமெரிக்கா முன்வரவில்லை. வளைகுடாவைப் பொறுத்தவரை அமெரிக்காவின் முக்கியமான கரிசனம் எண்ணெய், ராணுவரீதியான முக்கியத்துவம் ஆகிய இரண்டும்தான். அவர்கள் அதுவரை பேசிவந்த லட்சியங்கள் குறித்து அதற்கு கவலையெதுவுமில்லை. அமெரிக்காவின் யுத்தத்தை ஆதரித்த அமெரிக்க அறிவுஜீவிகள் பலரும், அமெரிக்கா சமீபகாலத்தில்தான் பனாமாவின் மீது படையெடுத்துச் சென்றது என்பதையும், சிலகாலம் அந்த நாட்டை ஆக்கிரமித்திருந்தது என்பதையும் மறந்துவிட்டனர். ஈராக்கை ஒருவர் விமர்சித்தால் அதே அளவுகோலை வைத்து அமெரிக்காவையும் அவர் விமர்சிக்க வேண்டுமில்லையா? “அது முடியாது நம்முடைய நோக்கம் உயர்வானது. சதாம் ஹ"சைன் ஒரு ஹிட்லர். எனவே இந்த யுத்தம் நீதிக்கான யுத்தம்” என்பதுதான் அப்போது நமக்கு கிடைத்த பதில்.
அல்லது ஆப்கானிஸ்தானுக்குள் சோவியத் யூனியன் நுழைந்தது பற்றி அவர்கள் பேசினார்கள். ஆனால் சோவியத் யூனியன் ஆப்கானில் நுழைவதற்கு முன்பே அமெரிக்காவின் நேசநாடுகளான இஸ்ரேலும் துருக்கியும் சட்டத்துக்கு புறம்பான முறையில் பிறநாடுகளின் பகுதிகளை ஆக்கிரமித்திருந்தன. அதைப்போலவே 1970களில் அமெரிக்காவின் இன்னொரு நேசநாடான இந்தோனேஷியா ஆயிரக் கணக்கில் திமோர் நாட்டவரைக் கொன்று குவித்தது. இதை அமெரிக்கா அறிந்திருந்தது மட்டுமன்றி கிழக்கு திமோர் யுத்தத்தின்போது செய்யப்பட்ட கொடுமைகளை ஆதரித்தும் வந்தது. ஆனால் சோவியத் யூனியன் பற்றிப் பேசிய அமெரிக்க அறிவுஜீவிகளில் சிலபேர் கூட இது குறித்துப் பேசவில்லை. காலத்தில் இன்னும் பின்னோக்கிப் போனால் இந்தோனேஷியாவில் அமெரிக்கா செய்த
22 பிரவாதம் - ஜூலை 2005

தலையீடுகள் தெரியவரும். அந்த அப்பாவித்தனமான விவசாயச் சமூகங்களை அது அழிவுக்குட்படுத்தியது விளங்கும். தொழில் முறை நிபுணர்களின் கவனமெல்லாம் யுத்தத்தில் தமது நாட்டை வெற்றியடைய வைப்பதொன்றையே குறியாகக் கொண்டுள்ளன. இதுதான் அரசியல் நடப்பாக
இருக்கிறது.
அவர்கள் அப்படி இருக்கலாம். ஆனால் நடுநிலையான அறங்களோ மதிப்பீடுகளோ இல்லாமல், ஏற்கெனவே குழம்பிப்போயிருக்கும் ஒரு காலச்சூழலில் வாழுகின்ற அறிவுஜீவியானவர் தனது நாட்டின் செயல்களைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது சரியா என நான் கேட்க விரும்புகிறேன். தனது நாடு இழைக்கும் குற்றங்களைப் பார்த்துக் கொண்டு, “ஆமாம் அப்படியெல்லாம் நடப்பது உண்மைதான். உலகம் இன்று அப்படித்தானே இருக்கிறது” என்று கேட்பதுதான் அறிவுஜீவியின் வேலையா? நான் சொல்ல வருவது, ஏராளமாகத் தவறு செய்யும் ஒரு அரசாங்கத்துக்குச் சேவகம் செய்து கொண்டு அதனால் பின்னடைந்து போயிருக்கும் தொழில்முறை நிபுணர்களல்ல அறிவுஜீவிகள். மாறாக அதிகாரத்துக்கு எதிரே உண்மையைப் பேசுபவர்களே அறிவுஜீவிகள். இப்படிச் சொல்வதன் மூலம் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டது போன்று “எல்லோருமே பாவிகள் அடிப்படையில் தீயவர்கள்” என நான் கூறவரவில்லை. நான் கூறவிரும்புவது இதிலிருந்து வேறுபட்டது. மனித உரிமைகளை உயர்த்திப்பிடிப்பதும் உலகளாவிய அணுகுமுறையில் தொடர்ச்சியை வலியுறுத்துவதும் அவசியமென்று கூறும்போது இதை ஒருவர் தேவதூதரிடமிருந்தோ தரிசனத்தின் மூலமோ பெற்றுவிடலாம் என்பதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. பெரும்பான்மையான நாடுகள், 1948இல் ஏற்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதைப் போலவே இன்னும் பல்வேறு ஒப்பந்தங்கள் உள்ளன. அவற்றில் யுத்தத்தின் விதிகள், போர்க் கைதிகளை நடத்தும் முறைகள் பற்றியும், தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள், புலம்பெயர்ந்தோர், அகதிகள் முதலானோரின் உரிமைகள் பற்றியும் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் எந்தவொரு ஒப்பந்தமும் யாரையும் தரம் குறைந்தவர்களாகப் பார்ப்பதில்லை: எல்லோருக்கும் சமமான சுதந்திரம் உண்டென்று அவை கூறுகின்றன. ஆனால் இந்த உரிமைகள் தினந்தோறும் மீறப்படுகின்றன. இதற்கு போஸ்னியா ஒரு உதாரணம் , அமெரிக்கா, எகிப்திய, சீன அரசாங்கங்களின் அதிகாரிகளைப் பொறுத்தவரை இந்த உரிமைகள் நடைமுறை ரீதியில் அணுகப்படவேண்டியவையே தவிரத் தொடர்ச்சியாகப் பேணப்பட வேண்டியவையல்ல.
பிரவாதம் - ஜூலை 2005 23

Page 15
ஆனால் அறிவுஜீவியின் அணுகுமுறை அதுவாக இருக்க முடியாது. சர்வதேச சமூகத்தால் கூட்டாக, எழுத்துபூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள அளவுகோல்களை, விதிகளை அவர் எல்லோருக்கும் தொடர்ச்சியாக பிரயோகிக்க வேண்டும்.
இந்த இடத்தில் தேசப்பற்று, தனது மக்களுக்கு விசுவாசமாக இருப்பது தொடர்பான பிரச்சினை எழுகிறது. அறிவுஜீவி என்பவர் கணிதவியலின் சூத்திரங்களுக்கேற்ப நகர்த்தப்படும் எந்திரமல்ல என்பது உண்மைதான். அதுபோலவே, ஒருவரது நோக்கத்தை, எண்ணத்தை அவரது தனித்துவத்தை பயமும் பல்வேறு கட்டுப்பாடுகளும் குறுக்குகின்றன என்பதும் கூட உண்மைதான். ஆனால் நடுநிலைமையென்பது பற்றிய கருத்தொருமை எப்படிக் காணாமல் போய்விட்டது என்பது குறித்து நாம் கவலைப்படுகிறோம். அதேசமயம் அகவயப்பட்ட அணுகுமுறைக்குள் அடித்துச் சென்று விடாதபடியும் பார்த்துக் கொள்கிறோம். ஒருவர் தனது தொழிலுக்குள், தனது தேசிய இன அடையாளத்துக்குள் அடைக்கலம் புகுவதென்பது வெறுமனே அடைக்கலம் புகுவதாகத்தான் அர்த்தப்படும். ஆனால், காலையில் செய்திகளைப் புரட்டிப் பார்த்த உடனேயே நம்மைத்தார்க்குச்சியால் குத்துவது போலத் தாக்கும் செய்திகளுக்கு, பிரச்சினைகளுக்கு அப்படி அடைக்கலம் புகுவது தீர்வாகிவிடாது.
‘சமயத்திலும்’ என்பது மதத்திலும்’ என்ற அர்த்தத்தை முதல் வாசிப்பில் தந்துவிட்டது. எல்லா நேரத்திலும் எல்லா விஷயங்களையும் பேசிக்கொண்டிருக்க எவராலும் முடியாது. ஆனால் தனது குடிமக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய ஓர் அரசாங்கமானது அநீதியான யுத்தத்தில் ஈடுபடும்போது அதன் அதிகாரமானது வரம்பின்றிப்பிரயோகிக்கப்படும்போது, அது ஒடுக்குமுறையில், குரூரமான வழிகளில் ஈடுபடும்போது, அது வேண்டுமென்றே பேதம் பாராட்டும் போது அதைக் கேள்விகேட்க வேண்டிய கடமை அறிவுஜீவிக்கு இருக்கிறது என நான் நம்புகிறேன். நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல, நாமெல்லோருமே தேசங்களின் எல்லைகளுக்குள்தான் வாழ்கிறோம். நாம் தேசிய மொழிகளைத்தான் பேசுகிறோம். பெரும்பாலும் நம் தேச மக்களை விளித்துதான் பேசுகிறோம். அமெரிக்காவிலிருக்கும் அறிவுஜீவியானவர் ஒரு யதார்த்தத்தை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. “எல்லாவற்றுக்கும் மேலாக நமது நாடு பல்வேறுப்பட்ட மக்கள் வந்து குடியேறியுள்ள ஒரு நாடு. இதன் செல்வங்கள் மகத்தானவை. ஆனால் இவற்றோடுகூட இது உள்நாட்டில் சமத்துவமற்ற ஒரு நிலையை காப்பாற்றி வருகிறது. வெளிநாடுகள் பலவற்றின் விவகாரங்களில் தலையீடு செய்து வருகிறது என்பதையும் மறந்துவிடக்கூடாது” என அவர் புரிந்த கொள்ள வேண்டும்.
24 பிரவாதம் - ஜூலை 2005

மேற்சொன்ன எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒரு சூழலின் அறிவுபூர்வமான அர்த்தமென்பது, அறியப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட சில விதிகளோடு கிடைக்கின்ற உண்மைகளை ஒப்பீடு செய்வதன் மூலமே பெறப்படுகிறது. இது ஒர் எளிதான காரியமில்லை. வழக்கமாகச் சிதைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் தரப்படுகின்ற தகவல்களிலிருந்த உண்மைகளைப் பெற ஆய்வுகளும் விவரங்களைச் சேகரிக்கப் போகிறது. ஒரு படுகொலை உண்மையாகவே நடந்ததா? என்பதைப் பெரும்பாலும் நாம் உறுதி செய்து கொண்டு விடமுடியும். என்ன நடந்தது ஏன் நடந்தது என்பதைக்கண்டறிவதுதான் உடனடியான பணியாகும். இதைத் தனிப்பட்ட சம்பவங்களாகப் பார்க்காமல் நமது தேசம் உள்ளிட்ட உரு பரந்த வரலாற்றின் ஒரு பகுதியாக நாம் பார்க்க வேண்டும்.
நம்முடையதைப் போன்று நிர்வகிக்கப்படும் பரந்துபட்ட சமூகங்களின் உண்மையைப் பேசுவதன் இலக்கு - இருப்பதை விடவும் மேம்பட்ட ஒரு நிலையை அவலங்கள் குறைந்த அமைதி நிலவும் ஒரு சூழலை உருவாக்குவதுதான். இது அறியப்பட்ட உண்மைகளை இருக்கின்ற அறவயப்பட்ட லட்சியங்களோடு ஒப்பிட்டுப்பார்த்தே உருவாக்கப்படுகின்றது. இந்த செயல்பாடு Abduction என அமெரிக்க ப்ராக்மடிக்ஸ் சிந்தனையாளர் சி. எஸ். பெய்ல்ஸினால் குறிக்கப்படுகிறது. இது புகழ்பெற்ற சிந்தனையாளர் நோம் சாம்ஸ்கியால் சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது. தான் எப்படிச் சரியாக இருக்கிறேன் என்பதை எல்லோருக்கும் அறிவிக்க வேண்டுமென்ற நோக்கோடு மட்டுமே ஒருவர் பேசுவதும் எழுதுவதும் கூடாது. மாறாக, ஆக்கிரமிப்பை இயல்பாக ஏற்றுக்கொள்கிற மனப்பான்மையில், கருத்துச் சூழலில் ஒரு மாற்றத்தை தூண்டுவதாகவும் அநியாயமாக மக்கள் தண்டிக்கப்படுவதைத் தடுப்பதாகவும் ஜனநாயக ரீதியான சுதந்திரமும் உரிமைகளும் அனைவருக்குமானது என்பதை அங்கீகரிப்பதாகவும் அது இருக்க வேண்டும். இவையெல்லாம் கற்பனை வகைப்பட்ட யதார்த்தத்தில் அடைய முடியாத விஷயங்களாகத் தோன்றுவது உண்மைதான். இன்னும் சொன்னால் அறிவுஜீவியின் தனிப்பட்ட செயல்பாடுகள் குறித்த எனது பேச்சோடு இவை உடனடியாகத் தொடர்பு கொண்டுள்ள விஷயங்களுமல்ல.
ஓர் இக்கட்டான தருணத்தில் கொள்கை பூர்வமானதொரு முடிவெடுக்கும் படி நேரும்போது அது சரியான நிலைப்பாடுதான் எனத் தெரிந்திருந்தும் நீங்கள் அதிலிருந்து விலகிக்கொள்வீர்களாயின் அத்தகைய போக்கைவிட மிகவும் மோசமானது வேறு எதுவுமில்லையென்பது எனது அபிப்பிராயம். அதிகம் அரசியல் சார்புடையவராகக் காட்டிக்கொள்ள நீங்கள் விரும்பவில்லை. பிரச்சினைக்குறியவராக ஆகிவிடுவோமோ என்று அஞ்சுகிறீர்கள். உங்களுக்கு உங்கள் மேலதிகாரியிடமிருந்தோ அல்லது வேறு
பிரவாதம் - ஜூலை 2005 25

Page 16
யாரோ ஓர் அதிகாரியிடமிருந்தோ ஒப்புதல் தேவை. நடுநிலமையானவர், மிதவாதி போன்ற அங்கீகாரங்களைக் காப்பாற்ற வேண்டும். உங்களது நம்பிக்கையெல்லாம் உங்களிடம் மீண்டும் அவர்கள் ஆலோசனைக் கேட்க வேண்டும். உங்களைக் கெளரவமான கமிட்டிகளில் அமர்த்த வேண்டும். அதன்மூலம் பொறுப்பான மைய நீரோட்டச்சக்திகளில் ஒருவராக நீங்களும் விளங்க வேண்டுமென்பதுதான். பெரும் பரிசு, கெளரவப் பட்டம் உங்களுக்கு ஒருநாள் கிடைக்குமென்று நீங்கள் நம்பிக்கையோடு இருக்கிறீர்கள். தூதராகக்கூட நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கிறீர்கள்.
ஓர் அறிவுஜீவியைப் பொறுத்தவரை, இத்தகைய மனப்பான்மை மலிவானது, இழிவானது. ஓர் அறிவுஜீவியின் வேட்கை மிகுந்த வாழ்வைப் பாழ்படுத்துவது, சிதைப்பது, சாகடிப்பது இத்தகைய மனப்பான்மைக்கு இடம் கொடுப்பது போல் வேறு எதுவுமில்லை.
இன்று இருப்பதிலேயே மிகவும் கஷ்டமான பாலஸ்தீனப் பிரச்சினையில் நான் இதை நேரடியாகவே அனுபவிக்கிறேன். நவீன வரலாற்றில் மாபெரும் அநீதியாய் விளங்கும் இப்பிரச்சினையைப் பற்றிப் பேசப் பலரும் அஞ்சுகின்றனர். இதில் உண்மையை அறிந்தவர்கள் அதைப் பேசாதபடி முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது; பார்க்காதபடி சேணமிடப்பட்டுள்ளது: செயல்படாதபடி முடக்கப்பட்டுள்ளது. தன்மீது சுமத்தப்படும் பழிகளையும் பேசப்படும் அவதூறுகளையும் மீறிப் பாலஸ்தீனியர்களின் உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தையும் ஆதரிக்கின்ற ஓர் அறிவுஜீவி உண்மையைப் பேசக் கடமைப்பட்டுள்ளார். இந்த உண்மையானது எதற்கும் அஞ்சாத, பிறர் துயரைத் தமதாக நினைக்கிற அறிவுஜீவியினால்தான் பிரநிதித்துவப்படுத்தப்பட வேண்டும். 1993 செப்டெம்பர் 13இல் பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் கையெழுத்தான ஒஸ்லோ ஒப்பந்தத்துக்குப் பின்னால் இது மேலும் நிரூபணமாகியுள்ளது. மிகவும் சொற்பமான அளவே பலன் தரும் இந்த ஒப்பந்தம் உண்டாக்கிய ஆரம்பக்கட்ட ஆர்ப்பரிப்புகள் பாலஸ்தீனியர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படுவதற்குப் பதிலாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை நீடிப்பதற்கே இந்த ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது என்ற உண்மையை மறைத்து விட்டன. இந்த ஒப்பந்தத்தை விமர்சிப்பது இறுதியில் ‘நம்பிக்கை’, ‘அமைதி என்பவற்றுக்கு எதிரான நிலையை மேற்கொள்வதாக அர்த்தம் கொள்ளப்பட்டது"
அறிவுஜீவிகளின் குறுக்கீடு எந்த விதத்தில் செய்யப்பட வேண்டும் என்பது பற்றி ஒரு சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். ஒரு
26 பிரவாதம் - ஜூலை 2005

அறிவுஜீவியானவர் மலையின் மீதோ பிரசங்க மேடையின் மீதோ ஏறி நின்று கொள்ளத் தேவையில்லை. அவர் வானத்தில் இருந்து இறங்கி வரவும் தேவையில்லை. நீங்கள் உங்கள் வார்த்தை எந்த இடத்தில் சரியாக கேட்கப்படுகிறதோ அங்கே பேசவிரும்புகின்றீர்கள் நடந்துகொண்டிருக்கிற நீதிக்கும் அமைதிக்குமான முயற்சிகளில் தாக்கம் விளைவிக்கும்படி உங்கள் செயல் அமைய வேண்டுமென்றும் விரும்புகிறீர்கள். அறிவுஜீவியின் குரல் அநாதரவாகத் தனியாக ஒலித்துக்கொண்டிருக்கிற குரல்தான். ஆனால் மக்களின் அபிலாஷைகளோடும் இயக்கப்போக்குகளின் யதார்த்தங்களோடும் கூட்டாகப் பரிர்ந்து கொள்ளப்படும் லட்சியங்களோடும் அது நெருக்கமாக இருப்பதால் அந்த அநாதரவான குரல் பெரும் அதிர்வுகளை, எதிரொலிகளை உண்டாக்குவதாயுள்ளது. மேற்கத்திய உலகின் சந்தர்ப்பவாதமோ பாலஸ்தீனிய “பயங்கரவாதத்தை” விமர்சிக்கிறது.இஸ்ரேலிய“ஜனநாயகத்தைப் புகழ்கிறது. அதன்பிறகு அது அமைதியைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் அறிவுஜீவிகளின் கடமையோ இதையெல்லாம் பாலஸ்தீனியர்களிடம் பேசுவதோடு நின்றுவிடல்லை. நியூயார்க்கிலும் பாரிஸிலும் லண்டனிலும் இந்தப் பிரச்சினையின் மீது செல்வாக்குச் செலுத்தும் அனைத்து இடங்களிலும் இதைப் பேசுவதில்தான் அது அடங்கியுள்ளது. பாலஸ்தீனியச் சுதந்திரம் பற்றிய கருத்தை வளர்த்தெடுப்பதில் எல்லாவிதமான பயங்கரவாதங்களிலிருந்து, தீவிரவாதங்களிலிருந்து சுதந்திரத்தை மீட்டெடுப்பதில் அது அடங்கியுள்ளது.
அதிகாரத்தினிடத்தில் உண்மையைப் பேசுவதென்பது கற்பனாவாதமல்ல. அது மாற்றுகளைக் கவனமாக மதிப்பிடுகிறது. சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கிறது. பிறகு எங்கே மிகுந்த தாக்கத்தையும் சரியான மாற்றத்தையும் அது உண்டாக்குமோ அங்கே அறிவுக்கூர்மையோடு அதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
குறிப்புகள்
1. Peter Novick, That Noble Dream: The 'Objectivity Question
and the American Historical Profession (Cambridge: Cambridge Univ. Press, 1988) Page 628
2. 95. Lögb) g6ög)Lð GÉ)flo) TS, Culture and Imperialism (London,
Vintage 1994) Pages 204-224 இல் பேசப்பட்டுள்ளது.
3. GudgyLib GślaJITråJ85G5&sg5’u Urfėsgs Noam Chomsky, Necessary Illusions. Thought Control in Democratic Societies (London, Pluto Press, 1989).
பிரவாதம் - ஜூலை 2005 27

Page 17
4. S5 upf) calfairgo, Gálaig.55/5(5 "Nationalism, Human Rights and Interpretation,” in- Freedom and Interpretation: The Oxford Amnetsy Lectures, 1992 Ed., Barbara Johnson (NewYork Basic Books 1993) usiso 175-205
5. Noam Chomsky, Language and Mind (NewYork: Herbourt
Brace Jovenovich 1972) Page 98-99.
6. “The Morning After', London Review of Books, 21- October
1993, Volume 15, No. 20, Page 3-5 என்ற கட்டுரையைப் பார்க்க
தமிழில் ரவிக்குமார்
N
ஸ்பானியா - 1964
பாய்லோ நெருடா
கல்போன்ற சொற்கள் சுவரில் எழுதப்பட்டுள்ளன. கடைசி விருந்தில் இரத்தக்கறை படிந்த தட்டுகள் வருகின்றன. ஸ்பானிய மேசையில் பிராங்கோ அமர்ந்திருக்கிறான் கவசத்துடன், முடிவற்றுக் கொறித்துத் தள்ளியவாறு தன் எலும்பு வீட்டுக்கு மரத்தூளைச் சேர்த்தவாறு.
சிறையில் இருப்பவர்கள், தமது துப்பாக்கிகளுக்குக் கடைசி ரோசாவைக் கட்டியவர்கள் சிறையில் பாடியவர்கள்
இப்போது அழுகிறார்கள் அது சிறையில் இருந்துவரும் பல்லவி வருந்துகின்ற, வாயடைக்கப்பட்ட ஓர்மம் சங்கிலிகள் பாடுகின்றன தன் கிற்றார் இல்லாமல் இதயம் அழுகிறது சுரங்க வழியில் துன்பம் அலைகிறது
தமிழில்: எம் ஏ. நுஃமான் (Alastair Reid GLoTgl6uugg GlbebLIT6l6óT ISLA NEGRA
நரூ الم தொகுப்பிலிருந்து ܢ
28 பிரவாதம் - ஜூலை 2005

பாலஸ்தீனப் பிரச்சினையும் அறிவுத்துறைப்புரட்டல்களும்
எட்வர்ட் சயித்
- பாலஸ்தீனப் பிரச்சினை பல வழிகளில் அசாதாரணமான ஒன்று. பாலஸ்தீனம் ஒரு புராணத்தலம் சமய சித்தாந்தங்களும் பண்பாட்டு முக்கியத்துவமும மண்டிய இடம். பல தலைமுறை மக்களாலும் மரபுகளாலும் அதற்கு அரசியல் அர்த்தங்கள் சேர்ந்திருக்கின்றன. கடந்த நூற்றாண்டில் சியோனிச இயக்கத்தினருக்கும் தங்களை இஸ்லாமிய அல்லது (கிறிஸ்தவ பாலஸ்தீனிய அராபியர் என அழைத்துக்கொண்ட பாலஸ்தீன மண்ணின் மக்களுக்குமிடையேயான கடும் சச்சரவுக் களமாக அது இருந்து வந்திருக்கிறது. மத்திய கிழக்கிலிருந்து வெகு தொலைவிலுள்ள பன்னாட்டு அரங்கிலும் இப்போராட்டம் தீவிரமாக இருந்து வருகிறது. இந்த அரங்கு என்பது சர்வதேச உறவுகள், வானொலி, அச்சு, தொலைக்காட்சி, அறிவுத்துறை (வரலாறு, சமூகவியல், பண்பாட்டு ஆய்வுகள், அரசியல், பொருளாதாரம், மானுடவியல், தத்துவம், தொல்லியல், முதலியன) மற்றும் பிரச்சாரம் ஆகியவற்றால் நிரம்பியது. 1948இல் இஸ்ரேல் ஒரு அரசாக நிறுவப்பட்டது. யூத வெறியர்கள் பாலஸ்தீனத்தின் பெரும் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது ஓரளவிற்கு இதற்குக் காரணமெனில், பன்னாட்டு அரங்கில் கருத்துப் போராட்டக் களத்தில் அவர்கள் அரசியல் வெற்றியடைநதிருந்தது ஒரு முக்கியகாரணமென்றால் மிகையாகாது.
அது முதல் இஸ்ரேல் தன்னை வலுவிலும் பரப்பிலும் விரிவுபடுத்தியிருக்கிறது. 1967இல் இது ராணுவ ரீதியாக பாலஸ்தீனத்தின் பரந்த அளவிலான அராபிய மண்ணையும் மக்களையும் கைப்பற்றி இன்னமும் தன் வசமே வைத்திருக்கிறது. இருபதாண்டுகளாக இந்நிலை நீடிப்பதென்பது வெளி ஆதரவில்லாமல் சாத்தியமில்லை. பாலஸ்தீனத்தின் மீதான ஆதிக்கப்போராட்டத்தின் களமாக இரண்டாம் உலகப்போர் வரை ஐரோப்பாவும் அதன்பின் அமெரிக்காவும் விளங்கிவருகிறது. அமெரிக்காவில் எதிர்ப்பே இல்லாத பெரிய அளவு ஆதரவை இஸ்ரேல் பெற்றுள்ளது. மக்கள் தொகை விகிதத்தின் அடிப்படையில் வேறெந்த அயல்நாட்டையும் விட மிக அதிகமாக அமெரிக்க உதவி பெறும் நாடு இஸ்ரேல்தான். ஒவ்வொரு இஸ்ரேலியனுக்கும் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 1400 டாலரை அமெரிக்கா மானியமாக வழங்கிவருகிறது. இஸ்ரேலியப் படை வீரர் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்குச் சுமார் 9750 டாலரை அமெரிக்கா செலவிடுகிறது. இந்த அளவு பெருந் தொகையைத் தனது குடிமக்களில்
பிரவாதம் - ஜூலை 2005 29

Page 18
பலருக்குக் கூட அது செலவிடுவதில்லை) இந்தப் பண உதவிக்குச் சமமான முக்கியத்துவமுடைய அரசியலாதரவையும் அமெரிக்கா வழங்கிவருகிறது. பன்னாட்டு அரங்குகளில் இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்தல், போர்த் தந்திர ரீதியில் ஒருங்கிணைவிற்கான ஒப்பந்தம், வேட்பாளர்களாக அமெரிக்காவில் போட்டி இடுபவர்கள் கூட இஸ்ரேலுக்குத் தான் நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாகச் சொல்ல வேண்டிய நிலை ஆகியவை இதனை விளக்கும். இந்த ஆதரவின்றிச் செயல்பட இயலாத அளவிற்கு இஸ்ரேல் இன்று அமெரிக்காவைச் சார்ந்திருக்கிறது.
இந்த உண்மைகள் வியப்புக்குரியவை. உடனடியாக விளங்கிக் கொள்ள இயலாத அளவிற்குச் சிக்கலுடையவை. யூதவெறிக்குப் பலியாகிற பாலஸ்தீனியர்கள் மீதான வன்முறைக்கு ஆதரவளித்து வலுவூட்டப்படுகிறது. ‘நமது நட்பு நாடு’ என்றும் ‘மத்திய கிழக்கின் ஒரே சனநாயக நாடு’ என்றும் அமெரிக்கக் காங்கிரஸ் இஸ்ரேலைப் புகழ்கிறது; ஆண்டுதோறும் இஸ்ரேலுக்கு அளிக்கும் உதவியை அதிகரிக்கிறது. இந்த ஆக்கிரமிப்புப்பிடி மேற்குக் கரை மற்றும், காஸா பகுதிகளில் மேலும் மேலும் ஆழமாக வெறுப்பேற்றக்கூடிய சட்ட விரோதக் குடியேற்றங்களை இஸ்ரேல் அரசு நிறுவ அனுமதிக்கிறது. மேலும் மேலும் அதிகமான பூாலஸ்தீனியர்கள் சிறையிடப்படவும், கொல்லப்படவும், நாடு கடத்தப்படவும் அனுமதிக்கிறது; மேலும் மேலும் அதிகமாக பாலஸ்தீன வாழ்க்கை கடினமாவதற்கும் அனுமதிக்கிறது. இன்னொன்று. இஸ்ரேல் ஆதரவு நிறுவனமயமாக்கப்பட்டுள்ளதன் விளைவாக பயங்கரவாதம், கம்யூனிசம் ஆகியவற்றை எதிர்ப்பது என்ற பெயரால் மட்டுமன்றி செமிற்றிக் எதிர்ப்புக்கு (anti-Semitic) எதிர்பட என்ற பெயரால் இஸ்ரேலை ஆதரிக்கும் போக்கு அமெரிக்காவில் உள்ளது. இந்நிலையின் விளைவாக அமெரிக்க நாளிதழ்கள், தொலைக்காட்சி, வணிக சினிமா போன்றவற்றில் பாலஸ்தீனியர்கள் - இஸ்லாமிய வெறியர், அப்பாவிகளை வன்கொலை செய்பவர், விரக்தியடைந்த காட்டுமிராண்டிகள் - என்கிற ஒரே அச்சுப்பதிவுகளாகக் குறுக்கப்பட்டுச் சித்திரிக்கப்படுகின்றனர்.
இந்நிலை இயல்பானதுமல்ல, தவிர்க்க இயலாததுமல்ல. கடினமான முயற்சி மற்றும் உழைப்பின் விளைவாக இத்தகைய இஸ்ரேல் ஆதரவு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று இதனைக் குறிப்பிடத்தக்க எதிர்ப்புகளுடனும் அதிகரித்துவரும் நெருக்கடியின் மத்தியிலுமே நிறைவேற்ற முடிகிறது. யூதவெறியின் அரசியல் வெற்றிக்கெதிரான அரசியல் மற்றும் பண்பாட்டுத்தள எதிர்ப்பு இது தங்கள் மண்ணுடனுள்ள தொடர்பைக் கட்டிக்காக்கவும் தம் உயிருக்கு எதிரான வெறிமிகு கொலைகாரத்
30 பிரவாதம் - ஜூலை 2005.

தாக்குதல்களிலிருந்து தப்பவும் பாலஸ்தீனியர்கள் செய்யும் முயற்சியே இந்த எதிர்ப்பின் தோற்றுவாய். உலகின் வேறு பகுதிகளில் நடைபெற்ற காலனியக் குடியிருப்பு இயக்கங்கள் கிழக்கத்திய சுரண்டற் பாத்திரத்தை உள்ளூர் மக்களுக்கு அளித்தன. யூத வெறியர்களோ பாலஸ்தீனியர்களைத் தங்களுக்கு அடங்கியவர்களாக மட்டுமன்றி, அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையே அவர்களுக்குத் தேவையில்லை எனவும் கருதினார்கள். சொந்த மண்ணைப் “புறக்கணித்து அலைந்த நாடோடிகளாக அவர்கள் கருதப்பட்டனர். இஸ்ரேல் என்பது அந்நாட்டுக் குடிமக்களின் அரசாக அன்றி ‘யூதர்களுக்கான அரசாக நிறுவப்பட்ட பிறகு பாலஸ்தீனியர்கள் ‘யூதரல்லாதவர்’ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். எனவே, 1948இல் இஸ்ரேல் நிறுவப்பட்டபின் முதல் இருபதாண்டுகளில் துரத்தி அடிக்கப்பட்ட 780,000 பாலஸ்தீனியர்கள் நாடு கடத்தப்பட்டதாகப் பொருள் கொள்ளப்பட்டது. எப்படியோ மிஞ்சியிருந்த 120,000 பேர் கேவலமான இழிந்த வாழ்க்கையை நடத்த வேண்டியிருந்தது. இந்த வாழ்க்கையின் கோரமான விவரங்களை முதன் முதலில் உலகிற்கு வெளிப்படுத்திய நூல்கள் இரண்டு. அவை சப்ரிஜிரியியின் இஸ்ரேலில் அராபியர்கள்’ (1976), எலியா சுராய்க்கின் ‘உள்நாட்டுக் காலனியாதிக்கம் பற்றிய ஆய்வு’ (1979), இந்த இரு ஆசிரியர்களுமே பாலஸ்தீனச் சிறுப்பான்மையினர்; அந்தக் கொடிய வாழ்க்கையின் விளைபொருட்கள். இந்த இரண்டோடும் ஒப்பிடத்தக்க இன்னொரு உயிரோட்டமுள்ள நூல் ஃபெளசி அல் அஸ்மரின் “இஸ்ரேலில் அராபியராக இருத்தல்’ (1975) என்பதாகும்.
சற்றுப் பின்னோக்கிச் செல்வோம். 1948இல் இஸ்ரேல் அரசு உருவாக்கப்பட்ட நொடி முதல் - இதற்கான தயாரிப்புகள் இதற்கு வெகுகாலத்திற்கு முன்பே செய்யப்பட்டன - உண்மை என உறுதியாய் நம்பப்படும் அளவிற்கு தொடர்ந்து பல பொய் விவரணங்களும் படிமங்களும் மேல் நாடுகளில் பெரு வெள்ளமெனக் கொட்டிக் குவிக்கப்பட்டன. அதற்கு முன் பல ஆண்டுகளாக யூதர்கள் குடியேற்றப்பட்டுங் கூட 1948 இல் பாலஸ்தீனியர்கள் சனத்தொகையில் 67 விழுக்காடாகவும் நிலப்பரப்பில் 90 விழுக்காட்டிற்குச் சொந்தக்காரர்களாகவும் இருந்தார்கள். யூதர்களுக்கு ஏற்பட்ட “பேரழிவுக்குப்பின்னும்கூட மக்கள் வசிக்காத காலிப்பிரதேசங்களில்”யூதர்கள் குடியேற்றப்படுவதற்கு காட்டுமிராண்டித்தனமாக எதிர்ப்புத் தெரிவிக்கும் உள்ளூர் மக்கள் குறித்துக் கட்டுக்கதைகளை உலகம் கேள்விப்பட்டது. அதன்பின் இந்தப் புனைவுகள் பல்கிப் பெருகி மேல்நாடுகளில், மறுக்க இயலாத அளவிற்கு ஒரு அமைப்பாக இறுகிவிட்டன. ‘தங்கள் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்கியே பாலஸ்தீனியர்கள் நாட்டைவிட்டு வெளியேறினர். ஏற்கெனவே ஹிட்லருடன் அணி சேர்ந்திருந்தபடியால்
பிரவாதம் - ஜூலை 2005 31

Page 19
அராபியர்கள் யூதர்களின் அரசைத் தகர்த்தழிக்க இருந்தனர். அவர்கள் இஸ்ரேலை எதிர்ப்பது சாராம்சத்தில் இனவாதமே, பாசிசமே. இஸ்ரேல் ஒரு சனநாயக நாடு. அது நிலைத்திருக்க விரும்புவது நீதிப்படி சரியானது (ஏனெனில் வேறு எவரும் யூதர்களைக் காட்டிலும் அதிகமாகத் துன்புற்றதில்லை). இஸ்ரேலின் உருவாக்கம் வராலாற்று ரீதியாய்த் தவிர்க்க இயலாதது. ஏனெனில், உலகம் முழுவதுமே ஐரோப்பாவிலிருந்து வந்த இந்த அறிவுமிக்க யூதத்தாராளவாதிகளுக்குப் பாலஸ்தீனக் காலியிடத்தை அளிப்பதாக உறுதிகூறியது எல்லாவற்றுக்கும் மேலாக யூதர்களாக இருந்த முன்னோடிகள் திறமை மிகுந்த அரசியலறிஞர்கள், அச்சமற்ற மனிதாபிமானிகள் மற்றும் கண்ணியமிக்க போராளிகள்! தமது எதிரிகள் மீது 1948க்கு முன்னும் பின்னும் நடத்திய பயங்கரவாதச் செயல்களைக் காட்டிலும் அளவிலும் கொடுமையிலும் யூதர்களின் மீது மிக மிக அதிகமாகப் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. இஸ்ரேல் முன்னேற்றத்திற்காகவும் சமாதானத்திற்காகவும் நிற்கிறது. அதே வேளையில் அதன் அராபிய எதிரிகள், முஸ்லிம் மதவெறியர்கள், பகுத்தறிவற்ற கொலைக்காரர்கள், வெறுக்கத்தக்க பாசாங்குக்காரர்கள்’ என்றெல்லாம் இட்டுக்கட்டப்பட்டன. இந்த மையமான புனைவு அமைப்போடு வேறு சில நீட்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பாலஸ்தீனியர்கள் இப்போது இல்லை; ஜோர்டான்தான் உண்மையில் பாலஸ்தீனம்: யூதர்களை வெறுப்பதற்கான ஒரு காரணமாக பாலஸ்தீனியர்களை அராபியர்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்தப் புனைவுகளின் தலையாய நோக்கம் இஸ்ரேலுக்கு ஆதரவு ஈட்டுவது மட்டுமல்ல. இஸ்ரேலின் வெற்றிக்கு மனித விலையாகக் கொடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களின் மலைக்கச் செய்யும் எண்ணிக்கையை மறைப்பதுமாகும். இவற்றில் பெரும்பாலான புனைவுகளை மறுப்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அங்கே ரத்தமும் சதையுமாய் பாலஸ்தீனியர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். மக்கள் தொகைக் கணக்கெடுப்புகளும், நிலவுரிமைப் பதிவுகளும், நேரில் கண்ட சாட்சிகளின் அறிக்கைகளும், 1948க்கு முன்னும் பின்னும் பாலஸ்தீனத்தில் மெய்யான அராபிய வாழ்க்கையின் சுவடுகளும் இருந்ததை தங்கள் தலைவர்கள் சொன்னதால்தான் பாலஸ்தீனியர்கள் ஓடிவிட்டார்களா என்பதைக் கண்டறிய ஆர்வமுள்ள எவரும் பதிவேட்டைப் புரட்டிப் பார்த்திருக்கலாம். அராபியர்களின் பயங்கரவாதம் ஸ்டெர்ன் காங், ஹகனா, இர்குன் பயங்கரவாதங்களோடு ஒப்பிடத்தக்கதுதான் எனச் சோதித்து அறிவது சாத்தியம்தான். ஒரு நாட்டு மக்களுக்குச் சொந்தமான நிலத்தை இன்னொரு மக்கள் தொகுதிக்கு வாக்குறுதி அளித்து-ராணுவ ரீதியாய்ப் ப்றித்துத் தருவது வரலாற்று ரீதியாய்த் தவிர்க்க இயலாததுதானா, நியாயமானதா, என்பதையெல்லாம் சோதித்து அறிவது சாத்தியமே.
32 பிரவாதம் - ஜூலை 2005

சமயங்களில் புனைவுகள் தமக்கென ஒரு வாழ்வையும் வளர்ச்சியையும் கொண்டுள்ளன. இஸ்ரேலின் முதல் பிரதமரான டேவிட் பென்குரியனைப் பற்றி ‘நியூயார்க் டைம்சில்’ (அக். 5, 1986) ஷிமோன்பெரோஸ் எழுதுகிற ஒரு புகழ்ச்சிக் கட்டுரையைப் பாருங்கள். வரலாற்றையும் ஐம்பது லட்சம் பாலஸ்தீனியர் வாழ்ந்திருந்ததையும் புறக்கணித்துவிட்டு ஏதோ வந்தேறிய யூதவெறியர்களே பாலஸ்தீனத்தைக் கண்டுபிடித்தது போல பெரெஸ் எழுதுகிறார்.
அவர்கள் வந்தடைந்த மண், அது உண்மையில் புனித மண்ணாக இருந்த போதிலும், பாழடைந்தும் ஆளரவமற்றும் இருந்தது. அம்மண் தரிசாக நீர் வேட்கையோடு கிடந்தது. சதுப்பு நிலமும் மலேரியாவும் நிறைந்திருந்தது. அம்மண்ணில் வேறொரு மக்களும் வாழ்ந்திருந்தனர். (பெரெஸ் அம்மக்களின் பெயரைச் சொல்வது கூட தேவை எனக் கருதவில்லை) அவர்கள் அங்கே வாழ்ந்திருந்தாலும் அம்மண்ணைப் புறக்கணித்திருந்தனர். யூதர்கள் அம்மண்ணுக்குத் திரும்பியது என்பது அங்கிருந்த சிறிய அராபிய மக்களுடனான முடிவற்ற வன்முறைப் போராட்டங்களுடன் இணைந்திருந்தது. (மே 1948இல் இஸ்ரேல் நிறுவப்படும் வரை அராபியர்கள்தான் அறுதிப் பெரும்பான்மையாகப் பாலஸ்தீனத்தில் இருந்தனர். அதன் பின்னரே இவர்கள் வன்முறையாக வெளியேற்றப்பட்டனர் என்கிற உண்மையை நினைவு கொள்க. அந்த நேரத்தில் இஸ்ரேல் என்ற நாடே இல்லை என்ற உண்மையை மீறி பெரெஸ் பாலஸ்தீனத்தை விட்டுவிட்டு இஸ்ரேல் பற்றிப் பேசுகிறார்) அத்தகைய போராட்டங்களை அராபிய அரசுகள் தூண்டிவிட்டன.
பாலஸ்தீனியர்களை அராபிய அரசின் வெறும் கருவிகளாகவும் அராபிய அரசுகளால் தூண்டப்பட்டதாலேயே அவர்கள் போராடினார்கள் என்பதாகவும் கூறப்படுவதைக் கவனிக்க.
பாலஸ்தீனியம் என்கிற யதார்த்தம் மேற்கத்தியப் பார்வையாளர்களுக்கு ஒரு எளிய எதிர் இணை அமைப்பாகக் (binary system) குறுக்கப்பட்டது. ஒரு பக்கம் ‘நம்மைப் போன்ற வீரமிகு யூதர்கள் மறுபக்கம் நம்மோடு அடையாளம் காண முடியாத உள்ளூர் மக்கள். நல்லது, உண்மையானது, அழகானது ஆகிய படிமங்கள் தவிர, காட்டுமிராண்டித்தனத்திலிருந்து நாகரிகத்தைத் செதுக்கி எடுக்கும் வெள்ளைக் குடியேறிகளின் படிமத்துடன் யூதர்கள் தொடர்புபடுத்தப்பட்டனர். அமெரிக்கத் தூய்மைவாதத்திலிருந்தும் ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவை வெற்றிகொண்டது பற்றி ஐரோப்பியர்கள் சொன்ன
பிரவாதம் - ஜூலை 2005 33

Page 20
வீரபராக்கிரம வருணனைகளிலிருந்தும் நவீன காவிய நாயகர்களின் பிம்பங்களிலிருந்தும் பண்பாட்டு ஊற்றுமூலங்களைக்கொண்ட படிமம் அது: “எக்சோடஸ்’ (வெளியேற்றம்) போன்ற பிரபலத் திரைப்படங்கள் எண்ணற்ற துன்ப துயரங்களுக்கு உள்ளாகிய இஸ்ரேலியர்கள் பற்றிய ஏராளமான கிளைக்கதைகள் நிறைந்தைைவ. இதுபோன்ற கதைகள் ஏற்கெனவே மேலைநாடுகளில் நிலவிவந்தன. இஸ்ரேலிய யூதர்கள் தான் உண்மையில் பலியானார்கள்; அவர்கள் நல்ல மனதுடையவர்கள் அறிவுத்திறம் மிக்கவர்கள் கடலில் தூக்கி எறிவோம்’ என்ற அராபியர்களின் அச்சுறுத்தல்களை கடும் முயற்சிகளால் முறியடித்தவர்கள் என்பன போன்ற திகைக்க வைக்கும் கருத்துக்களுக்கு இப்படங்கள் வலுவூட்டின. உண்மையில் பெய்ரூட்டை விட்டு விரட்டப்பட்ட பாலஸ்தீனியர்கள் தான் கடலுக்குள் விரட்டப்பட்டவர்கள் அகதிமுகாம்களில் கொலை செய்யப்பட்டவர்கள்.
இஸ்ரேலில் யூதர்களின் சாதனைகள் குறித்த கதை தொடர்ந்து துடிப்போடு பரவிவருகிறது. மேற்கு நாடுகளில் நியாயமாகவே பிரபலமாகியுள்ள மாபெரும் மனிதர்கள் சிலர் ஐன்ஸ்டீன், ஃப்ராய்டு, சாகல், ருபென்ஸ்டீன் போன்ற யூதர்கள்) இதற்குப் பயன்பட்டனர். இந்தக் கதைகளைப் பேசுகிற மக்கள் ஒரு சாதாரண மேற்கத்தியரின் உலகைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அத்தகைய வரலாறுகள் இன்று கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வமானதாகவே ஆகிவிட்டன. இதனால் சங்கடப் படக்கூடியவர்கள் உள்ளூர் ‘பயங்கரவாதிகள் தாம்’ தங்கள் வரலாற்றைப் பேசுகிற பாலஸ்தீனியர்கள் மேற்கு நாட்டாருக்கு நெருக்கமானவர்களல்லர். அவர்களது மொழி அரபு: மதம் இஸ்லாம் அல்லது கீழைக் கிறிஸ்தவம். அவர்களது பண்பாடு உறுதியாக மேலைப் பண்பாடு இல்லை.
பாலஸ்தீனியர்கள் கஷ்டங்களுக்கு உள்ளான போதிலும் பைத்தியம் பிடிக்கும் அளவிற்குக் கொடூரமான காலங்களைச் சந்திக்க வேண்டியிருந்த தெனினும் அவர்கள் அழிந்துவிடவில்லை; இடைக்காலத் தோல்விகளின் போது அரற்றி அழவுமில்லை; பாலஸ்தீனியர்களாக வாழ்வதிலிருந்து பின் வாங்கவுமில்லை. இஸ்ரேலைவிட்டு அகலாமல் அங்கேயே இருந்தவர்கள். இஸ்ரேலிலிருந்த முற்போக்கு இயக்கங்களோடு தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு பாலஸ்தீனியப் பண்பாட்டையும் மரபுகளையும் எதிர்ப்புக்கிடையே வளர்க்க முயன்றார்கள். இஸ்ரேலைவிட்டு வெளியேறியவர்களோ அரபு உலகில் நாஸரிசத்தோடு இணைந்து கொண்டார்கள். “பாசிஸ்டுகளாகவோ பொதுவுடமையாளர்களாகவோ மாறினர். அல்லது தலைமறைவாகி பாலஸ்தீனிய விடுதலை அமைப்புக்களைத் தொடங்கினர். இவை அரபு அரசுகளுடனும்
34 பிரவாதம் - ஜூலை 2005

இஸ்ரேலுடனும் ஒரே சமயத்தில் சண்டையிட நேர்ந்தது. 1948க்குப் பிந்திய பாலஸ்தீனிய இலக்கியம் 1960களில் மெல்ல மெல்லத் தோன்றி வளரலாயிற்று. மஹ்முத்தார்வீஷ், காசன் கனஃபானி, ஜப்ரா ஜப்ரா, சமி அல் காசிம் மற்றும் பலர் முன்னோடிகளாக விளங்கினர். ஜூன் 67 போருக்கு பிந்திய மாபெரும் மக்கள் எழுச்சிகளின் ஆழத்தை இப்போதுதான் நாம் காணத் தொடங்குகிறோம். 1967 என்பது பாலஸ்தீனியர்களைப் பொறுத்த மட்டில் இஸ்ரேலியர்கள் மேற்குக் கரையையும், காஸாவையும் வென்றதையே - வரலாற்று ரீதியான பாலஸ்தீனம் முழுவதையும் இழந்ததையே - குறிக்கிறது. எனினும், பாலஸ்தீன தேசிய இயக்கத்தின் எழுச்சியை 1967 விரைந்து தூண்டியது. தவிரவும் பண்பாடு மற்றும் சித்தாந்தத் துறைகளில் முழு வளர்ச்சி பெற்ற பாலஸ்தீனிய விவாதத்தைத் தொடங்கிவிட்டது. 1964இல் பாலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO) நிறுவப்பட்டது. இது பிராந்திய/பன்னாட்டு அரசியலில் ஒரு பெரிய சக்தியாக 1967க்குப் பிறகு கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது. (ஜோர்டான், லெபனான், போன்ற) ஆதரவு அரசுகளுடனும் கூட மோதல் தொடங்கிய பின்பு உள்நாட்டுப்போர், அழிவு ஆத்திரம் என்கிற ஒரு சோகப் பாரம்பரியத்தை PLO கொண்டிருந்த போதும், பல்வேறு வகைகளில் சிதறுண்டு கிடந்த பாலஸ்தீனியர்களை வரலாற்றில் முதன முதலாக ஒன்றிணைக்கும் பணியை அது செய்து முடித்தது. 1974இல் நடந்த ராபாத் அரபு உச்சி மாநாட்டில் PLO மட்டுமே பாலஸ்தீனியர்களின் சட்டபூர்வமான பிரதிநிதி என அறிவிக்கப்பட்டது. மேலும் பதினைந்து ஆண்டுகள் சீரழிந்து சின்னாபின்னப்பட்ட பிறகு மக்களின் ஒப்புதலையும் முன் எப்போதும கண்டிராத ஆதரவையும் வென்றெடுத்தது. இன்று அமெரிக்கா, இஸ்ரேல் தவிர உலகெங்கிலுமுள்ள நூற்றுக்கு மேற்பட்ட அரசுகள் PLOவை அங்கீகரித்துள்ளன.
ஜூன் 67இல் நடைபெற்ற சண்டை 1973 அக்டோபரில் மீண்டும் சண்டை நடக்க வழிவகுத்தது. கேம்ப் டேவிட் ஒப்பந்தங்களுக்கும் (1979), லெபனான் ஒப்பந்தங்களுக்கும் (1979; 82) வழிவகுத்தது. முதல் உலகப் போருக்குப் பின் காலனியப் பேரரசுகள் உருவாக்கிய இரண்டு அரசு அமைப்புக்களும், மத்திய கிழக்கை ஆள்வதற்கு மேலைநாடுகள் பயன்படுத்திய அரசியலும் சிதைவிற்கோ எல்லைச் சச்சரவிற்கோ வழி வகுக்கும் என்ற 1967இன் எச்சரிக்கையை ஈரானில் நடந்த இசுலாமியப் புரட்சியும், ஈரான் - ஈராக் போரும் நிறுவின. இசுலாமிய ஈரானும் யூதவெறி இஸ்ரேலும் தேசியங் கடந்த வல்லரசுகளாக வளர்ந்துவிட்டன. அவை மேலைநாட்டுப் பொருளாதாரத்தை விரும்பிச் சார்ந்திருந்தன. தனித்தும் செயல்பட்டன. அதேபோல் பாலஸ்தீன இயக்கமும் ஆசியஆப்ரிக்கலத்தீன் - அமெரிக்க நாடுகள் மாபெரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களாக
பிரவாதம் - ஜூலை 2005 35

Page 21
உருவெடுத்த விடுதலைத் தேசியம் என்பதோடு தொடர்புடைய பன்னாட்டுப் பரிமாணத்தையும் பெற்றது. அரபுநாடுகளைப் பொறுத்தமட்டில் பெருமளவில் ஊழல்மிக்க எதேச்சதிகார ஆட்சிகளைப் பெற்றிருந்தன. அவற்றால் தம் எல்லைகளைக் காத்துக்கொள்ள முடியவில்லை. உள்நாட்டு மக்களை ஒடுக்குகிற, சனநாயக உரிமைகளைப் பறிக்கிற உள்நாட்டு ராணுவங்களையே அவை நம்பியுள்ளன. தம் எண்ணெய் வள வருவாயையோ, சரியும் மூலவளங்களையோ சரியாகக் கையாள முடியவில்லை; அமெரிக்கச் சார்பில் ஊன்றி நிற்கின்றன. அமெரிக்காவோ இஸ்ரேலுக்குச் சார்பாக இருக்கிறது.
1967க்கு முன்னால் இஸ்ரேலும் அதன் ஆதரவாளர்களும் தம் முன்னேற்றத்துக்குத் தற்செயலாக நேர்ந்த முட்டுக்கட்டைகளில் ஒன்றாகப் பாலஸ்தீனியர்களை ஒதுக்கித்தள்ள முடிந்தது. 1967க்குப் பிறகு அதிகாரபூர்வ இஸ்ரேலிய மற்றும் யூதவெறி மறுப்புக்கள் என்பன அறிவுத்துறை அயோக்கியத்தனங்களாகவும் திருத்தியெழுதப்பட்ட வரலாறுகளாகவும் வடிவெடுத்து முழங்குகின்றன. இவை யதார்த்தத்திற்குப் புறம்பான போலிகளாகவே உள்ளன. இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இறுதியாக நடந்த மோதல் ஒரே நேரத்தில் இரண்டு மட்டங்களில் நடந்தது. அடிப்படையில் இது காலனியத்திற்கும் தேசிய ஆயுத எழுச்சிக்கும் இடையிலான போட்டியாக உள்ளது. இரண்டாவது மட்டம், சித்தாந்த அரசியல்/பண்பாடுச் சொற்களில் சொல்வதானால் பொருளியல் சார்பு, காலனிய ஆக்கிரமிப்பு, அதிகரித்துவரும் இராணுவ மயமாக்கல் ஆகிய முடிவில்லாப் பிரச்சினைகளில் புதைந்துபோன ஒரு இயக்கத்திற்கும் எல்லாவகைகளிலும் விழிப்புணர்வு பெற்றுத் தன் சொந்த வரலாற்றை அறிந்து கொண்டுள்ள எண்ணற்ற மூன்றாம் உலக விடுதலை இயக்கங்களுடன் நேரடியாக இணைப்புற்று வளர்ந்து வரும் புரட்சிகர அமைப்பிற்கு மிடையேயான போராட்டமாகவும் உள்ளது.
இந்த அடிப்படையை மாற்றிக்கொள்ளாமலேயே நான் தயக்கத்தோடு இன்னொன்றையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒட்டு மொத்தமான மோதல் சூழலின் கொடுமையையும் மீறி 1967க்குப் பிறகு சகவாழ்வு குறித்த மனிதநேய மாதிரிகளைத் தட்டுத்தடுமாறித் தேடிய சிந்தனை மிக்க சில இஸ்ரேலியரும் பாலஸ்தீனியரும் இணைந்தனர். தொடக்ககாலக் காலனியவாதிகளைப் போலவே யூத வெறியர்களும் நடந்துகொண்ட போதிலும் இஸ்ரேலியர்கள் வெள்ளை ஆபிரிக்கரோ, பிரெஞ்சு அல்ஜீரியர்களோ அல்லர் என்பதைப் பலர் புரிந்துகொண்டனர். இஸ்ரேல் என்பது ஒரு உண்மையான சமூகத்தின் உண்மையான அரசு. இருதரப்பு மக்களும் ஒரே நிலப்பரப்பிற்காகத்தான் போராடுகிறார்கள். பயங்கரமான ஒடுக்குமுறைக்கும் அழித்தொழிப்பிற்கும் ஆளாகியிருந்த ஓர் இனம் இப்போது மற்ற தரப்பு மக்களை ஒடுக்கும் நிலையில்
36 பிரவாதம் - ஜூலை 2005

உள்ளது. இம்மக்களின் ஒருங்கிணைவையும் விரக்தியையும் இந்த ஒடுக்குதல் துரிதப்படுத்தியிருக்கிறது. பாலஸ்தீனியர் மற்றும் இஸ்ரேலியர்களின் ஒரு தலைமுறை முழுவதுமே ராணுவ ஆக்கிரமிப்பை மட்டுமே அறிந்துள்ளனர் என்பதையும் நாடற்ற பாலஸ்தீனியர்களையும் பகைவர்களின் கொலைகார நோக்கை மட்டுமே அறிந்தவர்களாக உள்ளனர் என்பதையும் எண்ணிப்பாருங்கள்!
------
மேலைநாட்டுக் கலாச்சாரச் சொல்லாடலில் ஆதிக்கம் செலுத்துகிற யூதவாத நோக்கினைச் சற்று விவரமாய்ப் பார்ப்போம். அதே நேரத்தில் இத்தகைய போலித்தனமான சொற்புரட்டல்களுக்கும் அறிவுத்துறை அயோக்கியத்தனங்களுக்குமெதிரான ஊக்கமுள்ள பாலஸ்தீன எதிர்ப்பு வளர்ந்து வருவதையும் சுட்டிக்காட்ட வேண்டும். அதிகாரபூர்வமான யூதவாத நிறுவனங்களுக்கும் அதிகாரபூர்வமற்ற யூதவாத நடைமுறைக்கு மிடையேயுள்ள வேறுபாடுகளை முதலில் குறிப்பிட்டாக வேண்டும். 1980களின் மத்தியில் தோன்றிய டாம் சேகோவ், பென்னி மோரிஸ் போன்ற சில இளம் இஸ்ரேலியத் திரிபுவாத வரலாற்றாசிரியர்கள் யூதவாதிகளாக இருந்தபோதிலும் அவர்களின் படைப்புகள் கடந்த காலத்தை அறிய வேண்டுமென்ற மெய்யான ஆர்வத்தோடு செய்யப்பட்டவை. பொய் சொல்லவும் கடந்த காலத்தை மறைக்கவும் விரும்பாமல் 1948இன் பயங்கரங்கள் பற்றி அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நிறுவனமயமாகிவிட்ட அவர்களது சக வரலாற்றாசிரியர்கள் பழைய மயக்கத்துடனேயே எழுதுகிறார்கள். தம்மை எதிர்த்தால் பாலஸ்தீனியர்கள் பயங்கரவாதிகள், இல்லாவிட்டால் எடுபிடிகள். 1948இன் பழைய கட்டுக்கதைகளை எப்படியும் காப்பாற்றுவது அவர்களது நோக்கம்.
இதைவிட அதிகமாகக் கவனத்தில் படுவது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய யூதர்களுக்கிடையிலான சொல்லாடல்களிலுள்ள முரண்பாடுதான். அமெரிக்க யூதவாதிகளிடையே உள்ளதைக் காட்டிலும் அதிகமான விவாதங்களும் கலந்துரையாடல் சுதந்திரங்களும் இஸ்ரேலியர்களிடம் உள்ளன. அமெரிக்கர்கள் வெட்கங்கெட்ட முறையில் இஸ்ரேலைப் பொய்யாய்ப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். 1980களில் ரீகனின் ஆட்சிக் காலத்தில் உலகெங்கிலும் உள்ள சர்வாதிகார அரசுகளுக்கும் வலதுசாரி ஆயுதக் கிளர்ச்சிகளுக்கும் இழிவான முறையில் உதவிகளைச் செய்தனர். அமெரிக்க யூதவாதிகள் வலது எல்லையில் நின்று இஸ்ரேலை ஆதரித்தனர்.
1970களின் மத்தியில் அமெரிக்க யூதவாத இஸ்ரேலிய ஆதரவாளர்கள் அமெரிக்க அரசியலரங்கில் ஒழுங்கமைக்கப்பட்டு
பிரவாதம் - ஜூலை 2005 37

Page 22
பிரமாதமான செயல் தந்திரத்துடன் வெளிப்பட்டனர். அமெரிக்க காங்கிரசில் சட்டங்கள் இயற்றும் நடைமுறையிலேயே இவர்களால் செல்வாக்குச் செலுத்த முடிந்தது. செனட்டிலும் காங்கிரசிலுமிருந்த முக்கியப்புள்ளிகள் பலரும் கிராண்ஸ்டன், இனெவை, ஸ்பெக்டர், கேஸ்டன், லீஹி, சான்போர்டு, ஃபாசல், லெவின், ஒபெ, ஃபெய்கான், ஒல்ப் போன்றோர் யூத பொது விவகாரக் குழு’விடமிருந்து நிதியுதவி பெற்றவர்கள். கென்னடி, மொய்னிஹான், டி. அமெட்டோ, டாட், கோலார்ஸ், கூஅமா, பிடென், கெம்ப் டோல் போன்றோர் முழுமையாக வலதுசாரி யூதவாதிகளோடு தொடர்புடையவர்கள் இஸ்ரேல் செய்வதையெல்லாம் நியாயமென ஆதரிப்பவர்கள். ஆனால், உலகில் வேறெங்காவது இத்தகைய ஆக்கிரமிப்பு நடந்தால் அதனைத் தாக்குபவர்கள். ஜஸ்ஸி ஜாக்சன் மற்றும் சில விரல்விட்டு எண்ணக்கூடிய நேர்மையான கறுப்பு அதிகாரிகள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.
சிவில் சமூகத்திலும் இது குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. 1967க்குப் பின் இந்த யூத ஆதரவுக் குழுவினர் தமது செயல்பாட்டை அதிகரிக்க, அதிகரிக்க எதிர்ப்புகளும் அதிகரித்தன. அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகாரக்குழு, ‘அவதூறு எதிர்ப்பு அணி போன்ற அமைப்புகள் அமெரிக்கப் பொதுவாழ்வில் இஸ்ரேல்மீது தோன்றும் மாற்றுக் கருத்தை நசுக்க எவ்வளவு முயன்றனவோ அவ்வளவுக்கு எதிர்ப்புக்களும் தோன்றின. கருத்துக்களையும் விவாதங்களையும் கட்டுப்படுத்தும் யூதவாத அமைப்புகளின் முயற்சிகளின் மீதான முன்னோடி ஆய்வுநூல் ஆல்ப்ரெடு லிலியன்தால் எழுதிய யூதத் தொடர்’ என்பதாகும் (1978). இஸ்ரேல் ஒரு குற்றங்குறையற்ற லட்சிய அரசு என்கிற கருத்துக்கு எதிரான சிந்தனைகள் எதையும் வெளிப்படுத்தவிடாதபடி பதிப்பகங்கள், இதழ்கள், வானொலி, தொல்லக்காட்சி முதலியவை எவ்வாறு தடுக்கப்பட்டன என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியது, இந்நூல். லிலியன்தாலுடைய நூல் உண்மையான பெயர்களையும் விவரங்களையும் சுட்டிக்காட்டியபோதும் பெரிய பத்திரிகைகள் அதனைப் புறக்கணித்தன. எனினும், லிலியன்தால் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டு மற்றவர்கள் அஞ்சி எழுதுவதை நிறுத்தவில்லை. அப்படி எழுதுவோருடைய எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளிவந்துள்ள இரு குறிப்பிடத்தக்க நூல்கள் நோம் சோம்ஸ்கியின் The Fateful Triangle (1983) மற்றும் பால் ஃபின்ட்லேயின் ‘அவர்கள் பேசத் துணிந்தனர்’ (1985).
இஸ்ரேலிய ஆதரவாளர்கள், விமர்சிப்பவர்கள் உருவாக்கப்பட்ட புனைவுகளைக் கட்டவிழ்ப்பதைத் தம் முதற்பணியாகவும் பின்னர் உண்மை ஆதாரங்களை எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு நடுநிலையாக முன்வைப்பதையும் மேற்கொள்கிறார்கள். பாலஸ்தீனத்தைப் பற்றிய எதுவும்
38 பிரவாதம் - ஜூலை 2005

நிரூபணங்கள், மறுப்புக்கள், எதிர்ப்புகள் இல்லாமல் அமெரிக்க சிவில் சமூகத்தில் பரவ முடியாது என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். பாலஸ்தீனிய வரலாற்றைச் சொல்வதுகூட சகிக்க முடியாததாகவும் திருப்பித் திருப்பி அழுத்திச் சொல்லப்பட வேண்டியதாகவும் மாறிவிடுகிறது. பாலஸ்தீன அடையாளம் குறித்த கருத்தாக்கத்திற்கு எதிரான கடுமையான தாக்குதலுக்குச் சிறந்த உதாரணம் ஜோன் பீட்டர் எழுதிய “நினைவுக்கெட்டாத காலத்திலிருந்து” என்ற நூல். இந்நூல் அமெரிக்காவில் வெகுவாகப் பாராட்டப்பட்டதெனினும் இஸ்ரேலில் சீந்துவாரில்லை. பாலஸ்தீனியர் உண்மையில் அக்கம் பக்கத்து அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் யூத நாட்டின் செழுமையால் கவரப்பட்டு 1946-48 கால கட்டத்தில் பாலஸ்தீனத்திற்கு வந்தனர் என்பது பீட்டரின் வாதம். ‘யூத புத்தக சங்கத்தால் பரிசளிக்கப்பட்ட இந்நூல் மகத்தான வரலாற்றுச் சாதனை என பார்பாரா டச்மேன் போன்ற தொழில் முறை வரலாற்றாசிரியர்களாலும் சால் பெல்லோ போன்ற முக்கிய பிரமுகர்களாலும் தூக்கிப் பிடிக்கப்படுகிறது. அப்புத்தகத்தில் திரிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் மிகுந்துள்ளன என நிறுவப்பட்ட பின்னரும்கூட இவ்வாறு போற்றப்பட்டது.
பீட்டரின் நூலும் சரி, பயங்கரவாதம் பற்றி வந்துள்ள இதர நூல்களும் சரி, லெபனானை இஸ்ரேல் ஆக்கிரமித்ததையே (1982) வரலாற்று மூலமாகக் கொள்கின்றன. பெய்ரூட் முற்றுகையின் கொடுமைகளைத் தொலைக்காட்சிச் செய்திகள் தோலுரித்துக்காட்டியதால் முதல்முறையாக இஸ்ரேலும் அதன் ஆதரவாளர்களும் அதிர்சியடைந்தனர். தொடர்ச்சியாக சபராவிலும் ஷாட்டில்லாவிலும் நடந்த படுகொலைகள், அமெரிக்க லெபனான் கொள்கையில் ஏற்பட்ட படிப்படியான முறிவு, வியக்கத்தக்க வகையில் பாலஸ்தீனியர்கள் சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டமை, பெகின் தோல்வி அடைந்தது ஆகிய அனைத்தும் யூத வெறி அமைப்புகளின் அரசியல் மற்றும் பண்பாட்டு அத்துமீறல்களைக் கிளறிவிட்டன. யாருடைய விமர்சனங்கள் அதிகக் கவனம் பெறுகின்றனவோ அவர்களை எதிரிகளின் பட்டியலில் வைத்து AIPAC/ADL போன்ற யூதவெறியமைப்புகள் சிறுநூல்களை வெளியிட்டன. லெபனான் போரைப் பற்றிய செய்தி அளிப்பில் செமிட்டிக் எதிர்ப்புக்குரல் ஒலிப்பதாக வாஷிங்டன் போஸ்ட் என்.பி.சி போன்ற அமைப்புகளை யூதவெறிக் குழுக்கள் தாக்கின. யூதவெறி பிரச்சாரங்களில் இரண்டு அம்சங்கள் முன்னிலைப்பட்டுத்தப்பட்டன. முதலாவது இஸ்ரேலை விமர்சிப்பது என்பது செமிட்டிக் எதிர்ப்பு என்பதன் வெளிப்பாடே மற்றது, இஸ்ரேலை ஆயுதங்கள் தாங்கியோ பண்பாட்டு முனையிலோ எதிர்ப்பது சாராம்சத்தில் பயங்கரவாதமின்றி வேறில்லை. ஆனால், யூதவெறி அமைப்புகளின் வாய்ச்சவடால்களை நம்புகிற
பிரவாதம் - ஜூலை 2005 39

Page 23
கூட்டத்தின் அளவு குறைந்து வருகிறது. தென்னாப்பிரிக்காவுடனும், ஷாவின் ஈரானுடனும், சோமேசாவின் நிகராகுவாவுடனும் மூன்றாவது உலகிலுள்ள ஒவ்வொரு பிற்போக்கான ஆட்சியுடனும் உறவாடுகிற - அமெரிக்காவுடனும் சேர்ந்து ஒதுக்கப்பட வேண்டிய சர்வ தேசிய தீண்டத்தகாத நாடாகவே இஸ்ரேல் இன்று கருதப்படுகிறது. இஸ்ரேலை ஆதரிப்பதில் முற்போக்காக இருப்பதாகக் காட்டிக் கொள்பவர்கள் வேறெப்போதைக் காட்டிலும் இப்போது அதிகமாக இஸ்ரேலின் நல்ல குறிக்கோள்களைப் பற்றிய புனைவுகளைக் காப்பாற்றுவதற்காக அதிகம் கத்தித் தீர்க்கவேண்டியிருக்கிறது. மிசேல் வால்சர் போன்றோர் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இதர நாட்டு ஒடுக்கு முறைகளை எதிர்த்துக் கொண்டே இஸ்ரேலில் அவை கையாளப் படும்போது அவற்றை ஆதரிப்பது இவர்களது நடவடிக்கையாக இருக்கிறது.
பயங்கரவாதம், மத ஆர்வம் ஆகியவற்றைக் கையாள்வதிலும் இதைப் போன்று நெளிவு சுழிவே மேற்கொள்ளப்படுகிறது. இஸ்ரேல் வெளிப்படையாகவே மதக் கருத்துகளின் அடிப்படையில் ஆளப்படுகின்ற ஒரு அரசு. இசுலாமிய அடிப்படைவாதத்தைத் தாக்கிக்கொண்டே யூத மத அடிப்படைவாதத்தை மன்னிப்பது மேற்குறிப்பிட்டோரின் செயல் தந்திரமாகியுள்ளது. ரபிகானே இவர்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. பயங்கரவாதம்' என்பதையும் ஒரு வாய்ப்பான கருவியாக அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். "லெமோன்டே டிப்ளமாடிக்’ இதழில் எழுதும் போது (பிப். 86) அம்னோன் கேப்லியோக் குறிப்பிடுவதாவது பாலஸ்தீனியத் தேசியம் 1970களின் நடுவில் வட்டார அளவிலும் பன்னாட்டளவிலும் நம்பிக்கையைப் பெற்றது. அப்போது இஸ்ரேலிய அதிகாரிகள் நன்கு தெரிந்தே அதனைப் பயங்கரவாதம்’ என வகைப்படுத்தும் கொள்கையை மேற்கொண்டனர். அங்கே குற்ற வன்முறை நிலவியதென்பதையோ அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பது கடும்குற்றம் என்பதையோ யாரும் மறுக்க மாட்டார்கள். பிரச்சினை என்னவெனில் வலியோரைக் காப்பாற்றும் அரசியல் ஆயுதமாகப் பயங்கரவாதம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி அப்பாவி மக்கள் மீது அதிகார பூர்வமான ராணுவ நடவடிக்கையைச் சட்டப்பூர்வமாக்குவதேயாகும். (முன்னாள் பயங்கரவாதிகளான பெகின், ஷாமிர் போன்றோர் இன்று இஸ்ரேலை ஆளுகின்றனர் என்கிற உண்மை நினைவிலிருந்து துடைத்தழிக்கப்படுகிறது) ‘நியூயார்க் டைம்ஸ்’ இதழில் (1987 ஜூலை 1) ஸ்டீபன் எங்கெல் பெர்க் எழுதிய செய்தி குறிப்பிடத்தக்கது. பெஞ்சமின் ரொட்டான்யாகு பயங்கரவாதம் பற்றித் தொகுத்துள்ள நூல் (1985) தம்மீது அதிகம் தாக்கம் செலுத்தியுள்ளதாக அதிபர் ரீகன் சொன்னது அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நூலில் "பயங்கரவாதம்’ என்பது இசுலாம், பாலஸ்தீனியர்கள் மற்றும் கே. ஜி. பி. யுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
40 பிரவாதம் - ஜூலை 2005

காங்கிரசின் ஒப்புதலைக்கூடப் பெறாமல் எப்படி இதர அதிபர்கள் பாலஸ்தீனியர்களுக்கெதிரான தன்முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்ற விவரங்களும் அந்நூலில் உள்ளன.
இஸ்ரேலின் யூதவாதக் கொள்கை எதிர்ப்பாளர்களின் விமர்சன நூல்களைப் பற்றி இப்போது காணலாம். அமெரிக்க மற்றும் மேற்கு நாட்டுச் சொல்லாடல்களில் ஆதரவு பெற்றுவரும் யூதவாத நோக்கு நிலையை பாலஸ்தீனர்கள் எப்போதுமே எதிர்த்து வந்துள்ளனர். இந்த எதிர்ப்பு அதிக அளவில் வெளியே தெரியாதிருந்திருக்கலாம். ஆனால், யூதவாதத்தின் குருட்டுத்தனம், சித்தாந்த பலவீனம், வெட்கங்கெட்ட பொய்மையாக்கம் ஆகியவற்றிற்கெதிரான பாலஸ்தீனியரின் தாக்குதல் அதிகரித்துக்கொண்டே வந்தது. இங்கே நாம் அறிவுத்துறையையும் கவர்ச்சி வாதத்தையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். மத்திய கிழக்கு குறித்த மேலை அறிவுத்துறை - குறிப்பாக அமெரிக்க அறிவுத்துறை எழுத்துக்கள் என்பன பிராந்திய அரசியலில் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளன. இன்று மத்தியக் கிழக்கின் ஏதாவது ஒரு அம்சத்தைப் பற்றி ஆராய்பவர்கள் எல்லோருமாக இல்லாவிட்டாலும் பலர் யூத - பாலஸ்தீனச் சச்சரவால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். பெரும்பாலான மரபுவழி கீழைத்தேயவியலாளர்கள் யூதவாத நோக்கால் கவரப்படுகிறார்கள். இஸ்ரேலிய ராணுவ ஆக்கிரமிப்பின் அரபு அதிகாரிகள் இஸ்ரேல் மற்றும் மேலை நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களின் கீழைத்தேயத் துறையில் பயின்றவர்களாக உள்ளனர். எனவே, பாலஸ்தீனியர்களுக்கு அனுதாபம் காட்டுகிற அராபியர்களின் மனித உரிமைகளை மதிக்கிற நூல்களும் கட்டுரைகளும் மேலை நாட்டில் மிகவும் அபூர்வமாகும். சில விதிவிலக்குகள் சொல்வதானால் வரலாற்றாசிரியர்கள் திபாவி, ஆல்பர்ட் அவ்ராணி இங்கிலாந்து) பிலிப் இட்டி (அமெரிக்கா) ஆகியோரது படைப்புக்களைக் குறிப்பிடலாம்.
1967க்குப் பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டன. அரபியில் எழுதப்பட்ட மூலாதாரங்கள் திடீரென இலண்டன், பாரிஸ் அல்லது நியூயார்க்கில் கிடைக்கத் தொடங்கினவா என்கிற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். ஒரு அரபிக் கவிஞரோ, புதின ஆசிரியரோ தனது படைப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது இன்னும் கடினமாகவே இருக்கிறது. பெரும்பான்மையான மேலை வெளியீட்டாளர்கள் அரபியை ஒரு “பிரச்சினைக்குரிய மொழியாகவே கருதுகின்றனர். அரபி அறிவுத்துறை மற்றும் இதழியல் துறைப் படைப்புகளும் இவ்வாறே ஒதுக்கப்படுகின்றன. 1967க்கு முன்பு பாலஸ்தீனியர்கள் பற்றிய சில படைப்புக்கள் மட்டுமே ஆங்கிலத்தில் கிடைத்தன. பாலஸ்தீனிய விவாதத்தின் மையமாகிய 1948 நிகழ்வுகள் குறித்த
பிரவாதம் - ஜூலை 2005 41

Page 24
அராபியக் கண்ணோட்டத்திலான நூல்கள் மேலை ஆவணக் காப்பகங்களில் எளிதில் கிடைப்பதில்லை. எனினும், 1967க்கு முன் அதிகம் பயன்படுத்தப்படாத சில நல்ல நூல்களும் கட்டுரைகளும் இருக்கத்தான் செய்தன. எடுத்துக்காட்டாக ஜார்ஜ் அன்டோனியஸ் எழுதிய ‘அரபின் விழிப்பு’, சாமி ஹடாவி எழுதிய ‘கசந்த அறுவடை ஆகிய இரண்டையுங் குறிப்பிடலாம். 1967க்குப் பின் எழுதப்பட்ட சிறந்த புலமைத் தெளிவுள்ள இரண்டு நூல்களையும் சுட்டலாம். அவை: இப்ராஹீம் அப் லுவோத் தொகுத்தளித்த 1967இன் அரபு - இஸ்ரேலிய தகராறு’ (1967), இரண்டாவது: பலர் சுவைப்படத் தொகுத்த “பாலஸ்தீனிய உருமாற்றம்’ (1971).
1967க்குப் பின் அரபு மற்றும் பாலஸ்தீனியக் கண்ணோட்டத்தை மேலை நாட்டுப் பண்பாட்டில் மேலும் அதிகமாகக்கொண்டு செல்வது என வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட பல அரபு-அமெரிக்க அமைப்புகள் உருவாயின. இதனால் அரபியிலிருந்தும் ஹீப்ருவிலிருந்தும் மொழிபெயர்க்கப்பட்ட மூல நூல்கள் இறுதியாக வெளிவரத் தொடங்கின. இஸ்ரேலியர்களால் அதுவரை அமுக்கி வைக்கப்பட்டிருந்த பல நூல்கள் அப்போது வெளிவரத் தொடங்கின. இதர வகைகளிலும் கருத்து மாறுபாடுள்ள மரபு மீறிய படிப்பாளிகள் ஒருவருக்கொருவர் சந்திக்கவும் பேசவும் களம் அமைத்துக்கொடுத்தது போலாயிற்று. ‘அரபு - அமெரிக்கப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் சங்கம்’ என்பது அவற்றில் தலையாயது. இவை மேலை நாடுகளிலிருந்த நாடற்ற அராபியர்களை அமைப்பாக்கி, அராபியர்களையும் பாலஸ்தீனர்களையும் முதன்முதலாக மதச்சார்பற்ற வரலாற்றுப் பாத்திரங்களாக மேலை நாடுகளில் சித்திரிக்கும் அறிவுத்துறை மற்றும் வெகுமக்கள் படைப்புக்களை ஆதரிக்க உதவின. இம்முயற்சிகளின் விளைவாக மஹ்முத் தர்விஷ், எமில் ஹபீபி, தெளபிக் சையத், கசான் கனாஃபானி, எமில் தெளமா, சாகர் கலிஃபே, சாடெக் அல் அசம், எலியாஸ் கெளரி மற்றும் பல பாலஸ்தீனிய மற்றும் அரபு எழுத்தாளர்களின் தலைமுறையொன்று மேற்கில் அறிமுகமானது. அரபு ஆய்வுக் காலாண்டிதழ், பாலஸ்தீன ஆய்விதழ், AAGV செய்திமடல், MERIP அறிக்கைகள், மையக்கிழக்கு ஆய்வுகள், கஜெல் இங்கிலாந்து), தி லிங்க் இவையெல்லாம் யூத வாதத்தைப் பொதுவாக விமர்சனம் செய்பவைகளில் ஒரு சில. இவை அரபு மற்றும் பாலஸ்தீன யதார்த்தங்களின் மீதான புதிய நேர்மறையான விமர்சனப் படைப்புகளுக்கான மேடைகளாக விளங்கின. மேலும், ஜீடா மேகனஸைப் பின்பற்றி எல்மர் பெர்கர், இஸ்ரேல் ஷஹாக், நோம் சோம்ஸ்கி, மாக்சிம் ரொடின்சன், விவியா ரோகாச், அய். எம். ஸ்டோன் போன்ற யூத வாதத்திற்கெதிரான யூதர்களின் மாபெரும் விமர்சன முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இவர்களில் பலர் அரபு முயற்சிகளால் மேலை நாடுகளிலிருந்து ஆய்வுகள் மேற்கொள்ள
42 பிரவாதம் - ஜூலை 2005

உதவியளிக்கப்பட்டவர்கள். அதுவரை யூத ஆவணக் காப்பகத்தில் வெளியே தெரியாமலிருந்த ஆவணங்கள் பற்றிய ஆய்வுகள் பல தகவல்களை வெட்ட வெளிச்சமாக்கின. யூத வாதத்தின் கள்ளங்கபடமின்மை பற்றிய புனைவுகளைத் தகர்த்தெறிந்தன.
ஒரு கட்டத்தில் இந்த ஆய்வுகள் விவாதங்களை எதிர்கொள்ள நேர்ந்தன. 'மறுபக்கத்துடன்’ விவாதத்தில் ஈடுபடலாம் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது. பாலஸ்தீன விடுதலை இயக்கம் பெய்ரூட்டில் ஒரு வலிய தளத்தைப் பெற்றிருந்த வரையிலும், பாலஸ்தீனப் பிரச்சினையானது மையக் கிழக்கு நாடுகளின் எதிர்காலம் பற்றி மேலைநாடுகளில் நடைபெற்ற கொள்கை விவாதங்களின் மையமாக இருந்தவரையிலும் இந்த விவாதங்கள் தேவைப்பட்டன எனலாம். 1982இல் ஈரான்-ஈராக் போர் தொடங்கியது முதல், ரீகன் தலைமை ஏற்று அமெரிக்காவிற்கு மிகவும் பிடித்த கொள்கை இலக்காகப் ‘பயங்கரவாதம்’ நிறுவப்பட்ட பிறகு இந்த விவாதங்களில் ஒரு பின்னடைவு நேர்ந்தது. விவாதங்கள் புறக்கணிக்கப்பட்டன. உரையாடல்கள் தடைசெய்யப்பட்டன. “பாலஸ்தீனிய தேசிய ஒப்பந்தம்’ அல்லது “பாலஸ்தீனிய தேசியக் குழுவின் தீர்மானங்கள்’ ஆகியவற்றை வரிக்கு வரி அலசி ஆராய்வதை ஒரு காலத்தில் யூத அமைப்புகள் ஊக்குவித்தன. இப்போதோ பாலஸ்தீனியர்களுடன் தவிர்க்க இயலாமல் அறிவுத்துறை விவாதங்களில் ஈடுபட்டபோதெல்லாம் “பாலஸ்தீனிய பயங்கரவாத அமைப்பு' என்பன போன்ற முழக்கங்களால் அவை எதிர் கொள்ளப்பட்டன. விவாதத்திற்குப் பதிலளிக்க முடியாத போதும் உண்மைத் தகவல்களை மறுதலிக்க இயலாத போதும், “அவன் ஒரு பாலஸ்தீனியன், அல்லது சொந்த இனத்தையே வெறுக்கும் யூதன்' என்பது போன்ற அவரது சிறுபான்மை இன அடையாளத்தையோ “அவன் ஒரு வெளிப்படையான இடதுசாரி' என்பது போன்ற அவரது அரசியல் அடையாளத்தையோ தாக்குகின்றனர்.
காலனியத்திற்குப் பிந்திய தலைமுறையின் சாதனைகளை மறுதலித்து அராபிய உலகம் எவ்வாறு குறுங்குழுவாதம் மற்றும் பிராந்திய தேசிய வெறியில் வழுக்கி விழுந்தது என்பதைச் சொல்லாமல் 1982க்குப் பிந்திய விவரணம் முழுமையடையாது. பன்னாட்டரங்கில் அரபு உலகம் கலகலத்துக் கிடக்கிறது. பல அரசுகள் முதுகெலும்பற்ற கோழைகளாய் அமெரிக்காவிற்கு அடங்கி நடக்கின்றன. எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக நிகரகுவாவின் கோன்ட்ராக்களுக்கு சவூதி நிதியளிப்பதைக் குறிப்பிடலாம். பெரும்பாலான அரபு ஆட்சிகள் அரபு ஒற்றுமை என்ற கருத்தையே சுத்தமாக விட்டுவிட்டன. இதனால் பாலஸ்தீனத்திற்குப் பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டுவிட்டன. சில சமயங்களில் அவை பால்ஸ்தீனத்திற்கு எதிராகவே நடவடிக்கையும்
பிரவாதம் - ஜூலை 2005 43

Page 25
எடுத்துள்ளன (எகிப்து, ஜோர்டான், டுனீசியா, மொராக்கோ). இன்னும் சில நாடுகள் இஸ்ரேலுடனும் மத வலதுசாரிகளுடனும் நேரடியாகக் கைகோர்த்துக்கொண்டுள்ளன. பாலஸ்தீனிய அராபிய தேசியவாதத்திற்கும் அராபிய அரசுகளின் பிராந்திய வாதத்திற்குமிடையேயான நெருக்கடி என்பது 1982க்குப் பின்பு அதிகமாகியுள்ளது என்றே நினைக்கிறேன். ஒரு சிறு எடுத்துக்காட்டு 1983இல் ஐ. நா. அவையின் திட்டப்படி தொகுக்கப்பட்ட “பாலஸ்தீனிய மக்கள்’ என்கிற கட்டுரை பல அரபு நாடுகளால் எதிர்த்துத் தடுக்கப்பட்டது. ஏனெனில், அக்கட்டுரையில் மேற்குக் கரை மற்றும் காசா பகுதியையும் தாண்டி பாலஸ்தீனியர்களின் பகுதி குறிக்கப்பட்டுள்ளதாம்
ஆனால், பாலஸ்தீன வாழ்க்கையின் சிக்கலான யதார்த்தங்களை இன்று உலகம் தவிர்க்க இயலாமல் ஏற்றுக்கொண்டுள்ளது. அதிகார பூர்வ இஸ்ரேலிய நிலை தர்மசங்கடத்திற்குள்ளாகியுள்ளது. பனிப்போரும் மறு உருவாக்கம் செய்யப்பட்ட கருத்தியலும் பன்னோக்கிலான பதிலிகளைச் சிந்தனைக்குப் படைத்துள்ளது. எனினும், இவை எல்லோரது வழியையும் அடைத்துவிடவில்லை. ஒரு புதிய தலைமுறை அறிஞர்கள் பொருத்தமான மொழிகளைக் கற்றனர் பிரதிகளை வாசித்தனர். மத்திய கிழக்கு அரபிய மக்களைப் பற்றி ஆர்வங்காட்டினா. கீழை வறட்டுக் கோட்பாடுகள் எல்லாப் பக்கங்களிலிருந்தும் கடுமையாகத் தாக்கப்பட்டன. புதிய விமர்சன முறைகளும் அவற்றை ஒட்டிய அரசியல் அணுகுமுறைகளும் 'அராபிய மனம்'இசுலாமிய சமூகம்’ போன்ற வெற்றுரைகளைத் தகர்த் தெறிந்துவிட்டன. மார்க்சியம், பெண்ணிலை வாதம், பொருள்கோளியல் (hermeneutics), கட்டவிழ்ப்பு. கலாச்சாரக் கொள்கை ஆகியவை பழையனவற்றைக் காலத்திற்கொவ்வாதவையாக்கிவிட்டன. மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறைகளில் நவீன கட்டமைப்புக்கள் தோன்றலாயின. இறுதியாக அறிவிற்கும் அதிகாரத்திற்குமிடையேயான இணைவு என்பது எதிர்கொண்டு ஆராயப்படவேண்டிய ஒன்று என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. எழுச்சியூட்டும் இச்சூழலில் பாலஸ்தீனியப் பிரச்சினைதான் மையமாக இருந்தது. உதாரணத்துக்கு ஒன்று அமுக்கப்பட்ட கதையாடல்கள் மற்றும் சட்ட விரோதமாக்கபபட்ட விளிம்பு மக்களின் கண்டெடுக்கப்பட்ட வரலாறு பற்றிய பொது விவாதமாகக் கோட்பாட்டுத்தளம் ஆனபோது, பொது விவாதத்திற்கும் அதனுடைய ஓர் எடுத்துக்காட்டிற்கும் இடையேயான நேரடியான உறவைப் பலரும் சுட்டிக் காட்டினர். இவ்வாறு கோன்ட்ராக்களை எதிர்த்து சாண்டினிஸ்டாக்களை ஆதரித்தோரும், அணு ஆயுதப் பரவலுக்கு எதிராகவும் ஆயுதக் குறைப்புக்கு ஆதரவாகவும் அணி திரட்டியவர்களும் தென்னாபிரிக்காவிற்குப் பொருளாதாரத் தடைவிதிக்கக் கோரியவர்களும் பாலஸ்தீனியப் பிரச்சினையில் அமைதி காப்பதில் தர்ம சங்கடத்திற் குள்ளாயினர். 4 4 பிரவாதம் - ஜூலை 2005

இவ்வாறாக இது தொடர்பான கவனமான விவாதம் மெல்லத் தொடங்கலாயிற்று. எதிர் நிறுவன மையங்களாகவும் எதிர்ப்பு வடிவங்களாகவும் அவை வெளிப்பட்டன. பல்கலைக்கழக மேடைகள், கோவில் அரங்குகள், பிரக்ஞை பூர்வமான எதிர் நிறுவன வெளியீடுகள் ஆகியவை இதற்குப் பயன்படுத்தப்பட்டன. மைய நீரோட்டத்தொடர்பு சாதனங்களிலும் அதிகார பூர்வமான பண்பாட்டுத் தளங்களிலும் சாத்தியமில்லாதபோது இத்தகைய மேடைகளைப் பயன்படுத்துவது அவசியமாயிற்று. நான் முன்பே சொன்னபடி பாலஸ்தீனியர்களுக்கு அவர்களது வரலாற்றை மீட்டுத் தருவது என்பது இந்நடவடிக்கைகளின் முக்கிய குவிமையங்களிலொன்றாக இருந்தது. இந்த அற்புதமான அறிவுத்துறைச் சாதனையில் இன்னும் ஒரு முக்கியமான குறைபாடு இருக்கிறது. இத்தகைய சொல்லாடல்களிலும் அராபிய ஆதாரங்கள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாக உள்ளதே அக்குறைபாடாகும். 1948க்கு முன்னும் பின்னும் பற்றிய எண்ணற்ற தரமான ஆவணச் சான்றுகளும் இலக்கிய ஆதாரங்களும் கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஏராளமாகப் பல்கியுள்ளன. பாலஸ்தீன ஆராய்ச்சி மையம் என்று ஒன்றும் உள்ளது. அங்கிருந்த பழைய ஆவணங்கள் எல்லாம் இஸ்ரேலியப் படையினரால் கொண்டுசெல்லப்பட்டு (1982 செப்) பின்னர் திரும்பித் தரப்பட்டன. அந்த மையம் 1948க்கு முந்திய பாலஸ்தீன சமூகம் பற்றிய சகல துறைத் தரவுகளையும் திரட்டித் தொகுத்துள்ளது. ‘ஷ9ன் பாலஸ்தீனியா’ என்கிற அதன் இதழ் பாலஸ்தீனிய வரலாற்றில் பல்வேறு பாத்திரங்களை மேற்கொண்டவர்களது செழுமையான பேட்டிகள், நினைவலைகள், வாய்மொழிச் சான்றுகள் போன்றவற்றைத் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளது. அரபியிலுள்ள இத்தகவல்களில் மிக மிகச் சில பகுதியே பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலை நாட்டுச் சான்றுகளை மட்டுமே நம்பத்தகுந்த ஆதாரங்களாகக் கருதுகிற இப்போதைய ஆய்வு முறைகளை நாம் கேள்வி கேட்க வேண்டியுள்ளது.
ஓர் மிகப் பரந்த அளவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. 19ஆம் நூற்றாண்டுப் பிற்பகுதி அரபு - பாலஸ்தீனம் பற்றி இப்போது மிகவும் அதிகமாகத் தெரிந்துள்ளது. ஒட்டோமன், பிரிட்டிஷ் மற்றும் யூத ஆவணங்களைத் திறம்படப் பயன்படுத்தியதன் மூலம் பாலஸ்தீனத்தில் செழுமையானதும் ஒப்பீட்டளவில் அரசியல் மையப்படுத்தப்பட்டதுமான ஒரு சமுதாயம் இருந்ததை உறுதி செய்ய முடிகிறது. யூதவாதத்துடனான மோதலின் விளைவாகவே பாலஸ்தீன தேசியம் உருவாக்கப்பட்டது என்கிற பழைய கருத்து நீண்டகாலமாகவே அமுக்கப்பட்டுவிட்டது. அதுபோலவே பாலஸ்தீனிய அடையாளம் என்பது
பிரவாதம் - ஜூலை 2005 45

Page 26
ஒட்டோமன் பேரரசின் ஒரு கூறுதானேயொழிய வேறொன்றுமில்லை என்கிற கருத்தும் நொறுக்கப்பட்டுவிட்டது. பாலஸ்தீனியப் பிரச்சினை என்பது அராபிய அரசுகள் தங்கள் நலனுக்காக எழுப்புகிற ஒரு முழக்கந்தான் என்கிற கருத்திற்கு மாறாக அராபிய உலகில் பாலஸ்தீனியப் பிரச்சினை எப்போதுமே முக்கியமாகத்தான் இருந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிற வகையிலும் நல்ல ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. உண்மையில் பாலஸ்தீனப் பிரச்சினை என்பது வலுவற்ற அரசுகளின் மீது அவற்றின் விருப்பத்திற்கு மாறாகக் கீழிருந்த மக்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாகத் திணிக்கப்பட்ட மக்கள் பிரச்சினையாகும். யூதவாதிகள் குடியேறுவதற்கு முன்பே பல தலைமுறைகளாக பெரும்பான்மை அரபுக் குடியிருப்புகள் தொடர்ந்து இருந்து வந்ததும் இவ்வாராய்ச்சிகளால் நிறுவப்பட்டுள்ளது.
மேற்கு நாட்டு மையங்கள் குறித்து ஆய்வுகளையும் பாலஸ்தீனியர் முன் முயற்சி எடுத்து மேற்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். வாஷிங்டனிலுள்ள “பாலஸ்தீன ஆராய்ச்சி நிலையம்’ லீலு பிரியன் எழுதியுள்ள கனமான நூலொன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்க யூத அமைப்புக்களை அது நுட்பமாக ஆராய்கிறது. அவ்வாறே வாஷிங்டனிலுள்ள ஆராய்ச்சி மற்றும் பொதுக் கொள்கை பற்றிய பன்னாட்டு மையம் பாலஸ்தீனச் சிக்கல் பற்றியும், இஸ்ரேலிய அராபியம் பற்றியும், இஸ்ரேலிய அரசு பயங்கரவாதம் பற்றியும் அரிய ஆராய்ச்சித் தொடர்களை வெளியிட்டுள்ளது. பாலஸ்தீனியர்கள் பற்றி மேலும் மேலும் தெரியத் தெரிய இஸ்ரேலைப் பற்றியும் மென்மேலும் புதிய செய்திகள் வெளிக்கொணரப்படுகின்றன. ஜேன் ஹன்டரின் மாதாந்த வெளியீடான 'இஸ்ரேலிய வெளியுறவுகள்’ என்பதும் அவைகளில் ஒன்று. சிம்ச்சா ஃபளாப்பின் “இஸ்ரேலின் பிறப்பு - புனைவுகளும் உண்மைகளும்’ என்னும் நூலும் (1987) பெஞ்சமின் பெய்ட் - அல்லாமியின் “இஸ்ரேலியத் தொடர்பு என்னும் நூலும் சமகால வரலாறு குறித்த முக்கிய நூல்கள்.
இன்னும் பெருமளவில் பணி காத்திருக்கிறது. மேற்குக் கரையையும் காசாவையும் இஸ்ரேல் ஆக்கிரமித்து இருபதாண்டுகளாகிவிட்டன. அவற்றை விடுவிப்பதற்கு அதிக அளவு முயற்சிகளை இடைவிடாது செய்ய வேண்டும். நாம் நினைவில் பதிக்க வேண்டியது இதுதான் காலனியம் நிறுவியுள்ள 'உண்மை’ உட்பட எதுவும் மாற்றப்பட முடியாததல்ல. பல இஸ்ரேலியர் மற்றும் அவர்களுடைய மேலை நாட்டு ஆதரவாளர்களின் போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றம் குறித்த உற்சாகமூட்டும் அறிகுறிகள் இப்போது தென்படுகின்றன. அராபியர்களும் யூதர்களும் ஒரே சமுதாயமாய் இணைந்து வாழ்வதற்கான அரசியல் மற்றும் அமைப்பு வேலைகளை 1974
46 பிரவாதம் - ஜூலை 2005

முதற்கொண்டே பாலஸ்தீனியர் செய்து வருகின்றனர். தொடர்ந்து ராணுவ மயமாக்கல், முடிவற்ற போர் ஆகியவற்றிற்கு எதிராக மேற்குறித்த கருத்தின் நியாயத்தை மேலும் மேலும் அதிக யூதவாதிகளும் கண்டுணரத் தொடங்கியுள்ளனர். இரு இனத்தாரும் இணைந்து செய்கிற அரசியல் மற்றும் அறிவுத்துறைப் பணிகள் மேலும் அதிகமாக வேண்டும்.
தமிழில் பேராசிரியர் சே கோச்சடை
(அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல், பலஸ்தீனப்) பிரச்சினையும் அறிவுத்துறைப் புரட்டல்களும் ஆகிய இருகட்டுரைகளும் ரவிக்குமார் தொகுத்த ‘பணிய மறுக்கும் பண்பாடு’ என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டவை. அனுமதியளித்த ரவிக்குமாருக்கு நன்றி. "பலஸ்தீனப் பிரச்சினையும் அறிவுத்துறை அயோக்கியத் தனங்களும்’ என்று மொழி பெயர்ப்பாளர் கொடுத்த தலைப்பு "பலஸ்தீனப் பிரச்சினையும் அறிவுத்துறைப் புரட்டல்களும் என்று மாற்றப்பட்டுள்ளது.
பணிய மறுக்கும் பண்பாடு - எட்வர்ட் ஸெய்த் வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் - 2003
பிரவாதம் - ஜூலை 2005 4.7

Page 27
எட்வர்ட் சயித்தின் கீழ்த்திசை வாதம்
சியாஉத்தீன சர்தார்
கீழ்த்திசைவாதம் (Orientalism) என்னும் தலைப்பில் எட்வர்ட் சயித் (Edward Said) 1978ub ஆண்டில் ஒரு நூலை எழுதினார். மேலைத் தேசத்தவர்களான அறிஞர்கள் மத்திய கிழக்கு பற்றியும் ஏனைய கிழக்குலக நாகரிகங்களைப் பற்றியும் எழுதிய ஆய்வுகள் பற்றிய விமர்சனமாக இந்நூல் அமைந்தது. அவர்கள் கிழக்கை எவ்விதம் விபரித்தார்கள், அவர்களின் நோக்குமுறை எத்தகையது என்பது பற்றிய சயித்தின் விமர்சனம் ஒரியன்டலிசம்’ என்னும் புதிய கோட்பாட்டை பிரபல்யப்படுத்தியது. ஆனால் 'ஒரியன்டலிசம்’ அல்லது “கீழ்த்திசைவாதம் சயித்திற்கு முற்பட்ட ஒன்று. அது இஸ்லாமியக் கல்வியியல், மொழியியல், மானிடவியல், சமூகவியல், வரலாறு, மெய்யியலின் வரலாறு ஆகிய புலமைத் துறைகளின் எல்லைகளுக்குள் மட்டும் வெளிப்பட்ட ஒரு கோட்பாடாக இருந்து வந்தது. அதற்கு ஒரு தனித்துவமான அடையாளத்தையும் நாமத்தையும் தேடித் தந்ததுதான் சயித்தின் முக்கிய பங்களிப்பு என்றால் மிகையாகாது. சயித் ஒரு அமெரிக்க பலஸ்தீனியர் ஆய்வறிவாளர், சமூக அரசியல் செயற்பாட்டாளர் (activisi). அவருக்கு முன்னரே இத்துறை ஆய்வில் பலர் ஈடுபட்டனர். திபாவி (Tibawi), அல்டாஸ் (Altas), அப்டெல் மலேக், ஜெய்ட் (Djai), அப்துல்லா லறோய தலால், ஆசாத், பணிக்கர், ரோமிலா தாப்பார் ஆகியோர் இவரின் முன்னோடிகள. இந்த எழுத்தாளர்களின் கருத்துக்களின் ஆதாரத்தில் வடிவமைக்கப்பட்டது தான் செய்த்தின் கீழ்த்திசைவாதம். ஆனால், சயித் தமக்கு முன்னோடியாக இருந்தவர்களிடம் கடன்பட்டிருந்த தைக் குறிப்பிடத் தவறிவிட்டார். “கீழ்த்திசைவாதம்’ ஆகாயத்தில் இருந்து குதித்த ஒன்று என்ற பாவனையுடன் அரங்கத்தில் நுழைந்தது. சூடான விவாதங்களை அது கிளப்பியது.
சயித்தின் கீழ்த்திசை வாதத்திற்கும் அவருக்கு முன்னர் எழுதப்பட்ட ஆய்வுகளுக்கும் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா? அப்படியாயின் அந்த வித்தியாசம் என்ன? அஜாஸ் அகமட் (Ajas Ahamed) இரு இயல்புகள் அதனை வேறுபடுத்துவதாகக் குறிப்பிடுகிறார். பிரஞ்சு அறிஞர்களான சட்பிரியான்ட், நெர்வா, பிளேபர் ஆகியோரை சயித் ஆய்வுக்கு உட்படுத்தினார். பிரஞ்சு அறிஞர்களின் பங்களிப்பு இதற்கு முன்னர் நன்கு ஆராயப்படவில்லை. சயித் ஆய்வின் முக்கிய குண இயல்புகளில் இது முதலாவதாக குறிப்பிடப்படவேண்டியது. பூக்கோவின் கதையாடல்
48 பிரவாதம் - ஜூலை 2005

முறையியலை (discursive method) சயித் உள்வாங்கிக் கொண்டார். இது அவரது இரண்டாவது சிறப்பியல்பு. இவ்விதம் அஜாஸ் அகமது மதிப்பீடு செய்கிறார். ஆனால், இம் மதிப்பீடு முழுமையாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல. பிரஞ்சு கீழ்த்திசையியலாளர்களைப் பற்றி ஜெய்ட் (Djait) ஆராய்ந்துள்ள விதம் தனித்துவமானது. ஜெய்ட் ஆய்வோடு ஒப்பிடும்போது செய்த் இலகுவில் மறக்கப்படக்கூடிய ஒருவராகவே தென்படுவார். இதேபோல் பூக்கோவும் செய்த்தும் அறிவுலகில் பிரபல்யம் பெறுவதற்கு முன்னரே மார்சல் கொட்ஜ்சன் (Marshal Hodgeson) 1940-1960 காலப்பகுதியில் எழுதியவை அறிவுலகை உலுக்கிய எழுத்துக்களாகும். மேற்குலகு உலக வரலாற்றை தன் கோணல் பார்வையினால் அளக்க முற்பட்டது என்பதைக் கொட்ஜ்சன் மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டினார். கீழ்த்திசையியல் என்பது ஒரு அதிகாரக் கருத்தாடல். மேற்குலகு எஞ்சிய உலகின் (monwest) மீது கொண்டிருக்கும் மேலாதிக்கத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கருத்தாடல் என்பதை அவர் வெளிப்படுத்தினார். கீழ்த்திசையாளர்களின் வாதம் ஒரு சாராம்சவாதமாகும். இதன்படி நாகரிகங்கள் (Civilisations)சில அடிப்படையான சாராம்ச இயல்புகளின் வெளிப்பாடாக அமையும். ஆகவே, கீழ்த்திசை நாகரிகங்களில் அவற்றின் சாராம்சத்தை அடையாளம் காணலாம். இதேபோல்தான் மேலை நாகரிகமும். அதற்கென ஒரு சாராம்சம் உண்டு. இந்த இருவேறு நாகரிகங்கள் படைத்தளித்த பெருநூல்களில் (Great books) அவற்றின் சாராம்சம் வெளிப்படும். பெருநூல்களின் அடிப்படையில் நாகரிகங்களின் சாராம்சத்தைத் தேடும் வேலை ஒரு பெரும் ஏமாற்று. இது வரலாற்றைக் கேலிக்கூத்து ஆக்குகிறது. வரலாற்றில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை மூடி மறைத்து விடயங்களை நாடக பாணியில் இது முன்னிறுத்துகிறது. முஸ்லிம் நாகரிகத்தின் வரலாறு ஒரு துன்பியல் நாடகம்; மேற்குலகின் நாகரிகம் வெற்றிப்பாதை நோக்கிய வீறு நடை, அது சுதந்திரத்தினதும் பகுத்தறிவினதும் கதை; கிழக்கின் வரலாறு மிலேச்சத்தனமான எதேச்சதிகாரத்தினதும் பண்பாட்டுத் தேக்கத்தினதும் வெளிப்பாடு என்ற முறையில் வரலாறு சித்திரிக்கப்பட்டது. நாகரிகத்தை ஒரு பிரதேசம் என்ற வரையறைக்குள் சிறைப்படுத்துவதையும் கொட்ஜ்சன் ஏற்கவில்லை. இது அர்த்தமற்றது என்றார், அவர். உதாரணமாக, முஸ்லிம் நாகரிகம் மத்திய கிழக்கு அல்லது ஆசியா என்ற எல்லைக்கு உட்பட்டதல்ல. அது உலக வியாபகமானது. அதனைப் பிராந்திய எல்லைக்குள் வரையறுத்தல் அபத்தமானது. இஸ்லாம் பிராந்திய எல்லைகளைக் கடந்தது. நாகரிகம் என்ற எல்லைகளை உடைத்துக்கொண்டு கிளைத்துப் பரவியது; புதிய சமூக, கலாசாரக் கலப்புகளைத் தன்னகத்தே உள்வாங்கியது; அரேபியா, இந்தியா, சீனா, துருக்கி, ஆபிரிக்கா எனப் படர்ந்து நாற்றிசையில் இருந்தும் கலப்புக்களை ஏற்றுக்கொண்டது. இருந்தபோதும் அதன் அடிநாதமாக
பிரவாதம் - ஜூலை 2005 49

Page 28
அரேபியாவும், இஸ்லாமும் இருந்துள்ளன. ஆனால், இஸ்லாத்தை அதன் உலகு தழுவிய கலாசாரப் பின்னணியில் பார்க்கும்போது தான் அது அர்த்தம் உடையதாகும். Venture of Islam (துணிந்து செல் இஸ்லாம்) என்னும் தலைப்பில் மூன்று தொகுதிகள் கொண்ட நூலை கொட்ஜ்சன் எழுதினார். இஸ்லாமிய நோக்கில் உலகை எப்படிப் பார்க்கலாம் என்பதற்கு இந்நூல் ஒரு எடுத்துக்காட்டு. இஸ்லாம் திடீர் என உலக அரங்கில் தோற்றம் பெறவில்லை. அது மேற்குலகின் திரிபுபட்ட வடிவமும் அல்ல. உலகு தழுவிய தனது வரலாற்றை இஸ்லாம் தானே படைத்தளித்தது என கொட்ஜ்சன் எடுத்துக் காட்டுகிறார். பூக்கோவின் கதையாடல் கோட்பாட்டின் (discursive theory) மொழியை கொட்ஜ்சன் பயன்படுத்தவில்லை. ஆனால், கீழ்த்திசையியலை ஒரு பெருங் கதையாடலாக அவர் காட்டும் வேளை இஸ்லாத்தைத் திரிபுபடுத்தவில்லை. உலக வரலாறு, மேற்குலக நாகரிகம் என்ற பெரு நதியில் ஒரு கிளை நதியாக இஸ்லாத்தைச் சித்திரிக்கிறார்.
ஆகவே, கீழ்த்திசை வாதம் (ஒரியன்டலிசம்) புதிதாக எதனையும் கூறுகிறதா? நிச்சயமாக சயித் புதிய கேள்விகள், பிரச்சினைகள் எதையும் எழுப்பவில்லை. அவருக்கு முன்னர் எழுதியவர்களை விட பூரணமான, முழுமையான விமர்சனத்தை அவர் முன் வைத்தார். அதுவே அவரின் சிறப்பு. யேம்ஸ் கிளிபோர்ட் பின்வருமாறு கூறுகிறார்.
“சயித் எழுப்பும் பிரச்சினைகள் எவையும் பிரஞ்சு மொழிக்காரர்களுக்குப் புதியன அல்ல. அல்ஜீரிய விடுதலைப் போர் நிகழ்ந்த காலத்திலேயே இவை பரிச்சயமாக இருந்தன. 1950க்கு முன்னரே இவை உரத்துப் பேசப்பட்டன.”
பிரித்தானியாவில் கூட இந்தக் கருத்துக்கள் முன்னர் பேசப்பட்டவைதான். நோர்மன் டானியலும் ஆர். டபிள்யு சதர்ண் என்பவரும் தமது எழுத்துக்களின் மூலம் இஸ்லாம் பற்றிய மாறுபட்ட சித்திரத்தைத் தந்துள்ளனர். இஸ்லாம் பற்றிய மேற்கத்தைய படிமங்களின் (Western images of Islam) தோற்றமும் அவற்றின் தொடர்ச்சியும் நிலைபேறும் பற்றி இவர்கள் இருவரும் எழுதியுள்ளனர். எவ்வாறிருப்பினும் சயித் ஒரு புதிய விவாதத்தைக் கிளப்பிவிட்டார். இந்தப் புதிய விவாதத்தின் (a new debate) அடிப்படைகள் யாவை?
கீழ்த்திசை வாதம் (ஒரியன்டலிசம்) மூன்று புத்தாக்க இயல்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
1. சயித் இலக்கியப் புலமையாளர். கீழ்த்திசையில் வரலாற்று ஆய்வுகளில்
50 பிரவாதம் - ஜூலை 2005

‘இலக்கிய விமர்சனம்’ என்ற புதிய பரிமாணத்தை இவர் கொண்டு வந்தார். பிறரின் வரலாற்றுஆய்வுகளிற்குப் புதிய சேர்க்கை ஒன்றை சயித் வழங்கினார். ஏகாதிபத்தியச் சுரண்டலை நியாயப்படுத்திய பண்பாட்டு விழுமியங்கள், கருத்துக்கள் எவை என்பதை சயித் விளக்கினார். கிப்லிங் (Kipling), போஸ்ரர் (Forster), கொன்ராட் (Conrad) ஆகியோர் காலனி நாட்டுச் சூழலைப் பொருளாகக் கொண்டு நாவல்கள் எழுதியவர்கள். இவர்களை மட்டுமல்ல ஆஸ்டின் (Austin), டிக்கன்ஸ் (Dickens), ஹார்டி (Hardy), ஹென்றி ஜேம்ஸ் (Henry James) ஆகியோரையும் தனது ஆய்வுக்கு உட்படுத்தினார், சயித், சயித் கருத்துப்படி ஏகாதிபத்தியம் இல்லாமல் ஐரோப்பிய நாவல் இல்லை. இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை என்றார்.
2. கீழ்த்திசையியல் பற்றிய ஆய்வுகள் யாவற்றையும் தமது கீழ்த்திசைவாதம் (Orientalism) என்ற வகைமையின் கீழ் கொண்டுவந்தார் சயித். இதன்மூலம் பல்துறை ஆய்வு முறையையும் விமர்சனத்தையும் கீழ்த்திசை நாகரிகம் பற்றிய ஆய்வில் புகுத்தினார். பண்பாட்டு ஆய்வில் ஒரு புதிய பரிமாணம் தோற்றம் பெற அவர் உதவினார்.
3. பூக்கோவின் கதையாடல் கோட்பாட்டையும் (Foucauldian discursive theory), இலக்கிய விமர்சனத்தையும் கீழ்த்திசை பண்பாட்டு வரலாற்று ஆய்வில் சயித் புகுத்தினார். இதன்மூலம் கீழ்த்திசை வாதத்தின் இடம் (Location) கேந்திர முக்கியத்துவமுடையதாக செய்த்தால் மாற்றப்பட்டது. இது அதன் பிரபல்யத்திற்கும் வெற்றிக்கும் காரணமாயிற்று. செய்த் மேற்குலகின் அறிவு மையத்தில் தன்னை இருத்திக் கொண்டவர். அந்த மையத்தில் இருந்த அறிவாளர் குழாத்தில் உயர்வாக மதிக்கப்பெற்ற இலக்கிய விமர்சனத் துறையில் ஈடுபட்டவர். இவையாவும் அவரது கீழ்த்திசை வாதத்தின் மதிப்பை உயர்த்தியவை. உதாரணமாக, திபாவி (Tibawi) QGoaoTLólu uji 5566Ślu Suudio (Islamic studies) GT6ôTAD 9$sub பிரபல்யம் பெறாத துறையைச் சேர்ந்தவர். அலடாஸ் சிங்கப்பூரில் சமூகவியல் துறையில் பணியாற்றியவர். மூன்றாம் உலகச் சமூகவியல் பின்னணியில் அலடாஸ் உயர்வாகப் போற்றப்படும் சாத்தியம் இல்லை. ஜெல்ட் அரபி மொழியில் எழுதினார். மொரோக்கோவின்ரியுனிஸ் நகரில் வாழ்ந்தார். இவரின் எழுத்துக்கள் முதலில் பிரஞ்சு மொழியிலும், பின்னர் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டன. கெட்ஜ்சன் ஒரு வரலாற்றாசிரியர். வரலாறு தான் அவரது சிறப்புத்துறை. டானியலும் சார்ண் உம் ஐரோப்பிய வரலாறு பற்றி எழுதினார்கள். இந்தப் பின்னணியில் செய்த்தின் கீழ்த்திசைவாதம் வெற்றி வாகை சூடியதில் வியப்பில்லை. கீழ்த்திசைவாதம் பல அறிவுத் துறைகளையும் தழுவி நின்ற ஓர்
பிரவாதம் - ஜூலை 2005 51

Page 29
52
கதையாடலாக விளங்கியது. கீழ்த்திசைவாதம் ஒரு பெருங்கதையாடல் (meta discourse). இவ்விதம் அதனைக் கட்டமைக்கும்போது தமக்கு முன்னர் கூறப்பட்ட கீழ்த்திசைவாதம் பற்றிய எல்லா வரைவிலக்கணங்களையும் சயித் தன் ஆய்வுக்குள் கொண்டு வந்தார். அந்த வரைவிலக்கணங்களாவன:
1.
ஒரு மொழி, அம் மொழியில் தோன்றிய இலக்கியங்கள் என்பவற்றின் ஊடாக அம்மொழிப் பண்பாட்டை ஆராயும் செவ்வியல் மரபு (Classical tradition). ஆகவே, கிழக்கு உலகு பற்றிக் கற்பிப்பவர், ஆராய்பவர், எழுதுபவர் ஒரியன்டலிஸ்ட் (கீழ்த் திசையியலாளர்) என அழைக்கப்படுவார். ஐரோப்பாவின், மேற்கின் அனுபவத்தில் கிழக்குலகு வகிக்கும் சிறப்பான இடத்தை அறிதல். அந்த அனுபவத்தின் ஊடாக கிழக்கைப் புரிந்துகொள்ளல்.
எல்லாம் தழுவிய சிந்தனைப் பாணி, வரலாற்றை தொல்காலம் வரை
நீட்டி நோக்கும் நோக்கு, கிழக்கு (orient), மேற்கு (occident) என்ற இரண்டையும் அறிதற் கொள்கை (epistomology), மெய்ப்பொருள் மூலக் கொள்கை (ontology) ஆகியவற்றின் அடிப்படையில் ஒன்றில் ஒன்று வேறுபடுத்திப் பார்த்தல். கிழக்குலகை மேலாதிக்கம் செய்வதன் மேற்குலகப் பாங்கு, கிழக்குலகை மீள்கட்டமைத்தலுக்கும் அதன்மீது அதிகாரம் செலுத்துவதற்குமான வழிமுறை. பொதுவாகவும் எல்லோரும் சேர்ந்து ஒருமித்தும் பேணிவரும் தகவல்களின் சுவடிக் காப்பகம் அல்லது நூலகம் என இதனை உருவகிக்கலாம். உறவுடைய கருத்துக்களினதும், விழுமியங்களினதும் சேர்க்கை இந்த நூலகத்தை ஒழுங்குபடுத்தி இயக்குகிறது. கிழக்குலக மக்களின் நடத்தையினை இந்தக் கருத்துக்கள் வழிநடத்துகின்றன. அவர்களுக்கு ஒரு மனப்பாங்கையும், பாரம்பரியத்தினையும், சூழலையும் கீழ்த்திசைவாதம் வழங்கியுள்ளது. கிழக்குலக மக்கள் என்றால் இப்படித்தான் இருப்பர் என்ற படிமத்தை மேற்குலகுக்கு வழங்கி அவர்களோடு மேற்கைத் தொடர்புறுத்த உதவுகிறது. முதலில் மேற்கு எப்படி கிழக்கைக் கற்று அறிந்துகொண்டது. பின்னர் அதன் பிரக்ஞையில் கிழக்கு எப்படிக் கலந்தது. இறுதியில் மேற்கின் சாம்ராஜ்யத்தில் கிழக்கு எப்படி இடம்பெற்றது என்பவற்றை வழிநடத்திய சக்திகளின் கருத்து வெளிப்பாட்டு (p60p60L.D (System of representations).
பிரவாதம் - ஜூலை 2005

7. கிழக்குலகைக் கட்டுப்படுத்தி நிர்வகிக்கும் கூட்டிணைப்பு நிறுவனம் (Coorporateinstitution). கிழக்கை விபரித்தல், அதனை உள்ளடக்கி வைத்திருத்தல், கட்டுப்படுத்தல், அதனைப் பற்றிக் கற்றலும் கற்பித்தலும், அதைப்பற்றி அறிவித்தல்கள், வெளிப்படுத்துகை களைச் செய்தல், அதைப் பற்றிய கருத்துக்களை அங்கீகரித்தல், நிராகரித்தல் ஆகிய பணிகளில் ஈடுபடும் நிறுவனம்.
மேலே குறித்தவை சயித் தரும் வரைவிலக்கணங்கள். இவை விரிவான எல்லைகளை தமக்குள்ளே அடக்க முனையும் வரைவில க்கணங்கள். அதேவேளை முரண்பாடுகளைக் கொண்டவை. தொல்காலம் முதல் இன்று வரையான நீண்ட வரலாற்றுக் காலத்தை உள்ளடக்கியதாக கீழ்த்திசைவாதம் அமைகிறது. சயித் முன்வைக்கும் முக்கிய வாதத்தை இவ்விதம் கூறலாம். “கீழ்த்திசையியல் பற்றிய பாடங்கள் (Texts) அறிவை மட்டும் உருவாக்கவில்லை. அவை விபரிக்கும் முறையில் ஒரு யதார்த்தத்தினையும் (reality) உருவாக்குகின்றன. பின்னர் ஒரு மரபு (tradition) உருவாகிறது”
இந்த மரபுதான் பின்னர் கிழக்குப் பற்றிய கல்வியை நெறிப்படுத்துகிறது. இந்த அறிவும், மரபும் குடியேற்றவாதத்தின் கருவியாக மாறுகின்றன. அவை குடியேற்றவாதத்தின் பொருளாதார அரசியல் அதிகாரக் கட்டமைப்புகளுடன் பின்னிப் பிணைந்துள்ளன. கிழக்குலகு (Orient) என்னும் பொய்ப் புனைவையும் அங்கு வாழும் மக்களையும் ஐரோப்பா எப்படி உருவாக்கியது. பின்னர் அந்த உருவாக்கம் குடியேற்றவாத அடிமைத்தனத்திற்கு எவ்வாறு பணிபுரிகிறது என்பதனை சயித்தின் கீழ்த்திசைவாதம் எடுத்துக் காட்டுகிறது. இத்தகைய வரைவிலக்கணம் பல முரண்பாடுகளையும் கொண்டதாக இருந்தது. சிலர் சயித்தை ஏளனம் செய்தனர். சிலர் அவரைப் புகழ்ந்துரைத்தனர்.
ஒன்றுமட்டும் வெளிப்படை கீழ்த்திசைவாதம் மேற்கிற்கு எதிரான கண்டனம் அன்று. அதேவேளை அது இஸ்லாத்திற்குச் சார்பான ஒரு கோட்பாடும் அன்று.
(சியாஉத்தீன் சர்தார் எழுதிய Orientalism என்னும் நூலின் பக்கம் 65-69உள்ள கருத்துக்களை தழுவி தமிழில் எழுதியவர் க. சண்முகலிங்கம்)
Orientalismo, Ziauddin Sardar Viva BOOKS Private Limited New Delhi- 2002
பிரவாதம் - ஜூலை 2005 53

Page 30
மலையக குடும்பத்திட்டமிடல் ஓர் மதிப்பீடு
சோபனாதேவி இராஜேந்திரன்
இலங்கையில் பெருந்தோட்டத்துறைப் பெண்களின் கல்வித் தகமையானது ஏனைய கிராம, நகரத்துறைசார்ந்த பெண்களுடன் ஒப்பிடும் போது சார்பளவில் மிகக் குறைவான நிலையிலேயே உள்ளது. எனினும், கடந்த காலங்களில் அவர்களின் தொழிற் படை பங்கேற்பு உயர்வாக காணப்பட்ட அதே வேளை அவர்களின் கருவள வீதமும் மிக உயர்வாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், அண்மைய காலங்களில் கல்வித்தகைமைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களெதுவும் ஏற்படாத நிலையிலும் அவர்களின் கருவள வீதத்தில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தேசிய மட்டத்திலான கருவள வீத வீழ்ச்சி போக்குடன் ஒப்பிடுகையில் இது அதிகளவான வீழ்சிப் போக்கினை காட்டுகின்றது (வரைபடம் 1 ஐப் பார்க்க). இவ்விடயம் அச்
சமூகத்திலுள்ள பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வரைபடம் 1
கருவளவீதம்
1962/68 1970/72 1980/82 ஆண்டு 1982/87 1993 1997
Source: Demographic Projections For Sri Lanka 1998 (National Level) Estate Helth Records 1962/63, 1965/72, 1974/87 and Health Bulletin Estate Sector) 1993, 1997.
54 பிரவாதம் - ஜூலை 2005
 

இன்று தேயிலைப் பெருந்தோட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் நவீன குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள் சம்பந்தமாக முரண்பட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. செயற்கைக் கருத்தடை முறைகளின் பாவனை தோட்டப்புற மக்கள் மத்தியிலும் ஒருவித அதிருப்தி நிலையினை தோற்றுவித்துள்ளது. அரசியல்வாதிகள், தொழிற் சங்கவாதிகள், அரச சார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் போன்ற பலரும் இந் நிலமை தொடர்பான வாத விவாதங்களை முன்வைக்கின்றனர். தோட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன குடும்பக் கட்டுப்பாட்டு முறையே சடுதியான கருவள வீத வீழ்ச்சிக்கு காரணமென ஒரு சாரார் கூறுகின்றனர். எனினும், இது பற்றி தெளிவானதொரு விளக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, உண்மையில் கருவள வீத வீழ்ச்சிக்கான காரணங்களைக் கண்டறிந்து, அதனால் ஏற்பட்டுள்ள சாதக, பாதக விளைவுகளை ஆராய்வது அவசியமானதாகும்.
இந்த ஆய்வினை மேற்கொள்வதற்காக கண்டி மாவட்டத்திலுள்ள 14 தேயிலைப் பெருந்தோட்டங்கள் எழுமாற்று மாதிரியாக தெரிவுசெய்யப்பட்டு, அத் தோட்டங்களிலுள்ள இனவிருத்தி வயதுக்குட்பட்ட 321 பெண்களிடம் இனவிருத்தி செயற்பாடு தொடர்பான தகவல்கள் ஆழமான நேரடி விசாரணை மூலம் திரட்டிக்கொள்ளப்பட்டன. இவற்றிற்குப் புறம்பாக, மேலதிக தகவல்கள் தோட்டத்தில் தொழில் புரியும் கள உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், தோட்ட மருத்துவப் பிரிவினர், நகரங்களில் தொழில் புரியும் தாதிமார்கள் போன்ற பல்வேறுபட்ட குழுவினரிடமிருந்து கலந்துரையாடல்களினூடாக பெறப்பட்டதோடு, ஆய்வுடன் தொடர்புடைய தேசிய ரீதியானதும், தோட்டத்துறை சார்ந்ததுமான இரண்டாம் தர தகவல்களும் பல்வேறுப்பட்ட மூலங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டன.
இலங்கையில் 1950 களின் முற்பகுதியில் குடும்பத்திட்ட சங்கம் உருவாக்கப்பட்டு, அச் சங்கத்தின் மூலம் நவீன கருத்தடை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும், 1970 களுக்கு முன்னர் செயற்கைக் கருத்தடை முறைகள் பற்றி தோட்ட மக்கள் பெரிதாக அறிந்திருக்கவில்லை. விளைவாக இவர்களது கருவள வீதமும் மிக உயர்வாக காணப்பட்டது. இக் கால கட்டத்தில் குடும்ப அளவு மிகப் பெரியதாக இருந்ததால் அவர்கள் பல்வேறு சமூக - பொருளாதார ரீதியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க
பிரவாதம் - ஜூலை 2005 55

Page 31
வேண்டிய நிலையில் இருந்தனர். அத்துடன், சுகாதார ரீதியான பல பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை அவர்களிடையே காணப்பட்டது. அதிகளவில் பிள்ளைகளைப் பிரசவிக்கும் தாய்மாாகளின் மரண வீதம், சிசு மரண வீதம் என்பனவும் மிக உயர்வாக காணப்பட்டன. இச் சூழ் நிலையிலேயே 1970 களில் குடும்பத் திட்ட சங்கத்தினால் தோட்டங்களில் செயற்கை கருத் தடை முறை தொடர்பான வேலைத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆரம்பத்தில் இவர்கள் மத்தியில் நிரந்தரமான செயற்கை கருத்தடை பரீட்சிக்கப்பட்டது. முதலில் ஆண்களுக்கே இம் முறையில் கருத்தடை செய்யப்பட்டது. அவ்வேளை அதிகளவான ஆண்களும் இதனை செய்து கொண்டனர். ஆரம்பத்தில் இதற்கு ஊக்கமளிக்கும் முகமாக கருத்தடை செய்து கொள்வோருக்கு ஐம்பது ரூபா பணமும், மூன்று நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் வழங்கப்பட்டது. பின்வந்த காலங்களில் இது அவர்களது குடும்பங்களில் பல பிரச்சினைகளை உருவாக்கியது. குறிப்பாக, கருத்தடை செய்து கொண்டவர்களின் மனைவிமார் சிலர் கர்ப்பமடைந்ததால், அது பல வழிகளிலும் குடும்ப அமைதியின்மைக்கு வழிவகுத்தது மட்டுமன்றி. இது தோட்ட மருத்துவ அதிகாரிகளுக்கும் பிரச்சினைகளை உருவாக்கியது. இதனால் ஆண்களுக்கு கருத்தடை செய்வதைத் தவிர்த்து பெண்களுக்கு அதனைச் செய்ய ஆரம்பித்தனர் (தோட்ட மருத்துவ அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள் மூலம் இத் தகவல்கள் பெறப்பட்டன).
1970 ஆம் ஆண்டுமுதல் தோட்ட மக்களிடையே செயற்கைக் கருத்தடை முறை பாவனையில் இருந்து வந்துள்ள போதிலும், 1980 களின் இறுதிக் காலப்பகுதியிலிருந்தே இம் முறையின் பாவனையில் மிகத் துரிதமான அதிகரிப்பு ஏற்பட்டு வந்தது. 1992 ஆம் ஆண்டு தோட்டங்கள் தனியார்மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு சமூக சேமநல சேவைகள் அனைத்தும் பெருந்தோட்ட வீடமைப்பு, சமூக பொது நல நிதியம் (PHSWT) என்ற அமைப்பினால் பொறுப்பேற்கப்பட்டன. இவ்வமைப்பும், தோட்ட மருத்துவப் பகுதியும் இணைந்து 1993 ஆம் ஆண்டு தொடக்கம் குடும்பத்திட்ட நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்தின. இத்திட்டத்தினால் ஏற்கனவே தோட்டங்களில் காணப்பட்ட தாய் மரண வீதம், சிசு மரண வீதம் என்பன வீழ்ச்சியடைந்தன. அத்துடன், போகூஷ்ாக்கின்மைப் பிரச்சினையும் கணிசமான அளவிற்கு வீழ்ச்சிப் போக்கினை அடைந்து
56 பிரவாதம் - ஜூலை 2005

வருவதுடன் கருவள வீதத்திலும் வீழ்ச்சியேற்பட்டது (Health Bulletin, Estate Secter 1995-1997). இத் திட்டமானது மேலே குறிப்பிட்ட பல்வேறுபட்ட நன்மைகளைக் கொண்டிருந்த போதிலும், தோட்டங்களில் இன்று இத் திட்டம் பற்றி எதிர் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஒப்பீட்டு ரீதியில், தோட்டத் துறை மக்களின் கல்வித் தகமையானது தேசியமட்ட கல்வித் தகமையிலும் குறைவான நிலையில் இருப்பதாக பல ஆய்வுகள் காட்டுகின்றன. குறிப்பாக, இங்கு ஆண்களின் கல்வித்தரத்தினை விட பெண்களின் கல்வித்தரம் குறைவாகவே உள்ளது. தேசிய மட்டத்தில் எழுத்தறிவு 918 வீதமாக இங்கு ஆண், பெண் எழுத்தறிவு முறையே 943 வீதம் 918 வீதம்) உள்ளது. தோட்டத்துறை சார்ந்த மக்களிடையே அது 769 வீதமாகவும், ஆண், பெண் எழுத்தறிவு முறையே 872 வீதமாகவும், 673 வீதமாகவும் உள்ளது (Amal, 2000). பெருந்தோட்டம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் எழுத்தறிவு வீதத்தில் பால் ரீதியான வேறுபாடு மிகக் குறைவாகவே உள்ளது.
இவ்வாறு கல்வியில் பின் தங்கிய தோட்டச் சமூகத்தில் வெற்றிகரமான குடும்பத்திட்டமிடல் எவ்வாறு சாத்தியமாகிற்று என்பது இங்கு ஆராய வேண்டிய அம்சமாகவுள்ளது. கல்வியறிவு குறைவாக இருக்கும் போது நவீன கருத்தடை நுட்ப முறைகளை விளங்க வைப்பது இலகுவான காரியமில்லை. அதிலுங் குறிப்பாக, இத்திட்டங்கள் பெரும்பாலும் பெண்களை மையப்படுத் தியே மேற்கொள்ளப்படுவதால் இது வெற்றியடைய வேண்டுமாயின் பெண்களின் கல்வியறிவு உயர்வடைய வேண்டும். தோட்டங்களிலுள்ள பெண்களிடம் குழுநிலைக் கலந்துரையாடல்களை மேற்கொண்ட போது இது தொடர்பான சில உண்மைகளை பெறக் கூடியதாகவிருந்தது. அங்குள்ள பெண்களின் கருவள செயற்பாடு தொடர்பான தீர்மானங்கள் (குடும்பத் திட்டமிடல் முறைகள்) தோட்ட மருத்துவப் பிரிவினரால் தீர்மானிக்கப்பட்டு, தோட்டத்தில் குறிப்பிட்ட பெண்களை தனித்தனியாக சந்தித்து அவர்களுக்கு இது தொடர்பாக விளக்கமளிக்கப் படுகின்றது. ஆனால் அத்தகைய விளக்கங்கள் தமக்கு தெளிவாக இருப்பதில்லை என அவர்கள் குறிப்பிட்டார்கள். அத்துடன் தாம் விரும்பும் முறையைத் தெரிவு செய்து பாவிப்பதற்கு, அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. கருத்தடை முறை தோட்டங்களில் எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றது என்பதை நேரடியாகவே அவதானித்த போது, நடைமுறை நிலைமைகள் பற்றிய சில உண்மைகளையும் அறியக் கூடியதாக இருந்தது. கர்ப்பிணித் தாய்மாருக்கான கிளினிக் தினங்களிலும், நவீன
பிரவாதம் - ஜூலை 2005 57

Page 32
கருத்தடை முறை தொடர்பான விளக்கம் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றது. இதனை விட தோட்டத் தாதிமார், சமூக நலச் சேவையாளர் போன்றோர் லயன் அறைகளுக்கு சென்று தனித்தனியாக இனவிருத்தி வயதிற்குட்பட்ட பெண்களை சந்தித்து செயற்கை கருத்தடை முறை தொடர்பாக விளக்க முயல்கின்றனர். ஆனால் இதன் மூலம் ஒரு தெளிவற்ற நிலையே அவர்களிடையே ஏற்படுகின்றது. அம்மக்களின் கல்வியறிவு குறைவாக இருப்பதனால், பொருத்தமான கருத்தடை முறையை அவர்களால் தெரிவு செய்து கொள்ள முடியாது போகின்றது. ஒரு சிலர் மாத்திரமே தமது சுய விருப்புக்கிணங்க தமக்குப் பொருத்தமான முறையினை தெரிந்தெடுக்கும் பக்குவத்தினைப் பெற்றிருக்கின்றனர். எனவே, கல்வியறிவு குறைந்த பெருந்தோட்ட சமூகத்தில், கருவள வீதத்தைக் கட்டுப்படுத்துவதில் பெண்களின் கல்வி நிலை பெருமளவிற்கு செல்வாக்கு செலுத்துவதாகத் தெரியவில்லை.
கல்வியைப் போன்றே பெண்களின் கருவளத் தன்மையை தீர்மானிப்பதில் அவர்கள் திருமணம் செய்யும் வயது முக்கிய காரணியாகவுள்ளது. பெண்கள் திருமணம் செய்யும் வயதிற்கும், வாழ்நாளில் அவர்கள் பிரசவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கைக்குமிடையே எதிாக்கணிய தொடர்பு காணப்படுவதாக பொதுவானதொரு கருத்து sól6d6yślsőTADg5! (Afzal and Chudhury, 1997). Cg560Dbg5 6.JULg6id Glu60ÖTG56ÏT திருமணம் செய்வது நீண்ட இனப் பெருக்கக்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற கருத்து இதில் தொனிக்கின்றது. ஏனைய துறைகளுடன் ஒப்பிடும் போது, தேயிலைப் பெருந்தோட்டத் துறையில் பெண்கள் திருமணம் முடிக்கும் வயது குறைவாக இருக்கின்றமை ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. எனினும், தோட்டங்களில் சராசரியாக குறைந்த வயதில் திருமணம் முடிப் பவர்களுக்கும் , கூடிய வயதில் திருமணம் முடிப்பவர்களுக்குமிடையே கருவளத் தன்மையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. குறைந்த வயதில் (< 18) திருமணம் முடித்த பெண்களிடையே சராசரி குழந்தைகளின் எண்ணிக்கை 23 ஆகவும், 26 தொடக்கம் 30 வயதுக்கிடையே திருமணம் முடித்த பெண்களிடையே சராசரி குழந்தைகளின் எண்ணிக்கை 2.4 ஆகவும் காணப்படுகின்றமை அட்டவணை 1 இல் காட்டப்பட்டுள்ளது. இந் நிலையில் கருவளத் தன்மையை தீர்மானிப்பதில் தோட்டப் புறப் பெண்களின் திருமணம் முடிக்கும் வயது செல்வாக்கு செலுத்துவதாகத் தெரியவில்லை. உண்மையில், குறைந்த வயதில் திருமணம் செய்வோரின் உயர்வான கருவள
58 பிரவாதம் - ஜூலை 2005

வீதம் செயற்கை கருத்தடை முறைகளினூடாக குறைக்கப்படுவதாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, தோட்டங்களில் 16 வயதில் திருமணம் முடிக்கும் ஒரு பெண் 20 அல்லது 21 வயதடையும் போது சராசரியாக 2 அல்லது 3 குழந்தைகள் கிடைத்த பின்னர் தோட்ட மருத்துவப் பிரிவினரால் நிரந்தர கருத்தடை முறைக்கு உள்ளாக்கப்படுகின்றாள். குழந்தைப் பேற்றுக்கிடையிலான கால இடைவெளியும் மிகக் குறைவாக இருப்பதை இங்கு காணக்கூடியதாக உள்ளது. இந் நிலையில் இவர்களுக்கு தற்காலிக செயற்கைக் கருத்தடை செய்வதன் மூலம் குழந்தைப் பேற்றுக்கான கால இடைவெளியை அதிகரிக்க வாய்ப்பு காணப்பட்ட போதும், பொதுவாக அவர்கள் நிரந்தர கருத்தடை முறைக்கே உட்படுத்தப்படுகின்றனர்.
அட்டவணை-1 பெண்கள் திருமணம் முடித்த வயதின் அடிப்படையில் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கை
திருமணம் முடித்த வயது சராசரி குழந்தைகளின் (வருடங்களில்) எண்ணிக்கை
23 18 ܒ >
19 - 25 23
26 - 30 2.4
50 > 2.3
மூலம் கள ஆய்வு முடிவு
தோட்ட மருத்துவப் பிரிவானது தோட்ட அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழும். PHSWTஅமைப்பினது முழுமையான கண்காணிப்பின் கீழும் இயங்கி வருகின்றது. PHSWT இன் வழிகாட்டலுக்கு அமைய தோட்ட மருத்துவ அதிகாரி, தாதிமார், சமூகநல மேற்பார்வையாளர், பிள்ளை பராமரிப்பு நிலைய பிள்ளை பராமரிப்பாளர் போன்றோர் செயற்படுகின்றனர். இக் குழுவினருடன் கல்ந்துரையாடல் மேற்கொண்ட போது, அம் மக்களுக்குப் பொருத்தமான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை அவர்களுடன் கலந்தாலோசித்து அதாவது, அவர்களின் விருப்பத்தைப் பெற்று செய்து
பிரவாதம் - ஜூலை 2005 59

Page 33
வருவதாகவும், ஒரு குறிப்பிட்ட வருடத்தில் தமக்கு கொடுக்கப்பட்ட இலக்கினை அடையும் வகையில் செயற்படுவதாகவும் கூறினார்கள். இத் தோட்ட மருத்துவப் பிரிவினரே நேரடியாக அங்குள்ள மக்களிடம் தொடர்பு கொள்கின்றனர்.
இங்கு கருத்தடையானது, தற்காலிக கருத்தடை முறை, நிரந்தர கருத்தடை முறை என்ற இரு முறைகளில் மேற்கொள்ளப்படுகின்றது. பல்வேறு வித நவீன செயற்கை கருத்தடை முறைகள் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற போதும், பெருந்தோட்டங்களில் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வரும் செயற்கை கருத்தடை முறைகள் பின்வருவனவாகும்
நிரந்தர சத்திர சிகிச்சை முறை (ஆண்களுக்கு வாசெக்டமி) நிரந்தர சத்திர சிகிச்சை முறை (பெண்களுக்கு ரியுபெரக்டமி)
9 விழுங்கும் மாத்திரைகள்
லூப் முறை சு டேபோ - புரோ - வீரா ஊசி மருந்து  ைகொண்டம்
O
O
பெருந்தோட்டங்களில் தற்காலிகமான கருத்தடை முறையினை விட
நிரந்தர கருத்தடை முறையே அதிகளவு கையாளப்படுகின்றது (வரைபடம்
2 ஐப் பார்க்க). நிரந்தர கருத்தடை முறைக்கு உட்படுத்தப்பட்டவர்களின்
தொகை தொடர்ந்தும் அதிகரித்து வருவதையும் அதே வேளையில், தேசிய வரைபடம் 2
FAMILY PLANNING ACCEPTORS
Oral Pil = Condom s UD i BMPA S fubectomy Vasectomy
Source: Health Bulletin, 1999.
60 பிரவாதம் - ஜூலை 2005
 
 
 

மட்டத்தில் நிரந்தர கருத்தடை முறை படிப்படியாக குறைந்து செல்கின்றது என்பதையும் இதில் அவதானிக்க முடிகின்றது. 1995 இல் 40 வீதமாக இருந்த இது 1997 இல் 36.4 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது (Abeykoon, 2000). மாறாக, தோட்டங்களில் இதே காலப்பகுதியில் இது 56 வீதத்திலிருந்து 57 65LDITS, 955 figg GirG|Tg5 (Health Bulletin, 1999).
இன்று தேசிய ரீதியில் இயங்கிவரும் குடும்பத்திட்ட அமைப்புக்கள் தற்காலிக கருத்தடை முறையை ஊக்கப்படுத்துவதே இதற்கான காரணமெனத் தெரிகின்றது. தேசிய ரீதியில் வகுக்கப்பட்டுள்ள கொள்கை விதிமுறையின் படி, ஆகக் குறைந்தது இரண்டு உயிர்வாழ் குழந்தைகள் இருக்கின்ற ஒரு தாய்க்கே நிரந்தர கருத்தடை முறையினை உபயோகிக்கலாம் என குடும்ப சுகாதார நிலையத்தின் 15 ஆம் இலக்க சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நகர்ப்புறங்களில் இயங்கி வருகின்ற குடும்பத் திட்டமிடல் அமைப்புக்கள் ஆகக் குறைந்தது மூன்று உயிர்வாழ் குழந்தைகள் உள்ள ஒரு தாய்க்கே பொதுவாக நிரந்தர கருத்தடை முறையினை பயன்படுத்துகின்றனர். இரண்டு குழந்தைகளுடன் நிரந்தர கருத்தடை முறையினை செய்தால், ஒரு குழந்தை இறந்து விட்டால் அத்தாய்க்கு மீளவும் குழந்தைகள் பெறமுடியாத நிலை ஏற்படுவதால் ஒரு குழந்தையுடன் மட்டுமே இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அதிலும் மேலாக, இளம் வயதில் ஒரு பெண் தனது கணவனை இழந்தால் மறுமணம் செய்வதற்கு இந் நிரந்தர கருத்தடை முறை தடையாக இருப்பதாக பல முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாலும், இது ஒரு சமூக பிரச்சினையாக இருப்பதாலும் இரண்டு குழந்தைகளுடன் நிரந்தர கருத்தடை முறை செய்வதைப் பெரும்பாலும் இவர்கள் தவிர்த்துக்கொள்கின்றார்கள் (கண்டி குடும் பத்திட்டமிடல் (SLAVSC) அமைப் பின் அதிகாரிகளுடன் குழுக்கலந்துரையாடல்). தேசிய ரீதியில் இயங்கும் அமைப்புக்கள் இத்தகைய மனப்போக்கில் செயற்படுகின்ற அதே வேளையில், தோட்டப் புறங்களில் மாத்திரம் வேறுபட்ட கோணத்தில் இது நோக்கப்படுகின்றது. இனவிருத்தி வயதிற்குட்பட்ட பெண்களில் 893 வீதமான பெண்கள் செயற்கை கருத்தடை முறைக்கு உட்பட்டுள்ளதாக கள ஆய்வின் மூலம் அறியக்கூடியதாக இருந்தது. இவர்கள் பயன்படுத்தும் முறைகள் தொடர்பான தகவல்கள் வரைபடம் 2 இல் காட்டப்பட்டுள்ளன. இவர்களுள் 53.5 வீதமானோர் நிரந்தர (சத்திர சிகிச்சை) கருத்தடை முறையினையே பயன்படுத்தியுள்ளனர். தற்காலிகமான கருத்தடை முறைகளில் 32 வீதமானோர் ஊசி மருந்தேற்றல் முறையைப் பாவித்து வருகின்றனர். குழந்தைப் பேற்றினை முழுமையாகத் தடைசெய்வதற்கு நிரந்தர முறையினையும், குழந்தை பேற்றிற்கான இடைவெளியைக் கூட்டுவதற்காக தற்காலிக முறையினையும் பயன்படுத்துகின்றனர்.
பிரவாதம் - ஜூலை 2005 s

Page 34
நிரந்தர சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்களில் 40 வீதத்தினர் மாத்திரமே சத்திர சிகிச்சை பற்றிய விளக்கங்களையும், அதனால் ஏற்படக் கூடிய சாதக பாதகமான விளைவுகளையும், இடைத் தாக்கங்களையும், எதிர்பார்க்கக் கூடிய பயன்களையும் சரியான முறையில் அறிந்திருக்கின்றனர். எஞ்சிய 60 வீதத்தினர் இம் முறை பற்றிய எவ்வித தெளிவான விளக்கமுமின்றி இருக்கின்றனர். தோட்ட மருத்துவ அதிகாரியும், தோட்டத் தாதியுமே இதனைத் தெரிவு செய்வதுடன், அது பற்றி சிந்தித்து முடிவெடுப்பதற்கான கால அவகாசமும் அவர்களுக்கு அளிக்கப் படுவதில்லை. மேலும், மறைமுகமான வழிகளில் தம்மை இதற்கு இணங்கச் செய்ய முயலுவார்கள் என்ற அச்சம் அவர்களிடையே காணப்படுகின்றது. உதாரணமாக, தமது குடும்ப அங்கத்தவர் எவரேனும் சிகிச்சைக்காக தோட்ட மருத்துவ அதிகாரியிடம் செல்லும் போது அவர்களுக்கு தகுந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படமாட்டாது என்றும், பிள்ளை பராமரிப்பு நிலையத்திலுள்ள தமது பிள்ளைகள் சரியாக பராமரிக்கப்பட மாட்டார்கள் என்றும், ஏனைய சமூக நலன்புரி சேவைகளான மலசல கூடம் கட்டுதல், வீடு திருத்துதல் போன்றவற்றில் தமக்குரிய வாய்ப்புக்கள் மறுக்கப்படக் கூடும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறான காரணங்களினால் அவர்கள் ஏதோவொரு விதத்தில் நிரந்தர சத்திர சிகிச்சை முறைக்கு ஆளாக வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவ்வாறு நிரந்தர சத்திர சிகிச்சைக்கு அனுப்ப முன்பு அது சம்பந்தமாக போதுமான அறிவூட்டல் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். 90 வீதமான தோட்டங்களில் சரியான முறையில் இவ்வறிவூட்டல் வழங்கப்படுவதில்லை. மாறாக, அவர்களின் சுய விருப்பின்றியே இம் முறையை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். மேலும், ஒரு குழந்தை மட்டுமே இருக்கும் தாய்மாருக்குக் கூட நிரந்தர கருத்தடை செய்யப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டது. இரு குழந்தைகள் இருக்கும் 80.0 வீதமான தாய்மாருக்கும் இம்முறையில் கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இந் நிரந்தர முறையினைக் கையாளும் போது, தாயினது வயது 26 ஐ விட அதிகமாக இருக்க வேண்டுமென சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த போதும், சில தாய்மார்கள் இதை விடக் குறைந்த வயதிலேயே சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் இவ்வாய்வின் போது தெரியவந்தது.
இதனை விடவும் நகர, கிராமப் பகுதிகளில் சேவைபுரியும் தாதிகள், தாதிமார் பாடசாலையில் இரண்டு வருட கற்கை நெறியினை பூர்த்தி செய்துள்ளதுடன், மேலதிக பயிற்சிகளையும் பெற்றவர்களாக உள்ளனர். மாறாக, தோட்டப் பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள தாதிமார்களில் சராசரியாக
62 பிரவாதம் - ஜூலை 2005

50 வீதமானோர் மேற்குறிப்பிட்ட கற்கை நெறியினை பூர்த்தி செய்யாதோரே. ஏனையோர் குறுகியகால பயிற்சிகளை மாத்திரமே பெற்றவர்களாக உள்ளனர். இவர்களுட் சிலர் பிரத்தியேக வைத்தியர்களிடம் மூன்று அல்லது ஆறு மாதகால பயிற்சியை மட்டும் பெற்றவர்களாவர். அநேகமான தோட்டங்களில் இவ்வாறான தாதிமாரே குழந்தைப் பிரசவங்களை கண்காணிப்பவர்களாக இருக்கின்றனர். சுமார் 54 வீதமான தோட்டங்களில் மாத்திரமே பிரசவ விடுதி வசதி காணப்படுகின்றது. ஏனைய தோட்டங்களில் கர்ப்பிணித் தாய்மார் சிலர் முன் கூட்டியே அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்கு பிரசவத்திற்காக அனுப்பப்படுகின்றனர். எனினும், உடனடிப் போக்குவரத்து வசதியின்மை, திடீர் பிரசவம் போன்ற காரணங்களினால் 10 வீதமான பிரசவங்கள் இன்றும் லயன் அறைகளிலேயே நிகழ்கின்றன. இப் பிரசவங்களின்போது, தாதிமார் அங்கு வரவழைக்கப்படுகின்றனர். இவ்வாறு நடக்கும் பிரசவங்களில் 17.6 வீதமான குழந்தைகள் உடன் இறப்பிற்கு உள்ளாகின்றனர். பிரசவத்திற்கான வசதியின் மையும், பயிற்சி பெற்றதாதிமாரோ, வைத்தியரோ இல்லாமையும் இதற்கு பெரிதும் பொறுப்பாகவுள்ளது. இந்நிலை ஏற்பட்ட தாய்மார் சிலருக்கு அவர்களது உடல் நிலை ஒத்துழைப்பின்மையே இத்தகைய உடன் இறப்பிற்கு காரணமென தோட்ட மருத்துவர்களால் தீர்மானிக்கப்பட்டு அவர்களுக்கு வேறு எவ்வித வைத்திய ஆலோசனையும் வழங்கப்படாத நிலையில் நிரந்தர கருத்தடை சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் இவ்வாய்வின் போது கண்டறியப்பட்டன.
இதனை விட, தற்காலிக கருத்தடை முறைகளில் (மூன்று மாத இடைவெளியில் கருத்தடை ஊசி மருந்தேற்றலும் முறையே பெருமளவு தோட்டங்களில் உபயோகிக்கப்படுகின்றது. ஆய்வின் மூலம் பெறப்பட்ட தகவல்களின் படி, 32 வீதமான பெண்கள் இவ் ஊசி மருந்தேற்றல் முறையைப் பாவித்து வருகின்றனர். எனினும், இவர்களுள் 50 வீதமான பெண்கள் மாத்திரமே தமது சுய விருப்புடன் இம் முறையை ஏற்றுக் கொண்டுள்ளமையும் ஆய்வின் மூலம் அறியக் கூடியதாக இருந்தது. ஏனையோருக்கு ஒவ்வொரு மூன்று மாத முடிவிலும் தோட்டத் தாதி, பிள்ளை பராமரிப்பாளர் போன்றோர் மூலம் ஊசி போடும் திகதி தமக்கு அறிவிக்கப்படுவதாகக் கூறினார்கள். அவ்வறிவித்தலை ஏற்று குறித்த தினத்தில் அவர்கள் ஊசி ஏற்றப் போக மறுக்கும் பட்சத்தில், தோட்டத்தாதி அவர்களுடைய இருப்பிடங்களுக்கு வந்து தமது சட்டைப் பைகளில் கொண்டுவரும் ஊசியைக் கையாளுவதால், தாம் விரும்பியோ, விரும்பாமலோ அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுவதாகக் கூறினர். இது தொடர்பாக கண்டியிலுள்ள சில வைத்திய
பிரவாதம் - ஜூலை 2005 63

Page 35
நிபுணர்களிடம் வினவிய போது, இந்த ஊசிகளை இவ்வாறு வெறுமனே எடுத்துச் செல்லும் போது, அவற்றுள் கிருமிகள் உட்செல்லும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், அவ் ஊசியின் மூலம் அதனைப் பெற்றுக்கொள்ளும் நபரின் உடம்பில் காலப்போக்கில் பல பக்க விளைவுகளை அது ஏற்படுத்தலாமெனக் கூறினர்.
மேலும், 103 வீதமானோர் லூப் அணியும் தற்காலிக முறையினைப் பாவிக்கின்றனர். இது 10 வருட கால உத்தரவாதத்தில் பெண்களின் உடம்பிள் உட்செலுத்தப்படுகின்றது. எனினும், அதற்கு முன்பு குழந்தைப் பேற்றுக்கு அவசியமேற்படும் பட்சத்தில் அதனை உடம்பிலிருந்து அகற்றிவிடலாம். ஆனால், வைத்திய நிபுணர்களின் கருத்துப்படி, உடல் ரீதியாகப் பலவீனமானவர்களுக்கு இது பொருத்தமற்ற ஒரு முறையாகும். பொதுவாக, தோட்டங்களில் உள்ள பெண்களுட் பெரும்பாலானோர் இவ்வாறு பலவீனமானவர்களே என்பது பல ஆய்வுகளின் மூலம் 8öTL-slu JťJULI (GGTGITg (Amali, 2000; Jayawardena, 1984; and Rajendran, 2001). போதுமான போக்ஷாக்கினைக் கொண்ட உணவுகளை உட்கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. தோட்டங்களில் இம் முறையைப் பயன்படுத்துபவர்களில் சராசரியாக 90 வீதமானோருக்கு மாதவிடாய் காலங்களில் இரத்தப் பெருக்கு அதிகமாக ஏற்படுவதையும், அதனால் அக்காலங்களில் அவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றமையையும் இவ்வாய்வின் போது அறியக் கூடியதாகவிருந்தது.
மேற்கூறப்பட்ட அனைத்து விடயங்களையும் தொகுத்து நோக்கும் போது, கருவளத்தைத் தீர்மானிப்பதில், குறிப்பிட்ட பெண்ணின் சுய விருப்பு வெறுப்புக்கு இடமளிக்கப்படுவதில்லையென்பதும், தோட்ட சுகாதாரப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் சில சந்தர்ப்பங்களில் மறைமுகமான பலவந்தங்களின் மூலம் அவர்கள் மீது திணிக்கப்படுகின்றன என்பதும் தெரிய வருகின்றது. தோட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடும்பத்திட்டமிடல் முறையானது அங்குள்ள மக்களின் தெரிவுச் சுதந்திரத்தைப் பாதிப்பதோடு, அங்கு வாழும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் சனத்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் ஒரு செயலாகவும் உள்ளது. எனவே, பெருந்தோட்டத் துறையில் நடைமுறையிலிருக்கும் குடும்பத்திட்டமிடல் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, அதை சரியான முறையில் அதாவது, மக்களது சொந்த விருப்பின் அடிப்படையிலும், சுகாதார ரீதியாக பாதுகாப்பான முறைகளிலும் நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
64 பிரவாதம் - ஜூலை 2005

பெருந்தோட்டத் துறையில் தற்போது காணப்படும் அமைப்பு முறையில் பெண்களின் இனவிருத்திச் செயற்பாடுகளில் குடும்பத்திட்டமிடல் நிகழ்ச்சித் திட்டங்கள் மட்டுமே முறையாக நடைமுறைப் படுத்தப்படுகின்றன. இந் நிகழ்ச்சித் திட்டம் கூட தோட்ட மக்களிடையே அதிருப்தி நிலையையே தோற்றுவித்துள்ளதென இவ்வாய்வின் மூலம் அறியப்பட்டுள்ளது. எனவே, இவற்றைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியது மிகமிக அவசியமானதாகும்.
இவையாவன:-
9 இம்மக்கள் மத்தியில் இனவிருத்திச் செயற்பாடு தொடர்பான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய நிகழ்ச்சித் திட்டங்கள் செயற்படுத்தல் வேண்டும்.
9 தோட்ட சுகாதாரப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும், தோட்டப் பெண்களுக்குமிடையே முறையான நேரடித் தொடர்பாடல் முறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
9 செயற்கைக் கருத்தடை முறை பாவனை தொடர்பான சிறந்த அறிவூட்டல் நிகழ்ச்சிகள் (Counseling) ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும்.
9 தோட்டப் பெண்களில் ஓரளவு கல்வித்தகமை உடைய சிலரை சுகாதார சேவையாட்களாகத் தெரிவு செய்து அவர்களுக்கு செயற்கை கருத்தடை முறை பாவனை தொடர்பான பயிற்சிப் பட்டறைகளை நடாத்தி, அவர்களுக்கூடாக அங்குள்ள பெண்கள் மத்தியில் இது பற்றிய தெளிவான விளக்கத்தை ஏற்படுத்தல்.
0 தெரிவு செய்யப்பட்ட சுகாதார சேவையாளர், தோட்ட மருத்துவப் பிரிவு, PHSWT அமைப்பு, தோட்ட நிர்வாகம் போன்றவற்றைச் சேர்ந்தோரிடையே சிறந்த தொடர்பாடல், கலந்துரையாடல்கள் என்பவற்றை மேற்கொள்ளச் செய்ய வேண்டும்.
9 பிள்ளைகள் இல்லாத திருமணமான சோடிகள், சரியான கருவளப்
பரீட்சை மேற்கொள்ள உதவுதல்,
0 சிறந்த வழிகாட்டல்களினூடாக மனைவி, கணவன் இருவரும்
இணைந்து அவர்களுக்கு தாம் விரும்பிய செயற்கை கருத்தடை
முறையினைத் தெரிவு செய்வதற்கு பூரண சுதந்திரம் அளிக்கப்பட
வேண்டும்.
மேற்கூறப்பட்ட பரிந்துரைகள் தேயிலைப் பெருந்தோட்டத் துறையில் அமுல்படுத்தப்படுமானால், அது குடும்பத் திட்டமிடல் நிகழ்ச்சித் திட்டம் சரியான முறையில் வெற்றியளிப்பதற்கு வழிவகுக்குமெனலாம்.
பிரவாதம் - ஜூலை 2005 65

Page 36
REFERENCES
Abeykoon, A. T. L. P. (2000) "The Changing Pattern of Female Labour Force Participation in Sri Lanka". Sri Lanka Labour Gazette (Millennium Issue), 151 - 666
Afzal.M., and N. Chudhury. (1997)"Age at Marriage, Fertility and Infant Child
Mortality in a Labour Suburb'. Pakistan Development Review, 6.
Amali, P(2000) Gender Ideologis and Gender Relation in the Tea Plantation.
PALM Foundation, Nuwara Eliya. (Unpublished SurveyReport)
De Alwis, S. (1982) “The Impact of Socio Economic Factors on Fertility in Sri
Lanka'. Staff Studies Vol. 12 No. 2 Central Bank of Sri Lanka.
J.E. D.B. 1982-1986 Report on Vital Statistics J. E. D. B. Colombo.
Jeyawardena, K. (1984) The Plantation Sector in Sri Lanka. Recent Changes in the Welfare of Children and Women Ed. By. G. Richard and A. Giovanni, Corinea.
L. J. E. W. U. (1997) Report on Women, Child and Migrant Labour in the
Plantation Sector, Colombo (Unpublished).
PHSWT(1999) Health Bulletin: Estate Sector 1995-1997. PHSWT, Colombo.
Estate Health Annual Report 1996-2000.
Rajendran, S. (2002) Relationship Between the use of Contraceptive Methods and Fertility levels: A Study of Female Tea Plantatin Workers in Sri
Lanka. University of Peradeniya. Annual Research Paper.
சோபனாதேவி இராஜேந்திரன் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை.
பிரவாதம் - ஜூலை 2005

தேசத்தையும் அரசையும் கட்டியெழுப்புதல்: ஒரு கோட்பாட்டு விளக்கம்
அம்பலவாணர் சிவராஜா
1. தேசத்தினைக் கட்டியெழுப்புதல்
1950 களிலும் 1960 களிலும் மூன்றாம் உலகத்தில் தேசத்தினையும் அரசினையும் கட்டியெழுப்புதல் பற்றிய கலந்துரையாடல்கள் ஒப்பீட்டு அரசியற் கோட்பாட்டை மையமாகக் கொண்டு இடம்பெற்றன. இன்று நாம் மூன்றாம் உலகம் என அழைக்கும் பல சமூகங்கள் 1950களில் தமக்கென சுதந்திரமான அரசுகளைப் பெற்றுக்கொண்டமையால் இக் கோட்பாடுகள் விசேடமாக முன்வைக்கப்பட்டன. தேசிய அரசுகள் என்ற வகையில் சுதந்திரத்தின் பின் இவற்றின் அந்தஸ்து ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிப்பதிலிருந்து சற்று மேம்பட்டதாகவே இருந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட அரசுகளுக்குள்ளே வேறுபட்ட மத, மொழி, கலாசாரம் போன்றவை பன்மைத் தன்மை கொண்டனவாக இருந்தமையால், இறைமை பெற்ற அரசுகளாக தேசிய சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டியிருந்தன. அதனிடையில் பழைய நிலைநிறுத்தப்பட்ட தேசிய அரசுகள் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகள் தமது காலனிகளை விட்டு வெளியேறியதோடு, இரண்டாம் உலகப் போரில் பெற்ற அனுபவங்கள் காரணமாகத் திருந்தி, தமக்கென ஒரு சர்வதேச ஒழுங்கினை உருவாக்கியிருந்தன. அவை புதிதாக எழுச்சியடைந்து வரும் அரசுகளை சர்வதேச ஒழுங்குக்குள் கொண்டுவர வேண்டுமென விரும்பின. மூன்றாம் உலகச் சமூகங்களும் ஐரோப்பிய மாதிரியிலமைந்த தேசிய அரசுகளாக வேண்டுமென விரும்பின. இந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்குத் தேசிய அரசுகளைக் கட்டியெழுப்புவதற்கான நீண்டகால வரலாற்றுப் பரிணாம வளர்ச்சியை உதாரணமாக்கியதோடு, பல சூத்திரங்களையும் பட்டியல்களையும் அவை பின்பற்றி வழிகாட்டிகளாகக் கொள்ள வேண்டுமென்றும் விரும்பின. முன்வைக்கப்பட்ட கோட்பாட்டுப் பெட்டகம் தேசிய அரசுகளின் வரலாற்று ரீதியான பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடாகும். இது உலகின் எல்லாத் தேசிய அரசுகளினதும் குறிப்பிட்ட வரலாற்றினைக் கணக்கிலெடுக்காது முன்வைக்கப்பட்டது. இந்த அடிப்படையிலேயே கோட்பாட்டுவாதிகளும் ஒப்பீட்டினை முன்வைத்தனர். இருந்தும் இவ்வொப்பீடுகள் மூன்றாம் உலகம்
பிரவாதம் - ஜூலை 2005 67

Page 37
பின்பற்றக் கூடிய தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான இலட்சிய மாதிரியாகிறது. இம்மாதிரி ஆட்புலத் தேசிய சமூகம் இறைமை பெறுவதற்கும் மற்றைய அரசுகளோடு வெளிவாரியாகப் போட்டியிடுவதற்கும் உள்ளூரில் ஒற்றுமையான அரசியலை ஒழுங்கமைக்கவும் சட்டத்தையும் உறுதிப் பாட்டையும் தேசிய ஒற்றுமையினூடாக ஏற்படுத்த வேண்டியிருந்தன. அத் தேசிய ஒற்றுமையினை நவீனத்துவத்தினூடாகப் பெற்றதாக இருத்தல் வேண்டும் என மேற்சொன்ன கோட்பாடு வற்புறுத்தியது. ஆனால், அரசியல் ஒற்றுமைக்கு ஒன்று திரட்டுதல் வழிமுறை அவசியமாகின்றது. ஏனெனில், தேசத்தினைக் கட்டியெழுப்பும் நோக்கம் மரபுரீதியான அடையாளங்களை அழித்து விட்டுப் புதிய தேசிய அடையாளங்களை வேண்டி நிற்கின்றது. இவ்வாறு, அரசியல் சமூக ஒன்று திரட்டுதல் ஊடாக ஒரு நாட்டினைக் கட்டியெழுப்புதல் மூன்றாம் உலக நாடுகள் அரசு, சமூகத்தினைக் கட்டியெழுப்பும் முறையின் முன்மாதிரியாகியது.
கோட்பாட்டின்படி ஒன்று திரட்டுதல் நவீனத்துவ சக்திகளால் வழங்கப்பட்ட புதிய நடவடிக்கைகளில் ஈடுபட மக்களை ஆயத்தப்படுத்தும், அல்லது தூண்டும் எனப்பொருள்பட்டது. ஆனால், பல மூன்றாம் உலக நாடுகளினது வரலாற்றையும் இனத்துவக் கோரிக்கைகளையும் கொண்டு பார்க்கும்போது ஒன்று திரட்டுதல் என்பது நடைமுறையிலிருந்த இனத்துவ வேறுபாடுகளை அதிகரிப்பதாக இருந்தன. யதார்த்த ரீதியில் தேசிய ஒற்றுமை என்ற சிந்தனை பெரும்பான்மை இனம் என்ற அடையாளத்தினூடாக நடைமுறைப்படுத்தப்பட்டது. தேசியவாதம் பெரும்பான்மை இனத்துவம் என்ற இலகுவான தளத்தைக் கண்டு கொண்டது. சமூகத்தில் காணப்பட்ட மற்றைய இனத்துவக் குழுக்கள் தேசிய முயற்சிகளில் எவ்விதப் பயனும் பெறாது அரசியல் ரீதியில் தம்மை அடையாளப்படுத்த வேண்டியிருந்தது. இச் சமூகங்களில் இன அடையாளம் முதலில் அரசியல் காழ்ப்புணர்வின் அம்சமாகக் கொள்ளப்படலாயிற்று. இன, மொழி, மதக் குழுக்களும் பிற மரபுக் குழுக்களும் தவிர்க்க முடியாதபடி அரசியல் மயமாக்கப்பட்டமை அவற்றை ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் குழுக்களாக ஆக்கின. ஆனால், மற்றொரு மட்டத்தில் அவைகள் அரசியல் சுயாட்சி பெறுவதற்காக அரசுக்கு எதிராகச் செயற்பட்டன. முறு துருவத்தில் அவை சுதந்திரமான அரசொன்றையும் கோரின.
இனரீதியாகப் பிளவுபட்ட மூன்றாம் உலகச் சமூகங்களில் தேசத்தினைக் கட்டியெழுப்புதல் என்ற முயற்சி இனக் குழுக்களிடையேயான அரசியல் சமன்பாடுகளை மறு ஒழுங்கமைப்புச் செய்தல் எனக் கொள்ளப்படலாயிற்று. அரசு, ஒரு சிவில் சமூகத்தினை உருவாக்குவதில்
68 பிரவாதம் - ஜூலை 2005

கவனம் செலுத்துவதிலும் பார்க்க இன அரசியல் சமன்பாடுகளில் பெருமளவுக்கு மத்தியஸ்தராகச் செயற்படத் தொடங்கியது. இனப் பெரும்பான்மையுடன் சம்பந்தப்படும் அரசியல் கலாசார தத்துவத்தினை ஒரு சர்வதேச தத்துவமாக மாற்ற, அதனைத் தேசம் முழுவதற்கும் உரியதாக்க விரும்பியது. இதே வழியைத் தான் ஐரோப்பிய நாடுகளும் பின்பற்றின. ஆனால், ஐரோப்பாவைப் போலன்றி அத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தையும் பலத்தையும் மூன்றாம் உலகம் பெற்றிருக்கவில்லை. அத்தோடு, ஓர் இனப் பெரும்பான்மையினை அரசியல் பெரும்பான்மையாக்குவதும் சிரமமாயிருந்தது.
பல மூன்றாம் உலக அரசுகளின் ஆட்சி செய்யும் உயர்ந்தோர் குழுக்கள் பல்இன சமூகங்களில் சந்தைச் சக்திகளினூடாக ஒரு பொது தேசியத்துவத்தை உருவாக்குவது நலன்பேண் குழுக்களோடு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடத்தும் முறையோடு தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியினையும் ஏற்படுத்த முடியாது என்பதை விரைவில் கண்டுபிடித்தன. ஆனால், அவை மந்தமான அல்லது மெதுவாக வளர்ச்சியடையும் பொருளாதாரம் இனத்துவ அல்லது மற்றைய அரசியல் வேற்றுமைகளுக்கு வழிவகுப்பதோடு, தமது ஆட்சிகளின் உறுதிப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக அமைகின்றன என்பதைக் கண்டுகொண்டன. ஆகவே, பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தி என்ற பிரச்சனைக்கு அனைத்தாண்மை அல்லது சர்வாதிகாரத் தீர்வுகளில் தங்கியிருக்க அவை முற்பட்டன. அரசினை சமூகத்திற்கு மேலாகவும் விலகியும் காட்டுவதினூடாக அவை புதுவிதமான அரசினைக் கண்டு பிடித்தன. இது, மேற்குலகின் மத்திய மயப்படுத்தப்பட்ட அரசுகளிலிருந்தும் சோசலிச அரசுகளிலிருந்தும் வேறுபட்டதாகும். அது, குலமரபு பரம்பரை அல்லது இராணுவ சர்வாதிகார இயல்பைக் கொண்டதோடு, விரைவாக சர்வதேச ஒழுங்கோடு தன்னை இணைத்தும்கொண்டது. ஆனால், தமது சமூகங்களினது சிவில் ஒழுங்கினை விரைவில் சிதைத்தும் விட்டது.
சில மூன்றாம் உலகச் சமூகங்கள் ஒருதேசிய சமூகத்தினைக் கட்டியெழுப்புவதில் அரசியல், ஜனநாயகம், பிரசாவுரிமையினை விஸ்தரித்தல் என்பவற்றை வற்புறுத்தின. ஆனால், அவையும் குறிப்பிடக்கூடியளவுக்கு வெற்றிபெறவில்லை. பலவீனமான அரசில் ஒரு ஜனநாயக முறையைச் செயற்படுத்துவதில் இப்போது அவர்கள் ஒரு நட்பு வட்டத்தினுள் தம்மை உட்படுத்தியுள்ளனர். குறைந்த வளர்ச்சி விகிதங்கள், உயர்ந்தளவினதான இனத்துவ முரண்பாடுகள் இரண்டும் ஒன்றிலொன்று போசாக்குப் பெறுகின்றன. இரண்டும் உள்ளிருந்து அரசின் நியாயப்பாட்டினை அடித்துச் செல்கின்றன. அவை சர்வதேச ஒழுங்கில் தீர்மானிக்கும் சுயாட்சி என்ற கருத்தினை
பிரவாதம் - ஜூலை 2005 69

Page 38
வற்புறுத்துகின்றன. ஆனால், அந்த ஒழுங்கு பங்குபற்றுதலால் கிடைக்கும் முழு நன்மையைத் தர மறுக்கின்றது. அதேவேளை, அவை உரிமை கோரும் சுயாட்சி ஒருமைப்படும் உலகப் பொருளாதாரத்தின் எதிர்கணிய விளைவுகளிலிருந்து பாதுகாப்பைத் தரவில்லை; விரிவடையும் கடன் பொறிகளுள் சென்றிருப்பதோடு அடிப்படை உற்பத்திகளுக்காகத் தமது மூலவளங்களை வீணாக்குகின்றதோடு ஆரோக்கியமற்ற கைத்தொழில்களை வரவேற்பதன் மூலம் சூழல் மாசடையும் அபாயத்துக்குட்படுகின்றன. அத்தோடு, மேற்கு நாடுகளது பொருளாதாரம் கீழ் நிலைக்குச்செல்லும் போது வளர்ச்சி வீதம் குறைவுக்குட்படுகின்றன. இதுவ்ே அங்கு காணப்படும் நிலைவரங்களாகி யுள்ளதால் மூன்றாம் உலக அரசுகளுக்கு இறைமை எந்தவித அர்த்தமுமில்லாதாகின்றது. மிக வேகமாகச் சுருங்கி வரும் இன்றைய உலகில் பழைய, நிலை நிறுத்தப்பட்ட தேசிய அரசுகளின் இறைமை கூடச் சிதைந்து வருகிறது என்பது உண்மையே. ஆனால், மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்தவரை தேசத்தன்மை என்பது கூட அடைய முடியாததொன்றாக இருந்து வருகிறது என்பது ஒரு முக்கிய வேறுபாடாகும்.
அதன் இயல்பினைப் பொறுத்தவரை தேசத்தினைக் கட்டியெழுப்புதல் என்பது ஒரு குழப்பமானதும் சிரமமானதுமான செயற்பாடாகும். மேற்குலகில் அது நூற்றுக்கணக்கான ஆண்டுகளை எடுத்தது. ஆனால், அந்த வழிமுறை ஒப்பீட்டளவில் குழப்பம் குறைந்ததாகவும் அமைந்தது. காரணம், அது படிப்படியாகவும், படிமுறையாகவும் வளர்ச்சியடைந்தமையேயாகும். ஆசிய ஆபிரிக்க சமுதாயங்களில் தேசத்தினைக் கட்டியெழுப்பும் வழிமுறை பொருளாதார, அரசியல் சமூகத்துறைகளில் ஒரே காலகட்டத்தில் மாற்றங்கள் இடம்பெற்றமையால் சிரமங்களுக்குள்ளாகியது. இவற்றின் பெரும்பாலான சமூகங்கள் உயர்ந்தளவு பன்மைத்தன்மை வாய்ந்தவை என்பதோடு, பல்வேறு குழுக்களினதும் அபிவிருத்திக் கட்டங்கள் சமமற்றவையாகவும் இருந்தன. சமூக - பொருளாதார மாற்றங்களின் பிரச்சினைகள் அரசியல் பற்றிய அடிப்படை கருத்தொருமைப்பாடின்மையால் உக்கிரமடைந்தன. இவை முரண்பாட்டுத் தீர்வின் வழிமுறையை மேலும் குழப்பத்திற்குள்ளாக்கின.
2. அரசினைக் கட்டியெழுப்புதல்
அரசும் சிவில் சமூகமும் என்பது சமகாலத்தில் பரவலாக விவாதிக்கப்படும் ஒன்றாகவுள்ளது. இருந்தும், விமர்சனமற்ற முறையில் இவ்வெண்ணக்கருக்கள் பயன்படுத்தப்படுவதனால் அரசினை விமர்சிப்பதும்
70 பிரவாதம் - ஜூலை 2005

சிவில் சமூகம், கலாசாரம் என்பவற்றை கொண்டாடுவதும் ஒரு போக்காகவுள்ளது. இத்தகைய உரையாடல்களில் சமத்துவ நோக்கு மறைந்து வருவதும் அடிப்படைவாதத்தின் மறு எழுச்சி, உலகின் பலபாகங்களிலும் இனத்துவ, மத, வகுப்புவாத, வன்முறை நிகழ்ச்சிகளும் ஒத்துச்செல்கின்றன.
“அடையாளம்” “மீட்பு” என்பவற்றின் பெயரில் மனிதத் துன்பங்கள் இடம்பெறுகின்றன. நவீன அரசின் வன்முறைக்குப் பதிலாக மேற்சொன்னவை நடத்தப்படுகின்றன இதில் அரசுக்கும் அரசாங்கத்துக்குமிடையில் வேறுபாடு காட்டப்படுவதில்லை. ஒரு பக்கத்தில் முதலாளித்துவ தாராண்மை அரசுக்குக் கண்டனங்கள் இன்றித் துதி பாடப்படுகிறது. இது ஜனநாயகம், சமத்துவ அரசு என்பவற்றை மாற்றியமைப்பதற்கு இடமளிப்பதில்லை. மறுபுறம் நவீனத்துவம் மிகவும் பாரதூரமான கண்டனத்துக்குட்படுத்தப்படுவதோடு அரசுக்கெதிராக மரபு, கலாசாரம் என்பன புகழப்படுகின்றன. அத்தகைய கருத்தில் நவீன அரசு, கலாசாரம், மரபு என்பவற்றுக்கெதிரான சர்வ உலகமயப்படுதல் ஒற்றுமைப்படுவதாகக் கொள்ளப்படுகிறது. இதன் மூலம் நவீனத்துவத்திற்கு முற்பட்ட மரபு ரீதியான அரசியல், உண்மையான ஜனநாயக அரசியலாகக் காட்டப்படுகிறது. நவீன மக்களுக்கெதிரான கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட கூட்டுக்கள் முன்னுரிமை வழங்கும் அரசியலே உண்மையான முன்னுதாரணமாகக் கொள்ளப்படுகிறது. சுருக்கமாக கலாசாரம், சமூகம் எதிர் அரசு, மரபு எதிர் நவீனத்துவம் என்ற இரட்டைத்தன்மை மேடையை ஆக்கிரமித்துள்ளது. இருந்தும் அரசும் சமூகமும் ஒன்றிணைந்த எண்ணக்கருக்களாகும். அவை ஒன்றையொன்று பாதிக்கின்றன.
முன்னணி நவீன சமூகங்கள் யாப்பு ரீதியான ஜனநாயக அரசினை சட்டத்தின் ஆட்சியை அடிப்படையாகக்கொண்டே அதாவது, சட்டத்துறைக்கும் நிர்வாகத்துறைக்குமிடையில் சமத்துவத்தை ஏற்படுத்துவனவாக உள்ளன. இத்தகைய அரசாங்கங்கள் தேர்தல் தொகுதிகளினூடாகவும், பங்குபற்றுதலினூடாகவும் மக்கள் விருப்பத்துக்கு பதில்சொல்லத்தக்கனவாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த அரசாங்க ஸ்தாபனங்கள் தமது அதிகாரத்தை மக்களிடமிருந்தே பெறுவதால் அவை மக்களால் கட்டுப்படுத்தக்கூடியவை. இது, தனியொரு வர்க்கத்தினதோ குழுவினதோ கையில் அதிகாரம் தனியுரிமையாக இருக்கக் கூடாதென்பதை உறுதிப்படுத்துகிறது. ஜனநாயக உரிமைகள் எல்லா மக்களுக்கும் உத்தரவாதம் செய்யப்படுகின்றன. இத்தகைய ஒழுங்குப்பாட்டின்படி நவீன அரசு, பொதுமக்கள் ஆட்சியின் வெளிப்பாடு ஆகும். இந்த அடிப்படை எடுகோளை தாராண்மை ஜனநாயக அரசின்
பிரவாதம் - ஜூலை 2005 71

Page 39
அடிப்படையாகக் கொண்டு அத்தகைய அரசியல் பொருளளவில் பன்மையியல் தன்மையையும் சமூக வர்க்கங்களையும் ஊடறுக்கும் தன்மை கொண்டது. குழுக்களிடையேயும் ஸ்தாபனங்களிடையேயும் ஒழுங்கமைப் புகளினிடையேயும் அதிகாரம் பரவலாக்கப்படுகிறது. சமத்துவமின்மை காணப்படுகிறது. ஆனால், அவை பல்வேறு பொருளாதார, சமூக, அரசியல் நலன்களின் ஜனநாயகப் போராட்டங்கள், பேரம் பேசல் என்பவற்றாலும், பேச்சு வார்த்தைகளினாலும் மாற்றியமைக்கப்படுகின்றன. மொழி, பால், இனம், மதம், இனத்துவம் போன்றவற்றைச் சேர்த்தால் சமூகம் முழுவதிலும் பலம் வாய்ந்த தனிப்பட்டவர்களும், குழுக்களும் பரவலாகக் காணப்படும்போதும், அரசியல் முறை உருவாக்கிய கட்டுப்பாடுகள் மூலம் வாக்குப்பெட்டிகள் மூலம் மக்களுக்கு கணக்குச் சொல்லக்கூடியனவாக உள்ளன. இவ்வாறு அரசுகள்,
(அ) போட்டியிடும் நலன்களை இணக்கப்படுத்துகின்றன.
(ஆ) சில சந்தர்ப்பங்களில் முதலாளித்துவ நலன்களுக்கெதிராகவும் செயற்பட்டு, சர்வதேச நலன்களுக்கெதிராகவும் பொதுத்தேசிய நலன்களைப் பராமரிக்கின்றன.
இ) ஆகவே, அரசின் நடுநிலை சமப்படுத்துதலும் இணக்கப் படுத்துதலினதும் பங்கு சிவில் சமூகத்தை விரிவுபடுத்துதலில் தான் ஜனநாயகத்துக்கு கணக்குச் சொல்லுதல் என்பது தங்கியிருக்கிறது எனலாம்.
அரசு தன்னை விரிவுபடுத்தும் போதெல்லாம் அதன் அடக்கு முறையும் அனைத் ாண்மைப் போக்கும் வளர்ச்சியடைகின்றன. ஜனநாயக அரசியலைக் கொண்டுள்ள நவீன அரசுகளின் சாதனைகளைப் பற்றிக் கவனத்துள் கொள்வோம். இவை நவீனத்துக்கு முற்பட்டகால பழங்கால தாராண்மை அரசிலிருந்து வேறுபடுகின்றன. இத்தகைய கணக்கெடுப்பு பின்வரும் மூன்று விதங்களிலமைகின்றன. (1) இத்தகைய முறை ஆக்க பூர்வமான விமர்சனத்துக்கு வழியமைப்பதோடு இவ்வணுகுமுறை உள்ளார்ந்த மட்டுப்பாடுகளையும் கொண்டதாகும். இத்தகைய மட்டுப்பாடுகள் அரசு, சமூக உறவுமுறை பற்றிய மாற்று எண்ணக்கருக்களுக்கான தேவையைக் கோருகின்றன. இது ஒரு நல்ல எதிர்காலத்துக்கான தேவையாகும்.
(2) அரசு பற்றிய பழமையாளர் கண்டனங்கள் பெரும்பாலும் மறுவுருவமைப்பினை நோக்கியதாகவும் இருப்பதோடு அதிகாரத்
72 பிரவாதம் - ஜூலை 2005

தனியுரிமை ஆக்கிரமிப்புச் செலுத்தும் சமூகக் குழுக்களின் கைகளை அடைவது நிராகரிக்கப்படுகிறது. (3) இது அரசு, சமூகம் என்ற இரட்டைத்தன்மையான அத்திபாரத்தின் கண்டனமாகவும் மார்க்சிய சிந்தனையின் உள்ளே காணப்படும் எதிர்ப்புக் குரல்களின் பாடங்களையும் புதிய தாராண்மைவாதம் நவீன அரசினை நிராகரிக்கும் கலாசாரவாதிகளினதும் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட மரபையும் தேசங்களையும் மாற்றுக் கருத்துக்களையும் முன்வைக்கின்றது. வேறு வார்த்தைகளில் சொன்னால், அரசு - சமூக இரட்டைத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட கலாசாரவாதிகளில் இருக்கும் தாராண்மை மரபுகளை வெளிக்காட்டும். முதலாவதாக தாராண்மைவாத அரசின் சாதனைகள் பின்வருமாறு:
(1) குறைந்தது 20ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதிகளிலாவது அரசியல் பங்குபற்றுதலுக்கான வாய்ப்புகள் சனத்தொகையில் பெரும்பகுதியினருக்கு விரிவாக்கப்பட்டதோடு, முறைப்படியான அதிகாரத் தனியுரிமை ஆக்கிரமிப்பு செலுத்தும் சமூகக் குழுக்களின் கைகளை அடைவது நிராகரிக்கப்படுகிறது.
(2) ஒவ்வொரு தாராண்மை ஜனநாயக அரசுக்குள்ளும் முறைப்படியான சுதந்திரமும் எல்லாப் பிரசைகளும் சமத்துவமானவர்கள் என்பதும் யாப்பு ரீதியான உத்தரவாதத்தினால் கிடைக்கின்றது.
தொகுத்துப் பார்த்தால், கணிசமான சமமின்மைகளில் தலையிட்டு இணக்கப்படுத்துவதினூடாகவும் , தேர்தல் தொகுதித் தீர்ப்பில் பொதுமக்களின் பங்குபற்றுதலினூடாகவும் அரசுக்கான நியாயப்படுத்தல் அமைகின்றது. ஆனால், இது மிகக் குறைந்தளவினதான அரசு என்ற பிரேரணை பற்றிச் சந்தேகங்களை எழுப்புகிறது.
உண்மையில் இவ்வரசுகளில் இடதுசாரிகள் எதிர்நோக்கும் மிகப்பெரும் சவால், பழமையான தாராண்மை நிகழ்ச்சி நிரலில் மாற்றங்களைக் கொண்டு வருதலாகும். ஏனெனில், சந்தையினைச் சுதந்திரமாகவும் கொடூரமாகவும் விலக்கிவிடுவதை விடுத்து மறுபங்கீடு செய்வதில் அரசு சுறுசுறுப்பான பங்கை வகித்தது. அதனிலும் மேலாக சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் ஒவ்வொரு சமூகக் குழுவுக்கும்
பிரவாதம் - ஜூலை 2005 73

Page 40
வழங்குகிறதா என்ற கேள்வியும் உண்டு. ஜனநாயகம் என்ற கருத்து வாக்களிப்பதற்கான சமவாய்ப்புகளை வழங்கும் அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டதொன்றா? மூலவளங்களைச் சமமற்ற முறையில் பங்கீடு செய்வது நிகழுமானால் (கல்வி, முதல், மற்றைய உற்பத்தி வழிகள்) அங்கு சமமற்ற வாய்ப்புகளும், பேரம்பேசுதலும் இருக்கும். உதாரணமாக, தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றங்கள் அல்லது அசெம்பிளிகள் ஒழுங்கு படுத்தப்படாத தொழிலாளர்களினது அல்லது கிராமிய சனத்தொகையினது பிரச்சனைகளை எந்தளவுக்குப் பிரதிபலிக்கின்றன?
அண்மைத் தசாப்தங்களில் அரசியற் கட்சிகள் அதிகாரத்துக்கு வரும் அதேவேளை,சந்தைச் சக்திகளை அதிகாரத்துக்கு வரவிடுவதே அரசாங்க சக்திகளின் ஆக்கிரமிப்பாக இருந்து வருகிறது. இந்தக் கருத்தில் “முதல்” அரசில் மிகப்பிரதான கட்டுப்பாட்டைக் கொள்ளத்தொடங்கியுள்ளது எனலாம்.
தாராண்மைவாதிகளின் கோரிக்கைகளுக்கு முரணாக ஒவ்வொரு சமூகக்குழுவும் மூலவளங்களையும் உரிமைகளையும் சமமாகப் பங்கிடவில்லை எனக்கொள்ளலாம். மேலும், இப்பங்கீடானது சமூகக் குழுக்களினதும் சக்திகளினதும் வேறுபடும் இடங்களைப் பொறுத்த தாகவுள்ளது. இக் கருத்தில் பன்மையியல் மாத்திரம் ஜனநாயக அரசையோ அல்லது அரசியலையோ உறுதிப்படுத்த முடியாது. பிராந்திய மத, இனத்துவ, மொழி என்பனவும் தேர்தல் தொகுதி ஆதரவு பெறுவதற்கான அடிப்படைகளையும் சமூகபாகுபாட்டையும், சமமின்மையையும் மறைப்பதோடு, அரசுக்கெதிரான சிவில் சமூகத்தினை விரிவாக்குகிறது என்ற மாயையையும் ஏற்படுத்துகிறது. இக் கருத்தில் ஒரு குறிப்பிட்ட அரசுக்கெதிரான போராட்டத்தை ஜனநாயகத்துக்கான போராட்டமாகவோ சுய நிர்ணய உரிமைக்கான போராட்டமாகவோ கொள்ளமுடியாது. அது எளிமையாக ஜனநாயகத்துக்கெதிரான எதிர்ப்பின் வளர்ச்சியாகவும் இருக்கலாம். r
அடிப்படைவாதிகளின் கருத்தின்படி அரசு அடிக்கடி எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குக் காரணமான முதலாளித்துவ ஆக்கிரமிப்பினை இயலுமானதாக்கும். இது, மரபு ரீதியான கலாசாரத்தைப் புகழ்வதாக இருக்கும்.
சுருக்கமாக ஒரு பலவீனமான அரசு, ஒரு பலவீனமான சிவில் சமூகம்
என்ற பொருளைத்தராது. இதன் தாற்பரியம் என்னவெனில், அரசு சமூகக் கட்டமைப்பின் தாக்கங்களுக்கு உட்படுகிறது என்பதே. ஆகவே, அரசும்
74 பிரவாதம் - ஜூலை 2005

சிவில் சமூகமும் தனித்தனியான இருப்புக்கள் அல்ல. அவை அரசு சமூகம் என்ற இரு முறைத் தன்மையில் சுறுசுறுப்பாக ஒன்றிணைக் கப்பட்டுள்ளன.
3. முடிவுரை
இக் கட்டுரையின் 1" பகுதியில் தேசத்தினைக் கட்டியெழுப்புதல் பற்றியதொரு கோட்பாட்டு விளக்கம் முன்வைக்கப்பட்டது. அதில், புதிதாகச் சுதந்திரம் பெற்ற அரசுக்குள்ளே வேறுபட்ட மத, மொழி, கலாசாரம் என்பவற்றைப் பின்பற்றும் குழுக்கள் இருந்தமையால், அவை உண்மையான தேசிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றன என்பதையும் இக் கோட்பாட்டினை முன்வைத்தோர் ஐரோப்பிய மாதிரியிலமைந்த தேசிய அரசுகளாக மூன்றாம் உலக நாடுகளும் ஆகவேண்டுமென விரும்பினர் என்பதையும், அதற்காகப் பல சூத்திரங்களையும் பட்டியல்களையும் அவை பின்பற்ற வேண்டுமென்றும் விரும்பினர் என்பதையும் கண்டோம். ஆனால், மெதுவாக வளர்ச்சியடையும் பொருளாதாரம், இனத்துவம் மற்றைய அரசியல் வேற்றுமைகள் என்பன மூன்றாம் உலக நாடுகளில் இக் கோட்பாட்டினைப் பயன்படுத்துவதற்குத் தடையாகவுள்ளன என்பதும் விளக்கப்பட்டன.
இக் கட்டுரையின் 2" பகுதியில் அரசினைக் கட்டியெழுப்புதல் பற்றியதொரு கோட்பாட்டு விளக்கம் முன்வைக்கப்பட்டது. அதன்படி அரசுகளில் சமத்துவ நோக்கு மறைந்து வருவதும், அடிப்படைவாதத்தின் மறுஎழுச்சி, இனத்துவ, மத, வகுப்புவாத வன்முறை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன என்பதும் காட்டப்பட்டது. சுருக்கமாக கலாசாரம், சமூகம், எதிர்அரசு, மரபு எதிர் நவீனத்துவம் என்ற இரட்டைத் தன்மை மேடையை ஆக்கிரமித்துள்ளது என்பது விளக்கப்பட்டது. இக்கோட்பாட்டின்படி அரசுக்கான நியாயப்படுத்தல் சமமின்மைகளில் தலையிட்டு இணக்கப்படுத்துவதினூடாகவும் தேர்தல் தொகுதித் தீர்ப்பில் மக்களின் பங்குபற்றுதலினூடாகவும் இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடப்பட்டது.
ஆகவே, பகுதி ஒன்றின் விளக்கத்தையும் பகுதி இரண்டின் விளக்கத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தேசத்தினைக் கட்டியெழுப்புதல் என்பதும் அரசினைக் கட்டியெழுப்புதல் என்பதும் இரண்டு வெவ்வேறான பிரச்சினைகள் என்பது தெளிவாகின்றது. தேசத்தினைக் கட்டியெழுப்புதல் என்பது புதிதாகச் சுதந்திரம் பெற்ற மூன்றாம் உலகநாடுகளுக்கான மாதிரியாக முன்வைக்கப்பட்டதாகும். அரசினைக் கட்டியெழுப்புதல் என்பது நவீன அரசுகள் எல்லாவற்றுக்கும் பொதுவானதாக முன்வைக்கப்பட்டுள்ளது
பிரவாதம் - ஜூலை 2005 75

Page 41
என்பதும் தெளிவாகின்றது.
உசாத்துணை நூல்கள்
1. Ramakant & B. C. Upreti, Nation Building in South Asia - Vol. 1,
New Delhi:South Asian Publishers Ltd, 1991.
2. Gabriel Almond and James S. Colemon, The Politics of Developing
Areas, Princeton, 1960.
3. Almond, G. and Bungham Powell, G. Comparative Politics.A
Developmental Approach, Boston, 1963.
4. Dand Apler, Politics of Modernization, Chicago, 1965.
5. Rajani Kothari, Re-thinking Development: In Search of Human
Alternatives, Delhi: Ajanta Publishers, 1988.
அம்பலவாணர் சிவராஜா பேராதனைப் பல்கலைக்கழக - அரசியல் விஞ்ஞானத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்
76 பிரவாதம் - ஜூலை 2005

G பின் கவிதைக்கோப்பாடு
எஸ். வி. ராஜதுரை
*யதார்த்தவாதியாக இல்லாத கவிஞர்கள் செத்துப் போனவர்கள். ஆனால் யதார்த்தவாதியாக மட்டுமே இருக்கும் கவிஞர்களும் கூட செத்துப் போனவர்கள்தாம். அறிவுக்குப் புரியாத வகையில் எழுதும் கவிஞர்களின் கவிதைகள் அவர்களுக்கும் அவர்களை நேசிப்பவர்களுக்கும் மட்டுமே புரியும். இது மிகவும் வருந்தத்தக்கது. அறிவுக்குப் புரியும் வகையில் மட்டுமே எழுதும் கவிஞர்களைக் கழுதைகளாலும் கூடப் புரிந்து கொள்ள முடியும். இதுவும் வருந்தத்தக்கதுதான்.” மேற்தோற்றத்தில் முரண்பாடுகள் கொண்டதாகத் தெரியும் இந்த வரிகள் பாப்லோ நெருடாவின் கவிதைக் கோட்பாட்டினை உள்ளடக்கியுள்ளன.
1920 களிலிருந்து 1950 கள் வரை இலத்தீன் அமெரிக்காவிலும் ஸ்பெயினிலும இடதுசாரி எழுத்தாளர்கள் மீது செல்வாக்கு செலுத்திய இரண்டு முதன்மையான அரசியல், அழகியல் நிலைப்பாடுகள் சர்ரியலிசமும் சோசலிச யதார்த்தவாதமும் ஆகும்.1936 இல் ஸ்பெயினில் உள்நாட்டுப் போர் தொடங்கியதும் அதுவரை சர்ரியலிச பாணியில் கவிதைகள் எழுதி வந்தவர்களில் பலர் - குறிப்பாக செஸர் வால்லெயோ(Cesar Valejo) ரஃபேல் -96oGUTLq (Rafael Alberti), 9TuS Glas (upl-IT (Louis Cemuda), utüGouT நெரூடா ஆகியோர் - சாதாரண மக்களையும் எளிதில் சென்றடையக்கூடிய கவிதைகளை எழுதத் தொடங்கினர். ஆனால் ஃபாசிச எதிர்ப்பில் உறுதியாக நின்ற இடதுசாரிக் கவிஞர்களில் ஒக்டோவியா பாஸ் (Octavia Paaz), வின்செந்த் ஹoயுடொப்ரே (Vincente Huyidobre) ஆகியோர் பரிசோதனைப் பாணி, சர்ரியலிச பாணிக் கவிதைகளை எழுதுவதையோ அல்லது சர்ரியலிசயக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதையோ ஒரு போதும் கைவிடவில்லை. ஸ்பெயினின் புகழ்பெற்ற நாடகாசிரியரும் கவிஞரும் ஃபாசிசவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவருமான ஃபெடெரிகோ 55 TfGróuum GaoTsf5T (Federico Garcia Lorca) 35 GMLé6J6My FfrrfluuGóls & கவிதைகள் எழுதிவந்த போதிலும், அவரது மரணத்திற்குப் பின் ‘நியூயார்க்கில் கவிஞன்’ என்னும் தலைப்பில் வெளியிடப்பட்ட அவரது கவிதைகள் அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப் பெரும் பொருளாதார மந்தம், இனவாதம், அந்நியமயமாதல் ஆகியவற்றைச் சித்தரித்தன.உலகப் புகழ்பெற்ற மெக்ஸியக் கவிஞர் ஒக்டோவியா பாஸ், மார்க்சியச் சிந்தனையை ஏற்றுக்
பிரவாதம் - ஜூலை 2005 77 ۔

Page 42
கொண்டவராகவும், ஃபாசிசத்திற்கு எதிராக உறுதியாகப் போராடியவராகவும் இருந்தபோதிலும், சோசலிச யதார்த்தத்தை ஸ்டாலினிசத்தின் துணைவிளைவு என முற்றிலுமாக நிராகரித்தார்.
1917 நவம்பர் புரட்சிக்குப் பின் லெனின் தலைமையிலிருந்த ரஷ்ய (சோவியத்) கம்யூனிஸ்ட் கட்சியோ, சோவியத் அரசாங்கமோ அதிகாரபூர்வமான கலை இலக்கியக் கொள்கை எதனையும் வகுக்கவில்லை. மார்க்சியத்தையும் கம்யூனிசத்தையும் ஏற்றுக் கொண்டிருந்த கலை இலக்கிய வாதிகளிடையேயுங் கூட பல்வேறு போக்குகளும் பாணிகளும் இருந்தன. மார்க்சியவாதிகளாக இல்லாத, ஆனால் புரட்சியையும் சோசலிசத்தையும் ஆதரித்த கலைஞர்கள் சக பயணிகளாகக் கருதப்பட்டனர். லெனினின் மறைவுக்குப் பிறகும் கூட இத்தகைய கலை இலக்கிய சுதந்திரம் சில ஆண்டுகள் நீடித்தது. ஆனால் 1934 இல் ‘சோவியத் எழுத்தாளர் ஒன்றியம்’ என்கிற ஒரே அமைப்பும், சோசலிச யதார்த்தவாதம் என்கிற ஒரே ஒரு கலை இலக்கியக் கோட்பாடும் மட்டுமே சோவியத் அரசாங்கத்தாலும் கட்சியாலும் அங்கீகரிக்கப்பட்டன. அதிகார வர்க்கத் திரிபுகளுக்குள்ளான இக் கோட்பாடு பல சமயங்களில் சோவியத் பண்பாட்டு வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாகவே இருந்தது. பின்னாளில் கலை - இலக்கியத் துறையில் ஒரு சர்வாதிகாரியாக விளங்கிய ஸ்தானோவ் 1934 இல் நடந்த சோவியத் எழுத்தாளர் ஒன்றியத்தின் முதல் மாநாட்டில் கூறினார். “கம்யூனிஷ்ட் கட்சியின் தலைமையின் கீழும் நமது மாபெரும் தலைவரும் ஆசானுமாகிய தோழர் ஸ்டாலினின் மேதமைமிக்க வழிகாட்டுதலின் கீழும் நமது நாட்டில் சோசலிசம் மாற்ற முடியாதபடியும் இறுதியாகவும் வெற்றி பெற்றுள்ளது” தொழிற் துறையிலும் நாட்டுப் புறத்திலும் உள்ள குறை வளர்ச்சியை மட்டுமன்றி, அனைத்திற்கும் மேலாக “பாட்டாளி வர்க்கத்திடம் காணப்படும் பூர்ஷ்வா வர்க்கக் கருத்துநிலையின் எச்சங்கள், குட்டி பூர்ஷ்வா சோம்பேறித்தனம், சுற்றித் திரியும் தன்மை, வீணான நிலை, தனிநபர் வாதம், ஒழுக்கக் கேடான நடத்தை ஆகியவற்றை ஒழித்துக் கட்டுவதுதான் இக் காலகட்டத்தில் கலை எதிர்கொள்ள வேண்டிய சவால் ஆகும்” என்றும் கூறினார். அதே மாநாட்டில் உரையாற்றிய கார்ல் ராடெக் (Karl Radek) - ஜெர்மானியரான அவர் அன்று ரஷ்யக் கம்யூனிஷ்ட் கட்சியிலும் மூன்றாவது அகிலத்திலும் (Communist International Comintern) முக்கிய தலைவராக இருந்தவர். 1930 களில் நடந்த களையெடுப்புகளுக்குப் பலியானவர் - பாட்டாளிவர்க்க அல்லது சோசலிச யதார்த்தவாதம், சமூக பொருளாதார நிலமைகளையும் மக்களின் உளப்பாங்குகளையும் சர்ரியலிசம் போன்ற முன்னணிக் கலைப்பாணிகளைக் (Avant - garde art forms) காட்டிலும் மேலும் துல்லியமாகச் சித்தரிக்கின்றது என்றும், அது சோசலிசத்தின் எதிர்காலத்துடன், அதாவது அந்த
78 பிரவாதம் - ஜூலை 2005

எதிர்காலத்திற்கு வழிகாட்டுவதில் முன்னுதாரணமாகத் திகழும் சோவியத் ஒன்றியத்துடனும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். “சோசலிச உணர்வை உருவாக்கும் தொழிலாளர்களான எழுத்தாளர்கள் புரட்சியின் படைவீரர்களாக மாறி, தனிநபர்வாதத்தை வென்று, பூர்ஷ்வாக் கருத்துநிலை கூறும் ‘முழுமுற்றான சுதந்திரம்’ என்பதைக் கைவிட வேண்டும் என்றும் கூறினார்.
ராடெக்கின் உரையைக் கேட்கவோ, படிக்கவோ வாய்ப்புப்பெற்ற வெளிநாட்டு எழுத்தாளர்கள் பலர், சோசலிச யதார்த்தவாதம் தமக்குத் தேவையற்றது என்றாலும் அதனுடைய நோக்கங்களை ஏற்றுக் கொள்வது குட்டி பூர்ஷ்வா உணர்விலிருந்து விடுபட்டு சோசலிசத்திற்குத் தம்மை அர்ப்பணித்துக் கொள்ள உதவும் என்று கருதினர். ஏனெனில் 1917 நவம்பர் புரட்சி, உலகின் முதல் சோசலிசப் புரட்சியாக இருந்ததுடன், 1930 களில் ஸ்டாலின் கட்சியில் ‘களையெடுப்பைத் தொடங்கும் வரை உலகளாவிய புரட்சிக்கான நம்பிக்கைகளைத் தந்துகொண்டுமிருந்தது. ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஃபாசிசம் வளர வளர, நெரூடா போன்ற கவிஞர்கள் சோவியத் யூனியனின் தீவிர ஆதரவாளர்களாக மாறினர். இரண்டாம் உலகப் போரின்போது சோவியத் யூனியனுக்கான பிரச்சாரக் கவிதைகளையும் நெரூடா எழுதினார்.
மார்க்சியத்தையும் கம்யூனிசத்தையும் ஏற்றுக் கொண்டிருந்த கலைஞர்களில் சோசலிச யதார்த்தவாதத்தைக் கடுமையாக விமர்சித்தவர்களும் இருந்தனர். அதற்கு மாற்றாக அவர்கள் சர்ரியலிசத்தை உயர்த்திப் பிடித்தனர். அவர்களில் முதன்மைனயாவர் ஃபிரெஞ்சுக் கவிஞர் ஆன்ரே பிரித்தோன் (Andre Britton) , அவரும் லூயி அரகோன் (Louis Aragon), போல் எலுவர்ட் (Paul Eluard) ஆகிய இரு கவிஞர்களும் அன்று ஃபிரான்சின் இடதுசாரி சர்ரியலிசத்தின் மும் மூர்த்திகளாக விளங்கினர். சோசலிச யதார்த்தவாதத்தை ஏற்றுக் கொள்வது உலகின் முதல் சோசலிச நாடான சோவியத் யூனியனையும் ஸ்டாலினின் தலைமையையும் ஆதரிப்பதாகும் என்றும், ஃபிரான்சில் அன்று மேலோங்கியிருந்த கலை - இலக்கியக் கோட்பாடுகளைக் கொண்டு சோவியத் யூனியனிலிருந்து யதார்த்த நிலைமைகளை மதிப்பீடு செய்ய முடியாது என்றும் கருதிய லூயி அரகோனும், போல் எலுவர்டும், அன்ரே பிரித்தோனிடம் முறிவை ஏற்படுத்திக் கொண்டனர். சோசலிச யதார்த்தவாதத்தை ஏற்றுக் கொள்வது, சோவியத்யூனியனில் உருவாகியுள்ள ஸ்டாலினிச அதிகாரிவர்க்க ஆட்சியை ஏற்றுக் கொள்வதாகும் என்று கூறினார் பிரித்தோன். சோவியத் யூனியனிலும் முதலாளிய நாடுகளிலுமுள்ள இடதுசாரி எழுத்தாளர்களின் படிைந்துளை
பிரவாதம் - ஜூலை 2005 79

Page 43
வெளியிடுவதற்கான வாய்ப்புகளை முதலாளியப் பத்திரிகைகளோ வெளியீட்டு நிறுவனங்களோ தருவதில்லையாதலால் அவர்கள் சோவியத் அதிகாரிவர்க்கத்திடம் சரணடைகிறார்கள் என்றும் அதன் பொருட்டு அவர்கள் தமது கலைச் சுதந்திரத்தைத் தியாகம் செய்துவிடுகின்றனர் என்றும் கூறிய பிரித்தோன் 1934 இல் மெக்சிக்கோ சென்று அங்கு அரசியல் தஞ்சம் புகுந்திருந்த த்ரோத்ஸ்கியைச் சந்தித்தார். இருவரும் இணைந்து எழுதிய ‘சர்ரியலிச அறிக்கை’, சர்ரியலிச அழகியல் கலைஞர்களுக்கு வழங்கும் முழுமையான சுதந்திரம், கம்யூனிச புரட்சியால் உத்திரவாதம் செய்யப்படும் தனிமனித வளர்ச்சி, தனிமனித சுதந்திரம் ஆகியவற்றை ஒத்ததுதான் என்று கூறியது. த்ரோத்ஸ்கியும் பிரித்தோனும் அரசியல் அற்ற தூய கலை என்பதை நிராகரித்தனர். எனினும் அவர்களது அறிக்கை சோசலிசத்தின் எதிரி முதலாளியம் தான் என்று பொதுவாகப் பேசினாலும் சோவியத் யூனியனைப் பொறுத்தவரை அங்கு சோசலிசத்தின் எதிரியாக இருப்பவர்கள் ஸ்டாலினிச அதிகாரி வர்க்கத்தினர் தான் என்று கூறியது. இந்த நிலைப்பாட்டை மெக்சிக எழுத்தாளர் ஒக்டோவியோ பாஸ் முழுமையாக ஏற்றுக் கொண்டர். ஆனால், பாப்லோ நெரூடா ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக அவர் லூயி அரகோன், போல் எலுவர்ட் ஆகியோரின் நெருக்கமான நண்பராக மாறினார். இவர்கள் மூவருமே கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருந்தனர். பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி, அரகோனுக்கு முழுமையான கலைச் சுதந்திரத்தைக் கொடுத்திருந்ததைப் போலவே சிலி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியும் நெரூடாவின் கலைப்பாணியை முழுமையாக ஊக்குவித்து வந்தது. அக் கட்சி பல சமயங்களில் மூன்றாவது அகிலத்திற்கு வெளியே இருந்ததும் அகிலத்தின் கொள்கைகள் சிலவற்றை எதிர்த்து வந்ததும் ஒரு வகையில் நெருடாவின் கலைச் சுதந்திரம் இடையூறின்றி நீடித்து வந்ததற்கும், சோசலிச யதார்த்தவாதத்திற்குக் கட்டுப்படாமல் அவர் தப்பித்து வந்ததற்கும் ஒரு முக்கிய காரணமாகும். சோசலிச யதார்த்தவாதத்தை வெளிப்படையாக ஆதரித்த லூயி அரகோனும், போல் எலுவர்டும் கூட நெருடாவைப் போலவே சர்ரியலிச பாணியை முழுமையாகக் கைவிடவில்லை. தன் விருப்ப நிலையிலிருந்து, புறத் தூண்டுதலற்ற, இயல்பான, அகத் தூண்டுதலிலான படைப்பியக்கத்திற்கு சர்ரியலிலசம் தந்து வந்த முக்கியத்துவம் மேற்சொன்ன மூவரின் கவிதையாக்கங்களில் கடைசிவரை பயணம் செய்தது.
நெரூடா எத்தகைய கவிதைக் கோட்பாட்டைத் தெரிவு செய்துகொண்டார் என்பதைக் குறிப்பால் உணர்த்துபவை அவர் தனது நண்பர் போல் எலுவர்ட் பற்றிக் கூறிய கருத்துக்களாகும். “அறிவுக்குப் புரியாத சர்ரியலிசத்தில் அவர் (எலுவர்ட்) தன்னை இழந்துவிடவில்லை. ஏனெனில் அவர் மற்றொன்றைப் போலி செய்பவரல்லர். மாறாக, அவர் ஒரு கர்த்தா.
80 பிரவாதம் - ஜூலை 2005

அதனால் தான் அவர் தெளிவான சிந்தனை, கூர்மதி என்கிற துப்பாக்கிக் குண்டுகளை சர்ரியலிசம் என்கிற பிணத்தின் மீது செலுத்துகிறார்” சோசலிச யதார்த்தவாதக் கோட்பாட்டை நெரூடா இங்கு ஆதரிப்பது போல் தோன்றினாலும் இயற்பண்புவாதம் போன்ற ஆழமற்ற, எளிமைப்படுத்தப்பட்ட யதார்த்தவாதம், சோசலிச யதார்த்தவாதம் ஆகிய இரண்டையும் அவர் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டுமே மனிதர்களின் உணர்ச்சிகள், சமூக யதார்த்தம் ஆகியன குறித்த இறுக்கமான, தேங்கிப்போன பார்வையைக் கொண்டிருப்பதாகக் கருதினார்.
நெரூடா ஒரே சமயத்தில் சோவியத் யூனியனின் ஆதரவாளராகவும் சோசலிச யதார்த்தவாதத்தை ஏற்றுக் கொள்ளாதவராகவும் இருந்தார்.
“ஒரு புறம் புதிய வடிவங்கள், ஏற்கனவே இருக்கின்ற அனைத்தையும் புதுப்பிக்கும் தேவை ஆகியன இலக்கிய முன்மாதிரிகளாக இருப்பனவற்றை உடைத்துவிட்டு அவற்றைக் கடந்துவர வேண்டும். மற்றொரு புறமோ, ஒரு ஆழமான, பரந்துவிரிகின்ற புரட்சி எடுத்துவைக்கும் அடிகளைப் பின்தொடராமல் எப்படி இருக்க முடியும்? முக்கியப் பிரச்சனைகள், வெற்றிகள், மோதல்கள், மானுடப் பிரச்சனைகள், வளர்ச்சி, இயக்கம், சமூக பொருளாதார, அரசியல் துறைகளில் ஒரு தீவிரமான மாற்றத்தை எதிர்கொண்டுள்ள ஒரு மகத்தான மக்களின் உதயம் ஆகியவற்றிலிருந்து நம்மால் அப்படி விலகியிருக்க முடியும்? மூர்க்கத்தனமான படையெடுப்புகளின் தாக்குதல்களுக்கும் எளிதில் மசியவைக்க முடியாத காலனியாதிக்கவாதிகள், பல்வேறு சூழல்களையும் பின்னணிகளையும் சேர்ந்த இருண்மைவாதிகள் ஆகியோரின் முற்றுகைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ள இந்த மக்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளாமல் யாரால் இருக்கமுடியும்? இந்த அடிப்படையான விஷயங்களை அறிந்திருந்தும் இலக்கியமோ அல்லது கலையோ இவற்றால் பாதிக்கப்படாமல் சுதந்திரமாக இருப்பதாக பாவனை செய்ய முடியமா?”
இங்கு நெரூடா சோசலிச அரசியல் ஈடுபாடு, கலைச் சுதந்திரம் ஆகிய இரண்டையும் இணைக்க முயற்சி செய்கிறார். இதில் பெர்டொல்ட் ப்ரெஹ்ட்டின் நிலைப்பாட்டிற்கு மிக நெருக்கமாக வருகிறார் என்று கூறலாம். யதார்த்தவாதத்தை நிராகரிக்காமல், அதற்குள்ளேயே புதுமைகள் செய்ய விரும்பிய ப்ரெஹ்ட் கூறினார் “புதிய பிரச்சனைகள் தோன்றுகின்றன. அவை
பிரவாதம் - ஜூலை 2005 81

Page 44
புதிய முறைகளைக் கோருகின்றன. யதார்த்தம் மாற்றமடைகிறது. அதைச் சித்தரிக்க வேண்டுமானால் சித்தரிப்பு முறைகளும் மாற வேண்டும்” சோவியத் யூனியனில் சோசலிச யதார்த்தவாதம் ‘அதிகாரி வர்க்க யதார்த்தவாதமாக சீரிழந்து வந்த போக்கு இருந்ததை ஒப்புக் கொள்ளும் நெரூடா அப் போக்கைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகளும் அங்கு மேற்கொள்ளப்பட்டுவந்ததாகவும் கூறுகிறார்.
கலைகளில் சோவியத் வறட்டுவாதம் (dogmatism) நீண்ட காலம் நிலவி வந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் இந்த வறட்டுவாதம் ஒரு குறைபாடு என்றே எப்போதும் கருதப்பட்டு வந்ததுடன் அதனுடன் நேருக்கு நேரான சண்டையும் நடத்தப்பட்டு வந்தது. தனிமனித வழிபாடும், திறமைமிக்க பிரச்சாரகரான ஸ்தானோவின் விமர்சனக் கட்டுரைகளும் சேர்ந்து சோவியத் பண்பாட்டு வளர்ச்சி பாரதூரமான முறையில் இறுகிப் போவதற்குக் காரணமாக இருந்தன. ஆனால் இதற்கு நாடெங்கிலுமிருந்து எதிர்வினைகள் தோன்றிக்கொண்டிருந்தன. வாழ்க்கை என்பது. அதைப் பற்றிய நீதிக்கட்டளைகளைவிட வலுவானது. பிடிவாதமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். புரட்சிதான் வாழ்க்கை. நீதிக்கட்டளைகளோ தமக்கான சவப்பெட்டிகளைத் தேடிக் கொண்டிருந்தன.
அவரது நினைவுக்குறிப்புகளில் யதார்த்தவாதம், சர்ரியலிசம், சோசலிச யதார்த்தவாதம் ஆகிய மூன்றைப் பற்றியும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு கருத்துக்களை அவர் கூறுவதைக் காண முடிகிறது. ஒருபுறம், இவை மூன்றுமே தன் மீது தாக்கம் ஏற்படுத்தியதாகக் கூறுகிறார். மற்றோர் புறம், அவை ‘இயங்குவிசையற்ற இலக்கிய முன்மாதிரிகள்’ என்கிறார். கவிதைகளில் "இசம்’ பற்றி எழுதுகிறார்.
. கவிதை மிகை யதார்த்தத் தன்மையையோ குறை யதார்த்தத் தன்மையையோ கொண்டிருக்க வேண்டியதில்லை. அது யதார்த்தவாதத்திற்கு எதிரான தன்மையுடையதாகவும் இருக்கலாம். நான் ஒரு புத்தகத்தை, கவிதைப் படைப்பின் அடர்த்தியை, இலக்கியக் காடுகளை ரசிக்கின்றேன். எல்லாவற்றையுமே ரசிக்கிறேன். புத்தகங்களின் முதுகுகளைக் கூட. ஆனால் அவை அந்தந்த சிந்தனைப் போக்குகள் என அடையாள முத்திரைகளிடப்படுவதை நான் ரசிப்பதில்லை. எந்த சிந்தனைப்
82 பிரவாதம் - ஜூலை 2005

போக்குகளையும் வகைப்பாடுகளையும் சாராத புத்தகங்கள், வாழ்க்கையைப் போலவே இருக்கின்ற புத்தகங்கள் எனக்கு வேண்டும்.
1971ல் அவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட போது, தனது ஏற்புரையில் கூறினார்: “கவிதை எழுதுவதற்கான குறிப்புகள் எதனையும் புத்தகங்களிலிருந்து நான் கற்றுக் கொள்ளவில்லை. அதே போல நானும் எனது பங்கிற்கு, கவிதை எழுதுமுறை அல்லது பாணி குறித்து உள்ளொளி எனக் கூறப்படுமொன்றின் ஒரு சொட்டைக்கூடத் தரக்கூடிய அறிவுரை எதனையும் தருவதைத் தவிர்க்கிறேன்”
மேற்சொன்னவற்றிலிருந்து, நெரூடா தனக்கென்று கவிதைக் கோட்பாடு எதனையும் உருவாக்கிக் கொள்ளவில்லை என்கிற முடிவுக்கு நம்மால் வர முடியுமா ? இல்லை. அப்படி அவர் இருந்திருந்தால், மனித குல வரலாற்றில் மாபெரும் கவிஞர்களிலொருவராகக் கருதப்படுவதற்குக் காரணமாக அமைந்த ‘காண்டோ ஜெனெரல்’ காவியத்தை அவரால் படைத்திருக்க முடியாது. குறைந்த பட்சம் இந்தக் காவியத்திற்கேனும் பொருந்துகின்ற ஒரு கலைக் கோட்பாட்டை அவர் பின்பற்றத்தான் செய்தார். கலைச் சுதந்திரம், வரலாற்றுணர்வு ஆகிய இரண்டையும் இணைக்கின்ற ஒரு கோட்பாடுதான் அது : “வழிகாட்டப்படும் இயல்புவாதம் (guided spontenity) சட்டென்று. எதிர்பாராத நேரத்தில் மின்னலைப்போல் தோன்றி மறையும் கற்பனைக் கீற்றுகள் தன்னியல்பாய் பீறிட்டுக் கிளம்பும் கற்பனையாற்றல்; இதனை உணர்வுபூர்வமான வரலாற்றுணர்வு, சோசலிசப் பார்வை, பாட்டாளிவர்க்க நிலைப்பாடு ஆகியவற்றைக் கொண்ட ஒருங்கமைந்த கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் கொண்டு வருதல். இந்த இரு அம்சங்களின், எதிர்மறைகளின் இயங்கியல்ரீதியான ஒற்றுமையே, இணைப்பே அவரது கவிதைக் கோட்பாடு. இக் கோட்பாட்டின் வழியாகத்தான் உழைக்கும் மக்களுக்கு சேவை புரியும் “சொற் தொழிலாளி” (Word Proletarian) என்று தன்னை அவர் அழைத்துக் கொண்டார். அவரைப் பொறுத்தவரை இத்தகைய கலைக்கோட்பாடுக்கு முன்னோடியாக இருப்பவை மயகோவ்ஸ்கியின் கவிதைப் பாணியாகும்:
செரிமானம் செய்யப்பட்டு சிந்தனைக்கான உணவின் பகுதியாக மாறாத உள்ளடக்கப் புதுமையெல்லாம், சிந்தனைக்கான புறத்தூண்டுதல் மட்டுமேயாகும். போராட்டம் பற்றிய கடினமான பிரச்சனைகளும், கட்சிக் கூட்டங்கள் போன்ற சலிப்பூட்டும்
பிரவாதம் - ஜூலை 2005 83

Page 45
விஷயங்களும் மயகோவ்ஸ்கியின் கவிதையில் சுற்றியோடுகின்றன. இந்த விவகாரங்கள் அவரது கவித்துவச் சொல்லில் மலராய் மலர்கின்றன. அவை வியக்கவைக்கும் ஆயுதங்களாக, சிவப்பு பாப்பி மலர்களாக மாறுகின்றன.
தென்னமெரிக்கா நாடான பெருவில் ஆண்டெஸ் மலைத் தொடர்களில் இன்கா இனப் பேரரசால் கட்டப்பட்ட ‘மச்சு பிச்சு’ என்ற நகரத்தின் இடிபாடுகளையும் சிதிலங்களையும் பற்றிய நெரூடாவின் நெடுங்கவிதை ‘வழி காட்டப்படும் இயல்புவாதத்திற்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு. அக்கட்டிடங்களை எழுப்பிய அடிமைத் தொழிலாளிகள் மீது கவிஞர் காட்டும் ஆழமான சகோதரத்துவ உணர்வு, ஒரு மார்க்சியவாதி நவீனப் பாட்டாளிவர்க்கத்திடம் கொள்ளும் தோழமை உணர்வை ஒத்ததாகும். மச்சு பிச்சு நெடுங்கவிதையின் கடைசிப் பகுதியில் வரலாற்றால் மறக்கப்பட்ட, இன்கா இன உழைப்பாளிகளுக்குத் தனது குரலை சொற்களை, உதடுகளை வழங்குகிறார்.
என்னோடு சேர்ந்து பிறக்க எழுந்து வா, என் சகோதரனே பரவலாக விதைக்கப்பட்ட உன் துக்கத்தின் அடியாழங்களிலிருந்து உன் கையை எனக்குக் கொடு பாறையின் ஆழங்களிலிருந்து நீ திரும்பிவரப் போவதில்லை புதையுண்ட காலத்திலிருந்து நீ திரும்பி வரப் போவதில்லை உணர்ச்சியற்றுப் போன உனது குரல் திரும்பிவரப் போவதில்லை துளைக்கப்பட்ட உனது குரல் திரும்பிவரப் போவதில்லை பூமியின் ஆழங்களிலிருந்து என்னைப் பார்: தொழிலாளியே, நெசவாளியே, அமைதியான ஆட்டிடையனே குலச் சின்னங்களைப் பாதுகாப்பவனே ஒத்துவராத சாரத்தில் நிற்கும் கொத்தனே ஆண்டெஸ் மலைகளின் கண்ணீர்க் குடத்தைச் சுமப்பவனே விரல்கள் நசுக்கப்பட்ட பொற்கொல்லனே, விதையின் மீது நின்று நடுங்கிக் கொண்டிருக்கும் உழவனே உனது களிமண்ணோடு களிமண்ணாகிவிட்ட குயவனே
புதைக்கப்பட்ட உனது தொன்மைத் துயரங்கள் அனைத்தையும் இந்தப் புதிய வாழ்க்கைக் கோப்பைக்குக் கொண்டு வா
உனது இரத்தத்தையும் தழும்புகளையும் எனக்குக் காட்டு என்னிடம் சொல் இங்குதான் நான் தண்டிக்கப்பட்டேன் நான் தோண்டியெடுத்த இரத்தினக்கல் ஒளிராமல் இருந்ததற்காக
84 பிரவாதம் - ஜூலை 2005

நான் உழுத பூமி உரிய காலத்தில் தானியத்தைத் தராததற்காக, எனக்குச் சுட்டிக் காட்டு நீ விழுந்த பாறையை அவர்கள் உன்னை அறைந்த மரத்தை. தொன்மையான சக்கிமுக்கிக் கற்களை உரசி எனக்காக ஒளியேற்று
தொன்மையான விளக்குகள். உனது காயங்களில் நூற்றாண்டுகளாக ஒட்டிக் கொண்டிருக்கும் சவுக்குகள் இரத்தக் கறைகளால் பிரகாசிக்கும் கோடரிகள் செத்துப்போன உனது வாயினுடாக நான் பேச வந்துள்ளேன். மெளனமான, கிழிந்தபோன உதடுகள் அனைத்தையும் பூமியினூடே இணைக்க வந்துள்ளேன் ஆழங்களிலிருந்து இரவு நெடுக என்னிடம் பேசுங்கள் நாம் இங்கு ஒன்றாக நிலை நிறுத்தப்பட்டிருப்பது போல எல்லாவற்றையும் எனக்குச் சொல்லுங்கள். ஒவ்வொரு சங்கிலியாக
ஒவ்வொரு கண்ணியாக
படிப்படியாக நீங்கள் ஒளித்து வைத்திருந்த கத்திகளைக் கூராக்கி என் மார்பின் மீது என் கையின் மீது வையுங்கள் மஞ்சள் நிற மின்னலின் ஆற்றைப்போல் புதைக்கப்பட்ட வேங்கைகளின் ஆற்றைப் போல் என்னை அழ விடுங்கள், மணிகள், நாட்கள், அறிவற்ற யுகங்கள், நட்சத்திரத்திற்குரிய நூற்றாண்டுகள்.
எனக்குக் கொடுங்கள் மெளனத்தை, தண்ணீரை நம்பிக்கையை எனக்குக் கொடுங்கள். போராட்டத்தை, இரும்பை, எரிமலைகளை காந்தக் கற்களைப் போல் உங்கள் உடல்களை எனது உடலுடன் ஒட்ட வையுங்கள் வாருங்கள் எனது இரத்த நாளங்களுக்கு எனது வாய்க்கு பேசுங்கள் எனது சொற்களூடாக எனது இரத்தத்தினூடாக
நெரூடாவின் அரசியல், சோசலிசக் கவிதைகளைப் போலவே வாழ்க்கையில் நாம் அன்றாடம் காணும் மிகச் சாதாரணப் பொருட்களான புத்தகம், கோப்பை போன்றவற்றுக்கு அவர் பாடிய எழுச்சிப் பாக்களும் (Odes) அவரது ஆழமான மனித நேயத்தையும் மானுட உழைப்பின் மகத்துவத்தையும்
பிரவாதம் - ஜூலை 2005 85

Page 46
புலப்படுத்துகின்றன. அவரது காதல் கவிதைகளில் மயங்காதோர் யாரும் இல்லை. நகைச்சுவை உணர்ச்சிக்கும் அவருடைய கவிதைகளில் இடம் இருக்கிறது. அவரது மரணத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட ஒரு கவிதைத் Qg5.T(5 JGlgi) (Selected Failings, 1974 'épfft asses b 35L6Gir' (The Great Urinator) என்னும் கவிதை உள்ளது. தொழிற்சாலைக் கட்டிடங்கள், கல்லறைகள், பூந்தோட்டங்கள், தேவாலயங்கள் ஆகியவற்றின் மீது கடவுளின் மூத்திரம் விழுந்து அவற்றை அரித்துத் தின்கிறது. மக்கள் பீதியடைகின்றனர். செய்வதறியாமல் திணறுகின்றனர். யாரிடமும் குடையும் இல்லை. ஆனால் கடவுளோ வானத்திலிருந்து மெளனமாகச் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கிறார். நெரூடா எழுதுகிறார் :
வெளிறிய கபடமற்ற கவிஞன் நான்
விடுகதைகளை அவிழ்ப்பதற்கோ அல்லது விசேடக் குடைகளை வாங்கும்படி பரிந்துரைக்கவோ இங்கு நான் வரவில்லை
உங்களை வாழ்த்திவிட்டுச் செல்கிறேன் யாரும் என்னிடம் கேள்வி கேட்காத ஒரு நாட்டிற்கு மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துக்கள், திருவாளர் கவிதை அவர்களே.
இக்கட்டுரைக்கு ஆதாரங்கள் :
1. Greg Dawes, Verses Against Darkness: Neruda's Poetry and Politics, Pluto Press,
London, 2001 (Chapter 3)
2. Ilan Stavans, "Pablo Neruda: A Life Consummed by Poetry and Politics', The
Chronicle Review, July 2, 2004.
3. Mark Eisner (Ed), The Essential Neruda Selected Poems (Translated by Mark
Eisner et al), City Lights Books, San Francisco, USA, 2004. (LD& 5, 1983, நெடுங்கவிதையின் கடைசிப்பகுதியின் தமிழாக்கம் இத்தொகுப்பிலுள்ள ஆங்கில மொழியாக்கத்திலிருந்து செய்யப்பட்டது)
எஸ். வி. ராஜதுரை தமிழகத்தைச் சேர்ந்த முக்கியமான தமிழ் எழுத்தாளர், விமர்சகர் பல நூல்களின் ஆசிரியர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்.
86 பிரவாதம் - ஜூலை 2005

சோமதேரர்; அவரதுவாழ்வும்மரணமும்
ஜயதேவ உயங்கொட
கங்கொடவில சோமதேரரின் திடீர் மரணம் சிங்கள சமூகத்தில் ஏற்படுத்திய பாரதூரமான சர்ச்சைகளுடன் 2003 ஆம் ஆண்டு முடிவுற்றது. அவருடைய மரணம் இயற்கை மரணம் அல்ல என்றே அவருடைய பெரும்பாலான சகாக்களும், சீடர்களும் கருதினார்கள். சென்பீட்டர்ஸ் பேக்கில் அவருக்கு வழங்கப்பட்ட ஒரு கெளரவப் பட்டத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுக்குச் சென்றிருந்தபோது திடீரென நோய்வாய்ப்பட்டு அவர் அங்கேயே மரணமடைந்தார் என்பது பல யூகங்களுக்கும், சதி முயற்சிக் கொள்கைகளுக்கும் வழிவகுத்தது. சோமதேரரின் பெரும்பாலான சீடர்களும் பற்றார்வலர்களும் அவரது மரணம் திட்டமிட்ட கொலை என்றும், கிறிஸ்தவ மதக்குழுக்களின் சதி முயற்சியின் விளைவு என்றும் நம்பினார்கள். தேரரின் மர்மமான மரணத்துக்கு மிசனரிக் குழுக்களும் கிறிஸ்தவ அரசுசாரா நிறுவனங்களும் ஒரு பிரசித்தி பெற்ற வர்த்தகருமே பொறுப்பு எனக்கூறும் சுவரொட்டிகள் கொழும்பில் ஒட்டப்பட்டிருந்தன.
தேரரின் மரணச்சடங்குகள் முடிவுற்றதன் பின்னர் அவரது சகாக்களைக் கொண்ட குழுவொன்று ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை நடத்தியது. கிறிஸ்தவக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் “முறையற்ற மதமாற்றத்தை” அரசு தடைசெய்ய வேண்டும் என்பதே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கையாகும். சோமதேரர் கிறிஸ்தவ மதத்தையும், கிறிஸ்தவ மதமாற்றத்தையும் தீவிரமாக விமர்சித்தவர். இலங்கையில் முஸ்லிம் அரசியலையும் அவர் வன்மையாக விமர்சித்தார். அவரது மரணத்தின்போது, அதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர் அவர் நிறுவிய ஒரு சிறிய அரசியல் கட்சியின் தலைவராகவும் அவர் விளங்கினார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது சிங்கள-பெளத்த அரசியல் நலன்களைக் காப்பதற்காகவும் நாட்டின் தார்மீக மீட்டெழுச்சிக்காகவும் தான் போட்டியிடப் போவதாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.
பிரவாதம் - ஜூலை 2005 87

Page 47
மரணச்சடங்கு
டிசம்பர் 24ம் திகதி நடந்த சோமதேரரின் மரணச்சடங்கு அண்மைக் காலத்தில் இலங்கையில் நடந்த மிகப்பெரிய நிகழ்வாகும். இந்த நிகழ்வு டிசம்பர் 25ம் திகதி நடத்தப்படவேண்டும் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் விரும்பியதாகக் கூறப்படுகின்றது. பெளத்த, கிறிஸ்தவ முரண்நிலையை அது அடையாளப் படுத்துவதாக இருந்திருக்கும் என்று கருதப்பட்டிருக்கலாம். உண்மையிலேயே மிகவும் பெருந்திரளான மக்கள் மரணச்சடங்கில் கலந்துகொண்டனர். தாங்கள் வியந்து போற்றிய, தங்களால் வணங்கப்பட்ட அவரில் தங்களையே அடையாளங்கண்ட ஒரு மதத் தலைவருக்கு இறுதி மரியாதை செய்ய அவர்கள் குழுமினர் என்பது வெளிப்படை பதாதைகளும், சுவரொட்டிகளும், மரணச்சடங்கு அலங்காரங்களும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நகரிலும் தெருவிலும் காணப்பட்டன. வர்த்தகர்களும் முச்சக்கர வண்டியோட்டிகளும் மரணச்சடங்கு அலங்காரங்களை அமைப்பதில் மிகுந்த அக்கறை காட்டினர். அநேக சிறு நகரங்களிலும், தெருச்சந்திகளிலும் தேரரின் ஒலிப்பதிவு செய்யப்பட்ட உபன்னியாசங்கள் ஒலிபரப்பிகளைப் பயன்படுத்தி ஒலிபரப்பப்பட்டன. சில இடங்களில், ஒளிப்பதிவு செய்யப்பட்ட உபன்னியாசங்கள் அஞ்சலி செலுத்துவோருக்காக அகலத் திரைகளில் காட்டப்பட்டன. சில தீவிரவாத சிங்கள அரசியல் குழுக்கள் சோமதேரரின் மரணத்தையும் மரணச்சடங்கையும் ஒரு பாரிய அரசியல் நிகழ்வாகவும் மாற்றின. சோமதேரரின் அரசியல் நம்பிக்கைகளும் நடைமுறைகளும் தீவிரவாதச் சாயல்மிகுந்த சிங்கள தேசியவாதக்குழுக்களுடன் இணைந்தனவாகவே இருந்தன. சோமதேரரின் மரணச் சடங்கைத் தங்கள் அரசியல் எழுச்சிக்கும் கிறிஸ்தவ எதிர்ப்பு எழுச்சிக்கும் உரிய ஒருவாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டனர்.
சோமதேரரின் வாழ்வும் செய்தியும் கவர்ச்சி மிகுந்த ஒன்றாகும். சர்ச்சைக்குரிய அம்சங்களும், புத்தாக்கங்களும், அச்சமின்மையும், அதீத வெகுஜனக் கவர்ச்சியும் ஒன்று கலந்ததாக அது காணப்பட்டது. பெரும்பான்மையான இலங்கைப் பெளத்தகுருமார்களைப் போல் ஒரு சிறுவனாக அவர் தீட்சை பெற்றவர் அல்லர். ஒரு முதிர்ந்த வாலிபனாக இருபத்தைந்து வயதில் அவர் பிக்குவானார். தனது வர்த்தக முயற்சிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட தோல்விகளைத் தொடர்ந்தே அவர் தன் துறவு வாழ்வைத் தொடங்கியதாக அவர்பற்றிக் கதைகள் உள்ளன. ஒப்பீட்டளவில் பிந்திய வயதில் பிக்குவான சோமதேரர் பிரிவெனாவிலோ அல்லது பல்கலைக்கழகத்திலோ கற்றவர் அல்லர். பண்டித, சாஸ்திரவேதி அல்லது சாஸ்திரபதி போன்ற சம்பிரதாயமான பட்டங்கள் எவையும் அவருக்கு இல்லை. பிக்குகளின் படிநிலை அமைப்புகளில் அவர் எந்தப் பதவியும் வகிக்கவும் இல்லை. அவர்கிட்டத்தட்ட சுயமாக உருவாகிய ஒரு ஆய்வறிவாளராகவே
88 பிரவாதம் - ஜூலை 2005

காட்சியளித்தார். நிறுவன மயப்பட்ட பெளத்த பீடத்திலிருந்தும் கணிசமான அளவு சுயாதீனம் பெற்றவராக அவர் விளங்கினார்.
இந்தச் சுயாதீனம் சில வேளைகளில் தன் விருப்பார்வத்துக்கான ஒரு அதிகபட்ச சுதந்திரமாகத் தோன்றியது. கற்றறிந்தவராகவும் அதேவேளை தெய்வீகச் சின்னமாகவும் தோன்றிய ஒரு புத்தபிக்குவைப் பொறுத்தவரை இது முற்றிலும் விதிவிலக்கானது.
ஊடகமும் செய்தியும்
இருப்பினும் சோமதேரர் அமரபுர பிரிவின் சிறிதர்ம ரக்ஷித்த கிளையைச் சேர்ந்த கற்றறிந்த மூத்த பிக்குகளால் நடத்தப்படும் மஹரகம பெளத்த நிறுவனத்தில் பெளத்த தர்மம் தொடர்பான மிகச்சிறந்த, தீவிர பயிற்சி பெற்றவர். சம்பிரதாயபூர்வமான பிரிவெனாக்கல்வி பெறாதபோதிலும் பாளிமொழியில் அவருக்கு ஒரளவு அறிவு இருந்ததாகத் தோன்றுகின்றது. ஆனால், அவருக்கு சமஸ்கிருதம் அவ்வளவு தெரியாது. எல்லாவற்றையும் விட மிகுந்த தாக்கமுள்ள தொடர்பாடல் திறன்கள் அவரிடம் இருந்தன. வண்ணத் தொலைக்காட்சியின் மந்திர சக்தியை அவர் நன்றாகவே அறிந்திருந்தார். தொலைக்காட்சித் திரையில் நிறமும் ஒளியும் தரும் பாதிப்புபற்றி அவருக்கு இருந்த ஆழமான உணர்திறனை அவர் சிறப்பாகவே வெளிக்காட்டியிருக்கிறார். சமயப் பணியில் சிலகாலம் அவுஸ்திரேலியாவில் கழித்த சோமதேரர் ஆங்கில மொழியிலும் நல்ல தொடர்பாடல் திறன்களைப் பெற்றிருந்தார். தொலைக்காட்சித் திரையில் தோன்றிய இருமொழிப் புலமையும பேச்சுத்திறனும் மயக்காற்றலும் உள்ள அவரது பிம்பம் அதீத கவர்ச்சியுடையதாக இருந்தது. எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றி வண்ணத் தொலைக்காட்சியில் தொடர்பாடும் கலையில் அவர் அதி தேர்ச்சி பெற்றிருந்தார். பம்பலப்பிட்டி வஜிரராமய விகாரையின் ஸ்தாபகரான பெலனே வஜிரஞான மஹா தேரர் மதபோதனைக்கு வானொலி ஊடகத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திய முதலாவது பெளத்தபிக்கு என்றால், தொலைக்காட்சி ஊடகத்தை வெற்றிகரமாகக் கையாண்ட முதலாவது இலங்கைப் பெளத்த பிக்கு சோமதேரர் எனலாம்.
இலங்கையில் ஒரு பெளத்தசமயப் பணியாளர் என்ற வகையில் சோமதேரரின் செய்தி சிக்கல் வாய்ந்த ஒன்றாகும். இலங்கையில் தனது பகிரங்க சமயப் பணியை ITN தொலைக்காட்சியில் ஒரு வாராந்த கலந்துரையாடலின் மூலம் அவர் தொடங்கினார். அது 1990 களின் நடுப்பகுதியின் இறுதியாகும். இந்து சமயத்திலிருந்து நடைமுறைப்பெளத்தம் பெற்றுக்கொண்ட, சில பெளத்தர்களால் அனாசாரப் பழக்கங்கள் என நோக்கப்பட்ட விடயங்கள் பற்றிய அவரது தீவிரமான விமர்சனங்கள் ஆரம்பத்தில் அவரது போதனைகள் அதிக கவனத்தைப் பெற்றதற்குக் காரணமாக அமைந்தன. அந்த அர்த்தத்தில் அவரிடம் ஒரு சீர்திருத்தத் திட்டம் இருந்தது. பெளத்தத்தை உள்ளிருந்து சீர்திருத்தும் திட்டம். அது சாதாரண புத்திசீவிகளைக் கவர்ந்த ஒரு வகையான
பிரவாதம் - ஜூலை 2005 89

Page 48
பெளத்த தூய்மைவாதமாகும். இப் புத்திசீவிகள் சமகாலப் பெளத்த சங்கம் பற்றிய மாயைகளிலிருந்து ஓரளவு விடுபட்டவர்கள். பெளத்த சங்கம் ஊழல்மிக்கது. அரசியல் மயப்பட்டது, வீழ்ச்சியுற்றது. என்றே அநேக பொதுமக்கள் நம்புகின்றனர். இவ்வகையில் இலங்கையில் உள்ள அநேக பெளத்தர்கள் சோமதேரரை மரியாதைக்குரிய உதாரண பிக்குவின் பிம்பமாக சங்ஹவுக்கு ஒரு மாற்றுத் தலைமையாக, அச்சமற்ற ஒருசமய சீர்திருத்தவாதியாகவே நோக்கினர்.
இலங்கையின் வெகுஜனப் பண்பாட்டுக்கான சோமதேரரின் முன்னெடுப்புகள் ஆரம்பத்தில் ITN தொலைக்காட்சி ஊடாக வெளிப்பட்ட போதிலும், அரச உடைமையான ITN நிறுவனம் பின்னர் இந்த நிகழ்ச்சியை ரத்துச் செய்யத் தீர்மானித்தது. இதற்குக் காரணம், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தேரரின் இனத்துவ ரீதியான அரசியல் நிலைப்பாடாகும். இச் சந்தர்ப்பத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியில் இருந்தது. அதன் தகவல் தொடர்புசாதன அமைச்சர் இனத்துவ ஒருமைப்பாடு சமாதானம் என்பவற்றுக்கான வெகுஜனப் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருந்தார். தேரரின் நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டதனால் ஏமாற்றமடைந்த ஒருபெண் ITN தனது அடிப்படை உரிமையை மீறிவிட்டது என்று உயர்நீதிமன்றத்துக்குச் சென்றார். ஆயினும் அதில் அவர் வெற்றி பெறவில்லை. ITN இன் இழப்பு அதன் எதிரி நிறுவனமான TNL க்கு லாபமாக அமைந்தது. அப்போது, பிரதம மந்திரியின் ரணில் விக்கிரமசிங்க) சகோதரருக்குச் சொந்தமான கவர்ச்சியற்ற தொலைக்காட்சி நிறுவனமான TNL உடனடியாகவே தேரருக்கு தாராளமான தொலைக்காட்சி நேரத்தை வழங்கியது. TNL நிறுவனத்துக்கு தேரரதும் அவரது செய்தியினதும் பண்டப் பெறுமானம் நன்கு தெரிந்திருந்தது. பின்னர் நடந்தவை அனைவருக்கும் தெரிந்த வரலாறே.
அரசியல் பார்வை
சோமதேரரின் அரசியல் செய்தி தான் மிகுந்த பிரச்சினைக்குரியது. நாதியற்ற சிங்கள - பெளத்தர்களின் நலன்களை தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் கபடத்தனமாகக் கையாடுவதாக நம்பிய தேரர், அமைதியான தொனியில், சொற்தொடர்களை குயுக்தியாகத் திருப்பி, கவனமாகத் தேர்ந்தெடுத்த மொழியில் செய்த விமர்சனம் கண்டனத்தன்மை மிக்கதாகவும் அனர்த்தத்தை ஏற்படுத்த வல்லதாகவும் அமைந்தது. சிங்கள பெளத்தர்களின் பொருளாதார நலன்கள் தமிழ், முஸ்லிம் வர்த்தகர்களின் நேரடியான அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது என்பதை அவர் தனது போதனைகளின்போது மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர். இந்த வர்த்தகர்கள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டவர்கள் என்றும், சமூகரீதியில் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள் என்றும் அவர் கருதினார். சிங்கள - பெளத்த வர்த்தகர்கள் அதிக செயலூக்கம் உடையவர்களாகவும் உறுதியுடையவர்களாகவும் இருக்கவேண்டும் என்று அவர் கோரிக்கை 90 பிரவாதம் - ஜூலை 2005

விடுத்தார். சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த வர்த்தகர்கள், தொழிலதிபர்களின் சவால்களை எதிர்கொள்ளத் தயங்குவதற்காக அவர்களைத் தேரர் கண்டித்தார்.
2025ம் ஆண்டில் சிங்கள பெளத்தர்கள் குடித்தொகை ரீதியில் சிறுபான்மையினராகி விடுவார்கள் என்ற ஆச்சரியம் தரும் கோட்பாடு ஒன்றையும் சோமதேரர் பிரச்சாரம் செய்தார். இக் கோட்பாட்டைப் பிரச்சாரம் செய்கையில் சோமதேரர் முஸ்லிம் சமூகத்தைக் குறிப்பாக விமர்சித்தார். இவ் விடயத்தில் அவர் பகுத்தறிவின்மையின் எல்லைகளையும் தாண்டிச் சென்றார். சிங்கள - பெளத்தர்கள் குடும்பக்கட்டுப்பாட்டைப் பேணுகையில், முஸ்லிம்கள் தாராளமாகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதே அவரது அடிப்படை வாதமாகும். இந்தியாவின் தீவிர ஹிந்தித்துவ கருத்துநிலையாளர்களும் இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக இதை ஒத்த குடிக்தொகை வாதம் ஒன்றையே முன்வைக்கின்றனர். இந்தியாவில் ஹிந்தித்துவ கருத்துநிலை எத்தகைய பகுத்தறிவுக்குப் புறம்பான சட்டகத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதோ அத்தகைய சட்டகத்தையே சிங்களத்துவ கருத்துநிலையும் அடித்தளமாகக் கொண்டுள்ளது. இந்த நிலைமையை சமூகவியல் ரீதியாக நாம் பகுப்பாய்வு செய்தால், கொழும்பிலுள்ள முஸ்லிம் தமிழ் வர்த்தகர்களால் மட்டுமன்றி, பூகோளமயமாக்கலினாலும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள சிறிய சிங்கள வர்த்தக வர்க்கத்தினரின் அச்சம், மனக்கிலேசம, பாதுகாப்பின்மை ஆகியவற்றையே சோமதேரர் வெளிபபடுத்திக் கொண்டிருந்தார் என்பதை நாம் காணமுடியும்.
சமூகவியல் நோக்கில், சோமதேரரின் ஈர்ப்பு பிரதானமாக சிறுவர்த்தகர்கள், நடுத்தரச் சம்பளகாரர், சுயதொழிலாளர், பெண்கள் மற்றும் இளைஞர் சமூகங்கள் மத்தியிலேயே காணப்பட்டது. கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள - பெளத்த சமூகத்தைச் சேர்ந்த பூர்ஷ்வாக்களும், தொழில் வாண்மைப் பிரிவினர்களும் அவரால் கவரப்படவில்லை. அவர்கள் மிகவும் சக்திவாய்ந்த ‘வாழும் கடவுளான சாயிபாபாவின் பக்தர்களாக இருந்தனர். சோம தேரரின் ஆதரவாளர்கள் அடிப்படையில் நகர்ப்புற மற்றும் அரை நகர்ப்புற நடுத்தரவர்க்கத்தினரும், கீழ் நடுத்தரவர்க்கத்தினருமேயாவர். பெண்கள் பிரதானமாக அவரது செய்தியால் கவரப்பட்டதற்குக் காரணம் ஆண்கள் மத்தியில் பரவலாகக் காணப்பட்ட மது மற்றும் போதைவஸ்துப் பாவனைக்கு எதிராக மிகவும் வெளிப்படையாக அவர் பேசியமையாகும். போதைப் பொருள் பாவனை குடும்பத்தில் அடிக்கடி வன்முறைக்குக் காரணமாக இருந்தது. மது மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான அவரது ஒழுக்கவியல் செய்தி சமூகரீதியான பரிமாணத்தையும் கொண்டிருந்தது. இலங்கையில் அரசியல்வாதிகள் இவற்றை உண்மையான சமூகப்
பிரவாதம் - ஜூலை 2005 91

Page 49
பிரச்சினைகளாக ஒருபோதும் கருத்தில் கொள்ளவில்லை. ஒரு வகையில் சிங்கள-பெளத்த ஆணாதிக்கச் சிறையில் அடைபட்டு வருந்தும் பெண்களுக்காக சோமதேரர் குரல் கொடுத்தார் எனலாம். ஆனால், எதிர்மறையாக பெளத்த ஆணாதிக்கத்தின் தேசியவாத ஒழுக்கவியல் நடைமுறையை மீள் வலியுறுத்துவதே அவரது திட்டமாகும். தான் ரஷ்யாவிலிருந்து திரும்பிய பின்னர் பத்துப் பிள்ளைகளுக்கு மேல் பெற்ற சிங்கள - பெளத்த பெண்களைப் பாராட்டும் பொதுவைபவம் ஒன்றை ஏற்பாடு செய்ய அவர் திட்டமிட்டிருந்ததாக அவரது மரணத்தின் பின்னர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த நிகழ்வு தீவிர சிங்கள பெளத்த தேசியவாதத்தின் கோட்டை என்று பலரால் பிழையாகக் கருதப்படும் தென்மாகாணத்தின் தலைநகரான காலியில் நடைபெற இருந்தது. சோமதேரர் சமூகரீதியிலும் அரசியல் ரீதியிலும் ஒரு பழமைவாதி. அந்தப் பழமைவாதம் சமூக மாற்றத்தின் வலிமிகுந்த செயல்முறையின் ஊடாகப் போய்க்கொண்டிருக்கும் சிங்கள சமூகத்துக்குக் கவர்ச்சி காட்டியது.
சோமதேரர் இரவில் ஒளிரும் வால்நட்சத்திரம் போன்றிருந்தார். பொதுவாழ்வில் அவர் மிகுந்த நாடக பாங்கில் தோன்றினார். அதுபோல் தனது மறைவு பற்றிய மிகுந்த நாடகபாங்கான விளக்கங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் இடம்கொடுத்து அவர் திடீரென மறைந்தார். இலங்கையின் இன்றைய சிங்கள - பெளத்த சமூகத்தின் அநேக முரண்பாடுகளுக்கும் அவர் சுருக்கமான எடுத்துக்காட்டாக விளங்கினார். சிங்கள - பெளத்த அரசியல் சித்தாந்திகளால் பன்முகத்தன்மை, உண்மை ஜனநாயகம், பல்பண்பாடு ஆகியவற்றுடன் ஆக்கபூர்வமாக செயற்பட இயலாமை அவற்றுள் பிரதானமானது. கவர்ச்சியும், சொல்வன்மையும் மிக்க சோமதேரரின் சமூக அரசியல் பார்வை வரையறையுடையது; இன்று எத்தகைய ஜனநாயக சீர்திருத்தத் திட்டத்தையும் பொறுத்தவரை காலாவதியானது; பொருத்தமற்றது. எல்லாவகையான சிறுபான்மைப் பீதிகளினாலும் ஊட்டம்பெற விரும்பும் சிங்கள சமூகத்தின் சிறிய அரசியல் மற்றும் கருத்துநிலைக் குழுக்களினால் அவரது நினைவு பயன்படுத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
தமிழில்: எம். ஏ. நுஃமான் I56örö): Polity Vol. INo. 5
ஜயதேவ உயங்கொட கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
92 பிரவாதம் - ஜூலை 2005

அரை நூற்றாண்டு காலத்தில் முஸ்லிம் பெண்களின்
கல்வியும் பிரச்சினைகளும்
செல்வி ஹ. ஜெசிமா
ფ2 დ5 சமூகத்தின் முன்னேற்றம் அது அடைந்துள்ள அறிவுவளர்ச்சியைக் கொண்டே கணிக்கப்படுகிறது என்பதற்கமைய உலகின் அனைத்து மனித நாகரிகங்களும், சமயங்களும் அறிவை வரவேற்கின்றன. இதுபோலவே இஸ்லாமிய மார்க்கமும் “கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாக இருக்கிறது’ (ஹதீஸ்) என்பதையே வலியுறுத்தி நிற்கின்றது. இக் கட்டளை ஆண் , பெண் என்ற வேறுபாடின்றி அனைவரையும் கல்வியைப் பெறுமாறு தூண்டிக்கொண்டிருக்கிறது. ஆயினும் நாம் இலங்கையை எடுத்து நோக்குவோமாயின், முஸ்லிம் பெண்களின் அடிப்படை மரபுக்கல்வி(சமயக்கல்வி) ஆரம்ப காலத்தொட்டே ஓரளவு முன்னேற்றமடைந்திருந்த போதும் உலகியல் சார்ந்த கல்வியானது ஏனைய சமூகங்களை விடவும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வந்துள்ளது. எனினும், கடந்த ஐம்பது வருடங்களாக இப்பின்னடைவில் ஏற்பட்டுள்ள மாற்றமானது அதன் மெதுவான வளர்ச்சிப்போக்கையே காட்டுகிறது. இக்கட்டுரையானது சுதந்திரத்திற்குப் பின் 1950 -2000 வரையிலான முஸ்லிம் பெண்களின் கல்வி வரலாற்றில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளையும், முஸ்லிம் பெண் கல்வியின் வளர்ச்சிக்கு, அல்லது வீழ்ச்சிக்கு எவ்வாறான காரணிகள் செல்வாக்கு செலுத்தியுள்ளன, இதில் முஸ்லிம் கல்வி முன்னோடிகளின் பங்கு எவ்வாறானது, கல்விப்பாதையில் எத்தகைய நடைமுறை பிரச்சினைகளை முஸ்லிம் பெண் கள் எதிர்நோக்குகின்றனர் என்பதைப் பற்றி ஆராய்வதை நோக்காகக் கொண்டமைந்துள்ளது.
அனைத்து சமூகங்களிலும் கல்வி விழிப்புணர்ச்சி ஏற்பட்டு ஆண்,பெண் கல்வி வளர்ச்சிக்கான நடவடிக் கைகள் தீவிரமாக நடைப்பெற்றுக் கொண்டிருந்த 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலும் முஸ்லிம்கள் அவ்விடயத்தில் எவ்வித கவனமுமற்றவர்களாகவே இருந்தார்கள். இதில் ஐரோப்பியரின் காலனித்துவ ஆட்சிக்குப் பெரும் பங்குண்டென்பது குறிப்பிடத்தக்கது (மெண்டிஸ்.1963). முஸ்லிம்கள் ஆண்களினது கல்வியை விடவும் பெண்களின் கல்விக்கு மிகப் பிந்திய காலங்களிலேயே கவனமெடுக்க முற்பட்டார்கள். இந்நிலையில் எம்.சி.சித்திலெப்பை அவர்கள் முழு முஸ்லிம் சமூகத்தினது கல்விக்கும்
பிரவாதம் - ஜூலை 2005 93

Page 50
ஒளியேற்றுபவராக செயற்பட முன்வந்தார். பிற சமூகங்களினது வளர்ச்சியோடு தமது சமூகத்தின் வீழ்ச்சியை ஒப்பிட்டு, கல்வி நிலையில் ஆண்களைப் போலவே முஸ்லிம் பெண்களும் முன்னேறவேண்டும் என அயராது உழைத்தார்.
முஸ்லிம்களிடையே ஏற்பட்ட கல்வி விழிப்புணர்வு காரணமாக 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பாகமளவில் படிப்படியாக முஸ்லிம் சமூகத்தில் கல்விக்கான ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் 1891 இல் 30.5% இருந்த முஸ்லிம் ஆண்களின் எழுத்தறிவு 1921 அளவில் 47% ஆக அதிகரித்தது. ஆனால், 1891 இல் 17% வீதமாக இருந்த முஸ்லிம் பெண்களின் எழுத்தறிவு 1921 அளவில் 6% வீதமாயிற்று. இதே காலகட்டத்தில் சிங்களப் பெண்களின் எழுத்தறிவு 212 வீதமாகவிருந்தமை கவனிக்கத்தக்கது (குடிசன கணிப்பீடு 1921). எனினும், முஸ்லிம் பெண்களின் கல்வியில், சுதந்திரத்திற்குப் பின் ஏற்பட்ட கல்விக் கொள்கைகள் காரணமாகவும், முஸ்லிம் சமூகத்திலேற்பட்ட கல்வி பற்றிய விழிப்புணர்ச்சி காரணமாகவும் வளர்ச்சியேற்படத் தொடங்கியது. இதனால் பாடசாலைகளிலும் முஸ்லிம் பெண்களின் சேர்வு வீதம் படிப்படியாக அதிகரித்தது. காலனித்துவ ஆட்சியில் காணப்பட்ட கல்விக் கொள்கையால் முஸ்லிம் பெண்கள் கல்வி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியிருந்தனர், அதனால் ஏனைய பெண்களை விட கல்வியில் அவர்கள் பின்தங்கியிருந்தனர். அரச ஆங்கில மொழிப் போதனா பாடசாலைகளில் அவர்களது சேர்வு வீதம் 11 வீதமாகவிருந்தது. இக்காலக்கட்டத்தில் ஆங்காங்கே சில சுயமொழிப் பாடசாலைகளும் காணப்பட்டுள்ள போதும் அங்கு முஸ்லிம் பெண்களின் வரவு பூச்சியமாகவே இருந்தது. இக்பால்: 1994). ஆனால், இந்நிலையை 1953ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு நோக்குமிடத்து 11 ஆகவிருந்த சேர்வு வீதம் 412 ஆக வளர்ச்சியுற்றுள்ளதைக் காணலாம். இது பிற்பட்ட ஐம்பது வருடங்களில் பெரிதளவில் வளர்ச்சிகண்டமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய சமூகங்களைப் போலவே இலவசக் கல்வியின் அறிமுகம், தாய்மொழியிற் கல்வி, மாணவர்களுக்கான சலுகைகள் இலவச பாடநூல். சீருடை) என்பன முஸ்லிம் சமூகத்திலும் ஆழமாகச் செல்வாக்கு செலுத்தத் தொடங்கின. ஆண்,பெண் இருபாலாரினதும் பாடசாலைக் கல்வியில் முஸ்லிம்கள் அக்கறை செலுத்தியதோடு கல்வி முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் நாடாளாவிய ரீதியில் முஸ்லிம் பாடசாலைகளை அமைக்கும் பணிகளிலும் கவனமெடுக்கத் தொடங்கினர்.இதில் சேர் ராஸிக் பரீத், ஜாயா,
94 பிரவாதம் - ஜூலை 2005

அக்பர், பதியுத்தீன் மஹ்மூத் போன்றோர் முக்கிய இடத்தைப் பெறுகின்றனர். இதனால் நாடெங்கிலும் அமைக்கப்பட்ட 10200 பாடசாலைகளிடையே 752 முஸ்லிம் பாடசாலைகளும் உருவெடுத்தன. இதில் இருபத்துநான்கு பாடசாலைகள் முஸ்லிம் மகளிர் கல்லூரிகளாகும். இவ்வளர்ச்சியின் காரணமாகவே 1946 இல் 30% வீதமாகவிருந்த முஸ்லிம் பெண்களின் எழுத்தறிவு வீதம் 1981 இல் 70% ஆக உயர்வடைந்தது.
க.பொ.த (சாத) கல்வியும் முஸ்லிம் பெண்களும்
உயர் இடைநிலைக் கல்விக்கு மாணவர்களை தயார்படுத்தக்கூடிய இறுதிப் பரீட்சையைக் கொண்டிருப்பதால் க.பொ.த. சாதாரண தரக்கல்வி கூடிய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. க.பொ.த சாதாரண தரக்கல்வியில் பங்குபற்றும் முஸ்லிம் மாணவிகளின் வளர்ச்சிப் போக்கு மூன்று வெவ்வேறுபட்ட மாவாட்டங்களில் உள்ள மூன்று தேசிய பெண்கள் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு இவ் வாய் வில் நோக்கப்படுகிறது. கண்டி, மாத்தளை, காலி ஆகிய மாவட்டங்களில் இக் கல்லூரிகள் மட்டுமே முஸ்லிம் மகளிருக்கெனத் தனியாக இயங்குவனவாக அமைந்துள்ளன. முன்னாள் கல்வியமைச்சரான கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்களின் முயற்சியால் 1974 செப்டம்பர் முதலாம் திகதி கண்டியில் கண்டி பதியுத்தீன் மகளிர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை மாவட்டத்தின் ஆமினா மகளிர் கல்லூரியினது வரலாறும் மிக நீண்டதாகும். இப்பாடசாலை ஸாஹிரா ஆண்கள் கல்லூரியிருந்து 1962 இற்குப் பின்னர் ஆமினா மகளிர் பாடசாலையாக தனித்தியங்கத் தொடங்கியது. இப்பாடசாலைகளுடன் ஒப்பிடப்படும் மற்றுமொரு மகளிர் கல்லூரியான காலி முஸ்லிம் மகளிர் கல்லூரி பதியுத்தீன் மஹற்முத் அவர்களின் தூண்டுதலினாலும், ஊரார்களின் முயற்சியினாலும் 1965 ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இம்மூன்று பாடசாலைகளும் முஸ்லிம் பெண்களின் கல்வியில் மிகுந்த முக்கியத்துவமுடையனவாகும்.
இம்மகளிர் கல்லூரிகளின் ஐந்து வருட (1995-2000) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபெறுகளின் அடிப்படையில் முஸ்லிம் பெண்களின் சிரேஷ்ட இடைநிலைக் கல்வியின் வளர்ச்சிப் போக்கைப்
பின்வருமாறு அட்டவணைப்படுத்தலாம்:
பிரவாதம் - ஜூலை 2005 95

Page 51
6L6.606 or 1 க.பொ.த. (சாத) பரீட்சை பெறுபேறுகளுக்கேற்ப முஸ்லிம் மாணவிகளின் சித்தி விதம் 1995 - 2000
கண்டி பதியுத்தீன் மகளிர் மாத்தளை காலரி
கல் லுTரி ஆமினா மகளிர் மகளிர் ஆண் டு கல்லூரி
தோற்றியோர் சித்திய சித்தி தோற்றி சித்திய சித்தி சித்தி டைந்தோர் I வீதம் 1 யோர் டைந்தோர் I வீதம் 1 வீதம் 1995 175 45 25.7 80 39 48.75 69 1996 254 70 275 88 46 52.2 65 1997 177 72 40.6 90 61 677 66 1998 175 74 422 136 89 654 71 1999 157 73 464 93 67 7200 70 2000 125 53 424 82 45 54.81 73
குறிப்பு: காலி மகளிர் கல்லூரியிலிருந்து சித்திவீதம் மட்டுமே கிடைக்கப் பெற்றது.
இந்த அட்டவணையிலிருந்து மாவட்டத்துக்கு மாவட்டம் முஸ்லிம் பெண்களின் கல்வியில் ஏற்றத் தாழ்வுகள் நிலவுவதை அறிய முடிகின்றது. ஏனைய சமூகப் பெண்களை விட முஸ்லிம் பெண்களின் இடைவிலகல் வீதம் அதிகமாகவிருப்பதும், வேறு பல சமூக, பொருளாதாரக் காரணிகளுமே இதற்குக் காரணங்களாக அமைந்துள்ளன.
அட்டவணையின் படி, மூன்று பாடசாலைகளும் ஒரே தராதரத்தில் உள்ள போதும், காலி முஸ்லிம் மகளிர் கல்லூரி 1995, 1996, 1998, 2000 ஆம் வருடங்களில் மாத்தளை ஆமினா மகளிர் பாடசாலையை விட ஒரளவு உயர் வீதத்தையும், கண்டி பதியுத்தீன் மகளிர் கல்லூரியை விட அதிக வளர்ச்சி வீதத்தை கொண்டதாகவும் அமைந்திருப்பதைக் காண முடிகிறது.
மேலும், காலி, மாத்தளை மாவட்டங்களில் உள்ள இப்பாடசாலைகளை விட ஒப்பீட்டு அடிப்படையில் குறைவான சித்தி வீதத்தை காட்டும் கண்டி பதியுத்தீன் மகளிர் கல்லூரி ஒரு இருமொழிப்
96 பிரவாதம் - ஜூலை 2005

பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது. மாத்தளை நகரத்தை விட வசதிவாய்ப்புகளில் உயர்வாகவும், முஸ்லிம்களின் சனத்தொகை கூடுதலாகவும் உள்ள கண்டி மாநகரத்தில் அமைந்துள்ள இப்பாடசாலையில் ஆசிரியர்வளம், கட்டிட தொழிநுட்ப வசதிகள் பூரணமாகக் காணப்பட்ட போதும், க.பொ.த. (சாத) கல்வியின் தளம்பல் நிலைக்கான காரணம் ஆராயதக்கது. இப்பாடசாலையில் கற்கும் மாணவிகளில் பெரும்பாலானோர் உயர்தர குடும்பத்தினைச் சேர்ந்தவர்களாகவும், அதிகளவு வியாபாரத்தில் நாட்டமுடைய பெற்றோரின் பிள்ளைகளாகவும் இருக்கின்றனர். இவர்களின் கல்விக்கான ஆர்வத்தை குடும்பச் சூழல், பெற்றோரின் கல்வி பற்றிய அலட்சியத் தன்மை என்பன குறைத்துவிடுகின்றன. மேலும், க.பொ.த.சோ.த பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெறக் கூடிய திறமையான மாணவிகள் உயர்தரக் கல்வியைத் தொடர்வதற்கான அனுமதி பெற்றோரினால் முன்கூட்டியே மறுக்கப்பட்டு விடும் நிலை காணப்படுவதும், இவர்களது கல்வியின் மீதான நாட்டத்தை தடைப்படுத்துகின்றது எனலாம். 1996ஆம் ஆண்டில் இப்பாடசாலையிலிருந்து க.பொ.த. (சாத) பரீட்சைக்குத் தோற்றிய 254 மாணவிகளிடையே சிங்கள மொழி மூலமாக விஞ்ஞானப் பரீட்சை எழுதிய மாணவிகளில் யாருமே ஒரு விசேடச் சித்தியையேனும் பெறவில்லை. தமிழ் மொழி மூலம் தோற்றிய 82 மாணவிகளில் ஒருவர் மட்டுமே இப் பாடத்தில் விசேடச் சித்தி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வருடத்தில் கணிதப் பாடத்துக்குத் தோற்றிய சிங்கள மொழி மூல மாணவிகளுக்கு எதுவித விசேட சித்தியும் இல்லாவிடத்து, தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவிகளில் ஒருவர் மட்டுமே விசேடச் சித்தியைப் பெற்றிருந்தார். இவ்விடத்தில் 1991ஆம் ஆண்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகளிடையே பெறப்பட்ட வினையாற்றுகைச் சுட்டெண் ஒப்பீட்டு அட்டவணையைத் தருதல் மிகப் பொருத்தமானதாகும். இதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் க.பொ.த.சோத) தரப் பரீட்சையில் அகில இலங்கை மட்டத்தில் முதன்மை வகிக்கின்ற சிங்கள, தமிழ் பாடசாலைகளுடன் பிரபல்யமான முஸ்லிம் பாடசாலைகளின் வினையாற்றலை ஒப்பிட்டு நோக்கமுடியும். அப்போதைய நிலைக்கும், இன்றைய காலகட்டத்துக்கும் அதிகளவு வேறுபாடில்லை என்பதை கண்டி பதியுத்தீன் கல்லூரியின் பாட
ரீதியான வினையாற்றலே சுட்டிக் காட்டக் கூடியதாக உள்ளது.
பிரவாதம் - ஜூலை 2005 97

Page 52
அட்டவணை 2
வினையாற்றுகைச் சுட்டெண் ஒப்பீடு 1991
LJ T L. Boff 6) 6) طالک |تک இ r l cit GJ தேவி பாலிகா
வித்தியாலயம் 199 81 85 85 85 80 84 83 மகளிர் உயர் கல்லூரி
கண்டி 338 84 81 84 82 80 83 82 அல்மஸ்ஹர் மகளிர்
கல்லூரி 23 63 65 70 58 64 39 60 முஸ்லிம் மகளிர்
கல்லூரி கொழும்பு 206 51 76 50 46 52 49 54
அ. மாணவர் தொகை, ஆ. மொழி, இ. ஆங்கிலம், ஈ. கணிதம், உ. விஞ்ஞானம், ஊ சமயம், எ. சமூகக் கல்வி, ஏ. பாடசாலைச் சுட்டெண். (மூலம் பரீட்சைத் திணைக்களம்)
இவ்வட்டவணைப்படி க.பொ.த. (சாத) பெறுபேறுகளின் படி பாடfதியான வினையாற்றுகைச் சுட்டெண் கூடிய பாடசாலைகளாக முஸ்லிமல்லாத பாடசாலைகளே விளங்குவதைக் காண முடிகிறது. பதியுத்தீன் மகளிர் கல்லூரி 2000 இலும் கணித, விஞ்ஞான பாடங்களில் முறையே 46% , 50% ஆகியளவிலேயே சித்திவீதத்தைக் காட்டுகிறது. இவ்வகையில், முழு இலங்கையிலும் முஸ்லிம் பெண்களின் வினையாற்றுகை ஏனைய பெண்களை விட க.பொ.த. (சாத) கல்வியில் மிகக் குறைவாக இருக்கின்றமையை அறியக் கூடியதாகவுள்ளது.
மாத்தளை மாவட்ட ஆமினா மகளிர் கல்லூரியின் க.பொ.த. (சாத) பரீட்சையின் சித்தி வீதத்தை, கண்டி பதியூத்தின் கல்லூரியுடன் ஒப்பிடமிடத்து, அதன் வளர்ச்சி அதிகரித்தாகவும், 1997, 1999ஆம் ஆண்டுகளில் காலி மகளிர் கல்லூரியை விட முன்னேறியும் சென்றுள்ளது. எனினும், 2000இல் இதன் போக்கு தளர்ச்சியடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. முஸ்லிம்களின் கல்வி பற்றி சிந்திக்கத் தொடங்கிய ஆரம்ப காலங்களிலே கண்டி மக்களை விட மாத்தளை முஸ்லிம்கள் கல்வியைப் பெற அதிக ஆர்வம் காட்டியமையை வரலாறுகள் எடுத்துக்காட்டுகின்றன. கண்டி மக்கள் முஸ்லிம்களுக்கான ஆங்கில பாடசாலையொன்றை நிறுவ சிந்திக்காத காலக்கட்டத்தில் மாத்தளை மக்களின் ஆர்வம் காரணமாக
98 பிரவாதம் - ஜூலை 2005

மாத்தளையில் 1942 செப்டெம்பர் 8ஆம் திகதி ஸாஹிரா என்றொரு கலவன் பாடசாலை உருவாகியது.
இவ்வாறு பார்க்குமிடத்து, மாத்தளையில் பெண் கல்விக்குக் கூடிய ஆதரவளிக்கட்படுவதை அறிய முடிகின்றது. மேலும் கபொத (சாத பரீட்சையுடன் பாடசாலையை விட்டு இடை விலகும் மாணவிகளின் வீதமும் இங்கு மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. மாத்தளை மாவட்டத்தில் ஆண்களை விட பெண் ஆசிரியைகளே அதிகமாக இருப்பதை இதற்கு சான்றாகக் குறிப்பிட முடியும். (பாடசாலைக் கணிப்பு - 1998). எனினும் விஞ்ஞான, கணித பாடங்களுக்கான வசதிவாய்ப்புகள் இல்லாமை க.பொ.த. (சாத பரீட்சையில் பெண்களது மட்டுமல்லாது ஆண்களது பெறுபேறும் குறைவடைய ஒரு காரணமாக உளளது.
கண்டி, காலி, மாத்தளை ஆகிய மாவட்டங்களின் 1995 முதல் 2000 வரை க.பொ.த. (சாத) பரீட்சை பெறுபேறுகளுக்கேற்ப பெண்களின் கல்வி முன்னேற்றத்தில் கண்டி குறைந்தளவான வளர்ச்சியையும், காலி கூடியளவு முன்னேற்றத்தையும், மாத்தளை மிதமான வளர்ச்சிப்போக்கையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவை ஏனைய முஸ்லிமல்லாத உயர் பெண்கள் பாடசாலைகளுடன் ஒப்பிடமிடத்து குறைவாகவே உள்ளமை கவனிக்கத்தக்கது. முஸ்லிம்களை விட ஏனைய பெண்களுக்கு சூழல், வளங்கள் அனைத்தும் அவர்களது கல்விக்குச் சாதகமாக அமைந்திருப்பதை காண முடிகின்றது. எனவே முஸ்லிம் பெண்களுக்கு சிரேஷ்ட இடைநிலைக் கல்வியை பூரணப்படுத்துவதில் ஏற்படும் தடைகள் அகற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படல் வேண்டும். இதன் மூலமே உயர்கல்விப் போக்கிலும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியுமென்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இரண் டாந்தரப் பாடசாலைகளுக்கிடையிலான முஸ்லிம் பெண்களின் கல்விநிலை - ஓர் ஒப்பீடு க.பொ.த (சாத)
திருக்கோணமலை, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில்
பின்தங்கிய நிலையிலுள்ள இரண்டாந்தர கலவன் பாடசாலைகள்,மூன்று இங்கு ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளஐயூடுள்ளன்
பிரவாதம் - ஜூலை 2005 99

Page 53
09 | 082ț7990 || 7 || || — || Z.ț7 || || 3 || 0L는-$2 | 3* || OOOz 00|| || 82Z9Z | 2į | ??? || 9 || || || || 32 | 93 || 0:2 || Z. AZ || ||2 i G도는
666||
19 || 81ț7|| || || || 7| || 9'9 || ??? | | | | | G|| || $27 || 00— | — | g || 0ç | 8661
88 | 03Z|l.9 || Oliz || 6었3 || 3 || 는G | 72 | 0O-– || 903 || 166|| 9į | 09|99 || 0 || || 0 || 2’7 | -|9 | 23 || 0 || 9 || || -| || 82||
966|| 唐ne害命。唐ne *害ne *eno度帝enpe帝害noe帝enowe帝一度no度帝eno度命
IIIIශිදී){{II%දී){{II6ඹු)ប្រយ័uន៍ 俗
(іш啦Í(īju@(surno)ŲQj]]$3)|-
sosyolo-emos, looooooo! googol, emosioloo“o| gosos, q-anae,舞 Usonofis usnyaĚoșie, deosqr@g;Usonofi rwoorsælsosqứ ởuştsolosofi) urgelomysg lleos@sqğın
LLLL KKK K 0LS KK0K KTLSTL0LL KTMT 00LLKSLTYMML00S K00YSLL00Y ɛ ko gore-i Çıkç
OOOz - 966T G)"TrT& 4%, 1
பிரவாதம் - ஜூலை 2005
100

குறித்த மூன்று பாடசாலைகளிலும் ஆண்களும், பெண்களும் 1996 முதல் 2000 வரையில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் வீதங்கள் அட்டவணையில் வருட வாரியாகத் தரப்பட்டுள்ளன. குறிப்பாக, இப்பாடசாலைகளில் ஆண்களை விட பெண்களின் சித்தி வீதம் குறைவாகவே காணப்படுகின்றது. குறிப்பாக இஸ்மாலியா வித்தியாலயத்தில் இதை நன்கு காணலாம். எனினும், திருக்கோணமலை அல் ஹம்ரா பாடசாலையின் பெறுபேறுகள் ஆண்கள், பெண்கள் இருபாலருக்குமே முன்னேற்றமிக்கதாகவே உள்ளது. எனவே, வசதி வாய்ப்புகள் மிக்க கண்டி, மாத்தளை பாடசாலைகளுடன் ஒப்பிடும் போது யுத்த நெருக்கடி, பொருளாதாராப் பின்னடைவு மிக்க ஒரு சூழலில் அமைந்துள்ள பாடசாலையின் முன்னேற்றம் வியப்புக்குரியதேயாகும்.
இவ்வாறு கண்டி, மாத்தளை ஆகியவிடங்களிலுள்ள பாடசாலைகள் பின்தங்கிய நிலையிலும், திருகோணமலை பாடசாலை ஒரளவு வளர்ச்சி பெற்ற நிலையிலும் காணப்படுவதற்கு பல காரணங்களைக் குறிப்பிடலாம். மாத்தளையில் முதலாவது ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாக இஸ்மாலியா வித்தியாலயம் காணப்பட்ட போதும், இது இட நெருக்கடி மிக்க ஒரு இடத்தில் அமைந்து, போதியளவு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் அரசோ, இப்பகுதி முஸ்லிம் அரசியல்வாதிகளோ அக்கறை காட்டாதிருக்கின்ற நிலையிலேயே இப்பாடசாலை இயங்குகிறது. மேலும், இப்பாடசாலையிலிருந்து வளர்ச்சியுற்ற ஆமினா, ஸாஹிரா ஆகிய பிரபல்யமிக்க பாடசாலைகள் நகரத்தில் பிரபல்யம் பெற்றுள்ளமையினால், அதிகமாக, சமூகத்தின் கவனம் அப்பாடசாலைகளிலே திரும்பியுள்ளது. அத்தோடு, ஆசிரிய வளமின்மை, மாணவர்களின் ஆர்வமின்மை, இட நெருக்கடி, என்பனவும் இதன் வளர்ச்சியைத் தடைபடுத்தக் கூடியனவாய் உள்ளன. இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை ஒரேயொரு கட்டடத்திலே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இப்பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் பொருளாதார, குடும்ப பின்னணி என்பனவும் கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியனவாக உள்ளன. க.பொ.த (சாத) தரத்தில் மட்டுமன்றி, இப்பாடசாலையில் தாய் அல்லது தந்தையரை இழந்த மாணவர்களும், வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்காக தாய்மார்கள் சென்றுவிட கவனிப்பற்று விடப்படும் சிறார்களுமே இங்கு கல்விக்காக வருகின்றனர். இதனால் சிரேஷ்ட இடைநிலை வகுப்புகளிலும் அதற்கு கீழ்ப்பட்ட வகுப்புகளிலும் கற்கும் மாணவிகள் குடும்ப சுமை, பிள்ளைகள் பராமரிப்பு,
பிரவாதம் - ஜூலை 2005 01

Page 54
வீட்டு வேலை என்பனவற்றை பார்க்க வேண்டியவர்களாகவும், ஆண் பிள்ளைகள் கல்வி தவிர்ந்த நேரங்களில் வருமானத்துக்காக உழைக்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்களது இடைவிலகல் அதிகரித்தும், கல்வியின் மீதான ஆர்வம் மிகவும் குன்றிப் போன நிலையிலும் காணப்படுகின்றது. எனவே, க.பொ.த சாதாரண தரக் கல்விப் பெறுபேறுகள் நீண்ட காலமாக தேக்க நிலையிலேயே இருந்து வருகின்றது. இது ஒரு ஆரோக்கியமான சமூகத்தின் எழுச்சிக்கு உகந்தல்ல. ஆமினா மகளிர் கல்லூரி, ஸாஹிரா ஆண்கள் பாடசாலை மாணவர்களின் வளர்ச்சியோடு மாத்தளை இஸ்மாலியா கலவன் பாடசாலையின் க.பொ.த (சாத) பரீட்சை பெறுபேறுகளை ஒப்பிடுமிடத்து, ஏற்றத் தாழ்வுமிக்க ஒரு சமூகத்தின் அறிகுறிகளை கல்விப்போக்கில் காண முடிகின்றது.
மாத்தளை நகரத்தில் அமைந்துள்ள இஸ்மாலியா பாடசாலையின் நிலையே கண்டி சித்திலெப்பை வித்தியாலயத்துக்கும் ஏற்பட்டுள்ளதென உறுதியாகக் கூற முடியும் . இங்கு பெற்றோருக்கும் பாடசாலைக்குமிடையிலான தொடர்பின்மையும், பெற்றோரின் கல்வி பற்றிய அறியாமை, மாணவர்களின் அலட்சியப் போக்கு என்பனவும் இப்பாடசாலையின் கல்வியைப் பாதித்துள்ளன, இங்கு கற்பிக்கும் ஆசிரியர்களிடமும் மாணவர்களின் முன்னேற்றம் பற்றிய நம்பிக்கையின்மை காணப்படுகின்றது. இப்பாடசாலை நகரச் சூழலில் அமைந்திருந்த போதும், இதை விட பிரபலமான பாடசாலைகளை பெற்றோர் நாடுகின்றனர். போக்குவரத்துச் சிரமங்களினால் மிக அண்மையிலுள்ள முஸ்லிமல்லாத பாடசாலைகளிலும் தமது பிள்ளைகளை சேர்க்கின்றனர். இதனால், வறிய, கல்வியில் கரிசனை காட்டாத மாணவர்கள் மட்டுமே இங்கு சேர்கின்றனர். இதுவும் சிரேஷ்ட இடைநிலைக் கல்வி பாதிப்படைந்து காணப்பட முக்கிய காரணமாகும். இப்பாடசாலையிலும் இஸ்மாலியா வித்தியாலயத்தில் போலவே மாணவிகளின் சித்திவீதம் வீழ்ச்சியுற்ற நிலையிலேயே காணப்படுகின்றது. கண்டி பதியுத்தீன் கல்லூரியின் எழுச்சியே சித்திலெப்பையின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகின்றது. அரசியல்வாதிகளினதும், சமூகத்தாரினதும் கூடுதல் ஈடுபாடு பதியுத்தீன் கல்லூரியை முன்னேற்றுவதிலேயே காணப்படுகின்றது. மேலும் பதியுத்தீன் மகளிர் கல்லுTரிக்கு சித்திலெப்பையிலிருந்தே மாணவிகள் அனுப்பப்பட்டார்கள். இதனால் படிப்படியாக திறமையான மாணவிகள் பதியுத்தீனை நாடிப் போகத் தொடங்கினர்.
O2 பிரவாதம் - ஜூலை 2005

கண்டி, மாத்தளை ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் திருகோணமலை அல் ஹம்ரா வித்தியாலயத்தில் ஆண்களினதும், பெண்களினதும் கல்வி சமனான வளர்ச்சியைக் காட்டுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இப்பாடசாலை தமிழர்கள் அதிகமாக வாழும் மாவட்டத்தில் அமைந்துள்ளமையால், கல்வி மூலமான முன்னேற்றத்தையே அதிகளவு விரும்பும் தமிழர்களின் ஆர்வம் முஸ்லிம்களிடையேயும் செல்வாக்குச் செலுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. அத்தோடு, ஆசிரிய்ர்களின் நல்ல மனப்பாங்கும், மாணாக்கர் காட்டும் அக்கறையும், பெற்றோரின் தூண்டுதலும் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன. யுத்தம், வறுமை என்பன காணப்பட்டாலும், நகர்ப்புறம் போல் மாணவ, மாணவிகளின் கவனம் கல் விக்கப் பாற் பட்ட கேளிக் கை, விளையாட்டுகளில் திசை திருப்பப்படுவதற்கான சூழ்நிலைகள் இங்கு குறைவாக இருக்கின்றமையும் இவர்களது பெறுபேறுகள் ஒரளவு உயர்வான வளர்ச்சியைக் காட்டக் காரணங்களாக அமைந்துள்ளன. இதற்கு பிறிதொரு சான்றாக மாத்தளை நகர சூழ்நிலைகளிருந்து விடுபட்ட கிராமச் சூழலில் அமைந்துள்ள மாதிப்பொலை அரபா மகா வித்தியாலயத்தின் 1996 முதல் 2000 வரையிலான க.பொ.த.சாத பரீட்சைப் பெறுபேறுகளின் சித்திவீதத்தைக் காட்டலாம்.
அட்டவணை 4 மாத்தளை, மாதிப்பொலை முஸ்லிம் பாடசாலையின் க.பொ.த. (சாத) பரீட்சையின் சித்திவீதம் 1996 - 2000
ஆண்டுதோற்றியோர் சித்தியடைந்தோர் சித்திவீதம் - மொத்த
சித்திவீதம் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண்
1996 15 21 04 12 27 57 44
1997 17 O7 01 O2 O6 28 12.5
1998 27 17 11 14 40 82 56.8
1999 25 18 06 O7 24 38 30.2
2000 20 21 O7 14 35 | 66 512
பிரவாதம் - ஜூலை 2005 103

Page 55
இந்த அட்டவணையின்படி அரபா மகா வித்தியாலயம் ஒரு கிராமப்புறப் பாடசாலையெனினும் ஆண், பெண் கல்வி வளர்ச்சி, மாத்தளை, கண்டி நகரங்களில் அமைந்துள்ள பாடசாலைகளின் சித்திவீதங்களை விட உயர்வானது என்பது தெளிவாகிறது. மாத்தளை நகரப் பாடசாலையான இஸ்மாலியா வித்தியாலயத்தில் 1997, 1998 ஆகிய இரு வருடங்களிலும் சேர்த்து ஐம்பது ஆண்களும், பதினொரு பெண்களும் தோற்றிய போதும் ஒருவருமே சித்தியடையவில்லை என்பதை அட்டவணை காட்டுகிறது.
கல்விப் பொதுத் தராதர உயர் தரக் கல்வியில் முஸ்லிம் பெண்களும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும்.
பல்கலைக்கழகத் தெரிவுக்கான புதுமுக வகுப்பாக பாடசாலை மட்டத்திலான உயர் கல்வி விளங்குகிறது. க.பொ.த. (சாத) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கலை, வர்த்தகம், விஞ்ஞானம், ஆகிய பாடநெறிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு போதிக்கப்படுகின்றார்கள். இலங்கையில் பாடசாலை மட்டத்திலான உயர் கல்வியில் முஸ்லிம் பெண்களின் நிலையைப் பார்க்குமிடத்து, பிற சமூகப் பெண்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்ல, முஸ்லிம் பெண்கள் கலை பிரிவுகளில் மட்டுமே ஒரளவு அதிக எண்ணிக்கையிலும் விஞ்ஞான, வர்த்தகப் பிரிவுகளில் மிகக் குறைவாகவும் காணப்படுகின்றனர். மேலும், முஸ்லிம் ஆண்களை விட கலைப்பிரிவு தவிர்ந்த துறைகளில் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதை பின்வரும் அட்டவணை தெளிவுபடுத்துகின்றது.
அட்டவணை 6 க.பொ.த. (உ.த) வகுப்புகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களின் பால் ரீதியான எண்ணிக்கை 1992
கல்வி மட்டம் ஆண் % பென் % எண்ணிக்கை1 %
க.பொ.த (உத 1,576 145 948 8.72 2,524 2322
விஞ்ஞானம் −
க.பொ.த (உத 2,095 1927 1,522 1400 3,617 33.27
வர்த்தகம்
க.பொ.த (உத 1,805 16.60 2,924 26.90 4729 43.51
se)G) -
க.பொ.த (உத 5,476 50.37 5,394 49.63. 10,870 100.00
மொத்தம்
மூலம் பாடசாலைக் கணிப்பு 1992
104 பிரவாதம் - ஜூலை 2005

முஸ்லிம் பெண்கள் உயர்தரக் கல்வியில் ஆண்களை விடக் குறைவாக உள்ளமைக்கும், கலை தவிர்ந்த பாடங்களை தெரிவு செய்யாமைக்கும் பல்வேறு காரணங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன.
முதலில் கலைப் பிரிவை மட்டுமே அதிகமான முஸ்லிம் பெண்கள் தெரிவு செய்கின்றமைக்கான காரணங்களை ஆராயலாம். இன்று வரையிலும் முஸ்லிம் பெண்களின் உயர் கல்வித் தெரிவில் பெற்றோரின் விருப்பே கூடியளவு ஆதிக்கம் செலுத்துவதை முக்கியமானதெனக் குறிப்பிடலாம். ஏனெனில், க.பொ.த. (உத பரீட்சையில் விஞ்ஞான, கணித பிரிவுகளை தெரிவு செய்வதற்கு பலர் தகுதி பெற்றிருந்த போதும், பெற்றோரின் அனுமதியின்மை காரணமாக அவர்களது திறமை கலைத் துறைக்குள்ளேயே முடக்கப்பட்டு விடுகின்றது. இதனால், பல முஸ்லிம் பெண்கள் உயர் கல்வியை விட்டே ஒதுங்கி விடுபவர்களாக இருக்கின்றனர். இதற்கு பல உதாரணங்களாக குறிப்பிட முடியும், முஸ்லிம் பெண்களின் கல்வி ஒரளவு முன்னேறிக் கொண்டிருந்த காலப்பகுதியான 1986 ஆம் ஆண்டில் மாத்தளையில் சிங்கள மொழி மூலமாக தோற்றி க.பொ.த. (சாத பரீட்சையில் எட்டுப் பாடங்களிலும் விஷேட சித்தி பெற்ற ஒரு மாணவியின் விஞ்ஞானத்தை உயர்தரக் கல்விக்காகத் தெரிவு செய்யும் விருப்பம் பெற்றோரால் தடைப்படுத்தப்பட்டதால் அவர் உயர் தரக் கல்விக்கே முற்றுப்புள்ளி வைத்துவிட்டதை அறிய முடிந்தது. அக்குடும்பத்திலேயே 1993 இல் கபொத (சாத பரீட்சையில் தோற்றி எட்டு பாடங்களிலும் விசேட சித்தி பெற்ற அப்பெண்ணின் சகோதரருக்கும் தந்தையின் வியாபாரத் துறையின் ஆர்வம் காரணமாக கணிதத்தில் தொடர்ந்த உயர்தரக் கல்வியை பாதியிலேயே கைவிட வேண்டிய நிலையேற்பட்டது. இதனால் பெண்கள் மட்டுமல்லாமல், ஆண்களும் கல்வியல் ஈடுபட முடியாது சோர்வடைந்து விடுகின்றனர். உயர் தரக் கல்வியில் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, முஸ்லிம் சமூகத்தின் மனமாற்றத்திலேயே தங்கியுள்ளது.
மேலும், வெளியிடங்களில் டியூசன் வகுப்புகளுக்காக, அலைந்து திரிவதை முஸ்லிம் பெண்களோ பெற்றோரோ விரும்புவதில்லை. இதனால், பாடசாலையில் கற்பதைக் கொண்டே சிறந்த பெறுபேற்றைப் பெறக்கூடிய கலைப்பிரிவை பலர் தெரிவு செய்கின்றனர். விஞ்ஞான, கணித நெறிகளை முஸ்லிம் புெண்கள் பலர் ஒதுக்கிவிடுகின்றனர்.
முஸ்லிம் பெண்களின் சமய கலாசார அம்சங்களும் அவர்களது உயர் கல்வியில் செல்வாக்குச் செலுத்துவனவாக உள்ளன. பராயமடையும்
பிரவாதம் - ஜூலை 2005 105

Page 56
வரையிலேயே பெண்களைப் பாடசாலைக்கு அனுப்புவதை பெற்றோர் விரும்புகின்றனர். அவர்களது ஒழுக்க, சமய மாண்புகளுக்கு வெளிச் சூழல் பாதகமாக அமைவதாலும், உயர் தரக் கல்வி தொடங்கும் வயது அவர்களது திருமணம் பற்றிய எண்ணத்தை பெற்றோரிடம் ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதனாலும் பெரும்பாலும் பெண்கள் க.பொ.த. (சாத கல்வியோடு இடை நிறுத்தப்படுபவர்களாக இருக்கின்றனர். ஆனாலும், இன்றைய காலக்கட்டத்தில் இந்நிலையில் கூடிய நெகிழ்ச்சிப்போக்கு தென்படுவதை பரவலாக அறிய முடிகின்றது.
முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் கல்வி வளங்களும் பெண்களின் உயர்கல்விப் பங்களிப்பில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதும் கவனிக்கத் தக்கது. இவற்றில் ஆசிரிய வளமின்மை, தரமற்ற பாடசாலைகள், பாடசாலைக்கான கட்டட ஆய்வுகூட வசதிகள் இன்மை என்பவற்றைக் குறிப்பிடலாம். இன்று தேசிய மட்டத்தில் 15:1 என்றளவில் ஆசிரியர் மாணவர் விகிதம் காணப்பட முஸ்லிம்களிடையே இவ்விகிதம் 2011 என்றளவில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அதேபோல், முஸ்லிம்களுக்கென இயங்கும் 752 பாடசாலைகளிடையே 50 பாடசாலைகள் மட்டுமே 1.ஏ.பி தரத்திலானவையாக இருக்கின்றன. பெரும்பாலான பாடசாலைகள் கணித, விஞ்ஞான, வர்த்தக பிரிவுகளைக் கொண்டிருந்த போதிலும், போதிய ஆசிரியர்களையோ, ஆய்வு கூட வசதிகளையோ கொண்டிருப்பதில்லை. இக்குறைபாடுகளும் பெண்களின் உயர் தரக்கல்வி பின்னடைவதற்கும், பல்கலைக்கழக அனுமதி வீதம் குறைந்து போவதற்கும் காரணமாக அமைகின்றன.
மேலும் அதிகமான பாடச்ாலைகளில் கலை, வர்த்தக பிரிவுகள் மட்டுமே இருக்கின்றவிடத்து, கணித, விஞ்ஞான பாடநெறிகளுக்காக போக்குவரத்து சிரமங்களுக்கு மத்தியில் புதிய பாடசாலைகளுக்கு செல்வதை விட கலைத்துறையே சிறந்ததென இருந்து விடுகின்ற மானப்பான்மையும் முஸ்லிம் பெண் களிடையே அதிகமாக உண்டு. சிங் கள, தமிழ் மாணவர்களின் ஆர்வம் வர்த்தகம், கலை ஆகிய பிரிவுகளில் குறைந்து செல்ல முஸ்லிம்களின் வீதம் இவற்றில் அதிகரித்துச் செல்கின்றது. இன்றைய கால கட்டத்தில் தொழிற்துறைகளை கருத்திற் கொண்டு ஏனைய சமூகப் பெண்களும், ஆண்களும் கலை, வாத்தக பிரிவுகளிலிருந்து விடுபட்டு வேறு துறைகளில் கூடிய ஆர்வம் செலுத்தும்போது, முஸ்லிம்கள்
106 பிரவாதம் - ஜூலை 2005

இத்துறைகளில் மட்டுமே அதிகரித்துச் செல்வதும் முஸ்லிம் சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. எனவே, கணித, விஞ்ஞான பிரிவுகளிலும் முஸ்லிம் பெண்களை பங்கெடுக்கச் செய்வதற்கும், அத்துறைகளில் அவர்களது எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதற்குமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் அவசியமானது. அதே நேரத்தில் கலை தவிர்ந்த பாடநெறிகளின் போட்டிப் பரீட்சைகளுக்கு பெண்களை ஊக்கப்படுத்துவதில் பெற்றோரும் சமூகமும் கூடிய பங்கெடுத்தல் அவசியமானதாகும்.
முஸ்லிம் பெண்களின் உயர் தரக் கல்விக்கு பல தடைகளும், பிரச்சினைகளும் காணப்பட்ட போதும், படிப்படியாக அவற்றை நீக்குவதிலும், பெண்களை உயர் தரக் கல்வியில் அதிகமாக ஈடுபடச் செய்வதிலும் முஸ்லிம் சமூகம் முயன்று வருகின்றது என்பதை எடுத்துக் காட்டுவதற்காக கல்முனை, மாத்தளை ஆகிய மாவட்டங்களின் இரண்டு பெண்கள் கல்லூரிகள் பெற்ற உயர் தரக்கல்வியின் வளர்ச்சி வீதம் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
அட்டவணை 6 க/மஹற்முத் மகளிர் கல்லூரி, மா/ஆமினா மகளிர் கல்லூரி க.பொ.த (உ.த) பரீட்சையின் சித்தி வீதம் 1992 - 1996
භෞණ්G| கல்முனை மஹற்முத் மகளிர் கல்லூரி மாத்தளை ஆமினா மகளிர் கல்லூரி
தோற்றியோர் சித்தியடைந்தோர் வீதம் தோற்றியோர் சித்தியடைந்தோர் வீதம் 1992 104 73 70 32 15 46
1993 92 70 76 19 O9 47
1994 95 62 65 32 26 81
1995 91 67 74 - 39 25 64
1996 166 129 78 41 25 60
இந்த அட்டவணையில் இவ்விரண்டு பாடசாலைகளினதும் வளர்ச்சிப் போக்கு கணிதம், விஞ்ஞானம், கலை, வர்த்தகம் ஆகிய அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாகவே கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்படி கல்முனை மாவட்டத்தில் அமைந்துள்ள மஹற்முத் மகளிர் கல்லூரி, ஆமினா மகளிர் கல்லூரியை விடப் படிப்படியாக முன்னேறிச் சென்றுள்ளது. எனினும் 1994 இல் ஆமினாவின் சித்தி வீதம்
பிரவாதம் - ஜூலை 2005 107

Page 57
மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது. 1995, 1996 ஆகிய வருடங்களில் இவ் வளர்ச்சியில் வீழ்ச்சியேற்பட்டுள்ளமையையும் அவதானிக்க முடிகின்றது. இதனோடு ஒப்பிடுகையில் கல்முனை மஹ்முத் கல்லூரி க.பொ.த (சாத) கல்வியிலும் வினையாற்றுகைச் சுட்டெண்ணில் அதிகரித்துக் காணப்படும் ஒரு பாடசாலையாகும். இக்கல்லூரி உயர் கல்வியில் அதிகளவு தகுதியுடைய மாணவிகளை உற்பத்தி செய்த பாடசாலையாக விளங்குகின்றது. 1992 முதல் 1996 வரையான இதன் போக்கு கூடியும் பின் குறைந்தும் காணப்படுமிடத்து, 1996 இல் இது முன்னைய வருடத்தை விட நான்கு வீத அதிகரிப்பைக் காட்டுகின்றது. இக்கல்லூரி 1994, 1995 ஆகிய வருடங்களில் க.பொ.த (உத உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் இம் மாவட்டத்திலேயே முதலிடம் பெற்ற கல்லூரியாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது. 1996 இல் இம் மாவட்டத்தில் ஐந்து தேசிய பாடசாலைகள் இருந்தமை முக்கிய அம்சமாகும்.
கல்முனை மஹற்முத் மகளிர் கல்லூரியின் வளர்ச்சியை மாத்தளை மாவட்டத்தின் ஆமினா மகளிர் கல்லூரியுடன் ஒப்பிடுமிடத்து, அதன் சித்திவீதம் தாழ்ந்ததாக இருக்கின்றது. எனினும் மாத்தளை ஆமினா மகளிர் கல்லூரியை அம்மாவட்டத்தின் ஸாஹிரா ஆண்கள் கல்லூரியுடன் ஒப்பிடுமிடத்து 2001 ஆம் ஆண்டைத் தவிர அதன் போக்கு வளர்ச்சியுற்றதாகவே அமைந்திருந்தது. 2001 இல் ஆமினா மகளிர் கல்லூரியிலிருந்து ஒன்பது பேர் தகைமை பெற்றவிடத்து ஸாஹிரா ஆண்கள் பாடசாலையிலிருந்து பதின்மூன்று பேர் பல்கலைக்கழகத் தகுதி பெற்றனர். இதில் கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் அனைத்துப் பிரிவுகளும் உட்பட்டுள்ளது. இவ்விரு பாடசாலைகளையும் விட மஹ்முத் மகளிர் கல்லூரி முன்னணியில் திகழ்வது குறிப்பிடத்தக்கது. இக் கல்லூரியின் வளர்ச்சிக்கு மாத்தளை மாவட்டத்தை விடப் பல வேறுபட்ட அம்சங்கள் காரணமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை மஹமுத் மகளிர் கல்லூரி பெளதீக ரீதியிலும் கல்விச் செயற்பாட்டு ரீதியிலும் முன்னேற்றம், அடைந்துள்ளது. பெளதீக இடையூறுகள் நீங்கியமை, ஆசிரியத் தட்டுப்பாடும், பிற பாடசாலைக் குறைபாடுகளும் அப்பகுதி அரசியல்வாதிகளாலும், ஆதரவாளர்களாலும் உடனுக்குடன் நீக்கப்பட்டமை காரணமாக இப்பாடசாலையில் பெண்களின் உயர்தரக் கல்வி கலையில் மட்டுமன்றி, விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம் என அனைத்து பிரிவுகளிலும் துரித முன்னேற்றத்தைக் கண்டது. மேலும் இப்பகுதிப் பாடசாலைகளைப் பொறுப்பேற்கும் அதிபர்களுக்கும்
108 பிரவாதம் - ஜூலை 2005

ஆசிரியர்களுக்கும் நடத்தப்பட்டு வரும் சிறந்த முகாமைத்துவப் பயிற்சி காரணமாக மஹற்முத் பெண்கள் கல்லூரியும் கூடிய நன்மையைப் பெற்றுக் கொண்டது.
கல்முனை மாவட்டத்தில் 1964 இலிருந்தே படிப்படியாகப் பாடசாலைகளில் உயர் தரப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும், 1979 அளவிலேயே மஹற்முத் மகளிர் கல்லூரியில் உயர் தரம் தொடங்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு வரையில் அம் மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகத் தகுதி பெற்ற மொத்த மாணவர்கள் 1800 பேரிடையே எண்ணுாறு மாணவர்கள் மஹற்முத் மகளிர் கல்லூரிக்குரியவர்கள் என்பது விசேட அம்சமாகும். இவ்வளர்ச்சியை ஆரம்ப காலங்களோடு ஒப்பிடுமிடத்து, இதுவொரு திருப்தியான கல்வி முன்னேற்றம் எனலாம்.
மாத்தளை மாவட்ட ஆமினா மகளிர் கல்லூரியின் நிலையை அவதானிக்கும் போது 1968 இலேயே இங்கு உயர்தரக் கலைப்பிரிவும், இரு வருடங்களின் பின் வர்த்தகப் பிரிவும் ஆரம்பிக்கப்பட்ட போதும், விஞ்ஞான, கணிதப் பிரிவுகளில் உயர்தர வகுப்புகள் மிக அண்மைக்காலத்திலேயே (1994) ஆரம்பிக்கப்பட்டன. இதனால் கலை, வர்த்தகப் பிரிவுகளில் எழு நூற்றிற்கும் அதிகமான மாணவிகள் தகுதி பெற்றுள்ள போதும் கணித, விஞ்ஞான பிரிவுகளில் பத்திற்கும் குறைவானவர்களே தகுதி பெற்றுள்ளார்கள். ஆனால் 1985ஆம் ஆண்டு விஞ்ஞான, கணிதப் பிரிவுகளில் உயர்தர வகுப்புகளை ஆரம்பித்த கண்டி பதியுத்தீன் மஹ்முத் மகளிர் கல்லூரியில் விஞ்ஞானப் பிரிவில் நான்கு மாணவிகள் தகுதிபெற, கணிதப் பிரிவில் ஒருவருமே தகுதிபெறாத நிலையையும் அறியக் கிடைத்தது. இவ்வகையில் முறையே மஹ்முத் மகளிர் கல்லூரி, மாத்தளை ஆமினா மகளிர் கல்லூரி ஆகியவை அதிகளவில் பெண்களின் உயர்கல்விக்குப் பங்களிப்புச் செய்து வருவதை அறிய முடிகின்றது.
நாடளாவிய ரீதியில் நோக்குகையில் சில பிரதேசங்களில் முஸ்லிம் பெண்களின் உயர்தரக் கல்வி வளர்ச்சி அதிகரித்தும், சில பிரதேசங்களில் மிகக் குறைந்தும் காணப்படுகின்றது. இந்நிலை ஏனைய சமூகப் பெண்களின் உயர்தரக் கல்வியில் பங்குபற்றும், சித்தியடையும் வீதத்துடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாகவும், முஸ்லிம் ஆண்களுடன் ஒப்பிடுமிடத்து ஓரளவு தாழ் நிலையிலும் உள்ளது. எனினும் இக்கால கட்டத்திலே பெண்களை உயர்தரக் கல்வியில் ஈடுபடச் செய்வதன் மீதான ஆர்வம் முஸ்லிம்
பிரவாதம் - ஜூலை 2005 109

Page 58
சமூகத்தினிடையே அதிகரித்து வருகின்றது என்றே குறிப்பிட வேண்டும். இம் மனப்பான்மையை மாறாது பாதுகாப்பதில் துணை நிற்கக் கூடிய பிற காரணிகளை விட தங்களது சமய, கலாசார நடைமுறைகளைப் பேண உயர் கல்வியில் பங்கெடுப்பதன் அவசியத்தை முஸ்லிம் பெண்களே பெற்றோருக்கும், சமூகத்துக்கும் உணர்த்த முன் வருவது முக்கியமானதாகும். அத்தோடு உயர்கல்வியில் கற்கின்ற முஸ்லிம் பெண்களே முன்மாதிரிகளாக வெற்றிச் சாதனைகளை நிகழ்த்துவதும் சமூகத்தின் பெண் கல்விக்கான தூண்டுதலை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
பல்கலைக்கழகக் கல்வியும் முஸ்லிம் பெண்களும்
முஸ்லிம் பெண்களிடத்தே ஏற்பட்ட பாடசாலைக் கல்வியின் வளர்ச்சி காரணமாகப் பல்கலைக்கழக கல்வியும் படிப் படியாக முன்னேற்றமடையத் தொடங்கியது. இலங்கைப் பல்கலைக்கழகம் ஆரம்பித்த போது (1942) 42 சிங்களப் பெண்களும், 32 தமிழ்ப் பெண்களும் அனுமதிபெற்றிருந்தவிடத்து ஒரேயொரு முஸ்லிம் பெண்ணே அனுமதி பெற்றிருந்தார். (பல்கலைக்கழக சபை 1942) இது முஸ்லிம் பெண்களின் பின்னடைவையே காட்டுகிறது. 1940களில் மகளிரின் பங்கும் எதிர்பார்ப்புகளும், உயர்கல்வியையும், தொழிலொன்றையும் நோக்கியதாக இருக்கவில்லை எனச் சதரசிங்க (1995) குறிப்பிடுகின்றார். இக் காலப்பிரிவில் பிற இனத்தவர்களிலும் நடுத்தர வர்த்தகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தமது பிள்ளைகளைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பக் கூடியதாக இருந்தது. இக் காலத்தில் இயங்கி வந்த பல்கலைக்கழகக் கல்லூரி, பல்கலைக்கழகம் என்பன ஆங்கிலத்தையே போதனா மொழியாகக் கொண்டிருந்தன. ஆனால் அக் காலத்திலிருந்த முஸ்லிம் பாடசாலைகளோ தாய் மொழிக் கல்வியை மட்டுமே போதிப்பனவாக அமைந்திருந்தன. எனவேதான் 1942 இற்கும் 1961 இற்குமிடைப்பட்ட காலம் வரையில் முஸ்லிம் பெண்களில் பல்கலைக்கழக அனுமதி பத்திற்குள்ளேயே காணப்பட்டது.
110 பிரவாதம் - ஜூலை 2005

அட்டவணை 7 பல்கலைக்கழக அனுமதியில் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 1951 - 1961
ஆண்டு மொத்தமாணவர் முஸ்லிம் ஆண் பெண்
1951 - - - 55 51 4
1957 2178 54 44 1O
1958 3950 72 62 10
1959 3181 66 58 8
1960 3684. 67 59 8
1961 4655 84 75 9
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 1951 - 1961
அட்டவணை காட்டும் இப் பின்தங்கிய நிலைமைக்கு மொழிப் பிரச்சினை மட்டும் காரணமல்ல. முஸ்லிம் பெற்றோரிடையே அக்காலத்தில் நிலவிய பெண் கல்வி பற்றிய தப்பான அபிப்பிராயங்கள், சமய, சமூக, பொருளாதாரக் காரணங்கள் என்பனவும் முஸ்லிம் பெண்களிடையே உயர்கல்வி மீதான நாட்டத்தை குறைவடையச் செய்திருந்தன. 1944 அளவில் முழு இலங்கையிலும் பாத்துமுத்து ஹலால்தீன் எனும் ஒரேயொரு பயிற்றப்பட்ட முஸ்லிம் பெண் ஆசிரியை மட்டுமே இருந்தார். வேறு எந்தத் துறைகளிலும் முஸ்லிம் பெண்கள் இருக்கவில்லை (ஜெமீல் 2000), இந்நிலைமை 1967 இற்குப்பின் ஏற்பட்ட மும்மொழிகளிலுமான உயர்கல்வி, இலவசக் கல்வியின் வளர்ச்சி என்பனவற்றால் மாற்றமடைந்தது. எனினும் இதனால் கூடிய வளர்ச்சியை முஸ்லிம் பெண்களிடையே காண முடியவில்லை என்பதை ஏ.ஜே. சதரசிங்க குறிப்பிடுகிறார்.
“1960 களின் பிற்பகுதியில் நடுநிலைக்கல்வி விஸ்தரிக்கப்பட்டமையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கைகளின் விளைவாக உயர் கல்வியில் சேர்ந்து கொள்ளும் மகளிரின் விகிதாசாரம் கணிசமான அளவில் அதிகரித்தது. உதாரணமாக 1942இல் 101 சதவீதமான மகளிர் மட்டுமே கல்வி கற்று வந்தனர். இது 1967இல் 40 சதவீதமாக உயர்ந்ததுடன் அதன் பின்னர் அது ஒரு போதும் 40 சதவீத மட்டத்திற்குக் கீழ் வீழ்ச்சியடையவில்லை. முஸ்லிம்களைத் தவிர்ந்த
பிரவாதம் - ஜூலை 2005 111

Page 59
ஏனைய அனைத்து இனக்குழுக்களிலும் இதனை மிகத் தெளிவாகக் காண முடிந்தது’சதரசிங்க 1995
பல்கலைக்கழகம் ஆரம்பித்ததிலிருந்து முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதி போதிய வளர்ச்சியற்றதாகவும் தனது தேசிய இன விகிதாசாரத்தோடு பார்க்கும் போது மிகக் குறைவானதாகவுமே காணப்பட்டது. ஆனால் சிங்களவர், தமிழர் என்போர் தமது தேசிய இனவிகிதாசாரத்தை விட அதிகமாகவே பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றிருந்தனர். எனவேதான் 1980 வரையில் சுமார் நான்கு தசாப்த காலமாக முஸ்லிம்களிடையே குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதையும் காண முடியவில்லை (சந்திரா குணவர்தன. 1990). இதில் முஸ்லிம் பெண்களின் பல்கலைக்கழக அனுமதியோ விரல்விட்டு எண்ணக்கூடிய தொகையிலேயே இருந்தது. இவ்வாறு முஸ்லிம் ஆண்களினதும் பெண்களினதும் கல்வி பின்தங்கியிருந்ததற்கு பல காரணங்களைக் கூறலாம். அவற்றிடையே முஸ்லிம்களுக்கு தொழிற் கல்வியைவிட வர்த்தகத்தைச் சார்ந்த விடயங்களே அதிக விருப்பத்துக்குரிய துறைகளாய் அமைந்திருந்தமை முக்கியமானது. இது ஆண், பெண் இரு பாலாரின் பல்கலைக்கழக அனுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தியது இது தவிர இளவயதுத் திருமணம், கல்விக்காகத் தூரவிடங்களுக்குச் சென்று தனித்திருக்க வேண்டியிருந்தமை, பெற்றோரின் ஆர்வமின்மை ஆகியனவும் முஸ்லிம் பெண்களின் கல்வியைப் பாதித்தது. 1980 இற்குப்பின் இத் தடைகள் நீங்கின அல்லது நீக்கப்பட்டன. 1980க்குப் பின் முஸ்லிம் பெண்களின் கல்வி ஒரு வளர்ச்சிப்பாதையை எட்டத் தொடங்கியமை கவனித்தற்குரிய விடயமாகும்.
1980 இற்குப்பின் முஸ்லிம் பெண்களின் பல்கலைக் கழகக் கல்வியிலேற்பட்ட மாற்றங்கள்
முஸ்லிம் சமூகம் பெண் கல்வி தொடர்பாக அதிகளவுக்குச் சிந்திக்கத் தொடங்கிய காலப்பகுதியாக இதனைக் குறிப்பிடலாம். இக் காலப் பகுதியில் முஸ்லிம் பெண்கள் உயர் கல்வியில் கூடுதலாக ஆர்வம் செலுத்தத் தொடங்கினர். இக்கால கட்டங்களில் முஸ்லிம் மாணவர்களின் தொகை இதற்கு முற்பட்ட காலங்களை விட அதிகரித்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ் வளர்ச்சிப் போக்கு பெண்களின் அனுமதியிலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளதை நன்கு அவதானிக்க முடிகின்றது. 1980 களின் இறுதியில் முஸ்லிம் மாணவர்களது அனுமதி அவர்களது இனவிகிதாசாரத்தையும் கடந்து சென்றமை குறிப்பிடத்தக்கது. கீழ்வரும் அட்டவணை இன, பால் அடிப்படையில் முஸ்லிம்
12 பிரவாதம் - ஜூலை 2005

ஆண், பெண் மாணவர்களது அனுமதியையும் அவ்வாறே ஏனைய இனத்தின் மொத்த மாணவர்களில் பெண்களது வீதத்தையும் காட்டுகின்றது. முஸ்லிம் மாணவிகளின் அனுமதி வீதம் படிப்படியாக முன்னேறிச் சென்றுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
அட்டவணை 8
பல்கலைக்கழக அனுமதியில் இன, பால் ரீதியான வகைப்பாடு
கல்வி சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள்
ஆண்டு 1 பெண்கள் மொத்தம் % பெண்கள் மொத்தம் % பெண்கள் மொத்தம் %
1982/83 166 3778 43.96 473 1108 42.69 - 50 206 2427
1983/84 1690 3968 || 42.59 || 440 985 44.67 80 28O 28.57
1984/85 1671 3849 43.41 431 962 44.08 106 3O4 34.87
1985/86 1660 392 42.34 427 780 54.74. 140 327 42.81
1986/87 1796 4082 144.001 309 564 54.79 135 3.34 40.42
1987/88 1665 4147 40.15 494 914 54.05 198 475 41.68
1988/89 1725. 3942 43.76 405 820 - 4939 138 373 - 37.00
1989/90 2006 4510 44.48 503 博2 |4523| 160 430 37.2
(பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 1982/83 - 1989/90 கல்வி ஆண்டுகள்)
இத்தரவுகளிலிருந்து பல்கலைக்கழக அனுமதியில் முஸ்லிம் பெண்களின வளர்ச்சியைக் காணக் கூடியதாக உள்ள அதே நேரத்தில் இத்தொகை முஸ்லிம் ஆண்களிலிருந்து குறைவாகவும், தமிழ் சிங்களப் பெண்களின் தொகையிலிருந்து மிகக் குறைவாகவும் உள்ளதை அறிய முடிகின்றது. 1983 இலிருந்து 1990 வரையில் அனுமதியற்ற மொத்தம் 14, 951 பெண்களில் 1007 பேரே முஸ்லிம் பெண்களென்பது குறிப்பிடத்தக்கது. (பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 1980 - 1990)
ஏனைய இனப்பெண்களின் அதிகூடிய வளர்ச்சியும் முஸ்லிம் பெண்களின் குறைந்தளவான எண்ணிக்கையும் முஸ்லிம்களிடையே
பிரவாதம் - ஜூலை 2005 113

Page 60
பெண்களுக்கு கல்வியளித்தல் தொடர்பாக நிலவும் மனப்பாங்கு முற்றாக மறைந்து போய்விடவில்லை என்பதை உணர்த்தி நிற்கின்றன. இந்நிலை இன்று வரையும் ஓரளவு நிலைத்துள்ளதைக் காணக் கூடியதாகவேயுள்ளது.
முஸ்லிம் பெண் களின் கற்கை நெறிகள் தொடர்பாக அவதானிக்குமிடத்து அதிகளவுக்குக் கலைத்துறை சார்ந்த கற்கைப் பிரிவுகளையே இவர்கள் தெரிவு செய்யும் வழமை இன்றும் உள்ளது. கடந்த நான்கு தசாப்த காலத்தின் போது உயர்கல்வியில் மகளிரின் பங்கேற்பு அதிகரித்து வந்துள்ள போதிலும் பெரும் பாலான முஸ்லிம் பெண்கள் கலைத்துறை சார்ந்த பாடநெறிகளைக் கற்று வரும் ஒரு போக்கினை அவதானிக்க முடிகிறது. கல்வியைப் பொறுத்த வரையில் ஆண்களுக்குப் பொதுவாக உயர்கல்வி மற்றும் தொழில், பயிற்சி என்பன வலியுறுத்தப்பட்டு வரும் அதேவேளையில், பெண்களைப் பொறுத்த வரை குடும்ப வாழ்க்கையுடன் தொடர்பான விடயங்கள் மற்றும் வீட்டு நடவடிக் கைகள் என்பவற்றுக்கே அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. முஸ்லிம் பெண்கள் தவிர்ந்த ஏனைய இனப் பெண் கள் கலைத் துறை தவிர்ந்த பிற துறைகளிலும் போதிய அனுமதியைப் பெற்று வருகின்றமையையும், முஸ்லிம் பெண்களின் பங்கே மிகக் குறைவாயிருக்கின்றமையையும் பின்வரும் அட்டவணை காட்டுகின்றது.
114 பிரவாதம் - ஜூலை 2005

Fiqif).usgs) 'qølsīąjoto úrīļņ9ụ9ų9h (G961) đì)@ș100909%ī> mự9ươı oớigęœ09:goera : qigođfi)
(19??)(81)(91){8/)(8)(0%)(GOZ)(9/Z}{2})(6'){ZGZ)(671)(826) 0'00||0'00į.00010'00||0'00s.0'0010'00ł0'0010'0040'0010001 || 0,00i0'001 |-|-ダ ZO-----9’0-----$('||--30 | 4đựn Ş’9-$('#---6'38"|6′082g의z || 6일 || 와이z || ***년 søgef) |(6į-£7||| || ?ĢĢsy07G6||8’936??Z GŁ6?!ț7'$1į’8||ຫຼິກລີ Œlso ț77||00’00||ț7969||GoĝG09ĽŁŁț7'įį.Z9||| 619,989789'69: (pmış9 о9гnin(n1991@ | sriņ9 lyolph· TƯƠ009 Los@oqires?இழுகு'q1@ụ09%qrtos@ oogoo | qømsn | qrniso | §@ơiqrtos ļqrtos@| Qorm'quou@@ņ9qī£$ | Ģơ109 qĶĒĢương) | TbT | 9 || @jurie) | reso | @ņ109||9 || @@@mqon|$@qi | ¡¡n-a因额uen@qT-TH8 || $419 || Lotfi) | 09098
98 / 8861 quose odisèle ođìoșoegosoqorı çojoo qorı,9 ņæılmos) ‘síolíts-ııını “loog 6 1096919–17116)
115
பிரவாதம் - ஜூலை 2005

Page 61
இங்கு ஓரளவு மருத்துவத் துறை தவிர்ந்த ஏனைய விஞ்ஞானத்துடன் தொடர்புடைய பாடநெறிகளில் முஸ்லிம் பெண்களின் அனுமதி குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. கலை, சட்டப் பிரிவுகளில் முஸ்லிம் பெண்களின் பங்கு ஓரளவு போதியனவாகக் காணப்படுகின்றமையையும் அவதானிக்க முடியும். பிற இனப் பெண்களோடு ஒப்பிடுமிடத்து முஸ்லிம் பெண்களின் சேர்வு வீதம் குறைவாக உள்ளதை சந்திராகுணவர்தன அவர்கள் குறிபிடுகின்றார்.
“முகாமைத்துவம், வர்த்தகம் மற்றும் கலையோடு தொடர்புடைய பாடநெறிகளில் எதிர்காலத்தில் துரித வளர்ச்சியேற்படும் நிலை தென்படுகின்றது. எனினும் முஸ்லிம் பெண்களில் பிரதிநிதித்துவம் தாழ்ந்தளவிலேயே உள்ளது.” (சந்திராகுணவர்தன 1990)
இவ்வாறு பாடநெறி அடிப்படையில் முஸ்லிம் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 1980-1990 வரை கணிப்பிடுமிடத்து, பொறியியற் துறையில் 151 மொத்த முஸ்லிம் மாணவர்களில் நால்வரே பெண்களாவர். அவ்வாறே விவசாய பீடத்தில் அனுமதி பெற்ற 52 மாணவர்களில் 9 பேர் பெண்களாவர். மருத்துவ துறையில் 107 மாணவர்களில் 38 பேர் பெண்களாவர். பெளதீக விஞ்ஞானத்துறைக்கு அனுமதி பெற்ற 164 மாணவர்களில் 13பேர் பெண்களாவர். சட்டத்துறைக்கு அனுமதி பெற்ற 95 மாணவர்களில் 23 பேர் பெண்களாவர் (சுல்பிகா 2000). பொதுவாக நோக்குமிடத்து உயர் கல்விப் பிரிவுகளில் பால் பாகுபாட்டு நிலைமைகள் இருந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இது இன்றும் முஸ்லிம் பெண்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி வருவது ஒரு முக்கிய அம்சமாகும். ஆண் களுக்குச் சில துறைகளும் , பெண் களுக்கென்று வேறு சில துறைகளும் இருப்பதாக பால் அடிப்படையிற் கருதும் மனப்பாங்கே இதற்குக் காரணமாகும். இந்த ஏற்றத் தாழ்வு முஸ்லிம் பெண் களில் மட்டுமன்றி அனைத்துப் பெண்களினதும் வேலை வாய்ப்புகளிலும், சமூக வழிநடாத்தலிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதென சுவர்ணா ஜயவீர குறிப்பிட்டிருக்கிறார். 1980-1990 வரை முஸ்லிம் பெண்களின் பல்கலைக்கழகக் கல்வியில் செல்வாக்குச் செலுத்திய விடயங்கள் பிற்பட்ட பத்தாண்டில் முற்றிலும் மறைந்து விடாவிட்டாலும் ஓரளவு கூடிய வளர்ச்சி பெற்ற காலமாகவே விளங்குகிறது.
116 பிரவாதம் - ஜூலை 2005

1990 தொடக்கம் இன்றுவரையிலான காலம் வரை முஸ்லிம் பெண்களின் பல்கலைக்கழகக் கல்விநிலை
இலங்கையில் சுதந்திரத்தின் பின்னர் காலத்துக்குக் காலம் செயற்படுத்தப்பட்டு வந்த கல்விக் கொள்கைகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை கணிசமானளவில் விருத்தி செய்துள்ளன. இக்கொள்கைகளிலிருந்து மகளிர் பெருமளவுக்குப் பயனடைந்துள்ளனர். மகளிரின் எழுத்தறிவு விகிதத்திலும், பல்கலைக்கழகப் பிரவேசத்திலும் ஏற்பட்டு வந்துள்ள அதிகரிப்பு இதனைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலத்தைக் கடந்து வந்துள்ள பல்கலைக்கழகக் கல்வி வளர்ச்சியானது இலங்கையின் பொருளாதார, அரசியல் , சமூக மாற்றங்களுக்குப் பெரும் துணைபுரிந்துள்ள அதேவேளையில், முஸ்லிம்களிடையேயும் குறிப்பாக முஸ்லிம் பெண் களுக் கிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை அவதானத்துக்குரியதாகும். எனினும் இத் தாக்கத்தைத் தடுத்து நிறுத்தும் காரணியாக முஸ்லிம் சமூகமே முன்னிற்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. உயர் கல்வியினூடாகச் சமூகத்தில் உயர் அந்தஸ்த்தைப் பெற்றுக் கொள்வதைவிடப் பொருளாதார ரீதியில் அவ்வுயர்வைக் குறுகிய காலத்தில் அடைந்து கொள்வதிலேயே இவர்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். இது கல்வி வளர்ச்சி அதிகரித்துள்ள இக்காலத்திலும் முஸ்லிம் பெண்களின் பல்கலைக்கழகக் கல்வியைத் தடைபடுத்தும் காரணிகளில் ஒன்றாக அமைந்துள்ளது.
பொருளாதாரத்தில் முஸ்லிம்கள் அடைந்துகொள்ளும் உயர்வானது
பெண்களின் கல்வியைவிட இளம் வயதிலேயே ஒரு சிறந்த வாழ்க்கையை
அமைத்துக் கொடுக்கத் தூண்டுகோலாக அமைந்து விடுகின்றது. 1990 இற்குப்
பிற்பட்ட காலங்களிலும் ஏனைய இனங்களை விட முஸ்லிம்களிடையே
இதை அதிகமாகக் காண முடிகின்றது. எனவே, பல்கலைக்கழக அனுமதி
கிடைப்பதையும் பல பெண்கள் விரயமாக்க வேண்டி ஏற்படுகின்றமை
சமூகத்தைப் பாதிப்படையச் செய்துவிடுகின்றது. இந்த வகையில், 1990
தொடக்கம் இன்று வரையான முஸ்லிம் பெண்களின் அனைத்துத் துறைகளுக்குமான பல்கலைக்கழக அனுமதியை அவதானிக்குமிடத்து,
அவர்கள் அடைந்து கொண்டுள்ள இலக்குகளை அறிய முடியும்.
பிரவாதம் - ஜூலை 2005 117

Page 62
iz는7099Z389932/3ZG|66/866|| tz는30179||89ț7382296į.86/166|| 는20ț799į77806iz는91L6/966|| 9는202ț78||#779009383는96/966|| Ll20197Z29|Z123ț70||G6/766|| 8||7027트는799||12312||76/266|| 寸L2092ț7||829!26||4는26/Z66|| 80G01944|99는81||88Z6/166|| ļā,609G9는|90||993L9는16/066|| 白南道w용) || 長子용) ||열城w용) || 長ar용) || 열城km용) || 長ar용) || 「原道km용) || 長국공(þIII 명령官d) |열령原d) ||gl령%f) ||열층*&f) || 명령승d) |열용f) ||q용pf) |열용官ef)管f明 gn「TTa白田坝坝4n9qıñosỆĝơigolofi)(9Q99)Jigjחשר (ט
66 /8661 - 06 /1661 Ɛnsolę ofio?æqooqeri sejeogresseuqi qĻĢeạefi) opum og æırı
பிரவாதம் - ஜூலை 2005
118

9|, | 9070| 0$20ZO29.O는626|66 /366|| 93 || 9020었ZOZO|0071009:9는892----86 /166|| 23 || 9090Z070- -G92iz는12는62016 /966|| GO | - -20|0 10- -07寸9는802Z- -96 /G66|| 10 | 10ț70|0| 0ZO0320834는8||2OG6 /766|| | 0 | - -| 0| 0202OG92든는9360922O76 /266|| 60 || G02O었2OZO있2Oț73| 023800720Ç6 /366| 60 || 70ZO- -202O8寸는는833는4는- -Z6 /166|| 80 || 20|0|090ZO9310lỏ寸L09:20|6 /066||
守南城km용) || 長ar용) |g城km용) || 長역용) || 열城宣m용) || 長용국경) || 열城km용) || 長국령) || 열城km용) || 長安국용 || 열城km용) || 長역콩) || &득그
열층용f) |열증&D) ||q층&f) || 열家定용f) || 열승용f)|| 열용승() |열용官6) || 열용승f) || 열층승d) || 열층&D || m층승f) || 열층승(D食带
劑ரம9யஇெழுegre」Q@e
qırmışR9Ļ9ஓபிரqıfles@@@ơi qørn | qirtos@@@ơi(prm(4등Im그에ефиопоĮsigilo)-Turī
(68/8661 - 16 /0081 se opori sejeoffrenseun quoqefi spumos șırı)
gołę s-ıııoğuo 1999 OI 109&ore Tjalg)
119
பிரவாதம் - ஜூலை 2005

Page 63
ZO- -Ź0- -- -- -|0- -- -- -232O66/866|| |0- -70- -- -ț7030- -|0į06|2O86/166|| - -- -90- -- -- --90- -|0- -į73|0L6/966|| - -- -- -- -- -- -ĻO- -- -- -132096/G66|| - -- -- -- -- -- -20- -- -- -| 2| 0G6/766|| S S S S S S S S S S S S S S S S-- | -.- | -.- | -2 | --76/Q66|| - -- -- -- -- -- -ZO- -|0|04L |026/266|| - -- -- -- -- -- -| 0- -- -- -G3ZOZ6/166|| - -- -- -- -- -- -|0- -|0- -8Z016/066|| 역城宮澤) || 長역德) |g成道"T용) || 長生r용) || 열國道mm용)|| 용「용) || 열城km용) || 長국경) || 열城km용)|| &r용) || 영城km용)|| &r용) || &u그 Topf) ||Goof) |q|pop6 | q oqofi) | q oqofi) | q_prefi) | q oqofi) | ((soofi) | q oqefi) | q oqofi) | q_prefi) | (npopf)管R Qorms nr.80919ko | q ITIỆqjiffuse) | (SO) qulığılıp@ine,·- Ļ91009°ceğiĢ1909-ih그「HrmsC909田地1적學Tsфргmmijшп9)ĢĪĢĪ9-ııırı (68/8661 - 16/0661 se oop on sejeoffrewseum quæqefi æum og æırı)
¿??¿-ıııoğuo seg 01 wowore-IIIe)
பிரவாதம் - ஜூலை 2005
20

CI -- I CI -- | 70| 0| 0-- | O 20 | O 10 | O | 0 | O --66/866|| 70- -ZO- -| 0- -920- -80|086/166|| - -- -10| 0|0- -Ź01010ZO !16/966|| - -- -- -- -- -- -- -- -- -- -96/G66|| - -- -- -- -- -- -- -- -- -- -G6/766|| - -- -- -- -- -- -- -- -- -- -ț76/266|| - -- -- -- -- -- -- -- -- -- -26/Z66|| - -- -- -- -- -- -- -- -- -- -Z6/166|| - -- -- -- -- -- -- -- -- -- -16/066|| ფKääuglტ | W9rტ | ფKääug|ტ長9「용g홍km용) || 長국l용) || 열홍km용長9「용qẼĝae) | Isone) | (pun KlM KCM KlM KlT CM yM KCM LLM LT KLT9%。 As quaeolooŋ9Igue后回闯9Iரம91இஇருeIIq|1,911@@Ļ9I ფn|09ყ49)49)ცდ9 வியாg)பிருqømứIȚno olim?)(\s|| |oĝisorie) olim?)([ıG്യஐயrng)யிருĶīgie)-uri
(68/8661 - 16/0661 se oop on spojeosferollai quoqefi olimos qøırı)
(p + q Iugšuo 1999 OI kogers-ızılç
121
பிரவாதம் - ஜூலை 2005

Page 64
அட்டவணை 10 இன் தொடர்ச்சி
(பால் ரீதியாக முஸ்லிம் மாணவர்களின் ப.க.அ 1990/91 - 1998/99)
பாடநெறி மொத்தம் இலங்கை மொத்தம்
ஆண்டு : பால் முஸ்லிம் முஸ்லிம் மொத்த (UD(t)
பெண் மொத்தம் பெண் மொத்தம்
1990/91 176 522 3438 7179
1991/92 156 437 348O 7105
1992/93 179 40 2673 5913
1993/94. 193 496 2758 638O
1994/95 179 492 3642 7723
1995/96 164 424 3641 756O
1996/97 150 449 -- E 10450
1997/98 256 68O -- E 10755
1998/99 173 631 6232 11309
1999/2000 -- E -- E 6085 11805
குறிப்பு A - விவசாய விஞ்ஞானப் பாடநெறிக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின்
122
எண்ணிக்கை, விவசாயப் பாடநெறியோடு சேர்க்கப்பட்டுள்ளது.
- பொறியியல் II பாடநெறிக்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை பொறியியற் பாடநெறியோடு சேர்க்கப்பட்டுள்ளது.
- 1998 / 99 ஆண்டுக்குரிய தகவல்களில் பிரயோக விஞ்ஞானம் I, II ஆகிய பாடநெறிகள் இடம்பெறவில்லை. 1998/99 ஆம் ஆண்டில் பிரயோக விஞ்ஞானம் போஷாக்கு (பெளதிகம்/ உயிரியல் ஆகிய பாடநெறிகளுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை முறையே பிரயோக விஞ்ஞானம் 1, 11 கூடுகளில்
சேர்க்கப்பட்டுள்ளது.
பிரவாதம் - ஜூலை 2005

D - 1998 / 99 ஆண்டுக்குரிய தகவல்களில் பிரயோக விஞ்ஞானம் IV பாடநெறி
இடம்பெறவில்லை.
E - மொத்தப் பெண்கள் தொகை கணிக்கப்படவில்லை.
மூலம் 1990/91 - 1995/96 ஆண்டுகளுக்குரிய தகவல்கள் பல்கலைக்கழக மானியங்கள்
ஆணைக் குழுவின் புள்ளிவிபரக் கைந்நூல்களிலிருந்து பெறப்பட்டன.
1996/ 97 - 1998/ 99 ஆண்டுகளுக்குரிய தகவல்கள் மாணவர்கள் அனுமதி பற்றிய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் அடிப்படைத் தகவல் திரட்டுகளிலிருந்து பெறப்பட்டன. (சைபுதீன், ஷஸ்புல்லா 2000)
இவ்வட்டவணையின்படி 1980-90 வரையிலான காலகட்டத்தை 1990-1999 வரையான வருடங்களோடு ஒப்பிடுமிடத்து, பின்வந்த பத்தாண்டுகளில் முஸ்லிம் பெண்களின் அனுமதி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளதென்றே கூற வேண்டும். 1997/ 98 ஆம் கல்வியாண்டில் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு முஸ்லிம் பெண்களின் அனுமதி அதிகரித்துக் காணப்படுகின்றது. இவ்வதிகரிப்பு அதற்குப் பின்வந்த 1998/99, 2000/2001, 2001/2002 ஆகிய எந்த கல்வியாண்டிலுமே ஏற்படவில்லை என்பது முக்கிய விடயமாகும். இதற்கு பல்கலைக்கழக அனுமதி தொடர்பான அரசின் கல்விக் கொள்கைகளும், சமூகக் காரணிகளுமே செல்வாக்குச் செலுத்தியுள்ளன என உறுதியாகக் கூற முடியும்.
கலை, வர்த்தகம், பொறியியல் தவிர்ந்த துறைகளில் முஸ்லிம் பெண்களின் அனுமதி வீதம் கீழ்மட்டத்திலேயே இருந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. 2003 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் முறையே கணித, மருத்துவ, விஞ்ஞானத் துறைகளில் தலா ஒவ்வொரு முஸ்லிம் மாணவிகளே பட்டம் பெற்றனர். அத்தோடு விவசாயத்துறையில் ஒரு முஸ்லிம் மாணவியேனும் இடம் பெறாமையும் குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் பெண்கள் ஆசிரியத்துறை, மருத்துவத்துறை போன்ற துறைகளைத் தெரிவு செய்வதில் காட்டும் ஆர்வமும் பிற பாடத்துறைகளில் இவர்களின் பங்கு குறைவடையக் காரணமாகும். முஸ்லிம் பெண்களின் பல்கலைக்கழக அனுமதியை முஸ்லிம் ஆண்களுடன் ஒப்பிடுமிடத்து கலை தவிர்ந்த ஏனைய துறைகளில் ஆண்களே அதிகமாக இருப்பதைக் காண முடிகின்றது.
இவ்வாறு பார்க்குமிடத்து சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்திலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்துள்ள பல்கலைக்கழகக் கல்வியில் மாணவர் அனுமதி தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஒழுங்கமைப்புக்கள் முஸ்லிம்களின் பல்கலைக் கழக அனுமதியிலும் பாதிப் பை ஏற்படுத்துவனவாக உள்ளதோடு, பெண் கல்வியிலும் கூடிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்நிலைகளைக் கருத்திற் கொண்டு க.பொ.த (உ /த
பிரவாதம் - ஜூலை 2005 123

Page 65
வகுப்புக்களைக் கொண்டிருக்கும் பாடசாலைகள் அவ்வகுப்புகளில் கற்றல், கற்பித்தல், சூழல், பாடசாலைகளில் கிடைக்கக்கூடிய வளங்கள், ஆய்வுகூட வசதிகள், ஆசிரிய வளம், போதிய மேற்பார்வை போன்ற அம்சங்களை இப்பொழுதிலிருந்தே வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு சமூகத்தின் மனோநிலையையும் முஸ்லிம்களின் கல்விக்காவும், பெண்களின் கல்வி முன்னேற்றங்களுக்காகவும் மாற்றியமைக்கும் சாதகமாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவற்றைத் தொகுத்து நோக்குமிடத்து பல்கலைக்கழகக் கல்வியின் ஆரம்ப காலம் தொடக்கம் இன்று வரையிலான முஸ்லிம்களினதும், குறிப்பாக முஸ்லிம் பெண்களினதும் கல்வி படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்ததை அறியக் கூடியதாக உள்ளது. ஒவ்வொரு கால கட்டத்திலும் பெண்களின் கல்வியைத் தடைப்படுத்தும் காரணிகள் காணப்பட்டே வந்துள்ளன. இன்றும் காணப்படுகின்றன. எனவே, முழு முஸ்லிம் ஆண், பெண் மாணவர்களும் உயர் கல்வி பெற உதவுவதும், இடை நடுவில் கல்வியை வீண் விரயமாக்கும் சூழ்நிலைகளை இல்லாது செய்வதும் முஸ்லிம் சமூகத்தின் கடமையாக இருக்கின்றது. இவை முஸ்லிம் மாணவர்களினதும் மாணவிகளினதும் பல்கலைக்கழக அனுமதியை அதிகரிக்கச் செய்வதோடு, பிற சமூகங்களோடு சம வசதி வாய்ப்புகளை அடைந்து ஒரு முன்னணி சமூகமாகத் திகழ்வதற்கும் பெருந் துணையாக அமையும் என்பதில் ஐயமில்லை.
உசாத் துணை
அமீன். எம். ஐ. எம். (1997 இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் அறிஞர் சித்திலெப்பை ஹெம்மாதகம, அல்ஹஸனாத் பதிப்பகம்.
அமீன். எம். ஐ. எம். (2000) இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரமும் (18701915), ஹெம்மாதகம, அல்-ஹஸனாத் பதிப்பகம்.
அலியார். யூ. எல். (1983) இலங்கையில் மத்ரஸாக் கல்வியின் தோற்றமும் வளர்ச்சியும், திருநெல்வேலி,
அலியார். யூ. எல். (1999) இரு நூற்றாண்டுகளில் இலங்கையிற் கல்வி சம்மாந்துறை, பைதுல்ஹிக்மா
அனஸ். எம். எஸ். எம். 200 இஸ்லாத்தில் நவீனத்துவ வாதமும் புத்துயிர்ப்பு வாதமும் பேராதனை, பண்பாட்டு ஆய்வு வட்டம்.
இக்பால்-ஏ. (1994) கல்வி ஊற்றுக் கண்களில் ஒன்று பேருவளை, பேசும் பேனா பேரணி
கமால்தீன்.எஸ். எம். (1990) கலாநிதி துவான் புர்ஹானுத்தின் ஜாயா, மகரகம தேசிய கல்வி நிறுவகம்,
124 பிரவாதம் - ஜூலை 2005

கருணாநிதி, மா. 2000) “முஸ்லிம் பாடசாலைகளின் பொதுக் கல்விப் பெறுபேறுகள் - ஓர் அளவீடு” இலங்கையில் முஸ்லிம் கல்வி - பெண்கல்வியும் உயர்கல்வியும், கொழும்பு 5, முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி. செயல் முன்னணி,
சதரசிங்க. ஏ.ஜே. (1995) “கல்வியில் மகளிரின் பங்கேற்பும் அபிவிருத்தியின் மீதான அதன் தாக்கமும்” பொருளியல் நோக்கு ஜனவரி/பெப்ரவரி) கொழும்பு.
சந்திரசேகரன் சோ, கருணாநிதி மா. (1992) இலங்கையில் கல்வி வளர்ச்சி சென்னை, சூடாமணி பிரசுரம்,
சைபுதீன், என். பி. எம், ஹஸ்புல்லா, எஸ். எச், 2000) “உயர்கல்வியில் முஸ்லிம்கள் ஒரு பின்னணி அறிக்கை'இலங்கையில் முஸ்லிம் கல்வி- பெண்கல்வியும் உயர்கல்வியும் கொழும்பு 5, முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி.
பாத்திமா சுல்பிகா (2000) “முஸ்லிம் பெண்களின் உயர்கல்வி நிலை. ஓர் ஆய்வு” இலங்கையில் முஸ்லிம் கல்வி- பெண்கல்வியும் உயர்கல்வியும் கொழும்பு 5. முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி முன்னணி
றிம்சான் ஹம்தூன் (1998) இலங்கை முஸ்லிம்களின் கல்வியும் அரசியலும், பேருவளை அல்-கலம் வெளியீடு.
ஸைய்யத் முஹம்மத் எம். ஏ (1999) கல்வியும் முஸ்லிம் பெண்களும், காத்தான்குடி, ஸலவாத் மஜ்லிஸ்.
ஜெமீல், எஸ்.எச்.எம். (1990) “முஸ்லிம் உயர்கல்வி’, கல்விச் சிந்தனைகள், கல்முனை, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணிமனை.
LLLLLLLLLLLL00LLLLLLLLLLLLL0LCLLLLLCLLLLLLL0LLLLLLLLCLLG (2000) நமது முதுசம், கல்முனை, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப்
பணிமனை,
LLLLLLLLLL0LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL (1993) நினைவில் நால்வர், கல்முனை, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணிமனை.
LCCLLLCCCLCLCCCCCLLLLCL0CLCCCCCCCCCCCC0CCLCC (1980) ஏ.எம்.ஏ அளிஸ் அவல்களின் கல்விச் சிந்தனைகளும் பங்களிப்பும், கல்முனை, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம்.
--- (1984) ஸேர் ராஸிக் பரீத் அவர்களின் கல்விப் பணி கல்முனை, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம்.
(1998) காலச்சுவடுகள், கல்ஹின்னை, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம்.
ஹன்ஸி ர் (1989) எங்கள் தலைவர் பத்யுத்தின் கல்முனை, தமிழ் மன்றம்.
விழா மலர்கள்
கலைத்தாரகை (1997 ஆமீனா மகளிர் கல்லூரி, மாத்தளை. வளர்பிறை (1978) கொழும்பு, ஸாஹிரா தமிழ்ச்சங்கம் 1977-1978 வெள்ளிவிழா மலர் (1996) கல்முனை, மஹ்மூத் மகளிர் கல்லூரி.
பிரவாதம் - ஜூலை 2005 25

Page 66
Chandra Gunawardana (1990) “Education and the future of Muslims with Special Referance to Higher Education'. Challenge for Change. Profile of a Community, Colombo - 8, Muslim Women's Research and Action Front.
Ismail Jezima, (1997)"Impact of Religious Revivalism on Formal and Non Formal Education Among the Muslim Community in Sri Lanka'in Alternative Perspectives, A collection of essays on contemporary Muslim society, Colombo, MWRAF
Jayasuriya A.J.E (1976) Educational policies and progress, during British rule in Ceylon 1796-1948, Colombo, Associated Educational publishers.
Jayaweera Swarna (1991) Gender in Education in Sri Lanka, Women's Schooling and Work, Colombo CENWOR. SS (1993) Women Education and Training , Colombo,
CENWOR
(1990) Women and Education, Colombo, CENWOR.
(2001) Education in Post Beijing Reflections, Colombo, CENWOR.
Kamil Asad M.N.M (1993) The Muslims of Sri Lanka under the British Rule, New Delhi, Navarang Publishers.
Liyanage, K., (1996) "Women in Higher Education Perspectives from the University of Peradeniya', Proceedings of the Annual Research Sessions, University of Peradeniya,
Sumathipala (1967). History of Education in Ceylon 1796-1965, Kandy, Prabath.
Fatima Zulfika M.I.S (1995) A Study of the Factors Affecting the Continuation of Studies of Muslim Girls, after year-9 in Kalmunai District, Unpublished Dissertation, The Degree of Master of Education, Open University, Sri Lanka.
National Conference on the Education of Muslims in Sri Lanka 1993, Abstracts, University of Peradeniya, Peradeniya .
Challenge for Change: Profile of a Community (1990), Colombo -8, Muslim Women's Research and Action Front.
செல்வி ஹ. ஜெஸிமா பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.
126 பிரவாதம் - ஜூலை 2015

நூல் மதிப்புரை
The Colonial Economy on Track: Roads and Railways in Sri Lanka 1800-1905
திலகா மெத்தாநந்த
"The Colonial Economy on Track: Roads and Railways in Sri Lanka 1800-1905” என்ற நூல் சமூக விஞ்ஞானிகள் சங்கத்தினால் 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நூலாசிரியர் பேராசிரியர் இந்திராணி முனசிங்க. பிரித்தானிய குடியேற்ற ஆட்சியின் ஒரு நூற்றாண்டு காலப்பகுதியில் இலங்கைச் சமூகத்தில் ஏற்பட்ட மிக முக்கிய மாற்றங்களின் சிறப்பான அமிசமாக குறிப்பிடக்கூடிய பொருள் பற்றி இந்நூல் ஆய்வு செய்கிறது. ஆசிரியரின் முதுகலைமாணிப் பட்டப் படிப்பின் ஆய்வுடன் தொடர்புடையதாக எழுதப்பட்டுள்ள இந்நூல் 308 பக்கங்களைக் கொண்டுள்ளது.
பிரித்தானிய ஆட்சிக்காலப்பகுதியில் இலங்கையில் பெருமாற்றத்துக்கு வழிவகுத்த பிரதான காரணியான பெருந்தோட்டத்துறையினூடாக உருவான பெருந்தெருக்கள், புகையிரதப் பாதைகளின் விஸ்தரிப்பை ஆசிரியர் தனது நூலுக்கான தலைப்பாகத் தெரிவு செய்துள்ளார். பெருந்தோட்டத்துறையின் வளர்ச்சி தொடர்பான ஆய்வு நூல்கள் பல எழுதப்பட்டிருந்த போதிலும், பெருந்தெருக்களின் அதிகரிப்பினால் நடைபெற்ற விசேட பங்களிப்பு தொடர்பான ஆய்வுகளின் குறையை நிவர்த்தி செய்யும் முகமாகவே இந்த நூலை எழுதியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பெருந்தெருக்களின் வளர்ச்சி தொடர்பாக மட்டும் குறுகிய நோக்கில் ஆராயாமல், இந்த வளர்ச்சிக்குக் காரணமான விசேட காரணிகளையும், நடவடிக்கைகளையும் அதன் பல்வேறுபட்ட அம்சங்களையும் கவனத்தில் கொண்டு, இறுதியில் இந்த வளர்ச்சி சமூக பொருளாதார ரீதியாக ஏற்படுத்திய பாரிய தாக்கங்களைப் பற்றியும் இவ்வாசிரியர் கவனம் செலுத்தியுள்ளமை இந்த நூலின் விசேட அமிசமாகக் கருதலாம்.
சமகால இந்தியாவில் புவியியல் ரீதியான பரப்பளவு, சமூக வேறுபாடுகள் போன்ற காரணங்களால் உருவான பெருந்தெருக்களுக்கான அரசியல் தேவைகளுடன் ஒப்பிடும்போது, இலங்கையின் அரசியல் தேவைகள் குறைந்தளவினதாக இருந்தாலும் ஆரம்ப கட்டத்தில் பிரித்தானிய ஆதிபத்தியத்தை ஏற்படுத்தியது முதலே பெருந்தெருக்களை அமைப்பதில் ஆட்சியாளரின் கவனம் சென்றதைக் காண முடிகிறது. ஆனால், அரசியல்
பிரவாதம் - ஜூலை 2005 127

Page 67
நோக்கத்தைவிட பொருளாதார காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பெருந்தோட்ட பயிர்ச்செய்கைக்காக பெருந்தெருக்கள், புகையிரத பாதைகள் அமைப்பதிலும் அவற்றை அதிகரிப்பதிலும் பிரித்தானிய நிர்வாகம் படிப்படியாக ஈடுபட்ட விதத்தை இந்நூல் சிறப்பாக விளக்குகிறது. ஏனைய பிரித்தானிய குடியேற்றங்கள் தொடர்பாக பார்க்கும்போதும் இது பொதுவான அனுபவமாக ஆசிரியரால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த பொருளாதார காரணிகளுடன் இணைந்த மற்றுமொரு தேவை என்னவெனில், சுதேச மக்களின் நலன், அவர்களின் பொருளாதார நடவடிக்கைகள் என்பவற்றுக்கு ஏற்ற சூழலையும் உருவாக்குவதாகும். இந்த விடயம் தொடர்பாக 1880களின் பிற்பட்ட காலத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வகையில் இலங்கையில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையுடன் தொடர்புடைய இத்திட்டம் பற்றிய தெளிவான வேறுபாட்டைக் காண முடிகிறது. S.
நூலின் ஆரம்ப அத்தியாயங்களில் பெருந்தெருக்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டாலும் அதில் அதிகமான பகுதி புகையிரத பாதையுடன் தொடர்புடைய நடவடிக்கை பற்றியே பேசப்படுகின்றது. கோப்பி, தேயிலை, இறப்பர் போன்ற உற்பத்திகளுக்கு அவசியமான போக்குவரத்து வசதிகள் தேவைப்பட்டபோது புகையிரதப் பாதைகளினால் சிறப்பான சேவை கிடைத்தமை இதற்குக் காரணமாகும். ஒரு புறத்தில் பெருந்தோட்டப் பயிர்செய்கையுடன் தொடர்புடைய நடவடிக்கையினால் ஏற்பட்ட வளர்ச்சியும், மறுபுறத்தில் பெருந்தெருக்கள், புகையிரதப் பாதைகளினால் ஏற்பட்ட வளர்ச்சியும் பரஸ்பரம் நன்மையைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.
நூலின் அத்தியாயங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன. முதலாவது அத்தியாயம் அறிமுகமாகும். ஏனைய அத்தியாயங்கள் பெருந்தெருக்கள் அமைத்தலும் குடியேற்ற பொருளாதாரமும் 1800-1867, உழைப்பு, பெருந்தெருக்கள் அமைப்பு, கொழும்பு முதல் கண்டி வரையிலான வரலாற்று முக்கியத்துவமிக்க புகையிரதப் பாதை, புகையிரதப் பாதைகள் விஸ்தரிக்கப்பட்டமை, புகையிரதப் பாதைகளும் வளங்களும் பயன்படுத்தப்பட்டமையும் வருமானமும், புகையிரத சேவை நிர்வாகத்தின் வருமானமும் செலவும், போக்குவரத்து வளர்ச்சியின் சமூக, பொருளாதார துறைகள் என்பனவாகும்.
“பெருந்தெருக்கள் அமைத்தலும் குடியேற்ற பொருளாதாரமும் 1800
1867” என்ற நூலின் இரண்டாவது அத்தியாயத்தில் அக் காலப்பகுதியுடன் தொடர்புடைய விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து கண்டி
128 பிரவாதம் - ஜூலை 2005

வரையிலான முதலாவது புகையிரத பாதையை அமைக்கும் கட்டம் வரையிலான காலப்பகுதி இங்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளதுடன் ஆரம்ப கட்டத்தில் அதாவது, 1800ம் ஆண்டு காலப்பகுதியில் போர், பாதுகாப்புக் காரணங்கள் பிரதான இடம் வகித்தமையும், 1815இன் பின்னர் மலையகப் பிரதேசங்கள் உட்பட பிரித்தானிய ஆதிபத்தியத்தை உறுதிப்படுத்தும் தேவை முக்கியத்துவம் பெற்றமையும், இதனால் ஆளுனர் எட்வர்ட் பாண்ஸ்சின் பங்களிப்புடன் 1820களில் பெருந்தெருக்களின் வளர்ச்சி ஏற்பட்டமையும் ஆராயப்பட்டுள்ளது. இராணுவத்தை பரிபாலித்தல், அதற்கான செலவைக் குறைத்தல், உள்நாட்டு வியாபார நடவடிக்கைகளின் வளர்ச்சி என்பன பாதைகள் அமைப்பதற்கான நோக்காகக் கொள்ளப்பட்டன. அத்துடன் கோப்பி பயிர்ச்செய்கையும் அறுவடை செய்யப்பட்ட கோப்பியை கூலியாட்களின் தலைகளில் வைத்து கொண்டு செல்லல் போன்ற ஆரம்பத்தில் இருந்த நிலைமைகளை தவிர்ப்பதும் தெருப் போக்குவரத்தில் மாட்டுவண்டிகளை உபயோகிப்பதற்கு எண்ணியதற்கான காரணங்களாகக் குறிப்பிட்டுள்ளன. 1857க்குப் பிற்பட்ட காலத்தில் கூட நாட்டில் பல பிரதேசங்களில் இவ்வாறு கூலித் தொழிலாளர்களை பயன்படுத்தி கோப்பி கொண்டு சென்றமையைக் குறிப்பிடும் ஆய்வாளர் ஆரம்பகாலத்தில் பெருந்தெருக்களின் அதிகரிப்புக்கும் பெருந்தோட்டப் பயிர்செய்கையுடன் இணைந்த தேவைகளுக்கும் இருந்த நெருங்கிய தொடர்பை நன்றாக எடுத்துக் காட்டியுள்ளார். இந்திய தொழிலாளர்கள் பெருந்தோட்டப் பிரதேசங்களுக்கு செல்வதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் இங்கு முக்கிய நோக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பெருந்தெருக்கள், புகையிரதப் பாதைகளின் பரவல் தொடர்பான முடிவுகளுக்கு வரும் போது பொருளாதாரக் காரணிகளின் முக்கியத்துவம் நன்றாகப் புலப்படுகிறது.
மூன்றாவது அத்தியாயத்தில் பெருந்தெருக்கள் அமைத்தலுடன் அது தொடர்பான உழைப்புச் சேவைகள் (labour Service) தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.இங்கு ஆரம்பத்தில் இராஜகாரிய சேவையை அதற்காக பயன்படுத்திக்கொண்ட விதமும் அது தவிர ஏனைய உழைப்புச் சேவைகளிலிருந்து பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது Pioneer Corps, சம்பளத்துக்கு சேவையைப் பெற்றுக் கொண்டமை, சிறைக் கைதிகளின் உழைப்பு போன்ற பிரிவுகள் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 1833ல் இராஜகாரிய முறை நீக்கப்பட்டதன் பின்னர் 1834-1848 வரையிலான காலகட்டத்தில் பயனியர் வீரர்கள் (Pioneer Corps) பாதைகள் அமைத்தலுக்காக பயன்படுத்தப்பட்டனர். 1830-1840 வரையிலான காலப்பகுதியில் சம்பளம் கொடுக்கப்பட்ட முறையை ஆய்வு செய்து, சம்பள
பிரவாதம் - ஜூலை 2005 129

Page 68
அளவு உயர்வடைந்தமை குறிப்பிடப்பட்டுள்ளது. 1848ல் தெருக்கள் கட்டளைச் சட்டம் பற்றி ஆராய்கையில், கோப்பி பயிர்செய்கைக்கும் தெருக்கள் அமைக்கவும் அதிகளவிலான உழைப்பாளர்களின் தேவை ஏற்பட்டதால், செலவைக் குறைப்பதற்காக இந்த சட்டத்தைக் கொண்டு வருவதற்கு குடியேற்ற நாட்டு ஆட்சியாளர்கள் முனைந்தமை அச்சட்டத்தை கொண்டுவரக் காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. தெருக்கள் அமைத்தல், அவற்றை பராமரித்தல் என்பவற்றுக்கான வெற்றிகரமான செயற்திட்டமாக ஆளுனர் டொரிங்டன் அவர்களினால் 1848, 8ம் இலக்க பெருந்தெருக்கள் கட்டளைச் சட்டம் கொண்டுவரப்பட்டமையுடன் இணைந்த செயற்பாடுகளும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பிறப்பிக்கப்பட்ட கட்டளைக்கு ஏற்ப 1840 ஜனவரி மாதம் 01ஆம் திகதிமுதல் வயது வந்த எல்லா ஆண்களும் வருடத்துக்கு 06 நாட்கள் பாதை அமைத்தல் தொடர்பான சேவையில் ஈடுபடுவதற்காக அரசினால் அழைக்கப்படும்போது சேவை செய்ய வேண்டும் அல்லது வருடமொன்றுக்கு 3 சிலின் வீதம் வரி செலுத்தி அதிலிருந்து விடுதலை பெற உரிமையுண்டு. இச் சேவையை செய்யும்போது குடும்பத்தலைவருக்கு இது தொடர்பான விசேட பொறுப்பு வழங்கப்பட்டதுடன், சேவைக் கொடுப்பனவில் ஒரு பகுதி கட்டாயமாக சிறிய பாதைகளைப் புதுப்பிக்கவும் அவற்றைப் பராமரிக்கவும் பயன்படுத்தப்பட வேண்டும் என விதிக்கப்பட்டது. இந்த கட்டளைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்க செயலாளரின் தலைமையில் பிரதான G5(558, Git (5(g (p60p60u (Road Committee System) 9CpGot 556), பொதுமக்களில் சிலரை இந்த செயற்திட்டத்தின் நிர்வாகத்திற்கு இணைத்துக்கொள்ளும் முறையொன்றை பயன்படுத்துதல், இது தவிர பிரதேசக் குழுத் திட்டமொன்றை முன்வைத்தல் போன்ற விளக்கமான செயற்திட்டமொன்று பற்றிய விடயங்கள் கூறப்பட்டுள்ளன. இதன்படி இந்தப் பணியில் அரசுக்கு ஆதரவளிப்பதிலிருந்து தவிர்த்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. 1848 ஏப்பிரல் 15ம் திகதி சட்டநிரூபண சபையினால் இதற்கான கட்டளைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
உழைப்பைப் பெற்றுக்கொள்வதற்குரிய அதிக செலவை குறைப்பதைத் தவிர இத்திட்டத்தில் அரசுக்கு மேலதிகமான ஒரு நோக்கமும் இருந்தது. மாகாண நிர்வாக நடவடிக்கைகளில் மக்களைப் பங்குபற்றச் செய்வதால் அவர்களுக்கு சுயநிர்வாக நடவடிககைகளில் பங்குபற்றும் பயிற்சியைப் பெற்றுக் கொடுப்பதே அது. எவ்வாறாயினும் இந்த விடயங்கள் பற்றி அரசு காட்டிய அக்கறை அவ்வளவு ஆழமாக கவனிக்கப்பட்டதாகக் கூறப்படவில்லை. இக்கட்டளைச் சட்டத்தை அமுலாக்கியமை, அது
30 பிரவாதம் - ஜூலை 2005

தொடர்பான நடவடிக்கை என்பன பற்றியும் விசேட அவதானம் செலுத்தியுள்ள ஆசிரியர், பெருந்தெருக்கள், பாலம், கால்வாய் அமைத்தல் போன்ற நடவடிக்கைகள், வருமானம், உழைப்பு என்பவற்றை பெற்றுக் கொண்ட பிரதான வழிகள் என்ற வகையில் அவை பற்றியும் கவனத்தில் கொண்டுள்ளார். 1833ஆம் ஆண்டு நீக்கப்பட்ட இராஜகாரிய முறைபோல் இதுவும் கட்டாயமானதாக இருந்ததுடன், அதைச் செய்யாது தவிர்த்துக் கொள்பவர்களுக்கு தண்டனையாக கசையடி வழங்கப்படும் என்ற விதி இருந்ததால் இது இராஜகாரிய முறையுடன் கொண்டிருந்த நெருக்கமான ஒற்றுமை மிகவும் தெளிவாகின்றது. எனினும், இராஜகாரிய முறைக்கும் இந்த முறைக்கு இடையே உள்ள சில வேறுபாடுகளும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. சாதிமுறை பயன்படுத்திக் கொள்ளப்பட்டமை இதில் பிரதான அமிசமாகும். அத்துடன் புதியமுறை முக்கியமாக பெருந்தோட்டப் பயிர்செய்கை போன்ற விசேட துறைகளின் பயனை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் கிராம மக்களுக்கு சிலவேளை நன்மையானதாக அமைந்து சமூகத்தின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்வதில் உதவிசெய்த இராஜகாரிய முறையை விட புதிய முறையினால் மக்களுக்குத் தீமையேற்படுவதற்கு இடமிருந்தது. இதன் பின்னர் தெருக்களை பராமரிக்கும் பிரிவையும் உட்படுத்தி தெருக்கட்டளைச் சட்டத்துக்கு உட்படத் துறையை விஸ்தரிப்பதற்கு எடுத்த முயற்சிக்கு சட்டநிரூபணசபையின் அனுமதி கிடைக்காததால் சட்டத்தை சீர்திருத்த முடியவில்லை.
1848ஆம் ஆண்டு ஏற்பட்ட கிளர்ச்சிக்குப் பெருந்தெருக்கள் கட்டளைச் சட்டம் மூலம் தோன்றிய எதிர்ப்பும் ஒரு காரணமானதா என்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது பற்றி ஆராய்ந்தபின் பெருந்தெருக்கள் கட்டளைச் சட்டத்தினால் ஏற்பட்ட எதிர்ப்பே கிளர்ச்சிக்கான முக்கிய காரணம் என ஆசிரியர் கருதுகிறார். தெருக்கள் கட்டளைச் சட்டத்தின் கட்டளைகளைக் கிராமிய மக்கள் பாரமாக கருதியதாகத் தெரிகிறது. இந்த அத்தியாயத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் பாதைகள், பாலங்களுக்காக 1855-67 வரை அரசாங்கத்திற்கு ஏற்பட்ட செலவு விபரம் தரப்பட்டுள்ளது. அதில் தெருக்கள் கட்டளைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட சேவைகளுக்கான நிதியம் சதவீதத்தினால் காட்டப்பட்டுள்ளமையினால் இது தெளிவாகின்றது. மக்களிடையே எதிர்ப்பு இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவது அநேகமாக வெற்றியளித்ததாக அரசு ஏற்றுக்கொண்டது. அது உழைப்பையும், சேமிப்பையும் வழங்கியதால் அரசுக்கு அதிக நன்மை கிடைத்தது. ஆயினும், ஆசிரியர் குறிப்பிட்டுக் காட்டுவது போல் இதனால் பாதிக்கப்பட்டவர்களும் இல்லாமலில்லை.
பிரவாதம் - ஜூலை 2005 13

Page 69
“பெருந்தெருக்கள் வலையமைப்பு’ என்ற நான்காவது அத்தியாயத்தில் பாதைகள் அமைக்கப்பட்டதன் நோக்கங்கள், அதன் வரலாறு, அதற்காக நிதியைப் பெற்றுக் கொண்ட விதம் என்பன கலந்துரையாடப்பட்டுள்ளன. மற்ற அத்தியாயங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்த அத்தியாயத்தில் அதிக புள்ளிவிபரங்களைப் பயன்படுத்தியுள்ளார். அவற்றைத் தரவு அட்டவணைகளாக முன்வைப்பதன் மூலம் மிகச் சிறந்த பகுப்பாய்வு முறையை ஆசிரியர் தனது ஆதாரமாக உபயோகித்துள்ளார். பாதைகள் அமைக்கும் அளவை மாகாண ரீதியில் வகுத்தல், பாதைவகைப்படுத்தல்கள், 1865-1905 இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட செலவு (பரிபாலித்தல், சம்பளம் தொடர்பான விபரம் பற்றிய விளக்கம்) போன்ற பல தலைப்புகளில் விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. இவ்வாறான விளக்கங்களுடனான பகுப்பாய்வு முறையொன்றின் மூலம் அரசின் கொள்கை ரீதியான தீர்வுகள் தொடர்பாக பங்களிப்பு செலுத்திய பலவகையான காரணிகள், அவற்றின் ஒழுங்குமுறை என்பவற்றைத் தெளிவாக அறிந்துகொள்வதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வுகளின் வெற்றிக்காக புள்ளிவிபரங்களைப் பயன்படுத்துவதால் பெறக்கூடிய பாரிய பயனைக் காட்டுவதற்கு இவ்வாக்கியத்தை மிகச் சிறந்த உதாரணமாகக் குறிப்பிடலாம்.
ஐந்தாம் அத்தியாயத்தில் இலங்கையின் முதலாவது புகையிரதப் பாதையும், மிகவும் முக்கியமான புகையிரதப் பாதையுமான கொழும்பு-கண்டி புகையிரதப் பாதை தொடர்பான பரிசீலனை அடங்குகிறது. பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்கும் புகையிரத பாதைகளின் அகற்சிக்கும் (expansion) இடையிலுள்ள நெருங்கிய தொடர்பு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காக மிக அதிகமான நிலம் கொள்வனவு செய்யப்பட்டதுடன், அந்த நடவடிக்கையை இலகுபடுத்துவதற்காக புகையிரதப்பாதைகள் அமைக்கப்பட்டமை கலந்துரையாடலுக்கு உட்பட்டுள்ளது. பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட பிரதேசங்களில் உற்பத்தி நடவடிக்கைகள், தேவையான உணவுப் பொருட்கள், அரிசி உட்பட ஏனைய உணவுப்பொருட்களான உப்பு, கருவாடு, மரக்கறி, தேங்காய் என்பவற்றை விநியோகிக்கவும், தளபாடங்கள், பசளை வகைகள் போன்றவற்றை இடமாற்றம் செய்யவும் புகையிரத சேவையை மக்கள் முக்கியமானதாகக் கருதினர். மலையக பிரதேசங்களில் நிலத்தின் அமைப்பு காரணமாக மாட்டுவண்டிகளைவிட புகையிரதத்தினால் கஷ்டபிரதே சங்களுக்கு செல்வது இலகுவாக இருந்தமை விசேடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாட்டு வண்டிகளால் கோப்பியைக் கொண்டு செல்வதற்கு அதிக காலம் செலவிட வேண்டி இருந்தது. காலநிலை பொருத்தமற்றதாகும். கோப்பியின் தரம் குறைவடைந்ததுடன், லண்டன்
132 பிரவாதம் - ஜூலை 2005

வர்த்தக சந்தையில் விலைகள் தீர்மானிக்கப்படும் போது இக்காரணிகள் முக்கிய தாக்கத்தையும் ஏற்படுத்தின. காலநிலை மாற்றங்களால் சில சந்தர்ப்பங்களில் கண்டி நகரில் களஞ்சிய வசதிகள் உருவாக்கப்பட வேண்டியிருந்தது. இதனால், அதிக செலவை ஏற்க வேண்டி ஏற்பட்டது. இவ்வாறு பார்க்கும் போது, உற்பத்திச் செலவைக் குறைத்தல், விரைவுபடுத்தல் என்றவகையில் புகையிரத சேவையின் பெறுமதி நன்றாக உணரப்பட்டுள்ளது.
இலங்கையில் பெருந்தெருக்கள், புகையிரத சேவையின் வளர்ச்சி, இந்நாட்டின் பொருளாதார வரலாற்றில் அவை பெறும் இடம் என்பன பற்றிய மிக முக்கிய தகவல்களை இந்நூல் தருகின்றது. பிரதானமாக நூலின் இறுதி அத்தியாயங்கள் இவ்வகையில் முக்கியமானவை. தனக்குக் கிடைத்த மூலாதாரங்களை மிகச் சிறப்பாக ஆய்வுக்கு உட்படுத்தி, அந்தத் தரவுகளினூடாக பொருளாதாரப் பகுப்பாய்வில் ஈடுபடவும் அதனூடாக தெளிவான தீர்வுகளை மேற்கொள்ளவும் ஆசிரியருக்கு முடியுமாக இருந்துள்ளது.
முக்கியமான அத்தியாயங்கள் என்று பார்க்கும் போது 4, 8, 9 ஆகிய அத்தியாயங்களை புள்ளிவிபரங்களை பயன்படுத்தியதன் மூலம் விடயங்களை பகுப்பாய்வு செய்வதில் வெற்றி பெற்றுள்ளமைக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
மிகவும் சிறந்த நூற்பட்டியலைப் பார்க்கும் போது மூலாதாரங்களாக பயன்படுத்தியுள்ளவை பற்றி திருப்தியடையலாம். பெரிய பிரித்தானியாவில் லண்டன் அரச செயலகத்தில் இருந்து பெற்றுக் கொண்ட C.0.54, C.0.56 என்ற குடியேற்ற காரியாலயத்தினதும் இலங்கை அரசினதும் அறிக்கைகள், சம்பந்தப்பட்ட காலத்துடன் தொடர்புடைய பல்வேறு அரச, அரச சார்பற்ற அறிக்கைகள், கையேடுகள், ஏனைய அறிக்கைகள், பத்திரிகைகள் என்பன அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. புகையிரதத் திணைக்களத்தின் வளர்ச்சி தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள், வேறு குழுக்களின் அறிக்கைகளும் அதிளவில் பயன்படுத்தப்பட்டிருப்பது சிறப்பானதாகும். இந்த அறிக்கைகளுக்கிடையே 1864, 1866, 1870, 1871, 1874 ஆகிய காலகட்டங்கள் பற்றி வெளியிடப்பட்ட கருத்தரங்கு அறிக்கைகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றுடன் அடிக்கடி வெளியிடப்பட்ட முன்னேற்ற அறிக்கைகளும், ஊவா, யாழ்ப்பாணம், மாத்தளை, குருணாகல், பண்டாரவெல போன்ற பல பிரதேசங்களுக்கு புகையிரத பாதைகளை விஸ்தரித்த போது ஏற்பட்ட விமர்சனங்களை உள்ளடக்கிய அறிக்கைகளும் முக்கியமானவையாகும்.
பிரவாதம் - ஜூலை 2005 , 133

Page 70
நூற்பட்டியலின் மற்றுமொரு முக்கிய அம்சம் சமகாலத்தில் வெளியிடப்பட்ட நூல்கள் பிற்கால நூல்கள் என இருவகைப்பட்டிருப்பதாகும். சமகால நூற்பட்டியல் பூரணத்துவம் பெற்ற ஒன்றாகும். பிரித்தானிய நிர்வாக அதிகாரிகள், உல்லாசப் பயணிகள் போன்றவர்களால் எழுதப்பட்ட இந்த நூல்களில் அக்காலப் பகுதியில் நிகழ்ந்த அரசியல், சமூகச் சூழல் என்பவை உட்பட அரசின் கொள்கைத் திட்டங்கள், தீர்வுகள் தொடர்பான தகவல்கள் அதிகமாக உள்ளன. முக்கியமான மூலாதார வகையாக இதைக் குறிப்பிடலாம்.
பிற்காலத்தில் வெளியிடப்பட்ட நூல்களுள் இந்தியாவிலும் ஏனைய பிரதேசங்களிலும் போக்குவரத்து வளர்ச்சி பற்றி எழுதப்பட்ட நூல்கள் விசேட இடம்பெறுகின்றன. கிடைத்த விபரங்களினூடாக ஒப்பிட்டு ரீதியான ஆய்வை மேற்கொண்டு விடயங்களை பகுப்பாய்வு செய்து தனது நூலை சிறப்பாக அமைத்துக் கொள்வதில் ஆசிரியர் வெற்றி பெற்றுள்ளார். இக்கால கட்டம் தொடர்பாக இலங்கை வரலாற்றில் பல்வேறு பிரிவுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதுமாணிப்பட்ட ஆய்வுகளைப் பயன்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடக்கூடிய மற்றுமொரு சிறப்பான அம்சமாகும். இந்நூலில் பாதைகளின் அபிவிருத்தியைக் காட்டும் பொருத்தமான பெறுமதி வாய்ந்த புகைப்படங்கள் சிலவும் உள்ளன. துணை நூல்களாக குறிப்பிடப்பட்டுள்ள அறிக்கைகள் நூலின் பெறுமதியை மேலும் உயர்த்தியுள்ளன. போக்குவரத்தினால் பெற்றுக் கொண்ட வருமானங்களை வகைப்படுத்திக் காட்டியுள்ள புகையிரத திணைக்களத்தின் வருமான அறிக்கை (1895-1905) உட்பட பல்வேறு அறிக்கைகளினால் பெறுமதியான பல தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு நோக்குகையில், பேராசிரியர் இந்திராணி முனசிங்கவுடைய இந்நூல் இலங்கை வரலாறை கற்போருக்கும், அதேபோல் சாதாரண வாசகருக்கும் நிச்சயமாக பயனுடைய ஆய்வு நூலாக விவாதமின்றி ஏற்றுக்கொள்ளலாம். அவரால் பயன்படுத்தப்பட்டுள்ள ஆய்வு முறைகள் ஏனைய ஆய்வாளர்களுக்கும் முன்மாதிரியாகும் என்பதை உறுதியாகக் 36-pa) TLD.
சிங்களத்திலிருந்து தமிழில்: எஸ். ஏ. சி. பெறோசியா
பேராசிரியர் திலகா மெத்தானந்த பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் பணிபுரிகிறார்.
134 பிரவாதம் - ஜூலை 2005

எதிர்காலம் ஒரு வெளி
பாப்லோ நெரூடா
எதிர்காலம் ஒரு வெளி
மண்ணிற வெளி
முகில் நிற வெளி நீரின் நிற, காற்றின் நிற வெளி அநேக கனவுகளுக்கு இடம்தரும் கறுப்புவெளி எல்லாப் பனிக்கட்டிகளுக்கும் எல்லா இசைகளுக்கும் இடந்தரும் ஒரு வெள்ளை வெளி
விரக்தியுற்ற காதல் பின்னால் கிடக்கிறது ஒரு முத்தத்துக்கும் இடமற்று. வனங்களில், தெருக்களில், வீடுகளில் ஒவ்வெருவருக்கும் இடமுண்டு ஒரு தலைமறைவு வெளி, ஒரு நீர்மூழ்கி வெளி உண்டு ஆனால் இறுதியில் எந்த மகிழ்ச்சியைக் காண எழுகிறது ஒரு வெற்றுக் கோளம். வோட்கா போன்று தெளிவான பெரு நட்சத்திரங்கள் மிகவும் மனத்தடைகள் அற்று, மிகவும் ஒளிவு மறைவற்று முதல் தொலைபேசியுடன் வந்துசேர்கின்றன பின்னர் அநேகர் தங்கள் பலவீனங்களையெல்லாம் பேசலாம்
முக்கியமான விசயம் தன்னைப் பற்றி அறியாதிருப்பது ஒரு மலைத்தொடரிலிருந்து ஓலமிடுவது பிறிதொரு மலை உச்சியில் புதிதாக வந்துசேர்ந்த ஒரு பெண்ணின் பாதங்களைக் காண்பது.
வா, காலைமுதல் இரவுவரை நாமும் பிற மீன்களுடன் நீந்துகின்ற மூச்சுத்திணறும் இந்த நதியைக் கடப்போம் இப்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த வெளியில் தூய தனிமையை நோக்கிப் பறப்போம்
தமிழில்: எம் ஏ. நுஃமான் (Alastair Reid QLong,Guuj55 QbebLr6úl67 ISLA NEGRA Qgrg5ülleólobg)
பிரவாதம் - ஜூலை 2005 135

Page 71

Igbirjiħ
சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் அரையாண்டுச் சஞ்சிகை
சந்தா விபரம்
தபால் செலவு உட்பட
1ஆண்டு 2 ஆண்டு
இலங்கை es. 200.00 400.00
இந்தியா இந் ரூ. 175.00 350.00
பிற நாடுகள் US $ 10.00 20.00
பெயர்
3 ஆண்டு
600.00
525.00
30.00
விலாசம்
Social Scientists' Association 12, Sulaiman Terrace, Colombo - 5. TP: 2501339 Fax : 2595563 E-mail : ssa Geureka.lk

Page 72


Page 73
ighiji
ஜூலை - 2005 தொகு
எம். ஏ. நுஃமான் எட்வர்ட் சயித் சில குறிப்புகள்
Gilsuit full பொதுவாழ்வில் எழுத்தாளர்களினதும் பங்கு
அதிகாரத்திடம் உண்மையைப் பேசுத
பலஸ்தீனப் பிரச்சினையும் அறிவுத்துை
சியாஉத்தீன்சர்தார்
எட்வர்ட் சயிதின் கீழ்த்திசைவாதம்
சேபணதேவி இராஜேந்திரன் மலையகக் குடும்பத் திட்டமிடல்: ஒரு
SubLIGADGITEUR GIFTET தேசத்தையும் அரசையும் கட்டியெழுப்பு
Gaů. Gl. JTegeDy
பாப்லோ நெருடாவின் கவிதைக் கோட்
Eugesu 2 urkisleñFEL சோமதேரர்; அவரது வாழ்வும் மரணமு
gs). blæðun
அரை நூற்றாண்டு காலத்தில் முஸ்லிம்
திலகா மெத்தானந்த
நூல் மதிப்புரை (The Colonial Economy on Track: Roads and Railways in Sri Lanka 18
ISBN- 139
PRINTED BY UNIE ARTS (F
 

தி 4
ஆய்வறிவாளர்களினதும்
றப் புரட்டல்களும்
மதிப்பீடு
புதல்
LIT(6
பெண் கல்வி
:00- 1905)
1 - 7269
VT) LTD. COLOMBO-13
1墨
29
48
器皇
67
77
87
93
127
MAKEEN OOOO (""۔ اسےسنتا