கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஏதிலிகள்

Page 1


Page 2


Page 3

O b67
(சிறுகதைகள்)
கலைஞர் தாழை செல்வநாயகம்
மணிமேகலைப் பிரசுரம் தபால் பெட்டி எண் : 1447 7 (ப.எண்4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24342926,24346082 LSeiT sé5sä : manimekalai1G)dataone.in Website : www.tamivanan.Com

Page 4
2
நூல் விவரம்
நூல் தலைப்பு ஆசிரியர் மொழி
பதிப்பு ஆண்டு
பதிப்பு விவரம்
உரிமை
தாளின் தன்மை
நூலின் அளவு
அச்சு எழுத்து அளவு
மொத்த பக்கங்கள்
நூலின் விலை
அட்டைப்பட ஓவியம்
லேசர் வடிவமைப்பு
அச்சிட்டோர்
நூல் கட்டுமானம்
வெளியிட்டோர்
ஏதிலிகள்
கலைஞர் தாழை செல்வநாயகம்
தமிழ்
2007
முதற் பதிப்பு
ஆசிரியருக்கு
11.6 ટી.ટી.
கிரெளன் சைஸ்
(12%x 18% செ.மீ)
11 புள்ளி
140
જી. 40.00 bd 2 ஜமால் கிறிஸ்ட் கம்ப்யூட்டர்ஸ் (C) 23725639
ஸ்கிரிப்ட் ஆஃப்லெட் சென்னை - 94.
தையல்
tDavf&toGeD60ö ólgarð சென்னை -17

அமரர் செ. இளையதம்பி J.P. வாழைச் சேனை இந்துக்கல்லூரி திருகோணமலை இந்துக்கல்லூரி, முன்னாள் அதிபர்.
அரிவரி, தொடக்கம் உயர்தரம் வரையில், கல்வி கற்பித்த ஆசான். மாமேதை. அமரர் செ. இளையதம்பி அவர்களுக்கும் - அத்துடன் எனக்கு கல்வியூட்டிய கே. வேல்முருகு ஐயா, அமரர் வே. சாமித் தம்பி ஐயா, எம். இராசையா ஐயா, கு. நாகமணி ஐயா, ஆகியோர்களையும், என் தாய், தந்தை. தாய்மாமன் க. நல்ல தம்பி ஆகியோரையும், எனது தொழிலில் எனக்கு வழிகாட்டிய அமரர் க. தவசிப் பிள்ளை (வெல்லாவெளி) அவர்களையும் நினைவு கூர்ந்து,
இச்சிறுகதைத் தொகுப்பு நூலைக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறேன்
- தாழை Qedbojnuరిలీ

Page 5
இந்துக் கல்லூரியில் அரசினர்
LI ITL BT el al
ஆசிரியர்களும்
நிற்பவர்கள்
స్టా
ரேஸ்ட
எனக்கு கல்வி கற்பித்த அனைத்து
[195B]
*
அமர்ந்திருப்பவர்கள்
(இடமிருந்து வலம்) (இடமிருந்து வலம்)
அமரர் கு. சாமித்தம்பி திருமதி ப, பீதாம்பரம்
எஸ். நல்லதம்பி
ஜே.ஜே.எம். ஜெகராசா
அமரர் வே. சாமித்தம்பி ஜே.வி. அம்பலவாணர்
LOT. gy IT in FLIT கே. வேல்முருகு
அமரர் எஸ். இளையதம்பி அதிபர் எஸ். ராமதிலகம் ନTର୍ମା), $lfil୩Tit #it அமரர் என். ராஜூ
 
 
 
 

அணிந்துரை
மட்டக் களப் பின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவரான தாழை செல்வநாயகம், வாழைச்சேனையில் உள்ள பேத்தாழை கிராமத்தைச் சேர்ந்தவர். 1970-களில் நிறைய எழுதினார், கதை, கட்டுரை, விமர்சனம், நாடகம் எனப்பல துறைகளில் அவர் ஆக்கங்கள் வெளிவந்தன.
19 - வாழைச்சேனையில் "கம்பன் கலாமன்றம்’ என்ற பெயரில் ஒரு இலக்கிய அமைப்பினை ஆரம்பித்து, அதன் தலைவராகவும் செயற்பட்டார். இம்மன்றத்தின் மூலம், பல நாடகங்களை அரங்கேற்றி, அந்நாடகங்களில் நடிக்கவும்
செய்தார். s 1980-களில், வீரகேசரி நிருபராகவும் A. செயற்பட்டார். அக்காலகட்டத்தில் இவர்,
G ஆக்கங்கள், வீரகேசரி, மித்திரன், தினகரன்,
(&s, தினக்குரல், சுடர் முதலிய பத்திரிகைகளில் N్యస్తూ தொடர்ந்து வெளிவந்தன.

Page 6
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியிலும் பல ஆக்கங்கள் ஒலி பரப்பாகின. பேச்சுகள் இடம்பெற்றன.
இவர் தனது கலை, இலக்கிய வாழ்வில் நிறைய கெளரவங்களைப் பெற்றுள்ளார். அவை -
1) கோறளைப்பற்று கலாசாரப் பேரவையின்
கெளரவம் (2002)
2) இந்து இளைஞர் பேரவை - கலைஞர்
கெளரவம் (2004)
அவ்வாறே கோறளைப்பற்று கலாசாரப் பேரவை நடாத்திய கலை இலக்கியப் போட்டிகளில், சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றில் முதற்பரிசுகளைப் பெற்றார். 2006-ல் 2007-ல் சிறுகதைப் போட்டியில் மாவட்ட மட்டத்தில் முதற்பரிசு கிடைத்தது.
இதுவரை, பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்ற 10 கதைகளைத் தெரிவு செய்து “ஏதிலி’ சிறுகதைத் தொகுதியாக வெளியிடுகிறார்.
இவர் 1967-ல் வனபரிலாலன திணைக் களத்தில், வன அதிகாரியாக நியமனம் பெற்று, அன்று முதல் இளைப்பாறும் வரை (1990) அத்திணைக் களத்தில் கடமையாற்றினார். இச்சேவைக் காலத்தில் அவர் பெற்ற அனுபவங்கள் சில கதைகளுக்குக் கருப்பொருளாக அமைந்துள்ளன. தனது சிறுகதைகளைப் பற்றி அவர் இவ்வாறு கூறுகிறார்,

7
“இதுவரையில் நான் தொழில் புரிந்த, இடங்களும் நான் சந்தித்த நபர்களும், இக்கதைகளின் களமாகவும் பாத்திரங்களாகவும் வருகின்றன.”
இக் கருத்து ஊன்றிக் கவனிக்கத்தக்கது. சிறுகதைகளின் இறுதியில் “யாவும் கற்பனை’ என்று குறிப்பிட்டாலும், யதார்த்த ரீதியான கதைகளை வெறுமனே கற்பனை செய்து எழுத முடியாது. ஒரு எழுத்தாளனைப் பாதித்த சம்பவங்களும், மனிதர்களுமே, அவனது சிறுகதைகளில் இடம்பெறுவது தவிர்க்க முடியாதது. இது அப்பட்டமான உண்மை. அந்த உண்மை தாழை செல்வநாயகத்தின் சிறுகதைகளிலும் பிரதிபலிக்கவே செய்கின்றது. இதுவே அவரது கதைகள் பரிசு பெறுவதற்குக் காரணமாகவும் இருக்கலாம்.
தாழை செல்வநாயகத்தின் இலக்கிய ஆளுமையில் ஒருகைப்பிடியே இச்சிறுகதைகளில் வெளிப்படுகின்றன. அவர் அடுத்து வெளியிடவிருக்கும் “நாடகத் தொகுப்பும்’ “கட்டுரைத் தொகுப்பும்’ இவ்வாளுமையை இன்னும் விரிவாகக் காட்டும் என்பதில் சந்தேகமில்லை.
அன்புமணி
19, சூரியா வீதி
மட்டக்களப்பு 15.08.2007

Page 7
ஆசியுரை
நான் கண்ட திரு. தாழை செல்வநாயகம் 1965-ம் ஆண்டு முதல் முறையாக, வாழைச்சேனை அரசினர் தமிழ் வித்தியாலயத்தில், க.பொ.த. உயர்தரப் (AIL) பரீட்சையில் ஐந்து மாணவர்கள் சித்தியெய்தினர். அவர்களில் ஒருவர் திரு. கந்தையா செல்வநாயகம் அவர்கள். அன்று இவர் வாழைச்சேனைக்கும் வித்தியாலயத்திற்கும் பெருமை தேடித் தந்தார். அக்காலகட்டத்தில் இவர் சாதாரண மாணவர். இன்று இவர் ஓர் எழுத்தாளர். தாழை செல்வநாயகம் என்றால், எழுத்தாளர்கள் மத்தியிலும் வாசகர் வட்டத்திலும் நீங்காத இடத்தைப் பெற்றவர் என்பதனை நான் கூறித் தெரியவேண்டியதில்லை.
“தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதுஇன்றேல் தோன்றலின் தோன்றாமை நன்று”
என்பது வள்ளுவர் கருத்து. இக்கருத்து இவருக்குப் பொருந்தும்.
O5 எழுத்தாளனாக, சமூகத் தொண்டனாக, தனது சமூகத்தினர் உரிமைக்காக, உரத்துக் குரல்

9
கொடுத்தது மட்டுமல்ல, தனது ஜீவனோபாயத் தொழிலுக்கும், இடைஞ்சல் ஏற்படக் காரண காரியமாக, இருந்தவற்றைத் துச்சமாக மதித்து உழைத்தவர். இவர் உழைப்பு வீண் போகவில்லை. தொழிலுக்கு இடையூறு ஏற்படவுமில்லை. சத்தியம் ஜெயிக்கும் என்பதற்கு, இவரது தன்னலம் கருதாத உழைப்பு சான்றாக அமைந்தது என்பது மிகையாகாது. இவரது சீரிய தொண்டுகளை இன்னும் தொடர்ந்து கூறலாம்.
ஆனால் சுருங்கக் கூறுவதே இலக்கண மரபு. எனவே எனது மனங்கனிந்த ஆசியை, “நீ நீடூழி வாழ்க’ என்றும், உனது தொண்டு, இடையறாது தொடர வேண்டும் என்றும், இறைவன்ை வேண்டி வாழ்த்தி ஆசி கூறுகிறேன்.
இப்படிக்கு IDI. SIII00'III (ஒய்வு பெற்ற அதிபர்
LDI. SSITEDGFuII, விபுலானந்த வீதி, வாழைச்சேனை, 02.07.2007

Page 8
10
ஆசியுரை
Y\
மீன்பாடும் தேன்நாடு எனப்
புகழ்பூத்த மட்டுமாநகரின் வடபுறத்தே
இருபது கல்தொலையில் மாண்புடன் விளங்கும் நகரம் வாழைச்சேனை. இந்நகரில் திரு+திருமதி கந்தையா
தம்பதியினருக்கு செல்வப் புதல்வராகப்
பிறந்தவர் திரு. க. செல்வநாயகம் அவர்கள். அன்னார் தனது இளம்பிராயத்திலிருந்து வாழைச்சேனை தமிழ் LD 55 T வித்தியாலயத்தில், தனது கல்வியைத் தொடர்ந்து கற்றார்.
1965-ல் இவ்வித்தியாலயத்திலிருந்து க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு முதல் முறையாகத் தோன்றிய மாணவர்களில், சித்தியடைந்தவர்களில் இவரும் ஒருவர். இதனால் இவர் தனது பெற்றோருக்கும், தனது கிராமத்திற்கும் புகழ்சேர்த்தார்.
இவர் பாடசாலை வாழ்க்கையில் உத்தம மாணவராகவும், ஒழுக்கசீலராகவும்,
நற்பண்புகள் உள்ளவராகவும் படிப்பில்
திறமைசாலியாகவும், அதே வேளை இல்லத் தலைவராகவும் விளையாட்டில், பேச்சில்

11
விவாதப் போட்டிகளில், திறமையுடன் விளங்கி ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்றவராகவும் வாழ்ந்தார்.
இவரை வாழ்த்துவதில், ஆசியுரை வழங்குவதில் நான் பேருவகை அடைகிறேன். அவர் தமது பாடசாலைப் படிப்பை விட்டதும், வனபரிபாலன இலாகாவில், வன அதிகாரியாகச் சேர்ந்து, தமது கடமைகளைச் செவ்வனே செய்து, பேரும் புகழும் பெற்றார். கடமை உணர்வோடு பொதுச்சேவைகளையும் மேலானதெனக் கருதி, ஒய்வு நேரங்களில் தொண்டாற்றினார். இவரது கடமை உணர்வுகளும், பொதுச் சேவைகள் திறனும் பாராட்டுக்குரியவை. இவற்றை மனமார வாழ்த்துகிறேன்.
அண்மையில் இவர், சிறுகதைத் தொகுப்பு நூல் ஒன்றினை வெளியிடுவதற்கு விரும்பி முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக அறிகிறேன். இவரது இந்த முயற்சியும், பெருவெற்றியளிக்க வாழ்த்துகிறேன். அத்துடன் திரு. செல்வநாயகம் அவர்களின் முயற்சியை, உற்சாகத்தை, ஊக்கத்தை, திறமையை உணர்ந்து அன்னாரைப் பாராட்டுவதுடன், வாழ்த்துவதுடன் எனது இதயம் கனிந்த நல்லாசிகளையும் வழங்குகிறேன்.
க. வேல்முருகு (ஓய்வு பெற்ற அதிபர்)
க. வேல்முருகு இளைப்பாறிய அதிபர், இராசேஸ்வரி விலாஸ், வாழைச்சேனை, 02.07.2007

Page 9
12
வாழ்க்கைக் குறிப்பும், முன்னுரையும்
நான் வாழைச்சேனை நகர்ப்புறத்தில், கந்தையா, தங்கம்மா தம்பதிகளுக்கு மூத்த மகனாக 1946-ல் பிறந்தேன். வாழைச்சேனை இந்துக் கல்லூரியிலும், வந்தாறுமூலை மத்தியக் கல்லூரியிலும் கல்வி பயின்று வாழைச்சேனை இந்துக் கல்லூரியிலிருந்து முதல் முறையாக (1965) உயர்தரப் பரீட்சைக்கு தோன்றிய ஒன்பது மாணவர்களில், சித்தியடைந்த ஐவரில், நானும் ஒருவன். 1967-ல் வனதிணைக் களத்தில், வன அதிகாரியாக நியமனம் பெற்று, வெல்லாவெளியில், தொடர்ந்து ஐந்து வருடங்கள், கடமையாற்றினேன். (1971 வரை).
அக்காலத்தில் எனக்கு, நண்பர்களான, “கவிஞர் வெல்லவூர் கோபால்’, மண்டூர் இ. பாக்கியராசா (ஊடகவியலாளர்) ஆகியோரின், தொடர்பு கிடைத்தது.
பாடசாலையில் படிக்கும் காலத்தில், பத்து வயதில், ‘சுதந்திரன்’ பத்திரிகையில் ‘கேட்டுப் பாருங்கள்?’ என்ற கேள்வி பதில் பகுதியில் எனது எழுத்து ஆரம்பமாகியது. எனது 'தாய்மாமன் சுயமரியாதை’ நல்லதம்பியின், வீட்டில் நான் வளர்ந்ததால் தமிழகப் பத்திரிகைகள், திராவிட

13
முன்னேற்றக் கழக மாலைமணி, கலைமகள், கல்கி, 'ஆனந்த விகடன்', எம்.ஆர். ராதா எழுதிய ‘கீமாயணம்’ போன்ற பல நூல்களையும் படிக்க முடிந்தது. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, தந்தை பெரியார் ஆகியோர் புற்றிப் படித்தறிந்த நான், நாஸ்திகனாகவே இருந்து வருகிறேன்.
வாழைச்சேனையில் (1983-ல்) “கம்பன் கலா மன்றத்தினை ஆரம்பித்த நான், அதன் தலைவராகச் செயற்பட்டு, பல நாடகங்களை மேடையேற்றினேன். கதாநாயகனாகப் பல நாடகங்களில் நடித்தேன். பாடசாலையில் படிக்கும் காலத்தில் விளையாட்டு, பேச்சு, விவாதம் ஆகிய துறைகளில் பல பரிசுளைப் பெற்றேன். அகில இலங்கை விவேகானந்த சமயப் பரீட்சையில் (1966) அகில இலங்கைப் பரிசில் பெற்றேன்.
1968-ல் ‘வெல்லவூர் கோபால்’ நடாத்திய “தேனருவி” என்னும் கையெழுத்துப் பத்திரிகையில், எனது ‘நான்’ என்னும் முதல் சிறுகதை வெளியாகியது. அதேபோன்று மட்டக்களப்பிலிருந்து எழுத்தாளர் “கணமகேஸ்வரனின் தாரகை' மாத சஞ்சிகை நடாத்திய, அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில் எனது ‘சுயமரியாதை புதைபடுகிறது’ எனும் சிறுகதை முதல் பரிசினைப் பெற்றது. இவையிரண்டும் என் கைவசம் இல்லை.
1982-ல் வீரகேசரி ‘பொன்னரி’, கவிஞர் ‘வாகரைவாணன் (சுடர் ஆசிரியர்) ஆகியோர்களது தொடர்பு கிடைத்தபோது, வீரகேசரி நிருபரானதுடன்,

Page 10
14
மித்திரன் வீரகேசரி, தினகரன், சுடர் போன்ற பத்திரிகைகளில் பல கட்டுரைகளையும் சிறுகதைகளையும், எழுதும் வாய்ப்புக் கிடைத்தது.
1990-ல் சுயவிருப்பின் பேரில் நான் தொழிலிலிருந்து ஓய்வு பெற்று, கொழும்பில் பத்து வருடகாலமாக (2000 வரை) வசித்தபோது, ஜப்பான், ஜேர்மன், அவுஸ்திரேலியா, நாட்டுத் தூதரகங்களில், பாதுகாப்பு அதிகாரியாகக் கடமையாற்றினேன். அக்காலத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த, தம்பி ஐயா தேவதாஸ், முருகேசு ரவீந்திரன், நாகபூசணி, குமுதினி ஜெகந்நாதன், ஆகியோரது தொடர்பு கிடைத்தது. அவர்களுடன் சேர்ந்து தேசிய சேவை கல்வி ஒலி பரப்பில் “ஊர்வலம்', 'ஊர் அறிமுகம்’, ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பத்துக்கு மேற்பட்ட பேச்சுக்களைப் பேசியுள்ளேன்.
2002-ல் கோறளைப் பற்று, கலாச்சாரப் பேரவையின், கலைஞர் கெளரவத்தில், கலைஞராக கெளரவிக்கப் பட்டேன். கலாசாரப் பேரவை நடாத்திய சாகித்திய விழாப் போட்டிகளில் எனது சிறுகதை, கட்டுரை, நாடகம், கவிதை, போன்றவை முதற்பரிசுகளைப் பெற்றன. 2006-ல் சிறுகதைப் போட்டியில் தேசிய விருதான மாவட்ட முதற்பரிசு கிடைத்தது. 2007-லும் மாவட்டப் பரிசு கிடைத்தது. இதுவரையில், பரிசு பெற்ற சிறுகதைகள் (10) பத்தினைத் தெரிவு செய்து, இத்தொகுப்பில் வெளியிடுகிறேன்.
சிறுகதை என்றால் என்ன?
சிறுகதை எழுதுபவர்களுக்கு சிறுகதையின் வரைவிலக்கணம் என்ன, எப்படி அமைய வேண்டும்,

15
என்ன செய்திகளைக் கூறவேண்டும் என்ற விபரங்கள் தெரிவதில்லை. சிறுகதை ஒரு நாடகம் போல் அமைய வேண்டும். ஆனால் அது நாடகமல்ல. சிறுகதை ஒரு கவிதை போல் அமைய வேண்டும். ஆனால் அது கவிதையல்ல, சிறுகதை, ஒரு கட்டுரைபோல் அமைய வேண்டும். ஆனால் அது ஒரு கட்டுரையல்ல என்று ஒரு அறிஞன் கூறினான்.
நவீன இலக்கிய வடிவங்களுள் சிறுகதை இலக்கிய வடிவம் முக்கியமானது.
() ஒரு முறை உட்கார்ந்து, ஒரே மூச்சில், படித்துவிட்டு எழுவதுதான் சிறுகதை என்று டாக்டர் இரா. மோகன் கூறுகிறார்.
சிறுகதை பிறப்பதற்கு பல அடிப்படைக் காரணங்கள் உள்ளன. ஒரு பாத்திரத்தைப் பற்றிக் கூறப்படலாம். அல்லது ஒரு சம்பவம், நிகழ்ச்சி என்பன சிறுகதைக்கு அடிப்படைக் காரணங்களாக அமையலாம்.
ә சிறுகதை எழுதுகிறவன் உலகினைப் பார்க்கிறான். அங்கு அவன் பார்த்த செய்திகள் அவை ஏற்படுத்துகின்ற அசைவுகள் சலனங்கள் ஆகியன. சிறுகதைக்கு அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன.
е அரைமணி நேரத்தினுள், படித்து முடிக்கக் கூடியதாய் இருக்கும் ஒரு சம்பவம்தான் சிறுகதை என்று எச்.ஜீ. வெல்ஸ் என்கின்ற எழுத்தாளர் கூறுகிறார்.

Page 11
16
சிறுகதை திட்டமிட்டு எழுதப்படுகின்றது. ஒரு வார்த்தையினைக் கூட, நேரடியாகவோ, மறைமுகமாகவோ மிகையாகப் பயன்படுத்தக் கூடாது என்று கூறுகிறார். ஆங்கில எழுத்தாளர் ‘எட்கார் ஆலண்டோ’ சிறுகதை என்றால் என்ன? என்பதற்கு, எப்படி அமைய வேண்டும்? என்பதற்கு, சிறப்பான விளக்கங்களைக் கூறமுடியும்.
சிறுகதை என்பது குதிரைப் பந்தயம் போன்றது. அதன் தொடக்கமும் முடிவும், வேகமாக அமைய வேண்டும். பத்தாயிரம் சொற்களுக்கு மேல் எழுதக் கூடாது என்றும், அரைமணித் தியாலத்தில் முடிக்கக் கூடிய ஆக்கமே சிறுகதை என்றும் கூறலாம்.
இந்நூலில் இடம்பெறும் பத்துச் சிறுகதைகளுள்ளும், எதனைத் தெரிவு செய்து நூலின் பெயராக இடுவது, என்று பல நாட்கள் சிந்தித்தேன். இன்று. ஈழத்தில் மாத்திரமல்ல, உலகின் எல்லாப் பாகங்களிலும், பல்வகை அனர்த்தங்கள் காரணமாகவும், அகதி’ என்ற அந்தஸ்தினை மக்கள் பெற்று வருகின்றார்கள். தமிழ்நாட்டில் ஈழத்திலிருந்து யுத்தத்தின் காரணமாக, இடம்பெயர்ந்து சென்ற இலட்சக்கணக்கான அகதிகளின் துயர்களைக் கவனிப்பதற்காக 'ஈழத்து ஏதிலியர் சங்கம்’ என்ற பெயரில் ஒரு சங்கம் இயங்கி வருகின்றது: “அகதி’ என்ற பெயர்ச் சொல்லுக்கு ஏதிலி, ஏதிலியர், ஏதிலிகள் என்ற புதிய சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

17
உடுத்தும் ஆடைகளைவிடத் தங்களிடம் உரிமை கொண்டாடுவதற்கு ஏதும் இல்லை. ஏதும் இல்லாதவர்கள் தான் ஏதிலிகள். இந்தச் சொல்லில் வைத்து நான் எழுதிய சிறுகதைதான் ‘ஏதிலிகள்’. இச்சிறுகதை கோறளைப் பற்று கலாச்சாரப் பேரவை 2006-ல் நடாத்திய வெளிமட்டச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசினைப் பெற்றதுடன், மாவட்ட மட்டத்திலும் முதற்பரிசினைப் பெற்றது. இதேபோன்று கரடிக் காடு’ என்னும் சிறுகதையும் முதற்பரிசினைப் பெற்றுள்ளது. (மாவட்ட மட்டத்தில் இதில் வரும் அனைத்து சிறுகதைகளும், பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றவையே, இதுவரையில், நான் தொழில் புரிந்த இடங்களும், நான் சந்தித்த நபர்களும், இக்கதைகளின் களங்களாகவும் சம்பவங்களாகவும் பாத்திரங்களாகவும் வருகின்றன. தொடர்ந்து எனது நாடகத் தொகுப்பு ஒன்றும், கட்டுரைத் தொகுப்பு ஒன்றும் வெளிவரவுள்ளது என்பதனையும், அகமகிழ்வுடன் கூறிக் கொள்கிறேன்.
நன்றி.
தாழை செல்வநாயகம்
கல்குடா வீதி பேய்த்தாழை வாழைச்சேனை 06.04.2007

Page 12
18
ஏதிலிகள் (சிறுகதைத் தொகுப்பு)
இந்நூலில் இடம்பெறும் சிறுகதைகள்
கரடிக்காடு
(கோறளைப்பற்று கலாசாரப் பேரவையின் முத்தமிழ் விழா வெளிமட்டப் போட்டியில் 1-ம் பரிசு பெற்றது. 2007-ல் தேசிய இலக்கிய மாவட்ட 1-ம் பரிசினையும் பெற்றது)
முகாமில் ஒரு சடங்கு
(24.08.1997-ல் மித்திரன் வாரமலரில் வெளிவந்துள்ளது)
மாதா கோவில்
(2006-ல் வை.எம்.சீ.ஏ. வெளியீடான சுனாமி நினைவு மலர் 'கானல் நீராகும் விழுமியங்கள்’ நூலில் வெளிவந்தது)
தமிழ் வாத்தியாரு?
(பாவலர் தெ.அ. துரையப்பா பிள்ளை நினைவுச் சிறுகதைப் போட்டி)
மாரிப்போடி
(‘க மநலம்’ விவசாய சஞ்சிகையில் வெளிவந்தது)
21
34
42
53
65

ஏதிலிகள் (தேசிய இலக்கிய கலைப் பெருவிழா 2006ல் மாவட்ட 1-ம் பரிசு பெற்றது) இதுதான் முடிவு (2003-ல் கோறளைப் பற்று கலாச்சாரப் பேரவை வெளிமட்டப் போட்டியில் பரிசு பெற்றது அறுபதில் கிடைத்த வாழ்வு (2004-ல் கோறளைப் பற்று கலாச்சாரப் பேரவை, வெளிமட்டப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை)
பணத்திற்கு வேலை
(தேசிய இலக்கிய விழாவில் பரிசு பெற்றது)
கலைஞன் ஆகும் எழுத்தாளன் (ஏதிலிகள் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது)
19
75
87
99
112
129

Page 13
20
 

21
1. கரடிக் காடு
கோறனைப் பற்று கலாசாரப் பேரவையின் 2007ம் ஆண்டிற்கான போட்டிச் சிறுகதை. 1ம் பரிசு பெற்றது.)
அந்தச் சோலைக்காட்டில் பேய்க்குருவியான குழலியான் கத்தும் ஓசை ஆக்காண்டியின் பயங்கர ஒலி, பூதங்கள் மலையிலிருந்து பாறைகளை உருட்டும் சத்தம், மரங்கள் கதைக்கும் சத்தம், பற்றைக் காடுகளின் அசைவு, இத்தனைக்கும் இடையில் இரண்டு சீவன்கள் காதைக் கூராக்கிக் கொண்டிருந்தன.
அவனுக்குப் பேய்களுக்குப் பயமில்லை. அவனது பெத்தப்பா ‘கந்தப்புவாத்தியார்’-பஞ்சமி நாட்களில் ஊருக்குள் ஆராவாரம் செய்து வரும் பேய்களையும் சாவீடுகளில் எட்டாம் நாள்வரையிலும், கல்லெறிந்தும், மண்எறிந்தும் சோத்துப் பீங்கான்களில் தலைமயிரை வீசி எறியும் பேய்களையும் தார் ரோட்டில் குதிரைகளின் காலடி ஓசைபோன்று சத்தமிட்டு வரும் பேய்களையும் மந்திரங்களைச் சொல்லியவாறு பிரம்பு ஒன்றினால் சவுக்காலை வரையிலும், துரத்திக் கொண்டுபோய் விட்டு வரும் நடவடிக்கைகளை அவன் கவனித்திருக்கிறான்.
இண்டைக்கு கரடிக்காட்டிலிருந்து முதிரை மரங்களை ஏற்றிப்பத்து வண்டில்கள் வருகிறதாம். எதுக்கும்

Page 14
22 ஏதிலிகள்
நீ புறப்படத் தயாராகிக் கொண்டுவா என்றார். அவனுடைய மேலதிகாரி ‘கந்தையர்றேஞ்சர்’. கந்தையா றேஞ்சர் காட்டுப்பக்கம் மரம்பிடிக்க வருகிறார் என்றால் மரக்கடத்தல் காறனுகளுக்கெல்லாம் நடுக்கல் காய்ச்சல் வந்துவிடும். ஒல்லியான உடம்பில் காக்கிச்சீருடை அணிந்து துவக்கு வைத்துக் கட்டிய சைக்கிளில் ஏறிக்கொண்டு வருகிறார் என்றால், காட்டுப்பாதை ஹர்த்தால் போட்ட ஊர் போன்றாகிவிடும்.
கள்ளமரம் ஏற்றிவரும் வண்டில்காரர்கள் வண்டில்களை மரங்களுடன் குடைசாய்த்துவிட்டு, மாடுகளை உருவித் துரத்திவிட்டு ஓடிவிடுவதும் உண்டு. அப்படியான சந்தர்ப்பங்களில், தானே வழியில் செல்பவர்களின் உதவியுடன் வண்டில்களை ஒட்டிச் சென்று பக்கத்திலுள்ள கிராம அதிகாரியின் காரியாலயத்திலோ பொலிஸ் நிலையத்திலோ பாரம் கொடுத்துவிடுவார். அவருக்கு கைவந்த கலையிது.
ஐசே! சாறன் சாப்பாடு ரோச்லைட் எல்லாம் எடுத்துவாறயா? என்று கேட்டவாறு. சைக்கிளில் எறினார்.
rs காட்டில் தங்கலுக்குப் போகிறார் என்று அவனுக்கு விளங்கிவிட்டது. காட்டுக்கு அவர் புறப்படும் போதெல்லாம் இல்லாத தெய்வங்களையெல்லாம் வழிபட்டு புறப்படுவதுதான் அவரது பழக்கம். சைக்கிளில் உள்ள பெட்டியினுள் ஊதுபத்திப் பெட்டிகள் குறைவில்லாதிருக்கும், கூழாவடிப் பிள்ளையார் பாலத்தடிப் பிள்ளையார், நாதனைப் பிள்ளையார், வாழைக்காலைப்

கலைஞர் தாழை செல்வநாயகம் 23
பிள்ளையார் எல்லா இடங்களிலும் ஊதுபத்தி பற்றவைத்துத்தான் காட்டினுள் புகுவார்.
பாவித்த வெற்று ஊதுடத்திப் பெட்டிகளையெல்லாம் வீசிவிடாது பத்திரமாக கந்தோர் அறையொன்றினுள் அடுக்கி வைத்திருக்கிறார்.
நான் செத்தால். இந்த ஊதுபத்திப் பெட்டிகளால தான் எனக்குச் சவக்கட்டில் கட்டவேணும் என்று தனது கிழட்டு மனைவியிடம் அடிக்கடி கூறுவார்.
கந்தையா றேஞ்சர்சைக்கிளில் ஏறியதுதான் தாமதம் “றேஞ்சர் ஐயா! கொஞ்சம் நில்லுங்க அவசரமான காரியமொண்டு செஞ்சி தந்து போட்டுப்போங்க. எண்ட அல்லாஹ் கொஞ்சம் முந்திவந்துத்தம், இல்லாட்டி ஐயாவக் காட்டில தேடித்திரியிறத்தில எண்ட வாணால் போயிரும்” என்றவாறு காரிலிருந்து இறங்கினார். இப்றாஹிம் முதலாளி
அம்பாறை - மஹா ஓயா றோட்டில் தீவுலானைக்
குளத்து வழியால் சென்றால் ‘வலஹலக்காட்டை” அடையலாம்.
அது ஒரு கரடிக்காடு.
அம்பாறைக் காட்டு ராஜா, சித்தம்பலத்தார், கரடியுடன் குஸ்திபோட்ட காடு அது.
கரடியுடன் அவர் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த போது, அவர் பின்னால் சென்ற நாங்கள் தேன்தூக்கி மரத்தில் ஏறிநின்று, கத்திய சத்தத்தில் கரடிக்கூட்டம் ஓடிய காடு அது.

Page 15
24 ஏதிலிகள்
இப்றாஹிம்’ முதலாளியின் சிலிப்பர்கட்டை வெட்டும் காடு அங்குதான் உள்ளது.
இப்றாஹிம் முதலாளியிடம் நூற்றி ஐம்பது மரமேற்றும் மாட்டு வண்டில்கள் உள்ளன. அறுவைக்காரனுகள், சமையல்காரனுகள், கணக்கப்பிள்ளை மரமேற்றும் பத்து லொறிகள், அதற்குரிய வேலையாட்கள் உழவு இயந்திரங்கள் என்று ஆயிரக்கணக்கான முஸ்லீம் தமிழ், சிங்கள மூவினத்தவர்களுக்கும் வேலை கொடுக்கும் சீமான் இப்றாஹிம் முதலாளி.
மரவாடியில் வேலை செய்யும் வேலையாட்களோ, காட்டு அதிகாரிகளோ, அவரைச் சந்தித்கச் சென்றால், அவர்களை, வெறுங்கையுடன் திரும்பிப் போக விடமாட்டார். தேனிரோ, சாப்பாடோ கொடுத்து சட்டைப்பைக்குள்ளும், பணநோட்டுக்களைத் திணித்து கேற்று வரையில் அவர்களைக் கொண்டு போய் விட்டு விட்டுத் திரும்பும் பழக்கம் அவருக்குண்டான கலை,
இப்றாஹிம் முதலாளியின் வேலையினைச் சட்டென முடித்துக் கொடுத்துவிட்டு, மீண்டும் சைக்கிளில் ஏறினார் கந்தையா றேஞ்சர்.
நுரைப்பழச் சோலைகளும் கடுபுளியமரங்களும், நிறைந்துள்ள இக்காட்டினை அண்டியுள்ள தீவுலானைக் குளத்தில் நீலாவணை, கல்லாறு, மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை ஆகிய கிராமத்தவர்களின் மாட்டுப் பட்டிகள் உள்ளன.

கலைஞர் தாழை செல்வநாயகம் 25
தேனுக்கும், இறைச்சிக்கும், பாலுக்கும், தயிருக்கும், பழங்களுக்கும் பெயர் பெற்ற காட்டுப் பிரதேசம்தான் இந்தக் கரடிக்காடு சேனைப் பயிர் செய்ய அங்கு குடியேறிய சிங்களவர்கள், கரடிக் காட்டினை, வளஹாகல் என்று மாற்றிவிட்டார்கள்.
இறக்கத்தில் சொகுசாக சைக்கிளில் வந்து கொண்டிருக்கும் கந்தையா றேஞ்சர் ஐசே! நாம துறுவா கூப்பு வாடிக்குப் போவம். இரவைக்கு அங்கு தங்கி நிண்டு போட்டு, வெள்ளாப்பில கல்வீட்டுத் தேக்கஞ் சேனைப் பக்கம் போவம்' என்றார் கந்தையாறேஞ்சர். காக்கிக் கோட்டுடன், அவிண்ட குடுமியுடன் அவர் பின்னால் சைக்கிளில் வந்து கொண்டிருந்த தவசிக்கிழவனும் வாயைத் திறந்து 'ஓம் ஐயா’ என்று தலையாட்டிச் சம்மதம் தெரிவித்தார். வரும் வழியில் பட்டிக்காற முத்தன் அவர்களைக் கண்டுவிட்டான். ஐயாமாரக் காட்டுப்பக்கம் காணுறதெண்டா கரடி புறயக்காணுற மாதிரித்தான் என்றவாறு வெற்றிலை போட்டுக் காவியேறிய பற்களையும் காட்டியவாறு, யானை கெக்களிப்பது போல், கெக்களித்து விட்டான் முத்தன்.
“வைரவனுக்கு வாகனமா, நாய் கிடைச்சாப் போல. ஐயாவுக்கும் நல்லொரு “காட் பொடியனும் கிடைச்சிருக்கான்’ என்றான் முத்தன் மீண்டும் இளித்தவாறு ஒண்டா முத்தன் நான் சொன்னா பேண்ட பீயையும் அள்ளுவான் இந்தப் பொடியன்’ என்று சொல்லியவாறு பதிலுக்குச் சிரித்தார் கந்தையா றேஞ்சர்.

Page 16
26 ஏதிலிகள்
முத்தனின் பால்வாடியில் மோர் குடித்துவிட்டு 'மகிழவட்டவான்’ ஆற்றுமண்ணில் நீட்டி நிமிர்ந்தவாறு, ‘கட்டிச் சென்ற கட்டுச் சேrங்தை அவன் பிரிக்க ஆயத்தமாகினான்.
‘கரையாக்கன் பூக்களைத் தேடி முறித்துவந்து வண்டில் வழிக்கு குறுக்காக மண்குவித்து, அதன்மேல் கரையாக்கள் பூக்களைக் குத்தி மணக்குச்சி பற்றவைத்து, ஏதோ மந்திரங்களைச் செபித்தவாறு, நின்று கொண்டிருந்தார், றேஞ்சர்.
வழியில. கரடி பூதங்கள் வராமலும், கள்ள மரக்கடத்தல் வண்டில்காரனுகள் வராமலும், தான் சூனியம் செய்துள்ளதாகக் கூறிவிட்டு, அவரும் சோத்து முடிச்சை அவிட்டு பசியாறத் தொடங்கிய போது - வேட்டை நாய்களுடன், உடும்புக்காவுடன்றத்தன் வந்துவிட்டான். ‘மாஹத்துறு பொட்டாக்கின்ட மங் தளகொய்யா கெனாவா’ என்றவாறு அவர்கள் சாப்பிடுதை நிறுத்திவிட்டு சட்டுப்புட்டென உடும்பு ஒன்றை உரித்து வெட்டிச் சரிப்பண்ணி, ஆற்றில் கழுவி, அடுப்பு மூட்டி, விரைமரப் பொந்தில், அவன் தயாராக வைத்திருந்த மண்சட்டியை எடுத்து திடீரெனக் கறிசமைத்து, தேக்கம் இலையில் கொட்டி, அவர்களுக்குப் பரிமாறினான்.
கரடிக்காட்டில் பெயர் பெற்ற வேட்டைக்காரன் றத்தன். இவன் ஒரு வேடச்சிங்களவன்.
கரடிக் காட்டிற்கு வரும் அனைத்துப் பேர்வழிகளுக்கும், முகம் கோணாது இறைச்சி, தேன்

கலைஞர் தாழை செல்வநாயகம் 27
ஆகியன கொடுத்து, பண்ட மாற்றாக அவர்களிடம் சீனி, தேயிலை, சுருட்டு, மதுபானம், போன்றவைகளைப் பெற்றுக் காட்டில், தனிக்காட்டு ராசாவெனக் குடும்பத்துடன் வாழ்ந்து வருபவன்.
புழுகுநாவை விகாரை வழியாகச் சென்றால் மரப்பட்டைகளால் கட்டப்பட்ட இவனது காட்டுக் குடிசையினைக் காணலாம்.
கண்டி இராசதானி ஆட்சியின்போது, எதிரிகளின் படை நடவடிக்கைகளை இக்காட்டிலிருந்து கண்காணித்ததற்கு அத்தாட்சியான, செதுக்கப்பட்ட கற்றுாண்கள், அம்மி போன்ற கற்கள், அத்திவார அடித்தளங்கள், புதையல் எடுத்த குழிகள், ஆகியன இங்கு தென்படும். றத்தன் சரளமாகத் தமிழ்பேசுவான். பாடுவான் கரகைக்கிராமத்து கள்ளமர வண்டில்காரர்களுடன் அடிக்கடி பழகுவதனால் நன்றாகத் தமிழ் பேசக் கற்றுவிட்டான்.
அப்போது பார்த்து ‘நாய்வண்டனும் திடீரென அவர்களிருக்கும், மகிழவட்டவான் ஆற்றின் கரைக்கு வந்துவிட்டான்.
அவனது பைசிக்கள் வண்டியில் இரும்புக்கரியரில், எப்பொழுதும் இரண்டு நாய்கள் உட்கார்ந்து கொண்டிருக்கும்.
தோளில் தோட்டாத் துப்பாக்கியினை முறித்துப் போட்டிருப்பான், தலையில் தலைப்பாகை கட்டியிருப்பான்.

Page 17
28 ஏதிலிகள்
நாய்கள் சைக்கிளிலிருந்து கீழே குதித்துப் பாய அவனும் அவர்களுடன் அமர்ந்து கொண்டான்.
என்று றத்தனிடம் விசாரித்தான். நாய் வண்டனின் உண்மையான பதிவுப் பெயர் “ஹேரத்’ என்பதாகும். அவன் நாயுடன் கரடிக் காட்டுப் பிரதேசத்தில் சுற்றித் திரிவதனால் வண்டில்காரர்கள் அவனுக்கு ‘நாய் வண்டன்’ எனப் பெயர்
‘மச்சான் உம்ப கவத ஆவே.
சூட்டிவிட்டார்கள்.
றத்தனின் சகோதரியைத் தனது வீட்டுக்காரியாக்கி விட்டதால் அவனுக்கு மச்சானாகிவிட்டான் அவன்.
இரண்டு குடும்பங்களுடனும் கரடிக்காட்டிற்கு வரும் வண்டில்காரர்கள் உறவு கொண்டாடியதால், ஊரில் நடக்கும் தேரோட்டத் திருவிழா தீப்பள்ளயம், மண்டூர் திருவிழா போன்றவற்றிற்கெல்லாம் சென்று வருவதும், தீபாவளி, சித்திரைப்புத் தாண்டு பொங்கல் காலங்களில், முத்தன் வீட்டிலும், கந்தையா றேஞ்சளின் விடுதியிலும் தங்கி நின்று வருவதும், ஹச்சிப் பெருநாள் காலங்களில் இப்றாஹிம் முதலாளியின் வீட்டில் தங்கி நின்று விருந்துண்டு வருவதும் அவர்களுக்கு பழகிப் போய்விட்டது.
இந்தப் பயணம் தீப்பள்ளயத்துக்கு குடும்பத்தோட வருவியா வண்டா? என்று விநயத்துடன் கேட்டார் கந்தையா றேஞ்சர். "ஆமா! துர! எந்தவித தொந்தரவுமில்லாமக் குழந்த பிறந்தா காளியம்மாளுக்கு கோழிச் சேவல் நேர்த்திக் கடனாக் கொடுப்பதாக எண்ட

கலைஞர் தாழை செல்வநாயகம் 29
மகள் “லொக்கு நோனா’ நேத்திக்கடன் வச்சிருக்காவாம். அதுக்கு நாங்க பொண்டாட்டி புள்ளைகளோட கட்டாயம் வருவம், ரெண்டு மூண்டு நாளைக்கு உங்கட வங்களாவில தங்கி நிண்டு தான் வருவம்” என்று கூறினான் நாய்வண்டன். “மாஹத்தயா! தேக்கங்காட்டுக்குள்ள கலைமரையொண்டச் சுட்டுப் போட்டுத்து வாறன். மச்சானக் கூட்டிப் போய் உரிச்சி அத அட்டுவத்தில போடப்போறன். நீங்க இண்டைக்கு கூப்புவாடிக்குப் போக வேணாம். மச்சாண்ட வாடில தங்கி நில்லுங்க, காலம்புற போக்குள்ள இறைச்சி கொண்டு போகலாம்” என்றான்.
‘கடவுளே!’ என்று தனது இரண்டு கைகளாலும் தலையில் அடித்துக் கொண்டார் கந்தையா,
காட்டில் சுதந்திரமாகத் திரியும் மிருகங்களைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கோ, சுடுவதற்கோ அவர் சம்மதிப்பதில்லை.
“உனக்குத் தெரியுமா? வண்டா! காட்டில் திரியிற மிருக சாதிகளையோ கொக்கு குருவிகளையோ யாரும் சுட்டுக் கொல்லவோ கொண்டு செல்லவோ காட்டுச் சட்டத்தில அனுமதியில்லை.”
“கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க மாஹத்தயா? காட்டில மான்மரை பன்றிகளை மாத்திரமில்ல உடும்பு, முயல், மயில், குருவி, மயில்தோகை, குருவிக்கூடு, காட்டுக்கோழி, அதன் முட்டைகள், மலைப்பாம்பு, மான்கொம்பு, மான்தோல், யானைத் தந்தம், அது

Page 18
30 ஏதிலிகள்
மட்டுமல்ல விளாம்பழம், மருக்காலங்காய், பாலைப்பழம், வீரைப்பழம், திருக்கொண்டம்பூ, காய், கருவேப்பிலை, பால்க்கொடி, வாருகல்புல், பன்புல், இலைகுழைகள், காட்டில் வளரும் எதனையும் எவரும் எடுத்துச் செல்ல முடியாது. யாரும் காட்டுக்குற்றத்தினை மீறி நடந்தால், குற்றவாளிகளுக்கு காட்டுச் சட்டப்படி தண்டனை வழங்கமுடியும் என்று அவ்விடத்தில் குட்டிப்பிரசங்கமே செய்துவிட்டார் றேஞ்சர்.
‘என்ன மாஹத்தயா! வாருகல் புல்கூட புடுங்கிக் கொண்டு போய் வாடிகூடக் காட்ட முடியாதா?’ சிரிப்புடன் கேட்டான்றத்தன்.
“றத்தா நையாண்டி பண்ணாத! இனி காட்டு மிருகங்களச் சுட்டுக் கொல்லாதங்க, உடும்பு முயல்களப் இருவரையும் எச்சரித்துவிட்டு, இருட்டிவிட்டதால் பதுங்குமிடம் ஒன்றை நோக்கிப்
பயணமானார் கந்தையா.
பிடிக்காதங்க.
விகாரை Ꮏ Ꭰ ᎧᎧᎧ ᎧᏂᏪ வழிதான் கள்ளமர வண்டில்காரர்களின், பெயர் பெற்ற மரக்கடத்தல் பாதை.
நாள் தவறாமல் பகல் இரவு பாராமல் மரவண்டில்களும் கட்டை வண்டிகளும், கல்வாடி விறகு வண்டில்களும், அலம்பல் வண்டில்களும், வந்து கொண்டிருக்கும் பாதை அது.
இரவைக்கு வழி ஒரமாகப் பதுங்கிக் கொள்ள வேண்டுமென்பது, கந்தையா றேஞ்சரின் திட்டம்.

கலைஞர் தாழை செல்வநாயகம் 31
சாகப் போகும் உயிரைக் கவர்ந்து செல்ல, யமன் பாசக்கயிற்றுடன் சுற்றிக் கொண்டிருப்பான் என்று முதியவர்கள் கூறக்கேட்டிருக்கிறான்.
இந்த மனிசன் இண்டைக்கு நம்மள வாடிக்கு கூட்டிப் போகமாட்டான். யானைகள் திரியிற இந்த வழி ஒரத்திலதான் நம்மளப் படுக்கப் போடப் போறான் என்று அவன் மனதிற்குள் எண்ணினான்.
அன்று அமாவாசை இருட்டு, ரோச்லைற்றைக் கூட அடிக்க வேண்டாம் என்று றேஞ்சர் கூறிவிட்டார்.
வழியோரமாகச் சிறு சிறு கற்பறம்புகள் திட்டியும் திடலுமாகவும், சவம் புதைத்த மண்குவியல் போலவும் அழிந்து போன சவக்கட்டில்கள் போலவும் கும்மிருட்டில் அவன் கண்களுக்குத் தென்பட்டன. றேஞ்சரின் உயிர் அன்று போகப் போகிறது. அவருக்குத் தெரியவில்லை.
‘ஐசே! இந்த இடத்திலதான் நாம் பதுங்குவம்.” பக்கத்தில் நின்ற நாவல் மரத்தடியில் அவர் பதுங்கிக் கொள்ள அவனும் தவசிக் கிழவனும் மண் கும்பம் ஒன்றில், தலை புதைத்து பதுங்கிக் கொண்டனர்.
‘எப்படியும் இண்டைக்கு வண்டில்கள் வரும். கொஞ்சம் காது வைச்சுப்படுத்துக்க கண் அசந்துபோயிடாத என்று கூறினார்.
நுளம்புகள் அவ்விடத்திற்குப் படையெடுத்து வந்து கொண்டிருந்தன. மலைக்காட்டிலிருந்து ய்ேக்குருவியான குழலியான் கத்தும் சத்தம் பயங்கர ரகக் கேட்டுக் கொண்டிருந்தது.

Page 19
32 ஏதிலிகள்
குழலியான் கத்தும்போது கண்களிலிருந்து சொட்டுச் சொட்டாக இரத்தம் ஒழுகுமாம் என்று அவர், அவனுக்கு எப்பவோ கூறியது ஞாபகத்திற்கு வருகிறது.
மலையிலிருந்து, கற்பாறைகளைப் பூதங்கள் உருட்டிவிடுவது போன்ற ஓசை கேட்டது.
காடுகள் கலகலத்தன.
‘ஆக்காண்டி’ ஒன்று அவர்களுக்கு மேலாகச் சத்தமிட்டுப் பறந்தது. காட்டில் யாராவது நடமாடினால் அல்லது யானை, நரி, பன்றி போன்ற மிருகங்கள் நடமாடினால், ஆக்காண்டிப் பறவைகள் நிலத்திலிருந்து திடீரென எழுந்து பறந்து பயங்கர ஒலிஎழுப்புவது வழக்கம். காடுகளில் இரவு வேளையில், அன்றாடம் நிகழும் சம்பவங்களிவை -
அவன் எள்ளளவும் பய்ப்படவில்லை. ‘ஐசே! தூரத்தில மரவண்டில்கள் வருகிது போலக் கிடக்கு காட்டு வழியால் சென்ற கரத்தையின் சில்லுகள் உருண்ட தடத்தினை, குப்புறக்கிடந்து முகர்ந்து பார்த்து, ‘அந்தக் கரத்தையில் என்னவகை மரங்களை ஏற்றிப் போகிறார்கள் என்று கூறுவதில் அவர் மகாசூரர் கரத்தை போன தடத்தால் பின் தொடர்ந்து பார்த்தால், அவர் கூறியது உண்மையாகத் தானிருக்கும்.
காட்டில் மரங்கள் கதைக்கும் சத்தம் கேட்டது.
வழியோரத்தில் பற்றைக் காடுகள் அசைவது போன்றிருந்தது. மரவண்டில்கள் வழியால்தான் வரும். இந்தச் சத்தம் காடுகளுக்குள்ளிருந்தல்லவா வருகிறது?

கலைஞர் தாழை செலவநாயகம
இத்தனைக்கும் இடையில் காதைக் கூராக்கிக் கொண்டிருந்த அவர்களிடையே ஒளவையார் படத்தில் யானைக் கூட்டங்கள் ஓடிவந்தது போன்ற காட்சி.
அவிட்டு விட்ட காகம் பறப்பது போன்று, அவனும் தவசிக் கிழவனுடன் பாய்ந்தோடி விட்டான்.
பலபல வென்று விடிந்து வரும் வேளையில் றத்தனுடனும், நாய்வண்ட்னுடனும் சென்று பார்க்கிறான். அந்த மனிசன் மூச்சுப் பேச்சின்றி விறைத்துக் கிடந்தான்.
‘கடியன்’ எறும்புகள் மேல் முழுவதும் மொய்த்துவிட்டன. சுற்றிவர யானைகளின் அடிகள்.
யானைகள் அவர் மேல் ஏறிக்குதித்துக் கூத்தாடியிருக்கின்றன. காட்டுக் கந்தோர் குவாட்டர்சில் சனக்கும்பல் கூழாமரத்தடியில் விநாயகம் விதானையாரின் தலைமையில் சவக்கட்டில் தயாராகிவிட்டது.
பிரேத ஊர்வலம் தயாரான நிலையில், இப்றாஹிம்
முதலாளி காரிலிருந்து இறங்கி வந்து, தலையிலிருந்து குல்லாவை இறக்கிக் குனிந்து மரியாதை செலுத்துகிறார்.

Page 20
34 ஏதிலிகள்
2. முகாமில் ஒரு சடங்கு
அகதிமுகாம் என்றுமில்லாதவாறு கலகலப்பாகக் கான ப் பட்டது. நல்ல வே ைன இ ன்று ஞாயிற்றுக்கிழமையாகிவிட்டது. பாடசாலையும் இல்ல. தைைன விடுமுறையும் கொடுத்தாகிவிட் டது. இனித்தான் இங்குள்ளவர்கள் எல்லா கதிரை மேசைகளையும் எடுத்துப் போட்டுச் சிறிது நிம்மதியாகக் கால் கைகளை நீட்டிக்
கொள்வார்கள்.
இல்லாவிட்டால் அந்த ஒழுகும் வானம் தெரியும். ஓலைக் கொட்டில்களில்தான், கிடக்க வேண்டி வரும், இன்று அடுப்புகள் கூட வகுப்பு அறைகளில் அரங்கேறிவிட்டன. சிறிசுகளும், வயது போனதுகளும், இன்னும் எழும்பவில்ல. கரும் வகைகளில் சொகுசாகத் துங்கிக் கொண்டிருந்தார்கள்.
மீண்டுர், பாடசாலை தொடங்கும்போது பானவர்களின் பாடு திண்டாட்டம்தான் - கதிரை மேசைகளை ஒழுங்குபடுத்துவதுடன் அடுப்புச் சாம்பல்களையும் அள்ள வேண்டும் பாடசாலை வேலியைச் சுற்றி நடப்பட்டிருந்த யூக்கலிப்றஸ் மரங்களில் விழும் காற்று, ஒருவி, ரவீசப்பினை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

கலைஞர் தாழை செல்வநாயகம் 35
அகதிகள் கிணற்றடியில் குளிப்பதும், ஆடைகள் துவைப்பதுமாயிருந்தார்கள். அருகில் உள்ளது விளையாட்டு மைதானம். ஒலிம்பிக் விளையாட்டுக்களைக் கூட இங்கு நடத்திவிடலாம். அவ்வளவு விசாலமானது. பத்து ஏக்கராவது தேறும், இவ்வளவு பெரிய இடத்தை அதிபர் இராசநாயகம் எடுத்துப் போட்டவராம். புண்ணியவான் இன்று அகதிகளுக்காவது உதவுகின்றது.
"இஞ்ச கிடக்கிற அகதிகளுக்கு, இந்த விளையாட்டு மைதானத்தில் வீடு கட்டிக் கொடுத்தானென்ன...”
பாடசாலை நடந்த காலத்தில், வாத்தியாரின் கதையிது.
மைதானத்திற்கு மேலாக கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பார்த்தால், கல்குடா புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு புகையிரதம் வருவது தெரியும், கவனிப்பாரற்றுக் கிடக்கும் முகாம் போல புகையிரத விதியும் கிடக்கிறது.
வனராணி நேற்று வரையில் அந்த அகதிக் கூட்டத்தில் தான் ஓடி ஆடித்திரிந்தாள். வடமுனைக் கிராமத்தில் பிறந்த அவள் அங்கிருந்து இடம் பெயர்ந்து, அறுபது குடும்பங்களுடன் அகதி’ என்ற பெயர் சூட்டப்பட்டு, எழுவயதில் இந்த முகாமிற்கு வந்தாள்.
“எத்தனை மணிக்காம் ராணிக்கு தண்ணிவாக்கிற திருகுதாளம் பாடசாலைக்கேற்றால் வரும் போதே கேட்டவாறு வருகிறாள். பதின்மூன்று வயதாகிவிட்டது. முகாயிலேயே வயதுக்கு வந்துவிட்டாள். பிராயமடைந்து விட்டாள்.

Page 21
36 ஏதிலிகள்
வடமுனைப் பிரதேசம் பெரிய வனாந்தரங்களை உடையது. வனத்தில் பிறந்ததினால் ‘வனராணி’ எனப் பெயர் சூட்டப்பட்டது. காலையில் தண்ணிச் சோற்றில், தயிரினையும், சீனியையும் கொட்டிப் பிசைந்து ஒரு கை பார்த்துவிட்டு, ஆட்டுக்காலையைத் திறந்து, ஆடுமேய்க்கச் சென்றுவிடுவாள்.
சூரைப் பழங்களையும், காரைப் பழங்களையும் துள்ளிப் பறித்து வாயில் போடுவாள். அந்தியில் ஆடுகளை காலையேற்ற வரும்போது, கையில் கருவேப்பிலைக் கொத்துகளுடனும், கானாந்தி இலைக் கறியுடனும் வருவாள். குளத்தில் குளித்துவிட்டு வரும்போது, விழுந்து கிடக்கும் விளாம் பழங்களைச் சட்டையில் கட்டியவாறு
வழிநெடுகிலும் தின்று வருவாள்.
‘தொப்பிகல காட்டுப் பிரதேசத்தினுள் இராணுவம் நுழைந்த அன்று, கேட்ட வெடிச்சத்தங்கள் கொஞ்ச நஞ்சமல்ல, அன்று வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டினார்கள். கையில் கிடைத்த பொருள்களுடன் பதினைந்து மைல்கள் காட்டு வழியாக ஒடித் தப்பி வந்த தாடி ஆடு மாதிரி இங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
உயிர் தப்பியது போதும். சீவனிருந்தால் உழைத்துச் சாப்பிடலாம் என்று, எல்லோரும் நினைப்பது போல் அவள் அன்று நினைக்கவில்லை. விளையாட்டுப் பிள்ளைத்தனத்தில் எல்லோருடனும், சேர்ந்து தானும் ஒருத்தியாய் ஓடிவந்தாள். பலத்த காயங்களுடன் சுமந்து கொண்டு வரப்பட்டவர்களும், இறந்தவர்களும், "அகாலமரணம்’

கலைஞர் தாழை செல்வநாயகம் 37
எனத் தீர்ப்பு வழங்கப்பட்டு, இந்த மண்ணில்தான் புதைக்கப்பட்டார்கள். உடல் ஊறுபட்டு உயிர்தப்பியர்கள் நட்ட ஈடு எனச் சிறுதொகையினைப் பெற்றார்கள். இவளுக்கோ கிடைத்தது ‘அகதி’ என்ற பட்டம் மாத்திரமே. 'காளிக்குட்டியாரின்’ குடும்பம் மிகவும் செல்வாக்கான குடும்பம். “காடுவெட்டியார் என்றால்தான் எல்லோருக்கும் விளங்கும். வடமுனையில் உள்ள காடுகளை வருடா வருடம் அழித்து சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்ததினால், ‘காடு வெட்டியார்’ என்ற பெயர் காளிக்குட்டியருக்கு நிலைத்துவிட்டது. வயல் நிலங்களும், ஆடு மாடுகளும் அவருக்குத்தான் அதிகம். அக்கிராமத்தில் உள்ள ஒரே ஒரு ‘கல்வீடு' என்றால் காளியருடையதுதான். கோயில் சடங்கு என்றால் என்ன, சங்கக் கூட்டம் என்றால் என்ன, அவர்தான் தலைவர்.
அங்கு வரும் ‘எம்.பி'மார், காட்டு அதிகாரிகள், நில அளவையாளர்கள், மலேரியா தடுப்பு அதிகாரிகள், கிராமவிதானை அனைவருக்கும் அவர் வீடுதான் சொந்தம். அங்குதான் அவர்களுக்கு விருந்து, இடம் போக்கான வீடு அது. காட்டு அதிகாரிகள் வந்தால், ஆட்டுக்கிடா ஒன்றினைக் கூட, வெட்டிச் சாப்பாடு போடுவார். காடுகளை வெட்டும் குற்றத்திற்கு அவருக்கு வழக்கு எதுவும் கிடையாது. "நீதிமன்றம்’ எந்தப் பக்கம் உள்ளது என்று கூடத் தெரியாது, கண்ணியம் மிக்கவர்.
தான் ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற பெருமை அவருக்கு இல்லை. காளிக்குட்டியரின் ஒரே ஒரு செல்லமகள்தான் வனராணி

Page 22
38 ஏதிலிகள்
காளியண்ணனுக்கு நூறு வயது’ என்றாள் பாக்கியம். ஒரு தோளில் கிடந்த சால்வைத் துண்டினை மறுதோளில் மாற்றிப் போட்டவாறு, புன்சிரிப்புடன் வருகிறார் காளியர்.
எத்தின மணிக்காம் நாள்? பொழுதும், மதியத்தால கிறுகித்து ஐந்து மணி மட்டும் கரிநாளாம். அதுக்குப்புறகு எண்டா தண்ணி வாக்கலாமாம். பொட்டைக்கு அவ்வளவு நல்லா இல்லையாம். மாம்பிள்ளையும் வடக்குத் திசையிலதானாம் இருக்கானாம். அதுவும் பதினாறு வயதுக்குள்ள, வாழ்க்கைப் படனுமாம். மூச்சு விடாமல் சொல்லி முடித்துவிட்டு முழங்கால் வரையில் மடித்துக் கட்டியிருந்த வேட்டியினை அவிட்டு விட்டவாறு, வேப்பமர நிழலில் அமர்ந்தார். காளிக்குட்டியார்! ‘பாக்கியம் வீடுமனைகள், மாடுகண்டுகள், காணிபூமிகள், எல்லாம் விட்டு விட்டு இந்த முகாமிற்கு வந்தபின்னர் இங்குள்ளவர்களைப் பற்றி நன்கு அறிந்தும், அவர்களுடன் அன்னியோன்னியமாகப் பழகியும் விட்டாள்.
பாக்கியம் என்பதனைவிட “லொத்தர்ப் பாக்கியம் என்றால் தான் கிராமத்திலுள்ளவர்களுக்குத் தெரியும்.
எந்த வீட்டில் அடுப்பு எரிகிறது. எந்த வீட்டில் அடுப்பு எரியவில்லை என்பதெல்லாம் அவளுக்குத் தெரியும். பாக்கியத்திற்கு “லொத்தர்’ என்ற பட்டப் பெயர் கிடைத்தவிதம், சுவராசியமானது. வடமுனைக்கிராமத்தில் பெரிய கடைகளோ கடைத் தெருக்களோ இல்லை. அன்றாட அத்தியாவசிப் பொருள்களையோ

கலைஞர் தாழை செல்வநாயகம் 39
துணிமணிகளையோ வாங்க வேண்டுமானால் பட்டினத்திற்கு வந்துதான் கொள்வனவு செய்ய வேண்டும். ஞாயிறு தோறும் “கிரான் சந்தைக்கு வருவதற்குப் பாக்கியம் தவறுவதில்லை.
சந்தையில் அவள், லொத்தர் சீட்டு ஒன்றும் வாங்குவதற்குத் தவறுவதில்லை. அவள் ஒரு நாள் வாங்கிய லொத்தர் சீட்டில் பத்தாயிரம் ரூபாய் பரிசு கிடைத்துவிட்டது. அன்றிலிருந்து அவளுக்கு, லொத்தர் பாக்கியம் என்ற பட்டப் பெயர் கிடைத்துவிட்டது.
அவளது மகள் வனராணி அதிபரின் அறைக்கதவு ஊடாக வெளி உலகைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அந்த அறையினுள் மேலாக வெள்ளைச் சேலை கட்டப்பட்டிருக்கிறது. நிறைமுட்டியும் அன்று விரிந்த தென்னம்பாளையும், அறையை, அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
சலவைத் தொழிலாளி சந்தியாவின், பெண்சாதி வெற்றிலைப் பெட்டியின் முன்னால் காலை நீட்டியவாறு, அமர்ந்து கொண்டு, தனது காவியேறிய பற்களைப் போயிலைத் துண்டால் தேய்த்துக் கொண்டிருக்கிறாள். அவர்களது கிராமத்தில் நடக்கும், சாவு வாழ்வு, சாமத்தியச் சடங்கு, அனைத்திற்கும் சந்தியாவின் குடும்பம்தான் முழுமூச்சாக நின்று கடமை செய்யும். கைமாறாகச் சாராயம் சாப்பாடு, சன்மானம் எல்லாம் கிடைக்கும்.
ஆனால் இன்று நடைபெறும் சடங்கு, அகதிமுகாமில் நடக்கிறது. ஊர் வாழ்க்கைக்கும் இங்கு நடக்கும்

Page 23
40 ஏதிலிகள்
அகதிமுகாம் வாழ்வுக்கும் நிறைய வித்தியாசம் - ஏதோ கடமைக்காக நடைபெறுகின்றது. இந்த ஊரின் ஒரமாகச் செல்லும் ஆற்றின் கரையில், மாரியம்மன் கோவிலும் தாழை மரங்களும் நிற்கின்றன. தாழை மரங்கள் பூக்கும் காலங்களில் அதன் மணத்தினை, தென்றல் காற்று மெல்ல மெல்ல ஊருக்குள் தள்ளிக் கொண்டு வரும். அந்த நாளில் இங்குள்ள தாழை மரங்களில் பேய்கள் குடி கொண்டிருந்ததாக இங்குள்ள வயது போன பெரியவர்கள் கூறுவார்கள்.
இன்று அந்நிலை மாறி அகதிகள்தான் இக்கிராமத்தில், குடிகொண்டுள்ளார்கள். வனராணி தனது கடந்த காலவாழ்வினை, அறையினுள் இருந்தவாறே, அசைபோட்டுக் கொண்டிருக்கிறாள். கதிரவனின் கடமையும் முடியும் தறுவாயில் உள்ளது. இன்னும் ஒரு பாகப் பொழுது கிடக்கிறது. அந்திபடும் வேளையாகிவிட்டது. அவள் இந்த முகாமிற்கு காலடி எடுத்து வைத்து, இத்தனை வருடகாலமாகிவிட்டது. இக்கால எல்லையுள், பல சம்பவங்கள் நடந்துவிட்டன. பாடசாலையில் வாணி விழாக்களும், விளையாட்டுப் போட்டிகளும் - அகதிகள் மத்தியில் ஏற்பட்ட "கிசுகிசு’ சம்பவங்களும் ஏராளம்.
பாடசாலை என்று ஐந்து வருடங்கள் தான் போய்ப்படித்திருக்கிறாள் என்றாலும், இங்கு வந்த பின்னர் பள்ளிப்படிப்பை விடப் பல அனுபவங்களைப் படித்து விட்டாள். அறிவும் ஆற்றலும் அவளுக்கு இருந்தும் என்ன LuuaöT?

கலைஞர் தாழை செல்வநாயகம் 41
நாட்டு நடப்பும், சூழ்நிலையும் உதவ மறுத்த பின்னர் -
“என்னடியம்மா. யோசின கப்பலென்ன கவிண்டா போச்சி” என்று தாயிடம் இருந்து வந்த, சத்தம் - தான் பெரியவளாகிவிட்டதை, அவளுக்கு நினைவூட்டியது.
மேய்ச்சலுக்குச் சென்ற கால்நடைகள், பட்டிக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன.
விறகு சேகரிக்கச் சென்ற முகாம்பிள்ளைகளும் கடற்கரைக்குச் சல்லிக்கல் தோண்டச் சென்ற பெண்களும், திரும்பிக் கொண்டிருக்கிறர்கள்.
“பாக்கியத்தின் மகள் வனராணிக்கு, ஆறு மணிக்கு தண்ணி வாக்கிறதாம். உங்களையும் வாட்டாம்.”
என்று ஊருக்குள் தெரிந்த உறவுக்குடும்பங்களுக்குச் சொல்வதற்குச் சென்ற திருகுதாளமும், வந்துவிட்டாள்.
காளிக்குட்டியார் கடைத் தெருவிலிருந்து 'பிஸ்கட்’ வாழைப்பழம் உட்பட வேண்டிய சாமான்களுடன், வந்துவிட்டார்.
தண்ணீர் வாக்கும் நேரம் நெருங்கிவிட்டது.
வனராணிக்கு மச்சாள் முறையான பெண் பிள்ளையொன்று தலையில் சருவக்குடத்தைச் சுமந்தவாறு ஆயத்தமாகியது. இரண்டு பெண்கள் ‘மேற்கட்டிச்சேலை பிடிக்க, பின்னால் சென்ற பெண்கள் வாயிற்கையை வைத்து ‘குரவை போட்டவாறு உப்புத்தண்ணிர் அள்ளுவதற்காக, மாரியம்மன் கோயிலடித் துறையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

Page 24
42 ஏதிலிகள்
3. மாதா கோவில்
கில்குடா சந்தியில் மட்டக்களப்புப் பிரதேசம் முழுவதனையும், காவல் செய்து கொண்டு நிற்பது போல் உயர்ந்து நிற்கிறது கன்னிமரியாள்! தேவாலயம். இக்கோவிலிலிருந்து எழும் மணியின் நாதம், கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்குப் புதிய தெம்பினையும் உற்சாகத்தினையும் ஊட்டும். மாதாவினை மனதில் எண்ணிச் செல்லும் மீனவர்கள் வலை நிறைந்த மீன்களுடன் கரையினை அடைவர்.
கல்குடா துறைமுகத்திற்கு சரக்குக் கப்பல்கள் வரும் காலங்களில், பதுளையிலிருந்து சிங்களவர்கள் கூடு கட்டிய மாட்டுவண்டிகளில் மரக்கறிகளை ஏற்றிக் கொண்டு, வருவார்கள். வரும் வழியில் ஏறாவூர், வாழைச்சேனை போன்ற சந்தைகளில், மரக்கறிகளை விற்பனை செய்துவிட்டு, கல்குடாத் துறைமுகத்தினை அடைந்து, சீனி, வெங்காயம், மாசிக்கருவாடு, செத்தல் மிளகாய் ஆகிய சரக்குகளை, வண்டிகளில் ஏற்றிக் கொண்டு செல்வார்கள்.
பதுளைக் கரத்த வியாபாரிகள், மாதாவின் அருள் வேண்டிச் செல்வதுடன், மாதாவிற்குப் பெருந் தொகையான காணிக்கை யினையும் , செலுத்துவார்கள்.

கலைஞர் தாழை செல்வநாயகம் 43
“ஆரோக்கியம், இந்த முறை மாதாவின் திருவிழாவினைப் பெரிய அளவில் செய்யவேண்டும்.” விதானையின் மகன் சண்முகம் தனது மனைவி ஆரோக்கியத்திடம், ஆதங்கத்துடன் கூறினார்.
மாதாவின் கோவிலுக்குச் சண்முகம் போக மறந்தாலும், ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் தவறாது ஆராதனைக்குச் சென்று வருவார். ஆரோக்கியம் அப்பகுதி மக்களுடன் அன்பாகவும், பண்புடனும், பழகும் ஒருவராகவும் அவர் விளங்கினார்.
அவ்வழியால் வலைகளுடன், கடலுக்குச் செல்லும் மீனவர்கள், மாதா கோவிலைத் தரிசிப்பதுடன், ஆரோக்கியத்திடமும்,
'அம்மா! வலை வைக்கப் போகிறோம், வரும்போது கறிகொண்டு தருகிறோம்.’ என்று கூறிவிட்டுத்தான்
போவார்கள்.
கடலுக்குக் கவனமாய்ப் போய்த் தொழில் பார்த்துவிட்டு வாருங்கள் என்று ஆரோக்கியமும் கூறத் தவறுவதில்லை.
கன்னிமரியாள் தேவாலயத்திற்குப் பின்னால் உள்ள வளவு விதானையாருடையது. அவரது மகன்தான் சண்முகம் கன்னிமரியாளுக்கு ஊழியம் செய்வதிலும், மீனவர்களுக்கு உதவுவதிலும், பெயர் பெற்றிருந்தது விதானையாரின் குடும்பம்,

Page 25
44 ஏதிலிகள்
சண்முகத்தார் மட்டக்களப்பிலுள்ள பிரபல்யமான பாடசாலையொன்றில், ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்து ஒய்வு பெற்று சிங்கப்பூருக்குச் சென்று, அங்கும் பல வருட காலம் ஆசிரியத் தொழில் செய்துவிட்டுத் திரும்பியவர்.
நான் டபிள் பென்சனியர் மகன். பூரீலங்கா அரசிடமிருந்தும், சிங்கப்பூர் அரசிடமிருந்தும் எனக்குப் பென்சன் கிடைக்கிறது. என்று அவர் என்னிடம் அடிக்கடி கூறுவார்.
பென்சன் நாட்களில் வங்கிக்குச் சென்றால், சண்முகத்தார் மற்றவர்களைப் போல் வரிசையில் கால் கடுக்க நின்று பென்சன் பெறுவதில்லை. உள்ளே நேராகச் சென்று மனேச்சரின் மேசையின் முன்னால் உள்ள கதிரையில் அமர்ந்து விடுவார். வங்கி ஊழியர்கள் உடனடியாகச் செயற்பட்டு அவரது பென்சனைக் கொடுத்து, அவரை வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள்.
சண்முகம் அப்பகுதிப் பிரதேச சபையிலும் தவிசாளராகப் பணிபுரிந்தவர். இதனால் அவருக்கு எல்லோரதும் மதிப்பும் இருந்தது. ஒருகாலத்தில சண்முகத்தார் ஒரு பொதுவுடமைவாதியாகவும் அதன்பின்னர் தமிழரசுக் கட்சி தேர்தல் மேடையிலும், பிரசங்கியாகவும் திகழ்ந்தவர்.
இவர் அணியும் சிகப்புச் சேட்டும் அவரது குள்ளமான உருவமும் பார்வைக்கு அனைவரையும் கவர்ந்துவிடும். கட்சியின் சார்பாக ‘செனட்டர்’ பதவி

கலைஞர் தாழை செல்வநாயகம் 45
இவரைத் தேடி வந்த போதிலும், அதிலிருந்து அவர் ஒதுங்கியதுடன், சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அப்பதவி கிடைக்கச் சிபார்சு செய்துவிட்டார். மாதாவின் பார்வை, என்னேரமும் சண்முகத்தாருக்கு கிடைத்துக் கொண்டிருந்தது.
வங்காளக்கடலில் ஏற்படும் இரைவு, அப்பகுதி மக்களின் காதுகளில் எந்நேரமும் ரீங்காரமாக ஒலித்துக் கொண்டிருக்கும். வருடம் முழுவதும் மீனவர்களுக்கு தொழில் செய்வதற்கு உறுதுணையாக இப்பிரதேசம் விளங்கியதால், ஏனைய மாவட்டங்களையும் சேர்ந்த மீனவர்கள், பருவகாலங்களில் மீன்பிடிப்பதற்காக, கல்குடாவினை நாடிவருவர் காலி மாத்தறை, நீர் கொழும்பு ஆகிய பிரதேசங்களிலிருந்து வந்த சிங்கள மீனவர்கள், இங்கேயுள்ள தமிழ்ப் பெண்களையும் திருமணம் செய்துள்ளனர். வதுளைக்கரத்தை வியாபாரிகளாக வந்த ‘ஜேமிசும்’ ‘அப்புஹாமியும் மீனவப் பெண்களைத் திருமணஞ் செய்து, அதன் காரணமாகப் பிறந்தவர்கள் ஜேமிஸ் கணபதியும், "அப்புஹாமி சின்னத்தம்பியும்’ அவர்களது குடும்ப வாரிசுகள் இக்கிராமத்தில் உள்ளன.
மீன்பிடித் தொழிலின் நிமித்தம் வந்த வெளியூர் சிங்கள மீனவர்கள், கல்குடா வலைவாடிக் கிராமத்தில் குடியேறினார்கள்.
லூயிஸ்’ முதலாளியும் 'அண்ட்ரூ’ முதலாளியும் இப்பிரதேச மக்களுடனும், விதானையாரின் குடும்பத்துடனும், அன்னியோன்னியமாகப் பழகியதன்

Page 26
46 ஏதிலிகள்
காரணமாக, இரு சமூகத்தவர்களின், உறவுகளும் நாளடைவில் பலப்படுத்தப்பட்டன.
சண்முகம் மாத்தையா. மேஹரி அவுறுத்தட்ட அபிதமாய். மாதா கோவில் பெரஹரட்ட. தன்சல தெனவா.’
லூயிஸ் முதலாளி என்ன சொல்லுறாரு.’ என ஆரோக்கியம் சண்முகத்தாரிடம் கேட்க.
இந்த முறை, மாதாவின் நுகனத் திருவிழாவிற்கு லூயிஸ் முதலாளியின் வலை வாடி ஆட்கள்தானாம், அன்னதானம் கொடுக்கப் போகிறார்களாம் என்று சண்முகத்தார் மனைவியிடம் கூறினார்.
இப்படியாக, வருடா வருடம் வலை வாடிக் கிராமத்தவர்கள், கோவில் திருவிழாவிற்கு வரும் பல கிராமத்து மக்களுக்கும், மாதாகோவில் திருவிழா இறுதி நாளன்று அன்னதானம் கொடுப்பதும், பாசிக்குடா கடற்கரையோரமாக, வலைவாடிக்கிராமம் வரையில் மாதா ஊர்வலம் செல்வதும் வழக்கமாகிவிட்டது.
நூறு வருட காலங்களுக்கு முன்னர், தென்னை ஒலைக்கிடுகுகளால், வேயப்பட்டிருந்த மாதாவின் கோவில் தற்போது கருங்கற்கோயிலாக கல்குடா கிராமத்தில் உயர்ந்து நிற்கிறது. மாதாவின் சோறு வாங்கி உண்டால் பல நோய் நொடிகளும் பறந்துவிடும், என்று நம்பிக்கை கொண்டு, பல சமூகத்தவர்களும், சமயத்தவர்களும், பல ஊர்களில் இருந்தும், மட்டக்களப்பு நகரிலிருந்தும், இங்கு வந்து

கலைஞர் தாழை செல்வநாயகம் 47
செல்வதும், சுவைமிக்க மீன்கறியுடன் வழங்கப்படும் சோற்றினை வாங்கிக் கொண்டு பாசிக்குடா கடலில் குளித்துவிட்டு பசியாறிச் செல்வதும், வருடா வருடம் இங்கு நடைபெறும் கண்கொள்ளாக் காட்சிகளாகும்.
அன்று. கல்குடா பிரதேசம் பரபரப்பாகியது. அயல் கிராமங்களுக்கு மேய்ச்சலுக்காகச் சென்று விட்டு அந்தியானதும், வழமைபோல் வீடுகளுக்குத் திரும்பும். இக்கிராமத்து மீனவர்களின் கால்நடைகள் அன்று வரவில்லை, செல்லப்பிராணிகளான, நாய், பூனைகளையும் வீடுகளில் காணவில்லை.
/ . இஞ்ச பாருங்க. கேட்குதா? உங்களுக்கு நம்மட "ஜிம்மி’ நாயையும் காணோமே...' என்று குசினிப்பக்கமிருந்து வந்த ஆரோக்கியம், தனது கணவனிடம் கேள்வியாகத் துருவித் துருவிக் கேட்டாள்.
எங்கயும். கடற்கரைப் பக்கம் மீன் பொறுக்கித் தின்னப் போயிருக்கும் வருந்தானே...!
விதானையார் சிரிப்புடன் அலட்சியமாகக் கூறினார்.
“மிருகங்களுக்கு, மனிதர்களை விட எதிர்கால நடவடிக்கைகள், கால மாற்றங்கள், பிரளயங்கள் போன்றவற்றினை, அறியும் சக்தி அதிகமாகவுள்ளது.” என்று மிருகவியலாளர்கள் கூறியதனை ஒரு நூலில் எனக்குப் ப்டித்த ஞாபகம்.
‘சண்முகம் ஐயா! எங்கடபட்டி மாடுகள் இந்தப் பக்கம் வரல்லையா?.

Page 27
48 ஏதிலிகள்
பாசிக்குடா நடராசமணி தோளில் சால்வையுடன், கையில் சிறு தடியுடனுமாகக் கேட்டவாறு வந்து கொண்டிருக்கிறான்.
‘என்ன நடராசமணி! உண்ட மாடுகளும் வரல்லையா? எங்கட நாயையும் காணல்ல.
‘நேற்று இரவு மாடுகளக் கட்டி காலையில கறந்த
நீயா? ஒம் ஐயா! இரவு மாடுகள் ஒண்டும் பட்டிக்கு வரல்ல!
அந்தா பாரு குருவிக் கண்டாக்கரும் வாறாரு...! அவர்ர மாடுகளையும் காணல்ல போலத்தான் கிடக்கு
ஓம். ஐயா! அவர்ர மாடுகள் மட்டுமில்ல இந்த கல்குடா ஏரியாவில ஒருத்தரிடம் மாடுகளையும் காணல்ல எங்கதான் போய்த் தொலைஞ்சிதுகளோ தெரியா? நான் பிறந்த காலத்திற்கு இப்படியான புதினங்கள் நடக்கல்ல' என்றான் நடராசமணி.
ஆடுகளும் மாடுகளும் அன்றிரவு வீடுகளுக்குத் திரும்பாதது அப்பகுதி மக்களுக்கு ஆச்சரியமாகவிருந்தது.
ஆமிக்சாரனுகளைவிட, ஆதர்சமான “சுனாமி வருமென்று யார்தான் நினைத்திருந்தார்கள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை காலை வானம், மப்பும் மந்தாரமுமாக விருந்தது. மழை பெய்வதற்கான அறிகுறிகளைக் காணவில்லை.
வங்காளக் கடலும் வழமைக்கு மாறாகச் சீற்றத்துடன் காணப்பட்டது.

கலைஞர் தாழை செல்வநாயகம் 49
முதல் நாளன்று நத்தாரினைக் கொண்டாடியவர்கள், அன்று காலையும் குளித்து முழுகி மாதா கோவிலுக்குப் புறப்பட்டனர். கோவிலில் சிறுவர்கள் புத்தாடையுடன் கலகலப்பாகக் காணப்பட்டனர்.
l D.
மாதா கோவிவில் ஆராதனைகள் சிங்களத்தில் தான் நடைபெறுவது வழக்கம்
கோவில் நிறைந்த சனங்கள்; குருவானவ்ர் ஆராதனைகளை நடத்திக் கொண்டிருந்தார்.
கடலுக்குச் சென்ற மீனவர்களில் கரையினை வந்தடைந்தவர்களும், கரையை நோக்கியும் வந்து கொண்டிருந்தனர்.
இவ்வளவு காலத்திற்கு இவ்வளவு கும்பக்கணக்கான மீன்கள் பிடிபடவில்லை எனக் கூறிக் கொண்டிருந்தார்கள். கரைவலை வாடிக்காரர்கள் கரைவலைகளை இழுத்து முடிந்தாகிவிட்டது.
கடற்கரை நெடுகிலும் மீன் கும்பங்களே தெரிந்தன. மீன் வியாபாரிகள் மீன் நிறைந்த பெட்டிகளுடன் வந்து கொண்டிருந்தனர். மாதா கோவிலின் முன்னால் கடற்கரையோரமாக, வாடிவீட்டில் முகாமிட்டு இருக்கும் ஆமிக்காரனுகளும் பெரிதாகச் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர்.
கடல்போடும், இரைச்சலினைவிட, அவனுகள் போடும், இரைச்சல்தான் அதிகமாகக் காணப்பட்டது.

Page 28
50 ஏதிலிகள்
என்ன. என்ன விதமாகவெல்லாம் முள்ளுக் கம்பிகளால், தட்டுத் தட்டாக வேலிகளை அடைத்து வைத்துக் கொண்டு, சொகுசாக உள்ளே இருக்கிறானுகள்
“இந்த நாசமறுவானுகளுக்கு அழிவு காலம் நெருங்கிவிட்டது. கெதியா அழியப் போறானுகள்.”
சந்தியில் நின்று ஒரு பைத்தியக்காரன் கடந்தவாரம் ஏசிக் கொண்டிருந்தான்.
சண்முகம் மஹத்தயா! மொனவத அறயா! கத்தாக்கரண்ணே. ஆமிக்காரன் ஒருவன் கேட்க.
ஏயா. பிசுக்காறயா. எயாகே. கத்தாவ. ஒயா, பிலிகண்ட எப்பா. மல்லி.
சண்முகத்தார் ஆமிக்காரனிடம் கூறினார். பைத்தியக்காரன் அன்று கூறியது பலித்துவிட்டது. கிராமமே அழிந்து போய்விடும் என்று யார்தான் நினைத்திருந்தார்கள்.?
மாதா கோவிலில் காலை ஆராதனைகள் முடியும் நேரமாகிவிட்டது. நேரம் காலை எட்டு முப்பதைத் தாண்டிவிட்டது.
சண்முகத்தார் சாயிமனைக் கட்டிலில் படுத்தவாறே, மாதா கோவிலுக்குச் சென்றிருந்த, ஆரோக்கியத்தின் வரவிற்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
இன்று.கால நிலை வித்தியாசம்ாகத்தான் உள்ளது.

ர் தாழை செல்வநாயகம் 51
ஆரோக்கியம் வந்தால் தான், நமக்குக் காலைச்சாப்பாடு கிடைக்கும். இறால் குழம்புடன், அரிசி மாப்புட்டு அவித்துத் தருவாள். .
காலைப்பசி. சண்முகத்தாரின் வயிற்றைப் புறாண்டிக் கொண்டிருந்தது. கடல் அலைகள் மோதுவதைவிட, அவரின் மன அலைகள் மோதிக் கொண்டிருந்தன.
திடீரென்று. கடல் பக்கமிருந்து படீர். படீர். எனப் பயங்கரமான சத்தங்கள் எழுந்தன.
தலைகள் வெடிப்பதும், மூளைகள் சிதறுவதும், போன்றுமிருந்தன. நீலக்கடல் கரு நிறமாகி பனைமரமளவு உயரத்தில் ஊரை தோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
ஊருக்குள் வந்த கடல் மீண்டும் கடலையடைந்து விட்டது. :
பெருமூச்சு விடுவதற்கிடையில் கண் இமைகளை மூடி மறுதரம் திறப்பதற்கிடையில் இராட்சதக் கடல் மீண்டும் ஊருக்குள் புகுந்து, வெறியாட்டம் ஆடிப் பிஞ்சுக் குழந்தைகளை, பெண் பிள்ளைகளை கிழடு கட்டைகளையெல்லாம் உறிஞ்சிக்குடித்து ஏப்பம் விட்டு வெறியடங்கி கடலையடைந்து விட்டது.
தகப்பனின்றிப் பிள்ளைகளும், மனைவியின்றிக் கணவனும், கணவனின்றி மனைவியும், ஆச்சியை, அப்புவைக் காணவில்லையென்று பேரன் பேத்திகளும், ஒலியெழுப்பியவாறு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். கட்டத்தாருடன் வைத்தியர் சிவலியும் உடுத்தசாரத்துடன் ஓடிவந்து கொண்டிருக்கிறார்.

Page 29
52 ஏதிலிகள்
மாதா கோவிலுக்குப் பக்கமாகவும், சண்முகத்தாரின் வீட்டின் பின்புறமாகவும், குடியிருந்தவர்தான் வைத்தியர் சிவலிங்கம் சண்முகம் ஐயாவும், ஆரோக்கியம் அக்காவும். நடராச மணியின் குடும்பமும் ஊரில் யாருமே இல்லை. எல்லோரும் கடலுடன் சென்றுவிட்டார்கள்.
சிவலிங்கத்தார் ஓடியவாறே கூறினார். “கடலலையால் அடியுண்டு மிஞ்சி, ஓடிவந்து கொண்டிருந்த கூட்டத்தாரைப் பார்த்தவாறு நான் பேச்சு epigaists விறைத்தவாறு நின்று கொண்டிருந்தேன்.
மறுநாள் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது ஊர்களை அழித்து இந்நாட்டின் நாற்பதாயிரம் மக்களைப் பலியெடுத்த இராட்சதக் கடலலையின் பெயர் “சுனாமி” | GT6 -
வெள்ளைக்காரன் ஆட்சியின்போது கருங்கற்களால் கட்டப்பட்டிருந்த வாடிவீடு, தபால் நிலையம் நோனாக்கோரி துறைமுகப் பண்டகசாலை, ஆகியனவெல்லாம் தரைமட்டமாகிவிட்டன.
மாதாகோவில் மாத்திரம் இன்றும் எதுவித அழிவுகளுமின்றி உயர்ந்து நிற்கிறது.
மாதாகோவிலில் மணி ஒலிக்கிறது.
நத்தார் ஆராதனைக்காக மீண்டும் மக்கள் கூட்டம், மாதாவின் தேவாலயத்தில் பிரார்த்தித்தவாறு, நின்று கொண்டிருக்கின்றனர்.

கலைஞர் தாழை செல்வநாயகம் 53
4. தமிழ் வாத்தியா(ர்)ரு?
அது பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பு முதலாம் வருடம், வகுப்பு அறைதான் இல்லை. மாணவர் கூடும் மண்டபத்தின் ஒரு மூலையில் உள்ளது. எண்ணி எடுத்தால் இருபதிற்கு மேல் மாணவர்கள் தேறாது.--பாஞ்சாலி பரம்பரையில் பத்துப்பேரும், பாண்டவர்கள் பரம்பரையில் பத்துப்பேரும் - நாங்களெல்லாம் அசல் கிராமத்து மாணவர்கள். எங்களது அயல் கிராமத்தில் ‘ஆதிவாசிகள்’ கூடக் குடியிருக்கிறார்கள். ஆண்கள் அனைவரும் வேட்டியும் சேட்டும்தான் அணிந்து கல்லூரிக்கு வருவோம். ஆனால் பாஞ்சாலி பரம்பரையினர், அதற்கு நேர்மாறானவர்கள்.
தலைவிரி கோலத்துடன் கண்ணகி போன்றெல்லாம், வகுப்பினுள் நுழைவார்கள். ‘அதில் எங்கள் எவருக்கும், ஆட்சேபனையில்லை.
எங்களுக்குத் தமிழ்ப்பாடத்திற்கு, வாத்தியார் தேவையில்லை எங்கள் ஊரில் தான் “டிராமாக்கார சபாபதியர் பிறந்தவர். அண்ணாவி விநாயகமும் எங்கள் ஊர்தான்.

Page 30
54 ஏதிலிகள்
வள்ளி திருமணம் எங்களுக்குத் தலைகீழ்ப்பாடம். நாங்கள் எல்லோரும் கூத்து ஆடுவோம். ‘தீப்பள்ளயச் சடங்கு பக்கத்து ஊரில் தான் உள்ளது. வருடா வருடம் வனவாசம் பார்த்துச் சலித்துவிட்டது.
கண்ணகியம்மன் காவியம் தெரியும், இலக்கியம் எல்லாம் தெரியும். இலக்கணம் எங்களுக்குத் தெரியாதா? என்ன? '
புதுக்கவிதை எங்களுக்கு தண்ணீர் பட்டபாடு
வகுப்பில் ஒருநாள் எனது சகமாணவன் பாண்தலையனிடம், ‘புதுக்கவிதையொன்று உடனே எழுதிக் காட்டு மச்சான்’ என்றேன்.
“சந்திரனை நாய்கடித்தது
சூரியனை மாடு உதைத்தது”
என்று. இருவரிக் கவிதையொன்றினை கரும்பலகையில் ஒரே மூச்சில் எழுதிவிட்டான். மாணவர்கள் எல்லோரும், அசந்து விட்டார்கள்.
இதுவொன்றே, போதும் தானே, எங்களது கவிதையாற்றலுக்கு. இப்ப என்னடா செய்யிறது? தேனீர்ச் சாலைப்பக்கமும், போகமுடியாது. நம்ம திட்டங்கள் எல்லாம் தர்ை மட்டமாய் போய்விட்டது.
"கொத்து ரொட்டிக் கோபாலின் அக்கா வீட்டிற்குத் தினமும் தமிழ்ப் பாட நேரத்தில் சென்று, சுத்தியடித்து விட்டு, வருவோம். அதுவும் இன்றுடன், முற்றுப்புள்ளியாகிவிட்டது.

கலைஞர் தாழை செல்வநாயகம் 55
கோபால் எந்த நாளும் கல்லூரிக்கு வரும்போது, புத்தகங்களை மறந்து விட்டு, வந்தாலும், கொத்து ரொட்டிப் பார்சலை மட்டும், மறக்காமல் கொண்டு வந்துவிடுவான்.
வருங்காலப் பட்டதாரிகளாகிய நாங்கள், பத்தாம் வகுப்பில், படிக்கும் போதே. கோபாலுக்குக் கொடுத்த பட்டப் பெயர்தான் அது.
இந்த மாவட்டத்தில் இந்த தேர்தல் தொகுதியில், இந்தக் கிராமத்தில் பிறக்காத ஒருவர், தமிழ்ப் பாடத்திற்கே புதிய ஒரு தமிழ்வாத்தியார்.
இவர் நமக்குத் தேவையா? என்கின்ற எமது ஐயப்பாடு. என்னடா இது? இன்னும் ஒரு கிழமைதான் கிடக்கிறது. சைக்கிள் ஒட்டப் போட்டியிருக்கு. -
சைக்கிள் ராஜாவின் முகம் வாடிவிட்டது.
தமிழ்ப் பாட நேரத்தில்தான் அவன் நாலு ரோட்டையும் சைக்கிளில் சுற்றிப் பயிற்சி எடுப்பான்.
"யார் இந்த தமிழ்வாத்தி? இண்டைக்கா அவன் வரவேணும்? ராஜா சாமான்யமான ஆளில்லை. சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாநகரில், தினகரன் விளையாட்டு விழாவில், பத்து மைல் மாணவர் சைக்கிள் போட்டியில், அவனுக்குத் தான் முதலிடம்

Page 31
56 ஏதிலிகள்
எனது வகுப்பு மாணவன் என்பதால், எனக்குப் பெருமையாகவிருந்தது.
மறுநாள் அசெம்பிளியில், அதிபர், பெரிய ஐயா, அவனுக்குச் சைக்கிள் ராஜா என்ற பட்டத்தையும் சூட்டி விட்டார்.
இத்தனைக்கும். அவன் எங்கள் சாதியச் சேர்ந்தவன் அல்ல. முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவன். ஆனால் எங்களுக்கு உயிர் போன்ற நண்பன். 'பராசக்தி” கருணாநிதியின் வசனங்கள் அவனுக்குத் தலைகீழ்ப் பாடம்எங்கள் வகுப்பில் உள்ளவர்கள் பல்துறையிலும் விற்பன்னர்கள். தமிழ் வாத்தியாருக்கு கூத்து ஆடத் தெரியுமாடா? கூத்தில் வரும் ஒரு விருத்தத்தினைத்தான் கூறுவாரா? என்று கேட்டான் கோழிக்காலன், குணரெத்தினம் -
அவனுக்கு வடமோடி, தென்மோடி, எல்லாம் அத்துப்படி. அவன் கூத்துப்பழக ஆரம்பித்தபோது, தாளத்திற்கு, கால்போடத் தெரியாதிருந்தான்.
கோழி குப்பையக் கிளறித்தோண்டுறமாதிரி, காலால தோண்டாத என்றார் அண்ணாவியார்.
அன்றிலிருந்து அவனுக்கு கோழிக்காலன் என்ற பட்டம் நிலைத்துவிட்டது.
பாஞ்சாலி பரம்பரையினரின், பக்கமிருந்து எதுவிதமான ஆராவாரங்களும் இல்லை. அவர்களுக்கு, தமிழ்

கலைஞர் தாழை செல்வநாயகம் 57
வாத்தியார் வந்தாலென்ன. சிங்கள வாத்தியார் வந்தாலென்ன. என்ற நிலை.
‘என்னடி தமிழ்வாத்தியார் மன்மதன் மாதிரி இருப்பாரோ?” என்று ஒரு போடு போட்டாள். அணில் குஞ்சி அழகேஸ்வரி இல்லையாண்டி. ‘தீஸ்ஸஹாமி’ மாதிரியாம் என்று ஒரு போடு போட்டாள், பறட்டைத் தலைப்பரமேஸ்வரி
வகுப்பு சிறிது நேரம், சிரிப்பொலியில் கலகலப்பாகியது. வகுப்பு மாணவர்கள் ஆளுக்கொரு கதை சொல்லி தாழ்வாத்தியாரை யாரெண்டு கூடத் தெரியாமல் நையாண்டி செய்து கொண்டிருந்தார்கள்.
விறாந்தையில் அதிபர் நடந்துவரும் சப்தம் கேட்டது. வகுப்பு அமைதியாகிவிட்டது.
வகுப்பினுள் நுழைந்த அதிபர்.
இன்று முதல் உங்களுக்குத் தமிழ்ப்பாடம் ஒழுங்காக நடைபெறவுள்ளது. பண்டிதர், பரம்பரையில் பிறந்தவரும். ஈழம் மெச்சும் எழுத்தாளர்களில் ஒருவரும் ‘கரி, ‘பரி’ போன்ற பல நாவல்களை எழுதி பிரபல்யம் அடைந்தவருமான ஒரு தமிழ் அறிஞர். அவர்தான் உங்கள் தமிழ் வாத்தியார் வகுப்பிற்குள் வரவுள்ளார். அவரை அன்புடன் வரவேற்று தமிழ் அறிக! என்று விடை பெற்றார்.

Page 32
58 ஏதிலிகள்
வகுப்பு மீண்டும் பரபரப்பு அடைந்தது. அன்ைத்து மாணவர்களது கண்களும், உருண்டு பிரண்டு தமிழ்வாத்தியாரின், வரவினைப் பார்த்துக் கொண்டிருந்தன.
இனிமேல் நமது விளையாட்டுக்கள் எல்லாம் செல்லுபடியாகாது. உல்லாசமாகக் கழித்த ஒரே ஒரு பாட நேரமும் பறிபோய்விட்டது. ஒன்று நினைக்க வேறொன்றாய் முடிந்துவிட்டது.
பிள்ளையார் பிடிக்க குரங்காகிவிட்டது.
கம்பனைப் போல், வள்ளுவனைப் போல்,
பாரதியினைப் போல், காளிதாசனைப் போல் இளங்கோவைப்போல், என்றெல்லாம் கற்பனை பண்ணிக் கொண்டிருந்தோம்.
எம்.ஜி.ஆரைப் போலாவது இருப்பார், என எண்ணினோம். அவரும் ஒரு வாத்தியார் தானே. யாராயிருந்தாலும் பரவாயில்ல, வகுப்புக்குள் வரட்டும். முதல்நாள் தானே! படிப்பிக்கத் தொடங்கமாட்டார். அதையும், இதையும் பெயர் ஊர்களாகக் கேட்பதுடன் நிறுத்திவிடுவார்.
பூனை வரும்போதாவது, சிறிதளவு காதுகளுக்குச்
சத்தம் கேட்கும். அதுவுமில்லை.
நாகேசின் உடம்பு மாதிரி உடம்பு, ஒற்றைப்பட்டு வேட்டியுடன், ஒரு கையை வீசிய நடை
கமுக்கட்டினுள் ‘டயறி போன்று ஏதோ தெரிகிறது. ஏறுமாறாய் மோவாயில் வளர்ந்த மீசை, சிறிது,

கலைஞர் தாழை செல்வநாயகம் 59
புன்சிரிப்புடன் தான், வருகிறார் நமக்கெல்லாம் பற்கள் வெள்ளையாகவிருக்கும்.
அவரது பற்கள் அனைத்தும் வீரைப்பழத்தின் நிறத்தில் தெரிகிறது. எங்கள் ஊரில் ஆணி, ஆடி மாதங்களில், வீசுகின்ற “கச்சான் காற்றுக்கு’ மனிசன் நின்று பிடிப்பாரோ? தெரியவில்லை. ஆள் சுள்ளலாயிருந்தாலும் உசாரான நடையில் வருகிறார். ஆளை எப்படியும், சமாளித்து விடலாம்.
எடுத்த உடனேயே அவரது நடத்தயினைக் கண்டு பிடித்து விட முடியுமா? போகப் போகத்தானே அறிய (Մ)ւգեւյւհ.
வணக்கம் ஐயா!
அனைவரும் எழும்பி நின்று வணக்கம் செலுத்தினார்கள். சற்று சுணங்கிவிட்டது, அமருங்கள், ஆசனங்களில்,
வகுப்பில் யார் சின்னப் பொடியன்?
நான்தான் ஐயா!
நான், அரிவரி வகுப்பிலிருந்து, பன்னிரெண்டு
வருடங்களாக, வகுப்பில் முதல் வரிசையிலேயே இருந்து வருகிறேன். சின்னப் பொடியன் என்று என்னை முன்னுக்கே வைத்து விடுவார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவன், நான்தான்.

Page 33
60 ஏதிலிகள்
கரும்பலகையினை அழிப்பது தொடக்கம் கேள்விகளுக்குப் பதில் சொல்வது, பாடசாலை முடியும் தறுவாயில் தூர இடங்களுக்குச் செல்லும் வாத்திமார்களுக்குப், பஸ்நிலையம் சென்று பஸ் தயாராகவுள்ளதா? என்று பார்த்து வருவது, அடியும் குட்டும், படுவது எல்லாம் அடியேன்தான்.
தமிழ்வாத்தியார் என்னைப் பார்த்துப் புன்முறுவல் செய்கிறார். -
இங்க. வாரும் மோனே!.
தங்கள் திருநாமம் யாதோ?
செல்வா சேர். தந்தை செல்வநாயகமோ? எஸ்.ஜே.வியோ?. இல்லை சேர். தங்கள் திருவிடம் யாதோ?.
பதில் கூறினேன்.
சேட் பைக்குள் கையை விட்டு, ஐந்து சதக் குற்றியினை எடுத்து என்னிடம் தந்து, கிட்டவுள்ள கடைக்குப் போய். வெற்றிலைக் கூர் ஒன்று வாங்கி வாருமன்!
நான் வழக்கமாகச் செய்து வரும் வேலை தானே.
தமிழ் வாத்தியார் கதிரையில் இருப்பதாயில்லை.

கலைஞர் தாழை செல்வநாயகம் 61
பிள்ளையாள்! இதற்கு முன்னர் உங்களுக்குத் தமிழ்பாடம் படிப்பிக்க, யாரும் வரவில்லையோ?
ஒரு ரீச்சர் இருந்தா சேர்! எங்கடப் போக்கப் பார்த்துவிட்டு. அவங்களுக்குத் தமிழ் படிப்பிக்க எனக்கு ஏலாது, என்று அதிபரிடம் கூறிவிட்டு மாறிப்போய்விட்டாவு சேர். அப்படி என்ன, தமிழில நீங்க. விண்ணாதி விண்ணனுகளோ?
ஆமாம் சேர்! எங்களில் பல கலைஞர்கள் இருக்கிறார்கள் சேர். எல்லோருமாகக் கத்தினோம்.
ஒருவர் மட்டும் எழுந்து எனக்குப் புரியும்படி கூற முடியுமா? பத்தாம் வகுப்பில் படிக்கும் போதே நாங்கள் கையெழுத்துப் பத்திரிகை ஒன்றை ஆரம்பித்துவிட்டோம்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கடைசிப் பாட நேரத்தை ‘மாணவர் மன்றத்திற்காக ஒதுக்கி அதில் பல விடயங்களைப் பற்றிப் பேசுவோம் - கதை கவிதை நாடகம் எல்லாம் நடிப்போம் -
எமது வகுப்பில் பைரன், ஷெல்லி, விக்டர் ஹியூகோ, வள்ளுவன், கம்பன், பாரதி, அகிலன், கல்கி, வரதராசன், சாண்டில்யன், அண்ணா, கருணாநிதி போலில்லாவிட்டாலும், அவர்களது பரம்பரையினரின் அயல்வீடுகளில் குடியிருந்தவர்களைப் போலுள்ளவர்கள், ஏன்? ஈழத்து எழுத்தாளர்களைப் போலுள்ளவர்கள் இல்லையா? அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

Page 34
52 ஒரதிலிகள்
தமிழ் வாத்தியாரின் கேள்வி -
அவர்களும் திறமபானவர்கள் தான். அவர்களது திறமைகளை வெளிப்படுத்தி மற்றவர்களுக்குத் தங்களை அடையாளப்படுத்தக் கூடிய நிலை பில், இல்லாதவர்களாயுள்ளார்கள். நம்மூர் எழுத்தாளர்கள் எழுதியே ஏழ்மையான நிலையில் உள்ளார்கள். தாங்கள் எழுதிய ஆக்கங்களைத் தொகுத்து, ஒரு நூலாகக் கூட, வெளியிட முடியாத நிலையில் உள்ளார்கள்.
இலக்கியப் "புரவலர்ஹாசிம் உமர்” போன்றவர்கள் எமது நாட்டில் தோன்ற வேண்டும்.
நல்லது பாைைர்களே! உங்களைப் பற்றி நன்கு புரிந்து விட்டேன். உங்களைக் கொண்டு 'காப்பிய விழா ஒன்றினை நடாத்த நான் முடிவு செய்துவிட்டேன்.
அந்நிலையில் தனது பொக்கற்றில், சொருகியிருந்த ஊற்றுப்ே பனாவை, எடுத்து எழுத முனைந்த போது, பேனா மையினைக் கக்கியது. பேனாவின் கழுத்தினை நூலினால் வரிந்து கட்டியிருக்கிறார்.
இது தான் மோனே! ஈழத்து எழுத்தாளனின் (ELIGO" I...
வகுப்பில் உள்ள அனைவரும், கொல்லெனச் சிரிக்கின்றனர்.
ஈழத்தில் சிறுகதை, நாவல், மரபுக் கவிதைகள் ஆகிய துறைகளில் கணிசமான அளவு பங்களிப்புச் செய்தவர்கள்,
பற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியும்.

கலைஞர் தாழை செல்வநாயகம் 63
நீங்கள், அறிந்தவரையில் ஒரு பிரபல்யமான ஈழத்தின் எழுத்தாளரும், பிரச்சினைக்குரிய எழுத்தாளரும், ஒரு சமயம் சாகித்திய விழா மேடையில், கூழ் முட்டைகளால் எறிவங்கியவருமான ஒரு எழுத்தாளரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தெரியும் சேர்! அவரது புத்தகங்கள் என்றால். எங்களுக்குப் பித்து பிடித்த மாதிரி.
ஞக்கு ! :ליתI ו Tו#:{{
அடியேன் தான் அந்த எழுத்தாளன். உங்களது தமிழ் வாத்தியார் மாணவர்கள் அனைவரும் பாய்ந்து சென்று, அவர் கைகளை இழுத்து முத்தமிட்டனர். நல்ல வேளை முகத்திலல்ல.
இப்போது, தமிழ் வகுப்பென்றால் எங்களுக்கு நல்வி சந்தோசம் எந் நேரமும் அவர் பின்னாலேயே சுத்துவோம்.
தமிழ் இலக்கிய வரலாறு புத்தகத்தினை, ஒரு பார் நேரத்தில் படிப்பித்து முடித்துவிட்டார்.
அகமும், புறமும், ஐந்து நிலங்களும், எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும், பதினெண் கீழ் கணக்கும், ஐம்பெருங்காப்பியங்களும், சங்ககாலம் முதல் இருபதாம் நூற்றாண்டு இலக்கியம் வரையிலும், உங்களுக்குத் தெரியாதா? என்ன? என்று புத்தகத்தை மூடி வைத்து விட்டார்.
கமலாம்பாள் சரித்திரத்தினைப் புரட்டி, முதல் பக்கம் முதல்வரியே பிழையாகவுள்ளது. எல்லாம் வடமொழிக் கவிப்பாகவுள்ளது. நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.

Page 35
64 ஏதிலிகள்
காப்பிய விழா' கல்லூரி மைதானத்தில், கோலாகலமாக, நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஒரு நாள் தனது மழை" என்ற நாடகத்தினை மேடையில் காட்டினார். நிசமாகவே மழையும் இடியும், மின்னலும், யதார்த்த பூர்வமாகவே மேடையில் காண்பிக்கப்பட்டது.
அவர் ஒரு தமிழ் வாத்தியார் தான்.
(குறிப்பு : கதையில் வரும் சம்பவங்கள், உரையாடல் போன்றவற்றினைக் கொண்டு தமிழ் வாத்தியார் யார்? என்பதனைக் கண்டுபிடித்து விட்டீர்களா?)
05.06.98
 

கலைஞர் தாழை செல்வநாயகம் 65
5, மாரிப்போடி
போடியாரின் வயல் வாடியில் நின்று மேற்குப் புறமாகப் பார்த்தால், சேர்க்கியூட் வங்கிளாவில் எரியும் வெளிச்சமும், கிழக்குப் புறமாகப் பார்த்தால், காகித ஆலையிலிருந்து எழும். வைக்கோல் புகை மண்டலமும், இரவு வேளையில் வடக்குப் புறமாகப் பார்த்தால், மட்டக்களப்பிலிருந்து கொழும்பு செல்லும் நைற்மெயில் புகை வண்டி ‘லைற் வெளிச்சங்களுடன், செல்லும் காட்சியும், தென்புறமாகப் பார்த்தால், தேனாட்டியிலிருந்து, எவராலும் என்னை அசைத்து விட முடியாது என உயர்ந்து நிற்கும் 'தொப்பிகல’ மலையும் கண்கொள்ளாக் காட்சிகளாகத் தெரியும்.
“வயல் வாடியில் ஷெல் விழுந்து தீப்பற்றியதனால், கவனிப்பாரற்ற நிலையில் கருகிக் கிடந்த மாரிப்போடியாரின் உடலை, மூன்று நாட்களின் பின்னர் உரச்சாக்கொன்றினுள் போட்டு, வாய் கூட்டிக் கட்டி, வண்டிலில் ஏற்றி, புதுவெளிப் பாலத்துச் சோதனைச் சாவடியில், அவிட்டுக் காண்பித்து முகாமில் முடங்கிக் கிடந்த, போடியாரின் மனைவி செல்லாச்சியிடம் பத்திரமாகச் சேர்ப்பித்தான், “மையன்போடி”

Page 36
66 . ஏதிலிகள்
“செல்லாச்சியக்கே" போடியாரிட மையத்த இண்டைக்கி வெள்ளப்பில், மாடுதேடிப் போனாப் போல, கண்டுபிடிச்ச நான். கருகிப் போய்க்கிடந்தா மனிசன்.
வாடி துப்புரவா சாம்பலாகித்து.
வாசல்ல. இருந்த நெல்லுப்பட்டற சாம்பல் கும்பமாக் கிடக்கு. மாடு கண்டுகள் எல்லாம் வயல் வெட்ட வெளிய, போன போன இடத்தில், மேஞ்சாப் போல. மல்லாக்கா செத்துச் செத்துக் கிடக்கிதுகள். அந்தக் கோலங்கள கண்ணால பாக்கேலாது போடியாரிட மையத்த சுணங்காம அடக்கம் பண்ணுங்க.
வாகனேரி வயல் பிரதேசங்களிலிருந்து இடம் பெயர்ந்து வந்து முகாம்களில், அகதி வாழ்வு நடாத்திக் கொண்டிருந்த, அகதிகளில் அகதியாகவிருந்த, செல்லாச்சிக்கிழவியிடம் கூறிவிட்டு, அங்கிருந்து தான் கொண்டுவந்த வண்டிலை நெருங்கியபோது,
என்ன மையன் போடியார் என்றவாறு வெடிக்காறச் செல்லனும், பச்சுத்தண்ணிப் பரிசாரியாரும், விசனப்பட்டுக் கேட்டவாறு, அவனை நெருங்கிக் கொண்டிருந்தனர்.
ஒம். செல்லண்ணே போடியாரிட மையத்தக் கொண்டு வந்த நான் செல்லாச்சிட்ட பாரம் கொடுத்துப் போட்டு, கிளம்ப ஆயத்தமாகித்தன். நல்ல காரிய மொண்டப் பண்ணி போட்டயள் மையன் போடியா. நல்லர் காலமா உங்களால, வயல் வெளிக்குப் போக முடிஞ்சதப் பற்றியும், அந்த மனிசண்ட, கருகிப் போன

கலைஞர் தாழை செல்வநாயகம் 67.
கட்டயயாவது கண்டுபிடிச்சு துணிச்சலோட, கொண்டு வந்ததயிட்டும் எங்கட சாதிசனங்கள் பெருமைப்படுகிதுகள்.
ஆண்டாண்டு காலமா நம்ம இரண்டு சாதி சனங்களின்ர உறவுகளும், நீடிக்க வேணுமெண்டு வாகநேரிப் பிள்ளையார, வேண்டிக்கிறம் என்றார் பச்சத்தண்ணிப் பரிசாரியார்.
வாகநேரிப் பிரதேசத்தில் யாருக்காவது பூச்சி பொட்டை குத்திவிட்டால் காத்தமுத்துப் பரிசாரியாரின், வீட்டுக்குத்தான் ஒடிச் செல்வார்கள். தன்னைத் தேடிவரும், எவரையும் அவர் புறந்தள்ளி விடுவதில்லை. ‘பூச்சி பூரான்’ குத்திவிட்டதாகக் கூறிச் செய்தியைக் கொண்டு வந்தவரை, முதலில் தூதுவன் குறி’ மூலம் அறிவார். அவர் அங்கவீனரா? அங்கவீனமற்றவரா? பதட்டப்படுகிறாரா? எந்தத் திசையில் நின்று, செய்தியினைக் கூறுகிறார் என்பனவற்றையெல்லாம் தூதுவன் குறிமூலமறிந்து, கண்டத்திற்கு மேற்பட்ட கடியா? கீழ்ப்பட்ட கடியா? மருந்து மாயங்களைச் செய்து, குணமடையச் செய்யலாமா? அல்லது பிரயோசனமில்லையா? எனக்கணித்து, அவரால் முடியும்ாயின், போ வருகிறேன் என்று கூறிவிட்டுப் பூச்சியினால் கடியுண்டவரின் வீட்டினை அடைவார். காத்தமுத்துப் பரிசாரியார், தனது பரிகார வேலைகளுக்கு, ஸ்துவிதமான பலனையும், எதிர்பார்ப்பதில்லை. காட்டில் கிடக்கும் மருந்து மூலிகைகளைத் தேடிப் பொறுக்கி, பாம்பு வைத்தியம், விஷவைத்தியங்கள் செய்வதில் கை தேர்ந்தவர். வயல் காட்டுப் பிரதேசத்தில் வைத்தியம் செய்வதில் அவரை மிஞ்சியவர்கள் எவரும் கிடையாது.

Page 37
68 ஏதிலிகள்
இப்படிக் கொந்த மனிசனுக்கு, அப்பிரதேச விவசாயிகள் பச்சத்தண்ணி வைத்தியர் என்ற பட்டப்பெயரினைச் சூட்டிவிட்டார்கள்.
காத்தமுத்தர், மாரிப் போடியாருக்கு வலது கரம் போன்றவர். போடியார் தலைவலி காய்ச்சல் என்று படுத்து விட்டால், அவருக்குப் பக்கத்திலிருந்து திருநீறு போட்டும் தண்ணிர் ஒதிக் கொடுத்தும், சுகமாக்கி விடுவார்.
காத்த முத்தர் போடியாரிடம் அடிக்கடி நையாண்டியும் பண்ணுவார். “வேலிக்கட்டை யெண்டாலும், உங்களைப் போல ஆட்களுக்குப் போடிப்பட்டம் மட்டும் போகாதோ’ என்று கூறுவார்.
போடியார் வாடியில், பரிசாரியாருக்கு அவ்வளவு மரியாதை கிடைக்கும். போடியாரின் குடும்ப வைத்தியரும் அவரே தான் -
என்ன போடி. நான் போயித்து வரட்டா?
என்னவும், ஏதுமெண்டா வாடிக்கு விசளத்த, அனுப்புங்க. என்று கூறிவிட்டுச் சென்று விடுவார்.
‘வெடிக்காறச் செல்லன்’ வாகநேரிப் பிரதேசத்தில், பெயர் பெற்ற வெடிக்காறன். இவனை மிஞ்சிய வெடிக்காறர்கள் அக்காட்டுப் பிரதேசத்தில், எவரும் நுழைந்து விட முடியாது. அப்படி யாரும் வெடிக்காறர்கள், செல்லனையறியாமல் வந்து வயலுக்குள் நுழையும் பன்றிகளையோ, ஏனைய மிருகசாதிகளையோ, சுட்டு

கலைஞர் தாழை செல்வநாயகம் 69
விட்டால் நொடிப் பொழுதில் அதனை எழுப்பி ஓடச் செய்து விடுவான். சுடுபட்ட மிருகங்கள் எழுந்து ஓடிவிடும்.
கட்டை விரலையும் மோதிர விரலையும் ஒன்று சேர்த்து நொடித்து விடுவதுதான், அவனது மந்திரம்.
காட்டில், அவன் வெளிக்கிட்டு, வேட்டைக்குப் போவதும், புதுவிதமானதொரு கலையாகும்.
காட்டினுள் முதன்முதலாகப் புகும்பொழுது முன்னேயுள்ள குழையினை மந்திரம் சொல்லி முறித்துவிடுவான்; தான் காடுகட்டியதாகக் கூறுவான். வழிதவறாமல் மீண்டும், வாடிக்குத் திரும்பி வருவதற்கும், கரடி, புலி போன்ற கொடிய மிருகங்களிலிருந்து தன்னைக் காப்பதற்கும், காடு கட்டியதாகக் கூறுவான். காட்டில் பெரிய மிருகங்கள் அவன் கண்ணில் தென்படாவிட்டால், உடும்பு, சருகுமான், எதையாவது பிடித்து, இறைச்சியுடன் திரும்பாது விடவும் மாட்டான்.
செல்லா இண்டைக்கு மான்மரை உண்ட கண்ணில படவில்லையா? என்று போடியார் அவனிடம் கேட்பார்.
இல்ல போடியார் இண்டைக்கு பகல்வேட்டை வாய்க்கல்ல யாரோ? என்னவோ? செய்து போட்டானுகள் போலக் கிடக்கு. வாடிக்குப் போய் நான், குறிபார்த்து என்னவெண்டு அறியிறன். மாங்கேணி வேடனிகளிலதான். எனக்குச் சந்தேகமாக் கிடக்கு. வேடப் பேய்க்குள்ளால, நம்மட காட்டக் கட்டிப் போட்டானுகள் போலக்கிடக்கு. எண்ட சந்தேகமாக கிடக்கு.

Page 38
70 ஏதிலிகள்
நல்ல கொழுத்த உடும்பு போடியார் எண்ணக்காது, முட்டக்கோர்வை எல்லாம் கிடக்கு. செல்லாச்சியக்காட்டக் கொடுத்து, நல்லாக் கருக்கிச் சாப்பிடுங்க என்று கூறி கொண்டு வந்த உடும்பினை உரித்துக் கொடுத்துவிட்டுப்
போவான்.
வெள்ளாம வெட்டுக் காலத்திலதான், உடும்பு கொழுத்திருக்குமாம். வயல் விழைந்த காலத்திலதான் வரவைக்குள்ள பிடிக்கிற பனையான் மீனும் கொழுத்திருக்குமாம். பனையான் மீனக் குழம்பு வைச்சா கறிக்குள்ள எண்ணை மிதக்கும் என்று மாரிப்போடியார் அவர்களிடம் கூறுவார்.
போடியாரின் மருந்துத் துவக்கு, செல்லனிடம் தானிருந்தது. இதனால் அந்த வாடியில் இறைச்சிக்கும், மீனுக்கும், குளத்துக் கருவாட்டிற்கும், பஞ்சமில்லை.
வாகநேரி, வயல் வட்டை வெளிகளில், பகல் வேளைகளில், விளைந்த நெற்கதிர்களைத் தின்னவரும் தினையான் குருவிகளை விரட்டும் குருவிக்காரன்களில் ஒலியும், இரவு பட்ட வேளைகளில், காவல் பறண்களிலிருந்து, கவிபாடும், கன்னியர்களின், காளையர்களின் ஒலியும் பன்றிகளை விரட்டும், புலிஉறுமிகளின் ஒலியும் நாளாந்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்களே.
போடியாரின் வயல்வாடி, நிலையானவாடி. விதைப்புக்காலத்தில் தனது மனைவி, செல்லாச்சியுடனும்

கலைஞர் தாழை செல்வநாயகம் 71
பேரக் குழந்தைகளுடனும், விதைப்பு முடியும் வரையில் தங்கி நிற்பார். வயலுக்கு களை நாசினி கிருமி நாசினிகளை விசிறி உரம் எறியும் காலங்களிலும், தங்கி நிற்பார். வயலில் தலைப்புக்கதிர் பழுக்கத் தொடங்கியதும், மீண்டும் வந்து வாடியில் தங்கி நின்று, நெல்மணிகளுடன் தான் வீடு செல்வார். விதை நெல்லினையும், தேவைக்கு அதிகளவு நெல்லினையும் வாடியின் முன்னால் உள்ள கட்டான்தரையில், வைக்கோல் கத்தைகட்டி, வைக்கோல் புரியிட்டு, பட்டறைகட்டி அதனுள் போட்டு விடுவார்.
வைகாசி மாதம், கண்ணகியம்மன் குளிர்த்தி முடிந்த பின்னர், மட்டக்களப்புப் பிரதேசமெங்கும், கோவில் சடங்குகள் ஆரம்பித்து விடும். கோவில் திருவிழாக்களும், ஆரம்பமாகிவிடும். சித்தாண்டி மயில்கட்டுத் திருவிழாவன்று இங்குள்ள அநேக இளைஞர்கள், யுவதிகளின் திருமணங்களும் நடந்தேறும்.
ஒரு மயில்கட்டுத் திருவிழாவிலன்றுதான் திருவிழா பார்க்க வந்த செல்லாச்சில நான் மையல் கொண்டு மனைவியாக ஏற்று, அவளக் கடத்திக் கொண்டு, வாடிக்கு வந்த நான் என்று வாடிக்கு வருபவர்களிடம், கூறித் தம்பட்டம் அடிப்பார் போடியார்.
பேரப்பிள்ளைகளையெல்லாம் கூடுகட்டிய மாட்டுவண்டியில் ஏற்றி, மயில்கட்டுத் திருவிழாவிற்குச் சென்று, அவர்களுக்கு விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக் கொடுத்தும், பின்னர். மறுகிக் கொண்டு நின்ற செல்லாச்சியிடம்.

Page 39
72 ஏதிலிகள்
உனக்கு என்னவேணும் செல்லம் என்று கேட்க, எனக்குப் பனங்காப் பணியாரம் வாங்கித்தாங்க என்று செல்லாச்சி கூற சுற்றி நின்ற, அனைவரும் விழுந்து, விழுந்து சிரித்ததாகக் கூறுவார். வயலில் போடியார் இல்லாத காலங்களில், முல்லைக்காரன் முத்தன் அனைத்துக் காரியங்களையும் கவனித்துக் கொண்டிருப்பான்.
வட்டவிதானை 'கைலாஸ் வயல் வெட்ட களைச் சுற்றிப் பார்க்க வரும் காலங்களில், போடியாரின் வாடியில் தான் தங்கி நிற்பது வழக்கம். மாரிப்போடியின் மருமகன்தான், கைலாஸ். வட்டவிதானை போடியாரின் தம்பியின் மகளைக் கட்டியதாலும், தன் சகோதரியினைப் போடியாரின் மகனுக்கு மணம் முடித்துக் கொடுத்ததாலும் உறவு முறையாகிவிட்டான்.
வேளாண்மை வெட்டுக்காலம் (LDL- ULI வாகநேரிப்பகுதி விவசாயிகள், வட்டக்களரி அமைத்து கூத்துப்பழகி, கோவில்களின், திருவிழாக் காலங்களில் அரங்கேற்றுபவர்கள் கூத்துப்பழகுபவர்களுக்கு ஏற்படும் செலவுகள் அனைத்தையும் போடியர் தான், மனேச்சராக விருந்து கவனித்து விடுவார்.
போடியாரின் இன்னொரு மகன், ‘மத்தளம் வாங்கித் தரும்படி அடம் பிடிக்க, அவனுக்கு அதனை வாங்கிக் கொடுத்து ‘அண்ணாவி’ ஆக்கிய பெருமையும் அவருக்கே உரியதாகும். போடியார் தனியொரு விவசாயி மாத்திரமின்றி, கலைத்துறையினையும், ஊக்குவித்து கலைவளர்த்த, கலைஞராகவும் மிளிர்ந்தார்.

கலைஞர் தாழை செல்வநாயகம் 73
அன்று ஒரு துக்ககரமான தினம். படுவான்கரைப் பிரதேசத்தை நோக்கி, சரமாரியான ஷெல் வீச்சுகள், இடம்பெற்றன.
கரடி உரிச்ச குளப்பகுதியிலிருந்து, வாகநேரிப் பகுதியை நோக்கி எறியப்பட்ட ஷெல்கள் வயல் வாடிகளையெல்லாம் சேதமாக்கின.
விவசாயிகள் கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு நாத்தப்பாலத்தைக் கடந்து ஊர்மனைகளை நாடினர். அனேகர், அகதி முகாம்களை நாடித் தஞ்சமடைந்தனர்.
செல்லாச்சிக் கிழவியும், அகதி முகாமை, நாட வேண்டிய நிலை, ஊரில் உள்ள போடியாரின் உறவினர்கள், அவளை ஒதுக்கி வைத்திருந்தனர். போடியாரின் இரண்டாவது தாரம்தான், இந்தச் செல்லாச்சி. அவளுக்குத் தெரியும் தன்னை யாரும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள் என்று, அதனால்தான் அகதி முகாமிற்குச் சென்றாள்.
நான் ஊருக்குப் போகமாட்டேன். அழியும் நிலையேற்பட்டால் நான் இந்த வயல் வாடியில் தான் சாவேன். இந்த வயலுக்கே என் அனைத்து எலும்புகளும், உரமாகிப் போகட்டும் என்று உசும்பாமல் இருந்துவிட்டார் போடியார். எங்கிருந்தோ வந்த ஷெல்' ஒன்று, போடியாரின் வாடியில் விழுந்தது.
இரண்டு நாட்கள் கடந்து விட்டன.

Page 40
74 ஏதிலிகள்
நாய்கள் நரிகளை விட வாகநேரிப் பிரதேசத்தில், வேறு சீவன்கள் நடமாடியதாகத் தெரியவல்லை.
மூன்றாள் நாள் மாத்திரம், நாத்தப் பாலத்து இராணுவத்தினரால் முஸ்லீம் விவசாயிகள் மட்டும், தங்கள் தங்கள் வயல் வெளிகளை நாடிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
மையன்போடி முளித்த இமைகளை மூடாமல், நேரே போடியாரின் வாடிக்கே, தனது வண்டிலை ஒட்டினான்.
வயல் வாடியில் ஷெல்' விழுந்து தீப்பற்றியதனால், கவனிப்பாரற்ற நிலையில் கருகிக் கிடந்த, மாரிப்போடியாரின் உடலை உரச்சாக்கொன்றினுள் போட்டு, வாய்கூட்டிக் கட்டி, வண்டிலில் ஏற்றி புதுவெளிப் பாலத்துச் சோதனைச் சாவடியில் அதனை அவிட்டுக் காண்பித்து முகாமில், முடங்கிப் போய் கிடந்த போடியாரின் மனைவியிடம், அதனைப் பத்திரமாகச் சேர்ப்பித்து திரும்பிக் கொண்டிருந்தான். மையன்போடி - (கதையில் வரும் சம்பவங்கள் உண்மையே. பெயர்கள்
யாரையும் குறிப்பிடுவனவல்ல.) -
06.04.2007
۹
@e

கலைஞர் தாழை செல்வநாயகம் 75
6. ஏதிலிகள்
(தேசிய இலக்கிய கலைப் பெருவிழா - 2006)
உச்சி வெயில் பொழுது - மருதமரம், ஆற்றின் குறுக்காக விழுந்துபடுக்கின்றது. தண்ணில் இருவரினதும் முகங்கள் அழகாகத் தெரிகின்றன. இடையிடையே, சிறு பொட்டியான் மீன் குஞ்சுகள் வாலையாட்டியவாறு ஓடிக் கொண்டிருக்கின்றன.
மரத்தின் கொப்பில் வேலழகனும், வேலாயியும், துண்டில் கம்புகளுடன், குந்திக் கொண்டிருக்கின்றனர். இருவரும் தங்களுக்குள் ஏதேதோவெல்லாம் கதைத்துக் கொண்டிருந்த போதிலும், தூண்டல் மிதப்புக்கம்பில் கண்ணாயிருந்தனர்.
வேலாயி. மிதப்பு இழுபடுகிறது. வெட்டிவிடு பெரிய கொக்கிச்சான் போலக்கிடக்கு. என்றான் வேலழகன்.
தினமும் ஆற்றில் தூண்டில் போட்டு மீன் பிடிப்பதும், பறி நிறைந்ததும், குளித்துவிட்டு வீட்டிற்குச் சென்று சமைத்து உண்பதும், இருவரதும் பொழுது போக்குமாயிருந்தது.

Page 41
76 ஏதிலிகள்
‘பாலாமை மச்சான். என்றவாறு குனிந்த நிலையில் தூண்டில் கம்பினை ஒரு வெட்டு வெட்டி, வெளியே இழுத்தாள்.
ஆமை கரையில் வந்து விழுந்தது.
மச்சான்! காந்தனை காதர் நானாவின் வாடியில வேப்ப மரத்துக்குக் கீழ, தவழப் போட்டுத்து வந்த நான். கெதியாப் போய்ப் பாப்பம். இண்டயக் கறிப்பாட்டுக்கு இது போதும்.
காதர் உம்மாவும், கடைப்பக்கம் போகவேணுமாம். நம்மளக் கெதியா வரச் சொன்னாவு.
ஆமையைத் தூண்டிலிலிருந்து கழட்டி, சாக்கினுள், போட்டவாறு, இருவரும் வீட்டை நோக்கி, நடையக் கட்டினர்.
மயிலந்தனைக் கிராமம் தற்போது புதுப் பொலிவுடன் காட்சியளித்தது.
முப்பது வருடங்களுக்கு முன்னர், இனக்கலவரம் காரணமாக மலையகத்திலிருந்து வெறுங்கைகளுடன் ஓடிவந்து குடியேறிய குடும்பங்களில் வேலழகன் குடும்பமும் ஒன்று.
வேலாயி, மாத்தளைப் பகுதியிலிருந்து ஓடிவந்தவள். வேலழகன், இப்பகுதி பரம்பரைப் போடியார் வழியில் உள்ளவன்.

கலைஞர் தாழை செல்வநாயகம் 77
அவள், பேரழகியாகவிருந்த காரணத்தால், அவளில் மயங்கிய அவன் போடியாரின் சம்மதப்படி, திருமணம் முடித்துவிட்டான்.
அவ்வூர் வழக்கப்படி ஊருக்குச் சொல்லி, பந்தல் போட்டு பந்தியில் சோறு போட்டு, ஆடம்பரமாகத் திருமணம் நடந்தது.
போடியார் வேலாயியை, தனது மருமகளாக்கி விட்டார்.
அந்தக் கிராமத்தின் எழுவான் பக்கமாக கண்ணுக்கு எட்டியதுரம் வரையில், தெரிகிறது, ‘புணாணைக் குளம் ஊவாப் பிரதேசத்திலுள்ள விந்தனைப் பற்றிலிருந்து ஊற்றெடுத்து ஓடிவரும் ‘மதுஒயா இந்தக் குளத்தில் விழுவதனால், கோறளைப்பற்றுப் பிரதேசம் செழிப்படைகின்றது.
மந்தை வளர்ப்போரும், மீன்பிடிப்போரும் குளத்தையண்டியும் சாளம்பைச் சேனை வரையிலும், குடியேறியுள்ளனர். குளத்துப் பக்கமாக கண்ணோட்டம் விடுபவர்களுக்கு, எருமைக் கூட்டங்களும், பசுமாடுகளும் மேய்ந்து கொண்டிருப்பது தென்படும்.
சோலைக் காடுகளிலிருந்து வரும் யானைக் கூட்டங்களும் பகல் வேளைகளில் குளத்தில் நீரருந்தும்.
வேலழகனும் வேலாயியும் வீட்டை நெருங்கிக் கொண்டிருக்கின்றனர்.

Page 42
78 ஏதிலிகள்
மறுகணம். டும். டும். என்ற வெடிச் சத்தங்கள் குளத்தில் கிடந்த பறவைக் கூட்டங்களும் மந்தைகளும், பறப்பதும், சிதறியோடுவதுமாயிருந்தன.
அந்த இடத்தில் பெரிய கூச்சல் எழுகிறது. அலறியடித்துக் கொண்டு அந்தக் கிராமத்து மக்கள், ஒடி வருகின்றனர்.
மண்டையிலிருந்து இரத்தம் வழிய, வேலழகன் மல்லாக்காக கிடந்தான்.
வேலாயி தலையிலடித்து ஒப்பாரி வைக்கிறாள்.
உடனடியாக ஆளை ஆஸ்பத்திரியில், சேர்க்க வேணும். அந்தக் கிராமத்து வைத்தியன் முத்தன் அவசரமாக அறவித்துக் கொண்டிருக்கிறான்.
மயிலந்தனைக் கிராமம் இப்பொழுதுதான் சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்து கொண்டு வருகிறது.
ஒரு சிறு ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடசாலையினைத் தவிர, வேறு எந்தவொரு அரச கட்டிடங்களும், அங்கு இல்லை.
அங்கு குடியேறியவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் அரசினால் வழங்கப்பட்டது.
அப்பணத்தினை சில குடும்பங்கள் குடித்து வெறித்துவிட்டன. நகை நட்டு என்றும் ஆடையணிக்ள் என்றும் சிலர் வாங்கினர்.

கலைஞர் தாழை செல்வநாயகம் 79
வேலழகன் மட்டும் வேலாயியின் பெயரில் நகரத்து வங்கியொன்றில் சேமிப்புக் கணக்கு ஒன்றில் வைப்புச் செய்திருந்தான்.
வேலாயி. இப்ப அவசரமாய் பணம் வேணும். ஆஸ்பத்திரிச் செலவுக்கும் பிரயாணச் செலவுக்கும் ஐயாயிரமாவது பிரட்டவேணும் என்றான் காதர்.
உண்ட பெயரிலதானே காசு போட்டிருக்கான். எதுக்கும் நாம றோட்டுக்குப் போவம். விறைத்துப் போய் நின்ற வேலாயியிடம், காதர் உம்மா கூறினாள்.
இரத்தம் சொட்டச் சொட்ட கிடந்தவனை சாக்குத் தட்டியல் தூக்கி வைத்துக் கொண்டு சென்று, பாதையோரத்தில் கிடத்தி விட்டு, பஸ் வண்டிக்காக காத்து நின்றனர்.
பஸ், இண்டைக்கு வராதாம். வேலைப் புறக்கணிப்பு போராட்டம் நடத்துறானுகளாம் என்றான் ஒருவன் ஓடிவந்தவாறு.
வெள்ளி மலைப் பிள்ளையாரே! எல்லாம் எண்ட காலந்தான். எப்படியும் மச்சான ஆஸ்பத்திரியில சேர்த்து தப்ப வைச்சியெண்டா இந்த முறை நான் உண்ட கோவிலுக்கு வந்து அன்னதானம் குடுப்பன் என்று ஆயிரம் தடவைகளாவது வேலாயி வேண்டிக் கொண்டிருந்தாள்.
நல்ல காலம் கிறவல் ஏற்றி வந்த மொட்ட லொறியொன்றினை மறித்து, மண்டாடி குற்றுயிராய்க்

Page 43
80 ஏதிலிகள்
கிடந்தவனை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று விட்டார்கள். உள்ளே தான் செல்ல முடியவில்லை.
இரும்புக் கதவு பூட்டப்பட்டிருந்தது.
வெளியே நின்ற நிழல்வாகை மரத்தில் பெரிய எழுத்தில் அறிவித்தல் ஒன்று எழுதப்பட்டிருந்தது.
“சம்பள உயர்வு கிடைக்கும் வரையில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு
போராட்டம், தொடரும்”
வேலாயியின் தலை பம்பரம் போல் சுற்றியது. றோட்டில் பஸ் இல்லை. வங்கியில் பணம் பெற முடியவில்லை. ஆஸ்பத்திரியில் வைத்தியர்கள் இல்லை.
ஐயையோ மச்சானின் உயிர் போகப் போகிறதே. நாச மறுவானுகள், வேலைநிறுத்தம் பண்ணுறானுகளாமே. சும்மா கத்தாதம்மா! வேறு எங்காவது தனியார் ஆஸ்பத்திரியத் தேடிப்பார்ப்பம்.
எண்ட கையில மருந்துக்கு கூட காசில்ல. உன்னிட்ட காசிருந்தும் எடுக்க முடியல்ல.
எல்லாம் அல்லாவிட்ட வழி என்றான் காதர்
என்ன விதியிது. பிறந்த ஊரிலும் நிம்மதியில்ல, குடியமர்ந்த ஊரிலும் நிம்மதியில்ல.
வைத்தியர் சும்மா வைத்தியம் செய்வாரா?.

கலைஞர் தாழை செல்வநாயகம் 81
காதர் நானா இந்தச் சங்கிலிய விற்றாவது, காசு கொண்டுவா!
தன் கழுத்தில் கிடந்த இரண்டு பவுன் சங்கிலியைக் காட்டி அவளிடம் நீட்டினாள்.
இரத்தப் போக்குக் காரணமாகவும் தாமதமாகி வந்தபடியாலும் உயிரைக் காப்பாத்த முடியவில்லை’
வேலழகனைச் சோதனையிட்ட வைத்தியர் கூறினார். ‘சவத்தை வீட்டிற்கு கொண்டு செல்லுங்கள் பிரயோசனமில்ல."
காதர் நானாவிற்கு இப்போது தான் பிரமையேற்பட்டது. அவனை எப்படியும் சுகப்படுத்தி விடலாம் என்று எண்ணினான். அந்தக் கிராமத்தில் போடியார் குடும்பத்துடன் மிகவும் அன்னியோன்னியமாகப் பழகியவர்கள். காதரும், அவன் மனைவியும். அதே போன்று வேலாயியின் குடும்பத்தினர் மலையகத்திலிருந்து அங்கு வந்து குடியேறிய போது சகல உதவிகளையும் புரிந்து வாழ்வு சாவு சுகதுக்கங்களில், பங்கேற்ற பெருமையும் அவனுக்கே உண்டு. இஸ்லாமிய மதக்கோட்பாடுகளை, முறையாகப் பின்பற்றுபவன். குளத்தின் கரைப்பக்கமாக மேய்ந்து திரியும் எருமை மாடுகளுக்கெல்லாம் − சொந்தக்காரன். பால்வாங்கவென்றும், தயிர் வாங்கவென்றும், பட்டிக்கு வருபவர்களுக்கெல்லாம், அவர்கள் கொண்டு வரும் பாத்திரங்கள் நிறைய வார்த்துக் கொடுத்து விடுவான். காசு வாங்குவதில்லை.

Page 44
82 ஏதிலிகள்
‘பொன்னாங்கணி இலைகளைக் குளக்கரையில் நோண்டி எடுத்து பாலாடை சேர்த்து, சுண்டல் போட்டுச் சாப்பிட்டால் ஏற்படும் ருசியும், குளத்தில் வீசும் முண்டான மீன் சொதியும் மயிலந்தனைக் கிராமத்து மக்களுக்கு மறக்க முடியாத உணவுகள்.
என்ன வகையான அமிர்தம் கிடைத்தும் என்ன பயன்? பெறுமதி மிக்க மனித உயிர்கள் நாளுக்கு நாள் அழிவடைந்து மண்ணோடு மண்ணாகி வரும் இந்நாளில் இனியும் வாழ்ந்து தான் என்ன பயன்?
காதர் நானாவின் மூளை பலமாகச் சிந்தித்தது. வெறுப்படைந்த வாழ்க்கைப் பிரச்சினைகளின் மத்தியிலும் ஊரவர்க்கு உதவும் மனம் என்றும் அவனிடம் குறையவில்ல.
வேலாயியையும், அவள் மகன் காந்தனையும், அவன் கவனிக்கத் தவறியதில்லை.
அந்தக் கிராமம் அன்று ரணகளமாக மாறியது. நள்ளிரவில் கிராமத்தினுள், ஆயுதங்களுடன் புகுந்த காடையர்கள், அடித்தும், வெட்டியும், ஒரே இரவில் முப்பதிற்கு மேற்பட்ட அப்பாவி மக்களை, பிணமாக்கி விட்டார்கள். மயிலந்தனைக் கிராமம் சுடலையாக மாறிவிட்டது. இன்று அக்கிராமத்தவர் வேறிடத்தில். ஊரின் பெயர் மாத்திரம் வரலாற்றில் நிலைத்துவிட்டது. “பொலநறுவை இராசதானி கிடப்பது போல் கிடக்கிறது. காகம், நாய் நரிகள் கூட அங்கு செல்வதில்லை.

கலைஞர் தாழை செல்வநாயகம் 83
காலம் வேகமாக உருண்டோடியது. வன்செயலில் மரணித்தவர்கள் இடம் பெயர்ந்தவர்களுக்காக வழங்கப்படும் அரசின் இழப்பீட்டுத் தொகை வேலாயிக்கும் கிடைத்தது. அது கிடைத்து என்ன பயன்? சென்ற உயிர் மீண்டும் கிடைத்து விடுமா?
நகரப்பாடசாலை ஒன்றிற்கு காந்தனை அனுப்பி, உயர் வகுப்பு வரையில் படிக்க வைத்து விட்டாள்.
அவள் குடியேறியிருந்த கிராமத்தில் விதவைப் பெண்களுக்காகவும், அவர்களது பிள்ளைகளுக்காகவும் அரசினால் பல தொழிலகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. காந்தன் படித்திருந்த காரணத்தால், தொழிற்சாலை ஒன்றில், அவனுக்கு எழுதுவினைஞர் வேலை கிடைத்தது.
தன் மகனின் உழைப்பில், வேலாயிப்பாட்டி, காலத்தையோட்டினாள் ஐம்பது யதினைத் தாண்டி விட்ட வேலாயியை, பாட்டி என்று அழைக்காமல் வேறு என்னவென்று அழைப்பதாம்?
ஒரு நாள் காந்தன் தனது சக ஊழியர்களுடன்,
வீட்டின் முன்னால் வந்து நின்றான்.
என்ன மகன் வேலைக்குப் போகவில்லையா?
இல்லையம்மா! இன்றிலிருந்து நாங்கள் ஸ்றைக் பண்ணுகிறோம். அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கொடுத்திருக்கிறார்கள். எங்களுக்கு அது ஒன்றும் கிடைக்கவில்லை. சம்பள உயர்வு கிடைக்கும் மட்டும் வேலைக்குப் போவதில்லையென்று, முடிவு

Page 45
84 ஏதிலிகள்
எடுத்துவிட்டோம். அவன் சொல்லி முடிப்பதற்கிடையில். வேலாயிப்பாட்டி லொறியில் அடிபட்ட நாயின் நிலை போலானாள்.
அவன் வாயிலிருந்து வெளிப்பட்ட பயங்கரமான கூற்று ஒரு யுகம் மறைந்து, இன்னுமொரு யுகம் தோன்றுவது போன்றும்.
சூறாவளி போன்றும்.
சுனாமி போன்றும். இருந்தது.
எதுக்கு மகன் வேலை நிறுத்தம்?. உனது அப்பாவின் உயிர்போவதற்கு காரணமாயிருந்தது. அந்த வேலை நிறுத்தம்தான்.
எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து வாழ்ந்து கெட்ட நாம், இங்கே வந்து இருப்பதற்கும் காரணமானது அந்த வேலை நிறுத்தம் தான்.
உனக்கு வேணாம் மகன்! நீங்கெல்லாம் தம்பிமாரே! ஒழுங்கா வேலைக்குப் போங்க. அரசாங்கம் உங்களுக்கும், சம்பள உயர்வு தரும்.
மகனின் காலில் விழுந்துவிட்டாள். அவனுடன் கூட வந்தவர்களின், கால்களிலெல்லாம், விழுந்து பார்த்து விட்டாள்.
அம்மா! எல்லோரும் வேலை நிறுத்தம் செய்யும்போது, நான் மட்டும் எப்ப்டி? வேலைக்குப் போவது?

கலைஞர் தாழை செல்வநாயகம் 85
என்னை அவர்கள் சும்மா விட்டு விடுவார்களா?
நீ! வேலைக்குப் போகாவிட்டால். நானும் உன் அப்பா போன இடத்திற்கே போய்விடுவேன். என்றாள் கடைசியாக வார்த்தையாக
'மகுடியாக அடங்கிய நாகம்’ போல அம்மாவின் பேச்சுக்கு கட்டுப்பட்டான்.
அவனுடன் கூட வந்த சக ஊழியர்களைக் கூட அவன் கவனிக்கவில்லை.
காந்தன் இனி எந்தச் செயலிலும் ஈடுபடமாட்டான். எனது பேச்சுக்கு மதிப்பளித்து விட்டான்.
மகன் வேலைக்குப் போவதை கண்ணிமைக்காமல், பார்த்துக் கொண்டு நின்றாள் வேலாயிப்பாட்டி,
தனது கணவனின் உயிர்போன, அதே உச்சிப் பொழுது வேளை.
தினமும் பகல் பன்னிரெண்டு மணி தொடக்கம், ஒரு மணி வரையில் உள்ள காலத்தை ‘சுபநேரம்’ என்று பெரியோர்கள் சொல்வார்கள். சோதிடத்தில், அந்த வேளையினை பிரம்மோற்சவ காலம் என்பார்கள். எந்தக் காரியத்தினையும், அந்த வேளையில் பயமின்றித் தொடங்கலாம். ஆனால், அவள் வாழ்வில், பிரம்மோற்சவ காலம், யமோற்சவ காலமாக மாறிவிட்டது.
காந்தனை பிணமாகச் சுமந்து கொண்டு வந்து அவள் காலடியில் போட்டார்கள்.

Page 46
86 ஏதிலிகள்
இவன் “கோடரிக்காம்பு’ என்ற பட்டஞ்சூட்டி பொங்கி எழுந்து. ஒரே அடியில் கொண்டு போட்டார்கள் அம்மா! என்றனர். அவனைச் சுமந்து வந்த, அவனது கூட்டாளிகள். ‘ஷெல்’ அடித்து, வட்டுடன் பறந்த பனைமரம் போல், வேலாயிப்பாட்டி, நின்று கொண்டிருந்தாள். குறிப்பு : பறி என்பது, பிரம்பால் பின்னப்பட்டு ஒவல் வடிவத்தில், வாய்ப்பக்கம் கயிற்றால் பின்னப்பட்ட கூடை மீனவர்கள், இடுப்பில் கட்டியிருப்பார்கள்.
பட்டி : மாட்டு மந்தைகளை, அடைத்துப் பராமரிக்கும்
 

கலைஞர் தாழை செல்வநாயகம் 87
7. இதுதான் முடிவு.
நான் அப்பவே சொன்னன் கேட்டயளா?. நீங்க அவளை வேலைக்குப் போக விட்டிருக்கக் கூடாது. அதுவும் காட்டுப்பகுதி ஆமிக்காரனுகள், அடிக்கடி முகாம் அடிக்கும் பகுதி. அந்தப் பள்ளிக்கூடத்தின் முன்னாலிருப்பது, பொடியன்களின் மயானம் என்று கூறியபடி பெருமூச்சு விட்டு நிமிர்ந்தாள். தாய் தெய்வானை
தந்தை தவசிப்போடி எதற்கும் வாய் திறக்கவில்லை. மகளுக்கு ஒரு உத்தியோகமாவது கிடைத்துவிட்டது. காடாவது, நகராவது எல்லாம் சனங்கள் குடியிருக்கும் இடங்கள்தானே. காடுகளில் எத்தனை குமர்ப்பிள்ளைகள் இந்த நாட்டின் மீட்சிக்காக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிதுகள். நம்மட பிள்ளை, பள்ளி கூடத்தில் தானே படிப்பிக்கிறாள் என்று மனதிற்குள் நினைத்துக் கொள்கிறார்.
அவர் உள்ளத்திலும் குழப்பம் இல்லாமலில்லை. திகைப்பு. தெய்வானையின் பேச்சுக்கு, அவரால் எந்தவிதமான காரணங்களையும் திடமாகச் சொல்வதற்கு முடியவில்லை. உத்தியோகம் பார்த்து, ஏதோ நாலுகாசு, அள்ளுகிறோம் என்ற திமிர்தானே அவளுக்கு.

Page 47
88 ஏதிலிகள்
இப்ப என்ன தான் நடந்து போச்சு. ஷெல்லா விழுந்து விட்டது. முதல் எல்லாம் நளினி ஆம்பிளப் பிள்ளையளக்கண்டா நிமிர்ந்து கூடப் பார்க்கமாட்டாள். இப்ப அவளுக்கு. சாதி குறைஞ்ச பொடியனோட ஊர் சுத்திற்று. நெருக்கமாகப் பழகிற துணிச்சல் எப்படித்தான் வந்தது.
அந்தக் கிராமத்தில் தவசிப் போடியின் குடும்பம் மதிப்பு வாய்ந்த குடும்பம். ஊராரிடம், தான்தான் காலிங்காகுடியைச் சேர்ந்தவர் என்ற தம்பட்டம் அடித்துக் கொள்வார்.
அந்த ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு அவர்தான் ஆயுள் தலைவர்.
அவர் கண்ணுக்குப் பிறகுதான் வேறு ஒரு தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது அக்கிராமத்து மக்களது விருப்பம். நேர்மையான மணிசர். அவரது நேர்மைக்கு ஏற்றாற் போல் காட்டுக்கந்தோரிலும் காவலாளியாக கடமையாற்றினார். குடுமியை முடித்துக் கட்டிக் கொண்டு கருங்காலிப் பொல்லைக் கையில் எடுத்துக் கொண்டு, காக்கிச் சட்டையுடன் சைக்கிளில் ஏறினாரெண்டால். அவர் போடும் சத்தத்திற்கு கள்ள மரம் ஏற்றிவரும் வண்டில்காரர்கள் எல்லாம் நடுங்கிப் போய் விடுவார்கள்.
மீண்டும் தவசிப் போடி யோசனையில் மூழ்கிவிட்டார். அவர் மனம் எங்கோ செல்கிறது.

கலைஞர் தாழை செல்வநாயகம் 89
அந்த நாட்களில் ஊரில் எவ்வளவு கட்டுப்பாடு ஒரு சாதிக்காரனுக்கு இன்னொரு சாதியில் பெண் கொடுக்க LDrt L stjebGir.
வண்ணானும், அம்பட்டனும், பறையனும், ஊர்ப் பெரியவர்களைக் கண்டால் தோளில் கிடக்கும் சால்வையினை இறக்கி மரியாத செலுத்த வேண்டும் சாவீடு, கல்யாண வீடு, சாமத்திய வீடு வந்தால் அந்தந்தக் குடிக்கு ஏற்றாற்போல், "சீர்வரிசை செய்தல் ‘கூரைமுடி வைத்தல்' போன்ற பல சம்பிரதாயக் கடமைகள் உள்ளன.
இப்ப. ஊரில் அப்படியா நடக்கிறது. எல்லாம்
தலைகீழாக மாறிவிட்டது. தவசிப் போடியின் சிந்தனை அந்த இடத்தில் அறுகிறது.
தனது மகளின் பக்கம் சிந்தனையைத் திருப்புகிறார். வேலை பார்த்துச் சம்பாதிக்கும் பெண்களுக்கு வருவது துணிச்சல் அல்ல. தைரியம். தன்னம்பிக்கை. தானும் சமூகத்தில் ஒரு அங்கத்தவர் என்கின்ற விழிப்பு.
அதுவல்ல பிரச்சினை. இன்றையக் கால கட்டத்திற்கு ஏற்றாற்போல், நளினியின் வடிவத்திற்கு, இப்படியும் ஒரு கோணம் இருக்கிறது என்பது தான்.
தெய்வானை வருகிறாள்.
இலங்கை இராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களைப் பிடிக்கிற மாதிரி நீங்களும் எதையாது பிடிக்கப் போறயளா?. இனிமேல் அவளை வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லி விடுங்க. என்ன?.

Page 48
90 ஏதிலிகள்
இன்னொருத்தர் விடயத்தில் எப்படித் தலையிடுகிறது?! தாயும் பிள்ளையும் எண்டாலும் வாயும் வயிறும் வேறுதானே.
உங்கட பேச்செல்லாம் அழகாய்த்தானிருக்கு. அவள் என்ன இன்னொருத்தர் பெண்ணா?. நம்மட பெண். இதையெல்லாம் முளையிலேயே கிள்ளி எறியவேணும்.
நகத்தரல்கிள்ளி எறியிறத. கோட்ாலியால வெட்டிற மாதிரிக் கிடக்கு.
அவள். அவனோட இருக்கிற சகவாசத்த. இத்தோட நிறுத்திவிட வேணும். இதைவிட என்னால ஒண்டுஞ் சொல்ல முடியாது. தொடர்ந்து ஒரு மாதமாக. கணவனுக்கும் மனைவிக்கும் சண்டை, சச்சரவுகள் எதுவுமில்ல. மெளனம் சாதித்தார்கள். இது எனக்குப் பிடிக்கவில்ல. அவளது முடிவு எனக்கு அறவே பிடிக்கவில்லை. என்று அவர்களது மனம் மாத்திரம் சொல்லிக் கொண்டிருந்தது.
அவர்களது இளசுகள், ಖೊ எந்தவித கவலையுமின்றி, விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அன்றையப் பொழுது அடிவானத்தில் இறங்கிவிட்டது. கண்ணுக்குள் இருட்டு விழும் நேரம் வாசலில் செருப்புச் சத்தம் கேட்கிறது.
நளினி ஒரு வித பரபரப்புடன், வந்து கொண்டிருக்கிறாள். முன் அறையில் ‘பாரதம்' மாதிரி ஒரு

கலைஞர் தாழை செல்வநாயகம் 91
புத்தகத்தப் படித்துக் கொண்டிருந்த தன் தகப்பனாரைப் பார்த்து ஒரு புன்னகை செய்தாள். உள்ளே சென்று உடுப்பை மாற்றிக் கொண்டு வெளியே வந்து அவரின் பக்கத்தில் கிடந்த திரையில் அமர்ந்தவாறு மேசைக்காற்றாடியைத் தட்டிவிட்டாள்.
நீண்ட நேரம் அந்த அறையில் நிசப்தம் நிலவியது. அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தப் போட்டால் நாடு எப்படியிருக்குமோ. அப்படியிருந்தது வீடு.
அப்பா எதுவும் பேசவில்லை. அவளும் வாய் திறக்கவில்லை. தெய்வானை இது என்னடா சோலியாகி விட்டது என எண்ணியவாறு இரண்டு கோப்பத் தேனீருடன் வந்தாள்.
ஏனம்மா?. நீ. தேனீர் போடவேணும்?. எப்பவும் நான் தானே தேனீர் போட்டுக் குடிக்கிற நான்.
நான் கொஞ்சம் புளுக்கமாயிருக்கெண்டு. ஒய்வாக இருக்கிறன்.
இது புது பழக்கமாயுள்ளது. என வாயை அகலத் திறந்து விட்டாள்.
இந்த வீட்டில் எத்தனை புது வழக்கங்கள் நடக்கிறது. அதில இதுவும் ஒண்டு, என்று மகளுக்குக் குத்தலாகச் சமைத்து விட்டு அருகில் கிடந்த கதிரையில் தெய்வானையும் அமர்கிறாள்.
நளினியின் முகத்தில் சோகம் முகம் கறுப்பானது. எங்கிருந்தோ, குறுக்கால் வந்து நின்ற அவளது தங்கை,

Page 49
92 ஏதிலிகள்
சினிமாவில் வரும் ‘வில்லி மாதிரிக் கண்ணை உருட்டிப் பிரட்டிக் கொண்டு.
எந்த நாயோடடி. ஊர்சுத்திப் போட்டு வந்த நீ. என்று கேட்டு விட்டு வந்த வழியே திரும்பி விடுகிறாள்.
நளினி சட்டென்று நிமிர்ந்து இருக்கிறாள். இவள் எதற்கு இந்த மாதிரிக் கதைத்தாள். என்ற வெறுப்பான ஒரு பார்வையுடன் அவள் போன பக்கம் பார்த்து விட்டு. தனது தாயையும், தந்தையையும், கண்ணோட்டம் விடுகிறாள் வெறுப்புடன்
அந்தத் தட்டுவாணி’ என்ன சொல்லி விட்டுப் போறாள். என்று கேட்டாள்.
அது சொல்லித்தான் உனக்குத் தெரியணுமா?. உன்னைப் பற்றி இந்த ஊர் என்ன கதைக்கிது, எண்டு உனக்குத் தெரியாமாடீ.!
என்று சொன்ன தெய்வானையை அந்த மட்டுடன் தடுத்து நிறுத்தினார் தவசிப்போடியார்
சரி. சரி. இதெல்லாம் தாய் பிள்ளையஸ் கதைக்கிற கதையா?. அப்புறம் பேசிக்கலாம். விடு. கதைய..! என்று பேச்சுக்கு ஆப்பி வைத்து விட்டார்.
தெய்வானைக்கு ஆத்திரம் மேலிட்டது. எப்புறம் பேசுவது?. அவளிட்ட கேட்க உங்களுக்குத் தைரியம் இல்லாட்டி. காரியம் கைமீறிப் போய்விடும்.

கலைஞர் தாழை செல்வநாயகம் 93
எந்தக் காரியம்?. நளினி கேட்கிறாள்.
எல்லாம் உன் தந்தை மீண்டும் குறுக்கிடுகிறார். நளினி. உன் அம்மா கவலைப்படுகிறா. உன்னுடன் ஆறுதலாக கதைக்கிறன். இப்பவே விசயத்தைச் சொல்லுங்கப்பா!
அந்த விசயத்தை நாங்க வெட்கமில்லாமச் சொல்லணுமாடி ஊர் வாயை மூட உலமூடி வேணுமா? ஊரெல்லாம் சிரிக்கிறது. நீங்க. கேள்விப்படுறதெல்லாம் சரியா இருக்கணுமா? என்ன குழந்தையைக் குழப்பாதே. என்றார் தந்தை.
நளினி இருவரையும் நிதானமாகப் பார்க்கிறாள்.
என்னையும் ‘புலியரசன்’ என்ற ஒருவரையும் பற்றி ஏதும் கேள்விப்பட்டயளா?. என்றாள்.
இருவரும் சிலைபோலாகிவிட்டார்கள்.
ஏண்டீ! உண்ட மண்டக்குள்ள ஒண்டுமில்லையாடீ! அந்தக் களுதாவளையார் வந்து சொன்னது எல்லாம் சரியாகி விட்டது.
உண்ட தொழில் என்னடி?. அவண்ட குலம் கோத்திரம் என்னடி.!
பறச்சாதிப் பொடியனாம், இயக்கத்தில் ஈடுபட்டுத்
திரியிறானாம். என்ன நான் சொல்ற எல்லாம் சரிதானா?
பறச்சாதிப் பொடியன் எண்டாலும் நல்ல குணமான பொடியன். அந்தக் காட்டுப் பள்ளிக் கூடத்தில் அவன்

Page 50
94 ஏதிலிகள்
தான் எனக்குப் பாதுகாப்பு எல்லாம். அவனுக்குப் படிப்பு வராது. சின்ன வயதில இயக்கத்தில சேர்ந்தவனாம். நான் தான் பள்ளி விட்ட நேரத்தில அவனுக்கு ரீயூசன் சொல்லிக் கொடுக்கிற நான். W
என் மேல. அவனுக்கு ஒரு பிடிப்பு என்று மூச்சிரைக்கப் பேசினாள் நளினி.
அப்படியா சங்கதி. அமிர்தகழியாண்ட அவள் ரியூசனுக்குப் போகிறாள் எண்ட ரேடியோ நாடகம், மாதிரித்தான் போய் முடியும் போல கிடக்கு.
பொத்தடி! வாய அவண்ட விபரம் எல்லாம் உன்னட்ட ஆரு கேட்ட என்ன அவன் ஒரு தரம், அவண்ட வீட்டயும் கூட்டிப் போயிருக்கான். அதனால அவனுக்கு இயக்கத்தில தண்டனையும் கொடுத்துப் போட்டானுகளாம். இப்ப அவன், துவக்குத் தூக்கிறதில்லையாம். குசினியின் வேலையாம், எண்டாலும் என்னச் சந்திக்கத் தவறமாட்டான்.
“பாம்பு இல்ல நான் தண்ணிப்பாம்புதான் எண்ட கதையப் போலக் கிடக்கு.
தந்தையும் இப்போது தான் சலனப்படுகிறார். போயும் போயும் இவள் இயக்கப் பொடியனயா? பிடிக்கவேணும்.
சித்தாண்டிக் கந்தா இது என்ன அக்கிரமம் என்றாள் தெய்வாள்ை தலையில் அடித்தவாறு.

கலைஞர் தாழை செல்வநாயகம் 95
தவசிப்போடியார், அவள் சொன்ன வார்த்தைகளை அசைபோடுகிறார்.
தெய்வானை மீண்டும் தொடர்கிறாள்.
பாவம் அந்த மனிசன் உன்னைப் படிக்க வெச்சி ஒரு "ரீச்சர் உத்தியோகமும் எடுத்துத் தந்தா நீ இப்படியா? சேற்றில விழுறடீ!
நான் எந்தச் சேற்றிலயும் விழல்ல. நீ ஒண்டும் உளறாதப்பா,
வாழ்க்கை தான் முடிஞ்சி போச்சி இனி இவளோட பேசி என்ன பயன் என் வாழ்க்கை எங்கம்மா முடிஞ்சி போச்சி? இப்பதான் ஆரம்பிச்சிருக்கு. விசர்க் கதை கதைக்கிறா!
நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறன். ஒருவருக்கு எப்போது மூச்சு நிற்கிறதோ அன்றுதான் அவரது வாழ்வும் முடிகிறது. இவ்வளவு தத்துவம் கதைக்கும் உனக்கு இது தெரியாதா?.
அப்ப. நீ! என்னடி. இன்னம் இன்னம். நினைச்சிக்கிட்டிருக்க..?
இப்படியே நீ கெட்டுத்தானே போகப் போறா.
நான், ஏன்? கெட்டுப் போகணும்.
அவனத்தான் கலியாணம் கட்டப் போறன்.

Page 51
96 ஏதிலிகள்
இருவரும், கறண்டில் அடிபட்டு வீழ்ந்த காகம் போலானார்கள். தவசிப் போடியார் கதிரையில் விறைத்தவாறு கிடந்தார். அதிர்ச்சி அடைய இதில் என்ன இருக்கிறது. உலகம் இப்போது சுருங்கிவிட்டது. இம்மாதிரி விடயங்கள் எல்லாம் இப்போது சகஜமாகிவிட்டது. இப்போது யாரும் வண்ணான், அம்பட்டன், பள்ளன், பறையன், கரையான், என்றெல்லாம் சாதிப்பிரச்சினைகள் பார்ப்பதில்லை. சாதிப்பிரச்சினைக்கு எப்போதோ சாவுமனி அடிக்கப்பட்டுவிட்டது.
காற்று, பலமாக அருகில் அடிக்கும் போதுதான் மூச்சுத்திணறலும் அதிர்ச்சியும் ஏற்படுகிறது. நளினியின் விடயத்தில், என்ன அதிர்ச்சியைக் கொடுக்கிறது?
இருவரும் இன்னமும், மகளை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
நீங்கள் இருவரும் என் அம்மாவும் அப்பாவும்தானா..? என் சந்தோசத்திற்கு இந்த வீட்டில் கிடைக்கும், வரவேற்பு இவ்வளவுதானா?
கடைசியாக தாய் தெய்வானை பேசினாள்.
நாளையிலிருந்து நீ வேலைக்குப் போக வேண்டாம். வீட்டோடு கிட
நாங்கள் போடும் சாப்பாட்டைச் சாப்பிடு. முடிந்தால் தினமும், 'அம்மன் கோவிலுக்குப் போய் தரிசனம் செய்துவா.

கலைஞர் தாழை செல்வநாயகம் 97
கோவிலில் கூட முருகனும் தெய்வானையும், வேடுவச் சாதியைச் சேர்ந்த வள்ளியும், முருகனுக்கு மனைவியாகவுள்ளார்கள், அம்மா.
இந்த நேரம் பார்த்து அவள் தங்கை, "வில்லி’ மீண்டும் குறுக்கிடுகிறாள்.
உனக்கு ஒரு லவ்வா..? யூஆர் ஷேம் லெஸ். என்று கூறி அவளைக் குழப்பிவிட்டு ஓடி விடுகிறாள்.
அவள் சொன்னத கேட்டயாடி..? நீ இந்த மாதிரி நடந்தா. அவளுக்கு எப்படிக் கல்யாணம் ஆகும். நீ. இதப்பற்றி யோசிச்சயா டீ.? தாய் சற்று மனம் இளகினாள். அவள் தலையைத் தொட்டு வருடினாள். எல்லாத்தையும் மறந்திடும்மா. நீ நல்ல பொண்ணு. வயிற்றில் இருக்கிற பிள்ளைய நம்பி மாடு மேய்க்கிற பிள்ளயக் கொல்லுவதா?. அம்மா!
நான் என்ன பாவம் செய்தேனோ..! தன் தலையில் அறைந்து கொள்கிறாள் தெய்வானை.
கண்டிப்பாக. முதலும் இறுதியுமாகச் சொல்லுறன் நீ. இந்தக் கலியாணத்தச் செய்துக்கவே கூடாது.
தந்தை பக்கம் நளினி திரும்புகிறாள். உங்கள் முடிவும் இதுதானா..? அப்பா. தந்தை பேசவில்லை.
அம்மா! அந்த நாளில் கணவனையிழந்த பெண்களை உடன்கட்டை ஏற வைத்தார்கள். துடிக்கத்

Page 52
98 ஏதிலிகள்
துடிக்க நெருப்பில் தள்ளினார்கள். தலையை மொட்டையடித்தார்கள். பின்னர் இச்செயல்கள் எல்லாம் பிழை என்று உணர்ந்தார்கள். பெண்களைப் படிக்க வைத்தார்கள். புருஷ்ன் செத்தால் அவள் மறுமணம் செய்யலாம் என்ற நியதியும் சமூகத்தில் ஏற்பட்டது.
பெண்கள் பல விடயங்களைப் படிக்கிறார்கள். நாட்க் கூட ஆளுகிறார்கள். நாலு பேரோடும் பழகுகிறார்கள். பெண்கள் சமூகத்தில் மாறிவிட்டார்கள். பூலான் தேவியைப் போன்ற பெண்கள் புரட்சியினை ஏற்படுத்தி விட்டார்கள்.
தந்தை பெருமிதத்துடன் மகளைப் பார்க்கிறார். சரியாகச் சொன்னாய் என்ற சொல்வதற்கு அவரது வாய்துடித்தது. வார்த்தைகள் தான் வெளிவரவில்ல.
இனிமேல். நான் சொல்வதற்கு ஒன்றுதான் உள்ளது. இது தான் என் முடிவு!
தன் உடைகள் அடங்கிய சூட்கேசுடன், அவனின் வருகைக்காகப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாள்.
 

கலைஞர் தாழை செல்வநாயகம் 99
8. அறுபதில் கிடைத்த வாழ்வு
அந்தக் கிராமத்தில் கணபதியார் ஒரு தனவந்தர். இருபது ஏக்கர் தென்னந்தோப்பும், பத்துப் பதினைந்து ஏக்கர் வயல் நிலங்களும், எருமை மாட்டுப்பட்டியும், பார்த்தவிடங்களிலெல்லாம். மேய்ந்து திரியும் பசு மாட்டுப்பட்டியும் அவருக்கே சொந்தமானது. அவரைப் போடியார் எனவும், முதலாளி எனவும், கணபதியண்ணர் எனவும், அக்கிராமத்தவர் மிகவும் செல்லமாக அழைத்து வந்தனர்.
தொப்பை விழுந்த வயிற்றுடனும், கரிய நிறத்துடனும், மடித்துக் கட்டிய சாரத்துடனும்
அந்தக் கிராமத்தவர் தட்டுமுட்டுச் சாமான்களை வாங்க வேண்டுமென்றால், இவரது சில்லறைக் கடையினைத் தான் நாடி வருவார்கள். அனைவரையும், அன்புடன் பேசி, சாமான்களைக் கொடுத்து அனுப்புவதில் திறமை மிக்கவர்.
இவரது வீட்டில் சாப்பாட்டிற்கு குறைவில்லை.
தினமும் ஆட்டிறைச்சி, மான்மரை இறைச்சி, இல்லாவிடில், கொடுவாமீன் சினை, கண்ணாக்கடியன் நண்டு கோர்வை

Page 53
100 ஏதிலிகள்
ஆகியவற்றினை வாங்கிச் சென்று, பிள்ளைகள் ஆசைதீரத் தின்னக் கொடுப்பார்.
“அப்பா நாம் இந்த முறை, கதிர்காமம் சென்று முருகனைத் தரிசிக்க வேண்டும்” என்று அவரது மூத்தமகள் சொல்லிவிட்டால் போதும். உடனே தனிக்கார் ஒன்றினை ஒழுங்குபடுத்தி, குடும்பத்தார் அனைவரையும் கதிர்காமத்திற்கு கூட்டிச் சென்று விடுவார். அவரது மூத்த புத்திரி இராசம்மா.
பாடசாலை செல்லும் காலத்தில், வகுப்பில் அவள் குண்டோதரியாகவிருந்தாள். வகுப்பில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளிடையே வித்தியாசமான ஒர் உருவம் தெரியும் என்றால், அவளை விட வேறு யாருமாக இருக்க (POLlul Isgil.
நல்ல உயரம் என்றாலும், அவள் ஓர் அழகி தான்.
வகுப்பில் உள்ளவர்கள், அவளுக்கு வைத்த பட்டப் பெயர் 'வாணி பூரீ’ அக்கிராமத்துப் பாடசாலையில் முதன் முதலாக சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்ற முதல் மாணவி அவள் தான்.
இவையெல்லாம் நாற்பது வருட காலங்களுக்கு முந்திய கதைகள்.
இராசம்மா. நான் கலியாணம் கட்டுவதென்றால் உன்னைத் தவிர வேறு யாரையும் கட்டமாட்டேன்.
சுந்தரம், அவள் கண்ணழகில் மயங்கி, தேனொழுகப் பேசிப் பேசி அவளைக் கலியாணம் கட்டிவிட்டான்.

கலைஞர் தாழை செல்வநாயகம் 101
அவளது வீட்டின், ஓர் அறையில் தான் தபால் நிலையம் இருந்தது. அதில் தபால் அதிபராக இருந்தவன் சுந்தரம்.
நம் இருவருக்கும், நல்ல ராசிப் பொருத்தம். நன் மக்களிருவரை அளவுடன் பெற்று, சிறப்புடன், செல்வச் சிறப்புடன், நெடுநாள் வாழ்வோம் என இலக்கணம் பொதிந்த தமிழில், இராசம்மாவுடன், இரவு வேளையில், வீட்டு முற்றத்தில் கதை பேசுவான் சுந்தரம்.
வீட்டு முற்றத்திலிருந்தவாறு, கொடுங்கைக்குள் என்னை வீட்டிற்குள் தூக்கிச் சென்றுவிடுவார்.
இவையெல்லாம் முப்பத்தைந்து வருடங்களுக்கு முந்திய கதைகள்.
நான் அவளைச் சந்தித்த வேளை, அழுது, அழுது என்னிடம் இராசம்மா கூறினாள்.
நான் இளம் வயதில் விதவையாகி விட்டேன். எனது பிள்ளைகள் இன்று என்னுடனிருந்திருந்தால். இந்த வாழ்வு எனக்கு கிடைத்திருக்குா?. r எனது கணவர் ஒரு நாடகக் கலைஞர். அவர் பிறந்த ஊரில் பல நாடகங்களில் நடித்தவர். அடுத்து பத்திரிகைகளிலும், எழுதுபவர். அவரது அழகினை விட, நான் அவரது கலையார்வத்திலேயே மையல் கொண்டேன். எனது பெண் பிள்ளைக்கு மூன்று வயதாயிருக்கும் போதும், ஆண் பிள்ளைக்கு ஆறு வயதாயிருக்கும் போதும், எனது கணவர் மாரடைப்பினால் காலமாகி விட்டார்.

Page 54
102 ஏதிலிகள்
இவையெல்லாம், இருபத்தொன்பது வருடங்களுக்கு முந்திய கதைகள். நான் இருபத்தி ஒன்பது வருடங்கள் விதவையாக வாழ்ந்து விட்டேன்.
எனது கணவரின் அரச சேவையின் காரணமாக, எனக்கு கிடைக் வேண்டிய ஓய்வூதியப் பணத்தினை பெறவேண்டிய நிலை, எனக்கு ஏற்பட்டது, கிடைத்த அனுபவங்கள் எந்தப் பெண்ணிற்கும் ஏற்படக்கூடாது.
எனது கணவரின் சகோதார முறையான ஒருவர் என்னிடம் தொடர்பு கொண்டார். உனது ஓய்வூதியத்தினை நான் விரைவில் பெற்றுத் தருவேன் என்று கூறினார்.
எனது இரண்டு சிறு பிள்ளைகளுடனும், அவருடன்
ரயிலில் ஏறினேன். ரயிலில் உள்ளவர்கள் தூங்கி விழும் வேளைகளில், எல்லாம் அவர் என்னுடன் அங்கச் சேட்டைகள் செய்யத் தொடங்கினார்.
அவ்வேளையில் என்னால், எதுவித நடவடிக்கையிலும் இறங்க முடியாத சூழ்நிலையில், தவித்துக் கொண்டிருந்தேன்.
எனது பிஞ்சுகள், எனது காலடியில், ரயில் பெட்டியினுள் தூங்கிக் கொண்டிருந்தன.
அவரது சேட்டைகள் தொடரத் தொடர, நானும் இடங்கொடாமல் தடுத்துக் கொண்டிருந்தேன்.
என்னால் என்னதான் செய்ய முடியும்?

கலைஞர் தாழை செல்வநாயகம் 103
எனது காரியம் முடிவடைய வேண்டும். ஓய்வூதியத் திணைக்களத்தில் எனது வேலைகள்
முடிவடைந்து விட்டன.
அன்றிரவு மீண்டும் ஊர் திரும்ப வேண்டும்.
இன்னிலையில்.
இராசம்மா! இரவு பிரயாணம் செய்த நமக்கு அலுப்பாகவுள்ளது தானே.
நாம் இன்றிரவு ஒரு விடுதியில் தங்கி நின்று, நாளை காலை ஊருக்குப் புறப்படுவோம் என்று கூறினார்.
எனக்கு கோபம், அதிகரித்து விட்டது. அவரின் மறுபக்கம் எனக்குப் புரிந்துவிட்டது.
என்னிடம் காசு உள்ளது. நான் பிள்ளைகளுடன் இரவு ரயிலில் ஊர் போகப் போகிறேன் என்று பதிலளித்து விட்டு.
அங்கிருந்து விரைவாக நடையைக் கட்டி, எனக்குத் தெரிந்த சிங்களத்தில் சமாளித்து, புகையிரதத்திலும் ஏறியமர்ந்து விட்டேன்.
செய்வதறியாது அவரும், புகையிரதத்தில் வந்து, எங்கோ ஓரிடத்தில் அமர்வதனை என்னால் அறிய முடிந்தது. அதன் பின்பு அவருக்கும், எனக்கும் இடையே நீண்ட விரிசல் - ஒரு நாள் எனக்கு ஒரு கடிதம் வந்தது.

Page 55
104 ஏதிலிகள்
கொழும்புக்குச் செல்வதற்கு நான் செலவு செய்த பணத்தினை, எனக்குத் திருப்பி அனுப்பவும் என்று எழுதப்பட்டிருந்தது.
இப்படியும் சில மனிதர்களை என்னால் சந்திக்க முடிந்தது.
இராசம்மா எனது முகத்தைக் கூர்ந்து நோக்கிவிட்டு.
நீண்ட பெருமூச்சினை விடுகின்றாள்.
அவள் மீண்டும் என்ன கூறப்போகின்றாளோ. என்று ஆதங்கப்பட்ட நான்.
அவளது கண்ணிர்க் கதையினைக் கேட்க ஆயத்தமாயிருந்தேன்.
எனது பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். பதினைந்து பன்னிரெண்டு வயதினை அடைந்து விட்டனர்.
இருவரும் ஒருநாள் என்னிடம் வந்து.
அம்மா..! கண்மணிச் சித்தியின் மகள் கலையரசியும், மாமங்கத்தார் மகன் மாதவனும், இயக்கத்திற்குப் போய்விட்டார்களாம். f
எங்களுக்கும் விருப்பமாகவுள்ளது. நாங்களும் இயக்கத்தில் சேரப்போகிறோம். என்றார்கள்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

கலைஞர் தாழை செல்வநாயகம் 105
அவர்கள் கூறுவது எனக்குப் பெருமையாகத்தான்
இருந்தது.
நானும், நாட்டிற்காக இரு பிள்ளைகளையும்
தியாகம் செய்தால் என்ன? என்று சிந்திக்கலானேன்.
அவளது கூற்று எனக்குச் சுவையாகத்தான் இருந்தது. நம் நாட்டில் இப்படியும் ஒரு தாய் இருப்பாளா? எனது மனதிற்குள் எண்ணினேன். அப்படியென்றால் நீ என்ன முடிவு செய்தாய்? என்று நான் அவளிடம் கேள்வி கேட்க விரும்பவில்லை.
மெளனமாகவே இருந்து விட்டேன்.
இருவரையும் ஆடையணிவித்து அலங்கரித்தேன். எனது வீட்டின் பக்கத்தில் தான் அவர்களது காரியாலயமும் அமைந்திருந்தது.
இருவரையும் அங்கு கூட்டிச் சென்று விட்டுவிட்டு. தம்பிமார்களே! எனது பிள்கைளையும், உங்களுடன் இணைத்துக் கொள்ளுங்கள். எனக்குப் பூரண சம்மதமாயுள்ளது என்றேன்.
அவர்களில் ஒருவன் என்னிடம் கூறினான்.
அம்மா! உங்களுக்கு இரு பிள்ளைகள் தான்
உள்ளனர் என்பது எமக்குத் தெரிந்த விடயம். நீங்களும் கணவனை இழந்த விதவை என்பதும், ஓய்வூதியத்துடன் வாழ்க்கை நடத்துபவர் என்பதும், நாங்கள் அறியாமலில்லை. அதிலும் ஒருவர் ஆண். ஒருவர் பெண்.

Page 56
106 ஏதிலிகள்
இன்னுமொரு குழந்தை உங்களுக்கு இருந்தால், இவர்களைக் கொண்டு வாருங்கள். ஏற்றுக் கொள்வோம். போய் வாருங்கள்.
இவ்வளவு காலமும் இயக்கம் பற்றி நான். நினைத்திருந்தவைகள் எல்லாம் பொய்யாகிவிட்டன.
அவள் கூறியவை மீண்டும் எனக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்தின. இன்னும் அவள் என்னை கூறப் போகின்றாளோ எனப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
கணவனை இழந்த விதவைகளுக்கு தையல் இயந்திரம் தான் கணவன் போன்று கை கொடுப்பது' என்று யாரோ ஒர் எழுத்தாளர் தனது நூலில் எழுதிய ஞாபகம் எனக்கு.
நான் தையல் இயந்திரம் ஒன்றினை வாங்கி, தையல் வேலைகளில் இரவு பகல் பாராது உழைத்தேன். ஊரில் உள்ள அனைத்துப் பெண்களும், சட்டை தைப்பதற்காக, என்னைத் தான் தேடி வந்தனர்.
நான் எடுத்த ஓய்வூதியப் பணத்துடன், தையல் வேலைகளில் கிடைக்கும் பணத்தினையும் கொண்டு, பிள்ளைகள் இருவரினையும் வளர்த்து எடுத்து விட்டேன்.
எனது பெண் ஆசிரியையாகவும், ஆண் பிள்ளை எழுது வினைஞராகவும் போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டு வேலையில் அமர்ந்து விட்டனர்.
இனி எனக்கு என்ன குறை?

கலைஞர் தாழை செல்வநாயகம் 107
எனக்கு கிடைத்ததோ நான்கு வழியிலான வருமானங்கள். நான் எடுத்த முயற்சி வீண் போகவில்லை. சேமித்த பணத்தினைக் கொண்டு, மகனுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றும் வாங்கிக் கொடுத்தேன்.
நான் குறுக்கிட்டு அவளிடம் கேட்டேன்.
உனக்கு அப்போது, புதிதாக வீடு ஒன்றினைக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லையா? என்று.
எனக்கு எதற்கு வீடு? எனது அப்பா கட்டித் தந்த இந்தப் பெரிய வீடு இருக்கும்போது, நான் ஏன் வீடு ஒன்றினைக் கட்ட வேண்டும்.
நான் எனது பெண் பிள்ளைக்கு இந்த வீட்டினைக் கொடுத்துவிட்டு, எனது மரணம் வரையில் அவளுடன் இருந்து விடுவேன்.
மகன் கலியாணமாகி, புகுந்தவீடு சென்றுவிட்டால் அவனுடன் என்றாலும் எனது கடைசி காலம் வரையில் இருந்து இறந்து விடுவேன்.
யாருக்குத் தெரியும்? இப்படி ஒரு சுனாமி ஏற்படும் 66ਲੰup!
எனக்கு அறுபது வயதில், இப்படியொரு வாழ்க்கை கிட்ைக்கும் என்று, எனது பிள்ளைகள் திசைமாறிய பறவைகள் ஆகிவிடுவார்கள் என்று மீண்டும் இராசம்மா என்னைப் பார்த்து அழுது கொண்டிருக்கிறாள்.

Page 57
108 ஏதிலிகள்
மீண்டும் இராசம்மா என்னைப் பார்த்து அழுது கொண்டிருக்கிறாள். சுனாமியின் முன்பு இராசம்மா வாழ்ந்த வாழ்வினை விட. இப்போது அவளுக்கு கிடைத்த வாழ்வு மிகவும் பயங்கரமானதா? என்று நான் எனக்குள்
அசை போடலானேன்.
இராசம்மா என்ன. யாராயிருந்தாலும் இந்த முடிவினைத் தான் எடுத்திருப்பார்கள்.
பேய் பிடித்த சுனாமியால் அவளது வீடு தரைமட்டமாகியது.
தலை மட்டும் தப்பியது தம்பிரா" புண்ணியம் என்ற நிலையில் எனது பிள்ளைகளுடன் அகதி முகாம் வாழ்வு வாழ்ந்தேன்.
உடுத்த உடைகள் மாத்திரமே மிஞ்சியது. வசதிகளற்ற முகாமில், எத்தனை நாட்கள் வாழ்வது? வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து சிறிது காலம் வாழ்ந்தோம். எல்லோரும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி கொட்டில்கள் அமைத்து கஷ்டமான வாழ்வு வாழ்வதனையறிந்த நான். எனது ஊரையும் இனசனங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டேன்.
தமக்கென்று தொழிலுடன் உள்ள என்து பிள்ளைகள் எவ்வளவு காலம் என்னுடன் இருப்பது? இருவரையும் திருமண பந்தத்தில் பிணைத்து விட்டேன். நான் நினைத்தேன். அவர்கள் வாழ்க்கைப்படும் இடங்களில் நானும் சந்தோசமாக இருந்து விடலாம் தானே. என்று.

கலைஞர் தாழை செல்வநாயகம் 109
இந்தக்காலத்தில் நினைத்தவைகள் நடக்கின்றனவா?
எனக்கு கிடைத்த இரண்டு மருமக்களும், ஆசிரியத் தொழில் செய்பவர்கள்தான். எனினும் ஆசிரியர்களுக்குரிய பண்பு அவர்களிடம் இல்லை. எனது பிள்ளைகளும் அவர்களது சொல்வழியே நடந்தார்கள்.
மகளுடன் சிறிது காலம் இருந்து பார்த்தேன். மகளின் கணவன் எனது மண்டையை உடைத்து விட்டான்.
மகனின் வீட்டிற்குச் சென்றேன். அப்போது தான் புரிந்தது மருமகள், மருமகனைவிடக் கொடுமைக்காரி என்பது.
ஒரு சோறும், ஒரு கறியும் ஆக்கினால் போதும். அதிக செலவுகள் தேவையில்லை என்று அடிக்கடி கூறுவாள் மருமகள்.
நான் என்ன? அப்படியா தின்று வளர்ந்தவள்.
நான் என்ன பிச்சையா எடுக்கிறேன்.
எனக்கு கிடைக்கும் ஓய்வூதியம் எனது தனிக் குடித்தனத்திற்குப் போதுமானது.
என்ன. பாருங்க. நான் எடுத்த முடிவு சரியானதா?
நீ. எடுத்த முடிவு சரிதான். நீ பல்லைக் கடித்துக் கொண்டு உனது மருமக்களை அனுசரித்துக் கொண்டு
அவர்களுடன் இருந்திருக்கலாம்தானே.

Page 58
110 ஏதிலிகள்
எனது மருமகள் எனக்குத் தும்புத் தடியாலும் அடித்து விட்டாள். இன்னும் அவளது வீட்டில் என்னை வாழச் சொல்கிறீர்களா?
அதுவும் சரிதான். நான் நினைக்கிறேன். சுனாமி அடித்திராவிட்டால் நீங்கள் எல்லோரும் ஒன்றாக சந்தோசமாக. ஒரே இடத்தில் இருந்திருப்பீர்கள்தானே. என்று குறுக்கிட்ட எனக்கு கிடைத்த பதில். ஆச்சரியமாகியது.
நான் தனியே இருக்கிறேன் என்று, எத்தனை பேர் என்னிடம் வந்தார்கள். அது உங்களுக்குத் தெரியுமா?
இரவு வேளைகளில் வந்து என் வீட்டுக் கதவினைத் தட்டியவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
மச்சாள். மச்சாள். என்று என்னைச் சுற்றியவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
என்ன! பேசாமல் இருக்கின்றீர்கள்? இராசம்மா! நீ இன்னும் இளமைக் கோலத்தில்தான் இருக்கின்றாய். உனக்கு அறுபது வயது என்று யாராலும் சொல்ல முடியாது? உனக்கு நாற்பது வயதுதான் இருக்கும் என்று என்னால் கணிப்பிட முடிகிறது.
நான் உனது நடையைப் பார்த்திருக்கிறேன். நீர் மற்றவர்களுட்ன் அன்பாக கனைத்துப் பேசுவதனைப் பார்த்திருக்கிறேன்.

கலைஞர் தாழை செல்வநாயகம் 111
நீ. இப்போது தனி மரமாக இல்லை. அறுபது வயதில் உனக்கு ஒரு புதிய வாழ்வு கிடைத்திருக்கிறதென்றால் அதனை நான் பாராட்டுகிறேன். உன்னைப் பார்த்த எவருக்கும் உன் மேல் ஆசை வரத்தான் செய்யும்.
இராசம்மா கைகளிரண்டினுள்ளும், தனது முகத்தைப் புதைத்துக் கொண்டு சத்தமிட்டு அழுகிறாள்.
எனது பிள்ளைகள் என்னுடன் இருந்திருந்தால் எனக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்குமா?
நாசமாய்ப்போன சுனாமி என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டது.
இராசம்மா. நீர் சொல்வது பிழை. சுனாமியின் பின்னர்தான் உனது வாழ்வு திரும்பியுள்ளது.
நீ. இப்போது ஒரு சமூக சேவகியாகிவிட்டாய். நூற்றுக்கணக்கான படித்தவர்கள் கூட உன்னைத்தான், நிதியமொன்றின் தலைவியாகவும் ஆக்கிவிட்டார்கள். அறுபதில் நீ பெற்ற வாழ்வுக்கு என் வாழ்த்துக்கள்! நான் வந்த வழியில் நடையைக் கட்டினேன். m
垩

Page 59
112 ஏதிலிகள்
9. பணத்திற்கு வேலை
ஒரு ஞாயிற்றுக் கிழமை. நண்பகல் நேரம். பாசிக்குடா கடற்கரையில்உடைந்து கிடந்த ஒரு சீமெந்துக் கட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றேன்.
சுமார் முப்பத்தைந்து வருடகாலங்களுக்கு மேலாக, வடக்கென்றும், கிழக்கென்றும், கொழும்பிலும், மலைநாட்டிலும் காட்டிலாகாத் தொழிலிலும் பல வெளிநாட்டுத்தூதரகங்களில், பாதுகாப்பு அதிகாரியாகவும், தொழில் பார்த்துள்ளேன்
கடும்வெயிலின் கொடுமையும், கடுங்குளிரின் நடுக்கமும் எனக்குத் தெரியும். சோலைக் காடுகளின் மத்தியில் திசை தடுமாறியும், மகாவலியின் கரையிலும் தேயிலையின் மணத்திலும், தென்னஞ்சோலைகளில், பனையின் நுங்கில், இப்படிப் பல இரசனைகளில் நான் மகிழ்ந்து திரிந்துள்ளேன். பல்கலைக் கழக புகுமுக வகுப்புவரை நான் பயின்றுள்ளேன். என்னுடன் படித்த மாணவர்கள் இன்று.

கலைஞர் தாழை செல்வநாயகம் 113
நினைக்கும்பொழுது, பூரிப்பு அடைகின்றேன். எழுத்தாளர்களாக, கவிஞர்களாக, பொலிஸ் அதிகாரிகளாக, மருத்துவர்களாக, பொறியியலாளர்களாக, போராட்ட வீரர்களாக மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக, என்று பல ரகத்தினர்.
கரைக்கு வந்த அலைகள் மீண்டும் கடலுக்குள் சொல்கின்றன. இன்று நான், உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெறுகிறேன்.
என் பின்னால், வரிசையில் உடைந்து போய் கிடக்கும், உல்லாசிகளின் ஹோட்டல்கள் கூட, ஒய்வு பெற்று என்னைப் போன்று கடலையும், மாறி மாறி எழுந்து செல்லும் கடல் அலைகளையும், வெறிக்கப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
எனக்கு நிழலினைத் தந்து கொண்டிருக்கும் சவுக்கு மரங்கள், இதற்கு முன்னால் எத்தனை உல்லாசிகளின் இதயங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும்.
வெயில் அகோரமாக எரித்துக் கொண்டிருக்கின்றது. நானிருக்கும் சவுக்குமர நிழலை நோக்கி இருவர் வேகமாக வந்து கொண்டிருக்கின்றனர்.
வள்ளங்களும், வலைகளும், தோளில் வலைகளைச் சுமந்து கொண்டு, வீசித் திரிகின்றவர்களும் என் கண்களுக்குத் தெரிகின்றபோதிலும், இவ்விருவர் மாத்திரமே, என் கண்களுக்கு தெளிவாகத் தெரிகின்றனர். ·

Page 60
114 ஏதிலிகள்
ஒருவன் வெள்ளைத் தோல் ஐரோப்பியன், மற்றவன் எனது நாட்டைச் சேர்ந்தவன். அதிலும் தமிழன் போல் தெரிகின்றது.
இலங்கையனிடம், தோளிலும், கையிலுமாக, இரண்டு சூட்கேசுகள். இருவரினதும் பேச்சுக்கள் ஆங்கிலத்தில் தான் இருந்தது. வந்த இருவரும் எனக்குப் பக்கத்தில் கிடந்த அதே உடைந்த கட்டிலில் அமர்ந்து கொண்டனர். இலங்கையன், வெள்ளைத் தோல்காரனுக்கு வழிகாட்டி போல் தெரிகின்றது. வயிற்றுப் பிழைப்புக்காக, அவனுடன் வந்திருக்கலாம்.
என்னதான் சண்டைகளும், யுத்தங்களும், வெடிச் சத்தங்களும், ஹர்த்தால்களாகவிருந்தாலும், இங்கு குளிக்கவரும், உல்லாசிகளுக்கு குறைவில்லை. ஏனோ. இன்று கடற்கரையில் கூட்டம் குறைவாகவே காணப்படுகின்றது.
நானும் சாட்டாக, வாராந்தப் பத்திரிகை ஒன்றினைப் பார்ப்பது போல், பாசாங்கு செய்து, காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டிருக்கின்றேன்.
இருவரும் இளம் வயதினர் தான். சம வயதிருக்கலாம். ஐரோப்பியனிடம் காணப்பட்ட உடல் உறுதி, அவனிடம் காணப்படவில்லை.
சூட்கேசுகள் இரண்டினையும் சுமந்து வந்ததனாலோ. என்னவோ மிகவும் களைப்படைந்திருந்தான்.

கல்லஞ்ர் தாழை செல்வநாயகம் 115
வெளிநாட்டிலிருந்து, எதனைக் கடத்திக் கொண்டு வந்திருக்கின்றானோ? தெரியவில்லை.
எதற்கும், நான் அவர்களது நோக்கங்களை அறியுமட்டும், மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
வெள்ளைக்காரனின் வாய் திறக்கிறது. வோய். நான் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவன். எனது தாய்மொழி பிரான்ஸ், ஆங்கிலத்தை நன்றாகக் கற்றிருக்கின்றேன். சுத்தமான ஆங்கிலத்தில், சரளமாகப் பேசும் நீயும், நன்கு கற்றவனாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கின்றேன்.
சேர். நானும் எனது தாய்மொழியான தமிழையும், ஆங்கிலத்தையும், உங்களைப் போல் சுமாராகக் கற்றவன்தான்.
ஆனால், இப்பொழுது நீங்கள் ஆண்டான். நான் அடிமை.
உங்களிடம் மாத்திரமல்ல, எனது நாட்டில் கூட, சிங்களவர்கள் எமது ஆண்டான்களாகவும், தமிழ் பேசுபவர்களாகிய நாங்கள், அவர்களது அடிமைகளாகவுமே உள்ளோம்.
நீங்களெல்லாம், ஆளும் வர்க்கத்தினர், நாங்களெல்லாம் ஆளப்படுபவர்கள். உங்களுக்கு வேலையுண்டு. எனக்கு வேலை இல்லை.

Page 61
116 ஏதிலிகள்
யேசுநாதர் சிலுவையினைச் சுமந்தது போல், நான் உங்களது சூட்கேசுகளைச் சுமந்து திரிந்து, காலமோட்டுகின்றேன்.
வோய். ஏன் உனக்கு வேலையில்லை?. என்ற கேள்வி. அந்த ஐரோப்பியனின் வாயிலிருந்து திடீரெனப் பறக்கின்றனது.
சேர். நான் பரம ஏழை. அதிலும் எனது குடும்பம் பெரியது. நான் மூத்தவன். எனக்கு இரண்டு தம்பிகளும், இரண்டு தங்கைகளும், எனது தாய்தந்தையர், சேனைக்காடு வெட்டித் தொழில் செய்து, என்னை இவளவுக்கும் படிக்க வைத்து வளர்த்து விட்டனர். எனது கடைசித் தம்பி இயக்கம் ஒன்றில் சேர்ந்திருக்க, இன்னொரு இயக்கம், அவனைச் சுட்டுக் கொன்றுவிட்டது. எனது தந்தையால், இப்பொழுது உழைக்க முடியவில்லை. வயதும் போய்விட்டது. எனதும், எனது தம்பியினதும் வயதினைக் காட்டி, எனது ஊர் கிராமவிதானை, எனது தந்தையார் பெற்றுவந்த, சிறு பிச்சைச் சம்பளத்தினையும், அரசாங்கத்திடமிருந்து கிடைக்காது செய்து விட்டான். என்னாலோ, எனது சகோதரர்களாலோ எந்த ஒரு வேலையையும் தேடிக்கொள்ள முடியவில்லை. மிகுந்த வறுமையோடு வாழ்கிறோம்.
ஏன்? வோய். உங்கள் நாட்டில் ஏழைகளுக்கு வேலை கிடைக்காதா?. புதுமையாகவிருக்கின்றது. எங்கள் நாட்டில் படிக்காதவர்கள், படிப்புக்

கலைஞர் தாழை செல்வநாயகம் 117
குறைந்தவர்கள் தான் வேலை தேடிக் கொள்வது அசாத்தியம். ஆனால் முற்றாக வேலை கிடைக்காது, என்பதற்கில்லை. அல்லாமலும், வேலைக்கு, ஏழைகள், பணக்காரன் என்று பார்ப்பதில்லை.
சேர்!. எங்களைப் பொறுத்தவரை, படிப்புக் குறைவென்று கூற முடியாது. ஆசிரியர் வேலை, தாதிவேலை, எழுது வினைஞர் வேலை போன்ற சிறு வேலைகளுக்கு, எங்களுடைய படிப்பு போதும்.
நாங்களும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், வேலைகளுக்கு விண்ணப்பிப்போம், எழுத்துப் பரீட்சை எழுதுவோம். நேர்முகப் பரீட்சைக்கு கொழும்புக்கு போவோம். கொழும்புக்கு போவதென்றால், தற்போதைய நிலையில் என் போன்ற ஏழைகளுக்கு, வாலிப வயதினருக்கு இலகுவான காரியமல்ல. அதில் இரண்டு விதமான கஷ்டங்கள் இருக்கின்றன. ஒன்று கை நிறையப் பணம் வேண்டும். தங்கி நிற்பதற்கும், சாப்பாட்டிற்கும் நிறையச் செலவுகள் செய்ய வேண்டியுள்ளது.
மற்றையது வயது போன ஒரு ஆளின் துணை வேண்டும். கொழும்புக்கு செல்வதனால் சிங்களம் நன்கு தெரிந்திருக்க வேண்டும். சிங்களம் தெரிந்த ஒருவரையும் தேடிப் பிடிக்க வேண்டியுள்ளது.
அதுமாத்திரமல்ல. கொழும்பிலுள்ள தமிழர்களும், தாங்கள் தமிழர்கள் என்பதனை, இனங்காட்டிக்

Page 62
118 ஏதிலிகள்
கொள்வதில்லை. வீட்டிலும், றோட்டிலும் சிங்களம்தான் பேசுவார்கள்.
இன்னும் உள்ளது. கொழும்பில் பல சோதனைச் சாவடிகள் உள்ளன. தெருவில் திரியும் வியாபாரிகள் கூட, வெளியிடங்களிலிருந்து என் போன்று கொழும்புக்குச் செல்லும் வாலிபர்களை, சந்தேகக் கண்ணுடன் பார்த்து, தமிழ் மக்கள் என இனங்கண்டு, பாதுகாப்பு படையினரிடம் சமிக்ஞை கொடுத்து விடுவார்கள்.
பாதுகாப்பு படையினரின் சந்தேகக் கேள்விகளுக்கு நாம் தகுந்த பதில் சொல்ல வேண்டும். பயம் காரணமாகவோ, மொழி புரியாத காரணத்தினாலோ, சிறிய தவறுகள் ஏற்பட்டால் கூட, நேர்முகப் பரீட்சைக்குத் தோற்ற முடியாது போய்விடும்.
மாறாக, படையினரின், நரக லோகத்தில் நடைபெறும். நேர்முகப் பரீட்சையில்தான் தோற்ற வேண்டிவரும்.
நான் எனது தங்கையின் காதணியை, காசாக்கிக் கொண்டு, அம்மாவின் துணையுடன் இல்லாத சாமிகளையெல்லாம் வேண்டிக் கொண்டு, கொழும்புக்கு, நேர்முகப் பரீட்சை ஒன்றிற்குச் சென்றேன்.
வேலை கிடைக்கவில்லை. அவமானம்தான் கிடைத்தது.
பணக்கார வீட்டுப் பிள்ளைகள் தான் அந்த வங்கி வேலைக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கலைஞர் தாழை செல்வநாயகம் 119
இரண்டு லெட்சங்கள் கொடுத்து, வேலை எடுத்தார்களாம் என்று, ஊரார்கள் கதைக்கின்றார்கள்.
இதைக் கேட்டதும் ஐரோப்பியனின், கண்கள் அகலவிரிந்தன.
நீ. இவ்வளவு கஷ்டங்களின் மத்தியில் போயுமா? உனக்கு வேலை கிடைக்கவில்லை. அப்போ. நீ. தகுதியாகச் சித்தியடையவில்லை போல் தெரிகிறது.
இது ஐரோப்பியனின் ஆதங்கமான கேள்வி.
இல்லை சேர். எனக்கு வேலை கிடைக்காததற்கு அதுவல்ல காரணம் வேறுகாரணம் இருக்கின்றது. எங்கள் நாட்டு நடைமுறைகள் உங்கள் நாட்டு நடைமுறைகள் போன்றதல்ல.
எங்கள் நாட்டில் எம்.பி.மார்கள் மந்திரிமார்களின், கையாட்களுக்குத் தான் வேலை கிடைக்கும். ஆட்சியில் உள்ள கட்சியின் மந்திரிமார்கள், எம்.பி.மார்களின் பக்கம் யார் யார் நின்றார்களோ, அவர்களின் குடும்பத்தவர்களுக்கு நிட்சயம் வேலை கிடைத்துவிடும். பாராளுமன்றக் கதிரையில் உள்ளவர்களுக்கு, ஏஜெண்டுகள் உள்ளார்கள். அவர்களை யார்? பிடிக்கின்றார்களோ, அவர்கள் வேலையில் புகுந்து விடுவார்கள்.
என்னவோய். அப்போ. ஏன்? எழுத்துப் பரீட்சை நேர்முகப் பரீட்சை எல்லாம் வைக்கிறார்கள்.
அதெல்லாம் வெறும் கண் துடைப்பு சேர்.

Page 63
120 ஏதிலிகள்
வங்கியிலோ அல்லது திணைக்களங்களிலோ வேலை காலியாகவுள்ளதென்றால். வர்த்தமானியில் விளம்பரப்படுத்துவார்கள். அந்த வர்த்தமானி அறிவித்தல் கூட, எல்லோர் கண்களிலும் படுவதில்லை. தபால் கந்தோரில் வேலை செய்யும் பியோன்கள், வர்த்தமானியில் வரும் வேலை பற்றிய விளம்பரத்தினை கிழித்து அபேஸ் பண்ணி விடுவார்கள், அவர்கள் தங்களது உறவினர்களுக்கு அதனைக் கொடுத்து விடுவார்கள்.
எப்படியும் அந்த அறிவித்தலும் அதற்கான விண்ணப்ப பத்திரமும் கடைகளுக்கு விற்பனைக்கு வந்துவிடும். வேலைக்கு விண்ணப்பம் அனுப்புபவர்கள், எப்படியும் இருநூற்றி ஐம்பது ரூபாய் செலுத்த வேண்டும். ஒரு வேலைக்கு, லெட்சக் கணக்கானவர்கள், விண்ணப்பம் அனுப்புவார்கள். அரசுக்கு கோடிக்கணக்கில் பணம் சேர்ந்து விடும்.
என்னவோய்! நாட்டின் சட்டங்கள் மிகவும் பிழையாகவிருக்கின்றனவே.
தகுதி, திறமைகள் இருந்தாலும் ஒன்றுதான், இல்லாவிட்டாலும் ஒன்றுதான். அதைப்பற்றிக் கவலையில்லை. வேலை கிடைத்து விடும்.
இன்னும் சொல்கிறேன் கேளுங்கள் சேர்!. எங்கள் ஊரில் பாடசாலைகளில், படித்த பல இளைஞர்கள், சம்பளமில்லாமல், வருடக்கணக்காக சேவை மனப்பான்மையுடன் வேலை, செய்கிறார்கள்.

கலைஞர் தாழை செல்வநாயகம் 121
சம்பளமில்லாமல், வருடக்கணக்காக வேலை செய்கிறார்களா? ஏன் வோய். அவர்கள் படித்துவிட்டு, கைத்தொழில்கள், விவசாயம், நெசவு போன்ற தொழில்களைச் செய்து பணம் சம்பாதிக்க முடியாதா? படித்தால் உத்தியோகம் தான் பார்க்க வேண்டுமா?
ஆமாம் சேர். படித்தவர்கள் உத்தியோகத்தினைத் தான் நம்பியிருக்கிறார்கள். மீன் பிடிக்கவோ, வயலுக்குச் சென்று அருவி வெட்டவோ. ஒடாவி, மேசன் வேலைகளுக்கோ போகமாட்டார்கள். அது எங்களது நாட்ான், இளைஞர்களின் தலையெழுத்து.
படித்துவிட்டால் அவர்களுக்கு உத்தியோகம் கொடுக்க வேண்டும் என்று எந்த நாட்டுச் சட்டப் புத்தகத்தில் வோய் எழுதப்பட்டுள்ளது?.
சம்பளமில்லாமல் பள்ளிக் கூடத்தில் படிப்பித்தால், அவர்களது நிலை என்ன வோய்?.
அதத்தான் சேர்!. சொல்லப் போகிறேன். பாடசாலையில் படிப்பிக்கும் ஆசிரியர்கள், அதிபர்கள் செல்வாக்கில் அவர்களின் உறவினர்கள், அவர்கள் படிப்பிக்கும் பாடசாலைகளில் தொண்டராசிரியர்களாக படிப்பிக்கவெனச் சேர்ந்து விடுவார்கள். சிலர் தொடர்ந்து எதுவித சம்பளமுமில்லாமல், படிப்பித்துக் கொண்டிருப்பார்கள். சிலர் இடையில் விலகி, வெளிநாடுகளுக்கோ, வேறு அலுவல்களுக்கோ சென்று விடுவார்கள். சில வேளைகளில் அரசுக்கு சிலரால்,

Page 64
122 ஏதிலிகள்
கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக அரசு. தொடர்ந்து மூன்று வருட காலங்களாக தொண்டராசிரியராகக் கடமையாற்றுபவர்கள், நிரந்தரமாக்கப்படுவார்கள் என்ற அறிக்கையினை ஊடகங்கள் வாயிலாக வெளியிடும்.
உடனே, பல படித்த இளைஞர்கள் முண்டியடித்துக் கொண்டு பாடசாலையை நோக்கி ஒடித் திரிவார்கள். அதிபர்களின் காலில் விழுந்து தாங்களும் மூன்று வருடங்களாக, பாடசாலையில் படிப்பித்ததாக அத்தாட்சிப் படுத்துப்படி அழுவார்கள். அவர்களின் விருப்பத்திற்கு பதிவேட்டில் கையெழுத்துப் போடுவார்கள். அதன் பின்னர் அவர்களும் தொண்டராசிரியர், "ாக தெரிவு செய்யப்பட்டு விடுவார்கள். இதுதான் எனது நாட்டில் நடக்கும் தொழில் வாய்ப்பின் மகத்துவம்.
என்ன வோய். உங்கள் நாட்டில் இப்படித்தானா? பணத்திற்கும், முகத்தாச்சினைக்கும், வேலை கொடுக்கிறார்கள். அப்படியாயின் ஏழைக் குடும்பத்தில் பிறந்த படித்தவர்களின் நிலை என்ன? வருடக் கணக்கான தொண்டு அடிப்படையில் அல்லது சிறிய ஊதியத்தியத்தில் கற்பித்தலில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகளின், நிலையென்ன? இதுபற்றி உங்கள் நாட்டில், பேசித் தீர்வு காணக் கூடியவர்கள் இல்லையா? உங்கள் அரசியல் பிரதிநிதிகள் என்ன சொல்கிறார்கள்?
அப்படியானவர்கள் இல்லாமலும் இல்லை சேர்?. இருக்கிறார்கள். அவர்கள், என்னதான் கூவிக்

கலைஞர் தாழை செல்வநாயகம் 123
கொக்கரித்தாலும், பத்திரிகைகளில் எழுதினாலும், அவை எடுபடுவதில்லை. எம்.பி.மார்கள் சிலர் அரசியல் செல்வாக்குள்ளவர்கள். அவர்கள் ஆளும் கட்சியில் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள். இன்னும் சிலர் எதிர்க்கட்சிகளின் பக்கம் உள்ளவர்கள். இவர்கள் அரசியல் செல்வாக்கு அற்றவர்கள். எங்களினத்தை பிரதிநிதித்துவம் செய்யும் எம்.பி.மார்கள், இந்த வகையினைத்தான் சேர்ந்தவர்கள். இவர்களால் எமது தொழில் வாய்ப்புகளுக்கு, எந்தவிதமான உதவிகளையும் செய்ய முடியாது.
ஆர்ப்பாட்டம், போராட்டம், ஹர்த்தால் என்று தங்களது பதவிக்காலத்தைக் கடத்தி விடுவார்கள்.
என்னவோய்! உங்கள் பிரதிநிதிகள் ஆளுங்கட்சியில் சேர்ந்து கொண்டு, உங்களுக்குத் தொழில் பெற்றுத் தர முடியாதா?
அந்த ஐரோப்பியனின் ஆதங்கமான கேள்வியிது -
அப்படியும் ஒரு சில எம்.பி.மார்கள் சிங்கள ஆளும் கட்சிகளின் பக்கம் சேர்ந்துள்ளார்கள் சேர். அவர்களின் தயவால் தான் எங்களில் சில இளைஞர்கள் பணம் கொடுக்காமல் வேலை எடுத்துள்ளார்கள். ஆனால் அந்த எம்.பி.மார்களால், எங்களது மக்கள் மத்தியில், சுதந்திரமாக நடமாட முடிவதில்லை. பலத்த பாதுகாப்புகளுடன் கொழும்பில் தான் இருப்பார்கள். அந்த எம்.பி.மார்களின் தர்கர்கள் மூலம் தான் நாங்கள்

Page 65
124 ஏதிலிகள
சந்திக்க முடியும். அதுவும் அவர்களுக்கு தேர்தலில் வாக்குரிமையளித்ததாக நிரூபிக்க வேண்டும்.
ஐரோப்பியனின் கண்கள் மீண்டும் இன்னும் அகலமாக விரிந்தன.
அப்படியானால், அந்த எம்.பி.மார்கள் ஊருக்குள் வந்தால் என்ன நடக்கும்?
சுடப்பட்டும் விடலாம். சேர்! சுடப்பட்டும் விடலாம்.
шпуттөi)?
சேர்! அந்த மாதிரியான கேள்விகளையெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள்!
எங்கள் நாட்டில் அரசினர் வேலைகளுக்கு ‘கோட்டா முறையொன்றும் இருக்கிறது. அதன்படியும் வேலை வழங்கப்படுகின்றது.
அந்தக் கோட்டா எங்கள் நாட்டு எம்.பி.மார், மந்திரிமார்களுக்கே வழங்கப்பட்டிருந்தது. அவர்களின் தயவு இருந்தால், தகுதி திறமை இருந்தாலும் ஒன்றுதான், இல்லாவிட்டாலும் ஒன்றுதான். அதைப்பற்றிக் கவலை இல்லை. வேலை கிடைத்துவிடும் என்றான்.
என்ன வோய்! உன்னுடைய பேச்சு முன்னுக்குப்
பின் முரணாயிருக்கிறது. நீதானே அப்போது சொன்னாய். பரீட்சை எழுதினேன். நேர்முகப் பரீட்சைக்குப் போனேன்.

கலைஞர் தாழை செல்வநாயகம் 125
வேலை கிடைக்கவில்லை என்று. இப்போது தயவு. தயவு என்று என்று கூறுகின்றாயே?
என்ன அர்த்தம் அதற்கு.
சேர் அந்த இரகசியம் உங்களுக்கு எப்படித் தெரியப் போகிறது. நீங்கள் வெள்ளை உள்ளம் படைத்தவர்கள். அதனால் தான் கேள்விக்கு மேல், கேள்வியாக, திரும்பத் திரும்பக் கேட்கிறீர்கள். எங்கள் மொழியில், “திருமணங்கள், சொர்க்கத்தில் நிட்சயிக்கப்படுகின்றன’ என்று சொல்வார்கள். அதுபோல, ஒரு வேலை என்று அறிவிக்கப்பட்டதும், அந்த வேலையினை யார் யாருக்கு கொடுக்க வேண்டுமென, அவர்களே தீர்மானித்து விடுவார்கள். எவ்வளவு பணத்திற்கு கொடுக்க வேண்டுமெனவும், வரையறை செய்து விடுவார்கள்.
பரீட்சைகள் வைப்பது. வெறும் ஏமாற்றுவேலை.
ஏன் வோய்..?நீயும் அந்த வழியினைக் கையாண்டு, தொழிலினைப் பெற்றிருக்கலாம் தானே.
சேர். நான் பணமில்லாதவன். அவர்கள் எதிர்பார்க்கும் தொகை என்னிடம் இல்லை. நான் அவர்களைத் தேடிச் செல்வதானால், உரிய பணத்துடன் தான் செல்ல வேண்டும்.
என்ன வோய்! இங்கு எல்லாம் தலைகீழாகவுள்ளது. அப்படிச் சொல்லாதீர்கள். அதிகாரமும், பணமும் உள்ளவர்களுக்கெல்லாம் அது சரியான வேலைதான்.

Page 66
6 ஏதிலிகள்
ஆசிரியர் வேலைக்கு ஐம்பதாயிரம் எழுதுவினைஞர் வேலைக்கு, எழுபத்தையாயிரம். வங்கியில் வேலையென்றால் லெட்சக் கணக்கில். என்று வேலைக்குத்
தக்கவாறு, அவர்களிடம் ஒரு பட்டியலே உள்ளது.
என்னிடம், ஐம்பதாயிரம் ரூபாய் இருந்தால். தற்போது தெரிவு செய்யப்படவிருக்கும், ஆசிரியத் தொழிலில், நான் கூட எடுபட்டுவிடுவேன் என்று ஒரு
பெருமூச்சுடன் நிறுத்தினான்.
அ வ ரன து பெ ரு மூ ச் சு 1ம் து ய ர மும் , வெள்ளைக்காரனிடமே, அந்தப் பணத்தினைக் கேட்டது
போலிருந்தது.
அவனது முகத்தினையும், துயரத்தினையும் கவனித்த வெள்ளைக்காரன், என்ன நினைத்தானோ.
வோய்! எனக்குப் பசி எடுத்துவிட்டது. நிறமதியாகிவிட்டது. புறப்படுவோம் என்று கூறியவாறு, அவனையும் அழைத்துக் கொண்டு போய்விட்டான்.
அவர்களை கண்மறையும் தூரம் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். பாவம். அந்த ஏழைப் பொடியனுக்கு, முன்பின் தெரியாதவனுக்கு ஐம்பதினாயிரம் ரூபாயினை அந்த வெள்ளைக்காரன் கொடுப்பானா? சில வேளைகளில்
கொடுக்கவும் கூடும்.
அவர்கள் எல்லாம் இரக்கமுள்ளவர்கள்.

கலைஞர் தாழை செல்வநாயகம் 127
பணத்திற்காக மட்டும் வாழாதவர்கள். இங்குள்ள மக்கள் சூறாவளியால் பாதிக்கப்பட்டபோது, கடல் அனர்த்தம் ஏற்பட்ட போதெல்லாம் இவனைப் போன்ற வெள்ளைக்காரர்கள் தானே, உதவி செய்தார்கள். இன்னும் உதவி செய்து கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் இருவரதும், கதை பேச்சுக்களை கவனித்த எனக்கு, அந்த இளைஞன் மீது பச்சாதாபம் ஏற்பட்டுவிட்டது. இவனைப் போல் எத்தனை இளைஞர்கள், புவதிகள் ஏங்கிக் கொண்டிருக்கின்றார்களோ?
'மனித மனம் ஒரு குரங்கு' என ஏன்? சொன்னார்கள்.
இந்த அரசாங்கம் இவ்வாறு செய்யுமா? அவன் அந்த அன்னியனிடம், பணம் பறிக்க பொய்தான் சொல்லியிருக்கிறான். இவர்களது தொழிலே இதுதான்.
நான் அறிய இந்தப் பாசிக்குடாவில், எத்தனை குடும்பங்கள் எத்தனை பேர், வெளிநாட்டவர்களை ஏமாற்றிப் பணம் பறித்திருக்கிறார்கள். மாடி வீடுகள், மதில் சுவர்கள், தண்னர் டாங்கிகள், எல்லாம் இவர்களுக்கு வெள்ளைக்காரர்கள் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.
நான் படித்த காலத்தில் என்னைப் படிப்பித்த ஆசிரியர் ஒருவர் கூட, தனது மனைவியுடன் வெள்ளைக்காரியுடன், வெளிநாட்டுக்குச் சென்ற ஞாபகம்
இருக்கிறது.

Page 67
28 ஏதிலிகள்
அகதி முகாமில் இருக்கின்றோம். மகனைச் சுட்டுவிட்டார்கள். இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து விட்டோம் என்றெல்லாம் பொய் கடிதம் எழுதிப் பலபேர், பணம் பறித்த விடயம் எல்லாம் எனக்குத் தெரியும்.
ஏன்?. அந்தப் பொடியன். “பணமிருந்தால் போதும் திறமை கூடத் தேவையில்லை. வேலை கிடைத்து
விடும்’ என்று பொய் கூறினான்.
பல கேள்விகள் என் மனதை அடிக்கடி அலட்டிக் கொள்ளக் கட்டிலிருந்து எழுந்து விட்டேன்.
வீட்டை நோக்கி நடையைக் கட்டினேன்.
அவர்கள் இன்னும் வலையுடன் வீசிக் கொண்டேயிருக்கின்றனர்.

கலைஞர் தாழை செல்வநாயகம் 29
10. கலைஞன் ஆகும் எழுத்தாளன்
அவன் அப்பொழுது பிரபல்யமான கல்லூரி ஒன்றில், உயர்தர வகுப்பில் படித்துச் சித்தி பெற்றுவிட்டான். அவன் பிறந்தது, கிராமப்புறமாயிருந்ததால், அவனுக்கு கடல் தொழில், கமத் தொழில் எல்லாம் தெரிந்திருந்த போதிலும், எண்ணம் முழுவதும் உத்தியோகம் பார்க்க வேண்டும் என்பதில் தான் இருந்தது.
அவனுடன் சித்தி பெற்றவர்கள், பல்கலைக் கழகம் சென்று விட்டனர். அவனது தந்தையார், வன இலாகாவில் ஒப்பந்த அடிப்படையில், காணி பெற்று சேனைப்பயிர் செய்ததால், வன அதிகாரி ஒருவரின் தொடர்பு அவனுக்குக் கிடைத்தது.
போடியார் உன்ர மகன், படிச்சிருக்கிறத்தால அவனுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கப் போகுது.
எங்கட கண்டுநேசறியில அவன் வந்து வேலை செய்யட்டும். ஆறு மாசத்தால வன அதிகாரி உத்தியோகத்திற்கு ஆட்கள் எடுக்கப் போறாங்க. நாளைக்கே அவனை ‘தேக்கங்கண்டு நேசறிக்கு அனுப்பி வை என்றார் மகேசர்,

Page 68
130 ஏதிலிகள்
பட்டதாரிகளுக்கெல்லாம் வேலையில்லாதிருக்கும் இக்காலத்தில் அவனுக்கு எப்படி வேலை கிடைக்கப் போகிறது?
அதற்கிடையில் திருமணமும் முடித்து விட்டான். எப்படியும் வேலைக்குப் போய்த்தான் ஆகவேண்டும்,
அதுவும் தேக்கங்கன்றுப் பாத்திகளுக்கு பூவாளியால் தண்ணிர் ஊற்றும் வேலை,
இப்படிச் செய்தால் என்ன?
ஏதாவது இலக்கியக் கட்டுரைகள் எழுதி, தமிழ்ப்
பத்திரிகைகளுக்கு அனுப்பினால் என்ன? பிரசுரிப்பார்கள் தானே காசும் கிடைக்கும்.
நேசறியில் வேலை செய்ததாயுமிருக்கும், எழுத்துத் துறையில் வருமானமும் கிடைக்கும்.
வேலைக்குச் சென்றால் சக தொழிலாளர்களுடன் அவன் கதைப்பதில்லை. அவனும் அவன்பாடும்.
இவன் என்னடா, எந்த நேரமும் யோசனையில் தான் இருக்கிறான். எதையோ புதிதாகக் கண்டுபிடித்து விஞ்ஞானியாகப் போகிறானா?
என்னவோ பெரிய படிப்பு படிச்சவனாம். வன அதிகாரியாக ஆகவேணும் எண்ட நினைப்போ.
நாளாந்தம் அவனுடன், வேலை செய்யும் வேலையாட்கள் பேசும் கிண்டல்கள்.

கலைஞர் தாழை செல்வநாயகம் 131
கட்டுரை எழுதுவதில் உறுதியாகவிருந்தான். வேலைத் தலத்தில் மேய்ந்து எடுத்த எண்ணக் கருத்துக்களை, இரவு வேளைகளில் அசைபோட்டான்.
அவனது கட்டுரையினை, நன்றாகப் பட்டை தீட்டி, மெருகேற்றினான். ஒரு மாத காலம் கடந்து விட்டது.
தனது இலக்கியக் கட்டுரைக்கு நல்லதொரு பெயரினையும் தெரிவு செய்துவிட்டான். புறநானுற்றில் வரும் ஒரு காட்சி தான் அவனது கட்டுரைத் தலைப்பு,
‘புலிக்குப் பதில் குள்ளநரி திரும்பத் திரும்ப பல தடவைகள் படித்தான். பத்திரிகையில் வெளிவந்ததற்கான மகிழ்ச்சி முகத்தில் தெரிந்தது.
எப்படியும் வெளிவந்துவிடும் என்று முடிவு செய்துவிட்டான். கருத்து மிக்கதாகத்தான் இருக்கிறது. இந்தக் கட்டுரையைப் படிப்பவர்களுக்கு ருசியாகத்தான் இருக்கும்.
தேனில் துவைத்து எடுத்த பலாச் சுளையைப் போல. இந்தக் கட்டுரை எழுதத் தொடங்கிய காலந் தொடக்கம், எப்படியும், அரைக்கிலோ, வெள்ளைத் தாள்கள் கிழிந்திருக்கும்.
அவனுக்குப் பஞ்சாங்கத்தில் நல்ல நாள் பார்க்கத் தெரியும், எல்லாம் அனுபவப் படிப்புத்தான். சுபவேளை யொன்றினைத் தெரிவு செய்து புகழ் பெற்ற, வெள்ளி விழாக் கொண்டாடிய, பழம்பெரும் தமிழ்ப் பத்திரிகையின்

Page 69
132 ஏதிலிகள்
ஆசிரியருக்கு கட்டுரையினைத் தபாலிட்டு விட்டான். மூன்று நாட்களில் வாரமலர் ஆசிரியருக்கு கிடைத்திருக்கும். எப்படியும் ஒரு கிழமையால். கட்டுரை கிடைத்துவிட்டது. கூடிய விரைவில் வெளிவரும், என்ற பதில் கடிதம் கிடைத்து விடும், என்று.
அவன் மனம், எண்ணிப் பூரிப்படைந்தது. பத்திரிகை ஆசிரியருக்கும் ஆயிரம் வேலைகளிலிருக்கும். ஆயிரக் கணக்கான கதை, கட்டுரைகள் கிடைத்திருக்கும். எல்லாவற்றையும் கவனிக்க வேண்டாமா?.
இரண்டு வாரங்கள் கழிந்துவிட்டன. தபால் திணைக் களத்தின் வேலையாகவிருக்குமோ?.
தபால்காரன் கடிதத்தை எங்காவது, தொலைத்து விட்டானோ? என்றெல்லாம் அவன் மனம் எண்ணியது.
மணம் ஒரு குரங்குதானே. ஞாபக் கடிதம் ஒன்று எழுதிப் பார்த்தால் என்ன? ஊருக்குள் தபால்காரன், வரும்போது வீதியில் நின்று, பார்த்துக் கொண்டிருப்பான். அங்குமிங்கும் நடந்து திரிவான். நடை தளர்ந்த வேளைகளில் வீதியோரத்தில் உட்காருவான். h
அவனைப் பார்ப்பவர்களுக்கு, காதலியை எதிர்பார்த்துக் காத்திருக்கும், காதலனின் தோற்றம்தான் நினைவு வரும்.

கலைஞர் தாழை செல்வநாயகம் 133 என்ன செய்தும் பலனில்லை. கட்டுரை வெளிவரும் என்ற ஆசை அவனை விட்டு மறைந்துவிட்டது.
அவனது மனைவிக்கு, அவன் எழுதுவது துப்பரவாகப் பிடிப்பதில்லை. தனது எழுத்துத் துறைக்கு உதவி ஒத்தாசைகள் புரியாத இவளை, ஏன் திருமணம் செய்தேனோ?. என்று கூட எண்ணுவான்.
"தீப்பள்ளயத் திருவிழாவில், தீர்த்தச் செம்பினை, தொலைத்துவிட்ட’ கோவில் ஐயனின் நிலையிலிருந்தான். இரவு வேளைகளில், சரியான தூக்கம் இல்லை. தூங்கிவிட்டால் பயங்கரக் கனவுகளைக் கண்டான். வித்தியாசமான கனவுகளைக் கண்டான்.
பத்திரிகை ஆசிரியரை யாரோ. கொலை செய்வது போலவும், வெளிவந்த பத்திரிகைகளையெல்லாம், ஒன்றாகக் குவித்துப் போட்டு, காரியாலயத்துடன், நெருப்பு வைத்து எரிப்பது போலவும் கனவு கண்டான்.
அவனது மனைவியும் அவனைப்பற்றி, வித்தியாசமாக நினைக்கத் தொடங்கி விட்டாள்.
இவருக்கு. யாரும் வெளிப் பெண்களுடன் தொடர்புகள் இருக்குமோ..? என்று நினைத்தாள்.
அப்படியிருந்தால் தான். அவளால் என்ன செய்ய (Մ)ւգեւյւb.
ஆறு மாதங்கள் முடிந்து விட்டன. இனிச் செய்ய வேண்டியது. முத்திரை ஒட்டிய கடித உறையினை,

Page 70
134 ஏதிலிகள்
முகவரியுடன், எழுதி அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை.
அப்படி அனுப்பியும், கட்டுரை, திரும்ப என்னிடம் வரவில்லையே. அங்கு கடிதத்தை உடைத்துப் பார்த்தவர்கள் எனது முத்திரைகளைத் திருடியிருப்பார்கள் எப்படியும் நான் என் எண்ணத்தினை நிறைவேற்றியே தீருவேன். எழுத்தாளன், ஆகியே தீருவேன். முதல் கட்டுரை, ஒருபோதும் வெளிவருவதில்லை என்று ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம். அதில் ஒரு திருப்தி
எப்படியும், எனது இரண்டாவது கட்டுரையாவது, வெளிவர வேண்டும்.
ஆசிரியரை எப்படியாவது, வற்புறுத்தி, பிரசுரிக்கச் செய்ய வேண்டும். ஒரு பெண்ணின் பெயரில் எழுதிப் பார்த்தால். என்ன?
எனது மனைவியின் கையால், பிரதி செய்து எடுக்க முடியும். ‘புணாணைப் புனிதா' என்ற பெயரில் அதே கட்டுரையினை, அதே பத்திரிகையின் ஆசிரியருக்கு, தபாலிட்டான். என்ன ஆச்சரியம். பதில் கடிதம் கிடைத்துவிட்டது.
வளர்ந்து வரும் எழுத்தாளர் புணாணைப் புனிதாவிற்கு! உமது கட்டுரை கிடைத்தது. உமது கட்டுரையின் முதல் வரியே என்னைக் கவர்ந்து விட்டது.

கலைஞர் தாழை செல்வநாயகம் 135
உமது ஆக்கம் போன்ற அழகிய கட்டுரையொன்றினை இதுவரை நாங்கள் பெற்றதுமில்லை. பிரசுரித்ததும் இல்லை. நீங்கள் அனுப்பியது முதல் கட்டுரையானபடியால், எமது வாசகர்களும், உம்மைப்பற்றி விரிவாக அறிந்து கொள்ள ஆவலாயிருப்பார்கள். எனவே அண்மையில் எடுத்த, ‘பாஸ்போட் அள்விலதான, புகைப்படம் ஒன்றினையும், அனுப்பி வைக்கவும். நிச்சயம் எதிர்பார்க்கிறோம்.
இந்த வாரமே உமது கட்டுரை வெளிவருகின்றது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதுடன், எதிர்காலத்தில் சிறந்த ஒரு பெண் எழுத்தாளராகத் திகழ எமது வாழ்த்துக்கள். நன்றி.
இப்படிக்கு ஆசிரியர். ஐயோ..! நான் நன்றாக மாட்டுப்பட்டுக் கொண்டேன். யாருடைய படத்தை அனுப்புவது. புகைப்படம் போனால் தான் கட்டுரையும் வெளிவரும்.
மனைவியிடம் எப்படிப் படத்தைக் கேட்பது. அவளிடம் நான் உண்மையான, விஷயத்தைச் சொல்லி முடிப்பதற்கிடையில்,
பெண்டாட்டியின் படத்தை எந்தப் புருஷனாவது பேப்பரில் போடுவானா?. என்று கத்தத் தொடங்கி விட்டாள்.
பத்திரிகைகளில், ஒவ்வொரு நாளும் எத்தனை விதம் விதமான பெண்களின் படங்கள் வெளிவருகின்றன

Page 71
136 ஏதிலிகள்
என்றெல்லாம் சொல்லிப் பார்த்தான். அவனது பேச்சு அவளிடம் எடுபடவில்லை.
நீயே. பெண் வேடம் போட்டு, போட்டோ எடுத்து அனுப்பு என்றாள்.
அதுவும் எனக்குச் சரியாகத்தான் பட்டது.
இன்னும், எனக்கு முகறைக்கட்டையில் சரியாக மீசை கூட முளைக்கவில்லை. அதையும் எடுத்துவிட்டால்.
பாடசாலையில் படிக்கும்போது "அனார்கலி நாடகத்தில், பெண்பாத்திரம், அனார்கலியாக நடித்திருக்கிறேன்.
* கோவலன் கண்ணகியில் கண்ணகியாக நடித்திருக்கிறேன். அப்போது எனக்கு மீசையில்லை. எதுக்கும் எனது, சொந்த மூளையினைப் பாவித்து, ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதிப் பார்ப்போம்.
அன்புள்ள ஆசிரியருக்கு! உங்கள் கடிதம் கிடைத்ததிலிருந்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். நான் செய்யப் போகும் காரியங்களும், உடனுக்குடன் மறந்து விடுகின்றது. எப்படிக் கடிதத்தினைத் தொடங்குவது என்றும் விளங்கவில்லை. எனது கட்டுரையினைப் பிரசுரிப்பதற்குத் தெரிவு செய்த தங்களுக்கு, என்ன கைமாறு செய்வது என்று தெரியவில்லை. எனது புகைப்படத்தைக் கேட்டு எழுதியிருந்தீர்கள்? ஆசையாகத்தான் உள்ளது. நானும் ஒரு சிக்கலில் மாட்டியுள்ளேன்.

கலைஞர் தாழை செல்வநாயகம் 137
எனது கணவர் ஒரு எருமை மாடு. நான் ஒன்று சொன்னால் அவர் ஒன்று செய்வார். நான் பூசணிக்காய் வாங்கிவரச் சொன்னால் அவர் புடலங்காய் வாங்கி வருவார். சீனி வாங்கி வரச் சொன்னால், சர்க்கரை வாங்கி வருவார். நான் சூரியன் கிழக்கில் தான் உதிக்கிறது என்றால், அவர் இல்லை மேற்கில் தான் மறையும் என்பார். இப்படிப்பட்டவருடன், குடும்பம் நடத்துவது என்பது.
நான் இக்கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கும் போதே அவர் வருகிறார். உடன் நிறுத்துகிறேன். எப்படியும் இவ்வாரம் கட்டுரையினைப் பிரசுரியுங்கள். தொடர்ந்து வரும், கட்டுரையுடன் எனது புகைப்படத்தை, அனுப்புவேன்.
நன்றி.
புணாணைப் புனிதா கடிதத்தினை எழுதி முடித்து விட்டான். எப்படி? தர்ம பத்தினியிடம் கொடுத்துப் பிரதிபண்ணுவது? ஒருவாறு காலில் விழுந்து சமாளித்து விட்டான். இந்தக் கடிதத்தை மாத்திரமாவது உன் கைபட எழுதித்தா என்றான்.
யார் இந்தப் பம்மாத்துக்காரி புனிதா..? அவனது கால் முதல், தலைவரையில் பயங்கரப் பார்வை செலுத்தினான். அவன் தலை சுற்றியது.
‘புனிதா எனது கற்பனையில் உதித்த பெயர். அது எனது புனைபெயர்.
சுஜாதா, ரஜினி என்று பெண்களின் பெயரை வைத்து ஆண் எழுத்தாளர்கள் எழுதுவது போன்று.

Page 72
138 ஏதிலிகள்
நான் எனக்காக வைத்த எழுத்துலகப் பெயர்.
எப்படி எடுத்துச் சொல்லியும் அவள் நம்பினால்
தானே. என்னடா? உபத்திரவம் இது.
நான் பாத்தியில், தினைகளைத்தான் விதைத்தேன். ஆனால் பனைகள் முளைத்துவிட்டனவே.
நான் அவளிடம் செய்த அறுநூறு சத்தியங்களும், நூற்றிஎட்டு மன்னிப்புகளும், அவனிடம் அடிபட்டுப் போய்விட்டன.
நான்கு தசாப்த காலங்கள் ஓடி மறைந்து விட்டன.
எழுத்துத் துறையில் பல சாகித்தியப் பரிசுகளையும் பெற்றுவிட்டான்.
இரண்டு தடவைகளில், பொன்னாடை போர்த்தப்பட்டு, கலைஞனாகக் கெளரவிக்கப்பட்டு விட்டான்.
பல சிரமங்களின் மத்தியில், சிறுகதைத் தொகுப்பு ஒன்றினையும் வெளியிட்டு விட்டான்.
தற்போது ‘ஆளுநர் விருதினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்.
 

கலைஞர் தாழை செல்வநாயகம் 139
*
தாழை செல்வநாயகம்
பிறப்பு : 1946, வாழைச்சேனை பேத்தாழை).
பெற்றோர் - கந்தையா, தங்கம்மா.
கல்வி - வந்தாறுமூல மத்திய கல்லூரி வாழைச்சேனை இந்துக்கல்லூரி. கல்வித்துகைமை - க.பொ.த (உயர்தரம்).
தொழில் - வன அதிகாரி (1967) வனபரிபாலன
திணைக்களம்.
கடமை ஆற்றிய இடங்கள் - வெல்லாவெளி. இலக்கியப் பணிகள் - வாழைச்சேனை “கம்பன் கலாமன்றம்" நிறுவகர், தலைவர்). நாடகப்பணி - பல நாடகங்களை மேடையேற்றி, நடித்தது. பிற பணிகள் - வீரகேசரி நிருபர். ஓய்வு பெறுதல் - 1990. ஓய்விக்குப் பின் - (2000 வரை) கொழும்பில், ஜப்பான், ஜெர்மனி, அவுஸ்திரேலிய தூதரகங்களில் பாதுகாப்பு அதிகாரி.

Page 73
140
1. நாடகத் தொகுதி
ஏதிலிகள்
வானொலிப் பணி - இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத்தாபன தேசிய சேவை - “ஊர்வலம்”, “ஊர் அறிமுகம்’ பரிசுகள் - பல சிறுகதைப் போட்டிகளில் முதற்பரிசு கெளரவங்கள்
1. கோறளப்பற்று கலாசாரப்பேரவை - கலைஞர்
விருது (2002).
2. இந்து இளைஞர் பேரவை - கலைஞர் விருது
(2004)
3. கலாசாரப் பேரவை சாகித்ய விழாப் போட்டிகளில்
- பல பரிசுகள்.
4. மாவட்ட மட்ட சிறுகதைப் போடடி முதற்பரிசு
(2006, 2007).
ஆக்கங்கள் - சிறுகதை, கட்டுரை, நாடகம், கவிதை (வீரகேசரி, தினக் குரல், சுடர்ஒளி, மித்திரன் பத்திரிகைகள்.
முதற்சிறுகதைத் தொகுதி - ஏதிலிகள் வெளிவர இருப்பவை -
2. கட்டுரைத் தொகுதி.
 


Page 74
2006ல், கோறளைப் பற்றுப் பிரதேச செயலக விழாவில் வெளிமட்டச் சிறு கதைப் போட்டியிலும் விழாவில் முதலிடமும் பெற்றமையினைப் பா வழங்கப்பட்ட சான்றிதழினை கல்குடா கல்வி வல ரவி வழங்குகிறார். அரசாங்க அதிபர் திரு. ெ பணிப்பாளர் ஜனாப் யூ.எல்.எம். ஜெயினுதீன், கல மேடயில் அமர்ந்துள்ளனர்.
 
 
 
 

2002 ல் கோறளைப் பற்று , கலாச்சார ப்  ேப ர  ைவ யி ன Iா ஸ் நடாத்தப்பட்ட கலைஞர் கெளரவத்தில் கிழக்குப் ப ல் க  ைல க் க ழ க (நுண்கலைத்துறை)ப் பேராசிரியர் திரு. பொன். பாலசுகுமார் அவர்களால், ஆக்க இலக்கியத் துறைக் க  ைல ஞ ர |ா க ப் பொன்னாடை போர்த்திக்
கலாச்சாரப் பேரவையின் முத்தமிழ் முதலிடமும் மாவட்ட தேசிய இலக்கிய ராட்டி கலாச்சாரத் திணைக்களத்தால் ய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.தி. ச. புண்ணியமூர்த்தி வலயக் கல்விப் ாபூஷணம் திரு. வேலழகன் ஆகியோர்