கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2008.09-12

Page 1
றிவு
புரட்டாதி -
 

ழ்ச் சங்கம் 5606); OO/=

Page 2
பயன்டெ
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் முர் கண்டுகளிக்கக் கூடிய இடம்
அறுபது பேர் கலந்து கொள்ளக்கூ இங்கு உள்ளது. ஒலி அமைப்புக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. புத்தக ெ கலை விழா, முதலியவற்றை நடாத்; கட்டணத்தில் இம்மண்டபங்கள்
தொடர்புகளுக்கு: (GFL GOTGITT கொழும்புத் தமிழ்ச் இல 7, 57ஆவது ஒ கொழும்பு - 06 தொலைபேசி இல.
 
 
 
 
 
 
 

1றுங்கள்!!
நூறு பேர் அமர்ந்து நிகழ்வுகளைக் சங்கரப்பிள்ளை மண்டபம், அத்துடன் டிய குமாரசாமி விநோதன் மண்டபமும் உட்பட அனைத்து வசதிகளும் இவற்றில் பளியீடு அறிமுகவிழா, கலந்துரையாடல், துவதற்கு தலைநகரில் மிகவும் குறைந்த ளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சங்கம் ழுங்கை,
O 23637.59

Page 3
தமிழ் மருத்துவம்
உள்ளே.
நமது பண்பாட்டில் மரு
தமிழர் கல்விவழிப் புல முனைப்புக்களும்
தமிழ் இலக்கியங்களில்
சித்தர் பாடல்களில் மரு
தமிழர் தேசிய மருத்துவ
சுதேச தமிழ் மருத்துவ யாப்பியற் கவிதை வளி
ஆதுலர் சாலைகள்
நாட்டுப்புற மூலிகை LDC தமிழர் மருத்துவமும் 4
இனமரபியல் மருத்துவ
சித்த வைத்திய சிறப்பு
ஒலை 50

தமிழ் மருத்துவம்
த்துவம்
க்கள்ட்சியும் மருத்துவ
மருத்துவ நூற் செய்திகள்
தத்துவக் கருத்துக்கள்
வமும் சித்த மருத்துவமும்
இலக்கியமான பரராசசேகரத்தின் ாம்
குத்துவமும் மந்திரமும்
னர் மருத்துவமும்
ம்

Page 4
தமிழ் மருத்துவம்
urahasuredit szałkipjał
கொழும்புத் தமிழ்ச் சங்கம் திருவள்ளுவர் ஆண்டு : தி.பி.2038
இதழ் : 50 புரட்டாதி - மார்கழி 2008
ണ്ണങ്ങബ
மதியுரைஞர்கள் பேராசிரியர் முனைவர் சபா ஜெயராசா ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி சி.சிவலோகநாதன் பத்மா சோமகாந்தன்
ஆசிரியர் தெ.மதுசூதனன்
ஆசிரியர் குழு முனைவர் வ.மகேஸ்வரன் வைத்தியகலாநிதி ஜின்னாஹற் ஷரிபுத்தீன் க.இரகுபரன்
வசந்தி தயாபரன்
ஒருங்கிணைப்பு செல்வி சற்சொரூபவதி நாதன் ஜி.இராஜகுலேந்திரா டபிள்யு.எஸ்.செந்தில்நாதன் வைத்தியகலாநிதி சி.அனுஷ்யந்தன் மாவை வரோதயன்
நிர்வாக ஆசிரியர் எஸ்.எழில்வேந்தன்
வெளியீடு
கொழும்புத் தமிழ்ச் சங்கம் 7,57வது ஒழுங்கை (உருத்திரா மாவத்தை) கொழும்பு - 06. இலங்கை தொ.பே. . 011 2363759, தொ.நகல் 011 2361381 S60600TLuis6Tib:www.colombotanilsangam.com LósitoT6556): tamilsangam(d)sitnet.lk
அச்சுப்பதிப்பு : கொழும்புத் தமிழ்ச் சங்கம்
 

ஆசிரியர் பக்கம்
எமது சங்கத்தின் வெளியீடுகளில் ஒன்றான ‘ஓலை’க்கு சமீப காலங்களில் பெரும் வரவேற்பு ஏற்பட்டு வருகின்றது. நாம் ஒவ்வொரு இதழையும் ஒவ்வொரு துறைசார் சிறப்பிதழாக வெளியிட்டு வருகின்றோம். தொடர்ந்து தமிழிசை, நாடகம், வரிசையில் இந்த இதழ் “தமிழ் மருத்துவச்’ சிறப்பிதழாக வெளிவருகின்றது.
ஒவ்வொரு மனித சமூகமும் தமது வாழ்முறைகள், வாழ்வியல் அனுபவங்கள், சிந்தனைகள், உலகக் கண்ணோட்டங்கள், வரலாறுகள், அரசியல், அழகியல் முதலிய அனைத்தையும் தமது மரபு சார்ந்த வழக்காறுகளில் பொறித்து வைத்துள்ளன. தமிழர் போன்ற நீண்ட நெடிய வரலாறு கொண்ட தொல்குடிச் சமூகம் பல்பரிமாணம் கொண்ட வழக்காறுகளின் களஞ்சியமாக இருப்பது தவிர்க்க முடியாது. இதனொரு கூறாக மருத்துவ அறிதல் முறைகளும் வழக்காறுகளும் பண்பாட்டுக் கோலங்களின் நிலைபேறாக்கத்துக்கு உட்பட்டதாகவும் மேலும் மேலும் விருத்தி பெற்று வருவதாகவும் உள்ளன.
தமிழ் மருத்துவம் அல்லது தமிழர் மருத்துவம் என்று தனியாக அடையாளம் காணக் கூடிய அறிகைமரபு, சேவைமரபு மற்றும் தொழில்மரபு நமக்குள் தொடர்ச்சியாக பேணப்பட்டு, தலைமுறை தலைமுறையாக கையளிக் கப்பட்டு வரும் பணி பாட்டு அசைவியக்கம் எம்மிடையே வலுவாகவே செல்வாக்குச் செலுத்துகின்றது.
காலனித்துவ ஆட்சிக் காலத்தின் பின்னர் எமக்கான தனித்துவங்கள், செயற்படுதளங்கள் மற்றும் வழக்காறுகள் முழுமையாக தமது தொடர்ச்சிகளைப் பேண முடியாதவாறு
ஒலை 50

Page 5
தமிழ் மருத்துவம்
நெருக்கடிகளைக் கொண்டு வந்து சேர்த்தன. தொடர்ச்சி அறுபடல் பெரும் மரபாக செல்வாக்குச் செலுத்தும் பண்பாடு எம்மீது திணிக்கப்பட்டது. இன்றுவரை அதன் தாக்கத்துக்கு உட்பட்டவர்கள் மட்டுமல்ல, அதையே நமது பண்பாடுகளாகக் காவிச் செல்லும் கருவிகளாகவும் மாற்றப்பட்டுள்ளோம். எமக்கு ஆங்கில மருத்துவம் அல்லது அலோபதி மருத்துவம் புதிய அடையாளமாக மாறுகின்றது. இதுவே நவீன மனிதனி , நவீன வாழி க் கை, நவீனபண்பாடு போன்ற அம்சங்களின் கூறாகவும் இருப்பாகவும் மாறுகின்றது.
தமிழ் மருத்துவம் அல்லது தமிழர் மருத்துவம், சுதேசிய மருத்துவம், கிராமப்புற மருத்துவம், நாட்டுப்புற மருத்துவம், படிக்காதவர்கள் பின்பற்றும் முறை, பாட்டி வைத்தியம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. நகரம் X கிராமம், நவீனம் X பழமை, படித்தவர் X படிக்காதவர் போன்ற எதிர்வுகளுக்குள் இந்த அறிகைமரபு, வழக்காறுகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் நாம் வேர்கள் எதுவும் இல்லாத அல்லது அவற்றை அறுத்து வாழவேண்டியவர்களாக நிர்ப்பந்திக்கப் படுகிறோம். இன்று மருத்துவம் வணிகமயமாகிவிட்டது. பணி னாட்டு முதலாளிகள் எதையும் சந்தைப்படுத்தும் பண்பாட்டு மயமாதலின் செல்வாக்குக்கு உட்பட்டு வருகின்றனர். இன்னொரு புறம் அதீத தொழில் நுட்பமயமாதல் மருத்துவத்துறையை ஆக்கிரமித்துவிட்டது. இதனால் சாதாரண மக்களுக்கு இவை எட்டாக்கனியாக உள்ளன. மருத்துவத்தில் அரசின் பங்கிற்கு இருந்த இடம் நீக்கப்பட்டு சந்தை குந்திவிட்டது. தனியார் துறையின் ஆதிக்கம் வலுத்து விட்டது. செல்வந்தர்கள் மட்டுமே மருத்துவத்துன்றயை நாடும் போக்குகள்தான் இன்று பெருகிவருகின்றன.
நாம் இந்தப் பின்புலங்களை விமரிசன ரீதியில் அணுக வேணி டிய தேவை நமக்கு அவசியப்பட்டுள்ளது. ஆகவே எமக்கு தமிழ் மருத்துவம் / தமிழர் மருத்துவம் பற்றிய தேடல் முக்கியம். நமது சமூக வரலாற்று
ஒலை 50

பண்பாட்டு அசைவியக்கத்தில் மருத்துவம் வகித்த பங்கினை அறிந்துகொள்ள வேண்டும். மற்றும் மொழி, பண்பாடு, இனத்துவம் சார்ந்து மருத்துவம் பற்றிய ஆய்வுகளை விரிவாக்க வேண்டும். இதற்கான களங்களை நாம் அடையாளப்படுத்தவும் இதற்கான ஒரு தொடக்க முயற்சியாகவும் இந்த ஒலையை வெளியிடுகின்றோம்.
சமகாலத்தில் தமிழ் மருத்துவத்துறையில் இந்நாட்டில் உள்ள இரு பெரும் பல்கலைக் கழகங்களாகிய யாழ்ப்பாணப் பல்கலைக் கழகமும், கிழக்குப்பல்கலைக்கழகமும் தடம் பதித்து வருதல் மகிழ்ச்சிக்கும் பாராட்டுதற் கும் உரியது. அவை இத் துறையில் இனி னும் உலகத் தரத்துக்குரிய ஆழ்ந்த ஆய்வுகளை முனி னெடுக் க வேணி டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றோம்.
இன்று “ஓலை’ போன்ற கனதியான இதழை வெளியிடுவது அவ்வளவு சுலபம் அல்ல. ஆனால் ஆழமான விடயங்கள் குறித்து எம்மத்தியில் காத்திரமாகவும் அறிவு, ஆய்வு நிலைப்பட்டுச் சிந்திக்கவும், செயற்படவும், மேலும் மேலும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டிய அவசியப் பாடுகள் நமக்கு உண்டு. இதற்கான சிந்தனைத்திரள் பன்முகக் கருத்தாடல்கள் இங்கே தொகுக் கப் பட்டுள்ளன. நமக்கான மருத்துவம் அல்லது மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மீதான பன்முகப் பார்வையின் அவசியம் குறித்தான அக்கறைகளை இன்னும் விரிவாக்கவும் ஆழமாக்கவும் இந்த ஒலையை வெளியிடுகின்றோம்.
எமது வரலாறு, மொழி, சமூகம், இலக்கியம், பண்பாடு, அறிகைமரபு, போன்றவற்றின் மீதான மீள் வாசிப்புக்கள் அதிகம் நிகழ்த்தப்பட வேண்டும். தொடர்ந்து ஆய்வுகள் எமக்குப் புது வெளிச்சம் பாய்ச்ச வேண்டும். இந்தப் பணிகளை புரிந்து கொண்டு ஒலை வெளிவருகின்றது.

Page 6
தமிழ் மருத்துவம்
பண்பாடு என்ற சொல்லை, நாம் மிகச் சுருக்கமாகவே புரிந்து கொண்டிருக்கிறோம். உண்மையில் பண்பாடு என்பது தனிமனித ஒழுக்கம் சார்ந்த ஒன்றல்ல. பண்பாடு என்பது ஒரு சமூகத்தினுடைய வெளிப்பாடு. ஒரு மக்கள் திரள், தன்னை வெளிப்படுத்திக் கொள்கிற முறை. சொல்லாலே, செயலாலே, கருத்தினாலே தன்னை வெளிப் படுத்திக் கொள்கிற முறைக்குத்தான் பண்பாடு என்று பெயர். நம்முடைய தெய்வங்கள், நம்முடைய இசை, நம்முடைய கலை, நம்முடைய உணவு, gbb(p65)Lu 2 60L, bib(p60)L(Li 2-60L60)u blTib உடுத்துகிற முறை எல்லாமே பண்பாடு சார்ந்த அசைவுகள் தான்.
பண்பாடு என்பது ஒரு முழுமையான பொருள். இந்த முழுமை சார்ந்த பார்வை இல்லாது போன காரணத்தினாலேதான், ஒரு Wholystic approach 96ö 6) T göi (8u T 607 காரணத்தினாலேதான் பண்பாடு பற்றிய நமது பார்வை மிகவும் பலவீனமாக இருக்கிறது.
பண்பாடு என்பது, நம்முடைய ரத்த ஒட்டத்தோடு கலந்ததாகும். அது நமது மூச்சுக் காற்றைப் போல, நான் உங்கள் முன்னாலே மூச் சுவாங்கிக் கொணர் டு பேசிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்க வில்லை. நாம் மூச்சு வாங்கிக் கொண்டு இருக்கிறோம் என்பது எப்போது தெரியும் என்றால், மூக்கிலே ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் நாம் அதை உணர்கிறோம்.
பண்பாடு என்பதை அது மீறப்படுகிற போது உணர்கிறோம். இன்னொரு கட்டமாக, தேவைப்படுகிறபோது பண்பாட்டை உணர்கி றோம். நம் முடைய வீட்டிற்குத் தண்ணிர் போதாது என்கிற போது நம்முடைய வீட்டிலே மண்ணிற்குக்

நமது பண்பாட்டில் மருத்துவம்
பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன்
கீழாகவே தண்ணிர் இருக்கிறதே என்று எமக்குத் தோன்றும்.
எனவே சமூகத் தேவை ஏற்படுகிற போதும் நடைமுறை வாழ்க்கை மீறப்படுகிற போதும் நாம் பண்பாட்டைப் பற்றி கவலைப்படுகிறோம்.
உலகமயமாக்கம் என்ற சொல்லை ஏன் திரும்பத், திரும்பக் கேட்டுக் கொண்டிருக் கிறோம்? உலகமயமாக்கம் என்பது பொருளாதார நடவடிக் கை என்றுதான் பத்திரிகை படிப்பவர்களும், மெத்தப் படித்தவர்களும் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையிலே, உலகமயமாக்கல் என்பது ஒரு கலாச்சாரத் தாக்குதல். மிகப் பெரிய, தொன்மையான கலாசாரமுடைய தமிழ் மொழி பேசுகிற மக்கள் மீதும், இந்தியாவில் மற்ற மொழி பேசுகின்ற மக்கள் மீதும் அது மூலதனத் தாலி தொடுக்கப்பட்டிருக்கிற கலாசார யுத்தம். இந்தக் கலாசார யுத்தத்தை நம் மீது தொடுத்திருப்பது யார் என்று கேட்டால் மிக, மிகப்பெரிய நம்ப முடியாத அளவுடைய பன்னாட்டு மூலதனமே எனலாம்.
ஒரு 150 ஆண்டுக் கால, காலனிய ஆட்சியிலே எதை, எதை எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற பார்வையை நாம் இழந்து போயிருக்கிறோம். அதன் விளைவாக நாம் இன்று எப்படிக் கட்டப்பட்டிருக்கின்றோம்? இன்று இங்கு இருக்கிற, குறிப்பாக 25 வயதுக்குக் கீழாக இருக்கிற இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் உளவியல் எப் படிக் கட்டப்பட்டிருக்கிறது? எது. எது தேவையோ, அதையெல்லாம் தேவையில்லை என்கிறது. எது எது மறக்கப்பட வேண்டியதோ அதையெல்லாம் நினைக் கப் படவேணி டும் எண் கரிறது. எதையெல்லாம் மீற வேணி டும் என
ஒலை 50

Page 7
தமிழ் மருத்துவம்
நினைக் கிறோமோ, அதற் கெல லாமியூ அடங்கிப் போக வேணி டுமெனி கிறது. உண்மையிலே கலாசார போலித்தனத்தால் நாம் கட்டப்பட்டிருக்கிறோம். w
பன்னாட்டு மூலதனம் என்பது இப்பொழுது என்ன செய்கிறது என்றால், தான் எந்தெந்த நாடுகளிலெல்லாம் கொள்ளையடிக் கப் போகிறோமோ, அங்கெல்லாம் முதலில் பண்பாட்டு வன்முறையை ஏவுகிறது. வன்முறை என்றால் நமக்கு தோன்றுவது கத்தி, கம்பு, ஏ.கே.47. ஆனால் பண்பாட்டு வன்முறை என்பது மிகவும் நுட்பமானது. இதற்கு உதாரணம் தரலாம் என நினைக்கிறேன். தினத்தந்தியிலே, சுக்குக்கு என்ன பயன், மிளகுக்கு என்ன பயன், தூதுவளைக்கு என்ன பயன் என்று ஒரு சின்ன இடத்திலே போடுவார்கள். அதற்கு என்ன பெயர் தருவார்கள் என்றால் பாட்டி வைத்தியம். இதற்கு மரபுச் சொல் கை மருத்துவம் அல்லது வீட்டு மருத்துவம். இச்சொல்லுக்குரிய பாரம்பரியமான அறிவுத் தொகுதி என்னுடைய வீட்டிலே பிறந்த எல்லாப் பெண் பிள்ளைகளுக்கும் பங்கிடப்பட்டி ருக்கிறது முந்திய சமுதாயத்திலே. அதை என் சகோதரிக்கும், என் மனைவிக்கும், என் மகளுக்கும் சிறுதுளி தெரியும்.
அதை ஏன் “பாட்டி வைத்தியம்’ என்று சொலி கிறார் களெனர் றால் அது ஒரு வன்முறையான நிகழ்வு. ‘உங்கள் மேனியின் சிகப்பழகிற்கு’ என்று சொல்கிறார்களல்லவா? அதுவும் ஒரு பண்பாட்டு வன்முறைதான். பாட்டி வைத்தியம் என்ற சொல்லே ஒரு பண்பாட்டு வன்முறைதான். எப்படியென்றால், பாட்டி எப்படி சமகாலச் சமூகத்தோடு இயங்கிச் செல்ல முடியாதோ, அதுபோல இந்த மருத்துவமும் சமகாலச் சமூகத்தோடு இயங்கிச் செல்ல முடியாது. பாட்டி எப்படி பரிவோடு பார்க்கப்பட வேண்டியவளோ, அதுபோல இந்த மருத்துவமும் பரிவோடு பார்க் கப்பட வேணி டியது, அவ்வளவுதான்.
இது என்னுடைய வைத்தியம், அது பாரம் பரியமான வேர்களை என்னிடத்திலே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. நாம் மிக ஆழமான வேர்களைக் கொண்ட ஆலமரம் போன்றவர்கள். நமது பண்பாட்டு வேர்கள் மிக ஆழமானவை, நீளமானவை, மிகத் தொன்மையானவை. நமக்கு
ஒலை 50

நவிலிஇேந்திகும் ஆதிச் சநல்லூர் ப் பண்பாட்டிலிருந்து நமக்குச் சில செய்திகள் தெரிகின்றன. அந்த மக்கள் தாய்த் தெய்வத்தை வணங்கி இருக்கிறார்கள். கி.மு.10ம் நூற்றாண்டு அளவில் வெணி கலம் பயனர் படுத் தி இருக்கிறார்கள் . உலோகவியலிலே அவர்களுக்கிருந்த அறிவு தொல்லியல் ஆய்வாளர்களுக்கெல்லாம் பெரும் வியப்பைத் தருகிற செய்தி.
இந்தியாவினுடைய மற்ற பகுதிகளி லெல்லாம் இரும் புக் காலம் முடிந்து வெண்கலக்காலம் தொடங்குகிறது. ஆனால் இங்கு இரும்புக்காலம் தோன்றுகிறபோதே வெண் கலக் காலம் தோன்றியிருக்கிறது. தொல்லியல் ஆய்வாளர்கள், இந்தியாவிலேயே இரும்பை உருக்குகிற தொழில் நுட்பம் தாமிரபரணிக் கரையைப் போல் வேறு எங்கும் சிறந்ததாக இல்லை என்கிறார்கள். வெண்கலம் என்ற கலப்பு உலோகத்தைச் செய்கிற முறைக்கு அவர்கள் பயன்படுத்திய உலைகள் நமக்கு கிடைத்திருக்கிறது. அவர்கள் பயன்படுத்திய, உலோகத்தை உருக்கி ஊற்றுகிற சுடுமண் குழாய்களை நானும், நண்பர் லெனா. குமார் போன்றவர்களும், வீரவநல்லூர்க்கருகில் கண்டுபிடித்திருக்கிறோம். அவர்கள் என்ன கலனை (உருக்குவதற்கான பாத்திரம்) பயன்படுத்தினார்கள்? அவர்கள் என்ன எரிபொருளைப் பயன்படுத்தினார்கள்? வெப்பம் பற்றிய அவர்களின் அறிவு என்னவாக இருந்தது. இவையெல்லாம் ஆராய்ந்து கண்டு பிடிக்கப்பட வேண்டியவையாகும்.
நம்முடைய முன்னோர்கள், நமக்கு நல்ல வீட்டை, நல்ல காற்றை, நல்ல மண்ணை, இவை எல்லாவற்றையும்விட இவை பற்றிய அறிவையும் விட்டுச் சென்றிருக்கிறார்கள். இதை உணரும் போதுதான் பண்பாடு பற்றிய அடையாளங் களைப் புரிந்துகொள்கிறோம்.
இந்தப் பின்னணியிலேயே நாம் மருத்துவம் பற்றிப் பேசலாம். பண்பாட்டில் மருத்துவம் மட்டும் இல்லை. நம்முடைய இசை, கலை, நாடகங்கள், இலக்கியம், சிற்பம், சமயம், அந்தச் சமயம் சார் நீத வாழி வியல் விழுமியங்கள் இவையெல்லாம் சேர்ந்ததுதான் பண்பாடு. மருத்துவம் என்ற சொல்லுக்குத் தமிழில்
5

Page 8
தமிழ் மருத்துவம்
வேர்ச்சொல் “மரு” என்பதுதான். மரு என்ற சொல்லுக்குத் தமிழில் மணம் என்பதாகப் பொருள் இருக்கிறது. இந்தச் சொல் எப்படி வந் திருக்கக் கூடும் ? தாவரங்களை வகைப்படுத்துகிறபோது மனிதன் அந்த மணங்களிலிருந்து தான் வகைப்படுத்தி இருக்க வேண்டும். மருக்கொழுந்து என்றால் மணமுள்ள கொழுந்து என்று தான் அர்த்தம். இந்த மணம் தாவரங்களுக்கு மட்டுமல்ல, அசைகின்ற உயிர் உலகத்திற்கு கூட உண்டு. உதாரணமாக, புனுகு பூனை பார்த்திருப்பீர்கள்.
எனவே இந்த மரு என்ற சொல் , தாவரங்களை மணங்களினாலே அறிவதில் இருந்து தான் வந்திருக்கும் என நினைக்கிறேன். எனவே உணவாகட்டும், மருந்தாகட்டும் , தாவரங்கள் எனும் நிலை உயிரிகளை அவற்றின் மணத்தைக் கொண்டே அறிவதென்பது மிகவும் நுட்பமானது.
அறிவு என்பது எழுத்து மூலம் சார்ந்தது தான் என்று கருதக்கூடாது. அப்படிக் கருத 606155g European Epistomology - g(SJTitu மெயப் காணி முறைமை. அதனால் தான் ஐரோப்பியர் “எழுதத் தெரியாதவனெல்லாம் முட்டாள்” என்று சொன்னார்கள். எழுதத் தெரியாத நம் முன்னோர்களுடைய தாவரம் பற்றிய அறிவு பொய்யானதா? அவர்களுடைய மருந்து பற்றிய அறிவு பொய்யானதா? உலகம் பற்றிய அறிவு, அவர்களது வாழ்வியல் விழுமியங்கள் பற்றிய தன்னுணர்ச்சி பொய்யானதா?
எனவே அறிவு என்பது எழுத்து மரபு சார்ந்தது. எழுத்து வருபவனுக்குத்தான் அறிவு வரும் என்பது ஒரு பொய். எழுத்துப் பிறப்பதற்கு முன்னாலேயே அறிவு பிறந்தது. எழுதப்படிக்கத் தெரியாத ஒருவன், ஒரு அழகான சிற்பத்தை ஆக்கமுடியும், ஒரு நாற்காலியைச் செய்ய முடியும், இது எழுத்து மரபு பிறப்பதற்கு முன்னாலேயே பிறந்த அறிவு. இதைத்தான் கார்ல் மார்க்ஸ் “தொகுக்கப்படாத அறிவு” என்று சொல்வார்.
எப்பொழுது நீங்கள் எல்லாவற்றையும் புத்தகமாக / பனுவலாக (Textualize) பண்ண

விரும்புகிறீர்களோ, எழுத்து மூலம் கொள்ளை கொண்டு போய் “இதுதான் இதுதான்” என்று சொல்கிறீர்களோ, அப்போது அது முடிந்துபோகிற விஷயம். தோழர் அ.மார்க்ஸ் கூறியதுபோல, சித்த மருத்துவ அறிவு, ஏடுபடுத்தப்பட்டதினாலே முடிந்துபோனது என்று நினைத்தால் , நம்மைப்போல முட்டாள் யாரும் கிடையாது. ஏனென்றால் அண்டம் பற்றிய, பூமியைப் பற்றிய நமது அறிவு இன்னும் முழுமையான தல்ல. அறியப்படாத உயிரினங்கள் நிறைய இருக்கின்றன. அறியப்படாத மனிதரைப் போல, அறியப்படாத தாவரங்கள் நிறைய இருக்கின்றன. இவைபற்றிய அறிவு பெருகப்பெருக மனித வாழ்க்கை இன்னும் எளிமையாகும். இன்னும் இனிமையாகும்.
எனவே இந்த எழுத்து மரபுக்கு முந்திய அறிவு காட்டு வாழ்விலிருந்து, மணத்திலிருந்து பெற்ற மருத்துவ அறிவுதான். மணங்களைக் கொண்டு தாவரங்களை வகைப்படுத்திய அறிவுதான். மனித உடம்பிலிருந்தே மனிதன் நிறைய விஷங்களைக் கற்றுக்கொண்டான். வெட்டுகின்ற ஆயுதத்தை, குத்திக் கிழிக்கின்ற ஆயுதத்தை, அரைக்கின்ற ஆயுதத்தை இவற்றையெல்லாம் மனிதன் தன் பல்வரிசையிலிருந்தே கற்றுக் கொண்டான். தன்னை முழுமையான ஒன்றாகக் கருதி, தன்னிலிருந்தே கற்றுக்கொண்ட விஷயம். இப்படித்தான் மருத்துவ அறிவு தொடங்கி இருக்கிறது.
மருத்துவ அறிவு ஏனைய அறிவைவிட கூர்மையானதாக இருக்க வேண்டும். “மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன்’ என்பது சங்க இலக்கியம் , நோயாளிக்கு அவன் விருப்பப்பட்டதைக் கொடுக்காமல் ஆய்ந்து ஆய்ந்து மருந்து கொடுத்தானே, எனவே ஆராய்ச்சி இந்த மருத்துவ உலகிலிருந்துதான் துவங்குகிறது.
“மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன்’- இது Professional Ethics - என்று சொல்லக்கூடிய தொழில் சார்ந்த அறம். இது வேறு யாரையும் விட, மருத்துவம் செய்பவருக்கே அவருடைய தொழில் சார்ந்த அறம் முன்னிலைப்படுத்தப் படுகிறது தமிழ் சமூகத்திலே.
ஒலை 50

Page 9
தமிழ் மருத்துவம்
இந்த அறம் முன்னிலைப்படுத்தப்பட்ட காரணத்தினாலேதான் அரசுகள் எல்லாம் உருவாகிற போது, சொத்துகள் எல்லாம் பிறக்கிறபோது, ஆசைகள் உருவாகிறபோது மருத்துவத்தை ஒரு தொழிலாக, ஒரு முழுநேரப் பணியாக யாரும் கையிலெடுத் திருக்க மாட்டார்கள். எனவேதான், துறவிகள் இதனைக் கையில் எடுத்துக் கொண்டார்கள்.
சித்த மரபுக்கு முன்னாலே இங்கே சமண
மரபு என்று ஒன்று இருந்தது. ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களெல்லாம், சமணர்களாகத்தான் இருந்தோம். இன்றைக்கும் சமண மதத்தினுடைய தாக்கம் நம் வாழ்வில் உள்ளது. சமண மதம் நான்கே, நான்கு விஷயங்களைத் தான் வலியுறுத்தும். அந்த நான்கு என்னவென்றால், 1.சோற்றைக் கொடையாகக் கொடுப்பது
(அன்னதானம்) 2.கல்வியைக் கொடையாகக் கொடுப்பது
(ஞானதானம்) 3.மருந்தைக் கொடையாகக் கொடுப்பது
(ஒளஷத தானம்) 4.அடைக்கலம் கொடுப்பது (அடைக்கல தானம்)
இந்த நான்கையும் கழித்துவிட்டு பார்த்தால் அந்த “யுனெஸ்கோ’ என்ற அமைப்பே இல்லை.
கல்வியைக் கொடையாகக் கொடு, மருந்தைக் கொடையாகக் கொடு. இப்படி சொன்னது, உலகத்திலேயே சமண மதம் ஒன்றுதான். அது வேதத்தை எதிர்த்த மதம். வைதீகத்தை நிராகரித்த மதம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அது திகம்பர துறவிகள் இருந்த மதம். அவர்கள் மருத்துவ ஏடுகளைத் தவிர வேறு எதையும் கையிலே வைத்துக் கொள்ளக்கூடாது. அவர்கள் வாழ்ந்த குகைகளிலே குடிக்கத் தண்ணிர்க் குழி மட்டுமே உண்டு. குடிக்க டம்ளர்கூடக் கிடையாது. ஆனால் மருத்துவ ஏடு மட்டும் இருக்கும். முழுநேர மருத்துவப் பணியாளராக, ஒரு நாளைக்கு ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு, பட்டினி கிடந்த துறவிகள் இருந்தனர். இந்த மருத்துவம் இப்படித்தான் பாதுகாக்கப்பட்டு வந்தது. இப்படித்தான் இருந்தனர் அந்த மருத்துவ அறிஞர்கள். ஆனால் ஒன்று, நீங்கள் இன்று
ஒலை 50

சொல்வது போல அசையும் உயிர்களெல்லாம் அந்த மருத்துவத்திலே கிடையாது. ஏனென்றால் அவர்கள் புலால் உண்ணாத நோன்பிகள் ஆவர். அதே போல உலோகங்கள் சார் நீத மருத்துவமும் அவர்களிடம் கிடையாது. அவர்கள் முழுக் க முழுக் க மூலிகைகளைப் பயனர் படுத்துகிற மருத்துவர்களாகவே இருந்தார்கள். இன்றைக்கும் அழிந்துவிட்ட சமணக் குகைகள் நெல்லை மாவட்டத்திலே இருக்கின்றன.
இந்த மதத்தை வீழ்த்திவிட்டு வைதீகம் வந்தது. பாண்டிய அரசு, சோழ அரசு என்று இனக்குழுக்கள் எல்லாம் கரைக்கப்பட்டு, கரைக்கப்பட்டு அரசுகள் உருவாகும் போது மருத்துவம் தொழிலாக ஆகிறது. அதுவரை மருத்துவனும், ஆசிரியனும் காசு பெறக் சுடாது. அதுவரை மருந்து, விற்பனைக்குரிய பொருளல்ல. மருந்து விற்பனைக்குரிய பொருளல்ல என்ற எண்ணம் கி.பி. 7ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டிலே இருந்தது. 12, 13 ஆம் நூற்றாண்டுவரை இன்னொரு நினைப்பும் இருந்தது. அது, சோறு விற்கக் கூடாது. நெல் விற்கலாம். அரிசி விற்கலாம். வைதீகம் தமிழ்நாட்டை முழுவதும் வென்றெடுத்த பிறகுதான் சோற்றுக்கட்டியினை சத்திரங்களில் விற்க ஆரம்பித்தனர். 20ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதிவரை தண்ணிர் விற்கக்கூடாத பொருளாக இருந்தது. இதுதான் பண்பாடு.
எனவே தமிழ்நாட்டில் அரசு எந்திரம் உருவானபோது, வைதீகம் அதற்கு குறுக்கு வெட்டாகப் பாய்ந்தது. ஏனென்றால், அது தான் அரசுக்கு உவப்பான சித்தாந்தமாக இருந்தது. அப்பொழுதுதான் மிகப்பெரிய சமூக நிறுவனமாக கோயில் உருவானது. மாவட்ட ஆட்சித்தலைவரிடம் எவ்வளவு அதிகாரம் புதைந்து கிடக்கிறதோ அவ்வளவு அதிகாரம் கோயிலிலே கிடந்தது. இந்தக் கோயில் அதிகாரத்திலிருப்பவர்கள், நாம் என்ன சாதி? நாம் எங்கே இருக்கலாம். எப்படி உடுத்தலாம்? என்பதையெல்லாம் தீர்மானித் தனர். மருத்துவத்தைச் செய்து வந்த சாதியினர் கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டார்கள். (அன்றைய கணக்குப்படி பார்த்தால், குலம் அல்லது குடி, இன்றையக் கணக்குப்படி சாதி).

Page 10
தமிழ் மருத்துவம்
அதற்கு முன், அரசு உருவாகிறபோது அக்குடிகளின் நிலைமை என்ன என்று கேட்டால், உங்களுக்கு மிகவும் வியப்பாக இருக்கும். கி.பி. 8 ஆம் நூற்றாண்டிலே மாறஞ்சடையன் என்கின்ற பாண்டியனுக்கு முதலமைச்சராக இருந்தவர் மருத்துவ சாதியைச் சார்ந்தவர். இவர் இறந்த பிறகு இவரது தம்பி முதலமைச்சராகிறார். இவர்கள் மானுாருக்குப் பக்கத்திலே இருக்கிற களக்குடி எனும் ஊரைச் சார்ந்தவர்கள். இவரைப் பற்றியும், இவரது தம்பியைப் பற்றியும் பேசுகிற கலி வெட்டு ஒன்று மதுரை மாவட்டம் ஆனைமலை நரசிங்கப் பெருமாள் கோயிலிலிருக்கிறது. எனவே ஒரு காலத்தில் அரசனுக்கும், அரசதிகாரத்திற்கும் நெருக்கமாக மருத்துவர்கள் இருந்திருக்கிறார்கள்.
அதற்குப் பின், அரசதிகாரம் பெருகப், பெருக, அரசுகள் பேரரசுகளாக மாற, மாற, கோயில்கள் துணை நிறுவனங்களாக ஆக, ஆக, மருத்துவம் செய்கிற சாதி வெளியில் வைக்கப்பட்டது. அப்புறம், வைதீகம் அரசை கையிலெடுத்துக் கொண்டது. இன்றைக்கும் போல, அன்றைக்கும் எழுதப்படாத அதிகாரம் அதன் கையிலே இருந்தது. மருத்துவக் காரணம் என்ற பெயரில் மருந்துப் பொருள்களின் மீது வரிவிதித்தனர் அரசர்கள். இது நம் பண்பாட்டிலே ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்.
அ.மார்க்ஸ் சொன்னதுபோல, ஆகயிரண்டு மேல்சாதியிலே யாரும் மருத்துவராகக் கூடாது. மருத்துவத் தொழில் செய்யக் கூடாது. ஏனென்றால் அவர்களுக்கு மற்ற எல்லாரும் தொடப்படாத சாதி. இந்த தொடப்படாத சாதிக்காரனுக்கு எப்படி உடம்பைத் தொட்டு மருத்துவம் செய்வது? எனவே மருத்துவர்கள் பட்டுத் துணியைப் போட்டு “நாடி’ பார்த்தனர்.
இன்னொரு செய்தி, சித்த மருத்துவத்திலே இரசவாதம் என்றும் ஆங்கிலத்திலே Alchemy என்றும் சொல்லப்படும் கீழ் உலோகங்களை உயர்ந்த உலோகங்களாக்கும் முறை சொல் லப் பட்டுள்ளது. ஒரு பேரரசு உருவாகிறபோது, அது பல நிகழ்வுகளைக் கண் கொத்திப் பாம்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும். அரசுகள் Alchemy வளர்வதை விரும்பாது. ஏனென்றால், ஒருவன் இரும்பைத் தங்கமாக்குகிற விஷயத்தைக் கண்டுபிடித்து
8

விட்டால், ஒரே நாளில் அந்த அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட முடியும். எனவே அரசு அதை விரும்பாது. எனவே இந்த அரசியல் உருவான போது Alchemy முழுமையாக அரசினாலே தடைசெய்யப்பட்ட ஒன்றாக இருந்தது.
சோழ அரசின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, அடித்தள மக்களைச் சார்ந்து நிற்கிற வணிக் குழுக்களை அது புறந்தள்ளியதாகும். இதனால் மக்களுடைய எதிர்ப்பு அரசுக்கு உருவானது. மக்களுடைய எதிர்ப்பை அணிதிரட்டியவர்கள் சித்தர்கள். இவர்கள் நகர்ப்புறத்துக்கு வரவே இல்லை. எனவே இந்தச் சித்தர் களெல லாம் கிராமப்புறத்துக்குப் போனார்கள். மருந்து அவர்களுக்கு ஒரு வலிமையான ஆயுதமாக இருந்தது. ஏனென்றால் மருத்துவனுக்கு மட்டும் எந்த நேரத்திலும், எங்கும் நடக்கின்ற உரிமையைச் சமுதாயம் அளித்திருந்தது. எனவே மக்களுடைய நம்பிக்கையை அவர்கள் பெற்றிருந்ததற்கு இந்த மருந்து எனும் ஆயுதந் தான் காரணம். சித்தர் மரபு வளர்ந்த போதுதான் நஞ்சை மருந்தாகப் பயன்படுத்தக்கூடிய முறை பிறந்தது. அதற்கு முன் அது இருந்ததாகத் தெரியவில்லை. சித்தர்களையும் மக்களையும் இணைத்தது மருந்து.
நாங்கள் கல் லுாரியில் படித்துக் கொண்டிருக்கிற காலம் வரைக்கும் சித்தர்கள் இலக்கியத்தை மதிக்கவே மாட்டார்கள். "ஆச்சு போச்சுன்னு பாட்டு எழுதியிருக்கான். இதை கல்லூரிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க முடியுமா?’ என்பார்கள். இப்பொழுதுதான் கலக மரபு சித்தர்கள் என்று சொல்லி சித்தர்பாடல் களைக் கொஞ்சமாவது வைத்திருக்கிறார்கள்.
மிகச்சில ஏடுகள் தவிர, 19ஆம் நூற்றா ண்டிலே மக்களிடம் மனப்பாடமாக இருந்ததைப் பெற்றுத்தான் பெரும்பாலான சித்தர் பாடல்களை அச்சிட்டுவந்தார்கள். அதனாலேயே அதில் சில தவறுகள் எல்லாம் இருந்தது. ஆயிலைத் (Oil) தடவுவாய் என்றெல்லாம் பாட்டிருக்கிறது. இந்த ஏடுகளெல்லாம் திருவாவடுதுறை மடத்திலேயோ, தருமபுரம் மடத்திலேயோ, குன்னக் குடி மடத்திலேயோ இருக்காது. இங்கெல்லாம் சங்க இலக்கியமிருக்கும். தேவாரம் இருக்கும். திருவாசகம் இருக்கும். ஆனால் மருந்துவ
ஒலை 50

Page 11
தமிழ் மருத்துவம்
ஏடுகள் இருக் காது. ஏனென்றால இவைகளெல லாமி மக் களிடமிருந்து பெறப்பட்டுதான் பதிப்பிக்கப் பெற்றன. இதற்கு திருத்திய பதிப்பு கொண்டு வருவதற்கு ஒரு உ.வே.சாமிநாதய்யர் கிடைக்கவில்லை. ஏனென்றால் இவை மடங்களில் பாதுகாக்கப் படவில்லை.
ஆங்கிலம் தெரிந்தால எலி லாம் தெரிந்துவிடும் என்கிற ஒரு கலாசார போலித்தன்மை நம் முதல் எதிரி. இந்தப் போலித்தன்மையை முதலில் உடைக்க வேண்டும். இதை ஒரு வன்முறையாகக் கொண்டு வருகிறார்கள்.
நான் முதலிலேயே கூறியபடி, இந்த “பாட்டி வைத்தியம் என்ற சொல் ஒரு வன்முறை” நம்முடைய பாரம்பரியமான வேர்களை எல்லாம் அழித்தால் தானி (பணி பாடு எண் பது ஆணிவேராகவும், பக்கவேர்களாகவும், சல்லி வேர்களாகவும் அமைந்தது. இதை அறுத்து எறிந்தால்தான்) பன்னாட்டு முதலாளிகளுக்கு எதையும் சந்தைப்படுத்த முடியும். எனவே ஆங்கில மருத்துவம் வருகிறபோதே அதிகாரத்தோடு வருகிறது. எதுவரைக்கும் அதிகாரத்தோடு வந்தது என்று கேட்டால் 1920 வரைக்கும் கீழ் சாதிக்காரர்கள் யாருமே மருத்துவராக முடியாது. அதுவரை மருத்துவக் கல்லுTரியிலே சேர வேணி டுமானால் குறைந்தபட்சம் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற விதி இருந்தது.
ஆங்கில மருத்துவம் படிப்பதற்கு இது ஒரு முன் நிபந்தனை, இன்று பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட என்றெல்லாம் சொல்கிறோமே, இந்த சாதிகளிலே எத்தனை பேருக்கு அனி றைக் கு சமஸ் கிருதம் தெரிந்திருக்கும்? 1920ல் பனகல் அரசரின் நீதிக்கட்சி அமைந்த பிறகுதான் அந்த ஆணையை நீக்கினார்கள்.அதுவரை ஆங்கில மருத்துவம் என்பது மேல் சாதி அதிகாரத்தோடு கட்டப்பட்டிருந்தது. அதிகாரம் என்பதே இங்கு சாதி வழியாகக் கட்டப்பட்டது. நம்மால் இன்றைக்குங் கூட அதை முழுமையாக உடைத்து எறிய முடியவில்லை.
ஒலை 50

சித்த மருத்துவம் நோயாளியை மதிக்கின்ற மருத்துவமுறையாகும். “உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் மற்றிந்நாற் கூற்றே மருந்து” என்பது வள்ளுவர் கண்ட மருத்துவ நெறியாகும்.
நோயாளி மதிக்கப்பட வேண்டியவன். நோயாளிகளிடமிருந்து மருத்துவர் கற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்களும் இருக்கிறது. ஆங்கில மருத்துவம் நடைமுறையில் அதை ஏற்றுக்கொள்ளுவதில்லை. மருத்துவரிடம் நோயாளி ஒரு கேள்வி கேட்டால், நோயாளியை ஆங்கில மருத்துவர் மதிப்பதில்லை. எனவே நோயாளி மதிக் கப்பட வேணி டியவன் என்பதையும், அவனிடம் இருந்து கற்றுக் கொள்ள விஷயம் இருக்கிறது என்பதையும் நிராகரிக்கிறது அந்த மருத்துவம்.
இயல்பான நிகழ்வுகளை, இல்லாத நோய்களை எல்லாம் கண்டுபிடிக்கிறார்கள். எப்படி? பிரசவம் என்பது ஒரு இயல்பான நிகழ்வு. கருக்கொண்டிருக்கிற ஒரு பெண்ணை ஒரு ஆங்கில மருத்துவரிடம் அழைத்துப் போனால், அந்தப் பெண்ணை அந்த மருத்துவர் ஒரு நோயாளியாகவே பார்க்கிறார், அப்படித்தான் 9e4gí6ğ5 LD([bğbğ5J6)J(Up60)p, European Epistomology - அவருக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. அவரை sególuTLD36) 9gb5 European Epistomology ág5 அடிமையாய் இருக்கிறார். கருக்கொண்ட பெண்ணை ஒரு நோயாளியாகப் பார்ப்பது மாபெரும் தவறு. கருக்கொள்ளுதல் என்பது ஒரு இயல்பான நிகழ்வு. அது எப்படி நோயாகும்? மருத்துவர்கள் இல்லாமலேயே காலம் காலமாக எத்தனையோ மகப்பேறுகள் நடந்திருக்கின்றனவே.
கருக்கொண்டு நான்கு மாதம் ஆன பெண் ஒரு ஆங்கில மருத்துவரிடம் போகும் போது, “வயித்துல பிள்ளை எப்படி இருக்கிறதோ’ என்று நினைத்துக் கொள்கிறாள். திரும்பி வரும்போது குழந்தை என்ற சொல்லை மறுத்துவிட்டு Baby என்ற சொல்லோடு வருகிறாள். இங்கு கொள்ளை அடிக்கப்பட்டது நம்முடைய காசு மட்டுமல்ல. நம்முடைய கலாச்சாரம், நம்முடைய மொழி.
பார வண்டி செய்கிற ஒரு ஆசாரிக்கு அதனைப் பற்றி முழுமையான அறிவு உண்டு. என்ன மரத்தில் செய்ய வேண்டும்? என்ன பட்டை
9

Page 12
போட வேண்டும்? எவ்வளவு பாரம் தாங்கும்? பட்டையினுடைய கனம் என்ன? என்று பொருள் பற்றிய முழுமையான அறிவு உண்டு. பொருளுற்பத்தி பற்றிய இந்த முழுமையான அறிவு (86606)infoisosol (Division of labour), DL பயிற்சி (Specialisation) இவற்றால் பாதிக்கப் பட்டுள்ளது.
இன்றைக்கு மருந்து பற்றிய முழுமையான அறிவு ஆங்கில மருத்துவர்களுக்குக் கிடையாது. மருத்துவப் பிரதிநிதிகள் போய் மருத்துவரிடம் விளக்கிச் சொன்னாற்தான் உண்டு. எனவே பொருள் பற்றிய முழுமையான அறிவு இருக்கக் கூடாது என்பதிலே தெளிவாக இருக்கிறது உலக மயமாக்கலுக்குப் பின்னணியில் இருக்கிற பன்னாட்டு மூலதனம்.
நமக்கு காய்ச்சல் வருகிறது. நம்முடைய பாட்டி, வீட்டிலே இருக்கிற சுக்கு, மிளகு இன்னும் சில பொருட்களை இன்ன விகிதத்தில் என்று கலந்து குடிநீரிட்டுத் தருகிறாள். இரண்டு நாட்களில் சரியாகவில்லையா? நிலவேம்பைச் சேர்த்துக்கொடு என்கிறாள். பிணி பற்றிய அறிவு, எடுத்துக் கொள்ளக் கூடிய மருந்துப் பொருட்களைப் பற்றிய அறிவு, மருந்து பற்றிய அறிவு நம்முடைய பாட்டிக்கு இருக்கிறது. அவளே மருத்துவராக இருக்கிறாள். அவளே Pharmacologist ஆக இருக்கிறாள். அவளே நர்சாகவும் இருக்கிறாள்.
எனவே பொருள் பற்றிய இந்த அறிவைக் கொன்றழித்தது யார்? இதை மீட்டெடுப்பது யார்? மீட்டெடுப்பது எப்படி? என்பது தான் நம்முன் உள்ள கேள்வி.
இந்தப் பாரம்பரியமான அறிவுத் தொகுதி, மருத்துவத்துறையில் மட்டுமல்ல எல்லாத் திசைகளிலும் கொன்றழிக்கப்படுகிறது என்பதைத் தான் நான் சொல்ல விரும்பு கிறேன்.
ஏனென்றால் இந்த வெப்பமண்டலம் பற்றிய அல்லது அண்டத்தின் இந்தப் பகுதியைப் பற்றிய
O

அறிவை உள்வாங்கிக் கொண்ட ஒரு மருத்துவம், ஒரு இலக்கியம், ஒரு இசை இருந்திருக்க வேண்டுமல்லவா? இவை அனைத்தும் இல்லாமல் போனதற்கான காரணம் இந்த மூலதனத்தினுடைய உள்ளார்ந்த தன்மை “சுரண்டல்” என்பது தான். அப்படியென்றால் இதற்கு எதிராக நாம் என்ன செய்ய வேண்டும்?
நம்முடைய முன்னோர்கள் எல்லாம் சமூகப் பொறுப்பு உடையவர்கள். அவர்கள் சமூகப் பொறுப்பு உடையவர்கள் என்பதினாலேதான் நமக்கு சுத்தமான தாமிரபரணி நீரை விட்டுச் சென்றார்கள். அவர்கள் சமூகப்பொறுப்பு உடையவர்கள் என்பதினாலேதான் வயல்களிலே இரசாயன உரங்களை இடாமல், இயற்கை வளத்தை அப்படியே நம் கையில் தந்துவிட்டு போனர்கள். நாம் தான் ஃபாக்டம் பாசையும், யூரியாவையும் போட்டோம். பூச்சி மருந்துகளைத் தெளித்தோம். இதுதான் நம் பண்பாட்டிலிருந்து கற்றுக்கொண்டதாகும். கிடைக்கிற எல்லாப் புதிய அனுபவங்களையும் கொணர் டு தனக்குத்தானே தகவமைத்துக் கொள்வது. அதுதான் நம் பண்பாட்டின் பலன்.
Cultural Osmosis 676io QFTssal Gurjassi. ஒரு நல்ல உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் கோதுமை விளையாது. ரொட்டி, கோதுமையிலே செய்கிற உணவு. ரொட்டியை ஐரோப்பியர் கொண்டு வந்தனர். ரொட்டி மட்டுமல்ல கேக், மக்ரூன் இன்னும் என்னென்னவோ கொண்டு வந்தனர். இந்த ரொட்டியை மட்டும் பிரசவித்த பெண்ணின் Post natal உணவாக மாற்றிக் கொண்டார்கள் இல்லையா? அதற்கு பெயர் தான் Cultural Osmosis கலாசார தகவமைவு இது இந்தக் கலாசாரத்தின் பலமான அம்சம். இதையெல்லாம் நாம் இழந்து கொண்டு இருக்கிறோம் என்கிற கவலையினை, அக்கறையினை, நாம் பெற்றால்தான் நம்முடைய பாரம்பரியமான இந்த மருத்துவத்தை, நாளைய தலைமுறையின் தேவைக்கு ஏற்றதாக நம்மால் சீரமைக்க முடியும் எனக் கருதுகிறேன்.
(15.06.2005 அன்று Siddha Fest 05 விழாவில் பேராசிரியர் தொ.பரமசிவன் நிகழ்த்திய உரை)
ஒலை 50

Page 13
தமிழ் மருத்துவம்
தமிழர்
வாழ் வினி பரிமாணங்களோடு இணைந்ததாகத் தமிழர்களது நோயறி கல்வியும் நோய் அகல்விக்கும் நுண் முறைகளும் அமைந்திருந்தன. உளநோய் மற்றும் உடல் நோய் என்ற இருதலைப் பரிமாணங்களோடும் இணைந்ததாகத் தொன்மையான தமிழர் சடங்குகளும், வினைப்பாடுகளும் ஒன்றிணைந்திருந்தன. கூத்தும், குரவையும், வெறியாட்டும், நோய் அகல்விக்கும் “கூட்டுநிலை’ச் செயற்பாடு களாயின. கூட்டு வாழ்க்கை முறையிலே நோய் அகல்விக்கும் செயல்முறை தனி யொருவருக்குரியதாக ஆக்கப்படாது பலருக்குரிய கூட்டுச் செயற்பாடாக (Collective Activity) is BIT600TLJ'Lg).
கூட்டுச் செயல் முறையிலிருந்து படிமலர்ச்சி கொண்ட ஒரு மருத்துவச் செயற்பாடாக “மாயச் செயல் மருத்துவம்” (Magic Medicine) 3Lub Gubp6.j5g. Lóla, அண்மைக்காலம் வரை மருத்துவச் சித்தர்கள் மாயச் செயல் மருத்துவத்தை மேற்கொண்டு வந்தமைக்கு ஆதாரங்கள் உள்ளன. இணுவில் காரைக்காலிலே இடம் பெற்று வந்த மருத்துவ முறையில் “மாயச் செயலும் சித்த மருந்தும்” என்ற இருநிலை அணுகுமுறைகள் காணப்பட்டன. மாயச் செயல் இசை, கூத்து மேற்கொள்வோர் அவியல், படையல், மாயச் சொல் ஒப்புவிப் போர், சடங்குகள், இயற்றுவோர், அரைப்போர், உரைப்போர், என்றவாறு பலரின் செயற்பாடுகளை உள்ளடக்கிய “கூட்டுமுறைமை’யாக அமைந்திருந்தது.
வேட்டுவ வாழ்க்கையிலிருந்து மந்தை மேய்ப்பை நோக்கிய வளர்ச்சியும்
ஒலை 50

கல்விவழிப் புலக்காட்சியும் மருத்துவ முனைப்புக்களும்
பேராசிரியர் முனைவர் சபா ஜெயராசா
அவற்றிலிருந்து பயிர்ச் செய்கையை நோக்கிய வளர்ச்சியும் அவற்றோடிணைந்த கல்விச் செயற்பாடுகளும் இயற்கைச் சூழலை விளக்கும் அறிகைப் பாடுகளையும் , பகுத் தாராயும் செயற்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்லத்தூண்டின. அந்த வகையில் நோயை வருவிப்பதிலும் அகல்விப்பதிலும் நீரின் சிறப்பியல்புகள் அறியப்படலாயின. “நீர்வழியாக்கை”, “நீரின்றியமையாது யாக்கை” முதலாம் புலக்காட்சிகள் மேலெழலாயின. மருந்து சக நீர் “மருத்துநீர்’ என்ற தொடரும் வழங்கலாயிற் று. இந்த நிலையில் தமிழருடைய பண்டைய மருத்துவக்கல்விக்கும் சுமேரியருடைய தொனி மையான மருத்துவக்கல்விக்குமிடையே இணைப்புக்கள் இருத் தலைக் காணலாம் . சுமேரிய மருத்துவர்கள் “அ-சு’ (aZu) என அழைக்கப்பட்டனர். அதன் பொருள் அவர் “நீர் பற்றி அறிந்தவர்” என்பதாகும். (பேராசிரியர் அ.சதாசிவம் அவர்கள் தமிழ் மொழிக்கும் சுமேரிய மொழிக்குமிடையே காணப்படும் நெருங்கிய உறவைச் சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.)
தமிழர் மருத்துவக்கல்வியும் அதனோடி ணைந்த நோய்க் கல்விக்கும் செயல் முறைகள் பன்மைப்பாங்குடையவையாகக் காணப்பட்டன. அவ்வாறான அறிகையின் வெளிப்பாடு பலவகை மருந்தாக்கங்களுக்கு இட்டுச் சென்றது. தாவரம், வேர், இலை, விதை, கிழங்கு, காய், பழம், விலங்குகள், கனிமப் பொருட்கள், வெப்ப வழியாகப் புடமிடப்பட்ட பொருட்கள் என்ற பலவகைப் பொருட்கள் தமிழர் மருத்துவத்திலே பயன்படுத்தப்பட்டன.
11

Page 14
தமிழ் மருத்துவம்
சூழலைப் பகுத்தறியும் கல்வியின் முன்னேற்றம் கோள்கள் பற்றிய ஆய்வை மருத்துவத்துடன் இணைக்கும் செயற் பாடுகளை வளர்க்கலாயின. மருத்துவர் “கோளறி கணக்கர்” என அழைக்கப்பட லாயினர். கோள்களினதும் உடுக்களினதும் நகர்வுகள் மனித உடலிலும் உள்ளத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற கருத்தும் வளரலாயிற்று.
குருதிச்சுற்றோட்டம் பற்றிய கருத்து தொன்மையான தமிழ் மருத்துவர்களிடம் இருந்தமைக்கு "நாடி பிடித்தறிதல்” சான்றாக வுள்ளது. “இருவழிக் குருதி” என்ற தொடர் நாளம், நாடி பற்றிய தொன்மையான தமிழர் களின் மருத்துவப் புலக் காட்சியை வெளிப்படுத்துகின்றது. “வாநாட்டம்’, “போநாட்டம்” என்றும் நாடி மற்றும் நாளம் பற்றிய எண்ணக்கருக்கள் அழைக்கப்பட்டன.
சூழல் பற்றிய பகுப்பாய்வின் வளர்ச்சி ஐம்பூதங்கள் பற்றிய எண்ணக்கருவாக்கத் துக்குத்துணை செய்தது. மனித உடல் ஐம்பூதங்களால் ஆக்கப்படுகின்றது என்றும் அவற்றாலே நோய்கள் உருவாக்கப்படுதலும், அவையே நோயைக் குணமாக்கும் வல்லமை கொண்டவை என்றும் எடுத்துரைக்கப்பட்டது. ஐம்பூதங்கள் எதிர் வழிப்புகல் “நோய்’ என்றும், நேர் வழிப்புகல் “நோய் நீக்கல்” என்றும் கூறப்பட்டது. நேர் வழிப்புகல் வலஞ்சுழி எனவும் எதிர்வழிப் புகல் இடஞ்சுழி எனவும் அழைக்கப்பட்டது. ஐம்பூதங்களுக்கும் மனித உடலுக்கு மிடையே இசைவு நிகழும் பொழுது நோய் ஏற்படமாட்டாது என நம்பப்பட்டது.
நோய் நீக்கும் செயற்பாட்டுக்கு முந்திய நிகழ்ச்சி தமிழரது மருத்துவ அறிகையிலே “முற் குறிப்பு” எனப்பட்டது. முற்குறிப்பை “தலைவாயில்’ என்று கூறும் மரபு காணப் பட்டது. அதாவது மருந்து உண்பதற்கு முன்னதாக இடம் பெறும் குளிப்பு, விரதம்,
12

உள ஒடுக்கம், முதலியவற்றை முற்குறிப்பு அல்லது தலைவாயில் குறித்து நின்றது. கிரேக்கர்களது தொன்மையான மருத்து வத்திலும் இவ்வகை, முற்குறிப்பு இடம் பெற்றிருந்தமைக்குச் சான்றுகள் உள்ளன. நீர் பற்றிய அறிவு முற்குறிப்பிலே “முழுக்கு” அல்லது குளிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. “குளிப்பியற்கலை” (Balneology) தமிழர் மருத்துவ இயலின் சிறப்பார்ந்த பரிமாணமாக அமைந்திருந்தது.
தமிழரது தொன்மையான மருத்துவச் செயற்பாடுகளிலே பாவனை மெப்பாடுகளும் (imitation) சிறப்புப் பெற்றிருந்தது. இது “போல இயற்றல்” என்றும் குறிப்பிடப்படும். பரிணாம வளர்ச்சியில் இச் செயற்பாடு மனிதக் குரங்கு போன்ற உயர்நிலையான விலங்குகளின் வழியாக எழுச்சி கொண்டதென ஜோர்ச் தோம்சன் தமது கருத்தை வெளிப்படுத்தி யுள்ளனர். இயற்கையின் எதிர் மறையான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் நேர்நிலையான செயற்பாடுகளை ஊக்குவிப் பதற்கும் அவற்றைப் பாவனை செய்தல் பயன் தருமென தொல்குடிமக்கள் நம்பினர். அந்த நம்பிக்கை தமிழர் மருத்துவ அறிகையிலும் நீட்சி கொண்டது. சூறைக் காற்றையும், நீரோ ட்டத்தையும், நெருப்புச் சுவாலையையும், பாவனை செய்து ஆடுவதாலும், பாடுவதாலும், மாயச் செயல் ஒலிப்பை மேற்கொள்வதாலும் நோய் ஒடி நீங்கிவிடும் என்ற புலக் காட்சி நிலவியது. பாவனை முறைமையை அடியொற்றியே தமிழர் மருத்துவத்திலே “குளிப்பியல்” வளர்ச்சியடைந்தது. அதாவது நீரின் அசைவு நோயைக் கழுவிச் சென்றுவிடும் என்பது நம்பிக்கை.
தமிழர் மரபிலே வரன்முறையான மருத்துவக்கல்வி “புலவர்” மரபிலிருந்தே தோற்றம் பெற்றது. நல்லதும் கெட்டதும், நோயும் வாழ்வும் அறிவோராகப் புலவர் இருந்தனர். தமிழ் மருத்துவர்கள் புலவர் களாக இருந்து பாடல் புனைதல் இன்றும் காணப்படுகின்ற ஒரு தோற்றப்பாடாகவுள்ளது.
ஒலை 50

Page 15
தமிழ் மருத்துவம்
மருத்துவ வழியான புலக்காட்சியே பிற்காலத்து நூல்களுக்குக் காப்புப்பாடும் முறைமையைத் தோற்றுவித்தது. நோய்வராது காத்தல் என்ற செயற்பாட்டிலிருந்து அருவநிலை இலக்கியச் சிந்தனைக்கு இடையூறுவராது காவல் செய்யும் காப்பு எண்ணக்கரு உருவாக்கம் பெற்றது. உருவ வடிவிலான செயற்பாடுகளை அடியொற்றி அருவ நிலையான சிந்தனைகள் வளர்ச்சியுற மனித “உள்ளம்” பற்றிய எண்ணக்கரு மேலோங்கியது. சித்தர் மரபில் இது, “மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே” எனக் குறிப்பிடப்பட்டது. சித்தர்கள் புலவர்களாகவும், உடல் நோய் மற்றும் உளநோய் தீர்க்கும் வல்லுனர்க ளாகவும் ஒரே தளத்தில் இயங்கியமை குறிப்பிடத்தக்கது.
பொருணி மிய நிலையில் பயிர்ச் செய்கைச் சமூகச் செயற்பாடுகளோடு இணைந்ததாகச் சித்த மருத்துவம் வளர்ச்சிய டையத் தொடங்கியது. பயிர்களின் விளைச் சலும், கால்நடைகளின் பெருக்கமும் “சித்து’ என்ற எண்ணக்கருவினாற் புலப்படுத்தப்பட்டது. வேளாணி மை யுகம் ஆணர் களினி உடலுழைப்பை முக்கியத்துவப் படுத்தியது அந்நிலையிலே தமிழகத்துச் சமூகத்திலே முக்கியத்துவம் பெற்று விளங்கிய மருத்துவிச்சியரின் முக்கியத்துவம் குன்றத் தொடங்கி, ஆண் மருத்துவர்களின் சமூக முக்கியத்துவம் மேலெழலாயிற்று.
மேலும் நிலத்தைப் பண்படுத்துதல் போன்று உடலையும் உள்ளத்தையும் பண்படுத்தலாம் என்ற “விரிவாக்கற் சிந்தனை” வளர்ச்சி பெறலாயிற்று சித்த மருத்துவம் வரன்முறையான கல்வி வயப்பட்டுவளர, மருத்துவிச்சி மரபு நாட்டாரியல் தழுவி வளரலாயிற்று.
பயிர்ச் செய்கை ‘போகம்’ என்ற கால
அட்டவணைப்படி நிகழ்த்தப்படுகின்றது. ‘போகர்
என்ற எண்ணக்கரு பயிர்ச் செய்கைச்
ஒலை 50

சமூகவியல்புக்கும் சித்த மருத்துவத்துக்குமுள்ள இணைப்பைச் சுட்டிக் காட்டுகின்றது. சித்த மருத்துவம் தொடர்பான பனுவல்களை ஆக்குவோர் “போகர்’ என அழைக்கப்படுதல் உண்டு. சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்திலும் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்திலும் பாண்டிச்சேரி பிரஞ்சு இந்திய ஆய்வுக்கழகத்திலும், சித்தமருத்துவ மேம்பாட்டுக்குழுவிலும், தமிழ் பல்கலைக் கழகச் சுவடிகள் நூலகத்திலும், போகர் என்ற பெயரைக் கொணி டவர்கள் எழுதிய சித்தமருத்துவ நூற் சுவடிகள் காணப்படு கின்றன. இலங்கையில் வட்டுக்கோட்டை, கல்வியங்காடு, ஏழாலை, புலோலி, இணுவில், சில்லாலை போன்ற இடங்களில் வாழ்ந்த சித்த மருத்துவர்களிடம் போகர் ஏட்டுச் சுவடிகள் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது.
பயிர்ச் செய்கையோடிணைந்த நில மானிய சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்கள் சித்த மருத்துவவியலின் விழுமியங்களாக விரிவு பெற்றன. பயிர்கள், பண்ணை விலங்குகள், மனிதர் என்றவாறான தொடர்புகளும் அரவணைப்பும் பயிர்ச் செய்கைப் பண்பாட்டில் மேலோங்கியிருந்தன. பயிர்களுக்கு ஏற்படும் , நோய், பண்ணை விலங்குகளுக்கு ஏற்படும் நோய் மனிதருக்கு ஏற்படும் நோய் ஆகிய மூன்றையும் குறிக்கும் பொது எண்ணக் கருவாக ‘நசம்’ என்பது பயன்படுத்தப் பட்டது. மேலும் நிலமானிய சமூகத்தின் படிநிலை (Hierarchy) இயல்புக் கேற்றவாறு சமூகத்தின் உயர்
இருந்தனர். சமூகத்தின் தாழ் அடுக்குகளில் நாட்டார் மருத்துவ முறைகளே மேலோங்கி யிருந்தன.
வரன்முறையான கல்வி (Formal Education) சமூகத்தின் உயர் அடுக்கினருக்கு உரியதாகவும் வரன்முறைசாராக் கல்வி தாழ் அடுக்கினருக்கு உரியதாகவும் நிலமானிய சமூகத்திலே காணப்பட்டது. வரன் முறையான கல்வியுடன் சித்த மருத்துவம் தொடர்புபட்டிருந்தமையை பரராசசேகரம்
13

Page 16
தமிழ் மருத்துவம்
பாயிரத்திலே கண்டு கொள்ள முடிகின்றது மொழியுமாறே” என்ற தொடர் பாயிரத்தில் பொன்னையாபிள்ளை பதிப்பு) மேற்கூறிய கருத்
உலகநாடுகளின் மருத்துவ வரலாற்றை ஆ இயல்பு, வரன்முறையான கல்வியின் இயல்பு மரு கிடையே நேரில் தொடர்புகளும் இடையுறவுகளும்
துணைநின்ற நூல்கள்
இராம. சுந்தரம், சா. கிருட்டின மூர்த்தி (L மருத்துவ அறிவியல் வளர்ச்சி, தஞ்சாவூர், சே.பிரேமா, ப.வெ.நாகராசன் (1985) போக பல்கலைக்கழகம். முல்லை பி.எல்.முத்தையா (1990) வீரமா சென்னை, நியூ செஞ்சுரி புக் கவுஸ். மா. புனிதா, (ப.ஆ.) (1995) தேரையர் அ நிறுவனம்.
14
 

“மூதுரை வாகடத்தின் முறைமையை இடம் பெற்றுள்ளமை (பரராசசேகரம் ததை வலியுறுத்துகின்றது.
ராய்ந்து பார்க்கும் பொழுது சமூக இருப்பின்
நத்துவ அமைப்பியலின் பண்பு ஆகியவற்றுக் b இருத்தலைக் கண்டு கொள்ள முடிகின்றது.
1.ஆ) (1994) வளர்தமிழில் அறிவியல் அனைந்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம். ர் வைத்தியம் 700 தஞ்சாவூர், தமிழ்ப்
முனிவர் இயற்றிய தமிழ் மருத்துவ நூல்,
ந்தாதி, சென்னை, உலகத் தமிழாராய்ச்சி
ஒலை 50

Page 17
தமிழ் மருத்துவம்
தமிழ்
சங்க காலத் தமிழ் இலக்கியங்களில், தமிழகத்தில் தனி மருத்துவ முறை ஒன்று மருத்துவர்களால் வழங்கப்பட்டதை ஆங்காங்கு காணலாம். அவற்றுள் சிலவற்றை யீண்டு குறிக்கின்றேன்.
மருத்துவர்கள் நல்ல கொள்கைகளை யும் தூய ஒழுக்கத்தையும் உடையவர்களா யிருந்தார்களென்பதை, விளங்கிய கொள்கை ஆயூள் வேந்தர், என்று சிலப்பதி காரம் கூறுவதாலறியலாம்.
மருந்தால் பிணி தீருமென்பதையும், சில பிணிகள் தீராவென்பதையும், இன்ன பிணிக்கு இன்ன மருந்து பயனளிக்கு மென்பதையும் அறிந்திருந்தார்களென்பதை, *பசிப்பிணி மருத்துவ னில்லம் அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே” (புறநானூறு, 360) “விறலிழை நெகிழ்த்த வீவு அரும் கடுநோய்”
(குறிஞ்சிப் பாட்டு, 3.)
இவ்வடிகளாலறியலாம். சங்ககாலத்தில், மருத்துவர்கள், நோய்கட்கு மருத்துவம் செய்ய வழங்கும் மருந்துகட்கு வைத்திருந்த பெயர்களைச் சில நூற்கட்கு இட்டு வழங்கினார்கள். எடுத்துக் காட்டாகத் 'திரிகடுகம்', 'ஏலாதி, சிறுபஞ்சமூலம் எனப் பெயரிட்டிருப்பதாலே அம்மருந்துகள் உடலுறு பிணியை நீக்குமாறு போல இந்நூற்களும் அறியாமையாகரிய மனநோயை நீக்குமென்பது துணியாழ்.
சங்கப்புலவர் குழுவில் மருத்துவன் தாமோதரனார் ஓர் உறுப்பினராக இருந்தார். அவர் திருவள்ளுவ மாலையில் அடியிற் குறித்த செய்யுளைப் பாடியுள்ளார்.
*சிந்தினிர்க் கண்டஞ் தெறிசுக்குத் தேனளாய் மோந்தபின் யார்க்கும் தலைக்குத்தில்-காந்தி
ஒலை 50

இலக்கியங்களில் மருத்துவ நூற் செய்திகள்
பேராசிரியர் முனைவர் க.சு.உத்தமராயன்
மலைக்குத்து மால்யானை வள்ளுவர்முப் பாலால் தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு”
(திருவள்ளுவமாலை, 11)
இதனால் பண்டைய அரசர் அவையில் மருத்துவர்களிருந்தார்கள் என்பதையும் அரசர்க்குரிய ஐம்பெருங் குழுவினருள் மருத்துவரும் ஒரு குழுவினராவர் என்பதையும் அறிகிறோம்.
குளிர்காய வேண்டியவர் புகையைக் கருதாது தீயின் வெம்மையைக் கருதுவது போல மருந்துண்பவர், அதன் சுவையைக் கருதாது, மருந்தின் பயனையே கருதுவர்.
“நோய்க்குற்ற மாந்தர் மருந்தின் சுவை நோக்
- கில்லார்
தீக்குற்ற காத லுடையார் புகைத் தீமை யோரார்”
(குனடலகேசி, 2)
ஈதன்றியும், அக்காலத்தில் அறுவை மருத்துவத்தில் சிறப்புற்று இருந்தார்களெ ன்பதை உடலில் கட்டி முதலியன தோன்றின் அறுக்க வேண்டியவற்றை அறுத்தும், கெட்ட குருதியை வெளிப்படுத்தியும் , சுட வேண்டியவற்றைச் சுட்டும், அறுத்தாலும் சுட்டாலும் உணர் டாகும் புணர்ணுக்கு மருந்திட்டுத் தீர்க்கும் முறை உண்டென்பதை,
*உடலிடைத் தோன்றிற் றொன்றை அறுத்ததன்
- உதிரம் ஊற்றிச் கடலுறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம்
- தீர்வர்”
என்ற கம்பராமாயணம் யுத்தகாண்டம் கும்பகர்ணன் வதைப் படலச் செய்யுளால் (146, வை.மு.கோ.பதிப்பு) அறியலாம்.)
“வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன் போல்”
(குலசேகர ஆழ்வார் . நாலாயிரம், 6912)
15

Page 18
தமிழ் மருத்துவம்
என்ற அடிகளும் மேற்கூறியதை வலியுறுத்து கின்றன.
உடலில் பதிந்துள்ள ஆயுதத்துண்டு களைக் காந்தத்தால் வெளிப்படுத்தலை, *அயில்வேல்.நீங்கலது இப்பொழுதகன்றது a u essகாந்தமாம் மணியின்று வாங்க”
(கம்பராமாயணம் : மீட்சிப் படலம்: தசரதன் இராமனிடம்
கூறியது)
கம் பராமாயணம் எழுந்த காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு. ஆகவே பன்னிரண்டாம் நூற்றாண்டில் தமிழ் மருத்துவத்தில் விரண மருத்துவமுறை களாகிய அறுவை, சுட்டிகை, உடலில் பதிந்துள்ள ஆயுதத்துண்டுகளை நீக்கும் முறைகள் சிறப்புற்றிருந்ததென்பது நன்கு புலனாகின்றது.
உடலில் காயம் பட்டவருக்கு, நெய்க்கிழிவைத்தல், எண்ணெய்ப்பத்தரில் கிடத்தல் , ஒடிந்த இரும் புகளை அறுத்தெடுத்தல், புண்களுக்கு மருந்தை வைத்தல், எலிமயிர்க் கம்பளத்தால் போர்த்தல் முதலியன கையாளப்பட்ட தென்பதனை,
*நெய்க்கிழி வைக்கப் பட்டார் நெய்ப்பித்தல்
- கிடத்தப் பட்டார் புக்குழி எஃகம் நாடி இரும்பினால் போழப்பட்டார்”
(சிந்தாமணி, 818)
உடல் முற்றும் புண்பட்டவர்கட்கு, *முதுமரப் பொந்து போல முழுமெயும்
- புண்க ளுற்றார்க்கு இதுமருந் தென்ன நல்லார் இழுதுசேர்
- கவளம் வைத்து”
In as do 8 OCH நெய்க்கிழி பயிலச் சேர்த்தி
நூதிமயிர்த் துகில்குப் பாயம் புகுகென
- நூக்கி னானே? (சிந்தாமணி, 819)
என்ற பாக்களால் அறியலாம்.
இந்நூல் பத்தாம் நூற்றாண்டில் எழுந்தது - இதுவும் அக் காலத் தமிழ் மருத்துவச் சிறப்பைக் கூறுகின்றது. குறிப்பு
16

‘எலிமயிர்ப் போர்வை” என்ற தலைப் பிட்டு திரு. பி.எல்.சாமி, பி.எஸ்.சி. என்பவர், தென்னிந்தியத் தமிழ்ச் சங்கத்தின் நெல்லை, திருவரங்க நிலையக்கட்டிடத் திறப்பு விழாவின் போது வெளியிடப்பட்ட செந்தமிழ்ச் செல்வி சிறப்புமலரில் அவ்வெலியின், உடலமைப்பு, அது வாழுமிடம், அதன் நிறம் முதலியன பற்றிக் கூறியிருக்கின்றார். அவ்வெலி மயிரால் நெய்யப்பட்ட ஆடை குளிரைத் தாங்கும் போர்வையாகவும், அழகுக்காக அரிய ஆடையாகவும், திரையாகவும் பயன்பட்ட தைச் சிந்தாமணிச் செய்யுளால் விளக்குகிறார்.
*கொங்கு விம்முயூங் கோதை மாதரார் பங்கயப் பகைப் பருவம் வந்தென எங்கு மில்லன வெலிம யிர்த்தொழிற் பொங்கு பூம்புகைப் போர்வை மேயினார்”
(சிந்தாமணி, 2680) பனிமயிர் எனத் தொடங்கும் செய்யுளில்,
‘எலிமயிர்ப் போர்வை வைத்தெழினி வாங்கினார்”
(சிந்தாமணி, 2471) என்பர்.
மேலும், “புகழ்வாரைச் சென்னிமேற் பூசையிற் பெரியன பவழமே யனையன பன்மயிர்ப் பேரெலி அகழுயிங் குலிகமஞ் சனவரைச் சொரிவன கவழயா னையினுதற் றவங்கச் சொத்தவே”
(சிந்தாமணி, 1898)
உடலின் உறுப்புகள் வன்மை குறைந்த விடத்து அதையீடு செய்வதற்காகப் பிறர் உயிர்களின் அவ்வவ்வுறுப்பாலாய சத்துக்களை மருந்தாக வழங்குதல் இக்கால மேனாட்டு மருத்துவ முறைகளில் காணலாம். இம்முறை நம் நாட்டிலிருந்த தென்பதைக் காட்டும் பழமொழி “ஊனுக்கு ஊனிடுதல்’ என்பதாகும். இக்கருத்துட் கொண்டே கண்ணப்பநாயனார் ஊனுக்கு ஊன் எனும் உரைமுன் கண்டு அரண் கணினுக்கு தனி கணிணை அப்பினாராம் . மேலும் இதனைத் திருவிளையாடற்புராண வலாசுரன் கதை வலியுறுத்துகின்றது. அதர்வது அவன் பற்கள் முத்தாகவும், இரத்தம் மாணிக்கமாகவும் இவ்வாறே பிறவும் மாறின என்பதால் உடலின் அவ்வப்பகுதிகளில் நோய்வர அவற்றால் ஆய
ஒல்ை 50

Page 19
மருந்துகளை உபயோகிக்க அவ்வந்நோய் தீருமென்பதாம். இம்மருத்துவ முறைகளைச் சித்த மருத்துவத்தில் பரக்கக் காணலாம்.
திருமுக்கூடல் கோயில் கல்வெட்டி லிருந்து அக்காலத்தில் அக்கோயிலினி டத்தில் மருத்துவச்சாலை இருந்ததாகவும், அச் சாலையில் மருந்து செய்யுமிடமும் (Pharmacy) ஓராண்டுக்கு வேண்டிய மருந்தும், அறுவை மருத்துவம் (Surgery) செய்ததாகவும், நோயாளிகளைக் கண்காணிக்கப் பணிமகளிர் (Nurses) இருந்ததாகவும் அறியலாம்.
படைக்கலங்கள் சுவைகண்ட உடல் புண்ணிற்கு அத்தி மரத்தின் பாலும், பட்டையும் அக்காலத்தில் பயன் படுத்தினர் என்பதை, “இரும்புச்சுவை கொண்ட விழுப்புண் நோய்தீர்த்து மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி வடுவின்றி வடித்த யாக்கையன்”
(புறம், 180)
என்ற அடிகள் உணர்த்துகின்றன.
புண்ணை ஆற்ற இசையும் பயன்பட்டன
என்பதை,
".......... யாழொடு பல்லியங் கறங்க”
“இசைமணி யெறிந்து காஞ்சி பாடி”
(புறம், 281)
என்ற அடிகள் கூறுகின்றன.
புண்ணிற்குப் பஞ்சிட்டுக் கட்டும் பழக்கம் உளதென்பதைக் *கதுவாய் போகிய துதிவாய் எ.கமொடு பஞ்சியும் களையாப் பண்ணர்” (புறம், 353) என்பர்.
செய்யுளுக்கு இலக்கணங் கூறிய பவணநீதி முனிவர் அவர் யாத்த நன்னுரலெனும் இலக்கண நூலில், “பல்வகைத் தாதுவின் உயிர்க்குடற் போற்பல சொல்லால் பொருட்கிட னர்க உணர்வின் வல்லோர் அணிபெறச் செய்வது செய்யுள்” என்பது 7 வகை உடற்கட்டுகள் (தாதுக்கள்) சேர்ந்த பருவுடல் உயிர்வாழ இடமளித்தல் போலப் பொருள் பொதிந்த சொல்லால் அணியுடன் ஆகியது செய்யுள் என்று சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறார்.
ஒலை 50

கருத்தோற்றம்
பூப்படைந்த பன்னிரண்டு நிதேளுக்குள் புணர்ந்தால் கரு தரிக்குமென்பதை, “பரத்தையின் பிரிந்த கிழவோன் மனைவி பூப்பின் புறப்பா டிராறு நாளும் நீத்தகன் றுறைதல் அறத்தா றன்றே” என்ற இறையனார் அகப் பொருளர் சூத்திரத்தாலும், "பூப்புப் புறப்பட்ட நாள் முதல் பன்னிரு நாளும் தலைமகன் தலைமகளை நீத்தகன்று உறைதல் அறநெறியன்று’ என்றும், பூப்புப் புறப்பட்ட முந்நாளு முள்ளிட்ட பன்னிரு நாளுமென்பது துணிபுற்றாங்கு முந்நாளும் கூடியுறையின் படுங் குற்ற மென்னோ? என்றார்க்குப் “பூப்பு புறப்பட்ட ஞான்று நின்ற கரு, வயிற்றிலே அழியும், இரண்டாம் நாள் நின்ற கரு வயிற்றிலே சாம், மூன்றாம் நாள் கரு, குறுவாழ்க்கைத் தாம், வாழினும் திருவின்றாம், அதனாற் கூறப்பட்டது என்பது” என்றும், V “பூப்பு முதல் முந்நாள் புணரார், புனரின் யாப்புறு மரபின் ஐயரும் அமரரும் யாத்த கரணம் அழியும் என்ப" என்றும் கூறிய சூத்திரத்தின் பொழிப்புரை, விசேடவுரை, மேற்கோள் முதலியவற்றாலும் உணர்க.
ஆண் பெண் தோற்றமாகும் விதத்தை, *ஆண்மிகி லானாகும் பெண்மிகிற் பெண்ணாகும் பூணிரண் டொத்துப் பொருந்தி லலியாகும் தாண்மிகு மாகிற் றரணிமுழு தாளும் ஆண்வச மிக்கிடின் பாய்ந்தது மில்லையே” என்பதைத் திருமந்திர 488-ஆம் செய்யுளால் அறியலாம்.
சூலுற்ற மகளிர் புளிப்புப்பொருள்கள், மண், சாம்பல் போன்றவற்றைப் பிறர் அறியாமல் உண்பதை, “பிறர்மண் ணுண்ணும் செம்மல் நின்நாட்டு வயவுறு மகளிர் வேட்டுவுணி ணல்லது பகைவ ருண்ணா அருமண் ணினையே’ என்று புறம் 20ஆம் செய்யுள் தெரிவிக்கி ன்றது. கருச்சிதைவினைப் பண்டைக் காலத்தில் கொடுமையாகக் கருதினர்: “மாணிழை மகளிர் கருச்சிதைத்தோர்க்கும்”
(புறம், 34)
17

Page 20
தமிழ் மருத்தவம்
அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் உள்ள அடிப்படை ஒற்றுமையைச் சித்தர்கள் அறிந்திருந்தார்களென்பதை, “மண்டினிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் வீசும்புதைவரு வளியும் வளித்தலைஇய தீயும் தீமுரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்
- தியற்கைபோல” (upub, 2) என்ற புறப்பாட்டு கொண்டு அறியலாம்.
அண்டம் ஐம்பூதத்தாலாயது போலப் பிண்டமும் ஐம்பூதத்தாலாகியதாம்: “சித்தன் பெரியவன் செம்மல் திகழொளி”
(சிலப்பதிகாரம், 10 : 183)
சித்தர் - “நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார் விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்”
(குறுந்தொகை, 130 : 1-2)
திருமூலர் - இவர் திருத்தொண்டரே அல்லாமல் சித்தரும் ஆவர். திருமூலர் எண்ணாயிரம், திருமூலர் கருக்கிடை, திருமந்திர வைத்தியம் ஆகிய நூற்களை ஆக்கியுள்ளதால் இவர் அகத்தியருக்கு அடுத்த சித்தர் எனப்படுகிறார்.
மேக நோய் தீரத் திருமூலர் கூறும் மருந்தைக் கீழ்க் கூறப்படும் பாலாலறி யலாம். “பார்த்திடும் மேகம் பகர் இரு பத்தொன்றும் போற்றிடும் அபரேகப் பொலிவான சிந்துாரம் சேர்ந்திடும் கிந்தில் செவ்வாஞ் சருக்கரை மாற்றிடு வெண்ணெயில் மாமேகம் போகுமே.”
தெய்வப்புலவர் திருவள்ளுவர் வையம் உய்ய வழிகாட்டும் வகையில் வகுத்த நூல் திருக்குறள் எனப்படும். இது அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலைக் கொண்டது.
இவர் மருத்துவத்திற்காகப் படைத்த நூற்கள் “ஞான வெட்டியான்”, “பஞ்சரத்தினம்’ ஆகிய நுால் களாகும் . இவர் மருத்துவத்துறையில் அனுபவம் மிகுந்தவர் என்பதை இவர் எழுதிய திருக்குறளில் பிணியணுகா விதியையும், வலி முதலிய முக்குற்றங்கள் மிகினும் குறையினும் நோய் செயப் யுமெனி பதையும் , மருத்துவம்
நூற்பகுதிகளை யுடையதென்பதையும், நோய்
18

அறிவிதம், அதன் காரணம், அதன் மருத்துவம், நோயளவு, கால அளவு, நோயாளியின் வன்மைக்குத் தகப் பரிகரிக்கும் வகை முதலியவைகளையும் விளக்க “மருந்து’ என ஓர் அதிகாரதி தை அமைத்திருப்பதிலிருந்து அறியலாம்.
நோய் வராமல் உடலைப் பாதுகாக்கும் முறைகள்
*மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்தியது அற்றது போற்றி யுணின்”
“அற்றால் அளவறிந் துண்க அ.துடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு”
“அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து”
“மாறுபா டில்லாத வுண்டி மறுத்துண்ணின் ஊறுபா டில்லை உயிர்க்கு”
“இழிவறிந் துண்ைபான்கண் இன்பம்போல் நிற்கும் கழியே ரிரையான்கண் நோய்”
“தியள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்”
நோய் நாடல் “மிகினுங் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா வெண்ணிய மூன்று”
மருத்துவம் “நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்”
“உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்”
*உற்றான் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென் றப்பானாற் கூற்றே மருந்து”
இவற்றில் நோய் வருவதற்குரிய காரணம் பற்றிக் கூறப் புகுந்த வள்ளுவர், “மிகினுங் குறையினு நோய்செய்யும் நூலோர் வளிமுதலா வெண்ணிய மூன்று” என்று கூறியிருப்பது மருத்துவநூல் வல்லோர்கள் கூறுகின்ற கருத்தாகிய அன்றாட உணவும் செயல்களும் நடைமுறை அளவை விட மிகுமாயினும், குறையுமாயினும்,
GoGo 50

Page 21
தமிழ் மருத்துவம்
மருத்துவ நூல் வல்லோர்களால் வாத, பித்த, கபம் என்று கணக்கிடப்பட்டுள்ள மூவகை நோய்களும் மனிதனைத் துன்பப்படுத்துமென்பதேயாகும்.
எடுத்துக்காட்டாக உண்ணுகின்ற உணவு சிறிது அதிகப்பட்டு விடும்போது நடந்து செல்வதற்கு மூச்சுத் திணறுவதையும், உணவு குறைந்தபோது காதடைத்தல், சோர்வு, போன்றவை ஏற்படுவதையும் நாம் உணரலாம் . மேலும் , வள்ளுவர் தன்னுயிரைக் கொடுத்தாவது பிற உயிரைக் காக்கும் பெருந்தகை யானுக்கு மருந்து மரத்தை உவமையாகக் குறிப்பிடுவதைக் கீழ்க் கூறப்படும் குறள் தெளிவுபடுத்துகிறது. *மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கட் படின்’
நோய்வருவதற்குரிய காரணங்கள் என்ன என்பதுபற்றி விளக்கும்போது:
“கல்லினான் மயிரினான் மீதுரண் விரும்பலாற்
கருதிய விசாரத்தினாற் கூடுவழி நடக்கையான் மலசலம் அடக்கையால்
கணிபழங் கூறியுண்ண லால் நெல்லினால் உமியினால் உண்ட பின்மூழ்கலால்,
நித்திரைக ளில்லாமையால் நீர்ப்பகையினால் பனிக்காற்றில் உடல் நோதலால்
வீடு சருகிலை யூறலால் மெல்லிநல் லார்கலவி யதிகமுள் விரும்பலால்
வீழ்மலஞ் சிக்குகையினான் மிகுகமை எடுத்தலால் இளவெயிற் காய்தலால்
மெய்வாட வேலை செயலால் வல்லிரவி லேதயிர்கள் சருகாதி யுண்ணலால் :
வன்பிணிக் கிடமென்பர் காண்”
என்று குமரேச சதகம் கூறுகின்றது. அன்றாட உணவு மிகினுங் குறையினும் என்பது, உணவின் அளவு (quantity) கூடுவது குறைவது என்பது மட்டுமன்றி, உண்ணும் உணவின் தரம் (quality), சுவை, மட்டுமன்றி, வீரியம், சத்து இவைகளில் கூடுதல் குறைதல் ஏற்பட்டாலும் அது உடலின் நலத்தைப் பாதிக்கும் என்பதேயாகும். நடைமுறைச் செயல்கள் மிகுதல் குறைதல் என்பது மொழி,
ஒலை 50

மெய் போன்ற உறுப்புகளால் செய்கின்ற தொழில் காரணமாக இத்தகைய உறுப்புக்கள் வருந்துதல் அல்லது சோர்வடைதலைக் குறிக்கும். *மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய தற்றது போற்றி யுனின்”
என்பது ஒரு குறள்.
ஏற்கெனவே உண்ட உணவு நன்கு செரித்து விட்டதா என்பதைப் பசி மிகுதல் போன்ற குறிகளால் கண்டு அதன் பின்னரே உணவு உண்ணுவானாயின் அவனுக்கு மருந்து என்பதே வேண்டாம் என்பது கருத்து. அரிது அரிது மானிடராகப் பிறத்தலரிது. அவ்வாறு மானிடராகப் பிறந்த காலையும் நோய் நொடியின்றி வாழ்தலரிது, என்பது சான்றோர் வாக்கு.
“புல்மரம் நெல்புழுப் புள்விலங்கெனும் பன்மைய துயர்செயும் பவங்கள் தப்பியே”
“வன்னைகொள் நிலமிசை மக்களாகுதல்
நன்மைகொள் உயிர்க்(கு) அல்லால் அரிது
- நந்தியே”
என்பது பிரபுலிங்க லீலை.
புல்லாகிப் பூண்டாகி மரமாகி விலங்காகி வாழ்கின்ற உயிர்களை விட மனிதராக வாழ்கின்ற பேறு படைத்தவர்கள் பெறுதற்கு அரிய தமது யாக்கையைப் பெற்ற பயன், அதை நெடிது உயப் க் குமாறு போற்றுவதேயாகும்.
அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறப் புகுந்த வள்ளுவர், “அற்றால், அளவறிந்து உண்க, அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு” ஏற்கெனவே உண்ட உணவு அற்று விட்டதென்றால், நன்கு செரித்து விட்ட தென்றால் மட்டும் மீண்டும் உண்ண வேண்டும் என்று முற் குறளிலே வலியுறுத்திய வள்ளுவர், அதையே மீண்டும் வலியுறுத்தி விட்டு, மறுபடி உண்ணும் போதும் அளவு அறிந்து உண்ண வேண்டும் என்று அழகாகக் கூறுகின்றார். மிகினுங் குறையினும் நோய் செய்யுமென்று
19

Page 22
தமிழ் மருத்துவம்
கூறியவரல்லவா? இவ்வாறு உண்கின்ற பழக்கம் தான் பெறுதற்கரிய உடலைப் பெற்றவர்கள் பெற்று உடலை நீண்ட காலம் பேணிப் போற்றுவதற்குத் துணை செய்யும் என்பது அவர் கருத்து.
அடுத்த குறளில் இவ்விரு குறள்களின் கருத்தையும் வலியுறுத்தும் வகையில் நன்கு செரித்ததையும் அறிந்து, நடைமுறை அளவறிந்து உண்பதையும் கடைப்பிடித்து ஒன்றிற் கொன்று மாறுபாடில் லாத உணவுகளைப் பசித்த பின்னர் உண்ண வேண்டும் என்பதை “அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து” என்று அழகாகக் கூறுகிறார்.
இவ்வாறான மூவகை மாறுகோளு மில்லாத உணவைத் தன்னுள்ளம் வேண்டிய வளவினால் அன்றிப் பிணி வாரா அளவினால் ஒருவன் உண்டானாயின் அவனுக்குத் துன்பமில்லை. “மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபா டில்லை உயிர்க்கு” என்பது அடுத்த குறள்.
“உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு” என்ற ஒரு பழமொழி உண்டு. பெண்டிர்க்கு அழகு தருவதோடு மட்டுமன்றி உயிர்வாழ் மக்கள் யாவர்க்கும் உண்டி சுருங்குதல் இன்பத்தையே தரும் என்பது தெளிவு.
எனவே மாறுபாடில்லாத உணவை உண்ணும் போதும் அளவறிந்து குறைவாக உண்பவனிடத்து இன்பமும் அ.தறியாது உணவை மிகுதியாக உண்பவனிடத்து நோயும் நீங்காது நிற்கும்.
“இழிவறிந் துண்பான்கண் இன்பம் போல் நிற்கும் கழியே ரிரையான்கண் நோய்” என்பது அடுத்த குறளாக அமைகின்றது.
தனது யாக்கை இவ்வளவு உணவினைத் தான் சீரணிக்கும் என்ற அளவினையறியாது
20

மிகுதியாக உண்பானிடத்தில் நோய்கள் அளவில்லாமலுண்டாகும்.
*தியளவன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயாள வின்றிப் படும்” என்று கூறுகின்ற இவ்வாறான பல கருத்துக்களையும் நோக்கும் போது உடல் நோய் க்கு அடிப் படைக் காரணம் உணவேயாகும் என்பது தெளிவு. எனவே உயிர் வாழ்கின்ற மக்கள் உணவுப் பழக்க வழக்கத்தில் ஒரு சில கட்டுப்பாடுகள் அவசியம் பின் பற்றியே தீரவேண்டும் என்றதொரு நியதியை ஏற்படுத்திக் கொண்டால் தம்மைப் பிணியனுகாவண்ணம் காத்துக் கொள்ளலாம் என்பது தெளிவு. இக்கருத்துக்களே சித்த மருத்துவத்தில் “பத்தியம்” என்ற பெயரில் இயங்குகின்றது. இன்ன வியாதிக்கு இன்னின்ன உணவு வகைகள் அல்லது இன்னின்ன காய்கறிகள் ஆகாதென்பது மாறுபாடில்லாத உண்டி உண்பதற்கேயாகும். இதற்கு மேம்பட்ட நிலையில் நோய் வந்துவிட்ட பின்னர் அதற்குரிய மருத்துவம் என்ன என்பதை விளக்கப் புகுந்த வள்ளுவர், “நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்”
என்று கூறுகின்றார்.
நோயுற்றிருப்பவனிடமுள்ள குறிகளால் அவனுடைய நோயை இன்னதென்று கண்டுபிடித்து அந்நோய் வருவதற்கு உரிய காரணங்கள் இன்னவென்பதை ஆராய்ந்து பிணி பு அந் நோயைத் தணிக்கும் உபாயத்தினை நாடி அவ்வுபாயத்தினைச் செய்யும்போது வழி பிழையாமற் செய்து செயல்பட வேண்டும்.
நோயைத் தீர்ப்பதற்கு மட்டுமன்றி எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கும் இதைவிட எடுத்துக்காட்டு வேறு என்ன இருக்க முடியும். “நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.”
*உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்.”
என்பது அடுத்த குறள்.
ஒலை 50

Page 23
தமிழ் மருத்துவம்
மருத்துவனாயினான் பிணியாளியின் அளவையும், பிணியின் அளவையும், காலத்தையும் மருத்துவ நூல் வழியால் ஆராய்ந்தறிந்து அவற்றோடு பொருந்த மருத்துவஞ் செய்யக் கடவன் என்பதாகும்.
நோயுற்றவனுடைய அளவு என்பது அவனுடைய பகுதி, பருவம் (வயது), வேதனை, வலிகள் இவற்றைக் குறிக்கும்.
பிணியளவு என்பது - சாத்தியம், அசாத்தியம், யாப்பியம் என்னும் வேறுபாடும், தொடக்கம், நடுசறு என்னும் பருவ வேறுபாடும், வன்மை, மென்மை போன்றவையுமாகும் என்பது சித்த மருத்துவக் கோட்பாடுகளாகும்.
இவ்வாறான கருத்துக்களனைத்யுைம் மருத்துவத் துறையில் நான்கு கூறுகளாகப் பிரித்து உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்(று) அப்பால்நாற் கூற்றே மருந்து. என அறுதியிட்டுக் கூறியுள்ளார்.
பிணிக்கு மருந்தாவது அதனையுற்றவன், அதனைத் தீர்க்கும் மருத்துவன், அவனுக்குக் கருவியாகிய மருந்து, அதைப் பிழையாமல் இயற்றுவான் என்று சொல்லப்பட்ட நான்கு பகுதிகளுடையதென்பது இதன் கருத்து. இவற்றுள் உள்ளவன் வகை நான்கு என்பது பொருளுடைமை, மருத்துவன் வழிநிற்றல், நோய் நிலையுணர்த்தல், வன்மை, மருத்துவத் துன்பம் பொறுத்தல் என்பவைகளாகும். தீர்ப்பான் வகை நான்கு என்பது நோய் கண்டு அஞ்சாமை, கல்வியும் நுண்ணறிவுமுடைமை, தீர்த்து வருதல், மனம் மொழி மெய்கள் தூயவாயிருத்தல் ஆகியவைகளாகும். மருந்தின் வகை நான்கு என்பது பிணிகளுக்கு ஏற்றதாயிருத்தல் சுவை வீரியம் , விளைவாற்றல்களால் மேம்படுத்தல், எளிதினெயப் யப்படுதல் , பகுதியோடு பொருந்துதல் என நான்கு.
உழைச்செல்வான் அல்லது இயற்றுவான்
வகை நான்கு என்பது மருத்துவனிடம் அணி புடைமை, மனம் மொழி
ஒலை 50

மெய் துT யப் மையுடையவராயிருத்தல் , சொல்லியவற்றைச் செய்தல், அறிவுடைமை என்பவைகளாகும் என்று கூறி முடிக்கின்றார்.
இக்கருத்துகளனைத்தும் சித்த மருத்துவக் கருத்துகளோடு ஒத்து வருவதால் திருவள்ளுவரும் ஒரு சித்த மருத்துவர் என்று துணிந்து கூறலாம்.
தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகமான பொன்னாக்கும் சக்தியினை அக்கால மருத்துவர் பெற்றிருந்தாரென்பதை வில்லிபாரதம் 14ஆம் போர்ச்சருக்கம் “அயத்து இரதமிட பசும் பொன் ஆவது போல் அருச்சுனனார் அரிஞ்சனாக’, என்பதால் அறியப்படுகின்றது.
இதுவரை, தமிழ் இலக்கியங்களில் மருத்துவநூல் செய்திகள் என்பதைக் கூறினேன்.
இனி, அனுமதி கொடுத்தால் தமிழ் மருத்துவமாகிய சித்த மருத்துவத்தில் தமிழ் இலக்கிய இலக்கணச் செறிவைக் கூற விரும்புகின்றேன்.
பதினெண் சித்தர்களில் ஒருவராகிய தேரன் அல்லது தேரையா என்பவர் இலக்கிய இலக்கண, தர்க்க, சோதிடவடமொழி ஆகியவற்றிலி நல்ல அறிவு படைத்தவரென்பதில் சில பாக்களை எடுத்துக்காட்டாகக் கூறுகின்றேன்.
шшањti,
மருத்துவம் செய்யும் நாளறிதல் “மதியாத வன்மதித்து மத்தியென்று சற்று மதியாத வர்முதன்மை மைந்தர் - மதியாத பாற்கடலை மானப் பளிங்காண் டளப்பான்சேய் பாற்கடலை மானனுப்பார் பார்” மதி ஆதவன் மதித்து - திங்களையும் சூரியனையும் உத்தமமாய் எண்ணியும்.
மத்தி என்று சற்றும் மதியாதவர் - மத்திம மென்று சிறிதுங் கணிக்கத் தகாதவர்கள். முதன்மை மைந்தர் - முதலிற் கூறிய
2.

Page 24
தமிழ் மருத்துவம்
(இருவரின்) புதல்வர்களான புதனும், சனியும். மதியாத பாற்கடலை மான - கடையாத பாற்கடலை யொப்பாய் (விளங்கும்). பளிங்கு ஆண்டரிப்பான் சேய் - சுக்கிரனும், வியாழனும், செவ்வாயும்.
பாற்கு - மத்திம பாகத்திற்கு. அடலைமானவைப்பார் பார் . தங்கள் வல்லபத்திற் கேற்றவாறு உலகத்திலுள்ள பெரியோர்கள் பகுத்துரைப்பார்கள்.
(பொ-உரை) வைத்தியம் செய்வதற்குத் திங்கட்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் உத்தமம், வியாழக்கிழமையும், செவ்வாய் க்கிழமையும் மத்திமம், புதன்கிழமையும், சனிக்கிழமையும் அதமமென்க. இப்படிப் பல பாக்கள் உள்ளன.
மொழிக்கு முதல்வரும் எழுத்துக்களைக் கொண்ட கரிசல் என்னும் நூலில் அகர முதலாக அடிமோனை வைத்துப் பாடின நூல் கரிசலெனப்படும்.
அதில் ஒரு பா
மலத்தினுணரும் சுருக்குறியும் சாக்குறியும்
“மலமூத்திர குறி செப்பிடின் மலைமேற் பதிவிளக்காம் கையற்கொரு கணையாகிய மெளவற் கினையாமே மலமானது யுயலாமெனில் மன்னிற்பெறு சுரமே மலருங்கலி ரானால. தமைச்சன் சுரமாமே மகவான்கரி யானாலத மறவன் சுரமாமே மலிபாடயிம் ஆசட்கணையானலது மறவன் சுரமாமே யானாவது மயங்குங் கபவளியே மஞ்சாடிய தானாவது மரணக் குதவளியே மந்தாரைய தானாவது மடிக்குஞ்சலி வளியே
மண்டுகம தானாலிரு மதிக்கப்புற மலையே”
பொருள் கோள்முறை முறை நிரலி நரிரைப் பொருட்கோளுக்கு உதாரணம் - *குடமொரு நொச்சித் தாழை கொச்சை
- யருக்கெண் னேரண்டங் கூறியவேழின் முதன்மூன்றுங்கோ
- மிதுனம்பால் துவிநேயம்"
22

சோதிடம் உச்ச நீசமில்லாமல் நிறுத்ததில் - *உச்ச மொன்றும் காலொன்று கேந்திரம் அச்சு முக்கா லதிபதியோர் பலம் மெச்சு நட்புக் கரைப்பல மிக்ககால் துச்ச நீசர் பலனெனச் சொல்லுமே”
மேலும்
விரண சஞ்சீவித் தைலத்தில் *கால்புத்தியோரை நீயோர் காசன மதித்து சிட்டாகனிக் கொட்டை அரிபிறப்பைக் கண்டு அரை நறுக்கிச் சேர்”
தாளிசபத்திரிவடகத்தில “வேளிருகைச் சிலை அட்டடை சைவம்
- விரவிப்பயதானி”
கபசுரத்தில்
“ஆற்றுப்பதிகம் ஆற்றுப்பதிகம்” எனத் தேரன் கரிசலில் கபசுர முடிவில் உள்ள நிலையைச் சம்பந்தமூர்த்தி நாயனார் திருவை யாற்றுப் பதிகத்தில் “புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட்டு ஐம்மே லுந்தி அலமந்த போதாக அஞ்சேல் என்று அருட்செய்வான் அமரும் கோவில்” என்ற செய்யுளில் கூறியுள்ளதையுட் கொண்டு தேரர் கூறுகின்றார்.
தேரர் மருத்துவப் பாரதம் என்னும் நூலில் துரியோதனாதியரை நோயாகவும், பஞ்ச பாண்டவரை மருந்தாகவும், கண்ணனை மருத்துவராகவும் வைத்து ஒரு நூல் செய்துள்ளார் - அதில் நோய்களைத் தீர்க்கும் முறையை விரித்துள்ளார் - அதில் கடவுள் துதியில் *வாதமாய்ப் படைப்பித்த வன்னியாய்க்காத்து சேட்பச் சிதமாய்த்துடைத்து பாராந் தேகத்திற் குடியாமைந்து பூதவிந்திய மாமைவர் பூசை கொண்டவர்பால் விந்து நாதமாங் கிருஷ்ணமூர்தி தி நமக் கெனிறுநீ துணையாவாரே”
விரியுமென இதோடு விடுத்தனம்.
(சென்னைப் பல் க்கழகம் 1974இல் வெளியிட்ட “பல் ப் பழந்தமிழ்”
*னும் தொகுப்பிலிருந்து இக்கட்டுரை இ க்கப்பட்டுள்ளது)
ஒலை 50

Page 25
தமிழ் மருத்துவம்
சித்துக்கள் புரிந்தவர்கள் சித்தர் எனப் பெயர் பெற்றனர். சித்து என்னுஞ் சொல் இறைவன் அருள்பெற்ற அடியார்கள் வாழ்வில் நிகழ்கின்ற விந்தையான செயல்களைக் குறிக்கும். ஆங்கிலத்தில் குறிக்கப்படும் மிஸ்டிசிஸ்ம் (Mysticism) என்பதும் இப்பொருள் உடையது எனலாம். சித்தம் என்ற சொல்லிலிருந்தே சித்து, சித்தி என்னுஞ் சொற்கள் தோன்றின. சைவ சித்தாந்தத்திலே சத் + சித் +ஆனந்தம் என்ற பதங்களுக்கு முறையே என்றுமுள்ளபொருள், பேரறிவு, பேரின்பம் என்ற விளக்கம் கொடுப்பது மரபு. இவற்றில் சித் (=பேரறிவு) என்பதன் வழியாக வருவதே சித்து ஆகும். அறிவு, ஞானம், அனுபவம் என்பன கைவரப் பெற்ற நிலையே சித்து நிலை. அத்தகைய சித்துநிலை வாய்க்கப் பெறுபவர் சித்து + அர் = சித்தர் எனப் பெயர்பெறுகிறார்.
சித்தத்தின் சலனமே அனைத்துத் தத்துவங்களின் தோற்றம் என்ப. சித்தத்தின் அசைவே பிராணவாயுவின் அசைவாம். இதனாலேயே சித்தர்கள் தம் பாடல்களிலே பிராணாயாமத்தை வலியுறுத்தியுள்ளனர். பிராணாயாமத்தின் மூலம் சித்தம் ஒடுங்கிய நிலையே சித்தர் நிலையாகும். இதுவே சிவநிலை. எனவே, சித்தத்தை வென்றவர் சித்தர் என்றும், அவரது அனுபவநிலையே சித்து அல்லது சித்தி என்றும் கூறப்படுகிறது.
சித்தர்கள் சித்தத்தைச் சித்தினால் அடக்கியொடுக்கிச், சித்தத்தைச் சிவன்பால் வைத்து உண்மை, ஞானம், சிவம் என்பவற்றை அறிந்து அனுபவித்தவர்களாவர். சித்தத்தையடக்கிச் சிவன்பால் அணைந்து இரண்டறக் கலந்து அனுபவித்துக் கண்ட உண்மைகளே சித்தாந்தமாகும். புலன்வழி
ஒலை 50

சித்தர் பாடல்களில் மருத்துவக் கருத்துக்கள்
முனைவர் இ. பாலசுந்தரம்
ஆடாது, புலன்களை ஆட்டுவிப்பவனே சித்தன். எனவே, அவன் சித்து ஆடுபவனாகச் சித்தன் என்ற காரணப்பெயரையும் பெறுகிறான். ஆகவே “சித்த மூலம் சித்தநிலை வாய்க்கப்பெற்ற மனிதநிலை கடந்த மாபெரும் மனிதனே சித்தன்” என்ற கருத்தும் தொனிக்கிறது. இவர்களை இறை நிலையடைந்தவர்கள் என்றும் கூறலாம். ஆனால் இவர்கள் கடவுளாகார்.
இறைவனுடன் இரண்டறக் கலத்தலை முத்தி என்ப. நால்வகை முத்திநிலைகளிலே சாயுச்சிய முத்திநிலை பெற்றவர்களே சித்தர்கள் என்கிறது திருமந்திரம் (செய். 2485) யோகமார்க்கத்தின் மூலம் குண்டலினி சக்தியை மேலெழுப்பி அதனை ஆளுபவனே சித்தன் என்கிறார் கொங்கணர் (பாடல் 74). “சாத்திரத்தைச் சுட்டெரித்தால் அவனே சித்தன்” என்கிறது அகத்தியர் ஞானம் (பாடல் 5) சமுதாயத்தில் குடிகொண்டிருந்த சாத்திரங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கைகள் முதலியவற்றுக்கெதிராகக் குரல் எழுப்பி மெய்நெறி காட்டியவர்களாகவும் சித்தர்கள் விளங்குகின்றனர்.
பத்தர், சித்தர், ஞானி - இம்மூவரும் இறையுணர்வோடு வாழ்பவர்கள், இவர்களிற் பத்தர் சமய உணர்வோடு வாழ்பவர், சித்தர்கள் சமயம் என்ற எல்லையைக் கடந்தவர்கள். பேரறிவுடையோரே ஞானிகள். சித்தர்கள் ஞானிகளினி நிலையை அடைந்தவர்கள் என்ற கருத்தும் கூறப்படுகிறது. சித்தர்களும் ஞானிகளும் வேறு வேறானவர்கள் என்பதைச் சித்தர் பாடல்களே சான்றுபடுத்துகின்றன. “எழும்பாமல் வாசனையைக் கொன்றோன்ஞானி ஏகாமல் வாசனையை டித்தோன் சித்தன்”
(சட்டைமுனி பாடல் 56)
23

Page 26
தமிழ் மருத்துவம்
வாசனையாம் கருமவினையை எழும்பாமல் தடுப்பவன் ஞானி எனவும், ஏகாமலேயே தடுப்பவன் சித்தன் எனவும் விளக்குகிறார் சட்டைமுனி.
தாயுமானவ சுவாமிகள் சித்தர்கணம் என்ற தலைப்பிலான 10 பாடல்களிற் சித்தர்களின் இயல்புகள் சித்துக்கள், செயல்கள் என்பனபற்றி விரிவாகப் பாடியுள்ளார். அவர்களை “வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே” எனச் சமரச நிலையில் வைத் துப் பாடியுள்ளார்.
சித்தர்கள் தமிழகத்தில் இருந்து சீனா, அரேபியா, ரோமாபுரி முதலிய இடங்களு க்கும் சென்று வந்திருக்கிறார்கள் என்பது அவர்களது பெயர்களாலும் சில மருந்து மூலிகைப் பெயர்களாலும் அறியப்படுகிறது. இப்பயணங்கள் சித்திகளால் நிறைவு பெற்றிருக்கலாம். அல்லது அவர்கள் மருத்துவப் பயணம் மேற்கொண்டிருக்கலாம்.
சித்திகள்
சித்திகள் வாய்க்கப் பெற்றவர்களே சித்தர்கள். இவை கருமசித்தி, யோகசித்தி, ஞான சித் தி என மூவகைப்படும் . இவற்றிற்கருமசித்திகளை அட்டமாசித்திகள் என்பர். அவை அணிமா, மகிமா, லகிமா, பிரார்த்தி, கரிமாபிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பனவாகும். இராமலிங்க அடிகளார் அருட்கீர்த்தனைகள் 12ஆம் பாடலில் 64 சித்தர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். சித்திகளின் எண்ணிக்கை பலகோடி என்ற கருத்தும் உண்டு. இத்தகு சித்துநிலை வாய்க்கப் பெற்ற ஞானிகள் பரதகண்டத்தில் மட்டுமன்றி மேலைத்தேசங்களிலும் கி.பி.5ஆம் நூற்றாண்டு முதலாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் ஈண்டு நினைவிற் கொள்ளுதல் சாலும்.
சித்தர் கணம்
சித்தர் என்ற பெயரிற் பலர் வாழ்ந்து
சாதனைகள் புரிந்திருக்கிறார்கள். இந்தியாவில்
மட்டுமன்றி, ஈழத்திலும் சித்தர்கள்
24

வாழ்ந்ததுபற்றிச் செய்திகள் வழங்குகின்றன. “எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா, யானும் வந்தேன் ஒருசித்தன் இந்த நாட்டில்” என்று தன்னைச் சித்தர் வரிசையில் வைத்துப் பாடினார் பாரதியார். எனவே, சித்தர் பாரம்பரியமும், பண்பாடும் மிக நீண்டனவாகும். இதனாற்போலும் பண்டை நாளில் அட்டமா சித்திகளில் வல்லமை பெற்றோர் மட்டுமே சித்தர்கள் என மகுடம் சூட்டப்பட்டு, அவ்வரிசையில் இடம்பெற்ற 18 பேரை “பதினெண் சித்தர்கள்’ என்று மரபு வழியாக அழைத்து வரலாயினர் . ஆனால் இப்பதினெட்டுப் பேரும் யாவர் என்பதில் எவருக்கும் உடன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. இதுபோன்று வட இந்தியாவில் “நவநாதச் சித்தர்” பற்றிக் கூறப்படுகிறது. அங்கும் அந்த ஒன்பது பேர் யாவர் என்பதிற் கருத்து வேறுபாடுகளுள.
சித்தமருத்துவத் துறையிற் குறிப்பிடப் படும் சித்தர் கணங்களையும் அவர்தம் மருத்துவக் கோட்பாடுகளையும் அறிந்து கொள்வதற்குத் துணையாக அவர்களது பெயர்களை வரிசைப்படுத்தி அறிந்து கொள்வதும் பயனுடையதாகும்.
பதினெண் சித்தர் பெரிய ஞானக் கோவை என்ற தொகுப்பிலிருந்தும், சித்த மருத்துவ வரலாற்றுச் செய்திகளிலிருந்தும் பெறப்படும் சித்தர் கணங்களின் பெயர்கள் ஈண்டு அகரவரிசைப்படுத்தித் தரப்படுகின்றன. அகத்தியர், அகப்பேய்ச்சித்தர், அமலமுனி, அருணாசலகுரு, அழுகணிச் சித்தர், இடைக் காட்டுச் சித்தர், இராமதேவர், இராமலிங்கர், உரோமரிஷி, கஞ்சமுனி கடுவெளிச்சித்தர், கணபதிஈசர், கந்துரு, கமலமுனி, கருவுரார், கனகராமர் , காகபுசூண்டர், காலாங்கிநாதர், குதம்பைச் சித்தர், கொங்கணர், கோரக்கர், சட்ட நாதர், சட்டமுனி, சண்டிகேசர், சிவயோகமாமுனி, சிவவாக்கியர், சுந்தரானந்தர், சூரியானந்தர், சேஷயோகியர், தன்வந்திரி, திருமூலர், தேரையர், நந்தரீசர், பட்டினத்தார், பத்திரகிரியார், பதஞ்சலிமுனி, பாம்பாட்டிச் சித்தர், பிரம்மமுனி பீர்முகமது, புண்ணாக்
ஒலை 50

Page 27
தமிழ் மருத்துவம்
கீசர், புலஸ்தியர், புலிப்பாணி, புஜண்டரிஷி, பூனைக் கணிணர், போகர், மச் சமுனி, மதுரைவாலைசாமி, மாலங்கன், யாகோப்பு, யூகிமுனி, யோகர், வரரிஷி வாக்கியசித்தர், வாசமுனி, வியாக்கிரமர் முதலியோராவர்.
சித்தரும் சமூகமும்
சித்தர்கள் மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்கள், சிலர் மக்களோடு கலக்காமல் ஒதுங்கியும் வாழ்ந்தார்கள், தவம், யோகம், ஞானம் இவற்றிலே தேர்ந்து இவற்றாற் பல வேறு வலிமைகளையும் பெற்று, மக்களுக்குப் பயன்படும் வகையில் மருத்துவ நூல்கள், மந்திர நூல்கள், இரசவாத நூல்கள், யோக நுT ல கள் முதலியவற்றை ஆக்கினார்கள் . இவர் கள் மக்கள் சேவையையே மகேசன் சேவையெனப் போற்றி வாழ்ந்த சமூகத் தொண்டர்களாவார்கள்.
சோழர்காலத்திலே சீரோடு விளங்கிய சமூக அமைப்பிலே மக்களின் பாதுகாவ லனாக மன்னன் விளங்கினான். தஞ்சைப் பெரிய கோயில் போன்ற பெரிய ஆலயங்கள் மக்களின் குறை, நிறைகளைக் கவனிக்கும் சமூக நிறுவனங்களாகத் திகழ்ந்தன. இந்நிலையில் மக்கள் நோய்நொடியின்றி நிம்மதியாக வாழ வாய்ப்பேற்பட்டது. பின்னர் அரசியற் சீரழிவு ஏற்படத் தொடங்கியதும் சமூகச் சிதைவுகளும் படிப்படியாக நிகழ்ந்தன. இந்நிலையில் மக்களுக்கு உடற்பிணியையும், உளப்பிணியையும் அகற்றும் மருத்துவர்கள், தேவைப் பட்டார்கள் . சமூகத் தேவை சித்தர்களை வரவேற்றது. சித்தர்கள் உடற்பிணி மருத்துவர்களாகவும், உளப்பிணி மருத்துவர்களாகவும் செயற்பட்டபோது மக்கள் அவர்களைப் பெரிதும் விரும்பினர், அவர்களை நம்பினர். சித்தர்களும் தம் செல்வாக்கை மக்கள் மத்தியிற் பரப் புவதற்குரிய வழிவகைகளைக் கையாளத் தொடங்கினர். அதன் பொருட்டு இரசவாதம், அட்டமா சித்திகள் முதலியனவற்றை மக்களுக்குச் செய்து காட்டலானார்கள். இதன் பயனாகக் கூடுவிட்டுக் கூடுமாறல் போன்ற கதைகளும் நிகழ்வுகளும் தோன்றலாயின.
ஒலை 50

சோழர்காலத்தைத் தொடர்ந்து தமிழ் நாட்டிற் சமயத்துறையிலும், சமூகத்துறை யிலும் முதன்மை பெற்ற மடாதிபதிகள் பொதுமக்களின் நலன் கருதாதிருந்தபோது அல்லது பொது மக்கள் அவர்களை அணுகாதிருந்தபோது, சித்தர்கள் மடத் தலைவர்களைக் கண்டித்துக் கண்டனக் குரல் எழுப்பியதனாற் சித்தர் நெறியை மக்கள் நாடியதில் வியப்பில்லை. எனவே, சித்தர்களின் சமூகச்செல்வாக்குக்கு அவர்கள் வாழ்ந்த காலத்துச் சமூக சமய பொருளாதார நியதிகளும், சூழ்நிலைகளும் முக்கிய காரணிகளாக அமையலாயின.
அறிவுரை மருத்துவம்
திருவள்ளுவர் மருந்து என்ற தனி அதிகாரம்வகுத்து மருத்துவம்பற்றிக் கூறிய அதே வேளையில் அதற்கு முன்னும், பின்னும் கள்ளாமை, கள்ளுண்ணாமை, வெட்.காமை, பிறனில் விழையாமை, குற்றங் கடிதல், கூடாவொழுக் கம் , தவம் முதலான அதிகாரங்களிலே நலத்துடன் வாழத்தக்க வழிவகைகளையும் குறிப்பிட்டுள்ளார். இவைகளை நோய் வராமல் தடுக்கும் முறைகள் என்றுங் கொள்ளலாம். அது போன்றே சித்தர்களும் உடற்பிணி ஏற்படா திருக்கும் பொருட்டுச் சுகாதார வழிப்பட்ட போதனைகளையும் பாடல்களின் மூலம் மேற்கொண்டுள்ளனர். உதாரணமாகப் பின்வரும் பாடற் பகுதியைக் காட்டலாம்.
“கஞ்சாப்புகை பிடியாதே வெறி காட்டி மயங்கி கட்குடி யாதே அஞ்சவுயிர் மடியாதே பக்தி அற்றவஞ் ஞானத்தினுால் படியாதே"
(கடுவெளிச்சித்தர் - 52)
கஞ்சா, அபின் முதலிய போதைப் GLIT(basófia) Heroin, Cordine, Morphine முதலிய நஞ்சுப்பொருட்களுள. இவை நரம்புத் தொகுதியிலே தயக்கத்தையுண்டுபண்ணி நரம்பு வியாதிகளை ஏற்படுத்துகின்றன. புகைப்பிடிப்பதால் Nicotin என்னும் தீய நஞ்சு சுவாசப்பையிலே படிந்து சுவாசப்பையிற் புற்று நோயை உண்டுபண்ணுகிறது. மேலும் Nicotin
25

Page 28
தமிழ் மருத்துவம்
இரத்தக் குழாய்களின் சு வரைப் பலவீனப்படுத்துகின்றது. இதனால் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. புகை பிடித்தலே இருதயநோய்க்கு முதற்காரணி என்பது தற்போதைய ஆய்வின் முடிவாகும்.
புகைபிடிக் குமி பழக்கத்திற்கு ஆளானோரின் பிள்ளைகள் பிறக்கும் போது ஊனமுற்றவர்களாகக் காணப்படுகின்றனர். புகை பிடிப்போரது பக்கத்தில் இருப்போரும் புகை பிடிப்போரினாற் பாதிக்கப்படுகின்றனர். புகைத்தலின்போது வெளிவரும்புகை வளியிற் கலந்து பக்கத்திலிருப்போரது சுவாசத்தினூடாக உட்சென்று பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதனை உணர்ந்தே கடுவெளிச்சித்தர் புகைத்தலைத் தடைசெய்யும் வகையிற் பாடலானார் எனின் மிகையன்று.
உடல்நலத்திற்கு அறிவுப் போதனை செய்யும் சித்தர்கள் சமூகநோய்களை அகற்றுவதிலும் அரும் பாடுபட்டுள்ளார்கள். சாதிசமயப் பிரிவினைகள் என்ற பிணக்குகளாற் சீரழிந்து காணப்பட்ட சமூகத்தைப்பார்த்துச் சகல சித்தர்களும் சாடாமல் விடவில்லை. “கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக” என்று பாடினார் இராமலிங்க அடிகளார். “சாத்திரங்களைச் சுட்டுச் சதுர் மறைகளைப் பொய்யாக்கி’ (524) எனப் பாடினார் சிவவாக்கியர். பாம் பாட்டிச் சித்தர் “சாதிப்பிரிவினிலே தீயை மூட்டுவோம்’ (123) எனப்போர்க்கொடி உயர்த்தினார். நவயுகச் சித்தர் பாரதியாரும் “சாதிகள் இல்லையடி பாப்பா சாதியுயர்ச்சி தாழ்ச்சி சொல்லல் பாவம்” என்று பாப்பாப் பாட்டிலே பாடி வைத்துள்ளார்.
சித்தரும் சமயமும்
சித்தர்கள் நாஸ்திகர்கள் அல்லர். அவர்கள் மெய்ப்பொருளைப் போற்றுபவர்கள். ஆதலினாலே பாமர மக்களுக்கு உண்மை நெறியைப் புகட்டினர். பட்டினத்தார் கூறும் போதனை இவ் வகையில் மிகவும் பொருத்தமானதே.
26

“ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்
றிரு உயர் செல்வமெல்லாம் அன்றென்றிரு பசித்தோர் முகம்பார்
நல்லறமும் நட்பும் நன்றென்றிரு நடுநீங்காமல் நமக்கு
8ц”-шg என்றென்றிரு மனமே உனக்கே
உபதேச மிதே?
(பட்டினத்தார் பொதுப்பாடல் - 20)
தமிழர் பண்பாட்டிற் சித்தமருத்துவம்
தமிழிலக்கியச் செய்திகளினுடாகச் சித்தமருத்துவ வரலாற்றைப் முன்நோக்கிப் பார்க்கும் போது பல்லவர் காலம் முதல் வடமொழி மூலமாகச் சித்த மருத்துவக் கலை பேணப்பட்டமை அறியக்கூடியதாகவுள்ளது. பல்லவர்காலத்திலும், சோழர்காலத்திலும் சங்கத மொழியே ஆட்சி மொழியாக இருந்தது. பிராமணரே கல்வியில் மேலோங்கிக் காணப்பட்டனர். இவ்விருகாலப் பகுதிகளிற் சங்கத மொழிமூலமே சித்த மருத்துவக்கலை வளர்ச்சிபெற்றமை ப்ற்றிய செய்திகள் அறியப்படுகின்றன. பிராமண ஆதிக்கம் வலுக்குன்றியபோது, தமிழ்ச் சித்தர் பரம்பரை 12ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் தமிழர் சமூகத்திற் செல்வாக்குப் பெறுவதைத் தமிழர் சமூகவரலாறு எடுத்தியம்புகிறது. எனவே தமிழ்ச் சித்தர் காலத்துடன் சித்தமருத்துவமும் தமிழ்மொழி மூலமாக வளர்ச்சி பெறுவதாயிற்று. சித்தர் பாடல்களிற் சங்கத மொழியிலான மூலிகைப்பெயர்கள், மருந்துவப் பெயர்கள் காணப்படினும் அது காலநியதிப் பட்ட தவிர்க்க முடியாத நிலை எனலாம். பாண்டியர்காலச் சாசனங்களிற் (கி.பி 13ம் நூற்றாண்டு) சோமநாததேவர், அகோரசிவ முதலியார் முதலிய வைத்தியச் சக்கரவர்த்திகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளமையை நோக்குமிடத்து, பிராமணரல்லாதோரும் தமிழ் மூலம் படித்துப் பயன் படத்தக்கவகையிலே தமிழ்மொழியில் மருத்துவக்கலை வளர்ந்திருக்க வேண்டும் என்ற ஊகத்தை இவை சான்றுபடுத்துகின்றன.
சித்தர்களை நிறைமொழிமாந்தர் எனக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். மணி மந்திர
ஒலை 50

Page 29
ஒளடதங்களில் வல்லவரான சித்தர்களை நிறைமொழிமாந்தர் என்பது பொருத்தமா னதே. அட்டமா சித்திகளும் கைவரப்பெற்ற சித்தர்களின் செல்வாக்கு சங்ககாலத் தமிழர் சமூகத்திலே பரந்து காணப்பட்டதோடு, மக்களையும் கவர்ந்திருந்ததென்ற செய்தி குறுந்தொகைப் பாடலொன்றால் அறியப் படுகிறது.
“நிலந்தொட்டுப் புகாஅர் வான மேறார் விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார் நாடடி னாட்டி னுாரி னுாரிற் குடிமுறை குடிமுறை தேரிற் கெடுநரு முளரோ நங் காதலோரே”
(குறுந்தொகை . 130)
இப்பாடலிற் சித்தர் செயல்களைக் காதலன் மேலேற்றிக் கூறும் பான்மை நோக்கற்பாலது. மணிமேகலையிலும் சாரணர் பற்றிக் கூறும்போது,
“நிலத்திற் குளித்து நெடுவிசும் பேறிக் சலத்திற் றிரியுமோர் சாரணன்?
(மணிமேகலை 24:46-47)
என்ற பாடல் வரிகள் சித்தர் செயல்களைச் சாரணர் மேலேற்றிக் கூறப்படுதலைக் கவனிக்கலாம். கி.பி. 5ஆம் நூற்றாண்டிலே தோன்றிய பெருங்கதையிலும் சித்தர் செயல்கள் வருமாறு சித்தரிக்கப்பட்டுள்ள:
“இருநிலம் புகுதலும் ஒருவிசும் பிவர்தலும் வருதிரை நெடுங்கடல் வாய்கொண்டுமிழ்தலும் மந்திர மேந்தலு மென்றிவை பிறவும் பண்டியல் விச்சை பயிற்றிய மாக்களைக்
கண்டுமிதும்” (பெருங்கதை 34:86-90) இலக்கியச் சான்றுகளைக் கொண்டு நோக்கும் போது அகத்தியர் காலம் முதலாகத் தமிழர் பண்பாட்டிற் சித்தர் பற்றிய சிந்தனைகளும் சித்தர் கோட்பாடுகளும், அவர்களது செயல்களும் இடம்பெற்று வந்துள்ளமை அறியப்படுகின்றது. ஆயினும் இன்று எமக்குக் கிடைக்கும் “சித்தர் பாடல்கள்” இயற்றப்பட்ட காலம் கி.பி.10ஆம் நூற்றாண்டிற்குப்
ஒலை 50

பிற்பட்டதெனலாம்.
இறையனார், அகத்தியர், கெளதமனார் முதலியோர் கடல்கொண்ட முதற் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்கள் என்பது உரைகாரர் வாதம். இம் மூவரும் சித்த மருத்துவர் வரிசையிலும் இடம் பெறுகிறார்கள். இவர்களது மருத்துவ ஆக்கங்களும் கடற் கோள்களால் அழிந்திருக்கலாம். இசை நுணுக்கம் என்னும் நூல் இடைச்சங்க காலத்தது என்பர் . அந் நூலிலே உடற்றொழில்களை இயக்கும் 10வகை வாயுக்கள் பற்றியும் அவற்றின் தொழிற்பாடு பற்றியும் செய்திகள் காணப்படுகின்றன.
பணி டைக் காலத்தில் இலக்கண நூல்களை இயற்றிய ஆசிரியர்களே மருத்துவ நூல்களையும் இயற்றினர் என்ற கருத்தும் நிலவுகிறது. வடமொழியிற் பதஞ்சலி என்பார் “மகாபாஷயம்” என்ற வடமொழி இலக்கண நூலை இயற்றியதுடன் பல மருத்துவ நூல்களைத் தொகுத்தளித்துள்ளார். இது போன்றே “அகத்தியர்’ அகத்தியம் என்ற முதற்றமிழ் இலக்கண நூல் ஆக்கியதுடன் அகத்திய வாகடம் முதலாம் மருத்துவ நூல்களையும் ஆக்கியளித்தார் எனலாம்.
வட இநீதியாவில் ஆயுள் வேத வைத்தியமும் தென்னிந்தியாவில் சித்த மருத்துவமும் தனித்தனியாக வளர்ந்து வந்துள்ளன. ஆரியகலாசாரம் தென்னகத் திலும் தனது செல்வாக்கைப் பரப்பிய போதிலும் இரு வைத்திய முறைகளும் தத்தமக்குரிய தனித்துவமான இயல்புகளி னடிப்படையில் வளர்ந்து வரலாயின. நோய்களின் எண்ணிக்கை, அவற்றின் குறிகுணங்கள், நோய்ப் பரிசோதனை முறைகள் முதலிய இயல்புகளில் இரு சாரரிடையே வேறுபாடுகள் காணப்பட்டன.
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை நடாத்திய மக்கள் இயற்கைச் சூழலிற் காணப்பட்ட மரம், செடி, கொடி, புல், பூண்டு, இலை, காய், கனி, பூ, பிஞ்சு முதலிய வற்றை இனங்கண்டு நன்கு தெரிந்து வைத்திருந்தனர். குறிஞ்சிப் பாட்டில் (11-61-9598) வகையான
27

Page 30
தமிழ் மருத்துவம்
தாவரப்பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளமையை நோக்கும் போது அக்கால மக்கள் தாவரங்களின் இனங்களில் எவ்வளவுதூரம் பயிற்சி பெற்றிருந்தனர் என்பது புலனாகின்றது.
கி.பி.3ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலப்பகுதியிற் புறச் சமயங்களாகச் சமணமும் பெளத்தமும் தமிழ் நாட்டிற் செல்வாக்குப் பெற்றிருந்தவேளையிலே தத்தம்சமயத்தைப் பரப்பும் நடவடிக்கைகளிற் கல்வியையும், மருத்துவத்தையும் துணையா கக் கொண்டனர். அதன் பயனாக மருத்து வக்கலை பேணப்பட்டது. தமது சமயக் கருத்துக்களைக் கூறும் நூல்களுக்கும் மக்களறிந்த மருந்துப் பெயர்களையே சூட்டினர். அவ்வகையில் அமைந்த இலக்கியப் பெயர்களே திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகிய மூன்றுமாம்.
பல்லவர் காலத் துப் பக்தி இலக்கியங்களிலே மந்திரமும் தந்திரமும் ஆனாய் என இறைவன் பாடப்படுகிறான். நாயன் மார்களும் , ஆழி வார்களும் இறையருளால் மருத்துவம் செய்தமையும் அறியப்படுகிறது. பல்லவர் காலத்திலே மருத்துவர்கள் குறிப்பிட்ட சில மூலி கைகளின் நிமித்தம் அரசனுக்கு வரிசெலுத்த வேண்டியிருந்தனர். இவ்வரி “காணம” எனப்பட்டது. இராசசிம்மன் காலத்திற் (கி.பி.680720) பல்லவர்க்கும் சீனப் பேரரசுக்குமிடையே பெருந்தொடர்பு இருந்திருக்கின்றது.* இக்காலப்பகுதியில் வணிக நோக்கோடு மட்டுமல்லாது சமயம், தத்துவம், மருத்துவம், இரசவாதம் (Alchemy)போன்ற பல்துறைகளிலும் இந்திய அறிஞர்களின் கொள்கைகளையும் கண்டு பிடிப்புகளையும் பற்றி அறிந்துகொள்ளும் பொருட்டும் சீன ஆராய்ச்சியாளர் பலர் இந்தியாவுக்கு வருகைதந்துள்ளனர். சீனத் தொடர்பின் பலனாகத் தமிழகமும் பலபுதிய விடயங்களைக் குறிப்பாக மருத்துவம், இரசவாதம் ஆகியதுறைகளில் அறிந்து கொள்ள வாய்ப்பிருந்துள்ளது என்பதை மறுப்பதிற்கில்லை. பதினெண் சித்தர்களில் ஒருவராகிய போகர் என்பவர் சீனத்திலிருந்து தமிழகம் வந்தவர் என்ற கருத்தும் ஈண்டு நோக்கற் பாலது.
28

சோழர்கால இலக்கியவழியாக அக்கால மருத்துவநிலை பற்றிய பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன. சாசன இலக்கியத்தில் வீரசோழனின் (கி.பி.1063-1069) திருமுக்கூடற் கோயிற் சாசனம் இவ்வகையில் முதன்மை பெறுகின்றது. இதில் ‘வீரசோழனி ’ ஆதுல சாலை எனப் பெயர் கொண்ட மருத்துவமனை பற்றிய பல செய்திகள் காணப்படுகின்றன. “வைத்தியம் சொல்வோன்”, “பரியாரம் பண்ணுவோன்”, “சல்லியக்கிரியை பண்ணுவோன்’, (சல்லியம் = Surgery) “ஈரங் சொலி லி’ முதலான வைத்திய அலுவலர்களின் பெயர்களும், கடமைகளும், ஊதியங்களும் கூறப்படுகின்றன. அத்துடன் ஓராண்டுக்குத் தேவையான மருந்துகளும் ஆதுலசாலையில் வைக்கப்பட்டிருந்த செய்தியும் மருந்துப் பெயர்களும் அறியப்படுகின்றன. சகல பெயர்ச் சொற்களும் வட மொழியாகக் காணப்படுதல் பற்றி மேலாய்வு செய்யும் போது கவனிக்கப்படுதல் அவசியமாகின்றது.
சித்தர்களும் மருத்துவமும்
இயற்கைதரும் மருந்து மூலிகைகளைப் பயன்படுத்தி மருத்துவ முறைகளை மேற்கொண்டவர்கள் சித்தர்கள். அவர்களது சிகிச்சை முறைகளில் மணி, மந்திரம், ஒளஷதம் முக்கியமாக இடம்பெறுகின்றன. இவற்றுள் மணி என்பது கலையாகும். சோதிடக் கணிப்பின் அடிப்படையிலேயே பண்டை நாளில் மருத்துவம் செய்யப்பட்டது. மருத்துவத்திற்கும் காலக்கணிப்பிற்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. நாளும் கோளும் முறைப்பட்ட நிற்கும் நிலையறிந்து மருத்துவம் செய்யும் முறையே மணி எனப்பட்டது என்ற கருத்தும் நோக்கற்பாலது. மந்திரம் என்பது தெய்வீக சக்திவாய்ந்த ஒலிமுறையாகும். இவ்வொலிகளை உருவேற்றிப் பெற்ற ஆற்றலால் மருத்துவம் செய்யும் முறை மந்திரமுறையாகும். நோய் நாடி, நோய்முதல் நாடி, அதுகணிக்கும் வாய்நாடி, வாய்ப்புச் செய்யும் மருந்துமுறை மூன்றாவது முறையாகும் என்பதை வள்ளுவரும் (குறள் 999) குறித்துக் காட்டியுள்ளார். சித்த வைத்திய
ஒலை 50

Page 31
தமிழ் மருத்துவம்
நூல்களிற் காப்பு நீக்கம் - நிறைப்பு என்ற மூவகை அடிப் படைத் தத் துவங்கள் கூறப்பட்டுள்ளன. உடலிலே நோய்வராமல் தடுப்பது ‘காப்பு’. நீக்கம் என்பது ஏற்பட்ட நோயைப் பரிசீலனை செய்து மருந்தின் மூலம் நோயை நீக்குவதாகும். நிறைப்பு என்பது உடலுக் குத் தேவையான ஊட்டச் சத்துக்களைக் கொடுத்து உடல் வலுவடையச் செய்தலாகும்.
மனிதனைப் பற்றும் மூவகைப் பிணிகளைச் சித்தர்கள் உடற்பிணி, உயிர்ப்பிணி, பிறவிப்பிணி என மூன்றாக வகுத்துள்ளனர். இவ்விதம் நோயை மூன்றாக வகுத்துள்ளது போலவே மருத்துவத்தையும் தேவமருத்துவம், மனிதமருத்துவம், இராட்சத மருத்துவம் என மூன்றாக வகுத்துள்ளனர்.
சித்தர் பாடல்களிற் சுகவாழ்வுக்குரிய நடைமுறை ஒழுங்குகள், உணவுப்பழக்கங்கள் முதலான பலவிடயங்களும் கூறப்பட்டுள்ளன. அதிகாலையில் எழுவதன் மூலம் சுறுசுறுப்பு, புத்தித்தெளிவு, துர்க்குணங்கள் அகலல்,வாத, பித்த, கபங்கள் தத்தம் நிலையிற் பொருந்தியிருக்கும் என்ற செய்திகள் தேரையர் Lu T L 6f6ủ 6 C5 ud i M காணப்படுகின்றன.
“புத்தி யாதற்குப் பொருந்தும் தெளிவளிக்கும் சுத்த நரம்பினறற் றுாய்மையுறும் - பித்தொழியும் தாலவழி வாதபித்தந் தந்தநிலை மன்னுமதி காலைவிழிப் பின்குணத்தைக் காண்.
(560) yuj unt L6))
சித்த மருத்துவத்திலும் சரி சித்தர் கோட்பாடுகளிலும் சரி உடல் பற்றிய நம்பிக்கையும், அதன் பெறுமானமும் நன்கு வலியுறுத்தப்பட்டுள்ள்ன. தாயுமானவ சுவாமிகள் மானுடப்பிறவியின் அருமையை வருமாறு பாடுகிறார்.
“எண்ணரிய பிறவிதனில் மானுடப் பிறவிதான் யாதினும் அரிதரிதுகாண் :
ஒலை 50

இப்பிறவி தப்பினா லெப்பிறவி வாய்க்குமோ ஏதுவருமோ அறிகிலேன்”
(சித்தர்கணம் 4)
ஆனால் வேறு சில சித்தர்கள் இவ்வுடம்பின் நிலையாமையைப் பெரிதும் எடுத்துக் கூறியுள்ளமையும் நோக்கற்பாலது.
“நீர்மேற் குமிழியிக் காயம் இது
நில்லாமற் போய்விடும் நியதி மாயம்”
என்கிறார் கடுவெளிச் சித்தர். அழுகணிச்
சித்தர் மேலும் ஒருபடி சென்று கூறுகிறார்.
“ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப் பறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை”
(TL6 8)
உடம்பு நிலையற்றது, அழியுந் தன்மையது. ஆயினும் அது “மெய்’ எனப் பெயர் பெறுகிறது. இந்த உண்மையை உணர்ந்தவர்கள் சித்தர்கள். இவர்கள் உடம்பு அழியாவண்ணம் பாதுகாக்கும் வல்லமை பெற்றிருந்தார்கள்.
*கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு” (269)
என்ற வள்ளுவர் வாக்கு இதனையே சான்று படுத்துகின்றது.
“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்” என்ற கொள்கையுடையோர் சித்தர்கள், “காய கல்பம்’ என்னும் மருந்தினை உண்டும் யோகத்தில் ஈடுபட்டும் நீண்டகாலம் வாழும் வல்லமையைச் சித்தர்கள் பெற்றிருந்தார்கள். இதுபற்றிப் பாம் பாட்டிச் சித்தர் பின் வருமாறு குறிப்பிடுகிறார்:
*காலமெனும் கொடிதான கடும்பகையைக் கற்பமென்னும் வாளினாற் கடிந்து சாலப் பிறப்பிறப்பினை நாம் கடந்தோம் தற்பரங் கண்டோ மென்று ஆடாய் பாம்பே.”
காயகற்பம்
29

Page 32
தமிழ் மருத்துவம்
காயம் + கற்பம் - காயகற்பம். காயமாம் உடல் அழியாது நிலைபேறு தரும் மருந்தே காயகற்பம். காயசித்தி தருவதே காயகற் பத்தின் பயன்பாடு. சித்தர்கள் இக் காயகற்ப மருந்தை அரிதின் முயன்று பெற்று, உண்டு நீண்ட காலம் வழ்ந்தனர் என்பது ஆன்றோர் நம்பிக்கை. இயற்கையாக மனித உடலில் ஏற்படும் நரை, திரை, மூப்பு என்பனவற்றைப் போக்கும் இயல்புடையதே காயகற்பமாகும். இதனைச் சாகாமருந்து, அமுதம் என்றும் கூறுவர். மனித உடலின் அகம், புறம் இரண்டிலும் அகத் தூய்மையை யோகமும் ஞானமும் தரத்தக்கவை. உடல் இயக்கம் அகத்தும் புறத்தும் நன்கு அமையும் போதே உயிர் இயக்கத்தை நீட்ட வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே உடல்வளர உணவும், உயிரைம் பேண காயகற்பமும் அவசியமாகின்றன. மனத்துக்கண் மாசிலனாக அமைதலே அகமருந்தாகும். அக மருந்தால் உள்ளம் தூய்மையடையும் போது, உடலின் அகத்தே காயகற்பத்தைப் பேணும் வழி திறக்கின்றது. அதனை அறிந்து எடுத்து உட்கொண்டால் சாகா உடல் பெற்று எங்கும் இருக்கலாம், எங்கும் உலாவலாம். அது எல்லோரிடமும் உள்ளது, ஆனால் அந்த அமுதம் சுரக்கும் வழி அடைபெற்றுள்ளது, “மூப்பு” எனப்படும் ஒரு மருந் தைச் சாப்பிடுவதன் மூலம் காயகற்பம் எனும் அமுதம் சுரக்கும் என்கிறார் சித்தர் கணத்தைச் சேர்ந்த சட்டமுனி* பாம்பாட்டிச் சித்தர் காயகற்பத்தின் மூலம் சாகாநிலையடையலாம் எனவருமாறு பாடுகிறார்:
*காலமென்னும் கொடிதான கடும் பகையைக் கற்பமென்னும் வானினாற் கடிந்து சாலப் பிறப்பினை நாம் கடிந்தோம்
தற்பரங் கண்டோமென்று ஆடாயப் பாம்பே'
உள மருத்துவ போதனை
மனக்கட்டுப்பாடும் சகிப்புத் தன்மையு முடையோருக்கு உடல் நோய் ஏற்படும் வாய்ப்பு அரிது என்ப. அத்தகையோருக்கு உடற்பிணி ஏற்படினும் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. இதனையுணர்ந்த கடு
30

வெளிச் சித்தர் தம்பாடல்களில் உள மருத்துவ போதனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். எவற்றால் மனத்திற்கு இன்பமும் துன்பமும் ஏற்படுகின்றன என எடுத்துக் காட்டுகிறார். நல்ல மன ஒழுக்கத்திற்குப் பக்திமார்க்கத்தைக் காட்டுகின்றார். பாவஞ் செய்யாதிரு, கோபஞ்செய்யாதிரு என மனத்திற்குப் புத்தி புகட்டுகின்றார். கோபம் ஏற்படும் போது ஒருவன் தன்னை மறக்கிறான். தன் சுற்றத்தை மறக்கின்றான். தான் செய்யவிருக்கின்ற செயலின் சரி - பிழை, நன்மை - தீமை ஆகியவற்றை அளவிட மறக்கிறான். பிறருக்குத் தீங்கிழைக்க முற்படுகிறான். இதனால் அவனிடம் மனக்கிளர்ச்சி, கோபம், பொறாமை, கவலை, பகை என்பன தோன்றுகின்றன. அதனால் அவனுக்கு இரத்தக் கொதிப்பு, குடற்புண், இரத்த அழுத்தம், நீரிழிவு, மூச்சடைப்பு முதலிய நோய்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. இதனாலேயே சித்தர்கள் தம்பாடல்களிற் கோபமின்றி வாழ வழிகாட்டலானார்கள்.
குண்டலினி சத்தி :
மனித உடலின் மூலாதாரத்தில் உறங்கிக் கிடக்கும் ஓர் அற்புத சத்தியே குண்டலினி சத்தி. யோகப் பயிற்சியின் மூலம் இதனை மேலே எழுப்பி வேண்டிய பலனைப் பெறமுடியும். இதில் தெய்வீக சத்தியுண்டென்ப. சாதகர்கள் தம்யோக வல்லமையால் பல சித்திகளைப் பெற்றுக் கொள்வர்.? குணி டலினிசத்தியை மூலாதாரம் , சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாபதம், விசுத்தி, ஆக்நேயபுருவநடு என்ற ஆறு நிலைப்பாடுகளினூடாக மேலே எடுத்துச் சென்றால் சமாதிநிலை கிடைக்கும். அது விரும்பாதோர் பிணி, மூப்புச், சாக்காடு இல் லாமல் நலமாக வாழ இது வழிவகுக்கின்றது.
மிகவும் ஆற்றல் வாய்ந்த குண்டலினி சத்தியானது பாம்புபோன்று பிடித்து வைத்திருக்க முடியாதது. அதனைப் பாம்பாக உருவகித்து, அதன் வல்லபங் களையெல்லாம்
ஒலை 50

Page 33
தமிழ் மருத்துவம்
பாம்பாட்டிச் சித்தர் பாடியிருக்கின்றார். அவரது பாடல்களிற் பாம்பாகக் கூறப்படுவனவெல்லாம் குண்டலினி சத்தியைப்பற்றியனவேயாகும்.
பாம்பாட்டிச் சித்தர் பாடல்களிலே ஆரோக்கிய வாழ்வுக்குரிய உணவுப்பழக்கம் உடற்பழக்கம், மனஒழுக்கம் முதலாம் விடயங்களும், கருஉற்பத்தி, உடற்கூறுகள் என்பனபற்றியும் பாடப்பட்டுள்ளமை படித்தறியத் தக்கனவாம். சப்த தாதுக்களால் ஆனது உடல், சப்த தாதுக்களில் அழிவுகள் ஏற்பட்டு கழிவுகளாக நீங்குவது இயல்பு. உதாரணமாக குருதியிலுள்ள செங்குருதிக் கலங்கள் தம்
அடிக்குறிப்புக்கள்:
1. இந்நூலின் 3 ஆம் பக்கம் பார்க்க
2. இந்நூலின் 17 ஆம் பக்கம் பார்க் 3. இந்நூலின் 5 ஆம் பக்கம் பார்க்
4. Minakahi C.Administration and Soc
5. South Indian Inscription VOL II pt
6. இந்நூலின் 70 ஆம் பக்கம் பார்க்
7. இந்நூலின் 68 ஆம் பக்கம் பார்க்
8. பதினெண்சித்தர் பெரிய ஞானக்கே
9. “Kundaliniissynonymous with sakti living being and whichkeeps the wor potential, yet remains unrecognized i Margret stutley, Hinduism - The Ete
10. சித்தமருத்துவ பீட மாணவர்களின்
(முனைவர் இ. கருத்துக்கள்”
ஒலை 50

வாழ்க்கைக் காலத்தின் பின் மண்ணிரல், ஈரல் முதலிய உறுப்புக்களில் அழிக்கப் படுகின்றன. பின்பு இவை பிலிரூபின், பிலிவிடின் என்னும் இரு மஞசள் நிறமுடைய கழிவுப் பொருட்களுடன் " சேர்ந்து வெளியில் கழிக்கப்படுகின்றன. இந்த உடலியக்கத் தன்மையைப் பாம்பாட்டிச் சித்தர் பாடல் ஒன்ற குறிப்பிடுவதை நோக்கலாம்.
*மலக்குடம் மீதினிலே மஞ்சள் பூச்சென்றும் மல்கும் புழுக்கூட்டின்மேல் வண்ணத்தோல் என்றும் சலக்குழிக்குள்ளே நாற்றம் சார்ந்து சேறென்றும் தான் அறிந்து தள்ளினோம் என்று ஆடு பாம்பே'.
Es.
cal Life under the Pallavas P. 151 - 153.
III, pp. 109 - 110.
55.
56
5ாவை சட்டமுனி பாடல்கள் பார்க்க.
, the devine cosmic energy existinginevery ld cosmic process going. It has unlimitied
nmost people'. rrnal Law. Northampshire, 1985, p.79.
கருத்தாகும்.
பாலசுந்தரம் எழுதிய “இலக்கியத்தில் மருத்துவக் (1990) என்னும் நூலில் இருந்து.)
31

Page 34
தமிழ் மருத்துவம்
தமிழ் மக்களுக்கு என்று தனித்து வமான வரலாற்றுப் பாரம்பரியமுண்டு. அதேபோல், அவர்களுக்கான நீண்ட நாகரிக வளர்ச்சியும் உண்டு, கலை, கலாச்சார பண்பாட்டு அம்சங்களுமுண்டு. அவை பற்றிய தொன்மையான இலக்கிய, இலக்கண, அற நூல்கள் எல்லாம் உள்ளன. கட்டிடங்கள் பற்றிக் கூறும் கட்டிடக்கலை, சிற்பக்கலை நூல்கள் உண்டு. அதற்கான சான்றுகளாக பிரமாண்டமான கோயில் கட்டிடங்கள், சிற்பங்கள் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. மண்ணின் இயல்பு பற்றி கூறும் நூல்கள், நீர் நிலைகள் பற்றி கூறும் நூல்கள், வானசாஸ்திரங்கள் என இப்படியே கூறிக் கொண்டு போகலாம்.
தமிழ் மக்களுக்கான மருத்துவம் உண்டா? அதற்கான நூல்கள் உண்டா?
உண்டு. அது தான் சித்த மருத்துவம். அதற்கான நூல்கள் நிறைய உண்டு. தமிழ் மக்களுக்கான விஞ்ஞான பாரம்பரியங்கள் நிறைய உண்டு. அதற்கான நீண்ட வரலாறுமுண்டு.
தமிழ் மக்களின் தொன்மையான தனித்துவப் பண்புகள் கொண்ட அம்சங்கள் நிறையவே உள்ளன. கால மாற்றத்தில் நாம் அவற்றை மறந்து, கண்டதே காட்சி கொண்டதே கோலம் ஆகம் மாறி விட்டோம்.
தமிழர் வரலாறு, மொழி, பண்பாட்டு பாரம்பரியம் பற்றிச் எல்லாம் உரக்க சிந்தித்தோம். ஆனால், தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம் பற்றி சிந்திக்க, ஆராய மறுத்து விட்டோம். என்ற போதிலும் சித்த மருத்துவம் இன்றளவிலும் வாழ்ந்து
:
6
纽
32

தமிழர் தேசிய மருத்துவமும் சித்த மருத்துவமும்
மருத்தவர் இந்தராணி தர்மராஜா
காண்டே இருக்கின்றது. நோய்தீர்க்கும் 1ல்லமையிலும் அது சாதனை படைத்துக் காண்டே இருக்கின்றது. இன்றளவிலும் சரி திய நூற்றாண்டுகளிலும் சரி அது உலகின் வால் உடன் போட்டி போட்டுக் கொண்டே விக்கின்றது.
தமிழர் பண்பாடு, வரலாறு பற்றி எல்லாம் பசினோம், ஆராய்ந்தோம் செயற்பட்டோம். ல்லாம் சரிதான். ஆனால், முக்கியமாக தமிழர் ருத்துவமான சித்த மருத்துவம் பற்றிச் ந்திக்க, செயற்பட மறுத்து விட்டோம்.? இது 6?
வரலாற்றின் சதியா?
அல்லது எமது அசட்டையினமா?
சித்த மருத்துவம் விஞ்ஞான பூர்வமற்ற தவையற்ற விடயமா? தமிழர் தேசிய ருத்துவமான சித்த மருத்துவம் செத்து ட்டதா?
இல்லை. இல்லவே இல்லை.
அது உயிருடன்தான் போராடிக் கொண்டு ருக்கின்றது. இன்று வரையும் அது தன் சயற்பாட்டை, தொழிற்படும் ஆற்றலை இழந்து டவில்லை! ஆரோக்கியத்துடன் தன் வாழ்வுக்காக க்ரத்துடன் போராடிக் கொண்டே இருக்கின்றது.
பெரிதும் வளர்ந்து விட்ட இன்றைய ஞ்ஞான தொழில் நுட்பங்கள் நிறைந்த ாற்றாண்டிலும் நெஞ்சை நிமிர்த்தி வாழ்ந்து காண்டிருக்கின்றது. நூற்றாண்டுகளின் வாலுக்கும் முகம் கொடுகின்றது.
ஆரோக்கியத்துடன் முன்னேறி வாழ்ந்து காண்டு வந்த தமிழ் மருத்துவம், அந்நியர் மது தேசத்தை கைதியாக்கிய போது சித்த நத்துவமும் வரலாற்றின் முன் கைதியாகி ண்டனை அனுபவிக்க நேர்ந்தது.
ஒலை 50

Page 35
தமிழ் மருத்துவம்
எமது எத்தனையோ வளர்ச்சிக்குத்தடை போட்ட அந்நிய சக்திகள் தமிழர் மருத்துவ த்திற்கும் தடைபோட்டனர்.
விவசாயம், கைத்தொழில், எமது விஞ்ஞானம், பண்பாடுகள், கலைகள் யாவும் சிதைக்கப்பட்ட போது சித்த மருத்துவமும் சிதைக்கப்பட்டது.
தமிழர் வரலாற்றில், வாழ்வில் சித்த மருத்துவமும் ஒன்றிக் கலந்து பிரிக்க முடியாதபடி இருந்தது. மக்களின் நோய் நொடிகளையும் பிணிகளையும் நீக்கி தானும் முன்னேறிக் கொண்டுவந்தது. அந்நியரால் எல்லாம் தடுத்து நிறுத்தப்பட்டது.
சித்த மருத்துவத்தின் வரலாறு தமிழரின் வரலாற்றுடன் பிரிக்க முடியாதபடி தொடங்குகின்றது. ஆரியர் இந்தியாவுக்கு வரும் முன்பே தொடங்கிவிட்டது. அகன்ற பரத கண்டத்தில் வாழ்ந்த மக்களின் மருத்துவமாக சித்த மருத்துவம் இருந்துள்ளது. இந்தியாவுக்கு வந்த ஆரியர், இந்தியாவில் வாழ்ந்த தொன்மை இன மக்களின் கலாசார பண்பாட்டு அம்சங்களுடன் இணைந்து விட்டனர். இது வரலாற்றின் தவிர்க்க முடியா இயல்பு ஆகும். அது போல் இந்திய தொன்மை இன மக்களிடம் இருந்த மருத்துவ கலையையும் ஆரியர்கள் கற்று அறிந்து கொண்டார்கள். அதன் வளர்ச்சியடைந்த வடிவமே ஆயுள் வேத மருத்துவம் ஆகும்.
ஆயுள் வேத மருத்துவத்தின் தொண்மையான நூல்களை ஆராய்ந்து பார்த்தால் இது விளங்கும். சரகஸம்கிதை, சுசுருதஸம்கிதை ஆன தொன்மை ஆயுள்வேத நூல்கள் கூறுவது என்ன? அதற்கு முன்பே பல நூால் களர் இருந்ததை சரக, சுருருதஸம் கிதைகள் கூறுகின்றன. அப்படியானால் அந்த நூல்கள் யாருடைய நூல்கள்? எங்கிருந்து தோன்றின? எந்த இன மக்கள் அதை பின்பற்றினார்கள்? என்ற தொடர் வினாக்கள் எழுவது இயல்பு தொன்மையான அகண்ட பாரத கண்டத்தில் ஆரியர் நிலையாக வாழ்ந்த இனமக்கள் அல்ல.
ஒலை 50

ஆரியர் வரும் முன்பே அங்கு மக்கள் நிலையான பண்பாட்டு நாகரீகத்துடன் வாழ்ந்துள்ளார்கள். அதற்கு ஆதாரமாக ஹரப்பா, மொகஞ்சதரோ நாகரீகங்கள் சாட்சியாக விளங்குகின்றன. அங்கு சிறப்பான சுகாதாரக் கொள்கைகள், அமையப் பெற்றுள்ளதை அங்கு சிதைவடைந்த நகரங்கள் சுட்டி நிற்கின்றன என தொல்லியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மகாபாரத, இராமாயண இதிகாசங்கள் தொன்மையான மருத்துவங்கள் பற்றிப் பேசுகின்றன. இராமாயண இதிகாசத்தில் இராவணன் சிறந்த மருத்துவனாகவும் விபரிக்கப்பட்டு உள்ளான். அதேபோல் மகாபாரத இதிகாசத்திலும் மருத்துவக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளதை காணமுடியும். இவை எல்லாம் எதைச் சுட்டி நிற்கின்றன? தொன்மையான அகண்ட பரத கணிடத்தில் ஆரியர் அல்லாத இன மக்களிடத்திலும் மருத்துவக் கலை பரவி இருந்ததைத்தான் சுட்டி நிற்கின்றன.
ஆகவே, ஆயுள்வேத மருத்துவத்தில் பொதிந்து இருப்பவை யாவும் சித்த மருத்துவத்தின் ஊற்றுக்களே என்ற போதிலும், சித்த மருத்துவத்தின் தனித்துவமான சில அம்சங்கள் இன்றளவிலும் தென்னாட்டிலும், ஈழத்திலும் பிரதிபலிப்பதைக் காணமுடியும். வங்காளத்திலும் தனித்துவமான மருத்துவ அம்சங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது என்பதை தொன்மையான இந்திய மருத்துவ வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எப்படி இருந்த போதிலும் இந்தியாவின் அனேக மாநிலங்களில் ஆயுள்வேத மருத்துவம் என வைத்தியசாஸ்திரம் விளங்கிவரும் போது, தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் அது சித்த மருத்துவமாகவே வளர்ந்து வந்துள்ளது.
தமிழர் மருத்துவம் அன்று தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் மன்னர்களாலும், மடாலயங்களாலும் பேணிப் பாதுகாக்கப் பட்டு வளர்த்து வரப் பட்டது. பணி டைய கலாசாலைகளிலும், குருகுலங்களிலும் கற்பிக்கப்பட்டு வந்தது. மன்னர்களால் ஊர்கள்
33

Page 36
தமிழ் மருத்துவம்
தோறும் மருத்துவ ஆதுலர் சாலைகள் நிறுவப்பட்டு வைத்திய சேவைகளை வழங்கி வந்துள்ளது. அது போல் ஆலயங்களும், மடாலயங்களும் மருத்துவ சேவைகளை மக்களுக்கு வழங்கி வந்துள்ளன. ஆதுலர் சாலைகளில் வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். மருந்துகளுக்கான மூலிகைகளைப் பெற மூலிகை வனங்களை உருவாக்கியிருந்தார்கள். இதற்கான சான்றுகளாக சோழர் கால கல்வெட்டுகள் இன்றும் சாட்சியாகத் திகழ்கின்றன. அதே போல் ஈழத்தில் யாழ்ப்பாண மன்னர்களால் நாயன்மார்க்கட்டில் நிறுவிய ஆதுலர் சாலை சாட்சியாக திகழ்கின்றது.
தமிழர் மருத்துவம் கூறும் நூல்கள் ஏராளமாக சித்தர்களால் அன்று சுவடிகளில் கூறப்பட்டுள்ளன. அகத்தியர், போகர், கொங்கணர், திருவள்ளுவர், தன்வந்தரா திருமூலர் என சித்த மருத்துவம் கூறும் சித்தர்கள் பதினெட்டாக குறிக்கப்படுகின்றது. சித்த மருத்துவ சுவடிகளை அடியொற்றி ஏராளமான மருத்துவர்கள் இயங்கி வருவதுடன் தமக்கான பிரதிகளையும் ஒலைச் சுவடிகளில் திருத்தி பதித்தும் வந்துள்ளனர். தமிழ் நாட்டு தஞ்சை சரஸ்வதி மகாலில் ஏராளமான சித்த மருத்துவம் கூறும் ஏடுகளை மன்னர் சரபோஜி சேகரித்து வைத்து எதிர் கால சந்ததியினர் பயன் படுத்துமாறு விட்டு சென்றுள்ளார்.
வெளிநாட்டாரும் வந்து எமது தமிழர் வைத்திய முறைகளை கற்றுச் சென்றுள் ளார்கள். அத்துடன் நிற்காது எமது மருத்துவ சுவடிகளையும் தம் முடன் தமது நாடுகளுக்கும் கொண்டு சென்று பாதுகாத்து வைத்துள்ளனர். அவற்றை தமது மொழியில் மொழிபெயர்த்து սա 6ծi உள்ள குறிப்புகளையும் எழுதி வைத்துள்ளனர். ஜெர்மனியில் ஏராளம் சித்த மருத்துவ ஓலைச் சுவடிகளும், அவை பற்றிய குறிப்புகளும் உள்ளன என்பது பொய் அல்ல! அதேபோல் வேறு பல நாடுகளிலும் எமது பொக்கிசங்கள் நிறைந்துள்ளன.
34

யாழ்ப்பாணத்து மன்னர்களும் சித்த மருத்துவத்தை வளர்த்து வந்ததுடன் ஏடுகளையும் பாதுகாத்து வந்துள்ளனர். யாழ்ப்பாணத்து மன்னர்களின் பெயர்களில் சித்த மருத்துவம் கூறும் நூல்களும் உள்ளன. செகராசசேகரம், பரராச சேகரம் எனும் பெயர்கள் கூறும் சித்த மருத்துவ நூல்கள் ஈழத்தில் பிரபல்யமானவை. யாழ்ப்பாண அரசினி பரராச சேகரன் என்பவர் வைத்தியத்திலும் பிரபல்யமாக விளங்கினான். இவன் கண்டி சென்று, சுகவீனமுற்று இருந்த கண்டி அரசனின் மனைவியை சுகப்படுத்தி திரும்பியதாக ஒரு கதையுண்டு. ஈழத்தில் சித்த மருத்துவம் சார்ந்த பல சான்றுகள் உண்டு. திருக்கோணமலையில் மூதூரில் உள்ள அகத்தியர் ஸ்தாபனம் சித்த மருத்துவத்துடன் இணைத்துக் கூறப்படும் செய்தி ஆராயக் கூடியது ஆகும் . தென்னிலங்கையிலும் சித்த மருத்துவம் புகழுடன் இயங்கி வந்துள்ளது. கம்பஹாவில் உள்ள விக்கிரமாராச்சி சித்தாயுள்வேத வைத்திய சாலையும் கல்லூரியும் சித்த மருத்துவப் புகழ் கூறும் நிலையமாகும். அது பாரம்பரியமாக நெடுங் காலமாக இயங்கி வந்த கலாசாலையாகும்.
மண்னர் காலத்துக்குப் பிற்பட்ட காலங்களிலும் யாழ்ப்பாணத்தில் சித்த வைத்தியம் புகழுடன் திகழ்ந்து வந்துள்ளது. இதற்கு ஆதாரமாக பிற்பட்ட காலத்தில் தோன்றிய சித்த மருத்துவ நூல்களே சான்று ஆகும். இருபாலைச் செட்டியார் என்ற வைத்தியர் புகழுடன் விளங்கியதுடன், அவர் தனது பெயரிலும் சில வைத்திய சாஸ்திர நூல்களை விட்டுச் சென்றுள்ளார். இருபாலைச் செட்டியார் வைத்திய விளக்கம். பதார்த்த சூடாமணி போன்றன அவரின் நூல்களாகும். சுன்னாகம் அ. வரதபணி டிதர் என்பவர் அமுதாகரம் எனும் விஷ வைத்திய நூலை எழுதி வெளியிட்டுள்ளார். சொக்கநாத குருக்கள் என்பவர் சொக் கநாதர் தன்வந்திரியம் எனும் அறுவை வைத்திய சம்பந்தமான நூலைப் படைத்துள்ளார். இப்படியாக பல வைத்திய நூல்கள்
ஒலை 50

Page 37
தமிழ் மருத்துவம்
தோன்றியுள்ளன. எத்தனையோ நூல்கள் பராமரிப்பு கவனிப்பு இல்லாமல் அழிந்து விட்டன. சில நூல்கள் சிலரின் குறுகிய புத்தியால் அதாவது பிறருக்கு பயன்படக் கூடாது என்ற நோக்கில் அழிய விடப்பட்டன. மிஞ்சிய நூல்கள் சமுதாய விரும்பிகள் ஆன பெரிய மனதுள்ள புண்ணியவான்களால் காப்பாற்றப்பட்டு உள்ளன.
யாழ்ப்பாணத்தில் தோன்றிய அனேக வைத்திய நூல்களை அழிய விடாது தேடி எடுத்துப் பாதுகாத்து பதிப்பித்து வெளியிட்ட பெருமை ஏழாலை வைத்தியர் ஐ.பொன்னையாவையே சேரும். அந்த மகான்தான் பல அரிய பெரிய ஈழத்து வைத்திய நூல்களை தேடிச் சேகரித்து பல பிரதிகளை ஒப்புமை பார்த்து தனது யாழ்ப்பாணத்து வைத்திய நூற்பிரசுரம் மூலம் பதிப்பித்து வெளியுலகத்துக்கு வெளிச்சம் காட்டியவர். யாழ்ப்பாண மண் அவருக்கு பெரிதும் கடமைப்பட்டுள்ளது. அவர் இல்லாவிடில் பல வைத்திய நூல்களை நாம் இழந்து இருப்போம்.
இப்படியாக முன்னோர்கள் எமது மருத்துவத்தை வளர்த்து வந்துள்ளார்கள். எமது மருத்துவத்தில் உணவே மருந்து, மருந்தே உணவு என்ற தத்துவம் உள்ளது. அதாவது உணவும் வேறல்ல மருந்தும் வேறல்ல. இரண்டும் இணைந்து மனித வாழ்வுடன் கலந்து உள்ளது. மருந்தே உணவாக இருந்தால் நோய் வராமல் பாதுகாக்கலாம், உணவே மருந்தாக இருந்தால் நோயையும் மாற்றலாம். எமது அன்றாட உணவிலேயே ஆரோக்கியம் தங்கி உள்ளது. மிளகு, திப்பிலி, உள்ளி, இஞ்சி, சீரகம், கறுவா, பெருங்காயம், மஞ்சள் என மருத்துவப் பண்பு கொண்ட பொருட்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. மக்களின் வாழ்வில் ஒன்றிக் கலந்து விட்ட சித்த மருத்துவம் மனித வாழ்வின் போதனையாக விளங்குகின்றது.
மக்களின் வாழ்வில் ஒன்றிக்கலந்து விட்ட தமிழர் மருத்துவம் அந்நியரால் எமது
ஒலை 50

வாழ்வில் இருந்து விலக்கப்பட்டு திட்டுப் பொருள் ஆக்கப்பட்டது. கல்விக் கூடங்களில் இருந்து தூக்கி வீசப்பட்டது. ஆதுலர் சாலைகள் இடித்து உடைக்கப்பட்டு பாழ்பட விடப்பட்டன.
இன்று எமது மருத்துவப் பண்பாடு மாற்றப்பட்டு விட்டது. முன்பு எமது மூதாதையினரின் மருத்துவப் பண்பாடு சித்த மருத்துவப் பண்பாடாகவே இருந்தது. அந்நியரின் ஆட்சியினால் அந்தப் பண்பாடு மாற்றப்பட்டு விட்டது. ஆங்கில மருத்துவப் பணி பாடுதாணி எங்கள் பணி பாடாக வலியுறுத்தப்பட்டது. அது தான் வாழ்க்கை என வலியுறுத்தப்பட்டது. அதற்காக நாம் ஆங்கில மருத்துவத்தை வெறுக்கவோ மறுக்கவோ முடியாது. இன்றைய வளர்ச்சி அடைந்த உலகில் அது புறக்கணிக்க முடியாத இன்றியமையாத மருத்துவமாக வளர்ச்சி கண்டு விட்டது. நவீன உலகின் மக்களின் அத்தியாவசியமான தேவையாக அது நவீனத்துவமடைந்து விட்டது. அது தவிர்க்க முடியாதது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால், அது தான் வாழ்வு அல்ல. எமது வாழ்வு தமிழர் மருத்துவம். எமது முதுசம் சித்த மருத்துவம். அதனை நாம் புறக்கணித்து நசுக்கிவிட முடியுமா? அப்படியானால் அதை யார் வளர்த்து முன்னேற்றுவது? பிறர் செய்ய முன் வருவார்களா?
இல்லை! அவர்களுக்கு என்ன அக்கறை? வேதனைப்பட்டாலும், அழுதாலும் பிள்ளையை தாய் தான் பெறவேண்டும். வளர்க்க வேண்டும். அதுபோல் தமிழர் மருத்துவத்தை தமிழர் தான் கட்டிக் காத்து வளர்க்க வேண்டும்!
எனினதான முயன்றும் சித்த மருத்துவத்தை அந்நியரால் அழிக்க முடியவில்லை. எமது வாழ்வில் ஒன்று கலந்து விட்ட மருத்துவத்தை முற்றாக அழிக்க முடியவில்லை. ஆனால் எம்மில் இருந்து சிறிது அந்நியப்படுத்த முடிந்தது. ஒதுக்கப்பட்ட எமது
35

Page 38
தமிழ் மருத்துவம்
மருத்துவம் கிராமங்களில் எமது மூதாதையர்களிடத்தில் அது வாழ்ந்தது. எமது தாத்தாமார், பாட்டிமார் அதனை தமது சந்ததிகளுக்கு கடத்தினர். எமக்குக் கூட அவர்கள் தமது கை வைத்தியத்தை உபயோகப்படுத்தினர். காய்ச்சல், தலையிடி வந்தால் முதல் உதவி வைத்தியமாக கொத்தமல்லித்தண்ணி, வேர்க்கொம்புப் பற்று என தமக்குத் தெரிந்த மூலிகை முதல்உதவி வைத்தியத்தை செய்து பார்த்தனர். ஆனால் இன்று அந்த முதல் உதவி மூலிகை வைத்திய முறை கூட மறைந்து வருவதுதான் கவலைக்குரியது.
இன்று உலகமே மாற்றமடைந்து வருகின்றது. மேற்கு நாட்டினர் மாற்று மருத்துவம் நாடி அலைகின்றனர். மேற்கத்தைய வைத்திய முறைகளை கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர். எமது யோகா, ஆழ் நிலை தியானம் , மூலிகைகள் போன்றவற்றை தேடத்தொடங்கி விட்டார்கள். உலக சுகாதார நிறுவனம் மாற்று மருத்துவங்களை அங்கீகரித்து விட்டது. அதில்
வேப்பம்பட்டைத்தைலம் செய்முறை வேப்பம்பட்டை 350கிராம் எடுத்து நன்கு காய்ச்சி எட்டில் ஒன்றாகக் குறுக்கி நல்லெண்ணையைச் சேர்துக் கலக்கி அதி மெழுகாகக் காய்ச்சி பதம் பார்த்து இ அடைத்து வைத்துக் கொண்டு வாரம் ஒருமுறை தேய்துக் குளித்தவர கு
அரைத்துடனே காய்ச்சியது மெழு
ஆற்றியே வடித்துவைத்து நிறைத்திட்டவரதமெல்லா மெங்கே நிசமான சூலையோடு குட் நிரைத்திட்ட தழுதணையு மேற்கெ செங்கரப்பான் புண்புரைகள் முறைத்திட்ட தயிலமொன்று வுறை
வாதம், சூலை,குட்டம், கரப்பான்,ஆறாத வெயிலைக் கண்ட பணிபோல ஓடிவிடும் கூறியுள்ளார்.
36

எமது சித்த - ஆயுள் வேத மருத்துவ முறைகளும் அடங்கும்.
எமது முறைகளை மேற்கு நாட்டினர் சொந்தம் கொண்டாடும் முன் நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். தகுந்த முறையில் ஆராய்வோம். ஆராய்ந்து உண்மைகளை வெளி உலகுக்கு. அம்பலப்படுத்துவோம்.
“திறமான புலமையெனில் வெளி நாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்” என பாரதிகூறியது போல் திறமையை நாம் வெளிக்காட்ட வேண்டும்.
எமக்கென்று நாடு இருந்தது. மொழி, பண்பாடு, கலை இருந்தது. நாகரீகம் இத்துடன் மருத்துவமும் இருந்தது.
ஆனால் எல்லாவற்றையும் இழந்து விட்டோம்.
மீண்டும் எல்லாவற்றையும் பெறுவோம். ஆம். சித்தமருத்துவத்தையும் சேர்த்துத் தான். சிந்திப்போம் செயற்படுவோம்.
இடித்து 1லிட்டர் தண்ணிரில் போட்டுக் வடித்து கசாயத்துடன் 800மில்லி ல் 25கிராம் ஏலக்காயைத் தட்டிப் போட்டு றக்கி ஆறியபின் வடிகட்டிப் புட்டியில்
ணமாகும் நோய்கள்:
கதானால் முழுகும் போது
போச்சு டரோகம் ாடுப்புச்
சேராதோடு க்கின்றேனே.
ஆதாரம்:10
புண், பொடுகு, ரணம், யாவும் என்று அகஸ்தியர் தமது பாடலில்
ஒலை 50

Page 39
தமிழ் மருத்துவம்
சுதேச தப
இந்தியத் தமிழ் நாட்டைப் போலவே ஈழத்திலும் மிகவும் ஆதிகாலந்தொட்டுச் சுதேசவைத்தியம் மக்கள் பிணி தீர்ப்பதில் சிறப்புற்று விளங்கிவந்துள்ளதை அறிய முடிகிறது. பல்லவ, சோழ, பாண்டியர்களின் நட்புறவும் மேலாதிக்கமும் இலங்கையில் ஏற்பட்டிருந்த காலங்களில் தமிழகத்தில் கையாளப் பட்டு வந்த மருத்துவம் (சித்தமருத்துவம்) இங்கும் கையாளப்பட்டு வந்திருக்க வேண்டும். பொலநறுவை GUITAba56ð 6úlệp T60pyuî6ð (Potgul Vehera) அமைந்துள்ள ஒரு சிலை சித்தமருத்துவத் தின் தந்தை என்று கருதப்படும். அகத்திய முனிவருடையது என்ற கருத்து இதை வலும் படுத் துவதாக அமைகிறது. சிவசண்முகராஜா சே, (1993 ஈழத்துச் சித்த மருத்துவ நூல்கள், ஓர் அறிமுகம், St. Joseph's Catholic press, 360, Main Street, Jaffna, 9ựì(Jp5ư, Uragoda C.G, (1987)A History of Medicine in Sri Lanka form earliest times to 1948, ACetenary Publication, Sri Lanka. Medical Association, Colombo 14. g5 Lf மருத்துவம், சுதேசமருத்துவம், சித்தமருத் துவம், ஆயுர் வேதமருத்துவம், சித்தாயுர் வேத மருத்துவம், நாட்டுமருத்துவம், கைமருத்துவம், நாடிவைத்தியம் என்றெல்லாம் தமிழரது மருத்துவ முறைமைகள் வெவ்வேறு பதங்களிற் பேசப்பட்டுள்ளமை சுட்டத்தக்கது. யுனானி மருத்துவம், தொடுகை மருத்துவம், சிங்கள மருத்துவம், ஆங்கில மருத்துவம் என்பன பிறவகை மருத்துவ முறைமைகளாகும். மூலிகைமருத்துவம் என்பது சித்தாயுர்வேத தமிழ் மருத்துவ முறைமையேயாகும்.
ஈழத்துச் சுதேச தமிழ் மருத்துவ இலக்கியம் என்ற வகையிலே முதன்மை யாக
ஒலை 50

5ழ் மருத்துவ இலக்கியமான பரராசசேகரத்தின் யாப்பியற் கவிதை வளம் முனைவர் கனகசபாபதி நாகேஸ்வரன்
வைத்து எண்ணப்படுவது பரராசசேகரம் என்ற பன்னிராயிரம் பாடல்களைக் கொண்ட நூலேயாகும். இந்த நூலுக்கு முன்னர் தோன்றியது செகராசசேகரம் என்ற மருத்துவ இலக்கிய மாகும் . இவ்விலக்கியத்தை ஏழாலையைச் சேர்ந்த சுதேச வைத்தியர் ஐ.பொன்னையா என்பவர் ஏழு பாகங்களாகப் பிரித்து வெளியிட்டுள்ளார். அச் சுவேலியைச் சேர் நீத ச. தம் பிமுத்துப் பிள்ளை என்பவரும் பரராசசேகரத்தைப் பதிப்பித்துள்ளதாகக் கூறப்படுகின்ற போதிலும் அவரின் பதிப்பு நூல் கிடைத்திலது.
சுதேச தமிழ் மருத்துவ இலக்கியமான பரராசசேகரத்திலே அருமையான தமிழ்ச் சுவையை அனுபவிக்க முடியும். வைத்தியன் “பண்டிதன்' எனவும் அழைக்கப்படுகிறான். பண்டிதன் என்பது அறிவியல், மொழி, சிந்தனை, கவிதா, சாமர்த்தியம், விஞ்ஞான நோக்கு, இயற்கையோடியைந்த சிந்தனை, உவமை, உருவகக் கையாளல், தமிழ்ப் பாவியல், யாப்பியற் கட்டுமானத்தை இறுகப்பற்றுதல் என்னும் குணாம்சங் களினால் மேதாவிலாசம் கொண்டவன் என்னும் விரிந்த, பரந்த புலத்தைக் குறித்து நிற்கிறது. தெய்வ நம்பிக்கை, இதில் மிகப்பிரதானமாயமைகிறது. இவ்வனைத்துப் பண்புகளும் இலக்கிய, நூன் மரபுச் சிறப்புகளுடன் பரராசசேகரம் எனும் நூலிலே இடம்பெற்றுள்ளமை எம்மால் ஆய்வு செய்யப் பெற்று வெளிக்கொணரப் பட்டுள்ளது.
சுருக்கமாக, காப்புச் செய்யுள் வரிகள் ஓரிரு சான்றுகள் இங்கு நோக்கலாம்.
I.
“சீரணியுந் திருமாலு மயனுங் காணாச் சிவபெருமானளித் தருளுமொரு வெண்கோட்டுக்
37

Page 40
தமிழ் மருத்துவம்
காரணி மெய்யைங் கரத்து நால்வாய் முக்கட் கடவுளிரு பதயுகளங் கருத்துள் வைப்பாம்”
(பரராசசேகரம், கடவுள் வணக்கம் செய்1)
*அந்தியன் மதியென வலர்ந்த கோட்டைச்
சுந்தர நிறை மதித் துதிக்கை யானையை”
(பரராசசேகரம், கடவுள் வணக்கம் செய்2)
*வாரண மங்கையை வதுவை செய்திடும்
சீரிய வேள் பதஞ் சிந்தை செய்குவாம்”
(பரராசசேகரம், கடவுள் வணக்கம் செய்3)
உவமைகள், உருவகங்கள், அன்மொழித் தொகைகள் : (மேலது, செய் - 3)
பரராசசேகர இலக்கிய மருத்துவ நூலிலே யாம் தரிசித்த ஆய்வு செய்து கண்டுபிடித்தனவாக மேல்வரும் நயங்கள் வரிகள், வசனங்கள், உவமைகள், உருவக ங்கள், அன்மொழித் தொகைப் பிரயோங்கள் அமைகின்றன. i. “மானின் விழியாள் பெண் மணியே கேள்” i. கோவியங் கண்ணினாளே” i. “ஏலவார் குழலினாய் கேள்” iv. “மின்னிடை மின்னே”
“sist LL6 DLLDITS60'
wi. “கிளி சேர் மொழியாய்” wi. *பேனேயூரும் போலூரும்”
Vi.
wi. “செப்புப் போன் முலை மாது நலாய் ix, “குரும்பையின் முலை நன்மாதே”
x *வட்டமுலையாய்”
- எனவருவன காண்க.
தமிழியல் யாப்பிலக்கணத்திலே எதுகை மோனை என்ற இலக்கண வழக்குண்டு. தமிழிலே கவிதையையோ, செய்யுளையோ இயற்ற முற்படும் எவருக்கும் எதுகை மோனைப் பிரயோக முறைமை அவசியம், கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும். ஏனெனில் மேதாவிலாசமிக்க புலவன், கவிஞன், காவிய ஆசிரியன் எழுதும் பொருள் மரபு கவிதையான கவிதைப்பண்பான எதுகை
38

மோனை என்ற கவிதையரின் வடிவத்தன்மையினால் நீடுநிலைபெற வாய்ப்புள்ளது. எனவே பாவலன், புலவன், கவிஞன் என்பவனுக்கு எதுகை மோனை வழக்குகளை இக்கட்டுரை அறிமுகப் படுத்துவதும் பொருந்துமல்லவா?! “இரண்டாவது எழுத்து ஒன்றிவருவது எதுகை. முதலாவது எழுத்து ஒன்றி வருவது மோனை'
i. உண்மையாயப்
வண்மையாய்
திண்ணமாய்
மண்ணுளோர்
i. காரணமாறிந்தோர்
தாரணையறிந்து
வாரணி முலையினாளே
பூரணமாகச்
i. தானே.
DITGSGOT....
பேனே.
தேனே.
யாப்பியற் கவிதை வளம்
பரராசசேகர இலக்கிய மருத்துவ நூலிலே பல்வேறு வகையான யாப்புகள் இடம் பெற்றுள்ளன. செய்யுட்கள் பெரும்பாலும் பாமர சாமானிய படிப்பறிவற்ற மக்களுக்குப் புரியத்தக்கனவாயமையவில்லை. பண்டிதன் எனும் மருத்துவனின் சாணக்கியமும், புலமையும் , வித்துவ நலனும் , மேதாவிலாசமும், அறிவியற் பொருள் மரபு சுட்டும் திறனும் எல்லாம் இணைந்தும், பொருந்தியும் கவிதைகள் - செய்யுட்கள் இடம் கொண்டுள்ளமை மனங் கொளற்பாலது.
எண்சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம், நாற்சீர்விருத்தம், அறுசீர்விருத்தம், ஈரசைச்சீர் அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம், பன்னிரு சீர்ச்சந்த விருத்தம், பதினான்கு சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம், துள்ள லோசை விரவிய எண்சீர் விருத்தம், கலிவெண்பா, எண்சீர்ச்சந்த விருத்தம் முதலிய யாப்பியன் முறைமைகளிலமைந்த இலக்கியச் செய்யுட்கள் பரராசசேகரத்திலே காணப்படுகின்றன. ஒரு சில யாப்புகளுக் கான
ஒலை 50

Page 41
தமிழ் மருத்துவம்
சான்றுகளை நோக்குவோம். மேல்வருஞ் செய்யுள் எண்சீர்க்கழிநெடிலா சிரிய விருத்தம் என்னும் யாப்பிலமைந் துள்ளது.
*தாரணியோர் மிகப் புகழ் தன் வந்திரி செய்த தகவுடைய சீர்த்திபெறு மாயுள் வேதப் பேரணியும் வாகடத்தைப் பெரிது பேணிப்
பெட்புடைய தமிழ்ப்பாவாற் பேசும் வண்ணம் சீரணியுந் திருமாலு மயனுங் காணாச்
சிவபெருமானளித்தருளுமொருவெண் கோட்டுக் காரணிமெய் யைங்கரத்து நால்வாய் முக்கட்
கடவுளிரு பதயுகளங் கருத்துள் வைப்பாம்”
மருத்துவ இலக்கியமான பரராசசேகரத்தில் இடம்பெறும் நாற்சீர் விருத்தம், சான்றாதாரம், செய்யுள் *செந்திரு நிறையொலி திகழுங் கிம்புரி அந்தியின் மதியென வலர்ந்த கோட்டைச் சுந்தர நிறை மதித் துதிக்கை யானையை வந்தனை மலர்கொடு வணங்கி வாழ்த்துவாம்”
பரராசசேகரத்திலிடம்பெறும் அறுசீர்விருத்தம் சான்றுச் செய்யுள் *ஆயுளைக் கொடுக்கும் வேத மறையிலெட்
- டிலக்கமாகும் மீயுயர் தமிழினாயேன் விளம்புவ னென நினைத்தல் பாயுயர் விழியிலாதான் பகலினைக் காட்டக் கண்டு
ஒலை 50
 

சேயுயர் செவியினோர்க்குச் செப்பிய
- தன்மைத்தாமால்”
இனி, ஈரசைச்சீர் அநுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம். *ஏகமாயாதி யாகி யெங்குமா யாவுமாகிப் போகமாய்ப் போகியாகிப் பொருந்துயிர்க்
- குள்ளீடாகிப் பாகமாரம்பையோடு பரசிவனருளிற் றோன்றித் தாகமார் கைலை தன்னிற்றணித்திருந்தருளு
- மெல்லை”
இறுதியாகத் துள்ளலோசை விரவிய எண்சீர் விருத்தம் “தழுதாழை நிலவாகை புளியாரை நொச்சி
சாரணையுடன் கோவை தக்கவழி சித்தி பழுபாகலிருவேலி கோரக்கர் மூலி
பாங்கான வாகையகில் நன்னாரி சிந்தில் வழுவாத விருவேலி யிலாமிச்சு வெட்டி
வாகாய முக்கிரா மிளகு சாரணைவேர் அழகான வேங்கை வயிரத்தினுட னொவ் வோன்
றவ்வாறு பலமாக வெவ்வேறு கொள்ளே”
இவை பரராசசேகர மருத்துவ இலக்கிய த்தின் தமிழ் வளமாண்புகள்.
39

Page 42
தமிழ் மருத்துவம்
தமிழரின் மருத்துவச் சிந்தனைகள் இத்துறையில் கிரேக்கக் கொடைக்கு நிகரானவை. மருத்துவ இயலின் தந்தை என்று உலகம் கொண்டாடும் ஹிப்போகி ரேட்டசின் சிந்தனைகளுக்கு இணையான மருத்துவக் கொள்கைகளை வள்ளுவர் வகுத்திருக்கிறார். “நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்ற அந்த ஒன்றரை வரிகளுக்குள் இந்நாளைய மருத்துவக் கல்வி, மருத்துவப் பணி ஆகியவற்றின் அடிப் படைக் கோட்பாடுகள் முற்றிலுமாய் அடங்கி விடுகின்றன.
வள்ளுவருக்கு முன்னிருந்தே மருத்துவம் இந்த மண்ணில் மக்களின் நம்பிக்கைக்குரிய வாழ்நாள் வளர்க்கும் நலத்துறையாக வளர்ந்தோங்கியிருந்தது.
“தீயினும் கடிது அவர் சாயலிற் கனலுநோய் ஆங்கு, அன்னர் காதலர் ஆக அவர் நமக்கு இன்னுயிர் போத்தரு மருத்துவராயின்’
கலித்தொகைக் காதலி, தன் காதலரைப் பற்றித் தோழியிடம் பேசுமிடத்து, “உயிரைப் போகாமல் மீட்கும் மருத்துவராய் நமக்கு அவர் இருப்பாரா? என்று தோழியிடம் சிணுங்கிக் கேட்கும் சினப்பா இது. நமக்கோ மருத்துவர் மீது கலித்தொகை காலத்து மக்களுக் கிருந்த நம்பிக் கையை வெளிப்படுத்தும் அரியதொரு சான்று.
மற்றொரு பாலைக்கலி, “திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய மருந்து போல்” என்று மருத்துவன் மருந்துாட்டிய பக்குவத்தை எடுத்துச் சொல்கிறது.
40

ஆதுலர் சாலைகள்
முனைவர் இரா. கலைக்கோவன்
மருத்துவர்க்குப் பெண் பால் மருத்து வச்சி என்பர். ஆனால் மணிமேகலையோ 'மருத்துவி’ என்று சிறப்பிக்கிறது. "ஆருயிர் மருத்துவி' என்று அழைத்துப் பெண் மருத்து வர்களிடம் மக்களுக்கிருந்த பேரன்பையும் வெளிப்படுத்துகிறது.
மருந்து என்ற சொல் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, நாலடியார், கார் நாற்பது, ஐந்திணை எழுபது, திருக்குறள், திரிகடுகம், பழமொழி நானுாறு, சிறுபஞ் சமூலம், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருமுறைகள், திவ்வியப்பிரபந்தம் என்று பல இலக்கியங்களில் பாக்களிலும், பதிகங்களிலும், பாசுரங்களிலும், பொருளார்ந்த நிலையில் கையாளப்பட் டுள்ளதை நோக்கும்போது கி.பி. முதல் எட்டு நூற்றாண்டுகளில் தமிழகத்தில் இருந்த மருத்துவத் துறை வளர்ச்சியையும், மருத்துவ முறைகளையும் உய்த்துணர முடிகிறது.
"6 IT 6T IT 65 அறுதி துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல்நோ யாளன் போல்” என்ற குலசேகர ஆழ்வாரின் பாசுரம் அறுவை மருத்துவமும் , அந் நாளில் செழித்திருந்த தன்மைக்குச் சான்றாகிறது.
இந்த அறுவை மருத்துவர்கள் சோழர் காலத்தில் சல்லியக்கிரியை செய்வோராகக் குறிக்கப்படுகின்றனர்.
குடந்தைக்கு அருகிலுள்ள திருவிசலூர் சிவயோகநாதர் கோயிலில் உள்ள முதலாம் இராசேந்திரரின் நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, முதலாம் இராசராசரின் தமக்கையாரும் வல்லவரையர் வந்தியத்
ஒலை 50

Page 43
தமிழ் மருத்துவம்
தேவரின் வாழ்வரசியுமாருமான ஆழ்வார் பராந்தகன் குந்தவை பிராட்டியார், வேம் பற்றுாரில் சலி லியக் கிரியை மருத்துவராகப் பணியாற்றிய அரையன் உத்தம சோழனான ராஜேந்திர சோழ பிரயோகதரையனுக்கு, நல்லூர் நாட்டு பிரமதேயம் ராஜகேசரி சதுர் வேதி மங்கலத்தில், ஒரு வேலி நான்கு மா நிலத்தையும், வேம்பற்றுாரில் ஒரு வீட்டையும் சல்லியக்கிரியை போகமாகக் கொடையளி த்துள்ளார்.
இந்த நிலத்தின் விளைவை மருத்துவர் பிரயோகதரையன் வாழ்வூதியமாகக் கொண்டு, வேம்பற்றுார் வீட்டில் வசித்தபடி மக்களிடம் பொருள் கொள்ளாது மருத்துவம் செய்து வந்தார். இதைப் பல்வேறு கொடை நிறுவன மற்றும் தனியார் உதவிபெறும் இன்றைய தனியார் இலவச மருத்துவமனைகளுக்கு ஒப்பிடலாம்.
இதுபோல் மருத்துவமனைகள் தமிழக த்தின் பல பகுதிகளிலும் சோழர் காலத்தில் பயனுறப் பணியாற்றின. இம்மருத்துவர்கள் கல்வெட்டுகளில் வைத்தியர்கள் என்றழைக்கப் படுகின்றனர். இவர்களுக்குத் தனியர், ஊரவை, அரசு அலுவலர்கள், அரசு குடும்பத்தினர் என்று அனைவருமே கொடையளித்து, இவர் தம் மருத்துவப் பணி தொடர உதவியுள்ளனர். இப்படி அளிக்கப்படும் கொடை வைத்திய போகமாகவும் வைத்தியக் காணியாகவும் கலி வெட்டுகளில் குறிக்கப்படுகிறது. “எங்களுர் வைத்யக் காணி உடைய காசியபன் அரையன் அரைசனான ராஜகேசரி மங்கலப் பேரையன்’ என்ற கல்வெட்டு வரிகள் இதற்குத் தக்க சான்றாகும்.
இன்றைய சிறப்பு மருத்துவர்கள் போல் அந்நாளிலும் சிறப்பு மருத்துவர்கள் இருந்துள்ளனர். நஞ்சு முறிக்கும் மருத்துவ ர்களுக்கு வாழ்வூதியமாக நிலமளிக்கப்பட்ட செய்தி உத்திரமேரூர் கல்வெட்டொன்றி லிருந்து கிடைக்கிறது. இவ்வகை நிலம் விஷஹரபோகமெனப்பட்டது. ஊரவையே இம்மருத்துவரைத் தேர்ந்து பணிக்கமர்த்தி
ஒலை 50

நிலமளித்ததையும் இக் கல்வெட்டால் அறிகிறோம்.
அந்நாளைய மருத்துவமனைகள், ஆதுலர் சாலைகள் என்று கலி வெட்டுகளில் குறிக் கப்படுகின்றன. ஆதுலர் என்ற சொல்லுக்கு இல்லாதவர், அசத்தர், எளியர் என்று பல பொருள்களைத் தருகிறது பேரகராதி. ஆதுலர் சாலை இத்தகை யோர்க்கு உணவும், உறைவிடமும் தந்து பிணி நீக்கம் செய்யுமிடமாய் அமைந்தது. இவை தனியர்களாலும், அரச குடும்பத்தாரா லும் நிறுவப்பட்டன.
திருப்புகலூரிலுள்ள விக்கிரம சோழரின் இரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, அவ்வூரில் முடிகொண்ட சோழப் பேராற்றின் வடகரையில், இராசநாராயண வளநாட்டுத் திருவழுந்தூர் நாட்டுத் தேவுர் தேவரு டையான் வேளான் மனத்திற்கினி யானான வீரராசராசன், ஆதுலர் சாலை யொன்று நிறுவிய தகவலைத் தருகிறது. ஆதுலர்க்கும், அனாதையர்க்கும் புகலிடமாக விளங்கிய, இந்தச் சாலையின் பயன்பாட்டிற்காகப் புகலூர்ச் சபையிடம் நூறு காசு அளித்து, கோயில் பண்டாரம் இறையிலியாக நிலக் கொடையளித்தது.
அரசக் குடும்பத்தாரும் மருத்துவமனை களை நிறுவிப் பராமரித்து வந்தமைக்குக் கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளன. கோயில் தேவராயன் பேட்டை மத்ஸ்ய புரீசுவரர் கோயிலில் உள்ள முதலாம் இராசேந்திரரின் மூன்றாம் மற்றும் ஏழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள், குந்தவைப் பிராட்டியார் தஞ்சாவூர் சுந்தரசோழ விண்ணகரில் ஆதுலர் சாலையொன்றை ஏற்படுத்திப் பராமரித்த செய்தியை வெளிச்சத்திற்குக் கொணர்கின்றன.
இந்த இலவச மருத்துவமனையின் செலவினங்களைச் சந்திக்கவும், மருத்துவரின் வாழ்வூதியத்திற்குமாய்க் குந்தவை தேவி ஒன்பது மா நிலத்தைக் கொடையாக வழங்கினார்.
41

Page 44
தமிழ் மருத்துவம்
இந்த மருத்துவமனையை மருகல் நாட்டு மருகலைச் சேர்ந்த சுவர்ணன் அரையன் மதுராந்தகனும், அவர் பரம்பரையினரும் கவனித்து வருவதென்றும் , வைத்திய போகத்தை அவர்களே உரிமை கொண்டு அனுபவிக்கக் கடவதாகவும் என்றும் கொடுத்தனர், ஊர்ப் பெருஞ் சபையினர்.
செங்கற்பட்டு, காஞ்சிபுரம் சாலையி லுள்ள திருமுக்கூடல் தமிழர் மருத்துவ வரலாற்றில் சிறப்பிடம் பெறும் தலமாகும். இங்குள்ள வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் சுவர்களில் ஐம்பத்தைந்து வரிகளில் இடம் பெற்றுள்ள வீரராசேந்திரரின் ஐந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, வீரசோழன் ஆதுலர் சாலை என்ற பெயரில் இக் கோயிலில் கி.பி. பதினோராம் நூற்றாண்டில் இயங்கிவந்த இலவச மருத்துவ மனையொன் றினி முழுமையான படப்பிடிப்பை மகிழ்ந்து வெளிப்படுத்துகிறது.
வெங்கடேசப் பெருமாள் கோயிலில் அக் காலத் தே கல்லூரியொன்றும் , அக்கல்லூரி மாணவர்க்கென்று விடுதி யொன்றும் செயற்பட்டு வந்தன. இந்தக் கல லுரியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காகவும், இக்கோயிலில் பணியாற்றும் அலுவலர் கட் காகவும் தொடங்கப் பெற்ற இம்மருத்துவமனையில் பதினைந்து படுக்கைகள் இருந்தன. பொது மருத்துவர் ஒருவரும், அறுவை மருத்துவர் ஒருவரும் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்தனர்.
பொது மருத்துவர் ஆண்டுக் குத் தொண்ணுாறு கலம் நெல்லும், எட்டுக் காசுகளும் ஊதியமாகப் பெற்றதோடு, வைத்ய போகமாக நிலமும் பெற்றிருந்தார்.
அறுவை மருத்துவர் ஆண்டுக்கு எண்பது கலம் நெல் ஊதியமாகப் பெற்றார். மருந்துகள் காய்ச்சுவதற்கான மூலிகைச் செடிகளைப் பறித்து வருவதற்காகவும், விறகுகள் கொணர்வதற்காகவும், ஆண்டுக்கு அறுபது கலம் நெல் மற்றும் இரண்டு
42

காசுகள் ஊதியத்திற்கு பணியமர்த்தப் பட்டிருந்தனர். நோயாளி களுக்கு மருந்தூட்டுவதற்கும், அவர்களைப் பரிவோடு கவனித்துக் கொள்வதற்கும் இரண்டு செவிலியர் இருந்தனர். இவர்கள் ஆண்டுக்கு முப்பது கலம் நெல்லும், ஒரு காசும் ஊதியமாய்ப் பெற்றனர். நோயாளிகளுக்கு அறுவையின்போது முடி அகற்றவும், கட்டி அறுத்தல், சீழ் நீக்கல் போன்ற சிறு சிறு அறுவை மருத் துவ முறைகளை மேற்கொள்ளவும் நாவிதர் ஒருவர் பணியாற்றினார். இவருக்குப் பதினைந்து கலம் நெல் தரப்பட்டது. ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே' என்ற பாடல் வரி முக்கூடல் மருத்துவமனையில் பொன்னே போல் போற்றப்பட்டதை, அங்கிருந்த நோயாளிகளுக்கு ஒரு நாளைக்கு, தலைக்கு ஒரு நாழி அரிசியே உணவாகத் தரப் பட்டதிலிருந்து அறியலாம் . மருத்துவமனையில் நாள் தோறும் நீர் கொணர்ந்து வைப்பதற்காக அலுவலர் ஒருவர்க்குப் பதினைந்து கலம் நெல் தரப்பட்டது.
இரவு நேரங்களில் இம்மருத்துவமனை ஒளியுடன் திகழ வாய்ப்பாக, தொடர்ந்து விளக்கெரிய இரண்டரை காசுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இவையெல்லாவற்றையும் விடச் சிறப்பான செய்தி, இம்மருத்துவ மனைக்குத் தேவையான மருந்துகளை வேண்டிய அளவு சேமித்து வைக்கவும் பொருள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதுதான். வேறெதற்கும் இல்லாத அளவில் நாற்பது காசுகள் இம்மருந்துகளின் சேமிப்பிற்காகச் செலவிடப்பட்டுள்ளன. இது இன்றையப் பொது மருத்துவமனைகளில் கூட நாம் பார்க்க முடியாத சூழலாகும்.
இங்குச் சேமித்து வைக்கப்பட்ட மருந்துகளாக இருபது வகைகளின் பெயர்கள் கிடைக்கின்றன. சரஹ சம்ஹிதை, அஷ்டாங்க ஹிருதயம், சுச்ருத சம்ஹிதை போன்ற ஆயுர்வேத மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளவையாகும்.
ஒலை 50

Page 45
தமிழ் மருத்துவம்
இம்மருந்துகள் ஒன்றான தசமூல ஹரிதகி, காய்ச்சல், சிறுநீர்ப் பாதை நோய்கள், எலும்புருக்கி, மூட்டுக் காய்ச்சல், இரத்தப் பெருக்கு, விந்தக நோய்கள், நுரையீரல் நோய்கள், மண்ணிரல் வீக்கம், பசியின்மை போன்ற பல நோய்களுக்கு மருந்தாகுமென்று அஷ்டாங்க இருதயம் விளக்குகிறது. திருமுக்கூடல் மருத்துவ மனைச் செய்திகள், “உற்றான் தீர்ப்பான் மருந்து உழைச் செல்வானென்று அப்பால் நாற்கூற்றே மருந்து” என்ற வள்ளுவ வரிகளின் மெய்ம்மையை விளக்கின்றன.
ஒய்சளர் காலத்தே திருவரங்கத்தில் கருடவாகன பட்டர் என்பவர் மருத்துவப் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவரது பணியைப் பாராட்டி திருவரங்கத்துப் பெருமாள் இவரையே தமக்கு ரட்சகராய்க் கொண்டு பெருமைப்படுத்தினார். இந்தப் பணியைச் செம்மையுறச் செய்வதற்காக ஒய்சள அரசர் வீரராமநாதரின் பிரதான்களுள் ஒருவரான சிங்கதேவ சிங் கண்ண தண்டநாயகர் இக்கோயிலில், எடுத்த கை அழகிய நாயனார் இடம்பெற்றிருந்த கோபுரத்திற்கு மேற்கே அமைந்திருந்த திருநடை மாளிகையில், மருத்துவச் சாலையொன்று எடுப்பித்து அதன் பொறுப்பை இவரிடம் ஒப்புவித்தார்.
இந்த மருத்துவச் சாலையின் நிர்வாகச் செலவினங்களுக்காக மும்முடிச் சோழச் சதுர்வேதிமங்கலத்திலிருந்த நிலமொன்றை வரி நீக்கி அளித்த தண்டநாயகர்,அதற்கு விலையாகத் தந்த பொன், 1,100 வராகன், இவரளித்த நிலக்கொடையில் இருந்து வரும் விளைவு மருத்துவப் பரிசாரகர்க்கும், மருந்திற்குமாய் ச் செலவிடப்பட்டது. கருடவாகன பட்டருக்கு நாள்தோறும் ஐந்து குறுணி நெல் ஊதியமாக அளிக்கப்பட்டது. இவருக்குத் துணையாக இருந்து மருத்துவம் பார்ப்பதற்காகத் தோள்மாலை அழகியார் பணியமர்த்தப்பட்டார். இவருக்கு நாள்தோறும் மூன்று குறுணி நெல்லும், இம்மருத்துவமனையில் பணியாற்றிய பரிசாரகர் இருவருக்குத் தூணிப் பதக்கு நெல்லும் தரப்பட்டன.
ஒலை 50

இம்மருத்துவமனைக்கு வந்து மருத்துவம் பார்த்துக் கொண்ட பிணியாளர்க்குத் தரப்பட்ட மருந்தினங் கட்காக நாள்தோறும் நூறு காசு செலவிடப்பட்டதாகக் கூறும் கல்வெட்டு நம்மை வியக்கச் செய்கிறது.
பின்னாளில் தீப்பிடித்து வீணாகிப் போன இம் மருத்துவமனை கி.பி. 1493இல் சீனிவாசனான ஹிரங்க கருடவாகன பட்டரால் புதுப்பிக்கப்பட்டது. ஆரோக்ய சாலை என்று க்லி வெட்டுகளால் அழைக்கப்படும் இம்மருத்துவமனை அருகே தன்வந்திரி பெருமானின் திருமேனியும் சீனிவாசனால் எழுந்தருளுவிக்கப்பட்டது. தன்வந்திரி பெருமானின் படையல்களுக்கும், வழிபாட் டிற்குமாய் இரண்டு வேலி நிலம் இவரால் கொடையாகத் தரப்பட்டது. நாளும் இப் பெருமாளுக்கு மருத்துவக் குடிநீர் (கசாயம்) படையலாகத் தரப்பட்டுப் பின் பிணியாளர்க்கு வழங்கப்பட்டது.
மருத்துவமனைகளைப் போலவே மருத்துவக் கல்லூரிகளும் தமிழ் நாட்டில் இயங்கி வந்தன. திருவாவடுதுறை கோமுத்தீசுவரர் திருக்கோயிலில் உள்ள விக்கிரம சோழரின் மூன்றாம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டு, சோழர் காலத்து மருத்துவக் கல்லூரியை அறிமுகப்படுத்துகிறது. இங்கு மாணவர்க்குச் சரக சம்ஹிதையும், அஷ்டாங்க ஹிருதயமும் கற்றுத் தரப்பட்டன. இம்மருத்துவ மாணவர்கள், மற்ற மாணவர்களோடு சேர்ந்து இங்கிருந்த அறச்சாலையில் உணவருந்திப் படித்தனர்.
மருத்துவ நிறுவனங்கள் பற்றிப் பேசும் தமிழகக் கல்வெட்டுகள், மருத்துவ நம்பிக்கைகள் பற்றியும் பேசுகின்றன. நோயுற்றவர், துன்புற்றார் நலம் பெற வேண்டியும், நலமாய் இருப்பவர்கள் அந்நலத்துடனேயே நீடு வாழவும் இறையருள் வேண்டி நிறுவப்பட்ட திருமேனிகளும், விளக்குகளும், தரப்பட்ட கொடைகளும் கணக்கிலடங்கா.
திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள
43

Page 46
பெருங்குடி சார்ந்த பெருமுடியீசுவரர் திருக்கே கூத்தன் தம் மகள் நல்ல மங்கை இளவயதில் கண் விளங்கப் பெற்றமையால் இக்கோயில் செய்தளித்த தகவலைத் தருகிறது. தமிழகம் ( தேடக் கிடைக்காத அரும் பொருளாய் இன்று
சுவடிகளிலும் ஒளிந்து கொண்டுள்ளன. தமி மனம் வைத்தால் மறைந்தன மீட்டும் வருவது
வில்வாதித்தைலம்
செய்முறை வில்வவோ 350கழராம்எடுத்து நன்றாக காய்ச்சி 100மில்லியாகக் கசாயத்தை 800மில்லி அதில் சேர்த்து அத்தட விழுதாகப்போட்டுக் காய்ச்சி மெழு ஆறியதும் வடித்துக் பாட்டிலில் அ6
நாளொரு வேளை தேய்த்துக் குளி கபாலநீர், மேகம், பிறமேகம், இருமல் அசதி, சுரம் நீங்கும்.கண்கள் ஒளிய
சாந்தமாம் வில்வாதித் தயில் தாரணியில் வில்வே பாந்தமாயிடித் ததனைப் பத பருவமாய்க் காய்ச்சி போந்த எண்ணெய் நாழிவிட் புகழான கிஷாயத்தி வாய்ந்த மெழுகானால் வடி
வாகாக முழுகிவர
வாழசையாய் முகிவரப் பித் மைநதனே கபாலத்த இருமை பெற ஆக்கிவைக்கு இருகண்ணும் தெளி உரிசை பெறப் பித்தமெல்ல தரைமீதிற் றளுன்பிற சமிபிரதாய மிதுதான் தரணி
44

ாயில் கல்வெட்டொன்று, மருதாண்டான் மகன் ) பார்வைக் குறையோடு இருந்து பின்னாளில் இறைவர்க்குக் கழஞ்சு பொன்னால் பட்டம் பெற்றிருந்த மருத்துவ நோக்கும், மருந்துகளும் கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் ஓலைச் ழணர்வும் மருத்துவ நோக்கும் கொண்டோர்
கூடுவதே.
(நன்றி : "கலைமகள்’ யூலை 1994)
இடித்து 400மில்லி நீரில் போட்டுக் குறுக்கி வடித்து நலவெண்ணெய் ன் சந்தனம் 35கிராம் அரைத்து கு பதம் பார்த்து இறக்கிய பின் டைத்து வைத்துககொண்டு
த்துவர குணமாகும் நோய்கள்: , பித்தம், பிததவாந்தி, ஒக்காளம், டன் பிரகாசமாகும் .
Uங்கேளு வர் பலந்தான்பத்து க்கு நீரிற் யே யெட்டொன்றாக்கி டுச் சந்தனம் பலந்தான்
லரைத்துப் போடு ந்துக் கொண்டு வாழசைகேளே
தம் போகும்
ல் வெட்டை போகும்
மேகம்போகும் புண்டா மிருமல்போகும் ா மோடிப்போகும் க்குஞ் சூட்சஞ்சொன்னேன் யோர்க்கே.
ஆதாரம்: அகஸ்தியர் 3,4
ஒலை 50

Page 47
தமிழ் மருத்துவம்
நாட்டுப்புற இலக்கியம் மற்றும் கலைகள் பல திறத்தவை. பாடல்கள், கதைப்பாடல்கள், கதைகள், விடுகதைகள், பழமொழிகள் போன்றவை இலக்கியப் பிரிவிலும் கூத்து, நாடகம், விளையாட்டு, மருத்துவம் போன்றவை கலைப் பிரிவிலும் அடங்குகின்றன. ஒரு சமுதாயத்தின் பழைமையினையும் வரலாற்றினையும், சிறப்பியல்புகளையும் வெளிப்படுத்த வல்லவை நாட்டுப்புற இலக்கியங்கள் மற்றும் கலைகள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆகவே அவற்றை ஒதுக்கி விடாமல் ஆங்காங்கே நடைமுறையில் இருந்து வருவனவற்றை முறையாகத் தொகுத்து விளக்கும் போது 96) 6 சமுதாய வளர்ச்சிக்கும் வரலாற்றிற்கும் பெரிதும் துணை நிற்கும் என்பது வெள்ளிடைமலை.
ஆதிகாலம் முதல் மனிதனின் மருத்துவம் இயற்கைப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு விளங்கிறது. தானே உணர்ந்த உண்மைகளின் அடிப்படையிலும் பிறரின் அனுபவங்களின் வாயிலாகவும் நோய்களுக்கு மருந்தினைக் கண்டுபிடித்தான். அவனுடைய மருத்துவம் அனைத்திலும் இயற்கைப் பொருட்களே மூலப் பொருட்களாகின்றன. அத்தகைய பொருட்களை - மருத்துவ முறைகளை இலக்கியத்திலும் பதிவு செய்துள்ளனர் சான்றாக,
*ஆலும் வேலும் பல்லுக்குறுதி” “எட்டு மிளகு இருந்தால் எதிர் வீட்டிலும் - aFrůsorb"
“காமாலைக்காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்”
என்ற பழமொழிகள் இதனை விளக்குகின்றன. இயற்கையுடன் இயைந்து வாழ்வு நடத்தும்
ஒலை 50

நாட்டுப்புற மூலிகை மருத்துவமும் மந்திரமும்
முனைவர் வ.ஜெயா
நாட்டுப் புற மக்களின் மருத்துவ முறைகளையும் நம்பிக்கைகளையும் வெளிப்படுத்துவதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.
நாட்டுப்புற மருத்துவம்
பொதுவாக நாட்டுப்புற மருத்துவத்தில் மூலிகை போன்ற இயற்கைப் பொருட்களின் பயன்பாடு மிகுதி. மூலிகைகளின் இலைகள், வேர், பட்டை, தண்டு போன்றவை முக்கிய இடத்தைப் பெறுகின்றன. நாட்டுப்புற மருத்துவத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம். 1. மூலிகை மருத்துவம்
(nature folk medicine) 2. மந்திரச் சடங்கு மருத்துவம் (magicoritualfolkmedicine)
மூலிகை மருத்துவம் என்பது இயற்கை யாகக் கிடைக்கக் கூடிய தாவரங்களி லிருந்தும் விலங்குப் பொருட்களிலிருந்தும் பெற்று குணமடைகின்றன. மந்திரச் சடங்கு மருத்துவம் என்பது புனித மந்திரங்கள், புனித சொற்கள், புனித செயல்கள் மூலமாக நோய்களைக் குணப்படுத்த முயல்வது. இம்முறையானது நம்பிக்கை பழக்கவழக் கங்கள் ஆகியவற்றோடு தொடர்புடையது இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தும் நாட்டுப்புற மருத்துவம் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன.
மருத்துவ முறைகள்
உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, உள் ளம் இவற்றால் நோய்கள் உண்டாகின்றன. இவ்வாறு உருவாகும் நோய்களுக்கு இரண்டு வகை மருத்துவ முறைகளைக் கையாண்டு தீர்க்கின்றனர்.
45

Page 48
தமிழ் மருத்துவம்
நோய்வாய்பட்டோர்
மனிதர்கள் விலங்குகள்
: S : பொது சிறப்பு 岳可è野GL&G辑 கோழி போன்ற
பறவையினம்
ஆண பெண குழந்தைகள்
மருத்துவ முறைகள்
மேற்பூச்சு உள் மருந்து
நீருடன் கலப்பு பிறமூலிகையுடன் திரவமுறையில் பிறமூலிகையுடன்
岛铃u目
ってアー。 gj, Supar sy பற்றில் ' ; `~ பூசுதல்
ஒத்தடம் !  ̄ܝܢܬwܙܪܙܘܙ கொடுத்தல் > ஆ பிழிந்து கட்டுதல் விடுதல் ຫrແຕີ່
ஊற்றுதம்
இவ்வாறு மூலிகைகளின் வேர், பட்டை, இலை,
தண்டு ஆகியவற்றைக் கொண்டு மருத்துவம் செய்யப்படுகின்றன.
மேற்பூச்சு/உடலுக்கு வெளியே பயன் படுத்தும் மருத்துவமுறை
சில நோய்களுக்கு மேற்பூச்சு மருத்துவம் மட்டுமே பயனர் படுத்த வேணி டும் . மூலிகைகளின் இலை, பட்டை வேர் ஆகியவை மருந்துப் பொருட்களாகப் பயணி படுத்தப்படுகின்றன.
பற்றிடல்
வண்டுக்கடி சிலந்தி வெட்டுக்காயம் தீராத காயம்
(புன்ை)
வண்டுக்கடி
சில வண்டுகள் கடித்தவுடன் உடலில் தடிப்பு ஏற்பட்டு அரிப்பு உண்டாகும். சிலரு க்கு அலர்ஜி ஏற்படுவதுண்டு. அவ்வாறு ஏற்படாமல் இருப்பதற்கு நாட்டுப்புறத்தில் எளிய மருத்துவம் செய்யப்படுகிறது.
ஆடுதின்னாப்பாலை என்ற தாவரத்தின் இலையைப் பறித்து அரைத்து வண்டு கடித்த இடத்தில் பற்றிடும் பொழுது அத்துன்பம் நேராமல் காக்க முடிகிறது என்கின்றனர். ஆடுதின்னாப்பாலை - அரைத்தல் - பற்றிடல்
46
 

சிலந்திப் புண்
இனிப்புச் சத்து அதிகமானாலும் உடலை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளாமலிரு ந்தாலும் புண் உண்டாக வாய்ப்பேற்படும். அவ்வாறு ஏற்படும் புண்ணிற்கு ஆலமரத்தின் பாலுடன் வேளைத்தளையைச் சேர்த்து அரைத்து பற்று போட்டால் நான்கு நாட்களில் புண் சரியாகிவிடுகிறது.
ஆலமரப்பால் + வேளைத்தளை = அரைத்தல் - பற்றிடல் = நோய் குணமாகிறது.
வெட்டுக்காயம்
கீழே விழுந்து காயம் ஏற்பட்டாலோ வெட்டுப்பட்டு காயம் ஏற்பட்டாலோ அது ஆறுவதற்கு நீண்ட நாட்கள் ஆகின்றன. சில நேரங்களில் அறுவைச் சிகிச்சையும் கூட செய்ய வேண்டியுள்ளது. ஆனால் நாட்டுப்புற மருத்துவத்தில் எளிதாக குணமடைய சில மூலிகைகள் நமக்குப் பயன்படுகின்றன.
விரல் துண்டாகிப் போனாலும் அறுவைச் சிகிச்சை செய்யாமல் எளிதில் ஒட்டுமாறு செய்வதற்கு நாட்டுப்புற மருத்துவம் நம்பிக்கையளிக்கிறது. பிஞ்சு வாழைக்கையின் நீரினை எடுத்து விரலோடு சேர்த்துப் பற்றுப் போட்டால் பத்து நாட்களில் விரல் ஒட்டி விடுகின்றது. வாழைப்பூவின் நீரினையும் இதேபோல் எடுத்து வெட்டுண்ட விரலை இணைத்து பற்றிட்டாலும் விரல் ஒட்டிக்கொண்டு காயம் சரியாகி விடுகின்றது.
பிஞ்சு வாழைக்கையின் நீர்-பிழிதல்-பற்றிடல் வாழைப்பூவின் நீர்-பிழிதல்-பற்றிடல்
தீராத காயம்
நம் உடலில் ஏற்பட்ட காயம் வெகு நாட்கள் வரையில் ஆறாமல் இருந்தால் நாட்டுப்புற மருத்துவம் எளிதில் குணமாக்கி விடுகிறது.
நாட்டுக்கோழி முட்டையின் மஞ்சள் கருவினை நன்றாக காய்ச்சினால் கருமை யான நிறம் கொண்ட களிம்பாக மாறுகிறது. அக்களிம்பினை எடுத்து ஆழமான காயத்
ஒலை 50

Page 49
தமிழ்-மருத்துவம்
திற்கும் தீராத காயத்திற்கும் தொடர்ந்து ஒருவாரம் பற்றிட்டு வந்தால் குணமாகி -விடுகிறது. «
நாட்டுக்கோழி முட்டையின் மஞ்சள் கரு காய்ச்சுதல் - பற்றிடல்
பூவரசம்பட்டை, மஞ்சனத்திப்பட்டை (நோனா மரப்பட்டை) மஞ்சள் போன்ற இம்மூன்று பொருட்களையும் நன்கு அரைத்து தீராத காயத்தின் மீது பற்றுப் போட்டால் விரைவில் குணமாகின்றது என்று அம்மக்கள் கூறுகின்றனர். பூவரசம்பட்டை + மஞ்சனத்திப்பட்டை + மஞ்சள் - அரைத்தல் - பற்றிடல்
பூசுதல்
நோய் கொண்ட பகுதியில் பற்றுபோடல்
மருந்தினைப் பூசுதலும் உண்டு.
காயம்
காயம் ஏற்பட்டவுடன் காக்காப்பூடு என்று கூறப்படும் ஒருவகை தாவர இலையைக் கசக்கி அதிலிருந்து வடியும் சாற்றினைக் காயத்தின் மீது தொடர்ந்து நான்கு நாட்கள் பூசி வந்தால் விரைவில் நலமடைவர் என்று அம்மக்கள் விளக்கம் அளிக்கின்றனர். காக்காப்பூடு - இலைச்சாற்றினைப் பிழிதல் - பூசுதல்
காயம் ஏற்பட்டு பல நாட்கள் ஆகியும் அக்காயம் ஆறாமல் இருந்தால் விரைவில் ஆற்றுவதற்கு மூலிகை மருத்துவம் துணை செய்கிறது. கொவப்பூடு என்ற தாவரத்தின் இலையின் சாற்றினைக் காயத்தின் மீது பூசினால் ஒரு வாரத்திற்குள் காயம் ஆறி குணமடைகின்றனர்.
மூச்சுப் பிடிப்பு
உடல் பளுவின் காரணாக உடல் களைத்து விடுவதால் சில நேரங்களில் மூச்சுப் பிடிப்பு உண்டாகி விடுவதுண்டு. அப்பொழுது மூச்சு விடுவதற்கும் கூட முடியாமல் அவதிப்படுவதுண்டு. அதனைப் போக்க
ஒலை 50

நாட்டுப்புறத்தில் சிறந்த மருத்துவ முறை உள்ளது.
குப்பை மேனி என்ற தாவர இலையை நன்கு அரைத்து முதுகுத் தண்டின் மீது பூசினால் நான்கு மணி நேரத்தில் மூச்சுப்பிடிப்பு குணமடைகின்றது. w
இரு நொச்சிகுச்சியில் துத்தி எனும் தாவர இலையின் சாற்றினைப் பூசுகின்றனர். பின்னர் மூச்சுப்பிடிப்பு உள்ளவர்களின் மார்பிற்கு கீழ் இரு மருங்கில் துத்திச்சாறு பூசப்பட்ட நொச்சி குச்சிகளை வைத்து மந்திரம் சொல்கின்றனர். அப்பொழுது இரு குச்சிகளும் ஒன்றாக இணைகிறது. இணைந்த பகுதியை ஒடித்து எரித்து விடுகின்றனர். இவ்வாறு செய்த பின்பு மூச்சுப் பிடிப்பு சரியாகி விடுகிறது என்று விளக்குகின்றனர். 1. குப்பைமேனி இலை. அரைத்துப் பூசுதல் - 2. நொச்சுக்குச்சி+துத்திச்சாறு+மந்திரம்-மார்பின்
இரு மருங்கு
வீக்கம்
நம் உடலில் அடிபட்டு இரத்தம் உறைந்து விக்கம் ஏற்படுவதுண்டு. அதற்குப் புளி, சர்க்கரை (அஸ்கா) இரண்டையும் காய்ச்சி வீக்கத்தின் மீது பூசி வந்தால் விரைவில் குணமாகி விடுவதாக நாட்டுப்புற மக்கள் கூறுகின்றனர். புளி+அஸ்கா-காய்ச்சுதல்-பூசுதல்
பிழிந்து விடுதல்
சில நோய்களுக்கு இலைச்சாற்றி னையோ, தண்டின் பாலினையோ பிழிந்து விடுவதால் குணமடைய முடியும். கண்ணில் சிறு கட்டிகள்
கண்ணின் மேற்பட்டை, கீழ்ப்பட்டைகளின் உட்புறத்தில் சிறு சிறு கட்டிகள் தோன்றுவதுண்டு. இதற்கு கண்முளை என்று பெயர். கண் முளை வருவதால் கண் சிவந்து நீர் வடிந்து கொண்டிருக்கும். அரிப்பும் ஏற்படும் இதற்கு அம்மான்பச்சரிசி என்ற தாவரத்தின் பாலினைக் கண் முளையில் ஒரு வாரம் தொடர்ந்து வைத்துக் கொண்டு வந்தால் குணமாகி விடுகிறது.
47

Page 50
தமிழ் மருத்துவம்
கண்துசி எடுத்தல்
கண்களில் தூசி விழுந்தால் கண் உறுத்தும். இதனால் கண்கள் சிவந்து விடுவ முண்டு. சில நேரங்களில் அழுத்தி தேய்ப்ப தால் புண்ணும் உண்டாகின்றது. கண்களில் விழுந்த தூசினை எடுக்க நாட்டுப்புறத்தில் எளிய மருத்துவ முறை கையாளப்படுகிறது. பனைமரத்தின் பச்சைப் பட்டையினைப் பிழிந்தால் அதிலிருந்து சாறு வரும். அச்சாற் றினைக் கண்களில் விட்டால் தூசும் வந்து விடுகிறது. கண்களும் குளிர்ச்சியடை கின்றன.
வண்டுக்கடி
வண்டுக்கடிக்கு மற்றொரு மருத்துவ முறையை அம்மக்கள் கையாள்கின்றனர். பனைமரத்தின் அடிப்பகுதியைக் கீறினால் அதிலிருந்து நீர் வடிவதுண்டு. அந்நீரை வண்டு கடித்த இடத்தில் தொடர்ந்து சில நாட்கள் விட்டு வந்தால் நலமுண்டாகிறது என்று அம்மக்கள் கூறுகின்றனர்.
அப்படியே வைத்து கட்டுதல்
சில நோய்களுக்கு இலையை வாட்டியோ அல்லது கசக்கியோ அல்லது எண்ணெய் தடவியோ வைத்துக் கட்டினால் குணமாகி விடுகின்றது.
சிலந்தி (புண்)
சிலந்தி வருமிடத்தில் ஆய்க்கொழுந்து இலையினை அப்புண் நுனியில் இரண்டு நிமிடம் வைத்திருந்தால் புண் அமுங்கி விடுகிறது. பெரிதாக வளருவதில்லை.
நகச்சுற்று
விரல்களின் நகங்களை வெட்டும்போது சரியாக வெட்டவில்லையெனில் வலியேற் படுவதுண்டு. அதனைச் சரியாக கவனிக்கா விடில் சீழ்பிடித்து நகச்சுற்று உண்டாகிவிடு கின்றது. இதனால் துன்பம் ஏற்படுகிறது. இதற்கு நகக்கண்தளை என்ற தாவரத்தின் இலையை நகச்சுற்றின் மீது வைத்துக் கட்டிவிட்டால் விரைவில் குணமுண்டாகின்றது என்கின்றனர் நாட்டுப்புற மக்கள்.
48

உள்ளே கொடுக்கும் மருந்து
சில நோய்களுக்கு மருந்தினை அரைத்து குடிக் க வேண் டியுள்ளது. அப்பொழுதுதான் நோய் விரைவில் குணமாகும். இதற்கு இலை, வேர், பட்டை ஆகியவை பயன்படுகின்றன.
பெண் களின் நோயைப் போக்க பயன்படுத்துபவை
பெண்களுக்கு
கர்ப்பம் கலைய பருவமடையாத வெள்ளை படுதல்
பெண்கள்
கர்ப்பம் கலைக்க
குழந்தைப் பேற்றினைச் சிலநாட்கள் தள்ளி போடுவதற்கும், முதற்குழந்தை நன்றாக வளர்வதற்கும் பெண் கள் விரும்புவதுண்டு. அதனால் மாத்திரைகள், காப்பர்டீ, போன்ற மருத்துவ முறைகளைக் கையாள்கின்றனர். இதனால் பெண்களுக்கு பக்க விளைவுகளும் ஏற்பட்டு துன்பமடை கின்றனர். இதற்கு மேலும் குழந்தை உருவாகி விட்டால் மருத்துவரின் உதவியை நாட வேண்டியுள்ளது. அதனால் பணச் செலவு, உடல் வலி ஏற்படுகிறது. இச்சிக்கலைத் தீர்க்க நாட்டுப்புற மருத்துவத்தில் எளிய முறை கையாளப்படுகிறது. சித்திர மூலம் எனும் தாவரத்தின் வேர், சிறிது புளி, மிளகாய் என்ற மூன்றையும் அரைத்துச் சாப்பிட வேண்டும். சாப்பிட்டு இரண்டு நாட்கள் கழிந்த பின்பு கரு கலைந்து விடுவதாக நாட்டுப்புற மக்கள் கூறுகின்றனர். சித்திரமூலவேர்+புளி+மிளகாய்-அரைத்தல்குடித்தல்
கர்ப்பம் உண்டாவதைத் தடுக்க மற்றொரு மருத்துவ முறை கையாளப் படுகிறது. நாள்தோறும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு பிடி துளசி இலையைச் சாப்பிட்டால் கர்ப்பம் உண்டாவது தடுக்கப்படுகிறது. எளிய கர்ப்பத் தடை மருந்து துள்சி என்று கூறுகின்றனர்.
ஒலை 50

Page 51
தமிழ் மருத்துவம்
வெள்ளையடுதல்
உடல் சூட்டினால் சில பெண்களுக்கு வெள்ளை படுதல் உண்டு. இதனைச் சரியாகக் கவனிக்காவிடில் மலட்டுத்தன்மை உருவாகும். புற்றுநோயும் ஏற்படுவதுண்டு என்று அலோபதி மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நோயைப் போக்க நாட்டுப்புற மக்கள் எளிய மருத்துவத்தை மேற்கொள்கின்றனர்.
சோற்றுக்கற்றாழை என்ற தாவரத்தின்
ப்பகுதியின் உட்புறத்தினைக் காலையில்
நாள்தோறும் வெறும் வயிற்றில் சாப்பிட
வேண்டும். இதனால் சூடு மறைந்து வெள்ளைபடுதல் நின்று விடுகிறது.
சோற்றுக் கற்றாழையினைப் போலவே ஈச்சங்குருத்தினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும் வெள்ளைபடுதல் நின்று விடுகிறது என்கின்றனர்.
பருவமடையா பெண்களுக்கு
சில பெண்கள் இருபத்தைந்து வயது ஆகியும் பருவமடையாமல் இருப்பதுண்டு. வெகுசிலரே இவ்வாறு இருப்பர். அவ்வாறுள்ள பெண்களுக்கு தூதுவளை என்ற தாவரத்தின் வேரினை நன்கு அரைத்து தொடர்ந்து பனிரெண்டு நாட்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கொடுத்து வந்தால் விரைவில் பருவம் அடைவர் என்று அம்மக்கள் கூறுகின்றனர்.
பொது நோய்கள்
ஆண், பெண், குழந்தை, சிறுவர், பெரியவர் அனைவருக்கும் வரும் பொதுவான நோய்கள் சில உண்டு. அதற்கும் நாட்டுப்புறத்தில் எளிய மருத்துவம் செய்யப்படுகிறது.
சொறி-சிரங்கு
உடலுக்கு ஒத்துக் கொள்ளாத காய்கறிகளைச் சாப்பிடும்போது ஒவ்வாமை அலர்ஜி ஏற்பட்டு சொறி-சிரங்கு உண்டாகி விடுவதுணி டு. இதுவொரு தொத்து நோயாகும். எளிதில் பிறருக்குத் தொத்திக் கொள்ளும் இந்நோயிற்கு மருந்தாக உரிக்
ஒலை 50

கொடி வேர், குத்துப்பாலையின் வேர் பயன்படுகிறது. இந்த இரு தாவரங்களின் வேர்களை நன்றாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு நாளாக மூன்று வாரம் குடித்து வருதல் வேண்டும். இதனை முறையாக கடைப்பிடித்து வந்தால் நோய் குணமாகின்றது. மனிதர்களுக்கு மட்டுமல்ல கால்நடைகளுக்கு வரும் சொறி-சிரங்கிற்கும் இவ்வேரினை அப்படியே கொடுத்தால் குணமாகின்றது. உரிக்கொடிவேர்+குத்துப்பாலைவேர்-அரைத்தல்குடித்தல்
கண்பார்வையினை அதிகரிக்க
கண்களில் உண்டாகும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை என்ற இரு நோய்களுக்கு வேளைத்தளை என்ற கீரை மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது. இக்கீரையினைத் தொடர்ந்து பதினைந்து நாட்கள் உணவுடன் உண்டு வந்தால் கண்பார்வை சரியாகி விடுவதாகக் கூறுகின்றனர்.
பக்கவாதம் (சரவாங்கி)
பக்கவாதம் என்பது ஒருவகை நரம்புத் தளர்ச்சி என்பர். இரத்த ஓட்டம் சரியாக இயங் காத காரணத்தால் இந்நோய் ஏற்படுகிறது என்று கூறுவர். இந்நோயை முற்றிலும் குணப்படுத்த அலோபதி மருத்து வத்தில் நீண்ட நாட்கள் அதிக வருடங்கள் போராட வேண்டியுள்ளது. ஆனால் நாட்டுப்புற மருத்துவத்தில் இரண்டு மாதங்களுக்குள் முற்றிலும் நீக்கக்கூடிய மருந்துள்ளது. கோட்டான், செம்போத்து என்ற இரு பறவைகளின் இறைச்சியைப் பக்குவமாக சமைத்து நான்கு முறை சாப்பிட்டு வந்தால் பக்கவாதம் முற்றிலும் நீங்கிவிடுகிறது. இவ்வாறு பக்கவாதம் வந்து குணமானவர்கள் கூறுகின்றனர்.
ஆஸ்துமா
இந்நோய் பரம்பரையாக வருவது என்று சொல்லப்படுகின்றது. இந்நோய் உள்ளவர்கள் குளிர்காலத்தில் பெரும் துன்பப்படுகின்றனர். இறப்பு வரை இந்நோய் நீடிக்கிறது என்று
49

Page 52
தமிழ் மருத்துவம்
பேசப்படுகிறது. இந்நோயை முற்றிலும் போக்குவதற்கு நாட்டுப்புறத்தில் எளிய மருத்துவம் கையாளப்படுகிறது.
வேளத்தளை, சங்கந்தளை, முருங்கை ப்பட்டை, ஊஞ்சப் பட்டை, வெங்காயம், கருஞ்சீரகம், வெள்ளைப்பூண்டு, வால்மிளகு, சீரகம், கிராம்பு, வெற்றிலை போன்ற பதினொரு வகை மருந்துப் பொருட்களை அரைத்துக் குடிக்கச் செய்து வந்தால் அந்நோய் முற்றிலும் குணமாகின்றது என்கின்றனர்.
୫ ଗff]
மனிதனுக்கு அடிக்கடி வரும் நோய்க ளுள் ஒன்று சளி. இது அதிகமாகும் போது காய்ச்சல் இருமல் உண்டாகிறது. இதனால் துன்பம் உண்டாகிறது.
திருநீற்றுப்பச்சை என்ற தாவரத்தின் இலையை அரைத்துக் குடித்தால் சளி நீங்கி விடுகிறது.
துTதுவளை, சங்கங் கொழுந்து, வாதநாராயணன் இலை, பொடிதளை, மொசுமொசுக்கை, வால்மிளகு என்று ஆறு பொருட்களை ஒன்றாக அரைத்து ரசம் செய்து உட்கொண்டால் சளி நீங்கி விடுவதாக விளக்குகின்றனர்.
குழந்தைகளுக்குச் சளி அதிகமிருந்தால் துளசிச் சாற்றினை ஒரு தாமிர பாத்திரத்தில் ஊற்றி தாமிர காசினால் உரைத்து அதனைப் புகட்டினால் சளி நீங்கிவிடுவதாகக் கூறுகின்றனர்.
விஷம்
ನಿನ್ಗ್ರಾಹಿಹq.
பாம்பு தேள் நாய்
பாம்பு
ஒருவருக்குப் பாம்பு கடித்துவிட்டால் முதலில் முதலுதவி செய்தல் வேண்டும். பாம்பு
50

கடித்த 25 நிமிடத்திற்குள் வாழைப்படையினை இடித்து சாறெடுத்து 500 மில்லி குடிக்க கொடுத்தால் உயிருக்கு ஆபத்தில்லை.
பாம்பு கடித்தவுடன் கொளுஞ்சிச் செடியின் இலைகளைப் பறித்து அரைத்து 300 மில்லி குடிக்க கொடுத்தல வேணி டும் . கொளுஞ்சிச் சாறு விஷத்தை முறித்து விடுவதால் பாம்பு கடித்தவர்கள் பிழைத்துக் கொள்வர் என்று கூறுகின்றனர்.
தேள்
ஒருவருக்குத் தேள் கடித்துவிட்டால் மறுநாள் வரையில் விஷம் இறங்காமல் வலி உணி டாகும் . சிலருக்கு மயக்கம் ஏற்படுவதுண்டு. தேள் கடித்தவுடன் மருத்துவம் செய்து கொண்டால் விடித்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
ஒடுவந்தளை எனும் தாவரத்தின் இலையைப் பறித்து அரைத்து குண்டுமணி அளவு எடுத்து தேள் கடித்த கடிவாயில் வைத்து கட்டினால் சிறிது நேரத்தில் விஷம் வெளியாகி விடும். இதனால் துன்பத்திலிருந்து விடுபடலாம். இத்தளை மிகவும் விஷம் நிறைந்தது தேள் கடிக்கு மட்டுமே பயன்படுத்துதல் வேண்டும் என்று அம்மக்கள் விளக்குகின்றனர்.
புளியங்கொட்டையினை உரைத்து தேள்
கடித்த இடத்தில் வைத்து எடுத்தால் விஷம் நீங்கி விடுகிறது என்றும் கூறுகின்றனர்.
நாய்க் கடி
ஒருவரை நாய் கடித்துவிட்டால் அதற்கு மருத்துவம் பார்க்காமல் விட்டுவிட்டால் ஆபத்தாக மாறும். மரணமும் ஏற்படலாம். எந்த நாய் கடித்தாலும் தொப்புளைச் சுற்றி ஊசி போடச் செய்கிறது அலோபதி மருத்துவம். ஆனால் நாட்டுப்புற மக்கள் அவ்வாறு செய்வதில்லை. அதற்குப் பதிலாக புன்னாக்குப் பூடு எனும் தாவரத்துடன் சிறிது உப்பையும் சேர்த்து அரைத்துக் குடிக்கின் றனர். இதனால் நாய்க் கடியின் விஷத்திலி ருந்து குணமடையலாம் என்று கூறுகின் றனர்.
ஒலை 50

Page 53
தமிழ் மருத்துவம்
கால்நடை மருத்துவம்
மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் கால்நடைகளுக்கும் கூட மருத்துவம் நாட்டுப்புறத்தில் செய்யப்படுகிறது. கிராமங்களின் சுற்றுப் புறங்களில் கிடைக்கக்கூடிய இலை, வேர், தண்டு, காய், கனி ஆகியவை மருந்துப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
காய்ச்சல் ሥል
மனிதர்களுக்கு வருவது போலவே கால்நடைகளுக்கும் காய்ச்சல் வருவதுண்டு அதனால் மூக்கிலிருந்து நீர் வடியும். சரியாக உணவு உட்கொள்ளாமல் துன்பப்படும். இந்நோயைக் குணமாக்க எளிய மருத்துவ முறை கையாளப்படுகிறது.
மூன்று எலுமிச்சைப் பழச் சாற்றில் 100 கிராம் பெருங்காயத்தினைக் கலந்து கால்நடைகளுக்கு புகட்டி விடும்போது காய்ச்சல் குணமாகின்றது என்று கூறுகின்றனர்.
தொக்கம் / சொக்குதல்
கால்நடைகள் சோளப்பயிர் அல்லது ஆமணக்கு இலைகளை மேய்ந்து விடுவதுண்டு. அத்தளைகளில் புழுக்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். அதனைத் தின்று விடுவதால் அப்புழுக்கள் கால்நடைகளின் வயிற்றிற்குள் சென்று வயிற்றை உப்ப வைக்கின்றன. இதனால் மூச்சு விடுவதற்கு துன்பப்படுகின்றன. இதனையே தொக்குதல் / சொக்குதல் என்பர்.
இந்நோயைத் தீர்க்க சில மந்திரங்கள் பயன்படுகின்றன. இந்த மந்திரங்களின் சக்தியால் கால்நடைகளுக்கு ஏற்பட்ட தொக்குதல் நீங்கி விடுகிறது என்று நம்புகின்றனர். *விக்னீஸ்வரா வினாயகமூர்த்தி நம்மனமாதம் சந்திர காயம் பொன்னரபுரம் பூவரபுரம் பொன்னநீரு சொன்ன மனுஷ தா நீர் குடிச்சி சோளப்பயிர் மேஞ்சமாடு வாயாலே மேஞ்சு வாலாலே போ சிவ சிவா?
ஒலை 50

என்ற மந்திரத்தை மூன்று அல்லது ஐந்து முறை திருப்பித் திருப்பி கூறும் போது அச்சொற்கள் சக்தி பெற்று கால்நடைகள் சுகமாகின்றன. அதன் பின் எந்த மருத்து வமும் செய்வதில்லை என்று கூறுகின்றனர்.
1 டம்ளர் சுடுநீரில் மஞ்சள் பொடியைக் கலந்து கால்நடைகளுக்கு ஊற்றினால் வயிறு உப்புதல் குறைந்து விடுகிறது என்றும், புன்னாக்குத் தளை என்ற தாவரத்தின் இலையை நம் வாயில் போட்டு மென்று கால்நடையின் மூக்கில் ஊதினால் வயிறு உப்புதல் நீங்கி குணமடைகிறது என்று கூறுகின்றனர்.
சுளுக்கு
வேலைப் பளு அதிகமானாலோ உடல் எடை அதிகமானாலோ சுளுக்கு ஏற்படுவ துண்டு. அதற்கு மந்திரம் சொல்லப்படுகிறது. சுளுக்கும் நீங்கி விடுகிறது. “ஓம் நமசிவ குருவேயர மறந்தாலும் குருவ மறக்கிறா” எனத் திரும்புபத் திரும்ப கூறுவதன் மூலம் இந்தச் சொற்கள் சக்தி பெறுகின்றன. இதனால் சுளுக்கு நீங்குகிறது என்று நம்புகின்றனர். மேலும். “பொண்ணொரு களம் பூவொரு களம் பாப்பான் பொண்டாட்டி பறையன்கிட்ட பறையன் பொண்டாட்டி பார்ப்பான்கிட்ட பார்ப்பான் பொண்டாட்டி பறையன்கிட்ட பறையன் பொண்டாட்டி பாப்பான்கிட்ட” என்று ஆறுமுறை திரும்பத் திரும்ப சொல்வதினால் சுளுக்கு நீங்குகிறது என்று இம்மந்திர முறையினைக் கூறுகின்றனர்.
வேப்பங்கொழுந்து, அறுகம்புல் என்ற இரண்டையும் அரைத்துக் குடிக்கும் பொழுது சுளுக்கு குணமாகி விடுகிறது என்று மற்றொரு மருத்துவ முறையினையும் அம்மக்கள் விளக்குகின்றனர்.
முடிவுரை
நாட்டுப்புறங்களில் கிடைக்கக்கூடிய
மூலிகைகளைக் கொண்டு அம்மக்கள் தங்கள்
நோய்களைப் போக்கிக் கொள்கின்றனர்.
51

Page 54
தமிழ் மருத்துவம்
இத்தகைய மருத்துவ முறைகளினால் எவ்வித அன்றாட உணவில் கீரைகள், பழங்கள், கா வந்தால் பெரும்பாலான நோய்கள் உருவாவதை அத்தகைய மருத்துவ முறைகளை அறிந்து ெ (Փգամ).
விளாம்பழம் இது உடலுக்கு நல்ல சுகத்தையும், நலி கட்டும், கபம், சுவாசகாசம், இழைப்பிரு நீங்கும்.
எலுமிச்சம்பழம் இதனால் மலக்கட்டு, அதிதாகம், உே யானைக்கால், கண்ணோய், காதுவலி, !
கோவைக்காயப் இதனால் அரோசிகம், தீராத உடல் : கரப்பான், சொறி, சிரங்கு நீங்கும்.
சுரைக்காய் இதனால் உடம்பில் உள்ள கெட்ட நி நீங்கும்.
கீழாநெல்லி இலை கீழாநெல்லி இலை நாமாலையை நீக்கி
அத்தியிலை அத்தியிலை உடலுக்கு நல்ல இரத்தவி சக்தியைத் தரவல்லது.
சிறுகுறிஞ்சான் இலை சிறுகுறிஞ்சான் இலைச் சூரணம் மது, ே நீக்கவல்லது.
திரிபலா தான்றிக்காய், நெல்லிக்காய், கடுக்காய் திரிபலா எனப்படும். இது வாத, பித்த, கபம் வல்லது.
52

பக்க விளைவுகளும் ஏற்படுவ தில்லை. நம் ய்கனிகள் ஆகியவற்றைச் சேர்த்து உண்டு த் தடுக்க முடியும். ஆகவே, நாம் அனைவரும் காண்டு வாழ்ந்தால் நோயற்ற வாழ்வு வாழ
(தன்னானே, இதழ் 8:9 - 1997)
ல்ல பசியையும், உண்டாக்கும். கோழை மல், இரைப்பிருமல், பித்ததாகம் இவை
ன்மத்தம், பித்தம், வாந்தி, நகச்சுற்று, இவை நீங்கும்.
உஷ்ணம், சுரம், கபம், சளி, இருமல்,
ைேர வெளியேற்றும். உடல் உஷ்ணம்
குணப்படுத்தும் அரிய மருந்தாகும்.
ருத்தியைக் கொடுக்கும் நோய் எதிர்ப்புச்
மகநோய் களையும், விஷக்கடிகளையும்
இம்மூன்றும் சேர்ந்த கலவைச் சூரணமே சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்த
ஒலை 50

Page 55
தமிழ் மருத்துவம்
மேற்கத்தைய நாடுகளில் பெரும்பாலும் வழக்கிலிருந்த அலோபதி (ஆங்கில) வைத்திய முறையினைப்போல், கீழைத்தேய நாடுகளிலும் அவர்களின் சமுதாய பண்பாட்டின் வளர்ச்சியை ஒட்டிய கீழைத்தேய சுதேச வைத்திய முறைகள் வழக்கிலிருந்து வந்துள்ளன.
மேற்கத்தைய அலோபதி வைத்திய முறைகள் நவீன முதலாளித்துவத்தின் மறு மலர்ச்சியுடன் அதாவது, இயந்திரத் தொழில் புரட்சியின் மறுமலர்ச்சியுடன் மிகப் பெரும் வளர்ச்சியடைந்தது போல், கீழைத்தேய சுதேச மருத்துவ முறைகள் நவீன வளர்ச்சியடைய முடியவில்லை! காரணம் பெரும்பாலான கீழைத்தேய நாடுகள் மேற்கத்தைய ஐரோப்பிய நாடுகளுக்கு அடிமைப்பட்டு கிடந்ததேயாகும்!
சுதந்திரமற்று சுயவளர்ச்சியற்றுக்கிடந்த கீழைத்தேய நாடுகளின் பண்பாடு, கலை, சமய, பொருளாதார, விஞ்ஞான வளர்ச்சிகள் தடுக் கப்பட்டன, அத்துடன் அழித் தொழிக்கவும் பட்டன என்று கூறுவதும் பொருத்தமானதே! இந்த வரலாற்று சிக்கலுக்குள் சிக்குப்பட்டு குற்றுயிராக இருந்தனவே இன்றைய கீழைத்தேய சுதேச மருத்துவங்கள் ஆகும்!
மேற்கத்தை அலோபதி மருத்துவத்தின் வளர்ச்சி அதன் நவீன தொழில் நுட்ப சாதனத்துடனும், நவீன சத்திர சிகிச்சையின் அபாரமான வளர்ச்சியுடனும், தொழில் வளர்ச்சியின் காரணமாக கண்டு பிடிக்கப் பட்ட நுண்ணுயிர் கொல்லி மருந்துகளின் வளர்ச்சியினாலும் பின்னிப்பிணைந்த ஒன்றிணைந்த வரலாறு ஆகும்.
ஒலை 50

தமிழர் மருத்துவமும் சீனர் மருத்துவமும்
மருத்துவர் இராஜதர்மராஜா
இயந்திர தொழில் வளர்ச்சியற்ற, முதலாளித்துவ மறுமலர்ச் சிகாணாத தீழைத் தேய நாடுகளினி சுதேச மருத்துவங்களில் இத்தகைய புனர் நிர்மாண வளர்ச்சிகள் ஏற்படாது தேக்கம் அடைந்த நிலையில் இன்றும் உயிர் வாழுகின்றன என்றால், அதன் நோய் தீர்க்கும் மகத்துவ த்தினால் என்றே கூறவேண்டும். தொற்று நோய்கள் தவிர்ந்த மற்றைய பிணிகளின் விடயத்தில் அவை திடகாத்திரமான பங்கு வகிக்கின்றன. பிணிகளைத் தீர்க்கும் விடயத்தில் அவை தோற்றுப் போய்விட்டால் உலகில் நிலைத்திருக்க முடியாது அழிவையே தேடியிருக்கும்.
இன்று கீழைத்தேய நாடுகளின் சுதந்திர விடுதலையுடன், அவர்களின் அரசியலில் ஏற்பட்ட எழுச்சியுடன், அவர்களின் பண்பாடு, கலை, சமய, பொருளாதார, விஞ்ஞான அம்சங்களிலும் வளர்ச்சியும், புத்துயிர்ப்பும் தென்படுகின்றன. இதன் மூலம் கீழைத்தேய நாடுகளில் வழக்கில் இருந்த சுதேச மருத்துவங்களும் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியிருக்கின்றன.
இத்தகைய புனர் நிர்மாண வளர்ச்சியில் நோக்க வேணி டியதே எமது சுதேச மருத்துவங்களான சித்த - ஆயுள்வேத - யுனானி வைத்திய முறைகளாகும். இத்தகைய வளர்ச்சியில், இன்று எம்மையும் விட பல படிகள் மேலே மிஞ்சி வளர்ச்சியடைந்த சீன மருத்துவத்துடன் எமது மருத்துவத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய நிலையில் நாம்
6f(36mmib
பொதுவாக சித்த - ஆயுள்வேதம் யுனானி போன்ற எமது சுதேச
53

Page 56
தமிழ் மருத்துவம்
மருத்துவங்களை நாம் இந்திய மருத்துவ முறைகள் என்றே அழைக்கின்றோம். இதில் சித்த மருத்துவம் என்பது தமிழர்க்குரிய மருத்துவமாகத் திகழ்கின்றது. சித்த மருத்துவம் பொதுவாக தமிழர் வாழ் கினிற பிரதேசங்களான தென்னாட்டிலும், ஈழத்திலும் வழக்கத்தில் உள்ளது. சித்த மருத்துவத்தின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் பதினெட்டு சித்தர்களின் பங்கு பெரிதும் கூறப்பட்டுள்ளது. சித்த மருத்துவம் தமிழர்களின் மருத்துவ முறையாகக் கூறப்பட்டுள்ளதுபோல் ஆயுள் வேத மருத்துவமுறை வட இந்தியர்களின் மருத்துவ முறையாகக் கூறப்பட்டுள்ளது. ஆயுள்வேத மருத்துவ நூல்கள் பெரும்பாலும் சமஸ் கிருத மொழியிலேயே உள்ளது. சித்த, ஆயுள்வேதம் இரண்டும் தனித்துவமான மருத்துவ முறையாக இருந்த போதிலும் சில அடிப்படை தோற்றமுறைகளில் ஒற்றுமையும் உண்டு என்பது மறுக்க முடியாதது ஆகும். ஏனெனில் இரண்டு முறைகளும் அகண்ட பாரத தேசத்தில் தோன்றி வளர்ந்தது ஆகும். இரண்டு முறைகளிலும் பிரிக்க முடியாத ஒற்றுமை இருப்பது போல் சில வேற்றுமையும் உள்ளது இது இரண்டையும் வேறுபடுத்துகிறது
666). V
தமிழர் மருத்துவமாக சித்த மருத்துவம் விளங்குவது போல் கீழைத்தேயங்களில் கீழைத்தேய மருத்துவங்கள் விளங்கி வருகின்றன. பொதுவாக கீழைத்தேய மருத்துவ முறைகளில் ஒரு பொதுப் பண்பாட்டு இழை ஒடுகின்றது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்த பொதுப்பண்பாட்டு இழை இந்திய சீன வைத்திய முறைகளுக்கு இடையிலும் காணப்படுவது விந்தையல்ல. பொதுவாக இந்த சுதேச வைத்திய முறைகளில் நோய் தீர்க்கும் வழி முறையாக பெரும்பாலும் மூலிகைகள் பயன்படுத்தப்படுவது பெரிய ஒற்றுமை அம்சமாகும்.
இந்திய மருத்துவம் என்பது ஆதியில் பல தேசங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. மறுபுறமாக பல நாட்டில் இருந்த மருத்துவ எண்ணங்கள், கருத்துக்கள் இந்திய உப
54

கண்டத்தில் வந்து சங்கமமாகியிருக்கலாம். எது எப்படியிருந்த போதிலும் ஆதியில் இந்திய தொன்மையான பல்கலைக்கழகங்கள் ஆன தக்ஷிலா, நாளந்தா, காஞ்சி போன்ற அறிவாலயங்களில் இருந்து அறிவின் ஒளி பல நாடுகளிற்கும் பரவியிருக்கின்றது. இதில் மருத்துவத்துறையும் ஒன்றாகும். இந்த அறிவின் ஒளி வீச்சு நற்பணியில் புத்த சமயமும், புத்த பிட்சுக்களும் கணிசமான பங்கு வகித்திருக்கின்றனர். புத்த சமய போதனைகள் சென்று புத்த மதம் பரவிய நாடுகளில் எல்லாம் புத்த பிட்சுக்கள் கல்வி அறிவுடன், மருத்துவ அறிவையும் கொண்டு சென்றனர். இதன் மூலம் இந்திய மருத்துவப் பண்பாடு மற்றைய தேசங்களுக்கும் சென்றது. ஒரு காலத்தில் புத்த சமய போதனையில் தமிழ் நாடும், முக்கியமாக காஞ்சியும் கலங்கரை விளக்காக ஒளி வீசியது என்பது வரலாறு கூறும் செய்தியாகும். இந்த வகையில் சீன நாட்டின் சீன மருத்துவ முறையில் நமது சித்த ஆயுள் வேத மருத்துவங்களின் பொது அம்சங்கள் கலந்து இருப்பது ஒரு பண்பாட்டு அம்சத்தின் வெளிப்பாடு ஆகும்.
சீன தேசத்திலும் அதன் சுதேச மருத்துவமான சீன மருத்துவமும் அதனுடன் இணைந்த அக்குபங்சர் துறை யாவும் தேக்கம் அடைந்தே இருந்தன. ஆனால், சீனத்தின் விடுதலையுடனும், அதன் அரசியல் மறு மலர்ச்சியுடனும் அங்கு பெரும் பண்பாட்டு விழிப்புணர்ச்சி உண்டானது. அதன் வழியில் சீனமருத்துவத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி உலகை ஆச்சரியத்துடன் சீனாவின் பக்கம் திருப்பியது என்றால் மிகையல்ல.
சீன அக்குபங்கர் வைத்தியம் ஏற்படுத்திய திடீர் மந்திரவித்தை உலகையே கவர்ந்து கொண்டது. 1972ல் சீனா சென்ற அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் அக்குபஞ்சர் வைத்திய முறை கண்டு வியந்து மிகவும் பாராட்டிப் புகழ்ந்தது வெறும் சம்பிரதாய சம்பவம் அல்ல. உணர்மையிலேயே மருத்துவத்துறை வளர்ச்சியின் ஒரு புதிய 85LLLDITS5D.
ஒலை 50

Page 57
தமிழ் மருத்துவம்
அக் குபஞ் சர் வைத்திய முறை உண்மையில் சீன மருத்துவத்தின் ஒரு பிரிவாகும். அது தனித்த மருத்துவமல்ல. இம் முறை சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வைத்திய முறையாகும். சீன மருத்துவத்தையும் , அக் குபஞ சர் முறையையும் சீனர்க்கு அளித்தவர்கள் பண்டைய “தாவோக்” கொள்கையினர் என்று கூறப்படுகிறது. இந்த “தாவோக்” கொள் கையினர் உலகையும், சமூக நிறுவனங்களையும் புறக்கணித்தவர் களாகவே (குறிப்பாக கன்.பூசியக் கொள்கைக்கு எதிராக எழுந்தது தாவோயிசம்) இருந்துள்ளனர் என்பது குறிப்பிடக் கூடியது. இதே போலவே எமது சித்த மருத்துவ தி தை உருவாக்கிய சித் தர்களும் வாழ்ந்துள்ளனர் என்பது ஒரு அதிசயமான உண்மையாகும். சித்தர்களில் “போகர்’ எனும் சித்தர் முக்கியமானவர். இவரின் பேரில் பல சித்த மருத்துவ நூல்களுண்டு. போகர் சீனாவில் இருந்து வந்தவர் எனும் கர்ணபரம்பரைக் கதையுமுண்டு. சீனாவுக்கு பலமுறை போய்வந்தவர் என்பதும் முக்கிய அடையாளமாகும். இது சீன மருத்துவத் திற்கும், சித்த மருத்துவத்திற்கும் ஏற்பட்ட உறவு நிலையைக் குறிக்கலாம்.
இன்னும் சித்த மருத்துவத்தில் கூறப்படும் நாடிப்பரீட்சை முறை நோயை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதேபோல் தான் சீன மருத்துவத்திலும் அங்குபஞ்சரிலும் நாடிப் பரிசோதனை, வியாதியைக் கண்டுபிடிக்க முன்னோடியாகத் திகழ்கின்றது என்பதுவும் ஒரு அதிசயமான உண்மையாகும்.
அக்குபஞ்சர் என்பதை பொருள் பிரித்துப் பார்த்தால் “அக்கு” என்பது ஊசியைக் குறிக்கின்றது. “பங்சர்” எனும் பதம் குத்துதல் என பொருள் கொள்ளப்படுகின்றது. எனவே அக்குபஞ்சர் என்பது ஊசியால் குத்திச் செய்யப்படும் வைத்திய முறை என பொருள் கொள்ளப்படுகின்றது. இந்த அக்குபஞ்சர் வைத்தியமும், சீன வைத்தியமும் சீனாவில் பழங்காலம் தொட்டே பேணப்பட்டுவரும் வைத்திய முறையாகும்.
சீனதேசம் விடுதலையடைந்த பின்பு
ஒலை 50

அதன் சுதேச மருத்துவமான சீன மருத்துவ முறை புத்துயிர் ஊட்டப்பட்டு நன்கு வளர்த்தெடுக்கப்பட்டு உள்ளது. அதனையும் விட அவர்கள் புதியதொரு வளர்ச்சிக்கும் திட்டமிட்டு வேலை செய்கின்றனர். அவர்களின் புதிய திட்டம் இணைந்த மருத்துவ சேவையாகும். அதாவது சீன மருத்துவ முறையையும், மேற்கத்தைய ஆங்கில மருத்துவமான அலோபதி முறையையும் இணைத்து செயற்படுவ துமாகும்.
இந்தத் துணிவு அவர்களின் சுயசார்பு அரசியலின் துணிந்த முடியாகும். இதன் படி அவர்கள் புதியதொரு சுகாதாரக் கொள்கையை உருவாக்கி மக்களுக்கு பணியாற்றுகின்றனர். இணைந்த கொள்கை யென்பது மேற்கின் வழிகாட்டலுக்கு முற்றிலும் வேறுபட்டதுவாகும். மேற்கின் வழிமுறைகளில் இருந்து சீனா துணிந்து புதியதொரு சுகாதாரக் கொள்கையை உருவாக்கி உள்ளது. சீன பாரம்பரிய சுதேச மருத்துவத்தையும், மேற்கத் தைய நவீன ஆங்கில மருத்துவத்தையும் இணைத்து செயற்படுவது என்பது, மருத்துவ வளர்ச்சியைப் புதியதொரு கட்டத்திற்கு கொண்டு செல்வதுவாகும்.
சீன மருத்துவம் போல், எமது தமிழர் வைத்திய முறையும் மிக மிகத் தொன்மையான மருத்துவ முறையாகும். எமது நாடு அந்நிய ஏகாதிபத்திய அடக்கு முறை ஆட்சியினால் சீர்குலைக்கப்பட்ட போது, எமது மருத்துவ முறைகளும் சீர்குலைக்கப்பட்டு பின்தள்ளப்பட்டது வியப்புக்குரியதல்ல. ஒன்றல்ல மூன்று நூற்றாண்டுகளுக்கு மேல் நாம் அடிமைப்பட்டு இருந்ததில் எமது பண்பாட்டு வளர்ச்சியிலும் மேற்கு நாட்டின் ஆதிக்க சுவடுகளுக்கு இடம் கொடுத்து விட்டோம். இன்னும் நாம் அவற்றில் இருந்து விடுபடமுடியவில்லை என்பது வேதனை யான வரலாற்று முக்கியத்துவமாகும்.
சீனதேசம் விடுதலையானதும் அங்கு ஏற்பட்ட சமுதாய, பண்பாட்டு, விஞ்ஞான வளர்ச்சிகள் எமக்கு ஏற்பட முடியவில்லை. சீன மருத்துவம் உயர்ந்த கட்டத்துக்கு வளர்த்து எடுக்கப்பட்டது போல், எமது மருத்துவ முறைகள் வளர்த்து எடுக்கப்பட
55

Page 58
தமிழ் மருத்துவம்
வில்லை. நாம் மேற்கு நாட்டு விஞ்ஞானத் துக்கும், கொள்கைகளுக்கும் அடிமையாகி எமது கீழைத்தேய விஞ்ஞானத்தையும் கொள்கைகளையும் மறந்து விட்டோம். இன்று எமது சமூகத்தில் நடைபெறும் கோயில் மற்றும் சமயங்களை ஒட்டிய நிகழ்வின் உண்மைத் தன்மைகளை பகுத்து ஆராய்ந்து விளங்கத் தவறி விடுகின்றோம். கோயில் சமய நிகழ்வுகளில் பல உண்மைகள் மறைந்து கிடக்கின்றன. இது பெரிய அதிசயமல்ல. காரணம் பண்டைய மருத்துவக் கொள்கைள் சமய சடங்குகள் ஊடேதான் வளர்த்து எடுக்கப்பட்டு வந்துள்ளன. மருத்துவக் கலை புரோகிதர்கள் மத்தியிலே நிலவி வந்த காரணத்தால் அவர்கள் மருத்துவத்தையம் சமயத்துடன் இணைத் தே நடத்தி வந்துள்ளார்கள் . உதாரணத்துக்கு பெரியம்மை, சின்னமுத்து, கொப்பளிப்பான், அக்கி, போன்ற நோய்களை அம்மாள் வருத்தம் என்று கூறி நேர்த்தி வைப்பதைக் குறிப்பிடலாம்.
இப்படியாக சில மருத்துவ உண்மைகள் கோயில் சடங்காகவும், சமயச் சடங்குகள் ஆகவும் அன்றும் இன்றும் பேணப்படுவதன் மூலம் நடை முறையில் இருந்து கொண்டே வருகின்றன. ஆனால், அவற்றின் மருத்துவ உண்மைத் தன்மைகளை நாம் மறந்து விடுகின்றோம். அவற்றை ஆராய்வது மேற்கு நாட்டு விஞ்ஞானத்துக்கு ஏற்றதல்ல என விட்டு விடுகின்றோம்? ஏன்? எதற்கு? எப்படி? என்று ஆராய முற்படுவது இல்லை. கீழைத்தேய விடயங்கள் பற்றி முதலில் நாம் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். கிளிப்பிள்ளைகள் போல் திரும்பவும் திரும்பவும் நாம் மூட நம்பிக்கைகள், விஞ்ஞானத்துக்கு ஏற்றதல்ல என்று கூறுவதை விடுத்து உண்மைத் தன்மையை ஆராய முற்பட வேண்டும். மூடத்தன்மையும் உள்ளது தான். அதை ஆராய்ந்து முடிவு கட்ட வேண்டும். மேற்கு நாட்டு விஞ்ஞான முறைமைகள்தான் முடிந்த முடிபுகள் அல்ல. கீழைத்தேய விஞ்ஞான முறைமைகளும் உண்டு. அவற்றை நாம் கை விட்டு விட்டோம். உணர்மையில் , மேற்கின் விஞ்ஞான
S6

முறைமைக்கும், கீழைத்தேய விஞ்ஞான முறைமைக் கும் இடையில் பலத்த முரண்பாடுகள் உள்ளன. இவற்றை அடி ஆதாரங்களாக வைத்தே எமது மருத்துவ முறைகளையும் நாம் நோக்க வேண்டியுள்ளது.
கீழைத்தேய் விஞ்ஞான முறைமையில் சீன மருத்துவமும், எமது பாரம்பரிய மருத்துவ முறைகளும் ஒத்துப்போகும் தன்மையை நாம் காணமுடியும். சீன மருத்துவத்தின் வளர்ச்சிப் பாதையிலேயே எமது மருத்துவத்தின் வளர்ச்சிப் பாதையும் காணப்படுகின்றது. உதாரணத்திற்கு அக்குபஞ்சர் வைத்தியம் எப்படி உடம்பில் செயல்படுகின்றது என்பதற்கு மேற்கு நாட்டின் விஞ்ஞான முறைமையில் பூரணமான பதில் கூற முடியாதுள்ளது. பதில் இல் லை. ஆனால் , சீன மருத்துவ முறைமையில் அதாவது, கீழைத்தேய விஞ்ஞான முறைமையில் பதில் கூறமுடியும். இதே போல் தான் எமது சித்த - ஆயுள் வேத மருத்துவத்தின் சில செயற்பாடுகளும். இவற்றிற்கு நாம் மேற்கு நாட்டு விஞ்ஞான முறைமைகளில் பதில் கூற முடியாதுள்ளது. இதன் காரணத்தினால் இவை விஞ்ஞான பூர்வமற்ற மருத்துவ முறைகள் என்று அர்த்தமல்ல?. இங்கே நாம் அறிந்த விஞ்ஞான அறிவு மட்டுப்படுத்தப்பட்டது என்றே கொள்ள வேண்டும். விஞ்ஞானம் வளர்ச்சியடைய வேண்டிய தேவை உள்ளது. கிழக்கும் மேற்கும் சேர வேண்டியதேவை உள்ளது. எமது அறிவுக்குப் புலப்படாத சில விஞ்ஞான உண்மைகள் நடைமுறையில் உள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அக் குபஞ்சர் , சித்த ஆயுள் வேத மருத்துவங்கள் இதனையே சுட்டி நிற்கின்றன.
எமது மருத்துவத்தில் உள்ள பண்புகள் பல அக்குபஞ்சர் சீன மருத்துவத்திலும் காணப்படுகின்றன. அக்குபஞ்சர் மருத்துவ முறைமையுள் காணப்படும்.ஒத்த தன்மைகள், எமது மக்கள் வழமையாக எடுக்கும் சமயபக்தி பூர்வமான காவடி, கற்பூரச் சட்டி, முள்மிதியடி கட்டி நடத்தல், தீக்குளிப்பு G8 Lu T 6oi so F du u dë சடங்குகளிலும்
ஒலை 50

Page 59
தமிழ் மருத்துவம்
காணப்படுகின்றன. இவை பற்றி நீண்ட சிக்கலான ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டியது முக்கியமாகும்.
எமது மக்கள் தீராத உபத்திரவமான நோய்களுக்கு தெய்வங்களின் மேல் பழிபோட்டு நேர்த்தி வைப்பார்கள். இந்த நேர்த்தியை சிறப்பான சமய விழாக்களின் போது அல்லது ஆலய உற்சவங்களின் போது நிறைவேற்றி, துன்பங்களில் இருந்து விடுதலை பெறுவர். மக்களின் நேர்த்திகள் துன்பங்களுக்கு ஏற்ப வேறுபட்டுக் காணப்படும். காவடி எடுப்பது, கற்பூரச்சட்டி சுமப்பது முள் மிதியடிகட்டி நடப்பது, தீக்குளிப்பு, அங்கப் பிரதஸ்டம் செய்வது, உபவாசம் (விரதம்) இருப்பது போன்ற நடைமுறை நேர்த்தி செய்கையின் மூலம் தங்கள் தீராத நோய்கள் மற்றும் துன்பங்களில் இருந்து விடுதலை காண்பதை நடைமுறையில் காண்கின்றோம். காவடி எடுக்கும் போதும், தனியாகவும் சிலர் மேல் முழுவதும் வேல் குற்றி, செடில் குற்றி நேர்த்தி செய்வர். இவை எல்லாம் தமது தீராத வருத்தத்திற்கும் அல்லது, மனத்துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கும் செய்வர். இவற்றை நிறைவேற்றுவதன் மூலம் தமது துன்பம் அல்லது நோய்களில் இருந்து விடுதலை பெறுவதாக கூறுகின்றனர்.
காவடி எடுப்போர் வேல் குத்தும் போது உடலில் ஒரு ஒழுங்கு முறையிலேயே சிறிய வேல் ஊசிகளை குத்துவார்கள். இங்கே ஏற்படும் ஒழுங்கு வடிவத்திற்கும் அங்குபங்சர் பாதைகளுக்கும் ஓர் ஒற்றுமை இருப்பதை நாம் காணமுடியும் . இதே போல் முள்மிதியடியில் நடப்பது, தலையில் கற்பூரச் சட்டி சுமப்பது போன்ற செயல்களுக்கும் சீன மருத்வ முறைகளுக்கும் சில ஒத்த தன்மைகள் காணப்படுகின்றன. இவை பற்றிய ஆராய்ச்சிகளை சித்த ஆயுள் வேத மருத்துவர்களும், சீன சுதேச மருத்துவர் களும் சேர்ந்து மேற்கொண்டால் பல உண்மைகளை நாம் பெறமுடியும்.
அக்குபங்சர் மருத்துவத்தில் உடலில் காணப்படும் சில புள்ளிகளில் ஊசியால்
ஒலை 50

குத்துவதின் மூலம் வியாதியைக் குணப்படுத் துகின்றார்கள். இப்படி உடலில் காணப்படும் புள்ளிகளுக்கு அக்குபங்சர் புள்ளிகள் எனப்படுகின்றது. இது சுமார் எழுநூறு (700) ஆகும். இதேபோல் புள்ளிகள் மேல் சூடுபோடுவதன் மூலம் குணமாகும் வைத்திய முறைக்கு மொக்ஸிபியூஸன் எனப்படுகின்றது.
உடலில் காணப்படும் அக்குபங்சர் புள்ளிகள் சுமார் எழுநூறு வரையிருக்கும் என அறிவது போல், இந்த புள்ளிகளை ஒழுங்குபடுத்தி பாதையும் அமைத்தார்கள். பின் இப்படிப்பட்ட பாதை எந்த உறுப்புடன் தொடர்புடையதோ அந்த உறுப்பின் பெயரை அப்பாதைக்கு சூட்டினார்கள். உதாரணத்துக்கு இதயத்துடன் தொடர்புடைய பாதைக்கு இதயப் பாதை எனப்பட்டது. இப்படியாக பன்னிரண்டு சோடிப் பாதைகள் காணப்படுகின்றன. இன்னும் இரண்டு ஒற்றைப் பாதைகளும் உண்டு. இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்ன எனில் காவடி எடுப்பவர்கள் செடில் குத்துவதும், சிறுவேல் ஊசிகள் குத்துவதும் கிட்டத்தட்ட ஒரு பாதை ஒழுங்கு முறையில் ஆகும். இவை கிட்டத்தட்ட அக்குபங்சர் புள்ளிகளையும், பாதைகளையும் ஒத்தவையாகவே காணப்படுகின்றன. இன்னும் செடில் குத்தி இழுக்கும் போதும், ஆட்டும் போதும் அக்கு பங்சரில் செயல் படும் தூண்டல் விளைவு நடைபெறுகின்றது எனக் கொள்ளலாம். இதே செயற்பாடு முள் மிதியடியில் நடப்பதன் மூலமும் ஏற்படுகின்றது. என்றாலும், இங்கே அழுத்தம் காரணமாகவே புள்ளிகள் தூண்டப் படுகின்றன எனலாம்.
கற்பூரச் சட்டி எடுப்பதன் மூலம், கற்பூரச் சட்டியின் ஊடாக சூடு ஒரே சமச்சீராக ஒரு அளவான முறையில் தலையை தாக்குவது குறிப்பிடத்தக்கது ஆகும். இப்படியாக சூட்டின் மூலம் வைத்தியம் செய்வது எமது சித்தஆயுள் வேத வைத்தியத்திலும் காணப்படுகின்றது. அக்னி கர்மா, எனும் முறையுடன் சீன மொக்ஸிபியூஸன் வைத்திய முறையை ஒப்பிட்டு பார்க்கலாம். அக்னிகர்மா, ஷராகர்மா பற்றி எமது வைத்திய நூல்கள் பலவற்றில் விபரித்துள்ளார்கள். தலையில் கீறி
57

Page 60
தமிழ் மருத்துவம்
மருந்து வைத்து சூடாக்கும் குடோரி வைத்திய முறை மற்றும் உப்புக்கல் வைத்து சூடாக்குவதையும் குறிப்பிட முடியும். இதே போல் தான் சீனாவின் மொக்ஸியியூஸன் எனும் சூடாக்கும் வைத்தியம் காணப்படுகின்றது. இங்கே உடலில் காணப்படும் புள்ளிகளில் சில குறிப்பிட்ட மூலிகைகளை பொடி செய்து வைத்து சூடாக்கும் முறைகளைக் காண முடியும். மற்றும் மூலிகைப் பொடியை ஒன்றுதிரட்டி தட்டியான தடி போல் ஆக்கி அதன் மூலமும் உடம்பில் உள்ள புள்ளிகளில் சுடுவார்கள். மற்றும் இஞ்சி, உள்ளி, உப்புக்கட்டி போன்றவை மூலமும் சூட்டு வைத்தியம் செய்கின்றனர். இதனை விட அக்குபங்சர் ஊசிகளை சூடாக்கியும் புள்ளிகளில் குத்துகின்றனர். இப்படியான சீனவைத்திய முறைகள், எமது சித்த ஆயுள் வேத மருத்துவ முறைகளில் காணப்படுவதை ஒத்தே காணப்படுகின்றன. கற்பூரச் சட்டி எடுப்பதின் தத்துவத்திலும் சீன வைத்திய முறையான மொக்ஸி பியூஸனின் தத்துவமே காணப்படுகின்றது. சீனர்களுக்கும் எமக்கும் உள்ள வித்தியாசம் என்ன வெனில், நாம் எமது வைத்திய முறைகளை ஒவ்வொன்றாக கைவிட்டு மறந்து விட அவர்கள் ஒவ்வொன்றாக தமது வைத்திய முறைகளை புதுப்பித்து அபிவிருத்தி செய்து கொண்டு வருகின்றார்கள். அதன் மூலம் சீன சுதேச மருத்துவம் நவீன உலகில் வளர்ச்சி கண்டு வருகின்றது.
சீன மருத்துவத்திற்கும் எமது சித்த ஆயுள்வேத மருத்துவத்திற்கும் உள்ள மற்றொரு தன்மை பஞ்ச பூத தத்துவமாகும். சீனமருத்துவ தத்துவத்தின் படி மரம், தீ, பூமி, உலோகம், நீர் ஆகிய இயற்கை சக்திகளாகிய ஐம்பூதங்கள் உடலிலுள்ளன என்று கூறப்படுகிறது. அகில உலகத்திற்கும் பஞ்சபூதங்களே அடிப்படையாகும். எமது சித்த ஆயுள்வேத மருத்துவத்திலும் மனிதன் பஞ்ச பூதங்களினால் ஆக்கப்பட்டவனே என்பது குறிப்பிடக் கூடியது ஆகும்.
மேலும் மனிதன் உட்பட ஆகார ஒளடதங்கள் மற்றும் பொருட்கள் யாவும் பஞ்ச
58

பூதங்களின் வெவ்வேறு வகையான சேர்க்கையினால் ஆக்கப்பட்டவை என விபரிக்கப்படுகின்றன. ஆகாயம், காற்று, தீ, நீர், மண் ஆகியன பஞ்ச பூதம் என தமிழர் மருத்துவம் கூறுகின்றது. மற்றும் நோயாளிகளைப் பரீட்சிக்கும் அஷ்டவித பரீட்சைக்கும், சீன மருத்துவ பரீட்சைக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமைகள் கீழைத்தேச மருத்துவங்களிற் கிடையே காணப்படும் பண்பு ரீதியான ஒற்றுமைகளைக் குறிக்கின்றது. எமது அஷ்டவித பரீட்சையில் நாடிப்பரீட்சை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதேபோல் சீன மருத்துவத் திலும் அக்குபஞ்சரிலும் நாடியினால் நோய் அறிதல் முக்கியத்துவமாக விளங்குகின்றது.
விஞ்ஞான பூர்வமற்ற மருத்துவம் என தடை செய்யப்பட்டு ஒரு மூலையில் ஒதுக்கப்பட்ட சீன மருத்துவம் இன்று புகழ் பெற்றுத் திகழ்கின்றது. பல நாட்டு மருத்துவர்களும் இன்று அக்குபங்சர் மருத்துவம் கற்று வைத்தியம் செய்கின்றனர். அக்குபங்சரின் செயற்பாட்டுக்கு மேற்கு நாட்டு விஞ்ஞான ரீதியில் விளக்கம் கொடுக்க முடியாவிட்டாலும் அதன் நோய் தீர்க்கும் ஆற்றலால் உலகால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இலங்கை அக்குபங்சர் ஸ்தாபனம் அதிகளவு அக் குபஞ் சர் மருத்துவர் களைப் பயிற்றுவித்துள்ளது. இதன் மூலம் பல லட்சக் கணக்கான மக்கள் Lu 6oi அடைந்துள்ளனர் என்பதும் ஆச்சரியமான உண்மையாகும்.
ஆனால், சீன மருத்துவத்தைப் போல் பழமையானதும், இன்னும் வழக்கில் உள்ளதும் ஆன தமிழர் மருத்துவமான சித்த மருத்துவத்தின் நிலை பரிதாபகரமானதாகும். தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர் புதுமைப்பித்தன் கூறியது போல், “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் தோன்றிய முதல் குரங்கும் தமிழ் குரங்கு தான் என்று புகழ்பாடும் மனப்பான்மை உள்ள நாம் எமது முதல் தோன்றிய பண்பாட்டு மருத்துவ விஞ்ஞான உண்மைகளை ஆராய்ந்து
ஒலை 50

Page 61
தமிழ் மருத்துவம்
உயர்ந்தத் தரத்திற்கு உயர்த்த தவறிவிட்டோம் என்பதும் கசப்பான உண்மையாகும்.
இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மேற்கு நாட்டு அலோபதி நவீன மருத்துவத்துறையும், தமிழ் மக்களின் சித்த மருத்துவத்துறையும், தமிழ் மக்களின் சித்த மருத்துவத் துறையும் போதிக்கப்படுகின்றன. இந்த இரண்டு துறைகளும் இணைந்து செயற்பட்டால் எமது சித்த வைத்தியத் துறையையும் மேலும் அபிவிருத்தி செய்வதுடன், நவீன மருத்துவ முறைகளு டன் இணைத்தும் செயற்படலாம். சீனாவில் சீன அலோபதி மருத்துவர்களும் சீன சுதேச மருத்துவர்களும் ஒற்றுமையாக சேர்ந்து இரு துறைகளையும் அபிவிருத்தி செய்கின்றனர். இதேபோல் கண்டி மாநகரசபை ஆயுள்வேத மருத்துவப் பிரிவும், பேராதனை அலோபதி வைத்தியப் பிரிவும் சேர்ந்து கூட்டு வைத்திய முறையிலான சிகிச்சையை மேற்கொண்டு வருவதாக அறிய முடிகின்றது. இதே முன் மாதிரியை யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் மேற்கொண்டால் பெரும் நன்மை கிடைக்கும் எனக் கூறலாம்.
ஒலை 50
 

எமது சித்த மருத்துவ வைத்தியர்களும், வைத்திய போதனாசிரியர்களும் வெறுமே ஏட்டுச் சுவடிகளிலுள்ளதை மனனம் செய்து கிளிப்பிள்ளைகளைப் போல் ஒப்புவிக்கும் மனோபாவத்தை விட்டுவிட்டு, ஏதோ சம்பளம் வருகின்றது காலத்தைப் போக்கி விடலாம் என்று கூலிக்கு மாரடிக்காமல், ஆராய்ச்சி நோக்குடனும், நவீன காலத்துக்கு ஏற்ப தமிழர் மருத்துவத்தை அபிவிருத்திசெய்யும் தூரநோக்குடனும் செயற்பட வேண்டும். போதிப்பது சித்த மருத்துவம் நடைமுறைக்கு அலோபதி மருத்துவம் என பிழைப்பு நடத்தினால் சித்த மருத்துவம் அபிவிருத்தியாகாது. அபிவிருத்திப் பாதையில் நல் நோக்கத்துடன் பயணிக்க வேண்டிய தேவை சித்த மருத்துவர்க்கு உள்ளது. நவீன காலத்தின் சவாலுக்கு ஏற்ப தமிழர் மருத்துவமும் புதுப் பொலிவும் மாற்றமும் பெற வேண்டும். இதற்கு தம்மை அர்ப்பணித்து உழைக்க வேண்டியது சித்த மருத்துவர்கடமை ஆகும். தமிழர் மருத்துவத்தை பண்பாட்டு அம்சத்திலும், நவீனத்திலும் ஆராய்ச்சி செய்து உயர்த்த வேணி டியது தமிழர் தம் கடமையாகும்.

Page 62
தமிழ் மருத்துவம்
முன்னுரை
ஒவ்வொரு மனித சமூகமும் தமது வாழ்முறைகள், வாழ்வியல் அனுபவங்கள், உலகக் கண்ணோட்டங்கள். வரலாறுகள், அழகியல், அரசியல் முதலிய அனைத்தையும் தமது மரபு சார்ந்த வழக்காறுகளில் பொதிந்து வைத்துள்ளது. அம்மரபுசார் வழக் காறுகள் பெரும்பான்மையும் நினைவுசார் மரபு, வாய்மொழி மரபு, செய்முறை மரபு, தொழில் முறை மரபு, சடங்கியல் மரபு, நிகழ்த்து மரபு, பொருள்சார் மரபு, எழுத்து மரபு முதலிய பல் வேறு மரபுகளாக இன்றும் பண்பாடுகளிடையே நிலை கொண்டுள்ளன. எழுத்தல்லா மரபுகளின் பால் கவனங் குவித்திருக்கும் நாட்டுப்புறவியல் இன்று வெகுவான வளர்ச்சியைப் பெற்றுப் பல தளங்களில் தடம் பதித்து வருகின்றது. நாட்டுப்புறவியலில் “பொருள்சார் பண்பாடு” (Material Culture) (5,555 (35L656) biT (61) மருத்துவம் இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றது.
ஒவ்வொரு சமூகமும் தமக்கான மருத்துவ முறையினைக் கொண்டுள்ளது. “ஓர் ஒழுங்கு சார்ந்த நடத்தை முறையினால் மனித உடல் நலத்தை மையமிட்டு இது ஒரு சமூக நிறுவனமாக, பணி பாட்டு மரபாகச் செயல்படுகின்றது” (Dunn1976:135) நாட்டுப்புற மருத்துவ மரபு பல்வேறு பண்பாட்டுச் சூழல்களில் இயங்கும் தன்மை குறித்து g360TLDytilus) LD(5536 lb (ethnomedicine) என்ற சமூக அறிவியல் துறையானது அறிய முயன்று வருகின்றது. இனமரபியல் மருத்துவ ஆய்வு என்பது பன்முகத் தன்மையது. நாட்டுப் புற மருத்துவ முறையியல் (metamedical discourse) usibilugs. 96G6). TO பண்பாடும் அது சார்ந்த சமூகச் சுற்றுப்புறச்
60

இனமரபியல் மருத்துவம்
முனைவர் ச.பிலவேந்திரன்
சூழலில் மனிதன் உடலி சார் நீத அனுபவங்களைக் கொண்டிருப்பது மட்டுமன்றி நோயப் பற்றிய கருத் தாக்கங்கள் , சொல்லாடல்கள், அதனை எதிர்கொள்ளும் முறைமைகள், நோய் தீர்க்கும் முறைமைகள் முதலானவற்றையும் கொண்டுள்ளது. இந்த மருத்துவ அறிதல் முறைகள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தி அறியும் முறையியலாக இனமரபியல் மருத்துவம் அமைகின்றது. மருத்துவம் குறித்த அனைத்துச் சொல்லாடல்களையும் ஒருங்கிணைத்து ஒரு முழுதளாவிய தேடலை மேற்கொள்வதே இனமரபியல் மருத்துவம் ஆகும். இந்த அணுகுமுறை பலதரப்பட்ட மக்கள் குழுவி னரது உடல்நலம் சார்ந்த அனுபவங்கள். கருத்தாடல்கள், அறிதல் முறைகள், செயல்முறைகள், முதலியவற்றை ஓர் ஒழுங்குக்குள் வைத்து ஆராய்கிறது.
நவீன மருத்துவ மேலாண்மையும் உள்ளுர் மருத்துவ முறைமைகளும்
உலகம் முழுமையும் அலோபதி என்னும் நவீன மருத்துவமுறை ஓங்கி வளர்ந்து நடைமுறையில் இருக்கும் இச்சூழலிலும் சில நாடுகள் தங்கள் நாட்டுக்கே சொந்தமானதும் தங்கள் நாட்டிலேயே தோற்றுவிக்கப்பட்டதுமான மருத்துவமுறைகளை இன்றும் போற்றிக் காப்பாற்றி வருவதுடன் நடைமுறையில் புழங்கிக் கொண்டும் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை யுனானி, அக்குபஞ்சர், ஆயுர்வேதம், சித்த மருத்துவம், ஹோமியோபதி போன்றவையாகும். எனினும், ஒவ்வொரு நாட்டிலும் மருத்துவம் என்பது ஒரே முறையியலாக, ஒரு மைத் தன்மையதாக, ஒரே ஏகாந்த முறையாக இல் லை என்பதே உணி மையாக
ஒலை 50

Page 63
தமிழ் மருத்துவம்
இருக்கின்றது. மருத்துவம் உடலியலை. உடற்கூறியலை மையமாகக் கொண்டு இயங்கி வந்தாலும் நோய், நோயாளி, மருந்தாளுமை என்ற கருத்தியல்களை உள்ளடக்கியதாகவே இருந்து வருகின்றது.
எனினும் நவீன மருத்துவமும் உள்ளுர் நாட்டுப்புற மருத்துவமும் வெவ்வேறு தளங்களில் வெவ்வேறான அடிப்படைகளைக் கொண்டுள்ளன. நவீன மருத்துவம் மனித L-bangju 1606) (human physiology/anatomy) மையமாகக் கொண்டது. இதனடிப்படையில் மனித உடற்கூறு அதன் இயல்பிலிருந்து பிறழ் நீ து போவதை நோயாக அடையாளப்படுத்துகின்றது. இப்பிறழ்வுக்கான காரணத்தைக் கண்டு பிடித்து அதனை நேர்செய்ய இரசாயனக் கலவையிலான மருந்துகளைக் கையாளுகின்றது. நவீன மருத்துவம் பொதுவாக மனித உடற்கூறியலை அறிவியலடிப்படையில் மையமாகக் கொண்டிருந்தாலும் தனி மனித நோய்களைக் கையாளுவதில் அதனோடு தொடர்புடைய இயற்கை, தட்பவெப்பம், சூழல், உணவு, சமூகம், உளவியல் போன்றவற்றைப் பெரிதும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. எனினும் தொடர்ந்து நிகழும் அறிவியல் புத்தொளிகளும் ஓர் உலகளாவிய மருத்துவச் சொல்லாடலும் இதனைத் தொடர்ந்து நகர்த்திச் செல்கின்றன.
மரபான உள்ளுர் மருத்துவம் மனிதனைக் கால வெளியில் மற்றும் ஒரு சுழற்சியான இயற்கைத் தட்பவெப்பச் சூழலில் இயங்கும் கூட்டு உயிரியாகக் கருதுகின்றது. இக்கூட்டு உயிரி ஒரு கூட்டு நடத்தையை மையமாகக் கொண்டு கூட்டு உறவு, கூட்டு உணவு, கூட்டு உழைப்பு, கூட்டு களிப்பு, கூட்டு உண்மை, கூட்டு நினைவு, கூட்டு ஓர்மை, கூட்டு உளவியல், கூட்டு அறிவுப் பின்னணி கொண்டொழுகும் ஒன்றாகவும் கருதுகி ன்றது. நவீன மருத்துவத்தில் கூட்டு என்னும் ஓர்மை குன்றி தனிமனித மைய ஒர்மை வலுவாக உள்ளது. மேலும் அது தனி மனிதன். புற எதார்த்த உலகு ஆகியவற்றுக் கிடையிலான உறவு பற்றிய
ஒலை 50

ஓர் மை யைக் கணக் கிலெடுத்துக் கொள்வதில்லை. மனநோய் மருத்துவத்திலும் கூட நவீன மருத்துவ முறை கூட்டுக் கருத்தியல் என்பதன் வீச்சை முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
நவீன மருத்துவம் X உள்ளுர் மரபுசார் மருத்துவம் என்பதை இவ்விதத்தில் egocentric x Sociocentric மருத்துவ முறைமைகளாக வகைப்படுத்தலாம். மலாய் சமூகத்தின் மருத்துவ அறிதல்சார் முறையை விளக்கும் கரோல் லேடர்மன் (1994:191-205) மேற்கத்திய X கிழக்கத்திய மருத்துவ முறைகளை இவ்விதத்தில் தான் விளக்குகின்றார். உலகமயமாதல் முழு வீச்சுடன் இயங்கி வரும் இன்றைய சூழலில் மேற்கத்திய நவீன மருத்துவ முறை, கிழக்கத்திய உள்ளுர் மரபுசார் மருத்துவ முறைமைகளை விஞ்சி நடைபோடுவது கண்கூடானது.
இது தவிர உள்ளுர் மருத்துவ முறை என்பது இடத்திற்கிடம், சாதிக்குச் சாதி, குடும்பத்துக்குக் குடும்பம், மொழிக்கு மொழி வேறுபட்டதாய் உள்ளதை அறியமுடியும். இன்றைய நவீன மருத்துவத்தில் பல சிறப்பு நிலை மருத்துவர்கள் அதாவது கண் சிகிச்சை நிபுணர், தோல் சிகிச்சை நிபுணர், காது, மூக்கு, தொண்டை நிபுணர், இதய நிபுணர் எண் றிருப்பது போன்று நாட்டுப் புற மருத்துவத்திலும் பலவித நிபுணர்கள் சிறப்புநிலை பெற்று வருவதுண்டு. காட்டாக மகப்பேறுக்கென்றே மருத்துவச்சிகள், குழந்தைகளின் வயிற்றுப்போக்கு, சீதபேதி, வயிற்றுத் தொக்கம், மந்தம் போன்றவற்றைக் கவனிக்கும் சில நிபுணத்துவம் பெற்ற பெண்கள், குழந்தைகளுக்கான தசைச் சுளுக்கு (உரம் விழுதல்) நிவர்த்தி செய்யும் நிபுணர்கள், கை, கால் முறிவு, சுளுக்கு, போன்றவற்றைக் குணப்படுத்தும் எலும்பு 606i55uu is 600 jab6f (bone setters). eypātail பிடிப்பை மட்டுமே குணப்படுத்தும் சில நிபுணர்கள். விஷக் கடிகளை மட்டும் குணப்படுத்தும் சில நிபுணர்கள் என்று பலவித மருத்துவ நிபுணர்கள், பல்வேறுபட்ட முறைமைகள் செயல்முறையில் உண்டு.
61

Page 64
தமிழ் மருத்துவம்
இம்மருத்துவ முறைப்பாடுகள், மருத்துவ நிபுணர்கள் பற்றிய நம்பிக்கைகள், அவர்கள் நிபுணத்துவத்தைக் கைக்கொள்ளும் முறை, அவற்றைத் தக்கவைத்து, வாரிசுகளை உருவாக்கும் முறைகளும் ஆர்வம் தரக்கூடியன.
நாட்டுப்புற மருத்துவம்
நாட்டுப்புற மருத்துவம் பல்வேறாகக் காணக்கிடைப்பினும் இது நோய், நோயாளி, மருத்துவம், மருத்துவர், பிரபஞ்சம், இயலிறந்த ஆற்றல், இயற்கை, சூழல், தட்பவெப்பம், தொழில் போன்ற பல்வேறு கூறுகளை உள்ளடக்கியதாயும் இவையனைத்தையும் ஒரு சிக்கலான, எளிதில் விளக்கிக் கொள்ள முடியாத, இடையுறவில் பல தளங்களில் உறவாடும் ஒரு தருக்கவியல் ஒழுங்கைக் கட்டமைத்து உள்ளதாயும் இருக்கின்றது. நாட்டுப்புற மருத்துவம் ஒரு சமூகப் பண்பாட்டு, சுற்றுப்புறச் சூழலுக்குள், கால வெளிக்குள் மக்கள் குழுவின் வாழ்வியல் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது. இது சமூகத்தால் பண்பாடு, அரசியல், பொருளியல், தருக்கவியல் ஒழுங்குக்குள் வைத்துக் கட்டியெழுப்பப்பட்ட ஒன்று ஆகும். எனினும் நாட்டுப்புற மருத்துவத்தைப் பொதுவாக இயற்கை சார்ந்த நாட்டுப்புற LD(5536 b (natural folk medicine) 6T6örgob LD55gö FLsifluu6ò LDUbg5g56Ib (magico religious medicine) 676öpub Ug5 g5656. guibos மருத்துவமானது சமூகத் திணி புற எதார்த்தங்களான இயற்கை, சுற்றுச்சூழல், தட்பவெப்பம், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றுடனான சமூக அனுபவங்கள், உறவுகளின் அடிப்படையில் அமைகின்றது. இது இயற்கைச் சூழலில் கிடைக்கும் பல்வேறு வகையான தாவர, விலங்கு, கனிம, கரிமப் பொருட்களாலான உணவுப் பயன்பாட்டை மையமாகக் கொண்டது. மந்திரச் சடங்கியல் மருத்துவம் என்பது சமூகத்தின் உலகக் கண்ணோட்டங்கள். புற எதார்த்தங்கள் ஆகியவற்றைப் பண்பாட்டு ஒழுங்குக்குள் அர்த்தப்படுத்தி வைத்துள்ள முறைமை, சமூகப் பண்பாட்டு உளவியல், சமயம், சடங்குகள் போன்றவற்றின் அடிப்படையில்
62

செயல்படுவது ஆகும். இவ்விரண்டு நோயியல் மருத்துவ முறைகளும் வெவ்வேறு தளங்களை அடிப்படையாகக் கொண்டவை. எனினும் இவையிரண்டும் ஒரே நோயியல் குறித்த செயல்பாட்டில் ஒன்றிணைந்து செயல் படுவதும் உண்டு. இயற்கை மருத்துவச் சொல்லாடல் மனித உடலைப் பல்வேறு கோணங்களிலி வகைமைப் படுத்தி வைத்துள்ளது. வாதம், பித்தம், சிலேத்துமம், நீர், காற்று, குளுமை, சூடு என வகைப்படுத்தப் பெறும் நாட்டுப்புற மருத்துவம் உடலியலை வகைப்படுத்தும் பாங்கினை வெளிப்படுத்தும் இயற்கை, தட்பவெப்பம், மண், தர்வர வகை, விலங்கு, உணவுப் பண்டங்கள் முதலியனவற்றையும் கூட வாதம், பித்தம், கபம், குளுமை, சூடு, காற்று, நீர் என்ற வகைப்பாட்டுக்குள் அடக்கி வைத்துள்ளது. உடலியல் நிலை, அது கால வெளியில் இயங்கும் தன்மை, அது வெளிப்படுத்தும் எதிர்வினைகள், நோயின் தன்மை, அதனை எதிர்கொள்ள இயற்கை மருந்துகளின் தனித்த தனி மைகள் இவையனைத்தும் ஓர் ஒழுங்குக்குள் சீராக இயங்குவதை, இயற்கை மருத்துவம் தெளிவுபடுத்தும்.
இயற்கை மருத்துவம்
இயற்கை மருத்துவம் மனித உடலுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவின் அடிப்படையில் அமையப்பெறுகின்றது. மனித உடல் இயற்கையாகவே கால, வெளிச் சூழலில் இயங்குகையில் சில நோய்களை எதிர்கொள்கிறது. இது உள்கொள்ளும் உணவு, தட்பவெப்பம், இடம், தாவரம், விலங்கு ஆகியவற்றோடு உடல் கொள்ளும் உறவின் வினையாக அமைகின்றது. இவ்வாறான நோய்களைத் தீர்க்க இயற்கையிடமிருந்தே பெற்ற பொருட்களான உணவு, கரிம, கனிம, தாவர, விலங்குகளின் துணை கோரப்படுகின்றது.
நோய் களைக் கணி டறிவதும் அடையாளப்படுத்தி வகைப்படுத்துவதும் அதனை இயற்கையோடு வைத் து உறவுபடுத்தித் தீர்க்கும் முறைமைகள் ஒவ்வொரு பண்பாட்டிலும் ஏராளமாகக்
ஒலை 50

Page 65
தமிழ் மருத்துவம்
கிடைக்கின்றன. இம் முறைமைகள் இடத்திற்கிடம், சமூகத்துக்குச் சமூகம், பால் வேறுபாடுகள், வயது வேறுபாடுகள் என்ற பல்வேறு நிலைகளில் பலவாறாக இயங்கி வருவதைக் காணமுடியும். இவை வீட்டு வைத்தியம், கை வைத்தியம், பாட்டி வைத்தியம், பச்சிலை வைத்தியம், மூலிகை வைத்தியம்,நாட்டு வைத்தியம், சித்த வைத்தியம் எனப் பலவாறாகக் குறிப்பிடப்படுகின்றன. இம்மருத்துவ முறைகள் சில தனி நபர்கள், குடும்பத்தினர், சாதியினர் ஆகியோரிடம் மரபு வழியாகப் பயிலப்பட்டு வருகின்றன.
வானியல், கோளியல், சாதகம், நிமித்தம், கைரேகை ஆகியவற்றை வைத்துச் சோதிடம் கணிப்பதையும் மருந்தாளுமை, மந்திரச் செயல்பாடுகளையும் கையாளும் வெவ்வேறு குறிப்பிட்ட சாதியினர் திராவியப் பண்பாட்டில் உள்ளனர். இவர்கள் மரபு ரீதியாக, வரலாற்றினுாடாகத் தங்கள் நுண்ணறிவுப் புலமையைத் தக்கவைத்துச் செயல்படுத்தியும் வருகின்றனர். இவர்களுள் குறிப்பாகக் கம்பளத்து நாயக்கர், மலைக்குறவர், தொட்டிய நாயக்கர், வள்ளுவர் முதலிய சாதிகளைச் சுட்டலாம்.
திராவிடப் பண்பாட்டில் சாதி/இனக்குழு ரீதியாகவும் ஒரு குடும்பம் /குலம் ரீதியாகவும் மருத்துவ அறிவும் செயல்முறைகளும் இன்றளவும் நீடித்து வருகின்றன. இது ஒரு “கூட்டு மருத்துவ அறிவு நுட்பத்தையும் மருந்தாளுமையையும்’ சுட்டக்கூடியன. குறிப்பாக இரண்டு மேற்கோள்களை இதற்குச் சான்றாக இங்குத் தரலாம்.
1. “மேற்குத் தொடர்ச்சி , மலைதான் தமிழகத்தின் மிக முக்கியமான உயிர்ச் சூழல். கேரளத்திற்கும் தமிழகத்திற்கும் இடையில் இருக்கும் மலைத்தொடரில் வாழும் ஆதிவாசிகள் ‘காணிக்காரர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் குறிசொல்வதிலும் மருத்துவத்திலும் திறன் வாய்ந்தவர்கள். இவர்களுடைய மருத்துவ
ஒலை 50

அறிவு நவீன உலகத்திற்கு இன்றியமை யாத ஒன்று. இவர்களோடு காடுகளில் பயணிக்கும்போது தளர்ச்சியடையாமல் நடந்து வருவார்கள். கொஞ்சம் கூர்ந்து கவனித்தாலி தானி தெரியும் . சில இலைகளைக் கிள்ளி மென்றுகொண்டே வருவார்கள். அந்த இலையின் பெயர் "ஆரோக்கிய பச்சா’ இதைக் குதிரைக் குளம்பி என்பார்கள். இதன் இலை குதிரைக் குளம்பு போல இருக்கும். இது கிட்டத்தட்ட சீனாவின் ஜின்செக் (Ginseg) கிற்கு ஒப்பானது. காணிக்காரர்கள் தங்கள் காடுகளில் இதனைப் பயிரிடுகிறார்கள்.
2. G8a5J6ITġögộ6ò so 66TT TBGRI-(Tropical Botanical Gardens and Research Institute) என்னும் ஆய்வு நிறுவனம் 1987இல் இந்த இலையைப் பற்றி காணிகளுடன் சேர்ந்து ஆராய்ந்து "ஜீவனி’ என்னும் மருந்தைத் தயாரித்தார்கள் மிக வெற்றிகரமாக இம்மருந்து, வேலை செய்தது. தளர்ச்சியை உடனடியாகப் போக்கும் இம்மருந்து, வேலை செய்தது. தளர்ச்சியை உடனடியாகப் போக்கும் இம்மருந்து விளையாட்டு வீரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் (ஆர்.ஆர்.சீனிவாசன் 200024)
“நரிக் குறவர்கள் மூன்று, நான்கு மாதத்திற் கொரு முறை தங்கள் குழுவினருடன் (100 பேருக்கும் மேல்) ஒரு மலை அடிவாரத்திற்குச் சென்று தங்கி பேதி மருந்து உட்கொள்ளுகின்றனர். இரண்டு நாட்கள் வெறும் ரசம் மட்டுமே அருந்துகின்றனர். முழுவதும் பேதியான பிறகே, நகரத்திற்குத் திரும்புகின்றனர். அவர்களின் ஆரோக்கிய ரகசியம் இதுதான். உலகமே இவர்களிடமிருந்து இதனைக் கற்றுக் கொள்ளவேண்டும். கூட்டு மருந்து (massmedicine)இவர்களின் விழிப்புணர்ச்சி க்கான சரியான அளவுகோலாகும்” (ஆர். ஆர். சீனிவாசன் 2000:31) இது போன்றே நோயினைக் கையாளும் நாட்டுப்புற மருத்துவர்கள் பற்றிய சமூகக் கருத்தமைவுகள் இன்றியமையாதது. சுளுக்கு
63

Page 66
தமிழ் மருத்தவம்
எடுப்போர் எனச் சிலர் ஆங்காங்கே இருப்பர். இவர்களது பிறப்பு பற்றிய ஒரு கருத்து சமூகத்தில் நிலவுவதுண்டு. அதாவது இவர்கள் பிறக்கும் போது கால் முதலிலும் தலை பின்பும் வந்து பிறந்தவர்கள் என்பது போன்ற கருத்தமைவுகள் குறிப்பிடத்தக்கன. சில மருத்துவர்கள், குறி சொல்லிகள், மொட்டை நாக்கு உள்ளவர் களாக இருப்பர் என்பதும் இப்படிப்பட்டவர்கள் சொல்லும் குறி அல்லது வாக்கு பலிக்கும் என்பதும் நம்பிக்கையாகச் சமூகத்தில் உண்டு.
இவ்வாறு மருத்துவர்களின் பிறப்பு, சாதி, பால், பரம்பரை பற்றிய தனித்த தன்மைகள் நாட்டுப் புற மருத்துவ முறையில் முதனி மைத்துவம் பெறுகினி றன. இம்மருத்துவர்களின் தனித்த பண்புகள் பற்றிய சமூகக் கருத்தமைவுகள் Ꮿl 6ᏛᎧ 6Ꮒ] கொண்டிருக்கும் தருக்கவியல் ஒழுங்கு ஆகியவற்றை ஆராயும் தேவையுள்ளது.
மந்திரச் சடங்கியல் மருத்துவம்
பண்பாடு என்பது சமூகத்துடன் உறவாடும் எதார்த்தங்களாக இயற்கையை மட்டுமல்லாது பிரபஞ்சம், இயற்கையிறந்த ஆற்றல்கள் போன்றவற்றையும் அடையாளப் படுத்தியிருக்கின்றது. மேலும் பண்பாடு தனது உடலை வெறும் பெளதீகம் சார்ந்த ஒன்றாக மட்டுமல்லாமல் அரூபமான, பெளதீகம் சாராத g5T6 (ego Self) 6T6iro di L6)Tib. U60ituti (655 வெளியிலான புற எதார்த்தங்களான பிரபஞ்சம், பிற சமூகங்கள், பிற மனிதர், ஆற்றல் என்பனவற்றைப் பண்பாடு பிற எனச் சுட்டுகின்றது.
இந்தப் புறப் பிரபஞ்ச ஆற்றலான பிற என்பது பண்பாட்டின் தான் என்பதனைக் கட்டுப்படுத்துவதாகவும் தானுக்கும் பிறவுக்கும் இடையில் ஒரு சமூக உறவை நிலைப்படுத் துவதாகவும் சமயம், சடங்கு, மந்திரம் ஆகியவற்றின் வழிப் பண்பாடு ஒழுங்கமைந் துள்ளது. பண்பாட்டுத் தான் எதிர்கொள்ளும் ஒழுங்குச் சீர் குலைவு இநீதப் பிற எதார்த்தத்துடனான உறவுச் சிக்கலால் எழுவதாகவும் பண்பாடு நம்புகின்றது. இந்த
64

வகையில் தான் நாட்டுப்புற மருத்துவத்தில் மந்திரச் சடங்கியல் மருத்துவம் ஒரு சமூகப் பண்பாட்டு நடத்தையாக உள்ளது.
மந்திரச் சடங்கியல் மருத்துவம் மனித சமூகத்தின் பணி பாட்டு உளவியலை அடிப்படையாகக் கொண்டது. மனித சமூகம் m bggi la y - jhd (Selfego) 6T6irplb iii) (other/alien) 61 6i pLd 6Tgš j6)Lu T 60T எதார் தி தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளது. இந்தத் தான் x பிற என்ற எதிர்வுக் கட்டமைவு சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் செயல்படும் ஒன்றுதான் எனினும் மனித நலம். நோயியல், மருத்துவம் என்ற தளத்தில் இதன் செயல் பாடு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. தான் X பிற என்ற எதிர்வுகளுக் கிடையிலான உறவுநிலையே நோயியலின் அடிப்படையாக அமைவதைக் காணவியலும் . சமூக ஒழுகலாற்றில் சமயம், அறம், ஒழுங்கு, அரசியல், பொருளியல், பால் வேறுபாடு, சமூகப் படிநிலை முதலிய பல்வேறு கூறுகளை உட்செரித்துக் கொண்டுள்ளதை எடுத்தியம்பும். மந்திரச் சடங்கியல் மருத்துவம் பற்றிய ஆய்வு மிகவும் சிக்கலானது. ஏனென்றால் ஒரு சமூகத்தின் அனைத்துத் தளங்களையும் ஊடறுத்து நோக்கும் ஆய்வியல் முறைமை இதற்கு இன்றியமையாதது. ஒவ்வொரு பண்பாடும் தனது சமூகத்தை, மனிதத் தன்னிலைகளைத் தானி என பதாக கருத் த ைமத்துக் கொண்டுள்ளது. தான் என்பது உடலுக்குள் பண்பாட்டின் மைய நிலையைக் குறித்து நிற்கின்றது. தன் உடல் சாராதவற்றையும் தன் பண்பாட்டு உடல் சாராதவற்றையும் ஒவ்வொரு பண்பாடும் பிற என்பதாக அடையாளப்படுத்தியுள்ளது. தான் X பிற என்பவை எதிரெதிர்/முரண் நிலையில் செயல்படும் எதிர்வுகளாகக் கட்டமைக்கப் பட்டுள்ளன. தான் X பிற என்ற இரண்டுக்கும் இடையிலான இடைவெளியை ஒவ்வொரு தனிமனிதனும் சமூகமும் அதனதன் தனிமனித பண்பாட்டு உளவியல் சார்ந்து தீர்மானித்துக் கொள்கின்றன. இவ்விரண்டுக்கும் இடையிலான இடையுறவு "இணக்கம்” அல்லது ‘பிணக்கம்’
ஒலை 50

Page 67
தமிழ் மருத்துவம்
என்பதாக அமைவதையும் தனி மனித/சமூகப் பண்பாட்டின் உளவியலே தீர்மானிக்கின்றது. தான் என்பதன் வெளிக்குள் பிற என்பது ஊடாடுவது ஒரு குறியீட்டுத் தளத்தில் இணக் கமான ஒனர் றாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. பிற சூழல்களில் இவ்விடையுறவு வேண்டப்படாத ஒன்றாகவும் தானைத் தாக்கும் ஒன்றாகவும் பண்பாட்டில் கருத்துரைக்கப்படுகின்றது. தான் என்பது நோய் வாய்ப்பட்டிருக்கின்றது அல்லது துன்பத்தில் இருக்கின்றது என்பது பிற எண் பதின் இடையுறவால் எண் றே எடுத்துக்கொள்ளப்படுகின்றது. நோய்/துன்பம் என்பது புறத்தே இருந்து வந்த பிற என்பது தானின் மீது செயல்படுவது ஆகும் எனக் குறிப்பிடப்படுகின்றது.
பிற என்பது திராவிடப் பண்பாட்டில் பிற மனிதர், ஆவி, பேய், பிசாசு, முனி, தெய்வம் என்பனவாகக் கருத்தமைவு பெற்றுள்ளது. மற்ற பிற மனிதரின் தீய எண்ணம், பொறாமை, தான் என்பதைத் தாக்கவல்லன. இது கண்ணேறு/கண்ணாறு எனப்படுகின்றது. பிற மனிதரின் தீச்செயல், ஆவி, பிசாசு, சாத்தான் போன்றவற்றைத் தூண்டித் தான் மீது வினையாற்றச் செய்ய இயலும். இவ்வாறான தூண்டுதலின் பேரால் ஆவி, பேய், பிசாசு போன்ற பிற, தான் மீது செலுத்தும் நேரடி வினையே செய்வினை, பில்லிசூனியம், ஏவல், வைப்பு எனக் குறிப்பிடப்படுகின்றன. தெய்வம் என்னும் பிற, தான் மீது செலுத்தும் நேரடி வினை தெய்வக் குற்றம் என்பதாகப் பண்பாட்டில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. தான் என்பது தானாக விரும்பியோ அல்லது வேறு சமூக விதி/இயல்புக்கு மாறான நடத்தையினாலோ பேய், பிசாசு போன்ற பிறவற்றின் நேரடியான தொடர்புக்கு ஆட்பட நேரிடும். இது காத்துக் கருப்பு அண்டுதல், தொடருதல், பேய், பிடித்தல், முனி அடித்தல் போன்ற வினையாகப் பணி பாட்டில் கருத்துரைக்கப் படுகின்றது.
தான் X பிற என்னும் சமூகக் கூட்டு உளவியல் சொல் லாடல் திராவிடப் பண்பாட்டில் மிக ஆழமாக வேரோடியுள்ள
ஒலை 50

ஒன்றாகும். இந்தப் பண்பாட்டுச் சொல்லாடல் குறித்த ஆய்வு மிக முன்னதாகவே சீகன்பால் (1713) என்பவரின் ஆய்விலிருந்தே தொடங்குகின்றது. இது திராவிடப் பண்பாட்டில் காணப்படும் ஆவி, பேய், முனி, அணங்கு, சூர், மோகினி என்பன குறித்தும் அதுவே பல பண்பாட்டுச் சொல்லாடல் தளங்களின் அடியாழத்தில் வினைபுரியும் செயல்பாடாக உள்ளது. இது பற்றிய ஆய்வு நாட்டுப்புறச் சமயத்தில் தனித் தொரு துறையாக வளர்த்தெடுக்கப் பட்டுள்ளது. மானுடவியல், 5a5b5gjis35606) guié (Performance Studies) உளவியல் புலங்களிலும் கூட இது குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றது. இவற்றுள் திராவிடப் பண்பாட்டில் நிகழ்ந்துள்ள ஆய்வுகளாக சீகன்பால், பிளாக்பேர்ன், லூயிஸ், ஃபிரீடு, காப்..ரெபர், ஹார்ட், தர்ஸ்டன், திராவிக், ஆ.சிவசுப்பிரமணியன் போன்றோரின் பங்களிப்புக் களைக் குறிப்பிடலாம்.
இவ்வாறான தான், பிற என்பதின் இடையுறவால் ஏற்படும் நோய்கள் சில சடங்குக் குறியீடுகளால் நிவர்த்தி செய்யப்படுகின்றன. தானும் பிறவும் இடையுறவு கொள்வது சமூகத்தில் தனியனின் மாறுபட்ட இயல்பாக, அதாவது உடலியல் நோயாகவும் சமூக நடத்தையில் சமூகப் பிறழ்வாக அல்லது உளவியல் பிறழ்வாகவும் கொள்ளப்படுகின்றது. இது தனியனின் தான் என்பதற்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவில் ஓர் உடைசலை ஏற்படுத்துகின்றது.
இந்த உடைசல் பண்பாட்டில் தான் X பிற என்ற எதிர்வுகளின் கலப்பால் ஏற்படுகின்ற ஒரு வினையாகக் கருத்தமைவு பெற்றுள்ளது. தானையும் பிற வையும் & Libi (35 is குறியீடுகளால் அடையாளப்படுத்திப் பிரித்து விடுவதே நோய் தீர்க்கும் செயல்பாடாக உள்ளது. கண்ணேறு கழித்தல், தோஷம் கழித்தல், பேய் ஒட்டுதல், பில்லி சூனியம் எடுத்தல், நோன்பு, நேர்த்திக்கடன் போன்ற சடங்கியல் நிகழ்த்துதல்களை இவ்வாறுதான் பண்பாடு குறியீடுகளாக்கி வைத்துள்ளது.
65

Page 68
தமிழ் மருத்துவம்
இக் குறியீட்டுச் செயல்பாடுகளை நிகழ்த்தும் சடங்கியல் மனிதர்களைப் பண்பாடு அதன் இயங்குதளத்தில் கொண்டுள்ளது. இச்சடங்கியல் மனிதர்களே பூசாரிகள், குறி சொல்லிகள், கோடங்கிகள், மந்திரவாதிகள் எனப்படுகின்றனர். இச்சடங்கியல் மனிதர்கள் பண்பாட்டின் இயல்பான விதிமுறைகளை மீறிய வாழ்முறைகளைக் கொண்டிருப்பர். இவர்கள் சமூக இயல்புகளை மறுத்த தனியன்கள், இயல்பான வாழ்முறையை மறுத்தவர்களாகவும் இயலாத செயல்க ளைக் கைக்கொண்டிருக்கும் மனிதர்களா கவும் இவர்கள் சமூகத்தில் ஒரு தனித்த இடத்தைப் பெற்றிருப்பர்.
இந்த தான் X பிற என்னும் உளச் செயல் பாட்டுக் கருத்தமைவு என்பது தனிமனிதன் x தனிமனிதன், தனிமனிதன் x சமூகம், சமூகம் X பிற சமூகம் எனச் சமூக இடையுறவில் நிகழும் முரண்களைத் தனிமனிதனும் சமூகமும் எதிர்கொண்டு தீர்க்கும் செயல்பாட்டு உத்தியாக உள்ளது.
இது சமயத் தளத்தில் அதிக வெளிப் பாடுடையது. எனினும் கூட்டு மருத்துவ உளவியல் என்ற நிலையில் காலங் காலமாக மக்களிடையே நிலவி வந்துள்ள ஒன்று. தனிமனித/சமூக மன உளைச்சல்களை மொழிதல் மற்றும் நிகழ்த்துக் கூறுகளாக மடைமாற்றி அதன்வழி நோயின் ஆழத்தை உணர்ந்து மனத்தைச் சீர்மை செய்யும் போக்காக உள்ளது. இது போன்ற நிகழ்வில் தனிமனித/சமூக உடலியல் சார் சிக்கல்கள் இவ்விதத்தில் வேறொரு குறியீட்டுத் தளத்தில் எதிர்கொள்ளப்பட்டு நிவர்த்தி செய்யும் சமூக, சமய உளவியல் சடங்கியலாக உள்ளது. இது ஒரு பண்பாட்டுக்குள் செயல்படும் அதீதக் குறியீட்டு நிலைகளை உள்ளடக்கிய ஒரு மருத்துவச் சடங்கியல் சொல்லாடலாகவே SCbébélóösDg5). Sg5 QCB (metamedical/paramedical discourse) se, 85 & 3 ep355 g5 6.5 செயல்படுகின்றது.
66

(plg. 660dJ
நவீன மருத்துவம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று உள்ளுர் மருத்துவ முறையியலைப் புறந்தள்ளிவிட்ட போதிலும் இம் மருத்துவ முறை இன்றும் அதிகளவிலான தாக்கத்தைச் சிற்றுார்களில் ஏற்படுத்தவில்லை என்றே கூறலாம். இன்றளவிலும் தொடர்ந்து நடைமுறையில் . இருக்கும் உள்ளுர் மரபு மருத்துவ முறைகள் இதற்குச் சான்றாகும். என்றாலும் உள்ளுர மரபுகள் அதே வீச்சுடன் வலுவாக உள்ளன என்றும் குறிப்பிட இயலாது. நவீன தொழில் மயமாதல் , உலகமயமாதல் போன்றவற்றால் மாறிவரும் சமூகச் சூழலில் கூட்டுக் குடும்பச் சிதைவு, நகரமயமாதல், நவீனக் கல்விமுறை, சிற்றுார் மரபுகளின் தேய்வு ஆகியவற்றால் உள்ளுர் மருத்துவம் பெரிதும் தகர்ந்து வருகின்றது. நவீன உழவுத் தொழில் நுட்பம், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், வீரிய ஒட்டுவிதைகள், பயிர்கள், உணவுத் தானியங்கள், நவீன இரசாயன மருந்துகள் ஆகியன இதுவரையில் இயற்கையுடன் மனிதன்/சமூகம் கொண்டிருந்த ஒரு சமூகச் (FLD 60i B606) (human-eco equilibrium) நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதனால் மனித/சமூக உடல், உள்ளப் பாங்குகள் பல புதிய நெருக் கடிகளைச் சநீதித்துக் கொண்டுள்ளன. இந்தச் சூழ்நிலையிலிருந்து மீணி டு இயற்கை சார் நீ த உணவு, வாழ்முறைக்குத் திரும்புவதற்கான எத்தனிப்பும் முயற்சியும் எழுந்துள்ளது. இன்று சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற உள்ளுர் மரபு மருத்துவக் கல்லூரிகளும் ஆய்வு நிறுவனங்களும் பெருகி வருகின்றன. பல வகையிலான உள்ளுர் மரபு சார்ந்த மருத்துவ நிபுணர்கள், இயற்கை உணவுப் பண்டங்கள், மூலிகை மருந்துகள் போன்றவை பெருகி வருவதை வெகு சன ஊடகங்கள் நமக்குக் காட்டுகின்றன.
நாட்டுப்புற மருத்துவம், இனமரபியல் மருத்துவம் குறித்த ஆய்வுகள் அதிகம் நம்மிடையே இல்லையெனினும் தற்போது பல கட்டுரைகள், தொகுப்புக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இவையனைத்தும் சில
ஒலை 50

Page 69
தமிழ் மருத்துவம்
சாதிய, குடும்ப, இனக்குழு மரபுகளை மையமிட்டே அமைந்துள்ளன. குறிப்பாகச் சுட்டுவதானால் கருப்பையனின் பெரியார் மாவட்டதைச் சார்ந்த மலை வெள்ளாளர்களின் நாட்டுப் புற மருத்துவம் , ஆ.செல்லப் பெருமாளின் கல் வராயன் மலையின மலையாளிகளின் நாட்டுப்புற மரபியல் மருத்துவம் போன்ற கட்டுரைகளை யும், தே.ஞானசேகரன், சு.சண்முகசுந்தரம் ஆகியோர் தொகுத்து வெளியிட்டுள்ள நாட்டுப்புற மருத்துவச் சிறப்பிதழ் என்னும் பதிப்பு நூலையும் குறிப்பிடலாம்.
எனவே இனமரபியல் மருத்துவம் பண்பாட்டிடை நாட்டுப்புற மருத்துவத்தின் பல்வேறு கூறுகளை முழுதளாவிய பார்வை யில் வைத்து அலசுகின்றது. இதன் விரிந்த முழுதளாவிய தேடலில் கீழ்க் காணும் சிக்கல்கள் பற்றிய ஆழ்ந்த தேடல் தேவையாகின்றது.
கீழ்வரும் ஏழு கருத்துக்கள் மார்க் நீட்டர் (1994) என்பவர் பதிப்பித்த நூலுக்கு அவர் எழுதியுள்ள முன்னுரையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.
அ) பண்பாட்டின் உடற்கூறியல், உணவியல், நோயியல், மருந்தியல், தொழில்நுட்பம், சடங்கியல் உள்ளிட்ட அனைத்து நலவழி பற்றிய நாட்டுப்புற நம்பிக்கைகளைத் தொகுப்பது.
ஆ) நோய், நோய் பற்றிய மருத்துவ அணுகுமுறை, கணி னோட் டங்கள் , அறவிழுமியங்கள், சமூகப் படித்தரமுறை, பால்வேறுபாடு போன்றவற்றை வரலாற்றடிப் படையில் ஆராய்வது.
இ) நோய்களை அறியும் முறை, வகைப்படுத்தும் முறை, நோய் பற்றிய மொழிப் பயன்பாடுகள், வாய்மொழிச் சொல்லாடல்கள் (ilneSSnaratives), அவற்றின் 9ip6ñu6ú GuT(560560bLD56í (moral implications), நோயாளி-மருத்துவர் போன்ற அனைத்தையும் ஆராய்வது.
ஈ) நோய் பற்றிய நம்பிக்கைகள், சமூக நடத்தை விதிகள், இவற்றிற்கிடையிலான
ஒலை 50

உறவு, சமூக ஒழுங்கைப் பேணுவதில் நோய் பற்றிய எண் ணங்கள், கடப்பாடுகள் போன்றவற்றைக் கணக் கிலெடுத்துக் கொள்வது.
உ) பால் வேறுபாடு, பால் மேலாதிக்கச் சொல்லாடல் போன்றவை நோயியல், மருந்தியலுடன் கொண்டுள்ள உறவை ஆராய்வது.
ஊ) நோய் என்பது எதிர்ப்பைக் காட்டும் ஓர் ஊடகம் என்ற சொல்லாடலை ஆராய்வது.
எ) உலகளாவிய நகரமயமாதல், உலகச்
சந்தை, வர்த்தகமயப்படும் மருந்தியல் முறை,
மருத்துவப் பணி, ஆகியவற்றால் உருவழிந்து
தொலைந்து போகும் முன் நாட்டுப்புற மருத்துவத்தை அதன் முழு வீச்சுடன்
முழுதளாவிய அளவில் நம்பகமான பண்பாட்டு
மருத்துவ வடிவங்களைக் கண்டறிந்து
அவற்றை ஆவணப்படுத்துவது.
இவற்றோடு கூடுதலாகச் சமூகத்துக்கும் புறப்பிரபஞ்சத்துக்கும் இடையிலான இயல்புச் சூழல் உறவினை மையமிட்ட கீழ்க்காணும் உறவுகளையும் காணவேண்டும்.
அ) இயற்கை, தட்பவெப்பம், காலம், பருவநிலை ஆகியவற்றுக்கும் உடல் நலத்துக்குமான உறவு.
ஆ) தாவர விலங்கு உணவுப் பொருட்களுக்கும் உடல் நலத்துக்கும் இடையிலான உறவு.
இ) உணவுப் பொருட்கள், தாவர வகைகளான வேர்கள், கிழங்குகள், காய், கொட்டை, கனி, பட்டை, மூலிகை, விலங்கு இறைச்சி, எண்ணெய், நெய் முதலியவற்றை மருத்துவச் செயல்பாட்டில் பயன்படுத்தும் சமூக நடைமுறைகள் ஆகிய அனைத்துப் பண்பாட்டு மரபுகளையும் தொகுத்தல் தேவையாகின்றது.
குறிப்புகள் இந்தக் கட்டுரை தமிழ் நாட்டுப்புறவியல் ஆய்வு மையம் (CENTAFORE), நாட்டுப் புறவியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 23, 24
67

Page 70
தமிழ் மருத்தவம்
செப்டம்பர் 2000 ஆகிய நாட்களில் நடத்திய “புழங்கு பொருட் பணி பாடும் பால் அடிப் படைப் பிரச்சினைகளும்’ என்ற கருதி தரங்கில் வாசிக்கப்பட்டது. 1. சுளுக்கு குறித்த நாட்டுப்புற மருந்து பற்றியும் மந்திரச் சொற்களுக்கும் காண்க வ.ஜெயா 1997:37 இதில் பயன்படுத்தப்பட்ட மந்திரச் சொல் குறித்த விளக்கம் என்னுடையது.
2. தான் X பிற என்கிற உளவியல் செயல் பாட்டைப் பொதுவாக self x alien எனக் குறிக்கலாம். பண்பாட்டில் காணப்படும் பிற என்பதன் தாக்கம் இருப்பதாக கருதப்படும் நோய் பற்றிய உளப்பகுப்பாய்வில் ego என்றும் alien என்றும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் tale0S என்றும் tetic decentralisation, estrangement (3 LIFT 6øi gp LJ 6a) கருத்துக்கள் கொண்டு ஆழ்ந்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. காண்க Guinee, William Fenton 1992.
துணை நூல்கள்
சிவசுப்பிரமணியன், ஆ.1998. மந்திரம் சடங்குகள், சென்னை, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்.
சீனிவாசன் ஆர்.ஆர்.2000 நீங்கள் கேட்காதவை. தலித் முர்சு 4, 424 . 2000. நீங்கள் கேட்காதவை. தலித்
முரசு 4, 5:31
திருநாகலிங்கம், ஆ.1997, புதுச்சேரி வட்டார நாட்டுப்புற மருத்துவ முறைகள், தன்னனானே 89; 103-108
பிலவேந்திரன், ச. 1999 மனிதன் - ஆவி தொடர்பம்: தமிழ்க் கருத்தமைவுகள் களம் - நாட்டுப்புறவியல் ஆய்வாளர் மன்றம். அரசர் கல்லூரி, திருவையாறில் 23. 24 திசம்பர் 1993 நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை.
ஞானசேகரன், தே.மற்றும் சு.சண்முகசுந்தரம் 1997. தன்னனானே : நாட்டுப்புறமருத்துவச் சிறப்பிதழ். 8&9 பெங்களுர் காவ்யா.
ஜெயா, வ. 1997 நாட்டுப்புற மூலிகை மருத்துவமும் மந்திரமும் தன்னனானே. 8&9:26-37.
Chellaperumal, A. 1997. “Folk Therapeutic System Among the Malayalis of Kalrayan Hils' : 7, 1:73-81.
68

Claus, Peter.J. 1979. “Spirit Possession and Spirit Mediumshi from the Perspective of Tulu Oral Traditions. Culture, Medicine and Psychiatry 3:29-52.
Dunn, F.L. 1976. Traditional Asian Medicine and Cosmopolitan Medicine as Adaptive Systems, The Leslie, C. (ed.) Asian Medical system. Berkeley: University of California Press.
Gennep, Amold L.Vanl. 1960. The Rites of Passage. Chicago: University of Chicago Press.
Guinee. William Fenton. 1992, Suffering and Healing in Trinidadian Kali Worship. UMI Dissertation Service.
Kakar, Sudhir. 1982. Shamans, mystics and Doctors. New York: Alfred A. Knopf
Kleinmann, Arthur. 1984. Patients and Healers in the context of Culture: An Exploration of the Borderland between Anthropology, Medicine and Psychiatry. Berkeley: University of California Press.
Kapferer, Bruce. 1983. ACelebration of Demons: Exorcism and the Aesthetics of Healing in Srilanka Bloomington: Indiana University Press.
Karuppaiyan, V.1993. “Folk Medicine among the Malai Vellalas of Kali Hills in Periyar District, Tamil Nadu”. Proceedings ofthe Conference-Seminaron Folkloristics, Pondicherry: PLC.
Laderman, Carol, 1994, “Malay Medicine, Malay Person". In Athropoligical Approaches to the study of Ethnomedicine (Ed)Mark Nicthter, U.S.A: Gordenand Breach Science Publishers.
Lewis, I.M. 1993. (1971). Ecstatic Religion: A Study of Shamanism and Spirit Possession. New York : Routledge.
Nabokov. Lsabelle. 1977. “Expel the Lover, Recover the Wife:Symbolic Analysis of a South Indian Exorcism'. Journal of the Anthroplogical Institute 3, 2:292-196.
Nechter, Mark, 1994. (Ed). “Introduction” In. Anthropoligical Approaches to the study of Ethnomedicine. USA: Gordon and Breach Science Pub
lishers..
ஒலை 50

Page 71
தமிழ் மருத்துவம்
பல சித்தர்களால் மெய்ஞ்ஞானம் மூலம் கூறப்பட்டதே சித்த வைத்தியம் ஆகும். உலகம் தோன்றிய காலம் உலகப் படைப்பில் உள்ள அனைத்து தாவர, தாது, ஜீவ, நவரத்தினம், பாசாணம், உப்பு, லோகப் பொருட்கள் பற்றியும் அவற்றின் பலாபலன், குணம் குறிநஞ்சுத்தன்மை, பாவிக்கும் அளவு, பாவிக்கும் காலம், வயது, நாடு, காலங்கள், உடல் வாகு, நோய் தன்மை, ஏனைய நோய் தாக்கத்திற்கு ஏற்ப பாவனை முறை வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. உடம்பில் நாலாயிரத்து நானுற்று நாற்பத்தெட்டு நோய்கள் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நோய்கள் பற்றி மிக விரிவாக கூறிப்படா விட்டாலும் ரத்தினச் சுருக்கமாக கூறப்பட்டுள்ளது.
சித்த வைத்திய நூல்களில் சங்கீத இலக்கணம், இலக்கியம், எதுகை மோனை, ராகங்கள் கவிதையாப்புகள் கூறப்பட்டு ஸ்ளன. மிக நுட்பமான முறையில் பாடல்கள் அமைந்து உள்ளதால் அதற்கான பொருள் விளக்கம் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையில் அர்த்தம் கொள்ளுகின்றனர். மிக நுணுக்கமாகவே ஆராய்ந்து தெளிவு பேற வேண்டியுள்ளது. வைத்தியக் கலையுடன் சோதிடக் கலையும் பின்னிப் பிணைந்து காணப்படுவது சிறப்பம்சமாகும்.
சித்தர்கள் குறிப்பிட்ட ஒருசில நோய்கள் பற்றிக் கூறாது அனைத்து நோய்களையும் கூறி அதற்கான சிகிச்சை முறைகளையும் கூறியுள்ளார்கள். சித்த வைத்தியத்தில் மருந்து பாவிக்கும் போது பாவிக்க வேண்டிய உணவுகள், பாவிக்க கூடாத உணவு வகைகள், கடைப்பிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள் பத்தியா பத்தியங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள மையாது மிகச் சிறப்பு
ஒலை 50

சித்த வைத்திய சிறப்பு
மருத்தவர் எஸ். பரமசிவம்பிள்ளை
பெற்றதாக உள்ளது. உதாரணமாக கரப்பான் நோயாளிக்கு கிரந்தியை விருத்தி செய்யும் உணவு களான, இறல், நண்டு கணவாய், தக்காளிக் காய், அன்னாசி, கத்தரி போன்ற உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என கூறப்பட்டு ஸ்ளது. கரப்பான் நோயை குணப்படுத்தும் சிகிச்சை மேற்கொள்ளும் போது அந் நோயை குணப்படுத்தும் சிகிச்சை மேற் கொள்ளும் போது அந்நோயை அதிகரி க்கும் உணவு வகைகளையும் உட்கொண்டு வருவதால் நோய் குணமடையாது நீடிக்கும் நிலை ஏற்படுகின்றது. உணவு முறைகளில் பத்திய முறை கடைப்பிடிக்காவிட்டால் கரப்பான் நோய் குணமாகி வரும் காலங்க ளில் பக்க விளைவு நோய்களான சுவாச காச நோய், கண்பார்வை குன்றல், சிறுநீரக தொழில்பாடு குன்றுவதால் ஏற்படும் சோபை (வீக்கம்) நோய் ஏற்பட ஏதுவாகின்றது. சித்தவைத்தியத்தில் முறைப்படி பத்திய முறை கடைப்பிடித்து வருவதாலேயே பக்கவிளை வின்றி கரப்பான் ரோகம் பூரணமாக குணப்படுத்தி வருகின்றோம். வாதரோக சிகிச்சையில் அதிசிறப்பு பெற்று சித்த வைத்தியம் விளங்குவது அனைவரும் ஏற்றுக் கொள்ளுகின்றனர்.
சித்த வைத்தியத்தின் சிறப்பம்சமாக நோய்களுக்கு மருந்து பாவனை நாற்பது - அறுபது அல்லது எண்பது - நூற்றி இருபது நாட்கள் மட்டுமே சிகிச்சை மேற்கொள்ள வண்டி ஏற்படுகின்றது. அதே அளவு நாட்கள் >ருந்து இல்லாது உணவு முறையில் த்தியமாக கடைப்பிடிக்கப்படுகி ன்றது. இதன்மூலம் நோய் பூரணமாக குணமாகின்றது.
சித்த மருந்துகள் நீடித்த காலம் பாவிக்க
69

Page 72
தமிழ் மருத்துவம்
வேண்டிய தேவை ஒரு சில நோய்களுக்கு மட்டுமே ஏற்படுகின்றது.
பல மூலப் பொருட்கள் மருந்து செய்வதற்கு பாவிப்பதற்கு முன் சுத்தம் செய்வதற்கான முறைகள் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலமும் பக்கவிளைவின்றி நோய்களை பூரணமாக குணமாக்க முடிகின்றது.
சித்த வைத்தியத்தில் நாடி சாஸ்திரம் பிரதான சிறப்பு அம்சமாக விளங்குகின்றது.
நோய் நிதானம், மரணக் குறி கணிப்பிடு வதற்கு மிகச் சிறந்த முறையில் கூறப்பட்டு ள்ளன.
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களால் உலகம் உருவாக்கப் பட்டது. அதேபோன்ற பஞ்சபூதத்தினாலேயே உடலும் உருவாகியுள்ளது. காற்று - வாதம் - பித்தம் - கபம் அந்த அந்த அளவுகளில் அமைந்து இருங்கால் சுக தேகியாகவும் அம்முன்றும் வழமையாக அமைய வேண்டிய அளவு அமையாமல் ஏற்றத்தாழ்வாக கோளாறடைவதே நோயாகப் பரிணமிக்கி ன்றது என கூறப்பட்டுள்ளன.
சித்த சிகிச்சை முறைகளும் கோளடைந்த வாதம் - பித்தம் - கபம் அந்த அந்த அளவு சமநிலை அடையச் செய்வதே ஆகும். இந்த முறையானது அன்றும், இன்றும் என்றும் அமையும் என அறுதியிட்டுக் கூறலாம்.
ஏனெனில் எந்த எந்த பொருட்கள் வாதம்
பித்தம் - கபம் போன்றவற்றை அதிகரிக்கவும் . குறைவடையவும் சமப்படுத்தவும் கூடியன எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இனிப்பு, புளிப்பு, உப்பு, உறைப்பு, துவர்ப்பு, கைப்பு, ஆகிய அறுசுவைகள் பற்றியும் அவற்றின் தன்மை, நோய்களை தணிவடையச் செய்யும் தன்மை பற்றியும்
70

தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
சித்த வைத்திய சிகிச்சை முறையிலும் அறுசுவையின் பங்கு பிரதானமாக அமைந்து உள்ளதைக் காணலாம்.
சுவைகளின் தன்மைக்கு ஏற்ப உணவு வகைகளை உண்பதிலும் நோய்வராமலும் வந்த நோயைத் தணிக்கவும் முடியும்.
சித்த வைத்தியத்தில் நோய்களுக்கான சிகிச்சை கிரமங்கள் சிறந்த முறையில் கூறப்பட்டதே நோய்களை நிரந்தரமாகக் குணப் படுத்துவதில் பிரதான பங்கு வகிக்கின்றது.
தியானம், யோகாசனம் போன்றவை மிக தெளிவாக கூறப்பட்டுள்ளன. தமிழர்கள் மத்தியில் இன்றும் பிரபல்யம் அடையாமல் இருக்கின்றது. ஆனால் மேலைத்தேய நாடுகளில் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டு நோய் தீர்க்கும் சிகிச்சை முறையிலும் நோய் ஏற்படாது உடலைப் பாதுகாக்கும் பிரதான கலையாக வளர்ந்து வருகின்றது.
விரதம் இருப்பது எல்லாவற்றையும் விட சிறந்த சிகிச்சை எனக் கூறப்பட்டுள்ளது.
. உலகநாடுகளில் எல்லாம் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படுவது பொது விதியாகும். உடலையும் உள்ளத்தையும் புத்துணர்ச்சி - உத்வேகம் அதிகரிக்க செய்யும் தன்மை உண்டாக்குகின்றது.
மனிதர்களோ ஒய்வின்றி தொடர்ந்து உணவை உண்கின்றனர். அதனாலேயே நோய் இலகுவாக உடலில் ஏற்பட காரணமாக அமைகின்றது.
ஒரு போது உண்பவன் யோகி இரு போது உண்பவன் போகி முப் போது உண்பவன் ரோகி
என ஒரு பழமொழியுண்டு. உணவின் சுவை, வயது, உணவின் அளவு, குளிர், பனி, வெப்பம் G3LufT 6øi p காலநிலைக் கு ஏற்ப
ஒலை 50

Page 73
தமிழ் மருத்துவம்
உணவுகளைப்பற்றி சித்தவைத்திய நூல்களில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.
திருமூலர் 8000 என்னும் நூலில் “மருந்து” என்னும் நாலுவரி பாடல் மூலம் பல அரிய விடயங்களை மிக விளக்கமாகக் கூறியுள்ளார். மறுப்பது உடல் நோய் மருந்தெனலாகும் மறுப்பது உள நோய் மருந்தென சாலும் மறுப்பது இனி நோய் வாரதிருப்ப மறுப்பது சாவை மருந்தெனலாமே?
மறுப்பது உடல் நோய் உட்லில் நோய் வராமல் இருப்பதற்கான உணவு, பழக்கவழக்கம், உடம்பில் இருந்து இயற்கையாக வெளியேற வேண்டிய பதின்நான்கு வேகங்களை அவ்வுணர்வு ஏற்படும் போது வெளியேற்றாமலும், வெளியேற வேண்டிய உணர்வு ஏற்படாத வேளைகளில் தாமாக வலிய வெளியேற்றி வருதலுமே பிரதான காரணங் களாகக் கூறப்பட்டுள்ளது. பதினான்கு வேகங்களாவன: *பதின்னான்கு வேகப் பெயர்கள் பகிர்ந்திட
- அவற்றை கேளாய் விதித்திடும் வாதம், தும்மல் மேவு நீர் மலம்
- கொட்டாவி கதித்திடு பசி நீர் வேட்கை காசமொடு இரைப்பு
- நித்திரை மதித்திடு வாந்தி கண்ணிர் வளர்சுக்கிலம்
- Ghiraflon (SLD'
மறுப்பது உள நோய்
உள்ளத்தில் ஏற்படும் கோபம், கவலை, மன நெருக்கீடு, மன அழுத்தம், துர்ப்பழக்கம், நாட்டுச் சூழல் காரணமாக இடப்பெயர்வு, கடன்சுமை, வேலை வாய்ப்பின்மை, செலவிற்கு ஏற்ப வருமானம் இன்மை, சக்திக்கு மேற்பட்ட கற்பனைகளை வளர்த்தல், ஏமாற்றப்படுதல், காதல் தோல்வி, அதிர்ச்சியான விடயங்கள் சம்பவித்தல், குடும்ப உறவினர்கள், நண்பர்கள் 2-D6) சீரின் மை, 6) வித கஸ்ரநிலைமையால் பாதிக்கப்படும் உறவினர் நண்பர்களின் செய்திகள் கேள்விப்படுதல் போன்ற பல விடயங்கள் உள்ளத்தில் நோய் ஏற்படக் காரணமாக அமைகின்றது.
ஒலை 50

உள நோய் ஏற்படுத்தும் காரணங்களை தவிர்க்ககூடியவை கூட மருந்து என கூறப்பட்டது.
மறுப்பது இனி நோய் வாராதிருப்ப
யோகாப்பியாசம், இறைசேவை, மனதைத் திடப்படுத்தி வைத்தல், நல்ல சிந்தனை, நல்ல பழக்கவழக்கம் மனச்சாட்சிப்படி நடத்தல், உணவுக் கட்டுப்பாடு மேற்கொள்ளல், போதிய ஓய்வு எடுத்தல் ஆகியவற்றை முறைப்படி கைக் கொண்டு வந்தால் நோய் வராமல் தடுப்பதையும் “மருந்து” எனக்கூறியுள்ளார்.
மறுப்பது சாவை மருந்து
தொடர்ந்து இறைவன் சிந்தனையுடன் தியானம் செய்வது, உணவைச் சுருக்குதல், எந்த உலக சிந்தனையிலும் ஈடுபடாது இருப்பது. காயகல்ப மூலிகைகளான நூறு வருடம் சென்ற வேம்பு, நெல்லி, அறுகம்புல், ஐம்புலன்களையும் அடக்குதல், யோக நிலையில் தியானம் செய்தல், சுத்தமானநீர், காற்று, அமைதியானசூழல் போன்றவை மனிதனின் இறப்பு விரைவில் ஏற்படாது செய்கின்றது. இதுவும் “மருந்து” என அழகாகக் கூறியுள்ளார்.
மருந்து என்பது நோய் வந்ததும் பாவிப் பது அல்ல என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளார். எனவே சிறிய நோய் ஏற்பட்டாலும் நாமாகவே மனதைத் திடப்படுத்தி பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டு சுகதேகியாக வாழ முயற்சிக்க வேண்டும்.
மூலிகை பற்றிய விளக்கம்
ஒவ்வொரு மூலிகைகள் பற்றி மெய்ஞானத்தின் மூலம் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் கூறப்பட்டவற்றை சில நவீன விஞ்ஞான ஆய்வு கூட பரிசோதனைகள் மூலம் நிரூபித்து வருகின்றனர். பல இன்னும் பரிசோதனையில் ஆய்வு செய்து கொண்டு வருகின்றனர். சித்தவைத்தியத்தில் மூலிகைகள் நேரிடையாக மருந்துகளாகப் பாவிக்கப்பட்டு ஏற்படாது
71

Page 74
தமிழ் மருத்துவம்
சிறப்பை உடையதாக உள்ளது. இதன் கார விளங்கும் என்பது திடமாகும்.
இடப்பெயர்வு காரணமாகவும், பிரபல்யம
வேறு
தொழில் செய்தல், வெளிநாடு செல்
பெறமுடியாத காரணத்தாலும் சித்தவைத்திய தற்போது உள்ள வைத்தியர்கள், பொதுமக் வைத்தியத்தை வளர்க்கப் பாடுபடுவோமாக.
அருகம்புல் இலை மனிதர்கள் முதல் இறைவன் வரை சி சிறந்த மருத்துவத் தன்மை பெற்றது.
குணமாகும் நோய்கள்.
அருகம்புல் 50 கிராம், வேப்பிலை 50 கிராம் இவைகளைப் பொடித்து, சலித்து அடைத்து வைத்துக்கொண்டு 2 டீஸ்பூ சொறி, படை, பற்று உள்ள இடங்களி சென்று கழுவிவரச் சில நாட்களில் கு
கபம், இருமல், சளி, தலைப்பாரம்,
பித்தம், இரத்தபித்தம், பித்தவாந்தி, பி மூட்டுகளில் வலி இவை போன்ற நோய்க குளிர்ச்சியையும், வலுவையும் தருகின்
துளசி இலை துளசியில் கருந்துளசி, நிலத்துளசி, து இலை நல்ல மருத்துவக் குணம் நிை
குணமாகும் நோய்கள். துளசியை நீரிலிட்டு 5 நிமிடம் கெ தொண்டைக்கட்டு நீங்கும். துளசியும், மிளகும் சமஅளவு எடுத்து நீங்கும்.
நாசநோய், இரத்தசாகம், சளி, இரும சளி கட்டுதல், மூக்கடைப்பு, சுவாசகாக நீர்க்கோவை, கபம் கட்டிய இருமல் இ
72

ணமாகவே அன்றும் இன்றும் என்றும் சிறந்து
ான பரம்பரை வைத்தியர்களின் பிள்ளைகள் தல் காரணமாகவும், தரமான மூலிகைகள் வளர்ச்சி குறைந்து வருகின்றது. எனவே கள் ஒன்றிணைந்து எமது பாரம்பரிய சித்த
றப்புற்று விளங்கும் அருகம்புல், மிகச்
கிராம், துளசி 50 கிராம், மஞ்சள் 50 ஒன்று சேர்த்து, சூரணத்தை புட்டியில் ன் பொடியை மோருடன் கலந்து அரி, ல் தேய்த்து வைத்து ஒரு மணி நேரம் |ணமாகும்.
தலைவலி, நீர்ஏற்றம், கண்புகைச்சல், த்த ஓங்காளம், வாதவலி, குடைச்சல், ளைக் குணப்படுத்துவதுடன் மூளைக்குக்
pg5).
|ளசி எனப் பல வகை உண்டு. துளசி றந்தது.
*ன்று இந்தத் தண்ணிரைக் குடிக்க,
மென்று தின்ன சில்லரை விஷக்கடிகள்
ஸ், தும்மல், வறட்டு இருமல், மார்பில்
ம், தலைப்பாரம், தலையில் நீர்ஏற்றம், வை போன்ற நோய்கள் நீங்கும்.
ஒலை 50

Page 75
கொழும்புத் தமிழ்ச் "இலங்கை எழுத்தாள நிலையம்" தமிழவேள் மண்டபத்தில் அ6
இலங்கை எழுத்த தமிழ்ச்சங்க வெள விற்பனைக்கு உன் சிறுவர்க்கான நூ
பாடசாலை மாணவர்க்கான அப்பியாசக் கொப்பிகள், பே பெண்சில் எண்பவற்றையும் இ மொத்தமாகவும், சில்லறையா கொள்வனவு செய்யலாம்.
 
 
 

சங்கம் நடத்தும் ர் புத்தக விற்பனை
இ.க.கந்தசுவாமி 30). LD556. T6 TJ).
நதுளளது DESTU
ENNESNARANGNYA MUNRKENARN W
NNNNNNN 。 W איאן
N
N
NNNNNNNNNNN
N N
W
NNNNNNN W NNNNNNNNNNNN
N N W
ாளரின் புத்தகங்களும் ரீயீடுகளும் இங்கு ண்டு. இவற்றில் ால்களும் அடங்குகின்றன.
W

Page 76
មជ្ឈឹ