கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீங்களும் எழுதலாம் 2009.03-04

Page 1
தடைதனைத் த இதேே
இருமாத கை
NEENKALUM
(Poetry M.
( ଛୁର୍ଲ୍)
1 - ܝܢܠ
 

விதை இதழ்
ZHUTHALAM agazine)
23ージ

Page 2
நீங்களும் எழுதலாம்-1 இருமாத கவிதை இதழ் றார்ச்-ஏப்ரல்-2009
afi
எஸ்.ஆர்.தனபாலசிங்கம்
படைப்பாளிகள்
எஸ்.பாயிஸா அலி ஜின்னா ஷரிபுத்தின் தழிழேந்திரன் வேல் நந்தன் புவி லக்ஷி எஸ்.புஸ்பானந்தன்
உமா துரைராஜரட்ணம் சுளிலான முனாஸ் சீனா உதயகுமார் கணகிருஷ்ணராஜன் புசல்லாவை கணபதி எல்.வளிம் அக்ரம் ஜெயா தமிழினி கலா விஸ்வநாதன்
எஸ்.ஹம்சா அறோபர்ட் யூட் வி.கெளரிசங்கர் ர.ஜோயல் ஜைரஸ் கவித்தா நிஷாம் பாரதி புத்திரன் வி.முகிலன் ஏ.எம்.எம்.அலி ஷெல்லிதாசன் எம்.எஸ்.பாஹிரா உநிசார் ஆசை எட்வேட்
எஸ்.ஆர்.தனபாலசிங்கம் கருத்தாடற்களம்
*தீரன் மூட்டிய தீ ஏ.எம்.எம்.அலி *பாரதி ஒரு சர்ச்சை
அறிமுகக்குறிப்பு, நமது இதழ்கள் சில
1BC வானொலிக் குறிப்பு
வாசகர் கடிதம்,
மூலமும் பெயர்ப்பும்-சோ.பத்மநாதன்
கே.எஸ்.சிவகுமாரன்
anga Godů
எஸ்.யசோதரன் கே. மாக்ஸ்சிறிராம் அட்டைப்படம்
ஓவியர்.கே.சிறீதரன்
தொடர்புகளுக்கு, நீங்களும் எழுதலாம்’ 103/1 திருமால்வீதி, திருகோணமலை 6hgn Gມ: 026 2220898/0778812912
E-mail-neenkalayahoo.com 2 நீங்களும் எழுதலாம் 11(மார்ச் - ஏப்ரல் 2009)

காலத்தை வென்றிட
தாம் வாழும் காலத்து சமுதாய ஒழுங்கினை விமர்சன ரீதியாகப் பார்த்து காலத்தைக் கடந்து எதிர்கால நோக்கில் சிந்தித்த பெரியோர்களின் பட்டியல் கவிஞர்கள், சித்தனாவாதிகள், கண்டுபிடிப்பாளர்கள் நாட்டுத்தலைவர்கள். என நீளும்.
அந்த வகையில் ஒரு நாட்டில் தலைவர்கள் எடுக்கின்ற தீர்மானங்கள் சமூக அமைப்பு முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லன. ஒரு சில தலைவர்களைத் தவிர எமது நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலான தலைவர்களும், தலைமைப் பரீடத்தில் இருப்பவர்களும் தர் க் கதரிசனமாக சிந்தித்தவர்கள் சிந்திக்கின்றவர்கள் எனக் கூறமுடியாது. குறிப்பாக ஏகாதிபத்திய, மேலாதிக்க சக்திகளுக்கு எதிரான தெளிவான நிலைப்பாடின்மை அல்லது அற்ப நலன்களுக்காக அடிபணிந்து போகின்றமை போன்றவை மோசமான விளைவுகளுக்கு காரணமாயின எனலாம்.
மேலும் இவை பற்றிய (இவற்றின் தாக்கம்) புரிதலின்மை காரணமாக இலங்கையின் வரலாற்றில் நியாயமான பல போராட்டங்களும், தியாகங்களும் மழுங்கடிக்கப்படுகின்ற ஒரு நிலைமை தொடர்கிறது. சாராம்சம் என்னவெனில் இலங்கையராகிய நாம் அனைவரும் பல்வேறு வழிகளிலும் பலவீனமடைந்து கொண்டிருக்கிறோம் என்பதே.
வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டியவன் வள்ளுவன். இராம இராச்சியத்தைக் கனவு கண்டவன் கம்பன். குடிமக்கள் இராச்சியத்தை ஆராய்ந்தவன் இளங்கோ. கட்டிய தளையெலாம் சிதறுக என்றவன் பாரதி.அந்தவகையில் மானுடம்
ിഖങ്ങ[L
நீங்களும் எழுதலாம்
அன்புடன் ஆசிரியர்.
3 நீங்களும் எழுதலாம் 11(மார்ச் - ஏப்ரல் 2009)

Page 3
பெண்மொழியும் என்மொழியும்
நிலவில்முகிழ்த்தமணித்துளியாய் என் முதற்பேரன் மண்ணுக்கு முகங்காட்டிய திருநாள்! நுரையீரலையே புரட்டிப்போடும் டெற்றோல்நெடிமருந்துமாத்திரைமணம. கூடவே. வெள்ளைத்தேவதைகளின் விரட்டல்கள். எவற்யுைமே பொருட்படுத்தாது அந்தப்பிரசவஅறை கதவோரம் சாய்ந்திருக்கிறேன் கைகளில் வெந்நீர்ப் போத்தலும் கண்களில் கண்ணிருமாய் நான் புனர்ஜென்மம் பெற்று வந்த பூரணத்தோடு மருறு)மகள்.எனினுமவள் மறுகட்டிலில் அவளின் அகவையொத்த இன்னுமொருசின்னப்பூ! பாதி வியர்வையிலும் மீதி குருதியிலும் குளித்த உடலோடு போராடிக்கிடக்கிறது இந்தப் பொல்லாத பூமியிலே தன்னைப்படைத்தவன் இப்பரிதாப வேதனையைத் தனக்காய்க் கொடுத்தவன் - அந்த நாயகனவன் நாமங்கள் மொழிந்தபடி முழங்கால் மடக்கி மூச்சுப் பிடிப்பதும் பின் சோர்ந்து வீழ்ந்து முனகுவதுமாய். முக்கால் மணிநேரப்போராட்டத்தின் இறுதியிலே செவிப்பறையை நனைத்து நிறைக்கிறது அறையையந்த குட்டிக்குரல் "அல்ஹம்துலில்லாஹற்”.! அத்தனை இதயங்களினதும் ஆறுதல் பெருமூச்சுக்களினுாடே. அவளழகில், அவள் கலரில் அழகியதோர் குட்டிரோஜா கட்டிலில் காலடித்தLடி! அறைவாசலிலோர் ஆணுருவம் நிழலாட நிமிர்கிறேன். கையிலோ சிறுபொதி, பார்வையோ உள்ளே பரம்பியபடி. அவள்பெற்றதன் முதலெழுத்துக்குச் சொந்தக்காரன்போலும். கட்டியவள் கஷ்டம் வேதனை விசும்பல். எதனையுமே எண்ண மறந்தவனாய் "என்னபிள்ளை?என்னபிள்ளை?"என்கின்றான்.! அவன் வாரிசு வளரத் தன்னுடலையே நிலமாக்கி உதிரத்தையே உரமாக்கியவள் தன்தசையிலே இழைதிரித்து
4. நீங்களும் எழுதலாம் 11 மார்ச் - ஏப்ரல் 2009)

கருவறையைத்தறியாக்கி, அவன்பேருக்குத்தன் உயரிலேயே உயிராடை நெய்தவள். தன் சாக்கணத்து சாதனையுணர்ந்தே தலைகோதித் தாங்கிடுவான்! முகமேந்தியே முறுவலிப்பான! ஆறுதலாய் அன்பு மழைபொழிவான்! என்றெல்லாம் எண்ணியிருந்தாளோ என்னவோ. ! “என்னபிள்ளை" யென்ற விறைப்பான வினாவுக்குள்ளே விக்கித்துத்தான் போனாள். பதில்காணாது , தங்கத்தோள் போர்த்திருந்த போர்வை மெல்ல விலக்கியவன் தேள் கொட்டியவன் போலானான் விஷமேறித் தானுமே தேளானான் "ச்சீ.இதுவுமா..?"உதடுகள் மொத்த வெறுப்பையுமே காறியுமிழ. கோபமாயுதறுகிறான் விரல்களை பொதியாகிக் கிடந்த ஆப்பிளும் ஹோர்லிக்ஸம் நொருங்கிச்சிதறின அந்தக் கண்மணியின் கண்ணாடி மனசுபோலே. யுகம்யுகமாய். பெண்மையின் தேசியமொழியாகிப்போன கண்ணீர் மட்டுமேயவள் குனிந்த கண்களுக்குள்! வாய்திறக்க, அவளோ. உறைநிலை மெளனச்சிலையாய். நானோ கொதித்துப்போகிறேன். உணர்ச்சிகள் கொப்பளித்தென் சர்வ நாடிநரம்புகளுமே புடைத்துப்போக - "அட முட்டாளே உனக்குப் பிறக்கப்போவது ஆணா பெண்ணா என்பதனை உனதானதே தீர்மானமிட அப்பாவியாம் அவளைச்சாடுவதில் லாபமென்ன கண்டாய்' என உரக்கக் குரலிடுகிறேன்.
எனினுமென் குரல்வளை பிறப்பித்த அந்த ரீங்காரம் குரல்நாணைக்கூட அதிர்த்தும் ஓர்மமின்றியே மெல்லத் தணிந்தடங்கிற்று - என் தொண்டைக்குழிக்குள்ளேயே..!
கிண்ணியா எஸ்.பாயிஸா அலி.
ஆக் கபூர்வமான விமர்சனங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
ベ
நீங்களும் எழுதலாம் Ii (LDTÍTš - ஏப்ரல் 2009)

Page 4
நீயும்நானும் இரண்டல்ல
விழிகள் இரண்டாகிடிலும் பார்வை ஒன்றே - அவ்வாறேதான் இந்து முஸ்லிம் வேறெனிலும் இயல்பு ஒன்றே. இதைத்தானே எங்கள் இலக்கியப் பேராசான் பெரியதம்பிப் புலவர்மனி
"இருதயத்தின் ஈரிதழ்கள் இந்துமுஸ்லிம்" என்றார். ஏன்மறந்தோம் நாமதனை இன்றுதுயர்ப் படுகின்றோம்
பேரளவில் நீ தமிழன் நான் முஸ்லிம். பேசுமொழி பண்பாடு கலாசார ஒற்றுமையால் நான்வேறு நீவேறா நமக்குள்ளே ஏன் பிளவு
ஒன்றாக உண்டு ஒன்றாகத் தமிழ்கற்று ஒன்றாகச் சேர்ந்து 996 l606п u JT9 வாழ்ந்தவர்கள் நாங்கள் வரலாறு பேசுவது.
இல்லையென்று சொல்லு இயன்றால் மறுத்துப்பார் உன்
இதயமே அதற்கு ஏற்ற பதில் சொல்லும்,
ஏனடா அன்னே! இரண்டானோம் "காக்கா"என்றென்னை நீ கூப்பிட்டாய் பொருளென்ன? அன்னேதான் காக்கா காக்கா தான் அண்ணன் இல்லையென்று சொல்லு இயன்றால் மறுத்துப்பார்
6 நீங்களும் எழுதலாம் 11(மார்ச் - ஏப்ரல் 2009)

வேண்டாம் இதுதொடர வா நாங்கள் ஒன்றாவோம் ஒன்றாக உண்டு ஒன்றாகக் கற்றுணர்ந்து ஒன்றாகச் சேர்ந்து ஓடிவிளை யாடி முன்போல வாழ்வோம்
-ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
காலனே கவனமாயிரு.!
காலனே கவனமாயிரு. குருதி குடிக்கின்ற உனது குருட்டு தனத்தை உடனே நிறுத்து. ஒ. ஊளை பிடித்த மூளையில்லாத கோழை உனக்கு நாங்கள் விடுகின்ற இறுதி எச்சரிக்கை இது "காலனே கவனமாயிரு.!
உனது கண்மூடித் தனங்களை மண்மூடி மறையவை மண்ணிலே இன்னும் காவாலித் தனங்களையும் கழுதைக் குணங்களையும் காட்ட வராதே கட்டறுத்துப் பாயாதே கட்டளையை மீறாதே.?
எங்களது இருப்பிடங்களுக்குள் அத்து மீறி நுழையவும் அடாவடித் தனங்களைக் காட்டவும் ஆர் ஆணையிட்டது? எங்களின் சுதந்திரத்தை உன்னை யார் சுரண்டச் சொன்னது? உனது கையிலே இருக்கும் கயிற்றை உனது கழுத்துக்கே ஏறி.?
-தமிழேந்திரன் - கவிதை சம்பந்தமான குறிப்புக்கள் கட்டுரைகள் விமர்சனங்கள் போன்ற பல்வேறு விடயங்களோடு மொழிபெயர்ப்புக் கவிதைகளும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.
7 நீங்களும் எழுதலாம் 11(மார்ச் - ஏப்ரல் 2009)

Page 5
என்ன சொல்லிப்பாடுவது
என்ன சொல்லிப்பாடுவது ஏது சொல்லிப்பாடுவது சொற்கள் கூடசோபை இழந்து சொந்தம் கொண்டாடமுடியாத மெளன வெளியில் நின்றபடி என்ன சொல்லிப் பாடுவது ஏது சொல்லிப்பாடுவது
நாளும் பிணக்குவியலாகும் வாழ்வுக்குள் நின்றபடி உருகி வழியும் உணர்விலும் உச்சரிக்க முடியா வலியிலும் நின்றபடி என்ன சொல்லிப் பாடுவது ஏது சொல்லிப்பாடுவது
காதலின் புனிதமும் வீரத்தின் வீரியமும் பாடியது ஒரு காலப் பற்று! பைந்தமிழின் பொற்காலம் அறநெறியும் போதனையும் பக்தியும் ஆண்டது எம்மை ஒரு காலம் அது அன்புநெறிக்காலம் காப்பியங்களாகி (எம் வாழ்வு) கர்வமுற்றிருந்தது ஒரு காலம் பின் சிற்றிலக்கியமாகி சிறுகதை நாவலாகி சிறந்தது ஒரு காலம் புதுக்கவிதையாய் கனன்றது ஒரு காலம் அன்றெல்லாம் பூக்களைப் பாடினோம் புதுமைகள் தேடினோம் இன்றோ கண்ணுக்கு முன்னே ஈரமில்லாக்காட்சி மண்ணுக்குள் அகதிகளாய் அலைந்தபடி கண்டதே காட்சியெனப் போய்விட்ட எம் வாழ்வில் காணாத காட்சிகளின் (மரண) அரங்கேற்றம் என்ன சொல்லிப் பாடுவது ஏது சொல்லிப்பாடுவது
இயற்கை கூட இரக்கம் இழந்தபடி உலகம் கூட உறக்கத்தில் அறிக்கைகள் மட்டும் விட்டபடி நாளும் உயிர்வாழும் மரண வெளியில் நின்றபடி என்ன சொல்லிப்பாடுவது ஏது சொல்லிப்பாடுவது
புலோலியூர் வேல்நந்தன்
8
நீங்களும் எழுதலாம் 11 மார்ச் - ஏப்ரல் 2009)

சிதறல்
Ꭷ ᏍIᏍᏈᎧᎧ0! சிந்திக்கத் தொடங்கியதும் என் எண்ணங்கள் சிதறிவிட்டன
உன் ஓவியத்தை வரையத் தொடங்கியதும், வண்ணங்கள் மாறிவிட்டன எத்தனை தடவைகள் - அதில் எத்தனை சிதறல்கள்
என்னுள் ஆயிரம் ஆயிரம் வெப்பக் கனல்கள் வெளிப்பட்டுத் தெறிக்கின்றன. உன் இம்சைகளால் என் இதயம், சல்லடையாகின்றது ஆயினும் உன்பார்வைச் சிதறல் பட்டுத் தெறிப்பதால் என் நெஞ்சம் அழகாய் வலிக்கின்றது
- புவிலக்ஷி , பெரிய
நீலாவனை
களங்களை விரித்துள்ளோம் ஆக்கங்களை அனுப்புங்கள்
கவிதைக்கான.
பயில்களம்
பரிசோதனைக்களம் 5. காத்திரத்தின்களம் கருத்தாடற்களம் S་ விளக்கக்களம் ཎྜི་ விமர்சனக்களம் 翠
9 நீங்களும் எழுதலாம் 11 மார்ச் - ஏப்ரல் 2009)

Page 6
எங்கும் இருளாய்.
சுழலும் கோளப்போலியில் சுருங்கிப் போனது சுந்தரக்காலம்
சோபன ஜீவிதக் கனவுகள் கருக்கி தூஷணம் செய்தது துயரத் தேசம்நெஞ்செலாம் கூட கடுந்தணல் மூண்ட 83 ஆடித் திங்களிலிருந்து. சிரிப்புக்கு அழுதோம் அழுகைக்கு சிரித்தோம் கால் கை கட்டி வாயைப் பூட்டி கவலைத்தடத்தில் சீவியம் ஒட்டினோம்.
பீதி இருளில் சுயங்கள் தொலைத்தோம்! இல்லைக்கு ஆம் என விடைகள் மொழிந்தோம்!
பிரிந்தோம் பிரிந்தோம் பிரிந்து சிதைந்தோம்!
வீதிக்குழிகளை நிறைக்கும் குருதி நேற்றாய் இன்றாய் நாளையும் தொடரலாம்.
எங்கும் இருளாய். எல்லாம் துயராய்.
எஸ்.புஸ்பானந்தன்-மண்டுள் நாங்கள்
முகம் இருந்தும்
LD55 U6856 முகவரி இருந்தும் தொலைக்கப்பட்டவர்கள் உறவுகள் இருந்தும் பறிக்கப்பட்டவர்கள் உறுப்புக்கள் இருந்தும் இழக்கப்பட்டவர்கள் சந்ததி விருத்திக்கும் சதி செய்யப்பட்டவர்கள் உணர்வுகள் இருந்தும் ஒடுக்கப்பட்டவர்கள் சவச்சாலையிலும் சிறைவைக்கப்பட்டவர்கள் ஏனெனில் நாங்கள்.
உமா துரைராஜரட்ணம். திருமலை.
O
நீங்களும் எழுதலாம் 11(மார்ச் - ஏப்ரல் 2009)

வறுமைக்காய்
வார்த்தைகள் என்னில் வரமறுத்துக் கொண்டன எழுதுகோல் ஒழுங்கின்றி எகிறிக் கொண்டன உடல் உறுப்புக்கள் தளர்ந்தன உதிரம் உலர்ந்தது சிந்தனைகள் ஒருமுகப்படா சிதறடிக்கப்பட்டன கண்கள் விழிக்க முடியாதவாறு கண்ணயர்ந்தன சொந்த பந்தங்களின் சொள்ளல் கதைகள் பல சொந்தமாக விருந்தவர் சொத்துச் சுகமில்லாததால் சொந்தத்தில் இல்லையென சொல்லக் கேட்டவனாய் இவ்வுலகில் என்னைப் படைத்த இறைவனை நொந்தேன் இத்தனைக்கும் எஜமானாகிய இல்லாத நிலைகொண்ட வறுமைக்காய்
கணகிருஷ்ணராஜன்
இருட்டு வாழ்வு
சொல்லால் வடிக்க வொண்ணாத் துயரம் - அங்கே சொல்லால் தெறிக்கின்ற உதிரம் பொல்லாப் போர் மேகம் சூழும் - இந்தத் தொல்லை எப்போதிங்கே போகும்.
கண்கள் வடிக்கின்ற கண்ணி - நெஞ்சைப் புண்ணாய்ப் பிளக்கின்ற செந்நீர் மண்ணாய்ப் போகின்ற வாழ்வு - இதை எண்ணிப் பார்ப்போர்தான் யாரோ.
கதியற்றோர் வாழ்வைச் சுருட்டும் - இந்த மதிகெட்ட போரின் பொருட்டும்
எதிர்காலம் மனதை வெருட்டும் - இது விதியென்றே நெஞ்சம் இருட்டும்
-மூதூர் கஸானா முனாஸ்
11 நீங்களும் எழுதலாம் ; 1 மார்ச் - ஏபரல் 2009)

Page 7
ஒளிக்கும் ஒளி.
மேசை மின் விளக்கும் என் மகனும்!
மின் குமிழும் 616 9sLDIT6b
வர்ணத்தொலைக்காட்சியும் என் மனைவியும்!
நாளாந்தம்
அவர்.அவர்.
கடமைகள் அவர்களுடன் படியவைக்கும்.
ஒளிரும் ஒளியும் சலன ஓட்டமும் 360)Lugo)L 960)600Tu-f இடையிடை நிற்கும்.!
பரீட்சைக் காலம்
நெருங்க கேள்வியாகிறது எதிர்காலம் வெறுத்து ஒதுங்குகிறான் 616, LD356T.
இரவு உணவு அம்மாவின் கைகளில் பிள்ளையின் பசியுணர்ந்து துடித்திருந்தாள் என் அம்மா!
தொடரும்! பெண்களின் வக்கிரங்கள் தொடர்களில் தொடர்கின்றன இன்னும்
எதைவேண்டி பார்த்திருக்கிறாள் என் மனைவி
இப்படியேதான் நாளையும் தொடரும் என் வீட்டு அவலங்கள்.!
சீனா. உதயகுமார் "சமரபாகு”
12
நீங்களும் எழுதலாம் 1}(மார்ச் - ஏப்ரல் 2009)

நீயும் நானும் அல்லது நாம்
மிக முக்கியமான ஒரு பொழுது
சாளரத்தின் திரைச்சேலை அசைகிறது
கிளர்ச்சியின் வேட்கையில் கலவியின் தூவானம் வீச ஈரம் சேர்ந்து உலாவுகிறது
எச்சம் மச்சமாகி மிச்சமாகியது
இரத்தம் பிசுபிசுத்தது
வியர்வையின் துர்வாடை கட்டிலில் கழிவறையில்
எனக்கு சொந்தமான உறவு
பெரும் பீதியின் நடுவே ஒரு இடைவெளி மெளனத்தில் நடக்கிறேன்
நேற்றுவரை
எனது உணாவுகள எந்த அடைப்புகளுக்குள்ளும் நில்லாது நடந்தன.
மாயைகளை விழுங்கியபடி காற்றும் நட்சத்திரமும் வானமும் காதலில் நனைந்தன
எனக்கு சொந்தமான உறவு வந்துகொண்டிருக்க எனது பார்வைகள் தாழ்ந்து
Durslessor
-எல்.வஸிம் அக்ரம்
அறிமுகக்குறிப்பில் உங்கள் கவிதைத் தொகுப்பு இடம் பெற வேண்டுமாயின் ஒரு பிரதியை அனுப்பிவையுங்கள் 2007ற்கு முன் வெளியானவை அறிமுகக்குறிப்பில் இடம்பெறமாட்டாது
3 நீங்களும் எழுதலாம் 11(மார்ச் - ஏப்ரல் 2009)

Page 8
வாழ்வதற்கான அழைப்பு
எங்கள் புலம்பல்கள் 6). Tafsib35, JLT55 கவிதையாய்
மனித மாமிசம் கொத்தித் தின்னும் காக்கைகள் போல் 8T353563)L தலைமைகள் சலவைக்கு போய்வரும் கட்சிக் கொடிகள் - எம் கண்ணி துடைக்கும் கைக்குட்டைகளா?
பொய்த்துப்போன வாக்குறுதிகளுக்கு மட்டும் புள்ளடி போட அவசியமாகிபோன எழுத்தறிவு வீதம்!
கூடைதுக்கியே கூன்விழுந்த மலையக குமரிக்கிழவிகள்!
வாழும் உரிமைக்காய் கெளரவமாய் கைமாறும் லஞ்சப்பணமாய்
மாதாந்த சந்தா!
வா! இனியும் வேண்டாம் இருளை விரட்ட ஒரு தீக்குச்சியாய்
இணைவோம் நாம்!
-புசல்லாவை கணபதி
வங்கி மூலம் சந்தா செலுத்த விரும்புவோர் வருட சந்தா 200+ R.Thana balasingam A/C No: 106653402077 Sampath Bank, Trincomalee என வைப்பிட்டு பற்றுச்சீட்டை அனுப்பிவைக்கவும் G66flybirG US $ 10
4 நீங்களும் எழுதலாம் 11 மார்ச் - ஏப்ரல் 2009)

அன்ன சுவாசம்
ഉണ് கெட்டுப் போய் கிடக்கிறது!
நல்ல மனிதர்களை தேட வேண்டியிருக்கிறது. வல்ல மனிதர்கள் ஆளையாள் அடித்துக் கொண்டு அழிகிறார்கள்!
பொது நலப்பணி போர்வையாளர்கள் மனதெல்லாம் சுயநலநெருப்பு
ஆட்சியை பிடிக்க அடிபடல் ஓயவில்லை ஜனநாயகத்திலும் போர்க்குணம்
மனித மனங்களில் ஆசை அமைதியை தின்று விடுகின்றது.
நடுநிழல் ஞானிகள் நிம்மதியாய் மூச்சு சுவாசம் செய்கிறார்கள்!
நச்சுக்காற்றை விலக்கி. அமிர்தக்காற்றை மூடி, அன்ன சுவாசம் அமைதியாய் நிகழ்கின்றது.
கலா விஸ்வநாதன் -
கடிதவழி தனி இதழை பெற விரும்புவோர் 5/= பெறுமதியான 7 முத்திரைகள் அனுப்பவும். வருட சந்தா 200/- (தபாற்செலவு உட்பட) அனுப்பவேண்டிய தபாலகம் திருகோணமலை முகவரி எஸ்ஆர்தனபாலசிங்கம் 103/1 திருமால் வீதி,திருகோணமலை.
5 நீங்களும் எழுதலாம் 11(மார்ச் - ஏப்ரல் 2009)

Page 9
பெண்ணியம் மலரட்டும்
உழைப்புக்கேற்ற ஊதியத்தில் தகுதிக்கான பதவியில் - உள்ள உணர்வுகளை மதித்தலில் பெண்ணியம் மலரட்டும்
சட்டங்கள் ஆக்கவும் திட்டங்கள் திட்டவும் பட்டங்கள் பல பெருக்கிடவும் பெண்ணியம் மலரட்டும்
சிவனும் சக்தியும் இணைந்திட்ட சரிபாதி வடிவமது போல் வாழ்வின் இன்ப துன்பங்களில் பொருளாதார நெளிவு சுழிவுகளில் குழந்தை செல்ல வளர்ப்பினில் பெண்ணியம் மலரட்டும்
அரைகுறை ஆடையிலுள்ள விளம்பரக் காட்சிகள் ஒழித்தலில் அகராதியில்லா அர்த்தமற்ற பெயர்களை அழித்தலில் - போர்த் தாக்கத்தின் கோரப் பிடியகலலில் பெண்ணியம் மலரட்டும்.
வாலிபமெனும் வாழ்வின் வாசற்படிதனில் வழுக்கி விழும் புத்தம்புதிய பண்பாட்டுச் சீரழிவை பறைசாற்றும் ஆண் பெண் நட்புக்கலாசாரத்தை அடியோடு வெட்டிச் சாய்ப்பதில் உறவுகளை வளர்ப்பதில் உயர் குடும்ப அலகை காப்பதில் எமதான பெண்ணியம் மலரட்டும்
ஜெயாதமிழினி - திருகோணமலை
6 May 5 fes (36,
நீங்களும் எழுதலாம் இதழின் வளர்ச்சிக்கும். தொடர்ச் சிக் கும் உங்களது ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.சந்தாதாரர் ஆவதோடு உங்களது நண் பர்களுக் கும் அறிமுகப் படுத் தி உதவுங்கள்.அன்பளிப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்
6 நீங்களும் எழுதலாம் 11 மார்ச் - ஏப்ரல் 2009)

நல்வாழ்வு
பிறரன்பில் நீ வாழ்வாய் அக்கணம் உன்னை சமுகம் பால் என்னும், தேன் என்னும் தெவிட்டாத சுவை எனும்
ஊரெல்லாம் உலகெல்லாம் பாரெல்லாம் படைப்பெல்லாம் உன்நாமம் பாடும்
மாறாய் தவறுகள் புரிந்தால் தவறிப் போவாய் - பிளவுகள் கொண்டால் பிளவுண்டு போவாய் நட்பினை விடுத்தால் நலந்தனை இழப்பாயே!
ஆசைகள் அதிகம் கொண்டால் அன்பினை இழப்பாய் நீதியை நீ மறந்தாய் நிஷடுரமாவாய் - ஒளிதனை வெறுத்தால் இருள்தனில் வாழ்வாய்
அ.றோபட்யூட் - கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை கல்முனை வெண்கட்டி வெண்ணிற உடை உடையவளே - உயிர் வேட்கை தணித்தவளே வானவில்லின் வண்ணங்களை - தன் வதனத்தில் தீட்டியவளே.
பள்ளிக்கு வந்தவளே - பல பாடங்கள் கற்பித்தவளே வகுப்பறையில் உனை மிதிக்கும் - மாணவரை வாடாமுகத்தோடு வரவேற்பவளே.
வள்ளல் எனக்கூறவா? பல வாசமிகு மலர் தூவி வாழ்த்தவா? கள்ளமில்லா நெஞ்சோடு - எமை காலமெல்லாம் நினைப்பவளே.
எஸ்.ஹம்சா - தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரி
17
நீங்களும் எழுதலாம் 11(மார்ச் - ஏப்ரல் 2009)

Page 10
என்றும் மாற விரும்பா பள்ளிப்பருவம்
அன்றொரு தினம் ஒரே கணம் விழிதிறந்து பார்க்கையில் அன்னையின் மடியில் தவழும் சில நொடியில் கண்டேன் ஒரு புது விடியல்
ஆசான் சொல் வேதமென புதுயுகம் படைத்திடவே ஒன்று திரண்டோம் சாதனைகள் படைத்தோம் பருவங்கள் மாறினாலும் தொடர்கின்றன பள்ளிப்பருவத்தில் சாதனைகள்
காலங்கள் கடந்தோட
கல்வியும் எம் மனதில்
ஊற்றெடுத்தோடவே
மனம் ஏங்குகிறது
என்றும் நிலைநிற்க
மாற விரும்பா பள்ளிப்பருவத்தில்
ர.ஜோயல் ஜைரஸ் - கார்மேல் பற்றிமா
தேசிய பாடசாலை கல்முனை
கொடுமை அது (வா)
g8uj1 9łubupt என் குடையில் கூட கறுத்த சீலை வேண்டாம் அது நீதிபதியிடமும் சட்டத்தரணியிடமும் தான் சாட்சியுள்ள விடியல் வரை இருக்க வேண்டும். தண்ணீரில் கிடக்கும் பாம்பை மனிதன் உடலுக்கென்றே உரிமை கொள்வான் ம்.ம். நாகத்தை உலவவிட்டவன் பைத்தியக்காரன் தான் நிச்சயம் ஒரு நாள் அதன்வாய் மெளனமாக்கப்படும் பின்நாளில் - தண்ணிர்ப்பாம்புகள் தமது வால்களை நிமிர்த்திமின்மினிப்பூச்சிகளை தோற்கடித்து எல்லா வீதிகளிலும் வீடுகளிலும் இருட்டிலும் உலவித்திரியும்
வி.கெளரிசங்கர் தி/சென்ஜோசப் கல்லூரி
மாணவர்களே, ஆக்கங்களை வரவேற்கிறோம்
8 நீங்களும் எழுதலாம் 11(மார்ச் - ஏப்ரல் 2009)

பெரிய ஐங்கரனின் “சிலையாதல்" கவிதைக்குப் பதில் கவிதை
சிலை செய்ய நான் வருவேன். உறவாடும் உயர் தோழா. உற்ற நண்பா. "உயிர்வாழ்தல்" ஐ வெறுத்து “சிலையாதல்" ஐ விரும்பி நின்ற உந்தன் செய்தி விழிநீரைச் சுண்டி வெந்த மண்ணில் விட்டதடா. நொந்த மனத்தை இன்னும் நோக்காடு அடைய வைத்ததடா. கவலையைக் கைவிடு கண்களைத் திற. இடியும் முழக்கமும் கொடிய மழையும் வெய்யிலும் முதலிலே நிற்கட்டும். தடை தாண்டி நடைபோடு தலைநிமிர்ந்தே என்றும் நில் . உன் சிலையைச் செதுக்குதற்கு ஓடோடி வருவேன் நான். என் உளிக்கரத்தால் உன் உருவம் முழுவதையும் உள்ளபடியே செதுக்குவேன் நான். அதனால் நாளை நீயும் உயர்ந்ததோர் சிலையாக உருவாக்கம் பெறுவாய்.
பாரதி புத்திரன் -பாண்டிருப்பு
வாழ்வின் கடமை காலத்தின் கையில் வாழ்க்கைக் குட்டிக் குழந்தை தவழ்ந்து கொண்டு இருக்கின்றது அர்த்தமுடைய மானிட வாழ்க்கையில் பக்குவப்படுத்தலுக்கான பயணமோ நடந்து போகிறது. இந்த வனாந்தரத்தில் புண்பட்ட நெஞ்சங்கள் வஞ்சனையுடன் செத்து மடிகின்றன வாழ்க்கைப் பயணம் நெடு தூரம் செல்ல வேண்டி இருப்பதால் தூசியை தட்டி விட்டு தடைகளை தாண்டி புறப்படு முட்கள் நிறைந்த பாதை என்று பயணத்தை நிறுத்தி விடாதே
கவித்தா நிஷாம் - கிண்ணியா
நீங்களும் எழுதலாம் 11 மார்ச் - ஏப்ரல் 2009)

Page 11
உனக்குள்ளே. 5....
6l5B8B5FT&BLI LJ6ODL&b&bU ULLITULI. என்பது உனக்குத் தெரியுமா? ஆதிமனிதன் ஆதத்தின் விலா எலும்பிலிருந்து முதற் பெண்ணாக நீ.! சிருஷ்டிக்கப் பட்டதை மூடி மறைக்கத்தான் முடியுமா? உலகின் முதல் மனிதன் படைக்கப் பட்ட நாளிலிருந்தே வடிகாலாக வனிதையர் குலம்
ஆகவே
ஆண் உன்னை
அத்து மீறுவதாகக் கத்தாதே!
துாண் இல்லாமல் வான் நிற்பது போல்
ஆண் இல்லாமல்
நான் நிற்பேன் என்று நொட்டாதே!
கணவன் என்ற அனுமதிப்பத்திரம் சட்டபூர்வமாகக் கற்பழிக்க மட்டுமல்ல பெண் என்ற உன்னினத்திற்குப் பொற்பளிக்கவுந்தான்!
விளக்கின் அடிப்பாகத்திற்குள் எண்ணெய் இருக்கத்தான் வேண்டும் வெற்றடிப் பாகத்துடன் விளக்கிருந்தால் வெளிச்சம் எப்படி வரும்?
அங்கே பார்! ஆதர்ஷக் காதலர்களை அலகால் வருடி அனைத் தெடுக்கின்றது தன் துணையை அந்தக் காகம்!
முக்காரம் இட்டு முழக்கும் எருது முகர்ந்து முகம் நக்கி மோகித்துச் சல்லாபிக்குது பார்!
O நீங்களும் எழுதலாம் 11 மார்ச் - ஏப்ரல் 2009)

ஜீவ ராசிகளில்தான் எத்தனை ரகக் காதல் ஆம் நீ! அஜிவ ராசியா? நீ ஏன் ஆண்கள் மீது புணரும் மிருகமெனப் பொய்க் குற்றக் சுமத்துகிறாய்?
உனக்குள்ளே! கருப்பையும் காமநீர் வழிந்தோடும் 6ilgebF6D6D வைத்துக் கொண்டே!
ஏ.எம்.எம்.அலி கிண்ணியா.
ஆத்துமாவின் ராகம்
- - - - - -ஆடை களையப்பட்டு நிர்வாணமான நிமிஷங்கள் தான்-என் வாழ்நாளிலே அதிகமானவை!
ஒருவனின் நகம் கிழித்து என் தேகம் காயமானால் - அதில் இன்னொருவனின் உதடு ஊர்ந்து தழும்பு கூட காணாமல் போகும்
அரிசிக்கும்.பருப்புக்கும். உப்புக்கும்.புளிக்கும்.நான் அம்மணமான இராத்திரிகள் அந்தரங்கமானவை!
பாழ்அடைந்த வீடுகளுக்கும். மதுபானச் சாலைகளுக்கும். கசாப்புக் கடை ஒரங்களுக்கும். என்னை எப்போதுமே - நிறையவே ஞாபகம் இருக்கும்
தியாகிகள் பட்டியலில் நானும் சேர்க்கப்பட வேண்டியவள் ஏனெனில் எத்தனையோ பேரை நானும் வாழவைத்திருக்கிறேன்!
என் மேல் இரக்கப்பட்டு
யாராவது ஒரு நேர உணவு
கொடுங்கள்! - என்னிடம்
வந்து போபவர்களில்
இருவராவது குறையட்டும்!
வி.முகிலன்-நெடுந்தீவு-13.
2 நீங்களும் எழுதலாம் 11 மார்ச் - ஏப்ரல் 2009)

Page 12
கருத்தாடற்களம்
திரன் மூட்டிய தீ
கிண்ணியா ஏ.எம்.எம்.அலி
மரபோடு உறவாடும் மயில்கள் இரண்டோடு வான்கோழியொன்றை ஏன் இணைத்துக் கொண்டிர்கள்? இந்தக் கவலை கவிஞர் தீரன் ஆர்.ஆர்.எம்.நெளஸாத்திற்கு எழுந்தது பற்றி "நீங்களும் எழுதலாம்" 10ம் ஆம் இதழ் இயம்பிற்று.
தீரனின் "நுனிப்புல்லரிப்புச் செய்தியில் எதார்த் தமிருக்கலாம் "இல்லை” என்று இயம்புதற்கில்லை என்றாலும் ஆரத்தில் கோர்க்கப் பட்ட புட்பம் அஸ்ரப்கான். எடுத்தெறிதல் நலமா? புல்லரிப்புச் சேதி புதிய துTமகேதாகி அஸ்ரப்கானைச் சுடுதற்குக் காரணியாகிவிட்டது! வானம் பாடியின் வாய்!
காவியப் புலவர் ஜின்னாஷரிபுத்தீன், பாவலர் பஸில்காரியப்பர் ஆகிய இவ்விரு தமிழ்ப் பெருந்தகையாளர்கள் பயணித்துக் கொண்டிருக்கும் மரபுச் சாலையிலே கவிதை வாகனமோட்டப் பழகும் "L” போர்டுச் சாரதியாக அஸ்ரப்கான்"
"வால் வண்டியாலே" வந்து கொண்டிருந்தவரை வா! வந்தமர்க! நடுவண் என்று வானம்படி பிடித்திழுத்து அமர்த்தியது பிழைதான் என்கின்றார் தீரன் மரபுப் பற்றாக்குறை மலிந்துள்ள குறுநில மன்னனைச் சக்கரவர்த்திகளுடன் அரியாசனத்தில் அமர்த்திப் புகழந்ததைத்தான் சகிக்க முடியவில்லை எனச் சாற்றுகின்ற தீரனின் கூற்றுத் தீவா)யை அஸ்ரப்கானின் பதிற்புண்லே அணைக்கட்டும் அல்லது அடைக்கட்டும்.
கானை. கனதி மிகுந்த கவிஞர்களின் வரிசையிலே பட்டியலிடக் காரணம் எனக்குத் தோன்றுமாப் போல
"Some times his greasy hands would have touched the palm of "Vaanam Paadi" in order to archive such a high standard dignity in his literary works"
இந்த அணுகுமுறை இப்போது இல்லாத இடமே
இல்லை அல்லவா?
1 நீங்களும் எழுதலாம் (மார்ச் - ஏப்ரல் 2009)

பாரதி - ஒரு சர்ச்சை
பாரதியின் குழப்பங்கள், முரண்பாடுகள்
க.சி.அகமுடைநம்பி
சென்ற இதழ் தொடர்ச்சி உள் ளத் தால் பொய் யாகாது ஒழுகியவன் மகாகவி பாரதி. சொல் ஒன்று செயல்வேறு என்று வாழ்ந்தவன் அல்லன். ஆனால் அவனிடம் சில குழப் பங்கள் . முரண் பாடுகள் . தடுமாற்றங்களைக் காண்கிறோம்.
ஆரியம் என்ற கருத்தாக்கம்
இந்திய தேசத்து மக்கள் அனைவரையும் பாரதி ஆரிய இனமாகக் கொள்கிறான் அவர்களின் உயர்வையும், வேத உபநிடதங்களின் சிறப்பையும் இந்து மதத்தின் மேன்மையையும் பலபடப் புகழ்ந்து போற்றுகிறான். "நாம் பாரத புத்திரர்கள் ஆரியர்கள், ஹிந்துக்களும் மஹமதியார்களும் கலந்த மஹா ஜாதி நம்மில் இந்து தர்மம் என்று வழங்கப்படும் ஸனாதன தர்மத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பகுதியர். ஒரு சிறுபகுதி மகமதியார் ஆவர். இவர்களும் மதக்கொள்கை மட்டில் அரபி தேசத்தில் பிறந்த மஹமதின் மார்க்கத்தை அனுசரிப்பவர்களாயினும் ஜாதியில் நம்மவர்களே” என்றெழுதுகிறான் பாரதி இத்துடன் நில்லாமல், இந்தியாவிலுள்ள அனைத்துப் படைப்புகளும் "ஆரிய சம்பத்து" என்று உரிமை கொண்டாடிப் பெருமிதம் கொள்கிறான்.
ரேமிலா தாப்பர் என்ற அறிஞர் கூறுகிறார் ”ஆய்வாளர் களின் கருத் துக் களைச் சேர்த்துப்பார்த்தால் ஆரிய இனம் என்றோர் இனம் தனியாகத் தோன்றியிருந்ததா. இல்லை அது தொடர்புடைய ஒரே மாதிரியான மொழிகளைப் பேசும் மக்களின் தொகுப்பா என்றே ஐயமாக இருக்கிறது" என்றார்.
இது ஒரு புறம் இருக்க சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய ஆசியாவிலிருந்து
23 நீங்களும் எழுதலாம் 11 மார்ச் - ஏப்ரல் 2009)

Page 13
ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்து குடியேறினார்கள் என்றும் அதற்கு முன்பாக இந்தியா முழுவதிலும் தமிழர்களே வாழ்ந்து வந்தார்கள் என்றும் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் போன்ற மொழியியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரிக்குத் தெற்கே குமரிக்கண்டம் அல்லது இலெமூரியாக் கண்டம் என்ற பெயரில் இருந்து வந்த ஒரு பெரும் நிலப்பரப்பு சுனாமி போன்ற இயற்கை நிகழ்வுகளால் கடலில் மூழ்கிவிட்டதென்றும். அந்த நிலப்பரப்பில் தான் உலகின் முதல் மனிதக் கூட்டம் தோன்றியது என்றும் அவர்கள் தமிழர்களே என்றும், அந்த நிலப்பரப்பு பகுதி பகுதியாகக் கடலில் மூழ்கிய போது தமிழ் மக்கள் அங்கிருந்த இன்றைய இந்தியத் துணைக்கண்டத்திலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வாழத் தலைப்பட்டனர் என்றும் அண்மைக் காலமாக பல்வேறு அறிவியல், மொழியியல் அறிஞர்கள் முன்மொழியத் தொடங்கியுள்ளனர். முறையான கடல் அகழ்வாய்வுகள் மூலம் இதன் மெய்ம்மை நிலை கண்டறியப்பட வேண்டும். இதில் இந்திய அரசு சிறிதும் அக்கறையின்றி இருந்து வருவது வியப்புக்குரியது.
இந்தச் செய்திகளெல்லாம் பாரதி அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் எந்த ஓர் அறிவியல் அடிப்படையும் இல்லாமல் இந்தியா முழுமையும் ஆரிய சம்பத்து என்று அவன் கூற முற்பட்டதை அவனுடைய அறியாத்தனம் என்பதா, ஆரியத்தின் மீது அவனுக்கிருந்த அதி மிகு ஆர்வத்தின் (Over enthusiasm) வெளிப்பாடு என்பதா?
இவ்விதச் சறுக்கல், மொழியைப் பொறுத்தும் பாரதிக்கு ஏற்படுகிறது தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடிய அதே பாரதி, சமஸ்கிருதத்தை தேவபாஷையாக உயர்த்திப் பிடிக்கிறான். தமிழ் மொழியின் தோற்றம், வளர்ச்சி பற்றிப் பாடும்போது
ஆதிசிவன் பெற்றுவிட்டான் - என்னை ஆரிய மைந்தன் அகத்திய னென்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான் என்று உண்மையுடன் சிறிதும் பொருந்தாத கற்பனைப் புனைவை ஓர் வரலாற்று உண்மையைப் போல் கூறத் துணிகிறான். நீங்களும் எழுதலாம் iமார்ச் - ஏப்ரல் 2009)

பாரதியின் தமிழ்த்தாய் பாடல்களில் ஒன்று:
மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை மூண்டநல்லன்பொடுநித்தம் வளர்த்தார் ஆன்ற மொழிகளினுள்ளே - "உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்."
என்ற பாடலில் "உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்” என்ற வரி உணர்த்தும் பொருள் யாது?
மிகுதி அடுத்த இதழில் நன்றி உயிர் எழுத்து (இந்தியா)
(உங்கள் கருத்தாடலை எதிர்பார்க்கின்றோம்)
வலிகள் வலியின் போது வலிக்காமல் பிறந்ததினால் வழியெங்கும்
வலிகளின் வலிமை விழிகளின் மொழியை அழித்து விட்டது
விழுத்தெழுெம்பும்
தடவைகளெல்லாம் கொழுந்து விட்டெரியும் தீக்குள் தள்ளி விடப்படுகின்றேன் இரத்தக்கண்ணி வடிக்கும் பொழுதுகளில் எனதான பிரார்த்தனைகள் தொடர்ந்தபடி
ஏறிச் சென்று. வாரியெடுக்க விருப்பங்களில் விரைதல் கொடுப்புத்தேள் கொட்டி உயிரணுக்கள் சலனமற்றுப் போகின்றன மறுகணம்
தலையெழுத்தான
நிலையான நிஷ்டுரத்தால்
துளையிடப்பட்ட மனசின்
ரணங்கள்
அறைந்து வீழ்த்தும்
ஊழ் வினைக்குள்
பந்தாக உருட்டப்படுகிறேன்.
எம்.எஸ்.பாஹிரா - பதுளை
25 நீங்களும் எழுதலாம் 11 மார்ச் - ஏப்ரல் 2009)

Page 14
திராட்சை ரசம் (ஹைக்கூ கவிதைகள்) உ.நிசார் மாவனல்ல
“மூங்கிலொன்று
சூடுவாங்குகிறது
புல்லாங்குழல்”
போன்ற சிந்திக்கவைக்கும் ஹைக்கூ கவிதைகள்
கொண்டுள்ளது. திராட்சை ரசம்
கலாநிதி துரை மனோகரன் .பெரும்பாலம் ஹைக்கூ வின் உள்ளார்ந்த இயல்பை விளங்கிக்கொள்ளாமல் மூன்று வரிக்கவிதைகளை ஹைக்கூ என்று தவறான விளக்கத்தைக் கவிஞர்கள் கொண்டுள்ளனர்.
”கவிஞனுக்கு இருக்கவேணி டிய சொற்செட்டு, கருத்தாழம் சமூகநோக்கு சமூக விமர்சனம் போன்றவை இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள கவிதைகளில் படிந்துள்ளன. அழகான ஒவியங்களும் இணைந்து கவிதைகளுக்கு மேலும் மெருகேற்றுகின்றன. காலப்போக்கில் ஹைக்கூவின் கவிதை வளம் கவிஞர்.உ.நிசாரின் கைகளுக்கு ஒத் திசைந்து வரும் என எதிர்பார்க்கலாம்."என அணிந்துரையில் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. தொடர்பு 70/3.புதிய கண்டி வீதி, மாவனல்ல ബിഞൺ : 125,00 மெளனமே வாழ்வாக (கவிதைத் தொகுப்பு) க.சுதர்சன் "நான் சேற்றினருகே நின்றாலும் செந்தாமரை மலராதா கிழக்கில் ஒரு ஒளி சுடராதா என காத்திருக்கிறேன்.” தொகுப்பில் இடம்பெற்ற கவிதையொன்றின் வரிகள் இவை. க.பொ.த.உயர்தரப் பரீட்சை எழுதிய கையோடு வெளியிட்டிருக்கும் இந்நூலில் குறுங்கவிதைகள் உள்ளடங்கலாக மொத்தம் 22 கவிதைகள் உள்ளன.
"இளம் பராயத்தவராய் இருப்பினும் சுதர்சனின் இள நெஞ்சில் சமூக அநீதிகள், அடக்கு முறைகள். இழி நிலைகள் தொடர்பில் ஆவேச உணர்வு மேலோங்கி நிற்பதும் வாசகர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் கையாளப்பட்டிருப்பதும் அவரின் அசாதாரண ஆளுகைக்கு ஆதாரமாகின்றன.” என யாழ் பல்கழைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.சுந்தரேசன் குறிப்பிடுவது அவதானிக்கத்தக்கது
தொடர்பு: அம்பிகை வாசம் பிராமன தெரு, தும்பளை மேற்கு. விலை 100.00
6 நீங்களும் எழுதலாம் 11 மார்ச் - ஏப்ரல் 2009)

சஞ்சிகை - பெருவெளி (காலாண்டிதழ்)
”.முஸ்லிம் சிவில் சமூகம் வழ° த துக கொ ள ஞ ம நிலையிலும் இல்லை. விரிந்த தளத் தில் உறுதியான வரலாறுகளுடனோ தர்க்க நியாயங்களுடனோ முஸ்லிம் சமூகத் தனி இருப்பியல் பலத்தினை விளக்குவதற்கான அறிவும் நெஞ்சுரமும் இல்லாத அரசியல்வாதிகளைத் தான் முஸ்லிம் சமூகம் தலையில் வைத்து ஆடுகறது என்பது வெளிப்படையாகி வெகுநாட்களாகி விட்டது."என்று முடிகிறது ஆசிரியர் உரை காத்திரமான பல விடயங்களைத் தாங்கி வெளிவந்திருக்கிறது பெருவெளி.
விலை - 120.00 தொடர்பு - பெருவெளி இல, 31/C உபதபாலக வீதி, பதுர்நகர், அக்கரைப்பற்று -01
C நமது இதழ்களில் சில Ο
சஞ்சிகை - செங்கதிர்
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ' வெளிவந் திருக்கும் மார்ச் மாத இதழில் ஆண் ஆதிக்கத்திற்கு எதிராகவும் பெண் ஒடுக குமுறை க கு எ த° ரா ன து மா ன செயற பாடுகளை ஆணி ଦିଗ J କ୍ଷେତ୍ରୀ . GO இ ரு ப ஈ ல | ரு ம
இ  ைண ந து மேற்கொள்ளவேண்டும். என ஆசிரியர் தன் உரையில் குறிப்பிடுகிறார்.
“இலட்சியமில்லாமல் இலக்கியம் இல்லை" என
பிரகடனப்படுத்திக்கொண்டு மாதாமாதம் கிரணங்களைப்
பரப்பிக் கொண்டிருக்கிறது செங்கதிர்.
விலை - 50.00
தொடர்பு : த.கோபாலகிருஷ்ணன்
ஆசிரியர் - செங்கதிர் இல, 19 மேல்மாடித்தெரு மட்டக்களப்பு
7 מ நீங்களும் எழுதலாம் 11 மார்ச் - ஏப்ரல 2009)

Page 15
திறந்தே கிடக்கும் கதவுகள்!
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் எங்கிருந்தோ எழுந்து வருகிறது அசரீரி வாக்கொன்று
இழப்பதற்கு ஏதுமற்ற உழைத்தே உருக்குலைந்து போன எங்கள் இதயங்களில் ஒரு புதியதென்பு
நம்பிக்கையடன் சென்ற நாம் மூடிய கதவுகளை முடிந்தவரை தட்டினோம் தட்டப்பட்ட கதவுகளோ மேலும் இறுக மூடிக்கொள்ள தட்டிய எமது கைகள் தட்டி முறிக்கப்பட்டன
கேட்டால் நிச்சயம் கிடைக்கலாமென்ற நப்பாசையில் கெஞ்சாத குறையாக யாசித்தும் பார்த்தோம் கேட்க அசைந்த எமது உதடுகள் தான் கிழித்தெறியப்பட்டன அவர்களால் இரத்தம் சொட்டச் சொட்ட!
தூக்கி எறியவரும் மதயானை முன்னாலே துதிபாடி நிற்கவோ தாக்கவரும் குளுவனிடம் தயவுதாட்சணியம் பார்ப்பதோ பிரயோகிக்க முடியாத கணிதவாய்ப்பாடு
முடிவில் எமது மூச்சுக்காற்று ஒரு எரிமலையாகி வெடித்துச் சிவக்க அந்த அசரீரி வாக்கும் எங்களுடன் இணைந்து கைகோர்த்து.
28 நீங்களும் எழுதலாம் 11(மார்ச் - ஏப்ரல் 2009)

இறுக்க மூடிய கதவுகளை எட்டி உதைத்தன கால்கள் ஒரு உருக்குத்துணின் உத்வேகத்தில். கதவுகளோ திறக்கப்படவில்லை தகள்ந்து தலைசாய்ந்தன தரையில்
கேட்டதற்கு மேலாகவே கேட்கப்படாமலேயே எம்மால் வேண்டியவையெல்லாம் வென்றெடுக்கப்பட இப்போதெல்லாம். எல்லோர்க்கும் எல்லாமாகி இல்லாமை இல்லாதாகி தட்டாமல் என்றும் கதவுகள் திறந்தே கிடக்கின்றன.
ஷெல்லிதாசன் தெருக்குரல் மீண்டும் உன்னையே மணப்பேனென்று
வேண்டுவார்
உண்டோ எங்கும் சொல்லும். 冰冰冰冰本冰水冰冰冰冰冰
அடுத்தவர்க்கு துன்பம் கொடுப்பார்க்கு நிம்மதி இடுகாடு போனாலும் வரா. 冰冰冰冰冰本冰冰冰冰冰冰
பணத்தை கடன் வாங்கிக்கொண்டே
இருப்போனின் மானம் தான் போகும் மண்ணில் 冰冰冰冰水本冰冰冰冰冰冰
நயந்து இல்லால் தரும் சுகமே சலிக்கும்போது பயந்து அயலாள் சுகம் நயக்குமா 冰冰冰水冰冰冰冰冰冰冰米
தூரத்தே பார்த்தால் பால்நிலா மிதித்தால் வரண்டே போன பாழ் நிலம். 冰冰冰冰冰冰冰冰冰冰冰冰
வீட்டைக்கட்டி ஆடம்பரத்தைக்காட்டி
ஆனந்தித்திருப்பதாய் நாட்டை நம்பப்பண்ணுவாள் வீனர். 冰冰冰冰冰冰冰冰冰冰冰冰
அழகோவியத்தில் சிலந்திக் கூடுபோல்
கவலைகள் ஆளைத் தின்று விடும். 冰冰冰冰冰本本冰冰冰冰冰 மறதியெனப் புலம்புவார் பிறர்புரிந்த தீமைகளை மறவாமற் காப்பது எங்ங்ணம்.
-சூசை எட்வேட்-அன்புவழிபுரம்
29 நீங்களும் எழுதலாம் 11 மார்ச் - ஏப்ரல் 2009)

Page 16
எங்களுரிலும் இருந்தது ஒரு குளம் தாம ரைகள் பூத்த குளம் தண்ணி ரும் நிறைந்த குளம் மாம ரங்கள் சூழ்ந்து நிற்க மன தெல்லாம் கவர்ந்த குளம்
மழை பெய்ய நிறைந்த குளம் வடி கால்கள் இருந்த குளம் அலை யெழுந்து சல சலக்க ஆர்ப் பாட்டம் செய்த குளம்
நிரை நிரையாய் மீ னோட நீர்த் துளிகள் துள்ளி எழ இரை பிடிக்கக் கொக்கு களும் இங் கங்கே நின்ற குளம்
வணி தையர் வந்திறங்கி வனப் பாக அமர்ந் தங்கு துணி துவைக்கும் போதி னிலே துரை தொட்டு மகிழ்ந்த குளம்
பறவை களை விலங்கு களை பாதை யிலே போ வோரை உறவாகக் கொண்டதனால் உயிர் கொண்டு இருந்த குளம்
நிலை கொண்ட மரமெல்லாம் நிழல் கொடுத்து நின் றதனால் வலை வீசி மீன் பிடிக்க 6)6T LDTab g(bibgb (g56TLi
அரை குறை உடை யணிந்த ஆண்களையும் பெண்க ளையும் கரை யோரப் பற்றை களால் திரை கட்டி மறைத்த குளம்
பல் லாண்டு இருந்த குளம் பாங் காக இருந்த குளம்
பொல் லாத மனிதர் களால் போக் கற்றுப் போன குளம்
மீன் கொக்கு இன் றில்லை மீத மாக ஒன்று மில்லை ஏன் இந்த அநியாயம் என்று கேட்க யாரு மில்லை
30 நீங்களும் எழுதலாம் 11 மார்ச் - ஏப்ரல் 2009)

என்னை யன்று கவர்ந்த குளம் ஏற்ற முடன் இருந்த குளம் இன்று எனது கண்ணிரண்டும் ஏக்கத் துடன் நனைக்கும் குளம்
உ.நிசார் - மாவனல்ல
*நீங்களும் எழுதலாம் - இஞ்மாத கவிதை இதழி
J'ai rasar » – 3 airesus-sur-, que » aur2 »=l Cusavaro. F:தத ae na aayaw lind a. awasasaas na i arra வேர்ல் எவ ஒனர തr i am nilk or , (figris (്ക് ബ്ഞക இதழ்
'്യ്ര ഭെ',
بیمههای سه به ۶ تا ۲ قوه
's Editor
13 frumul Street TR-Flokite
S闵 LA淘K点
ര രസ്ക മൃശ്ശൂ தொடர்புகளுக்கு:
又」。 廷%捧
27. Rue Jean Moulin ፶Gኒ Wዘ፱ M”፥ 92400 Courbswoje
நிறுவனர் : கலைச்செல்வன்
இணையத்தில் உறிதிழல் தொகுப்பாசிரியர்தர் Www.uyirnizhal. con
ఖజానీ s.rast
ఉళుళpg్మ ఊగేఓజోit: trugL ష్కోగా . 15 శాuras last (*தேதிகள் தபாற் செலவு உட்பட
*aerregistrarent pe rasaacator: *3o232c.
* நீங்களும் எழுதலாம்" - ருேமாத கவிதை இதழ்
பிறர் ஈனநிலை கணிடு துள்ளுமி ஆயுதமாக, பேசாப் பொருளைப் பேசுவதாக, விரிந்தபார்வை கொணிடதாக, கவிதைகள் வளமி கொள்ள வேனிருமி என்கினிற Upada ujunas Radioasunas seogg Gaafagasatp ருேமாதக் கவிதை தேழி நீங்களும் எழுதலாம்"
'patg5. – Pufut épsé (Lignataó)
படைப்புக்களில் வரும் கருத்துக்களுக்கு படைப்பாளிகளே பொறுப்பாளிகள். படைப்பினை செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை உண்டு.
3
நீங்களும் எழுதலாம் 11 மார்ச் - ஏப்ரல் 2009)

Page 17
IEC யில் நீங்களும் எழுதலாம்
இலண்டனில் இருந்து இயங்கும் ஐ.பீ.சீ. அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சர்வதேச ஒலிபரப்பில் 5.5.2002 முதல் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் பிரித்தானிய நேரம் காலை 07:00 முதல் 1000 வரை ஒலிபரப்பப்படும் “காலைக்கலசம்" நிகழ்ச்சியில், "இலக்கியத் தகவல் திரட்டு" என்ற பகுதி காலை 7.15 முதல் 800மணி வரை சுமார் 15-20 நிமிடங்கள் ஒலிபரப்பாகின்றது. (இதனை ibctamil.co.uk என்ற இணையத் தளத் தரிலும் நேரடியாகச் செவிமடுக் கலாம் ) நுT லகவியலாளர் என்.செல்வராஜா அவர்களால் தொகுத்து வழங்கப்படும் இந்த வாராந்த நிகழ்ச்சியின் எழுத்துப் பிரதி இதுவாகும்.
ஒலியலை: 29.03.2009 புகலிடத்தின் கவிதைப் பிரியர்களுக்கு விருப்பமான நற் செய்தயொன் றினை இன்றைய காலைக் கலசத் தி ல அடுத்ததாகப் பகிர்ந்துகொள்கின்றேன். நீங்களும் எழுதலாம் என்ற தலைப்பில் கவிதை இதழ் ஒன்று கடந்த 2007ம் ஆண்டிலிருந்து திருக்கோணமலை மண்ணிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.ஆர்.தனபாலசிங்கம் அவர்கள் வெளியிடும் இச்சஞ்சிகை இருமாதக் கவிதையிதழாகும். தமிழகத்திலிருந்து கவிதைக்கென்றே ஏராளமான இதழ் கள் இதுவரை மலர் நீ து மணம்பரப்பிவந்துள்ளன. பாவேந்தர் பாரதிதாசனின் குயில், கவியரசு கண்ணதாசன் நடத்திய தென்றல் என்பன குறிப்பிடத்தக்கவை. இவை பின்னாளில் ஈழத்தமிழரிடமும் கவிதைக்கான தனித்துவமான இதழ்களை மலர்விக்கும் எண்ணத்தை வளர்த்தன. கவிஞன், நோக்கு, அக்னி, விடிவெள்ளி, பூபாளம். வகவம், கவிதை, யாத்ரா, மற்றும் புகலிடத்தில் ஜேர்மனியில் கலைவிளக்கு எனத் தொடர்ந்தன கவிதை இதழ்கள். அவ்வகையில் இன்றைய நீங்களும் எழுதலாம் என்ற கவிதை இலக்கியச் சிற்றிதழையும் சேர்த்துக்கொள்ளலாம். என்றுமே கண்டிராத பணவீக்கத்தாலும் அரசியல் நெருக்கடிகளாலும் சூழப்பட்டு இலங்கை திண்டாடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், போர் மேகம் சூழ்ந்ததும், அரசியல் களேபரங்களுக்கு மத்தியில் அல்லல் படுவதுமான சமகாலத்துக் கிழக்கிலங்கையிலிருந்து இலக்கிய தாகத்துடன்
3.
நீங்களும் எழுதலாம் 11 மார்ச் - ஏப்ரல் 2009)

ஒரு சஞ்சிகை பிடிவாதமாகத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டில் பயணித்து வருகின்றது என்பதே ஆச்சரியத்துக்குரிய விடயமாகின்றது. பயில் களம், பரிசோதனைக் களம் , காத்திரத்தின் களம், கருத்தாடற் களம், விளக்கக் களம், விமர்சனக் களம் என கவிதை சம்பந்தமான பல களங்களை ஏற்படுத்தி, கவிதையரின் of op 86 Lü Ju u 605 u T . Lọ 60) 607 உச்சப்படுத்தும் ஆரோக்கியமான நல்ல நோக்கத்துடன் வெளிவரும் நீங்களும் எழுதலாம் கவிதையிதழின் ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் பாராட்டுக்குரியவர். கார்த்திகை-மார்கழி 2008ம் ஆண்டுக்குரியதும் , தை-மாசி 2009 ம் ஆண்டுக்குரியதுமான இரண்டு இதழ்கள் தற்போது வெளிவந்த நிலையில் தன் கவித்துறைப் பாதையில் துணிச்சலுடன் பயணிக்கிறது நீங்களும் எழுதலாம்.கவித்துறைப் பாதையில் துணிச்சலுடன் பயணிக்கிறது நீங்களும் எழுதலாம். வானம்பாடியின் கவிதை என்பது ஒரு சிக்கலான பின்னமல்ல என்ற கட்டுரை. மேமன்கவியின் மல்லிகையில் முன்னதாக அறிமுகமானகவிதைக்கான ஒரு சிறுசஞ்சிகை என்ற அறிமுகக் கட்டுரை, மாரிமுத்து சிவகுமாரனின் மலைச்சுவடுகள் கவிதை நூல் பற்றிய விமர்சனம், என் பன மார் கழி 2008 இதழில் பரவித்தெளித்திருக்கும் கவிதைகளுக்கிடையில் காணப்பட்ட சில குறுங்கட்டுரைகளாகும். தைமாசி இதழிலும் , ஏராளமான அறிமுகக் கவிஞர்களின் நறுக்குத் தெறிக்கும் மரபுக் கவிதை, மற்றும் புதுக்கவிதை வரிகளுக்கிடையில் சில குறுங் கட்டுரைகளும் கவிதை அறிவை வளர்க்கத் துணைசெய்கின்றன. பாரதியின் குழப்பங்கள். முரண்பாடுகள் என்ற தலைப்பில் க.சி.அகமுடை நம்பியின் கட்டுரை சிந்தனைக்குரியது. இளம் படைப்பிலக்கியவாதிகளும், அனுபவம் மிக்க இலக்கியவாதிகளும் தத்தமது இலக்கியத் தரத்திற்கு அப்பால் நின்று நீங்களும் எழுதலாம் என்ற இதழில் - கவிதை யாத்தல் என்ற ஒரு தனித்துவமான இலக்கியத்தால் மட்டும் இங்கு ஒன்றுசேர்கிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான இலக்கியச் சூழலை அங்கு நிச்சயம் உருவாக்கும் என்று நம்பமுடிகின்றது.
33 நீங்களும் எழுதலாம் 11 மார்ச் - ஏப்ரல் 2009)

Page 18
இலங்கை ரூபாவில் 25 ரூபாயாக விலை குறிப்பிடப்பட்டுள்ள இவ்விதழில் உங்கள் ஆக்கங்களையும் பதிவுசெய்து, தாயகத்தின் தமிழ் இலக்கியவாதிகளுக்கு உங்கள் இருப்பினையும், விருப்பினையும் எடுத்துச்செல்ல ஏற்ற நல்லதொரு வாய்ப்பாக இக்கவிதையிதழை பார்க்கமுடிகின்றது. இவ்விதழின் பிரதிகளைப் பெறவோ, ஆக்கங்களை வழங்கிடவோ விரும்பும் கவிதைப்பிரியர்கள், எஸ். ஆர்.தனபாலசிங்கம், 103/1 திருமால் வீதி, திருக்கோணமலை என்ற முகவரிக்கு கடிதமூலம் தொடர்பு கொள்ளவும். தொலைபேசியில் தொடர்புகொள்ள விரும்புவோர். 0094 26 222 0398 என்ற தொலைபேசி இலக்கத்தில் ஆசிரியருடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
விரைவில் இரண்டனில் ஈழத்து தமிழ் நூற் கண்காட்சி - 2009
ஈழத்து. புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்து வடிவங்கள் காட்சியில் இடம்பெறும். அரசியல், அழகியல்,ஆன்மீகம், இதிகாசம், இசையியல், சமயம், வரலாறு, ஓவியம், ஒலைச்சுவடிகள், நாவல், நாடகம், சிறுகதை, சிறுவர் இலக்கியம், கவிதை, திரைப்படப் பிரதி, தொல்லியல், நூலகவியல், போராட்டப்பதிவுகள், சிறு சஞ்சிகை, 6)fì6ìi 3 fI uu lô . புவியியல் , சோதிடம் , மொழிபெயர்ப்பு.என விரியும் ஈழத்து நூல்களின் கண்காட்சி.
உங்கள் படைப்புகளுடன் படித்து முடித்த நூல்களும் ஈழத்து எழுத்தாளர்களின் ஒலி, ஒளி இழை நாடாக்களும் அனுப்பலாம். அனைத்து எழுத்தாளர்களின் பழைய புதிய படைப்புக்களையும் அமரத்துவமான படைப்பாளிகளின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களையும் அனுப்புங்கள்.
இந்தக் கண்காட்சிக்கு தங்களால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு R.Mahendran (y6ö60)60 SI(up56öt)
34 RED RIFFE ROAD PLAISTOW.LONDONE 3 OJX El 3 OJXTEL :0044-208 5867783 Email: mullaiamuthan 03/a hotmail.co.uk
34 நீங்களும் எழுதலாம் 11(மார்ச் - ஏப்ரல் 2009)

இலக்கியப்பூக்கள் ஆசிரியர் - முல்லைஅமுதன்
கா றி று வெளி வெளி ய° டா க வெளிவந்திருக்கும் இ ந நுT ல ல ஆசிரியர் தன் 9.60juງົ69 ”இரு ட் ட டிப் பு புற க கணிப் பு இன்னோரன்ன பிற சங்கடங்களினால் இந்நூலைக் காலந் தா ழி த த யே வெளியிடமுடிந்தது. எதிர்பார்த்த கட்டுரைகள் பாகுபாடின்றிக் கிடைக்க வாசல் திறந்திருந்தோம். அதுவும் தாமதமாயிற்று எனினும் பாகம் இரண்டில் அவர்களின் கட்டுரைகள் வரும் என்கிற நம்பிக்கையுடன் பாகம் ஒன்று வெளிவருகிறது". என்று குறிப்பிடுகிறார்.
44 இலக்கியவாதிகளை ஆவணப்படுத்தியுள்ளமை மெச்சத்தக்க பெருமைப்படத்தக்க விடயமாகும்.
இந்திய விலை: 200/- இலங்கையில் கிடைக்குமிடம்: சேமமடு பொத்தகசாலை, கொழும்பு - 11
அ.ந.க. @@ சகாப்தம் ஆசிரியர் அந்தணி ஜீவா மறுமலர்ச்சிக் கால எழுத்தாளரான அ.ந. க ந' த சா ம  ைய ஆவணப் படுத் தும் நோக்கில் அவர் பற்றிய குறிப்பு க்களுடன் அவரது Lu 600 L L L &5 &b, 6ff ச° ல வ ற  ைற யு ம உள்ளடக்கி நூலை வெளியிட்டிருக்கிறார் ஆசிரியர். அ.ந.க. வின் படைப்புக்கள் எதுவும் ஒரு தொகுப்பாக வராத ஒரு நிலையில் இது நல்லதோர் முயற்சி எனலாம்.
தொடர்பு : மலையக வெளியீட்டகம், த.பெ.எண் : 32, கண்டி, விலை ; 100/-
•م
நீங்களும் எழுதலாம் 11
f
மார்ச் - ஏப்ரல் 2009)

Page 19
அலங்கோலமாய்
விடுதலை வாசல் துகிலுரிந்து வரவேற்கிறது
ஒவ்வொரு உபசரிப்பும் உடல் புகுந்து துழாவியெடுக்கிறது தன் மானத்தை
ஒப்பாரி ஒலம் உலுப்பிவிட்டதான பாவனையில் வரங்கொடுக்க சந்நிதிகளை விட்டு சந்திக்கு வந்திருக்கின்றன சில சாமிகள்
பூசாரிகள் பூக்களைச் சொரிந்து கொண்டு
Ģ6{bĢ eļņ65? ஆருடம் சொல்கிறாள்கள்
ஏதோ பார்த்து நாலுவார்த்தை அளந்து விட்டுப்போனால் கூட அந்தச்சாமிகள்
அந்தஸ்தில் உயர்ந்து விடலாம் என எண்ணுகின்றன.
துடுப்பில்லாப் படகுகளும் கரைசேர்வதுண்டு நல்லது நடக்க நல்லோர் நினைப்பதுண்டு
கண்ணை மூடுகின்ற ஒவ்வொரு நொடியிலும் தன் மானத்தை இழந்து. இழந்து. குறுகிப் போகிற மனிதர்களின் அந்தப் பொழுதுகளில் நானும் கரைந்து போகிறேன்.
-எஸ்.ஆர். தனபாலசிங்கம்
36 நீங்களும் எழுதலாம் 11(மார்ச் - ஏப்ரல் 2009)

வாசகர் கடிதம்
சக்தி பால - ஐயா
தங்களது கடிதமும் ஆண்டு மலரும் கிடைத்தன. 30.10.2008 இல் எழுதியுள்ளிகள் மாதங்கள் ஐந்தின் பின் இந்தப்பதில், எழுதத்தொடங்கும் போதெல்லாம் தடைகள் குவிந்தன. தமிழ் இனம் படும் கொடுமைகளை எண்ணுவதாலுள்ள துக்கமும் தான். ஒருவாறு பதில் எழுத இன்றுதான் முடிந்துள்ளது.
மலையகத்தில் வாழும் எமது தமிழ் மக்களின் துன்ப வாழ்வை சித்தரிக்கும் சி.வி.யின்ஆங்கிலப் பாக்களில் நான் தமிழாக்கம் செய்த ஒருபாகம் தங்களின் கவிதை நூல் ஆண்டு மலர் பின்புற அட்டையில் இருப்பதைக் கூர்ந்தேன். திறன் வியந்தேன்.
தங்களின் முயற்சி மேன்மேலும் சிறந்து விளங்கிட எனது நல்லாசிகள்.
கலா விஸ்வநாதன்
10 இதழ்கள் பாரிய சாதனை கவிதைக்கான சஞ்சிகை, திருக்குறளின் வரிவடிவ எளிமையாக திரும்பும் பக்கங்களில் புதுக்குறளின் வரவாக புதுக்குரலாக உரத்து ஒலிக்கட்டும். நிறுத்தாது நீண்டநாள் நெடிய பயணம் தொடர இதயத்தின் இனிய வாழ்த்துக்கள். எழுதுவதை நிறுத்தியிருந்த என்போன்றவர்களை "நீங்களும் எழுதலாம்" என்று எழுப்பிவிட்டமைக்கு நன்றி.
ஜின்னாஹற் ஷரிபுத்தின்
தங்களால் அனுப்பப்பெற்ற "நீங்களும் எழுதலாம்" சஞ்சிகைகள் கிடைத் தன. நல்ல முயற்சி தொடருங்கள், வெண்பாவுக்கும். கட்டளைக் கலித்துறைக்கும், ஏன் எண்சீர் விருத்தத்துக்கும் ஏற்காத உருவம் ஆதனிலாலென்ன நவீன கவிதைக்கு நன்கு பொருந்துவது. நல்ல கருத்துக்கள் நவீனத்தில் நலம் பெறட்டும். சந்தர்ப்பம் அளித்துக் கை துக்கிவிடுங்கள்.
எல்லாமே கவிதையல் ல இனங் கண் டு அரங்கேற்றுங்கள் வாழ்த்துக்கள்.
37 நீங்களும் எழுதலாம் 11 மார்ச் - ஏப்ரல் 2009)

Page 20
தில்லையடிச் செல்வன். உடப்பு
தாங்கள் அனுப்பிய “நீங்களும் எழுதலாம்” கிடைத்தது. நன்றி. ஏற்கனவே நண்பர் திக்க வயல்தர்மு நீங்களும் எழுதலாம் உட்பட பல சஞ்சிகைகளை அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறார். பத்திரிகை அறிமுகம் கண்டு ஏராளமான பழைய எழுத்தாளர்களும், புதிய எழுத்தாளர்களும் நினைவுகளை மீட்டி எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்திலிருந்து வெளிவந்த வானம்பாடி விடியல் போன்ற கவி சஞ்சிகைகள் விமர்சனங்கள் என்பவற்றையும் வெளியிட்டு கவிதையினை ஆரோக்கியமான திசைக்கு வழிகாட்டினர். அதுபோன்று தாங்களும் முயல் வது வரவேற்கத்தக்கது.
தொடரட்டும் உங்கள் பணி
நாளைய விடிவிற் காய் இன்றே ஆகுதியாகும் ஆத்மாக்கள் சோலையாகும் வரலாற்றின் தோற்றுவாய் ஆவார் நிச்சயம்!
ஆராலியூர் ந.சுந்தரம்பிள்ளை உங்கள் கவிதை இதழ் சிறப்பாக இருக்கிறது. தொடர வாழ்த்துக்கள்.
ஜெயா தமிழினி
"நீங்களும் எழுதலாம்” இதழுக்கு இதழ் புதுமெருகுபெற்று வருகிறது. உருவிற் சிறிதெனினும் உள்ளடக்கம் பெரிதென இதழ் 10 இல் முப்பதுக்கும்
(3LD5 L. கவிதைப் படைப் புகளோடு கருத்தாடல் களையும் 6oft (33FL - DNE குறு விமர் சனத்தையும் (மாதுமையரின்
“ஒற்றைச் சிலம்பு" தாங்கி வந்திருக்கிறது. கவிதைகளுக்கு சிகரம் வைத் தாற் போல பேரா.சி.சிவசேகரத்தின் "தபாற்காரர்" எனும் மொழிபெயர்ப்புக் கவிதை அமைகிறது.
"பூமிக்கு இன்னமும் அதன் விளி பஸ் உள்ளான் எனினும் தனக்கென்ன வேண்டுமெனப் பாறை அறியாது” என்னும் வரிகள் இடையில் அகப்பட்டு அல்லலுறும் அப்பாவி மக்களைச் சித்தரிக்கிறது.
தடைகளைத் தகர்த்து தகவுகளைத் தேடி நடைபயிலட்டும் வாழ்த்துக்கள்.
38 நீங்களும் எழுதலாம் 11(மார்ச் - ஏப்ரல் 2009)

மூலமும் பெயர்ப்பும்
செத்த பாம்பு
கறுத்த மலைப்பாம்பாக செத்துக் கிடக்கிறது என் தெரு
ஆவணி வெய்யில் கொளுத்துகிறது ஒரே அமைதி இலை கூட அசையவில்லை செத்துக் கிடக்கிறது என் தெரு
அஞ்சலி செலுத்துவோர் அஞ்சி அஞ்சி
தூரநிற்க அஞ்சாறு படைவீரர் அணிவகுத்து மரியாதை செய்ய செத்துக் கிடக்கிறது என் தெரு
சோ.பத்மநாதன்
THEDEADROAD
The road is dead It lies Like a black snake In the August heat Quiet
No leaf stirs Afraid to peep People watch From a safe distance Soldiers in fatigues Guard the carcass My road is dead Killed In broad daylight
கணனி மயப்படுத்த உதவிய ஆர். 5lgóg5ur (Edgenet Cafe salooso) அவர்களுக்கும் அழகுற அச்சிட்டு உதவியர் அஸ்ரா பதிப்பகத்தினருக்கும் நன்றிகள்
39 நீங்களும் எழுதலாம் 11(மார்ச் - ஏப்ரல் 2009)

Page 21
World! Why do yo
World Why Ilo yIILI loLI Dially you? Really? N is L put Beäut in TT, L апd not my Understandi.
l häVECi inteesil MOT it gives left Testatisfact I Ful Wealth in ny Ltd. thām Irmy Underständing ii
A Pretty Face is sin gjr hDW. Can II value the daily CT the forget CTCWT of LL.
Frir its long its | ltul, itor 1 itis ELLIT LI LI IiiIIiiikel the Thäm 10 LITImake Tlly life W
5L i Gilli: GLE 고 La
ஆங்கிம்ே வழியாக தம கே.எனப் சிவகுமாரன்
வதைக்கிறாய
| L வேட்டையாடுகிறாய்" உனக்குத் தொந்தரவு த el_totability trill" எனது புரிதவில் அழை நான் வேண்டுகிறேன் அழகில் பின்து புரிதவை.
Jਸੁ எனக்கக்கறையில்லை :।। எனது புரிதலைச் செல்வ எனக்கதிக திருப்தியைத்
அழகிய வேதனம் விரள் காலத்தின் நாளாந்தக் ெ எவ்விதம் நான் மதிப்பிட
போவிச் சொகுசுக் கிரீட உடன்ேமேயை நான் தேடு பட்டுடன் கட்டிய எந்தன்
iLLE வாழ்கையின் பகட்டைக் சிறந்ததெனபான் நம்புகிே
ISSN 18)
 
 
 
 

LLP. D. H. Hi I 11e?
Lee His MVH || || || Illierstadig'? iբ in Beauty”:
| cy and 1% Lility: i
crstanding | Walt II
1է:
|titյլ լեյ Tirite: XLIry'
|TIth, | he - Wänities of Life: 1h ris.
| பிழில்
(BG), L'Ea)LLLITL | in Fլնե8լը 1
կենեսոլյլ
ருகிறேனா?
|L
T
விட் பாக்கிலும் நதில் கான்பதே
தருகிறது
ல் மறைந்திடும்
॥ Լբլglւլլին
=த்தை? חוurl=hiFT|
வாழ்க்கையை
|L நன்
- 33