கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலைவும் உலைவும் புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த பார்வைகள்

Page 1
96.O6UGOC
 
 
 

}க்கிலம் குறித்த பார்வைகள்

Page 2


Page 3

புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த பார்வைகள்
க. குணேஸ்வரன்

Page 4
9 அலைவும் உலைவும் 0 கட்டுரைகள்
ஆேசிரியர் சு.குணேஸ்வரன்முதற்பதிப்பு : புரட்டாதி 2009 9 வெளியீடு: தினைப்புனம் 9 அச்சுப் பதிப்பு:மதுரன் கிறா()பிக்ஸ் & ஒவ்செற் பிறின்ரேர்ஸ், அல்வாய், யாழ்ப்பாணம். முேன் அட்டை ஓவியம் : கருணா (யூஜின் வின்சென்ற்
கனடா) அெட்டை வடிவமைப்பு : சு. மகேஸ்வரன்
திணைப்புனம் வெளியீடு : 2
O Alaivum ulaivum O Essays O Author : S.Kuneswarano Language:Tamil O First Edition: September 2009 O Size: inches 11.4 x 8.7 OPaper: 70gm O Pages: 115+viii OPublishers: Thinaiippunam O Printing : Mathuran Grapics & Offset Printers, Alvai. Jaffna O. Front cover Art: Karuna (Eugine Vincent-canada)O CoverDesign : S.Maheswaran
Price: Re 2nsf
ISBN: 978-955-51949 - 0-7
நூல் கிடைக்குமிடம் : புத்தகக்கூடம் (800KCaC) 172இராமநாதன்வீதி, திருநெல்வேலி, unþöunewTib.

அலைவும் உலைவும்
சு.குணேஸ்வரன்
suijLD60shub g(3600TGisgor B.A(Hons),M.Phil
கொண்டவர்.
துவாரகன் என்ற புனைபெயரில் இவர் எழுதிய கவிதைகள் மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்" நூலாக வெளியாகியது. இது 2008ஆம் ஆண்டின் சிறந்த கவிதை நூலுக்கான 6DET60 இலக்கிய
விருதினையும் பெற்றுக்கொண்டது.
அம்மா, வெளிநாட்டுக்கதைகள், கிராமத்துவாசம் ஆகிய நூல்களின் தொகுப்பாசிரியர். தற்போது யாlஅம்பன் அ. மி. த. க பாடசாலையில்
ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
Şჯნაjjhნიმ ru ിഖി (www.valaive lie. blogspot.com)GTaup வலைப்பதிவில் வாசிக்க முடியும்.

Page 5

வீழருந்தும் வளவிருந்தும் வீதிகளும் வெளிகளும் வாழ்விடமாகிட ஊரிலும் உலகிலும் அலைந்துழலும் மக்களுக்கு.

Page 6

திரு. சு. குணேஸ்வரனின் 'அலைவும் உலைவும்நூல் புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த பார்வைகளை உள்ளடக்கியதாயுள்ளது. எண்பதுகளிலேநமதுநாட்டிலிருந்து அலைந்துஉலைந்துதிரிந்தமக்களின் புகலிடப் படைப்பிலக்கியங்களும் எழுத்துக்களும் உலகத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே புலம்பெயர் இலக்கியம் என்றொரு தனிப் பகுதியினை உண்டாக்கின. இவ்விலக்கியப் பகுதி பற்றி குணேஸ்வரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாணவனாக இருந்த பொழுதே ஆய்வு செய்யவும் எழுதவும் முயற்சிகள் மேற்கொண்டார். பின்னர் இவ்விடயத்தினையே நன்கு ஆழமாகவும் அகலமாகவும் நோக்கி, என்னுடைய மேற்பார்வையில் முதுதத்துவமாணிப் பட்ட ஆய்வேட்டினை எழுதினார்.
புலம்பெயர் இலக்கியம் பற்றிய அவருடைய அறிமுகம் பின்வருமாறு அமைகின்றது: "இற்றைக்குகால்நூற்றாண்டைநெருங்கிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் புலம்பெயர் இலக்கியம் தமிழ் இலக்கிய வரலாற்றினுள்
fë னதொரு இலக்கி கத்திகழ்ந் கின்றது. ஈமக்கமிம் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் இன்னோர் கட்ட வளர்ச்சியாகவும் திகழ்கின்ற இவ்விலக்கியத்துள் இதுவரை தமிழ் இலக்கிய உலகு எதிர்கொள்ளாத பல புதிய பிரச்சனைகளும் வாழ்வனுபவங்களும் உள்ளடங்கியுள்ளன. புலம்பெயர் இலக்கியத்தின் உள்ளடக்கம் ஈழத்தமிழ்ப் படைப்புலகுக்கு புதிதாக அமைகின்ற அதேவேளை அது உருவத்திலும் பல மாறுதல்களை வேண்டிநிற்பதாக அமைந்துள்ளது." புலம்பெயர் இலக்கியம் பற்றிய மிகச் சுருங்கிய முறையிலே அமையும் விமர்சனமாக இது அமைகின்றது.
i

Page 7
கலைமுகம், செங்கதிர், தினகரன், ஞானம், புதிய தரிசனம், வீரகேசரி, ships, thinnai.Com, pathivukal.com eduship Geo 666flapis 12 கட்டுரைகள் இந்நூலிலே இடம்பெறுகின்றன. இவற்றுள் "புலம்பெயர்தமிழ் இலக்கியம்”, “புலம்பெயர் சஞ்சிகைகள் - ஆய்வுக்கான ஓர் அறிமுகம்", "புலம்பெயர்தமிழ்ப்படைப்புலகில்மொழிபெயர்ப்புமுயற்சிகள்”, “புலம்பெயர் தமிழ்ப் படைப்புலகில் பிரதேசச் செல்வாக்கு" ஆகிய நான்கும் பொதுவான வரலாற்று விமர்சனக் கட்டுரைகளாகவும், "சுமதிரூபனின் யாதுமாகி நின்றாள்", "ஷோபாசக்தியின் தேசத்துரோகி”, “அ. இரவியின் காலம் ஆகி வந்தகதை","ஆழியாளின்துவிதம்","பொ.கருணாகரமூர்த்திபடைப்புக்கள் - ஒரு பார்வை”, “ஆசி.கந்தராஜாவின் படைப்புலகம்", "க. கலாமோகனின் கதைகள் குறித்து. ஒருமுன்குறிப்பு" என்னும் ஏழுகட்டுரைகளும்தனிப்பட்ட ஆசிரியர்களின் ஆக்கங்களை மதிப்பீடு செய்வனவாகவும், “புலம்பெயர் வாழ்வின் அகதி அநுபவம் -பாரிஸ் கதைகளை முன்வைத்து ஒரு குறிப்பு" என்னும் கட்டுரை புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வரும் பதினைந்து படைப்பாளிகளின் பாரிஸ் கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பினை அடிப்படையாகக் கொண்டு அவர்களுடைய அகதி அனுபவங்களைச்
"புலம்பெயர் தமிழ்ப்படைப்புலகில் மொழிபெயர்ப்பு முயற்சிகள்” கட்டுரை பல தகவல்களை எங்களுக்குத் தருகின்றது. டேனிஷ் மொழியில் அணசன் எழுதிய சிறுகதைகள் தமிழிலே மொழிபெயர்க்கப்பட்டமை குறிப்பிடப் படுகின்றது. அனசன் எழுதிய காவியம் ஒன்றினைக் கடற்கண்ணி என பாரதிபாலன் மொழிபெயர்த்துள்ளார். இதனையும் சேர்த்துக்கொள்ளலாம்.
தனிப்பட்ட ஆக்க இலக்கியகாரரின் படைப்புக்களைப் பொருத்தமான
ஷோபாசக்தியின் தேசத்துரோகி யை மதிப்பிடுமிடத்து "ஏழ்மை, இழப்பு, தியாகம், இலட்சியம், இயக்கம், போலிகள், புனைவுகள், வித்தியாசங்கள், என்பவற்றைஈழத்துமொழிநடையுடன்நன்குதந்திருக்கும் ஷோபாசக்தியின் எழுத்துக்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் படைப்புக்களுக்கு வலுச் சேர்ப்பனவாக அமைந்துள்ளன.” என்று கூறும் ஆசிரியர் தேசத்துரோகி எனத் தலைப்பிட்ட கதை, கதை சொல்வதிலும் கதை நேர்த்தியிலும் மிகச் சிறப்பாகத் தென்பட்டாலும் கதைத் தலைப்பின் அழுத்தமும் ஆழமும் கதையில் அவ்வளவாகப் பேசப்படவில்லை. ஒரு வித்தியாசத்தை நோக்கி ஷோபாசக்தி இத்தலைப்பை இட்டிருக்கக் கூடும்" எனக் கூறுவதையும் காணலாம். இதேபோன்று அ. இரவியின் காலம் ஆகி வந்த கதை பற்றிக்
i

கூறுமிடத்து, “சிற்சில கதைகளில் ஈழப்போராட்ட காலகட்டத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் வலிந்து புகுத்தப்பட்டதாகத் தெரிகின்றது. இவை கதைகளின் இயல்புத் தன்மையைப் பாதிக்கின்றன. அதேபோல் முன்னர் குறிப்பிட்டஒருசம்பவம் அல்லது சித்திரிப்புமீண்டும்வேறுகதைகளில் அதன் தொடராகத் தொடர்கின்றது. இந்தத்தொடர்புவாசகரை வேறுஒருதளத்திற்கு இட்டுச்செல்கின்றது.”என்று குறைகூறும் குணேஸ்வரன்"என்றாலும் ஈழத்து எழுத்துக்களில் ஒரு தொகுதி முழுவதும் பிள்ளைப் பருவநினைவுகளுடன் கதை கூறியவர்கள் குறைவு என்றே கூறல் வேண்டும். பல படைப்பாளிகள் சிற்சிலகதைகளை எழுதியிருந்தாலும் இரவியின்படைப்பு மனோநிலையில் நின்று எழுதியவர்கள் குறைவே." என்றுசிறப்பித்துக்கூறுவதைக்காணலாம். இவை குணேஸ்வரனுடைய பக்கச்சார்பற்றமதிப்பீட்டுக்குநல்ல சான்றுகளாக அமைகின்றன.
நம்முடைய மாணவர்களுக்கு இது ஒரு பயனுள்ள நூலாக அமைகின்றது. தமிழ் இலக்கிய வரலாறுகற்கின்றமாணவர்கள்புலம்பெயர் இலக்கியம்பற்றி றிந்தேயாகவேண்டும். இந்நூல் 球 bണുങ്ങല്ക്ക b. சாதாரண எழுத்தாளர்கள் வாசகர்கள் யாவருக்கும் பயனுள்ளதாக இது அமையும். குணேஸ்வரனுக்குப்பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் கூறி, இந்த அணிந்துரையை நிறைவுசெய்கிறேன்.
பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ் ஆலோசகர், மொழித்தறை, தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.

Page 8
வாசிப்பு அனுபவங்களின் அனுபவக் குறிப்புக்கள்
பதியெழு அறியாப்பழங்குடியினராய் வாழ்ந்த ஈழத்தமிழர்களுக்கு விதியோ, விபத்தோ எதுவெனத் துணிய முடியாதவாறு ஏற்பட்டதுதான் புலம்பெயர்வு. இவர்கள் திரைகடலோடித் திரவியம் தேடப் புறப்பட்டவர்கள்
வரவேற்றவர்கள் சிலர். வாயிற்கதவடைத்துகறுப்புநாயே ஏன்வந்தாய் எனக் கேட்டு எள்ளிநகையாடியவர்கள் வேறுசிலர்.புலம்பெயர்ந்தோர்வரலாற்றில் இவர்கள்அனைவரும்குறித்துக்கொள்ளப்படவேண்டியவர்கள்.புலம்பெயர்வு ஊரை, உறவுகளை, தேடிவைத்த தேட்டங்களை என்று எல்லாவற்றையும் பறிகொடுக்க வைத்தது. இழப்பதற்கு ஏதுமற்ற ஏதிலிகளாக ஈழத்தமிழர்கள் உலகநாபெங்கும் கையேந்திநின்றார்கள். இந்த வாழ்வின் சோகங்களைச் சொல்பவைதான் புலம்பெயர் இலக்கியங்கள். இழக்கக்கூடாதவற்றை யெல்லாம் இழந்த வாழ்வின் சோகங்களும் புகலிடங்களில் ஏற்பட்ட புதிய் அனுபவங்களும் இலக்கியத்தின் பொருளாகியபோது தமிழ் இலக்கியம் புதியதொரு பரிமாணத்தைப் பெற்றுக்கொண்டது.
குணேஸ்வரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப்பாடமாகப் பயின்றவர். புலம்பெயர் இலக்கியங்கள் குறித்த தேடலில் மிகுந்தஅபூர்வமுடையவர். புலம்பெயர் இலக்கியங்கள்தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுமுதுதத்துவமாணிப் (M.Phil) பட்டத்தினைப்பெற்றுக்கொண்ட முதல் மாணவனும் இவரே. பட்டங்கள் பட்டங்களாகவே இருந்து பறந்தோடிப்போவதும் உண்டு. ஆனால் குணேஸ்வரன் தனது ஆய்வுத் தேடுதலைவிருப்பார்வமுயற்சியாகவிபாமல்தொடர்ந்துவருபவர்.புலம்பெயர் படைப்புக்கள் குறித்த தகவற்பெட்டகமாகவே தன்னை வளர்த்து வருபவர். அவ்வாறான ஆய்வுத் தாகமுள்ள மாணவன் ஒருவனின் வாசிப்பு அனுபவங்களின்அனுபவக்குறிப்புக்களகஅமைவதே'அலைவும்உலைவும்
என்ற இச்சிறுநூல்.
M

நூலின் உள்ளடக்கம் மூன்று தளங்களில் அமைந்திருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. ஆரம்பத்தில் புலம்பெயர் இலக்கியங்களின் தோற்றத்திற்கான பின்னணி விரிவாக எடுத்துக்காட்டப்படுகின்றது. இரண்டாவது தளத்தில் புலம்பெயர் சஞ்சிகைகள், மொழிபெயர்ப்பு முயற்சிகள் புலம்பெயர் இலக்கியங்களில் பிரதேசச் செல்வாக்கு ஆகியன எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. மூன்றாவதாக அவர் வாசித்த புலம்பெயர் படைப்புக்கள் சில அறிமுகம் செய்யப்படுவதைக் காணமுடிகிறது. இப்பகுதியில் சுமதிரூபனின் யாதுமாகி நின்றாய் முதல் கலாமோகனின் கதைகள் வரை எட்டுநூல்கள்தொடர்பான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை அறிமுகக்கட்டுரைகள்எனக்கூறப்பட்டாலும் இவற்றில் பல அறிமுகம் என்றவரையறையைத்தாண்டி விமர்சனப்பாங்குடன்அமைந்திருப்பதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. கருணாகரமூர்த்தியின் படைப்புக்கள் ஒரு பார்வை, ஆசி.கந்தராசாவின் படைப்புலகம், கலாமோகனின் கதைகள் குறித்து ஒரு முன்குறிப்பு ஆகிய கட்டுரைகளும் இவ்வாறான விமர்சனப் பாங்கினைக் காணமுடியும்.
இந்நூல் சாதாரணவாசகனைச் சென்றடையும்போது அவனுக்குப் புலம்பெயர் படைப்புக்கள் சிலவற்றை அறிமுகமாக்கி புதியதொரு அனுபவத்தை ஏற்படுத்தும். ஆர்வமுள்ள வாசகனுக்கு புலம்பெயர் படைப்புக்களைத் தேடிப்படிக்கவேண்டுமென்ற ஆவலைத் தூண்டும். ஆர்வமிருந்தும் தேடிப்படிக்க வாய்ப்பில்லாத ஒருவனுக்குத் தகவல்களை வழங்கும். எவ்வாறாயினும் இந்நூல் பலருக்கும் கைநூலாக உபயோகப்படக்கூடியது. ஆனால் குணேஸ்வரனின் பணி இத்துடன் முடிந்துவிடக்கூடாது. குறைப்பசி பொல்லாதது. எனவே பசியோடு இருக்கின்ற வாசகர்களுக்குப் பசியாறத் தீனி போடும் வகையில் புலம்பெயர் படைப்புக்கள் குறித்த விரிவான நூலொன்றை அவர் எழுதி வெளியிட வேண்டும். அதற்கான முன்முயற்சியாக இந்நூலை ஏற்றுக்கொண்டு அவரின் முயற்சியைப் பாராட்டி வரவேற்கலாம்.
பேராசிரியர் கலாநிதி ம.இரகுநாதனி தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

Page 9
என் குறிப்பு
 ைெண்பதுகளின் பின்னர் ஈழத்து இலக்கியப் பரப்பிலே புலம்பெயர் இலக்கியம்தனித்துவமான ஓர் இலக்கியவகையாகத்திகழ்ந்துவருகின்றது. இது ஈழத்தமிழ் இலக்கியத்தின் அறுபடாத் தொடர்ச்சியுடன் கடந்த கால் நூற்றாண்டாக வளர்ந்து வருகின்றது. தற்கால இலக்கியச் சூழலிலே இவ்விலக்கியத்தின் மீதான எனது தேடலின் விளைவே இந்த அலைவும் D 6osобрiv.
புலம்பெயர் இலக்கிய உலகில் நாள்தோறும் எங்காவது ஒரு மூலையில் கலை இலக்கியச் செயற்பாடுகள் நிகழ்ந்தேறிய வண்ணமே உள்ளன. ஆனால் அவைபற்றிய முழுமையானதகவல்கள் எமது இலக்கியச் சூழலில் பரிமாறப்படுவதுமிகக்குறைவு.அதன்காரணமாகவும், பல்வேறுதேவைகளை முன்னிறுத்தியும் இக்கட்டுரைகளை எழுதியுள்ளேன்.
இவற்றுள் சஞ்சிகைகள் பற்றிய கட்டுரையும் மொழிபெயர்ப்புப் பற்றிய கட்டுரையும் தகவல்களை முன்வைப்பதை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. படைப்பாளிகளின் நூல்களை அறிமுகம் செய்யும் பொருட்டு தனிநூல்கள் தொடர்பான கட்டுரைகள் அமைந்துள்ளன. படைப்புக்களை விமர்சன நோக்குடன் அணுகும் பொருட்டு கலாமோகன், கருணாகரமூர்த்தி, ஆசி கந்தராஜா ஆகியோரின் படைப்புகள் குறித்த கட்டுரைகள் அமைந்துள்ளன. இவையெல்லாம் எனது ஆரம்ப முயற்சிகள். புலம்பெயர்படைப்பாளிகளை மையமாகக்கொண்டு நுண்மையாகநோக்கும் எண்ணமும்உண்டு. அவைஎதிர்காலத்தில்கைகூடும்என்றுஎண்ணுகிறேன்.
இந்நூலுக்குத் தக்கதொரு அணிந்துரையினை வழங்கி இத்துறையில் என்னை நெறிப்படுத்திய பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களுக்கும், இத்துறையில் தொடர்ந்தும் என்னை ஊக்குவித்து வழிப்படுத்துகின்ற பேராசிரியர்எஸ்சிவலிங்கராஜா அவர்களுக்கும்,நான்கேட்டுக்கொண்டபோது முழுமனதோடு அறிமுகவுரையைத் தந்துதவிய பேராசிரியர் ம. இரகுநாதன்
அவர்களுக்கும் என்நன்றிஉரித்தாகட்டும்.
V

புலம்பெயர் படைப்புகளைத் தேடிப் படிப்பதற்குரிய வாய்ப்பினைத் தந்துதவியது. குலசிங்கம் அவர்களுக்கும், தினகரனில் எனது கட்டுரைகள் வெளிவரக்காரணராக இருந்தமூத்தனழுத்தாளர்கலாபூஷணம் தெணியாள் அவர்களுக்கும், நூல் பற்றிய உரையாடலில் பங்கெடுத்த நண்பர் செ. சுதர்சனுக்கும்நன்றி
க்கட்டுரைகளைப் பிரசுரித்த பத்திரிகை, சஞ்
லே திரு திருமதி சண்முகலிங்கம் அவர்களுக்கும் அழகாக நூலாக்கித் தந்த மதுரன் கிறாபிக்ஸ் நிறுவனர் சு. மகேஸ்வரன் அவர்தம் ஊழியர்களுக்கும்
13 யாழ்ப்பாணத்து ஓவியர்களின் ஓவியக் காட்சி நூலிலிருந்து பெற உதவிய டிஜிற்றல் ஒவியத்தி ந்திருந் இயர் (புதின் வின்சென்ற் - கனடா) அவர்களுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
ட்டம்மன்றத்தி க்கும் மேலானநன்றி
தொடர்பான ஆய்வுப் பார்வையை விசாலிக்க முனைவோருக்கும் ஒரு தூண்டுதலாக இத்தொகுப்பு உதவினால் அதுவே பெரிதென எண்ணுவேன்.
'தினைப்புனம்” சு. குணேஸ்வரன் وIDiffl'g
அல்வாய்.
27.09.2009
Lósoforess : kuneswaranOgmail.com
vi

Page 10
(9) O ர்தமிழ் s b/01 புலம்பெயர் சஞ்சிகைகள்8 العقومسيح -ةப்வுக்கான ஓர் அறிமுகம43 புலம்பெயர் தமிழ்ப்படைப்புலகில்லமாழிபெயர்ப்புமுயற்சிகள்/58 புலம்பெயர்தமிழ்ப்படைப்புலகில்பிரதேசச்செல்வாக்கு/63
Ga) பேசப்பதகதைகள்-சுமதிருபனின்யாதுமாகிநின்றாள்/73 தோலுரித்துக்கட்டும்தையம்-ஷோபாசக்தியின்தேகத்துரோகி78 அகதிவாழ்வின் அவலம்-பரிஸ்கதைகள்/8 நிகழ்வுகள்டுனைவுகள்-அஆவியின்காலம் ஆகிவந்தகதை86 பெண்மொழியோடுஒருகவிதைப்பயணம்-ஆழியாளின் துவிதம/89
(S) த்தி ப்புக்கள்-ஒருபார்வை95 ஆசி.கந்தாவின்படைப்புலகம்/101 கலாமோகனின்கதைகள் -ஒருமுண்குறிப்பு/106

புலம்பெயர் இலக்கியம்
hostage
அறிமுகம்
இற்றைக்கு கால் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர் களின் புலம்பெயர் இலக்கியம் தமிழ் இலக்கிய வரலாற்றினுள் தனித்துவமான தொரு இலக்கிய வகையாகத் திகழ்ந்து வருகின்றது. ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் இன்னோர் கட்ட வளர்ச்சியாகவும் திகழ்கின்ற இவ் விலக்கியத் துளி. இதுவரை தமிழ்
இலக்கிய உலகு எதிர் கொள்ளாத பல
புதிய பிரச்சனைகளும் வாழ்வனுப வங்களும் உள்ளடங்கியுள்ளன. L6tb பெயர் இலக்கியத்தின் உள்ளடக்கம் ஈழத்தமிழ்ப் படைப்புலகுக்கு புதிதாக அமைகின்ற அதேவேளை, அது
உருவத்திலும் பல மாறுதல்களை
வேண்டிநிற்பதாக அமைந்துள்ளது.

Page 11
சொற்பொருள்நிலை
புலம்பெயர் இலக்கியம்’, ‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம்’ ஆகிய சொற்றொடர்கள் தமிழில் வழக்கத்தில் இருந்து வருகின்றன. இத்தொடர்களின் பிரயோகம் தமிழ் இலக்கிய உலகில் மிக வலுப்பெற்று வருவதும் நாம் அறிந்ததே. இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வானது.அரசியற் காரணங்களால் ஏற்பட்டதாகும். இதனாலேயே இச்சொற்றொடரின் அர்த்தத்தளம் மிக வலுவானதாக அமைந்துள்ளது.
புலம்பெயர்வு என்பது ஒரே அரசியல் பூகோள எல்லையை விட்டுப் பெயர்ந்துசமூக அரசியல்பண்பாட்டுச் சூழ்நிலைகளால் பெரிதும் வேறுபட்ட பிரதேசத்தில் வாழநேரிடுகிறவர்களைக் குறிக்கின்றது இவ்வாறு அரசியல் சமூக பண்பாட்டு அம்சங்களில் பெரிதும் வேறுபட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களால் படைக்கப்படும் இலக்கியங்களையே இங்குபுலம்பெயர் இலக்கியம் அல்லது புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற சொற்றொடர் கொண்டு அழைக்கிறோம்.
புகலிட இலக்கியம்’ என்ற சொற்பிரயோகமும் இதே அர்த்தத்தைக் குறித்தாலும் அதனை சற்று அரசியல் அழுத்தம் கூடிய சொல்லாகவே கருதமுடிகின்றது.சுயவிருப்பின்றிவெளியேற்றப்பட்டவர்கள், உயிராபத்துக் காரணமாக வெளியேறியோர், மரணதண்டனை விதிக்கப்பட் டம்ை காரணமாகவெளியேறியோர் (உதாரணமாக சல்மான்ருஷ்டியைக் கூறலாம்) இவ்வாறானவர்கள் மத்தியிலிருந்து வெளிவரும் படைப்புக்கள் புகலிட இலக்கியம் என அழைக்கப்படுகின்றது. இன்று புலம்பெயர் படைப்பாளிகள் என அடையாளம் காணப்பட்ட ஈழப் படைப்பாளிகளிற் சிலர் தமது படைப்புக்களையும் புகலிட இலக்கியம் என அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.
"sargasmy (Andrew gurr) (8 JTGig 65uDijssjas6it "exile' 6T6irp பதம் சுயவிருப்பு இன்றி புலம் பெயரும் நிலைமையையும் "expatriation" என்ற பதம் சுயவிருப்புடன் புலம்பெயர்தலையும் குறிப்பதாகவும் இவற்றிற்கிடையேயான வேறுபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதுகின்றனர்."(கொன்ஸ்ரன்ரைன், காலம், இதழ்18,புலம்பெயர்தலும்புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் இலக்கியமுயற்சிகளும்,ப20)
அலைவும் உலைவும் (புலம்பெக் படைப்பிலக்கியம் குறித்ர பந்வைகள்) 2

ஆங்கிலத்தில் ‘புலம்பெயர் இலக்கியம்’ என்பதனை 'Diaspora Literature என்றசொற்றொடரால் அழைப்பர். இதனைக்குறிக்க "expatriate literature" என்ற சொற்றொடரும்பயன்பாட்டில்உள்ளது.இங்கு ‘expatriate 6T6drugsbgs "to send out of one's country" GT60T GUTC56ft GasTests.TGoTib. மேலும் "expatiate என்பதற்கு ஒக்ஸ்பேட் ஆங்கில அகராதி a person living outside her or his own country 6T6076 b GUITOb6ft 35(566 pg5. (oxford advanced learner's dictionary, fifth edition 1996, p.403) இவ்வகையில்
"exile literature, Afro American literature, British Asian literature, French African literature 66. அழைக்கப்படும் இலக்கியங்கள் யாவற்றினதும் பொதுவான அம்சம் எல்லாம் ஏதோ ஒருவகையில் தாய் மண்ணை விட்டுப் பெயர்ந்து வந்தவர்களால் படைக்கப்படுவதே ஆகும்.” (யமுனா ராஜேந்திரன், புலம்பெயர் இலக்கியம் கோட்பாடு பற்றிய பிரச்சினை,சுவடுகள், நோர்வே, 1995, இதழ் 68)
இதேநிலையினையே ஈழத்தமிழர்களின் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற வகைப்பாடும் ஏற்படுத்துகின்றது. இங்கு ‘புலம்பெயர் இலக்கியம்' என்று குறிப்பிடப்படும் சொற்றொடர் ஊடாக ஈழத்தமிழர்களின் படைப்புக்களே கருத்திற் கொள்ளப்படுகின்றன என்பதையும் நாம் மனங்கொள்ளவேண்டும்.இவர்கள் புலம்பெயர்வதற்குபல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்தியுள்ளன என்று கூறினாலும் மிக வலுவான காரணிகளாக இருப்பவை அரசியற் பிரச்சனைகளே ஆகும்.
இரண்டாம் உலக யுத்தத்தின்போது நாசி ஜேர்மன் கிட்லரினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பும் இரண்டுஉலகப்போர்களும் ஏற்படுத்திய வடுவால் விளைந்த புலம்பெயர்வுகள் உலகப் பொதுவானவையாகும். ஆசிய, ஆபிரிக்க கிழக்கு ஐரோப்பிய மக்களே மேற்குலக நாடுகளை நோக்கிய புலம்பெயர்வுக்கு அதிகமும் உள்ளானவர்கள். அவர்களை துருக்கியர், குர்திஸ்தானியர், யூகோஸ்லாவியர். கறுப்பர், ஈழத்தமிழர்கள். ஸெuப்ரே, செக்கோஸ்லாவியர், கிழக்கு ஐரோப்பியர் எனக் கூறிக்கொண்டாலும் இனம் மதம் மொழி கடந்து எல்லோருமே அகதிகள் என்றே கூறிக்கொள்ளும் அவலம் உண்டு.
8amoa 3

Page 12
இவர்கள் அகதியாகி ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் தஞ்சமடைய நேரிடுகின்ற போது பலவிதமான துன்பங்களுக்கும் நெருக்கீடுகளுக்கும், ஒதுக்குதலுக்கும் உள்ளகின்றனர். இரண்டாம் உலகப்போரையொட்டி அகதிகளை ஏற்றுக்கொண்ட மேற்குலக நாடுகள் பின்னர் மூன்றாம் உலக நாடுகளின் அகதிகள் வரவைக் கட்டுப்படுத்தவும், அவர்களைத் திருப்பி அனுப்பவும் சட்டங்களை இயற்றி, தமது நாடுகளுக்கு உள் நுழையும் அகதிகளின் வரவைக்குறைக்கஒவ்வொரு அரசும்முயல்கின்றது.
st stsíðar; : '-J.FFF' : '; grairier air are rikk iż-LESS Ff3? "
இதற்கு பல காரணங்களைக் கூறிக் கொள்ளலாம். ஒருவர் அகதியாக ஏற்கப்பட்டால்வேலைவாய்ப்பு,கல்வி, நீதிமன்றங்களை அணுகும் உரிமை, பாஸ்போட் பெறும் உரிமை, ஆகிய அடிப்படை உரிமைகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது. எனவே இதனைத் தடுக்கும் வகையிலேயே ஐரோப்பியு நாடுகள் அகதிநிலைவழங்குவதைக்குறைக்கின்றன.உலகளாவியமனித உரிமைப்பிரகடனத்தின் 14ஆம்பிரிவு
"துன்புறுத்தலுக்கு எதிரான யாதொருவருக்கும் பக்கத்துநாடுகளில்புகலிடம் தேடவும் அனுபவிக்கவும் உரிமை உண்டு"(அ.மார்க்ஸ்,194,புலம்பெயர்தோர்
C Sefira (anague anianose.)
என்று வரையறை செய்கின்றது. கடந்த முப்பது ஆண்டுகளில் ஐரோப்பாவுக்குள்ளே புலம்பெயர்வு இடம்பெற்றது என்பதைக் காட்டிலும், ஆசிய ஆபிரிக்க நாடுகளில் இருந்தே அதிகமான புலம்பெயர்வுகள் நடந்தேறியுள்ளனளனலாம்.இந்தப்புலம்பெயர்வுக்குள்ளே எதிர்ப்பாளர்கள், படைப்பாளிகள்,விடுதலைப் போராளிகள், காலனித்துவஎதிர்ப்பாளர்கள்,
9gamawað sa AIDawað Cogadounä uamuissandhaswö og urianasio= 4
 

சில கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்தவர்கள்,எனப்பல்வகைப்பட்டவர்கள் புகலடைந்த நாடுகளில் இருந்து எழுதி வருகிறார்கள். இவர்களின் படைப்புக்கள் ‘புலம்பெயர் படைப்புக்கள்’ என்ற அடையாளத்தைப் பெறுகின்றன. இது பற்றிய யமுனா ராஜேந்திரனின் ஒரு கூற்று கவனத்திற்குரியது.
"இன்று மிக முக்கியமான உலக இலக்கியங்கள் இத்தகைய படைப்பாளிகளிடம் இருந்தேவருகின்றன. இவர்களின் படைப்புக்களில் வரலாற்றின்சாராம்சமும் போராட்டங்களும் எதிர்ப்புணர்வும் புதிய மனிதனுக்கான விழைவுகளும் சங்கமிக்கின்றன. இதை உலகம் இன்று எதிர்கொண்டும், நெருக்கடிகளை அதனின்றும் விடுவித்துக் கொள்ளும் எத்தனங்களை இப்படைப்புக்கள் பேசுகின்றன. இவன்தான் இன்றுவரை அறிந்திராத மூடுண்ட கதைகளை எங்கெங்கும் திறந்துவிடுகின்றான். பென் ஒக்ரி, செர்கே போஸ், ஆரியல் டேஸ்மேன், ஜீன் ஜோர்டன், இல்மேஸ் குணே, மிலான் குந்த்ரா, பிராட்ஸிகி, வோலோ ஸோயிங்கா, ஸல்மான்ருஷ்டி, சுஜாதாபட், ஜூன்அரசநாயகம் எனப்படைப்பாளிகள், காலனியாதிக்கம், நிறவெறி, பாலியல் நெருக்கடி, தேசியம், சூழலியம், அழிவு, நாடோடி வாழ்வு, அறங்களின் வீழ்ச்சி, பொய்மை, பேரழிவு, எதிர்ப்புணர்வு, விடுதலை, தத்துவச் சீரழிவு, ஷோசலிசம், முதலாளித்துவம், ஜனநாயகம், உலகெங்கும் நிராகரிக்கப்பட்ட மக்கள் மீதானபரிவு, போன்றவற்றை இவன் படைப்புக்கள் தழுவிச் செல்கின்றன.”(யமுனாராஜேந்திரன்,கிழக்கும்மேற்கும்,1997)
இக்கூற்றின் மூலம் உலகில்புலம்பெயர்படைப்பாளிகளையும் அவர்கள் தம் படைப்புக்களுக்கு எடுத்துக் கொள்ளும் பொருட்பரப்பையும் அறிந்துகொள்ளமுடிகின்றது.இதனைபேராசிரியர் கா.சிவத்தம்பிஅவர்கள் writings in excile 6T60Tais dings (85TG
ം്6ഞ്ഞൺബൺ - 5

Page 13
"ஈழத்தின் தமிழ் எழுத்தாளர்களையும் அந்தப் பெரும் பின்புலத்தில் வைத்தே நோக்க வேண்டும். தமிழ்நிலை நின்ற ஒரு முக்கியமான அவதானிப்பில் சொல்லவேண்டும்"(பேராசிரியர்காசிவத்தம்பி, செந்தணல்2004)
என்பார். இன்றைய உலக புலம்பெயர் இலக்கியமும் அதற்குள் உள்ளடங்குகின்ற ஈழத்தமிழர்களின் புலம்பெயர் படைப்புக்களும் இவ்வாறான பொதுமைக்குள்ளே வந்துசேரும்போது அவை தமிழுக்கு புதிய அனுபவங்களையும் கொண்டு வந்து சேர்க்கின்றன.
வரலாற்றுஅபுய்படையில்ஈழத்தமிழர்களின்புலம்பெயர்வு
இருபதாம் நூற்றாண்டில் ஈழத்தமிழரின் புலம்பெயர் வரலாற்றை 60-80 கள் வரையான புலம்பெயர்வு எனவும், 80 களின் பின்னரான புலம்பெயர்வு எனவும் இரண்டு வகையாக நோக்கலாம். முன்னையது மலேசியா, அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா ஆகிய ஆங்கில மொழி சார்ந்த நாடுகளுக்கு தொழிலின் நிமிர்த்தம் சென்றடைந்தவர்களையும், மற்றையது அரசியற் பிரச்சனை காரணமாக குறிப்பாக 1983 யூலை கலவரங்களையடுத்து மேற்கு ஐரோப்பிய, ஸ்கண்டிநேவிய ஆங்கில மொழிசாரா நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களையும் குறிக்கும்.
ஈழத்தமிழர்களின் புலம்பெயர் வரலாறு காலத்திற்குக் காலம் பின்வருமாறு இடம்பெற்றுள்ளதனை அறிந்து கொள்ளலாம்.
(1) 60 களில் இருந்து மலேசியாவுக்கான புலம்பெயர்வு (2) அதன் பின் ஆங்கில மொழிசார் நாடுகளுக்கான புலம்பெயர்வு (3) 70 களில் மத்திய கிழக்குநாடுகளுக்கு தொழிலாளர்கள்
புலம்பெயர்வு (4) 80 களில் இருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கான
புலம்பெயர்வு m (5) இந்தியாவில் தமிழகத்தை நோக்கியதான புலம்பெயர்வு
அலைவும் உலைவும் (புலம்பெக் படைப்பிலக்கியம் குறித்ர பந்வைகள்)= 6

60-80கள் வரையான புலம்பெயர்வு
1960 கள் முதல் 1980 கள் வரையான காலகட்டத்தில் ஈழத்தமிழர் சமூகத்தில் இருந்து புலம்பெயர்வுகள் இடம்பெற்றுள்ளமை நாம் அறிந்ததே. அக்காலகட்டபுலம்பெயர்வானது இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஏற்பட்ட முதலாவது பெயர்வாகக் கருதப்படுகின்றது.
இது 60 களுக்கு சற்று முன்னதாக 1956 ஆம் ஆண்டிலிருந்து மலேசியாவை நோக்கிய புலம்பெயர்வாக அமைகின்றது. பின்னர் பிரித்தானியா, அமெரிக்கா,அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குமாக அப் புலப்பெயர்வு நடைபெற்றது.
இலங்கை 1948 இல் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதும் 1948-1949 இல் பெருந்தோட்டப் பணியாளர்களாக இருந்த மலையகத் தமிழர்களின் வாக்குரிமையையும், குடியுரிமையையும் இலங்கை அரசு பறித்தது. தொடர்ந்து 1956 இல் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி எனும் சட்டம் இயற்றப்படுகிறது. இதனால் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது ஆங்கிலக் கல்வியின் மூலமாக வந்த தமிழர்களுக்கு இது பெரிய பிரச்சனையாக இருந்தது. இதன் காரணமாகவே,
"1956ற்குப்பின் இலங்கையில் தொடர்ந்து வாழ்வதால் தங்கள் வாழ்வில் முன்னேற்றங்கள் பெற முடியுமா என்கின்ற பிரச்சனை ஆங்கிலப் புலமையுடைய, கல்வி கற்ற சமூக வாய்ப்புள்ள மக்களிடையே எழத்தொடங்கியது. இதனால் 1956-60 களில் இலங்கையில் பெரும்பான்மை Professional என்று சொல்லப்படுகின்றவைத்தியர்கள் பொறியியலாளர்கள், வழக்கறிஞர்கள், எழுதுவினைஞர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் வெளியேறுகின்றனர். அவர்கள் ஆங்கிலமரபு தெரிந்த நாடுகளுக்கு குறிப்பாக பிரித்தானியாவுக்கு சென்றனர். இந்த ஓட்டம் படிப்படியாக தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே வந்தது"(கா.சிவத்தம்பி, புலம்பெயர் தமிழர் வாழ்வு, மூன்றாவது மனிதன்,2000)
ംശുഞ്ഞൺഖരീജ 7

Page 14
சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்ற சட்டத்தை எதிர்த்து தமிழர்கள் அறப்போரில் ஈடுபட்டபோது பலர் தாக்கப்பட்டனர். தொடர்ந்து நாடு முழுவதும் பரவலாக தமிழருக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்தன. இதனால்தமிழர் தாயகம் தவிர்ந்த இலங்கையின்பிறபகுதிகளில் தமிழர்கள் வாழ்வதே பெரும் பிரச்சனைக்குரியதாகியது.
இதன் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியின்போது டிசம்பர் 60 இல் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சிங்களமே பயன்பாட்டில் உள்ள மொழி ஆகுமாறு மற்றுமொரு ஆதிக்கச்சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் 61 இல் ஆதிக்க வன்மைப்போக்கை எதிர்த்து அறப்போர் தொடங்கிய தமிழர்கள் மீண்டும் தாக்கப்பட்டனர். இந்தக் காலகட்டங்களிலேதான்;
"1966 இல் அவுஸ்திரேலிய அரசாங்கம் உயர்கல்வித் தகைமை உடையவர்களுக்கு அந்நாட்டுப் பிரசாவுரிமை வழங்கியது. அக்காலப்பகுதியிலும் ஒரு சிறுபகுதியினர் அங்கு சென்று குடியேறினர். ஆனாலும் கடந்த 25 வருட காலப்பகுதியிலேதான் தமிழர்கள் அங்கு அதிகளவில் குடியேறினர்."(திஞானசேகரன்,2000,மல்லிகை. அவுஸ்திரேலியச் சிறப்பிதழ்)
என்ற கூற்றும் ஆரம்ப கால தமிழர்களின் புலப்பெயர்வை எடுத்துக் காட்டுகின்றது. இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்தும் இலங்கையில் இருந்தும் தொழில் தேடிப் புலம்பெயர்ந்தவர்கள். எவ்வாறாயினும் தமிழகத்தைச் சார்ந்தே அவர்களின் கலாசார முனைப்புக்கள் இருந்துள்ளன. ஆனால் இன்றைக்கு இரண்டாம் மூன்றாம் தலைமுறையாக வாழ்பவர்கள் இந்தியாவையும் இலங்கையையும் தமது பாரம்பரியப் பிரதேசமாகக் கருதுகின்றார்கள். தவிரவும் புலம்பெயர்ந்த நாடுகளையே தமது தாய்நாடாகக் கருதி வாழ்கின்றனர். இவர்கள் தமது படைப்புக்களும் தனித்துவமுடையதென இன்று கூறிவருகின்றமையும் தெரிந்ததே. இதனாலேயே தமது படைப்புக்களையும் புலம்பெயர் படைப்புக்களாகவே கொள்ளவேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.
மலேசியாவுக்கு ஈழத்தமிழர்கள் 1870 இல் இருந்து குடிபெயர்ந்ததாக வரலாறு கூறுகின்றது. பின்னர் இலங்கை காலனித்துவ ஆட்சியில் இருந்த
அலைவும் உலைவும் (புலம்பெக் படைப்பிலக்கியம் குறித்ர பந்வைகள்)= 8

போதும்,அதன் பின்னர் தொழில்புரிவதற்காகவும் குடிபெயர்ந்துசென்றமை பற்றிக. சத்தியசீலன் தமது கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.
"பிரித்தானியரால் ஐக்கிய மலாய் அரசுகள் (F.M.C) உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து யாழ்ப்பாணத்துத் தமிழர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வெளி நாடுகளுக்கான குடிபெயர்வானது இன்றுவரை தொடர்ந்து இடம்பெற்று வருவதைக் காண்கின்றோம். இலங்கைத் தமிழர் வரலாற்றைப் பொறுத்து வெளிநாடு ஒன்றிற்கு குறிப்பிடத்தக்க அளவில் இவர்கள் குடிபெயர்ந்து சென்றமை மலாயக் குடிபெயர்வுடன் ஆரம்பித்தது எனலாம். இத்தகைய குடிபெயர்வு ஒரு குறிப்பிட்ட சமூக வகுப்பினர் மத்தியிலிருந்து ஏற்பட்டதாகவே அமைந்தது. அதாவது பொருளாதார வசதியுள்ள ஓரளவு ஆங்கிலக் கல்வி கற்ற மத்திய வகுப்பு மக்களிடமிருந்துதான் இக்குடிபெயர்வு இடம்பெற்றிருக்கிறது" (5。 சத்தியசீலன், இலங்கைத்தமிழர் குடிபெயர்வு மலாய- மேற்குலக குடிபெயர்வு ஓர் ஒப்பீட்டாய்வு, சிந்தனை,2005)
பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் அவர்களின் காலனித்துவ நாடாக விளங்கிய பர்மா, சிங்கப்பூர், மலேசியா நைஜீரியா, சம்பியா போன்ற நாடுகளுக்கும் ஆபிரிக்க நாடுகள் சிலவற்றுக்கும் கணிசமான தமிழர்கள் சென்று ஆங்கிலேய அரசின் நிர்வாகப் பணியாளர்களாக பணி புரிந்தும் உள்ளனர். 'மூளைசாலிகள் வெளியேற்றம்’ என்ற அடிப்படையில் இப்புலப்பெயர்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆபிரிக்க நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் இலங்கைத் தமிழர்கள் தொழில்நிமித்தம் சென்று வாழ்ந்தனர். வாழ்ந்தும் வருகின்றனர். எனினும் இவர்களின் மத்தியில் இருந்து படைப்புகள் உருப்பெறுவதற்குரிய சாத்தியப்பாடுகள் மிகக் குறைவாகவே உள்ளன. அவர்கள் அமைப்பாக அல்லது கூட்டாகச் சேர்ந்து செயற்படுவதற்கு உரிய சூழல் மிகக் குறைவே. எனினும் விதிவிலக்காக சில படைப்புக்கள் வெளிவருகின்றன.
Moarea 9

Page 15
1970 களில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி தொழில் பெற்றுச் செல்கின்ற ஒரு நிலையும் காணப்பட்டது. இதற்கு;
"1970களில்உலகசந்தையில்மசகுஎண்ணெயின் விலை பன்மடங்கு உயர்ந்தபோது அபிவிருத்தி குன்றிய பல மத்திய கிழக்குநாடுகள் பெருஞ்செல்வத்தைத் திரட்டிக் கொண்டன. இந்நாடுகள் தாம் பெற்ற செல்வத்தைச் செலவிட்டு அபிவிருத்தி கருதி பல பொருளாதார கட்டுமானங்களைக் கட்டலாயின. இக்கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான ஆளணியை ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தன. இலங்கையில் இருந்தும் தமிழ் தொழில் நுட்பப் பணியாளர்கள், பயிற்றப்பட்ட ஊழியர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் பெற்றுச் சென்றனர்." (இ. நந்தகுமாரன்,2000,தடம், யாழ்பல்கலைக்கழக வவுனியா வளாகம்)
எனவே, 60 முதல் 80 கள் வரையிலான புலம்பெயர்வானது மூளைசாலிகள் வெளியேற்றம்’ என்ற அடிப்படையில் தொழில்சார் புலம்பெயர்வாகவே அமைந்தது. ஆனால் ஈழத்திலிருந்தான இவர்களின் புலம்பெயர்வு கருத்தியலில் அரசியற் தளத்தில் பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இதற்கு ༤་
. குறைந்த எண்ணிக்கையானவர்களே புலம்பெயர்ந்தனர். 2. சமூக நிலையில் ஒரே படிநிலையில் இருந்தவர்களே
புலம்பெயர்ந்தனர். 3. குறிப்பிட்ட ஒப்பந்த அடிப்படையிலேயே புலம்பெயர்ந்தனர்.
தம்மைநிலைநிறுத்தும் தகுதியைப் பெற்றுக் கொண்டவர்களே புலம்பெயர்ந்தனர்.
இதனாலே சமூகக் கட்டமைப்புக்கள் தொடர்பான கண்ணோட்டத்தில் அதன் நடைமுறையில் இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களால் தீவிர மாற்றம் எவையும் நிகழவில்லை எனக் கூறலாம்.
சி.சிவசேகரம் தனது கட்டுரை ஒன்றில் (புலம்பெயர்ந்தோர் நல மாநாடு-மலர்) லண்டனிலிருந்து பெரிய அளவில் தமிழ் முனைப்பு அல்லது தமிழ் சார்ந்த
ഉത്തരഖ്) തങ്ങഖി (മൾ ശ്ചLá ng G= 10

செயற்பாடுகள் எழவில்லை எனக் கூறுகின்றார். எனினும் 70 ற்கு சிறிது முன்பின்னாக லண்டனிலிருந்து பாதி தமிழிலும் மீதி ஆங்கிலத்திலுமாக லண்டன் முரசு என்ற சஞ்சிகை வந்திருக்கிறது. இதன் அக்கறைகள் கணிசமான அளவு மரபுசார்ந்தவை. அத்துடன் லண்டன் வாழ்வசதிபடைத்த தமிழர்களது சுய அடையாளத்தின் நெருக்கடி சார்ந்து அது அமைந்ததில் வியப்பில்லை இவ்வாறான கலாசார செயற்பாடுகள் சிலநடந்தேறியுள்ளன.
இந்நிலையில் இவர்கள் மத்தியில் இருந்து எழுதத்தொடங்கிஇன்றைய புலம்பெயர் தமிழ் இலக்கிய நீரோட்டத்தில் கலந்தவர்களாக ஏ.சிவானந்தன் (லண்டன்), ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (லண்டன்), அழகு சுப்பிரமணியம் (லண்டன்), சியாம் செல்வத்துரை (கனடா), ஆகிய எழுத்தாளர்களைக் குறிப்பிடலாம். இவர்கள் 60-80 களின் காலப்பகுதியில் புலம்பெயர்ந்து ஆக்க இலக்கியப் பணிகளைச் செய்து வருகின்றனர். இவர்கள் தவிர எஸ்.ஜே.தம்பையா (வார்ட்), சித்தார்த்தன் பேரின்பநாயகம் (நியூயோர்க்), வலன்ரைன் E . டானியல் (அமெரிக்கா), ஏ. ஜே. வில்சன் இவர்கள் போன்ற ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வெவ்வேறு துறைகளில், பணிகளில் உள்ளார்கள். ஆனால் இவர்கள் எல்லோரையும் புலம்பெயர் படைப்பாளிகள் என்ற வரையறைக்குள் உள்ளடக்கலாமா என்பது விவாதத்திற்குரியது.
80களின் பின்னரான புலம்பெயர்வு
மேற்கு ஐரோப்பிய ஸ்கண்டிநேவிய நாடுகளான சுவிஸ், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க், நோர்வே, பிரித்தானியா ஆகியவற்றுக்கும் வட அமெரிக்காவில் கனடாவுக்கும் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கும் ஈழத்தமிழர்கள் 80 களில் இருந்து பெருமளவில் புலம்பெயர்ந்துள்ளனர்.
1974 இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழாராய்ச்சிமாநாடு துயரில் முடிந்தது. பின்னர் 1977இலும் 1983 இலும் இடம்பெற்ற இனவன்முறைகளும் தமிழர்களின் வாழ்வில் துயரம் நிறைந்ததாகவே அமைந்தது. இதன்போதே, 60 களை விட 83 இன் பின்னர் பெரும் அலையாக மேற்கு நாடுகளுக்கு இளைஞர்கள் புலம்பெயரத் தொடங்குகிறார்கள். இலங்கையில் கூர்மையடைந்து வந்த இனப்பகைமை காரணமாக போராளி அமைப்புக்களுடன் பெருமளவான தமிழ் இளைஞர்கள் இணைந்து செயற்பட்டபோது சிறிலங்கா அரச படைகளால் தேடப்பட்ட நிலையிலும் கைது, சித்திரவதை என்றநிலையிலும்புலம்பெயரவேண்டியோராய்ஆயினர். 11 = قيمورمةaeتهCوهو

Page 16
"இப்புலம்பெயர்விற்குள்ளானவர்களில் பெரும்பான்மை யானோர்ஏதோஒருகாரணத்திற்காக தமிழ்சம்பந்தமான பிரச்சினையால் புலம்பெயர்ந்தவர்கள். அதில் சென்றவர்களில் 75 சதவீதமானவர்கள் இளைஞர்கள் அவர்கள் ஏதோ ஒரு வகையில் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களோடு தொடர்புபட்டு இந்தச் சூழலிலிருந்து விலகவேண்டுமென புலம் பெயர்ந்தவர்கள்." (பேராசிரியர் கா. சிவத்தம்பி, புலம்பெயர் தமிழர் வாழ்வு, மூன்றாவது மனிதன், 2000)
80 இன் பின்னர் புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையில் தமிழர் தாயகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 60 களில் புலம்பெயர்ந்தவர்களைப்போலல்லாது பெரும்பாலும் நடுத்தரமற்றும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும், உயர் கல்வியைப் பெறாதவர்களாகவும், தொழிற்துறை அனுபவம் அற்றவர்களாகவும், மேலைத்தேய நாடுகளின் மொழி பண்பாட்டு வாழ்வுடன் தம்மை உடனடியாக நிலைநிறுத்தமுடியாதவர்களாகவுமே இருந்தனர். இவர்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய சிறு தொகையினர் 60களில் புலம்பெயர்ந்தவர்கள்போல் அறிதொழில் சம்பந்தப்பட்ட தொழிற்துறையில் ஈடுபட, ஏனையவர்களில் மிக அதிகமானவர்கள்;
". . . . . . . . பெரும்பாலானோர் தோட்டங்கள், உணவுச்சாலைகள். பெற்றோல் நிரப்பும் நிலையங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிலேயே வேலை செய்கின்றனர். துப்பரவாளர்களாகவும், விளம்பரப் பத்திரிகைகளை வீடுவீடாக விநியோகிப்பவர்களாகவும் பலர் தொழில்புரிகின்றனர். இவ்வகையில் இவர்கள் உடலுழைப்பாளர்கள். அவ்வவ் நாடுகளின் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியினர்" (சித்திரலேகா மெளனகுரு, 1995, இலங்கைத் தமிழர்களின்புலம்பெயர் இலக்கியம்)
இதனாலேயே இவர்கள் மத்தியில் பல பிரச்சனைகளும் முரண்பாடுகளும் எழத் தொடங்குகின்றன. இந்த நிலைமை ஏதோ ஒரு விதத்தில் தமிழ் அடையாளத்துடன் வாழ அவர்களை நிர்ப்பந்திக்கின்றது. அதனாலேதான் தமது அனுபவங்களையும் எண்ணங்களையும் படைப்புக்களாக வடிக்கத் தொடங்குகின்றார்கள்.
அலைவும் உலைவும் (புலம்பெக் படைப்பிலக்கியம் குறித்த பந்வைகள்)= 12

இது தவிர இந்தியாவில் தமிழகத்தில் இலங்கையிலிருந்து சென்ற பெருமளவான தமிழர்கள் முகாம்களிலும் தனியார் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களால் படைக்கப்படும் படைப்புக்கள் புலம்பெயர் படைப்புக்கள் என, பெயர் சுட்டி அழைக்கப்படுவதில்லை. தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடையிலான உறவினை தாய் சேய் உறவெனக் கூறுவதோடு, இவ் இருநாட்டு மக்களின் வாழ்வும், சமூக பொருளாதார பண்பாட்டு அம்சங்களும் பெரிதும் வேறுபாடு இல்லாத ஒற்றுமைப் பண்புடைய காரணத்தாலும் இவ்வகைப்பாடு பொருந்தி வருகிறது. விதிவிலக்காக தேவகாந்தன், செ. யோகநாதன் ஆகியோரின் சில படைப்புக்கள் இந்தப் புலப்பெயர்வின் விளைவுகளை உணர்வுரீதியாக புலப்படுத்துவதால் அவற்றையும் கவனத்திற்கு உட்படுத்த வேண்டிய தேவை எதிர்காலத்தில் ஏற்படும் எனக் கூறலாம்.
எனவே, 80 இல் இருந்து குறிப்பாக 83ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலம்பெயர்ந்தவர்களின் மத்தியில் இருந்து வரும் படைப்புக்களே தமிழ் * இலக்கியத்தில் ‘புலம்பெயர் இலக்கியம்’ என்ற அடையாளத்துடன்
பேசப்படுகிறது.
புலம்பெயர் இலக்கியத்தில் கவிதைகள்
புலம்பெயர் இலக்கியத்தில் மிக வீச்சான இலக்கிய வடிவமாகவும் அதிகம் படைக்கப்பட்டனவாகவும் புலம்பெயர் கவிதைகளே அமைகின்றன. இலங்கை இனப்போராட்ட சூழலின் தாக்கம்படைப்புக்களில் செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்தபோது அவை கவிதைகளிலேயே அதிகமும் பதிவாகின. இனவுணர்வுச் சூழலையும், பெண்ணியத்தின் எழுச்சியையும், புலம்பெயர் வாழ்வையும் 80களில் இருந்து பதிவுசெய்யத் தொடங்கிய ஈழத் தமிழர்களின் கவிதைகள் உணர்வு நிலையிலும் உள்ளடக்கத்திலும் மிக வீச்சாக அமைந்தன.
இந்நிலையில் 80களின்பின்னரான ஈழக்கவிதைகள் பற்றி புதுக்கவிதை வரலாறு' என்ற நூலில் ராஜமார்த்தாண்டன் பின்வருமாறு எழுதுகின்றார்.
"அரச பயங்கர வாதத்திற்கெதிரான சுதந்திரக்குரல், போராளிகளுக்கிடையேயான மோதல்களினால் மனக்கசப்பு, அவநம்பிக்கை, ஓயாத விமானக் குண்டு வீச்சுகளுக்கூடாக உயிர்த்திருத்தலுக்கான sheesotagfood 13

Page 17
போராட்டம், சிதைவுகளினூடேயும் துளிர்க்கும் நம்பிக்கை, வன்முறைச் சூழலிலும் நசிந்து போகாத மனிதநேயம் முதலியன ஈழத்துக் கவிதைகளின் பிரதான வெளிப்பாடுகளாயின. அறுபது, எழுபதுகளில் முதன்மை பெற்றிருந்த தமிழ்த் தேசியம், சமத்துவ சோஷலிச சமுதாயப் பார்வைகள், சாதிக்கொடுமைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுக் கெதிரான எதிர்க்குரல் போன்றவையெல்லாம் பின்தள்ளப்பட்டுபோர்ச்சூழலின் அவலங்களும் தமிழின விடுதலையும் அதற்காதரவான ஆயுதப் போராட்டமும் பிரதான விஷயங்களாயின."
(ராஜமார்த்தாண்டன் புதுக்கவிதை வரலாறு 2003)
இந்த ஓட்டத்தினூடான ஈழத்துக் கவிதைகளை, 1980 இன் பின்னர் முளைகொண்ட புலம்பெயர் கவிதைகள் அதன் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றன எனலாம். ஒருபுறம் தாயக நினைவினையும் அதனோடு இணைந்த பிரச்சினைகளையும் முன்வைக்கும் அதிகமான ஆரம்ப காலப் புலம்பெயர் கவிதைகள் (குறிப்பாக 80 களில்) பின்னர், 90களில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வையும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், புதிய அனுபவங்களையும் முன்வைக்கின்றன. இதனை ஈழத்துத் தமிழ்க்கவிதையின் அடுத்த கட்ட வளர்ச்சி என்ற கட்டுரையில் சுரேஸ் கனகராஜா பின்வருமாறு குறிப்பிடுவது அவதானத்திற்குரியது. 2
"புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் புதிய உணர்வுகளையும் அனுபவங்களையும் தமிழ் இலக்கியத்தில் வரையத் தொடங்குகிறார்கள். மேற்கத்தைய சமுதாயத்தின் முன்னேற்றம். அபிவிருத்தி, வினோதம், தனிமனித சுதந்திரம், பாலியல் விடுதலை போன்றவற்றில் ஏற்படும் ஈர்ப்பு, நிறவாதம், இனப்பயங்கரவாதம், புரியாத பண்பாடு, பொருளாதார நெருக்கடிகள்,வேலையில்லாத் திண்டாட்டம் நிறைந்த அன்னிய நாட்டில் எம்மவர்களுக்கு ஏற்படும் பயம், அங்கலாயப்ப்பு, அன்னியமயப்பாடு, மற்றும் எமது சமுதாய அமைப்பிற்கேயுரிய சீதனக் கொடுமை, சாதிவேற்றுமை, என்பனவும் எம் கவிதைகளில் இப்போது பாடுபொருளாக
ഉതബ് മതങ്ങഖ) ((ൾ ( ക്ര}; തഖ8ീ= 14

இடம்பெறுகின்றன."(ஈழத்துத் தமிழ்க்கவிதையின் அடுத்த கட்ட வளர்ச்சி சுரேஸ் கனகராஜா 1998. இன்னுமொரு காலடி)
1983 இல் இருந்து இற்றைவரையில் இருபது வருடங்கள் கடந்து விட்ட நிலையிலே புகலிடத்திலிருந்து முதல் முதல் வெளிவந்த கவிதைத் தொகுப்பாக ‘துருவச் சுவடுகள் என்ற தொகுப்பு அமைந்துள்ளது. இத்தொகுப்பில் வ.ஐ.ச. ஜெயபாலன், தம்பா, கலிஸ்ரா இராஜநாயகம், தமயந்தி, வயவைக் குமரன், மைத்திரேயி, இளவாலை விஜயேந்திரன்
ஆகிய ஏழு கவிஞர்களின் இருபத்துமூன்று கவிதைகள் உள்ளன. 1989இல் "சுவடுகள் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இத்தொகுப்பு, பதிப்பு முயற்சியிலும்சரி அக்கவிதைகள் சுட்டும் பாடுபொருளிலும்சரி புலம்பெயர் வாழ்வனுபவங்களையே அதிகமும் கொண்டமைந்துள்ளது.
இதுவரையில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ன. பலர் புலம்பெயர்ந்த காலப்பகுதியில் இருந்து தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தாலும், இன்னமும் தொகுப்பு வடிவம் பெறாதவையும் உள்ளன. எனினும் உதிரியாக சஞ்சிகைகளிலும், ஆண்டு மலர்களிலும் வெளிவந்த கவிதைகளை ‘புலம்பெயர் கவிதைகள்(2001) என்ற நூலாக திருநாவுக்கரசு தொகுத்துத் தந்துள்ளமை புலம்பெயர் கவிதைகளின் பொருட்பரப்பை அறிந்து கொள்ள உதவியாக அமைந்துள்ளது.
இந்த வகையில் இன்றுவரை புலம்பெயர் படைப்புலகில் கவிதை
முயற்சியில் ஈடுபட்டு வருவோரில் கவனத்திற்குரிய சில கவிஞர்களை மூன்று வகைப்படுத்தி நோக்கமுடியும்.
ംക്ര5ഞ്ഞുൺബങ്ങ് - ', 15

Page 18
1. ஈழத்தில் இருந்தபோதே.கவிதைகளை எழுதிய வ.ஐ.ச. ஜெயபாலன்,சேரன், மு.புஷ்பராஜன், ஆதவன், ஹம்சத்வனி, சபேசன், இளவாலை விஜயேந்திரன் செழியன், ஊர்வசி, மைத்திரேயி, ஆகியோர்83 இல் இருந்து எழுதிவருகின்றனர்.
2. 90 கள் முதல் எழுதிவரும் கி.பி.அரவிந்தன், செல்வம், நட்சத்திரன் செவ்விந்தியன், ரவி (பாலமோகன்), இரா.ரஜீன்குமார்,
3. 90 இன் பிற்பகுதியில் இருந்து எழுதிவரும் திருமாவளவன், சக்கரவர்த்தி, இளைய அப்துல்லா, தா.பாலகணேசன், ஆழியாள், றஞ்சினி, நளாயினி தாமரைச் செல்வன்
இதுவரை தொகுப்புகளாக வெளிவராதபோதும் தொடர்ந்து எழுதிவரும் ரமணிதரன் (சித்தார்த்த சே குவேரா), பிரதீபா, நிருபா, ஆகியோரும் கவனத்திற்கொள்ளவேண்டியோராவார்.
எனவே, புதியகுழலும் புதிய வாழ்வனுபவங்களும் தமிழ்க் கவிதையினை அனைத்துலக மட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பைப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இவை எதிர்காலத்தில் தமிழ்க்கவிதை மேலும் வளர்ச்சியை நோக்கிச் செல்வதற்கான அடித்தளங்கள் என்று கூறலாம்.
புலம்பெயர் இலக்கியத்தில் சிறுகதைகள்
1983 இன் பின்னர் புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் படைப்புக்களுள் கவிதைக்கு அடுத்ததாக அதிகம் வெளிவந்தவை சிறுகதைகளே ஆகும். அச்சிறுகதைகளின் ஊடாக ஈழத்தமிழச் சிறுகதை மரபின்தொடர்ச்சியையும் புதிய பாய்ச்சலையும் அவதானிக்க முடிகின்றது.80கள் வரையும் தொடர்ந்து வந்த ஈழத்து இலக்கிய வரலாற்றுப் போக்கை பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் எடுத்துக் காட்டும்போது
"ஏறத்தாள40களில் மறுமலர்ச்சி இயக்கத்தை ஒட்டி ஒரு வளர்ச்சியும் 50 களின் பிற்கூறில் அல்லது நடுக்கூறுமுதல் 60 களில் முற்போக்கு இலக்கியத்தை மையமாகக் கொண்டு அதற்கு எதிராகவும் சார்பாகவும் வளர்ந்த
ഉത്തേ, ഞങ്ങഖി (ഗെർ (Lá ng uതഖരീ= 16

கோட்பாடுகளும் 60 க்குப் பின்னர் அழகியல் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு வந்த எழுச்சியும் 80 களில் குறிப்பாக ஏற்பட்ட சமூக அநுபவ மாற்றங்களினடியாகத் தோன்றிய இலக்கிய எழுச்சியும் எனக் கால கட்டத்தைக் குறைந்தது நான்கு கட்டங்களாகப் பிரிக்கலாம்" (கா.சிவத்தம்பி,2003.கார்த்திகேசு சிவத்தம்பி நேர்காணல்கள்)
என்று குறிப்பிடுகின்றார். 83 யூலைக் கலவரங்களுக்குப் பின்னர் இந்த நிலை ஈழத்து இலக்கியத்தில் மாற்றமடைகின்றது. அதுவரை இருந்த ஈழத்து இலக்கியத்தின் அரசியலும், அதன் உள்ளடக்கமும் மாற்றமுறுகின்றது. இது முதலில் கவிதைகளிலேயே பதிவாகின்றது. ஏற்கெனவே ஈழத்தில் இருந்தபோது இலக்கியம் படைத்த படைப்பாளிகள் புலம்பெயர்ந்தபோது அவர்களுக்குள்ளும் இப்புதிய மாற்றம் ஏற்பட்டு அவர்களின் படைப்புக்களிலும் புதிய வெளிப்பாட்டுடனான படைப்புக்கள் வெளிவரத் தொடங்குகின்றன.
"எண்பதுகள் ஈழத்தமிழ்ப் படைப்பிலக்கிய மரபில் மிக முக்கியமான காலப்பகுதி. ஒரு மொழியின் இலக்கிய மரபு அம்மொழி பேசும் மக்கள் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தது. தமிழ்ச் சமூகம் எக்காலத்திலும் எதிர்கொண்டிராத கொடுமைகளையும் வேதனைகளையும் ஈழத்தமிழ்ச் சமூகம் இக்காலப்பகுதியில் எதிர்கொள்ளும்படி நேர்ந்தது. இம்மண்ணில் மனிதவாழ்வு மிகுந்த நெருக்கடிகளுக்கு உள்ளானபோது ஈழத்தமிழ் விமர்சகர்களின் இலங்கைத்தேசியம், சர்வதேசியம், போன்ற பொய் முகங்கள் காணாமலானது. காலத்தின் முன்வைக்க இவர்களுக்கு ஏதுமில்லை என்றானது. ஈழத்தமிழன் தன் இன அடையாளத்தை இறுகப் பற்றும்படி நேர்ந்தது. அந்தப் போராட்டம் அதற்கே உரித்தான் குழுப்பிரிவுகளைத் தோற்றுவித்தது. குழுக்களுக் கிடையே ஆயுதமோதல்கள் வலுத்தபோது எதிர்கால நம்பிக்கைகள் இம்மண்ணில் சிதறுண்டன. ஈழத்தமிழ்ப் படைப்பிலக்கியம் காலத்தை எவ்வாறு எதிர்கொண்டது
കംക്ര6ങ്ങൺബര് = 17

Page 19
என்பதே காலம் இதன்முன் நிறுத்தும் மிகப் பெரிய கேள்வி" எம். வேதசகாயகுமார், ஓர் இந்தியத்தமிழ் வாசகனின் பார்வையில் ஈழத்தமிழ்ச்சிறுகதைகள், காலம் இதழ்15)
83 இன் பின்னர் ஐரோப்பா, வடஅமெரிக்கா, அவுஸ்திரேலியாக் கண்டங்களுக்கு ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்தபோது, தாம் போரினால் வாழ்வின் விளிம்பிலிருந்து தூக்கி வீசப்பட்டவர்களாக உணர்ந்தார்கள். இந்நிலையிலேயே தாம் இழந்துவிட்டதாயக வாழ்வையும் உறவுகளையும் எண்ணி அவற்றை கதைகளாகப் படைக்கத் தொடங்கினர்.
தேசம் கடந்து, எல்லைகள் கடந்து, இனம்,மொழி, பண்பாடு, நிலவமைப்பு ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அந்நியச் சூழலில் வாழத் தலைப்பட்ட இவர்களின் படைப்புக்களில், கவிஞர் சேரன் குறிப்பிடுவதுபோல்,
"இலக்கியத்தில் இன்றைய வாழ்வின் அவலமும் நெருக்கடியும், இருப்பின் இழப்பும், இழப்பின் இருப்பும், எதிர்ப்பின் துடிப்பும் பல தளங்களில் பேசப்படுகின்றன." (சேரன், 1999, நேர்காணல்கள், காலச்சுவடு இதழ் 26)
சிறுகதைப் படைப்புலகில் அ.முத்துலிங்கம், பொ. கருணாகரமூர்த்தி, க், கலாமோகன் ஷோபாசக்தி, சக்கரவர்த்தி, ஆசி. கந்தராஜா, பார்த்திபன், விமல் குழந்தைவேல், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், முருகபூபதி, எஸ். பொ, நிருபா, சுமதிரூபன், அ. இரவி, குமார்மூர்த்தி (மறைவு), அளவெட்டி சிறிசுக்காந்தராசா, அருண். விஜயராணி ஆகியோர் புலம்பெயர் சிறுகதைப் படைப்புலகில் கவனத்திற்குரியவர்கள் ஆவர்.
புதியவர்களின் உதிரியான சில சிறுகதைகள் முக்கியமானவை. சித்தார்த்த சேகுவேரா, சிறிதரன், சிவலிங்கம் சிவபாலன், பிரதீபா, தேவா, வசந்திராஜா, சுவிஸ் றஞ்சி, இன்னும் பலர் தொடர்ந்து எழுதிவருகின்றனர். இதுவரையும் ஏறத்தாள 80 ற்கும் அதிகமான சிறுகதைத் தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. 125 ற்கும் மேற்பட்டவர்கள் (இது இன்னும் அதிகம்) சிறுகதைப் படைப்புத் துறையில் தங்கள் தடத்தைப் பதித்துள்ளனர்.
ഉത്തരവ് () ((ൾ ( L (= 18

புகலிடத்திலிருந்து முதலில் வந்த சிறுகதைத் தொகுப்பாக மண்ணைத் தேடும் மனங்கள்" என்ற தொகுப்பைக் கருதமுடியும். இத்தொகுப்பு 11 சிறுகதைகளை உள்ளடக்கி 107 பக்கத்தில், 1986 இல் ஐரோப்பிய தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தால் எம். அரியநாயகத்தை (பிரான்ஸ்) தொகுப் பாசிரியராகக் கொண்டு வெளிவந்து ஸ்ளது. (ஆதாரம்:- என். செல்வராஜா 2002ஜன், நூல்தேட்டம்,தொகுதி-1)
இதே சமகாலத்தில் ஜேர்மனியில் வாழும் பார்த்திபனின் 4 சிறுகதைகளை உள்ளடக்கி நிஜங்கள் என்ற சிறு கதைத் தொகுப்பினை தென்னாசிய நிறுவனம் வெளியிட்டதாக யமுனா ராஜேந்திரன் குறிப்பிடுகிறார்.(கிழக்கும்
மேற்கும், 1997சித்திரை. தமிழர் நலன்புரிச் சங்கம், லண்டன், ப. 34)
39 படைப்பாளிகளின் சிறுகதைகளைத் தொகுத்து பனியும் பனையும் என்ற தொகுப்பாக எஸ். பொ வும், இந்திரா பார்த்தசாரதியும் 1994 இல் மித்ர வெளியீடாகக் கொண்டு வந்தனர். இப்படைப்பும் இன்னோர் விதத்தில் கவனத்திற்குரியது.இதுபற்றிகலாநிதி நா. சுப்பிரமணியன் குறிப்பிடும்போது,
5. s நிலையில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் பலவகை. புதிய மண்ணைச் சென்றடைந்து அங்கு காலூன்றி நிலைபெறுவது வரை, எய்தும் இடர்ப்பாடுகள் ஒருவகை, தொழில் தேடுவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இன்னொருவகை, புதிய சுவாத்தியத்துடன் இசைவாக்கம் பெறுவதில் எய்தும் துன்பங்கள் மற்றொருவகை, அந்நாடுகளின் பண்பாட்டுக் கூறுகளும் ஒன்றோடொன்று மோதும் நிலையில் நிகழும் உணர்வுத் தாக்கங்கள் பிறிதொருவகை, இவ்வாறான பல்வகைப் பிரச்சினைகள் சார்ந்த உணர்வோட்டங் களின் பதிவுகள் இக்கதைகள். ....தமிழ்க் கதையுலகத்துக்குப் புதிய பண்பாட்டு வரவாக

Page 20
அமைந்துள்ள இத்தொகுப்பு முதல் முயற்சி என்ற வகையில் வரலாற்று முக்கியத்துவமுடையது." (கலாநிதிநா.சுப்பிரமணியன், 1995, இந்தியாருடே."புதிய பண்பாட்டு
661)
இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் தமது சிறுகதைகளுக்கு எடுத்துக் கொள்ளும் பொருட்பரப்பு மிக விரிந்தது. தாயக வாழ்வினையும் அதனோடு இணைந்த போரின் வடுவையும் சுமந்த படைப்புக்களோடு, அகதிநிலை, நிற ஒதுக்கல், தொழிற்தள அவலம், நிர்வாகக் கெடுபிடிகள், இயந்திரமயமான வாழ்வு, முரண்பட்ட குடும்பநிலை, பண்பாட்டு நெருக்கீடுகள், பயண இடைவெளியில் பட்ட சீரழிவுகள், பெண்ணிலைவாதம்,தனிநபர் சுதந்திரம், பாலியல் அதிர்ச்சி, எதிர்ப்புணர்வு, ஆகியவற்றைத் தமது கதைகளுக்கு உள்ளடக்கமாக எடுத்துக் கொள்கின்றனர்.
தனியே வெளிவந்த தொகுப்புக்கள் தவிர, புலம்பெயர்ந்தவர்களின் அமைப்பு ரீதியான செயற்பாடுகளுக்கூடாக பல படைப்பாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். சிறுகதைக்கென பிரான்சில் இருந்து வெளிவந்து நின்று போன 'அம்மா’ சஞ்சிகை அதிகமும் சிறுகதைகளுக்குக் களமமைத்துக் கொடுத்துள்ளது. இது தவிர வெளிவந்து நின்றுபோன நூற்றுக்கும் மேற்பட்ட சஞ்சிகைகளும் சிறுகதைகளுக்கு இடங்கொடுத்துள்ளன.
இலண்டனில் இருந்து பத்மநாபஐயரைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு இதுவரை நான்கு ஆண்டுமலர்கள் வெளிவந்துள்ளன. 'கிழக்கும் மேற்கும், இன்னுமொரு காலடி, யுகம் மாறும், கண்ணில் தெரியது வானம், ஆகியனவே அவை. இவை அனைத்தும் இலண்டன் தமிழர் நலன்புரிச் சங்க வெளியீடாகவே வந்துள்ளன.
பிரான்சில் இருந்து சுகன், ஷோபாசக்தி ஆகியோரை தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த 'இருள்வெளி, கறுப்பு, சனதருமபோதினி ஆகிய ஆண்டுமலர்களும், பிரான்சில் இருந்து வெளிவந்த இலக்கியச் சந்திப்புமலராகிய இனியும் சூல் கொள் மற்றும் தோற்றுத்தான் போவோமா தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்த ‘புலம்பெயர்ந்தோர் நல மாநாடு (மலர் 1990), அவுஸ்திரேலிய சிறப்பிதழ்களாக வெளிவந்த 'கணையாழி, மல்லிகை, ஞானம் ஆகியனவும், பெண்கள் சந்திப்புக்கள் ஊடாக
ൈഖ് അബ്ര (മഗെർ (LG ശ്രീം (= 20

கொண்டுவரப்பட்ட ஊடறு மற்றும் பெண்கள் சந்திப்புமலர்கள், இவை தவிர ஏனைய நிறுவனரீதியாக வெளிவந்த ஆண்டுமலர்கள் மகாஜன வெளியீடாக வந்த பவளமல்லி போன்றன இத்தகைய சிறுகதைகளின் வளர்ச்சிக்கு உதவியுள்ளமை காலத்தின் தேவையாக அமைந்திருந்தது.
இந்த வகையில் புலம்பெயர் சிறுகதைகள் ஈழத்திலக்கியத்தின் தொடர்ச்சியான பண்புகளைக் கொண்டு முற்றிலும் வித்தியாசமான சூழலின் சாத்தியப்பாடுகளை உள்வாங்கியும், புதிய தடங்களை நோக்கியும், தமது பயணத்தை ஆரம்பித்துள்ளன. இதன் வளர்ச்சியும் தொடர்ச்சியும், தொடர்ந்து வரும் புலம்பெயர் சிறுகதைகளின் பதிவுகளின் மூலமே எதிர்வு கூறமுடியும்.
புலம்பெயர் இலக்கியத்தில் நாவல்கள்
1983 இன் பின்னர் ஏற்பட்ட புலம்பெயர்வின் காரணமாக நவீன தமிழ் இலக்கியத்தில் புலம்பெயர் கவிதை, சிறுகதைகளுக்கு அடுத்தபடியாக எண்ணிக்கையின் அடிப்படையிலும், அதன் தகுதிப்பாட்டின் அடிப்படையிலும் அடுத்து முக்கியம் பெறுவன நாவல்களே ஆகும்.
நாவல் என்பது மனிதனது அநுபவம் அனைத்தையும் தொகுத்து, வாழ்வின் முழுமையை சித்தரிக்க முயலும் ஒர் இலக்கிய வடிவம் ஆகும். இதனை அதிகமான படைப்பாளிகளும் விமர்சகர்களும் ஏற்றுக்கொண்டும் உள்ளனர். எழுத்தாளரும் விமர்சகருமான ஜெயமோகன் தனது நாவல் என்ற நூலிலே,
"நாவல் ஒருமையும் குவிதலும் உள்ளதாக இருக்கலாகாது நாவலின் நகர்வு ஒரே திசை நோக்கியதாக இருக்கக்கூடாது வலைபோல நாலாபுறமும் பின்னிப் பின்னி விரிவடைவதாக இருக்கவேண்டும் நாவலின் ஆகிருதி ஒரே பார்வையில் முழுமையாகப் பார்த்து விடக்கூடியதாக இருக்கக்கூடாதுபோன்ற விதிகள் போரும் அமைதியும் 'கரமசோவ் சகோதரர்கள் போன்ற பெரும் படைப்புகளின் மிகச் சிறந்த இயல்பாக அவற்றின் "வடிவமற்ற வடிவம் தான் விமரிசகர்களால் குறிப்பிடப்படுகிறது. அவற்றை வாசகர்கள் மீண்டும் மீண்டும் படிப்பதற்குக் காரணம் இந்த விளைவுதான். பெரும் காடுபோல தழைத்து ஈரமுள்ள
Ocasarseño 21

Page 21
நிலமெங்கும் பரவி நிறைந்திருப்பது ஒரு சிறந்த நாவலின்
இலக்கணம் எனப்படுகிறது. மலைகள் போல வடிவின்மையும் வடிவும் ஆக இருப்பதே நாவல் என்று வலியுறுத்தப்படுகிறது.மேற்குறிப்பிட்ட விதிகள் அனைத்தும் அடிப்படையில் ஒன்றையே கூறுகின்றன. நாவல் எளிமைப்படுத்துவதாகவோ, குறுக்குவதாகவோ அமையக்கூடாது. அது வாழ்வின் சிக்கலை காட்டக்கூடியதாகவும், விரிவைத் தொட முயல்வதாகவும் தான் இருக்கவேண்டும்." (ஜெயமோகன், நாவல், 1995)
என்று நாவலுக்குரிய அதிகபட்ச சாத்தியப்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றார். புலம்பெயர் இலக்கியப் பரப்பில் நாவல்கள் பற்றிச் சிந்திக்கும்போது அவற்றுடன் குறுநாவல்களையும் இணைத்தே பார்க்கவேண்டும். இந்தக் கட்டுரையில் இரண்டு வடிவங்களும் கருத்திற் கொள்ளப்படுகின்றன.
ஏற்கெனவே கவிதை சிறுகதை பற்றிய அறிமுகத்தில் ஈழத்தின் இலக்கியப் போக்கும் புலம்பெயர்ந்தவர்கள் தமது படைப்புக்களுக்கு எடுத்துக் கொள்ளும் பொருட் பரப்பும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. அவை நாவல்களுக்கும் பொருந்தும். இருந்தாலும் கவிதை சிறுகதைகளின் அளவுக்கு நாவல்கள் தோன்றாமைக்குரிய காரணங்கள் பல இருந்தாலும் கவிஞர் சேரன் பேட்டியொன்றில் எடுத்துக் காட்டும் கூற்றும் கவனத்திற்குரியது.
"நாவலைப் பொறுத்தவரையில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை இனித்தான் எழவேண்டும் என்று நினைக்கிறேன். இதற்கு வரலாற்று ரீதியான மற்றும் படைப்பாற்றல் சார்ந்த காரணங்கள் இருக்கின்றன என நான் கருதவில்லை. சூழலின் நெருக்கடியும் அவலமும் தொடர்ச்சியான ஒருமுகப்பட்ட உழைப்பையும் கவனத்தையும் தடுத்துக் கொண்டிருக்கின்றன." (சேரன், 1999, நேர்காணல்கள்,காலச்சுவடு இதழ் 26)
என்ற கூற்று இப்போதும் பொருத்தமாகத்தான் இருக்கின்றது. குறிப்பிட்டுக் கூறக்கூடிய சில நாவல்கள், குறுநாவல்கள் தவிர ஏனையவை உள்ளடக்க தீதிலும் அவற்றின்புனைதிறனிலும் இன்னமும்முழுமைபெறாதவையாகவே உள்ளன.
ഉഞ്ഞബ് ടഞ്ഞുബ CuawcôGw uccoulörðiauâáwdō (256ag unocooussolid 22

புலம்பெயர் நாவல் குறுநாவல்களில் கவனத்திற்குரிய படைப்பாளிகளாக ஷோபாசக்தி, கருணாகரமூர்த்தி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், பார்த்திபன், கி.செ.துரை, முருகபூபதி, விமல் குழந்தைவேல், மா.கி.கிறிஸ்ரியன், இ.தியாகலிங்கம், முல்லைஅமுதன், வ.ந. கிரிதரன், ஆகியோரைக் குறிப்பிடலாம்.
தாயக வாழ்வு, புலம்பெயர் வாழ்வு என்ற இரண்டு பகுதிகளாக நாவல்களின் பொருட்பரப்பை எடுத்து நோக்கலாம். தாயக மண்ணுடன் கொண்ட பிணைப்பும் அந்த மண்ணில் வாழ்ந்த உயிர்த்துடிப்பான வாழ்வும் அதிகமான படைப்புக்களில் பதிவாகியுள்ளன. சாதி, சீதனம், குழந்தை வளர்ப்பு, கிராமத்துவாழ்வு, பேரினவாத ஒடுக்குமுறையினால் ஏற்பட்ட விளைவுகள், அந்நிய நாட்டில் அகதிநிலை, பெண்களின் வாழ்வு, தனிமை வாழ்வு, இனவெறி, புலம்பெயர்ந்த சூழலில் தமிழர் வாழ்வு, ஐரோப்பியர்களது வாழ்வு, என்பன இவர்களின் படைப்பு நெறியாக உள்ளன.
புலம்பெயர்தளத்தில் ராஜேஸ்வரிபாலசுப்பிரமணியத்தின் எட்டுநாவல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. அவற்றுள் தில்லையாற்றங்கரை தவிர்ந்த ஏனைய நாவல்களுள் இலண்டன் வாழ் தமிழர்களின் வாழ்வும், இளைஞர்களது நிலையும் அதிகம் பதிவாகியுள்ளன.
ஷோபாசக்தியின் கொரில்லா', 'ம்' ஆகிய இரண்டு நாவல்களிலும் ஈழப்போராட்ட அரசியலும் அதனூடான வாழ்வும் பதிவாகியுள்ளன. இவரின் நாவல்கள் இரண்டுமே தமிழ்ச் சூழலில் அதிக கவனம் பெற்றனவாகும்.
83 இன் பின்னர் புலம்பெயர்ந்த படைப்பாளிகளின் நாவல்களுள் முதலில் வெளிவந்ததாக ஜேர்மனியில் வாழும் பார்த்திபனின் வித்தியாசப்படும் வித்தியாசங்கள்’ என்ற நாவலைக் கருதமுடியும். 1986 இல் தென்னாசிய நிறுவனம் இதனை வெளியிட்டதாக அறியமுடிகிறது. ஆனால்,83ற்கு முன்னர் புலம்பெயர்ந்த தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளியாகிய ராஜேஸ்வரி
6ഞ്ഞുൺവീ= 23

Page 22
பாலசுப்பிரமணியம் இலங்கை-இலண்டன் என்ற இரட்டைச் சூழலை மையப்படுத்தி ஒரு கோடை விடுமுறை என்ற நாவலை 1981 இல் அலை வெளியீடாகக் கொண்டு வந்துள்ளார்.
புலம்பெயர்ந்தோரின் சில புனைகதைகள் குறைபாடுகளைக் கொண்டு அமைந்துள்ளதாயினும், புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் இருந்து வெளிவருவதனாலும், அவர்களின் வித்தியாசமான வாழ்வனுபவங் களுடனான பதிவுகள்-என்றவகையிலும் ஈழத்துப் படைப்புலகிற்கு அவை புதியன. வரவேற்கத்தக்கன.
ஈழத்து இலக்கியம் மேலும் வீச்சானதாகவும் நவீன இலக்கியத்தின் சாத்தியப்பாடுகளை உள்வாங்கி வித்தியாசங்களை நோக்கிநகர்வதற்கும் இப்போதே சில வெளிச்சங்களை கொரில்லா, ஒரு அகதிஉருவாகும் நேரம் ஆகிய படைப்புகள் காட்டி நிற்கின்றன. இந்த வகையில் புலம்பெயர் நாவல்களின் வளர்ச்சியை படைப்புகளின் தொடர்ச்சியான வருகையும், அவற்றின் வடிவமும், புதுமையும், நவீன மொழிப்பிரக்ஞையுமே எதிர்காலத்தில் தீர்மானிக்கப் போகின்றன.
புலம்பெயர் படைப்புகளின் உள்ளடக்கம்
1. தாயக நினைவும் போர்ச்சூழலும் - குடும்பம், உறவு, பிரிவு, ஏக்கம், கிராமத்து வாழ்வு, சாதி, சீதனம், மரபுகள், நம்பிக்கைகள் ஆகியவற்றை இவ்வரையறைக்குள் அடக்கலாம்.
புலம்பெயர் படைப்புக்களின் உள்ளடக்கத்தை இருபிரிவுகளாகப் பகுத்து நோக்கலாம். ஒன்று தாயகம் சம்பந்தப்பட்டது மற்றையது புலம்பெயர் வாழ்வு சம்பந்தப்பட்டது. இவை கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய மூன்று இலக்கிய வடிவங்களுக்கும் பொருந்தக்கூடியது. 80 களிலிருந்து புலம்பெயர்ந்த அதிகமான படைப்பாளிகள் தாயகம் சார்ந்த நினைவுகளை இன்றுவரையும் பதிவுசெய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இது தவிர்க்க முடியாதது.
ஆனால் புலம்பெயர்ந்தவர்கள் தாம் புகலடைந்த சூழல்சார் பதிவுகளை 80 களில் இருந்து பதிவு செய்தார்கள் எனக்கூறமுடியாது. அது 90 களிலிருந்துதான் ஆரம்பமாகின்றது. அவர்கள் அங்குதம்மைநிலைநிறுத்திக் ஆலைவும் உலைவும் (புலம்பெக் படைப்பியக்கிம் குறித்ர பந்வைகள்): 24

கொண்டபின்தான் அந்த வேறுபட்ட வாழ்வுச்சூழல், அங்கு தமக்கு ஏற்படும் வாழ்க்கை முரண்கள், மதிப்பீடுகள், என்பனவெல்லாம் எழுகின்றன. ஆனால் தாயகம் சார் பதிவுகளை இன்றுவரை பதிவுசெய்துகொண்டுதான் இருக்கிறார்கள். வ.ஐ.ச.ஜெயபாலனின் இலையுதிர்காலநினைவுகள் என்ற கவிதையில் வரும் யாழ் நகரில் என் பையன். ’ என்ற கவிதை உணர்வுநிலையை செல்வம்,சேரன், செழியன், பாலகணேசன், நட்சத்திரன் செவ்விந்தியன் வரை பலரும் பாடியுள்ளனர்.
சிறுகதைகளில் 1985இல் வெளிவந்த 'மண்ணைத்தேடும் மனங்கள் என்ற தொகுப்பு முக்கியமானது. இதிலுள்ள 13 கதைகளில் 10 கதைகள் தாயக மண்ணுடன் தொடர்புபட்டவை. இலண்டனிலிருந்து அ. இரவியின் காலம் ஆகி வந்த கதை என்ற தொகுப்பு இவற்றுக்கெல்லாம் சான்றாக அமைந்த கதைகளைக் கொண்டமைந்துள்ளது. ஈழத்தில் பிள்ளைப்பராய நினைவுகளுடன் ஒரு தொகுதி முழுவதும் கதை கூறியவர்கள் மிகக் குறைவே.
விமல் குழந்தைவேலின் அசதி என்ற சிறுகதைத் தொகுப்பும் தாயக நினைவினைக் கொண்ட கதைகளையே முன்வைக்கின்றது.இத்தொகுப்பின் உள்ள அசதி எனத்தலைப்பிட்ட கதையும் இந்தத் தாயக நினைவினையே மீட்கின்றது. விமல் குழந்தைவேல் அதிகமும் தாயக வாழ்வு சார்ந்த நினைவுகளையே மிக வலிமையாக எடுத்துக் காட்டுகிறார். இது அவரது நாவல்களுக்கும் பொருந்தும். அவரின் அசதி ஒரு முக்கியமான கதையாகும். அதில் வரும் ஒரு பகுதி பின்வருமாறு அமைந்துள்ளது.
"ஊருக்குள் உள்ளிட்டவர்நேராகத் தன்வீட்டுக்குவந்து கால்களைக் கழுவிக் கொள்வதற்காக கிணற்றடிக்குச் சென்று கிணற்றை எட்டிப் பார்த்தார். கமுகம் பூக்களாலும், ஆடைகட்டி கிணற்று நீர் தன்னை மறைத்துக் கொண்டிருந்தது. துலாவை உள்ளே விட்டு வாளியால் பூவாடை விலத்தி தண்ணிரை இறைத்து காலைக் கழுவி விட்டு இடுப்பில் செருகி இருந்த சாவியால் வீட்டைத் திறந்து உள்ளே போனார். சாவியை விட்டு கதவைத் திறந்தபோது என்னை விட்டு எங்கே போனாய் என்று அவரிடம் அழுவதுபோல் கதவு "கிறிச் சென்று சத்தமிட்டது. உள்ளே மரப் பெட்டியைத்
ംക്ര6ഞ്ഞുൺബര് = 25

Page 23
திறந்தார். கம்பராமாயணம், கந்தபுராணம், போன்ற புத்தகங்களுடன் தான் எழுதி இயற்றிய கூத்துக் கொப்பிகளான மயான காண்டம் பாஞ்சாலி சபதம் போன்றவைகளை வெளியில் எடுத்தபோது கலீர் என்ற சத்தத்துடன் பெட்டியின் மூலையில் ஏதோ விழ கையை விட்டுத் தடவியபோது சோடிசல்லாரிகையில் தட்டுப்பட அதை வெளியில் எடுத்துப் பார்த்தார். ஐம்பது வருடங்களுக்கு முந்தியது. இப்போதும் சேதாரமின்றி பளிச்சிட்டது. . ஒரு வாளி தண்ணியை இறைத்து மரவள்ளிச் செடிக்கு நீராட்டினார். குந்தியிருந்து சிறுபிள்ளைகள் விளையாடுவது போல் மரவள்ளியின் அடிமண்ணை கைகளால் பிராண்டி தீய்த்தபோது ஒரு குட்டையான தடித்த கிழங்கொன்று தன் முகத்தைக் காட்ட டபக்கென அதைமுறித்து எடுத்துக் கொண்டு மீண்டும் பூனைபோல் மண்ணை மூடினார். ... . . . . . குளிக்கவேண்டும் போல் இருந்தது அவருக்கு. தோளில் கிடந்த சால்வையையும் இடுப்பு வேட்டியையும் அவிழ்த்து கிணற்றுக் கொட்டிலில் வைத்துவிட்டு கோவணத்தோடு நின்று கொண்டு தண்ணியை இறைத்துக் குளித்தார். எத்தனை வாளி இறைத்திருப்பாரென்று அவருக்கே தெரியாது. ஆசை தீரும் வரை குளித்தார். . . . மீண்டும் வந்தார். விரித்திருந்த சால்வையில் குந்தினார். நேற்றிரவைய கண்முளிப்பு, நடந்த களைப்பு. வயிறு நிறைய தின்ற கிழங்கின் திகட்டல் எல்லாமுமாய் அவருக்குள் ஒரு அசதியை எற்படுத்த அவரையும் அறியாமல் அவர் உடலை சால்வையில் சாய்த்துக் கொள்ள அவரிடம் அனுமதி பெறாமலேயே அவரின் கண்கள் சோர்ந்து மூடிக்கொள்ள அவரிடம் இருந்து பெரியதொரு மூச்சுக் காற்று வெளியேறியது."
தாயக நினைவு சார்ந்த கதைகளுக்கு உதாரணமாக மேலும் பல கதைகளை எடுத்துக் காட்டலாம். அ. முத்துலிங்கத்தின் 'அம்மாவின் பாவாடை, தில்லையம்பலபிள்ளையார், கலாமோகனின் மழை, நிருபா வின் சுணைக்கிது தொகுப்பிலுள்ள பல கதைகள் நல்ல உதாரணங்களாகும்.
() .അവർ ((ൾ (j) (8 (= 26

அ. இரவி ஓரிடத்தில் தாயக நினைவு சார்ந்த கதைகளை தான் எழுதுவதற்கு கூறும் சில வரிகளைப் பார்ப்போம்.
" வாழ்வு என்னை விட்டுக் கழன்று போய்விட்ட கதைகளையே நான் சொல்கிறேன். சொல்வதில்துயர் இருக்கிறது. சுகம் தெறிக்கிறது.இப்பொழுது இவற்றையெல்லாம்நான் சொல்லிவிடவேண்டும் இல்லையெனில் பின்னாளில் எப்பொழுதுமே சொல்லமுடியாது போய்விடலாம். எண் எழுத்தின் வலிமை என்னவென்று எனக்குத் தெரிகிறது. ஞாபகம்! அதுவே வலிமை! யாவற்றையும் துண்டாக துணுக்காக நுண்ணிய குறிப்பாக நான் ஞாபகம் கொள்கிறேன். ஞாபகம்தான் என்வலிமை அதுவே எனக்குக்கொடுமை”(ப.226
காலம் ஆகிவந்த கதைகள். அ. இரவி)
போரின் வடுவை நினைவுறுத்தும் குமார் மூத்தியின் கதைகளில் முகம்தேடும் மனிதன், சின்னத்துப்பாக்கி, குண்டுவெடிப்பு,கல்வீடு, LJUJGOOTLÖ ஆகியன உதாரணமாகும். :. - `
"உலகளாவிய தன்மையும் வன்முறையினர் மானிடவியலும் முர்த்தியினர் பல சிறுகதைகளில் தொனிக்கின்றன. வன்முறையினால் ஏற்படும் நேரடி இழப்புக்கள் பற்றி அவரது இலங்கைக் கதைகள் நுட்பமாகப் பேசுகின்றன” (காஞ்சனா
தாமோதரன், காலம். கனடா)
சோபாசக்தியின் விலங்குப் பண்ணை, மைசூர்ராசா, தேசத்துரோகி, எலிவேட்டை ஆகியவற்றிலும் போரின் வடு பதிவாகியுள்ளது. கருணாகரமூர்த்தியின் 'அவர்களுக்கென்று ஒரு குடில்’, மக்களின் இடப்பெயர்வு வாழ்வை விபரிக்கின்றது.
நாவல்களைப் பொறுத்தவரையில் தாயக வாழ்வின் சாராம்சமே வெளிவந்த நாவல்களின் உணர்வோட்டமாக இருந்தாலும் இவற்றை மட்டும் மையமாகக் கொண்டுவெளிவந்தநாவல்களில் சாதியம், சீதனப் பிரச்சனை, இராணுவ ஒடுக்குமுறை, தேசிய விடுதலைப்போராட்டக்,மண்ணின் நினைவு என்பவற்றை வெளிப்படுத்தும் நிலைநாவல்களில் உள்ளது.
பார்த்திபனின் நாவல்களில் சீதனப்பிரச்சினையை வெளிப்படுத்தும் 'ஆண்கள் விற்பனைக்கு, வ.ஐ.ச வின் செக்குமாடு, சாதிய பிரச்சினையை வெளிப்படுத்தும் பார்த்திபனின் “வித்தியாசப்படும் வித்தியாசங்கள்’ ംഝേൽ= 27

Page 24
குறிப்பிடத்தக்கன. இந்த வகையில் மண்ணின் நினைவினை வெளிப்படுத்தும் நாவல்களில்ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதியதில்லையாற்றங்கரை முக்கியமானது. கிராமத்து வாழ்வின் உயிர்த்துடிப்பான அம்சங்கள் இந்நாவலில் அழகாகப் பதிவாகியுள்ளன.
அதேபோல்பேரினவாத ஒடுக்குமுறையினையும் அதன் விளைவுகளையும் எடுத்துக்காட்டும் படைப்புக்களில் ராஜேஸ்வரிபாலசுப்பிரமணியத்தின் ஒரு கோடைவிடுமுறை, கி.செ.துரையின் 'சுயம்வரம்','ஒரு பூ ஆகியன (சிற்சில குறைபாடுகளைக் கொண்டிருந்தாலும்) போரினால் ஏற்பட்ட விளைவுகளையும் கிராமியப் பண்பினையும் வெளிப்படுத்தியுள்ளன என்ற வகையில் கவனத்திற்குரியன. பிரதேச நாவல்கள் என்ற வகையில் புலம்பெயர்ந்தோரிடமிருந்து வந்தவற்றுள் இவை முக்கியமானவை.
மேலும் வ. ந. கிரிதரனின் "மண்ணின் குரல், விமல் குழந்தைவேலின் "மண்ணும் மல்லிகையும் மா. கி கிறிஸ்ரியனின் 'உள்ளத்தில் மட்டும்’ 'கடலோரக் காற்று ஆகியவற்றுள் மண்ணும் மல்லிகையும் பேரினவாத ஒடுக்குமுறையின் விளைவுகளைக் கூறுவதில் முக்கியமானது.
ஷோபாசக்தியின் கொரில்லா வில் இலங்கையிலிருந்து தப்பி பிரான்ஸ் சென்ற றொக்கிராஜ் என்ற இளைஞன் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பம், செய்யும்பகுதியும் இலங்கை இந்திய அரசினாலும் தமிழ்ப் போராளிக் குழுக்களினாலும் தனக்கு ஏற்பட்ட துன்பங்களை விபரிக்கும் பாணியும் தாயகம் சார் உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கின்றன. இவற்றில் ஈழப்போராட்ட காலத்தில், போராட்டமும், அதன் நகர்வில் ஏற்பட்ட இழப்புக்களும் மாற்றங்களும் பதிவுபெற்றுள்ளன. ஒரு விதத்தில்பேரினவாத ஒடுக்குமுறையினையும் அதன் விளைவுகளையும் கதைகளுக்கூடாகக் கூறுதல், கதையின் விபரிப்புக்களை அடிக்குறிப்புக்கள் இட்டு உண்மைச் சம்பவங்களையும் கலந்து கூறுதல் கொரில்லாவில் கவனத்திற்குரியது.
2. புலம்பெயர் வாழ்வின் அவலமும் முரண்பாடும் - அகதிநிலை, இனவாதம், நிறவாதம், மொழி புரியாமை, முரண்பட்ட வாழ்வு, பண்பாட்டு வேறுபாடு, பாலியல் அதிர்ச்சி என்பன இந்த வரையறைக்குள் அடங்குவனவாகும்.
ഞ്ഞുങ്ങല തളവ ((ൾ ( G8 (= 28

அகதிநிலையை வெளிப்படுத்தும் ஒரு கவிதை பின்வருமாறு அமைகின்றது.
"பொய்யான நாட்டின்
பாஸ்போட் ஒன்றினுள்
பொறித்த என் தலையை
வெறுப்புடன் பார்த்தனர்.
அடிமையாய் அங்கு நீ
அழிவது உன் விதி
காட்டுமிராண்டி நாட்டிலிருந்து
களவாய் வந்த நீ
திரும்பிப் போய் விடு
ஆடு மாடு தோட்டம் ஏன் என் அம்மாவைக் கூட அடமானம் வைத்து அகதியாய் வந்த அப்பாவித் தமிழன் நான்"
இனவாத நிறவாத கெடுபிடிகளையும் புலம்பெயர் தமிழர்கள் எதிர்கொண்டனர். நவநாஜிகள் எனப்படும் கறுப்பர்களுக்கு எதிரான அமைப்புவெளிநாட்டவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்புவதும் குறிப்பாக கறுப்பர்கள் என்ற ரீதியில் நோக்குவதும் சுட்டிக் காட்டத்தக்களை கி. பி. அரவிந்தனின் நிறவாதத்தை வெளிப்படுத்தும் கவிதை ஒன்று பின்வருமாறு அமைகிறது.
"மலர்கள் தூவிய பீடங்கள் ஒவ்வொன்றிலும் கூர் வாள் உயர்த்திய வீரரைத் தாங்கும் штицIb цЈ6lastiti
Seöad 29

Page 25
தேசங்கள் வென்றவர்
சிலையிலும் முறைப்புடன்
தீப்பற்றும் குரல்களால்
செவிகளில் அறைவர்
வெளியேறு
சிலைகள் உயிர்க்கும்
வாள்முனை மினுங்கும்
தாயகம் துறந்தவனே
உனக்கு ஏது இருப்பிடம்?"
தமிழ் வாழ்வு மேலைத்தேய வாழ்வு இரண்டுக்குள்ளும் மூச்சுத்ததிணறிய
வாழ்வை தா. பாலகணேசனின் கவிதையொன்று புலப்படுத்துவதைப் LusTÜ'j(BJTub.
'சிரிக்க முயன்றும் தோற்றுப் போகிற
இயந்திர மனிதன் நான்
இறால் போட்டு சுறா பிடிப்பவர்க்கிடையில்
அகப்பட்டதென்னவோ
தலை விதிதான்.
எத்தனைநாளைக்குத் தானம்மா சவாரி மாடென நிற்பது? - . . நுகத்தடி கண்டிய காயங்கள் கழுத்தில் மாலை போல்
ஊர் நினைப்பும் உற்றார் உறவினர் பற்றிய துடிப்பும்
எப்போதாவது ஒரு நாள் மண்ணுக்குத் திரும்பி வருகிறதான கனவும்நினைவும் நிழலாய்த் தொடரும் இரட்டை வாழ்க்கை.
குளத்துநீரில் தாமரை இலைபோல் ஒட்டவும் முடியாது வெட்டவும் முடியாது. தவிக்கிறது மனது
ഉത്സു () ((ൾ തG M (= 30

என்ற குரல் இன்றைய புலம்பெயர்ந்த தமிழர்களின் இரட்டை வாழ்வுக்குச் சான்றாக அமையும் குரலாக இனங்காண முடிகிறது.
சிறுகதைகளில் கார்த்திநல்லையா எழுதிய அலையும் தொலைவு கதை அகதியாகி முகாமில் இருக்கும்போது விளம்பரப் பத்திரிகை வீடு வீடாக விநியோகிக்கும் தொழில் புரியும் இளைஞன் ஒருவனின் கதையைக் கூறுகிறது.
"நான்காம் மாடியாக இருக்கலாம். பூட்டிய அறையில் இருந்து நாயொன்று குரைத்தது.” என்று தொடரும் கதையில் இறுதியில் அவன் அவமானப்படும்போது மனது குறுகிவாழ்வின் துயரங்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விடுவதனை உணரக்கூடியதாக உள்ளது.
கி.பி அரவிந்தனின் நாடோடிகள்’ என்ற கதை அகதி நிலைக்கும், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் 'எய்தவர் யார்’ என்ற கதை நிறவாதத்திற்கும் நல்ல உதாரணங்களாகும். இதேபோல் கருணாகரமூர்த்தியின் ‘சுணி டெலி, கலைஞன் என்பனவற்றையும் குறிப்பிடலாம். கலாமோகனின் "உருக்கம்", என்ற கதையில் வேற்று இனத்தவருடன் வேலை செய்யும் போது அவர்கள் பாகுபாடு காட்டல் எடுத்துக்காட்டப்படுகிறது.
நாவல்களில் கருணாகரமூர்த்தியின் ஒரு அகதி உருவாகும் நேரம்" ‘வாழ்வு வசப்படும்’ ஆகிய இரண்டு குறுநாவல்களும் ஷோபாசக்தியின் கொரில்லா வின் தொடக்கமும் அகதிநிலையை எடுத்துக் காட்டும் படைப்புக்களுக்கு உதாரணமாகும்.
இனவாதம் நிறவாதம் சார்ந்த படைப்புக்கள் புலம்பெயர் படைப்பாளிகளிடம் குறைவாகவே உள்ளன. இதுசார்ந்த பிரச்சினையை மையமாகக் கொண்டு தியாகலிங்கத்தின் நாளை என்ற ஒருநாவல் மட்டும் வெளிவந்துள்ளது. இவரின் 'அழிவின் அழைப்பிதழ்’ என்ற நாவல் இளைஞர்கள் தவறான வழியில் சென்று தம் வாழ்வை அழித்துக் கொள்வதனை எடுத்துக்காடடுகின்றது. இந்நிலைக்குத் தாயகத்தில் இருக்கும் பெற்றோரே காரணமாக இருப்பதையும் ஆசிரியர் முன்வைக்கின்றார். இது பாலியல் அதிர்ச்சியை வெளிப்படுத்தும் நாவலாகவும் அமைந்துள்ளது.
ace6.orgofold 31

Page 26
3 புதிய சூழலில் புதிய அனுபவங்கள் - புவியியல், தொழிற்தள அனுபவம், அந்நியம்,மொழிக்கையாளுகை,மாற்றத்தை ஏற்றல், பழமையில் இருந்து விடுபடல் ஆகியவற்றை இந்த வரையறைக்குள் அடக்கலாம்.
வ.ஐ.ச வின் இலையுதிர் கால நினைவுகள்’ கவிதையில் 'இன்பக் கனவுபோல் தோற்றி மறைந்தது கோடை என்று வரும் வரிகளில் புவியியல் வேறுபாடும் அதற்கு எற்ப அர்த்தத் தளத்தில் ஏற்படும் மாறுபாடும் எடுத்துக் காட்டப்படுகிறது. சூரியனைப் பரதேசியாகப் பார்ப்பதும் இவ்வாறான மாற்றங்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.
புலம்பெயர் கவிதைகள் உள்வாங்கியிருக்கும் புதிய உணர்வு நெறிக்கு அந்நியமயப்பாடு என்னும் உணர்வினை வெளிப்படுத்தும் கவிதைகளைக் குறித்துக் காட்டலாம். இதற்கு மிகப் பொருத்தமான திசோ’ வின் கவிதையொன்றை எடுத்துக்காட்டலாம். இக்கவிதையில் வரும் மொழிக்கையாட்சியும் உணர்வுநிலையும் முக்கியமானவை.
"பகலில் வேலை தேடிய கால்கள்
பழிக்குப்பழி என வலித்தன . வெறித்த சுவர்கள் அதே முகமென அலுப்புடன் முறைத்தன. எனது நம்பிக்கை நப்பாசையில் முயற்சி என முனகியது. கடிதங்கள் எனை பிரி என ஒதுங்கிக் கிடந்தன. அதே கட்டில் "வந்து விட்டாயா? என ஏளனம் செய்தது. மேலும் இல்லாத கண்ணிர்த் துளி
ஆழ்ந்த அநுதாபம் என
மீண்டும் நான் உறங்கப் பார்க்கிறேன்."
9Gdavodö 2_Godavað Claudbouw varslösavälisiwò sig unaoasdid=2 32

இதேபோல் மொப்பும் வாளியும்’ என்ற கவிதையும் முக்கியமானது. அந்நியப்பட்ட உணர்வு என்பது புலம்பெயர்ந்த ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உரியது. அதிகம் தனிமையில் வாடும் நிலையில் இந்த அந்நிய உணர்வு மேலோங்குகின்றது. கவிஞரால் செயற்படவோ பேசவோ முடியாதநிலையில் சடப்பொருட்கள் பேசுகின்றன. நட்சத்திரன் செவ்விந்தியனின் கவிதையும் இந்த உணர்வை பின்வருமாறு எடுத்துக் காட்டும்.
"நான்
இனி நெடுகலும் தனித்துத் தான் போனேன். பட்டமரத்தில் கொட்டுக் காகம் உச்சிக் கிளையில் வந்திருந்தது ஒன்றாய்ச் சேர்ந்த துயரங்களுடன்
நான் மட்டும் ஒரு வலிய சாவுக்காக காத்திருக்கிறேன்”
ஆழியாளின் கவிதைகளில் அந்நியமும் தனிமையும் வெளிப்படுவதையும் அவதானிக்கலாம். மரணம்' என்ற கவிதையில் அவர் தனது தனிமையை வெளிப்படுத்த எடுத்துக்கொள்ளும் உவமை அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது.
"கலங்கரை விளக்கத்து இரவுக் காவலாளியாகவும் ஆறடிக் குழியுள் மெளனம் புடைசூழ இறக்கப்பட்ட பிணமொன்றைப் போலவும் தனித்தே மிகத் தனித்தே இருக்கின்றேன்."
சிறுகதைகளில் கலாமோகனின் உருக்கம் தொழிற்தள அநுபவத்திற்கு நல்ல உதாரணம். இக்கதை அப்பாவித்தனமான சித்திரிப்பாக அமைந்துள்ளது. கார்த்தி நல்லையாவின் 'அலையும் தொலைவு' சக்கரவர்த்தியின் நானும் ஒகஸ்டினாவும் ஒரு பந்தயக் குதிரையும்", குமார்மூர்த்தியின் கோப்பை ஆகியனவும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
aംക്ര6ഞ്ഞുൺബര് = 33

Page 27
4.பெண்களின் விழிப்புணர்வு - பெண்களின் சிந்தனை விரிவடைதல், வேலை செய்தல், தனித்து வாழ்தல், புதிய சூழலுக்குத் தம்மைத் தயார்ப்படுத்தல், அடக்குமுறையை எதிர்த்தல், அனைத்துலக நோக்கு ஆகியவற்றை இந்த வரையறைக்குள் அடக்கலாம்.
பெண்களின் படைப்புக்களிலே பெண்களுக்கெதிரான அனைத்து ஒடுக்கு முறைகளுக்கும் எதிராக குரல் கொடுக்கும் நிலையும் பெண்கள் மத்தியிலும் சமூகத்தின் மத்தியிலும் இருக்கும் கோட்பாடுகளைக் கேள்விக்கு உட்படுத்தும் சந்தர்ப்பங்களும் பெண்களின் படைப்புக்களிலே அவதானிக்க முடிகின்றது. றஞ்சனி, மல்லிகா, நிருபா, மைத்திரேயி, பிரதீபா, ஆழியாள் ஆகியோரின் கவிதைகளிலே இதனைக் கண்டுகொள்ளலாம். பெண் கவிஞர்களின் ‘மறையாத மறுபாதி என்ற கவிதைத் தொகுதி இவ்வகையில் முக்கியமானது. இவை தவிர ஊடறு, பெண்கள் சந்திப்பு மலர்கள் என்பவையும் கவனத்திற்குரியன.
பெண்களுக்கு எதிரான அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும். குரல் கொடுக்கும் பெண் கவிஞைகளின் கவிதைகள் தற்காலத்தில் கவனத்திற்குரியன. அவற்றுள் பின்வரும் மூன்று கவிதைகளை நோக்குவோம்.
"சமையல் தொடங்கி படுக்கை வரை இலவச சேவை வழங்கியதுபோதும் சுமைகளும் துளித்துளியான துன்பத்தின் வெளிப்பாடுகளும் மட்டும் உனதல்ல. சூழவுள்ள சகலவற்றிலும் உனக்கும் சம பங்குண்டு
வெளியே வா.
(பாமினி)
"என் ஆதித் தாயின் முதுகில்பட்ட திருக்கைச் சவுக்கடி நான் காணும் ஒவ்வொரு முகத்திலும்
ഉത്ഖി തബ് (Gൾ ശ്ചL( G= 34

ംക്ര6ഞ്ഞുൺബര് =
தழும்பாய் தேமலாய் படர்ந்து கிடக்கிறது அடையாளத்தை உணரும்போதெல்லாம் வீரியங் கொண்ட ஊழிச்சவுக்கின் ஒலி மீளவும் என்னை வலிக்கப்பண்ணும்
என்னைப் பிளந்து ரத்த உடுக்கள் வெடித்துப் பறந்து தனித்துச் சிதறிக் கொட்டும்
தனித்து அவை ஒவ்வொன்றும் கிரகங்கள் என உருப்பெறும் தன்னிச்சையாய் சுற்றி வரும் தாள லயத்துடன்
அங்கு எனக்கென ஓர் பிரபஞ்சம் உருவாகும் அப்போது உயிர் பெறும் எனக்கான வரிவடிவங்களுடன் கூடிய என் மொழி அதன்பின் தேமல் படர்ந்த எவனாயினும் என்னுடன் உரையாடட்டும் அப்போது கூறுகிறேன் பதிலை என் மொழியில் என் ஆதித்தாயின் பெண் மொழியில் அதுவரை நீகாத்திரு!"
35

Page 28
(ஆழியாள்)
"6T6 D866f
வளர்ந்தவளானாள் வினாக்களை வரிசையாக
அடுக்கினாள்
9|Lib DIT
நாங்கள் ஏன் அகதிகளானோம் என் தாய் நாடு எங்கே? என் தாய் மொழி எது? நாங்கள் ஏன் கறுப்பர்களானோம் ? அவர்களால் ஏன் ஒதுக்கப்படுகிறோம்? துருக்கித் தோழி ஏன் எரிக்கப்பட்டாள் ?”
(நிருபா)
மேலே எடுத்துக் காட்டிய கவிதைகளில் பெண் கவிதைகளுக்குரிய தனித்துவம் வெளிப்படுவதைக் கண்டுகொள்ளலாம்.
சிறுகதைகளில் சுமதி ரூபனின் ‘யாதுமாகி நின்றாள் முக்கியமான தொகுப்பு. தற்கால இலக்கிய உலகிற் பேசப்படும் பெண்ணியச் சிந்தனைகளுடனான பல கதைகள் இத்தொகுப்பில் உள்ளடங்கியுள்ளன. பெண் குடும்ப அமைப்பிலிருந்து வெளியேறி தனித்து வாழ முடியும் என்பதையும் சில கதைகள் உணர்த்துகின்றன. இவை தமிழ்ச்சூழலில் எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது கேள்விக்குரியது.
மேலும் புது உலகம் எமை நோக்கி என்ற புலம்பெயர்ந்த பெண் படைப்பாளிகள் எழுதிய கதைகள் அடங்கிய தொகுப்பும், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் பல படைப்புகளும், நிருபாவின் சுணைக்கிது தொகுப்பும், பெண்களின் விழிப்புணர்வைப் பேசும் தொகுப்புகளில் முக்கியமானவை. லதா உதயணனின் இடம்மாறிப்போன சந்திரா ரவீந்திரனின் பால்யம் ஆகிய கதைகளையும் இவற்றோடு மேலும் எடுத்துக் 85T'L6)Tib.
ഉത്തരവി .ഞങ്ങബർ (മഗെlൾ തLá ക്ര8 (= 36

நாவல்களில் பொ. கருணாகரமூர்த்தியின் மாற்றம், முருகபூபதியின் பறவைகள், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் லண்டனைக் களமாகக் கொண்ட நாவல்கள் ஆகியவற்றில் பெண்களின் சிந்தனையும் அவர்களின் உலகமும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாப'உலகமெல்லாம் வியாபாரிகள் என்ற ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல் பெண்ணிலைவாதச் சிந்தனை கொண்டதாக அமைந்துள்ளது.
கருணாகரமூர்த்தி, முருகபூபதி ஆகியோரின் கதைகளில் வரும் பெண்பாத்திரங்கள் எவ்வளவுதான் பெண் சார்ந்த முற்போக்குச் சிந்தனை உள்ளவர்களாக இருந்தாலும் இறுதியில் தம்மையும் தம் வாழ்வையும் இந்த சமூகத்திற்குள் குறுக்கிக் கொள்பவர்களாவே உள்ளனர்.
5.அரசியல் விமர்சனம் - விடுதலை அமைப்புக்களின் முரண்பாட்டைப் பேசுதல் எதிர்த்தல், வன்முறைகளைப் பேசுதல் எதிர்த்தல், தலித்தியம் ஆகியவற்றை இந்த வரையறைக்குள் அடக்கலாம்.
புலம்பெயர் இலக்கியத்தின் முக்கிய வெளிப்பாடாக ஈழ விடுதலைப் போராட்டம், தமிழ் விடுதலை அமைப்புக்களின் செயற்பாடுகள், அவற்றுக்கு இடையேயான அகமுரண்பாடுகள், என்பவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தும் படைப்புக்களும், சாதியம், தலித்தியம், மேட்டுக்குடி மனப்பான்மை என்பவற்றைக் கேள்விக்கு உட்படுத்தும் படைப்புக்களும் முக்கியமானவை.
ஈழத்தில் பேசமுடியாத எழுதமுடியாத விடயங்கள் எனக் கருதுபவற்றைப் புலம்பெயர் தேசத்தில் இருந்து சுயமாக எழுதுவதற்கு இவை வாய்ப்பளித்துள்ளன. இளைய அப்துல்லாவின் கவிதையொன்று பின்வருமாறு அமைவதனை நோக்கலாம்.
"சாப்பிடுதல் குடித்தல் புகைத்தல் இன்னும் புணர்தல் போல மிகச் சாதாரணமாய் பிணமும். சந்திகளில் இருந்துகொண்டு பிணம் பற்றிய பேச்சில் காலம் வெகு இலகுவாகக் கழிகிறது." 37 = تیمورمنcacعم26

Page 29
என்ற கவிதையூடாக மரணமும் அச்சமும் இணைந்த ஈழத்து வாழ்வு எடுத்துக் காட்டப்படுகிறது. இது அரசியல் விமர்சனம் என்ற உள்ளடக்கத்தில் வைத்துநோக்கத்தக்கது. இதனை வலியுறுத்தசேரனின் கூற்று ஒன்றினையும் இணைத்துப் பார்க்கலாம்.
"இலக்கியத்தின் இன்றைய வாழ்வின் அவலமும் நெருக்கடியும், இருப்பின் இழப்பும், இழப்பின் இருப்பும் எதிர்ப்பின் துடிப்பும், பலதளங்களிலும் பேசப்படுகின்றன. போராட்டத்திற்குள் ஒரு போராட்டமாக போராளி இயக்கங்களின் அரசியலும் நடவடிக்கைகளும் குறைந்த அளவிலாயினும் விமர்சிக்கப்படுகின்றன." (சேரன்)
சிறுகதைகளில் சக்கரவர்த்தியின் யுத்தத்தின் இரண்டாம் பாகம்’ தொகுப்பிலுள்ள கதைகள் மற்றும் குமார் மூர்த்தியின் கதைகள் முக்கியமானவை. குமார் மூத்தியின் கதைகள் போர் எதிர்ப்பினை வெளிப்படுத்தும் கதைகளாக அமைந்துள்ளன. வன்முறையாளர்கள் யார் என்பது குமார்மூர்த்திக்கு பிரச்சனையல்ல. வன்முறைதான் பிரச்சனையாக அமைந்துள்ளது. சி.புஸ்பராசாவின் பூச்சியும் நானும் கெளரிமனோகரனின் "எல்லோரும் மெளனமாக" ஆகியவற்றையும் இவ்வாறானவற்றுக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
நாவல்களில் தமிழ்நாட்டில் இருந்து எழுதிய கோவிந்தனின் புதியதோர் உலகம், செழியனின் ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து, சோபாசக்தியின் 'கொரில்லா', 'ம்', ஆகியனவும் விமல் குழந்தைவேலின் ‘மணினும் மல்லிகையும்’ நாவலிலுள்ள சில பகுதிகளும் குறிப்பிடத்தக்கன. இவை போராளிகளிஅகமுரண்பாடுகளையும் பேசுகின்றன.
6.அனைத்துலக நோக்கு - மூன்றாம் உலக நாடுகளின் பொதுவான பிரச்சனைகளைப் பேசுதல், உலகநோக்கு, மூன்றாம் உலக நாடுகளின் அகதிநிலை, முதலாளித்துவ சமூகத்தினால் சுரணிடப்படுதல், இனவாதத்திற்கு முகங்கொடுத்தல் ஆகியன இந்தப் பகுப்பில் உள்ளடங்குகின்றன.
படைப்புக்கள் தாயக வாழ்வையும் புலம்பெயர் வாழ்வையும் மட்டும் பேசுபொருளாகக் கொள்ளாது அனைத்துலக நோக்கிலான படைப்புக்களைத் தரும் நிலையும் உள்ளது.
ഉത്ഭവ) .തബ് (Gൾ തLá ng (= 38

"என் மகள் வளர்ந்தவளானாள் வினாக்களை வரிசையாக அடுக்கினாள். S|hLDIT
நாங்கள் ஏன் அகதிகளானோம் என் தாய்நாடு எங்கே? என் தாய் மொழி எது? நாங்கள் ஏன் கறுப்பர்களானோம்? அவர்களால் ஏன் ஒதுக்கப்படுகிறோம் துருக்கித் தோழி ஏன் எரிக்கப்பட்டாள்?
நிருபாவின் இக்கவிதை மூன்றாம் உலக நாட்டவரது அனுபவங்களுடன் ஒத்துள்ளமை புலனாகின்றது.
தமிழ்ப் படைப்புலகத்திற்கு ஒரு விரிந்த அனுபவத்தைக் கொண்டு வந்தவர்களில் அ. முத்துலிங்கம் மிக முக்கியமானவர். இவரின் படைப்புக்களினூடாக புறவுலக வாழ்வுச் சித்திரிப்பு குறிப்பாக உலகின் பல பாகங்களிலும் தொழிலின் நிமிர்த்தம் செல்லும் இடங்களில் தான் எதிர்கொள்ளும் புதிய சூழல்களையும், புதிய அனுபவங்களையும் தமிழுக்குக் கொண்டு வருகின்றார். இவரின் படைப்புக்களின் களம் மிக விரிந்தது. உதாரணம் நாளை என்ற கதை உலகில் போராலும் புலப்பெயர்வாலும் சிதைவடைந்து போன சிறுவர்களின் நிலையை வெளிப்படுத்துகின்றது. மிக விரிந்த தளத்தில் தனது கதைகள் சிலவற்றைத் தந்த ஆசி கந்தராஜாவும் இங்கு இணைந்து வரக்கூடியவர்.
நாவல்களில் தியாகலிங்கத்தின் நாளை நாவலை மட்டும் இதற்குள் உள்ளடக்கலாம். இதே போல் பார்த்திபனின் சிறுகதைகளையும் எடுத்துக்காட்டலாம். நாவலில் தாயக வாழ்வுடனும் மண்ணுடனும் பிணைந்த சாதி, சீதனம், ஆகியவற்றைக் கருவாகக் கொண்ட நாவல்களைத் தந்த பார்த்திபன் சிறுகதைகளில் தனது எல்லையை விட்டு வெளியே வந்து விடுகிறார். பார்த்திபனின் நாவல்களை விட சிறுகதைகளே அவரை ஒரு சிறந்த படைப்பாளி என அடையாளப்படுத்துகின்றன. அவரின் கதைகளில் வெளிப்படும் உலகம் மிக விரிந்தது. அவர் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு கதைகக்கருவும் உலகப் பொதுவானது. பார்த்திபன் ஈழப்படைப்பாளிகளில் இருந்து ஒருபாய்ச்சலையே நிகழ்த்துகின்றார்.
ംക്ര6ഞ്ഞുൺവീ = 39

Page 30
ஆனால் துரதிஸ்டவசமாக பார்த்திபனின் கதைகளை கண்ணில் தெரியுது 6)յT6ծIլի 2001 தொகுப் பில் வந்த தீவு மனிதன் கதைக்குப் பின்னர் காணமுடியவில்லை. இவரின் இச்சிறுகதையை மறைந்த ஏ.ஜே கனகரட்னா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இது பென்குயின் ஆங்கில சஞ்சிகையில் வெளிவந்ததாக ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது. பார்த்திபனின் கதைகளில் 50 டொலர் பெண்ணே’, ‘தெரியவராதது", இழவுக்கும் தொழிலுக்கும் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். தெரியவராதது" என்ற சிறுகதையில்,
"அமெரிக்காவில் சீவிக்கும் ஒரு கறுப்பனின் பாஸ்போர்ட் எப்படியோ தனக்குரிய வழிகளில் கிடைத்தது. முகம் சுமாராய் பாலுவைப் போலவே. தலைமயிர்கூட சுருட்டத் தேவையில்லை. சென்ற குறையின் ப்ாக்கி இருந்தது. மொத்தத்தில் மாறுவேடம் இல்லாமல் அப்படியே போக இயலக் கூடியதாக இருந்தது. தெரிஞ்ச பொடியனிட்ட வேற சிற்றிக்குப் போறன் சிலவேளை அங்கயிருந்து ஸ்சுவிசுக்குப் போனாலும் போவன். போனா போன் பண்ணிறன்.” என்று சிவகுமாருக்கும் பொய் சொல்லி வைத்தான். விமானம் இலண்டன் விமான நிலையத்தில் தரித்து சிறிது இளைப்பாறி மீண்டும் பறந்து பல நிமிடங்களின் பின் வானத்தில் வெடித்துச் சிதறி சிதையல்கள் 'லொக்கபே எனும் இடத்தில் வீழ்ந்தன. இரவுமுழுவதும் போதைவஸ்தும் கும்மாளமுமாய் இருந்து நேரம் கழித்து வந்து படுத்து இன்னும் எழும்பாமல் இருக்கும்"கிறிஸ்டோபர் பீலியை திட்டியபடி வாசலுக்கு வந்த அம்மா லொக்கபே விமான நிலையத்தில் கிறிஸ்டோபர் பீலி இறந்துவிட்டசெய்தியை ஆழ்ந்த கவலையுடன் தெரிவிப்பதாக வந்த தந்தியை வாங்கி வைத்துக் கொண்டு ஒன்றும் புரியாமல் குழம்ப, பாலகிருஸ்ணன் எங்கே என்ற உண்மை தெரியாமல் அவன் சுவிஸ் போய்விட்டதாக ஜேர்மனியில் இருந்த நண்பர்கள் நினைத்துக் கொள்ள, இலங்கையில் நடுமூலையில் உழைத்துத் தளர்ந்து போன அப்பாவும் ஒளவையாராகி கொண்டிருக்கும் அக்காவும், துப்பாக்கிகளுக்குப்பயப்பிடும் அண்ணாவும் எதிர்காலக் ഞ്ഞേ മതഭഖൾ ((ൾ ശ്ചLá ക്ര8 (= 40

கனவுகள் பற்றிய ஆரம்பங்களுடன் தம்பிதங்கைகளும் பாலுவின் கடிதம் பணத்திற்காகக் காத்திருந்தார்கள்.
காத்திருப்பார்கள்"
பார்த்திபனின் கதைகள் வித்தியாசமானவை. பார்த்திபன் தேர்ந்து கொள்ளும் பிரச்சனைகள் தமிழுக்குப் புதியவை. ஒருவகையில் உலகில் புலம்பெயர்ந்த தமிழரல்லாத பிறநாட்டவர்களின் அனுபவங்களையும் முன்வைப்பதாக அவரது கதைகள் அமைகின்றன.
"அந்நியமொழி அந்நிய நிலப்பரப்பு காலனிய மனப்பான்மை, நிற ஒதுக்கல்பாலுறவு அதிர்ச்சி, தனிநபர் சுதந்திரம், போலிப்பெருமை, தாய் நாட்டுக்கான ஏக்கம், நிரந்தரமற்ற தற்காலிக மிதப்பு வாழ்நிலை, போன்றவற்றோடு சொந்தநாட்டு அழிவுகளும் , புதிய வழிதேடிய கனவுகளுமே புலம்பெயர் இலக்கியத்தின் படைப்புச் செயல்படுதளமாக அமைகிறது"
(யமுனா ராஜேந்திரன், கிழக்கும் மேற்கும், ப.24)
இளைய பரம்பரைக் கவிஞர்கள் இன்னமும் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றில் பிறமொழிகளில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து பிற மொழிகளுக்குமான மொழிபெயர்ப்பு முயற்சிகளும் நடந்தேறி வருகின்றன. “ET DAMAIN’ என்ற கவிதைத் தொகுப்பு ஒன்றினை க. கலாமோகன் (பிரான்ஸ்) பிரெஞ்சு மொழியில் எழுதியுள்ளமை இந்த முயற்சிகளுக்கு எல்லாம் தொடக்கம் எனலாம்.
மேற்குறிப்பிட்ட கலாமோகனின் பிரெஞ்சுக் கவிதைத் தொகுப்பு, தர்மகுலசிங்கம் டேனிஸ் மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த 'தாய்' என்ற கதைகளின் தொகுப்பு, சியாம் nryt Jiuapi “FUNNYBOYo, 6g dairfoibgs6tfair WHEN MEMORY DIES (நினைவுகள்மரணிக்கும்போது)
41

Page 31
ஆகிய நாவல்கள், சிவலிங்கத்தின் கலேவலா என்ற பின்னிஸ் மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட பின்லாந்து காவியம், சுசீந்திரனின் ஜேர்மன் மொழிபெயர்ப்புகள், சுரேஸ் கனகராஜா வின் ஆங்கிலத்தினாலான கட்டுரைகள், பாமினி செல்த்துரையின் ‘சிதறிய சித்தார்த்தன்” (NORTH SOUTH AND DEATH ) BIT66) setsu60TG66)6OTLb usuubGuujbgs ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளின் மொழி பெயர்ப்பு மற்றும் மொழியாக்க முயற்சிகளை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இப்படைப்புக்கள் எல்லாம் ஈழத்தமிழ் இலக்கியம் அனைத்துலக இலக்கியத்துடன் ஊடாடும் நிலையை எடுத்துக்காட்டுகின்றன. m
நிறைவாக
பண்பாடு என்ற அகண்ட பரப்பில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் புலம்பெயர்ந்தவர்களின் தற்கால வாழ்க்கைப் போக்கினையும் அது எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகும் பல சிக்கல்களையும் மாற்றங்களையும் புரிந்து கொள்ள வழிவகுக்கும்.
இவ்வகையில் பின்வரும் விடயப் பரப்புக்களைக் குறித்துரைக்கலாம் என எண்ணுகிறேன்.
1. புலம்பெயர்ந்தவர்களின் மூன்றாம் தலைமுறையினர்
மத்தியிலான தமிழ்ப் பண்பாட்டின் பேணுகை. 2. ஒழுக்கவியல் மரபும், தமிழ்ச் சமூகமும் 3. தமிழர் மத்தியிலான வாழ்வில் ஏற்பட்டிருக்கும் பண்பாட்டுக்
கலப்பு. 4. தமிழ் அடையாளமும் அதன் பேணுகையும்
இன்றைய புலம்பெயர் தமிழ்ப் படைப்புக்கள் தமிழ்மொழியும் தமிழர்களும் என்ற அனுபவ எல்லையை விட்டு அனைத்துலக மட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. இதற்கு ஊடகங்களின் செல்வாக்கும் இணையப் பயன்பாடும் அதிக பங்களிப்பை வழங்கி வருகின்றன.
மொழிகளுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல்களும் நிகழ்ந்து வருகின்றன. ஈழத்தமிழ் அனுபவங்கள் பிரெஞ்சு, டெனிஸ், ஆங்கிலம் ஜேர்மன் மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன. அதேபோல் பிறமொழி எழுத்துக்கள் தமிழுக்கு வந்து சேருகின்றன. உலகப் பரப்பில் வைத்துப் பார்க்கும்போது இந்நிலை மிகச் சொற்பமாக அமைந்தாலும் தமிழ்மொழியும் தமிழர் வாழ்வும் அனைத்துலகத் தளத்திற்கு நகர்ந்துள்ளமையையே இவை காட்டி நிற்கின்றன. இவையெல்லாம் தமிழ் இலக்கியம் தன் அநுபவ வட்டத்தை உலகப்பரப்பில் பதிப்பதற்குரிய தொடக்கப் புள்ளிகள் எனக் dings6)Tib.
令令令
ഉതബb തവർ Cevdồ6uku vodulůSouăávå og unaoovadsid 42

புலம்பெயர் சஞ்சிகைகள்
-ஆய்வுக்கான ஓர் அறிமுகம்
hesosofoiled
ஈழத்தமிழ் இலக்கியத்தில் 80 களுக்குப் பின்னரான இலக்கியப் போக்கில் ‘புலம்பெயர் இலக்கியம்’ என்னும் புதியதொரு இலக்கிய வகைப்பாடு முனைப்புப் பெற்றுள் ளமை தமிழ் இலக்கிய உலகு அறிந்ததொரு விடயமாகும். இந்த இலக்கிய வகையின் வளர்ச்சிக்கு புலம்பெயர் நாடுகளில் இருந்து வெளிவந்த சஞ்சிகைகள் அளப்பரிய பங்களிப்பைச் செய்திருக்கின்றன. அவற்றினை நோக்குவதே இக் கட்டுரையின் பணியாகும்.
புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்ற
வகைப்பாடு இன்று ஈழத்தமிழ்
இலக்கியத்தின் இன்னொரு கட்ட வளர்ச்சியாக அமைந்துள்ளது.
43

Page 32
கடந்த 1980 களில் முனைப்புப்பெற்ற இலங்கை இனப்போராட்ட சூழலின் விளைவாக மேற்குநாடுகளுக்குப்புலம்பெயர்ந்துசென்ற ஈழத்தமிழர்களால் மேற்கொள்ளப்படும் இலக்கிய முயற்சிகளே ‘புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்று அடையாளப்படுத்திஅழைக்கப்படுகின்றது.
உலகிலே பல்வேறு இன மக்களும் தமது உள்நாட்டுப்போர் காரணமாகவும் அரசியல் அச்சுறுத்தல் காரணமாகவும், பிறவற்றாலும் தமக்குத் தஞ்சம் தரும் நாடுகளை நோக்கிப் புலம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையிலே ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வுகளும் இன்று உலகப் பரப்பில் பேசப்படும் ஒரு பிரச்சனையாக அமைந்துள்ளது.
இங்கிலாந்து, சுவிஸ்,பிரான்ஸ்,ஜேர்மனி, ஒல்லாந்து, டென்மார்க், சுவீடன், இத்தாலி,நோர்வே ஆகிய மேற்கு ஐரோப்பிய ஸ்கண்டிநேவியநாடுகளிலும், வட அமெரிக்காவில் கனடாவிலும் மற்றும் அவுஸ்திரேலியாவிலும் பெருமளவான ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் இலக்கிய ஆர்வமும் அதன்பாலான ஈடுபாடும் சமூக நோக்கும் உள்ளவர்களால் இவ்வாறான இலக்கிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவற்றினூடாக தமிழர்தம் அடையாளத்தையும் தமிழின், தமிழ்ப்பண்பாட்டின் பேணுகையையும் எதிர்காலச் சந்ததிகளுக்குக் கையளிக்கும் முயற்சியாகவே அவர்களின் கலை இலக்கியம் சார் செயற்பாடுகள் அமைந்துள்ளன.இவற்றினை வெளியுலகுக்குக் கொண்டுவர புலம்பெயர் சஞ்சிகைகள், பத்திரிகைகள் உறுதுணையாக இருந்துள்ளன.
சஞ்சிகைகளின் தோற்றத்திற்கான பிரதான காரணம்
1983 யூலை கலவரங்களின் பின்னர் கூர்மையடைந்த இனப்பகைமை நிலை காரணமாக குறிப்பாக இளம்வயதினர் ஈழத்தின் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் மாத்திரமல்லாது இலங்கையின் பிற பிரதேசங்களிலும் வாழ்வது உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த காரணத்தினால் மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். அவர்கள் புலம்பெயர்ந்த தேசங்களில் அகதிச் சமுகமாக ஆக்கப்பட்டனர். அத்தோடு புகலடைந்த தேசங்களில் தாம் அந்நியப்பட்டுப் போனதாகவும் உணரத்தலைப்பட்டனர்.
இனம், மதம், மொழி, பண்பாடு மட்டுமன்றி புவியியற் சூழலினாலும் முற்றிலும் வேறுபட்ட தேசத்தில் தமது பிரச்சனைகளைத் தாமே பேசிக்
ഉത്ഖി () (മിൾ (L() (8 (= 44

கொள்ளவும் தம் இனத்தவர்களிடம் (தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர்ந்த பிறநாடுகளிலும்) தொடர்புகளை வைத்துக் கொள்ளவும் வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டது. இந்நிலையிலேயே புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் சமூகத்திற்கு முதல்முதலில் தமது பிரச்சனைகளைத் தாமே எழுத களம் தேவைப்பட்டது. அதனாலேயே சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் தோற்றம் பெற்றன.
சஞ்சிகைகள் குறித்து.
இதுவரை நான் தேடிப்பெற்ற தகவல்களின்படி 150 ற்கும் மேற்பட்ட பத்திரிகை மற்றும் சஞ்சிகைகள் புலம்பெயர் இலக்கியப் பரப்பில் வெளிவந்துள்ளமை தெரியவருகின்றது. ஆனால் அவற்றுள் எல்லாமே தற்போதுவெளிவருவனவல்ல. ஆகக் குறைந்தது ஒரிரு இதழ்களுடன் தமது பயணத்தை முடித்துக்கொண்ட சஞ்சிகைகளும் உள்ளன. ஏறத்தாள 20 முதல் 30 வரையிலான பத்திரிகை, சஞ்சிகைகளே சமகாலத்தில் வெளிவருவதாக அறியமுடிகின்றது.
குறிப்பாக, சிறுசஞ்சிகைகளைப் பொறுத்தவரையில் அவை ஜனரஞ்சக இதழ்களாகவோ அதிக வாசகர்களைக் கொண்ட இதழ்களாகவோ அமைய வாய்ப்பில்லை. மாறாக காத்திரமான விடயங்களைப் பரிமாறும் களங்களுக்குரிய இதழ்களாகவே அவை அமைந்துள்ளன.
இவற்றுள் பத்திரிகைகளும் உள்ளடங்கும். அவை நாளாந்த, வாராந்த, மாதாந்தப் பத்திரிகைகளாக வெளிவந்துள்ளன. அவற்றுள்ளும் வர்த்தக விளம்பரத்தை நோக்கமாகக் கொண்டு இலவசமாக வெளியிடப்படும் பத்திரிகைகளும் கணிசமானவை வெளிவருகின்றன. இவை பற்றிப் பேராசிரியர் இ. பாலசுந்தரம் குறிப்பிடும்போது,
"இற்றைவரை ரொறன்ரோவில் வெளிவந்த பத்திரிகை, சஞ்சிகைகள் என்பவற்றின் வரிசையில் உலகத்தமிழ், செந்தாமரை, விளம்பரம், தமிழர் தகவல், தாயகம், நான்காவது பரிமாணம், ழகரம், வீணைக் கொடி, சூரியன், உதயன், தமிழர் செந்தாமரை, முழக்கம், நம்நாடு, ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி, சுதந்திரன், தென்றல், உலக தமிழோசை, அமுதம், தினத்தமிழ், வீடு, ஆத்ம ஜோதி, தேசியம், தங்கத்தீபம், பரபரப்பு முதலானவற்றைக் குறிப்பிடலாம். ஓரிரு
at (3660Rastold 45

Page 33
வெளியீடுகளுடன் ஓய்ந்த பத்திரிகை களுமுள்ளன. உதயன், தமிழர் செந்தாமரை, முழக்கம் ஆகிய பத்திரிகைகள் சுமார் 100 பக்கங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் வர்த்தக விளம்பரங்கள் பக்கங்களை நிரப்புகின்றன. பத்திரிகைகளில் வரும் செய்திகள் எல்லாம் ஒரே மாதிரியான தாயகச் செய்திகள், வெவ்வேறு தலையங்கங்களுடன் வெளிவருகின்றன” (போராசிரியர் இ. பாலசுந்தரம் : 2005, ரொரன்றோவில் தமிழ்ப் பத்திரிகைகள் - ஒரு நோக்கு, குவியம் கனடா.ப.33)
இதனாலேயே காத்திரமான விடயங்களைத் தாங்கி வருபவற்றுள் பத்திரிகைகளை விட சஞ்சிகைகள் முதன்மையாக அமைந்துள்ளன. அவற்றில் சில சஞ்சிகைகளை இவ்விடத்தில் எடுத்துக்காட்டுதல் பொருத்தம் என்று எண்ணுகிறேன்.
சஞ்சிகைகளைப் பொறுத்தவரையில் மாதாந்த, இருமாத மற்றும் காலாண்டு, அரையாண்டு சஞ்சிகைகளும் உள்ளன. சில சஞ்சிகைகள் ஆண்டு வெளியீடுகளாவும் வருவதுண்டு. கல்லூரிகள், சங்கங்கள், அமைப்புக்கள் என்பனவும் செய்திப் பத்திரிகைகளை வெளியிடுகின்றன. (இவற்றுள் ஆண்டு மலர்கள் கருத்திற்கொள்ளப்படவில்லை. அவை தனித்த பார்வைக்குரியன)
1985 இல் மேற்கு ஜேர்மனியில் இருந்து வெளிவந்த தூண்டில் என்ற
சஞ்சிகையே புலம்பெயர் படைப்பாளிகளிடம் இருந்து வெளிவந்த முதலாவது சஞ்சிகையாகக் கருதப்படுகின்றது. தூண்டிலிலேயே ஜேர்மனியில் இருந்து பார்த்திபன் எழுதிய புலம்பெயர் ஆரம்பகால நாவல்கள்
தொடர்கதையாக வெளிவந்தன. வேறும் சில சஞ்சிகைகள் நாவல் மற்றும் குறுநாவல் என்பவற்றைத் தொடராக வெளியிட்டன.
ഉതങ്ങഖ ഞ്ഞുങ്ങബb Guavcò6uw voodulůSauảáswóð og unaodavasod 46
 

சஞ்சிகை வெளியீடுகளில் அதிகமானவையும் குழுவாக வெளியிடும் நிலைதான் உள்ளது. இலக்கிய வட்டங்கள், அமைப்புக்கள், சங்கங்கள் ஊடாகவும், பல எழுத்தாள நண்பர்கள் இணைந்து வெளிவருவனவும், தனிப்பட்ட நபர்களின் முயற்சியில் வெளிவருவனவும் உள்ளன.
தற்போது கனடாவில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் காலம்’ என்ற சஞ்சிகை கவிஞர் செல்வத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகின்றது. 90 இல் இருந்து வெளிவரத் தொடங்கிய காலம் இன்றுவரையும் தொடர்ச்சியாக வருகின்றது. ஈழ, புலம்பெயர் படைப்பாளிகள் மட்டுமன்றி ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தமிழகப் படைப்பாளிகளும் இச்சஞ்சிகையில் எழுதிவருகின்றனர்.
பிரான்சில் இருந்து எக்ஸில் வெளியீட்டகத்தின் ஊடாக வெளிவந்த "எக்ஸில் என்ற சஞ்சிகை வெளிவந்து நின்றுவிட்டது. எக்ஸிலில் முன்னர் வெளிவந்த படைப்புக்கள் இணையத்தில் exilivre.com என்ற இணையத் தளத்தில் பார்க்கக் கிடைக்கின்றது. இந்த வெளியீட்டகத்தினுாடாக பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. திருமாவளவன், கலாமோகன், சிவசேகரம், சக்கரவர்த்தி ஆகியோரின் ஒவ்வொரு நூலும் மறையாத மறுபாதி என்ற புகலிட பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பும் இவற்றுள் முக்கியமானவை.
மறைந்த கலைச்செல்வன் மற்றும் லஷ்மி ஆகியோரின் முயற்சியில் பிரான்சில் இருந்து வெளிவந்த மற்றுமொரு சஞ்சிகையே உயிர்நிழல். 'உயிர்நிழல் முதலில் வெளிவந்து நின்றுபோனது. பின்னர் கலைச் செல்வனின் மறைவுக்குப் பின்னர் இரண்டாம் கட்டமாக வெளிவந்து தனது வரவை உறுதிப்படுத்தி யுள்ளது. எக்ஸில், உயிர்நிழல் ஆகிய இரண்டு சஞ்சிகைகளும் நவீன தமிழ் இலக்கியத்தின் அண்மைக்கால இலக்கியப் போக்கினை உள்வாங்கி மிகக் காத்திரமான பணியை
புலம்பெயர் படைப்புலகில் ஆற்றியுள்ளன. பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம், எதிர்ப்பிலக்கியம் ஆகியவை குறித்து தமது கவனத்தைத் திருப்பிய சஞ்சிகைகளாக இவை அமைகின்றன.
சக்தி, கண், ஊதா ஆகிய சஞ்சிகைகள் பெண்கள் அமைப்புக்களின் ஊடாக வெளிவந்தவை. அதேபோன்று தற்போது பல சஞ்சிகைகள்
കം(കൃ5ങ്ങൺബങ്ങ് = 47

Page 34
சங்கங்கள் மற்றும் அமைப்புகள் மூலமே வெளிவருகின்றன. பெண்கள் சஞ்சிகைகள் பற்றி றஞ்சி அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுவது கவனத்திற்கு உரியது.
"15 வருடங்களுக்கு முன்னர் மேற்கு ஐரோப்பாவில் பல மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட சஞ்சிகைகள் வெளிவந்தன. அவற்றில் பெண்களும் எழுதினார்கள். அனேகமான சஞ்சிகைகளில் பெண்களாலும் ஆண்களாலும் பெண்ணியக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. விவாதிக்கப்பட்டன. பிரான்சிலிருந்து ‘கண்‘ என்ற பெண்கள் சஞ்சிகை முதலில் கொண்டு வரப்பட்டது. இது பெண்களை ஆசிரியர் குழுவாகக் கொண்டிருந்தது. தொடர்ந்து "ஊதா, பெண்கள் சந்திப்பு மலர், சக்தி போன்ற பெண்களால் உருவாக்கப்பட்ட சஞ்சிகைகளும் இன்னும் "மறையாத மறுபாதி, புது உலகம் எமை நோக்கி, ஊடறு" போன்ற தொகுப்புக்களும் வெளிவந்தன. புகலிட வாழ்வு, பெண்ணியம், விளிம்புநிலை மாந்தர்கள், தமிழ் அரசியல் குறித்த படைப்புக்கள், தாங்கிய தொகுப்புக்களாக இவை தம்மை இனங்காட்டின."
(சுவிஸ் றஞ்சி: 2006 மார்ச், புலம்பெயர் நாடுகளில் பெண்ணியக்
கருத்துக்கள், உயிர்நிழல், இதழ் 22, பிரான்ஸ், ப.43)
WMIL. FEFUSEE
excer is less
' 789
சில சஞ்சிகைகள் தனித்த பார்வைக்குரியன. பிரான்சில் இருந்து வெளிவந்த 'அம்மா' சஞ்சிகை சிறுகதைக்கென தனித்த இதழாக வெளிவந்து நின்று போனது. கட்டுரையாளர் அறிந்தவரையில் 13 இதழ்கள் வரையில் காணக் கிடைத்தது. 1997 பங்குனியில் 'அம்மா வின் 1 வது இதழ் வெளிவந்துள்ளது. 2001 இல் இதன் 13 வது இதழ் வெளிவந்துள்ளது. வெளிவந்த இதழ்களில் சராசரியாக 5கதைகளாவது
ഉതയേവ് .തബ് Cuavöquð vou-Öóavåávö (22ðs Undanavss) = 48
 

கதைகளாவது வந்துள்ளன. அப்படிப் பார்த்தால் 75 கதைகளாவது வந்திருக்கும். அதிகமான புலம்பெயர் படைப்பாளிகளின் சிறுகதைகள் இந்த இதழில் வெளிவந்து பின்னர் நூல் வடிவம் பெற்றவையே. இந்த வகையில் அம்மா புலம்பெயர் இலக்கியப் படைப்புலகில் சிறுகதைக்கெனத் தனித்த இதழாக வெளிவந்து பலத்த பாதிப்பை ஏற்படுத்திய சஞ்சிகையாக அமைந்துள்ளது.
'சமர் பிரான்சிலிருந்து ரயாகரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த சஞ்சிகை. இதில் கவிதை, சிறுகதை எவையும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. கட்டுரை மற்றும் அரசியல் சார் விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் தத்துவார்த்த புரட்சிகர விமர்சன ஏடாக வெளிவந்தது. கட்டுரையாளர் அறிந்தவரையில் 31 இதழ்கள் 2002 வரை வெளிவந்துள்ளன. இது தவிர அரசியல் பொருளாதார கலாசார இதழாக வெளிவந்த புதுமை என்ற சஞ்சிகையும் நீண்ட காலம் தொடர்ச்சியாக வெளிவந்து நின்று விட்டது.
எழுத்தாளர் க. நவம் (எழுத்தாளர் தெணியானின் சகோதரர்) ஆசிரியராகப் பணியாற்றிய நான்காவது பரிமாணம் கனடாவில் இருந்து வெளிவந்த சஞ்சிகையாகும். கலை இலக்கிய காலாண்டு இதழாக 1991 செப்ரெம்பரில் இருந்து 1994 ஏப்ரல் வரை 13 இதழ்கள் மாத்திரமே இதுவரை வெளிவந்துள்ளன. பின்னர் இதுவும் நின்றுவிட்டது. இது வெளிவந்த காலப்பகுதியில் பல நூல் வெளியீடுகளை குறிப்பாக ஆரம்பத்தில் வெளிவந்த கவிதைத் தொகுதிகளை வெளியிட்டு அவை சார்ந்த கருத்துக்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனரஞ்சகமாக வெளிவந்த பல இதழ்களும் உள்ளன. அத்துடன் இந்தியாருடே பாணியிலும் வெளிவந்து நின்று போன இரண்டு சஞ்சிகைகள் பார்க்கக் கிடைத்தன. அவை லண்டனில் இருந்து வெளிவந்த உலக தமிழோசை", "உலகத் தமிழ் ஆகிய இரண்டு சஞ்சிகைகளும் ஆகும். கலை இலக்கியம் மட்டுமல்லாது அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி வெளிவந்தது. இதனாலேயே எந்தவொரு வாசக மட்டத்திலும் நிரந்தரமாகத் தமக்கென ஓரிடத்தைத் தக்க வைக்க முடியாத நிலை இவற்றுக்கு ஏற்பட்டு விட்டது. தற்போது இச்சஞ்சிகைகளையும் இங்கு பெறமுடியாதுள்ளது.
ംക്ര6ഞ്ഞുൺഖമഞ്ഞ് - 49

Page 35
புலம்பெயர் படைப்புலகில் வெளிவந்த சஞ்சிகைகள் கலை,இலக்கியம், விமர்சனம், அரசியல், பெண்ணியம், மாற்றுக்கருத்து, சிறுவர் இதழ்கள், ஆற்றுகைக்கலை, ஆன்மீகம், வர்த்தகம் என்றவாறு சிறப்புப் பண்புகளைப் பெற்று வந்துள்ளமை தெரியவருகின்றது. இந்தச் சஞ்சிகைகள் யாவும் முழுமையாக ஈழத்தில் கிடைக்காத நிலையிலே இவை பற்றிய பகுப்பாய்வினை மேற்கொள்ளுதல் மிகக் கடினமான ஒரு பணியாகவே அமைகிறது. ஈழத்தில் ஆவணப்படுத்த வேண்டிய பல்கலைக்கழக நூலகங்களுக்கோ அல்லது பொதுசன நூலகங்களுக்கோ (աTլք. பல்கலைக்கழக நூலகத்திலே எக்ஸில், உயிர்நிழல், கலப்பை, அம்மா, சமர், மண், ஆகியவற்றின் சில இதழ்கள் மட்டுமே பார்க்கக் கிடைக்கின்றது) இதுபோன்ற சஞ்சிகைகளின் பிரதிகளை வெளியீட்டாளர்களும் படைப்பாளிகளும் பொறுப்புணர்வுடன் அனுப்பிவைக்காதது ஒரு குறைபாடே. இந்நிலை இவை பற்றிய முழுமையான ஆய்வுகளுக்குத் தடையாக அமைந்துள்ளன.
இந்த வகையில் தற்போது வெளிவரும் சஞ்சிகைகளாக உயிர்நிழல், காலம், மண், நுட்பம், குவியம், இனி, உயிர்மெய், காற்றுவெளி, முற்றம் யுகமாயினி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். தொடர்ச்சியாக வெளிவரும் மேலும் சில சஞ்சிகைகளும் உள்ளன. இலத்திரனியல் ஊடகமான இணையத்திற்கூடாகவும் அதிகமான இணைய சஞ்சிகைகள் தற்போது வெளிவருகின்றன.
இதுவரை புலம்பெயர் படைய்யுலகில் வெளிவந்துள்ள சஞ்சிகைகள்/பத்திரிகைகள்
பிரான்ஸ் (36) அசை, அம்மா, அநிச்ச, ஆதங்கம், ஈழமுரசு,உயிர்நிழல், உறவுகள், எக்ஸில், எழில், எரிமலை, ஐரோப்பிய முரசு, ஓசை, கதலி, கண், கம்பன்,குமுறல், சமர், சிந்து, சிரித்திரு, சுட்டுவிரல், தமிழன், தமிழ் முரசு, தமிழ்த் தென்றல், தாயகம், தேடல், பள்ளம், பாரிஸ் ஈழநாடு, பாரிஸ் ஈழமுரசு, பகடைக்காய்களின் அவலக்குரல், புன்னகை, புதுவெள்ளம், முற்றம், மெளனம், வடு, வண்ணை, வான்மதி.
ஜேர்மனி (30)
அக்கினி, அறுவை, இளைஞன், இரவல் தூண்டில், ஈழமணி, ஊதா, ஏலையா, கலைவிளக்கு, சிந்தனை, சிவத்தமிழ், சிறுவர் அமுதம், தமிழ் அருவி, தளிர், தாகம், தாயகம், தமிழ் நாதம், தூண்டில், தென்றல், தேன், நமது இலக்கு, ഉതങ്ങൾ ഉ-തഖബ ((ൾ ത_( ക്രs u്തഖരി = 50

நமது குரல், பாரிஸ் ஈழமுரசு, புதுமை, புதுயுகம், பூவரசு, மண், மலரும் மொட்டுக்கள், வண்ணத்துப்பூச்சி, வெளிச்சம், வெற்றிமணி.
இங்கிலாந்து (25) அலை ஓசை, ஈழகேசரி, உயிர்ப்பு, உலக தமிழோசை, காற்றுவெளி, சுடரொளி, தமிழ் ஒலைகள், தமிழர் தகவல், தமிழன், தமிழ் அகதி, தமிழ் உலகம், தாகம், தேசம், நாளிகை, பனிமலர், பாரிஸ் ஈழமுரசு, புதினம், புலம் g..,f, fổf, 6 JT6ðICypJah, G66ń, Journal of Eelam Studies, Race and Class, Tamil Times, Tamil Nation.
зalist (5) ஊசி இலை, தமிழ் ஏடு, தமிழ்நாடு, பாரிஸ் ஈழமுரசு, மனிதம்.
டென்மார்க் (5) அரும்பு, இனி, கற்பகம், காகம், சஞ்சீவி.
நோர்வே (5) உயிர்மெய், சுவடுகள், சக்தி, சர்வதேச தமிழர், பறை.
நெதர்லாந்து (6) அ ஆ இ, உரிமை, சமநீதி, சுமைகள், செய்திக்கதிர், தமிழ்ஒளி,
669 LIT (39) அமுதம், ஆத்மஜோதி, ஈழநாடு, ஈழமுரசு, உதயன், உலக தமிழோசை, உலகத் தமிழர், கனடா ஈழநாடு, காலம், குவியம், சிறுவர் கதைமலர், சுதந்திரன், சூரியன், செந்தாமரை, தங்கத்தீபம், தமிழர் செந்தாமரை, தமிழர் தகவல், தாயகம், தினத்தமிழ், தேசியம், தேடல், தென்றல், நம்நாடு, நான்காவது பரிமாணம், நுட்பம், பரபரப்பு, பார்வை, புரட்சிப் பாதை , பொதிகை, மறுமொழி, முரசொலி, முழக்கம், ரோஜா, வானவில், விளம்பரம், வீடு, வீணைக்கொடி, வெற்றிமணி, ழகரம்.
அவுஸ்திரேலியா (14) அக்கினிக்குஞ்சு, அவுஸ்திரேலிய மரபு, அவுஸ்திரேலியமுரசு, இன்பத்தமிழ், ஈழமுரசு, உணர்வு, உதயம், கதிர், கலப்பை, தமிழர் உலகம், தினமுரசு, பாரதி சிறுவர் இதழ், மரபு, யுகமாயினி
a.(26oasrboyogi - 51

Page 36
GIDsyID (11) அஞ்சல்,உலகத்தமிழ்,ஒலை, குருத்து, சுட்டுவிரல், திருப்பம், துளிர், பாலம், புதினம், மண், மேகம்.
சஞ்சிகைகளின் உள்ளடக்கம்
இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ள சஞ்சிகைகளில் கலை இலக்கியம் சார்ந்தனவே அதிகம்.அவை கவிதை,சிறுகதை, தொடர்கதை, நூல் மதிப்பீடு, நூல் அறிமுகம், விமர்சனம், கட்டுரை, வாசகர் கருத்து, அரசியல், மாற்றுக்கருத்து, எதிர்வினை, ஆகியவற்றை பிரதானமாகவும் வேறும் சில விடயங்களை உபபிரிவுகளாகவும் கொண்டு வெளிவந்தன.
இவை ஒவ்வொரு சஞ்சிகைகளின் குறிக்கோளுக்கு ஏற்பவும் மாறுபடும். பெண்ணியக் கருத்துக்களை முதன்மைப்படுத்தி வெளிவந்த சக்தி, கண் ஆகியவற்றின் உள்ளடக்கத்திற்கும் சமர் சஞ்சிகையின் உள்ளடக்கத்திற்கும் உயிர்நிழல், காலம் என்பவற்றின் உள்ளடக்கத்திற்கும் இடையில் பெருத்த வித்தியாசம் உண்டு. அவற்றை வெளியிடும் குழுவின் கருத்தியலுக்கு ஏற்ப அவற்றின் உள்ளடக்கம் மாற்றமுறுவதைக் கண்டு கொள்ளமுடியும்.
இவை எவற்றையும் மனங்கொள்ளாமல் தமிழகத்தின் குமுதம்", ராணிமுத்து பாணியில் வெளிவரும் சஞ்சிகைகளும் புலம்பெயர் இலக்கிய உலகில் உள்ளன. அவை பெரிதும் தமிழ்நாட்டு வெகுஜன கலாசாரத்தின் தாக்கத்திற்கு உட்பட்டிருத்தலையும் கண்டு கொள்ளலாம்.
சஞ்சிகைகளின் அமைப்பு
ஆரம்பத்தில் வெளிவந்த சில சஞ்சிகைகள் கையெழுத்துப் பிரதியாக எழுதப்பட்டு அவை போட்டோப்பிரதி எடுக்கப்பட்டு வெளிவந்தன. பின்னர் தட்டச்சுச் செய்யப்பட்டு போட்டோப்பிரதி எடுக்கப்பட்டும், அதன் பின்னர் றோணியோ செய்யப்பட்டும் பல சஞ்சிகைகள் தமது பணியைத் தொடர்ந்தன. பின்னரே அவை அச்சுவடிவம் பெற்றன. தாயகம், சக்தி, புதுமை ஆகிய சஞ்சிகைகள் கட்டுரையாளருத்குப் பார்க்கக் கிடைத்தபோது மேற்கூறிய ഉത്തബ് () (( uത-ീൾ രൂഴി, ഗീതയജീ= 52

நிலையில் இருந்துதான் அவற்றின் வளர்ச்சி ஆரம்பமாகியது. இது ஆரம்பத்தில் வெளிவந்த அதிகமான சஞ்சிகைகளுக்கும் பொருந்துவதாக அமைகின்றது. சிறிது காலத்தின் பின்னரே அச்சுவடிவம் பெற்ற சஞ்சிகைகளைக் காணமுடிந்தது.
தமிழகத் தொடர்புகள் கிடைத்தபோது வெளியீட்டாளர்கள் தமது சஞ்சிகைகளைத் தமிழகத்தில் பதிப்பிக்கவும் செய்தனர். தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் பல சஞ்சிகைகள் தமிழகத்தில் மிகச் சிறப்பாக அச்சுப்பதிக்கப்பட்டு வெளிவருகின்றன. அநிச்ச (இரண்டு இதழ்களுடன் நின்றுவிட்டது. இதனை கீற்று (WWW.keetru.com) இணையத்தளத்தில் பார்க்கக் கூடியதாக உள்ளது. உயிர்நிழல், காலம், யுகமாயினி ஆகிய சஞ்சிகைகள் அண்மைக்காலத்தில் சிறந்த வடிவமைப்போடு காத்திரமாக வெளிவருகின்றன.
20செ.மீX15செ.மீ அளவுகளிலேயே ஆரம்பத்தில் வெளிவந்த அதிகமான சஞ்சிகைகள் அமைந் திருந்தன. இவை A4 அளவுள்ள தாள்களில் போட்டோப்பிரதி எடுப்பதற்கு வாய்ப்பாக அமைந்ததாலும் கைக்கு அடக்கமான அளவாதலாலும் இந்த அளவுடைய சஞ்சிகைகள் பெரிதும் விரும்பப்பட்டிருக்கலாம். சமர், தாயகம், சக்தி, ஆகிய சஞ்சிகைகள் இந்த அளவிலேயே அவை
நின்றுபோகும் வரையும் வெளிவந்தன. இவை தவிர 26செ.மீX18செ.மீ , 28செ.மீX22செ.மீ இவற்றை அண்மிய வடிவத்திலும் பல சஞ்சிகைகள் வெளிவந்துள்ளன. மெளனம், காலம், எக்ஸில், உயிர்நிழல், நான்காவது பரிமாணம், கணி, அம்மா ஆகிய சஞ்சிகைகள் இந்த அளவுகளில் வெளிவந்தமைக்கு உதாரணமாகும்.
ane(გნéoç67ზრojერdi = 53

Page 37
இன்னமும் தாண்டவேண்டியவை
சஞ்சிகைகள் தாண்டவேண்டிய தடைகள் பல உள்ளன. குறிப்பாக எல்லாச் சஞ்சிகைகளும் சேரவேண்டியவர்களுக்கு போய்ச் சேர்வதில்லை. என்பது முக்கியமான குறைபாடாகும். ஏற்கனவே ஒரு சஞ்சிகையில் பிரசுரமான படைப்பு மீண்டும் மீண்டும் மறுபிரசுரம் பெறுவதும் சஞ்சிகைகளின் குறைபாடுகளுக்கு மற்றுமொரு காரணமாகும். இவற்றில் பல எடுத்த எடுப்பிலேயே நின்றுபோவதற்கு
"குழுவிற்கான வேலைத்திட்டம், நடைமுறைப் பிரச்சினைகள், வாழ்நிலை முரண்பாடுகள், பிரமுகர்த்தனம், போலித்தன்மையான தியாக வெளிப்பாடுகள், தலைமைக்கான போட்டி, சிலரைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற சிலரின் அதீத வேட்கை என்பவற்றை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்” (தயாநிதி : 1999 செப் 2-15, சரிநிகர், கொழும்பு, ப.8)
என்ற கூற்றும் சஞ்சிகைகள் தொடர்ச்சியாக வெளிவராமைக்கு ஒருசில காரணங்களாக அமைந்துள்ளன. எப்படியாயினும் ஆளற்ற தனித்த தீவுகள் போல் ஆகிவிட்ட புலம்பெயர் படைப்பாளிகளின் உணர்வுகளைப் பதிவு செய்ய இந்தச் சஞ்சிகை வெளியீடுகள் ஒரு களமாக அமைந்துள்ளன. அந்த வகையில் ஒரு இதழ் வெளிவந்து நின்று போனாலும்கூட அதற்கூடாக அவர்களின் வாழ்வு பதிவாகி காலம் தாழ்த்தியேனும் உரியவர்களுக்கு கிடைக்க ஒர் ஊடகமாகவே இவை அமைந்திருக்கின்றன. இந்த முயற்சிகள் வரவேற்க வேண்டியனவே.
இணைய சஞ்சிகைகள்
கடந்த ஆண்டுகளில் அச்சு வடிவத்தில் வெளிவந்த சஞ்சிகைகளின் வரவு குறைந்துவிட்ட நிலையிலே தகவல் தொழில்நுட்பத்தை புலம்பெயர் படைப்பாளிகள் மிகப் பயனுள்ளதாக பயன்படுத்துவதற்கு சான்றாக தற்காலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் இணைய சஞ்சிகைகளைக் குறிப்பிடலாம்.
ഉത്ഭവb உலைவும் (புலம்பெக் படைப்பிலக்கியம் குறித்த பந்வைகள்)= 5 4

"இணைய வலைப்பதிவுகள்’ என்றதொரு புதிய அத்தியாயம் அண்மைக்காலத்தில் உலகெங்கும் வலுப்பெற்று வருகின்றது. இணையத்தில் ஒவ்வொருவரும் தத்தமக்கெனத் தனியான வலைப்பதிவுகளை (blogs) உருவாக்கிஉலாவ விட்டுள்ளனர்.அதேபோல எழுத்தாளர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட வலைப்பதிவுகள் உள்ளன. இது இந்தியாவிலேயே மிக அதிகம் என்றும் கூறப்படுகின்றது. அவ்வாறானதொரு நிலையினை இணையத்தில் உலாவரும் சஞ்சிகைகளும் தனித்தனியான இணையத்தளங்களும் நிரூபிக்கின்றன.
2000க்குப் பின்னரே அதிகமான இணைய சஞ்சிகைகள் வெளிவரத் தொடங்கின. அவற்றுள் ஏற்கனவே அச்சுவடிவம் பெற்றவை தவிர அதிகமும் புதிய பெயர்களைத் தாங்கியே வெளிவருகின்றன. ஏறக்குறைய ஐம்பதிற்கும் அதிகமான இணைய சஞ்சிகைகள் புகலிடத்தில் வெளிவருகின்றன. இது மேலும் அதிகரித்துக்கொண்டுசெல்கின்றபோக்குத்தான் தற்போது உள்ளது. தமிழகத்தினைச் சேர்ந்த சு.துரைக்குமரன் இணைய சஞ்சிகைகளைப் பற்றி முனைவர் பட்டத்திற்காக பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஆய்வு ஒன்றினையே மேற்கொண்டுள்ளார். இந்தச் செயற்பாடு இணைய சஞ்சிகைகளின் வளர்ச்சியை நாம் நினைத்துப் பார்ப்பதற்கு ஒரு மேலதிக தகவலாக அமைகின்றது.
இணைய சஞ்சிகைகளில் பல தமிழகத்திலிருந்தும் புலம்பெயர் எழுத்தாளர்களிடம் இருந்தும் வெளிவருகின்றன. இவற்றுள் இரண்டையுமே பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு படைப்பாளிகள் கலந்துறவாடுவது தெரிகின்றது. இது ஈழத்தமிழ் இலக்கியம் சர்வதேசிய இலக்கிய உலகு என்னும் பெரும்பரப்புக்குள் கலந்துறவாடும் நிலையாகக் கொள்ளலாம். திண்ணை இணையத்தளத்தில் தமிழகப் படைப்பாளிகளுடன் அதிகமான புலம்பெயர் படைப்பாளிகளும் எழுதிவருகின்றனர். இவை தவிர மரத்தடி, ஆறாம்திணை, தோழி, அம்பலம், கீற்று என இன்னமும் பல தமிழக இணைய சஞ்சிகைகள் வெளிவருகின்றன.
"உலகில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் இடத்தால் வேறுபட்டு பண்பாட்டு நாகரிக மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும் தமிழால் தமிழ் இணையத்தால் இன்று ஒன்றுபட முடிகிறது. இதற்குப் பெரும் பங்காற்றி வருவன தமிழ் இணைய இதழ்கள்." (சு.துரைக்குமரன். : 2006 யூலை 13, thinnai.com) ance,66Oagfood 55

Page 38
என்ற மேற்படி துரைக்குமரனின் கூற்றுக்குப் பொருந்துவதுபோல் புலம்பெயர்ந்தவர்களின் இணைய சஞ்சிகைகள் விளங்குகின்றன. புலம்பெயர் படைப்பாளிகளின் இணைய சஞ்சிகைகளாக பதிவுகள், அநிச்ச, வார்ப்பு, தமிழ் அலைகள், அலைகள், உயிர்நிழல், எக்ஸில் லீவர், சாரல், ஊடறு, சத்தியக்கடதாசி,நிச்சாமம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவை தவிர ஒவ்வொரு எழுத்தாளருமே தமக்கெனப் புதிய தளங்களையும் ஆரம்பித்துவருகின்றார்கள்.பொ. கருணாகரமூர்த்தி தனது படைப்புக்களை தமிழ்க் குடில்’ என்ற தளத்தில் இணைக்கத் தொடங்கியுள்ளார். ஷோபாசக்தியின் கொரில்லா நாவலை அவரின் சத்தியக் கடதாசி (Satiyakadatasi.com) தளத்தில் முழுவதுமாக வாசிக்கக் கூடியதாக உள்ளது. அதேபோல் கனடாவில் இருந்து எழுதும் வ.ந.கிரிதரனின் பதிவுகள் (pathivukal.com) தளத்தில் அவரது நூல்களை வாசிக்க முடியும்.சேரனின் எழுத்துக்கள் சிலவற்றை அவரது தளத்தில் (cheran.net) பார்க்கக்கூடியதாக உள்ளது. இவையெல்லாம் இலத்திரனியல் ஊடகம் நமக்குத் தந்துள்ள இலகுவான வழிவகைகளாகும்.
எனினும் இணைய சஞ்சிகைகளில் வெளிவரும் படைப்புக்களின் போதாமை குறித்த கருத்துக்களும் இலக்கிய உலகில்பேசப்படுகிறது. இதில் ஓரளவு உண்மையும் உண்டு என்பதனை இணைய சஞ்சிகைகளைப் பார்வைக்கு உட்படுத்துபவர்கள் அறிவார்கள். மேலும் இணைய சஞ்சிகைகளின் அமைப்பு, அவற்றின் எழுத்துரு என்பனவும் இவற்றின் சில குறைபாடுகளாக உள்ளன. "யுனிக்கோட் எழுத்துருவுக்கு அதிகமானவர்கள் மாறியுள்ள போதிலும் இவற்றை இன்னமும் கருத்திற் கொள்ளாத இணைய இதழ்கள் வாசகர்களை சிரமத்திற்கு உள்ளாக்குகின்றன.
தொகுப்பாக
எனவே புலம்பெயர் இலக்கியம் பற்றிய முழுமையான ஆய்வு முயற்சிகளின்போது புலம்பெயர் சஞ்சிகைகளின் பண்பும், அவற்றின் பணியும் மதிப்பீட்டுக்கு உட்படுத்த வேண்டியனவாக அமைந்துள்ளன. அந்தவகையில் இன்று பல தடைகளையும் தாண்டி பொறுப்புணர்வுடன் வெளியிடப்படும் சஞ்சிகைகள் மூலமாகவே சமகால புலம்பெயர் படைப்புக்களின் செல்நெறியை அறிந்து கொள்ள முடியும். அவற்றின் கனதியும் தொடர்ச்சியான வருகையும் தமிழ்ச் சூழலுக்கு மிக முக்கியமாக அமைந்துள்ளது.
്തബ് .തബ് (Gൾ uത്_( ക്ര8 (= 56

புலம்பெயர் சஞ்சிகை பத்திரிகைகள் புலம்பெயர் இலக்கியத்தின் தோற்றுவாய்க்கு 80 களின் நடுப்பகுதியில் இருந்து தமது பணியை ஆற்றத் தொடங்கியுள்ளன. இன்று அவற்றில் பெரும்பாலானவை நின்றுபோன பிறகும்கூட அவை பதித்துச் சென்ற தடங்கள் முக்கியமானவை. அவற்றின் படிப்படியான வளர்ச்சியினாலேயே ஈழத்தமிழர்களின் உணர்வுகள் பேசப்பட்டன. தமிழகம் தாண்டியும் அனைத்துலக மட்டத்திற்கு ஈழத்தமிழ் இலக்கியத்தை அவை கொண்டு சென்று சேர்த்துள்ளன. இவையெல்லாம் புலம்பெயர் இலக்கியப் பரப்பில் சாதாரணமாகத் தட்டிக்கழிக்க முடியாதவை என்பதும் எதிர்காலத்தில் ஆய்வு முயற்சிகளுக்கு வழிசமைக்கக்கூடியவை என்பதும் முக்கியமான குறிப்பாகும்.
(பிரான்ஸ் சஞ்சிகைகள் பற்றிய மேலதிக தகவல்களைத் தந்துதவிய ஷோபாசக்திக்கு நன்றி)
令令令
ംക്ര6ങ്ങൺവന്റെ = 57

Page 39
புலம்பெயர் தமிழ்ப்படைய்புலகில் மொழிபெயர்ப்புமுயற்சிகள்
தமிழ்ப் படைப்புலகில் காலத்திற்குக் d5(T6)f மொழிபெயர்ப்பு முயற்சிகள் நடந்தேறிய வண்ணம் உள்ளன. : இதன் ep6)f தமிழ்ப் படைப்புலகமும், பிறமொழிப் படைப்புலகமும் ஒன்றுடன் ஒன்று ஊடாடி அவற்றின் இலக்கிய நீட்சிக்குச் செழுமை சேர்த்துள்ள வரலாறுகளும் உள்ளன.
இவ்வகையில் ஈழத்தமிழர் புகலடைந்த நாடுகளில் இருந்து படைத்துவரும் மொழிபெயர்ப்பு முயற்சிகளை அடிப்படையாகக் கொண்ட அறிமுகக் குறிப்பாகவே இக்கட்டுரை அமைகின்றது. தமிழ்ப்படைப்புலகு தனது படைப்புச்
ഉത്) തങ്ങഖ ((ൾ (& n് തഖ8ീ= 58

செல்நெறியை விரிந்த ஒரு தளத்திற்கு இட்டுச் செல்லவும் உலக மானிடத்தின் அறிதல்களைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்க்கவும் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் சாதகமாக அமைந்துள்ளன.
ஈழத்தமிழர்கள் இன்று புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் கனடாவும் அவுஸ்திரேலியாவும் மிக முக்கியமானவை. பல்லின கலாசாரத்தைக் கொண்ட இந்நாடுகளில் பல மொழிகள் பேசப்பட்டு வருகின்றபோதிலும், இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் ஆகிய மொழிகளின் செல்வாக்கேமிகுதியாக உள்ளது. ”
இவ்வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், டேனிஸ், பின்னிஷ், ஆகிய மொழிகளில் கவிதை, புனைகதை, காவியம், கட்டுரை, ஆகிய இலக்கிய வடிவங்களில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் நடந்தேறி வருகின்றமை அறியக் கூடியதாக உள்ளது.
உலக இலக்கியப் பரப்பில் வைத்துப் பார்க்கின்றபோது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு மிகச் சொற்பமாகவே இவை அமைந்தாலும் மிக முக்கியமானவையும்கூட. அவற்றைப் பிறமொழிகளில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும் இலக்கிய வடிவங்கள் எனவும், தமிழில் இருந்து பிறமொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படும் இலக்கிய வடிவங்கள் எனவும் இரண்டாகப் பகுத்து நோக்கமுடியும்.
ஈழத்திலும் தமிழகத்திலும் மேற்கொள்ளப்படும் மொழிபெயர்ப்பு முயற்சிகளோடு புலம்பெயர்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் கவனத்திற்கு உட்படுத்தத் தக்கவை.
தமிழ் அநுபவப் படைப்பு ஒன்று பிறமொழிப் பரிச்சயம் பெற்ற தமிழ்ப் படைப்பாளிகளால் இலக்கு மொழிக்கு நேரே மொழிபெயர்க்கப்படும் முயற்சியும் அங்கு நடந்தேறி வருகின்றது. பிரான்சில் வாழும் கலாமோகன் பிரெஞ்சில் எழுதிய ET DEMAN என்ற கவிதைத் தொகுப்பும், இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் ஏ. சிவானந்தனின் WHENMEMORYDES என்ற ஆங்கிலநாவலும் குறிப்பிடத்தக்கன. இவை துறை சார்ந்தவர்களால் தனித்து நோக்கத்தக்கவை.
ംക്ര6ഞ്ഞുൺയര് = 59

Page 40
கனடாவில் வாழும் செல்வா கனகநாயகத்தைத் தொகுப்பாளராகக் Gd5T60iif(6 LUTESONG AND LAMENT (u Tupogub (UTsub) 6T6ögbbits) 8560TLIT TSAR பதிப்பகத்தால் 2002இல் வெளியிடப்பட்டது. 33 ஈழ புலம்பெயர் தமிழ்ப் படைப்பாளிகளின் படைப்புகளை உள்ளடக்கிய இத்தொகுதியினை சுரேஷ் கனகராஜா, ஏ.ஜே.கனகரட்ணா, லஷ்மி- ஷோம்ஸ்ரோம், செல்வா கனகநாயகம், சோ. பத்மநாதன், எஸ். இராஜசிங்கம், எஸ். திருநாவுக்கரசு ஆகியோர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். ஈழத்தமிழர்களின் வாழ்வியலை, அவர்களின் அனுபவத்தை வெளிப்படுத்தும் படைப்புக்களை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்வதற்கு இது போன்ற முயற்சிகள் அவசியமானவை.
ஜெர்மன் மொழிக் குடும்பத்தில் ஒன்றான டேனிஷ் மொழியினை மூலமொழியாகக் கொண்ட அணசன் எழுதிய கதைகளில் இருந்து 30 கதைகளை உள்ளடக்கியதாய் (1996), பாட்டி(2001),ஆகிய இரண்டுகதைத் தொகுப்புக்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
"அனசன் குழந்தைகளுக்கான கதை சொல்லியாகத் தம்மை எளிமைப்படுத்திக் கொண்டு மனித குலத்தை ஆட்டிப் படைக்கும் அனைத்து மனித ஆசைகளையும்,
பேராசைகளையும் அவற்றால் ஏற்படும் விளைவுகளையும் சோகங்களையும் பூரணமாகத் தரிசிக்கச் செய்தவர்”
என இக்கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்த டென்மார்க்கில் வாழ்ந்து வரும் த. தர்மகுலசிங்கம் குறிப்பிடுகின்றார்.
காலனித்துவ ஆட்சியின் விளைவாக அமெரிக்க, இங்கிலாந்து ஆங்கில இலக்கியம் தமிழ் வாசகர்களுக்குப் பரிச்சயமான அளவுக்கு அவுஸ்திரேலிய, ஆபிரிக்க ஆங்கிலம் மூலம் எழுதப்பட்ட படைப்புக்கள் பரிச்சயமானவை குறைவு என்ற கருத்து தமிழ்ச் சூழலில் உண்டு. இந்நிலையில் அவுஸ்திரேலிய சிறுகதை உலகில் முக்கியமானவராகக் கருதப்படும் ஹென்றி லோசனின் சிறுகதைகளை அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும்நவீனன்இராசதுரை ஹென்றிலோசன் கதைகள்' என தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
ஈழத்தவரான அழகு சுப்பிரமணியம் இங்கிலாந்தில் வாழ்ந்தபோது ஆங்கிலத்தில் படைத்த பலப்டைப்புகளை ஆங்கில இலக்கிய உலகு நன்கு அறியும். எனினும் தமிழ் வாசகப் பரப்புக்குள் அழகு சுப்பிரமணியத்தின் படைப்புகளைக் கொண்டு வந்து சேர்த்த பெருமை மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான அமரர் ராஜரீகாந்தனையே
ഉതബർ ത് Claudô6ww. uccesoulèdiau halbwdô (253g unigolauso) 60

சாரும். இவரால் நீதிபதியின் மகன் (1999) என்ற சிறுகதைத் தொகுப்பும் Mr. Moon (மல்லிகையில் தொடராக வெளிவந்தது) என்ற நாவலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
காலனித்துவ ஆட்சிக் காலத்திலேயே ஆங்கிலத்தில் பயின்று கனடாவுக்குப் புலம் பெயர்ந்து வாழும் afuu TLĎ Gaf6565 g560) Jugoi Funny Boy என்ற நாவலும் மிக முக்கியமா னதாகும். தனித்தனியான ஐந்து குறுநாவல்களின் தொகுப்புப்போல் தோற்றம் தரும் இந்நாவலினை விசித்திரமான பையன்’ என தமிழில் எஸ். கே. விக்கினேஸ்வரன் மொழிபெயர்த்துள்ளார். இதன் ஒரு பகுதி சரிநிகரில் (2000) தொடராக வெளிவந்தது.
ஒருபாலுறவு அரசியலும், ஈழத்தமிழரின் வாழ்வின் அரசியலும் கலந்தநாவல் என குறிப்பிடப்படும் Funny Boy ஏற்கனவே சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவின் இபோ இனப் பழங்குடியினரின் வாழ்வு அயலவரின் வருகையையொட்டி மாற்றத்திற்கும் சிதைவுக்கும் உட்படும் நிலையினைச் fjögfajög5b Chinua Achbe uî6õT Thing Fall Apart 6T6g3 b6J6ög5ôpG5 வந்துள்ளது. இதனை கனடாவில் வாழ்ந்து வரும் என். கே. மகாலிங்கம் "சிதைவுகள் (1998, காலம் வெளியீடு) எனத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
ஈழப்போராட்டத்தைக் கருவாகக் கொண்ட North South and Death என்ற நாவலை அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பாமினிசெல்லத்துரை ஆங்கிலத்தில் படைத்துள்ளார். இதனை "சிதறிய சித்தார்த்தன் (2000) என சபா இராஜேந்திரன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதேபோல் ஷோபா சக்தியின் “Glasmifle 6).T என்ற நாவல் ஆங்கிலத்திலும்
ംക്ര6ഞ്ഞുൺബൺ - 61

Page 41
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கொரில்லா தமிழில் வந்தபோது தமிழ் நாவல்களில் மிகுந்த கவனிப்புக்கு உள்ளாகியது. அதற்கு அது அரசியல் நாவல் என்பது முக்கிய காரணமாக இருந்துள்ளது. இவ்வாறான படைப்புக்கள் மூலமாகத் தமிழ் அநுபவம் உலக மொழிகளுக்கு செல்லும் வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன.
எலியாஸ் லொன்ரொத்தின் (Elias Lonrot) 'கலேவலா’ என்ற பின்லாந்தின் தேசிய காவியம் தமிழில் மொழிபெயர்க் கப்பட்டுள்ளது. இதனை பின்லாந்தில் வாழ்ந்துவரும் ஆர். சிவலிங்கம் (உதயணன்) பின்னிஸ் மூல நூலில் இருந்து நேரடியாகத் தமிழாக்கம் செய்து ள்ளார். பின்லாந்து நாட்டு மக்களின் கலாசாரப் பொக்கிசமாயப் க் கருதப்படும் கலேவலா வாய்மொழி sighbough மரபில் இருந்து வந்த கவிதைகளால் ፵፰5ድ*ግmድ። ஆக்கப்பட்ட காவியம் ஆகும்.
ఆళ ఓ శీటిళt
இதன் தமிழ் மொழிபெயர்ப்பு 30 வது மொழிபெயர்ப்பு என்பதும் கலேவலாவின் சிறப்புக்களில் ஒன்றாகும்.
தமிழ் அநுபவப் படைப்புலகு சர்வதேசியப் படைப்புலகில் காலடி பதிக்கவும் உலகின் சிறந்த படைப்புக்கள் தமிழுக்கு வந்து செழுமை சேர்க்கவும் இவ்வாறான மொழிபெயர்ப்பு முயற்சிகள் அவசியமாயுள்ளன. இவற்றினூடாக அனைத்துலகச் சமூகத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்குரிய வாய்ப்புக்கள் இலக்கியத்தினூடாக ஏற்படும் என்று கருதலாம்.
令令今
9ങ്ങബർ .ഞങ്ങഖ ((ൾ ശ്ചLá ng (= 62
 

புலம்பெயர் தமிழ்ப்படைய்புலகில்
பிரதேசச் செல்வாக்கு
കംക്ര6ഞ്ഞുൺവങ്ങ് -
புலம்பெயர் படைப்பிலக்கியம் தோற்றம் பெற்று இற்றைக்கு இரண்டு தசாப்தங்களைக் கடந்து விட்ட போதிலும் இவ் இலக்கியம் பற்றிய தேடல் இன்னமும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.இதனை நுணுகி நோக்கும்போது இன்னமும் பல வெளிச்சங்கள் எங்களுக்குத் தென் படும். அந்த வகையிலே இக்கட்டுரை யானது புலம்பெயர் தமிழ்ப் படைப் புலகில் பிரதேசச் செல்வாக்கினை ஆராய்வதற்கான ஓர் அறிமுகக் குறிப்பாகவே அமைகின்றது.
1983 இன் பின்னர் இலங்கையில் உத்வேகம் பெற்ற இனவுணர்வுச் சூழல் பெருமளவான ஈழத் தமிழர்களை மேற்குலக நாடுகளை நோக்கிப் புலம்பெயர வைத்தது.
63

Page 42
புலம்பெயர் இலக்கியம் என்ற வரையறைக்குள் நவீன இலக்கிய வடிவங்களாகிய கவிதை சிறுகதைநாவல் ஆகியவற்றையே முதன்மையாக கருத்திற் கொள்கின்றோம். அவற்றின் உள்ளடக்க ரீதியான பண்புகளைச் சுட்டும்போது ஒரு பொதுமைக்குள் நின்றுகொண்டே இதுவரை விவாதித்திருக்கின்றோம்.
ஈழத்து இலக்கியத்தின் போக்கினை மதிப்பிடும்போது எவ்வாறு பிரதேச அலகுகளை மனங்கொண்டு எமது மதிப்பீட்டினை முன்வைக்கிறோமோ அதேபோல் ஈழத்தமிழர் புலம்பெயர்ந்த பிரதேசங்களை மனங்கொண்டு புலம்பெயர் இலக்கியம் பற்றிய மதிப்பீட்டினை முன்வைக்கும்போது சில தெளிவீனங்கள் விடுபட வாய்ப்பு ஏற்படும் என்று கருதலாம்.
ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற மூன்று கண்டங்களிலும் (அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா) உள்ள நாடுகளின் சமூக பொருளாதார அரசியற் சூழலியற் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு புலம்பெயர் இலக்கியம் குறிக்கும் உள்ளடக்கத்தை மிக நுண்மையாக வகைப்படுத்தவும் முடியும்.
அவுஸ்திரேலியா தனியாகவும், அமெரிக்காக் கண்டத்திலுள்ள கனடா, அமெரிக்கா தனித்தனியாகவும், ஐரோப்பாக் கண்டத்திலுள்ள மேற்கு ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா,பிரான்ஸ், சுவிஸ்,ஜேர்மனி, இத்தாலி ஸ்கண்டிநேவிய நாடுகளான நோர்வே, டென்மார்க், நெதர்லாந்து, பின்லாந்து, சுவீடன், ஆகியவற்றைத் தனித்தனியாகவும் நோக்க முடியும்.
புலம்பெயர் படைப்புலகின் உள்ளடக்கத்தினை தாயகநினைவு, அகதிநிலை, தொழிற்தள அநுபவம், புதிய பண்பாட்டுச் சூழல், நிறவாதம், இனவாதம், புவியியற்சூழல், வித்தியாசமான வாழ்வுலகு, அந்நியமயப்பாடு, அனைத்துலக நோக்கு என பொதுமைப்பண்பிற்கூடாகச் சுட்டினாலும் இவை எல்லாநாடுகளுக்கும் பொதுவானவை என்று கருதமுடியாது. சிலநாடுகளில் இருந்து வருகின்ற படைப்புக்களில் சில பண்புகள் மிக அதிகமாகவும் மற்றைய நாடுகளில் இருந்து வருகின்ற படைப்புக்களில் இப்பண்புகள் மிகக் குறைவாகவும் இருப்பதற்கு வாய்ப்புண்டு.
உதாரணமாக இனவாதம் நிறவாதம் சார்ந்த பிரச்சினைகளை ஜேர்மனியிலும் கனடாவிலும் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் நிலைப்பாடுகளுக்கு இடையில் வேறுபாடுகள் உள்ளன. அதேபோல் பிரான்ஸ், ஜேர்மனி சுவிஸ் ஆகிய நாடுகளில் மொழிசார்ந்து
ഉഞ്ഞങ്ങഖ ഞഗേഖ) (മൾ ശ്ചLá ng (= 64

தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் இலண்டன் கனடா அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. இதேபோல் புவியியல் சார்ந்த இயற்கை அமைப்பிலும் வேறுபாடு உள்ளது.
இவற்றைத் தனித்தனியான நுண்ஆய்வின் மூலமே கண்டுகொள்ள முடியும். இதற்கு அமைவாக இக்கட்டுரையானது ஈழத்துப் பிரதேச செல்வாக்கு எவ்வாறு புலம்பெயர் படைப்புலகில் காணப்படுகின்றது என்பதனை ஓர் ஆரம்ப கட்ட முயற்சியாக எடுத்துக் காட்ட முயல்கின்றது.
முதலில் கவிதைகளில் நோக்குவோம்.
"பலா இலை மடித்துக் கோலி ஈர்க்கில் துண்டை முறித்துச் செருகி ஒடியல் மீன் கூழை வார்த்து அம்மா அப்பா தம்பி ஆச்சி என சுற்றமும் சூழ இருந்து உறிஞ்சிக் குடித்த நாட்கள்"
என்று தன் உறவுகளுடன் சொந்த மண்ணில் இருந்து மகிழ்வாக உண்டு களித்த நாட்களை நினைவுகளாக மீட்டுப் பார்க்கின்றார் கவிஞர் செழியன். இங்கு எமது மண்ணுக்கேயுரிய உணவுப் பழக்கம் எடுத்துக் காட்டப்படுகின்றது.
தாயகத்தை விட்டுப் பிரிந்து புவியியற் சூழலிலிருந்து பெரிதும் வேறுபட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ முற்படும்போது, சொந்தநாட்டு மண்மீதான நினைவும் ஏக்கமும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஏற்படுதல் தவிர்க்க முடியாததாகும். பனிநிறைந்த வீதிகளும் வானளாவிய கட்டடங்களும் நிறைந்த தேசத்திலே இயந்திர வாழ்வுடன் போராடி மூச்சுத் திணறி வாழும் வாழ்க்கையிலே கவிஞர்கள் தமது தேசத்தை ஏக்கத்துடன் நினைத்துப் பார்க்கின்றார்கள்
தாயக மண்ணின் இயற்கை அழகும் அதனோடு இயைந்த வாழ்வும் நினைவுகளை மீட்கின்றன. கிடுகுவேலி, பனைவடலி, கிணறு, வயல், வீடு, முற்றம், கோவில் எல்லாமே நினைவுகளாகின்றன. இதனாலேயே கவிஞர்
കംക്ര6ഞ്ഞുൺവൽ - 65

Page 43
செல்வம் கட்டிடக் காட்டுக்குள் என்ற கவிதையில் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றார்.
"சிறுகுருவி வீடு கட்டும் தென்னோலை பாட்டிசைக்கும் சூரியப் பொடியன் செவ்வரத்தம் பூவை புணரும் என் ஊரில் இருப்பிழந்தேன். அலை எழுப்பும் கடலோரம் ஒரு வீடும் செம்மண் பாதையோரம் ஓர் தோட்டமும் கனவுப் பணம் தேட கடல் கடந்தோம் நானும் நாங்களும் அகதித் தரையில் முகமிழந்தோம்.”
என்று கட்டிடக் காடாகிப் போன அந்நிய தேசத்தில் வாழ்ந்து கொண்டு ஊரின் நினைவினை மீட்டுப் பார்க்கின்றார். தாயக மண்ணுடனான உறவில் இருந்து பிரிந்து ஆண்டுகள் பலவாகிய பின்னரும் காலவெள்ளம் எதையெல்லாம் புரட்டிப்பார்க்கின்றது என்பதனை பின்வரும் கவிதை வரிகள், ஊடாக நோக்கலாம்.
பிடுங்கி எறியப்பட்டு ஆண்டுகள் பத்தாயிற்று நான் புரண்ட செம்பாடு வியர்வையில் குழைத்து எழுப்பிய வீடு மூலைக் கன்று மா முற்றத்துமல்லிகை
எஞ்சிக் கிடந்த அப்பாவின் புகைப்படம் ஊர் சுற்றக் கிடைத்த சைக்கிள் கட்டை சூரன் நாய் காலவெள்ளம் எதையெல்லாம்
புரட்டிச் செல்கிறது." அலைவும் உலைவும் (புலம்பெக் படைப்பிலக்கிம் குறித்ர பந்வைகள்)- 66

என்று பனிவயல் உழவு தொகுப்பின் முன்னுரையில் கவிதை வரிகளாகவே திருமாவளவன் எழுதுகின்றார். இவ்வாறாக ஈழத்து மண்ணின் வாழ்வும் வளமும் தாயக நினைவு சார்ந்த கவிதைகளிலே பிரதேசச் செல்வாக்குடன் பதிவுபெறுவதனை கண்டு கொள்ளலாம்.
இதேபோல் புனைகதைகளில் ஈழத்துப் பிரதேச செல்வாக்கு எவ்வாறு பதிவு பெற்றுள்ளது என்பதனையும் நோக்கமுடியும்.
அ. இரவியின் காலம் ஆகி வந்த கதை' என்ற சிறுகதைத் தொகுப்பில் யாழ்ப்பாண மண்ணுக்கேயுரிய பண்பாட்டு அம்சங்களைக் கண்டு கொள்ள முடியும். ஒரு சிறுவனின் உளநிலையில் கூறப்படும் கதையூடாக கதைக்குரிய காலத்தையும், எம் மண்ணுடன் இரண்டறக்கலந்தவாழ்வையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றார்.
பிள்ளைப் பருவ நினைவுகளுடாக (Child hood) பாடசாலைப் பருவ வாழ்க்கை, கோயிற் சம்பவங்கள், ஊர் நினைவுகள் (இதனுள் கோயிற்பண்பாடு, சமூகத்தொடர்பு, மரபு, நம்பிக்கை, கலை என்பன ஊடுபாவாக கதைகளில் உள்ளடங்கியுள்ளன) என எல்லாவற்றையும் சம்பவங்களாக அடுக்கிச் செல்கிறார். ஈழத்துப் படைப்பிலக்கியத்திலே இவ்வாறான பிள்ளைப் பருவ நினைவினுடாக, பிரதேசச் செல்வாக்குடன் கதைகூறியவர்கள் மிகக் குறைவென்றே கூறலாம்.
இதேபோல் அ.முத்துலிங்கத்தின் பல சிறுகதைகள் யாழ்ப்பாண மண்ணின் மணங்கமழ சித்திரிக்கப்பட்டுள்ளன. முத்துலிங்கத்திடம் புறவுலகம் சார்ந்த சித்திரிப்பு மிக நுண்மையாக இருந்தபோதும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் இரத்தமும் சதையுமான வாழ்வனுபவம் மிகக் குறைவு என்றே கூறலாம். ஷோபாசக்தி, குமார்மூர்த்தி(மறைவு), சக்கரவர்த்தி, பொ.கருணாகரமூர்த்தி ஆகியோர் காட்டுகின்ற புலம்பெயர் வாழ்வனுபவத்திற்கும் முத்துலிங்கம் காட்டுகின்ற புலம்பெயர் வாழ்வனுபவத்திற்கும் இடையில் நிரம்ப வேறுபாடுகள் உள்ளன.
முத்துலிங்கத்திடம் காணக்கூடிய பல விசேட அம்சங்களில் ஒன்றாக ஈழத்து அடுக்கமைவுகளைத் தீண்டாத கதைகூறும் பாணி மிக முக்கியமானது. முத்துலிங்கத்தின் மனக்கிடங்கின் ஆழத்திலிருந்து வெளிப்படும் பல கதைகளில் யாழ்ப்பாணத்து வாழ்வினோடு ஒட்டிய பிரதேசச் 67 = أشهورموعته6همه

Page 44
செல்வாக்கைக் கண்டு கொள்ள முடியும். தில்லையம்பல பிள்ளையார் கோயில், அம்மாவின் பாவாடை ஆகிய கதைகளை இவற்றுக்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம்.
"அப்பா முன் சீட்டில் இருந்து சுருட்டைப் பற்ற வைத்தார். வுட்போட்டில் நின்றபடி ஒரு கை உள்ளே பிடிக்க, மறு கை வெளியே தொங்க சின்னமாமா சிகை கலைய, அங்கவஸ்திரம் மிதக்க ஒரு தேவதூதன் போல பறந்து வந்தார். அந்தத் தருணத்தில் எனக்கு சின்னமாமாவிடம் இருந்த மதிப்பு பன்மடங்கு பெருகியது." (தில்லையம்பல பிள்ளையார் கோயில்)
“காரைக் கண்டதும் கட்டை வண்டிகள் எல்லாம் ஓரத்தில் நின்றன. சைக்கிள்காரர்கள் குதித்து இறங்கி வழிவிட்டனர். மூட்டை சுமப்பவர்களும், பாதசாரிகளும் வேலிக் கரைகளில் மரியாதை செய்து ஒதுங்கினார்கள். இன்னும் பலர் வாயை ஆவென்று வைத்துக் கொண்டு, காரின் திசையை அது போய் பல நிமிடங்கள் சென்ற பின்னும், பார்த்தபடி நின்றார்கள். டிரைவர் பல சமயங்களில் பாதசாரிகளின் வேகத்தை ஊக்குவிக்கும் முகமாக பந்துபோல உருண்டிருக்கும் ஒலிப்பானை அமுக்கி ஓசை உண்டாக்கினார்." (தில்லையம்பல பிள்ளையார் கோயில்)
இன்னோர் புறமாக, முத்துலிங்கம் தன் உலகளாவிய பயண அநுபவத்தின் மூலம் தமிழுக்குத் தரும் புதிய கதைகள் கவனத்திற் கொள்ளத்தக்கவை. அவை அந்தந்தநாட்டுப்பிரதேசஅனுபவங்களாக விரிகின்றன.பாகிஸ்தான் பிரதேச அநுபவத்திற்கூடாகக் கூறப்படும் ஒட்டகம் கதை இதற்கு நல்ல உதாரணமாகும். இதேபோல் ஏனையநாட்டு அனுபவங்களினூடாகவும் வரும் பல கதைகள் இவரிடம் உள்ளன. இவையெல்லாம் தனித்த பார்வைக்குரியன.
இலண்டனில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற விமல் குழந்தைவேலின் அசதி தொகுப்பிலுள்ள பல சிறுகதைகள் மட்டக்களப்பின் அக்கரைப்பற்று கோளாவூர் பிரதேசங்களை உள்ளடக்கிய தென்கிழக்குப் பிரதேசச்
அலைவும் உலைவும் (புலம்பெக் படைப்பிலக்கியம் குறித்த பார்வைகள்) 68

செல்வாக்கினை நமக்குக் காட்டுகின்றன. இவரின் அசதி தொகுப்பிலுள்ள ஆச்சியும் பூசாரியும், சின்னாம்பி, அசதி, பேய் நாவை, வெள்ளாவி ஆகிய சிறுகதைகள் சிலவற்றை எடுத்துப் பார்க்கலாம்.
விமல் குழந்தைவேலிடம் ஈழத்தின் கிராமியச் செல்வாக்குடன் கூடிய வாழ்வனுபவம் அவரின் படைப்புக்களுடாக வெளிப்படுதல் மிக முக்கியமானது. மரபுகள், நம்பிக்கைகள், வழக்காறுகள், என்பவற்றுடன் அவர் கையாளும் வட்டார வழக்கு மொழிநடையும் முக்கியமானது.
இதேபோல்தான் இவரின் வெள்ளாவி என்ற நாவலும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இந்நாவலில் இலங்கையின் தென்கிழக்குப் பிரதேசத்தின் கிராமியச் செல்வாக்கு உள்வாங்கப்படுவதைக் கண்டுகொள்ளலாம். கோளாவில், அக்கரைப்பற்று.தீவுக்காலை, பனங்காடு ஆகிய சிறு சிறு கிராமங்களைச் சுற்றியே கதைக்களம் அமைந்துள்ளது. அப்பிரதேசத்துச் சலவைத்தொழிலாளர் சமூகத்தின் உயிர்த்துடிப்பான வாழ்க்கையும் தலைமுறை தலைமுறையாக அவர்களைச் சுரண்டி வாழும் போடியார் சமூகம் பற்றிய பதிவும் இந்நாவலில் எடுத்துக்காட்டப்படுகின்றது.
இந்நாவலின் மொழிநடைக்கு ஒர் எடுத்துக்காட்டாக,
"முன்னுக்கும் பின்னுக்கும் ரெண்டு பொண்டுகள் குடை பிரிச்சிப் புடிச்சிக் கொண்டு நடக்க, ரெண்டு குடையையும் தொடுத்தாப்போல போட்ட வெள்ளவேட்டி பந்தலுக்குள்ள பலகாரப் பொட்டியளயும் தட்டுக்களயும் எடுத்துக் கொண்டு பொண்டுகள் நடக்க மெல்ல மெல்ல நடந்து வந்த மாப்பிள்ளை ஊட்டாக்கள் பொணி ஊட்டு கடப்படிக்கு வந்ததும் தடுத்து நிறுத்தினாப் போல நகராமல் நிண்டுடுவாங்கள். கேட்டா இவ்வளவு தூரம் நடந்து வந்த மாப்பிள்ளை ஊட்டாக்கள் பொண்ணுரட்டாக்கள் கடப்படிக்கு வந்து வரவேற்று உள்ளுக்கு கூட்டிப்போகோனும் எண்டு சொல்லுவாங்க” (வெள்ளாவி)
കംക്ര6ൽൺഖരി - 69

Page 45
"இண்டைக்கு இரிக்கிற நாம நாளைக்கு இரிப்போமோ எண்டுறது நிம்மளம் இல்லாத சீவியத்துல இன்னும் எத்தின நாளைக்குத்தான் சாதி சனத்தோட பகைச்சிக் கொண்டிருக்கிறதாம். அந்த ஆள்ற கதைய உட்டுப்போட்டு அவங்கள கல்யாணம் செஞ்சிவரச் சொல்லுகா” (வெள்ளாவி)
"பிரித்து வைக்கப்பட்டிருந்த கடதாசிச் சரையில்
பன்னிரெண்டாம் நம்பர் தூண்டில்கள் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன. தங்கூசியை நன்றாக இழுத்து, விரலிடுக்குகளால் நீவி பக்குவமாக தூண்டில்களில் பெருக்கிக் கொண்டிருந்தார் கிழவர். தொழிலின் அநுபவமும், பொறுமையும் அவர் போடும் முடிச்சுக்களின் இறுக்கத்தில் பரிமளிக்கும். ஆகையால் தான் தூண்டில் போடும் கிட்டத்திற்கு அரிப்புக் கட்டி ஈயக் குண்டு போடுவதில் அந்த வட்டாரத்தில் மயிலருக்குத் தனிப்பெயருண்டு.” (சுயம்வரம்)
"இந்த முறை விளைமீன் சீசனை ஒரு கை பார்த்துப்போடவேணும்" என்று நினைத்துக் கொண்டே கிட்டத்தையும் தூண்டில்களைப் பிணைத்திருந்த அரிப்பையும் இணைத்துப் போட்ட பிரதான முடிச்சையும் ஒருமூச்சுக் கொடுத்து இறுக்கிக் கொண்ட்போது, வெளியே அவரது மனைவி ஆச்சிமுத்துக் கிழவி யாரையோ திட்டிக் கொண்டிருப்பது கேட்டது. வேலையைப் போட்டது போட்டபடி விட்டுவிட்டு வெளியே வந்து எட்டிப்பார்த்தார்’ (ðru lö6)]Jufb)
அலைவும் உலைவும் (புலம்பெக் படைப்பிலக்கியம் குறித்த பந்வைகள்)=
மேலே எடுத்துக் காட்டிய ஆசிரியரின் எடுத்துரைப்பு மொழியும் பாத்திரங்களின் உரையாடலும் விமல் குழந்தைவேலின் நாவலில் மிக அருகருகாக வருவதனைக் கண்டு கொள்ளலாம். இந்த வட்டாரத்தன்மை விமல் குழந்தைவேலின் நாவலில் கவனத்திற்கு உட்படுத்தவேண்டியதாகும்.
டென்மார்க்கில் இருந்து எழுதும் கி. செ. துரை சிறுகதைகளும் எழுதி வருபவர். இவரின் திரியாப்பாரை சிறுகதையும் 'சுயம்வரம்' என்ற நாவலும் இவ்வகையில் கவனத்திற்கு உரியனவாகின்றன. சுயம்வரம்’ நாவலில் வடமராட்சி கடற்கரைப் பிரதேச மக்களின் வாழ்வும் அவர்களின் மொழியும் பதிவாகியுள்ளதை அவதானிக்கலாம்.
70

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் தில்லையாற்றங்கரை” நாவலும் பிரதேசச் செல்வாக்கைக் கொண்ட நாவலாகவே அமைந்துள்ளது. குழந்தைப் பருவத்தைத் தாண்டி குமரியாகிக் கொண்டிருக்கும் மூன்று பெண்பிள்ளைகளின் கதையைக் கிராமிய மணங்கமழ சொல்ல வருகின்ற ஆசிரியர் அம்மண்ணுக்கேயுரிய வழிவழியாக வந்த மரபுகளை வழக்கடிபாடுகளை எடுத்துக் காட்டுகின்றார்.
ஷோபாசக்தியின் கொரில்லா' நாவலின் மொழிநடையை தீவகத்திற்குரியது என்ற ஒரு கூற்றும் உள்ளது. இந்நாவலின் மொழி தீவகத்திற்குரியதாக இருந்தாலும் அப்பிரதேசமக்களின் உரையாடல் மொழியும், தமிழ்ப்போராளிகளின் உரையாடல் மொழியும் தனித்தனியான தனித்துவதோடு வெளிப்படுவதனைக் கண்டுகொள்ள
(Pl.9ULD.
"ஹெய் நிலத்தில வடிவா சப்பாணி கொட்டி இரும் ஐஸே காலிலகுந்தியிருந்த ரொக்கிராஜ் பொத்தெண்டுநிலத்தில சப்பாணிகொட்டி சக்கப்பணிய இருந்தான். ‘என்ன சவம் வந்தது வராததுமாய் மாஸ்டரிட்ட ஏச்சு வாங்கிப் போட்டேனே' எண்டு அவன் சரியாய்க் கவலைப்பட்டான்." (கொரில்லா, ப. 66)
"ஐயோ தம்பியவை இஞ்ச ரத்தத்தைப் பார்த்தீங்களோ? நான் பிள்ள குட்டிக்காரன் கண்டீங்களோ? இந்தக் கொரில்லா எண்டுறவன் நெடுக நெடுக கடையில வந்து வெத்திலை, பீடி, சுருட்டு எண்டு நித்தம் ஒரு அரியண்டம் குடுத்துக் கொண்டேயிருக்கிறான். நானும் வயித்துப்பாட்டுக்காய் ஊர் விட்டு ஊர் வந்துகடைதிறந்த இந்த ரெண்டு வரியத்திலயும் ஒரு நாள் எண்டாலும் அவனுக்கு குடுத்த சாமான்களுக்கு ஒரு சதமெண்டாலும் வேண்டியறியன்...” (கொரில்லா, ப. 94)
இந்த இரண்டு உரையாடலுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. ஒரு வகையில் போராளிகளின் உரையாடல் ஈழத்துக்கேயுரிய பொதுவான நியமத்திற்குள் உள்வாங்கப்படுகின்றது. சாதாரண
.ക്രൈബൽ =
71

Page 46
மக்களின் உரையாடலுக்கூடாக ஈழத்துப் பேச்சு மொழிக்கூறுகள் உள்ளவாறே வெளிப்படுகின்றன. இவையெல்லாம் பிரதேசச் செல்வாக்கிற்கூடாகவே கொரில்லாவில் பதிவாகின்றமையை கண்டுகொள்ளலாம்.
ஈழத்தின் தமிழ்ப் பிரதேசங்களில் மக்களின் வாழ்வும் அந்த வாழ்வினோடு இரண்டறக் கலந்துவிட்ட தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளும் மிக அழகாகப் புலம்பெயர் படைப்புக்களில் பதிவு பெற்றுள்ளன. இவை பற்றிய மேலதிக பார்வைகளும் முன் வைக்கப்படவேண்டும்.அதேபோல் புலம்பெயர் படைப்புக்களின் அந்தந்த நாட்டு வாழ்வனுபவங்களும் அப்பிரதேசத்திற்கேயுரிய சிறப்புப் பண்புகளும் எடுத்து நோக்கப்படவேண்டும். அப்போதுதான் பொதுமைப் பண்புகளுள்ளே பல சிறப்புக் கூறுகள் இருப்பதனைக் கண்டு கொள்ள முடியும். அதற்கு ஓர் அறிமுகக் குறிப்பாகவே இக்கட்டுரை அமைந்துள்ளது.
令令令
ഉത്തരവി .ഞങ്ങൂ (( uതLá ng uതലമ=
72

Gшзғішш птgБањ6pgБањ6ѓт
சுமதிருபனின் யாதுமாகிநின்றாள்
acaécoastalled.
நவீன தமிழ் இலக்கியத்தின் மற்றுமொரு வீச்சுமிக்க எழுத்தாக பெண்ணிய எழுத்துக்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. பெண் தனிமனித வாழ்விலும் குடும்ப மற்றும் சமூக வாழ்விலும் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு ஆளாதலும் அந்த ஒடுக்குமுறைகளில் இருந்து விடுபட்டு தனித்தன்மையுடன் வாழத் தலைப்படும் சிந்தனையையும் அதிகமான பெண் படைப்புக்கள் எடுத்துக் காட்டுகின்றன.
புலம்பெயர்ந்து வாழும் பெண் படைப்பாளிகளில் ஒருவராக அறியப்படும் சுமதிரூபன், 1983இல் புலம்பெயர்ந்து தற்போது கனடாவில்
73

Page 47
வாழ்ந்து வருகின்றார். சிறுகதைகளோடு குறும்படத்திலும் ஈடுபாடு கொண்டவர். உஷ், சப்பாத்த,மனமுள்,YoOTo0 ஆகிய குறும்படங்களை புகலிடத்தில் இயக்கியுள்ளார். மனுசியில் நடித்துமுள்ளார். இவரின் யாதுமாகி நின்றாள் என்ற சிறுகதைத் தொகுப்பு 13 கதைகளைத் தாங்கி அவுஸ்திரேலிய மித்ர வெளியீடாக வந்துள்ளது.
இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் பெண்களின் ஒவ்வொரு பிரச்சினையை முன்வைக்கின்றது. சிறுவயதில் இருந்து பெண் என்ற காரணத்தினால் ஆணாதிக்க சமூகத்தின் ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பல பெண்களை கதைகளில் இனங்காண முடிகின்றது.
1.பயண இடைவெளியின்போது உடலும் உளமும் சிதைக்கப்பட்ட பெண்.
2.தமிழ்ச் சமூக மரபிலே தனது தனித்தன்மைகளை இழந்த பெண்.
3.தனிமனித, குடும்ப மற்றும் சமூக வாழ்வில் ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு
ஆளாகும் பெண்.
4. சமூகத் தடைகளை உடைத்து வெளியேறும் பெண்.
ஆகியோர் சுமதிருபனின் கதைகளிலே தம் உணர்வுகளைக் கொட்டிக் கதைசொல்கின்றனர்.மேலைத்தேய கலாசார வாழ்வின் ஒருபாலியல் குறித்த கதைகளும் புதிய கருத்துக்களை முன்வைக்கின்றன.
புலம்பெயர் தமிழ்ப் படைப்புலகில் இதுவரை பேசப்படாத பிரச்சினை ஒன்று இந்தத் தொகுப்பின் ஊடாகத்தான்முதல்முதல் முன்வைக்கப்படுகிறது.இது இலக்கிய உலகில் இதுவரை அதிகம் பேசப்படாத ஒரு பிரச்சினை. அதாவது பயண இடைவெளியின்போது பெண் உடல் சிதைக்கப்படல் இதுவரையில் வேறு தொகுப்பில் அல்லது கதைகளில் இப்பிரச்சினை எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. அதனை சுமதிரூபன் துணிந்து முன்வைக்கின்றார்.
பெண் உடல்பயண இடைவெளிகளில் சிதைக்கப்படல் எழுத்தில் வந்தமை மிகக்குறைவு. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பாரிஸ் கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பில் கி. பி. அரவிந்தனின் கூற்று ஒன்று இதனை மேலும் வலுவாக்குகின்றது.
ഉഞ്ഞുങ്ങഖ ങ്ങബb CavöQuwi ucodulůSavåčáswóð og umeroaaseid 74

" தாயகம் துறந்து தொடங்கப்படும் பயணமானது தங்கள் இலக்கான ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய வலயங்களுக்குள் நுழையும் வரையான காலதுTர இடைவெளியானது துன்பியல்மிகுந்த பெருங்கதையாகும்.இந்தப் பயணகால இடைவெளியில்தான் நமது பெறுமானங்கள், ஏன் பவுத்திரங்கள் எல்லாமே உடைந்து நொறுங்கிப் போகின்றன. இப்பெருங்கதை இதுவரை சொல்லப்படவில்லை.” (பாரிஸ் கதைகள் முன்னுரையில்)
ஆனால், சுமதிரூபனின் யாதுமாகிநின்றாள் என்ற தலைப்புக்கதைஇதனை சொல்லத் தொடங்கியுள்ளது. பயண இடைவெளியில் ஏஜென்சியின் பயமுறுத்தலுக்கு ஆளாகிச் சிதைபடும் பெண் உடல் குறித்த கதை தொகுப்பில் வலிமையான கருத்தினை முன்வைக்கின்றது.
"ஓ... உன்னைப்பற்றித்தான் எனக்குநல்லாத் தெரியமே. வழிப்பா ஆக்களைக் கூட்டிக் கொண்டு வாறன். எங்கட ஆக்களுக்கு ஹெல்ப் பண்னவேணும் எண்டு சொல்லிப் போட்டு தெரியாத இடங்களுக்கு பொம்பிளைகளைக் கூட்டிக் கொண்டு போய் உன்ரை ஆசைக்கு கட்டுப்பட வேணும் இல்லாட்டி அங்கேயே விட்டிட்டுப் போயிடுவன் எண்டு பொம்பிளையளைப் பலி போடுற ஆசாமி நீ. எத்தினை எத்தினை பொம்பிளையஸ் பயத்தால உன்ர ஆசைக்கு பலியாச்சினம். கலியாணம் செய்தவரைக்கூட நீ விட்டு வைக்கேலை. உண்ணால மனம் பாதிச்சு தற்கொலை செய்தாக்களைக் கூட எனக்குத் தெரியும். உன்ர விளையாட்டு எல்லாரிட்டையும் சரிவராது.

Page 48
இந்த ஆர்த்தியைப் போலவும் சில ஆக்கள் இருக்கத்தான் செய்யினம். அப்ப உன்னட்டை அம்பிட்டுப் பயத்திலை பலியாகிப் போனது உண்மைதான் ஆனால் நீ இப்ப பாக்கிற ஆர்த்திவேற. நான் எதுக்கும் துணிஞ்சிட்டன். உன்ர குடும்பத்தைப் பழிவாங்க வேணும் எண்டுதான் உன்ர தம்பியைக் கலைச்சுக்கலைச்சுகாதலிச்சன்.பிறகுதான் தெரிஞ்சுது உன்னட்ட இருக்கிற எந்தப் கெட்ட குணமும் ராகுலிட்ட இல்லை. எனக்கு அவர்தான் புருஷன்.” (யாதுமாகிநின்றாள்)
திருமணத்தின் பின்னர் பெண்கள் தமது தனித் தன்மைகளை இழந்து விடுவதை உணர்த்தும் 'அம்மா இது உன் உலகம்’ என்ற கதையும், குடும்பத்திலும் சமூகத்திலும் ஆணின் வன்முறைக்கும் பாலியல் வக்கிரத்துக்கும் ஆளாகி சமூகத் தளைகளை மீறி வெளியே வரமுடியாத நிலையில் பெண்களின் உணர்வுகள் முடங்கிப் போதலை உணர்த்தும் அகச்சுவருக்குள் மீண்டும், வடுபவர்கட், ஆகிய கதைகளும் பெண்,உடல் உள ரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளாதலைச் சித்திரிக்கும் கதைகளாக அமைகின்றன. இதனாலேதான்,
" வாழ்வு குறித்த கேள்விகளை மட்டுமல்ல பல்வேறு பெண்நிலை நோக்கினுள் விளையும் மோதல்களினதும் பாலியல் உணர்ச்சிகளினதும் சுய கேள்விகளையும் நாம் சுமதிருபனின் கதைகளில் காணமுடியும்." (உயிர் நிழல்)
என சுவிஸ் றஞ்சி குறிப்பிடுகிறார்.
துணிச்சலான பெண் இந்த ஒடுக்குமுறைகளுள் இருந்து வெளியே வந்து விடுகிறாள். அவளுக்கு படிப்பும் தொழில் புரிந்து சம்பாதிக்கும் மனோதிட்மும் வந்து விடுகின்றபோது குடும்பம் என்ற அமைப்பில் இருந்து கூட வெளியேறிவிடுகின்றாள். இந்நிலையில் பெண்; சமூகத்தில் பல எதிர்ப்புக்களையும் சம்பாதித்துக் கொள்கிறாள். இதனையே ஆதலினால் நாம் என்ற கதை உணர்த்துகின்றது.
தனித்தனியே திருமணமான இரண்டு பெண்கள். இருவரும் பிள்ளைகள் உள்ளவர்கள். குடும்பத்தில் கணவன்மாரின் வன்முறையில் இருந்து விடுபட்டு வீட்டைவிட்டு வெளியேறி இரு பெண்களும் பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வாழ்கின்றனர். ஒரு பாலியல் உறவு குறித்த கதையாக உள்ள
ഉരൈ) .തബ് (മഗെ ( G= 76

இக்கதை மேலைத்தேய வாழ்முறையின் தாக்கத்தை பிரதிபலிக்கின்றது. இது எமது தமிழ்ச் சமுகத்தைப் பொறுத்தவரையில் சாத்தியமானது அல்ல. ஆனால் புலம்பெயர் வாழ்வுச் சூழல் தவிர்க்கமுடியாத வகையில் இந்நிலையை ஏற்படுத்திவிடுகின்றது.
குறிப்பாக 70 களின் பின்னர் தோற்றம் பெற்ற தீவிரவாதப் பெண்ணியவாதிகள் குடும்ப அமைப்பையும், சமூக அமைப்பையும் ஆணின் மேலாதிக்கத்தையும் புறக்கணித்து வாழத் தலைப்பட்டவர்கள். பாலியல் உரிமையும், தன்னின அனுபவமும் குழந்தைகளின் கூட்டுப் பாதுகாப்பும் இவர்களின் செயற்பாடுகளில் சிலவாகும். இந்நிலையில் சுமதிரூபனின் சில பாத்திரங்கள் குடும்ப அமைப்பைப் புறக்கணித்துத் தனித்தன்மையுடன் வாழத் தலைப்படும் தீவிரவாதப் பெண்ணியத்தின் இயல்புகளைக் கொண்டிருக்கின்றன.
'அவன் அப்படித்தான்’ என்ற கதையும் ஒருபாலியல் உறவு குறித்த கதைதான். சத்தியனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்புகின்றனர். ஆனால் அவன் தனது நண்பனுடன் கொண்ட உறவின் காரணமாக வீட்டைவிட்டு வெளியேறிவிடுகின்றான்.மேலைத்தேய கலாசார சூழலில் ஏற்பட்டுவந்துள்ள இந்த மாற்றம் சியாம் செல்வதுரையின் Funny Boy நாவலை தழுவி எழுதப்பட்ட கதையாக அமைகின்றது. தனிமனிதனின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும் என்பதை கதை குறித்துநிற்கின்றது.
சோதனை முயற்சியாக எழுதப்பட்ட கட்டிடக் காட்டுக்குள் என்ற குறியீட்டுக் கதையில் கூறப்படும் கருத்தில் தெளிவு போதாமை தெரிகிறது. பெண்ணிலைவாத சிந்தனைகளை முன்வைத்து எழுதப்பட்ட கதைகளிலும் ஏனையவற்றிலும் யதார்த்தம் பேணப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழ்ச்சூழலில் சில கதைகள் பலத்த விமர்சனங்களை முன்வைக்க களம் அமைத்துள்ளன.
இவ்வகையில் புலம்பெயர் வாழ்வில் பெண்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளை முன்வைத்துள்ள இத்தொகுப்பில் இதுவரை பேசப்படாத பிரச்சிைைனகளின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.மேலைத்தேய வாழ்வியற் சூழல் இவ்வாறான கருத்துக்களை சமூகத்திற்கு எடுத்துச் சொல்வதற்கு துணிச்சலைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் புலம்பெயர் பெண் படைப்புலகிற்கு வலுச்சேர்க்கும் படைப்பாக 'யாதுமாகி நின்றாள்" திகழ்கின்றது எனலாம்.
----->
ംക്ര6ഞ്ഞുൺബഞ്ഞ് - 77

Page 49
தோலுரித்துக் காட்டும் தைரியம்ட
ஷோபா சக்தியின் தேசத்துரோகி
ஷோபாசக்தி பிரான்சில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். கொரில்லா, ம் ஆகிய நாவல்களும் தேசத்துரோகி, எம்ஜிஆர் கொலை வழக்கு ஆகிய சிறுகதைத் தொகுப்பு களும் வேலைக்காரிகளின் புத்தகம் என்ற கட்டுரைகளின் தொகுப்புமாக ஐந்து நூல்கள் இதுவரை வெளி வந்துள்ளன. கறுப்பு, சனாதன தர்மம் ஆகியமலர்களைசுகனுடன்இணைந்து தொகுத்துள்ளார். "சத்தியக்கடதாசி என்ற தனது இணைய இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். இவரின் கொரில்லா நாவல் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
ഉഞ്ഞങ്ങൾ ഞങ്ങഖ ((ൾ ശ്ചLá ക്ര8 ( 78

தேசத்துரோகி என்ற சிறுகதைத் தொகுப்பு 2003 இல் வெளிவந்துள்ளது. அவ்வப்போது சஞ்சிகைகளிலும் மலர்களிலும் எழுதிய 14 கதைகளை இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ளது.
இத்தொகுப்பில் உள்ள கதைகளில் அதிகமானவை புகலிடச் சூழலையும் அச் சூழலினுடான வாழ்வனுபவங்களையும் கருப்பொருளாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன.
புலப்பெயர்வுக்கு காரணமான பிரச்சனைகள், ஏஜென்சிகளிடமும் நாடுகளின் எல்லைகளிலும் (border) குறிப்பாகப் பெண்கள் எதிர்கொள்ளும் அவலங்கள். புலம்பெயர்ந்து சென்றவர்கள் அகதி விண்ணப்பம் கொடுப்பதற்கும் அகதி அந்தஸ்துக் கோருவதற்கும் படும் பாடுகள், தொழிற்தள அவலங்களும் நிறவாதக்கெடுபிடிகளும், பல்கலாசாரச் சூழலில் பெண்களின்நிலை, முறையற்ற பாலியல் நடத்தைகள் எனபுலம்பெயர் தமிழர் வாழ்வின் பல பிரச்சினைகளைக் கருப்பொருளாகக் கொண்ட பல கதைகள் உள்ளன.
என்றாலும் தாயகத்தின் மீதான உறவும் பிரிவும் கடந்த கால மீள் நினைவுகளும் இக் கதைகளுக்கு வலுச் சேர்ப்பனவாக ஆங்காங்கே தலை காட்டுகின்றன.
தேசத்துரோகி எனத் தலைப்பிட்ட கதை, கதை சொல்வதிலும் கதை நேர்த்தியிலும் மிகச் சிறப்பாகத் தென்பட்டாலும் கதைத் தலைப்பின் அழுத்தமும் ஆழமும் கதையில் அவ்வளவாகப் பேசப்படவில்லை. ஒரு வித்தியாசத்தை நோக்கிஷோபாசக்தி இத்தலைப்பை இட்டிருக்கக் கூடும்.
3:- : تمہمند، نہ بنا ه f
அடிப்படையில் அ. முத்துலிங்கம் தனது கதைகளில் புறவுலகச் சித்திரிப்பைக் கையாண்டு தன்னை 9(5 கதைசொல்லியாக அடையாளப்படுத்துவதுபோல், ஷோபாசக்தியின் எழுத்துக்களிலும் இப்பண்பைக் காண முடிகின்றது.
79

Page 50
அங்கு முத்துலிங்கத்துக்கு உலக அநுபவங்கள் கைகொடுக்கின்றன. ஷோபாசக்திக்கோ ஈழத்தின் போராட்ட சூழலின் மீதான மீள் நினைவுகளும், தகவல்களும் குறிப்புக்களும் நன்கு கதை நகர்வுக்குக் கைகொடுக்கின்றன. இதனை இவரின் கொரில்லா நாவலிலும் கண்டு கொள்ளலாம்.
உருவ ரீதியில் கூட சில சோதனை முயற்சிகளை ஷோபா சக்தி இத்தொகுப்பில் செய்துள்ளார். பத்துக்கட்டளைகள், பைலாப்பாட்டு, V9674D2687430743, தனது மற்றது நான்காம் பிரஜை ஆகிய நான்கு கதைகளில் இவற்றைக் கண்டுகொள்ளலாம். இதற்குப் பின்நவீனத்துவ சொல்லாடல்கள் நன்கு துணை புரிகின்றன. மைசூர் ராசா என்ற கதை குறியீட்டுக் கதையாக அமைந்துள்ளது. ܀
தொகுப்பில் பல கதாமாந்தர்கள் உலா வந்தாலும் சில பாத்திரங்கள் அழுத்தமாக வாசகர் மனதில் ஆழப்பதிந்து விடுகின்றன. குறிப்பாக அயிட்டம், காஞ்சனா, மொறின் ஆகிய பாத்திரங்கள் முக்கியமானவை. பெண்களின் பல பிரச்சனைகள் பல கதைகளில் பேசப்பட்டுள்ளன. சில கதைகள் ஆரோக்கியமான விவாதத்திற்குகளம் அமைத்துள்ளன.
ஈழத்து மாந்தரிடையே புரையோடிப் போயிருக்கும் மேட்டுக்குடி மனப்பான்மையுடனான செயற்பாடுகளையும், எம் மக்களைப் பிடித்து ஆட்டுவிக்கும் சாதி, சீதனம், ஆடம்பரம், போலிகள் என்பவற்றையும் எள்ளல் தொனிக்க தோலுரித்துக் காட்டுகின்றார்.
எனவே, ஏழ்மை இழப்பு, தியாகம், இலட்சியம், இயக்கம், போலிகள், புனைவுகள், வித்தியாசங்கள், என்பவற்றைஈழத்து மொழிநடையுடன் நன்கு தந்திருக்கும் ஷோபாசக்தியின் எழுத்துக் கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் படைப்புக்களுக்கு வலுச்சேர்ப்பனவாக அமைந்துள்ளன.
4-4-4-
gഞ്ഞങ്ങഖ ഞബb Cuaudô6uw ucidulůSavåławå (og vincordaadid 80
 

அகதிவாழ்வின் அவலம்
பாரிஸ் கதைகள்
കംക്ര6ങ്ങൺവൽ -
புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வரும் பதினைந்து படைப்பாளிகளின் "பாரிஸ் கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பு வெளிவந்து ள்ளது. கி.பி அரவிந்தனை தொகுப் பாசிரியராகக் கொண்டு திருகோண மலை அப்பால் தமிழ் பதிப்பகம் இத்தொகுப்பினை வெளியிட்டுள்ளது.
ஈழத்தமிழ் இலக்கியச் சூழலில் நாம் தரிசிக்காத பல அநுபவங்களை புலம்பெயர் தமிழ்ப் படைப்புக்கள் பதிவு செய்வதாலேயே அவை தனித்து நோக்கப்படும் இலக்கிய வகையாக இன்று உருப்பெற்றுள்ளன.
இந்த வகையில் 1988 இல் இருந்து 2002 வரையான காலப்பகுதியில்
81

Page 51
வெளிவந்த இக்கதைகளில் புலம்பெயர் வாழ்வில் எதிர்நோக்கும் அடிப்படையான பல பிரச்சனைகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
தொழிற்தள அநுபவத்தின் ஊடாக அவலங்களும் அகதிவாழ்வின் காரணமாக எதிர்நோக்கும் பல சிக்கல்களும் அதிகமான கதைகளின் சாரமாக உள்ளன.
அகதிகளுக்கான வதிவிட அநுமதி கிடைக்காத நிலையிலே எவ்வித தொழிற் பாதுகாப்பும் அடிப்படை உரிமைகளும் இன்றி வேலை செய்தலும், வெளிநாட்டவரின் நிறவாத இனவாத நெருக்கடிகளுக்கு உள்ளாதலும், குறைந்த ஊதியத்தில் கூடியளவு வேலை செய்தலும், நிர்வாகக் கெடுபிடிகளுக்கு மத்தியில் எந்த நேரத்திலும் வேலையில் இருந்து நிறுத்தக்கூடிய நிலையிலும் பெருமளவான தமிழர்கள் வேலை செய்யும் சூழ்நிலையும் புகலிடத்தில் உள்ளது. குறிப்பாக 83 இற்குப் பின்னர் புலம்பெயர்ந்த பலரின் நிலை இதுவாகத்தான் உள்ளது.
இதனை தொழிற்தளத்தை மையப்படுத்திய பல கதைகளில் அவதானிக்க முடிகின்றது. வாசுதேவனின் சுதந்திர அடிமை என்ற கதையில் லாம் வரிகள் கவனத்திற்குரியன.
"இன்று யூலை 14 ம் திகதி. சுதந்திரத்தை சுதந்திரமாய்ப் பெற்ற பிரஞ்சு மக்களின் சுதந்திர தின விழாவாணவேடிக்கைகளை எச்சில்கோப்பை கழுவிக் கொண்டு ஒருகுசினியின் பின்புறத்தில் நிற்கும் என்னால் கண்டுகொள்ள முடியவில்லையெனினும் வெக்கை நிறைந்த இக்குசினியின் அடியில் நிற்கும் எனது வியர் வைத் துளிகளை வெளியில் கேட்கும் வெடிச்சத்தம் பரிகசிக்கின்றது. பாதிநாளை நித்திரையிலும் மீதிநாளை கரட் சீவுவதற்கும் சலாட் இலை கழுவுவதற்கும் கழித்துக் கொண்டிருக்கும் நான் ஒரு பட்டதாரித்தமிழன். தண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில்கூட குற்றவாளி என்பதை உணர மறுக்கும் அளவிற்கு அறியாமையால் ஆளப்படும் நான் எனது சமூகத்தின் அறிவாளி.” (வாசுதேவன், சுதந்திர 9960)LD&B6f)
அலைவும் உலைவும் (புலம்பெக் படைப்பிலக்தியம் குறித்த பந்வைகள்)= 82

தா. பாலகணேசனின் உதிரும் இலைகள், க.கலாமோகனின் மூன்று நகரங்களின் கதை, கார்த்தி நல்லையாவின் அலையும் தொலைவு மா.கி. கிறிஸ்ரியனின் சிறைச்சாலை ஆகிய கதைகளிலும் இதே குரலைத்தான் கேட்க முடிகின்றது.
அகதி வாழ்வு என்பது மிகவும் கொடூரமானது. அதுவும் இனத்தாலும், மொழியாலும், பண்பாட்டுக் கூறுகளாலும் முற்றிலும் வேறுபட்ட சமூகத்தில் ஈழத்தமிழர்கள் வாழ நேர்கின்றபோது எதிர்கொள்ளும் முரண்நிலைகள் மிக அதிகம்.
அதற்குள்ளும் அகதி வாழ்வு வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையிலே பயணத்தின்போது எதிர்கொள்ளும் அவலங்களும், அதன்பின்னர் திருப்பி அனுப்பப்படும் துயரங்களும் அகதி என்ற காரணத்தினாலேயே முகங்கொள்ளும் நிர்வாகக் கெடுபிடிகளும், பல கதைகளில் பதிவாகியுள்ளன.
பாரிஸ் கதைகள்
பயண அநுபவத்தையும் ஏமாற்றத்தையும் எடுத்துக் காட்டும் செந்தமிழர் எழுதிய பொறி, குடும்ப உறவுகளின் வாழ்வும்கூட அகதி அநுமதி பெறுவதிலேயே தங்கியுள்ளது என்பதைப் புலப்படுத்தும் பாரிஸ் பார்த்திபன் எழுதிய இதுவும் ஒரு இலையுதிர் காலம், வதிவிட அநுமதிக்கும் முகவரி மாற்றத்துக்கும் அலைந்து திரியும் புவனன் எழுதிய "கியூவரிசை ஆகிய கதைகளில் அகதி வாழ்வின் அநுபவம் எடுத்துக் காட்டப்படுகிறது.
கி.பி.அரவிந்தனின் நாடோடிகள் என்ற கதை, பல வருடங்கள் பிரான்சில் வாழ்ந்த பின்னரும் அகதி அநுமதி வழங்கப்படாத நிலையிலே அங்கிருந்து தாயகத்திற்கு திருப்பி'அனுப்பப்படும் ஒரு குடும்பத்தின் கதையைக் கூறுகின்றது.
“என்னைக் கண்டதும் ராணி சற்று உரமாகக் கேவிக் கேவி அழத் தொடங்கினாள். எனக்கு மனசைப் பிசைந்தது. இழவு வீட்டிற்கு செல்லும்போது ஒவ்வொருவரைக் காணும்போது ஒப்பாரி சொல்லி aംക്ര5ഞ്ഞുൺബര് = - 83

Page 52
அழுகை கூடுமே அப்படி இருந்தது நிலைமை. நேற்று ராத்திரிதான் வந்துசொன்னார்கள் எங்கள்மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு விட்டதாம். வரும் திங்களுக்குப் பின் இங்கு இருக்க இயலாதாம். எல்லாம் சரிவரும் வீடு தரப்போறாங்கள் என்று ஒரு விட்டிற்கு தேவையான சாமான்கள் எல்லாத்தையுமல்லோ வாங்கிப்போட்டு அந்தநம்பிக்கையில்தானே வயிற்றிலகுழந்தையை வளர விட்டனான். நாடோடிகள் மாதிரியல்லோ ஆகிப் போச்சு. இது இத்தாலியில் உண்டாகியது. இங்கு பிறந்தது. இப்ப ஒன்று உருவாகி இருக்கு எங்க பிறக்கப் போகுதோ? பிறேமின் கண்களில் இருந்தும் நீர் வழிந்தது. துடைத்துக் கொண்டார்” (கி.பி அரவிந்தன், நாடோடிகள்)
இவை தவிர ஏழாயிரம் கிலோமீற்றர் தாண்டிச் சென்ற பின்னரும் போரின் வடுவைச் சுமந்து ஆயுதத்திற்குப் பயப்பிடும் கலைச்செல்வனின் பரிசுத்த ஆவி, தனிமனித வாழ்வின் தோல்வியை நினைவுகள் ஊடே மீட்டுப் பார்க்கும் தில்லைநடேசனின் துளிர்ப்பு, உறவுகள் இல்லாத நிலையிலே பிற நாட்டாருடன் வாழ்தலில் ஏற்படும் அநுபவத்தினை எடுத்துக் கூறும் சிவலிங்கம் சிவபாலனின் மலர்வு, மனிதர்களே இயந்திரமாகிப்போனபாரிஸ், வாழ்வில் இருந்து விடுபட எண்ணும் சி. புஸ்பராசாவின் கோழியும் ஐந்து நண்பர்களும் பல சாத்தான்களும், சு. கருணாநிதியின் விடுமுறை ஆகிய கதைகளும் தொகுப்பிற்கு வலுச்சேர்க்கின்றன.
தனியாகவும் குடும்பமாகவும் வாழ்கின்ற பலரின் நுண்மையான உணர்வுகளும், யதார்த்த வாழ்வின் அம்சங்களும் பல கதைகளின் சிறப்புக்கும் இயல்புத் தன்மைக்கும் சான்றாக அமைந்துள்ளன.
எனினும் தமிழ் - பிரெஞ்சுக் கலாசாரத்தின் முரண்பாட்டுக்குள் சிக்கித் தவிக்கும் இளைஞர் யுவதிகளின் பிரச்சனைகளை முன்னிறுத்தும் ரமேஷ் சிவருபனின் "இடைவெளி என்ற கதை தவிர புலம்பெயர் வாழ்விலே தமிழர்கள் எதிர்கொள்ளும் பணிபாட்டு நெருக்குவாரத்தை வலுவாகப் புலப்படுத்தும் வேறு கதைகளை இத்தொகுப்பில் காணமுடியவில்லை.
ഞ്ഞുങ്ങല .ഞങ്ങഖ ((ൾ തLá ng uതലജീ= 84

படைப்புக்கள் பாரிஸை மையமாகக் கொண்டே அமைந்துள்ளதால், இயல்பாகவே தமிழில் வந்து சேர்கின்ற பிரெஞ்சு மொழிச் சொற்கள் அதிகமாக உள்ளன. ஏற்கனவே தமிழிற் கலந்துள்ள சில திசைச் சொற்கள் போன்று (பேச்சு வழக்கில்) புலம்பெயர் இலக்கியத்திற் கலந்துள்ள
பிறமொழிச் சொற்களும் எதிர்காலத்தில் கவனத்திற்குரியனவாக 960)LDuj6 TLD.
இவ்வகையில் புலம்பெயர்ந்த படைப்பாளிகளின் அநுபங்களைத் தாங்கிய படைப்புகள் ஈழத்தில் அரிதாகவே கிடைப்பதால் இதுபோன்ற தொகுப்பு முயற்சிகள் மேலும் தொடர வேண்டும். அதுவே எமது விருப்பமும்கூட.
令令令
ംക്ര6ഞ്ഞുൺബര് = 85

Page 53
நிகழ்வுகள் நினைவுகள் இரவியின் - காலம் ஆகிவந்த கதை
தாயகத்தை விட்டுப் புலம்பெயர்ந்து சென்ற ஒவ்வொரு மனிதனுக்கும் நினைவு’ என்பது உண்மையில் LIs!956s!& 85LÍ LLவேண்டியதே. அந்நிய தேசத்தில் தமது அடையாளத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சமே இந்தத் தாயக நினைவினை மீட்டுத் தரு கின்றது. இவ்வகையில் ஈழத்தி லிருந்து புலம்பெயர்ந்து மேற்கு
நாடுகளுக்குச் சென்ற ஈழத்தமிழர் களின் அதிகமான படைப்புகளில் தாயக நினைவு மேலோங்கி இருப்ப தற்கும் இதுவே காரணமாகும்.
gതബb ഞങ്ങൾ ((ൾ തL(u) ക്ര8 ur'തബരീജ 86

அந்தநினைவுகளின் ஊடே உரசிச் செல்கின்ற கதைகள்தான் காலம் ஆகி வந்த கதை இலண்டனில் புலம்பெயர்ந்து வாழும் அ. இரவியின் 20 சிறுகதைகளை உள்ளடக்கி 264 பக்கங்களில் அந்திவானம் பதிப்பகத்தினால் இத்தொகுதி வெளியிடப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களின் இனப்போராட்டம் கூர்மையடையத் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து அதன் படிப்படியான வரலாற்று ஓட்டத்தில் இடம்பெற்ற மாற்றங்களை எமது மக்களின் வாழ்வுடன் இணைந்த வகையில் இரவி எடுத்துக் காட்டுகின்றார்.
இந்தக் கதைகளுக்கு எல்லாம் ஆதாரமாக இருப்பது ஆசிரியரின் பிள்ளைப்பருவ (childhood) நினைவுகளே. யாழ்ப்பாணத்தில் அளவெட்டி என்ற கிராமத்தையும் அதனை அண்டிய அயற் கிராமங்களையும் பகைப்புலமாகக் கொண்டு அந்தப்பருவத்தின் உளநிலையில் நின்றே கதை கூறுகின்றார். தொகுப்பில் உள்ள 20 கதைகளிலுமே எமது மக்களின் வாழ்வினுடான பண்பாட்டு அம்சங்களை கதைகளில் பதிவு செய்திருக்கிறார். கோயிற் பண்பாடும், சமூகத் தொடர்புகளும், மரபுகளும், நம்பிக்கைகளும், கலைகளும், கதைகளில் தலை காட்டுகின்றன.
இரவியின் இந்தக் கதைகளின் பலமாகக் கருதக்கூடியது பேராசிரியர் கா. சிவத்தம்பி குறிப்பிட்டது போல் எடுத்துரைப்பு முறையும், மொழிக்கையாளுகையும் ஆகும்.
எடுத்துரைப்பு முறை இயல்பாக ஒரே நேர்கோட்டுப்பாணியில் கதைக்கு குறைவு ஏற்பட்டு விடாத வகையில் செல்கின்றது. இக்கதைகளுக்கு இது சாத்தியமாக அமைந்துள்ளது. ஆனால் தொகுப்பில் இல்லாத வேற் ઈી6o கதைகளை அவதானித்தபோது (காலஸ்திர் குயிற்கூட்டின் மேலால் பறந்த ஒன்று, ஜேர்மனியில் ஒரு நகரம் பிறகு பிறேமன் நகரத்துக் காகம், எனது கிராமத்தை பேய்கள் சப்புகின்றன ஆகிய சிறுகதைகளில்) எடுத்துரைப்பில் வித்தியாசம் தெரிகின்றது. காலம், இடம், நோக்கம் என்பவற்றைப் பொறுத்து நடையில் மாற்றம் ஏற்படுவது இயல்பானதே. அந்த இயல்பான தன்மையே எடுத்துரைப்பிற்குக் காரணமாக இருக்கலாம். அத்தோடு அவை புலம்பெயர் சூழலை மையப்படுத்திய கதைகளாகவும் உள்ளன. ஆக இரவியிடம் இரண்டு வகையான எடுத்துரைப்புமுறைகளை அவதானிக்க முடிகின்றது.
ംക്ര6ങ്ങൺബങ്ങ് = 87

Page 54
சிற்சில ககைகளில் ஈழப்போராட்ட காலகட்டத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் வலிந்து புகுத்தப்பட்டதாகத் தெரிகின்றது. இவை கதைகளின் இயல்புத் தன்மையைப் பாதிக்கின்றன.
அதேபோல் முன்னர் குறிப்பிட்ட ஒரு சம்பவம் அல்லது சித்திரிப்பு மீண்டும் வேறு கதைகளில் அதன் தொடராகத் தொடர்கின்றது. இந்தத் தொடர்பு வாசகரை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் செல்கின்றது. ஒரு நாவலில் வரும் சம்பவத் தொடர்புபோல் வீட்டுச் சூழல், குடும்ப உறவுகள், கோயிற் சம்பவங்கள், பாடசாலை நினைவுகள் மீண்டும் வருகின்றன.இதனை அண்மையில் வெளிவந்த அ. முத்துலிங்கத்தின் "உண்மை கலந்த நாட்குறிப்புகள் நாவலோடும் பொருத்திப் பார்க்கலாம்.
என்றாலும் ஈழத்து எழுத்துக்களில் ஒரு தொகுதி முழுவதும் பிள்ளைப் பருவநினைவுகளுடன் கதை கூறியவர்கள் குறைவு என்றே கூறல் வேண்டும். பல படைப்பாளிகள் சிற்சில கதைகளை எழுதியிருந்தாலும் இரவியின் படைப்பு மனோநிலையில் நின்று எழுதியவர்கள் குறைவே. எடுத்துக் காட்டாக, அ. முத்துலிங்கத்தின் ஒரு சிறுவனின் கதை, தில்லையம்பலப் பிள்ளையார் கோயில், ஆகிய கதைகளும், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் தில்லையாற்றங்கரை நாவலில் வரும் சில பகுதிகளிலும் பாத்திரச் சித்திரிப்பு, சம்பவச் சித்திரிப்பு என்பவற்றிலும் இவர்களுக்கும் இரவிக்கும் இடையில் அதிகளவு ஒற்றுமையை அவதானிக்க் முடிகின்றது.
எனவே, எமது மண்ணின் கதை கூறும் இரவியின் முதலாவது படைப்பாக
இத்தொகுப்புத் திகழ்வதால், இவரிடம் இன்னும் நிறையவே எதிர்பார்க்கத் தோன்றுகின்றது.
令令令
ഉത്ഖ് മതബ് (Gൾ തLá ng u'ഞ്ചഃീ= 88

பெண் மொழியோரு
ஒரு கவிதைய் பயணம்
-ஆழியாளின் துவிதம்
ംക്ര6ൽൺവൽ -
"உரத்துப்பேச(2000) கவிதைத் தொகுப்பினுTடாக ஈழத்துப் பெண் கவிஞர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட ஆழியாளின் துவிதம் என்ற கவிதைத் தொகுதி கடந்த வருடம் மறு வெளியீடாக வந்து ள்ளது. நவீன தமிழ் இலக்கியத்தில் பெண் எழுத்துக்கள் மிகுந்த கவனிப்புக்கு உள்ளாகியிருக்கும் தற்கால இலக்கிய உலகில், இக் கவிதைத் தொகுதி புலம் பெயர்ந்த ஈழத்தமிழரின் படைப்புக்களுக்கு வலுச்சேர்க்கும் ஒரு முயற்சியாக அமைந்துள்ளது.
89

Page 55
பெனி-மொழி-கவிதை: மொழிசார் சாலைப் பயணம் என்ற தெ. மதுசூதனனின் ஆழமான தொடக்க அறிமுகத்துடன் அழகான அமைப்பில் அமைந்துள்ள இக்கவிதைத் தொகுப்பில் மொத்தம் 24 கவிதைகள் அமைந்துள்ளன.
கவிதைகள் அனைத்திற்கும் தாயக வாழ்வும்புலம்பெயர் தேசத்து வாழ்வும் இணைந்த உணர்வு நெறி அடிப்படையாக அமைந்துள்ளது. சில கவிதைகளில் இரண்டையுமே வேறுபிரித்து அறியமுடியாதபடிக்கு அதன் உள்ளுணர்வு பின்னிப் பிணைந்துள்ளது.
ஆழியாளின் கவிதைகள் அனைத்தும் சுட்டுகின்ற பொருட்பரப்பு முக்கியமானது. இத்தொகுப்பினுTடாக தாயக வாழ்வின் ஞாபக அடுக்குகளில் இருந்து பல உணர்வு வெளிகள் விரிகின்றன. வாழ்வு பற்றிய பிடிமானமும் அதற்கான எத்தனமும் இந்தச் சூழலிலிருந்து மெல்ல மெல்ல விலகுவதும், புலம்பெயர் தேசத்தில் அந்நியமாகிப் போன வாழ்வுநிலையும், பெண் தன்னையும் தன் உணர்வுகளையும் வெளிப்படுத்துதலும், பெண் தன் தனித்துவத்தைக் கட்டமைத்தலுமாக இத்தொகுப்பின் கவிதைகள் பல வழிகளில் பயணிக்கின்றன.
பெண் ஒடுக்குமுறையும் அதற்கெதிரான எழுச்சியும், பெண் தன் சுய அடையாளத்தை வெளிப்படுத்தலுமாக இதுவரை பயணித்து வந்த பெணி , படைப்பாளிகளின் படைப்புக்கள் எவ்வளவு தூரம் முக்கியமோ, அதே அளவு பெண் தனக்கான மொழியைக் கட்டமைக்கும் சிந்தனையும் அதற்கான செயற்பாடுகளும் தற்கால இலக்கிய உலகில் முக்கியமானவையாக அமைந்துள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக பெண் தன்னை தன் எழுத்துக்களுக்கூடாக மறுபிரதி செய்தலும் தன் உணர்வுகளையும் தன் மொழியையும் எழுதுதலாயும் உள்ளது. இது காலம் காலமாக இருந்த தடத்தை அழித்து புதிய தடத்தை எற்படுத்தும் நிலை. இதன் ஒரு அம்சமாகத்தான்
"இருப்பதை உடைக்காமல் புதிய சொல்லாடலை உருவாக்க வழியில்லை”
என்று பெண்ணியல் திறனாய்வாளரான ஹெலன் சீக்ஸிஸ் (Helene Cixous) எழுதியுள்ளார்.
ஆலைவும் உலைவும் (புலம்பெக் படைப்பிலக்கியம் குறித்த பந்வைகள்)க 90

இதனாலேயே பெண், பெண்உடல், பெண் மொழி என்பன இன்றைய இலக்கியச் சூழலில் மிகுந்த விவாதத்திற்கு உட்பட்டிருக்கிறன. பெண்கள் தமக்கான மொழியைக் கட்டமைப்பதன் மூலம் தமக்கான விடுதலையைச் சாத்தியமாக்க முடியும் என்ற சிந்தனையும் இன்று வலுப்பெற்று வருகின்றது. இவற்றை மனங்கொண்டுதான் ஆழியாளின் படைப்பினை நோக்கமுடியும்.
காமம், விடுதலை, தடம் இதுபோன்ற பல கவிதைகளை ஆழியாளின் பெண்
மொழிக்கு உதாரணமாகக் காட்டலாம். "தடம்" என்ற கவிதையில்
"வெகு இயல்பாய் என் தடமழியும்
வள்ளம் பதித்த நீர்ச் சுவடு போல காற்றுக்
காவும்
fair 6JTFLib (3LT6) கடற்கரைக் காலடியாய் வெகு இயல்பாய் என் தடமழியும்
நாலு சுவருள்
ஒற்றப்படும் மென் உதட்டு முத்தம் போலவும் எட்டுக்கால் படும் ஒற்றைச் செருப்படி போலவும். வெகு இயல்பாய் என் தடமழியும் ஒளி விழுங்கின வானவில்லாய்."
என்கிறார். ஆழியாள் தனது முதலாவது தொகுப்பான எல்லை கடத்தலில்
ംക്ര6ഞ്ഞുൺബങ്ങ് =
"என் ஆதித்தாயின் முதுகில் பட்ட திருக்கைச் சவுக்கடி நான் காணும் ஒவ்வொரு முகத்திலும் தழும்பாய் தேமலாய் படர்ந்து கிடக்கிறது"
91

Page 56
என்ற பிரகடனத்துடன் கவிதை எழுதியபோதே கவனிக்கப்பட்டவர். துவிதம் தொகுப்பில் அமைந்துள்ள 'காமம்' என்ற பிறிதொரு கவிதையில்
“2_u Chlb மலையடிவார மண்கும்பிகளுள் திணறி அடக்கமுறும் மனித மூச்சுகளும்
பள்ளங்களின் ஆழப்புதைவில் அலறி ஓயும் குரல்களின் இறுதி விக்கல்களும் உண்டு இங்கு
சுவருக்கு செவிகள் உண்டு இருளுக்கு கூர் விழிகளும் உண்டு பீறிக் கசியும் ரத்தமாய் மேலும் உண்டு இன்னொன்று அவளுக்கு."
ஆழியாளின் கவிதைகளின் பலமே அவற்றின் மொழிதான். ஆணாதிக்க மொழியில் இருந்து விடுபட்டு பெண்கள் தமக்கான மொழியை உருவாக்குதலும் இவரின் படைப்புநெறியாக அமைந்துள்ளதை அவதானிக்கலாம். தமிழ்ச்சூழலில் அம்பை, மாலதி மைத்திரி, குட்டிரேவதி, சுகிர்தராணி, சல்மா, புகலிடத்தில் ரஞ்சனி, சுமதிரூபன் ஆகியோரின் எழுத்துக்களில் இதற்கான எத்தனத்தைதற்காலத்தில் அவதானிக்கமுடியும்.
தாயக வாழ்வு தந்த போரின் வலிகளைப் பதிவுசெய்யும் கவிதைகளில் சின்னப்பாலமி கவிதை ஏனைய பல கவிதைகளுக்கு தொடர்ச்சியாய் அமைந்துள்ளது. அது கொண்டு வரும் படிம அடுக்குகள் முக்கியமானவை. அதில் வெளிப்படும் குரூரம் காட்சிப்படிமாகத் தொடர்வதனை கவிதையின் வாசிப்பினுTடாக கண்டுகொள்ளலாம். இது போன்ற உணர்வு வெளிப்பாடுகளை பல ஈழக்கவிஞர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். சேரனின் எலும்புக்கூடுகளின் ஊர்வலம்" கவிதையில் எலும்புக்கூடுகள் அணிநடையாகச்சென்றபின்னரும் தொடரும் ஓசைஒழுங்குபோல்(சி.சிவசேகரம், விமர்சனங்கள்)ஆழியாளின் இந்தக் கவிதையிலும் தொடர்வதனைக்
ജങ്ങബി തബ് (Gൾ ( ക്രിട്ട് തഖീ= 92

கண்டுகொள்ளலாம். இதனை அதியதார்த்தக் (Surealism) கவிதைகளில் வெளிப்படும் பண்புக்கு இணையாக ஒப்பிடலாம்.
சின்னப் பாலத்தடிக்கு நித்தம் செட்டை அடித்து வந்தன வழக்கத்திலும் கொழுத்த ஒற்றைக்கால் கொக்குகளும், சுழியோடும் நீர்க்கோழிகளும்,
அவற்றிலும் அதிகமாய்
விளைந்து கிடந்தன ஊறி அழுகிய பிணங்களின் வாசனை முகர்ந்து, சுவை அறிந்த ஜப்பான் குறளிகளும், குறட்டை பெட்டியான் மீன்களும். கபறக்கொய்யாக்களோ எவ்வித நிர்ச்சலனமுமின்றி நீரிற் பொசிந்துாறிய மனிதக் கபாலங்களை ஆளுக்கு ஐந்து ஆறாய்ப் பங்கிட்டுக் கொண்டன - சண்டை சச்சரவின்றி சமாதானத்துடனே,
தேவைப்படும்போது
அவை பின்னிற்பதில்லை
தம் நாவால் மனிதக் கட்குழிகளை நீவிக்
கறுத்த விழிகளைத்
திராட்சைகளாய் உறிஞ்ச.
இவை தவிர ஆழியாளின் கவிதைகளில் அந்நியமும் தனிமையும்
வெளிப்படுவதையும் அவ்தானிக்கலாம். மரணம் என்ற கவிதையில் அவர் தனது தனிமையை வெளிப்படுத்த எடுத்துக்கொள்ளும் உவமை அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது.
“கலங்கரை விளக்கத்து இரவுக் காவலாளியாகவும்
ംക്ര6ഞ്ഞുൺയമങ്ങ് - 93

Page 57
ஆறடிக் குழியுள் மெளனம் புடைசூழ இறக்கப்பட்ட பிணமொன்றைப் போலவும் தனித்தே மிகத் தனித்தே இருக்கின்றேன்."
கொடுரமான கனவுகளே வாழ்வாகிப் போன நிலையில் கவிதை சார்ந்த அழகியலும் சூழல் சார்ந்தே இயங்குவதனைக் கண்டு கொள்ளலாம். இது இவரது அதிகமான கவிதைகளுக்குப் பொருந்தக்கூடியது. சின்னப்பாலம், கிபி2003இல் தைகிரீஸ், மரணம், ஞாபக அடுக்குகள் ஆகியவற்றில் வரும் படிமங்கள் முக்கியமானவை.
உணர்வும் தர்க்கமும் இழையோடும் கவிதைகளில் அவை வெளிப்படுத்த விளையும் பொருட்பரப்பும் அதன் அழகியலும் மிகக் கட்டிறுக்கமாகப் பல கவிதைகளில் அமைந்துள்ளன. குறியீட்டுக் கவிதைகள் வாசிப்பில் பல அர்த்தத் தளங்களுக்கு இடங்கொடுக்கின்றன.
கவிதைகளின் அர்த்தத்திற்கு ஏற்ப சில கவிதைகளில் துருத்திக் கொண்டு நிற்கும் சாத்தியமில்லாத பந்தி பிரிப்பு தவிர்த்திருக்கக்கூடியதே. சின்னப்பாலம், விமானநிலையச் சந்திப்பு ஆகியவற்றில் வரும் இறுதி இரண்டு பந்திகளுமே அவை.
அதிகளவான பெண் படைப்பாளிகள் தொடர்ந்து எழுதுவதில்லை என்ற குற்றச்சாட்டு விமர்சகர்களால் முன்வைக்கப்படுவதுண்டு. இது படைப்பு நெறி சார்ந்து நோக்கும்போது பெண் படைப்பாளிகளிடம் இருக்கும் முக்கிய குறைபாடாகும். அந்தநிலையில் இருந்து விடுபட்டு தொடர்ச்சியாகத் தனது படைப்பைச் சாத்தியமாக்க வேண்டிய தேவை ஆழியாளுக்கும் உண்டு. அதற்குரிய வீச்சும் புதிய விளைவும் ஆழியாளிடம் நிரம்பவே உள்ளன என்பதை வெளிவந்துள்ள இரண்டு தொகுப்புக்களுமே நிரூபிக்கின்றன. இந்த வகையில் புலம்பெயர்ந்த பெண் கவிஞர்களின் படைப்புக்களில் கவனத்திற்கு உட்படுத்த வேண்டியதும் ஈழத்தமிழ்ப் படைப்புக்களில் தவிர்க்க முடியாததுமான ஒரு தொகுப்பாகத் துவிதம் அமைந்துள்ளது என்பது வெளிப்படையான உண்மையாகும்.
4-0-1)
ഉതബ് തങ്ങഖ ((ൾ ( G= 94

கருணாகரமூர்த்தி படைய்புக்கள்
ஒரு பார்வை
കംക്ര6ഞ്ഞുൺബങ്ങ് -
புகலிடத்தில் எழுத்துப்பயணத்தை ஆரம்பித்தவர்களில் GL}T. கருணாகரமூர்த்தி முக்கியமானவர். இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்து ஜேர்மனி யில் வாழ்ந்து வருகிறார்.
இக்கட்டுரை கருணாகரமூர்த்தியின் ஒரு அகதி உருவாகும் நேரம் என்ற மூன்று குறுநாவல்களைக் கொண்ட தொகுப்பினையும்; கிழக்கு நோக்கி சில மேகங்கள், அவர்களுக்கென்று ஒரு குடில் ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் அடிப்படை யாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளது.
95

Page 58
இவை தவிர பெர்லின் இரவுகள்’ என்ற கட்டுரை நூலும், "கூடு கலைதல் என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளன.
ஆரம்பகாலப் படைப்புக்களில் தாயக நினைவும் அதனோடு இணைந்த வாழ்வுச் சூழலுமே அதிகம் பதிவாகியிருந்தன. பின்னர் அவை படிப்படியாக வரித்துக் கொண்ட புதிய அநுபவங்களையும் புலம்பெயர் இலக்கியம் பேச முற்பட்டபோதே தமிழ்ப்படைப்புலகில் மிகுந்த கவனத்திற்கொள்ளப்பட்டன.
ஒரு அகதி உருவாகும் நேரம் (1994) என்ற குறுநாவல் ஊடாக தமிழகத்திலும் இலங்கையிலும் நன்கு அறியப்பட்டபொ. கருணாகரமூர்த்தி தன் படைப்புக்களுக்கு வரித்துக் கொண்ட கதைக் கருக்கள் முக்கியமானவை.
1. புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்களின் செயற்பாடுகள். 2. அந்நிய கலாசாரச் சூழலில் தமிழ்ப் பண்பாட்டு மனம்
"எதிர்கொள்ளும் நெருக்கடிகள். جس ” 3. பெண்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் முரண்பாடுகள். 4. போரினால் வாழ்வின் விளிம்பில் தூக்கி வீசப்பட்ட மானிட
உணர்வுகள். 5. கர்மா பற்றிய விசாரணையும் வாழ்வும்.
‘வாழ்வு வசப்படும்’ என்ற குறுநாவல் ஜேர்மனிக்கு அகதியாயப்ப் புலம்பெயர்ந்து ஒரே அறையில் வசித்து வரும் இளைஞர்களின்
ஒலைவும் உலைவும் (புலம்பெக் படைப்பிலக்கியம் குறித்த பந்வைகள்)= 96
 

வெவ்வேறுபட்ட மனவுணர்வுகளையும் செயற்பாடுகளையும் சித்திரிக்கிறது. ஒரு வகையில் ஜெயமோகன் கூறுவதுபோல்
ஏறத்தாள எல்லாக் கதாபாத்திரத்திலும் ஆசிரியர் சீராக ஒரு விஷயத்தை வைத்திருக்கிறார். கீழைத்தேய கலாசாரத்தில் வளர்ந்த மனிதர்கள் மேலைத்தேய கலாசாரத்தை எதிர்கொள்ளும் தத்தளிப்புதான் அது. (ஜெயமோகன், ஒரு அகதிஉருவாகும் நேரம், முன்னுரை)
இதனை பெண் நிலைப்பட்ட கதைகளில் மட்டுமல்லாமல் பண்பாட்டு நெருக்குவாரத்தைச் சந்திக்கும் கதைகளிலும் முன்வைத்துள்ளார்.
பர்வதங்களும் பாதாளங்களும் என்ற கதையில் புலம்பெயர்ந்த தேசத்தில் வளர்ந்த பிள்ளைகளுடன் வாழும் ஒரு தாய்க்கு இருக்கக்கூடிய நியாயமான அச்சங்களை கருணாகரமூர்த்தி எடுத்துக் காட்டுவது கவனத்திற்குரியது.
"மனதை சபலிக்க வைக்கும் முத்தங்கள், தழுவல்கள், உரசல்கள் கலந்துள்ள டி.வி ப் படங்களை பார்க்கின்றனர். இரவில் பதினொன்றுக்குமேல் ஆர்.டி.எல். பிளசும் பார்ப்பார்களோ? அச்சமாயிருக்கு! இரண்டுங்கெட்டான் வயதில் உணர்ச்சி உத்வேகத்தால் தடுமாறும் சிலபேதைகள், தம்போல் இரட்டிப்பு வயதான ஆப்கானிஸ்தான்காரனுடனும், சீக்கியனுடனும்,மூன்று பிள்ளைகளைப் பெற்ற அரபுக்காரனுடனும் அவசர முடிவெடுத்து ஓடிப்போகுதுகள்! கர்ப்பமாகி அவர்கள் திரும்பி வருவதைப் பார்த்து பதைக்கும் பெற்றோரைப் பார்க்கவே முடிவதில்லை! பரிதாபமாயிருக்கு பள்ளித் தோழர்களால் கர்ப்பமாகும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. அதிர்ச்சியாகவுள்ளது.” (கிழக்குநோக்கி சில மேகங்கள், ப.107)
பெண்நிலைப்பட்ட கதைகளில் அவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் முரண்பாடுகள் தனித்த பார்வைக்குரியன. இவரின் கதைகளில் வரும் பெண்கள் நவீனத்துவத்தின் சாயலே படியாத குக்கிராமத்திலிருந்தும் வெளிப்படுவதனை அவதானிக்கலாம். இதற்கு 'அக்கரையில் ஒரு கிராமம்’ ംക്ര6ഞ്ഞുൺബീ = 97

Page 59
என்ற சிறுகதையினையும்; பெண்ணியச் சிந்தனைகளைப் பேசும் துணிச்சலான பெண்ணுக்கு உதாரணமாக 'பால் வீதி’ என்ற சிறுகதையினையினையும் எடுத்துக் காட்டலாம்.
இந்தப் பெண்களை மூன்று வகையாக நோக்கலாம். மாற்றத்தை அறியாத பெண், ஒத்துப்போகும்பெண், துணிச்சலான பெண், என்ற வகையில் எடுத்துக் கூறலாம். மற்றெல்லாவற்றையும் விட பாலியல் ரீதியில் பெண் சுரண்டலுக்கு உட்படுதலை மிக நுண்மையாக எடுத்துக் காட்டுகின்றார். இவற்றுக்கு ஆவுரஞ்சிகள், ஸ்பொன்சர் தாத்தாக்களும் ஏற்பாட்டு மாமாக்களும், வண்ணத்துப் பூச்சியுடன் வாழ முற்படல், பேதையல்ல பெண், ஆகிய கதைகளைக் குறிப்பிடலாம்.
ஆவுரஞ்சி களில் வரும் பென்சனியர் சமூகத்தில் தன்னைப் பெரிய மனிதராகக் காட்டிக்கொண்டு செய்கின்ற நடத்தைப் பிறழ்வுகளில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக சிங்களப் பெண்கள் பற்றிய சித்திரிப்பு புலம்பெயர் இலக்கியத்தில் மிக அரிதாகவே கூறப்பட்டுள்ளது. அதனை பொ. கருணாகரமூர்த்திஸ்பொன்சர் தாத்தாக்களும் ஏற்பாட்டுமாமாக்களும் என்ற சிறுகதையில் எடுத்துக் காட்டியுள்ளார்.
வண்ணத்துப் பூச்சியுடன் வாழ முற்படல் என்ற கதையில் தாய்லாந்தில் இருந்து இளைஞர் ஒருவரால் அழைத்து வரப்படும் பெண்ணும் கூட முடிவில் அவனிட மிருந்து விலகி இன்னோர் வடிவத்தில் பாலியல் சுரண்டலுக்கு ஆளாதல் சித்திரிக்கப்பட்டுள்ளது.
போரால் வாழ்வின் விளிம்புக்குத் தூக்கி வீசப்பட்ட மாந்தர்களின் உணர்வினைப் பேசும் படைப்புக்களும் கவனத்திற்குரியன. இனப்போராட்ட சூழலில் யாழ்ப்பாணத்தில் பெரும் இடப்பெயர்வின்போது மக்கள் சந்திக்கின்ற இன்னல்கள் சோகம் ததும்ப அவர்களுக்கென்று ஒரு குடில் என்ற கதையில் காட்டப்படுவதிலிருந்து, ஜேர்மனிய தெருக்களில் அலையும் வாழ்வைத் தொலைத்த மாந்தர் வரை கருணாகரமூர்த்தியின் கதைகளின் களம் விரிகின்றது.
ജങ്ങബb உலைவும் (புலம்பெம் படைப்பிலக்கியம் குறித்த பார்வைகள்)ண s
f
 

"ஒரு அகதி உருவாகும் நேரம் குறுநாவலில் வரும் சட்டநாதன் இறுதிவரை வாழ்வின் ஏமாற்றங்களுடனேயே வருதல் உள்ளூர மனத்தில் அமுங்கிய சோகத்தையே வரவழைக்கின்றது. இதனைத் தனியே இனப்பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒருவரின் கதையாக மட்டுமல்லாமல் உலகப் பொதுமை பெறும் அளவில் நசிபடும் மானிடர்களின் அவலமாகக் கூட எடுத்துக் கொள்ளலாம்.
இரண்டாம் உலகப்போரின் வடுக்களில் இருந்து இன்னமும் மீளமுடியாத மூதாட்டியும் இனவாதத்தால் தோற்கடிக்கப்பட்ட ‘சுண்டெலி’ கதாபாத்திரமும் தெருப்பாடகனாக அலைந்து திரியும் ஏழைக்கலைஞனும் கூட வாழ்வின் விளிம்புக்கு தூரவீசப்பட்ட மாந்தர்களே.
அதுமட்டுமல்லாமல், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள், பிறதேசங்களின் ஒடுக்குமுறையிலிருந்து தஞ்சமடைந்த துருக்கியர், பாகிஸ்தானியர் ஆகியோருடன் பக்கத்து பக்கத்து வீடுகளில் முரண்பட்டு வாழ்கின்றபோதிலும், இறுதியில் அவர்களும் கூட அகதி அந்தஸ்த்து மறுக்கப்பட்ட நிலையில் அந்நாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்படும்போது பிரச்சனையின் கனம் ஒன்றாகத்தான் உள்ளது.
இது இன்றைய புலம்பெயர் இலக்கியம் சர்வதேசிய மானிடர்களின் அனுபவங்களையும் பேசும் அளவிற்குத் தனது எல்லைகளை விரித்துக் கொண்டமைக்குச் சான்றாக அமைகின்றது.
அறிவுக்கும் ஆத்மிகத்திற்கும் இடையிலான உரையாடலாக அமையும் பால்வீதி, போதிமரம், ஒரு கிண்டர்கார்டன் குழந்தையின் ஆத்ம விசாரணை ஆகிய கதைகளில் கர்மா பற்றிய விசாரணை உள்ளது. மனித சமூகத்தையே ஆட்டுவிக்கும் இன்னல்களுக்கு கர்மாவே காரணம் என்பதைக் கதைகளில் சுட்டும் கருணாகரமூர்த்தி பல சிந்தனைகளை முன்வைக்கின்றார். ஆனால் ‘விடுதலைக்குப்போராடும் யாருக்கும் மனதளவில் பெருந்தடையாக கர்மாக் கோட்பாடே நிற்கும்’ எனக் கூறும் கவிஞர் இன்குலாப்பின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே.
எமது மதங்கள் பாரம்பரியமாகக் கட்டிக் காத்துவரும் கருத்துக்களுக்கும் வாழ்வியலுக்கும் இடையில் நிரம்ப முரண்பாடுகள் உள்ளன. இதனை எடுத்துக் காட்டுவதில் கருணாகரமூர்த்தி விடைகூறமுடியாத தருணங்களும்
.Gൺഖത് 99

Page 60
உள்ளன. அவற்றை மையப்படுத்தியும் மேற்குறிப்பிட்ட கதைகள் அமைந்துள்ளன.
தனக்கேயுரிய பாணியில் கதைகூறும் ஆசிரியர் கதைக்களத்திற்கு ஏற்ப சில கதைகளில் மொழியைச் செம்மையாகக் கையாண்டுள்ளார். வடிவச் சிறப்புமிக்க பல கதைகளைத் தமிழுக்குத் தந்திருக்கும் கருணாகரமூர்த்தியின் படைப்புக்கள் புனைகதை உலகிற்கு வளம் சேர்க்கக்கூடியவை. குறிப்பாக தமிழர்தம் பண்பாட்டுப் பெறுமானங்கள் அந்நிய கலாசாரத்தில் திசைமாறிச்செல்லும் அபத்தநிலையையும், நசிபடும் மானிடங்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் சர்வதேசிய பொதுமை பெறும் பல கதைகளையும் தந்துள்ள வகையில் கணிப்பிற்குரிய படைப்பாளியாக பொ. கருணாகரமூர்த்தி திகழ்கின்றார் எனலாம்.
令令令
ஒலைவும் உலைவும் (புலம்பெக் படைப்பிலக்கியம் குறித்த பந்வைகள்)= 100

ஆசி.கந்தராஜாவின் படைய்புலகம்
കംക്ര6ഞ്ഞുൺഖങ്ങീ =
புலம்பெயர்ந்தோரின் படைப்பிலக்கியச் சூழலிலே இடை யிடையே மின்னல் அடித்தாற் போல் சில நல்ல தொகுப்புக்கள் காணக் கிடைக்கின்றன. அந்த வகையில் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் ஆசி. கந்தராஜா என அறியப்பட்ட படைப்பாளியின் பாவனை பேசலன்றி, உயரப் பறக்கும் காகங்கள், ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் அண்மைக் காலத்தில் வெளி வந்துள்ளன.
ஆசி. கந்தராஜா அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தாலும் தனது தொழிலின் நிமித்தம் உலகின் பல பாகங் களுக்கும் பயணப்பட்டுள்ளார்.
101

Page 61
அதன்மூலம் தான் தரிசித்தவற்றைத் தனது கதைகளுக்குப்பகைப்புலமாகக் கொண்டுள்ளார்.
ஈழம், அவுஸ்திரேலியச் சூழல் தவிர வங்காளதேசம், சீனா, வியட்நாம், கொரியா, ஜேர்மனி, ஆபிரிக்கா, யப்பான், ஆகிய நாடுகளைக் களங்களாகக் கொண்டுமொத்தம் 20 கதைகளை இரண்டு தொகுதிகளிலும் தந்துள்ளார்.
மிகப் பரந்த ஒரு புறவுலகச் சித்திரிப்பின் ஊடாக கதை சொல்லியாகத் திகழும் அ. முத்துலிங்கம் ஈழத்தமிழ் வாசகன் இதுவரை சந்தித்திராத பல களங்களைத் தனது கதைகளில் முன்வைக்கின்றார். அதன் தொடர்ச்சியாக பல களங்களை ஆசி, கந்தராஜாவின் கதைகளிலும் கண்டுகொள்ள முடிகின்றது.
ஈழச் சூழலை மையப்படுத்திய மூன்று கதைகள் தவிர ஏனையவை அவுஸ்திரேலிய தமிழ்ச் சூழலில் ஏற்பட்ட அநுபவங்களையும், தொழிலின் நிமித்தம் பிற நாடுகளுக்குப் பயணப்பட்டபோது பெற்ற புதிய அநுபவங்களையும் தரும் கதைகளாக உள்ளன. பொதுவாக இவரின் கதைகள்
ஆண் பெண் உறவுநிலை குறித்த சிக்கல்களையும் போலி வாழ்வின் பொய்மைகளையும் புதிய களங்களில் கிடைத்த அநுபவங்களையும் தனித்து விடப்பட்ட முதுமையின் தனிமை உணர்வுகளையும்
கதைக் கருக்களாகக் கொண்டு அமைந்துள்ளன. ஆனாலும் மிகச் சிறப்பாகப் பேசக்கூடிய அளவுக்கு ஆண் பெண் உறவுநிலை குறித்த கதைகள் அமைந்துள்ளன. அவை தமிழ்ச் சூழலிலும் பல்கலாசாரச் சூழலிலும் காதல் மற்றும் திருமண உறவு குறித்த சிக்கல்களை எடுத்துக் காட்டுவனவாக அமைந்துள்ளன.
அம்மா பையன், அடிவானம், ஒட்டுக் கன்றுகளின் காலம், உயரப் பறக்கும் காகங்கள், வெள்ளிக்கிழமை விரதம்,துர்க்கா தாண்டவம், ஆகிய கதைகள் மேற்கூறிய ஆண் பெண் உறவுநிலை குறித்துப் பேசுகின்றன.
புலமைப் பரிசில் பெற்று ஜேர்மனிக்குப் படிப்பின் நிமித்தம் சென்றபோது வியட்நாமியப் பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பும் பிரிவும்,நீண்டகாலங்களின்
ஜின்லவும் உலைவும் (புலம்பெயர் படைப்பியக்கியம் குறித்த பந்வைகள்)= O2

"புத்திஜீவிஎன்ற மமதையிலே மானிட தர்மங்களை மறந்த ஒருவரை என் தந்தை என்று அடையாளப்படுத்த நான் விரும்பவில்லை. கிம்மின் மகனாகவும் வியட்நாம் குடிமகனாகவும் வாழ்வதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.”
என முகத்தில் அடித்தாற்போல் சந்ததி வழியாகக் கேட்க முடிகின்ற குரலை 'அம்மா பையன் என்ற கதை காட்டுகின்றது.
மேலைத்தேய குடும்ப வாழ்வில் தன் கணவனிடம் இருந்து விவாகரத்துப் பெற்றுச் செல்ல விரும்பும் ஜேர்மனியப் பெண்ணும் தமிழ்ச் சூழலில் கணவன் எவ்வளவுதான் கொடுமையானவனாக இருந்தாலும் சேர்ந்து வாழ விரும்பும் தமிழ்ப் பெண்ணின் மனமாற்றமும் அடிவானம்’ என்ற கதையில் எடுத்துக் காட்டப்படுகிறது.
ஆபிரிக்கத் தேசத்தில் மணப்பெண் கூலி கொடுத்து ஆண்கள் திருமணம் செய்யும் கலாசாரத்திலே காதலர்கள் தமது திருமண பந்தத்திற்காகப் பணம் சேர்க்கிறார்கள். அதில் பெண்; தான் உடலால் சோரம் போனாலும் உள்ளத்தால் தன் காதலை இழக்காத பெருமை வெள்ளிக்கிழமை விரதம் என்ற கதையில் எடுத்துக் காட்டப்படுகிறது. ஒரு வகையில் புதுமைப்பித்தனின் பொன்னகரத்தை ஞாபகப்படுத்தினாலும் ஆபிரிக்கக் கலாசாரத்தின் சில பக்கங்களை அறிய வைக்கிறது.
இவ்வாறான ஆண் பெண் உறவுநிலை குறித்த கதைகளிலே எமது தமிழ் மரபுச்சூழலையும் பிற நாடுகளின் கலாசாரச் சூழலையும் கொண்டு வந்து நிறுத்துவதன் மூலம் பல கருத்துக்களை தனது கதைகளின் SD6LT55 கேள்விக்கு உட்படுத்துகின்றார். ംക്ര6ഞ്ഞുൺബങ്ങ് = 103

Page 62
புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களில் பலர் தமது போலிப்
பெருமைகளையும் பழக்க வழக்கங்களையும் இன்னமும் விட்டுவிட (LDLọU JTLD6ử
ஒவ்வொருவரும் மற்றவரை ஏமாற்ற போலி முகங்களுடன் வாழ்ந்து வருவதை காலமும் களமும், முன்னிரவு மயக்கங்கள், பாவனை பேசலன்றி, ஆகிய கதைகளில் எள்ளல் தொனிக்க சிறப்பாகக் கூறியுள்ளார்.
தொழில் காரணமாக சென்ற இடங்களில் தரிசித்த அநுபவங்களைப் பல
கதைகளில் எடுத்துக் காட்டுகின்றார். அதில் ஒரு கதை வேகமான
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக யப்பான் தேசம் பற்றிய எமது
கருத்தியலை கேள்விக்கு உட்படுத்துகின்றது. அங்கும்கூட ஓர் இருண்ட
பக்கம் தேன் சுவைக்காத தேனீக்கள்’ என்ற கதையூடாக எடுத்துக்
காட்டப்படுகிறது. பல நெருக்கடிகளுக்கு மத்தியில் படித்து பரீட்சையில்
வெற்றிபெற முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சிறுமியின் நிலை
மானிட நேயமுள்ள எவரையும் உலுப்பி விடக் கூடியது. மரணத்துக்கு யப்பான் தேசத்தினர் கொடுக்கும் முக்கியத்துவமும், இக்கதையில் எடுத்துக்
காட்டப்பட்டிருக்கின்றது.
ஆசி. கந்தராஜாவின் கதைகளில் சமூகத்தால் தனித்து விடப்பட்ட பாத்திரங்களின் உணர்வுக்கோலங்கள் இன்னுமோர் முக்கியமான கூறாகும்.
யாழ்ப்பாணத்துச் சூழலில் தனித்துப் போன பூமணிரீச்சர், அவுஸ்திரேலிய தமிழ்ச் சூழலில் தனித்துப்போன சின்னத்துரை வாத்தியார்,கணவன் இறந்த பின் வீட்டையும் பங்குபோட்டு பிள்ளைகளால் தனித்து விடப்பட்ட பார்வதியம்மா, ஆகிய பாத்திரங்கள் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வோட்டக் கூறுகளுக்கு முகங்கொடுக்க மாட்டாமல் தனித்துப்போனவர்கள். அவர்களின் உள்ளங்களில் ஒளிந்திருக்கும் பல கதைகளை பாத்திரங்களின் மெளனங்களின் ஊடாக உணர்த்திவிடுகின்றார்.
அலைவும் உலைவும் (புலம்பெக் படைப்பிலக்கியம் குறித்த பார்வைகள்) 104
 

இங்கு கூறப்பட்ட எல்லாக் கதைகளிலுமே குறைந்த பட்சம் மானிட நேயமுள்ள ஒரு மனிதன் உலா வருகின்றான்.
"ஒரு நீளும் கை கந்தராஜாவின் வார்த்தைகளுக்கு முளைத்து விடுகிறது. அந்தக்கை நம் தோளைத் தொடுகிறது. தொட்டு நம் கவனத்தை அவர் சொல்லும் விஷயத்தின் பக்கம் நகர்த்துகிறது. உணர்வு கொப்பளிக்க ஆனால் உரக்கச் சத்தம் போடாத நளினம் ஆசிரியருக்கு கைவந்து விடுகிறது. இதுதான் அவரைத் தனித்துவப்படுத்துகிறது. சாதாரண சொற்கள் சத்தியத்தில் நனைந்து விடுகின்றன. எனக்கு கதைகளைக் காட்டிலும் கதைக்குப் பின்னால் இருக்கும் ஆத்மா முக்கியமாகப் படுகின்றது."
என்று பிரபஞ்சன் கூறுவது கவனிக்கத் தக்கது.
இலாவகமான நடை, கோட்பாடுகளைப் போட்டுக் குழப்பாத நிலை, கதைக்குத் தேவையான நகர்வு, எல்லாம் சேர்ந்து கதைகளை சுவாரசிமாக படிக்க வைக்கின்றது.
ஆனால் இன்றைய புலம்பெயர் படைப்புலகிலேஷோபாசக்தி, பார்த்திபன், பொ. கருணாகரமூர்த்தி, கலாமோகன் போன்ற படைப்பாளிகள் காட்டும் படைப்புலகம் ஆசி. கந்தராஜாவின் கதைகளில் இருந்து வேறுபடுகிறது. அந்த வேறுபாடுகள் உலக அரங்கில் இன்று பேசப்படும் அகதிநிலை தொடங்கி கலாசார அந்நியமாக்கல் வரை விரிந்து செல்கின்றன.
தனியே உலக அநுபவம் மட்டுமல்லாது அகதி நிலையும் அவலங்களும் நெருக்கடியும் சேர்ந்தே ஈழத்தமிழரின் புலம்பெயர் இலக்கியத்தை அடையாளப்படுத்த முடியும்.
புலம்பெயர் படைப்பிலக்கியத்திற்கு வலுச்சேர்க்க ஆசி கந்தராஜாவின் கதைகளும் இன்னமும் புதிய களங்களை நோக்கி நகரும் என்று
எதிர்பார்க்கலாம்.
-0-0--0
ംക്ര6ഞ്ഞുൺബങ്ങ് = 105

Page 63
கலாமோகனின் கதைகள் ஒரு முன்குறிப்பு
5. கலாமோகன்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்த ஈழத்தமிழ்ப் படைப்பா ளிகளில் ஒருவராக அறியப் பட்டவர். பிரெஞ்சு மொழியிலும் எழுதிவருபவர். 1983 இல் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து தற்போது பிரான்சில் வாழ்ந்து வருகின்றார்.
1999 இல் பிரான்சில் இருந்து எக்ஸில் வெளியீடாக வந்த நிஷ்டை சிறுகதைத் தொகுப்பின் மூலம் தமிழ் இலக்கிய உலகின் கவனிப்பைப் பெற்றவர். இதன் பின்னர் 2003 இல் அவுஸ்திரேலியாவில் இருந்து மித்ர வெளியீடாக ஜெயந்தீசன் கதைகள் தொகுப்பும் வெளிவந்துள்ளது. இவை
தவிர வீடும் வீதியும் என்ற நாடக அலைவும் உலைவும் (புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்ர பந்வைகள்)= 106

நூலும், பிரெஞ்சு மொழியில் கலாமோகனால் படைக்கப்பட்ட Et damain (நாளையும் ) கவிதைத் தொகுப்புமாக இதுவரை நான்கு நூல்கள் வெளியாகியுள்ளன. கலாமோகனின் பிரெஞ்சுக் கவிதைத் தொகுப்பை பேராசிரியை கிறிஸ்டின் மார்ஸ்ரண்ட் Og Morgen என்ற நூலாக டெனிஸ் மொழியில் மொழிமாற்றமும் செய்திருக்கின்றார்.
நவீன தமிழ் இலக்கியத்தின் வீச்சான எல்லைகளைத் தொட்டுவிட முனையும் கலாமோகனின் படைப்புக்களில் நிவர்டை, ஜெயந்தீசன் கதைகள் என்ற இரண்டு தொகுப்புக்களையும் முன்வைத்தே இக்குறிப்பு வரையப்படுகிறது.
நிஷடை தொகுப்பில் உள்ள 12 சிறுகதைகளும் உதிரியாக வெளிவந்த புகார், பாம்பு, குளிர், 20 ஈரோ, ஆகியனவும் நவீன தமிழ்ச் சிறுகதை வடிவத்தின் சாத்தியப்பாடுகளை உள்வாங்கிய கதைகள். மறுபுறம் ‘ஜெயந்தீசன் கதைகள்’ என்ற தொகுப்பு, 67 குறுங்கதைகளைக் கொண்டமைந்தவை. இக்கதைகளை Satire (கேலி, வசை) வகைக் கதைகள் என எஸ். பொ குறிப்பிடுகிறார். இவை சிறுகதைகள் என்ற சட்டகத்துள் அமையாதவை. ஈழத்தில் காசி ஆனந்தன், செம்பியன் செல்வன் ஆகியோர் எழுதியுள்ள சில குறுங்கதைகளின் அமைப்பில் உள்ளன. ஆனால் கலாமோகன் இக்கதைகளில் சுட்டும் பொருட்பரப்பு வித்தியாசமானது. சமூகத்துள் உள்ளமுங்கியிருக்கும் பல விடயங்களை வெளிக் கொண்டு வருவதும் அவற்றை ஏளனம் செய்வதுமே ஜெயந்தீசன் கதைகளின் முதன்மையான நோக்கமாயுள்ளது.
இந்த வகையில் கலாமோகனின் அக்கறைகள் அதிகமும்புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் மீதாகவும், தவிர்க்க முடியாத வகையில் அவர்களின் தற்கால வாழ்வியல் மீதான விமர்சனமாகவும் எடுத்துக் கொள்வதற்குரிய சாத்தியம் அதிகமாயுள்ளது.
இளமைப் பருவம், தாயக நினைவு, அகதி வாழ்வு, அகதி அந்தஸ்துப் பெறுவதற்கான அவலம்,தொழிற்தளம், தனிமை வாழ்வு,ஒழுக்கம் தவறல், மணப்பெண் தேடல், மணப்பெண் இறக்குமதி, சீதனம், சாதி, இளைஞர் நிலை, குடும்ப உறவுநிலை, குடும்ப உறவுமுறையின் குழப்பங்கள், அமைப்புக்களின் பிரச்சனைகள், ஏமாற்றங்கள், பகட்டு வாழ்வு, பிரபல்ய முயற்சிகள் ஆகிய விடயங்களை கலாமோகன் தனது கதைகளுக்குக் கருவாகக் கொள்கிறார்.
ംക്ര6ഞ്ഞുൺബര് = 107

Page 64
ஒருமித்த பார்வையில் கலாமோகனின் சிறுகதைகளும் சரி, குறுங் கதைகளும் சரி, பின்வருவனவற்றை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளதை அவதானிக்கலாம்.
1. ஆண் பெண் ஒழுக்கவியல் மரபினைக் கேள்விக்கு
உட்படுத்துதல். 2. குடும்ப உறவுநிலையில் ஏற்படும் சிக்கல்களை
உணர்த்துதல். 3. குருட்டு நம்பிக்கையும், பிரபல்யத் தேடலும் வளர்ந்து
வருவதை ஏளனஞ் செய்தல். 4. சூழலின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளல்.
தமிழ்ப் பண்பாட்டால் கட்டமைக்கப்பட்ட மாந்தர்கள் முற்றிலும் வித்தியாசமான அந்நிய கலாசார சூழலிலே வாழ நேரிடுகின்றபோது அவர்தம் சுய அடையாளத்துடனான பண்பாட்டுப் பெறுமானங்கள் உடைந்து போகின்றன. ஒரு வகையில் முதலாளித்துவ உலகும், பல்கலாசாரச் சூழலும் ஏற்படுத்தும் தாக்கத்தினால் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது தமிழ்ப் பண்பாட்டின் ஒழுக்கவியல் மரபிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இளைஞர்களாகவும் குடும்பமாகவும் புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்களின் வாழ்வை தாயகச் சூழலிலிருந்து நோக்கும்போது இவ்வாறான கேள்வியே மிஞ்சுகிறது.
நிஷடை தொகுப்பில் உள்ள இரா, கனி, இழப்பு, ஈரம், தெரு, மற்றும் உதிரியாக வெளிவந்த புகார், பாம்பு, 20 ஈரோ, ஆகிய சிறுகதைகளும் மேற்குறிப்பிட்ட ஒழுக்கவியல் மரபின் மீதான கேள்விகளையே முன்வக்கின்றன.
“கலாமோகனின் கதைகள் பாலியல் சார்ந்த குழப்பங்களுக்கு இலக்காவதுண்டு. அவரின் பெரும்பாலான கதைகள் ஆண் பெண் உறவுநிலைகளை எந்தச் சட்டகங்களுக்குள்ளும் நில்லாமல் வெளிப்படையாக, இயல்பாகப் பேசிவிடுகிறது. சிலவேளை கலாமோகன் சமூகத்துள் மறைந்து கிடக்கின்ற, நிகழ்கின்ற கள்ள உறவுகளை எந்தப் பூச்சுகளுமின்றிசொல்ல வந்திருக்கிறார் என்று கருதவும் ജ്ഞങ്ങഖ്) തങ്ങഖ ((ൾ തLá ക്ര8 (= 108

இடமுண்டு. எல்லாம் பிரதி மீதான வாசிப்பில்தான் உள்ளது."(எம்.கே. எம். ஷாகிப், சரிநிகர், 6-19 ஜூலை 2000, ப.15)
கந்தபுராண கலாசார மற்றும் சாதிய வர்க்க சிந்தனைகளாலும் கட்டமைக்கப்பட்ட ஈழத்தமிழர் வாழ்வு அதற்குள்ளேயே ஒழுக்கவியலையும் எழுதாத விதியாக வரித்துக் கொண்டது. இதனை இன்னமும் ஆழமாக நோக்கின் பல விவாதங்களை ஏற்படுத்தும். எதிர்மாறான விடைகளையும் தரக்கூடும்.
இளைஞர்களாகச் சென்றவர்களுக்கு ஏற்றுமதியாகும் மணப்பெண்களும், அங்கு குடும்ப வாழ்வில் புகுந்து கொண்டவர்களும் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். சந்தேகம், விவாகரத்து, தனித்து வாழ்தல், மணப்பெண் மாறுதல், திருப்பி அனுப்பப்படல் என்றவாறு பல்வேறு வடிவப் பரிணாமங்களை இந்தப் பந்தம் ஏற்படுத்துகின்றது.
பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ்ப் பிரதேசங்களில் குடும்ப உறவுகளை அனுசரித்தும், வாழ்வின் சுகதுக்கங்களில் இணைந்தும் தம் வாழ்வை அமைத்த தமிழர் சமூகம், இன்று இயந்திர வாழ்வுக்குள் அந்நியப்பட்டுப் போன பின்பு அவசர அவசரமாக தமது அடையாளங்கள் எனக் கருதி வாழ்வுச் சூழலின் வசதியிலே குருட்டு நம்பிக்கையுடனும் பெரும் எடுப்பிலும் வீட்டு விசேடங்களை நிகழ்த்திக் காட்டலும், பிரபல்யப் பெருமை பேசுவதற்காக எதுவும் செய்யத் தயாராய் இருப்பதுவும் ஜெயந்தீசன் கதைகளின் குறுங்கதைகள் புலப்படுத்துகின்றன.
தற்கால வாழ்வின் அவசரக் கோலத்தில் உண்மைகளும் அர்ப்பணிப்புக்களும் தேவைகளும் பின்தள்ளப்பட்டு பொய்யும் பிரபலமும்
亲
ംക്ര6ങ്ങൺബര് = 109

Page 65
பகட்டும் முன் நிறுத்தப்படுகின்றன. இவை தனியே புலம்பெயர் சூழல்தான் என்றில்லாமல் எங்கும் யதார்த்தமாகிப் போனதும் வேடிக்கையானதே.
சூழலின் யதார்த்தைப் புரிந்து கொண்டதான பல சிறுகதைகள் கலாமோகனிடம் வலுவாக உள்ளன. அது புகலடைந்த நாட்டு வாழ்வனுபவங்கள் ஊடாகப் புலப்படுத்தப்படுகின்றது. தொழிற்தளத்தை மையப்படுத்திய 'உருக்கம் என்ற சிறுகதை மிகச் சிறந்த ஓர் அப்பாவித் தனமான சித்திரிப்பாக அமைந்துள்ளது.
“என்ர பத்திரோன் (முதலாளி) நல்லவர். அவர் மட்டுமே, அவற்றை மனிசி, மகன், மகள், நாய்க்குட்டி, பூனைக்குட்டி எல்லாந்தான். பிரெஞ்சு ஒழுங்காகப் பேசமாட்டன் எண்டதாலை, எங்க என்னை நிப்பாட்டிப் போடுவாரோண்டு வேலைக்குப் போய்ச்சேர்ந்த காலத்தில எனக்கு அவரிலை பொல்லாத பயம். அவர் கதைக்கிறது எனக்கு வடிவா விளங்குறதில்லை. நான் கதைக்கிறதெல்லாம் தனக்கு 6)J96JT85 விளங்குதெண்டு - என்னைப்போலை கையையும் தலையையுமாட்டிச் சொல்லிறவர். இங்கிலிஸிலைபேச வெளிக்கிட்டாலும் அவரோ,நீஉன்ரை பிரஞ்சிலைபேசு, அது தனக்கு நல்லா விளங்குமெண்டிறவர். நல்ல பத்திரோன். அவர் எங்கடசனங்களைப் போலயில்லை. சனங்கள் எப்ப பார்த்தாலும், நான் முவா துவா (நான், நீ) எண்டுதான் பிரெஞ்சு பேசுறன் எண்டு சொல்லி என்னை நக்கலடிக்குங்கள். அதுகளுக்குப் பொய்தான் பேசத்தெரியும். பத்திரோன் மட்டும் தான் உண்மை பேசுறவர். நல்ல பத்திரோன். என்னோடை நல்ல நேசம். நான் கோப்பையள் கழுவிக் கொண்டிருக்கேக்கை - குசினிக்கை வந்தாரெண்டா என்ரை முதுகிலை தட்டிச் சிரிக்காமல் போக மாட்டார். நல்ல பத்திரோன்." (உருக்கம், நிஷடை, ப. 37)
இதுபோன்ற பல கதைகளை புகலிடத்தில் எழுத்துப் பயணத்தை ஆரம்பித்த இளைய பரம்பரை எழுத்தாளர்கள் பலரிடம் அவதானிக்க முடிகின்றது. அகதியாகிப் போன பரதேசி வாழ்வைப் புலப்படுத்தும் ജ്ഞങ്ങബർ 9-ങ്ങബ് (Gൾ ശ്ചല്ക്ക് ക്ര8 (ഖമീ= 110

வகையில் அமைந்தமூன்று நகரங்களின் கதை, "எனதுதேசம் ஆகியனவும்; தனிமைத்துயரையும் ஆழ்மன விசாரணையையும் வெளிப்படுத்தும்நிஷடை, 'நிழல்' ஆகியனவும் சூழலின் யதார்த்தத்தைப் புரிந்து கொண்ட சிறுகதைகளுக்கு நல்ல உதாரணங்கள் ஆகும்.
தமிழில் ஏற்கனவே இருந்துள்ள வடிவத்தை அனுசரித்துச் செல்கின்ற கலாமோகன் புனைவின் தருக்கத்திற்கு ஏற்ப புதிய வடிவங்களையும் கையாள்கின்றார். ஈரம், இழப்பு ஆகிய இரண்டு சிறுகதைகளும் துண்டுதுண்டான கதைசொல்லலும், சாத்தியமானதை ஏற்றுக்கொள்ளலும் சாத்தியமற்றதை விலக்கலுமான வகையில் அமைந்துள்ளன. இது இன்றைய புனைவின் புதிய உத்தியாகவும், பின்நவீனத்துவக் கோட்பாட்டை அனுசரித்து மரபுவழிப்பட்டதை மறுப்பதாகவும் அமைகின்றது. அவை கதைகளின் உள்ளடக்கத்தில் மட்டுமல்லாது உருவத்திலும் மாற்றத்தை வேண்டிநிற்கின்றன. புகலிடத்தில் ஏற்கனவே வெளிவந்த ஷோபாசக்தியின் தேசத்துரோகி சிறுகதைத் தொகுப்பிலுள்ள சில சிறுகதைகளில் இப்பண்பை அவதானிக்க முடியும்.
போதனையாகவோ சீர்திருத்தமாகவோ அமையாமல்; உள்ளதை உள்ளபடி எல்லோரிடமும் கொண்டு செல்லக்கூடிய ஒரு உத்தியாக ஜெயந்தீசன் கதைகள் அமைந்துள்ளன. அவை வெகுஜன இதழியலுக்குரிய வடிவத்தையும் கொண்டுள்ளன. இத்தொகுப்பிலுள்ள குறுங்கதைகளில் சில, தமிழ்ப் போராளி அமைப்புக்கள் சார்ந்த விமர்சனத்தை முன்வைப்பனவாகவும் உள்ளன. புலம்பெயர் படைப்பாளிகள் சிலரிடம் இருக்கும் மாற்றுக்கருத்து சார்ந்த நிலைப்பாடாக இதனைக்கருதலாம். ஆனாலும் அவற்றில் இருக்கும் மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
நிஷடை சிறுகதைகளின் உருவ உள்ளடக்கம் அவரின் குறுங்கதைகளில் இல்லாதபோதும் இரண்டுமே சொல்லவிழையும் செய்திகளில் ஒன்றுபடுவதை அவதானிக்க முடிகின்றது. அத்தோடு கலாமோகன் கதைகளின் நடையும் (style) கவனத்திற்கு உட்படுத்தவேண்டியவை. மேலே எடுத்துக் காட்டப்பட்ட "உருக்கம் கதையில் வரும் எளிமையானநடைக்கும் இவரின் கனி கதையில்வரும் பைபிள்சார் நடைக்கும் இடையில் பெருத்த வித்தியாசத்தைக் கண்டு கொள்ள முடியும். ஏனைய கதைகள் இன்னோர் விதமானவை. இந்த ஏனையவை என்பவற்றுக்குள் வரும் கதைகளின் நடையே கலாமோகனின் அதிகமான கதைகளின் நடையாக உள்ளது. மூன்று நகரங்களின் கதையில் வரும் ஒரு பகுதி
aംക്ര6ഞ്ഞുൺബര് = 111

Page 66
"உடல். எனது உடல். காசினால் காக்கப்பட்ட உடல். எனது உடல் கடல் கடந்து அகதியாகிவிட்ட உடல். மூன்றாவது நகரில் நான் இப்போது அகதி முதலாவதுநகரிலோ அகதிப்பெருமை கிட்டாமல் எத்தனையோ உடல்கள் மண்ணிடை மண்ணாய்ப் புதைந்த வண்ணம். தப்புதல் கருத்துடனோ கட்சியுடனோ கடவுளுடனோ சம்பந்தப்பட்ட விஷயமல்ல. காசுடன் சம்பந்தப்பட்டது என்பதை மூன்றாவது நகரில் காலடி எடுத்து வைத்த முதல் நாளிலேயே புரிந்து கொண்டேன். எனது மூன்றாவது நகரம் பாரிஸ” (மூன்று நகரங்களின் கதை, நிஷ்டை ப.34)
என்றவாறு அமைவதனை உதாரணத்திற்காகக் குறிப்பிடலாம். இறுக்கமான கதைகளாயினும் சிக்கலற்ற மொழிக்கையாளுகை கதைகளில் வாசகனுக்கு ஏற்படும் ஈர்ப்பை அதிகரிக்கவே செய்கின்றன. கலாமோகனின் பின்நவீனத்துவ கதைகளுக்கும் இது பொருந்தக்
Ցուգեւ 15l.
முடிவாக, கதைகளின் உள்ளடக்கத்தில், அவற்றின் உருவத்தில், அவற்றின் நடையில், வித்தியாசங்களை முன் நிறுத்துவதாக கலாமோகனின் படைப்புலகம் அமைந்துள்ளது.
இவ்வகையில் கலாமோகனின் இரண்டு தொகுப்புகளும் மூன்று வகையான வடிவப் பிரக்ஞையை வேண்டி நிற்கின்ற அதேவேளை உள்ளடக்கரீதியில் இரண்டுமே முக்கியமானவையும்கூட. ஒருபுறம் தமிழ்ப் பண்பாட்டு ஒழுக்கவியலை கேள்விக்கு உட்படுத்தலும் மறுபுறம் மிக வேடிக்கையான தமிழர் தம் வாழ்வியற் செயற்பாடுகளும் ஈழத்தமிழ்ப் பண்பாட்டு மனங்களின் படிப்படியான சரிவினையே புலப்படுத்திநிற்கின்றன. இதனை உறுதிப்படுத்துவனவாகவே கலாமோகனின் இரண்டு தொகுப்புக்களும் அமைந்துள்ளன.
令令今
ഉതേ ഞ്ഞു ClaucibGVWS UGouüSovááwö (2x)}g vmboebajason) -
 

பிரசுர விபரம்
1. புலம்பெயர் தமிழ் இலக்கியம்
DSLIGử (60060 2oo9), thinnai.com (SnaFÜ. 2oo9) ஆகியவற்றில் வெளிவந்த கட்டுரையின் விரிந்த வடிவம் 2. புலம்பெயர் சஞ்சிகைகள் - ஆய்வுக்கான ஓர் அறிமுகம்
thinnai.com 18.10.2OO7 கலைமுகம் ஜனவரியூன் 2008 இதழ் 47 pathivukal.com செங்கதிர் - இதழ் 10,11,12 3. புலம்பெயர் தமிழ்ப்படைப்புலகில் மொழிபெயர்ப்பு முயற்சிகள்
g56T66er 6JTuDeaf, Os-O5-2Oos 4. புலம்பெயர் தமிழ்ப்படைப்புலகில் பிரதேசச் செல்வாக்கு
ஞானம் 100 வது இதழ் 2008 pathivukal.com 5. சுமதிரூபனின் யாதுமாகிநின்றாள்
தினகரன் 19.06.2007 6. ஷோபாசக்தியின் தேசத்துரோகி
புதியதரிசனம் இதழ் 4,ஆடி2oo4 7. பாரிஸ் கதைகள் பற்றி
வீரகேசரி வாரவெளியீடு, 05-06-2005 ப.22 8.அ. இரவியின் காலம் ஆகிவந்த கதை
புதியதரிசனம், மே-ஜூன் 2005, ப.62-64. 9. ஆழியாளின் துவிதம் ஜீவநதி இதழ் 1, 2oo7 thinnai.com 16.12.2OO7 10.பொ.கருணாகரமூர்த்திபடைப்புக்கள் - ஒரு பார்வை
தினகரன் 2005-ஆகஸ்ட் 28. ப.5 11. ஆசி.கந்தராஜாவின் படைப்புலகம்
தினகரன் வாரமஞ்சரி 06.03.2005 12.க.கலாமோகனின் கதைகள் குறித்து. ஒரு முன்குறிப்பு
thinnai.com 27.12.2Oo7, எதுவரை இலண்டன்) இதழ்-12oog
令令令 ംക്ര6ഞ്ഞുൺബീ = 113

Page 67
நன்றி
வீரகேசரி தினகரன் உதயன் புதிய தரிசனம் ஜீவநதி கலைமுகம் ஞானம் செங்கதிர் எதுவரை Thinnai.com (Pathivukal.com
அலைவும் உலைவும் (புலம்பெக் படைப்பிலக்கியம் குறித்த பந்வைகள்)= 114

கட்டுரைகள் பற்றி.
சு. குணேஸ்வரன் புலம்பெயர் இலக்கியம் பற்றி இலங்கையிலே தொடர்ந்து ஆய்வு செய்து வருபவர். சித்திரலேகாவுக்குப் பின்னர் இந்த ஆப்விலே குணேஸ்வரன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பெருந்தொகையான தகவல்களைத் தேடிச் சேர்த்துள்ளார். இருபதாம் நூற்றாண்டில் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் கவிதை புனைகதை பற்றிய ஆப்வு என்னும் முதுதத்துவமாணிப்பட்ட ஆய்வேட்டினை (2006) எழுதியுள்ளார்.
- பேராசிரியர்அ. சண்முகதாஸ்,
ஞானம் 100 வது இதழ் ப 68
உங்கள் இணையத்தள எழுத்துகள் எனக்கும் efefefutó ugeotóQuuj இலக்கியம் பற்றிப் பயிலும் பட்டதாரி மாணவர்களுக்கும் பயன்படுகின்றன.
— assormóldasn.aröð)gupæýluvai, sest_ff
18.03.2008 மின்னஞ்சலில்
திண்ணையில் தரமான படைப்புக்களும் பயனுடைய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. புலம்பெயர் சஞ்சிகைகள் குறித்த கட்டுரை சிறப்பு. கட்டுரையாளருக்கு என் பாராட்டுக்கள்.
- முனைவர் மு. இளங்கோவண் புதுச்சேரி இந்தியா.
sediCulrust 25, 2007 thinnai.com
இவ்வமர்வின் முதலாவது கருத்துரையை சு. குணேஸ்வரன் புலம்பெயர் இலக்கியம் எனும் தலைப்பில் நிகழ்த்தினார். இது நன்கு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட நேர்த்தியான கருத்துரையாகும்.
- நெருவன், சரிநிகர் செப் 2007, ப.84 (திருமறைக் கலாமன்றக் கருத்தரங்கு பற்றிய குறிப்பில்)
ஆழியாளின் துவிதம் கவிதைத் தொகுப்புப் பற்றி நூல் மதிப்புரை செய்த குணேஸ்வரனின் ரசனையும், அதனை எடுத்தியம்பிய விதமும் அவரை தேர்ந்த விமர்சகனாக அடையாளம் காட்டுகின்றன.
- டாக்டர். எம். கே. முருகானந்தண், கொழும்பு,
ஜீவநதி இதழ் 2, ப.50
aca,660aafayed 115

Page 68


Page 69
குணேஸ்வரன் u பல்கலைக்கழகத்தில் த புப் பாடமாகப் பயின்ற Gluf இலக்கியங்க தேடலில் மிகுந்த ஆர்வ L61) b பெயர் இ தொடர்பான ஆய்வில் முதுதத்துவமாணிப் (N டத்தினைப் பெற்றுக் கெ மாணவனும் இவரே. பட் டங்களாகவே இருந்து போவதும் உண்டு. குணேஸ்வரன் தனது
தேடுதலை விருப்பார்வ
விடாமல் தொடர்ந்து புலம் பெயர் படைப்புக் தகவற் பெட்டகமாகே வளர்த்து வருபவர். ஆய்வுத் தாகமுள்ள ஒருவனின் வாசிப்பு அனு அறிமுகக் குறிப்புக்கள் வதே அலைவும் உை இச் சிறு நூல்.
கலாநிதி ம சிரேஷ்ட வி
யாழ்ப்பாணப் பல்
 

பாழ்ப்பாணப் மிழைச் சிறப் வர். புலம் ள் குறித்த
J(p6OLuu6)IT. லக்கியங்கள்
b ஈடுபட்டு M.Phil) Lil' ாண்ட முதல் -LBJ56ir LIL'
பறந்தோடிப் ஆனால் ஆய்வுத் முயற்சியாக வருபவர். கள் குறித்த வ தன்னை அவ்வாறான
LDIT600T66 லுபவங்களின்
|TF T85 960). D லவும் என்ற
இரகுநாதன்
ரிவுரையாளர் தமிழ்த்துறை கலைக்கழகம்