கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் செய்தி மடல் 2010.09

Page 1
சங்க உறுப்பினர்களுக்கு மட்டும்
ஜி. :ெ - サ端。 ଓରtଅj=!
வெளியீடு : 011 மாதம் : பு
கொழும்புத் தமிழ்ச் சங்க இணையத்தளத்த "செய்தி மடல்’ என்பதன் பிரசுர வடிவம் இ இணையத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள். 360600Tugsgb6|Tib:WWW.colombotamilsangam.com தொலைபேசி இல . 2363759 தொலைநகல். 2361381
/வாசிப் பதன் மூ பூரண மனிதை
'ஒரு நூல் நிலையத்தின் கதவு திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலையின் கத |தாழிடப்படுகிறது"
விவேகானந்தர்
-- 6.புத்தக சமர்த்தா
 
 
 
 
 
 
 
 
 

irá5 UDL6ü
ரட்டாதி ஆண்டு : 2010
ல் "எம்மைப் பற்றி” என்னும் பகுதியிலுள்ள }ம்மடலாகும். மேலும் விபரங்களுக்கு எமது
fairgo.giggi); tamilsangamcolombo(a)yahoo.com
info(a)colombotamilsangam.com
லம் ஒருவனி எாகின்றான்
பிடாதீர்கள்" ஞர் அப்துர் ரகுமான்

Page 2
புரட்டாதி மாதம் தமிழ்ச் சங்கத்தில்
இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றிய
forumriginal
அறிவோர் ஒன்றுகூடல் 01.09.2010 நிகழ்வுக்கு துணைத்தலைவர் திரு.ச.இலகுப்பிள்ளை அவர்கள் தலைமை தாங்கினார். முன்னாள் பாராளுமன்ற இணைவேக உரை பெயர்ப்பாளர் திரு.செ.குமாரசாமி அவர்கள் “2வது உலக மகாயுத்தம்” என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
“1விதி உலக மகாயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஜெர்மனி ஐரோப்பாவின் பெரும் பகுதியைக் கைப்பற்றியதோடு இங்கிலாந்தை யும் யுத்தத்துக்குள் இழுத்துக்கொண்டது. 1939ம் வருடம் செப்ரம்பர் மாதம் 1ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் 1945ம் வருடம் செப்ரம்பர் மாதம் 2ம் திகதி முடிவடைந்தது. ரஷ்யாவையும் வெற்றி கொள்ள நினைத்த ஹிட்லரின் எண்ணம் நிறைவேறவில்லை. கடும்பனி காரணமாக ஹிட்லரது தொண்ணுறு ஆயிரம் (90,000) படை வீரரும் சரணடைந்தனர் என உரையை ஆரம்பித்தார்.
ஹிட்லரின் கொடுர ஆட்சிக்கு எதிராக உதவுவதாக வின்சன்ட் சர்ச்சில் அறிவித்தார். இங்கிலாந்தும் ஹிட்லரால் சுற்றிவளைக் கப்பட்ட போது அங்குள்ள பலர் கனடாவுக்குச் சென்று குடியேறினர். அமெரிக்காவும் போரில் இழுக்கப்பட்டது. இங்கிலாந்துப் படைவீரர் பிரான்சுக்கு உதவினர். ஹிட்லரின் படைகள் பின்வாங்கின. பாரிஸ் நகரிலிருந்து பின் வாங்கினாலும் அந்நகரம் எரிய வேண்டும் என்று ஹிட்லர் கூறினான். தளபதி எரியூட்டத் தயங்கினான். “s Paris burning" 66ip sn'6)ft (35'LT6i.
யப்பான் போரில் தன்னையும் இணைத்துக் கொண்டு தென் கிழக்காசியா ஊடாக இலங்கையை நோக்கி முன்னேறியது. யப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. 80,000 பேர் கொல்லப்படனர். கதிர் வீச்சால் 70,000 பேர் இறந்தனர். 1945 செப்ரம்பர் 2ல் யப்பான் சரணடைந்தது. 6 கோடிக்கு மேற்பட்ட மக்களைக் காவுகொண்ட இதுபோன்ற யுத்தம் மீண்டும் வேண்டுமா? யுத்தத்தின் கொடுரத்தைத் தணிக்க 1945 அக்டோபர் 18ல் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது. அடுத்து வரும் தலைமுறையை யுத்தத்திலிருந்து காப்பற்ற வேண்டும் என்ற பெருநோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் யுத்தமில்லாத உலகை எமக்குக் காட்டுமா?’ என்ற ஏக்கத்தோடு தனது உரையை நிறைவு செய்தார்.
%. ஒவ்வொரு உயாந்த புத்தகமும் ஒரு செயல், ஒவ்வொரு உயர்ந்த செயலும் ஒரு புத்தகம்.
~ மாட்டின் லூதர் ~
 
 
 
 
 

இலக்கியக்களம்
O3.09.2010 “கனவு மெய்ப்பட வேண்டும்” என்னும் தலைப்பில் திருமதி
நாகராணி சீதரன் உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு இலக்கியக் குழுச் செயலாளர் எஸ்.எழில்வேந்தன் தலைமை தாங்கினார். உரைஞர் பற்றிய நல்ல அறிமுகம் ஒன்றைக் கூறி தலைவர் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.
உரைஞர் தனது உரையில் கனவு மெய்ப்படுமா இல்லையா
என்பதை அவையோருக்கே விட்டு விடுகிறேன் என்று கூறினார். பாரதியாரின் கனவு மெய்ப்பட்டது. பல கவிஞர்களின் கனவுகள் மெய்ப்பட்டன. ஈழத்துக் கவிஞர்களின் கனவுகள் மெய்ப்படவில்லை. அது ஒரு துரதிஷ்டமே என்று பல செய்திகளைக் கூறி உரையை நிறைவு செய்தார்.
நூலகம் (சிறுவர் பகுதி)
04.09.2010 “கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில் திருமதி வயலற் சந்திரசேகரம் கலந்து கொண்டு சிறுவர்களுக் கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அறிவோர் ஒன்றுகூடல்
08.09.2010 நடைபெற்ற அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வில் திருமதி தயாநிதி அரசரெத்தினம் அவர்கள் “வள்ளுவத்தில் விஞ்சி நிற்பது உலகியலே” என்னும் பொருள் பற்றி உரையாற்றினார். நிகழ்வுக்கு தமிழ்ச் சங்க துணைத் தலைவர் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் தலைமை தாங்கினார்.
பேச்சாளர் உலகியல் பற்றிய கருத்துக்களை பல எடுத்துக்
காட்டுகளுடன் கூறினார். தலைவர் தனது நிறைவுரையில் எண் மப்புரட்சி அதாவது Digital தத்துவம் என்பது 01. பூச்சியத்தைக் கண்டு பிடித்தவர்கள் தமிழர் என்பர். 10 என்ற எண்ணிக்கையை திருவள்ளுவர் அறிமுகப்படுத்தினார். நாயன்மார் கூட இந்த 10 என்ற எண்ணிக்கையைக் கொண்டு பதிகங்களைப் பாடியுள்ளனர். திருவள்ளுவரது உலகியல் கருத்து எவ்வாறு ஆழ வேரூன்றி யிருந்தது என்பதை அறிய முடிகின்றது. அவரது பதின்மக்கணக்கு தொடர்ந்து உலகியலை நோக்கிச் செல்கின்றது எனவும் கூறினார்.

Page 3
இலக்கியக்களம்
10.09.2010
நிகழ்வில் “தமிழில் பிழையின்றி எழுதுதல்” என்னும் பொருள் பற்றி பன்மொழிப் புலவர் த.கனகரத்தினம் அவர்கள் உரையாற்றினார். துணைத் தலைவர் செல்வி சற்சொரூபவதி நாதன் அவர்கள் தலைமை தாங்கினார்.
பன்மொழிப் புலவர் உரையாற்றும் பொழுது தமிழ் கற்கும் மாணவர்கள், மற்றும் கற்றவர்கள் கூட தமிழில் எழுதும் பொழுது பல பிழைகளை விடுகிறார்கள்.
இவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பது பற்றி “செந்தமிழ் வளம்பெற” என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் அதனைப் படித்து தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம். சில பிழைகளை பலகையில் எழுதிக் காட்டி விளக்கினார். இரண்டு சொற்கள் புணரும் போது ஏற்படும் பிழைகள் அதிகம் என்றார். உதாரணமாக தமிழ் சங்கம் என்பது தவறு. தமிழ்ச் சங்கம் என்று எழுதப்பட வேண்டும் என்று கூறி மேலும் பல தகவல்களோடு உரையை நிறைவு செய்தார்.
நூலகம் (சிறுவர் பகுதி)
.09.2010
*" கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில்
திருமதி மனோரா ஐயாத்துரை கலந்து கொண்டு சிறுவர் களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அறிவோர் ஒன்றுகூடல்
15.09.2010
அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வில் “என் இசையும் என் கதையும்" என்னும் பொருள்பற்றி நித்தி கனகரத்தினம் அவர்கள் உரை யாற்றினார். தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
பேச்சாளர் தனது உரையில் “நான் இரசாயனம் கற்பிக்க விரும்பி னேன். 1955ல் எனது 10வது வயதில் இராகத்துடன் தேவாரம் பாடினேன். எனது ஆசிரியர்கள் இசைத்துறையில் என்னை ஊக்கு வித்தனர். பெற்றோர் இதை விரும்பவில்லை. கொழும்பு அக்குவனர்ஸ் கல்லூரியில் படிக்கும்போது ஆங்கிலப் பாடல்களைப் பாடினேன். கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரம் பயின்ற போது “சின்னமாமியே” என்ற பாடலைப் பாடினேன் என்றார்.
தொடர்ந்து ‘கள்ளுக்கடைப் பக்கம் போகாதே’ என்ற பாடலை எழுதிப் பாடினேன். யாழ்.மாநகர சபை பெளர்ணமி கலை விழாவில் பாடினேன். 1968ம் ஆண்டு தினகரன் 10வது ஆண்டு விழாவில் பாடினேன். சின்னமாமி புகழ் நித்தி, பெளர்ணமி நித்தி, தினகரன் புகழ் நித்தி எனப் பெயர் மாறியது.
கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, N.S.கிருஷ்ணன், கல்லடி வேலுப்பிள்ளை ஆகியோரது பாடல்கள் என்னைக் கவர்ந்தன. இந்தியா சென்று வந்த போது பல பாடல்களைப் பாடினேன். தற் போது அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறேன்.
 

யுத்தத்தின் கொடுமையால் சீரழிந்துள்ள மானிப்பாய் ஆஸ்பத்திரியைப் புனரமைப்பதைப் பிரதான நோக்கமாகக் கொண்டே தற்போது வந்துள்ளேன்” எனக் கூறி தனது பிரசித்தி பெற்ற “சின்னமாமி” பாடலுடன் உரையை நிறைவு செய்தார்.
இலக்கியக்களம் 17.09.200 நடைபெற்ற நிகழ்வில் "பசில் காரியப்பர் நினைவுகளும்
கவிதைகளும்” என்னும் தலைப்பில் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்வுக்கு வைத்தியக் கலாநிதி தி.ஞானசேகரன் அவர்கள் தலைமை தாங்கினார்.
தலைவர் உரையாற்றும் போது பசில் காரியப்பர் என்றவுடன் அழகான “ஒரு சோடிக் கண்கள்” என்ற பாடல் தான் நினைவுக்கு வரும். பசில் அவர்களுக்கு பாவலர் என்னும் பட்டம் புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களால் வழங்கப்பட்டது. அவரைப் பற்றி நன்கு தெரிந்தவர் பேச்சாளர் சிஹாப்தீன் எனக் கூறி அவரை உரையாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
பேச்சாளர் உரையாற்றும்போது ‘நான் ஒரு சிறந்த பேச்சாளன் அல்ல. ஓர் அறிவப்பாளன் மட்டுமே. அவரது கவிதை நூலைப் படித்தது அவருடன் பழகிய நினைவுகளைக் கொண்டு எனக்குத் தெரிந்தவற்றைக் கூறுகிறேன்” என்றார். யாத்ரா என்னும் கவிதை நூலை பதிப்பித்து வருகிறேன். பசில் காரியப்பரது “தங்கம்மா" கவிதை பல பரிசுகளையும் பெற்றுள்ளது. அது ஒரு காவியம் போலிருந்தது.
இக்கவிதை தினகரன் பத்திரிகைக்கு அனுப்பப்பட்டும் பிரசுரிக் கப்படவில்லை. பின்னர் அது அகில இலங்கை ரீதியில் பரிசு பெற்றது. புத்தாயிரம் ஆண்டு 2000த்தில் யாத்ரா இதழை வெளியிட்டேன். அதில் பசில் காரியப்பர் அவர்களின் செவ்வியை வெளியிட்டதில் மகிழ்ச்சியடைகிறேன்.
போராடும் குணமுள்ளவராக, ஏழைகளுக்கு உதவுபவராகக் காணப்பட்டார். பட்டங்களை விரும்பவில்லை. 1978ல் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தால் தங்கப் பதக்கம் அணிவித்து கெளரவிக்கப்பட்டார்.
தங்கம்மா’, நீள் கவிதையை இலங்கை அரசாங்கம் தமிழ்ப் பாடத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டது.
2002ம் ஆண்டு அகில இலங்கை இஸ்லாமிய இலக்கிய விழாவுக்கு திரு.பசில காரியப்பர் தலைமை தாங்கி சிறப்பாக நடாத்தி வைத்தார். அதுதான் அவரைச் சந்தித்த இறுதிச் சம்பவம்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
நூலகம் (சிறுவர் பகுதி)
18.09.2010 “கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில் திருமதி வயலற் சந்திரசேகரம் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.

Page 4
தமிழ்ச் சங்கத் தலைவர் வாழ்த்துகிறார்!
எமது சங்கத்தினரால் அன்றாடம் ஆற்றப்படும் பணிகளையும், நிகழ்ச்சிகளையும் குறிப்பாக அறிவோர் ஒன்றுகூடல், இலக்கியக்களம், அற்றைத் திங்கள், சிறுவர்களுக்கான கதை சொல்லுதல், வாக்கேயக்காரர் வரிசையில் போன்றவற்றையும் துல்லியமாகத் தொகுத்து *" செய்திமடல்’ மூலம் மாதாந்தம் வழங்கி வருகின்றோம். செய்திமடல் மாதந்தோறும் சங்கச் செய்திகளோடு நல்ல சிந்தனைகளையும் தாங்கி புது மெருகுடன் வெளிவருவது கண்டு களிப்படைகின்றேன் “செய்திமடல்' மேலும் சிறப்புப்பெற எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மு.கதிர்காமநாதன் தலைவர்
தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர் வாழ்த்துகிறார்!
'அறிவோர் ஒன்றுகூட லாக்கித் தந்திடும் பிறிதோர் சங்கம் எங்கணும் இல்லை *இலக்கியக் களம் இவற்றுட னுள்ளம் துலக்கிடும் தூய நற்பணிகளும் பெரிதே'
சிறுசிறு கதைகள் கேட்டிடச் சிறார்கள் குறுகுறு நடந்து சிறுகை கொட்டுவர்; “அற்றைத்திங்கள் அற்புத நிகழ்வெனினும் மற்றைய நிகழ்வுகள் மறந்திடற் கெளிதோ!
அத்தனை செய்தியும் அழகுறத் தொகுத்து புத்தக வடிவில் பொலிவுடன் தந்திடச் *செய்திமட லொன்று திங்கள் தோறும் பெய்து நிற்கும் பெற்றியும் வாழ்கவே!
ஆ.இரகுபதி பாலழறீதரன்
பொதுச் செயலாளர்
 
 
 

தமிழ்ச் சங்க நிதிச் செயலாளரின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
சங்கத்தால் நடாத்தப்படும் நிகழ்ச்சிகள் தொகுக்கப்பட்டு செய்தி மடல்’ என்னும் பிரசுர மாக வெளிவருவது வரவேற்கத் தக்கது. இப்பணி மென்மேலும் சிறப்புற எனது வாழ்த்துக்களைத தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
திரு.செ.திருச்செல்வனர் நிதிச் செயலாளர்
நூலகத்துக்கு ஒரு தொகை நூல் அன்பளிப்பு
சங்க வளர்ச்சியிலும் நூலக வளர்ச்சியிலும் அதிக அக்கறை கொண்ட வள்ளல் க.மு.தர்மராஜா அவர்கள் சட்டத் துறை மானவர் களுக்குப் பயன்தரக்கூடிய நூல்கள் சிலவற்றை தலைவர் திரு. மு. கதிர்காமநாதன், நிதிச் செயலாளர் திரு.செ.திருச் செல் வன், i:قيقيوني * துணைத p. 60) 6.6list Er CAx 'ss Av. பேராசிரியர் சபா ஜெயராசா, துனைச் செயலாளர் " தரிரு . ஆழி வாப் பிள்  ைள கந்தசாமி மற்றும் தமிழ்ச் यF Ibá म5 உறுப்பினர் தரிரு . சோ , தேவ ரா சா ஆகியோர் முன்னிலையில் நூலகரிடம் கையாளித்தார். அவருக்கு எமது நன்றிகள்.

Page 5
ஆட்சிக்குழு கூட்டம்
19.09.2010
மாதாந்த ஆட்சிக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
நூலகம் (சிறுவர் பகுதி)
25.09.2010
"கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில்
திருமதி சுமதி இரகுபதி பாலழரீதரன் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க சுவையான கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
ஆரோக்கிய வாழ்வுக்கான கலந்துரையாடல்
26.09.2010
அன்று இடம்பெற்ற “ORAL HEALTH - வாய் தொடர்பான ஆரோக்கியம்” என்னும் நிகழ்வுக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் தலைமையேற்றார். வழமைபோல வைத்திய கலாநிதிகள் ரி.ஆனந்தமூர்த்தி (பல்வைத்திய ஆலோசகர்), சி.அனுஷ்யந்தன், சி.எஸ்.நச்சினார்க்கினியன், வைத்தியகலாநிதி (திருமதி).எஸ்.இரகுபரன், வைத்தியகலாநிதி அகமது ஜின்னாஹம் ஷரிபுத்தீன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை உளநல ஆலோசகர் திரு.கா.வைத்தீஸ்வரன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
 

அறிவோர்ஒன்று கூடல்
29.09.2010
அன்று இடம்பெற்ற அறிவோர் ஒன்று கூடலில் பரதநாட்டிய நிகழ்வு இடம்பெற்றது.
செல்விகள் இந்திரா பிரியதர்சினி, சீவரத்தினம் சபரிபிரியதர்சினி, சீவரத்தினம் மயூரிகா அருள்வேல், கவிதா சக்திவேல் ஆகியோர் இணைந்து வழங்கிய “சண்முக அர்ப்பணம்” என்னும் இந் நிகழ்வுக்கு துணைத் தலைவர் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் ‘பரதமுனிவர்தான் பரதநாட்டியக் கலையை ஆரம்பித்து வைத்தார் என்பது தவறான கருத்து என்று கூறினார். இந்தியாவிலுள்ள நாட்டியங்களைத் தொகுத்ததுதான் அவரது பணியாகும்” என்றார்.
சமஸ்கிருதக் கலப்பால் தமிழில் ‘திருச்சதிர்’ என்பது நாட்டியம் என்று மாற்றப்பட்டது. இது வேத்தியல் பொதுவியல் என சிலப்பதி காரத்தில் பேசப்பட்டுள்ளது. “அடைவு என்ற சொல் 'அடவு' என்று மாற்றப்பட்டுள்ளது என்று கூறியதோடு சிறந்த அணிசெய் கலைஞர்கள் எம்நாட்டிலிருந்தும் இந்தியாவிலிருந்து அழைப்பது தவறானது என்றும் கூறினார்.
நாட்டிய நிகழ்வில் முதலில் புஷ்பாஞ்சலி இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் பாடலுக்கான நடனமும் சுவாமிநாதனே என்ற வர்ணமும், காவடிச்சிந்தும் கண்களுக்கு விருந்தளித்தன. நிறைவாக சோமசுந்தரபட்புலவரது பாடலுக்கான நடனமும் இடம்பெற்றது. மண்டபம் நிறைந்த அனைவரது கண்களையும் கருத்துக்களையும் கவர்ந்த நிகழ்வு
W * * எனது தோட்டத்தில் நாண் என்னுடைய பகல் பொழுதுகளைக் கழிக்கின்றேனர். எனது நூலகத்தில் என்னுடைய இரவுகளைக் கழிக்கின்றேன். பூக்களுடன் நிகழ்காலத்தில் இருக்கின்றேன். என்னுடைய புத்தகங்களுடன் கடந்த காலத்தில் இருக்கின்றேன். நான் நூலகத்துக்குப்போனவுடன் எல்லாச் சரித்திரங்களும் எண் முன் விரிகின்றன.”
- அலெக்சாண்டர் ஸ்மித்
鲑警9宝

Page 6
குழுச் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள்
2010/2011 (அ) உறுப்புரிமை (உ) இலக்கியக்குழு 01. திரு.கந்தசாமி மகாதேவா 01. திரு.எஸ்.எழில்வேந்தன் (செயலாளர்)
(செயலாளர்) 02. பேராசிரியர் சபா ஜெயராசா 02. திரு.ச.இலகுப்பிள்ளை 03. திரு.ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி 03. திரு.இ.உருக்குமணிகாந்தன் 04. திரு.சி.கந்தசாமி 04. திரு.இ.சிறிஸ்கந்தராசா 05. திரு.டபிள்யு.எஸ்.செந்தில்நாதன் 05. திரு.சி.கந்தசாமி 06. திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா 06. திரு.அ.பற்குணன் 07. திரு.அகமது ஜின்னாஹம் ஷரிபுத்தீன் 07. திருமதி றஜனி சந்திரலிங்கம் 08. திரு.எஸ்.பாஸ்க்கரா (ஊ) பரிசில் நிதியம் 09. திரு.சி.சிவலோகநாதன் 01. திரு.ஆ.குகளுழர்த்தி (செயலாளர்)
02. திரு.ச.இலகுப்பிள்ளை (ஆ) நிலையமைப்பு 03. திருமதி வசந்தி தயாபரன்
01. திரு.மா.சடாட்சரன் (செயலாளர்)
04. 6) செல்ல 02. திரு.ச.இலகுப்பிள்ளை ::ಇಂಕಣ
ಙ್ஸ்வரி 06. திரு.சி.சிவலோகநாதன் 07. திருமதி ப.சந்திரபவானி
05. திரு.க.ஞானசேகரம்
:* (எ) பதிப்புத்துறை விற்பனைக்குழு . திரு.க.சுநதரமு 01. திரு.க.இரகுபரன் (குழுச் செயலாளர்)
02. பேராசிரியர் சபா ஜெயாராச
08. திரு.அ.பற்குணன் 09. திரு.எஸ்.பா ரா 03. சைவப்புலவர் சு.செல்லத்துரை
10. திரு.இ.உருக்குமணிகாந்தன் 04. கலாநிதி வ.மகேஸ்வரன் (இ) கல்விக்குழு 05. திரு.அகமது ஜின்னாஹற் ஷரிபுத்தீன் 01. திரு.மா.கணபதிப்பிள்ளை 06. செல்வி சற்சொரூபவதி நாதன்
(செயலாளர்) 07. திருமதி வசந்தி தயாபரன்
02. பேராசிரியர் சபா ஜெயராசா 08. திரு.எஸ்.பாஸ்க்கரா 03. கலாநிதி வ.மகேஸ்வரன் 09. திரு.சி.கந்தசாமி 04. செல்வி சற்சொரூபவதி நாதன் 10. திரு.ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி 05. திரு.க.இரகுபரன் 06. திரு.மதி ப.சந்திரபவானி (ஏ) சமூகமேம்பாட்டுக் குழு 07. வைத்தியகலாநிதி சிஅனுஷ்யந்தன் 01. வைத்தியகலாநிதி சி.அனுஷ்யந்தன் 08. திரு.க.க.உதயகுமார் (குழுச்செயலாளர்) 09. திருமதி வசந்தி தயாபரன் V− 02.
o 03. திரு.எஸ்.பாஸ்க்கார (ஈ) நூலகக்குழு 04. திரு.கந்தசாமி மகாதேவா
01. திரு.தி.ஞானசேகரம் (செயலாளர்) MA D 02. திரு.கந்தசாமி மகாதேவா திரு.மா ಇಂನ್ದಿರಾ। 03. திரு.அகமது ஜின்னாஹற் ஷரிபுத்தீன் . திரு.தி.ஞானசேகரன்
07. திரு.அகமது ஜின்னாஹற் ஷரிபுத்தீன் 04. (3uTITéflfuJñ 5FUT QsouTT5FIT 05. ທີ່ມີທີ່ ugë LDIT தீேன் 08. திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா 06. திரு.ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி O9. திருமதி வசந்தி தயாபரன 07. திரு.க.இரகுபரன் 10. செல்வி சற்சொரூபவதி நாதன்
08. திரு.எஸ்.பாஸ்க்கரா
 

விட்டுக் கொண்டிருக்கவேண்டும். உயர்ந்த ஆராய்ச்சியின் பேரிலேயே எண்ணத்தை - விழிப்புடன் - ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
எண்ணத்தை ஆராய்ச்சியிலும் தூய்மையிலும் வைத்தி ருப்பவன் அறிஞன், மகான், ஞானி. எண்ணம் என்பது எப்படி இயங்குகின்றது, அதிலிருந்து பல்வேறு அகக் காட்சிகள் எப்படித் தோன்றுகின்றன என்று அடிக்கடி ஆராய்ந்து பாருங்கள் சில நாட்களுக்குள் நீங்களும் அறிஞர்களாகவே திகழலாம். உயர்ந்த பயனளிக்கும் நோக்கத்தில் எண்ணத்தைப் பயிற்று விப்பது சிறந்தது. பல களங்கங்களைப் போக்கி, நல்ல நிலையில் எண்ணத்தைத் தூய்மையாக வைத்திருக்க அப்பயிற்சி உதவும். தன் உருவ நினைவு, அறிவில் தெளிந்த பெரியோரின் உருவ நினைவு, இவை எண்ணத்தில் நிலைபெறப் பழகுவது மனிதனை வாழ்வில் சிறப்படையச் செய்யும்.
எண்ணத்தின் அளவையொட்டியே மனதின் தரமும், உயர்வும் அமைகின்றன. மனதின் அளவில்தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எப்படி?
எண்ணத்தைக் கொண்டு தான் எண்ணத்தைப் பயன்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித் தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும்.
வடிவமைப்பு:- கந்தசாமி மகாதேவா - உறுப்பாண்மைக்குழுச் செயலாளர்

Page 7
ہے؟ அக்தரின்
கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல.07, 57ஆவது ஒழுங்கை, கொழும்பு 06.
அறி
வாசிப்பு மாதத்தை (ஜப்ட சேரும் அங்கத்தவர்களுக் சிறுவர்) நூலகக் கட் வழங்கப்படும் என்பதை அத்துடன் நுாலக அங்க நூலகத்தை இலவசமாகப்
என்பதை மகிழ்ச்சியுடன் ெ இச்செய்தி அனைத்து தமிழ் உதவுமாறு அன்புடன் கே
தி.ஞானசேகரன் நூலகச் செயலாளர்
 

வித்தல்
பசி) முன்னிட்டு புதிதாகச் க்கு (இரவல், படிப்பகம், -ணத்தில் 50% கழிவு அறியத் தருகின்றோம். த்தவர் அல்லாதவர்களும் பயன்படுத்தி பயன்பெறலாம் தரிவித்துக் கொள்கின்றோம். 2 மக்களையும் சென்றடைய ட்டுக் கொள்கின்றோம்.
ஆ.இரகுபதி பாலழறீதரன்
பொதுச் செயலாளர்