கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சறந்தீபில் பாறூதி

Page 1


Page 2

சறந்தீவின் பாறுதி
(மஹற்முத் சாமி அல்-பாறுதி கவிதைகள்)
மௌலவி எஸ்.எச். ஆகும்பாவா MA அதிபர், அல்-ஹாமியா அறபுக் கல்லூரி கல்முனை
கலமுஷ்-ஷர்க் வெளியீடு - 04
. 2008

Page 3
Title
Subject
Author
Copy Right:
First Edition :
Publishers
Printed by
Pages
Price
ISBN
Bar Code
எஸ்.எச். ஆதம்பாவா
: Serendibil Baroodi
: Mahmood Sami Al-Baroodi Kavithaikal (Poems)
: Moulavi S. H. Athambawa
B.A. Hons (Sri Lanka), B. A. Lit. (KSA), M. A. (Sri Lanka) Principal Al-Hamiya Arabic College, Kalmunai
Author
2008
: Kalamush Sharq Publication Bureau
72, Al-Hilal Road
Sainthamaruthu - 11 Sri Lanka Phone : 067 222 1965
: Star Offset Printers
Sainthamaruthu-14 067 2229414
: X + 90 = 100
: 200/
: 978-955-1470-02-5
: 97895.51 407025
II

சறந்தியில் பாறுதி
ീ റീd %d fഴ جمهورية مصر العربية 'dind, ീ ( as: کولومبو۔-- سریلانکا ۔ ർ, ീ മർdള്ള مالیه - المالدیف |
Message by Her Excellency Ms. Gehan Amin Mohamed Ali, Ambassador of the Arab Republic of Egypt for Sri Lanka & Maldives
Mahmoud Sami El Baroudi was a significant Egyptain politacal figure and a prominent poet. He served as Prime Minister of Egypt from February 4th 1882 until May 26th May 1882. He was known as Rab Aseif Wel Qualam "Lord of sword and pen'
El Baroundi's career as a politician developed mainly in the 1878-1882 when he assumed a string of high ranking offical posts including Minister of War, and until he participated in the Orabi Revolution led by Egypt's national hero Ahmed Orabi, and was sentenced to exile with Orabi Pasha and rest of companions to Sri Lanka "then Ceylon' in 1882.
El Baroudi embraced the life in exile with all the hopeful confidence with which he embarked on his military career, El Baroudi produced more than one poem on the "People of Sarendeeb', he left the Island in 1900 and died in Egypt in 1904.
The book "Sarendeeb il Baroudi' authored by Moulavi S. H. Adambawa, Principal Al-Hamiya Arabic College, Kalmunai narrates the work of poet Mahmoud Sami El Baroudi and his national feelings and patriotism for Egypt. My best wishes for Moulavi Adambawa's keen interest to publish this book to bring awareness among the Sri Lankan community of Egypt's prominent politician and poet Mahmoud Sami El Baroudi.
Gehan Amin Ambassador
III

Page 4
எல்.எச். ஆதம்பாவா
அணிந்துரை
மஹற்மூத் சாமி பாறுதி (1839 - 1904) நவீன எகிப்தின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவர். நவீன அரபுக் கவிதையின் முன்னோடியாகவும் கருதப்படுபவர். துருக்கிகுர்திஷ் வம்சாவழியில் வந்த பிரபலமான மம்லுக் குடும்பத்தில் பிறந்தவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எகிப்திய ராணுவத்தில் பணியாற்றி, எகிப்தின் யுத்த மந்திரியாகவும் பின்னர் பிரதம மந்திரியாகவும் நியமிக்கப்பட்டவர். தீவிர தேசியவாதி.
1882இல் அரசியல் சீர்திருத்தம் வேண்டியும் அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராகவும் அராபி பாஷா தலைமையில் நடைபெற்ற ராணுவக் கிளர்ச்சியில் முக்கிய பங்கேற்றவர். கிளர்ச்சி தோல்வியடைய பிரித்தானியரால் கைதுசெய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்.
அராபி பாஷா, பாறுதி, மஹற்மூத் ஃபஹற்மி உட்பட ஏழு முக்கிய பிரமுகர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுமாக 54 பேர் இவ்வாறு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர். இவர்கள் 1883 ஜனவரி 10ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தனர். சித்திலெப்பை உட்பட இலங்கை முஸ்லிம் பிரமுகர்களால் கொழும்பில் இவர்களுக்கு பெரிய வரவேற்பு ரிக்கப்பட்டது. நாடு கடத்தப்பட்ட எகிப்திய தேசியவாதிகளின் i, குறிப்பாக அராபி பாஷாவின் வருகை இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அரசியல் பண்பாட்டு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தமைபற்றி பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
அராபி பாஷா அரசியல் துறையில் முக்கியத்துவமும் பிரபலமும் பெற்றவர். எனினும் பாறுதி அவரது அரசியல் பிரபலத்துக்கு அப்பால் எகிப்திலும் முழு அரபு உலகிலும் கவிதைத் துறையில் மிகுந்த பிரபலம் பெற்றவர். ஆயினும் அராபி பாஷா அளவுக்கு இலங்கையில் அவர் சரியாக அறியப்படவில்லை. அராபி பாஷாபோல் பாறுதியும் இலங்கையில் 17 வருடங்கள் வாழ்ந்திருக்கிறார். இலங்கைக்கு
IV

சறந்தியில் பாறுதி
வரும்போது அவருக்கு 44 வயது. இலங்கையைவிட்டு அவர் தாய்நாடு செல்லும்போது அவருக்கு வயது 61. நாடுகடத்தப்பட்ட ஏனையோரைப் போலவே தனது வாழ்க்கைக் காலத்தில் முக்கியமான பகுதியை நிர்ப்பந்தத்தின்பேரில் அவர் இலங்கையில் கழித்திருக்கிறார். அவருடைய இலக்கிய அறுவடையிலும் இது முக்கிய காலகட்டமாகக் கருதப்படுகிறது. எனினும் இலங்கையில் இவரது வாழ்க்கையும். நடவடிக்கைகளும் விரிவாக ஆராயப்படவில்லை. இலங்கையில் வாழ்ந்த காலத்தில் இவர் நிறைய எழுதியிருக்கிறார். இலங்கையைப்பற்றியும் கவிதைகள் எழுதியிருக்கிறார். அவையும் வெளிக்கொண்டுவரப்பட வில்லை. சில ஆண்டுகளுக்கு முன் பண்ணாமத்துக் கவிராயர் பாறுதிபற்றி ஒரு சிறு நூல் வெளியிட்டார். மெளலவி ஆதம்பாவா தினகரனில் ஒரு கட்டுரை எழுதினார். நான் அறிந்தவரையில் தமிழில் இவரைப்பற்றி எழுதப்பட்டது இவ்வளவே.
இப்போது மெளலவி ஆதம்பாவா அவர்கள் பாறுதியை தமிழுக்கு விரிவான முறையில் அறிமுகப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். ஆதம்பாவா அரபு மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றவர். மதினா பல்கலைக் கழகத்தில் அரபு இலக்கியம் பயின்றவர். இலக்கிய ஆர்வம் உள்ளவர். சில ஆண்டுகளுக்குமுன் அவருடன் பேசிக்கொண்டிருக் கையில் பாறுதி பற்றியும் பேச்சு வந்தது. பாறுதியின் கவிதைத் தொகுதிகளையும் என்னிடம் காட்டினார். அரபுமொழி நன்கு அறிந்தவர் என்ற வகையில் பாறுதியின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்க்கு மாறு அவரை ஊக்கப்படுத்தினேன். கடந்த சில ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இப்போது நமக்கு ஒர் அரிய நூல் கிடைத்துள்ளது. சிறிதும் பெரிதுமாக பாறுதியின் சுமார் ஐம்பது கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இலங்கையின் இயற்கை வனப்பை வியந்து அவர் எழுதிய கவிதைகள் இவற்றுட்சில. நாடுகடத்தப்பட்ட வாழ்வு பற்றிய அவரது உள்ளக்குமுறலை வெளிப்படுத்தும் கவிதைகள் பல. பாறுதியைப் பற்றிய ஒரு நல்ல அறிமுகத்தை இந்த நூல் நமக்குத் தருகின்றது.

Page 5
எஸ்.எச். ஆதம்பாவா
பாறுதியின் கவித்துவ மொழி மிகவும் செழுமையானது என அவரது விமர்சகர்கள் கூறுகின்றனர். அவரது மொழிநடை செவ்வியல் பாங்கானது என்றும் குறிப்பிட்டுள்ளனர். அரபுக் கவிதையில் குறிப்பாக அப்பாசிய காலக் கவிதையில் அவர் ஆழ்ந்த புலமை உடையவர் என்றும், அவருக்கு முன்பும் பின்பும அவரளவு புலமை உடையவர் யாரும் இருக்கவில்லை என்று கூறப்படுகின்றது. அத்தகைய கவிஞர் ஒருவரின் ஆக்கங்கள் தமிழில் வருவது ஒர் அபூர்வ நிகழ்ச்சி என்றே கூறவேண்டும்.
கவிதையை மொழிபெயர்ப்பது என்பது மிகவும் சிக்கலான விடயம். கவிதை மொழிபெயர்க்க முடியாதது என்ற கொள்கையும் உண்டு. மூலமொழிக் கவிதையின் எல்லா அழகையும் மொழிபெயர்ப்பில் கொண்டு வரமுடியாது என்பதே இதன் பொருள். ஆயினும் மெளலவி ஆதம்பாவா அவர்கள் முடிந்த அளவு பாறுதியின் கவிதைப் பொருளை தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் என்றே கூறவேண்டும். இத்துறையில் அவர் மேலும் முயன்று பாறுதியின் இன்னும் பல கவிதைகளைத் தமிழுக்குக் கொண்டு வரவேண்டும். அதுபோல் வேறு அரபுக் கவிஞர்களையும் தமிழுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
இந்த அரிய முயற்சியை தமிழ் இலக்கிய உலகு வரவேற்கும் என்று நம்புகிறேன்.
ஆசிரியருக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும்
பேராசிரியர் எம். ஏ. நவஃமான் தமிழ்த்துறை
போராதனைப் பல்கலைக்கழகம் 05-10-2008
VI

சறந்தியில் பாறுதி
என்னுரை
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலம், சங்கமருவிய காலம், பல்லவர் காலம், ஐரோப்பிய காலம், இன்றைய காலம் எனப் பிரித்து அவ்வக்கால இலக்கியங்களின் பண்புகள், சிறப்புக்கள் ஆராயப்பட்டது போல் அறபு இலக்கிய வரலாற்றில் ஜாஹிலிய்யாக் காலம், இல்லாமிய காலம், அப்பாஸிய காலம், துருக்கிய காலம், இன்றைய காலம் எனப் பிரித்து அவ்வக்கால இலக்கியத்தின் தன்மைகள், போக்குகள், பண்புகள் பற்றி ஆராயப்படுவதுண்டு.
தமிழ் கவியுலகிலே மகாகவி பாரதியார் எவ்வாறு இன்றைய கவிதைகளின்
முன்னோடியாகக் கருதப்படுகிறாரோ அதேபோல் இன்றைய அறபுக்
கவிதைகளின் முன்னோடியாக, வழிகாட்டியாகக் கருதப்படுபவர் மஹற்மூத் சாமி அல்-பாறுதி என்ற கவிஞராவார். ‘பாறுதி யுகம் என்றுதான் இன்றைய
கவிதையின் போக்குகள் அடையாளப்படுத்தப் படுகின்றன.
இவ்வாறு புகழ்பெற்ற கவிஞர், அறபுக் கவிதையின் முன்னோடி இலங்கை நாட்டிலே வாழ்ந்து இலங்கையைப் பற்றி நிறைய கவிதைகளை எழுதியுள்ளார் என்றால் எவ்வளவு தூரம் அச்செய்தி உற்சாகத்தைத் தரும் என்பதை நான் கூறத்தேவையில்லை.
எகிப்து நாட்டின் பிரதம மந்திரியாக இருந்த இவர், ஒராபிபாஷாவோடு சேர்ந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு வந்து இலங்கையில் வாழ்ந்தவர். பெரும் பதவி வகித்து நாடு கடத்தப்பட்டு இலங்கையில் ஒரு கைதிபோல் வாழ்ந்த கவிஞர் இலங்கை நாட்டில் தனது சோகங்களை வெளிப்படுத்தியதுபோல் இலங்கையின் எழிலையும் சிறப்புக்களையும் தமது
கவிதைகளில் வெளிப்படுத்தினார்.
1985இல் மதீனா பல்கலைக்கழகத்தில் அறபு இலக்கியத்துறையில் இறுதி ஆண்டு மாணவனாகப் பயின்றபோது, ஒரே நாளில் இலக்கியம், இலக்கிய வரலாறு, இலக்கிய விமர்சனம் ஆகிய மூன்று விரிவுரைகளுக்கு வந்த விரிவுரையாளர்கள் கவிஞர் பாறுதி பற்றி அறிமுகம் செய்தபோது, இலங்கையில் அவர் வாழ்ந்தார் என்ற தகவல்களை அவர்கள் கூறியபோது
VI

Page 6
எஸ்.எச். ஆதம்பாவா
நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அது எனக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அந்தப் பிடத்தில் பயின்ற ஒரேயொரு இலங்கையரான எனக்கு எனது நாட்டைப் பற்றி ஒரே நாளில் மூன்று விரிவுரையாளர்கள் குறிப்பிட்டது பெரும் பெருமையாக இருந்தது. அதுவரை அவர்பற்றி எதுவும் அறியாதிருந்த நான், அன்று முதல் அவர் பற்றி ஆராய ஆரம்பித்தேன். அறபு இலக்கிய பாட நூல்களில் கவிஞர் இலங்கை பற்றிப் பாடிய பாடல்கள் அதிகம் இடம் பெற்றிருந்ததால் எனது உற்சாகம் மேலோங்கியது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளராக நான் கடமை புரிந்தபோது அங்கு அறபு மொழியில் சிறப்புப் பட்டம் பெற்ற இறுதியாண்டு மாணவர்களுக்கு பாறுதி பற்றி நிறைய விரிவுரைகளை நிகழ்த்தினேன். அவருக்கும் இலங்கைக்குமிடையே ஏற்பட்ட தொடர்புகளை அம்மாணவர்கட்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கே நான் அறிமுகம் செய்தேன்.
2007இல் சென்னையில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடைபெற்றபோது இலங்கையில் வாழ்ந்த அறபுக் கவிஞர் அல்-பாறுதி எனும் தலைப்பில் அங்கு கட்டுரை வாசித்தேன். அம்மாநாட்டில் நான் வாசித்த அக்கட்டுரையை தினகரன் வாரமஞ்சரி தொடராக பிரசுரித்தது.
கவிஞரின் கவிதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பெற்று விரிவுரைகளை நிகழ்த்தி வந்த நான் அவரின் கவிதைத் தொகுப்பைப் பெறுவதற்கு பல முயற்சிகள் செய்தேன். பலரிடம் கூறி அனுப்பினேன். மிகவும் காலதாமதமாகவே அத்தொகுப்பு என் கைகளுக்குக் கிட்டியது. அதன் பின்னரே சென்னையில் நடைபெற்ற மாநாட்டிற்கு என்னால் ஆய்வுக் கட்டுரை எழுத முடிந்தது.
எனக்குக்கிடைத்த கவிஞரின் தொகுப்பு நூலுக்கு எகிப்தியரான அலி அப்துல் மக்குத் அப்துர்ரஹீம் என்பவர் குறிப்புரைகள் எழுதியுள்ளதுடன் பிரதம மந்திரி மஹற்மூத் சாமி அல்-பாறுதி பாஷா அவர்களின் தீவான்' (தொகுப்பு) என அதற்குப் பெயரிட்டுள்ளார். லெபனானின் பேறுதிலுள்ள தாறுல் ஜில் அதனை வெளியிட்டுள்ளது.
VIII

சறந்தீபில் பாறுதி இக்கவிதை நூல் ‘காபியா’ அடிப்படையில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு கவிதைத் தலைப்பிலும் இது என்ன ‘பஹற்றில் (மெட்டில்) பாடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறபுக்கவிஞர்கள் தங்கள் கவிதைகளை எழுதும்போது அறுாள் மற்றும் காபியாவைக் கவனித்தே கவிதை எழுதி வந்தனர். தவில், மதித், வாபிர், காமில், றிஜ்ஸ் போன்ற பதினாறு பஹற்றுகளைக்கொண்டு அவர்களின் கவிதைகள் அமைந்தன. உதாரணமாக தவீல்" என்றால் அதன் அமைப்பு பஊலுன் மபாஈலுன் - பஊலுன் - மபாஈலுன் என்ற ஓசையுடன் வரும். இந்த அணியை கண்டிப்பாகக் கவனித்தே கவிதைகள் ஆக்கப்பட்டன. 'காபியா' என்பது கவிதை வரியின் சொல்லின் ஒழுங்காகும். உதாரணமாக “நூன்" என்ற எழுத்தில் கவிதை முடிந்தால் அதை நூனிய்யா' என அழைக்கப்படும். அக்கவிதையில் நூறு வரிகள் இருந்தாலும் அது ஒரே ஒழுங்கில் நூன்" என்ற எழுத்தில் முடிவடையும். உதாரணமாக வசனு, சகனு, ளுஅனு, யஹினு, பிதனு, வகனு, திமனு. இங்கே 'னு' என்று இறுதி எழுத்து அமைந்துள்ளதுபோல் காபியாவின் இறுதிச் சொல் ஒரே ஒழுங்கில் அமைந்திருக்கும். “நூனிலே முடிவதுமட்டுமல்ல அணியும் தவறாது. உதாரணமாக வசனு என்ற சொல்லுக்குப் பின் சகனு என்று வருமே தவிர சக்னு என்றோ சகினு என்றோ சகானு என்றோ வராது.
கவிஞரின் கவிதைகள் அனைத்தும் இந்த அறுள், காபியா என்ற அமைப்பை முழுமையாகப் பின்பற்றியே அமைந்துள்ளன. அறபுமொழியில் அகர வரிசைப்படி காபியா அமைப்பில் முதலில் ஹம்ஸ்", பாஉ, தாஉ, ஜீம் என்ற ஒழுங்கில் கவிதைத்தொகுப்பு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
சுமார் 600 பக்கங்கள் கொண்ட கவிஞர் பாறுதியின் கவிதைத் தொகுப்பில் சுமார் 400 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சுமார் 25 கவிதைகளில் “சறந்தீப் எனும் பெயர் வருகிறது. அக்கவிதைகளுடன் மேலும் சிறிய கவிதைகளை மொழி பெயர்த்து இந்நூல் வெளிவருகிறது.
இந்நூலுக்கு ஒரு வாழ்த்துரை தருமாறு எகிப்திய தூதுவர் திருமதி.
ஜெஹான் அலி அவர்களைச் சந்தித்து நான் வேண்டியபோது கவிதைப் பிரதிகளைப் பார்த்துப் பிரமித்துப்போன அவர் ஆச்சரியமேலிட்டினால் இவற்றை எல்லாம் எங்கிருந்து, எப்படிப் பெற்றிர் என வியந்தார். அறபுக்
IX

Page 7
எஸ்.எச். ஆதம்பாவா
கவிதைகளின் பிரதிகளைத் தந்துதவுமாறும் வேண்டினார். அவரின் வாழ்த்துரைக்காக எனது நன்றிகள்.
தமிழ் கூறும் நல்லுலகம் இக்கவிஞர் பற்றி அறிய வேண்டுமென்பதற்காக இதனை நூலாக வெளியிட வேண்டுமென பல நண்பர்கள், அறிஞர்கள் என்னை வேண்டினர். குறிப்பாக பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் கலாநிதி எம். ஏ. நுஃமான் அவர்கள் அதில் முக்கியமானவர். அன்னாரது அணிந்துரையுடன் இந்நூல் வெளிவருவது மற்றுமொரு சிறப்பாகும்.
பாறுதியின் கவிதைகளை மொழிபெயர்க்கும்போது எனக்குதவிய கல்முனை அல்-ஹாமியா அறபுக் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமை புரியும் எகிப்தைச் சேர்ந்த அஷ்ஷெய்க் அல்-ஹாபில் அப்துல் முன்இம் (அல்அஸ்ஹரி) அவர்களுக்கும் இந்நூலை அச்சிட்டுத் தந்த சாய்ந்தமருது ஸ்டார் ஒப்செற் அச்சகத்தாருக்கும் இந்நூலுக்கு உதவி செய்யும் ஒவ்வொரு இதயத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட ஆறு நூல்களுக்கும் வாசகர்கள் தந்த ஒத்துழைப்பினைப்போல் இந்நூலுக்கும் வழங்குவார்கள் என்று நம்புகின்றேன். வாய்ப்புத் தந்த வல்ல இறைவனைப் புகழுகின்றேன். அல்-ஹம்துலில்லாஹற்.
இஃது மெளலவி எஸ்.எச். ஆதம்மாவா 72, அல்-ஹிலால் வீதி, சாய்ந்தமருது - 11.
067 222 1965

சறந்தீபில் பாறுதி Ο1
A A ATAAAA a A a A a A at
கவிஞர் பாறுதி
A A. At A TA A at at A. A. At A at A
A
தோற்றமும் வளர்ச்சியும்
எகிப்தின் பிரபல குடும்பமொன்றில் 06-10-1839 ஞாயிற்றுக்கிழமை கெய்ரோவுக்கு அண்மையிலுள்ள 'சறாய் அல் பாறுத் என்ற கிராமத்தில் ஹஸன் ஹ"ஸ்னி அல்-பாறுதி தம்பதியினரின் செல்வக் குழந்தையாகப் பிறந்த மஹற்மூத் அவர்கள் தமது சொந்தக் கிராமத்துடன் இணைக்கப்பட்டு தமது குடும்பத்தினர் அழைக்கப்பட்டதுபோல் - மஹற்மூத் சாமி அல்-பாறுதி என அழைக்கப்பட்டார்.
எகிப்தை ஆண்ட மம்லூக்கிய அரச பரம்பரையில் ஜர்கஸ்லிய குடும்பத்தைச் சேர்ந்த கவிஞர் தனது பரம்பரைபற்றி ஒரு கவிதையில்
சிறப்பையும் நல்வாழ்வையும் உலகிற்கு வழங்கிய கண்ணியமிகு குடும்பத்தைச் சேர்ந்தவன் நான் அவர்கள் இப்பூமியை ஆண்டனர்; பரிபாலித்தனர்; பின்னர் காலம் கழிவதுபோல் அவர்களும் அழிந்து கழிந்து விட்டனர்.
என்று தனது மூதாதையர் ஒரு காலத்தில் எகிப்தை ஆண்ட வரலாற்றைக் கூறுகிறார்.
கவிஞரின் தந்தை பெயர் ஹஸன் ஹ"ஸ்னி அல்-பாறுதி என்பதாகும். இராணுவத் தளபதியாகப் பணியாற்றிய இவர் பின்னர் மாவட்ட அரசாங்க அதிபராகவும் கடமை புரிந்தார்.

Page 8
O2 எஸ்.எச். ஆதம்பாவா
தனது தந்தையை ஏழுவயதில் இழந்த கவிஞர் தாயின் அரவணைப்பில் வாழ்ந்தார். தான் தனது தந்தையை ஏழு வயதில் இழந்த சோகத்தை கவிஞர் இவ்வாறு விபரிக்கிறார்.
ஏழு வயதில் எனைவிட்டு அவர் சென்றுவிட்டார் என்னை எந்த எதிரியும் பயப்படமாட்டான் என்னை அரவணைக்கவோ பாதுகாக்கவோ எங்கு திரும்பினும் உறுதியான ஒரு சகோதரனை பெற முடியவில்லை
கண்கள் கண்ணிரை வடித்தாலும் உள்ளம் துக்கத்தினால் சோர்ந்தாலும் எவ்வித பயனையும் அவை நல்கவில்லை எனக் கூறுகின்றார்
ஆரம்பக் கல்வியை முடித்தபின் பன்னிரெண்டாவது வயதில், தமது குடும்பத்தினர் அரச பரம்பரையினர் பயின்றதுபோல் இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் சேர்ந்து பயின்றார். பின்னர் 1854இல் தனது 16வது வயதில் இராணுவப் பயிற்சிக் கல்லூரியிலிருந்து வெளியேறினார். இராணுவப் பயிற்சி பெற்று வெளியேறிய போதும் உடனடியாக தொழில் வாய்ப்புக் கிடைக்காததால் அக்காலத்தை இலக்கியத்திற்காக அர்ப்பணித்தார்.
பின்னர் இராணுவத்தில் சேர்ந்து பல்வேறு பதவிகளை வகித்த அவர் யுத்தங்கள் பலவற்றிலும் 1. கலந்துகொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தினார். 'போல்கான் சண்டைகள், கிறிட் தீவில் நடந்த யுத்தம் என்பவற்றிலும் அதிகாரி மட்டத்தில் கலந்துகொண்டார். 1878இல் ரஷ்யா, துருக்கிமீது படையெடுத்தபோது ரஷ்யாவுக்கெதிரான அப்போரில் இவர் காட்டிய திறமைக்காக "ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

சறந்தியில் பாறுதி O3
பின்னர் தமது 40வது வயதில் மாவட்ட அரச அதிபராகவும் அதன்பின் தலை நகரிலே அரசாங்க அதிபதியாகவும் கடமை புரிந்தார். இவ்வேளை ஆட்சியில் இருந்த கத்யவீ தெளபீக் உடன் இருந்த நெருங்கிய தொடர்பு காரணமாக இவர் வக்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் அப்பதவியுடன் யுத்த மந்திரியாகவும் பதவி வகித்தார்.
இவ்வேளை இவருக்கும் அரசர் தெளபீக்குக்குமிடையில் ஏற்பட்ட மனமுறிவு காரணமாக பதவி நீக்கப்பட்டார். பின்னர் சிலகாலம் பதவியின்றி இருந்த இவர் பிரதம மந்திரியாக இருந்த ஷரீப் என்பவரின் இராஜினாமாவைத் தொடர்ந்து கி. பி. 04-02-1882ல் பிரதம மந்திரியாகப் பதவி ஏற்றார். அவ்வேளை யுத்த மந்திரியாக ஒறாபிபாஷா நியமனம் பெற்றார். பாறுதியின் பதவியேற்பு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிரதமரான பாறுாதி இராணுவத்திற்கும் கத்யவி தெளபீக்குக்கு மிடையே இணக்கத்தை ஏற்படுத்த முயன்றார். எனினும் இராணுவத்தினரின் தீவிர போக்கினால் கத்யவீ பதவி நீக்கப்பட்டதும் நிலைமை மோசமானது. இங்கிலாந்தும் பிரான்ஸ"ம் தலையிட்டது. தமது நண்பர்கட்கு இதன் ஆபத்தை அவர் விளக்கியபோதும் அவர்கள் விட்டுக்கொடுக்க உடன்படவில்லை.
இதுபற்றி அவர் ஒரு கவிதையில் விளக்குகிறார். இறுதியில் நடந்த சண்டையில் நாடு ஆங்கிலேயர் பிடியில் வந்தது. முக்கிய பதவிகளை வகித்த தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். பிரதம மந்திரி பாறுாதி, யுத்த மந்திரி ஒறாபிபாஷா மேலும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து ஆங்கிலேயரின் மற்றொரு காலனித்துவ நாடான இலங்கைக்கு இவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

Page 9
O4 எஸ்.எச். ஆதம்பாவா
இலங்கையில் வரவேற்பு
பாறுாதி, ஒராபிபாஷா, அலிபஹற்மி, அப்துல் ஆல்ஹில்மி, மஹற்மூத் பஹற்மி, யாகூப் சாமி, துல்பா இஸ்மத்பாஷா ஆகியவர்களும் அவர்களது குடும்பத்தினருமாக கொழும்புத் துறைமுகத்தை 1883 ஜனவரி 10ஆம் திகதி வந்தடைந்தபோது இலங்கை முஸ்லிம்கள் துறைமுகத்திலும் கொழும்பிலும் அவர்கட்கு உற்சாக வரவேற்பளித்தனர். எகிப்தின் தேசிய வீரர்கள் எனப் புகழ்ந்தனர்.
இலங்கை வந்த கவிஞர் பாறுதி, கி. பி. 1883 முதல் 1900 வரை ஏழு வருடங்கள் கொழும்பிலும் பின்னர் பத்து வருடங்கள் கண்டியிலும் வாழ்ந்தார். இலங்கைக்கு வந்ததும் அவர் ஆங்கில மொழியைக் கற்பதில் ஆர்வம் செலுத்தினார். தனது பிள்ளைகளையும் ஆங்கிலப் பாடசாலைகளில் சேர்த்தார். பாறுதி அரச பதவி வகித்தபோது துருக்கியில் வாழ்ந்த காலங்களில் துருக்கி, பாரசீக மொழிகளைப் பயின்று அதில் பாண்டித்தியம் பெற்றதுபோல் இங்கு வந்து ஆங்கில மொழியினைக் கற்று அதில் தேர்ச்சியடைந்தார்.
சுமார் 17 வருடங்கள் தன் தாய்நாட்டைப் பிரிந்து வாழ்ந்த கவிஞருக்கு புகுந்த நாட்டில் கவிதை பாடுவதே துணையாக அமைந்தது. கவிதை மூலம் தனது பிரிவுத் துயரை வெளிப்படுத்தினார். தனது இன்னல்களை முறையிட்டார். சறந்தீயிலே தனது தனிமையை எண்ணிக் கவலைப்பட்டார். தாய் நாட்டில் மரணிப்பவர்களுக்காக இரங்கற்பா பாடினார்.
மிக நீண்ட காலம் தாய் நாட்டைப் பிரிந்து வாழ்ந்தமை இவரது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியதுபோல் உடலிலும் தளர்வை ஏற்படுத்தியது. கண் பார்வையை இழந்தார். காது கேட்பதும் குறைந்தது. உடல் பலவீனமானது.

சறந்தியில் பாறுதி 05
எகிப்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து 1900ஆம் ஆண்டு இவரும் நண்பர்களும் மன்னிப்பளிக்கப்பட்டு நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். இலங்கையில் இருந்து திரும்பும்போது இலங்கையில் தான் யாத்த கவிதைகளையும் தன்னுடன் கொண்டு சென்றார்.
மேற்படி ஆண்டில் எகிப்து திரும்பிய பாறுாதிக்கு வரலாறு காணாத வரவேற்பு அங்கு அளிக்கப்பட்டது. நாடு திரும்பிய பாறுதியின் இல்லம் இலக்கியக் கழகமாக மாறியது. தமது பெரும் செல்வங்களான கவிதைகளைத் திருத்தங்கள் செய்து அதனைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்பாசிய காலத்து கவிஞர்களின் சிறந்த கவிதைகளைத் தொகுத்து அவற்றிற்கு வேண்டிய குறிப்புக்களை எழுதிப் பிரசுரித்தார். நான்கு வருடங்கள் வாழ்ந்த அவர் 12-12-1904இல் எகிப்தில் காலமானார். இவரின் ஜனாஸாவிற்கு எகிப்து மக்கள் வெள்ளமெனத் திரண்டனர். அக்கால புகழ் பூத்த இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் முஹம்மது அப்து இவரது ஜனாஸாத் தொழுகையை நடாத்தினார். அறபுக் கவிதையின் இமயமென மதிக்கப்பட்ட பாறுதியின் ஜனாஸா எகிப்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது கவிதைகள்
பாறுதி இராணுவ வீரனாக தனது பணியை ஆரம்பித்தபோதும் இராணுவக் கல்லூரியில் பயின்றபோதும் கவிதையில் அவருக்கிருந்த ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் அத்தொழில் தடுக்கவில்லை. அத்தகைய கடினமான பணிக்கு மத்தியிலும் இலக்கியத்துக்கென நேரம் ஒதுக்கிக்கொண்டார். போர்ச் சூழல் அவரது கவிதைக்கு உரமூட்டியது. போர்க் களத்தில் தன் தாய்நாட்டின் மீதான பற்றை அதற்கான அர்ப்பணிப்பை வெளியிட்டார். போரின்போது நடந்தவற்றைக் கவிதைகளில் விபரித்தார்.

Page 10
O6 எஸ்.எச். ஆதம்பாவா
ஊற்றெடுத்து ஓடும் ஆறுபோல் அவரது கவிதைகள் அமைந்தன. வலிந்து வசனங்களை வரவழைத்துத் திண்டாடும் நிலை அவருக்கிருக்க வில்லை. அவரது கவிதைகள் ஆற்றொழுக்காக இலகுவான நடையில் எவரும் விளங்கத்தக்கதாக அமைந்தன.
அவர் தன் கவிபற்றி இவ்வாறு கூறுகின்றார்.
நான் இயற்கையாகவே கவி கூறுகிறேன்
செப்பனிடப்பட்ட இடங்களோ
கரடுமுரடான பாதைகளோ எனக்குத் தேவையில்லை
என் நாவு முத்துக்களைச் சொரிகின்றன
முத்துக்கள் கடலில் உண்டாகுவது என்பது ஆச்சரியமானதல்ல எனக் கூறுகிறார்.
அவரது கவிதையில் வரும் சொற்கள் இலகுவானவை. அதன் பொருட்கள் உயர்வானவை. பொருளுக்கேற்ற பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்தார்.
தான் ஒரு பரம்பரைக் கவிஞன் என்றும் தனது கவி ஆற்றலுக்கு தன் தாய்மாமன் இப்றாஹிம் என்ற கவிஞரே காரணமென்றும் அவர் வழியிலே தானும் கவி கூறும் திறமை பெற்றதாகவும் ஒரு கவிதையில் பாறுதி கூறுகிறார். துருக்கியிலே வெளிநாட்டமைச்சில் பணி புரிந்தபோது இவர் துருக்கி, பாரசீக மொழிகளைப் பயின்றதுமல்லாமல் அதன் இலக்கியங்களிலும் அதிக கவனம் செலுத்தினார். இவரது இம்மொழி ஆற்றல் அறபு மொழிக்கும் இவரது கவிதைத் திறனுக்கும் பெரும் பேறாக அமைந்ததாக விமர்சகர்கள் கூறுகின்றனர். பிற்காலத்தில் இலங்கையில் வைத்து இவர் ஆங்கில மொழியில் பெற்ற தேர்ச்சியும் இவரது கவிதைத் திறன் வளர்ச்சிக்குக் காரணமாக குறிப்பிடப்படுகின்றது.

சறந்தீபில் பாறுதி O7
கவிஞர் அரச பதவிகள் வகித்தபோது ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்றிருந்தார். ஐரோப்பிய நாடுகளுக்கான அவரது விஜயங்கள் அவரது கவிதையின் போக்கில் மாற்றத்திற்குக் காரணமாக அமைந்தது.
அப்பாசிய காலத்துக் கவிதைகளில் எவ்வளவு அந்நியமொழித் தாக்கம் இருந்ததோ, அதேபோல் பாறுதியின் கவிதைகளிலும் துருக்கி, பாரசீகம், ஆங்கில மொழிக் கவிதைகளின் தாக்கம் ஏற்பட்டது.
அறபு இலக்கியங்களும் கவிதைகளும் நீண்ட வரலாற்றுப் பொக்கிஷங் களை உடையன. ஜாஹிலிய்யாக் காலம் முதல் இன்று வரை அறபு உலகம் கண்ட கவிஞர்களோ ஏராளம் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல நூற்றுக்கணக்கான பெரும்கவிஞர்களை இவ்வுலகம் கண்டுள்ளது. அக்கவிஞர்களின் வழியை அடியொட்டியே இவரின் கவிதைகள் அமைந்தன.
அவர் கூறுகிறார்,
கவிதைகள் பண்புகளின் தொகுப்பு அது சிந்தனையின் வெளிப்பாடு அதனால் உயர்ந்தவர்கள் பலர் தனது பெருமையை இழந்து அழிந்தவர்களும் உளர் சுஹைர் ஹறமின் பெருமைகளை நிலை நிறுத்தினார் ஜர்வல் ஸபர்கானின் மாண்பையே தகர்த்தார் நுமைர் என்ற குடும்பத்தை ஜரீர் இழிவாக்கினார் அபு தையிப் இல்லை என்றால் காபூரின் புகழ் இத்தரையில் நிலைத்து நிற்காது
என்று ஜாஹிலிய்யா முதல் அப்பாசியக் காலம் வரை வாழ்ந்த சில கவிஞர்களை நினைவு கூருகின்றார்.

Page 11
08 எஸ்.எச். ஆதம்பாவா
வாழ்க்கைக் காலங்கள்
கவிஞரின் வாழ்க்கையை இரு காலங்களாகப் பிரிக்கலாம். ஒன்று ஒறாபிபாஷாவின் புரட்சிக்கு முந்திய காலம். இரண்டு அதற்குப் பிந்திய 85T6)b.
முதற்பகுதி கவிஞர் வாழ்க்கையில் வசந்தத்தை அனுபவித்த காலம். அதில் வாழ்வின் சிறப்புக்களையும் செல்வச் செழிப்புக்களையும் எகிப்தின் இயற்கைச் சூழலையும் அதில் வாழும் பறவைகள், மரங்கள் போன்றவற்றையெல்லாம் பாடினார். தாய் நாட்டின் சிறப்பையும் வியந்தார்.
யுத்தத்தில் கலந்துகொண்ட அவர் யுத்த நிகழ்வுகளையும் போரின் சிறப்புக்களையும் வீரத்தின் திறன்களையும் வர்ணித்தார். எகிப்தை ஆண்ட தனது மூதாதையர்களின் திறனையும் சிறப்புக்களையும் பாடினார். போரும் சமாதானமும் அவரது கவிதைகளில் ஒலித்தன. புரட்சியில் கலந்து நாடு கடத்தப்பட்டு இலங்கையில் அவர் வாழ்ந்த காலம் அவரது வாழ்வில் துன்பங்கள் நிறைந்த காலமாகும். தனது வாழ்வின் சோகங்களை, தாய் நாட்டில் தனது பசுமை நினைவுகளை, நாடு கடத்தப்பட்டு வாழும் நாட்டில் தனது பிரிவுத்துயரங்களை, குடும்பத்தில் இறந்தவர்களுக்காக இரங்கற்பாக்களைப் பாடி வருந்தினார். சிறையிலே வருந்தும் கூண்டுப் பறவைபோல் தனது துன்பங்களை வடித்தார். எமது நூலில் இவரது இக்கால கவிதைகளே அதிகம் இடம் பெற்றுள்ளன.
பாறுதியின் கவிதைகளால் கவரப்பட்ட ஒருவர்; அக்கால மொழி இலக்கியத்தில் புகழ் பெற்ற அறிஞர் அஷ்ஷேக் ஹுஸைன் அல்மர்ஸ்பி அவர்கள். கவிஞரின் கவிதை ஆற்றல்களைக் கண்டு வியந்து அவருக்கு பல்வேறு ஊக்கங்களையும் ஆலோசனைகளையும் வழங்கியவர் அவர். அவரது தொடர்பு இவர் கவிதையில் பாரிய

சறந்தியில் பாறுதி O9
மாற்றத்தை ஏற்படுத்தியது. துருக்கிய, பாரசீக மொழிகளில் பேராற்றல் பெற்றிருந்த கவிஞர் இலக்கியப் புகழ் பெற்ற அவ்விரு மொழிகளினதும் அறிவால் அறபு மொழிக்குப் பயன் சேர்த்தார்.
தனது பரம்பரையைவிட தனது பட்டம், பதவிகளைவிட தான் தன் கவிதையால் வாழ்வார் என்பதை பாறுதி தன் கவிகளில் சொல்லிச் சென்றிருக்கிறார்.
எண்ணைச் சந்திக்காதவர்கள் என் கவிதையால் எண்ணை நினைவு கூர்வர் மரணத்தின் பின் ஒரு வாலிபன் நினைவு கூரப்படுவது அதுவும் வாழ்வே!
என்றும் மேலுமோர் இடத்தில்,
எனது நினைவு காலமெலாம் நிலைத்திருக்கும் மரணத்தின் பின் வாலிபன் நினைவு கூரப்படுவது அவனை நிலைத்திருக்கச் செய்யும்
நிச்சயமாக கவிஞர் கூறியதுபோல் இன்று அவர் தன் கவிதைகளால் உலக மெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சறந்தீயிலே
"சறந்தீப் என்பது இலங்கைக்கு அறயிகள் வைத்த பெயர்களில் ஒன்று 'சைலான் என்பதும் அறபிகள் சூட்டிய மற்றொரு பெயராகும். இன்று அறபு நாட்டிலே இலங்கையின் பெயர் சிறிலங்கா என வழங்கப்பட்ட போதும் பண்டைய நூல்களில் சறந்தீப், சைலான் எனும் பெயர்களே வழங்கப்பட்டுள்ளன.

Page 12
1O எஸ்.எச். ஆதம்பாவா
கவிஞர் பாறுதியின் கவிதைத் தொகுப்பு எங்கணும் சறந்தீப் எனும் பெயர் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அறபு நாட்டுப் பாடப்புத்தகங்களில் பாறுதியை அறிமுகம் செய்யும்போது இலங்கையில் அவரது சோக வாழ்வுக் கவிதைகளே பிரசுரிக்கப்பட்டுள்ளன. அவைகளில் "சறந்தீபிலே பாறுதி' என்றே அதிகமாக தலைப்புக்கள் இடப்பட்டுள்ளன.
கவிஞரின் கவிதைத் தொகுப்புக்களிலுள்ள இலங்கை தொடர்பான கவிதைகளில் “எனக்கு இந்த சறந்தீபில் உதவி செய்வார் யாருமில்லை” என்ற வரிகளே நிறையக் காணக்கிடக்கின்றன.
எகிப்திலே செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர் பாறுாதி. அந்நாட்டில் தளபதியாக, அமைச்சராக, பிரதமராக பதவி வகித்த அவர் எவ்வளவு செல்வாக்குள்ளவராக வாழ்ந்திருப்பார்; எவ்வளவு பணியாளர்கள், பாதுகாவலர்கள் இருந்திருப்பர்; எவ்வளவு அதிகாரிகள் அவரது கட்டளைக்குக் காத்திருந்திருப்பர். அப்படியான ஒருவர் நாடு கடத்தப்பட்டு இயற்கை வனப்பு மிக்க இலங்கைத் தீவில் தனிமையில் விடப்பட்டால் அவரது உள்ளம் எவ்வளவு பாடுபடும். இதோ கவிஞர் உருகி, உருகி தன் உள்ளத்தின் வேட்கையை வெளிப்படுத்துகிறார்.
எனது உறவினர்கள், கூட்டத்தினர் சூழ்ந்திருக்க எனது ஊரில் என்னை நான் காண்பேனா? என் குதிரையில் ஏறி புற்கள் நிறைந்த செழித்த பூமியில் காட்டு மரையை விரட்டிச் சென்று அதனை வேட்டையாடுவேனா? பணியாளர்கள், நேயர்கள் குழ செல்வச் செழிப்பில் நான் வாழ்ந்த இல்லம் நான் சமிக்ஞை செய்து முடியமுன் அதனை நிறைவேற்றத் துடித்த கூட்டம் சிறப்பாகப் பேசுபவனும் என் நாவைப் பயந்தான் என் பெயர் கேட்ட படையினர் நடுங்கினர் ஆனால் இன்றோ
என் அம்பு நான் எறியுமிடம் செல்லாது எனது வாள் வெட்டி வீழ்த்தாது.

சறந்தீபில் பாறுதி
சறந்தியில் துன்ப, துயரங்களை வெளிப்படுத்தும் கவிதைகள்
11

Page 13
12
எஸ்.எச். ஆதம்பாவா
விண்மீனின் தலையை தொடுமளவு உள்ள
உயர்ந்த மலையின் உச்சியில் நான் உள்ளேன் நீட்டிய இரு கையளவே - ஒரு பாகம்தான் இரண்டுக்குமிடையே தூரமுள்ளது மேகங்கள் அதன் இரு பகுதிகளையும் பாரிய மழையால் வரவேற்கின்றன பெரும் காற்று இரு பாகங்களிலும் கடுமையாக வீசுகின்றது மலையின் உச்சி காய்ந்திருக்கின்றது கால் நடைகள் மேயும் அளவு அதன் கீழ்ப்பகுதி நனைந்திருக்கிறது மின்னல்கள் பளிச்சிடும் வேளை அதனை ஒரு விரன் தங்கத்தைக் கவசமாக அணிந்துள்ளானா 676ow if aff; /62p6w 60erui762mui7! அது சூரியனை மிக நெருக்கமாகத் தொட்டுக் கொண்டிருக்கிறது சந்திரனைச் செல்லாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது இவ்வாறான மலை உச்சியிலே
நான் பரதேசியாக
துக்கம் மேலிட்டவனாக கவலைகளால் தூங்கும் இடத்தைத் துறந்தவனாக உள்ளேன்
சறந்தியிலே துன்பம் வரும்போது நான் உதவி பெறுவதற்கு ஒரு நண்பனும் கிடையாது என்னைக் கவனிக்கவும் யாருமில்லை

சறந்தீயில் பாறுதி 13
676d6cp6oTz'r LumTifašáróløgp62mifa567ï நான் சிரித்துக்கொண்டும் மகிழ்ச்சியுடனும் துன்பமற்றும் இருப்பதாகத்தான் எண்ணிக் கொள்கிறார்கள்
ളിബങ്ങബ്, ഉബങ്ങബf
இறைவன் மிதாணை
எனது துக்கங்கள் விரைவில் அழியக் கூடியவை அல்ல எனது பொறுமையை நான் இழந்து விடுபவனுமல்ல எனினும் நான் உறுதியான நம்பிக்கையின் உரிமையாளி என் துன்பங்களை நீக்கும் இறை கட்டளையை எதிர்பார்க்கும் ஓர் அடியான் அவனைப் பயந்து ஓடிக் கொண்டிருக்கும் என் கண்ணிரை நான் தடுத்துக் கொண்டிருக்கிறேன் என் உள்ளம் உறுதியானது
───ཡས་༢༤སྤྱི>9བསམ་──

Page 14
14
எஸ்.எச். ஆதம்பாவா
کی خطافخ< SO23
ܠܔܕܕܬܼ2zgg
காதல் எனும் நோய் தீர்க்க வைத்தியர்கள் உண்டா? கண்ணிரும் கவலையுமாய் உள்ள இந்நோயாளியைக் குணப்படுத்த மந்திரிப்பவராவது உண்டா? துக்கம் என்னைப் பலவீனப்படுத்திவிட்டது என் நேசமும் என் ஈரலைப் பலவீனப்படுத்திவிட்டது துக்கம், நேசம் இவைகளால் எனக்கு ஏற்பட்ட கை சேதமே! என் உள்ளத்தை பொறுமையால் கட்டுப்படுத்துகிறேன் காதலிலே பொறுமை எக்காதலர்களுக்கும் முடியாததொன்று
சறந்தியிலே தஞ்சம் புகுந்துவிட ஒரு தோழனும் கிடையாது எனது துக்கத்தையும் மெளனத்தையும் தவிர! சேர்ந்து பழகிடவும் ஒருவரும் இல்லை ஏற முடியாத மலை உச்சியில் தடியை ஊன்றியவனாக இரவு நட்சத்திரங்களை நான் கவனித்துப் பார்க்கிறேன்
பிய்க்க முடியாத அகன்ற சரிகை நாடாவினால்
தொடுக்கப்பட்ட முத்துக்களை மாலையாய் அணிந்துள்ளன சுறையா’ என்ற நட்சத்திரக் கூட்டம் இளம் பிறையின் கீழ் பளிங்கில் இலங்கும் விளக்குப்போல் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது
நைலின் பூங்காவே!

சறந்தீபில் பாறுதி 15
உனக்கு எவ்வித ஆபத்தும் நேர்ந்துவிடக் கூடாது ஒளிரும் வர்ணம் கொண்ட பட்டுப் பிடவையைப்போன்ற இலைகள் உனை விட்டும் நீங்கக் கூடாது மணம் பரப்பும் அதன் தென்றல்கள் என்ன அழகு! கால்வாயில் வழிந்தோடும் நீர்தான் என்ன அழகு! அதிகாலையிலே கழுத்தில் ஆபரணமணிந்த மாடப்புறாக்கள் ஆண் புறாக்களை அழைக்கும் பெருமரங்களின் அழகுதான் என்ன! என் குதிரைகள் மேயுமிடம் என் அயலவர்கள் வாழுமிடம் எனது கூட்டத்தினரின் பாதுகாப்பு அரண் எனது உறவுகளும் ஒழுக்கங்களும் உண்டான இடம் தூரத்திலிருந்து அம்மண்ணுக்கு என் அன்பைச் சொரிகின்றேன் வறுமை என்ற உடையில் நான் வாழ்வது எனக்கு ஆச்சரியம் தருகிறது எனது அன்பும் கிருபையுமுள்ள என சங்கைமிகு குடும்பத்தைவிட்டு வந்த அந்த இல்லங்களை நான் எவ்வாறு மறப்பேன்? அவர்கள் பற்றிய கடந்த கால நினைவுகளை மீட்டினால் என் கண்களில் நீர் வழிந்தோடுகின்றது காலைத் தபாலே! நான் சத்தியத்தின்பால் உள்ளேன் என்று என் குடும்பத்திற்கு நீ சொல் மிக்யாஸ்' எனும் நைல் பூங்காப் பக்கம் சென்றால் எனது அன்பு சலாத்தை அதற்குச் சொல்லு
-oo-63>30eO
* நைல் என்று கவிஞர் எகிப்தை அழைக்கிறார்.

Page 15
எஸ்.எச். ஆதம்பாவா
کی تو اNWلمذ<
* یکصه تينية
744N
என் தாய் நாடே! உன் நேசத்தால் எனக்கு சோதனைகள் தேர்ந்தபோதும் எனது பாசமும் பற்றும் உன்மீதே! நீயே என் விருப்பம்! விடிந்து விட்டால் உன்னைப் பற்றியே பேச்சு! இரவு தூங்கும்போதும் உன்னைப் பற்றியே பேச்சு! நான் மறைவில் இருந்தாலும் உனை எப்படி மறப்பேன்? என் உள்ளத்தை உன்னிடமே அடகு வைத்துவிட்டேன். நீ சிறப்படைய வேண்டுமென்பதற்காக எவ்வித துன்பம் எனக்கு வந்தாலும்
கவலையில்லை
எனது நேசங்கள் - நண்பர்கள் பற்றி புறாத்தபாலே நீ அறிவித்திருக்கலாமே! அவர்கள் எண்மிது அன்பு வைத்துள்ளனரா? அல்லது கோள் முட்டுபவன் புகுந்து அவர்களை மாற்றிவிட்டானா?
அவர்கள் என்னை மறந்தாலும் நான் அவர்களை மறவேன். அர்ப்ப, இடையற்ற பொருளல் நிறுத்தாலும் கதிக்காத மனிதர்கள் மத்தியில் வாழும் உடல் அதன் வாழ்வை எவ்வாறு மறக்கும்? அவர்கள் அண்டபினால் எவ்வித இலாபமும் கிடையாது. நண்பர்களே வாழும் இல்லமோ இல்லாத ஒரு நாட்டில் எவ்வாறு நான் வாழ்வது? ஒவ்வொரு நண்பனும் மற்றவர்க்கு அடைக்கலம் ஒவ்வொரு விடும் அவ்விட்டாருக்கு அபயம்
—=se<ళ్ల ప్రాశిee—

சறந்தீபில் பாறுதி 17
کی بنیاNYخخخ۔
O43ܠܓܢܼܕܬܼܙܹzg
மிஸ்றே! உன் சிறப்பே சிறப்பு எந்தப் படைப்புக்கு தங்குமிடம் நிலைத்திருக்கும்? உண்மை, என் உள்ளம் உன்னைப் பிரியவில்லை அது பொறாமைகள் நிறைந்த காலம் என் துன்பத்தையிட்டு எதிரிகள் மகிழ்ச்சியடைய வேண்டாம் அது விரைவில் அழியும். எனது பசுமை நினைவுகள் நிலைக்கும்.
நான் தூரத்திலே இருப்பது என் புகழுக்கு இழுக்கு என நினைக்கின்றனர். இல்லை, அது சிறப்பு என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
என் குடும்பத்தை என் நாட்டை நான்
விட்டுச் சென்றாலும் மனிதர்கள் எல்லோரும் என் குடும்பத்தினர்
பூமி எல்லாம் என் தாய் நாடு.
நான் பெற்றுள்ள சிறப்புக்களை
அறிவின்மை அழித்துவிடாது.
சூரியனின் பிரகாசத்தை புகை எவ்வாறு மறைக்கும்? வறுமை இருந்தபோதும் அறிவு மனிதர்களை உயர்த்தும்
செல்வமிருந்தபோதும் அறிவின்மை மனிதர்களைத் தாழ்த்தும்.
எத்தனையோ மரணித்ததோர் அவர் சிறப்பால் உயிர் வாழ்வர் எத்தேையா உயிர் வாழ்வோர் அவர் அறிவின்மை அவரை மறைத்துவிடும். நடைபெறும் நிகழ்வுகளுக்கு யாரையும் குறை கூற முடியாது.

Page 16
எஸ்.எச். ஆதம்பாவா
நாம் எல்லோரும் விதிகளின் கைகளில் ஈடு வைக்கப்பட்டவர்கள் மனிதனே தன் நடவடிக்கைகளைத் திர்மானிப்பவனாயின் அவன் சுதந்திர பறவையாகவே வாழ்ந்து விடுவான் சோதனைக்ள் எதுவும் வந்துவிடாது.
எனினும் நான்
பண்டற்ற மனிதர்கள் மத்தியிலே வாழ்கின்றேன். அவர்கள் உடன்பட்டால் மாறு செய்வர் சேர்ந்து வாழும்போதும் மோசடி செய்வர் உள்ளத்தினுள்ளே பொறாமைகளை மறைத்து வைப்பர் நன்மைகள் முடக்கப்பட்டுள்ளன. தீமைகள் விரிக்கப்பட்டுள்ளன. மடமை பரவுகின்றது அறிவு புதைக்கப்பட்டுள்ளது உள்ளத்தில் பொறாமைகொண்ட அவர்களில் உண்மை நண்பனைக் காணமுடியாது.
ஒரு நண்பனைக் கவனிக்கவோ அவன் ரகசியங்கள் பேணவோ எந்த நண்பர்களும் இல்லை பரீட்சித்துப் பார்த்தேன். வாழ்க்கையே எனக்கு வெறுத்துவிட்டது இதனால் மனிதர்களைவிட்டும் என்னை நான் திருப்பிக்கொண்டேன். நான் சொந்தமாக்கி வைத்திருந்தவை எனை விட்டுத்தவறினாலும் அவர்களை விட்டு நான் தூர இருப்பது பெறுமானமே!
தூரம் என்ற யுத்தம் சமாதானத்தை தந்துவிட்டது எத்தனையோ பயத்தினுள்ளே பாதுகாப்பும் இருக்கிறது. நம்பிக்கை என்ற பூங்காவில் நன்மை என்ற மேகம் மழை பொழியும் மரங்களும் கிளைகளும் அதனால் வளரும் ஆரம்பமும் முடிவும் ஒவ்வொன்றுக்குமிருக்கும் காலம் எவ்வாறு நன்மை, தீமை இன்றி இருக்கும்?
一...8苓3...一

சறந்தியில் பாறுதி 19
வாளின் ஒளியா? அல்ல மின்னல் வெட்டியதா? நள்ளிரவில் மின்னும் வானத்தை ஒளியாக்கியதென்ன? அதனால் பயணிகள் பயந்து நீண்ட பெருமூச்சு!
மின்னலின் இயக்கம் காதலுக்கோர் அடையாளம் அது காதலனுக்குப் பிடித்துள்ள போதையின் ஆதாரம் பதட்டமான உள்ளங்கள் நெஞ்சுகளை துடிக்க வைக்கின்றன. காதலின் இரகசியத்தை உரியவன் அல்லாதவன் எவ்வாறு பாதுகாப்பான்? அதன் அர்த்தத்தை பிரியாதவன்தான் நன்கு அறிவான் சத்தியமாக என் தூரம் என்னைப் பலவீனப்படுத்தி கடும் கவலையால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறது. சறந்தியிலே எனது இந்த தனித்த வாழ்வு போதும் உறவு என்ற ஆடையை என்னைவிட்டும் கழற்றிவிட்டேன்.
சிறப்புக்களை அடைய விரும்புவோர் துன்பங்களை சந்திப்பதில் உறுதியாக வேண்டும்! எனது நாட்கள் என் குடிநீரை கலக்கி என் சக்தியை சோதனைகளைக் கொண்டு அழித்து விட்டபோதும் என்னை இச்சோதனைகள் நிலைகுலையச் செய்யாது. என் பாதைகளை தடம் புரளச் செய்யாது. எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வழியில் நான் உள்ளேன். இதனால் என் எதிரிகள் கோபப்படுவர் நண்பர்கள் மகிழ்ச்சியடைவர்

Page 17
எஸ்.எச். ஆதம்பாவா
உண்மையான நண்பனை விட்டும் தூரமாய் இருப்பதன் கை சேதம், விசுவாசமற்ற எதிரியை விட்டும் தூரமாய் இருப்பதன் மகிழ்ச்சி போன்றது அந்தத் துன்பம் இந்த மகிழ்ச்சி கொண்டு நீங்கும் உலகம் விவேகியின் சூழ்ச்சித் தலமாகும்.
என்னை அறிவினத்தால் இகழ்பவனே! நான் தலைமுடியின்மேல் வைக்கப்பட்டுள்ள முத்து என்பதை நீ அறியாய்! உயர்வானவர்களை இகழ்வதற்காக நீ வருந்து! அதை விட்டு நீங்கு! வீண் வார்த்தைகள் உயர்வைத் தராது நான் அநியாயத்தை ஏற்றுக்கொள்ளும் ஒருவனல்ல புத்திபேதலித்தவனே எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்பவன்! ஒரு மனிதன் தனது கீர்த்திக்காக எழுச்சி பெறவில்லை எனில் அவன் அழிந்துவிடுவான்.
நான் புரட்சி முலம் அரசுக்கு மாறு செய்ததாகச் சிலர் கூறுகின்றனர்
மாறு செய்தல் என் பழக்கமல்ல எனினும் நான் இறை திருப்தியை நாடி நீதிக்காக அழைப்பு விடுத்தேன் பொறுப்புள்ள மக்களை எழுச்சி பெறுமாறு வேண்டினேன். நன்மையை ஏவி தீமையைத் தடுத்தேன். இவை அனைத்தும் மனிதர்களின் கடமை. இது மாறு செய்தல் எனக் கூறின் இதன் முலம் இறைவனுக்கு வழிப்படுவதையே நாடினேன்.

சறந்தீபில் பாறுதி 21
சரியான பாதையைத் தேடுவோருக்கு கலந்துரையாடி முடிவுக்கு வர அழைத்தல்
என் குற்றமா? இல்லை. இது கடமை ஆளுவோரும் ஆளப்படுவோரும் முன்னுள்ள பொறுப்பு இது கெட்டவர்கள் கொண்டு வரும் சட்டங்களையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் ஒரு மனிதன் எவ்வாறு சுதந்திரமானவனாயிருப்பான்? மனிதர்கள் சமயத்திலே மோசடித்தனமாக இருந்தால் நானோ இறை புகழால் மோசடிக்காரன் அல்லன் அவர்கள் மக்களை அடக்கி வாக்குறுதிகளை மிறி ஆட்சி செய்தனர்
அட்டூழியம் எல்லை கடந்தபோது படையினரில் ஒரு கூட்டம் நிதிக்காகப் போராட முன்வந்தது மக்கள் அதற்குப் பேராதரவு தந்தனர் நாட்டின் தலைவரிடம் சென்று மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரினர் அவர் பின்வாங்கியபோது உண்மையைக் காண மக்கள் முயன்றனர் அதிலும் சிலர் நேர்வழியை விற்று வழிகேட்டின் இழிவை விலைக்கு வாங்கினர் மார்க்கத்தை சில்லறைக்கு விற்றனர் கள்ளத்தனமாக உதவ முன்வந்தனர்
இது எங்கள் மண் அதைப் பாழாக்கினர். தான் பயந்தவர்களை நாடு கடத்தினர் நைல் நதி குறையாடப்பட்டது அவர்களின் அடக்குமுறை ஆட்சி உருவாக்கப்பட்டது இதுவே உண்மை! இதுபற்றி என்னிடமே கேள் இதுபற்றி அறிந்தவன் நானே!

Page 18
எஸ்.எச். ஆதம்பாவா
மிஸ்றே! உன்னை இறைவன் செழிப்பாக்கட்டும் நைலில் இருந்து ஒலித்தோடும் நீர் உமது பூமிக்கு நீர் புகட்டட்டும் மணம் பரப்பும் காலைத் தென்றல்
சிறந்த மணத்தை பரப்பட்டும்
மிஸ்றே! நீயே எமது மக்களின் பாதுகாப்பு அரண் எனது குடும்பத்தின் ஒன்று கூடல் தலம் எனது நண்பர்கள் விளையாடுமிடம் எனது குதிரைகளின் ஓடுமிடம் அச்சரத்தைக் கழட்டி தோளிலே வாளை ஏந்திய பால்யப்பருவம் முதல் வாலிபனாய் வாழ்ந்த பூமி அதிலே என் கண்ணியம் நிறைந்த குடும்பத்தினர், அயலவர்கள் அனைவரையும் விட்டு வந்துள்ளேன்.
வாழ்வின் இன்பத்தை அவர்களின் பிரிவோடு வெறுத்துவிட்டேன் வாலிபத்தின் சிறப்பை அடைமானம் வைத்துவிட்டேன் என் காலங்கள் அவர்களைச் சந்திக்க வாய்ப்பளிக்குமோ? நேசமான உலகம் அதன் நேயனுக்கு வாய்ப்பளிக்கும் என் பிரிவும் காலமும் நீண்டுவிட்டது எனது வழிகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன காலத்தின் நிகழ்வுகள் கெட்டுவிட்டாலும் நான் இறைவன் உதவியால் உறுதியாய் உள்ளேன் கோணல் நிகழ்ந்த பின் நிலைமை சீராகும் பிரிந்தவர்கள் எல்லோரும் தாய்நாடு சென்றடைவர்.
—==se<ళ్ల9శిee=—

சறந்தியில் பாறுதி 23
சறந்தியிலே’ நான் தூக்கமற்றவானக, நோயாளியாக இரவைக் கழிக்கிறேன் தனித்த நிலையில் என் துன்பங்களுக்கு பரிகாரம் தேடுகிறேன் என் கண்களைச் சுழலச் செய்கிறேன்
ஆனால், என் சப்தத்திற்கு செவிசாய்க்கும் எவர் முகத்தையும் நான் காணவில்லை எனக்காக இரங்குவோராவது கிடையாது திக்குச்சியில் இருந்து பொறிகள் பறந்ததுபோல் நடு நிசியில் பறந்த மின்னல் என்னைக் கவலையுறச் செய்கிறது அதன் ஒளி சமபூமிக்கும் மேட்டுக்குமிடையே இருளின் திரையைக் கிழித்து விடுகின்றது அதற்காக நான் விழித்து இருந்தேன் பிரகாசமான நட்சத்திரங்கள் தடுமாறியதாக அதன் பயணத்தில் சோர்வைக் காட்டியது
சூழல் பக்கங்கள் கறுத்த ஆடையாக இருந்தன
வெள்ளைப் புள்ளி கலந்த கருநிறப் பாம்பின் விசப்பல்களிடையே
அல்லது கொடுர சிங்கத்தின் கூரிய

Page 19
24 எஸ்.எச். ஆதம்பாவா
நகங்களிடையே
நான் இரவைக் கழிக்கின்றேன் என் பார்வையைத் திருப்புகிறேன் நட்சத்திரங்களோ கவசங்களிலே இலங்கும் மாணிக்கக் கற்கள்போல் இலங்கிக்கொண்டிருக்கின்றன உறுதியான தோளிலே சுமக்கும் தொங்கவிடப்பட்டுள்ள வாள் ஒன்றைத் தவிர எனக்கு தோழன் கிடையாது.
Ο -ier8 (8.30a

சறந்தியில் பாறுதி 25
நோயாளி சொல்லும் சலாமுக்கு பதில் உண்டா?
அல்லது
காலைச் சந்திப்புக்கு
வாழ்த்துக் கூறல் உண்டா? கண்ணால் இருளைப் பார்த்தவனாக என் இரவு கழிகிறது அதன் உணவு கண்ணிரும் விழித்திருத்தலும்தான்!
என் நிலையை முறையிட்டால் இரங்கும் தோழன் எனக்கில்லை பதில் கூறவும் ஆளில்லை
உயர்ந்த மலையிடையே மேகம் என்ற மறைப்பு ஆடையாய் உள்ளது. தனித்தவனாக அதில் அழுது நான் உள்ளேன் விட்டைவிட்டு தூரமானோர் அனைவரும் தனித்தவர்களே! எனது நாட்டின் உயர்ந்த Ամ60սմարծ
அதன் மக்களையும் நான் நேசிக்கிறேன் நாளை காலை எனக்கு அந்த உயர்பூமி எங்கே கிடைக்கும்?

Page 20
எஸ்.எச். ஆதம்பாவா
லைலாவின் ஏக்கத்தால் என் உள்ளம் கரைகிறது அன்பு பலவீனமாக்கிவிட்ட என் உள்ளமே!
உனது நிலைதான் என்ன?
உள்ளம் இல்லாமல் 676ióItal
என் மாலை நேரம் அமையும்
என் கண்ணின் பிரகாசமே!
எவ்வாறு என் காலைப் பொழுது அமையும்?
எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு.
ஆனால், துன்பத்தின் தொடருக்குத்தான் எல்லை கிடையாது துன்பத்துக்கு முன்னால் முன்பு இல்லை அதற்குப் பின்னால் பின்பு இல்லை என் இறைவன் என் விலங்கை உடைப்பான்
அவன் விரும்பியதை செய்யக்கூடியவன்
--ee-CD3oor

சறந்தியில் பாறுதி 27
கண்களிலிருந்து வடியும் கண்ணிர் ஒவ்வொன்றுக்கும் ஏதோ காரணம் இருக்கும் கவலைகொண்ட ஒருவன் கண்ணிருக்கு எவ்வாறு உரிமை கொண்டாடுவான்? பற்று பாசத்தினால் வருத்தமடைவதில்லை என்றால் கண்கள் நீரை வடிக்காது
உள்ளம் பேதலிக்காது.
சோதரா! என்னை இகழ்வதற்கு நீ அவசரப்படாதே! என் நேசம் எரியும் நெருப்பை அணைத்த நிலையில் ஆக்கியுள்ளது இதனால் என் உயிரை இழந்துவிடும் நிலையுமுள்ளது நான் முச்செடுத்தால், திப்பொறியின் பின் தீச்சுவாலை ஒளி பரப்புவதுபோல் எனது மூச்சு நெருப்பைக் கக்குகிறது.
நான் பரதேசியாக வாழ்கின்றேன் அதை என் உள்ளம் ஏற்றுக்கொள்வதாயில்லை எனது உதவியாளர்கள் எவரும் என்னைச் சந்திப்பதுமில்லை உள்ளத்தை மகிழச்செய்யும் ஒரு நண்பனும் இல்லை என் கஷ்டத்தைக் கண்டுதவும் தோழனுமில்லை என் வாழ்வில் நான் சந்தித்தவை ஆச்சரியமானவை எனக்கேற்பட்ட துன்பம் ஆச்சரியமானதே!

Page 21
எஸ்.எச். ஆதம்பாவா
எனக்கு இன்று ஏற்பட்டிருக்கும் நிலைக்கு நான் எவ்வித தவறும் செய்தவனல்ல! என் மார்க்கத்திற்காய் என் தாய் நாட்டுக்காய் தற்காப்பு யுத்தம் புரிவது ஒரு பாவமா? நாடு கடத்தப்படுமளவுக்கு அது ஒரு குற்றமா?
பொறாமைக்காரர்கள் நான் கவலைப்படுவதாக நினைக்க வேண்டாம் நான் பொறுமையுள்ளவனாக இறை கூலியை எதிர்பார்த்துள்ளேன். நான் சிறப்புக்களை சொத்தாகக் கொண்டவன் என் கைகள் பரிசுத்தமானவை உயர்வான உள்ளத்தை தேவைகள் தாழ்த்திவிடமாட்டாது தாழ்ந்த ஒருவனை அவனது சொத்துக்கள் உயர்த்திவிட மாட்டாது
பயம் கோபத்தைத் தடுக்காத மனிதன் நான் என் கோபம் என் பண்புகளை பறித்தது கிடையாது நான் பொறுமையின் சொந்தக்காரன் இழிவை என் நாவு உரைக்காது என் மானத்தை, சிறப்பை நான் பாதுகாத்துள்ளேன் சந்தேகம் என்னோடு ஒட்டி இருக்காது.
நான் எதையும் பொருட்படுத்துபவனல்ல! எவர் எதைக் கூறியபோதிலும் நான் எத்தவறும் செய்தவனுமல்ல இன்று என் காலம் கெட்டு என்னை பரதேசியாக ஆக்கிவிட்டிருப்பினும்
இரக்கமான நண்பன் இல்லாவிடினும் எனது இரவுகள் கலக்கத்தின் பின் தெளிவுபெறும் ஒவ்வொரு கட்டமும் மாற்றமடையக் கூடியதே!
-oo-CeBoo

சறந்தியில் பாறுதி 29
கடும் தாகம்கொண்ட ஒட்டகங்கள் நீருற்றைத் தேடி எப்போது வரும் தாகித்த தமது ஈரலை நணைப்பதற்காக! எப்புறம் திரும்பினாலும் மழை பூமியை நனைத்துள்ளதைக் காண்கிறேன் ஆனால் என் விட்டை மாத்திரம் சொட்டு நீரும் தொட்டுப் பார்க்கவில்லை
நைலின் ஒடையிலிருந்து வந்த Cypø56ó GypLlif sífiløTIT6Ivoir முச்சுவிடுகின்ற தாகித்த ஈரல் தாகம் தணிக்கின்றது? மஞ்சனித்த பூண்டுகளை மெத்தையாகக்கொண்டு இலந்த மரக்கிளைகளின் கீழ் பகல் தூக்கம் தூங்கும் இடம் உண்டா? பசுமை நிறைந்த கிளைகளைக் கொண்ட பெருமரங்கள் அழகு நிறைந்த வர்ணப்பட்டாடைபோல் இளம் தென்றல் வரும்போது விதம் விதமான பூக்கள்
பறப்பதுபோல் நீர் காண்பீர்
அப்பூக்களோ
வசந்த காலத்தில் ஈசல்கள் கிளம்பி வருவதுபோல் இருக்கும் மனிதன் இன்பமாக வாழும் இல்லங்கள் அது இறைவனின் சிறப்பான பூமி இறைவா! அவ்வாறான சிறப்பான வாழ்வுக்கு எனக்கு உதவு!
—=9999–

Page 22
எஸ்.எச். ஆதம்பாவா
1O 予。ミ
இருளின் இரவு நீண்டு விட்டதா?
அல்லது நட்சத்திரங்கள் விடியாமல் அதனைப் பிடித்துக் கொண்டதா? அல்லது நாளை (விடிவு) அதன் வழியைத் தவறவிட்டுவிட்டதா? சறந்தியிலே
இரவு முழுவதும் தூக்கமின்றி துக்கத்தால் உழல்கின்றேன் பெற்றுக்கொள்ள முடியாத ஒன்றுக்காக நான் முயற்சிக்கின்றேன்
இவ்வாறுதான் கை சொந்தமாக்க முடியாததை உள்ளம் ஆசை வைக்கும் ஹுல்வான்' பக்கமிருந்து ஒரு காற்று என்னைத் தொட்டால் என் உள்ளமோ கொழுந்து விட்டெரியும் தீச்சுவாலையாய் ஆகிவிடுகின்றது
வாலிபத்தின் பின்னால் சிறந்தகாலம் இல்லாமல் போய்விட்டது மிக்யாஸ்' தீவின் பின்னால் இல்லமும் இல்லாமல் ஆகிவிட்டது வாலிபமும் நண்பர்களும் அவர்களின் அன்பை இழந்துவிட்டேன் மனிதன் எவனோ அவனுக்கு பொன்னான காலமும் பொல்லாத காலமும் வரும் தனிமையாக - பரதேசியாக வாழ நான் பயந்தவனல்ல கறுத்த சிறு பணியாளன் இங்கே உதவியாய் உணவு பரிமாறுபவனாய் உள்ளான்
一...8苓>3。
O
(ஹல்வான் எகிப்தின் நகரங்களிலொன்று)

சறந்தியில் பாறுதி 31
کے فاWvخ< S113. 24y
மணம் கமகமக்க இளந்தென்றல் சென்றதா?
96й62 இந்தியாவின் காணிக்கையை தூதுவர் கொண்டு வந்தாரா? பிறண்டி முடர் ஒன்றினால் மயங்கியவன்போல் மணத்தின் வாசம் எண்னை மகிழ வைக்கிறது அன்பின் சோதரன் எப்போதும் களிப்புடனே இருப்பான் மேடுகளுக்கும் மலைகளுக்குமிடையே அவன் அன்பைத் தொடர்வான் எனது அன்போ எனது விடு நோக்கியே நீர்ேகின்றது எனினும் கண்டியிலே வாழ்பவனுக்கு எகிப்து எங்கே?
நைலின் அழகே அழகு! அது ஒடும்போது வாளின் அழகை அதன் கைப்பிடியும் சித்திரங்களும் குலுங்குவதுபோல் வெளியாக்கி நிற்கிறது நிறப்புடைவைகளை கன்னியர்கள் இழந்து நிற்பதுபோல் கிளைகள்அதன் இரு மருங்கிலும் காட்சி தருகின்றன.
மேகம் என்ற கை அதற்கு மாலை அணிவித்தது அந்த மாலையின் அழகே அழகு! அந்த நைலின் மரங்களிலே கரும்புப் பாணியால் போதையூட்டப்பட்ட புறா எவ்வாறு கானம் இசைக்காமலிருக்கும்? அது என் அம்பின் எறியுமிடம் என் குதிரையின் விளையாட்டு மைதானம் என் குடும்பத்தின் வேலி
என் கொடி ஏற்றுமிடம்

Page 23
எஸ்.எச். ஆதம்பாவா
இவைகளை என் உள்ளம் என் கண் முன்னே காட்சிப்படுத்தும்போது என் நேயம் உள்ளத்திலே திக்குச்சிகொண்டு எரிய வைக்கின்றது எனக்கு அந்த மண்ணிலே என்னை நேசிக்கும் ஒரு நண்பர்* அதுபோல் அவர்மீதும் எனக்கும் பேரன்பு
என் உள்ளமோ படைகள் புடைசூழ தூரம் என்ற கயிறால் கட்டப்பட்டுள்ள போதும் என் தாய் நாட்டை நான் ஆதரவு வைக்கிறேன் எனது உண்மையான காணிக்கையை அதற்குச் செலுத்துங்கள் என் தலைவரே! என் நிலையையிட்டு இரங்கங் காட்டுங்கள் இந்தியாவையும் சிந்துவையும் அறிந்தவன் என்ற வகையில் என் தாய் நாட்டின் மிது அளவு கடந்த ஆசை எனக்குண்டு என் ஆசை போட்டி வைத்தாலும் விரைந்து வெல்லக்கூடியது அதற்கு பக்கமாய் வாழும் பாக்கியத்தை காலத்திடம் நான் கேட்கின்றேன் காலம் அல்லாத எவரும் எனக்கு அநியாயத்தை நாடியிருந்தால் குதிரைமேல் ஏறி வாளேந்தி பாலைவனத்திலே அவரை எதிர்கொண்டு வென்றிருப்பேன் என் எதிரியை என் மணிக்கட்டால் வீழ்த்தும் பலம் என்னிடமிருப்பினும் காலத்தை வெல்லும் சக்தி எனக்கில்லை.
—==కళ్లప్రాశిee=—
(இங்கு நண்பரெனக் குறிப்பிப்படுபவர் சேக் முஹம்மது அப்துஹற். எகிப்தின் 6 fiu Losfašaj 5606v62si)

குறத்திவில் பாறுதி 33
يحة الشفح E123ܓܔܕܙ27gg
இழந்துபோன என் இளமையை மீட்டுத்தாருங்கள் சென்றுவிட்ட என் தலை முடியின் கறுப்பு மீண்டு வருமா? கழிந்துவிட்ட காலங்கள், சிந்தனை என்ற பக்கத்தின் பசுமையான நினைவுகள் என் துன்பத்தை அதிகரித்துவிட்டன. உள்ளங்கள் மறந்து சோகத்தின் பின்னால் விரிப்பிலே போட்டு விடுகின்றன. ஆனால் எனது உள்ளமோ மறந்து விடாது. இன்பத்தில் மகிழ்ந்துவாழ்ந்தவன் அதனை அறியமாட்டான் நான் துக்கம் என்ற நெருப்பை அரவணைத்துக்கொண்டவன்.
என் உள்ளம் பரிசுத்தமானது, என் ஆத்மா சுதந்திரமானது என் கரங்கள் நம்பிக்கையானவை என் நாவு மோசடி செய்யாது எனினும் நான் இன்று பரதேசியாக வாழ்கின்றேன் ஏனெனில் என் போன்ற உறுதியுடையோர் இன்று குறைந்து விட்டனர் கடந்து சென்ற இரவுகளையும் இனி வரும் இரவுகளையும் புகழும் நிலையில் எனது காலம் இல்லை. அது சோகம் இலகு - கஷ்டம் என்ற இரு பகுதிகளையும்
69լքիմլյ - வறுமை என்ற இரு சுவைகளையும் நான் அனுபவித்துவிடடேன்.

Page 24
எஸ்.எச். ஆதம்பாவா
இயலுமையின் பின்னால் இயலாமை பற்றி நான் கவலைப்படுபவனல்ல வறுமைக்குப் பின்னால் செல்வம் பற்றி நான் மகிழ்பவனும் அல்ல தூய்மை ஒன்றே என் ஆத்மாவைச் சாந்திப்படுத்துகின்றது இகழ்தல் என்ற புழுதி என் வால்களில் இணைந்து கொள்ளது இன்று என் முக்கணாங் கயிறு தலைமையை வழிப்படுவதல்ல என் உள்ளம் உலக ஆசையின் பால் சாய்ந்து விடுவதுமல்ல! ஆனால் உண்மை விசுவாசம் நிறைந்த தோழமையைத் தேடுவது என் விருப்பமாய் உள்ளது. என் தேவையை நான் எவ்வாறு பெற்றுக் கொள்வேன்? ஏனெனில் காலத்தின் உண்மையை எங்கும் காண முடியாதுள்ளது சறந்தியிலே அன்பு பாராட்டவோ பேசிக் கொண்டிருக்கவோ என்னை கவனித்துக் கொள்ளவோ எவருமே இல்லை மிக உயர்ந்த பரனுக்கு மேலே உள்ள பருந்து போல் உயர்ந்த மலையிலே தனித்து நான் உள்ளேன் நான் திரும்பிப் பார்க்கும் வேளை என் எண்ணங்கள்வரையும் சித்திரங்கள் தவிர எந்தக் காட்சிகளும் காணமுடியாதுள்ளது. குளிர் காற்று என்னை நடுங்கச் செய்கிறது இத்துப்போன போர்வையால் பனியின் குளிர் என்னைப் போர்த்துகின்றது.
வானத்திலே முகடு போன்ற மேகக் கூட்டங்கள் முற்ற வெளியிலே மலையிலிருந்து அருவியாய் ஒடும் வெள்ளங்கள் வழிந்தோடும் வெள்ள நிருக்கு மேல் போடப்பட்டுள்ள பாலம் போல் வானவில் உள்ளது பல்வேறு தோற்றங்களையும் நிறங்களையும் கொண்ட ஒளிச் சுடர்கள் அதன் பின்னால் பரந்து கொண்டிருக்கின்றன.

சறந்தியில் பாறுதி 35
என்னையும் எனது நனைந்த மழைப் போர்வையையும் நீ பார்த்தால் அடர்ந்த மரங்களுந்கிடையே பறவைக் குஞ்சு என என்னை நீ எண்ணுவாய்
இப் பரந்த பூமியிலே என்னைக் கவனிக்கவோ நிருவகிக்கவோ எவருமில்லை கண்ணுக்குப் புலப்படாத எவரும் ஏறெடுத்து பார்க்காத சிறு முடி போல் நானுள்ளேன் கடும் உஷ்ணத்தில் கடும் தாகத்தால் மாலை வேளைக்கும் அதிகாலைக்குமிடையே நீரை எதிர்பார்ப்பவனாக நானுள்ளேன் மிருதுவான மண்ணின் மேல் தூங்கும் என் கூட்டினை பருந்துகளின் சத்தம் திடுக்கிட வைக்கிறது அசைய முடியாமல் மருந்தைக் காலில் கட்டிப்போட்டது போல் அப்பருந்துகள் அப்பருந்துகள் போன்றே என் நிலையும் ஆனால் அவைகளுக்கு அசையவும் அழவும் முடிகின்றது. இரும்புக்கவசத்தை அணிந்தவன் போல் என் ஆடைகளை இழுத்துப் போடவும் முடியாத நிலையில் நானுள்ளேன்.
நான் நினைத்தவற்றை எழுத என் கரங்கள் என் பேனாவின் கூரை தொட முடியாதுள்ளது. செழிப்பான என் உடம்பு இன்று காய்ந்துவிட்ட போதும் காலம் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தவல்லது கடந்த காலங்கள் என் வாய்மையை வெளிப்படுத்தும் நிலையில் நான் எதற்காக கவலைப்பட வேண்டும்? என் வாழ்க்கை ஒரு நூலின் உள்ளடக்கம் போன்றது.

Page 25
எஸ்.எச். ஆதம்பாவா
உள்ளடக்கத்தைப் பார்த்தால் நூலில் உள்ள விடயம் எதுவென அறிய முடியும் தத்துவங்களும் உதாரணங்களும் கொண்ட என் வாழ்வின் சிறப்புக்களை என் மக்கள் எவ்வாறு புறக்கணிப்பர்? நான் பேசினால் பேச்சே தான் அது கவிதை, இலக்கியம் அதற்காகப் பெருமைப்படும் தகுதி எனக்குண்டு என் கவிதைகள் தெளிவான அத்தாட்சிகள் அவை காலத்தின் கன்னங்களில் ஜொலிக்கும் அதனைப் படிப்பவன் தன் துன்பங்களை இழப்பான் அதன் ஒளியால் நேர் வழி பெறுவான் என் கவிதை - என் வாழ்வின் இரு பக்கங்கள் அவை என்னை பிரதிமைப்படுத்தும் ஓவியம் மனிதன் பல்வேறு தோற்றம் கொண்ட மரத்தைப் போன்றவன் அவனைப் பார்த்து நீ ஏமாந்து விடாதே மனிதன் - அவனுக்குப் புத்தி என்ற சிறப்பு இல்லை எனில் முட்டுக்களைக்கொண்ட எலும்பினால் இணைக்கப்பட்ட ஓர் உருவமே அவன்
----هه8<*>8• •-------

சறந்தியில் பாறுதி
37

Page 26
38 எஸ்.எச். ஆதம்பாவா
کیخان ۹۹۷۶۶
SO13
༣744ད་དང་ང་རོ་
பேராதனைப் பூங்கா
கண்ணுக்கழகு தரும் ஓர் அரங்கம் எண்ண உலகில் அதற்கு ஈடிணை கிடையாது அதிகாலை வேளையில் அங்கு நான் விரைந்தேன் சூரியன் மறைவில் தூங்கிக் கொண்டிருந்தது காட்டுப் புறாக்கள் விழிப்பாய் இருந்தன மேகங்கள் அடிவானத்திடையே மெல்ல,மெல்ல விலகிக்கொண்டிருந்தன இளந்தென்றல் பூங்காவில் இதமாய் வீசின. புழுதி கலந்த புடவைபோல் வானம் இருந்தது ஒளி குவிகின்றது, நிழல் விரிகின்றது பறவைகள் மகிழ்ச்சியால் ஆரவரிக்கின்றன வானம் பேதலிக்கின்றது கண்கொள்ளாக் காட்சிகள்
* பஹற்சாத் இதனைக் கண்ணுற்றால் புத்தி பேதலித்தவன் தடுமாறுவதுபோல் திணறுவார் கோட்டைகள் போன்ற பெருமரங்கள் அதில் செல்வச் செழிப்புடன் வாழும் மகளிர் போன்று பெண் புறாக்கள் இனிய ஓசையுடன் வரவேற்கின்றன சில வேளைகளில் இசை எழுப்புகின்றன சில வேளைகளில் சோகம் நிறைந்த கூவுதல்கள் அதன் இசைகள், கூவல்கள், சோகங்கள் எல்லாம் எவ்வளவு அழகு!

39
s臀 盟、
சாம்பல் நிறப்புறாக்களின் இனிய ஓசைகள் அவைகளின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன.
அந்த வளாகத்தை நான் நெருங்கினேன் அங்கே உண்மை அன்பை வெளிப்படுத்தும் இளைஞர்கள் எவ்வித வேறுபாடுகளை, பிணக்குகளை அவர்களிடம் காணமுடியவில்லை கண்ணியம் மிகுந்தவர்கள், பண்பாளர்கள் நற்பண்புகளில் எவ்வித களங்கமும் கிடையாது நேரான வாளைப்போல் நேர்மையானவர்கள் அதனைப்போல் பிரகாசிப்பவர்கள்
அவர்கள் பேசினால் அது இலக்கியமாகவிருக்கும் அத்தகுதி அவர்களுக்குண்டு அவர்கள் வாய்பொத்தி இருந்தால் அறிவைத் தேடுவதாய் அது அமையும் நாங்கள் குடிப்பது மிகத்தெளிந்த நீர், கலப்பற்ற நீர் இம்மக்களோ மிகுந்த சிறப்புக்குரியவர்கள் பசியின்றிப் புசியாதோர். பண்புள்ள பெருமக்கள்!
--ههلانگ8ه هس
* புகழ்பெற்ற இஸ்லாமிய ஓவியர்

Page 27
40 arab.oré. Kysburou
கண்டி மாநகரம்
பசுஞ்சோலைபோன்ற அழகான ஓர் இடம் வாலிபப் பருவம் என்றோ சென்றுவிட்டாலும் அப்பருவ பொழுதுபோக்கிற்காக என்னை அழைத்தது
கண் செல்லுமளவு அதன் விசாலம்
அதன் குளம் நீரால் நிரம்பியுள்ளது
அதன் மரங்களே நீண்டு அழகாய் உள்ளன அதிக கிளைகள் நிறைந்த இலைகளைக்கொண்ட
2-uniյ5:25, அடர்ந்த மரங்களின் நிழல்' எனும்
ஆடையை பூமி அணிந்துள்ளது.
நட்சத்திரம் ஒன்றுடன் காதலோ எனக்கருதுமளவு மரத்தின் கிளைகள் அதன் அண்டை சென்றுள்ளன சூரியக் கதிர்கள் பிரகாசிக்கும் ஒளிச்சங்கிலியாக அதன் அறைகளில் ஜொலிக்கின்றன
காதல் மயக்கத்தால் அல்லது மதுவின் போதையால் Lou Jialug/6 II6.3
மாடப்புறாக்கள் கானம் இசைக்கின்றன
”தகளை இணைத்து விரைந்து செல்லும்

சறந்தீயில் பாறுதி 41
பிரயாணிகள்போல நீர்ப்பறவைகள் கூட்டம், கூட்டமாகச் செல்கின்றன தெளிந்த நீரை அது காணும்போது சிறகை விரித்துப் பறக்கின்றன மேலே வட்டமிடுகின்றன அதனுள் மூழ்கி மகிழ்கின்றன
காலைவேளை அங்கு சென்றோம் காலை அதன் ஒளியைப் பாய்ச்சிக்கொண்டிருந்தது இருளின் பகுதிகள் விலகிக் கொண்டிருந்தன பாரிய மரங்களின் மடியில் பறவைகள் ஒலி எழுப்பி நிற்கின்றன.
அங்கே பல்வேறு இன்பங்களில் லயித்தோம் அனைத்து நாட்களும் அங்கே மகிழ்ச்சியாய் நிரம்பின இசைக்கருவிகொண்டு பாடகர்கள் கானம் எழுப்பினர் அந்த இசைவெள்ளம் எம் உள்ளத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தின அங்குள்ள வீடுகளின் அழகே அழகு! அதில் துஷ்டர்கள் எவரும் நெருங்கார்கள்
அந்நாட்கள் இளமைக்கால வரலாறு அதனை நினைக்கையில் உள்ளம் கொதிக்கிறது மகிழ்ச்சி நிறைந்த ஒரு பகலும் மதுவினால் இருண்ட ஓரிரவும் அங்கு நாம் தரித்திருந்தோம்

Page 28
எஸ்.எச். ஆதம்பாவா
அவ்விடம் விட்டுச் செல்ல நினைக்கையில் உள்ளம் கவலையால் தோய்ந்தது கண்ணிர் பெருக கவலைகள் நிறைய அவ்விடம் விட்டு வெளியேறுகையில் நண்பர்கள் கூறினர், இந்த நாளின் சிறப்பையிட்டு கவி பாடுங்கள் அதற்குப் பொருத்தமானவர் நீங்கள் சிந்தித்தேன் கஸ்தூரி மணம் பரப்பும் வார்த்தைகளால் அதனைக் கூறினேன் வாளின் கூர்போன்ற சிறப்பான நாவு அதனைக் கூறாமல் எவ்வாறு தவிர்க்கும்?
蜂 一...8苓3...一

சறந்தீபில் பாறுதி 43
کی خطNفخح
-SO33
 ̄ ܐܔܢܼܙܸܙܸzg”
மக்கள்
எழில் மிக்க சறந்திப்
எனினும் அங்கே சில அழகற்ற மக்கள் வாழ்கின்றனர். ஆற்றொழுக்கான பேச்சற்றவர்கள். வாய் பூமியில் இரத்தத்தை உமிழ்வதுபோல் அவர்கள் பேச்சு இருக்கும் அவர்கள் கடைவாய் வடிதலை பூவல் இரத்தமாக ஓடுகின்றதென நீ எண்ணுவாய் தந்தையைப்போன்று பிள்ளையில்லை பிள்ளையைப்போன்று தந்தையில்லை அவர்களின் தன்மையோ கடுமையானது அழகற்ற முகம்கொண்டவர்கள் சிறப்பு இல்லாதவன் அதனை எவ்வாறு அறிவான்? நன்மைகள் இல்லாதவன் அதனை அறியமாட்டான் அறிவு ஞானம் அவர்களிடம் இருக்காது சிறப்புகள் அவர்களிடம் ஏற்படாது அவர்களில் சிலரைப் பார்த்தால் மேதாவி போன்றிருப்பர் அவர்கள் வாய் திறந்தால் தன்மைகள் வெளிப்பட்டுவிடும் மனிதன் பேசும்வரை அவனின் குணத்தை அறிந்துகொள்ள முடியாது.
娜》 -ier8-163-300

Page 29
44 எஸ்.எச். ஆதம்பாவா
இலங்கையில் கவிஞர் இரவு நேரத்தில் அழும் பெண்ணின் சத்தத்தைக் கேட்கிறார். அவர் கூறுகிறார்,
ஒரு பெண்ணின் அழுகை என் உள்ளத்தைத் துன்பப்படுத்தியது செவிகளுக்கும் உள்ளங்களுக்கும் அது அதிர்வை ஏற்படுத்தியது அவள் ஏன் அழுகிறாள்? நான் கேட்டேன் அவள் தன் நேயனை இழந்துவிட்டாளாம் இவ்வுலகில் எவருடைய நேயன்தான் எஞ்சியிருப்பான்? நான் அவள் மொழியை விளங்காவிடினும் அவளுக்காக அழுதேன் பரதேசியும் சிலவேளை துக்கமான குரல் கேட்டு அழுவான்.
O 一...8苓3。 LJimm

சறந்தீபில் பாறுதி 45
அடுத்த வீடு
இறைவா! எனது முழு இரவையுமிட்டு உன்னிடம் முறையிடுகின்றேன் அடுத்த விட்டுக்காரி காலை வரை அவள் வீடு இரைச்சலும் அழுகையுமாய் கேட்கிறது.
அவளின் பிள்ளைகள் முன்நெற்றி ரோமம் அழகற்றவர்கள் உடனே தூங்கமாட்டார்கள் கூச்சல்கள, குழப்பங்கள் அதிகாலையில்தான் அச்சத்தங்கள் அடங்கும் எந்த நன்மையும் அற்ற வீடு அது. அவர்கள் போடும் சப்தம் உயர்கோளத்தையே சென்றடையும் அவர்கள் சண்டைகளைப் பார்க்கும்போது மாலை நேரத்தில் நாய்கள் ஓநாய் சிங்கத்திடம் வந்ததுபோல் இருக்கும் எல்லாமே சேர்ந்து போடும் சப்தம் கிராமத்து நாய்களையும் திடுக்கிட வைக்கும் இதனால் ஊரிலுள்ள அத்தனை நாய்களும் உறவுகள், குடும்பங்களுடன் அங்கு வந்து சேர்ந்துவிடும் இவைகளின் சப்தத்தினால் ஊரிலுள்ள குதிரைகளும் ஆடு, மாடு, ஒட்டகைகளும் சேர்ந்து சப்தமிடும்

Page 30
46 எஸ்.எச். ஆதம்பாவா
இதனால் ஊரிலுள்ள மக்கள் அந்த ஊர் நீண்ட தோளுடைய முதிர்ந்த படையினரால் கைப்பற்றப்பட்டு விட்டதோ என எண்ணி அம்பை எடுத்தவர்கள், கம்பைக் கையிலெடுத்தவர்கள் திடுக்கிட்டு குர்ஆனை ஓதியவர்கள் கதறி அழுத குழந்தைகள், கதவண்டை வந்து நின்ற பெண்கள் இப்படி ஏராளம், ஏராளம் இறைவா! நான் அனுபவிக்கும் இத்துன்பத்தை அனுபவிக்க எனக்கு நல்ல பொறுமையைத் தா!
இவர்களை நிலநடுக்கத்தால் பிடித்துக்கொள்!
一哈苓3° Mumm
کی فطNخ SO63
༣༡༦4AN་དང་དྲོ་རོ་
சறந்தியின் எனது இரு நண்பர்களே! என்னைப் பழிப்பதை விட்டுவிடுங்கள் பழிப்பது எந்தப் பயனையும் தரப்போவதில்லை நானோ இப்பூமியில் ஒரு பரதேசி ஒரு பரதேசி ஏன் பழிக்கப்பட வேண்டும்? மிஸ்றின் புஸ்தாத் நகரை நீங்கள் எனக்குக் கூறுங்கள் அதன்மிது கொண்ட மோகத்தினால் நான் உருகிக்கொண்டிருக்கின்றேன்.
-oo-63-3oo

47
சறந்தியில் பாறுதி
(கவிஞர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டபோது அவரின் குடும்ப உறுப்பினர் சிலரை அழைத்து வந்ததுபோல் சிலரை விட்டுவிட்டு வந்திருக்க வேண்டும். அவர்களினதும் தனது நண்பர்களினதும் மரணச் செய்தி எட்டியபோது அவர்களுக்காகக் கவிஞர் இரங்கற்பா பாடினார். 'றிதாஉ' எனப்படும் இரங்கற்பா அறபுக் கவிதைப் பண்புகளில் முக்கியமானதாகும்)

Page 31
48 எஸ்.எச். ஆதம்பாவா
کو NYخ<
* O13
 ̄ ܢܠܔܛ27g44
தனத மனைவியின் மரணச்செய்தி வந்தபோது
மரணத்தின் கரங்களா? நீ எத்திக்குச்சியினால் சுட்டுவிட்டாயப்? எத்திச்சுவாலையினால் என் உள்ளத்தைப் பொசுக்கிவிட்டாய்? இராணுவப் படை போன்ற என் உறுதியான நிலையை நீ பலவீனப்படுத்தி விட்டாய் சண்டைசெய்யும் அம்புபோன்ற என் உடம்பை நீ உடைத்துவிட்டாய்
துன்பம் என் வாசலுக்கு வந்து நிலைத்துவிட்டதா?
s/66) ஈட்டி என் உள்ளத்தைக் காயப்படுத்தியதா? நான் அறியன் கண்கள் கலங்கி கன்னங்களில் கண்ணர் இரத்தமாய் ஓடுகிறது. இத்துன்பம் ஏற்படும்வரை நடைபெறும் நிகழ்வுகள் என்னை திடுக்கிட வைக்கும் என நான் நம்பவில்லை இதுவோ என் சக்தியைப் பலவீனப் படுத்திவிட்டது.
நோய் விசாரிப்போன் கண்களுக்கு என் உடம்பே தெரியாத அளவு துன்பங்கள் என்னைப் பலவீனப்படுத்தி விட்டன. பெருமூச்சுகளும் கண்ணிருமே எனக்கு உதவி!
என் துன்பங்கள் உள்ளத்தை விடுவதாய் இல்லை

சறந்தீபில் பாறுதி 49
என் கரங்கள் போகும் நண்பனை பிடித்து நிறுத்த சக்தி பெறாது காலமே! என் துணைவியை ஏன் பறித்தாய்? அவளே என் வாழ்வின் சாராம்சம்! தெரிவு! எனது நோய் நிலையிலும் அவளை தூரப்படுத்தி என்மீது இரக்கம் காட்டாது விடினும் எனது பிள்ளைகளின் துக்கத்திற்காவது நீ இரங்காமல் விட்டாயே!
அந்த இளம் குமர்களை நீ தனிமைப்படுத்திவிட்டாய் உள்ளம் துடிதுடிக்க கண்கள் காயமடைய அவர்களின் மாலைகளின் முத்துக்களை வீசியுள்ளனர் பிரிவின் துயரால் அழுது மாய்கின்றனர் அவர்களின் கன்னங்கள் கண்ணரால் நனைந்துள்ளன உள்ளங்கள் துக்கத்தால் தாகமாயுள்ளன இவ்வுலகில் உனக்காக மற்றொரு உயிரைப் பரிகாரமாகக் கொடுப்பதாயின்
முதலில் அர்ப்பணிப்பவன் நானே!
எனினும் விதிகள்! மரணத்திடம் நிரந்தரமாக ஒப்புவித்து நிற்பதைத்தவிர எதுவும் பயனளிக்காது.
எனது துக்கத்தின் கரத்தைத் தட்டிவிட எவ்வாறு சக்தி பெறுவேன்? அதுவோ எனது நல்வாழ்வின் கடிவாளத்தையே சொந்தமாக்கிக் கொண்டது.

Page 32
எஸ்.எச். ஆதம்பாவா
கடினமான பொறுமையைத்தான் உதவியாயப் பெறுவேனா?
அல்லது மிகத்தூரத்திலுள்ள மறந்து விடுதலையைத்தான் நான் இணைத்துக்கொள்வேனா? உனக்குப் பின்னால் உனது தூரத்தின் துயரத்தினால் எனது விலா எலும்புகள் உறுதிப்பாடு அடைவது
அல்லது
எனது படுக்கை மிருதுவாவது
மிகத் தூரத்திலாகிவிட்டது.
உன் கவலை பகல் முழுதும் பற்றிக்கொள்கிறது நினைக்கும் நேரமெல்லாம் நீயே என் நினைவில்! விழிக்கும் போதும் முதலில் உன் நினைவு
துரங்கச் சென்றாலும் இறுதியில் நீயே நினைவில்,
என் எதிர்பார்ப்பிற்கு மாற்றமாக காகிதம் வந்தது அக்காகிதம் அழியட்டும் கீதமிசைக்கும் ஒருவனின் முகம் அதனால் சோகமாகிவிட்டது கொடிய பாம்பு திண்டியவன்போல்
மயங்கி வீழ்ந்தேன் முட்களினால் கண் இமைகளுக்கு அழுகை சுறுமா போட்டதுபோல் கண்கள் இருண்டன. பொறாமைக்காரர்களிடம் மகிழ்ச்சி அதிகரிப்பதுபோல் எனது துன்பமும் அதிகரித்துவிட்டது.

சறந்தீபில் பாறுதி 51
தென்றலே நீ செல் "இமாமின் மண்ணறைக்குப் பக்கத்திலுள்ள மண்ணறையிலுள்ளவருக்கு என் அன்பையும்
காணிக்கையையும் செலுத்து
இறுதியில் மனிதர்கள் எழுப்பப்படும் நாளில் உன்னைச் சந்திப்பது முடியாவிடினும் துக்கம் மேலோங்க மரணம் என்னையும் நெருங்குகிறது கொப்புக்களிலிருந்து புறாக்கள் கானமிடும் காலமெல்லாம் உனக்கு என் உள்ளத்திலிருந்து காணிக்கைகள்
"இமாம்" என்றால் தலைவர். இங்கு இமாம் ஷாபியி (ரஹற்) அவர்களின் மண்ணறைக்கு (கப்றுக்கு) பக்கத்தில் கவிஞரின் மனைவி அடங்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.
கவிஞரின் இரண்டாவது மனைவி அதிலா யகுன் என்பவரை கவிஞர்1867இல் திருமணம் செய்தார். நான்கு பெண்பிள்ளைகளையும் ஓர் ஆணையும் பெற்ற இவர் கெய்ரோவில் 1883ஆம் ஆண்டு காலமானார். அப்போது அவருக்கு வயது 37 ஆகும். இம்மனைவியின்
பிரிவுக்காக மேற்படி கவிதையைப் பாடியுள்ளார்.
Ο -oo-(3-300

Page 33
52 எஸ்.எச். ஆதம்பாவா
மகனின் பிரிவுக்காக
அன்பு மகனே! மரணம் உன்னை எவ்வாறு அரவணைத்துக் கொண்டது? என் கையால் எவ்வாறு உன்னை மண்ணிடம் ஒப்படைப்பேன்? என் ஈரல் துண்டே - அலியே!
உன் இழப்பு என் உடம்மை பலவீனப்படுத்தி விட்டது பொறுமையை இழக்கச் செய்துவிட்டது பலத்தை உடைத்துவிட்டது உனக்காக காலையில்லாத எத்தனையோ இரவுகள் உதவியின்றி விழித்து அழுது இருந்தேன் கண்ணிரும் விழித்திருத்தலும் விழித்து விழித்து அழுது வடித்த எந்தக் கண்தான் எஞ்சி இருக்கும்?
என் கவலை உனது நினைவு பளிச்சிடும்போது பொறாமைக்காரர்களின் கண்ணை நான் பயந்தபோதும் மரணத்தை காவலாக்கும் என நான் எண்ணவில்லையே!
காலம் என்னைத் திடுக்கிட வைத்தது

சறந்தீயில் பாறுதி 53
அதன் மோசடியை நானறியேன்
காலம் சிங்கத்தைப் போன்றது வெட்கத்தைப் பயப்படவில்லை ஏனெனில் புத்தியை மாற்றி பொறுமையைத் தரும் மனநிலையை பெற்றிருப்பேன் எனினும் உள்ளமே நீ அழு! கண் நீரைவடிப்பதால் அது உள்ளத்தின் அந்தஸ்தை அடையாது உன் மரணம் என் உடம்பில் பெரும் நோயை ஏற்படுத்திவிட்டது.
மகனே! உனக்கு என் சலாம் - பிரியாவிடை இது எனது இயலாமையின் இறுதி வார்த்தைகள்
蛾 一...&毛葵>3...一

Page 34
54 எஸ்.எச். ஆதம்பாவா
یکی خروط اخت
-SO33
 ̄ ܠܓܕܙܼ2zgg
மகளின் பிரிவுக்காக
கவிஞர் இலங்கையில் வாழ்ந்தபோது எகிப்தில் அவர் மகள் காலமாகிவிட்ட செய்தி வருகிறது. துக்கத்தின் மேலீட்டால் அழ முடியாதவராக அவர் கூறுகின்றார்
துன்ப மேலிட்டினால் கண்ணிரின் பக்கம் நான் சென்றேன் அது வர மறுத்தது துன்பம் வரும்போது கண்ணிரைக் விடுதல் ஒரு நோய் துன்பம், துயரத்தினால் நான் துவன்றேன் என் துக்க அதிகரிப்பு அழுகை வருவதைத் தடுத்தது.
Ο -no-(3>Boo

சறந்தீபில் பாறுதி
55

Page 35
56 எஸ்.எச். ஆதம்பாவா
யுத்த களத்திலே!
தூங்குபவனே!
நீ எதுவரைக்கும் தூங்குவாய் மக்கள் படுத்துறைங்குகையில் உன் நினைவால் என்னை எழுப்பி விட்டாய் இந்த இரவு இதோ முடியப் போகின்றது ஆனால், என் கண்களோ தூக்கத்தை அறியவில்லை நான் ஆஹர்' என்றால் கோபிக்கின்றனர் அவ்வாறு நான் கூறுவது கூடாதா? கடிதங்கள் வரவில்லை செய்திகளும் வரவில்லை காட்சி கனவுகளும் இல்லை இறைவன் மேலாணை உங்களுக்காக தூக்கம் கண்களை எட்டவில்லை உள்ளம் வேதனையால் பலவீனமடைந்து விட்டது தூரமும் பிரிவும் நீண்டுவிட்டது.
இளந்தென்றல் எனைக் கடக்கும்போது நான் ஆறுதலடைகின்றேன் அதிலேதான் எனக்கு நிம்மதி என் நோய்களுக்கு நிவாரணம் என்னை ஒரு தந்தி வந்தடைய வேண்டும் அல்லது புறாவின் உள் சிறகினுள் ஓர் இறகு - செய்தி சில நிமிடங்களில் எகிப்தை நான் சென்றடையவும் அங்கே நேசமாக நாட்களைக் கழிக்கவும் 676i 256.0661st

சறந்தீபில் பாறுதி 57
பிரிவின் கசப்பு அதிகரித்துவிட்டது ஒருநாள் ஆயிரம் வருடமாகக் கழிகிறது என் குழலைப் பார்
முக்கியஸ்தர்களையும் குதிரைக் கூட்டங்களையும் இருளில் இரட்சிக்கும் காவலனையும் தவிர எந்த நண்பனையும் காண முடியாது.
பின்னால் நீ திரும்பிப் போ முன்னால் போக முடியாது காலை வெளிச்சம் வரும் இருள் அகலும் ஒளி அகலும் இருள் வரும் நண்பனிடமிருந்து கடிதமும் வரவில்லை உண்மை நண்பனிடமிருந்து ஸலாமும் எட்டவில்லை தப்றிஜாவின் உயர்ந்த பூமியிலே பருந்தையும் உச்சி நிலத்தையும் தவிர வேறு எதுவுமில்லை எமது பின்னால் கடல் முன்னால் பயமுட்டும் பெருந்தொகைகொண்ட படை இதுவே என் நிலை - இது உனக்கு நேராமலிருக்கட்டும் - வீரமிகு என் தலைவா! நீங்கள் எவ்வாறு உள்ளிகள்?
—=998-కళ్లప్రాశిe==-
* தப்ரீஜா' என்றால் கருங்கடலிலுள்ள விவசாய மாகாணம்
* ரஷ்யாவுக்கெதிரான போரில் கலந்துகொண்ட பாறுதி அங்கிருந்து கொண்டு தனது நண்பனான ஹுசைன் அல்-மர்ஸ் அவர்கட்கு எழுதிய கவிதைக் கடிதம்

Page 36
58 எஸ்.எச். ஆதம்பாவா
கிராமத்திலே
மழைபொழியும் அதிகாலை! மணம்பரப்பும் இளந்தென்றல்! காலைப்பானத்தை எதிர்பார்த்து உள்ளங்கள் உன் இரு கண்களையும் சுழட்டு நீ விரும்பும் அரசாங்கத்தையும் பசுமையான தோட்டங்களையும் நீ காண்பாய் அதன் கிளைகளோ வானத்துடன் பிணைந்துள்ளன அதன் நிலமோ பயிர்களால் நிரம்பியுள்ளது காட்சிகள் அழகை மீட்கின்றன வாழ்வின் திரைகள் விலகியுள்ளன மான்கள் நிழலின் கீழ் மேய்கின்றன கொப்புகள் மேல் பறவைகள் பரவியுள்ளன முத்துமாலைகள் உதிர்வதுபோல் தூறல் மழை விழுகின்றது ஓடைகள் (வயல்) வெளியிலே ஓடுகின்றன வானத்தில் மேகங்கள் வழிந்தோடுகின்றன
சுவண்டி நிறைந்த உலகம் அதன் அழகு பிரகாசிக்கும் குரியனையே பழிக்கின்றது அதன் நிழல் இளம் காற்றை உறைய வைக்காது அதன் கால்வாய்கள் குப்பை கூழங்களை முடிக்கொள்ளாது

சறந்தீயில் பாறுதி 59
அன்பனே! நீ வாரும் பொழுது போக்கை பங்கிட்டுக்கொள்வோம் என் உள்ளமோ கழிந்துவிட்ட இளமையை ஆசை வைக்கின்றது சென்றுவிட்ட அரசியலை
விட்டுத் தள்ளு!
மனிதர்களின் உள்ளங்கள் அதனால் கோபத்தால் நிரம்பியுள்ளன தங்கள் நாட்களை ஆபத்தால் கழிக்கின்றனர் அரசியலின் முடிவு மிக மோசமானது; ஆபத்தானது அது மோசடி நிறைந்தது அரசியல்வாதி துன்பத்துக்கும் கஷ்டமான வாழ்வுக்குமிடையே பிணைக்கப்பட்டுள்ளான் எனக்கும் என் மக்களுக்குமிடையே என்ன? நான் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் இல்லை பழி வாங்கலோ வஞ்சகமோ இல்லை ஒவ்வொரு மனிதனும் தனது குறிக்கோளுக்காகச் செல்லக் கூடியவன் ஒவ்வொரு ஆத்மாவும் மறைவானவற்றுக்கு அடிபணியக் கூடாது இறைவா! என் உள்ளம் மகிழ்ந்திடும் சிறப்புக்களை தந்திடு அது பயந்த நிலையில் உள்ளது எனக்கு திங்கு செய்பவனை சாட்டிவிடாதே! என் உள்ளம் உன் உதவியை நாடியுள்ளது.
ཡ──་ཐ8ཚེ>3༠ ཐཟ──མས་ལ་ 稳
இக்கவிதை கவிஞர் அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் கிராமத்துக்குச் சென்று வாழ்ந்தபோது எழுதப்பட்டதாகும்.

Page 37
60 எஸ்.எச். ஆதம்பாவா
சிறையிலே
கவலை என்னைக் களைப்படையச் செய்துவிட்டது தூக்கமின்மை துன்பத்திலாழ்த்தியுள்ளது தெளிவின்றி கண்ணை முடிக்கொண்டிருக்கும் துன்பம் என்னைப் பிடித்துவிட்டது.
இரவின் இருட்டு விலகக்கூடியதாக இல்லை காலையின் வெண்மை எதிர் பார்க்கப்படும் நிலையுமில்லை என் முறையீட்டைக் கேட்க எந்த மனிதனுமில்லை எச்செய்தியும் என்னை அடைவதாயில்லை இனிய காட்சிகள் எதுவுமே இல்லை
பூட்டிய கதவும் சுவர்களுக்குமிடையே சிறைக்காவலர்கள் போடும் சப்தம் சிறு சத்தம் போட்டாலும் நின்று அவதானிக்கும் நிலை இயற்கைக் கடனுக்காய் எழுந்தாலும் கவனம்! சுற்றாதே! என்று இருள் சொன்னது எதை நான் தேடினாலும் அது கிடைப்பதில்லை நட்சத்திரம் இல்லாத இருள் நீண்ட பெருமுச்சு ஒன்றே மிச்சம்! என் ஆத்மாவே! நீ வெற்றியடையும் வரை நீ பொறுமை செய் சிறந்த பொறுமைதான் வெற்றியின் திறவுகோல்
象 -eo8-(E)-3oor
பிரதமராகப் பதவி வகித்த கவிஞர் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டதும் அவர் பாடிய கவிதை

சறந்தீபில் பாறுதி 61
பிரார்த்தனை
ஆட்சிகளின் சொந்தக்காரன் அவனிடம் நீ கேள்! அவனே ஏவுபவன், விலக்குபவன் அநியாயக்காரனை நீ பயப்படாதே! ஆட்சி அதிகாரம் இறைவனுக்கே உரியது அநியாயம் செய்யப்பட்டவனை உயர்த்துபவன் அவனே! பெருமை அடிப்பவனுக்கு கூலி கொடுப்பவனும் அவனே! அவனுக்கு நீ சிரம் பணி! அவனை நெருங்கு! அவனை வழிபடு அதனால் நீ விரும்பும் பெருமையையும் சிறப்பையும் பெறுவாய்!
360,276.17 என் தாய் நாட்டின் மீதான ஆசை நீண்டுகொண்டே செல்கிறது. எனது விலங்கை உடைத்து என் மண்ணில் என்னைச் சேர்த்துவிடு! சகல திங்குகளை விட்டும் என்னைக் காக்கும் உன் அருள் மழையை என்மீது சொரி நானோ இயலாத பலவீனன் இது என் பிரார்த்தனை! திர்ப்புக் கூற நியே போதுமானவன் அதற்கு எல்லா அரசர்களும் அரசர்கட்கெல்லாம் அரசர்களும்
னிவர் * அடி பணவா -=998ళళ్ల ప్రాశిeజ

Page 38
62 எஸ்.எச். ஆதம்பாவா
琴05臣 ܓܰܔܕܕܬܼ2zg44
தாய்நாடு நோக்கி
நான் காண்பது பாடபில்’ என்ற நகரமா? அல்லது இதுதானா மிஸ்று? இதில் குனியத்தால் தூங்கும் கண்களை நான் பார்க்கிறேன் இதனை கயல்விழியொத்த கண்கள் விருப்பம் என்ற பார்வையால் விழிப்படையச் செய்கின்றன. இச்சூனியப் பார்வைக்கு வாட்களும் ஈட்டிகளும் அடி பணிந்துவிடுகின்றன அதற்கு முன்னால் சிந்தனைக்குப் பாதுகாப்பு கிடையாது உள்ளத்தையும் தடுக்கும் திரை கிடையாது.
முஸ7 சூனியத்தை அழித்துவிட்டிருந்தால் அது அற்புதங்களின் காலம் 35/ 345a5/76 lbs
எந்த உள்ளம்தான் அன்புக்குக் கரையாது எந்தக் (கண்ணின்) மேகம்தான் மழையைப் பொழியாது உண்மையாகவே கண் வளர்ச்சி பெரிதாக விருப்பினும் அதன் இமையினிலே பலவீனம் உள்ளது.
வாலிபப்பெண் - அவளின் முக்காட்டின் கீழ் பூரண நிலா இலங்கும் அவளின் வர்ண ஆடைகளிலே ஒல்லிய கால்கள் குலுங்கும் மழையின் முத்துக்கள் விரிந்த ரோசாப் பூவினுள் உள்ளதுபோல் அவளின் வாய்

சறந்தீபில் பாறுதி 63.
பாடபில் குனியக்காரர்கள் அவளின் இரு கண்களுக்கு தாழ் பணிவர் அவளின் வாயிலிருந்து வரும் நீர் மதுவைவிட மயக்கம் கொடுக்கக் கூடியது
முகமுடிப் பெண்களே! யுத்தம் செய்யும் சிங்கமும் உங்கள் முன் தோற்றுவிடும் உன்னை நேசிப்பதில் நான் பைத்தியமாக உள்ளது எனக்குப் பெருமைதான்
எனது நேசத்தை கேலியாக எண்ணாதே அது நெருப்புச் சட்டியின் கீழே உள்ள தணல்! தீக்குச்சி போன்றது எனது ஆசை
எனது ஊரை நான் வந்தடைந்தால் சில மனிதர்களின் உள்ளம் கோபத்தால் கொதிக்கும் என்னைத் திமையாய் அவர்கள் நினைக்கின்றனர் நான் அதற்கு உரியவனல்ல ஆதாரமில்லாத எண்ணங்களும் பாவங்களை ஏற்படுத்தும் ஒரு கவிஞன் ஒரு மெட்டில் (காபியாவில்) கவிதையை இசைப்பது வெறுப்பானதல்ல தன்சோகத்தை எண்ணி புறாக்கள் அழுகின்றபோது சுதந்திரமானவன் அழத்தேவையில்லை என் உள்ளத்தைப் பொறுமையால் எவ்வாறு கட்டுப்படுத்துவேன் எனது தேசத்திலே எனக்கு உள்ளமும் பொறுமையும் எஞ்சவில்லை.
Οι —=998<ళ్ల98ee
கவிஞர் மன்னிப்பு அளிக்கப்பட்டு இலங்கையில் இருந்து நாடு திரும்பும் போது அவர் பாடிய கவிதை

Page 39
64 எஸ்.எச். ஆதம்பாவா
کی خطNخ< SO63. ܠ ܐܓܥܼܕܼܬܼzgg
மீண்டும் அந்தஸ்த
இருளில் சட்டையைக் கிழித்துவிட்டது சூரியனின் ஒளியா?
9656) பிரபலமிக்க முடியைச் சூடிக்கொண்ட பெருநாளின் ஒளியா? அது விண்மீன்களா?
el6ú6)
விரைந்து செல்லும் குதிரை வீரர்களா? கடல்போன்று நிரம்பிய ஊர்வலத்தையிட்டு என்ன நினைக்கிறாய்
கொழுந்து விட்டெரியும் நெருப்பின் நாக்குபோன்று வாளின் புழுதியின் நிழல் ஒவ்வொரு வீரனிடமிருந்து வெளிப்படுகிறது. தாக்கும் நேரத்தில் எதிரியைப் பயப்படாத படை மானின் கூட்டத்தைக் கண்டு சிங்கம் பயந்துவிடுமா? எதிரிமிது பாய அரசனின் கட்டளையை எதிர்பார்த்து நிற்கும் கடமை மிகுந்த படை.
நீதத்தால் தூரத்தில் உள்ள சூரியன்போல் உயர் அந்தஸ்தை அடைந்த நாடு பிரகாசத்தால் பூரண நிலவை நீ அடைந்துள்ளாய் அதன் பகுதியெல்லாம் ஒளி பரவியுள்ளது.
கிரிடம் ஒளி பொருந்திய நெற்றியைச் சுற்றிப் போடப்பட்டதற்காக அது பெருமைப்படட்டும்! நட்சத்திரங்களை மாலையாய் தொடுத்து பூரண நிலவுக்கு போட்டதுபோல் உள்ளது.
மன்னனுக்கு நடக்கும் மாபெரும்விழா காலத்தின் கரங்கள் இச்சிறப்புமிகு காட்சியை பார்த்துக்கொண்டிருக்கின்றது.

சறந்தீபில் பாறுதி 65
எத்தனையோ இளவரசர்கள் மகிழ்ச்சியால் பூரிப்படைந்துள்ளனர் எத்தனையோ அமைச்சர்கள் மகிழ்ச்சியால் மயங்கியுள்ளனர்.
பூமியோ மகிழ்ச்சியில்! காலமோ ஆனந்தக் களிப்பில்! மக்களோ வாழ்த்துக் கூறியவர்களாய்! ஒவ்வொரு நாட்டுக்கும் இச்செய்தியை அறிவிக்கும் தந்திகள் பறக்கின்றன.
இந்நாள் ஒவ்வொரு செவிக்கும் இசைக்கருவி புகுத்தியதுபோல் செவிகள் இசையால் நிரம்பியுள்ளன நீதத்தால் தன் நாட்டை நிரப்பியவரின் நாட்டின் புகழ் எவ்வாறு உலகெலாம் எட்டாமல் இருக்கும்? இந்த மன்னர் இவரின் நித செயல்கள் இல்லையென்றால் கஷ்டத்தின் பின் நற்காலம் வந்திருக்க முடியாது
நற்பேறுபெற்ற அரசனே! சிறந்த வெற்றிகள் உங்களுக்கு உரித்தாகட்டும் கிழக்கிலே நீ எதிர்பார்த்த வெற்றிகளை அடைந்துவிட்டாயப் மேற்கிலும் உரிமைகளை பெற்றுவிட்டாயப்
சிறப்பான பணிகளில் உனை வெல்வோர் யார்? உறுதியிலும் செயல் திறனிலும் உனக்கு நிகர் யார்? நீ இல்லை என்றால் சமாதானத்தின் நிழல் இல்லாமல் போயிருக்கும் யுத்தத்தினால் சேதம் ஏற்பட்டுப் போயிருக்கும் பயத்தின் பின் பாதுகாப்பு பரவியிருக்காது சிறப்புற்ற உன் ஆட்சி காலமெலாம் தொடர வேண்டும்.
ཡ─────ང་ཐ8ཕྱོགྱི>3༠ ཐཟ─────
* 17-05-1900 அன்று ஒரு வைபவத்தின்போது எகிப்திய அரசர் கித்யோ இரண்டாம் அப்பாஸ் ஹில்மி அவர்கள், பாறுதி அவர்களின் குடியியல் அந்தஸ்தை வழங்கியதுடன் அவரது பட்டங்கள், சொத்துக்கள் அனைத்தையும் மீள அளித்தார். அவருக்கு நன்றி தெரிவித்துப் பாடிய கவிதை.

Page 40
66 எஸ்.எச். ஆதம்பாவா
நன்றிக்கடன்
அப்பாஸ்! நிதியில் சிறந்த மன்னா! உன் புகழ் பாடுபவன் சிறப்புக்குரியவன் உன் திருப்தியை எனக்களித்தாய் மலர்ச்சியான உன் முகத்தை எனக்குக் காட்டினாய் உன் ஆட்சி ஓங்குக! நீர் ஆட்சியின் பூரண சந்திரன்
பலத்தின் தூண்
தேசியக்கொடிக்குப் பக்க துணை
அபிலாசைகளை அடைவதில் தாகமாய் உள்ளவனே நீ அவரது விட்டு முற்றம் என்ற கடலிலே நீர் அருந்து
உதவிகள் பெறுவாய் அவரும் அவர் முதாதையர்களும் உயர்வின் சிறப்பினை அனந்தரமாய்க்கொண்டவர்கள் நிதம் அவர் குணம்
அறிவு அவர் பண்பு விவேகம் (ஹில்மி) அவரது பெயர் எல்லாச் சிறப்புக்களையும் அரவணைத்துக்கொண்ட வாலிபர் அவர் கண் அளவில் சிறியதாக இருப்பினும்
வானம் பூமி எங்கும் அதன் பார்வை செல்லும்
Ο -to-63>30ed

சறந்தீபில் பாறுதி 67

Page 41
68 எஸ்.எச். ஆதம்பாவா
வசந்த காலம்
பனித்துளிகள் இலங்கின
பூக்கள் மலர்ந்தன
பறவைகள் அதன் மொழிகளில் பேசின ஒவ்வொரு சமவெளியிலும் வாசனை வியாபாரி நிற்பதுபோல பள்ளத்தாக்குகளில் ஓடைகள் எங்கும்
நறுமணம் பரவியது
பூக்கள் கிளைகளில் இலங்கிக் கொண்டிருந்தன பறவைகள் இனிய கானம் இசைத்தன பூவல்கள் நீரால் நிரம்பி வழிந்தன மணம் பரப்பும் இளம் தென்றல் இதமாய் வீசின உச்சி நேர வெயிலும் இதமாய் அமைந்தது கற்பிணிகள் போன்ற பழுத்த நீண்ட பேரீச்ச மரங்கள்
உச்சியிலே ஒளிகொண்ட நெடிய கம்பமாய்க் காட்சியளிக்கின்றன அதன் ஓலைகள் உயரத்திலிருந்து பூமியைத் தொட்டனவாய் உள்ளன அதன் கழுத்தோ எப்பார்வையும் எட்ட முடியாத அளவு உயரமாய் உள்ளது அதன் வேர்கள் மீன்கள் விளையாடுமிடம் அதன் கிளைகள் நட்சத்திரங்கள் பறக்குமிடம்

சறந்தியில் பாறுதி 69
பல நிறங்கள் கொண்ட பேரீச்சம் பழக்கொலையை அதன் மேலே நெருப்பு பிடித்துக்கொண்ட திரியென நீ எண்ணுவாய் அது சிலவேளை காற்றோடு சாயும் திரும்பி வரும் தூக்கம் பிடித்தவன் வலதும் இடமும் சாய்வதுபோல் இரகசியமாய்ப் பேசுபவன் சாய்வதுபோல் அது ஆடிக்கொண்டிருக்கும்
இதனை நீ பார்த்தால் ஆறுகள் ஓடும் அழகு நிறைந்த பசுந்தோட்டத்தை நீ கண்டுகொள்வாய் அதன் கிளைகளில் சிட்டுக்குருவி கானமிசைக்கும் இனிமையான ஓசையுடைய குயில் கூவும் கஸ்தூரி போன்ற மண் வெள்ளி போன்ற குளங்கள் முத்துப் போன்ற மழைத்துளிகள் தங்கம் போன்ற மலர்கள்
வசந்தத்தின் வதனத்தில் நீ அருந்து ஏனெனில் வீணரில் இரத்தம் சிந்தும் பாவ இரத்தத்தின் காலம் இது மனிதன் நிரந்தரமற்றவன் அவன் வரலாறே எஞ்சி இருக்கும் என நீ அறி நேரான ஈட்டிகொண்டு காலம் விளையாடி விட்டாலும் எனது தலைமுடியும் தாடியும் நரைத்து விட்டன எதிரிகளின் கண்கள் பயப்படுமளவு சங்கையை அது தக்கவைத்துள்ளது

Page 42
எஸ்.எச். ஆதம்பாவா
நான் நண்பர்களுக்கு நண்பன் எதிரிகட்கோ கர்சிக்கும் சிங்கத்தைவிடவும் கடுமையானவன் என் குதிரைகள் அடையாளமிடப்பட்டவை என் ஈட்டிகள் யுத்தகளத்திலே பாய்ந்து செல்லக்கூடியவை என் வாள் விரைந்து வெட்டக்கூடியது என் கையிலிருக்கும் பேனாவை நான் ஆட்டினால் தாகமுள்ள வாய்களுக்கு அது நீர் புகட்டும் குண்டுகளும் வீரர்களும் தடுமாறுவர் ஈட்டிகளும் வாள்களும் நிலைகுலையும் என் பேனா தாளின்மேல் எழுதும்போது வரும் ஓசையின் இசைக்காய் இசை எழுப்பும் கம்பிகள் தாழ்பணியும் நான் ஏறினால் எல்லா வீரர்களும் பணிந்து விடுவர் நான் பேசினால் எல்லா பேச்சுகளும் தாழ்ந்துவிடும் என் பேச்சுக்களால் கவிதைகள் பெருமையடையும்.
载 -oo-Ee-30 0 және O

சறந்தீபில் பாறுதி 71
வசந்த காலம்
எங்கும் மழை!
ஆறுகள், குளங்கள், கால்வாயப் போன்ற நீர் நிலைகள் நிரப்பமாயுள்ளன. அடர்ந்த மரங்களை அலங்கரிக்கும்
அழகிய மலர்கள்! குயில்கள் அம்மரங்களிலிருந்து அழகிய குரலில் கூவும் இனிமை
பூமி நன்மைகளால் நிரம்பியுள்ளது பூமியின் முகம் முழுவதும் பயிர்கள் வானத்தின் நெற்றியோ ஓடிக்கொண்டிருக்கும் மேகங்கள் இரண்டுக்குமிடையே அசையும் இளந்தென்றல் பயிர்கள் பெருங்கடல்போல் காலையும் மாலையும் அழகிய காட்சிகளை கொடையாய் நல்குகின்றன
அப்பயிர்களின் மேடுகள் கடலில் செல்லும் கப்பல் போன்ற காட்சியை எமக்கு நல்குகின்றது வட, தென் பருவக்காற்றுகளினால் அது ஒருபுறம் சாய்வதும் நேராக நிற்பதுமாய் இருக்கிறது
கற்பினிபோல் பழங்களைச் சுமந்த நீண்டு உயர்ந்த பேரீச்சமரங்கள் அதன் ஒலைகள் பூமியை நோக்கி நீண்டு கிடக்கின்றன அதன் கழுத்து சமமின்றி பாழைகளைத் தாங்கி நிற்கின்றன

Page 43
எஸ்.எச். ஆதம்பாவா
ஓலைகளும் மட்டைகளும் அதன் தலையில் பெண்களின் சாயம் பூசப்பட்ட நுனி விரல் சிவப்பாகத் தெரிவதுபோல் பேரீச்சையின் உதப்பழங்கள்
காட்சி தருகின்றன அக்காய்கள் தங்கத்தினால் செய்யப்பட்டதுபோல் உள்ளன சங்கிலி தாங்கிய விளக்குகள் போல் அதன் பாளைகள் நீர் இறைக்கும் துலாவின் சப்தம் கவலை நிறைந்த பெண் கேட்பதுபோல் இருக்கும் துலாவினால் வழிந்தோடும் நீர் தன் பிள்ளையை இழந்த துக்கம் நிறைந்த தாயின் கண்ணிபோல் பெருக்கெடுத்தோடும்.
காற்று கடுமையாக வீசுகையில் பேரீச்சையின் கழுத்திலிருந்து பாரிய சப்தம் கேட்கிறது அதன் பழங்கள் ஆடுகையில் ஒளி பொருந்திய நட்சத்திரங்கள் அதன் எல்லையில் பிரகாசிப்பதுபோல் உள்ளன
அடர்ந்த பெருமரங்களிடையே பொழியும் மழை பக்கமாகச் சாய்ந்து பூமியில் விழும் அழகு தாகித்த பறவைகள் நீர் அருந்துவதுபோல் புறா அதன் கிளைகளில் கூவுவதுபோல் இருக்கும் அதிகாலைப் பொழுதும் மாலை நேரமும் அம்மழையால் செழிக்கும் மறந்து வாழ்பவனே! நீ எழும்பு உன் அபிலாஷைகளை அடைந்து கொள் காலம் என்றோ ஒருநாள் மனிதனை உண்டு விடும் பூமியிலே எல்லாம் அழியக்கூடியதே!
-oo-3-3oor

சறந்தீயில் பாறுதி 73
ܫܹܫܵܬܳܐNNyhܪܵܓܶ
O33 yo. ܐ” '(\്
இலையுதிர் காலம்
கோடையும் குளிரும்
காலையும் மாலையும்
சரிசமமாய்விட்டன.
நீண்ட மன்றாட்டத்தின் பின் வானமும் பூமியும் இணக்கமாகிவிட்டன.
இனி
உவர்ணத்தைப் பயந்து திறந்த வெளி செல்லும் தேவை இல்லை. புடைவையுள்ளும் விட்டினுள்ளும் மறைந்து கொள்ளவும் தேவை இல்லை. தண்ணிரை அள்ளி உடம்பில் ஊற்றவும் அவசியம் இல்லை. நெருப்பை முட்டி குளிர் காயவும் தேவை இல்லை. நந்தவனத்தைப் பார்த்து கண்கள் மகிழ்கின்றன. நீரும் ஆகாயமும் அதனை செழிப்பாக்குகின்றன. விதையின் பயிர்களோ கொள்ளை அழகு! அடர்ந்த காடுகள் நீர் பாய்ச்சும்! பறவைகள் காட்டிலே கானம் இசைக்கும்! இளந்தென்றல் அதனிடையே சீட்டியடிக்கும்! சூரியன் காட்டு மரங்களினால் முக்காடிடும் பூக்கள் ஒளியினைப் பரவச் செய்யும் காலை, பகல், இரவு, நடு இரவு எல்லாமே சமமாக இருக்கும். மப்பு மந்தாரமும் இல்லை, மேகக் கூட்டங்களும் இல்லை இருளும் இல்லை, ஒளியும் இல்லை.
நீ எழும்பு,
இழந்துவிட்ட எமது வாலிபத்தையும் அதன் இன்பத்தையும் அனுபவிப்போம்! வா!
-oo-(3>300

Page 44
74
எஸ்.எச். ஆதம்பாவா
பெருமரங்களில் உள்ள புறாக்களிடத்திலே என்னைப் பற்றிக் கேளுங்கள் என் கவலையை அதிகம் அறிந்தது அந்தப் புறாக்கள்தான் ஏனெனில் நாங்களிருவரும் காதலில் சமமானவர்கள்! மரக்கொப்புக்காய் அழுபவர்கள்! எனினும் அதன் காதலும் எனது சோகமும் ஒன்றல்ல நான் என் துன்பத்தை நினைத்து அழுகின்றேன் அது மரக்கொப்பிலே நின்று கானமிசைக்கின்றது. அது கண்ணிரை ஓட்டுவதில் உலோபி! என் கண்களோ தாரை தாரையாய் நீரை வடிக்கின்றன காதலிலே நீ எனக்குச் சமமாகவில்லை எனவே, பறவையே எனை விட்டு நகர்
-oo-Ee-3oeO
அடர்ந்த மரத்திடை வாழும் புறாவே! உன் செழிப்பை நான் பார்க்கிறேன் உன் கொப்புக்களே ஆடி அசைகின்றன நீ ஏன் சோககிதம் இசைக்கின்றாய்? நீ மிகவும் மகிழ்ச்சிகரமான நிலையில் உள்ளாய் ஆனால், என் உள்ளமோ தண்டனையால் காயப்பட்டுள்ளன நீ என் அன்பில் உதவியாளனாயின் உன் இரு கண்களிலும் கண்ணிரை இரவல் வாங்கு! ஏனெனில் அழுகைதான் ஆறுதலிக்க வல்லது இல்லையெனில் நீ கானமிசைப்பதில் என்னை விட்டுவிட்டுச் சென்றுவிடு கொடையாளனும் உலோட்பியும் சமமானவர்களல்ல!
-<ళ్లeశిee

சறந்தீபில் பாறுதி
75

Page 45
76 எஸ்.எச். ஆதம்பாவா
மனஉறுதி
நான் வாழ்ந்தால் எனக்கொரு கவளம் உணவு கிடைக்காமல் விடாது நான் மரணித்தால் மண்ணறை எனக்கு இல்லாமல் போகாது எனது மன உறுதி அரசர்களின் படையுறுதி போன்றது எனது உள்ளம் சுதந்திரமானது அது இழிந்து வாழ்வதை இறை மறுப்பாய் காண்பது!
8 -eo-Ee-3oo
எச்சரிக்கை
பகிரங்க எதிரியின் திங்கை நீ அதிகம் பயப்படாதே! ஆனால்
மறைவான எதிரியின் திங்கை நீ பயப்படு! எத்தனையோ பகிரங்க தீமைகள் ஏற்பட்டவேளை அதிலிருந்து தப்பிக்க முடிந்தது ஆனால் மறைவான திங்கு அவ்வாறல்ல!
-98<ప్రాశిea

சறந்தியில் பாறுதி 77
மெளனம்
சிறந்த வார்த்தை நிலைத்து நிற்கும் என்பதை நீ அறிவாயா? வாய் பொத்தி இருப்பதே புத்திசாலிகளுக்கு வெற்றியளிப்பதாகும் இரகசியத்தில் நண்பர்களைக்கூட நம்பாதே! சிலவேளை நண்பனிலிருந்து எதிரி வருவான்!
-eo (E&Boo
கொடை
கொடை கொடுப்பதற்காக என்னைப் பழிக்கின்றனர் கொடை ஒரு மழை மேகம் அது பொழியுமிடத்திலே நன்றியென்ற பயிர் முளைக்கும் அந்தஸ்துக்கேற்ப செலவழிக்காத ஒருவரின் செல்வமும் வறுமையே!
- سده ه8حدیگ8اهه سیس

Page 46
78 எஸ்.எச். ஆதம்பாவா
இரகசியம்
உன் இரகசியத்தை உன் எதிரியிடம் மறைத்து விடு அதனை உன் நண்பர்கட்கும் தெரியப்படுத்தாதே! அதிலும் நீ எச்சரிக்கையாய இரு! சிலவேறு நண்பனும் எதிரியாக மாறுவான் எதிரியும் நண்பனாக மாறலாம்.
Ο -|=ه ه3رهنگ 8 هست
தயார் நிலை
ஒரு மனிதன் தன்கெதிரான அநியாயத்தைத் தடுப்பதற்கு பகைமையை பகையையைக் கொண்டு எதிர்கொள்ளவில்லையெனில் அவர் இழிவுக்கு உரித்தாவார் போர்க்களத்திற்கு ஆயுதமின்றிச் சென்று தன் கையால் தன்னைப் பாதுகாப்பவன் ஒரு முட்டாள்.
Ο -oo-(3>30eO

சறந்தீபில் பாறுதி 79
இரகசியம் பேணல்
இரகசியத்தின் காப்பறனாய் உன் உள்ளத்தை ஆக்கு அதுவே சமுகத்திடம் சிறப்பைத்த தருவது நீ பாதுகாத்து இருக்கும் காலமெலாம் இரகசியம் உனது அடிமை நீ வெளியே விட்டுவிட்டால் அதன்பின் நீ அதன் அடிமை
ســـده م8حكgهه سسسسس
நாளை விசாரணை
அழியும் அரசாட்சியை வைத்துக்கொண்டு அநியாயம் செய்யும் அரசனே! உன்னால் முடிந்த அநியாயங்கள் அனைத்தையும் செய் நிதியாளன் இறைவன் முன்
நாளை சந்திப்போம்
Ο 一...8号资>3。 }gapanmanns

Page 47
8O எஸ்.எச். ஆதம்பாவா
மாறும் உலகம்
அனைத்து விடயங்களும் மாறும் தன்மையுள்ளதாய் நான் காண்கின்றேன் யதார்த்தத்தை நாம் ஏன் சந்தேகிக்கிறோம்? மேற்கும் கிழக்கும் பூமியின் வெளியை நீ பார் 'கிஸ்றாவினதும் ?கைசரினதும் சுவடுகளை
நீ காண்பாய்
wHome <@శిe † neunmm
(1) ‘கிஸ்றா என்றால் பாரசீக சாம்ராச்யத்தை ஆண்ட மன்னர்களின் பெயர்
(2) கைசர்’ என்றால் ரோம சாம்ரச்யத்தை ஆண்ட மன்னர்களின் பெயர்
உயர் பணிபுகள்
பெருமையில்லாக் கண்ணியம் துன்புறுத்தலில்லாத மன்னிப்பு சொல்லிக்காட்டாத கொடை தாழ்வில்லாத அமைதி மனிதனின் பண்புகளில் உயர்வானது இந்நான்குமே!
நற்பண்புகளுக்காக போட்டியிடு உன் அந்தஸ்து உயரும் நன்மை செய்ய போட்டியிடுவதே சிறப்பு கண்ணியமானவர்கள் சென்றுவிட்டால் நம்பிக்கை கிடையாது நம்பிக்கை போய்விட்டால் சிறப்பே கிடையாது
-=298<ళ్లప్రాశిee—

சறந்தியில் பாறுதி 81
சிறப்புள்ளவர் உயர்வர்
நெருப்பை நீ கீழே எவ்வளவுதான் அடக்கி வைத்தாலும் அது மேலே எழுந்தே திரும் சிறப்புள்ள மக்களை வறுமை மறைத்தாலும் என்றோ அவர் சிறப்பு உயர்ந்தே திரும்.
0» -oo-(3>3oor
வாழ்க்கை
மனிதன் அன்றைய நாளுக்குரியவானாயுள்ளான் தரிபடுவதும் பிரிவதும் கொண்டதே வாழ்க்கை காலம் பல படங்களைக் கொண்ட பதிவுப் புத்தகம் அதற்கு உதாரணம் கூறமுடியாது ஒரு புறத்தில் முடிவுற்ற காலமும் மறுபுறத்தில் ஆட்சியும் மனிதர்களும் காணப்படும்.
Ο -eo8-6&Bon

Page 48
82 எஸ்.எச். ஆதம்பாவா
நாக்கு
இயன்றவரை நாக்கைப் பரிசுத்தமாக்கு அதனால் மனிதர்கட்கு மோசடி செய்வோனாய் ஆகாதே! புறம் பேசல், இகழ்தல் புரியாதே அதனைச் செய்பவரை நோக்கியே இழிவு திரும்பும்
-oo-Ee-30 bur
6assroof
தர்மம் அதிகம் செய் இறைவனின் கொடை தொடரும் நன்மை செய்வதையிட்டு கவனமற்று இராதே!
உலோபத்தனமும் கோழையும் மனிதனின் குறைபாடு இறைவன் பற்றி நம்பிக்கையுள்ளவனிடம் இவைகள் இருக்காது
Ο -oo-CED3oor

சறந்தியில் பாறுதி 83
பெயர் வைத்தல்
ஸ“ன்பூர்’ என உனக்குப் பெயரிட்டுள்ளனர் அதன் பொருள் உனக்குத் தவறாது முன்னோர் கூறினர்
ஆளுக்கும் அவர் பெயருக்கும் நிச்சயம் தொடர்பிருக்கும் (ஸ“ன்பூர் என்றால் ஆண் குழவி என்பது பொருள்)
Ο 一哈苓3...一 O
இகழ்ச்சி
திறமைமிகுந்த கவிஞனே! நீ கூறுவதை நிதானமாய் அளந்து கூறு அர்ப்பனை அதிகம் இகழாதே! சிறந்தவனைப் புகழ்! சிறந்தவனைப் புகழ்வது அர்ப்பனை இகழ்வதே!
象 -o-8-163300O

Page 49
84 எஸ்.எச். ஆதம்பாவா
தறவறம்
உயிர்கள் எல்லாம் மரணித்தே திரும் உலகில் எவரும் நிலைக்கார் ஆட்டங்கள் எல்லாம் அடங்கும் அனுங்குதலே அதனைத் தொடரும் பேசவே முடியாதிருக்கும் பின்னர் தொடரும் மரணம்
பெருமையடித்துத் திரிந்தவனே! நீ எனக்குச் சொல் எங்கே உன் பெருமை? சண்டித்தனம்! பேசுவதற்கு படைக்கப்பட்ட உனக்கு ஏனிந்த பெருமை? பேச முடியாத நிலை நான் காண்பது மரணமா? அல்லது பெருமையா? எல்லாத் திசையிலும் அதிகாரம் இருந்த அரசர்கள் எங்கே? கிரிடங்கள் அழிந்தன. பெட்டகங்களுக்குள் அடங்கின அவர்களின் நாடுகள் புதைகுழியாய் மாறின காது கேட்பவனும் பேச்சை விளங்கான் உயிர் உள்ளவனும் சப்தமிடான் மண்ணறைகள் அவர்களை நிருவகிக்கும் வீடுகள் அவர்களை விட்டு நீங்கும் உலகம் என்பது ஒரு கற்பனை - பொய் அது தவறக்கூடியது அதில் மனிதனுக்கு இறையச்சத்தைத் தவிர உணவு கிடையாது.
一哈苓3e...一

சறந்தீபில் பாறுதி 85
இரகசியம்
என் உள்ளம் நிறைத்துவைத்துள்ள உன்மீதான காதலை நான் மறைத்து வைத்துள்ளேன் எனது நாவுக்கு அது தெரியாது என் விலா எலும்புகளிடையே உள்ள அந்த மறைவான இரகசியத்தை எழுதும் மலக்குகளும் கண்டுகொள்ள மாட்டார்கள் என் நாக்கு மொழியாத அந்த இரகசியத்தை அவர்கள் எவ்வாறு எழுதமுடியும்?
够 -oo-Ee-3oe
கோள் மூட்டி
கோள் சொல்பவனுடன் சேராதே அவன் உள்ளத்தையும் உடம்பையும் பிரிக்கும் மோசடிக்காரன் அவன் கூறுவது பொய் இல்லையென்றால் ஏன் அவன் அதனைப் பகிரங்கமாகக் கூறாமல் மறைக்கிறான்?
----- ༠༠83>3༠•ཟ───── -

Page 50
86 எஸ்.எச். ஆதம்பாவா
பொறாமை
இரு முகத்துடையான் அவன் முகத்தை மகிழ்ச்சிகரமானதாய் நீ காண்பாய்
ஆனால் அவன் உட்ளளமோ துக்கமானதும் கபடமானதும் மான் குட்டியின் கடைக்கண்போன்று அவன் கண் திறந்திருக்கும் ஆனால், அவன் விலா எலும்புகளிடையே பொறாமை என்ற உடும்பு மறைந்திருக்கும்.
—=eeశస్త్రశిea—
நண்பன்
நண்பர்களின் உள்ளங்களை - இரகசியங்களை - பரிசோதித்துப் பார்த்தேன் எனது எதிரியை நண்பர்களிலிருந்தே கண்டுகொண்டேன் இரகசியங்களில் நண்பர்களை அச்சமற்று இராதே! ஏனெனில் அவர்கள் குற்றம் குறைகளைத் தேடும் உளவாளிகள்
$ -eo (€330s

சறந்தியில் பாறுதி 87
எதிரி
செருப்பு தன் அழகினால் விட்டில் பூச்சிகளுக்கு திங்கு செய்த அதனை அழிக்காவிடினும் ஆபத்தை ஏற்படுத்துவதுபோல எதிரியை நீ நம்பாதே! ஏனெனில் அவன் அழகான பேச்சினால் உன் விழ்ச்சியை எதிர்பார்க்கின்றான்.
-eo8-6s-8oo
aff 6th
மடையனுடன் என்றும் சேர்ந்து வாழாதே! ஏனெனில் உண்மையில் அவன் 69,2525 afL6 lb 6 IT6istolof அவனுக்கும் பைத்தியத்திற்கும் கறுப்புக் குதிரைக்கும் சிவப்புக்கும் உள்ள வித்தியாசமே!
-─────ས་ཐ8 >3༠ •ཟ────

Page 51
88 எஸ்.எச். ஆதம்பாவா
காலை நட்சத்திரமே!
இருளின் காலம் எப்போது முடிவடையும்? காலை நட்சத்திரமே! இரவின் கோட்டை தன் கதவுகளைத் தாழிட்டுக்கொண்டன திறக்கும் அத்தியாத்தை அதற்காக ஒது! இரவின் நட்சத்திரங்களை நான் பார்க்கிறேன் அவை பலவீனமடைந்துவிட்டன நிந்துவதற்கு அதற்கு சக்தி இல்லை மணிக்கோதுமை கதிர்போல் நீண்ட ஒளி தரும் வாலைப்போல் அது காட்சி தருகிறது!
----هg<<*>8oهه---
கவிதை
கவிதை மனிதனுக்கு அழகு சேர்ப்பது அது புகழ்வதற்கும் இகழ்வதற்குமான ஊடகமாக இல்லாத நிலையில் அதனால் சிறப்புற்ற மக்களோ அதிகம்!
அதனால் இழிவடைந்த மக்களும் இல்லாமல் இல்லை! தத்துவம், உபதேசம், வளரும் சிறப்புக்கள் இவைகளில் விரும்பியதில் கவிதை ஆக்கு! அதனை வெளியிட முன் கூவி அழை! அம்பு எறிபவனை நோக்கியும் திரும்பும்!
● -oo-(Ee-Bo

சறந்தியில் பாறுதி 89
இறதிக் கவிதை
நகரத்துக்கும் கிராமத்துக்குமிடையே சப்தம் சென்றடையும் தூரத்தளவு செல்லும் பேச்சின் முலகர்த்தா நானே! நான் ஒரு குதிரை விரன் எல்லா யுத்தத்தின்போதும் எல்லா சபைகளிலும் நான் ஒரு கவிஞன் யுத்தம் செய்வதற்காய் குதிரையில் ஏறினால் குதிரை வீரர்களின் ஸெப்து’! நானாவேன் நான் பேச முனைந்தால் நானே குஸ்ஸ்" சாயிதா அல்-இயாதி ? சகல பிரச்சினையின் ஆலோசனையிலும் இதுவும் அதுவுமே எனது வழமை
—==eeళళ్ల ప్రాశిee==-
1. ஸெய்து ஜாஹிலிய்யாக்கால (இஸ்லாதிற்கு முந்திய கால) பிரபல
கவிஞனும் குதிரை விரனும்
2 ஜாஹிலியப்யாக்கால பிரபல பிரசங்கி
இக்கவிதையே கவிஞர் பாறுதி எழுதிய இறுதிக் கவிதையாகும். கிபி 1904 நவம்பரில் தனது நோயின்போது இதனை எழுதியுள்ளார்.

Page 52
எஸ்.எச். ஆதம்பாவா
என் கவிதைகளை
இராகமெடுத்துப் பாடுங்கள் ஏனைய வார்த்தைகளை விட்டுவிடுங்கள் என் கவிதைகளுக்குப் பின்னால் வேறென்ன? அது புதிதான கவிஞர்கட்கெல்லாம் போதுமானது என் கவிதை சிலவேளை மிருதுவாகச் செல்லும் வெள்ளைத்தேன் சிலபோது தொண்டைக்குழியை அடைத்துவிடவும் கூடியது அதைக்கொண்டு பாடகன் கானமிசைப்பான் பாலைவனத்திலே ஒட்டகத்தை நடாத்திச் செல்பவனும் இந்த இசையை இசைப்பான்.
அதனை ஒருவேளை
சபையிடையே வைக்கப்பட்டிருக்கும் மலர்க்கொத்தாக நீ பார்ப்பாய் சிலவேளை அது படையினரிடையே இருக்கும் ஈட்டியாகவும் நீ காண்டாயப் அது இரவில் நடந்து செல்வோனுக்கு ஒளி விளக்கு முட்டாள்களுக்கு வேதனை பாலர்களை இதனால் மகிழச்செய்துள்ளேன் நான் ஒரு கவி வரி சொன்னால் அது காலம் எல்லாம் நிலைத்து நிற்கும் மேற்கு முதல் கிழக்கு வரை அம்மழை பொழியும் வாள் ஏந்தும் விரன் அதனால் விரத்தை வெளிப்படுத்துவான் அழகிய முத்துமாலை அணிபவளும் அதனால் பொழுதைக் கழிப்பாள். என் கவிதை முலம் நான் நாடியதை அடைந்துள்ளேன் அந்த
விரியாத மலர் மொட்டில் புதிதாக எதனையும் நான் விட்டு வைக்கவில்லை இது கவிதைப்புலி - நீர் அருந்த அந்த தடாகத்தை நீ நாடு! இது சிறப்பின் உயர் தலம்
அதில் நீ ஏறிக்கொள்
Ο -no-(3300

நூலாசிரியர்ன் ஏனைய நூல்கள்

Page 53


Page 54
பெற்
DL-L- போட்டியிலும் 'ஹிஜ்ரா பதக்கத்தை வெ
'இஸ்லாமும் கவிதையும் என்ற நா: தமிழுலகிற்குத் தந்துள்ள மெளலவி மாண்புகள்' என்ற நாலுக்காக 1993இ மண்டலப் பரிசு பெற்றவராவார்.
ம், இலக்கியம், அரசியல் போன் நால்கள் எழுதியுள்ள இவரின் பை பிரசுரமாகியதுபோல் இவரது பேட்டிகை Փ6ԾՈDպլb மலேசியாவிலிருந்த அரேபியாவிலிருந்து வெளிவரும் றாபி லண்டன் B.B.C.யும் இவரது பேட்டி வானொலி முஸ்லிம் சேவையில் 8 பேச்சையும் நிகழ்த்தியவராவார்.
சஊதி அரேபிய மதீனா பல்கலைக்க நாலாசிரியர் இலங்கைத் தென்கிழக்குட் வருகைதரு விரிவுரையாளராக நீண்ட
கல்முனை அல்-ஹாமியா அறபுக் கல் ஜம்இய்யத்துல் உலமா தலைவராக உலமா பிரதித்தலைவர்களில் ஒருவர இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாந நகரங்களில் நடைபெற்றபோது அவை
ஜேர்மனி, லண்டன், பிலிப்பைன்
நா
டுகளில் நடைபெற்ற சர்வதேச மாநா
 
 
 
 
 
 
 
 
 
 

களில் தினபதி கவிதா மன்டல தைகள் மூலம் எழுத்துலகில் வசித்த மெளலவி எஸ். எச். ஆதம்பாவா தி, புதுமைக் குரல், நண்பன் போன்ற ரிகைகளில் பல்வே
த்தில் நடாத்திய குத்பாக் கட் ன்றவர்.
ல் முதல் இதுவரை SJug ஆதம்பாவா அவர்கள்
களை ஒலிபரப்பியுள்ளது. இலங்கை இஸ்லாமிய வரலாறு' எனும் தொடர்
கட்டு LoGeoລທີມn, சவூதி அரேபியா போன்ற டுகளிலும் கருத்தரங்குகளிலும் கலந்து ISBN: 978-955-1407-02-5
85 கள