கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தனித்துத் தெரியும் திசை

Page 1


Page 2


Page 3

தனித்துத் தெரியும் திசை
திசை’ இதழின் சிறுகதைப் பங்களிப்பு - ஒரு மதிப்பீடு
O b: த அஜந்தகுமார் உதவி விரிவுரையாளர், தமிழ்த்துறை,
彰 。三一奎、 கம்
6ajafa : புதிய தரிசனம்

Page 4
தனித்துத் தெரியும் திசை - திசை இதழின் சிறுகதைட் பங்களிப்பு - ஒரு மதிப்பீடு
ஆய்வு நூல்
த அஜந்தகுமார் 9
நவம்பர் - 2009
வெளியீடு : புதியதரிசனம் யார்வத்தைவதிரி கரவெட்டி.
500 பிரதிகள்
96 + i. தமிழ்ப்பூங்கா அச்சகம் நெல்லியடி, கரவெட்டி,
200A.
ISBN: 978-955-52094-0-3
- ii -

சமர்ப்பணம்
நான்பிறந்தபோது பேருவகை கொண்டிருந்து; ஆயினும் பத்து மாதத்திலேயே நான் அறியாமுகத்தினராய் விண்ணுலகு ஏகிவிட்ட என் அத்தான்களான க. சிவபாதம் க. தவராசா ஆகியோருக்கு. - iii -

Page 5
வாழ்த்துரை
பல்கலைக்கழகத்திலே தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயிலும் மாணாக்கர் தமது நிறைவாண்டிலே ஆய்வுக் கட்டுரையொன்றினைச் சமர்ப்பிக்கவேண்டும் என்ற நியதி உள்ளது.
யாழ்ப்பான வளாகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தலைவராகவும் தமிழ்ப் பேராசிரியராகவும் விளங்கிய கைலாசபதி, யாழ்ப்பான வளாகம் தமிழ், இந்து நாகரிகம் ஆகிய துறைகளுக்கும் பெரும் பணியாற்றவேண்டும் என்ற அவாவுடையவராக இருந்தார். அதற்கான நடைமுறைகளை வகுத்ததோடு செயற்பாடுகளிலும் ஈடுபட்டார்.
சிறப்பாகத் தமிழ்த்துறையிலே செய்யப்படவேண்டிய ஆய்வுகள் பெரும்பாலும் ஈழத்து இலக்கியம் சார்ந்ததாக இருக்கவேண்டும் என்பதில் கைலாசபதி ஆர்வம் காட்டினார். கைலாசபதியின் கருத்துக்கு உதவியாகவும் உந்துவிசையாகவும் பேராசிரியர் கா. சிவத்தம்பி விளங்கினார்.
1976ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை மாணவர்கள் பலர் ஈழத்துத் தமிழ் இலக்கியம் சார்பாகவே தமது கலைமாணி, முதுமாணி, கலாநிதிப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மரபின் அறாத் தொடர்ச்சியாகவே செல்வன் அஜந்தகுமார் 'திசை" பத்திரிகை பற்றிய சிற்றாய்வொன்றை மேற்கொண்டார். அலை, மல்லிகை, கலைச்செல்வி, தாயகம், சிரித்திரன்முதலான பல சஞ்சிகைகளைப்பற்றிய ஆய்வுகளை நமது மாணாக்கர்கள் மேற்கொண்டுள்ளனர். பொதுவாகச் சிற்றிதழ்கள் அல்லது சிறு சஞ்சிகைகள் என அழைக்கப்படும் பலவற்றுட் சில இலக்கிய உலகிலே ஏற்படுத்திய தாக்கம் பெரியது என்பதை ஆய்வாளர்கள் ஒத்துக்கொள்ளுவர்.
- iv -

நமது மாணவர்களிற் பெரும்பாலானவர்கள் இன்று நவீன இலக்கிய உலகிலேயே சஞ்சரிக்கின்றனர். அவர்களது விருப்பும் ஈடுபாடும் நவீன இலக்கியம் சார்ந்ததாகவே இருக்கின்றது. நவீன இலக்கியத்திலே ஆழமாகக் காலூன்றப்பழந்தமிழ் இலக்கியங்களிலும் பரிச்சயம் வேண்டும் என்று கருதுபவர்களில் நானும் ஒருவன். அதற்காக எமது பாட விதானத்திலே பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களுக்கு கணிசமான அளவு இடம் ஒதுக்கியுள்ளோம். இதனால் எமது மாணவர்கள் இரண்டு தளத்திலும் ஆற்றலுடையவர் களாகத் திகழ்கின்றனர். Վ.
அஜந்தகுமாரின் இச் சிறு நூல் ஈழத்திலே வெளிவந்த தமிழ் இதழ்களில் ஒன்றான 'திசையின் பங்களிப்பின் ஒரு பகுதியைத் தெளிவுபடுத்துகின்றது. ஈழத்துத் தமிழ் இதழ்கள் பற்றிய நுண்ணாய்வை மேற்கொள்ள விரும்பும் இனிவரும் ஆய்வாளர்களுக்குப் பலவகையிலும் இந்நூல் உதவும் என்று நம்பலாம்.
அஜந்தகுமாரின் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
பேராசிரியர்கலாநிதி எஸ். சிவலிங்கராஜா, தலைவர்,
. தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

Page 6
அணிந்துரை
அணிந்துரைகள், பல நூல்களுக்கு எழுதியிருப்பினும் இவ் ஆய்வு நூலிற்கு அணிந்துரை எழுதுவதில் இரு மடங்கு மனத்திருப்தி என்னுள் முகிழ்ப்பது பற்றி முதலிற் குறிப்பிட்டாக வேண்டும். இதற்கு இரு காரணங்களுள்ளன. இன்று ஈழத்துத் தமிழ் இலக்கியம் தொடர்பான ஆய்வுகள் பல்கலைக்கழகங்களில் பல மட்டங்களில் இடம்பெற்றுவரினும் ஈழத்துத் தமிழ் இலக்கியம் 1968 அளவில் முதன்முதலாக கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அறிமுகமான சூழலில், அதனைக் கற்ற மாணவர் குழாத்தினருள் நானும் ஒருவனாக இருந்தமை எனது மனத்திருப்திக்கான முதற்காரணமாகிறது
அவ்வாறு அறிமுகமான ஈழத்துத் தமிழ் இலக்கியத்தைப் பல மட்டங்களிலும் ஆய்வுப்பொருளாக்கிய வரலாற்றுப்பெருமை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறையைச் சார்ந்தது என்ற விதத்தில் அப்பல்கலைக்கழகம் சார்ந்த இளம் விரிவுரையாளரொருவரின் ஆய்வு நூலுக்கு அணிந்துரை எழுத முற்படுகின்றமை, எனது மனத்திருப்திக்கான மற்றொரு காரணமாகிறது.
ஈழத்து நவீன இலக்கியத்தின் தோற்றத்திலும் ඡෂුද්‍යහ් ஒவ்வொரு காலகட்ட புதிய செல்நெறிகளின் உருவாக்கத்திலும் ஈழத்து இலக்கிய சஞ்சிகைகளுக்கும் பத்திரிகைகளுக்கும் கணிசமான பங்கிருப்பது இலக்கிய ஆர்வலர்கள் பலருமறிந்த விடயமே. இத்தகைய பத்திரிகைகளும் (உ-ம் ஈழகேசரி) சஞ்சிகைகளும் (உ-ம் மறுமலர்ச்சி, மல்லிகை, தீர்த்தங்கரை, மூன்றாவது மனிதன், பெண்) பற்றிய ஆய்வுகள் அவ்வப்போது ஈழத்துத் தமிழ்ப்பல்கலைக்கழகங்களில் நடைபெற்று வருகின்றமை கண்கூடு. இத்தகைய ஆய்வு வரிசையில் 'திசை’ இதழ் பற்றிய இவ்ஆய்வும் இன்று இணைந்துகொண்டு அத்தகைய ஆய்வுகளுக்கு இன்னொரு புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளது. அது பற்றி ஆழமாகச் சிந்திக்கும் போதுதான் இவ் இளம் ஆய்வாளரின் ஆய்வுத்திறன் ஓரளவு பளிச்சிடுவதை என்னால் அவதானிக்க முடிகிறது.
- Vi

திசை அண்மைக்காலத்தில் வெளிவந்திருந்தமையாலும் குறுகிய காலமே வெளிவந்திருந்தமையாலும் அது பற்றி ஆய்வு செய்வது இலகுவானதென்று ஒருவர் கருதக்கூடும். அது உண்மையல்ல என்பது ஆழ்ந்து நோக்கும் போதுதான் புலப்படுகிறது. அதாவது, 'திசை, ஈழத்தில் அரசியல் நெருக்கடிகள் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த காலச்சூழலில் வெளிவந்தது. அத்தகைய சூழலில் அதில் சமகாலப் பிரச்சினைகள் தழுவிய சிறுகதைகளை வெளியிடுவது மிகவும் சிரமமானது. அதையும் மீறி 'திசை கவனத்திற்குரிய சிறுகதைகளை வெளியிட்டதென்பதனைத் தீவிரவாசகள் அறிந்திருப்பினும், ஆய்வு நோக்கில் அதனைநிறுவுவது அவசியமானது. இவ்வேளையிலேதான் இவ்ஆய்வாளரின் ஆய்வுத்திறன் வெளிப்படுகின்றது. ஒப்பியல் அணுகுமுறையில் சமகாலத்தில் ஏனைய பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகளுடன் ஓரளவு ஒப்பீட்டு ஈழத்துச் சிறுகதை வள்ச்சிக்கு 'திசை ஆற்றிய பங்களிப்பினை இவ் ஆய்வாளர் நிறுவியிருப்பது விதந்துரைக்கப்படவேண்டியதொன்றே!
ஏலவே சிறுகதை, கவிதை, விமர்சனம், இதழியல் (புதிய தரிசனம்" -ஆசிரியர்)என பலதுறைகளிலும் ஈடுபட்டு தனது பன்முக ஆற்றலை வெளிப்படுத்திய அஜந்தகுமார், கவனத்திற்குரியதொரு இளம் ஆய்வாளராகவும் இந்நூலின் மூலம் தன்னை வெளிப்படுத்துகின்றார் என்று துணிந்து கூறலாம். அவ்வாறான நிலைக்கு அன்னாரை ஆற்றுப்படுத்தியதையிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பெருமைப்படுவதிலும் நியாயமுள்ளது.
எத்தகைய சிரமங்களிருப்பினும் ஈழத்துத் தமிழியல் ஆய்வுத்துறையில் தொடர்ந்தும் ஈடுபட்டு ஆழமான காலடிகளை அத்துறையில் அவர் பதிக்க வேண்டும் என்பது எனது அதிகாலைக் கனவு கனவு மெய்ப்படுவதாக
வாழ்த்துக்களுடன், மொழித்துறை, abeaorTI55 6)af. G8uLJITaögITeFII கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை. sOO9.ll.O.
- vii

Page 7
முன்னுரை
ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சிக்கு பத்திரிகைகள் காத்திரமான பங்களிப்பை வழங்கிவந்திருக்கின்றன. அதிலும் புனைகதைத்துறைக்கு அதிகமான பங்களிப்பை அவை வழங்கியிருக்கின்றன. இவை குறித்த ஒட்டுமொத்தமான ஆய்வுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளும் மேலெழுந்தவாரியானதாகவே நிகழ்ந்திருக்கின்றன. ஈழத்துப் பத்திரிகைகள் தமிழகப் பத்திரிகைகளைவிட இலக்கிய நாட்டமும் இலக்கிய வளர்ச்சியில் பற்றுறுதியும் மிக்கனவாகும். ஈழத்து இலக்கிய வரலாற்றெழுதிகள் இப்பங்களிப்பினை இதழியல் வரலாற்றோடு இலக்கிய வரலாற்றோடும் ஒன்றாக வைத்து நோக்குவது அரிதேயெனலாம். இந்நிலையில் ஈழத்து இதழியல் வரலாற்றில் 'திசை என்கின்ற பத்திரிகை குறுகிய காலம் வெளிவந்தபோதும் அதன் பங்களிப்பு காத்திரமானது என்பதையும் அது சிறுகதைத் துறைக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கிறது என்பதனையும் என் இலக்கிய ஈடுபாட்டினால் அறிந்து வைத்திருந்தேன். அதனால்தான் திசையின் சிறுகதைப்பங்களிப்பை மதிப்பிட விழைந்தேன்.
திசை இதழ் சிறுகதைத்துறைக்கு முக்கிய பங்களிப்புச் செய்திருக்கிறது என்று எல்லோராலும் கூறப்படுகிறதே அல்லாமல் அது ஆய்வுப்பொருளாகவில்லை என்பதனால் அதை நான் ஆய்வுப் பொருளாகக் கொண்டேன். ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் திசையின் பங்களிப்பை விளங்கிக் கொள்வதற்கு ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் பத்திரிகைகளின் பங்கையும் பணியையும் நோக்கவேண்டியது முக்கியம் என்பதனாலேயே அதனை முதலாவது இயலில் கூறியுள்ளேன்.
திசையின் சிறுகதைப் பங்களிப்பை விளங்கிக்கொள்வதற்கு திசை இதழின் தோற்றம், நோக்கு, அது வெளிவந்த சூழல், அதன் கலை இலக்கியப் பங்களிப்பு என்பன முக்கியமானவை என்பதனால் அதனை இரண்டாவது இயலில் கூறியுள்ளேன்.
- viii -

திசை இதழில் வெளிவந்த சிறுகதைகளை அதை எழுதிய எழுத்தாளர்களை அச்சிறுகதைகள் வெளிவந்த சூழலை, அச்சிறுகதைகளின் பேசுபொருளான உள்ளடக்கங்களை அந்த உள்ளடக்கங்கள் எவ்வளவு உக்கிரமாகவும் கலாபூர்வமாகவும் வெளிப்பட்டுள்ளது என்பதை மிக விரிவாகவும் - ஆழமாகவும் மூன்றாவது இயலில் நோக்கியிருக்கிறேன். இதன்போதுதான் இந்திய இராணுவம் இருந்த காலத்தை - இனப்பிரச்சினைச் சூழலை - சமூக மெய்ம்மைகளை எவ்வளவு தத்ரூபமாக இவை வெளிப்படுத்தியுள்ளன என்பது தெளிவாகின்றது. இது திசையின் சிறுகதைகளுக்கு சமூகவியல் மற்றும் அழகியல் முக்கியத்துவத்தை கொடுத்திருப்பதைக் காணலாம்.
மதிப்பீட்டில் சமகாலப் பத்திரிகைகளில் இருந்து திசை இதழ் வேறுபட்டுநின்று வழங்கிய சிறுகதைப்பங்களிப்பின் காத்திரத் தன்மையினையும், ஈழகேசரி, சுதந்திரன், ஈழநாடு, வீரகேசரி,தினகரன் போன்று திசையானது பல தசாப்தங்களாக வெளிவராதபோதிலும் குறுகிய காலப்பகுதியில் திசை இதழ் வழங்கிய சிறுகதைப் பங்களிப்பின் முக்கியத்துவத்தினையும் இனங்காட்டியுள்ளேன்.
என் ஆய்வின்மூலம் ஈழத்து இதழியல் வரலாற்றில் 'திசை” இதழ் இன்னும் ஆழமாக நோக்கப்படவேண்டிய அவசியமும் அதன் காத்திரமும் -
ஈழத்துச் சிறுகதைவளர்ச்ச்சியில் தீவிரபிரக்ஞையுடன் புதிய திசையொன்றை திசை”திறந்துவிட்டதன் முக்கியமும் -
ஈழகேசரிச் சிறுகதைகள், மறுமலர்ச்சிச் சிறுகதைகள், சுதந்திரன் சிறுகதைகள், ஈழநாட்டுச் சிறுகதைகள் போல திசையின் சிறுகதைகள் ஆவணப்படுத்தப்ப்ட்வேண்டிய அவசியமும் மேற்கிளம்பவேண்டும் என நான் எதிர்ப்ர்க்கின்றேன்.
த. அஜந்தகுமார்
(சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைக்கு எழுதப்ப்ட்ட முன்னுரை
-ix

Page 8
என்னுரை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் இறுதி வருட மாணவனாக நான் இருந்த 2008 ஆம் ஆண்டு எனது பரீட்சைக்காக நான் சமர்ப்பித்த ‘ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் திசையின் பங்களிப்பு ஒரு மதிப்பீடு’ என்கின்ற ஆய்வுக்கட்டுரையே புதுக்கிய நிலையில் நூல் வடிவம் பெறுகின்றது.
பல்கலைக்கழகம் புகுவதற்கு முன்னமே இதழியலிலும் நவீன இலக்கியத்திலும் எனக்கு ஈடுபாடு இருந்தது. புதியதரிசனம் என்கின்ற கலை இலக்கிய இதழை வெளியிட்டு வந்தமையால் ஈழத்தில் வெளிவந்த நல்ல இதழ்கள் பற்றிய அறிகைப்புலம் என்னிடம் இருந்தது. பல்கலைக்கழகத்தில் இதழியல் தொடர்பான விரிவுரைகளை எடுத்த கலாநிதி கி. விசாகருபன் அவர்கள் மூலம் பழைய இதழ்கள் தொடர்பான ஆவணங்களின் முக்கியத்துவம் என்னுள் கிளர்ந்தது.
கலாநிதி செ. யோகராசா எழுதிய ‘ஈழத்து இலக்கியமும் இதழியலும்’ என்ற நூலில் திசை, சரிநிகள் ஆகியவற்றின் பங்களிப்பு ஆராயப்படவேண்டியதேவையை வலியுறுத்தி இருந்தார். அதில் ஒரு தேவையாவது நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை பற்றியே இந்த ஆய்வினை மேற்கொண்டேன். w
இந்த ஆய்வுத்தலைப்பைக் கூறியதும்மிகுந்தமகிழ்ச்சியுடன்
மேற்பார்வையாளராக இருந்து எ
- '''
...
திேசையின் சிறுகதைகளை, பல்கலைக்கழக நூலகத்தில் நிழற்பிரதிசெய்யமுடியாத நிலை ஏற்பட்டபோது, திசையின் துணை ஆசிரியராக இருந்த அ. யேசுராசா அவர்களை நாடினேன். என் மேல்
– Xጰ--
 
 
 

உள்ள அன்பினாலும் நம்பிக்கையினாலும் நிழற்பிரதியெடுப்பதற்குத் திசை இதழ் முழுவதையும் தந்துதவினார். அத்தோடு அவரோடு திசையின் காலம் குறித்து பல மணித்தியாலங்கள் உரையாடவும் வாய்ப்புக் கிடைத்தது. அதேபோல எனது பாடசாலைக் காலத் தமிழாசிரியர் குப்பிழான் ஐ. சண்முகன் அவர்களுடனும் உரையாடினேன்.
இந்த ஆய்வு ஒருவகையில் பரீட்சைத் தேவைக்கான நெருக்கீடுகள் மத்தியில் செய்யப்பட்டாலும் கூட, அதில் நான் காட்டிய அக்கறை தேடல் - ஆய்வு வெளிப்பாடு ஆகியவற்றில் எனக்கு ஒரு உளத்திருப்தி இருந்தது. ஆகையால் இந்த ஆய்வு, நான்கு சுவர்களுக்குள் உறங்கிக்கிடப்பதில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. அத்தோடு ஒரு ஆவணமாகும் சாத்தியம் இதற்கு இருப்பதனால் இவ்வாய்வை நூலாக்குகிறேன்.
இதனை நூலுருவாக்கும்எண்ணம்உருவாகியதும்அயேசுராசா, கலாநிதி செ. யோகராசா ஆகியோரிடம் அபிப்பிராயத்திற்காகக் கொடுத்திருந்தேன். அவர்கள் இருவரும் மிகுந்த அக்கறையோடு இந்த ஆய்வை வாசித்துப் பல விடயங்களை எனக்கு நினைவுபடுத்தினர்கள், சில திருத்தங்களைச் சொன்னாள்கள்.
நூலாக்கும்போது 'ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் பத்திரிகைகள்” என்ற இயலை நீக்குவதா? சேர்ப்பதா? என்ற குழப்பம் எனக்குள் இருந்தது. ஆயினும் இந்தப் பின்னணியிலேயே திசையின் முக்கியத்துவம் இன்னும் ஆழமாக வெளிப்படும் என்று நம்பியதாலும், ஆய்வு மாணவர்களுக்கு உதவும் என்பதாலும் அவ்வியல்ையும் சேர்த்துள்ளேன். திசையோடு ஒப்பிடும்போது சமகாலபத்திரிகைகளானமுரசொலி, ஈழநாடு போன்றனவெளியிட்ட பல சிறுகதைகள் பலவீனமானவையாக இருப்பதையும் ஆய் செய்ய நினைத்தேன். இது பாரிய அளவில் செய்யப்படவேண்டிய்து அதற்கான சிறு முன்னாரம்பத்தை இதில் செய்துள்ளேன். இது என் ஆய்வுக்கட்டுரையில் இடம்பெறவில்லை.
一翠r上

Page 9
இந் நூாலை வெளியிடுகின்றேன் என்று கூறியதும் ‘வாழ்த்துரை' வழங்கிய மதிப்பிற்குரிய தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி எஸ். சிவலிங்கராஜா அவர்களுக்கும்,
நான் கேட்டவுடன், தனது வேலைப்பளுக்கள் மத்தியிலும் அணிந்துரை எழுதித்தந்த கிழக்குப்பல்கலைக்கழக மொழித்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி செ. யோகராசா அவர்களுக்கும்,
இந்நூல் குறித்த தன் மனக்கருத்தினை எழுதித்தந்த விமர்சகர் அலை அ. யேசுராசா அவர்களுக்கும்,
எனக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழைக் கற்பித்த அனைத்துப் பேராசிரியர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும்,
என்னுடன் பயின்ற தமிழ்த்துறை நண்பர்களுக்கும், இந்நூல் தொடர்பாக பலவகையில் உதவிகள் செய்த சு. குணேஸ்வரன், இ. இராஜேஸ்கண்ணன், ந. மயூரருபன், ப. யூட்பிறின்சன், யோ. பகிரதன் ஆகியோருக்கும் இந்நூலினை பதிப்பித்து தந்த தமிழ்ப்பூங்கா அச்சக உரிமையாளர் சி. கணேசலிங்கம் அவர்களுக்கும், ஊழியர்களுக்கும் என்னை பலவகைகளிலும் ஊக்குவிக்கும் பெற்றோர்க்கும் தங்கைகளான மீனலோசினி சியோபன்,ராஜநந்தினி ஆகியோருக்கும் என் அன்பும் நன்றியும். 'ஒரு சோம்பேறியின் கடல்' என்ற என் கவிதைத் தொகுதியோடு இந்நூலினையும் வெளியீடு செய்ய கிடைத்த இறையாசியை எண்ணி இந்த நூலினை உங்களிடம் தருகின்றேன்.
த. அஜந்தகுமார்
தமிழ்த்துறை, யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம். o5.11.2Ooe

வாழ்த்துரை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அணிந்துரை கலாநிதி செ. யோகராசா
ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் பத்திரிகைகள். 1 19 سد திசை இதழின் கலை இலக்கியப் பங்களிப்பு. 90 - 39 திசை சிறுகதைகளின் உள்ளடக்கமும் வெளிப்பாடும். 40 - 83 ραδύπ1Φ 84 - 90 உசாத்துணை நூல்கள்
பின்னிணைப்பு
கவனத்தை ஈர்க்கும் முயற்சி. 95 -965 س
s9. (8uaigrafn

Page 10

த அஜந்தகுமார்
ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் பத்திரிகைகள்
1. ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில் பத்திரிகைகள்
தமிழ்மொழியின் வளம் பெருக ஐரோப்பியர் ஆற்றிய பணிகளில் பத்திரிகைகளின் பங்களிப்பு அளப்பரிய ஒன்றாக விளங்குகின்றது. இதன் விளைவாக தமிழின் பல துறைகளும் வளர்ச்சி கண்டன. எனவேதான் தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றி ஆராய விழையவர்கள் தமிழ்ப் பத்திரிகைகள் பற்றிய ஆய்வையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமானதாக இருக்கின்றது. பத்திரிகைகளின் தோற்றம் காரணமாக சமூக மட்டத்திலும் இலக்கிய வளர்ச்சியிலும் ஏற்பட்ட மாற்றங்கள் முக்கியமானவை.
தமிழ்ப் பத்திரிகைகள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ் வசனநடையின் முன்னேற்றத்திற்கும் ஒரு நல்ல சாதனமாய் இருந்திருக்கின்றன. தமிழ் வசனநடையைத் திறமையுடன் கையாண்ட பாரதியும், வ.வே.சு ஐயரும் பத்திரிகைத் தொழிலில் கலந்திருந்தார்கள். பாரதியின் அநேக கட்டுரைகளையும் கதைகளையும் வெளியிட்ட பெருமை சுதேச மித்திரன் பத்திரிகைக்கு உரியது. விக, வ.வே.சு. ஐயர் ஆகியோர் தேசபக்தன் பத்திரிகையின் மூலம் தமிழ் வளர்ச்சிக்குச் சேவை புரிந்திருக்கிறார்கள்

Page 11
தனித்துத் தெரியும் திசை
அச்சியந்திரத்தின் வருகையோடும் எழுத்தறிவின் வளர்ச்சியோடும் இணைந்த ஒரு பத்திரிகை உலகு, கிறிஸ்தவப் பாதிரிமரின் முயற்சியினாலும் ஆங்கிலம் கற்ற மத்தியதர வர்க்க இயக்கத்தினாலும் இலங்கையில் உருவாகியது . 1841இல் உதயதாரகையின் தோற்றம் ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகை வளர்ச்சியில் ஒரு புதிய சகாப்தத்தையே ஆரம்பித்தது எனலாம். உதயதாரகையைத் தொடர்ந்து பல பத்திரிகைகள் தோன்றின. தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் என்பன இவற்றினூடாக வளர்ச்சி கண்டதோடு தமிழ் அரசியல் போக்கும் மாற்றம் கண்டது. இலங்கையின் சமூக பொருளாதார அரசியல் சூழ்நிலையைத் தெளியவைக்கும் பிரதான தகவல் தேட்டச் சாதனங்களாகவும் பத்திரிகைகள் விளங்கின.
சமூகத்தில் புதிதாக உருவான நடுத்தர வர்க்கத்தினரின் தொகை பெருகியபோது அவர்களது கருத்துப் பரிமாற்றத்திற்குரிய வெளியீட்டுச் சாதனமாகவும் பத்திரிகைகள் விளங்கின. சமயக் கருத்துகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் பரப்பும் நோக்கில் வெளிவரத் தொடங்கிய பத்திரிகைகள் தமிழ் மக்களில் குறிப்பிடத்தக்க தொகையினரிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தன.
19ம் நூற்றாண்டில் இருந்து இன்றுவரை ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியின் ஆக்க சக்தியாகப் பத்திரிகைகள் விளங்கிவருவதை மறுதலிக்கமுடியாது.
நவீன இலக்கிய வளர்ச்சி இலக்கிய சஞ்சிகைகளுடன் பின்னிப்பிணைந்த ஒன்று என்பது பலரது அபிப்பிராயம். ஆனால் அத்தகைய வளர்ச்சியில் பத்திரிகைகளுக்கும் பங்கு உள்ளமை குறிப்பாக ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியைக் கூர்ந்து நோக்கும்போது புலனாகின்றது. ஆதலினால் ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில் ஈழத்துப் பத்திரிகைகளின் பங்கு எந்நிலையிலுள்ளது என்பது குறித்துச் சிந்திப்பது முக்கியமானதே.
19ஆம் நூற்றாண்டில் ஈழத்து இலக்கிய வரலாறு புதிய
மாற்றங்களைக் கண்டது. மரபு இலக்கிய வளர்ச்சிகள் தொடர்கின்ற அதேவேளையில் நவீன இலக்கிய வளர்ச்சிப் போக்குகள் ஆரம்பிக்கின்ற
- 2 -

த, அஜந்தகுமார்
நிலைமை 19ம் நூற்றாண்டில் உருவாகத் தொடங்கியது. இது
இருநிலைமைகளில் ஏற்படத் தொடங்குகின்றது.
1. நவீன இலக்கியங்கள் தோற்றம் கொள்கின்றமை.
2. அத்தகைய முயற்சிகளுக்கான வாய்ப்புகள் உருவாகின்றமை.
இவ்வாறு நவீன இலக்கிய முயற்சிகள் கால்கொண்ட
வேளையில் பத்திரிகைகளே அவற்றின் பிரசுர களமாக இருந்துவந்துள்ளன.
19ம் நூற்றாண்டில் வெளிவந்துள்ள பத்திரிகைகளுள் உதயதாரகை, உதயாதித்தன், வித்தியாதர்ப்பணம், பாலியர்நேசன், இலங்கைநேசன், கத்தோலிக்க பாதுகாவலன், சன்மார்க்க போதினி, முஸ்லிம் நேசன், சைவ உதயபானு, இந்து சாதனம் என்பன முக்கியமானவை.
ஈழத்தின் முதல் நாவல் எனப்படும் அசன்பே சரித்திரம் (1885) முஸ்லீம்நேசனில்தான் தொடராக வெளிவந்தது. ஈழத்துச் சிறுகதைக்கான ஆரம்ப முயற்சிகள் ஆர்னால்ட் சதாசிவம் பிள்ளையினால் நன்னெறிக் கதா சங்கிரகம் என்ற பெயரில் அவர் ஆசிரியராக இருந்த "உதயதாரகையில் 1860 காலப்பகுதியில் எழுதப்பட்டது. பின் தொகுதியாகவும் வெளிவந்தது. தொடர்ந்து 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்து சாதனம் பத்திரிகையில் ம.வே. திருஞானசம்பந்தம்பிள்ளை எழுதிய உலகம் பலவிதம் கதைகள் (காசிநாதன் நேசமலர், கோபால நேசரத்தினம், துரை ரத்தினம் நேசமணி முதலியன) தொடராக வெளிவந்தன.
இன்று புனைகதைதி துறை முயற்சியில் ஈடுபடுவோர் புனைகதைகளுக்கேற்ற உரைநடையைக் கையாள்வதில் சிரமப்படுவதில்லை. இவ்வாறு புனைகதைகளுக்கான உரைநடை உருவானதென்பது உடனடியாக நிகழ்ந்ததன்று. பல படிகளைத் தாண்டிய பின்னரே அது கைகூடலாயிற்று. இத்தகைய உரைநடை உருவாக்கத்தில் அதன் ஆரம்பநிலையில் பத்திரிகைகளுக்கு கணிசமான பங்கு உண்டு என்பது மறுதலிக்கமுடியா உண்மையாகும்.
பத்திரிகை வாசிப்புக் காரணமாகப் பரந்துபட்ட நிலையில் சாதாரண மக்கள் உள்ளிட்ட வாசகள் கூட்டமொன்று ஈழத்தில் உருவாகத் தொடங்கியது என்பதும் கூட்டு வாசிப்பு என்பது தனி வாசிப்பாகப் பரிணாமம் பெறத்
- 3 -

Page 12
தனித்துத் தெரியும் திசை
தொடங்கியது என்பதும் முக்கிய விடயங்களாகின்றன. ஏனெனில் நவீன
இலக்கியத்துக்கான முக்கியமான ஊற்று அவற்றில் இருந்தே சுரக்கத்
தொடங்குகின்றது.
"20ம் நூற்றாண்டைப் பொறுத்தவரையில் அதன் மூன்றாம் தசாப்தம் ஈழதீதும் பதி திரிகைத் துறையினி திருப்புமுனையாகின்றது. சுதேச தேசிய உணர்வுகள் முளைவிடத் தொடங்கிய இக்கால கட்டத்திலேயே அரசியல் சமூக விமர்சன இதழ்கள் வெளிவரத் தொடங்குகின்றன.
சமய நோக்கினை முதன்மைப்படுத்தி இதுவரை காலமும்
வெளிவந்த பத்திரிகைகளைப் போலன்றி அதிலிருந்து விடுபட்டு, செய்திகளை வெளியிடும் நோக்கத்துடனும் ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சிக்கு இடமளிப்பதுமான தன்மை அரங்கேறுகின்றது. ஈழகேசரி (1930), வீரகேசரி (1930), தினகரன் (1932) என்பனவற்றின் வரவு இவ்வேளை இடம்பெறுகின்றது”
இதில் வீரகேசரியும் தினகரனும் தினசரிப் புதினத்தாள்கள் என்ற அளவில் மட்டுமே இலங்கைத் தமிழ் மக்களிடம் இடம்பிடித்தன. இலங்கைத்தமிழ் வளர்ச்சிக்காக அவற்றின் வரலாற்றில் முதல் 3 கால் நூற்றாண்டுவரை அவை கவனம் எடுக்கவில்லை எனலாம். வீரகேசரி போன்றன மரபிலக்கிய ரசனையில் ஊறித் திளைத்தனவே தவிர நவீன இலக்கியப் பக்கம் நீண்டகாலம் வரை அவை எட்டிப் பார்க்கவில்லை எனலாம். எனவே இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கான களமாக ஈழகேசரியே விளங்கியது. தமிழ்நாட்டில் அக்காலத்தில் வெளியாகிக் கொண்டிருந்த கலைமகள், கலாமோகினி, கிராம ஊழியன், மணிக்கொடி முதலிய சஞ்சிகைகள் நவீன இலக்கிய வடிவங்களின் பரிசோதனைக் களமாக விளங்கி இலக்கிய ஆர்வங் கொண்டவர்களின் கவனத்தை ஈர்த்தன. இப்பத்திரிகைகளுடன் ஈடுபாடும் நவீன இலக்கிய நாட்டமும் கொண்டிருந்த சி. வைத்தியலிங்கம், க. தி. சம்பந்தன், இலங்கையர்கோன், சோ. சிவபாதசுந்தரம் முதலியோர் நவீன இலக்கிய வளர்ச்சிக்குக் கால்கோள் இடும் களமாக ஈழகேசரியைப் பயன்படுத்தினார்கள். இதனால்தான் செங்கைஆழியான்,
- 4 -

த அஜந்தகுமார்
“.நவீன இலக்கியத்திற்கு ஆரோக்கியமான தடமும் தளமும் அமைத்துக் கொடுத்ததோடு ஆக்கவிலக்கிய கர்த்தாக்களை இனங்கண்டறியத் தந்த பெருமையும் ஈழகேசரிக்குள்ளது. ஒரு காலகட்டத்தின் இலக்கிய சக்தி ஈழகேசரியெனில் அது ஒருபோதும் மிகையாகாது”*
என்கின்றார்.
இந்த வகையில் ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளான இலங்கையர்கோன், சி. வைத்தியலிங்கம், சம்பந்தன் முதலியோரது கணிசமான சிறுகதைகளுக்கு ஈழகேசரியே களமமைத்துக் கொடுத்தது. இவர்களதும் ஏனையோரதும் மணிவாசனை மிக்க படைப்புகள் ஈழகேசரியிலேயே முதன்முதலாக வெளிவந்ததோடு குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பு நாவல்களும் வெளிவந்தன. (இவான் துர்கனேவ், ரெனிசன், தாமஸ் ஹார்டி, வில்ஹெல் ஸ்மித் போன்றோரின் நாவல்கள்) ஈழகேசரி கவிதைத்துறைக்கும் பங்களித்தது. ஈழத்தின் முதலாவது புதுக்கவிதையெனக் கொள்ளப்படும் வரதரின் ‘ஓர் இரவினிலே’ என்ற கவிதை ஈழகேசரியிலேயே வெளிவந்தது. ஈழகேசரி நாவல்துறைக்கும் பங்களித்தது. இந்தவகையில் சச்சிதானந்தனின் ‘அன்னபூரணி, வரதரின் ‘சோமுவின் காதல்‘, சம்பந்தனின் “பாசம்', சொக்கனின் 'மலர்ப்பலி", வ.அ.இராசரத்தினத்தின் "கொழுகொம்பு’ போன்றன முக்கியமானவை. ஆயினும் ஈழகேசரியில் ஏற்பட்ட போதாமையே மறுமலர்ச்சி இதழை தோன்றவைத்தது என்பர். இவ்வாறான பரந்த முக்கியத்துவம் ஈழகேசரிக்கு இருந்தமையினாலேயே கா. சிவத்தம்பி,
“இலங்கையின் இலக்கிய இதழியல் நடவடிக்கைகளைப்
பர்க்கின்றபோது ஈழகேசரி முக்கிய இடம் பெறுகின்றது”*
என்றார்.
ஈழத்துப் பத்திரிகைகளின் போக்கிலே 1940கள் தொடக்கம் ஒரு மாற்றம் ஏற்படத் தொடங்கியது. ஈழத்தில் முதன்முதலாக இக்காலப்பகுதியிலேயே இலக்கியச் சஞ்சிகைகள் தோன்றத் தொடங்குகின்றன. இந்தவகையில் மறுமலர்ச்சி (1946), பாரதி (கொழும்பு - 1948), பாரதி (மண்டூர் - 1948) என்பன குறிப்பிடத்தக்கன. இதன்பின்னர் இத்தகைய
- 5 -

Page 13
தனித்துத் தெரியும் திசை
இலக்கிய சஞ்சிகைகளுக்கும் பத்திரிகைகளுக்கும் இடையே பரஸ்பரம் ஊடாட்டம் ஏற்படுகின்றது. இத்தகைய சஞ்சிகைகளின் இலக்கியப் போக்குகளோடு சில காலப்பகுதியிலே பத்திரிகைகள் இணைந்தும் சில காலத்தில் விலகியும் செயற்பட்டன.
இலக்கிய சஞ்சிகைகள் பரவலாக வெளிவந்த மேற்குறிப்பிட்ட சூழலில் சுதந்திரன் (1947) பத்திரிகையின் வரவு ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சிப்போக்கிலே கவனத்துக்குரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றது .
நவீன இலக்கியத்தின் மீது நாட்டம் மிக்க அ. ந. கந்தசாமி, அ. செ. முருகானந்தன், கே. கணேஷ், சில்லையூர் செல்வராசன் போன்றோர் ஆசிரியர் குழுவிலே இடம்பெற்றிருந்த சுதந்திரனின் முதலாவது தசாப்த காலத்தில் இலங்கைத் தமிழ் இலக்கியம் புதிய வேகமும், வீறும் பெற்றது. தமிழரசுக் கட்சியின் ஏடாக விளங்கிய சுதந்திரன் தமிழ்த்தேசிய (மொழி) எழுத்துக்களுக்கே முதன்மை கொடுத்தது. ஆனால் பல்வேறு இலக்கியக் கொள்கை சார்ந்தவர்களுக்கும் அது இடம்கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது. ஈழத்தின் பல பிரதேச எழுத்தாளர்களுக்கும் முதன்முதலாக சுதந்திரன் இடமளித்ததைக் காணலாம். குறிப்பாக மட்டக்களப்பு எழுத்தாளர் பலர் சுதந்திரன் ஊடாகவே முதன்முதலாக இனங்காணப்பட்டனர்.
இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளைப் பொறுத்தவரை 1950 களின் நடுப்பகுதியைத் தொடர்ந்து இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கியம் தரும் பல திருப்பங்கள் ஏற்பட்டன. சமூகப் பிரக்ஞை கொண்ட எழுத்தாளர்கள் இறுக்கமாகத் திரண்டு இலங்கைப் பத்திரிகைகளில் இலங்கை எழுத்தாளர்களுக்கு இடம்வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்து வலியுறுத்தினர். இதனால் பிரக்ஞை பூர்வமாக இலக்கிய உணர்வு (தேசிய இலக்கியம், மண்வாசனை இலக்கியம்) பல்வேறு காரணிகளாலே இவ்வேளை உருவாகத் தொடங்கியது. இதனால், நா. சோமகாந்தன் கூறுவதைப் போல,
'தினகரனின் மீது இருந்த மரபு வழியாளர்களின் ஆதிக்கமும் வீரகேசரி மீதிருந்த தென்னிந்திய எழுத்தாளர்களின் ஆதிக்கமும் விடுபட்டு இலங்கையின்
- 6 -

த. அஜந்தகுமார்
பல்வேறு பிரதேசங்களினதும் மணிவாசனை மிக்க இலங்கைக்கெனத் தனித்துவமானதொரு தமிழ் இலக்கியம் செழுமை பெற்று வளர நல்ல சூழ்நிலை ஏற்பட்டது’’
வீரகேசரியின் ஆசிரியர் குழுவில் எஸ். எம். கோபாலரத்தினம், சில்லையூர் செல்வராசன், ராஜகோபால், கார்மேகம் போன்றோர் இக்காலத்தில் இடம்பெற தினகரன் ஆசிரியராக கைலாசபதி (1957 - 1961) அமர்ந்தார். இதன்பிறகு 1950 இல் இனஎழுச்சி தொடர்பான எண்ணங்களினைப் பிரதிபலித்த தினகரன், தேசிய இலக்கியக் கோட்பாட்டினையும் தனது பிரதான இயல்பாகக் கொண்டியங்கத் தொடங்கிற்று. இலங்கையில் வாழுகின்ற தமிழ்பேசும் மக்களின் மனோஉணர்வுகளை, வாழ்வு முறைகளை, சம்பிரதாயங்களை, அடிப்படை இயல்புகளை அவர்களது பேச்சுமொழி வழக்கு, பிரதேச உணர்வுகளின் ஊடகத்திற்கு ஊடாகவே வெளியிட வேண்டுமென்ற கருத்துருவம்; ஒரு செழுமையான வடிவத்தினைப் பெறுவதற்குத் தினகரன்’ முன்னோடியாய் நின்றது . அந்தச் சிந்தனைக் கருத்தினைக் கலாசார துறையிலே புகுத்துவதிலே தன்னால் இயன்றளவு பங்கினை ஏற்று இக்கருத்தினை அடிநாதமாகக் கொண்டு புதிய படைப்பாளிகளின் ஆக்கங்களை முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிப்பதிலே தலைமைத்துவ நிலையைத் தினகரன் வகித்து வரலாயிற்று. இதன்மூலம் புனைகதை இலக்கியத் துறையிலே மகத்தான மாற்றம் சாத்தியமாயிற்று. இளங்கீரன், செ. கணேசலிங்கன், கே. டானியல், எஸ். பொ, என். கே. ரகுநாதன், தாழையடி சபாரத்தினம், வரதர், சொக்கன், டொமினிக் ஜீவா, அருள் செல்வநாயகம், வ. அ. இராசரத்தினம், அ. ந. கந்தசாமி, நீர்வைப் பொன்னையன் முதலிய படைப்பாளிகளும் -
முருகையன், சில்லையூர் செல்வராஜன், மஹாகவி முதலிய கவிஞர்களும் -
க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, கனக. செந்திநாதன் முதலான விமர்சகர்களும் -
தேசிய இலக்கியம் என்ற கோட்பாட்டினைத் தழுவித் தினகரனிலே
அடிக்கடி எழுதிவரலாயினர். இதன் தாக்கத்தினால் புதிய தலைமுறை
எழுத்தாளர் அணி ஒன்று உருவாக வழிவகுத்ததென்பது இலக்கிய - 7 -

Page 14
தனித்துத் தெரியும் திசை
ஆய்வாளர்களின் ஒருமித்த அபிப்பிராயமாகும். அத்தோடு தினகரன் முஸ்லிம் எழுத்தாளர்களுக்குப் பரந்த களத்தைக் கொடுத்தது, கொடுத்து வருகின்றது.
தினகரன் முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளித்தது போன்று பொருளாதாரத்தினால், கல்வியினால் பிற்பட்டுப் போயிருந்த மலையகத் தமிழர்களின் மேம்பாட்டுக்கான முயற்சிகளுக்குத் தூண்டுதலாகத் திகழ்ந்த வீரகேசரி, மலையக இலக்கியத் துறையின் எழுச்சிக்குப் பணிபுரிந்தது. மலையகத் தமிழ் இலக்கியம் முழுமையான இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் ஓர் அங்கம் என்பதனை ஊக்குவிப்பதற்காக வீரகேசரி நடத்திய சிறுகதைப் போட்டி மூலம் பல சிறந்த எழுத்தாளர்கள் உருவாகினர். ஏற்கெனவே நவஜீவன் பத்திரிகையும் மலையக எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்திருந்தது.
1970களில் வீரகேசரி ஈழத்து நாவல் வளர்ச்சிக்குப் பங்காற்றியது. தமிழக ஜனரஞ்சக நாவல்கள், வெளியீடுகள் தடைவிதிக்கப்பட்ட சூழலில் மாதமொரு தமிழ் நாவல் வெளிவந்து புதிய எழுத்தாளர்கள், பிரதேச நாவல்கள் வாசகர் பெருக்கம் ஏற்பட வழி செய்திற்று. இது தொடர்பாக நா. சுப்பிரமணியம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“1969 - 1976 வரையான ஏழாண்டு காலப்பகுதியில் ஈழத்தில் வெளிவந்த 85 நாவல்களில் 45 வீரகேசரிப் பிரசுரங்கள் என்பதனால் ஈழத்து தமிழ் நாவல் வரலாற்றுப் போக்கினை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரணியாகவே வீரகேசரி இயங்கி வந்துள்ளது” " என்று குறிப்பிடுகின்றார். மேலும், ,
“. இலங்கையில் கலை இலக்கிய வளர்ச்சிக்கெனத் தனியான சஞ்சிகைகளோ, வெளியீடுகளோ நிலையாக வெளிவராததால் கலையையும் இலக்கியத்தையும் ஊக்குவித்து வளர்க்கவேண்டிய பொறுப்பிலும் வீரகேசரி பல காலமாக ஈடுபட்டு வருகின்றது' "
என்று அதன் ஆசிரியர் வி. தேவராஜ் கூறுவதனை மறுதலிக்க முடியாது.
- 8 -

த. அஜந்தகுமார்
1961இல் வரதர் வெளியிட்ட புதினம் முக்கியமான இலக்கியப் பங்களிப்பை வழங்கியிருந்தது.
1968இல் தினபதி பத்திரிகையின் வரவு புதிய எழுத்தாளர்கள் பலர் உருவாகுவதற்கு களமானது. தினபதி கவிதா மண்டலம் ஊடாகப் பல இளங்கவிஞர்கள் இனங்காணப்பட்டனர். தினம் ஒரு சிறுகதைத் திட்டத்தையும் இது நடைமுறைப்படுத்தியிருந்தது. இவ்வாறே இன்சான் பத்திரிகையூடாகப் புதிய தலைமுறை முஸ்லிம் எழுத்தாளர் பலர் இனங்காணப்பட்டனர்.
இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சிப் பணியிலே பிரதேசப் பத்திரிகைகள் வழங்கியுள்ள பங்களிப்புகளும் முக்கியமானவை. ஈழகேசரி 1958 இல் தன் பணியினை நிறுத்திக்கொள்ள 1959இல் ஈழநாடு தொடங்கப்பெற்றது. ஈழநாடே பிரதேசப் பத்திரிகைகளின் வரவிற்கு வழிவகுத்தது. ஈழகேசரியின் நிறைவுக்கால ஆசிரியராக இருந்த இராஜ. அரியரத்தினமே ஈழநாடு வார ஏட்டின் முதல் ஆசிரியராகப் பதவியேற்றார். அதனால் ஈழகேசரியின் இலக்கியப் பணிகளை அவர் இதன்மூலம் தொடர்ந்தார். ஈழநாடு தனது பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி நட்ாத்திய இலக்கியப் போட்டிகளின் மூலம் புதிய எழுத்தாளர் பரம்பரை ஒன்றினை உருவாக்கித் தந்தது. 1995 வரையும் இதன் பணி தொடர்ந்தது. 12 குறுநாவல்கள், 18 நாவல்கள், 799 சிறுகதைகள் என்று இலக்கியப் பணியில் ஈழநாடு தன்னை விரித்திருந்தது.
1962இல் கணிடியில் தோன்றிய மலைமுரசு சில காலமே வெளிவந்திருந்த போதிலும் மலையக எழுத்தாளர் பலரின் இலக்கியப் பரிசோதனைக் களமாகத் திகழ்ந்ததால் “மலையகத்தின் மணிக்கொடி" எனப் புகழ்ந்துரைக்கப்பட்டது. 1983இல் கண்டியில் வெளிவந்த வார இதழான செய்தி தனது 10 ஆண்டு ஆயுட்காலத்தில் இலக்கிய விமர்சனங்கள், கவிதைப் பரிசோதனைகள், இலக்கிய ஆய்வுக்கட்டுரைகள், நாவல்கள் முதலியவற்றுக்குக் குறிப்பிடக்கூடிய களமாக விளங்கிற்று.
தினபதி தினப் பத்திரிகையின் வார இதழான “சிந்தாமணி’யும் தன்னாலியன்ற பணியை நல்கியது எனலாம்.
- 9 -

Page 15
தனித்துத் தெரியும் திசை
1980கள் இன்னொரு விதத்தில் தமிழ்ப் பத்திரிகை வளர்ச்சிப் போக்கிலே மாற்றங்கள் ஏற்படக் காரணமாயிற்று. இக்காலப் பகுதியிலே வேரூன்றி வளரத் தொடங்கிய இனவழித் தமிழ்த் தேசிய உணர்வுகளோ படைப்புகளோ தேசியப் பத்திரிகைகளிலே வரமுடியா நிலையிலே பிரதேச மட்டத்திலே பல பத்திரிகைகள் தோன்றின. இந்தவகையில்,
ஈழமுரசு (1984)
உதயன் (1985 - சஞ்சீவி)
திசை (1989)
முரசொலி (1989)
ஈழநாதம் (1990)
இவை உருவாகி அத்தகைய காத்திரமான பல படைப்புகள் உருவாக வழிவகுத்தன.
80 கள் போன்றே 90 களும் பிறிதொரு விதத்தில் ஈழத்துப் பத்திரிகை வரலாற்றில் முக்கியம் பெறுகின்ற காலமாகின்றது. இக்காலத்தில் சரிநிகள் (1991) பத்திரிகையின் வரவு கவனத்திற்குரியதாகின்றது. ஈழத்தில் (தமிழில்) முதல் மாற்றுப் பத்திரிகையாக விளங்கிய “சரிநிகர்’ ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சிக்கு வழங்கியுள்ள பங்களிப்புக் காத்திரமானது. சரிநிகர் (பின்னர் நிகரி, இப்போது சரிநிகர் என்ற பெயரோடு சஞ்சிகையாக வெளிவருகிறது) பத்திரிகை ஊடாக இனங்காணப்பட்ட புதிய இளைய தலைமுறை ரீழத்து நவீனகவிதை வளர்ச்சிக்கும் போக்கிற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளதனை மறுக்கவியலாது.
1998 இல் இருந்து வெளிவரும் தினக்குரலின் வார வெளியீடு ‘பனுவல்’ போன்ற இலக்கியப் பகுதிகள் மூலம் தன் பங்களிப்பை வழங்குகின்றது.
2001 இல் இருந்து சிறிது காலம் வெளிவந்த வலம்புரியின் வார இதழான ‘சங்குநாதம்’ புதிய தலைமுறைக்குக் களம் கொடுத்தது.
இவ்வாறு ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில் பத்திரிகைகள் காலந்தோறும் பங்களிப்புச் செய்துள்ளன. ஆனால் இதில் எழுத்தின் கலைப் பெறுமானத்தில் தீவிர கவனம் செலுத்தியவையாக 'திசையும் ‘சரிநிகரு'மே - 10 -

த. அஜந்தகுமார்
விளங்கின. அடுத்து நவீன இலக்கிய வடிவத்தில் ஒன்றான சிறுகதைக்கு ஈழத்தில் பத்திரிகைகள் அளித்த பங்களிப்பை நோக்குவோம்.
2. ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் பத்திரிகைகள்
உலகப் பொதுவாக நோக்குகின்றபோது சிறுகதை வளர்ச்சிக்குப் பத்திரிகைகளே அடிப்படையாக இருந்துள்ளதைக் காணலாம். இதனாலேயே கநா.சு,
“செய்தித்தாள் உலகத்திற்காகத் தோன்றிய ஓர்
இலக்கியத்துறை உருவம் சிறுகதை என்பது உலக
இலக்கிய வரலாற்றில் தெரியவரும் உண்மை” " என்று குறிப்பிடுகின்றார்.
உலக இலக்கிய வரலாற்றைப் போலவே தமிழ்ச் சிறுகதை தோற்றத்திலும் வளர்ச்சியிலும் பத்திரிகைகள் பங்காற்றின. இதனாலேயே எம்.வேதசகாயகுமார்,
“தமிழ்ச் சிறுகதையின் வரலாறு ஆரம்பம் முதலே இப்பத்திரிகை வரலாற்றோடு பின்னிப் பிணைந்ததாகவே காணப்படுகிறது” " என்று குறிப்பிடுகின்றார். மேலும் பேராசிரியர் கா. சிவத்தம்பி,
“பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் கூற்றில் தமிழ்ப் பத்திரிகைகள் தோன்றத் தொடங்குகின்றன. தினமணி, சுதேச மித்திரன் போன்ற பத்திரிகைகள் வெளிவரத் தொடங்குகின்றன. அவற்றில் பிரசுரிக்கப்படுவதற்காகக் கதைகள் எழுதப்படலாயின. அவ்வாறு எழுதப்படும் கதைகள் சிறிய அளவினவாய் இருக்கவேண்டுவது அவசியமாகின்றது. சிறுகதையின் உருவ வளர்ச்சிக்குப் பத்திரிகைகளே முக்கிய காரணமாக அமைந்தது என்பதனை உலகச் சிறுகதை இலக்கிய வரலாறு கட்டும்”* என்று குறிப்பிடுகின்றார். பத்திரிகைகளில் பிரசுரிக்கத்தக்க அளவு சிறிய கதைகளை எழுதியவர்களுள் பாரதி, அ. மாதவையா, வவேசு ஐயர் போன்றோர் முக்கியமானவர்கள்.
- 1 -

Page 16
தனித்துத் தெரியும் திசை
ஆங்கில வாழ்வு முறையை அறிந்த, ஆங்கிலம் படித்த வகுப்பினர் தமிழ் நாட்டிலும் அத்தகைய சுதந்திர வாழ்வுக்கான சூழ்நிலை உண்டாக வேணிடுமெனக் கருதிப் பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் அக்காலத்தில் (1910 - 1920) வெளியிட்டனர். அதீத கைய சூழ்நிலையில் தானி சிறுகதை தமிழில் வளரதி தொடங்கியது. தமிழின் நவீனத்துவம் என்பது புதியனவற்றின் வருகை தமிழில் உள்வாங்கப்படுவதன் வரலாறு ஆகும். அ. மாதவையாவின் பஞ்சாமிர்தம், வ.வே.சு. ஐயரின் பாலபாரதி ஆகியன சிறுகதையின் வளர்ச்சிக்கு முக்கியமானவையாக விளங்கின. 1920களுக்குப் பிறகு பல்வேறு அரசியல் சமூகப் பிரசாரத் தேவைகளுக்குக் கவிதைகள் பயன்பட்டதைப் போலக் கதைகளும் பயன்பட்டன. இப்பணியைச் செய்த பத்திரிகைகளுள் தமிழ்நாடு, தேசபக்தன், நவசக்தி, சுதந்திரச் சங்கு, ஆனந்தவிகடன், சுதேச மித்திரன் போன்றன முக்கியமானவை. இவற்றில் சிறுகதைகள் இடம்பெற்றனவெனினும் அவை இலக்கிய சோதனையைத் தம் நோக்கங்களில் ஒன்றாகக் கொள்ளவில்லை. மணிக்கொடியே இவ் இலட்சியத்துடன் தோன்றிய முதல்ப் பத்திரிகை மணிக்கொடி என்பது இலக்கிய வளர்ச்சி பற்றித் தோன்றிய ஓர் இயக்கத்தின் சின்னம். தமிழின் முதலாவது காத்திரமான இலக்கிய நவீனத்துவ இதழாகத் தோன்றிய மணிக்கொடியுடன்தான் சமூக மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்களைத் தனிமனித உணர்வு நிலை நின்று சித்திரிக்கும் பண்பு, கலாநேர்த்தியுடன் செய்யப்படும் முறைமை வளம்டையத் தொடங்குகின்றது. 1933 - 35 வரை பிரதானமாக அரசியல் விமர்சன இதழாகவே வெளிவந்த மணிக்கொடி 1935 - 38 இல் சிறுகதை இதழாகவே வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று குறிப்பிடத்தக்க ஒரு பரம்பரை சிறுகதை வரலாற்றில் ஒளிவிடத் தொடங்கியது. 1930 - 1950 வரையான 20 வருடங்களையும் தமிழ் இலக்கிய உலகில் மணிக் கொடிக் காலம் என வரையறை செய்துகொள்ளலாம். இந்த இருபது வருடங்களையும் தமிழ்ச் சிறுகதை மரபில் பொற்காலம் எனக் கருதுவதில் தவறேதுமில்லை.
நவீன இலக்கிய வடிவங்களுள் முக்கியமான நாவல், சிறுகதை என்பன ஈழத்தில் வெளிவருவதற்குப் பத்திரிகைகளே களம் அமைத்துக் கொடுத்தன. ஈழத்துச் சிறுகதையின் தோற்றத்திற்கான ஆரம்ப முயற்சிகளாக
- 12

த அஜந்தகுமார்
ஆர்னால்ட் சதாசிவம்பிள்ளை உதயதாரகையில் (1860 களில்) எழுதிய கதைகளைக் குறிப்பிடலாம். இதனாலே ஈழத்தினது மாத்திரமல்ல தமிழினது முதற் சிறுகதையாசிரியராக இவரை சிட்டியும், சோ. சிவபாதசுந்தரமும் கொள்கின்றனர். ஆயினும் இவரது கதைகளை சிறுகதைகள் என்ற வடிவத்திற்குள் சொல்லிக்கொள்வதில் சில இடர்பாடுகள் உள்ளதும் கவனத்திற்குரியது.
உதயதாரகை இவ்வாறு ஆரம்ப முயற்சிக்குக் கைகொடுத்ததன் பிறகு ஈழகேசரி, மறுமலர்ச்சி, சுதந்திரன், ஈழநாடு, வீரகேசரி, தினகரன், சஞ்சீவி, முரசொலி, திசை, சரிநிகர், தினக்குரல் என்று ஏராளமான பத்திரிகைகள் காத்திரமான பங்களிப்பை வழங்கின.
1930கள் தொடக்கம்தான் சிறுகதை ஈழத்தில் உருவப் பிரக்ஞையுடன் எழுதப்படலாயிற்று. இதற்கு அடிப்படையாக 1930 இல் தோன்றிய ஈழகேசரி விளங்கியது. முதலில் நவீன தமிழ் இலக்கியத்தில் அதிக ஈடுபாடு காட்டாத ஈழகேசரியை சோ. சிவபாதசுந்தரம் தான் நவீன தமிழ் இலக்கியத்தின் தொட்டிலாக்கினார். இதனால் இலங்கையில் தோன்றிய சிறுகதை இலக்கிய முயற்சி ஈழகேசரியுடன் தொடர்புற்றதாகவே விளங்கியது. இதனை சோ. சிவபாதசுந்தரம், “..ஏற்கெனவே ஆனந்தவிகடன் கலைமகள் மூலம் புதிய தமிழ் முழக்கத்தில் ஆசை கொண்டிருந்த ஈழத்தவர்களில் உயர்தரத் தமிழ்க்கல்வி கற்றுக் கொண்டிருந்த தமிழ் ஆசிரியர்களும் மற்றவர்களும் மணிக்கொடியினைத் தொடர்ந்து அந்தவழியில் புதிய வடிவம் பெற்ற ஈழகேசரியில் புதிய வகைச் சிறுகதை எழுதினார்கள்' " என்று குறிப்பிடுகின்றார்.
ஈழகேசரியில் 1930 - 1958 காலகட்டத்தில் 138 எழுத்தாளர்களால் 513 சிறுகதைகள் எழுதுப்பட்டுள்ளன. பெரும்பாலானவை சமூகச் சிறுகதைகளாகவும் 18 கதைகள் வரலாற்றுக் கதைகளாகவும் விளங்குகின்றன. சு. நல்லையா, வரதர், அ. செ. முருகானந்தன், வ. அ. இராசரத்தினம், கே. டானியல், புதுமைலோலன், க. சிவகுருநாதன் (கசின்), இலங்கையர்கோன், சி. வைத்தியலிங்கம், இ. நாகராஜன், பவன், சு.வே.எஸ்.பொ. ஆகியோர் அதிகளவிலான சிறுகதைகளை ஈழகேசரியில்
- 13 -

Page 17
தனித்துத் தெரியும் திசை
எழுதியுள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஈழகேசரிப் பண்ணையில் முகிழ்த்தவர்கள் எனக் கொள்வதில் தவறில்லை. இன்று கணிப்பிற்குரிய எழுத்தாளர்களாக விளங்குகின்ற எஸ். பொ, டானியல், சிற்பி, டொமினிக் ஜீவா, என். கே. ரகுநாதன், நந்தி, குறமகள், இ. நாகராஜன், அ. ந. கந்தசாமி, சோமகாந்தன் ஆகியோரின் ஆரம்ப எழுத்துகள் ஈழகேசரியில்தான் வெளிவந்தது என்பது முக்கியமானது. மூன்று தலைமுறைப் படைப்பாளிகளின் களமாக ஈழகேசரி விளங்கியிருக்கிறது. ஈழகேசரியில் வெளிவந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து தொகுத்த செங்கைஆழியான்,
"ஈழத்தின் உன்னதமான தமிழ்ச்சிறுகதைகள் எனத் தெரிவு செய்யப்படக்கூடிய ஏழு சிறுகதைகள் ஈழகேசரியில் வெளிவந்துள்ளன. ஆனந்தனின் தண்ணீர்த்தாகம் (1939), நவாலியூர் சோ. நடராஜனின் கற்சிலை (1941), அ. செ. முருகானநிதனின் வணடிச் சவாரி (1944), இலங்கையர்கோனின் வெள்ளிப்பாதசரம் (1944), இராஜ. அரியரத்தினத்தின் வயலுக்குப் போட்டார் (1945), கனக. செந்திநாதனின் ஒருபிடி சோறு 1945), வ. அ. இராசரத்தினத்தின் தோணி (1953) எனும் ஏழு சிறுகதைகளும் ஈழத்திற்குப் பெருமை சேர்க்கும் உன்னதமான சிறுகதைகளாகும்' " என்று குறிப்பிடுகிறார். இக்கருத்து உண்மை என்பதனை இக்கதைகளின் நிலைபேறு எமக்கு உணர்த்துகின்றது. 1954இல் மண்வாசனை புனைகதைகளில் முக்கிய அம்சமாக வலியுறுத்தப்படுவதற்கு முன்னரே ஈழகேசரியின் கதைகளில் மணிவாசனையும் யதார்த்தப் பணிபும் விரவி
அமைந்து இருந்தன.
ஈழகேசரிப் பண்ணையில் ஒன்றுசேர்ந்த எழுத்தாளர்களுக்குப் புத்திலக்கியம் பற்றிய தெளிவும், நவீன இலக்கிய வகைகளும் தெரிந்திருந்தன. அவர்களில் சிலர் ஒன்று சேர்ந்து 1942இல் மறுமலர்ச்சி சங்கத்தினை உருவாக்கியதன்மூலம் இலக்கியம் பற்றிய பொதுக்கருத்திற்கு அவர்கள் வந்துள்ளனர் எனலாம். இந்தவகையில் 1946இல் அவர்கள் வெளியிட்ட 'மறுமலர்ச்சி' மணிக்கொடி போல ஈழத்துச் சிறுகதைத்துறைக்கு புதிய
- 14 -

த அஜந்தகுமார்
பரிமாணத்தை அளித்தது. ஈழத்துக்கெனத் தனிச்சிறுகதைக்கான மரபு தோன்றுவதற்கான வித்து இக்காலப்பகுதியில் இடப்படுகின்றது.
ஈழகேசரி, மறுமலர்ச்சியை அடுத்து சுதந்திரனும் ஈழத்துச் சிறுகதைத்துறைக்கு பணி செய்துள்ளது. சுதந்திரன் ஓர் அரசியல் பத்திரிகையாக விளங்கியபோதும் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் ፵® தேசியப் பத்திரிகையாகவே இறுதிவரை செயற்பட்டுள்ளது. சுதந்திரனின் மாத சஞ்சிகையான “சுடரும் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்கு ஆரோக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளது. “சுதந்திரன் வெளியாகிய 32 ஆண்டு காலத்தில் 582 சிறுகதைகள் வெளியாகியுள்ளன.” “
உதயணன், நாவேந்தன், தீவான் (மு.பொ), பாலேஸ்வரி, தையிட்டி அ. இராசதுரை, என். கே. ரகுநாதன், புதுமைலோலன், ஏ.வியிகோமஸ், மு. தளையசிங்கம், செங்கை ஆழியான், வ. அ. இராசரத்தினம், செம்பியன் செல்வன், தேவன், முனியப்பதாசன், நெல்லை க. பேரன், குப்பிழான் ஐ. சண்முகன், அ. முத்துலிங்கம், க. நவசோதி, கே.எஸ். சிவகுமாரன், திருமலை சுந்தா . என ஏராளமான படைப்பாளிகள் பங்களித்துள்ளார்கள்.
சுதந்திரனின் குறிப்பிடத்தக்க சிறப்பு யாதெனில் ஈழகேசரி, ஈழநாடு, மறுமலர்ச்சி போன்று பிரதேச படைப்பாளிகளோடு குறுகிவிடாது இலங்கை முழுவதிலும் பரந்துபட்டு வாழுகின்ற படைப்பாளிகள் அனைவரதும் சங்கமமாக சுதந்திரன் விளங்கியுள்ளது. ஈழகேசரியில் வ. அ. இராசரத்தினம் எழுதியமை புறநடை.
முற்போக்கு, மறுமலர்ச்சி என்று கோட்பாட்டு ரீதியாகப் பிரிந்திருந்த எழுத்தாளர்கள் எல்லோரும் சுதந்திரனில் ஒன்றுபட்டு எழுதியுள்ளமை சிறப்பு. ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் சுதந்திரனின் பங்களிப்பைப் புறக்கணிக்க முடியாது.
சுதந்திரனை அடுத்து ‘ஈழநாட்டின் பங்களிப்பும் சிறுகதைத் துறைக்கு முக்கியமானதாகும். இதன் ஆயுட்காலத்தில் 799 சிறுகதைகள் வெளிவந்துள்ளன". ஈழத்தின் முன்னோடிப்படைப்பாளிகளான சம்பந்தன், இலங்கையர்கோன், இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த இ. நாகராஜன்,
- 15 -

Page 18
தனித்துத் தெரியும் திசை
தாழையடி சபாரத்தினம், கே. டானியல், எஸ். அகஸ்தியர், கே.வி. நடராஜன், புதுமைலோலன் போன்றோரும் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த வன்னியூர் கவிராயர், ஐந்தாந் தலைமுறையைச் சேர்ந்த ஜோர்ஜ் சந்திரசேகரன், செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், செ. யோகநாதன், செ. கதிர்காமநாதன், அங்கையன், சிதம்பரபத்தினி, துருவன், பவானி ஆகியோரும் ஆறாந் தலைமுறையைச் சேர்ந்த முனியப்பதாசன், மா. பாலசிங்கம், தி. ஞானசேகரன், தெணியான், குப்பிழான் ஐ. சண்முகன், நந்தினி சேவியர், நெல்லை க. பேரன், கே. ஆர், டேவிட், புலோலியூர், ஆ. இரத்தினவேலோன், இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் போன்றோரும் ஈழநாடு இதழ்களில் சிறுகதை எழுதியதன் மூலம் ஈழத்துச் சிறுகதை உலகிற்கு அறிமுகமான ஏழாந்தலைமுறையைச் சேர்ந்த வ. ந. கிரிதரன், சி. கதிர்காமநாதன், இயல்வாணன், தேவிபரமலிங்கம், திக்கம் சிவயோகமலர் ஜெயக்குமார், சந்திரா தியாகராசா போன்றோரும் என்று ஈழநாட்டிற்குப் பல தலைமுறைப் படைப்பாளிகளும் தமது பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். பிரதேச பத்திரிகையாக முகிழ்த்த ஈழநாடு ஈழத்துச் சிறுகதைத் தடத்திற்கு தன்னால் இயன்றளவு பங்களிப்பை வழங்கியுள்ளது எனின் மிகையில்லை.
வீரகேசரி, தினகரன் போன்ற பத்திரிகைகள் தமது கால நூற்றாண்டு வரை தென்னிந்திய எழுத்தாளர்களின் கூடாரமாக விளங்கின. ஆனால் 1950 களுக்குப் பிறகு ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் அக்கறை கொள்ளத் தொடங்கின. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இலக்கிய இயக்கம் வலுவடைந்து வரும் நாட்களில் க. கைலாசபதி தினகரன் பத்திரிகையிற் சேர்ந்தார். சேர்ந்த சில நாட்களுக்குள் அவர் தினகரன் வாரப் பதிப்பின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அவ்வாறு நியமனம் பெற்றதும் அவர் ஈழத்தினைக் களமாகக் கொண்டு ஈழத்து வாழ்க்கைப் பிரச்சினைகளை இலக்கியப் பொருளாகக் கொண்ட சிறுகதைகள் பிரசுரமாகின. அவ்வாறு வெளியிடப்பெற்ற சிறுகதைகள் மண்வாசனை என்பதற்கு உதாரணங்களாக விளங்கின. அவர் முழுப் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றதும் தினகரன் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் முதன்மை பெறத் தொடங்கியது. அதன்பிறகு தினகரன் ஆசிரியர்களாக வந்த இ. சிவகுருநாதன், ராஜபூீரீகாந்தன் போன்றோர் சிறுகதைத் துறைக்கு தினகரனைப் பயன்படுத்த வழிசெய்தார்கள்.
- 16 -

த அஜந்தகுமார்
தினகரன் நடாத்திய சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற கதைகள் பரிசுக்கதைகளாக (1997) வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தினகரனைப் போலவே வீரகேசரியும் காலத்துக்குக் காலம் சிறுகதைப் போட்டிகளை நடாத்தி அநேக புதிய எழுத்தாளர்களை உருவாக்கியதுடன் இலங்கையில் பல பிரதேசங்களிலும் பரவலாக வாழும் மக்களின் எண்ணங்கள், ஏக்கங்கள், துன்பங்கள், வாழ்க்கை முறை, பேச்சு வழக்கு முதலியவற்றை வெளிப்படுத்தும் முதிர்ச்சி பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் பிரசுரித்து இலக்கிய வளர்ச்சி மேம்பட வழிசெய்து வந்துள்ளது. கதைக்கனி போன்ற சிறுகதைத் தொகுதிகளையும் வீரகேசரி வெளியிட்டுள்ளமை கவனத்திற்குரியது.
ஈழத்தில் 'தினமொரு சிறுகதை’ என்னும் இலக்கிய முயற்சியின் முன்னோடியாக வீரகேசரியே விளங்கியது. இதன் தொடர்ச்சியாகவே ‘தினபதி’யும் தினமொரு சிறுகதைத் திட்டதீதையும் நடைமுறைப்படுத்தியது. மூத்த எழுத்தாளர்களின் சிபாரிகடனேயே இக்கதைகளை இளம் எழுத்தாளர்கள் அனுப்பவேண்டி இருந்ததால் தரமான கதைகளே பிரசுரமானமை முக்கிய விடயமாகும்.
முரசொலி, வெள்ளிநாதம் ஆகிய இதழ்களும் ஈழத்துச் சிறுகதைத் துறைக்குப் பங்காற்றியிருக்கின்றன. முரசொலியில் ஒவ்வொரு மாதமும் வந்த சிறுகதைகள் திறனாய்வு செய்யப்பட்டு அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் பிரசுரமாகியமை காத்திரமான சிறுகதைகள் வெளிவருவதற்கு துணைசெய்தது எனலாம்.
இதேபோல சஞ்சீவி வார இதழும் புதிய தலைமுறைப் படைப்பாளிகளை ஈழத்திற்குத் தந்துள்ளது. தாட்சாயணி சாரங்கா, குமுதினி, இராகவன், உடுவில் அரவிந்தன், கோகுலராகவன் போன்ற படைப்பாளிகள் சஞ்சீவி உருவாக்கியவர்களே, இங்கிருந்து. என்ற சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதிய குப்பிழான் ஐ. சண்முகன்,
“இந்த சஞ்சீவி எழுத்தாளர்களை (இவர்களில் பலரும்
சஞ்சீவி மூலம் அறிமுகமானவர்கள் என்றே நினைக்கிறேன்)
– 17 ۔

Page 19
தனித்துத் தெரியும் திசை
அவர்களின் கதைகள் மூலம் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தேன்” "
என்று குறிப்பிடுவதன் மூலம் சிறுகதை வளர்ச்சியில் சஞ்சீவியின் பங்கு தெளிவாகின்றது. திசை, சரிநிகள் ஆகிய இரண்டு பத்திரிகைகளும் எழுத்தின் கலைப் பெறுமானத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தவை. சரிநிகர் தொண்ணுாறுகளுக்குப் பின்னான சிறுகதை வளர்ச்சியில் புதிய தலைமுறையினர் சிலரைக் காத்திரமாக உருவாக்கியுள்ளது.
1989இல் இருந்து ஒன்றரை வருட காலம் வார இதழாக
வெளிவந்த திசை’ இதழ் ஈழத்துச் சிறுகதைத்துறைக்கு வழங்கியுள்ள பங்களிப்பைக் கவனப்படுத்துவதே என் ஆய்வின் நோக்கமாகும்.
அடிக்குறிப்புகள்
1.
சுப்பிரமணிய அய்யர், ஏவி, (மூன்றாவது பதிப்பு - 1985), தற்காலத் தமிழ் இலக்கியம், சென்னை, பக்கம் 161 - 162 சிவகுருநாதன், இ, (மீள் பதிப்பு - புரட்டாதி - 2001), இலங்கையில் தமிழ்ப் புதினப் பத்திரிகைகளின் வளர்ச்சி, கொழும்பு, பக்கம் 61 யோகராசா, செ, (2007), ஈழத்து இலக்கியமும் இதழியலும், கொழும்பு, பக்கம் 79 செங்கை ஆழியான், (தொகுப்பாசிரியர்) (ஒக். 2000), ஈழகேசரிச் சிறுகதைகள், திருகோணமலை, பக்கம் VI சிவத்தம்பி, கா, தமிழ் இலக்கிய வரலாற்றில் இதழ்கள் விரிவான ஆய்வுக்கான முன் குறிப்புகள் சில, தேசிகம் பஆ க. இரகுபரன், யாழ்ப்பாணம் (2000), பக்கம் 42 யோகராசா, செ, மேலது, பக்கம் 80 சோமகாந்தன், நா, (1992) ஈழத்து இலக்கியம்; பல்துறை நோக்கு, சென்னை, பக்கம் 50 - 51 V. சிவகுருநாதன், இ, மேலது, பக்கம் 85 சுப்பிரமணியம், நா. (1978), தமிழ் நாவல் இலக்கியம், யாழ்ப்பாணம், பக்கம் 6
- 18 -

த அஜந்தகுமார்
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
8.
தேவராஜ், வி, (2006), வீரகேசரி பவளவிழாச் சிறுகதைக் களஞ்சியம், கொழும்பு பக்கம் IV பியூலா மெர்சி, தா, எ, (1974), இருபதில் சிறுகதைகள் (1900 - 1978) சென்னை, பக்கம் 21 வேதசகாயகுமார், எம். (1972), தமிழ்ச் சிறுகதை வரலாறு, சென்னை, பக்கம் 15 சிவத்தம்பி, கா, (இரண்டாம் பதிப்பு - 1978) தமிழில் சிறுகதையில் தோற்றமும் வளர்ச்சியும், சென்னை, பக்கம் 22 சிவபாதசுந்தரம், சோ, (1990) கங்காகீதம் (முன்னுரை) சென்னை, பக்கம் V
செங்கை ஆழியான், மேலது, பக்கம் VIII செங்கை ஆழியான், (தொகுப்பாசிரியர்), சுதந்திரன் சிறுகதைகள் (முன்னுரை), யாழ்ப்பாணம், பக்கம் XIV செங்கை ஆழியான், ஈழநாடு இதழின் புனைகதைப் பங்களிப்பு, மல்லிகை 43 வது ஆண்டு மலர், 2008 பக்கம் 14 குப்பிழான் ஐ. சண்முகன் (2003) அறிமுகங்கள், விமர்சனங்கள், குறிப்புகள், கொழும்பு, பக்கம் 32
- 19 -

Page 20
தனித்துத் தெரியும் திசை
2 திசை இதழின் கலை இலக்கியப் பங்களிப்பு
ஈழத்தில் பிரதேச பத்திரிகைகளின் தோற்றம்
இலங்கைத்தமிழ் இலக்கிய வளர்ச்சிப் பணியில் பிரதேச பத்திரிகைகள் வழங்கியுள்ள பங்களிப்புகள் முக்கியமானவை. இலங்கையின் அர்சியல் வளர்ச்சி கொழும்பை மையமாகக் கொண்டே இயங்கிவந்தமையால் ஆரம்பத்தில் நாளிதழ்கள் கொழும்பில் இருந்தே வெளிவந்தன. 1950களின் பிற்கூற்றில் இருந்து வடக்குக் கிழக்குப் பகுதியில் வாழ்கின்ற தமிழ்மக்களின் அரசியல் செயற்பாடுகள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பை மையமாக வைத்தே நடைபெறத் தொடங்கியமையினால் யாழ்ப்பாணத்தில் நாளிதழ்கள் தொடங்கவேண்டிய சூழலும் தேவையும் ஏற்பட்டது. ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகைத் துறையைப் பொறுத்தவரை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையின் வரவு (1959) பிரதேச பத்திரிகைகளின் வரவிற்கு வழிவகுத்தது. இதனைத் தொடர்ந்து வந்த 1980கள் இன்னொரு விதத்தில் தமிழ்ப்பத்திரிகை வளர்ச்சிப் போக்கிலே மாற்றங்கள் ஏற்படக் காரணமானது.
- 20 -

த. அஜந்தகுமார்
". இக்காலப்பகுதியிலே வேரூன்றி வளரத் தொடங்கிய இனவழித் தமிழ்த் தேசிய உணர்வு சார்ந்த விடயங்களோ படைப்புகளோ தேசியப் பத்திரிகைகளில் வரமுடியா நிலையிலே பிரதேச மட்டத்திலே பத்திரிகைகள் உருவாகத் தொடங்கின’ !
இந்தவகையில் ஈழமுரசு (1984), உதயன் (1985), முரசொலி (1989), திசை (1989), ஈழநாதம் (1990), வலம்புரி (1999) போன்றன முக்கியமானவை.
இதில் யாழ்ப்பாணத்தில் இருந்து தோன்றிய திசை” என்கின்ற வாரப் பத்திரிகையினைப் பற்றி நோக்குவதே எனது நோக்கம்.
திசை பத்திரிகையின் தோற்றம்
1982 இல் இருந்து 1987 வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஒரேயொரு ஆங்கில செய்தி விமர்சனப் பத்திரிகையாக சற்றடே ரிவியூ (Saturday Review) விளங்கியது. இதில் முதலில், சிவநாயகம் பிறகு காமினி நவரட்ண ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர். இதில் ஏ.ஜேகனகரட்னா, சேரன் ஆகியோரின் பங்களிப்பு நிறைந்திருந்தது. இலங்கையில் இருந்து வெளியாகிய சகல ஆங்கிலப் பத்திரிகைகளில் இருந்தும் வேறுபட்டு தமிழரின் போராட்ட நியாயங்களை தமிழரின் நோக்கு நிலையில் இருந்து வெளியிட்ட ஒரேயொரு பத்திரிகை சற்றடே ரிவியூதான்.
இந்த சற்றடே ரிவியூவின் சகோதரப் பத்திரிகையாக மலர்ந்ததுதான் 'திசை”என்கின்ற வாரப்பத்திரிகை. இல 18, 4 ஆம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணத்திலுள்ள fly ஈறா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் 14.01.1989 முதல் 25.05.1990 வரை திசை இதழ் வெளியிடப்பட்டது.
முதலாம் வருடத்தில் 51 இதழ்களும்
இரண்டாம் வருடத்தில் 18 இதழ்களுமாக மொத்தம் 89 இதழ்களே திசை வெளிவந்தது.
- 21 -

Page 21
தனித்துத் தெரியும் திசை
“சுதந்திர ஒளியினில் மனங்குளி
அதன்வழி திசையெல்லாம் துலங்கவே” என்ற மகுடத்துடன் மு. பொன்னம்பலம் அவர்களை ஆசிரியராகவும் அ. யேசுராசா அவர்களைத் துணை ஆசிரியராகவும் கொண்டு 'திசை” இதழ் வெளிவந்தது. ஆரம்பத்தில் சனிக்கிழமை வெளியீடாக வந்து 26.05.1989 தொடக்கம் வெள்ளிக்கிழமை தோறும் பெரும்பாலும் 12 பக்கங்களுடன் இது வெளிவந்தது. 5000 பிரதிகள் அச்சிடப்பட்டன.
திசை வெளிவந்த கழல்
திசை வெளிவந்த காலமான 1989/90, இந்திய இராணுவம் இலங்கையில் “அமைதிப்படையாக”த் தங்கியிருந்த காலமாகும். இதனால் இந்திய இராணுவமும் தமிழ்க்குழுக்களும் விடுதலைப்புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலமாக இது விளங்கியது. இத்தகைய போராட்டச் சூழலில் இருந்தும் பல கலை இலக்கிய வடிவங்கள் முனைப்புப் பெற்றன. இதில் தொடர்புசாதனங்களும் முக்கியமானவை. இக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஒரு பத்திரிகையை நடாத்துவது என்பது பெரும் போராட்டம் நிறைந்ததாகவே இருந்தது. இதை ஈழமுரசு ஆசிரியராக அப்போது இருந்து கைதுசெய்யப்பட்ட எஸ். எம். கோபாலரத்தினம் எழுதிய "ஈழமண்ணில் ஓர் இந்தியச் சிறை என்ற நூலில் இலகுவாகத் தரிசிக்கலாம். இதனைத் திசையின் ஆசிரியராக இருந்த மு.பொ. அவர்களும் ஒரு நேர்காணலில் வெளிப்படுத்துகின்றார்.
“. வயிற்றுப்பிழைப்புக்காகப் பத்திரிகை நடாத்தவில்லை நாங்கள். அரசியல் சமூக இலக்கியக் குரலாகவே நாங்கள் அப்பத்திரிகையை நடாத்தினோம். பூரண சுதந்திரம் என்பது அக்காலத்தில் எமது பத்திரிகைகளுக்கு இருக்கவில்லை. இரு பக்கக் கேள்வி நெருக் குதல்களுடனேயே எழுத்தாளர்களின் எழுத்துகளுக்கு விளக்கம் கேட்கும் மரணப் பொறியாகவே அது இருந்தது’ ‘
- 22

த. அஜந்தகுமார்
தமிழ்த்தேசியம் பற்றிய கருத்துகள் வலிமை பெற்று வருவதாகவும், நாளுக்கு நாள் படுகொலைகளும், காணாமல் போதல்களும், குண்டுவெடிப்புகளும், ஹர்த்தால்களும், மோதல்களும் மிகுந்ததாகவும் இக் காலம் விளங்கியது. இதனால் இளைஞர்கள் வெளிநாட்டுக்குப் புலம்பெயர்கின்ற சூழல் காணப்பட்டது. இதனால் விளைந்த சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டு மாற்றங்களைப் பிரதிபலித்துத் தன்னை தீர்க்கமாக வெளிப்படுத்தவேண்டிய தேவை திசைக்கு இருந்தது. இதனைத் தனது முதலாவது ஆசிரியர் தலையங்கம் மூலம் அது தெளிவாக வெளிப்படுத்துகின்றது.
திசையின் நோக்கு
தமிழ் வாரப் பத்திரிகை வெளியீட்டில் மறுமலர்ச்சியான போக்குகளை வெளிப்படுத்தி பல்வேறு சிந்தனைகளைக் கொண்டுவருவதற்கு திசை” களமாக இருக்கவேண்டுமெனக் கருதப்பட்டது. இதனைத் திசையின் முதலாவது ஆசிரியர் தலையங்கம் தெளிவாகச் சொல்லுகின்றது.
éé
. ஒடுக்கப்பட்ட தமிழினத்தின் குரலை உலகறியச் செய்யவேண்டும் என்ற நோக்கில் சற்றடே றிவியூ வெளிவந்ததால் அது, அதிகமாக அரசியல் கருத்துகளுக்கும் அது பற்றிய ஆய்வுகளுக்குமே முக்கியத்துவம் கொடுத்திருந்தது. ஆனால் தமிழில் வெளிவரும் திசை, சற்றடே றிவியூ அதிகம் தொடாதுவிட்டிருந்த சமூக, பொருளாதார, கலை, கலாசார அறிவியல் போன்ற இன்று தேவைப்படும் பல தளங்களுக்குள் மக்களை அழைத்துச்சென்று, அறிவு பாய்ச்சவேண்டும் என்றும் இது அவர்களின் பூரணமான நிமிர்வுக்கு வழிவகுக்கும் என்றும் எண்ணும் இலட்சிய எதிர்பார்ப்புகளோடு வெளிவருகிறது.
அத்தோடு சுரணையற்றுத் தூங்கிக்கிடக்கும் ஒரு சமூகத்தைத் தட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றுபவை,
- 23

Page 22
தனித்துத் தெரியும் திசை
அச்சமூகத்தின் சிந்திக்கும் ஒரு பகுதியில் இருந்து எழும் கலை இலக்கிய கலாசார படைப்புகளும் அவை பற்றிய ஆய்வுகளுமே, இது ஒரு வரலாற்று ரீதியான உண்மை. ஒரு சமூகம் முன்னோக்கிச் செயல்படுவதற்கு திட்டவட்டமான சிந்தனை, கோட்பாடு போன்றவை மிக அவசியமாகும். அவற்றின் வடிகாலாக கலை, இலக்கியம், கலாசாரம் போன்றவைகளுக்கு களம் அமைத்துக்
கொடுப்பதில் முக்கிய கவனம் எடுத்துக்கொள்ளும்.
நவீன கலை இலக்கியம் பற்றிப் பேசும்போது தமிழ்நாட்டில் மணிக்கொடிக்காலம் பற்றிப் பேசுவதுண்டு. ஈழத்தில் ஈழகேசரிப் பொன்னையாவின் காலம் பற்றிச் சிலாகிப்பதுமுண்டு. மீண்டும் ஒரு மணிக்கொடிக் காலம் ஒன்றை நாம் ஏணி கலை இலக்கியத்தில் ஏற்படுத்தக்கூடாது? நமது பண்பாடு, சூழல் இவற்றின் அடிப்படையில் கலை இலக்கியப் பரிசோதனைகள் ஏன் ஏற்படக்கூடாது? இந்தக் கேள்விகளையெல்லாம் ஆக்கரீதியாகப் பயன்படுத்திக் கொள்ளும் பொறுப்பு வாசகர்களாகிய உங்கள் கையிலேயே விடப்பட்டுள்ளது. திசை’ இதற்கெல்லாம் தனது வாசலை என்றைக்கும் திறந்து வைத்திருக்கும்”
என்று மிகத் தெளிவாக அதன் நோக்கம் சொல்லப்பட்டுள்ளது. ஈழத்தில் இதுவரை தோன்றிய பத்திரிகைகளின் முதலாவது ஆசிரியர் தலையங்கத்தில் வெளிப்படாத ஒரு விடயம் திசையில் வெளிப்பட்டுள்ளதை நாம் காணலாம். ஏனைய பத்திரிகைகளில் பெரும்பாலானவை இலக்கியப் பகுதிகளை இடம் நிரப்பும் பகுதிகளாகவே பய்ன்படுத்திவந்தன, வருகின்றன. ஆனால் திசை தனது நோக்கத்தில் கலை இலக்கியங்களுக்கு கணிசமான பங்கு கொடுத்திருந்தது. அத்தோடு மீண்டும் ஒரு மணிக்கொடிக் காலம் ஒன்றை நாம் ஏன் கலை இலக்கியத்தில் ஏற்படுத்தக் கூடாது? என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தது. உண்மையில் திசை தான் தோன்றிய காலந்து அரசியல், சமூக, பொருளாதார சூழலை உணர்ந்தே
- 24

த அஜந்தகுமார்
இக்கேள்வியையும் கருத்தையும் சொல்லியிருந்தது எனலாம். தமிழ்த்தேசியம் பற்றிய கருத்துக்கள் வலுவடைந்தும் அச்சுறுத்தல் சூழல் மிகுந்தும் விளங்கிய காலத்தில் கலை இலக்கியங்களை ஆயுதமாகக் கையாளும் உத்தியே இது எனலாம். மணிக்கொடி இதழ் இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் தோன்றியது என்பதும் இங்கு எம் கவனத்துக்கு உரியது. மணிக்கொடிக் காலம் பற்றி எம். வேதசகாயகுமார் கூறுவது திசையின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளவும் உதவும் என நம்புகின்றேன்.
“மணிக்கொடி ஆசிரியர்கள் சுதந்திரத்தின் முழு அர்த்தத்தையும் உணர்ந்து கொணர்டிருந்தார்கள். அரசியல் சமூக எழுச்சியைப் போலவே கலை இலக்கிய எழுச்சிகளையும் தேசிய எழுச்சியின் ஒரு பாகமாகவே கண்டார்கள். எனவே கலை இலக்கியத்தின்பாலும் இவர்களின் கவனம் இருந்ததில் வியப்பில்லை. கலை இலக்கியத்துக்காக மணிக்கொடியில் பக்கங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. சமூக, அரசியல் விஷயங்களில் இவர்கள் கொண்டிருந்த கிளர்ச்சி மனப்பான்மையையும் புரட்சி வேகத்தையும் இலக்கியம் பற்றிய இவர்கள் கண்ணோட்டத்திலும் நாம் காணமுடியும்" "
இத்தன்மையே திசையில் ஊடுபாவி இருந்தது என்று நான் நம்புகின்றேன். இதனால்தான் திசையின் சமகாலத்தில் வெளிவந்த ஏனைய பத்திரிகைகள் செய்திக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்தபோது, திசை அதுமாத்திரமல்லாது சமூக, பொருளாதார, கலை, கலாசார, கல்வி போன்ற அம்சங்களைத் தன் உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது.
இவ்வாறு இது ஆக்கபூர்வமாக இயங்குவதற்கு ஒரு பின்புலமும்
இருக்கவே செய்தது. இதனை மு.பொ.
"அறிவுபூர்வமான ஒரு கூட்டம் எங்கள் பத்திரிகையின் பின்னால் இருந்தது. ஏ.ஜே. கனகரட்னா, நான், யேசுராசா, பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்டோர் என நாங்கள் ஒரு கூட்டமாகவே இயங்கினோம். அறிவு வர்க்கத்தின்
- 25 -

Page 23
தனித்துத் தெரியும் திசை
துணையோடு எங்கள் கருத்துகளை எழுதினோம். அந்தவகையில் அக்காலகட்டம் சங்கோசமாகக்கூட இருந்தது”
என்று கூறுவதன் ஊடாக நாம் அறிந்துகொள்கின்றோம். இதனை திசைக்கு
எழுதிய கடிதமொன்றில் குப்பிழான் ஐ. சண்முகன்
"திசை தனக்கென்றொரு தனித்துவத்தைப் பெற்றுவிட்டது. ஆளுமைகளின் செல்வாக்குத் துலாம்பரமாகத் தெரிகின்றது. இன்றைய சூழலில் திசையின் வெளிப்பாடு புதிய பரிமாணமென்றே சொல்லலாம்' "
என்று குறிப்பிடுகின்றார்.
இனி, திசையின் உள்ளடக்கங்கள் குறித்து நோக்குவோம்.
aókaparuheir உள்ளடக்கம்
திசை தன் நோக்காக வரித்துக் கொண்டதை வெளிவந்த 69 இதழ்களிலும் கடைப்பிடித்து ஆக்கபூர்வமாகச் செயற்பட்டு உள்ளதனை அதன் உள்ளடக்கங்கள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன. உருளும் உலகில் திசைமுகம், தோழி, சமூகம், கலைச்சாரல், தூவானம், திசையின் சிறுகதை, இளவட்டம், கவிதைகள் என்று முக்கியமான பகுதிகளைத் திசை தன் உள்ளடக்கங்களாய்க் கொண்டிருந்தது. அவ் உள்ளடக்கங்கள் தீவிரமான பிரக்ஞையோடு இயங்கின என்பதையும் எவ்வாறு இயங்கின என்பதையும் அ. யேசுராசா பின்வருமாறு கூறுகின்றார்.
“.அரசியல் என்று பார்க்கின்றபோது தமிழர்கள் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகின்ற எண்ணப்பாங்குகளைக் கருத்துகளை வெளிப்படுத்தினார்கள். அதேபோல் சமுதாயத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி வாதப்பிரதிவாதங்களை வெளியிடுவதற்கு களமாகத் திசை இருந்திருக்கிறது. கலாசாரத்தளத்திலும் பல்பரிமாணத் தன்மையுள்ள கலை இலக்கிய வெளிப்பாடுகளைக் கொடுத்து இருக்கிறோம். சிங்களம் உட்பட பிறமொழி
- 26 -

த அஜந்தகுமார்
நாடகங்கள், திரைப்படங்கள், இலக்கியங்கள் பற்றிய அறிமுகங்கள் வந்துள்ளன. வித்தியாசமான படைப்பு வெளிப்பாடுகளை ஊக்கப்படுத்தி அக்கலைஞர்களின் கவிதை, சிறுகதை, குறுநாவல் போன்றவற்றிற்குக் களம் அமைத்துக் கொடுத்திருக்கின்றோம். அரசியல் ரீதியான விமர்சனங்கள் கூட மிக முக்கியமானவையாக அமைந்த இருக்கின்றன.
முக்கியமானவற்றை வெளிப்படுத்துகின்ற எவருக்கும் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. மாறுபட்ட அபிப்பிராயங்களையும் அது பற்றிய தனது நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தி இருக்கிறது. கருத்துப் பரிமாற்றத்திற்குரிய தளமாக அது செயற்பட்டிருக்கின்றது.
ஆக்கங்களை எழுதியோரில் 50 வீதத்துக்கு மேற்பட்டவர்கள் புதியவர்கள், இளைஞர்கள். எங்களுக்கு அறிமுகமானவர்கள் என்று சொல்லமுடியாது. தரமான ஆக்கங்களைக் கண்டு நாங்கள் இடங்கொடுத்தபோது பெரும்பாலும் இளைஞர்களுடைய பங்களிப்புகளாகவே அவை இருந்தன. ஒட்டுமொத்தமாக, எங்களுடைய வாழ்வுடன் தொடர்பான சமுதாயம் சார்ந்த பல்வேறு விடயங்களும் திசையில் இடம்பெற்று இருக்கின்றன. அதில் எங்களுக்குப் பெருமளவு திருப்தி இருந்தது.
“இன்று பார்க்கையில் நாங்கள் அதிருப்தி கொள்ளும்வகையில் இருப்பதாக எதனையும் எனக்குச்
சொல்ல முடியவில்லை” '
என்று குறிப்பிடுவதன் ஊடாக ஒரு சிற்றிதழுக்குரிய தீவிரமான பிரக்ஞையோடு திசை தன் தடத்தில் இயங்கியுள்ளதை அறிகின்றோம். இதனாலேயே பேராசிரியர் கா. சிவத்தம்பி,
- 27

Page 24
தனித்துத் தெரியும் திசை
"80களில் ஏற்படுகின்ற மாற்றங்களோடு வெளிவரத் தொடங்கிய இதழ்களுள் இரண்டு முக்கியமானவை. ஒன்று திசை, மற்றொன்று வெளிச்சம்' " என்று குறிப்பிடுகின்றார்.
9 அரசியல்
இந்திய இராணுவம் இலங்கையில் குடிகொண்டிருந்த காலப்பகுதியிலேயே திசை வெளிவந்தது. திசை தமிழ்ச்தேசியம் சார்ந்ததாக இருந்தது. இதனை அது வெளிப்படுத்திய ஆசிரியர் தலையங்கங்களிலும் கட்டுரைகளிலும் செய்திகளிலும் நாம் பரக்கக் காணலாம். "உருளும் உலகில்' என்ற தலைப்பில் பல சர்வதேச நாடுகளின் விடுதலைகள் பற்றி மு. திருநாவுக்கரசு 'சர்வதேசி' என்ற பெயரில் எழுதிய கட்டுரைகள் காலப்பொருத்தம் கருதியே எழுதப்பட்டதை இலகுவில் புரிந்துகொள்ளலாம். ஆசிரியர் தலையங்கப் பகுதியானது சமகால அரசியல் பிரச்சினைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை ஜனநாயகவழி, விடிவு ஏற்படுமா?, ஜனநாயகத்தின் புதிய தேவை, பேச்சும் செயலும், தமிழ்ப் பேரினவாதம், பாடங் கற்காத பங்காளிகள், எது செய்யப்படவேண்டும், நாடும் அரசும் யாருக்காக, ஜனநாயகம் தேர்தலின் தீர்வு போன்ற தலைப்புகளில் எழுதப்பட்ட விடயங்கள் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். *
எடுத்துக்காட்டாக ராஜீவ்காந்திக்குத் துவக்கால் அடித்த விஜயமுனி விஜித ரோகணவுக்கு கருணை காட்டப்படவேண்டும் என்று சுதந்திரக்கட்சிப் பிரதிநிதி ஒருவர் கூறியதற்கு,
"கருணை குற்றவாளிகளுக்கு காட்டப்படுவது நன்று. ஆனால் இத்தகைய குற்றவாளிகளுக்கு எல்லாம் கருணை காட்டக்கூடிய தாராண்மை மிக்கது நமது நீதியென்றால். நமது ஆயிரம் ஆயிரம் தமிழ் இளைஞர்களை நோக்கியல்லவா இந்த நீதியின் கருணை பெருக்கெடுத்திருக்கவேண்டும். ஆனால் நமது நீதி அப்படிச் செய்யாது. காரணம் நீதியும் நியாயமும் சட்டமும் ஒழுங்கும் ஆட்சியின் குணங்களின் பிரதிபலிப்பே. ராவணன்
- 28 -

த. அஜந்தகுமார்
ஆளும்போது சீதையை விடுவிக்கும்படி கேட்கமுடியுமா? கும்பகர்ணன்களே விழித்தெழுவர்" " என்று எழுதியமை நல்ல சான்றாகும். அத்தோடு EPRLF ENDLF போன்ற இயக்கங்கள் முஸ்லிம் பிரதேசங்களில் கட்டவிழ்த்துவிட்ட இராணுவ அராஜகங்கள் தொடர்பாக மிகத் துணிச்சலாக 'தமிழ்ப் பேரினவாதம்' என்ற தலைப்பில் ஆசிரியர் தலையங்கம் தீட்டப்பட்டது.
இதனால் அரசியல் தொடர்பாக திசையிடம் மிகத் தீர்க்கமான பார்வை இருந்ததை நாம் உணரலாம். இதை மு.பொ
"தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் நாங்கள் இருந்தாலும் இப்படியான உடையாடுகள் தொடர்பாக எங்கள் எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டன” " என்று குறிப்பிடுவதில் இருந்து தெளிவாகக் காண்கின்றேன். யாருக்கும் வால்பிடிக்காமல் தன் கருத்தில் திசையின் அரசியல் பயணித்திருப்பதை நாம் காண்கின்றோம். இத் தீர்க்கமே பத்திரிகையின் ஒவ்வொரு பக்கத்திலும் சுவறியிருந்தது எனின் மிகையில்லை.
9 சமூகம்
தான் வாழும் சமூகம் தொடர்பாகவும் திசை ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தது. இதில் கல்வி, பண்பாடு, பெண், ஆத்மிகம் போன்ற பல விடயங்கள் அடங்கியிருந்தன. சமூகம் என்ற தனித்தலைப்பில் ஒவ்வொரு இதழிலும் கருத்துக்கோவைகள் இடம்பெற்று இருந்தன. இதற்கு எடுத்துக்காட்டாக, 1. தமிழ் மாணவர்களின் விஞ்ஞானக்கல்வி ஒரு கண்ணோட்டம் 2. தமிழீழம் எதிர்கொள்ளவிருக்கும் மாற்றங்கள் ஒரு புத்திஜீவியுடன்
பேட்டி 3. சிறுவர் உரிமைகள் மலையகத்தில் ஒரு நோக்கு 4. அருகிவரும் கிராமியப் பண்புகள் 5. அட்வான்ஸ் சமூகம் போன்ற விடயதானங்களைக் குறிப்பிடலாம்.
- 29

Page 25
தனித்துத் தெரியும் திசை
பெண்களுக்கான பகுதியாக திசையில் "தோழி’ என்ற பகுதி இடம்பெற்றிருந்தது. இதில் பெண்ணிலை வாதம் தொடர்பாகவும், பெண் விடுதலை தொடர்பாகவும், பெண்ணின் பெருமை, பெண்கள் அமைப்புத் தொடர்பாகவும் பல கருத்துகளும் விவாதங்களும் இடம்பெற்று இருந்தன.
"ஒருபிடி விசாரம்’ என்ற தலைப்பில் தீட்சண்யன் (மு.பொ) எழுதிய விடயங்கள் ஆத்மிகம் தொடர்பான மன விசாரங்களாக அமைந்து சிந்தனையைத் தூண்டுகின்றன.
0 கலை இலக்கியம்
'திசை’ இதழானது கலை இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது ஆகும். கலை இலக்கிய சிற்றிதழ் சூழலில் இயங்கிவந்த (Pd. பொன்னம்பலமும், அ. யேசுராசாவும் இதில் இயங்கியமை கூடுதல் சாத்தியங்கள் உருவாக வாய்ப்பளித்தது எனலாம்.
“ஒரு சமூகம் முன்னோக்கிச் செயல்படுவதற்கு திட்டவட்டமான சிந்தனை, கோட்பாடு போன்றவை மிக அவசியமாகும். அவற்றின் வடிகாலாக கலை, இலக்கியம் கலாசாரம் போன்றவைகளுக்குக் களம் அமைத்துக் கொடுப்பதில் முக்கிய கவனம் எடுத்துக்கொள்ளும்” என்று தனது முதலாவது ஆசிரியர் தலையங்கத்திலேயே கூறிய திசை இதழானது வெளிவந்த 69 இதழ்களிலும் கலை இலக்கியத்துக்கு வழங்கிய களமும், பங்களிப்பும் காத்திரமானது எனலாம்.
கலைச்சாரல், தூவானம் போன்ற பகுதிகளுக்கு ஊடாகவும் சிறுகதை, குறுநாவல், மொழிபெயர்ப்பு நாடகங்கள், மொழிபெயர்ப்பு கவிதைகள், கவிதைகள், விமர்சனக் கட்டுரைகள் என்று ஆக்கவடிவங்களைப் பிரசுரித்ததன் ஊடாகவும் கலை இலக்கியப் பங்களிப்பைத் திசை நல்கிற்று எனலாம். 12 பக்கங்களுடன் வெளிவந்த திசை’ கணிசமான பக்கங்களை கலை இலக்கியத்துக்கு வழங்கிவந்தமையால் இராஜதர்மராஜா (பரந்தன்) என்கின்ற வாசகர்
கலை இலக்கியத்துக்கு அதிக பக்கங்கள் அவசியமா? என்ற கேள்வியை வாசகள் கடிதம் மூலமாக எழுப்பியிருந்தார். இதற்கு ஆசிரியர், முதலாவது ஆசிரியர் தலையங்கத்தைக் கோடி காட்டி தமது நோக்கங்களுள்
- 30

த அஜந்தகுமார்
அதுவும் தலையாயது என்று கூறியிருந்தமை திசையின் கலை இலக்கிய பிரக்ஞையை மிக ஆழமாக வெளிப்படுத்துகின்றது.
ஈழத்துப் பத்திரிகைகளைப் பொறுத்தவரை ஏனைய பத்திரிகைகளில் இருந்து விடுபட்டு எழுத்தின் கலைப் பெறுமானத்துக்குத் திசை முக்கியம் கொடுத்து இருந்தது என்பதனை திசையில் வெளிவந்த தூவானம் என்கின்ற பகுதியில் நீலாம்ப்ரன் (அ. யேசுராசா) எழுதிய குறிப்பு ஒன்றின் மூலம் நாம் விளங்கிக்கொள்ளமுடியும்.
“பிரசுரத்திற்கென ஏராளம் கவிதைகள் திசைக்கு வருகின்றன. ஆனால் ஓரளவிற்காயினும் நல்ல கவிதைகள் அவற்றில் மிகக் குறைவாகவே காணப்படுகினிறன. நல்ல கவிதைகளில் இருக்கவேண்டிய வார்த்தைச் செட்டு, இறுக்கம், வெளிப்படுத்தப்படும் உணர்வின் ஒருமைப்பாடு, மனதை இதமாக வருடிச் செல்லும் தன்மை போன்றன இல்லாத வார்த்தைக் கொட்டல்களாகவே பெரும்பாலானவை அமைந்துள்ளன.
புதியவர்களே ஆர்வமிகுதியுடன் இத்தகைய கவிதைகளை அனுப்பி வைக்கின்றனர். இவர்கள் இவ்வாறான கவிதைகளை எழுதுவதற்கு வேறு காரணிகள் இருந்தாலும், அவர்களின் கணிகளிற் படக் கூடிய கவிதைகளிற் பெரும்பாலானவை இத்தன்மையனவாக இருப்பதும், அவற்றையே முன்னுதாரணமாகக் கொண்டு இவர்கள் எழுத முனைவதும், ஒரு முக்கிய காரணியாகலாம் என நினைக்கிறேன். இக்கவிஞர்களிற் பெரும்பாலானவர்கள் வாசிப்புப் பழக்கம் அற்றவர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்குச் சுலபமாகக் கிடைக்கக் கூடிய இலங்கைப் பத்திரிகைகளின் வார வெளியீடுகளிலும் சஞ்சிகைகளிலும் தரமற்ற படைப்புகளே கவிதைகள் என்ற பெயரில் இடம் நிரப்பிகளாக வெளியிடப்படுகின்றன. அந்தம்
-31 -

Page 26
தனித்துத் தெரியும் திசை
பக்கங்களுக்குப் பொறுப்பாயுள்ளவரின் தேர்ச்சியடையாத
ரசனை, பொறுப்பற்ற தன்மை, பலருக்குப் பிரசுர வாய்ப்புக்
கொடுப்பதன் மூலம்தான் விற்பனையைப் பரவல்படுத்தல்
போன்ற காரணிகளால்தான் இவ்வாறு நடைபெறுகின்றன"' என்று எழுதியிருப்பதன் மூலம் திசையின் கலை இலக்கியம் மீதான அக்கறையும், அதன் பக்கங்களுக்கு பொறுப்பாயுள்ளவர்களின் பொறுப்பும், ரசனையும், இலங்கைப் பத்திரிகைகளில் வாரவெளியீடுகளில் இருந்து தன்னை அது கோடுபிரிப்பதும் மிகத் தெளிவாகவே புலனாகின்றது. திசையின் கலை இலக்கியப் பங்களிப்பை அதன் முக்கிய பகுதிகளுடாக சுருக்கமாக நோக்குவோம்.
1. கலைச்சாரல்
போராட்டச் சூழலிலும் 'திசை’ இதழ் கலை இலக்கியம் பற்றிய ஆழ்ந்த அக்கறை எடுத்திருந்தமையை கலைச்சாரல் என்கின்ற பகுதி மூலம் நாம் தெளிவாக அறியலாம். கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், குறிப்புகள், பேட்டிகள் என்று பல வகைகளில் இப்பக்கம் வெளிவந்தது. சினிமா, கவிதை, சிற்பம், சிறுகதை, நாவல், இசை, நாடகம் தொடர்பான ஆக்கபூர்வமான விடயங்கள் இப்பகுதியில் பிரசுரிக்கப்பட்டன. அக்காலச் சூழலில் தணிக்கை இருந்தமையால் சொல்லமுடியாத விடயங்களைக் கூட கலை இலக்கியம் சார்ந்த மறுபிரசுரங்கள் மூலம் இவர்கள் வெளியிட்டமை முக்கியமானவை ஆகும்.
இலங்கையில் உள்ள தமிழ் வாரவெளியீடுகள் பெரும்பாலானவை சினிமாப் பக்கத்தை கவர்ச்சி விடயமாகவே காட்டி இளைஞர்களை மயக்கி நின்ற காலத்தில் திசை இதழானது தீவிர சினிமா சார்ந்த அக்கறையோடு செயற்பட்டதனை கலைச்சாரலில் வெளிவந்த பல கட்டுரைகள் மூலம் நாம் அறிந்துகொள்கின்றோம். எ - டு 1. இன்னொரு சமூகத்துக்காக இன்னொரு சினிமா -
என்று ஏ. எஸ். பன்னீர்ச்செல்வன் ஃவிலிம்ஸ் ஃவெயாரி'ல் எழுதிய கட்டுரையை அ. யேசுராசா மொழிபெயர்த்துள்ளார். i. எது நல்ல சினிமா? எஸ். தேவபிச்சை என்பவர் இனி
இதழில் எழுதியது மறு பிரசுரமாகியுள்ளது.
- 32

த அஜந்தகுமார்
i. தமிழ்ச் சினிமா சில பார்வைகள் - க. விஜயகுமார் iv. புத்தாடெப் தாஸ்குப்தா என்கின்ற இந்திய திரைப்பட
கர்த்தாவின் நேர்காணல் (மறுபிரசுரம்)
இதேபோல இசை சார்ந்த அக்கறையை,
"இளையராஜா - ஒரு இசைமேதையா அல்லது போலியா?” என்று Frontine இதழில் இளையராஜாவுடன் ஏ. எஸ். பன்னீர்ச்செல்வன் கணிட நேர்காணலின் முக்கிய பகுதி திசைமுகனால் (மு. பொ) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கலைச்சாரலில் நல்ல கவிஞர்கள் பற்றிய அறிமுகமும் கவிதைகள் பற்றிய விமர்சனங்களும் இடம்பெற்றுள்ளன.
குர்திஷ் கவிஞன் ஷெர்கோ பெகாஸ் பற்றி எஸ். வி. ராஜதுரை பாலம் இதழில் எழுதிய கட்டுரை காலதேவை கருதி மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது. தமக்கே உரிய நீண்ட வரலாற்றையும் பண்பாட்டையும் மொழியையும் கொண்ட குர்திஷ் இனத்தவர்கள் பன்னூறு ஆண்டுகளாக அந்நியராட்சியின் கீழ் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். இவர்களது சுயநிர்ணய உரிமைக்கான விடுதலைப் போராட்ட வரலாறு சிக்கல் மிகுந்தது. 1985இல் குர்திஷ் விடுதலை இயக்கத்தில் சேர்ந்த இக்கவிஞரது கவிதைகளில் மானிட கெளரவம், சுதந்திரம் ஆகியவற்றுக்கான போராட்டமே முக்கியமான கருவாக அமைந்துள்ளது. இவரைப் பற்றிய அறிமுகம் என்பதும் அவரது சில கவிதைகளின் பிரசுரம் என்பதும் போராடும் தமிழினத்திற்கும் பொருந்தும் என்பதாலேயே திசை பிரசுரித்துள்ளது என்பதனைக் காட்டுகின்றது.
அத்தோடு பாரதியின் பிறந்த தின சிறப்புக் கட்டுரை, அழ. வள்ளியப்பாவுக்கு அஞ்சலிக்கட்டுரை, அன்னா அக்மதோவாவின் கவிதை பற்றிய கட்டுரை, உலகக் கவிதைத் திருவிழா பற்றிய கட்டுரை என கவிதை பற்றிய விடயத்துக்கும் கலைச்சாரல் களம் கொடுத்துள்ளது.
கலைச்சாரலில் ஓவியம், சிற்பம் பற்றிய விடயங்களும் இடம்பெற்றுள்ளன. சரவணன் என்பவர் எழுதிய “பரிச்சயமின்மையால் எதிர்க்கப்படும் நவீன ஓவியங்கள் சிற்பங்கள்” என்ற கட்டுரையும் சிற்பக் கலைஞர் ஐயாத்துரை விஸ் வலிங்கம் பற்றிய கட்டுரையும், கொறொகொன்ஸ்ரன்ரைன் எழுதிய "ஈழத்து சிற்பக்கலையில் 70ற்குப் பின் ஏற்பட்ட வளர்ச்சி” என்ற கட்டுரையும் இந்தவகையில் முக்கியமானவை.
- 33

Page 27
தனித்துத் தெரியும் திசை
இவைதவிர ஈழத்துத் தமிழிச் சிறுகதைகளும் தேசிய இனப்பிரச்சனையும் என்ற யேசுராசாவின் கட்டுரை, நவீன சிங்கள நாவலின் தந்தையான மார்ட்டீன் விக்கிரமசிங்க பற்றிய கே. எஸ். சிவகுமாரனின் கட்டுரை, நாடக நெறியாள்கை பற்றி நா. சுந்தரலிங்கத்தின் பேட்டி, பேராசிரியர் சு. வித்தியானந்தனும் தமிழ் நாடக உலகும் என்ற சி. மெளனகுருவின் கட்டுரை, ஆங்கில இலக்கியம் படைக்கும் ஈழத்தமிழ்ப் பெண்மணி ஜெகதீஸ்வரி நாகேந்திரன் பற்றி கே. எஸ். சிவகுமாரன் எழுதிய கட்டுரை என்று ஏராளமான காத்திரமான விடயங்கள் கலைச்சாரலை நிறைத்துள்ளன.
2. தூவானம்
திசை இதழில் கலை - இலக்கியம் தொடர்பான பத்தியாக தூவானம் என்கின்ற பகுதி நீலாம்பரன் என்கின்ற புனைபெயரில் அ. யேசுராசாவினால் எழுதப்பட்டது. அவ் எழுத்துகள் எல்லாம் தூவானம் என்ற பெயரில் இப்போது நூலாக வெளிவந்ததன் மூலம் அதன் முக்கியத்துவம் புலனாகிறது. அந்நூலின் ‘என்னுரையில் யேசுராசா பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“1989 - 90 காலப்பகுதியில் திசை வாரவெளியீட்டில் துணை ஆசிரியராக நான் கடமையாற்றிய வேளை அதன் ஆசிரியர் மு. பொன்னம்பலம் அவர்கள், கலை - இலக்கியத்துறை சார்ந்த பத்தியொன்றைத் தொடர்ந்து எழுதும்படி கூறி ஊக்கமளித்தார்; இருவரும் சேர்ந்து தூவானம் என்கின்ற பெயரை அதற்குச் சூட்டினோம்; நீலாம்பரன்’ என்னும் புனைபெயரில் அதனை எழுதி வந்தேன். திரைப்படம், ஓவியம், கவிதை, சிற்றிதழ், கலாசாரத்துறை சார் நடவடிக்கைகள், எதிர்வினைகள் எனப் பலவற்றைத் தொடுவதாகவே அந்தப் பத்தி அமைந்தது" " இதன்மூலம் தூவானம் என்கின்ற பத்தி எழுத்துப் பகுதி கலை இலக்கியத்தின் எல்லாத் திசைகள் குறித்தும் காட்டிய அக்கறை புலனாகின்றது.
-34 -

த. அஜந்தகுமார்
திரைப்படம் தொடர்பாக தூர்தர்ஷனின் கலைப்படங்கள், சிங்களத் திரை உலகு, ஜேர்மன் திரைப்பட விழா, "ஃவ்றேம் வேர்க் இலங்கைத் திரைப்படத் துறைக்கென வெளியிட்ட சிறப்பிதழ், கல்கத்தாவின் உலகத் திரைப்பட விழா, அடுர் இற்கு மீண்டும் விருது, யில்மெஸ் குனேயின் மந்தை' போன்ற எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன.
ஓவியம், சிற்பம், இசை தொடர்பான எழுத்துகளும் எழுதப்பட்டுள்ளன. கோவிலில் வர்ணவேலை செய்தவருக்கு "ஓவிய திலகம் என்ற பட்டம் அளிக்கப்பட்டமையை எதிர்த்து ஓவிய உணர்வு, சல்வடோர் டாலிக்கான அஞ்சலிக்குறிப்பு, சனாதனனின் ஓவியக் கண்காட்சி பற்றிய குறிப்பு, நவீன சிற்பக் கண்காட்சி பற்றிய குறிப்பு, கவின் கலை மன்றத்தில் கேட்ட இசை நிகழ்ச்சி பற்றிய குறிப்பு போன்றன முக்கியமானவை.
மஹாகவியின் குறும்பா, தா. இராமலிங்கத்தின் கவிதை, இந்திய சுதந்திர போராட்ட காலத் தலைவர்களில் ஒருவரான ஆஸாத்தின் கவிதை, மொழிபெயர்ப்புக் கவிதைகள் என்பவற்றை அறிமுகப்படுத்தி வாசகர்களை நல்ல கவிதைகளுடன் பரிச்சயம் கொள்ளவைக்கும் முயற்சி இடம்பெற்றுள்ளது. பத்திரிகைக் கவிதைகள் தொடர்பாக கடுமையாக விமர்சிக்கப்பட்டும் உள்ளது.
வாசிக்கிறவரெல்லாம் வாசகரல்ல, தர்மபோதனைக்கு வியாசங்கள், முதற் பிரதிகள் சிறப்புப் பிரதிகள் போன்ற விடயங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன.
ஈழத்து இலக்கிய உலகில் கலகக்காரராக அறியப்படும் யேசுராசா எழுதிய இப்பத்தி எழுத்துகள் அக்கால கலை இலக்கியம் குறித்த
பதிவையும் விமர்சனத்தையும் தந்ததன் மூலம் திசை’ இதழுக்கு ფ2(სნ முக்கிய காத்திரத்தன்மை வழங்கியது எனின் அது மிகையில்லை.
3. விமர்சனம்
04.03.1989 முதல் திசை இதழில் நூல் விமர்சனம் இடம்பெற்றுள்ளது. கே. கணேஸ், சாந்தன், அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை, எம். கே. முருகானந்தன், கோகிலா, மகேந்திரன், சச்சி மாஸ்டர் போன்ற
- 35 -

Page 28
தனித்துத் தெரியும் திசை
பலரின் படைப்புகள் திசையில் விமர்சிக்கப்பட்டன. இவ் விமர்சனங்கள் துதிபாடல்களாகவோ, தூற்றுதல்களாகவோ இல்லாமல் மிகக் காத்திரமாக அமைந்து இருந்தன. நூல்களை விமர்சனம் செய்தவர்களில் திசைமுகன் (மு.பொ.). நுஃமான், சு. வில்வரத்தினம் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.
4. இளவட்டம்
வளர்ந்துவரும் இளங்கவிஞர்களை ஊக்குவிக்கும் நோக்குடன்
20.10.1989 முதல் ஒன்றுவிட்ட ஒரு கிழமை இப்பகுதி வெளிவந்தது.
இதண்மூலம் ஏராளமான கவிஞர்கள் அறிமுகமானார்கள்.
5. கவிதைகள்
திசை இதழானது பொறுப்புணர்வுடனும் ரசனைபபுடனும் மிகக் காத்திரமான கவிதைகளைத் தெரிவுசெய்து பிரசுவித்தது. திசையில் கவிதை எழுதியவர்களுள் சோய, சு. வில்வரத்தினம், கருணாகரன், சோலைக்கிளி, வாசுதேவன், உமாவரதராஜன், நற்பிட்டிமுனை பனில், எஸ். ஞானசேகள், வளவை வளவன், மைதலி அருளையா போன்றவர்கள் முக்கியமானவர்கள். திசை வெளிவந்த சமகாலத்தை மிக உக்கிரமாக இக்கவிதைகள் பிரதிபலித்தw. (T (5) r
நீர்தேங்கிய பள்ளங்கள்
முதல்நாள் பெய்த மழையைச் சொல்லும்
வெற்றிலை சப்பித் துப்பிய தரையாய்த்
தெரியும் தெருவோ
அன்றுவிடிய நிகழ்ந்த கொலைகளைக் கூறும்
எனினும் என்ன
இன்னும் கொஞ்ச நேரம் செல்ல
இந்தச் சந்தி எதுவும் நிகழாப் பாவனையில்
இயங்கும் இங்கே.
(உமா வரதராஜன்)
. இன்றோ மின்சும்பம் துக்குமரமாகிய விந்தை கான உறங்காதென் கனர்
– if =

த. அஜந்தகுமார்
(சோய) "
எம்மைச்சூழ தடியுடன் பல பேர். நாண் சாகப் பயந்தேன் நணர்பர்களும் சாகப் பயந்தார்கள் அயலவர்களும் சாகப் பயந்து சந்தர்ப்பங்களில் ஒளிந்து கொண்டார்கள் இப்போது சாகப் பயந்த அனைவருமே ஒவ்வொருவராகச் செத்துக் கொண்டிருக்கிறோம்
(நற்பிட்டிமுனை பளில்) "
6. மொழிபெயர்ப்புக் கவிதைகள்
சமகாலப் பொருத்தம் கருதியும் நல்ல கவிதைகளை அறிமுகப்படுத்துவது கருதியும் 18 மொழிபெயர்ப்புக் கவிதைகள் திசையில் பிரசுரமாகியுள்ளன.
இந்தவகையில் ஜெயசீலனின் (அ. யேசுராசா) மெளனம், இந்திரனின் நாரைகள், எபஹீன் மொழிபெயர்த்த ஆம் அவனும் மனிதனே, கருடன், 20ம் நூற்றாண்டு எஸ் வி. ராஜதுரை, வ. கீதா மொழிபெயர்த்த "அன்னா அக்மதோவாவின் மூன்று கவிதைகள்’, ’அனைத்தும் இழந்தவனின் அறிக்கை', அ. யேசுராசா மொழிபெயர்த்த ‘மாலையில்', ‘நிலை மயக்கம், கனவு’, கே. ராஜி மொழிபெயர்த்த ஒரு தாய் தலை குனிகிறாள், மு. புஸ்பராஜன் மொழிபெயர்த்த பபிசோன் கடற்கரை", பிரம்மராஜன் மொழிபெயர்த்த “நெருப்பும் மரணமும்’, ‘தங்க மீன்', நாகார்ஜூனன் மொழிபெயர்த்த நினைவுச் சின்னத்தில் பொறிப்பதற்காக, பண்ணாமத்துக் கவிராயரின் இரு கஜல்கள்' போன்ற மொழிபெயர்ப்புக் கவிதைகள் முக்கியமானவை.
இக்கவிதைகளின் சமகாலப் பொருத்தத்துக்கு ஒரு உதாரணமாக
நாகார்ஜூனன் மொழிபெயர்த்த அடோல்ஃபோ பேணப் போனின் நினைவுச்
சின்னத்தில் பொறிப்பதற்காக’ என்ற கவிதையைக் குறிப்பிடலாம். அதில்
-
: 1" வரும,
- 37

Page 29
தனித்துத் தெரியும் திசை
"அவர்கள் உன்னைக் கொன்றதாக நினைத்தார்கள் அவர்கள் செய்ததெல்லாம்
1 т. ஒரு விதையைப் புதைந்ததுதான் என்ற வரிகள் முக்கியமானவை எண்று கருதுகின்றேன்.
7. மொழிபெயர்ப்பு நாடகங்கள்
திசை இதழில் மூன்று மொழிபெயர்ப்பு நாடகங்கள் காலதேவை கருதி பிரசுரிக்கப்பட்டிருந்தன. ஆசியாவின் ஒலம் கூண்டுக்கிளி (வங்காள நாடகம், ஹரீந்திரநாத் சட்டோபாத்பாய) வேலை நிறுத்தம்
8. குறுநாவல்கள்
திசை இதழானது குறுநாவல் இலக்கியத்திற்கும் நிறைந்த பங்களிப்பை வழங்கியுள்ளது. சாதாரண பத்திரிகைகளின் தொடர்கதைகளைப் போல அல்லாமல் வாழ்வு பற்றிய தீவிர விசாரணைகளை நிகழ்த்திய இரண்டு குறுநாவல்களைத் திசை பிரசுரம் செய்திருந்தது. இந்தவகையில் 1980களுக்குப் பிறகான ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில்; கோசலை, கோனறு பதிகம், காலம் உனக்கொரு பாட்டெழுதும் போன்ற கவனிப்புக்குரிய சிறுகதைகளை எழுதிய ரஞ்சகுமாரின் ஆட்கொல்லி என்கின்ற குறுநாவலும், குறைவாக எழுதியபோதும் கவனிப்புப் பெற்ற பூரீதரன் எழுதிய 'சொர்க்கம் எண்கின்ற குறுநாவலும் திசையில் வெளிவந்து இருந்தன.
9. சிறுகதைகள்
எழுத்தின் கலைப் பெறுமானத்திற்கு முக்கியம் அளித்த திசை இதழில் தரமான பல சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. வெளிவந்த 9ே இதழ்களில் மொத்தமாக 47 சிறுகதைகள் திசையில் பிரசுரமாகியுள்ளன. அவற்றைப் பின்வருமாறு பாகுபடுத்துவது வசதியானது.
1. 'திசை’ இதழுக்கே உரிய சிறுகதைகள் - 33 ii. மறுபிரசுரக் கதைகள் - II iii. மொழிபெயர்ப்புக் கதைகள் - 3
-38 -

த. அஜந்தகுமார்
இந்தச் சிறுகதைகள் மூலம் ஈழத்துச் சிறுகதை வனர்ச்சிக்கு தன்னால் இயன்ற பணியினைத் திசை இதழ் ஆற்றியுள்ளது. ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் பத்திரிகைகளின் பங்கு என்று பார்க்கின்றபோது திசை தனது காத்திரத்தன்மையினால் தனித்து நிற்கின்றது என்பதை உணரலாம். இப்பகுதியே எனது ஆய்வுப் பொருள் என்பதால் அடுத்துவரும் இயல்கள் திசையின் சிறுகதைகள் குறித்துப் பேச உள்ளன.
அடிக்குறிப்புகள்
. போகராசா, செ, (2007), ஈழத்து இலக்கியமும் இதழியலும், கொழும்பு,
பக்கம் 83
பெளசர், எம். (தொ.ஆ) (2001), ஈழத்து இலக்கியத்தின்
சமகால ஆளுமைகளும் பதிவுகளும், கொழும்பு, பக்கம் ேே
திசை (இதழ் - 1) 14.1.1989
வேதசகாயகுமார், எம். தமிழ்ச் சிறுகதை வரலாறு, பக்கம் 81
பௌசர், எம். (மேலது), பக்கம் 8ர்
திசை (இதழ் - 5) 11.03.1989
யேசுராசா, அ. (2007) குறிப்பேட்டிலிருந்து, யாழ்ப்பாணம்,
சிவத்தம்பி, கா. தமிழ் இலக்கிய வரலாற்றில் இதழ்கள் விரிவான ஆய்வுக்கான முன் குறிப்புகள் சில, தேசிகம், க. இரகுபரன் (ப.ஆ), 2000, பாழ்ப்பாணம்.
பக்கம் 44
9. திசை 15.04.1989
10. பெளசர், எம். (மேலது)
II. திசை 11.03.1989
12. திசை 28.07.1989 13. யேசுராசா, அ. (2001) தூவானம், கொழும்பு 14. திசை 25.03.1989
I5. fiscos (08.09.1989
16. திசை 27.10.1989
- 39.

Page 30
தனித்துத் தெரியும் திசை
3
வெளிப்பாடும்
பத்திரிகைச் சிறுகதைகள்
ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் பத்திரிகைகள் ஆற்றிய பங்களிப்பை முதலாவது இயலில் நோக்கியிருந்தேன். தனி ஒரு படைப்பாளியின் படைப்பை ஆய்வுசெய்வதற்கும் பத்திரிகையில் வெளிவந்த சிறுகதைகளை ஆய்வு செய்வதற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. பத்திரிகைக் கதைகள் மற்வேறு படைப்பாளிகளின் சங்கமமாக இருப்பதனால் அனுபவவெளி விசாலமானது. பல்வேறு அடுக்குகளுக்கு ஆய்வு மனத்தை அழைத்துச் செல்லும் இயல்பு உடையனவாக அவை விளங்கும். களங்கள் - கருத்துக்கள் வேறுபட்டவையாய் இருப்பதோடு தான் வாழும் சூழலோடும் - தர்க்கத்தோடும் - பார்வையோடும் கதைகள் பதிவு செய்யப்படுவதால் அவைக்கு சமூக ஆவணம் ஆகும் சாத்தியம் அதிகம் எனலாம். தட்டையானதாக இல்லாமல் பன்மைச்சாத்தியம் நிரம்பியதாக அவை இருக்கும். குறித்த படைப்புகள் மூலம் அவர்கள் வாழ்ந்த சமூகவியல் பின்னணியை, தர்க்கத்தை, பல்வேறு படைப்பாளிகளின் தீவிரமான குரல்கள் மூலம் புரிந்துகொள்ளப் பத்திரிகைச் சிறுகதைகள் இடமளிக்கின்றன. இத்தன்மை கலைப் பிரக்ஞையுள்ள பத்திரிகைகளிலேயே சாத்தியம் என்பது முக்கியமான விடயம். இந்நிலையில் கலை இலக்கியத்திற்குத் தன்னை அர்ப்பணித்து பிரக்ஞையுடன் 89 இதழ்கள் வெளிவந்த திசை' இதழ் சிறுகதைத்துறைக்கு அளித்த பங்களிப்பை நோக்குவோம்.

த. அஜந்தகுமார்
திசை சிறுகதைகள் ஓர் அறிமுகம்
திசை வெளிவந்த 69 இதழ்களிலும் மொத்தமாக 47 சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. திசை இதழானது சிறுகதைப்போட்டி ஒன்றையும் நடாத்தி அதில் பரிசு பெற்ற கதைகளைத் திசையில் பிரசுரித்தும் இருந்தது. போட்டி அறிவிப்பினை,
“சிறுகதை இலக்கியத் துறைக்கு வளமூட்டும் நோக்கோடும் சகல எழுத்தாளர்களையும் - இளந் தலைமுறையினர், எழுதாமல் இருக்கும் பழந் தலைமுறையினர் - ஆகிய சகலரையும் ஊக்குவிக்கும் நோக்கோடும் சிறுகதைப் போட்டி ஒன்றை நடாத்தத் திசை தீர்மானித்துள்ளது" ! என்று அறிவித்து இருந்தது.
தமிழ்த் தேசிய உணர்வும், தேசிய இனப் பிரச்சினையும் அக்காலத்தில் தீவிரம் பெற்று இருந்தமையினால் தமிழ்த் தேசியம் சார்ந்து இயங்கிய திசை’ ‘தேசிய இனப் பிரச்சினைக் கதைகள்' என்ற மகுடத்தின் கீழ் சிறந்த பத்துச் சிறுகதைகளை மறுபிரசுரம் செய்திருந்தது. அதற்கான சூழலை - காரணங்களையும் அக்கதைகள் குறித்த சுருக்க அறிமுகத்தினையும் இறுதியில் தருகிறேன்.
இதுதவிர மூன்று மொழிபெயர்ப்புச் சிறுகதைகளையும் திசை பிரசுரித்து இருந்தது. மேலும் துருவன்' அவர்களின் நினைவாக அவரின் 'மனிதன்' என்ற கதையும் மறுபிரசுரமாகியிருந்தது. இவ்வாறு நோக்கும்போது திசையில் வெளிவந்த 47 சிறுகதைகளில் பரிசு பெற்று பிரசுரம் பெற்றிருந்த 08 சிறுகதகைள் உட்பட 33 சிறுகதைகளே திசை இதழுக்கு என்று தனித்துவமான உரிமையுடையவை என்பது புலனாகின்றது.
இந்த 33 சிறுகதைகளின் ஊடாகவே பிரதானமாக திசையின் சிறுகதைப் பங்களிப்பை இனங்காணமுடியும். இதனை மதிப்பிடவேண்டும் எனில் தாம் வாழ்ந்த சமூகச் சூழலை இக்கதைகள் வெளிப்படுத்திய
- 41 -

Page 31
தனித்துத் தெரியும் திசை
விதம், அவற்றின் பேசு பொருள், எழுத்தாளர்கள் போன்ற பல விடயங்களைக் கருவியாக கொள்ளவேண்டும்.
எழுத்தாளர்கள்
திசை இதழில் சிறுகதை எழுதிய படைப்பாளிகளாக யானைப்பாகன் (நட்சத்திரன் செவ்விந்தியன்), வடகோவை வரதராஜன், ந. சத்தியபாலன், ரஞ்சகுமார் (ஜனனி என்ற பெயரிலே இவரின் 'இருள்' என்ற சிறுகதை திசையின் முதலாவது இதழில் இடம்பெற்றிருந்தது) அழகு அருணாசலம், அல் அஸஉமத் க. பீற்றர், கர்த்திநேசன் (என். கே. ரகுநாதன்), க. சட்டநாதன், சந்திரா தனபாலசிங்கம் எஸ். பி. சிவனேஷ், துரை சுப்பிரமணியம், தெளிவத்தை ஜோசப், அ. ரவி, க. நளாயினி, எஸ். பி. கிருஷ்ணன், சு. ராஜமகேந்திரன், திருமலை சுந்தா, இரிஷி ப்ரபஞ்ஷன் (தற்பொழுது ‘சித்தார்த்த சே குவாரா என்ற பெயரில் புலம்பெயர் படைப்பிலக்கியவாதியாக அறியப்படுபவர்), ஜி. பி. வேதநாயகம் மயூரன், கலைவாதி கலீல் துவிஜன் (மு. பொ), ந. பர்த்தீபன், மு. புஸ்பராஜன், குப்பிழான் ஐ. சண்முகன் (சம்யுக்தா என்ற பெயரில் தரு’ என்ற சிறுகதை பிரசுரமாகியிருந்தது), சாந்தன் போன்ற 27 பேர் விளங்குகின்றார்கள்.
இதுதவிர துருவன் க. பரராஜசிங்கம், ரஞ்சகுமார், வரதர், எஸ். கே. விக்னேஸ்வரன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், சாந்தன், நந்தி, மு. தளையசிங்கம், முத்து சிவஞானம், அ. செ. முருகானந்தன், பிரான்ஸிஸ் சேவியர் (புதியதோர் உலகம் என்ற நாவலைப் படைத்த கோவிந்தனே இவர்) ஆகியோரின் சிறுகதைகள் மறுபிரசுரம் செய்யப்பட்டிருந்தன.
A. பன்பிலொவ், காவ்ஃகா, சதாத் ஹசன் மன்தோ ஆகியோரின் சிறுகதைகள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டிருந்தன.
இந்த எழுத்தாளர்களின் எழுத்துகளைப் புரிந்து கொள்வதற்கு இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் உள்ள ஊடாட்டமும் இவர்களின் கதைகள் எழுதப்பட்ட சூழலும் முக்கியமான கருவிகளாகும் என்பதனால் அவை குறித்து முதலில் சுருக்கமாக நோக்குகின்றேன்.
- 42 -

த, அஜந்தகுமார்
இலக்கியமும் சமூகமும்
இலக்கியம் என்பது ஒரு சமூக உற்பத்தியே. இலக்கியத்தைத் தனி மனிதனே உற்பத்தி செய்கின்றான். எனினும் அதனைத் தனிமனித உற்பத்தியாகக் கருதமுடியாது. தனிமனிதன் தான் சார்ந்த சமூகவியல் அம்சங்களின் அடியாகவே இலக்கியத்தை உற்பத்தி செய்கின்றான். இதனைப் பின்வரும் கருத்துகள் மூலம் நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.
“சமுதாயச் சூழல்களால் உந்துசக்தியைப் பெற்ற தனி
மனிதர்களின் படைப்புகளாகவே கலைப் படைப்புகள்
அமைகின்றன’ ‘
“இலக்கியம் என்பது சமூக உணர்வுகளையும் சிந்தனை களையும் அச்சமூகத்தில் வாழும் மக்களின் வாழ்க்கையில் தோன்றும் உணர்ச்சிகளையும் மொழிக் குறியீடு கொண்டு தருவதாகும்’ ’
“ஒவ்வொரு காலத்தின் ஆன்மாவும் அவ்வக் கால இலக்கியங்களில் வெளிப்படுத்தப்படுகிறது” எனவேதான் இலக்கியம் பற்றிய ஆய்வின்போது சமூகவியற் கருத்து நிலையையே அடிப்படையாகக் கொள்ளவேண்டும். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, சமூகவியற் கருத்துநிலை ஏனைய கருத்து நிலைகளையும் உள்ளடக்கியது. மற்றையது இலக்கியம் என்பது சமூக உற்பத்தி என்ற வகையில் சமூகவியற் கருத்துநிலையில் அதனை நோக்குவதே அதிக பொருத்தப்பாடு உடையதாகும். மேலும்,
“இலக்கியத்தை சமுதாயச் சான்று நூலாகம் பயன்படுத்துகின்றபோது அது சமுதாய வரலாற்றுக்கு உரிய புற அமைப்பை அளிக்க இயலும்” “ என்பதனால் திசை சிறுகதைகளின் முக்கியத்துவத்தை அறிய சமூகவியல் நோக்கில் ஆராய்ந்து கொள்வதே எமக்குப் பயனளிக்கும் என்பது புலனாகிறது. இதற்கு அக்கதைகள் எழுந்த சமூக - பொருளாதார பண்பாட்டுச் சூழலை மிகச் சுருக்கமாக நோக்குதல் ஆய்வுக்கு நலனளிக்கும்.
- 43

Page 32
தனித்துத் தெரியும் திசை
திசை சிறுகதைகள் வெளிவந்த கழல்
திசை இதழ் வெளிவந்த சூழலை இரண்டாவது இயலில் கூறியிருந்தேன். இச் சிறுகதைகளைப் புரிந்துகொள்வதற்கு இன்னும் சிலவற்றைக் கூறுவது சாலப் பொருத்தமாகும்.
1989/90 காலகட்டத்திலேயே திசை இதழ் வெளிவந்து இருந்தது. அதில் வெளிவந்த சிறுகதை பெரும்பாலும் அக்காலத்தின் ஆன்மாவாகவே தம்மைப் பிரதிபலித்தன. இக்காலம் இந்திய அமைதிப்படை இலங்கையில் குடிகொண்டிருந்த காலம். சுட்டுக் கொலைகளும், படுகொலைகளும், காணாமல்போதல்களும், குண்டுவெடிப்புகளும், மோதல்களும், இயக்க முரண்பாடுகளும், இளைஞர்களின் வெளிநாட்டுத் தப்பியோட்டங்களும், அமைதியின்மையும், துயரங்களும், வறுமையும், விமானத் தாக்குதல்களும், சுற்றிவளைப்புகளும் அக்காலத்தில் எழுச்சி பெற்றிருந்தன. இது மனித மனங்களில் அந்நியம், தனிமை, விரக்தி, தத்துவவிசாரம், நிலையாமை, ஆற்றாமை போன்றவற்றை உண்டு பண்ணியதோடு பொருளாதார பண்பாட்டு - கலாசார ரீதியாகப் பல மாற்றங்களையும் விளைவித்தன. படைப்பு வெளிவருகின்றபோது இத்தனை அடுக்குகளிலும் நுழைந்து தொகுத்து பதனிட்டு செம்மைப்படுத்தியே தன்னை வெளிப்படுத்துகின்றது.
பேராசிரியர் கா. சிவத்தம்பி,
“படைப்பாளியின் மனதைத் தொடும் சம்பவப்பதிவு ஏற்பட்டதன் பின்னர் அதனோடு ஒட்டிய பலவற்றை அவன் தொகுத்துக் கொள்ளுகின்றான். அதாவது கற்பனையல்லாத புறஇயல் மெய்மையிற் (reality) காணப்படுகின்றனவற்றைத் தொகுத்துக் கொள்கிறான். அப்பொழுதுதான் அதனை வாசிப்பவன் அதனோடு இணைய முடிகின்றது. படைப்பாளி தொகுத்துக் கொள்ளுகின்ற முறைமையிலேதான் அவனுடைய கற்பனை தங்கியுள்ளது' " w
என்று கூறுகின்றார். எனவே ஒரு படைப்பாளி ஒரு கதைக்கருவைச்
சொன்னாலும் அக்காலச் சூழலின் புறஇயல் மெய்ம்மைகள்
- 44 -

த. அஜந்தகுமார்
அச்சிறுகதையெங்கும் விரவி நிற்கும் என்பதை உணரமுடிகின்றது. இப்பண்பை திசையின் சிறுகதைகளில் அதிகம் காணலாம். அக்காலச் சூழலின் குறுக்குவெட்டுமுகத்தை திசையில் வெளிவந்த சில செய்திகள் மூலம் இலகுவாக அறியவைக்கலாம் என நினைக்கிறேன்.
“ஒருபுறம் புதிய அணுகுமுறை மூலம் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது பற்றிய பேச்சு, மறுபுறம் சுற்றிவளைப்புகளும் தேடுதல் வேட்டைகளும் தாக்குதல்களும் தீவிரப்படல். இலங்கை அரசாங்கம் உதட்டளவில் அரசியல் தீர்வைப் பற்றி பேசிக்கொண்டு செயலளவில் கொடூரமான இராணுவ நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது' '
"நான்கு மாதத்தில் இரண்டாயிரம் கொலைகள் நாடெங்கும் அராஜகம்’ ‘
“1978இல் இருந்து 1988 வரையிலான் இந்தப் பத்துவருட இடைவெளிக்குள் பெரிய அளவில் இளந்தலைமுறை ஒன்றே (முக்கியமாக ஆண்கள்) இன்னும் அழிந்துகொணர்டிருக்கிறது. இது தமிழீழத்துக்கு சமூக பொருளாதார ரீதியாக பெரிய பிரச்சினைகளைக் கொண்டுவர இருக்கிறது.
உள்நாட்டுப் போரின் பயங்கரம் ஒவ்வொரு பெற்றோரின் மனத்தையும் கிலி கொள்ளச் செய்துள்ளதனால் அவர்கள் தங்கள் பிள்ளைகளை ஊரில் வைத்திருக்கவே பயப்படுகின்றார்கள். அவர்கள் பிள்ளைகளின் படிப்பைப் பற்றியே கவலைப்படாமல் பிள்ளைகளைப் பிடித்து வெளிநாடு அனுப்பி விடுகிறார்க்ள்” "
இவற்றுக்குள் பல சொல்லப்படாத சேதிகள் உறங்கியுள்ளன. இச்சூழலின் சமூக பொருளாதார பண்பாட்டுச் சூழலை எவ்வாறு திசையின் சிறுகதைகள் பிரதிபலித்தன என்று நோக்க விழைகின்றேன்.
- 45 شد.

Page 33
தனித்துத் தெரியும் திசை
திசை சிறுகதைகளின் உள்ளடக்கம்
திசையில் வெளிவந்த சிறுகதைகள் தாம் வாழ்ந்த காலத்துச் சமூகத்தின் தர்க்கத்தோடும் அதன் இயல்போடும் விமர்சனத்தோடும் எள்ளலோடும் வெளிவந்துள்ளன.
அக்காலத்தில் மேலோங்கியிருந்த இனப்பிரச்சினையையும் அதன் வழியாகக் கிளைத்தெழுந்த பிரச்சினைகளையும் அவை உள்ளடக்கங்களாகக் கொண்டுள்ளன. இராணுவத்தின் அராஜகங்கள், விமானத் தாக்குதல்கள், அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் - பாதிப்புகள், தேடுதல் - படுகொலைகள், இளைஞர்களின் அவச்சாவு, சிறுவர்கள் - பெண்கள் எதிர்கொண்ட பாதிப்புகள் - அனுபவங்கள், இளைஞர்களின் தீவிரவாத எழுச்சி - இயக்க முரண்பாடுகள், இளைஞர்களின் வெளிநாட்டுப் பயணங்களின் சாதக - பாதகங்கள், தமிழ்த்தேசிய உணர்வு, சமூகம் மீதான விமர்சனங்கள், சமயம் மீதான விமர்சனங்கள், சாதி, ஆண் - பெண் உறவுச் சிக்கல்கள், மெல்லிய காதல்கள், அந்நியம், மன விசாரங்கள், சமூக உறவுகளின் நேயம் - முரண்பாடுகள், பழைய நினைவுகளில் குளிர்காய்தல், சமூக மனிதர்களின் முகத்திரைகள் என்று பல விடயங்களை இக்கதைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் எடுத்துரைத்து நிற்கின்றன. இவற்றை மொழிக் குறியீட்டின் மூலமும் - சரியான உருவம் மூலமும் இவை வெளிப்படுத்தியமை இதன் முக்கியத்துவம் எனலாம். இவ் உள்ளடக்கங்களை எவ்வாறு இச்சிறுகதைகள் பேசியிருக்கின்றன என்பதை சில வகைமைகளுக்கு ஊடாக நோக்கலாம்.
திசையில் வெளிவந்த சிறுகதைகள்; சமுதாயத்திலுள்ள பிரச்சினைகளையும் துன்ப துயரங்களையும் எதிர்கொண்டு அவற்றைச் சித்திரிப்பனவாகவும் பழைய வாழ்க்கையின் பொன்னான ஞாபகங்களை மீட்டி அதன் மூலம் ஒரு வகையில் சமகால வாழ்விற்கு எதிர்வினை யாற்றுபவையாகவும் வாழ்க்கையையும் அனுப்வங்களையும் மற்றும் சுற்றியிருப்பவற்றையும் நுணுக்கமான விவரங்களுடன் இயல்பு நவிற்சியாகச் சித்திரிப்பவையாகவும் வாழ்க்கையையும் அனுபவங்களையும் அப்படியே சொல்வது மட்டுமன்றி அவற்றை எள்ளுதலும் விமர்சித்தலுமாக
- 46

த. அஜந்தகுமார்
இயங்குபவையாகவும், சமுதாய நிலைகளையும் போக்குகளையும் காரண காரிய முறையில் இனங்கண்டு அவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இனங்கண்டு, அவற்றை இலக்கியப் பொருளாக எடுத்தாளுபவையாகவும் விளங்குவதை அவதானிக்கலாம். இத்தன்மையை நாம் திசையின் சிறுகதைகளில் நோக்குவோம்.
இனப்பிரச்சினை
திசையின் சிறுகதைகள், மோசமான இராணுவ நடவடிக்கைகளும் - அடக்குமுறைகளும் இடம்பெற்ற சூழலில் வெளிவந்தமையினால் அக்காலத்தை மிக இலகுவாகப் பிரதிபலிக்கின்றன. இராணுவ அராஜகங்களை, இளைஞர்களின் பீதியை - எழுச்சியை, வெளிநாட்டுக்குத் தப்பியோடுதலை, அகால மரணங்களை, தமிழ்த்தேசிய உணர்வுகளை, இயக்கங்களிடையேயான முரண்பாடுகளை அவை சொல்லி நின்றன. அக்காலப் பிரச்சினைகளை மிக உக்கிரமாக வெளிப்படுத்திய சிறுகதைகளுள் அ. ரவியின் "இப்படி ஒரு காலம், சந்திரா தனபாலசிங்கத்தின் இயன்றால் நகுக, துவிஜனின் வேட்டை, திருமலை சுந்தாவின் அவதிக்காரர்கள், ரஞ்சகுமாரின் 'கோளறு பதிகம்' என்பன முக்கியமானவை.
இராணுவத்திற்கு ஒளித்துத் திரியும் இளைஞன் ஒருவனால் சொல்லப்படும் இப்படி ஒரு காலம் சிறுகதையானது சமகால இராணுவப் பிரச்சினைகளை உன்னதமாகப் பதிவு செய்கின்றது. அதாவது பழையகால நினைவுகளினை இரைமீட்டிச் சந்தோஷம் கண்டு நிகழ்காலத்தில் அச்சம் கொள்கிறது. இயன்றால் நகுக’ சிறுகதையில், வீட்டில் தனித்து நிற்கும் ஒரு பெண் இராணுவத்திற்கு பயப்படுவதும் அண்மையில் பெண்களுக்கு நடந்தவைகள் எல்லாம் நினைவுக்கு வந்து அவளைப் பதற்றமடைய வைப்பதும் மிக அழகாகச் சொல்லப்பட்டுள்ளது.
துவிஜனின் ‘வேட்டை சிறுகதையானது, இராணுவத்தின் மோசமான நடவடிக்கைகளை குறியீடாகச் சொல்கிறது. ‘மனிதனைத்தேடி என்ற சிறுகதையானது, சிங்களக் கிராமமொன்றில் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்படும் ஒரு மனிதனின் கதையைச் சொல்கிறது. அவதிக்காரர்கள்
- 47

Page 34
தனித்துத் தெரியும் திசை
என்ற சிறுகதை, வெளிநாட்டில் அகதி என்ற போர்வையில் குளிர்காயும் இளைஞர்களையும் - தாயகத்துக்காக உயிரையும் கொடுக்கும் இளைஞர்களையும் ஒரு தந்தையின் பார்வையில் பார்க்கின்றது. சாந்தனின் அதே விதியெனில்’ என்ற சிறுகதை, வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான அரசியல் விடயத்தைக் கதையாடுகின்றது.
இச்சிறுகதைகள் நேரடியாக இப்பிரச்சினைகளை அலசியுள்ளன. இதுதவிர பல கதைகளில் இப்பிரச்சினைகள் ஆங்காங்கு தொட்டுச் சொல்லப்படுவதனையும் - இப்பிரச்சினைகள் வழியாக விளையும் உப பிரச்சினைகளையும் நாம் காணமுடிகின்றது. இவற்றை நாம் பல எடுத்துக்காட்டுகளுடன் பல வகைமைகளில் காணலாம்.
1. இராணுவச் சூழல்
திசையில் வெளிவந்த சிறுகதைகள் இராணுவ அராஜகங்களை மிகத்தெளிவாக வெளிப்படுத்தி அக்காலச் சூழலை எமக்கு உணர்த்துகின்றன. இராணுவம் எதையும் செய்யும் விட்டேத்தித்தனத்துடன் செயற்பட்டுத் தமிழ் இளைஞர்களைப் பலியெடுப்பதும் - பழிவாங்குவதும் சாதாரணமாக இடம்பெற்றது. இதனைப் பூட்டில்லாப் பூட்டு' என்ற சிறுகதையில்,
"நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன என்ற நிலையில் இராணுவம் அட லைபிறறியையே கொழுத்தும் அவங்கள், லைபிறறிக்குள் நிற்கும் அவர்களையா விடுவார்கள். எந்த நேரத்தில் எது நடக்கும் யாருக்குத் தெரியும்” என்ற வரிகளில் நாம் காண்கிறோம். இதனால் மக்கள் வாழ்வில் பீதியும் கலக்கமுமே இருந்தது. மரணத்துள் வாழும் இயல்பற்ற வாழ்க்கை அக்காலத்தை மூடியிருந்தது. இதனை “இப்படி ஒரு காலம்’ சிறுகதையில்,
“ஒவ்வொருவரும் பீதி கொண்ட முகங்களுடனேயே வாழ்கிறார்கள். ஒரு உண்மையை எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள் - தங்கள் மரணம் அகாலமாகவே நிகழும் 6T6 ge.
- 48 -

த அஜந்தகுமார்
சில மனிதர்கள்’ என்ற சிறுகதையில்,
“தலைமேல் இடிஇடித்து தடியால் அடி அடித்து ஏறடா இறங்கடா, ஹாண்ட்ஸ் அப் பணிணடா என்று எத்தனையோ சோதனைகளை எதிர்கொண்டு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் மத்தியில்.” ܫ என்று பதிவாகி உள்ளது. இதனால் அதிகம் இளைஞர்களே பாதிக்கப்பட்டார்கள். இராணுவத்துக்குப் பயந்து ஒளிந்து திரிந்தார்கள். அவர்களின் கனவுகள் எல்லாம் மிகப் பயங்கரமானவையாக மாறி அவர்களைச் சித்திரவதை செய்து அவர்களின் மனதில் அச்சக் கோடுகளையும் வாழ்க்கை பற்றிய மயக்கங்களையும் மரண அவஸ்தைகளையும் ஏற்படுத்தின. இதனை
இப்படி ஒரு காலம் சிறுகதையில்,
“ஹெலி இரவில் வெளிச்சப் பொட்டைப் பாய்ச்சியபடி வரும்போது; இந்த வெளிச்சப் பொட்டின் பாய்ச்சல் தன்னைத் தேடத்தானோ என்பதும் திகிலைத் தருகிறது.” “எல்லோரும் நித்திரையாக இருந்த ஒரு சாமம் புரிபடா மொழியின் கூச்சலுடன் இராணுவத்தினர் அவன் வீடு புகுந்தனர். . பற்றைகள் நிறைந்த வெளிகளில் பாம்புக்கும் அஞ்சாது ஓடினான். பிறகு வேறு குடில்களில் கிடந்தான். இனி ஓடமுடியாது என்று களைத்த நேரத்தில் இந்தியாவிற்கு ஓடிவிட்டான்” “அந்நியக் கால்கள் பதிந்த காலம் இது. அவ்வளவுதான் எல்லோரும் சிதைந்து போனார்கள். அவர்கள் மனது ஒருவழிப்படவில்லை” “இன்றைக்கு இங்கால் பக்கம் செக்கிங் என்றால் அங்கால் பக்கம் ஒளிந்திருக்கிற மகனுக்குத் தகப்பன் சாப்பாடு கொண்டுபோய்க் கொடுக்கிறார்.” “ஹெலி சுற்றிச் சுற்றி வருகிறது. . மரவள்ளித் தோட்டத்தில் இளைஞர்கள் பதுங்குகிறார்கள். ஹெலி விட்டுவிட்டுப் போகிறது. அல்லது சடசடவென்று குண்டுகளைத் தீர்க்கிறது” என்று பதிவாகியுள்ளது.
- 49 -

Page 35
தனித்துத் தெரியும் திசை
“கோளறு பதிகம்” என்ற சிறுகதையில் அச்சம் தரும் இரவும் அதை எதிர்கொள்ளும் இளைஞர்களின் மனநிலையும் அழகாகப் பதிவாகியுள்ளது. “. இந்தத் தெருவில் இருக்கும் எல்லா நாய்களும் சேர்ந்து எச்சரிக்கையும் பயப்பிராந்தியும் கலந்த குரலில் குரைக்கத் தொடங்கின. . ஒரு வெடிச்சத்தம் இருளை உலுக்கியது நாய்களின் சந்தடிகள் ஓய்ந்தன. ஜன்னலை எச்சரிக்கையாகத் திறந்தோம், தெருவில் சிலபேர் கனமாக நடந்து கொண்டிருந்தார்கள். நிழல்கள் போல், காலடி அரவங்களைக் கிளப்பாது ஈசலைப் பிடிக்க எத்தனிக்கும் பல்லிகளெனப் போயினர். சுற்றுச் சூழல் முழுவதற்கும் அச்சமூட்டும் தோற்றமொன்றினை அவர்கள் வெகு இலகுவாகக் கொடுத்துச் சென்றனர். . சற்று நேரத்தில் சற்றுத்தூரத்தில் இருந்து இன்னொரு வெடிச்சத்தம் கேட்டது. வெகுநேரம்வரை எமது காதுகளுக்குள் அந்தச் சத்தம் சுழன்று சுழன்று ஓடிக் கொண்டேயிருந்தது” இதனால் அவர்கள் பயங்கரமான கனவுகளுக்கு ஆட்பட்டார்கள். கனவிலும் கூட நிம்மதியாக வாழமுடியாத பிராணவஸ்தை இளைஞர்களிடம் மிகுந்தது. இதனை அதே சிறுகதையில் வரும்
“தடார் படார் என ஜன்னல்களும் கதவுகளும் மூடிக்கொள்ளும் சற்று நேரத்தில் தாமே திறந்துகொள்ளும். யாரோ சிலர் பிரணாவஸ்தையுடன் முனகும் அவல ஒலங்கள் கேட்பதைப் போலிருக்கும். மிக நெருங்கும் அபாயத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளும் அவதியுடன் மூத்திரம் முட்ட சில பேர் தாறுமாறாக தடுமாறி ஓடிக்கொண்டிருப்பதெனவும் அரவங்கள் எழுந்தன. . எனதுடல் வியர்க்கும் இதயம் துடிக்கும். வேகவேகமாக மூச்சு வரும். எழுந்து போகவோ மறுபுறம் திரும்பிப் பார்க்கவோ இயலாதவனாய் போர்வையால் முகத்தை மூடியபடி படுத்துக் கிடப்பேன்’ இளைஞர்களின் கனவுகளுக்கும் பயங்களுக்கும் அர்த்தம் தருவதாய் அகாலமரணங்கள் அவர்களைச் சூழ்ந்தபடியே இருந்தன. அவர்களின்
- 50 -

த. அஜந்தகுமார்
மரணங்கள் முன்னால் அவர்களின் இலட்சியங்கள், கனவுகள், ஆர்வங்கள், சிரத்தைகள் எல்லாம் பொடிப்பொடியாகி விடுவதோடு ஒரு சமூகம் இளைய தலைமுறையை இழந்துவிடுவது என்பதும் நிகழ்கின்றது. இது கோளறு பதிகம் இப்படி ஒரு காலம், பக்குவம், அவதிக்காரர்கள், வேட்டை ஆகிய சிறுகதைகளில் அழகியல் பூர்வமாக வெளிப்பட்டுள்ளது. இப்படி ஒரு காலம் சிறுகதையில்,
“எதிர்பார்த்தபடி ஒரு நாள் இந்தக் கிராமத்தின் ஒரு பகுதி சுற்றிவளைக்கப்பட்டது. சுற்றிவளைத்ததின் பிறகு எது நடக்குமோ அது நடந்தது. இந்திரன் அன்றைக்கு இறந்துபோனான். இறந்து போனான் என்பது வெறும் வார்த்தை இது சும்மா ஒரு சொல்லால் சொல்லிவிட்டுப் போகமுடியாது. அதன் முழு உருவத்தையும் குணாதிசயங்களையும் அதன் பரிணாமங்களையும் சேர்த்துக் கொண்டுதான் அவன் இறந்துபோனான். அவனுக்கும் ஏணை கட்டி தாலாட்டுப் பாடித்தான் தாய் தூங்க வைத்திருப்பாள். மெத்தென்ற தன் நெஞ்சில் பால் சுரக்க வைத்திருப்பாள்" 'பக்குவம்' என்ற சிறுகதையில்,
"முப்பத்தொரு வயதில் சா வருவது எவ்வளவு கொடுமை. அவனுக்கும் ஈஸ்வரிக்கும் இடையே எவ்வளவு நெருக்கமான உறவு தளிர்கொண்டது . திருமணம் கூட இரண்டொரு மாதத்தில் என்று இருந்தது. எல்லாமே அவனளவில் ஏன் பொய்த்துப் போய்விட்டன.
அவனது ஆர்வம், சிரத்தை மாணவர்களின் தன்மைக்கேற்ப கற்பிக்கும் பக்குவம் எல்லாமே ஒரு துப்பாக்கி ரவையின் முன்னால் அர்த்தமிழந்து போவதென்றால் .” என்று பதிவாகியுள்ளது. இதனால்தான் அதே சிறுகதையில், "இரத்த வெடிலும் பிண வாடையும் தான் இந்த மண்ணின் விதியாகிவிடுமோ..? இயல்பு தப்பிய இந்த வாழ்வு - எத்தனை காலம் நீடிக்கப் போகிறது.
- 51 -

Page 36
தனித்துத் தெரியும் திசை
இது என்ன அபத்தம். எல்லாமே ஒழுங்கற்று தடுமாறியதான நிலை ஏன்? இயல்பும் இசைவும் பிறந்த இந்த வாழ்வு ஒழுங்குபடுத்தப்படுவது எப்போது.? எல்லாமே தூரத்துக் கணவாய் ஆகிவிடுமோ.” என்ற ஏக்கப் பெருமூச்சும் வேதனையும் எழுகின்றது.
இவ்வாறான இராணுவ அராஜகமும் போர்ச் சூழலும் மிகுந்த காலகட்டத்தில் சமூக உறுப்பினர்களான பெண்களும் சிறுவர்களும் அதை எவ்வாறு எதிர்கொணர்டார்கள் என்பதும் அது அவர்களில் ஏற்படுத்திய ஆக்கிரமிப்பையும் உளவியலையும் அறிவது என்பது மிக முக்கியமானது.
2. போர்ச்கழனும் பெண்ணும்
அச்சம் தரும் இராணுவ நடமாட்டங்களும் அவர்களின் பாலியல் சேஷ்டைகளும் பெண்களின் வாழ்வைச் சீரழித்ததோடு வீட்டிலோ, வெளியிலோ நடமாடமுடியாத ஒரு பதுங்கல் வாழிவையும் பயங் கலந்த உணர்வுகளையுமே பெண்களிடம் தோற்றுவித்தன.
இயன்றால் நகுக' என்ற சிறுகதையானது வீட்டில் ஒரு இளம்பெண் தனித்திருக்கும் போது வீட்டுச் சூழலுக்குள் இராணுவம் நுழைந்தபோது அவள் அடைந்த பயம் - கலக்கம் - அச்சம் என்பவற்றையும் அப்போது அவள் கேள்விப்பட்ட பெண்கள் பட்ட துன்பங்கள், இராணுவ சேஷ்டைகள் பற்றிய பய எண்ணங்களையும் மிக ஆழமாகப் புலப்படுத்துகின்றது. இந்திய இராணுவம் பெண்களுடன் சேஷ்டைவிடவில்லை என்று இந்தியா சாதித்து வந்ததற்கான விமர்சனமும் அச் சிறுகதையில் சொல்லப்பட்டுள்ளது.
“. பசுமாடு கத்த, திறந்து கிடந்த வெளி வாசல் கதவை அழுத்திப் பூட்டி, யன்னல் வழியே பார்த்தாலும் தெரியாத நடைப்பக்கத்துச் சுவர் ஓரமாக நின்று கொண்டாள். அவள் இதயத்தின் சாதாரண டப் டப் ஓசை இப்போது ‘டம் டம்’ என்றாகி எகிறிக் குதித்துத் துடிக்கத் தொடங்கியது. தன்னைத் தன்னந்தனியே தவிக்கவிட்டு எங்கோ போய்விட்ட தன் வயதான தகப்பனைக் காரணமில்லாமல் மனதுக்குள் கடிந்து கொண்டாள். அவர் காவல்தான் இவளைக் காத்திடுமா என்ன?
- 52

❤. ---eי -־־י־'''''''''''''''''''''''''איא த அஜந்தகுமார்
பயத்தில் கண்களை இறுக்க மூடியிருந்தாள்.
இதே நிலையும் நீடித்து, இன்னும் கதைகளும் கேள்விப்பட்டால் தான் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு நிரந்தர நோயாளி ஆகிவிட வேண்டியிருக்கும் என்று மிகவும் அஞ்சினாள்" என்று வதனி என்ற பாத்திரம் அஞ்சுவதும் கலங்குவதும் செய்வதறியாது திகைப்பதும் காட்டப்பட்டுள்ளது. அவள் கேள்விப்பட்ட முன்வீட்டுக் கனகசபையின் விதவை மகளுக்கு நிகழ்ந்தது, குளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் கன்னத்தைக் கிள்ளியதும் - அவள் கணவன் வந்தபோது "அண்ணி தனிய, - நான் காவல்” என்று கூறிய கதையும், ஏழை முருகனின் மகளுக்கு நடந்ததான; “வீட்டுக்குள் பட்டப்பகலில் தம் ஒரே மகளின் மரண ஒலம் கேட்டும், ஒன்றும் செய்யமுடியாத நிலையில் பெற்றவர்கள். எல்லாம் முடிந்து போய்விட்டது. காட்டுப் பூனைகளால் முகம் பிறாண்டப்பட்டவள் போல முகம். உடலெங்கும் காயங்களுடன் தன் ஒரே மகளை அவன் கண்ட கொடூரமும் சோகமும்” மணியத்தின் பத்து வயது மகளுக்கு நடந்த அக்கிரமமும், செக் பொயின்ரிற்கு பக்கத்து வீடான வசந்தி ரீச்சருக்கு நடந்ததுமான கதைகள் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளில் இராணுவம் ஈடுபட்டதனைச் சொல்லுகின்றது.
வேட்டை கதையில் கணவனுக்கு முன்னாலேயே மனைவி கற்பழிக்கப்படுவது சித்திரிக்கப்பட்டு உள்ளது.
“உள்ளே திடுதிடுப்பென நுழைந்த அது, நேராக அவளில் பாய்ந்தது. அவளது ஆடை அலங்காரம் அனைத்தும் சிதைக்கப்பட்டு அவள் நிர்வாணமாக்கப்பட்டாள். ஓர் உன்மத்தம் கொண்ட உக்கிரமான தாக்குதல் கதவின் பின்னால் மறைந்து நின்ற அவன், அந்த உன்மத்த விவின் அகோரத்தில் இல்பொருள் ஆனான்”
- 53 -

Page 37
தனித்துத் தெரியும் திசை
அக்காலச் சூழலில் பச்சிளம் சிறுமிகள், திருமணமாகாத இளம்பெண்கள், திருமணமான பெண்கள் என்று பாகுபாடின்றிப் பலரும் இராணுவத்தின் காமப்பசிக்குப் பலியாகியதையும் அதனால் பெண்களிடம் ஏற்பட்ட பயத்தையும் - ஆணிகளிடம் குறிப்பாக கணவன்மாரிடம் ஏற்பட்ட உளவியல்
தாக்கத்தையும் விளங்கிக்கொள்வது முக்கியமானது. ஆனால் இவ்வாறெல்லாம் நடந்தபோதும் இந்திய இராணுவத்தை அமைதிப் படையாகவும், பச்சிளம் பாலகர்களாகவும் சித்திரிக்கும் அரசியல் அராஜகம் நிலவி இருந்தது. இதனை 'இயன்றால் நகுக’ சிறுகதை விமர்சித்துள்ளது.
". இத்தனைக்கும் இவளின் அபிமான இந்திய எழுத்தாளரான ஜெயகாந்தன் தமிழ்நாட்டில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் இப்படிப் பேசியிருந்தாராம்: "எங்கள் வீரர்கள் அங்கே தமிழ்ப் பெண்களிடம் தவறாக நடக்கிறார்களாம் இதை ஒருநாளும் நம்பமாட்டேன் என்று. சோ என்னும் ராமசாமி கூடப் பேசினாராம், “காதில் பூ வைத்திருப்பவனிடம் போய்ச் சொல்லுங்கள் - இதை ஒரு குழந்தை கூட நம்பாது’ என்று. யாரும் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இங்கே நடப்பவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன” . இதையெல்லாம் மகாத்மா காந்தி இன்றிருந்து கேள்விப்பட்டால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை பண்ணியிருப்பாரோ? என்று விமர்சிக்கப்பட்டுள்ளது. இதேபோல “முதுகில் சொறியுங்கோ' என்ற சிறுகதையில், ". உறுப்புகளை அறுத்து அங்கேயே ஈடுவைத்துவிட்டு வந்த இந்த அப்பிராணி மயான அமைதிப்படைக்கு, மேகம் மேகமாய் நோய் பரவியிருப்பதாக இந்தியாவில் புதிய வாகடம் எழுதப்படுகிறதாக ஒரு புதிய ஐதீகக் கதை இந்தப் படைக் குழந்தைகளை நினைத்தால் பாவமாகக் கிடக்கிறது. தூக்கிவைத்துக் கொண்டு அமாவாசை நிலவைக் காட்டிப் பழங்காலப் பாற்கடலின் அசுரபானத்தைக் கொடுக்க ஆசை” என்று இந்திய இராணுவத்தை மிக எள்ளலாக விமர்சிக்கப்பட்டு உள்ளதையும் காணலாம்.
அக்காலப்பகுதியில் இராணுவ அராஜகங்களால் ஆண் சமூகம் அழிக்கப்படும் சூழலில் பெண்களின் நிலை என்பது கவலைக்கிடமானது
- 54

த. அஜந்தகுமார்
என்பதோடு துயரம் தருவதாகவுமே இருந்தது. இந்தநிலையை கோளறு பதிகம் சிறுகதையில் வரும் காட்சி ஒன்றுக்கூடாக நாம் காணலாம். ". அந்தப் பெண்ணின் முகத்தினுள் தசைகள் யாவும் ஒருவாறு கோணிப்போய்த் துடித்தன. வாயும் கண்களும் அகல விந்திருந்தன. கண்களில் அதிர்ச்சியும் ஏக்கமும் தேங்கிப் போய்க்கிடக்க, வாய் சில வார்த்தைகளை வெளிப்படுத்த முயல்வதாய் மெல்ல அசைய உன்னியது. அவளுக்கு நோயல்ல, துக்கம்! தாங்கமுடியாத துக்கம். அழுது குழறுவதால் மட்டும் அப்படியான துக்கங்களை முழுமையாக வெளிக்கொணர முடியாது. அநேகமாக அவளது கணவனோ குழந்தையோ எங்காவது குண்டு வெடிப்பிலோ துப்பாக்கிச் சூட்டிலோ மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கவேண்டும், இறந்துகூடப் போயிருக்கலாம்”
3. போர்ச்சூழலும் சிறுவர்களும்
இதேபோல யுத்தச் சூழலை, இராணுவ நடமாட்டங்களை சிறுவர்கள் எவ்வாறு உள்வாங்கிக் கொண்டார்கள் என்பது முக்கியமானது. வளிளம் பருவத்தினராகிய அவர்களிடம் அச்சூழல் ஏற்படுத்தும் உளவியலும், புரியாத வயதின் புதிர்க் கோலங்களும் திசையின் சிறுகதைகளில் வெளிப்படுத்தப்பட்டு உள்ளமை முக்கியமானது. இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டான சிறுகதையாக "இவன்’ என்ற சிறுகதை விளங்குகின்றது.
சிறுவர்களுக்கு உரிய விடுப்புப் பார்க்கும். - கேட்கும் தன்மையை, ". இவன் ஆட்டுக் கொட்டிலுக்குள் இருந்து பார்த்தான். பின்பக்கத்துக் குளத்தங்கரையாலை - இவன் வீட்டு முள்ளுக்கம்பி வேலியருகே போனர்கள். எல்லோரும் லோங்சை மறைக்கும் சப்பாத்துகளுடன், ‘கருங்குழலேந்தி கனமான தொப்பிகளுடன் பச்சையாய்.” s ". இவன் வீட்டையும் செக்கிங்குக்குப் போனார்களாம். தாத்தாவும் தங்கச்சியும் வீட்டையிருந்தார்கள். மாமரத்திலே மாங்காய் ஆஞ்சு சப்பினர்கள். இளநீர் விசாரித்தார்கள். பெரியவீட்டை மட்டும் திறந்து அலுமாரி சூட்கேஸ் எல்லாம் பார்த்தார்கள்’ என்ற பகுதிகளில் காணமுடிகின்றது. பிஞ்சு உள்ளங்களில் இராணுவ நடமாட்டங்களும் - தேடுதல்களும் ஏற்படுத்திய பாதிப்பினை,
- 55

Page 38
தனித்துத் தெரியும் திசை
"மாரி காலத்தில் இவன் ஐந்தாவது சேட் போடுவான். அதுவும் அந்தச் சிவப்புக் கோடன் சேட். அது போட்டுக் கழட்டுகிற காலையில் ஆமிக்காரர் வருவார்களாம். மூன்று முறை நினைத்தது நடந்தது. பிறகு அவன் அதைப் போடவேயில்லை”
என்ற வரிகள் மிக உக்கிரமாக வெளிப்படுத்துகின்றன.
4. eudis உருவாக்கமும் - முரண்பாடுகளும்
இராணுவ ஆக்கிரமிப்புகள் இருந்த காலகட்டத்தில் ஆயுதம் ஏந்திய தமிழ்க் குழுக்கள் உருவாகுவதும், அவர்களிடையே இயக்க முரண்பாடுகள் கூர்மை பெறுவதும் இடம்பெறத்தொடங்கின. இளைஞர்களில்
பெரும்பாலானவர்கள் ஏதோ ஓர் இயக்கத்துடன் இணைந்தவர்களாகவும் சார்ந்தவர்களாகவும் இருந்தார்கள். இயக்கங்களிடையே அரூபகரங்களினால் உட்கட்சி மோதல்களும் பூசல்களும் ஊக்குவிக்கப்பட்டன. இவை இளைஞர்களின் தீவிரவாத எழுச்சியைக் 'காயடிக்கும் இராஜ தந்திரங்களாகச் செயலூக்கம் பெற்றிருந்தன. இத்தன்மையை "கோளறுபதிகம்' என்ற சிறுகதை மிக அற்புதமாகச் சிருஷ்டித்துத் தந்துள்ளது. கதை சொல்லிக்கு ஊடாகவும் தேவன் என்கிற பாத்திரம் ஊடாகவும் புறமெய்ம்மை இயல் சித்திரிப்பு ஊடாகவும் இப்பொருள் சித்திரிக்கப்பட்டுள்ளது.
“. தேவன் மக்கு அல்ல, அவனது புலன்களும் புத்தியும் வேறு திசைகளை நோக்கித் திருப்பப்பட்டிருந்தன. இன்னும் கொஞ்சம் காலம் போனதும், அவனது சைக்கிளின் பெரிய கரியர் கழற்றிவைக்கப்பட்டது. அவனது ஐயாவிற்கும் அவனுக்கும் ஒத்துவரவில்லை. தேவனின் சைக்கிள் விரைந்து செல்லக்கூடியவாறு உருமாற்றம் செய்யப்பட்டது. அத்துடன் ஹாண்டிலில் ஒரு பெரிய துணிப்பை தொங்கியவண்ணம் இருந்தது. அது சிறிய, கனமான சில பொருட்களைச் சுமந்தது.”
என்பதன் ஊடாக இளைஞர்கள் ஆயுதக் குழுக்களை நோக்கி ஈர்க்கப்படுவதும் அவர்கள் அதில் கரைந்துபோவதும் உணர்த்தப்படுகிறது. பிறகு தேவன் குண்டு ஒன்றினைத் தயாரிக்க முயலும்போது அவனது வீடு சேதமடைந்து தகப்பனுக்கும் அவனுக்கும் பெரிய பிளவு தோன்றியது. அவன் அலைந்து திரிவோனாகி, மெலிந்து தன்னைப் பாதுகாக்க ஒளிந்து திரியத் தொடங்கினான்.
- 56 -

த. அஜந்தகுமார்
இறுதியில் அவனுடைய தோழர்களுடைய கதையைப் போலவும் அவன் கதையும் கிடைக்கப் பெறாத கதையாக மாறியது. உட்கட்சிப் பூசல்கள் பெரும் படுகொலைகளை நிகழ்த்தியமை பின்வரும் பகுதி தெளிவாக உணர்த்துகின்றது.
“. வீட்டின் சுவர்களில் எல்லாம் துப்பாக்கிக் குண்டுகள் மழையெனப் பொழிந்ததில் மேற்பூச்சுகள் புண்பட்டு மூளியாகிப் போயினவாம். இதே மாடிப்படிகளின் வாயிலாக இரத்த ஓடை குதூகலத்துடன் கீழிறங்கிப் போயிற்றாம். உட்கட்சிப் போராட்டத்தை சில துப்பாக்கிக் குண்டுகள் சப்தித்து முடித்து வைத்தனவாம். மொத்தம் பன்னிரண்டு பேர்கள் ஒரே இரவில் சில நொடிகளுக்குள் கட்சியினின்றும் உலகத்தினின்றும் வெளியேற்றப்பட்டர்கள்.”
அக்காலப்பகுதி இளைஞர்கள் பெற்றேளில் இருந்து அந்நியமாகி இயக்கங்களுள் கலந்து, அங்கும் உட்கட்சி முரண்பாடுகளுக்கு ஆளாகி நின்ற தன்மையும் அழிந்துபோன நிலையும் ஆழமாக நோக்கப்படவேண்டிய ஒன்று.
அவலங்களையும் அழிவுகளையும் தமிழரிடம் விதைத்ததனால் இளைஞர்களின் எழுச்சி என்பது தவிர்க்கமுடியாமல் இருந்தது. இதற்கு அரசு பல்வேறு கபட நாடகங்களை ஆடவேண்டி இருந்தது. வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பாக அக்காலத்தில் தோன்றிய சிக்கல்கள், அதில் அரசு ஆடியிருந்த கபட நாடகங்கள் சாதாரணர்களிலிருந்து கம்யூனிஸ்டுகள் வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அதன் விளைவுகள் பற்றிய அலசலை அதே விதியெனில்' என்கின்ற சிறுகதை தீர்க்கமாகக் கதையாடுகின்றது. இதனை, "வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர சர்வசன வாக்கெடுப்பு தேவை எண்டு சொல்லுகினம் இல்லையே. . இதைப் பற்றித்தான் பேச வேண்டியிருந்தது. ஒமென்றான்.
- 57

Page 39
தனித்துத் தெரியும் திசை
அதாவது வடக்கோட இணைஞ்சிருக்க கிழக்குக்கு விருப்பமோ எண்டறிய வாக்கெடுப்பு’
அவர் தொடர்ந்து பேசினார்.
“ஓ.” "அப்பிடிப்பாத்தா, அதுக்கு முதல் இலங்கையோட இணைஞ்சிருக்க விருப்பமோ எண்டறிய வடக்குக் கிழக்கிலயும் வாக்கெடுப்பு நடத்தத்தானே
29
வேணும். என்பதனூடாக விளங்கிக்கொள்கின்றோம். அரசின் கண்துடைப்பை இனங்கண்ட தன்மையையும் அதனால் வரும் எழுச்சியையும் இதில் தரிசிக்கிறோம்.
அதேவேளை இராணுவ அராஜகங்களினால் அந்த அவலங்களையும் துயரங்களையும் தாங்கமுடியாமல் தமிழ்த்தேசிய உணர்வு பெற்றவர்களாய், இளைஞர்கள் 'இயக்கமாக’ உருமாறியமை முக்கியமானது. இத்தன்மையை அவதிக்காரர்கள்’ என்ற சிறுகதை தெளிவாக வெளிப்படுத்துகின்றது.
“. இஞ்ச இந்த மண்ணை மீட்க என்ரை உயிர் போகட்டும். ஐயா அநியாயமாகச் செத்தார். நான் இனி வாற பரம்பரை . இப்படி அப்பாவியாய் அநியாயமாகச் சாகக்கூடாது. அம்பது பேரை முடிச்சுப் போட்டுத்தான் போகவேண்டும். நீயாவது படி, ஏன் தெரியுமா? என்னைப் போல இந்த மண்ணுக்காகப் போராடி . உயிரோட போராடுறவங்கள காப்பாற்ற வேண்டாமா?”
அழிவுகளும் அவலங்களும் இளைஞர்களிடம் ஏற்படுத்திய எழுச்சியை மிக இலகுவாக இது படம்பிடித்துக் காட்டிவிடுகின்றது. இது தமிழ் இளைஞர்களின் போராட்ட வரலாற்றின் முக்கியமான சமூகவியல் பின்னணியாகும்.
-.58 -

த. அஜந்தகுமார்
5. இனப்பிரச்சினையும் மனிதநேயமும்
தமிழர் சிங்களவரிடையே இன ரீதியான முரண்பாடு வலுப்பெற்று படுகொலைகளும், வன்முறைகளும் அதிகரித்தபோதிலும் இனத்தைக் கடந்து மனிதநேயம் என்பதும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும் என்ற இயற்கையை ‘மனிதனைத் தேடி. என்ற சிறுகதை வெளிப்படுத்தி நிற்கின்றது. சிங்களக் காடையர்களினால் குடும்பம் சிதைக்கப்பட்டுத் தப்பியோடி காயப்பட்டு மயங்கிக் கிடந்த தமிழ் இளைஞன் ஒருவன் மீது சிங்களச் சிறுமி ஒருத்தி கொள்ளும் பரிவும், மனிதநேயமும் இக்கதையில் அழகாகப் புலப்படுத்தப்படுகின்றது. ஆனால் இறுதியில் அந்தச் சிறுமியின் தகப்பனாலேயே அவன் குழறக் குழறக் கொலை செய்யப்பட்டபோது அதிர்ச்சியில் காய்ச்சலாகி அவள் மீளாத்துயில் கொண்டு விடுகின்றாள் என்பதன் மூலம் ஒரு சிறுமியிடம் இனங்கடந்து வெளிப்பட்ட மனிதநேயத்தையும் வளர்ந்த சமூகம் வன்முறைக்கு இலக்காகி திசைமாறிச் செல்வதும் சுட்டப்படுகின்றது.
6. போரும் இசைவாக்கமும்
மரணத்துள் வாழுகின்ற சூழலில் அதன் அவலங்களுக்கு காலவோட்டத்தில் மனிதமணம் இசைவாகி விடுவது மிக முக்கியமான உளவியல் நிலையாகும். இத்தன்மை இல்லாவிடின் மனிதர்கள் இந்த உலகத்தில் வாழவே முடியாது. இந்தச் சமூக உளவியலும் திசையின் கதைகளில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. பனி இளகிய பகல், பக்குவம் போன்ற சிறுகதைகள் இதற்குத் தக்க சான்றாகும்.
பனி இளகிய பகல் சிறுகதையில், “வெளியே பனியில் குளித்த பசும் புற்கள், மார்கழி மாதத்தின் காலை இனிமையை அனுபவித்தபடி சிலிர்த்துப்போய் நின்றன. அந்த இளம் புற்களின் பசுமையை வெறித்தபடி நின்றேன். தம்பி இல்லாதது, தனியாக வீட்டிலிருந்தது, இவளுடன் மனத்தாங்கல்பட்டது, இரவு குண்டு வெடித்தது, எல்லாம் மறந்துபோய்விட்டன, நான் உற்சாகமாகக் குளியலறைக்குள் நுழைந்தேன்.”
- 59

Page 40
தனித்துத் தெரியும் திசை
'பக்குவம்' என்ற சிறுகதையில் அகாலத்தில் இறந்துபோன நண்பன் பரந்தாமனின் சாவீட்டில் துக்கித்துக் கொண்டு நின்றவன், அவன்
வீட்டிலிருந்து திரும்பி வந்தபோது சைக்கிள் விட்ட வீட்டில் சிறுமி ஒருத்தி தான் விட்டிருந்த சைக்கிளில் காட்டிய அக்கறையில் மெய்மறக்கிறான். பரந்தாமனின் மரண நினைவுகளின் இறுக்கத்தில் இருந்து அவனை விடுபடவைத்து புறச்சூழல் மனதை இலேசாக்குகின்றது. “மணம் பரவசம் கொண்டு சிறகு விரித்ததான நிலை பரந்தாமனின் மரணம் தந்த உளைச்சல் சிறுகச் சிறுக நீங்கியதான நிலையில் எல்லாமே அவனுக்கு அழகாகத் தெரிந்தன. . அவனுக்கு முன்பாக, எதிரே வந்து அவனைக் கடந்து சைக்கிளில் சென்ற பெண்பிள்ளையின் இலாவகம், சுமக்க முடியாத சுமையைச் சுமந்துசெல்லும் சிறுவனின் முகம் காட்டும் முதிர்ச்சி, தோளோடு தோள் கைபோட்டு சைக்கிளில் சமாந்தரமாக உலாப்போகும் சீருடை அணிந்த கல்லூரி மாணவர்களின் குதூகலம், பஸ்ரியன் சந்தியில் திரும்பிய பஸ்ஸில் கணமே தெரிந்து மறைந்த அந்தப் பெயர் தெரியாத, எங்கோ எப்பொழுதோ பார்த்துப் பிரியப்பட்ட அழகியின் முகம், எல்லாமே அவனுக்கு மகிழ்ச்சியைத் தநதன
இது முக்கியமான விடயமாகும். இல்லையேல் துயரங்களுக்குள் மனிதமனம் புதைந்துவிடின் மனித வரலாறு அழிந்துவிடும். இன்றும் உயிர்ப்புப் பெற - இதுவே சான்றாக இருக்கிறது.
7. புலம்பெயர்வு சாதகம் - பாதகம்
உள்நாட்டுப் போரின் விளைவாகவே புலம்பெயர்தல் என்பது தமிழர்களைப் பொறுத்தவரை முக்கியம்பெறத் தொடங்கியது. இது சமூக பொருளாதார பண்பாட்டு ரீதியாக ஏற்படுத்திய சாதக பாதகங்களை மிகுந்த நுணினுணர்வோடு திசையின் சிறுகதைகளும் பதிவு செய்துள்ளதனை அவதானிக்க முடிகின்றது. இப்படி ஒரு காலம், வெளிநாட்டுக் காசு, அவதிக்காரர்கள், முகத்திரை போன்ற சிறுகதைகள் இந்தவகையில் முக்கியமானவை.
உள்நாட்டுப் பேரின் பயங்கரம் ஒவ்வொரு பெற்றோரின் மனத்தையும் கிலி கொள்ளச் செய்ததால் தங்கள் பிள்ளைகளை ஊரில் தம்மோடு - 60 -

த அஜந்தகுமார்
வைத்திருக்கப் பயந்து, படிப்பாவது ‘மண்ணாங்கட்டியாவது பிள்ளை உயிரோடு இருந்தாலே எங்களுக்குப் போதும் என்று அனுப்பிவிடுகின்றர்கள். சிலர் தாமாகவே தப்பியோடியும் விடுகின்றார்கள். இது தமிழர் தேசிய எழுச்சித் தடையாகவும் அமைந்தது. இதனைத் திசையின் ஆசிரியர் தலையங்கமும் பின்வருமாறு தீட்டியிருந்தது.
“. ஆற்றாமை கொண்ட இளந்தலைமைகள் பழந்தலைமைகளின் பரவணி வியாதியான குத்துவெட்டுக்குள் அகப்படவே நமது மீட்சி ஸ்தம்பித்தது மட்டுமல்லாமல் நிலம் இரத்தக் களியும் ஆயிற்று. ஒன்று திரண்டு போராடவேண்டிய இளம்பரம்பரை பன்முகமாகச் சிதறிற்று; இந்தச் சிதறலின் ஓர் அம்சம்தான் இன்று வெளிநாடு நோக்கிப் பறந்து கொண்டிருக்கும் இளைஞர்களும் யுவதிகளும்' "
போராடும் இளந்தலைமுறை பற்றிய எணர்ணங்களையும், புலம்பெயர்ந்த தன் பிள்ளைகளையும் எண்ணி அசைபோட்டு தாயகத்தில் வாழ்வோருக்காக சிந்திக்கின்ற தந்தை ஒருவரின் உள்ளத்தை
அவதிக்காரர்கள்’ என்ற சிறுகதை சித்திரிக்கின்றது.
கனடாவில் மூத்தமகன் பிரஜாவுரிமை, இளையவன் கனடா போய் ஒன்றரை வருடம், தங்கச்சியையும் எடுத்திடுவான். நாங்களும் அங்கே போய் விடலாம் என்று மனைவியினி சிந்தனையோடு அவர் கலந்திருந்தபோதுதான்; அவரும் குடும்பமும் திக்கற்று நின்ற வேளையில் இடந்தந்து சாப்பிடப் பாண் வாங்கித்தரச் சென்றவேளையில் குண்டுவெடிப்பில் சிக்கிப் பலியாகிய டேவிட்டின் மகன் வருகின்றான். அவன் மூலம் அவர் கேட்ட தகவல்கள் அவரது வெளிநாட்டு நினைவுகளின் வேர்களைப் பிடுங்கி எறிந்துவிடுகின்றன.
தம்பி நீ படி என்றுவிட்டு மண்ணை மீட்க போராடச் சென்று சுதுமலையில் இந்தியன் ஆமியோட நடந்த சண்டையில் செத்த தமையன். தோட்டத்தில் வேலை செய்யும்போது தாயும் தங்கச்சியளும் ஷெல் விழுந்து செத்தது,
- 61 -

Page 41
தனித்துத் தெரியும் திசை
என்று டேவிட்டின் மகன் சொன்ன தகவல்கள் அவரை நிலைகுலைய வைத்தன. இங்கு இவர்களுக்கு இப்படி நடக்கத் தன் பிள்ளைகள்,
“சுயலாபத்தை நினைத்து வெளிநாடு என்ற போர்வைக்குள் மறைந்து வாழ்ந்து அகதி என்ற லேபிலில் ஆனந்த வாழ்க்கை தேடுவது” அவருள் முள்ளாகக் குத்துகின்றது. தான் கனடா செல்ல நினைத்த எண்ணத்தை தாயக நினைவுகளின் நெருடலில் அவர் சுக்குநூற்ாகக் கிழித்துவிடுகின்றார்.
“என் கைகள் அதில் உள்ள விரல்கள் உணர்வு
கொண்டவையாக மாறுகின்றன. துப்பாக்கியை இயக்கவேண்டிய அவைகள். அந்த. அந்த என் இனிய மகனின் கனடாக் கடிதத்தைக் கசக்குகின்றன. கசக்குகின்றனவே.” என்பதன் ஊடு இதனைத் தெளிவாகக் காணலாம்.
‘வெளிநாட்டுக் காசு’ என்ற சிறுகதையானது, தன் மகள் மல்லிகாவின் திருமணத்துக்காக நாலு பரப்பு காணி வாங்குவதற்காக வீட்டு நகைகளை எல்லாம் அடகு வைத்து பணத்தைச் சேகரித்து அண்ணாமலை, காணிவாங்கச் செல்கின்றபோது, வெளிநாட்டுக் காசினால் திடீர் பணக்காரன் ஆகிய முருகேசன் பதினைந்தாயிரம் ரூபாய் அதிகமாய்க் கொடுத்து நிலத்தை வாங்கிய கதையையும் - அதனால் அண்ணாமலையும் மனைவியும் அடைகின்ற மன உளைச்சலும் - வெளிநாட்டுக் காசினில் திடீர் பணக்காரர் ஆகியவர்களின் மீதான விமர்சனமும் வெளிப்பட்டு நிற்கின்றது.
“அழிஞசு போவார் வெளிநாட்டுக் கர்சை வைச்சுக்கொண்டு ஊரில் உள்ள காணிகளையெல்லாம் வாங்கித்தள்ளுகினம். இவங்களால இந்த ஊரில இருக்கிறவை கஷ்டப்பட்டு உழைச்சு ஒரு குழி நிலம் கூட வாங்க முடியாது. அவங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆனைவிலை குதிரைவிலை குடுப்பினம். கடவுளே நாங்கள் என்ன செய்யிறது?
- 62 -

த அஜந்தகுமார்
உவ்வளவு காசைக் கொட்டிக் கொடுத்து அந்த நிலத்துக்கை தங்கமோ வெள்ளியோ கிண்டி எடுக்கப்போகினம்” இது பணம் பத்தும் செய்யும் என்பதாய் வெளிநாட்டுப் பணம்; உள்நாட்டை நம்பி வாழ்கின்றவர்களில் ஏற்படுத்தும் தாழ்வையும் - சிக்கல்களையும், திடீர் பணக்காரர்களின் வருகை சமூகமட்டத்தில் நிகழ்த்தும் ஆக்கிரமிப்புகளையும் தெளிவாகப் புலப்படுத்தி நிற்கின்றது.
திசை"யில் வெளிவந்த சிறுகதைகள் இனப்பிரச்சினையினால் விளைந்த உள்நாட்டுப் போரின் பயங்கரங்கள், இராணுவ அராஜகங்கள், புலம்பெயர்வின் சாதக - பாதகங்கள், இயக்க உருவாக்கங்கள், முரண்பாடுகள், பெண்கள் - இளைஞர்கள் - சிறுவர்கள் அதை எதிர்கொண்ட விதம் என்பவற்றை மாத்திரம் அல்லாமல் ஆண் - பெண் உறவுச் சிக்கல்கள் - முரண்பாடுகள், வறுமை, சமகாலச் சமூகம் மீதான விமர்சனங்கள், சமயம் மீதான விமர்சனம், சாதி, முதலாளிகளின் சுரண்டல், வேலைஸ்தல சிக்கல்கள், பெண்களின் பிரச்சினைகள் - பாடுகள், உறவுகளின் அன்பு - சிக்கல்கள், தனிமை - அந்நியம் - சுயநலம், குழந்தைகளின் உலகம், பழைய கால நினைவுகள் போன்றவற்றினைப் பேசு பொருளாகக் கொண்டு இயங்கியுள்ளமையினை அவதானிக்க முடிகின்றது.
சமுதாயப் பிரச்சினைகள்
திசையில் வெளிவந்த சிறுகதைகள் பல்வேறு சமுதாயப் பிரச்சினைகளையும் தமது பேசுபொருளாகக் கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது. இந்தவகையில் ஆண் - பெண் உறவுச் சிக்கல்கள், பெண்ணின் சமூக எதிர்கொள்ளல், வேலைத்தள பிரச்சினைகள், தனிமனித நெருக்கீடுகள், அந்நியம், சமயம் மீதான விமர்சனங்கள், சாதி மீதான விமர்சனங்கள், எழுத்தாளர்கள் - இலக்கிய உலகம் மீதான விமர்சனங்கள், உறவுச் சிக்கல்கள் போன்ற பல விடயங்கள் பேசப்பட்டுள்ளன.
- 63 -

Page 42
தனித்துத் தெரியும் திசை
1. ஆண் - பெண் உறவுச் சிக்கல்கள்
ஆண் - பெண் உறவுச் சிக்கல்களைச் சொல்லுகின்ற
சிறுகதைகளும் திசையில் பிரசுரமாகியுள்ளன. இந்தவகையில் தரு, சில மனிதர்கள், முதுகச் சொறியுங்கோ, பனி இளகிய பகல் ஆகிய சிறுகதைகள் முக்கியமானவை.
- 'தரு’ என்கின்ற சிறுகதையானது ஆண் - பெண் உறவுச் சிக்கல்களை மிகக் கவித்துவமாகப் பதிவுசெய்துள்ளது. ஆண் - பெண் ஆகிய இருவருக்குமிடையே இன்னும் ஓர் ஆண் வருகின்றபோது ஆணிடம் இயல்பாக எழுகின்ற எரிச்சல், சந்தேகம், அவஸ்தை, கோபம், வெக்கை என்பன மிக அழகாக வெளிப்பட்டுள்ளன. மூன்றாவது ஆண் 'காட்டுமனிதன்” என்று உருவகப்படுத்தப்பட்டு உள்ளான்.
காட்டு மனிதன் ப்றேமியை நெருங்குவதை, அவன்மீது ப்றேமி கொள்ளும் வாத்சல்யத்தை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனை,
“குளிர்ந்த தருவின் கீழும் பாலையின் வெப்பக் காற்று புகுந்தது போல இருந்தது. என்னால் தாங்கமுடியாது போயிற்று. பயமும் கிலேசமும் வெறுப்பும் மேலோங்கிற்று” இது அவனின் மனப்பிரமை என்று அவள் கூறியும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் ப்றேமி மீது பல கட்டளைகளை விதித்தான். சந்தேகம் வாழ்வை அந்நியமாக்கத் தொடங்கிற்று.
“இப்போதெல்லாம் பாலை வெளிக்கும் தருவின் நிழலிற்கும் வித்தியாசம் இல்லை என்றாற் போல ஆகிவிட்டது. பாலை வெளியிலும் பார்க்கத் தருவின் நிழலே கொடுமையானது என்று கூறப்பட்டது. அந்தத் தருவின் நிழலைவிட்டு ஓடிவிட்டாலி அநீத வேதனை வெக்கை குறையுமென்றுபட்டது” இவனது சந்தேகங்களைப் பொறுத்துக் கொள்ளமுடியாத காட்டுமனிதன்,
“உனக்கு நான் துரோகம் செய்யப் போவதில்லை” என்று கூறியதும் உலகமே ஸ்தம்பித்தது போன்ற மெளனத்துள் அவன் ஆட்பட்டான். அவன் மனதுக்குள் போட்டுக் குமைந்ததை காட்டு மனிதன்
- 64

த. அஜந்தகுமார்
அறிந்து நேரடியாகச் சொல்லியது அவனை குலைத்துவிடுவதாகக் கதை முடிகின்றது. மிக நுணுக்கமாக ஆண் - பெண் உறவுச் சிக்கல்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
முதுகச் சொறியுங்கோ’ என்ற கதையில் இலக்கியமே முதல் மனைவி என்னும் எழுத்தாளன் ஒருவனிற்கும் மனைவிக்கும் இடையே நிகழும் சில இடைவெளிகள், ஆற்றாமைகள் மிக அழகாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.
“சுற்றிவரப் பிணங்களாக இருக்கிறபோது உங்களுக்கு இலக்கியம் என்கிற மாதிரி ஒரு இராத்திரி இரண்டு மணிக்கு முணுமுணுக்கிறாள். இரவானபின் எண் வாசிப்பும் எழுத்தும் இவளுக்குச் சில வர்மங்களில் பிடிக்கிறது இல்லை. அதிலும் டீவி நிகழ்ச்சி முடிந்த பிறகு படுமோசம். நான் வேறு பாவி கட்டிலில் இருந்துகொண்டுதான் எழுதுவேன் - வாசிப்பேன் - நெருப்பில் சீனி போட்ட மாதிரி. இதனால் தெறிக்கும் ஏமாற்றமோ ஆத்திரம்தான் இப்படி உருவம் கொள்ளும்”
“சில மனிதர்கள்’ என்ற சிறுகதையில் குடிவெறியில் மனைவியோடு சண்டை பிடித்து அவளுக்கு அடித்துவிட்டு மருந்து குடித்த ஒருவன் பற்றிய சித்திரம் வருகின்றது. மனைவியான சுந்தரி,
"அவர் நல்லவர், குடிச்சால் மட்டும் ஒரு சதத்துக்கும்
உதவார். ஆரும் தூண்டிவிட என்னைப் போட்டு
அடிப்பார். ராத்திரியும் தேவையில்லாமல் அடிச்சுப்
போட்டார்” என்பதன் ஊடாக ஆணி - பெண் உறவுகளிடையே சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட புறச்சூழலும் அழுத்தம் தருவது சித்திரிக்கப்பட்டு உள்ளது.
‘பனி இளகிய பகல்’ என்ற சிறுகதையிலும் ஆண் - பெண் உறவுச் சிக்கல் சொல்லப்பட்டு உள்ளது. பெண்ணின் எதிர்பார்ப்பிற்கும் -
- 65 -

Page 43
தனித்துத் தெரியும் திசை
ஆணின் எதிர்பார்ப்பிற்கும் இடையே நிகழும் இடைவெளிகள் உருவாக்கும் முரண்பாடு சித்திரிக்கப்படுகின்றது.
“. இவளை அடிக்கடி சந்திப்பதைத் தவிர்க்கவேண்டும். குறிப்பாக அவள் வீட்டிற்குப் போவதை நிறுத்தவேண்டும். சில லெளகீக வசதிகளைத் தேடிக்கொள்ளும் வரையாவது இதைக் கடைப்பிடிக்க வேண்டும். வெளிநாட்டுக்குப் போகத்தெரியாத, உழைக்கத் தெரியாத, பிறரின் பேச்சின் பின்னால் உள்ள வஞ்சகத்தைப் புரிந்துகொண்டு பதிலுக்குப் பதில் செய்யத் தெரியாத ஒழுங்கற்றவன், பத்தாம்பசலி அல்லது இழிச்சவாயன் என்ற மாதிரி ஒரு பட்டப் பேரைக் கெளரவமாக ஏற்றுக்கொண்டு திரிகிறவனாக என்னை இவள் நினைக்கிற நிலை மாறுகிற அளவுக்கு, அதாவது இவள் தன்னை, என்னைப் புரிந்து கொள்வதற்குப் பக்குவப்படுத்திக் கொள்கிற வரைக்குமாவது இதை நடைமுறைப்படுத்த வேண்டும்” ஆண் - பெண் உறவு நிலையில் எழக்கூடிய சந்தேகம் - இடைவெளி - ஆற்றாமை என்பன மிக அழகாக இவற்றில் சொல்லப்பட்டு உள்ளன.
2. சமூகமும் பெண்ணும்
மனிதன் ஒரு சமூகப்பிராணி. அவன் ஆண் - பெண் என்ற பால் அடையாளங்களைக் கொண்டு விளங்குகின்றான். இதில் சமூகத்தின் உயிரியான பெண், சில அடக்குமுறைகளுக்கு இலக்காவதும் - அத்தளைகளில் இருந்து அவள் விடுபட எண்ணுவதும் - விடுபடுவதும் சமூக யதார்த்தமாகும். இத்தன்மையினை வெறுமை ஒரு பிரமை, சின்ன அப்பு ஆகிய கதைகளில் காணமுடிகின்றது.
‘வெறுமை ஒரு பிரமை சிறுகதையில் மீரா, பல்கலைக்கழக கல்வியை முடித்துவிட்டு வேலையொன்றிற்கு முயன்று கொண்டிருக்கிறாள். அவள் கற்ற கல்வி, அவளின் குடும்பம் ஏற்பாடு செய்யும் திருமணத்தைக்கூட திணிப்பாகக் கருதுகின்றது.
- 66 -

த. அஜந்தகுமார்
“பெண்களின் மீது சமுதாயத்தின் திணிப்புகள், நடவடிக்கைகள் மீராவிற்கு எரிச்சலைக் கிளப்பியது. சாதாரண ஒரு பெண்ணாக இல்லாமல் இத்திணிப்பு முறைகளினால் நாளுக்கு நாள் வெறுப்படைந்துகொண்டு வந்தவளுக்கு, தனக்கு கலியாணம் என்றவுடன் எரிச்சல் கிளம்பியதா? அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனைய பெண்களோடு ஒப்பிட்டாள்; இடையில் ஏதோ வேறுபாடு புலப்பட்டது. அந்த வேறுபாடு அவளுக்குச் சந்தோஷத்தைத் தந்தாலும் ஏதோ மனக்குழப்பத்தையும் உண்டு பண்ணியது” என்பதன் மூலம் இந்தச் சமூகத்தில் ஒரு பெண்ணாகத் தன்னை நிலைநிறுத்துவதில் உள்ள சங்கடத்தையும் மீரா மூலம் அறிந்து கொள்கின்றோம்.
*சின்ன அப்பு’ என்ற சிறுகதையில் வறுமையினாலும் தகப்பனின் குடிவெறியினாலும் பெணிகள் அடைந்த துன்பமும் துயரமும் சித்திரிக்கப்பட்டுள்ளது. பகல் எல்லாம் குடிப்பதனால் உழைக்க நேரமில்லாத சின்ன அப்பு தன் மனைவி செல்லம் உழைக்கும் காசில் குடித்துவிட்டு அவளைத் துன்புறுத்துவார். பெண் பிள்ளைகள் கூலி வேலைக்குச் செல்லவேண்டியிருந்தது. அவர்களுக்குத் திருமணம் என்பது எட்டாக் கனியாகவே மாறியது. தந்தையின் பொறுப்பற்ற தன்மையும் - குடிப்பழக்கமும் பெண்களின் எதிர்காலத்தை எவ்வாறு சூனியமாக்குகிறது என்பதை இச்சிறுகதை உணர்த்துகிறது.
சின்ன அப்புவின் மகளான சகுந்தலாவின் மனநிலையை,
“யாருக்கும் பயப்படக்கூடிய மனநிலையில் அவள் இருக்கவில்லை. அவளுடைய மனம் மிகுந்த துணிச்சல் பெற்றிருந்தது. தகப்பனைக்கூட எதிர்த்துக் கதைக்கிற மனநிலை இருந்தது. யாருக்கும் பயப்படுவதில் அர்த்தம் இருப்பதாகத் தோன்றவில்லை. உற்றம் சுற்றம் என்றும் யாரும் அவர்களைத் திரும்பிப் பார்ப்பதாயில்லை. ஐந்து பெண்களில் ஒருத்தியையாவது கரைசேர்க்க இவரால்
- 67 -

Page 44
தனித்துத் தெரியும் திசை
முடியுமா? சாப்பாட்டுக்கு உழைப்பது போலவே ஒரு
புருஷனையும் அவர்களாகத்தான் உழைத்துக்கொள்ள
வேண்டிய நிலைமைதான் இருந்தது” என்பதன் மூலம் உணர்கின்றோம். சகுந்தலா ஒருத்தனை விரும்பி சந்தியில் நின்று கதைப்பதாக அறிந்ததும் சின்ன அப்பு அவளுக்கு அடிக்கின்றார். அந்த அடி ‘பாடாக" விழுந்ததால் அவள் தீராத நோய்க்கு ஆளாகின்றாள். அதனை அவளுக்குப் பேய்பிடித்துவிட்டது என்று சொன்னார்கள். இறுதியில் இறந்தபோதும் அதுவே சொல்லப்பட்டது. இதன்மூலம் பெண்களின் பிரச்சினைகளை - அபிலாசைகளை ஆண்மனம் அணுகும் முறையும் - வன்முறைப் போக்கும் வக்கற்ற போதும் போலிக் கெளரவத்துக்கு ஆட்பட்டு நிற்பதும் மிகத் தெளிவாக உணரவைக்கிறது.
3. சமய விமர்சனம்
சமூக நிறுவனத்தில் சமயம் என்பது மக்களுடன் ஒன்றாகக் கலந்தது. ஆனால் அது சமூகத்தில் இருந்து விலகுவது போன்ற தோற்றத்தைக் கொடுக்கின்றபோது சமூக உறுப்பினனான எழுத்தாளன் எதிர்வினையாற்றுவது இயல்பாகும். இத்தன்மையினை கோவில்கள் கட்டப்படுகின்றன, மையித்துகள் துயில்கின்றன ஆகிய சிறுகதிைகளில் தெளிவாகத் தரிசிக்க முடிகின்றது.
“கோவில்கள் கட்டப்படுகின்றன’ என்ற சிறுகதையானது மக்கள் அகதிகளாகத் துன்பப்படும்போது அவர்களுக்கு ஓர் உதவியும் செய்ய முன்வராது கோவில் கட்டும் சமூகத்தையும் மக்கள் வாழிடம் இன்றி வறுமையில் துடிக்கும்போது மசூதி கட்டும் சமூகத்தையும் விமர்சிக்கின்றது. அத்தோடு சமயத்துள்ளும் சாதி ஊடுருவி நின்று சமூகத்திற்குள் சேறுபூசி நிற்கும் நிலையும் சொல்லப்பட்டுள்ளது. “இந்த ஊரிலை ஒரு கோயிலை கொஞ்சக் காலமாகப் பூட்டி வைத்திருக்கினமே ஏன்? அதைத் திறக்காமல் பிறகு இன்னொரு கோயில் எதுக்கு?
அங்கை இருக்கிற சாதியாக்கள் இந்த கோயிலுக்கை
- 68

த அஜந்தகுமார்
வரவெளிக்கிட்டதால் ஒரு பிரச்சனை. அது இன்னும் தீராததாலைதான் கோயில் மூடிக்கிடக்கு. அவங்களுக்கு வேறு ஒரு கோயில் கட்டிக் கொடுக்கப் போகினம் பிறகு அவங்கள் இந்தக் கோயிலுக்கை வரமாட்டினம் வேலை கெதியா முடியட்டும் எண்டதுக்காகத்தான். இந்த ரிக்கற்றை வித்துக் குடுக்கிறன்.” "இரவுத் தொழுகைக்கான பாங்கொலி பலதிசைகளில் இருந்தும் கேட்க ஆரம்பித்தது. இவ்விடத்தில் எத்தனை மசூதிகள் இருக்கின்றனவோ? எல்லாப் பக்கத்தில் இருந்தும் பாங்கு கேட்கின்றதே. கடை வாசல்களையே தமது இரவு இருப்பிடமாகக் கொள்ளும் மக்களில் சிலர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். மழை காலத்தில் இவர்கள் எங்கே படுக்கப் போவார்கள்?” சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் உழல்தல் கண்டும் சிந்தை இரங்காது வாழிடம் அமைக்கவோ வசதிகள் செய்யவோ நினைக்காது கோவில் என்றோ மசூதி என்றோ கட்டடங்களை அமைப்பது உண்மையான சமயத்தின் நோக்கமாகாது என்றே இச்சிறுகதை விமர்சிக்கிறது.
இதேபோல “மையித்துகள் துயில்கின்றன” என்ற சிறுகதையானது இஸ்லாம் சமயத்தின் மீது விமர்சனமொன்றினைக் கூறி புரட்சிகரமான முடிவொன்றினை விளைவித்துக் காட்டுகின்றது.
சகாப்தீன் காக்கா இறந்துபோனதும் அவரது மையித்தை (சவம்) எடுப்பதற்கு எல்லா ஏற்பாடுகளும் நடக்கின்றன. மையித்தைத் தூக்கும் சமயத்தில் ஊர் மரைக்கார் அப்துல் ஹமீது அதனைத் தடுத்துநிறுத்தி பள்ளிவாசல் காசு பாக்கியைத் தீர்க்காமல் மையித்தை எடுக்க விடுவதில்லை என்ற ஊர் வழக்கத்தை சொல்லுகின்றார். செப்புச் சல்லி இல்லாத அவர்கள் முழிக்கின்றார்கள். ஊர் மெளனமாக நிற்கிறது. காசைக் கட்டாவிடின் கபுறில (மையவாடி) அடக்கம் செய்யமுடியாது என்று மரைக்கார் சொல்ல, மகளான ஷர்மிலா,
“நீம ஏத்துக் கொள்ளாட்டிப் போங்காணும் எங்க வாப்பா
உடம்பத் தின்னப் போறது நீம இல்ல! இந்த
- 69

Page 45
தனித்துத் தெரியும் திசை
மண்ணுதான். ஆண்டவன் மனிதர்ட ஒடம்ப மண்ணுதான் திங்குமுன்னு சொல்லியிருக்கிறான். வாழத்தான் வழியில்லே, வாழமுடியாம சாவை அணைச்சிட்டாக்கூட அந்தப் பொணத்தைப் பொதைக்கிறதுக்கு தடையா நிற்கிறீங்களே இதுதானா ஓங்கட இஸ்லாம்?” இதைக் கேட்டதும் லெப்பையைக் கூட்டிக்கிட்டு இந்த ஊட்டை விட்டே போயிடுவோம், மையித்தை நாம் ஏன் தூக்கணும். நாய்தான் தூக்கும் என்று ஊர் மரைக்கர் சொல்ல, ஷர்மிலா தன் சகோதர சகோதரிகளுடன் மிகத் துணிவாக மையித்தை தூக்கிக்கொண்டு கபுறு நோக்கிச் செல்வதாய்ச் சிறுகதை முடிகிறது. இதன்மூலம் சமயம் மீதான விமர்சனத்தை, புரட்சியை அது மக்கள் நலனில் காட்டவேண்டிய அக்கறையைச் சொல்லி நிற்பதனைக் காணமுடிகின்றது.
4. சாதி
சாதி தொடர்பான எதிர்வினைகள் சிறுகதைகளில் இடம்பெற்று உள்ளதனைக் காணமுடிகின்றது. இந்தவகையில் பிஞ்சு, கோவில்கள் கட்டப்படுகின்றன ஆகிய சிறுகதைகள் முக்கியமானவை. ‘பிஞ்சு’ என்ற சிறுகதையில் சின்னப்பிள்ளைகள் மீது பரிவும் பாசமும் மிக்க ஒரு த்ந்தை சாப்பாட்டுக்கடை ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது நதியா என்ற சிறுமி மரணித்துவிட்டதாக மரண அறிவித்தல் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. அவள் சாதி குறைந்தவள் என்பதனால் அவள் இறந்த பிறகு கூட அவளை உயிரியாக எண்ணாது எள்ளிப் புறக்கணிக்கும் சமூகத்தை அதில் காணமுடிகிறது. “சூ! பேரப்பாத்தியா பேர் நதியாவாம். நதியா.ம் கனைத்துக் கொண்டார் எதிரில் இருந்த இருவரில் ஒருவர். காலம் கெட்டுப் போச்சு. இதாலதானே இந்த செல்லடியும் சூடும்.” என்று சாதித்திமிரினால் இறந்துபோன ஒரு பிஞ்சுச் சீவனைக்கூட விட்டுவைக்காத சமூகத்தின் இகழ்ச்சியும் - சீரழிவும் இதன்மூலம் பட்டுத்தெறிக்கின்றது.
- 70 -

"த அஜந்தகுமார்
‘கோவில்கள் கட்டப்படுகின்றன’ என்ற சிறுகதையில் ஒவ்வொரு சாதிக்கும் கோவில்கள் எழுவதும் அதனால் சீரழிவதும் சொல்லப்படுகின்றது.
5. வேலைத்தளப் பிரச்சினைகள்
தொழில் ஸ்தலங்களில் சந்திக்கும் முரண்பாடுகளும் - இடைவெளிகளும் முதலாளிகளின் சுரண்டல்களும் சில சிறுகதைகளில் மிக அழகாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளன. இந்தவகையில் அவன் 3C) மணிக்காய், பருவந் தவறிய மழையைப் போலவே, இருள் போன்ற சிறுகதைகள் முக்கியமானவை.
சிறுவர்களை வேலைக்கமர்த்தி முதலாளிமார் இலகுவாகச் சுரண்டுகின்ற செயலினை 'அவன் ஒரு மணிக்காய்' என்ற சிறுகதையானது சொல்லிநிற்கின்றது.
“என்னைப் போல குழந்தைப் பெடியன், பொம்பிளைப் பிள்ளையளெண்டால் நல்லாச் சுறண்டுவினம். இப்ப சோடி பணிஸ் எனின விலை. அதுவுமி எண் ரை உள்ளங்கையளவு. மூண்டு ரூபாய். அரை றாத்தல் unsoci இரண்டே கால் ரூபாய், மத்தியானத்துக்கு எனக்கு சாப்பாடு 12 ரூபாய். இரவைக்குச் சாப்பாடு . மூண்டு ரூபா. பேந்து பிளேன்ரிக்கு. எனக்கு மாத்திரம் இருபது ரூபாக்கு மேல வேணும். இந்தப் பத்து ரூபா எந்த மூலைக்கு.” என்று குட்டியன் என்ற சிறுவன் சொல்கிறான். அவன் தனது சாதுரியத்தால் மாதம் 500 ரூபா சம்பள உயர்வு பெறுகிறான். இதன்மூலம் சுரண்டலுக்கு எதிரான சமூக அணி திரளலுக்கு தனிமனிதர்களின் புரட்சி மனப்பாங்கும் முக்கியமானது என்பது புலப்படுத்தப்படுகின்றது.
‘பருவந் தவறிய மழையைப் போலவே. சிறுகதையில்,
“பரந்த பெரிய மைதானத்தில் கால்வாசிப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு திட்டுத் திட்டாகக் கிடக்கும் அலுவலகக் கட்டிடத் தொகுதிகள்.
- 71 -

Page 46
தனித்துத் தெரியும் திசை
அதில். எத்தனை ஆணவம்; மிடுக்கு, அதிகார உறுமல்கள் இல்லாத மழை பெய்கிற ஞாயிற்றுக்கிழமை”
என்பதன் மூலமும் அதிகாரிகளின் திமிர்த்தனம் சாதாரண அலுவலகர்களில்
ஏற்படுத்திய தாக்கம் புலனாகின்றது.
"இருள்” என்ற சிறுகதையில்,
“நுளம்பும் லிகோரியும் (மனேஜர்) அண்ணனும் தம்பியும் குத்தல், இரத்தபானம் செய்வதில் குரூர சந்தோஷம்" “மற்றெல்லாருக்கும் நான் மாஸ்ரர் பிறின்ரர். லிகோரிக்கு மட்டும் பெரிய இளப்பம், இவன் மட்டும் என்ன? ஏழு வருஷமா லே அவுட் போட்டவன் - பென்சிலும் அடிமட்டமும் எடுத்துப் போடுற வேலை. இப்பமட்டும் பெரிய பிறின்ரிங் மனேஜர். இவனுக்கு என்ன தெரியும் மெஷினிலை நாங்கள் சமாளிக்க வேண்டிய பிரச்சினை. இருக்கட்டும் இருக்கட்டும் எல்லோருக்கும் காட்டுறன் வேலை”
என்பதன் மூலம் வேலைத்தலத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்களும் முரண்களும்
பதிவு செய்யப்பட்டுள்ளது.
6. நகர வாழ்வு - அந்நியம் - நெருக்கீடுகள்
நகர வாழ்வு என்பது எவ்வளவு கொடூரமானது என்றும் அது இயற்கையான மனிதனைச் செயற்கையாக்கி அவனை அவனில் இருந்தே அந்நியமாக்குகின்றது என்பதையும் சில சிறுகதைகள் வெளிப்படுத்துகின்றன. நகரவாழ்வு - நெருக்கீடுகள் - தனிமை - அந்நியம் என்பவற்றில் மனித மனம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் நோய்க்கூறினை உடலுள் கடத்திவிடுவதோடு மன அழுத்தத்தையும் ஏற்படுத்திவிடுகின்றது. இதற்கு 'இருள்’ என்ற சிறுகதை தக்க சான்றாகும்.
நகரத்தின் இயந்திரமயமான வாழ்வுக்குள் தலைகொடுத்து நித்திரையின்றி வேலைச் சுழலுக்குள்ளும் நோயுக்குள்ளும் பயங்கரக் கனவுகளுக்குள்ளும் மாட்டுப்பட்டுத் தன்னுள்ளிருந்து தானே அந்நியமாகிக் கொண்டிருக்கும் இளைஞன் ஒருவனின் அனுபவங்களின் கோர்வையாக
- 72

த அஜந்தகுமார்
இக்கதை கவித்துவ மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவனது ஓய்வுக்கு அமைதி தந்த இருள் அவனது அவஸ்தைகளால் கொடூரமானதாக மாறிவிடுகின்றது. ஒரு காலத்தில் கொழும்பு நகள் மீதிருந்த ஈடுபாடெல்லாம் தகர்ந்துபோய் நோய் நகராய் அது மாறிவிடுகின்றதை கதை அழகாகச் சொல்லுகின்றது.
“எங்கோ காரியமாய் பரபரத்துப் போகிறார்கள் சனங்கள். என் முதுகுக்குப் பின்னால் கண்ணாடிக் கூண்டினுள் நாகரிகமாக உடை தரித்த சில பொம்மைகள் மட்டுமே உயிழந்த தம் கண்கள் கொண்டு என்னைப் பரிதவிப்புடன் பார்க்கின்றன. சொறிந்துகொள்ளப் பத்து விரல்கள் போதாமல் வெகு கஷ்டப்படும் என்னைப் பார்த்து தம் உதட்டினுள் பூத்துக்கொள்கின்றன. தமது கைகளை வெகு ஒயிலாக வைத்தவாறு என்னை நையாண்டி செய்கின்றன. எனக்கோவெனில் உலகம் முற்றும் ‘ஊய்ங்கென ஊளையிட்டவாறு என்னை மையமாகக் கொண்டு பெருவட்டமாகச் சுற்றிச் சுழன்றாடி கெக்கெலி விட்டுச் சிரிப்பதாகத் தோன்றியது” இதில் நகரவாழ்வின் தனிமை - விரக்தி - அந்நியம் என்பன எல்லாம் ஒன்றாக வெளிப்படுவதனைக் காண்கின்றோம்.
7. தத்துவ விசாரம்
வாழ்வின் அர்த்தத்தைத் தேடுகின்ற தத்துவ விசாரம் மிக்க சிறுகதைகளையும் காணமுடிகின்றது. இந்தவகையில் அர்த்தத்தைத் தேடி. நான் வட்டச்சுவருள் முட்டும் குருடன், பக்குவம் ஆகிய சிறுகதைகள் முக்கியமானவை. ‘அர்த்தத்தைத் தேடி-’ என்ற சிறுகதையில், ராஜன், விஜயன் என்ற இரு பல்கலைக்கழக மாணவர்கள் தேநீர்க்கடையில் இருந்துகொண்டு இந்த வாழ்வின் அர்த்தம் என்னவென்று யோசிக்கிறர்கள் - விவாதிக்கிறார்கள் - 'எத்தனை பொழுதுகள் பேசியென்ன வாழ்வின் அர்த்தம் இன்னும் புரியேல்லையே' என்று கூறும் இவர்கள் தேநீர்க்கடையில் இருந்து விடுதிக்குத் திரும்பும்போது,
- 73 -

Page 47
தனித்துத் தெரியும் திசை
“நிலவிலே நடந்தபடி தெஃபியா ரோசாவும் என்புருக்கியும் வாகையும், ஊதாவாயும் சிவப்பாயும் பொன்னிறமாயும் வழியெல்லாம் பூச்சொரிந்திருக்கும் அந்த அழகிய தெருவில் அவர்கள் மகிழ்ச்சியுடன் நடந்தார்கள்.
“நீண்ட வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கோ என்னவோ தெரியாது. ஆனால் இந்த நிமிடத் துளிகட்கு அர்த்தமிருக்க மச்சான். இப்பிடி சந்தோஷமாய் நிலவிலே கதைக்கிற கணங்கள் - இந்தக் கணப்பொழுதுகட்கு அர்த்தம் இருக்கு மச்சான்.” என்று விடைபெறுகின்றர்கள். வாழ்வின் அர்த்தத்தை இயற்கை எங்களுக்கு உணர்த்தியபடி இருக்கும் அதிசயத்தை இக்கதை சொல்லுகின்றது.
இதேபோல 'பக்குவம்’ என்ற சிறுகதையில்,
இந்த வாழ்வு. இதன் அர்த்தம் எல்லாமே நகரும் முகில்கூட்டம் தானா?” என்று பரந்தாமனின் உடல் எரியும்போது யோசித்தவனுக்கு - செத்தவீட்டிற்கு வந்தபோது சைக்கிள் விட்ட வீட்டுக்காரச் சிறுமி மழைபடாமல் காத்துநின்ற பக்குவத்தைக் கண்டதும்
“வாழ்வின் அர்த்தமே அவள் என்பது போலவும்
உயிர்ப்பசையின் தொடர்ச்சியை ஒரு சுடராய் அவள் தாங்கி
நிற்பது போலவும் அவனுக்குத் தோன்றியது” அந்தச் சிறுமியின் பக்குவம் வாழ்வின் நிலையாமைக்கு மத்தியிலும் வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும் பக்குவத்திற்கு அவனை இட்டுச்சென்று விடுகின்றது.
‘நான் - வட்டச் சுவருள் முட்டும் குருடன்’ என்ற சிறுகதை, பெரதெனியாவில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் பல்வேறு மனக்குமைச்சல்களுக்கு மத்தியில் வாழ்வின் தத்துவார்த்தத்தைத் தேடுவதனைக் கூறுகின்றது. அப்பொழுது சமகால வாழ்வின் தப்பித்தல்கள் குறித்த எதிர்வினைகள் சுய எள்ளலுடன் கதையெங்கும் நிறைவதனைக்
காணலாம்.
- 74

. த.அஜந்தகுமார்
வாழ்வு நெருக்கீடுகளைச் சந்திக்கின்றபோது, சமகால வாழ்வின் நினைவுகளில் இருந்து தப்பிப்பதற்காக பழைய நினைவுகளில் மூழ்கி எழும் சில சிறுகதைகளைக் காணமுடிகின்றது. இந்தவகையில் நினைவுகள், இப்படி ஒரு காலம் ஆகிய சிறுகதைகள் முக்கியமானவை.
நினைவுகள்’ என்ற சிறுகதையில் நான் உன்னுடன் படித்தவன் என்று பொய் சொன்ன ஒருவனால் அவனுக்குப் பாடசாலை ஞாபகங்கள் பசுமையாக விகின்றன. அவன் தன்னை ஏமாற்றி காசு வாங்கிவிட்டான் என்று அறிந்தபோதும் பழைய ஞாபகங்களைத் தூண்டிய அவனுக்கு மனதால் நன்றி சொல்கின்றான். இதன்மூலம் நுகத்தடியாய் வாழ்வை, அழுத்தும் நெருக்கீடுகளில் இருந்து தப்பிக்க நினைவுகள் எவ்வளவு முக்கியமானவை என்று தெரிகின்றது.
இதேபோலவே இப்படி ஒரு காலம்’ சிறுகதையும் இளைஞர்கள் சிதறிப்போய்விட்ட இராணுவச் சூழலில் சுதந்திரமாய்த் துள்ளித் திரிந்த காலங்களை நினைத்து - சமகால வாழ்வுக்கு எதிர்வினையாற்றுகின்றது.
8. உறவுகளும் சிக்கல்களும்
உறவுகளிடையே உள்ள அன்பு, சுயநலம், போலி என்பவற்றை திசையில் வெளிவந்த சில சிறுகதைகள் மிக வெளிப்படுத்தியுள்ளன. இந்தவகையில் உள், பிரியம், சில மனிதர்கள், முகத்திரை, கேள்வி ஆகிய சிறுகதைகள் முக்கியமானவை.
'உள்' என்ற சிறுகதையில், பாடசாலைத் தோட்டக்காரனைப் பிள்ளைகள் பேசுவதைக் கண்ட ஆசிரியர் மாணவர்களைப் பேசிக் கலைத்துவிடுகின்றார். அதன்பின் மாணவர்கள் தோட்டக்காரனுடன் கதைப்பதுகூட இல்லை. இதனால் ஆசிரியரைக் கண்டு “அந்தப் பிள்ளைகள் தமாசுக்குத்தானே அப்பிடிப் பேசினர்கள் - என்னை ஒருவரும் கவனிக்கிறார்களே இல்லை” என்று வருந்துகின்றான். இதன் அன்புக்காக ஏங்கும் ஓர் உறவை நாங்கள் தரிசிக்கின்றோம். இதேபோல 'பிரியம்’ என்ற சிறுகதையில், மூத்தமகளோடு கதைக்காமல் இருக்கும் இராசம்மா தன் பேர்த்தி சேலை
- 75 -

Page 48
தனித்துத் தெரியும் திசை
உடுத்துக் கொண்டு கோயிலுக்குப் போவதைப் பார்க்க ஆசைப்பட்டு அவளைக் கண்டு, கதைத்துப் பரவசம் கொள்கின்றாள் என்பதனைச் சுட்டுகிறது. இதன்மூலம் உறவுகளிடையே விகற்பங்களும் முரண்பாடுகளும் இருந்தாலும் உள்ளே சுரந்தபடி இருக்கும் அன்பின் ஊற்றை இக்கதைக் கரு சுமந்துள்ளது.
‘முகத்திரை’ என்ற சிறுகதையில்,
வெளிநாட்டில் இருந்து வந்த இந்திரன் தன் உயர்வுக்குக் காரணமான தம்பையா வாத்தியார் கஷ்டப்படுவதை அறிகிறான். அவரை நேரில் காணுகின்றபோது அவர் தன் கஷ்டத்தைச் சொல்லுவார் என்று எதிர்பார்க்கிறான். அவரும் "ஏதாவது உதவி செய்யட்டுமா” என்று கேட்பான் என்று உள்ளூர எதிர்பார்க்கிறார். இறுதியில் திரை திரையாகவே இருக்க அவரவர் பாதையில் போகும் நிலை சொல்லப்படுகின்றது. இதன்மூலம் உறவுகளிடையே உள்ள ‘முகத்திரைகள்' - எமக்கென்று உள்ள சில முகமூடிகள் சொல்லப்படுகின்றன.
‘கேள்வி’ என்ற சிறுகதையில், தனக்குச் சொல்லாமல் தமையனின் மகளுக்குத் திருமண ஏற்பாடு செய்தமையால் 'துள்ளிக் குதிக்கும் மாமி ஒருத்தி மூலம் - அவளிடம் இருக்கும் எரிச்சல், சுயநலம் - போலித்தன்மை என்பன இயல்பாக வெளிப்படுகின்றன.
‘வம்சத்து வம்சம்’ என்ற சிறுகதை, ஹோமோவாக இருந்து (தன்னினச் சேர்க்கையாளன்) எயிட்ஸ் வந்து தற்கொலை செய்த ஒருவனின் ஆவி மூலம் கதை சொல்லப்படுகின்றது. தன்னினச் சேர்க்கையாளனாக உறவுகளே தன்னை ஆக்கி, தன்னைத் தறிகெட்டுப் போகவைத்துவிட்டு தங்களைத் தூய்மையாளர்களாகக் காட்டிய சமூகப் பொய்மையை, போலியை விமர்சிக்கின்றது. அதேநேரத்தில் இக்கதையில் தன் மகனை மகனென்று தெரியாமல் பாலியல் துன்புறுத்தல் செய்ததன் மூலம் உறவுகளிடையேயான விகற்பம், மாறுபட்ட அனுபவம் என்பனவும் சொல்லப்பட்டுள்ளது.
- 76

த. அஜந்தகுமார்
9. இலக்கிய உலகம் மீதான விமர்சனங்கள்
இலக்கிய உலகம் மீதான விமர்சனங்கள் - பார்வைகள் திசையில் வெளிவந்த சிறுகதைகளான பஜகோவிந்தம், முதுகச் சொறியுங்கோ ஆகியவற்றில் வெளிப்பட்டதைக் காணலாம்.
'பஜகோவிந்தம்’ என்ற சிறுகதையில் முற்போக்கு எழுத்தாளர் ஒருவர், சொத்துக்கு ஆசைப்பட்டு ஆண்மையற்ற ஒருவனுக்கு தன் மகளைக் கட்டிக்கொடுத்த வக்கற்ற தன்மை மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அப்பொழுது இலக்கிய உலகத்தின் பலமுகங்கள் திரை கிழிக்கப்படுவதையும் காணலாம்.
. பல நவீன யந்திரங்களையும் கருவிகளையும் கொண்டிருந்த ஒரு தச்சுத் தொழிற்சாலையின் முதலாளி தருணபாவணன், அங்கு வேலைசெய்யும் தொழிலாளிகளைச் சுரண்டிச் சேர்க்கும் பணத்தில் பிரமுகர்களுக்கு நைவேத்தியம் செய்து தனக்குப் பிரபலம் தேடும் முயற்சியில் முதலாளித்துவக் கொடுமைகளையிட்டு மூச்சுவிடாது சாதிப்பிரச்சினையை மாத்திரம் சாடிக்கொண்டிருக்கும் ஒரு நவீன ஷோசலிசவாதி என்று அவரைப் பற்றிய பொதுவான அபிப்பிராயம்.” இதனால்தான் அக்கதையில் பேராசிரியர் சர்வராகவனுக்கு “ச்சீ. இலக்கிய உலகம் முழுவதும் வெறும் பம்மாத்துத் தானே என்ற எண்ணம் மனதில் புழுவாய் நெளிந்தது”.
“முதுகச் சொறியுங்கோ’ என்ற சிறுகதையில் போட்டி ஒன்றிற்கு கதை எழுத நினைப்பவர் ஒருவரின் எண்ணங்கள் மூலம் இலக்கிய உலகின் பாவனை - போலி என்பன எள்ளலாகச் சொல்லப்பட்டுள்ளன.
இவ்வாறாகத் திசையின் சிறுகதைகள் பல்வேறு பேசு பொருள்களை உள்ளடக்கமாகக் கொண்டு அக்கால சமூகத்தை வாசிப்புச் செய்வதற்கான ‘சான்று நூலாக விளங்குகின்றது எனின் அது மிகையில்லை.
- 77

Page 49
தனித்துத் தெரியும் திசை
மறுபிரசுரக் கதைகள்
திசையில் தேசிய இனப்பிரச்சினையை மிக உக்கிரமாக வெளிப்படுத்திய சிறந்த சிறுகதைகள் பத்து மறுபிரசுரமாகி இருந்தன. அதற்கான நோக்கத்தை,
“தமிழ் தீ தேசிய இனம் 1947 இல் இருந்து ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிவருகின்றது. எமது துயரங்கள் கணிணிரிலும் இரத்த தீதிலும் தோய்ந்திருக்கின்றன. யதார்த்தம் இவ்வாறாக இருந்தபோதிலும் கலை இலக்கியங்களில் அவை கடந்த காலங்களில் உரிய முறையில் வெளிப்படுத்தப்படவில்லை. கலை இலக்கிய உலகில் நிலவிய தவறான அணுகுமுறைகளும் வேறு சிலவும் இதற்குக் காரணிகளாய் அமைந்தன. தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமாக வெளிவந்துள்ள சில நல்ல சிறுகதைகளை இடைக்கிடை வாசகர்களுக்குத் திசை அறிமுகப்படுத்த இருக்கின்றது' " என்று கூறியிருந்தது. இந்தவகையில் வரதரின் ‘கற்பு’, அ.செ.முவின் 'காளிமுத்துவின் பிரஜாவுரிமை, மு. தளையசிங்கத்தின் 'இரத்தம், நந்தியின் "கேள்விகள் உருவாகின்றன’, சாந்தனின் ’கிருஷ்ணன் தூது’, பிரான்ஸிஸ் சேவியரின் "எதிரொலி’, முத்து சிவஞானத்தின் ‘உரிமைக்கு உயிர்’, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘பேய்களுக்கு யார் பயம்?’ ரஞ்சகுமாரின் “கோசலை, எஸ். கே. விக்னேஸ்வரனின் “வேலிகள்’ ஆகிய பத்துச் சிறுகதைகள் மறுபிரசுரமாகியிருந்தன.
மலையக மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை சம்பந்தமாக 'காளிமுத்துவின் பிரஜாவுரிமை சிறுகதை அமைந்துள்ளது. தன் மூதாதையர்களின் எலும்பைத் தோண்டி தன்னை அவன் நிரூபிக்க விழைய அவன் பைத்தியமாகப் பார்க்கப்படுகின்றான்.
*கிருஷ்ணன் தூது’ என்ற சிறுகதை மொழிப் பிரச்சினையை
மையமாக வைத்து எழுதப்பட்டது. ஓர் அலுவலகத்தின் நலன்புரிச் - 78 -

த, அஜந்தகுமார்
சங்கத்தின் கடிதத் தலைப்பில் சிங்களத்துடன் தமிழும் இடம்பெறாமையைச் சுட்டித் தமது உரிமையை நிலைநாட்ட முயலும் சில தமிழ் ஊழியர்களின் நடத்தையைச் சித்திரிக்கிறது. சிங்களவர்கள் ‘தமிழ் பற்றிக் காட்டும் அலட்சியம், தவறான மனோபாவம், பயந்த தமிழர்களினதும் சிங்கள அதிகாரிகளினதும் ஊசலாட்டம் போன்றன செப்பமான மொழியில் இறுக்கமாகவும் தாக்கமாகவும் வெளிப்பட்டுள்ளது.
‘உரிமைக்கு உயிர்’ என்ற சிறுகதை, சத்தியாக்கிரக போராட்டத்தில் இறந்த தங்கையின் மரணம் - அவள் இறப்பதற்கு முன் மரணத் தறுவாயில் எழுப்பிய கேள்விகள் மூலம் போராடத் துணியும் துரைராசனின் கதையைச் சொல்கின்றது.
இரத்தம்’ என்ற சிறுகதையானது 1958 இனக்கலவரத்தில் எட்டுப்பேரால் கற்பழிக்கப்பட்டு விசரி போல ஆகிவிட்ட கமலத்தைக் கண்ட ஓர் இளைஞனின் உணர்வுகளைச் சித்திரிக்கின்றது.
“கற்பு’ என்ற சிறுகதை 1958 கலவரத்தில் கணபதி ஐயரின் மனைவியை மூவர் கற்பழிக்கின்றனர். ஆனால் மனதளவில்தான் கற்பு முக்கியம் என்று கருதும் இலட்சியக் கதையாக விளங்குகின்றது. இக்கதையில் இனக்கலவரச் சூழல் தத்ரூபமாக வெளிப்பட்டுள்ளது.
“எதிரொலி’ என்ற சிறுகதை 1977 கலவரத்தை மையமாகக் கொண்டது. தமிழருக்கு நிகழ்ந்த கொடுமைகளை எதிரொலிப்பது.
‘பேய்களுக்கு யார் பயம்’ என்ற சிறுகதையானது லண்டனில் பேய் என்று மற்றவர்கள் பயப்படும் தனது அறையொன்றில் இருந்த மகாதேவன் மூலம் சொல்லப்படுகின்றது. இங்குள்ள இராணுவ அராஜகங்களை எதிர்கொண்டவர்களுக்கு பேய்கள் ஒரு பொருட்டல்ல என்று கதை முடிகின்றது.
‘கோசலை” என்ற சிறுகதையானது இளைஞர்களின் தீவிரவாத எழுச்சியையும், அக்காலத்தில் ஒரு தாய் படும் வேதனையையும் மிக நுட்பமாகப் பதிவுசெய்கின்றது.
- 79 -

Page 50
தனித்துத் தெரியும் திசை
‘கேள்விகள் உருவாகின்றன’ என்ற சிறுகதையானது இளைஞர்கள் எவ்வளவு துயரங்களைத் தாங்கி தமிழினத்துக்காகப் போராடுகின்றார்கள் என ஒரு முதியவரின் பார்வையில் சொல்லப்படுகின்றது.
“வேலிகள்’ என்ற சிறுகதையானது இராணுவத்தால் சூழப்பட்ட மக்களின் இயல்பற்றதும் பாதுகாப்பற்றதுமான வாழ்வை விவரிக்கின்றது.
இந்தப் பத்து சிறுகதைகளும் ஈழத்தின் இனப்பிரச்சினையை மிகத் தத்ரூபமாக கலாநேர்த்தியுடன் வெளிப்படுத்திய சிறுகதைகளாகும். கலை - இலக்கியத்தில் தீவிர அக்கறை காட்டிய 'திசை இச்சிறுகதைகளை மறுபிரசுரம் செய்ததன் மூலம் தனக்குரிய காலத் தேவையை நிறைவேற்றியதோடு நல்ல சிறுகதைகளை வாசகர்களைச் சென்றடையவும் செய்தது. இதன்மூலம் நல்ல சிறுகதைகளுடன் பரிச்சயமாகுவதற்கு வாசகர்களுக்கு நல்ல சந்தர்ப்பத்தையும் திசை அளித்தது எனலாம்.
துருவண் ஞாபகார்த்தமாக அவரின் 'மனிதன்' என்ற சிறுகதையையும் திசை மறுபிரசுரம் செய்திருந்தது. மேலும் பிரசுரமாகிய மூன்று மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் மூலம் தமிழ் அனுபவத்திற்கு அப்பாலும் வாசக மனத்தை அழைத்துச் செல்வதோடு சில பொதுமைகளை இனங்காட்டவும் திசை’ உதவிற்று எனலாம்.
திசையின் சிறுகதைகள் தான் வெளிவந்த காலச்சூழலை - சமூகத்தை - அதன் இயல்போடும் மணத்தோடும் உள்ளடக்கங்கள் வாயிலாக எமக்கு உணர்த்தியுள்ளதை நான் நோக்கினேன்.
திசையில் வெளிவந்த சிறுகதையின் உள்ளடக்கத்தையும் அதன் வெளிப்பாடுகளையும் நோக்கினோம். அவற்றில் வெளிப்படும் கலாபூர்வம் - பாடுபொருளின் இறுக்கம், நேர்த்தி என்பன அதன் பங்களிப்பை ஸ்திரமாக்குகின்றன. திசையில் வெளிவந்த எந்த சிறுகதைகளையும் ஜனரஞ்சக வாசிப்பு வட்டத்திற்குள் குறிக்கிவிடமுடியாது. 'திசை ஆசிரியர் குழுவின் தேர்வு இதில் செல்வாக்கு செலுத்தியிருக்கும் என்பதை மறுக்கமுடியாது. திசையின் சமகாலத்தில் வெளிவந்து கொண்டிருந்த முரசொலி, ஈழநாடு பத்திரிகைகளின் வார வெளியீடுகளில் சிறுகதைகள் தொடர்ச்சியாக வெளிவரவில்லை என்பதோடு அவற்றில் வெளிவந்த
- 80 س

الأTصاو63كقgلاعب 25 حسن خن
சிறுகதைகளில் தேறக்கூடியவை சிலவே ஆகும். குப்பைக்ள் நடுவே
குன்றிமணியைத் தேடவேண்டிய துர்ப்பாக்கியத்தையே நாம் அதிகம்
தரிசிக்கமுடிகின்றது. மிகச் சாதாரண கதைகளாய் பெரும்பாலானவை
வெளிவந்தன. முடிவை நோக்கி ஆஞ்சலோட்டம் செய்யும் சூத்திரக்
கதைகளாய் - ஒரு செய்தியைப் போல இறுக்கமற்ற கதைகளாய் இறுதியில்
"யாவும் கற்பனை என்று முடியும் கதைகளையே அதிகம் முரசொலி, ஈழநாட்டில் காண முடிகின்றது. இதற்குப் பதச்சோறாக சில
உதாரணங்களைக் காட்ட முடியும்.
"இந்திரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவனுக்கு தன்னுடைய கண்களையே நம்ப முடியவில்லை. அவள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லையா? அல்லது திருமணம் செய்து விதவையாகிவிட்டாளா? அல்லது அவளைப் போலவே இன்னொருத்தியா? ஒருவரைப்போல் பலர் உருவத்தில் ஒற்றுமை உடையவர்கள் இருக்கின்றார்கள் என்று அவன் கேள்விப்பட்டிருக்கின்றான் அதுவும் இப்படியா? " என்று மிகுந்த பீடிகையுடன் தொடங்கும் "தழும்புகள் மறைவதில்லை” என்ற சிறுகதை தான் காதலித்த பெண்ணை அதுவும் சில காலத்தின் பின் இப்படிச் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாதோடு மிகச் சாதாரணமான கதையாய் நகர்ந்து செல்கின்றது. இறுதியில் யாவும் கற்பனை என்று முடிகின்றது. ',
இதேபோல “அவன் பெயர் மிருதங்கம்” என்ற ஈழநாட்டுச் சிறுகதை, சகல நிறைவேற்று அதிகாரமும் கொண்ட அவனுடைய தந்தை, சகல நிறைவேற்று அதிகாரமுடைய தலைவியாக அவன் மனைவி, சகல உரிமைகளையும் இழந்த ஒரு நாட்டின் அடிமைப் பிரஜையாக அவன்." "
என்று தொடங்கி மிகச் செயற்கையாக நகர்ந்து செல்கின்றது. பல மூத்த எழுத்தாளர்கள் ஈழ நாட்டில் எழுதிய போதிலும் பலரது நல்ல கதைகள் இடம் பெறவில்லை. இதை "ஈழநாட்டுச் சிறுகதைகளை"த் தொகுத்த செங்கை ஆழியான் ஒத்துக் கொண்டுள்ளார். ஈழநாட்டு சிறுகதைகளில் பல தேறாதவை என்பதை செங்கை ஆழியான்,
-81 -

Page 51
தனித்துத் தெரியும் திசை
"ஈழநாடு இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளில் உருவம்,
உத்தி, சமூகச்செய்தி என்பவற்றில் தேறுகின்ற சிறுகதைகள்
சொற்பமானவையே." " என்று குறிப்பிடுகின்றார். 799 சிறுகதைகள் வெளிவந்த ஈழநாடு இதழில் சொற்பமானவையே தேறுகின்றன என்பது மிகவும் பலவீனமான நிலையாகும். திசை இதழானது ஆசிரியர் குழுவின் மிக இறுக்கமான சிறுகதைத் தேர்வினால் சிறந்த சிறுகதைகளையே பிரசுரித்தது. அதனாலேயே 89 இதழ்களில் 47 சிறுகதைகள் பிரசுரமாகி இருந்தபோதிலும் 'திசை தனித்து நிற்கின்றது.
முரசொலியில் சிறுகதைகள் பிரசுரமாகி இருந்தன. மாதம் ፵® பிறமொழிக் கதை என்று மொழிபெயர்ப்புக் கதைகள் பிரசுரிக்கப்பட்டன. ஒரு இதழில் பிரசுரமாகிய சிறுகதைகள் அடுத்த இதழில் விமர்சிக்கப்பட்டு வந்தது. இப்படியான ஆரோக்கிய பக்கங்கள் இருந்த போதிலும் திசையோடு ஒப்பிடுகின்ற போது முரசொலி சளைத்து விடுகிறது. முரசொலியில் வந்த சில கதைகளை இதற்கு எடுத்துக் காட்டலாம். அந்த ஆயிரம் ரூபாய் என்ற கதை, w
"மெல்ல மெல்லப் புலப்படத் தொடங்கியது. எலும்பையும் நடுங்க வைக்கும் பின்பனிக் காலத்தின் குளில் எண்சாணி உடம்பையும் ஒரு சாணாகக் குறுகிக் கெண்டு படுத்திருந்த தங்கம்மா படலையடியில் யாரோ அழைப்பதைக் கேட்டு வரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தாள்" " என்று மிகச் சாதாரணமாகத் தொடங்கி வழமையான கதை ஒன்றைச் சொல்லுகின்றது. இதனாலேயே இக்கதைக்கு,
"வனஜா விசுவலிங்கம் எழுதிய 'அந்த ஆயிரம் ரூபாய்’ சமகால வாழ்வை கருகூலமாக கொண்டுள்ளது. இக் கதை மிகநீண்டதாகவே அமைந்திருந்த போதிலும் நீளத்திற்கேற்ற உள்ளடக்கம், உணர்வு என்பன போதாது என்றே கூறலாம். எடுத்துக் கொள்ளப்பட்ட விடயம் இன்றைய பிரச்சனைகளில் ஒன்றாக இருந்தாலும் இப்பிரச்சனையை விளக்க எடுத்துக் கொண்ட பாத்திரங்களும் உணர்வுகளும் கட்ந்த காலங்களில் கூறப்பட்ட விடயங்களாகவே உள்ளன' " முரசொலியில் சமகாலப் பிரச்சனைகளும் முற்போக்கான சிந்தனைகளும் சிறுகதை வடிவில் வந்த போதிலும் அவற்றின் மொழி, உருவம்,
- 82 -
என்று விமர்சனம் வந்தது. உண்மையில்

த அஜந்தகுமார்
உள்ளடக்கச்செழுமை என்பன பலவீனமானதாக இடம்பெற்றதைக் குறிப்பிட்டு ஆகவேண்டும். -
இந்த நிலையிலேயே திசையின் சிறுகதைகளின் முக்கியத்துவம்
மேற்கிளம்புகின்றது. இதுவே ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியின் திசையின் பங்களிப்பை தனித்து முக்கியப்படுத்த வசதி செய்கிறது.
இனி திசையின் சிறுகதைகள் உருவ ரீதியாகவும் வெளிப்பாட்டு
ரீதியாகவும் - ஈழத்துப் பத்திரிகை வரலாற்றில் தனித்து நிற்பதனை மதிப்பிட
விழைகின்றேன்.
அடிக்குறிப்புகள்
1. திசை - 22.06.1989
2. ஜான் சாமுவேல் (1984) இலக்கியத்தில் சமுதாயப் பார்வை, சென்னை.
பக்கம் 7 -
3. சிவத்தம்பி, கா, (2001), தமிழ் இலக்கியத்தில் மதமும் மானிடமும்,
சென்னை. பக்கம் 39 - 40
4. ஜான் சாமுவேல், மேலது. பக்கம் 29
5. குளோறியா சுந்தரமதி, (மொ.பெ) (1966) இலக்கியக்கொள்கை Qssion. Luists 66 Renewellek and Austin Warren orgful Theory of Literature އި .. •
8. சிவத்தம்பி, கா உயிர்ப்புகள் (சிறுகதைகளும் மதிப்பீடும்), (1986)
பக்கம் 128
7. திசை, 11.03.1989 (செய்தி)
8. திசை, 2005.1989
9. திசை, சமூகம் (பக்கம் 4) தமிழீழம் எதிர்கொள்ளவிருக்கும்
மாற்றங்கள் ஒரு புத்திஜீவியுடனான பேட்டி
10. திசை (ஆசிரியர் தலையங்கம்) 2502.1989
11. திசை, 08:04.1989
12. ஈழநாடு, 2008.1989
13. ஈழநாடு, 03.09.1989
14. செங்கை ஆழியான், ஈழநாடு இதழின் புனைகதைப் பங்களிப்பு,
மல்லிகை 43வது ஆண்டு மலர், 2008, பக்கம் - 25
15. முரசொலி. 02.04.1989
16. முரசொலி, 25.06.1989
- 83 -

Page 52
தனித்துத் தெரியும் திசை
மதிப்பீடு
ஈழத்து சிறுகதை வளர்ச்சிக்குப் பத்திரிகைகள் ஆற்றிய பங்களிப்பு என்பது தனித்துவமானது. 19ம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்துவரும் இந்தப் பாரம்பரியம் இன்றுவரை நின்று நிலைக்கின்றது. இன்ற்ைக்கு வெளிவருகின்ற, வாரப் பத்திரிகைகள் எல்லாமே சிறுகதைகளையும் தாங்கி வருகின்றன. ஆயினும் அச்சிறுகதைகள் பெரும்பாலும் வெகுசன வாசிப்புக்கான நெகிழ்வுகளுடனேயே பிரசுரமாகிவருவதை நாம் இலகுவாகப் புரிந்துகொள்கின்றோம். ஈழகேசரியில் இருந்தே ஒரு காத்திரமான சிறுகதைப் பங்களிப்புத் தொடங்கியது. ஈழகேசரியை பயன்படுத்தியவர்கள் தமிழ்நாட்டு சஞ்சிகைகளுடன் இலக்கிய பரிச்சயம் கொண்டிருந்தார்கள் என்பது முக்கியமான விடயம். இதனாலேயே ஈழகேசரியில் சிறந்த சிறுகதைகள் பிரசுரமாகும் சாத்தியம் இருந்தது. சுதந்திரன், ஈழநாடு, வீரகேசரி, தினகரன், சரிநிகர், தினக்குரல், சஞ்சீவி என்று பல பத்திரிகைகளும் சிறுகதை வளர்ச்சிக்குத் தம்மால் இயன்ற பங்களிப்பினை வழங்கியிருக்கின்றன. இந்நிலையில் ஒன்றரை வருட காலம் வெளிவந்த திசை’ இதழின் பங்களிப்பினை மதிப்பிடுவது என்பது முக்கியமான விடயமாகும்.
- 84 -

த. அஜந்தகுமார்
ஒன்றரை வருட காலத்தில் 69 இதழ்களில் வெளிவந்த திசை இதழானது மிகத் தீவிரமாக இயங்கியமையால் தனக்கென்றொரு முத்திரையைப் பதித்துச் சென்றது. ஈழத்தில் ஒரு மணிக்கொடிக் காலத்தை கொண்டுவரும் கலை - இலக்கிய நோக்கினைத் தனது நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டு அது வெளிவந்தமையினால், மணிக்கொடி எவ்வாறு இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கலை இலக்கியத்தை கையாண்டதோ அவ்வாறே தமிழ்த்தேசிய எழுச்சியை கலை இலக்கியங்களின் மூலம் பிரதிபலிக்க திசை தன் பங்களிப்பினைக் காத்திரமாக வழங்கியது. தனது முதலாவது ஆசிரியர் தலையங்கத்தில் கூறியதுபோலவே திசை இதழானது வெளிவந்த 69 இதழ்களிலும் கலை இலக்கியப் பிரக்ஞையுடன் இயங்கியமையால் அதில் வெளிவந்த பெரும்பாலான சிறுகதைகள் காத்திரத்தன்மை வாய்ந்தனவாகவே விளங்கின என்பதை நாம் அதன் சமூகவியல் முக்கியம் மூலமும் அழகியல் முக்கியம் மூலமும் உணர்ந்துகொள்ளலாம். பத்திரிகைகள்-வெகுசன வாசிப்பிற்கான தளங்களாக இயங்குகின்றமையினால்தான் தீவிர வாசிப்புக்கென அவற்றின் போதாமையை உணர்ந்து சஞ்சிகைகள் தோற்றம் கொள்கின்றன. இதனை ஈழகேசரி வெளிவந்த காலத்திலேயே மறுமலர்ச்சி இதழ் தோற்றம் பெற்றதில் இருந்து நாம் புரிந்துகொள்ளலாம். திசை இதழின் ஆசிய பொறுப்பில் இருந்தவர்கள் இருவரும் சிறுசஞ்சிகைகளுடன் மிகுந்த ஊடாட்டம் மிகுந்தவர்கள் என்பதனால் அவர்களின் தேர்வு - ரசனை என்பன காத்திரமாக அமைந்தன. அதனால்தான் திசையில் வெளிவந்த சிறுகதைகள் சிறந்த சிறுகதைகளாக மிளிரமுடிந்தது.
வெகுசன வாசிப்பு பெரிதும் வளர்ந்துள்ள நிலையில் சொற்களின் கனதியையும் வாக்கியங்களின் இறுக்கத்தையும் எழுத்துக் குறியீடுகளின் உள்ளார்த்தங்களையும் முழுக்கதையின் அமைப்புச் செம்மையினையும் மிக நுணுக்கமாகக் கவனித்து எழுதுவதற்கான - பிரசுரிப்பதற்கான சூழல் மிக அருகிய நிலையில் திசையில் வெளிவந்த சிறுகதைகள் இவற்றின் நிறைந்த சாத்தியங்களோடு வெளிவந்தமையை திசையின் சிறுகதைகளில்
காணலாம்.
- 85

Page 53
தனித்துத் தெரியும் திசை
திசையில் வெளிவந்த சிறுகதைகள் அவற்றின் உள்ளடக்க ரீதியிலும் மிகுந்த முக்கியம் பெறுவதனை நாம் தெளிவாகக் கண்டோம். தாம் வாழ்ந்த சூழலை பல்வேறு படைப்பாளிகளும் மிகுந்த தத்ரூபமாக வெளிப்படுத்தியிருந்தார்கள். தான் வாழ்ந்த சூழலை மாத்திரம் வெளிப்படுத்திவிட்டால் அது முக்கியம் பெற்றுவிடப் போவதில்லை. உள்ளடக்க ரீதியான சமூகவியற் கருத்து நிலையோடு அழகியல் கருத்து நிலையும் ஒன்றிணைந்து வெளிப்பாடு அடைவதிலேயே அதன் முக்கியத்துவம் இருக்கின்றது. கலைகள் சமூகவிதிகளுக்கு உட்பட்டு இயங்குவது போல கலையின் உள்ளார்ந்த கலைவிதிகளுக்கும் உட்பட்டு இயங்குகின்றன. எந்தவொரு ஆக்கங்களும் கலை அல்லாதனவற்றில் இருந்து வேறுபடுவது இக்கலை விதிகளின்மூலமே. சமூகத்தைப் பிரதிபலிக்கும் வெளிப்பாட்டு ரீதியில் உணர்திறன் முறையில் அதன் கலைப்பிரக்ஞை முக்கியமானது. இந்தப் பிரக்ஞையை திசையின் சிறுகதைகள் ஒவ்வொன்றும் கொணடிருநீதது என்பதே கவனத்திற்குரியதாகும்.
திசை இதழில் வெளிவந்த சிறுகதைகள் சூழலைப் பிரதிபலித்ததால் மாத்திரம் முக்கியம் பெறவில்லை. அக்கதைகளின் கலாரூபமும் உருவச் செம்மையும் - ஆங்காங்கு வெளிப்படும் பரிசோதனை முயற்சிகளும் அவற்றின்
பங்களிப்பைக் காத்திரமாக்கின.
புறமெய்ம்மையில் நடைபெறும் நிகழ்ச்சிகளைத் தளமாகக் கொண்டு அவற்றை உந்துபீடமாகக்கொண்டு தான் எடுத்துக்கொண்ட பொருளை முனைப்புற சித்திரிப்பதற்கான படிம உலகையும் சிறுகதையாளன் நிர்மாணிக்கவேண்டும். இந்தக் கட்டத்திலேயே அவன் புறமெய்மையை படிமங்களாக்கி நிஜ உலகின் உணர்ச்சி கொந்தளிப்புகளை வன்மையுடன் இரத்தத்துடனும் சதையுடனும் தருகின்றான். உண்மை சொட்டும் படிம ஒழுங்கமைப்பிலேதான் படைப்பின் வெற்றி தங்கியிருக்கின்றது. இத்தன்மையை நிறைந்த சாத்தியங்களுடன் இருள், கோளறுபதிகம் முதுகச் சொறியுங்கோ, வம்சத்து வம்சம், நினைவுகள், இயன்றால் நகுக, இப்படி ஒரு காலம், பஜ கோவிந்தம், அர்த்தத்தைத் தேடி, அவதிக்காரர்கள், நான் வட்டச் சுவருள் முட்டும் குருடன், பனி இளகிய பகல், மையித்துகள்
- 86 -

த. அஜந்தகுமார்
துயில்கின்றன, வேட்டை, பருவந்தவறிய மழையைப் போலவே, தரு ஆகிய சிறுகதைகளில் அதிகம் தரிசிக்கமுடிகிறது.
ஈழத்தில் 1980 களுக்குப் பிறகு புதிய உணர்வு முறைமை, புதிய சிந்தனைக்கட்டு, எழுச்சி ஆகியனவற்றினூடாகப் புதிய மாற்றம் வருகின்றது. தமிழ்ச்சிறுகதையில் தொடக்கம் - உச்சம் - முடிவு என்ற அரிஸ்ரோட்டலிய முறைமை சிதையத் தொடங்கியது. ஆயினும் பத்திரிகைகள் வெகுசன வாசிப்புக்காக அவற்றைச் சிதையாமல் காத்தன. ஆயினும் திசையானது இம்மாற்றத்தை நிரம்பவே பிரதிபலித்து நின்றது எனலாம். தொடக்கம் - உச்சம் - முடிவு என்ற சூத்திரப்பாங்கிற்குள் முழுமையாக இயங்காமல் மிகுந்த கூர்மையோடு பெரும்பாலான கதைகள் தம்மை வெளிப்படுத்தின. சமூகத்தின் உணர்திறன்கள் மாறும்போது கலை இலக்கிய வடிவங்களில் முக்கிய மாற்றங்கள் நிச்சயமாகப் பாணி மாற்றங்கள் ஏற்படும் என்பதைத் திசை உணர்ந்திருந்தது. அதைப் பயன்படுத்திய எழுத்தாளர்களும் உணர்ந்திருக்கிறார்கள். ஆயினும் திசையின் சமகாலப் பத்திரிகைகளான முரசொலி, வீரகேசரி, தினகரன் உதயன், சஞ்சீவி போன்றன இத்தடத்தில் பயணிக்கவில்லை. இதே திசையின் பங்களிப்பை இன்னும் வலுப்படுத்துகின்றது எனலாம்.
வெகுசன வாசிப்புக் கருதி வழமையாகப் பத்திரிகைக் கதைகள் வர்ணனைகளுடன், விவரணங்களுடன் தொடங்கி திருப்பம் தருகின்ற ஒரு முடிவுடன் முடிவதையே தமது நோக்கமாகக் கொண்டு, கதைப் பின்னலையும் பாத்திரங்களையும் நகர்த்திச் செல்வதனை நாம் காணலாம். இதற்கு ஈழகேசரிச் சிறுகதைகள், சுதந்திரன் சிறுகதைகள் ஆகிய தொகுதிகளில் நிறைய உதாரணங்களைக் காட்டமுடியும். உண்மையில் சிறுகதை வடிவம் என்பது ፵Gö பகுப்பாய்வு வடிவமாகவே அமையவேண்டும். தனியே கதை வளர்த்துச் செல்வதில் அர்த்தம் இல்லை. சிறுகதை ஒரு பகுப்பாய்வு வடிவமாகவே விளங்குகின்றது என்பதற்கு திசையில் வெளிவந்த வம்சத்து வம்சம், நான் - வட்டச் சுவருள் முட்டும் குருடன், கோளறு பதிகம், இயன்றால் நகுக, இவன், பக்குவம் ஆகிய கதைகளை எடுத்துக்காட்டலாம்.
- 87 -

Page 54
தனித்துத் தெரியும் திசை
சிறுகதையில் மொழி என்பது மிக முக்கியமானது. ஆயினும் பத்திரிகைக் கதைகள் மிக நெகிழ்வானவையாக - நீட்டி முழங்குபவையாக - இறுக்கமற்ற நீளம் மூலம் இலக்கிய படிவத்தின் அமைப்பையே குலைத்துவருவதை சமகாலம் வரை நம்மால் உணரமுடியும். சில மகிழ்ச்சி தரும் புறநடைகளும் இருக்கவே செய்கின்றன என்பது வேறு விடயம். சிறுகதையில் உரைநடை கவிதைக்குரிய காம்பீர்யத்துடனும் நுண்ணுணர்வுடனும் தொழிற்படவேண்டும். அதன் ஒவ்வொரு அம்சமும், தலைப்பு முதல் இறுதிக் குறியீடுவரை ஒவ்வொன்றும் எழுத்தாளரின் படைப்புத் திறனின் ஆழ்குவிவிலிருந்து வெளிக்கிளம்பவேண்டும். அப்போதுதான் அது உண்மையான கலைப்படைப்பாக இருக்கமுடியும். சிறுகதைகளில் இருக்கக்கூடிய சொற்தேர்வு வாசக மனதைப் பரவசம் கொள்ள வைக்கவேண்டும். இப்பண்புகள் திசையின் சிறுகதைகளில் அதிகம் காணப்படுகின்றது. இனப்பிரச்சினைச் சூழலை சொல்கின்ற கோளறு பதிகம், இப்படி ஒரு காலம், பக்குவம், வேட்டை ஆகியவற்றின் மொழி மிக இறுக்கமாகவும் தத்ரூபமாகவும் காணப்படுகிறது. ஆண் - பெண் உறவுச் சிக்கலைச் சொல்லுகின்ற தரு என்கின்ற சிறுகதையானது கவிதையோ இது என்று ஆச்சரியப்படும் அளவிற்கு கவிதை நடையில் மிக தத்ரூபமாக எழுதப்பட்டுள்ளது. தனி மனிதப் பிரச்சினைகளைச் சொல்லுகின்ற பருவந்தவறிய மழையை போலவே, இருள், வம்சத்து வம்சம், முதுகச் சொறியுங்கோ ஆகியவற்றின் மொழி எள்ளலும் - தீவிரமும் கலந்து வாசக மனதைப் பிழிந்துவிடுகின்றது.
திசையின் சிறுகதைகள் கதை சொல்லும் முறையிலும் தம்மைக் கோடுபிரித்து நிற்பதனைக் காணலாம். அக்காலத்தில் அதிகம் கையாளப்பட்டுள்ள நனவோடை உத்தி திசை இதழிலும் பயன்பட்டுள்ளது. ஆனால் அது மிகத் தத்ரூபமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நினைவுகள், இப்படி ஒரு காலம், அவதிக்காரர்கள், வம்சத்து வம்சம், சின்ன அப்பு ஆகிய கதைகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். நினைவுகள், வம்சத்து வம்சம், இப்படி ஒரு 女 காலம் ஆகிய கதைகள் நனவோடை உத்தி கையாளப்பட்ட புதிய உணர்த்துதிறன்களோடு கூடிய கலாநேர்த்தியான சிறுகதைகளாகும்.
- 88 -

த. அஜந்தகுமார்
முற்றுமுழுதாக குறியீட்டு முறையில் எழுதப்பட்ட கதையாக வேட்டை என்கின்ற கதை விளங்குகின்றது. இராணுவச் சூழலை மிகத் தத்ரூபமாக இது குறியீட்டு மொழியில் எழுதிச் சென்றாலும் வாழ்வு சார்ந்த பல ஜன்னல்களை எந்தக் குறுக்கமும் இன்றி இது திறந்துவிடுகின்றது. பாரதியின் அக்கினிக்குஞ்சு கவிதை போல பல பொருள்களை வாசகன் இதற்குக் கொள்ளமுடியும்.
புதிய வெளிப்பாட்டு முறையில் நான் வட்டச் சுவருள் முட்டும் குருடன், முதுகச் சொறியுங்கோ, தரு, இருள் ஆகிய சிறுகதைகள் அமைந்துள்ளன. பரிசோதனை முயற்சிகள் இக் கதைகளில் துளிர்விட்டுள்ளதைக் காணலாம்.
திசையானது வாசகர்களுக்கு படைப்பாளிகளின் புதிய சிறுகதைகளை மாத்திரம் அல்லாது தனது நோக்கம் கருதியும் தேசத்தின் - காலத்தின் தேவை கருதியும் இளம் படைப்பாளிகளை கூர்மைப்படுத்தும் நோக்கோடும் மறுபிரசுரக் கதைகளை வெளியிட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக் கதைகள் என்ற மகுடத்தின் கீழ் அது வெளியிட்ட கற்பு, கேள்விகள் உருவாகின்றன, கோசலை, கிருஷ்ணன் தூது, பேய்களுக்கு யார் பயம்?, இரத்தம், உரிமைக்கு உயிர், எதிரொலி, காளிமுத்துவின் பிரஜாவுரிமை, வேலிகள் ஆகிய கதைகள் ஈழத்துச் சிறுகதை வரலாற்றிலேயே முத்திரை பதித்த சிறுகதைகள் என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று. இம் மறுபிரசுரம் மூலம் சமூகவியல் - அழகியல் ரீதியில் திசை இலக்கிய தடமும் அதன் சிறுகதைப் பங்களிப்பும் வெளிப்படுகின்றது.
திசையில் மொத்தமாக 46 சிறுகதைகள் பிரசுரமாகியிருந்தன. அதில் 32 சிறுகதைகள் திசைக்கென்று உரிமையுடையவை. அந்த 32 சிறுகதைகளும் அதன் உள்ளடக்க ரீதியிலும் வெளிப்பாட்டு ரீதியிலும் கலாபூர்வமானவை என்பதோடு பெரும்பாலும் இளம் படைப்பாளிகளாலேயே அவை எழுதப்பட்டன என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 32 சிறுகதைகளும் இனப்பிரச்சினையின் விளைவுகளை - அதன் வழியாக கிளைந்தெழுந்த பிரச்சினைகளை, சமய விமர்சனங்களை, ஆண் பெண் உறவுச் சிக்கல்களை, சமூக விமர்சனங்களை, பெண்ணிலை உணர்வுகளை என்று பல பேசுபொருள்களை எடுத்து சமூக மெய்ம்மையை மிகத்
- 89 -

Page 55
தனித்துத் தெரியும் திசை
தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளன. 32 சிறுகதைகளையும் ஒன்றாக வாசிக்கின்றபோது ஒரு காலகட்டத்தில் சமூக வரலாற்றை வாசிக்கின்ற சாத்தியம் வாசக மனத்திற்கு கிட்டுவது 'திசையின் வெற்றி எனலாம்.
32 சிறுகதைகளில் இவன், அர்த்தத்தைத் தேடி, முதுகச் சொறியுங்கோ, பஜ கோவிந்தம், பக்குவம், நினைவுகள், இப்படி ஒரு காலம், இருள், வம்சத்து வம்சம், நான் வட்டச் சுவருள் முட்டும் குருடன், பனி இளகிய பகல், மையித்துகள் துயில்கின்றன, வேட்டை, கோளறு பதிகம், தரு, பருவந்தவறிய மழையை போலவே ஆகிய 16 கதைகள் சமூக மெய்ம்மையை கலா பூர்வமாக வெளிப்படுத்தி வெற்றிபெற்ற மிகச்சிறந்த சிறுகதைகள் என்று சொல்லலாம். ஏனைய 16 கதைகளும் ஏனைய கதைகளுக்கு சளைத்தவை இல்லை என்ற வகையிலேயே உள்ளன.
28 வருடகாலம் வெளிவந்த ஈழகேசரியில் 513 சிறுகதைகள் வெளிவந்து இருக்கின்றன. அவற்றில் 7 சிறுகதைகளே உன்னதமான கதைகளாகத் தேறக்கூடியன. 50 ற்கு மேற்பட்ட கதைகளே நல்ல சிறுகதைகள்.
32 ஆண்டு காலம் வெளிவந்த சுதந்திரன் 582 சிறுகதைகளை வெளியிட்டுள்ளது. அதிலும் தேறக்கூடிய சிறுகதைகள் சிலவே.
ஈழநாட்டில் 799 சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. அவற்றின் தரமும் ஒப்பீட்டளவில் குறைவானதே. வீரகேசரி, தினகரன் போன்றனவும் மிக நீண்ட காலமாக இன்றுவரை சிறுகதைகளைத் தமது வார வெளியீட்டில் பிரசுரித்து வருகின்றன. அவை வெகுசன வாசிப்புக்கான கதவுகளையே திறந்துள்ளன. ஆனால் ஒன்றரை வருடகாலம் வெளிவந்து தனது 69 இதழ்களில் மொத்தமாக 46 சிறுகதைகளைப் பிரசுரித்த திசையானது 20ற்கு மேற்பட்ட மிகத்தரமான - கலாபூர்வமான சிறுகதைகளைப் பிரசுத்ததன் மூலம் தனது காத்திரத் தன்மையினால் உயர்ந்தும் தனித்தும் நிற்கின்றது எனில் மிகையில்லை.
திசையின் இதழியல் வரலாறு - சிறுகதை வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது மாத்திரமல்லாமல் அக்காலத்தைய சமூக வரலாற்றோடும் வெளிப்பட்டு நிற்கின்றது எனின் மிகையில்லை.
- 90 -

த, அஜந்தகுமார்
10.
11.
உசாத்துணை நூல்கள்
சுப்பிரமணிய அய்யர், ஏவி, (மூன்றாவது பதிப்பு - 1985), தற்காலத் தமிழ் இலக்கியம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
சிவகுருநாதன், இ, (மீள் பதிப்பு - புரட்டாதி - 2001), இலங்கையில் தமிழ்ப் புதினப் பத்திரிகைகளின் வளர்ச்சி, தமிழ்ச்சங்கம், கொழும்பு.
யோகராசா, செ, (2007), ஈழத்து இலக்கியமும் இதழியலும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
செங்கை ஆழியான், (தொகுப்பாசிரியர்) (ஒக். 2000), ஈழகேசரிச் சிறுகதைகள், பண்பாட்டலுவல்கள் அமைச்சு, திருகோணமலை.
சிவத்தம்பி, கா, தமிழ் இலக்கிய வரலாற்றில் இதழ்கள் விரிவான ஆய்வுக்கான முன் குறிப்புகள் சில, தேசிகம் க. இரகுபரன் (ப.ஆ), யாழ்ப்பாணம் (2000)
சோமகாந்தன், நா. (1992) ஈழத்து இலக்கியம், பல்துறை நோக்கு, பாரி நிலையம், சென்னை.
சுப்பிரமணியம், நா. (1978), தமிழ் நாவல் இலக்கியம், யாழ்ப்பாணம்.
தேவராஜ், வி. (2006), வீரகேசரி பவளவிழாச் சிறுகதைக்
களஞ்சியம், நியூ எக்ஸ்பிரஸ் லிமிடெட், கொழும்பு.
பியூலா மெர்சி, தா, எ, (1984), இருபதில் சிறுகதைகள் (1900 - 1978), தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
வேதசகாயகுமார், எம். (1972), தமிழ்ச் சிறுகதை வரலாறு, சென்னை.
சிவத்தம்பி, கா, (இரண்டாம் பதிப்பு - 1980) தமிழில் சிறுகதையில் தோற்றமும் வளர்ச்சியும், சென்னை.
-91 -

Page 56
தனித்துத் தெரியும் திசை
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
செங்கை ஆழியான், (தொகுப்பாசிரியர்), ஏப்ரல் 2002, சுதந்திரன் சிறுகதைகள், இலக்கிய வட்டம், யாழ்ப்பாணம். செங்கை ஆழியான், ஈழநாடு இதழின் புனைகதைப் பங்களிப்பு, மல்லிகை 43வது ஆண்டு மலர், 2008. குப்பிழான் ஐ. சண்முகன் (2003) அறிமுகங்கள், விமர்சனங்கள், குறிப்புகள், நிகரி வெளியீடு, கொழும்பு. பௌசர், எம். (தொ.ஆ) (2001), ஈழத்து இலக்கியத்தின் சமகால ஆளுமைகளும் பதிவுகளும், மூன்றாவது மனிதன், கொழும்பு. யேசுராசா, அ, (2007) குறிப்பேட்டிலிருந்து, அலை வெளியீடு, யாழ்ப்பாணம், யேசுராசா, அ, (2001) தூவானம், மூன்றாவது மனிதன் வெளியீடு, கொழும்பு. ஜான் சாமுவேல் (1984) இலக்கியத்தில் சமுதாயப் பார்வை, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை. சிவத்தம்பி, கா, (2001), தமிழ் இலக்கியத்தில் மதமும் மானிடமும், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை. குளோறியா சுந்தரமதி, (மொ.பெ), (1966) இலக்கியக்கொள்கை, பாரி நிலையம், சென்னை. சிவத்தம்பி, கா (1988), உயிர்ப்புகள் (சிறுகதைகளும் மதிப்பீடும்), கலாசார கூட்டுறவுப் பெருமன்றம், கரவெட்டி.
செங்கை ஆழியான் (தொ.ஆ), (ஒக்டோபர் 2000) ஈழகேசரிச் சிறுகதைகள், இலக்கிய வட்டம், யாழ்ப்பாணம். செங்கை ஆழியான் (டிசம்பர் 2001), ஈழத்து சிறுகதை வரலாறு, வரதர் வெளியீடு, யாழப்பாணம்.
கோபாலரத்தினம், எஸ், எம். (மே 2002), ஈழமண்ணில் ஓர் இந்தியச் சிறை, நிகரி வெளியீடு, கொழும்பு.
- 92 -

த அஜந்தகுமார்
ulairefabarů
திசையில் வெளிவந்த சிறுகதைகள் 1. இருள் - ஜனனி ரஞ்சகுமார்). 14.01.1989 2 தயவுசெய்து இருதயத்தை இயக்கிவிடுங்கள் (அறிவியற் சித்திரம்)
- எஸ். பி. கிருஷ்ணன்.. . . . . . . cass.---------- 21.01.1989 3. இப்படி ஒரு காலம் - அ. ரவி. 28.01.1989 4. பனி இளகிய பகல் - மயூரன். 04.02.1989 5. கேள்வி - எஸ். பி. சிவனேஷ் . 12.02.1989 6. பருவந் தவறிய மழையைப் போலவே - .
குப்பிழான் ஐ. சண்முகன்.... 18.03.1989 7. பக்குவம் - க. சட்டநாதன். see sees -----το 25.03.1989 8. வம்சத்து வம்சம் - அல் அஸமத். 0.04.1989 9. கி கற்பு - வரதர் O8.04.1989 10. * அதிஷ்டகரமான ரிக்கற் - ரஷ்ய மொழியில் A. பன்பிலொவ்
- ஆங்கிலம் வழி தமிழில் மூ.சி. சீனித்தம்பி . 15.04.1989 11 கி காளிமுத்துவின் பிரஜாவுரிமை - அ. செ. முருகானந்தன்
22.04.1989 s 12. நினைவுகள் - தெளிவத்தை ஜோசப். 29.04.1989
a & 8 was a 8 w y a & O6.05.1989 13. லி உரிமைக்கு உயிர் - முத்து சிவஞானம். 3.05. 1989 14. வேட்டை - துவிஜன் (மு. பொ). 2005. 1989 15. கி இரத்தம் - மு. தளையசிங்கம்.& & ab a 8 «* : * & * & *w 26.05.1989 16. O மனிதன் - துருவன் (க. பரராஜசிங்கம்). 26.05.1989 17. கி எதிரொலி - பிரான்ஸிஸ் சேவியர். 1606. 1989 18. கி கிருஷ்ணன் தூது - சாந்தன். 14.07.989
* : ... as a 8 - 84 vows see we v s is ow a so a i. 21:07.1989 19. லி பேய்களுக்கு யார் பயம்? - ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
LLLL0LL00LLL0LLLL L0L 0L L 0L LLL0LLLLLLLLL LLLLLLLLS S 28.07. 1989 20. மி வேலிகள் - எஸ். கே. விக்னேஸ்வரன். 04:08.1989 21. லி கேள்விகள் உருவாகின்றன - நந்தி. 11.08-1989 22. லி கோசலை - ரஞ்சகுமார். 18.08.1989 SLL L CLL LLLLCL LLLLLLL00LLL0LL0L0LL00L00 0L LLL LL 0LLLLLLL LLJLSLLL LL LLSLSLL SLLLLLLS.............................................. 25.08.1989 23. கோளறு பதிகம் - ரஞ்சகுமார் . 01.09.989
- 93 -

Page 57
தனித்துத் தெரியும் திசை
24. மையித்துகள் துயில்கின்றன - கலைவாதி கலீல் .
S LSLLLSL LSS0LSSLLSSLLSSLL LLLSL LSLSLL LLSLLLLSLLSLLSLLL LL0S LSLLSLLLLS LSCLLLL LSLL LLLLLL .................................................... 08.09. 1989 25. 1 முதுகச் சொறியுங்கோ - அல் அஸமத் . 22:09.1989 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 29.09. 1989 26. நான் - வட்டச்சுவருள் முட்டும் குருடன் - இரிஷி ப்ரபஞ்ஷன்
SC00LCCCCLCCLCC CCLCCCCCLCCLC CCLL LLLCLCLL CLCCL0LL0LCCLL LCC0LCCL0L CCLLCLLLSLLLL LLSLLLLL0LLLLLS0LL .............................. 06.10.1989 27. பூட்டில்லாப் பூட்டு - ந. பார்த்திபன். 13.10.1989 28. அதே விதியெனில் - சாந்தன் .... 20.10.1989 29. மனிதனைத் தேடி - ஜி. பி. வேதநாயகம் . 27.10.1989 30. முகத்திரை - எஸ். பி. சிவனேஷ். 03.11.1989 31. சில மனிதர்கள் - சந்திரா தனபாலசிங்கம். 10.1.1.1989 32. அர்த்தத்தைத் தேடி - வடகோவை வரதராஜன்.08.12.1989 SLLLCLSLLLLCCC LCLLSLSLLLSLLLLCSLLLLLL SLLLS LLLLLSLLLSLSLSLLLCLLLCLL LLLLSL0SL0LLLSLLSLLSLLLSLSLSSLL LSSLLSSLL0SS SLLSS SL0LLLLSL SLLSLSLLSL0LLLSLLSLLLLLSSLLLLSLLLLLLLL LLLLLLLLSLLLLLL 15.12.1989 33. உள் - ந. சத்தியபாலன். 22.12.1989 34. கோவில்கள் கட்டப்படுகின்றன - க. பீற்றர். 29.12.1989 35. சின்ன அப்பு - சு. ராஜமகேந்திரன். 12.01.1990 36. பிரியம் - ந. சத்தியபாலன். 26.01.1990 37. அவன் ஒரு மணிக்காய் - துரை சுப்பிரமணியம் .09.02.1990 38. பிஞ்சு - மு. புஸ்பராஜன். 02:03.1990 39. அவதிக்காரர்கள் - திருமலை சுந்தா. 09.03.1990 40. பஜகோவிந்தம் - கார்த்திநேசன். 23.03.1990 41. வெளிநாட்டுக் காசு - அழகு அருணாசலம். 30.03.1990 42. இயன்றால் நகுக - சந்திரா தனபாலசிங்கம் . 06.04.1990 43. இவன் - யானைப்பாகன் (நட்சத்திரன் செவ்விந்தியன்).
SLL SLLSLCL0LLCLCLLLCLSLCLLLLLSLS S LLLL CSLS SLSLCSLCC0 LCSCL0L CLCLL CLLLLSCLLLLSLL SLCCLLCCLLLLSSSLLLLSLLL0LLLSLLLSLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLLLS LLL SLLLLSLSSL L SLLLLLLSLLLLCLLL LSLLLLLLSLLLS 20.04.1990 SLS SLS S SLSL S SLS 0LSLLSL SLLLSLLS0L0SLLLSLLLSLLLCLL LLLL SLSLL0LLCL0 LC00LLC0LCLCL0CLSL L LSLSLL LLL0LLLLLSS SLL LLL0LLLLL 0L0LSSLSLLLSLCCCCLLCLC0LCC L0LCS 27.04.1990 44. தரு - சம்யுக்தா (குப்பிழான் ஐ. சண்முகன்) . 04.05.1990 45. * சட்டத்தின் முன்னால் - காவ்.கா - ஜேர்மனிலிருந்து
ந. சுசீந்திரன். 18.05.1990 46. வெறுமை ஒரு பிரமை - க. நளாயினி . 25.05.1990 47. * திறந்துவிடு - சதாத் ஹசன் மன்தோ - ஆங்கிலம் வழியாக
தமிழில் இ. கிருஷ்ணகுமார் . 01:12.1989
* மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் லி தேசிய இனப்பிரச்சினைக் கதைகள் (மறுபிரசுரம்)
திசை சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதைகள் O ஞாபகார்த்த சிறுகதை
- 94 -

த அஜந்தகுமார்
கவனத்தை ஈர்க்கும் முயற்சி.
சிறந்த - படைப்பாளிகள், படைப்புகள், இதழ்கள், அமைப்புகள் என்பன விமர்சனங்களிலும் ஆய்வுகளிலும் அரங்குகளிலும் ஒதுக்கப்பட்டோ மறக்கப்பட்டோ வரும் கசப்பான நிலைமை, எமது கலை இலக்கியச் சூழலில் தொடர்ந்தபடிதான் உள்ளது.
அமைப்புகளிலும் இதழ்களிலும் உள்ளவர்களின் ‘சராசரித் தன்மை - மந்த இரசனை முதலியன இவற்றின் காரணிகளனாலும் அடிப்படையாகவுள்ளது "அறவுணர்வு' இன்மையே என்பதைக் கூர்ந்து நோக்கினால் உணரலாம். மதிப்பீடுகளின் சரிவு, உண்மை நிலைமைகளைக் குழப்பிவிடுவதோடு வளர்ச்சியையும் தடுத்துவருகிறது.
இந்நிலையில் 'திசையின் சிறுகதைகள் பற்றிய ஆய்வு நூல் வெளிவருவது, கவனத்தை ஈர்க்கும் ஒன்றாகும். புதியவர்களிடையே 'திசையின் முக்கியத்துவத்தை இது கொண்டுசெல்லும், பழையவர்களின் நினைவுகளைக் கிளரச்செய்து செயல்முனைப்பின் தேவையையும் உணர்த்தி நிற்கும்.
இந்திய “அமைதிப் படை” எமதுமண்ணில் கால்பரப்பி நின்ற - வன்முறைச் சூழல் நிலவிய
- 95 -

Page 58
தனித்துத் தெரியும் திசை
காலப்பகுதியில் (1989 - 1990), "திசை’ இதழ் தனது இருப்பை ஒருவாறு தக்கவைத்தபடியே - அரசியல், சமூகம், கலை இலக்கியம், பெண்ணியம், விளையாட்டு முதலிய தளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தச் செயற்பட்டது; மக்கள் மத்தியில் நிரம்பிய வரவேற்பையும் பெற்றது.
அதன் பொதுவான பங்களிப்பைப் பின்புலமாக வைத்து, இலக்கியத் துறையில் - குறிப்பாக, அதில் வெளியான சிறுகதைகளை ஆய்வுசெய்து மதிப்பிட இந்நூல் முயல்கிறது.
தனது கலைமாணி சிறப்பு (தமிழ்) பட்டத்திற்காக த. அஜந்தகுமார் மேற்கொண்ட ஆய்வே இந்த நூல்; ஆயினும், கற்கைநெறித் தேவைக்கான நிர்ப்பந்தச் செயற்பாடாக’ அன்றி, ஈடுபாட்டுணர்வுடன் அவர் மேற்கொண்ட ‘தெரிவுதான் அந்த ஆய்வு என்பதையும் மனங்கொள்ள வேண்டும். மாணவப் பருவத்திலேயே அக்கறைகொண்ட வாசகனாயும், ‘புதிய தரிசனம்’ என்ற கலை - இலக்கிய இதழின் ஆசிரியராயும் அவர் இருந்திருக்கிறார்; வாசிப்பினால் உருவான இரசனையும் மதிப்பீட்டுணர்வும் இவ்வாய்வில் அவருக்குத் துணைநின்றிருப்பதையும் உணரமுடிகிறது.
இளம் ஆய்வாளனென்ற வகையில் இம்முயற்சி நல்லதோர் ஆரம்பம், இவ்வாறான ஆய்வுகளை - விரிந்த தளங்களில் - எதிர்காலத்தில் அவர் தொடரவேண்டு மெனவும் விழைகிறேன்.
அ. யேசுராசா
குருநகர், 220.2009
- 96 -


Page 59


Page 60
ன்றான திசையின்
ஈழத்துத் தமிழ்
ம் என்று நம்பலாம்.
த, கவிதை, விமர்சன றகளிலும் ஈடுப அஜந்தகுமார், வும், இந்நூலின் மூ
கூறலாம.
நிர்ப்பந்தச் செயற்ப காண்ட ‘தெரிவுதான்
மாணவப் புதிய தரிசனம்" அவர் இருந்திரு ம் மதிப்பீட்டுணர்வும் தையும் உணர முடிகிறது
978-955 - 520
 
 
 
 
 
 
 
 
 
 

நூல் ஈழத்திலே வெ பங்களிப்பின் ge(5