கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூங்காவனம் 2010.08

Page 1


Page 2
with Best Compliments From...
TOP Q U E EN
Advertising
Digital Printing Art Work Sing Board Plastic Board Digital Name Board Screen Printing Visiting Card Rubber Stamp For All Vehicle All Wedding Decoration Digital Technology
AllWorls are Available with
Graphic Designing
Office - Branch - 126/1, Main Street, 20, Main Street, Kalmunai, Maligaikadu, Sri Lanka. Sri Lanka. Te - 077 9027514 Te-O67 3673489
O77 9593.559 O77 4531111
E-mail :- topdueen.adGigmail.Com
 

இதழ் 2
Best Queen Foundation வெளியீடு
பூங்காவனம்
இதழ் 02 ISSN 2012 - 6700
ஆசிரியர் குழு
ரிம்ஸா முஹம்மத் எச்.எப். ரிஸ்னா டப்ளியு.எம். வஸர் கிளியனூர் இஸ்மத்
ஆலோசகர்
திருமதி, ஜரீனா முஸ்தபா
வங்கித் தொடர்புகளுக்கு
Commercial Bank, Mount Lavinia Branch, Best Queen Foundation, A/C No: 893.0016177.
என்ற இலக்கத்திற்கு காசு, காசோலைகளை வைப்பிலிடுவோர் பற்றுச் சீட்டுக்களை எமக்கு அனுப்ப வேண்டும். காசுக் கட்டளைகளாயின் அதற்கான பற்றுச் சீட்டுக்களையும் எமக்கு அனுப்ப வேண்டும்.
தனிப்பிரதி - 80/ தபால் மூலம் - 100/- வெளிநாடு - 2.5S
தொர்புகளுக்கு
"Poongavanam" 21 E, Sri Dharmapala Road, Mount Lavinia,
Sri Lanka.
Email:- bestoqueen 12G)yahoo.Com
Website:- wbestoueen12.blogspot.com
Phone:a O094 (0) 77 5009 222
O094 (0)71 9200 580
புதிய ஆக்கங்களும், இச்சஞ்சிகை பற்றிய விமர்சனங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. நூல் விமர்சனத்துக்கு அனுப்புபவர்கள் நூலின் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும்.
-----------
படைபபுகளுககு
படைப்பாளிகளே பொறுப்பு.
செவ்வைப்படுத்த நிர்வாகக்குழுவுக்கு
உரிமையுண்டு.

Page 3
பூங்காவனம்
பூங்காவினுள்ளே
நேர்காணல்
திருமதி. ஐரீனா முஸ்தபா
கவிதைகள்
மன்னார் அமுதன் சந்திரகாந்தா முருகானந்தன் நல்லை அமிழ்தன் பதுளை பாஹிரா மூதூர் கலைமேகம் வெலிகம ஸிஹற்னா நவாம் வி. விஜயகாந்த் அ.பேனாட்
எஸ். மஞ்சுலா கே. ஜோன் 6T6b. 69)..L.T தர்காநகர் றம்ஸியா
சிறுகதைகள்
க.பரணிதரன் பவானி சிவகுமாரன் சுங்காவல் றியாழ் மாவனல்லை ரிஷான் ஷெரீப் முஹம்மட் அஸாம்
கவிஞர் ஏ. இக்பால் தம்புசிவா லெனின் மதிவானம் ச. முருகானந்தன் எஸ்.ஆர்.பாலசந்திரன்
விமர்சனம்
சிவாஜினி நிலாக்குயில்
வாசகர் கடிதம்
துலகப்பூங்கா
 
 
 
 

listension
திருமதி. ஐரீனா முஸ்தபா அவர்களுடனான ஒரு நேர்காணல்
சந்திப்பு : தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
“மனித நேயங்களையும், இணக்கங்களையும் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாது நமது வாழ்வில் ஐக்கியமாக்கிக்கொள்ள வேண்டும். அதன் மூலமாக மட்டுமே உண்மையான வெற்றியை அடைந்து கொள்ள முடியும்” என்கிறார் பூங்காவனம் அட்டைப்படத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் நாவலாசிரியையான திருமதி. ஜரீனா முஸ்தபா அவர்கள். அவரிடமிருந்து பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களை பூங்காவனம் வாசகர்களுக்காக தருகிறோம்.
உங்களைப்பற்றிய அறிமுகத்தை பூங்காவனம் வாசகர்களுக்காக கூறுங்கள்?
1985ம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்பட்ட ‘ஓர் முடிவில் ஓர் ஆரம்பம்' என்ற நாடகத்தின் மூலமாக இலக்கிய உலகில் காலடி எடுத்து வைத்தேன். அன்று தொடக்கம் இன்று வரையில் கிட்டத்தட்ட அறுநூறு ஆக்கங்கள் வரையில் (சிறுகதை, கவிதை, நாடகங்கள், கட்டுரைகள், நாவல்கள்) என எழுதியிருக்கிறேன். அது தவிர A to Z Fancy House & Communication g fool DuT6TCub Sj6IITsugupta, உள்ளேன். நான்கு பிள்ளைகளும் மூன்று பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
நீங்கள் இதுவரை இரண்டு நாவலி களை ; வெளியிட்டிருக்கிறீர்கள். அவற்றின் போது கிடைத்த * அனுபவம் எப்படி இருந்தது?
நில்ை எவ்வாறு இருக்கும் என வியந்து விட்டேன். இந்த நாவல் நான் எதிர்பார்த்திராத வெற்றியை ஈட்டித்தந்ததுடன் அதன் வரவேற்பு இரண்டாம் பதிப்பையும் வெளியிட வைத்தது.

Page 4
எனது இரண்டாவது வெளியீடு 'இது ஒரு ராட்சஷியின் ?"
கதை' என்ற நாவலாகும். இந்தியாவில் நடந்த சர்வதேச போட்டிக்காக நான் அதை எழுதிக்கொண்டிருக்கும் போது மிகக்கடுமையாக சுகயினமுற்றேன். அதனால் அது இடைநிறுத்தப்பட்டது. நான் வைத்தியமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது இது குறித்து இந்தியாவுக்கு அறிவிக்கப்பட்டது. எனது நிலைக்காக இன்னும் பதினைந்து நாட்கள் போட்டியின் தவணை நீடிக்கப்பட்டாலும் பூரண சுகத்தை அடையாத நிலையிலேயே மிகுதியை எழுதி அனுப்பினேன். இந்த நாவலுக்கு கிடைத்த பரிசை என் எழுத்துக்கும், கருத்துக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே எண்ணுகிறேன்.
கவிதை, சிறுகதைகளை விட நாவலில் அதிக ஆர்வம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன?
நான் நீண்ட காலமாக கட்டுரைகளுக்குத்தான் முன்னுரிமை கொடுத்து எழுதினேன். ஆனால் மக்கள் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது கதைகள் தான் என்பதை காலப்போக்கில் என்னால் உணர முடிந்தது. நான் நாவல் எழுதிய காலம் மிகக்குறைவு. இப்போது தான் ஏழாவது நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன். பொங்கி எழுகின்ற கற்பனைகளில் சில துளிகளை தெளித்ததும் கட்டுரை பிறந்து விடுகின்றது. சமகால யதார்த்தங்களைத் தெளித்தால் சிறுகதை பிறந்து விடுகிறது. எல்லாமாக ஒன்றிணைந்து விரிவாக விபரிக்க நாவல் தான் சிறந்த வழியாக தோன்றுவதால் நாவல் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.
நீங்கள் சிங்கள மொழியில் கல்வி கற்ற போதும், தமிழில் பரிச்சயம் ஏற்பட்டது எப்படி? ܢ ܬ
கண்ணில் காண்பவைகளை வரைவதும், மனதில் தோன்றியவற்றை எல்லாம் எழுதுவதும் சிறுபராயம் முதல் எனது பழக்கமாகும். ஆயினும் தமிழில் எழுதத்துவங்கியது பருவகாலத்தை அடைந்த பின்னர் தான். தொடர்ச்சியான வாசிப்பு தமிழ் எழுத்துக்களை இனம் காண வைத்தது. எழுதும் போது அகராதியின் உதவியை பெற்றுக்கொள்வேன். தாய்மொழி தமிழ் என்பதால் இது சிரமமாகத் தோன்றவில்லை.
எழுத்துத்துறையில் ஈடுபடுவதற்கு முன்னோடியாய் இருந்தவர்கள் பற்றி.?
நான் ஆரம்பத்தில் நிறைய எழுதி குவித்த போதும் அவற்றை ஊடகங்களுக்கு அனுப்பும் துணிவு இருக்கவில்லை. முதன்முதலில் எனக்கு அந்தத் துணிவை ஏற்படுத்தியவர் பிரபல பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தான். படிப்பினாலும், பணத்தாலும் பெற முடியாத, அவற்றுக்கு அப்பாற்பட்ட
 
 
 

பூங்காவனம்
விடயம் தான் திறமை என்பது. அது உங்களிடம் நிறைய இருக்கிறது. அதை வெளிப்படுத்துங்கள் என்றார். அதன் பிறகே வானொலி நிகழ்ச்சிகளில் எழுத ஆரம்பித்தேன். இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் எனது படைப்புக்கள் ஒளிபரப்பாகி வந்தன. அந்த நாட்களில் ஏ.சி. கமருன்னிஸா என்ற பெயரில் எழுதினேன். திருமணத்தின் பின்னர் தான் எனது சொந்தப் பெயரில் எழுத ஆரம்பித்தேன்.
தொடராக 25 ஆண்டுகளாக எழுதி வந்த போதும் இலக்கிய உலகம் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. எக்மி பதிப்பகத்தாரின் அறிமுகம் கிடைத்த பிறகு தான் இலக்கிய உலகம் பற்றிய அறிமுகம் எனக்கு கிடைத்தது. அத்தோடு எனது கணவரின் பூரண ஒத்துழைப்பும் கிடைத்ததால் என்னால் இரண்டு நாவல்களை வெளியிட முடிந்தது. விரைவில் இன்னும் இரண்டு நூல்கள் வெளிவரவுள்ளன.
உங்கள் படைப்புகள் மீது வாசகர்களின் எதிர்பார்ப்பு எந்தளவில் இருக்கிறது?
எனது படைப்புகள் இந்த சமுதாயத்துக்கு பிரயோசனப்பட வேண்டும் என்பது தான் எனது நோக்கம். அதை வாசகர்கள் மிகத் துல்லியமாக புரிந்து ஏற்றுக்கொள்வதை அவர்களது தொலைபேசி உரையாடல்களும், வாழ்த்து மடல்களும் தெளிவுபடுத்துகின்றன. அவர்களது எதிர்பார்ப்புகளும் அதுவாகவே உள்ளது.
சமூக ரீதியான கருக்களை மையமாக வைத்தே உங்கள் படைப்புகள் ಙ್ಗ8ಹೆಸರಾ. அவ்வாறு எழுதுவதற்கு தூண்டுதலாய் அமைந்த காரணி என்ன
இது ஒரு முக்கியமான கேள்வி. சமூக ரீதியான பலதரப்பட்ட பிரச்சனைகளோடு வாழ்கின்ற பல ஜீவன்களுக்கு அறிவுரைகள் பகருவதற்கும் ஆலோசனைகளை வழங்குவதற்குமான சந்தர்ப்பங்கள் அடிக்கடி நிகழ்வதுண்டு. வெறும் கற்பனைகளை விட நிஜங்களில் பல படிப்பினைகள் உண்டு. ஆகவே தான் சமகால யதார்த்தங்களை முன்வைத்து எனது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைத்து எழுதுவதை தனித்துவமாக்கிக்கொண்டேன். எனது எல்லாப் படைப்புக்களிலும் நிஜங்களைக் காணலாம்.
உதாரணமாக ஓர் அபலையின் டயறி' என்ற என் நாவலைச் சொல்லலாம். அது இளம் தம்பதியருக்காக சொல்லப்பட்ட கதை. ஒரு கணவன் தன் மனைவி பற்றி தனது நண்பனிடம் சொல்வதும், ஒரு மனைவி தன் தோழி பற்றி தனது கணவரிடம் சொல்வதிலும் ஏற்பட்ட விபரீதத்தை விபரிப்பது தான் அந்த கதை. இது தவிர்க்கப்பட வேண்டும் என்பதோடு வெள்ளம்

Page 5
TÄIESTE SOLÈ
வந்த பின் அணை கட்ட முயற்சிப்பதை விட வெள்ளம் வருமுன் அணை கட்டுவதே சிறந்தது என்பதை உணர்த்தியிருந்தேன். அக்கதையை படித்த பலர் அதனை ஏற்றுக்கொண்டதுடன் இதே போல நடந்த பல சம்பவங்கள் பற்றி கூறி 'உங்கள் அறிவுரைகள் காலத்தின் தேவையாக அமைகிறது என்றனர். அத்தோடு 'இது ஒரு ராட்சவழியின் கதை' என்ற நாவலிலும் வாசகர்கள் பல படிப்பினைகளை பெறுவார்கள் என நம்புகிறேன்.
உங்கள் வாழ்விற்கு அர்த்தம் கொடுக்கும் பணியாகத் தான் எழுத்துத்துறையை கணிக்கிறீர்களா? ஏன்?
ஆமாம். என்னைப்பொறுத்தவரை என் வாழ்வுக்கு அர்த்தம் கொடுத்தவற்றில் இந்த எழுத்துத்துறையும் ஒன்று. ஒரு குடும்பத்தலைவி என்பதோடு பல கடமைகளையும் பொறுப்புக்களையும் சுமந்து கொண்டிருப்பதால் இடைக்கிடையே உள்ளம் சோர்வடைந்து விடுவதுண்டு. அவ்வேளையில் மனம் அதிகமாக விரும்புகின்ற ஒன்றில் நம் கவனத்தை ஈடுபடுத்தினால் நமது உள்ளமும் உடலும் புத்துணர்வு பெறும். அது போன்றதொரு சந்தர்ப்பங்களில் நான் எழுதத்துவங்கி விடுவேன். இதன் மூலமாக எனது உள்ளம் விபரிக்க முடியாத அளவில் திருப்தி அடைவதை உணர்கிறேன். அத்தோடு எனது எழுத்துக்களும், கருத்துக்களும் மரணத்துக்கு பின்னாலும் உயிர்வாழக்கூடியவை என்பதில் ஓர் அலாதியாக மனநிறைவைக்காண்கிறேன்.
சமகாலத்தில் ஈழத்தின் நாவல் வளர்ச்சி பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
திறமை மிக்க படைப்பாளிகள் ஈழத்தில் நிறைந்துள்ள போதும், அவர்கள் இன்னும் இலைமறைக்காயாக இருப்பது கவலைக்குரிய விடயம் தான். சிலர் பல தடைகளுக்கு மத்தியில் முன்னேற முயன்றாலும் அவர்களுக்கு கைகொடுத்து தூக்கி விட விரும்பாமல் விமர்சன அம்புகளைக்கொண்டு தாக்கி வீழ்த்தி விடுவதில் இன்பமடைகின்ற முன்னோடிகளால் பலர் உள ரீதியாக பாதிப்படைந்து பின் நிற்கின்ற நிலையை அவதானிக்க முடிகிறது. இந்த நிலை மாறினால் பல நாவலாசிரியர்களை இனம்காண முடியும் என நம்புகிறேன். அத்தோடு கலைஞர்களுக்கு தோள் கொடுக்கின்ற சில நல்லிதயங்கள் இயங்கி வருவது ஆறுதலான விடயம். இதே போன்று இன்னும் பல நல்லிதயங்கள் முன்வந்தால் இலக்கியவாதிகள் வெறும் விடிவெள்ளிகளாக மட்டும் மிளிராமல் நிலவுகளாகவும் பிரகாசிக்க முடியும்.
வளர்ந்து வரும் படைப்பாளிகளிடமிருந்து இலக்கியத்திற்கான எத்தகைய பங்களிப்பை எதிர்பார்க்கின்றீர்கள்?
என்னைப்பொறுத்தவரையில் எல்லோரும் வளர்கிறவர்கள் தான். கல்விக்கு அளவில்லை. வளர்ச்சிக்கு நிறைவில்லை. இவைகள் இரண்டும் முடிவடைவது
 
 

மரணத்தில் மட்டும் தான். முட்டாள் ஒருவரைக்காண வேண்டுமானால் தன்னை ஓர் அறிவாளி என்று பெருமைப்பட்டுக் கொண்டவரைப் பாருங்கள் என்று தான் நான் சொல்வேன். அறிவிலும் அனுபவத்திலும் எத்தகைய முதிர்ச்சியுடையவனாக இருப்பினும், சில வேளைகளில் தனது மூன்று வயது பேரக்குழந்தையிடம் ஏமாறுவதைக் காணலாம். இது இயற்கை. நாம் யாரும் அறிவாளிகள் இல்லை. பெருமைக்கும் புகழுக்கும் உரியவர்களும் இல்லை. அவை யாவற்றுக்கும் சொந்தக்காரன் இறைவன் தான். இப்படி எவனுடைய உள்ளத்தில் உள்ளதோ, அவன் தான் உண்மையான சிந்தனையாளனாக இருக்க முடியும். இலக்கிய உள்ளங்கள் யாவருக்கும் பொதுவாக நான் சொல்ல விரும்புவது இதைத்தான்.
மனித நேயங்களையும், இணக்கங்களையும் எழுதுவதோடு நிறுத்திக்
’கொள்ளாது நமது வாழ்வில் ஐக்கியமாக்கிக்கொள்ள வேண்டும். அதன் மூலமாக மட்டுமே உண்மையான வெற்றியை அடைந்து கொள்ள முடியும், ஓர் எழுத்தாளனிடத்தில் பெருமை இருக்கக்கூடாது. அந்தப்பெருமை தான் தலைக்கணத்தை ஏற்படுத்துகிறது. அது தான் மற்றோரை புண்படுத்துகிறது. ஓர் எழுத்தாளனின் பேனா, வாளை விடக் கூர்மையானது. அதைக்கொண்டு வளர்கின்றவர்களை வெட்டுவதற்காகவும், வீழ்த்துவதற்காகவும் பிரயோகிப்பதை விடுத்து முதலில் தனது கர்வத்தினை வீழ்த்துவதன் மூலமாக மட்டுமே மனித நேயங்களையும் ஒற்றுமைகளையும் வளர்க்கவும் நிலைநிறுத்தவும் முடியும்.
நிச்சயமாக இலக்கியவாதிகள் யாவரும் ஈகோவைக் கலைந்து விட்டு ஒரே குடும்பம் போன்று ஒற்றுமையாக செயல்பட்டால் பல வெற்றிகளை
960Lu (pigub.
ஒன்றுபடுவோம். ஒற்றுமையாக வாழ்வோம். வெற்றி பெறுவோம்!!!
“பூங்காவனம்” கிடைக்குமிடங்கள்
பூபாலசிங்கம் புத்தகசாலை கொழும்பு - 11 பூபாலசிங்கம் புத்தகசாலை கொழும்பு - 06 பெஸ்ட் குயின் பவுண்டேஷன் - கல்கிசை

Page 6
இலங்கையில் தமிழ் கவிதை இதழ்கள்
கவிஞர் ஏ. இக்பால்
தமிழ் இலக்கியத்தின் முதல் தோன்றல் கவிதை தான். தமிழ்க் கவிதைகள் வேதாந்தப்போக்குடன் ஆன்மீகத்தை சுமந்து நின்றன. காலத்தின்போக்கு தமிழ்க்கவிதை வடிவத்தை அவ்வப்போது மாற்றிய போது தமிழறிவின் உந்துதலும் உயிர்த்து நின்றது. வரலாற்று வளர்ச்சியில் இலக்கண மரபுடன் கதைகளைப் பாடிய கவிதை காலமாற்றங்களோடு உலகியலுடன் ஒன்றித்து நின்றது.
காலத்துக்குக்காலம் மாறுபாடடைந்து புதுமுயற்சியாக யாப்பிலக்கணத்தை உதறித்தள்ளிய தமிழ்க்கவிதை அரை நூற்றாண்டுக்கு மேல் நவீனத் தன்மையை நிலைநாட்டியமைக்குத் தற்காலக்கவிதைகள் சாட்சியாகவுள்ளன. இவ்வரலாற்றுச் சுருக்கத்தை முன்வைத்துத் தமிழ்க்கவிதைச் சிற்றேடுகளை நோக்குதல் அவசியம்.
கவிதைச் சஞ்சிகைகள் தமிழ்நாட்டில் அநேகம் வெளிவந்திருக்கின்றன. பாரதிதாசனின் ‘குயில்' எனும் சஞ்சிகை, சுரதாவின் சுரதா கவிதை இதழ், ஏர்வாடி ராதா கிருஷ்ணனின் ‘கவிதை உறவு' சஞ்சிகை, இடிமுரசு அப்துர்ரஹற்மானின் ‘கவிக்குரல்" காலாண்டு இதழ். இவ்விதம் பல கவிதை இதழ்களைக் கணக்கிடலாம்.
இலங்கையின் கவிதை வளர்ச்சியின் ஓர் அம்சமாக கவிதைகளாக மட்டும் வெளியான சிறுசஞ்சிகைகள் இங்கு தோன்றின. 1955களில் "தேன்மொழி' எனும் இலங்கையின் முதலாவது கவிதை சஞ்சிகையை மஹாகவியும் வரதரும் இணைந்து வெளியிட்டார்கள். பதினாறு பக்கங்களைக்கொண்ட தேன்மொழி மாதந்தோறும் வெளிவந்தது. ஆறு இதழ்களே வெளிவந்த போதும் கவிதை வளர்ச்சியின் போக்கை வரலாற்றுரீதியாக எடுத்துக்காட்டி நின்றது.
தேன்மொழியை அடுத்து எட்டாண்டுகளின் பின் 1964களில் நோக்கு' எனும் கவிதை இதழை இ.முருகையன், இ.இரத்தினம் இருவரும் சேர்ந்து காலாண்டுக்கொரு இதழாய் வெளியிட்டனர். தாய்மொழிக்கவிதை, கவிதை மொழிபெயர்ப்பு, கவிதை விமர்சனம் அம்மூன்றையும் வளர்ப்பதே நோக்கு சஞ்சிகையின் நோக்கமாக இருந்தது.
1968களில் தர்காநகர் ஸாஹிறாவின் இலக்கிய வெளியீடாக "சுவை' எனும் றோனியோ இதழ் திக்குவல்லை கமாலை ஆசிரியராகக்கொண்டு வெளியானது. இன்றைய “அரும்பு ஆசிரியர் இதன் உதவி ஆசிரியராக செயற்பட்டார். சுவை பாடசாலை மட்டக் கவிதை இதழானாலும், நீலாவணன் போன்ற வளர்ந்த கவிஞர்களும் இதில் எழுதினர்.
 
 

1969 - 70களில் நான்கு இதழ்கள் 'கவிஞன்’ எனும் கவிதை ஏடு வெளிவந்தது. எம். ஏ. நுஃமான், சண்முகம் சிவலிங்கம் 'கவிஞன் இதழின் ஆசிரியர்களாக செயற்பட்டனர். இச்சஞ்சிகை கவிதைத்துறையில் இலங்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இன்றைய கவிதையின் பரிணாமங்கள் கலை மதிப்புடைய தமிழ்க் கவிதைகளை இனங்காணுதல், பக்கச்சார்பற்ற வெளியீட்டுக்களம், கவிதைகள் பற்றிய விமர்சன வார்ப்பு, சமகாலச் சர்வதேசக் கவிதைகளை தமிழுக்கு அறிமுகம் எனும் இலட்சிய அடிப்படையில் 'கவிஞன் வெளிவந்தது. இந்த இலட்சிய வெளிப்பாட்டால் மரியாதையற்ற சொற்றொடர்கள், மறைக்க வேண்டியதை அப்பட்டமாக வெளிக்காட்டுதல், அழகுகெடல் என்பன கவிதைகளாயின.
1973 களில் நீள்கரைநம்பி, அப்துல் சத்தார் இருவரும் ‘க-விதை' என்ற புதுக்கவிதை ஏடோன்றை வெளியிட்டனர். 1975 களில் கவிஞர் ஈழவாணன் "அக்னி" என்ற கவிதை சஞ்சிகையை வெளியிட்டார். 05 ‘அக்னி’ இதழ்கள் வெளிவந்தன. “பொன்மடல்', ‘நவயுகம் ஆகிய இரு கவிதை ஏடுகளும் இக்காலம் வெளிவந்தன.
1970களில் மட்டக்களப்பிலிருந்தும் ‘கவிதை” எனும் சஞ்சிகை வெளிவந்திருக்கிறது. அதன் விபரம் தெரியவில்லை. 1974களில் 'விடிவெள்ளி' எனும் கவிதை ஏட்டை புத்தளம் ஜவாத் மரைக்கார் வெளியிட்டார். ஆரம்ப காலத்தில் மூன்றாம் நான்காம் இடத்தில் அயேசுராசா ‘கவிதை' எனும் ஏட்டை வெளியிட்டிருக்கிறார். 1992ல் "தேன்’ எனும் கவிதை ஏட்டை மாத்தளை ரபியுதின் வெளியிட்டிருக்கிறார். 1974,75 களில் தில்லையடிச்செல்வன் 'பொன்மடல்’ எனும் கவிதை ஏட்டை வெளியிட்டார். 1982களில் அல் அஸீமத் பூபாளம்' எனும் கவிதை ஏட்டை வெளியிட்டார்.
சாய்ந்தமருதிலிருந்து நெளசாத் துரது எனும் காத்திரமான கவிதை ஏட்டை தொடர்ந்து வெளியிட்டார். ஹைக்கூவை இலக்கணச்செம்மையுடன் எழுதியவர் நெளசாத் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
தொடர்ந்து இலங்கையில் வெளியான கவிதை சஞ்சிகைகளை கணக்கெடுத்தல் முக்கியமே. தாஸிம் அஹமதின் “வகவம்', 1976ல் வெளியான நாஸரின் நவயுகம்', 1980களில் வெளியான கவின்கமலின் கமலம்', 1982ல் வெளியான என்.ஸி.ஏ. பரீத்தின் 'கோகிலம், 1984ல் வெளியான மேமன்கவியின் சப்னா, எம்.எம்.எம். நூருல் ஹக்கின் "சோலை', 1985களில் வெளியான ஒலுவில் அமுதனின் "புதுக்குரல்", 1987களில்
வெளியான கலா விஸ்வநாதனின் மலைக்கண்ணாடி", 1988ல் வெளியான நிதானிதாஸனின் 'விடிவு', திருமலை மைக்கல் கொலனின் தாகம்", காத்தான்குடி பெளசின் ‘பா’, வவுனியாவில் வெளியான நிலம்", மலைநாட்டிலிருந்து வெளிவந்த "கனல்", 1980 களில் வெளியான பூ மதுரமி', 'மின்னல்", "விருந்து' என்பன குறித்துக்காட்ட வேண்டிய கவிதை இதழ்களாகும்.

Page 7
Flairssortid
1993களில் ஈழத்தின் முதல் ஹைக்கூ கையேடாக றபீக்கின் புள்ளி வெளியானது. இவ்வித மந்த கதியில் கவிதை ஏடுகள் வெளிவந்த காலம், ஜனவரி 2000த்திலிருந்து அஷ்ரஃப் சிஹாப்தீனை ஆசிரியராகக் கொண்ட 'யாத்ரா வெளியானது. இலங்கையின் கவிதை இதழ் வரலாற்றில் யாத்ராவின் பங்களிப்பு மிக முக்கிய இடத்தைப்பெறும். இதுகாலவரை பத்தொன்பது 'யாத்ரா' இதழ்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜூன் 2007 - டிசம்பர் 2008 எனக்குறிப்பிட்டு வெளியான யாத்ரா 19வது இதழுடன் நின்று விட்டதோ தெரியாது.
'யாத்ரா நுழைந்த காலப்பின்னணியில் இலக்கியவாதங்கள் பல்வகைப்பட்டு நின்றன. மரபுவழியான பழைமைவாதம் - TRADITIONANISM, யதார்த்தவழியான முற்போக்குவாதம் - REALISM, இயற்கை வழியான இயற்கை வாதம் - NATURALISM, புதுமை வழியான நவீனத்துவம் - MODERNISM, furrouT60T Lairb6forgig.6lb - POST MODERNISM என பல்வகைப்பட்ட விதங்களைப் பின்பற்றும் இலக்கியங்களுக்கு ‘யாத்ரா' இடங்கொடுத்து நின்றது. இச்சோதனைத்தளத்தை இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் 'மறுபாதி’ கவிதைக்கான காலாண்டிதழ் கொண்டு நடத்துகிறதெனலாம்.
தற்காலம் இலங்கையில் வந்துகொண்டிருக்கும் கவிதை இதழ்களை கணக்கெடுத்தல் முக்கியமே. மதன் என்பவரால் “கவிஞன்’ எனும் கவிதை இதழ் மட்டக்களப்பிலிருந்து வெளிவருகிறது. இருமாத கவிதை இதழாக நீங்களும் எழுதலாம்' எனும் கவிதை இதழை திருகோணமலை எஸ்.ஆர். தனபாலசிங்கம் வெளியிடுகிறார். சித்தாந்தனை ஆசிரியராகக்கொண்ட மறுபாதி காலாண்டிதழ் யாழ்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இதனிடையே நடுகை' எனும் இதழும் வருவதாய் அறிகிறேன். கிண்ணியா அமீரலியை ஆசிரியராகக்கொண்ட 'எழுது எனும் கவிதைச் சஞ்சிகையும், மற்றும் கிண்ணியாவிலிருந்து 'பேனா என்ற கவிதை சஞ்சிகையும் வெளிவரவிருப்பதாக பத்திரிகைச் செய்திகள் அறிவிக்கின்றன.
அவசரத்தேடலில் அகப்பட்ட கவிதை இதழ்களின் பட்டியலை இங்கே தந்துள்ளேன். நான் தராத கவிதை இதழ்களின் வரவை அறிந்தவர்கள் தந்துதவுமாறு வேண்டுகிறேன். இக்கவிதைச் சஞ்சிகைகளை நுணுகி ஆராய்தல் மிகமுக்கியம் எனலாம். அதிகமான இதழ்களை முஸ்லிம்களே வெளியாக்கியுள்ளனர். அதற்குரிய காரணம், பின்னணி, தேவை பற்றியெல்லாம் அலசுதல் மிகவும் தேவையானதே.
உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட மரங்கொத்தி எனும் கவிதை இதழ் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியானது. அது இப்போதும் தொடர்ந்து வெளிவருகிறதா என தெரியவில்லை. ஆர்வமுள்ளவர்கள் இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்து ஆய்வில் ஈடுபட வேண்டுகிறேன்!!!
 
 

இலக்கியவாதி அருள் மா. இராஜேந்திரனின் மறைவையொட்டிய கவிதை
பெற்றது கோடி பேசுதல் சிறிதே மற்றது எல்லாம் மனதின் பதிவே ஆன்றோர் முன்னால் அடியவன் உரைக்கும் அருள்மா சிறப்புகள் எல்லாம் மெய்யே
ஆண்டுகள் நாற்பதாய் அருள்மா புரிந்த அரும்பணி உரைப்பது மன்றக் கடமை ஆற்றிய பணியில் குறைநிறை அளந்து குற்றம் பரப்புதல் சிலரது மடமை
அருள்மா அவர்கள் அணிந்தது வெண்மை ஆடைகள் போலவே உள்ளமும் தும்பை அடியவன் தோளிலும் அருள்மா கைகள் ஆதரவாகத் தொட்டது உண்மை
வருவார் அமர்வார் வார்த்தைகள் மொழியார் வாசலில் காண்கையில் புன்னகை மொழிவார் இலக்கிய உரைகளை இயம்பி அமர்கையில் இனிதிலு மினிது இயம்பிய தென்பார்
அருளின் கதைகள் எல்லாம் விதைகள் கருப்பொருள் செறிவைக் கதைத்தனர் பலபேர் கதைகளின் மாந்தர் கண்ணில் படுகையில் விதைகளில் பலது விருட்சமாய் வளரும்
வற்றிய கிணற்றில் தவளைகள் போலே வாடயிலே நீர் ஊற்றினிர் எம்மில் பற்றிய பிடியைத் தளர விடாதே வருவாய் விரைவாய், உயர்வாய் என்றீர்
தூற்றிப் பழகா போற்றும் குணத்தார் ஆற்றிய பணிகள் அத்தனை அருமை கற்றதை எல்லாம் கைமண் அளவாய்க் கருதியே அருள்மா கதைத்தது அருமை
பெற்றது கோடி பேசுதல் சிறிதே மற்றது எல்லாம் மனதின் பதிவே ஆன்றோர் முன்னால் அடியவன் உரைக்கும் அருள்மா சிறப்புகள் எல்லாம் மெய்யே!!!

Page 8
ச. முருகானந்தனின் போர்க்கால சிறுகதைகள்
சிவாஜினி
இன்று ஈழத்து சிறுகதைப் பரப்பில் அதிகம் எழுதி வருபவர்களுள் டாக்டர் ச.முருகானந்தனும் ஒருவர். மூத்த படைப்பாளிகள் பலர் இலக்கிய உலகிலிருந்து ஒதுங்கிய பின்னும் இன்னும் தொடர்ந்து எழுதி வரும் டாக்டர் ச. முருகானந்தன் பல்துறை எழுத்தாளருமாவார். இலக்கியத்திற்கு அப்பால் விமர்சனம், மருத்துவம் என்ற துறைகளிலும் தடம்பதித்துள்ளமை இன்னொரு சிறப்பம்சமாகும். சுகவாழ்வு சஞ்சிகையில் இவர் தொடர்ந்து எழுதி வரும் மருத்துவ ஆலோசனைகள் சாதாரண மக்களுக்கு மிகவும் பயனுடையவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எழுபதுகளின் பிற்பகுதியில் எழுத ஆரம்பித்த ச.முருகானந்தனுக்கு இது மணிவிழா ஆண்டு. சிறுகதை, நாவல், கவிதை, மருத்துவம், அறிவியல், விமர்சனம், நாடகம் என பலதுறைகளில் இவர் கால்பதித்தாலும் டாக்டர் ச.முருகானந்தன் என்றதும் நினைவுக்கு வருவது அவரது சிறுகதைகள் தான். இருநூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதிய இவர் ஏழு சிறுகதை நூல்கள் உட்பட பதின்நான்கு நூல்களை வெளியிட்டுள்ளமை இவரது அசுர வேகத்திற்கு சான்று பகர்கிறது.
பல வேளைப்பளுவுக்கு மத்தியில் 25 வருடங்கள் வன்னியில் மருத்துவப் பணியும், சமூகப்பணியும் செய்தபோதிலும் இலக்கிய நேசிப்பினால் இடையறாது எழுதிக்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் தான் பிறந்த வடமராட்சி களத்திலும், பணியாற்றிய மலையக பின்புலத்திலும் சில கதைகளை எழுதியபோதும் போருக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாக்கப்பட்ட வன்னி மண்ணே இவரது பல கதைகளின் களமானதுடன் போர்க்கால அவலங்களே பேசு பொருளாகின.
யுத்தம் வன்னி மண்ணை ஆக்கிரமிக்க தொடங்கிய காலகட்டத்தில் இங்கிருந்த அப்பாவி மக்களை, போராளிகளை, படையினரை, அறிந்திராத நிகழ்வுகளை எல்லாம் இவரது கதைகள் வெளிக்காட்டி நின்றன. தாயகக் கனவின் நிலைப்பாட்டிற்கு தன் கவனத்தை கோரும் உண்மைகளின் பதிவுகளோடு சுழல்கிறது இவரின் கதைகள், படையினரின் அடாவடித் தனங்களைக்கூறும் அதே வேளை போராளிகளின் மேலாதிக்கத் தன்மைகளையும் மக்களை தம்வசப்படுத்தி வைத்திருப்போர் பற்றியும் நாசூக்காக சுட்டிக்காட்டுகிறார். ஆட்சியாளர்களுக்கு தேவைப்படுவது அமைதியல்ல, நில ஆக்கிரமிப்பு தான் என்பதையும் அதற்காக அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் வெறித்தனமாக நடந்து கொள்வதையும் தன் கதைகளினூடே பதிவு செய்கிறார். '
 
 
 

பூங்காவனம்;
விரக்தியுற்ற மனிதர்கள் போராடவே செய்வார்கள் என்பதை 'பரீட்சைக்கு நேரமாச்சு' என்ற கதை மூலம் யதார்த்தமாக சித்தரிக்கிறார். சட்டங்கள் மீறப்படுவதையும், அதன் யதார்த்த தன்மையையும் காலமாற்றம் ஏற்படுத்தும் மனித மனமாற்றங்களையும், தவிப்புக்களையும் கூறுகிறார்.
இலட்சியக் கனவு சார்ந்த படிமங்களும் அதன் மெல்லிய படலம் போர்த்திய நிகழ்வுகளும் யதார்த்தத்துடனேயே முன்வைக்கப்படுகின்றன. புறத்தாக்கங்களின் அழுத்தங்கள் அகமாற்றங்களை ஏற்படுத்தி புறச்செயற்பாடுகளையே மாற்றி விடும் என்பதையும் தன் கதைகளில் பிரதிபலிக்கச் செய்கிறார்.
ச.முருகானந்தன் இயல்பாகவும், வலுவாகவும் குறியீடுகளைப் பயன்படுத்துகிறார் என்பதற்கு போராட்டத்தை மையப்படுத்திய ஈழத்தின
முன்னோடி சிறுகதையான 'அலியன் யானை சான்று பகர்கிறது. பேரினவாதத்தின் குறியீடாக வன்னி விவசாயிகளின் பயிர்களை நாசம் செய்யும் குழுவின் யானையைப் பயன்படுத்தி அவற்றை வேட்டையாடும் கிராமவாசிகளை போராளிகளுக்கு உருவகப்படுத்திய இச்சிறுகதை பத்திரிகைகள் போர்ச்சிறுகதைகளை பிரசுரிக்க முடியாத காலத்தில் எழுதப்பட்டது.
ஆட்கடத்தல், பத்திரிகையாளர், எழுத்தாளர் படுகொலைகளை மையமாக வைத்து இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இவற்றில் நான் சாக மாட்டேன்' என்ற கதை இன்றைய கடத்தல், படுகொலை மற்றும் பத்திரிகை ஊடகவியாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் என்பவற்றை கூறி நிற்கும் அருமையான கதை.
இறுதிக்கட்ட யுத்தத்தினையும், அதன் பின்னரான முகாம் வாழ்வையும் முன்னிறுத்தி சில கதைகள் எழுதியிருக்கிறார். உச்சகட்டம், தாய்மடிமண், தண்ணீர் தண்ணிர், சுடலை ஞானம், முள்வேலி, வெறும் சோற்றுக்கே வந்தது, தனியொருவனுக்கு, என்று தனியுமிந்த. முதலானவைகளுடன் இன்னும் பல கதைகள் அண்மைய அறுவடைகளாகும். மனதை உருக்கும் சித்தரிப்புடன் எழுதப்பட்ட இக்கதைகள் யதார்த்த பூர்வமானவை.
இலங்கை இந்திய சர்வதேச பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதியுள்ள இவர் பல பரிசில்களையும், விருதுகளையும் பெற்ற படைப்பாளியாவார். வாசகர்களின் பாராட்டுதலையே பெரும் விருதாகக்கருதுபவர்.
இவரது பதினான்காவது சிறுகதை நூலான "அவர்கள் துணிந்து விட்டார்கள் என்ற மலையக சிறுகதைத்தொகுதி அண்மையில் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது!!!

Page 9
பூங்காவனம் 14 m-m-m-m-
பெண் உனக்கு போகப்பொருள் தான்!
சந்திரகாந்தா முருகானந்தன்
வண்ணத்துப்பூச்சியாய் பறக்கும் என் உள்ளத்தில் கட்டற்ற - என் குமுறலை ஏற்படுத்துகின்றன! இலட்சியக் கனவுகளை கடுகளவேனும் மிதக்க விடாமல் தினமும் இரவு வேளைகளில்
ஆதிக்க ஆணி உனக்கான நுகர்வுப்பண்டமாய். அடிக்கிறாய் தினமும்! இன்பப்பொக்கிஷமாய்.
உறக்கமின்றி யோசிப்பின் தெளிவும் மனது உன்றலுமின்றி சிந்தனையின் மிதப்பும் படுத்தெழுவது
என்னிடம் ஊடு பாயாமல் தடுத்து சலித்துப்போய் விட்டது! அதிகார அணை கட்டி அவற்றைத் தேக்கி விடுகிறாய் காதலை
என் உள்ளத்தினுள்ளே! வெளிப்படுத்தும் வேளையிலும்
கடும் போக்கினை பகல் பொழுதுகளில் ஆதிக்கம் செலுத்தும் என் கடன். உன்னோடு ஒன்றி பணி செய்து கிடப்பதுவே மெய்மறக்க முடியவில்லை. என எழுதப்படாத பெண் உனக்கு உன் ஆதிக்கச்சட்டங்கள் போகப்பொருள் தான்!!!
參
翁
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யதார்த்தம்
க.பரணிதரன்
"ட்ரிங். ட்ரிங். ட்ரிங்.” மணிக்கூட்டு அலாரத்தை நிறுத்தியவாறு எழும்புகின்றான் சண்முகநாதன்.
எப்போதும் ஐந்தரை மணிக்கு எழும்புவது சண்முகநாதனின் வழக்கம். அவன் சற்று அயர்ந்தாலும் அவனது "அலாரம்' அவனை நித்திரை கொள்ளவிடாது எழுப்பிவிடும்.
அம்மாவைப் போய்ப் பார்க்கின்றான். அம்மா நன்றாக உறங்கிக் கொண்டிருக்கின்றாள். அவனது மனைவியும் பிள்ளைகளும் போர்வையால் இழுத்து மூடிக்கொண்டு ஆழ்ந்த நித்திரையில் கிடக்கிறார்கள். சனிக்கிழமைகளில் இவர்கள் இவ்வாறு விடிய விடிய நித்திரை கொள்வது வழக்கம்.
சண்முகநாதன் தன் காலைக்கடன்களைக் கழித்த பின்பு சில்லென்ற நீரில் நீராடி, வீட்டிலுள்ள சாய்வு நாற்காலியை வீட்டு முற்றத்தில் கொண்டு வந்து வைத்துவிட்டு அதில் அமர்ந்து கொள்கின்றான். வானத்தை அண்ணார்ந்து பார்த்தபடி நாற்காலியில் இருக்கிறான்.
‘எப்படி நான் இதை அம்மாவிடம் சொல்லுவது.? அம்மா எப்படி எடுத்துக் கொள்ளுவாவோ."
சண்முகநாதன் ஹற்றணில் வசிக்கின்றான். நாற்பத்தியொரு வயதாகிறது. ஹற்றணிலுள்ள தமிழ்ப் பாடசாலையில் தமிழை போதிக்கும் ஆசிரியர். மனைவி ஆங்கில ஆசிரியை. ஆசைக்கொன்று ஆஸ்திக்கொன்று என அவனுக்கு இரு பிள்ளைகள். பெண் பிள்ளைக்கு பதினான்கு வயது. ஆண் பிள்ளைக்கு பன்னிரண்டு வயது.
சண்முகம் பிறந்து இரண்டு வருடத்தில் அவனது தகப்பன் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருக்கும்போது மண்சரிவில் அகப்பட்டு மண்ணோடு மண்ணாகிப் போய்விட்டார்.
சண்முகமும் தாயார் கமலமும் நட்டாற்றில் நின்றார்கள். சண்முகத்தின் தகப்பன் கொண்டு வரும் கொஞ்சப் பணத்தில் தான் அவர்கள் வீட்டு உலை கொதிக்கும். ஆனால் இப்பொழுது என்ன செய்வது எனத் தெரியாத நிலையில் கமலம்,

Page 10
கமலத்தின் நண்பி புவனம் அவளது சோகத்தையும் வறுமை நிலையையும் பார்த்து மனம் நொந்து, கமலத்தையும் தங்களுடன் கொழுந்து பறிக்க வரச் சொல்லிச் சென்றாள்.
ஆனால், பாவம் கமலம். கைக்குழந்தையான சண்முகத்தை எங்கு விட்டுச் செல்வாள்? வேலைக்குப் போகாது விட்டால் குழந்தையின் பசியைத் தீர்ப்பது எப்படி? நான் சாப்பிட்டால் தான் பால் சுரக்கும். இரண்டு நாட்களாக பால் சுரக்காது தன் பிள்ளைக்கு பச்சைத் தண்ணியைப் பருக்கினாள்.
"இந்தப் பிஞ்சுப் பாலகனை வாழவைக்க வேணுமெண்டால் நான் எப்படியும் கொழுந்து பறிக்க போகத்தான் வேணும். காதலிச்சுக் கலியாணம் கட்டி என்னையும், என்ர பிள்ளையையும் நட்டாற்றில் விட்டு மாண்டுபோன என்ர புருஷனை நினைச்சு எந்தப் பயனுமில்லை” என ஒரு முடிவுக்கு வந்தவளாய் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, கொட்டுகின்ற பணியில் சில்லென்று வீசுகின்ற குளிர் காற்றுக்கு மத்தியில் கொழுந்து பறிக்கச் சென்றாள்.
கமலத்தைக் கண்ட புவனம், "கமலம். கமலம். இங்க வா. உதென்ன குழந்தையோட வந்திருக்கிறாய். எங்கேயாலும் விட்டிட்டு வந்திருக்கலாமே, குழந்தையோட எப்படி நீ கொழுந்து பறிக்கப் போறாய்?"
"நான் என்ன செய்ய புவனம்? எனக்கெண்டு ஆர் இருக்கினம்? குழந்தையை என்ர நெஞ்சோடு சேர்த்து துணியால கட்டிப்போட்டுத் தான் பறிக்கப் போறன்’
"இந்தக் குளிருக்கு குழந்தை விறைக்கவெல்ல போகுது”
“என்னை என்ன செய்யச் சொல்லுறாய் புவனம்? இந்தப் பாவியின்ர வயித்தில பிறந்து கஷ்டப்பட வேணுமெண்டது அவன்ர விதி" என்றவாறு குழந்தையை நெஞ்சோடு சேர்த்து துணியால கட்டிக் கொள்கிறாள். கூடையை முதுகுப் புறமாக கொழுவிக் கொள்கிறாள். கொழுந்துகளைப் பறிக்கத் தொடங்குகிறாள்.
அருகே வேலை செய்து கொண்டிருந்த மற்ற வேலையாட்கள் இவளைப் பார்த்து பரிதாபப்பட்டுக் கொண்டிருந்தனர். வேறு சிலர் கமலத்தை ஏளனம் செய்தனர். கங்காரு தனது குட்டியை சுமந்து கொண்டு திரிவது போல கமலம் குழந்தையைக் காவிக் கொண்டு கொழுந்து பறித்துக் கொண்டிருந்தாள்.
முதலாளி கொடுக்கும் ஐம்பது ரூபாப் பணத்தில் தான் இருவரினதும் வயிறு கொஞ்சமாவது நிறையும். இப்படியே சண்முகத்தை நான்கு வயது வரை சுமந்து கொண்டு கொழுந்து பறித்து வருகின்ற பணத்தில் சீவியம் நடத்தி வந்தாள்.
 
 

சண்முகத்தை ஐந்து வயதில் பாடசாலையில் சேர்ந்தாள். அவன் பாடசாலைக்கு செல்லத் தொடங்கியதும் அவளுடைய உழைப்பு மகனின் படிப்புச் செலவிற்கு போதுமானதாக இருக்கவில்லை. தனது சாப்பாட்டை சுருக்கி அவனுக்காக வாழ்ந்து வந்தாள்.
சண்முகம் வளர வளர செலவு கூடியது. அவளுடைய வருமானம் போதுமானதாக இருக்கவில்லை. சண்முகம் நல்ல கெட்டிக்காரன். அவனை எப்படியாவது பல்கலைக்கழகம் அனுப்பி விடவேண்டும். படித்து அவனொரு உத்தியோகம் பார்த்தால் அவனாவது கஷ்டப்படாமல் வாழுவான் என்று நினைத்து பலகாரம் செய்து விற்று அவனைப் படிப்பித்து வந்தாள்.
சண்முகமும் நல்ல பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகம் சென்றான். அவன் அங்கு படிக்கின்ற காலங்களிலும் தாய் கஷ்டப்பட்டு உழைத்து அவன் படிப்புக்கு உதவி செய்தாள்.
சண்முகத்திற்கு பல்கலைக்கழகப் படிப்பு முடிந்து பல மாதங்கள் வேலை இல்லாது வீட்டில் இருந்தான். தாய் படும் கஷ்டங்களைப் பார்த்து தானும் கூலி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான். இதனைக் கண்டு துயருற்ற கமலம் கங்காணிமாரின் காலில் வீழ்ந்து அரசியல்வாதிகள் மூலம் சண்முகத்திற்கு ஆசிரியத் தொழிலைப் பெற்றுக் கொடுத்தாள்.
ஆசிரியத் தொழில் கிடைத்த பின்னர் தாய் வேலைக்குச் செல்வதை தடுத்து நிறுத்தினான். அவளை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்தான். அவன் ஆசைப்பட்டது போலவே அவனோடு ஆசிரியப் பணி புரிந்த சுமதியைக் கட்டி வைத்தாள் கமலம்,
பேரப் பிள்ளைகள் பிறக்க, அவர்களையும் சண்முகத்தைப் பாதுகாத்து வளர்த்தது போலவே வளர்த்தாள்.
மிகவும் இன்பமாக அவளது கடைசிக் காலம் கழிந்து கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று ஒரு நாள் பெய்த கடும் மழையின் பின்பு அவளது வலது பக்க காலும் கையும் இழுத்துக் கொண்டது. ஆனாலும் கமலத்தின் மன வைராக்கியத்தின் காரணமாக அவளது பேச்சில் எந்தக் குறைபாடும் இருக்கவில்லை. தன்னிச்சையாக எழுந்து இருப்பாள். அவளது பேரப் பிள்ளைகள் அவளுக்கு ஆதரவாக இருந்தார்கள். தாயின் நிலை கண்டு சண்முகம் மிகவும் நொந்தான்.
தாய்க்குரிய பணிவிடைகளை செவ்வனே செய்து வந்தான். ஆனால் மருமகள் சுமதிக்கு கமலத்தை பார்க்கப் பார்க்க எரிச்சல் தான் வரும், “ஏன் இது இன்னும் உயிரோட இருந்து எங்களை கரைச்சல்படுத்துது” என்று நினைத்து கணவனிடம் முணுமுணுப்பாள். இதனால் கணவன் மனைவிக்கிடையில் அடிக்கடி சண்டை மூளும்.

Page 11
18
காலை 6 மணிக்கு ஒலித்த கோயில் மணி அவளை நினைவிலிருந்து மீட்டது.
என்ன தான் சண்டைப்பட்டாலும் தனது மனைவியின் பக்கத்து நியாயங்களையும் அவன் சிந்தித்துப் பார்த்தான்.
சுமதிக்கு யாரும் இல்லைத்தான்.
இத்தனை நாட்களாக அம்மாவுடன் அவள் நன்றாகத்தான் பழகினாள். அம்மாவின் பணிவிடைகளையும் மனம் கோணாமற் தான் செய்தாள்.
ஆனால் அம்மா படுக்கையில் வீழ்ந்த பிறகு சுமதிக்கு அம்மா பாரமாகத்தான் இருந்தாள்.
அதிகரித்த பாடசாலை வேலைச்சுமையுடன் வீட்டு வேலைகளையும் பரபரப்புடன்தான் செய்து வந்தாள்.
கணவன், பிள்ளைகள், மாமியார் என்று அனைவரின் பணிவிடைகளையும் அவள் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து முடித்துவிட்டு காலையில் சாப்பிட்டது பாதி, சாப்பிடாதது பாதி என்று பாடசாலைக்கு ஓடிச் செல்லும் சுமதியை நினைக்கையில் அவள் பக்கத்தில் நியாயம் இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது.
முதியோர் இல்லத்தில் அம்மாவைச் சேர்ப்பது பற்றிய எண்ணத்தையும் முதலில் தயங்கித் தயங்கித் தான் அவள் சொன்னாள்.
“வீட்டிலிருந்து யாரும் இல்லாத நேரங்களில் அம்மா அவதிப்படுவதை விட முதியோர் இல்லத்தில் இருந்தால் நல்ல கவனிப்புக் கிடைப்பதோடு பேச்சுத் துணைக்கும் ஆள் கிடைத்து ஆறுதலாக இருக்கும். பாடசான்ல முடிந்து தினமும் எல்லோரும் சேர்ந்து அம்மாவிடம் சென்று பார்த்து கதைத்துப் பேசி வந்தாலும் எல்லோருக்கும் அது ஆறுதலாகவும் இருக்கும்”
அவனுக்கு அதுவே இப்போது நியாயமாகவும் பட்டது. அன்று அவனின் அம்மாவுக்கு அவன் மட்டுமே உலகம். இன்று சுமதிக்கு கணவன், பிள்ளைகள், மாமியார், பாடசாலை. என்று உலகம் பரந்து விரிந்திருக்கிறது. இந்த உலக மாற்றத்தை, யதார்த்தத்தை விளங்கிக் கொண்டால் வாழ்வு முன்னேற்றம் காணும்.
அம்மா உலக நடப்பு தெரிந்தவள்.
அவள் இந்த முடிவை நிச்சயம் ஏற்றுக் கொள்வாள்.
ஒரு முடிவிற்கு வந்தவனாய், மனைவியின் சொற்படி, தன் தாயை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதற்கான ஆயத்தங்களைச் செய்தான்.
 
 
 

责 素 *
தயங்கித் தயங்கி தாயின் படுக்கையின் முன்னால் சென்று “அம்மா. இந்த விஷயத்தைச் சொல்ல எனக்கு கஷ்டமாகத்தான் கிடக்கணை. ஆனால் நீ இங்க இருந்து இப்படிக் கஷ்டப்படுறதைப் பார்க்க எனக்கு கவலையாய் கிடக்கு. நாங்களும் வேலைக்குப் போயிடுவம். உன்னைக் கவனிக்க இங்க ஒருத்தரும் இல்லை. அதால உன்னை முதியோர் இல்லத்தில’ சேர்க்கப் போறன், நாங்கள் ஒவ்வொரு நாளும் வேலையாலை வந்தவுடன் உன்னை வந்து பார்ப்போம்" என்று கூறியவாறு தாயின் கையைப் பற்றினான்.
கமலம் விறைத்துப் போய்க் கிடந்தாள். பதறிப் போய், தாயின் நாடித் துடிப்பைப் பிடித்துப் பார்த்தான். நாடி முற்றாக விழுந்திருந்தது. மின்னல் போல அவனுள் ஒன்று பொறி தட்டியது.
'அம்மாவுக்கு இந்த உலக யதார்த்தம் புரிந்து விட்டதோ?
"ஐயோ” என்ற அவனது கதறல் வானையே பிளந்து விடுமாப் போல இருந்தது!!!
With Best Compliments From...
Amja Travels (Pvt) Ltd
(áir Line Ticketing & Tour operators)
D.C.A. LICENCE No. A324 HAJJ & UMRAH OPERATORS
Head Ofice: K/G/1, Gunasinghepura, Dias place, Colombo - 12, Sri Lanka.
Tel - +94 il 2335657, Fax - 2437308, Dircct - 238843 E-mail-anjatrvlGosltinct.lk
Branches: : ; :: No. 61, Yatinuwara Road, Kandу, sri '...' " No. 671, Anuradhapura Road, Dambulla. Tel-0664924954, Fax. 0664468032.
No. 8-1/1, Kadurugas Junction,Colombo Road,Kurunegala Tel-0374932441, Fax. 0374690452.

Page 12
இலங்கையின் நாட்டுக்கூத்துக்கலை
தம்புசிவா
எமது நாட்டின் பண்பாட்டுப் பாரம்பரியங்களின் உயிர்ப்பு கிராமங்களை அணி டி வாழும் மக்களின் வாழ்க் கையுடன் நெருங்க பிணைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இத்தகைய கிராமத்து மக்களின் உணர்வோடு ஒன்றி வளர்ந்த அழகுக்கலையே கிராமிய நாடகம், கிராமிய நாடகங்களை நாட்டுக்கூத்து என்றே வழங்குவர். இது பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் விலைமதிக்க முடியாத பெரும்சொத்து. அவர்களின் உணர்ச்சிகளையும், செயல்களையும் வெளியிடும் சாதனமாக அமைந்திருக்கும் இக்கலை, உள்ளத்துக்கு அழகையும், இன்பத்தையும் அளிக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. நாட்டு மக்களின் உள்ளக்கருத்து, குணச்சிறப்பு, கலை, பண்பாடு, வாழ்க்கைமுறை என்பவற்றை எடுத்து விளக்குவதுடன் கலாசார பாரம்பரியத்தின் முக்கிய அம்சமாகவும் சிறப்புப்பெற்றுள்ளது.
மேலைத்தேய பண்பாடு, கல்வி ஆகியவற்றின் தாக்கத்தினால் பல பழைய நாடகங்கள் மறக்கப்பட்டு மறைந்து கொண்டிருக்கின்றன. மக்கள் வளர்த்த கிராமிய நாடகக் கலை பழங்காலத்திலிருந்து மோடியானவை, பண்பாடற்றவை, இக்கால வளர்ச்சியோடு முரண்பட்டவை எனக்கொண்டு இவற்றின் கலைமதிப்பையோ, நாடக உலகில் இவற்றிற்குரிய முக்கியத்துவத்தையோ அறியாது இவற்றை மக்கள் புறக்கணிக்கலாயினர். இக் காலத்தில் தான் மட்டக் களப்பு மண்ணின் மக்களால் பேணிக்காப்பாற்றப்பட்டு வந்த நாட்டுக்கூத்தை பல்கலைக்கழக மட்டத்துக்குக் கொண்டுவந்த பெருமை, பேராசிரியர் சுவித்தியானந்தனையே சாரும், அவரைத்தொடர்ந்து பேராசிரியர் மெளனகுரு இவற்றுக்கு புத்துயிர் அளித்து வருகிறார்.
இலங்கையில் தமிழர்கள் வாழுகின்ற பிரதேசங்களில் எல்லாம் கூத்துகள் ஆடப்பட்டு வந்துள்ளன. ஆடலும் பாடலும் அடிநாதமாகக்கொண்ட கூத்தே தமிழரது நாடகமாக இருந்தது. 'கூத்தானது, கதை தழுவிய ஆட்டம் என அடியார்க்கு நல்லார் கூறியுள்ளமை கவனிக்கத்தக்கது. இவரின் கூற்றுக்கு இலக்கணமாக அமைந்த கூத்துக்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு, மலையகம், சிலாபம் ஆகிய பிரதேசங்களில் ஆடப்பட்டு வந்துள்ளன. இன்று இப்பிரதேசத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த கூத்துக்கள் பல காரணங்களால் பின்னிலை அடைந்துள்ளது. யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவிலும் சிலாபத்திலும் இவற்றை ஆடுவோர் தொகை வெகுவாக குறைவடைந்துள்ளது.
 
 

மட்டக்களப்பு, மன்னார் ஆகிய மாவட்டங்களின் பொருளாதாரம் இன்றும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மேலும் மக்களின் சமூக வாழ்க்கை சமயத்தோடு பின்னிப்பிணைந்து இறுக்கம் பெற்றிருக்கின்றது. மன்னார் பகுதியில் கிறிஸ்தவ மத அடிப்படையிற் பாடப்பட்ட வடபாங்கு, தென்பாங்கு நாடகங்களும் சபாக்களும் வாசாப்புக்களும் ஆடப்பட்டு வந்துள்ளன. மட்டக்களப்பிலே தென்மோடி, வடமோடிக் கூத்துக்களும் விலாசங்களும் ஆடப்படுகின்றன. இலங்கையில் மட்டக்களப்பிலும் மன்னாரிலும் ஆடப்படும் கிராமிய நாடகங்கள் இன்றும் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளன.
கிராமப்புறங்களில் நாட்டுக்கூத்துக்கள் பெரும்பாலும் கோயில் முன்றலில் ஆடப்படும். கிராமிய நாடகம் ஆடுவதற்கென அமைக்கப்படும் மேடை 'கூத்துக்களரி" என அழைக்கப்படும். இது நாற்பது அடி விட்டமுள்ள வட்டமாக இருக்கும். மூன்று அடி உயரத்துக்கு வட்டம் நிரம்ப மண்ணை உயர்த்தி அதன் மேல் புல்லை வெட்டிப்போட்டு ஆடுவதற்கேற்ப இறுக்கமான களரியாக அமைப்பர். மேடை எல்லாப்பக்கமும் திறந்தே இருக்கும். களரியை வளைத்திருந்து மக்கள் கூத்தாட்டம் பார்ப்பர். இரவிரவாக கூத்து நடைபெறுவதைப்பார்க்க கிராம மக்கள் வயது, பால் வேறுபாடின்றி உற்சாகத்துடன் பங்கு கொள்வர். உழைத்து வாழும் மக்களின் முக்கிய பொழுதுபோக்காகவும் இவை அமைந்துவிடுகின்றன.
கூத்துகளைப் பழக்கி நடத்துபவர்களை அண்ணாவிமார் என்று அழைப்பர். கூத்துக்களின் போது இவரே பெரும்பாலும் மத்தளம் அடிப்பார். கிராமிய நாடகத்தில் இசை, ஆட்டம், உரையாடல் இடம்பெறும். ஆயினும் பாட்டும், ஆட்டமுமே முக்கியம் பெறுகின்றன. கதைத்தொடர்ச்சிக்கும் விளக்கத்துக்குமிடையே உரையாடல் இடம்பெறும். ஆட்டமே சந்தர்ப்பங்களையும், பாத்திரங்களின் பண்புகளையும், கதைப்போக்கினையும் விளக்குகிறது. கிராமிய நாடகம் ஆட்டத்தை அடித்தளமாகக்கொண்டது. மட்டக்களப்பு நாட்டுக்கூத்தில் இன்றும் ஆட்டமே முக்கிய இடம் வகிக்கிறது. மத்தளம் அடிக்கும் சல்லரியின் இசைக்கு ஏற்ப நடிகர் ஆடுவர். நாட்டுக்கூத்துக்கு மத்தளம் இன்றியமையாததாக இருப்பதால் மத்தள அடியே பாத்திரங்களின் ஆட்ட மாற்றங்களையும், இட மாற்றங்களையும், காட்சி மாற்றங்களையும் நிர்ணயிக்கிறது. மத்தளம் இல்லாது கூத்தில்லை. அதுவே கூத்தின் உயிராகவும் இருக்கிறது.
இலங்கையின் கூத்து மரபு வடமோடி, தென்மோடி என இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆடல், பாடல், உடல், ஒப்பனை, கதைப்பொருள், கதைப்போக்கு, ஆயுதங்களைக் கையாளும் முறை என்பவற்றில் இரண்டுக்குமிடையே பல வேறுபாடுகள் உள்ளன. இவ்விரு கூத்து மரபுகளையும் இன்னும் பேணும் மாவட்டமாக மட்டக்களப்பு பெருமை பெறுகிறது. மட்டக்களப்பில் ஆடப்படும் வடமோடி, தென்மோடி நாடகங்களைக்கொண்டு அவற்றுக்கு இடையேயுள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ளலாம்.

Page 13
வடமோடிக்கும் தென்மோடிக்கும் கதைப்போக்கு, இசை, ஆடல், உடல் முதலியவற்றில் வேறுபாடு உண்டு. வடநாட்டு புராதன இதிகாசக் கதைகளைக் கொண்டவை வடமோடி நாடகங்கள். இராம நாடகம், தர்ம புத்திர நாடகம், பப்பிரவாக நாடகம், பதினெட்டாம் போர், குருசேத்திரன் போர், சூர சம்சாரம், செல்வ நாடகம், பாண்டவர் வனவாசம், கர்ணன் போர் போன்றவை இன்று இலங்கையில் ஆடப்படும் வடமோடி நாடகங்களாகும். போர் செய்து வெற்றி பெறுவதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருக்கும் இக்கூத்தில் வீரம், கோபம், அழுகை முதலிய சுவைகள் விரவி வரும், ஈழத்தில் நடிக்கப்படும் தென்மோடி நாடகங்களில் பவளவல்லி நாடகம், நொண்டி நாடகம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். பெரும்பாலும் தமிழ்நாட்டுக் கதைகளைக் கூறுவனவாய் காதற்சுவை பயந்து காதல் கைகூடுவதாக முடிகின்றன. இவற்றில் நகைப்பு, வியப்பு போன்ற சுவைகளைக் காணலாம். பழைய முறைப்படி இசை தென்மோடியில் அமைந்திருக்கும்.
மட்டக்களப்பில் ஆடப்படும் கூத்துக்களில் நமது புராதன கூத்துக்குரிய பல அம்சங்கள் காணப்படுகின்றன என்று பேராசிரியர் சு. வித்தியானந்தன் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அந்நியத்தாக்கம் அதிகம் ஏற்படாமையும், இயற்கை அமைப்புக் காரணமாகவும், ஏனைய பிரதேசங்களுடன் அதிக தொடர்பின்றி இருப்பதும், மக்கள் அவற்றின் பால் ஈர்க்கப்பட்டமையும் இக்கூத்து மரபு அழியாமல் பேணப்பட்டமைக்கான காரணங்களாகும்.
கூத்து பழகுவது பற்றிய மரபும் மிகவும் கவனிக்கத்தக்க விடயமாகும். வயல் கிராமங்களில் அதிகமாக அரிவு வெட்டு முடிந்த பின்பே கூத்து ஆரம்பமாகும். கூத்தாட விரும்புபவர்களை அழைத்துப் பாடச்சொல்லி குரலுக்கும் தோற்றத்திற்கும் ஏற்ப பாத்திரங்களைத் தெரிவு செய்வர். தொடக்கத்தில் இரவு பத்து மணி வரை கூத்துப்பழகுவர். நான்கு ஐந்து மாதங்கள் பழகிய பின் காலில் சதங்கை அணிதல் நடைபெறும். இதை ஒரு விழாவாகக் கொண்டாடுவார்கள். அரங்கேற்றத்திற்கு ஒரு கிழமைக்கு முன் ஆடை அணிகலன் அணியாமல் முழுக்கூத்தினையும் இரவு முழுவதும் ஆடி அடுக்கு பார்ப்பார்கள். இவ்வளவும் நிகழ்ந்து பின்னர், குறிப்பிட்ட நன்னாளிலே அரங்கேற்றம் நடைபெறும். இது முதலாம் களரி எனப்படும் சில நாட்களுக்கு பின் இரண்டாம் களரி இடம்பெறும். விடியவிடிய ஆடப்படும் இக் கூத்துக்கள் செழுமையும் தனித்துவமும் வாய்ந்தவையாக அமைந்திருப்பதை அவதானிக்கலாம்.
மன்னார் பகுதியில் வழங்கும் கிராமிய நாடகங்களின் வகைகள் இருவகைப்படும். அவை மாத்தோட்டப்பாங்கு, யாழ்ப்பாணப்பாங்கு என்பனவாகும். மாத்தோட்டப்பாங்கை தென்பாங்கு என்றும் தென்மெட்டென்றும், யாழ்ப்பாணப்பாங்கை வடபாங்கென்றும் வடமெட்டு என்றும் அழைப்பர். வடபாங்கிற் கடவுள் வாழ்த்து விருத்தப்பாவில் அமைய, தென்பாங்கில் வெண்பாவில் அமையும்.
 
 

தென்பாங்கிற் பாத்திரங்கள் தத்தம் நிகழ்வுகளில் ஒவ்வொரு வரவுக்கும் செலவுக்கும் தனித்தனி தருக்களும், சிந்துகளும் அவற்றிற்குரிய ஆடல்முறைகளும் உண்டு. உதாரணமாக, ஞானசவுந்தரி நாடகத்தில் தருமர் ஒவ்வொரு முறை தோன்றும் போதும் தரு, சீந்து, ஆடல்முறைகள் இருக்கும். ஒரு கதையை ஒருவர் மாத்தோட்டப் பாங்கிற்பாட இன்னொருவர் யாழ்ப்பாணப்பாங்கிற் பாடுதலுமுண்டு.
மன்னார் மாவட்டத்தில் ஆடப்படும் நாடகங்கள் சிங்கள மொழியிலும் காணப்படுகின்றன. தென்பாங்கு, வடபாங்கு நாடகமுறை சிங்கள நாடகங்களில் காணப்படாத போதும் நாடக அமைப்பும் பாவகைகளும் மன்னார் பகுதிக்கூத்துக்கள் போன்றே அமைந்துள்ளன. பேராசிரியர் சரச்சந்திரா தமது நாடகங்களுக்குக் கூத்துக்களே அடித்தளமிட்டன எனக்கூறியுள்ளார்.
தென்னிந்திய கிராமிய நாடகங்கள் இலங்கைக்கிராமிய நாடகங்களுடன் சில அம்சங்களில் தொடர்பு கொண்டுள்ளன. கன்னட தேசத்து யக்ஷகான நாடகத்திற்கும், மட்டக்களப்பு வடமோடி நாடகத்திற்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாக அறிய முடிகிறது. ஒப்பனை, உடை, ஆட்டம், விறுவிறுப்பு களரி போன்றவை இருவகை நாடகத்திலும் ஒத்திருக்கின்றன. கதகளிக்கும் வடமோடிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. வடமோடி போலவே கதகளியும் ஆட்டம், இசை, அபிநயம் என்பவற்றின் மூலம் கதையை உணர்த்துகின்றது. உடையலங்காரம், தயாரிப்பு, களரி அமைப்பு ஒளி அமைப்பு முதலியவற்றிலும் ஒற்றுமையைக் காணலாம்.
தமிழகத்திலே தெருக்கூத்து பல ஆண்டுகளாக இருந்துவந்த போதிலும் இப்போது வழக்கொழிந்து போயுள்ளது. ஆனால் இலங்கையில் தமிழிலும், சிங்களத்திலும் தெருக்கூத்து என்று சொல்லப்படுகின்ற வீதி நாடகங்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக இன்றும் ஆடப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பிலும் மன்னரிலும் பொதுமக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த கூத்துக்கலை, அழகுக்கலைகளில் ஒன்றாக மிளிர்ந்து விளங்குகிறது. பொதுவாகப்பார்க்குமிடத்து இன்றைய தலைமுறையினர் இவற்றைக்காப்பாற்றி அடுத்து தலைமுறையினருக்கு இவற்றை கையளிக்க வேண்டியது அவசியமானதாகும். அப்பொழுதுதான் எமது பழந்தமிழ்க் கலைகளை நாம் பாதுகாத்தவர்களாவோம்!!!
NuwuDITI ಇಂಗ್ಲಕ್ಹGon இயன்ற அன்பளிப்புக்க .இ 60პ6ir ԴԱՔԵish 69آك6تقلت له: .
வளர்ச்சிக்கு -♔ ഖു്.
略 始 சஞ்சிகையின் طا 601 لهT6ة نقلا ،، مماجع
ساآرقه |

Page 14
என் க(வி)தை
|m அமிழ்தன்
பண்டாரக்குளம் எனது ஊரு பட்டினிப்பிள்ளையார் எனது தேரு பூபதி மைந்தன் எனது பேரு புலமைக் கவிதையைக் கொஞ்சம் கேளு!
பத்து வயதில் பெற்றதாயை இழந்தேன் பட்டினி பசியில் வீதி வேலிகளில் விழுந்தேன் சுற்றமும் உறவும் செய்த சூழ்ச்சியால் அழுதேன் சோதனையும் வேதனையும் சூழ்ந்த வாழ்வால் அலைந்தேன்!
சகுனி மாடன் சூழ்ச்சியால் தாயின் நிலம் பறிபோனது சண்டாள முடவன் ஆசையில் தந்தை நிலம் பறிபோனது உருளிக்குத்தியன் சூதில் பாட்டன் நிலம் பறிபோனது குறளிப்பரியாரி மருந்தில் என் உடல் பாதியானது!
பாதிரிப்பள்ளியில் நன்றாகக் கற்றேன் பாடநூல் வாங்க இரத்தம் விற்றேன் செருப்பின்றி சாலையில் நடந்தேன் காசின்றி சோற்றுப்பசியில் உருண்டேன்!
குப்பைகள் கூட்டிவிற்று மிதிவண்டி வாங்கினேன் கொடுமைகள் அழிந்திட மார்க்சின் வரியில் ஏங்கினேன் குடிசை வீட்டில் நிலவு விளக்கில் படித்தேன் குழிகள் தோண்டிய உறவுகளின் நாவினால் துடித்தேன்!
மரணத்தை நோக்கி மகிழ்வுடன் கவிதை புனைகிறேன் மனிதத்தை நேசிக்கும் மனிதர்களை நினைக்கிறேன் கரணம் அடிக்கும் மானிடக் கூட்டை வெறுக்கிறேன் காலத்தால் அழியாத கவிதைகளை இழந்து அழுகிறேன்!
அறுபதில் பயங்கர கொள்ளையரால் கால் முறிக்கப்பட்டேன் பொறியியல் மகனின் புலம்பெயர் வாழ்வில் நானும் வாழ்கிறேன் சிறுபொறியும் நெருப்பாகும் என்ற சிந்தனையில் வாழ்கிறேன் சேமிப்பு நிறைந்த அன்பு மனைவியின் காவலில் தமிழை ஆள்கிறேன்!!!
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 

சொந்தமில்லை சோகமில்லை
பவானி சிவகுமாரன்
திெலும் மனம் ஒன்றவில்லை. இங்கே வந்திருக்கவே கூடாது. இங்கு வந்திருக்கும் பலரை எனக்குத் தெரியாது. சிலர் என்னை சுட்டிக்காட்டி விசாரிப்பது தெரிந்தது. நான் கவனியாதது போல் இருந்து விடுகிறேன். எனக்கு இவர்கள் யாரையும் தெரிந்து கொள்ளும் ஆசையிருக்கவில்லை. இந்த விடயத்தில் மனம் நொந்து, பாறாங்கல்லாகி இரண்டு, மூன்று தசாப்தங்கள்.
எவ்வளவு நேரம் மொபைல் போனில் கேம் விளையாடுவது? பார்வையைத் திருப்பினேன். சம்பந்திகள் ஒருவருக்கொருவர் பொட்டு வைத்துக் கொண்டிருந்தனர். பட்டுச்சீலைகளின் சரசரப்பு. குசல விசாரிப்புகள், சிரிப்புகள். நீர் முந்திப்பார்த்ததற்கு இப்ப கொஞ்சம் "பெட் ஆகிட்டீர்', 'அதில க்ரீன் சாரியோட கதைச்சிக்கொண்டிருக்கிறது யார்? ஜெயம் மாமியா? விசாரணைகள். பீற்றல்கள். "ஒ. இவர் வெடிங் அன்னிவர்சரிக்கு வாங்கித் தந்தது. நெக்லஸ் நல்லாயிருக்கா?” பெருமிதங்கள், மகள் இப்ப பைனல் இயர். இவர்களின் பேச்சுக்களோடு நாதஸ்வரமும் மேளமும் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. ஊதுபத்தி, பூக்கள், ஃபெர்பியூம்கள் வாசனை. எனக்கு தலையிடிப்பது போல் இருந்தது. தாலி கட்டி முடிஞ்சதும் வெளிக்கிட்டிடோணும்.
"அம்மாஆர். அப்பா வருவாரா கூட்டிக்கொண்டு போக?"
"டைம் இருந்தால் வருவார்.
இவ்வளவு நேரமும் பொறுமையாய் இருந்த என் மகள் ஆர்த்தி பொறுமையிழப்பது தெரிந்தது.
முதல்ல உங்களோடு வந்து கதைச்சுக் கொண்டிருந்தா. பிங்க் கலர் சாரி. அவ யார்?
000 AU of 0.888 - 8 Phi PA
இந்த லலிதா மாமியை சந்திக்காமல் இருந்திருக்கலாம். ஆர்த்திக்கு வருகிற மாதம் பிறந்த நாள். தான் நேரில் வந்து செலக்ட் பண்ண வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க அன்று ஆர்த்தியுடன் புடவைக்கடையில் நின்றிருந்தேன். சற்றுத்தள்ளி விதவிதமாய் பட்டுச் சேலைகள். கூறைச்சேலைகளை விரித்து வைத்து ஆராய்ந்து கொண்டிருந்தது ஒரு கும்பல்.

Page 15
‘என்ன விலை இது முப்பத்தஞ்சா? எங்களுக்கு இன்னும் கொஞ்சம் நல்லதா நாப்பத்தஞ்சு, ஐம்பதுக்கு.
இந்தப்பட்டுச்சாரி "போட்டி தவ்சனாம் எடுக்கட்டா?
முதலில் இவை எதுவும் என் கவனத்தைக் கவரவில்லை. வேண்டியதை எடுத்துக்கொண்டு திரும்பும் போது.
யார்? பார்த்த முகமாய்த் தெரியவே, நடை வேகத்தைக் குறைத்தேன்.
"சுகந்தி!'
தற்செயலாய்த் திரும்பியதும், இனங்கண்டு பூவாய் சிரிக்கும் முகம். லலிதா மாமி.
‘எப்ப வந்தனிங்கள்?
‘எங்கட சுதாகருக்கு வெடிங். நல்ல காலம் கண்டது. எப்பிடி சுகமா இருக்கிறீங்களா? அட்ரஸ் சொல்லும். நீங்கெல்லாம் ஒதுங்கிட்டீங்கள். பொம்பிள கனடா. நான் தான் பேசி முற்றாக்கிக் கூட்டி கொண்டு வந்தனான்.
இந்த லலிதா மாமி அப்பாவின் ஒன்றுவிட்ட தங்கை. நீண்ட காலம் தொடர்பில்லை. அவர்கள் குடும்பத்துடன் கனடாவில் குடியேறி வெகுகாலம். நான் இனிமேல் காணவே மாட்டேன் என்று நினைத்த உறவிது. தன் தங்கையின் மகனுக்கு மணப்பெண்ணை அழைத்து வந்துள்ளார்.
ஆட்ரஸ் வாங்கி, வீடு தேடி வந்து அழைப்பிதழ் தர, நான் எனது மகளுடன் இன்று, இங்கு கல்யாண மண்டபத்தில் பிரசன்னம். ༤
பார்க்க விரும்பாத, நினைவில் மறைந்து போன பல முகங்களைப் பார்க்க வேண்டியிருந்தது. அருகில் வந்து சிரிக்கும் பல முகங்களில் குள்ள நரிகள் தெரிந்தன.
‘என்னைத் தெரியுதா' - மகாலிங்கம்.
உண்மையில் சொன்னாற் பிறகு தான் தெரிந்தது. நான் பேசாமலிருந்தேன். அப்பாவின் மரண வீட்டிற்குக் கூட வரவில்லை. அப்பாவின் செல்வாக்கைப் பயன்படுத்தி தன்னை உயர்த்திக்கொண்ட நூற்றில் ஒன்று இது. ஏணியை மறந்து போனவற்றில் ஒன்று.
தங்கச்சி இப்ப எங்க? பழைய இடம் தானோ? ஆள் வலு ஸ்ட்ரிக்ட். வேலைல வலு கெட்டிக்காரி என்று கேள்விப்பட்டன். எங்கட ஊர்பிள்ளை. கேட்க சந்தோஷமாயிருந்தது. ஒரு காணி விசயமா நானும் அவவைச் சந்திக்கோணும்.
 
 

அவள் அப்பா மாதிரி ஏமாளி இல்ல. நீங்க நினைக்கிற மாதிரி ஆட. மனம் வெகுண்டது.
ப்ரமோசனாம். கங்கிராயுலேஷன். இப்ப எங்க வேலை. அப்பாக்குத்தான் பார்க்க பொசிப்பில்லை.
இந்த பரிதாபங்களைக்கேட்க எரிச்சலாயிருந்தது.
‘ஒரு மகள் தானா?
兹。受。梦
D
‘என்ன ஒன்டோட நிப்பாட்டிட்டீங்கள்? - சிரிப்போடு ஒரு கேள்வி.
நாங்கள் எல்லாம் பொம்பிளைப் பிள்ளைகளாய் இருந்ததால் தானே
நீங்களெல்லாம் கழன்டனிங்கள். அந்தப் பயத்தில தான். என்னால் என் நினைப்பை அடக்க முடியவில்லை. மனம் எக்காளமிட்டுச் சிரித்தது.
என் மெளனத்தை மெல்ல மெல்ல அவர்கள் உணர்வது தெரிந்தது.
"ஊர்பக்கம் வராமல் விட்டுட்டீங்கள்
நாங்கள் ஒருநாளும் ஊரை விட்டுக் கொடுக்குறேல்ல'
இது இருபத்து சொச்ச வயதிலிருந்த ஒன்று விடுத்த ஸ்டேட்மன்ட். லலிதா மாமியின் தங்கையின் மகன்களில் ஒன்று. ஊரை விட்டுக் கொடுக்குறேல்லயாம். நாட்டை விட்டு ஒட வெளிநாட்டு சிட்டிசன் பொம்பிளை தேடுறான்கள்.
கோபத்தில் எண்ணங்கள் தறிகெட்டோட முற்பட்டன. என் முகத்தின் இறுக்கம் உணர்த்தியிருக்க வேண்டும். அவர்கள் சென்ற பின்னும் மனம் பழைய நினைவுகளிலிருந்து மீள வெகுநேரம் எடுத்தது.
“ச்சீய்.”
உறவுகள் விலகி. மறந்து. பதவி. திருமணம். புதிய உறவுகள். செல்வாக்கு. பிள்ளை என்று வாழ்க்கை வெகு தூரம் சென்ற பின்னும்.
ஏன் இவர்களைக் கண்டதும் இப்படி அல்லாடுகிறேன்? இன்னமும் மனதளவில்
முதிர்ச்சி இல்லையா? இல்லை!. இவர்களால் ஏற்பட்ட தாக்கம் இன்னும்
இருக்கிறது. என் எண்ணங்கள் வக்கரிப்பதை, மறுகுவதை நான்
ಸ್ಖುಮೇಸುಖ.ಖ. இது என் இயல்பிற்கு பொருந்தாத ஒன்று. இங்கு வந்தது
ழை!

Page 16
"சுகந்தி! பாரும் யார் வந்திருக்கிறதென்டு.
பார்த்தேன். அடையாள்ம் தெரியவில்லை. உயரமும் பருமனுமாய் தலை நரைத்து. யாரிது? சூழவும் அழைத்து வந்து முகங்கள். லலிதா மாமி, சித்தப்பா, ஒன்று விட்ட அண்ணா அக்கா. சிரிப்புடன் என்னைப் பார்த்தபடி,
தெரியேல்லயா?
'இல்லை’
பெயரைச் சொன்னார்கள். உடம்பெல்லாம் பற்றி எரிந்தது. அழைத்து வர வேண்டிய நேரம் ஒதுங்கி இருந்து விட்டு, சேர்ந்து கதைத்து குதூகலித்து விட்டு இப்ப வேடிக்கை பார்க்க வந்திருக்கினம்.
"கதையுங்களேன். பேசாமல் இருக்கிறீங்கள்'
உணர்வுகள் கட்டு மீறின. "இங்க என்னத்துககு இனி? வடிவு பார்க்கவா?
சென்று விட்டார்கள். திரும்பிப் பார்த்தேன். தாலி கட்டி முடிந்து விட்டிருந்தது. நான் இந்த தேவையற்ற ஆரவாரத்தில் இதைக் கவனிக்வில்லை. மணமக்களை வாழ்த்த ஒரு "க்யு அணிவகுத்திருந்தது. நானும் வாழ்த்தி விட்டு கிளம்ப வேண்டியது தான். எழுந்த போது தான் கவனித்தேன். எனது அக்கா. பெரியப்பாவின் மகள். ஏதோ சொல்லிக்கொண்டிருக்க மற்றவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். கதை கேட்டுக்கொண்டிருந்த அக் காவின் மகள் இடையிடையே என்னை திரும் பரிப் பார்த்துக்கொண்டிருந்தாள். மற்றவர்களும் தான்.
கதை சொல்லி கெடுத்த பழைய தலைமுறை ஒன்று போய்ச்சேர்ந்து விட்டது. இன்றைய தலைமுறை சொல்லிக் கொண்டிருக்கிறது. நான்ளய தலைமுறை கேட்டுக்கொண்டிருக்கிறது. இது தொடரும். இவர்கள் மற்றவர்கள் பெயரை கெடுத்து சாதித்தது என்ன? எனக்குத் தெரியவில்லை.
'அம்மா இப்ப வந்திட்டுப் போனவை எல்லாம் யார்?
தெரிஞ்ச ஆட்கள்
இல்லாத உறவைச் சொல்லி என் மகள் மனதிலும் வேண்டாத பாசத்தை, எதிர்பார்ப்பை வளர்க்க நான் விரும்பவில்லை. உதவி பெற்று விட்டு மறந்து போன உறவுகள். புறக்கணித்து உறவுகள், தரம் தாழ்ந்த போது புறம் பேசிக்களித்த உறவுகள். எனக்குத் தேவையில்லை. இவர்கள் தேவைப்படாத வாழ்க்கை கடவுள் எனக்குத் தந்திருக்கிறார். மொபைல் போன் சத்தமிட்டது. இவர் தான்.
'ஓ முடிஞ்சது வாங்கோ
 
 

மணமக்களை வாழ்த்தி பரிசுப் பொருட்களை கொடுத்து விட்டுத் திரும்பினேன்.
'அம்மா அப்பா வந்திட்டார்’
கண்ணாடித் தடுப்பின் வழியே கார் வருவது தெரிந்தது.
‘லலிதா மாமி நான் போட்டு வாறன்’
‘சாப்பிடேல்லயா?. ஏன்?
'இல்லை மாமி இவருக்கு ஏதோ அப்பொயின்ட்மன்ட் இருக்காம், வரச்சொல்லி நிக்கிறார்.
பத்து நிமிஷத்தில் சாப்பிடலாம். அவரையும் கூப்பிடும். சாப்பிட்டுப்போகலாம்.'
'இல்லை மாமி. நான் வாறன். கோவிக்காதேங்கோ'
கையைப்பிடித்த மாமியின் கையை மெதுவாகக் கழற்றி விட்டு வெளியேறினேன். மாமியின் பார்வையை முதுகில் உணர்ந்தேன். வேதனையாகத் தான் இருந்தது.
'அம்மாஆ! ஏன் சாப்பிடேல்ல. எனக்கு சரியாயப் பசிக்குது. வாங்கோ FITÜist (BL GLulIG6liffsb.
“ரெஸ்டோரன்டில் சாப்பிடுவோம்'
'எனக்கு வேண்டாம். வெடிங் சாப்பாடு தான் டேஸ்ட்' அடம் பிடிக்கும் மகளை தள்ளாத குறையாக அழைத்து வந்தேன்.
அப்யா! அம்மா என்னை சாப்பிட விடாம கூட்டிக் கொண்டு வந்திட்டா'
இவர் திரும்பிப் பார்த்தார். ஏதோ விளங்கியிருக்க வேண்டும்.
'சரி சரி. போற வழியில நல்ல ஹோட்டலாப் பார்த்து சாப்பிடுவம், எங்க சாப்பிடுவம்?
பார்க் வ்யூ"
"இன்டைக்கு வெள்ளிக்கிழமை
"அப்ப அம்மா விரதமிருக்கட்டும்'
என் குடும்ப உறவின் தித்திப்பில் பழைய உறவுகளும், அவை தந்த கசப்பும் கணவாய்த் தோன்றின!!!

Page 17
பூங்காவனம்
உண்மையின் சொரூபங்கள் உருத்தெரியாமல் சிதைக்கப்பட்டு. நன்மையின் பார்வைக்குள் நங்கூரம் விதைக்கப்பட்டு. பணத்தின் மூச்சுக்குள் முகவரிகள் முடக்கப்பட்டு.
மனத்தின் உயிர்வேர் முறிதலில் கணத்திற்கு கணம் முகத்திரைகளின் மாற்றம். பிணத்தையெழுப்பிடும் பலத்தால் பயண வெளியிலே பலியாட்டங்கள். உயர்ந்து நிற்கும் களியாட்டங்கள்!
வாசப் பொய்கைக்குள் விஷப்பாஷாணமாக
உன் மனத்தடாக மனிதங்கள் அணுவணுவாக கரையும்!
கீதை பேசும் புலத்திலே போதைகளின் நுகர்ச்சிகள்.
பாதை போட்ட செங்கம்பளத்திலே. வதை செய்யும் முட் திணிப்புகள்! ஒதை செய்யும் விட்டில்களால் சீதைகள் சிதையில் கருகிடும் சூட்சுமம்!
விளங்க முடியாத மொழியாக வழங்கப்படும் முகமூடிகள். நலம் பாடும் நட்பு நேயங்கள் நலிவுற்று நிறமிழக்கும்!!!
எம்.எஸ் பாஹிரா - பதுளை
LLLLLS SLLS LSSLS S S S S S SS SS SS SSLSLSS SLSS
உணர்வாரோ!
வீதிகள் விரிந்திருந்தும் வாகனம் பெருகி நித்தம் பாதசாரிகள் விபத்தில் பலியாகும் தன்மையதிகம்!
மதுபோதை தலையிலேறி மதியினை இழந்து சாரதி எதுவுமே செய்ய இயலா ஏகுவோர் உயிரை எடுப்பர்!
நம்பியே பயணம் செய்யும் நலமான பயணி வாழ்வு வம்பான நடத்தை தன்னால் வன்னுயிர் மாய்தல் நன்றோ?
86OT6960Orb
எங்கெங்கும் இந்தக்கோரம் ஏராளம் பெருகலாச்சு சங்கடம் நிகழாவண்ணம் சாரதி திருந்துவாரோ?
பச்சிளம் குழவி முதலாய் பாவையர் பல்லோரீராய் இச்செயல் கவனக்குறைவால் இது மேலும் வளரலாமோ?
எத்தனை உயிரிழப்பு எத்தனை முடவலிப்பு இத்தனை கோர நிகழ்வு இனி வாராதுணருவாரோ?
மூதூர் கலைமேகம்
 
 
 
 

கூண்டுப்பறவை
śmigo
சுங்காவில் றியாழ்
சாதாரண ஒரு ஏழைக் குடும்பத்தில் ஹஸன் நானாவுக்கும் ஹபீபா தாத்தாவுக்கும் தலப்புள்ளயா பிறந்தவள்தான் ஹஸினா. ஹஸன் நானாவுக்கு பரம்பரைத் தொழில் விவசாயம்தான்.
கிடைக்கும் கொஞ்ச நஞ்ச விளைச்சலால குடும்ப வாழ்க்கைய கஷ்டமில்லாம கொண்டு போறாரு. ஹசீனா சாதாரண தரத்துதோடு நின்று விட்டு உம்மாவுக்குத் துணையாக வீட்டில் இருந்து விட்டாள். இப்படியாக நாளும் பொழுதும் கணக்கின்றிக்கழிய ஹசீனாவின் வயதும் இருபத்து மூன்றைத் தாண்டியது. எப்படியாவது ஒரு நல்ல மாப்பிள்ளைய பார்த்து கலியாணம் முடிச்சு வைக்க ஹசீனாவின் பெற்றோர் மாப்பிளை பாத்தாங்க. வந்தவர்களெல்லாம் கைக்கூலி என்ற பேருல வசதிக்கு மேல் மடிப்பிச்ச கேட்க, நல்ல வரன் அமையும் என்று நம்பியே ஒம்பதாவது மாப்பிளையும் வந்து போயிட்டாரு. கவல நெறஞ்ச மனசோட ஹசீனா பொறுமையா படச்ச அல்லாஹற்கிட்ட
இத்தன மாப்பிளை மாருல ஏன் ஒருத்தராவது மனசோடு குணத்த பார்க்காம, வசதியோடு பணத்தப் பாக்குறாங்களே என அழுது தொழுது வேண்டுவாள்.
ஹசீனா ஒய்வு நேரங்களில் தையல் செய்து அதில் வரும் வருமானத்தால் தன் சின்னச்சின்ன தேவைகளை நிறைவேற்றிக்கொள்வாள். இப்படி இரண்டு வருடங்கள் இழுத்தடிக்க, ஒருநாள் பத்தாவதாய் இன்னொரு மாப்பிள்ளை ஹசீனாவை பெண்பார்க்க வரும் நேரம் வந்தது.
தைத்துக்கொண்டிருந்த ஹசீனாவிடம் அவளது தாய் வந்து மகள் மாப்பிளை வீட்டுக்காரங்க வார நேரமாகுது. ரெடியாகுங்க' என்றார். அன்பான அந்த வார்த்தைக்கு கட்டுப்பட்டு பத்தினி அவள் பத்தாவது தடவை தன்னை அலங்கரிக்க அவளது அறைக்குள் நுழைகிறாள்.
ஹபீபா தாத்தா பலகாரத்தை சுட்டு பக்குவமாய் அடுக்கி வைத்தார். ஆண் வாரிசு இல்லாததால் அத்தனை வேலைகளையும் ஹஸன் நானா செய்து முடித்தார்.
மாப்பிளை வீட்டார் வருகைக்காக காத்திருந்தார்கள். ஹசீனா தன் அறையில் அடிக்கடி கடிகார முட்களைப்பார்த்து முடிந்து போன சோகங்களைக் கொஞ்சம் மீட்டிப்பார்த்தாள். இப்படியிருக்க மாப்பிள்ளை வீட்டார் மாருதிக்

Page 18
காரில் வந்திறங்கினர். அவர்களை வரவேற்று அழைத்து வந்து உட்கார வைத்தார்கள். வந்தவர்களுக்கெல்லாம் ஹசீனா தேநீர் பரிமாற மாப்பிள்ளை சற்று நிமிர்ந்து பார்க்க, ஹசீனா வெட்கத்தினால் புன்னகை பூத்த முகத்துடன் கதவோரத்தில் சென்று மறைந்து கொண்டாள்.
மாப்பிள்ளை வீட்டார் பேச்சை ஆரம்பித்தனர்.
"பொண்ண புடிச்சுப்போச்சு. இந்த வீட்டுடன் மாப்பிள்ளைக்கி மோட்டார் சைக்கிள், ரோட்டோர காணித்துண்டு, பத்து பவுண் நகை இவ்வளவும் போதும். பெரிசா ஒன்னும் கேக்க மாட்டம்
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ஹஸன் நானா. 'கைக்கூலி என்ற பேருல இப்பிடி ஏழக்குமருகள்ட வாழ்க்கைய பாழாக்குறாங்களே. இவங்கெல்லாம் அல்லாஹற்கிட்ட எப்பிடி பதில் சொல்ல போறாங்களோ என்று மனதில் நினைத்தவாறு
'இவளவுக்கும் நான் எங்க போவேன்' என்று கூற.
சினம் கொண்ட சீமான்களின் கார் சில்லுகள் விர் என்ற வேகத்தில் பறந்தன. வழமையான தோல்வியால் குடும்பமே சோகமாயிருந்தது.
தன் பெயருக்கு அர்த்தம் தான் அழகே தவிர, அவள் வாழ்வில் எந்த அர்த்தமும் இல்லையே என்று எண்ணியே வாழுகிறாள் கூண்டுப்பறவையாய் ஹசீனா.!!!
MAİ தேடியது கிடைக்கவில்லை. தேட இனி முயற்சியில்லை. தேகம் மெலிந்து விட்டது!
இனியாவது தேனாய் நீ வருவாய் என தேய்ந்த நிலையில் உனக்காக இவனொருத்தி உன்னையே நினைத்தபடி!!!
வெலிகம ஸிஹற்னா நவாம்
 
 
 
 

பாலா என்றழைக்கப்பட்ட சத்தீஷ்
எம்ரிஷான் ஷெரீப் - மாவனல்லை.
"இந்த முகம், இந்த விழிகள், இந்த அடர்த்தியான புருவங்கள் இவனுக்கு எப்படி வந்தது? உலகத்தில் ஒருவரைப் போலவே ஆறு பேர் இருப்பார்கள் என்பது உண்மைதானோ? இல்லையே. இவனது சுருட்டை முடி அவனுக்கு இருக்கவில்லையே. அவன் இவனை விடவும் உயரமும், சிவப்பும் மிகுந்தவனல்லவா? எனினும் இதே அடர்ந்த இமைகளோடு கூடிய கருவிழிகளும், இதழோரச் சிறுநகையும், ஒரு பக்கப் புருவ உயர்வுடன் நிறுத்தும் பேச்சும் அவனுக்கும் இருந்ததுவே."
ஒரு அழகிய இளம்பெண், “எக்ஸ்கியூஸ் மி. பேனா இருக்கிறதா?"எனக் கேட்டு ஒரு சராசரி இளைஞனை ஒரு நிமிடம் தொடர்ந்து உற்று நோக்கியதில் அவன் கலவரப்பட்டிருக்க வேண்டும். திரும்பவும் ஒரு “எக்ஸ்கியூஸ் மி" யை உதிர்த்து விட்டு இன்னொருவரிடம் மெல்ல நகர்ந்தாள்.
இன்றைய இரவில் தனது நண்பர்களுடனான அரட்டையில் இவன் இந்நிகழ்வைப் பற்றி ஆச்சரியம் கலந்த அலட்சியத்தைத் தனது குரலில் கலந்து விவரிக்கக் கூடும், "ஒரு ஆப்பர் பிகர் இன்னிக்கு என்னை ஹாஸ்பிடலில வச்சு சைட் அடிச்சுக்கிட்டே இருந்தாடா, மொபைல் நம்பர் கூடக் கேட்டா, நாந்தான் குடுக்காம வந்திட்டேன். பொண்ணுங்ககிட்டிருந்து ஒரே தொந்தரவுடா" எனப் புளுகி நண்பர்களின் பொறாமைப் பார்வையில் தன்னை ஒரு நாயகனாய்ச் சித்தரிக்க முயற்சிக்கவும் கூடும். இல்லையெனில், அவனைப் போல இவனுக்கும் டயறி எழுதும் பழக்கமிருப்பின் இன்றைய திகதியின் கீழ் எழுதியும் வைப்பான்.
எவ்வாறாயினும், அவன் ஜாடையிலொருவனைச் சந்திக்க நேரிடுமென முன்பே அறிந்திருப்பின் தனது வருகையைத் தவிர்த்திருக்கலாமென எண்ணினாள். இல்லை. தவிர்க்க முடியாது. கணவனது குருதிப்பரிசோதனை அறிக்கை இன்று வைத்தியரிடம் சமர்ப்பிக்கப் படவேண்டும். அதன்மூலம்தான் அவரைத் தாக்கியிருப்பது புற்றுநோயா என அறியமுடியும்.
அவருக்கு ஏதேனும் ஆகிவிடும் பட்சத்தில் இவளுக்கென்று யாருமிலர். அதுவும் கல்லூரிப்படிப்பைப் பாதியில் நிறுத்தி அவசரம் அவசரமாக சொந்தத்திலேயே திருமணம் முடித்து அவனுடன் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர் தனது தோழிகளுடனான சம்பந்தங்களும் தொடர்பற்றுப் போயிற்று. கொஞ்சம் தாமதித்தாவது வந்திருக்கலாம். உறங்கிக்கிடந்த

Page 19
அவன் சம்பந்தப்பட்ட நினைவுகளை, இவன் எழுப்பிவிட்டு ஏதுமறியாதவனாய் அப்பால் நகர இவளிங்கே அவன் நினைவுகளோடு அல்லாட வேண்டியிருக்கிறது.
கல்லூரியில்தான் அவன் அறிமுகம். முதலாம் வருட மாணவியாய் இவள் நுழைய, இரண்டாம் வருட மாணவனாய் அவன் இருந்து இவளை ராகிங் தொந்தரவிலிருந்து காப்பாற்றினான். முதல் வகுப்பு மாணவர்களனைவரும் ராகிங்கில் மாட்டிக்கொண்ட போதிலும் சீனியர்கள் இவளை மட்டும் அணுகவேயில்லை. தன்னை மட்டும் காப்பாற்றிய காரணம் குறித்து அவனிடமே கேட்டுவிடலாமெனினும் ஏதோ ஒரு கூச்சம் தடுத்தது.
அம்மாவுடன் வாழ்ந்த இவளது முதல் பத்து வருட காலத்திலும் பள்ளிக்கூடத்திலோ, வெளியிலோ எந்த ஆண் நண்பர்களும் இவளுக்கென்று இருக்கவில்லை. அம்மா இறந்ததற்குப் பிற்பாடும் தனிமை மட்டும்தான் இவளுக்கு நெருங்கிய தோழியாக இருந்தது. அப்பாவும் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை. இவளை நல்லபடியாக வளர்த்தெடுக்க வேண்டுமென்ற உயர்ந்த நோக்கமெதுவும் அதற்குக் காரணமல்ல. இவருக்குப் பெண் தர யாரும் முன்வரவில்லையென்ற காரணம்தான் பிரதானம். இவரது குடிப்பழக்கமும், சந்தேக புத்தியும் அம்மாவை இவர்தான் தூக்கத்தில் தலையணையை முகத்தில் அழுத்திக்கொன்றார் என்ற ஊராரின் பேச்சும் இவரது இன்னொரு திருமண முயற்சிக்குப் பெருந்தடையாக அமைந்தது.
அம்மாவின் அழகு, நிறம், அமைதி அப்படியே இவளுக்கும் வாய்த்திருக்கிறது. வகுப்புத் தோழிகள் கூட அடிக்கடி சொல்வார்கள்.
"ராஜி, உன் அழகுக்கும் நிறத்துக்கும் சீக்கிரம் நீ லவ்வுல விழுந்திடுவே"
லவ்வாவது, மண்ணாவது. அம்மாவினதும் அப்பாவினதும் காதல் அம்மாவின் உயிரோடும், அப்பாவின் போதையோடும் கலந்து கரைந்துபோனதைப் பார்த்து வளர்ந்தவளுக்குக் காதல் மேல் விருப்பம் வருமா என்ன? அப்பா, அம்மாவை அடிப்பதையும் அம்மா தனிமையிலிருந்து விசும்பி அழுவதையும் கூடச் சிறுவயதில் இவள் பார்த்திருக்கிறாள். இதில் எங்கிருந்து காதல் மேல் இவளுக்கொரு நேசம் வரும்?
பள்ளிப்படிப்பின் இறுதியில் மிகச்சிறந்த புள்ளியைப்பெற்ற மாணவியென்ற காரணத்தினால் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர் முதல் அப்பாவின் நண்பர்கள் வரை அநேகர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இவள் கல்லூரி சென்று படிக்க அனுமதித்திருந்தார் அப்பா. அதுவே பெரிய விஷயம்.
வெளியே மழை லேசாய்த் தூறிக்கொண்டிருந்தது. இப்படியான ஒரு சூல்நிலையில்தான் அவனுடனான முதல் பேச்சும் இவளுக்கு நிகழ்ந்தது நினைவிருக்கிறது. கல்லூரி கெண்டீனில் சிற்றுண்டிக்கான வரிசையில் இவளும் தோழியும் நின்றிருக்கையில் இவர்களுக்கான உணவை அவனே வாங்கிவந்து அருகினில் ஒரு புன்னகையோடு நீட்டினான். தோழி வாங்கி
கலை இலக்கிய சமூக சஞ்சிை
 
 
 

பூங்காவணம்:
விட்டாள். இவளும் வாங்காவிட்டால் நன்றாக இருக்காது என்பதால் வாங்கிக்கொண்டாள். மூவரும் கெண்டீனில் போடப்பட்டிருந்த பச்சைநிற ப்ளாஸ்டிக் கதிரைகளில் அமர்ந்திருந்தனர்.
“உங்கட சிநேகிதியைப்போல நீங்களும் சிரிச்சீங்களெண்டால் இன்னும் வடிவாயிருப்பியள்” என்றவன் சொன்னதன் பிறகுதான் தயக்கம் நழுவித் "தேங்க்ஸ்” சொன்னாளிவள்.
"சரி. உங்கட பேரென்ன? எனக்கு ரெண்டு பேரிருக்கு. பதிஞ்ச பேரு சத்தீஷ், அதச் சொல்லித்தான் இஞ்ச எல்லோரும் கூப்பிடுகினம். ஊருல, வீட்டுல, அம்மா எல்லோரும் பாலா எண்டுதான் கூப்பிடுவினம். நீங்கள் என்னெண்டு கூப்பிடுவியள்?"
"நான் எதற்கு உங்களைக் கூப்பிடப் போகிறேன்?” என்று எண்ணியவள் பின்வந்த நாட்களில் பாலா என்றுதான் கூப்பிட்டாள். இவள் புன்னகையை மட்டுமே பதிலாகத் தருவதைக்கண்டு தோழிதான் இவள் பெயர் சொல்லி, இவளை மட்டும் ராகிங்கிலிருந்து காப்பாற்றியதற்கான காரணம் கேட்டாள்.
“எனக்கொரு தங்கச்சி இருந்தவ. சுவாதியெண்டு பேர். இவங்களப் பார்க்கையில அவளின்ட நினைவுதான் அப்படியே வருது. நல்லாப் படிப்பா. இவங்களப்போலவே நல்ல வடிவு. எண்ட மேல அண்ணா, அண்ணாவெண்டு ரொம்பப் பாசமாயிருந்தவ. ஏலெவல் முடிச்சிட்டு ரிசல்ட்ஸ் வரும்வரையில கொழும்பு போய் மாமாவின் வீட்டுல இருந்தனான். அவர் ரொம்ப வசதிப்பட்ட மனுஷன். அங்க இருந்துதான் கம்ப்யூட்டர் கிளாஸ் போன நான். அப்போ வந்த சுனாமியில ஊருல இருந்த தங்கச்சியும், அம்மாவும், அப்பாவும் இன்னும் நிறைய சிநேகிதங்களும் தவறிட்டினம், ஊருல நிறையப் பேர் செத்துப் போயிட்டினம். எங்கட வீட்டு வளவுல இருந்த முப்பது வருஷப் பனமரம் கூடச் சாஞ்சிருந்தது. அவ்வளவு உசரத்துக்கு கடல் வந்திச்சுதெண்டால் ஊருல நிறையப் பேர் மரிப்பது சாத்தியம் தானே?"
பதிலின் தேவையற்ற கேள்வியோடு அவன் நிறுத்துகையில் இவள் விழிநீர் கசியத் தலைகுனிய வேண்டியிருந்தது.
“பிறகு கொழும்பு மாமாதான் என்னை இஞ்ச சென்னைக்கு அனுப்பிப் படிக்கவைக்கிறார். நல்லாப் படிக்கிற நானல்லோ. அவரின்ட மகள எனக்குக் கட்டிவைக்க அவருக்கொரு எண்ணமிருக்கு. இந்த ராஜி கூடக் கதைக்கையில் சுவாதிகூடக் கதைக்கிற உணர்வும், களிப்பும் தான் ஏற்படுது. நிசமாத்தான்."
பின் வந்த நாட்களில் அவனது காதலென்ற எண்ணமற்ற பாசத்துடனான உரையாடல்களில் இவள் மனதும் பூரித்துப் போயிற்று. இவளது தயக்கங்கள் விலகி நட்பு வேர் இறுகிச் செழித்து வளரலாயிற்று. கிடைத்த நேரங்களிலெல்லாம் கல்விச்சந்தேகங்கள், அவனது அம்மா செய்யும் தேங்காய்ப் பிட்டின் சுவை, ஊர் நிலவரங்கள், இவள் வீட்டுப் புது வரவான

Page 20
நாய்க்குட்டி, முன்னைய நாள் பார்த்த திரைப்படம், வீட்டுத் தோட்டத்தில் நேற்றுப் பூத்திருந்த பெயரறியாப் பூ என இருவருக்கும் உரையாடப் பல விஷயங்கள் இருந்தன.
அவனது அநேக உரையாடல்களின் முடிவில் "நிசமாத்தான்” என ஒரு புருவமுயர்த்திச் சொல்வது மிக அழகாக இருக்கிறதெனத் தோழி பலமுறை வியந்து அவளுக்காக அவனிடம் காதல் விண்ணப்பம் விடுக்கச் சொல்லிக் கெஞ்சியதில் இவளும் அவனிடம் கேட்டாள்.
"நாந்தான் உங்ககிட்டயும், அவங்ககிட்டயும் முன்னமே சொல்லிட்டனல்லோ. எனக்கு அந்தமாதிரி எந்தவொரு எண்ணமுமில்ல கண்டியளே. எண்ட மாமா எனக்கு இண்டைக்கு இவ்வளவு செலவழிச்சுச் செய்யுறதெல்லாம் சும்மாவெண்டே நெனச்சியள்? அவருக்கு அவரிண்ட மகள எனக்குக் கட்டி வைக்கவேணுமெண்ட எண்ணம். அந்தப் பெட்டை அவ்வளவு வடிவில்லை. அம்மா இருந்திருந்தாக் கூட மறுப்பேதும் சொல்லியிருக்க மாட்டா. நிசமாத்தான்!
நானும் இஞ்ச நல்லபடியாப் படிச்சு முடிச்சுட்டு அங்க போய்க் கல்யாணம் முடிச்சு அவங்களையும் கூட்டிக்கொண்டு லண்டன், கனடா, சுவிஸ் எங்கேயெண்டாலும் போய்ச் சீவிக்கனும் என்ற எண்ணத்திலிருக்கிறன். இலங்கையில் சீவிக்கிறது வலுகடினம். உங்கட சிநேகிதிக்கிட்ட சொல்லுங்கோ. அவங்களும் எனக்குத் தங்கச்சி மாதிரித்தான். நிசமாத்தான்!”
தோழியிடம் விடயத்தைச் சொன்னதில் கலங்கிய விழிகளுடன் அன்று விடைபெற்றுப் போனாள். இவனது தனிமைத் துயரங்கள், தேசத்தைப்பிரிந்த சோகம், யுத்தக் கதைகள் கேட்கும் போது இவளது கவலைகள் அற்பமானதெனத் தோன்றும். இவனைச் சந்திக்கும் முன் பல இரவுகளில் தலையணை நனைய தனிமையில் விசித்து விசித்தழுதிருக்கிறாள். *
தொடர்ந்த இவர்களது நட்பில் கல்லூரியில் இருவரையும் இணைத்துப் பலகதைகள் உலாவந்தன. ஒரு அழகனும், ஒரு அழகியும் கல்லூரியில் தினமும் ஒன்றாய்ப் பலர் பார்க்க உலாவந்தால் இதுபோலக் கதைகள் கிளம்புவது இயல்புதானே. அவளது அப்பாவின் காதுகளுக்கும் எட்டி அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் வாதிட்டுத் தோற்றுத் தலை குனிந்தாள்.
"இன்னிக்கு ப்ரண்ட்ஸ்னு சொல்லிட்டுத் திரியுறீங்க. கண்டிப்பா ஒருநாள் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கத் தான் போறிங்க!" என்ற இருவரதும் நண்பர்களின் வார்த்தைகளைப் பொய்யாக்கி ஒரு அடர்மழை நாள் இரவில் தெருவோரமுனையில் காத்திருந்த இவளது அப்பாவின் கத்திக்குத்துக்கு இலக்காகி பாலா என்றழைக்கப்பட்ட சத்தீஷ் பரிதாபமாகச் செத்துப் போனான்!!!
 
 

என் உணர்வுகளை இறக்கி வைக்க நீயின்றி யாரிருக்கிறார் இங்கு?
கஷ்டங்களைக்கூட இஷடமாக்கும் கலையை கற்றுத்தந்தவள் நீயல்லவா? நான் நினைக்கும் போது இவன் அருகில் வா!
காத்துக்கிடக்கிறேன் எப்போதும் உன் அழைப்புக்காக! தவமிருக்கிறேன் எப்போதும் உன் உறவுக்காக!
பூக்களை
இப்போதெல்லாம் வெறுக்கிறேன்.
உன்னுடன் போட்டி போட்டு வாசம் வீசுவதால்!
என் உள்ளகிடக்கைகளை உன்னிடம் கொட்டி விட நினைக்கிறேன். நீ என்னை ஊமையாக்கி சிரிக்கிறாய்!!!
வி. விஜயகாந்த் பலாங்கொடை
கனவு கலைவதா
ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் இருப்பவன் தரணியாள்பவனா தலைகொய்யும் கள்வனா?
பத்துமாதம் சுமந்தவள் பரிதவிப்பதா இரத்தம் கசிந்து கருச்சிதைவதா. கனவு கலைவதா.
கண்மணியாகக் காத்தவள் துயர்படுவதா. துன்பம் சூழ்வதா?
கலையின் கையில் கத்தி. மானுடம் காண்பது இரத்தம்.
மானுடத்தின் சிதிலம் கற்பின் கனதி.
இவ்வேளை பிறக்கிறான் பிள்ளை நிலவு. இது
உண்மை நினைவு!!!
அ. பேனாட் வவுனியா

Page 21
:é. 38 : வாழ்க்கையினை பாடுகின்ற வானம்பாடி எழுத்தாளர் சுதாராஜ்!
நிலாக்குயில் புநிலாக்குயில்
இலக்கியம் மனித வாழ்க்கைக்கு இன்பத்தை தருகிறது. மனித உள்ளத்தில் புதுத்தெம்பையும், புத்துணர்ச்சியையும் ஒரு தெளிவையும் ஏற்படுத்துகின்றது. சிந்தனா சக்தி கொண்ட மனிதனின் வாழ்வில், தான் பெற்றுக்கொண்ட அனுபவங்களை காத்திரமான முறையில் கருத்து ரீதியாக வெளிப்படுத்தும் முயற்சிக்கான ஊடகம், இந்த இலக்கியம் தான். இலக்கியம் காலத்தின் கண்ணாடி,
கற்பனை கலந்த யதார்த்தத்தை உணர்த்துவது இலக்கியம். எனவே ஒரு எழுத்தாளனின் எழுதுகோலுக்கு யதார்த்தங்களை படம்பிடித்துக்காட்டும் சக்தி உண்டு. தொலைந்து போன வாழ்வை தோண்டிக்கொடுப்பது இலக்கியம். எழுத்தாளனின் கண் ஒரு கெமரா.
கவிதைகளை விட சிறுகதைகளால், சொல்ல வந்த விடயங்களை நன்றாகவே சொல்ல முடிகிறது. அந்த வகையில் ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் சுதாராஜ் பல சிறுகதைத்தொகுதிகளை வாசகர்களுக்கு முன்வைத்துள்ளார். 1970களில் எழுத்துலகத்துக்கு பிரவேசித்தவர் இவர். எழுத்தாளர் சுதாராஜ் அமைதியான தோற்றத்துடன் காணப்படும் ஆர்ப்பாட்டமில்லாத ஒருவர். அவரது நடத்தைகள் அவரது எழுத்துக்கு புறம்பாக இருக்காது. ஏனையவர்களின் துன்பங்களைக் கண்டு வருந்தும் மனமுடையவர் இவர். யதார்த்தத்தை பேசுகிற யாத்ரீகன், வாசிப்பவர்களை யோசிக்க, நேசிக்க வைக்கும் இந்த கதைஞருக்கு வார்த்தைகள் வாலாயப்பட்டதால் கருத்தானது கட்டிடங்கள் செய்வதற்கு கற்களைக் கொடுத்திருக்கிறது. கற்பனைகள் சொற்களைக் கொடுத்திருக்கிறது.
தனிமனித உயர்வுகளில் மட்டுமே நுழைந்திடாமல் சமூக அவலங்களை புடம் போட்டுக்காட்டும் இவரது கதைகள் மனதை செழுமைப்படுத்துவதுடன் மனநிலையையும் செதுக்குகின்றன.
'ஒரு நாளில் மறைந்த இருமாலைப்பொழுதுகள்’ என்ற தொகுப்பில் வரும் 'கால்கள்’ என்ற கதை, வறுமையில் வாடும் குடும்பம் பற்றியது. சோற்றைக்கண்டு பத்து நாட்களுக்கும் மேலாகிற நிலையில் சோறு சாப்பிட வேண்டும் என்ற அந்த சிறுவனின் ஆசை கண்ணிரை வரவைத்த, உருக்கமான கதையாகும்.
தெரியாத பக்கங்கள்’ என்ற தொகுதியில் ஆனந்த விகடனில் பரிசு பெற்ற 'அடைக்கலம்' என்ற கதை ஜீவகாருண்யம் பற்றி பேசுகிறது. இதே
 
 
 

தொகுதியில் அமைந்திருக்கும் "மெய்ப்பொருளி என்ற கதை ஏழ்மையின் காரணமாக இன்னும் மணமுடிக்காத மூன்று சகோதரிகள் பற்றியது. அகிலா (40 வயது), சாந்தா, அம்பிகா (35 வயது) என்ற வயதடிப்படையில் இருக்கும் சகோரிகளில் முதலாமவளை அவளது இருபதாவது வயதில் சதானந்தன் என்றொருவன் காதலிக்கிறான். ஆனால் அவன் பிரான்ஸிருந்து வந்த பிறகு 35 வயதுடைய அம்பிகாவை மணமுடிக்க விரும்புவதாய் கூறுகிறான். இது அகிலாவை மட்டுமல்ல. நம் எல்லோருடைய இதயத்திலும் தீ மூட்டுகிற, மனதை சுட்டெரிக்கிற ஒரு விடயம். நரை தட்டும் முடியை வைத்துக்கொண்டும் சில ஆண்வர்க்கத்துக்கு இளமையான பெண் கேட்கிறது என்று வைகிறார்.
'கொடுத்தல்' என் தொகுதியில் இருக்கும் 'ஒரு தேவதையின் குரல்" என்ற சிறுகதை அற்புதமானது. சகல இனத்தவர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டிய இந்த சிறிய இலங்கையில் இனவேற்றுமை தலைதுாக்கி, சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிற காலகட்டத்தில் இன ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதே இக்கதை. இவ்வாறு ஒரு தேவதையின் குரல் அல்ல. ஓராயிரம் தேவதைகளின் குரல்கள் ஒலிக்க வேண்டும்.
எழுத்தாளர் சுதாராஜ் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளும், சவால்களும், அனுபவங்களும் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு சிறந்த ஆதர்சனங்களாகும். சமூகத்தில் ஏற்படுகிற அநீதிகளுக்கு சாட்டையடி கொடுத்து மனித நேயத்தைப் பாடுகிறது இந்த வானம்பாடி,
மனித தரிசனங்கள் என்ற கதைத்தொகுதியில் காணப்படும் மானிட நேயம், வேலைத்தளத்தில் வேலை செய்ய வந்த ஊழியர்களை சார்ந்து நிற்கிறது. பொப்கோல், பூரி போன்றவர்கள் அற்புதமான மனிதர்கள். முகாமை, நிர்வாகம் போன்ற துறைகளில் தாராள மனப்பான்மையுள்ள இவ்வாறான மனிதர்களின் கீழ் வேலை செய்வதே சந்தோஷமானதொரு விடயம்.
இதே தொகுதியில் ‘புதுநண்பர்கள்' என்ற கதை ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. அந்நிய நாடொன்றில் தனது வாகனத்தைப் பார்க் பண்ணி விட்டு பாஷை தெரியாமல் அடித்து விடுவார்களோ என்று தான் சந்தித்த இக்கட்டான நிலையை சுவாரஷ்யமாக விளக்கியிருக்கிறார்.
அருமையான, ஆழமான கருத்துக்களைக் கொண்டு அமைந்த நிஜங்களைப் படம் பிடித்துக்காட்டுகிறது.
"இளமைக்கோலங்கள்’ என்ற நாவல் கூட தொழில் செய்வதற்காகவும். கல்வி கற்பதற்காகவும் கொழும்பில் வாடகை அறையில் தங்கியிருக்கும் மூன்று இளைஞர்கள் பற்றியது. மிக இனிமையாக நகர்த்திச் செல்லப்பட்டிருக்கும் இந்த கதை அலுப்புத்தட்டாத பாணியில் அமைந்திருப்பது சிறப்பம்சம்.

Page 22
சில யதார்த்தங்களைச் சொல்வது சிலருக்கு கசப்பாகத்தான் இருக்கும். எனினும் என்னால் சொல்லாமலே இருக்க முடியவில்லை என்று சொல்லும் சுதாராஜ், நேரில் சந்திக்கும் போது தான் ஒரு பொறியியலாளர் என்பதை சொல்லாமல் மிகவும் பணிவாக, அன்பாக கதைத்தார். பின்னர் தான் அவர் ஒரு பொறியியலாளர் என்பதை நான் தெரிந்து கொண்டேன்.
உண்மையில் மேடைப்பேச்சுக்களில் மானிடத்தை நேசிக்கிறோம்' என கதையளப்பவர்கள் தம்மை மனிதநேயம் மிக்கவர்களாக இனங்காட்ட பிரயத்தனப்படுகிறார்கள். இவர்கள் சொற்களில் மாத்திரம் இல்லாமல் வாழ்விலும் மனிதத்தை கடைப்பிடிக்க வேண்டும். மிக அடக்கமாக காட்சி தரும் சுதாராஜ் போன்றோர் மனிதர்களையும் இலக்கியத்தையும் மதிப்பவர்களாய் இருப்பது நிதர்சனம்.
கலைத்துறையில் கற்றவர்கள் ‘களைத்துறையில் நிற்கும் போது, கணிதத்துறையில் கற்ற இவரின் எழுத்துக்கள் சாதிக்கும். போதிக்கும். வாழ்வின் வசந்தங்களையும், வறுமையையும் காட்டி நெஞ்சை வருடி திருடி செல்கின்றன இவரது படைப்புக்கள்.
செல்லரித்த கருத்துக்களோடு கைகோர்க்காத இவரது கதைகளை படிக்கையில் நெஞ்சில் புல்லரிக்கிறது. இவரது கதைகளின் செழுமை மிக்க செய்நேர்த்தி இவரது தனித்துவத்தை பறைசாற்றுகிறது.
இளைய தலைமுறை எழுத்தாளர்கள் சுதாராஜ் போன்ற காத்திரமானவர்களின் படைப்புக்களைக் கற்காமல் எழுத்துத்துறையில் காலூன்றுவது கடினமே. கர்வமே இல்லாத இந்த கதைஞருக்கு காலத்தின் பொன்னாடை காத்துக்கொண்டிருக்கிறது.
இவரது நூல்கள்.
1. ஒரு நாளில் மறைந்த இருமாலைப்பொழுதுகள்
2. தெரியாத பக்கங்கள்
3. கொடுத்தல்
4. மனித தரிசனங்கள்
5. இளமைக்கோலங்கள்
6. மனைவி மகாத்மியம்
 
 

கானலான கனவுகள்!
உதிரத்தை பாலாக்கி எனக்கு உயிர் தந்தவளே. உன் ஒவ்வொரு வியர்வைத்துளியும் எனக்காக சிந்தினாயம்மா!
கருவில் எனை சுமந்து பல கனவுகளை இதயத்தில் சுமந்தாய். கனவு மாளிகையோ என் பரிதாப நிலை கண்டு கண்ணாடி மாளிகையானதம்மா!
உன் கருவறையில் அன்று துன்பம் அறியாமல் சுகமாய் உறங்கிய உறக்கம் நிரந்தரம் ஆகியிருந்தால்.
உள்ளம் உள்ளம் கலங்கியிராது
பாவி என் நிலை கண்டு!!!
எஸ். மஞ்சுளா கிரிஎல்ல.
தாயெனும் தெய்வம்!
என் இதயக்கரையில் கேட்டிருக்கும் ஒரு தாலாட்டின் குரல். கோபிக்காத விரும்பித் தண்டிக்காத - உன் தண்டனைகளால் மறந்து போகிறேன் தவறு செய்ய!
என் சிறகு விரிப்பில் நீ சொன்ன சுதந்திர விளக்கங்களை சுமந்து செல்கிறேன் விலகாத எல்லைகள்
தேடியபடி
கவலை மறைத்த கண்களில் சிரிப்புகளில் கண்ணீராகி
உனக்காய் அழ விரும்புகிறேன்!
இன்னும் இதயத்தில் என்னை சுமந்தபடி எனக்காய் வாழும் உன் நாட்கள்!
என் வாழ்தல்களில் தாயே உன்னை தெய்வமாய் துதித்தபடி!!!
கே. ஜோன் மல்வான,
சமூகசேஞ்சிகை

Page 23
உள்ளத்தின் நெருடல்கள்
முஹம்மட் அஸாம் - படல்கும்புர
‘என்ன முஸம்மில் ஒரு மாதிரியா இருக்கிறாய்?
இல்லடா. இன்டைக்கும் ஒரு இன்டர்வியூ இருக்கு. எல்லா இன்டர்வியூ போலவே இதுவும் நடக்குமோ என்று பயமாயிருக்கு ரஹீம்.
அதெல்லாம் ஒன்னும் கவலைப்படாத, அல்லாஹற் நாடினது நடக்கும்டா.
() () () () () () () ()
முஸம்மில் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனால் அவனின் குடும்பத்தவர்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாகவே இருந்தார்கள். பல இன்னல்களுக்கு மத்தியிலும் இவன் படிப்பை கைவிடவில்லை. ஆனால் அவன் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை தான் இன்னும் கிடைக்கவேயில்லை. இன்டர்வியூக்கு போகும் ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒன்றைக்கூறி தகுதியிருந்தபோதும் அவனை நிராகரித்து விடுவார்கள்.
சிலர் அரசியல் பேசுவார்கள். வேறு சிலர் சம்பந்தமேயில்லாதவற்றைப் பேசுவார்கள். இன்னும் சிலரோ பதில் கடிதம் போடுவதாகக்கூறி அனுப்பி விடுவார்கள். இப்படித்தாண்டா, மொத்தத்தில் எல்லாவற்றுக்கும் லஞ்சம் என்ற பேய் தான் காரணம், ஒருத்தனுக்கு கொடுத்தா மட்டும் போதுமா? ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் உள்ள அத்தனைப் பேருக்குமே லஞ்சம் கொடுத்தால் தான் தொழில் கிடைக்கும். காசு உள்ளவன் என்றால் பரவாயில்லை. என்னைப்போல் படிப்பை மட்டுமே நம்பி வாழுபவர்கள் என்ன செய்வார்கள்? திறமைக்கு கிடைக்க வேண்டிய தொழில், வெறும் பணத்திற்கு பறிபோகிறது.
ஆனால் இதையெல்லாம் அறியாத அப்பாவியான நாங்கள், எங்கள் திறமைக்கு நிச்சயம் வேலை கிடைக்கும் என்று எண்ணியே ஏமாறுகிறோம். இந்த அநியாயத்தை தட்டிக்கேட்க யாரும் இல்லைடா. தொழில் இல்லாமல் இருக்கும் போது குறை சொல்ல ஆயிரம் பேர் இருப்பார்கள். ஆனால் இவ்வாறானதொரு கேடுகெட்ட லஞ்சத்தை எதிர்த்துப்பேச ஒருத்தனுக்கும் முடியாது. நம்மட சமூகத்தின் தலைவிதிடா. முஸம்மில் தன் ஆதங்கத்தையெல்லாம் கொட்டினான்.
‘சரிடா. இப்போ இதப்பற்றி வீணா பிரச்சனைப்படாதே. இந்தக்காலத்துல இதெல்லாம் சகஜம்டா, அரசியல்ல தான் எல்லாம் நடக்குதே' என்றான்
ரஹீம்.
 
 
 

43
'நீ என்ன எல்லாம் சகஜம் என்கிறாய்? இப்படி சொல்லிச் சொல்லியே தான் நம்ம சமூகம் இப்படி ஆயிடுச்சி. தட்டிக்கேட்டா தன் வேலை போயிரும்கற பயத்துல எவனுமே வாய் திறக்கிறதில்லை. இந்த சமுதாயத்தில உள்ளவங்களுக்கு கெளரவம் தான் பெருசு. மத்தவங்கட கண்ணிரைப்பற்றி யாருக்குமே கவலை இல்லை. வேலையும் இல்லாமல், குடும்பத்துக்கு பாரமாய் இருக்கவும் விரும்பாமல் எத்தனைப்பேர் இன்று ஹோட்டல்களிலும், புடவைக்கடைகளிலும் வேலை செய்கிறார்கள். சிலர் தற்கொலையே செய்து கொள்கிறார்கள். இதெல்லாம் பாராமுகத்தாலயம் சுயநலத்தாலயம் ஏற்படுற விளைவு. முஸம்மிலின் குரல் தழுதழுத்தது. கண்களும் கலங்கியது.
அவனுடைய ஆவேசமானதும் நியாயமானதுமான கருத்துக்களை கேட்டு ரஹீம் வேதனைப்பட்டான். அவனும் கூட படிப்புக்கேற்ற தொழில் கிடைக்காத விரக்தியில் இருப்பவன் தான். ஆனாலும் அவனது கவலைகளைக்கூறி ஆறுதல் தேடுவதற்கான நேரம் இதுவல்ல என்று உணர்ந்தவனாய்.
ஓகே மச்சான். இதப்பத்தி நாம ஈவினிங் பேசுவம். இப்ப உனக்கு இன்டர்வியூவுக்கு டைம் ஆயிட்டு. புறப்படு' என்றான்.
'எனக்கு இந்த வேலை கிடைக்கனும்டா, துஆ கேட்டுக்கொள்' என்று கூறியவாறு புறப்பட்டான் முஸம்மில்!!!
BTECHND IN BUSINESS (T)
சர்வதேசத் தகைமைகளை வழங்குகின்ற இங்கிலாந்தின் புகழ்பெற்ற நிறுவனமான Edexcenternational UK வழங்குகின்ற Nin Business (T) பாடநெறியை பூர்த்தி செய்வதன் மூலம், இறுதி வருடத்தை வர்த்தகம் அல்லது IT தறையில் இங்கிலாந்தில் புகழ் பெற்ற கல்ஹாசியிலோ அல்லது பல்கலைக்கழகத்திலோ பூர்த்தி செய்ய முடியும்.
16-18 months (Weekdays/Weekend)
Why BTECH HNDatiВS?
(i) The Fastest route to Complete a Recognized Business
Management or IT Degree GD Recognized by more than 105 Universities around the Globe (i) The Course is designed to meet industry Challenges (i) Highly Qualified & Experienced Lecturers (i) Awarded by Edexcellnternational JK
No. 67, Kawan Road, bahiwalia.fal: (011) 5522188,5622488,2729557 No, 528f}}, Peraderhye Kasi, karsy at 88332336586, 56383;}
eXCel
NTERNATIONAL
No. 464, Main Street, Negombo. Tel: 0315677288 Email: infoGibsianka.com

Page 24
.44 புலம்பெயர் தமிழர் வாழ்வு சில அவதானிப்புகள்
லெனின் மதிவானம்
இலங்கை தமிழரின் புலம்பெயர் கலாசாரப் பண்பாட்டுப் பாரம்பரியமானது தனித்துவத்துடன் விளங்குகின்றது. பண்பாட்டாய்வுத் துறையின் ஜனநாயகப் பண்பு வளர வளர இதன் முக்கியத்துவம் சிறப்பாக உணரப்பட்டு வருகின்றது. தமிழ்ப் பண்பாட்டின் இப்புதிய முனைப்பை உணர்ந்ததன் விளைவாக புலம்பெயர் இலங்கை தமிழர் மத்தியிலிருந்து ஆரோக்கியமான கலாசாரப் பண்பாட்டு ஆய்வு முயற்சிகள் இடம்பெற்று வருவதனை காணக் கூடியதாக உள்ளன. அந்தவகையில் புலம்பெயர் இலங்கை தமிழரின் உணர்வுகளை அவர்தம் வாழ்க்கையை கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் தன் சரித்திர தூரிகை கொண்டு புதியதோர் நாகரிகத்திற்கான சித்திரத்தை இவ்வாறு ஆக்குகின்றார்.
iaыповті
“உலகெங்கும் வாழ்வை இழந்து வசதி பொறுக்குகின்ற மனித சருகுகளாய் புரள்கின்றேன் என்ன நம் தாய்நாடு ஓயாமல் இலையுதிர்க்கும் உயிர்ப்பிழந்த முதுமரமா..?
யாழ்நகரில் என் பையன் கொழும்பில் என் பெண்டாட்டி வன்னியில் என் தந்தை தள்ளாத வயதினில் தமிழ் நாட்டில் அம்மா.
என்ன நம் குடும்பங்கள் காற்றில் விதிக்குரங்கு கிழித்தெறியும் பஞ்சுத் தலையணையா..? பாட்டனார் பண்படுத்தி பழ மரங்கள் நாட்டி வைத்த தோப்பை அழியவிட்டு தொலைதேசம் வந்தவன் நான் என்னுடைய பேரனுக்காய் எவன் வைப்பான் பழந்தோட்டம்.?
 
 
 
 
 

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் காரணமாக இலங்கைத் தமிழர் குறிப்பாக வடகிழக்கு பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்வதற்கான நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இப்புதிய சூழலில் இவர்கள் எதிர் கொண்ட அனுபவங்களும் சவால்களும் தனித்துவமானவை. இப்பின்னனியே “புலம்பெயர் இலங்கை தமிழர்” (Sri Lankan Tamil Diasphora) என்ற சமூக இருப்பை தோற்றுவித்துள்ளது. புலம்பெயர் இலங்கைத் தமிழர், அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் நசிந்து சிதைவுக்குள்ளான வடகிழக்கின் வாழ்க்கை குறித்த மனித நேயத்தை பதிவாக்கத் தவறவில்லை. அவ்வகையில் தன் வேள்வி வீழ்ந்து விடாமல் தொடர்வதற்குரிய பலத்தை பிரதிபலிக்கும் குரலாகவும் இதனை அர்த்தப்படுத்தலாம்.
இலங்கை தமிழரின் புலம்பெயர்வு அவ்வவ் கால கட்டங்களில் திட்டுகளாகவும் தீவுகளாகவும் இடம்பெற்று வந்திருப்பினும் புலப்பெயர் இலங்கைத் தமிழர் என்ற சமூக இருப்பை நிலைநிறுத்தும் அம்சமாக அவை அமையவில்லை. 1960, 1970 களில் குறிப்பாக வடகிழக்கு தமிழர் மத்தியிலான புலம்பெயர்வு கல்வி, தொழில் நிர்ப்பந்தம் காரணமாக இடம்பெற்றது. இவர்கள் மேட்டுக்குடி சமூகமாக இருந்ததுடன் எண்ணிக்கையும் மிக சிறு தொகையாகவே காணப்பட்டது. நமது நாட்டின் வரிப்பணத்திலும் மற்றும் அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் உழைப்பையும் உதிரத்தையும் கொள்ளையடித்து சம்பாதித்த பணத்திலும் பெற்ற கல்வியை மேலும் விருத்தி செய்து அதனுாடே தமது அங்கீகாரத்தையும் அந்தஸ்த்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கே இவர்களிடம் முனைப் புற்றுக் காணப்பட்டன. இவர்களில் பலர் தமிழுணர்வு உடையவர்களாக இருந்துள்ளராயினும் பெரும்பாலும் அவர்களது அக்கறைச் சமுதாயத்தில் மேட்டுக் குடியினரையே சார்ந்திருந்தது. எனவே இவர்களின் உணர்வுகள் புலம்பெயர் தமிழர் என்ற அடையாளத்துடனான சமூக இருட்யாக மலரவில்லை. 1983க்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சமூகப் பொருளாதார நெருக்கடிகள், இனவன்முறைகள் காரணமாக இந்தியாவிற்கும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் இலங்கைத் தமிழர் புலம்பெயர்ந்து சென்றனர்.
இலங்கையில் இடம்பெற்ற தமிழ் தேசிய போராட்டமானது இம்மக்களின் புலம்பெயர்வை அதிகரிக்கச் செய்தது. ஒரு புறமான சிங்கள பேரினவாத அடக்கு முறைகளும் மறுபுறமான தமிழ் தேசிய போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பாசிஸ்டுகளினது அராஜக போக்குகளும் இம்மக்களை நிலைத்தடுமாற வைத்தது. இந்த சூழலில் சமூகத்தில் வாய்ப்பும் வசதியும் பெற்ற மேட்டுக் குடியினர் பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, சுவிஸ்லாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்றனர். வசதியற்றவர்கள் தமது சொத்துக்களை அடமானம் வைத்தும் கடன் பெற்றும் இத்தகைய நாடுகளுக்குச் சென்றனர். இத்தகைய

Page 25
புலம்பெயர்வில் வயது முதிர்ந்தோர் சிலர் சென்றனர் என்ற போதிலும் பெருந்தொகையினர் இளைஞர்களாகவே காணப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தொழில் தேடி சென்றவர்கள் என்பதை விட தமது உயிர்க்கு அஞ்சி புகழிடம் தேடி சென்றவர்களே என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிதொரு அம்சமாகும்.
இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து சென்றவர்கள் அங்குள்ள கலாசாரப் பண்பாட்டு பாரம்பரியமானது இலங்கை தமிழரின் பண்பாட்டு பாரம்பரியத்தோடு பெரிதும் ஒத்திருந்தமையினால் அங்கு நிலைத்து வாழ எண்ணியோருக்கு அச்சூழலுக்கு தம்மை பழக்கப்படுத்துவதும் சங்கமமாவதும் ஓரளவிற்கேனும் சாத்தியமாயிற்று. ஐரோப்பிய நாடுகளின் நிலைமை வேறு விதமாக அமைந்திருந்தது. இச்சூழலில் இவர்களின் தாயக ஏக்கங்களும் தாய் மண்ணை இழந்து செல்கின்றோம் என்ற உணர்வுகளும் புதிய கலாசாரப் பண்பாட்டுச் சூழலில் சுய அடையாளத்தைத் தேட வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியது. புலம்பெயர்ந்த நாடுகளில் இவர்களின் சுய அடையாளங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டதுடன் அந்நாடுகளில் இவர்கள் அந்நிய மனிதர்களாகவும் கறுப்பர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டனர். தமது நாட்டிலே கல்வி, தகுதி அடிப்படையில் உயர்த் தொழிலில் ஈடுபடவேண்டியவர்கள் அந்நிய தேசத்தில் தோட்டங்கள், உணவுச்சாலைகள், பெற்றோல் நிலையங்கள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் சாதாரண தொழில்களில் ஈடுபடுகின்றவர்களாகவும் காணப்படுகின்றனர். காலத்திற்குக் காலம் இந்நாடுகளில் கொண்டு வரப்படுகின்ற குடிவரவுச் சட்டங்களும் அந்நாட்டு மக்களிடையே வளர்ச்சி பெற்று வருகின்ற கறுப்பின எதிர்புணர்வுகளும் புலம்பெயர் இலங்கைத் தமிழரை பாதிக்கவே செய்கின்றன.
தமது இருப்புக் குறித்தும் புதிய சூழலில் எதிர் நோக்குகின்ற சவால்கள் குறித்தும் புலம்பெயர் இலங்கைத் தமிழர் பல சிக்கல்களை எதிர் நோக்கி வருகின்றனர். ஒரு புறத்தில் மரபையும் பண்பாட்டையும் இறுக்கமாக பின்பற்றுகின்ற நிலையையும் புலம்பெயர் இலங்கைத் தமிழரிடம் காணக்கூடியதாக உள்ளது. அதன் பின்னணியில் தமது சாதி பற்றிய மேட்டிமைத் தனத்தையும் குறுகிய தமிழ் தேசிய சிந்தனைகளையும் இவர்கள் நிலைநிறுத்தத் தவறவில்லை. இந்தியாவிலிருந்து வெளிவருகின்ற வணிக நோக்கிலான வீடியோக்களும் திரைப்படங்களும் இவர்களின் சிந்தனையை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன.
மறுபுறமாக சமுதாய அக்கறையும் நேர்மையும் கொண்டவர்கள் இந்த புதிய சூழலில் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது தொடர்பாகவும் புதியதோர் நாகரிகத்திற்கான வேள்வியை தொடங்குவது தொடர்பிலும் ஆரோக்கியமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் செயற்பாடுகள் கலாசாரப் பண்பாட்டு மீளமைப்பு முயற்சிகள் நம்பிக்கை தரக்கூடியனவாகவுள்ளன!!!
 
 

glierGIGILò
அல்குர்ஆன் போதனைகளை மறந்தனையோ? அண்ணல் நபிவழி மறந்தனையோ? முஸ்லிமாய் வாழுமுனக்கு மயக்கமென்ன? நல்மு.மினாய் வாழ்ந்திட தயக்கமென்ன?
மாமறை உன் கையிலிருந்தும் உணர்வில்லையோ? மறுமைக்காய் உழைத்திட நினைவில்லையோ? ஐம்பெருங் கடமைகளை அறியவில்லையோ? அதை அர்த்தமுடன் நிறைவேற்ற எண்ணமில்லையோ?
சீதனத்தை வெறுத்திட முடியலையா? சீரான வழிநடக்க விரும்பலையா? மஹர் கொடுத்து மணமுடிக்க துணிவில்லையா? மாநபி ஸஉன்னாவை உயிர்ப்பிக்க மனமில்லையா?
பூவான இவ்வுலகம் உதிர்ந்து விடும். பொன்விளைந்த பூமியிது பஞ்சாய் பறந்துவிடும்.
உலகமொரு தரிப்பிடம் - புரிந்திடு.
மறுமை தான் நிரந்தரம் விளங்கிடு!!!
அல்குர்ஆன் ஸ?ன்னா வழியில் நடந்திடு. அகிலத்தாருக்கெலாம் முன்மாதிரியாய் இருந்திடு. இறைமறையை ஈமானுடன் ஓதி உணர்வாயே. இஸ்லாத்தின் வழி நடந்து ஈருலகிலும் வெற்றி பெறுவாயே!!!

Page 26
riešEMEINSATLb
எழுச்சியுறும் பெருந்தோட்ட மக்களின் கல்வி நிலை
ச. முடுகானந்தன்
இன்று ஏழ்மை நிலையில் வாழ்ந்து வரும் பெருந்தோட்டத்துறை மாணவர்கள் கல்வியில் அண்மைக் காலமாக காட்டி வருகின்ற ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிற போதிலும், அதற்கான வாய்ப்பு இன்னும் அதிகரிக்கப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளது. தொழிலாளர்களின் குடும்பங்கள் பொருளாதார ஸ்திரத்தன்மையற்று இருப்பதும், முழுநேர உழைப்பாளிகளாக இருப்பதும் பாடசாலைகளின் பற்றாக்குறையும், பயண வசதியினங்களும் மலையக சிறர்களின் கல்வி வாய்ப்பை பெரிதும் பாதிக்கின்றன.
சமூக நிலையிலும் பொருளாதார நிலையிலும் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தையே சார்ந்திருப்பதால் நிர்வாகத்தினரின் கருணையினாலேயே அவர்களது பிள்ளைகளின் கல்வியும் தங்கியிருக்கும் நிலை நீண்ட காலமாக இருந்து வருகிறது. தேசத்தில் ஏற்படும் கல்வி நிலை மாற்றங்கள் மலையகத் தொழிலாளர்களுக்கு எட்டாததாகவே இருக்கின்றது. ஏற்படும் சில மாற்றங்கள் கூட மெத்தனமாகவே நிகழ்வதை அவதானிக்க முடிகிறது.
பெருந்தோட்ட தொழிலாளர்களை முதலாளிவர்க்கம் தொடர்ந்தும் தொழிலாளர்களாகவே வைத்திருந்து சுரண்ட விரும்பியதால் லயக்குழந்தைகளினதும், பிள்ளைகளினதும் கல்வி நடவடிக்கைகளில் அக்கறை செலுத்தாதிருந்தது. மட்டுப்படுத்தப்பட்ட ஆரம்ப கல்வி நடவடிக்கைகள் அங்கு நிகழும் உற்பத்திச் செயற்பாடுகளை மீள உற்பத்தி செய்வதற்கு மட்டுமுரிய அறிவுக் கையளிப்பை நோக்கமாகக் கொண்டிருந்தது.
குறைந்த ஊதியத்துடன் உழைப்பு வலுவைப் பெற்றுக்கொள்வதற்கு தொழிலாளர் வர்க்கத்தினருக்கு வழங்கும் கல்வி பங்கம் விளைவித்து விடுமோ என்ற அச்சத்தில் முதலாளிவர்க்கம் சாதுரியமாக தொடர்ந்தும் தலைமுறை தலைமுறையாக கல்வி மேம்பாட்டை முடக்கியே வைத்திருந்தது. எனினும் ஆக்கபூர்வமாக செயற்பட்ட ஒருசில தொழிற்சங்கங்கள் கல்வியின் அவசியம் பற்றி வலியுறுத்தி வந்தது. இதனால் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கல்வி மேம்பாட்டினால் முன்னேற்ற முடியும் என்ற ஆதங்கம் துளிர்த்தது.
ஏற்கனவே பெருந்தோட்டத்துறையில் உருவாக்கப்பட்டிருந்த கல்லி நடவடிக் கை சமூக ஒழுங்கமைப்புக் கும் பொருளாதார
 
 
 

பூங்காவனம்
நடவடிக்கைகளுக்குமுரிய மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததேயன்றி மேல் நோக்கிய சமூக அசைவியக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கவில்லை. நாட்டின் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாமல் வாக்குரிமை பறிக்கப்பட்டு அரசியல் அநாதைகளாக்கப்பட்ட பெருந்தோட்ட மக்களின் நலனில் எந்த ஒரு அரசியல் கட்சியும் அதிக அக்கறை செலுத்தவில்லை. எனவே மலையகத் தமிழரின் கல்வி நடவடிக்கை அங்கு நிகழும் உற்பத்தி செயற்பாடுகளை மீள உற்பத்தி செய்வதற்கு மட்டுமுரிய அறிவுக்கையளிப்பை மேற்கொள்வதாகவே கடந்த நூற்றாண்டின் மூன்றாவது காலாண்டு வரை தொடர்ந்து வந்தது. அதன்பின் ஏற்பட்ட மலையக அரசியல் மாற்றம் கல்வியையும் ஓரளவுக்காவது செப்பனிட ஆரம்பித்தது.
வெறும் ஆரம்பப் பாடசாலைகளாக மட்டுமிருந்த தோட்டப்புற பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டன. அத்துடன் அவை அரச பாடசாலைகளாக உள்வாங்கப்பட்டன. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வழங்கப்பெற்ற கல்வியால், சமூக அறிவியக்கத்தை மலையக மாணவர்களும் சிறிய அளவிலாவது பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அத்துடன் தோட்டங்களில் தொழிலாளர்ச்சிறார்களுக்கென்றிருந்த தனித்த அடையாளமுள்ள பாடசாலைகளும், உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் படித்த பாடசாலைகளும் சங்கமமாகின.
வரன் முறைக்கல்வியில் ஒதுக்கப்பட்டிருந்த காலத்தில் கூட வரன்முறை சாரா கல்வி மூலமே மலையக சிறார்கள் தமது அறிவை வளர்த்துக்கொண்டனர். நாட்டார் பாடல்களும் கதைகளும் நாட்டிய நாடகங்களும் கூத்தும் இளைய தலைமுறையினருக்கு அறிவை கையளிக்கத்தவறவில்லை. இன்று வரன்முறைக்கல்வி வாய்ப்பு கிட்டிய பின்னர் மலையக மாணவர்களின் உயர்வுக்கு பின்பலமாக வரன்முறை சாரா கல்வி அமைந்திருந்தமையை மறுப்பதற்கில்லை. இன்று பல்கலைக்கழக படிகளை மிதிக்கும் மலையக மாணவர்களின் எழுச்சிக்குப் பக்கபலமாக பிற மாவட்ட ஆசிரியர்களும் துணை நிற்பதை மறுக்க முடியாது. ஒரு காலத்தில் தோட்டத்து நிர்வாகத்துடன் இணைந்து சுரண்டியவர்களின் இன்றைய மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
இன்றும் சனத்தொகை ஒப்பீட்டளவில் நோக்கும்போது வசதியற்ற காரணத்தினால் மிகக்குறைந்தளவு மலையக மாணவர்களே உயர்கல்வி பெறுகிறார்கள். வசதியும் உரிய வாய்ப்பும் கிட்டினால் மலையக மாணவர்கள்
சளைத்தவர்களல்லர் என்பதை அவர்கள் பெற்று வரும் அண்மைக்கால பெறுபேறுகள் எடுத்தியம்புகின்றன.
கடந்த நூற்றாண்டின் இறுதிக்காலாண்டிலிருந்து படிப்படியாக மலையகத்தில் ஏற்படும் மாற்றங்கள், மலையக மக்கள் உழைப்பதற்காகவே வாழ்பவர்கள் என்ற நிலையை மாற்றி, வாழ்வதற்காக உழைப்பவர்கள் என்ற நிலையை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளது.

Page 27
இந்த மாற்றத்திற்கு வித்திட்டது கல்வி மேம்பாடு தான். கல்வியின் படிப்படியான அபிவிருத்தி நிலைகள் ஏற்படுத்த அயராது பாடுபட்ட தொழிற்சங்கங்கள், அரசியல்வாதிகள் முதலானோரின் பங்களிப்பின்றி இந்நிலை மாற்றம் ஏற்பட்டிருக்க முடியாது. புதிதாக உருவாகிய மலையக புத்திஜீவிகளும் பிற அக்கறை மிக்க ஆய்வாளர்களும் தமது ஆய்வறிக்கை மூலம் மலையகத்திற்கான கல்வி மேம்பாட்டின் தேவையை வலியுறுத்தினர். பாடசாலைக் கட்டடங்கள், தளபாடங்கள், இலவச புத்தகங்கள், சீருடைத்துணிகள் என்பன மலையகத்தையும் எட்டிப்பார்க்கும் நிலை காலதாமதமாகவே ஏற்பட்டது. ஆசிரிய வள மேம்பாடும் மெல்ல மெல்ல எழுச்சியுற்றது. இதனால் தேசிய கல்வி அலையுள் பெருந்தோட்ட பாடசாலைகளும் சங்கமமாகின.
பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருப்பினும் தற்போது சரியான பாதையில் நம்பிக்கையுடன் பயணிக்க ஆரம்பித்திருக்கும் மலையகக் கல்வி பயண உச்சத்தை எட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை.
எனினும் பெண்கள் கல்வி கற்கும் நிலையில் இன்னமும் வளர்ச்சிப்போக்கு தேவை. மலையகச் சிறார்களின் கல்வியை அவர்களது பெற்றோர்களே இடைமறித்து, வேலைக்கு அனுப்பும் நிலையில் மாற்றம் தேவை. குறுகிய கால இலாபத்தை எண்ணி எதிர்காலத்தை பாழாக்கி விடக்கூடாதல்லவா!!!
With Best Compliments From...
SNew Fahim Enterprises (Pvt) sta, Tahim Tours & Travels (Pvt) sta. Tahim Enterprises (Pvt) sta,
Al - Haj M.F.M. Fahim Managing Director
PO, Box: 782 Tel - 2438030, 2423935, 2330692 No. 283 - 1/1, 2/1, 3/1, Fax - 2431773, 2688284 Main Street, Colombo - 11, Res - 2693511, 2908457, 2811069 Sri Lanka. Mobile - 0722242213,0722255572
E-mail: new fahim Gyahoo.com, newfahimGstnet.lk Website: www.newfahim.com
fours & Travels, Manpower Consulting Services & General Merchants (Labour License No. 736) (Founder Member of ARCO & Member of ALFEA)
 
 
 

Friarsilsorb
அன்பாலும் பண்பாலும் வளர வேண்டிய உறவை முரட்டுத்தனம் காட்டி கெடுத்து விடக்கூடாது
(எஸ் ஆர். பாலசந்திரன்)
ஆணாதிக்கம் என்பது அன்று தொடக்கம் இன்று வரை உள்ளதொரு விடயம். முக்கியமாக ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் சற்று அதிகம் தான். ஆனால் காலத்திற்கு காலம் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கூட இவற்றை எதிர்த்து வெற்றி கண்டுள்ளனர். உதாரணமாக இந்தியாவில் ராஜபுத்திரி பெண்கள் கணவரோடு உடன்கட்டை ஏறுதல் நடைபெற்றது. அதைத்தடுத்து நிறுத்தியவர் ஓர் ஆங்கிலேயர். விதவைகள், மேற்படிப்பு, மறுவிவாகம் போன்றவற்றில் போராடி வெற்றி பெற்றவர் மகாத்மா காந்தி. தேவதாசி முறைகளை எதிர்த்துப் போராடியவர் ஓர் இந்திய வீரப்பெண்மணி.
பெண்ணழகு, கற்பு, பணிவு, தியாகம் எல்லாம் மாயை. அது ஆண்களுடைய அடிமைப்படுத்தும் முறையை பிரதிபலிக்கிறது என்ற கருத்து தவறானது. பெண்கள் மென்மையான குணம் படைத்தவர்களாக இருத்தல் தவறல்ல. ஆனால் ஆபத்து என்று வரும்போது புலியாக மாறி செயல்பட வேண்டும். ஆண்டவன் படைப்பிலே ஆண் இனம் முரட்டுத்தனமாகவும், பெண் இனம் மென்மையாகவும் படைக்கப்பட்டிருக்கின்றது. அதுவே அவர்களிடையே சுமுகவாழ்வை ஏற்படுத்துகிறது.
ஆணைப் பொறுத்தவரை பெண் உடல் அழகானது. அது இயற்கை. அந்த உணர்வே காதலாகி திருமணத்தில் முடிகிறது. ஆண்களின் பார்வையிலிருந்து பெண்கள் தம்மைக் காத்துக்கொள்ள வேண்டுமானால் ஆடைகளிலும், பேசும் முறைகளிலும் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் ஆண்துணையின்றி வெளியே செல்லல் தவிர்க்கப் படவேண்டும்.
புனிதமான இஸ்லாம் மதத்தில் கூட பெண் தனது உடலின் பாகங்களை மறைக்குமாறு கட்டளையிடப்பட்டிருக்கிறது. ஓர் ஆண் இரவு நேரம் பிந்தி வந்தால் அவனது உயிர் ஆபத்தில் இருக்கிறதா என்று ஏங்குவர். ஆனால் ஒரு பெண் நேரம் பிந்தி வந்தால் உயிரிலும் மேலான அவளது பெண்மை ஆபத்திலிருக்கிறதா என்று தான் பார்க்கப்படுகிறது.
ஆயிரம் கூறினாலும் ஒழுக்கமுள்ள ஒருத்தியையே மனைவியாக்கிக்கொள்ள ஓர் ஆண் விரும்புவதுண்டு. இது தவறில்லை. இந்திய பாகிஸ்தான் பிரிவின்போது ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். அப்போது மகாத்மா காந்தி என்ன சொன்னார்?
"இவர்கள் குற்றமற்றவர்கள். இந்தியா மீது உண்மையில் அக்கறை
கலை இலக்கிய சமூக,

Page 28
பூங்காவனம்
உள்ளவர்கள் கேள்வி கேட்காது இப்பெண்களை திருமணம் செய்து கொள்ளுங்கள்' என இளைஞர்களை நோக்கிக்கூற, பலர் முன்வந்து திருமணம் செய்து கொண்டார்கள். ஆகவே கற்பு விஷயத்தில் தன்னை மீறி நடந்த விடயங்களில் பெண்களைக்குறை கூற முடியாது.
பத்துமாதம் சுமந்து பெற்று பாலூட்டி வளர்த்த தாய் தியாகத்தின் சின்னம். தாயினால் அன்போடு வளர்க்கப்படும் பிள்ளைகள் நற்குணம் உள்ளவர்களாக இருப்பது கண்கூடு, தகப்பன் மோசமான நடத்தையுள்ளவனாக இருந்தாலும் ஒரு தாயால் தனது பிள்ளைகளை நற்பிரஜைகளாக வளர்க்க முடியும். இங்கே தான் தாயின் தியாகம் மதிக்கப்படுகிறது. அன்றுதொட்டு இன்றுவரை குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஆணே ஏற்றிருக்கிறான். சில பெண்கள் தற்காலத்தில் பொருளாதார விடயங்களில் சம பங்கெடுத்துக்கொள்வது உண்மை. ஆனால் ஆபத்து என்று வரும் போது பெண்களால் உடனடியாக செயற்பட முடியாது. அவர்களது மென்மையான தன்மை அதிலிருந்து பெண்களை தடுக்கிறது. உதாரணமாக நள்ளிரவில் ஒரு திருடனைப்பிடிக்க ஒரு பெண்ணால் செல்ல முடியாதல்லவா?
அன்பாலும் பண்பாலும் வளர வேண்டிய உறவை முரட்டுத்தனம் காட்டி கெடுத்துவிடக்கூடாது. பாரதியார் கண்ட புரட்சிப்பெண் முரட்டுத்தனம் மிக்கவள் அல்ல. உறுதியானவள். அவள் துன்பம் நேர்கையில் சோர்ந்து விடாது உறுதியாக செயற்படுவாள் என்பது தான் உண்மை!!!
புதிய அத்தியாயம்
துயரங்களின் ܀ ܘܐ - ܘ - ... - R ܀ ܘ ܝ முடிச்சுகளோடு இறைவனைத் நாளைய நம்பிக்கையில் துணைக்கழைப்போம். ஆதமாககளை இரவாகவே இருக்கின்ற உயிர்பெறச்செய்வோம்! இந்த பூமிக்கு விடியலைக் கொஞ்சம் இறந்த காலத்துக்குள் இரவல் கேட்போம்! புதைந்து போன இதயங்களை மீட்டெடுப்போம்.
தேடித்தேடி தொலைந்து போன கண்ணீர் விருட்சங்களை மானுடத்தை களைநது விட்டு ஆங்காங்கே சிதறிக்கிடந்தால் முகமெனும் முற்றத்தில் பொறுக்கியெடுப்போம்! புனனகை மலரகளைத தூவிடுவோம்.
ரணங்களாகவே சுழன்று கழியும் இன்றே வாழ்க்கை ஏட்டில் கணங்களைக் கொஞ்சம் புதிய அத்தியாயம் நிறுத்தி வைக்கச்சொல்வோம்! எழுதுவோம்!!!
- தர்காநகர் றம்ஸியா
லை இலக்கிய சமூக
 
 
 

பூங்காவனம் பாங்காய் பூத்ததைப் பார்த்தேன்! பல மலர்ச்சுவை நறையும் பருகிச்சுவைத்தேன்! பாராட்டுக்கள்!
ஏறாவூர் அனலக்தர்
Best Queen Foundation Q616sfulfilst 601 Eisst 660Tib S35 01 asjib எட்டிய போது, கருத்தினில் நிறைவும், அறிவினில் செறிவும் அதிகரித்தன. ஆளுமையுள்ள படைப்பாளிகளின் செழுமையான இலக்கியப்படைப்புக்கள் பயன் பேசின. ஆரோக்கியமான கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் பூங்காவனத்தின் சிறப்புக்கு இணை சேர்த்தன.
நிர்வாகக்குழுவினரின் அயராத முயற்சியும், தளராத கொள்கையும் பூங்காவனம் பூராவும் படர்ந்திருந்தது. அதன் நேர்த்திக்கும், கீர்த்திக்கும் மேலும் இலக்கியப் படைப்புக்கள் பயன்படுத்தப்பட வேண்டும். தொடரும் காலங்களில் புதுக்கருத்துக்களால் புன்மைகளை புதைத்திடும் புயலாய் உருவெடுக்க வாழ்த்துக்கள்!
எம்.எஸ் பாஹிரா பதுளை
பூங்காவனம் முதலாவது இதழ் பார்த்தேன். திருமதி பவானி சிவகுமாரனின் நேர்காணல், இளைய அப்துல்லாஹற்வின் சிறுகதை, கா.விசயரத்தினம் அவர்களின் ஆக்கம் என்பவையுடன், பூங்க்ாவில் பூத்த கவிதைகள், கட்டுரைகள் அனைத்தும் அற்புதம். தொடர்ந்து தங்களின் பூங்காவனம் பூத்துக்குலுங்க எனது வாழ்த்துக்கள்!
செ. கனகரெத்தினம் திருக்கோணமலை

Page 29
பூங்காவனம்
பெயர் - அலைகள் தேடும் கரை (நாவல்)
நூலாசிரியர் - ஸ்னிரா காலிதீன் 65II6O)6(8Llaf - O7. 3364437
வெளியீடு-பேசும் பேனா
ഖിഞ്ഞാ - 18ഠ/-
பெயர் - மலைச்சுவடுகள் (கவிதை) நூலாசிரியர்-மாரிமுத்து சிவகுமார் தொலைபேசி - O5 22:23418 வெளியீடு- சிந்தனை வட்டம் விலை - 120/=
பெயர் - எல்லாப்பூக்களும் உதிர்ந்து விடும் (கவிதை)
நூலாசிரியர்- அலறி தொலைபேசி - O7 6356564 வெளியீடு-புதுப்புனைவு இலக்கிய வட்டம் விலை - 13O/=
yang 烈 భట్టిభ్ళ
பெயர் - தமிழ் இலக்கியத் தொகுப்பு நூலாசிரியர் - பேருவளைறபீக் மொஹிடீன் 65IT606)08 Jef - O7723OO94 வெளியீடு- இஸ்லாமிக் புக் ஹவுஸ் விலை - 150/=
 
 
 
 
 
 

பெயர் - சிரட்டையும் மண்ணும் (கவிதை) நூலாசிரியர்- நாச்சியாதீவு பர்வீன் தொலைபேசி - O771877876 வெளியீடு-ப்ரிஸ்ம் சமூக அபிவிருத்தி அமைப்பு & விலை-90/=
நr
பெயர் - பேனாவால் பேசுகிறேன் நூலாசிரியர் - நாச்சியாதீவு பர்வீன் தொலைபேசி - O771877876 வெளியீடு-மல்லிகைப் பந்தல் 6. f606-15Ofs
பெயர் - என் இனிய தமிழே (கவிதை) நூலாசிரியர் - அ பேனாட் 65IT606368 Jaf - O349.2236Ol வெளியீடு-கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் விலை - 100/=
பெயர்- மூங்கில் காற்று (கவிதை) நூலாசிரியர் - அ பேனாட் தொலைபேசி - O24 22236O! வெளியீடு-கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் விலை-ioo/=

Page 30
புரவலர் புத்தகப் பூங்காவினால் வெளியிடப்பட்ட நூல்கள். தொடர்புகளுக்கு - O774161616, O785318503, விலை - 150/=
பெயர் - பீலிக்கரை (சிறுகதை) நூலாசிரியர்-பிரமிள செல்வராஜா
பெயர் - கனலாய் எரிகிறது (கவிதை) நூலாசிரியர் - கே. எம். ஏ. அஸிஸ்
பெயர்- சலங்கையின் நாதம்
(வரலாற்றுநாடகம்) நூலாசிரியர்- கலைஞர் எம். உதயகுமார்
பெயர் - தேன்கூடு (பாலர் கவிதை) நூலாசிரியர் - கல்லொளுவை பாரிஸ்
 
 
 
 
 
 

N
With Best Compliments From...
Ismail Electrical
Single-3phase wiring, Single & 3phase motors, Water pump, Washing machine, Armatures, Grinder, Drill, Fan, Generator
జ్ఞ
yif"V
N
Rewinding and electrical appliances Repair.
43/B, Circular Road, Galle, Sri Lanka. Mobile: 071 9201405
N
N
With Best Compliments From...
Al-Haj M.Z.M. Fassy
FIE PLSH R PHIII
Wedding Cards, Offset & Screen Printing
Digital Printing, Plastic Boards, Stainless Steel, Letter
S8, CEIRA ROD 38, ZWG LINE DHARGA TOUI. THAGODA, ||(II):- (1717-5779,21. BEUTE.

Page 31
ents From
NATTARANIPOTHA, KUNE TEL - 0094 - 081 - 2420574, 242021 luckyllanc
 

ASALE, SRI LANKA.
FAX 9094 - 081 - 2420740
Ostnet.k.
I