கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மெளனப் பார்வை

Page 1


Page 2


Page 3

மெளனப் பார்வை
(நாவல்)
துறையூரான்
வெளியீடு கலைஞர் பேரவை பேசாலை.

Page 4
Gi>-
நூல் விபரம்
நூல் தலைப்பு - மெளனப் பார்வை
(நாவல்) ஆசிரியர் - துறையூரான்
(எம்.சிவானந்தன்) பதிப்பு ஆண்டு - 2010 பதிப்பு விபரம் - முதல் பதிப்பு உரிமை - ஆசிரியருக்கு தாளின் தன்மை - 11.2 கி.கி நூலின் அளவு - 12.5X18.5 cm அச்சு எழுத்து அளவு - 10 புள்ளி மொத்த பக்கங்கள் - 114 நூலின் விலை - 200/= அச்சிட்டோர் - ஸ்கை அச்சகம்,
மன்னார் வெளியிட்டோர் - கலைஞர் பேரவை
Guysteo6)

சமர்ப்பணம்
அன்பினையூட்டி
ஆளுமையாக்கி
அணிகலனாய் அறிவினை
அளித்து அருளிய
அன்னைக்கும் தந்தைக்கும்
அர்ப்பணிக்கின்றேன்.

Page 5
Gw D
என்னுரை
வாழ்க்கை என்பது அனுபவங்களின் தொகுப்பு. அனுபவங்கள் எனப்படுவது பல்வேறுபட்ட நிகழ்வுகள் ஆகும். நிகழ்வுகளுக்கு நல்லது என்பதோ கெட்டது என்பதோ கிடையாது. அவை வெறுமனே நிகழ்வுகள்தான். ஆனால் நாம் அவற்றுக்கு சமூக மதிப்புக் கொடுத்து நல்லது, கெட்டது என்றோ, உண்மை, பொய் என்றோ, சரி, பிழை என்றோ பெறுமானம் சார்பாக பார்க்கிறோம். நல்லதை பாராட்டி வரவேற்கின்ற அதேவேளை கெட்டதை மறுத்து ஒதுக்குகிறோம். ஆனால் இந்தப் பாராட்டுதல்களும் ஒதுக்குதல்களும் காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம், சமூகங்களுக்குச் சமூகம், இனத்துக்கு இனம், மதத்துக்கு மதம் வேறுபட்டே காணப்படுகின்றது. குறிப்பிட்ட ஒரு கால கட்டத்தில் அற்புதமாகத் தோன்றியவை பின்னாளிலி அற்பமாகவும், அற்பமாகத் தோன்றியவை அற்புதமாகவும் தெரிவது இயற்கையே. இது அனுபவத்தோடு தொடர்புடையது.
இந்த வகையில் எனது சிறு வயது தொடக்கம் இளமைக் காலம் வரை என்னைப் பாதித்த நிகழ்வுகளையும், மனிதர்களையும் சற்று முதிர்ச்சி ஏற்பட்ட வயதில் நினைத்துப் பார்த்தபோது புதிய பரிமாணங்களோடு அவைகளை, அவர்களை நோக்க முடிந்ததன் வெளிப்பாடே இந்தக் கதை.

சமூக நியமங்கள், கட்டுப்பாடுகள் என்பவற்றை மீறி பல சம்பவங்கள் பல்வேறு காலகட்டங்களில் நடந்திருக்கின்றன, நடந்து கொண்டுமிருக்கின்றன. அவ்வாறான சம்பவங்களில் சம்பந்தப்படுகிறவர்களும் மனிதர்களே. சரி, பிழை என்பவற்றைக் கடந்து, அவர்களையும் மனிதர்களாக அல்லது சக உயிரியாக நோக்க வேண்டிய தேவை பகுத்தறிவு ஜீவன்களுக்கு உண்டு. மிகப் பரந்த, தெளிவான அறிவு கொண்டு நோக்குவோமேயானால் எல்லாம் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவையே ஆகும். அல்லது ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நிகழ்பவையே ஆகும்.
எழுத்தாளர் அகிலன் அவர்கள் தனது கதைக் கலை எனும் நூலில் “ஒரு நாவல் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த வரையறையும் இல்லை. ஆனால் எழுதப்பட்ட நாவல்களைக் கொண்டு அதன் இயல்புகளைக் குறிப்பிடலாம்” என்றும் “நாவலின் பல்வேறுபட்ட சம்பவங்களில் இருந்து வாசகர்கள் பல்வேறுபட்ட செய்திகளை பெற்றுக் கொள்வர். இதுதான் செய்தி என்று ஒன்றை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை” என்று பொருள்படவும் கூறியுள்ளார். இதனையே நானும் வாசகர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். வாசகர்களின் பார்வைக் கோணங்களுக்கு ஏற்ப இதில் கூறப்படும் செய்தி அமையட்டும்.
மிகச் சிறந்த முறையில் அணிந்துரை வழங்கி உதவிய திரு. எஸ். டேவிட் அவர்களுக்கும்,இந்த நாவலை எழுதுவதற்கு எனக்கு மிகுந்த ஊக்கம்

Page 6
Ον )-
தந்ததுடன் முன்னுரையும் நல்கிய மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவர் அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார் அவர்களுக்கும் அறிமுக உரை வழங்கிய எனது நண்பனும் மூத்த எழுத்தாளனுமாகிய திரு. எஸ். ஏ. உதயன் அவர்களுக்கும் இந் நூலை மிகச் சிறப்பாக அச்சுப் பதித்துத் தந்த மன்னார் ஸ்கை அச்சகத்தாருக்கும் அட்டைப்பட வடிவமைப்பில் உதவிய ஆசிரியர் திரு.ச.கொ.அன்ரன் யோகராஜா அவர்களுக்கும் அச்சுப்பிழை திருத்தி உதவிய ஆசிரியர் திரு. ஜே. பிறிண்ஸ்லி றெவல் மற்றும் ஆசிரியை திருமதி ஜூடா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து நிற்கின்றேன. அத்துடன் எனது எல்லா முயற்சிகளுக்கும் போல இந்த நாவலுக்கும் மிக உறுதுணையாக நின்று நம்பிக்கையூட்டி நிறைவு காணச் செய்த இனிய துணைவிக்கும் நன்றியைப் பகிர்ந்து கொள்கின்றேன்.
துறையூரான் எம். சிவானந்தன்
தலைமன்னார். *சிபிமகியகம்’ 09.10.2010. பேசாலை - 08 T.P 023 2281068 TP 023 3236808
071 5838058 077 3586958

முன்னுரை “அருட்திரு தமிழ் நேசன் அடிகளார்
ஈழத்து, இலக்கியத் தளத்தில்:மன்னார்:பிரதேசம் தற்போது அவதானத்திற்குரிய இடிமாக மாறிவருகின்றது. காரணம்:ழன்னார்: மண்ணில் இருந்து பல காத்திரமான ஆக்க:இலக்கியங்கள் தொடர்ச்சியாக மேலெழுந்த வண்ணம்:உள்ளன. இலக்கியத்தைப் பொறுத்தவரையில்:மன்னாருக்கு இது “பொற்காலம்” எனலாம்.
மன்னாரின் தொடர்ச்சியான ஆக்க இலக்கிய முன்னெடுப்புக்களின் வரிசையில் துறையூரான் என்ற புனைபெயரில் எழுதிவரும் தலைமன்னாரைச்சேர்ந்த ஆசிரியர்:எம்.சிவானந்தனின் மெளனங் பார்வை என்ற நாவல் வெளிவருகின்றது. குறிப்பாக அண்மைக்
இருந்து வெளிவரும் மூன்றாவது நாவலாக இந்த நாவல் முகிழ்த்து நிற்கிறது.
இச் சந்தர்ப்பத்தில் மன்னார் பிரதேசத்தில் கடந்தகால நாவல் இலக்கிய முயற்சிகளை பின்னோக்கிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்.
ஈழத்தின் நாவல் இலக்கிய வரலாறானது 1856ல் வெளியிடப்பட்ட காவலப்பன் கதை என்ற நாவலுடன் ஆரம்பமாவதாக ஈழத்து இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த வகையில் ஈழத்து இலக்கிய பரப்பில் நாவல் இலக்கியம் தோற்றம் பெற்று ஏறக்குறைய ஒரு

Page 7
Guidநூற்றாண்டுக்குப் பின்னர்தான் மன்னாரில் இருந்து நாவல் இலக்கியம் வெளிவருகிறது. இந்த நீண்டகால இடைவெளியானது தொடக்க காலதில் மன்னாரில் நிலவிய இலக்கிய வெறுமையைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் மன்னாரில் இருந்து சிலர் நாவல் இலக்கிய முயற்சிகளில் இறங்கியுள்ளனர். திரு. அரசரெத்தினம் என்பவர் வரலாற்று நாவலி ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார். இந் நாவல் பற்றிய முழு விபரங்களையும் அறிய முடியவில்லை. நாவண்ணன் என்ற பெயரில் அறியப்படும் திரு. ம. சூசைநாயகம் அவர்கள் 1978ம் ஆணர் டு “பயணங்கள் தொடர்கின்றன” எனும் நாவலை எழுதினார். கலையமுதன் என்ற பெயரில் அறியப்படும் விடத்தல்தீவைச் சேர்ந்த எம்.சி.எம். இக்பால் அவரகள் 1985ம் ஆண்டு “ஒரு கருவண்டு பறக்கிறது” என்ற நாவலை வெளியிட்டார். மன்னாரைச் சேர்ந்த கலைவாதி கலீல் அவர்கள் எழுபதுகளில் தினகரன் பத்திரிகைகளில் அறுபது அத்தியாயங்கள் கொண்டு “எங்கிருந்தோ ஒரு ஜீவன்” எனும் நாவலை எழுதினார். அது நூலாக வெளிவரவில்லை. பேசாலையைச் சேர்ந்த எஸ்.ஏ. உதயன் அவர்கள் 2008ம் ஆண்டு “லோமியா’ எனும் நாவலையும் 2009ம் ஆண்டு “தெம்மாடுகள்” என்ற மற்றொரு நாவலையும் வெளிக்கொணர்ந்தார். அவ்விரு நாவல்களுமே வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அவ்வவ் ஆண்டுகளுக்கான சிறந்த நாவலுக்கான பரிசில்களைப் பெற்றன.

இவற்றின் தொடர்ச்சியாகவே தற்போது துறையூரானின் “மெளனப் பார்வை” நாவல் வெளிவருகின்றது.
மன்னார் மண்ணின் எழுத்தாளர்களில் துறையூரான் என்ற பெயரில் எழுதிவரும் எம். சிவானந்தன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். புனைகதை இலக்கியத்தில் கால் பதித்து காத்திரமான கருத்தாழமிக்க சிறுகதைகளை எழுதி வந்த இவர் தற்போது புனைகதை இலக்கியத்தின் மற்றொரு வடிவமான நாவல் இலக்கியத்திலும் தடம் பதிக்கின்றார்.
2008ம் ஆண்டு மன்னார் பிரதேச மட்டத்தில் நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் திறந்த போட்டிப் பிரிவில் இவரது சிறுகதை முதலாம் இடத்தைப் பெற்றிருந்தது. அந்த நாம் வெளியிட்ட மன்னல் என்ற மகுடம் தாங்கிய மன்னார் பிரதேச இலக்கிய விழா சிறப்பு மலரில் இவருடை அந்த சிறுகதை இடம்பெற்றிருந்தது. “திருவிழா வியாபாரம்” என்ற அந்தச் சிறுகதை ஒரு ஏழைக் குடும்பத்தின் வறுமை நிறைந்த வாழ்வியல் சூழ்நிலையை உணர்வு பூர்வமாக படம் பிடித்துக் காட்டியது. அந்த சிறுகதை எனினுள்ளே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததை இந்த இடத்தில் நான் பதிவு செய்தே ஆக வேண்டும்.
ஏழை மக்களின் வறுமை நிலையையும் மனப் போராட்டங்களையும் தத்ரூபமாக, உணர்வுபூர்மாக அக்கதையில் வெளிக்கொணர்ந்திருந்தார். அந்தச் சிறுகதையை வாசிக்கும்போதே என் கண்கள் பனிக்க ஆரம்பித்துவிட்டன. அந்தச் சிறுகதையை வாசித்து

Page 8
Gx D–
முடித்த பின்னர் ஆழமான சோக உணர்வு என்னுள் படர்ந்து நின்றதை நான் உணர்ந்தேன். அந்தச் சிறுகதையில் வரும் கதை மாந்தர்களின் வறுமை நிலையோடு நானும் மனதளவில் ஒன்றித்து விட்டிருந்தேன். அந்தச் சிறுகதை என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து விடுபட எனக்குப் பல நாட்கள் எடுத் தன. இவருடைய எழுத்துக்கள் வாசகர்களிடத்தில் எத்தகைய பிரதிபலிப்புக்களை ஏற்படுத்தியிருந்தன என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகவே எனது அனுபவத்தை இச் சந்தர்ப்பத்தில் பதிவு செய்ய முனைந்தேன். இதை இவருடை எழுத்துக்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக, வெற்றியாகக் கொள்ள முடியும்.
மண்வாசனையோடு பின்னப்பட்ட இவரது “மெளனப் பார்வை” என்ற இந்த நாவல் இவருடைய பிறந்தகமான தலைமன்னார் பிரதேசத்தைக் கதைக் களமாகக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. மணி னார் மாவட்டத்திலே தலைமணி னார் பிரதேசத்திற்குப் பல சிறப்புக்கள் உண்டு. அதில் முக்கியமான ஒன்று மும்மத, மூவின மக்களின் ஒத்திசைவு வாழ்வு முறையாகும். இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மும்மதங்களையும், தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர் ஆகிய மூவினங்களையும் கொண்ட ஒரே இடம் தலைமன்னார்தான்.
2000 - 2003ம் ஆண்டு வரையான மூன்று வருடங்கள் தலைமன்னாரில் பங்குத் தந்தையாக இருந்து சமயப் பணியும் சமூகப் பணியும் ஆற்றியவன் என்ற வகையில் இந்த மக்களின் வாழ்வியல்

-Gid
நெருக்கீடுகள் பற்றிய புரிதல் எனக்கு நிறையவே உண்டு.
இப் பிரதேச மக்களின் வாழ்வியல் கோலங்களை, பலங்களையும், பலவீனங்களையும் எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் மாற்றங்களையும் ஏமாற்றங்களையும் இந்த நாவல் சித்தரிக்க முனைகிறது. கதை மாந்தரின் உணர்வுகள் மிகவும் இலாவகமாக வெளிக்கொணரப்படுகின்றன. ஏழை மக்களின் வறுமையும் வெறுமையும் காதல் மற்றும் காம உணர்வுகளும் கூட இந் நாவலில் மிகவும் நுட்பமாக சித்தரிக்கப்படுகின்றன. இந்த வகையில் நாவலாசிரியர் சிவானந்தன் தனது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் எனலாம்.
ஆழமான தேடலையும் தீவிர வாசிப்புப் பழக்கத்தையும் கொண்ட சிவா இன்னும் பல புனைகதை இலக்கியங்களை வெளிக்கொணர்வார் என நம்பலாம்.
இந்த நாவலுக்கான முன்னுரையில் ஈழத்து இலக்கியப் பரப்பில் மன்னார் நாவல்கள் பற்றிய குறிப்பையும் அவருடைய எழுத்துக்கள் பற்றிய எனது மன உணர்வுகளையும் பகிர்வதற்குக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கின்றேன். சிவாவின் இலக்கியப் பயணம் தொடர வாழ்த்துகின்றேன். இறையாசி வேண்டுகின்றேன்.

Page 9
GiD
அறிமுகவுரை
ஈழத்து இலக்கியப் புலத்தில் எனது நண்பர் ஒரு புதிய வரவுதான் என்றாலும் புலமையான வரவு என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இப்போதுதான் அவரின் எழுத்து அவரது முயற்சியால் அச்சு வாகனம் ஏறுகிறதே தவிர அவரது இலக்கிய ஆர்வத்தால் முகிழ்ந்தவைகள் பலவெனச் சொல்லலாம். எனக்கு அவரது திருவிழா வியாபாரம் என்ற சிறுகதை பிடித்திருந்தது.
நாங்கள் சம வயதுக் காரர்கள் தானி என்றபோதிலும் என்னை மூத்த எழுத்தாளர் என்ற வகையில் அவர் மரியாதை கலந்த நட்பின் வீச்சத்தால் நீண்டு, அகன்று, ஆழமாகவும் சிலாகிப்பது குறித்து நான் சந்தோசப்பட்டிருக்கின்றேன். நாவல் இலக்கியத்தைப் பொறுத்தவரை துறையூரானின் அலுமாரியில் இருந்து நான் எடுத்துப் படித்தவைகள் தான் அநேகம் . அதிகமான எழுத்தாளர்களின் எழுத்துப் போக்குகளைப் பற்றி நாங்கள் அடிக்கடி அமர்ந்திருந்து மணிக்கணக்காகப் பேசியிருக்கிறோம்.
இவரது பேச்சிலும் நினைப்பிலும் சிவப்புச் சிந்தனை பட்டுத்தெறிக்கும். சமூகத்தில் விரவிக் கிடக்கின்ற மூட நம்பிக்கைகளையும் சடங்குகள், ஆச்சாரங்களில் இருக்கின்ற போலித்தனத்தையும் துணிச்சலுடன் விமர்சிக்கின்ற சிந்தனைவாதி. மனிதத்துவத்தின் மேன்மையையும் வாழும் வாழ்வில் இருக்கவேண்டிய கண்ணியத்தையும் மட்டுமே

Qர்) வலியுறுத்துகின்ற இவர் தனது எழுத்துக்களில் நிறையவே அதனைத் தொட்டுக் காட்டுகின்றார்.
விடாமுயற்சியும் வைராக்கியமும் கொண்டு தமது கல்விப்புல தகைமைகளில் வளர்ந்து வருகின்ற இவர் இன்று நாவல் இலக்கியத்திலும் தடம் பதித்திருக்கின்றார் என்பது பெருமை தருகிறது.
இவரது தேடல் புதுமையானவை. மெளனப் பார்வை என்ற இந்தக் கண்ணி நாவலை வெளிக் கொண்டுவரும் முயற்சியில் அவர் எடுத்துக்கொண்ட பிரயத்தனம் அனைத்தும் நான் அறிவேன். ஒப்புக்காக எழுதுகின்ற எத்தனையோ கோக்கு மாக்கு பிரத்தியட்சங்களில் இருந்து வேறுபட்டு தமிழ் இலக்கியச் சிறப்புக்காகவும் எழுத்தினால் சமூக இலட்சியங்களை வளர்த்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கையோடு எழுதப்பட்ட நல்ல எழுத்தாளர்கள் வரிசையில் இந்தத் துறையூரானும் இருப்பார் என்று நம்புகிறேன்.
வாசகர்களுக்கு நெஞ்சுமட்டும் வந்து
நின்று சில வார்த்தைகள்.
நேரம் ஒதுக்கி அமர்ந்திருந்து எழுதுவது என்பது பெரிய வேலை. எண்ணத்தின் கோர்ப்புக்களை நாவலாக வடிப்பதுவும் பெரிய வேலை. இவற்றைவிட பெரிய்ய். ய வேலை என்ன தெரியுமா? நம் மக்களை வாசிக்க வைப்பது. உண்மையிலேயே வாசிக்கும் திறனும் பழக்கமும் நம் மக்களிடையே இருந்து காணாமல் போய்விடுமோ? அந்த நிலைமைகளை ஏற்றுக் கொள்ள முடியாதென்பதை வலியுறுத்த ஒரு விழிப்புணர்வு நிகழ்வினை அனுஷ்டிக்க வேண்டுமென எனக்குத் தோன்றுவதுண்டு.

Page 10
ஏதோ வாசிக்கிறோம் என்று இருக்கும் அந்தக் கொஞ்சம் வகையறாக்களில் இருக்கும் மதிப்புமிக்க ஆர்வமுள்ளவர்களே நீங்கள் ரமணிச் சந்திரனையும், பட்டுக்கோட்டை பிரபாகரனையும் படிப்பதோடு நம் மூர் எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் படியுங்கள். இது எம்மட்டு உயர்வானது என உணர்வீர்கள்.
எஸ்.ஏ. உதயன்
எழுத்தாளர் பேசாலை.

அணிந்துரை
திரு.எஸ்.டேவிட் கோட்டக்கல்விப் பணிப்பாளர் முசலி.
அண்மைக் காலமாக மன்னார் மண்ணில் கலை இலக்கியப் படைப்பாக முயற்சிகள் சிலிர்ப்படைந்து முன்னோக்கிய பாய்ச்சலை ஆரம்பித்திருக்கும் வேளையில் திரு.எம்.சிவானந்தன் என்னும் இயற்பெயரைக் கொண்ட துறையூரானின் “மெளனப்பார்வை” என்ற நாவலின் வரவானது முன்னோக்கிய பாய்ச்சலின் மற்றொரு ஆழமான அடிச்சுவட்டைப் பதித்துள்ளதுடன் படைப்பிலக்கிய முயற்ச்சிக்கும் வலுச்சேர்த்துள்ளதென துணிந்து கூறலாம்.
மேலுமாக இரணி டு வருடகால இடைவெளிக்குள் கலைவளம் மலிந்த பேசாலை மண்ணில் இருந்து வெளிக்கிளம்பியுள்ள மூன்றாவது நாவல் என்ற வகையில் இது முக்கியத்துவம் பெறுகின்றது.
இதுவரை ஒரு சிறுகதை எழுத்தாளராக வளர்ந்து கொண்டிருந்த துறையூரானின் நாவல் எழுத்து முனைப் பானது அவரது கணினி முயற்சியாகும். இக் கன்னி முயற்சியில் தான் அடைய முனைந்த இலக்கை அவர் எட்டியுள்ளாரா? என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டுமாயின் வாசிப்பவர்களிடமிருந்து முளைத்துக் கிளப்பும் காத்திரமான ஆக்கபூர்வமான கருத்துக்களும்

Page 11
CXWX– விமர்சனங்களும் அவரைச் சென்றடைவதன் மூலமாகவே அது சாத்தியமானதாக இருக்கும்.
மெளனப் பார்வை என்ற இந்த நாவலின் கதை நிகழும் களம் பனையூர் என்ற கற்பனைக் கிராமமாகும். இது தலைமன்னாரை அண்மித்த பல குறிச்சிகளில் ஒன்றை பனையூராக்கி மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் வித்தியாசமான வாழ்வியல் கோலங்களை துல்லியமாகவும் நிதானமாகவும் யதார்த்தமாகவும் இந்த நாவலில் படம் பிடித்து காட்டுகின்றார்.
இந்த நாவலில் வரும் மனிதர்களுக்கு துறையூரான் அந்நியமானவரல்ல. ஆறு வயதில் இருந்து மூன்று தசாப்தங்களாக இப்பிரதேச மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்தவர். சிந்திக்க தெரிந்த நாளிலிருந்து இப் பிரதேசத்தின் சூழலமை வினையும் பொருணி மரியக் கட்டுமானங்களையும் கலாசார பன்மைத்துவத்தையும் நம்பிக் கைகளையும் வழக்காறுகளையும் மரபுகளையும் சமுதாயத்தின் பலம் , பலவீனங்களையும் முரண்பாடுகளையும் ஒரு சமூகவியல் ஆய்வாளனின் நோக்கு நிலையில் நின்று அனுபவ ரீதியாகவும் ஆய்வு ரீதியாகவும் ஆழமான அவதானிப்பு மூலமாகவும் கற்றுக் கொண்ட பாடங்களில் இருந்தும் பெற்றுக்கொண்ட தகவல்களில் இருந்தும் சொல்ல விரும்புகின்ற செய்தியினை நவீன இலக்கிய வடிவமான நாவல் வடிவில் கதை மாந்தர்கள் ஊடாக சில இடங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லுகின்றார்.
18ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலிருந்து

GvD
தென்னிந்திய கரைகளில் வாழ்ந்த வறிய மக்களை தலைமன்னார் துறைமுகம் ஊடாக மலையகத்துக்கு நகர்த்திச் சென்றனர் பிரித்தானியர். இவர்களது உழைப்பை உறிஞ்சிக் குடித்தனர் தோட்டத்துறைமார். வெறுப்படைந்த அநேகர் இத்துறைமுகம் ஊடாகவே தாயகம் மீண்டனர். பலர் தலைமன்னார் குறிச்சிகளில் நிரந்தராமாக தங்கி விட்டனர். அவ்வாறானவர்களின் மூன்றாவது தலைமுறையினரில் ஒரு பகுதியினரே இந்நாவலில் வரும் பனையூர் மக்கள்.
இந்த பின்னணியை மையமாக வைத்து நாவலில் அறிமுகமாகின்ற பாத்திரங்களின், கதைமாந்தர்களின் நடத்தைக் கோலங்கள், அவர்களின் உணர்வுகள், உறவின் பரிமாணங்கள், வாழ்வியல் சூழலுக்குள்ளேயே பொருண்மிய முன்னோற் றங்களைக் காண முனைந்து ஏமாற்றமடையும் பரிதாப நிலைகள், நாட்டாண்மைக் காரர்களின் அதிகார அழுத்தங்கள். என்றவாறான பல்முனைத் திருப்பங்களை, சித்தரிப்புக்களை இந்நாவலின் தரிசிக்க முடிகிறது. இங்கு கவனிக்கத் தக்க விடயம் என்னவெனில் ஏதோ ஒரு தேவைக்காக பனையூருக்கு வந்து சேர்கின்றவர்கள் இங்கு நிலவும் ஒழுங்கமைப்பற்ற வாழ்வு நிலையின் பலவீனங்களை புரிந்து கொண்ட பின் அவர்களை ஏமாற்ற முனைவதாகும். குறிப்பாக பெண்மையை தனது உணர்வுகளுக்கான வடிகாலாக பயன்படுத்த முனைவதை சுனில், குணநாதன் போன்றவர்களின் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதானது

Page 12
அப்பாவித்தனமான மாந்தர்கள் மீது அவர் கொண்டுள்ள அக்கறையை மறைமுகச் செய்தியாக சொல்லாமல் சொல்கின்றது.
பனையூர் கிராமத்தின் பாரம்பரிய கலைவடிவமான காத்தவராயன் கூத்து ஒத்திகையுடன் ஆரம்பமாகும் இந்த நாவலின் நகர்வானது கதை மாந்தர்களின் நிகழ்கால நடத்தைகளையும் கடந்த கால நிகழ்வுகளை முன்னிட்டுக் காட்டும் உத்தியையும் கையாண்டு பல பிரச்சினைகளை வெளிக் கொணர் கினிற வடிவமைப்பினை கொண்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.
சமுதாயம் ஏற்றுக்கொண்ட ஒழுங்குகளும் ஒழுக்க நெறிகளும் விதி முறைகளும் பலவீனமடைந்துள்ள ஒரு சமூகத்தில் மனிதர்களின் உணர்வுகளும் நடத்தைக் கோலங்களும் எண்ணங்களும் எவ்வாறு தாறுமாறான போக்கைக் கொண்டிருக்கும் என்ற உண்மையை அல்லது கவனத்தில் கொள்ள வேண்டிய மறைமுகச் செய்தியை பல கலாசார சூழலில் இருந்து வந்து பனையூரில் பகுவியமாகி உள்ள மனிதர்களின் நடத்தைக் கோலங்கள் ஊடாக, அசைவியக்கங்கள் ஊடாக முன்னிறுத்துகின்றார்.
இந்த நாவலில் பல காதல் காட்சிகளைப் போல் முன்னிறுத்தப்படும், சித்திரிக்கப்படும் நிகழ்வுகளைக் கொண்டு இது ஒரு காதலை மையமாகக் கொண்ட நாவல் என்ற முடிவுக்கு வர (урушпа.

அறியாமை இருளுக்குள்ளும் ஒழுங்கற்ற சமூகச் சூழலுக்குள்ளும் சீரான வழிகாட்டல்கள், ஆலோசனைகள் எதுவுமற்ற பலவீனமான வாழ்க்கை முறைக்குள்ளும் சிக்கித் தவிக்கும் அப்பாவி இளசுகள் காலத்தை மட்டும் கருத்தில் கொணர் டு எதிர்விளைவுகளைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்காது பருவத்தின் தேவைக்கு முதன்மை அளிப்பதனால் வரும் வில்லங்கங்களும் ஆபத்தானவை என்ற செய்தியையும் மறைமுகமாகச் சொல்லும் கதாசிரியர் இது குறித்து ஆங்காங்கு தனது சுயமான சிந்தனைகளைக் கட்டுக்கோப்பான வார்த்தைகளுடன் விதைத்துள்ளார்.
நிச்சயமாக இந்த நாவலின் உள்ளடக்கம் எவரையும் புண்படுத்தப் போவதில்லை. மாறாக இன்றைய நிலையில் சுயமான கலாசார சூழலில் அமைதியாக வாழும் மக்கள் மத்தியில் பொருத்தமற்ற கலாசார சீரழிவுகளைச் சுமந்துவரும் மனிதர்ள் ஊடுருவுவதனாலி அச் சமூகம் எவ்வாறு பாதிக்கப்படும் என்ற செய்தியை இந் நாவலின் உள்ளடக்கத்தில் கற்றுக் கொள்ள வழிகாட்டுகின்றார்.
இந்த நாவலின் கதாநாயகி என இனங்காணக் கூடிய வதனியின் ஏமாற்றத்திற்குள்ளான வாழ்வு இளமையிலேயே அணைந்து சோகத்தை எதிரொலிக்கச் செய்கிறது. அந்தச் சோகத்தின் எதிரொலிக்கு பல அர்த்தங்கள் மறைந்திருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

Page 13
கல்விப் புலத்தில் மாணவர்களின் கல்வி நலனில் அக்கறையுள்ள, அர்ப்பணிப்புள்ள மனப்பாங்கு நிறைந்த நல்ல ஆசிரிர் என்ற கணிப்புக்குரிய சிவானந்தன் இன்று பாடசாலை முகாமையாளராகவும் படி உயர்ந்துள்ள நிலையில் “துறையூரான்” என்ற புனை பெயரில் சமூக அக்கறை பொலிந்த தரமான படைப்புக்களை மேலும் படைக்கும் திறன் தனக்கு D-6Qui G என இந்த நாவலி மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
Heeze keekkZkZksk

6apatai. 17A japay
GO
"அவர் போறாராம், போராறாம் காத்தலிங்கசாமி - அந்தப் பொன்னானதோர் மாளிகைக்கு காத்தலிங்கசாமி.” என்று உச்சத் தொனியில் குரலெடுத்துப் பாடிக்கொண்டிருந்தான் பயில்வான் என்கிற வேலு. அவன்தான் சின்னக் காத்தான். பிரகாசமும், காளிமுத்துவும் முறையே முதலாம், இரண்டாம் காத்தான்கள். இவர்கள் இருவரும் பாடி முடித்துவிட இப்போது வேலுவின் பகுதி போய்க் கொண்டிருக்கிறது. கோடை இடி கோவிந்தசாமி வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார் மேளத்தை அவர்தான் கூத்துக்கு இசையமைப்பாளர். அவரின் மேள இசையின் அதிரடியை மெச்சி அவருக்குச் சூட்டப்பட்டிருந்த பட்டம்தான் "கோடை இடி’
ஏறக்குறைய இருபது கிழமைகளாக இந்தக் கூத்துப் பழகும் கூத்து பனையூரில் நடந்து கொண்டிருக்கிறது. வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் இரவு ஒன்பது, பத்து மணியளவில் தொடங்கி, அதிகாலை நான்கு மணிவரை தொடரும். சில வேளைகளில் விடிந்தும் விடுவதுண்டு.
காத்தவராயன் கூத்தைத் தொடர்ச்சியாக மூன்று முறை அரங்கேற்றினால் அந்த ஊருக்கு வருகின்ற பிரச்சினைகள் எல்லாம் தானாக மறைந்து விடுமாம். அதிக நன்மைகளும் பெருகுமாம் என்பது வழி வழியாகச் சொல்லப்பட்டுவரும் கருத்து. சென்ற வருடம் ஒருமுறை அரங்கேற்றியாகி விட்டது. இது இரண்டாவது தடவை அரங்கேற்றுவதற்கான பயிற்சி.
சைவ மக்களின் சமய ரீதியான பாரம்பரியமான நாட்டுப்புறக் கதையாக இது இருந்தபோதிலும் சென்ற முறை கத்தோலிக்கர்களான பிரகாசம், அருளானந்தம் போன்றோரும் இஸ்லாமியரான பாபாவும் மிகச் சிறப்பாகப் பாத்திரமேற்று நடித்திருந்தனர். இம்முறையும் இவர்கள் வேறு பாத்திரங்களில் துறையூரான்:

Page 14
62.D6 ait mağ626)
நடிக்கப் பழகுகின்றனர். ஆனாலும் சென்ற முறை சின்னக் காத்தானாக பாத்திரமேற்று நடித்திருந்த சண்டியன் செல்லமுத்து இம் முறை இல்லை. நாடகத்தில் மட்டுமல்ல, ஊரிலும் ஏன் உலகத்திலும் கூட. போய்ச் சேர்ந்து விட்டான். இவனது பாத்திரத்தையே இம்முறை பயில்வான் வேலு நடிக்கிறான். வடி சாராயத்தை அதிகமாகக் குடித்துக் குடித்து ஈரல் கருகி இறந்து போன பலருள் செல்லமுத்துவும் ஒருவன். வேலு மிகவும் ஒல்லியாக, மெலிந்து போய் இருப்பான். எத்தனை எலும்புகள் என மிக எளிதாக எண்ணிவிட முடியும் என்பதால் சக கரைவலைத் தொழிலாளர்கள் கடற்கரையில் வைத்த அடைமொழிதான் பயில்வான்.
சின்னக் காத்தானாக வேலு ஆடத் தொடங்கும் போது செல்லமுத்துவின் ஞாபகமே அவனுக்குள் வரும். மானசீகமாக அவனுக்கு வணக்கம் செலுத்திவிட்டே நடிக்கத் தொடங்குவது வழக்கம். அவனுக்கு மட்டுமல்ல கூத்துப் பழகுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பெரும்பாலானவர்களுக்கும் செல்லமுத்துவின் ஞாபகம் வந்து அவர்களும் நினைவுகூருவார்கள். ஆனால் செல்லமுத்துவின் மனைவி ராசம்மாவுக்கு மட்டும் அவனை நினைத்தாலே பற்றிக் கொண்டு வந்துவிடும்.
* படுபாவி, இருக்கிற நேரமும் நிம்மதியில்ல, போய்ச் சேர்ந்த பிறகும் நிம்மதியில்லாமப் பண்ணிட்டான். ஊர் முழுக்கக் கடன். வீட்டுக் காணிய உறுதிமுடிக்கக் கொடுத்தக் காசக் கூட குடிச்சுத் தொலைச்சிருக்கான் பாவி. இப்ப காணிக்காரி வந்து எழும்பு, இல்லன்ன காசத் தான்னு ஒரே பிடியாப்பிடிச்சிக்கிட்டு நிக்கிறா.” என்று தனக்குள்ளாகவே மனசுக்குள் திட்டித் தீர்த்தாள்.
வந்தால் அதிசயம்தான். அப்படி ஒரு அதிசயம் ராசம்மாவின் வாழ்வில் நிகழ்ந்ததாக நினைவேயில்லை. யாருடன் சண்டை
துறையூரான்

Daugań (Tjapay
போட்டாலும் கடைசியில் ராசாம்மா வாங்கும் அடியிலேயே அது முடியும். அவன் ரோட்டில் போடும் சத்தம் வீட்டுக்கு மிகத் தெளிவாகக் கேட்கும். கெட்ட வார்த்தைகளுக்கு அவனிடம்தான் டியூசன் எடுக்க வேண்டும். அவன் சண்டை போடும்போது போய்த் தடுத்துக் கூப்பிட்டாலும் குற்றம், போகாவிட்டாலும் குற்றம். ஒன்று ரோட்டில் அடி விழும், அல்லது வீட்டில்.
"கடைசியாக் கூட கலமாங் காக்கா கடைக்கு முன்னால தலமயிரச் சுருட்டிப் பிடிச்சிக்கிட்டு நடு முதுகுல நங்கு. நங்குன்னு குத்தினாம்பாவி. முனு நாளா நிமிரவே முடியல. அடுத்த நாளு ஆஸ்பத்திரில போய்ச் சேந்தவன் பொணமாத்தான் விட்டுக்கு வந்தாங்...”
என்று செல்லமுத்துவின் கடைசி நாட்களை பலமுறை இவ்வாறுதான் நினைத்துக் கொள்வாள். நல்லவிதமான சம்பவங்களே நினைவிலி வராத அளவுக்கு இம்சைப்படுத்தியிருந்தான் அவன்.
பெட்ரோமாக்ஸ் லைற் மங்கலாகிப் போய்க் கொண்டிருந்தது. இரவு ஒன்பது மணிக்குப் பற்றவைத்தது, இப்போது மணி ஒன்றைத் தாண்டியிருந்தது. இடையிடையே லைற்றுக்கு காற்று அடித்துக் கொண்டுதானிருந்தாலும் புகைபடிந்திருந்த கண்ணாடியில் இரண்டு மூன்றுகள் உடைந்திருந்ததனால் காற்றுப் புகுந்து மென்டிலையும் மேற்புறத்தால் சற்று உடைத்திருந்தது. உச்சபட்ச வெளிச்சமே அவ்வளவுதான் என்று ஆகியிருந்தது.
பிரகாசத்தின் வீட்டு வளவிலேயே ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. பிரகாசம் சென்றமுறை அம்மன் வேடமேற்று நடித்திருந்தவன் இம்முறை இடைக்காத்தான். பிரகாசத்தின் வீடு சிறிய ஒலைக் குடிசைதான் என்றாலும் வளவு பெரியதாக இருந்தது. சுற்றிவர ஐந்தாறு தென்னை மரங்களும், நடுவில் ஒரு பூவரசுமாக இருந்தது. வீட்டு வாசலின் நேரெதிரே இருந்த வளவு நன்கு
துறையூரான

Page 15
G04)- áægaf Hafaða
விசாலமாகவும் தினந்தோறும் கூட்டித் துப்புரவு செய்யப்பட்டதாகவும் இருந்ததனால் அந்த இடம் பொருத்தமானதாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் பெட்ரோமாக்ஸ் லைற் பிரகாசத்திடம் இருந்ததும் மற்றுமொரு காரணமானது.
பிரகாசத்தின் மனைவி மரியம்மா வீட்டு முற்றத்தில் ஒரு தூசு, துணுக்கு இருக்க விடமாட்டாள். தென்னையோலையின் ஈர்க்குகளால் கைக்கு அடக்கமாய்க் கச்சிதமாய் அவளாலேயே தயாரிக்கப்பட்டிருந்த கூட்டுமாறைக் கையில் பிடித்துக் கொண்டு குந்தியிருந்து நகர்ந்தபடி கைமாற்றிக் கைமாற்றிக் கூட்டி இத்தனை துப்பரவாக வைத்திருந்தாள் முற்றத்தை. இதன் பலனாகப் பலர் பஞ்சு மெத்தையில் படுத்திருப்பது போன்ற இன்பத்தைப் பெற்றிருந்தமை அவர்களின் நிம்மதியான குறட்டையில் இருந்து தெட்டத் தெளிவானது.
கடற்கரையை அண்டிய கிராமம் என்றபடியால் மணல் மிகவும் சிறிய துணிக்கைகளாகவே இருந்தது. நடக்கும் போது ஏறக்குறைய உள்ளங்கால் முழுமையாக மணலினுள் புதைந்துவிடும் என்றாலும் இக் கிராமங்களில் வாழ்பவர்களுக்கு இது மிகவும் பழகிப் போய்விட்டது. புதிதாக யாராவது இங்கு வந்தால் நடப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். அத்தகைய மணலைக் கூட்டுவது என்பது ஒரு தனிக்கலை. பொறுமை வேண்டும்.
கொணி டிருந்த சத்தம் தான் இன்னும் கொஞ்சப் பார்வையாளர்களைத் தூங்காமல் செய்துகொண்டிருந்தது. ஆனாலும் அது நித்திரையைக் கட்டுப்படுத்துவதாக இல்லை சிலருக்கு குறட்டை விட்டுத் தூங்கும் அளவுக்கு அந்தச் சத்தம் தாலாட்டுப் போல இருந்திருந்ததோ தெரியவில்லை.
வேலு, தான் வாய்மொழியாகவே கேட்டுப் பாடமாக்கிய கூத்துப் பாடல்களை இனிமையைத் தொலைத்துவிட்டு துறையூரான்

6lapsgai najapat —പ്ര05) இரைச்சலாகப் பாடிக்கொண்டு அங்கும் இங்கும் நடிக்கிறேன் என்று அவனே நினைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தான். அதனை அவனது பிள்ளைகள் மூவரும் தூக்கம் களைந்து எழுந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.
பிற்பாட்டுப் பாடுபவர்களின் சத்தமும் குறைந்து போயிருந்தது. அவர்களில் சிலர் தாங்கள் உடுத்தியிருந்த சாரத்தைக் கொண்டு தலைமுதல் கால்வரை போர்த்திக்கொண்டு வெறும் மணலில் தூங்கிப் போயிருந்தார்கள். இன்னும் சிலர் கால்வரை சாரம் இருப்பதாக நினைத்துக் கொண்டு தலையை நன்றாகப் போர்த்திக் கொண்டு குறட்டை விட்டார்கள். நல்லவேளையாக அவர்கள் உள்ளாடை அணிந்திருந்ததனால் தூங்காதவர்கள் தப்பித்தார்கள்.
“ஏய். எங்கப்பா பிப்பாட்டுப் பாடுறவங்க. தூங்கிட்டானுகளா. எழுப்பி விடுங்கப்பா..” என்ற வெள்ளைச்சாமி அண்ணாவியாரின் சத்தத்தைக் கேட்டதும் பிற்பாட்டுச் சத்தம் சற்றுக் கூடுதலாகக் கேட்கத் தொடங்கியது.
நண்பர்களின் கூட்டத்திற்குள் ஒருவர் மேல் ஒருவராக தலைவைத்துப் படுத்திருந்தவர் ர் இருந்து செல்வா மெதுவாக தலையை நிமிர்த்தி சுற்றிவரப் பார்த்தான். யாரோ ஒருவர் ஏற்கனவே குடித்துவிட்டு ந்கவிடக் தெனப் பாதியிலேே காதில் செருகியிருந்த பீடியை எடுத்து வாயில் வைத்து, தீப்பெட்டியை உரசி குச்சியைப் பர் 列 வண்ணம் கைகளால் கவனமாகப் பொத்தி பிடியைப் பற்றவைத்த வெளிச்சத்தில் பெண்கள் பக்கம் இருந்து ஒரு சோடிக் கண்கள் தன்னைப் பார்ப்பது செல்வாவுக்குத் தெரிந்தது. ஆம், வதனிதான். அவனைவிட பத்து வயது மூத்தவள். அவள் கண்களால் ஏதோ சாடை காட்டுவது போல இருக்கவே கண்களை நன்றாகக்
துறையூரான்

Page 16
06 மெளனம் பார்வை
கசக்கிவிட்டுக் கொண்டு மீண்டும் பார்த்தான். ஆம், கண்கள்தான் பேசியது. அதன் அர்த்தம செல்வாவிற்குப் புரிந்தது. “இப்போது அவள் எழுந்து செல்வாள், பின்னால் தானும் செல்லவேண்டும்”
என்பதே அது.
மன்னார் நகரில் இருந்து முப்பது கிலோ மீற்றர் தொலைவில் மூன்று பக்கமும் இந்து சமுத்திரத்தால் சூழப்பட்டதாக, இந்தியாவிற்கு அண்மையில் அமைந்திருந்த கிராமங்களில் ஒன்றுதான் பனையூர். இங்கு இந்து, கத்தோலிக்கம், இஸ்லாம் என மூவின மக்கள் வாழ்ந்தாலும் இவர்களுக்குள் ஓர் ஒற்றுமை இருந்தது. எல்லோருமே இந்திய வம்சாவழியினர். ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களாக வேலை செய்வதற்குத் தென்னிந்தியாவில் இருந்து இலங்கையின் மலைநாட்டுப் பகுதிக்கு ஆட்களைக் கொண்டு செல்வதற்கு இப் பகுதியே கப்பல் துறைமுகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இவ்வாறு கொண்டுவரப்பட்டவர்களில் சிலர் அங்கே தாக்குப் பிடிக்க முடியாமல் மீண்டும் தமது சொந்த நாட்டிற்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் எனும் நோக்கில் இங்கு வந்து வழி தேடிக் காத்திருப்பார்கள். கள்ளத் தோணியில் இவர்களை ஏற்றி இறக்குவதற்கும் ஆட்கள் இருந்தார்கள். இவ்வாறு வந்தவர்களில் பல குடும்பங்களுக்கு பனையூர் பிடித்துப் போகவே தாய்நாடு செல்லும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு நிரந்தரமாகத் தங்கிவிட்டார்கள். மேலும் கரைவலை இழுப்பதற்காகவும் இங்குள்ள சம்மாட்டிமார்களால் தமிழ்நாட்டில் இருந்து பலர் குடும்பங்களாகவே கொண்டுவரப்பட்டனர். இவர்களின் வம்சாவழியினர்தான் இன்றைய பனையூர்க் கிராமவாசிகள். ஏறக்குறைய நூற்று ஐம்பது வருடகால பாரம்பரியத்தைக் கொண்டவர்கள்.
துறையூரான்

மெளனர் பார்வை -G07)
இவர்களில் பெரும்பாலானவர்கள் சைவ சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தனர். இதனால் கோயில் வழிபாடுகள், கலை, பண்பாடு எல்லாமே தென்னிந்திய, குறிப்பாக தமிழ்நாட்டின்
இவர்களைத் தவிர ரெயில்வேயில் கடமை புரியவென நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் தனியாகவோ, குடும்பமாகவோ
கோயில் குருக்கள், மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் போன்றோர் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.
பனையூரில் இருந்து இரண்டு கிலோமீற்றர்கள் தொலைவில் வடக்காகவும், மேற்காகவும் மணல்திட்டுக் கிராமமும், மண்முனைக் கிராமமும் இருந்தன. மணல்திட்டுக் கிராமத்தைச் சேர்ந்தவர்களின் மூத்தோர் சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் என்பதால் அவர்கள் பனையூர் மற்றும் மண்முனைக் கிராமங்களைச் சேர்ந்தவர்களுடன் ஏதாவது தகராறு என்றால் “வடக்கத்தியான்” என்ற சொல்லைப் பயன்படுத்தி இழிவுபடுத்துவது அந் நாட்களில்
‘வடக்கத்தியான் என்றால் இலங்கைக்கு வடக்கே உள்ள இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்றுதான் பொருள். ஆனால் இந்த அர்த்தத்தில் அவர்கள் அப்படி அழைப்பது கிடையாது. “நீ அந்நியன், உனக்கு இங்கே எந்த உரிமையும் கிடையாது, நாங்களே இங்கு ஆட்சியாளர்கள், நீங்கள் அண்டிப் பிழைக்க வேண்டும், அதிகாரம் காட்டக் கூடாது, மீறினால் அடித்து நொறுக்கி விடுவோம்..” என்பன போன்ற ஆயிரம் அர்த்தங்கள் அந்த வார்த்தைக்கு இருக்கும். பல முறை இந்த வார்த்தையாலேயே நல்ல அடிவாங்கிப் போன மணல்திட்டுக்காரர்களும் ஏராளம். பனையூரில் படிப்பறிவு பெற்றவர்கள் மிகக் குறைவு என்றாலும்
துறையூரான்

Page 17
C08D— மெளனர் பார்வை
சண்டியர்களின் தொகை அதிகம். பின்விளைவுகளைப் பற்றிக் கொஞ்சம் கூட யோசிக்காமல் அடிதடியில் இறங்கிவிடுவதால் இவர்கள் மேல் கைவைக்க பிறர் பயப்படுவார்கள். ஒரு தடவை பொலிஸ்காரர் ஒருவரையே கம்பத்தில் கட்டி வைத்து உதைத்தவர்கள் பனையூர்க்காரர்கள். அதற்காக அடித்தவர்களுடன் சேர்த்து அப்பாவிகளையும் இரவோடிரவாக அள்ளிக் கொண்டுபோய் பொலிசார் வெளுத்து வாங்கி அனுப்பியது தனிக்கதை.
ஏறத்தாழ முந்நூறு குடும்பங்களுக்குமேல் வாழுகின்ற பனையூர்க்காரர்களில் பெரும்பாலோருக்கு கரைவலை இழுப்பதுதான் தொழில். வள்ளம், வலை என்பன இவர்களுக்குச் சொந்தமாக இல்லை. என்பதோடு, அவ்வாறு சொந்தாமாக இருந்தாலும் அதைக் கொண்டு தொழில் செய்ய முடியாது. காரணம் கடல் அதன் கரை எல்லாம் மணல்திட்டுக்காரர்களின் கோயிலுக்குத் தான் உரிமை என்பதால் இவர்கள் சொந்தமாகக் கடல்தொழில் செய்ய முடியாது.
ஆனாலும் பிடிக்கின்ற மீனில் மூன்றில் ஒரு பங்கு தருவதான ஒப்பந்தத்தின் பெயரில் மணல்திட்டுக்காரர்களின் வள்ளம், வலைகளைப் பெற்றுத் தாம் தொழிலாளிகளை அமர்த்தி சம்மாட்டியாகவும் சிலர் உள்ளனர். இவர்களுள் காளிமுத்து சம்மாட்டி நீண்டகால அனுபவம் உள்ளவர்.
பனையூரில் உள்ள பாடசாலையில் நிறையப் பிள்ளைகள் கல்வி கற்றாலும் இவர்களின் பெற்றோர் அநேகமாக கைநாட்டு விற்பன்னர்களே. சிலர் மூன்றாம் வகுப்புவரை படித்துள்ளனர். எட்டாம் வகுப்புவரை படித்துச் சாதனை செய்த ஒரு பெண்ணும் உண்டு. அவளுக்கு இங்கு அதிக மரியாதையும் உண்டு.
செல்வாவின் அப்பா கருப்பணி ணனும் ஒரு கைநாட்டுத்தான். ஆனாலும் தமிழ்நாட்டு அரசியல், சினிமா விடயங்கள் அத்துப்படி. எம்.ஜி.ஆர் கட்சி ஆள். இலங்கை அரசியல் துறையூரான்

Paň japRN
ஞானம் சுமார்தான். நல்ல உயரமான அதற்கேற்ற பருமனான ஆள். ஆனாலும் ஊரில் அவ்வளவு மரியாதை இல்லை. உழைப்புக்குப் போவது மிகவும் குறைவு. வெட்டிப் பேச்சு வீரர். வெள்ளைச் சேர்ட்டும், கலர் சாரமுமாக மாலை ஐந்து மணிக்கு கடைத்தெருவில் பாண்டி கடை விறாந்தையில் உள்ள வாங்கில் உட்கார்ந்தார் என்றால் இரவு எட்டரை மணியாகும் மனுசன் வீடு செல்ல.
கூட இருந்து கதைக்கும் அங்கத்தவர்கள் மாறிக் கொண்டேயிருப்பார்கள். அதற்கேற்றால் போல கதைக்கும் விடயமும் மாறும். ஆனால் எல்லாக் கதைக்கும் ஈடு கொடுத்துக் கதைக்கும் வல்லமை கருப்பண்ணனுக்கு வாய்வந்த கலை. உண்மையோ, பொய்யோ மனுசன் விட்டுக் கொடுக்காமல் கதைப்பான்.
நீரும் நெருப்பும் எம்.ஜி.ஆரின் இரட்டை வேடம் தொடங்கி, ஞான ஒளியில் சிவாஜிக்கு விருது வழங்கி, அரங்கேற்றத்தில் பிரமிளாவின் பாத்திரத்திற்குப் பட்டிமன்றம் வைத்து முடியவும் மணி எட்டு ஆகவும் சரியாக இருக்கும்.
அதன்பின் அநேகமாகப் பேய்க்கதை தொடங்கிவிடும். பாண்டி அண்ணனும் கதையில் கலந்து கொள்வார். அவர்
சுவாரசியமாகக் கதை சொல்வார். கதை சொல்லும் நேரத்தில் யாராவது டீ, பிளேன்ரி கேட்டாலும் கிடைக்காது. கதை முடிந்தபின்தான் வியாபாரம் எல்லாம். அரைச் சுவர் வைத்து ைைலயால் வேயப்பட்ட கடை. மழை பெய்தால் கடைப் புாத்திரங்களில் அநேகமானவை மழை நீர் சேகரிப்புப் பாத்திரங்களாக மாறிவிடும். ஒரு பட்டறை மேசை, மூன்று மணியில்
துறையூரான்,

Page 18
62AD6AgaDTib ziTdjap6QI
வாங்குகள். அதில் ஒன்று வெளியே போடப்பட்டிருக்கும். உள்ளே இரண்டு வாங்குகளுக்கும் நடுவில் ஒரு மேசை சாப்பிடுவதற்காக, யாரும் கை வைக்காதவரை நேராக இருக்கும். சாப்பாட்டுத் தட்டில் கைவைத்துச் சாப்பிடத் தொடங்கிவிட்டால் அது ஆட்டம் போடத் தொடங்கிவிடும். பாண்டியும் மேசையின் எல்லாக் கால்களுக்கும் சப்போர்ட் கொடுத்து ரிப்பைகளை அடித்துத்தான் பார்த்தார். ஆட்டம் நின்றபாடில்லை. இனி அடிக்க இடமுமில்லை. ஒரு கண்ணாடிப் பெட்டி. நாலு பக்கங்கள் கொண்ட அதில் ஒன்றரைப் பக்கங்களுக்கு கண்ணாடிக்குப் பதில் பொலித்தீன் பேக்தான். ஞாயிற்றுக் கிழமை என்றால் கண்ணாடியையும் சில சோடாப் போத்தல்களையும் பாதுகாப்பதற்கு பாண்டி பெரும்பாடு பட வேண்டியிருக்கும். பகல் ஒரு மணி தாண்டினால் என்ன? எதற்கு? என்று தெரியாமலே தனித்தோ, கோஷ்டியாகவோ சண்டையிட்டு, ஆயுதத் தேவைக்காக கடைக்குள் நுழையத்தான் செய்வார்கள். அதனால் கண்ணாடிப் பெட்டிக் கண்ணாடியைப் போடுவதில்லையென்று உறுதியான முடிவை எடுத்துவிட்டிருந்தார் பாண்டி, பெட்டியின் உள்ளே பாண்டியின் கை வண்ணத்தில் உருவான பக்கோடா, குண்டு, பூரி என்பனவும், பேக்கரிப் பண்டங்களான நாலைந்து பணிஸ், கேக் என்பனவும் தான் இருக்கும். காலையில் தோசை, இடியப்பம், பிட்டு, பருப்புக் கறி என்பன இருந்தாலும் மாலையில் அவை மிஞ்சினால்தான் இருக்கும். எப்போதும் புகைபடிந்த ஒரு பெட்ரோமாக்ஸ் லைற். இதுதான் பாண்டி கடை.
பனையூரில் இன்னும் பொதுமக்கள் பாவனைக்கு மின்சாரம் வரவில்லை. அப்படியே வந்திருந்தாலும் அதனைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற வீடுகளோ, வசதியோ இங்குள்ளவர்களில் நிறையப் பேருக்கு இல்லை. ஒலையால் வேய்ந்து, செத்தை அடைத்திருக்கும் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க மாட்டார்கள். கோச்சி ரோட்டில் அங்கொன்றும்
துறையூரான்

6ioaTai maj 69A -C1D
இதற்காக ஓடிக் கொண்டிருக்கும் பவர் ஹவுஸ் என்ஜினின் உரத்த சத்தத்திற்கும் வெளிச்சத்தின் அளவுக்கும் தொடர்பே இருக்காது. இருட்டுக்கும் பேய்க்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. எங்கெல்லாம் இன்னும் மின்சாரம் நுழையவில்லையோ, அங்கெல்லாம் பேயும், பேய்க்கதைகளும் போசாக்காக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. பெயருக்கு ஏற்றாற்போல பனைமரக் கூடல்களும், ஓங்கி உயரமாக வளர்ந்த ஒற்றைப் பனைகளும் பனையூரில் ஏராளம் என்பதால் பேய்களின் வசிப்பிடம் பெரும்பாலும் பனையாகவே இங்கு சித்தரிக்கப்படும். வேப்பமரம் இங்கு இரண்டாவது இடத்தைத்தான் பெற முடிந்தது.
பகல் பனிரெண்டு மணிக்கு பழையவாடியிலிருந்து தனியாக மீன் கொண்டு வரும்போது மீன்கோர்வையைப்
நடுச்சாமம் பனிரெண்டு மணிக்கு ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து அட்டகாசம் பண்ணிய குட்டிப் பிசாசு வரை கதை தொடரும். போதாக்குறைக்கு அண்மையில் இரட்டைப் பனையில் ஒன்றான வளைந்த கட்டைப் பனையில் காரணமே தெரியாமல், தூக்குப் போட்டுச் செத்துப் போன பவர் ஹவுஸ் ஊழியன் மென்டிசுவின் ஆவி அதைச் சுற்றியே திரிவதாகவும், பனங்காய்க் பொறுக்கப் போவோரைக் காவோலையை ஆட்டிப் பயமுறுத்துவதாகவும் புதுக் கதைகளும் வேறு.
கதை சூடு பிடித்தால் சில நாட்களில் பத்துப் பத்தரை ஆகிவிடும் வீடு போக. படம் முடிந்து கடைசிபஸ் வந்தபின்தான் நேரம் பற்றிய நினைவு வரும். மன்னாருக்குப் படம் பார்க்கப் போனவர்களும், பேசாலைக்குப் படம் பார்க்கப் போனவர்களும் இந்த பஸ்ஸில்தான் வந்து சேருவார்கள். ப்டம் என்னவோ மூன்று மணித்தியாலம்தான் ஒடும். ஆனால் அதற்காக இவர்கள் எட்டு மணித்தியாங்கள் வரை செலவழிக்க வேண்டும். மாலை மூன்று
துறையூரான்

Page 19
O2)--- 6206) mjapa இருந்து படம் பார்க்கப் புறப்படும் கூட்டம் பஸ் பிடிக்கத் தொடங்கும். மன்னாருக்குப் போவதென்றால் நான்கு மணிக்குள் பஸ் பிடித்தாக வேண்டும். தவறினால் படம் தொடங்கி ஓடிய பின்தான் போய்ச் சேர முடியும். பேசாலைக்கு என்றால் ஐந்து மணி மெயில் பஸ்ஸில் போகலாம். சனக் கூட்டம் அதிகம் என்றால் பனையூர் தரிப்பில் பஸ் நிற்காது. அதற்காக ஒரு கூட்டம் அரை மைல் நடந்து தபால் கந்தோர் வரை சென்றுவிடும். மெயில் எடுக்க எப்படியும் நிறுத்தித்தானே ஆக வேண்டும் எனும் நம்பிக்கை. ஐந்து மணி பஸ்ஸையும் தவற விட்டவர்கள் அன்று படம் பார்த்த மாதிரிதான். நாலு மணியில் இருந்து காத்திருந்து ஐந்து மணி பஸ்ஸுக்கு கைகாட்டி அது நிற்காமல் போனதும் அந்தக் கூட்டத்தினரின் முகங்களைப் பார்க்க வேண்டுமே. அதை நேரடியாகப் பார்த்து அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.
தாம் கூறிய பேய்க் கதை இட்டுக் கட்டியதுதான் என்று அவரவர்க்குத் தெரிந்தாலும் மற்றவர்கள் கூறிய கதை உண்மையாக இருக்குமோ எனும் பயத்தில் பிடியைப் பற்றவைத்துப்
விசில் அடித்துக் கொண்டும், பாட்டுப் பாடிக் கொண்டும் விரைவு நடையில் வீடு வந்து சேருவார்கள் அந்த வீரத் திருமகன்கள்.
அன்று கருப்பண்ணன் வீடு வரும்போது உள்ளே குப்பி விளக்கு எரிந்து கொண்டிருப்பது தெரிந்தது. வெளி வாசலை அண்மித்ததும் தொண்டையைச் செருமினான் அவன். வலது பக்கத் திண்ணையில் இருந்து எழுந்து அவன் மனைவி முத்தம்மா
இருந்து தெரிந்தது.
“புள்ளைக படுத்திருச்சிகளா?. என்ற கருப்பண்ணனின் கேள்விக்கு “அதுக கூத்துப் பாக்கபோயிருச்சுக..” என அவளிடம் இருந்து பதில் வந்தது.
துறையூரான்

Dawaii najspay -G13)
இடது பக்கத் திண்ணையில் இருந்த காயவைத்த குருத்தோலைகளையும் இழைத்து குறையாக இருந்த ஒலைப் பெட்டியையும் ஈர்க்குகளையும் கையால் தள்ளி நகர்த்தி விட்டுக் கொண்டு உட்கார்ந்தான் கருப்பண்ணன்.
களிமண்ணால் வீட்டுவாசலின் இருபுறமும் கட்டப்பட்ட திண்ணையில் தாராளமாக ஒரு ஆள் படுத்துத் தூங்கலாம். வெள்ளிக்கிழமைகளில் முத்தம்மா சாணி போட்டு மெழுகி வைப்பாள் திண்ணையை.
பெரும்பாலும் விட்டுத் திண்ணைகளில்தான் ஆண்கள் படுத்துறங்குவது வழக்கம். காற்று அதிகமாக அடிக்கும் காலங்களில் திண்ணைகளில் தென்னை ஒலையால் பின்னப்பட்ட தடுப்புக்கள் கட்டப்பட்டிருக்கும். சாணத்தின் வாசைனயும் தென்னை மற்றும் பனை ஓலைகளின் வாசனையும் கலந்து ஒருவித பழகிய வாசனையைத் தரும். திண்ணையில் மல்லாந்து படுத்துக் கொண்டால் கைக்கெட்டிய தூரத்தில்தான் கூரையின் சாய்வுப் பகுதி இருக்கும். தீப்பெட்டி, பீடி அல்லது சுருட்டு, கடதாசியுடன் சுற்றப்பட்ட வெற்றிலை என்பன கூரை இடுக்குகள் அல்லது செத்தை இடுக்குகளில் கைக்கெட்டிய தூரத்தில் இருக்கும். அதை எடுத்துப் பாவிக்கிறார்களோ இல்லையோ அது கைக்கெட்டிய தூரத்தில் இருப்பதை நினைத்துக் கொள்வதே பெரும்பாலோருக்கு நிம்மதியையும் திருப்தியையும் தந்து சுகமாகத் தூங்கச் செய்துவிடும்.
வீட்டினுள்ளேயிருந்து ஒரு கையில் சாப்பாட்டுத் தட்டுடனும், மறுகையில் குப்பிவிளக்குடனும் வந்தாள் முத்தம்மா. முத்தம்மாவுக்கு கிட்டத்தட்ட முப்பத்தாறு வயதிருக்கும். கறுப்புத்தான் என்றாலும் முகம் களையாக இருக்கும். மெல்லிய உடல்வாகு. நீண்ட தலைமுடி நெற்றியில் குங்குமம் அடுத்தடுத்து
துறையூரான்

Page 20
62D6 ai milja096
பிள்ளைகள் பெற்றதனால் சற்று கூன் விழுந்தாற்போலத் தோன்றினாலும் அது அவளின் அழகைக் குறைத்து விடவில்லை. குப்பி விளக்கை காற்றுக்கு அணையாத வண்ணம் ஒலைத் தட்டிக்கருகிலும், சாப்பாட்டுத் தட்டை கருப்பண்ணன் முன்னும் வைத்துவிட்டு தண்ணிச் செம்பை எடுப்பதற்காக உள்ளே சென்றாள். அவள் விலகியதால் தெரிந்த வெளிச்சத்தில் வலது திண்ணையில் முகம்மது படுத்திருப்பது கருப்பண்ணனுக்குத் தெரிந்தது.
iGschofsschrist (Uisi பின் இ &68 முகம்மது எழுந்து போவதைக் கருப்பண்ணன் கவனித்திருந்தான். முகம்மது கருப்பணிணன் வீட்டின் பின்புறம் தான் தங்கியிருக்கின்றான். விடுவலை பிடிப்பதுதான் அவன் தொழில். சாப்பாட்டுக்காகவும், தங்கியிருப்பதற்காகவும் கிழமைக்குக் கிழமை காசு கொடுத்துவிடுவான். மூன்று பிள்ளைகளும் சேர்த்து மொத்தம் ஐந்து பேருக்கும் கருப்பண்ணனால் உழைக்க முடியவில்லை. இயல்பாகவே நல்ல உழைப்பாளி அல்ல அவன். முத்தம்மாவின் பெட்டி, பாய் இழைத்து விற்பது, பனங்கிழங்கு போட்டு ஒடியலாக்கி விற்பது போன்ற முயற்சிகளால்தான் ஓரளவுக்காவது குடும்பத்தை ஓட்ட முடிந்தது. இதனால் முகம்மதுவின் பணம் அவளுக்குப் பேருதவியாகவே இருந்தது.
மூத்தவன் செல்வா பள்ளிக்கூடம் முடிந்து வந்ததும் சாப்பிட்டுவிட்டு கடைத்தெருவில் உள்ள சூசையின் சில்லறைக் கடைக்குப் போய் எடுபிடி வேலைகள் செய்வான். கொப்பி, புத்தகம், இரவுச் சாப்பாடு எல்லாம் அங்கேயே ஆகிவிடும் அவனுக்கு. பள்ளிக்கூடச் செலவும் பெரும்பாலும் சூசையாலேயே ஆகிவிடும். முகம்மதுவின் வருகைக்குப் பின் வீட்டில் கறிமினுக்கும் பஞ்சமில்லை. விட்டுச் சாமான்களும் கொஞ்சம் நிறைவாக வாங்கக் கூடியதாக இருந்தது. இருந்திருந்துவிட்டு தொழிலுக்குப் போகும் கருப்பண்ணன் இப்போதெல்லாம் தொழிலுக்கே போவதில்லை.
துறையூரான்

மெளனப் பார்வை --O15)
இதனால் வீட்டில் முகம்மதுவுக்கு மரியாதை கூடி, கருப்பண்ணனுக்குக் குறையத் தொடங்கியிருந்தது.
கருப்பண்ணனுக்கு ஆரம்பத்தில் ஆத்திரமும், கோபமும்
சொள்ளையுமாக வெளிக்கிட்டு, கடைத்தெருவில் உட்கார்ந்து கதையளப்பதில் சுகம் கண்டுவிட்டான். மற்றவை பற்றியெல்லாம் அவனுக்கு எந்தக் கவலையும் இல்லை. பாண்டி கடை வாங்கில் இருந்து கொண்டு சூசை கடையில் இருக்கும் மகனைக் கூப்பிட்டு முகம்மதுவின் கணக்கில் செய்யது பிடிக்கட்டு வாங்கிக் கொள்வான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஊரில் அரசல் புரசலாக இவன் ம் ஒன்று என்பது இ UN O தெரிந்திருக்குமோ தெரியாது.
G)
பத்தாம் வகுப்புப் படிக்கும் செல்வாவிற்கு பதினாறு வயசு, மெல்லிய உடல்வாகு. தலைமயிர் கறு கறுவென்று, நெளி நெளியாக நல்ல சுருட்டையாக இருப்பது அவனுக்குத் தனி அழகாக இருக்கும். ஒரு வருசம் பெயிலாகிப் படிக்கிறான். அன்று வெள்ளிக் கிழமை என்பதால் மாலையில் வெகு உற்சாகமாகவே கடை வேலைகளில் ஈடுபட்டிருந்தான். பாடசாலை நாட்களில் மதியத்திற்குப் பிறகும், சனி, ஞாயிறுகளில் முழு நேரமும் கடை வேலைதான். மன்னாரில் இருந்து தலைமன்னார் துறைமுகம் வரை செல்லும் பிரதான வீதியை ஒட்டியே பனையூரின் கடைத்தெரு இருந்தது. குசையின் சில்லறைக் கடையும் பாண்டியின் தேநீர்க் கடையும் அடுத்தடுத்தே இருந்தன. பாண்டி கடையை அடுத்து வாப்பா கடை இருந்தது. சூசை கடையில் மளிகைச் சாமான்களுடன், இரும்புச் சாமான்களும் விற்பனைக்கு இருந்தன.
துறையூரான்

Page 21
மெளனம் பார்வை
“என்ன செல்வா, இன்டைக்கு நாடகம் பாக்க வருவியா..? என்ற பாண்டி அண்ணனின் மகன் வாசனின் கேள்விக்கு,
“வராம. நீ ஏன்டா இன்டைக்கு பள்ளிக்குடம் வரயில்ல.?
"அப்பா மன்னாருக்குப் போய்ட்டாங்க.. கடையில நாந்தான்.” வாசன் ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறான். காலையில் கடைக்கு வநீது தந்தைக்கு உதவிகள் செய்து கொடுத்துவிட்டுத்தான் பாடசாலை செல்லவேண்டும். எப்போதும் பிந்தித்தான் பாடசாலை செல்ல முடிந்தது அவனால், பாண்டி குசினி வேலைகள் எல்லாம் முடிப்பதற்குள் எட்டு மணியை அறிவிக்கும் பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சி முடியும் இசை ரேடியோவில் கேட்க ஆரம்பித்துவிடும். “இன்னும் வெளிக்கிடயில்ல, இனிப்போய் வெளிக்கிட்டுப் பள்ளிக்கூடம் போக எட்டரையாயிரும். அடிவாங்காம உள்ளுக்குள்ள போக ஏலாது.” என்று தனக்குள்ளாகவே நினைத்துப் பாண்டியைத் திட்டித் தீர்ப்பான் மனசுக்குள். ஒருவாறு பாண்டி, கடைக்குள் வந்து இவனை அனுப்ப எட்டுப்பத்து ஆகிவிடும். ஓட்டமாக வீடு செல்பவன் காற்சட்டையையும், சேர்ட்டையும் அழுதழுதே போட்டுக் கொண்டிருக்கும்போது அம்மா கேட்பாள்,
“ஏன்டா அழுறா..? “தெரியாத மாதிரிக் கேளு, ஒவ்வொரு நாளும் நாந்தான் அடிவாங்குறது.”
“சரி. சரி. அழாமப் போ. அடிக்கமாட்டாங்க.”
துறையூரான்

686gali najda -C17)
“யாரு. அந்த ஆறுமுகம் மாஸ்டரா. அடிக்காம விடுவாரு நல்லா.” தினம் இப்படித்தான். இன்று போகவில்லை.
இப்போதெல்லாம் வெள்ளி, சனி என்றால் பனையூர்ப் பொடியன்களுக்கெல்லாம் சந்தோசம்தான். நண்பர்களோடு சேர்ந்து காத்தவராயன் நாடகம் பழகுவதைப் பார்க்கவென்று சென்று கும்மாளமடிக்கலாம். இது ஒரு நல்ல சாட்டு. இல்லையென்றால் இரவில் வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்ல வீட்டில் அனுமதியில்லையே. இப்போது என்றால் "நாடகம் பாக்கப் போறோம்” என்று போய் விடுகிறார்கள். நிறையப் பேர் இருப்பார்கள் என்பதுவும், உறவுக்காரர்கள் நடிக்கிறார்கள் என்பதும் பெற்றோரும் பார்க்கப் போவார்கள் என்பதும் பெற்றோர்கள் மறுப்புச் சொல்லாமல் இருப்பதற்குரிய காரணங்கள்.
இன்னுங் கொஞ்ச நேரத்துல நாடகந் துவங்கிடும்..” என்று தனக்குள்ளாகக் கூறிக்கொண்டு நேராக நாடகம் பழகும் இடத்தை நோக்கி நடந்தான். நடக்கும்போதே “இந்நேரந் தம்பி தங்கச்சியெல்லாம் நாடகம் பாக்கப் போயிருப்பாங்க.. குமார் மட்டுந்தான் அம்மாவோட இருப்பான். அவனும் இப்ப தூங்கிப் போயிருப்பான். அப்பா இன்னுங் கடைத்தெருவுல இருந்து
மாமா அங்க இருந்த மாரித் தெரியல. வீட்டுக்குப் போயிருப்பாரு...” என்று நினைத்தபோதே அவனுக்கு மனதுக்குள் என்னவோ ஒரு இனம்புரியாத உணர்வு தோன்றியது. அது வெறுப்பா அல்லது வேறு எதுவுமா..? என்று இனம் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை. கூடவே சில காட்சிகளும் நினைவுக்கு வந்தன.
துறையூரான்

Page 22
Singali initia)6
இவன் ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது ஒருநாள் மணல்திட்டுக் கிராமத்தில் இருந்து மரைக்காயர் தன்னுடன் சோடியாக விடுவலை பிடிக்கவென முகம்மதுவைக் கூட்டி வந்தார். “கறுப்பா. இவன பின்னால இருக்கிற ஒம் மச்சான் வீட்ல கொஞ்ச நாளு தங்க விடுப்பா. பேரு மம்மது. என்னோட விடுவல புடிக்க வந்திருக்கான்.” என்றார் மரைக்காயர் கருப்பண்ணனிடம். “அப்புடியா...” “எங்க வுட்ல எடம் பத்தாது. ஓம் மச்சின குடுச சும்மாதான இருக்கு. வாடகை ஏதுந் தருவான்.”
முத்தம்மாவின் தம்பி குடியிருந்த விடு அது. அவர்கள் டும்பத்துடன் இந்தியா சென்றுவிட இப்போது சும்மாதான் இருந்
குடிசை.
9.
“அதுக்கென்ன இருந்துட்டுப் போவட்டும்.” என்று அனுமதி
கொடுத்தான் கருப்பண்ணன்.
நாற்பது வயது மதிக்கத்தக்க முகம்மது நல்ல பருமனாக இருந்தான். வெள்ளை நிறம் என்றாலும் வெயிலில் கறுத்துப் போயிருந்தது. தலையைச் சுற்றி சிறிது முடி இருந்தாலும் நடுவில் வழுக்கையாக இருந்தது. தலையில் இருக்க வேண்டிய முடிகள் எல்லாம் உடம்பு முழுவதும் மண்டிக் கிடந்தன. மீசை, தாடி சுத்தமாக சவரம் செய்யப்பட்டிருக்கும். வாயில் எப்போதும் சுருட்டு.
வீடு வெவ்வேறாக இருந்தாலும் வளவு ஒன்றுதான். குடிவந்த ஆரம்பத்தில் முகம்மதுவுக்கு அந்தக் குடிசை மட்டும் போதுமானதாக இருந்தாலும் நாளடைவில் கருப்பண்ணன் வீட்டு திண்ணையும் தேவையாக இருந்தது. இப்போதெல்லாம் துறையூரான்

| dapaagi nId apan
முத்தம்மாவே முகம்மதுவுக்கு சாப்பாடு பரிமாறுகிறாள். கருப்பண்ணனை விட அவள் முகமதுவையே அதிகம் கவனிக்கிறாள் என்பது மட்டும் செல்வாவுக்கு அந்த வயதிலேயே உணரக் கூடியதாக இருந்தது.
பழைய நினைவுகளில் நடந்தவனுக்கு வதனியின் ஞாபகம் வரவே நடையை விரைவுபடுத்தினான்.
“நாடகம் பாக்க வதனியும் வாறன்னு சொல்லிச்சு. அவுக அம்மா வரல்லாட்டி நாந்தாங் கூட்டிட்டு வரணும்..” என நினைத்துக் கொண்டவன் நாடகம் பழகும் இடத்தையும் தாண்டி வதனி வீடு நோக்கி நடந்தான்.
கடைத்தெருவில் இருந்து வீதியைக் கடந்து மாதா கோயில் ஒழுங்கையால் நேராக நடந்தால் தரவை வரும். அதைத் தாண்டி மேடான பக்கத்தில் இருந்த குடியிருப்புப் பகுதியில்தான் வதனியின் வீடு இருந்தது.
வதனி பத்தாம் வகுப்பு முடித்து பத்து வருடாமாகிறது. ஐந்து பெண்களில் இளையவள். இரண்டாவது அக்காவைத் தவிர மற்றவர்கள் யாருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. அவளுக்கும் கூட பெரும் பாடுபட்டுத்தான் திருமணம் ஆகியது. நாட்டுப்புறத்தில் உள்ள மாப்பிள்ளையை எப்படியோ பேசி, யாழ்ப்பாணத்தில் உள்ள காணியை விற்று ஒருவாறு முடித்து வைத்தார்கள்.
இடியப்பம் அவித்து விற்றுத்தான் அவர்களின் பிழைப்பு நடக்கிறது. சூசை கடையில் வதனியின் அம்மா செளந்தரி கணக்கு வைத்து வீட்டுச் சாமான்களை கடனாக வாங்குவது வழக்கம். சூசை செல்வாவைவிட்டு இடியப்பம் வாங்கி வர அனுப்பும்போது தேவையான வீட்டுச் சாமான்களுக்குரிய பட்டியலை எழுதிக் கொடுத்துவிடுவார்கள். கடையை விட்டு வீடு செல்லும் போது அந்தச் சாமான்களைக் கொண்டுபோய் கொடுத்துவிட்டுப் போவது
துறையூரான்

Page 23
62 pagati artifa)6
செல்வாவின் வழக்கம். மேலும் வாங்கிய சாமான்களுக்கான தொகையில் இடியப்பத்துக்குரிய தொகையைக் கழித்துவிட்டு ஞாயிற்றுக் கிழமைகளில் கணக்கு முடிப்பதும் செல்வாதான். ஆண் துணை இல்லாத வீட்டில் செளந்தரி குடும்பத்தாருக்கு இந்தச் சின்னச் சின்ன உதவிகள் மிகவும் தேவையாகவே இருந்தது. செளந்தரியைப் பொறுத்தவரை தனக்கு ஆண் குழந்தையில்லாத குறையைப் போக்குபவனாகவே செல்வா தோன்றினான்.
காலப் போக்கில் வதனிக்கு மட்டுமே தனித் தேவையாக செல்வா ஆகிவிட்டிருந்தான் என்பது அப்போது எவருக்குமே
தெரிந்திருக்கவில்லை.
கந்தையாவின் குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தின் கரையோரக் கிராமம் ஒன்றிலிருந்து 1950களில் பனையூருக்கு வந்தவர்கள். துறைமுகப் பகுதி என்பதால் உழைப்பை மையமாக வைத்து வந்த இவர்களுக்கு ஆரம்பத்தில் ஒரு சிறிய கடை மட்டுமே வைக்க முடிந்தது. மனைவி செளந்தரியும் மூத்தவள் அன்னபூரணியும் இரண்டாவது மகள் தாட்சாயிணியும் வயிற்றில் மூன்றாவது குழந்தையுமாக வந்தவர்களுக்கு முத்தண்ணாதான் தங்க இடம் கொடுத்தார்.
“யாழ்ப்பாணத்தில இருந்து வர்றிங்கன்னு சொல்றீங்க. இங்க எங்க தங்குறதா வந்தீக.”
“எங்கயாவது இடம் கிடைக்கும் தானேயெண்டு வேற எதயும்
யோசிக் காம இங்க வந்திட்டம் . நீங்கள் சம்மதிச்சிங்களென்டால். வாடகை தருவம்.”
துறையூரான்

மெரைனர் பார்வை —Q])
முத்தண்ணாவுக்கு ஒரே ஒரு பெண்தான். அவளை முடித்தவன் அவளையும் அழைத்துக்கொண்டு அளவக்கைக்குச் சென்று விவசாயம் செய்கிறான். அவனுக்கு கடல்தொழில் ஒத்துவரவில்லை. மனைவியும் இறந்துவிட முத்தண்ணா தனித்துப் போய்விட்டார். தனக்கும் உதவியாக இருக்குமே என கந்தையா குடும்பத்தை தனது விட்டில் தங்க வைத்தார். ஆனால் வாடகை எதுவும் வாங்கவில்லை.
ரெயில்வே ஸ்டேசனுக்குப் போகும் வழியில் இருந்த ஒரு சங்கக் கட்டிடத்தில் கந்தையா ஒரு சிறிய கடையை ஆரம்பித்தார். வாழைப்பழக் குலை, வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை, ஊதுபத்தி, நீலசோப், சாம்பிராணி, சுருட்டு, ஆர்.வி.ஜி. பிடி என யாழ்ப்பாண மணத்தோடு இருந்தது கடை, வியாபாரம் ஆகியது என்றாலும் அது போதுமானதாக இருக்கவில்லை. இங்கு வந்து சில மாதங்களில் மூன்றாவதாகவும் பெண் பிறந்துவிட செலவு எக்கச்சக்கமானது. வரவைவிட செலவு அதிகமானதால் கடனும் கூடியது. இந்தக் கடை வருமானம் சரிவராது என வேறு கடை தேடியவருக்கு மண்முனைக் கிராமத்தில் கூப்பன் கடை நடாத்தும் வாய்ப்புக் கிடைக்க, அநேகமாக வெறும் கட்டிடம் மட்டுமே எஞ்சியிருந்த பனையூர்க் கடையை விட்டு விட்டு கூப்பன் கடையைப் பொறுப்பேற்றார் கந்தையா.
பனையூரைக் காட்டிலும் மண்முனையில் மக்கள் தொகை அதிகம் என்பதோடு பணப் புழக்கமும் அதிகம். துறைமுகக் கிராமமாக இருந்ததே அதற்குக் காரணம். பிரதான வீதியால் செல்வதானால் பனையூரில் இருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரம். தண்டவாளத்தைக் கடந்து குறுக்குப் பாதையான ஒற்றையடிப்பாதையால் நடந்தால் ஒரு கிலோ மீற்றர்தான் இருக்கும். பனையூரைக் காட்டிலும் நன்கு வளர்ச்சி பெற்ற கிராமமாக இருந்தது.
துறையூரான்

Page 24
ഫ്ര- மெளனம் பார்வை
கூப்பன் கட்ையில் நல்ல வியாபாரம், மண்முனையைச் சேர்ந்த வெள்ளைச்சாமியையும் கடைக்கு உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். கடையின் பின்புறமாக இருந்த வீட்டில் குடும்பத்தைக் கொண்டுவந்து வைத்துக்கொண்ட கந்தையா மிகவும் இனிமையானதாக வாழ்க்கையை உணர்ந்தார். இந்த மகிழ்ச்சி மேலும் இரு குழந்தைகளைத் தந்தது. இரண்டும் பெண்கள். கடைக்குட்டிக்கு சந்திரவதனி என்று பெயர்.
ஐந்தும் பெண்களாகிப் போனதில் செளந்தரிக்கு வருத்தமே என்றாலும் கந்தையா இது பற்றிக் கவலை கொண்டிருக்கவில்லை. கடையின் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்துக் கணக்குப் போட்டவர் எப்படியும் சமாளித்து விடலாம் என்றே நம்பினார்.
மனிதனின் நம்பிக்கைகள் எப்போதுமே நிகழ்காலத்தைக் கொண்டே எதிர்காலத்தை நோக்குவதாக உள்ளது. இன்று உயிரோடு இருக்கிறோம் என்ற உணர்வே நாளையும், அதற்கு மறுநாளும், மறுநாளும் உயிரோடு இருப்போம் என்று நம்ப வைக்கிறது. இந்த நாளை என்ற நாளை நம்புவதால்தான் மனிதன் வாழ முடிகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மைதான்.
வதனிக்கு ஒரு வயது ஆகியிருக்கும்போது யாரும் எதிர்பாராத விதமாக கந்தையா போய்ச் சேர்ந்தார்.
“நல்லா இருந்தாரு மனுசன் திடீர்னு இப்புடி ஆயிட்டுதே.”
* காலையிலதான கடையில உட்காந்து கணக்குப் பாத்துக்கிட்டு இருந்தாரு. அதுக்குள்ள...”
“என்னன்னு செத்தாரு...”
துறையூரான்

மெஹரனப் பார்வை - Ο23)
“மாரடைப்புல போயிட்டாராம்.”
"பாவம் அஞ்சும் பொம்பிளப் பிள்ளைக. என்னென்டுதான் சமாளிக்குப் போகுதுகளோ.”
என்றவாறான ஊர்ச் சனங்களின் அனுதாபத்தையும், கூப்பன் கடையையும் மட்டும் விட்டுவிட்டு போய்ச் சேர்ந்து விட்டார் கந்தையா.
செளந்தரி அழுதுகொண்டேயிருக்கிறாள். மடியில் வதனியும் சேர்ந்து அழுகிறாள். தாயும் ஏனையோரும் அழுவதால் தானும் அழுகிறாள். ஏன் அழுகிறோம் எனக் குழந்தைக்குத் தெரிய நியாயமில்லை. தனது அண்ணன்மார் இருவர் வந்திருந்து காரியங்களைப் பார்ப்பது செளந்தரிக்கு சற்று ஆறுதலாக இருந்தாலும் “ஐந்து பெண்களை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேன்.” என்ற நினைவு வந்து தொண்டைக்குள் பெரிய துன்ப உருண்டைகளைத் தோற்றுவித்து நெஞ்சுக்குள் அனுப்பிக் கொண்டிருந்தது.
மீண்டும் திரும்பி வராத இடத்திற்குப் போய்ச் சேர்ந்துவிட்ட கணவனுக்காக அழுகிறோமா அல்லது தனது எதிர்காலத்தை எண்ணி அழுகிறோமா என்று வேறுபடுத்திப் பார்க்க அவளால் அப்போது முடியவில்லை.
இறந்தவர்களை நினைத்து அழுவதாக நினைத்துத்தான்
அப்படித்தான் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே யோசித்துப் பார்த்தால் பெரும்பாலும் தங்களை நினைத்து, தங்களுக்காகவே அழுதுகொள்கிறார்கள் என்பது புரியும். இறந்தவரினால் தான் இழந்துவிட்ட நன்மைகள். இவரால் ஆகிய காரியங்கள் இனி என்னவாகும். வருமானம். பாதுகாப்பு. சமூக மதிப்புகள். எத்தனை இழப்புக்கள். இனி என்ன செய்வேன்.
துறையூரான்

Page 25
62D6 of 111 j606)
ஐயோ. போயிட்டீங்களே, போயிட்டிங்களே.ஐயோ.
செளந்தரி தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறாள். இவளின் அழுகை மற்றவர்களுக்கும் தாங்கள் தாங்கள் சார்ந்த இழப்புக்களை ஞாபகப்படுத்தவே அவர்களும் சேர்ந்து அழுகிறார்கள். தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவர்கள் காரணமில்லாமலே அழுகையில் சேர்ந்து கொள்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் இருந்து உறவுக்காரர்கள் வந்திருந்து காரியங்களைக் கவனித்தார்கள். வெள்ளைச்சாமியும் மிகுந்த ஒத்தாசையாக இருந்தான். உரிய முறைப்படி ஈமக்கிரியைகள்
நடாத்தப்பட்டன.
எல்லாம் ஆயிற்று. நேற்று பதினாறாம் நாள் காரியங்கள் செய்து முடிக்கப்பட்டிருந்தது. உறவுகள் கிளம்பத் தயாராயின. அவரவர் காரியங்கள் அவரவர்க்கு நிறையவே இருக்கின்றன. எந்த இறப்பிற்காகவும், இழப்பிற்காகவும் காலம் காத்திருப்பதில்லை. காலத்தில் செய்ய வேண்டிய காரியங்கள் மனிதர்களுக்கு ஏராளமாகவே இருக்கின்றன.
ஐந்தாம் வகுப்புப் படிக்கும் மூத்தவள் அன்னபூரணியை, தான் கொண்டு சென்று படிக்கவைப்பதாகக் கூறி, செளந்தரியின் சம்மதத்துடன் அவள் அண்ணன் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றார்.
தான் தொடர்ந்து கூப்பன் கடையைப் பார்த்துக் கொள்வதாகவும் தனது சம்பளம் போக மீதியை செளந்தரிக்குத் தருவதாகவுமான ஒப்பந்தத்தில் கடையைத் தொடர்ந்து நடாத்திக் கொண்டிருந்தான் வெள்ளைச்சாமி.
ஆரம்பத்தில் கூறியபடி அவன் செய்தாலும்
துறையூரான்

6ED6yeri milijaDay -C25)
ஒன்றும் இல்லை என்றானது. ஆனால் கடை நன்றாகப் போய்க்கொண்டுதானிருந்தது. கேட்டதற்கு, கந்தையா விட்டுச் சென்ற பொருட்களுக்கும் மேலாகப் பல மடங்குப் பணம் தந்துவிட்டதாவும், மேற்கொண்டு தர முடியாது எனவும் வெள்ளைச்சாமி உறுதியாகக் கூறிவிட்டான்.
மனிதர்கள் எலி லாவிதத்திலும் எப்போதும் மாறிக்கொண்டே இருப்பவர்கள். இது இயற்கைதான் என்றாலும் “நீ முன்ன மாதிரி இல்ல. நிறையவே மாறிப் போயிட்ட.” என்று யாராவது சொன்னால் உடனே மறுத்து விடுவார்கள். “நான் எப்பவும் போலத்தான் இருக்கிறன். நீ தான்.” என்று அடுத்தவரின் மாற்றத்தை இவர்கள் கூறுவார்கள். ஆனாலும் மாற்றம் நல்ல விதமாகக் கூறப்பட்டால் ஒன்றுமே கூறாமல் நூறுவீதம் ஏற்றுக் கொள்வார்கள்.
செய்வதறியாது திகைத்து நின்ற செளந்தரிக்கு சையத் சம்மாட்டியின் மனைவி கைகொடுத்தாள்.
மண்முனையில் குடியிருக்கும் சையத் சம்மாட்டிக்கு பனையூரிலும் வீடு வளவுண்டு. மனைவியின் அண்ணனான இப்ராஹிம்தான் அங்கேயிருந்து வீடு வளவையும், தென்னை மரங்களையும் பராமரித்துக்கொண்டிருக்கிறார். ஐம்பது வயதாகியிருக்கும் இவரை எல்லோரும் இப்ராஹிம் மாமா என்றே அழைத்தார்கள். இன்னும் திருமணமாகவில்லை. அநேகமாகப் பெண்கள் கூட்டத்துடன் சேர்ந்திருந்து அவர்களைப் போலவே கதை பேசிக்கொண்டிருப்பார். தோற்றத்தில் ஆணாக இருந்தாலும் பெண் இயல்பே இவரிடம் மிகுந்திருப்பதாக ஊரில் பேச்சு.
சுற்றியிருக்கும் குடும்பங்களின் அவசரத் தேவைகளுக்கு கைமாற்றாக காசு வழங்குவதும் மாம்ாதான். வாங்கிய பணத்தை உரிய தவணைக்குத் தரத் தவறினால் மறுமுறை வாங்குவது சிரமம் என்பது எல்லாப் பெண்களுக்கும் தெரியும் என்பதால்
துறையூரான்

Page 26
apagá japa
பெரும்பாலும் உரிய நாளில் பணம் கிடைத்துவிடும். மிக அதிக பட்ச தொகை ஐம்பது ரூபாய்க்குமேல் தரமாட்டார் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.
ஏழு வருடங்களின் பின் செளந்தரி மீண்டும் பனையூருக்கே இடம் பெயர்ந்து வந்தாள். முன்பு தங்கியிருந்த முத்தண்ணாவின் வீட்டை மட்டக்களப்புக் காக்கா விலைக்கு வாங்கிருந்ததுவும், இரண்டு வருடங்களுக்கு முன் முத்தண்ண இறந்து போனதும் செளந்தரிக்குத் தெரிந்தே இருந்தது.
சையத் சம்மாட்டியின் வளவுக்குள் குடிசை போட்டுக்கொண்டு நான்கு பிள்ளைகளோடு குடியேறினாள். அன்றுமுதல் தொடங்கியதுதான் இடியப்ப வியாபாரம்.
வீட்டில் இடியப்பம் அவித்து மலையாளக் காக்காவின் கடைக்கும் கொடுத்து வீட்டில் வந்து வாங்குபவர்களுக்கும் கொடுப்பதில் கிடைத்த வருமானத்தில் குடும்பம் ஓடியது. மூத்தவர்கள் மூவரும் பாடசாலை செல்கின்றனர். வதனியை இன்னும் பாடசாலையில் சேர்க்கவில்லை.
சொந்தரி இடியப்பம் அவிக்க, இரண்டாவது மகள் தேங்காய் துருவி சம்பல் இடித்து பின் இடியப்பத்தையும் சம்பலையும் காக்கா கடையில் கொண்டு அக்காவும் தங்கைகளும்
வந்து வாங்குபவர்கள் காலை பத்து மணிவரை வந்துகொண்டிருப்பார்கள். அதன்பின்தான் மதியச் சாப்பாட்டு வேலைகளைத் தொடங்குவாள் செளந்தரி,
நல்ல உயரமாக, சுமாரான அழகுடன் பொதுநிறமாக இருக்கும் அவள் கந்தையா இருந்தவரை தன்னை அழகாகப்
பெற்றிருந்தாலும் கட்டுக் g கவே இருந்தாள். ஆனாலும் தன்னை அலங்கரித்து அழகுபடுத்திக் கொள்வதில்லை.
துறையூரான்

Qabalazi u japan -O27D
நாள் முழுவதும் வேலையாகிப் போய்விட்டதில் தன்னைக் கவனிப்பதற்கு அவளுக்கு நேரமுமில்லை, நினைப்புமில்லை.
காலையிலி 3գամ սլճ வாங்க வரும்
சேர்ந்தவன் பலவருடங்களாக பனையூரிலேயே அவுட் மோட்டார் மெக்கானிக்காக தொழில் செய்து வருகின்றான். பின்னாளில் சுனிலின் வடிவில் தனக்கு மிகப்பெரியதொரு அவமானம் நேருமென ப்போதெல்லாம் சௌந்தரி நினைத்துக்கூடப் பார்த்திருக்கவில்லை.
G)
bi பில் நல் ம், கெட்ட b tongs, மாறி நிகழ்ந்த வண்ணமே உள்ளன. நிகழ்வுகளுக்குத் தாம் நல்லவை என்பதோ, கெட்டவை என்பதோ தெரியாது. சமூகம்தான் மதிப்புக் கொடுத்துப் பிரித்துப் பார்க்கிறது. சமூக நியதிகளைக் கடைப்பிடிப்பவர்கள் நல்லவர்கள் என்றும், அதனை மதித்து ஒழுகாதவர்களை கெட்டவர்கள் என்றும் சமூகம் அழைக்கத் தலைப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு தனி மனிதரும் தம் மனதை உண்மையாகக் கேட்டுப் பார்த்தால் எவருக்குமே சமூக விதிகள் பிடிப்பதில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை. மற்றவர்களுக்காக, சமூகத்திற்காக, நற்பெயருக்காக, மரியாதைக்காக. இன்னோரன்ன காரணங்களுக்காக நடிப்பார்களே தவிர உள்ளுக்குள் எல்லா விதிகளையும் மீறிப் பார்க்கத்தான் ஆசை. அதை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளாமலும், வெளிக்காட்டிக் கொள்ளாமலும் வெகு கவனமாக
துறையூரான்

Page 27
606 ma
நடந்து கொள்வதில்தான் அவர்கள் ஒவ்வொருவரினதும் நடிப்பின் திறமை தங்கியிருக்கிறது. சிலர் நடிப்பில் சோடை போய்விடுகிறார்கள். தூற்றுதலுக்கு ஆளாகிறார்கள்.
சுனில் நல்ல வெள்ளை. மெல்லிய ஆனால் உறுதியான தேகம். சிறிய அரும்பு மீசை, கவனித்துப் பார்த்தால் கண்களில் ஒருவித கவர்ச்சி இருக்கும். சிங்களமும் தமிழும் கலந்து இவன் பேசும் பாஷை சில வேளைகளில் சிரிப்பை வரவழைக்கும்.
சுனில் இயல்பாக இல்லாமல் திட்டமிட்டுப் படிப்படியாக செளந்தரியில் மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தான்.
"அக்கா பத்து ருவாக்கு இடியப்பம்." என்று வளவுக்கு வெளியே நின்று குரல் கொடுத்து வாங்கியவன், இப்போது விட்டு வாசலுக்கு அருகே வந்து
“இடியப்பம் தாங்க” என்று நூறு ரூபாய் நோட்டை நீட்டுகின்றான். வீடு மிகவும் சிறியது. வாசல் அதைவிடச் சிறியது. குனிந்துதான் உள்ளே செல்ல வேண்டும், வெளியே வர வேண்டும். வீட்டையும், குசினியையும் பிரிப்பது ஒரு ஒலைத் தடுப்புத்தான். கையை நீட்டிக் காசைக் கொடுத்து, எட்டி இடியப்பத்தை வாங்குவான். சிறுவர்கள் சிரமமில்லாமல் உள்ளே சென்று வாங்கலாம். இடியப்பம் வாங்க வரும் சற்று வயதான பெண்கள் வாசல்கட்டில் "அப்பாடா.” என்று உட்கார்ந்து, ஊர்க்கதை பேசி, பின் கையைப் பின்புறமாக ஊன்றி “அம்ம்ம்மாடி.." என்று இடியப்பப் பார்சலுடன் எழுந்து செல்வார்கள்.
“நூறு ரூபாய்க்குச் சில்லற இல்ல”
"அப்ப மிச்ச சல்லிய நாளைக்குத் தாங்க” என்று போய்விடுவதும்,
அடுத்தநாளும் துறையூரான்

Sapsatů Arjasay --س---------G29<
மிகுதிக் காசை வாங்காமல் "இடியப்பங் வாங்கிக் கழிக்கிறாங்” என்று விடுவதும் கனிலின் வழக்கமாகியிருந்தது.
செளந்தரிக்கும் இது உதவியாகத்தான் இருந்தது. செலவுகளை மாறிச் செய்து கொள்ள வசதியாகப் போனது. கனில் தனி ஆள் என்பதால் அவனுக்குப் பணம் ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. இன்னும் அவன் திருமணம் செய்து கொள்ளவில்லை.
“அவனுக்கு என்னத்துக்குடா கலியாணம்.அவனுக்குத்தான் A இருக்குறாளுகளே." என்று அவன் காதுபடவே பனையூர்க்காரர்கள் சிலர் கிண்டல் செய்தாலும் அவன் கண்டு கொள்ள மாட்டான்.
ஒருநாள் இடியப்பம் வாங்கும்போது “மத்தியானச் சாப்பாடு தர ஏலுமா? என்று கேட்டான்.
“ஏன் கடையில தானே வழமையாச் சாப்பிடுறது?
“அது நமக்குச் சரிவர்றதில்ல, அதாங்.."
* நாங்க மச்சம் சமைக்கிறதில்லை”
செளந்தரியின் குடும்பம் யாழ்ப்பாணத்தின் கரையோரப் பிரதேசத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டதில்லை. விரதங்கள், கோயில்கள் எனச் சைவச் சூழலில் வாழ்ந்ததனால் மச்சம், மாமிசம் சாப்பிடுவது கிடையாது. பனையூருக்கு வந்தபின்பும் கூட இதே வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.
துறையூரான்

Page 28
GO- Dagogů java
"பரவால்ல. சமாளிக்கலாம்”
சுனிலுக்கு மச்ச வாசம் இன்றி ஒருபிடி சோறுகூட தொண்டைக்குள் இறங்காது. ஆனால் பரவாயில்லை என்கிறான்.
நீர்கொழும்பில் இருந்து வந்து பிளாஸ்டிக் போட் மற்றும் தெப்பம் வைத்து மீன் பிடித்துக்கொண்டு நிறையக் குடும்பங்கள் கடற்கரையை அண்டிய கிராமங்களான பழையவாடியிலும், உப்புத் தரவையிலும் இருக்கிறார்கள். பனையூரில் இருந்து இரண்டுமே தெற்காகவும், வடகிழக்காகவும் ஒரு மைல் துரத்தில் உள்ள இடங்கள்தான். இங்கு இருப்பவர்களின் பிள்ளைகள் கல்வி கற்கவென பனையூர்ப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்புவரை
மேல் படிப்பதென்றால் மன்னாரில் உள்ள பெரிய சிங்களப் பாடசாலைக்குத் தான் போக வேண்டும். அவ்வாறு பெரிய பாடசாலைக்கு போவோர் மிகவும் குறைவு. சிறு வயதிலேயே கடற்றொழிலுக்குச் சென்று விடுவார்கள்.
இவ்வாறு தொழில் செய்பவர்கள் வைத்திருக்கும் "அவுட் மோட்டரைத் திருத்துவதுதான் சுனிலின் தொழில். இதனால் “பாஸ்’ என்ற பட்டத்துடன் “சுனில்பாஸ்” என்று அழைக்கப்படுகிறான்.
"பரவால்ல” என்றவனுக்கு அடுத்தநாள்முதல் மதியச் சாப்பாடு செளந்தரி வீட்டில்தான்.
திண்ணையில் இருந்துதான் சாப்பிடுவான். கடையில் இருந்து பொரித்த மீன் வாங்கி வந்து சாப்பிடத் ெ கி 影
துறையூரான்

6padů zj898 -GD
சௌந்தரி முட்டையை அவித்தோ, பொரித்தோ கொடுக்கும் அளவுக்கு நிலைமை முன்னேற்றம் கண்டது.
இந்த முன்னேற்றம் செளந்தரியின் பொருளாதாரத் s கொஞ்சம் உயர்ச்சி காண வைத்தது. சாப்பாட்டுக்குரியதைவிட அதிகமாகப் பணம் கொடுப்பது, பிள்ளைகளுக்கு பாடசாலைப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் என வாங்கித்தருவது என்று பல வழிகளிலும் உதவினான் சுனில்.
அன்று மழை பெய்துகொண்டிருந்தது. வாடைக் காற்றுக் காரணமாக இருபக்கத் திண்ணைகளும் நனைந்து விட்டு வாசலின் உட்புறம் வரை தூவானம் அடித்துக் கொண்டிருந்தது. குடையைப் பிடித்துக் கொண்டு சாப்பாட்டுக்காக வந்திருந்த கனில் ஈரத் திண்ணையிலேயே அமர்ந்தான்.
சாப்பாட்டை போட்டு வைத்த செளந்தரி, திண்ணை
கவனத்தில் கொண்டு,
“உள்ளுக்க வந்து சாப்பிடுங்க” என்றாள்.
சற்றுத் தயங்குவது போல இருந்தாலும் மறுப்புச் சொல்லாமல் குடையை மடக்கித் திண்ணையில் வைத்துவிட்டு, குனிந்து உள்ளே சென்றான். ஒலைத் தடுப்பின் பின்னே வதனி
தான் ப்பில் சேர்க்க வேண்டும். பக்கத்தில் எதைே வைத்துக்கொண்டு நான்காவது பெண் விளையாடிக் கொண்டிருந்தாள். இவளுக்கு பனிரெண்டு மணிக்கே பாடாசலை முடிந்து விட்டதால் நல்லவேளை மழைக்கு முந்தி வந்திருந்தாள். மற்றவர்கள் இருவரும் இன்னும் பாடசாலை முடிந்து வரவில்லை.
துறையூரான்

Page 29
G2)- 62apatai alaÖapat
குசினிக்குள் சாப்பிடும் சுனிலுக்குத் தண்ணிர் எடுத்து வைத்துவிட்டு பிள்ளைகள் இருக்கும் இடத்திற்கு நகர்ந்து சென்றுவிட்டாள் செளந்தரி.
சாப்பிட்டு முடித்த சுனில் தண்ணீரைக் குடித்துவிட்டு, கைகழுவும் சத்தம் கேட்டது. செளந்தரி வெளியே வந்து திண் 党 ● 偷 C ள். 5 நனைந்து இருந்த துணியை சுனிலை நோக்கி நீட்ட, சுனில் வியுடன் சேர்த்து ம் பிடித்து இழுத் *னுடன் இறுக்கினான். திடீரென எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்ட இந்தச்
ம்பவத்தால் உடல் நடுங்கி, அந் பிலும் வியர்த்துவிட் செளந்தரிக்கு. ஆனாலும் ஆர்ப்பாட்டம் எதுவும் செய்யவில்லை. பிள்ளைகள் பார்த்துவிடாமல் சற்று நகர்ந்து நின்று கொண்டாள்.
மழை விடாமல் தூறிக் கொண்டிருந்தது.
G)
“சே என்ன ஒரு மடத்தனம். கனில் இப்படிச் செய்வான் என கொஞ்சங்கூட நான் எதிர்பார்க்கவில்லையே. நல்ல வேளையாக தாட்சாயினி பாடசாலையிலிருந்து மழையோடு மழையாக வந்து “அம்மா ..., அம்மா ...” என அழைத்துக்கொண்டே வந்தது” என தனக்குள்ளாக நினைத்துக் கொண்டவள், “ஆனால் நான் எந்த மறுப்பும் காட்டாமல் அப்படி இருந்துவிட்டேனே. நானும் அதனை விரும்பி ஏற்றுக் கொண்டது போல ஆகிவிட்டதே. அப்படியென்றால் அதுதான்
D 6oiroup(SuT....”
துறையூரான்

Daai miljø96 - O33D தாட்சாயினியின் சத்தம் கேட்டதும் சுனில் இறுக்கத்தை விட்டுவிட்டு சடாரென விலகித் திண்ணையில் அமர்ந்து கொண்டானே. உள்ளே வந்த தாட்சாயினி “என்ன மாமா நனைஞ்சிக்கிட்டே இருக்கிறீங்க” என்றதற்கு
“அது. வந்து. சும்மா..” என்று ஏதோ உளறிக் கொண்டே எழுந்து சென்றுவிட்டிருந்தான்.
நடந்து மூன்று நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் அவளால் அந்த சம்பவத்தை மறக்கவே முடியவில்லை. இன்னொரு தடவை இவ்வாறு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தனக்குள் தானே ஒரு முடிவு எடுத்துக் கொண்டு சற்று நிம்மதியானாள்.
மூன்று நாட்களாக விட்டுப் பக்கமே வராத சுனில் நான்காம் நாள் வழமைக்கு மாறாக மாலையில் வந்தான். பிள்ளைகள் எல்லோரும் முற்றத்தில் உள்ள மாமரத்தின் கீழே விளையாடிக் கொண்டிருந்தார்கள். வெளி வாசலைத் திறந்து கொண்டு சுனில் வரும்போதே செளந்தரி கவனித்து விட்டாலும் கவனியாதது போல அடுப்படியில் தேநீர் வைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தாள். "அம்மா சுனில் மாமா வந்திருக்காங்க” என வதனி கூற,
“ம்” என்ற ஒற்றையெழுத்தில் பதில் வந்தது.
திண்ணை அருகே ஒன்றும் பேசாமல் சுனில் நிற்பது குனிந்த நிலையில் இருக்கும் அவளுக்கு நன்றாகத் தெரிந்தது. சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்தவள் “உட்காரச் சொல்லு” என மகளிடம் கூற, சுனில் உட்கார்ந்து கொண்டான்.
துறையூரான்

Page 30
622Darai ITiopol
சுட வைத்த தண்ணிரில், வாங்கி வைத்திருந்த ஒரு ரூபா தேயிலைப் பக்கெற்றைப் பிய்த்துக் கொட்டியவள் சாயம் ஊறியதும் கழுவி வைத்திருந்த டம்ளர்களில் அளவாக ஊற்றினாள். பிளாஸ்டிக் டப்பா ஒன்றுக்குள் இருந்த சர்க்கரைக் கட்டி ஒன்றை எடுத்து கத்தியால் நான்கு துண்டுகளாக்கியவள், “ஏய். இங்க வாங்க, தேத்தண்ணியக் குடிங்க..” என்று பிள்ளைகளை அழைத்தாள். “இந்தாங்க சக்கரக்கட்டி” என்று ஆளுக்கொரு துண்டாய் சர்க்கரைக் கட்டித் துண்டுகளைக் கொடுத்தவள் சீனி போடாத வெறும் சாயத் தண்ணி டம்ளர்களை எடுத்துக் கொள்ளச் சொன்னாள்.
வேறொரு டப்பாவைத் திறந்து கரண்டியால் சுரண்டிச் சேகரித்த சீனியை ஒரு சாய டம்ளரில் போட்டுக் கலக்கி, அதில் கொஞ்சம் கரண்டியால் எடுத்துக் குடித்துப் பார்த்துவிட்டு, அந்த டம்ளரையும், தனக்கென்று உள்ள சாய டம்ளரையும் இரு கைகளிலும் எடுத்துக் கொண்டவள் தனது டம்ளரை பக்கத்துத் திண்ணையில் வைத்துவிட்டு, சீனி போட்ட பிளேன்ரீயை சுனிலை நோக்கி நீட்டினாள். “ம். இந்தாங்க” குனிந்தபடியே வாங்கிக் கொண்டான் டம்ளரை.
உள்ளே சென்று தனது சர்க்கரைத் துண்டை எடுத்து வந்தவள் சாய டம்ளரைக் கையில் எடுத்துக் கொண்டு திண்ணையில் உட்கார்ந்தாள். பிள்ளைகள் மாமரத்தின் கீழுள்ள பனைமரக் குற்றியில் உட்கார்ந்து சர்க்கரையைத் தொட்டுத் தேநீரைக் குடித்துக் கொண்டிருந்தார்கள். சர்க்கரையை எவ்வளவுக்கெவ்வளவு குறைவாகப் பாவித்து சாயத் தண்ணியைக் குடித்து முடிக்க முடிகிறதோ அவ்வளவுக்கவ்வளவு மீதிச் சர்க்கரைத் துண்டை சாயத்தண்ணி இல்லாமல் தனியாக வாயில் போட்டுச்
துறையூரான்

6D6aň (Tjapany --K35)
சூப்பிச் சாப்பிடலாம் என்பது தொட்டுக் குடிக்கும் எல்லாப் பிள்ளைகளுக்கும் தெரியும் என்பதால் இவர்களும் இதே முறையைக் கையாண்டார்கள்.
“தேத்தண்ணியக் குடிங்க” என்றாள் செளந்தரி சுனிலைப் பார்த்து.
* என்ன மன்னிச்சிடுங்க” என்ற சுனிலின் வார்த்தைக்கு பதில் எதுவும் இல்லை.
“நா போய்ட்டு வாறன்”
“இந்தாங்க டம்ளர்” என நீட்டியவனிடம் கையைத் தொட்டு வாங்கிக் கொண்டாள் செளந்தரி.
காணாதபோது கனதியாய் எடுத்த முடிவு கண்முன் கண்டதும் காணலாகிப் போனது எவ்வாறோ...? இதைத்தான் பெண்களின் பலவீனம் என்கிறார்களோ..?
ஊரார் அரசல் புரசலாகப் பேச ஆரம்பித்து விட்டார்கள். இப்ராஹிம் மாமா நேரடியாகவே கண்டித்ததோடு, சையத் சம்மாட்டியின் மனைவியான தனது தங்கைக்கும் விபரத்தை தெரிவித்திருந்தார். அவளும் வந்து செளந்தரிக்குப் புத்தி சொல்லிவிட்டுப் போனாள்.
ஒரு வெள்ளிக்கிழமைக் காலை பிள்ளைகள் எழுந்து
பார்த்தபோது செளந்தரியைக் காணவில்லை. இடியப்பம்
'அவித்திருப்பதற்கான அல்லது அவிப்பதற்கான எந்த அறிகுறியும் குசினிக்குள் இல்லை. வளவு முழுவதும் தேடியும் அவளைக்
துறையூரான்

Page 31
Gapsidafi and Day
காணாததால் இப்ராஹிம் மாமாவிடம் மூன்றாவது பெண் மனோன்மணி சென்று கேட்டாள்.
"uDmuDT, en blom subg5IIIsæ6ntr?" “இல்லையேம்மா, ஏன் எங்க போயிருக்கிறா” “தெரியல மாமா, நாங்க எழும்பிப் பார்க்கிற போதே அம்மாவக் காணல”
“ளங்க போயிருக்கப் போறா, இங்க பக்கத்து வீடு
எங்கயும் போயிருப்பா. வா பாப்பம்”
அக்கம் பக்கம் தேடியும் ஆள் இல்லை.
“மன்னாருக்குப் போய் விட்டாளோ. பிள்ளைகளிடம் சொல்லாவிட்டாலும் என்னிடம் சொல்வாளே..” என யோசித்த மாமா “பயப்புடாதம்மா.. எங்கயாவது தேவைக்குப் போயிருப்பா, வந்துருவா” என்று சமாதானம் கூறி அனுப்பிவிட்டு யோசிக்கலானார்
LDTDs.
“எங்க போறதுன்னாலும் சொல்லிட்டுத்தான போவா. இவ்வளவு நேரமாச்சு. சனியன் எங்க போய்த் தொலைஞ்சா. புள்ளைக வேற அந்தரிச்சு தவிக்குதுக. சரி எங்க போனாலும் வரத்தான வேணும்.”
மதியம் வரை வராததால் தான் சமைத்ததைப் பிள்ளைகளைச் சாப்பிடச் சொல்லிக் கொடுத்துவிட்டு, யோசித்தவருக்கு சட்டென சுனிலின் எண்ணம் வரவே கடைத்தெரு நோக்கி நடந்தார்.
“சுனில்ட புழக்கத்த காணல்ல. எங்க ஆளு?’ என கராஜில் விசாரிக்க துறையூரான்

மெளனப் பார்வை ー○
*காலம்பரதான் கொழும்பு பல்ஸில ஏறி நீர்கொழும்பு போனாரு” எனப் பதில் வந்தது. சௌந்தரி பற்றி எந்தத் தகவலும் அப்போதைக்குக் கிடைக்கவில்லை.
இன்று பிள்ளைகள் பாடசாலைக்கும் போகவில்லை. “இப்போது, இதோ வந்துவிடுவாள்" என்ற எதிர்பார்ப்பில் பகல் பொழுதைக் கழித்தவர்கள், இருட்டிக் கொண்டு வர ஆரம்பித்ததும் பயத்தை உணரத் தொடங்கினார்கள்.
"அம்ம்மா. அம்ம்மா." என அழத் தொடங்கிவிட்டாள் வதனி, பெரியவள் தாட்சாயினிக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் மெளனமாக இருந்தாள். எப்போதும் துறு துறுவென்று இருக்கும் மூன்றாவது பெண் மனோன்மணி கூட சோர்ந்து போய் உட்கார்ந்துவிட்டாள். நான்காவது மணிமேகலை இப்ராஹிம் மாமாவோடு முன் வாசலில் காத்திருக்கிறாள்.
இப்ராஹிம் மாமாவுக்குமே பயம் தொற்றிக்கொண்டு விட்டது. “வரவே மாட்டாளோ. இந்தப் பிள்ளைகள் என்ன
எங்கே போகிறோம் என்று.சே என்ன பொம்பிள இவள்.”
காத்திருந்தவர்கள் களைத்துப் போனார்கள். கவலையும், பயமும் சேர்ந்து பிள்ளைகளுக்கு அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. மாமாவுக்கு ஆத்திரத்தைத் தந்தது. மனதிற்குள் சபித்துக் கொண்டே பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறிய வண்ணம் இருந்தார்.
இரவு எட்டுமணி பஸ்ஸில் வந்து சேர்ந்தாள் செளந்தரி,
“எங்கடி போயிருந்த”
துறையூரான்

Page 32
விழவானப் பார்வை
என்ற மாமாவின் கேள்விக்கு பதில் ஏதும் கூறாமல் வீட்டினுள் சென்று பிள்ளைகளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு விம்மி விம்மி அழுதாள். சற்று நேரங் கழித்து பொறுக்க முடியாமல் இப்ராஹிம் மாமா வாசலில் வந்து நின்று,
“ஏய் மனோ. புள்ள. இங்க வா” என்று கூப்பிட “மன்னாருக்குப் போயிருந்தன்னு சொல்லு” என்று மகளிடம் செளந்தரி கூறி அனுப்பினாள.
“எங்கடி போயிருந்தாவாம் உங்க அம்மா?
“மன்னாருக்குப் போயிருந்தாங்களாம்”
“ஒகோ.” என்றவர் மேற்கொண்டு ஏதும் கேட்காமல் சிறிது நேரம் மறுபடி என்ன கேட்பதென்று தோன்றாமல் நின்றிருந்தவர் மெதுவாக நடந்து சென்றுவிட்டார்.
ஆனால் செளந்தரிக்கு மட்டுமே தெரியும் தான் மதவாச்சி வரை சுனிலோடு போய் வந்தது.
*சே. என்ன மனுசி நான்.? நேற்று சுனில் கூப்பிட்டதும் அதிகாலையிலேயே எழுந்து கொழும்பு பஸ் பிடித்து மதவாச்சிக்குப் போனதும், அங்கே கணவன், பிள்ளைகளோடு வாழ்ந்து வரும் சுனிலின் அக்கா நோனா தும்புத்தடியை எடுத்துக் கொண்டு தன்னை அடிக்க வந்ததும், சுனில் தடுத்ததும், வீதியில் நின்று அந்தத் தெருவில் உள்ள எல்லோருக்கும் கேட்கும்படி கொச்சைத் தமிழிலும், சிங்களத்திலும் மிக மிக அசிங்கமாகத் திட்டியதும், அந்த நிமிடத்தில் சுனில் என்ற ஒருவனின் ஞாபகமே இல்லாமல் ஆட்டோ பிடித்து பஸ் ஸ்டான்ட் வந்து மன்னார் பஸ் பிடித்து வந்து சேர்ந்ததும். எல்லாம் நிஜம்தானா? கனவுபோல் நடந்து முடிந்துவிட்டது. துறையூரான்

மெளனப் பார்வை
சர்வமும் அடங்கி, ஒடுங்கிப் போயிருந்தது அவளுக்கு. “ஐந்து பிள்ளைகள். சே. நானும் ஒரு தாயா? தாய்மை எனப்படுவதற்குரிய எந்தத் தகுதியும் எனக்கில்லை.” அவளை நினைக்க அவளுக்கே அருவருப்பாக இருந்தது.
இது நடந்து ஒரு மாதம் கழிந்திருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் மாமனாரோடு படிக்கச் சென்ற மூத்தவள் அன்னபூரணி வந்து சேர்ந்தாள். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டாள். தொடர்ந்து படிக்கவில்லை. அங்கே ஒரு கல்யாணம் கேட்டார்களாம். மாமாவுக்குச் சம்மதமாம். பொடியன் கடை வைத்திருக்கிறானாம். ஏழாம் வகுப்புப் படித்திருக்கிறானாம். அன்னபூரணிக்குப் பிடிக்கவில்லையாம். உத்தியோகம் பார்க்கும் மாப்பிள்ளை வேண்டுமாம். இந்த நிகழ்வுக்குப்பின் அங்கே விட்டில் சின்னச் சின்னப் பிரச்சினைகளாம். அன்னபூரணிக்கு அங்கேயிருக்கப் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டாளாம். அதுதான் கொண்டு வந்து விட்டார்களாம்.
“ஏற்கனவே ஐந்து பேரின் சாப்பாட்டுக்கே கஸ்டம். இதில் இவள் வேறு. ஒழுங்கா அவங்க சொல்றபடி கேட்டு நடந்திருக்கலாம்..” என தனக்குள்ளாகவே பேசிய செளந்தரி வெளியே எதுவும் சொல்லாமல் மெளனமாகவே இருந்துவிட்டாள்.
கொண்டு வந்துவிட்ட செளந்தரியின் அண்ணன் அன்று இரவு தங்கி, அடுத்தநாள் அதிகாலையிலேயே பஸ்பிடித்து யாழ்ப்பாணம் சென்றுவிட்டார். இரவு அவள் இப்ராஹிம் மாமாவோடு கதைத்துக் கொண்டிருக்கையில் இங்கே நடந்தவையும், அங்கே நடந்தவையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்பட்டிருந்தன.
துறையூரான்

Page 33
●
மெளனர் பார்வை
G.)
"ஏய் தாட்சாயினி எழும்புடி. எத்தின முற தான் எழுப்புறது. சனியன் ம்..ம்ன்ட்டு கிடக்கிறா..” என்ற செளந்தரியின் சத்தத்திற்கு,
“ஏன் அவள எழுப்பவேண்டியதுதானே. நாந்தானா ஒவ்வொருநாளும் சம்பல் இடிக்கனும்?.”
அன்னபூரணியைக் குறிப்பிட்டுத்தான் அவள் அவ்வாறு சொல்கிறாள் என்று தெரிந்தும்
"நீ இப்ப எழும்பி வரப்போறியா இல்லையா..” என்ற சௌந்தரியின் அதட்டலுக்கு எழுந்தாள் தாட்சாயினி.
இப்போதெல்லாம் அதிகாலையில் எழுந்து, நள்ளிரவு வரை குடும்பம் முழுவதுமே உழைக்க வேண்டியிருந்தது. இடியப்பம் அவித்து விற்பதற்கான ஆரம்ப வேலைகள், மற்றும் துணை வேலைகள் ஏராளமாகவே இருந்தன. கடையில் மாவு வாங்கிக் கொண்டு வருவது, அவிப்பது, அரிப்பது, பச்சையரிசி வாங்கி ஊறப்போட்டு இடிப்பது, விறகு தேடுவது, தேங்காய் வாங்குவது, சம்பல் இடிப்பது, கொண்டுபோய்க் கொடுப்பது என அதனோடிணைந்த பல வேலைகள் இருந்தன. இவை தவிர தங்களுக்கென சமைப்பதும் ஒரு வேலை.
அன்னபூரணி இந்த எந்த வேலையிலும் பங்கெடுக்க மாட்டாள். யாழ்ப்பாணம் சென்று படித்து 10ம் வகுப்பு பாஸ்
செய்துவிட் க்கு இடியப்பம் அவிக்கும் உத்தியோகம் என்
துறையூரான்

606ai maa அன்னபூரணியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மற்ற நால்வரும் அம்மாவோடு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது தான் மட்டும் எதுவும் செய்யாமல் இருப்பது அவளுக்குள் எந்தக் குற்ற உணர்வையும் தோற்றுவிக்காதது அதிசயமாகத்தான் இருக்கும்.
“இங்க ஒன்டு இருக்குது. சாப்பிடுறதும் கதப்புத்தகம் படிப்பதும்தான் அதுக்கு வேலை.”
என்று தாட்சாயினி அவ்வப்போது யாரிடமோ சொல்வது போல குத்திக்காட்டுவாள். உடனே சண்டை தொடங்கிவிடும்.
“ஓம் அப்பிடித்தான்டி. என்னடி செய்வ? என்று அன்னபூரணி கேட்க,
"நான் என்ன செய்யப்போறன். பூன நாய்க்கெல்லாந்தான் சாப்பாடு போடுறம். அதுகள ஏதும் கேட்க முடியுமா?
*அப்ப என்ன நாய்ன்டாடி சொல்ற.”
என்று ஆரம்பித்து சூடு பிடித்து உச்சரிப்புப் பிழை இல்லாத கெட்ட வார்த்தைகள் வாரி இறைக்கப்பட்டு, களைத்து, வாய் *ஓய்ந்து சண்டை நிற்கும். அக்கம் பக்கத்தார்க்கு இது சாதாரணமாகிவிட்டது. ஐந்து பெண்களோடு சேர்த்து அம்மாவும் சண்டை பிடித்தால் சத்தத்தை கேட்கவா வேண்டும். இப்ராஹிம் மாமா இடையிடையே வந்து “என்னடி இது. பெரிய தொந்தரவாப் போச்சி. வாய மூடுங்கடி. கேக்கிறவங்க என்ன நினைப்பாங்க..” என்று அடக்குவார்.
மணிமேகலையும் படிப்பை நிறுத்த இப்போது மனோன்மணியும், வதனியும் மட்டுமே பள்ளிக்கூடம் செல்கின்றனர்.
துறையூரான்

Page 34
6B6Waň mitjİspay
இடியப்பம் அவிக்கும் வேலைகளோடு பனங்காய் பொறுக்கி கிழங்குப் பாத்தி போடுவது, ஒலைப்பெட்டி இழைப்பது, ஒடியல் போடுவது என அவரவர் முயற்சிக்கேற்ப தனித் தொழில்களிலும் ஈடுபட்டு அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை தனி வரவாக வைத்துக் கொள்வார்கள். தாம். விரும்பியதை வ்கிக் கொள்வதோடு அவ்வப்போது பேசாலையில் படம் பார்க்கச் செல்வதும் இந்தக் காசில்தான்.
படக் கதை சொல்வதில் மணிமேகலைக்கு நிகர் மணிமேகலையேதான். மூன்று மணித்தியாலப் படத்தையும் ஒருகாட்சி தவறவிடாமல், மிகச் சுவாரசியமாகக் கூறுவாள்.
கதை கேட்பவர்கள் படம்பர்க்க வேண்டிய அவசியமே இருக்காது. அவ்வளவு முழுமையாக இருக்கும்.
ஒரு தடவை பேசால்ை முறிபரதன் தியேட்டரில் “சுடரும் சூறாவளியும்?ல் படம் பார்த்துவிட்டு பாண்டி அண்ணனின் மனைவியிடம் கதைசொல்லத் தொடங்ககுடும்பமே சுற்றியிருந்து கேட்டுக் கொண்டிருந்தது:நாயகன், நாயகிக்கு எவ்வளவு பாராட்டுக் கிடைக்கிறதோ.அந்த அளவுக்கும் அதிகமாக வில்லனுக்குத் திட்டுக் கிடைக்கும் கேட்பவர்களின் வயது வித்தியாசம் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் கெட்ட வார்த்தையாலேயே திட்டுவாள் வில்லனை: “அந்தஜ் ஜெமினிப். இருக்கானே. புள்ளைகள
"அப்பத்தான் இந்தப்பாட்டு:அன்பு வந்தது என்னை ஆள வந்தது.” என்று:பாடிக்காட்டி கதைசொல்லி முடிக்க, படம் பார்த்த திருப்தியில் பாண்டி குடும்பம் எழ, துறையூரான்:

GAD67gatii na japen
“சனியனே இங்கயா இருக்கா. அரிசி இடிக்கிற ஞாவுகமே இல்லையா..” என்ற செளந்தரியின் சத்தம் கேட்டு ஓடிப்போனாள்.
படிக்கிறாள். தாயைப் போலவே சுமாரான நிறம்தான் என்றாலும் நல்ல அழகு. வயதுக்கே உரிய வளர்ச்சியுடன் இருந்தாலும் மினுமினுப்பாக, நல்ல உடற்கட்டுடன் கவர்ச்சியாகவும் இருந்தாள். நீண்ட அடர்த்தியான கறு கறுவென்ற தலைமயிரைச் சுற்றி இரட்டைச் சடை. பாடசாலைச் சீருடை கூட இவளுக்கு மட்டும் மிகவும் அழகாக இருப்பது போலத் தோன்றும். வகுப்பில் படிக்கும் ஏனைய பெண் பிள்ளைகளைவிட இவளே சற்று உயரமானவள். கண்கள், புருவம், நெற்றி எல்லாமே ஒருவித நேர்த்திதான். பார்ப்பவர்களை மீண்டும் பார்க்கச் செய்யும் அழகு.
மூத்தவள் அன்னபூரணிக்கு இருபத்தைந்தைத் தாண்டியும் கலியாணம் எதுவும் சரிவரவில்லை. கேட்டு வந்த ஒரு இடத்தையும் வேண்டாம் என்று விட்டாள்.
“அவனெல்லாம் ஒரு மாப்பிள்ளையா. ஆளையும் அவரையும்.”
மேற்கொண்டு எதுவும் அவளோடு கதைக்க முடியாது என்பதால் அடுத்தவள் தாட்சாயினிக்கு பேசி முடிக்கப்பட்டது. செளந்தரி யாழ்ப்பாணம் சென்று தனது பெயரில் இருந்த காணி விற்றுக் கொண்டு வந்த காசில் கலியாணம் ஒருவாறு நடந்து முடிந்தது.
பனையூர்ப் பாடசாலைக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து குணநாதன் ஆசிரியர் மாற்றலாகி வந்திருந்தார். விஞ்ஞான
துறையூரான்

Page 35
மெளனம் பார்வை
ஆசிரியர். கணிதமும் படிப்பித்தார். அதிபர் வீரசிங்கத்தோடு, அதிபர் விடுதியிலேயே தங்கினார். மச்சம் சாப்பிட மாட்டார் என்பதால் சைவச் சாப்பாடு கிடைக்கக் கூடிய இடம் தொடர்பாக பத்தாம் வகுப்புப் பிள்ளைகளிடம் விசாரிக்க அவர்கள் எல்லோரும் வதனியைக் காட்டினார்கள்.
“சேர் இவங்களும் மச்சம் சாப்பிட மாட்டாங்க, சைவந்தான்.” “ஒ. அப்படியா.” என்று வதனியைப் பார்த்தவர் ஆச்சரியப்பட்டவாறு “இந்தப் பக்கம் எல்லாரும் மச்சம்தான் சாப்பிடுவினம் என்டு சொன்னவயள். நீங்கள் எப்படிச் சைவம்.” என்று இழுத்தார்.
“அவங்களும் யாழ்ப்பாணந்தான் சேர். "அப்படியெண்டால் எனக்கு மதியச் சாப்பாடு தர ஏலுமோ?.” என்று வதனியைப் பார்த்துக் கேட்க,
s
“அம்மாட்டத்தான் கேக்கனும், கேட்டுச் சொல்லுறன் சேர்’ என்றாள் வதனி புன்முறுவலோடு.
“ஓமோம். கேட்டு நாளைக்குச் சொல்லுமென்ன.”
“ஓம் சேர்”
ஆனால் மாலையே வீட்டை விசாரித்து அறிந்து கொண்டு
வதனியின் வீட்டுக்கு வந்துவிட்டார் குணநாதன் ஆசிரியர். சாப்பாட்டு
அவசரத்தைவிட வதனியின் வீட்டைத் தெரிந்து கொள்ளும்
அவசரமே அதிகம் இருந்தது.
"அம்மா சேர் வந்திருக்கார்.”
“சேரா யாரு. ஏண்டி என்னத்துக்கு வந்திருக்காரு, உட்காரச்
சொல்லு.” என்று குசினிக்குள் இருந்து கூறிய செளந்தரியிடம்
துறையூரான்

மெளனர் பார்வை “வதனி ஒன்டும் சொல்லயில்லையோ...” என்று வதனியைப்
"மறந்துட்டன் சேர். அம்மா சேர் சாப்பாடு கேக்கிறார்.” “நான் மச்சம் சாப்பிடுறதில்ல, அதான் இங்க இருந்து சாப்பாடு எடுக்கலாமா என்டு கேட்டுட்டு வரச் சொன்னனான்.”
செளந்தரி சம்மதித்தாள். எப்படியும் வருமானத்தை நிகரித்துக் கொள்ள வேண்டிய தேவை செளந்தரிக்கு. ே பளுவைப் பார்த்தால் பணம் கிடைக்காது. தினசரி பள்ளிக்கூடம் முடிந்ததும் சாப்பாட்டை வதனியிடம் அதிபர் விடுதிக்குக் கொடுத்துவிடுவதாகக் கூறினாள்.
குணநாதன் வந்ததில் இருந்து பிள்ளைகள் நல்ல திருத்தம் நல்ல உயரமும் வெள்ளையுமாக முழுக்கை சேர்ட்டுடன் பார்க்க நல்ல அழகாக இருப்பவர் நல்ல கண்டிப்பும் கூட. பிள்ளைகள் எல்லோரும் உரிய நேரத்திற்கு பாடசாலைக்கு வருவதோடு, வீட்டு வேலைகளையும் ஒழுங்காக செய்து கொண்டுவந்தார்கள். மாலை நேர வகுப்புக்களும் நடாத்தப்பட்டன.
ஆனால் அவருக்குக் கோபம் வந்துவிட்டால் வலது கையில் கட்டி இருக்கும் மணிக்கூட்டைக் கழற்றி மேசையில் வைத்துவிட்டு கன்னத்தில் பளார், பளார் என அறைவார்
முழுவதும் அடிவாங்கியவர்களின் கன்னங்களில் இருக்கும். அவர் மணிக்கூட்டைக் கழற்றிவிடக் கூடாது என மனதுக்குள் எல்லாத்
பருவத்திற்கேயுரிய ஓமோன்களின் சுரப்புக்களும், அவற்றின் செயற்பாடும் சேர்ந்துவிட்டால். இவ்வாறு தோன்றும் எல்லா
துறையூரான்

Page 36
பெறவினர் பார்வை
வதனி மட்டும் பயப்பட மாட்டாள். அவளுக்கு அடி விழுவதும் இல்லை.
“ஏன்டா வதனிக்கு மட்டும் அவரு அடிக்கிறதில்ல. அவவும் அவருக்குப் பயமில்ல.” என்ற சக மாணவன் ஒருவனின் கேள்விக்கு,
"அவங்க வீட்ல இருந்துதான்டா சேருக்கு சாப்பாடு வருது. அதான் அவளுக்கு அடிக்கிறதில்ல.” என்று ஒருவன் கூற மற்றவர்களும் அதை ஆமோதித்தார்கள். ஆனால் கொஞ்ச நாள் கழித்துத்தான் தெரிந்தது சாப்பாடு காரணமல்ல, சாப்பாடு கொண்டு
செல்லும் வதனிதான் காரணம் என்று.
பனையூர்க் கிராமத்தில் எல்லா வகையான மக்களும் இருந்தார்கள். கடந்த நூறு நூற்றைம்பது ஆண்டுகளுக்குள் குடியேறிய மக்கள் தொடக்கம் மூன்று வருடங்களுக்கு முன்வந்து குடியேறியவர்கள் வரை தங்கள் சொந்த ஊர் பனையூர்தான் என்றார்கள். அதனால் பனையூருக்கு என்று பொதுவான சமூக விதிகளோ, கட்டுப்பாடுகளோ, சம்பிரதாயங்களோ இருக்கவில்லை. அவரவர் தாம் கொண்டுவந்த சம்பிரதாயங்களை பனையூரின் சம்பிரதாயங்களாக மாற்ற முனைந்தார்கள். ஆயினும் அதுவும் அவ்வப்போது சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதோடு நின்றுவிடும். எதுவும் நீடித்து நிலைப்பதில்லை. எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் இவர்கள் கட்டுப்படுவதுமில்லை. ஓரினம்,
துறையூரான்

மெளனம் பார்வை
ஓர் மதம் என்றில் b வெவ்ே ச் சேர்ந்தவர்களாக பனையூர்க் கிராம மக்கள் இருந்ததுதான் இதற்கு மூலகாரணம் என்றாலும் படிப்பறிவின்மை, சண்டித்தன கலாசாரம் என்பனவும் துணைக்காரணங்களாக இருந்தன.
இளமைப் பருவத்தினரை வழிநடத்துவதற்கான எந்தவொரு அமைப்பும், கல்வி வசதிகளும் இல்லாத நிலையில் ஒரு சில பெற்றோர்களின் கண்டிப்பும், கண்காணிப்புமே கட்டிளமைப் பருவத்தினரை ஓரளவுக்கு வழிநடத்தின. இந்தத் தன்மைகள் இல்லாத குடும்பங்களில் நிகழ்கால உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதேயன்றி எதிர்காலம் பற்றிய எந்தச் சிந்தனையும் இருக்கவில்லை. வதனியின் குடும்பமும் இதற்கு உதாரணம்.
செளந்தரியின் சொலி பிள் ஒளகளில செல்லுபடியாவதேயில்லை. தான் அதிகமாக ஏதும் கூறப்போய் தனது பழைய கதை பிள்ளைகளால் கிளறப்பட்டு விடுமோ என்ற பயமும் அவளை அடக்கி வைத்திருந்தது. இவ்வாறான சூழ்நிலையில் வதனிக்கு அதிகளவு சுதந்திரம் கிடைத்திருந்தது. அந்த சுதந்திரத்தை வதனி உணர்வுகளுக்கும் கொடுத்தாள். அது குணநாதனுக்கு வாய்ப்பாகிப் போனது.
ரேடியோ என்ற ஒலிபரப்புச் சாதனம் இளைஞர்களின் வாழ்வில் மிக அதிகப் பங்கெடுத்துக் கொண்ட காலம் அது. தவிரவும் சினிமா எக்ஸ்பிரஸ், பேசும் படம் போன்ற தமிழ்நாட்டு சினிமா வார, மாத இதழ்களும் இங்கு கிடைத்தன. இவை செய்திகளைத்தான் தந்தன. ஆனாலும் மறைமுகமாக இளமைப் பருவத்தினரில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவும் தவறவில்லை. சினிமாவில் வரும் காட்சிகளும், பாட்டுக்களும் ரேடியோவில் ஒலிபரப்பாகும்போதும், புத்தகங்களில் பிரசுரிக்கப்படும் நடிக, நடிகையரின் படங்களும் ஓர் இனம்புரியாத உணர்ச்சிகளை இவர்களுக்குள் தோற்றுவித்துவிடும். இவற்றோடு சேர்த்து
துறையூரான்

Page 37
6D6Julai maj 6096
உணர்ச்சிகளையும் “காதல்” என்றே நம்பினார்கள் அந்த
வயதுக்காரர்கள். வதனியும் மேற்சொன்ன எல்லாமுமாக இருந்தாள்.
*ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால் ஒருவரில் இருவரையும் ஒருடலாய்க் கண்டிடலாம்.” என்று தான் வாசித்துவிட்டு வைத்திருந்த தினசரிப் பேப்பரின் மேல் பக்கத்தில் குணநாதன் எழுதிவைத்திருக்க, சாப்பாடு கொண்டு வந்திருந்த வதனி அதைப் படித்துப் பார்த்துவிட்டுப் பக்கத்தில்
“நீயில்லாத உலகத்திலே நிம்மதியில்லை - உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை.”
என்று எழுதி வைத்து விட்டுச் சென்றாள்.
இந்த இரண்டுங் கெட்டான் வயது இப்படித்தான். அர்த்தமில்லாமல் என்னென்னவோ செய்யும். இவர்களின் செயல்களுக்கு காரண காரிய ரீதியாக எந்த அர்த்தமும் இருக்காது. ஆனால் எல்லாவற்றிற்கும் அர்த்தம் இருப்பதுபோல் தோன்றும். தரையில்தான் கால் இருக்கும், பறப்பார்கள். பொதுவாக எல்லோருக்குள்ளும் ஏற்படும் சாதாரண உணர்வுகள்தான் என்றாலும் தமக்குள் மட்டுமே ஏற்பட்டுவிட்ட உன்னதமான, புனிதமான, தெய்வீக நிலை என்று நினைப்பார்கள். ஆனால் அந்த நிலைக்கு காதல் என்று பெயர் வைப்பதுதான் இளமையின்
gouT60LD.
வதனிக்குள் பிறந்த காதல் குணநாதன் எதிர்பார்த்த ஒன்றுதான். அவளுடைய வயதையும்,
துறையூரான்

6.Dagarů mATỪapa
உணர்வுகளையும், சந்தர்ப்பங்களையும், சூழ்நிலையையும் சரியாகக் கணக்கிட்டு குணநாதனால் வதனிக்குள் ஊடுருவ விடப்பட்ட, திட்டமிடப்பட்ட செயல்தான் வதனியின் காதல்.
யாழ்ப்பாணம் போயிருந்தார். இனி அவர் திங்கட்கிழமை மதியமளவில்தான் வருவார். வழக்கம் போல சாப்பாடு கொண்டு வந்தாள் வதனி.
* நேற்று என்ன, பாட்டெல்லாம் எழுதி வைத்திருந்தனிர்? என்ற குணநாதனின் கேள்விக்கு வதனி பதில் ஏதும் கூறாமல் குனிந்தபடி நின்றிருந்தாள்.
“என்னப் பிடிக்குமோ.”
".........................” பதிலில்லை * என்ன சொல்லுமென். பிடிக்குமோ”
“சொல்லுமென்.” என கதிரையில் இருந்து எழுந்து வதனியின் அருகே வந்தவர் “சொல்லுமென். என்னப் பிடிக்குமோ." தடுமாற வதனியோடு உரசிக் கொண்டு காதில் கிசு கிசுப்பாகக்
கேட்டார்.
வதனிக்கு உடம்பு நடுங்கியது. “ம். சொல்லுமென்.” வதனியின் வலது கையைத் தன் இடது கையால் பற்றிக்கொண்டு இன்னும் நெருங்கினார். வதனி எதுவும் கூறவில்லை.
9
என்று வார்த்தைகள்
நான்கு மாதங்களின் பின் ஒருநாள் வகுப்பில் மேசையில் வைத்திருந்த குணநாதனின் டயரியில் இருந்து ஒரு காகிதம்
துறையூரான்

Page 38
6.Dataň Tjøpar
கீழே விழுந்தது. அவர் வகுப்பில் இல்லாததால் அதை எடுத்த ராணி எனும் மாணவி மீண்டும் அவரது டயறிக்குள் வைக்கும் முன் திறந்து பார்த்தாள். வதனியின் கையெழுத்தில் முத்து முத்தாக “என் அன்புக் காதலர் குணநாதனுக்கு. எனத் தொடர்ந்தது கடிதம். வதனி பயப்படாததன் உண்மை ரகசியம் அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது. அப் புரிதல் பரஸ்பரம் பரிமாறப்பட்டு வகுப்பு முழுமைக்கும் புரிய வைக்கப்பட்டது.
ஒரு வாரம் கழித்து வதனி பாடசாலை வருவது நிறுத்தப்பட்டிருந்தது.
ஒரு மாதங் கழித்து குணநாதன் ஆசிரியர் மாற்றலாகிப்
போயிருந்தார்.
1977களில் நிகழ்ந்த அரசியல் மாற்றம் வதனிக்கும் ஒரு வேலை வாய்ப்பைக் கொண்டு வந்தது. ஆளுங்கட்சியின் உள்ளுர் ஆதரவாளரான “வாப்பா”வின் சிபாரிசின் பேரில் சங்கக் கடையில் வேலை கிடைத்தது. நிரந்தர உத்தியோகமாக இல்லாவிட்டாலும்
மாதச் சம்பள வேலை.
படிப்பை நிறுத்திவிட்ட பிறகு வீட்டிலேயே இருந்து அம்மா, அக்காமாரோடு வாய்ச்சண்டை போட்டுக் கொண்டிருந்த வதனிக்கு இது ஒரு மிகப் பெரிய அதிர்ஷ்டமாக இருந்தது. சங்கக் கடைக்குப் பின்பக்கம் அந்தோனியப்புவின் சலூன்கடை இருந்தது.
துறையூரான்

aparagi mitjada -G5D
க்கு அது ஒன்றுதான் சி ஆட்கள் வருவது பெரும்பாடு. கிழமைக்கு ஒரு தடவைதான் சேவிங் செய்வார்கள். மாதாமாதம் முடி வெட்டிக் கொள்பவர்கள் ஒரு சிலர்தான். பெருநாள் திருநாள் என்றால்தான் கூட்டம் இருக்கும் கடையில்.
ஒரே ஒரு பெல்ஜியம் கண்ணாடி. ஒரு லோக்கல் கண்ணாடி, தலைசாய்த்து வைத்துக் கொள்ளக்கூடிய கதிரை ஒன்று, நடுவில் வளைந்து போன மூன்று பேர் உட்காரும் வாங்கு ஒன்று, சாதாரண கதிரை ஒன்று. இது தான் அந்தோனியப்புவின் சென். அந்தனிஸ் சலூன்.
கதிரையில் சேவிங் செய்யவோ, முடி வெட்டிக் கொள்ளவோதான் ஆட்கள் உட்காருவார்கள். வெட்டிக் கதை பேசிக்கொள்ள
கிறவர் ன். எப்போதும் வது இருப்பார் வாங்கில். ஒரு ஆள் என்றால் ஒரு ஓரமாக வாங்கில் இருக்க முடியாது. தூக்கியடிக்கும் என்பதால் நடுவில் தான் இருக்க வேண்டும். பாரம் தாங்காது வாங்கு நடுவில் வளைந்து போய் இருந்தது. இந்த வளைவை ஏற்படுத்தியதில் பெரும்பங்கு கணேசனுக்கு உண்டு.
மட்டக்களப்பு, திருகோணமலையின் கரையோரங்களில் வாழும் மக்களில் ஒரு சிலர் இங்கு வந்து கரைவலை இழுக்கும் தொழில் செய்தனர். அவர்களில் ஒருவன்தான் கணேசன். அபூர்வ ராகங்கள் கமல் ஸ்டைலில் சேர்ட், தலையிழுப்பு, மீசை எல்லாம். சாரம் தான் கட்டியிருப்பான். ஆனாலும் அதையும் ஒருவித ஸ்டைலாகத்தான் கட்டுவான். ஒரு வேளை படத்தில் கமல் சாரங் கட்டியிருந்தால் கணேசன் போல இருந்திருக்குமோ தெரியாது. நிறத்தில் மட்டும் கமலுக்கு எதிர்மாறு.
துறையூரான்

Page 39
32- 69 apa gauriñ majar:19an அந்தோனியப்புவுக்கு ஆறு பிள்ளைகள். மூத்ததும், நான்காவதும் ஆண்கள். மற்றதெல்லாம் பெண்கள். மூத்தவனுக்குத் திருமணமாகிவிட்டது. அவன்தான் கடையை நடத்துகிறான். அடுத்தவன் தொழில் பழகவென வவுனியாவில் உள்ள அவனது சித்தப்பாவின் சலூன் கடையில் நிற்கிறான். அந்தோனியப்பு வீடு வீடாகச் சென்று முடி வெட்டிக் கிடைக்கும் வருமானத்தில் பின்னேரம் வரும்போது கறிக்கு மீன் வாங்கி வருவார். தோளில் ஒரு பையில் கத்தரி உட்பட அவரது உபகரணங்கள் தொங்கும். எல்லோருக்கும் முடி வெட்டி, சேவ் செய்து விட்டாலும் அவரது தலையும் முகமும் எப்போதும் அதிக முடியோடுதான் இருக்கும். அதிக பிள்ளைகளைப் பெற்றுவிட்டோமோ எனச் சதா நினைக்கிறாரோ என்னவோ கவலை ரேகைகள் முகத்தில் எப்போதும் இருக்கும்.
வரிசையாக நான்கு பெண்கள். எல்லோரும் வயதுக்கு வந்தவர்கள். மூத்தவள் சுசீலாவில் தொடங்கி எல்லோருக்கும் “லா”வில் முடியும் பெயராக வைத்திருந்தார் அந்தோனியப்பு மூன்றாவது பெண்ணைத் தவிர மற்ற மூவரும் கறுப்பாக இருந்தாலும் நல்ல களையாக இருந்தார்கள்.
மூத்தவன் செபஸ்ரியான், தான் சீட்டுப் போட்டுச் சேர்த்த பணத்தில் வாங்கி வைத்துள்ள “யுனிக் பிராண்ட்” ட்ரான்சிஸ்டர் ரேடியோதான் அந்தப் பெண்களுக்கு நாள் முழுவதற்குமான வேலையும் பொழுதுபோக்கும். எப்போதாவது அக்கம் பக்கத்துக்காரர்கள் கூப்பிட்டால் ஏதும் உதவி செய்து கொடுப்பார்கள். அதற்கு பணமோ, பொருளோ கூலியாக கிடைக்கும்தான் என்றாலும் அதைக் கூலி எனச் சொல்வதிலோ, அப்படியொரு வேலை செய்வதிலோ அவர்களுக்குத் துளியும் விருப்பம் இல்லை. இந்த
துறையூரான்

Gapaagi, alties ---Ο53) எண்ணத்திற்கு பெரிதும் காரணம் தாங்கள் அழகானவர்கள் என்ற அவர்களின் எண்ணம்தான்.
காலையில் கீதாஞ்சலியுடன் தொடங்கும் ரேடியோவில் புலரும் பொழுது, நினைவில் நின்றவை நிகழ்ச்சிகளை பாயில் படுத்தவண்ணமே கேட்டுவிட்டு, செய்திகளுக்கான தொடக்க இசை டிட்டி டிட்டி டிடி டிடிட்டி. ஒலிக்கும்போது எழுந்து வீட்டு வேலைகள் பார்க்கத் தொடங்குவார்கள். பொங்கும் பூம்புனல், வானவில். எனத் தொடர்ந்து ஹிந்திப் பாடல்களில் மதியச் சாப்பாடு. மீன் கிடைக்கப் பிந்தினால் ஒரு படப்பாட்டு முடிந்து, பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி அல்லது மகளிர் கேட்டவை வரை கூட மதியச் சாப்பாடு பிந்திய நாட்களும் உண்டு. அதற்கும் பிந்தினால் சுட்ட கருவாடு, அல்லது ஊறுகாய், பச்சை வெங்காயத்துடன் சோற்றைக் கரைத்துக் குடித்தாவது மதியச் சாப்பாடு முடியும். எப்படியும் இசைக் களஞ்சியம் தொடங்கும் போது மதியச் சாப்பாடு ஆகிவிட்டிருக்கும். அடுத்து இசையும் கதையும் கேட்டு, இன்றைய நேயரின் ரசனையை அசைபோட்டு. என்று தொடர்ந்து இரவின் மடியிலோடு ரேடியோவுக்கு ஓய்வு. நான்கு எவரெடி பெற்றரிகள் ஒரு மாத காலம் எப்படித்தான் தாக்குப் பிடிக்கிறதோ. வானொலி நிகழ்ச்சிகளின் ஒழுங்குதான் இவர்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சி நிரலாகவும் இருக்கும்.
காலையில் பொங்கும் பூம்புனல் முடிகிற வரை வீடுகளிலும், விதிகளிலும் பரபரப்பாகவும், நெருக்கமாகவும் காணப்படும் சனக்
பாடசாலைகளுக்கும், கடற்றொழிலாளர், வியாபாரிகள் என்போர் கடற்கரைக்கும், ரெயில்வே ஊழியர்கள் தமது வேலைகளுக்கும் சென்றுவிடும் நேரம் அது. இந்த அமைதியான சூழ்நிலையில் ஒலிபரப்பாகும் வானவில் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்படும் பாடல்கள்
துறையூரான்

Page 40
62D6"Taiń (Tjapan
P கத் தோன்றும் அந்தோனியப்புவின் மூத்த பெண் சுசீலாவுக்கு.
*கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான். கண்ணிண்மணி சீதை தானும் தொடர்ந்தாள். மெல்ல நடந்தாள்.” பாடலோடு தனது கற்பனையில் ஒடும் கங்கைநதியின் ஓரத்தில் கே.ஜே. ஜேசுதாஸின் குரலில் பாடும் யாரோ ஒரு ராமனின் கையைப் பற்றிக்கொண்டு வாணி ஜெயராமின் குரலுக்கு நம் சுசீலா வாயசைத்துக் கொண்டு மெல்ல நடப்பாள்.
சுசீலாவின் இந்த ரசனை உணர்வு கணேசனைக் கதாநாயகனாக்கியது. இதுதான் அவன் சலூன் கடை வாங்கை வளையச் செய்த ரகசியம். இந்தக் கதை முதலில் தெரிய வந்தது சுசீலாவின் கடைசித் தங்கை லீலாவுக்குத்தான். லீலாவுக்கு பதினாறு வயதாகிறது. வட்டமான முகம், அலை அலையான கூந்தல். உயரம் சற்றுக் குறைவுதான் என்றாலும் எல்லா அங்கங்களும் வயதுக்கு மீறிய வளர்ச்சியாக இருந்தது. இதனால் அவள் வீட்டை விட்டு வெளியே எங்காவது நடந்து சென்றால் எல்லா ஆண்களும் ஒரு தடவை நேரடியாகவோ, மறைவாகவோ அவளைப் பார்ப்பதைத் தவிர்க்க மாட்டார்கள்.
வீட்டாருக்குத் தெரியாமல் கணேசன், சுசீலா தொடர்பை வளர்த்ததில் பெரும்பங்கும் இவளுக்குத்தான் உண்டு. அவ்வாறு செயற்படுவதில் வித இன்பத்தைக் கண்டாள். இதன் விளைவாக தானும் காதலிப்பதற்குத் தகுதியானவள் என்ற எண்ணம் அவள் மனதில் எழுந்து, கண்களைக் கருவியாகப் பாவித்துக் கதைபேசி ரசீமிடம் அடைக்கலமானாள்.
துறையூரான்

மெளனர் பார்வை -Ο55)
வதனியும் லீலாவும் நண்பிகளாகிப் போயிருந்தார்கள். சங்கக் கடைக்கு அருகில்தான் அந்தோனியப்புவின் சலூன் இருந்ததால் வேலை இல்லாத நேரங்களில் வதனி, லீலாவுடன்தான் கதை பேசிக் கொண்டிருப்பாள். அந்தரங்க விடயங்களைக் கூட பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் நட்பு நெருங்கியிருந்தது. சுசீலாவின் காதல் விவகாரமும் வதனிக்குச் சொல்லப்பட்டது.
இந்தக் கதை கேள்விப்பட்ட நாளிலிருந்து வதனியும் கணேசன் சலூனுக்கு வந்திருக்கும் நேரங்களில் கவனித்துப் பார்க்கத் தொடங்கினாள். ஆயினும் எப்போதும் அவன் கடையின் ஒலை மறைப்புக்கு இந்தப் பக்கம் உட்கார்ந்திருக்கும் காட்சியையே காணக் கூடியதாக இருந்தது. உள்ளே செல்வதையோ அல்லது சுசீலா வெளியே வருவதையோ கண்டதேயில்லை. இதுகுறித்து லீலாவிடம் கேட்டபோது,
“அதுவா. செத்தைக்கு அந்தப்பக்கம் அக்கா இருப்பா. இவரு வெளில இருக்கிறமாதிரித்தான் இருக்கும். ஆன முத்தமெல்லாம் குடுத்துக்குவாங்க. நானே நிறையத் தடவ பாத்திருக்கன்” “அதெப்டி.” “அது. செத்தையில ஓட்டை போட்டிருக்காங்க. அண்ண கடையில இல்லாத நேரத்துல இது வழியாக் கூத்து நடக்கும்” "அப்ப ஓட்டை இருக்கிறது மத்தவங்களுக்குத் தெரியாதா...” “கையால ஓலைய இழுத்து விட்டா சரியாயிரும்”
பிறகு குணநாதனின் நினைவை வரச் செய்து ஒரு வகையான உணர்ச்சிநிலையைத் தந்தது. சில வேளைகளில் இரவு நாடகம் பழகுவதைப் பார்த்துவிட்டு செல்வாவின் தோளில் ஒரு கையை
துறையூரான்

Page 41
மெளனர் பார்வை
வைத்துக்கொண்டு நடக்கும்போதும் இதே விதமான உணர்வுகள் எழுவதும் ஞாபகம் வந்தது.
எனினும் தன்னைவிடப் பல வயது குறைந்த சிறுவன் எனும் எண்ணமும் கூடவே வந்து எண்ண மோதல்களை ஏற்படுத்திக் குழப்பும். குழப்பம் தெளியுமுன் வீடு வந்துவிடும்.
சில நாட்கள் கழிந்தபின் ஒருநாள் லீலா வதனியிடம் கூறினாள், "அத்தான் வீட்டுக்குள்ள வர ஆரம்பிச்சிட்டாரு...” “நானுங் கவனிச்சன்தான். அப்பா, அண்ணல்லாம் ஒன்னுஞ் சொல்றதில்லயா.” “இல்ல. சொல்லிப் பிரயோசனமுமில்லயாம்.” "ஏன் அப்படிச் சொல்ற.”
“விசயம் பெரிசாப் போச்சாம்.” "அப்பக் கல்யாணத்தப் பண்ணி வைக்கிறதுதானே.” “அதுசரி என்னத்த வச்சுப் பண்ணுவாங்க.சாப்பாட்டுக்கே லாட்ரி. அதுந் தவிர எங்கட ஆக்களே ஒரு மாதிரியாக் கதைப்பாங்க. ஆனா மண்திட்டுக்குப் போய் ரிஜிஸ்டர் பண்ணி விடப்
இரு வாரங்களாக லீலா முச்சந்தியில் இருக்கும் பாரூக் கடைக்கு வேலைக்குப் போகிறாள். பாரூக் குருநாகல்லைச் சேர்ந்தவன். பனையூரில் இருக்கும் சிக்கந்தரின் மகள் பர்வினைத் திருமணம் செய்து குருநாகலுக்கு கூட்டிப்போயிருந்தவன், அங்கே தொழில் ஒன்றும் அமையவில்லை என்று மூன்று வருடம் கழித்து மீண்டும் பனையூருக்கே வந்து “பர்வின் ஹோட்டல்' என்ற பெயரில் சிறிய மக்கடை வைத்திருக்கிறான். இரண்டு பிள்ளைகள் அவர்களுக்கு. துறையூரான்
போறாங்களாம்.”

amparaň marjava -G57)
ரெயில்வே ஸ்டேசனுக்குமாகப் போகும் விதிகள் சந்திக்கும் முச்சந்தியில் கடை பனையூர்க்கார ஆண்களுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. யாராவது புதுக்கடை ஆரம்பித்து விட்டால் எல்லோரும் அந்தக்
சாப்பிடும் இவர்கள் நாளக ஆக சிறிது சிறிதாக சின்னச் சின்னத் தொகையாக கடன் வைத்து, அது பெரிய தொகையாக மாறியதும்
இந்தக் கடன்களை அநேகமாக அறவிட முடியாக் கடன்களாகப் பதிவழிப்பதைத் தவிர வேறு எந்த மார்க்கமும் கடை முதலாளிகளுக்கு இருக்காது. இதனாலேயே பல புதிய கடைகள் பழைய கடைகள் ஆவதற்குள் மூடப்பட்டுவிட்ட கதைகள் ஏராளம் உண்டு.
ஆயினும் பர்வின் கடை ஒரளவுக்குத் தாக்குப் பிடித்தது. கடைப் பூலகாரங்களை கணவனும் மனைவியும் சேர்ந்து செய்வார்கள். அதற்குரிய ஏற்பாட்டு வேலைகளுக்காகவ்ே லீலாவை வேலைக்கு அமர்த்தினார்கள். இடியப்பத்துக்கு அரிசிமா இடிப்பது, தண்ணிர் அள்ளி வைப்பது, எனத் தொடங்கிய வேலை இப்போது பள்வினோடு சேர்ந்து எல்லா வேலைகளையும் செய்வது என்றாகிவிட்டது.
காலை ஆறு மணிக்குப் போய் பத்து மணிக்கெல்லாம் வீடு திரும்பி பின் மாலை நாலு மணிக்குப் போய் இரவு ஏழு, ஏழரைக்கெல்லாம் வந்துவிடுவாள். மத்தியான நேரத்தில் வதனியைக் கண்டு கதைப்பாள். வதனியோடுதான் கதை என்றாலும்
எப்போதும் நாலா பக்கமும் கண்கள் சுழன்று கொண்டிருக்கும்
துறையூரான்

Page 42
G8>- aparati naja. தெருவிலில் இருக்கும் பலபேர் தன்னைப் பார்த்துக்
பார்க்கிறார்கள் என்று பார்ப்பதற்குத்தான் அந்தச் சுழற்சி
ஒரு வெள்ளிக் கிழமை மத்தியானம் லீலா கூறினாள், நான் இனி பர்வீன் அக்காட்ட வேலைக்குப் போகப் போறதில்ல." "ஏன் என்னாச்சு “புதுசா ஒருத்தன. சேர்த்திருக்காங்களே. . ரசீம்னு' “ரசீமா, அதுக்கென்ன.” “அந்தக் குரங்குட பார்வையே சரியில்ல. இடிச்சிக்கிட்டு நடக்கிறான்.” مح۔
éé
“நீ பர்வீன் அக்காக்கிட்ட சொல்ல வேண்டியதுதானே.” * சொன்னனே. அதுக்கு அவங்க நீ ஏன் அவனப் பாக்குற. தெரியாம இடிபட்டிருக்கும்னு மேலோட்டமாச் சொல்லுறா.” "அப்பிடித்தான் இருக்குமோ என்னவோ. உடனடியா ஒரு முடிவுக்கு வர்றது பிழதானே.”
இதற்குப் பின் சில நாட்களாக லீலாவுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் வேலைக்குப் (3urtu வருவதை வதனி பார்ப்பாள். இரு வாரங்கள் கழித்து ஒருநாள் லீலாவைக் கண்டவதனி, “என்ன ஆளையே பாக்க முடியல. அவ்வளவு வேலையோ. இப்ப அவன் என்ன மாதிரி.” “ஆரு ரசீமா அவன் இப்ப நல்லமாதிரி. அதோட என்ர ஆளு." “என்ன அந்தத் தடியனா.” “நானுங் கொஞ்சம் தடிச்சிதானே. " எப்பிடிடி புடிச்சா.” "நா எங்க புடிச்சங். அவன்தான்.
துறையூரான்

6aDagaň narjapay
“ஒரு நா வேலையெல்லாம் முடிஞ்சதுக்குப்பிறகு கைகழுவ கிணத்தடிக்குப் போகக்குள்ள பின்னால வந்து அப்படியே கட்டிப்பிடிச்சிட்டான்.”
“ஐயையோ...”
“மளார்னு அறஞ்சேன். ஆனாப் படல. விலகி ஓடிட்டான்.”
“பிறகு மன்னிப்புக் கேட்டான். புடிச்சிருந்ததாலதான் அப்பிடிச் செஞ்சன்னு சொன்னான், அதிலயிருந்து ஆரம்பிச்சது.”
தனது அக்கா சுசீலாவின் காதலுக்கு துணையாகவும் தூதாகவும் இருந்த அனுபவமும் சுசீலா - கனேசன் தொடர்பான சில காட்சிப் பதிவுகளும் லீலாவுக்கும் உடனடியாக ஒரு காதல் தேவையை ஏற்படுத்தியிருந்தது. காதல் என்பது இயல்பாகத் தோன்றுகின்ற ஒன்று என்பதோ, ஓமோன்களின் சுரப்புக்களால் ஏற்படுகின்ற இரசாயன மாற்றத்தினால் நிகழ்கின்ற உடல் தேவைகளினின்றும் அப்பாற்பட்ட, மேலான ஒன்று என்பதோ லீலா போன்ற இளம் நினரில் நி ப் பேருக்குப் புரிவதில்லை. வலிந்து, பல உத்திகளைக் கையாண்டு ஆள் பிடிக்கும் நடவடிக்கையாகவே காதல் கணிக்கப்படுகின்றது. ரசீம் - லீலா காதலும் அவ்விதம்தான்.
லீலா கூறியதைக் கேட்டதும் வதனிக்கு குணநாதனின் ஞாபகம் வந்தது. வதனி ஒன்றும் சொல்லவில்லை. “என்னக்கா ஒன்னும் சொல்லாம இருக்கிறீங்க? “அ. அது வந்து. ஒன்னுமில்ல.” “அப்ப நாம் போய்ட்டு வாறன்.”
துறையூரான்

Page 43
6068ů japa
லீலாவுக்கு. ஏனெனில் அவளுக்கு நிச்சயமாகத் தெரியும் கடைத் லீலா போய்விட்டாள்.
‘இன்று வெள்ளிக்கிழமை நாடகம் பழகுறதப் பாக்க
வரமாட்டா. மற்றதுகள் என்னப் பார்க்காது. அதது இஸ்டத்துக்கு வரும் போகும். செல்வா வந்தா நான் பாக்கப் போகலாம்.”
எனத் தனக்குள்ளாகவே கதைத்தாள் வதனி.
நினைத்தவாறே நடந்தது. அம்மா கிளம்பவில்லை. மற்றவர்கள் எல்லாம் கிளம்பிப் போயிருந்தார்கள். இரவு ஒன்பதரை இருக்கும் செல்வா வந்தான். “என்ன. நாடகம் பாக்க வரல்லையா.” “ எனக்கு வர ஏலாது. ஒரு மாதிரியா இருக்கு சுகமில்ல.” என்றாள் செளந்தரி
“அப்ப நாம் போறன்.” என்று கிளம்பியவனை நோக்கி வதனி
“இரு. நானும் வாறன்.” என்று கிளம்பினாள்.
வீட்டில் இருந்து மண் திட்டைக் கடந்தால் தரவை வந்துவிடும். தரவையால் நடந்து வீடுகள் உள்ள குறுகிய ஒழுங்கையால் நடந்து வளைவில் திரும்பினால் கூத்துப் பழகும் இடத்தின் பெட்ரோமாக்ஸ் லைற்றின் வெளிச்சம் தெரியும், அதுவரை இருட்டுத்தான்.
வீட்டைவிட்டு கிளம்பும் போதே வதனியின் மனதுக்குள் லீலா - ரசீம் ஜோடி கற்பனைக் காட்சிகளாக என்னென்னவோ செய்தார்கள். தரவையில் இறங்கி நடக்கத் தொடங்கியதும் துறையூரான்

62D660 i Tjaapay
வழமைக்கு மாறாக செல்வாவின் கையைப் பிடித்துக் கொண்டாள் வதனி.
என்ன 99
“சரியான இருட்டு., பயமாயிருக்கு. ஆட்கள் கதைக்கிற சத்தங் கூட கேக்கயில்ல.”
"நாடகந் தொடங்கிட்டு. எல்லாரும் போயிருப்பாங்க..” என்று செல்வா சொல்லும்போதே ஏதோ காலில் தட்டுப்பட்டாற் போல்
விடாமல் இருக்க அவன் பின்னோக்கி இழுக்க, சுதாகரித்துக் கொள்ளாமல் வேண்டுமென்றே அவன் மீது மோதி விழுந்தாள் அணைத்தபடி.
தூரத்தில் கோடை இடி கோவிந்தசாமியின் மேளச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.
ஆலோசனைகள் எல்லாம் வெறுப்பையே தரும். அதிலும் பெற்றோர்களின் அறிவுரைகள் என்றால் கேட்கவே வேண்டாம். ஆனாலும் பெற்றோர்கள் சரியான வழியில், முறையாக வாழ்ந்து காட்டினால் அது பிள்ளைகளுக்குக் கூறும் ஆயிரம் அறிவுரைளைவிட மேலானதாக இருக்கும் என்பதுடன் பிள்ளைகளிலும் அது பிரதிபலிக்கும். தங்கள் செயற்பாடுகள்
துறையூரான்

Page 44
மெளனர் 1ta
அனைத்தையும் செப்பனிட்டுக் கொண்டால் அதுவே பிள்ளைகளின் ஏணிப்படிகளக அமையும் என்பதைப் பெரும்பாலான பெற்றோர்கள் சிந்தித்துப் பார்ப்பதேயில்லை. தாங்கள் பிழையாக வாழ்ந்து கொண்டு, பிள்ளைகளுக்குச் சரியான வழியைக் காட்ட முடியாது. அறியாமை காரணமாகவே நிறையத் தவறுகள்
நடந்துவிடுகின்றன.
வதனிக்கு அம்மாவின் கண்டிப்பு, மற்றும் கட்டுப்பாடுகள் ஒரு தடையாக இருந்ததேயில்லை. அவள் வளர, வளர அம்மாவின் பழைய சம்பவங்கள் ஏதோ ஒரு வழியில் அவள் காதுகளை வந்தடையவே செய்தன. தாயின் பலவீனங்கள் இவளைச் சுதந்திரமாக்கின. அறிந்தும் அறியாமலும் குணநாதனுடன் கொண்ட நட்புக்கு இதுவும் ஒரு காரணம். இப்போது கடையில் வேலை செய்வதன் மூலமான வருமானமும் ஒரு கர்வத்தைத் தந்தது. லீலாவின் நட்பும், இறுதியாக அவளுடன் நடந்த உரையாடலும், உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரும் வயதும் எல்லாமுமாகச் சேர்ந்து செல்வாவுடன் அவ்வாறு நடந்து கொள்ளச் செய்தது.
வதனி தடுமாறுவது போல அணைத்துக் கொண்டு விழுந்ததும் ஒரு கணம் தடுமாறிப் போன செல்வாவுக்கு மனதில் தன் தாயினதும், முகம்மதுவினதும், அந்த இருட்டுக் காட்சிகளினதும் ஞாபகங்கள் வரவே ஏதும் கூறாமல் அவனும் மெளனமானான்.
தனது மூன்று வயதுத் தம்பி அச்சு அசல் முகம்மது மாமாவைப் போலவே இருப்பதாக ஊரார் பேசிக் கொள்வதும் கூட நினைவில் வந்தது. அப்பாவின் கையாலாகாத்தனம்தான்
துறையூரான்

606.gaň (Tjapay
இதற்குக் காரணம் என்பதும் அவனுக்குத் தெரியும். “வெட்டிப் பேச்சு வீரர். கடைத்தெருவில் இருந்து கதையளக்கும் கையாலாகாதவர்” அப்பாவின் மேல் ஒரு வெறுப்புணர்வும் ஏற்பட்டது. போகப் போக அவனுக்கு எல்லாம் பழகிவிட்டது. இசைவாக்கம் அடைந்து விட்டான்.
தூரத்தில் யாரோ அரிக்கேன் விளக்கு கொண்டு வரும் வெளிச்சம் தெரிய அவசரமாக விலகி எழுந்து கொண்டு, கூத்துப் பழகும் இடத்தை நோக்கி நடந்தார்கள்.
kkekkkk
இப்போதெல்லாம் நாடகம் பழகுவதைப் பார்க்க வரும்போது, அல்லது போகும்போது எப்படியும் திட்டமிட்டு தனிமையாகப் போவதை இருவருமே வழக்கமாக்கிக் கொண்டார்கள். அதனால் வதனியின் கண்கள் பேசும் அர்த்தம் செல்வாவுக்கு மட்டும் விளங்கிவிடும். வேறு யாருக்கும் இது கொஞ்சங்கூட வித்தியாசமாகப் படவில்லை.
லீலா இப்போதெல்லாம் அவ்வளவாக வதனியுடன் கதைப்பதில்லை. லீலாவைக் காண்பதே அரிதாகிவிட்டது. எப்போதாவது பாரூக் கடைக்குள் லீலா போகும்போது அல்லது வரும்போது தூரத்தில் தெரிவாள். சற்று உடம்பு வைத்தாற்போல வதனிக்குத் தெரியும்.
செல்வாவும் இப்போதெல்லாம் நண்பர்களுடன் பழகும் போது பெரிய மனிதத் தோரணையுடன் பேசுகிறான். சினிமாப் பாடல்களை அடிக்கடி பாடுகிறான். அதுவும் ஒன்றுக்கொன்று எதிரான சூழ்நிலைகளைக் கொண்ட பாடல்களை அடுத்தடுத்துப் பாடுகிறான்.
துறையூரான்

Page 45
6D60i mT)
*ஆணையரினர் தந்தர் கடைந்தெடுத்தாறி மோலி அங்கமெலி லாம் ஒர் பரிரிைம்ைபு அரச மரத்தின் இலைகளில் ஒன்று வந்து நின்றாற்போல் ஒரு நினைப்பு” என்று மோக வசனமாகப் பாடுகிறவன் சற்று நேரத்திலேயே * மலரே எண்ணெண்ண கோலம்
எதனால் எண்மீது கோபம். 99
என்று சோக வசனம் பாடுகிறான். எல்லாமே ஒரு வித்தியாசமாகவே அவனது நடத்தைகள் மாறிப் போய் இருந்தன. இவனின் நடவடிக்கைகள் எதுவுமே அவனது நண்பர்களுக்குப்
புரிவதேயில்லை.
மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் காலை ஊர் முழுவதும் ஒரே பரபரப்பு. நேற்று இரவு லீலா நஞ்சு குடித்து விட்டாளாம், இரவோடிரவாக ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய், உடனடியாக மன்னாருக்குக் கொண்டு போய்விட்டார்களாம்.
“ஏன் என்ன நடந்தது..? என்று ஆஸ்பத்திரிக்குப் போனவர்களைத் தவிர எஞ்சியிருந்த அந்தோனியப்புவின் வீட்டாரிடம் கேட்டதற்கு, சுசீலாதான் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“என்னண்டே தெரியல. பாரூக் கடையில இருந்து எட்டு மணிக்கிட்டத்தான் வந்தா. சாப்பிடாம படுத்திட்டா, கேட்டதுக்கு வேணாமின்டு சொல்லிட்டா. நாங்கல்லாம் நித்திர கொண்ட பிறகுதான் எதையோ குடிச்சிருக்கா. முனகுற சத்தங் கேட்டு நாந்தான் முதல்ல முழிச்சுப் பாத்தன். வாயில நூர தள்ளி பாயில எல்லாம் வழிஞ்சிருந்துது.”
துறையூரான்

6D6i maa
வந்திருந்தவர்கள் ஆளாளுக்குக் குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தார்கள். தாங்களாகவே சிலதைச் சேர்த்து வைத்தும் இடைவெளிகளை நிரப்பினார்கள்.
இதற்கென்றே பிறவி எடுத்தாற்போல சிலர் கண், காது,
விடுவதில் மகா கெட்டிக்காரர்கள். இம் மாதிரியான கதை உருவாக்குவதில் இவர்களுக்கு நிகர் இவர்களேதான். வால்மீகி, கம்பர், வியாசர், ஏனைய கவிஞர்கள் எல்லாம் இவர்களிடம் தோற்றும் போவார்கள். உண்மையிலிலாததையே உண்மையாக்கிவிடும் இவர்களுக்கு உண்மைக் கதைகள் எதுவும் கிடைத்துவிட்டால் கேட்கவா வேண்டும்?
“அதெல்லாம் ஒன்னும் ஆவாது. நீ கவலப்படாம
காஞ்சனா கேட்டாள்,
“என்னவாம். என்ன நடத்திச்சாம்." “நஞ்சக் குடிச்சிட்டாளாம், ஏன்னு தெரியாதுன்னு
சொல்றா இவ."
“கொஞ்ச நாளாவே அவ அதிகமாக யாரோடயும் தக் கிறதில்ல”
“பாரூக் கடைக்கு வேலைக்குப் போய்க்கிட்டுல்ல 曲 தா”
"அங்கதாண்டி. அவந்தாண்டி.” “யாரு...”
*அவந்தான் அந்தச் சோ. ரசிமோ கசிமோ” "ஓ அவனா. விசயம் ஏதும் பிசகிட்டுதோ...”
துறையூரான்

Page 46
Ο66D------ மெளனம் பார்வுை
"அப்பிடித்தான் இருக்கும். பர்வினே ஒரு தடவ சாட DTLurrë GlassFTGGTTT ஏங்கிட்ட”
“பர்வினா. அவ பெரிய சுத்தம்.”
“நமக்கேன்டி வம்பு, வா போவம். 99
லீலா செத்துப் போய்விட்டாள் என்று. அந்தோனியப்புவின் வீட்டிலிருந்து எழுந்த ஒப்பாரிச் சத்தம் வதனியின் காதில் விழுந்த
சுற்றி, நெஞ்சை அடைப்பது போலிருந்தது வதனிக்கு. அழுகைக் குரல்களால் அங்கிருந்த அனைத்து இதயங்களும் கனத்துப் போயிருந்தன. மனேஜரிடம் சொல்லிவிட்டு வதனி வீட்டுக்குப்
போய்விட்டாள்.
மாலை நாலு மணியளவில் லீலாவின் உடல் வந்து சேர்ந்தது. சடலத்தோடு ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு சங்கதியும் ரகசியமாக வந்தது. வாகனத்திலிருந்து சடலம் இறக்கப்பட்டு விடு போய்ச் சேருவதற்குள், அந்தச் சங்கதி பல காது கடந்து ஊர் முழுதும் பரவியது. V
“என்ன..” ஒருத்தியின் வாயில் காது வைத்துக் கேட்டுவிட்டுத் திரும்பியவளிடம் இன்னொருத்தி காதைக் கொடுத்து
ரகசியமாய்க் கேட்டாள்.
“மாசமா இருக்காளம்.” ரகசியமாய்ச் சொல்லப்பட்டது. அப்படியே ரகசியம், ரகசியமாகவே பரப்பப்பட்டது.
மனிதர்களுக்குள் மறைந்து கிடக்கும் வக்கிரபுத்தி இப்படித்தான் வெளிப்படும். தனக்குள் இருக்கும் குறைகளை துறையூரான்

மெளனர் பார்வை
p9 த்து, அடுத்தவரின் கு க்கும் பரவசம்.
uTyrrhigi
“ஏன் இப்படியெல்லாம் கதைக்கிறாய்.” என்றால்
“உண்மையத்தானே சொன்னன், உனக்கென்ன? என்று எதிர்க்கேள்வி கேட்டு, அத்தோடு விடாமல்
“இவளப் பத்தித் தெரியாதா..” என்று இன்னொன்றிடம் கூற ஆரம்பிக்கும்.
தேவையேற்பட்டால் ஒழிய உண்மையை எல்லாம் சொல்லத்தான் வேண்டும் எனும் அவசியமில்லை என்பது இவர்களுக்கு எங்கே புரியப் போகிறது?
மாலையில் லீலாவின் சடலத்தை வந்து பார்த்த வதனி அடக்கமாட்டாமல் தேம்பித் தேம்பி அழுதாள். அதிகமாய் அழுதாள். வதணி அழுவதைப் பார்த்தவர்கள், அவள் லீலாவுக்காக, தனது நண்பிக்காக தாங்கமாட்டாமல் அழுகிறாள் என்று நினைத்தார்கள். ஆனால் வதனிக்கு மட்டுமே தெரியும் தன்னை நினைத்தே அழுகிறோம் என்று.
அழுதழுது வீங்கிய முகத்துடனும் சிவந்த கண்களுடனும் வீடு நோக்கி நடக்கையில் மிக உறுதியாக முடிவெடுத்துக் கொண்டாள். “செல்வாவுடனான தொடர்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.”
முடிவு உறுதியாகத்தான் இருந்தது. ஆனால் காலம் கடந்திருந்தது.
துறையூரான்

Page 47
ஹெவானார் பார்வை
காத்தவராயன் கூத்து அரங்கேற்றுவதற்கு நாள் குறிக்கப்பட்டது. உத்தேசத் திகதியை வைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. இன்னும் நான்கு வாரங்கள்தான் பாக்கியிருந்தது. அதுவரைதான் பழகுவது இருக்கும். அவரவர் ஏற்கும் பாத்திரத்தின் கனதிக்கும், பாடல்களின் தொகைக்கும் ஏற்ப ஒவ்வொருவரும் பணப் பங்களிப்புச் செய்யவேண்டும். உடை அலங்காரம், மேடை அமைத்தல், மின்சார ஒழுங்கு, இசை போன்ற அனைத்துச் செலவுகளும் கூட்டப்பட்டு ஒவ்வொருவருக்கும் தொகை கூறப்படும். இது தவிர ஊருக்குள் பொது வசூல் ஒன்றும் செய்யப்படும்.
G.)
ஒருவர் முதன்முறையாக தனது பாத்திரத்தை நடிக்க மேடைக்கு வரும்போது, அவரது உறவினர்கள், நண்பர்கள் என ஒரு கூட்டமே காகித மாலை போட்டு வாழ்த்துத் தெரிவிக்கும். அதேநேரத்தில் பட்டாசு வெடியொலி காதைப் பிளக்கும். இதன்பின்தான் நடிக்கத் தொடங்குவார்கள்.
ஏறத்தாழ இருபது, இருபத்தைந்து வாரங்களாக நடிப்பவர்களையும், நடிப்பையும் பார்த்துப் பார்த்துப் பழகிப் போன கதையும், கூத்தும்தான் என்றாலும், நடிப்பவர்கள் மறந்தாலுங்கூட பார்த்திருந்தவர்களுக்குப் பாடமாகிப் போன பாட்டுக்கள் தான் என்றாலும் தொடர்ந்து இரண்டு நாட்களும் சனம் வந்திருந்து பார்க்கும். அது நிறைவுச் சந்தோசம்,
இனிக் கூத்துப் பழகுவதைப் பார்க்கத் தான் போகப் போவதில்லை, மேடையேற்றும் நாளில் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவான முடிவோடுதான் வதனி இருந்தாள். செல்வா இடையில் பலமுறை வந்து அழைத்தும் அவள் வரவில்லை துறையூரான்

6wateri tilrfaðar -Κό9D
எனக் கூறிவிட்டாள். அவனோடு தனியே கதைக்கும் சந்தர்ப்பங்களைக் கூடத் தவிர்த்து விட்டிருந்தாள். வதணியின் திடீர் மாற்றத்திற்குரிய காரணம் தெரியாமல் செல்வா அங்கலாய்த்தான். என்ன செய்வது என்று தெரியாத ஒரு தவிர்க்க முடியாத தவிப்புடன் திரிந்தான். வதணியின் இந்த மாற்றத்தில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தான் செல்வா.
வதணிக்கும்,செல்வாவுக்கும் இடையில் எந்தவிதமான பாசமோ, பற்றுதலோ, காதலோ இருக்கவில்லை. இவ்வளவு நாளும் இருந்தது வெறும் உடல்சார்ந்த உணர்வுகள்தான். லீலாவின் மரணம் வதனியின் உணர்ச்சிகளை ஒடுங்கச் செய்திருந்தது. செல்வாவுக்குள் இத் தாக்கம் நிகழவில்லை. எனவே அங்கலாய்ப்பில் திரிந்தான்.
லீலா இறந்து ஒரு மாதம் கழிந்த நிலையில் ஒருநாள் காலையில் கிணற்றடியில் முகங் கழுவிக் கொண்டிருந்த வதனி, தலை சுற்றுவது போல உணர்ந்து, தன்னைச் சமாளித்துக் கொள்வதற்குள் மயக்கமாகி விழப்போனாள். இதைக் கவ்னித்துவிட்ட மனோன்மணி ஓடிச் சென்று தாங்கிப்பிடித்துக் கொண்டு, அம்மாவைக் கூப்பிட்டாள்.
"அம்மா ஒடியாங்க. வதனி மயக்கம் போட்டுட்டா..."
அம்மாவும், மகளும் கைத்தாங்கலாக திண்ணைக்குக் கொண்டு போகும்போதே வதனி விழித்துக் கொண்டு விட்டாள். திண்ணையில் உட்கார்ந்து கொண்டு வாந்தி எடுத்தாள். கொஞ்சம் நன்றாக இருந்தது.
“ஏண்டி என்னடி ஆச்சு...” என்ற செளந்தரியின் கேள்விக்கு, -
துறையூரான்

Page 48
OO- மெளனம் பார்வை
“என்னண்டு தெரியல்ல.” என்றவள் எழுந்து மீண்டும் முகத்தைக் கழுவிக் கொண்டு கடைக்குப் புறப்பட்டுப் போனாள். ஆனாலும் ஒரு மாதிரி வயிற்றைப் புரட்டுவது போலவே இருக்கவே கவலைப்பட ஆரம்பித்தாள்.
இந்த மாதம் இவ்வளவு நாள் பிந்திப் போகும்போதே தான் பயந்தது சரியாகத்தான் போய் விட்டதோ என்று நினைத்தவளுக்கு உள்ளுரப் பயம் பற்றிக் கொள்ளப் பதற ஆரம்பித்தாள். அடுத்து வந்த இரண்டு நாட்களும் தொடர்ந்தும் வாந்தி. செளந்தரிக்குச் சந்தேகம் வந்தது. ஆனாலும் ஏதும் கேட்கப் பயப்பட்டாள். வதனி எரிந்து விழுவாள். தான் நினைப்பது போல் இல்லையென்றால் அவளிடம் இருந்து தப்ப முடியாது. தன்னை நாறடித்து விடுவாள் என்ற பயம்தான்.
அன்று மதியம் அரை நேரத்தோடு கடையில் இருந்து வந்த வதனி விழுந்து படுத்துவிட்டாள். அடுத்தநாள் காலை வரை எழுந்திருக்கவில்லை. காலையிலும் சத்தி. செளந்தரிக்கு சந்தேகம் வலுத்தது. இனியும் பொறுக்க மாட்டாதவளாய் நடப்பது நடக்கட்டும் என்று படுத்திருந்த வதனியை உலுக்கி அதட்டிக்
கேட்டாள்.
案率寧率寧寧案寧寧
சௌந்தரி அழுது புலம்பினாள். அன்னபூரணி வதனியுடன் சேர்த்துத் தாயையும் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள். கேள்விப்பட்டவுடன் ஆத்திரம் கொண்ட மணிமேகலை படுத்திருந் வதனியின் தலைமயிரைப் பற்றித் தூக்கி கன்னத்தில் பலமாக இரு அறை விட்டவள், ஒரு மூலையில் இருந்து முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அழுதுகொண்டிருக்கிறாள். வெளியே போய்
துறையூரான்

6.DageNň majapan ---O71) வந்திருந்த மனோன்மணி விட்டுச் சூழல் வித்தியாசமாக இருக்கவே, என்ன நடந்ததென்று அம்மாவைக் கேட்கப் போக, அதற்குமுன் செளந்தரி
“போய் இப்ராஹிம் மாமாவக் கூட்டிட்டு வா..” என்றாள்
ه?lل9k(!p85Lی
இப்ராபிம் மாமா முன்னே வர, மனோன்மணி பின்னால் வந்தாள்.
“என்ன புள்ள. வரச் சொன்னியாமா.”
செளந்தரி பதில் கூறாமல் இருந்தாள்.
“இவ இன் க்கு ே க்கப் போகல்லியோ.” என்றார் படுத்திருந்த வதனியைப் பார்த்து.
அதற்கும் பதில் இல்லை.
”...S த்தியும் டர்றாளுக اس سے € எனத் தன் க் கூட்டி வந்த மனோன்மணியைப் பார்த்துக் கேட்பார்
DITLDT.
*அம்மா” என அதட்டினாள் மனோன்மணி. தலையை நிமிர்த்திய செளந்தரி
“நான் என்னத்தச் சொல்றது.” என்று தொடங்கி, சொல்லி முடித்தாள்.
அதிர்ந்து போனது இப்ராஹிம் மாமா மட்டுமல்ல, மனோன்மணியும்தான்.
"urymsing....?"
துறையூரான்

Page 49
O2)- apasů z japa
*நானும் ஆண்மட்டும் கேட்டுப் பாத்துட்டன். சொல்ல
“சரி. சரி. நீங்க எல்லாம் வெளில போங்க. நாங் கேக்கிறன்”
இப்ராஹிம் மாமாவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு எல்லோரும் வெளியே சென்றார்கள்.
நீண்ட நேரத்திற்குப் பிறகு வெளியே வந்த மாமாவிடம் சௌந்தரி
“என்னவாம்..” என்றதற்கு “இங்க வா..” என்று செளந்தரியை மட்டும் கையைக் காட்டிவிட்டு முன்னால் சென்றார். பின்னால் சென்ற அவளிடம்
*செல்வாவாமடி, கருப்பண்ணன்ட மகன்.” “அவனா, செல்வாவா. ஐயோ அவன் சின்னப் பொடியனாச்சே. அவன எப்பிடி. அவன மகன் மாரித்தானே நெனச்சிருந்தேன். இப்பிடிப் பண்ணிட்டானே. பாவி. அவன்ர ஆத்தாட புத்திதானே அவனுக்கும் இருக்கும்..” என்று என்னவெல்லாமோ சொல்லி அரற்றிக் கொண்டிருந்தவளை மாமா அதட்டி அடக்கினார்
“ஒன்ர அழுகய நிப்பாட்டு முதல்ல. ஊர் முழுக்கத் தெரியிறதுக்குள்ள என்ன ஏதுன்னு ஆக வேண்டியதப்பாரு”
“இப்ப என்ன பண்றது. எனக்கு என்ன செய்றதுண்டு தெரியல்லையே...”
“சரி. சரி. நான்போயி ஏதாவது சொல்லி அவனக் கூட்டிக்கிட்டு வாறன், கதைச்சுப் பாப்பம்.” என்றவர் உடனேயே சூசை கடை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
நல்லவேளையாக செல்வா கடையில் இருந்தான். இவர்
D 6G86T (3uTu
துறையூரான்

Dagotů znýápa -C73) “இந்தா அஞ்சு ருவாக்கு வெத்தில பாக்குத்தா” என்றவர் “என்ன செல்வா ஒன்ன அந்தப் பக்கமே காண்றதில்ல.”
என்றார் மிகச் சாதாரணமாக, வதனி வீட்டில் நடந்த எதுவுமே
தெரியாத அவன்
“வாறத்தில்ல மாமா.
99
என இழுத்தவன் “பரீச்ச
இருந்துதா அதான் ராவுல படிச்சிக்கிட்டிருந்தன்.”
“உன்னப் பின்னேரமா ஒருக்கா வந்துட்டுப் போகச்
சொன்னா வதனி” என்றவர் வதனி என்றதும் அவனது முகம்
பிரகாசமாவதையும் கவனித்துக் கொண்டார்.
“வதனியா. பின்னேரம் வாறன்டு சொல்லுங்க...” மாமா சென்றதும்
“என்ன திடீர்னு. என்னப் பாக்கவே பிடிக்காத மாரி முகத்தத் திருப்பிக்கிட்டுப் போவா. எதுக்கா இருக்கும்..? என யோசித்தவன் “சரி எதுக்கும் இருட்டுனதுக்கப்புறம் போவோம்.” என தனக்குள் முடிவு செய்து கொண்டான்.
மாமா மட்டும் தனியே வருவதைப் பார்த்த செளந்தரிக்குத் திக்கென்றிருந்தது. “வரமாட்டன்னு சொல்லிட்டானோ..” என மனதுக்குள் நினைத்துப் பதறியவள்
"stseisa LDITLDIT”
*பின்னேரம் வாறண்டு சொன்னான்”
“ஏதாவது நீங்க சொன்னிங்களா?
“நா ஒன்னுஞ் சொல்லயில்ல. சாதாரணமாத்தான் சொன்ன, வதனி வரட்டாம்னு சொன்ன”
*வருவான”
“வருவான்னுதான் நெனைக்கிறன்.”
இந்த உரையாடல்கள் வதனியின்:காதுகளிலும் விழுந்தன. அவளும் அவனின் வருகையை எதிர்பார்த்தாள்.
துறையூரான்

Page 50
6BaDagań milijeD6y
பின்னேரமானது. அவன் வரவில்லை. ஏமாற்றத்தோடு எல்லோரும் காத்திருந்தார்கள். நன்றாக இருட்டிய வேளையில் வந்தான் செல்வா.
திண்ணையில் உட்கார்ந்திருந்த செளந்தரியிடம்
*வதனியக்கா வரச் சொல்லிச்சாம்..” என்று இழுத்தான்.
அவளுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. “அக்காவாம் அக்கா.” பற்களைக் கடித்து அடக்கிக் கொண்டாள்.
“எங்க வதனியக்கா”
*உள்ள படுத்திருக்கா”
உள்ளே எட்டிப் பார்த்தவன் “என்ன சுகமில்லயா?
“சுகமில்லதான். அதா வரச்சொன்னன்.” என்று கூறியபடியே மாமா வந்தார். பின்னால் மனோவும் வந்தாள்.
மற்றவர்கள் உள்ளே செல்ல, மாமா செல்வாவை அழைத்துக் கொண்டு முற்றத்திலுள்ள மாமரத்தின் கீழேயுள்ள பனங்குற்றியில் அமர்ந்தார்.
“இருப்பா.”
இருந்தவன் யோசித்தான். ஏதோ வித்தியாசமான ஒரு சூழ்நிலையை உணரத் தொடங்கினான்.
“வதனி மாசமாயிருக்கா.” உடனடியாகவே கதையை ஆரம்பித்தார் மாமா.
துறையூரான்

Daraðinnijspay -C75)
*அப்பிடின்ன..” ஒன்றும் தெரியாதவனாகக் கேட்டான். ஆனால் எல்லாம் தெரிந்திருந்ததற்கு அடையாளமாக அவன் குரல் நடுங்கியது.
“வயித்துல பிள்ள உண்டாகியிருக்காப்பா.”
தலை சுற்றியது செல்வாவுக்கு. உடம்பில் என்னென்னவோ இரசாயன மாற்றங்கள் நிகழ்ந்து வயிற்றில் அமிலம் சுரந்தது. தொண்டை வரண்டு, வியர்த்து விறுவிறுத்து, கை கால்கள் செயலிழந்தது போலாகி. எல்லாமாகச் சேர்ந்து உடம்பு முழுவதையும் ஆட்டம் காணச் செய்தது பயத்தில். ஏதும் பேசுவதற்கு நா எழவில்லை.
“அவ ஒன்னத்தாஞ் சொல்றாப்பா...”
என்ன சொல்வது, என்ன செய்வது என்று தெரியாமல் கண்கள் எல்லாம்ம் இருட்டிக் கொண்டு வந்தது அவனுக்கு அழும் குரலில்.
“எனக்கு ஒன்னுந் தெரியாது. நாம் போறன். அம்மா பேசுவாங்க. என்று நடுங்கிக் கொண்டே எழுந்தவனைக் கையைப் பற்றி இழுத்து. “கொஞ்சம் இருப்பா. கதைப்பம்..” என்றவரின் கையைத் தட்டிவிட்டு விட்டு "இல்ல. எனக்கொன்னும் தெரியாது. நாம் போறன்.” என்று ஓடாத குறையாக எட்டி நடந்து போயே விட்டான்.
துறையூரான்

Page 51
C76)- - ாளனர் பார்வை
Gs)
வதனியின் வீட்டைவிட்டு வந்தவன் நேராகத் தனது வீடு நோக்கி நடந்தான். இதயம் கழன்று வெளியே வந்து விழுந்து GLIDIT GITGITU பயப்படுமளவுக்கு வேகமாக இயங்கியது. கால்களை விட மனம் வேகமாகச் செல்ல, முன்பக்கம் சற்றுச் சரிந்தவாறே வேகமாக நடந்தான். ஆனாலும் அந்த இக்கட்டான நிலையிலும் ஒரு விடயத்தில் மிக உறுதியாக முடிவெடுத்துக் கொண்டான். " மறுப்பது.என்னவானாலும் பரவாயில்லை, மிக உறுதியாக மறுப்பது" அழுது கொண்டே வீட்டினுள் நுழைந்தவன், தேம்பிக் கொண்டே திண்ணையில் விழுந்து படுத்தான். மகள் அழுவதைக் கண்ட முத்தம்மா என்ன ஏதென்று தெரியாமல்
பதறிப் போய்
"என்னடா செல்வா. ஏன்டா அழுவுற. என்னடா ஆச்சு?” "... . . . . . . . . . . . ." " பதிலில்லை, அழுகை தொடர்ந்தது. "என்னன்டு சொல்லித் தொலையன்டா. ஏன்டா அழுகிற.” " . . . . . . . . . . . . . . . ۰ - + - ، +۰۰ " அழுகைதான் பதில் "கடையில ஏதும் பிரச்சினையா. சூசண்ண ஏதும் பேசினாரா."
'E'
"அப்ப என்ன?"
"இப்ராஹிம் மாமா."
"இப்ராஹிமா. அவன் யே நீ போன? அவன் என்ன செஞ்சான்."
"தேவயில்லாத கத கதைக்கிறாரு.” “என்ன தேவயில்லாத கத.” "ஆசிங்கமாக் கதைக்கிறாரும்மா." ஒன்றுமே தெரியாதவனாக, அப்பாவியாகக் கூறினான்.
துறையூரான்

AltszEATž ETýstav ー○
"அசிங்கமான்னா. என்னண்ணு ஒழுங்காச் சொல்லித் தொலையண்டா சனியனே." கோபம் வந்துவிட்டது
isł
"அவரு என்னவோ சொன்னாராம். இவரு கேட்டுக்கிட்டு வந்தாராம். வா. போய் என்னண்ணு கேப்பம்." என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று மாமாவின் வீட்டை நோக்கி நடந்தாள். செல்வா எழுந்திருக்கவில்லை. எதிரே வந்த கருப்பண்ணன்
"என்ன எங்க போற" "வாங்க எண்னோட." என்று வேறு ஒன்றும் சொல்லாமல் நடந்தாள். கருப்பண்ணன் தொடர்ந்தான்.
செல்வாவுக்குள் பயம் புகுந்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. இன்பத்தை அனுபவித்தவன் அதன் விளைவைத் துன்பமாக, வெறுப்பாக உணர்கிறான். எத்தனையோ இடைஞ்சல்களுக்கு மத்தியில் மிகவும் துணிவு கொண்டு, எல்லாவற்றையும் சமாளித்து காரியம் சாதித்தவன் தானே காரணம் என்பதை மறுக்கிறான். உண்டு பண்ணியவனே இல்லை என்கிறான். தனது சாதனையையே மனிதன் மறுக்கும் சந்தர்ப்பங்களும் நிறைய உண்டு என்பதற்கு இதுவும் ஆதாரம்,
அநேகமாக எல்லா மவிதர்களுமே சூழ்ச்சிக்காரர்கள், வேடதாரிகள். நன்மைகளை அனுபவிக்கக் கூட்டுச் சேர்ந்து கும்மாளம் போட்டுவிட்டு, துன்பத்தில் கைகழுவி விடுகிறார்கள். ஒரு சிலரைத் தவிர மற்றவர் எல்லாம் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாதவர்கள். அப்படி இருக்கவேண்டும் என்று நினைக்காதவர்கள் அல்லது நினைக்கத் தெரியாதவர்கள்.
துறையூரான்

Page 52
Quparoti nítjá00)
ஒருவேளை. இயற்கையே மனிதனை அப்படித்தான்
செல்வாவும் நடிக்கத் தொடங்கி விட்டான். காத்தவராயன் கூத்துப் பார்ப்பதில் ஆரம்பித்த உறவு என்பதாலோ என்னவோ தனது பாத்திரத்தின் தற்போதய நிலையை நன்குணர்ந்து உள்வாங்கி மகா நடிகனாகிப் போனான்.
தன் மகன் அழுது கொண்டு வருகின்ற அளவுக்கு என்ன நடந்திருக்கும். என்ன கதைத்திருப்பார். என்ற யோசனையும், அப்படி ஏதாவது பேச இவர் யார்? என்ற எண்ணமுமாக ஒரு வித ஆவேசத்துடன் இப்ராஹிம் மாமாவின் வளவிற்குள் நுழைந்தாள் முத்தம்மா.
“DITLDT..... LIDTLDT....
வதனியின் சம்பவத்தையே மனதில் போட்டு அலசிக் கொண்டிருந்தவருக்கு முத்தம்மாவின் குரல் கேட்க,
“யாரு. முத்தம்மாவா. வா. வா..” என்று உள்ளே அழைத்தாலும் அவருக்குள் பயம் தொற்றிக் கொண்டது. இப்போதுதான் செல்வா போனான். வெளியே இன்னொரு உருவம் தெரிவதைப் பார்த்து
“அது யாரது வெளியால.”
"அவருதான் நிக்கிறாரு. நீங்க செல்வாட்ட என்னமோ கதச்சீங்களாமே. அவன் அழுதுக்கிட்டிருக்கிறான். ஏன் என்ன நடந்திச்சி.” வயதுக்கு மூத்தவர் என்பதால் முத்தம்மா மரியாதை கொடுத்துக் கேட்டாள். இயல்பில் அவள் அப்படியல்ல. எடுத்த எடுப்பில் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடியவள்.
துறையூரான்

6Apatai najapat -C79)
"அது ஒன்னுல்ல. சும்மா கதைச்சம் புள்ள...” “என்ன கதைச்சிங்கன்டு சொல்லுங்க.” "அவன் ஒன்னுஞ் சொல்லலியா. அது ஒன்னுமில்ல. கருப்பண்ணனயும் உள்ள கூப்பிடு சொல்றங்.”
கருப்பண்ணன் உள்ளே வந்து உட்கார்ந்தான்.
“என்னன்ன முத்தம்மா. நாஞ் சொல்றதக் கொஞ்சம் அமதியாக் கேளு. நம்ம செல்வா நல்ல பொடியந்தாங். இவ வதனி இருக்காளே."
*வதனிக்கு என்ன..? “ஏதோ நடந்திரிச்சாம். அதுக்கு செல்வாதான் காரணம்னு சொல்றா. அதான் விசாரிச்சுப் பாத்தேன்." “எதுக்குக் காரணம்?.” “வதனி மாசமாயிருக்கா” என்றார் கிசுகிசுத்த குரலில். அவர் சொல்லி முடிக்குமுன் முத்தம்மா ஆவேசமாகக் கத்தத் தொடங்கினாள்.
“எந்த நாய் எம் மவனச் சொல்றது. நாறச் சிறுக்கி. அவ ஆத்தா மாறி நினைச்சாளே எல்லாரையும்..” என்று மாமாவின் வீட்டிலேயே தொடங்கி. பின்வாசல் வழியாக செளந்தரியின் வளவுக்குள் புகுந்தவள், தன் சக்தியை எல்லாம் வாய்க்குக் கொண்டு வந்து உபயோகிக்கத் தொடங்கினாள். பிறகு கேட்கவா வேண்டும்...? அக்கம் பக்கம் எல்லாம் கூடி வேடிக்கை பார்க்க
தேவையில்லாத பாடல்களுடன் அரங்கேறிக் கொண்டிருந்தது.
துறையூரான்

Page 53
(80)-— Paari PA
பொறுக்கமாட்டாதவளாய் செளந்தரியும் கொஞ்ச நேரம் முத்தம்மாவின் வண்டவாளங்களை இழுத்து,
"அடிப் போடி எனக்குத் தெரியாதாடி உன்ர." “அடிப் போடி. போடி. மம்மது.” என்று என்னென்னவோ தொடங்கினாலும் அது எடுபடவில்லை. அது எல்லோருக்கும் தெரிந்த கதை. முத்தம்மா கூறுவதுதான் புதுக்கதைகள். செல்வாவைத் தவிர தனக்குத் தெரிந்த எல்லோரையும் பெயர் குறிப்பிடாமல் வதனிக்குச் சாட்டியது மட்டுமல்லாமல் “தெரிஞ்சது இது. மத்ததெல்லாம் எப்படியோ..." என்று குடும்பத்தையே நாறடித்தாள் முத்தம்மா. வேறு வழியில்லாமல் பின்வாங்கி மெளனமானாள் செளந்தரி,
பேயாட்டம் போட்டவள் இறுதியாக “இனி எம்மவனப் பத்தி எவளாவது வாயத் திறக்கட்டும் அப்புறம் நடக்கிறதே வேற.” என்றவள் மாமாவின் வீட்டுப் பக்கம் திரும்பி
9.
“ஏ மாமா உனக்குந்தாஞ் சொல்றங்..” என்று கூறிவிட்டு, இரண்டு கைகளையும் தலைக்கு மேலாக உயர்த்தி, தலைமுடியை முடிந்துகொண்டு விறுவிறுவென்று வந்தவாறே
நடக்க, கருப்பண்ணனும் பின்தொடர்ந்தான்.
ఏడ கிக் கொண்டிருந்தது.
முத்தம்மாவைப் பொறுத்தவரை தனது கதை ஊரறிந்த விடயம் என்பதை அவள் ஒரு அனுகூலமாகவே எடுத்துக் கொண்டிருந்தாள். ரகசியமாக இருக்கும் வரைதான் பயம்
துறையூரான்

Danaů zAjapa
ஆனால் வெட்கம் இருக்க வேண்டும். அதுவும் சிலருக்கு “அப்படியா அது என்ன விலை?” என்று கேட்குமளவிற்கு இல்லாமல் போய்விடுகிறது. காலமும் இதற்குத் துணை செய்கிறது. எல்லாவிதமான காயங்களையும் ஆற்றிவிடக் கூடிய ஆற்றல் காலத்திற்குண்டுதான். ஆனால் களங்கங்களையும் மறக்கச் செய்யும் ஆற்றலும் உண்டு என்பது முத்தம்மா போன்றவர்களின் அனுபவக் கண்டுபிடிப்பு வாய்ச் சாமர்த்தியத்தால் எல்லாவற்றையும் சமாளித்து விடுவார்கள். தப்பித் தவறி யாராவது இவர்களைப் பற்றி வாய்திறந்து விட்டால, “ஆகா கதைக்க வந்திட்டா பத்தினி. உன்னப் பத்தி தெரியாதாடி..” என்று தொடங்கி அவள் பரம்பரைக்கே கதை சொல்லும் ஆற்றல் எல்லோருக்கும் வராது. இவர்கள் சொல்லும் கதைகளைக் கேட்பவர்களுக்கு “உண்மையாக இருக்குமோ...” என்ற எண்ணம் வலுப்பெறுவதைத் தவிர்க்க முடியாது. இவர்களைப் போன்ற பெண்களுக்கு வாய் மிகப்பெரிய பலமான ஆயுதம்.
அதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் நுட்பமும் வல்லமையும் முத்தம்மா போன்றவர்களுக்குச் சொல்லித் தெரிய
இரவோடு இரவாக செல்வாவதனி விவகாரம் ஊர் முழுவதும் பரவி, காலையில் கடைத்தெருவில் தலைப்புச் செய்தியாகப் பேசப்பட்டது. செய்தி இரவே தெரிந்துவிட்டது. விமர்சனம் தான் காலையில் என்பதுதான் உண்மை. மேற்கொண்டு விபரங்களை அறிவதற்கும், அறிந்த விபரங்களை உறுதிப்படுத்திக்
முத்தம்மாவின் சண்டையை இரவு நேரில் பார்த்த பெண்கள், “விஷயந் தெரியுமாடி..” என்று வாய்வழியாகவே ஏனைய பெண்களுக்குக் கூற, கேட்ட பெண்களின் வாய் அவரவர் தவிர
துறையூரான்

Page 54
6Abagati trijada
க்களுக்கு கூற, ஆண்கள் இப்போது காலைக் கூட்டம் நடாத்தி விஷயத்தை அலசி, அக்குவேறாய், ஆணிவேறாய் ஆராய்கிறார்கள்.
“அட நம்பவே ஏலாம இருக்கு.இவஞ் சின்னப் பொடியன் இல்லடா.” “ஆமா, சின்னப் பொடியன். வாயில விரல வச்சா கடிக்கத் தெரியாது. அடப் போப்பா. இந்தக் காலத்துப் புள்ளக.” “அவளுக்கு எங்க போச்சாம் அறிவு.” “அம்மாட புத்தி புள்ளைக்கு வரத்தானே செய்யும்” “அதுசரி. இவ்வளவு நடந்திருக்கு. அவுக விட்ல ஒத்தருக்கும் தெரியாமலா இருக்கும்.” “தெரியாமத்தான் இருந்திருக்கு. நேரங் கெட்ட நேரத்துல வாறதும், போறதும். நா அப்பவே நெனைச்சேன் ஏதாவது ஆகும்னு.” “விஷயம் வெளிய தெரியாம ஏதாவது செஞ்சிருக்கலாமே. இப்படி
“இதெல்லாம் மறைக்கிற விஷயமாடா. போன மாசம் செத்துப் போச்சுதே சலூன்காரப் புள்ள. அது செத்தப்புறங்கூட விஷயம் வெளிய வரல்லியா என்ன.”
*அதானே.” “சரி. இப்ப என்னதான் செய்யப் போறாகளாம்.” “அவனப் புடிச்சிக் கட்டி வச்சிர வேண்டியதுதான்” “அவந்தான் தான் இல்லன்னு சத்தியம் பண்றானாமே..., வயசு
குறைஞ்சவன் வேற.” "அவளுக்கொங்க போச்சி புத்தி. அவ என்ன சின்னப் புள்ளயா. முத்தின குமரு.”
“அதாம்பா பிரச்சினையே. அவளுக்கு மூத்தது இன்னும் மூணு
இருக்கே. அதுக முடிச்சி, அப்புறம் இவ முடிக்கிறதுக்குள்ள கிழவி ஆயிடுவா."
துறையூரான்

Dagari adapa
*அதுக்காக இப்படியா.”
இந்தக் க்கு முடிவே இல் ல் தொடர்ந்து கொண்டிருக்க, இதுவரை எதுவும் கதைக்காமல் சிகரெட்டைப் பற்றவைத்துக் குடித்துக் கொண்டிருந்த கார்த்திகேசு குறுக்கிட்டார்
“அட இப்பிடியே பேசிக்கிட்டிருந்தா ஒன்னும் ஆவாது. பஞ்சாயத்தக் கூட்டி ரெண்டுபேரையும் சேத்து வச்சு விசாரிச்சாத்தான் என்ன, ஏதுன்னு முடிவு பண்ணலாம். அதுக்கான ஏற்பாட்டப் பாருங்கப்பா.”
கார்த்திகேசு பனையூர்க்காரர் அல்ல. போன மாசம்தான் ராமேஸ்வரத்தில் இருந்து வந்திருந்தார். காயாம்புத் தேவரின் உறவினர். இன்னும் இரு வாரங்கள்தான் இங்கே தங்கியிருக்கப் போகிறார். ராமேஸ்வரத்தில் இவர் இருக்கும் பகுதியில் வரும் பிரச்சினைகளுக்கு இவர்தான் பஞ்சாயத்துப் பண்ணுவாராம். அந்த வழக்கத்தைத்தான் இங்கு கூறினார்.
பனையூருக்குப் பஞ்சாயத்து என்பது புதிது. இதுவரை அப்படி எதுவும் நடந்ததில்லை. அடிதடிச் சண்டை விவகாரங்கள் உட்பட அனைத்தும் பொலிகக்குத்தான் போகும். ஆயினும் பஞ்சாயத்துப் பண்ண கார்த்திகேசு இருக்கிறார் என்ற தைரியத்தில் ஆண்கள் கூட்டம் பஞ்சாயத்தை ஆதரித்தது.
ஊர்த் தலைவர்கள் என்றெல்லாம் பனையூரில் எவரும் இல்லை. இரண்டு குடும்ப ஆட்சிதான் இங்கு நடைபெற்று வருகிறது. ஒன்று முருகுத்தேவர் குடும்பம். அவருக்கு ஒன்பது பிள்ளைகள். ஏழு ஆண்கள், இரண்டு பெண்கள். அடுத்தது கறுப்பையாத் சேவர் குடும்பம் ஸ்டுப் பிள்ளைகளில் ஆறு ஆண்கள். பிள்ளைகள்
துறையூரான்

Page 55
62aD6IgaTifi ZITj6ap6Q7
மாமன், மச்சான் என இருபக்கமும் பதினைந்து பேருக்குக் குறையாத சண்டியர்கள் இருந்தார்கள்.
ஞாயிற்றுக் கிழமைகளில் நன்றாகச் சாராயத்தைக் குடித்துவிட்டு நடக்குமே கூத்து. அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள் எல்லாம் அன்று பாவனைக்கு வந்துவிடும். எம்.ஜி.ஆர்., நம்பியார் பாணியில் வாள் சண்டை கூட நடக்கும். ஆனால் நேரடியாக முகத்துக்கு முன்னால் அல்ல. கைச் சண்டை முடிவில் ஒளிந்திருந்து, சமயம் பார்த்துக் கத்திக்குத்து, அல்லது வாள்வெட்டு நடக்கும்.
வெட்டப்பட்டவர் ஆஸ்பத்திரிக்கும், வெட்டியவர் சிறைக்கும் போய் பத்து நாட்களின் பின் வருவார்கள். பின்னர் ஒரு மாதத்திற்கு பரம எதிரிகளாகத் திரியும் இவர்கள், நாளடையில் ஒருவர் வாயில் பீடியை வைத்துக்கொண்டு மற்றவரிடம் தீப்பெட்டி கேட்டு வாங்கி பற்ற வைத்துக் கொண்டு நட்பாகிவிடுவதும், இரண்டு, மூன்று மாதங் கழித்து மீண்டும் ஆஸ்பத்திரிக்கும் பொலிசுக்கும் ஆள்மாறிச் செல்வதும் பனையூர் மக்களுக்குச் சாதாரணமான விடயம். ஒரு சோடி ஆஸ்பத்திரி மற்றும் சிறையில் இருந்து வருவதற்குள் இன்னொரு சோடி போயிருக்கும்.
இவ்வாறு இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் எதிரிகளாகச் செயற்பட்டாலும் பழைய வாடிக் கிராமத்தில் உள்ள சி.களவர்களோடு பிரச்சினை வந்துவிட்டால் இரு சாராரும் ஒன்று சேர்ந்து அடிப்பார்கள். இப்படித்தான் ஒரு இரவு சிங்களவர்களோடு ஏதோ பிரச்சனைப்பட்டு, பெரிய சண்டையாகி, நாலைந்து சிங்களவர்களுக்குப் பலத்த காயமாகி மன்னார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்கள்.
துறையூரான்

Gabayoff Adapay
அடுத்தநாள் தைப்பொங்கல் தினம். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் கத்தி, கம்பு, வாள், மண்ணெண்ணெய் டின் என்பவற்றோடு பனையூருக்குள் புகுந்த சிங்களவர்கள், கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மண் தெரியாமல் தாக்கிவிட்டு, சுலைமான் கடைக்கும் தீ வைத்துவிட்டுச் சென்றார்கள். கடை முழுவதுமாக எரிந்து சாம்பலாகியது.
காத்தவராயன் நாடகத்தில் இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் க்கிறார்கள் என்றாலும் நல்லே இன்னும் சண்டை எதுவும் வரவில்லை. இந்த இரண்டு குடும்பங் க்கும் சம்பந்தமில் கருப்பண்ணன் குடும்பம், வதணி குடும்பம் போன்ற ஏராளமானோரும் பனையூரில் இருக்கத்தான் செய்தார்கள்.
கார்த்திகேசுவின் தலைமையில் வருகிற ஞாயிறு மாலையில் பஞ்சாயத்துக் கூடி விசாரிப்பதென முடிவு செய்யப்பட்டு இரு தரப்புக்கும் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டபடி பனையூரின் பிரதான விதிக்கும், மண்மேட்டுக்கும் இடையில் உள்ள தரவையில்
பஞ்சாயத்துக் கூடியது.
தரவையில் கூட்டம் கூடியிருந்தது. கருப்பண்ணன் குடும்பம் ஒரு பக்கமும், செளந்தரியின் குடும்பம் இன்னொரு பக்கமுமாக இருக்க நடுவில் கதிரை போட்டு கார்த்திகேசுவும் சில பெரிய மனிதர்களும் அமர்ந்திருந்தனர். இவர்களுக்கு முன்னால் சுமார் நூறு பேர் கொண்ட, கூடிய ஆண்களும், குறைந்த பெண்களுமான கூட்டம்.
தரவை எனப்படுவது திறந்தவெளி புற்தரை. ஆங்காங்கே தென்னைகளும், பனைகளும் உயரமாகவும், குட்டையாகவும்,
துறையூரான்

Page 56
GDataff altitaay சரிந்தும், வளைந்தும் நின்று கொண்டிருக்கும். தோப்பாக இல்லாமல் தனித்து நிற்கும் மரங்கள். நான்கைந்து ஆண்டுகளுக்கொரு முறை பெருமழையால் தரவையில் நீர் நிரம்பிக் காணப்படும். தண்ணிர் இடுப்பு உயரம் வரை இருக்கும். மார்ச்சுக்குப் பிறகு எப்படியும் வற்றிவிடும். சாதாரணமழைக்கு பிடிக்கும் தண்ணிர் சில வாரங்களில் வற்றிவிடும். பள்ளமான பகுதி என்பதால் எப்போதும் பச்சைப்புல் இருக்கும். மாலை
அதிகம் இங்கேதான் விளையாடுவார்கள்.
செல்வா கூனிக் குறுகிப் போய் உட்கார்ந்திருந்தான். ஆரம்ப வகுப்புக்களில் படிக்கும்போது சையத் சம்மாட்டியின் கரைவலைக்கு ராசு அண்ணன் கயிறு திரிக்கும்போது, அந்தக் கயிற்றை சுருண்டு விடாமல் நேராக இழுத்துக் கொண்டு போய் வைத்துவிடும் வேலை செய்து கூலி ஒரு ரூபாவை வாங்கி ஐஸ்கிறீம் சாப்பிட்டது இந்தத் தரவையில்தான்.
சோளகக் காற்றுக் காலத்தில் பட்டம் பறக்கவிடுவதும் இந்தத் தரவையில்தான். அநேகமாக எல்லோருடைய பட்டங்களும் கோச்சு ரோட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் மின் கம்பங்களில் சிக்கித்தான் தங்கள் ஆயுளை முடிக்கும்.
மாலை வேளைகளில் தகர டின்னின் மூடியை, ஒரு பனைமட்டைக் கம்பில் சோடா மூடியை வைத்து ஆணியால் அடித்துச் செய்த வண்டியை ப்ரும்ம்ம். ப்ரும். என வாயால் ஸ்டார்ட் செய்து பிப்பீப் என ஹோர்ன் அடித்துவிட்டும்ம்ம்ங். என்று வேகமாக ஓடுவதும் இந்தத் தரவையில்தான்.
துறையூரான்

pagarð Arja9ay --K87D
தரவையில் உள்ள தென்னை, பனை மரங்களுக்கு எல்லாம் தான் போய்ப் பார்க்க ஆசைப்பட்ட இலங்கையின் பிரசித்தி பெற்ற இடங்களான கொழும்பு, கண்டி, காலி, யாழ்ப்பாணம், கதிர்காமம், நுவரெலியா எனப் பெயர் வைத்து வண்டியை
டிநிற்கிறதே அந்த உயரமான பனை, அதுதான் கண்டி” என்று
இப்போதும் நினைத்துக் கொண்டான்.
அந்த ஒற்றைப் பனை நல்ல உயரம் தரவையில் நிற்கும் எல்லா மரங்களிலும் அதுதான் உயரம் கூடியது. இதில் ஏறி நின்று பார்த்தால் பனையூர் மட்டுமல்ல, அயற்கிராமங்களும் தெளிவாகத் தெரியும். மன்னாரே தெரியுமோ என்னவோ. அவ்வளவு உயரம். ஆனாலும் அது அலட்டிக் கொள்ளாமல் அப்படியே நிற்கும். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு சலனப்படாமல, தான் உண்டு, தன் வேலையுண்டு என்றிருக்கும்.
ஏனைய எல்லா மரங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு. ஆனால் இந்தப் பனை மரத்துக்கு அவ்வாறு எந்த உணர்ச்சியும் இல்லை என்பது போலத் தோன்றும். தென்னை, வேம்பு, பூவரசு எனப் பல மரங்கள் தரவையில் இருக்கின்றன. அவை காற்றுக்கு அசைந்து, ஆடி, இலைகளை அசைத்து, வருடி, ஒன்றோடொன்று உரசி ஏதோ எண்ணங்களையும், உணர்வுகளையும் பரிமாறிக் கொள்வது போலத் தோன்றினாலும் பனைமரம் மட்டும் உருண்டு திரண்டு, நீண்டு நிமிர்ந்து ஒரு அலட்சியமாக நிற்கும்.
அதன் ஒலைகள் கூட எந்தவித மென்மைத் தன்மையுமின்றி இறுக்கமாகவே இருக்கும். தன் ஆயுளை முடித்துக்கொண்டு கீழேவிழும் காவோலை கூட ஒரு மிடுக்கோடுதான் கிடக்கும்.
துறையூரான்

Page 57
GADGravaiů na jaway வேறு பனைகள் மற்றும் வடலிகள் ஓரளவு மென்மையும் பெண்மையும் கொண்டிருப்பது போல இருந்தாலும் இந்தப் பனையில் அவைகளைக் காண முடியாது. ஒருவேளை இது ஆண்பனை என்பதால் இப்படியோ. அல்லது மனிதர்களின் முன்னுக்குப்பின்னான முரணான நடவடிக்கைகளை மிக நீண்டகாலம் அவதானித்து, அவதானித்து ஒரு ஞான நிலைக்கு போய்விட்டதோ. ஞானியாகிவிட்டதோ இந்தப் பனை.
தும்பைப் பூவில் தேன் குடித்துக் கொண்டிருக்கும் சிவப்பும், வெள்ளையும், கறுப்பும் கலந்த வண்ணத்துப் பூச்சிகளை காவோலைகளைக் கொண்டு அமுக்கிப் பிடித்து, அதன் உடம்பின் நுனிப் பகுதியில் நூலைக்கட்டி பறக்கவிடுவதும் இங்கேதான். விதி கெட்டியாக உள்ள ஒரு சில வண்ணத்துப் பூச்சிகள் நூலில் இருந்து வழுகி தப்பிப் பிழைத்துப்போய் மின் கம்பங்களில் மூன்று தடவை மோதியபின் உயரப் பறந்து போய்விடும். அப்போதெல்லாம் நண்பர்கள் கூறுவார்கள் அது சாபம் போட்டுவிட்டுப் போகிறது என்று. அது உண்மைதானே. அந்தச் சாபங்கள்தான் இப்படித் தன்னை மாட்டிவிட்டு விட்டதோ.
* எ ன ன . . எ ல ல |ா ரு ம
வந்தாச்சாப்பா.தொடங்கலாமா..” என்ற கார்த்திகேசுவின்
உரத்த சத்தம் கேட்டு சிந்தனை கலைந்தான் செல்வா.
“சரி. சம்பந்தப்பட்டவங்க ரெண்டு பேரும் முன்ன வாங்க.”
வதனி அழுதுகொண்டே இருந்தாள். அழுதழுது முகம் வீங்கிப் போய் இருந்தது. கழுத்தைச் சுற்றிப் போட்டிருந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்த வண்ணம் இருந்தாள். எழுந்து வரவில்லை.
துறையூரான்

Ásatů zajasa
கார்த்திகேசு கேட்டார் “எங்க, எப்பிடி நடந்திச்சு?.” அழுகைதான் பதில் *ܘܘܘܘܘܘܘܘܘܘܘܘܘܘܘܘܘܘܘܘܘܘܘܘܘܘܘܘ." *கேக்குறதுக்குப் பதில் சொல்லலன்ன எப்பிடி?...”
“வாயத் தொறந்து பதிலச் சொல்லும்மா.” *நாடகம் பழகுறத பாக்கப் போகக்குள்ள...” அழுதுகொண்டே கூறினாள் வதனி
“யாரு இந்தப் பையந்தானே.” என்று முன்னே வந்து தலையைக் குனிந்தபடி நின்றிருந்த செல்வாவைக் காட்டிக் கேட்டார்.
ஆம் என்பதாகத் தலையாட்டினாள். “ஏம்பா. நீ என்ன சொல்ற? “எனக்கொன்னுந் தெரியாது” “என்னடா இப்பிடிச் சொல்றா? நீதானடா அவள ராத்திரியில கூட்டிக்கிட்டுத் திரிஞ்ச.” என்று சற்றுக் கோபத்துடன் கேட்டான் காளிமுத்து.
*கூட்டிக் கொண்டே விட்டா..? அதுக்கென்ன.7 முத்தம்மா இடையில் புகுந்து கேட்டாள் காளிமுத்துவிடம்
கானிமுத்து ஒன்றும் பேசவிலி லை. செல்வா சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுத்த மாதிரிச் சொல்லிக் கொண்டிருந்தான்.
"ஏம்மா சாச்சிக்கு ஒருத்தரும் இல் லியா.”
கார்த்திகேசுவின் கேள்விக்கு எவரும் பதில் சொல்லவில்லை.
"இதெல்லாம் சாட்சி வைத்துச் செய்யும் காரியங்களா.." என்று
அவசியம் ஏற்படும் போது ஆவேசமாக மாறி செல்வா போன்ற
துறையூரான்

Page 58
G90)- பிரிவாரப் பார்வை கேட்க எல்லோர் மனதிலும் கேள்வி எழுந்தது. ஆனால் எவரும் கேட்கவில்லை.
சுமார் ஒரு மணிநேரம் நடந்த பஞ்சாயத்தில் எந்தப் பலனும் இல்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கார்த்திகேசுவும் குழம்பிப் போயிருந்தார். திடீரென ஒரு யோசனை தோன்றியது.
"சரி, நீ காரணமில்லன்னு சொன்னா. சாமி பேர்ல கர்ப்பூரம் ஏத்திச் சத்தியம் பண்ணு. என்னப்யா நாஞ்
சொல்றது"
எல்லோரும் ஆமோதித்தார்கள்.
"அவன் ஏஞ் சத்தியம் பன்னணும். ஒன்னுந் தெரியாத பயலப் போட்டு இந்தப் பாடு படுத்திறியளே." என்று முத்தம்மா
தொடங்க
"அடி செருப்பால. ஒன்னுந் தெரியாதவனாமே. கேளுங்கடா கதய." என்றான் காளிமுத்து கோபத்துடன்,
"என்னால சத்தியம் பனன்ன முடியாது.? நீங்க என்ன வேனா பன்ைனிக்குங்க."
என்று செல்வா கூற, கோபத்தின் உச்சத்திற்கே ஈேன்றுவிட்ட காளிமுத்து பாய்ந்து அறைந்துவிட்டான் செல்வாவை.
இதனைச சற்றும் எதிர்பாராத செல்வா, இரண்டு மூன்று அர ஆள்ளிப்போப் கூட்டத்தின் மேல் விழுந்தான்.
"ஐயையோ. எம் மவன் அடிக்கிறானே பாவி.
நாசமாப் போவா."
### ஆண்

கிமளவிப் பார்வை
என்று முத்தம்மா அழுதுபுலம்ப, நாலைந்து பேர் ஓடிவந்து காளிமுத்துவைப் பிடிக்க, இன்னுஞ் சிலர் செல்வாவைத் தூக்க ஒரே பரபரப்பாயிற்று.
"இவங் காரணமில்லன்னா சத்தியஞ் செய்ய வேண்டியது தானே. தேவையில்லாம ஏன் வீறாப்பாப் பேசுறான்." என்று கூடியிருந்தவர்கள் குரல் கொடுக்க
"டேய். இங்க வாடா. பண்ணுடா சத்தியம்." என்று முத்தம்மாவே அனுமதி கொடுத்தாள்.
கற்பூரம் ஏற்றப்பட்டது. செல்வா மிகத் தீர்மானமாகச் சத்தியம் செய்தான் கற்பூர அக்னி மீது. தான் ஏதுமறியாதவன்
ΕΤΕΙΙΙ.
ஒரு உண்மையைப் பொய் எனச் சத்தியம் செய்ய மிகத் துணிச்சல் வேண்டும். அதுவும் தெய்வ சாட்சியாக, அக்னியின் மீது சத்தியம் செய்வதற்கு அசாத்தியமான தைரியம் வேண்டும். அந்தத் தைரியம் செல்வாவிற்கு எப்படி வந்தது? இந்த விவகாரத்தைத் தொடங்கி வைத்தவன் தான் இல்லை என்ற நொண்டிச் சமாதானமா..? அல்லது தாய் முத்தம்மா தந்த தைரியமா..? அல்லது இதுவரையில் எந்தவொரு அநியாயத்தையும் தட்டிக் கேட்க ஆண்டவன் வரவில்லை என்கிற அனுபவப் பாடமா?.
ஆனால் இயற்கையாகவே ஓர் சக்தி எல்லாவற்றையும்
இயக்கி, இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதுவும், அது அகற்ற
வேண்டியவற்றை அகற்றி, புகுத்த வேண்டியவற்றைப் புகுத்தித்
தனக்குள் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக் கொண்டும்,
மாற்றியமைத்துக் கொண்டும் அமைதியாக இயங்குகிறது என்பதும்,
துறையூரான்

Page 59
G92)- pagaň njaba அநேகம்பேரை ஆட்டங்காணவும் வைத்திருக்கிறது என்பதுவும் அந்த வயதில் அவனுக்குப் புரியவா போகிறது? அறுபதில் கூட அநேகருக்கு வாழ்க்கையின் நுட்பம் பிடிபடுவதில்லையே.
(s)
திட்டமிட்டவாறு காத்தவராயன் கூத்து முதல் நாள் மிகச் சிறப்பாக நடந்தேறியது. ஆனால் இரண்டாவது நாள் பனையூரில் ஒரு கொலை நடந்திருந்தது. முதல் நாள் இரவிலேயே இது நடந்திருக்க வேண்டும். அடுத்தநாள் தான் தெரிய வந்தது.
அருகில் உள்ள உடை மரங்கள் சூழந்திருக்கும் பற்றைக்குள் நிசங்கவின் சடலம் கிடந்ததைக் கண்டவர்கள் கூற, பொலிசுக்குத் தகவல் போய், அவர்கள் வந்து அம்புலன்ஸில் சடலத்தை ஏற்றிக் கொண்டு சென்றார்கள்.
நிசங்க ரெயில்வேயில் பிளம்பர் ஆக வேலை செய்பவன். இள வயதுக்காரன். தென் பகுதியைச் சேர்ந்தவன். அவனை யார்? ஏன்? கொலை செய்தார்கள் என்பது எவருக்குமே தெரியவில்லை. அன்று முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் இரவு காத்தவராயன்கத்துத் தொடர்ச்சியில் பகல் விசயம்பெரும்பாலும் எல்லோருக்கும் மறந்தே போய்விட்டது. தவிரவும் நிசங்க இவ் ஊர்க்காரன் இல்லாததும், அவனின் சடலம் அவனது ஊருக்கு
டுத்துச் செல்லப்பட்டுவிட்டதும் இந் நிகழ்ச்சியை மற்க்க
காரணங்கள்ாயின.

Spaarii najapa -K93D
ஆனாலி செல்வா இயல்பாகத் திரிந்தாள். தன்னைச் சீண்டுபவர்களைத் தானும் தீண்டினன். சிலரிடம் அடி வாங்கினான். பொலிசில் முறைப்பாடு செய்து அடிவாங்கியும் கொடுத்தான். எப்படியோ மிக நேர்த்தியாக நடித்தான். நீண்ட நாட்களுக்கு இவ்வாறு தாக்குப் பிடிக்க முடியாது என்பது அவனுக்கும், அவனது
திறந்து தன் குடும்பத்தாருக்குக் கூட உண்மையைச் சொல்லவில்லை. ஆனாலும் முத்தம்மா ஒரளவுக்கு உண்மையை
வார்த்தை பொய் என்பது தெரிந்திருந்தாலும் இதுபற்றி எதுவும் பேசுவதைத் தவிர்த்திருந்தான். முத்தம்மாவின் மீதுள்ள பயமும் வதனியின் வயதும் இதற்குக் காரணங்களாக இருந்தன.
சில வாரங்கங்களுக்குப் பிறகு முத்தம்மா குடும்பம் இந்தியா செல்லப் போவதாக செய்தி அடிபடத் தொடங்கியது. அச் செய்தி வதனியின் காதையும் எட்டியது.
சோதனை மேல் சோதனை என்று இதைத்தான் சொல்வார்களே. இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் செல்வா மனம் மாறி வருவான், குழந்தை பிறந்த பிறகாவது இது சாத்தியமாகலாம் என்ற நம்பிக்கையில் காலத்தைத் கழித்துக் கொண்டிருந்த வதனிக்கு இச் செய்தி இடியாய் இறங்கியது.
அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்யத் தோன்றவில்லை. செளந்தரிதான் என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோரிடமும் ஒடிப்போய் ஆலோசனை கேட்பாள். யாருமே உருப்படியாக ஒன்றும் கூறவில்லை.
துறையூரான்

Page 60
மெரைனர் பார்வை
“பொலிசில் முறைப்பாடு செய்தால் என்ன...? என்ற எண்ணம் வதனியிடம் தோன்ற அதுகுறித்து யோசித்தாள்.
பனையூரைப் பொறுத்தவரை தேவர் குடும்பங்கள் இரண்டிற்கும் எதிராக எவரும் பொலிசுக்குப் போகப் பயப்படுவார்கள். அந்த இரு குடும்பங்களும் மாறி, மாறி முறைப்பாடு செய்வார்களே தவிர அவர்களுக்கு எதிராக வேறு எவரும் முறைப்பாடு செய்ய மாட்டார்கள். பின் விளைவுகளை நினைத்து முன் யோசனையாக அந்தப் புத்திசாலித்தனமான முடிவை எடுத்து விடுவார்கள். இவர்களது கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட, பணவசதியுள்ள அல்லது உத்தியோகம் பார்ப்போரிடம் தேவர் குடும்பத்தவர் வம்பு, தும்பு வைத்துக்கொள்ளவும் மாட்டார்கள்.
“செல்வா, தேவர் குடும்பத்தவன் இல்லைதான். பஞ்சாயத்துக் கூடி, ஊரார் முன்னிலையில் கற்பூரம் அணைத்துச் சத்தியஞ் செய்து மறுத்தவனைப் பொலிசாரால் என்ன செய்துவிட முடியும். தன்னிடம்தான் எந்த ஆதாரமும் இல்லையே. தவிரவும் பொலிஸ்காரர்கள் இந்த விடயம் என்றால் ஆபாசமாக, விரசமாகக் கேள்விகளைக் கேட்டுத் துளைப்பார்கள் என்றும், முறைப்பாடு முக்கியமில்லாமல் போய் நடந்த கதையின் சுவாரசியத்தை அறியும் வக்கிர எண்ணத்தோடு விசாரிப்பார்கள் என்றும் அம்மா
y
கூறுகிறாள்..” என்று யோசித்தவள் பொலிசுக்குப் போகும்
எண்ணத்தைக் கைவிட்டாள்.
“அவனை ஒரு முறை சந்தித்து விட்டால், எப்படியாவது கெஞ்சி மன்றாடியாவது கேட்டுப் பார்க்கலாம். சில வேளை அவன் என்னுடன் உறவாடிய ஞாபகங்கள் அவனை மாற்றலாம். ஆம் அவனை எப்படியும் சந்தித்துக் கதைத்துவிட வேண்டும்.”
துறையூரான்

62.DagaTň mitjapany என அவனைச் சந்தித்துப் பேசுவதற்குரிய சந்தர்ப்பத்தை உருவாக்குவது பற்றி யோசிக்கத் தொடங்கினாள்.
வதனியின் வயிறு வேறு வரவர பெரிதாகி, வெளியே தள்ளிக்
எல்லோரும் தன்னையே, தன் வயிற்றையே உற்று, உற்றுப் பார்ப்பது போல உணர்ந்து, உடம்பு கூசி, கூச்சத்தினால் கூனிக் குறுகி விடுகிறாள்.
“லீலா மாதிரி நானும் செத்துவிடலாமோ..” என்று பலமுறை யோசித்தும் அவளல் அது முடியவில்லை. “சாவதென்றால் விசயம் வெளியே தெரியுமுன் செத்திருக்க வேண்டும்.” இப்போதுதான் எல்லோருக்கும் தெரிந்த பழைய கதை ஆகிவிட்டதே. ஆனாலும் முன்பு கூட எனக்குச் சாகும் துணிவு வரவில்லை என்பதுதான் உண்மை, சாவதற்கும் ஒரு துணிவு வேண்டுமோ. இல்லையே சாவது கோழைத்தனம். எதையும் எதிர்கொண்டு சமாளிப்பதுதான் வீரம் என்றுதானே படித்திருக்கிறேன்.” என்றெல்லாம் யோசித்தவளுக்கு “எப்படியாவது செல்வாவைத் தனியே சந்தித்துவிட வேண்டும்” என்ற எண்ணம் வலுப்பெற்றது.
செல்வாவின் நண்பன் சங்கர் வீதியால் செல்வதைப் பார்த்து கடையைவிட்டு வெளியே வந்து அவனை அழைத்தாள்.
“சங்கர். எனக்கொரு உதவி செய்வியா? “என்னக்கா. சொல்லுங்க...” *செல்வாவ நா வரச்சொன்னன்னு சொல்லனும்” “செல்வாட்டயா. ஐயோ அவன் அவங்க, அம்மாட்டச் சொல்லிக்குடுத்துருவான். அவங்கம்மா.. எங்கம்மாவோட சண்டைக்கு வருவாங்க."
துறையூரான்

Page 61
G96)- 8Dayaff attapal
தனது நம்பிக்கை இப்படி ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டையாவதை நினைத்த மாத்திரத்திலேயே வதனிக்கு இரண்டு கண்களிலும் கண்ணிர் பெருக்கெடுத்தது.
"அக்கா அழாதீங்க. நாஞ் சொல்லுறன். எங்க வரச் சொல்ல? * ஏழு மணி போல வீட்டுக்கு வரச் சொன்னன்னு சொல்லு.” சொல்லி கூற்று த்தமாகத் தெரியவே
“இல்லாட்டிச் சங்கக் கடைக்காவது வரச்சொல்லு.” “சரிக்கா..” என்று போகப் புறப்பட்டவனை அழைத்து, “சங்கர், அவனிட்ட சொல்லிட்டியான்னு எனக்குச் சொல்லிட்டுப் (8
“சரிக்கா." கடைக்குள் திரும்பி வந்து உட்கார்ந்த வதனி மீண்டும் யோசிக்க ஆரம்பித்தாள். “செல்வாவையும் அதிகம் குற்றஞ் சொல்ல முடியாதுதான். நாந்தானே அவனைத் தூண்டினேன். எவ்வளவு வயசு வித்தியாசம்.? அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் கூட பதின்மூன்று வயது வித்தியாசமாமே. ஆனா அப்பாவுக்குத்தானே வயசு கூட. ஆம்பிளைக்கு வயசு கூட இருந்தாப் பரவாயில்லயாமே. பெண்ணுக்கு வயசு கூட இருந்தால் என்னவாம்.? அவன் உழைத்துப் போடக் கூடத் தேவையில்லை.என்னுடைய சம்பளத்திலேயே சமாளிக்கலாம். அவன் என்னுடன் வாழாவிட்டாலுங்கூடப் பரவாயில்ல. இந்தக் குழந்தைக்குத் தான்தான் காரணம் என்று ஒத்துக் கொண்டால் கூடப் போதுமே. பாதி அவமானம் போய்விடும்.அப்படிச் சொல்லிவிட்டாவது எங்கேயும் போகட்டுமே. இப்படி அவமானச் சின்னமாய் எத்தனை நாளைக்குத்தான் வாழ்வது..? என்று யோசித்துக் கொண்டிருந்தவள், தூரத்தில் சங்கர் வருவதைப் துறையூரான்

2Danaů japa
பார்த்து நியாத ஒரு உற்சாகத்தில் விருட்டென எழுந் கடையைவிட்டு வெளியே வந்தாள்.
அருகே வந்த சங்கரின் முகம் வாடி இருப்பதைக் கண்டதும்
“என்ன சங்கர் சொன்னியா..?
*சொன்னந்தான். ஆனா...அவன் வரமாட்டாம்போல இருக்கு."
“வரமாட்டன்னு சொன்னனா..? *அப்பிடிச் சொன்னத்தாம் பரவாயில்லயே...” “என்னதாஞ் சொன்னான்...? அழாக் குறையாகக் கேட்டாள் வதனி "அவ வரச் சொன்னா நீ போன்னு.” அவன் சொல்லிமுடிக்குமுன்னே வதனிக்கு அழுகை பிறிட்டுக் கொண்டு வந்தது. முகத்தைப் பொத்தியபடியே நடந்து கடைக்குள் சென்று விட்டாள். சங்கருக்கும் கண்கள் கலங்கிவிட்டது.
拿事事事奉率事事家
செளந்தரியின் கட்டாயத்தின் பேரில்தான் ஏதோ சாப்பிடுகிறாள். வயிறுதான் பெரிதாகிறதே தவிர, அவள் மெலிந்து, காய்ந்து, கருகிக் கொண்டிருந்தாள். “கடவுளே. எனக்காக இல்லாவிட்டாலும் இந்தக் குழந்தைக்காகவாவது அவனின் மனதை மாற்ற மாட்டாயா..? அவனைச் சந்திக்கவாவது ஒரு ஏற்பாட்டைச் செய்து தந்தால் கெஞ்சி, மன்றாடியாவது பார்க்கலாம்..” எனத் தனக்குள்ளேயே எத்தனை முறையோ சொல்லி நேர்ந்து விட்டாள். அழுதழுது கண்ணிரும் வற்றிவிட்டது அவளுக்கு.
துறையூரான்

Page 62
GDagari and Pay
இப்படியே அழுது, உருகிக் கொண்டிருந்தவளுக்கு மேலும் ஒரு செய்தி வந்து நெஞ்சைத் தாக்கியது. பாஸ்போர்ட் எல்லாம் எடுத்துவிட்டார்களாம். அடுத்த கிழமை மூன்றாவது கப்பலுக்குப் போகப் போகிறார்களாம்.
மூன்று தடவை "ராமானுஜம்” கப்பல் சேவை நடைபெறும். திங்கள், புதன், வெள்ளி என இந்தச் சேவை நடைபெறுவது வழக்கம். கொழும்பிலிருந்து காலை, மாலை என இரு ரயில் சேவைகளும் நாள்தோறும் இடம் பெறும். கப்பல் நாள் என்றால் ரயில், பஸ், மினி பஸ்கள் என எல்லா வாகனங்களிலும் கூட்டம்
நடைபெறும்.
கப்பலுக்கு போகும், வரும் பிரயாணிகளின் பொதிகளைத் தூக்கும் “போர்ட்டர்” வேலை செய்யும் கூலியாட்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். பிரயாணிகள், சுங்கத் துறையினர், பாதுகாப்பு உத்தியோகத்தர்களைத் தவிர இந்தப் போர்ட்டர்களுக்கு
அடிப்படையில்தான் இந்த வேலைவாய்ப்புக் கிடைக்கும். இந்த வேலை கிடைப்பது என்பது பணம் அச்சடிக்கும் இடத்தில்
இவர்களின் அதித வருமானம் காரணமாக இவர்களைப் பற்றிய கதைகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. பிஸ்கட் தங்கம், மற்றும்
கொண்டுபோய்க் கப்பலில் கொடுப்பது, அவ்வாறே இந்தியாவில் இருந்து கொண்டுவரப்படும் அவ்வாறான பொருட்களைச் சுங்க அதிகாரிகளுக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டு வந்து கொடுப்பது, சுங்க அதிகாரிகளைச் "செட்” பண்ணிப்
துறையூரன்

aapatan nadaan -G99)
பொருட்களைக் கொண்டுவருவது என பல்வேறு வகையான வருமானங்கள் இத் தொழிலில் உண்டு.
ஒரிரு தடவைகள் இவ்வாறு வாடிக்கையாளர்களுக்கு நேர்மையாக பொருட்களைக் கொண்டு சென்று கொடுத்தாலும் பெறுமதி கூடிய சமயம் பார்த்து ஒரே அமுக்காக அமுக்கிவிடுவார்களம். கப்பலில் இருந்து எதிர்பார்ப்பவருக்கு கப்பல் புறப்பட்ட பின்புதான் “ஆள் ஏமாற்றிவிட்டார்” என்பது தெரிய வருமாம். அவ்வாறு ஏமாற்றிப் பணக்காரர்களான பலபேரின் பெயர்களும், கதைகளும் இன்றுங்கூட
செல்வா குடும்பம் மூன்றாவது கப்பலில் இந்தியாவுக்குப் போகப்
போகிறார்களாம் என்ற செய்தியைக் கேட்டவுடன் வதனி,
உறுதியான ஒரு முடிவை எடுத்தாள்.
“இன்று எப்படியும் அவனைச் சந்தித்து விடுவது”
இரவு ஏழரை மணிவாக்கில் சௌந்தரியும் வதனியும் வெளிச்சம் அதிகம் இல்லாத இடமாகப் பார்த்துப் பார்த்து நடந்து சூசை கடையின் பின்புறக் கதவு வழியாக வளவுக்குள் சென்றார்கள். வதனியை இருட்டில் நிற்க வைத்துவிட்டு, சௌந்தரி கடையின் பின்பக்க வாசலை நெருங்கி நின்று, x - is
“சூசண்ண. சூசண்ண. * என்று அழைத்தாள். “யாரது. பின்னால.டேய்,ராசா பின்னால யாரோ கூப்பிர்றாங்க பார்ரா.” என்று கடையில் புதிதாக வேலைக்குச் சேர்த்த பொடியனிடம் சூசை கூறுவது செளந்தரிக்குக் கேட்கவே, “சூசண்ண, நீங்கதான் ஒருக்கா வந்திட்டுப் போங்க. நா வதனிட shLDT...'
“என்ன பின்னால் வந்து நிக்குறிக..?
துறையூரான்

Page 63
மெளனர் பார்வை
"இந்தா வதனி வந்து நிக்குறா. அவஞ் செல்வாவோட கதைச்சும் பாப்பம்ன்ட்டு." அவங் கடப் பக்கமே வர்றதில்லையே. அவுகதான் எல்லாரும் இந்தியாவுக்குப் போகப் போறாகளாமே." "இல்லன்ைன. நீங்க சொல்லிவிட்டா அவன் வருவான்ன. எப்பிடியாவது இந்த உதவியச் செஞ்சு தாங்கண்ணே." இருட்டுக்குள் இருந்து வெளியே வந்த வதனி, அழுதுகொண்டே சூசையின் கையைப் பிடித்துக் கெஞ்சியபடி கூறினாள்.
சூசைக்கும் கண்கள் கலங்கிவிட்டன. மனிதர்களின் இதயம் இரும்பாலானதா. என்ன? ஆனால் சிலர் இரும்பாக்கி
வைத்திருக்கிறார்கள்.
"சரி இருங்கம்மா. யார்ட்டயாவது சொல்லிவிட்டுப் பாக்கிறன்” என்று கடைக்குள் சென்றவர் “டேய் ராசா. நீ போய் நாஞ் சொன்னேன்னு செல்வாவக் கொஞ்சம் வரச் சொல்லிட்டு வா." என்றார்.
வதனிபபும், செளந்தரியும் கடைக்குப் பின்னால் இருந்த வாங்கில் இருந்து காத்துக் கொண்டிருந்தார்கள். இருவரும் எதையும் கதைத்துக் கொள்ளவில்லை. இனிக் கதைப்பதற்கு ஒன்றுமேயில்லை என்பதைவிட, செல்வா வருவானா, மாட்டானா என்ற சந்தேகத்தினால் எழுந்த பயம் அவர்களின் வாயைக் கட்டிப் போட்டிருந்தது. வராவிட்டால்...? என்ற நினைப்பே வதணிக்கு கண்ணிரை ஊற்றெடுக்கச் செய்தது. அழுகிறாள். அழுகிறாள். மெளனமாக அழுகிறாள். அதைத் தவிர வேறு எதுவும் செய்ய அவளால் முடியவில்லை.
சிறிது நேரத்தில் திரும்பி வந்த கடைப் பொடியனிடம் சூசை,
"என்னடா சொன்னியா?"
துறையூரான்

எண்னர் பார்கள் "சொன்னண்ண, இப்ப வாறன்று சொன்னான்." "சரி கடயக் கொஞ்ச நேரம் பாத்துக்க. அவள் வந்தா நாம் பின்னால் நிக்கிறன்று வரச் சொல்லு." என்றுவிட்டு பின்புறம்
வந்தார் சூசிே.
இப்ப வாரன்னு சொல்லிவிட்டானாம்." "அண்ண நீங்களும் கொஞ்சம் கதைச்சுப் பாருங்கண்ண. சத்தியமா. கடவுள்மேல சத்தியமா அவந்தான்ன இதுக்குக் காரணம்.” வதனி அழுதுகொண்டே கூறினாள்.
இப்ப அழுது என்ன புண்ணியம். எல்லாந்தான் ஆயிருச்சே." "அப்பிடிச் சொல்லாதீங்கன்ைன. கதச்சுப் பாருங்கண்ணே. நாஞ் செத்துப் போயிருவணன்ன." "சரி. சரி. அழாத கதச்சுப் பாப்பம். உன்ர சத்தம் கேட்டுத் திரும்பிப் போயிறப் போறான்."
சில நிமிடங்களில் செல்வா வந்து சேர்ந்தான். அவன் நினைத்தது வேறு. இவ்வளவு நாளும் தான் சூசன்னனுக்கு ஒத்தாசையாக நின்றதற்காக ஏதாவது தருவதற்காகத்தான் வரச் சொல்லிவிட்டிருக்கிறார் என்று.
"சூசண்ண. சூசண்ண."
"மொதலாளி பின்னால நிக்கிறாரு. வரச் சொன்னரு." என்றான் ராசா.
பின்னால் சென்றவன் மீண்டும்
"இங்கதான் இருக்கன் வா."
“என்ன வரச் சொன்னிங்களாமா."
"வா செல்வா. என்ன அடுத்த கிழம போகப் போநீங்களாமா..? எல்லா ஏற்பாடுஞ் சரியா..?
துறையூரான்

Page 64
ന്തു 69angaň narapa
“ஒ சூசன்னவாற வெள்ளிக் கிழமக்கப்பலுக்கு.
"அங்கசொந்தக்காரங்கள்ளம் இருக்காங்களா..? எல்லாம் அவருக்குத் தெரிந்த விடயம் தான். இருந்தாலும் நேரடியாக விசயத்துக்கு வருவதற்குத் தயங்கி, சுற்றிவளைத்துக் கொண்டு வந்தார் சூசை. செளந்தரியும், வதனியும் இருட்டில் மறைந்து நின்றிருந்தார்கள்.
"மாமாதான் வரச்சொல்லியிருக்காரு. அம்மாவழிக் காணி கொஞ்சம் உச்சப்புளியில இருக்குதாம். ஏதாவது வேலையும் பாத்துத் தேடித் தாறன்னும் சொல்லியிருக்காரு...”
“வதனிட விசயம் அவங்களுக்கெல்லாத் தெரியுமா..? என்று சூசை கதையைத் தொடங்க, கோபமும், எரிச்சலும் வந்தவனாய,
ஏலாமத்தான் இந்தியாவுக்கு ஒடுறம். அங்க வேற தெரியணுமா?
இருக்கிறவளத் தவிக்கவிட்டுட்டு. ” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள்,
"சும்மாருங்க சூசண்ண. நாந்தாங் காரணமில்லன்னு சொல்லிக்கிட்டே இருக்கன். நீங்க என்னமோ பக்கத்துல இருந்து பாத்த மாதிரி பாவம். அது இதுன்னு உளர்றிங்க..” என்றான் கோபமாக,
இதற்கு மேலும் பொறுக்க மாட்டாதவளாய் இருட்டின்
துறையான்

aparalið madaway -G103)
"அப்பிடிச் சொல்லாத செல்வா. உண்மயுச் சொல்லு. நீதானே. நாம ரெண்டு பேருந்தானே. "
வதனியைக் கொஞ்சம் கூட எதிர்பாராத செல்வா நிலைகுலைந்து போய் செய்வதறியாது நின்றான்.
“இந்தியாவுக்குப் போகாத செல்வா. நாம இங்கேயே
இருப்போம். அவங்க வேணா போகட்டும். என்ர சம்பளத்திலேயே சமாளிக்கலாம். போகாத செல்வா.” கண்ணின்
ஆறாக ஒட அழுதுகொண்டே கூறினாள் வதனி,
திடீரென தன்னுணர்வு பெற்றவனாய் செல்வா,வதனியின்
கையை உதறிவிட்டு,
“d肪中.....。 இது என்னடா உபத்திரவம். நாந்தா இல்லன்னு சொல்றங்..” என்று எப்போதும் சொல்லும் பழைய பல்லவியையே பாடத் தொடங்க,
"அப்படிச் சொல்லாதடா. நீ தானேடா. , is
S என்னக் கல்யாணம் பண்ணக்கூட வேணாம். இந்தக் குழந்தைக்கு நீதான் அப்பான்னு சொல்லிட்டாவது போயிரு. இல்லன்டா நாஞ் செத்துப் போயிருவேன்.” என்று சடாரென அவனின் காலைப் பிடித்துக் கொண்டு ஓவென அழத் தொடங்கிய வதனியைக் கட்டுப்படுத்துவதற்காக செளந்த்ரியும் மறைவிலிருந்து வெளிப்பட்டாள்.
செளந்தரியையும் பார்த்துவிட்ட் செல்வா மேலும் கலவரமாகி,
துறையூரான்

Page 65
®- Gibrari far
"எர்ன் சூசன்ன இது..? எல்லாம் உங்கட வேலதானே..? அம்மாட்ட சொன்னத் தெரியுந் தானே. நாம் பேறன். போய்.” என்று காலை உதறி தன்னை விடுவித்துக் கொண்டு விநுவீரவென்று கடைக்குள்ளால் ஏறிப் போயே விட்டான்.
சூசைக்கு செல்வாவின் பேச்சும், போக்கும் அதிர்ச்சியைத் தந்ததால் செயலற்றுப் போய் நின்று கொண்டிருந்தார். அவரின் கண்கள் அவரையறியாமலேயே கலங்கி இருந்தன.
"அவன் போனாப் போறான் விடும்மா. அவரு பெரிய மசிரு. அம்மாட்ட சொல்லுவாறாம் அம்மாட்ட. அவளப் பத்தி எனக்குத் தெரியாதா..? அவளே ஒரு. அவ மகன் வேற எப்பிடி இருப்பான்.? என்று அழுது கொண்டிருக்கும் வதணிக்கு ஆறுதல் கூறினார் சூசை,
ஆறுதல் வார்த்தைகளாக இருந்தாலும் சூசையின் வார்த்தைகள் செளந்தரியையும் ஊசியால் குத்துவது போல
என்னென்னவோ எதிர்பார்த்து வந்தவர்களுக்கு அது எதுவும் சாத்தியப்படாமல் போனது மட்டுமல்ல, இனி அதற்குச் சந்தர்ப்பமே அமையப் போவதில்லை என்பதுவும் தெரிந்த அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியாமல் சூசை கடையின் பின்புறமே இருந்துவிட்டார்கள்.
எவ்வளவு நேரம் போனதோ தெரியவில்லை. கடையை
முடிவிட்டு சூசை வந்து,
"இன்னும் நீங்க போகல்லியா..? எழும்பி போங்கம்மா விட்டுக்கு. எல்லாத்துக்கும் கடவுள் இருக்காரு. அவருக்கு
துறையூரான்

விமானப் பார்வை -டு
மேல பாரத்தப் போட்டுட்டுப் போங்க. இதுக்கெஸ்லாம் ஒரு முடிவு வராமலா போகும்." என்றார்.
எல்லாத் தொடக்கங்களுக்கும் முடிவு உண்டு என்பது உண்மைதான். ஆனால் அந்த முடிவுகள் நாம் விரும்பும் வகையில், விரும்பும் நேரத்தில் நடப்பதில்லையே. மனிதர்களின் பெரும்பாலான கவலைகள் உடனடிக் காரணங்களுக்காகவேதான் ஏற்படுகின்றன. எப்போதாவது இதற்கு முடிவுவரும்தானே என இப்போது சந்தோசப்பட்டுக்கொள்ள, அல்லது கவலைப்படாமல்
இருக்க எல்லோரும் பக்குவப்பட்டவர்கள் அல்லவே.
சூசனன்னனின் சத்தம் கேட்டு உணர்வு வந்தவர்களாக வதானியும், செளந்தரியும் எதுவும் கூறாமல் எழுந்து நடக்கத் தொடங்கினார்கள்.
அழுதுகொண்டே வந்து கொண்டிருந்த வதனி, இடைக்கிடை சத்தமாகவும் அழ, செளந்தரி அதட்டினாள், "சத்தம் போடாத. எல்லாரும் பாக்கிறாங்க."
இந்த "எல்லாரும் என்பவர்களுக்காகத்தானே இத்தனை கவலையும். செல்வா இல்லையென்றாலும் வதனி வாழலாம், குழந்தையையும் பெற்றெடுத்து வளர்க்கலாம். நல்லபடியாக படிக்கவைக்கலாம். வேறு ஒருவனைத் திருமணம் செய்யலாம். வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்ந்து காட்டலாம். ஆனால் அதெல்லாம் முடியாது. ஏனென்றால் இந்த "எல்லாரும்" என்பவர்களின் பக்கமாக நின்று செளந்தரி, வதனி போன்றவர்கள் சிந்திப்பதால்தான். இந்த "எல்லாரும் வதனியின் பக்கமாக நின்று சிந்திக்கிறார்களா..? இல்லையே. அப்படிச் சிந்தித்தால் எந்தப்பிரச்சினையும் இல்லையே.
துறையூரான்

Page 66
6ADazerá najapa
போல பேசுகிறானே. முற்று முழுதான ஒரு உண்மையை
திரும்பச் சொல்லி, அதுவே அவனுக்கு உண்மை போலாகிவிட்டதோ. அல்லது அவனுக்கு யாரும் செய்வினை" ஏதும் செய்து வைத்து விட்டார்களே.” என்று அழுகையினூடே சிந்தித்துக் கொண்டே நடக்கிறாள் வதனி.
மனிதர்களுக்கு தன்னம்பிக்கை குறையத் தொடங்கும் போதுதான் செய்வினை, சூனியம் போன்ற விடயங்களில் அதிக நம்பிக்கை வருகிறது. கவலை, துன்பம், பிரச்சினையில்லாத
துன்பங்களை, கவலைகளை, பிரச்சினைகளைக் கண்டு பயப்படுபவர்களை, எதிர்த்து நின்று விரட்டத் தெரியாதவர்களைச் சரியாக நாடிபிடித்துப் பார்த்து, அவர்களையே மூலதனமாக்கிச் சம்பாதிக்கும் சாகசக்காரர்களின் வியாபார உத்திகளே செய்வினை, சூனியம் என்பன. மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி தங்களை வளர்ப்போர், தங்களின் வார்த்தை ஜாலங்களால்
இயல்பாகவேயுள்ள குறுக்குவழி ஆசைகளும் உதவியாக அமைந்து விடுகின்றன.
வீட்டில் இருந்த மற்ற மூன்று பெண்களும் "ஏதாவது o 队 g தா? କର ன் d 72 என எல்லாக் கடவுள்களுக்கும் நேர்ந்து கொண்டிருந்தார்கள்.
வந்து விட்டார்கள். துறையூரான்

GADagai muj apo ർ-®
வதனியின் அழுகையும், அம்மாவின் முகமும் அங்கே எதுவுமே நல்லது நடந்துவிடவில்லை என்பதைத் தெரிவித்தன.
பின்புற வழியால் வந்த இப்ராஹிம் மாமா,
அவன் எதுக்கும் மசிய மாட்டான்னு எனக்குத் தெரியும் விடு கழுதய. கடவுள் இருக்காரு .
என்று பொதுவாகச் சொன்னவர், வதனியப் பார்த்து,
“நீ ஏன் அழுதுகிட்டே இருக்க. இப்ப அழுவுறதால ஏதும் ஆகப் போவுதா? இல்ல இதுக்கு முன்னால அழுததால ஏதும் ஆயிருச்சா..? அழுறத நிறுத்திட்டு, ஆவுறதப் பாரு.”
வதனி என்ன நினைத்தாளே, அதன்பின் அழவேயில்லை.
வதனி ஏதோ தீர்மானம் எடுத்தவளாய் அழுவதை நிறுத்தினாள். முடிந்தவரை எல்லா முயற்சிகளும் செய்து பார்த்தும் எந்தப் பலனும் கிட்டாததால் ஏற்பட்ட விரக்தியா? பொய்யையே உண்மைபோலி பேசும் ஒருவனுடன் இனித் தொடர்பு ஏற்படுத்துவதால்தான் என்ன பயன் எனும் எண்ணமா? நடப்பது நடக்கட்டும், என்விதி இதுவானால் அதை யாரால் மாற்ற முடியும் என்ற சமய தத்துவஞானமா? அழுவதனால் ஆகப் போவது ஒன்றுமில்லை என்கிற அனுபவமா? அல்லது இவையெல்லாம் சேர்ந்து உருவாக்கிய தெளிவா? ஏதோவொன்று வதனியில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
துறையூரான்

Page 67
108 620auawň majapay
இந்தியாவுக்குப் போய்விட்டானா? வீட்டில் என்ன நடக்கிறது? வெளியில் என்ன நடக்கிறது? என்ற எந்தப் பிரக்ஞையும் வதனியிடம் இல்லை. சங்கக் கடைக்குப் போய் இரண்டு கிழமைகளாகி விட்டன. செளந்தரிதான் மனேஜரைக் கண்டு கதைத்திருந்தாள்.
எல்லா விடயங்களும் அவர் அறிந்திருந்ததனால் எதுவும் கூறவில்லை.
“சுகமானதும் வருவா. தயவு செஞ்சு வேற யாரயும் வேலைக்குச் சேர்த்திடாதீங்க.”
“எப்ப வருவா..?”
“அடுத்த கிழம எப்பிடியும் வந்திருவா.”
சௌந்தரியின் பெரும் ற்சியினால் வதனி ே போய் வருகிறாள். ஒரு சடம் போல்தான் இயங்குகிறாள். முகம் களையிழந்து, சோர்ந்து போய், அதுவே அவளது சொந்தத் தோற்றம் போல் ஆகிவிட்டது.
செல்வா குறிப்பிட்டபடியே, குறிப்பிட்ட நாளில் சென்றிருந்தான் என்பதைக் கூட இரண்டு கிழமைகளுக்குப் பிறகு இப்ராஹிம் மாமா கூறத்தான் கேள்விப்பட்டாள். ஆயினும் அச் செய்தி குறித்து அவளது முகத்தில் எந்த மாறுதலும் ஏற்படாததைக் கவனித்த இப்ராபிம் மாமாவுக்குத்தான் கவலையாக இருந்தது.
வர வர வயிறும் பெரிதாகிக் கொண்டே வந்தது.
பின்பற்ற வேண்டியிருந்தது.
துறையூரான்

606 ai majapan
லீலாவின் சாவுக்குக் காரணமான ரசீமை பொலிஸ் அரஸ்ட் செய்திருப்பதாக இப்ராஹிம் மாமா வதனியிடம் கூறினர்.
“ஏன்? என்றாள் ஒற்றை வார்த்தையில்
“அவனும் இன்னொரு சிங்களவனுமாச் சேர்ந்துதான் நிசங்கவக் கொன்னுருக்காங்க. இப்பத்தான் பொலிசுக்கு தெரிய வந்திருக்கு. அதுவும் பாரூக் தான் பொலிசில சொல்லியிருக்கிறான்”
“யாரு?
“அவந்தான். பாருக். பர்வின்ர புருசன். அவனுக்கு உடனயே தெரியுமாம். ஆனா இப்பத்தான் பொலிசில சொல்லியிருக்கிறான்.”
"ஏன்?
“ரசீம பர்வின்கிட்ட இருந்து பிரிக்கத்தான்.”
“அப்ப.” என்று ஏதோ கேட்க நினைத்தவள் அடக்கிக் கொண்டாள். என்னென்னவோ கேட்க வேண்டும் போலத்தான் இருந்தது. கேட்டு என்ன ஆகப் போகிறது.
ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? இதற்கெல்லாம் எது அடிப்படைக் காரணம்? மனிதருக்குள் இருக்கும் அசிங்கங்களின் வெளிப்பாடுகள் தான் இவையெல்லாமோ. அல்லது இதுதான்
கட்டுப்பாடுகள் இறுக்கமாக இல்லாததன் விளைவோ. ப்படியென்றால் இறுக்கமான கட்டுப்ாடுகள் உள்ள இடங்களிலும் இவ்வாறான விடயங்கள் நடக்கத்தானே செய்கின்றன. தனி
துறையூரான்

Page 68
ന്ത്ര 606Oli ala
மனிதர்களின் சுய கட்டுப்பாடுகள்தான் இவற்றைத் தவிர்க்க உதவுமோ.
வதனிக்கு. பனையூர்க்காரர்கள் ஒன்றில் அவளை அனுதாபமாகப் பார்த்தார்கள், அல்லது அவமானமாகப் பார்த்தார்கள். ஆனால் யாரும் சாதாரணமாகப் பார்க்கவில்லை. அவ்வாறு அணுக அவர்களுக்குத் தெரியவும் இல்லை. யார் எப்படிப் பார்த்தாலும் வதனிக்கு அது அவமானப் பார்வையாகவே இருந்தது. ஏதோ ஒரு குறிக்கோளுடன் இருப்பவளைப் போல எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.
ஒரு புதிய மனித ஜீவன் இந்தப் பூமிக்கு வதனி வழியாக வரும் நாளும் வந்தது. ஆம். வதனி ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தலைமயிர் கறு கறுவென்று சுருட்டையாக இருந்தது. எடை குறைவுதான் என்றாலும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவே ஆஸ்பத்திரித் தகவல்கள் தெரிவித்தன. செல்வி எனப் பெயர் வைக்கப்பட்டது.
ஒரு மாதத்தின்பின் குழந்தையைப் பார்த்தவர்கள் அச்சு அசல் செல்வாவைப் போலவே குழந்தை இருக்கிறது என்றார்கள். ஆயினும் வதனியின் அக்கா தாட்சாயினியின் கணவரின் பெயரே குழந்தையின் தந்தையின் பெயராக, அவரின் அனுமதியுடன் பதிவேடுகளில் பதியப்பட்டன.
இங்குள்ள முத்தம்மாவின் சொந்தக்காரர்கள் மூலம்
கொண்டிருந்தது. செல்வா அங்கே தன் மாமாவின் மகளைத்
துறையூரான்

Gapa Již japa
ஆட்சியர் அலுவலகத்தில் பியூன் வேலை பார்ப்பதாகவும்
போய்ச் சேர்ந்திருக்கும் என்பது வதனிக்குத் தெரிந்திருந்தது. ஆயினும் அவள் அதுபற்றி யாரிடமும் எதுவும் கேட்கவில்லை.
குழந்தைக்குத் தாய்ப்பால் போதாததால் புட்டிப்பால் கொடுக்க வேண்டியிருந்தது. வதனியும் நாளுக்கு நாள் மெலிந்து போய்க் கொண்டிருந்தாள். செளந்தரியின் முழுப் பராமரிப்பில்தான் ர்ந்தது. அவ்வப்போது பால் கொடுப் ட்டும்தான் வதனி,
செல்விக்கு மூன்று மாதம் ஆகியிருந்தபோது ரிக்கக் காய்ச்சல் வந்தது. தொடர்ந்து ஆறு நாட்கள் காய்ச்சல் விடாமல் வந்து கொண்டிருந்ததால் ஆஸ்பத்திரியில் வாட்டில் அனுமதிக்கப்பட்டாள்.
குழந்தை பிறந்ததில் இருந்து சங்கக்கடை வேலைக்கும் போவதில்லை. காய்ச்சல் காரணமாக பிள்ளைக்குப் பால் கொடுப்பது நிறுத்தப்பட்டிருந்தது. முழுமையாக புட்டிப்பால் என்ற நிலைக்கு நிலைமை மாறியிருந்தது.
பின்னேரங்களில் செல்வியைக் கொண்டுவந்து சிறிது நேரம் வதனிக்கு அருகே கிடத்துவாள் செளந்தரி. குழந்தை கையைக் காலை ஆட்டி ஆ , ஊ என்று சத்தம் எழுப்பி விளையாடும். அது விளையாடுவதை வதனி எந்த உணர்ச்சியும் அற்று, வெறுமையாய்ப் பார்ப்பாள். அதில் மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ காண முடியாது. இதைத்தான் விருப்பு வெறுப்பற்ற நிலை என்று சொல்வார்களே .
துறையூரான்

Page 69
112 மெளனப் பார்வை ஆஸ்பத்திரிக்கு வந்தும் ஆறு நாட்கள் ஆகிவிட்டன. காய்ச்சல் சுகமாகவில்லை. வதனி பெரும்பாலும் கண்களை மூடிய படியே கிடந்தாள். கண்களில் இருந்து மட்டும் எப்போதும் நீர் கசிந்த வண்ணமே இருந்தது. காய்ச்சல் வந்து ஆஸ்பத்திரிக்கு வரும் வரை அவள் அழுவதை நிறுத்தியேதான் இருந்தாள். இப்போது அவளை அறியாமல் நீர் கசிகிறது. ஆஸ்பத்திரியில் உள்ளவர்கள் அது காய்ச்சல் காரணமாக வரும் கண்ணிர் என்றே
நினைத்தார்கள்.
ஐந்து பெண் பிள்ளைகளாக இருந்தாலும், அதைப் பற்றிய எந்தக் கவலையும் இன்றி விளையாடித் திரிந்த அந்த இனிமையான பிள்ளைப் பருவ நாட்கள் , இப்ராஹிம் மாமாவின் வீட்டுக்கு பின்புறம் கோழி இறகுகளைப் புதைத்து அடையாளம் வைத்துவிட்டு, அடுத்தடுத்த நாட்களில் அது குட்டி போட்டுவிட்டதா எனத் தோண்டிப் பார்த்தது, பாடசாலை செல்லும் வழியில் மற்றப் பிள்ளைகளோடு சேர்ந்து சோடா மூடியைத் தண்டவாளத்தில் வைத்துவிட்டு ரயில் கடந்து சென்றதும் தட்டையாகிப் போன மூடியை எடுத்து அதில் இரண்டு ஒட்டைகள் போட்டு, நூலைக் கட்டி பம்பரம் செய்து விளையாடியது . மனோ அக்காவின்
விற்க வீடு வீடாகச் சென்றது ., மூன்று ரூபாய்க்கு பள்ளிக் கூடத்தில் டிக்கற் வாங்கி பேசாலை முறிபரதன் தியேட்டரில் நிதியுதவிக்காட்சியாக ராமன் எத்தனை ராமனடி திரைப்படம் பார்த்தது ., என்று ஒவ்வொன்றாக நினைவில் வந்து போய்க்கொண்டிருந்தது வதனிக்கு. உடல் அசைவற்று இருந்தது.
இந் நினைவின் தொடர்ச்சியாக, குணநாதனின் ஞாபகங்கள் வந்தது. தொடர்ந்து செல்வா. என்னவென்று இனம் பிரித்து அறிய முடியாத உணர்ச்சிகள் உள்ளத்தில் அலைமோத
துறையூரான்

data atas -Ql
அப்படியே தூக்கம் வருவது போல நினைவுகள் மங்கிச்
செல்ல ஆரம்பிக்க. திடீரென குழந்தை அழும் சத்தம் கேட்டது.
கண்களைத் திறக்கப் பார்த்தாள் முடியவில்லை. லீலா
குழந்தையுடன் வந்து, சிரித்துக் கொண்டு அருகில் நின்றாள்.
ஆண் குழந்தையா? பெண் குழந்தையா ? குழந்தை வீறிட்டு
Sil
நிற்கிறாளே? இவளுக்கு என்ன ஆயிற்று. அட விழுந்து விழுந்து
Bo?
குழந்தை இன்னும் வீறிட்டு அழுகிறது.
ஏய் லீலா. பிள்ள அழுறது காதுல விழலயா.? சிரிச்சிக்கிட்டு நிக்கிறாய். என்று வதனி அதட்ட, லீலா சிரித்துக் கொண்டே குழந்தையுடன் மறைந்தாள்.
வாய் அசையுது என்னவோ சொல்லுறா. என்னன்டு
கேட்பது போலிருந்தது அவளுக்கு
குழந்தை இன்னும் உரத்த சத்தத்தில் அழ,
ஐயோ! என் பிள்ளையின் சத்தம் மாதிரி இருக்குதே என்று நினைத்தவள் மிகவும் சிரமப்பட்டு க்ண்களைத் திறக்க
மூச்சு நின்று போயிருந்தது.
துறையூரார்

Page 70
♔ - GD&Taif ultijapey
அருகில் குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்த செளந்தரி எழுப்பிய அழுகைச் சத்தத்தில் ஆஸ்பத்திரியில் நின்றிருந்த அனைவரும் கூடிவிட்டனர். மனோன்மணி தாயிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு அழுதபடியே வெளியே வந்தாள்.
யாழ்ப்பாணத்தில் இருந்து உறவினர்கள் வந்திருந்தார்கள். பதினாறாம் நாள் காரியங்கள் முடிந்து, அடுத்த நாள் புறப்பட்டார்கள். செளந்தரியின் அண்ணனின் மகன் செல்வியைத் தான் வளர்ப்பதாகக் கூறி வாங்கிச் சென்றார்.
தரவையில் இருந்த அந்த ஒற்றைப் பனை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு ஆடாமல், அசையாமல்
நின்று கொண்டிருந்தது.
ஒரு ஞானியைப் போல. (முற்றும்)


Page 71
பெயராக் குப் பெரு à
ஆசிரியப் பணியில் சிறப்புற்று வி வியைத் தலைமன்னாரிலும் அடுத் மகா வித்தியாலயத்திலும் பயின்ற சிறப்புப் பயிற்சி பெற்றதுடன் பேராதனைப் பல்கலைக் கழகம், பவற்றில் பல பட்டங்களையும் பெர்
ஆசிரியப் பணியோடு அறநெறிப்
பதினைந்து ஆண்டுகளாகச் 9றப்
கணனி வள நிலையத்தில் கணி றியபோது பயிற்சியில் பங்குபற்
பண்பாளராகவும் திகழ்ந் உள்ள முட நம்பிக்கைகளை தக டுரைகளையும் சஞ்சிகைகளுக்கு எனும் இவரது சிறுகதை மாவட் றதோடு பலரின் உள்ளத்தையும் கிற அங்கீகாரத்தையும் பெற்றுத்
தற்போது பாடசாலை அதிபராகக் றல் கொண்டவர். இந்த பிI6 இலக்கிய வரிசையில் இவரது கன் பணி வாசிப்பவர்களின் சிந்தனை
உதவும் வகையில் அமைய வாழ்
 

திரு. எம். சிவானந்தன் அவர்கள் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற
5TDDIT60 g5606ADLID seiliam பிறந்தவர். இலக்கிய ஆர்வலரான
ଜୋM 356014 [[<: எழுத்தாளராக, பிறந்த மன்னனுக் மை சேர்த்துள்ளார்.
ங்கும் இவர் தனது ஆரம்பக் கன்
கல்வியை எருக்கலம்பிட்டி பத்தி
ij. Lavri a\5 69,dfjujj Jb av)II JʻT I oʻO)avfi ாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் காமராஜர் பல்கலைக் கழகம் என் றுள்ளார்.
பாடசாலை அதிபராகவும் an is
ணியும் புரிந்து வந்துள்ளார். a;
offsәсолшп өтпельф, аны 62ыПошті ஆசிரியர்களினால் மதிக்கப்பட்ட
ர்த்தெறியும் வகையில் பல்வேறு கட் யூதியுள்ளார். திருவிழா வியாபாரம் பத்தில் முதலாம் இடத்தைப் பெற்
இவருக்கு எழுத்தாளர் என்
கடமையாற்றும் இவர் பல்துறை ஆற் III jộ06) எனும் நூல், நாவல்
முயற்சியாகும். இவரது எழுத்துப் யைத் தூண்டி சமுக மேம்பாட்டிற்கு துகிறேன்.
art. 2.Gus Hvals, olului, dibisofi lífinult blij. tвої6ы 1ј. -