கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீங்களும் எழுதலாம் 2008.11-12

Page 1
தடைகளைத் தக _____兰°
இருமாத கவிை
 

5-மார்கழி
2008
ழுதலாம்
எழுத்து -09
-_

Page 2
நீங்களும் எழுதலாம்-09 இருமாத கவிதை இதழ் நவம்பர்-டிசம்பர்-2000
eaffi
ersb-St.Gerumeosomasb LuaLiu Tafsaf ஷெல்லிதாசன் சி.ரவீந்திரன் தீபச்செல்வன் அஸ்ரபா நூர்டின் த.ஜெயசீலன் பாவெல் ஏ.எம்.எம்.அலி பெரிய ஜங்கரன் செ.ஜே.பபியான் வாகரை வாணன் என்.சந்திரசேகரன் செ.கணேசன் சூசை எட்வேட் ம.ராஜ்குமார் கெளரி மோகனதர்சினி எம்.வதனரூபன் ம.கம்ஷி கணேசமூர்த்தி வினு கயோகானந்தன் ரிம்ஸா முஹம்மத்
கவெல்லபதியான் தில்லைமுகிலன் திருமதி.டி.சுதாகினி எச்.எfப் ரிஸ்னா
உங்கள் கண்ணோட்டம்
அறிமுகக்குறிப்பு
கருத்தாடல் - வானம்பாடி கவிதைக்கான சிறு சஞ்சிகை - மேமன்கவி இரசனைக்குறிப்பு - கலா விஸ்வநாதன் பசுபதி கவிதை . வாசகர் கடிதம் மூலமும் பெயர்ப்பும்
ais an airdiúil
எஸ். யசோதரன் கே.மாக்ஸ்சிறிராம்
அட்டைப்படம்
ஓவியர்.கே.சிறீதரன்
தொடர்புகளுக்கு, நீங்களும் எழுதலாம் 103/1 திருமால்விதி திருகோணமலை, 6habT.Gu: 026 2220398. E-mail:-neenkalayahoo.com
- 2 - நீங்களும் எழுதலாம் - 09-2008 (நவ- டிச)

கவிதையும் மனித உணர்வும்
உலக சனத்தொகையில் வறிய மக்களின் பங்கு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மிலேனியம் இலக்காகக் கொள்ளப் பட்ட 2015ம் ஆண்டிலி வறுமையை முற்றாக ஒழித்தல் என்னும் இலக்கிற்கு மாறாக ஆண்டுகள் ஒன்பதை கடந்துவிட்ட நிலையில் 2000ல் இருந்ததைவிடவும் வறுமை வீதம் அதிகரித்து வருவதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. உலக நாடுகளின் கவனம் வேறு வேறு திசைகளில் திரும்பிக் கொண்டிருக்கிறது என்பதே இதன் அர்த்தம்.
மனித உணர்வுகள் சார்ந்த சிந்தனை
பலரிடத்தும் குறைந்து வருவதே இதற்குக் காரணமாகும்.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" (புறநானுாறு-18)என்று பாடிய சங்கப் புலவர்களிலிருந்து தனியொருவனுக்கு உணவில் லையெனில் ஜகத் தினை அழித்திடுவோம்" என்ற பாரதி வரை வறுமையைப் பற்றி பேசுபவர்களும் , வறுமைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களும் கவிஞர்கள். அன்று தொட்டு இன்று வரை தடுமாறும் ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டு பவர்களாகவும் , சாதாரண மக்களை விழிப்பூட்டுபவர்களாகவும், திகழ்பவர்களில் கவிஞர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
அவ்வாறான ஒரு பயணத்தில் நீங்களும் எழுதலாம் இணைந்து நடைபயின்று கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். அப்பயணத்தில் நீங்களும் இணைந்து கொள்ள நீங்களும் எழுதலாம்.
அன்புடன் ஆசிரியர்
- 3 - நீங்களும் எழுதலாம் - 09- 2008 (நவ- டிச)

Page 3
asfaltasacDGDI gimrasflagið சுதந்திரங்கள்.
வெள்ளைப் புறாக்களில் எத்தனை பரிவு தான்
இந்த - வல்லுறுக் கூட்டங்களுக்கு! தினந்தினம் - வானத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு
பருந்துக் கண்கொண்டு கண்துஞ்சாத கண்காணிப்பு பாவம் புறாக்களாம்!
வன வேடனின் அம்பு வீச்சு அவன் விரிக்கும் வலை வீச்சிலெல்லாம் வீழ்ந்து விடாமல் சுதந்திரமாய் புறாக்கள் சிறகடித்து சிறகடித்து இன்ப உலாவருவதை கண்கொண்டு பார்த்து களிகூர ஆவலாம்
இந்த -
கழுகுக்கூட்டத்தின் நெருங்கிய உறவுகளுக்கு !
இவற்றின் - கண்துஞ்சாத இத்தனை "அறங்காவலிலும் தினந்தினம் பகலிரவாய் மாயமாய் மறைகின்றன புறாக்கள் - கரையொதுங்குகின்றன முடிவில் - விழித்துக் கொண்ட புறாக்கள் தமது உரத்த குரலில் “எங்கள் சுதந்திரத்தில் எங்களின் விடுதலையில் கண்ணும் கருத்துமாய் கரிசனை காட்டும் கருணாமூர்த்தியின் மறு அவதாரங்களே 6Tiboud - வட்டமிட்டு வட்டமிட்டு திட்டமிட்டு திட்டமிட்டு காவல் காக்கும் கைங்கரியத்தை
- 4 -
நீங்களும் எழுதலாம் - 09-2008 (நவ- டிச)

நீங்கள்
தானாக கைவிட்டாற் போதும்
எமது
இழந்த சுதந்திரம்
இல்லாமற் போன விடுதலையெல்லாம்
தானாக கைகூடும்
சிறகடித்து வானில்
இன்பமாய் உலாவருவோம் நாம்"
-ஷெல்லிதாசன்
மக்களோடு பேசு
நீ என்ன மெளனிக்கிறாய் உனது மெளனம் எனக்கு பலதை புரியவைக்கிறது நான் அவளோடு பேசுவது நட்போடுதான் ! அவளும் நானும் நீண்ட நாள் நண்பிகள் உன்னை அறிவதற்கு முதல் அவளை நான் நன்கறிவேன் நீ அன்றும் மெளனி இன்றும் மெளனி ஆனால் - மற்றவர்கள் என்னோடு பழகுவதை நீ விரும்பியதில்லையே - ஏன்? நான் அவளுக்கு வழிகாட்டுவது அவளை அறிமுகப்படுத்துவது - ஏன் சந்திப்பது 8thl:
உன் மனதை பாதிக்கிறது அவள் வெளியுலகை பார்க்க விரும்புகிறாள் உனக்கு வெளியுலகு களனிக்குள் தெரிகிறது அவளோ வெளியுலகு வந்து புதிதாய் சொல்லத்துடிக்கிறாள் நீ என்றும் வாய்பேசாமடந்தையாக. மெளனம் காக்கிறாய் - ஆனால் மனதாலும் கொதிக்கிறாயே. நீயும் வெளியே வந்து.
-வதிரி - சி. ரவீந்திரன் -
களங்களை விரித்துள்ளோம்
- 5 - நீங்களும் எழுதலாம் - 09- 2008 (நவ- டிச)

Page 4
இரவு மரம்
இரவு முழுவதும் நிலவு புதைந்து கிடந்தது நெடுஞ்சாலையின் அருகிலிருக்கும் எங்கள் கிராமமே
மண்ணுக்குள்
பதுங்கிக் கிடந்தது
வானம்
எல்லோரும் வெளியேறிய
வீட்டின்
சுவரில் ஒட்டியிருந்தது.
நேற்று இறந்தவர்களின் குருதியில் விழுந்து வெடித்தன குண்டுகள்
நாயும் நடுங்கியபடி பதுங்குகுழியின் இரண்டாவது படியிலிருக்கிறது
ஒவ்வொரு குண்டுகளும் விழும் பொழுதும் நாங்கள் சிதறிப் போயிருந்தோம் தொங்கு விளக்குகளை
எங்கும்
எறிந்து எரியவிட்டு
விமானங்கள் குண்டுகளை கொட்டின.
எங்கள் விளக்குகள் பதுங்கு குழியில் அணைந்து போனது இரவு துண்டு துண்டாய் கிடந்தது பதுங்கு குழியும் சிதறிப் போகிறது எங்கள் சின்ன நகரமும் சூழ இருந்த கிராமங்களும் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தன.
மெதுவாய் வெளியில் அழுதபடி வந்த நிலவை கொடூரப்பறவை வேகமாய் விழுங்கியது.
- 6 - நீங்களும் எழுதலாம் - 09-2008 (நவ- டிச)

இரவு முழுக்க விமானம் இரைந்து கிடந்தது அகோர ஒலியை எங்கும் நிரப்பிவிட காற்று அறைந்து விடுகிறது. தாக்குதலை முடித்த விமானங்கள் தளத்திற்கு திரும்பு கின்றன இரவும் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது மரங்களும் எரிந்து கொண்டிருந்தன சிதறிய பதுங்கு குழியின் ஒரு துண்டு இருளை பருகிய படி எனது தீபமாய் எரிகிறது மரமாய் வளருகிறது.
உடைந்த வானத்தின் கீழாக நிலவு தொங்கிக்கொண்டிருந்தது நட்சத்திரங்கள் பேரிரைச்சலோடு புழுதியில் விழுந்து கிடந்தன.
தீபச்செல்வன்.
புதிய ஆத்திது
அரசியலில் நுழை! ஆயுதம் ஏந்து இம்சை செய்! ஈழத்தைத் தகர்! உண்மையைக் கூறும் ஊடகத்தை கொளுத்து எதிர் வீட்டு சண்டைக்கும் ஏ. கே. யைத் துாக்கு ஐக்கிய இலங்கை ஒரு பகற் கனவாக்கு! ஓர்மை தவிர்! ஒளவியம் பேசு!
- அவற்ரபா நூர்தின் -
- 7 - நீங்களும் எழுதலாம் - 09-2008 (நவ- டிச)

Page 5
வேரில் விழும் அனல்
உலாவுகின்ற தென்றலும் உலர்ந்து வீசுதேனடா? உசாவுகின்ற பூங்குயில் உடன் திரும்பி போகுதா? நிலாவிலென்ன நேர்ந்ததோ, நிலைகுலைந்து தேய்ந்தது! நியாயமில்லை. பூக்களும் நெருப்பிலுள்ந்து வீழ்ந்தது
கனாக்கள் நூறு வந்து கணத்திலே மறந்தது வினாக்கள் கோடி. நீளுது விடைக்கு ஏங்கி வாடுது அநாகரிகம் ஆயிரம் அயல்கள் மீது ஆடுது அதோ எம் வாழ்வின் வேரிலும் அனல் படர்ந்தெழும்புது
இடம் பெயர்ந்த வாழ்க்கையே இடி. விழுந்து சாகுதே! இதம் தொலைந்த மானிடம் இழந்தழிந்து ஒடுதே! தடம் அழிந்து போகுதே! தலை குனிந்து வீழுதே! கடந்து போகும் காலமே கரம் கொடு நாம் வாழவே
- த.ஜெயசீலன்
(plgupir? என்னால் விரும்பப்படுகின்ற ஒரு மனிதனாக ஆகுவதற்கே என்னால் முடியவில்லை
f
விரும்புகிற ஒருவனாக
6T. g. என்னை மாற்றிக்கொள்ள இயலும்?
- பாவெல் - - 8 - நீங்களும் எழுதலாம் - 09-2008 (நவ- g)

துளைக்குள்ளே நுழைதற்குத் துடிப்பு
ஆணி உடைந்து போய் அந்த அச்சாணி உடைந்து போய் அதிக நாள் ஆயின
ஆகவே வண்டி ஓடாது பத்து வற்சரங்களுக்கு மேற் போயின
ஓடாது போனாலும்
ஒழுங்காகக் கிடந்தது வண்டி!
நீங்கங்ே
உருளாது கிடந்தது வண்டி!
ஓராணி அச்சாணி ஆகவுரு வாகியது அவ்வாணி அவசரத்தில் அச்சின் துளை தேடியது
துளைக்குள்ளே நுழைதற்குத் துடிக்கின்ற ஆணிக்கு வண்டி ஓடினாலென்ன? ஓடாவிட்டாலென்ன? உருண்டா லென்ன? கவிழ்ந்தா லென்ன?
துளைக்குள்ளே நுழைகின்ற
துடிப்போடு மட்டும் துடிக்கிறது!
அது
அச்சாணி ஆவதற்கு எவ்விதத்
திராணியும் அற்று துடிக்கிறது!
- கிண்ணியா ஏ.எம்.எம். அலி -
கவிதைக்கான.
பயில்களம் பரிசோதனைக்களம் காத்திரத்தின்களம் கருத்தாடற்களம் விளக்கக்களம் விமர்சனக்களம்
- 9 - நீங்களும் எழுதணம் - 09-2008 (நவ- டிச)

Page 6
சிலையாதலி
முகத்தில் இறுக்கம் இருக்கக் கூடாது சுருக்கம் விழக்கூடாது
பளிச்சென்று இருக்க வேண்டும் புன்னகை தவழாத பொழுதுகள் உதடுகளில் உதிக்கவே கூடாது. முக்கியமாக
தலைகுனியக் கூடாது இவ்வளவும் போதும்
இப்பொழுதே என் சிலையை செதுக்கி விடுங்கள் கொடிய வெயில்
கொடிய மழை இல்லாத இடமாய் பார்த்து.
- பெரிய ஐங்கரன்
தொட்டிச்செடி
அதிகார குலைவுக்குள் விடுதலை எனும் நுகர்ச்சி அடைபட்டுக்கிடக்கிறது! காலடித் தடங்களில் கலையாமல் சிறைக்குள் இடம்பெயரும்
பட்சி! பற்றியெரியும் மனசு - தொட்டிச்செடியாய் g56Itb uDMgtb! மறு உற்பத்தி சுழற்சி தொழிற்சாலையாய் யதார்த்தத்தின் அழுத்தம் ஒட்டிச்சுருட்டிய சல்லடை சருகாய், உன் எரிகைக்குள் ஆட்பட்டு, சிலிர்க்கும்.? உறுதிகலையா கட்டமைவு நீ.?
செ.ஜெ.பபியான் - சாமிமலை பத்தனை.
س۔ 10 سے நீங்களும் எழுதலாம் - 09-2008 (BA- g)

தமிழுக்காக
பேசுக தமிழில் மட்டும் பிற மொழி தன்னை அள்ளி வீசுக தெருவின் ஒரம் விளங்குக தமிழனாக துசது தட்ட வேண்டும் துடைப்பதை எடுத்துக் கொள்க மாசது நீங்கிப் போகும் மறை மலை அடிகளாவோம் !
மொழியினில் பற்று வேண்டும். முன்டங்கள் உணர மாட்டா! விழியதை இழந்து விட்டால் வீணென ஆகும் வாழ்க்கை பழியது நேராவண்ணம் பைந்தமிழ் மொழியைக் காத்தல் தொழிலெனக் கொள்ள வேண்டும். தொண்டிதற் கிணையே இல்லை!
அந்நிய மொழியில் ஆசை அடியோடு சாய்த்துப் போடும் முன்னைய வரலாறெல்லாம் மூளையில் பதிக்க வேண்டும். அன்னையாம் தமிழைக் காக்க அணியது திரள வேண்டும் பின்னிய சதிகள் எல்லாம் பிய்த்து நாம் எறிதல் வேண்டும்.
பாரதி சொன்னான் அன்று பைந்தமிழ் மொழியைப் போல ஓர் மொழி இனிப்பதில்லை உண்மையே அவனும் சொன்னான் பேர், புகழ் சிறப்பினோடு பெருமைகள் பலவும் பெற்ற சீர் மொழி தமிழே எங்கள் சிந்தையில் வாழ வேண்டும்.!
-வாகரை வாணன்
Gaur afasitat5686IT,
நீங்களும் எழுதலாம் இதழின் வளர்ச்சிக்கும், தொடர்ச் சிக்கும் உங்களது ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.சந்தாதாரர் ஆவதோடு உங்களது நணி பர்களுக் குமி அறிமுகப்படுத்தி உதவுங்கள்.அன்பளிப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்
- 1 - நீங்களும் எழுதலாம் - 09-2008 (நவ- டிச)

Page 7
நியாயம் கண்ட மனசு
கண்கள் கண்டவை நெஞ்சம் நெகிழ்ந்தவை நெஞ்சம் நிறைந்தவை நெஞ்சுருக நெருடியவை நெஞ்சமதில் நெருப்பாய் உணர்வுகளின் உந்துதலாய் உருவம் பெறுகிறது கவிதையாய் ஒன்றைக் கண்ட போது உருக்கொண்ட தீப்பொறி இல்லை.
இனி ஒன்றையும் காணவே கூடாதென கண்ணை மூடிக்கொண்டாலும் மனசு கண்டவைகள். நெருடலாய் ஒரு நெருப்புச் சுவாலையாய் எழுகிறது கவிதையாய் நேற்றைகளில். நேரில். நிஜமாய். கண்டபோது கரைபுரண்டவை இப்போ. காணாத போது நிதர்சனத்தை நியாயப்படுத்தி நீதி கேட்கிறது.
என்.சந்திரசேகரன்- இரத்தோட்டை
துளிப்பா
புலலாங்குழல் இசை மயங்கியது மூங்கில் எட்டப்பன்.
கொத்தடிமை வியர்வைத்துளி அதிசய அழகானது தாஜ்மகால்
ஒற்றைக்கால் தவம் உலக சமாதானம் வெள்ளைக்கொக்கு
செல்லக்குட்டி கணேசன், அல்வாய்.
- 12 - நீங்களும் எழுதலாம் - 09-2008 (நவ- டிச)

தெருக்குரல்
இல்லையென ஏங்குவன எல்லாம், வைத்திருப்பார் தொல்லையென தேம்புவன வற்றைத்தான்.
கடனையும் நோயையும் உடன் தீர்த்தல் திடமான வாழ்க்கைக்குத் தீர்வாகும்.
புண்ணியம் புரிந்தால் கண்ணிய வாழ்நாளின் எண்ணிக்கையில் ஒன்று கூடுமே.
தாய்மை பெண்மை சேவை அழகின்மையால் இல்லாமை ஆகிடுமா என்ன.
முட்டாள் மனைவியே ஆயினும் யோசனைக்கு கட்டுப்படாதவன் பாடு திண்டாட்டமே.
-சூசைளட்வேட், அன்புவழிபுரம்
விடியா இரவு ஈழத்தமிழர் இரத்தத்திலே - இப்போது ஈமோக்குளோயின் தெரியவில்லை ஈனம் தெரிகிறது - உள்ளத்தின் ஊனம் தெரிகிறது. எரிகிறது - தமிழன்னையின் பெற்ற வயிறு சுற்றி அடிக்கின்ற விமானங்கள் எற்றி உதைக்கின்ற விலைவாசி முற்றி வளர்ந்துவிட்ட "குடும்பப்" பிரச்சனை. தட்டிக்கேட்கலாம் கேட்பவன் நாளை பிணமாய் அதிகாலையில் பத்திரிகை படிப்பவன் அதிசயமாய் கேட்கிறான். அடடே. இன்றைக்குக் கொலை செய்தி ஒன்றுமே இல்லை. p ஓ. இறைவா. எம்மை நீர் ஓடிவந்த சுனாமியில் ஒரேயடியாய் அழித்திருந்தால். ஒற்றையாய் எம்மை விட்டுவிட்டு ஒளிந்திருந்து இரசிக்கின்றாயோ..? இல்லையென்றால். ஒற்றுமையைத் தொலைத்து விட்ட நாங்கள் ஒருவருமே உன்னைக் கவனிக்கவில்லையோ..?
-ம.ராஜ்குமார், வவு.கல்.கல்லுரி
- 3 - நீங்களும் எழுதலாம் - 09 - 2008 (நவ- டிச)

Page 8
“உங்கள் கண்ணோட்டம்" இதழ் 8 ஒரு பார்வை
-கள்ளிமுத்து வெல்லபதியான் எருவிலகவிதை என்பது காலத்தின் கண்ணாடி அதனால் காலத்தின் தேவைகளைக் கருத்திலே கொண்டு தான் கவிதைகளோ, கவிதை இதழ்களோ உருவாக்கம் பெற வேண்டியது இன்றியமையாததாக இருக்கின்றது. இது ஒரு சாதாரண பணியல்ல."நீங்களும் எழுதலாம்" இதழுக்கு இதழ் இது மெருகேறி வருவது இதனை ஆழமாகப் படித்துணரும் போது தெரிய வருகின்றது. “உலக உணவுப் பரிரச் சினையை எதிர் வுகொள்வதில் உலக நாடுகளின் நடவடிக்கையும் நம் நாட்டின் நிலைப்பாடும். என்னும் தொனிப்பொருளிலான ஆசிரியர் தலையங்கம் அருமை. அதனைத் தொடர்ந்து தீபச்செல்வன் - தீபன் எழுதிய "துண்டாடப்பட்ட சொற்கள்" , "அடிமைகள் நகரத்தின் தீபாவளி’ முதலான கவிதைகள் "நவீன கவிதைகள்” என்பதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. ஆழமான அற்புதமான நடப்பியல் அம்சங்களை தத்ரூபமாக அவை வெளிப்படுத்தி நிற்கின்றன.
கவிஞர் கிண்ணியா ஏ.எம்.எம்.அலி.அவர்கள் எழுதிய "காதல் மெய்ப்படும்" என்னும் கவிதையோ சங்கத்தமிழ்ப் பாடல்களின் சாயல்களைப் பெற்றிருந்தது. பிரபல கவிஞரான "திக்கவயல் தர்மு" வின் ” விசித்திரம்” என்னும் கவிதையில் வரும் "ஐரோப்பா மீது அணுகுண்டு போட்டால் வெள்ளைத் தோல்கள் கறுப்பாகக் கூடும்.” என்ற அடிகளும், கொம்மாதுறை நா.விஸ்வாவின் "அழுவதற்கு நேரமில்லை" என்னும் கவிதையில் வரும் "துரக்கணாங் குருவிக் கூட்டைத்துவம்சம் செய்து தூக்கி எறிந்த குரங்கு போல.” என்ற அடிகளும் சிறந்த கற்பனைத் திறனை எடுத்தக் காட்டுகின்றன. தாமரைத் தீவான் அவர்கள் பல சிறப்பம்சங்களைக் கொண்ட கவிதைகளைப் படைத்து வருகின்ற ஒருவர். இவர் "பராசக்தி” என்னும் தலைப்பில் " காணி நிலம் போச்சே - பராசக்தி காணிநிலம் போச்சே." என எழுதிய கவிதை பாரதியாரின் "காணி நிலம் வேண்டும்" என்னும் கவிதையை ஞாபகப்படுத்துவதோடு இப் போதைய நிலைப்பாட்டை உள்ளவாறே புலப்படுத்தி நிற்கின்றன. மாணவர்களுக்கான பயில்களத்திலே "புதுமைப்பெண்ணாகு" "அதனால்”, “அன்பின் ஆழம்",
- 14 -۔ நீங்களும் எழுதலாம் - 09-2008 (நவ- டிச)

"விஷ விருட்சம்", "யுத்தத்தின் பிடியில்", ஆகிய ஐந்து (05) கவிதைகள் இடம் பெறுகின்றன. அவற்றை எழுதிய ஐந்து மாணவர்களும் பாராட்டப்படவேண்டியவர்களே.
இவற்றினைத் தவிர இதழாசிரியர் எஸ்.ஆர். தனபாலசிங்கத்தின் "ஆடுகளும் ஓநாய்களும்" என்னும் கவிதையானது தற்போதைய நிலைமையைக் கூம்பகமாக எடுத்துக் காட்டுகின்றன. அதன் உச்சியில் வரும் "ஓநாய்கள் புனிதர் களாக ஆடுகள் ஆடுகளையே படையலிடுகின்றன." என்னும் வரிகள் அற்புதமானவை. வவுனியா கலிவியியற் கல்லூரியைச் சேர்ந்த சுதர்ஷிகாவின் "அன்புடன் அரசிற்கு" என்னும் கவிதை நசுக்கப்பட்ட குரல்களின் ஆத்ம ஒலியாக முழங்குகின்றது. மேலும் தூள்களுக்குள் துகள்களாகும்." (ஜெயா தமிழினி திருக்கோணமலை), "நுணங்கைக்கூத்து" (சண்முகம் - சிவகுமார் - கொட்டகல), "பொய்க்கோபம்" (சீனா உதயகுமார் - சமரபாகு) ஆகிய கவிதைகளும் அருமை. நாச்சியா தீவு பர்வீனின் கவிதை பற்றிய கருத்தாடலும் இதழுக்கு மேலும் செழுமை சேர்ப்பதாகத் தெரிகின்றது. இறுதியாக முல்லை அமுதனின் தா.இராமலிங்கம் பற்றி குறிப்பும். "இனிய நந்தவனம்" உலகத் தமிழர் மேம்பாட்டிதழ் பற்றியகுறிப்பும், "மூலமும் பெயர்ப்பும் பகுதியும் இதழுக்கு மெருகூட்டுகிறது. சைலைஜா மகாதேவன் எம்.பீ.அன்வர், கண.கிருஷ்ணராயன் ஆசை எட்வேட், த.வினோதரன்,பெரிய ஐங்கரன் க.அன்பழகன், த.ஜெயசீலன், த.ஜீவராஜ், ஆயுவன். லோ.ஜெயபிரதா, பாரதிபுத்திரன் ஆகியோரது கவிதைகளும் இதழுக்கு வளமூட்டுகின்றன.
த்தாடற் களத்திற்கு உங்கள் G|
கடிதவழி தனி இதழை பெற விரும்புவோர் 5/= பெறுமதியான 7 முத்திரைகள் அனுப்பவும் வருட சந்தா 200/- (தபாற்செலவு உட்பட அனுப்பவேண்டிய தபாலகம் திருகோணமை முகவரி எஸ்.ஆர்.தனபாலசிங்கம் 103/1 திருமால் வீதி,திருகோணமலை.
படைப்புகளில் வரும் கருத்துகளுக் படைப்பாளிகளே பொறுப்பாளிகள். படைப்பி செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை உண்டு
– 5 -۔ நீங்களும் எழுதலாம் - 09- 2008 (நவ- டிச)

Page 9
விடிவெள்ளி உழுதுமே நெல் விதைத்து உலகுக்கு உணவு தரும் பழுதில் "விவ சாயி" யவன் பாருக்கோர் "விடிவெள்ளி"
காசினியில் நித்தமே கண்ணான கல்வியினை ஆசையுடன் கற்பிக்கும் ஆசிரியர் "விடிவெள்ளி”
பூவினிலே மனிதம் தான் புதைபட்டுப் போனதை பாவினிலே வடிகின்ற பாவலனோர் "விடிவெள்ளி”
கடமையிலே தவறாமல் கண்ணியமாய் வாழ்வேற்று மடமைகளை மாய்க்கின்ற மனிதனுமோர் "விடிவெள்ளி”
கெளரி மோகன தர்சினி ஆலங்கேணி கிழக்கு.
அரிமுகக் குறிப்பு : ரகுமான் ஏ.ஜமரிலின் "தனித்தலையும் பறவையின் துயர் கவியும் பாடல்கள்” கவிதைத்தொகுப்பு
"என் ஆசைகளைச் சொதப்பி கனவுகள் கலைத்த அம்மா நீ மகா கொடுரிதான்" "எரிமலைபோல் செல்வேன் கசங்கிய சேலையைச் சரிசெய்து" "எனது நிலத்தின் கணப்பொழுதானது பிணங்களைச் சுமந்தபடியும்."
தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகளின் சில வரிகள். "பொதுவாக இந்தத் தொகுப்பிலுள்ள ஜமிலின் கவிதைகள் சிறுவா, பெண் களது பிரச்சினைகளையும், பொதுவான வாழ்வின் நெருக்குவாரங்களையும், இனப் பிரச்சினை தோற்றுவித்த வன்முறைகளையும் சுற்றுபுறச் சூழ்ந்த பிரச்சினைகளையும் பேசுகின்றன” என்று முன்னுரையில் “அம்ரிதா ஏயெம்" குறிப்பிடுவதை இவ்வரிகள் ஞாபகமூட்டுகின்றன.
இத்தொகுப்பு அமரர். கவிஞர் ஐயாத்துரை நினைவாக யாழ் இலக்கிய வட்டம் நடாத்திய போட்டியில் முதற்பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்பு ; 124ஏ, ஸ்டார்வீதி, பெரிய நீலாவனை,
கல்முனை
- 16 - நீங்களும் எழுதலாம் - 09- 2008 (நவ- டிச)

கருத்தாடற் களம்
கவிதை என்பது ஒரு சிக்கலான பின்னமல்ல.
- 6). TGFb JT9 -
கவிதை என்பது ஒரு சிக்கலான பின்னமல்ல. கவிதை என்பது மரபு சார்ந்தது. ஓசை நயத்தோடு எழுதப்பட்டது. தமிழோடு கலந்து சிறப்பியல்பு பெற்றது. கவிதையென்றால் மக்களுக்கு புரியக் கூடியதாக இருக்க வேண்டும். சங்ககாலக் கவிதைகள் கூட ஓசை நயமோடு இருந்தாலும் அதைப்புரிந்து கொள்ள பண்டிதர்களை நாட வேண்டிய நிலை இருந்தது.
பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் கவிதைகள் எப்படிப்புரிந்தன. இதன்பின் வந்த கவிஞர்களின் மரபுக் கவிதைகள் எவ்வாறு புரியவைத்தன. ஏன் இன்றும் கூட நல்ல கவிஞர்கள் மரபோடு எழுதிவருகின்றனர். கவிதை என்பது புரிதலை ஏற்படுத்த வேண்டும். இன்று புதுக்கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் வெளி வருகின்றன. புதுக்கவிதையில் பிச்சமூர்த்தி, முமேத்தா, அப்துல் ரகுமான் போன்றவர்கள் பிரபல்யம் பெற்றவர்களாக இருந்தனர். அந்தக்கவிதைகளில் தெளிவும் ஒரு ஒசைப்பாங்கும் இருந்தது, நமது கவிஞர்களான திக்குவல்லைக்கமால், அன்பு ஜவகர்ஷா போன்றவர்களே ஆரம்பத்தில் புதுக்கவிதை உலகில் பேசப்பட்டவர்கள் திக்குவல்லைக் கமால், "எலிக்கூடு" என்ற புதுக்கவிதைத்தொகுதியை வெளியரிட் டு 9 ബ്ള്യു பெயரைப் பதித்துக்கொண்டவர்.கடுகுசிறிதானாலும் அதில் காரம் கூடவே இருந்தது. இவரைப்போன்றே அன்பு ஜவகர் ஷாவும் பொறிகள் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டு பல கவிஞர் களை அறிமுகம் செய்த பெருமைக்குரியவராவார். இந்தக் கவிதைகள் அனைத்தும் புரியக்கூடியவையாக உள்ளன. சிலவற்றில் ஓசை வெளிப்பட்டது. இதன்பின் புதுக்கவிதை எழுதுவோம் என வந்த பலர் கண்டதையும் எழுதி ஒருபுரியாத நிலைக்கு கொண்டுவந்தனர். மேமன்கவி, சோலைக்கிளி ஆகியோரின் சில கவிதைகள் புரியும்படியாக படுவதில்லைத்தான். ஆனாலும பல உச்சமான கவிதைகளும் இவற்றில் உள்ளன. மரபுக்கவிஞர்கள் கவியரங்குகளில் கவிதைபாடும் நீங்களும் எழுதலாம் - 09-2008 (நவ- டிச)

Page 10
போது பார்வையாளர்களுக்கு உற்சாகம் குன்றிவிடுகிறது. மேமன்கவி கவியரங்குகளில் தனது கவிதைகளை வரிக்குவரி புரியவைத்து பாராட்டைப்பெற்றுக்கொள்கிறார். கவிதை வாசித்தலிலும் ஒருசெழுமை இருக்க வேண்டும்.
கவிதையென்பது புரியப்பட வேண்டும். மரபுக்கவிஞரான காசிஆனந்தன் "தெருப்புலவர் சுவர்க்கவிதைகள்” என்ற தொகுதியினூடாக புதுக்கவிஞர்களை திணற வைத்தவர். சந்தம்மிக்க சொற்சிலம்பம் இல்லாத நக்கல் கவிதைகளாக இருந் இது அரசியல் சர்ந்ததாக இருந்தாலும் ஏதோ ஒரு விடயத்தை மக்களுக்கு புரிய வைத்தது.
மஹா கவியின் குறும்பாக்கள் பிரசித்தமானது யாப்பமைதியோடு பாடப்பட்டதாகும் இதே போன்று சில்லையூரார் நீலாவணன் ஆகியோரும் சந்தமோடு பாக்கள் தந்தவர்கள் என்பகர் பகர்கில் இப்படியே பளில் காரியப்பர், ஜின்னாஷெரிப்புதீன், காத்தான்குடி அஸ்ரப்கான் போன்றோரும் மரடோடு நிற்கும் கவிஞர்களாவர்.
புதுக்கவிதைகள் சொல்சிக்கனத்தோடு வெளிவந்து, பின்பு ஏதேதோ வசனங்களைப்போட்டு கவிதையின் கருவோடு தொடர்புபடாமல் போவது உண்மைதான், நாச்சியாதீவு பர்வின் கூறியசொல்லடுக்குகள் என்பது இன்றைய புதுக்கவிதைகளில் தான் அதிகம் வந்து மோதுகின்றன. தாங்கள் எழுதிய கவிதைகள் சில தமக்கே புரியாத நிலையில் கவிஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
புரியக்கூடிய கவிதைக்கு உதாரணமாக 1965 காலப்பகுதிகளில் வெளிவந்த "இரவில் வாங்கினோம் இன்னும் விடியவில்லை" என்னும் கவிதையை கொள்ளலாம். மேலும் “எனது ஊரில் இரண்டு சமாதானநீதிவான்கள் எனது ஊர் இப்போ இரண்டு" இது நமது நாட்டு கவிஞர் (72ல் வெளிவந்த) ஒருவரின் கவிதை. நிறையக்கூறலாம். மரபோ - புதுக்கவிதையோ வாசித்துப்புரியும்படி இருக்கவேண்டும். சந்தமும் சேர்ந்தால் இவை இன்னும் வலுப்பெறும் என்பது எனது கருத்தாகும்.
ܚ ܲ18 - நீங்களும் எழுதலாம் - 09- 2008 (நவ- டிச)

அப்பாவிகளின் சார்பாக எல்லோருக்கும் தெரியும். இங்கு இருப்பவைகளையும் இன்னும் நடப்பவைகளையும் அவர்களும் இவர்களுமே உருவாக்கினர்.
ଶtråଥ56it சுவடுகளை அழிக்க முடியாதவர்கள் இப்போது கால்களையே வெட்டியெறிய அலைகிறார்கள் முற்றத்து மணலில் மல்லாந்து உறங்கியே பழகிப்போனவர்களை வீட்டிற்குள்ளும் வெளியிலும் ஊர் முழுவதிலும் காடெங்கிலும் தேடுகின்றார்கள்.
ஏமார்ந்து புணர்வு மயக்கத்திலிருக்கும் ஒரு சோடிச் சுவர்ப்பல்லிகளை வெட்டி வீழ்த்துவதில் தணிகிறது அவர்களின் வீரம்
மண்ணை நேசிக்கின்ற எல்லோராலும் எல்லா நேரத்திலும் நாங்களும் மண் புழுக்களைப் போல நிராகரிக்க முடியாமல். மண்ணிற்கு உள்ளேயும் வெளியிலுமாக சேமிக்கப்படுகிறோம் ஆர்ப்பரிப்புகளின் எல்லை கடக்க கண்ணிரின் பாசனத்திலும் இரத்த உரப்பிலும் விளைகிறது தேசம்
சிலர் சொல்லிக்கொண்டார்கள் ஒடியல் கூழினுள் இறால்களைப் போலவும், மீன் நண்டுத் தசைகளைப் போலவும் கலந்து மிதந்தோம் என்று
இப்போது மலத்தியோன் துவப்பட்ட கடியான் எறும்புகளைப் போல மயங்கிப் போனாள்கள்
அப்பாவிகளின் பகல்களின்மீது கரியள்ளிப் பூசுகிறவர்கள் இன்னும் வென்றுவிடவில்லை
-சம்பூர் எம்.வதனரூபள். - 19 سب
நீங்களும் எழுதலாம் - 09-2008 (நவ- டிச)

Page 11
கவிதைக்கான ஒரு சிறு சஞ்சிகை -மேமன்கவி.
தமிழ் சஞ்சிகைத் துறையில் ஒவ்வொரு துறைக்கென பல சஞ்சிகைகள் பெரும் சஞ்சிகைகளின் சந்தையிலும், சிறு சஞ்சிகைச் சூழலிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பெரும் சஞ்சிகைகளின் சந்தையில் வெளிவரும் அத்தைகய சஞ்சிகைகளை விட சிறு சஞ்சிகைச் சூழலில் வெளிவரும் ஒவ்வொரு துறைக்கான சஞ்சிகைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன. இந்த வகையில் கவிதை, சங்கிதம், ஓவியம் போன்ற துறைகளுக்கென தமிழகத்திலும் ஈழத்திலும் வெளிவரும் சிறு சஞ்சிகைகளைக் குறிப்பிடலாம்.
அந்த வகையில், கவிதைக்கென தமிழகத்திலும், ஈழத்திலும் சிறு சஞ்சிகைச் சூழலில் தோன்றிய சஞ்சிகைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திச் சென்று இருக்கின்றன.
பாவேந்தர் பாரதிதாசன் நடத்திய "குயில்", கண்ணதாசன் நடத்திய "தென்றல்" எனத் தொடங்கி "வானம்பாடி" வரை தமிழகத்தில் கவிதைக்கென தோன்றிய சஞ்சிகைகள் பல நல்ல கவிஞர்களை தமிழுக்கு அடையாளம் காட்டிச்சென்றுள்ளன. ஈழத்தைப் பொறுத்தவரை கவிஞன், நோக்கு எனத்தொடங்கி அக்னி, விடிவெள்ளி பூபாளம், வகவம், கவிதை, யாத்ரா என பல சஞ்சிகைகள் கவிதைக்கென (இது பூரண பட்டியல் அல்ல) தோன்றிய சஞ்சிகைகள் ஈழத்து கவிதை வளர்ச்சியில் கணிசமான பங்காற்றிச் சென்றுள்ளன. பங்காற்றி வருகின்றன. அந்த வரிசையரில் திருகோணமலையிலிருந்து எஸ்.ஆர். தனபால சிங்கம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் "நீங்களும் எழுதலாம்" எனும் கவிதைக் கான சஞ்சிகையும் தன்னை இனைத்துள்ளது. ஓராண்டை பூர்த்தி செய்திருக்கும் "நீங்களும் எழுதலாம் பல புதிய கவிஞர்களை இந்த ஓராண்டு காலப்பகுதியில் ஈழத்து கவிதை உலகுக்கு அடையாளப்படுத்தியிருக்கிறது. அத்தோடு, பல முன்னோடிக் கவிஞர்களின் படைப்புகளை பிரசுரித்தும், மீள் பிரசுரம் செய்தும் புதிய கவிதைப்
سه 20 - நீங்களும் எழுதலாம் - 09- 2008 (நவ- டிச)

படைப் பாளிகளுக்கு வழிகாட்டியாக செயற்படுகிறது.
அதன் ஓராண்டு சிறப்பு இதழை நாம் நோக்கும் பொழுது, கடந்த ஓராண்டில் அச்சஞ்சிகையில் எழுதிய கவிதைப் படைப்பாளிகளினது பெயர் பட்டியல் ஒன்றினை வெளியிட்டு இருப்பதன் மூலம், அச் சஞ்சிகை பல புதிய கவிதைப் படைப்பாளிகளை ஈழத்து கவிதை உலகின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. " நீங்களும் எழுதலாம்" தனது ஓராண்டு இதழில் வெளியிட்டிருக்கும் இப்பட்டியலைக் காணும் பொழுது, எனக்கு 70களில் தமிழகத்திலிருந்து தமிழகக் கவிஞர்களான உமாபதி, ராஜரிஷி போன்றேர் இணைந்து வெளியிட்ட "ஏன்" என்னும் கவிதைச் சஞ்சிகையில் ஈழத்து புதுக் கவிதைச் சிறப்பிதழ் ஒன்றினை வெளியிட்டதும், அவ்விதழில் அன்று ஈழத்தில் எழுதிக் கொண்டிருந்த நுாற்றுக்கணக்கான புதுக் கவிதையாளர்களின் பெயர் பட்டியல் ஒன்றினை வெளியிட்டு இருந்தமையையும் எனக்கு ஞாபகப்படுத்தியது.
"நீங்களும் எழுதலாம்" இதழில் எழுதிய எழுதிக்கொண்டிருக்கும் புதிய கவிதைப் படைப்பாளிகளின் படைப்புகளை நோக்குமிடத்து, 70களிலும், இன்றைய சூழலில் சில பத்திரிகைகளிலும் எழுதிய - எழுதும் புதிய கவிதை படைப்பாளிகளின் படைப்புகள் போல் வெறுமனே துணுக்குகளாய் அமையாது, எழுதுவோர் புதிய படைப்பாளிகளாக இருப்பினும் அவர் தம் அனுபவங்களை கவிதைகள் மூலம் முன்வைக்கும் பாங்கும், உள்ளடக்கங்களின் வீச்சும் கவனத்தை ஈர்க் கரின்ற வகையரில் அமைந்திருக்கின்றன. இதற்கு இன்றைய வாழ்வு அவர்களுக்கு தரும் அனுபவங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது தெரிகிறது.அத்தோடு, "நீங்களும் எழுதலாம்" சஞ்சிகையில் முன்னோடிக் கவிதைப்படைப்பாளிகளின் படைப்புகளை மட்டும் மீள் பிரசுரம் செய்யாது, அவ்வாறான முன்னோடிக் கவிஞர்களின் கவிதை பற்றி, அன்று அவர்கள் முன்வைத்த கருத்துக்களையும் வெளியிட்டு, புதிய கவிதைப் படைப்பாளிகளைச் சிந்திக்கத் தூண்டுகிறது. அந்த வகையில், "நீங்களும் எழுதலாம்" தனது ஓராண்டு இதழில் மீள் பிரசுரம் செய்து இருக்கும் பல்கலை வேந்தர் சில்லையூர் - 21 - நீங்களும் எழுதலாம் - 09 - 2008 (நவ- டிச)

Page 12
செல்வராசன் அவர்கள் அன்று சொன்ன ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது.
"கற்றால் வருமோ கவித்துவம்?" எனும் தலைப்பிலான அக்குறிப்பில் சொல்லப்பட்டு இருக்கும் த்துக்கள் இன்றும் பொருத்தக்கூடிய கருத்துக்க்ளாக இருக்கின்றன.
செய்நேர்த்தி திறன் மட்டுமே ஒரு படைப்பை உருவாக்கி விடுவதில்லை. அதற்கு மேலாக, சிருஷ்டி திறன் என்பதும் தேவையான ஒன்று என்னும் தொனியில் அமைந்திருக்கும் சில்லையூர் செல்வராசன் அவர்களின் கருத்துகள் "கவிதை"என்பது தமக்கே சொந்தமானது எனும் மயக்கத்தில் இருக்கும் அறிவுஜீவிகளுக்கும் கவிதை என்பது வெறும் சொற்களின் குவியல் என மயங்கிக் கிடக் கும் கவிதை தயாரிப்பாளர்களுக்கும் "கவிதை" மட்டுமல்ல, ஒரு சிருஷ்டிக்கு படைப்பாற்றல் அதி முக்கியமான ஒன்று என்பதை அழுத்திச் சொல்வதாகவே எனக்குப்படுகிறது.
"நீங்களும் எழுதலாம்" போன்ற சஞ்சிகைகள் இத்தகைய கருத்துக்களைத் தொடர்ந்து மீள் பிரசுரம் செய்யும் பணியினைத் தொடர வேண்டும். இன்றைய ஈழத்து சூழலில் ஒரு சிறு சஞ்சிகை நடத்துதல் என்பது மிகுந்த சிரமமான பணி. அத்தகைய சிரமமான பணியினை சேர்வில்லாமல் மேற்கொண்டு வரும் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் அவர்களின் பணியினை நாம் பாராட்டுதல் வேண்டும்.
"நீங்களும் எழுதலாம்" கவிதைச் சஞ்சிகை ஈழத்து கவிதைச் சஞ்சிகைகளின் வரிசையில் கவனிக்க வேண்டிய ஒரு சஞ்சிகை என்பது மறுப்பதற்கில்லை.
நன்றி. மல்லிகை (ஒக்டோபர் - 2008)
மாணவர்களே உங்களது ஆக்கங்களை பயில்களத்திற்கு அனுப்புங்கள்
இதழ் 07 இல் கருத்தாடல் களத்தில் கலாவிஸ்வநாதனின் ”கற்றால் வரும் கருத்துவம்" என்பது "கற்றால் வரும் கவித்துவம்" என தவறுதலாக இடம்பெற்றுள்ளது
ஆர் - 22 - நீங்களும் எழுதலாம் - 09-2008 (நவ- டிச)

( - )
வெண்புறா வெளிச்சம் கம்பிக் கூட்டுக்குள் நீ சிக்குண்டு போனதால் எலும்புக் கூடாகிப் போனது எமது வீடான இலங்கை வீடிது வெளிச்சம் பெறுவதற்கும் வெளியே நாம் வருவதற்கும் வெளியே நீயினி வரவேண்டும்
- கணேசமூர்த்தி வினு - (வின்சன் உயர்தர தேசிய பாடசாலை LDL-is856ITIL)
சுதந்திரத்திற்காக தொலைந்து போன நிம்மதியும் இழந்து போன சந்தோஷமும் தொடர்ந்து வந்த துயரங்களில் பங்கேற்கும் தமிழராய் நாம்! தாயகம் ஒன்றின் சுதந்திரத்தை தேடியழித்த பாவியர்களை எண்ணுகையில் மனதில் வருவதோ தீ நெருப்புத்தான் நம் இனிய தேசத்தில் நடைபெறும் படுகொலைகளையும் ஆட்கடத்தல்களையும் நினைக்கையில் நெஞ்சம் குமுறுகிறது: நாட்களை நகர்த்தியபடி - நாம் சிறையினில் சிதைந்து போனாலும் மகிழ்ச்சிகரமான வாழ்வினை மறந்து மரணிக்க நேரிட்டாலும் நாளைய சந்ததியினருக்கு போராடிக்கொண்டிருக்கும புதிய எழுச்சியை வழங்குவோம் திடமான கொள்கைகளைப் பரப்புவோம்! ஆயிரமாயிரம் கரங்கள் ஒன்றிணைந்து அணிவகுக்கச் செய்வோம்! இழப்பின் சுவடுகளை இல்லாமற் செய்யவைப்போம்! கொடிய அரக்கர்களின் - எரிப்புக் கரங்களை அழித்தொழிக்கவும் புதிய வரலாற்றை உருவாக்கவும் - ஒரு புதிய சந்ததியினரை தட்டிஎழுப்புவோம்! ம.கம்ஷி - (வவு.சைவப்பிரகாச மகளிர் கல்லூரி)
நீங்களும் எழுதலாம் - 09-2008 (நவ- டிச)

Page 13
புதைந்து போன மானுடம்
இரவின் வேதனைகள் அசையாத காயங்கள் வதைபடு முகாம்களில் கல்லாய்ப் போன துன்பங்கள் குருதி மணக்கும் பூமியில் புதைந்து போன மானுடம் விழுதிலிருந்து விழும் விதைகளே என் வழிகாட்டிப் பறவைகளே குறுகிப் போன இதயத்தை மன்னியுங்கள் நெருப்பைத் தொடுகின்றேன். தென்றலாய் நினைக்கின்றேன். கரடு முரடான பாதைப் பயணங்கள் கண்ணுக்கெட்டும் தூரத்தே விடியல் கண்முன்னே தெரிகிறதே பச்சையமற்ற உடற்குழந்தைகள் பார்வையிழந்து போன பூமித்தாய் நிட்சயமில்லாத வாழ்க்கை ஓடுபாதைகள் இறுதிவரை வாழ்ந்திருப்போம். உறுதியிலே திளைத்தவர்களாய்.
க.யோகானந்தன் -திருகோணமலை
காத்திருப்பு!
காலம் விதியின் கைகளில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. காலச்சக்கரம் வெகுவாய் சுழன்று கொண்டிருக்கிறது. பகல்களும் இரவுகளும் நாளுக்கு நாள் கடக்கின்றன! எனது நிமிடங்களை எண்ணிப் பார்க்க இங்கு எவருமில்லை. எனது சுவாசக் காற்றின் கனத்தையளக்க இங்கு யாருமில்லை! யுகங்கள் மலர்களைப்போல் மலர்ந்தும் உதிர்ந்தும் போகின்றன! நான் உனக்காக எத்துணை காலம் காத்திருப்பதென்பது எனக்கே தெரியாமல் போகின்றன.!!
- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
- 24 - நீங்களும் எழுதலாம் - 09-2008 (நவ- டிச)

அட்டைப்படக் கவிதை -இதழ் 8
தொலை தூரப் பயணத்தில் தொடுவானத் தூரத்தில் இருக்கிறது எங்களின் இனிய பழத் தோப்பு.
DT 6) 6}T60)p856)b மற்றும் பல கனிவகையும் முத்தமிழ் வாசனையும் கொண்டதோப்பு எங்கள் தோப்பு
பழத் தோப்பதனை.நோக்கிப் பாதந்தேய நடக்கிறோம் . பனந்தோப்பின் இடையாலே பனையுறுதியுடனே நடக்கிறோம்!
பனைகளின் தலைகள் கூடப் பறந்து சிதறும் காலத்தில் பனைகளிலும் மேலாய் எங்களின் பேனைகளும் நிமிர்ந்துவிட்டன! நிமிரும் பேனாக்களால் நாங்களும் நிமிர்வோம். நடையைத் தொடர்வோம் நாளைய உலகினை வெல்வோம்.
-சரஸ்வதிபுத்திரன். - 25 -
நீங்களும் எழுதலாம் - 09 - 2008 (நவ- டிச)

Page 14
இரசனைக் குறிப்பு
மாரிமுத்து சிவக்குமாரின் “மலைச்சுவடுகள்"
-கலா விஸ்வநாதன். மாரிமுத்து சிவக் குமார் சஞ்சிகைகள் பத்திரிகைகளில் எழுதிய கவிதைகளை தொகுப்பாக்கி தரும் உத்வேகத்துடன் "மலைச்சவடுகள்" கவிதைத்தொகுப்பினை
தந்திருக்கிறார்.
இளம் கவிஞரான மாரிமுத்து சிவக்குமார் தாம் வாழுமி , தாம் காணும் , தாம் அனுபவிக்கும்மலையகத்தை அப்படியே வாசகள் முன் நிறுத்துவதற்குத் தமது கவிதைகள் தோறும் முனைந்துள்ளார். மலையகம் எதிர் காலத்தில் புதுமைகள், மாற்றங்களை காண வேண்டும் என்ற தணியாத தாகத்தையும் கவிதைகள் மூலம் வெளிப்படுத்துகிறார். என்று முன்னுரையில் கலாநிதி துரை மனோகரன் குறிப்பிடுகிறார்
"எமது நாட்டிலும், அப்பாலும் தான் பிறந்த மண்ணிலும் இடம் பெற்று வந்துள்ள நிகழ்வுகளின் ஒரு வெட்டு முகத்தோற்றமாக இந்நூலிலுள்ள
i விளங்குகின்றன" என்று மதிப் பில்
கலைமகள் ஹிதயாரிஸ்வி குறிப்பிட்டுள்ளார்
"சந்தோஷங்களையும் சங்கடங்களையும ஒரே மேடையில் உயர்த்திவைத்து
பின் கவிதை எழுதிப்பார்"
என்று கூறும் கவிஞர் மலையக சமூகத்தின் மீது அவரின் பார்வையை, பார்வையினூடாக நேர்மையான நெஞ்சத்தின் சிந்தனையை கவிதையாக தருவதற்கு எளிமையாகவே முயற்சித்திருக்கிறார் சந்தக் கவிதை பாணியிலும் புதுக்கவிதை உருவத்திலும் கவிதைகளை படைப்பாக்கம் செய்துள்ள கவிஞர் வளரும் பருவத்திலும் வாசிப்பவரை யோசிக்கவைக்கும் வரிகளை கையாண்டும் இருக்கிறார்.
- 26 - நீங்களும் எழுதலாம் - 09-2008 (நவ- டிச)

கை தேர்ந்த கவிஞராக உருவெடுப்பார் என்பதற்கு "மலைச்சுவடுகள்” நூலில் வெளி வந்துள்ள கவிதைகள் முன் முயற்சியாக பயிற்சியாக மலர்ந்துள்ளன.
“தேயிலையின் வேர்கள் போல் எங்கள் தேகங்களின் நரம்புகள் இம்மண்ணுள் புதைக்கப்பட்டுக்கொண்டிருப்பதும் கேள்விகள் எழுப்பாத கேலிகளாய். இன்னும் கூலிகளாய் வாழ்வதும் இம்மண்ணில் தான்" “காணிநிலம் வேண்டுமென்று பாட்டுக்கொரு புலவன் பாடிச்செல்ல, இங்கே "லயக்" கூட்டைக்கூட சொந்தம் சொல்ல இல்லையொரு சாசனமும்". என்ற வரிகள் ஊடாக மலையக மக்களின் அதிமுக்கிய ஜீவதார பிரச்சினையைப்பற்றி பிரஸ்தாபிக்கின்றார். "காலமெல்லாம் வேண்டுவது காணிநிலம் மாத்திரம் தான் காதல் செய்ய நந்தவனமாவேண்டுகிறோம்!” "உழைப்பின் ஏணிகள் தான் எங்களது கருவறைகள் அந்த ஏணியே ஊனமாகும் போது எங்கள் உருவங்கள் எப்படி முழுமைபெறும்?." இவ்வரிகள் மலைச்சுவடுகள் கவிதையில் வரும் உயிர்ப்பு வரிகள் உழைப்பின் பிறப்பிடமான கருவறையே ஊனமாகிப் போனால் உழைக்கும் சமூகம் ஏனைய சமூகத்திலிருந்து பிரித்தறியப்படும் ஊனச் சமூகமாக தோற்றமளிப்பதை யதார்த்தமாய் கவிஞர் "எங்கள் உருவங்கள் எப்படி முழுமைபெறும்? "என்று வினாவுகிறார். கவிஞர் மாரிமுத்து சிவக்குமார் கூறுவது போன்று "இந்த மலையக மண்பரப்பின் மேலிருந்த பாசமும், பணிவும் பற்றும்" இவரை கவிதையாக சிந்திக்க வைத்து "மலைச்சுவடுகள்” எனும் கவிதைத் தொகுப்பை தமிழ் உலகுக்கு தரச் செய்துள்ளது.
- 27நீங்களும் எழுதலாம் - 09 - 2008 (நவ- டிச)

Page 15
காக்க காக்க எந்தவேல் காக்க
பழையபோர்வைக்குள் சிக்குண்டிருக்கும் மானிடமே உன்னை மீட்டெடுக்கப்போவது யார்? புதிய பார்வைக்குள் இருப்போர் மாத்திரமே மானிடமே அவர்கள் மட்டுமே உன்னைப் பார்க்க முடியும். அவர்கள் மட்டுமே உனது ஒலத்தைக் கேட்க முடியும். எல்லாம் இழந்தவர்கள் தான் உன்னை மீட்க முடியும்
மானிடமே
உன் மேனிக்கு
மதத் தூரிகைகளுமல்லவா வர்ணம் தீட்டுகின்றது
மனத்தூய்மை நூலின்
வரிகளில் மட்டுமே பேதங்கள் மாற மந்திரமான நீ இன வேள்விக்குள் அல்லவா இரையாகிப் போகின்றாய் மொழிகளில் எல்லாம் பெருமையான வார்த்தை g பழி பாவத்தில் நிலை குலைந்து அழிகின்றாய் சாத்தம் சாத்வீகம் சமாதானம் சமதர்ம வடிவம் f சாதிச் சகதிக்குள்ளும் மூழ்கித் திணறுகின்றாய் தேசங்களின் நேச மூலம் நீ பாசிச நாசிசப் பொறிக்குள் அகப்பட்டு நெரிபடுகின்றாய் உலக வாழ்வின் உன்னதத்தின் சக்தி நீ அகிலப் பேரரசு மயமாக்கலில் அடிமையாகின்றாய்
மானிடமே பாரிடம் இப்போ நீ இருக்க வேண்டிய மன இருப்பிட்ம் இல்லாமல் போய் விட்டதே எப்படியும் இப்போ உன்னை மீட்க வேண்டும் இல்லையேல் உலகப் பேரரசு வாதம் முழு உலகையும் விழுங்கி விடும், அதனால் உன்னை மீட்க நாம் படை திரட்டுகின்றோம்.
*ಸ್ತ್ರಿ தில்லை முகிலன்நீங்களும் எழுதலாம் - 09- 2008 (நவ- டிச)

சுடலை ஞானம்
எனது பெற்றோரை. எனது சகோதரிகளை. எனது அயலவர்களை உள்வாங்கிக்கொண்ட சுடலையைப் பார்க்கிறேன் கண்கள் பனித்தன. அதரங்கள் துடித்தன. அவர்கள் பாக்கியசாலிகள்.? கெளரவமாய் அடக்கம் செய்யப்பட்டார்கள் ஆனால். நாங்கள்? நாளை எங்களின் உயிரற்ற உடல்கள் எந்தெந்த மூலைகளில் எப்படிக்கிடக்குமோ? ... என்ற கிலி எனக்குள் படர்கிறது சவக்களை தொனிக்க நகர்கிறது நமது பயணங்கள். 9. நாங்கள் மனிதர்கள். அதிலும் தமிழர்கள்.
-திருமதி.டி.சுதாகினி, செங்கலடி
இடியாகும் வானமும் புயலாகும் பூமியும் ஆக்ரோஷமாய் பாறையில் ஆவேசத்துடன் பலமுறை மோதியும். தோல்வியை சுமந்தே திரும்புகிறது கடல் அலைகள்! எஞ்சியிருக்கும் மீதி நாட்களும் அப்படியே ஆகிடுமோ என்றே இடியும் புயலும் மனதில் நர்த்தனம் செய்கிறது! என் எண்ணங்கள் மாத்திரம் எப்போதும் வண்ணம் பெற்று சிறப்பானதேயில்லை! கற்பனைக் கடலில் மிதக்கிறேன் எனினும் ஒன்றாவது விற்பனையாகி ஈடேறாத கானல் நீர்தான் நஞ்சுச் செடியைச்சுற்றி வேலியிட்டு என்ன பயன்? முட்டைக்குள்ளே. அழகிய முத்தொன்றை எதிர்பார்த்தல் அறிவாகிடுமோ! பிடிக்கவில்லை எனக்கு எதுவுமே பிடிக்கவில்லை மலர் ஒன்று முட்களில் வாழ்வதும். சிலர் சொற்களில் உயிர்கள் வீழ்வதும்..!!
-தியத்தலாவ எச்.எ(f)ப்.ரிஸ்னா
- 29நீங்களும் எழுதலாம் - 09- 2008 (நவ- டிச)

Page 16
தீர்மானிக்கப்பட்ட பிரகடனங்கள்
எங்கள் நிலமும் எங்கள் நீரும் எங்கள் காற்றும் எங்கள் ஒலியும் ஒளியும் கூட b6OULLDITEs..........
அந்திப்பொழுதில் பயிர் விளைவிக்கும் பருவம் தப்பியவர்களாய்.
அத்திவாரங்கள் மீதான பிரக்ஞை சற்றுமற்று கோபுரங்கள் மீதான கனவில் லயித்துப் போகிறவர்களாய்.
இரத்தத்தில் ஊறிப்போன எஜமான விசுவாசத்தில் சற்றேனும் சளைத்தவரல்லர் என்பதை பொறுத்த தருணங்களில் காட்டிவிடுகின்றவர்களாய்.
போதனைகள் யாவும் தாரக மந்திர உச்சாடனங்களாய் .
எங்களுக்கான அனைத்தும் பரிந்துரைகளின் மீதே கட்டியெழுப்பப்படுவனவாய்.
ஏக்கங்களுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் S. 6il6TITT355L (6 அங்கலாய்த்துத் திரியும் அற்பக் கூட்டங்களாயின பின் விற்பனையாகின்றன! தீர்மானிக்கப்பட்ட பிரகடனங்கள்!!
தனித்தேனும் பலர் கூடியேனும் மீண்டெழாத படிக்கு!!!
எஸ்.ஆர்.தனபாலசிங்கம் -
- 30 - நீங்களும் எழுதலாம் - 09- 2008 (நவ- டிச)

பாட்டாளி துயரமீ
-பசுபதிபாட்டாளி வர்க்கமொன்று உழைப்ப தாலே பாருணி டு பலனுண் டு பாரீர் இங்கே! கூட்டாளி அவர் நமக்குக் குறையாச் செல்வம் குவலயத்தில் அவர் பெருமை குன்று போலாம்! நாட்டிற்கு முதுகெலும்பு போல்வா ரென்றும் நல்லதொரு வாழ்வமைத்தார் மக்கட் கானால் வீட் டிலே வெந் துயரப் படுவ ரண் றோ ! வேதனையே அவர் துயரம் சொல்லப் போமோ?
பாரதிலே பற்பலவாய்ப் புதுமை கண்டார் பசும்பொன் வரைதனிலே எடுத்துத் தந்த: காரதிலே கடல் தனிலே கடமை செய்தார் கல்லிலே மண்ணிலே குடைந்து ழைத்தார்: நேரதிலே பார்த்திருப்பின் நெஞ்சம் வேகும்! நீரருவி தாரையாய்ச் சொரியும் கண்ணில் ஊரதிலே உழைத்தவர்க்கு உணவு இல்லை உள்ளத்தின் வெந்துயரம் சொல்லப் போமோ?
காலையிலே எழுந்து சென்று காடு வெட்டி கழனியிலே விளைவுதர உழைத்த பேர்கள், சாலையிலே சந்தையிலே சாக்க டையில் சலியாது உழைத்துழைத் தலுத்த பேர்கள், மாலையிலே மனைநோக்கி மக்கள் நோக்கி மாற்றின்பம் சிலவேனும் அடைய வந்தால் வேலையிலே அலையுறுத்தும் கப்பல்போல வேகுமே அவர் துயரம் சொல்லப் போமோ?
பஞ்சுபடும் பாடுபடும் அவர்தம் உள்ளம் ! பாடுபட்டுப் பலனிழந்து நிற்கும் போது நஞ்சனையார் அவருள்ளம் காண்ப தில்லை! நலன் தனது சுயநலத்தை நாடி நிற்கும் வஞ்சனையார் வாழுகின்றார் வாய்ப்ப வர்க்கு! வளமுட்டும் வினைஞர்க்கு வாழ்வு இல்லை: வெஞ்சினமே கொள்ளுதடா! வீணர் கூட்டம் விளங்கவில்லை! அவர் துயரம் சொல்லப் போமா?
1963 இல் தனது 40வது வயதில் காலமான (யாழ்.பருத்தித்துறையைச் சேர்ந்த யாழ்ப்பாணக் கவிராயர் என்ற புனைபெயர் கொண்ட) கவிஞர் பசுபதி 1956 இல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஓர் அங்கத்தவராக இணைந்து ஒடுக்கப்பட்ட மக்கள், உழைப்பாளிமக்களின் விடுதலைக்காக உழைத்தவராவர்
நீங்களும் எழுதலாம் - 09 - 2008 (நவ- டிச)

Page 17
ஒருபடைப்பாளியின் கருத்து
"நீங்களும் எழுதலாம்" ஆடி - ஆவணி 2008 இதழ் கிடைத்தது. நன்றி ஆர் இந்தத் தனபாலசிங்கம்? என்றிந்தப் பார் கேட்குமளவுக்கு உங்கள் தமிழ்ப்பணி உயர்ந்து செல்வதை "நீங்களும் எழுதலாமி” நிரூபித்துக் கொண்டிருக்கின்றது நிற்க, நான் நம்தமிழை வழுவிலா தெழுத வேண்டுமென்னும் வாஞ்சை கொண்டவன். ஆனால் அச்சுக் கோத்தவர் எனது கவிதையைக் கொச்சைப் படுத்தியுள்ளதைக் கண்டு கோபித்தேன். அக்கோபம் எனது தாய்மொழி மீதெழுந்த தாபத்தால் வந்த கோபம் கவிதையின் முதற் சீரே பிழையாக அச்சிடப்பட்டுள்ளது. "பரிவோ" எனவரவேண்டியசீர் "பரியோ" எனவாயிற்று. இவ்வாறு சீர்கள் சிலவற்றில் எழுத்துப் பிழைகள் இடம்பெற்றுள்ளன. இன்னென்ன இடங்களில் இன்னென்ன எழுத்துக்கள் தாம் வரவேண்டுமெனும் நியதியை "நீங்களும் எழுதலாம்" மீறக்கூடாது. மீறிவிட்டால் மரபோ புதிதோ எந்தக் கவிதையானாலும் பொருளும் குலையும் கவித்துவமும் கலையும்! மாற்றாந் தாய் மனப்பாங்கில் மரபைப் பார்க்கக் கூடாது. யாத்தவருக்கும் கோத்தவருக்கும் இடையிலேயுள்ள தமிழ்ப்பச்சமும் தமிழிற் பரிச்சயமும் எக்கணமும் மாறாதிருக்க வேண்டும். தமிழிலிருந்து இன்னொரு புதிய மொழியை உண்டாக்கும் முயற்சி வேண்டாம். அவ்வாறு ஒரு மொழி உருவானால் அது இவ்வாறு தான் இருக்கும். "வாலைப் பளம் அலுகி ஒளுகி நிலத்தில் வீல்ந்தது" என்பதாக
பேதையொருவன் இங்ங்னம் பிழைவிட்டாலும், அந்தப் பிழை. இனி மேலும் வராது பேணுதல் உன்றன் பொறுப்புத் தம்பி. பேணுங்கால் "நீங்களும் எழுதலாம்” உருவிற் சிறிதானாலும் எடை எப்போதும் குறையாமல் இருக்கும்!
அன்புடன் சகோதரர் ஏ.எம். எம். அலி
கவிதைசம்பந்தமான குறிப்புக்கள்,கட்டுரைகள்,விமர்சனங்கள் போன்ற பல்வேறு விடயங்களோடு மொழிபெயர்ப்புக்கவிதைகளும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.
- 32நீங்களும் எழுதலாம் - 09-2008 (நவ- டிச)

வாசகர் கடிதம்
"நீங்களும் எழுதலாம்" இலங்கையில் கவிதைக்காகவே வெளிவரும் இதழ்களில் நீங்காத இடத்தைப் பிடிக்க வேண்டும். புதியவர்கள் பழையவர்கள் என்ற தரம் பிரித்துப் பார்க்காமல் தகுதிக்கேற்ப அனைவருக்கும் களம் அமைத்துக் கொடுத்துள்ளிர்கள். இன்றைய மாணவ சமுதாயத்தையும் கவிதைத்துறையில் அதிகமாக ஈடுபடச் செய்தல் நல்லது. எதிர்காலத்தில் இதழின் வடிவத்தை ஓராண்டுச் சிறப்பிதழ் அளவில் வெளியிட முயற்சி செய்யுங்கள்.
எஸ்.கே இராஜரெட்ணம் - பண்டாரவன:
"நீங்களும் எழுதலாம்" - இதழை சாரல் நாடன் ஐயா அவர்களிடமிருந்து பெற்றேன். மாணவர்களுக்கு தனியான களம் தந்திருப்பது ஆரோக்கியமானது. முன்னட்டை வடிவமைப்பு, கவிதைகளைப் பிரசுரிக்கும் முறை என்பன சிறப்பாக உள்ளன. இன்னுமின்னும் பல கவிஞர்கள் உங்களுடன் இணைவார்கள் என நம்புகின்றேன்.
சிகரம் பாரதி - கொட்டகல
"நீங்களும் எழுதலாம்" கவிதை கோவை அன்சார் அவர்கள் எனக்கு அறிமுகப்படுத்திவைத்தார். படித்தேன் நல்ல கவிதைகள். வாழ்த்துக்கள்.
A.S.M.566rò Gai5TyptbL - 14
"நீங்களும் எழுதலாம்” கவிதை ஏடுகள் கையில் கிடைத்தன. வாசித்து மகிழ்ந்தேன். புதியவர்கள் மட்டுமல்லாது பிரபல்யங்கள் கூட எழுதுகிறார்கள் எழுத்துலகை மறந்து இருந்தவர்களையும் (ஷெல்லிதாசன்) ஆசிரியர் மீண்டும் கொண்டு வந்திருக்கிறார். "அக்னி" என்ற கவிதை ஏட்டை வெளியிட்ட ஈழவாணன் அவர்களையும் கலைவாதி கலில் அவர்களின் "நவமணி"வாரப்பத்திரிகையின் குறிப்பு மனதுள் ஞாபகப்படுத்தியது. ஆசிரியர் முயற் சிக்கு பாராட் டுக் கள் , தொடர கைகொடுப்போம்.
- வதிரி. சி. ரவீந்திரன், கொழும்பு -
- 33 - நீங்களும் எழுதலாம் - 09- 2008 (நவ- டிச)

Page 18
நான் எழுதுவது கவிதையல்ல.
காணி நிலத்தோடு - ஓர் அழகிய உலகத்தை பராசக்தியிடம் கேட்ட - தன் நெஞ்சிலும் முதுகிலும் என்றாவது ஓர் நாள் தாமரைத் திவான் என்ற கவிஞன் ஒட்டாண்டியாக வந்து,
ஓங்கிக்குத்துவான்.
என்று
LJTJ கனவிலுங் கூட. ஏன் தமாஷாகக் கூட நினைத்திருக்க DMLLIT6ö. தாமரைத்திவானின் இக்கவிதை ஆத்மா குமுறிய அனல் மூச்சு. வாழ்த்துக்கள். கையடக்கச் சிற்றேட்டில் களமமைக்கும் தனபால சிங்கத்துக்கு...!
"நீங்களும் எழுதலாம்" இதழ் மிகத் தரமாக உள்ளது.100 கவிஞர்களுக்கு மேல் அறிமுகஞ் செய்துள்ளமை பாராட்டுக்குரியது, கூடுமானவரை பெண்களை நினைக்கும் சராசரிக் கவிதைகளைக் குறைத்து, இன்றைய சூழலில் தமிழ் இனத்துக்கு நல்ல சேதி சொல்லும் படைப்புக்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள் உங்களது ஆடுகளும், ஒநாய்களும் கவிதை மலையகத்தை அப்படியே பிரதிபலிக்கின்றது.
-மு.சிவலிங்கம் - கொட்டகல
புனையெரில் எழுதுவோர் தங்களது சொந்தப்பெயர் முகவரியினையும் குறிப்பிடுதல் வேண்டும்
- 34 - நீங்களும் எழுதலாம் - 09- 2008 (நவ- டிச)
 
 
 
 

Father
When here
The rain Slicks city cheeks, Lit glass, spat- on asphalt, Drumming on steel roofs With mechanical noises, We shut our eyes and see Him in his chosen loneliness, Sitting my his door, between the hills, Watch the same rain sparkle On the avocados in his hands Down the white flanks of saplings Grown now in to lively giants who chatter Away the gloom of overcast afternoons.
He is alone, to remember. What we are without time to recall, Having watched us grow, and grapple, The world take us, Leaving in its swirl no time for memories3,
Wisely he has planted other seedlings, He can see them Unfurl their branches to the wind at his door. They will not leave him as we did.
ஆங்கில மூலம் : உயாநந்த கருணதிலக
e9L LITT
D6op
ஒளி உமிழும் கண்ணாடிகளிலும் வழியும் போதும் தார்ச்சாலையின் மீது துப்பும் போதும் கடினமான கூரைகள் மீது முரசறையும் போதும் bTib கண்களை மூடுவோம் அவரைக் காண்போம் மலையில் தனிமையில் தம் வாசற்படியில் இருப்பார் தன்.கைகளால் நட்டு இன்று ஓங்கி வளர்ந்து
- 35 - நீங்களும் எழுதலாம் - 09-2008 (நவ- டிச)

Page 19
மாலைப் பொழுதின் நிசப்த தன்னோடு உரையாடும்
ஆனைக் கொய்யா மரங்கள் இதே மழை பொழிவதைப்
அவர் தனித்துப் போனார் நாம் வளர்வதையும் இழுபறிப்படுவதையும் நினைவுகளுக்கே இடமில்ல 39. El) fl-ST jiġif எம்மை வாரிச் செல்வதைய அவர் கண்டிருக்கிறார்.
அவர் புத்திசாலி வேறு நாற்றுக்களும் நட் HEI) til
அவர் வாசவில் கிளைகளை ஒச்சி நிழல் ElfsbLD (LITF அவை அவரைக் கைவி
GLILuf'LI: (FIT.L.
அறிமுகக்குறிப்பில் உங்கள் இடம் பெற வேண்டுமாய அனுப்பிவையுங்கள் 2007ற்கு அறிமுகக்குறிப்பில் இடம்பெற
வங்கி மூஜ சந்தா செலு வருட சந்தா ? R. Thanahalasi MAI Nr: || 53 Sā. Ti pH th Bank, Tr என வைப்பிட்டு ப அனுப்பிவைக்
வெளிநாடு 18
"நீங்களும் எழுதலா கணனி மயப் படுத்த ஆர்.நித்தியா (EDGE உவர்மலை), அவர்களுக் அச்சிட்டு உதவரிய பதிப்பகத்தினருக்கும், எழுதலாம்" தனது
தெரிவித்துக்கொள்கின்றது
ISSN ISO
 
 
 
 
 

நத்தைப் போக்க
மீது
TILLIII.
TEL
டிருக்கிறார்
தருகின்றன.
L
கவிதைத் தொகுப்பு ன் ஒரு பிரதியை முன் வெளியானவை
LDTLT
தீத விரும்புவோர்
Ig:1III
חידושיו!.
| IČO HE ற்றுச்சீட்டை கவும்
S II)
"ம்" இதழை ந உத வரிய NET Cfa கும் அழகுற 55 | T "நீங்களும் நன் நரிகளை
ام 3.31
- 2008 (நவ- பூச)
i