கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாருதம் (வவுனியா) 2003.04

Page 1
參
丝
參
 

ள் வட்டம்
இதழ் 03
55
|?
ị
後
後 《
க்
கதி
參
必 警
கலை இல
சி.மெளனகுரு
.《 | ()

Page 2
கடைவீதி வவுனியா :02-22
முந்தையா மண்டபம் திருமண், பூப்புனித நீராட்டுவிழா மற்றும் கலை கலாசார பொதுக் கூட்டங்களுக்கும் ஒரே ஒரு சிறந்த மண்டபம் முத்தையா மண்டபம் (சகல வசதிகளுடன் கூடிய}
எண்ணை ஆலை சுத்தமான தரமான நல்ப்ேன்ைனர், தேங்காய் எண்ணை, பின்னாக்கு,
சுத்தமான வறுத்த அரிசிய போன்றவற்றை மலிவு விலையில்
தையலகம்
நனை முறை பரிப் சிறு வl கோர வெப்ப தாக்கத்திலிருந்து பெரியவர் உட்பட அனைவருக்கும் விடுதலை பெற பல.நோ.கூ. சங்க (3 jan Gll LLIT Fir ? - 52.2 L H, b)) 61 h. குளிரகத்தை நாடுங்கள். தாமதமின்றிப் பெற்றுக் கொள்ள ||
தையலகத்தை நாடுங்கள்.
სნ வி ரகம்
தொலைத் தொடர்பு நிலையம்
சர்வதேச தொலைத்தொடர்பு சேவைக்கும் குறைந்த விலையில் أمه போட்டோ பிரதிகளுக்கும் நிமிடத்தில் அடையாள அட்டை புகைப்படததிற்கும் , றோணியோப் பிரதிகள் பெறுவதர தும் வவுனியா.ப.நோ.சு.சங்க தொலைத்தொடர்பு நிலையத்தை நாடுங்கள்
நுகர்ச்சிப் பொருட்கள்
எங்களின் 30 இற்கு மேற்பட்ட நுகர்ச்சிக்கிளைகளில் குறைந்த விலையில் தரமான நுகர்ச்சிப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள இன்றே நாடுங்கள்.
-
 
 
 
 
 
 
 
 
 
 
 

భ్రవే#్య
ஆசிரியர் குழு
திகாங்கர்
கந்தைr g'கணேசர்
உதவீ
சிசஸ்: சீரோஜினி
திரு. ப. முரளிதரர்
அச்சு
பள்ளிவிழர் பிரீகர்சரதி
கரகோர்
தொடர்புகட்கு:
(1) சிபாதிகை,
33அனயூகார ரீ,
தாய், அஆணிா,
list.gr (34 - 231)
(2) go, நீருநாலுந் தாங்
அரியா,
-
வெளியீடு
கிரிபுரிபா கண்டி இங்கி
நண்பர்கள் ஆட்டம்,
* காங்கள் தமிழ்
- கவிஞர் அகளங்கள் - * ஈழத்து நீரில் இலக்கில்
- ஐகதிர்காமசேகரம். * Tyrrol தாழ்க்ர்த்து.
- ஜெ.எஸ் அரியரட்ணக் من سيتيتش، مtr لأقط، مثل تجة
- சகேர்முகபிரியா ஆலேந்தித் rifluntai air.'logy - சிசிவாஜிவி . + "&r:fyo Yativaria. Morriskriv «Kri:Fawce * வி ஃ&ருத்து ஒரு கடிதம்
- த.விஜயசேகரன். e Figë zgura:Wikilaj lirikë
ಛೋಳ நான் ராஜேந்திரர் - ήήπική - διεξ ημένη και
முகிபா ராஜேந்திரர் - ჭ/&lLკ&rff&dffkäfuკჯor:fffჯჭჯ rthi.
- வெண்ணிலா விஜயவார்ார் .
- ரத்த மகள் . முராரிகா, பொ.சந்தியநாதய் {ట్లో; } - சிசிவாஜினி. * Loy' MEJ w Jy & &agy
- கத்தையா ரீகணேசன் - 3% &nfa gwair
- அனோட், அனாவை கலைக்கரண் - Εξ ορχή. Πλήκήό μια εί
சி.ஆர.இராஸ்பைரமி . $3: 8 тууйлу г/wлмму”у мү3м.
* கதி முரளிதரன் ட * ಕ್ಲಾÂಬ್ಲೌಸ್.
- சங்கர செல்க',

Page 3
JEWEL PLAZA
Specialist in Finest Quality & Latest Jewellery
o 138/8 Sea Street, No : 373 Bazaar Street, olombo - 11 Vavuniya. e : 382924 Te: O24 - 22392
 

உங்களுடன்.
எமது வட்டத்தின் வெளியீடான மாருதம் சஞ்சிகையின் மூன்றாவது இதழுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்வடைகின்றோம். இது எமது ஆறாண்டு நிறைவு இதழாகவும் பரிமளிக்கின்றது. வவுனியா மாவட்டத்தில் கலை இலக்கிய கல்வி பண்பாட்டு வட்டத்தை ஏற்படுத்தி அதனை தரமான நிலைக்கு இட்டுச் செல்வதே கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினதும் மாருதம் சஞ்சிகையின் நோக்கமும் ஆகும். கடந்த ஆண்டில் எழுத்தாளர் சந்திப்பு, நூல் அறிமுகம், பழந்தமிழ் இலக்கிய அறிமுகம், பட்டிமண்டபம், கவியரங்கம், இசை நடன நிகழ்வுகள், புதிய பாடல் அறிமுகம், என எமது செயற்பாடுகள் தொடர்ந்தன. அதன் தொடர்ச்சியில் வன்னி ஊற்று இசை நாடாவை வவுனியா வளாக கலை கலாசார மன்றத்தினருடன் இணைந்து வெளியிடுவதில் நாம் பெருமையடைகின்றோம். ஒரு பல்கலைக்கழகம் எவ்வாறு சமூகத்துடன் இணைந்தும், பிணைந்தும், பணியாற்ற வேண்டும் என்பதற்கு இது ஒர் எடுத்துக்காட்டாகும்.
அதே போல சமூகத்தில் இயங்கும் கலை இலக்கிய கள்த்தாக்களை கெளரவிப்பதும் எமது கடப்பாடுகளில் ஒன்று. இம் மாவட்டத்தில் பணியாற்றிய பிற மாவட்ட எழுத்தாளர்கள், கல்விமான்களின் சேவையை கெளரவிப்பதன் மூலமும் அவர்களது பணியை அங்கீகரிப்பது எதிர்கால சந்ததியினருக்கும் அவர்களது பணி முன் உதாரணமாக அமைந்து விடுகின்றது. அந்த வகையில் முன்னாள் கல்வியற் கல்லூரி பீடாதிபதி திரு.செ.அழகரத்தினம், மற்றும் முன்னாள் மாகாண கல்வி பணிப்பாளர் திரு.ச.அருளானந்தம் S96 Ta560D6"Tu quid 6lI'ttib கெளரவிக்கின்றது.
மேலும் இந்த இதழில் வவுனியா பிரதேச எழுத்தாளர்களுடன் பிற பிரதேச எழுத்தாளர்களும் இணைகின்றார்கள். தரத்தை நோக்கி நடைபோடும் வேளையில் இளைய தலைமுறையை ஊக்குவிக்கவும் பாடசாலை, கல்வியியற் கல்லூரி, தொழில் நுட்பக் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களின் எழுதும் ஆற்றல், வாசிப்பு திறன் என்பவற்றை வளர்ப்பதே இன்றைய சூழலில் எமக்கு முக்கியமாகின்றது. இவ்வண்ணம் புதிய வாசகர்களை வரவேற்று இவ்விதழை உங்கள் கரங்களில் தவழவிடுகின்றோம்.
நன்றி
ஆசிரியர்கள்

Page 4
எங்கள் தமிழ்
தமிழே செந் தமிழே உன் தரம் சொல்லவா - செந் தமிழான புல வோரின் புகழ் சொல்லவா
(தமிழே.) அமிழ் தான மொழி யாகி அர சோச்சினாய் - மிக அரி தான பல பாடல் அரங் கேற்றினாய்
(தமிழே.)
(வேறு) திங்களுக்கும் மூத்தவள் நீ செங்கதிர்க்கும் ஒளி தருவாய் தென்றலுக்குத் தோழியும் நீ செந்தமிழே - உன்பின் சென்றவர்கள் தோற்ற தில்லை செழுந்தமிழே.
(தமிழே.) சங்கத்திலே வளர்ந்த வளே சத்தியம்போல் உயர்ந்த வளே அங்கத்திலே உயிர் எனவே அமைந்தவளே - எங்கள் அரனாரின் கவிதை யிலே சமைந்தவளே.
(தமிழே.) பொதிகை மலை இருந்த அகத்தியர் செய்து தந்த பொன்போலும் இலக்கண மாம் ஆடை கொண்டாய் - புலவோர் போற்றுதொல் காப்பியம் நன் நூலும் கொண்டாய்
vo- (தமிழே.)
பள்ளுப் பிரபந் தங்கள் பரணி கலம்ப கங்கள் தெள்ளு தமிழில் தந்தார் புவலர்கள் - அவை தெவிட்டா அமுதம் என்றார் தேவர்கள்.
(தமிழே.)
~கவிஞர் அகளங்கன்

திருக்குறள் போல ஒரு கருத்துக் கரு வூலம் செகத்தினில் இல்லை இல்லை இல்லையம்மா - இந்த செகத்துக் கவிதைக் கது 616d606ou JlbLDT.
(தமிழே.) கம்பனொடு வள்ளு வனும் காவியஞ் செய் இளங்கோவும் நம்பமுடி யாத படி கவிதை தந்தார் - இந்த நானிலத்தோர் அவை களையே அமுத மென்றார்.
(தமிழே.) (வேறு) திருப்புகழ் எனும் புகழ்க் கவிதையொடு தேவார
திருவா சகம் தந்த தெங்கள் தமிழ் விரும்புமுரை நடை நாவல் சிறுகதை புதுக்கவிதை
வீறாப்பாய் தந்த தமிழ் எங்கள் தமிழ்
அரும்புகழ்த்தேம் பாவணியும் அழகுமிகு சீறாவும்
அரிய நடை யில்தந்த தெங்கள் தமிழ்
இரும்புமனம் உருகிடவும் இளகிடவும் பக்தியினை
ஏற்றமொடு தந்ததமிழ் எங்கள் தமிழ்
(வேறு
அகமும் புறமும் தந்து அறமும் மறமும் தந்து இகமும் பரமும் தந்த தமிழே உறவும் உலகும் நீயே உணர்வும் உயிரும் நீயே உனையே புகழ்ந்து வாழ்த்திப் போற்றினோம் - எங்கள் உயிரே உந்தன் பெருமை சாற்றினோம்.
(தமிழே.)
(தமிழே.)
(தமிழே.)

Page 5
ஈழத்து நாவல் இலக்கியம். -அறிமுகக் குறிப்பு.
ஜ.கதிர்காம சேகரம் ஆசிரியர் வ/வவுனியா தழிழ் ம.ம.வி
ஈழத்து தமிழ் நாவல் இலக்கிய வளர்ச்சிப் போக்கினை மதிப்பீடு செய்யின் சென்ற நூற்றாண்டின் இறுதியில் வளரத்தொடங்கி இந்த நூற்றாண்டில் மிகப் பரவலான ஓர் இலக்கிய வகையாக வளர்ந்திருக்கின்ற உரை நடை இலக்கிய மெனலாம். 18ம் நூற்றாண்டில் இங்கிலாந்து, பிரான்ஸ், போன்ற மேற்குநாடுகளில் ஏற்பட்ட அரசியல் கைத்தொழில் சமூகப் புரட்சிகளே நாவல் இலக்கியம் தோற்றுவதற்கு களம் அமைத்துக் கொடுத்த காரணியாக அமைகின்றது.
இந்தியாவில் மத மறுமலர்ச்சி, தேசிய மறுமலர்ச்சி ஆகியவற்றின் விளைவாக உருவான கருத்துப் புரட்சியே அங்கு நாவலுக்கான களமாக அமைந்தது.
1879ம் ஆண்டு வெளிவந்த மயூரம் வேத நாயகம் பிள்ளையின் பிராதாப முதலியார் சரித்திரமே தமிழில் எழுந்த முதல் நாவல் இலக்கியமாக கருதப்படுகின்றது. இக்காலகட்டத்தில் ஈழத்திலும் தமிழ் நாவலுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1856 இல் வெளிவந்த காவலப்பன் கதையே ஈழத்தில் முதல் நாவல் என்பர் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை. ஆனால் 1885 இல் வெளிவந்த அறிஞர் சித்திலெப்பையின் அசன் பேயின் சரித்திரம் முதல் நாவலாகக் கொள்ளப்படுகின்றது. இந்த நாவலின் நாயகனாக அஸன் காவிய நாயகனுக்குரிய பண்புகளுடன் படைக்கப்பட்டுள்ளான். மார்க்கப் பற்று மிக்கவனான அவன் ஆங்கில கல்வி கற்று உயர் பதவி வகித்த போதும் தன் மத அனுட்டானங்களில் பற்றுமிக்கவனாகவும் தன் வீரதீர பராக்கிரமங்களால் காளையை அடக்கி ஆங்கில மாதின் காதலுக்குரியவனாகி ஈற்றில் அவளை இஸ்லாத்திற்கு மதம் மாற்றி மணந்து கொள்கின்றான். இது அரேபிய பகைப்புலத்தில் நிலவும் கதையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அரேபிய இரவுக் கதையின் அற்புதத் தன்மை இங்கும் காணப்படுகின்றது. மதப்பிரச்சாரத் தன்மை கொண்டதாகவும் விளங்குகின்றது. ஈழத்து மண்ணைக் களமாகக் கொண்டு நாவல் எழுதும் மரபு 20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் இருந்து தொடங்குகின்றது. இந்த வகையில் சி.வை. சின்னப்பிள்ளை எழுதிய வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம் குறிப்பிடத்தக்கது. இதுவும் காவியத்தன்மை நிறைந்ததாகவும் நாயகனின் வீரதீர செயல்களை சித்திரிப்பதாய் அமைகின்றது. கொழும்பு, யாழ்ப்பாணம், ஈறாக ஈழத்தின் பல பாகங்களில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சைவபக்தியுணர்வு விஞ்சிநிற்கின்றது.
ஈழத்து தமிழ் மக்களது சமுதாய பிரச்சினையை பொருளாகக் கொண்டு எழுந்த முதல் நாவல் என்ற பெருமையை திருமதி மங்கள நாயகம் தம்பையா எழுதிய 1914இல் வெளிவந்த நொறுங்குண்ட இதயம் பெறுகின்றது.
6

இதில் கிறிஸ்தவ மதக் கருத்துக்கள் விரவிக் காணப்படுகின்றன. தி.சரவணமுத்துபிள்ளை எழுதிய மோகனாங்கி எனும் கதையும் இக்காலத்தைச் சார்ந்தது.
மேற்கூறிய நாவல்களை கருத்திற் கொண்டு நோக்கும் பொழுது "1915வரை நீண்டதும் வசன ரூபத்தால் அமைந்தனவுமான கற்பனைக் கதைகளே முதன்மை பெறுவதனை” அவதானிக்கலாம்.
பாத்திர உருவாக்கம், பாத்திர உரையாடல் கதைப்பின்னல்கள் என்பவற்றில் யதார்த்தப்பண்பை பேண் அதிக கவனம் செலுத்தாவிடினும் அக்கால சமூக நிலைமைகள் சமூகத்தில் நிலவிய கருத்தோட்டங்கள் ஆகியவற்றை நாவல்களில் ஓரளவு பிரதிபலித்துள்ளனர். ஈழத்து ஆரம்ப காலங்களில் பிரச்சார உணர்வு தமிழக நாவல்களை விட விஞ்சிக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இலங்கையில் இடம் பெற்ற கிறிஸ்தவ மதமாக்கல் முயற்சியும் அதற்கு எதிராக சுதேசிகளிடம் தோன்றிய சுதேச மதப்பற்றும் நாவல்களில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.
இதே கால நாவல்களில் சமுதாய பிரச்சினைகள், மர்மப்பண்புகளையும் சம்பவச் சுவையையும் பொருத்தி எழுதியமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
உதாரணமாக - ப.நல்லையா (முன்னாள் வீரகேசரி பத்திரிகை ஆசிரியர்) i) இரத்தினாவழி அல்லது காதலின் மாட்சி (1938) ii) காந்தாமணி அல்லது தீண்டாமைக்கு சாவுமனி (1938) ii) சோமாவதி அல்லது இலங்கை இந்திய நட்பு (1940)
அறப்போதனை அல்லது அறிவியல் நோக்கம், கதை சுவைக்காக திடுக்கிடும் சம்பவங்களும் கொண்ட நாவல்கள் தோன்றுவது முக்கிய போக்காக இருந்த அதேவேளை குடும்ப உறவுகளையும் அவற்றில் தோன்றும் பிரச்சினைகளையும் உணர்ச்சி போராட்டங்களையும் முக்கிய போக்காக கொண்டு நாவல் எழுதும் போக்கு 1940 களில் காணப்பட்டது. இதற்கு எடுத்துக் காட்டாக கதி. சம்பந்தனின் பாசம், மனநிழல், அன்னபூரணி அ.செ. முருகானந்தனின் யாத்திரை என்பவற்றினைக் கூறலாம்.
மத்தாப்பு, தீ போன்ற பரிசோதனை முயற்சி நாவல்களும் எழுந்தன. 1943 இல் மறுமலர்ச்சி சங்க எழுத்தாளர்களிடையே இயங்கிய சுவாமி விபுலானந்தர் “எமது எழுத்தாளர்கள் எமது வாழ்வையும் வளத்தையும் பிறர்க்குணர்த்தும் வகையில் புனைகதைகளைச் சித்திரிக்க வேண்டும்” என்ற வேண்டுகோள் இக்காலத்தைத் தொடர்ந்து வந்த நாவல்களில் பிரதிபலிப்பதை அவதானிக்கலாம். 1950 களின் நாவல் பற்றி பார்க்கும்போது இக்காலப் பிற்பகுதியில் இருந்து ஈழத்து நாவல்களில் புதியதொரு சகாப்தம் தொடங்குகின்றது. 1956 இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆரம்பித்து அச்சங்கத்தின் முக்கிய கோசமாக ஈழத்து தமிழ் இலக்கியம் என்ற கோட்பாடு கோலோச்சியது, மண்வாசனை, தேசிய நவீன இலக்கியம், யதார்த்தவாதம் என்பன முக்கியம் பெற்றன. இவ் இலக்கியம் சார்ந்த எழுத்தாளர்களில் தமிழ் நாவல்களுக்கு புதியதோர் பரிமாணத்தைக் கொடுத்தவர் என்ற வகையில் இளங்கீரன்
7

Page 6
குறிப்பிடத்தக்கவர். இவரும் செ.கணேசலிங்கனும் அரசியல் பொருளாதார சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாவல்களை எழுதினர். மார்க்சிய சமூகவியல் நோக்கில் சமூக நிலைமைகளை அவதானித்து அவற்றை நாவல்களின் பொருளாக கொண்டோர்களில் நீண்ட பயணம் (1965) செவ்வானம் (1967) ஆகிய நாவல்களை எழுதிய செ.கணேசலிங்கன் குறிப்பிடத்தக்கவர்.
ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் முக்கிய பிரச்சினையாக இருந்த தீண்டாமையை அதாவது அடிநிலை மக்களின் வாழ்க்கையையும் பிரச்சினைகளையும் எழுத்தில் வடிக்கும் முயற்சியில் தமிழ் மக்களிடையே சமூக அடக்கு முறையின் வடிவமாக இருக்கும் சாதிப்பிரச்சினை நாவல்களில் அம்பலப்படுத்தப்பட்டன. இந்த வகையில் செ.கணேசலிங்கத்தின் நீண்டபயணம், டானியலின் பஞ்சமர், அகஸ்தியரின் எரிமலை போன்றன குறிப்பிடத்தக்கன. 1970 களில் வீரசேகரி பலதரமான ஈழத்து நாவல்களை வெளியிட்டது. மண்வாசனையை அடிப்படையாக கொண்டு எழுதப்படும் பிரதேச நாவல்களின் தோற்றம் குறிப்பிடத்தக்க அம்சமாகும். உதாரணமாக பாலமனோகரனின் நிலக்கிளி, அருள் சுப் பரிரமரிையனின் அவர்களுக்கு வயது வந்து விட்டது. எஸ்.பொன்னுத்துரையின் சடங்கு, டானியலின் போராளிகள் காத்திருக்கின்றார்கள், செங்கையாழியானின் வாடைக்காற்று, கட்டாறு, என்பவற்றைக் கூறலாம்.
இங்கு பின்வரும் வகைப்பாடுகளில் நாவலின் விடயங்கள் அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.
. சமகாலப்பிரச்சினை நாவல்கள்
அரசியல் பொருளாதாரப் பிரச்சினை நாவல்கள் . பாலியல் பிரச்சினை நாவல்கள்
(gö(6tb u Lofo bft66d866ir மலையகப் பிரச்சினை நாவல்கள் நகைச்சுவை நாவல்கள் வரலாற்று நாவல்கள் . சாதிப்பிரச்சினை நாவல்கள் 9. பிரதேச நாவல்கள். இவற்றறுடன் 1980 களில் இருந்து சில புதிய போக்குகள் நாவலில் இடம் பெறுகின்றன. இப்புதிய போக்கின் அடிப்படையில் எழுதியவர்கள் கேடானியல், செ.கணேசலிங்கன், செங்கையாழியான், சொக்கன், தெளிவத்தை ஜோசப் (காலங்கள் சாவதில்லை), பாலேஸ்வரி, செ. யோகநாதன், சி.வி.வேலுப்பிள்ளை, ஈழத்து சோமு, செம்பியன் செல்வன், சிதம்பரதிருச்செந்தி நாதன் போன்றோரும் நாவல் படைப்பில் கவனம் செலுத்தினர்.
1980 களில் தேசிய இனப்பிரச்சினை உக்கிரத்தன்மை அடைந்ததால் இனப்பிரச்சினை பல்வேறு வகையில் நாவல்களில் வெளிப்படுத்தப்படுகின்றது. இப்பிரச்சினை 2 கோணங்களில் சிறப்பாக நாவல்களில் வெளிப்படுத்தப்படுகின்றது. மேற்படி பேரினவாதப் பிரச்சினையால் ஏற்பட்ட மலையக தோட்டத் தொழிலாளர் நிலைபற்றி தெளிவத்தை ஜோசப், மாத்தளை சோமு,நந்தி தி.ஞானசேகரன் முதலானோர் செல்வாக்கு செலுத்துகின்றனர்.
8

மற்றையது பேரின வாதச் சூழலில் பாதிப்புற்ற ஈழத்தின் வடபிரதேச தமிழர்களின் வாழ்க்கையை பகைப்புலமாக கொண்ட ஆக்கங்கள். 1980 களில் காணப்படும் முக்கியத்துவம் பெற்ற அடுத்த அம்சம் சாதி பிரச்சினையை மையமாக கொண்டு எழுதப்படும் அம்சம், செங்கையாழியானின் காட்டாறு, பிரளயம், என்பனவும் நந்தியின் தங்கச்சியம்மா மற்றும் தெணியானின் நாவல்களை குறிப்பிடலாம். இக்காலகட்டத்தில் இனப்பிரச்சினை, சாதிப்பிரச்சினை, என்பற்றுடன் மற்றைய சிறப்பம்சம் ஈழத்தின் ஒவ்வொரு பிரதேசத்திற்குமுரிய மண்வாசனையுடன் பிரதேச நாவல்கள் படைக்கப்பட்டமையாகும்.
இக்காலகட்டத்தில் 1980 களில் முன் காணப்பட்ட பொதுவாக சமூகப் பொருளாதார முரண்பாடுகள், குடும்பப் பிரச்சினைகள் ஏனைய பாரம்பரிய கருப்பொருளைக் கொண்ட நாவல்கள் என்பன தொடர்ந்தும் எழுதப்படுகின்றன.
1990ஐ தொடர்ந்து வந்த தசாப்பத்தில் தொடர்ந்தும் செங்கையாழியான், வ.அ.இராசரத்தினம் போன்றோர். தமது நாவல் பணியை தொடர்கின்றனர். வரலாற்று நாவலுக்கு எடுத்துக் காட்டாக முல்லைமணி எழுதிய வன்னியர் திலகம், மல்லிகை வனம் ஆகியனவற்றை கூறலாம். புலோலியூர் சதாசிவம் எழுதிய நாணயம், சோ.ராமேஸ்வரனின் வடக்கும் தெற்கும் போன்றன கவனத்திற்குரியன. முனைப்புற்றிருக்கும் இனப் போராட்டத்தின் மத்தியிலும் யாழ்ப்பாணத்தை பகைப்புலமாகக் கொண்டு அங்கு நீறுபூத்த நெருப்பாக இருக்கும் சாதிப்பிரச்சினையை அம்பலப்படுத்தி தெணியானினால் எழுதப்பட்ட சாகித்திய அக்கடமிப் பரிசு பெற்ற மரக்கொக்கு போன்ற நாவல்கள் வெளிவருவதும் சுட்டிக்காட்ட வேண்டிய அம்சமாகும்.
சமகால தமிழ் இலக்கியத்தின் கலாசார முனைப்புகளில் ஒன்றாக இலங்கையில் இருந்து வேற்று நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்வோரின் மத்தியில் இருந்து வரும் ஆக்கங்கள் புலம் பெயர்ந்தோர் இலக்கியம் என்ற தலைப்பில் அழைக்கப்படுகின்றது. இந்த வகையில் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து சென்ற ஏராளமான இலக்கிய வாதிகளுள் அகஸ்தியர், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம, லெ.முருகபூபதி, போன்றோரைக் குறிப்பிடலாம்.
பெண்ணியம் என்ற எண்ணக்கருவை முன்னிலைப்படுத்தி பெண்நிலை வாத கருத்துக்கள் நாவல்களில் இடம் பெறுவதும், இக்கால கட்டத்தில் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்கள் இலக்கிய உலகில் பிரவேசித்திருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். கோகிலா மகேந்திரனின் துயிலும் ஒருநாள் கலையும் ஒரு பெண் விடுதலை சார்ந்த படைப்பு, தாமரைச் செல்வியும் இத் துறையில் கவனம் பெறுகின்றார்.
மேலும் மலையக மக்களின் வாழ்க்கை அவலங்களை கருப்பொருளாக கொண்டு பல நாவல்கள் எழுந்தன. கோகுலம் சுப்பையாவின் தூரத்துப் பச்சை, நந்தியின் மலைக்கொழுந்து தெளிவத்தை ஜோசப்பின் காலங்கள் சாவதில்லை, பெனடிக்பாலனின் சொந்தக்காரன் தி.ஞானசேகரனின் குருதிமாலை என்பனவும் குறிப்பிடத்தக்கன.

Page 7
இவ்வாறாக ஈழத்துதமிழ் நாவல் பற்றி சுருங்கக் கூறின் நாவல் பற்றிய கண்ைேrட்டத்தில் பழைய போக்கு தொடரும் வேளை புதிய போக்குகளும் இம் பெறுவதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
(வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினால் நடத்தப்படும் பெளர்ணமிக் கருத்தாடல் ஒன்று கூடற்றொடர் வரிசையில் 23.07.99 அன்று நிகழும் அரங்குக்கென ஆக்கம் பெற்றது.)
10
 

1.
10.
11.
12.
13.
வவுனியாவின் நாட்டுக் கூத்த செல்நெறிவிபரம்
(1972 - 1998 assog)
* சில குறிப்ாகனர்/
“நாட்டுக்கூத்துக் கலைஞர்” அமரர் திரு.S.Pஅலோசியஸ் முன்னர் அதிபர் வ/இந்துக்கல்லூரி அவர்களின் நெறியாள்கையில் வவுனியா மாவட்டத்தில் நடாத்தப்பட்ட நாட்டுக்கூத்துக்கள் யாவும் தென்மோடி நாட்டுக் கூத்துக்கள் ஆகும்.
1991ம் ஆண்டு (20.12.1991) வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட கலை, இலக்கிய சேவையைப்பாராட்டி விபுலானந்தர் நூற்றாண்டு விழாவில் இலங்கைத் தேசிய சர்வோதய சங்கம் “நாட்டுக்கூத்துக் கலைஞர்’ என்ற பட்டமும், பொற்கிளியும் வழங்கி கெளரவித்தது
1973 “ஞானசவுந்தரி’ வவுனியா புனித அந்தோனியார் ஆலu
திறந்த வெளியரங்கு 1974 “ஞானசவுந்தரி’ செட்டிகுளம் கத்தோலிக்க ஆலய அரங்கு
1974 ‘அகந்தையின் அழிவு வவுனியா நகரசபை திறந்த வெளியரங்கு 1975 ‘விஜயமனோகரன் ஓமந்தை கத்தோலிக்க ஆலயம் 1976 ‘விஜயமனோகரன்' வவுனியா நகரசபை திறந்த வெளியரங்கு 1981 °தாவீதும் கோலியாத்தும்’ (தென்மோடி)
வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்று அகில இலங்கைப் போட்டிக்கு தெரிவு பெற்றது. 1988 ‘ஏரோடியாள் சபதம் வவுனியா புனித அந்தோனியார் ஆலயத் திறந்த வெளியரங்கு
1992 ‘காத்தவராயன்' 6t) & 6). Lify estig விதி தியாச மலை ஆசிரியைகள் p
1993 ‘காத்தவராயன்’ போருட் நிறுவன 93ம் ஆண்டு பயிற்சி DIT66316ies6ir
1994 ‘காத்தவராயன்’ போரூட் நிறுவன 94ம் ஆண்டு பயிற்சி மாணவிகள்
1995 ‘ஏரோடியாள் சபதம் வவுனியா புனித அந்தோனியர் out அரங்கு 1996 "தாவீதும் கோலியாத்தும் யாழ்பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் காமினி மகாவித்தியாலயம் 1997 ‘மூவிராசாக்கள் - (வடமோடி) நாட்டுக்கூத்து புனித அந்தோனியார் ஆலய அரங்கு வவுனியா திருமறைக் கலாமன்றத்தினர்.

Page 8
2.
17。
9.
20.
‘நெறியெழில் அமரர் திரு நடராசா சோமசுந்தரம் (முன்னாள் அதிபர் வ/ பெரியகோமரசன் குளம் அ.த.க.பா) அவர்களின் நெறியாள்கையில் வவுனியா மாவட்டத்தில் நடாத்தப்பட்ட நாடகங்களும் நாட்டுக் கூத்தும் (04.04.1997 இல் வவுனியா நகர சபையால் நெறியெழில்’ பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.)
'செஞ்சோற்றுக் கடன்’ 30.05.1979 வவுனியா இறம்பைக்குளம் மகளிர்
மகாவித்தியாலயம் - கலைவிழா 01.06.1979 நகரசபை வவுனியா மாவட்ட நாடக விழா 1ம் இடம்
‘கர்ணன் வவுனியா மாவட்ட ஆசிரியர்கள் நடிப்பு 06.10.1991 கோயிற்குளம் இந்துக்கல்லூரி ஆசிரியர் தினம்
25.12.1991 வதமிழ் மத்திய மகாவிததியாலய ஐயாத்துரை மண்டபம்
* பாஞ்சாலி சபதம் 18.07.1991 வசைவப்பிரகாச மகளிர் கல்லூரி வலயமட்ட தமிழ் மொழித் தினம் 28.01.1991 கோயிற்குளம் இந்துக்கல்லூரி உழவர் தின விழா 16.06.1992 வ! காமினி மகாவித்தியாலயம்
Lingp6ft
21.03.1978 வ/பெரியகோமரசன்குளம் அ.த.க.பா
'ஏகை வன்’
28.06.1979 நகர்சபை சிறுவர் நாடக விழா ‘காத்தவராயன்’ நாட்டுக்கூத்து தென்மோடி 18.05.1992 வ/சைவப்பிரகாச மகளிர் கல்லூரி தமிழ்த்தின விழா - 12 மணித்தியாலம் 2009.1992 தி சண்முகானந்தா மகாவித்தியாலயம் மாகாண மட்ட தமிழ் மொழித்தினம் 30.08.1994 சமளங்குளம் முத்துமாரி அம்மன் வருடாந்த உற்சவம் 2 மணித்தியாலம் 20.08.1997 வெளிக்குளம் பிள்ளையார் வருடாந்த உற்சவம் 2 மணித்தியாலம்
20.08.1995 வீரபுரம் 2 மணித்தியாலம் 1994.03ம் மாத பெளர்ணமி விழா 1 மணி நகரசபை உள்ளரங்கு 1995 2ம் மாத பெளர்ணமி விழா 2மணி நகரசபை வெளியரங்கு
தொகுப்பு திருமதி ஜெ.எஸ். அரியரத்தினம் வஇந்துக்கல்லூரி
வவுனியா.

நடனப் பாடல்கள் இரண்டு
செம்பு நடனப் பாடல்
வாரீர் சகிகளே செந்தமிழ் விளங்கி பாடியே நாமும் ஆடுவோம்
இலக்கிய நண்பர்கள் வட்டமும் இதுவே இனிதே நற்தமிழ் என்றுமே வளர்ந்திட நாமகள் துணையை வேண்டுவோம் நறுமலர் தூவி வாழ்த்துவோம்.
வாரீர் சகிகளே கைவளை குலுங்கிட செம்பதை ஏந்தி ஆடுவோம்.
கற்பகதரு என விளங்கிடும் மன்றம் கிளை என அறிஞர் பலரையும் கொண்டு என்றுமே தளைத்திட வாழ்த்துவோம் சிறுமியர் நாம் சுழன்றாடுவோம்.
வாரீர் சகிகளே செம்பினை எறிந்து ஜாலங்கள் பல நாம் காட்டுவோம்
சங்கம் வளர்த்த தமிழ் எங்கள் தமிழே அதை இங்கு வளர்ப்பது நண்பர்கள் வட்டமே பல பல ஆண்டு வாழ்கவே நம் தமிழ் என்றும் ஓங்கவே
வாரீர் சகிகளே செந்தமிழ் விளங்கி. பாடியே நாமும் ஆடுவோம்.
13

Page 9
கும்மிப்பாடல்
கும்மியடித்து மகிழுங்கடி - எங்கள் இலக்கிய வட்டத்தைப் போற்றுங்கடி நம்மிதயந்தனில் நிறைவு தந்த இந்த பெளர்ணமி தினமதில் ஆடுங்கடி
தானா தன்னானனா தன தானா தன்னானனா
கலை இலக்கியம் எம் உயிர்மூச்சு gsods&us sit b alb8a Tuilabig b6i6TTAb Ef5L u tib 336b6)TLDs) கலைமகள் பாதம் பணியுங்கடி
தானா தன்னானனா தன தானா தன்னானனா
வவுனியா நகரிலே ஓங்கி நிற்கும் வளமான அன்னையை பாடுங்கடி - அவள் அறிவொளி எங்கும் சூழ்ந்திடவே ஆனந்தக் கும்மியடியுங்கடி
தானா தன்னானனா தன தானா தன்னானனT
இலக்கிய அறிவை எமக்குத் தந்து வன்னி மண்ணை ஓங்கச் செய்து இலக்கிய வளம் தனை கூறி நிற்கும் இலக்கிய வட்டத்தை போற்றுங்கடி
தானா தன்னானனா தன தானா தன்னானனா
பாடலாக்கம் ஆசிரியை :- சண்முகப்பிரியா குலேந்திரன் (லண்டன்)
4
 
 
 
 
 

கவியரங்கக் கவிதை
அண்பெண்று கொட்டுமுரசே
அன்பென்று கொட்டு முரசே அருமையான தலைப்பினிலே கவியொன்று தரவந்தேன் காலை வந்தனமும் தந்தேன் - கவி அரங்கொன்று அரங்கேற அவையினிலே கலைஞர்கள் அனைவரது ஆசியிலும் கவியொன்று பாடவந்தேன். கவிதை யென்று கொள்ளாதீர் கவிதை போல - ஒன்று தவறிருப்பின் பொறுத்திடுவீர்
அன்புதனைப் பாடச் சொல்லி கவியடியைத் தந்தார்கள் எந்த அன்பை நான்பாட? பத்துமாதம் சுமந்து பெற்று பெண்மைக்கே உரித்தான பண்புகளை - அன்புடனே வளர்த்துவிட்ட அன்னையவள் அன்புதனைப் பாடுவதா?
பத்து வயதானாலும் பாரம் இல்லை என் பிள்ளை என்று - தோள்களிலே சுமந்து வந்த - தந்தை அவர் அன்புதனைப் பாடுவதா?
அஞ்சி அஞ்சி நாமிருக்க கொஞ்சிக் கொஞ்சி மொழிபேசி நெஞ்சினிலே உரமூட்டி பாரினிலே தடம்பதிக்க பல கலைகள் கற்றுத்தந்து
பண்புகளும் சொல்லித்தந்து பண்பாடுகள் பதிய வைத்து பழக்கிவிட்ட ஆசான்கள் இதயத்தில் இருந்து வந்த அன்புதனைப் பாடுவதா?
இன்பத்திலும் துன்பத்திலும் சரிசமமாய் பங்கெடுத்து
சரிவுகளில் தோள்தொடுத்து
உணர்வுகளை உர்ைந்து கொண்டு - உரியவழி காட்டுகின்ற நண்பர்களின் அன்புதனைப் பாடுவதா?
இல்லை உற்றாரும் உறவினரும் a flo)IDut..65s firit (6,545 உன்னதமாய் நாம் வாழ உரிய வழி காட்டி என்னை உணர்த்திவிட்ட அன்புதனைப் பாடுவதா?
சில நிமிடம் சிந்திக்கிறேன் பசிக்கு உணவு மானத்திற்கு உ ை இருப்பதற்கு வீடு இவற்றில் அன்பெதற்கு? இப்போது புரிகிறது வாழ்க்கைக்கே அன்புதானே அத்திவாரம்
பாரினிலே பிறக்கையிலே தாயவள் மடியிலிலும் தந்தை அவர் தோள்களிலும் உறவினர்கள் உறவினிலும் ஆசான்கள் அன்பினிலும் தோழர்களின் நட்பினிலும்
நாம் கண்ட சுகங்கள் எல்லாம் சும்மா கிடைக்கவில்லை அவரவர் இதயத்தில் இருந்து வந்த அன்பினாலே விளைந்தவைதான்.

Page 10
நேற்றுக் கூட
என் அன்னை அன்பாய் - அறிவுரையாய் சொல்லி வைத்தாள் - ஒருசேதி பெண் என்று பிறந்துவிட்டாய் பெரும் கவனம் உனக்கு வேண்டும் பேதமை தான் கொள்ளாதே!
அன்பு என்று சொல்லிப் பல உறவுகள் புதிதாய்வரும் மதிக்கலக்கம் உனக்கு வேண்டாம் மடமைதான் உனக்கு வேண்டாம் சிந்தையிலே திடமிருந்தால் புயல் கூட சிதைக்காது.
மங்கையராய் பிறப்பதற்கே
DAB6 b Gauluj (86.60ir(BLDublDir. அன்புடனே உன் அறிவு அகிலம் புகழ வேண்டும் அம்மா! அன்பு தானே உயிர்மூச்சு
அகிலத்தை எண்ணி நிதம் அச்சம் தான் கொள்ளாதே அன்பு மட்டும் உன்னிடத்தில் ஆயுதமாய் இருக்கையிலே அகிலமே உன் கையில் அச்சம் தான் வேண்டாமே என்று என் அன்னை அன்பாய் அறிவுரையாய் என்னிடத்தில் சொல்லி வைத்தாள்.
சென்ற வார செய்தியிலே “காதலை எதிர்த்த பெற்றோரை தங்க மகன் வெட்டிக் கொலை” இது தான இன்றைய காதல்
சினிமாவுக்கு வேணும் என்றால் சரியாய் படலாம் எமக்கு வேண்டாம் இந்த
காதல் எல்லாம் கலாசாரத்தை சீரழிக்கும் களியாட்டக் காதல் எல்லாம் கனகாலம் நிலைப்பதில்லை
அன்பு என்று சொல்லி 6Tibé0)LD 9(1960) Du Fris85t பார்க்காதீர், அன்பு என்று சொல்லுவதே அடிப்படையில் புரிந்துணர்வே
அன்பு என்று சொல்லிப்பல உண்மை அன்பை கொல்லாதே இரு உள்ளம் அன்பு கொண்டு இணைவதனை - அன்புடனே வாழ்த்திடுவோம் பல்லாண்டு வாழ்கவென.
கண்டவுடன் காதல் கொண்டு அதை ஆழமான அன்பென்று பலவிதமாய் கவிபாடிப் - பின்னர் காதல் தோல்வி என்பர் தாடியையும் வளர்த்துநிதம் சோகமே உருவெடுப்பர்.
பெண்களை நம்பாதே - அவள் கண்களை நம்பாதே என்று பற்பல கவிபாடி காலத்தையும் - நேரத்தையும் வீணடித்து திரிகின்ற காதலை மட்டும் அன்பென்று சொல்லாதிர்
எமைப் போன்ற மங்கையரால் சகித்துக் கொள்ள முடியாது.
உண்மையான காதல்கள் இதயங்களில் பிறக்கட்டும் இனிமையான வாழ்வுதனை அன்புதானே அணைத்துக் கொள்ளும்
16

உலகமே உண்மை என அன்பே சிவமென்போம்.
அன்புதானே உண்மை என அன்பே வாழ்வென்போம் அப்போது கொஞ்சம் அவளியிலே நாம் வாழ உணர்வு வரும் அன்புடனே உறவு ಇಂಗ್ಲಿ;
. அன்ைவருமே வளமாய் வாழ அகிலத்திலே அன்புதனைப் அன்பென்று கொட்டுமுரசே பாராட்டப் பலபேர்கள் பற்பிழையும் பொறுத்து பணத்துக்காய் சிலபேர்கள் எந்தன் சிறுகவிஷய அறிவுக்காய் சிலபேர்கள் கேட்ட நெஞ்சங்கள் அழகுக்காய் சிலபேர்கள் அனைவருக்கும் 6ாந்தன் தமது வேலைக்காய் சிலபேர்கள் அன்பு கலந்த நன்றிகள். அகிலத்தை அறிந்துநீயும் அன்புடனே வாழ வேண்டும். சி.சிவாஜினி
(71வது கலை இலக்கிய கருத்தாடல் நிகழ்வில் கவியரங்கில் லாசிக்கப்பட்டது)
பத்மநாதன் சிவமைந்தனின் 128ஆவது இசையரங்கு.
யாழ்ப்பாணம் நயினைதீவை சேர்ந்த பத்ம நாதனின் மைந்தன் சிவமைந்தன் சிறு வயது முதல் இசைக்கலையைப் பயின்று பாடி வருகின்றார். தாயாரிடமும், கலாபூசணம் பொன் சுந்தரலிங்கம் அவர்களிடமும், பயின்று இன்று திருமதி. வதனி பூரீதரனிடம் இசை கற்கின்றார். யாழ் மத்திய கல்லூரியிலும், வவுனியா இந்து மாமன்றம் மற்றும் இலங்கையின் பல பாகங்களிலும் இசையரங்குகளை நடத்தி வருகின்றார். இவருக்கு இசைமைந்தன் எனும் விருதினை வவுனியா இந்து மாமன்றம் வழங்கியது. க.பெ.த.சா.தரம் 11யின்று வரும் சிவமைந்தனது 100வது அரங்கு கடந்த வருட வட்ட ஆண்டு விழாவில் நடைபெற்றது. (படம் கீழே) இவரது சகோதரர் பத்மநாதன் ரங்கநாதன் மிருதங்கம் வாசிக்கின்றார். இவ்வாண்டு அவர் 125 அரங்கில் பாடுகின்றார்.
17

Page 11
கவிஞர் கண்ணையாவின் கவிதைகள்
மனிதம் படும் பாடு
மானிடர், மானுடர், மனிதம், மாந்தள் எனும் தேனினுமினியர் மக்களிவர் தெளிந்திலர் இக்காலம். மனித விழுமியம் மாறுபட்டுச் சேறாகின்றது. புனித கொள்கையில் புரண்டு வீழ்ந்தழிகின்றனர் அநியாயம் அட்டூழியம் - அடக்குமுறை - ஆதிக்கம் அநியாயம் போர் பூசல், ஆளுமையில் சீர்கேடு. தனிஞாயம் - தப்பெண்ணம் - தவறு தலைதூக்கி இனிஞாயம் பேசுவதில் எந்தபலனும் வீண். துவேசம், பொறாமை, துர்க்குண, தீமைபாவம்பழி, சர்வேசுரன், புத்தன், சங்கரன், கண்ணன், அல்லாவென கர்வம், அநீதியில் கடமைமறந்து போகின்றனர். சர்வம் அறிந்த கடவுளின் தயவுதவி ஏதுமில்லை. காதல், காமம் இரண்டும் கலந்து வாழ்வு சரிகிறது. காதல் இல்லை! இல்லை! அவதிகஷ்டம் மீட்பில்லை. சூரியன் சுடுகிறது, சுடர்மதி பிறழ்கின்றது, ஆரியன், திராவிடன் அடிபட்டு மாள்கின்றான். சொந்தம் அந்தஸ்து சுகம் சீர் அழிகின்றது. அந்தோ ஆள்பார்த்து அகற்றிவிடும் பரிதாபம் படித்தவன் இலக்கியவாதி பார்த்துப் பார்த்து வேதனை அடுத்தவன் வாழ்வில் உலை; அவனை உருப்பட விடமாட்டான் கடவுளை மறந்து கடமையில் பிறழ்ந்து கலைகலாசார உடமை இழந்தும் உணர்வு கொண்டிலன் மனிதனிவன் நீதி நேர்மை நியதி நட்பு நிகரில்லா அன்பு ஈகையாய் இலக்கியம் ஓதி கூர்ந்து சமாதான ஒற்றுமையில் வாழ்வதே சிறப்பு ஆகும். காதல், வாழ்க்கை, கடவுள் பக்தி, கருணை, கடப்பாடுடன் மோதல் போர் முடிவாயின் முயல்வன முழுதுங்கூடும்.
18

என்ன
KO 56)& Ess) -
ஓ! நெஞ்சமே என்ன கலக்கம்? எங்கும் போர் எங்கும் அழிவு. எத்தனை கொடுமை எத்தனை அநீதி. எண்ணி எண்ணி என்னில் கவலை. இனிய கடவுளை இறைமை தன்னை இனிமேல் அடைய இருப்பனோ? நான் இழிவான செயல் இன்னல் பாவம் இயல்பு கெடுதல் இடர்பாடுகள் அன்பு பண்பு அறிவு ஆற்றல் 9|L8585ld, 36.560LD அமைதி சாந்தம்
அவனியில் இல்லை.
அடக்கு முறையில் அச்சம் பயப்பீதி அனைத்தும் பாழே 2-6)(35 (6Libt is (6 உலைவு சீரழிவு 2–60ö60)[D DVIsrG உயர்வே குறைபாடு உறுதிகள் இல்லை
உழைப்பில்லாமை உயர் கருமங்கள் உருச் சிதைவுகள் ஒற்றுமை இன்மை ஒழுக்கம் இன்மை ஒருவரோ டொருவர்
ஒன்றி இராமையே ஒருவரின் செருக்கு
ஒருவன் ஒருத்தியை
ஒட்டிப் பிரித்து ஒதுங்கி சாகிறான் கையுறை(uயின்) கைங்கரியம் கைம்மாறு கைவரின் கைமேல் கைகூடும் கை ஒயின் கை துக்கும் வாய்மை
மெய்மை
g|Tul60)to தாய்மை - இவை பொய்மை சேய்மை (8ul60)d
g56)T&T. தீச்சுட்டதும் கைவிட்டது போல் என் படைப்பு.
19
ஓரெழுத்து பதம்
6)iff
605
தf
t AXT தே கோ தோ? (,
|
83
தை
6)) தீ(ப்)
6)
R Glir
g நோ
į jff
丛°[
60)6)
நை
மே Gofr?

Page 12
கனடாவில் இருந்து ஒரு கடிதம்.
த.விஜயசேகரன்
sayisolautif றிகணேசனின் சர்வதேச அடிமைகள் கனடாவில் திரு.த. விஜயசேகரனின் நெறியாள்கை அரங்கேறிய போது தெறித்த எதிர்வினைகள்)
“மூளைாசாலிகள் நீவின் ஓடிவிட்டால் இங்கு தோன்றுமா ஒரு புதுவாழ்வு” “1ரெங்கும் பரந்து ஊirவிட்டு ஊர் மாறி, எல்லை மாறி எல்லைகள் மீறி. எங்கே போனார்கள் இந்த மனிதர்கள்”
வெற்றிகரமாக அரங்க அளிப்பு - அதே உணர்வு, அதே வசனங்கள். அதே நடிப்புகள், எல்லாம் செய்யப்பட்டன. இவற்றுடன் பின்னணி இசையும், மேடை ஒளி அமைப்பும் எமக்கு இன்னும் உத்வேகத்தை அளித்தது.
நாளைய மேடையேற்றமும் இவ்வாறே இருக்க வேண்டும். என்பதில் 6ானக்கு பேரவா
பார்த்தவள் பலரின் பதிவுகள்.
மதியழகன் : It's a very very beautiful play. 260iróOLDuigi) (ET6);560)gs உணர்ந்து போடப்பட்ட நாடகம் வித்தியாசமான அரங்காக அமைந்துள்ளது. இதில் குறைகூறுவதற்கு என்று இடம் இல்லை எல்லாம் நன்றாக விளங்குகின்றது.
usé) régis 618556ós : It's a Great achievement bo) 6) 6 g. 6) it is
ஒவ்வொருவருடைய பிரதியும் பிரதிபலித்தன.
செல்வன் : நல்லதொரு Teamwork, ஆனால் பின்னணி இசைதான்
வசனங்களை விட மேவி நின்றது.
ராந்தகன் : “வாருங்கள் தோழர்களே!
வறுமையை எரிக்க ஒரு புதுவேகம் கண்டிடுவோம்! இனிமையை மீட்க ஒரு புதுப்பண் பாடிடுவோம்!” இத்துடன் நாடகத்தை நிறைவிற்கு கொண்டுவரலாம் பின்னர் வரும் அந்தப் பாடல் “காலம் வருகுது ஐயா’ தேவையில்லை
சாந்திநாதன் : நான் நாடகத்துள்ளே சென்றுவிட்டேன் வெளியே வர நீண்ட நேரம் எடுத்தது. உண்மையில் சிறந்த தொரு நாடகம் நல்ல Persentation எல்லோருடைய நடிப்பும் அற்புதம்
நவம் : இது வந்து Constructive ஆன விமர்சனம் எல்லாம் நன்றாக இருந்தது. சில பழைய பாங்குகளை கைவிட்டு (உ-ம் மேடைக்கு பின்காட்டல், மேடையில் வலம் இடம், இடம் வலமாக நடந்து வசனம் சொல்லல்) இவற்றை நீக்கி செய்திருந்தால் நன்றாக வரும்
20

நண்பர் போலச் செய்தல் என்பது அற்புதமாக செய்துள்ளிகள்
மனோகரன் கனடாவில் பெண்கள் குடிக்கின்றார்களா? அது நன. முறைக்குச் சாத்தியமற்றது. அதை நீக்கியிருக்கலாம் (இவர்தான் கடந்த 13 வருடங்களாக வானவில்லிற்கு நாடகம் போட்டவர்)
தமிழ் தெரியாத தமிழ் இளைஞன் : இதுவரை காலம் குடும்பம், சண்டை, என்று நாடகம் பார்த்த எங்களுக்கு நீங்கள் முழுக்க ழுழுக்க Action மூலம் எல்லாம் விளக்கமாக விளங்க வைத்துள்ளீர்கள். நாடகம் எனக்கு விளங்கிற்று.
இவை பலபேரின் கருத்து : பண்டாரவன்னியன் காட்சி உண்மையில் படக்காட்சி
போல தோன்றியது என்று சிலர் குறிப்பிட்டனர்.
நாடகம் பார்த்துச் சென்ற 3 பாடசாலை மாணவர்கள் (தமிழ்) (12, 14, 16 வயதுகள் நிரப்பியவர்கள்) தமது தகப்பனாருக்கு அந்த நாடகத்தை முழுமையாக விளங்கப்படுத்தியுள்ளார்கள்.
இவற்றிற்கொல்லாம் மேலாக பின்னணி பாடிய பாடகரின் பாடல் மிக மிக மிகச்சிறந்ததாகவும் மிகவும் உணர்வுடம் பாடியிருந்தார் எனவும் அங்கு பலபேரும் குறிப்பிடத் தவறவில்லை.
இங்கு சில நாடகவியலாளர்கள் சேர்ந்து நடாத்தும் ஒரு நாடக குழு “மண்வெளி அரங்காற்றுக் குழு' இவர்கள்தான இங்கு பல நாடகங்களை மேடையேற்றி அது சம்பந்தமான கருத்தாடல்களையும் நடாத்தி வருபவர்கள். அவர்கள் கூட பிரமித்து நின்றார்கள் இந் நாடகத்தை பார்த்து, தற்பொழுது அவர்கள் எங்களில் சிலருக்கு தமது குழுவுடன் சேர்ந்து அமெரிக்காவில் நடக்கவிருக்கும் நாடக தினத்திற்கு நடிக்க வரும்படி அழைப்பு விடுத்திருக்கின்றார்கள். இவையெல்லாம் சர்வதேச அடிமைகள் செய்த வேலை.
மேலும் பிரச்சனை எழும்போது ( அழிப்பு நடவடிக்கை) 3தரம் வரும் பொழுதும் ஒரே மாதிரி அமைவதாகவும் அது படிப்படியாக கூடிச் சென்றிருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவியது. .
அத்துடன் ஏன் அவற்றிலிருந்து ஒருவர்தானும் Positive ஆன கருத்து ஒன்றை கூறவில்லை எத்தனையோ பேர் பிரச்சனைக்குள்ளும் நிமிர்ந்து நிற்கின்றார்கள். அவர்களை ஏன் காட்டவில்லை (Pவிக்கினேஸ்வரன் கருத்து)
இதில் துன்ப நிகழ்வு என்னவெனில் இன்றுவரைக்கும் இதன் புகைப் 量。 பிரதியோ வீடியோ பிரதியோ எமக்கு தராதது தான்.
; (20020221) நன்றி -
2

Page 13
தமிழ்ச் சிறுகதைகளின் படைப்பாக்க நட்பங்கள்
X ந. பார்த்திபன்
விரிவுரையாளர், வவுனியா தேசியகல்வியற் கல்லூரி
சிறுகதையின் படைப்பாக்கம் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. கதையின் உள்ளிடு, கதையின் தொடக்கம், கதையின் அமைப்பு முறை, உச்சநிலையும் முடிவும், பாத்திரப் பண்போவியம், கதை சொல்லும் முறை, கதையில் மொழிநட்ை ஆகிய விடயங்களில் கவனஞ் செலுத்தி சிறுகதையொன்று படைக்கப்படுவதை சிறுகதையின் படைப்பாக்கம் என்பர். இன்னும் புதுமைவேகம், கூர்மையான பார்வை, ஒப்பற்ற சிந்தனை நுட்பம், பாத்திரப் படைப்பு, மனநிலைச் சித்திரிப்பு, எண்ணங்களை அழுத்தமாகவும் புதிய முறையில் நயமாகவும் கூறும் துணிச்சல், அபாரமான தன்னம்பிக்கை, தேர்ந்தெடுத்த கதைப் பொருள்கள், அவற்றுக்கு கலைவடிவம் கொடுத்த நேர்த்தி, ஈடிணையில்லாத எழுத்தாற்றல், கையாண்ட நடை ஆகிய விடயங்களில் கவனஞ் செலுத்தி ஆக்கப்படும் சிறுகதை படைப்பாக்கம் என்பர். இவற்றை விட வாழ்க்கையை அதன் சகல தன்மைகளிலும் சிறுகதையெனும் இலக்கியத்தில் படம் பிடித்துக் காட்டுதல், வாழ்வின் பல சூட்சுமங்களையும் எழுத்தில் நிர்மாணித்துக் காட்டுதல் என்ற கருத்தும் உண்டு. இனி, உன்னதமான மனவெழுச்சிக்கு உருவம் கொடுத்தல், சிறந்த சொல்லாட்சியும் உருவ அமைதியும் பொருந்தியிருத்தல், இலக்கிய பூர்வமான கலையழகும் கற்பனை வளமும் நிறைந்திருத்தல், பேச்சுவழக்கை கையாளல் (மண்வாசனை மணக்க) தம்மைச் சூழ்ந்துள்ள் பிரச்சினைகளை ஒன்றியுணரல் என்பனவும் படைப்பாக்கமென கருதும் நிலையைப் பார்க்கிறோம்.
இந்நிலையில் படைப்பாக்க நுட்பங்களென எதனை நாம் கருதகிறோமென்ற வினாவை எழுப்பினால், நுட்பமென்பது சிந்தனைக்குரிய விடயமாகிறது. உதாரணமாக தொழில் நுட்பம் என்ற பதம் இன்று பெரும்பாலும் பலராலும் பயன் படுத்தப்படுகின்றது.
குறிப்பிட்ட சில பொருட்களை உற்பத்தி செய்வதற்கு அல்லது ஒரு வேலையினை இலகுவாகச் செய்து முடிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற நுட்பம் 1ற்றிய முறையான கல்வியே தொழில் நுட்பம் எனப்படுகின்றது. இந்நிலையில் நுட்பம் என்பது தொழிலில் நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி பொருள்களை உற்பத்தி செய்கின்ற முறைமையை திட்டமிடுகின்ற முறை எனக் குறிப்பிடுகின்றோம். இதே நுட்பம் என்ற பதமானது தொழிலுக்கு மேற்கூறிய விளக்கத்தைப் பெறுவது போல சிறுகதையின் உற்பத்தியில் நவீன உத்திகளைப் பயன்படுத்தி படைக்கப்படுவதைக் குறிக்கும். இதன் காரணமாக நவீன உருவங்களைப் அது பெற்று வெளிவரும். ஆக உள்ளடக்கம் ஒன்று நவீன உத்திகளால், நவீன உருவங்களைப் பெற்று வருவதைப் படைப்பாக்க நுட்பமெனலாம். இவ்வாறான படைப்பாக்க நுட்பங்கள் தமிழ்ச்சிறுகதைகளில் 6வ்வளவு துரம் வந்துள்ளன என்பதை இதில் பார்ப்போம்.
22

காலத்திற்கு காலம் பல்வேறு உள்ளடக்கங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. கடந்த 40, 50 ஆண்டுகளில் உள்ளடக்கங்கள் மாறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்துள்ளன. இருந்து வருகின்றன. ஆங்கில இலக்கியப் பரீச்சய அருட்டுணர்வால் வெளிவந்த சிறுகதைகளின் உள்ளடக்கங்கள், மணிக்கொடிகால மறுமலர்ச்சிக் கால சிறுகதைகளின் உள்ளடக்கங்கள், காலதேசவர்த்த மானங்களைக் கடத்து உயர்ந்த உணர்வுகளுக்கும் நன்மை தீமை போராட்டங்களுக்கும் முக்கியத்துவம் தந்து எழுதப்பட்ட சிறுகதைகளின் உள்ளடக்கங்கள். இதிகாச, சமய, கலையழகீடுபாடு மிகுந்து காணப்பட்ட சிறுகதைகளின் உள்ளடக்கங்கள். எனப் பல்வேறுபட்ட உள்ளடக்கங்கள் முடிவற்ற வகையில் மிக வேகமாகவும், ஆச்சரியப்படத்தக்க வகையிலும் மாறியவண்ணம் வருகின்றன. இவ்வாறான அதிசயக்கத்தக்க உள்ளடக்க மாற்றங்களுக்கேற்ப உத்தி, உருவம் மாறினவா? படைப்பாக்க நுட்பங்கள் குறிப்பிடத்தக்களவு காணப்படுகின்றனவா? போன்ற வினாக்கள் தமிழ்ச் சிறுகதைகளில் குறிப்பாக ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் எடுத்துப் பார்க்கும் போது சற்று ஆழமாகச் சிந்திக்க வேண்டிய வினாவாக எம்முன் எழுந்து நிற்கின்றன.
குறிப்பாக ஈழத்துச் சிறுகதைகளை எடுத்து நோக்கும் போது 1939 இல் தொடங்கி 1955 வரை வெளிவந்த ஈழகேசரிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட சிறுகதைகளைத் தொகுத்த எழுத்தாளர் செங்கை ஆழியானின் குறிப்பொன்று கவனத்தைப் பெறுகிறது. “அன்று எழுதிய உச்சத்தினை மேவி பின்வந்த காலங்களில் எத்தனை படைப்புகள் தேறின எனப் பார்க்கும் போது கவலையுண்டாகிறது. கால நீட்சிக்கேற்ப தரமான சிறுகதைகளைக் கொண்ட வொரு பாய்ச்சல் கொண்ட சிறுகதைகள் ஈழத்தில் வெளிவந்தனவா? ஈழகேசரிக்குப் பின்னர் இன்னும் செழுமையான சிறுகதைகள் நிறைய வெளிவந்திருக்க வேண்டும். அரைத்த மாவை அரைப்பது போல புதிய பொருள், புதிய சொல், புதிய வடிவம் இன்றி நிறையச் சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. சிறுகதைகள் பற்றி நம் முன்னோர் கொண்டிருந்த விளக்கத்திற்கு ஆப்பால் நாங்கள் அதிக மாற்றங்களைச் செய்து கொள்ளவில்லை” மேற்கூறிய நீண்ட, ஆயினும் சிந்தனைக்குரிய கூற்றொன்றை சிறுகதை எழுத்தாளரான செங்கை ஆழியான் குறிப்பிடும்போது, யாரையோ சாடுவது போலன்றி தன்னையும் சேர்த்துக் குறிப்பிடுவதும், ஒருவித ஆதங்கத்தோடு வெளிப்படையாக கூறுவதும் இன்றைய சிறுகதை எழுத்தாளர்களின் கவனத்திற்கு பட வேண்டும்.
புதுமைப்பித்தன் குறிப்பிட்டது போல “ஒருவித சீலைப்பேன் எழுத்து" குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது அல்லது சுற்றிச் சுற்றி சுப்பற்றை கொல்லை என்றெல்லாம் கழிவிரக்கம் கொள்ளும் நிலைக்கு எமது படைப்பாக்க நுட்பங்கள் இருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது. இன்னும் வெளிச்சம்! சஞ்சிகையின் ஆசிரியர் கருணாகரன் குறிப்பிடுவது போல் புதிய பரிசோதனைகள், விரிந்த எல்லையை நோக்கிய படைப்புகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. முற்றாக இல்லையென மறுக்கப்படவில்லையாயினும் ஒப்பீட்டு ரீதியில், அதாவது உள்ளடக்கத்தில் காணப்பட்ட மாற்றங்களுக்கேற்ப இல்லை என்பதோடு, கவிதை,
23

Page 14
நாடகம், ஓவியம். போன்ற இலக்கிய வடிவங்களோடு ஒப்பிடுமிடத்தும் சிறுகதை பெரியளவு மாற்றத்துக்கு உட்படவில்லை என்றே குறிப்பிட வேண்டும்.
மாறிவரும் உலகில் பல புதிய பிரச்சினைகளின் தாக்கங்களுக்குட்படும் எழுத்தாளர்கள், மூத்த எழுத்தாளர்களும் சரி, புதிய எழுத்தாளர்களும் சரி அவற்றைப் பதிவு செய்யும் வேகங்கொண்டு நிற்கிறார்களே தவிர, தாம் சொல்ல வந்த விடயத்தைப் புதிய முறையில் அதாவது புதிய சொல், புதிய வடிவம், எனப் பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டு, விரிந்த எல்லையை நோக்கிப் பயணிக்கிறார்களில்லை. இவ்வுண்மை சற்றுக் கசப்பானதாயினும், ஆழ்ந்த கவனத்திற்குரியது என்பதை எழுத்தாளர்கள் மறுக்க மாட்டார்கள் என நம்புகிறேன். இந்நிலைக்கு எழுத்தாளர்களை மட்டும் குறை கூறுவதும் ஏற்புடையதல்ல. இவ்விடத்தில் வெளிச்சம் ஆசிரியர் கருணாகரனின் கூற்றைச் சற்றுப் பார்த்தல் அவசியம். “நவீன சிறுகதை குறித்து யோசிக்கும் போது புதிய கதைகளுக்கு தமிழின் பெரும்பாலான ஊடகங்களும், ஒரு தொகுதி வாசகர்களும் பெரிதும் எதிர்மறையாக இருப்பதை நாம் உணர்கின்றோம். ஊடகத்தினுாடாகவே (ஊடகவியலாளரின் ரசனை, கலை இலக்கியம் மீதான ஈடுபாடு, அவை பற்றிய கருதுகோள்கள் என்பன பல இடங்களிலும் மட்டமாகவே இருக்கின்றன.) தனது எழுத்தினை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டியிருப்பதால் படைப்பாளி ஊடகத்தின் விதியை ஏற்றுக் கொள்வதால் படைப்பாளியினது சுய ஆளுமையின் முனைகள் முறிந்து விடுகின்றன. படைப்பு ஜடமாகி விடுகிறது.
ஆக, புதிய பரிசோதன்ைகள், விரிந்த எல்லையை நோக்கிய படைப்புகள் எல்லாம் அநேகமான தருணங்களில் பல ஊடகங்களாலும், பெரும்பாலான வாசகர்களாலும், புறக்கணிக்கப்படுகின்றன.” இந் நிலையில் படைப்பாக்க நுட்பமென்பது புறக்கணிக்கப்படுகின்றது.
சிறு சஞ்சிகைகளும் (சிற்றேடுகள்), முற்போக்கான சிறிய வட்டத்தைக் கொண்ட பத்திரிகைகளும் துணிந்து இவ்வாறான படைப்பாக்க நுட்பங்கொண்ட சிறுகதைகளைப் பிரசுரித்து ஆதரித்து வளர்க்கின்றன. இந்நிலையில் பிரபல்யத்தையும், பரந்த வாசக வட்டத்தையும் விரும்பும் எழுத்தாளன் படைப்பாக்கத்தில் அக்கறை கொள்கின்றானே தவிர புதிய பரிசோதனை முயற்சிகளிலோ, நுட்ப மாற்றத்தையோ விரும்புகின்றானில்லை. ஆயினும் ஆங்கில மொழிப் பயிற்சியும், திறனும் கொண்டோரும், வேற்றுமொழிப் பயிற்சியும் திறனும் கொண்டோரும், நவீன சிறுகதைகள் பற்றிய கூரிய தேடலும், பார்வை கொண்டோரும் புதிய பரிசோதனை முயற்சிகளில் ஈடுபாடு கொண்டு படைப்பாக்க நுட்பம் கொண்ட சிறுகதைகளை படைக்கின்றார்களென்ற போதும் எண்ணிக்கையுடனும், கால நீடிப்புடனும் ஒப்பிடுமிடத்து சிறுகதைத் துறையில் படைப்பாக்க நுட்பம் வளர்ச்சி குன்றியே காணப்படுகின்றது. இவற்றை மனதிலிருத்தி இனிவரும் சிறு கதைப் படைப்புக்களையேனும் புதிய நுட்பத்தில் எழுதுவது தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சிக்கு உதவுமென நம்பிக்கை கொள்வோம்.
24

பதிவு
இலக்கிய கருத்தாடல் நிகழ்வும் “மாருதம்” 2ஆவது இதழ் வெளியீடும்
வவுனியா கலை இலக்கியநண்பர்கள் வட்டம் மாதம் தோறும் ‘முழுநில’ அன்று நடத்திவரும் கலை, இலக்கிய நிகழ்வின் வரிசையில், 68ஆவது கருத்தாடல் நிகழ்வு சமீபத்தில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை ப.முரளிதரன் நிகழ்த்தினார்.
அன்றைய தினம் வவுனியா கலை, இலக்கிய நண்பர்கள் வட்டம் வெளியிடும் ‘மாருதம்’ காலாண்டு இதழின் இரண்டாம் இதழ் வெளியிட்டு வைக்கப்பட்டது. வவுனியா தேசியக் கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி க.பேர்னா இதழ் அறிமுகத்தை நிகழ்த்தினார்.
அவர் தனது அறிமுக உரையில் “வவுனியா கலை, இலக்கிய நண்பர்கள்
வட்டத்தின் செயற்பாடுகள் சிறந்த முறையில் செல்வதை அவதானிக்க முடிகின்றது.
அவர்கள் கலை, இலக்கியத்துடன் மட்டும் நின்று விடாமல் பிறவற்றிலும் கவனம்
செலுத்துகின்றனர். இந்த இதழில் உயர்தர மாணவர்களுக்குத் தேவையான
விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதே வேளை, இலகுவில் புரிந்து
கொள்ளக்கூடிய வகையில் ஏனைய படைப்புகளும், அமைந்திருப்பது பாராட்டத்தக்கது” என்று கூறினார். w
வெளியிடப்பட்ட ‘மாருதம்' காலாண்டு இதழின் முதற் பிரதியை, வவுனியா இந்து மாமன்றத்தின் தலைவர் சி.ஏ. இராமசுவாமி பெற்றுக் கொண்டார். தொடர்ந்து இடம் பெற்ற எழுத்தாளர் அறிமுக நிகழ்வில் நிலக்கிளி” நாவலின் ஆசிரியர் அ.பாலமனோகரனின் அறிமுகம் இடம்பெற்றது. எழுத்தாளரும் முல்லைமணி வே.சுப்பிரமணியம் பாலமனோகரனை அறிமுகம் செய்து வைத்துததுடன் கடந்த கால இலக்கியப்போக்கு பற்றியும் உரையாற்றினார். ‘நிலக்கிளி' நாவலை யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத் தமிழ் விரிவுரையாளர் செல்லி செ. சந்தானாள் அறிமுகம் செய்து வைத்து, நாவலின் சிறப்புப்பற்றி உரை நிகழ்த்தினார்.
சபையில் இருந்தோர் எழுத்தாளர் பால மனோகரனுடன் கருத்தாடல் செய்தனர். நிகழ்வின் இறுதியில் பால மனோகரன் பதிலுரையையும் எழுத்தாளர் கந்தையா ரீகணேசன் நன்றியுரையையும் வழங்கினார்.
க.தே.புரட்சிதாசன்
L.Graf iņas.08.09.2002
25

Page 15
வண்ணி மண்ணின் நவீன இலக்கிய அடையாளம் நிலக்கிளி
முல்லைமணி முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங்காலை முறைசிறந் தனவே பாடலுள் பயின்றவை நாடுங்காலை
என்னும் சூத்திரத்தில் ஓர் இலக்கியப் படைப்பு முகந்து கொள்ளும் பொருளை முதல், கரு, உரி என மூன்றாக வகுத்துள்ளார். தொல்காப்பியர். ஒரு இலக்கியப் படைப்பில் உரிப்பொருளே உயிரான பொருள். இந்த உரிப்பொருளை வளர்க்கின்ற பொருள்கள் முதலும் கருவும் ஆம்.
முதற் பொருள் காலமும் இடமும், கருப்பொருள் கதைமாந்தர் கால் 1 தித்து நிற்கும் நிலத்திலுள்ள தாவரங்கள், விலங்குகள், பறவைகள் முதலியன.
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்த அ.ாலமனோகரனின் ‘நிலக்கிளி' நாவலை மீண்டும் வாசித்த போது ஏனோ மேற்படி சூத்திரம் நினைவுக்கு வந்தது.
ஓர் எழுத்தாளன் தான் உணர்த்த எடுத்துக் கொண்ட பொருளைப் பாத்திரங்களின் உணர்வுகள் செயல்களுடாக மட்டுமன்றி அப்பாத்திரங்கள் கால் பதித்து நிற்கும் களத்தினூடாகவும் காட்டலாம். உரிப்பொருள்தான் ஒரு நாவல் உணர்த்த முனையும் செய்தி அல்லது உண்மை. முதலும் கருவும் நாவலின் பகைப் புலம் அல்லது களம்.
கதையை மட்டும் கூறுவது நாவலாகாது. நாவலில் கதையும் இருக்க வேண்டும். கதைக்கு அப்பாலும் சில உண்மைகள், கருத்துக்கள் செய்திகள் உணர்த்தட்ட வேண்டும்.
நிலக்கிளி வன்னி மண்ணோடியைந்த வாழ்க்கையின் இயல்பான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றது. கன்னிமை நீங்காத தண்ணிமுறிப்பு மண்ணில் கதைமாந்தர் உலவுகின்றனர்.
: நாகரிகத்தின் சயலோ அன்றேல் புறவுலகின் கள்ளங்கபடங்களின்
சாயலோ பரவாத கிராமியச் சூழலும் அச்சூழலில் வாழும் கதைமாந்தரின் மனப் ாேங்குகளுமே இந்த நாவலின் அடிப்படை தான் வாழும் பொந்தும் அதைச் சுற்றியுள்ள பிரதேசமுமே உலகம் என வாழ்வதும், உயரத்தில் எழுந்து பறக்க விரும்பாத இயல்பால் எளிதில் பிறரால் அகப்படுத்திக் கொள்ளக் கூடியதுமான நிலக்கிளி என்ற பறவை போன்றவள் பதஞ்சலி என்ற பெண். வெளியுலக அனுபவத்தின் சாயலோ அன்றேற் கள்ளங்கபடங்களோ படியாத அந்த இளம் பெண்ணுள்ளத்திற்குத் தன் கணவனைத் தவிர பிற ஆடவனைத் தொட்டுப் பழகுவது தவறு என்று உணரக் கூடத் தெரியாது. கணவனான கதிராமன் இல்லாத சமயம் ஆசிரியர் சுந்தரலிங்கத்தால் தழுவப் படுகின்றாள். புயல் ஒன்றின் தாக்கத்தால் ஏற்பட்ட சோதனை அது. அந்த நிகழ்ச்சியை
26

எண்ணித் துடித்துக் குமுறி அழுத பின் பலவிடயங்களைப் பற்றிப் புரிந்து கொள்ளுகிறாள். சமூகத்தில் பொய்யும் வழுவும் புகாத அந்தக் குழந்தையுள்ளம் பெறும் அனுபவ உணர்வின் பரிணாமமே கதையாக விரிகிறது.
கதைப்பின்னல் ஆவலைத் தூண்டக் கூடிய முறையில் அமைந்துள்ளது. எடுத்த புத்தகத்தைக் கீழே வைக்காமல் ஒரே மூச்சில் படித்து முடிக்க வேண்டும் என்ற ஓர்மத்தை வாசகள் பால் மூட்டியிருப்பது கதாசிரியரின் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.
தண்ணி முறிப்புக் கிராமமும் அதிலுள்ள வயலும் இருண்ட காடுகளுமே கதைக் களமாக அமைகின்றன. வெறுமனே கதைக் களத்தை விவரிப்பதுடன் ஆசிரியர் நின்றுவிடவில்லை. கதைப் போக்குடன் கதையின் களம் பின்னிப் பிணைந்துள்ளதை அவதானிக்கலாம்.
வவுனியா மாவட்டக் காடுகளில் ஏராளமாகக் காணப்படும் முரளி மரங்கள் ஐந்து வருடத்துக்கொரு முறைதான் காய்த்துப் பழுக்கும். முரளி பழுத்தால் காடே மணக்கும். i
தண்ணி முறிப்புக் காடுகளில் காணப்படும் மரைகள் நீலங்கலந்த கருநிறம் படைத்தவை. அழகிய கொம்புகளைத் தலையில் ஏந்தி அவை கம்பீரமாக நடப்பதைக் காண்பவர்கள் நெஞ்சு ஒருதடவை நின்று தான் அடித்துக் கொள்ளும். கதிராமனுடைய நடையிலும் அதே கம்பீரம் காணப்பட்டது.
மண்ணை வாரி எறிந்து ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு வந்த கரடி பின்னங்கால் இரண்டிலும் எழுந்து காடே அதிரும்படி அதட்டியது.
பதஞ்சலிக்கு அக்கிராமத்தில் எல்லாமே மிகவும் பிடித்திருந்தன. அடர்ந்து கிடக்கும் இருண்டகாடுகள். அவற்றினுடாகச் சலசலத்தோடும் காட்டாறுகள், அவற்றின் கரையோரங்களில் கான மிசைக்கும் Jr. (6) பறைவைகள் - இவை அனைத்திலும் அவளுக்குக் கொள்ளை ஆசை. அவள் நடந்து திரிவது கிடையாது. சதா மான் குட்டியின் துள்ளலும் துடிப்புந்தான்.
இந்த நாவல் சுட்டும் காலப்பகுதி எது? இலங்கை சுதந்திரமடைந்த (1948) காலத்துக்கும் அதற்குச் சற்றுப்பின்னுமாகும். தண்ணி முறிப்புக் குளம் புணரமைக்கப்படுவதற்கு முன்பே அடர்ந்த காட்டின் மத்தியில் குடி * : ...కీ கதிராமனின் தந்தை கோணாமலையர். 感、 S. தண்ணி முறிப்பை வன்னி மண்ணின் வகைமாதிரியர் : tậ
சித்திரிப்பதாகாது.
i கோணாமலையர் குடும்பம், உமாபதிகுடும்பம், காடிய எல்ல்ாமர் ஆரம்பத்தில் எட்டே எட்டுப் பேர் கொண்ட கிராமமாகத் திகழ்ந்தது தனித் முறிப்பு நிலக்கிளி காட்டும் வாழ்க்கை முறை இருபதாம் நூற்றாண்டின் ஆர் தசாப்பதங்களைக் கண்முன்னே கொண்டு வருகிறது. இதுவரை வெ தெரியாத வாழ்க்கையம்சங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது எஜ்ற இந்த நாவல் முக்கியத்துவம் உடையது. :
27

Page 16
ஒரு நாவலை உயிர்த்துடிப்பாக்குவது பேச்சுமொழியில் அமையும் உரையாடல். இந்த நாவலில் உரையாடல் மிகக் குறைவாகவே காணப்பட்டாலும் இடையிடைவரும் உரையாடல்கள் நாவலை உயிருள்ளதாக்குகின்றன.
“மூத்தண்ணையின்ரை கையிலை காயம், கறடி விறாண்டிப் போட்டுதாம்"
“ஏதோ குருந்தூர் ஐயன்ரை துணையிலை இண்டைக்குத் தப்பட்டியள்” s:
“உமாபதி எனிமேல் இவளைக் கண்டபடி காடுவழிய திரியவிடாதை. பக்குவப்படுகிற வயது”
இந்த நாவலில் பாத்திரப் படைப்பு நேர்த்தியாக அமைந்துள்ளது. சகோதரர்களுடன் ஏற்பட்ட காணித் தகராற்றினால் துணிச்சலுடன் இருண்ட தண்ணி முறிபபுக் காட்டில் குடியேறிய கோணாமலையர் முன்கோபக்காரர், பிடிவாதக் காரர். தனது விருப்பத்துக்கு மாறாக நடந்து கொள்ளும் கதிராமனை’ “என்னடா ஒரு மாதிரி முழுசிப் பாக்கிறாய். இவனை இண்டைக்குக் கொண்டுபோட்டுத் தான்” என்று கூறும் வார்த்தைகள் அவரின் முன் கோபத்தின் சித்திரிப்பு
கதிராமன் கடும் உழைப்பாளி, உறுதியான உடல் கட்டுடையவன். காடு அவனுக்குச் சொந்தம், அவன் காட்டுக்குச் சொந்தம். காட்டோடு அவன் கொண்ட உறவு அவனின் தோற்றத்தில் நன்கு தெரிந்தது. படிப்பறிவில்லாதவன், ஆனால் காட்டில் காணப்படும் ஒவ்வொரு காலடிச் சுவடுகளும் தடயங்களும் அவனுக்கு அட்சரங்கள், சொற்கள் போன்றவைதான் அவற்றைப் பார்த்ததுமே அவற்றின் பொருள் அவனுக்குப் புரிந்துவிடும். தந்தையின் கடுமையான எதிர்ப்பின் பின்னரும் மிகத்துணிச்சலுடன் பதஞ்சலியைக் கைப்பிடித்தவன்.
பதஞ்சலி என்னும் பாத்திரத்தை சுற்றியே கதை நிகழ்கின்றது. ஆசிரியரின் கூற்றாகவும் பாத்திரங்களிடையே இடம் பெறும் உரையாடலாகவும் அவனின் செயற்பாடுகள் மூலம் பதஞ்சலியின் குணவியல்புகள் துலக்கமடைகின்றன. காட்டையும் அதன் கருப்பொருள்களையும் நேசிப்பவளாக எப்பொழுதுமே துள்ளிக் குதிக்கும் சிட்டாகக் கள்ளங்கபடந் தெரியாதவளாக அவள் படைக்கப்பட்டுள்ளாள். தனது சிறிய வீட்டையும் வளவையும் அழகாகவும் தூய்மையாக வைத்திருப்பவள். ஆண்களுக்கு நிகராக வயலில் வேலை செய்து பழக்கப்பட்டவள். பருவமடையாத இளவயதிலேயே கதிராமனால் ஈர்க்கப்பட்டுத் திருமணமும் செய்து கொண்டவள்.
'இந் நாவலாசிரியர் பேச்சு மொழியையும் கனதியான இலக்கியச் சொற்களையும் கலந்து காத்திரமான வகையில் நாவலை வடித்துள்ளார்.” என யாழ்ப்பாணம் தேவன் நாவலின் மொழிநடைபற்றிச் சொல்கின்றார். “சமதரையில் அமைதியாகச் செல்லும் நீரோட்டம் போல கதை செல்கிறது” என்கிறார் கலாநிதி நா. சுப்பிரமணியன்.
இந்த நாவல் நமக்குத் தரும் செய்திதான் என்ன? பதஞ்சலி மட்டுமல்ல வன்னிவாழ் மக்கள் உயரப் பறக்க விரும்பாததால் மிக இலகுவில் பிறரால் அகப்படுத்திக் கொள்ளப்படும்நிலையில் உள்ளனர். பதஞ்சலி மட்டுமல்ல அவளின்
28

தாய்முத்தம்மாவும் தம் அப்பாவித்தனத்தால் பாலியல் ரீதியில் சுரண்டப்படுகிறாள். இது ஒரு பாடமாக அமைய வேண்டும் என உய்த்துணர வைக்கிறார்.
1942 இல் த. கயிலாசபிள்ளை எழுதிய இன்பவதி நாவல் முற்றுப் பெறாததாலும் 1969 இல் மணிவாணன் எழுதித் தினகரனில் தொடராக வந்த யுகசந்தி நாவல் மண்ணோடு ஒட்டாத குடும்பக்கதையாக இருப்பதாலும் 'நிலக்கிளியே வன்னி மண்ணை அடையாளப்படுத்தும் முதல் மண்வாசனை நாவல் என்று கூறலாம்.
நிலக்கிளி ஆசிரியர் ஆ. பாலமனோகரனுடன் வட்டம் நிகழ்த்திய சந்திப்பில் முல்லைமணி அவர்கள் உரையாற்றுகின்றார்கள். கல்வியியற் கல்லூரி பீடாதிபதி திரு.க.பேர்னாட் கந்தையாழரீகணேசன் மற்றும் தமிழ்ம்ணி அகளங்கன் ஆகியோர் மேடையில். :
29

Page 17
நேர்காணல்.
சங்கமம்
(அனைத்துலக ஒளிபரப்பு கூட்டுத்தாபன
நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது)
ஈழத்தின் பழம்பெரும் நாடகக்கலைஞர் எஸ்.திருநாவுக்கரசு அவர்களோடு சங்கமம் உரையாடுபவர் யமுனா ராஜேந்திரன்
கேள்வி
கேள்வி
“அரசையா’ என்று அறிந்தவர்களால் அன்புடன் அழைக்கப்படுகின்ற திருநாவக்கரசு அவர்களே! நீங்கள் கடந்த 55 ஆண்டுகளாக நாடகத்துறையிலே பங்க்ளிப்பு செய்து கொண்டு வந்திருக்கிறீர்கள், ஈழத்து நாடகங்களைப் பற்றி மட்டுமல்ல தமிழகத்து நாடகங்களைப் பற்றியும் மேற்கத்தேய நாடகங்களைப் பற்றியும் அவை ஒரு கலை நடவடிக்கை என்கிற அளவில் அறிந்திருப்பதோடு அது சம்பந்தமான கோட்பாட்டு ரீதியான விஷயங்களிலும் பரந்துவிரிந்த படிப்பை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் அந்த வகையில் உங்களைப் பற்றி நான் அறிந்து கொண்டதில் இருந்து இரண்டு தளங்களில் அறிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். ஒன்று உங்களுடைய ஆளுமை எவ்வாறு பரிணாமம் பெற்றது. இன்னென்று வரலாற்று ரீதியில் ஈழத்தினுடைய நாடகங்களில் உங்களுடைய ஈடுபாடு, பங்களிப்பு எவ்வாறு இருக்கிறது (இந்தநாள் வரை) என்பதைப்பற்றி அறிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். இப்படி உங்களுடைய பாலியகாலம், இளமைப்பருவம் இதுவரை உங்களுடைய தனிப்பட்ட வாழ்வுகுறித்து முதலில் நாம் தெரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
ஆரம்பத்திலே, என்னுடைய ஒரு மூன்றாம் நான்காம் வகுப்பிலே என்று தான் நினைவுக்கு வருகிறது. அதிலே தில்லையா வாத்தியார் என்கிற வாத்தியார் இருந்தார். அக்காலத்திலே இருந்து சொல்லுவதாக இருந்தால். ‘நாயும் புலியும்”, “இராவணனும் வேங்கையும்” அப்படியான சில சில நாடகங்களே எங்களுக்கு பழக்கப்படுவதுண்டு. அந்த நேரத்திலே, அதற்கு உரிய முறையிலே பாவனைகளை போட்டுவிட்ட நடியுங்கள் என சொன்னார். நாங்கள் அதுபோலவே நடித்தோம். அது எல்லாம் இக்காலத்திற்கு எவ்வளவு பொருத்தம் என்பது தெரியாது.
உங்களுடைய பாலிய காலம், நீங்கள் எந்த கிராமத்திலே பிறந்தீர்கள் நீங்கள் எத்தனையாம் ஆண்டு பிறந்தீர்கள், உங்களுடைய தாய், தகப்பன் எவ்வளவு கலை ஈடுபாடுகளை கொண்டிருந்தார்கள்.? அவர்களுடைய இயல்பான வாழ்க்கை, பள்ளிப்பருவ நாட்கள்
30
 

பதில்
எவ்வாறாக கழிந்தது என்பதில் இருந்து தொடங்கலாம் என நினைக்கிறேன்.
என்னுடைய சிறுவயதிலே நான் நல்லூர் சாதனபாடசாலையில் கல்விகற்றேன். எனது தந்தையார் சிவக்கொழுந்து. இவர் ஒரு நாட்டு வைத்தியர். ஆனால் அவர் அதனுடன் சேர்ந்து ஆங்கில வைத்தியமும் செய்தார். அப்படியான ஒரு சூழ்நிலையிலே, நாங்கள் எங்களுடைய பிறப்பிடம் என்று சொன்னால் யாழ்ப்பாணம் நல்லுர் முத்திரைச்சந்தியடி. நாங்கள் ஆறுபேரில் நான் நாலாவது. எனக்கு மூத்தவர்களுக்கும் நாடகத்துறையில் பிரியம் இருந்தது. ஆனால், எனது பாடசாலை பராயத்துடனேயே முடிந்தது. அப்போ மேற்படிப்பிற்கான வசதிகள் இல்லாத காரணத்தினால் எனது தந்தையார் செய்து வந்த நாட்டு வைத்தியத்தை கற்பதற்காக ஒரு வைத்தியரிடம் சென்று சத்திரசிகிச்சை இரண்டு வருடம் படித்தேன். பின்னர் உடல் வைத்தியம் படிப்பதற்காக சீனிவாசசஸ்தபதி என்கின்ற ஸ்தபதியிடம் சென்றேன். அவர் ஒரு சிற்பவேலை செய்பவராக இருந்ததனால் அவரது வைத்தியம் சாதாரணமாக இருந்ததால் அவர்
சிற்ப வேலைகளில் எனக்கு ஈடுபாடு இருந்தது. தாம்பரத்தில்
சிற்பவேலைகளில் ஈடுபட்டுவந்தார். அதனைப்பார்த்த எனக்கு சிற்பவேலைகளில் ஈடுபாடு அதிகமானது. நான் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் இந்தியாவில் இருந்து வருகின்ற சிற்பிகளிடம் எமது கோயில்களில் இருக்கும் சிற்பங்களை பாருங்கள் என நான் கூறுவேன். அவர்கள் பார்த்துவிட்டு சிரிப்பார்கள். இது என்ன சிற்பங்கள் நீ இந்தியாவிற்கு வந்து பார்க்கவேண்டும் என்பார்கள். நானும் யாருக்கும் கூறாது வெளிக்கிட்டுவிட்டேன். கையில் 10 ரூபாதான் இருந்தது. 9.90 சதம் கொடுத்தால் யாழ்ப்பானத்தில் இருந்து மதுரையில் போய் இறங்குவதற்கு ரிக்கற் தருவார்கள்.
(எனக்கு 9 வயதாக இருக்கும் போதே தந்தையார் காலமாகி விட்டார். அதனால் மேற்படிப்பை தொடரமுடியாத நிலை ஏற்பட்டது) மதுரையில் போய் இறங்கியவுடன் சிற்பங்கள் எல்லாவற்றையும் பார்த்தேன் அப்போது 15 வயதிருக்கும். முதலில் பெ.கந்தசாமி ஆச்சாரி என்பவரை போய் சந்தித்தேன். மதுரையில் வீரபாண்டி கட்டபொம்மன் சிலையை அடித்த சிற்பியின் வீட்டிற்கே சென்றிருந்தேன். இவர் என்னை விருது நகரில் உள்ள வெய்யில் உதந்த அம்மன் கோயிலில் அவருடைய மாமன் பெரிய ஸ்தபதியாக இருந்த அவரிடம் என்னை பழக விட்டார். அப்போ ஒரு நாள் எதிர்பாராத விதமாக ஒரு கடைக்கு முன்னால் இராணுவவீரர்களை சேர்ப்பதற்கான தராசு இருந்தது. நான் தெரியாமல் ஏறிவிட்டேன். அப்போது ஓர் இராணுவ வீரன் பார்த்து விட்டு என்னைப் பிடித்து விட்டான். “இதில் ஏறினால் இராணுவத்தில் சேரவேண்டும் உன் நிறை சரியாக இருப்பதனால் கட்டாயம் சேரவேண்டும் என்றான்.
31

Page 18
கேள்வி
கேள்வி
நான் எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் மறுத்துவிட்டனர். அன்றைய சூழ்நிலையும் அவ்வாறு இருந்தது.
நான் போன காலம் 2ம் உலகமகாயுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம், இராணுவத்திற்காக ஆள் சேர்த்துக் கொண்டிருந்தகாலம், அதில் இருந்து நான் தப்பி ஓடலாம் என்றிருந்தாலும், அவர்களுடைய நடவடிக்கைகள் உடற் பயிற்சி என்பவற்றால் என் மனம் அதில் படிந்தது. 1947ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் யுத்தம் முடிந்ததும் திரும்பிவந்தேன் இராணுவத்தில் இருக்கும்போது அங்குள்ள நூலகத்தில் உள்ள புத்தகங்களை வாசித்து எனக்கு நிறைய ஆர்வம் இருந்தது. அப்போது தென்னகத்தில் பெரியாருடைய தலையிலும் அண்ணாவுடைய தலைமையிலும் பெரும் புரட்சி ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அந்த புத்தகங்களையும் வாங்கிக் கொண்டு ஊருக்கு வந்தேன்.
1947ம் ஆண்டுகளில் , 21 வயதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாதிப்பினையும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தினை நேரிலே கண்ட அனுபவமும் கொண்டவர். நீங்கள் அதன் பிறகு உங்கள் இளமைக்கால அனுபவம் பற்றிக் கூறுங்கள்?
யாழ்ப் ாணத்தில் ஏராளமான திராவிட முன்னேற்றக் கழக ஏடுகள், சஞ்சிகைகள் வந்து குவிந்து கொண்டு இருந்ததனால் நான் அதிகம் அதனை வாசித்து வந்ததன் மூலம் எங்கள் நாடு இன்னும் ஏன்
இவ்வாறு இருக்கிறது என்ற ஓர் உந்துதல் ஏற்பட்டது. அப்போது
இளைஞர்களிடத்திலும் அங்குள்ளவர்கள் இடத்திலும் ஒரு முற்போக்கு எண்ணம் இருந்து. அப்போது திராவிட முன்னேற்ற எண்ணம் கொண்ட ஒரு சபையை அமைத்தோம். அதில் மல்லிகை எழுத்தாளர் டொமினிக் ஜீவா கூட எம்முடன் இருந்தார்.
டொமினிக் ஜீவா முதலில் திராவிட முன்னேற்ற சபையில் இருந்து பின்னர் மாக்சியத்திற்காக பிரிந்து போனார் எனின், ஏன் உங்களுக்குத் மார்க்சிய ஈடுபாடு இல்லையா.
பொதுவுடமைக் கருத்துக் கொண்டவர்களுக்கு தமிழ் இனம் தனியே பிரியக் கூடாது. அது தேசிய இனமாகவே போராட வேண்டும். அத்தோடு மொழியை பெரிதாக கொள்ள முடியாது. அது தொடர்புக்குரியது என்ற கருத்துக்கள் இருந்ததனால் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தில் நாடகங்கள் மூலம் பிரசாரம் செய்தோம். தமிழகத்திலும் வெளியான நாடகங்களை பின்பற்றியே ஆடத்தொடங்கினோம். அதே நேரம் மக்கள் ராஜா, ராணி, உடை அணிந்து நடிப்பதனையே அதிகம் விரும்பியதால்
32

கேள்வி
பதில்
எமது கருத்துக்களை அதனுடாக செலுத்துவதற்கு முயற்சித்தோம். பின்னர் சமகால நிலையிலேயே யதார்த்தமாக செய்வதனை உருவாக்கிவந்தோம். அதே நேரம் ஆங்கில, சிங்கள நாடகங்களும் யாழ்ப்பாணத்திற்கு வரத்தொடங்கியது.
நீங்கள் பாலியகாலத்தில் ஒரு விதமான நாடகங்களாலும் பின்னர் இளமைக்க்ால்த்தில் வேறு விதமான அதாவது திராவிட முன்னேற்ற
கழகத்தில் சீர்திருத்த நாடகங்களாலும் ஆகாசிக்கப்பட்டீர்கள்
அதற்கிடையிலான வித்தியாசத்தை எவ்வாறு உணர்ந்தீர்கள்?
திராவிட முன்னேற்ற கழகத்தினர் புராதன நாடகங்களை ஒதுக்கித்தள்ளாது அவற்றில் உள்ள புரட்சிகரமான கருத்துக்களை தந்துள்ளமையை மறுக்கமுடியாது அதனை பிற்போக்கு என்றும் கூறமுடியாது. இந்தியாவிலே உள்ளது போன்றே எங்களுடைய நாட்டிலும் புரட்சிகள் இருந்துள்ளன என்பதற்கு பண்டாரவன்னியன்
சங்கிலியன் போன்றவர்களின் சரித்திரங்களை கவனிக்கக் கூடியதாக
இருந்தது. அதனை எங்கள் கலைஞர்கள் மேடை ஏற்றம் செய்துள்ளனர். அதே நேரம் சமகாலத்தில் அந்நிய நாடகங்கள் வரும்போது நாம் நாடக உலகில் பின் தங்கி இருக்கின்றோம் என்ற மன உணர்வு ஏற்பட்டது. இதனால் எங்களுகென்று ஒரு முறையில் இதனை சீர்ப்படுத்த வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அந்த நேரத்தில் தான் “நாடக டிப்ளோமா" கற்கை நெறியை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அது சிங்கள, தமிழ் பட்டதாரிகளுக்கே உரியது. எமது சபையைச் சேர்ந்த 11 @ 而 2 வருட பயிற்சியை மேற்கொண்டனர். குறிப்பாக கல்யாண சுந்தரேசன் தாசீசியஸ்மாஸ்டர், குழந்தை ம.சண்முகலிங்கம் காரை சுந்தரம் பிள்ளை, ஈ.ஆர். திருச்செல்வம் ஆகியோர்ோடு மலையகத்திலிருந்து திருச்செந்தூரனும் சென்றனர்.
இவ்வாறு படித்துவந்தவர்களும் நாமும் சேர்ந்து சமகால நிகழ்வுகளை உலக நாடகமரபுகளை வெளிப்படுத்தாது அழிந்து போக விடாது, (அரசாங்கமும் பாடசாலைகளுக்கு நாடகத் துறையை கொண்டுவரவில்லை.) என்ன செய்வோம் என்று சிந்தித்த வேளை கலையரசு சொர்ணலிங்கம் என்ற பெரியாருடைய தலைமையில் தாசீசியஸ் நாடக அரங்க கல்லூரி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 1978ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப விழாவிற்கு பழைய கலைஞர்களையும் அழைத்திருந்தோம். இதில் அங்கம் வகிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரிய போது நூற்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்தன. 90 பேரை தெரிவுசெய்த போது நானும் அதில் ஒரு மாணவனாக சேர்ந்தேன்.
சனி, ஞாயிறு தினங்களில் காலை 6 மணி தொடக்கம் மாலை 6
33

Page 19
கேள்வி :
பதில்
மணிவரை ஒன்றாக இருந்து உலக நாடக மரபுகள் பற்றி பயிற்சி பெற்றோம். இவர்களுடன் கவிஞர்கள், எழுத்தாளர்கள்
போன்றவர்களும் பழந்தமிழ் இலக்கியங்கள், பற்றி கற்பித்தனர்.
அது எமக்கு பரந்த அறிவை வழங்கியது.
இப்போதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஒரு நாள் பயிற்சியில் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொல்லும் போது எனது முறை வந்ததும் நான் எழுந்து நான் இவ்வளவு நாளும்
ஏதோ நாடகம் செய்தேன் இப்போது நாடகம் கற்பதற்காக
வந்துள்ளேன் என்று கூறியபோது அவள் சிரித்து விட்டு சென்னார் நீங்கள் இவ்வளவு நாளும் செய்தீர்கள் அதுதான் நாடகம் அதனை ஓர் ஒழுங்குமுறையில் மக்களுக்கு எவ்வாறு அளிப்பது என்பதை படிப்பதற்கே வந்துள்ளிகள் என்று கூறியது இன்னும் நினைவில்
உள்ளது.
சொல்முறைகள் அல்லது நெறிமுறைகள் என்னென்னவாக இருந்தன.
நீங்கள் தேடிக்கொண்டிருந்த நெறிமுறைகள் எவ்வாறு உருவாகியது என்பது பற்றிச் சொல்லுங்கள்?
நெறிமுறைகள் என்று சொல்லும் போது ஒரு கருத்தை மக்களிடம்
சென்று அடைவதற்கு நாங்கள் கையாளுகின்ற முறைகள், அதனை பழைய ஆட்டமுறையிலும் பாட்டு முறையிலும் வரலாம். சமகாலத்தில் வந்துள்ள படச்சட்ட அமைப்பு மூலமும் வெளிப்படலாம். நாட்டுக்கூத்து மூலமும் வரலாம். தேவையற்ற கருத்துக்களை விடுத்து முக்கியமான கருத்துக்கள் மக்களைச் சென்று அடையவேண்டும் என்பது எங்களின் நோக்கமாக இருந்தது.
எமது ஆசிரியர்களும் பழைய இலக்கியங்களும் இதனையே போதித்தன. ஒருகருத்தை வெளிப்படுத்துவதற்கு நீண்டி கதையை உருவாக்க வேண்டிய தேவை அன்றைய காலத்தில் இருந்தது. உதாரணமாக அரிச்சந்திரன் நாடகம் உண்மை நிலை நிறுத்துவதற்கு இவ்வளவு கதையை உருவாக்கி உள்ளமை சாதனை என்றே சொல்ல வேண்டும்.
அன்றைய காலத்தில் பகல்முழுவதும் தமது நஞ்சை புஞ்சைகளில் வேலை செய்துவிட்டு இரவுச்சாப்பாட்டின் பின் காலைவரையும் பொழுது போக்க வேண்டி இருந்தமையால் அன்று நீண்ட நாடகங்கள் தேவைப்பட்டன. ஆனால் இன்றைய நாளில் ஒரு மணித்தியாலம் இருந்து பார்ப்பதற்கு கூட நேரமில்லை.
34

கேள்வி
பதில்
கேள்வி
பதில்
நவீன நாடகநெறிமுறைகளை வைத்துக் கொண்டு ஈடுபடுகின்றவர்கள் ஈழத்திலே இன்னும் செயற்படுகிறார்களா?
இதுவே அதிகமாக நடைபெற்றுக்கொண்டு இருப்பதுடன் மேடை நாடகங்களும் அதிகமாக அரங்கேற்றப்படுகின்றன. ஆனாலும் நாடகத்தில் ஏற்படுகின்ற விருப்பு வெறுப்புகள், சுகதுக்கங்கள் என்பவற்றில் தம்மையும் ஈடுபடுத்திக் கொள்கின்ற மக்கள் இருந்தார்கள். உதாரணமாக நாங்கள் நடித்த “எந்தையும் தாயும்” குழந்தை சண்முகலிங்கத்தின் நாடகத்தில் நடக்கின்ற சம்பவங்களைப் பார்த்து மக்கள் பரிதாபப்பட்ட நிலையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது நாடக பாத்திரம் உணர்வதனை வி. இதனை பார்த்து அனுபவிக்கின்றவர்கள் தங்களுட்ைய உணர்வுகளை வித்தியாசமாகவே காட்டுகின்றனர். ஒருமுறை யாழ்ப்பாணத்தில் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் இதனைப் ப்ார்த்துவிட்டு இதற்கு விமர்சனம் செய்ய முடியாது என்று தளதளத்த குரலில் சென்றார்.
நீங்கள் மூன்று பிரதேசங்களில் நடந்த நாடகத்தினுடைய வளர்ச்சியை அறிந்திருக்கிறீர்கள். ஒன்று, சிங்களப் பிரதேசத்தின் நாடகத்துறை வளர்ச்சி, ஈழத்தின் நாடகவளர்ச்சியை 55 வருடங்களாக அனுபவபூர்வமாகவும் அறிந்திருப்பதோடு தமிழகத்தின் நாடகத்தின் வளர்ச்சியையும் அறிந்திருக்கிறீர்கள். இவற்றில் எவ்வாறான கருப்பொருள்களைக் கொண்ட நாடகங்கள் அமைந்திருந்தன.
gð5T6göl 1950 Goör(6 T.K.S.Brothers uirþII Isf68brgjöfl6io 10 நாட்கள் அரங்கேற்றினார்கள். அதை பார்த்த போது சில சினிமா உத்திமுறைகள் கையாளப்படடிருந்தன. எனவே நாங்கள் தனியாகச் சென்று கேட்டோம், நாடகம் என்று சொல்லி இவ்வாறு சினிமா உத்திகளை கையாண்டுள்ளிகளே என கேட்டபோது அவர் கூறினார் தமிழகத்தைப் பெறுத்தவரை இன்று நாடகம் வாழ்வதா, சாவதா என்ற நிலையிலே உள்ளது. மக்களிடையே சினிமா மோகம் அதிகரித்துவிட்டது. எங்களில் 3000 பேருக்கு கிட்ட நாடகத்தை தொழிலாகக்கொண்டுள்ளோம். எனவே தான் மக்களை நாடகத்தின் பால் ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே சினிமா உத்திகளையும் கையாண்டுள்ளோம். நீங்கள் சினிமர் உத்திகளை நீக்கிவிட்டுப் பார்த்தாலும் அது நாடகமாகவே தெரியும் என்பது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்ப மாற்றங்கள் அடைவதை வளர்ச்சி இல்லை என்று கூறமுடியாது. அன்றைய கால தேவை அவ்வாறு இருந்தது. ஒரு நாடகத்தை எந்த விதத்தில் மக்களிடையே புகுத்த முடியுமோ அந்த வகையில் இயங்குவது நாடக இயங்குநரின் ஆற்றலைப் பொறுத்தது.
35

Page 20
கேள்வி
பதில்
கேள்வி
தில்
கேள்வி
1தில்
கேள்வி:
முத்துசாமி, பிரளயனுடைய நாடகங்களின் தன்மைகள் பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?
அவருடைய நாடகங்களை பார்த்திருக்கிறேன். பிரளயன் நல்ல சிந்தனை உள்ளவர். அவருடைய நாடகத்தை பார்த்த போது சுவாரஸ்யமாகவே இருந்தது. பாவனைகள், செயல்கள் என்பவற்றைப் Iர்க்கும் போது ஒரு திறமான படைப்பாகவே உள்ளது. இப்போது யாழ்ப்பாணப்பகுதிகளில் lighting பற்றி பெரிதாக அக்கறை இல்லை. ஏனென்றால் 1ighting மூலம் ஒரு (Effect) பாதிப்பினை நாடகத்தில் ஏற்படுத்துறதோ என்பதில் சந்தேகம் வந்ததோ தெரியவில்லை. இப்போது சாதாரண lights சைப் பயனப்படுத்தியே நாடகங்கள் செய்கின்றனர். தற்போது சிதம்பரநாதன் நடாத்துகின்ற நாடகங்கள் பல கலைஞர்களை ஒன்று கூட்டி தெரு நாடகங்களாக தமது
கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர்.
தற்போது புகழ் பெற்ற நாடகங்கள் அல்லது நாடகக்குழுக்கள் என்று யார்யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?
: முக்கியமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக நாடகங்கள் எல்லாம்
பரீட்சார்த்த நாடகங்கள் என குறிப்பிடலாம். இவ்வாறு பரீட்சார்த்தமாக செய்யப்பட்டு வெற்றி கண்ட நாடகங்களே தொழில் முறைக்கு எடுக்க வேண்டும் என்பது எனது அபிப்பிராயம்.
நீங்கள் 55 வருடகாலமாக நாடகத்துறையில் ஈடுபட்டுள்ளிகள் நூற்றுக்கணக்கான நாடகங்களில் பங்கு பற்றி இருக்கிறீர்கள். முக்கியமான நாடகங்கள் என்று எதைக் கருதுவீர்கள். அதே சமயம் தற்போது: எந்த விதமான நாடகங்களை நடித் துக் கொண்டிருக்கிறீர்கள்?
தற்போது ஈடுபடுவது குறைவு எனினும் பாடசாலை மாணவர்களுக்கு நாடகங்கள் பழக்கும்போது என்னால் இயன்ற அளவு கற்றுக் கொடுப்பேன். நான் இறுதியாக நடித்தது “எந்தையும் தாயும்” எனக்கு பழைய ராஜா ராணி உடை உடுத்தி நடிக்கின்றதில் அதிக ஈடுபாடு உண்டு. அதனை உடனுக்குடன் செய்யக் கூடிய திறமை தரப்பட்டது
என்றே கூறவேண்டும். குறிப்பாக நான் நடித்த நாடகங்கள் எனக்
கூறும் போது “இறுதிப்பரிசு” நாடகத்தில் குமணனாக நடித்தேன்.
மற்றும் “வீரமைந்தன்” என்ற நாடகம் இன்றும் மறக்கமுடியாதவை.
நாடகத் துறையைப் பொறுத் தவரை இதன் (p6o LĎ பொருளாதாரத்தினைப் பெறமுடியாது. அத்தோடு, பல இழப்புக்களை நீங்கள் அடைந்திருப்பீர்கள். அவ்வாறான இழப்புக்கள் என்ன? உங்களுடைய குடும்ப வாழ்க்கையை எவ்வாறு பாதித்தது? இத்துறையில் உங்கள் குழந்தைகளுக்கு ஈடுபாடு எப்படி?
36

ա{ւp60III
ஆரம்பகாலங்களிலே அதாவது இளம் தம்பதிகளாக இருக்கும் போது மகிழ்ச்சியை அளித்திருந்தாலும் பொருளாதார ரீதியில் சம்பாதிக்க வேண்டிய காலத்தை இழந்து விட்டேன். சினிமா துறையிலும் முயற்சி செய்து பார்த்த போது அதிலும் பொருளாதார ரீதியில் பெருங்கஸ்ரமாகவே இருந்தது. அதிலும் நான் கவலைப்பட்டதிலும் பார்க்க எனது குடும்பம் கவலைப்பட்டது அதிகம். எனது மகள் கலாபுவனேந்திரன் கலைச்சேவையில் ஈடுபாடு கொண்டவர். எனது குடும்பத்தில் நாடகத்துறை இல்லாவிட்டாலும் வேறுவேறு கலைத் துறைகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். பின்னாளில் நாடகம் எனக்கு ஒரு அமைதியை அளிக்கவில்லை ஆனால் நடிக்கும் போது அதன் மகிழ்ச்சி சாதாரணமானது அல்ல. சுதந்திரமான மனிதன், அந்நியமாகாத மனிதன், சமுதாயத்தோடு இணைந்து கொண்ட மனிதன் என்றால் அது கலைஞனில் தான் காணமுடியும். பட்டுப்பூச்சி பட்டைத்தருவது போல கலைஞன் கலைப்படைப்புக்களைத் தருகிறான். இவ்வாறு ஒரு கலைஞர் எமது 1.B.Cநிறுவனத்துக்கு வந்து இவ்வாறான சந்தர்ப்பத்தைத் தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி தொகுப்பு
செல்வி சி.சிவாஜினி
பீடாதிபதி திரு.க.பேர்னாட்டிடமிருந்து திரு.சி.ஏ.இராமஸ்வாமி அவர்கள்
பெறுகின்றார்கள்.
37

Page 21
வட்டத்தின் விருது பெறும் இருவர்
முன்னாள் கல்வியியற் கல்லுரி பீடாதிபதி
கல்வியியற் செல்வர் செ.அழகரெத்தினம் மட்டக்களப்பு வீரமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.செ.அழகரெத்தினம் அவர்கள் ஒரு சிறந்த கல்வியியலாளர். மூன்று தசாப்த காலமாக கல்விப்பணியாற்றி நல்ல அனுபவத்தைப் பெற்ற இவர் கல்வியியலில் பட்ட மேற்படிப்பு டிப்ளோமா
முதுகலைமாணிப் பட்டம் பெற்றவர். இவரது கல்வியியற் துறை ஈடுபாடும் இலக்கியத்தின்பாலான இவரது அக்கறையும் இணைந்ததாக “கல்வியும் இலக்கியமும்”, “சுவாமி விபுலானந்தரின் கல்விச் சிந்தனையும் தொண்டுகளும்” எனும் நூல்கள் வெளிவந்துள்ளன. நல்ல முகாமைத்துவத்திற்கு சிறந்த உதாரண புருஷராகத் திகழ்ந்து கல்விப் பணியாற்றுபவர்.
அழகரெத்தினம் அவர்கள் வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் சிறந்த நன்மாணக்கராக முத்திரை பதித்தவர். கல்வி, கலாசாரம், இலக்கியம், விளையாட்டு, சமூக ஈடுபாடு போன்ற பலதுறைகளில் முதன்மை மாணக்கராகத் திகழ்ந்தவர். 1964இல் இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டதாரியாக வெளிவந்தவர். கிண்ணியாப் பிரதேசத்தில் 1965 அளவில் இளைஞர் சமூக சேவாசங்கமொன்றை அமைத்து அதன் தலைவர் பதவியை ஏற்று சமூகசேவையில் ஈடுபட்டார். 1978, 79 ஆம் ஆண்டுகளில் தம்பலகாமம் பலநோக்குக் கூட்டுறவுச் சமாஜ சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றியவர். பல்கலைக்கழக காலத்தில் பேராசியர் சு.வித்தியானந்தனின் கூத்துக்களில் ஆடியும் கலைப்பணி புரிந்துள்ளார்.
பீடாதிபதி அவர்கள் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து ஒரு பட்டதாரி ஆசிரியராகக் கல்வித்துறையில் நுழைந்து, அவரது முயற்சியால் கல்வியில் உயர்ந்து, பட்டங்கள் பல பெற்று, உழைப்பால் உயர்ந்து வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் முதலாவது பீடாதிபதியாக நிமிர்ந்து நின்றவள். கடந்த பத்தாண்டு காலத்துக்குள் கல்வியியல் கல்லூரிகள் பிரச்சினைகள், சிக்கல்களிக்கிடையே இருந்த போதிலும் புதிய மாற்றங்களை உள்வாங்கிக் க்ொள்ள வேண்டிய தேவைப்பாடும் நிறைந்ததாக இருந்த நிலையில் திரு. அழகரெத்தினம் அவர்கள் வவுனியா கல்வியற் கல்லூரியை ஒரு நிறைவான கல்லுரியாக மாற்றுவதற்கு சவால்களுக்கு இடையில் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டவர்.
பீடாதிபதி என்ற வகையில் கல்விசார், கல்விசாரா ஆளணியினர், மாணவர்கள் மற்றும் கல்லூரிக்கான சமூகம் தொடர்புறும் தாபனங்கள் அனைத்தையும் இணைத்து நிர்வகிப்பதில் திரு. அழகரெத்தினம் வெற்றி பெற்றவர். அவரது சேவையால் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி நாடளாவிய உயர்வு &b6ხმ{l.ყაl.
38
 
 

நமது பிரதேச கல்வி வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய தொண்டினால் திரு.அழகரெத்தினம் என்றும் நினைவு கூரப்பட வேண்டியவராகின்றார். சுவாமி விபுலானந்தரின் தத்துவங்கள், சிந்தனைகளால் கவரப்பட்ட அவர் சுவாமிகளின் பாதையில் தனது கல்வித் தொண்டை ஆற்றி வந்தவர். இவ்வாறு திரு.செ.அழகரெத்தினம் அவர்கள் கல்வி, இலக்கியம், சமூகசேவை என அவர், ஆற்றிய பங்களிப்பு அளப்பெரியது. கல்விப் பரப்பில் தம் கடமைக psi, b, பிறசேவைகளையும் நிறைவுறச் செய்து நிற்பவர்கள் எவராக இருப்பினும் அவர்களை கணித்து கெளரவிக்க வேண்டியது எமது முக்கிய கடப்பாடாகும். அந்த வகையில் இவரது கல்விச் சேவையையும் சமூக அக்கறையையும் பாராட்டும் முகமாக கெளரவிப்பதையிட்டு நாம் பெருமிதம்அடைகின்றோம். தொண்ணுறுகளில் இருந்து வவுனியா மாவட்ட்தின் சகல கலை இலக்கிய செயற்பாடுகளிலும் தன் பங்கினை ஆற்றியுள்ளார். வவுனியா பிரதேச செயலக இலக்கிய விழா கருத்தரங்குகள், வடக்கு-கிழக்குமாகாண இலக்கியவிழா நிகழ்ச்சி ஒருங்கமைப்பு, வவுனியா வளாக நூல் வெளியீடுகள், கலை இலக்கிய நண்பர்கள் வட்ட கருத்தாடல் நிகழ்வுகள் என்பவற்றில் பங்கு கொண்டு பணியாற்றினார்.
திரு.செ.அழகரெத்தினம் அவர்கள் தமது பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர்களின் பணி தொடர வேண்டுமென்றும் கல்வியியலின் புதிய சிந்தனைகள் பற்றி அவள் மேலும் பல நூல்களை வெளியிட்டு தமிழ் கூறும் நல்லுலகிற்கு அவரது அறிவும் ஆற்றலும் பயன்பட வேண்டும் என்பது எமது அவா. இத்தகைய சிறப்புகள் பொருந்திய திரு.செ.அழகரத்தினம் அவர்களுக்கு 'கல்வியியற் செல்வர்' என்னும் விருதை வவுனியா கலை இலக்கியயர் நண்பர்கள் வட்டம் வழங்கி பெருமை அடைகிறது. * .
ஆசிரியர் குழு
வட்ட நிகழ்வில் பங்கு கொள்ளும் சண்முகப்பிரியா தியாகரன் நர்த்தனாஞ்சலி
நடன குழுவினர். . . '
39

Page 22
சிறுவர் இலக்கியச் செல்வர்
கேணிப்பித்தன் திரு.ச.அருளானந்தம்
ஒரு நாடறிந்த சிறுவர் இலக்கிய கர்த்தா. சிறந்த கவி ஞரான திரு.சஅருளானந்தம் சிறுவர்களுக்கான கதைகளையும் பாடல்களையும் ஆக்கியளிப்பதில் வல்லவராகத் திகழ்கின்றார். இன்று ஈழத்தின் தலைசிறந்த சிறுவர் இலக்கியப் படைப்பாளி என்று சொல்லும் அளவுக்கு குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்குமான அறிவுபூர்வமானதும் , கவர்ச்சிமிக்கதுமான படைப்புகளை ஆக்கியளித்துக் கொண்டிருப்பவர். w
ஆசிரியராகவும், பாடசாலை அதிபராகவும் நீண்ட காலம் பணியாற்றிய கார68த்தினால் சிறுவர்களின் மனப் போக்குகள், உள்மன ஆசைகள் அவர்களது தேவைகள் முரண்பாடுகள் என்பன பற்றியெல்லாம் பரிச்சயப்பட்டுப் போன காரணத்தினாலேயே அவர்களுக்கியைந்ததான இரசனை மிக்க பாடல்களையும் கதைகளையும் இவரால் சிறப்பாக படைக்க முடிகின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தின் கிராமங்களில் ஒன்றான ஆலங்கேணியை பிறப்பிடமாகக் கொண்டவர். சிவானந்த வித்தியாலத்தில் கல்விகற்றபோது அதிபர் அமரர் க.கணபதிப்பிள்ளை அவர்கள் ஊட்டிய அந்த அடித்தளக் கற்பனாவிருத்தி, எழுதத் துண்டியதென அவர்கள் குறிப்பிடுவார்கள். எனினும் ஆரம்பத்தில் கிராமத்திலேயே ஆங்கில ஆசிரியராகச் சேர்ந்து ஊரின் எழுச்சிக்காகப் பாடுபட்டார். ஆசிரியரான பின் பாரதி படிப்பகத்தினால் இலக்கிய விழாக்களைத் தொடக்கி கேணிச் சுடர் கையெழுத்துப் பிரதியை மாதந்தோறும் வெளியிட்டு வைத்ததோடு கலை நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கும் முன்னின்று உழைத்தவர். சிந்தாமணி ஆசிரியர், அமரர் எஸ்.டி சிவநாயகம் அவர்களே “கேணிப்பித்தன்” என்ற புனைப் பெயரை வழங்கியவர்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்று ஆசிரியராகி, அதிபராகி, கல்வி நிர்வாக சேவை அதிகாரியாகி, கல்விப் பணிப்பாளராக உயர்ந்தவர். வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் உதவிக் கல்விப்பணிப்பாளராகவும், வவுனியா கோட்டக்கல்விப் பணிப்பாளராகவும் இருந்தபோது 67 புதிய பாடசாலைகளை உருவாக காரணமானவர். முத்தமிழ் கலாமன்றத் தன்லவராக, வன்னி இலக்கிய பேரவை அமைப்பாளராக இருந்தார். புதிய இளைய தலைமுறை ஆசிரியரை உருவாக்கினார். வெளிவாரிப் பட்டப்படிப்பை தொடக்கினார். வவுனியாவில் விபுலாநந்தர் நூற்றாண்டு விழா செயலாளராக இருந்து “உள்ளக்கமலம் இதழை
ഖണിuി'1.If. ‹ሰነ
இவரது இலக்கியப் பிரவேசத்திற்கு உந்து சக்தியாக தேசியப் பத்திரிகைகள் விளங்கின. சுதந்திரன், தினகரன், வீரகேசரி தினமணி சிந்தாமணி தினக்குரல், ஈழமணி வெற்றிமணி தினமுரசு, இன்னும் பல பத்திரிகைகளும்
40
 

சஞ்சிகைகளும் பேருதவியாக இருந்தன. மூதூர் தொகுதிக் கிராமங்கள் தோறும் கவிதை அரங்குகளை சிறந்த முறையிலே நடாத்திய பெருமை உடையவர்.
பேராசிரியர் தில்லைநாதன், சில்லையூர் செல்வராசன், சொக்கன், வித்துவான் எவ், எக்ஸ்.சி.நடராசா, புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை, செ.பொ.சிவசேகரனார், தாமரைத்திவான், நவாலியூர் நடராசன், வித்துவான் வி.சி.கந்தையா போன்ற பல கலைஞர்களின் தலைமையில் கவிபாடியுள்ள பெருமை இவருக்குண்டு.
இவரது கவிதைகள், கதைகள், நாடகங்கள் இலக்கிய ஆக்கங்கள் யாவும் 1990 இல் நடந்த வன்செயலினால் அழிக்கப்பட்டும், அழிந்தும் விட்டன. எனினும் நூல்வடிவம் பெற்று அழியாச் செல்வமாக திகழ்பவையும் பல தமிழரதும், தமிழ்ச் சமுதாயத்தினதும், இன்னல்கள் மனோபாவங்கள், அவலங்கள், யதார்த்தங்கள் நிலைமைகள் என்பவற்றை அனுபவரீதியாக அனுபவித்து கவிதைகளாக இலக்கிய உலகிற்கு படைத்துள்ளமை வரப்பிரசாதமே. இப்படிப்பட்ட ஒரு கலைஞரை வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், தனது ஆறாவது ஆண்டு நிறைவுவிழாவில் சிறுவர் இலக்கிய செல்வர் எனும் விருதை வழங்கிக்
கெளரவிக்கிறது. ச.அருளானநதம
ஆசிரியரின்நூல்கள்
1. இன்பக் கனிகள் சிறுவர் பாடல்கள் 2. LJT6ů u(6986) Tib சிறுவர் பாடல்கள் 3. காகமும் தம்பியும் சிறுவர் பாடல்கள் 4. பாடி ஆடுவோம் சிறுவர் பாடல்கள் 5. கடலும் காவிரியும் சிறுவர் பாடல்கள் (மாகாண சாகித்தியப் பரிசு) 6. சின்னச் சின்ன பாட்டு சிறுவர் பாடல்கள் 7. மனதுக்கினிய பாட்டு சிறுவர் பாடல்கள் (அகில இலங்கை சகித்தியய்பரிசு) 8. 607595LDM607 LTG சிறுவர் பாடல்கள் 9. பூஞ்சிட்டுக்கள் சிறுவர் கதைகள் 10. தங்க மாம்பழம் சிறுவர் கதைகள் 11. பளிங்குத் தீவு சிறுவர் நாவல் 12. காட்டில் கலவரம் சிறுவர் நாவல் 13. LjuЈBIClasт6поп6отапа... uпtium சிறுவர்நாவல் (அகில இலங்கை சாகித்தியப் பரிசு) 14. மனதில் உறுதி வேண்டும் சிறுவர் நாவல் . அச்சில் 15. உல்லாசப் பயணம் சிறுவர் நாவல். அச்சில் 16. ஆடி மகிழ்வோம் சிறுவர் விளையாட்டு 17. அந்த ஆவணி ஆறு சிறுகதைகள் தொகுப்பு 18. ഖbഥി , சிறுகதைகள் - தொகுப்பு 19. கேணிப் பித்தன் கவிதைகள் கவிதைத் தொகுப்பு (அச்சில்) 20. கண்ணனும் ராமனும். அச்சில்
V ஆசிரியர்குழு
41

Page 23
புரட்சி வெடித்தது, போராட்டம் முற்றுபெறவில்லை பெண்களின் யதார்த்த வாழ்வியல் பற்றிய கண்ணோட்டம்
• 's -கதையாய் கட்டுரையாய்
சர்ச்சைக்குள்ளாகக் கூடிய யாழ்ப்பாணத்து உயர்குடிப் பிறந்த வேளாளப் பெண்களுடையதும், இடைக்கால வரலாற்றில் ஏனைய சாதிகளிலும் ஏற்பட்ட கலப்புத் திருமணவாழ்வுகள் பற்றிக் கூற முற்படுகிறது எனது கட்டுரை, விமர்சனங்களுக்கும் முழுமையற்ற தரவுகளுக்கும் ஆட்படக் கூடும் என்பதால் நேயர்களிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற்று பூரணமாக இதனை ஆராய்ந்து கூற முற்படுவதே எனது நோக்கம் என்று கூறி இச் சிறு கட்டுரையினை உங்கள் முன் வைக்கிறேன்.
பல பெண்கள் இத்தகைய திருமணங்களுக்கு ஆட்பட்டு இருந்தாலும், தமது பிரச்சனைகளை முன்வைக்கவோ, அன்றி அலசல்களுக்கு இ.மளிக்க விரும்பமாலோ இருந்திருக்கிறார்கள் என்றே கூறவேண்டும். இத்தகைய பெண்கள் ஆரம்பம் முதல் பிறந்து வளர்ந்த சூழல் மிகக் கட்டுக்கோப்பானது. 11ாரம்பரியம் மிக்கது. சாதி, சால்பு, சமயம், என்ற இறுமாப்பு உடையது, சாதி எனும்போது வரையறைக்குப் பெருமளவு உட்பட்ட வேளாளர் சாதியே எனது etsi (660Dyu6ör 1 Isl6JOITTUD6Alfrgó).
தந்தை வழிப் பராம்பரியம் மிக்க வேளாளர்களும், ஒன்று கூடி வளர்ந்த ஏனைய சாதிகளும் ஒன்று பட்ட கட்டுக் கோப்பில், பிராமணர்கள் அறிவார்ந்ததும் மதிப்பிற்குரியராகவும் கருதப்பட்டனர். பெருமளவு இச்சாதியில் பெண்கள் பிறழ்வுத் திருமணங்களுக்கு ஆட்படவில்லை. ஏனைய தோழிகளுடன் வாழ்ந்த வேளாளப் பெண் எப்படி இதற்கு அடிமையானாள் என்பது எனது o)çJ60) .
ஆரம்பத்தில் வேளாளக் குடிமகன் என்பவன் தனது குடும்பத்தில் நிர்வாகியாக சகல துறைகளிலும் தேர்ந்தவனாக தனது குடும்பத்துணையால் ஏற்றுக் கொள்ளப்பட்டவனாக இருந்த அதே சமயம் கல்வியின் பால் பெரிதும் விருப்புடையவனாகவும் சமூகத்தில் அந்தஸ்துக் கோரி நிற்பவனாகவும் காணப்பட்டான். ஆகையினால் இயல்பிலேயே பெண் தனது கல்வியறிவு என்ற பிரச்சினை முன் வைக்கப்பட்ட போது வேளாளன் தனது மகளை பள்ளிகளில் கல்விகற்ற அனுமதித்தது 1950 அல்லது அதற்கு முற்பட்ட ஓரிரு தசாப்தங்களில் எனலாம். ஆறுமுகநாவலர் போன்ற ஒழுக்க சீலர்களது வகுப்புக்களிலோ விவேகானந்தர் நிவேதிதா போன்றவர்களது சீர்திருத்த இயக்கங்களிலோ பலவாறு பெண்களது வளர்ச்சி தோற்றம் பெற்றது எனலாம்.
42

இவ்விதம் பெண்களது கல்வி வளர்ச்சி பெற திருமணம் என்பது சடங்காக மட்டுமல்லாது வாழ்வியல் சார்ந்ததாகவும் விரும்பு வெறுப்புக்கள்ை முன் வைப்பதாகவும் இருந்தது. இதன் காரணமாக துரதிர்ஷ்டவசமாகவோ அன்றிட் பாரம்பரியமாகவோ சமூக மரபுகளிலே சீதன முறைமை முக்கியத்துவம் பெற்றது. “தந்தை தனது மகளுக்கு தர வேண்டியது” என்று கூறுவது அநாகரீக மாகப்பட்ட காலம் அது. சொத்துக்கள் மகனுக்கு அன்றி மகளுக்கே என்றவாறு சிந்தித்த தந்தையர் மத்தியில் படித்த மாப்பிள்ளை ஒரு பிரச்சினையானான். மாப்பிளையின் தராதரம் கூடக் கூட பெண்களுக்கு சீதனம் வியாபாரம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு பெருமளவு பெண்கள் தந்தைக்கும் மூத்த சகோதரனுக்கும் பாரமாக இருக்கும் நிலை தோன்றியது. அறுபதுகளிலும் பிற்பட்ட காலங்களிலுமே சீதனக் கொடுமைகளினால் பெண்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். அத்துடன் நல்ல கதை சொல்லும் பாட்டி, சமையல் கைவந்த அம்மா இயல்பூக்கம் நிறைந்த சகோதரி, வாழ்க்கைக்கேற்ற சகபாடி மனைவி என்ற அந்தஸ்து பாரம்பரிய குடும்பங்களில் இருந்து சிறிது சிறிதாக மறையத் தொடங்கியது.
சீதனக் கொடுக்கல் வாங்கல்களில் பேரம் பேசிய மணமகன் பெற்றோர் சம்மதத்துடன் மகளின் விருப்புக்கூட இன்றி மணம் செய்யும் நிலை தோன்றியது 70க்குப் பிற்பட்ட காலங்களில் என்றே கருதுகிறேன். இஸ்லாமிய சகோதரிகளில் பெரும்பான்மையானவள்கள் இதற்குச் சாட் சியாக இருக்கக்கூடும் எனினும், வேளாளப் பெண்களின் கருத்துநிலை முரண்பாடு எத்தகையது என்பதிலேயே என் கவனம் ஈர்க்கப்படுகிறது.
இங்கு கல்வியறிவு மற்றும் சுற்றுச்சுழல் விழிப்பு நிறைந்த பெண் தனது அண்டைய நாட்டுப் பெண்களது வாழ்வு முறைகளினால் ஈர்க்கப்பட்டுத் தானும் புரட்சி செய்யப் புறப்பட்டது காலத்தின் எதிரொலியாகும்.
ஏனெனில் தேசியப் பிரிவினைகளினர்ல் பிற்பட்ட சமூக வாழ்வில் பெருமளவு பிறழ்வு நீரோட்டம் நிலவியது. தனது அந்தஸ்தை ஆணுக்குச் சமனாக நிலைநிறுத்திய பெண் ஆண்களினால் பெருமளவு புறமுதுகிடப்பட்டாள். ஆன் என்பவன் ஆள்பவனாகவும் குடும்பத்தின் சர்வாதிகாரியாகவும் இருக்க முற்பட இன்னோரன்ன பல பிரச்சனைகளால் உந்தப்பட்ட பெண் எதிர்நோக்கியது அல்லது எதிர்பார்த்தது தனது அந்தஸ்திற்கு ஏற்றதொரு துணையையே. லெளகீக விடயங்களில் தோல்வி அடைந்த பெண்கள், மாமியார்க் கொடுமைகட்கு உட்பட்ட பெண்கள், என்று பலர் தமது பிரச்சனைகளை ஏற்கனவே கூறி இருக்கிறார்கள் என்பதால் எனது கட்டுரையில் அவற்றைப் பெருமளவு கூற முற்படவில்லை.
மேலும் இச் சந்தர்ப்பத்தில் சமூத்தில் தோல்வி மனப்பாங்கு பெரும்பாலும் ஆண், பெண் இருபாலாரையுமே அணுகிப் புரட்சிகள் வளர்ச்சி பெற்றன. போர்ச்சூழல் யாழ்ப்பாணத்தில் 80களில் வளர்ச்சியுற்ற பெண்களது நிலையைப் பெரிதும் மாறுபடுத்தியது.
43

Page 24
சீதனப்பிரச்சனை ஒருபுறம், குடிப்பிறப்பு ஒருபுறம், ஒழுக்கம் ஒரு புறம், என்று பலதரப்பட்ட பிரச்சனைகளை முன்வைத்து சமூகப் பாரம்பரியங்கள், போராளிகளாலும் சமூக உந்துதல்களாலும் தகர்த்தெறியப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது.
வருணாச்சிரம தர்மம் பேணப்பட்ட சமூகத்தில் உயர்குடிப் பிறந்த பெண்ணின் மணவாழ்க்கை முறிவடைந்த போதிலும் கீழ்ச்சாதிக்காரனுக்குப் பெண் கொடுக் கப்படாது என்ற தோற்றப்பாடு நிலவியதும் கூட இக்காலப்பகுதியிலேயே. வெடித்துப் புறப்பட்ட உணர்வுகளுக்கு வாய்க்காலின்றித் தவித்த பெண்களுக்கு வாழ்வளிக்க முன்வந்ததும் 80 களில் தான். பிற்பட்ட சமூகத்தினரு ன் முன்னொரு போதும் இல்லாதளவு கலப்புத் திருமணங்கள் இப்பகுதியில் காணப்பட்டன.
தந்தை வழிப் பாரம்பரிய வேளாளச் சமூகத்தில் இதுவரைகாலமும் பெண்ணின் விருப்பு வெறுப்புப்பற்றிய அலசல்கள் இன்றியே திருமணங்கள் நிகழ்ந்து வந்தன. எனினும், பிற்பட்ட காலப்பகுதியில் அது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக மாற்றம் பெறும்நிலை தோன்றியது. பெண்களது கல்வியறிவு பிரச்சனையற்றதாக இருந்த நிலையில் பொருளாதார சுதந்திரம் பற்றி பெண் சிந்திக்கத் தொடங்கியதும் இக்காலப் பகுதியில் தான். சமூகத்தில் தனக்கெனத் தனியிடம் வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கிய பெண்ணுக்கு ஆதரவாக ஒரு துணை வேண்டப்பட்டது. உணர்வு பூர்வமாகவும் லெளகீக விடயங்களை அண்டியும் இப்பெண் சிந்திக்க ஆரம்பித்த காலத்தில் சமூக விழிப்புப் போராட்டங்கள், போர்ச்சூழலால் முன்னெடுத்துச் செல்லப்பட்டிருந்தன. போராளிக் குழுக்களிலும் இளம் பெண்கள் பங்கேற்ற காலங்களில் குடும்பக் கட்டுக் கோப்புக்கள் சாதிமுறைமைகள், கீழ் சாதித் தவிர்ப்புகள் உடைத்தெறியப்பட்டுக் கொண்டிருந்தன. எனவே கொழுகொம்பைத் தேடிய பெண் முற்போக்குச் சிந்தனைகளால் துண்டப்பட்டு குடும்பப் போராட்டி, வாழ்வில் கலப்புத் திருமணவாழ்வை ஏற்றுக் கொண்டாள்.
ஆரம்பத்தில் பெருமளவு வெளிச்சூழலுக்கு ஆட்படாத பெண்ணின் வாழ்வு காதலிருவர் கருத்தொருமித்ததாகவே அமைந்தது. மணமகனது குணாதிசயங்கள், இயல்புகள் நோக்கிச் சர்ச்சைகள் ஏழாத தாம்பத்யம் இல்லறலாழ்வை இனிமையாகவே இழுத்துச் சென்றது. இடையில் குடும்ப வரையறைகளில் சற்று மாறுபாடுகள் காணப்பட்டாலும் கூட மரபுவழிவந்த பெண் விட்டுக் கொடுத்தாள். மணமகனும் அதற்கு இசைந்தான்.
மணவாழ்வில் பொருளாதாரம் என்ற கருத்துப் புகுந்த போது நிலைமை மாறியது. குழந்தைகள் தோற்றம் பெற்றபோது அடுத்தநேர உணவு பிரச்சனை ஆகியது. எனவே உழைக்கும் திறனைப் பெண் தனது பங்களிப்பாக ஏற்றுக் கொண்டாள். பெரும்பாலும் “மணமகன் தனது தாய்வழிக் குடும்பத்தின்
44

பராமரிப்பை ஏற்பவன்’ என்ற யாழ்ப்பாணத்து மரபுமட்டும் குடும்பத்துத் தலைவனால் ஏற்கப்பட்டது. அதுவும் புரட்சி கருத்துக்களால் கவரப்பட்ட் மணமகளின் மனம் துன்பம் பூத்த மனக்குரங்கு ஆயிற்று. குடும்பத்தில் சூத்திர உழைப்பாளியாகவோ அல்லது வீட்டுத் தந்தை என்ற பங்களிப்பையோ ஆண்மகன் ஆற்றினான். எனினும் முற்றுப்பெறாத பிணக்குகளும் சச்சரவுகளும் மாத்திரமன்றி கருத்தியற் கலகங்களும் பெண்ணின் மனதைக் கூனிக்குறுகச் செய்தது என்றால் மிகையல்ல.
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட தொடர்ந்த அரசியல் அழிவுகளால் ஏற்பட்ட இடப்பெயர்வு, பட்டினி, வசதி, வாய்ப்பு என்று இன்னோரன்ன பிரச்சனைகளும் தலைதுாக்கியபோது தன்கணவனை உழைக்கும் பொறி முறைக்குப் பல துன்பங்களின் மத்தியிலும் உயர்த்தி வைக்கத் தலைப்பட்டாள் பெண். இது தலைவியின் குடும்பப் பாரம்பரியத்தின்பாற்பட்டது என்பதே அன்றி நேரடியான மேற்பார்வைகள் “கருத்துச் செம்மல்களால்”ஏற்றிவைக்கப்படவில்லை. புரட்சிகள் வெடிப்பது சுலபம். ஆனால் அவை பெருமளவு எழுந்தமானமாக இருந்ததே தவிர பொதுமைப்படுத்தப்படவில்லை. போராட்டம் முற்றுப் பெறவில்லை.
இதனிடையே உணவு, வீட்டுத்தூய்மை, பள்ளி செல்லும் குழந்தைகளது பராமரிப்பு என்னும் பொறுப்புகளைச் சுமந்த பெண் மன உளைச்சல்களுக்கும் பிரமைகளுக்கும் ஆட்பட்டதும் கூட ஒரு செய்திதான்.
பாரம்பரியக் குடும்ப வரன்முறைகளோடு இயல்பில் பயந்த சுபாவியாக இருந்த பெண் “பெண்ணிலைவாதி” “ஆண்மூச்சுக் கொண்டவள்” என்ற விமர்சனங்களுக்குள் வரையறைப் படுத்தப்பட்டதும் இன்னொரு வகை. ஆனால் பெண் விடுதலை பெற்றுக் குடும்பத்தை விட்டு வெளியேறியது ஒரு புறம் என்றால், குடும்ப வரன் முறைகளுக்குள்ளே தனது பொறுப்புக்களைச் சீர்ப்படுத்தியது இன்னொரு புறம் எனலாம்.
எனது எழுதுகோல் குடும்பப் பெயர்வு செய்த பெண்ணின் கருத்து வளத்தைவிட குடும்பத் தலைவியின் கருத்துவளம் சற்றும் சளைத்ததாக இல்லை என்றே கூறவிழைகிறது. பரிணாமவாதிகளின் குழந்தைகள் பள்ளிப்படிப்பில் ஒழுங்குமுறைப் படுத்தப்பட்டனர். இங்கு கூட குழந்தைகள் சூத்திரன் பெற்ற குழந்தையென்று குடும்பங்களில் வரன்முறைப் படுத்தப்பட்டதும் ஒரு வகை. கல்வி அறிவு பெற்ற பெண்ணின் தராதரம் சீர் தூக்கிப் பார்க்கப்பட்டது. சமூக விழிப்புப் பெற்ற ஆண் பாரம்பரிய வாதிகளால் அவள் போகுமிடம் எல்லாம் சீர்தூக்கிச் சரிசெய்து பார்த்ததும் ஒரு வகை.
குடும்பத்தில் ஆண்மகன் அசமந்தமாக இருந்தால் விழித்திருக்கச் செய்கிற கட்டாயத்திலும் பெண் தான் போராளியானாள். இத்தயை பெண்ணுக்கு “விடியலுக்கு நாளில்லை பொழுதில்லை” என்று சொல்லும் திறன் மட்டும் போதுமானதல்ல. வயோதிபத் தளர்வும், உடல், நலிவும் ஏற்படும் போது புரட்சி
45

Page 25
எப்படி இனிச் செல்லும் என்று மட்டுமல்ல சமூகப்புலன்களுக்கு பெண் காட்சிப் பொருளாக் கப்பட் 1.வள் என்பதனால் இப் போது திருமணங்கள் மறு பரிசீலிக்கப்படுகின்றன.
“தனது பாட்டனோ தார்ம் இழந்தது தனது 60 பதுகளில், தந்தையோ தனது வாலைப் பருவம் இழந்தது 50பதுகளில், தனது வாழ்வில் தளர்ச்சி ஏற்பட்டதோ 40 பதுகளில்” என்று சொல்லும் நாயகனோ தன் தம்பியின் வாழ்வுப் பிரச்சினை மறுபரிசீலிக்கப்படுவது 30 அல்லது 35களில் என்றான். உடலகம் எப்படி போய்க் கொண்டிருக்கின்றது என்கிற நோக்கில் பெண்மையின் பரிணாமத்தின் இன்னொரு பருவம் அல்லது தோற்றப்பாடு அவளது மகளா என்பது கூட சிந்தனையில் ஏற்படுகிற ஒரு முரண்பாடுதான்.
“மேற்படியாள்” என்று செல்லமாக அழைக்கப்படுகின்ற பெண்ணின் துரப்பர்வை, சமூகத்தின் இடியப்பச்சிக்கலுக்கு முகம் கொடுக்க வயோதிபத்தில் தனக்கு வலு இருக்குமா? என்று சிந்திக்குமா? அன்றி, பாரம்பரிய வாழ்வில் தனது தந்தையின் வன்முறைக்கு ஆட்பட்ட தனது தாயை நினைவு கூருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 8
வெண்ணிலா விஜயலக்ஷ்மன் போதனாசிரியை வவுனியா வளாகம்.
ဖွံဖြိုကွ္ဆန္တိန္တီး జీణి ... : : ܕ݁ܪ ܬܐ 類 سی வட்ட நிகழ்வில் பங்கு கொண்ட மிருதங்க வித்துவான் திரு.க. கனகேஸ்வரனின் மாணவர்கள்.
46
 
 
 
 
 
 
 
 

எச்சரிக்கை
(செம்மணி)
கொஞ்சம் நில்லடா கோடரியும் கொண்டு போகிறாய் மிதி வண்டியின் இலக்கத்தை வீட்டில் பத்திரமாய்க் குறித்துவை. இந்த இரும்பு கூட உனது இருப்பை அறிய உதவலாம். நீ நினைக்கலாம் இச்சுமை - உன் 6). If p88 360)tD60)u இறக்குமென்று. உனது எலும்பைக் கூட இலகுவில் நீறாக்கலாம்.
விபத்த நெருங்கும் போது
வண்டில் ஒட்டி நான் எதிர் வருகையில் சற்று அவதானமாக கடந்து போக வேண்டும் (நீ) விபத்தேதும் நேராவண்ணம் அப்படியான நேரங்களில் படபடக்கும் மனதுடையவன் நான்
மேலும் அந்நேரங்களில் என்னவளுடனோ என் நீசனுடனோ வழமையான துக்கத்தின் துகள்கள் பரந்திருக்கும் அகன்ற அறைக்குள்ளோ சிட்டுக் குருவியின் பாதையைப் பின் பற்றியோ ஒப்பற்ற இலக்கின் ஒளிக்கீற்றுடனோ இன்னுமொரு அல்லது பல பயணங்களையும் நான் மேற்கொள்ள நேரலாம்!
நன்றி 'மெளன மொழி' சஞ்சீவி வாரமலர் 28.09.1999
எதிர்ப்படும் நீயோ
மிகவும் நல்லவன் சிறுகுணத்தோர் அறியாமையை பொறுக்கும் பெருமுள்ளம் பயித்தியங்களை நேசிக்கத் தெரிந்தவன்
எனவே நீ கடந்து செல்ல வேண்டும் சிறு விபத்தும் நேராதபடி அது தப்பி விபத்து நெருங்கும் போது எண்ணிக் கொள்வேன் என்னைப் போன்றவன் நீயென்று
சற்றுப் பின் ஜீரணிக்க முடிந்தால் செர்க்கத்தின் வாசலில் பிரமிப்பின் மரணம் எனக்கு உனக்கு.?
பசுபதி முரளிதரன்
47

Page 26
கருத்தற்ற காவியமாக.
அரங்கத்திலிருந்து
69(5 dis60)6) வெளியேற்றப்படுகிறது. கருத்தற்ற காவியமாய்
29, ஆற்றுகையின் அர்த்தம் புரியாமல் அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகளால்
b'qi'i C3i Jfii i' f'... ġbir6b நிலை குலைந்து போகிறது!
616) ult (666)66 666 6திர்பார்த்து கிறுக்கப்படுவதையும் செதுக்கப்படுவதையும், செதுக்கப்படுவேன் எனச் சென்று சிதைக்கப்படுவதையும் ஆக்கப்பட வேண்டும் என விரும்பி தாக்கப்படுவதையும்,
&563)6) எப்படித்தாங்கிக் கொள்ளும்?
துரிகையையும் உளியையும் எதிர்பார்த்த இடத்தில்: துருப்பிடித்த ஆணியல்லவா ஆட்சிசெய்கிறது
தங்கள் மனச் சிலுவைகளை
சிற்பங்களின் முதுகில் ஏன் சுமக்க வைக்கிறார்கள்?
பாலை வனத்தில் எரிகின்ற நெருப்பினைப் பசுப் புற்றரைகளில் பற்ற வைத்தும் வடிகால்களுக்குப் பதிலாகத் தேக்கங்களை உருவாக்கியும் ஏன் வேடிக்கை பார்க்கிறார்கள்?
“உன்னையே நீ அறிவாய்” மகுட வாசகத்தை (pg.8FETurghg
“எனக்கு நான் உதவாமல் போகும்”
அராஜகம் அரியாசனம் கொள்ள வழிவிட்டால்
566) கலைந்து போகாதோ? அது
அரங்கிலிருந்து கருத்தற்ற காவியமாய்.
-பொ. சத்தியநாதன்.
48...

பதிவு 2
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தில் ஆறு வருட கலை இலக்கியப் பணிகள்.
ஆறு ஆண்டுகளிற்கு மேலாக வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் மாதந்தோறும் முழுநிலாக்கருத்தாடல் நிகழ்வினை காலை 11 மணி முதல் பி.ப.1.30 வரை நடத்திவருகிறது. பல்வேறுபட்ட தலைப்புகளில் கருத்தரங்குகள், நாடகம், நடனம், இசைநிகழ்ச்சிகள், நூல் வெளியீடுகள் ஒலி நாடா வெளியீடு கலை இலக்கிய சஞ்சிகை வெளியீடு ஆகியவற்றினை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது. بر
வவுனியாவில் கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தை பொறுத்த மட்டில் அது பல்வேறு நோக்கங்களைக் கொண்டு இயங்கிவருகின்றது.
ஆரம்பகட்டத்தில் இருக்கும். அதாவது மாணவர்களின் கல்வி
வளர்ச்சிக்கு சமாந்தரமாக ஒர் இலக்கிய அல்லது கலை ஆர்வத்தை துண்டி
அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பது, தேடல் நோக்கிச் செல்லும் இளம் கலை இலக்கிய ஆர்வலர்களுக்கு ஓர் உந்து சக்தியாக விளங்குவது, கலை
இலக்கியவாதிகள் தங்களின் கலை இலக்கியம் சம்பந்தமான ஓர்
இரைமீட்டல்களுக்கு உறுதுணையாக அமைய உதவுவது. இது போன்ற
பல்வேறுபட்ட நோக்கங்களுக்காகவென 1997ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்
ՓՓ நிலாதினத்தில் (21.02.1997) 17 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பே
இதுவாகும்.
வவுனியாவில் வாழ்ந்து வருகின்ற இலக்கிய பணிகளில் ஈடுபடுபவர்களாகிய தமிழ்மணி அகளங்கன், வவுனியா தேசிய கல்வியியற் கல்லுரி விரிவுரையாளர் ந. இரவீந்திரன் வவுனியா வளாக ஆங்கில விரிவுரையாளர் கந்தையா ரீகணேசன், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஆசிரியர் ஐகதிர்காம சேகரம் மற்றும் கனக ரவீந்திரன், கா.கணபதிப்பிள்ளை போன்றோரின் உந்துதலுடன் வவுனியாவில் வாழும் கலை இலக்கிய ஆர்வலர்கள் பல்கலைக்கழக வளாக, கல்வியற், கல்லூரி பாடசாலை மாணவர்கள் ஆகியோரால் இது நடத்தப்பட்டு வருகின்றது.
74 நிகழ்வுகளை பல்வேறு கருப்பொருள்களின் கீழ் நடாத்தி வந்துள்ளது. தமிழ் இலக்கிய வரலாற்றுக்காலம் தொடக்கம் முற்போக்கு எழுத்தாளர்களது சிறுகதைப்பங்களிப்பு, புதுக்கவிதை தமிழில் சிறுகதை வளர்ச்சி எழுத்து, தமிழ் இலக்கியத்தில் வன்னி இலக்கியங்களின் பங்களிப்புக்கள், வன்னிப் பண்பாட்டு பகைப்புலத்தில் வன்னியூர் கவிராயரின் பங்களிப்பு என பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.
49

Page 27
இவற்றை மட்டுமன்றி காலத்திற்கு காலம் நூல்கள் சஞ்சிகைகளின் அறிமுகமும் கருத்தாடல்களும் இடம் பெற்று வந்துள்ளன. இவ்வாறாக பல நிகழ்வுகளும் நடைபெறுவதற்கு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கம் பெரும் பங்காற்றியுள்ளது. இவர்களுடன் வவுனியா நகரசபை, வவுனியா வளாகம், கல்வியியற்கல்லுரி மற்றும் பாடசாலைகளும் தமது பங்களிப்பை செய்து வருகின்றன.
தற்போது கலைச் செயற்பாடுகளுக்கு களங்கள் மிக அரிதாக காணப்படுவதனால் கருத்தாடல்களின் இணை நிகழ்ச்சியாக கலை நிகழ்வுகளும் இ.ம்பெற்று வருகின்றன. அது மட்டுமன்றி வவுனியா மாவட்டத்தில் நிகழும் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகள் பற்றி ஆராயப்படுவதுடன் அப் பிரச்சினைகள் பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதும் பாராட்டத்தக்கதாகும். குறிப்பாக கடந்த கூட்டங்களின் போது வவுனியா மாவட்ட நீர்ப்பிரச்சினை, அகதிகள் பிரச்சினை, பிச்சை எடுக்கும் குழந்தைகளின் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் பற்றி கருத்தாடல்கள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தம் தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தவும், ஏனையவர்களிடமிருந்து தெரியாதவற்றை தெரிந்து கொள்ளும் ஒரு பகிர்வாகவும் இக் கருத்தாடல்கள் அமைவது அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள பணி 6ான்றே பாராட்ட வேண்டும்.
-சி.சிவாஜினி. நன்றி æägrf 66200
வட்ட நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டோர்.
50
 

அட்டைப்படக் கதை
அறுபதாம் அகவை காணும் பேராசிரியர் சி. மெளன குருவின் நாடக அரங்கு
-கந்தையா ரீகணேசன்alifkyapuramž arayanur anomasti. ஈழத்தின் கலை அடையாளம் கூத்து :-
கூத்துக்கலைகளால் நிறைந்த ஒரு தேசத்தில் மேற்குலக கலை மரபின் அதிமுகத்தினால் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விக்ரோறியன் பாணியிலான அரங்கொன்றை மேற்குலக கல்விப் புலமை பெற்ற கலையரசு சொர்ணலிங்கம் (பம்பல் சம்பந்த முதலியாரை அடியொற்றி) நிறுவுகின்றார். இந்த ஓட்டத்தின் அடுத்த மைல்கல்லாக வந்து சேர்பவர் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, நாற்பதுகளில் மேற்குலக இயற்பண்பு வாத அரங்கில் யதார்த்தமாக பேச்சு மொழியைப் பேசும் யாழ்ப்பாணக் கதாமாந்தரும் அவர் தம் வாழ்வியலும் அரசியலும் அவர் அரங்கின் பிரதான பண்புகள் ஆகின. இந்தப் பின்னணியில் நாடக ஈடுபாடு கொண்டிருந்த பேராசிரியர் சு.வித்தியானந்தன் (சக சிங்களிப் பேராசிரியர் எதிரி வீரசரத்சந்திரரின் 'நாடகம்' எனும் கூத்து வடிவின் நவீனத்துவ அளிக்கையால் உந்தப்பெற்று) தமிழ் கூத்து வடிவங்களை நவீன படச்சட்ட அரங்குக்கு ஏற்ப சுருக்கி அளித்து ஈழத் தமிழ் அரங்கின் போக்கை கூத்தின் பிரதான மூலங்களுடன் (ஆடல், பாடல், புராண, இதிகாசக் கதைகள்) அடையாளப்படுத்துகிறார். ஆட்டப் பண்பு சிறப்புடன் பயிலப் பட்டு வந்த மட்டக் களப்பு வடமோடி தென்மோடிக் கூத்துகள் ஈழத்தமிழன் அரங்கின் பிரதான ஆட்டக் கோலமாகின. இந்தப் போக்கினூடாக வளர்ந்து ஈழத்தமிழ் அரங்கின் இன்னொரு மைல்கல்லாக அமைபவர் கலைஞர் சி. மெளனகுரு இவரது இராவணேசன் வடமோடிக் கூத்து அமைப்பில் புதிதாக எழுதப்பட்ட கூத்து ஆகும்.
அதாவது, சு. வித்தியானந்தனின் கூத்து மீட்புப்பயணத்தின் பிரதான ஆட்ட நாயகனாக மெளனகுரு மிளிர்ந்தமை வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகிறது. ஏனெனில் வெறுமனே பாடசாலை பல்கலைக்கழக காலத்தில் மட்டும் விலாசத்துக்கு நாடகம் ஆடும் கலைஞராக இல்லாது வாழ்வின் தொடர்ந்த பயணத்தில் நாடக வாழ்வையும் தன்னுடன் பிணைத்ததில் ஈழத் தமிழர் அரங்கு ஒரு புதிய பரிமாணத்தைப் பெற வழிவகுத்தது என்றால் மிகயாகாது.
ஈழத்து நவீன அரங்கின் முகம் :-
ஏற்கனவே நாற்பதுகளில் தமிழர் அரசியலை பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் அரங்கு (துரோகிகள், தவறான எண்ணம், சங்கிலியன்) பேசிய போதும் அறுபதுகளில் இறுதியில் தேசிய அரசியல் முனைப்புப் பெற்ற போது ஈழத்தமிழர் அரங்கு இரு பிரதான விடயங்களில் பேச முயன்றது. ஒன்று சாதி ஒழிப்புப் போராட்டம் இது என் கே. ரகுநாதன், இளையபத்மநாதன், தாசீசியன் மற்றும் அம்பலத்தாடிகளின் கூட்டுப் படைப்பான கந்தன் கருணையூடாக வெளிப்பட்டது. மற்றயது வர்க்க அரசியல். இதனை மெளனகுருவின் ‘சங்காரம்" பேசியது. கூத்து வடிவத்தினூடாக (பார்க்க சங்காரம் - ஆற்றுகையும் தாக்கமும்)
51

Page 28
மெளனகுரு, மீட்டெடுக்கப்பட்ட கூத்து மரபின் அரங்கியற் சாத்தியப்பாடுகளையும் அந்தக் கூத்து மரபு தொடர்ந்து வளரும், வாழும் அரங்கின் இன்றியமையா முதன்மையாகியுள்ளமையும் உருவகப்படுத்தியுள்ளார். “என பேராசிரியர் கா.சித்தம்பி (வனவாசத்தின் பின் . முன்னுரை) கூறுவது இந்தப் பின்னணியைக் dis(bgigli) கொண்டு தான் ஈழத்தமிழர் அரங்கு கண்டு கொண்ட பிரதான பண்பு மாற்றம் 70 களில் அரங்கேறுகிறது. அரங்கு அரசியலையும், மக்கள் வாழ்வையும், சாத்தியமான முறையில்சேத்தலைப்பட்டது. அளிக்கை முறையில் நவீனத்துவம் ஏற்படுகிறது. இந்த அடிப்படையில் பெளசுல் அமீர், சுகை ஹமீட், (பொம்மலாட்டம்) நா. சுந்தரலிங்கம் இ.முருகையன் (கடுழியம்) சுதாசீசியஸ் (பொறுத்தது போதும்) போன்றவை உருவாகின்றன. கூத்தின் மூலகங்களை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் மூன்றாம் கட்ட வளர்ச்சியாக இது காணப்படுகிறது. இதன் ஒட்டத்தில் முக்கிய பாய்ச்சலாக எண்பதுகளில் குழந்தை ம.சண்முகலிங்கத்தின் மண் சுமந்த மேனியள் (நெறியாள்கை - க. சிதம்பரநாதன்) அமைகின்றது. இது தமிழர் தேசிய இனப்பிரச்சனையை பேசியது.
மெளனகுருவின் அரங்கப் பணி :
இக்கால கட்டத்தில் மெளனகுருவின் அரங்கு கல்விசார் அரங்காகவும், சிறுவர் அரங்காகவும் இன்னொரு பரிமாணம் எடுத்தது. கூட்டத்தின oy"I , p.೧)íä6)6ité! பெரிதும் தனது நாடகங்களில் பயன்படுத்தி வந்த சி.மெளனகுரு அவர்கள் அதனை சிறுவர் நாடகங்களிலும் அளவுற பொருத்தமாக பல்வேறு ஆக்க கலை மரபுகளுடன் இணைத்து அவற்றிற்கு ஒரு தமிழ் அரங்க முகத்தை வழங்கினார். 'தப்பி வந்த தாடி ஆடு’, ‘வேடனை உச்சிய வெள்ளைப் 1றாக்கள்’ என்பன சிறுவர் உளவியல் அடிப்படையில் அவர்கள் உணர்வுகளுடன அரங்கேற்றப் பட்டபோதும், அதன் எழுத்துருவுக்குள் ஊடுபாவாக - மறைந்தும் மறையாமலும் காணப்படும் சமகால அரசியல் ஒட்டங்களை நாடக வரலாற்றாய்வாளர்களும், சமகால அரசியலாளர்களும் கண்டு கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இது எவ்வகையிலும் சிறுவர் அரங்கை ஊறுபடுத்தும் ஒன்று அல்ல என்பதும் இவற்றை வாசிக்கும் புதியவர்களும் உணர்ந்து கொள்வர். சிறுவர் அரங்கின் தொடர்ச்சியாக அவரது கல்வி சார் அரங்கு அமைந்தது. ஏற்கனவே குறிப்பிட்ட படி கூத்தின் மூலங்களை பயன்படுத்தி வந்த மெளனகுரு அவர்கள், பல்வேறு கலைமரபுகளையும் இணைத்து ஒரு புதிய ஆட்ட அரங்க மரண அதன் இயங்கியல் தன்மைகளுடன் வடிவமைத்த அடுத்த கட்டம் தொடர்ந்தும் அவரது “சரிபாதி’, ‘விடிவு', ‘நம்மைப் பிடித்த பிசாசுகள் ஆகிய நாடகங்களுடாக வெளிப்படுகிறது. தமிழ் அரங்க வடிவில் கால் ஊன்றிக் கொண்டு, பரதம், கதகளி, மேற்கத்தேய நடன அமைப்புகள் என பல்வேறு பொருத்தமான கலைமரகளின் சங்கமமாக தனது அரங்கை விகCக்கச் செய்தார். அவற்றை நிருத்திய நாடகம் என்றோ விவரண அரங்கு என்றோ, மேடை நிகழ்வு என்றோ அழைப்பதற்கு அப்டால் அதன் பாடுபொருளும், அரங்கமுறைமையும் மனித குலத்தின் தவிர்க்க முடியாத மனித முரண்களும் கலை மரபுகளும் பின்னிப் பிணைந்த "கூட்டு” என்பதே பொருத்தமான சொல் ஆகும். இதன் உச்ச
52

வெளிப்பாடாக அமைந்ததே 80 களின் நடுப்பகுதியில் பெண்ணுரிமை பேசிய சக்திபிறக்குது. இதன் பாடுபொருளும், ஆட்ட அரங்க முறைமையும் பெண்ணியல் விடுதலையை கட்டியம் கூறி நிற்றமை வரலாறு.
சமாந்தரமாக, ஈழத்தமிழர் அரங்கு தேசிய அரசியலை வீச்சுடனும், வேகத்துடனும் நாடகக் கலை விதிகளுக்குட்பட்டு போரையும் போரின் தாக்கத்தையும் பேசி வந்தது. (குழந்தை.ம.சண்முகலிங்கத்தின் அரங்க வளர்ச்சியோடு பார்க்கப்பட வேண்டியது க.சிதம்பரநாதனின் அரங்கத் தேடலும் இங்கு இணைத்துப் பார்க்கப்படலாம்.) போர்க்காலத்துக்கேயுரிய குறியீட்டுத்தன்மைகள், தொன்மங்களின் பயன்பாடு, மோடியுற்ற நடிப்பு முறைமைகள் என இவ்வரங்கு பரந்து விரிந்து வளர்ந்து பேசாப் பொருளை, அரசியலை, மக்கள் வாழ்வை பேச முனைந்தார்கள். எம் நாடகவியலாளர்கள். மெளனகுரு அவர்களும் இந்த அலையில் தனித்து நிற்பவரல்ல. அவரது “சரிபாதி”, “விடிவு', என்பன கூறும் கதைகள் அநேகம் அதன் இன்னொரு பரிமாணம் தான் வனவாசத்தின் பின். எடுத்துருவுடன் மட்டுமே நிற்கும் இவ்வரங்கு அரங்கேறும் போதுதான் மெளன குருவன் அரங்க விகச்சிப்பின் அடுத்த பரிமாணத்தை மக்கள் அறிய முடியும். (அவரது அரங்க விகCப்பை 'இராவணேசன்’ மீண்டும் புத்தாயிரம் ஆண்டின் தொடக்கத்தில் 2001 இல் மேடையேறிய போது பார்த்தவர் உணர்ந்தனர். ‘வனவாசத்தின் பின்.”. மனித முரண்களின் மோதுகை என கா.சிவத்தம்பி குறிப்பிடுகிறார். கருத்துக்களின் மோதுகையிலிருந்து மனிதநிலைப்பட்ட மோதல்களில் கவனம் செலுத்தியுள்ள மெளன குரு அவர்கள் இனிமேல் தரவுள்ள நாடகங்கள் ஈழத்தமிழரின் வாழ்வுத் தடத்தை உருவாக்க மேலும் உணர வைக்கும்.
அறுபது அகவை அடையும் பேராசிரியர் அவர்கள் 'கிழக்கிசை” எனும் இசைப்புதையலையும், ஈழத்தமிழர் நடனம் எனும் நடனக் கோலத்தையும் ஈழத்து இன்னிய அணி ஒன்றையும், (Band) உருவாக்கி உள்ளதோடு கலை இலக்கிய விமர்சன ஆய்வுத்துறைகளில் தனது முத்திரையை பதித்துள்ளார். அவர் உருவாக்கி உள்ள அரங்கு கலை இலக்கிய பார்வை, ஈழத்து நடனம், கிழச்கிசை, ஈழத்து இன்னிய அணி, என்பவற்றை எதிர்கால சந்ததி ஏற்று பேணுவதில் தான் சிறப்பு பெறுகின்றது.
தீர்வு
சாந்தன்

Page 29
அநீதிதான் நியதியோ!
வந்தாரை வரவேற்றுபுசலித்து வாழ்வளித்து வளம் கொழித்த வன்னி மனன், மண்வளமும் மழைவளமும், மரவளமும் மலிந்திருந்த மண், மானும் மானமும் செழித்தோங்கியமண், பாலும் தேனும் பாய்ந்தோடிய மண், குதுகலம் கொப்புளித்த மண், . வாடி வதங்கி, காய்ந்து கருகி, வறண்டு வாடிவிழுந்து, சுடுகாடாய்ச் சுருண்டுகிடக்கின்றது! சுடுதீ இது, வன்னிக்கு மட்டுமல்ல தேசமெங்கணுமே சூழ்ந்து, r இருள் மண்டிக் கிடக்கின்றது, மாதமும் மாரி பொழிந்த மாதாவை இன்று குருதி மாரி குளிப்பாட்டுகின்றது! வெளிச்சம் இங்கே வேரோடே பதிந்து. கிடக்கின்றது உண்ணுகின்ற உணவுமிங்கே, வாய்க்கும் வயிற்றுக்குமிடையே ஊசலாடி நிற்கின்றது, $2.6biré6). Desóir 961160) pureéléir நீதி நியாயம் நிர்மூலமானது! இனப்படுகொலைபோய் - இப்போ தினப்படுகொலை தாண்டவமாடுகின்றது; அழுது அழுதே - எங்களின் கண்ணிக் கடல்களும் காலியாகின. அதனால் .
வங்கக் கடலின் உப்பின் வீதமும் அதிகரித்தது!
தரித்திரமே இங்கு தமிழர் சரித்திரத்தை நிர்ணயிக்கின்றது! பUம். பதட்டம். பரிதவிப்பு. 6மக்கு, என்றும் எப்பொழுதும்!
'54

தென்றல் எங்களைத் தழுவி ஆண்டுகள் பலவாச்சு!
ஏனெனில். எங்களின் கண்ணிக் கதை கண்டு தென்றலும் சப்தித்து நின்று விட்டது! பால் பொங்கும் நிலவு தரும் பெளர்ணமியும் - இப்போதோ தினம் தினம் கண்ணீர்தான் சொரிகினறது. எங்கள் செந்நீர்க் கதையையே கண்டதனால், தேற்றுவாரின்றித் தேசமே தேம்பித் தேம்பி அழுகின்றது! தருமமிங்கு தழைப்பதென்று? அமைதி எம்மை அரவணைப்பதெப்போ?
என்று தனியுமிந்த ஆயுத கலாசாரம்? - எமக்கு என்று விடியும் எங்கள் இலட்சிய தேசம்? ?.
அ.பேனாட்
(பிரதேச கலாசார பேரவை நடாத்திய 2000 ஆம் ஆண்டு போட்டியில்
பரிசுபெற்ற கவிதை)
வனநாடே வண்ணி வளநாடே.
சோலைகளும் குயில்களும்
ஓலமிடும் காற்றும்
ஓங்கிவளர் மரங்களும். உரத்துக் குரல் கொடுக்கும் ஊர்க்குருவிகளின் ஓசைகளும் இனிப்பாய் சிறந்துநிற்கும் தெவிட்டாத தேன்மொழியும் கருத்தாழம் மிகுந்த கலைஞர்களின்
கலையூற்றும்.
பசுமைப் பூக்களாய் படர்ந்த வயலும் செழுமையின் சேதிகள் கூறும்.! வார்த்தைகள் மூச்சுமுட்டும் வன்னியின் எழில் கூற.!
தேடித் திரிந்து பெற்ற அமிர்தத்தின் ஒருதுளியாய் அனைவரும் நாடித்துதிக்கும் கோவில்கள். மதத்தின் வ்ேற்றுமைகள் மனிதத்தில் இங்கில்லை.! ஒப்பற்ற சமத்துவத்தின் உயிர்ப்புள்ள பூமித்தாய் வன்னி. சொற்களால் கூறும் வகையில் சிறப்புகள் சிறியதல்ல.! நித்தமும் வன்னி வளநாடே நின்புகழே ஓங்குதற்குப் பற்று வைத்து வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்.!
(அளவை கலைக்கரன்)
55

Page 30
ஒரு வாழ்த்துப் பாடல் நிலையான ஒரு நிகழ்வாய கலை இலக்கிய வட்டமது
பலகாலம் செயல்படுதல் பாராட்டத்தக்கதுவே கலையானது துலங்கமிக பண்பாடதுவாழ பெரும்பாடு
பட்டுவரும் வட்டமது கலைவட்டம் மலையான துன்பங்கள் அடைந்திட்ட போதிலுமே
இலையானை தூரத்துதல் போல மதித்தனராம் அலையான மக்களவர் நண்பராய் வந்துசேர
அனைவரையும் அன்புடன் இணைத்திட்டார்
ஏற்றத் தாழ்வில்லை எவெரெவரும் பேசிடலாம்
நாற்றம் மணம் என்ற பேச்சுகிடமில்லை ஆற்ற முடிந்தவற்றை ஆற்றவே செய்திடலாம்
மனமாற்றம் ஏதும் அங்குஇல்லை சேற்றை இறைப்பது போல் பேசினாலும் ஏற்றிடுவர்
ஆற்றெழுக்கு ஆனாலும் அவை ஒன்றே சீற்றம் ஏதும் காட்டுவது வழக்கமில்லை
நேறன்றப்பாலகன் ஆனாலும் அதுவே தான்
கண்ணாலே பார்த்துக் கவிபாடும் வல்லர்கள்
முன்னாலே இருந்திடவும் ஏதும் எண்ணாமலே இங்கே கவிபட வந்துவிட்டேன்
அச்சம் மிகத்தான் ஆனாலும் போகட்டும் மண்ணிலே செய்த மதில்தான் என்றாலும்
சின்னாள் அதுதான் நிற்காதோ புன்னாலே மேல்வந்த புழவங்கே சிலநாளில்
கண்ணாலே காணஅது மறைவதுபோல்
கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகப் பலகவிதை
எண்ணுக்குள் அடங்காத எத்தனையோ படிவைத்த
அண்ணல் அகளங்கன் கவிஞரவர் இங்கிருக்க
மண்ணுக்கு நிகரான கவி ஒன்று சாற்றுகிறேன்.
கண்ணி வரவழைக்கும் கவிதை ஒன்றை
பாடினவைத்தாள் கோழிக் கவிதை அது அண்ணார் அகளங்கன் பாடிவந்த கவிதையினை
தம்பி தமிழருவி விரித்துரைத்தர் விண்ணி வீழ்ந்தநிலம் அது போல கண்ணில்
சொரிந்து உள்ளம் மகிழ்ந்தனரே தண்ணி ஓட்டமதாய் அமைந்த கவிதையது
என்னாலே ஒரு நாளும் மறக்க முடியாது
எழுபத்தைந்து விழாக்கண்ட கலைவட்டம் வாழ்க
பழுவைச் சுமந்து நிற்கும் நண்பர்கள் வாழ்க விழுதைப் போல் அமையும் அகளங்கன் அவர் வாழ்க சிவனெறிப் புரவலர் பழுதிலா நண்பர் வட்டமது என்றுமே வாழியவே. சி.ஏ.இராமஸ்வாமி
56

உணர்வு வயப்பட்டதா நீதி?
பசுபதி முரளிதரன்
மநுநீதி கண்ட சோழனது நீதி வழுவாத ஆட்சிச் சிறப்பும் அவன் மகன் வீதிவிடங்கனின் பேராற்றல் சிவநெறி பிறளாத வரலாற்றையும் சேக்கிழார் சுவாமிகள் தமது பெரிய புராணத்தில் திருவாரூர் திருநகரச் சிறப்பு எலும் பகுதியில் அற்புதமாக பாடியுள்ளார். அமைச்சர்கள், குடியானவர்கள் ஏனைய ஜீவராசிகள், இவற்றை யெல்லாம் காக்கும் (மன்னன்) காவலன், காவலருக் கெல்லாம் காவலன் இறைவன் போன்றோரைப் பாடுபொருளாக்கி ஆறாத பக்தியை பெரிய புராணம் எங்கணும் காணமுடிகிறது.
திருநகரின் சிறப்பு (பசு கூட நீதிகேட்கும், நீதியைக் காக்க ஏகபுதல்வனையே பலியிடும் தந்தை - மன்னன்) அதன் வரலாறு, சூரிய குலமரபில் வந்த மநுநீதிச் சோழனின் சகல சிறப்புகளும் குறிப்பாக நீதியைத் தனதாக்கி (நீதி வழுவாது) ஆண்டமை. மன்னனுக்கும் பாரியாருக்கும் வீதிவிடங்கன் பிறக்கிறார். அவன் சிவநெறி பிசாகாது சகல கலைகளையும் கற்றுத் தேறுகிறான். அரசருக்கேயுரிய மணி நெடுந்தேரில், குதிரை, யானைப் படைகள், காலாற்படைகள், புடைசூழவும் அரசர் உலாவுகிற அரசுலாந் தெருவில் செல்கிறான்.
இத்தருணத்தில்த்தான் பசுக்கன்று ஒன்று அரசினங்குமாரனின் பொற்தேரின் சிற்களில் அகப்பட்டு உயிர் விடுகிறது.(தற்கொடைத் தாக்குதலா? வீதி விடங்கன் எதிரியா என்ற வினா எழுகிறதல்லவா) தாய்ப்பசு அன்றி துன்பத்தின் எல்லையை அடைகிறது. அரச சபை வாயிலில் தூக்கிய ஆராட்சி மணியை அடித்து நீதி கேட்கிறது. இன்னிலையில் வீதிவிடங்கன் துன்பமடைகிறான். பரபரப்படைகிறான். புலம்புகிறான். பிராயச்சித்தம் தேட முனைகிறான். மன்னன் செய்தியை அறிகிறார். பசுபடும் வேதனையை அடைகிறான். கன்றுக்கு நேர்ந்ததுபோல் தனது மகனையும் தனது தேர்க்காலால் (ஏக புதல்வன்) கொலை செய்ய இறைவன் தடுத்தாட்கொள்வது கதை. இங்கு கீதை கூறுவதல்ல நோக்கம், உணர்வு வயப்பட்ட நீதி இயற்கைக்கு முரணானதா என்பதே.?
இந்த இடத்தில் புலவரூடாக மநுநீதிகண்ட சோழன் முரண்படும் சம்பவத்தைக் காணமுடிகிறது. வீதி விடங்கன் அரசுலாம் தெருவில் தனது பரிவரங்களுடன் செல்லும் போது ஏன் பசுக்கன்று தேர்ச்சில்லில் புகவேண்டும்? நீதிகேடகும் தாய்ப்பசுவிற்கு மேற்கொள்ள விடயங்கள் தெரியாதா? (பேரறிவு பசுவிற்கும் உண்டு. இதுதான் திருநகரச் சிறப்பு) தனது கன்றைக் காப்பாற்றும் ஆற்றல் எங்கே போயிற்று? யாரும் அறியாதபடி விதிவசத்தால் நிகழ்ந்ததாயின் மன்னன் விதியை நோவதா? மகனை நோவதா? (மந்திரிமார் கூறிய பிராயச் சித்தங்களை ஏன் தேடக்கூடாது. விதியென்றால்) தன்னைப் போல் தொடர்ந்து நீதியைக் காக்க தனது வாரிசு ஏன் இருக்கக் கூடாது. இந்த இடத்தில்தான்
57

Page 31
மரண தண்டனை (இலங்கையில்) மீண்டும் கொண்டுவரப் படவேண்டுமா கூடாதா என்ற வாதம் நடைபெறுகிறது.
பத்து குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டனை பெறக் கூடாது. இது பழமொழி
ஒருவரது உயிரைப் பறிக்கும் உரிமை எவருக்கும் இல்லை. ஐக்கிய நாடுகள் சபை வாசகம்.
குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு அது நிகழ்கின்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க வேண்டும். இதற்காக பொருதாதார வளமும், மன வளமும் பெருக வேண்டும். மனித உரிமையும் மனிதனை மனிதன் நேசிக்கும் மனிதம் மலர வேண்டும். இதற்காக இலக்கியம், ஆன்மிகம் பெரும்பங்காற்ற முடியும். இதனால் தான் இலக்கியங்கள் பலதும் படைக்கப்பட வேண்டும். அவை இரசிக்கப்பட வேண்டும். இவற்றை இலக்கிய மன்றங்களும் அவற்றிற்கு ஊக்குவிப்புகளும் வழங்கப்பட வேண்டும், ஆதரிக்க வேண்டும்.
பிழையான தீப்புகள் நீதிமன்றங்களால் வழங்கப்படுகின்றன. அவை மேன்முறையீட்டால் நிராகரிக்கப்படுகின்றன. நஸ்ட ஈடுகள் வழங்கப்படுகின்றன. மரணதண்டனையை நிறைவேற்றி விட்டால் இழந்த உயிரை மீட்க முடியுமா?
தண்டனை என்பது குற்றங்களை குறைக்க அல்லது ஒழிக்க இந்த இடத்தில் அது எந்தளவு சாத்தியப்படுகிறது?
தமிழிலக்கியங்களில் இது போன்ற ஏராளமான சம்பவங்களைக் குறிப்பிடலாம். உதாரணமாக கண்ணகி நீதி கேட்டு ஒரு கோவலனுக்காக மதுரை மாநகரையே அழிக்க முடியுமா? ஏனைய உயிர்களின் நிலை (ஊழ்வினை, கற்பின் பெருமை என்பன வேறுவிடயம்)
இலக்கியங்கள் உணர்வு மயப்பட்டதா? அறிவு மயப்பட்டதா? மனிதனது வாழ்வியல், அடிப்படை உரிமைகளுக்குப் போதுமானதா? இன்றைய நவகாலனித்துவம், சர்வதேசமயம், தகவல்த் தொழில் நுட்ப யுகத்தில் இவற்றை எவ்வாறு பிரதியிட்டு சமூக முன்னேற்றத்திற்கு இலக்கியங்கள் பங்காற்ற முடியும்? இப்படியான கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததாகிறது. இப்படியான கேள்விகளுக்கு மரபு வழிநின்று புதுமைகளைப் புகுத்தி இலக்கியச் செல் நெறிuைluம் அதனுடு சமூக வாழ்வியலையும் வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு இலக்கிய வாதிகளதும் (வாசகர்களதும்) இலக்கிய மன்றங்களினதும்
Jiru 6...60)puröib.
58

ஓர் இலக்கியகாரனின் தினக்குறிப்பில் இருந்து.
-சங்கர செல்வி திரைப்படங்கள் பற்றி:-
அண்மையில் வவுனியா ரோயல் திரை அரங்கில் பரிசு பெற்ற சிங்கள் தமிழ் திரைப்படங்களின் காட்சி இடம் பெற்றது. இந்த திரைப்படக் காட்சியை பிரபல நாடக திரைப்பட நெறியாளர் தர்மசிறி பண்டாரநாயக்கா அவர்கள் ஒழுங்கு செய்திருந்தார். திரு கோணமலை, யாழ்ப்பா0ைம், மட்டக்களப்பு வவுனியா என பல்வேறு பிராந்தியங்களிலும் இத்திரைப்பட விழா நடார்த்தப்பட்டது.
லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ்சின் நிதானய (புதையல்), அசோகா ஹந்தமகவின் சந்தகின்னரி (நிலவுப் பென்), பிரசன்ன விதானகேயின் ரசந்த கலுவற (ஒர்பூரணையில் மரணம்), தர்மசிறி பண்டாரநாயக்காவின் 11வதுக்க (வாழ்தலின் துன்பம்), தர்மசேன பததிராஜவின் மத்துயம் தவச (எதிர்காலத்தில் ஏதோ ஒரு நாள்), சுமித்திரா பீரிஸ்சின் ஜலய (மணல்மேல் எழுத்து), பவகiம (Lவதுக்க படத்தின் இரண்டாம் பகுதி), வசந்த ஒபேசேகரவின் தீர்க்கயாத்ரா (தீர்த்தயாத்திரா), தர்மசேன பத்திராஜவின் பொன்மணி(தமிழ்) என்பன ஏப்ரல் 2ம் திகதிமுதல் 6ம் திகதிவரை இலவசமாக கலாரசிகர்களுக்கு காட்டப்பட்டது.
லெஸ்ரரின் புதையல் ஒரு தனிமனித ஆசையை அதனால் விளையும் சோகத்தை சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது. குளோசப் காட்சிகளில் காமினி பொன்சேகாவும், மாலினி பொன்சேகாவும் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தனர். அசோகாவின் ‘நிலவுப்பெண்’ குடும்ப வாழ்வில் எதிர் கொள்ளும் சிக்கல்களில் குடிகாரக் கணவன் இறந்தபின் அவனுடனான வாழ்வின் மீட்டலை படம் பிடிக்கின்றது. பிரசன்ன விதானகேயின் “ஓர் பூரணையில் மரணம்”சமகாலட் போரினால் பாதிக்கப்படும் ஓர் ஏழைக்குடும்பத்தின் உணரர்வுகளை சித்தரிக்கின்றது. கண்பார்வை அற்ற தந்தை போரில் இறந்த மகனின் உடலை கொண்டுவந்த பெட்டியுள் அவன் உடல் இல்லை என்பதை உணர்கிறார் புதைக்கப்பட்ட பெட்டியை கிளறி எடுத்து உண்மையை உலகிற்கு உணர்த்துகிறார். வரண்ட பாலைநில குளத்தில் நீரற்ற போகும் காட்சியில் தொடங்கி அதே காட்சியில் படம் நிறைவுறுகின்ற போது மகன் திரும்ப வரக்கூடும் என்ற நம்பிக்கையை தந்தைக்கும் பார்வையாளர்களுக்கும் மழைபொழியச்செய்வதன் மூலம் கோடிகாட்டுகின்றார் நெறியாளர். தர்மசேன பத்திராஜவின் “எதிர்காலத்தில் ஏதே ஒரு நாள்’90களில் ஜே.வி.பி. - அரசு மோதலின் பின்னணியில் பலிக்கடாவாகும் கொந்தராத்து கொலைகாரர்கள் பற்றி சிறந்த நிலையில் விபரிக்கின்றது.
தர்மசிறி பண்டாரநாயக்காவின் ‘வாழ்தலின் துன்பம்’ இருபகுதிகளாக காட்டப்பட்டது. காலனித்துவ காலத்து ஆட்சியினால் சிதைக்கப்படும் உள்ளுள் பொருளாதாரம், கலை, கலாச்சாரம் என்பனவற்றை நன்கு சித்திரிக்கின்றது.
59

Page 32
சுமித்திரா பீரிசின் ‘மணல்மேல் எழுத்து கணவனை இழந்த அடிமட்ட ஏழைப்பெண்ணின் வாழ்வின் சிக்கல்களை விபரிக்கின்றது. வசந்த ஒபயசேகராவின் ‘தீர்த்தயாத்திரை அநாதையாக தத்தெடுக்கப்பட்டு மேல் தட்டு வர்த்தகத்தில் வளர்க்கப்பட்ட பெண் தனது வேரை தேடிச் செல்லும் போது காணும் அவளது பெற்றோர், சகோதரர்களின் நிலமை அவளை தீர்த்தயாத்திரை செல்ல வைக்கின்றது.
இறுதியாக காட்டப்பட்ட "பொன்மணி’ என்னும் திரைப்படம் ஈழத்து திரைப்படத்தின் நம்பிக்கை ஒளிக்கிற்றுக்களை சுட்டி நின்றது தர்மசேன பத்திராஜாவால் நெறியாள்கை செய்யப்பட்ட இப்படம் யாழ்ப்பாணத்தில் சீதனம், சாதிப்பாகுபாடு, காதலிற்கு எதிர்ப்பு போன்ற விடயங்களை ஒரு மத்திய தரகுடும்பப் பின்னணியில் சிறப்பாக எடுத்துக் காட்டியிருந்தது. தரமான கலைப்படங்களைப்பார்த்த திருப்தி அந்தவாரம் ஏற்பட்டது.
ஒரு நாடகம் பற்றி.
குழந்தை ம.சண்முகலிங்கம் எழுதித் தயாரித்த 'ஆர்கொலோ கதுரர்’ என்னும் நடன நாடகம் ஒத்திகை நிலையில் பார்க்கக் கிடைத்தது. நடன அமைப்பை நாட்டிய நாடகத் தயாரிப்பாளர் திருமதி. சாந்தினி சிவனேசனும் பாடல் வரிகளை ஈழத்தின் மூத்தகவிஞர் முருகையனும் இசையமைப்பை இளம் இசையமைப்பாளர் றொபேட் அவர்களும் ஆக்கியிருந்தார்கள் எழுத்துருவில் ஆக்கப் பின்னணியில் உளவியல் மருத்துவர் திரு. சிவயோகனும் பங்கு கொண்டமை இந் நாடகத்தின் கூட்டுத்தயாரிப்பை சிறப்புடையதாக ஆக்கியது. ஈழத்தமிழர்களின் தேசிய போராட்ட பின்னணியில் அவர்களின் வாழ்வியலை ‘மண்சுமந்த மேனியர்', 'யார்க்கெடுத்துரைப்பேன்’, ‘அன்னை இட்ட தி','எந்தையும் தாயும் போன்ற நாடகங்களின் மூலம் பேசிவந்தார் சண்முகலிங்கம். சமகாலத்தில் இதிகாசங்களுாடாக சமகாலத்தை விமர்சனம் செய்கிறார். அவரது “மனத்தவம்’ என்னும் நாடகம் இராமனின் அரசியல் தலைமையை அரசியல் தர்மத்தை கேள்விக்குள்ளாக்கும் வண்ணம் ஆக்கப்பட்டது. இதேபோல சமாதானசூழலின் பின்னனியில் போரின் நியாயம் இன்மையைச் சுட்டும் முகமாக மகாபாரதக்கதையின் பதின்மூன்றாம் நாட் போரை தனது நாடக ஆய்வு ஆக்குகின்றார். அபிமன்யு பத்மவியூகத்தை உடைப்பதும் அநியாயமாக இறப்பதும் ஆசிரியரின் கவனத்திற்கு உள்ளாகின்றன. பேரில் இறந்து கிடக்கும் பிணங்களைப் புரட்டும் காட்சியூடாக சமகால அவலத்தை பார்வையாளர்களுக்கு தொற்ற வைக்கிறார்.நாடகத்தின் மீது கேள்வி எழுப்பும் பார்வையாளர் பாத்திரங்களாக மேடையில் தோன்றும் பாட்டா, பாட்டி, போரப்பிள்ளைகள் நாடகத்தின் தாக்கத்தை சமகாலத்திற்கு ஏற்றி விடுகின்றன.
சமகால அரசியலை பூடகமாக இதிகாசக் கதையூடு அலசுதல் ஒரு தந்திரோபாயமாக இருக்கலாம். சிறப்பான நடன அமைப்பினாலும் இசைக் கூட்டினாலும் பொருத்தமான பாடல் வரிகளினலும் நல்லதோர் கலைப்படைப்பை
60

மிக்க பார்வை வீச்சு அவரது நூறுவீதமான சுயபடைப்புக்களிலேயே வெளிப்படுகின்றது என்பது யதார்த்தம்.
இரசித்தோம் என்பது உண்மை ஆயினும் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் வீரியம்
ஒரு கண்காட்சி பற்றி.
கடந்த மேமாதம் நடந்த 2வது உலக இந்து மாநாட்டையொட்டி மட்டக்களப்பில் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையினரும், இந்துசமய அலகும் இணைந்து நடாத்திய "மட்டக்களப்பு தமிழகமும் இந்துமதமும்” எனும் தலைப்பிலான கண்காட்சி பலரது கவனத்தையும் ஈர்த்தது. பேராசிரியர் மெளன குருவின் வழிகாட்டலில் இது அமைக்கப்பட்டிருந்தது. இந்து மதம் பல்வேறு கிளைநதிகளையுடைய பெரும் ஆறு. அது புராதனகாலம் தொட்டு வழக்கிலிருந்து வருகின்ற சகல வழிபாடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ள தென்ற உண்மையை இக்கண்காட்சி ப்றைசாற்றியது என்றால் மிகையாகாது. வேடுவர் வழிபடும் வில் அம்பு உடைய குமாரபந்தல், மந்தை மேய்ப்போர் வழிபடும் வதனமார் வழிபாடு, குமாரதத்தன் வழிபாடு, வேளாண்மை தொடங்கிய காலத்தில் வழக்கத்திற்கு வந்த கும்ப வழிபாடு பின்னர் ஏற்பட்ட முகக்களை வழிபாடு, உருவ வழிபாடு, நாககன்னிகை வழிபாடு, வடதென்சேரி கொம்பு முறிவழிபாடு, திரெளபதையம்மன், கண்ணகியம்மன் வழிபாடுகள் ஆரியமயமாதலுடன் கூடிய ஆகம வழிபாட்டு முறைகள் என்று பல்தரப்பட்ட சடங்குகள், வழிபாட்டு முறைகளை கண்காட்சி வரலாற்று நோக்கோடு வரையறைசெய்தது.
t மேலும் மனிதனது பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகள், தோடுகுத்துதல், திருமணச் சடங்கு, மரணச்சடங்கு என்பவையும் காட்சியுள் அடக்கப்பட்டன. இந்துமதம்சார் அறிவியலில் சோதிடம், சூனியம், வசியம் என்பனவும் கலைகளில் கூத்து, பரதம், இசை என்பனவும் ஒழுங்காக வடிவமைக்கப்பட்டிருந்தன.
இதைவிட இந்துமதநூல்கள், ஆய்வேடுக்ள், மற்றும் வழிபாட்டு முறைகளை இராமகிருஷ்ணமிஷன், காயத்திரிபீடம், சாயிவழிபாடு என்பனவும் உள்ளடக்கப்பட்டு, ஒரு புலமைசார் கண்காட்சியாக இந்துமதத்தின் பன்மைத் தன்மையை சுட்டி நின்றது சிறப்பானதாக அமைந்தது.
ஒரு கல்லூரி சஞ்சிகை பற்றி.
வவுனியா பண்டாரிக்குளம் விபுலாநந்தாக் கல்லூரியின் வருடாந்த சஞ்சிகையான விபுலம் -02 இதழ் கடந்த மார்ச்மாதம் பாடசாலை மண்டபத்தில் வெளியிடங்பட்டது. அதிபர் திரு. சி.வீ பேரம்பலம் தலைமையில் இதழாசிரியர் திரு.சு பிரபாகரும் துணையாசிரியர் செல்வி கு.பிரேமலதாவும் உதவி அதிபர்கள் திரு.வழறிகாந்தன், திரு. சு.சிவநாதன் ஆகியோரின் வழிகாட்டலில் இச் சஞ்சிகையை சிறப்புடன் உருவாக்கியுள்ளனர்.
61

Page 33
வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதி அவர்கள் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்த சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு மாணவர் ஆசிரியர் ஒத்துழைப்புடன் அழகாக நடைபெற்றது. மாணவர்களது ஆக்கங்களுக்கு முன்னுரிமை அளித்ததோடு ஆசிரியர்களும் தங்கள் பணியென பல ஆக்கங்களை வழங்கியுள்ளார்கள். அத்தோடு சமூகத்தில் இயங்கி வரும் கலை இலக்கிய கர்த்தாக்களான முல்லைமணி வே. சுப்பிரமணியம், கலைமணி பொன் தெய்வேந்திரம் மற்றும் தமிழ்மணி அகளங்கன் ஆகியோர் ‘தமிழ் கவிதை அன்றும் இன்றும்’, ‘தமிழும் கல்வியும்’, ‘இலக்கியபோர்களும் இறந்தோர்களும்’ எனும் தலைப்புக்களில் கட்டுரைகளை வரைந்துள்ளன
மாணவர்களின் ஆக்கங்களில் செல்விகள் துசிதாவின் ‘சமாதானமும், டனேயாவின் 'செஞ்சிலுவைச்சங்கம்’, ச, நிஷாந்தினியின் “வாய்மை, தனுசாவின் ‘விஞ்ஞானத்தில் ஆக்கம்’ ஆகிய கட்டுரைகளும், சங்கரின் ‘ஈழத்துப் பெண்” ஐரேஷன் ஈஸ்வரனின் 'மானுடம் கசக்கிறது’. மு.ராம்ஜிவ்வின் ‘மனிதநேயத்தை வளர்ப்போம்" என்பனவும் குறிப்பிடத்தக்கன.
ஆசிரியர்கள் கல்வி, கல்விச் சீர்திருத்தம் விஞ்ஞானமும் மெஞ்ஞானமும், சிறப்புரிமையியல் ஒசேன்படலம், கல்வியில் கணினி, முகாமைத்துவம், வணிகத்தகவல் முறைகள், வறுமை, பெண்களும் அந்தஸ்தும், மனிதவாழ்வில் இசைக்கலை, நாட்டிய சஸ்திரம் கற்பிக்கும் முறைகள், நாடக இலக்கியம், இலங்கையின் கர்நாடக இசைவளர்ச்சி, இசை உருவில் மலரும் மறை சம்பந்தப் பெருமானின் காட்டும் வேள்வி, வீட்டுத்தோட்டம் மின்னின்றி இயங்கும் உபகரணம் 66 பல்வேறு பாடப்பரப்புக்களில் ஆசிரியர்களது கட்டுரைகள் மாணவர்களுக்கு முன்னுதாரணமாகவும், எழுத்துத் துறையில் அவர்களை ஆர்வம் ஊட்டும் உந்துசக்தியாகவும் அமைகின்றன. o
மாணவர்களான சுபாஜினியின் ‘நண்பன்' ஈஸ்வரன் டக்சாயினியின் ‘கூடில்லாத குஞ்சு' என்பன சாதி எற்றத்தாழ்வையும் தாய் சகோதர பிரிவுகளையும் யதார்த்தமாக தரும் கதைகளாக அமைகின்றன. பைரவியின் கலைவாணி ஓவியம் சஞ்சிகைக்கு அழகு சேர்க்கிறது மரபு ஒவியத்துடன் நவீன ஓவியப்பரீட்சயத்தையும் மாணவர்க்கு ஏற்படுத்துவது நன்று.
இணைப்பாக ஆங்கிலப்பகுதியும் விபுலத்தில் சேர்க்கப்பட்டிருப்பது பயன் மிக்கது மாணவர்களதும் ஆசிரியர்களது ஆக்கங்களில் எழுத்துப் பிழைகளை தவிர்ப்பது சிறப்பானது. அதேபோல் கட்டுரைகளுக்கு உபதலைப்புகள் இடுவதும் வாசகரை ஈர்க்கும் பண்புடையது. ஒரு கல்விப்பண்பாட்டை வவுனியா மக்கள் மத்தியில் ஏற்படுத்த இது பேன்ற சஞ்சிகை வெளியீடுகள் உதவும் என்பது Garafaldanao.
62

ஒரு கவிதை ஆய்வரங்கு பற்றி
மே 30, ஜூன் 1 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூட்டத்தில் துாண்டி இலக்கிய வட்டம் ஒழுங்கு செய்திருந்த ஈழத்துக்கவிதை ஆய்வரங்கு ஒரு புதிய பாணியில் ஒழுங்கமைக்கப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்க ஒன்று. இது காலவரை காலரீதியிலும், கோட்பாட்டு ரீதியிலும் கவிதை ஆய்வரங்குகள் நடைபெற்று வந்துள்ளன. எழுபதுகளில், எண்பதுகளில் இலக்கியம் என்றோ முற்போக்கு இலக்கியம், தேசிய இலக்கியம், என்றோ அமைப்பது வழக்கம் இம்முறை துண்டி இலக்கிய வட்டம் தனித்தனி ஆளுமைமிக்க கவிஞர்களை ஆய்வுக்குட்படுத்தியது.
இரு நாட்களிலும் 48 கவிஞர்களை 12ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர் இதில் பேராசிரியர் அ. சண்முகதாஸ், கலாநிதி செ.திருநாவுக்கரசு, கலாநிதி செ.யோகராசா, ஈ. குமரன் போன்ற கவிஞராக அதிகம் பேசப்படாத ஆய்வாளர்களும் கவிஞர்களாக அறியப்பட்ட இ.முருகையன் சு.வில்வரத்தினம் சோ.பத்மநாதன் சண்முகம் சிவலிங்கம் பா.அகிலன் மு.பொன்னம்பலம் அயேசுராசா போன்ற ஆய்வாளர்களும் சங்கமித்தனர் நிலாந்தன், கருணாகரன், நூ.மான் ஆகியோர் வராதது குறையாக இருந்தது எனினும் நுஃமான் அவர்களின் கட்டுரை வாசிக்கபடபட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒரு சிறப்பு சோ.பத்மநாதன், மு.பொன்னம்பலம், இ.முருகையன் சண்முகம் சிவலிங்கம், அயேசுராசா, பா.அகிலன் (அ.யேசுராசா, பா.அகிலன் பற்றிய நிலந்தனின் உரை இடம் பெறவில்லை) போன்றோர் பிறகவிஞர்களை விமர்சித்தவேளை தம்மைப்பற்றிய மற்றய ஆய்வாளரின் விமர்சனங்களையும் செவி மடுத்தனர் இதைவிட சா.வே.பஞ்சாட்சரம்,அமரதாஸ்,ச.முகுந்தன், த.ஜெயசீலன் ஆகிய கவிஞ்ர்கள் தம்மைப்பற்றிய விமர்சனங்களைக் கேட்க சபையில் கூடியிருந்தனர்.
கால அடிப்படையிலான போக்குகள், தத்துவ மற்றும் கலைக்கோட்பாடுகள் என்பவற்றையும் மீறி ஒரு கலைஞனின் ஆளுமை எவ்வாறு கால ஓட்டத்தோடு இணைந்து கொண்டது என்பதை பல விமர்சனங்கள் தொட்டுச் சென்றன. பசுபதியின் முற்போக்கு மாறாத நிலையையும் சு.வில்வரத்தினத்தின் தேசிய விடுதலையுடன் கூடிய ஆத்மார்த்த உணர்வுகள் மற்றும் பழந்தமிழ் இலக்கிய தாக்கம் பற்றியும் முகுந்தனின் மரபு ஆட்சியில் பல்பொருள் பற்றி பாடுந்திறன் மற்றும் வணித்துப்போகும் கவிஆற்றலையும் குமரன் தொட்டுச் சென்றார்.
சு வில்வரத்தினம் நீலவாணனின் கவி ஆற்றலையும், எளிமையையும்,
நேர்மையையும், சோ.பத்மநாதனின் சந்தத்தையும், கூர்மையையான பார்வையையும்,
மொழி பெயர்ப்பு ஆளுமை பற்றியும் திருமாவளவனின் போலித்தனமான கவிதை
63

Page 34
வடிவையும் கி வி அரவிந்தனின் புலம்பெயர், அவலவாழ்வு கவிதையூடு வெளிப்படுவதையும் எடுத்து விரித்துரைத்தார்.
கலாநிதி செ.யோகராசா எம்ஏ நுஃமானின் கவிதைகளில் உள்ள முற்போக்கு
குணாம்சம், மரபு ஆளுமை , சமகாலத் தாக்கம் என்பவற்றை எடுத்துக்கூறியதோடு: தா. இராமலிங்கத்தின் லயம் பிசகாத மக்கள் உணர்வுக் கவிதைகளையும்
வெளிப்படுத்தினார் மேலும் நிலாந்தனின் பல்துறையாற்றல்கள் பண்பு, கவிதை ஊடாகத்துாடு மடைமாற்றமடைவதையும். சக்கரவர்த்தியின் புலம்பெயர் சோகத்தையும் குறிப்பிட்டுச் சென்றார்
சண்முகம் சிவலிங்கம் மு பொன்னம்பலத்தின் தேசிய நோக்கு , ஆத்மார்த்தம் என்பவற்றை கூறி, வ.ச.ஜ ஜெயபாலனின் போலித்தனத்தை ஒரு கடித வடிவில் வெளிப்படுத்தினார் மேலும் ஓட்டமாவடி அரபாத்தின் கவிதைகள் நொறுக்குத் தீனி பண்டங்கள் எனவும் , அச்சில் வடிக்கப்படும் பலகாரங்கள் எனவும் விமர்சித்தார்
இரண்டாம் அமர்வில் பா.அகிலன் ஊர்வசியின் ஆரம்பகாலக் கவிதைகளில் காணப்பட்ட பெண் விடுதலைக் குணாம்சங்களைக் கூறி பெண்ணிலை வாதம் வேறு பெண் விடுதலை வேறு என்று வேறுபடுத்தினார் அந்தவகையில் சிவரமணியின் கவிதைகள் இயல்பாக பெண் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளன என்றும் மைதிலி அருளையா, ஆழியாள் போன்றவர்கள் இயல்பான உணர்வு கவிதைகளுடன் இட்டு கட்டப்பட்ட பெண்ணிலை வாதக் கவிதைகளையும் படைத்துள்ளனர் எனவும் முத்தாய்ப்பு வைத்தார்
மு.பொ தனது ஆய்வில் முருகையனின் கவிதை வீச்சு, முற்போக்கு அம்சம், அறிவியல் பார்வை, பொருத்தமான நாட்டார்மொழி பயன்பாடு பற்றி கூறியதோடு புதுக்கவிதை வரவை அவர் எதிர் கொண்ட விதம் பற்றியும் குறிப்பிட்டார். சில்லையூர் செல்வராசனின் சமயோசிதமான கிண்டலான கவிதாவிலாசம் , தருமு சிவராமுவின் புதுக்கவிதை வீச்சு, ஆத்மாவின் சமகால பிரதிபலிப்புக் கவிதைகள் பற்றி ஆழமான பார்வையை முன்வைத்தார்.
அயேசுராசா, அமரதாஸின் சொற் பயன்பாட்டில் உள்ள அர்த்தமின்மை பற்றியும் கருணாகரன் கவிதைகளில் நேர்மையுடன் ஆங்காங்கே தலைகாட்டும் இந்திய சிறு சஞ்சிகைச் செல்வாக்கு பற்றியும் பேசியதோடு றஸ்மியின் உணர்வோட்ட கவிதைகளைக் கூறியதோடு அஸ்வகோஸின் கவிதைகளின் உண்மைத் தன்மையை பொருத்தமாக அடையாளம் கண்டு கொண்டார்
மாலை அமர்வில் கலாநிதி செ.திருநாவுக்கரசு பேசும் போது மகாகவி, சா.வே. பஞ்சாட்சரம், காரை சுந்தரம்பிள்ளை, கல்வயல் குமாரசாமி ஆகியோர் மரபுக் கவிதை ஆழத்தை தொட்டதோடு லயத்துக்கும் மண்வாசனைக்கும் புதுமைக்கும் சொந்தக்காரர்கள் அவர்கள் என எடுத்தியம்பினார்.
64

தலைமை வகித்த பேராசிரியர் சண்முகதாஸ் மகாகவி எவ்வாறு தன்கவிதா மேதா விலாசத்தால் விமர்சகர்களையும் காலத்தையும் வென்று நின்றார் என்று விளக்கினார்.
எம்.ஏ.நு."மானின் கட்டுரையை ஒழுங்கமைப்பாளர் செல்வ மனோகரன் வாசித்தார் சுபத்திரன் மற்றும் சாருமதியின் மாறாத முற்போக்கு அம்சத்தையும், முற்போக்கிலிருந்து தேசிய விடுதலைக்கு மாறிய சொல்வீச்சுக் கொண்டபுதுவை இரத்தினதுரையின் கவிதைகள் பற்றியும் கூறியதோடு சண்முகம் சிவலிங்கம் எவ்வாறு நேர்மை தவறாது மார்க்சிய வழிபட்டு நின்று எல்லா அத்துமீறல்களுக்கும் எதிராகவும், தன் மகனின் இழப்பை எல்லா இறந்த போராளிகளின் நினைவாக கொண்டு கவிதை வடிக்கும் பாங்கையும் பதிவு செய்தது அக்கட்டுரை.
இறுதியாக சோ.பத்மநாதன் அவர்கள் காசி ஆனந்தனின் உணர்ச்சி வீச்சையும், ஈழவாணனின் கவிதை பற்றிய கோட்பாடுகளையும், கவிச்சிறப்பையும் இளங்கவிஞர்களான நட்சத்திரன் செவ்விந்தியனின் விமர்சனக் கண்ணோட்டக் கவிதைகளையும், புதுகவிதை புனையும் த.ஜெயசீலனின் மரபுத் தாக்கத்தையும் குறித்துச் சென்றார்.
வீரியம் மிக்க கலந்துரையாடல்கள், கோகிலா மகேந்திரன், கென்னத், தேவ் ஆனந் ஆகியோரின் கவிதா நிகழ்வுகள் என்பவற்றுடன் ஆரோக்கியமான பெறுமதி மிக்க ஆய்வுகளை ஒழுங்கு செய்த செல்வ மனோகரன் கணிக்கப்படவேண்டியவர் ஆகின்றார்.
பெயர்
கணபதிபிள்ளை ஒரு கடைபோட முடிவு செய்தார். வட்டிக்கடை. நல்லதாக ஒரு பெயர் வைக்க வேண்டும் என்று யோசித்தார். கண்நாட்கள் ஆகியும் ஒன்றும் அகப்படவில்லை.
இம் மாதிரி சங்கதிகளின் கெட்டிக்காரரான தன்னுடை நண்பர் சுப்பிரமணியத்தை கேட்டார். மணியத்தார் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு
"Débé66 6.Qd6 660L' என்று வையும் என்றார்.
சாந்தன். (நன்றி கடுகு)
65

Page 35
LL LLL LLL LLL LLL LLL LLLL LL LL SLLLL LL LLL LLL LLLL LL LLL LLLLL S LLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LL
O O O O O : இராசையா மருந்துக்கடை : - O a o
கோயில் அபிஷேகப்பொருட்கள், வாசனைத்திரவியங்கள், இந்தியா ஊதுபத்திகள், மொத்தமாகவும் சில்லறையாகவும் O பெற்றுக்கொள்ளளாம். O O O
: вз நவீன சந்தை வவுனியா.
e இல: 202, பஜார் வீதி,
க வவுனியா.
Rasiah Medical Stores
53, New Market - Vavuniya.
2002, Bazzar Street - Vavuniya.
O
O
Dealers in Agro chemicals and Paints 156 Bazaar Street, Vavuniya.
N. P. Vinayagamoorthy & Sons :
“அமோக விளைச்சலுக்கு சி.ஐ.சி விவசாய இரசாயன பொருட்களையே பாவியுங்கள்.
o o O O o O o O o O o O B O o O O o O p O o O O o O p o O p o o e o o
66
 

இரசாயன உரங்கள் கிருமி நாசினிகள் விற்பனையாளர்
27. கடைத்தெரு வவுனியா,
67

Page 36
ரங்கநாதன் ஜிவலர்ஸ்
74A கடைவீதி வவுனியா,
Affiated t0 NET COM . Canda
Computer Training Division Computer Maintenance Division
A Non Profit Making Educational Concern
Station Road, Var vunniya, Srila raks. ፲፱/ : 024 - 228ዕቧ Mዕùr 024 - 23446
επιται , να γίεαυτίνιεί. Μ MʼHvMV. va sfec.org
8
 
 
 
 

"All Computer Needs Under One Roof
B. Pakicerathan (Managing Director)
Northern Technology (Pvt) Ltd.
எமது பிரதேச கணினி உலகின்
காட்சிப்பெட்டகம்
Head Office Branch Office # 52, 2nd Cross Street, #20, Kannath iddy Road,
Wavuniya, Sri Lanka. Jafna, Sri Lanka. Tel (0094) 24–21649 Tel:(0094)21 - 2225653
K.T.P.M. Computer training Ceritter, Vavuniya. Tel (924 — 22521

Page 37
No: 60, 1st Cross Street, Vavuniya.
 
 

024 - 22047 */024-22630