கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் செய்தி மடல் 2010.11

Page 1
சங்க உறுப்பினர்களுக்கு மட்டும்
惹。 கொழும்
(6)
ിഖിuീ( ; 013 மாதம் : ச
கொழும்புத் தமிழ்ச் சங்க இணையத்தளத்தி "செய்தி மடல்” என்பதன் பிரசுர வடிவம் இ இணையத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள். 36061Tugs.g61Tib:www.colombotamilsangam.com தொலைபேசி இல . 2363759 தொலைநகல்: 2361381
மலரவிருக்கும்
வரவேற்று வ புதிய ஆண்டில் வைக்கும் அனை நல்வாழ்
'வழக்கமாக வரும் விருந்த என்பது பிரஞ்சு நாட்டுப் பழமொ சூரியனின் சுற்று வட்டத்தினா விரும்பியோ, விரும்பாமலோ
“அமைதிக்காக உழைத்து பாக்கியசாலிகள்” என்ற சிந புத்தாண்டில் நாமும் உலக அ உறுதி பூணுவோம்.
நிறையப்பேசுவதில் மட்டு காரியங்களைச் செய்வதில் நல்ல எணர்ணத்துடன் புதி புத்தாண்டில் அனைவரும் ச வேண்டுமென வாழ்த்துவதில்
R3 வாழ்க வையகம்!
 
 
 
 
 
 
 
 

-ಣ್ಣೆ தமிழ்ச் ಆrób ingS UDL6ö
கார்த்திகை ஆண்டு : 2010
ல் "எம்மைப் பற்றி” என்னும் பகுதியிலுள்ள ம்மடலாகும். மேலும் விபரங்களுக்கு எமது
tổì6ắĩ6H(6556ü: tamilSangamcolombo(a)yahoo.com
info(a)colombotamilsangam.com
2011ம் ஆண்டை ாழ்த்துவதோடு
b காலடி எடுத்து எவருக்கும் எமது த்துக்கள்
நினன் வரவேற்கப்படுவதில்லை” ழி எனினும் பிரபஞ்ச அமைப்பில் "லி ஏற்படும் மாற்றத்தை நாம்
வரவேற்கத் தான் வேண்டும். அமைதியுடன் வாழ்பவர்களே தனைக்கேற்ப பிறக்கப்போகும் மைதிக்காக உழைப்போம் என்று
ம் காலத்தைப் போக்காமலி கவனம் செலுத்துவோம் என்ற : ய ஆணர்டை வரவேற்போம். கல நலன்களும் பெற்று வாழ t
பெருமகிழ்வடைகிறோம்.
வாழ்க வளமுடனி

Page 2
கார்த்திகை மாதம் தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றிய
மீளிபார்வை
அறிவோ'ர்ஒன்று கூடல்
3.I.O.
'அனுராதபுர மாவட்ட இஸ்லாமிய கவிஞர்கள் பற்றிய இலக்கியப் பார்வை" என்னும் பொருள் பற்றி மன்னார் அமுதன் உரையாற்றினார். நிகழ்ச்சிக்குத் தலைமை நாங்கிய கொழும்புத் தமிழ்ச் சங்கத் துணைச் செயலாளர் நிரு.ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்கள் பேச்சாளர் பற்றிய அறிமுகத்தைச் செய்து அவரைப் பேச அழைத்தார்.
இலங்கை தமிழ் இலக்கிய வட்டத்தில், அனுராதபுரம் இன்று இலக்கிய ஆர்வலர்களின் அவதானத்துக்குரிய இடமாக மாற்றம் பெற்றுள்ளது. முற்றிலும் சிங்கள ஆளுமைக்குட்பட்ட இம் மண்ணிலிருந்து கொண்டு அன்றாடப் பயன்பாட்டில் தாய் மொழியை உபயோகப்படுத்துவதும், தாய் மொழியின் இருப்பை இலக்கியத்தின் மூலம் வெளிப்படுத்துவதும் பெருமி தமடையச் செய்கிறது என்று தனது பேச்சை ஆரம்பித்தார் பேச்சாளர். கடந்த 6 ஆண்டுகளாக அனுராதபுர மாவட்டத்தி லிருந்து வெளிவரும் சிற்றிலக்கிய இதழான "படிகள் சஞ்சிகையின் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட முதலாவது கவிதைத் தொகுதியான "வேலிகளைத் தாண்டும் வேர்கள்" என்னும் தொகுதியில் ஒன்பது கவிஞர்களின் கவிதைப் படைப்புகள் வெளிவந்துள்ளன. அவற்றை அடிப்படையாகக் கொண்டதே எனது பேச்சாகும் என்றார்.
இத்தொகுதி, ஆய்வு மாணவர்களுக்கும் இலக்கிய ஆர்வலர் களுக்கும் இனிவரும் சந்ததிகளுக்கும் பயனுள்ளதாகவே இருக்கும். அன்பு ஜவஹர்ஷாவின் கவிதை ஒன்று
"தொலைக்காட்சிப் பெட்டியில் தொலைந்து போயிருக்கின்றன நான் பெற்ற செல்வங்கள்." என முடிகின்றது. பேனா மனோகரன் எழுதிய “அருவி ஆறு முதல் வைகை ஆறு வரை” ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வு வாழ்வைக் குறிக்கிறது.
"இருதயத்தில் முள்முடி இறங்கியதால் கடைவாயில் கவிதைக் குருதி வழிய" என்னும் வரிகள்
曇 է:
 
 

H
எப்படிப்பட்ட வலிகளின் அடிப்படையில் கவிதை பிறக்கிறது என்பதைக் காட்டுகிறது.
கெக்கிராவ ஸஹானா பெண்ணியம் பற்றித் தெளிவாகப் பேசுகிறார், பெண் குழந்தை பிறந்தபோது,
"கண்ணிர் சிந்தி மறுபுறம் திரும்பிப் படுத்த சின்னம்மா அடுத்த நாள் கண் விழித்தாள்.
கையிலிருந்த மகளை நீட்டினேன் "ஐயோ பெண் குழந்தை' - என அழகாக எழுதியுள்ளார்.
"வரன் என்ற போர்வையில் வாய்ப்ப தெல்லாம் ஆயுள் தண்டனை தோள் தினவெடுக்கும் போதுகளில் தின்பண்டமாய் ஆகிப் போய்விட்டது."
- நாச்சியா தீவு பர்வீன் - "சமையலறைத் தொட்டி நிரம்பிய பாத்திரங்களும் பெருக்க வேண்டிய வாசல் கொல்லைப் புறத்தினதும் கழுவியுலர்த்தியிருக்க வேண்டிய உடுப்புகளதும் நினைவுகள் ஒரு முகமாய் வந்து தூக்கத்தைக் காவு கொள்ளும்’
- கெக்கிராவ ஸலைஹா -
எனக்குத்தான் ஆடு சுரனைகளெல்லாம் செத்து விட்டதே
இன்னும் அவனின்
சிரசையே
வருடி வருகிறேன்
- எம்.சீரஸ்மின் -
இன்ப சாயலை இரசனையை உறிஞ்சிக் குடிக்கும் வெறியில்"
- ரஹற்மத்துல்லாஹற் -
:தமிழ்ச்சங்க செய்தி மடல்: .

Page 3
‘நாளுமோர் அகதி
சோகக் கண்ணிரால் தாவித்திரிந்து நடைபயின்ற கால் நடைகளோ அல்லது மனித ஜீவன்களோ யாதேனும் தென்படவில்லை.”
- ഖണ്ഡ്b - ‘அனைத்தும் ஒரு நொடியில் நிகழ்ந்து மறைந்தது கடற்கரையில் நின்று கவி புனைகிறேன் நானுமோர் அகதியாய்”
- அனுராதபுரம் சமான் - ஒன்பது கவிஞர்களில் அனுராதபுரம் சமாண் மற்றும் ரஹற்மத்துல்லாஹம் தவிர்ந்த ஏனைய 7 கவிஞர்களும் குறைந்தது ஒரு புத்தகத்தை இலக்கியத் தடத்தில் பதித் துள்ளனர். அவர்களது கவிதைகள் உள்வாங்கப்படுவதன் மூலம் கவிதைகள் காற்றில் கரைந்து விடாமல் காக்கப்படும் என்று கூறி உரையை நிறைவு செய்தார் இளைஞர் மன்னார் அமுதன்.
தீயத் திருநாள் 05. 20 O அன்று மாலை 5.30 மணியளவில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் தீபாவளியை முன்னிட்டு நடாத்திய தீபத் திருநாள் நிகழ்ச்சி இடம்பெற்றது.
திருமதி மைதிலி அமுதனின் தமிழ் வாழ்த்துடன் ஆரம்பித்த நிகழ்ச்சியில் துணைநிதிச் செயலாளர் திரு.சி.பாஸ்க்கரா வரவேற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பரிசில் நிதிச் செயலாளர் ஆகுகழுர்த்தி அவர்கள் தலைமையுரை யாற்றும் போது இம்முறை தீபத் திருநாள் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாகக் கொண்டாடத் தீர்மானித்து, இரண்டு தரமான நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்துள்ளோம் என்றார். இந்நிகழ்ச்சியை இனி வருங்காலங்களில் மேலும் சிறப்புடன் செய்வதற்கு தீர்மானித்துள்ளோம் என்றும் கூறினார்.
அடுத்து வெள்ளவத்தை இராமகிருஷ்ண வித்தியாலய மாணவர்கள் வழங்கிய ‘இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை” என்ற நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்நாடகத்துக்கு இசைக்குறித்தளம் பி.நாகேந்திரன் வழங்கினார். வளங்கள் மிகக் குறைந்த ஒரு பாடசாலையிலிருந்து வளமான
:கொழு Güğüpi
 
 

கருத்துமிக்க ஒரு நாடகம் அரங்கேறியது. நாடகத்தில் பங்கு கொண்ட அனைத்து மாணவர்களும் தமது பாத்திரங்களை உணர்ந்து மேடைக் கூச்சமின்றி நடித்து பலரது பாராட்டையும் பெற்றுக் கொண்டனர். அவர்களுக்கும், தயாரித்து வழங்கிய பாடசாலை நிர்வாகத்தினருக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும்.
நாடகத்தைத் தொடர்ந்து “தேசமெலாம் தீப ஒளி துலங்குமாமோ?” என்னும் கவியடியில் கவிஅரங்கம் இடம் பெற்றது. இக்கவி அரங்குக்கு சட்டத்தரணி ந.காண்டீபன் தலைமைக்கவியாகப் பொறுப்பேற்று கவியரங்கைச் சிறப்புற வழி நடத்தினார். மன்னார் அமுதன், லுணுகலைழறி, மு.மயூரன் செல்வி நிலா(தர்ஷாயணி) தி.விமலாதித்தன் ஆகிய கவிஞர்கள் பங்கு கொண்டு உணர்ச்சி பொங்கும் கவிதைகளை வழங்கி சபையோரின் பாராட்டைப் பெற்றனர். இது போன்ற கவி அரங்கம் மீண்டும் மீண்டும் இடம்பெற வேண்டுமென்றும் கருத்துக் கூறினர். நிறைவாக பொதுச் செயலாளர் திரு.ஆ.இரகுபதி பாலறிதரன் அவர்களது நன்றியுரையுடன் தீபத் திருநாள் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
நூலகம் (சிறுவர் பகுதி)
06, 2010 “கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில் செல்வி. கலா வடிவேற்பிள்ளை கலந்து கொண்டு சிறுவர் களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அறிவோர்ஒளிறு கூடல் 10, 2010 “ஆரோக்கியத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும் சீன வைத்தியம்” என்னும் பொருள்பற்றி வைத்திய கலாநிதி உமாபதி ரீசங்கர் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.இருக்மணி காந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை உரையில், பேச்சாளர் எனக்கு நன்கு அறிந்தவர். இவர் ஒரு வைத்திய கலாநிதியாக இருப்பதோடு சமாதான நீதிவானாகவும், சமூக சேவையாளராகவும் உள்ளார். முதியோர் இல்லம் ஒன்றை நடாத்திவருகின்றார் எனவும் கூறினார். அவரைத் தொடர்ந்து உரையாற்றிய பேச்சாளர் கூறியதாவது; வைத்திய முறை பற்றி நான் பரீட்சித்துப் பார்த்த பின்னர் தான் அவை பற்றி உங்களுக்கு கூறவந்துள்ளேன். இன்று இடைநிலை வயதுள்ளோருக்கும் இருதயநோய் உண்டு. ஆரோக்கியமாக இருந்தால்தான் சந்தோஷமாக இருக்கலாம்.
SLLS0L LLLLLLLLSSSLL SSSS
Mynwyl i gael!?! us
s
(దిద్దో

Page 4
எனவே நாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியம் இல்லாமல் எவ்வளவு வசதிகள் இருந்தும் பயனில்லை. விரும்பியவற்றை உண்ணமுடியாது. ஆங்கில வைத்தியத்தில் திறந்த சத்திர சிக்சை இல்லாமல் வைத்தியம் செய்கிறார்கள். செய்த பின்னும் clinic போக வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செல்ல வேண்டும். கொப்பியோடு திரிய வேண்டும். ஆகாரம், கால நிலை மாற்றம் இவற்றால் தான் நோய் ஏற்படுகிறது. உணவில் கட்டுப்பாடு வேண்டும். இன்று இயற்கையோடு ஒட்டிய வாழ்வு முறை இல்லை. பண்டைய நாட்கள்போல் அம்மி, ஆட்டுக்கல், உரல், உலக்கை இல்லை. உடற்பயிற்சி இல்லை. சுத்தமான காற்று இல்லை. சுத்தமான நீர், வெளிச்சம் இல்லை. மின்சார உபகரணங் களைப் பாவித்துவிட்டு நடைப்பயிற்சிக்குச் செல்கிறோம். வருங்காலத்தில் காற்றைக் கூடக் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம் என அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். காசு கொடுத்தே தண்ணிரை வாங்கிக் குடிக்கி றோம். நடுத்தர வயதானவர்களுக்கு கொலஸ்ரோல் ஏற்படு கிறது. இது குருதி மூலம் உடல் முழுவதும் பரவக் கூடியது. சத்திரசிக் சை சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. உணவே மருந்து. நோய் வருமுன் காக்க வேண்டும்.
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” - என்றார் திருவள்ளுவர் சாப்பிட நேரமில்லாத இயந்திர வாழ்வு இன்று, பஞ்சபூதத்தில் சமநிலை மாறுபடும் போது நோய் ஏற்படுகிறது. சீன மருத்துவர் லீ ஜின் யுவான் ஒரு உப உணவு முறையை உலகளா விய ரீதியில் அறிமுகம் செய்து வெற்றி கண்டுள்ளார்.
இவை இயற்கையானவை. இவை கற்களை உருவாக்க மாட்டா. Cancer கலங்கள் மேலும் விரிவடையாமலும் பாதிக்கப்படாமலும் இருக்க மாத்திரை உண்டு. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். வெயிலில் அலைவதாலும் பரம்பரையாலும் மன அழுத்தங்களாலும் நோய் ஏற்படலாம். இப்போது சில விளக்கங்களை உதவியாக வந்த வைத்திய கலாநிதி உபகரணங்கள் மூலம் விளக்குவார் என்றார். சீப்பு போன்ற உபகரணம், நரம்புகளைத் தூண்டும் உபகரணம் என்பன மூலம் விளக்கம் கொடுத்து தனது உரையை விளக்கமாக ஆற்றினார் துணையாக வந்த வைத்தியகலாநிதி.
இவர் தனது சிகிச்சை நிலையத்தை விரைவில் 49A நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை, கொழும்பு 06 இல் ஆரம்பிக்க வுள்ளதாகவும் கூறினார்.
s
 
 

சபையோர் இவரது உரையை பாராட்டியதோடு அவரது வைத்திய முறையில் ஆர்வமுள்ளவர்களாகவும் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.
இயக்கியகளம் 30
12.1.201)
*" தொலைந்துபோன தமிழ் நூாலிகள்’ என்னும் தலைப்பில் தமிழ்நாடு ராஜ்மோகன் ஆறுமுகம் அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்வுக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.சி.கந்தசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.
பேச்சாளர் சக்தி FMஇல் தயாரிப்பாளராகவும் அறிவிப் பாளராகவும் கடமையாற்றுகிறார் என தலைவர் அறிமுகம் செய்து வைத்தார். தொலைந்துபோன தமிழ் நூல்கள் என்னும் போது அவை தொலைக்கப்பட்டனவா, அழிக்கப் பட்டனவா அல்லது கை விடப்பட்டனவா? எனப் பலவாறு எண்ணத் தோன்றும். எனவே பேச்சாளர் எதைப் பற்றி உரை யாற்றப்போகிறார் எனக் கேட்டுப் பார்ப்போம் எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
திரு.ராஜ்மோகன் உரையாற்றும் போது, அரிய தமிழ் நூல்கள் பல இன்று எம்மிடையே இல்லை. ராஜராஜ சோழன், டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் போன்றோர் நூல் களைத் தொகுத்து வெளியிட்டுள்ளனர். பண்டைய தமிழ் அறிஞர் கல்வெட்டு, செப்பேடுகள், ஏடுகள் என்பவற்றை ஆதாரமாக வைத்து வடி கட்டி ஒழுங்கு முறைப்படுத்தி பழைய நூல்களை நூல் வடிவில் பதிப்பித்து வெளியிட் டுள்ளனர். ஈழத்து அறிஞர்கள் சி.வை.தாமோதரம்பிள்ளை, நாவலர் போன்றோரும் அத்தகைய அரும் பெரும் பணிகளை ஆற்றியுள்ளனர். இயல், இசை, நாடகம், வரலாறு என பல்துறை சார்ந்த நூல்களும் வெளிவந்தன. ஆனால், அவற்றுள் பல இன்று காணாமல் போயுள்ளன. குறிப்பாக வீரசோழியம், அபிதான சிந்தாமணி போன்ற நூல்கள் காணமால் போயுள்ளன. இன்றைய சந்ததியினர் அவை பற்றி அறியாதவர்களாக உள்ளனர். அவற்றை எடுத்து மீள் பதிப்புச் செய்து வெளியிட வேண்டும்.
நாடகங்கள் பற்றி சிலப்பதிகாரத்தில் அறியக் கூடியதாக வுள்ளது, நாடகம் பற்றி சாத்தனார் எழுதிய 'கூத்தநூல் தொலைந்து விட்டது என்றார். (இந்நூல் யாழ் பல்கலைக்கழகத் திலும், கொழும்புத் தழிழ்ச் சங்க நூலகத்திலும் உள்ளன என்ற செய்தியைப் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் கருத்துரையின் போது கூறினார்.)

Page 5
இன்று காணப்படும் நூல்கள் கூட ஒருகாலத்தில் தொலைந்து போகக் கூடும். அவற்றைப் பாதுகாக்கவேண்டும். யாழ். நூலகத்தில் இருந்து பல நூல்கள் தீயில் கரைந்து போய் விட்டன. எமது முன்னோர் அரும்பாடுபட்டு பதிப்பித்த நூல் களை தொலைக்காமல் பாதுகாக்க வேண்டியது எமது கடமை எனவும் கூறினார். இவரது உரை பலரும் பாராட்டும் படியாக அமைந்திருந்தது.
நூலகம் (சிறுவர் பகுதி)
13.11.2010 “கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில் திருமதி அ.புவனேஸ்வரி கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
இலக்கியக்களம் 31 19.11.2010 இலக்கியக்களம் நிகழ்வில் “பெரியாழ்வார் திருமொழி யின் இலக்கியநயம்” என்னும் பொருள் பற்றி துணைவியூர் கேசவன் அவர்கள் உரையாற்றினார்.
ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.அ.பற்குணன் தலைமையுரை யாற்றினார். தனது உரையில் திரு.கேசவன் தமிழ்ச் சங்கத்திற்கு புதியவரல்ல என்றும் பலகூட்டங்களில் பேசியுள்ளர் என்றும் கூறி அவரைப் பேசுமாறு அழைத்தார். பேச்சாளர் இத்தலைப்பைத் தெரிவுசெய்த காரணத்தை இறுதியில் சொல்வ தாகக் கூறினார். தமிழ் இலக்கியங்களுள் பெரியாழ்வார் திருமொழி மிகச் சிறந்தது. திருமுறைகளும், பிரபந்தங்களும் பக்தி இலக்கியங்களாக மிளிர்கின்றன. இது தமிழ்மொழியின் ஒரு சிறப்பு அம்சம். நாம் இறைவனை எமது உறவாகக் கருதுகிறோம். அப்பாவாக, அம்மாவாக, சகோதரராக, காதலன், காதலியாக நோக்குகிறோம். நான் இன்று இலக்கிய நோக்கி லேயே பார்க்க விரும்புகிறேன். பஞ்சாமிர்தத்தில் ஒரு பதார்த் தத்துடன் இன்னொன்று ஒட்டியிருப்பதைத் தவிர்க்க முடியாது. அதுபோல் இலக்கியம் பற்றிப் பேசும் போது ஆங்காங்கே
 
 

பக்தி பற்றிய கருத்துக்களைத் தவிர்க்க முடியாது. அதனைத் தவிர்த்தால் சுவை குன்றிவிடும். இயன்றவரை இலக்கியம் பற்றிப் பேசுகிறேன் என்றார்.
அவர் தொடர்ந்து உரையாற்று கையில், விஷ்ணுசித்தர் என்ற பெயர் கொண்டவர் பெரியாழ்வார். பாண்டிய நாட்டில் வாழ்ந்த இவர் திருப்பல்லாண்டு எனும் 12 பாடல்களைக் கொண்ட ஒரு நூலையும் 461 பாடல் கொண்ட பெரியாழ்வார் திருமொழி என்ற நூலையும் பாடியுள்ளார்.
வடகலை, தென்கலை என இரண்டு பிரிவுகள் உண்டு. இவரது இரண்டு நூலையும் ஒன்றாகக் கொள்கிறார் பெரியவாச்சான்பிள்ளை அவர்கள்.
சாதாரணமாக 10 பாசுரங்களே பதிகம் என இருந்தும் இவரது 1வது பதிகத்தில் 9 பாடலும் 2வது பதிகத்தில் 21 பாடலும் உண்டு.
பாவனை முறை என்ற உத்தியினை ஆழ்வார்கள், நாயன் மார்கள் கையாண்டுள்ளனர். தம்மை ஒரு உறவுமுறையில் வைத்துப் பாடியுள்ளனர். பெரியாழ்வார் தன்னைத் தாயாக வைத்துப் பாடியுள்ளர்ர். முதலாவது திருமொழியில் கண்ணனது அவதாரச் சிறப்பும் 2வது திருமொழியில் கண்ணனது அழகு வர்ணனையும் இடம் பெற்றுள்ளன.
“அழகிய பைம்பொன்னின் கோல் அங்கை கொண்ட கண்ணனைக் காண வாருங்கள் பெண்களே” என்று யசோதை அழைப்பது போல் பாடியுள்ளார். அழகை வர்ணிக்க 10 பாடல் போதாது என்று 21 பாடலாகப் பாடியுள்ளார் போலும். அடுத்த திருமொழியில் தாலாட்டுப் பாடுகிறார்.
நாட்டுப் புறக்கலை உணர்வோடு பெரியாழ்வார் பாடியுள்ள தாக மேலை நாட்டு அறிஞர் ஒருவர் கூறியுள்ளார். அடுத்த தாக‘அம்புலிப்பருவம்” பாடியுள்ளார். அவதாரங்களுடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளையும் இடையிடையே பாடிச் செல் கிறார். அடுத்து செங்கீரைப் பருவம், பிறந்து 5வது மாதப் பருவமாகும். தொடர்ந்து சப்பாணிப்பருவம், நடைப்பருவம் அச்சோப்பருவம், புறங்கொள்ளல், அப்பூச்சி பருவம் ஆகிய வற்றையடுத்து முலையுண்ண அழைத்தல் பாடியுள்ளார். தாயின் பெருமையைக் கூறி முலையுண்ண அழைக்கிறார். ஆணாக உள்ள பெரியாழ்வார் தாய்மையின் உணர்வை துல்லியமாகக் காட்டியுள்ளார்.
அடுத்து காது குத்தும் பருவம், நீராட்டல் பருவம், குழல் வாரும் பருவம், கோல் கொண்டுவரல் பருவம், பூச்ஆடல் பருவம் என வருகின்றன. பாலைக் குடித்துச் செல்வதை

Page 6
இரசித்த படியால் அதைத் தடுக்க மனமில்லாமல் இரசித்ததை பெரியாழ்வார் அழகாகப் பாடியுள்ளார். குழந்தைப் பருவத்தில் சிறுவனை மாடுமேய்க்க அனுப்பி விட்டேனே என்று கவலைப் படுவதாகப் பாடியுள்ள தாயைப் பார்க்கிறோம். “என் குட்டனே ஓடி வந்து ஒரு முத்தம் தா” என்று கேட்கிறார்.
23வது திருமொழி கன்னியர் காமுறும் திருமொழி. தாயாக, ஆச்சியராக, அயல்வீட்டுப் பெண்ணாக, கன்னிப் பெண்ணாக பெரியாழ்வார் 4 வித பாத்திரங்களை எடுத்துப் பாடியுள்ளார். 26வது திருமொழியில் நற்றாயாக இரங்கிப் பாடியுள்ளார். கண்ணன் எனது மகனைக் கொண்டு போனால் என் குடும்பத் துக்குப் பழிவந்து சேருமே என்ற கவலையுடனும் எனது மகனை யசோதை என்ற மாமி என்ன பாடுபடுத்துவாளோ என்று ஏங்கியும் பாடுகிறார்.
“உந்தீபற' என்னும் பதிகத்தில் ஒரு பகுதி இராமனுக்காகவும் ஒரு பகுதி கிருஷ்ணனுக்காகவும் நின்று பாடுகிறார்கள். திருமாலிருஞ் சோலைப் பதிகத்தில் கண்ணன் தன்னுள் குடியேறியது போல் உணர்கிறார்.
கடைசி 10 பாடலிலும் பெரியாழ்வார் திருமால் வசப்பட்டு தன்னையிழந்து விட்டபடியால் திருமொழியை அத்தோடு முடிக்கிறார்.
பிள்ளைத் தமிழ் இலக்கியத்துக்கு அடியெடுத்துக் கொடுத்தவர் பெரியாழ்வார் எனப் பேசப்படுகிறார். அதே போன்று ‘உலா பிரபந்தம்' என்னும் பாடல் வகையும் இவரது திருமொழியில் காணப்படுகிறது. பெரிய சமுத்திரம் போன்ற பெரியாழ்வார் திருமொழியில் ஒரு சிறுதுளியையே என்னால் தரமுடிந்தது. பெரியாழ்வார் திருமொழியில் உள்ள 'நீராடல் பருவம்’ க.பொ.த.(உயர்தரப்) பாடத்திட்டத்தில் இருப்பதனாலேயே இத்தலைப்பை எடுத்துக் கொண்டதாகவும் எனினும் மாணவர் களைக் காணாதது வருத்தம் தருகிறது எனவும் கூறி உரையை நிறைவு செய்தார். அன்னாரின் உரை மிகவும் பாராட்டும் படியாக இருந்தது.
grsoasib Césař uě55)
20. 1.201.0 "கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில் திருமதி ரஜனி சந்திரலிங்கம் கலந்து கொண்டு சிறுவர்களுக் கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
sůláFáě5Čge alb 21.11.2010 காலை 9.30 மணியளவில் சுபவேளையில் 3ம் மாடியில் புதிய அறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
 

இடம்பெற்றது. இந்நிகழ்வில் சங்கத் தலைவர், செயலாளர், நிதிச் செயலாளர் உட்பட ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பலரும்
காலை 10.00 மணிக்கு மாதாந்த ஆட்சிக்குழுக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சிக்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து ஆட்சிக் குழு உறுப்பினராகவிருக்கும் திரு.ருக்மணிகாந்தன் கனடா நாட்டுக்கு வதிவிட உரிமை பெற்றுச் செல்வதாகத் தெரிவித்தார். பிரியாவிடை பெற்றுச் செல்லும்வேளை ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு தேநீர் விருந்தளித்து மகிழ்வித்தார். திரு.ருக்மணிகாந்தன் சங்கத்துக்கு ஆற்றிய சேவைகள் பற்றி தலைவர் உட்பட பலரும் பாராட்டிப் பேசியதோடு அவர் செல்லுமிடமெங்கும் சிறப்பு வாழ வேண்டு மென்று வாழ்த்தியதோடு தேநீர் விருந்துக்கு நன்றியும் கூறினார்கள்.
நிறைவாக திரு.ருக்மணிகாந்தன் தாம் சங்கத்துடன் இணைந்து செயற்பட்ட காலங்களையும் நண்பர்களுடனான பசுமை நிறைந்த நினைவுகளையும் கூறி அனைவருக்கும் அன்பான பிரியாவிடையைக் கூறி அமர்ந்தார்.
அற்றைத்திங்கள்
2, 1.2010
தனித்துவம் மிக்க அற்றைத்திங்கள் நிகழ்வில் நிதி அறிவுரைஞர் திரு உடுவை தில்லைநடராசா அவர்கள் உரையாற்றினார். As
சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் அவர்கள் தலைமை தாங்கினார். உரைஞர் பற்றிய அறிமுகவுரையைக் கூறும்போது உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் யாழ் இந்துக்கல்லூரியிலும் பயின்றவர் எனக் குறிப்பிட்டார். இவர் சிறந்த எழுத்தாளர், பேச்சாளர். இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து பல்வேறு திணைக்களங்களில் பணிபுரிந்துள்ளார். சிறந்த நிர்வாகியாக விளங்கி பல சாதனைகள் புரிந்துள்ளார். ஒரு சிறந்த நடிகரும் கூட எனக் கூறி தனதுரையை நிறைவு செய்தார்.
பேச்சாளர் தனது உரையில் தெய்வ நம்பிக்கையும் பெரியோர் ஆசீர்வாதமுமே எனது முன்னேற்றத்துக்குக் காரணமாகும். குடும் பத்தினரும் , நண்பர்களும் வழிகாட்டியுள்ளனர். கல்லூரிப் படிப்புப் பற்றி விரிவாகக் கூறினார். விரும்பிய கலைத்துறையைத் தேர்வு செய்ததால் எனது தலை விதியை நிர்ணயிக்கும் நிலைக்கு உயர்ந்தேன்.

Page 7
எழுது விளைஞராக எனது தொழிலை ஆரம்பித்தேன். ஆரம் பத்தில் தனக்கு ஏற்பட்ட பல சுவையான அனுபவங்களை நகைச்சுவையாகக் கூறினார். மொழிப் பிரச்சினை இருந்தது. பின்னர் ஒருவாறு இசைவாக்கம் செய்து கொண்டேன். பொலிஸ் திணைக்களத்தில் பெற்ற அனுபவம் எனது நீண்ட பயணத்துக்கு உதவியது. சிறு சிறு விடயங்களையும் கவனமெடுத்துப் படித்தால் வாழ்வில் முன்னேறலாம்.
பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றியவேளை, பலர் நிர்வாக சேவைப் பரீட்சையில் தேறினர். அதைக் கண்டு எனக்கும் அதில் ஆர்வம் உண்டானது. அமரர் வ.இராசையா என்ற ஆசிரியரும் ரீகுமரன் என்ற யாழ் இந்து ஆசிரியரும் எனக்கு வழி காட்டினர்.
மல் லாகத்தைச் சேர்ந்த கணக் காளர் சிவசுப்பிரமணியம் அவர்களும் வழிகாட்டினார். நடக்கக் கூடியவற்றை நினைத்தால் அது நிச்சயம் வெற்றியாகும்.
நிர்வாக சேவைப் பரீட்சையில் தேறி நேர்முகப் பரீட்சைக்குச் செல்வதற்கு முன் அது சம்பந்தமான விடயங் களை அதிர்ஷ்டவசமாக நண்பர்களுடன் கலந்துரையாடி யிருந்தேன். இது எனக்குப் பயன் தந்தது. எனவே நண்பர்களைச் சந்திக்கும் போது நல்ல விடயங்கள் பற்றிப் பேசுவது பயன்தரும் என்பதற்கு இது ஒரு உதாரணம் எனக் கூறினார். ஓய்வு நேரங்களில் பயனுள்ளவற்றைப் படித்தேன். இளைப்பாறும் போது ரூபா 50 இலட்சம் பெறுமதியான வெகுமதி எனக்குக் கிடைத்தது.
தனது விமானப் பயணம் பற்றிய பல சுவையான தகவல்களைக் கூறினார். திருமலையில் ஒரு விசாரணைக் குழுவில் இணைந்து பல அறிக்கைகளைச் சமர்ப்பித்தேன்.
வவுனியாவிலும், மாகாணசபையிலும் பணியாற்றிய தோடு வவுனியா அரச அதிபராகவும் கடமையாற்றினேன். வாகனம், தொலைபேசி உட்பட பல வசதிகள் எனக்குக் கிடைத்தன.
பல அமைச்சர்களோடு பணியாற்றி உள்ளேன். மேலதிகாரிகள் பலரும் உதவி செய்துள்ளனர். அவர்களை மறக்க முடியாது. இளைப்பாறிய பின்னரும் பொலிஸ் ஆணைக் குழுவில் பணியாற்றினேன். இப்போது நிதி அறிவுரைஞராகக் கடமையாற்றுகின்றேன். தெய்வ நம்பிக்கையும், முயற்சியும், பெரியோர் ஆசீர்வாதமும் இருந்தால் வாழ்வில் முன்னேறலாம் எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
 

அறிவோர்ஒன்று கூடல்
24, 2010
கடும் மழை காரணமாக இன்றைய அறிவோர் ஒன்றுகூடல் இடம்பெறவில்லை. எ.எம்.எம்.அளகளிலின் நினைவும், பணிகளும் என்ற தலைப்பில் உரையாற்ற வந்திருந்த பேச்சாளர் திரு.நஹியா அவர்களுக்கு வேறு ஒரு நாள் ஒதுக்கித் தரப்படவுள்ளது.
இலக்கியக்களம் 32
26, 1.2010
'நாவலர் அரங்கில்” நடைபெற்ற இலக்கியக் களம் நிகழ்வில் இன்று ரீலறி ஆறுமுகநாவலர் நினைவு தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வுக்கு சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் தலைமை தாங்கினார். தலைமையுரையாற்றுகையில் நாவலர் பணியை நினைவு கூர்ந்து, விழா எடுக்கவேண்டிய கடப்பாடு எங்களுக்கு உண்டு என்பதை வலியுறுத்தினார். இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்ற அழைப்பை பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் விருப்புடன் ஏற்றுக் கொண்டார். அதுபோல் எமது ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.இரகுபரனும் இவ்விழாவில் பங்கு கொள்ள இசைந்தமைக்கு நன்றி தெரிவித்தார். இருவரையும் அன்புடன் வரவேற்பதாகக் கூறினார்.
தொடக்கவுரையை தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்
துறைத் தலைவர் " " ஆ க.இரகுபரன் ! - ஆற்றினார். நினைவு கூரப்பட வேண்டிய பெருமைக்கு உரிய 嵩 வர் நாவலர். தமிழ் நாட்டில் தொன்மை மிகுந்த இலக்கியங் கள் தோற்றம் பெற்றன. ஈழத்தில் பல சிறந்த இலக்கி
s、RAP税.i.A 料み翁
t
யங்கள் தோன்றினாலும் அது தமிழகத்துக்குச் சென்றுசேர வேண்டுமென பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் கூறினார். தமிழகத்தோடு ஒப்பிடும்போது மிகப் பிற்பட்ட காலத்தில் தான் ஈழத்தில் இலக்கியங்கள் தோன்றின. இலங்கையில் இருந்து தமிழகம் சென்ற நாவலருக்கு கிடைத்த மதிப்பு வேறு எவருக்கும் கிடைக்கவில்லை. அனைவரும்

Page 8
அவரைப் போற்றிப் புகழ்ந்தனர். அவரது தமிழ்ப் புலமைதான் இதற்குக் காரணமாகும். ஞானச் செருக்கு அவரிடமிருந்தது. தமிழ்ச் சமூகத்துக்காகப் பாடுபட்டார். பஞ்சம் வந்த போது மடிப்பிச்சை எடுத்து கஞ்சி ஊற்றினார்.
தமிழையும் சமயத்தையும் இரு கண்ணென மதித்தார். பண்ணிசையை ஊக்குவித்தார். நாடகத்தை வளரச் செய்தார். ஒழுக்கத்தில் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்றார். இவர் வர்ணாச்சிரம் தர்மத்தைக் கடைப்பிடித்தமை பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவில்லை. பல நூல்களைப் பதிப்பித்ததோடு மாணவர் பரம்பரையை உருவாக்கினார். ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். நீதி நெறி நின்றவர். நாவலர் தனது சுகங்களை இழந்த போதும் சமூகம் இன்னும் திருந்த வில்லையே என்று கவலையுடன் இவ்வுலக வாழ்வை நீத்தார் என்று கூறி நிறைவு செய்தார்.
அவரைத் தொடர்ந்து பேராசிரியர் சண்கமுதாஸ் அவர்கள் "ஆறுமுகநாவலர் வாழ்வும் பணியும்' என்னும் தலைப்பில் சிறப்பு உரையாற்றினார்.
19ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வாழ்ந்த அறிஞர்கள்
பற்றிக் கூறுகையில் area as ས།
**
அந்த நூற்றாண்டு இலங்கை அறிஞர் களுக்கு உரிய ஆண்டு என்றனர். பல கெடுபிடி களுக்கு மத்தியில் யாழ். மக்கள் வாழ்ந்த காலத் தில் நாவலர் பெருமானும் வாழ்ந்தார். பல பெரிய பதவிகளை உதறித்தள்ளினார். பல ருபா பெறுமதியுடன் வந்த திருமணத்தை விரும்பவில்லை. தமிழுக்காக தமிழருக்காக துறவறத்தை மேற்கொண்டார்.
கிறிஸ்தவப் பாதிரியார் பேர்சிவல் அடிகளாருடன் பலமுறை தமிழ்நாடு சென்று வந்து பைபிளை மொழி பெயர்த்தார்.
பொன்னான மொழிபெயர்ப்பு என்று போற்றப்பட்ட அந்த
மொழிபெயர்ப்புக் குழுவில் நாவலரும் இடம்பெற்றார். கிறிஸ்தவப் பள்ளியில் படித்து கிறிஸ்தவர்களுடன் பழகியும் தனது சமயத்தை மறக்கவில்லை. மக்கள் மதம் மாற முற்பட்ட போது தூரநோக்குடன் செயற்பட்டவர் நாவலர்.
(14.
SYSSYSSSYSSSYSeSMS eeLeTmmLGLTYS TTLT uTSeLT S LS0LS
 
 
 

கலை நிகழ்ச்சிகளில் இடம்பெற்ற சில படைப்புகளைச் சகிக்கமுடியாத காரணத்தால் கனகி புராணம் எழுதினார். சமய நெறியில் மக்களை ஊக்குவித்து பிரசங்கங்கள் செய்யும் பணியைத் தொடங்கினார்.
தமிழ்ப் பிள்ளைகள் தமிழை மறக்கக் கூடாது என்பதற்காக சைவ வித்தியாபிவிருத்திச் சங்கத்தை உருவாக்கி எவ்வாறு அவர்களது பாடத் திட்டங்கள் அமைய வேண்டுமெனச் சிந்தித்து பால பாடம் எழுதினார். பல நூல்களைத் தேடி எடுத்து அச்சு வாகனம் ஏற்றியுள்ளார். இவரது தமிழ்ப் பணி எவராலும் என்றும் மறக்க முடியாதவை என்று கூறியதோடு மேலும் பல செய்திகளையும் சுட்டிக் காட்டி தனது உரையை நிறைவு செய்தார். இவரது உரை அனைத்து தமிழ் மக்களையும் சென்றடையுமாறு அச்சிட்டு வெளியிடப்படும் என கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் தெரிவித்தார். பொதுச்செயலாளர் ஆ.இரகுபதி பாலறிதரனின் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
நூலகம் (சிறுவர் பகுதி)
27, 2OO "கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில் திருமதி சுமதி பாலறிதரன் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
ஆரோக்யே வாழ்வுக்கான கலந்துரையாடல்
28. 11.2010 ஆரோக்கிய வாழ்வுக்கான மாதாந்த கலந்துரையாடலில் "அன்பு பாராட்டுதல்" என்னும் நிகழ்வுக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் தலைமையேற்றார். வழமைபோல திரு.பி.இராசேந்திரா, வைத்திய காலநிதிகள் சி.எஸ்.நச்சினார்க்கினியன், திருமதி விக்னவேணி செல்வநாதன், அகமது ஜின்னாஹம் ஷரிபுத்தீன், சி.அனுஷ்யந்தன், திரு.ஆ.இரகுபதி பாலறிதரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை உளநல ஆலோசகர் திரு.கா.வைத்தீஸ்வரன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
T --
"கிராமத்திலிருந்து ஒருவனை வெளியில் கொண்டு வர முடியும். ஆனால் அவனுக்குள்ளிருக்கும் கிராமத்தை வெளியில் | கொண்டு வர முடியாது."
- ஒரு பழமொழி - :
தொகுப்பாார்:- கந்தசாமி மகாதேவா -
உறுப்பான்மைக்குழுச் செயலாளர் செல்வி.சி.சத்தியஜோதி

Page 9
தி
3aptañu | 1 brilo
கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல.07, 57ஆவது ஒழுங்கை, கொழும்பு 06.
அடிப்படைத்
உடலையும் அதன் இயக்கத்ை ஓட்டத்தையும், ஜீரணத்தையும் சரி உழைப்பு;
உள்ளம் அமைதியாகவும், உற் மலை, காடுகள் முதலான இயற்ை சுற்றிவரும் வாய்ப்பு:
புலன்களையும், அறிவையும் ஒ: இன்பத்தை ஊட்டும் நடனம், பாட்டு, அறிவைப் பயன்படுத்த வயதுக்( இவையனைத்தும் மனிதனுக்கு - ப
மனித இனம் சுகமாக வாழ்வதற்கு மட்டும் அளவுடன் கொண்டு தே வேண்டும்.
 

த் தேவைகள்
தையும் காக்க ஆகாரம், இரத்த யான படி வைத்திருக்க மிதமான
சாகமாகவும் இருக்க கடல், நதி, கக் காட்சி; இவைகளைக் காணச்
ன்றுபடுத்தித் தனக்கும் பிறருக்கும் சிற்பம், ஓவியம் முதலிய கலைகள். கேற்ற தியானம், தவமுறைகள் Dனிதர் வாழ்வுக்கு அவசியமாகும். குத் தேவையான அனுபோகங்களை தவையற்றவைகளை விட்டு விட
- அருள் தந்தை -