கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாருதம் (வவுனியா) 2004.04

Page 1

30
** 史 历 ଔଷ୍ଣୀଂ
历2004
சித்திை

Page 2
மாருதம் சிறப்புற வாழ்த்தகிறோம்.
ж
விநாயகர் மரக்காலை சூசைப்பிள்ளையார் குளம் விதி, வவுனியா.
தொ.பே. இல : 024 2222184
விநாயகர் றேடிங் கொம்பிளெக்ஸ் இல:212, ஹொரவப்பொத்தான விதி,
வவுனியா. தொ.பே. இல : 024 2221638

26G6
வடஇலங்கையிற் குளக்கோட்டன் 03
-ഗ്ഗഭോജീ. காக்கைச் சிறகினிலே O7
- அகளங்கன். கவிதைகள் 13
-சோப.அகளங்கன் பேணாட், தமிழ் நேர்காணல் 9
-Øഗ്രീ ஒயுதல் செய்யோம் தலைசாயுதல் செய்யோம் கவிதைகள் தொடர்ச்சி 28
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
-நளிம், வெண்ணிவா சோப.
ஆசிரியர் குழு சத்தியபாலன் சுகந்தினி மpாரிணி அகளங்கின் கயல்வண்ணன், விமலரதி கந்தையா முறிகணேசன் அநதக கண்கள் 34 உதவி: பிரசிஆனந்தரசா
செல்வி.சி.சிவாஜினி உளவளத்துணைசர் கதை திருபமுரளிதரன் மனுடம்வெல்லும் (நாடகம்) சுசிவபாஷன் 37 அச்சு: பதிவுகள் 1 43 மல்ரிவிஷன் அச்சுக்கலையகம்' எமது உணர்வுகளின் ஊற்றாக 47 குடியிருப்பு வவுனியா, -விகரன் - தொ.பே: 024 : 2223669 வற்றாத ஊற்றாய் 51 வடிவமைப்பு: கரணேஷ் -எஸ்தர்ஷ
R f O o இலச்சினை: பசிவஅன்பு தாமரைச்செல்வியின் . 54 முன்அட்டை: ஆஇராசையா த.விஜயசேகரன் தொடர்புகட்கு: کریہ۔
g (1) ధதிகை” கவிதைகள்தொடர்ச்சி 56
3%அலைகரை வீதி, -சிஏ.இராமஸ்வாசிபமுரளிதரன் இறம்பைக்குளம், கஜப்பிரியா யாத்திரீகன் 6alsassflurr, உடல்மொழி 59
தொபே : 024 2221310
-வேனா - தமிழ்வாணன்
(2) 9திருநாவற் குளம் அப்பு(சிறுகதை) 61
வவுனியா, -ஒகேகுணநாதன்
024 2221676 பதிவுகள் 2 63
வட்டத்தின் பாராட்டுப் பெறுவோர் 64
வெளியீடு: ஓர் இலக்கியகாரனின் . 66
வவுனியா கலை இலக்கிய ۹ - می سو நண்பர்குள் வட்டம் Q、忘 ஆங்க்ந்செல்வி
ாழு' 'வட்ட்த்தின் நிகழ்வு தொகுப்பு 70
நண்பர்களுக்குமட்டும் -சிசிவாஜினி,
. . . .

Page 3
pas, asts Baiau aidas
‘மாருதம்’ இதழ் 5 உடன் மீண்டும் வாசகர்களுடன் சங்கமிப்பதில் மகிழ் வடைகின்றோம்.
இது எமது ஏழாண்டு நிறைவுக்கட்டம். அந்த நினைவுகளைச் சுமப்பதுடன் புதிய கலை இலக்கிய எல்லைகளைத் தொடுவதும் எம் எண்ணம்
குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓடுவது எமது நோக்கமல்ல. உலகளாவ பரந்து விரிவதற்கும் சிந்தனை உண்டு. எனினும் சொந்த ஊரில் உழுது பண்படுத்தி அதில் விளையும் பயிரை உலகெல்லாம் உவக்க அளிப்பதுதான் எம் எண்ணம்.
எமது நூலை ஒரு கலை இலக்கிய கல்விப் பண்பாட்டுமையமாக உருவாக்கி, அயல் பிரதேசங்களை அரவணைத்து வானளாவ உயர்ந்து உலகின் உச்சங்களையும் தொட்டுக் கொள்ள ஆவல் உண்டு. சமூக, கல்வி தொடர்புள்ள கலை இலக்கிய சஞ்சிகையாக மாருதம் - 5 வீசுகிறது. ஓர் அதிபரின் சிறப்புகள் அவரது நேர்காணல் ஊடு வெளிப்படுவதாக இந்த இதழ் சுட்டிநிற்கிறது.
மேலும் புதிய பொலிவுடன் உள்ளுர் ஆக்கங்களையும் ஊக்கப்படுத்தி தொடர்ந்து வீசும் மாருதத்தின் இதத்தினை உணர வாசகர்களை வேண்டி மீண்டும் அடுத்த இதழில் சந்திக்கும்வரை விடைபெறுகின்றோம்.
ஆசிரியர்கள்.
-2-

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
ԱՐtՌյÉյt D
வட இலங்கையிற் குளக்கோட்டன்
-இலக்கியச் செல்வர் முல்லைமணி
இலங்கைத் தமிழ்ப்பிரதேச வரலாற்றில் குளக்கோட்டன் என்னும் பெயர் மிகவும் பிரசித்தமானது. ஒரு மன்னனுக்குரிய சிறப்போடு இவன் புகழ்பரவியுள்ளது. குளக்கோட்டன் பற்றிய ஐதீகக் கதைகள் யாழ்ப்பாண வைபவமாலை, திருக்கோணாசல வைபவம், கோணேசர் கல்வெட்டு, தெட்சிண கைலாய புராணம் என்னும் நூல்களில் இடம் பெறுகின்றன. இவன் சோழவம்சத்தைச் சேர்ந்தவன் என்றும் கோணேசர் ஆலயத் திருப்பணி வேலைகளில் ஈடுபட்டிருந்தான் என்றும் இந்நூல்கள் கூறுகின்றன.
யாழ்ப்பாண வைபவமாலை குளக்கோட்டன் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றது.
சாலிவாகன சகாப்தம் 358ஆம் வருஷத்தில் (கி.பி.436) மனுநீதி கண்ட சோழன் மகன் குளக்கோட்டு மகாராசன் யாத்திரை பண்ணித் திருக்கோணேசர் மலையிற் சேர்ந்து கோணேசர் சிவாலயத்தைத் தரிசித்து தம்பலகாமத்தில் பழுதுபட்டுக் கிடந்த கோணேசர் சிவாலயத்தைப் பழுது பார்ப்பித்து அக்கிரகாரம் முதலிய வேலைகள் அனைத்தையும் திருத்துவித்துக் கொண்டிருந்தான். திருப்பணியை நிறைவேற்றி அவ்வாலயப் பணிவிடைகளை நிறைவேற்றுவதற்கும், கோணேசலிங்கத்திற்குப் பூசனை புரிவிப்பதற்கும் செலவு வரவுகளுக்காக ஏழு நாடுகளில் வயல் நிலங்களையும் தோப்புகளையும் ஏற்படுத்தி அவைகளிற் பயிரிட்டு வருமானஞ் செலுத்தும்படி வன்னியர்களை அழைப்பித்துக் குடியிருத்தித் தன் நாட்டுக்கு மீண்டான்.
கோணேசர் கல்வெட்டு இக்கதையில் சிறுமாற்றத்தைச் செய்துள்ளது.
மனுநீதி கண்ட சோழன் மரபில் வந்த வரராமதேவன் திரிகைலைப் பெருமைகேட்டு, அங்குவந்து தொண்டு செய்தான். பின்பு அவன் மகன் குளக்கோட்டு
ராசன் மருங்கூரிலிருந்து குடிகளை மரக்கல மேற்றித் திட்டங்களும் செய்தான்.
-3-

Page 4
சமூக கல்வி கால இலக்கிய சஞ்சிகை
குளக்கோட்டன் பின்னர் உன்னரசுக் கிரியில் (திருக்கோவில்) ஆட்சி புரிந்த ஆடக செளந்தரியை மணம் புரிந்து திருகோணமலை முதல் திருக்கோவில் வரை திருப்பணிகள் செய்தான். ஆடக செளந்தரியின் உதவியுடன் கந்தளாய்க் குளத்தைக் கட்டினான் கோணேசர் கோயில் நடைமுறைக்காக வயல்களை நிவந்தமாக வழங்கினான்.
“அரன்தொழும்பிற் காட் போதா தென்று”தானத்தார் வரிப்பத்தர் ஆகியோரையும் கொணர்வித்தான். அவர்களுக்குட் பிணக்குவரின் தீர்த்து வைப்பதற்கென மதுரையிலிருந்து தனியுண்ணாப் பூபாலன் என்ற வன்னிமையை வரவழைத' தான்.
தெட்சண கைலாய புராணம் கூறும் கதை :
வராம தேவன் மச்சேந்திர புராணத்தில் கூறப்படும் கோணேச்சர் ஆலயத்தின் பெருமைகளைக் கேள்வியுற்று ஈழத்திற்கு வந்து திருகோணமலைச் சிகரத்தில் தூபியுடன் கோயிலியற்றி பூசைவிழா முதலியன நடத்தி திருப்பணிக்குக் கொண்டு வந்த ப்ொன்னைக் கிணற்றுள் அடைத்து வைத்து, மகனுக்கு அறிவிக்கும்படி தூதனுப்பிப் பரகதி அடைந்தான். பின் அவன் மகன் குளக்கோட்டன் இலங்கைக்கு வந்து திருப்பணிகள் செய்தான்.
இக்கதைகள் யாவும் கற்பனை கலந்தவை. ஆனால் இக்கதைகளினூடே நாம் பின்வரும் வரலாற்றுத் தகவல்களைத் தரிசிக்க முடிகிறது.
அ. குளக்கோட்டன் சோழ வம்சத்தைச் சேர்ந்தவன் ஆ. திருகோணமலை முதல் திருக்கோவில் வரை பல ஆலயங்களுக்குத்
திருப்பணி செய்தவன்.
இ. ஆலயப் பணிகள் தடங்கலின்றி நடைபெறுவதற்காக வயல் நிலங்களை நிவந்தம் அளித்தவன். இப்பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியாவிலிருந்து வன்னிக்கு குடிகளை வருவித்துக் குடியமர்த்தியவன்.
序。 ஆடக செளந்தரியைத் திருமணம் செய்தவன்.
உ. திருகோணமலையிலும் உன்னரசுக்கிரியிலும் ஆட்சிபுரிந்தவன்.
ஊ. கந்தளாய்க் குளத்தைக் கட்டுவித்தவன்.
வைபவமாலையில் குறிப்பிடப்படும் ஏழு நாடுகளில் வயல் நிலங்களும் தோப்புகளும் கிழக்கிலங்கையில் மாத்திரமன்றி வட இலங்கையில் அடங்காப்பற்றுவரை பரந்திருந்தது எனக் கொள்வது தவறாகாது.
குளக்கோட்டன் என்னும் பெயர்.
குளக் கோட்டன் என்பது இவனது இயற்பெயரன்று காரணப் பெயரேயாம்.
குளங்களைக் கட்டுவித்ததுடன் கோட்டங்களுக்கும் (கோயில்களுக்கும்)
திருப்பணிவேலை செய்வித்ததால் இப் பெயரைப் பெற்றான் - தெட்சண கைலாய
புராணத்தில் சோழகங்கன் என்னும் பெயரும் இவனுக்கு உண்டு எனக் கூறப்படுகின்றது.
இது கூட இயற் பெயர் அன்று. சோழமன்னர்கள் தமது ஆட்சிக்குட்பட்ட - 4

சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
பிரதேசங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் தமது பிரதிநிதிகளை அனுப்பும் போது வம்சப் பெயர்களும் கெளரவப் பெயர்களும் இறுதியில் வருவது மரபு. உதாரணமாக சோழபாண்டியன், சோழகேரளன், சோழ இலங்கேஸ்வரன், சோழகங்கன் என்பவற்றை இடுவது வழக்கம். கங்க நாட்டுக்குப் பிரதிநிதியாக அனுப்பப்பட்டவனே இந்தச் சோழகங்கன் எனலாம். எனவே குளக்கோட்டனின் இயற்பெயர் தெரியவில்லை.
மேலே குறிப்பிட்ட நூல்கள் அனைத்தும் கிழக்கிலங்கையுடனேயே குளக்கோட்டனைத் தொடர்புபடுத்துகின்றன.
வன்னிப்பிரதேசத்தில் வழங்கிவரும் மரபுக்கதையொன்று குளக்கோட்டனை வன்னிப்பிரதேசத்துடன் தொடர்பு படுத்துகின்றது. “கோணேசர் ஆலயத் திருப்பணி வேலைகள் முற்றுப் பெற்றதும் குளக் கோட்டன் வன்னிக்கு வந்தான். ஒட்டுசுட்டான் தான் தோன்றிஈஸ்வரர் ஆலயத்திற்குத் திருப்பணிவேலை செய்தான். வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் பொங்கலில் நந்தி உடையாரின் மகளைக் கண்டு அவளைத் திருமணம் செய்யவிரும்பினான். திருமணம் பேசி நந்தி உடையாரிடம் தூதுவர்களை அனுப்பினான். நாடோடியாகத் திரிந்து குளங்கட்டுவிப்பவனுக்குப் பெண்ணைக் கொடுக்க முடியாது எனக் கூறி அவர் மறுத்து விட்டார்.
வற்றாப்பளை ஆலயத்துக்கு அண்மையில் நந்தி உடையாருக்குச் சொந்தமான பல ஏக்கள் வயல் நிலம் உண்டு. பேராற்று நீர் நந்தி உடையாரின் வயல்களுக்கு நீர்ப்பாய்ச்ச உதவியது. சோழப் பெருமன்னர் இலங்கையில் ஆட்சி புரிந்த காலத்தில் முத்தரையன் என்னும் இராசப் பிரதிநிதி பேராற்றை மறித்து முத்தரையன்குளத்தைக் கட்டுவித்தான். இலங்கையில் சோழர் ஆட்சி முடிவிற்கு வந்த பின்னர் இந்தக் குளம் பராமரிப்பு இன்மையால் முறிகுளமாகிவிட்டது. இதனால் பேராற்று நீரை மறித்து விட்டால் நந்தி உடையாரின் செருக்கை அடக்கலாம் எனக் குளக்கோட்டன் நினைத்தான். அவன் எண்ணம் செயற்படுத்தப்பட்டது. நந்திஉடையாரின் வயலில் நெற்பயிர்கள் நீரின்றி வாடின. பயிர் முழுவதும் எரிந்து நாசமாகிவிடுமே என உடையார் கவலைப்பட்டார். கார்த்திகை மாதத்துக் கள்க்கடக ராசியில் பெருமழை பெய்தது. இதனால் நெற்பயிர்கள் எரிந்து போகாமல் காப்பாற்றப்பட்டது மட்டுமன்றிப் பெருவிளைச்சலையும் தந்தன.
“ஆற்றைமறித்தான் குளத்தை மறித்தான் கார்த்திகை மாதத்துக் கள்க்கடகத்தை மறிக்கமுடியுமா?” என நந்தி உடையார் கூறினார்.
யாழ்ப்பாண வரலாற்றில் இடம் பெறும் உக்கிரசிங்க சேனனுடன் குளக்கோட்டனை சுவாமி ஞானப்பிரகாசர் தொடர்புபடுத்துகின்றார்.
கோளுறு கரத்துக் குரிசிலின் மாமனான உக்கிர சோழனது மக்கள்
சிங்ககேதென்பவனும் மாருதப் பிரபை என்பவளும் இலங்கை சேர்ந்தனர் என்றும்,
மாருதப் பிரபைக் கிருந்த குதிரை முக நோய் (இது முழந்தாளில் ஏற்படும் நோய்
-5-

Page 5
്യാ, ബ, മണ്ണ ജൂബിu ിയ6
என வையாபாடல் பதிப்பாசிரியர் கலாநிதி க.செ.நடராசா கருதுகிறார்) கீரிமலைத் தீர்த்தத்திலாட மாறிற்றென்றும் அதன் பின் அவள் கதிரைமலையிற் சென்று “அரன்மகவினை” வணங்கி வருங்கால் உக்கிர சிங்கசேனன் அவளை மணந்து வாவெட்டி மலையில் மண்டபமியற்றி அங்கிருந்து அரசாட்சி செய்தான் என்றும் வையாபாடல் கூறும்.
வாவெட்டிமலை வன்னிப்பிரதேசத்திலுள்ள ஒட்டுசுட்டானுக்கு அண்மையில் உள்ளது. பிற்காலத்திலேயே இம்மன்னன் யாழ்ப்பாணத்திலுள்ள கதிரைமலையை இராசதானியாகக் கொண்டிருக்கவேண்டும்.
இக்கதையினை சுவாமி ஞானப்பிரகாசர் ஆராய்ந்து இங்கு கூறப்படும் உக்கிர சிங்கசேனனே குளக்கோட்டு மன்னன் எனவும் மாருதப் பிரவையே ஆடக செளந்தரி எனவும் கருதுவர்.
இம்மன்னன் வாவெட்டி மலையில் இருந்து ஆட்சி செய்ததால் கோயில் திருப்பணி செய்ததுடன் முத்தரையன் குளத்தை மீளக் கட்டுவித்தான் என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.
தற்கால வரலாற்றாய்வாளர் பொலனறுவையில் இருந்து இலங்கையை ஆட்சி செய்த கலிங்க மாகனின் (கி.பி.1215 - 1236) உபராசனாக இருந்தவனே குளக் கோட்டன் என்பர். ஜயபாகு என்பது இவனது மற்றொரு பெயராகும். கலிங்க மாகன் கலிங்க விஜயபாகு என அழைக்கப்பட்டான். விஜயகாலிங்க சக்கரவர்த்தி என்பதே மாகனின் முழுப் பெயராகும். இப் பெயரே தவறாக கூளங்கைச் சக்கரவர்த்தி எனப்பட்டது. பொலனறுவையிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் மாகன் யாழ்ப்பாண அரசனாகி இருக்க வேண்டும். இவனுக்குக் கீழ் உபராசனான குளக்கோட்டன் (உக்கிரசிங்க சேனன்) வன்னிப் பிரதேசத்தை ஆட்சிபுரிந்திருக்க வேண்டும்.
குளக்கோட்டன் காலம் பற்றிப் பல்வேறு விதமாகக் கூறப்படுகின்றது. யாழ்ப்பாண வைபவமாலை கி.பி.5ஆம் நூற்றாண்டெனவும் கோணேசர் கல்வெட்டு கி.மு.2590 எனவும் குறிப்பிடுகின்றன. எனினும் இவை ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
திருகோணமலை பிரடறிக் கோட்டை சிதைந்த சமஸ்கிருதக் கல்வெட்டில் “சகவருடம் 1145 சம்பு புஷ்பம் ஆண்டு சோடகங்கன் என்னும் மன்னன் இலங்கைக்கு வந்தான்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாண்டு கிபி 1223 என்பதும், சோடகங்கன் என்னும் மன்னன் குளக்கோட்டன் என்றும் “குளக்கோட்டன் தரிசனம்’ என்னும் நூலாசிரியர் செல்வி.க.தங்கேஸ்வரி நிறுவியுள்ளார்.
எனவே குளக்கோட்டன்கிழக்கிலங்கையில் மாத்திரமன்றி வட இலங்கையிலும் ஆட்சிபுரிந்து தன் பணிகளை மேற்கொண்டான் என்பதற்கு ஐயமில்லை.
-6-
 

്യാട്, മേ, ബ இலக்கிய சஞ்சிகை
indigniff flapsilanGao a ed
-தமிழ்மணி அகளங்கன்.
நாங்கள் எத்தனையோ விடயங்களில் புறத்தோற்றத்தைக் கண்டு ஏமாந்து விடுகின்றோம். மயங்கிவிடுகின்றோம். எங்களைக் கவருகின்ற பலவிடயங்கள் ஒரு பிரயோசனமுமில்லாதவையாக இருந்து விடுவதுமுண்டு.
நாளாந்தம் நாம் காணுகின்றவையும் நமக்கு நெருக்கமாக இருப்பவையும் பல சமயங்களில் நம் மனதைக் கவர்வதில்லை. எங்கோ தொலைவில் உள்ளவைதான் எங்கள் கவனத்தை ஈர்த்து விடுகின்றன.
கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடலொன்றில் ஒரு அருமையான வரி உண்டு. “கண்களருகே இமையிருந்தும் கண்கள் இமையைப் பார்ப்பதில்லை’ என்பதுதான் அந்தவரி. எவ்வளவு அற்புதமான வரி.
தாமரையோடு ஒன்றாகத் தடாகத்தில் வாழும் தவளைக்கு தாமரைப்பூவின் வாசனையோ, தாமரை இதழ்களின் பிரகாசமோ, அழகோ, மென்மையோ, மேன்மையோ எதுவுமே தெரிவதில்லை. தாமரைப் பூவிலுள்ள தேனின் அருமையும் தவளைக்குத் தெரியாது.
ஆனால் வண்டு காட்டிலே இருந்து தாமரைப் பூவைத் தேடிவந்து தேன்குடித்து மகிழ்ந்து செல்கின்றது. வண்டுக்குத்தான் தாமரைப் பூவின் பெருமை தெரிகிறது. சிலவேளை வண்டும் தாமரையோடு பக்கத்தில் வளர்ந்திருந்தால் அதற்கும் தாமரைப்பூவின் அருமை பெருமை தெரியாமலிருந்திருக்குமோ என்னவோ.
-7-

Page 6
്യാഭ (t്, ബി ബിധ ട്രിക്കു -(இதழ் 5) இதை ஏன் கூறுகின்றேனென்றால் நாம் பல சந்தர்ப்பங்களில் எம்மோடு கூட உள்ளவற்றின் சிறப்பை உணராமல் விட்டுவிடுகின்றோம் என்பதாற்தான் கூறுகின்றேன்.
தூரத்தில் இருப்பவற்றின் நல்லதன்மைகள் தான் தெரிகின்றன. கிட்ட உள்ளவற்றின் கெட்டதன்மைகள் தான்தெரிகின்றன. என்று சொல்லலாம் போல்
இருக்கின்றது.
உங்களில் யாருக்காவது காகத்தைப் பிடிக்குமா, காகத்தைப் பார்த்துப் பரிதாபப்பட்ட ஒரே ஒரு ஆள் மகாகவி பாரதிதான். அவர் தான் எத்தித் திருடும் அந்தக் காக்கை அதற்கு இரக்கப்படவேணும் பாப்பா’ என்று காகத்தின் மேல் இரக்கப்பட்டு மற்றவர்களையும் இரக்கப்பட வைத்தவர்.
பாரதி ஏன் அப்படிப் பாடினான் என்று சிந்திக்கும் போது சில விடயங்கள் புலனாகின்றன. அவன் தனது பாப்பாப் பாட்டில் சின்னஞ் சிறுகுருவி போலே - நீ திரிந்து பறந்துவா பாப்பா வன்னப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா! எத்தித் திருடும் அந்தக்காக்காய் - அதற்கு இரக்கப்பட வேணும் பாப்பா பாலைப் பொழிந்துதரும் பாப்பா - அந்த பசு மிக நல்லதடி பாப்பா வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா வண்டி இழுக்கும் நல்ல குதிரை - நெல்லு வயலில் உழுதுவரும் மாடு அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு - இவை ஆதரிக்க வேணுமடி பாப்பா.
என்றெல்லாம் சொல்லிக் கொண்டு போகிறார். இட்பாடலில் காகத்தை மட்டும் தான் இரக்கப்படவேண்டிய பறவை என்று பாடுகின்றார். காகத்திற்காக ஏன் இரக்கப்பட வேண்டும். அது ஏமாற்றித் திருடித் தின்கிறது. அறிவற்ற காகம் என்பதால் அதற்கு இரங்க வேண்டும் என்றாரா?
காகத்தை நரி ஏமாற்றிய கதை ஒன்று உண்டல்லவா. எந்தித் திருடிக் கொண்டு போய் மரக்கிளையில் இருந்த காகத்தைப் பார்த்து தந்திரசாலியான நரி புகழ்ந்து பேசியதாம்.
காகம் அழகற்ற பறவை என்றும், அதன் குரல் இனிமையற்றது என்றும்
வைத்துக் கொண்டுதான் இந்தக் கதையை உருவாக்கினார்கள். தற்புகழ்ச்சிக்கு
அடிமையான காகம் ‘கா கா” என்று பாட அதன் வாயிலிருந்த வடை கீழே -8-

്യാദ്, ബി ( Gിധ സ്റ്റിയ - । விழுந்ததாகச் சொல்லும் கதை யாவரும் அறிந்த கதைதான்.
உன் பொன்னான வாயைத் திறந்து உன் இனிமையான குரலில் பாடு பார்க்கலாம் என்று புகழ்ந்தது நரி எனக் கதை பண்ணியவர்கள், காகத்தை மிகவும் அழகற்ற ஒரு பறவையாகவும், இனிமையற்ற குரல் கொண்ட பறவையாகவும் எண்ணித்தான் கதை பண்ணியிருக்கிறார்கள்.
இப்படி, காகம் ஏமாந்து போனதற்காகத் தான் பாரதி காகத்திற்காக இரக்கப்பட வேண்டு மென்று பாடினானோ
காகத்தின் சிறப்புக்கள் பல உண்டு. காகத்தின் நிறம் கறுப்பாக இருக்கலாம். ஆனால் கறுப்பு அழகில்லை என்று எந்த முட்டாள் சொன்னான். வைரமுத்துவின் “கறுப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு” பாட்டைக் கேட்ட பின் கறுப்பு அழகில்லை என்று சொல்லலாமா.
தமிழனின் நிறமே கறுப்புத்தானே. அப்படியென்றால் தமிழன் அழகில்லையா, கவியரசு கண்ணதாசன் “கன்னங் கறுத்த கிளி கட்டழகன் தொட்ட கிளி அன்ன நடை போட்டாளடி” என்று எழுதிய பாடல் ஒலிக்காத திசையில்லையே. உச்சரிக்காத உதடில்லையே.
காத்தவராயன், ஆரியப் பூமாலையைப் பார்த்து விட்டு வந்து தாயிடம் ஆரியப் பூமாலையின் அழகை வர்ணிக்கும் போது சொல்லுவான் “அவள் நாவற்பழத்திலுமோ நல்ல கறுப்பழகி” என்று
ஆண்டாள் மகாவிஷ்ணு மூர்த்தியை “கருமாணிக்கம்” என்று அன்பொழுகத் தன் பாசுரத்திலே அழைக்கிறார்.
பாரதி, காகத்தின் சிறகினிலே எதைக் கண்டான். * காக்கைச் சிறகினிலே நந்தலாலா உந்தன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா’ என்றானே. மறக்க முடியுமா, காகத்தின் சிறகிலுள்ள கருமையிலே கண்ணனைக் கண்டான் பாரதி.
அது மட்டுமா! * காக்கைக் குருவி எங்கள் ஜாதி” என்று காக்கையை முன்னிறுத்தியல்லவா பரந்த உலகத்தில் தன் பற்றை வெளிப்படுத்துகிறான். அது LD (SLDT
காவென்று கத்திடும் காக்கை - என்றன்
கண்ணுக்கினிய கருநிறக் காக்கை
என்று பாடுகிறானே. சும்மாவா! காகத்தின் புற அழகை ரசிக்க வேண்டுமென்றால் முதலில் காகத்தின் அக அழகைக் காணவேண்டும். வெறுந் -9-

Page 7
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
தோற்றத்தைக் கண்டு ஏமாந்து போபவர்களுக்கு காகம் அழகில்லைத்தான் காகத்தின் சந்தம் வெறும் கத்தல்தான்
பாரதிக்கு குயிலின் கூவல் கூட கத்தலாகத்தான் இருந்தது. அதனாற்தான் “கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் படவேண்டும்” என்று பாடினான் பாரதி.
குயிலின் குரல் இனிமையானது என்பது பலரது வாதம். முடிந்த முடிபு கூட ஆண்டாள் முதல் அத்தனை பேரும் பாடிப் பரவி விட்டார்கள். “குயிலே உனக்கு அனந்தகோடி நமஸ்காரம்” என்று சினிமாவில் பாடினார்கள். “கீதமினிய குயிலே” என்று மணிவாசகர் பாடினார். தமிழ்த் திரையில் இளையராஜா பல குயில்ப் பாடல்களைப் புகழ் பெறச் செய்தார்.
ஆனால் எனக்கோ இப்போதெல்லாம் குயிலின் கூவல் பிடிக்கவில்லை. காகத்தின் கரைதல் தான் பிடிக்கிறது. கூவல் என்றால் அழைத்தல் என்று பொருள். கூவி அழைத்தல் என்றும் சொல்கின்றவழக்கம் உண்டு.
குயில் யாரைக் கூவி அழைக்கிறது தெரியுமா. தன் துணையைத்தான் கூவி அழைக்கிறது. குயிலினத்தில் பெண்குயில்தான் கூவுகிறது என்கிறார்கள். பெண் குயில் தன் காமஇச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக ஆண்குயிலை அழைக்கத்தான் கூவுகிறது.
சேவல் கூவுகிறது இருளைப் போக்கி உலகைக் காக்கும் சூரியனை அழைத்துக் கூவுகிறது. அது உயர்ந்த பொது நோக்கம். தனக்காக அல்லாமல் உலகுக்காகக் கூவுகிறது சேவல். இருள் விலகி ஒளி தோன்றி உலகு உய்யவேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தில் அது கூவுகிறது. அதனாற்தான் முருகப் பெருமான் சேவலைக் கொடியாகக் கொண்டார்.
குயில் கூவுவது உண்மையில் படு ஆபாசம். தன்காம இச்சையைத் தீர்த்து வைக்கும்படி ஊரறிய, உலகறியக் குயில் கூவுகின்ற, துணையை அழைக்கின்ற வெட்கம் கெட்ட அநாகரிகமான செயலை எப்படி ரசிப்பது.
காகம் கரைகிறதே ஏன் தெரியுமா? ஏதாவது உணவு கிடைத்தால் தன் சுற்றத்தை அழைப்பதற்காக அது கரைகிறது. கரைதல் என்றாலும் அழைத்தல் என்றுதான் பொருள். கலங்கரை விளக்கு என்பது கலத்தை அழைக்கும் விளக்கு என்றே பொருள் தருகின்றது.
காகம் தன் இனத்தையும் அழைத்து உண்பிக்கின்ற உயர்ந்த எண்ணம் கொண்டது. இந்தக் குணம் குயிலிடம் இல்லை. இதனால் எனக்கு குயிலின் குரலைவிட காகத்தின் குரல் இனிமையானதாக இருக்கிறது.
- 10

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
இதைவிட இன்னொரு இரகசியமுமிருக்கின்றது. அது தான் இன்னும் முக்கியமானது. உலகில் தாய்மைக்கே களங்கமாக இருப்பது குயில். குயில் காகத்தின் கூட்டில் காகத்தை ஏமாற்றி முட்டையிட்டு விடுகிறது.
அடைகாக்கத் தெரியாத குயிலுக்கு ஆசைவேறு. காகம் குயிலின் முட்டையையும் சேர்த்து அடைகாத்துக் கொள்கிறது. அது மட்டுமல்ல, குஞ்சு பொரித்த பின் குயிலின் குஞ்சுக்கும் இரையூட்டி வளர்க்கிறது.
தன் குஞ்சுக்கு ஒரு பொழுதேனும் இரைஊட்டாத குயிலை நினைத்தால் கோபம் வரவில்லையா? தாய்மைக்கே மாசுகற்பிக்கும் குயிலின் குரல் போற்றப்படுவது விந்தையிலும் விந்தையே. இன்றைக்கு உலகம் இப்படித்தான் மயங்கிப் போய்க் கிடக்கிறது.
காகத்தின் சிறப்புப் பற்றி ஒரு பழம் பாடல் இருக்கிறது. அதனை இங்கு பார்ப்போம்.
“காலை எழுந்திருத்தல் காணாம லேபுணர்தல் மாலை குளித்து மனைபுகுதல் - சால உற்றாரோடு உண்ணல் உறவாடல் இவ்வாறும் கற்றாயோ காக்கைக் குணம்”
என்பது தான் அப்பாடல். அதிகாலையில் நித்திரை விட்டெழுதல். எவரும் காணாதபடி மறைவாகத் தன் துணையோடு கூடுதல்.
இன்று மனிதனிடமே கூட இந்த இரண்டும் இல்லையே. நாய்க்குணம் மிக்க காமுகர்களைத்தானே, பெரும்பாலும் காதலர்களாக சந்திக்குச் சந்தி, கடற்கரை, பூங்கா, பஸ்நிலையம், புகையிரதநிலையம், என பார்க்குமிடமெங்கணும் நீக்கமறக் காண்கின்றோம்.
காகத்தின் அடுத்த சிறப்பு மாலையிலே நீராடி விட்டுத் தன் கூட்டுக்கு வருதல். இதில் இரண்டு விடயங்கள் அடங்குகின்றன. ஒன்று மாலையில் நீராடல் மற்றது மாலையில் கூட்டுக்கு வருதல்.
அத்தோடு உற்றாரோடு சேர்ந்து உண்ணல், அதுமட்டுமல்ல ஒரு காகம் இறந்து விட்டால் எல்லாக் காகங்களும் சேர்ந்து அழுது தம் கவலையைப் பகிர்ந்து கொள்கின்றன இது உறவாடல் ஆகும்.
இந்த ஆறும் காக்கைக் குணம், இதை மனிதன் கற்க வேண்டும் என்கிறார் புலவர்.
- 11

Page 8
சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
காகமா குயிலா நல்ல பறவை. வெளிவேசத்தில் மயங்கிப் போகும் மக்களுக்கு இது எங்கே புரியப்போகிறது.
இருந்தாலும் எங்கள் சைவர்கள் புரட்டாதிச் சனியிலே காகத்தை அழைத்து விருந்து வைக்கிறார்களே. காகக் குணத்தைத் தெரிந்து தான் விருந்து வைக்கிறார்களா?
உதவக் கரைகின்ற காகமா, தன் காமஇச்சையைத் தீர்த்துக்கொள்ள ஆண்குயிலை அழைத்துக் கூவும் குயிலா உயர்ந்த பறவை?
தன் தலைவனின் வரவை அறிவித்துக் கரைந்த காகத்திற்கு பொற்கிண்ணத்திலே அறுசுவை உணவை வழங்கினாலும் போதாது என்ற சங்ககாலத் தலைவி காகத்திற்குக் கொடுத்த மதிப்பு உண்மையான உயர்ந்த மதிப்பே.
திண் தேர் நள்ளி கானத்து அண்டர் பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு எழுகலத்து ஏந்தினும் சிறிது என் தோழி பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே
(குறுந் - 210)
காக்கைப்பாடினியார் என்ற பெண்புலவர் பாடிய குறுந்தொகைப் பாடல் தான் இது.
“வலிய தேர்ப்படை கொண்ட நள்ளியினது காட்டிலுள்ள சிறந்த பல பசுக்கள் தந்த நெய்யோடு தொண்டி என்னும் ஊர் முழுதும் விளைந்த வெண்ணெல்லின் விருப்பமான சோற்றைக் கலந்து ஏழு கலங்களில் கொடுத்தாலும் சிறிய கைம்மாறே ஆகும். என் தோழியின் தோளை நெகிழுமாறு செய்த துன்பத்திற்கு மாற்றாக விருந்து வரைவதாகக் கரைந்த காக்கைக்கு உரிய பலியாகக் கொடுக்க அது சிறிதே ஆகும்.” என இதற்கு உரை வகுத்துள்ளார் டாக்டர் மு.வரதராசன்
காகத்தின் மதிப்பை இனியாவது உணர்ந்து கொள்வோம். போலிகளைப்
போற்றுவதை விட்டுவிட்டு நல்லவைகளைப் போற்றுவோம்.
- 12

சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
இதள்ளிவங்கைக் கவிதை ஞாபகம் հիմոթեն աուIւլ
நெடிய பருத்தி மரங்களில்
பஞ்சு வெடித்துவிட்டது.
இந்த வெக்கையில்
அதன் இறக்கைகள்
புகார் போல மிதக்கின்றன.
இக் காலத்தில் தான்
நீயும் நானும் பட்டுப் போன்ற இறக்கைகளைத் துரத்திக் கொண்டு ஒரு பஞ்சு முகிளை
இருவர் விரல்களும் பொத்த ஒருவர் மீது ஒருவர் மோதி விழுவோம்.
அந்த ஸ்பரிசத்தால் அதிர்ந்து உன் முகம் சிவக்கும். என் உடலெங்கும் வெப்பமின் அலைகள் பாயும். அப்போது உனக்கு வயது பன்னிரண்டு எனக்குப் பதின்மூன்று
பறக்கும் பஞ்சு முகிள் போல அவையெல்லாம் அநித்தியமாய்ப் போயின. இதயங்கள் உறவை மறக்க அரும்பிய முளையை கருக விட்டோமே
பஞ்சு முகிள் போல நீயும் அவ்வுணர்ச்சியும் பிடிமானமின்றி அடைய ஒண்ணாது பிடிக்க ஒண்ணாது காற்றில் மிதந்து போயின.
முலம் கமலா விஜயரத்ந தமிழில் சோ.பத்மநாதன்
- 13

Page 9
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
விண்ணவர்க்கும் அமுதான விந்தைத் தமிழ்
நெருப்பினில் எரியாது நீரினில் எதிரேறும்
கவிஞர் அகளங்கன்
விருப்பினில் நாம் பேசும் எங்கள் தமிழ் - இது
விண்ணவர்க்கும் அமுதான விந்தைத் தமிழ்
(நெருப்.)
பொருப்பினில் உருவாகி புலவர்க்கு உயிராகி திருக்குற ளாற்பொலிந்த தெங்கள் தமிழ் திருப்புக ழால் நிறைந்த தெய்வத் தமிழ்
(வேறு)
சங்கத்திருப் பாட்டு சர்க்கரையாய் இனித்திடுமே சம்பந்தர் தேவாரம் சாவையும் தடுத்திடுமே திங்கள் நிகர் காவியங்கள் திசையெல்லாம் பரந்திடுமே திருமுறை பாசுரத்தால் தீமையெல்லாம் பறந்திடுமே
(வேறு)
பரணி உலா வென்றும் பாவையொடு கோவையென்றும் தரணி புகழ் பனுபல்த் தமிழ் எங்கள் உயிராமே
அறனில் பல கவிதை அருளில் பல கவிதை
- 14
- தெய்வத்
நெருப்.

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
திறனில் பல கவிதை தீந்தமிழ்க் கவிதைகளாம்
(வேறு)
(நெருப்.)
அகத்தியர் முதலாக வீரமா முனிவர்வரை அகம்புறம் எனத்தந்த இலக்கணம் எமதாகும் செகத்தியல் புகளெல்லாம் சிறப்புடன் பாடிவைத்த செந்தமிழை நாம் மறவோம் செங்கரும்பாய் நுகர்ந்திடுவோம்
(வேறு)
இயல் இசை நாடகங்கள் இன்பந் தரும் உரைநடைகள் மயல்மிகு மனத்தை எல்லாம் மாற்றிநல்ல ஏற்றந் தரும்.
வள்ளுவன் இளங்கோவும் வளம்மிகு கம்பனுமே
வடித்தவை படித்தவர்கள் வாழ்வாங்கு வாழவல்லார்
(வேறு)
சொல்ல அரும் அருளாளர் சேக்கிழார் மூவரொடு நல்ல மணி வாசகனார் நம்கச்சி, நாவலனார் எல்லையிலாப் புகழ் சேர்த்த எம்புலவன் பாரதியும் பல்லோரும் புகழ்விபுலா னந்தர் விரமாமுனிவர் உமறுப் புலவர், என உயர்ந்தோர் வளர்த்த தமிழ்
(நெருப்.)
- 15

Page 10
്യാമ, ബി ഓൺ ബർളിധ ിഭ
வார்த்தை மனிதரானார்
உருவமற்ற இறைவனொரு உருவம் செய்தார். உருண்டையான அதனை அவர் உலகமென்றார். வெறுமையான அதற்குப் பல வளங்கள் சேர்த்தார். இறுதியாக எல்லாமாக எம்மைப் படைத்தார்.
பஞ்சம் பசி என்னவென்றே தெரியவில்லை. பாவமென்ற சொல்லே அன்று இருக்கவில்லை. அன்பு மிக்க இறைவன் அன்று சொன்ன சொல்லை. மோகம் கொண்ட மனிதன் மட்டும் மதிக்கவில்லை.
ஞானம் மிக்க இறைவன் முகம் கோபமாச்சு. மனிதன் மீது வைத்த அன்பே சாபமாச்சு. அன்று முதல் நிம்மதியும் மண்ணில் போச்சு. பஞ்சம் பசி கொள்ளை நோயும் பரவலாச்சு.
இருந்தாலும் இறைவனொரு வாக்களித்தார். இருள் நீங்க ஒளி தருவேனென்றார். தரணி மீட்கத் தம் மகனே வருவாரென்றார் தம்மை அழித்து உலக மீட்பைத் தருவாரென்றார்
ஏனோக் எலியாஸ்வழி சீராக்கும் ஆமோஸ் மிக்கேயாஸ் யோனாசும் பெண்கள் வடிவத்தில் எலிசபேத்தம்மாளும் அண்ணல் வருகையை அறிவித்தனர்.
காலம் கனிந்தது கர்த்தர் வந்தார். மரியன்னை மூலமாக மனிதரானார். வள்ளலான பிதா வாக்கின்படி வார்த்தை மண்ணிலே மனிதரானார்.
(கிறிஸ்து பாலகன் பிறப்பையொட்டி எழுதப்பட்ட கவிதை)
அ.பேனாட் வவுனியா - 16

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
புகலிடக்கவிதை
இ(யந்திர வாழ்வு இதுவெல்லோ
இன்றும் ஒரு காலை என்றென சொன்னது கடிகாரம். கோயில் மணிகள் கேட்கவில்லை. கோழிகள், குருவிகள் கூடக் கத்தவில்லை. விண்ணின் கிழக்கே அடிவானில் கூட விடிகின்ற அறிகுறிகள் தெரியவில்லை. ஐயகோ இது ஐரோப்பாவெல்லோ! போர்வைக்குள் முடங்கிய தமிழனிவன் சோர்வைத் துறந்து துள்ளி யெழுந்தான். "அலாரம்” பாடிய சுப்ர பாதத்தில் காலைக் கனவுகள் கலைந்து போனது. இதோ இருபது நிமிடத்தில் இறங்கிவிட்டான். இவனுக்கு முன்பே நகள் விழித்திருந்தது. கம்பளி ஆடைக்கூடே தாக்கும் குளிர்காற்று இரைச்சலின் ஊற்றுக்களாய் சறுக்கிச் செல்லும் வாகனங்கள். வேலைக்குப் போகும் அவசரத்திலும் - நெரிசலிலும் ஆளை இடித்து கொண்டு செல்லாத வெள்ளைக்காரர் ஆரவாரமாய் பள்ளி செல்லும் பிள்ளைகள் சந்தோசமாய், முகங்களில் செயற்கை புன்னகைகளுடன் சில தமிழர் மின்சார ரயில் புள்ளிகளாய் மறைந்துபோயினர் கும்பலாய் சில இளம் பெண்கள் பெரிதாய் சிரித்தனர் கொஞ்ச நிமிட நடையில் உணவகம் தெரிந்தது. குளிர் உடல் வழியே ஏறி பல்லில் தாளமிட்டது. வெறும் கோப்பி அருந்த “வெடவெடப்பு”குறைந்தது அடுத்த சில மணித்தியாலங்கள் - வேலை குசினிக்குள் கரைந்தது. கோப்பைகளும் சட்டிகளும். மூளையை குத்தகைக்கு எடுத்திருந்தன - ஆனாலும் இடைக்கிடையே “மனசு” மட்டும் வெளிநடப்பு செய்தது. அம்மாவின் “அஞ்சல்” வந்திருக்குமோ? அப்பர் சிலவேளை “ரெலிபோன்’ எடுத்திருப்பாரோ? வட்டிக் காரன் வந்து கத்தியிருப்பான். உண்டியல் காசு போய்ச் சேந்திருக்குமோ! நேற்று “ஏசியன் சொப்” பில் பார்த்த பெண் யாராய் இருக்கும். முகத்தில் சிதறிய அழுக்கு நீரால் நிஜம் தெரிந்தது. சட்டியை வீசிய சமையல்காரன் அவனின் பாசையில் கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறான். பாசை தெரியாததால் கோபம் வரவில்லை. அவரச அவசரமாய் இயந்திரமாய் இயங்கினான். மீதம் வரும் உணவுகளை கண்டபோது வன்னி மக்கள் நினைவில் வந்து வாட்டினர் நிமிடங்கள் வேகமாய் நடைபழகி ஓடிக்கழிந்தது.
- 17

Page 11
சமூக கல்வி கவல இலக்கிய சஞ்சிகை
வெளியே சூரியனை காணவில்லை - மின்சார விளக்குகள் வெளிச்சம் தந்து இருட்டி விட்டதென்று ஒப்பித்தது. மீண்டும் தெருவழியே ஒட்டமும் நடையுமாய் இப்போதும் மக்கள் இயந்திரமாய். ஊர் ஞாபகங்கள் ஏனோ வந்து போனது சூரியனை மறைக்க முயலும் மேக கூட்டங்கள் காற்று சுமந்து வரும் மல்லிகை வாசனை நிலத்திற்கு குடைபிடிக்கும் பூவரசுவேலிகள் தூரத்தில் கேட்கும் கோவில் மணியோசைகள் கலகலப்பாய் அந்த கிராமிய சூழலே தனிசுகம். விழியில் ஒரம் இரு துளி கண்ணிர் கசிந்தது. குளிரின் ஊடே “பெருமூச்சொன்று’ ஆவியாய் போனது. இயல்பாய், இயற்கையாய், வாழ்ந்த வாழ்க்கை இயந்திரமாய் இயங்குகிறது வெளிநாட்டில். ஆயிரம் வசதிகள் இருந்து மென்ன பலன். அகதியாய் வாழ்வதில் இனியும் சம்மதமில்லை. ஊருக்கு போகவேனும் - தினமும் இதுவே கனவு “வராதே இப்பவென’வந்து சேரும் கடிதங்கள். புலம் பெயர்ந்தாலும் வளமும் வசதியும் குறைவில்லை. ஏசியன் சொப்பில் எல்லாம் கிடைக்கும். புட்டுக் குழல் முதல் புழுக்கொடியல் வரை ஊரைப் போலவே கோயில்களும் கொண்டாட்டங்களும் காற்றலைகளில் கூட தமிழ் வானொலிகள் மாற்றம் இல்லாத சினிமா மோகமும் இருந்தும் ஏனோ இறுகிய மனங்களுடன் மக்கள் “ஏதோ’ஒன்றை இழந்திருப்பதாய் உணர்வுகள் ஒப்புக்காய் சிரித்து “ஒப்பனையாய்”வாழ்கிறார்கள். மன ஒட்டம் மெல்ல நின்றது. இதோ இவன் வதியும் உறைவிடம் வந்தது. இது வீடல்ல அறை - அறையுமல்ல அது கூடு - ஆறேழு ஜீவன் அனுசரித்துப் போகும் கூடு. நள்ளிரவில் மட்டும் மனிதன் இருப்பதாய் தெரியும். சமையலொன்று நடப்பதாய் “கறிவேப்பிலை” மணக்கும். காற்றில் ஹரிகரன் சோகமாய் பாடுவார். குளிர் பியர் உபயத்தில் உற்சாகமாய் சிரிப்பொலிகள். பின்னிரவில் இதுவெல்லாம் அடங்கிப் போகும். கனத்த இதயங்களுடன் ஒவ்வொருவரும் தூங்கினர். யாருக்கு தெரியும் இவர்களின் வேதனைகள். ஊருக்குத் தெரிவதெல்லாம் “கரன்சிகளின் கணக்கு மட்டுமே” யோசித்துப் பார்த்தால் நித்திரையும் போகும். அயர்ந்து போனபோது அஞ்சு மணியாய் இருக்கும். என்றும் போலவே இன்றும் ஒரு நாள் கழிந்தது s என்றென சொன்னது கடிகாரம் மட்டும். இலண்டனிலிருந்து பாடும் சுப்ரபாதத்தில் இ.தமிழ் அடுத்த விடியல் துள்ளி எழுந்தது. (இணுவில்) - 18

esgypeth, ei66ü6n, 6560 16u ga36uéhafu 65ŷd'EIU)65
நேர்காணல்
முன்னாள் அதிபர் வண.சகோ.ம.ம.மடுத்தின் அவர்களுடன்
நேர்காண்பவர்கள்
திரு .க. பூரீகணேசன், ஆங்கில விரிவுரையாளர்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
வவுனியா வளாகம், வவுனியா, திரு. சு. சிவபாலன், சிரேஸ்ட ஆசிரியர், இறம்பைக்குளம் மகளிர் மகாவித்கியாலயம்
வவுனியா
மாருதம் :
01. வவுனியா மாவட்டத்தின் ஒரு பிரசித்த, பாடசாலையின் அதிபர் என்ற வகையில்
நீங்கள் ஆற்றிய பங்கினை விவரிப்பீர்களா?
அருட் சகோதரி :
பாடசாலைக்கு ஒரு தலைமைத்துவத்ததை உருவாக்கி இருக்கிறேன். அதிகாரப் பரவலாக்கல், பங்கேற்கும் முகாமைத்துவம், இறைவனின் அருள் என்பதில் நான் அசையாத நம்பிக்கை கொண்டிருப்பதனால் இதனைச் செய்யக்கூடியதாக இருந்தது. தனியொருவரால் ஒரு பாடசாலையைக் கட்டி எழுப்ப முடியாது. பாடசாலை மட்டுமல்ல, எந்த ஒன்றையுமே கட்டியெழுப்ப முடியாது. ஏனெனில் மனிதன் ஒரு சமூகப்பிராணி. பாடசாலை என்பது ஒரு சமூகத்தின் சமூகம். அது ஒரு முறைமையான தொகுதி. ஒரு தொகுதி சிறப்பாக இயங்க வேண்டுமெனில் அங்கு ஒரு ஒழுங்கு முறை இருத்தல் வேண்டும். ஒழுக்க விழுமியங்கள் மிக நன்றே பேணப்படல் வேண்டும். இவற்றை நான் மறந்து விடவில்லை. இவற்றை நிலைநிறுத்துவதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள், மாணவர்கள் போன்றவர்களுக்கிடையே நல்ல உறவுமுறை பேணப்படவேண்டும். இவ்வுறவுகளை புறப்பாடவிதான செயற்பாடுகள் மூலமும் வாரம் தோறும் நடைபெறும் முகாமைத்துவக் குழுவின் மூளை மும்முரப்படுத்து வதற்கான (BrainStorming) ஒன்று கூடல்கள் மூலமாகவும் ஏற்படுத்தினேன். பாடசாலைத் தொகுதியின் அங்கங்களாக ஒவ்வொரு மாணவரும் இருக் கின்றார்கள். பாடசாலைத் தொகுதி மிகத் திறமையாக செயற்படுத்துவதற்கும் என்னாலான முழு முயற்சிகளையும் ழேற்தொஒன்இஜ்இவை எல்லாம்
எனது புதிய சிந்தனதொழுக்கிள் ரீதிதிேகோலாகஅமைந்திருந்தன.
- 19

Page 12
éFpéb, abbÜbs absÜbu Sibuébéfu} ä{ShéfbMéH
மாருதம் :
O2. கல்விச் சூழலுக்கான உங்கள் சிந்தனைக்கும் யதார்த்த நிலைக்குமான
முரண்பாடுகளுக்கு நீங்கள் எவ்வாறு முகம்கொடுத்தீர்கள் ?
அருட்சகோதரி :
நல்ல சிந்தனைகள் நல்லசெயற்பாடுகள் என்பவை ஒருவருக்கு தன் இலட்சியத்தை அடைவதற்கு வழிவகுக்கும். புதிய மாற்றங்கள் வரும்போது மக்கள் உடனடியாக அவற்றைஏற்று கொள்வார்கள் என்பதற்கில்லை. ஏற்றுக்கொள்ளாத நிலையில் ஏற்க வேண்டியதின் அவசியத்தையும், அதன் நற்பலன்களையும் அவர்களுக்கு பொறுமையோடு எடுத்துரைக்கும் போதெல்லாம் அவர்கள் வரவேற்றார்கள். எனவே மக்கள் புரிந்துணர்வுடையவர்கள். அவர்களுக்கு வேண்டிய விளக்கத்தையும் அறிவையும் கொடுக்க வேண்டியது தலைமைத்துவத்தின் தேவையாகின்றது. கடமையாகின்றது. எல்லாவற்றிக்கும் மேலாக இறை சிந்தனை விடயங்களை இலகுவாக்கி இருக்கின்றது. எனவே பிரச்சினைகள் என்பது பெரிதாக இல்லை என்றே சொல்ல வேண்டும். அல்லது அணுகுமுறைகள் பிரச்சினையை சிறிதாக்கின என்றே சொல்ல வேண்டும். கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டை மேம்படுத்தும் நோக்கோடு, நான் பெற்ற புதிய சிந்தனைகளை செயற்படுத்த முயன்றேன், ஆயினும் எல்லா இலட்சியங்களையும் அடையக்கூடியதாக இருந்தது என்று சொல்வதற்கில்லை. ஆனால் அடைய முடியாதவற்றில் பல பாடசாலைகளுக்குரியன அல்ல; அவை நாட்டுக்கு பொதுவானவை. எனவே இவை நாடளாவிய பிரச்சினைகள். உதாரணமாக, பரீட்சைமையக்கல்வியானது மாணவர்களின் ஆளுமை விருத்திக்கு குந்தகமாகவே இருக்கின்றது. இந் நாடளாவிய பிரச்சினைக்கு ஒரு பாடசாலை அதிபர் என்னதான் செய்யமுடியும்? புதிய கல்விச் சீர்திருத்தங்கள் இது போன்ற தடைகளைத் தாண்டுவதென்பது நடைமுறை சாத்தியமானதுதானா? என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். பாடசாலை மட்டக் கணிப்பீடுகளைத்தான் நான் இங்கு குறிப்பிடுகின்றேன். அவை முழுமையான மாற்றீடாகுமா என்பது சந்தேகமே. உண்மை என்னவெனில் மாறுதல்கள் ஏற்படும் என்பதில் மாறுதலே இல்லை. மேலும் மாறுதல்கள் என்பன மனித வரலாற்றில் தவிர்க்க முடியாததொன்றாகும்.
மாருதம் :
O3. உங்கள் கல்வி இலக்குகளை எய்துவதற்கான உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு
சமூகச் சூழல் சாதகமாக இருந்தது என நீங்கள் உணர்கின்றீர்களா?
அருட்சகோதரி :
ஆம்,நான் எதிர்பார்த்ததை விட சமூகச்சூழல் எனக்கு உற்சாகம் ஊட்டுவதாகவும், உறுதியாக்குவதாகவும் இருந்தாக நான் உணர்ந்திருந்தேன். எனினும் செல்கின்ற பாதைகள் நெளிவு.சுழிவு இல்லாமல் இருக்கும் என்றோ,
- 20

சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
மேடு பள்ளம் இல்லாமல் இருக்கும் என்றோ எதிர்பார்க்க முடியாது. இவை
நாம் எ வி வளவு 56) 65T LID 「T&5 கல் வரி இலக் குகளை முன்னெடுத்துச்செல்லுகின்றோம் என்பதைப் பொறுத்த விடயமாகும். நான் எப்போதும் இவற்றை மிகக் கவனமாக வழிநடத்த வேண்டுமென்ற
நோக்கோடு செயற்பட முயன்றிருந்தேன் என்பதுதான் உண்மை. எல்லாவற்றிற்கும் மேலாக, வளமுகாமைத்துவம் இதில் ஒரு மிக முக்கிய பங்கை வகிக்கின்றது. என் பாதையில் சந்தித்த இடர்களைத் தாண்டிச் செல்வதற்கு, எனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை, வளங்களை- நான் உச்சபயன்பாடடையக் கூடியதாக பயன்படுத்தி இருந்தேன் என்றே சொல்ல வேணி டும் . எவ்வளவோ கல வி இலக் குகளை நாம் அடைந்திருக்கின்றோம்.கல்விக்களத்தில், சவால் நிறைந்த சமூகச் சூழலில்,கல்வி இலக்குகளை எய்துவதென்பது இலகுவான காரியம் அல்ல என்றே நான் கருதுகின்றேன.
EDITSE5D :
04. புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அர்த்தமுள்ளதாக, எங்கள் சமூகத்திற்கு
நடைமுறைக்கு சாத்தியமானதென நீங்கள் கருதுகின்றீர்களா?
அருட்சகோதரி :
உலகம் மாறிக் கொண்டிருக்கின்றது. மிகவேகமாகவே மாறிக் கொண்டிருக்கின்றது. கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் புதிய வடிவங்களை புதிய பரிமாணங்ளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. கரும்பலகையோடும் வெண்கட்டியோடும் எவ்வளவு காலத்திற்குத்தான் ஒடமுடியும். குறிப்புக் கொடுப்பதும், மனனம் செய்வதும் அதை மீள ஒப்பிவிப்பதுமான குண்டு சட்டிக்குள் குதிரையோடும் செயற்பாட்டை நம்பி எவ்வளவு தூரம் தான் ஓடமுடியும். புதிய அணுகு முறைகள் மிகத் தேவையானதாகின்றது. எனவே நாம் மாற்றங்களை நாடவேண்டியவர்களாக இருக்கின்றோம். மாற்றம் தேவை மிகமிகத் தேவை. இத்தகைய மாற்றத்தை அர்த்தமுள்ளதாக்குவதும் நடைமுறைச்சாத்தியமாக்குவதும் எங்கள் எல்லோரினதும் கூட்டுப் பொறுப்பேயன்றி தனியொருவர் பொறுப்பன்று.
மாருதம் :
O5. பழைய புதிய சந்ததிகளுக்கிடையில் உள்ள இடைவெளிகள் பற்றி.
அருட்சகோதரி :
பாடசாலையில் ஆறு வயதில் இருந்து கட்டிளமைப்பருவம் வரை பிள்ளைகள் இருக்கிறார்கள். 22வயதில் இருந்து 60வயதிலான ஆசிரியர், ஆசிரியரல்லாத செயற்பாட்டுக் குழு இருக்கின்றது. எனவே பாடசாலைச் சமூகத்தில் பழைய புதிய தலைமுறைகளைக் காண்கின்றோம். இவர்களுக்கிடையில்
-2 l

Page 13
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
இடைத்தாக்கங்கள் இயல்பாகின்றது. உலகம் மிக விரைவாகவே மாற்றங்களுக்கு உட்பட்டுக்கொண்டிருக்கின்றது. இவை கலாசார நடத்தைகள், விழுமியங்கள், வேறுபாடு கொண்ட தலைமுறைகளை தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன. நேற்று சட்டத்திற்கு முரண் என இருந்தது இன்று மாறுகின்றது. இன்று ஏற்றுக்கொள்ளப்படுவது நாளை மாறலாம். இது தான் உண்மை நிலை. பழைய தலைமுறை புதிய தலைமுறையை புரிந்து கொள்வது இலகுவானதா, அல்லது புதிய தலைமுறை பழைய தலைமுறையை புரிந்து கொள்வது இலகுவானதா? என்ற கேள்விகள் எங்கள் மனங்களிலே எழுகின்றன. புதிய தலைமுறையின், நிலைப்பாடு பழைய தலைமுறையின் நிலைப்பாட்டுடன் வேறுபடுகின்றது. புதியதலைமுறை ஒரு ஊறுபடுத்தக் கூடிய சமூகச்சூழலையே எதிர் கொள்கின்றது. 50இல் என்ன இருக்கிறது என்பதை 20வயது இளைஞன் ஒருவன் உணர்ந்து கொள்வதை விட 20ல் என்ன இருக்கிறது என்பதை ஒரு 50வயது உள்ள ஒருவரால் உணர்வது இலகுவானதும், இயல்பானதும் ஆகுகின்றது. எனவே பழைய தலைமுறை இங்கு வழிகாட்டியின் பங்கை வகிக்கவேண்டியது அவசியமாகின்றது. இளைய தலைமுறை சக்தி கொண்டது. விறுவறுப்பானது என்பது, நாம் மறக்க முடியாத உண்மையாகும். எனவே பழைய தலைமுறையிடமிருந்து புதிய தலைமுறைகள் பொறுப்புக்களை படிப்படியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தால் இரு தலைமுறைகளுக்கிடையிலான இடை வெளி, அதிகமாகிக் கொண்டு வருகின்றது. நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வாழ்க்கை நெறிமுறையில் மாற்றங்கள் Ld as விரைவாகவே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக விழுமியங்கள் பண்புகள், கேள்விக்குறியாகின்றன.
மாருதம் 3
O6. உங்களது பாடசாலையில் ஆங்கிலக்கல்வியின் மேம்பாட்டில், முன்னேற்றம் அல்லது புத்துணர்வு ஏற்பட்டுள்ளதாக நீங்கள் கருதுகின்றீர்களா?
அருட்சகோதரி :
பிரதானமாக, ஆங்கில ஆட்சிதான் ஆங்கில மொழியை எமது நாட்டிற்கு கொண்டுவந்தது. அது இலங்கை மக்களின் வாழ்கை முறையை பாதித்தது. அன்று ஆங்கிலம் ஒரு ஆட்சி மொழியாக இருந்தது. அதுவகித்த பங்கும் இன்றையதை விட வித்தியாசமானது. அதன் நிலை காரணமாக அது சில பிரமுகர்களின் மொழியாக இருந்தது. விஞ்ஞானப் புரட்சியின் பின்னர் நிலமை மாறியது. சட்ட ரீதியாக பிரஞ்சுமொழி சர்வதேச மொழியாக இருந்த போதிலும் நடைமுறை ரீதியாக ஆங்கிலம் சர்வதேச மொழியானது. இன்று அது
-22

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை டமாருதம்)
பிரிட்டனுக்கு மட்டுமே சொந்தமான மொழி என்றில்லாமல் இந்திய ஆங்கிலம், இலங்கை ஆங்கிலம், மலேசிய ஆங்கிலம், அமெரிக்கஅங்கிலம், கனேடிய ஆங்கிலம், அவுஸ்ரேலிய ஆங்கிலம் என்று உலக மொழியாகி விட்டது.எல்லாவற்றுக்கும் மேலாக அது இணைப்பு மொழியாகிவிட்டது. எனவே ஆங்கிலத்தைக் கற்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே எமது பாடசாலையிலும் ஆங்கிலம் கற்கவேண்டியதை, மேம்படுத்துவதன் அவசியம் எழுந்திருக்கின்றது. பரீட்சைமையக் கற்றல்-கற்பித்தல் முறை, பல்கலைக்கழகம் செல்ல தேவைப்படும் தகைமை, ஆங்கிலம் ஒரு கட்டாய பாடம் இல்லை என்ற பல காரணிகள் ஆங்கில கற்பித்தலின் மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கு குந்தகமாக அமைகின்றன. எனவே பெரும்பாலான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கு, அடிப்படைத் தகைமைகளை மனதிற்கொண்டு ஆங்கிலம் கற்பதை கருத்தில் கொள்வதில்லை என்பதைத்தான் நடைமுறையில் நாங்கள் காண்கின்றோம். ஆங்கிலம் உயர்தரத்தில் கற்க வேண்டும் என்ற நிலை 2000ஆண்டில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதனால் மாறுதல்களை நாம் எதிர்பார்க்கலாம். காலத்தின் தேவைகருதி ஆங்கில மொழி மூலம் கற்க விரும்புபவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்ற கொள்கையோடு எங்கள் பாடசாலையும் இணைந்திருக்கின்றது.இதன் விளைவாக 6,78 ம் தரங்களில் பிரதானமான பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிப்பதற்கு ஆரம்பித்திருக்கின்றோம். இதில் மேம்பாட்டைக் காணக்கூடியதாக இருக்கின்றது. புத்துணர்வு ஒன்றைக்காணக் கூடியதாக இருக்கின்றது. ஆனால் துரித முன்னேற்றமானது ஊக்குவிப்பு காரணிகளால் தடைகளை எதிர்நோக்குகின்றது. கணிணி உதவிக்கற்றல் என்ற கற்றல் முறைகள் மலரத்தொடங்கி இருக்கின்றன. இம் முறைக்கு ஆங்கிலம் அவசியம் ஆகின்றது. எனவே எங்கள் நாட்டில் ஆங்கிலக்கல்வியின் தேவை புதிய பரிமாணத்தைப் பெற்றுக்கொண்டிருக்கின்றது.
DTGsib *
O7. மாணவர்கள் கல்வி மீதான ஊக்கத்தை ஏற்படுத்துகின்ற மேம்பாட்டில்
கலாசாரச் செயற்பாடுகள் வகிக்கும் பங்கினைக் கூறுவீர்களா?
அருட்சகோதரி :
ஒரு பாடசாலையிலே ஒவியம் சங்கீதம்,நடனம்,விளையாட்டு என்ற துறைகள் நன்கு பேணப்பட்டுவந்தால் கற்றல் கற்பித்தலின் அரைபங்கு வேலை முடிந்துவிட்டது எனக் கொள்ளலாம். இதை நான் எய்துவதற்கு எனது ஆசிரியகுழாம், பெற்றோர், நலன்விரும்பிகள், மாணவர்கள், என்போரின் ஒத்துழைப்பைப் பெற்றிருக்கிறேன். கலாச்சார விழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றேன். மாணவர்களும் நன்கு பயன்படுத்தியிருக்கிறார்கள்.இச் செயற்பாடுகள்,மாணவர்களின் ஆளுமை விருத்திக்கு ஒரு மந்திரகோலாகவே
-23

Page 14
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
இருந்திருக்கின்றது. இவற்றோடு நல்ல நூல் நிலையம், விஞ்ஞானம், மனையியல், சித்திரம், நடனம், சங்கீதம் போன்றவற்றிற்கான நல்ல ஆய்வு கூடங்கள் மாணவர்களின் கல்விசார் நிலையை உயர்த்துவதற்கு உந்துகோலாக இருக்கின்றன. வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான். கற்றல் தொழில்பாட்டில் வாசித்தல் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. மாணவர்கள் மனங்களிலே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்கு பல நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றோம். தற்போது வாசித்தல் சம்பந்தமாக மாணவர் மத்தியிலே ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. எதுவித சந்தேகமும் இல்லாமல் இது வளரும். இதற்கான தேவையும் இருக்கின்றது.
மாருதம் :
O8. புறப்பாடவிதானச்செயற்பாடுகளில் மாணவர்கள் ஆர்வமுள்ளவர்களாக
இருக்கின்றார்களா?
அருட்சகோதரி :
புறப்பாடவிதான செயற்பாடுகள் என்ன வடிவத்தில் இருந்தாலும் மிகத்தேவையான தொன்றாகும். இது சுகாதாரமானது. மேலும் மாணவர்களின் பாடசாலைக் காலத்தில் மிகத் தேவையான பொழுது போக்கம்சமாகக்கூட கருதலாம். பொதுவாக மாணவர்கள், இதில் ஆர்வம் உள்ளவர்களாகவே, காணப்படுகின்றார்கள். பெரும்பாலான மாணவர் ஆர்வத்தோடு பங்குபற்றி, தங்கள் ஆளுமையை வெளிக் கொணர்கின்றார்கள். புதிய மாற்றங்களில் துணிந்து செயற்படுகின்றார்கள். மாணவ உலகின் பொதுவான இயல்பு இது. பாடசாலை நேரத்தில் புறப்படவிதானச் செயற்பாடுகளில் ஆர்வம்காட்டுவார்கள். பாட வேளைகளை அதற்காக தியாகம் செய்யவும், தயங்கமாட்டார்கள். ஆனால் பாடசாலை தவிர்ந்த நேரங்களில் அவ்வாறு செயற்பட அவர்கள் விரும்பு வதில்லை. ஏனெனின் அவர்கள் ரியூசன் வகுப்பிற்கு ஓட வேண்டிய தேவை இருக்கின்றது. விளையாட்டுப் போட்டியில் ஒட வேண்டிய ஒட்டப்போட்டிகளை இழந்து, எலிகளின் ஒட்டத்திலே(Rat rase) இணைய வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். பரீட்சை மையக்கல்வியின் கொடிய விளைவுகளில் ஒன்றுதான் இது. கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஏனையோர், இக்கொடிய பிடியில் இருந்து எப்படி விடுபடலாம் என்று அங்கலாய்த்து, நிற்கின்றார்கள். இப்பிரச்சினைக்கு எப்படித்தான் தீர்வு காணப்போகின்றோம். சுரங்கத்தின் முடிவில் ஒளியை நாம் காண்போம் என்ற நம்பிக்கையில் தான் இருக்க வேண்டியிருக்கின்றது. தகவல் தொழில் நுட்பங்கள் தோன்றியதின் எதிரொலியாக கற்றல் முறைமைகளிலே பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தேடிக்கற்றல்,சுயகற்றல் என்ற எண்ணக்கருக்கள் ஒரு ஆசிரியரை வழிகாட்டி என்ற நிலைக்கு மாற்றியிருக்கின்றது. எனவே காலம் நல்ல மாறுதல்களை சுயமாகவே
-24

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
ஏற்படுத்தும்.
மாருதம 3
O9. எங்கள் சமூதாயத்தில் சமயம் வகிக்கும் பங்குபற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
அருட்சகோதரி :
எங்கள் சமூகம் பல சமயங்களைக் கொண்ட ஒரு தொகுதியாகும். உண்மை என்பது ஒன்றுதான் அதனை துறவிகள் பல்வேறு பெயர்களால் அழைக்கின்றார்கள். தண்ணீரை நாம் வெவ்வேறு மொழிகளில் அழைத்தாலும் அது தண்ணிர் தான். ஒரு உண்மையான கிறிஸ்தவன், ஒரு உண்மையான இந்து ஆவான். ஒரு உண்மையான இந்து, ஒரு உண்மையான பெளத்தன் ஆவான். ஒரு உண்மையான பெளத்தன், ஒரு உண்மையான இஸ்லாமியன் ஆவான். இப்படியே நாங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம். இச் செய்தி பிள்ளைகளின் உள்ளங்களில் சென்றடைய வேண்டும். இச் செய்தியை வெளிப்படுத்துவதில் பல முயற்சிகளை நான் மேற்கொண்டிருக்கின்றேன். சமய அறிவுரைகள், செயற்பாடுகள், சிந்தனைகள் என்பன ஒரு சமூகத்தின் கலாசார விழுமியங்களை வளர்ப்பதில், உரங்களாக இருக்கின்றன. பல்லினத்தன்மை என்பது இயற்கையானதே. ஆனால் பல்லினத்தில் ஒருமைப்பாட்டைக் காண்பது மிகவும் முக்கியமானதாகும். அன்னை தெராசாவின் வாழக்கை எங்களுக்கு இதை நன்கே எடுத்துக் கூறுகின்றது. இச் சந்தர்ப்பத்தில் அவருடைய சிந்தனை ஒன்றை பகிர விரும்புகின்றேன்.
"எந்த நிறமோ, எந்த மதமோ
எந்த இனமோ எங்களுக்கிடையில் தடையாக இருக்க முடியாது! நாங்கள் எல்லோரும் இறைவனின் பிள்ளைகள்.”
மாருதம் :
10. எங்கள் கல்வி முறையில் புகுந்துள்ள பரீட்சைமையக் கற்பித்தல் பற்றி
உங்கள் வெளிப்பாடு என்ன?
அருட்சகோதரி :
இது ஒரு சாபக்கேடென்றே சொல்ல வேண்டும். இதனால் பிள்ளைகளின் பாடசாலை வாழ்க்கை அவர்களுடைய ஆளுமை விருத்தி, நசுக்கப்படுகின்றது. அவர்களுடைய திறன்கள் ஆற்றுப்படுத்தப்பட வில்லை. இதனால் திறன்களை இழக்கின்றோம். வளங்களை இழக்கின்றோம். இது ஒரு கல்வியியற் தவறு என்றே சொல்ல வேண்டும். ஆனால் மாற்றீடு வழிதான் என்ன என்பதுதான் தற்போதைய கேள்வியாகும். புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர் கணிப்பீட்டை பரிகாரமாக வைக்கிறது. அதிலும் குறைபாடுகள் இருந்துதான் செய்கின்றன.
-25

Page 15
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
இருந்த போதலும் நல்ல பெறுபேறுகளைத் தரும் என்ற நம்பிக்கையுடையவர்களாக இருப்பது நல்ல தென்றே நினைக்கின்றேன்.
மாருதம் :
11. நடைமுறை ரீதியில் ரியூசன் என்பது தவிர்க்க முடியாத பிசாசு என்றாகி
விட்டது. இது பற்றி .
அருட்சகோதரி :
புலமைப்பரிசில் பரீட்சைகள், பல்கலைக்கழகபுகுமுக பரீட்சைகள் என்பன உளநலமற்ற போட்டிகளாக இருக்கின்றன. ஏக்கங்களை, சலனங்களை, பெற்றோர் மத்தியில் தோற்றுவிக்கின்றன. மாணவர்களின் தவிப்பு என்னும் நெருப்புக்கு பெற்றோரின் எதிர்பார்ப்புக்கள், பெற்றோலாக அமைகின்றன. இதிலிருந்து தப்புவதற்கு மாணவர்கட்கும் எந்த வழியும் இல்லை. நான் முன்பு குறிப்பிட்டது போல, விளையாட்டு ஒட்டப் போட்டியை இழந்து, எலிகள் ஒட்டத்தில் இணைகின்றார்கள், ஏதுமறியாத மாணவர்கள். ரியூசன் ஒரு தேவையான தீங்காகி விட்டது. ஒரு குறிப்பிட்ட , சிறிய தொகை மாணவர்களைத் தவிர ஏனையவர்கள் இதில் இருந்தும் தட்ப முடியவில்லை. தப்பிய சிறுபான்மையினர் கொடுத்து வைத்தவர்கள். பெரும்பான்மையினர் தங்கள் நேரத்தை இழக்கின்றனர். பணத்தை இழக்கின்றார்கள். தங்கள் சிந்தனையை மழுங்கடிக்கின்றார்கள். சில மாணவர்களுக்கு உண்மையில் ரியூசன் தேவை தான். ஆனால் எல்லோருக்கும் அல்ல.
LDITEsash :
12. மாணவர் மத்தியில் சுயகற்றல் முறையை அமுல்படுத்துவதில்
மேம்பாட்டைக்கான யாதேனும் மார்க்கங்கள் உண்டா?
அருட்சகோதரி :
கற்கின்ற இயல்பு மனிதனிடம் இயல்பாகவே இருக்கின்றது. உள்ளர்ந்திருக்கும் அறிவை வெளிக்கொணர்வதே கல்வி ஆகும் என்று ஒரு அறிஞர் கல்வி பற்றி வலியுறுத்தி இருக்கின்றார். ஒரு நல்ல கற்றல் சூழலிலே பொருத்தமான கற்றற் துணைச்சாதனங்களோடு, நல்ல வழிகாட்டலும் இருக்குமானால் ஒரு மாணவன் சிறச்த சுயகற்றலைப் பெறமுடியும் . கற்றல் துணைச்சாதனங்களாக, புதிய புதிய அணுகு முறைகள் வந்துள்ளன. கணிணித் துணைகொண்ட சுயகற்றலும் இதில் ஒரு முறை. இதற்கான வசதிகள். எங்கள் பாடசாலையில் இருக்கின்றன. இவற்றின் உச்ச பயன்பாட்டை பெற, மாணவர்கள் நன்கு வழிநடத்தப்பட்ட வேண்டும். நன்கு கவனமாக தயாரிக்கப்பட்ட உதவிக் குறிப்புக்கள், உசாத்துணை நூல்கள்,வாசிப்பதற்குத் தேவையான புத்தகங்கள்,இன்ரநெற் வசதிகள் குறுக்கெழுத்துப் பயிற்சிகள்,ஆய்வுகூட வசதிகள், கல்விச்சுற்றுலாக்கள் என்பன சுயகற்றல் மேம்பாட்டில் உள்ளடக்
-26

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
கப்பட்டிருத்தல் வேண்டும். இவற்றின் துணையோடு மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டல்கள் இருக்குமெனில் சுயகற்றல் செயற்பாடு வெற்றியைத்தரும்.
மாருதம் : 13. இளையதலைமுறையினருக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
அருட்ககோதரி:
இன்று இளைஞராக இருக்கின்ற நீங்கள்தான் நாளைய தலைவர்கள். புதிய தொழில் நுட்பங்கள், தலைமைத்துவ மாதிரிகள், உலகின் வளங்கள் எல்லாம் உங்கள் கையில் இருக்கின்றது. இயற்கையும் உலகமும், ஏன் வியாபித்திருக்கின்றன என்பதன் நோக்கத்தை நிறைவேற்றவும், நீங்கள் மேம்படைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்களுடன் இருக்கின்றன. மனித நேயமற்ற, தர்மம் குன்றிய, பலவான் சொல்வது தான் சரி என்றே நிலைப்பாடுள்ள, தீய, போரிடும் உலகில் தான் நாம் வாழ்கின்றோம். இளைஞர் உலகம் எது சரி எது தவறு என்பதை அறியும் பகுத்தறிவை வளர்க்க வேண்டும். திய, போரிடும் உலகத்தை வெறுத்து சமாதானச் சுழலை ஏற்படுத்த வேண்டியதன் தேவை இருக்கிறது. நாங்களும் வாழ்ந்து, மற்றவர்களும் வாழ வேண்டுமென்ற ஆழலை உருவாக்க வேண்டும் தங்கள் மனங்களின் நோக்கிலே, செல்கின்ற அழிவுச் சக்திகளில் இருந்தும் விடுபட விமர்சனக் கல்வி மிகவும் உதவியானதாக அமையும்.
மாருதம் -நன்றி
--27 ستہ

Page 16
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை ଔgy 5
சரித்திரத்தின் சமுத்திரம் சரித்திரமிங்கு பராக்கிரம சமுத்திரமாய். பேசுகிறது. பலயுகங்கள் சென்றும் - அதன் பாதங்கள் பேசுகிறது
எமைவிட அதன் மூச்சுக்கு வலிமை அதிகம் வீரர்கள் - மண்விட்டு போனாலும் சிகிரியா வாய் கைரேகை செதுக்கப்பட்டிருக்கிறது கண்முன்னே
அவர்கள் நடந்த பூமியெங்கும் கலை நகர்த்தப்பட நிலை மாறிற்று அந்த வரலாற்றுப் பக்கம்
படைப்பின் அர்த்தங்கள் பேசும் கற்களின் பொழிவைக் கண்டேன்
அந்தப் புயங்களுக்குள் நீ இரும்பை ஊற்றினாயா..? ஆத் தமுது கூட்டத்தின் பிச்சலம் தான் இங்கு வந்ததா..?
அப்படியென்றால் உன்படைப்பு நதியில் எந்தத் துளியாய் யாம்.?
ஓட்டமாவடி எம்.பீ.நளிம்.
ஆத்தமூது - ஆதிகால குகைவாசிகள் (பராக்கிரமபாகு சமுத்திரத்தை கண்டபோது எழுந்த கவிதை)
- 28

சமூக, கல்வி கலை இலக்கிய ്ഠിതമ
என் தாபம்
எல்லாமே நீ உனது நலனுக்காய்ச்
செய்கின்றாய் என்று நீ
குற்றம் சாட்டிய பொழுதுகளில்
குறுகிப் போகும் எனது நாளங்கள்,
வெடித்துச் சிதறி சல்லடைக் கண்களாக கோபித்து
நான் சீற்றம் தணிவிக்கும் பொழுதுகளில் என்மனதில் என்றோ ஒரிருநாள்
சிறகு விரித்த புறாக்களைச்
சின்னாபின்னமாக்கிச் சிறகொடித்து விட்டாயே - என்று
வேகத்தில நான் விமர்சித்த பொழுதுகளில்
வீரனாகவே என்னை ஆசீர்வதித்து
விதுரனாக உன்னை இனம் காட்டினாயே - இப்போது மென்ன பொழுதுசாயும் வேளைகளில்,
புறம்கண்டு வீடு திரும்பும் பொழுதுகளில், உன்னைப் பேடியென்று விமரிசித்து நான் எழுதிய
எனது வியாக்கியானங்களை எண்ணி நான் வேதனையில் வாடி விடுகின்றேன்
எத்தனை நாட்களுக்கு இப்படி நான்.?
-வெண்ணிலா
கால்பதிக்காப் பாதை மொழிபெயர்ப்பு . தெள்ளிலங்கைக் கவிதை/
முறுவலிக்காத முகங்கள் மலிந்த இந்தக் காட்டில் புன்னகைத்தபடி பிரிந்து போகும் ஒருவரை நோக்கி ஒரு பாதை வெட்ட முயல்கிறேன். புரியாத மொழிகளின் சங்கம இரைச்சலில் ஒரு பரிச்சயமான ஒலிக்குப் பொருள்காண முயல்கிறேன். பல மணங்களின் கலவைக்குள் பழக்கமான மணம் ஒன்றை முகர முயல்கிறேன். பல்லாயிரம் பாதங்களின் ஒசைகளை நான் உற்றுக் கேட்கிறேன். அவை காலடிகள் - அறிவேன் அவை என்னைக் கடந்து போகின்றன.
முலம் கமலா விஜயரத்ன
Sudyglosað GeFIT. Lu -29

Page 17
முக கல்வி கால இலக்கிய சஞ்சிகை
பாறையுடன் பேசுதல்
சகமனிதனின் சிரிப்பைத்தின்று திருப்திப்படுகிறாய்
அடுத்தவனின் சந்தோஷத்தைச்சுரண்டி
G66WILD Ist J வெற்றிலையிற் தடவிச் சப்பிவிட்டு நாக்கிழுத்துச் சிவப்புப் பார்க்கிறாய் வகையற்றவனின் ஒரே போர்வை உன்காலடியிற் கிடக்கிறதொரு சாக்காக
எந்த எதிராளியின் வலிமுனகலும் விழாது உன்காதில் நாற்புறமும் நிலைக்கண்ணாடிபதித்த உன் பாதாளலோகச் சுவர் நடுவே குறட்டைவிட்டுறங்குநீ
சுகமாக
- ந. சத்தியபாலன்
(03.11.03)
-30

്യാ, ടബ്, ടണ്ണ (ധ ട്രി
பெண்ணே எழுவாய்
ஆதிசிவனும் மனையாள் பெற்றான் அம்பாள் எனவே கொண்டோம் பாதி மனிதர் பெண்ணை இன்று போகப் பொருளாய்க் கொண்டார்!
பிள்ளை பெற்றிடும் இயந்திரமோ பாடுபட்டிடும் சேவகியோ தொல்லை பல தான் கொடுத்தபோதும் பொறுத்தல் இலக்கணம் என்றிடலாமோ!
ஆணவன் தனக்கு மாதம் பத்து அரிவையர்க் கென்ன ஐந்தாமோ ஏனவன் பெண்ணை ஏய்க்க வேண்டும் ஏற்றத் தாழ்வு நாட்ட வேண்டும்!
அகப்பை பிடிக்க மட்டுமல்ல ஆட்சி புரியவும் தெரியுமென்று வகையாய் பெண்ணும் உணர்த்திடவேண்டும் வலைநிகள் துன்பம் அறுத்திடவேண்டும்
ஆணொடு பெண்ணாய் இரண்டு இனம் அகிலத்தில் தேவை அதனாலே வீணாக ஒன்றை நசுக்குவதோ? விதியாய் அதனை மாற்றுவதோ! தன்னை பெண்ணிடம் பேசிவிற்பார் தாழ்வாய் அவளை ஏசி நிற்பார் என்னை ஏளனம் ஏனோ பொறுமை விழிநீர் வேண்டாம் வீரம் கொள்வாய்.
பெண்ணே நீயும் எழுந்திட வேண்டும்
பேணிய பொறுமையும் போதும் போதும்
கண்ணே நீயும் கரங்கள் உயர்த்த
கருத்தாய் பாதை இட்டிட வேண்டும் க. சுகந்தினி
-31

Page 18
്യാഭ്, ബി. (ൺ 8ബിഡ (dിb
சமாதானம்
சொத்திழந்து சுகமிழந்து சொந்தபாச உயிரிழந்து நித்தம்நிதம் வேதனையால் கண்ணிரிலே தத்தளித்து ஒட்டு மொத்த செல்குண்டால் வீடுவாசல் செயலிழந்து நட்ட நடுத் தெருவினிலே படுத்தது தான் மறந்தீரா?
மாளிகை மாடிகளில் மன்மதன் போல் வாழ்ந்து விட்டு மரத்தடியில் உறங்கியதை கனவென்றா எண்ணுகின்றீர்? பட்டதுயர் அனைத்தும் விட்டுப் போக வேண்டுமாயின் சமாதானப் பறவையையே சாதனையால் படைக்கவேண்டும்!
பஞ்சம், பசி, நோய் தந்து தரணியிலே தாழ்த்தினாலும் தஞ்சம் எனத் தாழ்பணிந்து அடிமைகளாய் வாழ்ந்திடோம்! சோதனையும் வேதனையும் மாறிமாறி வருத்தினாலும் சாதனைகள் பல ஈட்டியே சமாதானத்தை பெற்றிடுவோம்!
செ.ஷாமினி ஏடு நாளையே எழுதட்டும்
மனிதா மனிதா நீ மனிதன் தானா இனியாவது கொஞ்சம் திருந்திவாழு. பழமையை மறந்து புதுமையை நாடு இளமையைக் கொன்று வாழ்வதை ஒதுக்கு
பள்ளிப்பருவம் போனால் வராது
துள்ளியெழுந்து கல்வியைப் பயிலு. சின்னச் சின்ன சேட்டைகள் தள்ளு என்றும் மனதில் நல்லதை எண்ணு!
சந்தியில் குந்தி வம்புகள் அளந்து சிந்திக்கும் ஆற்றலை இளமையில் இழந்து வாழ்வதில் நல்ல பலன்களோ இல்லை. நாளையே சீரிய வாழ்வினை நாடு!
பெற்றவர் உள்ளம் மகிழ்ச்சியில் வெள்ளம் கற்றவர் நெஞ்சில் நீ என்றுமே வெல்லம்.
நாடுவாழ உன்பங்கினை ஆற்று கயல்வண்ணன் ஏடு நாளையே உன்னையே எழுதட்டும்!!! வவுனியா.
-32

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
குறுங்கவிதைகள் நான்கு
தாய் சதனமீ உதிரத்தை உருக்கி ஆண்களை அணிகலமாக்கி உயிரைக் கொடுத்துருகும் பெண்ணுக்கு பெண்காட்டும் மெழுகு பெருமை
வெணிகட்டி நட்பு தன்னையழித்துத் தேய்த்து வேதனைகளை மெழுகுக்கு நிகரான சாதனைகளாக்கும்
தோழன் மருந்து
9ரஞ்சுறுத்தும் கால்
3 h , , il bili

Page 19
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
உளவளத்துணைசார் கதை
அந்தக் கண்கள்
பி.ஏ.சி.ஆனந்தராஜா
எனது ஆசிரியப்பணியிலே பல வருடங்கள் ஓடிவிட்டன. இந்த அனுபவச்சுரங்கத்தில் எத்தனையோ நினைவுகள் வந்து சுழலிடும் - பசுமையான இனிமையான நிகழ்வுகள் எத்தனையோ. வருடா வருடமாக எத்தனை மாணவச்செல்வங்களைச் சந்தித்தாயிற்று! ஆனால்அந்த ஜீவாமட்டும் என்னுள்ளத்தை விட்டகலாமல் உறுத்திக்கொண்டிருக்கின்றான்.
ஆசிரியப்பயிற்சியை முடித்துப் பல இலட்சியங்களோடு, அந்த ஆறாம் வகுப்பிற்குள் நுழைந்த போது ஜீவாவின் தொடர்பு ஏற்பட்டது. குடிப்பழக்கமுடைய தந்தைக்கும், காசநோயால் பீடிக்கப்பட்ட தாய்க்கும் ஒரே பிள்ளையவன் என்பதை அறிந்து கொண்டேன். அழுக்கான கசங்கிய உடை, தொங்கித்தரையை நோக்கும் முகம் - கால்களை தரையில் தேய்த்துக்கொண்டு விருப்பமில்லாமல் வகுப்பிற்குள் நுழைவான் அவன். என்னையோ, தன் சக மாணவர்களையோ நிமிர்ந்து பார்ப்பது அரிது. பிள்ளைகளும் அவனைவிட்டு ஒதுங்கிக்கொள்ளவே முயலுவார்கள். கிண்டல்களும் ஏளனமும் அவனுக்கு ஏராளமாகக் கிடைத்தன. கதைசொல்ல அவர்களை வட்டமாக இருத்தும் பொழுதாவது அவனை அவர்களோடு “நெருக்கமாக்கும்” முயற்சிகளும் தோல்வி கண்டன. நான் மிகவும் வேதனையடைந்தேன். ஜீவாவின் நொந்த உள்ளத்தை அசெளகரியப்படுத்தாது சக பிள்ளைகளுடன் கூடி விளையாட வைக்க நான் எடுத்த சூட்சகமான வழிகள் தான் எத்தனை?
ஜீவா நாளுக்கு நாள் வகுப்பின் “பலியாடாகிக்” கொண்டு வந்தான். பொருட்கள் தொலைந்தால் தீர்ப்புவிரைவாக வரும் “ஜிவா களவெடுத்துப் போட்டான் சேர்’ நானும் இந்தப் பெலயினத்திற்கு இரையாவதுண்டு. அவனது மெளனம் என் சந்தேகத்தை வலுப்படுத்தும். இருந்தும் “அவசரப்பட்டு முடிவெடிக்கக்கூடாது. ப்ொருட்களை எங்கோயாவது தவறி வைத்திருப்பீர்கள் - தேடினால் கிடைக்கலாமல்லவா’ என்று அடிக்கடி அவன் பக்கமே நின்று வாதாடுவேன். ஆனால் பொருட்கள் தொலையத்தான் செய்தன. விளையாட்டு மைதானத்தில் விடப்பட்ட புத்தகங்கள், தண்ணிர்ப் “பைப்படி”யில் வைத்த பேனாக்கள் - இப்படிப்பல. சில தொலைந்து விடும். சில கிடைப்பதுமுண்டு.
-34

சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை -மாருதம்)
ஜீவாவின் நிலை பரிதாபமாயிருந்தது. வீட்டிலோ அவனுக்கு ஆதரவோ வழிகாட்டலோ குறைவு. வறுமையின் தாக்கம் வேறு. பிற பையன்களைப் போன்று, “கடலை இனிப்பு” என்று வாங்குவதற்கு அவன் கையில் காசு கொடுக்க யார்
இருக்கிறார்கள்.
அன்று வெள்ளிக் கிழமை ஆசிரியனுக்குச் சோர்வான நாள், எனக்கு சோதனை மிகுந்தநாளாயும் அமைந்தது. ஓயாது மழை பெய்தது - வெளியே ஒடித்திரிந்து விளையாட முடியாத பிள்ளைகள் ஒருவரை ஒருவர் இடித்து இரைந்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர் நான் கோபத்தோடு அந்த “இரைச்சலை” அடக்க எழுந்தேன்.
“சேர் என் பேனாவைக் காணவில்லை” ஜீவா களவெடுத்துப் போட்டான்” என்று சத்தியன் கத்தினான்.
“ஏய் - சத்தியன் - நீ சொல்வது உண்மையா?’ என்று அவனை அதட்டினேன்.
“இந்த மேசையில்தான் சேர் வைத்தனான். பென்சில் சீவ வெளியே போயிற்றுவாறன் அதைக் காணவில்லை” என்று வந்தது பதில். ஜீவாவை திரும்பிப் பார்க்கின்றேன். தலையைத் தூங்கப் போட்டுக்கொண்டு மெளனியாகின்றான். அவன் சத்தியன் சொல்வதைப்போல் அந்தப்பேனா அங்குதானிருந்திருக்க வேண்டும். அவனுக்குப் பக்கத்திலிருந்தவனும், ஜீவாதான்.
வகுப்பில் திடீரென்று நிசப்தம் நிலவியது. அடுத்து நான் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றேன். என்ற எதிர்பார்ப்போடு, பிள்ளைகள் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்தப் பொல்லாவேளை எனக்கு நித்தியமாய் நீண்டது. முழு வகுப்பும் என் தீர்ப்பை எதிர்பார்த்து நின்றது. பெலயினங்கள் பிடித்திழுக்கப் பொறுமையை இழந்தேன்.
நாதியற்ற பிள்ளையொன்று பழியைச் சுமக்க நேர்ந்தது. ஜீவா கள்வனா? குற்றம் சுமத்துவது எவ்வளவு இலகுவானது!
"ஏய் ஜீவா சத்தியனிடம் அந்தப் பேனாவைக் கொடுத்து விடு” என்று கட்டளையிட்டேன் வழக்கமான மெளனம். அவனிடமிருந்து பதிலில்லை.
“ஜீவா எழுப்பி நில்” அவன் எழுந்து நின்றான். “உன் சட்டைப் பையை பார்க்கவேணும் புத்தகங்களையும் வெளியால் எடுத்து வை”
ஜீவா என் ஆணைகளுக்குப் பணிந்தான். அந்தப் பேனா அவனிடமிருக்கவில்லை. வகுப்பறையின் நிசப்தம் கலையவில்லை. ஜிவா மெளனமாய் தன் புத்தகங்களை அடுக்கிப் பைக்குள் புகுத்திவிட்டு, இருக்கையிலமர்ந்து, கைகளை மேசைமேல் மடித்து அதற்குள் தன் முகத்தை புதைத்துக் கொண்டான்.
-35

Page 20
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
தீடிரென்று நானிழைத்த குற்றம் நெஞ்சைக் குடைந்தது. யாருக்கும் தேவைப்படாத நேசிக்கப்படாத ஜீவாவிற்கு கொஞ்சம் நேசத்தைக் காண்பித்த நான் கூட கைகளை விரித்து விட்டேன்
அன்று பகல், “டேய் சத்தியன்? இந்தா உன்பேனா, பைப் படியில் கிடந்தது” என்று கூறிக்கொண்டு தியாகு சத்தியனிடம் பேனாவைக் கொடுத்தான். சத்தியனுக்கு நினைவு வந்தது “ஓம் தியாகு இப்பதான் நினைவுக்கு வருகுது, தண்ணி குடிச்சிட்டு பைப்படியில் வைச்சனான். மறந்திட்டன்’
இந்த உரையாடல் என்செவிகளில் விழுந்து மனதிற்கு ஆறுதலை அளித்தது. விறாந்தையில் தனிமையாகி நின்று கொண்டிருந்த ஜீவாவை கட்டி அணைத்தவாறு “ஜீவா நான் வீணாக உன்மேல் பழியைப் போட்டுவிட்டேன்! இதை மனதில் வைச்சிருக்காதே’ என்றேன். நான். அவன் தலை நிமிர்ந்தது. அந்தக் கண்கள் என்னை ஊடுருவியது. அந்தக் கண்களிலிருந்த வேதனை என்னிதயத்தை குறிசுடாமலில்லை.
“சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்” - ஆசிரியப்பயிற்சிக் காலங்களில் கிறிஸ்துவின் இந்தவார்த்தைகளைப் பற்றி நான் அடிக்கடி சிந்தித்ததுண்டு. அந்த வார்த்தைகள் ஒரு பிள்ளையை வழிநடத்துவதுதான் எமது பிரதான வேலை என்பதை எனக்குணர்த்தியது. ஜீவாவின் மட்டில் இந்த “வேலை’ தோற்றுப் போய்விட்டது. எனது மதிப்புக்குரிய பேராசிரியர் ஒருவருடைய வார்த்தைகள் சிந்தனையில் பளிச்சிட்டது. “நேசிக்கப்படாத பிள்ளைதான் எமது அன்பை அதிகம் வேண்டி நிற்கின்றது” அந்தக் கண்களில் நிலவிய ஏக்கம் என் நெஞ்சைத் தட்டிக்கொண்டே இருந்தது.
அதிபருடன் ஜீவாவை வீட்டில் சந்தித்தேன். அவனுக்கு பகுதி நேரவேலை ஒன்றை ஒழுங்குபடுத்தி சொற்ப பணமும் கிடைக்க வசதிகள் செய்தோம். அவன், முக மலர்ச்சியோடு வகுப்புக்களுக்கு வரத்தொடங்கினான். பணத்தை பொறுப்பாகக் கொடுத்து சின்ன வேலைகளைச் செய்யச் சொல்வேன் - அவன் எந்தப் பிரச்சனைகளையும் தரவில்லை. “நீ நம்பத்தகுந்தவன்” என்ற பாடத்தை. ஜீவா அன்று தொட்டுக் கற்றுக்கொள்ளத் தவறியதில்லை!
இவையெல்லாம் என் மனக் கண் ஒடும் பழைய நினைவுகள் தான்? ஆனால் - எப்படி உலகத்தையே நிமிர்ந்து பார்க்கக்கூடிய அளவிற்கு ஒரு சிறு பையன் தன்னம்பிக்கையுடன் வளர்ந்து மனிதனாகினான் என்ற அனுபவம் பசுமையாக நினைவில் நிலைத்து இனிக்கின்றது. ஜீவா, தன்னைச் சுற்றியிருந்த “ஓட்டை’உடைத்து வெளியேறிய அன்று, ஆசிரியனாயிருந்த எனக்கும் வெகுமதி கிடைத்தது.
(06.03.04 இல் வட்டத்தால் வெளியிடப்பட்ட ‘அன்புக்கரங்கள்’ தொகுப்பிலிருந்து.)
-36

சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
LUs hófus
நாடகம்
உரைஞர்:
உரைஞர்:
பெளத்தர்
S6rosoft fluff
கிறிஸ்தவர்
மானுடம் வெல்லும்
முல எழுத்துரு.சு.சிவபாலன் ஆசிரியர் வ/இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி அரங்க வடிவம்: நாவண்ணன். நெறியாள்கை : திருமதி நெலோமி.அண்ரணிகுருஸ்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம். வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்
ITL6)
எங்களில் ஓடுவது எந்த சாதி இரத்தமுமல்ல எங்களில் ஓடுவது எந்த மொழி இரத்தமுமல்ல எங்களில் ஓடுவது எந்த இன இரத்தமுமல்ல எங்களில் ஓடுவது மானுட இரத்தமே
மானுடம் வெல்லும் உலகம் மாறிக்கொண்டு வருகின்றது. வன்முறைகளால் பட்டதுபோதும். மானுடம் வெல்லும் நாள் வரும் என்ற ஏக்கத்தோடு மக்கள் இருக்கிறார்கள். பழிவாங்கல்களால், நியாயமற்ற கொலைகளால் ஒரு சமுதாயத்திற்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை, மூட நம்பிக்கை தவிடு பொடியாகி பகுத்தறிவுவாதம் தலைதூக்கி நிற்கும் இன்றைய காலகட்டத்தில் எத்தனை மனித உயிர்கள், விலை மதிக்கமுடியாத எத்தனை மனித உயிர்கள் தான்தோன்றிகளால் அநியாயத் தீர்வைக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றன. (சர்வமத இசை ஒலிக்கின்றது. புத்தம். சரணம்)
கருணை உள்ளம் கொண்டவரே,அன்பு உள்ளம் கொண்டவரே, வணக்கத்திற்குரிய பிரபுவே எமக்கு புரிந்துணர்வுள்ள இதயத்தைத் தாரும்.
அல்லாஹி அக்பர்
அல்லா வடிவில் உள்ளவரே! அறிவையும், பக்தியையும், திடமான கடவுள் நம்பிக்கையையும், எம்மைச் சீராக்கும், மனச்சலனங்களை வெல்லும் சக்தியையும், ஆன்மீக பலத்தையும் தாருங்கள்.
(அப்பா பிதாவே. அப்பா பிதாவே.)
பேராசை, கோபம், பொறாமை, நான் என்னும் அகங்காரம் ஆகிய
-37

Page 21
Grupafo, abst6 afstaniu suhu ardanah
8િLDfો
(3LDf
மேரி
மேரி
மேரி
மேரி
பெளத்ர் (3Drf
உரைஞர்
குமார்
கொடூரங்களிலிருந்து விடுபட எமது உள்ளத்தை தெய்வீக சிந்தனையால் நிரப்பியருளுங்கள். உங்கள் நாமம் என்றும் எங்களோடு நிலைத்திருக்க வேண்டுமு. உமது வழிகாட்டலில் எமது பயணம் தொடர வேண்டும் ஒரு தாய் மக்கள் நாம் என்போம், வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்.
எங்களில் ஒடுவது எங்கள் உயர்சாதி இரத்தமே எங்களில் ஒடுவது எந்த சாதி இரத்தமுமல்ல எங்களில் ஒடுவது எங்கள் சமய இரத்தமே எங்களில் ஒடுவது எந்த சமய இரத்தமுமல்ல எங்களில் ஓடுவது எங்கள் இனரத்தம் எங்களில் ஒடுவது எந்த இன இரத்தமுமல்ல எங்களில் ஒடுவது எங்கள் மொழி இரத்தம் எங்களில் ஒடுவது எந்த மொழி இரத்தமுமல்ல, எங்களில் ஓடுவது மானுட இரத்தமே, சமயம், மொழி, இனம், நாடு, சாதி, இரத்தம் அல்லவே (அனைவரும் சேர்ந்து மேரியைத் தாக்குகின்றனர். சர்வமதக் குருக்கள் வருகின்றனர்) குருக்களே, சர்வமதத்தின்குருக்களே, சமாதானத்தின் விரும்பிகளே, மானுட நேயர்களே மேரியை உடனடியாக வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்வோம் வேண்டாம். வேண்டாம். நான் இனிப் பிழைக்கப் போவதில்லை. எமது கொள்கைகள் சாகப் போவதுமில்லை யேசுநாதர், காந்தி, புத்தர் இவர்கள் இறந்திருக்கலாம். ஆனால் அவர்கள் போதனைகள் இன்னும் வாழ்ந்து கொண்டே இருக்கின்றன. எமது சமுதாயம் பல தலைமுறைகளுக்கு மனம் நோக வேண்டியதன் காரணம் அக்கிரமங்களைப் புரியும் கொடியவர்களாலல்ல. வாய்மூடி இருக்கும் மெளனிகளால் தான். இவ்வாறு கூறியவர் மாட்டின் லூதர். கிங் அவர்களின் பயங்களைப் போக்குங்கள், அவர்களை ஒன்றிணைத்து செயற்பட வையுங்கள்
(மேரி இறத்தல், உடல் கொண்டு செல்லப்படுகிறது. பாடல் ‘எங்களில் ஓடுவது.)
மேரி சாகவில்லை. அவளைக் கொன்றவர்கள் எதனைச் சாதித்து விட்டார்கள், தூங்கிக் கிடந்த சமுதாயத்தை விழிப்படையச் செய்திருக்கிறார்கள். பயந்தொடுங்கிய நல்லவர்களை துணிந்த பலசாலிகளாக்கி இருக்கிறது அவளது சாவு,
(பாடல் - எங்களில் ஒடுவது எந்தச் சாதி.) பாலன்
-38

്യാദ്, ബി, ബബ 8ബ്ളിധ ട്രിക
LT606i, குமார் பாலன் குமார்
T66ir குமார்
JT606ir குமார் UT6066 பாலன் குமார் UT606i, குமார் LIT6)6ir குமார்
JT606ir குமார் பாலன் குமார் UT6)6T குமார் LTണ്ഡങ്ങ குமார் LT6)6. குமார் LIT6)6i குமார் T6)6i குமார் பாலன் குமார் பாலன் குமார்
T606i, குமார் LJT606ir குமார் uT606if குமார் LT66
பாலன்தான் வந்துவிட்டாய் நீ சொன்னபடியே நீ செய்ய வேண்டியது அதிகமுண்டு
யாருக்காக? எமது இலட்சியத்திற்காக இருந்தாலும் மனமொரு குரங்கு மறுப்பதற்கில்லை தாவும் தன்மை கொண்டது அதில் நான் விதிவிலக்கு உனது குறி? என்றுமே பிழைக்காது சமத்துவம் பேசுபவர்கள் சாகடிக்கப்பட வேண்டியவர்கள் களைகள் அகற்றப்படவேண்டியது நல்லது
எது நல்லது? உனது இலட்சியம் பழிவாங்குவது
uT60y?
அவர்களை அவர்களை என்றால்? அந்தக் கொடியவர்களை எந்தக் கொடியவர்களை
எனது தந்தையையும், சகோதரனையும் கொன்றவர்களை.
ஏன் கொன்றார்கள்? இனத்தின் பெயரால் &FUT69 ஆனால் என்ன? அந்த சர்வமதவாதிகள் அவர்கள் கொடியவர்கள் அரசியல் வாதிகளை விடவா? அரசியல் வாதிகளை ஆட்டிப் படைப்பவர்கள் அப்படித் தெரியவில்லை உனக்கு அனுபவம் போதாது இருக்கலாம்
-39

Page 22
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
குமார் LT6)66T குமார் பாலன் குமார் பாலன் குமார் பாலன் குமார் LJT6)6óT குமார் UT666 குமார்
LT666T
கிறிஸ்தவ பெளத்தள் இந்து இஸ்லாமியர் கிறிஸ்
முஸ்ல கிறிஸிம் இந்து
அதனால்?
அவர்கள் மேல் கைவைக்க அவகாசம் வேண்டும் அவகாசம் கொடுத்தால்.
அனுபவம் பெறுவேன்
அனுபவம் பெற்றால்
ஆணையை முடிப்பேன்
எம்மவன்நீ
மறுக்கவில்லை
அடுத்து
ஆணையை நிறைவேற்றுவேன் நிறைவேற்றத் தவறினாய் என்றால்..?
தவறினேன் என்றால்? தண்டனை கிட்டும். ஆனால் உன்னைப் போன்றவனல்ல ராமு. அந்தக் கூட்டத்தில் இருந்து கொண்டும் நான் சொல்வதைச் செய்பவன் இலட்சியத்தில் தவறாதவன். உன்னைவிட தன் கடமையை நிறைவேற்றுவான். நான் மனச்சாட்சிக்குப் பயந்தவன். ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டேன். உங்களது இலட்சியங்களுக்குத் தடையாக இருக்க மாட்டேன். எனது கடமையைச் சரிவரச் செய்வேன். வருகிறேன். (சர்வமதக் குருக்களும் போதிக்கின்றனர். ராமு - அவர்களைக் கொலை செய்ய வந்தவன் மனம்மாறி போதனைகளைக் கேட்கின்றான்) ஓர் உண்மையான இந்து ஓர் உண்மையான பெளத்தன் ஓர் உண்மையான பெளத்தன் ஓர் உண்மையான கிறிஸ்தவன் ஓர் உண்மையான கிறிஸ்தவன் ஓர் உண்மையான இஸ்லாமியர் ஓர் உண்மையான இஸ்லாமியன் ஓர் உண்மையான இந்து இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம். ஆனால் நாம் ஒன்றைக் கவனிக்கவேண்டும். அவை எல்லாம் ஒன்றையே குறிக்கும் பருகிடும் நீரை நாம் தண்ணிர் என்கிறோம். ஜலம் என்கிறார் இன்னொருவர்
வெள்ளம் என்கிறார் இன்னொருவர் வத்துற என்கிறார் மற்றொருவர் பாணி என்கிறார் இன்னுமொருவர். இப்படி மொழிக்கு ஒரு பெயர். ஆனால் எல்லாம் ஒன்றையே குறிக்கும்.
(LITL6)
அன்பென்று கொட்டுமுரசே மக்கள் அத்தனைபேரும் நிகரே நாலுவகுப்பு மிங்கொன்றே - இந்த நான்கினில் ஒன்று குறைந்தால் வேலை தவறிச் சிதைந்தே - செத்து

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
பெளத்
கிறிஸ் 36t)6OT
இந்து
மனச்சாட்சி
LT606i
வீழ்ந்திடும் மானிட ஜாதி சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில் தாழ்வென்றும் மேலென்றும் சொல்வார் சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு தன்னில் செழித்திடும் வையம் தெய்வம் பலப்பல சொல்லி - பகை தீயை வளர்ப்பவர் மூடர் உய்வதனைத்திலும் ஒன்றாய் - எங்கும் ஓர் பொருளாவது தெய்வம் தீயினைக் கும்பிடும் பார்ப்பார் - நித்தம் திக்கை வணங்கிடும் துருக்கள் கோவில் சிலுவையின் முன்னே - நின்று கும்பிடும் யேசு மதத்தார் யாரும் பணிந்திடும் தெய்வம் - பொருள் யாவிலும் நின்றிடும் தெய்வம் பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில் பற்பல சண்டைகள் வேண்டாம் வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் - அதில் மானிடர் வேற்றுமை இல்லை. எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் . இங்கு யாவர்க்கும் ஒன்றெனக்காண்பீர்.
(பாடல் முடிவில் ராமு சுடப்பட்டு இறத்தல்)
ராம் உனக்குமா இந்த தண்டனை நீ எந்த நல்ல குடும்பத்தையும் அழித்தது கிடையாதே. நீ யாரையும் அநாதையாக்கியதும் கிடையாதே நான் எனும் அகங்காரமும், எனது எனும் மமதையும் ஞானத்தின் எதிர் வேதம் என்பாயே, ஊனத்தின் உணர்வு என்பாயே, உன்வாழ்வில் அகங்காரத்தையே அறியாத உன்னையே அழித்தார்களே, உன் நல்ல உள்ளத்தை அறிவார்களா? மேரியின் வரிசையில் இன்று நீ உன்வரிசையில் இன்னும் எத்தனை உயிர்களைப் பறிக்கப் போகிறார்கள் உங்கள் மரணங்கள், வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணங்களை மாற்ற முடியுமா? நாங்கள் கலங்கவில்லை, நாங்கள் தியங்கவில்லை. இவை யெல்லாம் எம்மை உறுதியடையச் செய்கின்றன. வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்க எமக்கு அடித்தளம் இட்டுக் கொடுக்கின்றது. (பாடல் - எங்களில் ஓடுவது.) (மனச்சாட்சி வருகை. பாலன் மனக்குழப்பம்) நீயும் மனம் மாறுகின்றாயா? அப்படியென்றாள் உன் இலட்சியம் என்னாவது? எனது இலட்சியம்
- 41

Page 23
്യാ, 6ഖി, ബി (ഡ ീഴിൽ -(இதழ 5)
மனசாட்சி
Usf606i, குமார்
LJT6)6ir
குமார் UT6)6.
உரைஞர்
எல்லோரும்
சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர். ஏனெனில் இறையரசு அவர்களது, நீதியின் நிமித்தம் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் இறைமக்கள் எனப்படுவர் என்பதை நம்புகிறாயா? ஆமாம். அதில் என்ன தவறு இருக்கிறது? அப்படியானால் உன் தந்தையையும், சகோதரனையும் கொன்றவர்கள்? அவர்களைக் கொன்றவன் ஒரு கொலைகாரன் என்பதற்காக நானும் கொலைகாரன் ஆக வேண்டுமா? அமைதியையும் சமாதானத்தையும் விரும்புபவர்களை அழிக்க நினைப்பதால் சமாதானம் வந்து விடுமா? தவறுக்குப் பின் போகிறாய் எது தவறு? கொலை செய்ய வந்த ராமுவை மனம் மாறவைத்தது தவறா? அமைதியையும் சமாதானத்தையும் வேண்டுபவர்களை அழிப்பதால் சமாதானம் வந்து விடாது. எங்களில் ஒடுவது எந்த சாதி இரத்தமுமல்ல எங்களில் ஓடுவது எந்த சமய இரத்தமுமல்ல எங்களில் ஓடுவது எந்த மொழி இரத்தமுமல்ல எங்களில் ஒடுவது எந்த இன இரத்தமுமல்ல
}எங்களில ஓடுவது மானுட இரத்தமே (துப்பாக்கிச் சூட்டு ஒலி பாலன் இறந்து விழுகின்றான்) மேரி கொலையுண்டாள், கொலை செய்ய என்று வந்த ராம் மனம் மாறினான், அதனால் உயிரிழந்தான். கொலை செய்ய என்று வந்த பாலன் மனம் மாறினான். உயர்ந்த நோக்கத்திற்காக உயிரைக் கொடுத்தான், மானுடத்தோடு சங்கமித்தான். எது என்னவானாலும், எப்படியானாலும் மானுடம் வெல்லும்
மானுடம் வெல்லும்
நாமெல்லோரும் ஒருதாய் மக்களே
(பாடல்)
ஒருதாய் மக்கள் நாமென்போம் வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் எங்களில் ஓடுவது எந்தச் சாதி இரத்தமுமல்ல எங்களில் ஓடுவது எந்த மொழி இரத்தமுமல்ல எங்களில் ஓடுவது எந்த மத இரத்தமுமல்ல எங்களில் ஒடுவது மானுட இரத்தமே
மானுடம் வெல்லும் (02)
-p ன்றி.
2003 இல் வவுனியா மாவட்ட தமிழ்த் தினப் போட்டியில் 2 ஆம்
இடத்தைப் பெற்றுக் கொண்ட நாடகம் - 42

சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
பதிவுகள்
வட்டத்தின் ஆறாம் ஆண்டு நிறைவு விழா அறிக்கை
செல்வி த.அநிந்திதை
(யாழ் பல்கலைக்கழக மாணவி)
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், நடாத்திய “ஆறாம் ஆண்டு
நிறைவு விழாவும், சான்றோர் கெளரவிப்பும்” என்னும் எழுபத்தியைந்தாவது நிகழ்வு
திட்டமிட்டபடி 14.06.2003 அன்று மாலை நான்கு மணியளவிலே வவுனியா நகரசபை மண்டபத்திலே ஆரம்பமாகியது.
முதல் நிகழ்வாக, மங்கல விளக்கேற்றல் நடைபெற்றது. மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து தமிழ்மணி அகளங்கன் அவர்களின் தமிழ் வணக்கப்பாடலை, செல்வி உஷேனி ழரீதரன் பாட அதற்கு செல்வி கஜப்பிரியா குலேந்திரனின், நர்த்தனாஞ்சலி நாட்டியப் பள்ளி மாணவர்களின் அபிநயமும் இடம்பெற்றது. இது விழாவின் வரவேற்பு, நடனமாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்விழாவிற்கு, பிரதம விருந்தினராக வவுனியா, அரச அதிபர் திரு.கே.கணேஷ் அவர்களும், கெளரவ விருந்தினராக, வவுனியா வளாக முதல்வர் பேராசிரியை திருமதி.இ.மகேஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா பிரதேசசெயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் அவர்களும், வவுனியா நகரசபை செயலாளர் திரு.வி.எஸ்.எஸ்.செல்வராசா அவர்களும் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர். திரு.நா.சேனாதிராஜா அவர்களும், வவுனியா இந்து மாமன்றத்தலைவர், திரு.சி.ஏ.இராமஸ்வாமி அவர்களும், வவுனியா ப.நோ.கூ.சங்கத் தலைவர் திரு.பூ.குமாரகுலசிங்கம் அவர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
இவ்விழாவின் வரவேற்புரையை செல்வி.சி.சிவாஜினி அவர்கள் நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து, தமிழ்மணி அகளங்கன் அவர்களின் தலைமையுரை இடம்பெற்றது. இவர் முக்கியமாக கல்வி, சமூகத்துடன் இணைந்ததாக இருக்க வேண்டும் என்பதையும், சமூக முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பதாக பல்கலைக்கழகங்களும், கல்வியியற் கல்லூரிகளும் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். மற்றும், ஆறாண்டு கால கலை, இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் பன்முகப் பணிகளையும் எடுத்து விளக்கினார். கலை, இலக்கியங்கள் சமூகத்திற்கு எந்தவகையில் துணைபுரிகின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார். இவ்வாறு, பல கருத்துக்களையும் துல்லியமாக வெளியிட்டிருந்தார்.
- 43

Page 24
சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வவுனியா அரச அதிபர் திரு.கே.கணேஷ் அவர்கள் உரையாற்றும், போது கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின், சமூகத்தோடு இணைந்த பன்முகப் பணிகளையும் பாராட்டியிருந்தார். இலக்கியத்தோடு சமூகப்பணிகளையும் ஆற்றியிருப்பது சமூகத்தைப் பல்வேறு வகையிலும் முன்னெடுத்துச் செல்வதற்கு பக்கபலமாக இருந்தது. என்பதையும் எடுத்துக்காட்டினார். இப்பணி மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்தும் வழங்கியிருந்தார்.
இவ்விழாவிலே மூன்று முக்கிய நிகழ்வுகள் சிறப்பிடம்பெற்றிருந்தன. அவை இரசனைக்கு விருந்தாகவும் இருந்தன.
சஞ்சிகை வெளியீடு
வவுனியா கலை, இலக்கிய நண்பர்கள் வட்டத்தினாலே, அரையாண்டு சஞ்சிகையாக ‘மாருதம்’ எனும் சஞ்சிகை வெளியிடப்படுகின்றது. இவ்விழாவிலே, மாருதம் சஞ்சிகையின் மூன்றாவது இதழானது வெளியிட்டு வைக்கப்பட்டது. இது சமூக, கலை, இலக்கிய சஞ்சிகையாக மிளிர்கின்றது. இச் சஞ்சிகையிலே பலதரப்பட்ட ஆக்கங்களும் அடங்கியுள்ளன. உயர்தர மாணவர்களுக்கு பல்வேறு வழியிலும் உதவும் நோக்கத்துடன் கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல், என்னும் பல்வேறு தரமான ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன.
இச்சஞ்சிகைக்கான வெளியீட்டு உரையை வவுனியா தம.ம.வித்தியாலயத்தின் ஆசிரியரான திரு.ஜகதிர்காமசேகரம் அவர்கள் ஆற்றினார்கள். மாருதம் இதழ் மூன்றை, வவுனியா பிரதேச செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் அவர்கள் வெளியிட்டு வைத்தார்கள். இதற்கான ஆய்வுரையை வவுனியா இறம்பைக்குளம் ம.ம.வி.ஆசிரியை திருமதி வி.முருகேசபிள்ளை அவர்கள் நிகழ்த்தினார்கள். இவ்விதழின் முதற் பிரதியினை, வவுனியா ப.நோ.கூ.சங்கம் தலைவர் திரு.பூ.குமாரகுலசிங்கம் அவர்கள் பெற்றுக் கொண்டார். பின்பு அனைவரின் கைகளிலும் ‘மாருதம் தவழ்ந்து சிந்தனையை நிறைத்தது.
இசைநாடா வெளியீடு
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின கலை, கலாசார மன்றத்துடன இணைந்து "வன்னி ஊற்று” என்ற இசைநாடாவைத் தொகுத்திருந்தது. இவ்விசை நாடா இவ்விழாவிலே வெளியீடு செய்து வைக்கப்பட்டது. இதற்கு முன்பு “வன்னிஓடை”, “வன்னி அருவி” என்கின்ற இசைநாடாக்கள் வெளிவந்துள்ளன. மூன்றாவதாக "வன்னி ஊற்று' இசைநாடா வெளிவந்துள்ளது.
'வன்னி ஊற்று’ எனும் இசைநாடாவிலே, மொத்தமாக பத்துப் பாடல்கள் அடங்கியுள்ளன. ஈழத்துக் கவிஞர்களான தமிழ்மணி அகளங்கன், சோ.பத்மநாதன், செ.குணரட்ணம், கந்தையா பூரீகணேசன், மற்றும் வளர்ந்து வரும் இளைய தலைமுறையினர் பலரின் கவிதைகளும் இணைந்துள்ளன.
- 4.4-

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
Of FijGilg)
வன்னி ஊற்று இசைநாடாவின் வெளியீட்டுரையை யாழ், பல்கலைக்கழக, வவுனியா வளாக கலை கலாசாரமன்றத் தலைவர் திரு.விநோதன் அவர்கள் நிகழ்த்தினார்கள். இதனை யாழ் பல்கலைக்கழக, வவுனியா வளாக முதல்வர், பேராசிரியை திருமதி.இ.மகேஸ்வரன் அவர்கள் வெளியிட்டு வைத்தார். இதற்கான நயவுரையை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியால ஆசிரியர் தமிழருவி த.சிவகுமாரன் அவர்கள் நிகழ்த்தினார். 'வன்னி ஊற்று இசைநாடாவின் தரத்தையும், சிறப்பையும் பற்றி அனைவருக்கும் அறிய வைத்தார். இதற்கான முதற்பிரதியை, வவுனியா சமூக பொருளாதார அபிவிருத்தியாளர்கள் தலைவர், திரு.பொ.நரசிங்கம் அவர்கள் சார்பில் பிரதிநிதி திரு.ழரீதரன் பெற்றுக் கொண்டார்.
வன்னி ஊற்று இசை நாடாவுக்கான, இசையை திரு.சோ.ஜெயச்சந்திரன் அவர்கள் வழங்கியிருந்தார். சிறந்த கலைஞர்களாலே பாடப்பட்டு சிறப்புடன்வெளிவந்த 'வன்னி ஊற்று இசைநாடா அனைவரின் இரசிப்புக்கும் உள்ளாகியது. இந்நாடாவின் ஒரிரு பாடல்கள் விழாவின் இடையிடையே பாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சான்றோர் விருது வழங்கும் வைபவம்
சமூகத்திலே இயங்கும் கலை,இலக்கிய கர்த்தாக்களை கெளரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. அந்த வகையில், பிற மாவட்டங்களிலிருந்து வந்து, வவுனியா மாவட்டத்திலே கலை, கல்வி, இலக்கியப் பணிகளை ஆற்றிய கலைஇலக்கிய கள்த்தாக்கள் இருவர் இவ்விழாவிலே கெளரவிக்கப்பட்டனர்.
இதில், முன்னாள் கல்வியியற் கல்லூரி பீடாதிபதி.திரு.செ.அழகரத்தினம் அவர்களும் முன்னாள் மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.ச.அருளானந்தம் அவர்களும் இவ்விழாவிலே விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் வவுனியாவின் கல்வி, கலை, இலக்கிய நிகழ்வுகள் அனைத்திலும் பங்கு கொண்டு, அதனை வளர்த்தெடுப்பதிலும் அருந்தொண்டாற்றியுள்ளனர். வவுனியாவின் வளர்ச்சிக்காக சேவை செய்த இச் சான்றோர்களை, கலை, இலக்கிய, நண்பர்கள் வட்டம் இவ்விழாவிலே கெளரவித்தது சிறப்புக்குரியது.
இருவருக்கும், தமிழ்மணிஅகளங்கன் அவர்கள் மாலை அணிவிக்க, வவுனியா அரச அதிபர் திரு.கே.கணேஷ் அவர்கள் பொன்னாடை அணிவிக்க யாழ்பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் பேராசிரியை திருமதி இமகேஸ்வரன் அவர்கள் விருது வழங்கி கெளரவித்தார். வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி முன்னாள் பீடாதிபதி திரு.செ.அழகரத்தினம் அவர்களுக்கு “கல்வியியற்செல்வர்” என்ற விருதும், வ.கி.மாகாண கல்வி அமைச்சு முன்னாள் மேலதிக கல்விப்பணிப்பாளர் திரு.ச.அருளானந்தம் அவர்களுக்கு “சிறுவர் இலக்கியச் செல்வர்” என்ற விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இவர்களுக்கான பட்டமளிப்பு உரையை யாழ்பல்கலைக்கழக வவுனியா
- 45

Page 25
சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
வளாக விரிவுரையாளர் கந்தையா றிகணேசன் அவர்கள் நிகழ்த்தினார்கள். இதில் விருது பெறும் இருவரின் பணிகளையும் சுட்டிக்காட்டினார்.
சான்றோர் விருது வழங்கும் வைபவத்தைத் தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியது. கலை நிகழ்ச்சிகளில், இசைவிருந்தும், நடன விருந்தும் இடம்பெற்றன.
செல்வன் பத்மநாதன் சிவமைந்தன், தனது 125வது அரங்கிலே இசை விருந்தை நிகழ்த்தினார். இதை தொடர்ந்து நடன விருந்து படைக்க இருமன்ற மாணவிகள் கலந்து கொண்டனர். நிருத்தியவாணி திருமதி சூரியயாழினி வீரசிங்கம் அவர்களின் நட்டுவாங்கத்தில், வவுனியா, நிருத்திய நிகேதன கலாமன்ற மாணவிகளின் நாட்டியமும், செல்வி கஜப்பிரியா குலேந்திரன் அவர்களின் நட்டுவாங்கத்தில் வவுனியா நர்த்தனாஞ்சலி நாட்டிய பள்ளியினரின் நாட்டியமும் மிகவும் இரசிக்கத்தக்கதாக அமைந்திருந்தன.
இந் நிகழ்வுகளைத் தொடர்ந்து வட்டத்தின் உபசெயலாளர் திரு.ப.முரளிதரன் அவர்களின் நன்றியுரை இடம் பெற்றது. இறுதி நிகழ்வாக யாழ்பல்கலைக்கழக, வவுனியா வளாக விரிவுரையாளர் கந்தையா ரீகணேசன் அவர்களின் வாழ்த்துப் பாடலை, செல்வி கீர்த்தனா ழரீதரன் பாட, அதற்கு செல்வி கஜப்பிரியா குலேந்திரன் நர்த்தனாஞ்சலி மாணவிகளின் நாட்டியமும் இடம்பெற்று வாழ்த்துப்பாடலுடன் விழாவும் இனிதே நிறைவு பெற்றது.
- 46
 

&gpa, &bt5s' &EU5u B5uÁbau GShéfanef
ഖ്ഥണ്ട് வணினி இாற்று இசைநாடா பற்றிய இரு குறிப்புக்கள்
பாடல் வரிகள் சார்ந்த விமர்சனம்
1) எமது உணர்வுகளின் ஊற்றாக ஊறியுள்ள
“வன்னி ஊற்று”
விகரன்
தமிழ் இலக்கிய உலகிற்கு தமது மூன்றாவது இசைப்பா ஒலியிசைத்தட்டினை வழங்கியுள்ளார்கள் வவுனியா வளாக கலை கலாசாரமன்றத்தினர். ஒரு சமூகத்தின் உயர் கல்வி நிறுவனமானது அச்சமூகத்துடன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அச்சமூகத்தில் இயங்கும் இலக்கிய அமைப்பான வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து தமது “வன்னி ஊற்று” என்னும் இசைத்தட்டினை வெளிக் கொணர்ந்தது. அச் சமூகத்தின்பால் அந் நிறுவனம் கொண்ட அக்கறையையும் அந்நிறுவனத்தின்பால் சமூகம் வைத்திருக்கும் அக்கறையையும் தெளிவாக வெளிக்காட்டுகின்றது.
ஈழத்திற்கான இசை மரபைத் தேடும் முயற்சியில் வளாகமும் கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் முனைப்பாக இறங்கியுள்ளது என்பது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். அவர்கள் கூறுவதைப் போன்று “ஈழத்து இலக்கியம், ஈழத்து நாடகம், ஈழத்துக் கூத்து, ஈழத்து பண்பாடு வரிசையில் ஈழத்து நடனம் இசை என்பன கருக்கொள்ளும் காலமிது” எமக்குள்ளே பக்திப் பேரியக்கம் என்பது தொன்று தொட்டே இருந்து வந்துள்ளது என்பதற்கான சான்றுகள் நம்மிடத்தே காணப்படுகின்றன. இறை மேல் கொண்ட பக்தி, மொழி மேல் கொண்ட பக்தி, இனம் மேல் கொண்ட பக்தி, தேசத்தின்கண் கொண்ட பக்தியென நீண்டு செல்கின்றது.
கவிச்சக்கரவர்த்தி கம்பன் கூறியது போல் “பாற்கடலை நக்கிக் குடிக்க நினைத்த பூனை” போலத்தான் என் நிலையும். எனக்கோ இசை ஞானம் என்பது பூச்சிய நிலைதான். இருப்பினும் இசைமேல் கொண்ட ஆசையும் இலக்கியத்தில் கொண்ட சிறிதளவு நாட்டத்தினாலும் வன்னி ஊற்றில் ஊறியுள்ள பாடல்கள் பற்றி என் கருத்தை இங்கு தெரிவிக்கவுள்ளேன்.
முத்தாக பத்து பாடல்களை கொண்டுள்ள இவ்வூற்றில் - கவிஞர்கள் தமிழ்மணி அகளங்கன், சோ.பத்மநாதன், கந்தையா றிகணேசன், வ.சுப்பிரமணியம், செ.குணரத்தினம், க.கோகுலதாஸ், அநிஷாந்தன் ஆகியோரின் பாடல்வரிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் “இசைத்திட முடியாது எங்கள் பெருமை” எனும் பாடலில் தமிழ்மணி அகளங்கன் அவர்கள் தமிழின், தமிழனின் பெருமைகளை இசைத்திட முடியாதென -47

Page 26
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
இசையில் கூறியுள்ளார். உசேனி பூரீதரன் அவர்கள் மெல்லிய குரலில் மெல்லப் பாடியுள்ளார். ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை ஒரே Organ Beatல் தங்கியுள்ளது என்ற குற்றத்தை பெற்றாலும் எமது பாரம்பரியங்களை சொல்லிச் செல்கின்றது
9TL6).
இரண்டாவது பாடலாக கவிஞர் சோ.பத்தமநாதன் அவர்களது “புலரும் பொழுதில்”புதுப்பொலிவு பெறுகின்றது எனும் நம்பிக்கை உத்வேகத்தை இக்காலம் எங்களுக்கு தருகின்றது என்கிறது அப்பாடல்.
AO XA » M A O நேற்றைத் துயர நெருடல் மெல்ல மெல்ல மறைகிறது.
வாழ்க்கை இனிது என்ற நினைவு ஊக்கம் தருகிறது.
எனும் பொருள்படும் பாடல் நிஷாந்தன், ஏஞ்சல் ஆகியோரது இருபால் குரல் பாடலாக அமைந்துள்ளது. காலத்திற்கு ஏற்றதாக சிறப்பாக அமைந்துள்ளது இப்பாடல்.
அடுத்து கவிஞரும் நாடக கலைஞருமாகிய கந்தையா முரீகணேசன் அவர்களது “தேடிய தேட்டங்களே’ எனும் பாடல் பழைய நினைவுகளை மீட்பதாயும், பிரிவின் சோகத்தை சுமப்பதாயும், அமைந்துள்ளது.
போரினால் சிதைந்திட்ட எம் தேசம் நிமிர்த்திடுவோம் காரிருள் அகன்றிடவே காணிக்கை அளித்திடுவோம்.
என்ற நம்பிக்கை எதிர்பார்ப்புடனும் அமைந்துள்ள இப்பாடலே என் மனதை இசையாலும் வரிகளாலும். குரலாலும் தைத்த பாடல். இவ்விசைத்தட்டிலுள்ள பாடல்களை வரிசைப்படுத்துவோமேயானால் இப்பாடலுக்கே முதலிடம் வழங்க முடியும். திருமதி ராதிகா நாவேந்தசாமா தனது இனிமையான குரலினால் மிகவும் அனுபவித்து பாடியுள்ளார்.
ஊற்றின் நான்காவதாக ஊறி நிற்பது ஆசிரியர், விமர்சகர் கவிஞர் வ.சுப்பிரமணியம் அவர்களது “சின்ன சின்ன வட்டங்கள் உடைத்தெறிவோம்’ என்னும் பாடல். மனிதம் என்னும் மாபெரும் வட்டத்திற்குள் ஏன் இந்த சின்ன சின்ன வட்டங்கள் என்று கேள்விக்கணைகளை தொடுக்கின்றார் பாடலாசிரியர். அவரின் கேள்விகளுக்கு ஏற்றாற்போல அவரே கேள்விகளை நேரில் கேட்குமாப் போல பாடலின் இசையும் அப்பாடலைப் பாடிய க.ஜெயந்தன் அவர்கள் மிகவும் உணர்வுபொங்கப் பாடியுள்ளமையும் பாராட்டப்பட வேண்டியது.
as a இரத்த வண்ணம் ஒன்று எனின் இனம் என்ற வட்டம் எதற்கு? சுவாசக் காற்று ஒன்றேதான் எனின் சாதி என்ற சட்டம் எதற்கு?
a- a போதும் சின்ன வட்டம் பொசுக்கவே எழுந்தோம்
- 48

656b65 66nbu 856uébaáu at hydfarnaib á巴p6 GPU -(ாம்)
மனிதம் என்னும் மாபெரும் வட்டம் மட்டும்வரைவோம்.
என தொடர்கின்றது அப்பாடல் வரிகள்.
“செந்தணல் தணியும் தேசம்’ எனும் க.கோகுலதாஸ் அவர்களது பாடல் அடுத்து அங்கே ஊற்றெடுத்துள்ளது. அண்மைக்கால அனர்த்தங்களால் செந்தணலாய் சிவந்திருந்த எம் தேசத்தில் தேன் சிந்த கரம் நீளுகின்றது என வி.ஏஞ்சல் அவர்கள்பாடியுள்ளார்கள்.
கவிஞர் பாடகள் நிஷாந்தன் அவர்கள் வரியமைத்து பாடியுள்ள பாடல் “நிழலாக வருவேனடி” காதல் உணர்வில் பாடியுள்ள அப்பாடல் வேறொரு பாடலின் சாயலையுடைய மெட்டாக அமைந்திருக்கும் குற்றத்தைப் பெறுகின்றது.
அடுத்த பாடலாக ஊற்றில் இடம் பெறுவது கவிஞள் சோ.பத்மநாதன் (சோ.ப) அவர்களது “தாயிழந்தவளோ” எனும் பாடல்
- - - - - - - - - - உருக்குலைந்தவளோ - இவள் ஓய்விலாதவளோ - கொடும் நெருப்பு வெக்கையில் குருத்துமிப்படி நீள நிற்பதுவோ.
மாளப் பிறந்தவளோ - இவள் வாழப் பிறந்தவளோ.
பெண் என்பவள் அடங்கிக் கிடக்கவேண்டிய ஒரு பண்டமல்ல அவளும் இந்தச் சமூகத்தில் வாழத்தான் பிறந்தவள். பெண்களை அடக்கியாளும் ஆண்வர்க்கம் இப்பாடல்களைக் கேட்டாவது திருந்தி வாழப்பழகுங்கள் என கூறும் சோய. அவர்களது பாடல் வரிகளை சிறந்த குரலால் பாடியுள்ளார் எஸ்.கல்பனா அவர்கள்.
“அழகிய பூவின் கண்கள் ஏன் மூட மறந்தன?’ என மீண்டும் ஒலிக்கின்றது நிஷாந்தன் அவர்களது குரல்.
இறுதியாக கவிஞர் செ.குணரத்தினம் அவர்களது “முற்பிறப்பில் செய்த வினை’ என்னும்பாடல் இடம்பிடித்துள்ளது. இப்பிறப்பின் வழக்குகளுக்கு இப்பிறப்பிலே தீர்ப்பு வழங்க கோருகின்றார் பாடலாசிரியர். இங்கே, எம்நாட்டில் எத்தனையோ வழக்குகள் தீர்ப்பு வழங்காமல் நிலுவையாக உள்ளது என்பதை சொல்லாமல் சொல்கின்றார் கவிஞர்.
- - - - - - - இப்பிறப்பில் செய்தவினை இப்பிறப்பில் சூழ்ந்தால்தான் தப்பாது மனிதரிங்கே திருந்துவார் - அவர் தவறையெண்ணி அப்போதே வருந்துவார்.
- 49

Page 27
sepa, 66ts, asosu ësuese u 654.6
என தொடரும் அப்பாடலை தனது இனிமையான குரலினால் பாடியுள்ளார் ப.சிவமைந்தன் அவர்கள்.
மொத்தத்தில் பத்துப்பாடல்களும் ஒவ்வொரு சுவையுடனும் ஒவ்வொரு ரசனையோடும் ஒவ்வொருவகைப்பட்ட கருத்துக்களையும் எமக்கு சொல்லி வைக்கின்றன. இவ்விதத்தில் இப்பாடல்கள் அனைத்தையும் இசையமைத்த திரு.சோ.ஜெயச்சந்திரன் அவர்கள் பாராட்டிற்குரியவராகின்றார்.
ஏலவே, "வன்னி ஒடை”, “வன்னி அருவி” எனும் இரண்டு இசைப்பா தொகுப்பை தம் வளத்தைக் கொண்டு ஒலிப்பதிவு செய்து இவ்விலக்கிய உலகிற்கு தந்த வவுனியா வளாக கலை கலாசார மன்றம் முன்னைய தொகுப்புக்களிலிருந்து சற்று வித்தியாசமான முறையில் ஓரிரண்டு இசைகருவிகளைச் சேர்த்து இவற்றை ஒலிப்பதிவு செய்திருப்பினும் இன்னும் பலவகையான வாத்திய கருவிகளை சேர்ப்பதன் மூலம் இனிவரும் இசைப்பா தொகுப்புக்களை நல்ல முறையில் வெளிக்கொணர உதவும்.
இன்று மேற்கத்தைய இசைக்கருவிகளின் வருகைகளாலும், எம் மக்கள்மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் சில்லறையான சினிமாப்பாடல்களுக்கும் மத்தியிலும் இவ்வகையான வெளியீடுகளும், இவ்வகையான ஈழத்து இசை மரபுத் தேடல்களும் நிச்சயம் நன்மை பயக்கும், ஆக்கபூர்வமான முயற்சியாகும். அந்த வகையில இம் முயற்சியில் பங்கெடுத்த அத்தனை கலைஞர்களும் பாராட்டிற்குரியவர்களாகின்றனர். இம்முயற்சிகள் இத்துடன் நின்றுவிடக்கூடாது, இன்று எம்மத்தியில் அருகிவருகின்ற சில இசை வாத்திய இசைகள் ஆவணப்படுத்த வேண்டியவை, உதாரணமாக சில நாட்டார் பாடல்கள், ஒப்பாரிப்பாடல்கள், தாலாட்டு பாடல்கள், நாட்டுக்கூத்துப் பாடல்கள் இவற்றோடு பல இசைக்கருவிகளின் இசையை ஆவணப்படுத்த வேண்டிய பொறுப்பு பல்கலைக்கழகங்களையும் அவை சார்ந்து இயங்கும் இவ்வமைப்புக்களையும் சார்ந்ததாகின்றது.
இம்மன்றத்தின் இவ்வகையான சமூகம் சார்ந்த செயற்பாட்டிற்கும் முயற்சிக்கும் அச்சமூகமும் உறுதுணையாக அமைந்து செயற்பட்டமை பாராட்டுக்குரியது.
 
 

சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை டமாருதம்)
ÆJanar ármff;éð sistarfarantfð
2) வற்றாத ஊற்றாய் மிளிரும் வன்னி ஊற்று
எஸ்.தர்ஷனன் குரலிசை விரிவுரையாளர், யாழ். பல்கலைக்கழகம்
நீண்டு நீண்டு சென்று கொண்டேயிருக்கும் பாடல்வரிகள், முறைப்படி சாஸ்தீரிய இசைகற்காத கலைஞர்களின் கற்பனைக்கோலங்கள், மனம் திறந்து பாராட்டத் தகுந்த ஒலிப்பதிவுத் திறன், இவற்றுடன் வற்றாத ஊற்றாகத் திகழ்கிறது வன்னி ஊற்று.
கந்தையா றிகணேசனின் முயற்சியில், சக்தி தாசனின் ஒருங்கமைப்பில், சோமரட்ணம் ஜெயச்சந்திரனின் மேலைத்தேய இசை அமைப்பில், தமிழ்மணி அகளங்கன், கவிஞர் சோ.பத்தநாதன் கந்தையா றிகணேசன், வ.சுப்பிரமணியம், க.கோகுலதாஸ், அநிஷாந்தன், செ.குணரத்தினம் ஆகியோரின் கவிதை ஊற்றில், உசேனி பூரீதரன், அநிஷாந்தன், வி.ஏஞ்சல், ராதிகா நாவேந்தசர்மா, க.ஜெயந்தன், எஸ்.கல்பனா, எஸ்.அலெக்ஸ்கரன், ப.சிவமைந்தன், கீர்த்தனா ஹிரீதரன் ஆகிய குரலிசைக் கலைஞர்களின் உணர்ச்சி மிகுந்த குரல் வண்ணத்தில், காந்திஸ்ரீரியோ சவுண்ஸ் இன் தரமான ஒலிப்பதிவில், பி.பாலமுகுந்தனின் ஒலித்தொகுப்பில், க.கோகுலதாஸ், கே.ஆர்.ரஜீவன் ஆகியோரின் அறிவிப்பு மழையில் வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் உருவாகிய ஒலிப்பதிவு நாடா வன்னி ஊற்று தொகுப்பு - 03
உசேனி பூரீதரனின் மழலைக்குரலில் அமைந்த “இசைத்திட முடியாது” என்ற பாடல் மழலை இன்பத்தைக் கேட்போர் நெஞ்சில் விதைந்து நிற்கின்றது. “மோகனம்’ என்ற சாஸ்தீரிய இராகத்தில் சிறிய சிவரஞ்சனிக் கலப்புடன் வருகிறது இப்பாடல். மெல்லிசை உருவாக்கத்தில் ராகங்களைக் கலக்கக்கூடிய சுதந்தரம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். பாடகி இன்னும் கொஞ்சம் சுருதியைக் குறைத்துப் பாடுவதற்கு இசையமைப்பாளர் அனுமதித்திருந்தால், உயர்ந்த சுருதி நிலைகளைத் தொடும் வேளைகளில் லாவகமாகப் பாடியிருந்திருப்பார்.
கோவில் மணியோசையுடன், பறவைகளின் இனிய ஒலிகளுடன், தர்மவதி ராகததில் பொழுது புலர்கிறது. வாழ்க்கை இனிது என்று பாடினாலும் பாடல் முழுவதும் சோகமே இழையோடிக் காணப்படுகிறது
கெ U சாருகேலியில் ஒலிக்கின்ற “சேடிய தேட்டங்களே”ராதிகா நாவேந்தசர்மாவின் குரலிலும், சொந்த மெட்டிலும் முறைப்படி சாஸ்திரிய இசைபயின்ற தனித்தன்மையைத் தெளிவாக உணர்த்தி நிற்கின்றது.
-51

Page 28
്യ, ബ, മണ്ണ ജൂബിu ിളിക്ക
சோகம் கலந்த வீரத்தைக் காட்டி நிற்கின்ற ரேவதி ராகத்தில் “சின்னச் சின்ன வட்டங்கள் சின்னஞ்சிறுவர்கள் மனதில் விறுவிறுப்பை ஏற்படுத்த வல்லது.
நடனபைரவி ராகத்தில் இழையோடியிருக்கும் சோகத்தை நன்கு பயன்படுத்தியிருக்கும் “செந்தணல் தணியும் தேசம்’
'நிழலாக வருவேனடி என்று பாடுகிறார் நிஷாந்தன். இவர் தனது பாடல் வரிகளைத் தானே பாடும் வல்லமை படைத்திருக்கிறார். நிழலாக வருவேனடிகீரவாணி ராகத்தில் நிலவுபோல ஒளிர்கிறது.
ஹம்ஸ நாதத்தில சுத்தமத்திமம், சுத்தரிஷபம் என்பன கலந்த ஒரு பாடலாக 'தாய் இழந்தவளோ சாதாரணமாகத் தென்னிந்திய சாஸ்திரீய இசைப் பாடகர்களால் முடியாத காரியமென இதைக் கூறலாம். ஒரு ராகத்தின் சாயலை முற்று முழுதாக மாற்றும் வகையில் வேறு ராகத்துக்குரிய ஸ்வரங்களைக் கலப்பதானது சாஸ்திரீய இசை படிக்காதவர்களுக்கும், சாஸ்திரீய இசையை அறப் படித்து ஆனால் அதில் ஊறிய போகாமலிருப்போருக்கு மட்டுமே அத்துப்படியாக இருக்க முடியும்.
சங்கராபரணத்துக்குரிய ஸ்வர நிலைகளை அடிப்படையாகக் கொண்டு சாதாரண காந்தாரமும் கலக்கப் பெற்ற இசையமைப்பே ‘அழகிய பூவின் பந்தல் எஸ்.அலெக்ஸ் கரனின் இனிமையான வளமான குரல் வளத்தில் மயங்க வைக்கிறது. உண்மையிலேயே இந்தப் பாடலே பல்வேறு வகையான அழகிய பூக்கள் சேர்ந்த பந்தல் தான்.
பந்துவராளியில் “முற்பிறப்பில் செய்தவனை” இதுவும் சோகம் கலந்த ராகமாயினும், சோகமான இசையமைப்பைக் கொண்டு சற்று வித்தியாசமாக விளங்கவைக்க இசையமைப்பாளர் முயற்சி செய்திருக்கிறார்.
இறுதியாக “கெளரிமனோகரி ஸ்வரங்களை அடியொற்றி அமைந்த ‘வாழ்த்துப் பாடுங்கள் என்ற மழலைக் குரலுடன் நிறைவு பெறுகிறது ஒலி நாடா. கீர்த்தனா பூரீதரனின் குரல அது.
யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக கலை கலாச்சார மன்றமும், வவுனியா
கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து வெளியிட்ட இவ்வொலிநாடவில் மொத்தத்தில் தமிழ் மக்களின் வாழ்க்கையோடு நீண்ட காலமாக ஒன்றிப் போயுள்ள சோகத்தை உலகிற்குக் காட்டிநிற்கும் ராகங்களே கையாளப்பட்டுள்ளன. ஆனால் அந்த ராகங்களின் பெயர்களைத் தெரிந்து கொண்டுதான் இசையமைப்பாளர் இசையமைத்திருப்பாரென்றோ அல்லது பாடகள்கள் பாடியிருப்பரென்றோ கூறமுடியாது. இசையமைப்பாளர் சோ.ஜெயச்சந்திரன், A.R.ரகுமானின் தீவிர ரசிகள் என்றும் ஆருடம்
-52
 

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
கூற முடிகிறது. (மேலைத்தேய இசை உபகரணங்களை உபயோகித்து, மேலைத்தேய வாசிக்கும் பாணிகளைப் பின்பற்றி அமைக்கப் பட்டிருக்கும் இவ்வொலி நாடாவிற்கு உரிய கீழ்த்தேய இசை ராகங்களின் பெயர்கள் இங்கு இனங்காட்டப்பட்டிருப்பதைக் கொண்டு ஒரு முடிவுக்கு வாசகர்கள் வரலாம். அது என்ன முடிவு?
கீழைத்தேய இசை, மேலைத்தேய இசை, பொப்பிசை, நாட்டாரிசை, மெல்லிசை, சினிமா இசை இவை எல்லாம் ஒன்றிலிருந்து மற்றொன்று முற்று முழுதாக வேறுபட்டவை அல்ல. இசைக்கும் முறைகளிலும் கையாளும் யுக்திகளிலும் தான் இவ்விசைவகைகள் வேறுபடுகின்றனவேயன்றி அடிப்படைக் கட்டமைப்பில் எல்லா இசைகளுமே 7 ஸ்வரங்களையும் 12 ஸ்வரநிலைகளையுமே கொண்டுள்ளன.
நன்றி. ஞாயிறு தினக்குரல் 18.04.04

Page 29
epă, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
தாமரைச்செல்வியின் “அழுவதற்கு நேரமில்லை” - வன்னி அவல வாழ்க்கையின் அனுபவப்பதிவு
த.விஜயசேகரன்
தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு மீண்டுமொரு சிறந்த சிறுகதைத் தொகுப்பொன்றை தந்துள்ளார் “தாமரைச்செல்வி’யவர்கள். ஒரு பெண் எழுத்தாளராக இருந்து கொண்டு ஏன் பெண்கள் சம்பந்தமான பிரச்சினைகளை இவர் தனது கதைகளில் வெளிப்படுத்துவதில்லையென்ற கேள்வி நம்மிடையே எழத்தான் செய்கின்றது, இருப்பினும் அவ்வட்டத்தையும் விட்டு ஒரு சமூகம் சார்ந்த, ஒரு இனம் சார்ந்த, ஒரு தேசியம் சார்ந்த பிரக்ஞைகளை கற்பனையாகவல்லாது கதையாக ஒப்புவிக்கின்றார் ஆசிரியர். அவரின் கூற்றுப்படி “பொய்களோ புனைவுகளோ இல்லாதிருப்பதனால்தான் ஒரு படைப்பு வாசகள்களின் கவனத்தையிர்க்க முடியும்’ என்பது போல, வாசகள்களை கற்பனையில் மிதக்கவிடாது, பாத்திரப் படைப்புகளை உருவகப்படுத்தாது உண்மை உருவங்களை கண்ணில் நிறுத்துகின்றார்.
அண்மைக்காலமாக வன்னிக்குள் இருந்து வரும் படைப்புக்களில்தான் உண்மை நிலை வெளிப்படுத்தப்படுகின்றது. அவைதான் வாசகள்களின் நெஞ்சங்களைத் தைக்கின்றது என்பதும் உண்மை. இவற்றின் அடியொற்றியே வன்னிக்கு வெளியேயுள்ள படைப்பாளிகளும் போராட்டம், இடப்பெயர்வு, கைது, சிறையடைப்பு போன்ற கருக்களுக்கு உருவடிவம் கொடுக்கத் தொடங்கினர். எவை எப்படி கூறினும் பட்டவர்களுக்குத்தான் தெரியும் வலியின் அனுபவங்கள்.
இந்த “அழுவதற்கு நேரமில்லை” என்ற சிறுகதைத் தொகுப்பும் அவ்வகையானதே. அவர்கள் நேரில் பட்ட வேதனைகள், அவர்கள் நெஞ்சிலுள்ள தழும்புகள், அவர்களுக்கு இன்னமும் வலித்துக் கொண்டிருக்கின்ற காயங்கள், மரங்களின் கீழ் வாய்க்கால் கரையோரம், வீதியோரம் குந்தியிருந்து இளைப்பாற முன்னர் அடுத்த இடப்பெயர்வுக்காக தயார் பண்ணி இருக்கும் சமூகத்தின் அவல வாழ்வின் கதைகள் இவை.
ஒவ்வொரு மனிதனும் எனக்கு வேலைக்கு நேரமில்லை, எனக்கு படிக்க நேரமில்லை, எனக்கு சாப்பிடநேரமில்லை; எனக்கு நித்திரை கொள்ள நேரமில்லை என அழுது புலம்ப இந்த மனிதர்களுக்கோ ‘அழுவதற்கே நேரமில்லையென்றால் பாருங்கள் இடம்பெயர்வாழ்வின் கஷ்டத்தின் உச்சம் எங்குள்ளதென. தனிமனிதன் ஒருவனுக்கு ஒரு முழுச்சமூகத்தின் இன்னல்களும் ஒரே நேரத்திலேயா வரவேண்டும். செத்துப்போன மனைவியைக் கூட நினைத்து அழுது ஆறக்கூட நேரமில்லாது ஒரு சமூகத்தை தள்ளியுள்ளது இந்தக் கொடிய யுத்தம் என்பதனை கூறி நிற்கின்றது இந்த கதைத் தொகுப்பு
“இக்கதையை படித்தால் அல்லாது சொல்லிப் புரிந்து கொள்ள முடியாத அவல வாழ்வின் சித்திரம் தான் இக் கதைகள் சோகத்தின் நரம்புகளை மீட்க
-5 4

சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
உயிர்த் துடிப்பு வெளிப்பட தாமரைச்செல்வி இக்கதைகளைப் படைத்துள்ளார் என மாத்தளைக் கார்த்திகேசு அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
தன்னையீன்றெடுத்த பெற்றோர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கும் இத்தொகுப்பு சுப்ரம் பிரசுராலயத்தின் இரண்டாவது வெளியீடாக வெளிவந்துள்ளது. மொத்தம் 12 கதைகளை கொண்டுள்ள இத்தொகுப்பில் எல்லாக் கதைகளும் என்னை எதோவொரு வகையில் தாக்கியுள்ளது. சில கதைகளால் எனது கண்கள் பனித்ததும் உண்டு. இவை என்னை மட்டுமல்லாது இதனை வாசிக்கும் ஒவ்வொரு மாந்தரின் நெஞ்சத்திலும் தாக்கம் ஏற்படுத்தும் என்பது உண்மை
அழுவதற்கு நேரமில்லை, நாளைய செய்தி, முற்றுகை, உறவு, பாதை, சுயம், பாதணி, ஊர்வலம், அக்கா, ஓட்டம், சிறைநிழல், அடையாளம் என்பன இத்தொகுதியில் இடம்பிடித்துள்ள கதைகள். ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு பிரச்சினைகளை சுட்டிக்காட்டினாலும் அப்பிரச்சினைகள் ஒவ்வொன்றும் இந்த ஒடுக்குமுறை யுத்தத்தினால் ஏற்பட்ட விளைவுகள் தான்.
ஒவ்வொரு கதைகளின் வாசலிலும் அக்கதை கருப்பொருளோடு ஒத்த ஒவியங்களையும், தொகுப்பிற்குரிய ஒரு சிறந்த முகப்போவியமொன்றையும் தானே வரைந்துள்ளார் தாமரைச்செல்வியர்கள்.
அவள் கூறுவது போல யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இருந்த இடங்களை விட்டு இடம்பெயர்வதும், பின்னர் மீள் இருப்பும், மிண்டும் யுத்தம் மூண்டவுடன் (முதன்முதலில் ஆனையிறவில் இருந்து எறிகணை வந்து வீழ்ந்து) இடம்பெயரும் கிராமமாக இருந்தது அவரது குமாரபுரம். இப்படியான ஒருஅஞ்சலோட்டத்தின் மத்தியிலும் தனது படைப்புக்கள் சொத்துக்கள் அழிக்கப்பட்ட நிலையிலும் இவரது இலக்கியப் பயணம் தொடர்ந்து கொண்டிருப்பதையிட்டு தமிழ்ச்சமூகம் பெருமைப்பட வேண்டியுள்ளது.
இன்று இந்த நாட்டில் மலிந்து போயுள்ள இந்த “செலுாலைற்’ இலக்கியத்திற்கு மத்தியில் இப்படிப்பட்ட கதைக்ள் வாசிப்பவர்கள் தொகை எந்தளவு என்பது கேள்விக்குறியே. ‘சித்தி’, ‘அண்ணி', 'ஆலயம்’. என இந்தியச் சினிமா, சின்னத்திரைகள் எம் வாழ்கை முறைகளுக்கு ஒவ்வாத கதைகளை படங்களாகவும், நாடகங்களாகவும் தமது வணிக நோக்கத்திற்காக இங்கு ஒரு நச்சு விதையை வீசிக்கொண்டிருக்கின்றன. மாறாக எம்தாயகத்து கதைகள் எம் வாழ்வு பற்றியும் எம் சகோதரர்கள் வாழ்வுகளையும் அவர்கள் படும் இன்னல்களையும் படம்பிடித்துக் காட்டுகின்றன. இவைகள் தான் நாம் வாசிக்க வேண்டியவையேயன்றி அந்நாடகங்களோ, படங்களோ அல்ல.
எழுத்துலகில் அவருக்குள்ள முதிர்ச்சி அவரது படைப்புகளில் நன்றாக
வெளிப்படுகின்றது. ஏறத்தாள முப்பது வருடங்களுக்கு மேலாக எழுத்துத்துறையில்
வலம் வரும் தாமரைச்செல்வியவர்கள், எழுபதுகளின் ஆரம்பத்தில் இலங்கை
வானொலியில் இசையும் கதையும் நிகழ்ச்சிக்கென எழுதத் தொடங்கியவர். இதுவரை
-55

Page 30
சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை Grup 5
சுமைகள் (1979), தாகம் (1990) (இரண்டும் நூல் வடிவம் பெற்றுள்ளன) தெருவோரத்து திருவிளக்குகள் (தினக்குரல் - 1999) ஆகிய நாவல்களையும், வேள்வித் தீ (முரசொலி 1991) எனும் குறுநாவலையும், ஒரு மழைக்கால இரவு (1998) அழுவதற்கு நேரமில்லை (2002 எனும் சிறுகதைத் தொகுப்புக்களையும் இந்த இலக்கிய உலகுக்காக தந்துள்ளார்.
வளங்கள் குறைவாக காணப்பட்டுள்ள போதிலும் எமது வளங்களைக் கொண்டே நாம் எம்மை வளப்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன தனது ‘அழுவதற்கு நேரமில்லை' தொகுப்பினை வன்னி மண்ணிலேயே அச்சுப் பதித்து வெளியிட்டுள்ளமை பாராட்டுதற்குரியது. இப்படியான மனப்பாங்கும். எழுதும் முனைப்புமுள்ள தாமரைச்செல்வியவர்கள் மென்மேலும் தமிழ் இலக்கிய உலகிற்கு இன்னும் படைப்புக்களை புரிய வேண்டும் என்று வாழ்த்துவோமாக.
சித்திரை நிலவு
சித்திரை நிலவே சித்திரை நிலவே சற்றொருநேரம் நின்று செல்வாயோ இத்தனை காலம் எங்கு சென்றாயோ உத்தமியோ நீ ஒதுங்கிநின்றாயே இத்தரை மீதில் இருக்கும் பெண்கள் பித்தரைப்போல அலைகின்றாரே முத்தனையாளே முழுமதியாளே முத்தம் தரவே வருவாய் நீயே
எங்கள் விஞ்ஞானி என்பார் பலரே அங்கு வந்தேதான் அடிவைத்தாரே அங்குவந்தார் அவர்சொன்னாரே எங்கள் நிலமும் இன்னொரு நிலவாம்
திங்கள் என்றும் தண்மதிஎன்றும் தலைமுறை காலம் சொல்லி வந்தோமே இங்கு இருப்போர் அங்கு வந்தாலே எங்கள் நிலவை அழைப்போம் வாவென
இத்தனைகாலம் எங்கள் பிள்ளைகள் உன்னைத்தானே அழைக்கவந்தார்கள் பத்தும்பலதும் படித்திருந்தாலும் பித்தம்பெருகச் செய்வாய் நீயே எத்தனைபேர்கள் என்ன சொன்னாலும் முத்தனையாளே முழுமதியே நீ கத்துங்கடலும் கலங்கிடவைப்பாய் நித்தமும் நீதான் நினைவில் நிற்பாயே
சி.ஏ.இராமஸ்வாமி -56

சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
அத்தனையும் போதும்
இரவோடு இரவாக விழியோடு விழிமூடாது மழையிலே மழலையுடன் நான் மற்ற மகளுடன் மனைவி வெறுத்தாலும் மறுக்காமல் வரும் நாய்க்குட்டி நாக்கை நீட்டியபடி வாழையடி வாழையாய் வாழ்ந்த மண்ணை விட்டு விட்டு
எல்லையின் நின்றோம் தொல்லையில்லாமல் மீளுவோமென்று! மீளவில்லை ஆனால் மாளாமல்த் தப்பி விட்டோம் அதுபோதும்
யுத்தம் வேண்டாம் மென்று புத்தம் சொன்ன போதும் நித்தமும் யுத்தமேனோ? யுத்தம் வேண்டாமென்று சத்தம் போட்ட போது தடியடிதந்தானே அன்று!
அத்தனையும் போதும் நண்பா முகரியைத் தந்துவிடு முடிந்தால் வருதவற்காக மாளாமல் இருந்தால் மற்ற இடப் பெயர்வில் மீளவும் உன்னிடம்!
எமது இன்னல் எவருக்கும் வேண்டாம் என்று தான் ஒழியும் இக் கலாசாரம் அன்றுதான் ஒளிரும் எம் வாழ்வு
Lórugi
-57
முரளிதரன்

Page 31
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
SS தேசிய கீதம்
தத்தித் தவழ்ந்து தளர் நடை நடந்து தாவி விழுந்தது சில வருடம் அன்று உதடுகள் உச்சரித்தது மழலைகீதம் - பின்னே புல்லிச் சிறகடித்து துள்ளித் திரிந்த பாலகப் பராயத்தில் பள்ளி செல்கையிலே பால்மணம் மாறாது படித்தது அரிச்சுவடிகிதம் - பின் பட்டங்கள் பெறவும் சட்டங்கள் ஆளவும் படி ஏறி உயர்கல்வி பெற்ற போது பள்ளி நிகழ்வில் பாடினோம் கல்லூரி கீதம் அம்மட்டேயோ?. இடையே வீசும் இளவேனிற்காலம் புயல் எனக் காதல் வந்து வீச இளமனங்கள் இசைத்தது காதல் கீதம் - அத்தோடு திருமணத்தில் இசைத்தது மங்கள கிதம் மரண வீட்டில் ஒலித்தது சோககிதம் பிரிவுகள் சில வந்து வாட்டிய போது தான் இதயத்தின் அடியிலிருந்து கேட்டது அன்பு கீதம் ஆம் அன்பு தான் எம் தேசிய கீதம்.
கு.கஜப்பிரியா
முடிவுறாத கோலம்
யதார்த்தங்களை தின்றொழித்தபடி ஏப்பமிடுகிறது காற்று: கோலங்களை கலைத்து விளங்க முடியாத புதிது புதிதாய், கோலங்களின் கோடுகளே
வடிவங்களாய் நெடுவழிப் பயணத்தினூடே ரணங்களின் வலிகள் கோலங்களின் வர்ணங்கள் அதிகமதிகமாகின்றன. அழுதழுது கரைந்தொழிகிறது. மனங்களின் உணர்வுகள் முடிவுறாத கோலத்திலேயே மறுதலிக்கப்படுகிற தொடர்ந்தும் தொடர்ந்தும் ஒவ்வொரு காலத்திலும் வர்ணங்கள் பூசப்படுகிறது
எவரும் விளங்கிக் கொள்ள முடியாதபடி:
-யாத்திரிகண்.
-58

சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
உடல் மொழி
-லேனா தமிழ்வாணன்ஆயிரமாயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாத, விஷயங்களைச் சிறு உடல் அசைவுகள் மூலம் சொல்லிவிட முடியும்.
புன்னகை என்பது ஒர் உடல் மொழிதான். வணக்கம் தெரிவிப்பதும் ஓர் உடல் மொழி தான். அலட்சியப் பார்வை உடல் மொழி தான்.
உடல் மொழியைக் கவனமாகப் பயன்படுத்தினால் அது நமக்கு பலவிதங்களில் நல்லது.
நமக்கு யார் மீதாவது மிகுந்த மரியாதை உண்டென்றால் அவர்கள் வரும் நேரம் நாம் எழுந்து அவர்களை வரவேற்கின்றோம். சற்றே மரியாதைக்குரியவர் என்றால் கால் மீது போட்டிருக்கும் மற்றொரு காலை எடுத்துவிடுகின்றோம். நண்பர் என்றால் சற்றே நகர்ந்து அமர்ந்து அவரை அமரும்படி கையைக்காட்டுகின்றோம். முன் பின் அறியார் என்றால் நாம் எப்போதும் போல் இயல்பாக இருக்கின்றோம். எதிரி என்றாலோ வெறுப்புடன் நோக்கிவிட்டு, வேறு திசைக்குத் திருப்பிக் கொள்கின்றோம். வாய் வார்த்தையில்லாமல் நம் சிறு அசைவுகளை வைத்தேநாம் அவர்களை எந்த அளவிற்கு விரும்புகின்றோம் அல்லது வெறுக்கின்றோம் என்பதை உணர்த்த முடியும் என்கின்றபோது, இந்த உடல் மொழியை ஏன் சரிவரப் பயன்படுத்தக்கூடாது?
ஒருவர் ஒன்றைச் சொல்லும் போது நாம் எங்கோ பார்த்துக்கொண்டிருந்தால், ஒன்று அவரைப் பிடிக்கவில்லை என்று பொருள். அல்லது , அவர் சொல்லும் விஷயம் பிடிக்கவில்லை என்று பொருள்.
நம்முடைய விரும்பத்தகாத உணர்வுகளை நாம் வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாது. வெளிக்காட்டினால் அது நமக்கு நன்மை செய்யாது.
முற்றிலும் புதிய ஒருவர் அறிமுகப்படுத்தப்பட்டால் அவரவர் மதமுறைப்படி வணக்கம் தெரிவிக்கலாம். புன்னகையும் சேர்ந்துகொள்ளவேண்டும். நாமும் அறிமுகம் செய்யப்பட்டவரும் பேசப்போகும் நேரம் வெகு குறைவு. ஆனால் வணக்கம் சொல்லும் முறை நன்றாக இருந்தால் அந்த நொடியே அவரைக் கவர்ந்துவிட முடியும்.
பலபேர் சிரிக்ககூடச் சில்லறை கேட்கிறார்கள். பெண்களிடம் பெண்களும் ஆண்களிடம் ஆண்களும் நன்கு சிரித்துப் பேச வேண்டும். சிரித்துப்பேசினால்
நாம் அனைவரையும் கணப்பெபாழுதில் கவர்ந்துவிடலாம்.
உடம்பு பல பேருக்கு வளைவது இல்லை அசைவது, எழுதுவது நகர்வது என்றாலே இவர்களுக்கு கசப்பாக இருக்கிறது.
س 59 -

Page 32
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
டாக்டர் வீட்டில் அமர்ந்திருக்கிறீர்கள். ஒருவர் அருகே அமர வருகிறார். லோசக நகர்ந்து இடம் (ஏற்கெனவே இடம் இருந்தாலும் ) கொடுங்கள். அவருக்கு உங்களை மிகப் பிடித்துவிடும்.
ஒருவரைப் பார்க்கபோகின்றோம். அவர் இல்லை. நாம் காத்திருக்கின்றோம். அவர் உள்ளே நுழைந்ததும், நாம் எழுந்துவிடவேண்டும். காரணம் அவரது இடம் அவரது கோட்டை உடனே அவர் “உட்காருங்கள், உட்காருங்கள்!” என்பார் சிறுபதட்டத்துடன்,
அதன் பிறகு உபசரிப்பு நன்றாக இருக்கும். நாம் வந்த காரியம் முடிந்துவிடும். கால் மீது கால் போட்டுக் கொண்டு, “வாய்யா ஜேம்சு” என்கிற பாணியில் உட்கார்ந்திருந்தால் உடையவருக்கு எரிச்சல்தான் உண்டாகும். வந்த காரியமும் நடவாது.
கண்களில் வியப்பைப் பொழிதல், பாசத்தை வெளிக்காட்டுதல், எழுந்து. கதவைத் திறந்துவிடுதல், காரின் கதவைச் சாத்தி விடுதல், ஒதுங்கி வழிவிடுதல், பொது இடங்களில் முன்பின் அறியாதவர்களிடம் கூட உடல் மொழியால் நல்ல பெயர் வாங்க முடியும். அந்தச் சூழ்நிலையை இனிதாக்கும், இவற்றை இயன்றபோதெல்லாம் செய்து பாருங்கள் அப்புறம் பாருங்கள் இவை செய்கிறவேலையை!
நன்றி : கல்கண்ரு
அஞ்சலிகள்
அமரர் மருதுர்க் கொத்தன் :
கல்முனை எழுத்தாள் சங்கத்தின் தலைவர், ஓய்வுபெற்ற அதிபர், சிறுகதை எழுத்தாளர், ஆளுநர் விருது, கலாபூஷணம் விருது என பலவிருதுகள் பெற்ற பொது உடைமை வாதி. இவரது "பாவம் நரிகள் நாடகம் புகழ்பெற்றது. அன்னாருக்கு எம் இதய அஞ்சலிகள்
அமரர் ராஜ ருநீகாந்தன்
தினகரன் முன்னாள் ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், பொது உடைமைவாதி, நீதிபதியின் மகனி, காலச்சாளரம் சிறுகதை தொகுப்புகள் பரிசு பெற்றவை. அன்னாருக்கு எம் இதய அஞ்சலிகள்
الهـ
-60

சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
சிறுகதை
KYa
&9IIJL
-ஓ.கே.குணநாதன்
அப்பு. என் அப்பாவின் அப்பா.
எல்லோரும் அவரை ‘அப்பு’ என்றே அழைப்பர். அப்புவின்ர பெயர். செல்லத்துரை. ஆனா. அப்புவின்ர பெயர் யாருக்குமே தெரியாது.
அப்புவைத் தெரியாதவர்களே கிடையாது. அவ்வளவு பிரபல்யமானவர். குட்டி அரசியல்வாதி போல. அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டமே இருக்கும். அவர் ‘எலக்ஷன் கேட்டிருந்தால் நிச்சயமாக ஜெயித்திருப்பார். ஆனால். அவர் கேட்கேயில்ல.
அப்புவைத் தேடி வாற சனங்களோ ஏராளம். பள்ளிக்குப் போற மாணவர்கள். பல்லில்லாத கிழவர்கள். பெண்கள். பக்கத்து வீட்டுகாரர்கள். பக்கத்து ஊர்க்காரர்கள். அரசியல்வாதிகள் கூட.
இப்போ அப்புவுக்குக் கொஞ்சம் வயது போயிற்று. முதுகு கூனி. கால்கள் வளைந்து. நரை விழுந்து. தோலெல்லாம் சுருங்கிப் போயிற்று.
வாலிப காலத்தில நல்ல வாட்ட சாட்டமான ஆள் கொஞ்சம் கறுப்புத்தான். ஆனா. வைரம் செறிந்த உடம்பு. அவள் நடக்கும் பொழுது அவருடைய கொம்பு மீசை துடிக்கும்.
அப்புவைத் தேடி வாறவங்களுக்கு நேர காலமே கிடையாது. ஆள்மாறி ஆள்தான். அப்பு தூக்கத்திலிருந்து விழிக்க முதலே கதவை தட்டுபவர்களும் உண்டு. அவர் அலுத்துக் கொள்ளுவதேயில்ல. சினப்பதுமில்ல. வாறவங்களைச் சமாளிச்சுப் போட்டு மீண்டும் நித்திரைக்குப் போக எப்படியும் பன்ரெண்டு மணி தாண்டி விடும். வாறசனங்களை உபசரித்து, உபசரித்துக் களைத்தே போவார். மனுசனுக்கு சாப்பிடக் கூட நேரமே கிடைக்காது.
அப்புவிட்ட வாறவங்களுக்கு திரும்பிப் போறத்திற்கு மனமே வாறதல்ல. அலட்டிக் கொண்டே இருப்பாங்க. அங்கேயே படுத்துக் கிடந்து போறவங்களுமுண்டு. சில வேளையில. மனைவி வந்து கூட்டிற்று போன சரித்திரங்களுமுண்டு.
-61

Page 33
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
எனக்கு நல்லா நினைவிருக்குது. அப்பு தென்னங்குற்றிகளைச் சதுரமாகப் போட்டு. அதுக்குள்ள ஒன்று ஒன்றரையடி உயரத்திற்கு கடற்கரை மணலைக் கொட்டியிருப்பார். அது பால நிலவு போலதான் இருக்கும். விடும் கடற்கரையோரத்தில இருந்ததால ‘ஜில் லென்ற காற்றும் வீசும். சும்மா சொல்லக் கூடாது திரும்பிப் போகேலாதவங்க அதில சுக சயனந்தான்.
அப்பு அடிக்கடி தோட்டத்திற்கு வேலைக்குப் போவார். ஆனா. அப்புவைத் தேடி வாறவங்க அட்பு தோட்டத்தால வரும்வரைக்கும் காத்துக் கொண்டே நிப்பாங்க. தோட்டத்துக்குப் போன அப்பு வந்ததும் அவர்களை சிரிச்சுக் கொண்டு உபசரிப்பார்.
பெரிய இடங்களிலெல்லாம் விருந்தாளிகள் வீட்டுக்கு வந்தால் மனுவழிதானே தேத்தண்ணி ஊற்றிக் கொடுக்கிறவங்க. ஆனா இங்க அப்பிடியில்ல. ஆச்சியைக் கஷ்டப்படுத்தவே மாட்டார். ஆச்சியை ஊற்றிக் கொடுக்க விடவே மாட்டார். அவரே ஊற்றி, ஊற்றிக் கொடுப்பார்.
ஒருநாள் நள்ளிரவில் வந்து யாரோ கதைவைத் தட்டி அப்புவை எழுப்பி ஏதோ கேக்க.அப்பு இல்ல என்று சொல்ல. அவன், ஐயா எனக்கு அது இல்லாவிட்டால் உயிரே போய்விடும் என்று மன்றாடியது நினைவில இருக்குது.
அப்புவை எல்லோரும் அடிக்கடி தேடி வருவாங்க. ஆனா அட்பு யாருடைய வீட்டுக்கும் போறதேயில்ல. அப்பிடிப் போனாலும் அவருக்கென்றே தனி மரியாதைதான். இருப்பிடம். சாப்பாடு. தேனீர். இந்த உபசரிப்பெல்லாம் அப்புவுக்கு பிடிக்கிறதேயில்ல. ஆனா. யாருடமும் சொல்லுறதேயில்ல.
அப்பு நல்ல கெளரவமான மனிசர். மரியாதைர கொடுத்து மரியாதை வாங்குவர். தேடி வருபவர்களை வயது வித்தியாசமின்றி “ என்ன அண்ணே. என்றே அழைப்பர். அவர்களும் "சும்மா. வந்தனான். என்று பிடரியைச் சொறிவார்கள். அப்புவுக்கு அந்த சொறிப் பாஷை கூடத் தெரியும். புரிந்து விடும்.
அதோட. அப்பு ஒரு கண்ணியமான மனுஷர். யாரிடமும் கடன் வாங்க மாட்டார். ஆனால். அப்புவிட்ட கடன் வாங்குபவர்கள் ஏராளம்.
இப்படியெல்லாம் அப்புவைத் தேடி வந்த சனங்கள் இப்போது ஒன்று கூடத் தேடி வருவதேயில்லை.
நன்றி கெட்ட சனங்கள்.
அப்புவும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஏனென்றால் அவருக்கு வயது போயிற்று. மரம் ஏற முடிவதில்லை.
-62

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
பதிவுகள் 2
01. மாருதம் ஒரு சிறந்த படைப்பு
கொழும்பைத் தளமாகக் கொண்டு பத்திரிகைகளும் சிற்றிதழ்களும் வெளிவரும் இந்ந சூழ்நிலையில், இலக்கியதாகம் கொண்ட ஒரு சாராரால் ‘மாருதம்' என்ற படைப்பை வவுனியா போன்ற இடத்தில் வெளியிட்டுவருவது சுலபமான காரியமல்ல. வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டு புற்றீசல்களாக படையெடுக்கும் தரமற்ற படைப்புகள் வெளிவரும் ஒரு காலகட்டத்தில் இலக்கிய சுவை சற்றும் பிசகாமல் அமரர் பேராசிரியர் க.கணபதிப் பிள்ளையின் அட்டைப் படத்துடன் மாருதம் தனது நான்காவது இதழை விரித்துள்ளது.
ஆ. வரதன்
சுடடொளி வாரமலர்
11-17/01/04
02. உலகம் என்ற இலக்கை நோக்கி. . .
வவுனியா கலைஇலக்கிய வட்டத்தினர் பெளர்ணமி தினத்தில் கலை இலக்கிய நிகழ்வுகளை நடத்தி வருவது பாராட்டுக்குரியது. அவ்வாறே ‘மாருதம்' இதழ் வெளியீடும் மிகவும் பாராட்டுக்குரியது. இதில் வவுனியா’ என்று குறுகிவிடாமல் “இலங்கை' என்பதற்கு விரிவடைந்து ‘உலகம்' என்ற இலக்கினை நோக்கி பயணிக்கவேண்டும்.
ச.ஜீவா
தினகரன் வாரமஞ்சரியில் 28.2.03
-63

Page 34
சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
வட்டத்தின் பாராட்டுப் பெறும் இருவர
கலாபூஷணம் கவிஞர் கண்ணையா.
மன்னார் பாலைக்குழியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் கவிஞர் கண்ணையா. இயற்பெயர் மு.இராமையா. பிறந்த திகதி 29.09.1942. முருங்கன் பொன்தீவுக் கண்டலில் 1942ல் படிப்பைத் தொடங்கி 1962/1963 இல் க.பொ.த. சாதாரண தரம் வரை முறைசார்கல்வியைப் பெற்றார். கவிதை, சோதிடம் , சித்தமருத்துவம், என பல் துறைகளில் தனது படிப பைத் தொடர்ந்தார். 1964ல் வவுனியா கணேசபுரத்தில்
1962ல் முதற்படைப்பாக ‘பயிர்களுக்கு நேரிங்கே எனும் கவிதை வெளிவந்தது. " வவுனியா ப.நோ.கூ. சங்கத்தில் கிளைமுகாமையாளாக கடமைபுரிகிறார். 1977 முதல் இன்று வரை சங்கக்கவிஞன அறிமுகம் பெற்றுள்ளார். விவசாயம், கைத்தொழில், புவிசார்ந்த துறைகளில் புதுமோகம் கொண்டுழைப்பவர். ‘கவிதைப் பூக்கள்’ எனும் நூலை வெளியிட்டார் வவுனியா பிரதேச சபையின் கெளரவமும், வவுனியா நகரசபையின் 'கவியெழில் விருதும் பெற்றுள்ளார். 1996ல் சமாதான நீதவான் பட்டமும் பெற்றார். 1999ல் வவுனியா ப.நோ.கூ.சங்கத்தினர் ‘பல்துறைக்கலைஞர் விருது வழங்கிக் கெளரவித்தனர்.
பல்சமய ஈடுபாடும், பல்வேறு அரசியல், சமூக செயற்பாடும் மிக்க மு.இராமையாவின் ஆக்கங்கள் பத்திரிகை சஞ்சிகையில் தொடர்ந்தும் வெளிவருவதுடன், வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டசெயற்பாடுகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். இலங்கை கலாசார அமைச்சினால் 2002 க்கான கலாபூஷண விருது பெற்றமை பாராட்டத்தக்கது.
இலக்கிய சமூகத் தொண்டர் சூடாமணி இ.கா.கணபதிப்பிள்ளை
ஒரு மெலிந்த உருவம், வெண்ணிற வேட்டி அரைக்கைச்சட்டை, மெல்லிய புன்னகை, மெல்லிய கதைகள், இலக்கிய சமூக கூட்டங்களில் புத்தகங்கள் பத்திரிகைகளுடன் உலா வரும், விற்பனையும் நடக்கும். சமூகச் செய்திகளும் பரிமாறப்படும். இளைஞர் அல்லர், சற்று வயதானவர்தான். வெள்ளைத் தாடி முகத்தில் அரும்பியபடி உலகத்து விடயங்கள் எல்லாம் கூறி நிற்கும்.
ஆமாம் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 82 கூட்டங்களில்
கலந்து தன் இலக்கியப் பங்கை ஆற்றிவரும் சூடாமணி என்று அழைக்கப்படும்
திரு.இ.கா. கணபதிப்பிளளை அவர்கள் அமைதியே உருவமானவர். பண்புடன் -64
 

erabah, asistr6 assunsu 336&tau &FiefbUR65
பழகுபவர். அடக்கமாக ஒரு கம்யூனிஸ்ட் ஆக செயல் பட்டு வருபவர். எளிமையான வாழ்வு, கனிவான கதைகள்.
யாழ் மாவட்ட காங்கேசன்துறை, தையிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவள். தையிட்டி கணேசா வித்தியாலயத்தில் ஆறாம் வகுப்பு வரை கற்றவர். ஆனால் 12 வயதில் தமிழக கம்யூனிஸ்ட் ப.ஜீவானந்தம் பேசிய ‘தீண்டாமை ஒழிப்பு கருத்தில் உள்ளம் பறிகொடுத்தவர்.
கூலி விவசாயிகள் போராட்டங்களில் சித்தனையை திருப்பினார். வறுமை கடன் தொல்லை காரணமாக படிப் பைத் தொடர முடியவில்லை. புராணங்கள், இதிகாசங்கள் வாசித்தார். முறைசாராக் கல்வியைத் தொடர்ந்தார். கல்கி இதழில் சிதம்பரம் கோயில்பற்றி அறிந்து அங்கு போக விருப்பம் கொண்டார். தந்தையின் கண்டிப்பு தடை போட்டது. எனினும் சாமியார் போல வேடமணிந்து சிதம்பரம் போய்வந்ததாக நடித்தார். " சிதம்பரம் செல்ல அனுமதி கிடைத்தது. (கல் கியில் சிதம்பரம் கோயில் பற்றி வாசித்த அறிவு கைகொடுத்தது)
ஐம்பதுகளில் இந்தியாவில் பிச்சைகாரர் அவலத்தைக்கண்டு மனம் பதறினார். ப.ஜீவானந்தம் வழிதான் இதற்கு தீர்வு என்றும் காமராஜா மற்றும் அண்ணா போன்றவரின் அரசியல் இதற்கு தீர்வு தராது என்றும் உணர்ந்து ஈழம் திரும்பினார்.
திருஅம்பலத்தின் மகன் தொடர்பில் மார்ச்சியக் கருத்துக்களை அறிந்துகொண்டு கூலிவிவசாயிகளின் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை செலுத்தினார். வித்துவான் ஆறுமுகம், கே.ஏ.சுப்பிரமணியம், பேராசிரியர் க.கைலாசபதி, சோ.தேவராஜா, நஇரவீந்திரன் போன்ற தோழர்களின் தொடர்புகளால் தேசாபிமானி கலைமதி, மருதம, தொழிலாளி, யுகசக்தி, பாட்டாளி, செம்பதாகை, வசந்தம், தாயகம், போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளின் வெளியிட்டு, விற்பனைகளில் இணைந்து நின்று தொண்டாற்றினார். கம்யூனிஸ்ட் வாலிபர் சங்கம், தேசியகலை இலக்கியப் பேரவை மற்றும் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து ஒரு இலக்கிய சமூகத் தொண்டராகப் பணிபுரியும் சூடாமணி அவர்களை வாழ்த்திப் பாராட்டுவதில் வட்டம் பெருமையடைகிறது. -
யேயும் ஓயாத விவாதம் நடைபெற்றுவரு இந்த விவாதம் நடைபெற்று வரு
காலத்திலிருந்தே இந்த நடைபெற்று வருகிறது. பலாத்கரம் என்ப இயக்கத்தின் கொள்கை லட்சியமோ அல்ல வர்க்க வேற்றுமையும் கர
ஐயும் மனித சமுதாயத்தின்மீது திணித்த பலாத்காரத்திற்கு முற்றாக
கட்டுவதே கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இலட்சியம்
ဒွိမွို.......့်ဒွိ ု ့် இ.கா.கணபதிப்பிள்ளை.
23.04.2004
-65

Page 35
சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
ஓர் இலக்கியகாரனின் தினக்குறிப்பில் இருந்து....
பதிவு 3 ള്
1. குறிப்பு சங்கரன் செல்வி
பண்பாட்டு ஆளுமைகள்
ஒரு சமூகத்தின் கலை பண்பாட்டுப் பதிவுகளே அதன் சிறப்பை எடுத்தியம்புவன. மனிதர்குழுமத்தின் பண்பாட்டுப் பதிவுகளை வரலாற்று ஓட்டத்தில தோற்றம் பெற்று வருகின்றன. இவ்வகை மாற்றங்களுக்கு பல கலை இலக்கிய ஆளுமைகள் காரணமாக இருக்கின்றன. 19ம் இருபதாம் நூற்றாண்டுகளில் இந்திய பண்பாட்டு எழுச்சியில் பல முக்கிய ஆளுமைகள் சம்பந்தப்படுகின்றன. இரவீந்திரநாத்தாகூர், சுவாமி விவேகானந்தர், மகாத்மாகாந்தி, பாரதி எனப் பலர் குறிப்பிடப்படலாம். சிங்கள சமூகத்தில் மார்ட்டின் விக்கிரமசிங்க, அநாகரிக தர்மபால அதன் பண்பாட்டு மாற்றத்தில் முக்கிய மாற்றத்தை விளைவித்தவர்கள. ஈழத்துத்தமிழ் மக்கள் மத்தியில் பூரீலழரீ ஆறுமுகநாவலர், சுவாமி விபுலானந்தள் ஆகியோர் சிறப்பிடம் பெறுகின்றனர். ஈழத்துக்கலை இலக்கிய வரலாற்றில் பேராசிரியர்கள் வித்தியானந்தன், சிவத்தம்பி, கைலாசபதி ஆகியோருடன் பேராசிரியர் சி.மெளனகுருவும் தாக்கமான மாற்றங்களை ஏற்படுத்தியவராவர். கூத்து மீளுருவாக்கத்தில் பேராசிரியர் சி.மெளனகுருவின் பங்களிப்பையும் அவர் தம் கூத்து ஆய்வையும் (மட்டக்களப்பு கூத்து) நாடகங்களையும் மதிப்பீடு செய்தனர் அவர் தம் மாணாக்கள்களும் சக விரிவுரையாளர்களும் இது மட்டக்களப்பில் 9.1003 அன்று நடைபெற்ற மணிவிழாவில் நடத்தேறியது.
191203ல் வெளியிடப்பட்ட “மெளனம் மணிவிழாச்சிறப்பு மலரில் மெளனகுரு எழுதிய சார்வாகன்’ எனும் குறுநாவலும், "வனவாசத்தின் பின்’ என்ற நாடகமும் சமகாலத்தை நன்கு பிரதிபலிக்கின்றன என்கின்றார் விமர்சகள்கள், பேராசிரியர் மெளனகுருவின் சிறப்புப் பணிகளான கிழக்கு இசையும், சுதேச இன்னியமும் இராவணேசன் - வடமோடி நாடகமும் ஈழத்துத் தமிழர் பண்பாட்டு வளர்ச்சியில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தவல்லன என்பது இங்கு பதிவு செய்யப்படவேண்டியதே.
குறிப்பு 2. அஞ்சலிக்குறிப்புகள்.
ஈழத்துத் தமிழரின் இன்னொரு பக்கம் இசை, நடனம், நாடகம், இதில் இசைநடன நாட்டிய சாகித்யகள்த்தா பிரம்மறி ந.வீரமணி ஐயரின் மறைவு மக்கள் மனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுயமாக பாட்டுகள் சாகித்தியங்கள் ஆக்குந்திறன் கைவரப்பெற்ற ஐயருக்கு இசை நடனமும் சிறப்பாக கைவந்தமை ஈழநாடு செய்த தவப்பயனே. பல்வேறு புராண இதிகாசக் கதைகளுக்கு நாட்டிய நாடக உருக்கொடுத்து எழுதினார். திருமயிலைக்குறவஞ்சி, பக்த பிரகலாதன், 72 மேளகர்த்தா ராகத் திருமயிலைக்கற்பகாம்பாள் கீர்த்தனைகள், செளந்தர்யலாகரியம், ஸ்சந்தலிலா எனத் தொடரும் அவர் படைப்புகள் பல. பல்வேறு ஊர்க் கோயில்கள்
-66

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை மாருதம்)
மீது பாடிய பாடலகள், (இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் உட்பட) அவரது ‘கற்பகவல்லிய்ன் பொற்பதம் பிடித்து எனும் பாடல் உலகம் முழுக்க அறிந்ததன்றோ! இணுவிலின் இனிமைக்கு சான்றாக வாழ்ந்து மழைந்தவர் வீரமணிஜயர் ஆவர் பற்றி பேராசிரியர் சபா ஜெயராசா எழுதிய “செளந்தாயலாகரியம் முன்னுரை அவர் சிறப்புகளை காலம் உள்ளவரை சொல்லும் இளைஞர்களை வளர்ப்பதில் அவரது ஆர்வம் குறிப்பிடத்தகுந்தது.
அடுத்து அஞ்சலிக்குரியவர் தாளக்காவடி கலைஞள் ஏரி.பொன்னுத்துரை, மரபுசார்ந்த புராண இலக்கிய அரச நாடகங்களுடாக (இறுதிப்பரிசு) தன்னை அடையாளங்காட்டி தாளக்கா வடி யூடாக மரபு சார்ந்த புதுமோடி நாடகங்களில் ஈடுபடுத்தி தாசீசியஸ், சண்முகலிங்கம், மெளனகுரு போன்ற அடுத்த கட்டகலைஞர்களுடன் தன்னை இணைந்து ஈழத்துத் தமிழ் நாடக உலகுக்கு வளம் சேர்த்தவர்.
எம்போன்ற இளைஞர்களை ஊக்குவித்தவர். ‘நாடகம், கூப்பியசரங்கள், “பக்தி வெள்ளம், “பாடசாலை நாடகம், “அரங்கு கண்ட துணைவேந்தர், ‘தாளக்காவடி, ‘மயில்’ அரங்கக் கலைஞர் ஜவர் போன்ற பல நூல்களின் ஆசிரியர். 75 வயதில் காலமாகும் போதும் அகவுலகில் நாடக உலகுடன் இணைந்து வாழ்ந்து மறைந்தார். ஆசிரியராய், அதிபராய், கலை இலக்கிய சங்கங்களின் உறுதுணைவராய் செவ்வனே வாழ்ந்து மறைவருக்கு எம் அஞ்சலிகள்,
குறிப்பு 3. இரு மழைநாட்களில் ஒரு நூலின் (நிதர்சனத்தின் புத்திரர்கள்) அறிமுகம்
மீண்டும் ஒரு முறையல்ல இரு கட்டங்களாக வன்னிப்பிரதேசத்தில் கந்தையா பூரீகணேசனின் நிதர்சனத்தின் புத்திரர்கள் நூல் அறிமுகம் நடைபெற்றது. மழை கூடிய நாளான 25.1103 அன்று பூநகரி மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற அறிமுக நிகழ்விற்கு பூநகரிப் பிரதேச செயலாளர் திரு க.வைரமுத்து பல நோக்கு கூட்டுறவு சங்க தலைவர் திரு.கா.கார்த்திகேசு, கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.தி. கணபதிப்பிள்ளை, ஆரம்ப உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.பொன்.தில்லை நாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். கூட்டுறவு முகாமையாளர் திருந.பாலசுப்பிரமணியம் சிறப்புப்பிரதியை பெற்றுக்கொண்டார். அயற்பாடசாலை அதிபர்கள், பூநகரிமாகவித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு அப் பிரதேசத் தின் கலை இலக் கிய ஆர்வத்தை சுட்டி நின்றது. திரு.பொன்.தில்லைநாதனின் ஒழுங்கமைப்பில் நிகழ்வு நடந்தேறியமை குறிப்பிடத்தக்கது.
122.04 அன்று இயக்கச்சி அரசின் தமிழ்க்கலவன் பாடசாலையில் அதிபர்
திருமதி இராசம்மா இராசரத்தினம் தலைமையில் நடைபெற்ற நூல் அறிமுக
நிகழ்வும் மழை கூடிய நாளாகக் காணப்பட்டது. ‘உறுதி’ எனும் நூலின் முதல்
நாடகம் மேடையேற்றப்பட்ட போது அப்பாடசாலை மாணவியாக இருந்து நடித்த
செல்வி.ந.நகுலேஸ்வரியின் (ஆசிரியை) வரவேற்புரையைத் தொடர்ந்து -67

Page 36
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
அறிமுகவுரையை சோரன் பற்று கணேசா வித்தியாலய ஆசிரியரும் இலக்கிய கள்த்தாவுமான திரு.இ.கோகுலராகவன் ஆற்றி, நூல் கோடி காட்டி நிற்கும் தேசிய உணர்வு முக்கியமானது எனக் குறிப்பிட்டார். இப் பாடசாலையின் முன்னாள் அதிபரும் தற்போதய கிளிநொச்சி வலயப் பணிப்பாளருமாகிய திரு.ப.அரியரத்தினம் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நாடகக் கலையூடு மாணவரின் ஆற்றல்களைமேம்படுத்தும் வழிவகைகள் பற்றியும் சமூகத்தின் முன்னேற்றம் பற்றியும் குறிப்பிட்ட பணிப்பாளர் இது போன்ற நிகழ்வுகள் மாணவரை ஊக்கப்படுத்தும் என்றார். கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.அ.கைலாயபிள்ளை மற்றும் அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பங்கு கொண்டு சிறப்பித்தனர். பளையைச் சேர்ந்த பவளங்கள் புத்தகசாலை அதிபர் திரு. நா.பூபாலசிங்கப் சிறப்புப் பிரதியைப் பெற்று வாழ்த்து தெரிவித்தார். இயக்கச்சி கவிஞர் எஸ்.கருணாகரன் இந்நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பு 4. சீலாமுனைக் கூத்துக் கலைஞர் சந்திப்பு 15.12.2003
அது ஒரு மழைக்கால மப்புப் போடும் பகற்பொழுது. மட்டுநகள் வாவியின் அலை அடிப்பு சற்று ஓய்ந்திருந்தது. பார்வீதியில் சீலாமுனையில் நின்று பார்த்தால் முகத்துவராக்கடல் முகம் தெரிகின்றது. வாவியில் வலை இழுத்து படகில் செல்வோர் ஒருபுறம், தூண்டிலில் இறால் போட்டு மீன் பிடிக்கும் சிறுவர் மறுபுறம். தென்னை மர இலைகள் சலசலப்பை சற்று மறந்திருந்தன.
வாவிக்கரையோரம் மீசையைத் தடவியபடி வரும் கூத்து அண்ணாவியாரை காணக்கிடைத்தது. கூடவே கூத்து ஆடிய வட்டக்களரியின் சற்று சிதைந்த அமைப்பும் பார்க்க முடிந்தது. தொடர்ந்து ஏட்டு அண்ணாவியாரின் தலைவாசலில் வடமோடிக் கூத்தர்களின் கூத்துகளின் பழைய கதைகள் பழறய முடிந்தது. படங்கள் பார்க்கக் கிடைத்தது.
மாலையில் நிலவின்ஒளியில் சிறிய தென்னங்கன்றுகள் வளர்ந்திருந்த வளவில், ஒரு வீட்டின் பின்புறத்தில் மணல் வெளியில் சிறுவர்களின் கூத்து ஆட்டங்களை இரசித்தோம். மெல்லிய மங்கல் லாம்பு வெளிச்சத்தில் சிறுமிகளின் இலாவகமான ஆட்டங்கள் மனதில் தாளமிட்டன. அண்ணாவியாரின் மத்தள அடிக்கேற்ப ஏட்டண்ணாவியாரின் பாட வளர்ந்த இளைஞர் வில்லு கதாயுதம் சகிதம் பாண்டவர் கதையொன்றின் ஆட்டங்களை ஆடிக் காட்டினர். வளமான ஆடற்கலை எம் நாட்டின் சொத்து. இதனை எமக்குக் அறிமுகப்படுத்திய பேராசிரியர் (அமரர்) சு.வித்தியானந்தனின் (1960களில்) பணி நினைவுக்கு வந்தது. கூடவே அதனை அவருடன் இணைந்தும், இன்று இன்னொருபரிமாணத்தில் பேராசிரியர் சி.மெளனகுரு செய்த செய்கின்ற பணியும் மனதில் இனித்தது.
கிராமத்துக் கலையை கிராம மக்களே சிறப்டன் போற்றவும், நகரத்தார்
அதனை தமது கலை என்று கொண்டாடவும், ஆராய்ச்சியாளர் கவனத்தை அது
ஈர்க்கவும் காலம் கனித்துள்ளமையை மனது பற்றிக் கொண்டது. ஆராய்ச்சியாளர் -68

சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
சி.ஜெயசங்கள் போன்றோர் செய்யவேண்டிய பணிகள் ஏராளம் ஏராளம் இக்கூத்துக்களின் செயலமர்வுகள் கொழும்பு பிஷப் கல்லூரி மண்ட்பத்திலும பேராசிரியர் சி.மெளனகுரு தலைமையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. சிங்களகலைஞரும் இணைந்திருந்து, எமது கலையை இரசித்தமை இதன் சிறப்பை பறைசாற்றுகிறது.
குறிப்பு 5 : புத்தகப் பண்பாட்டுத்திருவிழாவும் நூல் வெளியீடுகளும்.
எமது பண்பாட்டில் புத்தகம் போடுதலும், விற்பதும், கஷ்டமான காரியங்கள், ஏனெனில் புத்தகங்களை காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் மனோபாவம் எம்மவர் மத்தியில் வளரவில்லை. பாடப்புத்தகங்களையும் இரவலாக வாங்கிப் படிப்பதிலேயே நாம் ஆர்வம் காட்டுகிறோம். இடையில் தென்னிந்திய அரை வேக்காட்டு சஞ்சிகைகள், நாவல்கள் படிப்பவரும் ஈழத்துப் புத்தகங்களை கண்கொண்டும் பார்க்கமாட்டார்.
இந்த இலட்சணத்தில் ஈழத்துப் படைப்புகளுக்காக புத்தகப்பண்பாட்டு பெருவிழாவை (கண்காட்சியுடன்) கடந்த வருடம் டிசம்பர் 27முதல் இவ்வருடம் ஜனவரி 7 வரை தேசிய கலை இலக்கியப் பேரவை கொழும்பு தமிழ்சங்கத்தில் நடாத்தியது பல்வேறு சமகால ஈழத்துப் படைப்புகள் விற்பனைக்கு வந்தன. ஒவ்வொருநாள் மாலையிலும் கவிதை சிறுகதை, நாவல், நாடகம் வரலாறு அரசியல் என நூல் அறிமுகங்களும் எழுத்தாளர் சந்திப்பும் நடைபெற்றன.
உண்மையில் வரவேற்கத்தக்க இந்நிகழ்ச்சியில் பல ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். ஆனால் சென்னையில் இதே காலத்தில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சி பற்றி எழுதிய உள்ளுர்ப் பத்திரிகைகள் இந்நிகழ்ச்சி பற்றி மூச்சு விடக்கானோம். இப்படியான மாற்றத்தாந்தாய் மனேபாவம் உள்ள சூழலில் எப்படி மக்கள் மனதில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் இது பற்றி தினகரனில் எழுதிய ச.ஜீவாவும் எதிர்மறையாகக இருந்தமை கவலைக்குரியதே.
கடந்த மாதம் (மார்ச்) ஏழாந்திகதி குழந்தை ம.சண்முகலிங்கத்தின் நாடக வழக்கு’ - அரங்கக்கட்டுரைகளும் நேர்காணல்களும் என்னும் நூல் இணுவில் கலைஇலக்கிய வட்டத்தால் இணுவிலில் வெளியிடப்பட்டது. 200க்கும் மேற்பட்ட பார்வையாளர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஆசிரியரின் நாடக சகபாடிகள் மாணவர்கள் இலக்கிய கள்த்தாக்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பலதரப்பினரும் கூடியிருந்தமை எழுத்தாளரின் அமைதியான இலக்கியப் பணிக்கு கிடைத்த கெளரவம் எனலாம். தொகுப்பாளரும் ஒரு மாணவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
భ
: கஜததரங்கம 雛 D ! Koor AlexNGAM **** = et
-69

Page 37
சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
வட்டத்தின் நிகழ்வுப் பதிவுகள்
நிகழ்வு 80
நிகழ்வு 08.11.2003 காலை 11.00மணிககு நடராஜ மண்டபத்தில் திரு.தமிழ்மணி அகளங்கன் தலைமையில் நடைபெற்றது. மாருதம் இதழ் 4 அறிமுகமும் எழுத்தாளர் சந்திப்பும் இடம்பெற்றது. தலைமையுரையை திரு அகளங்கனும், இதழ் அறிமுக உரையை திரு.செழறிதரனும், திரு.அ.ஜெயச்சந்திரனும் நிகழ்த்தினர். எழுத்தளர் சந்திப்பு நிகழ்வில் “வன்னி. மாநிலமும், யாழ புலமும்” நூலை எழுதும் எழுத்தாளர், இளைப்பாறிய நிர்வாக சேவை அதிகாரி திரு.தி.திருலிங்கநாதனுடனான சந்திப்பு இடம்பெற்றது. வரவேற்புரையை செல்வி.சி.சிவாஜினியும் நன்றியுரையை திரு.ப.முரளிதரனும் நிகழ்த்தினர்.
நிகழ்வு 81
நிகழ்வு 08.12.2003 காலை 11.00 மணிக்கு சுத்தானந்த இந்து இளைஞர் சங்க சேக்கிழார் மண்டபத்தில திரு.கந்தையா பூரீகணேசன் தலைமையில் இடம்பெற்றது. பிரதம் விருந்தினராக வவுனியா வளாக கணக்கியலும் நிதித்துறைத் தலைவர் திரு.வி.யே.துரைரட்ணமும், சிறப்பு விருந்தினராக சுகாதார வைத்திய அதிகாரி திருமதிகெளரிமனோகரி நந்தகுமாரும் கலந்து கொண்டனர். வரவேற்புரையை திரு.ப.முரளிதரனும் வெளியிட்டுரையை திரு.தமிழ்மணி அகளங்கனும் முதற்பிரதியை டிஜிற்றல் கலர்லாப் போட்டோ சண்கோ உரிமையாளர் திரு.ஜ.சண்முகராசாவும் சிறப்பு பிரதியை குமார் ஹோட்டல் உரிமையாளர் திரு.சு.சற்குணலிங்கமும், இந்தியா சல்வார் உரிமையாளர் திரு.ஜெ.ஜெயபாஸ்கரனும் பெற்றுக் கொண்டனர். விமர்சன உரையை விரிவுரையாளர் திரு. ந.பார்த்திபனும் ஏற்புரையை நூலாசிரியரும் நன்றியுரையை செல்வி சி.சிவாஜியும் நிகழ்த்த நிகழ்வு மதியம் 200 மணி அளவில் இனிதே நிறைவு பெற்றது.
நிகழ்வு 82
நிகழ்வு 07.01.2004 காலை 11.00 மணிக்கு கலாசார மண்டபத்தில் விரிவுரையாளர் திரு கந்தையா முறிகணேசன் தலைமையில் ஆரம்பமானது. வருவேற்புரையை செல்வி சி.சிவாஜினியும் சிறப்புரையில் ‘திருவாசகம் தரும் இலக்கிய வீச்சு என்னும் தலைப்பில் திரு.தமிழ்மணி அகளங்கனும் உரையாற்றினர். செல்வன் ப.சிவமைந்தன் திருவாசகப் பாடல் இசை நிகழ்வினையும், வவுனியா நர்த்தனாஞ்சலி நாட்டியப்பள்ளி மாணவிகள் நடன நிழ்வினையும் நன்றியுரையை திரு.ப.முரளிதரனும் நிகழ்த்தினர். செல்வன் ப.சிவமைந்தனின் திருவாசகப் பாடல் சபையோரை பக்திவெள்ளத்தில் ஆழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
-70

சமூக கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
நிகழ்வு 83
புலோலியூர் க.சதாசிவம் எழுதிய 'அக்கா ஏன் அழுகிறாய்? எனும் சிறுகதைத்தொகுதி நூல் வெளியீடு தமிழ்மணி அகளங்கன் தலைமையில் 25.01.2004 மாலை 400மணியளவசில் வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில நடைபெற்றது. இது ஒரு முழுநிலா தின கருத்தாடல் நிகழ்வாக அல்லாமல் ஒரு ஞாயிறு மாலை நிகழ்வாக நடத்தப்பட்டது. பிரதம விருந்தினராக வவுனிய மாவட்ட அரச அதிபன் திரு.க.கணேஷ் கலந்துகொண்டார். வெளியீட்டுரைைைய திருநபர்த்திபன் (விரிவுரையாளர், வவுனியா தேசியகல்வியியல் கல்லூரி) வழங்க விமர்சன உரையை முல்லைமணி ஆற்றினார்.
நிகழ்வு 84
உளவளத்துணை ஆலோசகள் திரு.பி.ஏ.சி.ஆனந்தராஜாவின் ‘அன்புக்கரங்கள் எனும் ‘உளவளத்துணைசார் கட்டுரைகளும் கதைகளும் வட்டத்தின் பன்னிரண்டாவது வெளியீடாக 06.03.2004 காலை 11.00 மணிக்கு சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்மணி அகளங்கன் தலைமையில் வெளியீட்டுரையை கந்தையா றிகணேசன் வழங்க விமர்சன உரைகளை தள்காநகள் தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளளர் திரு.பெ.சத்தியநாதனும், வவுனியா தேசிய கல்வியிற் கல்லூரி விரிவுரையாளர் திரு.இன்ப தேவராஜாவும் ஆற்றினர். பிரதம விருந்தினராக வவுனியா வளாக கணக்கியலும் நிதியியலும் துறைத் தலைவர் திரு.வி.யே. சூசைரட்ணம் கலந்து சிறப்பித்தார்.
தொகுப்பு: சி.சிவாஜினி

Page 38
്യാഭ് (; ജ്ഞ ( (
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் நடாத்தும் ஏழாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வு 85 th:15.05.2004 on too 5.00 EDOf இடம்: சுத்தானந்த இந்த இளைஞர் சங்க நடராஜர் மண்டபம்
வவுனியா,
தமை: தமிழ்மணி அகளங்கள் பிரதம விருந்தினர் திரு.க.பேர்னாட்பீடாதிபதி தேசிய கல்வியியல் கல்லூரி வவுனியா கெளரவ விருந்தினர் திரு.எஸ்.சத்தியசீலன் பிரதேச செயலாளர், வவுனியா சிறப்பு விருந்தினர்கள் திரு.நா.சேனாதிராஜா தலைவர் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கர் வலுனியா திரு.சி.ஏ.இராமஸ்வாமி திண்வர். இந்துTCண்ரத், ஓஜனிT திரு.பூகுமாரகுலசிங்கம் Hi -- தலைவர், ப.நோ.கூ.சங்கம், வவுனியா
மாருதம் சஞ்சிகை இதழ்-5 வெளியீடு
வெளியீட்டுரை: திரு.எஸ்.பவானந்தன்விரிவுரையாளர் தேசிய கல்வியற் கல்லூரி வவுனி" நால் அறிமுகம் குழந்தை.ம.சண்முகலிங்கம் எழுதிய "நாடகவழக்கு"-அரங்கக் கட்டுரைகளும் நேர்காணல்களும்= ஆய்வுரைமுல்லைமணி திருவே.சுப்பிரமணியம் ஒப்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய “இலங்கைத் தமிழ் தேசிய வாதம்"-ஆரம்பத் தோற்றும் பற்றிய ஆய்வுஆய்வுரை திருமுதிதுநாவுக்கரசு அரசியல் ஆய்வாளர் பாராட்டுப்பெறும் களை இலக்கியகத்தாக்கள், ஆர்வலர்கள் கவி எழில் திரு.கண்ணையா(மு.இராமையா) திரு.இ.கா.கணபதிப்பிள்ளை (சூடாமணி) இசை விருத்து -13வது அரங்கு செல்வன் பத்மநாதன் சிவமைந்தன் நடன விருந்து * வவுனியா நிருத்திய நிகேதன கலாமன்ற மாணவிகள் நட்டுவாங்கம் நிருத்திய வாணி திருமதி சூரியயாழினி வீரசிங்கம் * வவுனியா நர்த்தனாஞ்சலி நாட்டிய பள்ளியினர் நட்டுவாங்கம் செல்வி கஜப்பிரியா குலேந்திரன்
- -
 

گی
naam
ಙ್
甄

Page 39
(, (ബി, ഞണ ജൂബിധ ിത് V -(இதழ் 6)
மாருதம் சிறப்புற வாழ்த்தகிறோம்.
அருணி பேக் ஹவுஸ் 404, இறம்பைக்குளம், வவுனியா தொ. பே: 024 2222735
மரகுதம் சிறப்புற வாழ்த்தகிறோம்.
அருண்()பூட் பரடைஸ் 118, பஸார்வீதி வவுனியா தொ. பே. இல: 024 2222768
-74.

്യാദ്, ബി, ഞണ ജൂബിധ ട്രിക്കു
மாருதம் சிறப்புற வாழ்த்தகிறோம்.
X
கனகேஸ் றேடேர்ஸ் Ba0: 23,24, UnafůListGUNGTumi gag:Tib
GuGayadun.
024222日227
- 75

Page 40
சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
மாருதம் சிறப்புற வாழ்த்துகிறோம்.
X
றோயல் பார்க் திருமணமண்டபம், வாடகைக்கார், குளிரூட்டப்பட்ட அறைகள், மற்றும் சைவ, அசைவ உணவுகளுக்கு
நாடவேண்டிய இடம்
றோயல் கார்டின் றெஸ்ரோறண்ட்
இல: 200 ஹொறுவபொத்தான வீதி
uថាបុfur.
024 2224026
-76

சமூக, கல்வி கலை இலக்கிய சந்சிகை
மாருதம் சிறப்புற வாழ்த்தகிறோம்.
jõgi OTLÜJÜ
மோட்டார், உழவுயந்திர உதிரிப்பாக
விற்பனையாளர்
9.D: 110, IJIs Sif), வவுனியா.
தொ.பே.இல: 024 2222474,024 2222475
- 77

Page 41
p, ബി. കബ് 86ിധ dിഭ
மாருதம் சிறப்புற வாழ்த்தகிறோம்.
குளோப் றேடேர்ஸ் விவசாய இரசாயன, பசளை இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் இல: 19, குளோப் பில்டிங், பசார்வீதி, வவுனியா.
தொ.பே. இல : 024 2222345, 2222418 பெக்ஸ் 2221087 (GR)
மாருதம் சிறப்புற வாழ்த்தகிறோம்.
வெங்கடேஸ்வரா பல்பொருள் வாணிப நிலையம் Bau: 15, LuGunftslig GuGanduIT
651.8u. SG): 024222248
- 78
 

சமூக, கல்வி கலை இலக்கிய சஞ்சிகை
மாருதம் சிறப்புற வாழ்த்தகிறோம்.
சிறந்த சைவ உணவுகளுக்கு
ஆானம்ஸ் கபே 25, asigaf|Tul Sasmula sigl,
GuGedun.
○24 - 2222○83
மாருதம் சிறப்புற வாழ்த்தகிறோம்.
حه
FeF6)
JEFTuG 2 Lykiai6, illud Telefa56f 6ghLIGENETuTGTh.
Sa): 27, Larnheig, GuGanun.
- 79

Page 42
്യാ, 6bഖ്, ബ) 8ബിu ട്രിക
மாருதம் சிறப்புற வாழ்த்துகிறோம்.
X
GL7976LT Gür dinü75}GöT
புதிய பஸ்நிலையக் கட்டிடம், வவுனியா. தொ.பே,இல: 024 2220306
-80

--
மாருதம் சிறப்புற வாழ்த்தகிறோம்.
அம்பாள் கபே
இல08, ஹொறவப்பொத்தா விதி GGfiu.
WESTERN UNON
ΜΟΝ ΕΥ TRANSFER
|
அதிகாரமளிக்கப்பட்ட முகவர்
அம்பாள் ஏஜென்சி
(அம்பாள் கபேக்கு அருகாமையில்)
ல.0, ஹொறவப்பொத்தாவீதி, Guqkunan. T.P & Fax :, O24 222242
Guana) egyh: p.u. 6.00 – I.L. 9.00

Page 43
மாருதம் சிறப்புற வாழ்த்துகின்றோம்" ー。
வவுனியா ப.நே
கடைவீதி,
024-222
முத்தையா !
திருமணி, பூப்புனித நீராட்டு விழா மற்றும் கலை கலாச
கூடிய சிறந்த
எண்ணெய், @Shiff,
சுத்தமான தரமான நல்லெண்ணெய், தேங்காய் எண்
என்பவற்றை மலிவு விலையில் 6
குளிர
கோர வெப்பத் தாக்கத்திலிருந்:
ଗ୩35ujର
நவீன முறையில் சிறுவர் பெரியவர் அனைவருக்கும
தொலைத்தொட
உள்ளூர் சர்வதேச தொலைத்தொடர்பு சேவைக்கும், ஒரு நிமிடத்தில் அடையாள அட்டை புகைப்படத்திற்கு
நுகர்ச்சிப்டெ
தரமான நுகர்ச்சிப்பொருட்களை பெர்
வவுனியா ப.நே
 

நா.கூ. சங்கம்
வவுனியா
2384
மண்டபம்
ார பொதுக்கூட்டங்களுக்கும் சகல வசதிகளுடன்
D6Sir Luib
sf, DIT &606)
ணெய், பிண்ணாக்கு, சுத்தமான வறுத்த அரிசிமா
பற்றுக்கொள்ள நாடுங்கள்
象
து விடுதலைபெற நாடுங்கள்
DD
ான உடைகளைப் பெற்றுக்கொள்ள நாடுங்கள்
டர்பு நிலையம்
குறைந்த விலையில் போட்டோப் பிரதிகளுக்கும், ம், றோனியோ பிரதிகள் பெறுவதற்கும் நாடுங்கள்
ாருட்கள்
bறுக்கொள்ள இன்றே நாடுங்கள்
ா.கூ. சங்கம்
மல்ரிவிஷன் அச்சுக்கலையகம், 024 2228689