கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மதீனாவின் மாண்புகள்

Page 1

föIII (gas)MA
፡ሠ።

Page 2

மதீனாவின் மாண்புகள்
மெளலவி எஸ். எச். ஆதம்பாவா
(மதனி) M.A
கலமுஷ் ஷர்க் வெளியீடு- 05

Page 3
மதீனாவின் மாண்புகள்
First Edition
MADEENAVN MANPUHAL
: 1992 (April)
Second Edition: 2009 (August)
Author
Address
Phone
Copyright
Price
: Moulavi S.H. Athambawa (Madani)
B.A. Hons (S.L.) B.A. (SP) Medina M.A. (S.L.)
Principal -
Al-Hamiya Arabic College, Kalmunai President:-Jamiyyathul Ulama Ampara District.
: 72, Al Hilal Road,
Sainthamaruthul- 11
: 067-222 1965 (Home)
0777839527 (Mobile)
: Author
: 150/-
Published By : Kalamush-Sharq Publication Bureau
Printed By
I.S.B.N
72, Al Hilal Road,
Sainthamaruthul- 11
: A.J. Prints (Pvt) Ltd,
44, Station Road, Dehiwala
: 978-955-1407-01-08

மதீனாவின் மாண்புகள்
வடக்கு - கிழக்கு மாகாண இலக்கிய விழா திருக்கோணமலை
சாகித்திய மண்டலப் பரிசு
1992 - 1992
r -
வடக்கு - கிழக்கு மாகாணத்தின் 1992 1991 வருடங்களில் வெளியான
غدد له قسمه 熙、蟹、 .துறையில் சிறந்ததென ܐܸܬܼܬܼܥܲܬ݂ܬܹܐ..........ܙhaܘܝܪܟܢ
... "Y ss − As2SSašaš, தேர்ந்தெடுக்கப்பட்டு نتی\جد بھیج دھج\
拳 V SWXYుస్లMధ్సన్లో ïîâåò:R}284$*?*.....oy a iiap és,
இச்சHன்றிதழ் வழங்கப்படுகிறது.
g کسی) > ノベーノメへ』 へん、ふ* سمبر எம். ஏ. சீ. முகைதீன், செ. எதிர்மன்ன یهs b, சாகித்திய விழாக் குழுத்தலைவர், * To.ăsti «os răsto Gruarreni,
ாக்கு
Wävado, as acT 7 (77 Jwswav år sir, addaw Mr J "tu"-39A y ATPAD
உதவில் கarசாரப் பணிப்பானt, அமைச்சின் செயலாகாச்,

Page 4
மதீனாவின் மாண்புகள்
முதற்பதிப்பின் அணிந்துரை
கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் துறைத் தலைவர் வழங்கியது.
மெளலவி எஸ் எச் ஆதம்பாவா (மதனி) பீ.ஏ. (சிறப்பு) அவர்களால் எழுதப்பட்டுள்ள மதீனாவின் மாண்புகள் எனும் நூல் என் பார்வைக்குக் கிட்டியது.
காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு விஷேடமாக மதீனதுர் ரஸால் என உலக முஸ்லிம்களால் கண்ணியமாக அழைக்கப்படும் மதீனா மாநகர் பற்றி அறிந்து கொள்வதற்கு ஆசையுடையவர்களுக்கும் ஸியாரத்துக்காக அங்கு செல்வோருக்கும் அந்நகரின் பழமைப் பெருமைகளையும் அந்நகரில் அமைந்து கிடக்கும் சரித்திரப் புகழ் பெற்ற இடங்களையும் பற்றிய விவரமான பல ருசிகரமான, பயனுள்ள தகவல்களை மிக இலகு தமிழ் நடையில் சிறப்பாக அள்ளித்தருவதாக இந்நூல் அமைந்திருக்கின்றது. இந்நூலை எழுதி வழங்குவதன் மூலம் தமிழ் பேசும் நல்லுலகுக்கு மெளலவி எஸ். எச். ஆதம்பாவா அவர்கள் இன்னோர் பங்களிப்பைச் செய்திருக்கிறார்.
மெளலவி. எஸ். எச். ஆதம்பாவா பற்றியும் ஒருசில வார்த்தைகள் கூறி வைக்க வேண்டியது இவ்விடத்தில் எனது பொறுப்பு எனக் கருதுகிறேன்.
மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அறபு மொழியிலும் இலக்கியத்திலும் பட்டப்படிப்பை மேற்கொண்டு பட்டம் பெற்றவராவார். அத்தோடு இலங்கையிலும் அறபு மொழியில்

. மதீனாவின் மாண்புகள்
பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரி பரீட்சார்த்தியாகத் தோற்றி மிகச் சிறப்பாக சித் தியடைந்து பட்டம் பெற்றவராவார்.சிறந்த அரபு மொழி, இலக்கிய அறிவாளியும் மார்க்க அறிஞருமான இவர் இளமைத் துடிப்புடன் எழுதிப்படைத்திருக்கும் இந்நூல் பொதுவாக தமிழ் பேசும் நல்லுலகத்துக்குப் பயன் படக் கூடியதாக இருப்பதுடன் விஷேடமாக உயர்கல்வி மாணவர்களுக்கும் மதீனா மாநகர் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளோர்க்கும் மிகப்பயன்படக் கூடியதாகவும் உள்ளது.
மெளலவி. எம். ஐ. அப்துர் ரஸ்ஸாக் எம். ஏ தலைவர், இஸ்லாமிய கற்கைகள் துறை கிழக்குப் பல்கலைக்கழகம்
23, கெட்டவலமுல்ல லேன் கொழும்பு- 09

Page 5
மதீனாவின் மாண்புகள்
முதல் பதிப்பின் முன்னுரை
பிஸ்மில்லாஹிர் றஹற்மானிர் - றஹிம்
எல்லாப் புகழும் ஏக வல்ல அல்லாஹவுக்கே உரியன. ஸலாவாத்தும் சலாமும் எங்கள் கண்மணி ஏந்தல் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் உற்றார், உறவினர், அன்பர்கள் அனைவர் மீதும் உரித்தாகுக!
1981 ஜனவரி 18 (ஹிஜ்ரி 1401 றபியுல் அவ்வல் 12) இத் தினத்திலே மதீனாப் பல்கலைக்கழகப் புலமைப்பரிசில் பெற்று அங்கு பயணமானேன். மதீனா சென்றதும் மனதிலே நீண்ட நாள் உறைந்து கிடந்த ஆசை பீறிட்டுப்பாய உடனே மஸ்ஜிதுந் நபவி சென்று தொழுது நபி (ஸல்) அவர்களது புனித கப்றையும் ஸியாறத் செய்து உள மகிழ்வெய்தினேன்.
அம் மஸ்ஜிதின் அழகும் அமைப்பும் அங்கே நிலவும் அமைதியான சூழலும், றவ்ளா ஷரீபிலே இரண்டு ரகஅத் ஆவது தொழத்துடிக்கும் இதயங்களும், றசூலுல்லாஹற் அவர்களினதும் அவர்களின் இரு தோழர்களினதும் கப்றை ஸியாறத் செய்யும் பெருமக்கள் கூட்டமும் எனக்கு பேரார்வத்தை ஏற்படுத்தின.
எனவே இம் மஸ்ஜிது பற்றியும், இதிலேயுள்ள அம்சங்கள் பற்றியும், மதீனாவின் சிறப்புக்கள் பற்றியும் அறிய ஆவல் கொண்டு பலரிடம் வினாக்கள் விடுத்த போதெல்லாம் சிறந்த பதிலை அவர்களால் தரமுடியவில்லை. ஒவ்வொருவரும் ஆளுக்கொரு பதிலைக் கூறினர். இதனால் உண்மையை அறிய வேண்டுமென்ற ஆவல் என்னில் தீவிரமானது.

மதீனாவின் மாண்புகள்
நான் பயின்று கொண்டிருந்த அறபு மொழி, இலக்கிய பீடத்தில் வருடாந்தம் ஓர் ஆய்வுக்கட்டுரை சமர்பிக்க வேண்டிய நடைமுறை இருந்ததால் இரண்டாம் வருடத்தில் ஆய்வுக்காக நான் தேர்ந்தெடுத்த தலைப்பு “மதீனா முனவவறாவின் சிறப்புக்கள்" என்பதாகும். இதற்காக பல நூற்களை வாசிக்க வேண்டியிருந்ததால் மதீனா பற்றிய சிறந்த அறிவைப் பெற முடிந்தது. இறுதியாண்டில் பயின்று கொண்டிருந்தபோது மாணவர் புறக்கிருத்தியச் செயற்பாட்டுக்காக ஜம்இய்யதுல் ஹதீஸில் சேர்ந்த நான் "மதீனா பற்றிய ஆய்வுகள்" தொடர் கட்டுரைகளைச் சமர்ப்பித்தேன். இதனால் 1985ல் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு வைபவத்தின் போது பெறுமதிமிக்க பரிசில்களைப் பெற்றேன். அம்மூன்று கட்டுரைகளைத் தழுவியே மூன்று பாடங்களாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
முதலாம் பாடத்தில் மதீனாவின் சிறப்புக்களை பல்வேறு கோணங்களிலிருந்தும் எடுத்து நோக்கியுள்ளேன். அதன் வரலாற்றையும் இயன்றளவு தெளிவாககக் கூறியுள்ளேன்.
இரண்டாம் பாடம் மஸ்ஜிதுந் நபவி பற்றிய தெளிவான விளக்கத்தைத் தந்து நிற்கிறது. மூன்றாம் பாடத்தில் மதீனாவிலுள்ள முக்கிய தலங்கள் பற்றிய குறிப்புக்கள் இடம்பெறுகின்றன.
நானறிந்த விடயங்கள் தமிழ் மொழி வாசகர்கள் அறிந்து கொள்ள வேணி டுமெனி ற நண் னோக் கில எழுதப்பட்டுள்ள இந்நூலைப் பெரும்பாலும் பலமான ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டே அமைத்துள்ளேன். இந்நூலை வாசிக்கும் அன்பர்கள் மதீனாவின் மாண்புகளை அறிவதுடன் அவர்களின் உள்ளங்களிலே அந் நகர் பற்றிய கெளரவம் உயரவும் வழிவகுக்கும் என்பது எனது திண்ணம்.

Page 6
மதீனாவின் மாண்புகள்
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் துறைத்தலைவர் மெளலவி M. அப்துர் ரஸ்ஸாக் எம்.ஏ. அவர்களும் அழகொளிரும் அட்டைப்படத்தை வரைந்துதவிய கலைஞர் நண்பர் M. 1. லியகத் அவர்களும் இந்நூலை வெளியிடுகின்ற வல் கலமி வெளியீட்டுப் பணியகமும் நவீன ஒப்செட் பாணியில் கொம்பியூட்டர் டைப் செட்டிங் செய்து இநநூலை அச்சிட கொழும்பு மிலக்ஷ் (MILAKSH) நிறுவனத்தினரும், இதன் பிரதியை எழுதி உதவியவர்களும் இந்நூலுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் அனைத்து வாசகர்களும், பிரமுகர்களும் எனது இதயம் நிறைந்த நன்றிக்குரியவர்கள்.
ஏற்கனவே வெளிவந்த எனது இரண்டு நூற்களுக்கும் வழங்கிய பேராதரவை அன்பு வாசகர்கள் இதற்கும் அளிப்பர் என எதிர்பாக்கிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹற் எனது முயற்சியை அவனுக்காகச் செய்யும் தூய பணியாக ஏற்று அருள்புரிவானாக.
மெளலவி எஸ். எச். ஆதம்பாவா. (Y ه(( வாரிதா மஹால் சாய்ந்த மருது. 24.04.1992

மதீனாவின் மாண்புகள்
இரண்டாம் பதிப்பின் முன்னுரை
பிஸ்மில்லாஹிர் ரஹற்மானிர் ரஹீம்
‘மதீனாவின் மாண்புகள்’ என்ற இந்நூலின் இரண்டாம்
பதிப் புக் கான முன் னுரையை எழுதுவதில் பெருமகிழ்வெய்துகின்றேன். அல்ஹம்துலில்லாஹற்.
1992ல் முதற்பதிப்பை வெளியிட்ட போது கிடைத்த வரவேற்புகள் மறக்க முடியாதவை. அவ்வருடம் ஹஜ்ஜுக்கு வந்திருந்த மர்ஹம் எம். எச். எம். அஷ்ரஃப் அவர்கள் மினாவில் என்னைச் சந்தித்த போது இந்நூலை தன்னுடன் கொண்டு வந்ததாகவும் ஒரு முறை வாசித்து முடித்து விட்டேன் மீண்டும் ஒரு முறை வாசிக்கத் தூண்டுகிறது எனக் கூறி பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
முன்னாள் முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச். எம். அஸ்வர் அவர்கள் அதே வருடம் மக்காவில் வைத்து எனது தந்தையிடம் ‘உங்கள் மகன் மிகச் சிறப்பான நூலொன்றை எழுதியுள்ளார்’ என பாராட்டியதுடன் பின்னர் அவரது அமைச்சில் வைத்து வைபவமொன்றில் 300 பிரதிகளை வாங்கி ஊக்கப்படுத்தினார்.
1993ல் வடகிழக்கு மாகாண கல்வி கலாசார அலுவல்கள் அமைச்சு சாகித்திய மண்டலப் பரிசுக்காக இந்நூலை தெரிவு செய்தது எனக்கு பெருமகிழ்வை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடந்த விழாவில் விருது, பொற்கிழி, பொன்னாடை என்பன வழங்கப்பட்டதுடன் இந்நூலின் சிறப்புக்களும் அம்மகாநாட்டில் கூறப்பட்டன. இவ்விழாவைத் தொடர்ந்து சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற முதல் மெளலவி என 'தினகரனில்” செய்தி வெளியிடப்பட்டது.
எனக்கு பல சிறப்புகளை ஏற்படுத்திய இந்நூலில் ஒரு பிரதி

Page 7
மதீனாவின் மாண்புகள்
கூட இல்லாமல் போனதால் இதனை மறு பிரசுரம் செய்ய வேண்டும் எனத் துணிந்தேன். இன்று அது ஈடேறுவது கண்டு மகிழ்கின்றேன்.
இதன் முதல் பதிப்பில் எவ்வித அறபு எழுத்துக்களும் இடம் பெற்றிருக்கவில்லை. இப்பதிப்பில் இயன்ற வரை குர்ஆன் ஹதீஸ்கள் அரபு மொழியில் இடம் பெற்றுள்ளன.
கடந்த மே மாதம் மதீனா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த சவூதிஅரேபிய பல்கலைக்கழக ஆசியாக்கண்ட பட்டதாரிகளுக்கான மூன்றாவது மகாநாட்டில் பேராளராக கலந்து கொண்ட போதும் கடந்த ஹஜ்ஜுக்கு சென்றிருந்த போதும் இந்நூலின் முதற் பதிப்பில் குறிப்பிட்டிருந்த மஸ்ஜிதுந்நபவியின் விஸ்தரிப்பு வேலைகள் பூரணமாக முடிவடைந்திருந்ததால் இது தொடர்பான விபரங்களை மஸ்ஜிதின் பொதுசனத் தொடர்பு அலுவலகத்திலிருந்து பெற்று அவ்விபரங்களையும் ‘மன்னர் பஹற்தின் விஸ்தரிப்பு’ என்று தலைப்பிட்டு அவ்விபரங்களை சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளேன்.
இதனை பல சிரமங்களுக்கு மத்தியில் பிரதி செய்து உதவிய எனது மாணவன் M.I.M. ரிஸ்வான் (ஹாமி) அவர்களும் எனது நூல்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் என்து வக்பு சபை சகாவும் சமூக நலன் விரும்பியுமான அல்ஹாஜ் முஸ்லிம் சலாஹ"தீன் அவர்களும் சமூக நலனில் அயராது உழைக்கும் சகோதரர் அல்ஹாஜ் M.S. பெளசுல்ஹக் அவர்களும் இந்நூலை சிறப்பாக அச்சிட்டு உதவிய AU PRINTS நிறுவனத்தினரும் இந்நூல்களுக்கு ஆதரவு தரும் வாசகர்களும் எனது நன்றிக்குரியவர்கள்.
வல்ல அல்லாஹற் எனது இச்சேவையை புனித தீனுக்குரிய சேவையாக ஏற்று அருள்புரிவானாக
மெளலவி எஸ். எச். ஆதம்பாவா 72, அல்ஹிலால் வீதி ۔۔۔۔ சாய்ந்தமருது.
02.08.2009

மதீனாவின் மாண்புகள்
உள்ளே
(1) மதீனா முனவிவறா
01. 02. 03. 04.
05. 06.
மதீனா முனல்வறா - வரலாறு மதீனாவின் மறுபெயர்கள் ஹதீஸின் ஒளியிலே மதீனாவின் சிறப்புக்கள் எது சிறந்த நகரம்? மதீனாவின் மாணிக்கங்கள்
மதீனாவின் விஷேட அம்சங்கள்
(2) மஸ்ஜிதுந் நபவி
0.
02. 03.
04.
05.
06.
07.
08.
09.
மஸ்ஜிதுந் நபவியின் சிறப்புக்கள் றவ்ளா ஷரீப்
LÓlbLuír
தூண்கள்
திண்ணை வாசிகள் ஹ"ஜ்ரா முபாறக்கா அறிவுச்சோலை விஸ்தரிப்பு வேலைகள் இரு சோக சம்பவங்கள்
(3) மதீனாவின் முக்கிய இடங்கள்
01.
02.
O3.
04.
05.
06.
07.
08.
09.
0.
.
12.
மஸ்ஜிதுல் குபா மஸ்ஜிதுல் கிப்லதைன் மஸ்ஜிதுல் முஸல்லா மஸ்ஜிதுல் இஜாபா மஸ்ஜிதுல் ஜும்ஆ மஸ்ஜிதுல் பதஹற் மஸ்ஜிது தில் ஹ?லைபா உஹறது மலை ஜன்னதுல் பகி. பி'று உதுமான் அல்குர்ஆன் அச்சகம் இஸ்லாமியப் பல்கலைக்கழகம்

Page 8

மதீனாவின் மாண்புகள்
O1 மதீனா முனவ்வறா
இந் நாமத் தைக் கேட் டாலே இனி ப வெள்ளத்திலே மூழ்கித்திணறுவர் முஸ்லிம்கள்! எங்குதான் அவர்கள் வாழ்ந்தாலும் எந்த மொழியைத்தான் பேசினாலும் மகிமைகள் நிறைந்த இம்மண்ணுக்கு அம்மக்கள் கொடுக்கும் கெளரவம் மட்டிலடங்காது! தீனுல் இஸ்லாத்தை பெரு விருட்சமாக வளரச் செய்ய இந்நகருக்கு இம்மணிணின் மைந்தர்களான அன்சாரீன்கள் செய்த சீர் மிகு சேவை இஸ்லாமிய வரலாற்றிலே என்றுமே அழிந்து விட முடியாத அளவுக்கு பசுமையாகப் பதிந்துள்ளது.
அறேபியாவின் தென் மேற்கிலே அமைந்துள்ள ஹிஜாஸ் மாகாணத்தில் முக்கிய நகரங்களில் ஒன்றான புனித மதீனா வரலாற்றுப் பெருமை கொண்ட புராதன நகரமாகும். செங்கடலிலிருந்து 230 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்நகரம் புனித மக்காவிலிருந்து சுமார் 450 கி.மீ. தூரத்தில் உள்ளது.
மகிமை மிகு மஸ்ஜிதுந்நபவி உட்பட பல மஸ்ஜித்களையும் புகழ்பெற்ற மலைகளையும் புராதன தலங்களையும் பல உயர் பாடசாலைகளையும் பல்கலைக்கழகங்களையும் பெறுமதி மிக்க நூல் நிலையங்களையும் தன்னகத்தே கொண்ட இந் நகரை நோக்கி உலகின் பல திசைகளிலிருந்தும் தினமும் வந்து கொண்டிருக்கும் மக்களின் வசதிக்காக பல நவீன வசதிகள் கொண்ட பாரிய ஹோட்டல்கள் விமான நிலையம் நவீன மிகு வைத்தியசாலைகள் பாரிய கடைத்தொகுதிகள் உட்பட
O1

Page 9
மதீனாவின் மாண்புகள்
உலகின் சகல பாகங்களுடனும் ஒரே நொடியில் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைத்தொடர்பு வசதிகள் என்பன நிறைவாகக் காணப்படுகின்றன. இந்நகரின் சுத்தத்தையும் அழகையும் பாதுகாப்பதில் நகர சபையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அதன் பின்னர் நேர்வழி பெற்ற முதல் மூன்று கலீபாக்கள் காலத்திலும் இஸ் லாமியப் பேருலகினி தலைநகரமாக விருந்த இந்நகரிலிருந்தே இஸ்லாமியச்சுடர் உலகமெங்கும் வியாபித்தது. பத்று, உஹது, மக்கா வெற்றி, தபூக் போன்ற புகழ் பெற்ற யுத்தங்களுக்கெல்லாம் இஸ்லாமியப்படை இங்கிருந்தே சென்றது. இஸ்லாமிய நாகரிகத்தை உருவாக்கி வளர்த்த இந்நகரின் நாமம் என்றும் நிலைத்து நிற்கக்கூடியது.
மஸ்ஜிதுந்நபவியை மையமாகக் கொண்டு அமைந்துள்ள இப்புனித நகர் ஒரு முன்னேற்றமடைந்த மாநகரிற்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
இதன் வரலாறு
மதீனாவின் ஆரம்பகாலப்பெயர் யத்ரிப் என்பதாகும். அழிந்து போய்விட்ட அறபியப் பிரிவுகளில் ஒன்றான அமாலிகா பரம்பரையைச்சேர்ந்த யத்ரிப் என்பவரே இங்கே முதன் முதலில் குடியேறி இந் நகரை உருவாக்கியதனால் இவரது பெயரைக்கொண்டே இந்நகர் அழைக்கப்படலாயிற்று. யத்ரிப் என்பவர் நூஹ (அலை) அவர்களின் மகன் சாம் என்பவரின் ஏழாவது தலைமுறையைச் சார்ந்தவராவார்.
02

மதீனாவின் மாண்புகள்
அமாலிகா என்போர் உடற் பருமனும் பலமும் நிறைந்த அறபு இன மக்களாவர். இவர்கள் அறேபியாவின் கிழக்கு நாடான ஈராக், திஹாமா மற்றும் ஷாம், ஹிஜாஸ், பஹற்றைன், மிஸ்று போன்ற நாடுகளில் பரந்து செறிந்து வாழ்ந்தனர். எகிப்தை ஆட்சி செய்த பிர்அவ்ன் கூட இப்பரம்பரையைச் சேர்ந்தவனே!
யத்ரிபின் தலைமையில் இந்நகரில் குடியேறிய இவர்கள் பல கட்டிடங்கள் வீடுகள் பேரீச்சமரத் தோட்டங்கள் என்பவற்றை நிறுவி இந்நகரத்தை உருவாக்கினர். வீரமும் செல்வாக்கும் நிறைந்த இவர்கள் பல நூற்றாண்டுகள் இந்நகரிலே அதிகார கர்வம் பிடித்தவர்களாக நீதி நியாயமின்றி எதேச்சாதிகாரமாகச் செயற்பட்டனர். இறுதியில் இவர்களின் கட்டுப்பாடற்ற அழிவு வேலைகளால் இவர் கள் படிப் படியாக அழிந்து கொண்டிருந்தனர்.
யூதர்கள் வருகை
அமாலிக்கர்கள் “யத்ரிப்” பிரதேசத்தில் அழிந்து கொண்டிருந்த போது ஜெரூசலத்தில் கி.மு. 600 ம் ஆண்டளவில் புக்தன்ஸர் எனும் அரசனால் யூதர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இவ்வாறு விரட்டப்பட்ட இவர்கள் அறேபியாவின் ஹிஜாஸ் மாகாணத்தில் குறிப்பாக யத்ரிப், கைபர் போன்ற இடங்களில் குடியேறினர். இவர்கள் பெருமளவில் இங்கே குடியேறியதால் பரம்பரை அறபிகளான அமாலிக்கர்கள் சிறுபான்மையினராகினர். வம்புத்தனங்களால் செல்வாக்கற்றுப்போன அறபிகளின் அதிகாரம் படிப்படியாக யூதர்கள் வசமாயின. சகல தோட்டங்களினதும் கட்டிடங்கள், சொத்துக்களினதும் உரிமையாளர்களாக யூதர்கள் மாறினர். பனூ குறைளா, பணு நுளைர், பனுகைனுகா ஆகிய கோத்திரங்களைச்சேர்ந்த இந்த யூதர்கள் எஞ்சியிருந்த அமாலிக்கர்களையும் துரத்தி விட்டு பலம் பொருந்திய இனமாக மாறினர். தமது
03

Page 10
மதினாவின் மாண்புகள்
பாதுகாப்புக் கருதி பல கோட்டைகளைக் கட்டியதுடன் விவசாயம், வியாபாரம் போன்ற சகல துறைகளிலும் முழு ஆதிக்கம் செலுத்தினர்.
யூதர்கள் மதீனாவிலே குடியேறியதற்கு பல காரணங்களை வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இறுதி நபியாக வரவிருப்பவர் பேரீச்ச மரங்கள் நிறைந்த ஒரு நகரிற்கு ஹிஜ்ரத் செய்து அங்கேயே வாழ்வார் என்று தவ்றாதில் கூறப்படுவதை அறிந்திருந்த யூதர்கள் அங்கு குறிப்பிடப்படும் நகரம் மதீனாதான் என அறிந்து அங்கே பெருமளவில் குடியேறினர். இன்னும் சிலர் மூஸா (அலை) அவர்களே இம்மக்களை பேரீச்சந் தோப்புகள் நிறைந்த இந்நகரில் குடியேறுமாறு பணித்தார்கள் எனக் கூறுகின்றனர்.
யூதர்கள் மதரீனாவில் குடியேறியதற்கு மற்றொரு காரணத்தையும் ‘வயாஉல் வபா’ வில் இமாம் ஸம்ஹ"தி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். மூஸா (அலை) அவர்கள் பிர்அவ்னை வெற்றி கொண்ட பின் ஷாம் நாட்டிற்கு வந்து அங்கு அநியாயங்களைச் செய்து கொணி டிருந்த கன்யானியர்களோடு போர் புரிந்து வெற்றி கொண்ட பின் ஹிஜாஸ் நாட்டில் அழிவும் அநியாயமும் செய்து கொண்டிருந்த அமாலிக்கர்களோடு போர் புரிந்து ஒருவரைக்கூட தப்ப விடாமல் அனைவரையும் கொன்று விட வேண்டும் என உத்தரவு பிறப்பித்து ஒரு படையை அனுப்பினார்கள்.
படை திரும் பி வருவதற் கிடையில் நபியவர்கள் காலமாகிவிட்டார்கள். ஹிஜாஸ் சென்ற படை முழு அமாலிக்கர்களையும் வெட்டி வீழ்த்திய பின் ஓர் அழகான வாலிபனை மட்டும் கொல்லாது தங்களுடன் கூட்டிக்கொண்டு வந்தனர். வெற்றியோடு திரும்பிய படை நபியவர்களின்
04

மதீனாவின் மாண்புகள்
கட்டளைக்கு மாறு செய்து எல்லோரையும் கொல்லாமல் ஒரு நபரை தம்முடன் கூட்டி வந்ததையிட்டு அதிருப்தியடைந்த மக்கள் இப்படைகள் எதுவும் தம்முடன் சேரக்கூடாது என கட்டளை பிறப்பித்தனர். செய்வதறியாது திகைத்த இப்படையினரே திரும்பிச்சென்று மதீனாவிலும் கைபறிலும் குடியேறினர்.
அவ்சு, கஸ்ரஜ் வருகை
அவ்சு, கஸ்ரஜ் என்பன த.லபா பின் அம்ரு என்பவரின் இரு ஆண் மக்களின் பெயர்களாகும். இவ்விருவரின் சந்ததிகளே அவ்சு, கஸ்ரஜ் என அழைக்கப்பட்டனர். இவர்களையே வரலாறு அன்ஸாரீன்கள் என்று பாராட்டி அழைக்கின்றது.யமன் நாட்டிலே ஏற்பட்ட சைலுல் அரிம் எனும் பாரிய வெள்ளத்தைத்தொடர்ந்து அங்கு வாழ்ந்த மக்கள் பல தேசங்களிலும் குடியேறினர். இவ்வெள்ளம் பற்றி அல்-குர்ஆனும் சூறா-அஸ்ஸபஉ வில் குறிப்பிடுகின்றது. இவ்வெள்ள அழிவைத்தொடர்ந்து யமனிலே வாழ்ந்த அவ்சு, கஸ்ரஜ் எனும் சகோதரக் குடும்பத்தினர் அவ்விடத்தை விட்டு நீங்கி மதீனா நகரில் குடியேறினர்.
இவர்கள் அங்கு பெரும் பலத்துடன் வாழ்ந்த யூதர்களுடன் நட்புறவு ஒப்பந்தம் ஒன்றையும் செய்து பரஸ்பரம் நல்லெண்ணத்துடனும் ஒத்துழைப்புடனும் வாழ்ந்து வந்தனர். காலஞ்செல்லச்செல்ல இம்மக்கள் பற்றிய நல்லபிப்பிராயமும் நம்பிக்கையும் செல்வாக்கும் வளர்ந்தன. இதனால் பொறாமை கொண்ட யூதர்கள் அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் முறித்து அவர்களை எதிரியாகக்கருதி தீங்கு செய்ய ஆரம்பித்தனர்.
05

Page 11
மதீனாவின் மாண்புகள்
சுதந்திரமாக அவர்களை வாழவிடாமல் வதை செய்தனர். இவர்களின் இன்னல்களைத் தாங்கவொண்ணாத அவ்சு, கஸ்ரஜ் பரம்பரையினர் ஷாம் தேசத்திலே குடியேறி அங்கே ஆட்சி செய்து கொண்டிருக்கும் தமது சகோதர பரம்பரையினரான ஹஸ்ஸானின்களிடம் சென்று யூதர்களின் கொடுமைகளை எடுத்துக்கூறினர். இந்த ஹஸ்ஸானின்களும் யமனிலேயிருந்து ஷாமிலே குடியேறியோர் என்பதும் அவர்கள் அன்ஸாரீன்களின் உறவினர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்த ஹஸ்ஸானின்கள் யூதர்கள் மீது மிகவும் வெறுப்புக்கொண்டவர்களாகவுமிருந்தனர்.
எனவே ஹஸ்ஸான் ஆட்சியினர் மதீனா யூதர்கள் மீது படையெடுத்து அவர்களை பின்வாங்கச் செய்தனர். இதனால் மதீனாவின் தலைமைத்துவம் அவ்சு கஸ்ரஜ் பரம்பரையினர் கைக்கு வந்தது.
யூதர்கள் சதி
அவ் சு, கஸ் ரஜ் ஆகிய சகோதர அறபியர்களின் கையோங் கியதைக் கணிடு கலக்கமுற்ற யூதர்கள் இவர்களிடையே பகைமையை மூட்டி பிளவை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டனர். ஒற்றுமையாகவிருந்த ஒரே குடும்பம் பிளவுபட்டது. இருவர் மத்தியிலும் சண்டைகள் மூண்டன. அவர்கள் மத்தியில் நடந்த புஆத் எனும் யுத்தம் முடிவடைய 120 வருடங்கள் எடுத்தன. பெரும் தலைவர்கள் மாணி டனர் . இறுதியில் 35 LD gll தவறுகளை உணரத்தலைப்பட்டனர். பிறருக்கு அடிமைகளாகி விட்டோம் என வருந்தினர். ஒற்றுமைப்பட வேண்டுமென்று உறுதி பூண்ட்னர். அவ்சுப் பிரிவைச்சேர்ந்த அப்துல்லா பின் உபை அவர்களைத் தலைவராக்கி மீண்டும் தமது பலத்தை நிறுவ
06

மதீனாவின் மாண்புகள்
முயற்சித்தனர். இவ்வேளை புனித மிகு மக்கா நகரிலே ஒரு நபி தோன்றி புனித மிகு இஸ்லாத்தைப் போதிப்பதைக் கேள்வியுற்று தமக்குள் தலைவரைத் தெரிவு செய்யும் முயற்சியைப் பின்போட்டனர்.
தாமதம் ஏன்?
நீண்ட பகைமையிலிருந்து மீண்ட மக்கள் மக்காவில் நபியொருவர் பிரசாரம் புரிகின்றார் என்பதைக்கேள்வியுற்ற உடனே தமக்குள் அவசரப்பட்டு ஆட்சியொன்றை நிறுவாமல் விட்டதற்கு பல நியாயங்களுள. அவ்சு, கஸ்ரஜ் பரம்பரையினர் சிலை வணக்கம் புரிபவர்களாக இருந்ததால் இந்நகருக்கு வரப்போகும் நபியுடன் இணைந்து தங்களுக்குச் சிறந்த பாடம் புகட்டுவோம் என யூதர்கள் அடிக் கடி அவ்சு, கஸ் ரஜ் மக்களை எச்சரித்துக் கொண்டிருந்தனர்.
மேலும் இந்நகருக்கு விரைவில் வரப்போகும் நபி பற்றி யூதர்களின் வேதத்தில் கூறப்பட்டிருப்பதை அறிந்து கொண்ட இம்மக்கள் அந்நபியைப் பகைக்காமல் அவருடன் இணைந்து வாழ வேண்டும் என்று ஏற்கனவே உறுதி பூண்டிருந்தனர்.
வரலாறு கூறும் மற்றொரு சம்பவம் என்னவெனில் நபி(ஸல்) அவர்கள் பிறப்பதற்கு 700 வருடங்கள் முன்பே மதீனா வந்த ஒரு யமன் தேச அரசருடன் 400 அறிஞர்களும் வந்தனர். சில நாட்கள் இங்கே தங்கி விட்டு அரசர் நாடு திரும்ப ஆரம்பித்தபோது அந்த அறிஞர்கள் அனைவரும் பிற்காலத்தில் இந்நகரில் நபி ஒருவர் வருவார். ஆகவே இந்நகரிலேயே நாங்கள் தங்க விரும்புகிறோம் எனக்கூறினர். இந்த அறிஞர்களை இப்புனித நகரில் தங்க அனுமதித்த அம்மன்னன்
07

Page 12
மதீனாவின் மாண்புகள்
அபூகரிப் என்பவர் எதிர்காலத்தில் வரவிருக்கும் நபிக்காக ஒரு மாடி வீட்டையும் கட்டி வைத்தார். இந்த அறிஞர்களின் பரம்பரையைச்சேர்ந்தவர்களே மதீனத்து அன்ஸாரீன்கள் எனவும் கூறப்படுகிறது. இவ்வளவு காலமும் தங்கள் பரம்பரை காத்திருந்த நபி வந்து விட்டார் எனக்கேள்வியுற்றதும் அம்மக்கள் தமக்குள் தலைமையை ஏற்படுத்தாமல் விட்டது ஆச்சரியமில்லையல்லவா?
மதீனாவில் இஸ்லாம்
அன்றைய அறபு மக்கள் நபி (ஸல்) அவர்களின் நபித்துவத்திற்கு முன்பும் மக்கா சென்று ஹஜ்ஜ" செய்யும் வழக்கத்தைக்கொண்டிருந்தனர். ஹஜ்ஜ" செய்யும் மாதமாகிய துல் ஹஜ்ஜ"மீ அதற்கு முந்திய துல் க..தா வும் ஹஜ்ஜுக்குப்பிந்திய முஹர்ரம் மாதமும் றஜபும் சங்கை வாய்ந்த மாதங்களாக அறபிகளிடம் மதிக்கப்பட்டின. இம்மாதத்தில் எவ்வித யுத்தத்திலும் அவர்கள் ஈடுபடுவதில்லை. இதனால் புனித ஹஜ்ஜுக்கு எவ்வித பயமுமின்றி பல தேச மக்களும் வந்து போகும் சூழ்நிலை அறபியாவில் நிலவியது. இவ்விதம் ஹஜ்ஜுக்கு வரும் மக்களைச்சந்தித்து இரகசியமாக இஸ்லாமியப் போதனை புரியும் பணியில் நபி (ஸல்) அவர்கள் ஈடுபட்டார்கள்.
மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்கு வந்த கஸ்ரஜ் குல மக்கள் சிலரை மினாவில் உள்ள அகபா எனுமிடத்தில் நபி(ஸல்) அவர்கள் சந்தித்து இஸ்லாத்தைப்போதித்ததுடன் அல் குர்ஆனையும் அவர் கட்கு ஒதிக் காண்பித்தார்கள். இப்போதனையைக்கேட்ட மதீனா வாசிகள் யூதர்கள் எம்மை எச்சரித்துக்கொண்டிருக்கும் நபி தூதர் நிச்சயமாக இவரேதான். இவ்விடயத்தில் நாம் அவர்களை விட முந்த வேண்டும் என
08

மதீனாவின் மாண்புகள்
தங்களிடையே பேசிக்கொண்டு சத்திய சன் மார்க்கத்தை மிகவும் பிரியமாக ஏற்றுக்கொண்டதுடன் மதீனா திரும்பிய அவர்கள் புனித மார்க்கத்தை போதிப்பதில் ஈடுபட்டனர். மதீனாவின் அனைத்து வீடுகளிலும் நபி(ஸல்) அவர்கள் பற்றிய பேச்சாகவே இருக்கும் அளவுக்கு இஸ்லாமியச் சுடர் மதீனாவில் பிரகாசிக்க ஆரம்பித்தது.
அடுத்த ஆண்டு ஹஜ்ஜுக்காலத்தில் பன்னிரண்டு மதீனா வாசிகள் மக்கா வந்து நபி (ஸல்) அவர்களை இரகசியமாகச்சந்தித்து புகழ் பெற்ற முதலாம் அகபா உடன்படிக்கையைச் செய்தனர். இவ்வொப்பந்தத்தில் தாங்கள் இனிமேல் இணைவைக்காமல் ஏக வல்ல அல்லாஹற்வை ஒருமைப்படுத்தி வணங்குவதாகவும் களவு, விபச்சாரம் போன்ற துர்ச்செயல்களில் ஈடுபடுவதில்லை என்றும் பிள்ளைகளை கொல வதில் லை என்றும் நல விடயங்களை ஏற்றுச்செயற்படுவதாகவும் உறுதி கூறினர். பின்னர் அவர்கள் நாடு திரும்பும் போது அவர்களுடன் மதீனா மக்களுக்கு மார்க்க போதனை புரிவதற்காக முஸ்அப் பின் உமைர் (ரழி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். இவர்களின் பிரச்சாரம் மதீனாவில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. ச.'து பின் முஆத் போன்ற தலைவர்களும் இஸ்லாத்தை ஏற்றனர்.
மறு ஆண்டு ஹஜ்ஜுக்கு வந்த மதீனா வாசிகள் அகபாவில் உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் நடு இரவில் நபி(ஸல்) அவர்களுடன் இரகசியமாகச் சந்திக்க ஏற்பாடாகியது. இச்சந்திப்பின் போது 73 ஆண்களும் இரு பெண்களும் இடம் பெற்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ் வேளை இஸ்லாத்தையே ஏற்றிராத தனது சிறிய தந்தை அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபுடன் அங்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே
09

Page 13
மதீனாவின் மாண்புகள்
அம்மக்களுக்கு த.வா அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கே மக்கள் இஸ்லாத்தை ஏற்றதுடன் நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தால் இஸ்லாத்தையும் நபி (ஸல்) அவர்களையும் பாதுகாப்பதாகவும் அதற்காக எவ்வித தியாகம் செய்யவும் தயார் எனவும் உறுதிப்பிரமாணம் எடுத்தனர்.
மதீனாவில் இஸ்லாத்திற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகியதால் மக்காவிலே துன்பத்திலே துவண்டு கொண்டிருந்த சஹாபாப்பெருமக்களை மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்யுமாறு நபியவர்கள் வேண்டினார்கள். பெரும் சஹாபாக்களான உமர்(ரழி), உதுமான்(ரழி), அப்துல் றஹற்மான் பின் அவ்பு (ரழி), சுபைர் பின் அவாம் (ரழி) போன்ற உத்தமத்தோழர்கள் உட்பட பல சஹாபாப் பெருமக்கள் புனிதமிகு மதீனா போய்ச்சேர்ந்தனர். இதன் பின்னரே குறைஷிகள் கொல்ல வந்த இரவில் நபி(ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரழி) அவர்களுடன் ஹிஜ்ரத் பயணத்தை ஆரம்பித்து மதீனா சென்றடைந்தார்கள்.
மதீனாவில் இறைதூதர்
எந்த மண்ணில் எங்கள் நபி(ஸல்) அவர்கள் பிறந்தார்களோ எந்த மக்களால் அல்-அமீன் எனப்புகழப்பட்டார்களோ எந்த மக்களை ஈடேற்றம் பெறச்செய்ய சுமார் 13 வருடங்கள் பாடுபட்டார்களோ அந்த மக்களால் அந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்டு அகதியாய் மதீனா வந்து சேர்ந்த அருமை நபி(ஸல்) அவர்களுக்குக் காத்திருந்த வரவேற்பு, மக்கள் உள்ளங்களிலே மகிழ்ச்சி ஆரவாரம் சொல்லுந்தரமன்று. இது போன்று மதீனா மக்கள் மகிழ்ச்சியடைந்த நாளை நாங்கள் காணவில்லை என மதீனத்து யூதர்கள் கூறுமளவிற்கு அம்மக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். பாதைகளிலே, வீடுகளிலே கூடிய மக்கள் முஹம்மது வந்து விட்டார், அல்லாஹற்வின்
10

மதீனாவின் மாண்புகள்
தூதர் வந்து விட்டார், அல்லாஹ் மிகப்பெரியவன் எனக்கூறி அவர்கள் அடைந்த ஆனந்தம் வார்த்தைகளால் வடித்தெழுத இயலாது.
ஹிஜ்ரத் வந்து “குபா’ நகரில் சில நாட்கள் தங்கியிருந்து அங்கே தங்களது திருக் கரங்களினால் கல் சுமந்து மஸ்ஜிதொன்றை நிறுவிய பின் இன்றைய மதீனாவை நோக்கி பயணம் தொடர ஆயத்தமானார்கள் நபி(ஸல்) அவர்கள். நீண்ட காலமாக நபி தூதரை எதிர்பார்த்திருந்த அன்பு நெஞ்சங்கள் தத்தம் இல்லங்களில் வந்து தங்குமாறு அன்புத்தொல்லை கொடுத்தார்கள். அப்போது நபியவர்கள் ஒரு யுக்தியைக் கையாண்டார்கள். ஆம் அதுதான் வந்த ஒட்டகம் எந்த இடத்தில் போய் கால் மடித்துப்படுக்கின்றதோ அந்த இடமே நான் தங்குமிடம் என்று கூறி ஒட்டகையின் கயிற்றை சோர விட்டு அதன் பாட்டில் விட்டார்கள். மக்களோ தங்கள் வீட்டில் அது படுக்கமாட்டாதா என ஏக்கத்தோடு நோக்கினர்.
அல்லாஹ தஆலா எந்த இடத்தில் எனது தங்குமிடத்தை விரும்புகின்றானோ அதனை அவனே தெரிந்து கொள்ளட்டும் என் நபிகளார் தன்பாட்டில் இருந்தார்கள். ஒட்டகம் இன்றைய மதீனாவைச்சுற்றிச்சுற்றி வந்தது. ஒவ்வொரு கிளையார்களும் தங்களது அண்டை ஒட்டகம் வந்த போது நபியே! எம்மிடம் வாருங்கள் என இரங்கினர். இறுதியாக இன்று “மஸ்ஜிதுந் நபவி’ உள்ள இடத்திலே தான் ஒட்டகம் கால்மடித்துப்படுத்தது. உடனே அதன் பக்கம் இருந்த பனுT நஜ்ஜார் கிளையைச்சேர்ந்த அபூ ஐயூபில் அன்சாரி (றழி) அவர்கள் ஓடி வந்து நபியவர்களை வரவேற்று தங்களினில்லம் அழைத்துச்சென்றார்கள்.
11

Page 14
மதீனாவின் மாண்புகள்
நபியவர்கள் குடிபுகுந்த இல்லம்
நபியவர்கள் விருந்தாளியாகச் சென்ற பனு நஜ்ஜார் கிளையினர் நபி(ஸல்) அவர்களின் உறவினராவர். அதாவது நபியவர்களின் பாட்டனாரான அப்துல் முத்தலிபின் தாயார் சல்மா என்பவர் இந்த பனூ நஜ்ஜார் கிளையைச்சேர்ந்தவரே. நபியவர்களின் தந்தை அப்துல்லாஹற், தாயார் ஆமினா போன்றோர் உறவினர்களான இந்த பனுT நஜ்ஜார் கிளையினரைச் சந்திக்க அடிக்கடி மதீனா வந்துள்ளனர். இவ்வாறு மதீனா வந்த சந்தர்ப்பத்திலேயே அப்துல்லாஹற்வும் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் நபி(ஸல்) அவர்கள் அபூ ஐயூபில் அன்சாரி (றழி) அவர்கள் வீட்டிலேயே குடியேறினார்கள். இந்த வீடு அபூ ஐயூபில் அன்சாரி (றழி) அவர்களின் மூதாதையினருக்கு அக்கால “ஹிம்யரீ’ அரசன் அபூகரீப் என்பவர் இந்நகரிலே எதிர் காலத்தில் ஒரு நபி வருவார். அவருக்காக இந்த வாசஸ்தலத்தைக் கட்டுகிறேன், என எதிர்கால நபிக்காக கட்டிவைத்த வீடே அது என வரலாறு கூறுகிறது. எனவே நபி(ஸல்) அவர்கள் மதீனா ஹிஜ்ரத் வந்து எவரது வீட்டிலுமல்ல தனது சொந்த வீட்டிலேயே தனது உறவினர்களிடமே குடியேறினார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மதீனாவின் மறு பெயர்கள்
“யத்ரிப்” என்ற பெயரில் இதுவரை காலமும் அழைக்கப்பட்டு வந்த மதீனாவை இனிமேல் அப்பெயர் கொண்டு அழைக்க வேண டாம் எண் றும் அவி வாறு கூறுபவர் பாவமன்னிப்புக்கோரட்டும் என்றும் நபித்துாதர் அவர்கள் அறிவித்தார்கள். காரணம் “யத்ரிப்” என்ற அறபுச் சொல்லின் பொருள் “இழிவானது, அருவருக்கத்தக்கது’ என்பதாகும்.
12

மதீனாவின் மாண்புகள்
புனிதமிக்க நகருக்கு பிழையான அர்த்தத்தைக்கொடுக்கும் பெயரை மாற்றி அதன் அந்தஸ்துக்கும் கெளரவத்திற்கும் ஏற்ற நல்ல நாமங்களை நபி(ஸல்) அவர்கள் ஆட்டினார்கள். இந்நகருக்கு குர்ஆனிலும், ஹதீஸிலும் பல பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அல்லாமா ஸம்ஹ"தி அவர்கள் தங்களது “வபா உல் வபா’ எனும் நூலில் 94 பெயர்களை குறிப்பிடுகின்றார்கள். அதிலிருந்து 50 பெயர்கள் இங்கே குறிப்பிடப்படுகின்றன.
அல்குர்ஆனிலே.
அர்ளுல்லாஹம் :ー ( அல்லாஹற்வின் பூமி )
“அல்லாஹற்வுடைய பூமி விசாலமானதல்லவா? நீங்கள் இருந்த அவ்விடத்தை விட்டு ஹிஜ்ரத் சென்றிருக்க வேண்டாமா என்று கேட்பர்.’ (அந்நிஸா 97ம் வசனம்)
தார் (இல்லம்) :- (ஈமான் (விசுவாசம்)
“எவர்கள் தார்’ ஐ தங்கள் ஊராகக் கொண்டு “விசுவாசமும்’ கொண்டிருந்தார்களோ. (ஹஷர் 9ம் வசனம்)
பைத்துர் றசூல் :ー (தூதரின் இல்லம்)
“உமதிறைவன் உமது இல்லத்திலிருந்து சத்தியத்தைக்கொண்டு உம் மை (பத்று யுத் தத்திற் கு) வெளிப் படுத்திய
சமயத்தில். (அன்பால் 5ம் வசனம்)
13

Page 15
மதீனாவின் மாண்புகள்
ஹஸனா (நல்ல இருப்பிடம்)
“எவர்கள் துன்புறுத்தப்பட்டு அல்லாஹற்வுக்காக தங்கள் ஊரை விட்டுப் புறப்பட்டார்களோ அவர்கட்கு நாம் இவ்வுலகில் நல்ல இருப்பிடத்தைத் (ஹஸனாவை) தருவோம்.
(நஹற்ல் 41)
முத்ஹல சித்க் - (உண்மை புகுந்து கொள்ளுமிடம்) “என் இறைவனே! என்னை உண்மையின் நுழைவிடத்தில் நுழையவை’
(அல் இஸ்றாஉ 80)
ஹதீஸிலே.
அக்காலத்துல் குறா:- ( சிறு கிராமங்களை உண்ணக்கூடியது.)
“நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சிறு கிராமங்களை உண்ணக்கூடிய (வெற்றி பெறக்கூடிய) ஓர் ஊரிற்கு ஹிஜ்ரத் செல்ல பணிக்கப்பட்டுள்ளேன்.
(முஸ்லிம்) மதீனாவின் மாண்பினால் மற்ற ஊர்களின் பெயர்கள் நிலைத்து நிற்காது என்பதே இதன் பொருளாகும்.
ஹறமு றசூலில்லாஹற்:- (றசூலுல்லாஹற்வின் புனித பூமி)
“இப்றாஹீம் (அலை) அவர்கள் மக்காவை புனித பூமியாகப்
பிரகடனப்படுத்தினார்கள். நானோ மதீனாவை புனித பூமியாக்கியுள்ளேன்.” (முஸ்லிம்)
14

மதினாவின் மாண்புகள்
தாறுல் ஈமான் :- ( ஈமானின் இல்லம்) குப்பதுல் இஸ்லாம் (இஸ்லாத்தின் முகடு)
“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதீனா விசுவாசத்தின் இல்லம், இஸ்லாத்தின் குப்பாவாகும்.” (அஹற்மத்)
தாபா :- (நறுமணமானது)
“நிச்சயமாக அல்லாஹ மதீனாவுக்கு “தாபா” எனப் பெயரிட்டுள்ளான்.” (முஸ்லிம்)
மகர்ரு :- (நிலையான இடம்) “யா அல்லாஹ்! இப்பூமியை தரிப்பிடமாகவும் சிறந்த “றிஸ்கு’ தரும் இடமாகவும் ஆக்கு என நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.”
(ஹதீஸ்)
s
தைபா :- (நறுமணமானது)
“மதீனாவை “யத்ரிப்” (இழிவானது) என அழைத்தார்கள். ஆனால் அல்லாஹற்வின் தூதர் அதற்கு தைபா (மணமானது) எனப் பெயரிடுகின்றார்.”
(புஹாரி)
ஹபீபா, முஹிப்பா, மஹற்பூபா
é é
"நபிய்வர்கள் இவ்வூரை அதிகம் நேசித்ததால் நேசம் மிகுந்தது’ என்ற பொருளுடைய மேற்கூறிய பெயர்கள் கூறப்பட்டன.
15

Page 16
மதீனாவின் மாண்புகள்
தாறுஸ்ஸ"ன்னா :- (சுன்னாவின் இல்லம்)
“இவ்வூரிலிருந்தே அதிக இடங்களுக்கு ஹதீஸ்கள் சென்றதால் ஹதீஸின் மூலமான மதீனா இப் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.
திர்உல் ஹஸினா - (பாதுகாப்புக்கவசம்)
“நான் ஒரு பாதுகாப்பான கவசத்திற்குள் இருப்பதாக கனவு கண்டேன்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹமத்) பாதுகாப்பான கவசம் என்பது மதீனாவைக் குறிக்கின்றது.
முபாறக்கா - (பறகத் செய்யப்பட்ட நகரம்)
“நபி(ஸல்) அவர்கள் இந்நகரத்திற்கு “ பறகத்” செய்யுமாறு துஆ செய்ததால் இப்பெயர் வழங்கப்பட்டது”
கர்யா - (கிராமம்)
அல்லாஹ இக் கிராமத்தை இணை வைத்தலிலிருந்து பரிசுத்தப்படுத்துகின்றான்.
ஏனைய பெயர்கள்
முஹாஜிறு றசூலில்லாஹற் இறைதூதரின் ஹஜ்ரத் பூமி மள்ஜஉ றசூலில்லாஹற் இறைதூதரன் உறங்கலிடம் கல்புல் ஈமான் விசுவாசத்தின் இதயம் தாறுஸ் ஸலாம் சாந்தி இல்லம்
16

மதினாவின் மாண்புகள்
தாறுல் பதாஹற் வெற்றியின் இல்லம்
தாறுல் ஹிஜ்றா ஹிஜ்ரத்தின் இல்லம்
கர்யதுல் அன்ஸார் அன்சாரீன்களின் கிராமம்
அக்காலத்துல் புல்தான் நாடுகளை வெல்லும் நகரம்
மஹற்பூழா தஜ்ஜால், கொலராவினை விட்டும்
பாதுகாக்கப்பட்ட நகரம்
மு.மினா உண்மை விசுவாசிகளின் தலம்
கைறா, கையறா அதிக நலன் நிறைந்த நகரம்
பார்ரா, பர்ரா, பஹறா நன்மை பயக்கும் நகரம்
தாதுந்நகீல் பேரீச்சம்பழ நகரம்
ஷாபியா சுவாத்தியமளிக்கும் நகரம்
ஆஸிமா தலை நகரம்
புஹைறா, பஹா விசாலமான நகரம்
முபய்யினுல் ஹலால் வல் ஹறாம் ஹலால் ஹறாமை பிரித்துக்காட்டுமிடம்
தாறுல் அப்றார்
தாறுல் அக்யார் நல்லவர்களின் இல்லம்
நப்லா சிறப்புக்குரியது
முக்தாறா சிறந்த நபிக்காக தெரிவு
செய்யப்பட்ட நகரம்
மர்சூகா சிறந்த நபி கொடுக்கப்பட்ட நகரம்
முஸ்லிமா இறைவனுக்கு அடிபணிந்த நகரம்
முதய்யபா மணமாக்கப்பட்ட நகரம்
சையிதத்துல் புல்தான் நகரங்களின் தலைவி
நாஜியா தஜ்ஜால் போன்ற கொடியவர்களில்
இருந்து ஈடேற்றம் பெறும் பூமி
மதீனத்துல் றசூல் (ஸல்) றசூல் (ஸல்) அவர்களின் நகரம்.
தவ்றாத்தில
அத்றாஉ, மிஸ்கீனா, காஸிபா, துறாஉ, சல்கா போன்ற
பெயர்கள் இந்நகருக்குதவ்றாத்தில் கூறப்பட்டுள்ளன.
17

Page 17
மதீனாவின் மாண்புகள்
ஹதீஸின் ஒளியிலே மதீனாவின் சிறப்புக்கள்
சிறப்புமிக்க ஹதீஸ் கிரந்தங்களை எடுத்து நோக்கும் போதெல்லாம் அங்கே மதீனாவின் சிறப்புக்கள் பக்கம், பக்கமாக நிரம்பியுள்ளதைக் காணலாம். உலகிலே இப்படியும் ஓர் ஊரா என வியக்கும் அளவுக்கு அதன் மாண்புகளை மனிதப்புனிதர் (ஸல்) அவர்கள் எடுத்துக்கூறியுள்ளார்கள்.
1- ஈமானின் உறைவிடம்
மற் றெலி லா மக்களையும் விட முஸ லிமி கள் மேன்மையானவர்கள் என்பதற்குக் காரணம் அவர்களிடம் இருக்கும் “ஈமான்’ என்ற இலட்சினை ஆகும். அது எவரிடம் அதிகம் உள்ளதோ அவர்களே மேன்மையானவர்கள் என்பதே இஸ்லாத்தின் கருத்து.
قال رسول الله صلى لله عليه وسلم: " إن الإيمان ليأزر إلى المدينة كما تـزر الحية إلى جحرها (متفق عليه )
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பாம்பு தன் புற்றினுள்ளே வந்து உறைந்து கொள்வது போல் நிட்சயமாக “ஈமான்’ மதீனாவில் இணைந்து கொள்ளும்”. அறிவிப்பவர்: அபூ ஹ"றைறா ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.
மேற்கூறிய ஹதீஸ் மஸ்ஜிதுந் நபவியில் உள்ள றவ்ளா ஷரீபிலும் எழுதப்பட்டுள்ளது.
பாம்பு இரை தேடுவதற்காக தன் பொந்திலிருந்து வெளியாகி இரைகளைப் பெற்றுக் கொண்டதும் தன் பொந்தினுள்ளே
18

மதீனாவின் மாண்புகள்
மீண்டும் வந்து நுழைந்து இருந்து விடுவது போல் மதீனாவிலிருந்து வெளியான “ஈமான்’ எனும் சுடரைப்பெற்ற விசுவாசிகள் மதீனா மீதும் அருமை நபி(ஸல்) மீதும் என்றும் தன் நேசத்தைக்கொண்டவர்களாகவே இருப்பர் என இந்த ஹதீஸுக்கு இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹற்) அவர்கள் தமது பத்ஹ"ல் பாரி எனும் புகாரி ஷரீபின் ஹதீஸ் விளக்க நூலில் எழுதுகின்றார்கள்.
இமாம் குர்துபி (ரஹம்) அவர்கள் இது பற்றி விளக்கம் கூறுகையில் “இநீ த ஹதீஸ் மதரீனா வாசிகளின் மார்க்கக்கருத்துக்களே சரியானவை, அவர்கள் “பித்அத்' களை விட்டும் பரிசுத்தமானவர்கள். அவர்களின் மார்க்கச்செயல்கள் எமக்கு ஆதாரமானவை” என்பதை வெளிப்படுத்துகிறது. என்கிறார்.
2- கெட்டவர்களை வெளியேற்றும் பூமி
நல்லவர்கள் வாழும் பூமி அது! அல்லாதவர்கள் அதனுள் வந்தால் அது அவர்களை அகற்றியே தீரும்.
இது தொடர்பாக வரும் ஹதீஸ்களை இனிக்கவனிப்போம்.
أمرت بقرية تأكل القرى، يقولون يثرب، وهي :
المدینه ، تنفی الناسی کما تنفی الکبیر خباتث الحديد(متفق عليه)
“கிராமங்களைத் தின்று விடக்கூடிய ஒரு கிராமத்தின் பால் ஹிஜ்ரத் செல்லுமாறு நான் ஏவப்பட்டேன். அதற்கு “யத்ரிப்” என்கிறார்கள். அது மதீனாவாகும். அது கொல்லனின் உலை
19

Page 18
மதீனாவின் மாண்புகள்
இரும்பின் கறளை நீக்கிவிடுவது போல் கெட்ட மனிதர்களை நீக்கி விடும்.
(புகாரி, முஸ்லிம்)
ஒரு நாட்டறயி நபியவர்களிடம் வந்து இஸ் லாத்தை ஏற்றுக்கொள்வதாக உறுதிப்பிரமாணம் எடுத்தார். மறுநாள் காய்ச்சல் பிடித்தவராக நபியவர்களிடம் வந்து தனது உறுதிப்பிரமாணத்தை வாபஸ் பெறுவதாக மூன்று முறை வந்து கூறினார். மூன்று முறையும் அதனை நிராகரித்த (ஸல்) அவர்கள்
" إنما المدينة كالكير تنفى خبثها وتنصع طيبها "
“கொல்லனின் உலை போன்றதே மதீனா. கெட்டவர்களை அது நீக்கி விடும். நல்லவைகளே அதில் எஞ்சி இருக்கும் எனக் கூறினார்கள்”. (புகாரி, முஸ்லிம்)
மேற்கூறிய கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. இவை அனைத்தும் மதீனாவின் பரிசுத்தத்தன்மையையும் சிறப்பையும் எடுத்துக் கூறிக்கொண்டிருக்கின்றன. நல்லவைகளே அதில் நிலைத்து நிற்கும் எனக்கூறும் போது அம்மண்ணின் புனிதத்துவம் பளிச்சிடுகின்றது. இந்த ஹதீஸ்களும் இதன் பின்னர் கூறப்படுகின்ற மதீனா மக்கள் தொடர்பான சில விடயங்களும் அது நபி (ஸல்) அவர்களினதும், உத்தம சஹாபாக்களினதும், தாபியீன்களினதும் காலத்தில் வாழ்ந்த மக்களை மட்டுந்தான் குறிக்கும் என சில அறிஞர்கள் கருத்துத்தெரிவிக்கின்றனர். ஆனால் ஹதீஸின் வசனங்கள் குறிப்பிட்ட சில காலத்தை மட்டும் சுட்டிக்காட்டாமல் இருப்பது அவதானிக்கத் தக்கதாகும்.
20

மதீனாவின் மாண்புகள்
3- கெடுவாய்! கேடு நினையாதே!
இஸ்லாம் வாழுமிடம் மதீனா! அதனை வாழவைக்கும் இடமும் அதுவே! எனவே இந் நகரையும், மக்களையும் அழித்து ஒழித்து விடலாம் என எவரும் நினைத்து விட முடியாது. அழிக்க நினைப்போர் அழிந்து விடுவர்! ஒழிக்க முயல்வோர் ஒழிந்து போவர்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ولا يريد أحد أهل المدينة بسوء y أذابه الله في النار ذوب الرصاص أو ذوب الملح في الماء
* மதீனா வாசிகளுக்கு கேடு செய்ய ஒருவன் நினைத்தால் அவனை அல்லாஹற் நெருப்பிலே ஈயத்தை உருக வைப்பது போல் அல்லது நீரிலே உப்பைக்கரைத்து விடுவது போல் நரகிலே அவனை அழித்து விடுவான்’. (முஸ்லிம்)
** لا يكيد أهل المدينة أحد إلا انماع كما ينماع الملح في الماء"
* மதீனா வாசிகளுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்பவன் நீரிலே உப்பு கரைவது போல் கரைந்து அழிந்து விடுவான்’ (புகாரி, முஸ்லிம்)
மேற்கூறிய ஹதீஸ்களின் நிதர்சன உண்மையை இன்று நாம் காணிகின்றோம். மதீனாவையும் இஸ் லாத்தையும் அழித்துவிடலாமெனக் கங்கணங் கட்டி நின்ற குறைஷிக் காபிர்கள் என்ற ஒரு கோஷ்டி இன்று மக்காவில் உள்ளதா? கூடவே இருந்து குழிபறிக்க நினைத்த, பாதுகாப்புக்கோட்டைகள் கட்டி வாழ்ந்த யூதர்களில் ஒருவராவது இன்று ஹிஜாஸிலே
21

Page 19
மதீனாவின் மாண்புகள்
உள்ளனரா? மதினாவை அழிக்க நினைத்த றோம சக்ராதிபதிகளும் பாரசீக இராசாக்களும் இன்று எங்கே? எனவே மதீனா கிராமங்களையும், நாடுகளையும் வெற்றி கொள்ளும் நகரமே தவிர அதனை எவரும் வெற்றி கொள்ள முடியாது. அந்தப்புனித பூமியிலே வாழும் மக்களை வாட்ட நினைப்போர் வாழ முடியாமல் வழி இழந்து தவியாய்த் தவிப்பர். .
4- இங்கே வசிப்பது ஏற்றமிக்கது
எத்தனை நாடுகள்தான் பிடிக்கப்பட்டாலும் அங்கே எப்படியான நாகரிகங்கள் புகுந்தாலும் மதீனாவில் வாழும் வாழ்க்கைக்கு அவைகளில் எதுவுமே ஈடாகாது. உண்மையான அறிவுள்ள மக்கள் புனித மிக்க இம்மதீனாவை விட்டும் பிரியவே மாட்டார்கள். வேறு ஊரில் குடிவாழப் போகவே மாட்டார்கள். எப்படியான செல்வந்த வாழ்க்கை வசதிகள் நாடுகளில் ஏற்பட்டாலும் மதீனாவைப்பிரியக்கூடாது என்பதே நபி தூதர் அவர்களின் கட்டளையாகும். நபி தூதர் (ஸல்) அவர்களின் பரிசுத்த ஹதீஸ் ஒன்றைக் கவனியுங்கள். “யமன் தேசம் வெற்றி கொள்ளப்படும். மக்கள் தங்கள் குடும்பங்களுடன் மூட்டை முடிச்சுக்களுடனும் மதீனாவை விட்டு வெளியேறி அங்கே குடியேறுவர். அவர்கள் அறிவுள்ள மக்களாயின் மதரீனாவில் வாழ்வதே அவர் கட்கு மேன்மையானது. ஷாம் தேசம் வெற்றி கொள்ளப்படும். மக்கள் அங்கே மூட்டை முடிச்சுக்களுடனும் குடும்பங்களுடன் குடியேறுவர். அவர்கள் அறிவுள்ள மக்களாயின் மதீனாவில் வாழ்வதே மேலானது. ஈராக் நாடும் வெற்றி கொள்ளப்படும். மக்கள் தங்கள் குடும்பம், பொருட்களுடனும் அங்கே குடியேறுவர். அவர்கள் அறிவுள்ள மக்களாயின் மதீனாவில் வாழ்வதே மேலானது.
22

மதினாவின் மாண்புகள்
(புகாரி, முஸ்லிம்) மேற்கூறிய ஹதீஸ் எதிர் காலத்தில் பிடிக்கப்படப்போகும் நாடுகள் பற்றிய நற்செய்திகளையும், அவ்வேளை மக்களின் மனநிலையையும், அவர்கள் மதீனாவிலேயே வாழ வேண்டிய அவசியத்தையும் எடுத்துக்கூறிக்கொண்டிருக்கிறது. இந்த ஹதீஸ் அறிவித்தது போல் நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், முதலாம் கலீபா அபூ பக்கர் (ரழி) அவர்களின் காலத்திலும் “எமன்’ நாடு பிடிக்கப்பட்டுவிட்டது. ஏனைய நாடுகளும் குலபாஉல் ராஷிதீன்களின் காலத்திலேயே வெற்றி கொள்ளப்பட்டு விட்டன. பரிசுத்தமான சிறப்புமிக்க இப்பூமியை விட்டு மக்கள் வெளியேறாமல் இருக்க இந்த ஹதீஸ் அம்மக்களுக்கு உதவியிருக்கும். நாடுகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவைகளை விட மதீனா மேலானது என்று மேன்மைமிக்க நபியவர்களே குறிப்பிட்டுள்ளார்களென்றால் இந்த நகரின் சிறப்புக்கு வேறு ஆதாரங்கள் தேவையா?
5. துன்பங்கள் ஏற்பட்டாலும்.
புனிதமிகு மதீனாவில் வாழும் போது பல பிரச்சினைகள், துன்பங்கள் தோன்றலாம். நோய்கள் ஏற்படலாம். அவற்றைக் கண்டு மனம் தளர்ந்துவிடக்கூடாது. அபூபக்கர் சித்தீக் (ரழி), பிலால் (ரழி) உட்பட பல சஹாபாப் பெருமக்கள் கூட மதீனாவுக்கு வந்து சேர்ந்த ஆரம்பகாலத்தில் அதன் காலநிலைக் குத் தாக்குப் பிடிக்க முடியாமல் நோய்வாய்ப்பட்டார்கள். மதீனாவில் என்னதான் சிக்கல்கள், சங்கடங்கள் ஏற்பட்டாலும் காலநிலைத்தாக்கங்கள், விலைவாசி உயர்வு, கடும் வெப்பம் போன்ற எப்பிரச்சினையாயினும் அதற்காகப் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு செய்வோர்கட்கு அல்லாஹற்வின் தூதர் (ஸல்) நாளை கியாமத்து நாளிலே பிழை பொறுக்கத் தேடுவதாகவும், ஷபாஅத் செய்வதாகவும் அறிவித்துள்ளார்கள்.
23

Page 20
மதீனாவின் மாணர்புகள்
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழி) அறிவிக்கிறார்கள். மதீனாவின் கஷடங்களின் மீது எவர் பொறுமை மேற்கொள்கிறாரோ அவருக்கு “ஷபாஅத்” செய்பவராகவும் அல்லது இறுதி நாளில் அவருக்கு சாட்சி கூறுபவராகவும் நான் இருப்பேன்.
(முஸ்லிம்)
சுபைர் (ரழி) அவர்களின் அடிமையான யுஹன்னஸ் என்பவர் அறிவிக்கின்றார். அவர் ஒரு பிரச்சினை நேரத்தில் இப்னு உமர் (ரழி) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தார். அவ்வேளை அவருக்கு ஸலாம் சொல்லிக்கொண்டு ஒரு பெண் வந்து அப்துர் றஹமானின் தந்தை அவர்களே எங்களுக்கு வாழ்வில் பெருங்கஷட நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் மதீனாவை விட்டுச் செல்லப்போகின்றோம் எனக் கூறினாள். இதைக்கேட்ட இப்னு உமர் அவர்கள் மடப்பெண்ணே! நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
عن ابن عمر رضي الله عنهما أنه قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : لا يصير على لأوانها وشدتها أجمل الإ
) كنت له شهيد ا أو شفيعا يوم القيامة
“மதீனாவின் கஷ்டத்தின் மீதும், துன்பங்களின் மீதும் எவர் பெர்றுமை செய்கின்றாரோ அவருக்கு சிபாரிசு செய்பவராகவும், சாட்சியம் சொல் பவராகவும் ஆகுவேன்” எனக் கூறியுள்ளார்கள். எனவே நீர் இவ்வூரை விட்டுப் போய் விடாதே எனக் கூறினார்கள். (முஸ்லிம்)
24

மதீனாவின் மாண்புகள்
மதீனாவிலே ஏற்படும் துன்பங்கள் கூட மனிதனின் எதிர்கால
சுபீட்சத்துக்கு வழியாக அமைந்து விடுகின்றன. இதுவும் அதன்
சிறப்பை வலியுறுத்தி நிற்கின்றன.
6- மரணிக்க மதீனாவை நாடுங்கள்
நபி (ஸல்) அவர்கள். அவர்களின் அருமை நண்பர்களான அபூபக்கர் (ரழி), உமர் (ரழி), உதுமான் (ரழி) போன்றோர் மரணித்த இடம் மதீனாவாகும். உலகிலே மேன்மை மிக்க இடம் எதுவெனில் உத்தமத்திருத்தூதர் (ஸல்) அவர்களின் மேனி அடக்கப்பட்ட இடம்தான் என பல ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. எனவே நபி(ஸல்) அவர்கள் இந்த ஊரிலே ஒருவர் மரணம் அடைந்து அங்கேயே அடக்கம் செய்யப்படுவதை மேன்மையுள்ளதாகக் கூறியுள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “ஒருவர் மதீனாவில் மரணிக்க முடியுமாயின் அங்கேயே அவர் மரணிக்கட்டும. அங்கே மரணிப்பவர்கட்கு நான் “வடிபாஅத்' செய்வேன்’ (ஆதாரம் : திர்மிதி, இப்னு மாஜா)
உமர்(ரழி) அவர்கள் மதீனாவில் மரணிப்பதை அதுவும் அல்லாஹ வின் பாதையில் மரணிப்பதை விரும்பி இருக்கிறார்கள். “புகாரி’ வடிரீபிலே வரும் ஓர் அறிவிப்பின்படி உமர் (ரழி) அவர்கள் பின்வருமாறு பிரார்த்தனை புரிந்தார்கள். “யா அல்லாஹற்! உன் பாதையில் வீர மரணத்தை எனக்குத் தருவாயாக! எனது மரணத்தை உனது நபியின் நகரிலே ஏற்படுத்துவாயாக!”
அவ்வளவு தூரம் மதீனாவில் மரணம் அடைவதன் சிறப்பை அவர்கள் அறிந்திருந்தார்கள். கலீபா உமர் (ரழி) அவர்கள் மஸ்ஜிதுந் நபவியிலே தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது ஒரு நெருப்பு வணங்கியால் குத்தி ஷஹிதாக்கப்பட்டதும்
25

Page 21
மதீனாவின் மாண்புகள்
அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களின் வீட்டில் நபி (ஸல்),
அபூபக்கர் (ரழி) ஆகியோர்கட்குப்பக்கத்தில் நல்லடக்கம்
செய்யப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
7. பாதுகாக்கப்பட்ட நகர்
உலக முடிவின் போது “தஜ்ஜால்” எனும் கொடியவன் தோன்றி அவன் செல்லும் இடமெல்லாம் வழி கெடுத்துக்கொண்டுவரும் வேளை மதீனாவில் நுழைய அவன் எவ்வளவுதான் முயன்றாலும் அவனால் அது முடியாமல் போய் விடும். புனித மிகு மதீனாவில் அவனை நுழையவிடாமல் மலக்குமார்கள் தடுத்து விடுவார்கள்.
இதே போல் பயங்கர காலரா நோய்களும் மதீனா மக்களைத் தாக்கமாட்டாது என்பதும் நபியவர்களின் கூற்றாகும். எனவே கொடிய இவ்வகையான நோய்களை விட்டும், கொடிய தஜ்ஜாலின் தீங்கை விட்டும் பாதுகாக்கப்பட்ட நகராக மதீனா உள்ளது. இது தொடர்பான நபி (ஸல்) அவர்களின் ஹதீஸைக் கவனிப்போம்.
عن أبي بكرة الثقفي رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: " لا يدخل المدينة رعب المسيح الدجال لها يومئذ سابعة أبواب، علی کل باب ملکان
( البخاري)
عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم: “ علــــی أنقاب المدينة ملائكة لا يدخلها الطاعون ولا الدجال (البخاري ومسلم ) “ தஜ்ஜாலின் பயங்கரம் மதீனா நகருள் நுழையாது. அந்நாளில் மதீனாவுக்கு ஏழு வாசல்கள் இருக்கும். ஒவ்வொரு வாசலிலும் இரு மலக்குகள் நின்று காவல் புரிவர்” (புகாரி)
26

மதீனாவின் மாண்புகள்
மதீனாவில் ஒவ்வொரு வாசல்களிலும் மலக்குமார்கள் நின்று காவல் புரிவர்.அதில் காலரா நோய்களும், தஜ்ஜாலும் உட்புக முடியாது” (புகாரி, முஸ்லிம்)
“கிழக்கிலே இருந்து தஜ்ஜால் மதீனாவை அடைவதையே நோக்கமாகக்கொண்டு உஹது மலையின் பின்புறத்தில் வந்து இறங்குவான். பின்னர் மலக்குகள் அவனது முகத்தை “ஷாமின்’ பக்கம் திருப்பி விடுவர். அவன் அங்கே சென்று அங்கேயே அழிவான்’
(புகாரி, முஸ்லிம்)
மேற்கூறிய ஹதீஸ்கள் மதீனாவினதும், அதன் மக்களினதும் சிறப்புக்களைத் துல்லியமாக விளக்கிக் கொண்டிருக்கின்றன.
8- மதீனாவின் பேரீச்சம் பழங்கள்
மக்காவுக்கு “ஸம்ஸம்’ நீர் போல மதீனாவுக்கு பேரீச்சம் பழங்களாகும். மதீனாவுக்கு எவ்வாறு சிறப்புள்ளதோ அவ்வூர் பேரீச்சம் பழங்களுக்கும் அவ்வாறு சிறப்புள்ளதை ஹதீஸ்கள் தெளிவாகக் கூறுகின்றன.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
قال رسول الله صلى الله عليه وسلم : " من تصبح كل يوم سبع تمرات عجوة لم يضره في ذلك اليوم سم ولا سحر
“ஒருவன் காலையில் ஏழு “அஜ்வா’ இன பேரீச்சம் பழங்களை சாப்பிட்டால் அந்த நாளில் அவனுக்கு நஞ்சாலோ,
27

Page 22
மதீனாவின் மாண்புகள்
சூனியத்தாலோ தீங்கு ஏற்பட மாட்டாது” (புகாரி, முஸ்லிம்) ஸஹிஹற் முஸ்லிம் எனும் கிரந்தத்தில் வரும் மற்றொரு ஹதீஸைக் கவனியுங்கள்.
من اکل سبع تمرات مما بین لابتیها حین یصبح لم یضره سم حتی تماسبي
“மதீனாவின் ஏழு பேரீச்சம் பழங்களை ஒருவன் காலையில் சாப்பிட்டால் அன்று மாலை ஆகும் வரை அவனுக்கு நஞ்சால் தீங்கு ஏற்பட மாட்டாது”
நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். “உயர் தர “அஜ்வா’ பழத்திலே நோய்க்கு மருந்து உள்ளது.” (முஸ்லிம்) மேலும் ஒரு ஹதீஸில்
"العجوة مسن الجنة وهي شفاء من السم" “அஜ்வா சுவனத்தில் நின்றுமுள்ளது. அது நஞ்சுக்கு நிவாரணியானது” (இப்னுமாஜா)
மேற்கூறிய ஹதீஸ்கள் மதீனாவின் பேரீச்சம் பழங்களின் அதிலும் குறிப்பாக “அஜ்வா’ இனப்பழங்களின் மகிமையை எடுத்துக்கூறுகின்றன. மனிதனுக்கு நோய் நிவாரணியாகவும் ஆபத்து வராமல் தடுக்கும் ஒளடதமாகவும் அப்பழங்கள் உள்ளன.
“அஜ்வா’ இனம் என்றதுமே பேரீச்சம் பழங்களில் பல இனங்கள் உள்ளனவா எனச் சிலர் வினவலாம். “இன்றைய
28

மதீனாவின் மாண்புகள்
மதீனா” எனும் அறபு நூலில் மதீனாவின் பேரீச்சம் பழங்களின் வகைகள் பின்வருமாறு கூறப்படுகின்றன.
1.அன்பரா 2.அஜ்வா 3.ഖg"ൺUT 4.ஸபாவி 5.ஹ"ல்வா 6.புர்ணி 7.பீள் 8.6 D60)6m)LDIT 9.ஷ"ப்றா 10. Olg|T60TT 11றபீஆ 12.சவிதா 13.சுக்கரியா 14.8 L 2 15.குன்புர் 16.துபர்ஜல் 17.புறுன்ஜி 18. LugögöITUUT 19.றுதானதுஷ் ஷர்க் 20.உம்முல் கஷப் 21.லவ்னா 22.றுபாஆ
“வபாஉல் வபா” என்ற புகழ்பெற்ற மதீனா பற்றிய நூலில் 130 க்கு மேற்பட்ட பேரீச்சம் பழவகைகள் கூறப்பட்டுள்ளன.
9. நபித்துரதரின் “துஆ” “பறக்கத்’ பெற்ற பூமி
மதீனாவுக்காகவும் அம்மக்களின் நல்வாழ்வுக்காகவும் நபி(ஸல்) அவர்கள் இறைஞ்சியுள்ள துஆக்கள் ஏராளம்! ஏராளம்! நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் மக்காவிலே தமது குடும்பத்தைக் குடியேற்றிய பின் அதன் எதிர் காலச்சந்ததியினருக்காக பிரார்த்தனைகள் செய்ததுபோல் எங்கள் நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்காக அதிகம் பிரார்த்தனை புரிந்தார்கள்.
சில ஹதீஸ்களைக் கவனிப்போம். நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்தித்தார்கள்.
الله سم بسارك لنسا في ثمرنا ، وبارك لنا في مدينتنا ، وبارك لنا في صناعنا ، وبارك لنا في مدنا ، اللهم إن إبراهيم عبدك وخليلك
29

Page 23
மதினாவின் மாண்புகள்
ونبيك وإني عبدك ونبيك وانه دعاك لمكة وانـي أدعوك للمدينة
“யா அல்லாஹ! எங்கள் பேரீச்சம் பழத்திலும், எங்கள் மதீனா நகரத்திலும் எங்கள் அளவைகளிலும் எங்கள் அள்ளுகளிலும் எங்கள் மீது நீ பறக்கத் செய்வாயாக! உனது அடியாரும் நபியும் தோழருமாகிய இப்றாஹீம் மக்காவுக்காக உன்னிடம் பிரார்த்தனை புரிந்தார். உனது அடியாரும் நபியுமாகிய நான் மக்காவுக்குச்செய்த “பறக்க” த்தில் இரு மடங்கு மதீனாவுக்கு செய்யுமாறு பிரார்த்திக்கிறேன்” (முஸ்லிம்)
"اللهم اجعل بالمدينة ضعفى ما بمكة من البركسة" “யா அல்லாஹ! மக்காவுக்கு நீ செய்த பறக்கத்தின் இரு மடங்கை மதீனா மீது சொரிவாயாக!” (புகாரி, முஸ்லிம்)
மதீனா வாசிகளும் அடிக்கடி நபி(ஸல்) அவர்களிடம் சென்று தங்களது விளைச்சல்களைக் காண்பித்து அவர்களிடம் பிரார்த்தனை புரியுமாறு கூறுவார்கள். அபூ ஹ"றைறா (ரழி) அறிவிக்கிறார்கள். “மதீனா மக்கள் தங்களின் முதல் விளைச்சலைப்பெற்றதும் அதனை எடுத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வருவார்கள். அதனை நபி (ஸல்) அவர்கள் எடுத்து “யா அல்லாஹ் எங்கள் பழங்களிலும், நகரத்திலும் அளவைகளிலும் அள்ளுகளிலும் எமக்கு அருள் புரிவாயாக! நபி இப்றாஹீம் மக்காவுக்கு பறக்கத் கோரி பிரார்த்தித்தது போல் இரு மடங்கு மதீனாவுக்கு அருள் சொரிவாயாக! எனப்பிரார்த்தித்து விட்டு சிறு பிள்ளைகளைக் கூப்பிட்டு அப்பழங்களைக் கொடுத்து விடுவார்கள்’
(முஸ்லிம்)
30

மதினாவின் மாண்புகள்
உண்மையில் எங்கள் நபி(ஸல்) அவர்கள் மதீனா மீது எவ்வளவு அன்பு கொண்டிருந்தார்கள் என்பது அவர்களின் துஆக்களில் தெளிவாகின்றன. நிச்சயம் அவர்களின் துஆவின் பறக் கதி அங்கே வாழும் மக்களுக்கு என்றும் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
10- மதீனா ஒரு புனித பூமி
இஸ்லாத்திலே புனித பூமிகள் மூன்று ஆகும். மக்கா, மதீனா, பைத்துல் மக்திஸ் ஆகியவையே அவை. இதனை அறபியில் “ஹறம்” எனக்கூறப்படும். “ஹறம்’ எல்லையில் செய்யக்கூடாத சில விடயங்கள் சட்ட நூல்களில் கூறப்பட்டுள்ளன. மதீனாவும் ஒரு புனித “ஹறம்’ பூமியாகும்.
إن إبراهيم حرم مكة ودعا لها وحرمت المدينة كما حرم إبراهيم مكة "
Gé
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இப்றாஹீம் மக்காவை புனித பூமியாகப் பிரகடனப்படுத்தி அதில் வாழும் மக்களுக்காகவும் பிரார்த்தனை புரிந்தார். இப்றாஹீம் மக்காவை புனித பூமியாகப் பிரகடனப்படுத்தியது போல நாணி மதரீனா வை புனித பூமியாகப் பிரகடனப்படுத்துகிறேன். ཧ
(புகாரி, முஸ்லிம்)
“இப்றாஹீம் மக்காவை “ஹறம்’ ஆக ஆக்கினார். நான் மதீனாவை ஈறு, தவ்று ஆகிய மலைகளுக்கிடையே “ஹறம்’ ஆகப்பிரகடனப்படுத்துகிறேன். அதிலே உள்ள மரக்கிளைகள் வெட்டப்படவோ, அதன் மிருகங்கள் வேட்டையாடப்படவோ கூடாது”
(முஸ்லிம்)
31

Page 24
மதீனாவின் மாண்புகள்
மக்காவைப் போன்றே மதீனாவும் “ஹறம்’ என்று நபி(ஸல்) அவர்கள் அழுத்தமாகக் கூறுவதால் மக்காவுக்குரிய “ஹறம்’ சட்டமே மதீனாவுக்கும் பிரயோகிக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது. எனவே குறிப்பிடப்பட்ட ஈறு, தெளறு மலைகளுக் கிடையே உள்ள பிரதேசத்தில் எந்த மிருகங்களையும் வேட்டையாடவோ, அதில் உள்ள மரங்களை வெட்டவோ கூடாது. அவ்வாறு செய்வது விலக்கப்பட்டதாகும்.
மேலும் ஒரு ஹதீஸில் அங்கு “எந்தப் பொருட்களையும் பொறுக்கி எடுக்கக் கூடாது’ என்றும் ஒருவனைக் கொல்வதற்கு ஆயுதம் ஏந்த முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. “ஈறு’ என்பது மதீனா வாசிகள் இஹற்றாம் கட்டும் துல்ஹ"லைபா எனும் இடத்திற்குப் பக்கத்தில் உள்ள மலையாகும். தவ்ர் என்பது உஹதுக்குப் பின்னால் உள்ள ஒரு சிறு மலையாகும். இவ்விரண்டுக்கும் இடைப்பட்டதே புனித பூமிக்குரிய எல்லையாகும்.
எனவே புனித மிக்க பிரதேசமான மதீனா செல்லும் நாம் நபி(ஸல்) அவர்களின் போதனைக்கேற்ப அம்மண்ணின் புனிதம் கெடாமல் நடந்து கொள்ள வேண்டியது கடமையாகும்.
எது சிறந்த நகரம்?
உலகிலேயுள்ள நகரங்களில் மக்கா, மதீனா இரண்டுமே மேன்மையானது என்பதில் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கருத்து வேற்றுமை கிடையாது. ஆனால் இவ்விரண்டு நகரங்களில் எது மேலானது என்பதில் அவர்கள் மத்தியிலே கருத்து வேற்றுமையுள்ளது. மக்காவின் அறிஞர்கள் தங்கள் ஊரையும், மதீனாவின் அறிஞர்கள் தங்கள் ஊரையும்
32

மதீனாவின் மாண்புகள்
மேம்படுத்தி விவாதங்களில் ஈடுபட்டுள்ளமை வரலாற்று நூல்களில் காணக்கிடக்கின்றன.
வபாஉல் வபா எனும் கிரந்தத்தில் அல்லாமா சம்ஹ"தி பின்வரும் சம்பவத்தைக் குறிப்பிடுகின்றார். மக்காவாசிகள் மக் காவின் மேன் மை யை உயர்த்தி ஒரு நூலை வெளியாக்கினர். அதேபோல மதீனத்து மக்களும் ஒரு நூலை வெளியிட்டனர். எது மேன் மையுடையது என்பதில் அவர் கட் கிடையே விவாதம் நடந்தது. இவ்வேளை மதீனாவாசிகள் ஒரு வினா எழுப்பினர். ஒரு மனிதன் எந்த இடத்தில் இருந்து எடுக் கப் பட்ட மணி னினால படைக்கப்படுகின்றானோ அதே இடத்தில்தான் அவன் அடக்கப்படுவான். அவ்வாறெனில் மிகச்சிறந்த படைப்பாகிய நபி(ஸல்) அவர்களைப்படைப்பதற்கு அல்லாஹற் மதீனா மண்ணையே தெரிவு செய்திருந்தால் எந்த மண் மேலானது? இவ்வினாவுக்கு விடையளிக்க முடியாது மக்காவாசிகள் வாய் மூடினர்.
மதீனாவே மேலானது என்ற கொள்கையை உடையவர்களில் உமர் பின் கத்தாப் (றழி), அவரது மகன் அப்துல்லாஹற் (றழி), இமாம் LDT 6jas (ற ஹர்) போன் றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இமாம் மாலிக் (றஹற்) தங்களது முவத்த:' எனும் கிரந்தத்தில் பின்வரும் சம்பத்தைக் குறிப்பிடுகின்றார்.
“ஒரு முறை உமர்(றழி) அவர்கள் இப்னு இயாஸ் மக்குமி அவர்களிடம் நீங்கள் மதீனாவை விட மக்காதான் மேலானது என்று கூறினீர்களாம் உண்மைதானா? என்று கேட்டார். அதற்கு இப்னு இயாஸ் அவர்கள் ஆம் அது அல்லாஹவின் புனித பூமியும் அவனது பாதுகாப்புக்குரிய இடமுமல்லவா? அவனது
33

Page 25
மதீனாவின் மாண்புகள்
வீடான கட்பாவும் அங்கல்லவா இருக்கின்றது என்றார்கள். அப்போது உமர்(றழி) அவர்கள் நான் அல்லாஹ்வின் புனித பூமி பற்றியும் அவனது வீடு பற்றியும் கேட்கவில்லை. மக்கா நகர் மதீனாவை விட மேலானதா? இதுதான் கேள்வி என்றார்கள். இப்னு இயாஸ் பதிலளிக்கவில்லை’.
“இமாமுல் மதீனா” என அழைக்கப்பட்ட இமாம் மாலிக் (றஹற்) அவர்களின் கருத்து என்னவெனில் “உலகில் மேன்மையானது கட்பதுல்லாஹ் ஆகும். கஃபாவைத்தவிர்த்து பூமிகளில் சிறந்தது மதீனாவாகும். அடுத்ததே மக்காவாகும்.” இதுவே இமாம் அஹற்மத் பின் ஹம்பல் (றஹற்) அவர்களின் கருத்துமாகும்.
இமாம் மாலிக் (றஹற்) அவர்கள் இந்நகருக்கு கொடுத்த கெளரவம் வரலாற்றிலே குறிப்பிடத்தக்கதாகும். இமாமவர்கள் முவத்த. எனும் புகழ்பெற்ற ஹதீஸ் கிரந்தத்தைத் தொகுத்தவர். ஒரு முறை ஹஜ்ஜுக்கு வந்திருந்த கலிபா ஹாறுன் அல் ரஷிது அவர்கள் இமாமவர்களிடம் “தங்களுக்கு வீடு இருக்கிறதா? எனக் கேட்டார்கள். இமாமவர்கள் இல்லை என்றதும் மூவாயிரம் தீனார் காசுகளை அவரிடம் கொடுத்து வீடு ஒன்றை வாங்கிக்கொள்ளுமாறு கலீபா அவர்கள் கூறினார்கள். இமாமவர்கள் வீட்டை உடன் வாங்கவில்லை. பின்னர் கலீபா அவர்கள் பக்தாத் திரும்பும் போது இமாமவர்களை அழைத்து உஸ்மான் (றழி) அவர்கள் குர்ஆனுடன் மக்களுக்கு தொடர்பை ஏற்படுத்தியது போல் நான் முவத்த.வுடன் தொடர்பை ஏற்படுத்த விரும்புகிறேன். எனவே என்னுடன் தாங்களும் பக்தாத் வரவேண்டும் எனக் கலீபா வேண்டுகோள் விடுத்தார். அப்போது இமாமவர்கள் கலீபாவிடம் “அறிவுள்ள மக்களாயிருப்பின் மதீனாவில் வாழ்வதே மேலானது” என்ற ஹதீஸையும், “மதீனா கெட்டவர்களை வெளியேற்றும்’ என்ற ஹதீஸையும்
34

மதீனாவின் மாண்புகள்
சுட்டிக்காட்டி என்னால் மதீனாவை பிரிந்து அங்கு வர முடியாது. விரும்பினால் தாங்கள் எனக்குத்தந்த பணத்தை மீளப்பெற்றுக் கொள்ளுங்கள். மதீனா நகருக்கு பிரதியீடாக உலக சுகங்களை நான் பெறப் போவதில்லை எனத் திட்டமாகத் தெரிவித்தார்கள் மதீனாவின் இமாம் மாலிக் அவர்கள்.
இரண்டாம் உமர் என வர்ணிக்கப்படும் உமர் பின் அப்துல் அஸிஸ் (றஹற்) அவர்கள் மதீனாவின் கவர்னராகவிருந்து இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் அமீருல் மு.மினினாகப் பதவியேற்க திமஷ்க் செல்ல நேர்ந்த போது மதீனாவின் பிரிவை எண்ணி கவலையடைந்தார்கள். மதீனாவே நீ வெளியேற்றும் பாவியாக நான் ஆகி விட்டேனோ எனக்கூறி அழுதார்கள். எனவே மதீனாவில் வாழ்வதையும் அங்கேயே மரணிப்பதையும் பெரும் பேறாகக் கருதி வாழ்ந்தனர் மேன்மக்கள். அவர்கள் வாழ்வதற்கு மக்காவை விட மதீனாவையே சிறந்த பூமியாகக் கருதினர். ஏனெனில் நபி தூதர் அவர்களின் துஆ பரக்கத்தை தனதாக்கிக்கொண்ட பூமியல்லவா அது.
மதீனாவின் மாணிக்கங்கள்
மதீனா நகர் எவ்வளவு சிறப்பானதோ அதில் வாழ்ந்த மக்களும் மிகச் சிறப்புவாய் நீத மக்களாக வரலாற்றிலே மதிக்கப்படுகின்றனர். மதீனத்து மக்கள் மக்காவிலிருந்து மதீனா சென்ற முஹாஜிர்களை (அகதிளை) அன்போடு வரவேற்று உபசரித்த விதம் மனித வரலாற்றில் எங்கும் காண முடியாத அரும் நிகழ்ச்சியாகும். இந்த அரும் பணிக்காகவே அணி ஸா ரீன் கண் (உதவியாளர்கள்) என்ற சிறப்பு
35

Page 26
மதீனாவின் மாண்புகள்
வார்த்தைகளால் இஸ்லாம் வாழும் காலமெல்லாம் அவர்கள் வாழ்த்தப்படுகின்றார்கள்.
அம்மக்களின் மனநிலை பற்றி அல்லாஹற் கூறுகிறான். “எவர்கள் மதீனாவை தங்கள் ஊராக்கிக் கொண்டு விசுவாசமும் கொண்டிருந்தார்களோ இவர்கள் ஹிஜ்ரத் செய்து தங்களிடம் வருவோரை அன்பாக நேசித்து வருவதுடன் அவர்களுக்கு கொடுக்கப் படுவதைப் பற்றியும் தங்கள் நெஞ்சத்தில் குறையாகக் காண்பதில்லை. அன்றி தங்களுக்கு வறுமையே நேரினும் தங்களை விட, அவர்களுக்கே (கொடுக்கப்படுவதைத்) தேர்ந் தெடுத்துக் கொள்கின்றனர்”. (அல்-ஹஷர்-09)
அன்ஸாரீன்களை நேசிப்பவன் மு.மின், அவர்களை கோபிப்பவன் முனாபிக். அவர்களை நேசிப்பவனையே அல்லாஹ நேசிக்கிறான். அவர்களை கோபிப்பவனை அல்லாஹற் கோபிக்கிறான். (ஹதீஸ்)
மக்காவிலே இருந்து கொண்ட கொள்கைக்காய் துரத்தப்பட்டு அல்லல்பட்டு அகதிகளாக வந்த மக்களை இன்முகம் கூறி வரவேற்று தன்னிடம் இரண்டு வீடு இருப்பின் ஒன்றை அந்த அகதிகளுக்கு அன்பளிப்புச் செய்து, தனது சொத்துக்களில் சரி பாதியை, தோட்டங்களில் சரி பாதியை, மனைவியின்றி வந்தவர்கட்கு தனது இரு மனைவிகளில் ஒன்றை விவாகரத்துச் செய்து கொடுக்க முன்வந்த மக்களை இது போன்ற வரலாற்றை மனித வரலாற்றில் யாராலும் கூற முடியுமா? அவ்வாறு சரித்திரம் படைத்த சான்றோர்கள் தான் அன்ஸாரீன்கள்.!
36

மதீனாவின் மாண்புகள்
பிறந்த மண்ணிலே பெருமானார் போதித்த சத்திய மார்க்கத்தை பின்பற்ற மறுத்து படுகொலை செய்ய முன்வந்த மக்கா மக்களுடன் மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக் காலத்தைப் பயன்படுத்தி மக்கா சென்று இரகசியமாக நபியவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்று அம்மார்க்கத்துக்காக உயிரை விடவும் தயார் என்று சத்தியம் செய்து திரும்பியது மட்டுமல்லாமல் அந்தக் குறைஷரியர் கட் கெதிராக பத் ர், உஹது போர்க்களங்களிலே இன்னுயிரை தியாகம் செய்யவும் முன்வந்த அம்மாணிக்கங்களை ஒப்பிடும்போது அம்மாணிக்கங்களின் சிறப்புத்தான் என்னே! அதோ உஹது யுத்தம்! பயங்கரமாக நடைபெறுகிறது! அன்ஸாரிப்பெண்ணான உம்மு அம்மாறா அக்களத்திலே நீர்த் தொட்டிகளைத்தாங்கி முஸ்லிம் வீரர்கட்கு நீர் விநியோகித்துக் கொண்டிருக்கிறார். முஸ்லிம்களுக்கு தோல்வி ஏற்பட்டுக்கொண்டிருந்த போது நீர்த் தொட்டியை தூக்கி எறிந்து விட்டு வாளை ஏந்தி போர்க்களம் பாய்கிறார் அம்மாதரசி உம்மு அம்மாறா.
உஹது யுத்தம் ஓய்ந்து கொண்டிருக்கிறது. நபி(ஸல்) அவர்கள் ஷஹிதாக்கப்பட்டார்கள் என்றதொரு வதந்தி ஸஹாபாக்கள் அபூபக்கர், உமர் உட்பட பலர் மலையோரத்தில் இருந்து கொண்டிருக்க, அவ்வேளை அன்ஸாரியான அனஸ் பின் நள்ளு என்பவர் சென்று ஏன் இருந்து கொண்டிருக்கிறீர்கள்? என வினவ நபியவர்கள் கொல்லப்பட்டார்கள் எனக் கூறப்படுகிறதே எனக்கூற அப்படியானால் அவர்கட்குப்பின் எமது வாழ்வின் பயன் என்ன? போர்க்களத்திலே குதியுங்கள், அவர்கள் சென்ற பாதையிலே நீங்களும் செல்லுங்கள் என உரமேற்றி போர்க்களத்திலே பாய்ந்த அனஸ் அவர்கள் எழுபது வெட்டுக்களை எதிரிகள் மீது பாய்ச்சி இறுதியில் அவரும் ஷஹிதாக்கப்பட்டார்.
37

Page 27
மதீனாவின் மாண்புகள்
இவர்கள் தான் அன்ஸார்கள். இவர்களின் இஸ்லாமிய உணர்வை, சேவையை எழுத ஏட்டினால் முடியாது. வரலாற்றில் மணம் பரப்பும் விலைமதிப்பற்ற மாணிக்கங்கள் அவர்கள்!
மதீனாவின் விஷேட அம்சங்கள்
மதீனா மாநகர் பல் விஷேட சிறப்பம்சங்களைத் தாங்கி இருக்கின்றன. அவற்றை பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்.
-
புனிதமிக்க நபி(ஸல்)அவர்களின் புனித கப்ர் அங்கே உள்ளது. மாண்புகள் நிறைந்த பல தலங்களைத் தன்னகத்தே கொண்ட பூமி அது. நபி முஹம்மது (ஸல்) அவர்களே அதனைப்புனித பூமியாக பிரகடனம் செய்தார்கள். பத்தாயிரத்துக்கு மேற்பட்ட ஸஹாபா பெருமக்கள் அம்மண்ணிலே அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். மதீனா அல்குர்ஆனினால் வெற்றி கொள்ளப்பட்ட நகர். அந் நகரிலிருந்தே பல நாடுகள் வெற்றி கொள்ளப்பட்டன. மக்கா வெற்றியின் முன்னர் அந்நகரை நோக்கி ஹிஜ்ரத் செல்வது மார்க்கக் கடமையாக இருந்தது. அந்நகரிலே வாழுமாறும், அதன் கஷடங்களை தாங்கிக் கொணி டு பொறுமை செய்யுமாறும் அம்மண்ணிலேயே மரணிக்குமாறும் ஹதீஸ்கள் உற்சாகமூட்டுகின்றன. அம்மண்ணுக்கும், மக்களுக்கும் “பரக்கத்’ செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் பல முறை “து ஆ’ச் செய்துள்ளார்கள்.
38

மதீனாவின் மாண்புகள்
10
11
12
13
4
15
16
17
18
19
20
21
அம்மண் கெட்டவர்களை வெளியேற்றி விடும். அங்கே வாழும் மக்களுக்கு கெடுதி விளைவிக்க நினைப்பவன் அழிக்கப்படுவான். அது ஈமான் வாழும் தலம். இஸ்லாத்தின் உறைவிடம். தஜ்ஜாலின் தீங்குகளை விட்டும் காப்பாற்றப்பட்ட பூமி. கொலரா நோய் அம்மக்களைப் பீடிக்காது. நபி(ஸல்) அவர்களின் மஸ்ஜித் அங்கேயே உள்ளது. அதனை அமைக் கும் பணியில் அவர்களே ஈடுபட்டார்கள். நபிமாரால் கட்டப்பட்ட இறுதி மஸ்ஜித் அது. பிரயாணம் அனுமதிக்கப்பட்ட மூன்று மஸ்ஜித்களில்
அதுவும் ஒன்று.
ரவ்ளா ஷரீபை தன்னகத்தே கொண்ட பூமி. புனித மிம்பர் உள்ள மஸ்ஜிதைக் கொண்ட பூமி. உஹது மலையையும், வாதி "அகீக்” கையும் கொண்ட Ամ). உலகில் மிகச் சிறந்த பூமி என அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதும், அன்ஸாரீன்கள் வாழ்ந்ததுமான ஏற்றமிகு பூமி. கலீபாக்களான அபூபக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான்(ரழி) ஆகியோரின் ஆட்சியின் போது இஸ்லாமிய உலகத்தின் தலை நகரமாக இருந்த Ալճl.
39

Page 28
மதீனாவின் மாண்புகள்
02
01- மதீனாவில் மஸ்ஜிதுந் நபவி
மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்து சேர்ந்த நபி(ஸல்) அவர்கள் முதன் முதலில் இஸ்லாத்தின் கேந்திர ஸ்தானமான மஸ்ஜிதை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அம்மஸ்ஜிதுக்காக அவர்கள் தேர்ந்தெடுத்தது அவர்கள் மதீனா வந்த போது ஒட்டகை கால் மடித்துப்படுத்த இடமாகும். அத்தலம் பனு நஜ்ஜார் கிளையைச் சேர்ந்த முஆத் பின் அப்றாஉ என்பவரின் பராமரிப்பிலுள்ள சஹற்ல், சுஹைல் எனும் இரு சகோதரர்களான அநாதைப் பிள் ளை கட் குச் சொந்தமானதாகும்.
பேரீச்சை மரங்களும், சில முஷ்ரிகீன்களின் புதைகுழிகளும் இருந்த இந்நிலத்துண்டினை மக்கள் பேரீச்சம் பழங்களைக் காயவைக்க உபயோகப்படுத்திக்கொண்டிருந்தனர். இந்நிலத்தை மஸ்ஜித் நிறுவுவதற்காக நபி(ஸல்) அவர்கள் கோரிய போது அதனை இலவசமாக அன்பளிப்புச் செய்ய உரிமையாளர்கள் முன்வந்தனர். எனினும் இறைத்தூதர் அவர்கள் அதனை இலவசமாகப் பெற்றுக் கொள்ள விரும்பாமல் அதற்குரிய பெறுமதியை கொடுத்து விடுமாறு அபூபக்கர் (ரழி) அவர்களிடம் வேண்ட அவர்கள் அவ்வாறே செய்தார்கள். விலை கொடுத்து வாங்கப்பட்ட அப்பூமியில் இருந்த மேடு பள்ளங்கள் நீக்கப்பட்டு சமதரையாக்கப்பட்டன. கப்ருகள்
40

மதீனாவின் மாண்புகள்
அழிக் கப் பட்டு அதனுள் இருந்த எலுமி புகள் அப்புறப்படுத்தப்பட்டன. அந்நிலத்திலே இருந்த பேரீச்சை மரங்கள் வெட்டப்பட்டு அம்மரங்களும் ஒலையும் கட்டிடத் தேவைகட்கு உபயோகப்படுத்தப்பட்டன.
இது தொடர்பாக புகாரி ஷரீபிலே வரும் ஒரு ஹதீஸைக் கவனிப்போம்.
அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்து சேர்ந்து மஸ்ஜித் ஒன்றைக் கட்ட வேண்டுமென்று பணித்தார்கள். “பனு நஜ்ஜார்’ பரம்பரையினரே! உங்களின் இப்பூமியை எனக்கு கிரயமாகத் தாருங்கள் என நபி(ஸல்) அவர்கள் வேண்டினார்கள். அப்போது அம்மக்கள் அதற்கு நாம் பெறுமதியைக் கோரமாட்டோம். அதற்கு கூலியை அல் லாஹி தான் எமக் குத் தர வேண்டும் , அதனை இலவசமாகவே பெற்றுக்கொள்ளுங்கள் எனக்கூறினர். பின்னர் அங்கே இருந்த கப்ருகள் தோண்டி எடுக்கப்பட்டன. மேடு பள்ளமான நிலம் சமப்படுத்தப்பட்டது. ஈச்சை மரங்கள் வெட்டப்பட்டன. மரக்கால்கள் கிப்லாவின் பக்கமாக வைத்து கட்டப்பட்டன.
இப்பள்ளிவாசலை நிறுவும் பணியில் நபி(ஸல்) அவர்கள் தனது வியர்வை சிந்த ஈடுபட்டார்கள். இந்த மஸ்ஜிதே இன்று நானிலம் போற்றும் மஸ்ஜிதுந்நபவியாகத் திகழ்கிறது.
மஸ்ஜிதுந் நபவியின் சிறப்புக்கள்
عن أبي هريرة رضي الله عنه فال قال رسول الله صلى الله عليه وسلم : صلاة في مسجدي هذا افضل من الف صلاة فيما سواد الا المسجد الحرام. (متفق عليه)
41

Page 29
மதீனாவின் மாண்புகள்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது இந்த (மதீனா) மஸ்ஜிதிலே தொழும் ஒரு தொழுகை (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர்த்து ஏனைய மஸ்ஜித்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விட மேலானது. (அறிவிப்பவர்: அபூ ஹறைறா - ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா தவிர்ந்த எந்த மஸ்ஜித்கட்கும் பிரயாண ஏற்பாடு செய்து யாத்திரை செல்லக்கூடாது.
(அறிவிப்பவர்: அபூஹ"றைறா - ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
எனது மஸ்ஜிதிலே தவறாமல் நாற்பதுநேரத்தொழுகையை ஒருவர் தொழுது வந்தால் அவருக்கு நரகத்திலிருந்தும், வேதனையிலிருந்தும், நயவஞ்சகத்தன்மையிலிருந்தும் விடுதலை கிடைக்கும்.
(அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் - ஆதாரம் : முஸ்னத் அஹற்ழத்)
நான் இறுதி நபி. எனது மஸ்ஜித் நபிமார்களின் மஸ்ஜித்களில்
இறுதியானது.
(முஸ்லிம்)
மேற்காணும் அனைத்து ஹதீஸ்களும் மஸ்ஜிதுந் நபவியின் சிறப்புக்களை எடுத்துக் கூறிக்கொண்டிருக்கின்றன. உலகிலே உள்ள மஸ்ஜித்களில் இரண்டாவது இடத்தில் வைத்து மதிக்கப்படும் மஸ்ஜித் இதுவாகும். சீரும் சிறப்பும் நிறைந்த நபி(ஸல்) அவர்கள் தங்களின் பொற்கரங்களால் வேலை செய்து கட்டிய முத்தான பள்ளிவாசல் இது. இதிலே தொழும் ஒரு தொழுகை ஏனைய பள்ளிகளில் தொழும் தொழுகையை விட ஆயிரம் மடங்கு மேலானது என்று அருமை நபியின்
42

மதீனாவின் மாண்புகள்
பரிசுத்த ஹதீஸ்கள் அறிவிக்கின்றன என்றால் அதன் மகிமையைக் கூற வேறு சான்றுகள் தேவையில்லை.
உலகில் உள்ள மஸ்ஜித்களில் மூன்றுக்கு மட்டும்தான் பிரயாண ஏற்பாடு செய்து போக முடியும். அம்மூன்றும் தவிர்ந்த ஏனையவற்றிற்கு பொதி கட்டிப் புறப்பட்டுப்போக முடியாது. ஒருவர் மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு போகப் புறப்பட்ட ஒரு பிரயாணத்தையும் சஹாபாக்கள் பயன் குறைந்தது எனக் கூறித் தவிர்த்துள்ளனர்.
“ஒரு பெண்மணி தனது நோய் குணமானால் பைத்துல் முகத்தஸல் மஸ்ஜிதுல் அக்ஸா சென்று தொழுவதாக நேர்த்தி வைத்திருந்தார். அவரது நோயும் குணமடைந்தது. அப்பெண் அங்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கையில் நபி(ஸல்) அவர்களின் மனைவி மைமூனா (ரழி) அவர்கள் அங்கு வந்தார். அவர்களிடம் அப்பெண்மணி விடயத்தைக் கூற அவ்வாறெனில் நீ அங்கு போகத்தேவையில்லை. உனது பிரயாணத்தை நிறுத்து. நீ தயாரித்த உணவுகளையும் சாப்பிடு. நபி(ஸல்) அவர்களின் மஸ்ஜிதிலே தொழுது உனது நேர்ச்சையை நிறைவேற்று. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். மஸ்ஜிதுந் நபவியிலே தொழும் தொழுகை க..பாப் பள்ளியைத்தவிர்த்து ஏனைய பள்ளிகளில் தொழும் தொழுகையை விட ஆயிரம் மடங்கு மேலானது என்றார்கள்.
(முஸ்லிம்)
மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமில் தொழும் ஒரு தொழுகைக்கு ஓர் இலட்சம் நன்மையும், மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவியில் தொழும் தொழுகைக்கு ஆயிரம் நன்மையும், ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழும் தொழுகைக்கு ஐநூறு நன்மையும் கிடைப்பதாக
43

Page 30
மதீனாவின் மாண்புகள்
ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே மதீனாவிலுள்ள ஒருவர் நீண்ட பயணம் செய்து ஜெருஸலம் செல்வது பிரயோசனம் குறைந்ததும் நன்மையைக் குறைவாகப் பெற்றுக் கொள்ளும் முயற்சியுமாகும். இதனாலேயே அன்னை மைமூனா (ரழி) அவர்கள் இப்பிரயாணத்தைத் தடை செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுந் நபவியின் சிறப்புப் பற்றிக் கூறும் போது “இந்த எனது மஸ்ஜிதிலே தொழும் ஒரு தொழுகை ஆயிரம் மடங்கு மேலானது என்று சுட்டிக்காட்டியதைக் குறிப்பிடும் அறிஞர்கள் “இந்த” என்று குறிப்பிட்ட வார்த்தை மூலம் அன்று இருந்த பள்ளிவாசலை மாத்திரம் குறிப்பிடுமா? அல்லது அதன் பின் ஏற்பட்ட ஏற்படுகின்ற விஸ்தரிப்புகளையும் சேர்த்துக் கொள்ளுமா? என்பதில் கருத்து வேற்றுமைப் பட்டுள்ளனர். அன்று இருந்த பள்ளிவாசலின் அளவை மட்டுமே அது குறிக்கும் என்றனர் சிலர் : அன்று இருந்த பள்ளிவாசலை மட்டும்தான் அந்த ஹதீஸ் குறிப்பதாயின் கலீபாக்களான உமர்(ரழி) , உஸ்மான் (ரழி) ஆகியோர் விஸ்தரிப்பு முயற்சிகளை மேற் கொண்டிருக்கவே மாட்டார்கள். அந்த முயற்சியை எந்த ஸஹாபாக்களும் எதிர்க்கவில்லை, உமர்(ரழி) கூறுகின்றார்கள் “நபி(ஸல்) அவர்கள் இப்பள்ளியை விஸ்தரிக்க வேண்டும் என்று கூறியதாலேயே நான் விஸ்தரிப்பு வேலையில் ஈடுபடுகின்றேன்’ என்றார்கள், மஸ்ஜிதுந் நபவியின் விஸ்தீரணம் எவ்வளவுதான் நீண்டு சென்றாலும் அதற்கு மஸ்ஜிதுந் நபவிக்குரிய குறிப்பிட்ட நன்மையே கிடைக்கும் என்பதே பெரும்பாலான அறிஞர்களின் முடிவாகும். இதற்குச் சான்றாக உமர்(ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் ஒன்று “முஸ்னத் அஹற்மத்” வில் பதிவாகியுள்ளது.
“இந்த எனது மஸ்ஜித் ஸன்ஆ வரை (யமனின் தலைநகரம்) நீண்டாலும் எனது மஸ்ஜிதே, (அதற்குரிய நன்மையே கிடைக்கும்) எனவே மஸ்ஜிதுந் நபவியில் தொழுகையின்
44

மதினாவின் மாண்புகள்
போது நீண்டு செல்லும் வரிசைகள் எவ்வளவு தூரம் சென்றாலும் அதற்கு மஸ்ஜிதுந் நபவியில் தொழுத நன்மை கிடைக்கும் என்பதே பெரும்பாலான சட்ட அறிஞர்களின் முடிவாகும். இந்த எனது மஸ்ஜித் என்ற வார்த்தை மூலம் மதீனாவிலுள்ள ஏனைய மஸ்ஜித்களை அது நீக்கி விடுகின்றது. மதீனாவின் ஏனைய சிறப்புமிகு மஸ்ஜித்கட்கு இந்நன்மை கிடைக்காது என்பதே அறிஞர்களின் அபிப்பிராயமாகும்.
02. றவ்ளா ஷரீப்
قال رسول الله صلى الله عليه وسلم : ما بين بيني ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي. (متفق عليه)
“எனது வீட்டுக்கும் எனது மிம்பருக்குமிடையேயுள்ள பகுதி சுவனப்பூங்காக்களில் ஒரு பூங்காவனம் ஆகும். எனது மிம்பர் எனது ஹவ்ளின் மீது உள்ளது.
(புகாரி, முஸ்லிம், நஸயீ)
மஸ்ஜிதுந் நபவியிலே உள்ள நபி(ஸல்) அவர்களின் மிம்பருக்கும் அவர்களின் கப்று உள்ள அவர்களின் வீட்டுக்குமிடையேயுள்ள பகுதியே றவ்ளா ஷரீப் ஆகும். உண்மையிலே றவி ளா ஷரீப் எனும் இடம் மனித உள்ளங்களை மகிழ்வுறச் செய்யும் மகோன்னத இடமாகும். மிம்பருக்கும் வீட்டுக்கும் இடையேயுள்ள இப்பகுதியில் தூண்கள் வெள்ளை நிறங்கொண்டதாக மிளிர்கின்றன. எந்நேரம் பார்த்தாலும் இந்த சுவனப்பூங்காவில் மக்கள் நிரம்பி வழிந்த வண்ணமே இருப்பர்.
45

Page 31
மதீனாவின் மாண்புகள்
“சுவனப் பூங்காவனம்’ என்று இதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறியதன் விளக்கம் என்ன? என்பதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேற்றுமைகள் எழுந்தன. றவ்ளா ஷரீப் சுவனத்தின் ஒரு பகுதி. அது பின்னர் சுவர்க்கத்திற்கு கொண்டு செல்லப்படும். அது ஏனைய பூமியைப்போல் அழிந்து விடப்போவதில்லை. “இமாம் மாலிக் (ரஹற்) உட்பட பல அறிஞர்களின் கருத்து இது.
“இந்த இடத்திலே வணக்கம் புரிபவர் சுவனம் செல்ல ஏதுவாகும். இது ரஹற்மத் இறங்குவதிலே சுவனத்தை ஒத்தது” என்பது இமாம் இப்னு ஹஜர் உட்பட பல அறிஞர்களின் கருத்தாகும்.
இந்த இரு வித்தியாசமான கருத்துக்களின் அடிப்படையில் ஒன்று தெளிவாகின்றது. அதுதான் றவி ளாவுக்கும் சுவர்க்கத்திற்குமிடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதாகும். அது சுவனம். என்ற கருத்தும் அது சுவனத்திற்கு மனிதனை இட்டுச் செல்வது என்பதற்கும் அது நிச்சயம் சுவர்க்கத்தன்மை வாய்ந்தது என்பது புலனாகின்றது. மதீனா பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருந்த காலங்களிலே பெரும்பாலும் மாலைப் பொழுதை மஸ்ஜிதுந் நபவியிலே குறிப்பாக றவிளா ஷரீபிலே தொழுது குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்த எனக்கும் அல்லாஹற் சுவனத்தை “நஸ்பா’க்குவானாக! ஆமீன்!!
03. மஸ்ஜிதுந் நபவியின் “மிம்பர்”
மஸ்ஜிதுந் நபவியிலே உள்ள நபி(ஸல்) அவர்கள் குத்பா பிரசங்கம் நிகழ்த்திய மிம்பர் இருக்கிறதே அதன் சிறப்புக்கள்
46

மதீனாவின் மாண்புகள்
ஏராளம் ஏராளம்! நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதைக் கவனியுங்கள்.
قال رسول الله صلى الله عليه وسلم ومنبري علی حوضي.
“எனது மிம்பர் எனது ஹவ்ளின் மேலே உள்ளது” (புகாரி,முஸ்லிம்) “எனது மிம்பரின் கால்கள் சுவனத்திலே நிரந்தரமானது” (அஹற்மது)
قال رسول الله صلى الله عليه وسلم : منبري هذا على ترعة من ترع الجنة. (رواه أحمد)
“இந்த எனது “மிம்பர்’ சுவனப்படிகளில் ஒரு படியின் மீதாகும்’ (அஹற்மது) “எனது மிம்பர் எனது ஹவ்ளிலே உள்ளது” என்ற ஹதீஸ் மூலம் மஸ்ஜிதுந் நபவியிலுள்ள மிம்பர் கியாமத்து நாளில் நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்படும் “ஹவ்ளுல் கவ்தர்’ எனும் நீர்த்தடாகத்தில் இருக்கும் என்பது தெளிவாகின்றது. மேற்கூறிய மிம்பர் பற்றியே “எனது மிம்பருக்கும் எனது வீட்டுக்கும் இடையே உள்ள பகுதி சுவனப் பூங்காக்களில ஒரு பூங்கா’ என்றார்கள் நபி(ஸல்) அவர்கள். மேற்கூறிய மிம்பரும் றவ்ளா வடிரீபில் ஒரு பகுதியாகும். இந்த மிம்பர் இரு வகை சிறப்பை உடையதாகின்றது. ஒன்று சுவனப்பூங்காக்களில் ஒன்றாக இது இருக்கின்றது என்ற ஹதீஸ் மற்றது அந்த மிம்பர் ஹவ்ளுல் கவ்தரில் ஒரு படியாக இருக்கின்றது என்பது இதன் மூலம் அந்த மிம்பரின் சிறப்பு தெளிவாகின்றதல்லவா?
47

Page 32
மதீனாவின் மாண்புகள்
“எனது மிம்பர் எனது ஹவ்ளின் மேலே உள்ளது” என்ற ஹதீஸின் விளக்கம் தொடர்பாக அறிஞர்கள் மத்தியில் கருத்து வேற்றுமைகள் உள்ளன.
இமாம் கத்தாபி போன்றோர் “அந்த (மிம்பரின்) இடத்திலே நல்ல அமல்களை அதிகம் செய்து வருவது கியாமத் நாளிலே “ஹவ்ஸ்’ அடியே வருவதற்கும் அதிலே இருந்து நீர் அருந்துவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதே அதன் அர்த்தம்’ என்கின்றனர்.
இப்னு நஜ்ஜார், இப்னு அஸாகிர் போன்றோர் “இந்த உலகத்திலே இருக்கும் அதே மிம்பரே அந்நாளில் அருமை நபி அவர்களின் ஹவ்ளிலே இருக்கும்’ என்பதே அதன் பொருள் என்கின்றனர்.
மரக்கட்டையின் அழுகை
நபி(ஸல்) அவர்கள் மஸ்ஜிதுந் நபவியை நிறுவிய போது அதிலே குத்பாப் பிரசங்கம் நிகழ்த்துவதற்கென ஒரு மிம்பரை ஏற்படுத்தவில்லை. நிலத்திலே நின்று பேரீத்த மரக்குத்தியின் பால் சாய்ந்தவர்களாகவே “குத்பாப்” பிரசங்கம் நிகழ்த்தி வந்தார்கள். பின்னர் மஸ்ஜிதை அவர்கள் விஸ்தரித்த போது ஒரு மிம்பரின் தேவையை உணர்ந்தார்கள். புகாரியிலே வருகின்ற ஒரு ஹதீஸின் பிரகாரம் “ஓர் அன்சாரிப் பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து யாறகுலல்லாஹற்! என்னிடம் ஓடாவி வேலை செய்யும் ஒரு மகன் இருக்கின்றார். அவரைக் கொண்டு தாங்கள் பிரசங்கம் நிகழ்த்தக் கூடிய ஒரு மிம்பரை செய்து தரட்டுமா? எனக் கேட்டார். அதனை நபி(ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.”
48

மதீனாவின் மாண்புகள்
இதன் பிரகாரம் மூன்று படிகளைக் கொண்ட மிம்பர் செய்யப்பட்டு முன்பு சாய்ந்து நின்ற ஈச்ச மரக்கட்டை அகற்றப்பட்டது. அது மஸ்ஜிதின் ஒரு பக்கத்திலே போடப்பட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் புதிய மிம்பரில் குத்பா ஒதுவதற்காக ஏறினார்கள். 'ஸஹிஹ?ல் புகாரியில் வரும் மற்றொரு ஹதீஸைக் கவனியுங்கள். “நபி(ஸல்) அவர்கள் சாய்ந்து கொண்டு நின்ற ஈச்ச மரத்துண்டு புதிய மிம்பர் ஏற்படுத்தப்பட்டு அதிலே நபியவர்கள் ஏறியதும் குட்டியைப் பிரிந்த பால் ஒட்டகை அழுவது போல் அழும் சப்தம் கேட்டது. நபி(ஸல்) அவர்கள் இறங்கி அதிலே கையை வைத்தார்கள்.”
இந்த ஹதீஸை பத்துக்கு மேற்பட்ட சஹாபாப்பெருமக்கள் அறிவிக்கிறார்கள். இம்மரக்குத்தி அழுத அச்சப்தத்தைக் கேட்ட சஹாபாக்களும் அழுதார்கள். நபி(ஸல்) அவர்கள் வந்து அதனை அள்ளி அணைத்தார்கள். அவ்வேளை அது தன் அழுகையை நிறுத்தியது.
மரக்குத்தி அழுகையை நிறுத்திய போது நபி(ஸல்) அவர்கள் அழுத காரணத்தை வினவியபோது தங்களின் திருமேனி என்னில் இனிப்படமாட்டாதே என்பதால் அழுகிறேன் என்றது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் அதனிடம் நீ முன்பிருந்தது போல் மீண்டும் மரமாக விரும்புகின்றீரா? அப்போது உனக்கு வேர், கிளைகள், பூ, காய்கள் உண்டாகும் அல்லது உன்னை சுவர்க்கத்தில் ஒரு மரமாக நடவா? எனக் கேட்ட போது அது சுவனத்தைத் தேர்ந்தெடுத்தது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் அதனை மிம்பரின் அடியில் அது முன்பு நாட்டப்பட்டிருந்த இடத்தில் புதைத்தார்கள். உலக வாழ்வில் உன்னத வாழ்வைத் தரவா? மறுமை வாழ்வின் சிறப்புக்கள் தேவையா? எனக்
49

Page 33
மதினாவின் மாண்புகள்
கேட்டபோது மறுமை வாழ்வே மேலெனத்தேர்ந்தெடுத்தது அந்த மரக்கட்டை. ஆனால் இன்றைய மனித மரக்கட்டைகளோ உலக வாழ்வையே சதமென நம்பி மறுமை வாழ்வைப் புறக்கணித்து நடப்பதை என்னென்பது?
இன்றைய மிம்பர்
நபி (ஸல்) அவர்கள் மூன்று படிகளைக் கொண்ட மிம்பரையே செய்து அதிலேயே ஏறி நின்று குத்பாப் பிரசங்கம் நிகழ்த்தினார்கள். கலீபா முஆவியாவின் ஆட்சியின் போது இதன் படிகள் ஒன்பதாக அதிகரிக்கப்பட்டன. இன்று கூட அதன் படிகள் ஒன்பதைக் கொண்டதாகவே இருக்கின்றது.
04- மஸ்ஜிதின் தூண்கள்
மஸ்ஜிதுந் நபவியிலே நாம் நுழைந்தால் பல் தூண்கள் அங்கே காட்சி தரும். அவைகள் கூட சரித்திரப் பிரசித்தி பெற்றவையாகவே மிளிர்கின்றன. அத்துண்களில் எட்டு பற்றிய சிறப்புக்கள் வரலாற்று நூல்களில் புதைந்து கிடக்கின்றன.
1. உஸ்துவானதுல் முகல்லக்:
நபி(ஸல்)அவர்கள் தொழுத இடத்துக்குப் பக்கத்தில் இத்தூண் உள்ளது. இதன் பக்கத்திலே இருந்த ஈச்சமரத்துண்டிலே தான்
நபி(ஸல்) அவர்கள் சாய்ந்தவர்களாக குத்பாப் பிரசங்கம் செய்தார்கள்.
50

மதீனாவின் மாண்புகள்
2. உஸ்துவானது ஆயிஷா
ஆயிஷா நாயகியின் தூண் என்றும் திருவுளச்சீட்டிற்குரிய தூண் என்றும் அழைக்கப்படும் இது மிம்பரிலிருந்து பார்த்தாலும் கப்ரிலிருந்தும் கிப்லாவிலிருந்தும் பார்த்தாலும் மூன்றாவதாக றப்ளா ஷரீபின் மத்தியில் உள்ளது. அத்துணில் தெளிவாக அறபு மொழியில் “உஸ்துவானது ஆயிஷா” என எழுதப்பட்டுள்ளது. இத் துTணின் சிறப்பை மக்கள் அறிவார்களாயின் அவ்விடத்தில் தொழுவதற்காக திருவுளச் சீட்டுப் போட வேண்டிய நிலை வரும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக தபறானியில் ஒரு ஹதீஸ் பதியப்பட்டுள்ளது. இவ்விடத்தின் மகிமையை மக்கள் அறிவராயின் அவ்விடத்தில் தொழுவதற்காக மக்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வார்கள் என ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். அபூ பக்கர்(ரழி), உமர் (ரழி) போன்ற புகழ் பெற்ற சஹாபாக் கள் இந்த இடத்திலேயே அதிகம் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள். துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
3. தவ்பாவின் தூண்.
கப்ரிலே இருந்து இரண்டாவதாகவும் மிம்பரிலிருந்து நான்காவதாகவும் இருக்கும் இத்தூணின் அடியிலேயே நபி(ஸல்) அவர்கள் “இஃதிகாப்’ எனும் வணக்கத்தில் ஈடுபடுவார்கள். அந்த இடத்திலேயே அதிகமாக “நப்ல்” தொழும் வழக்கத்தை நபி(ஸல்) அவர்கள் கொண்டிருந்தார்கள்.
அபூ லுபாபா என்ற சஹாபி பனூ குறைளா யூதர்கள் மீது சம்பந்தப்பட்ட விடயமொன்றில் நபி(ஸல்) அவர்களினால்
51

Page 34
மதினாவின் மாண்புகள்
புறக்கணிக்கப்பட்டார். எனவே இந்த சஹாபி தனக்கு அல்லாஹற்விடமிருந்து மன்னிப்புக் கிடைக்கும் வரை அத்தூணிலே தன்னைக் கட்டி வைத்தார். பின்னர் அல்லாஹ இவரது பாவத்தை மன்னிப்பதாக வஹீ அறிவித்தான். இதற்காகவே தவ்பாவின் தூண் என அது அழைக்கப்படுகிறது.
4. கட்டில் தூண்
தவி பாவின் துTணுக்கு கிழக்கே கப் றின் ஜன்னலுக்கணித்தாகவுள்ள இத்தூணடியிலேயே நபி(ஸல்) அவர்களின் கட்டில் போடப்பட்டிருந்தது. இவர்களின் கட்டில் இவ்விடத்தில் போடப்பட்டதால் உஸ்துவானதுஸ்ஸரீர் என அத்தூணுக்கு பெயரிடப்பட்டிருந்தது.
5. அலி(ரழி) அவர்களின் தூண்
நபி(ஸல்) அவர்களின் பாதுகாப்புக்கருதி அலி(ரழி) அவர்கள் அமரும் தூணாக இது விளங்கியது. இது தவ்பாத் தூணுக்குப்
பின்னால் நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா நாயகியின்
வீட்டிலிருந்து தொழுகைக்காக றவ்ளாவுக்கு பிரவேசிக்கும்
பாதையில் அமைந்துள்ளது. இந்தத் துTணுக்கு
பாதுகாப்பிடத்துாண் என்றும் பெயர் கூறப்படும்.
6- உஸ்துவானதுல் வயூத்(தூது கோஷ்டித் தூண்)
நபி(ஸல்) அவர்களைச் சந்திக்க தூதுக் கோஷ்டிகள் வந்தால் அவர்களை இந்த இடத்தில் வைத்தே ரஸலுல்லாஹற் (ஸல்)
அவர்கள் சந்தித்து மார்க்கத்தை எடுத்து விளக்குவார்கள். இது பாதுகாப்புத் தூணின் பின்னால் உள்ளது.
52

மதீனாவின் மாண்புகள்
7. மகாமு ஜிப்ரீலின் தூண்
பாத்திமா (ரழி) அவர்களின் வீட்டு வாசலின் பக்கத்தில் இத்தூண் உள்ளது. இவ்விடம் தொழுகை நேரங்களில் வரும் நபி(ஸல்) அவர்கள் “தொழுகை, தொழுகை” எனக் கூறிவிட்டுச் செல்வார்கள்.
“நபியின் வீட்டினரே! உங்களை விட்டு சகல அசுத்தங்களையும் நீக்கி உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கி விடவே அல்லாஹற் விரும்புகின்றான்” எனும் குர்ஆன் வசனத்தையும் கூறிவிட்டுச் செல்வார்கள்.
8- உஸ்துவானுத் தஹஜ்ஜத்
நபி(ஸல்) அவர்கள் நின்று தஹஜ்ஜத் தொழும் தூணுக்கு மேற்கூறிய பெயர் கூறப்படும். சன நடமாட்டம் குறைந்த பின்னர் நபி(ஸல்) அவர்கள் இந்த இடத்திற்கு வந்து இரவுத் தொழுகையை அதிகம் தொழுவார்கள். இது பாபு ஜிப்ரீலுக்கு வலது பக்கமாக உள்ளது.
05. அஹற்லுஸ் ஸப்பாக்கள் எனும் திண்ணை வாசிகள்
மஸ்ஜிதுந் நபவியின் பிரசித்தி பெற்ற “ஹ"ஜ்றா’ வீடுகளுக்குப்பின்னே இடது பக்கமாக அஹற்லுஸ் ஸப்பாக்கள் (திண்ணை வாசிகள்) தங்கி இருந்த மேடை ஒன்று உள்ளது. இதிலே அனாதரவான நிலையிலுள்ள ஏழை சஹாபாக்கள் தங்கி வாழ்ந்தனர். இவர்களின் வசிப்பிடமாக இதுவே இருந்தது: கிடைப்பதை உண்டு வாழும் நிலையில் அவர்கள் இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் இவர்களின் உணவுக்குரிய வழிகளைக் கவனித்தார்கள். இன்றைய வயோதிப இல்லங்களை
53

Page 35
மதீனாவின் மாண்புகள்
நினைவுபடுத்தும் வகையில் அந்த திண்ணை வாசிகள் வாழ்ந்து வந்தனர்.
மஸ்ஜிதின் மூலையினை தமது வசிப்பிடமாகக் கொண்ட அம்மக்கள் நபி தூதர் (ஸல்) அவர்களோடிணைந்தவர்களாக அவர்களிடமிருந்து அறிவு பெறுபவர்களாக வாழ்ந்தனர். திண்ணை வாசிகளில் சிரேஷ்டமானவரான அபுஹ"றைறா (ரழி) அவர்கள் தங்களது பணி பற்றி கூறும் போது “எனது சகோதரர்களான முஹாஜிர்கள் கடைத் தெருக்களில் வியாபாரத்திலும் அன்ஸாரீன்கள் விவசாயத்திலும் ஈடுபடச்செல்லும் வேளை நானோ ஹதீஸ்களை அறிவதிலும் அதனை மனனமிடுவதிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்’
இவ்வாறு அம்மக்கள் செய்த சேவைகளின் பேறாகவே நாம் ஹதீஸ் மலர்களை அள்ளி நுகர முடிகின்றது. அல்லாஹற் அம்மக்களுக்கு மாபெரும் சிறப்புக்களை நல்குவானாக!
06. நபித் தூதரின் சிறப்புமிகு இல்லம் (ஹ"ஜ்ரா (լpւյTՄ&m)
மஸ்ஜிதுந் நபவி கட்டப்பட்ட போது அப்போதிருந்த தனது இரு மனைவிமார்களான ஆயிஷா(ரழி), ஸவ்தா(ரழி) ஆகியோருக்கு அதற்குப் பக்கத்தில் இரு அறைகளை அமைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பின்னர் அவர்களின் மனைவிமார்களின் அதிகரிப்புக் கேற்ப அறைகளும் அதிகரிக்கப்பட்டன.
இவ்வீடுகள் மஸ்ஜிதுக்குப் புறம்பாக மஸ்ஜிதுக்கு நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்தன. பாத்திமா (ரழி) அவர்களின் இல்லம் நபி(ஸல்) அவர்களின் வீட்டிற்குப் பின்னால் இருந்தது. இரண்டு வீடுகளுக்குமிடையே ஒரு வெளிச்சம் தரும் துவாரம் இருந்தது.
S4 .

மதினாவின் மாண்புகள்
இத்துவாரத்தினால் மகளாரின் செய்திகளை விசாரித்தறியவும் செய்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் வெளியூர்ப் பயணம் சென்று திரும்பினால் மகளாரின் வீடு சென்று இருந்து கதைத்துவிட்டு வருவது வழக்கம். ஒரு முறை பயணத்திலிருந்து திரும்பி நேரே மகள் வீடு வந்த போது அவர் ஒரு சோடிக் காப்பும், தோடும், மாலையும் செய்து அணிந்திருந்ததுடன் திரைச் சீலை ஒன்றையும் வாங்கிப் போட்டிருந்தார். மகள் வீடு சென்ற இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உள்ளே செல்லாமல் கோபத்துடன் வெளியேறிவிட்டார்கள். தனது தந்தையின் கோபத்திற்கான காரணத்தை உணர்ந்த மகளார் அத்தனை பொருட்களையும் கழற்றி எடுத்து அதனை ஒருவரிடம் கொடுத்து “உங்கள் மகள் உங்களுக்கு சலாம் சொன்னார். இவ்வளவு பொருட்களையும் அல்லாஹற்வின் பாதையில் தானம் செய்துவிட்டதாகக்கூறி தங்களிடம் கொடுத்துவிட்டு வருமாறு என்னைச் சொல்லி அனுப்பினாார்’ என அவர் கொண்டு வந்த பொருட்களை ஒப்படைத்துக் கூறினார். இது பற்றி மகிழ்ந்த நபி(ஸல்) அவர்கள் “இந்த உலகம் முஹம்மதிற்கோ அல்லது அவரது குடும்பத்திற்கோ சிறப்பானதல்ல. அல்லாஹற்விடத்திலே இந்த உலகம் ஈயின் இறக்கையின் அளவு பெறுமானமாக இருந்திருந்தால் ஒரு சொட்டு நீரைக்கூட அல்லாஹற் காபிர்களுக்கு குடிக்கக் கொடுக்கவேமாட்டான் என்று கூறிவிட்டு பின்னர் மகள் வீடு வந்தார்கள். பின்னர் அத்திரைச் சீலை இரண்டு, இரண்டு முழங்களாக கிழிக்கப்பட்டு ஏழைகளுக்கு கொடுக்கப்பட்டது. ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் யுத்தம் ஒன்றுக்குச் சென்ற பின்னர் உம்மு சல்மா (ரழி) அவர்கள் தனது அறையில் ஒரு சுவர் கட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் யுத்தத்திலிருந்து திரும்பிய பின் உம்மு சல்மா! இது என்ன? என்று கேட்டார்கள். மனிதர்களின் பார்வையைத் தடுக்க நாடி இதனைச் செய்தேன்
55

Page 36
மதீனாவின் மாண்புகள்
எனக் கூறினார்கள் அந்த உம்முல் மு.மினின் அவர்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் “உம்மு சல்மா! ஒரு முஸ்லிமின் பணம் செலவழிவதில் மிகவும் மோசமானது கட்டிடத்திற்காகவே” என்றார்கள்.
இந்த வீடுகளில் ஒன்றான அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் வீட்டிலேயே நபி (ஸல்) அவர்களும், அபூபக்கர் சித்தீக் (ரழி) , உமர் (ரழி) ஆகியோரும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கலீபா வலீதின் ஆட்சியில் மதீனாவின் கவர்னராகவிருந்த உமர் பின் அப்துல் அஸிஸ் (ரஹற்) அவர்களினால் இந்த அனைத்து அறைகளும் விலை கொடுத்து வாங்கப்பட்டு இவைகள் மஸ்ஜிதுடன் சேர்க்கப்பட்டன.
07- அறிவுச் சோலை
மஸ்ஜிதுந் நபவியை ஓர் அறிவுச்சோலை எனலாம். நபி(ஸல்) அவர்களின் காலமுதல் இன்று வரை மக்கள் அறிவு பெறும் கல்விக்கூடமாக அது திகழ்கின்றது. எந்த மத்ரஸாவுக்கும் சென்று முறையாகக் கல்வியைப் பெறாமல் மஸ்ஜிதுந் நபவி எனும் பல்கலைக்கழகத்திலே பட்டதாரியாகிய அறிஞர்கள் ஏராளம், ஏராளம்! இதனை இன்று நாம் மதீனாவில் சாதாரணமாகக் காணலாம். எந்தப் பாடசாலையிலும் பயிலாமல் அந்த மஸ்ஜிதிலே படித்தவர்கள் இன்று பல்கலைக்கழக விரிவுரையாளர்களாகக் கூட உள்ளனர். உலகெங்குமிருந்து வணக்க வழிபாட்டிற்காக மதீனா வந்தவர்களை அப்பள்ளிவாசல் அறிஞர்களாக மாற்றி அனுப்பியது. இத்தனைக்கும் அங்கே முறையான கல்வி கிடையாது. நாங்கள் மதீனாப் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது மஸ்ஜிதுந் நபவியிலே நடைபெறும் அந்த
56

மதீனாவின் மாண்புகள்
பாடவகுப்புகளுக்கு எமது மாணவர்கள் சென்று வந்தனர். அங்கே அஸர்த் தொழுகையின் பின் ஒவ்வொரு பாடத்திலும் சிறப்பிற்குரிய அறிஞர்கள் அவர்களை நாடிவரும் மாணவர்கட்கு பாடப்போதனை புரிவர். இந்த மாணவர்கட்கு வயதெல் லை கிடையாது. குடுகுடு கிழவர்களும் , இளைஞர்களும் தந்தையும் தனயர்களும் கலந்து கொள்வர். இவ்வாறான பாடப் போதனைகள் நஹற்வு, ஸர்பு, பலாஆ, தப் ஸிர், முஸ்தல.., பிக் ஹ" போன்ற பாடங்களில் நடைபெறுவதைக் காணலாம். இதே போல் ம.ரிப் தொழுகையின் பின் மஸ்ஜிதுந் நபவியில் ஒரு புறத்தே ஹதீஸ் விரிவுரையும் மறுபுறத்தே தப்ஸிர் வகுப்பும் நடைபெறுகின்றன. இஷாத் தொழுகையின் பின் பொதுவான பயான்களும் இடம்பெறுகின்றன. இதேவேளை மஸ்ஜிதுந் நபவியின் பிற்பகுதியில் உள்ள மேல்மாடியில் பாரிய நூல் நிலையம் ஒன்றுள்ளது. ஏராளமான கிதாபுகளும் போதிய ஊழியர்களும் அங்குள்ளனர். அதாவது பள்ளியில் இருந்து கொண்டே நூல் நிலையத்தை உபயோகிக் கப் போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கல்விப் போதனா முறை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. நபி(ஸல்)அவர்களின் காலத்திலிருந்தே மக்களுக்கு கல்வி கொடுக்கும் நிலையமாக அப்பள்ளிவாசலே திகழ்ந்துள்ளது. வாழ வசதியற்றோர், உதவி இழந்தோர் திண்ணைவாசிகளாக இருந்தது போல் அவர்கள் அப்பள்ளியிலே பரிபாலிக்கப்பட்டது போல் அறிவு கொடுக்கும் நிலையமாக அது திகழ்ந்தது. அந்த அறிவுச்சோலையில் மக்கள் அறிவுக் காற்றைச் சு வாசித்து அறிஞர் களாயினர் . மஸ் ஜிதீ ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்து பண்பட்ட அறிஞர்களை உருவாக்கியது. இப்பணியை எமது பள்ளிவாசல்களும் செய்ய முன்வரும் போது முன்னேற்றமடைந்த ஒரு சமுதாயத்தை நிச்சயம் எதிர்பார்க்க முடியும்.
57

Page 37
மதினாவின் மாண்புகள்
08. மஸ்ஜிதுந் நபவியின் விஸ்தரிப்பு வேலைகள்.
நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரி முதலாம் ஆண்டு மஸ்ஜிதுந் நபவியை சுமார் 30x35 மீற்றர் பரப்பளவு கொண்டதாக நிறுவிய பின் சில வருடங்களின் பின் அதனை விஸ்தரிக்க வேண்டிய தேவையை உணர்ந்தார்கள் . இதன் விளைவாக பக்கத்திலிருந்த பூமியொன்றை விலைகொடுத்து வாங்கி ஹிஜ்ரி 7ம் ஆண்டில் 50x50-2500 மீற்றர் பரப்பளவு கொண்டதாக விஸ்தரிப்புச் செய்தார்கள்.
இதன் பின்னர் கலீபாக்களில் முதலாவது விஸ்தரிப்புச் செய்தவர் உமர்(ரழி) அவர்கள் ஆவார்கள். ஏழு முளம் உயரமாக இருந்த பள்ளியின் முகட்டை பதினொரு முழமாக உயர்த்தியதுடன் பள்ளியின் பரப்பளவும் 18200 முழம் கொண்டதாக விஸ்தரிப்புச் செய்தார்கள். உதுமான் (ரழி) அவர்களின் ஆட்சியின் போதும் பள்ளிவாசல் விஸ்தரிக்கப்பட்டது. அவர்கள் 160x150 முழத்தில் விஸ்தரித்தார்கள்.
உமையாக் கலீபாக்களில் ஒருவரான வலீத் பின் அப்துல் மலிக் அவர்களின் ஆட்சியின் போது பாரிய புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. இக்காலத்தில் மதீனாவின் கவர்னராக உமர் பின் அப்துல் அஸிஸ் (ரஹற்) அவர்கள் கடமை புரிந்தார்கள். இக்காலத்திலே இம்மஸ்ஜித் விஸ்தரிக்கப்பட்டதுடன் இஸ்லாமியக் கட்டடக் கலைகளும் புகுத்தப்பட்டன. கிப்லாவின் பக்கச் சுவரிலே இருந்து மிஹற்ராபும் உயர் மனாராக்களும் ஏற்படுத்தப்பட்டதுடன் நபிகளாரின் மனைவிமார்களின் வீடுகளும் விலை கொடுத்து வாங்கப் பட்டு மஸ்ஜிதுடன் இணைக்கப்பட்டன.
S8

மதீனாவின் மாண்புகள்
இதேபோல் அப்பாஸிய ஆட்சியின் போதும் அதன் பின்னர் வந்த சிற்றரசர்களின் காலத்திலும் உஸ்மானியப் பேரரசர்கள் ஆட்சியின் போதும் பல விஸ்தரிப்புகளை இம்மஸ்ஜித் கண்டது. உஸ்மானிய சுல்தான் இரண்டாம் மஹற்மூத் என்பவரே கி.பி. 1813ம் ஆண்டில் புகழ்மிக்க ஹஜ்ராவுக்கு மேலால் பச்சை நிறத்தினாலான “குப்பா’ வைக் கட்டினார். இன்றும் இப்பச்சைக் குப்பா பார்ப்போரைப் பரவசப்படுத்திக்கொண்டிருக்கின்றது.
சுஊதி குடும் பத்தின் ஆட்சி ஏற்பட்ட பின்னரே மஸ்ஜிதுந்நபவியில் மாபெரும் விஸ்தரிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போதய பாரிய விஸ்தரிப்பு
மேற்கூறிய விஸ்தரிப்பு முயற்சிகள் போல் மாபெரும் விஸ் தரிப் புத் திட்டம் ஒன்றுக்கு 29-10-1984 வெள்ளிக் கிழமையன்று இன்றைய மன்னர் பஹ து அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இப்புதிய நிர்மாணத்தின் பின் இதற்கு முன்பிருந்த பள்ளியின் அளவில் 4 மடங்காக இது விளங்கும். பள்ளியின் மேற்கு, கிழக்கு வடக்குத்திசைகளில் மேற்கொள்ளப்படவிருக்கும் விஸ் தரிப் பின் பின் மேல் மாடியிலும் தொழுகை மேற்கொள்ளப்படும். உவர்ணத்தை உறிஞ்சி வெயில் நேரத்திலும் குளிர் தரக்கூடிய விஷேட பளிங்குக்கற்கள் தரைக்கு பதிக்கப்படும். மேலும் தொழுபவர்களின் வசதிக்காக மிக நவீனமயமான குளிர்சாதனக் கருவிகள் பொருத்தப்படும்.
நாலாயிரம் கார்கள் நிற்கக் கூடிய தரிப்பிடமும் அமைக்கப்படும். இப்புனரமைப்பின் போது 92 மீற்றர் உயரம்
கொண்ட 6 மனாராக்கள் நிறுவப்படும். இதன் பின்னர்
59

Page 38
மதீனாவின் மாண்புகள்
தற்போதுள்ள நான்கு மனாராக்களையும் சீர்த்து மொத்தம் பத்து மனாராக்களிலிருந்து ஒளி பிரகாசிக்கும். மேலும் 27 குப்பாக்களும் நிறுவப்படும். புதிதாக பாரிய ஏழு தலைவாசல்களும் எட்டு பக்கவாசல்களும் அத்துடன் மேல்மாடி செல்வோர் வசதிக்காக மின்சாரத்தில் இயங்கும் ஏணிகளும் அதற்காக எட்டு வாசல்களும் அமைக்கப்படும்.
புதிய பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்ட பின் அதன் விஸ்தீரணம் 165500 மீற்றர் பரப்பளவை கொண்டதாகவும் இரண்டு இலட்சத்து ஐம்பத்தேழாயிரம் (257000) மக்கள் தொழக்கூடியதாகவும் இருக்கும். ஹஜ்ஜுக்காலத்தில் வரும் மக்களின் வசதிக்காக 235000 மீற்றர் பரப்பளவு கொண்ட முற்றவெளிகள் நிறுவப்படும். இதில் ஹஜ்ஜுக்காலத்தில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் தொழக்கூடியதாக கூடாரங்கள் அடித்து தொழுகைக்குரிய வசதிகள் செய்யப்படும். புனித மக்கா பள்ளிவாசலில் தற்போது செய்யப்பட்டுவரும் அபிவிருத்தி முயற்சிகளுக்கும் இம்மதீனாப் பள்ளிவாசல் விஸ்தரிப்புக்குமாக மொத்தம் இருபத்தொன்பதினாயிரம் கோடி சவூதி றியால்கள் செலவிடப்படுகின்றன.
மிக விரைவில் இப்பள்ளிவாசல் கட்டிட வேலைகள் முடிந்துவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனை வெற்றிகரமாக முடிக்கும் பணியில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் , பொறியியலாளர் களும் தொழில்நுட்பவியலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இப்பள்ளிவாசல் விஸ்தரிப்புக்காக மஸ்ஜிதுந் நபவியின் மிக அணி மையில் இருந்த பாரிய ஹோட் டல் களினி உரிமையாளர்கட்கும் ஏனைய கட்டிட சொந்தக் காரர்கட்கும் பலகோடி றியால்கள் அரசாங்கத்தால் நஷ்ட ஈடாக வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
60

மதீனாவின் மாண்புகள்
குறிப்பு: மேற்கணி டவாறு எமது முதல் பதிப் பில் குறிப்பிட்டிருந்தோம்.
மன்னர் பஹற்த் அவர்களின் விஸ்தரிப்பு
நாம் மேலே கூறியதுபோன்று மன்னர் பஹற்த் அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டு நிறைவுபெற்றுள்ள மஸ்ஜிதுந்நபவியின் விஸ்தரிப்பு வேலைகள் வரலாறு காணாத வகையில் பார்ப்போரை வியக்கவைக்கும் முறையில் அமைந்துள்ளது.
9 82000 மீற்றர் பரப்பளவு கொண்டதாக தற்போதைய விஸ்தரிப்பு அமைந்துள்ளது. இது முந்திய பரப்பளவை விட ஐந்து மடங்கு அதிகரிப்பாகும்.
9 மஸ்ஜிதின் உள்ளும் மேல்மாடியிலும் சுமார் 250000 பேர் தொழக்கூடிய வசதி ஏற்பட்டுள்ளது. முன்னர் 28000 பேரே தொழும் வசதி இருந்தது.
9 வெளர் ளைப் பளிங் குக் கற்களினால் அலங் கரிக் கப் பட்டுள்ள 2174 துTணிகள் நிறுவப்பட்டுள்ளன.
9 ஒவ்வொரு தூணின் அடியிலும் காற்றை உள்வாங்கி குளிர் காற்றை வெளியிடும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
9 ஒவ்வொரு தூணின் மேற்பகுதியில் வேலைப்பாடுடன் கூடிய செம்பிலான கிரீடம் அமைக்கப்பட்டுள்ளது.
9 104 மீற்றர் உயரத்தையுடைய ஆறு மனாராக்கள் புதிதாக நிறுவப்பட்டுள்ளன. முன்பிருந்த நான்கு மனாராக் களுடன் சேர்த்து மொத்தம் பத்து மனாராக்கள் உள்ளன. ஒவ்வொரு மனாரா மீதும் மீறி றர் s) uU LD (T 60T இளம் பிறை [10] لیگ
61

Page 39
மதீனாவின் மாண்புகள்
அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பிறையின் பாரம் 4.5 தொன்னாகும். 13 பிரதான வாசல் களி ல் 64 கதவுகள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதவும் 2.5 தொன் நிறைகொண்டதாகும். ஓர் ஆணி கூட கதவு செய்வதற்குப் பயன்படுத்தப்படவில்லை. எவ்வித சிரமமுமின்றி திறந்து மூடக்கூடியதாக அக்கதவுகள் உள்ளன. தரை, சுவர், ஜன்னல்கள் அனைத்தும் அலங்கார வேலைப்பாடுகளுடன் உள்ளன. 235000 பரப்பளவு கொண்ட திறந்த வெளிகள் நிறமூட்டப்பட்ட கிறனைட்களைத் தாங்கி பரந்த பூங்காபோல் காட்சியளிக்கின்றன. வெயிலிலும் உஷ்ணம் வெளிப்படாத பளிங்குக் கற்கள் கொண்டதாக நான்கு சுற்றுப் புறமும் அமைந்துள்ளன.
வெளியில் தெரியாத காட்சிகள்
மேலே நாம் கூறியவை மஸ்ஜிதுந்நபவியினுள் நுழைபவர்கள் அனைவரும் கண்ணால் காணக்கூடிய காட்சிகளாகும். இதேபோல் நிலத்தின் கீழே பல்வேறு காட்சிகள் நிறைந்துள்ளன.
மஸ்ஜிதுந்நபவியின் மேல் பகுதியின் அளவு விசாலமான விஸ்தீரனம் கொண்ட பாரிய கட்டிடங்கள் boug556 dip (Under Ground) BIT600TL (656.ip601. இங்கே நீரைக்குளிராக்கும் வளியைக்குளிராக்கும் 8Tg560T bids6ft, 66.5 FTg560T stids6fi (Sound System) பாதுகாப்பு போன்ற பல்வேறு அம் ஸங்களை உள்ளடக்கிய 144 தொகுதிகள் காணப்படுகின்றன.
62

மதீனாவின் மாண்புகள்
நிலத்தின் கீழ் செல்பவர் அங்கே 2554 தூண்களைக் காண்பார். ஒவ்வொரு துணும் 4.44 ( 4 மீற்றரும் 44 சென்றி மீற்றரும் ) உயரமுடையது. மஸ்ஜிதின் மேற்கு, தெற்கு, வடக்குத்திசைகளில் நிலத்துக்குக் கீழே இரு மாடிகளைக் கொண்ட வாகனத்தரிப்பிடங்கள் மூன்று நிறுவப்பட்டுள்ளன. இதன் நிலப்பரப்பு 390000 பரப்பளவாகும். வாகனத்தரிப்பிடமும், வுளுச்செய்யும் இடமும் அமைந்துள்ள இடத்தின் நீளம் சுமார் 1.5 கி. மீற்றர் ஆகும். ஒரே நேரத்தில் 4200 வாகனங்கள் நிறுத்தக்கூடிய இத்தரிப்பிடங்களிலிருந்து மின்சார “லிப்ட்” சாதாரண படிக்கட்டுகள் மூலமாக மஸ்ஜிதை அடைய முடியும். வாகன தரிப்பிடங்களுக்கு அணித்தாக அமைந்துள்ள வுளுச் செய்யும் இடத்தில் 6000 நீர்க் குழாய்களும் 2000 மலசலகூடங்களும் அமைந்துள்ளன. ஆறு மீற்றர் அகலம் கொண்ட சுவர் இதனடியில் கட்டப்பட்டுள்ளது. இது உலகத்திலேயே மிகப்பெரிய சுவரெனக் கருதப்படுகிறது. மின்சாரம், குளிர் என்பன சுமார் 7 கி.மீற்றர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள உற்பத்தி நிலையத்திலிருந்து உருவாக்கப்பட்டு பாரிய குழாய்கள் மூலமாக மஸ்ஜிதின் நிலத்தில் கீழ் உள்ள 144 அறைகள் கொண்ட தொகுதிக்குக் கொண்டுவரப்பட்டு அங்குள்ள கருவிகள் ஊடாகவே மஸ்ஜிதுக்கு மின்சாரம், குளிர் என்பன வழங்கப்படுகின்றன.
மேற்கூறியவை காட்சிகளில் சில. இன்னும் எத்தனையோ உள. விரிவஞ்சி இங்கு குறிப்பிடப்படவில்லை.
63

Page 40
மதீனாவின் மாண்புகள்
09. இரு சோக சம்பவங்கள்
1. நபிதூதரின் புகழுடம்பைத் திருடும் முயற்சி
ஹிஜ்ரி 557 ம் ஆண்டு மொரோக்கோ வாசிகள்போல் உடையணிந்த இருவர் மதீனா வந்து நபிதூதரின் கப்றுக்கு அண்மையில் பள்ளிக்கு வெளியே கூடாரமடித்துத் தங்கினர். அவ்விருவரும் எவ்வேளையிலும் வணக்க வழிபாடுகளிலும் பெருமானாரை ஸியாறத் செய்வதிலும் பகி" எனும் அடக்கஸ்தலத்தை ஸியாரத் செய்வதிலும் மதீனா மக்களுக்கு நன்கொடைகள் அன்னதானங்கள் வழங்குவதிலும் ஈடுபட்டுத் தங்களை பெரும் வணக்கசாலிகளாகக் காட்டிக்கொண்டனர். இதுவே அவர்களின் வெளித்தோற்றம்.
ஆனால் இரகசியமாகத் தாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து புகழ்மிக்க நபி(ஸல்) அவர்களின் கப்றை நோக்கி குழி தோண்டிக்கொண்டிருந்தனர்.தோண்டி எடுக்கும் மண்ணை அவர்கள் பக்கத்தில் ஒரு கிணறு தோண்டி அதில் போட்டனர். சிலவேளைகளில் சாக்கினுள் இரகசியமாக எடுத்துக்கொண்டு ஜன்னதுல் பகீயில் ஸியாறத் செய்யச் செல்வது போல் சென்று மணல்களை வீசி விட்டு வந்தனர். இவ்வாறு அவர்கள் பல நாட்கள் தோண்டிய சுரங்கம் பெருமானாரின் கப்றை அடைவதற்கு மிக நெருக்கமாக இருக்கும் போது பாரிய மழைகள் மண்ணை வாரி அவர்கள் முயற்சியைப் பின்போட்டது.
இவ்வேளை சிரியாவிலிருந்த அந்நாட்டு சுல்தான் நூறுத்தீன்
மஹற்மூத் பின் ஸன்கீ அவர்கள் ஒரு கனவு காண்கின்றார். அக்கனவிலே நபி(ஸல்) அவர்கள் தோன்றி மேற்கூறிய இரு
64

மதீனாவின் மாண்புகள்
é
நபர்களையும் சுட்டிக்காட்டி “மஹற்மூத்! இவ்விருவரின் திங் கைவிட் டும் என் னைப் பாதுகாத்துக் கொள் ” எனக்கூறினார்கள். திடுக்கிட்டு விழித்த சுல்தான் மஹமூத் அவர்கள் வுளுச் செய்து தொழுது விட்டு மீண்டும் படுத்தார்கள். மீண்டும் அதே கனவு! இவ்வாறு மூன்று முறை நடந்தது. மூன்றாவது கனவின் பின் சுல்தான் அவர்கள் தமது அமைச்சர் ஜமாலுத்தீன் முசலி அவர்களை அழைத்து கண்ட கனவைக் கூறினார். அப்போது அமைச்சர் ஏதோ ஒரு சம்பவம் மதீனாவில் நடந்துள்ளது. கனவை எவரிடமும் கூறாமல் உடனே மதீனா செல்லப் புறப்படுங்கள் என அவர் ஆலோசனை கூற இருவரும் ஷாமிலிருந்து இருபது உதவியாளர்களுடன் புறப்பட்டு பதினான்கு நாட்கள் பிரயாணம் செய்து மதீனாவை அடைந்தனர்.
மதீனா வந்த அரசர் றவுளா சென்று தொழுது நபிதூதரையும் ஸியாறத் செய்துவிட்டு அமைச்சருடன் அமர்ந்து கனவின்’ விளக்கம் பற்றியும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசித்தனர். அப்போது அமைச்சர் அவ்விருவர்களையும் உங்களால் அடையாளம் காட்ட முடியுமா? எனக் கேட்க ஆம் என்றார் மன்னர். உடனே அமைச்சர் “மதீனா வாசிகள் அனைவரையும் பள்ளியில் கூடுமாறும் மன்னர் அவர்கட்கு அன்பளிப்புகள் வழங்கவிருப்பதாகவும் தேவையுள்ளவர்கள் மன்னரிடம் தங்களது தேவைகளைக் கூறி உதவி பெறுமாறும் பொதுக் கட்டளை ஒன்றைப் பிறப்பித்தார். மக்கள் வெள்ளம் பள்ளியினுள் வர ஒவ்வொருவராக உதவிகள் வழங்கப்பட்டன. மக்கள் உதவி பெற்று முடிந்து விட்டது. ஆனால் மன்னர் தேடிய இருவரும் அவர்களில் இல்லை.
மக்களை நோக்கி சுல்தான் இன்னமும் மதீனாவில் எவரும் வராமல் உள்ளனரா? என வினவ “அரசரே !
மொரோக்கோவைச் சேர்ந்த இருவர் மட்டும் வரவில்லை.
65

Page 41
மதீனாவின் மாண்புகள்
அவர் கட்கு தங்களின் உதவி தேவையேயில்லை. முழுமையாகத் தங்களை வணக்கத்தில் ஈடுபடுத்திக் கொண்டுள்ள அந்நன்மக்கள் எமக்கு அதிகம் உதவி செய்யும் பரோபகாரிகளாக உள்ளனர். பெரும் கனவான்கள் அவர்கள்’ என்றனர் மக்கள்.
அவர்கள் இருவரையும் கண்டிப்பாக வரச்சொல்லுமாறு சுல்தான் கட்டளை பிறப்பிக்க அவர்கள் இருவரும் அங்கு வந்தனர். அப்போது அமைச்சரை நோக்கி மன்னர் கனவிலே காட்டப்பட்டவர்கள் இவர்கள்தான்! சந்தேகமேயில்லை ! எனக் கூறினார். அமைச்சர் அவ் விருவர் களையும் விசாரித்தபோது “நாங்கள் மொரோக்கோவைச் சேர்ந்தவர்கள். ஹஜ்ஜுக்கு வந்த நாங்கள் நபிகளாருக்குப் பக்கத்திலிருந்து நல் லமல் கள் செயப் ய உறுதி புணர் டு இங்கு தங்கியிருக்கின்றோம் எனக் கூறினர். துருவித்துருவி விசாரித்தனர். பலன் கிடைக்கவில்லை. பின்னர் சுல்தானும் , அமைச்சர்களும் மதீனாவின் சில பிரதானிகளுமாக அவர்கள் தங்கியிருந்த கூடாரத்தை நோக்கிச் சென்று பார்வையிட்டனர். அதிகமான பணமும் பல புத்தகங்களும் அங்கு காணப்பட்டன. எவ்வித சந்தேகங்களும் கொள்ளும் அளவுக்கு நிலைமை அங்கிருக்கவில்லை. சுல்தான் நூறுத்தீன் கூடாரத்தினுள் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். திடீரென அங்கே நிலத்திலே விரிக்கப்பட்டிருந்த விரிப்பை உயர்த்தினார். ஒரு மரப்பலகை அதன் கீழ் இருந்தது. அதனையும் உயர்த்தினார். அங்குதான் பேரதிர்ச்சி, பேரிடி காத்திருந்தது. பாரிய குழியொன்று அங்கு காணப்பட்டது. அக்குழி நபி(ஸல்) அவர்களின் புனித உடம்பு அடக்கஞ்செய்யப்பட்டிருக்கும் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. புனித உடம்புக்கும் சுரங்கத்துக்குமிடையே
66

மதீனாவின் மாண்புகள்
சில அடிகளே எஞ்சியிருந்தன. அல்லாஹற் அந்த உடம்பை பாதுகாத்தான்.
மன்னரும், மக்களும் அவர்களை அடித்து விசாரித்த போது தாங்கள் இருவரும் ஸ்பெயின் நாட்டு கிறிஸ்தவர்கள் என்றும், தங்களை கிறிஸ்தவ அரசர் ஒருவர் அதிக பணத்தைக் கொடுத்து மொரோக்கோ ஹாஜிகளின் உடையில் அவர்களை மதீனாவுக்கு அனுப்பியதாகவும் நபியவர்களின் திருவுடம்பை தனது நாட்டுக் கு கடத்திக் கொணி டு வருமாறு உத்தரவிட்டதாகவும் கூறினர். அவர்கள் இருவரையும் கொல்லுமாறு சுல்தான் உத்தரவு பிறப்பித்தார்.
பின்னர் சுல்தான் நூறுத்தீன் ஸன்கீ அவர்கள் பெருமானாரின் வீட்டைச் சுற்றி நீர் மட்டம் வரும் வரை தோண்டி அங்கே ஈயம், செம்பு போன்ற உலோகங்களைக் கொட்டி அப்பாரிய கிடங்கை நிரப்பினார். இனிமேல் எக்காலமும் எவராலும் தோண்ட முடியாத அளவுக்கு நீர் மட்டம்வரை அதிகளவு உலோகங்கள் போடப்பட்டன. பின்னர் மன்னரும், பிரதானிகளும் சிரியா நோக்கித் திரும்பிச் சென்றனர்.
மேற்காணும் சம்பவம் பல வரலாற்று நூல்களில் இடம் பெற்றுள்ள ஒரு பிரபல்யமான சம்பவமாகும். இச்சம்பவத்தினால் நாம் ஓர் உண்மையைத் தெளிவாக அறிகின்றோம். நபி(ஸல்) அவர்கள் அடக் கஞ் செய்யப்பட்டு சுமார் ஐந்தரை நூற்றாண்டுகள் கடந்த பின்னரே இந்தத் திருட்டு முயற்சி நடந்துள்ளது. இதனால் அந்த எதிரிகள் இத்தனை வருடங்களும் அந்த நபிநாதரின் உடம்பு அழியாமல் உள்ளது என்பதை மிகத்திட்ட வட்டமாக நம்பியுள்ளனர் என்பது தெளிவாகின்றது.
67

Page 42
மதீனாவின் மாண்புகள்
2. இரு முறை தீப்பற்றியது.
மதீனாப்பள்ளியில் நடந்த மற்றுமொரு சோக சம்பவம் அங்கு
தீப்பிடித்ததாகும். இது ஹிஜ்ரி 654 றமழான் பிறை ஒன்று வெள்ளிக்கிழமை இரவு நடந்தது.
இது பற்றி கூறப்படுவதாவது,
மஸ்ஜிதின் ஊழியர் ஒருவர் விளக்கேற்றும் பணியில் ஈடுபட்டார். அவரது கவனயீனத்தால் எண்ணெய் அதிகம் கொட்டப்பட்டு அதிலே இருந்து நெருப்பு சுவாலை விட்டு பற்றி பள்ளிவாசலின் வளையில் பிடித்து எரிய ஆரம்பித்தது. தீச்சுவாலை எங்கும் வியாபித்து மதீனாவின் கவர்னரும் மக்களும் கூடி அதனை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் நெருப்பை அணைக்க முடியவில்லை. பள்ளிவாசலின் பெரும்பாலான பகுதிகள் நெருப்புக்கிரையாகின. நபி(ஸல்) அவர்கள் அடக்கப்பட்டிருக்கும் பகுதியும் அதன் பக்கமிருந்த உதுமான் (ரழி) அவர்களினால் பாதுகாக்கப்பட்ட அல்குர்ஆனின் மூலப்பிரதியும் ஏனைய பொருட்களும் எஞ்சின.
அவ்வேளை பக்தாதில் கலீபாவாக இருந்த அப்பாஸிய கலீபா முஸ் த.ஸ்லிம் பில்லாஹ புனிதமிகு பள்ளிவாசலைப் புனர்நிர்மானம் செய்யத்தேவையான ஊழியர்களையும் பொருட்களையும் அங்கு அனுப்பிவைத்தார்.
இவ்வருடத்திலே நடந்த மற்றுமொரு சம்பவம் என்னவெனில் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்த ஹிஜாஸ் நெருப்பு இவ்வருடத்திலேயே வெளியாகிறது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
68

மதினாவின் மாண்புகள்
ஹிஜாஸ் மாகாணத்தில் பாரிய நெருப்பு வெளியாகும் வர்ை இறுதி நாள் ஏற்படமாட்டாது. (புஹாரி, முஸ்லிம்)
மஸ்ஜிதுந் நபவியில் தீப்பிடித்த அதே வருடத்திலேயே ஜமாதுல் ஆகிர் மாதம் புதன் இரவு பூமி அதிர்ச்சி ஏற்பட்டு அப்பயங்கர நெருப்பும் மூண்டது.
இப்பள்ளியிலே இதே போன்ற மற்றொரு சோக சம்பவம் ஹிஜ்ரி 886 றமழான் பிறை 13ல் நடந்தது. திடீரென ஏற்பட்ட இடி முழக்கத்தின் தீச்சுவாலை ஒன்று பள்ளியின் தென்கிழக்கு மூலையிலிருந்த மனாறாவில் வீழ்ந்து அதன் கீழிருந்த சம்சுதீன் பின் கதீப் எனும் தலைமை முஅத்தினின் தலையில் விழ அவர் காலமானார். அதே இடியினால் பள்ளிவாசலில் தீச்சுவாலை ஏற்பட்டு அது எரிய ஆரம்பித்தது. மக்களும் நாட்டு அமீரும் கூடி அதனை அணைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இதே நெருப்பு நபி (ஸல்) அவர்களின் ஹஜ்ராவை நெருங்கவில்லை. அப்பகுதியில் இருந்த பொருட்கள் தப்பின.
இவ்விடயம் அவ்வேளை எகிப்தில் இருந்து ஆட்சி செய்த சுல்தான் அஷ்ரஃப் காய்த்த பாய்க்கு அறிவிக்கப்பட்டு அவர் மூலம் தொழிலாளர்களும் கட்டடத்துக்குத் தேவையான கருவிகளும் பொருட்களும் அனுப்பப்பட்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
வல்ல அல்லாஹ் இப்புனித மஸ்ஜிதுக்கு மேலும் சோதனைகள் ஏற்படாமல் பாதுகாப்பானாக!.
69

Page 43
மதீனாவின் மாண்புகள்
03
மதீனாவின் முக்கிய இடங்கள்
01- மஸ்ஜிதுல் குபா
மதீனாவில் மஸ்ஜிதுந்நபவிக்கு அடுத்ததாக சிறப்புக்குரியதாக இது திகழ்கின்றது. உலகிலே சிறப்புமிக்க மூன்று மஸ்ஜித்களுக்கு அடுத்ததாக சிறப்புக்குரியதாக இதனைக் கூறலாம். இப்பள்ளியிலே இரண்டு ரகஅத் தொழுவது ஓர் “உம்றா’ ச் செய்வதற்கு சமம் என ஹதீஸ்கள் கூறுகின்றன. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
“ எவரொருவர் மஸ்ஜிது குபாவுக்கு வந்து அதிலே இரண்டு ரகஅத் தொழுவாராயின் அவருக்கு ஓர் “உம்றா’ ச் செய்த நற்கூலி கிடைக்கும்”
(நஸயீ) இறைத்தூதர் ஹிஜ்ரத் வந்து முதலில் அமைத்த மஸ்ஜித் இதுவாகும். இது பற்றி அல்லாஹற் பின்வருமாறு கூறுகின்றான்.
"رجال يحبون أن يتطهروا * والله يحدب المطهرين
“ ஆரம்ப தினத்திலேயே பயபக்தியாக அமைக்கப்பட்ட
மஸ்ஜிதுதான் நீர் நின்று தொழுவதற்கு மிகத் தகுதியுடையது. பரிசுத்தவான்களாக இருப்பதையே விரும்பும் மனிதர்கள் தாம்
70

மதினாவின் மாண்புகள்
அதில் இருக்கின்றனர். அல்லாஹவும் பரிசுத்தவான்களையே விரும்புகின்றான்.” (தவ்பா:108) இம்மஸ்ஜிதின் சிறப்புக் காரணமாக நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக் கிழமையும் இப்பள்ளிக்கு நடையாகவோ அல்லது ஒட்டகை மீதோ சென்று அங்கு இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள் என ஏராளமான ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. இதே போல் உமர் (ரழி) அவர்கள் தமது பதவிக் காலத்தில் திங்கள், வியாழக்கிழமைகளில் இப்பள்ளிக்கு வருவதை வழக்கமாக்கிக்கொண்டார்கள்.
* மஸ்ஜிது குபாவில் இரண்டு ரக்அத்து தொழுவது பைத்துல் முகத்தஸில் தொழுவதை விட விருப்பமானது”
என சட்து பின் அபீ வக்காஸ் (ரழி) போன்ற பல ஸஹாபாக்கள் கூறியுள்ளனர்.
மஸ்ஜிதுந் நபவியிலிருந்து சுமார் மூன்று மைல் தூரத்தில் இருக்கும் இப்பள்ளிவாசல் தற்போது பல நவீன வசதிகளுடன் விஸ்தரித்துக் கட்டப்பட்டுள்ளது.
02- மஸ்ஜிதுல் கிப்லதைன்
மதீனாவிலிருந்து தபூக் பாதையில் 3 மைல் தூரத்தில் இம்மஸ்ஜித் அமைந்துள்ளது. மஸ்ஜிதுல் கிப்லதைன் என்றால் இரு கிப்லாவுடைய பள்ளி எனப் பொருள் படும். இப்பள்ளிக்கு இவ்வாறு பெயர் கூறப்படும் காரணம் என்னவெனில் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற போது முஸ்லிம்கள் தங்கள் ஜங்காலத் தொழுகைகட்காக தற்போது உள்ளது போல் க.".
71

Page 44
மதீனாவின் மாண்புகள்
பாவை முன்னோக்கித் தொழவில்லை. முஸ்லிம்கள் மக்காவில் வாழ்ந்த போதும் பின்னர் மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்த பின்பும் ஜெரூசலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவை முன்னோக்கியே தொழுதார்கள். நபி(ஸல்) அவர்கள் புனித க.பாவை முன்னோக்கித் தொழ ஆவல் கொண்டவர்களாகவே இருந்தார்கள். ஒரு நாள் நபி(ஸல்) அவர்களையும் சில ஸஹாபாக்களையும் பனு ஸலமா கிளையைச் சேர்ந்த உம்மு பஷர் எனும் பெண் பகல் உணவுக்கு அழைத்திருந்தார். அங்கு சென்றவர்கள் ஞஹர் நேரம் வந்தவுடன் தொழ ஆரம்பித்தார்கள். வழமையைப்போன்றே பைத்துல் முகத்தஸை முன்னோக்கியே தொழ ஆரம்பித்தார்கள். அவ்வேளை
"فول وجهك شطر المسجد الحرام "
உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹறாமுக்கு நேராகத் திருப்புவீராக’ எனும் அல் குர்ஆனின் கட்டளை அல்லாஹற்விடமிருந்து வந்தது. எனவே வடக்குப் பக்கம் பார்த்து தொழுது கொண்டிருந்த நபியவர்கள் திெற்குப் புறமாகத் திரும் பினார்கள். பின்னால் தொழுது கொண்டிருந்தவர்களும் அவ்வாறே செய்தார்கள். ஆண்கள் தொழுத இடத்தில் பெண்களும், பெண்கள் தொழுத இடத்தில் ஆண்களுமாக மாற்றப்பட்டனர். ஒரே நேரத்தில் இரு கிப்லாக்களை நோக்கி ஒரே தொழுகை தொழப்பட்டதால் அந்தத் தொழுகை நடந்த இடத்திற்கு இரு கிப்லாக்களை உடைய “மஸ்ஜிதுல் கிப்லதைன்’ எனப் பெயர் வழங்கப்பட்டது. இப்பள்ளிக்கு “மஸ்ஜிது பனிஸலமா’ என்றும் ஒரு பெயர் உண்டு. ஹிஜ்ரத் வந்த பின்னர் சுமார் 16 மாதங்கள் நபி (ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை
72

மதீனாவின் மாண்புகள்
முன்னோக் கியே தொழுது வந்தார் கள் எனர் பது குறிப்பிடத்தக்கது.
03- மஸ்ஜிதுல் முஸல்லா
“மஸ்ஜிதுல் கமாமா” என அழைக்கப்படும் இப்பள்ளிவாசல் மஸ்ஜிதுந்நபவிக்கு அண்மையில் உள்ளது. நபி(ஸல்) அவர்கள் பெருநாட் தொழுகைக்காகவும் மழை தேடித் தொழும் தொழுகைக்காகவும் பெரு வெளியாக இருந்த இந்த இடத்தையே உபயோகித்தார்கள். அனஸ் பின் மாலிக் (ரஹற்) அவர்கள் அறிவிக்கிறார்கள் " ஒரு முறை (ஸல்) அவர்கள் மழை தேடித் தொழும் தொழுகைக்காக இம்முஸல்லாவுக்கு வந்தார்கள். தொழுது குத்பா ஒதிய பின் இதுவே நாங்கள் ஒன்று கூடுகின்ற, மழை தேடித் தொழுகின்ற, நோன்புப் பெருநாளுக்கும், ஹஜ்ஜுப் பெருநாளுக்கும் தொழுகின்ற இடமாகும். இவ்விடத்தில் கட்டடம் அமைக்கக்கூடாது’ என்று கூறினார்கள்.
“எனது தொழும் இடமான “முஸல்லாவுக்கும்’ எனது வீட்டுக்குமிடையே றவ்ழா ஷரீப் உள்ளது” என்றும் ஓர் ஹதீஸ் அறிவிப்பு உள்ளது. நஜ்ஜார் என்பவர் அறிவிக்கிறார்.'ச'து பின் அபீ வக்காஸ் (ரழி) அவர்களின் மகள் ஆயிஷாவுடன் நான் மக்காவுக்குச் சென்றேன். அவர் என்னிடம் மதீனாவில் உனது வீடு எங்கே உள்ளது எனக் கேட்டார். நான் “பிலாத்” தில் என்றேன். அப்படியா! அந்த இடத்தை விட்டு விடாதே! ஏனெனில் எனது தந்தை அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூறியுள்ளார்கள். எனது பள்ளிக்கும் இந்த
73

Page 45
மதினாவின் மாண்புகள்
முஸ்லி லா வுக் குமிடையே உள்ள பகுதி றவி ளா (சுவனப்பூங்காவனம்) என்பதாக!
இவ்விடத்திலே பள்ளிவாசல் பிற்காலத்திலே கட்டப்பட்டுள்ளது. இதன் கூரை ஆறு குப்பாக்களாக அமைக்கப் பெற்றிருக்கிறது. இதற்கு “மேகப் பள்ளி’ எனப் பெயரிடப்பட்டதற்குக் காரணம் சரித்திர நூல்களில் காணப்படவில்லை.
04- மஸ்ஜிதுல் இஜாபா
“ஜன்னதுல் பகீ’ என்னும் மதீனா மையவாடியின் வடக்கே ஷாரிஉசித்தீன் எனும் பாதையில் தற்போதைய அன்சார் . ஆஸ்பத்திரிக்குப் பக்கத்தில் இம்மஸ்ஜித் அமைந்துள்ளது.
“இஜாபா” என்னும் அறபுச் சொல்லுக்கு பதிலளித்தல் என பொருள்படும். ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் இந்தப் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். இது “அவ்சு” கிளையாரின் பள்ளியாக இருந்தது. இப்பள்ளியினுள் வந்த நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத் தொழுது விட்டு பின்னர் அங்கு பிரசன்னமாயிருந்த மக்களிடம் வந்து நான் எனது றப்பிடம் மூன்று விடயங்களை கேட்டுக் கொண்டிருந்தேன். எனது இரண்டு கேள்விகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஒன்று மறுக்கப்பட்டது.
“என் சமுதாயத்தாரை (ஒட்டுமொத்தமாக) பஞ்சத்தால் அழித்துவிடாதே எனக்கேட்டேன். அதை எனக்குத் தந்தான். எனது சமுதாயத்தினரை வெள்ள நீரில் (மொத்தமாக) மூழ்கடித்துவிடாதே எனக்கேட்டேன். அதையும் எனக்குத் தநீ தான் . எனது சமுதாயத்தினர் தமக் கிடையே மோதிக்கொள்ளக் கூடாது எனப்பிரார்த்தித்தேன். அதனை ஏற்க மறுத்துவிட்டான்’ ( முஸ்லிம்-5539 )
74

மதீனாவின் மாண்புகள்
இவ்வாறு இரண்டு கேள்விகட்கு பதிலளிக்கப் பட்டதாலேயே இப்பள்ளி மஸ்ஜிதுல் இஜாபா (பதிலளிக்கப்பட்ட மஸ்ஜித்) என வழங்கப்படலாயிற்று.
05. மஸ்ஜிதுல் ஜும்ஆ
ஹிஜ்ரத் வந்து குபா நகரில் சில நாட்கள் தரித்திருந்த நபி தூதரும் ஸஹாபாக்களும் மதீனா நோக்கி வெள்ளி காலை புறப்பட்டு குபாவிலிருந்து மதீனா வரும் வழியில் குபாவுக்கு மிக அண்மையில் உள்ள பனு சாலிம் கிளையினரின் வீடுகளிலிருந்த றானுானா பள்ளத்தாக்கில் ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றினார்கள். நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் முதன் முதலாக இந்த இடத்திலேயே ஜும்ஆத் தொழுததால் இவ்விடம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
06- மஸ்ஜிதுல் பதஹற்
ஹிஜ்ரி 5ல் எதிரிகளின் கூட்டுப்படைகள் மதீனாவைத் தாக்க வந்த போது எதிரிகள் மதீனாவினுள் நுழையச் சாத்தியமான பகுதியெங்கும் அகழிகள் தோண்டப்பட்டு பாதுகாக்கப்பட்டன. அதிலே நபி(ஸல்) அவர்களும் சஹாபாக்களும் கூடாரமடித்துத் தங்கியிருந்து பிரார்த்தித்த இடங்களில் யுத்த ஞாபகார்த்தமாக சில பள்ளிவாசல்கள் பிற்காலத்தில் எழுப்பப்பட்டன. இப்பள்ளிவாசல் பிரதேசம் இன்று சப்உ மஸாஜிது எனும் பெயரில் அழைக்கப்படுகின்றது.
இப்பள்ளிகளில் ஒன்றே மஸ்ஜிதுல் பதாஹற். இது பற்றி முஸ்னது அஹற்மதுவில் பின்வரும் ஹதீஸ் பதியப்பட்டுள்ளது.
75

Page 46
மதீனாவின் மாண்புகள்
“நபி (ஸல்) அவர்கள் கூட்டுப் படைகட்கு எதிராக திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்களிலும் பிரார்த்தனை புரிந்தார்கள். அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுவதாக புதன் கிழமை தொழுகையின் போது அறிவிக்கப்பட்டது. இதனால் அவர்களின் முகத்தில் மலர்ச்சியும் மகிழ்ச்சியும் காணப்பட்டது”
நபி(ஸல்) அவர்கள் தொழுது மேற் கூறிய பிரார்த்தனை புரிந்த இடத்திலேயே மஸ்ஜிதுல் பதஹற் உள்ளது எனக் கூறப்படுகின்றது.
07. மஸ்ஜிது தில் ஹ"லைபா
மதீனாவாசிகள் மக்காவுக்குச் செல்லும் போது இஹற்றாம் கட்ட வேண்டிய “மீக்காத்” பள்ளியாக மேற் கூறிய துல் ஹ"லைபாப் பள்ளி உள்ளது. இதற்கு பி.று அலி பள்ளி என்றும் மீக்காத் பள்ளி என்றும் அழைக்கப்படுகின்றது. இப்பள்ளிவாசல் வாதி அகீக் எனும் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இப்பள்ளத்தாக்கின் சிறப்புக்களும் ஹதீஸ் களில் கூறப்பட்டுள்ளன. இப் பள்ளத் தாக்கு 'முபாறாக்கானது” என்றும் இதில் தொழுமாறும் நபி(ஸல்) அவர்கள் பணிக்கப்பட்டார்கள். இன்று இப்பள்ளிவாசல் மிக விசாலமாக்கிக் கட்டப்பட்டுள்ளதுடன் இஹற்றாம் கட்டுவதற்குரிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இஹற்றாம் கட்டுவோர்கட்கு குளிப்பது “சுன்னத்' ஆதலால் இங்கே குளியலறை வசதிகள் ஏராளம் செய்யப்பட்டுள்ளன.
08- உஹது மலையும் அதன் சுஹதாக்களும்
மதீனா நகருள் பிரவேசிக்கும் எவருக்கும் மிகத் துல்லியமாகத் தென்படும் மலை உஹது மலையாகும். இம்மலை பற்றி
76

மதீனாவின் மாண்புகள்
பல வாறெல்லாம் புகழ் நீது நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
هذا جبل يحبنا ونحبه (متفق عليه)
“உஹது மலை எம்மை நேசிக்கின்றது. அதனை நாம் நேசிக்கின்றோம்”
(புஹாரி, முஸ்லிம்) “உஹது எம் மை விரும் புகின்றது. அதை நாம் விரும்புகின்றோம். அது சுவன வாசல் களில் ஒரு வாசலாகவுள்ளது.
(தபறானி)
எங்கள் நபி(ஸல்) அவர்கள் இம்மலையைப் பற்றி இவ்வளவு தூரம் புகழ்ந்து கூறியுள்ளது நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டியவையாகும். ஈச்ச மரக்குத்தி எவ்வாறு நபியை நேசித்ததோ அதே போல் தான் இம்மலையும் நேசித்ததாகவும் றவ்றா ஷரீப் சுவனத்தில் இடம் பெறுவது போல் இதுவும் இடம் பெறும் எனவும் அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மதீனாவிலிருந்து 5 கி.மீ தூரத்தில் இருக்கும் இம்மலை தனித்து பிற மலைகளுடன் தொடர்பின்றி இருப்பதாலேயே இதற்கு உஹது (தனித்தது) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இம்மலையில் தங்கம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இம்மலையை நாம் காணும் போது இதன் அடிவாரத்தில் ஹிஜ்ரி 3ம் ஆண்டு நடைபெற்ற போர் தான் எம் நினைவுக்கு வருகின்றது. “அல்லாஹவின் சிங்கம்” எனப் புகழப்பட்ட
77

Page 47
மதீனாவின் மாண்புகள்
நபி(ஸல்) அவர்களின் சாச்சா ஹம்ஸா (ரழி) அவர்கள் சஹிதாக்கப்பட்ட சோக சம்பவமும் எம் கண் முன் தோன்றுகின்றது. இந்த யுத்தத்திலே முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு ஹம்ஸா (ரழி) அவர்களின் பிரிவாகும். இதன் நிமித்தமாக இன்று உஹது அடிவாரக் கிராமத்தின் பெயர் “செய்யிதுஷ ஷ"ஹாதா” என அழைக்கப்படுகின்றது. அங்குள்ள பாடசாலையும் அவர்களின் பெயரிலேயே இயங்குகின்றது. “உஹது யுத்த முடிவிலே ஹம்ஸா (ரழி) அவர்களின் மூக்கு, காதுகள் வெட்டப்பட்டு அவரின் வயிறு பிளந்து ஈரல் வெளியே தள்ளப்பட்டு பார்ப்போரை ஆத்திரம் கொள்ளச் செய்யும் நிலையில் அப்புகழுடம்பு பிரகாசித்த போது அவரின் சகோதரி ஸபிய்யா (ரழி) அவர்கள் அவரைப் பார்க்க அங்கே வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஸபிய்யாவின் புதல்வர் சுபைர் பின் அவாம் (ரழி) அவர்களிடம் உங்கள் தாயை அவ்வுடலைப் பார்க்காமல் செல்லுமாறு கூறுங்கள் எனப் பணித்தார்கள். தாயாரிடம் மகன் கூறிய போது நிச்சயமாக நான் பொறுமையைக் கடைப்பிடிப்பேன் என அவர் கூறி தன் சகோதரரின் தியாகத்தை மெச்சி அவருக்காக துஆ இறைஞ்சிச் சென்றார்கள் நபி தூதர் (ஸல்) அவர்களின் மாமியான ஸ்பிய்யா (ரழி) அவர்கள். நபி(ஸல்) அவர்கள் “என்னிடம் ஜிப்ரீல் வந்து ஹம்ஸா அல்லாஹற்வினதும் அவனது துTதரினதும் சிங்கம் என ஏழு வானங்களிலும் எழுதப்பட்டுள்ளதாக அறிவித்து விட்டுச் சென்றார்’ என அறிவித்தார்கள்.
இந்த யுத்தத்திலே எழுபது ஸஹாபாக்கள் வீர சுவர்க்கம்
புகுந்தார்கள். அவர்கள் அம்மலையடிவாரத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
78.

மதீனாவின் மாண்புகள்
09. ஜன்னதுல் பகி.
மதீனா வாசிகளின் பொது அடக்கஸ்தலத்திற்கு பகி" என்பது பெயர். இதனை “ஜன்னதுல் பகீ.’ என்று சிறப்பாகக் கூறப்படுவதற்குக் காரணம் அங்கே சுமார் பத்தாயிரம் சஹாபாக்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். பல முக்கிய சஹாபாக்கள், உம்முஹாதுல் மு.மினின்கள், தாபியன்கள், தபஉத்தாபியின்கள் போன்ற நன் மக்கள் இங்கே அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மதீனா செல்வோர் இம்மையவாடி சென்று ஸியாரத் செய்வது வழக்கம்.
“மதீனாவில் மரணிக்க விரும்புவோர் மரணிக்கட்டும். அவர்கட்கு நான் ஷபாஅத் செய்வேன்’ என்ற ஹதீஸ் இங்கு அடக்கப்பட்டுள்ள மக்களின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது. நடு இரவுகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்விடம் சென்று அம்மக்களுக்கு பிழை பொறுக்கத் தேடியதாக ஏராளமான ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. இறுதி நாளில் அவ்விடம் இருந்து எழுபதினாயிரம் பேர் பூரண சந்திர வதனத்துடன் எழுப்பப்படுவதாகவும் ஹதீஸ்கள் அறிவிக்கின்றன.
உலகிலுள்ள மையவாடிகளில் நபி(ஸல்) அவர்களின் துஆப் பிரார்த்தனையை அதிகம் பெற்றதும் சிறப்புக்குரியதுமான இது, மதீனாப் பள்ளிவாசலுக்கு கிழக்கே மிக அண்மையில் அமைந்துள்ளது. மதீனாவில் மரணமடையும் அனைவரும் இங்கேயே நல்லடக்கம் செய்யப்படும் பாக்கியத்தைப் பெறுகின்றார்கள்.
10. பி.நூறு உதுமான்
உதுமான் (ரழி) அவர்கள் வாங்கி முஸ்லிம்களுக்காக வக்பு செய்த “பிட்று றுாமா” எனும் கிணறே பி'று உதுமான் என அழைக்கப்படுகின்றது. மஸ்ஜிதுல் கிப்லதைனுக்கு
79

Page 48
மதீனாவின் மாண்புகள்
அண்மையிலுள்ள ஜாறுப் பகுதியிலுள்ள இக்கிணறு இன்று உடைந்து வரண்டு உள்ளது. மிக இடிபாடடைந்த நிலையில் இது உள்ளதால் இதனைப் பார் க் க தற்போது பார்வையாளர்கள் அனுமதிக்கப் படுவதில்லை.
இக்கிணறு யூதன் ஒருவனுக்கே சொந்தமாக இருந்தது. மதீனா மக்களின் நீர்த் தேவையை நிறைவு செய்யும் பிரதான கிணறாக இது இருந்ததால் அதனை வாங்கி ஏழைகட்கு வக்புச் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் உதுமான் (ரழி) அவர்களைக் கேட்டுக் கொண்டார்கள். இதன் பெயரில் 35000 திரஹம் கொடுத்து இதனை வாங்கி உதுமான் (ரழி) அவர்கள் ஏழைகட்கு அன்பளிப்புச் செய்தார்கள். இதனால் அவரது பெயர் கொண்டே இதன் நாமம் நிலைக்கலாயிற்று.
11- மதீனாவின் பாரிய அல்-குர்ஆன் அச்சகம்
“முஜம்மஉல் மலிக் பஹத் லிதிபாஅதில் முஸ்ஹபிஷ்ஷரீப்”
என அறபியில் அழைக்கப்படும் அல்குர்ஆனின் நவீன பாரியு அச்சு இயந்திர சாலை ஒன்று மதீனாவில் உள்ளது. அறபு
நாடு எதுவுமே கண்டிராத இப்பாரிய அச்சு இயந்திர சாலையில்
ஆண்டொன்றிற்கு 80 இலட்சம் அல்குர்ஆன் பிரதிகள்
அச்சிடப்படுகின்றன. மேலும் 10 இலட்சம் மொழிபெயர்ப்புப்
பிரதிகளும் உலகின் பல வேறு மொழிகளிலும்
மொழிபெயர்க்கப் படுகின்றன.
ஹஜ், அவ்காப் அமைச்சரின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் உயர் அறிஞர் சபையொன்று இவ்வச்சுச் சாலையின் பணிகளை மேற்பார்வை செய்கின்றது. இக் குழுவில் அல்குர்ஆனிலும் அதன் பல்வேறு கலைகளிலும் துறைதோயக் கற்ற மேதைகள் அங்கம் வகிக்கின்றனர். இப்பாரிய அச்சகத்திலிருந்து “முஸ்ஹபுல் மதீனா முனஷ்வறா’ எனப்
80

மதீனாவின் மாண்புகள்
பெயர் கொண்ட அல்குர்ஆன் பிரதிகள் மிக உயர் தொழில் நுட்ப உதவியுடன் அச்சிடப்படுகின்றன. இதன் மூலம் சவூதி அரேபியாவின் முழுமையான அல்குர்ஆன் தேவைகளும் நிறைவு செய்யப்படுவதுடன் வெளி நாடுகட்கும் பல இலட்சக் கணக்கான பிரதிகள் விநியோகிக்கப்படுகின்றன. எமது நாட்டிலும் இதே குர்ஆன் பிரதிகள் விநியோகிக்கப்படுகின்றன. அல்குர்ஆன் பிரதிகளை அச்சிடும் இச்சாலையிலிருந்தே அல்குர்ஆனின் மொழிபெயர்ப்புக்கள் ஹோசா, சீனா,துருக்கி பிரான்சு, தமிழ், ஆங்கிலம், தாய்லாந்து, உருது போன்ற பல்வேறு மொழிகளில் அச்சிடப்படுகின்றன. இதே அச்சிச்சாலையில் சிறந்த காரிகளால் ஒதப்பட்ட அல்குர்ஆனின் பதிவு நாடாக்கள் தயாரிக்கும் பிரிவும் உள்ளது. சுமார் 1500 பேர் பல்வேறு தரத்திலும் வேலை செய்யும் அல்குர்ஆன் அச்சுச்சாலை சுமார் 2 இலட்சம் மீற்றர் பரப்புக் கொண்டதாக மதரீனாவில் த பூக் பாதையில் அமைந்துள்ளது. இவ்வச்சிச்சாலையின் முன்வாசலிலே ஒதுவதற்குப் பலகையிலே விரித்து வைக்கப்பட்டது போல் மாபெரிய குர்ஆனின் மாதிரி உருவம் செதுக்கப்பட்டு பிரமாண்டமாகக் காட்சி தந்து கொண்டிருக்கிறது.
12 - மதீனாவில் இஸ்லாமிய பல்கலைக்கழகம்
எந்த இடத்திலிருந்து இஸ்லாமிய “த.வத்’ உலகெங்கும் பரந்து சென்றதோ அதே இடத்திலே “த.வா’ வை நோக்கமாகக்கொண்டு பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ வேண்டிய அவசியத்தை உலக இஸ்லாமிய அறிஞர்கள் உணர்ந்தனர். இதன் பேறாகவே ஹிஜ்ரி 1381 றபியுல் அவ்வல் பிறை 25ல் அன்றைய சவூதி மன்னர் அவர்களால் மதீனாவில் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவும் அரச பிரகடனம் வெளியிடப்பட்டது.
81

Page 49
மதீனாவின் மாண்புகள்
உலகின் பல பாகங்களிலுமுள்ள தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர் பெருமக்களையும் உள்நாட்டு அறிஞர்களையும் ஆளுநர் சபையாகக் கொண்ட இப்பல்கலைக்கழகத்தில் ஐந்து வளாகங்கள் உள்ளன. அவையாவன:
இஸ்லாமிய சட்டக்கலை (ஷரீஆ)
1.
2. த.வா 3. அல்குர்ஆன் 4. அல்ஹதீஸ் 5. அறபு மொழி
ஏதோ ஒரு பிரிவில் நான்கு வருடங்கள் பயிலும் மாணவர் அத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறுவதுடன் பொதுவான மார்க்கக் கல்வியையும் பெறும் ஒழுங்கில் பாடவிதானம் அமைக்கப்பட்டுள்ளது.
இதே பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்புகளுக்காக உயர் கற்கை பீடம் ஒன்று உள்ளது. இதில் “மஜிஸ்தேர்” (M.A) “துக்தூரா” (டாக்டர்) பட்டங்களைப் பெறுவோர் பயில்கின்றனர். மேலும் “முதவஸ்ஸிதா” எனும் பெயரில் கனிஷ்ட இடைநிலை கல்விப்பிரிவு ஒன்றும் “தானவி’ எனும் பெயரில் சிரேஷ்ட இடைநிலை கி கல்விப் பிரிவொன்றும் தனித்தனி பணிப்பாளர்களின் கீழ் இயங்குகின்றன. மூன்று வருட பாடப்போதனையைக் கொண்ட இப்பிரிவுகளில் பொதுவான பாடங்கள் கற்பிக்கப்படுவதுடன் கனிஷ்ட இடைநிலையில் சித்தி பெறுவோர் சிரேஷ்ட இடைநிலைக்கும் சிரேஷ் ட இடைநிலையில் சித்தி பெறுவோர் பல்கலைக்கழகத்திற்கும் அனுமதிக்கப்படுகின்றனர்.
இப்பல்கலைக்கழகத்தில் உலகின் சகல நாடுகளிலுமுள்ள முஸ்லிம் மாணவர்கள் அனுமதிக்கப்படுவதால் அறபு மொழி பேச முடியாத மாணவர்கள் வசதிக்காக அறபு மொழி பயிற்சிப் பிரிவொன்றும் தனியான பணிப்பாளரின் கீழ் இயங்குகின்றது.
82

மதீனாவின் மாண்புகள்
இங்கே இரண்டு வருடங்கள் அறபு மொழிப் பயிற்சி வழங்கப்பட்ட பின் அவர்களின் கல்வித் தகைமைகட் கேற்ப கல்வி நெறி ஒன்றிற்கு அனுமதிக்கப்படுவர்.இங்கே சுமார் 100 நாடுகளிலிருந்து 5000 திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பெறுகின்றனர். சவூதி அறேபியா, எகிப்து, சூடான், ஜோர்தான், பலஸ்தீன், இந்தியா, சிரியா நாட்டவர்களும் விரிவுரையாளர்களாக உள்ளனர்.
இப்பல்கலைக்கழகத்தின் விஷேட அம்சங்கள் இங்கே பயிலும் அனைவருக்கும் புலமைப் பரிசில் வழங்கப்படுவதுடன் பரீட்சை முடிவுகள் அனைத்தும் ஒரு வார காலத்தில் வெளியாவதுடன் பல்கலைக்கழக அனுமதி வேலைகள் அனைத்தும் தவணை விடுமுறையின் போது பூர்த்தியாக்கப்பட்டு புதிய தவணை ஆரம்பத்தில் மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு அனுமதிக்கப்பட்டுவிடுவர்.
மதீனா நகரிலிருந்து சுமார் ஐந்து கி.மீ தூரத்தில் சிறப்புமிக்க “வாதி அகரீகு” க்குப் பக்கத்தில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் தினந் தோறும் பிற்பகலில் மஸ்ஜிதுந் நபவி சென்று தொழுவதற்கு வாகன வசதிகளைப் பல்கலைக்கழகம் செய்துள்ளது. பிற்பகல் 4 மணியிலிருந்து மதீனா நகருக்கு மாணவர்களை ஏற்றி வரும் பல்கலைக்கழக பஸ்கள் இஷா தொழுது முடிந்த பின் மீண்டும் அவர்களை பல்கலைக்கழக வளவினுள் கொண்டு சேர்க்கும்.
மதீனாவிலிருந்து சஹாபாப் பெருமக்கள் இஸ்லாமியத் தூதை எடுத்துக் கொண்டு உலகெங்கும் பரந்து சென்று தீனொளி பரப்பியது போல் தூய்மையான நபி(ஸல்) அவர்களின் தூதை உலகெங்கும் பரப்ப இப்பட்டதாரிகள் பணி புரிவர் எனும் எதிர் பார்ப்பில் இப்பல்கலைக்கழகம் முப்பது ஆண்டுகளாக கல்விப் போதனை செய்து கொண்டிருக்கிறது.
83

Page 50
மதீனாவின் மாண்புகள்
09.
10.
உசாத்துணை நூல்கள்
பத்ஹால் பாரி, ஷரஹல் புகாரி
இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹம்)
ஷரஹற் ஸஹிஹற் முஸ்லிம் இமாம் நவவி (ரஹற்)
முஸ்னது அஹற்மது
இமாம் அஹற்மத் பின் ஹம்பல்(ரழி)
. முவத்தா..
இமாம் மாலிக் (ரஹற்)
6) IUT 6) 6 JuT அல்லாமா ஸம்ஹ"தி (ரஹற்)
அல்பிதாயா வந்நிஹாயா இப்னு கதிர் (ரஹம்)
சீறதுந் நபி இப்னு ஹிஷாம் அல் அன்சாரி
மஆலிமு தாரில் ஹிஜ்ரா யூஸ"ப் அப்துர் ரஸ்ஸாக்
மதீனா அல்யவ்ம் முஹம்மது ஸாலிஹற் புலைஹிஸ்
புஸ"லுன் மின் தாரீகில் மதீனா அலி ஹாபிழ்
84

மதீனாவின் மாண்புகள்
ll.
15.
19.
20.
வீரதுந் நபவிய்யா அபுல் ஹஸன் அலி நத்வி
மதீனா பைனல் மாளி வல் ஹாழிர்
இப்றாஹீம் அலி யாஷ்
ரஸாயில் பீ தாரிகில் மதீனா
அப்துல் ஜாஸிர்
திரு மதீனாவின் சரித்திரம்
மெளலவி அப்துல் கரீம்
கிதாபு தாரிகில் மதீனா இப்னு ஸ"ப்பா
தல்ஹிஸ" மஆலிமில் ஹிஜ்ரா ஸைனுத்தீன் அல் மறாஹி
. அல் வபா
இப்னுல் ஜவ்ஸி
தலிலுல் ஜாமிஅதில் இஸ்லாமிய்யா
றாபிததுல் ஆலமில் இஸ்லாமி. மாசிகைகள்.
அல் அஹாதீதுஸ்ஸஹிஹா பீ பழாயிலில் மதீனா கல்ாநிதி சாலிஹற் பின் ஹாமித் றிபாயி
85

Page 51


Page 52
ISBN: 978-955-1407-01-08
 

ليسانس من الجامعة الإ: بكالوريوس (سريلانكا
ملدابیر الكلية الحامية