கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வடக்கிருத்தல்

Page 1


Page 2

வடக்கிருத்தல்
சோ. பத்மநாதன்
Sfiniai
தேசிய கலை இலக்கியப் பேரவை
W
சவுத் விஷன்

Page 3
Vadakiruthal S. Padmanathan First Published : Jan. 1998 Published in ASSociation with National Association for Art and Literature
by
Vyf
SOUTH VISION 6, Thayar Sahib lil Lane Chennai - 600 002.
RS, 50.00
Published and Distributed in Sri Lanka by Vasantham (Pvt.) Ltd. South Asian Books 44, 3rd Floor, CCSM Complex, Colombo - 11. Tel: 335844. Fax: OO94 - 333279
தேசிய கலை இலக்கியப் பேரவையின்
25வது ஆண்டு நிறைவு வெளியீட்டு வரிசையில் முதலாவது நூல்
வடக்கிருத்தல் சோ. பத்மநாதன் முதற் பதிப்பு : ஜனவரி 1998 வெளியீடு தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து
y
சவுத் விஷன் 6. தாயார் சாகிப் 2வது சந்து, சென்னை - 600 002
ரூபா : 50.00
அச்சாக்கம் : மணி ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை - 600 005. அட்டை அச்சு : பிரிண்ட் ஸ்பெஷாலிடி சென்னை - 600 014. அட்டை அமைப்பு: ஏஞ்சலோ கிராபிக்ஸ்

பதிப்புரை
மீண்டும் துளிர்ப்போம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற 95, ஒக்ரோபர் இடப்பெயர்வும் - வீழ்ச்சியும் புத்தக வெளியீட்டில் நெருக்கடியையும் புத்தகப் பண்பாட்டில் தேக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புத்தக வெளியீட்டு நிதி முடக்கமும் - விநியோக சீராக்கமும் வலுவிழந்துள்ளது. ஆதிக்க சக்திகளின் அனுசரணையுடனும் பக்கத் துணையுடனும்புத்தக வெளியீடு செய்வதில் எமக்கு நம்பிக்கையில்லை.
இலங்கைத் தமிழ்ப் புத்தகப் பிரியர்கள் உலாவிடும் சுதந்திரத்தை இழந்துள்ளனர். எமது கொழும்பு புத்தக நிலையத்துக்கு வந்து செல்பவர்களே கைதாகின்றனர். விசாரணைக்குட்படுகின்றனர். பொதுவாகவே தமிழ் இளைஞர்கள் விசாரணையின்றி தடுத்து வைக்கப்படுகின்றனர். மூச்சு விடக்கூட முடியாது திணறுகின்றனர்.
யாழ். வசந்தம் புத்தக நிலையம் சோபை இழந்துள்ளது. புத்தக நிலையத்தின் புதிய புத்தகங்கள் வந்ததும் முதல் நாளே வந்து கூடுவதும், நூல்களின் வரவை எதிர்பார்த்து என்று வரும் என்று வரும் என கேட்டு வந்த புத்தகப் பிரியர்களின் வரவை இழந்துள்ளோம். ஏனோ தானோ என்று ஊருகிறோம்.
கடன் பளுவும், வட்டிக் கரைச்சலும் நெருக்கி விழுங்குகிறது. அன்றாடம் அந்நிய வல்லூறுகளின் வாய்க்குள் விழுங்கப்படுவதாக உணருகிறோம்.
நாமும் நலியாக் கலையுடையோம்' என்ற மீண்டும் தொடங்கும் மிடுக்குடன் "போரின் முகங்கள்' நூலைத் தொடர்ந்து இக்கவிதை நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம். பத்து வருடங்களின் முன்னே வந்திருக்க வேண்டிய சோப வின் கவிதை நூல் இன்றைய நெருக்கடி நிலையிலேனும் "வடக்கிருத்தல்" என்ற தலைப்போடு வெளிவருதல் அர்த்தமுடையதே. 95 'ஒக்ரோபர் இடப்பெயர்வின் பின்னால் எம்மிடம் பிரதி தந்திருந்தும் இப்போது தான் வெளியிடுதல் சாத்தியமாகிறது.
தேசிய கலை இலக்கியப் பேரவையின் இருபத்தைந்தாண்டு காலத்தைக் குறித்து மாதாந்தம் ஒரு நூல் வெளியிட முன் வந்துள்ளோம். முதல் கட்டப் பரீட்சார்த்தமாக பன்னிரு நூல்களை வெளியிடுகின்றோம். அதில் இந்நூலும் அடங்கும்.
புத்தக நிலையங்களை நோக்கி வரும் வாசகர்களின் வீழ்ச்சியினால் 'வீட்டு நூலக விநியோகத் திட்டம்' பற்றி ஆலோசித்துள்ளோம்.
புத்தகப் பண்பாட்டினை முன்னெடுத்து இலட்சிய தாகத்துடனும், நம்பிக்கையுடனும் முன் நடப்போம்.
"என்று தணியும் எங்கள் சுதந்திரதாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற் பிறகெது வேண்டும். S.44, ep6TDITb LDT.g. தேசிய கலை இலக்கியப் பேரவை கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி, கொழும்பு - 11

Page 4

என்னுரை
நான் கவிதை எழுதத் தொடங்கி நாற்பது ஆண்டுகள் ஆனாலும் இப்பொழுதுதான் ஒரு தொகுதியை வெளியிட முடிகிறது.
ஒரு சீராக - கிரமமாக - எழுத்துப் பணியை நான் செய்ததில்லை. அவ்வப்போது எழுதுவேன். பிறகு நீண்ட காலம் செயல்ற்றிருந்துவிடுவேன். எழுதியவற்றைப் பேணுவதிலும் பெரிய அக்கறை காட்டியதில்லை.
ஆனால் நான் கண்டவை, கேட்டவை, உணர்ந்தவை. யாவும் என் சிந்தனையில் செல்வாக்குச் செலுத்தின, செலுத்திக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்குக் “கலைவடிவம் - கவிவடிவம் கொடுப்பதில் அதிக கவனமெடுக்கிறேன்.
சுயம் என்னுடைய இலக்கிய கொள்கையையும் கவிதா ரஸனையையும் கோடிட்டுக் காட்டும் என்னுடைய "அகம்" கால்ங்கடந்தது என்பதை உணர்கிறேன். ஆனால் என் வளர்ச்சியில் அது ஒரு கட்டம் ஆதலின் இத்தொகுதியில் இடம் பெறுகின்றது.
அவலங்கள் மலிந்த மண்ணில் பதினாலு ஆண்டு வாழ்ந்த ஒருவன் அவற்றால் பாதிக்கப்பட்டிருக்காவிடின், அவன் கவிஞனாக முடியாது என்பது மட்டுமல்ல, மனிதனாகவும் இருந்திருக்கமுடியாது. இந்நூலின் "புறம்” பகுதி நாம் நொந்த கதையும் வெந்த கதையும் சொல்லும்.
எனது துறை கவிதை என்பது "எப்பவோ முடிந்த காரியம்" விமர்சனம், மொழிபெயர்ப்பு, நாடகம், மேடைப்பேச்சு என்று பல ஈடுபாடுகள் எனக்கிருந்தாலும், என் ஆத்மாவை நானெழுதும் கவிதையே காட்டும் என்று நம்புகிறேன்.
"கவிதைக்குரிய பொருள் இவைதாம்" என்று நான் என்னை மட்டுப்படுத்திக் கொண்டதில்லை. காதல், கடவுள், அரசியல், சமூகம் என்று பல பொருள்கள் பற்றிப் பாடியிருக்கிறேன். வாழ்க்கை பன்முகப்பட்டதாயிருக்கும் பொழுது, இது தவிர்க்க முடியாதது.

Page 5
அடுத்தது வடிவம்: தமிழ்க்கவிதையோடு பரிச்சயமுள்ளவர்கள், என் கவிதை மரபுவழிவந்த வடிவங்களைக்கொண்டிருப்பது காண்பர். என் இலக்கியப் பயிற்சி அதற்குக் காரணம். சொல்ல வரும் கருத்துக்களை மரபுவழி வடிவங்களில் என்னால் சொல்ல முடிகிறது.
கவிதை கட்புலமாகிவிட்டது. ஓசை என்ற தளையை அறுத்தெறிந்து விட்டது என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. வெற்றிகரமாக அமைந்த பல புதுக்கவிதைகள், சூக்குமமாக ஓசையமைதி பேணுவதை என்னால் நிரூபிக்க முடியும்.
உரைநடைக்குக்கூட லயம் உண்டு என்று மொழியியலாளர் கூறுவர். இசை, ஓவியம், சிற்பம், நடனம் முதலிய கலைகள் எல்லாம் லயம் பேணுகின்றன.
‘ஆனாலும் நின்றன அதிசயங்கள் யாவினுமே கானா முதம்படைத்த காட்சிமிக விந்தையடா காட்டு நெடுவானம் கடலெல்லாம் விந்தையெனில் பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா! பூதங்கள் ஒத்துப் புதுமைதரல் விந்தையெனில் நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேராமோ? ஆசை தருங்கோடி அதிசயங்கள் கண்டதிலே ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ!'
- பாரதி
எனவே, என் கவிதை ஓசையை நிராகரிக்கவில்லை, அதைக் கொண்டாடுகிறது. w
இப்படி எழுதுவது “பண்டிதத்தனம்" ஆகாது. யாப்பிலக்கணம் கற்று ஒருவர் கவிஞராக முடியாது. யாப்பமைதியுள்ள மிக மட்டமான கவிதைகளும் வருகின்றன. புதுக்கவிதை என்ற பேரில் உயிரற்ற உருவக அடுக்குகளும் வருகின்றன.
நல்ல கவிதை அதன் பொருள் புலப்படு முன்னரே கேட்போனை 6JTS 3560601 - G&Girp60)LdBg5. ("Good Poetry communicates even before it is understood" - T.S. Eliot) d565ujiga,6ft eyp6)b 6T66 TT6) கேட்போரோடு தொடர்பு கொள்ள முடிந்திருக்கிறது. அதற்குக் காரணம் பொருள் மட்டுமல்ல, ஓசையுந்தான்.

இத்தொகுதியில் உள்ள கவிதைகள் வெவ்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்டவை. அவற்றை அவை வெளிவந்த காலப் பின்னணியில் பார்க்க வேண்டும்.
ஆரம்பக் காலப் படைப்புகளைத் தவிர்த்து விட்டேன். யாழ். இந்துக் கல்லூரி மலரில் வெளிவந்த “யாழ்ப்பாணம்" (1955) என்ற என் முதற் கவிதையோ வரதருடைய "ஆனந்த"னில் (1956) வெளிவந்த 'நீச்சல் வீரன் நவரத்தினசாமியோ, "தேன்மொழி” என்ற கவிதை இதழில் (1956) வெளிவந்த “யாருக்கு வெறி?” என்ற கவிதையோ இதில் இல்லை.
அதுபோலவே, அண்மைக்காலங்களில் பல பெரியோர்களை வாழத்தியும், வேறு பலர் மறைந்த போது அஞ்சலி செலுத்தியும் பாடியவை இதில் இல்லை. என் மொழிபெயர்ப்புக்கள் பிறிதொரு தொகுதியாக வர இருப்பதால் இதில் இடம்பெறவில்லை. "இக்கால ஸ்தோத்திரம்", "மேரியும் கிறிஸ்துவும்" அவற்றின் பொருத்தப்பாடு கருதி *பரம்” பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
இவ்வளவு காலமும் செய்யாத, செய்ய முடியாத, இப்பணி, இப்பொழுது மட்டும் எப்படிச் சாத்தியமாயிற்று? 1995 ஒக்ரோபரில் வலிகாமத்திலிருந்து தென்மராட்சிக்கு யான் இடம்பெயர நேர்ந்தது. பத்திரிகை நறுக்குகளாகக் கிடந்த என் கவிதைகள் நூலுருப்பெறாமல் அழிந்து போமோ என்ற அச்சம் ஏற்பட்டது. கணிசமானவற்றை என் மருகி குணாளினி சதாசிவமூர்த்தி படியெடுத்தாள். செல்வி ரஞ்சினி ராசரத்தினம் அனைத்தையும் தட்டச்சிற் பொறித்துதவினார்.
அச்சுவாகனத்துக்குப் போகுமுன் பிரதியைப் படித்து தெரிவுபற்றி ஆலோசனை வழங்கிய பேராசிரியர் நா. சுப்பிரமண்யன், கலாநிதி சி. சிவலிங்கராசா, கலாநிதி காரை சுந்தரம்பிள்ளை, கோகிலா மகேந்திரன், கந்தையா ரீகணேசன் ஆகியோருக்கு என் நன்றி
ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பே என் கவிதைத் தொகுதியை வெளியிட முன்வந்த சோ. தேவராஜாவை அணுகினேன். அவர் மகிழ்ச்சியோடு வெளியீட்டுப்பணியை மேற்கொண்டார்.
தனிப்பட்ட நெருக்கடிகளை எதிர்நோக்கிய வேளையிலும், ஓவியர் இராசையா, எனக்காக நேரம் ஒதுக்கி, அட்டைப்படத்தையும்

Page 6
மற்றைய ரேகைச் சித்திரங்களையும் வரைவதில் அர்ப்பணிப்போடு செயற்பட்டார். அவருக்கும், தலைப்பை அழகுற எழுதி உதவிய "ரமணி"க்கும் என் நன்றி.
என் கவிதைகளைப் பிரசுரித்த க. கைலாசபதி (தினகரன்), எஸ்.டி. சிவநாயகம் (தினபதி - சிந்தாமணி), ம. சிவராசா (முரசொலி), ஜிவா (மல்லிகை) ஆகியோருக்கும், அவை எழுதப்பட்ட காலங்களிலேயே தம் நாடகங்கள் வாயிலாக அவற்றுக்கு ஒரு மேலதிக பரிமாணம் தந்த கோகிலா மகேந்திரனுக்கும் என் கடப்பாடு பெரிது. பெருமதிப்புக்குரிய பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இத்தொகுதியைப் படித்து, பெறுமதி மிக்க அணிந்துரை ஒன்றை எழுதியுள்ளார். அவருக்கு யான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.
ஆக, என் பேரிலும் ஒரு கவிதைத் தொகுதி வருகிறது.
சோ. பத்மநாதன்
ஏரகம்
பொற்பதி வீதி, கொக்குவில், இலங்கை 97.2-0.

நமது இன்னல் வரலாற்றுக்கான இன்னோர் இலக்கிய சாட்சியம் - கவிஞர் சோ, பத்மநாதனின் வடக்கிருத்தல் கவிதைத் தொகுதிக்கான முன்னுரைக்குறிப்பு
இந்தக் கவிதைத் தொகுதி ஏற்கனவே வந்திருக்க வேண்டியது. கடந்த பத்துப் பதினைந்து வருடங்களாக "சோ.ப" ஈழத்துக் கவிதையுலகில் வகித்து வந்துள்ள இடத்தை நோக்கும் பொழுது, அவரது கவிதைத்தொகுதி ஏற்கனவே வந்திருத்தல் வேண்டும்.
இந்தத் தொகுதியில் கவிஞர் 1960 முதல் எழுதிய கவிதைகளின் தெரிவுகள் இடம் பெறுகின்றன. தினபதி, சிந்தாமணி காலத்திருந்து 1996 வரையுள்ள கவிதைப் படைப்புக்கள் உள்ளன. சோ.பவின் கவிதை ஆளுமை வளர்ச்சியை அறிந்து கொள்வதற்கு இந்தத் தொகுதி பெரிதும் உதவும்
"சோப" வின் கவிதைகளை விளங்கிக் கொள்வதற்கு (மற்ற எல்லாக் கவிஞர்களின் ஆய்வுக்கும் பொருந்தும் வகையிலே) கவிஞரை -அதாவது சோ.ப. என்ற மனிதனை - விளங்கிக் கொள்ளல் வேண்டும். ஆக்க ஆளுமைக்கும் புற உலகுக்கும் உள்ள ஊடாட்டம் தான் கலைப்படைப்புக்களைத் துருகின்றன.
சோ.ப அதிராது பேசுபவர், நுண்ணிய உணர்வுகளும் நெகிழ்ச்சி யுள்ள இதயமும் கொண்டவர். அவரிடத்து உணர்நுண்மையும் உணர்ச்சித் தாக்க நெகிழ்வும் நிறைய உண்டு. பண்படுத்தப்பட்ட நிலம் போன்றவர் அவர். "
எண்பது தொண்ணுாறுகளில் யாழ்ப்பாணத்தின் சனரஞ்சகக்
கவிஞர்களுள் ஒருவராக விளங்கி வந்தவர்.
இலக்கியத் தாடனம் இவரது பலங்களில் ஒன்று. ஆங்கில, தமிழ்க்கவிதைப் பாரம்பரியத்தோடு நிரம்பிய பரிச்சயம் உள்ளவர். கவியரங்குகள் முதல் விமர்சன அரங்குகள் வரை இவரது பங்களிப்புக்கள் பரந்திருக்கும்.
இந்தத் தொகுதி இக்கவிஞரின் முழு ஆளுமையையும் வெளிக்கொணருவதாகவே அமைகிறது. 64 கவிதைகள் சுயம், பரம், அகம், புறம் என்ற தலைப்புக்களின் கீழே தரப்பட்டுள்ளன.

Page 7
பாரம்பரிய, மரபுநிலைப்பட்ட, ஓசை-லய முறைமையையே கவிதைக்கான சட்டகமாகக் கொண்டிருப்பதே இத்தொகுதியின் முக்கியத்துவமாகும். மரபுவழிவரும் யாப்பமைதி தரும் ஓசையே தனது கவிதைக்கான ஆதார சுருதியாக இருப்பதைக் கவிஞர் தனது முகவுரையில் வற்புறுத்தியுள்ளார். பாரம்பரியமான ஓர் ஒசைலயத்தையே முருகையனும் எப்பொழுதும் கொண்டுள்ளாரெனினும், அவரது கவிதைகளிற் புலமை வீச்சே பிரதானப்பட்டு நிற்பதால், ஒசைலயம் ஆதாரமாக அமையுமே தவிர, அது முனைப்புறுவதில்லை. சோப 560Tg5 a56îGODg5uî Gör 'L SDJGODLDßuîGB6O(Bulu (the flow of the poetry) தனது கவிதையின் உயிரை (உயிர்ப்பை) வைத்துள்ளார் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவருக்கு மரபுவழி ஓசையமைதி முக்கியLDITégBg5.
அண்மைக்காலத்துப் பிரதான கவிஞர்களிடத்து இந்தப் போக்கு இல்லை. காரணம் புதுக்கவிதை இந்த ஓசை ஒருங்கமைவை நம்பி நிற்காதது. அது அந்த "ஒழுங்கமைவுகளின்" முறிவிலேயே தனது கவிதை வீச்சினை வைத்துள்ளது. புதுக்கவிதைக்கு படிமங்களின் எழுச்சி, சரிவே முக்கியமானதாகும். அச்சின் பயன்பாடும் இணைந்துவர, புதுக்கவிதை மரபுவழிக்கவிதைக்குப் புறம்பான ஒரு ஸ்ருதிவிகச்சிப்பை தனது தளமாகக் கொள்கிறது. எந்தக் கலைப்படைப்பிலும் ஒரு ஸ்ருதிலயம் உண்டு.
அது புதுக்கவிதையிலும் உண்டு. "சோப" வைப் பொறுத்தவரை, பாரம்பரியமான கவிதையோட்டத்தின் பாய்ச்சலிலேயே (rhythmic flow) தனது கவியுள்ளத்தின் தடத்தை (புகைவண்டிக்குத் தண்டவாளம் போன்று இந்தத்தடத்தை) தனது உணர்ச்சி, சிந்தனையோட்டங்களுக்குமான தண்டவாளமாகக் கொள்கிறார்
இதனை நாம் "சந்த ஓட்டம்” எனலாம். "இக்கால ஸ்தோத்திரம்" தவிர்ந்த, மற்றைய கவர்ச்சிகரமான கவிதைகள் இந்த சந்த ஓட்டத்தையே கொண்டுள்ளன. இந்தச் சந்த ஓட்டம் திருப்புகழ்ச் சந்தமாகவோ, எடுத்துரைப்புச் சந்தமாகவோ அமையும்.
புதுக்கவிதையைத் தனது இலக்கிய கவிதா "இலச்சினை" யாகக் கொண்ட சமகால(த்தமிழ்) இலக்கியத்தில் இந்தச் சந்த ஓட்டத்துக்கு என்ன இடம் உள்ளது என்பதுதான் வினா.

"சோ.ப" இந்த நடையைப் பயன்படுத்தியே நம்மிடையே ஒரு சமகாலக் கவிஞராக நிற்கின்றார். சமகாலப்பிரச்சினைகளை எடுத்துரைக்க இந்தச் சந்த ஓட்டம் எவ்வாறு பயன்படுகின்றது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்த ஓட்டம் புதுக்கவிதைக்கில்லாத ஓர் எடுத்துரைப்பு ஓட்டத்தை வழங்குகின்றது.
"சோபவின் கவிதைகளில் அந்த எடுத்துரைப்புப் பாய்ச்சல் நன்கு தெரிகிறது. இந்தப் பாய்ச்சலின் ஒசைக்கவர்ச்சி காரணமாக இவர் அண்மைக்காலத்தின் சிறந்த கவியரங்குக் கவிஞர்களுள் ஒருவர் என்ா) உண்மையையும் பதிவு செய்து கொள்ளல் வேண்டும்.
இந்தக் கவிதைத்தொகுதியிலுள்ள கவர்ச்சிகரமான, முக்கியமான கவிதைகளிற் பெரும்பாலும் இப்பண்பையே காண்கின்றோம். "பாலாய் நிலவு பொழிகிறது" இப்பொழுது கூறியவற்றுக்கான நல்லதோர் உதாரணம். வேறும் பல உள.
புதுக்கவிதை, கவிஞனின் தனி ஆளுமையின் துலங்கல்களைக் காட்ட, பாரம்பரிய சந்த ஓட்டம் ஒன்றை எடுத்துரைக்க உதவுகிறது.
"சோப"வின் சிறப்பம்சம் இந்த எடுத்துரைப்பினுடே காணப்படும் இலக்கிய ஆழமாகும். தமக்குள்ள இலக்கியப்பரிச்சயம் காரணமாக, இவரை அறியாமலே பண்டைய இலக்கியத் தொடர்கள், பதங்கள், இவரின் கவிதைகளிலே வந்து விடுகின்றன. உண்மையில் "பரம்” பகுதியில் வரும் பக்திப்பாடல்கள் (தரிசனம் போன்றவை) குமரகுருபரர், அபிராமிப் பட்டர் முதலியோரை நினைவூட்டுகின்றன.
இதனால், "சோ.ப"வைப் போன்ற இலக்கியப் பரிச்சயமுடையோருக்கு, சோபவின் கவிதைகள், அவர்களை இன்னொரு ரசனைத் தளத்துக்கு இட்டுச் செல்வனவாகவே அமையும். இக் கவிதைகளை வாசிக்கும்பொழுது நம்மிற்பலர் இவற்றினூடாக இன்னொரு தளத்துக்குச் சென்று விடுகிறோம்.
இந்த இலக்கியப் பரிச்சயம் காரணமாக இவர் பாரம்பரிய படிமங்களைப் பிரக்ஞை பூர்வமாகப் பயன்படுத்தும் தன்மையையும் நாம் அவதானிக்கலாம். "ரிவிரஸ்" வின் பின் வீட்டுக்குத் திரும்புவதை "வீடுபேறு? என்ற தலைப்பு உணர்த்துகிறது. கவிஞர் தம் வீட்டைத் திரும்பப் பெறுகிறார், அவருடைய நாய் "வீடு" (அதாவது மோட்சம்) பெறுகிறது. வடக்கிருத்தல் என்ற படிமமும் சங்க இலக்கியத்தின் புறப்பொருள் மரபினுாடு வருவதே.

Page 8
"சோயவின் கவிதையோட்டம்மாத்திரமல்ல; அவரது படிமங்கள், வரிகள் கூடத் தமிழலக்கியப் பண்பாட்டினுள் தோய்ந்து கிடப்பவையே இதுவரை நாம் பார்த்தது "சோப" என்ற கவிஞனின் கவிதா ஆளுமையின் அம்சங்களாகும். இந்தத் தளத்திலிருந்து அவர் தரும் கவிதைப் பொருளுக்கு வருவோம். "அகம்” பகுதியில் காதல் பற்றிய தன்மைநிலைக் கூற்றுக்கள் பல உள எனினும், இத்தொகுப்பின் முக்கியத்துவம் "ப்ரம் பற்றிய பாடல்களிலும் "புறம்" தொகுதியில் வரும் பாடல்களிலுமே தங்கியுள்ளது.
இளைஞர் இயக்கங்கள் முளைவிடுவதற்கான பின்புலம் தோன்றுவதற்குமுன்னர் நிலவிய நிலைமைகளிலே தொடங்கி, படையினரின் மிகைத் தாக்குகை, மக்களின் இன்னல்கள், இந்தியப்படையின் வருகை, ஷெல் குண்டுத்தாக்குதல்கள், அகதி வாழ்க்கை, தாண்டிக்குள அநுபவங்கள், ரிவிரஸ் ஏற்படுத்தியூ புலப்பெயர்வு, மீண்டும் "வீடுபேறு" அடைதல் என வரலாற்றொழுங்கு தவறாது, கவிதைச் சாட்சியங்களாக இந்தப் பாடல்கள் அமைந்துள்ளன. புலம்பெயர்ந்த தமிமர்கள் இவரது அங்கதப் பார்வைக்கு ஆளாகிறார்கள், நமது கடந்த இருபது வருட காலத்து அல்லல்களின் ஒரு முக்கிய இலக்கிய ஆவணமாக இந்தத் தொகுதி வருகிறது.
முதிர்ச்சியுள்ள ஒருவரின் பார்வை வழியாக, இந்தப் பதிகை நடைபெற்றுள்ளது. தென்மராட்சிப் பயணத்தின் பின் வீடு திரும்பிய "சோப" தாங்கள் விட்டுச் சென்ற நாயைத் தேடுவதும், அந்த நாய்க்கான தேடுதலின் ஊடாக, ஒரு மனிதாயதச் சித்திரிப்பைத் தந்திருப்பதும், "சோப" என்ற மனிதனுக்குள் உள்ள கவிஞனையும், கவிஞனுக்குள் உள்ள மனிதனையும் நமக்குக் காட்டுகின்றன.
அவர் புகழ்பரவ, அவர் ஆக்கங்கள் மேலும் மேலும் வர, எனது வாழ்த்துக்கள்.
கார்த்திகேசு சிவத்தம்பி
தகைசார் ஓய்வு நிலைப்பேராசிரியர் (யாழ் பல்கலைக்கழகம்) வருகைப் பேராசிரியர் (கிழக்குப் பல்கலைக்கழகம்) 1212量997


Page 9

குரு
மூவர் சொலும் தமிழ்க்கடலில் மூழ்கியெழும் பேரறிஞன்
முன்னாள் என்னைக் கூவியழைத்(து) 'அட கவிதை உனக்கு வரும் எழு(து)!
எதுகை, தளை, சீர், மோனை - யாவும் இவை' எனக்காட்டி, கற்றோர் முன் என்கவியைத்
தான்பா ராட்டும் " ** தேவன், உயர் பண்பாளன் கார்த்திகேயன்பாதம்
சென்னி வைப்பேன்.

Page 10
மூலம்
யாழ். இந்துக் கல்லூரி
உளறிய மொழியை - மழலையை -உவந்தும்
உச்சிமோந்தணைத்தும்நான் நாளும் வளருதல் கண்டும் மற்றவர் புகழ
மகிழ்ந்துபூரித்தனை அம்மா விளைகிற பயிராம் பின்னொரு நாளில் விசுவரூ பங்கொளும் என்று முளையிலே என்னை இனங்கண்டு கொண்ட
மூலமே எனைப்புரந்தவளே
வடக்கிருத்தல் 2
சோ.பத்மநாதன்
 

வெற்றி பெறுவேர்விழைவதுவும் செல்வங்கள் பற்றிநினைவோர்பணிவுதுவும்-கற்றவர்கொண் டாடுவதும் சங்கீதஆேல்ே முதற்கலைகள் ஊடு பயின்றிவ் வுல்கெல்லாம் - -ஈடில் லாப் பூசனைகள் செய்யும் புனித உள்ளத்தவர்கள் நேசமுற என்றும் நினைப்பதுவும் ஆசுகவி கம்பன் அழைக்கக் கடுகி நடந்ததுவும் & நம்பும் அபிராமிப் பட்டரது- கண்களிப்ப ஆனந்தமாக நடம் ஆடி அவருளமர்ம் வானந் திகழும் மதியமும் கஞானம்வளா சாலை, தொழிற்கூடம், தக்கோர் அவை இன்னும் முலை முடுக்கிலுள்ள் கோயிலெலாம் * நீாளும் உலவுவதும் வையத் துளமதங்கள் தோறும்
நிலவுவதும் அடியேன் நெஞ்சில் - பலகாலம் தீட்டும் உயிரோவியமாய்த் திகழ்ந்தெனது பாட்டின் பொருளாய் நான் பாடுங்கால் கேட்டுருகி தாளம் இடுவதுவும் சந்தங்கள் தந்திந்த ஈழம் முழுவதிலும் என்கவிதை - மூளவொரு காரணமும் அன்னை கலைவாணி தன் சிவந்த ஆரணங்கள் காணா அடி.
முரசொலி, 1991.
வடக்கிருத்தல் 3
சோ. பத்மநாதன்

Page 11
உயர எழுக
அமுத கவிதை பருகி உலகம் அமர நிலையை அடையாதோ? அறுபதினிலும் இளமை உணர்வு முறுகி எழுக! அணுகாத - இமய முடியும் குமரி முனையும் இணைய வழி கண்டிட லாமோ? இதய வெளியில் எழுசொல் இனிமை உலகை நொடியில் அளவாதோ சுமைகள் கடிது தொலைக! துயர்கள் வெயில் முன் பனியென் றகலாவோ? சுழலும் உலக நெறியை உணரும் துணிவி னொடு நம் புலவோர்கள் தமிழை அணிசெய்துயர்க மனசு தளர்தல் ஒழிக! கவியாலே தளைகள் அடியொடறுக! மனிதன் உயர எழுக! - முடியாதோ?
வடக்கிருத்தல் 4
சோ.பத்மநாதன்
 

அலகில் விளையாட்டு
சொல்லை வசைத்துச் சுவையை அதில் தேக்கி எல்லை கடந்து விரிந்த வெளிக்கேவி வையகம் எல்லாம் வலஞ்செய் திடவிடுத்த ஐயா நீ செய்த அலகில் விளையாட்(டு) ஒர் சாதனைதான் உன்னால் நிமிர்ந்தோம்! தமிழ்க்கவிதைப் பாதை சமைத்து, பவனிவரும் வழியில் தோரணங்கள் வீதியெல்லாம் தொங்கவிட்டு வாயில் தொறும்
பூரண கும்பங்கள் பொலிவாக வைத்தவன் நீ!
வடக்கிருத்தல் 5
சோ.பத்மநாதன்

Page 12
சூறாவளியைத் துணிந்து பிடித்தடக்கி நூறாயிரஞ்சாளரத்துள் நுழைத்திழுத்து மின்னற் கொடியால் விளக்கிப் புதியபல வண்ணங் கலந்து மடக்கி ஒரு சீருக்குள் பத்தா யிரம் வோல்ற் மின்சாரம் பாய்ச்சுகிற வித்தை புரிந்தாய் - எவரே வியவாதார்!
தென்றலாய் மாறிச் சிகரம் தடவியெங்கள் முன்றில் உலாவி முகாமொன் றமைத்தவனே! சந்தனத்தேர் செய்து தமிழை அதிலிருத்தி அந்தரத்துத் தேவர்வாய் ஊற அலங்கரித்தே ஓசை நுணுக்கமெனும் ஒண்புரவி பூட்டியெங்கள் வாசல் வரைசெலுத்திக் கொண்டுவந்த வல்லாள!
பத்து நூற் றாண்டு கழிந்தாலும் உன்பாட்டு புத்தம் புதிதாய்ப் பொலிகிறது காண்கின்றேன்! சுட்டும் பொருளுக்கும் அப்பாலுன் சொல், கம்ப, எட்டிப் புதிதோர் இடத்தைத் தொடுகிறது! புலனைந்தும் பாட்டுப் புனலாடு கின்றன காண்
சலனங்கள் எல்லாம் தவிர்ந்து.
-கம்பன் விழாக்கவியரங்கம் நல்லூர், 1993 கம்பமலர் (1995)
சோ.பத்மநாதன்
 

பாரதியின் புதிய அலை
ஆண்டவனைத் துயிலெழுப்ப பாடுகின்ற
அடியார்கள் போல்நாடு விழித்துக் கொள்ள வேண்டுமெனப் புதுப்பள்ளி யெழுச்சி பாடி
விடுதலைப் போர் முரசறைந்த வீரன், பஞ்ச பாண்டவர்கள் தேவிசபை நடுவில் பட்ட
பாடனைத்தும் பாரதத்தாய் பட்டதென்றான், மீண்டுமவள் பண்டையநாள் இருந்தவாறு
விளங்க வைத்தல் இந்தியர்தம் கடமை என்றான்.
நீருக்குள் மூழ்கியெழல், நெருப்பில் நிற்றல்
நெற்றி நடுவை நோக்கல், உண(வு) ஒழித்தல் பாருக்குள் தவமென்றும் யோகமென்றும்
பலகாலம் இருந்து வந்த கருத்தை மாற்றி ஊருக்கும் நாட்டுக்கும் உழைத்தல் போல
உயர்ந்த தவம் பிறிது கண்டதில்லை, என்றான் யாருக்கும் எளிதான யோகம் சொன்னான்
யாரிவன்போல் சமூகசீர் திருத்தம் செய்தார்.
சாதியெனும் நோய்பிடித்த சமுதாயத்தை
சரிசெய்யும் மருத்துவனாய் வந்தான் இந்த வேதியனென் பதுபுதுமை கல்வியின்றி
வீட்டுக்குள்ளே யடங்கிக் கிடந்த இந்து மாதருக்கு விடுதலை யுண்டானால் இந்த
மாநிலமும் விடுதலையைக் காணும் என்றான் 'காதல்மனை யவள்சக்தி கண்டீர்' என்றான்
கற்பையிரு சாரார்க்கும் பொதுவில் வைத்தான்.
வடக்கிருத்தல் 7

Page 13
எங்கள்மலை இமயமென்று முழங்கி நின்றான் ஏன்? இமயம் எனநிமிர்ந்து தன்தாய் நாடு பொங்கியெழும் எனக் கனவு கண்டு கண்டு
புளசித்த புலவனவன் ஆத லாலே ! கங்கை எங்கள் ஆறென்று பெருமைப்பட்ட
கருத்தென்ன? ஆயிரமாயிரமாண்டாக அங்கதனுக் கருகில் வளர்ந்தோங்கி வந்த
அரியதொரு பண்பாட்டையன்றோ கண்டான்!
மண்ணல்ல, மலையல்ல, ஆறும் அல்ல
மானிடனே ஒரு நாட்டுக்குயிராம், அந்த விண்ணையவன் இங்கு -கண்முன் -கொணரவல்லான்
வீரத்தால் -நுண்ணறிவால் -படைத்தவெல்லாம் எண்ணிலடங் காஎன்பதுணர்ந்தான் இந்த
ஈடிணை யிலாக் கவிஞன் தொடுத்தான் தெய்வப் பண்ணொன்று, மானிடவன் மேன்மை தன்னை
பாடவென்று - தமிழன்னை உற்றுக் கேட்டாள்.
‘புதிதிந்தக் குரல், பாட எடுத்துக் கொண்ட
பொருள் புதிது, வளம் புதிது, சொல்லும் கூடப் புதிதிந்தக் கவி மெட்டை எங்கு பெற்றான்?
புதுவையிலே தான்கேட்ட குயிலின்கீத மதுவினிலா? ஏற்றநிர்ப் பாட்டு நல்கும்
மயக்கினிலா? பண்னை மடவார்தம் பண்ணா? பொதிகை தவழ் தென்றலா? அன்றிப் பொன்னிப்
புதுப்புனலா ஊற்(று)?’ என்று திகைத்து நின்றாள்.
வடக்கிருத்தல் 8
சோ.பத்மநாதன்
 

சாதிகளால் ஏழைபணக் காரன் என்னும்
தாழ்வுயர்வால் சாத்திரங்கள் நூறுகற்று மோதிநிலை குலைகின்ற நாட்டில் வாழ்ந்தும்
'மொழி பதினெட் டானாலும் சிந்தை ஒன்று, நீதியிது, எக்குலத்தார் என்ற போதும்
நிகராவார் இந்தியர்கள் நிறையில் என்று வேதமொன்று புதிதாக ஆக்கித் தந்தான்!
வீழ்ந்து பட்ட பாரதத்தை எழுப்பிவிட்டான்!
'கம்பன் சொல் கவியெல்லாம் நான்' என்றிந்தக் கவியரசன் பாடினான்; தமிழ்நா டென்றால் கம்பனெனும் மானிடவன் பிறந்து செஞ்சொற்
கவிதையிலோர் கொடுமுடியைத் தொட்டநாடு எம்பெருமான் வள்ளுவனை ஈன்ற நாடு
இளங்கோவின் சிலம்பினொலி எழுந்த நாடு கொம்பு தரு ‘தேன்வந்து செவியிற் பாய்ந்து
கொள்ளையின்பம் தருகுதடா’ என்ற வாயால்
'காஞ்சியிலே இருந்தபடி காசி வாழும்
கவிஞருரை வானொலியிற் கேட்பேன்’ என்றான்
வாஞ்சை மிக உடையவனாம் காளிதாச
மாகவிபால் - அவன் கவிதை வளம் வேட்டானோ.
t
வேதமுர சம்கேட்க விரும்பி னானோ
விள்ளும் உபநிட ஞானம் நாடி னானோ
மாதவன் சொல் கீதைக்கு விளக்கம் செய்வார்
வடமொழியின் கரைகண்ட புலவர் என்றோ!
வடக்கிருத்தல் 9
சோ.பத்மநாதன்

Page 14
வங்கத்துக் கவிஞர்களின் உணர்ச்சி வெள்ளம்
மராத்தியர்தம் வீரம்- இவை எல்லாம் இந்த சிங்கத்தின் தமிழ்க்கவிதை மொண்டு வந்த
தெருவெல்லாம் முழங்கியது - ரஷ்யாவில் வெடித்தயுகப் புரட்சியினை பெல்ஜியத்தின்
வீரவரலாற்றை, இத் தாலிநாட்டை வடித்தளித்தான் கவிதையிலே தமிழ்த்தாய் இந்த
மாகவியை வாரியெடுத்துச்சி மோந்தாள்
(வேறு) நாட்டுமக்கள் நலமுற்று வாழுதல்
நானிலத்தவர் மேனிலை எய்துதல் பாட்டி லேதனி இன்பத்தை நாட்டுதல் -
பாரதிக்குறு லட்சியங்கள் இவை மூட்டு தீக்கொழுந் தோங்கி யெழுந்தது
மூட தத்துவம் முற்றும் தகர்ந்தது ஒட்டி னான்பயப் பேயைத் தமிழ்க்கவி
ஊடெழுந்தது புதியதோர் பேரலை
(வேறு) வீரந்ததும்பும் விழிகளும் - முறுக்கு
மீசை யொடு தலைப் பாகையும் - எந்த நேரத்திலுமென்றன் கண்களை - விட்டு நீங்கிய தில்லை, யென் நெஞ்சகம் பூரித்தது, தமிழ் அன்னையாள் - புத்தம்
புதிய வடிவம் புனைந்தனள் - அவன் வேரிற் பழுத்தப லாப்பழம் - விடி வெள்ளி தமிழர் தவப்பயன்.
(மாவை பாரதி மறுமலர்ச்சி மன்றம் நடத்திய அகில இலங்கைத் கவிதைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற கவிதை)
வடக்கிருத்தல் O
சோ.பத்மநாதன்
 
 

குறுக்கீடு
நெஞ்சம் நினைந்து நினைந்து கனத்தென்றன்
நிம்மதிேேபாய்ச் செஞ்சொற் கவிதை எனுஞ் சிறகால்உல
கேயளக்க மிஞ்சிக் கிடந்த புலமைமுற்றும் விழ
லாகிவிட கொஞ்சப் பொழுதோ, விழித்திருந்தும்கொள்ளை
போனதுவே?
வடக்கிருத்தல் 11
சோ.பத்மநாதன்

Page 15
பாடத் தமிழ்ப்பண், பயிலத் தமிழ்க்கவி,
பார்த்திருக்க ஆடற் கலையும் அருவியும் குன்றமும்
அம்புலியும் - தேடக் கிடையாத செல்வம் - படைத்துமிச்
செந்தமிழர் மூடச் சிறுமதி யால்கவலைக்கடல்
மூழ்குகிறார்.
'தென்றலும் பூக்களும் திங்களும் செந்தமி
ழும் நமக்கே
என்றிருக்கும்பொழு தேதிடர்’ என்றிறு
ம்ாந்திருப்ப(து)
அன்றிப் பெருமை சிறுமைகள் பேசி
அரும்பொழுதைக்
கொன்றித் தமிழர் குலமடி யோடு
குலைகிறதே.
கால்பிடிப் பாரிவர், கைகட்டி நிற்பர்,
கடையவர்க்கு
வால் பிடிப் பாரிங்கு 'மானம் இழந்தென்ன
வாழ்வெ' னவே
நூல்படித் தாரஃ(து) ஏட்டினுக் கோ? நொந்து
நொந்தெழுதுகோல்பிடிக் கும்பொழு(து) இந்தக் கொடுமை
குறுக்கிடுதே.
-சிந்தாமணி, 22.6.69
வடக்கிருத்தல் 12
GFIT பத்மநாதன்
 
 
 

நினைவுத் தாளைப் புரட்ட முனைகையில்.
நெல்வயல்கள் நடுவில் கடற்புறம்
நிற்கும் வெண்மணற் குன்றை நிறுத்திய வல்லவர் யார்? இரட்டைப் பனைதொடு
வானத்தே தீட்டிவைத்தவர் யாவரோ? வெள்ளக் காட்டினிடை ஒற்றைக் காலிலே
நிற்கும் கொக்கின் நிரையின் அழகும் என் உள்ளத்தே குடி இருக்கும் என்பாட்டிலே
ஊறும், என்னை உயர்த்தும், அமரனாய்.
எட்டுமூலை சோளகக் காற்றிலே
ஏறும் போததன் "விண் ஒலி ஊரெல்லாம் முட்டி மோத நான் வயலும் வெளிகளும்
மூசி ஒடி அலைந்து திரிந்ததும், கிட்டி பம்பரம் வளையம் இவற்றினால்
கிறங்கிப் போய் ஊண் உறக்கம் எலாம் அற விட்டு நெஞ்சு பறிகொடுத் தாடிய
விளையாட் டெல்லாம் விரையும் என் கண்களில்.
காக்கை தீவு மண் மேட்டினில் ஏறிநான்
கடலை நெல்வயலைப் பனை தென்னையை
பார்த்துப் பேசிப் பழகிய காலமும்,
பரமனின் கட்டுக் காவலை மீறியே
மேற்கு வேலியின் ஊடு நுழைந்து போய்
விளாவில் ஏறிக் காய்கள் பறித்ததும்
வடக்கிருத்தல் 13
சோ.பத்மநாதன்

Page 16
கார்த்திகேசுவின் மாங்காய் பிடுங்கையில்
கையும் மெய்யுமாய் ஆப்பிட்ட நாளும், என்
நெஞ்சமாகிய கவிதைத் தொகுதியின்
நினைவுத் தாளில் பதிந்திருக்கின்றன.
பாடசாலை வாசலில் எத்தனை
பண்டம் விற்கும்! கடலை, றபர் இனிப்(பு) ஒடு, 'நைஸ், 'ஐஸ்பழம்' என மயிலருக்(கு)
ஒளித்துத் தின்றும் குடித்தும் களித்தநாள் தாடிவைத்த பைத்தியம் 'ஆபிரிக்
காவின் பக்கம் மடகஸ்கர்’ என்று பூச் சூட, ஆட, கம்பைச் சுழற்ற, நாம்
சுற்றிநின்று கைகொட்டிச் சிரித்ததும் நெஞ்சமாகிய கவிதைத் தொகுதியின்
நினைவுத் தாளைப் புரட்டப் பளிச்சிடும்.
சங்கு சேமக் கலத்தொடு மார்கழிச்
சாமம் ஒதும் திருவெம்பாப் பாட்டு நம் நெஞ்சை அள்ளும், குளிர்பனிக் காற்றினை
நிரப்பும் கோயில் மணி, எங்கள் ஐயர்கைப் பஞ்சாமிர்தமும் பிட்டும் சிறுவரைப்
பாலிக்கும், அம்மன் வீதி உலாவிலே கொஞ்சமோ எழில் ஆகா நினைவுகள்
கொலுவிருக்கும் என் நெஞ்சினில், இன்னமும்.
வாரியார் பிரசங்கம் நிகழ்த்திய
மற்றை நாளென் வயதுப் பொடியளாய் ஊரிலுள்ள பத்துப் பதினொன்றொடு
கூடிக் 'கைத்தல நிறைகனி 'பாடியும்
சோ.பத்மநாதன்
 
 
 
 

ஆறுகால் மடத்திருந்து முதியவர்
ஆடு நாயும் புலியையும் பார்த்துவாய்
ஊறிநின்றதும் மாமனார் வந்தததும்
உலகெலாம் நான் ஒடி ஒளித்ததும்
நெஞ்சமாகிய கவிதைத் தொகுதியின்
நினைவுத் தாளில் பதிந்து கிடப்பன.
'பந்தம் ஏந்திய பேயொன்று கல்லுண்டாய்ப்
பாதை சாமம் போகும், மற்றொன்று - பெண்
முந்தநாள் விடியப்புறம், 'சுருட்டினை
மூட்டத் தாநெருப்(பு) என்று நீ இருக்கிற
குந்திலே பழி கிடக்கும் இறைப்புக்குக்
கூட்டிப்போய் ஒன்று துலாமிதிக்கும்" - ca.
இந்தவாறென் கற்பனை ஓங்கிட
ஏற்றவாறு பொன்னாச்சி உதவினாள்.
அந்தக் காலத்தரசியல், தேர்தல்கள், !
ஆட்கள் ஏற்றி இறக்கல், சா ராயத்தை தந்து காரியம் சாதிக்கும் தந்திரம்,
சமத்துவம், சமபந்தி எனப்பல விந்தை, சத்தியாக் கிரகம்,தடியடி,
வீதி நீள பவனிகள், தோரணம் வந்துபோகும் என்நெஞ்சத் திரையிலே
வாழ்வில் எத்தனை எத்தனை மர்மங்கள்!
மல்லிகை 1995
வடக்கிருத்தல் - 15
சோ.பத்மநாதன்

Page 17
இன்று புதிதாய் உலகை நிர்மாணிப்போம்
சாதி பற்றிய கதைகள் எழுதினோம்
சந்ந தங்கொண்டு கவிதைகள் பாடினோம் ஈது தோன்றி வளர்ந்ததிப் படியென
ஏறி எத்தனை மேடையிற் கூறினோம் நீதி யான உலகைப் படைத்தலால்
நித்திரை வரா தென்று முழங்கினோம் சாதி போக ஏன் இத்தனை தாமதம்
சமத்து வம்வர எத்தனை காலமோ?
வடக்கிருத்தல் 16
சோ.பத்மநாதன்
 

மாதரைப்பல நூற்றாண்டு காலமாய்
வாட்டுகின்ற கொடிய வழக்கமாம் சீதனத்தைத் துவைத்துக் கிழித்து நாம்
செய்த "பேப்பர் புரட்சிகள் எத்தனை
சாதனைகள்தாம் எத்தனை மாதர்தம்
சரித்திரம் இன்னும் மாறிய தில்லையே
வேதனைப்பெரு மூச்சும்ஏ மாற்றமும்
விம்மலும் போக எத்தனை காலமோ
அங்கொருத்தி - சீனாவிலே - பெண்பெற்ற
அந்தக் குற்றத்துக் காகக் கொலையுண்டாள்
இங்கொருத்தி அம்பாறையில் - சீதனம்
இல்லையென்று தீ மூழ்கித் தொலைகின்றாள்
சங்க யீனம்ஈ தென்றிம யத்திலே
தாவி ஏறித் தமுக்கிட் டடித்திட
எங்க ளுக்குள் ஒருவனுமில்லையாம்
என்ன செய்கிறார் இந்தக் கவிஞர்கள்?
எழுது கோல் தொழுந் தெய்வம் என்றவன்
இமய மாகியே நிமிர்ந்து நின்றவன்தொழுது பின்செலும் வாழ்வைத் துரவென
துச்சமாகவே கருதி வந்தவன் முழுதும் தன்கவி மக்கள் நெஞ்சிலே
மூட்டு கின்றதீ யூடெங் கெங்கும்எப். பொழுதும் வாழ்பவன் - பாரதிப்பெயர்ப்
புகழ்படைத்தவன் போல நாமெலாம்
வீர ராய்நிமிர்ந் திடுதல் வேண்டுமே
விடுதலைப்பறை அறைதல் வேண்டுமே
வடக்கிருத்தல் 17
சோ.பத்மநாதன்

Page 18
பாரெலாந்திரண் டெதிரில் நிற்பினும்
பணிகி லாதநெஞ் சுறுதி வேண்டுமே
ஊரெலாம், அனைத் துலகெலாம் நமக்(கு)
உறவென் றெண்ணுமோர் உள்ளம் வேண்டுமே
ஆரெலாம், துணிவார்சுகங்களை
ஆரெலாம்துறப் பார் - எழுகவே.
கொடுமை காண்கையில் குமுறு தெஞ்சமும்,
கூற்றை யும்புறம் காணும் ஆற்றலும், மிடிமை, நோய், அறியாமை, இங்குள
வேற்றுமை, பயம் ஒழிய நோற்றலும் அடிமை வாழ்வினை உதறு கின்றதோர்
ஆண்மை ஆர்த்தெழ, அரசு போடுமப் படிகள், சிற்சில சலுகை என்றெதும் பார்த்தி ராஎழுத்தாளர் கூடுக.
வேற்றுமைகள் அகல அறி யாமைஎனும் பழம்வேலி
விழுந்து போக
நேற்றிருந்த நிலைமாற இன்றுபுதிதாய் உலகை
நிர்மாணிப்போம்!
கூற்றுவனைப் புறங்காண்போம் கொடுமைகளை இனங்காண்போம் குனியோம் என்றே
ஏற்றபணி முற்றுவிக்கத் துடிக்கின்ற எழுத்தாளர்
எழுக, வெல்க:
(முற்போக்கு எழுத்தாளர் மாநாடு, 1986)
சோ.பத்மநாதன்
 

தளைகள் அறுப்பது
மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான் ஆனால் மனிதனைச் சுற்றிக் கட்டுக்கள் - தளைகள் தளைகள் அறுப்பதே மனிதன் லட்சியம் விட்டு விடுதலையாகி நிற்பது வீடு பேறென வேதம் விளம்புமாம் விடுவது எதனை? எப்படி விடுவது? வேதாந்த விசாரம் விரிந்து செல்லும் விடுதலை சொந்த முயற்சியின் விளைவு விடுதலை யாரும் தருவதும் அல்ல விடுதலை சும்மா வருவதும் அல்ல.
வடக்கிருத்தல் 19
சோ.பத்மநாதன்

Page 19
மனிதன் கட்டுப் பட்டுக் கிடக்கிறான் மனிதன் காலில் கையில் விலங்கு கட்டுப் பட்டவன் செயற்பட முடியுமா? காலைக் கையைக் அசைக்கக் கூடுமா? "சும்மா இருந்தால் என்ன வந்ததாம்? சொறியப் போனால் தொல்லை நிச்சயம்’ -இப்படிச்சில பேர் பல்லி சொல்லுவர் சும்மா இருப்பது யோக சூத்திரம் சும்மா இருப்போர் யோகியர் மாத்திரம் சுழலும் உலகம் அண்ட வெளியிலே சுழலும் உலகில் வாழும் மனிதன்சும்மா இருப்பது இயற்கையும் அல்ல தொழிற்படு, தொழிற்படு, சதா தொழிற்படு செய்க கருமம் செய்க கருமம் கீதா சாரியன் சொன்னதும் இதுவே
எனது சுதந்திரம் எதுவரை போகலாம்? அடுத்தவன் மூக்கு நுனிவரை நீளலாம் மற்றவன் சுதந்திரம் தனைமதியாதவன் கூரையில் ஏறிக் கூவலாம் உரத்து விடுதலை முரசை விண்ணுற முழக்கலாம் ஆயினும் விடுதலைக் கருகன் ஆகான் வாயளவே அவன் சுதந்திர உணர்வு.
அடுத்தவன் நாட்டை அடித்துப் பிடிக்கவும் அடுத்தவன் செல்வம் கொள்ளை அடிக்கவும் அடுத்தவன் மீதுதன் மொழியைத் திணிக்கவும் அடுத்தவன் மதத்தைக் காலில் மிதிக்கவும் அடுத்தவன் முதுகில் சவாரி செய்யவும்
வடக்கிருத்தல் 20
சோ.பத்மநாதன்
 

முனைந்தால் ஏற்க முன்வரு வானா? எத்தனை காலம் பொதிகள் சுமப்பதாம்? எத்தனை காலம் முதுகு வளைவதாம்? எத்தனை காலம் தலைகள் குனிவதாம்? எத்தனை காலம் மெளன விரதமாம்?
குதிரை மனிதனைத் தள்ளி விழுத்தும் குனிந்த தலைகள் நிமிர்ந்து கொள்ளும் சுமைகள் தூர வீசப் படுமாம் மெளனம் கலையும், பேச்சுப் பிறக்கும் சுதந்திர உணர்வு காற்றிலும் தொற்றும் சுதந்திர உணர்வு மலைகளைத் தகர்க்கும் விலங்குகள் நொறுங்கும், விடுதலை கிடைக்கும்
ஆள்பவர் சுதந்திரம் அளிக்க முன்வரார் எங்கள் முதுகைவிட் டிறங்க மறுப்பர் எங்கள் சுமையை இறக்க விடார்கள் இதுவே அவர்கள் இயல்பு - வழமை தென்ஆபிரிக்கா சென்ற வெள்ளையர்கள் இன்னும் வெளியேறுவதாய் இல்லை இதுவே நிலைமை, இதுவே உண்மை.
ஈழநாட்டிலும் இதுதான் நிலைமை ஆளுகின்றோர் அசைவதாய் இல்லை ஆளுகின்றோர் அசைவார் என்றும் நாளை விடுதலை கிட்டும் என்றும் நம்பி நாற்ப தாண்டு கழிந்தன. பூகம்பம் ஒன்று வந்தால் ஒழிய ஆட்சி பீடம் அசையமாட்டாது
வடக்கி
21
சோ.பத்மநாதன்

Page 20
ஒப்பந்தங்கள் எழுதிக் கிழித்தும் நிர்ப்பந்தங்கள் கொடுத்துப் பார்த்தும் நீதி கேட்டும் நியாயம் குறித்து வாதிடும் மன்றுகள் ஏறி இறங்கியும் ஏதும் நடப்பதாய் இல்லையென்றான போதுதான் இங்கு புரட்சி வெடித்தது.
புரியாதவர்கள் புரிந்து கொண்டார்கள் தெரியாதவர்கள் தெரிந்து கொண்டார்கள் சாது மிரண்டால் காடு கொள்ளாது நீதி கேட்போர் நெருப்பாய் நிற்பர் விடுதலைத் தீயில் நம் சிறுமைகள் வேகும் அடிமைத் தளைகள் அனைத்தும் பொடிபடும் ஆள்வோர் அடிமைச் சாசனம் கிழித்து வாழ்வோர் எழுதும் வரலாறு இதுவாம் சொல்லில், எங்கள் நினைப்பில், செயலில் எல்லாம் சுதந்திரம் ஓங்கி ஒலிக்கும் எட்டுத் திக்கையும் எமது முழக்கம் எட்டும்; எமக்கு விடுதலை கிட்டும் இந்நாள் காணும் எழுச்சி, அந்தப் பொன்னாள் ஆகப் புலரும், புலரும்.
நல்லூர், 1994
சோ.பத்மநாதன்
ls
 
 
 


Page 21

தரிசனம்
வேறாரும் இல்லாத வெட்டவெளி, கர்ப்பூர வுெளிச்சம் பட்ட வாறாக விரிந்தமுக மலர், நீண்ட
கண், இந்த வையம் எல்லாம் பேறாகப் பெற்றபெரு மாட்டியிதழ்க்
கோணத்திற் கண்டேன் ஏதும் கூறாத குமிண் சிரிப்பை உண்மையிலென்
நெஞ்சமெலாம் குளிர்ந்து போச்சு.
வடக்கிருத்தல் 23
சோ.பத்மநாதன்

Page 22
அன்பறியா என்னுள்ளப் பாலையிலோர்
பசும் புல்லன்(று) அரும்பக் கண்டென் என்புருக, இருகண்ணும் ஆறாக,
எனைமுற்றும் இழந்து நின்றேன் தென்பொதிகைச் சந்தனத்து நறுமணத்தை
வாரியிளந் தென்றல் வந்து முன்றிலெலாம் வீசியது, மொழிகடந்த
கவிதையொன்று முளைக்கக் கண்டேன்
தேவிமலர் வாய்சிந்து புன்னகைபன்
னிரள்ளித் தெளிக்க, என்றன் ஆவியையும் அதுபற்றி அப்பாலுக்
கப்பாலாய்ப் போயிற் றம்மா. ஒவியம், இன்னிசை, நடனம், நாடகமென்(று)
அத்தனையும் ஒன்று சேர்ந்த காவியமோ இவள் சிரிப்பு? கலையென்ற
தத்துவத்தின் கடைசிக் கீற்று?
'ஒடுகிறாய் உலகெலாம் பொருள்தேடி
பகையென்றும் உறவென்றும் நீ ஊடுகிறாய், உவக்கின்றாய், அழுகின்றாய்
சிரிக்கின்றாய், உண்மை அன்பைத் தேடுகிறாய் சலித்துப்போய்ச் சோர்ந்து விட்ட
வேளைகளில் தெய்வந் தன்னை நாடுகிறாய்' என அன்னை மீனாட்சி
முகத்தின் இளநகைசொல் லிற்றோ.
கலைமலர்,
கோப்பாய் ஆசிரிய yoga)2 ஆண்டுமலர் (1993)
வடக்கிருத்தல் 24
சோ.பத்மநாதன்
 

தெரியாதோ?
து வி மயில்கடல் போல, அதன்மிசை
ஞாயி றெனநிமிர் வடிவாலும் தோளில் அசைகடம் பாலும், அடியவர் துரவு பிறமலர் வகையாலும் ஆவி யுனதடி மேவி சிறிதும்வி
டாது சுழலுவதறியாயோ! ஆகம் உனதருள் ஆன கடலிடை
ஆடல் புரிவது தெரியாதோ! தேவர் படுதுயர் யாவும் பொடிபட
சேனை யொடுகளம் புகுநாளில் தீய அவுணர்கள்'மாய நெடுமரம்
சாய விடுமொரு வடிவேலா! கோயில் களில் அழகான வடிவுள
கோலம் அமைநல்லை அமர்வோனே கூடும் அடியவர் பாடும் இசைமழை
ஊடு நனைகிற பெருமாளே.
உதயன், 1992
வடக்கிருத்தல் 25
சோ.பத்மநாதன்

Page 23
கிழவேடன்
நால்ான வேத நூலாக மாதி
நாவார ஒது குருநாடி ஞானோபதேசம் ஆதாரமாக
ஈடேறு மாறு முயலாதே சேலான வாறும் நூலான வாறும்
தேனான வாறும் இளமாதர் தீராத காதல் ஆராமை பாடு
வோனாக நானும் அலைவேனோ? ஆலோலம் பாடு வாள்போடு வேடர் ஆகாரம் தேடி வனமேவி ஆராய் விலாது தானோடி யாடி
ஆயாசமான கிழவேடா ஏலாத சூரன் மாவாக வேலை
ஏவு ஈடிலாத பெருமாளே ஈராறு தோள வீராதி வீரர்
ஏறேநல்லூரில் வருவோனே.
வடக்கிருத்தல் 26
சோ.பத்மநாதன்
 

குண்டுமழை ஒயாதோ
குண்டு மழைபோல
வந்துபொழி வேளை
குஞ்சுகுரு மான்கள் ஒடுகாதல்
கொண்ட மனை தாயர்
தந்தை கிளை தோழர்
என்றஉற வேதும் நிலையாது
வடக்கிருத்தல் 27
சோ.பத்மநாதன்

Page 24
பஞ்சுபடும் பாடு
கொஞ்சமல நாளும்
நொந்துவரு வார்கள் துயர்காண
நெஞ்சுருகும், ஆறி
நின்றொருசொல் கூறு
முன்வருவி மானம் பலிகோரும்
எங்கள் பொருள் வீடு
எங்கள் தொழில் வாழ்வு
எங்கள் உயிர் ஏதும் எமதாமோ?
என்றநிலை மாற
இந்த இடர்தீர
என்றுமயில் ஏறி வருவாய்நீ
மங்கைதெய்வ யானை
குன்றிலுறை பேதை
என்றிருவர் சூழ ரதமேறி
வந்துபணி கோடி
அன்பர்புகழ் பாட
வண்டமிழ்நல்லூரில் வருவோனே.
-முரசொலி, 1991
வடக்கிருத்தல் 28
சோ.பத்மநாதன்
 

நிந்தாஸ்துதி
சட்ட நாதர் பூந் தோட்டம் வடக்கிலே
தமையனார் கயிலாயர் தெற்கெல்லையில் வெட்ட வெளியாய்க் கிழக்கில் கிடப்பது வெயிலுகந்த விநாயகன் காணியாம் பெற்ற தாய்மா காளிதென் மேற்கிலே
பேச்சு வார்த்தை குறை(வு) - ஓர் குறத்தியை மற்று நம்மயில் வாகனன் நல்லையில்
வைத்திருப்பதால் வந்ததித் தொல்லையே.
வடக்கிருத்தல் 29
சோ.பத்மநாதன்

Page 25
ஆயிரம் அறங்கள் வளர்கோயில்
ஓடிவரு கங்கை பாதிமதி கொன்றை ஓர்மிடறில் நஞ்சம் இவைசூடி ஊழிநட னஞ்செய் நாதனுனை நண்ணி
'ஒது பொருள்’ என்ன விடையாக ஈடிணையி லாத வேதமுதல் மந்த்ரம்
ஈசனும்விளங்க அருள்பாலா ஏழையடி யோமைச் சூழும்வினை மாள
ஈழமுழு தாள வரவேணும். வேடுவர்ம டந்தை காடுபடு கொம்புத்
தேனொடுபிசைந்த தின்ைமாவை தேடிமுள்நிறைந்த கானிடை நடந்து
சேவடிசி வந்த பெருமாளே ஆடிவரு தொண்டை மான்நதிம ருங்கில்
ஆயிரம்.அ றங்கள் வளர்கோயில் ஆடுமெழில் கொஞ்சு காவடியு கந்த
ஆறுமுக வாசந் நிதியானே.
-முரசொலி, 04.09.90.
வடக்கிருத்தல் 30
சோ.பத்மநாதன்
 
 

ஒளி கொணர்ந்த பாலன்
ஒளிகொணர்ந்த பாலனே
உலகம் வந்த தேவனே
வழிவகுத்த மீட்பனே
வாழ்வு தந்த மேய்ப்பனே
மாளிகைகள் வேண்டிலாய்
வசதி வாழ்க்கை வேண்டிலாய்
ஏழை ஒலைக் குடிசையேய
ஏற்றதென்று தோன்றினாய்
வடக்கிருத்தல் 3互
சோ.பத்மநாதன்

Page 26
விழியிழந்தோர் காணவும்
வீழ்ந்தவர்எழும்பவும் மொழியிழந்தோர் பேசவும்
முடவர்கள் நடக்கவும்
மலையின் மீது நின்றனை
வாழும் மார்க்கம் தந்தனை அலைகடல் நடந்தனை
அன்பு வார்த்தை பேசினை
'விண்ணகத்துத் தந்தையின்
மேன்மையான சித்தமே மண்ணகத்தும் நடக்குமாம்"
-வாய்மலர்ந்த யேசுவே
சுமையினாலே துவஞவோர் - என்
தோளில் சாய்ந்து கொள்ளுங்கள் அமைதி காண வாருங்கள்
ஆத்ம ஞானம் கேளுங்கள்
'பகைவர் மீதும் அன்பையே
பாலியுங்கள்' என்றனை மகிமை பெற்றெழுந்தது
மானுடம் உன் வார்த்தையால்.
-'ஒளிமலர்', 1989
வடக்கிருத்தல் 32
சோ.பத்மநாதன்
 

மேரியும் கிறிஸ்துவும்
"தொங்குகின்றனை சிலுவையில் நாணினித்
தொடர்ந்து செல்லும் வழியெது? காட்டுவாய்
மைந்தனோ நீ, அன்றி ஆண்டவர் கொலோ??
மரியை யேசுவை நோக்கி வினவுவாள்
'வாசலூடு நான் ஏதும் புலப்படா
வாறு போதல் நியாயமன்றையனே! ஊச லாடும் உயிர் இன்னும் உன்னதோ?
ஒது நீ தெய்வமோ? அன்றி மைந்தனோ?*
அண்ணல் தன்மலர் வாய்மொட்டவிழ்ந்தது
'ஆய்வெதற்கு? நான் மரிக்கிலென், வாழிலென்? ன்ெனே தேவனோ குமாரனோ என்றுநீ
பேதுறல், நான் உன்னவன், உன்னவன்.
(ஆங்கில மூலம் - நொபெல் பரிசு பெற்ற கவிஞர் ப்றொட்ஸ்கி)
வடக்கிருத்தல் 33
சோ.பத்மநாதன்

Page 27
தெய்விகம்
தெய்வம் கையில் ஓர் வரிசிலை'ஏந்தியே
திருவடி நிலம் தோய வருதலும் 'உய்வம்" என்று கருதிலன், 'மனிதனாம்
ஒருவன்’ என்ற ராவணன் ஒழிந்தனன்
வையம் காக்கும் பரம் பொருள் தூதனாய்
வந்த போதும் இடையன்என் றெண்ணியே.
பொய்ய னாம்துரி யோதனன் பூண்டொடு
போய் ஒழிந்ததைப் பாரதம் சொல்லுமாம்
தேரும் வாழ்வும் வரமும் அருளிய
தெய்விம் கண்ணெதிர் நிற்க, கொடியவெஞ் சூரன் 'பாலனோ எனக்கிங் கறிவுரை
சொல்லு கின்றவன்?’ என்று பிணங்கினன்
வடக்கிருத்தல் 34
சோ.பத்மநாதன்
 

தேவன் மண்ணகம் நாடி இறங்கினன்
தீய யாவையும் ஒழிந்திட, நம்பெரும்
பாவ மாகிய பாரச் சிலுவையை
பரமன் தாங்கத் திருவுளம் பற்றினன்
'கல்லில் செம்பில் கடவுள் இருப்பரோ,
காட்டு’ எனும் குரல் புதிய தொன்றல்லவே
'சொல்லு நீ சொலும் ஹரியிந்தத் தூணிடை
தோன்று மோ? எனும் இரணிய வாசகம்
மெல்ல அவ்வப் பொழுது புதிய தோர்
வேதமாக ஒலிக்க, கடவுளோ பல்லுக்குப் பதமாகப் பலப்பல
'பாடுகள்’ படுவார்ஈ தியற்கையாம்
மனித னாகஇம் மண்மிசைத் தெய்வமே
வந்து லாவிய மாக்கதை கூறினேன் மனிதன் தெய்வமாய் மாறிஇம் மண்ணையே
மகிமைசெய்த கதையினிச் சொல்லுவேன்
சாயலில் தன்னைப் போல மனிதனை
சமைத்தனன் தேவன் என்பதன் தத்துவம்
தூய பேரொளிப் பிழம்பாய் நிமிர்ந்திவன்
சுடரவேண்டும் - அதுவிதி என்பதாம்
'இன்ன தாம் செய்வ தென்பதுணர்கிலாா
இவர்கள் செய்யும் பிழையை இறைவனே மன்னி யும்' எனச்சொன்னஅவ் வாசகம்
மனிதன் உடையதோ?- தெய்விக வாய்மையோ?
வடக்கிருத்தல் 35
சோ.பத்மநாதன்

Page 28
இந்த நாலு முழத்துணிக் கதிகமாய்
ஏழை இந்தியன் இடம்எதும் இல்லையாம்
அந்த நாலு முழமே அணிவனென்(று)
அவனெடுத்த விரதமோர் தெய்விகம்
சூடு பட்டு விழுகையில் ராமன்பேர்
சொல்லும் காந்தியின் வாய் தெய்விகத்திலே
ஈடுபட்டுத் திளைத்து நிலைத்த பேர்
இன்பம் எய்திய அற்புதம் கண்டனம்
தெய்வம் மனித் நிலைக்கிறங் கிடுவது
செய்வதற்கரிதான செயலன்று தெய்வமாக மனிதன் உயர்வதோ
செப்பின் அரியனவற்றுள் அரியதாம்
யாவர் நெஞ்சினில் ஈரம் கசியுதோ
யாவர் சொல்லினில் அருள்இருக் கின்றதோ தேவர் என்றுகொண்டாடத்தகும், அவர்
செய்கை தெய்வச் செயலெனல் கூடுமாம்
துன்பம் உற்றவர் கண்ணிற் சொரியுநீர்
துடைக்க முந்தும்அத் தெய்வ மணிக்கைகள்
இன்ப ஊற்றெனக் கண்களில் ஒற்றுவோம்
இயலும் கூத்தும் இசையும் பொழிகுவோம்
திருமறைக்கலாமன்றக் கவியரங்கம், 1993
வடக்கிருத்தல் 36
சோ. பத்மநாதன்
 
 

இக்கால ஸ்தோத்திரம்
சிறையில் வாடும் பல்லாயிரம் கைதிகளோடும், நம் நாடாகிய அகன்ற சிறையில் இருக்கும் பலலட்சம் மனிதரோடும், - சேர்ந்து வழிபடுகையில்எம் விழிகள், சிறைக்கம்பிகளுடு, விண்ணை நோக்குகின்றன நாங்கள் விடுதலையை யாசிக்கின்றோம், அதைவிட உயிரை !
பெயரில்லா அலுகோசுகள், தாங்கள் காவலில் வைத்தோரை, சித்திரவதை செய்து கரை சேர்க்கையில்பல பேர்களால் -
இல்லை, ஒரு பேரால் மட்டுமே
வடக்கிருத்தல் 37
சோ.பத்மநாதன்

Page 29
அழைக்கப்படும் இந்நோயால், பெற்றோரும் பிள்ளைகளும், மெல்ல, மெல்ல - ஆனால் நிச்சயமாக -
சாகையில் -
'மரணமும் சிறையும் சாசுவதமானவையல்ல,
ஒருநாள் வாழ்வும் விடுதலையும் கிட்டும்’ என்ற நம்பிக்கை தாரும் ஆண்டவரே.
சாவும் சிறையும்
விடுதலைக்கும் வாழ்வுக்குமான மக்கள் போராட்டத்தின் அறிகுறிகள் என்னும் ஞானத்தைத் தாரும் ஆண்டவரே.
‘நம் மக்கள் விழித்தெழுகையில் நம் வேண்டுதல்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில், எம் ஸ்தோத்திரம் உரத்தே ஒலிக்கிறது
ஆமென்
-முரசொலி, 26.08.90
ypavid: Edicio de la Torre Philipines.
Grrr. பத்மநாதன்
 
 
 
 
 


Page 30

யார்க்குரைப்பேன்
அடர்ந்து கறுத்த புருவ வரம்புதொட்(டு) அலையும் விழிகளினால் -எனைத் தொடர்ந்து விழுங்குகின்றாளவள் ஈதென்ன
தொல்லை அடட டா,
பேச்சிலை எம்மிடை என்பதெ லாமொரு பெரிய குறையிலை யே - கண்
வீச்சினில் ஆயிரம் செய்தி வெளிப்படும்
விந்தை நிகழ்கிற தே.
வடக்கிருத்தல் 39
சோ.பத்மநாதன்

Page 31
மோதித் தவழ்ந்து தவழ்ந்து கரையினை
முத்தமிடும்.அலை போல் - அவள்
காதின் அருகினில் கார்குழ லின்சுருள்
காற்றிற் புரள்வதை யும்.
தந்தத்திற் தன்கைபடாதொரு சிற்பி
சமைத்த கழுத்தினை யே -என்முன்
அந்தத் திருமகள் சாய்க்கும் அழகையும்
அள்ளிப் பருகுகி றேன்.
கண்ணொடு கண்ணிணை கெளவும் நிலையிதிற்
காலமெல் லாம், எதிரே உள்ள
பெண்ணோடு செல்லுதல் வேண்டுமென் றாசை
பிறந்தது நெஞ்சினி லே.
ஐந்து மணிப்பொழு தென்றன் எதிரிருந்(து)
ஆவலைத் தூண்டிய பின் -இடை
வந்த நிலையத்தில் மூட்டைமு டிச்சுடன்
வண்டியை விட்டிறங்கி.
கையை அசைத்துத் சிரித்து விடைபெற்றுக்
காதகி செல்லுகிறாள் - ஐய, ஐய, எனதுளம் ஆயிரஞ்சுக்கலாய்
ஆனதை யார்க்குரைப் பேன்.
-சிந்தாமணி, 24.04.69
வடக்கிருத்தல் 40
சோ.பத்மநாதன்
 

உதயதேவி ஓட ஓட.
'உதய தேவி ஒட ஒட
உவகை ஓடி விட்டதோ? ஒருசொ லேனும் பேச லின்றி
ஊமை யாகி விட்டதேன்? இதய மாக டற்குள் மோதும்
எண்ணில் கற்பனைகள்கோத்(து) இனிய பாடல் பாடவில்லை
என்ன வந்த(து)?' என்கிறாய்.
சொல்ல டுக்கிச் சுவைகள் சேர்த்துச்
சொல்ல வந்த செய்தியைச் சோடனைக்குள் முழ்கடிக்கச்
சொல்கிறாயா? - சொல்லடி கல்லடுக்கிச் சாந்து பூசிக்
கட்டு கின்ற கோட்டையா கவிதை யென்பது? - இல்லை -நீயென்
கவிதை யென்று சொல்லுவேன்.
வடக்கிருத்தல் 41
சோ.பத்மநாதன்

Page 32
வெண்ணிலாவின் தண்மை, தூய
வெள்ளை மல்லி கைமணம், வீசு தென்றல் தீண்டும் இன்பம்,
வீணை நாத வெள்ளம், - உன் கண்ணி லேயிருக்க நல்ல - கவிதை எங்கு தேடு 'றாய்? கள்ளி அன்று தொட்டு நீயென்
கற்பனை னைக்குள் ஆடு “றாய்.
'வையம் உங்கள் கைகள் மீது
தூவ வேண்டும் மல்லிகை வான ளந்த பாடல் தந்த
வாறு கண்(டு)* என் றள்ளியென் கையை அன்று கண்ணில் ஒற்றிக் கொண்டி யேயுன் காவியக் கண்ணை விஞ்சி வேறு பூவும்
கமழு மோ, என் கைகளில்?
ஒட வேண்டும் உதய தேவி
உலகின் எல்லை தாண்டியே ஊழி காலம் நீயும் என்முன்
ஓவி யம்ப டைப்பதைப் if வேண்டும் சொல்க டந்த
பண்க டந்த - பாடலாம் பார்வை யொன்றில் கேட்டு நெஞ்சைப் பறிகொடுக்க வேண்டும்நீ.
வடக்கிருத்தல் 42
சோ.பத்மநாதன்
 

அரங்கேற்றம்
அன்று மாலை இடையிற் குடத்துடன்
ஆற்றை நோக்கி நடந்த நடையிலே சென்ற என்மனம் இன்னமும் மீளலை
செய்தி கேட்டிலையோ? அடி செல்வமே நின்று பாதி வழியிற் திரும்பிநீ
நீள வாள்விழி வீசியன்றோ எனைக் கொன்ற னை? இதைக் கேட்பவரில்லையா?
கூடு மட்டுங் கிடந்துத விக்குதே
வடக்கிருத்தல் 43
சோ.பத்மநாதன்

Page 33
அள்ளி நீகுழற் கற்றை முடித்தென (து)
ஆவி யைழுடித் தாய் அது மட்டுமா? வெள்ளை மல்லிகை பூக்களைச் சூடினை
வேகும் நெஞ்சினொ டென்னைவிட் டோடினை கொள்ளை கொண்டனை சிந்தனை என்னையிக்
கோலஞ் செய்துபின் ஒன்றும் அறிகிலாப் பிள்ளைபோலிருத் தல்முறை யென்றுநீ
பேசு செந்தமிழ் நூல்களில் உள்ளதோ?
காட்டு முல்லையுன் பல்லின் வரிசையென்
கற்ப னைப்பெரு மாளிகை வாயினில்
தீட்டு மோவிய மாகக் குழிந்தெழில்
தேங்கக் காண்பதுன் கன்னம் செழுந்தமிழ்ப்
பாட்டிருக்குதுன் பார்வையிலே நடை
பரதநாட்டியம் பண்டைய செந்தமிழ்
நாட்டு யாழிற் பிறந்த இசையடி
நங்கை நின்மலர் வாயில் மலர்ந்த சொல்.
மின்ன லின்ஒளிக் கீற்றென எண்ணி நான்
மெய்ம்மறந்து வியந்தது நீசிந்து புன்ன கைதனைக் கண்டடி வாழ்க்கையின்
போக்கை முற்றிலும் மாற்றிஅமைத்தனை முன்னிருந்தசோர் வின்றிலை நெஞ்சிலே
மூட்டி விட்டனை ஆசையை முற்றிலும் என்னை இங்குப் புதிய பிறவியாய்
ஏற்றி விட்டனை வாழ்க்கை அரங்கிலே.
-தினபதி கவிதா மண்டலம்
24.10.68
வடக்கிருத்தல் : 44
சோ.பத்மநாதன்
 
 

பெருஞ்சுமை
அன்ன மென்னநடந்துநடந்தென(து)
ஆவி யூடுக லந்துக லந்ததும்,
பின்ன லோடென்உ ளத்தையும் சேர்த்துடன் பின்ன விட்டதும், பேரிருள் கீறுமோர்
மின்ன லொவெனத் தோன்றி மறைந்ததும்,
மெல்ல வேயென்றன் நெஞ்சம்நிறைந்ததும்,
* இன்னமும்அறியாதவள் தன்னையா(ர்)
எண்ணி ரண்டுப ராயத்தள் என்கிறார்?
மொட்ட விழ்ந்திடு மல்லிகை போலவள்
முறுவலித்ததும் சித்திரைக் காற்றிலே
பட்ட பஞ்சென நெஞ்சம்அலைந்ததைப்
பாத கிஇனும் ஏனறி கின்றிலஸ்?
கிட்ட வந்துகதைகள் சொலும்படி
கெஞ்சி நின்றபெண் ணாஇவள்? இன்றைக்கு
மட்டு மெங்கிருந்தித்தனை நாணமும்
வந்ததோ? இது மாபெரும் விந்தையே.
வடக்கிருத்தல் 45
சோ.பத்மநாதன்

Page 34
நீல வானிலோர் நிறைமதி நாளிலே
நித்தி லத்திரள் வாரி விதைத்தது போல மீனினம் பொலிவது கண்டுடல்
புளக மெய்த ‘ஓர் பாடல்பு னைந்திடல் ஏலும் என்றுளத் தெண்ணியென் கையிலே ஏடெடுத்ததும், எங்கிருந்த தோவிழி வேலி னால் அந்தக் கற்பனைக் கோட்டையை
வீட்டி விட்டவள் வேடிக்கை பார்க்கிறாள்.
சிறகடித்தது தாவணி காற்றிலே
சிறகடித்ததென் கற்பனை ஊற்றிலே பிறைநுதல்மிசைக் குங்குமப் பொட்டுடன்
பின்னல் மார்பில் தவழ்ந்தெழில் சொட்டிட, குறைவி லாஎழிற் சிலையென நெஞ்சினைக்
கொள்ளை கொள்ளுமந் நிலையை அறிகிலாத் துறவி யா? அதைப் பாடி மகிழ்ந்தலால்
தூய செந்தமிழ் நெஞ்சம்உறங்குமா?
கூந்த லோசுமை எனிலதிற் குடிய
கொத்துப் பூச்சுமை, கோயிலுக் கென்றவள் ஏந்து தட்டமும் சுமையக் கொடியிடைக்(கு)
எழில்உ டல்சுமை, சதங்கைகள் காற்சுமை, காந்தள் மெல்விரற் கைகளுக் கென்னிலோ
காப்புக் கள்சுமை, கற்பனை வெள்ளத்தில் நீத்தி மோதி நிலைதடு மாறுமென்
நெஞ்சினுக்கவள் நினைவுபெருஞ்சுமை.
-கலாவதி, 1967.
சா.பதமநாதன்
 
 
 
 

வாழுமடி என் காதல்
மல்லிகைப் பந்தர்க் கீழிருந் தொருநாள் மகரயாழ் மீட்டிய நிலையை சொல்லினில் வடிக்கத் துடிதுடித் தின்னும்
தோல்வியே காணுகின்றேன் நான் முல்லைபூத்ததுபோல் முழுநிலா வதனம்
மோகனப்புன்னகை சிந்த கல்லையு முருக்கும் கனிவொடன் றென்னை
கன்னிநீ கடைக்கணாற் பார்த்தாய்.
ஒவியம் உயிர்பெற்றுலவுதல் போல
ஒளிநிலா வானம் விட்டிறங்கி காவியம் படைக்கக் கற்பது போல
கற்பனை ஊற்றினில் தோன்றி நாவினில் உருவாம் செந்தமிழ்க்கவிதை
நயமென- நான்முகன் என்னும் பாவியிங் குன்னை எழிலெலாம் சேர்த்துப் படைத்ததைப் பாடநான் துடித்தேன்.
காற்சிலம் பொலிக்க கைவளை குலுங்க
கன்னிநீ அரங்கினில் பரதநூற்சிறப் பெல்லாம் சிறந்த மெய்ப் பாட்டில்
நுண்ணிடை வளைவினில் காட்டி ஏற்றிய விளக்காய் நின்றெனை நோக்கி
இளநகை செய்திரு விழியால் கூற்றுவன் போலென் ஆருயிருண்ட
கொடுமையை நினைந்துளம் குமுறும்.
வடக்கிருத்தல் 47
சோ.பத்மநாதன்

Page 35
அலையெனக் கூந்தல் நெற்றியில் தவழும்
அழகினை - அழகெலாம் அமைந்த சிலையென, முன்கைத் தண்டினில் செந்தா
மரைமுகம் தாங்கிய சிறப்பைதலைகவிழ்ந் தெனைரீ நோக்கிய போது தவிப்பெலாம் கண்ணிலே தெரிந்த நிலையினை - நெஞ்சில் ஓவியமாக்கி
நிலைபெறச் செய்யநான் நினைந்தேன்.
கூவிடும் குயிலின் ஒசையில் உன்றன்
குரலினைக் கேட்டுளம் குழைந்து பாவிலும் பொருளாய் உன்னழகொன்றே
பரந்ததும் கண்டயர்ந்தேன் பூங் காவிலும் ஆற்றங் கரையிலும் நெஞ்சம்
கலந்துந்ாம் உலகினை மறந்தே ஆவியொன் றியதைப் பாடநான் கம்பன்
அல்லவே என்னுளம் மறுகும்.
மாம்பழக் கன்னம் குங்கும மாக
மயங்கினன், பார்வையால் நெஞ்சம் சாம்பநீ செய்தாய்- தவித்தனன், இன்பத் தமிழொடும் தனிமையி னோடும் நாம்பழ கியதை எண்ணிநா னெண்ணி
நாள்கழித் துருகுவன், நங்காய் கூம்பிடும் போதும் அழகொளி வீசும்
குமுதமா முகத்தெழில் வியப்பேன்
வடக்கிருத்தல் 48
சோ.பத்மநாதன்
 
 
 

வேறு பெண்ணரசி நீயெனுளம் நிறைந்த துண்மை
பித்தாகி யானுலகை மறந்த துண்மை கண்ணழகால் நான்கவிஞன் ஆன துண்மை
காதலெங்கள் இடையரும்பி மலர்ந்த துண்மை விண்ணகத்தே கற்பனையாம் இறக்கை கட்டி
விம்மிதமுற் றிருவேமும் பறந்த் துண்மை எண்ணினரா இதையெல்லாம் உனது பெற்றோர்?
எமைப் பிரித்தார் -உனக்குமணம் பேசிவந்தார்.
வானகத்து வட்டநிலா வதனந் தன்னை
மாம்பழத்துக் கன்னத்தை - மலரை ~அன்னம் போல் நடக்கும் பூங்கொடியை -நெற்றிக்கீற்றில்
பொட்டிட்டென் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட மானை இரு கரும்பாம்பை முதுகில் சூட்டும்
மயிலை - மணி விளக்கை -அருந் தமிழை நாளும் நானகத்தில் எழுதுமுயிர் ஓவியத்தை
நாயகியை நான்மறக்க வேண்டு மென்றார்.
வெண்ணிலவு தண்மையினை மறப்பதில்லை
வேய்ங்குழ லின்னிசையமுதை மறப்பதில்லை வண்ணமலர்த் தேனைவண்டு மறப்பதில்லை
வளமார்ந்த தமிழைஉளம் மறப்பதில்லை எண்ணமுனை இமைப்பொழுதும் மறந்ததில்லை
என்றாலும் இதையுணரா இரும்பு நெஞ்சர் கண்ணை - என துயிரை -உளங்கோயில் கொண்ட
காதலியாம் உனைமறக்கச் சொன்னார், சொன்னார்.
வடக்கிருத்தல் 49
சோ.பத்மநாதன்

Page 36
யான்புனைந்த பாடலினைக் கானடாவில்
யாழிசைத்து நீபாடக் கேட்ட பின்பு தேன்கசந்து போனதடி! 'ஏனுன் தந்தை
தெரிந்தெடுத்த மாப்பிளைக்குக் கழுத்தை நீட்டத் தான்துணிந்தா யோ?’ எனநான் கேட்ட போது
தவிதவித்தாய், துடிதுடித்தாய், எனினும் என்னை ஏன்துறந்தாய்? துணிவின்மை யாலா? என்றன்
ஏழ்மையா லா? இனும்நான் அறிகி லேனே.
வேறு அலைபோலும் கூந்தல் அழகை வியந்தபடி சிலை போல நின்றதெல்லாம் சிதைந்தகன வாச்சுதடி
தென்றல் வருமென்று திசைபார்த் திருந்தேன்நான் இன்று புயல்வீச இதயமலர் வாடுதடி
தென்பாங்கு பாடத் திறந்தவாய் மூடவில்லை அன்பேஎன் பாட்டில் அவலம் வரலாச்சே
ஆவி கலந்தாய் -அகமகிழ்ந்தேன் -அன்புவைத்தேன் பாவி மனம்அனலாய்ப் பற்றி எரியுதடி
மான்போல நோக்கியதும் மயில்போல ஆடியதும் தேன்போலப் பேசியதும் தெருவில் விடுதற்கோ
இன்பத் தமிழ்பயிலும் என்நாவால் உனைத்து ற்றேன் அன்பு சுரந்தமனம் ஆரஉனை வாழ்த்தேன், போ!
பெண்ணும் பொய், இன்பம்பொய், பேரழகு பொய் இந்த மண்ணும் பொய், ஆனாலும் வாழுமடி என்காதல்.
-கலாவதி 1966
50
Gతాm. பத் மநாதன்
 
 
 

அன்பு ஒரு புதிர்
கண்கள் இரண்டுமெனைக் கெஞ்சிநின்ற வோ? இரு
காலும் நடந்துவர அஞ்சிநின்ற வோ? பெண்கள் இனமெனிலோர் காட்சிப்பொருளோ? -என்று
பேசத் துடிதுடித்த வோஉதடு கள்? நண்பர் உறவினரும் சூழவிருந்தேன்-அவள்
நாணம் எனுங்குணமே வாழவிருந் தாள் துன்ப நிழல்கவிந்த தேன்முகத்தி லே? -அன்று
சோர்வு குடியிருந்த தேன், அகத்தி லே?
வடக்கிருத்தல் 51
சோ.பத்மநாதன்

Page 37
"வேர்த்து விறுவிறுத்து நின்றநிலை யும் -பெரு
விரலின் நுனியில்விழி யொன்றுநிலை யும் பார்த்த பொழுதினிலென் மெய்சிலிர்த்ததும் - அவன்
பார்வை எனைவிழுங்க, நெஞ்சினலைகள் ஆர்த்து முழங்கியெழுந்தாயிரமுருத் - தீட்ட
அந்தக் கனவிலெனை நானிழந்ததும் -(கண்டு) தீர்த்த அனுபவமிங் கேதுபுது மை?' -என்று
செயலற் றிருந்தநிலை சேதிசொல்லிற் றோ?
'சீவிக் குழலைப் பின்னிப் பூமுடித்ததும் -வண்ணச் சேலை யுடுத்தழ குப்பொட்டு வைத்ததும்
கோவில் இருந்ததிசை நோக்கி 'முருகா, - கை
கூட அருள்செய்' என நானிரந்ததும்
ai அவன்பெரிய தோரணையிலே -என்னைப்חL
பார்த்து மறுக்க, நெஞ்சு தாங்கமறுத் தே
ஆவி துடித்ததுவும் ஆரறிகுவார்? - என்றன்
ஆசைக் கனவழிந்த தாரறிகு வார்?"
என்னுங் குமுறல், அவள் சிந்தனையிலே-நின்று என்னை உருக்கியதை மட்டுமுணர்ந் தேன்
இன்னும் அழகின்இயல் பார்த்தலெனது -பண்புக் கேற்றந்த தருவதல என்றுதுணிந் தேன்
‘என்ன முடிவுசொல?" என்பதன்மு னே 'நாள்
எப்போ?* எனுமெனையே ஏறஇறங்க -(என்)
அன்னை அதிசயமாய்ப் பார்த்திடுகிறாள் -அவள்
அன்பு மனதுக்கென தன்பு புதிரே.
தினபதி, கவிதா மண்டலம் ஆண்டு மலர், 12.12.1968
வடக்கிருத்தல் 52
சோ.பத் மநாதன்
 
 
 

முரண்பாடு
தன்வயிற்றில் கருவாகி வளரும்போது
தாங்குதற்கும், தாயாகும் அந்த வேளை துன்பமுற்றுத் துடிதுடித்துச் சாவின் எல்லை
தொட்டுவந்து குழந்தையொன்று பெறுவதற்கும் பின்பெடுத்து முலைதரவும், அன்புவார்த்தை
பேசுதற்கும், நாணாத பெண், பின்னாலே தன்சேய்க ளுடன்வெளியே போனால், மற்றோர்
தாயென்று சொல்வரென நாணு கின்றான்.
சோ.பத்மநாதன்

Page 38
வழிவழியாய் வந்ததிந்த வழக்க மின்று
வழிபாடு செய்வதற்கென்றுள்ளே யிந்த இழிசனர்கள் போனால் நம் ஆலயங்கள்
என்னாகும்? 'எனக் கதறும் இவர்க ளந்தப் பழிகாரர் மரமேறிப் படாதபாடு
பட்டிறக்கிப் பரிவுடன் ஒலைக் கலத்தில் பொழிதரு கள்ளமுதமென 'ஏந்தி யுண்ணும்
புதுமையினைக் கண்டுள்ளம் பூரித்தேன் நான்.
'ஆறுயார் வீண், இரண்டே போதும், ஆனால்
அது முழங்கால் மேற்கூடு மானது ரம் ஏறுகிறதழ(கு) அதனைப் பொறுத்தே யெம்மை இவ்வுலகு நாகரிகர் என்னும்’ என்று கூறுபவள் 'இடமில்லைக் கீழே’ என்று
கொண்டக்டர் கூறியபின்னாலும் -மேலே ஏறுவதற் கஞ்சுகிற நிலையைக் கண்டே
எனக்குள்ளே பலதடவை சிரித்ததுண்டு.
நாடாளுமன்றத்தில் ஐந்தாண் டுக்கோர்
நாற்காலி பிடிப்பதற்கே, அலைந்து வீடு வீடாக வாக்கிரந்து வென்றால் போக்கு
வேறாகிப் பொருள்குவிக்கப் புறப்பட்டுக்கை கூடாதபோது கொள்கை மாறல் போன்ற
குறுக்குவழிப் போமிவர்க்காய்க் குத்திவெட்டி கோடேறிப் பொருளிழந்து சிறைக்குப் போகுங்
கொடுமையினை நினைந்துள்ளங் குமுறு கின்றேன்.
சோ.பத்மநாதன்
 

பிறநாட்டுக் கதையில் வரும் நிகழ்ச்சி கொண்டு
பின்னுக்கும் முன்னுக்கும் ஒட்டவைத்து குறையாடை, குடி, கும்கும்குத்து, காதல்
கொண்டவர்கள் பூங்காவிற் புரளல் -எல்லாம் முறையாகப் புகுத்தியதைத் திரையிற் காட்டி
முப்பத்தைந்தாண்டுகளாய் 'பிஸ்னெஸ் செய்து கறைபட்ட படவுலகின் மயக்கில் மூழ்கிக்
காளையர்கள் கருத்தழிதல் கண்டு நொந்தேன்.
வானளந்த கோபுரமும் எட்டுத் திக்கும்
மணங்கமழும் கலையழகும், நெஞ்சையள்ளும் தேனளைந்த பாடல்களும், குறளென்கின்ற
சிந்தனையு முடையவன் -செந் தமிழன் -இன்று போனவற்றின் நிழலினிலே யொதுங்கி நின்று
பொய்ம்மையெனும் வேலியினைச் சுற்றிக் கட்டி, தானுயரும் வழியொன்றே வகுத்துக் கொண்டு
தடுமாறும் நிலைகண்டு தளர்ந்து போனேன்.
அம்புலியிற் போயிறங்கி, மண்ணை யஸ்ளி,
ஆராய்ந்து கொண்டிருக்கும் மனிதன் இன்று நம்புகிறான் இல்லைப்பொய் லஞ்சம் தீர்ந்த
நல்வழியை உண்மைக்குப் பாடுபட்டால் வம்புதும்பில் மாட்டுண்ண நேருமென்று
வாயடங்கி வாழ்கின்றான், தான்முன்னேறக் கும்பிடுதல், வால்பிடித்தல், குழைதல் செய்து
கொடுமையே அறமென்று குழம்பிப் போனான்!
-சிந்தாமணி, 02.02.71
வடக்கிருத்தல் 55
சோ.பத்மநாதன்

Page 39
கம்பன் காணும் காதல்
காதலானது கரையிலாதது
கவிதை, காவியம், அரியநாடகம் கோதில் சித்திரம், சிற்பமாய் மனம்
கொள்ளை கொள்கவி னார்கலைகளின் வேத மானது மார வேன் இள
வேனில் வெண்ணிலா விரியுமல்லிகைப் போது தென்றல் கொண்டாளுகின்றதோர் புனித மாளிகை அழிவிலாதது.
வேறுநாடு பண்பாடு வேறுடை
வேறு பாஷைகள் வேறு கண்டவை வேறு பற்பல சமய மென்னிலும்
வீறு கொண்டு முளைக்க வல்லது ஈறி லாத் தாம் சாதி வேறுபா(டு)
ஏற்றத் தாழ்வெனும் எல்லைக் கோடுகள் நூறிருப்பினும் நொறுக்க வல்லிதிந்
நொய்ய தாகிய காத லென்பது!
வடக்கிருத்தல் 56
சோ.பத்மநாதன்
 

மங்கை ஜானகி மாட மீதிலே
வந்த ராகவன் மிதிலை வீதியில் அங்கு தற்செ லாய்நிமிர்ந்தவன்
அழகு தேவதை விழிதன் தோள்லே தங்கி நின்றதும், கண்கள் ஓர் நொடி
சங்க மித்ததும் இதயம் மாறிப்புக்(கு) ஒன்று கூடிய காதற் செய்தியை
ஒதினேன் உவந் தீர் புகழ்கிறீர்.
வேறு மாடத்தே நின்றவள் ஜானகி -மிதிலை
மண்ணில் நடந்தவன் ராகவன் -அவர்கள் கூடும் படியொரு காட்சியை -வைக்க
கோசிகன் தன் துணை நாடினேன் நாடும் முழுவதும் போகிறார் -இந்நாள்
நாயகி யர்அவர்க்காக நம் ஆடவர் மாடத்தைப் பார்ப்பதே -இப்போ(து)
அருகி இருப்பது காண்கிறேன்.
வண்டியிற் போகும் பொழுதிலும் - காலை
பஸ்ஸிற்கு நிற்கும் பொழுதிலும் கண்திறக் கும்பொழு துக்குள்ளே -இப்போ காதல் முகிழ்ப்பது காண்கிறேன் வண்டு, குயில், தோழி என்றுபற் - பல
வாய்ப்பில்லை ஆனாலும் ரெலிபோன் உண்(டு) உயர்கல்விக் கழகங்கள் - உண்டு
ஒன்றாய்ப் பணிசெய் தொழிலஓ.
வடக்கிருத்தல் 57.
சோ.பத்மநாதன்

Page 40
நூலக மும்பட மாளிகை -களும்
நூறுள வாயக டைகளும் ஆலயந் தோறும் திருவிழா -அயர்
அந்த நாள்களிலும் கடற்கரை -எங்கும் வாலைகள் கூடிப் பழகவும் -காதல்
வார்த்தைகளைப்பரி மாறவும் ஏலுமென் கின்றதும் உண்மைதான் -இந்நாள் ஏட்டிலும் பாட்டிலும் காதல்தான்.
காதலராகிக்க லப்பதும் -பூங்
காவினிற் கைகோத் துலாவலும் 'கூதல் எடுபட்ட பின் மண - நாள்
குறிக்கும் அளவில் அம் மன்மதன் ‘ஏதும் பெறுபவன் அல்லன் நான் - என்னை
ஈன்றவ ரோபழங் காலத்தார் சீதனம் கொஞ்சம் கொடுத்திடில் -இதை
ஷேப் பண்ணலாம்’ எனக் கூறுவான்.
காசினைக் கண்டதன் பின்னரே - அந்தக்
காளையின் நெஞ்சம் மலருமாம் ஆசைக் கலியாணக் சந்தையில் -வழக்
கறிஞர், மருத்துவர் பொறிவலர் -விலை பேசப் படுகையில் காதலைப் -பற்றி பெரிது படுத்தி நான் பாடவா? வாச மிலாத மலர்களே - கொண்டு
மாலை தொடுத்து நான் சூடவா?
"கம்பனாகி நின்று இக் காலக் காதலைப் பாடுக” என்ற பணியேற்றுப் பாடியது - கம்பன் விழா இணுவில். சிந்தாமணி, 1984.
வடக்கிருத்தல் 58
சோ.பத்மநாதன்
 
 
 

இல்லாத ஒன்று
வெள்ளை வெளேரென்று பூத்து -இள
வேனிலி னைவுர வேற்று கெர்ள்ளை அழகுடன் நின்றும் - மனம்
கூடப்பெறாமலர் ஒன்று.
வடக்கிருத்தல் 59
சோ.பத்மநாதன்

Page 41
தேனை அளாவிய சொல்லும் -குளிர்
தென்றல் உலாவிய பண்ணும் ஊனை உருக்க அமைந்தும் -உயிர்
ஒன்றிப் பிறவாத பாட்டு.
அன்பின் பெருக்கினில் தன்னை - இழந்(து)
ஆண்டவன் கோயிலில் நின்றான்
பின்புறத் தேவந்த கூட்டம் - மோதப்
பெரும்புயலில், துரும் பானான்.
இளமைக் கனவுகள் நூறு - விழி
இணையில் புலப்படு மாறு
அழகுச் சிலையென நின்றாள் - நெஞ்சில்
அவளுக்கிலைஇடம் என்றான்.
வேயின் குழலிலோர் பண்ணை - மண்ணும் விண்ணும் மயங்க இசைத்தான், ஆயின் அவளிரு காதும் - செவி(டு)
ஆயின் அவனென்ன செய்வான்?
நெஞ்சக மாமலர் கொய்து -அதில் ܚܝ நினைவு மணம்வரச் செய்து வஞ்சி அவளிடந்தந்தான் -அது
மண்ணிற் கிடந்திட நொந்தான்.
சிந்தாமணி, 07.03.70
வடக்கிருத்தல் 60
சோ.பத்மநாதன்
 
 

·‘ “ ’ ! 'i... ,
.., ¿? * &#||! 4s ≡. に 、|-*ェび
* |-|-- -# .?|- |-く** ...* ·... \・く。*イシ鞑靼本 盈を 。々 んノイ汤之龙メ・|-** ... à 、シ をメダ. .... o.); _之、シ%ダ・|-メダイダ%タ「ダ... ~• ... - ~ ~ --★ →|-|-
* عي.

Page 42

மீண்டும் ஒரு தேர்தல்
தேர்தல் திருநாள் திரும்பிவந்த தானாலும் ஆர்வத்துக் கேதும் குறைவில்லை -மார்தட்டி இம்முறையும் (பாவந்தான் - என் செய்வார்) தொண்டரெ லாம் எம்முன்நிற் பார், பல் இளித்து
'மீண்டும் ஒருதேர்தல் வேலை மினக்கேடு, வேண்டாமீ தென்னில், வினவுவேன் - வேண்டாமோ உண்ணும் மதுவில் உலகத்தரசியலின் எண்ணம் சுரக்கும் எழில்?
வடக்கிருத்தல்

Page 43
'தம்பி தமிழ்காக்கத் தானே புறப்பட்டான்! நம்புங்கள் நம்பொடியன், நாவாலே -அம்பெனவே தாக்குவான் வேறு பலரை, தயவு செய்து வாக்களியும்" என்பார் வருந்தி.
போட்டி இடுதல் புகழுக் கிலை, எங்கள் நாட்டின் நலனுக்காம் -நாமறிவோம் -கேட்டெங்கள் காது புளித்ததுதான் மிச்சம்; கருமத்தில் ஏதும் நடந்த திலை.
தாடி வளர்த்தல் தமிழுக்காம் (தண்டமிழும் வாடியதோ தாடியொன்று வாராமல்?) -ஓடியிவர் ஆடுவது, பேசல், அழுவதெலாம் தம்வாய்க்குப் போடுவதற் கென்று புகல்.
'மக்களது சேவை மகிழ்ச்சிதரும், நாமதற்குத் தக்கவ"ரென்றேதம்பட்ட்மடிக்கும் இக்கும்பல் சொல்வதெலாம் நன்று வசைபாடுந் தொண்டி லினி இல்லையிவர்க் கெங்கும் இணை. w
"அப்பொழுதே சொன்னேன் அவன்போன தேர்தலின்பின் எப்பொழுது வந்தானென் வீட்டுக்கு? -இப்பொழுது வாக்கிற் கிரந்து வருவான் -வரட்டும்' எனத் தாக்கத் தவிப்பாருளர்.
-தினகரன், ஆனி 12,1960
வடக்கிருத்தல் 62
சோ.பத்மநாதன்
 
 

தேர்தல் என்றொரு நாடகப் பெருவிழா
ஈழத்திற் தலைசிறந்த நடிகரெலாம் கூடி
இணையற்ற விழாவெடுக்க இருக்கின்றார்: கார்கள் மேளம், பூமாலை, வெடி, ஒலிபெருக்கி, வாழை
மின்விளக்கு, தோரணங்கள் வீதி தெரு -ஒழுங்கை நீளம் அணிவகுப்பு, சுவரொட்டி, விளம்பரங்கள் நெடுமாடம் -மரங்கள்- கடைவாயில்
தொறும் கொடிகள் காளையரே கன்னியரே மூத்தோரே சிறாரே
காணலாம் வம்மின் விழா கண்களுக்கு விருந்து!
வடக்கிருத்தல் . . . . 63
சோ.பத்மநாதன்

Page 44
இயல் இசையும் இடம்பெறினும் நாடகத்துக் கென்றே
இந்த விழா அமைவதனால் நடிகருக்கே முதன்மை! புயல் போல மேடையிலே நின்று 'மைக்" கைப் பிடித்து
பொழிவார்கள் செந்தமிழின் சிறப்பு-புகழ் -எல்லாம் கயல், புலி, வில் உலகமெங்கும் பறந்திட்ட காலம்
கண்னெதிரில் வரமுழக்கம் செய்வார்கள் -எந்தப் பயலிவர்கள் முன்னிற்க முடியும்? இந்தத் தமிழர்
பரம்பரையே இவர்ககையில் பயமினியேன் நமக்கு?
நாடகங்கள் -ஒன்றல்ல. பலமேடை ஏறும்
நாடு வியந்தார்ப்பரிக்கும், நடிகர்தலை யசைப்பர் வீடு, தெரு, கடை, சந்தை, பஸ்நிலையம் -எங்கும் விமரிசகர் வாதிடுவர், மோதுதலும் நிகழும், ஏடுகளில் நிழற்படங்கள், பேச்சுகள், அறிக்கை,
எத்தனையோ இடம்பெறுமிங்கென்னகுறை வாழ்வில்! சூடுபிறக்கும் இனிமேல் சுவையிருக்கும் என்ன,
சொல்லுவது கேட்கிறதா? தூங்கிவிடாதீர்கள்!
நடிகரென்றால் நம்மவர்தான் மணிப்பயல்கள், போங்கள்
நடுத்தெருவிற் கண்டாலும் நமைவாரி அணைப்பர் விடுவாரா நடப்பதற்கு? காரிலெமை ஏற்றி
வீடுவரை கொண்டு செல்வர், விருந்தளித்து மகிழ்வர் குடியாட்சிக் காலமிஃ(து) என்பதனை உணர்ந்து
கொண்டவர்கள், பாருங்கள் -கொடுத்திடுவர் வார்த்து! அடியடா முரசிந்த விழாசிறக்க வென்று
ஐந்தாண்டுக் கொன்றென்றால் அதைவிடுவ மோநாம்!
வடக்கிருத்தல் 64
GsFmr. பத்மநாதன்
 
 

நேற்றுவரை தலைநகரில் வாழ்ந்து வந்த வாழ்வை நீத்து, நம திடையுலவி, இங்கிலிசும் துறந்து காற்சட்டை கைவிட்டு, வேட்டியினைக் கட்டி
காணாத பகைவனையே களத்தில் அறைகூவி, மேற்சட்டை சுருங்கிமுழங்கையின்மேல் ஏற,
வீர உணர்வோங்க, வெறும் மேசையினைக் குத்தும் தோற்றத்தைக் காணத கண்ணென்ன கண்ணே
தூரநின்று கேட்பார்தம் காதென்னகாதோ?
உங்களுக்கு மட்டும் சொல் வேன், இந்தவிழாவில்
ஒரு புதுமை -நடிக ரெலாம் விமர்சக ராவார்கள் தங்களது குழுவொன்றைத் தவிர எந்தக் குழுவும்
தருபவற்றைப் பிய்த்துவிடு வார்களையா, பிய்த்து தங்களுளே ஒருவர்மற்றவருக்குப் பட்டம்
தாராளமாயளிப்பர்; பரப்பிவரு வார்கள் எங்களுக்கேன் வம்பு? நாய்வாழ்ந்தாலென்? பூனை
இருந்தாலென் அரியணையில்? நாடகமே உலகம்!
நாடகத்துப் பெருவிழாவுமே இருபத் தேழாம்
நாள் நிறைவு பெறும், இறுதி சிறப்பாக அமையும் மேடைகளும், மாலைகளும், வாழைகளும் போகும்
மின்விளக்கு மங்கும், ஒலிபெருக்கி யும்வாய் ஒயும் ஒடெடுப்பர் சிலர், நடிப்பதில்லை யினியென்றே
ஓட்டெடுப்பர் சிலர், சிறந்த நடிகருக்கோர் தேர்வு கூட நடக்கும் வாரீர் வாக்களிக்க முடிவைக்
கொழும்பிலிருந் தொலிபரப்பு வார்கள் அதுபோதும்.
சிந்தாமணி, மே 1970
வடக்கிருத்தல் 65
சோ.பத்மநாதன்

Page 45
ஊதுகுழல்கள்
ஊதுகுழல் கேட்டென் உயிரை எடுக்கின்றாய்,
ஏது சொலினும் இசைய மறுக்கின்றாய். ஏழாண்டு காலம் மலிவாய் இருந்ததுதான் மீளா அடிமைத்தனத்தின் விளைவது காண் வானொலியிற் சாதனைகள் வகுத்துத் தொகுத்தவர்கள், ஏனெனவே கேட்கும் இதயத்துரமிழந்த பத்திரிகைக் காளான்கள், படித்தமகா பண்டிதர்கள், புத்துலகங்கண்டுபுளகிப்படைந்து புதுக் கற்பனைகள், செஞ்சொற்கவிதை, இசைவடிவு அற்புதங்கள் என்றெல்லாம் 'ஆகா ரமிட்டவர்கள், இந்த யுகத்தின் இணையிலா நாயகியின் முன்றானையிற் தொங்கி முன்னேற்றம் கண்டவர்கள், நித்தியமாயந்த நிறமே யிருக்குமென்று முத்திரையைக் குத்தி முழுநீல மாய்க்காட்சி தந்தவர்கள், கூட்டுறவுச் சங்கத் தலைவர்களாய்க் குந்தியெழும்பிக் கோபுரங்கள் கட்டியவர்காக்கி யுடையின் கவசத்தினால் மக்கள் தாக்கப் படவும் தருக்கித் திரிந்தவர்கள், இச்சகமும் பொய்யும் ஏமாற்றும் கையூட்டும் நிச்சயமாய்த் தம்மை நிமிர்த்தும் என மகிழ்ந்தஊது குழல்கள் ஒரா யிரங்கிடைக்கும்!
போதுமடா தம்பி புலம்பல் புறப்படுக, தேடுவா ரற்றுத் தெருவோரத் தேகிடக்கும், ஒடு, போஒன்றெடுத் தூது.
-சிந்தாமணி, 11.07.82
வடக்கிருத்தல் 66
சோ பத்மநாதன்
 

பெரும் ஆளோ?
காணி நெற் பயிர்கள் சுரீர் சுரீர் என
வீடு பற்றும் நெருப்பு குயீர் குபிர் என
காவல் மிக்க அரண்கள் திடீர் திடீர் என எரிகாலம்
காடுபுக்கு ஜனங்கள் உளார் உளார்.பசி
யோடு மக்கள் கலங்கு கிறார் உளார் பசி யாகி உக்கி வதங்கி இதோ இதோ உயிர் விடுகின்றார்
வடக்கிருத்தல் х и г в 67.
சோ.பத்மநாதன்

Page 46
பாடுபட்டு முயன்று பலாபலன்களை
யேயெடுக்க வயல்கள் புகார், புகும் பொழு(து) ஆமிசுற்றி வளைந்து டுமீல் டுமீல் எனும் அநியாய
பாதகத்தை முனைந்து செயாய், செயாய் என
பாரனைத்தும் எழுந்து தகா(து) அடாதிது தீதெனச்சொல் விளங்க கிலாய் அடா, அட முழுமோடா
ராணுவத்தை, கலங்கள் கொளா கொளாபல
ஆயுதத்தை, பறந்து செலா செலாவரும் ஊர்தியைச் சிறந்த மகா மகாபலம் எனஏவி
வான கத்தில் இருந்து மடார் மடார் என
நீ நினைத்த கணத்தில் ஷெலாய், ஷெலாய்பொழி போது மக்கள் பயந்து ஐயோ ஐயோ என அழலாமோ?
ஆணவத்தில் விளைந்த பொலா பொலாஉளம்
ஏவிதைத்த நெருஞ்சி முளால் முளால் இனம் ஈன முற்ற விதங்கள் எலாம் எலாம் உல கறியாதோ.
ஆக மத்தை உணர்ந்த மகா மகாகுரு
மார் வகுத்த கொள்கை விடாய், விடாதெமை
ஆளு தற்கு முனைந்த ஜெ.ஆர். நீ யார்? ஒரு பெருமாளோ?
-முரசொலி, 1987
வடக்கிருத்தல் 68
சோ.பத்மநாதன்
 
 

எங்கள் நகர் ஏன்
“எங்கள் நரேன் எரியுண்டு போகிறது? உங்களுக்கு:சத்தியமா ஒன்றுந் தெரியாதோ?* 'ஏதுக்கிப்ய்ேநஇப்பேச்சை எடுக்கின்றாய்?
. -
காதுக் கருகில்ஆந்து கத்தித் தொலைக்கின்றாய்?" ‘எங்கள் நகரேன்ன்ரியுண்டு போகிறது? உங்களுக்கு - சத்தியமா ஒன்றுந் தெரியாதோ?” ‘தீபாவளியா? திருத்தார்த் திகைநாளா? கோபாவே சத்தில் கொளுத்த இது கூடலா? முற்றுகையும் இல்லை, மூண்டபெரும் Gl umtrfñasib68bavj எற்றுக்கப் பாநம் நகரம் எரிகிறது?
நள்ளிரவு, கும்மிருட்டு,தாட்டிலே தேர்தல் எனில் சொல்லி வைத்தாற் போலத்ரிர்என்றெரிகிறதே!
பாதுகாப்புக் காகப் படைகள் குவிந்திருக்கும் போதுதீப் பற்றும் புதினம் நடக்கிறதே! எங்கள் நகரேன் எரியுண்டு போகிறது? உங்களுக்கு - சத்தியமா - ஒன்றும் தெரியாதோ?" "பற்றி எரிவது யாழ்ப்பாண நக்ரமல்ல பெற்ற வயிறுந்தான் - பேசா திருமகனே"
-மரணத்துள் வாழ்வோம், 1985
வடக்கிருத்தல் ; : 69
சோ.பத்மநாதன்

Page 47
இனவாதம்
இனவாத விதையிங்கு யார்தூவினார்கள்?
எரியென்றும் உடையென்றும் யார் ஏவினார்கள்? சினமான செந்தீயை யார்மூட்டினார்கள்?
திருநாட்ட்ை எரியூட்டி யார்காட்டினார்கள்?
வடக்கிருத்தல் 70
Gen. பத்மநாதன்
 

பயிர், வீடு, பசு, மாடு, பனை, வேலி தீயும்
பலகால சேமிப்புப் பறி போகக் கூடும்
கலிகால நமன் வானில் ஹெலிகொப்ரர் ஏறும்
கண்மூடித்தனமாக சன்னங்கள் தூவும்!
விவசாயி வயலோடு உரமாக நேரும் - மீ
னவனாவி கடல்மீதில் படகோடு போகும்
தொழிலாளி உடல், ஆலை தெருவோரம் சாயும்
துயரான கதை நாளும் அரங்கேறலாகும்.
வழிபாடு செயவந்த அடியார்கள் வீழ்வர்
மணி, தேர், சப்பறம், கோயில், மடம் தீயில் மூழ்கும்
குருமாரென் றாலென்ன? முதியோரென் றாலென்
கொலைகாரர் நமதாவி பலி கேட்கும் போது?
போராயின் போரென்றோர் புதுவேதம் ஒத
புரியாது வெறிகொண்டு சனம் மாறி மோத வீராதிவீரர் செய் வேளாண்மை இன்று
விளைச்சல்கண்டறுக்கின்ற கருஞ்சட்டைக் கூட்டம்!
சுழற்காற்றைப் பயிர்செய்து கண்ணீரைப் பாய்ச்சி,
சுற்றிவரப் பகைமையெனும் முள்வேலி கட்டி, புயற்காற்றை அறுவடைசெய் புதியகமக் க்ாரர் "பொலிபொலி யென்றிடும் ஒலம்
'புவத் இடும்வ் வோலம்!
வடக்கிருத்தல் *71
சோ.பத்மநாதன்

Page 48
(அ)லட்சியம்
வீட்டில், வீதியில், கோயிலின் வாசலில்
வேலை பார்க்கும் இடத்தில், பயணத்தில், காட்டில், கடலிலும் காலன்றன் தூதுவர்
காத்திருப்பது கண்டு நடுங்கவா? வேட் டின் ஒலிகளும் கண்ணிவெடிகளும்
விண்ணிலே ஹெலி கொப்ரர் ஒலிகளும் கேட்டும் "லங்கா புவத் தரும் செய்திகள்
கேட்டும், கண்கள் உறங்குதல் கூடுமோ?
வடக்கிருத்தல் 72
சோ.பத்மநாதன்
 
 
 

கெட்டும் பட்டணம் போ’ என்று சொல்வது
கேட்டதால் சென்ற மாதத்தில் ஓர்சனி
"பட்டுப் பட பட பட்" என வான்வழி
பாயும் குண்டுக் கஞ்சி யொதுங்கவோ,
ஒட்டவோ வகையின்றித்தவித்த நான்
ஒடவும் வழியின்றித் திகைத்ததால்
"சுட்டும் பட்டணம்போ’ ஓர் புதுமொழி
சொல்லு வேன் யாழ்ப்பாணத்தனுபவம்.
"கொழும்பு மிக்க அமைதியாய் உள்ளது,
கொஞ்சமும்பய மில்லை, குழப்பங்கள் எழம்ப வாய்ப்பில்லை, எத்தனை நாள்கள்தாம் இங்கிருப்பது? பீரங்கிக் குண்டுகள் விழுந்திசையினை நோக்கி இரவெலாம்
விழித்திருப்பது? விதியை விட்டுக்கைஒழுங்கை யூடு திரிவது, வீடு விட்(டு)
ஒடு கின்றது?’ என்னும் ஒரு குரல்.
"இங்கிருப்பதில் ஆபத்திருப்பதால்
இந்தியா போய் இருப்பம், குழந்தைகள் அங்கு கல்வி கற்பது நல்லது,
ஆங்கிலத்திலே போதனை -ஆதலால் எங்கும் வேலை கிடைக்கும் வாய்ப் புள்ளது
என்ன சொல்லுறன் கேக்குதே? கொஞ்சமும் உங்களுக்கிதில் அக்கறை இல்லையோ?
ஒழுங்கு செய்யுங்கள் என்னும் ஒருகுரல்.
73
Gen. Ll25 மநாதன்

Page 49
'வீடியோப்படம், மினிசினி மாக்களின்
விளைச்சல் காணும் சமூகம் விடுதலை நாடுகின்ற அதிசயம் இங்குதான்
நடக்கு(து) எங்கள் சந்தையில் மாப்பிள்ளை தேடி அங்கோர் தரகர் முயற்சியால்
சீதனம்சரி வந்துபின் மாலைகள் சூடுகின்ற திருமண வாணிபம்
'சூடு கண்ட தன் பின்னரும் மாறிற்றோ?
வீடு, வாசல், நகை, காணிபூமிகள்,
வேறு சொத்(து) அசைவுள்ள, இல்லாதவை ஈடு வைத்து மகனை அழைத்து.'இந்தா
இதற்கு மேல் ஏதும் என்னிடம் இல்லை, நீ
சூடு பட்டிற வாதே படிப்பில்லை,
தொழிலில் லையேனும் கவலையும் இனியிலை
ஒடு ஜேர்மனி, சவுதி, ஒமான், பிரான்ஸ்
இத்தாலி போ கனடா ஹொலன்ட் இல்லையா?*
சர்வதேச அகதிகளாவதோ .
தமிழர் லட்சியம்? ஈழத் தமிழினம். உய்ய, மண்ணை மானத்தைக் காக்க, நாம்
ஒரு பெரும் போர் தொடுத்துத் தியாகங்கள் செய்வதெல்லாம் யாருக்கு? நம்மவர்
தேடு கின்ற விடுதலை பேர்லினில் பெய் பனிக்குள் இருந்து பிறக்குமோ?
பிறந்த மண்ணையும் நெஞ்சம் மறக்குமே.
-ஈழமுரசு மலர்(1986)
வடக்கிருத்தல் 74
Gær. பத்மநாதன்
 
 

இன்னும் எத்தனை எத்தனை காலமோ!
சொந்த மண்பன் னிரண்டு பரப்பையும்
சுப்பர் கொத்திப் புரட்டி எடுத்தொரு விந்தை செய்கிறார், வெய்யிலிற் காய்கிறார்,
வியர்வை சிந்திப்பொன் விளைத்து மகிழ்கிறார்! அந்தக் காணியை ஈடுவைத் தைம்பதி
னாயிரத்தை ஓர் ஏஜென்டின் கையிலே
தந்துவிட்டாறுமாதம் அலைகிறான்
தனயன், தாயோ கண்ணிர் வடிக்கிறாள்.
சோ.பத்மநாதன்

Page 50
கராச்சி பம்பாய் வீதியில் நம்மவர்
கால்கடுக்க அலைந்து திரிகிறார் இராப்ப கல்கிடையாதவர், கைவிட்ட
ஏஜென்டின் முகம் கண்டறியாதவர் வராத டிக்கெட்டின் வழியின் மேலாறு
மாதமாய் விழிவைத்துத் தவஞ் செயும் சராசரிகளைச் சவுக்கால் அடித்தெங்கள்
சாயம் போவதைத் தடுப்பதெக் காலமோ?
கனடா நாட்டின் கடலிலே உயிர்
காக்கும் வள்ளங்கள் மீதுமி தக்குதாம் எனதினம்எனும் செய்தியை அன்றிரா
இந்தியாவின் வானொலி கூறவும் மனது சஞ்சலம் கொண்டது, பின்பல
வாறு விளக்கங்கள் வந்தன வானிலே! குனிகிறேன் தலை, தமிழன் உலகெலாம்
குலைகிறான்பொருள் ஆசையால் அலைகிறான்!
மருந்து மாயங்கள் செய்வதில் நந்தமிழ்
மக்கள் வல்லவர் என்றுமாற் றார்சொல
உரிந்து போகுமென் ஆடைநம் சாயமிவ்
வுலகெலாம் போகு தென்பதை நிச்சயம் தெரிந்த பின்னும்எம் மினமென்ன செய்யுது?
செல்வ மெலாம் தொலைக்குது, விற்குது, வரிந்து கட்டிவிண்ணுரர்தியில் ஏறு(து) -எம் மானமும் கப்பலேறுது கூடவே!
சோ.பத்மநாதன்
 
 
 

அச்சம் யாவும் அகன்றிட எங்கள(து)
ஆண்மை வீறுகள் கொண்டு விழித்திட உச்சிமீது ஷெல் வீழ்ந்திடலாம்என
ஒடி ஒடி உலைதல் ஒழிந்திட பிச்சை கேட்டுல கெங்கும் அலைகின்ற
பேதை மைஅடி யோடு தொலைந்திட மிச்சமான தமிழனின் மானத்தை
மீட்க எத்தனை எத்தனை காலமோ!
s தேடுதல் இங்கோர் இலட்சியம்
கடலைத் தாண்டுதல் கூடஇலட்சியம் வீசுகாற்றையும் கட்டிப் போட்டொரு
பிஸ்னெஸ் செய்தலும் இன்னுமோர் இலட்சியம் ஊசியின்முனை நுழையக் கூடிய
ஒவ்வோர் நாட்டையும் தேடி நுழைந்து போய் ஒசி வாழ்க்கை வாழ்ந்திடுதல் ஆகிய
உயர்ந்த லட்சியம் தமிழருக் குள!
பொன்னும் பொய்ப்பொருளும்புது மாதிரி
போகமும்தரு வாழ்வினில் மோகமாய் என்னினத்தவர் மேலைநாடெங்கும்கை
ஏந்தி நிற்பதிங் கெத்தனை காலமோ? முன்னருற்றதோர் புகழெனுங் கனவினுள்
மூழ்கு வார்சில தமிழர் இப்பொழுதும்தம் கண்திறந் துண்மை நிலைமையை நேரிலே
காண எத்தனை எத்தனை காலமோ?
கவியரங்கம், நல்லூர்
வடக்கிருத்தல் 77
சோ.பத்மநாதன்

Page 51
இந்துமா கடலைக் கேள்!
பெருகிவரும் மாவலியின் நீரைக் கொண்டு
பின்மாரி முன்மாரி எல்லாம் செய்து முருகனுக்கு விழாவெடுத்துப் பொங்கலிட்டு
முழுநாளும் நோன்பிருந்து தீமிதிக்கும் வெருகல், வளம் கொழிக்கும் கிளி வெட்டி, சம்பூர்,
சேனையூர், தோப்பூர், மல் லிகைத்தீவு -எல்லாம் கருகியெழும் புகைகண்டு கலங்கும் நெஞ்சும்!
கட்டைபநிச் சான்எங்கும் காலன் ஒலம்!
வடக்கிருத்தல் 78
சோ.பத்மந ாதன்
 

செம்பவளச் சம்பாவைப் பொங்கி, அம்மான்
சேனையிலே சுட்டமுயற் கறியு மாக்கி தம்ப்ரது பட்டியிலே போட்ட கட்டித்
தயிரோடு தேன்கலந்து மேலே உண்டு கொம்புவிளையாட்டுவட மோடிக் கூத்து
கோலாட்டம் கும்மிகர கங்கள்காணும் தம்பலகாமத்துவயல் திடல்கள்தோறும் சாக்காடு குடியிருப்ப தாகக்கேள்வி
மலையகமும் மன்னாரும் வன்னி மண்ணும்
மட்டுநகர், கிளிநொச்சி முல்லைத்தீவும்
அலையுடுத்த திருமலையும் ஆறுபாயும்
அழகிருக்கும் மூதூரும் கலை கல்விக்கு
நிலையமென விளங்குயாழ்ப்பாணம் எங்கும்
நெருப்பிட்ட கூட்டத்தை, ஏவிவிட்டுக்
கொலை புரியப் பார்த்திருக்கும் -9! T60)éF - செய்யும்
கொடுமைகளைக் கண்டுள்ளம் கொதிக்கின்றோம் நாம்.
எந்தவழி தரைகடல், வான் இவற்றினூடு
எமைநோக்கி யமன் வருவான் என்று பார்த்து நொந்தவர்கள் நாங்கள், படுந் துன்பம் ஒவ்வோர்
நொடியும் உள, கொடியர் இடுந் தீயில் நின்று வெந்தவர்கள் நாங்கள்! அநியாயமாக
வெட்டுண்டும் சுடுபட்டும் வீழ்ந்தோர் நாங்கள்! இந்துமா கடலைக் கேள், காற்றைக் கேள், இங்கு
எறிக்கின்ற வெயிலைக் கேள், எல்லாம் சொல்லும்!
வடக்கிருத்தல் 79
Gm பத்மநாதன்

Page 52
தேர(ர்) வாதம் செழித்த மண்
வான கத்தொரு சோதியெழுந்தது
மண்டி யிட்டு வணங்குவன் என்றெலாம் நானகத்து நினைப்பதன் முன்அட
நாசமாய்ப் போன ஷெல்லாய் விழுந்தது ஊனகத்தைச் சிதைத்திட வல்லது Φ
உயிரை ஆங்கு குடித்திட வல்லது சேனை கொண்டர சாண்டிடு கின்றதோர்
தேசம் எங்குபோய் நீதி நாம் கேட்பது?
அடுப்பை ஊதக் குனிகையில் வீழலாம்
அன்பு கொண்ட இல்லாளின் தலையிலே உடுப்பைத் தோய்த்து வெயிலில் விரிக்கையில்
ஒன்றுநம் கழுத்தைப் பதம் பார்க்கலாம் படுக்கையில் கண்ணயர்கையில் - இன்றிரா
பாவி ஏவிய ஷெல்விழக் கூடுமாம் தடுப்ப தெப்படி? தப்புவதெப்படி?
சர்வ வல்லமை படைத்தஷெல் வீழ்கையில்!
ஆசுப் பத்திரிக் கட்டிலில் நோயினால்
அவதிப்பட் டுசல் ஆடும் உயிரையும் மூசி வீழுமோர் ஷெல்நொடிப் பொழுதிலே
முத்தி சேர்த்திடும் வல்லமை பெற்றது! நேஸ"ம் டொக்ரரும் பரகதி போகலாம்
நெஞ்சதிர்ந்தவர் ஆறுபேர் சாகலாம் நீசர் ஆட்சி செலுத்துமிந் நாட்டிலே
நித்தமும் நெருப் பாம்சுடு காட்டிலே!
வடக்கிருத்தல்
சோ.பத்மநாதன்
 

பள்ளி செல்லும் சிறுவர் சிறுமியர்
பல்லி லாத கிழடுகள் கருவினில்
உள்ளிருக்கும் குழவிகள் நோய்நொடி
உற்று வார்ட்டில் கிடக்குமப் பாவிகள்
ஷெல்விழுந்து சிதறுவதா? இந்தத்
தேச மாள்பவர் பைத்தியகாரரா?
கொள்ளி வைக்கவும் ஆளிலாப் பூமியில்
கோட்டை, கொத்தளம், குண்டடி, ஷெல்லடி?
ஈவிரக்கமில் லாத கொடியவர்
எங்கள் மண்ணில்ஓர் கோட்டை புகுந்தவர் சாவிளைச்சல்கண் டோம்அஞ்சு பத்தென சாதனைகள் 'புவத்தில் விரிப்பவர் காவ லாய்நின்று பயிரையே மேய்கின்ற காக்கி ஆடை புனைவிடு காலிகள் ஏவு ஷெல்களால் செத்து மடிவமா?
ஏதும் செய்க லாற்றாது முடிவமா?
வல்லு வெட்டித் துறையில் தொடங்கிய
மனித வேட்டையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை யேகத்தி வாள் - இவை உலகிலே
ஏந்த வல்ல(து) இலங்கையின் ராணுவம் (சொல்ல வேணும்) அகிம்சை உலகெலாம்
துலங்க வேணும் எனவேதுப் பாக்கியால் கொல்வதோடொப் பிடுகையில் கத்திமேல்
கொள்கை பாருங்கள், இப்ப விளங்குதே?
‘ஆலயங்களுள் போயிருப் பீரெம(து)
அருமை மக்களே உங்கள் நலத்துக்கு
சால அவ்விடம் தக்கது - சத்தியம்’
சாற்றும் தானே முளைத்ததோர் வானொலி
வடக்கிருத்தல் 8.
சோ.பத்மநாதன்

Page 53
காலை ஏழு மணிக்குமுன் பெண்டுகள் கையி லேகோல் ஏந்து கிழடுகள்
பாலர், நோய் - பிணியுற்றவர் என்றெலாம்
படையெடுத்தனர் கோயில்கள் நோக்கியே!
வண்ணை யிற்சிவனார்திருக் கோயில், அல்
வாயில் அம்பாள், சுதுமலை ஆலயம் கன்னி மேரிதேவாலயம் என்றெலாம்
கதியி ழந்தவர் தஞ்சமடைந்தனர்! முன்னரேசெய்த சூழ்ச்சி உணர்கிலார்
முடிந்தனர் குண்டு வீச்சாற் கருகினர்! என்ன தேசமோ? என்னதான் ஆட்சியோ!
எங்கள் கைவிலங் கென்றுதூளாகுமோ?
கத்தி வாள் கிறிஸ் ஏந்திய பேய்களும்
கண்ட கோடரி தாங்கிய பேய்களும் குத்துவாள், பொல், உலக்கை - இவையெலாம்
கொண்டுலா விடும் பேய்களும் ஈற்றிலே முத்து மாலைகள், தாலிகள், சங்கிலி மோதிரம், கடிகாரம் எனப்பல சுத்தமான பவுணில் அமைந்தவை
சூடுமாம்! தத்தம் ஊருக்கு மீளுமாம்!
பந்த மேந்தியே பாய்கிற பேய்களும்
பணத்தை வாரிச் சுருட்டிடும் பேய்களும் வெந்த வீட்டிற் பிடுங்கி யெடுப்பதே
மிச்சம் என்று வெளிக்கிடும் பேய்களும் சந்தி, கோபுரம், பற்றை, வயல், கல்விச்
சாலை எங்கணும் குடிகொள்ளு தேயிங்கு
சோ.பத்மநாதன்
 

வந்து மந்திரம் சொல்பவர் ரார்? பெரும்
மடைப்பரப்பிப் பேய்ஒட்டவல் லார் - எவர்?
பத்து லட்சமாம் கட்டிய வீடுகள்
பார னைத்தும் புகழுது பாருங்கள்
ஒத்து வானொலி வாஹினி உளறுமாம்
ஊர்திமீது பவனி - அமளியாம்
“சித்து வேலையா? அற்புதம் அல்லவோ செய்யுதிங்கு பூரீலங்கா அம்மவோ?
புத்த தர்மம் செழிக்குமந் நாட்டிலே
புதின மல்லவே??? உலகம் மலைக்குடிாம்
வீடு கட்டுமோர் சாதனைக் கென்றொரு
விழா எடுத்து மகிழுதல் தெற்கிலே ஈடு வைத்துக் கடன்பட்டுக் கட்டிய
எங்கள் வீடுகள் எல்லாம்? ஐயையகோ காடை யர்படை இடிக்குதாம் அதற்கொரு
காக்கி, யூனிபோம், குஞ்சங்கள், சம்பளத் தோடுநூறு சலுகைகள் உள்ளவாம்
உத்தமர் - நவ புத்தர்தம் ஆட்சியில்.
நாலு லட்சம் அகதிகள் யாழ்க்குடா
நாட்டிலே தமிழ்நாடு போயுள்ளவர் மேலு மொன்றரை லட்சம் தமிழராம்
மேற்கு நாடுகள் நாலைந்தைத் தாங்குமாம் காலி, பூஸ்ா, வெலிக்கடை என்றெலாம்
காய்பவர் தொகை ஆயிரம் ஆயிரம் சீலம், தர்மம், மாபோதி, ‘பிரித்’ எனும்
தேர(ர்) வாதம் செழித்ததிம் மண்ணடா
வடக்கிருத்தல் 83
சோ.பத்மநாதன்

Page 54
வடக்கிருத்தல்
எந்த வீடு தரைமட்ட மானதோ
எந்தப் பாலம் தகர்ந்து விழுந்ததோ எந்த வீதியில் கண்ணி வெடித்ததோ
எந்த ஊரின்(று) எரியுண்டு போகுதோ எந்தச் சூட்டுக் களத்தில் உழவர்தம்
எலும்புக் கூடுகள் குவிந்து கிடக்குமோ எந்த நூலகம் தீயில் முழுகுதோ
எந்த மாணவன் இறந்து கிடப்பனோ.
எந்தப் பெண்கைம்பெண் ஆகிய செய்தியோ
எந்தப் பிள்ளை அநாதையாகின்றதோ எந்தத் தாயின் புலம்பலும் விம்மலும்
இரவினூடுவந் திதயம் பிளக்குமோ எந்தப் பெண்ணின் கற்பைப் பறித்தவன் எந்தக் காமுகன்? எங்கு முறையிட சொந்த மண்ணிலும் இத்தனை சோகமா சூரனார் அர(சு) இங்கு நடக்குதோ
வடக்கிருத்தல் 84
சோ.பத்மநாதன்
 

படகிலே வந்த பச்சைக் குருத்துத்தாய்
பார்த்திருக்கக் கொலை செயப் பட்டதாம் கடலிலே பாது காப்பில்லை; பஸ்வரு
காட்டிலும் பாது காப்பில்லை; தமிழர்தம் உடைமைக்குப் பாது காப்பில்லை கடமைசெய் ஊழியர்க் கேது காவலிங்கே ஐயா? தொடருமிந்தக் கொடுமைகள் என்றுதான்
தொலையுமோ எங்கள் விலங்கு தூளாகுமோ.
தாயின் தோளில் கிடந்த குழந்தையின்
தலையினூடொரு குண்டு புகுந்ததாம் வீரந் தானிது நிச்சயம் நாங்கள் ஒர்
விழாவெடுக்கலாம் விருதுவழங்கலாம் ஆரும் வீழலாம், விழின் "பயங்கர
ஆள் என்றிலங்கா புவத் சொன்னதாகவே கூவும் வானொலி உண்மை நெடுந்துயில்
கொள்ளும் பொய்யரசாட்சி செலுத்துமாம்.
தாயுன் மங்கல நாணை அறுத்தவன்
சகடை சப்பறம் தேர்கள் எரித்தவன்கோயில் வாசலில் கொலைகள் புரிந்தவன்
கும்பிட்டாள்ஒரு பெண்ணையும் சுட்டவன்தீயை யிட்டுன்றன் தீவெலாம் தீய்த்தவன் தெய்வ சந்நிதி யைச்சீர் அழித்தவன் யாவன்? ஏவிய பாதகன் யாவனோ?
யாவன் ஆள்பவன்? யாவன் கொல் ஆண்டவன்?
-அமிர்தகங்கை, 1986
வடக்கிருத்தல் 85
சோ.பத்மநாதன்

Page 55
ஏன்?
நிழல் சொரியும் மரங்களெலாம் நெருப்பள்ளிச் சொரியும் நினைந்து செயுங் கொடுமைகளால் நெஞ்சமெலாம் எரியும் புயல் அடித்த ஊராகி எம் வாழ்வு குலையும் புலம்புதலும் விம்முதலும் மொழியாகி உலவும்
கடல்குருதி யாய்க்குமுறும் காற்றோலம் இடும், நம் கனவுகளும் நனவுகளும் இழவுகளாய் முடியும் உடல் சிதறும் வேளையிலே உற்றார் ஆர்? உறவார்?
உடைமைகள் ஏன்? வீடுகளேன்? ஊர்தேசம் ஏன்? ஏன்?
பிஞ்சுகளும் பூக்களும் காய்களும் உதிரும் வண்ணம் பேய்க்காற்றுப் போட்டுலுப்பும் மரத்தை இரவிரவாய் குஞ்சுகுரு மான்களெலாம் இடமின்றிப் பறக்கும் கும்மிருட்டு, மழைக்குளிரில் கொடுகுமுடல் நடுங்கும்
குண்டுகளை வீடுகள்மேல் மாடுகள்மேல் குழந்தை குட்டிகள்மேல் கிழடுகள்மேல் பொழிபவனும் கோனாம் குண்டர்களை ஏவியரசாளுவதற் கிங்கே
குடைஆல வட்டம் செங் கோல் கொடிகள் ஏனாம்?
அடைபட்ட சிறைச்சுவர்க்கு நடுவில் எழும் ஒலம் அரசோச்சும் கொடுங்கோலர் துயில்கலைக்கலாமோ? உடைபட்ட பாலங்கள் புதுப்பிக்க லாம், நட்(பு)
உறவுப்பாலம் பிளந்தால் ஒட்டவைக்க லாமோ?
வடக்கிருத்தல் 86
சோ.பத்மநாதன்
 

உண்டுகளித் திருப்போர்கள் பசித்தோர்க்குத் தியாக உபதேசம் செய்வார்கள் படுகுழிக்கு நாட்டைக் கொண்டு செல்வோர் "மக்கள்அரசாளுவதில் சிரமம்
கூட?" எனப் புதியதொரு கொள்கைவகுப் பார்கள்.
கடல்வானம் நிலமெல்லாம் காலனிடும் ஒலம் 'கடைவிரித்தேன் வாருங்கள் மலிவுவிலை உயிர்கள் எதுவேண்டும்? மொத்தமா? சில்லறையா? கடனா? எவ்விடத்தும் எந்நாளும் 'டிலிவறி செய்திடுவேன்'
வடக்கினிலும் கிழக்கினிலும்,அலுவலகம் நூறு மரணங்கள் பதிவுசெய்ய நிறுவிடுதல் நன்று சுடக்கருதி சுடுகாடு போவதுவிண் சிரமம் சூழலெலாம் பிணவாடை, பாடல்கள்ஒப் பாரி,
சிதறுண்ணும் மனிதஉடல் தமிழன்றன் உடலா? சிங்களவன் தன்னுடலா? என்பதுமோர் ஆய்வா? பதறுபவள் தமிழ்த் தாயா? சிங்களத்தி தானா?
பார்க்கின்ற பார்வையிலும் ஏன் ஈரம் இல்லை?
யார்செய்த வேளாண்மை? யார்வெட்டு வோர்கள்? யார்தட்ட பனைவடலி? யார்தறிக்கின்றார்கள்? யார்கையில் கொடுவாள்கள்? யார்கை கும் பிடுங்கை?
யார்கொல்லப்படுவோர்கள், யார்கொன்று மகிழ்வோர்?
யார் வயலை உழுகிறவன்? யார்விளைச்சல் பெறுவோன்? யார்தறியில் நெய்கிறவன்? யாருடுத்து மகிழ்வோன்? யார் சேனை நடத்துபவன்? யார்போரில் மடிவோன்? யார்விற்ற ஆயுதங்கள்? யார்சுட்டு மகிழ்வோர்?
வடக்கிருத்தல் 87
சோ.பத்மநாதன்

Page 56
யார் சிவிகை ஊருவது? யார்சுமக்கும் ஆட்கள்? யார்நாட்டை ஆளுவது? யார் ஆளப்படுவோர்? யார்கையில் துப்பாக்கி? யாருடலில் ரவைகள்?
யார்சிறையில் வாடுபவர்? யார்கையில் திறப்பு?
யாருக்கு நந்தவனம்? யாருக்குக் காடு? யாருக்கு மலர்மஞ்சம்? யாருக்கு முட்கள்? யாருக்கு குளிரூட்டும் அறை? வெய்யில் யார்க்கு? யாருக்குத் தாவாரம்? யாருக்குப் பரிகை?
யாருக்குச் சுகபோகம்? யாருக்குச் சுமைகள்? யாருக்கு மண்குடிசை? யாருக்கு மாடம்? யாருக்குச் சமிபாடு குறைவு? பசி யார்க்கு? யாருக்கு மோஹனம்? யார் யாருக்கு முஹாரி?
யார்கையில் வானொலிவாஹினிஏடு வகைகள்? யார்வாயில் ஊதுகுழல்? ஒத்தூதுபவர்ார்?
யார்செய்த பாவம் பொய் புரட்(டு) எந்தநாளும் அலைபாய்ந்து செவிமீதில் விழிமீதில் மோதல்?
வினாக்கள்தாம் எத்தனை? ஏன்விடை கிடைக்கவில்லை? வெம்போர்மூண் டெத்தனைநாள்? விடுதலை ஏன் இல்லை? கனாக் காணும் புதியயுகம் ஏன் உதிக்கவில்லை? கண்ணிரும் கம்பலையும் ஏன் ஒயவில்லை?
தாயகம் 1986
சோ.பத்மநாதன்
 
 
 
 

சமகாலம் ஐந்து
U6)6.
நீக்கமற ஓங்கி நிமிர்ந்த பனங்கூடல் தாக்குதலில்
காக்கும் தலை.
நாய்கள்
அந்நாளில் ஊரைவிட்டு ஓடாதிருந்து மதிப்பில் உயர்ந்தீர் இன்றும் வேற்றரவம் கேட்டால் விடாது குரைக்கின்றீர் எமக்கில்லா, மானஉணர்வு
உமக்கு, வந்தவிதம் எந்தவிதம்?
சுயநலம்
உங்கள் ஊர்திகள்
நம் ஊரைக் கடந்து செல்லும்
ஒவ்வொரு கணமும்
வடக்கிருத்தல் 89
சோ.பத்மநாதன்

Page 57
உங்களுக்காக
நான் பிராத்திக்கின்றேன் உங்களுக்காகவா? இல்லை
எனக்காகவுந்தான்.
முகங்கள்
என்ன பாவம் செய்தோர் இவர்கள் ஏக்கம், அச்சம், கலக்கம் எல்லாம் தேக்கிய முகங்கள் தெருவோரத்து அரண்களைத் தாண்டிப் போகையில் - வருகையில் காலையும் மாலையும் காணும் முகங்கள் என்ன பாவம் செய்தோர் இவர்கள் பிள்ளைகள் கதியை எண்ணி, எண்ணித் துடிக்கும் தாயராம் சோக சித்திரங்கள்.
வடக்கிருத்தல் 90
சோ.பத்மநாதன்
 

பிரார்த்தனை
பள்ளிக்குப் போன பாலர் வரும் வேளை அயலில் வெடிச்சத்தம், ஆறுபேர் வீழ்ந்தனராம் கேட்டுக் கலங்கிப் பதைத்துத் துடிதுடித்து வீதி வழியோடி விரைந்து போய் பார்க்கையில்
'அப்பாடா' மாண்டவர்கள் என் பிள்ளைகள் இல்ல, என ஆறுதல் பெருமூச்சு விடும் அற்பத்தனம் அடியோடு போக, அருள் தாரும் ஆண்டவரே.
மல்லிகை, ஜூன் 1989
வடக்கிருத்தல் 91
சோ.பத்மநாதன்

Page 58
சமகாலம் அஞ்சு
நரை
எட்டிப் பார்த்தபோது நான்
அஞ்சினேன், அருவருப்படைந்தேன் பகலிரவாய் உனையொழிக்கப் பாடுபட்டேன், ஆனால்
நீயோ,
என்னைக்
கடவைகளிலும் காவற் கூடங்களிலுபட காத்துவருகிறாய்.
தூக்குமரம்
'கோட்டை பார்
கொத்தளம் பார்’
அன்றுஆசிரியர் சொல்லிவர அண்ணாந்து பார்த்தேன் நான் தூக்கு மரங்கண்டு துணுக்குற்றது நெஞ்சு
வடக்கிருத்தல் 92
சோ.பத்மநாதன்
 
 

தொங்கும் மனித உடல் தோன்றியது கனவில். இன்றோ
மின்கம்பம் தூக்குமரமாகிய விந்தை
காண உறங்காதென் கண்.
மலிவு விற்பனை
லாபாய், லாபாய் மனித உயிரெலாம் மலிவு விற்பனை மொத்தமாகவும் சில்லறையாகவும் மனித உயிரிங்கு மலிவு விற்பனை தெருவு தோறும் வாயில் தோறும் தினமும் எங்கள் டிலிவறி நடக்கும் லாபாய், லாபாய்
லாபாய், லாபாய்
படைப்பாளிகள்
கட்டி எழுப்புவதற்கு கனபேர் முன்வந்துள்ளார் மட்டில் அடங்கா
மகிழ்ச்சி நமக்கெல்லாம்
வடக்கிருத்தல் 93
சோ.பத்மநாதன்

Page 59
உற்றுப் பார்க்கின்றேன் ஒகோ, இவையெல்லாம் பார்த்த முகங்கள் பழக்கம் எனக்கு
இவர்கள் இடித்துத் தகர்த்தவர்கள் இன்றெமது திருநாட்டைக் கட்டி எழுப்புவது காண்.
வீரம்
அப்புவுக்கு
வீரம் அதிகம்
அறு பதிலும்
எப்படித் தீக்கக்க இவர்பேசுகின்றார்
ஆம்,
போர்முனைக்குக் கூடப் போய்விடுவார் போலிருக்கே! மறந்திட்டன், மூத்தமகன் ஜேர்மனியிலையாம் மற்றொருவன் கனடாவில் மகள் நோர்வே போய்விட்டாள் பொக்கற் குறிப்பு பொருத்தம் சில பார்க்க அப்புவுக்கு வீரம் அதிகம் அறுபதிலும் கொப்புளிக்கு தென்ன குறை!
- மல்லிகை, 1991.
வடக்கிருத்தல் 94
சோ.பத்மநாதன்
 

அமைதிப்படையோடு வந்தீரோ, தம்பி
அரிசிப் பொதியோடும் வந்தீரோ தம்பி அரிய தமிழீழம் கண்டீரோ தம்பி
பருப்புப் பொதியோடும் வுந்தீரோ தம்பி பருத்தித் துறையூரும் கண்டீரோ தம்பி
சீனிப் பொதியோடும் வந்தீரோ தம்பி தெல்லிப் பழையூரும் கண்டீரோ தம்பி
எண்ணெய்ப் பொதியோடும் வந்தீரோ தம்பி இணுவிற் பதியூரும் கண்டீரோ தம்பி
வடக்கிருத்தல் 95

Page 60
ரின்மீன் பொதியோடும் வந்தீரோ தம்பி திருகோண மலையூரும் கண்டீரோ தம்பி
உப்புப் பொதியோடும் வந்தீரோ தம்பி உயிலங் குளத்தையும் கண்டீரோ தம்பி
மாவுப் பொதியோடும் வந்தீரோ தம்பி
மன்னார் முருங்கனும் கண்டீரோ தம்பி
புடைவைப் பொதியோடும் வந்தீரோ தம்பி புளியங் குளத்தையும் கண்டீரோ தம்பி
மருந்துப் பொதியோடும் வந்தீரோ தம்பி மட்டக் களப்பூருங் கண்டீரோ தம்பி
மருந்துப் பொதியோடும் வந்தீரோ தம்பி மருத்துவர் மூவரைக் கொன்றீரோ தம்பி
வானிற் பொதியோடும் வந்தீரோ தம்பி வன்னிப் பதிமூதூர் கண்டீரோ தம்பி
அமைதிப் படையோடு வந்தீரோ தம்பி அழிவைத் துயரத்தைத் தந்தீரோ தம்பி
அமைதிப் படையோடு வந்தீரோ தம்பி ஆப்பிட் டதையப்பிக் கொண்டீரோ தம்பி
காரைநகர்க்கம்பன் விழா, 1988
 

ஞானம்
துன்பம் கோடி சூழ மக்கள் துவண்டு போன துண்மையே தொடுத்த போரிற் கிடைத்த வெற்றி தொலைந்து போன துண்மையே அன்பராக வந்த பேர்கள் அழிவு செய்த துண்மையே அருமை நாடு எரியினாலே கருக நேர்ந்த துண்மையே.
கப்பலேறுகின்ற மக்கள் கணக்கை எண்ணிப் பார்ப்பமா? கால மாகி நாளும் வீழும் பிணத்தை எண்ணிப் பார்ப்பமா? எப்ப தானெம் தந்தை தாயர் சொந்த மண்ணில் நாமெலாம் இருகை வீசி நடப்பதாம் வெண் நிலவி லாடிக் களிப்பதாம்?
வடக்கி 97
சோ.பத்மநாதன்

Page 61
திகதி ஞாபகத் திருக்கும் பத்து, போன ஐப்பசி, ஷெல்விழுந்து ஷெல்விழுந்து சிதறுகின்ற வாழ்க்கையில் அகதியாக நாமெலாம் அலைந்த லைந்த துண்மையே அறிவு கொஞ்சம் தெளிவடைந்த துண்ணிம, உண்மை, உண்மையே.
எங்கள் வீடு எங்கள் காணி, எங்கள் வேலி எல்லைகள், எங்கள் செம்பொன், எங்கள் ஆடை, எங்கள் ரீவி, என்றெல்லாம் எங்கள் பாடு பார்ப்பதன்றி ஏதுஞ் செய்திராத நாம் எங்கள்.சொந்தம் என்று சொல்ல
ஏது மில்ல ராகினோம்
ஞானம் வெள்ளை அரசின் கீழ் இருந்து மட்டு மாவரும்? ஞானம் மோனம் மூழ்குகின்ற போது மட்டு மாவரும்? வான வீதி தானளாவ ஏவு ஷெல்கள் ராவெலாம் வந்து வீழும் அந்த வேளை வந்து கூடும் ஞானமே.
வடக்கிருத்தல் 98
சோ.பத்மநாதன்
 
 

வயிறு காய்வதின்ன தென்று பட்டுணர்ந்த ஞானமும் வசதியான படுக்கை யற்ற, வாழ்க்கை தந்த ஞானமும் உயிரை எங்கள்.கைப்பிடிக்குள் பற்றுகின்றதன்றி வே(று) ஒன்றுமில்லைக் கொண்டு போக என்று ணர்ந்த ஞானமும்
நன்மை யன்றித் தீமை யென்று சொல்லு கின்ற தாரடா? நாடு போன போக்கைக் கொஞ்ச நேர மெண்ணிப் பாரடா! தன்ன லத்தை மையமாகக் கொண்டி யங்கித் தமிழினம் தலை கவிழ்ந்து நிலை குலைந்து தத்த வித்து நிற்குது.
நூறு நூறு சாதி, நூறு N நூறு நூறு மோதல்கள்! 38° நொந்து போன எங்கள் மக்கள் ' வெந்து போன பின்னரும் G நாறுகின்ற நம்ச மூகம் வேறு பாதை நாடியே நடந்த தென்ற செய்தி காதில் விழுந்த தில்லை நாள்வரை
காரைநகர்க்கம்பன் விழாக்கவியரங்கம், 1988
வடக்கிருத்தல் 99
சோ.பத்மநாதன்

Page 62
பாலாய் நிலவு பொழிகிறது
பாலாய் நிலவு பொழிகிறது - பெளர்ணமிநாள் ஒராயிரம் நினைவு நெஞ்சில் அலைமோத. பாலாய் நிலவு பொழிகிறது.
முன்னாள் இது போல் முழுநிலவில் முற்றத்துத் தென்னைமுழுகுகையில் தென்றல் அதைத் தாலாட்டும் தூரத்தே ஊதும் சுருட்டி மிதந்து வரும் ஈர மணலில் இரு கால் புதைய நெடு நேரம் கழியும் நினைப்பே யிலாது, கடல் ஒரம் கைகோத்தே உலா வருவோம்; மேலே வான் நீல விதானம் விரிக்கும்; விண்மீன்களோ கோலம் இடும்; ஒலைக் குடிசையிலே தென்மோடி ஆட்டுவிக்கும் அண்ணாவி பாடல் உடுக்கோடு போட்டுலுப்பும் சாமப் பொழுது
பாலாய் நிலவு பொழிகிறது. திங்கள் மூன்றாகச் சிறிதும் மழையில்லை எங்கள் பயிர் பச்சை எல்லாம் கருகுகையில், வானத்தை நோக்கிக் கழுத்து மிக வலித்துப் போனதே அன்றிப் புதினம் எதுவுமில்லை
'நீர் வேணும், இந்த நிலம் தோண்டவல்ல பல ஆள் வேணும்' -கூவி அழைக்க இளைஞர் சிலர் ஆயுதங்கள் ஏந்தி வந்தார். 'நீர் கண்டலாதினி நாம் ஒயுறதே இல்லை" - ஒரு சூள் உரைத்தார்கள்.
வடக்கிருத்தல் OO
சோ.பத்மநாதன்
 

பாலாய் நிலவு பொழிகிறது - பெளர்ணமிநாள் நூறாயிரம் அலைகள் மோதி நுரை சிதற பாலாய் நிலவு பொழிகிறது.
பச்சைப் பயிரும் பயன் மரமும் தோப்புகளும் உச்சி கருகி உயிரூசல் ஆடுதல் கண்(டு) ஏங்கி மனம் நொந்திருந்தோம் எமதின்னல் தாங்கப் பொறாராய்த் தாமோடி வந்தார்கள் அண்டை அயலார் அலவாங்கொடு பாரை கொண்டு வந்தார்; சோற்றுப் பொதியும் அனுப்பி வைத்தார் 'ஆகா, இவர்கள் போல் ஆர் வருவார்' என்றுருகி வீதியெலாம் வாழை நட்டுத் தோரணமும் தொங்கவிட்டு வாசல் தொறும் பூரண கும்பம்முறை யாக வைத்து மாலை மரியாதை செய்து வரவேற்றோம்! வானத்திருந்தமரர் வந்தது போல் பூரித்து மோனத்திருந்தோம் -முழுசாய் இரு மாதம்! ஊர்திகளில் ஏற்றி ஊர்வலங்கள் செய்வித்தோம்!
பார் முழுதும் பார்க்கப் பவனி பல வந்தோம்!
பாலாய் நிலவு பொழிகிறது - பெளர்ணமி நாள்.
அந்தரத்துத் தேவர் ஒருநாள் அசுரர்களாய்த் தொந்தரவு செய்யத் தொடங்கத் துணுக்குற்றோம் நாடொன்று கேட்ட தமிழர் குடியிருக்க வீடொன்று மில்லாமல் ஷெல்லாய் விதைத்தார்கள் ஆடு பலி கோழி பலி ஐயோ அணிகலனும் வீடும் பலியாய்க் கொடுத்து விதிர் விதிர்த்தோம் நாடு புகுந்தவர்கள் நாளாக நாளாக வீடு புகுந்தெங்கள் மானம் விலை கேட்டார்
பத்மநாதன்

Page 63
தண்ணீருக்காகத் தவமிருந்த மக்களைக் கண்ணிர்க் கடலாட விட்டுக் கதையளந்தார்! நீர் காண முன்பு முயன்ற இளைஞர்களை ஊர் தோறும் தேடி உழக்கி வதைத்தார்கள்! பொய்யை மெய்யாகப் புனையும் முயற்சியிலே வையம் முழுதும் வலம் வந்து பார்த்தார்கள் அசுரர்களை ஏவி அநியாயம் செய்வித்தார் நிசியில் கொலை களவு நிட்டுரம், அம்மம்மா!
'மூன்றாம்பிறை நம் முருங்கை மரத்தடியில் தோன்றுது, போய்க்கூடித் தொழுகை நடத்துங்கள்’ நாலாம் பிறை கண்டு நாய் படாப் பாடு பட்டோம் ஒலமிட்டோம் கண்ணிர் உகுத்தோம், ஒரு நாளில் சூறாவளியால் சுழன்று முருங்கை மரம் பாற, நமது பகைவர் மறைந்தார்கள்! " மீண்டும் இளைஞர் மிடுக்காய்த் தொடங்கினர் தோண்ட, ஒரு சிறிதும் சோம்பல் அறியாதார் ஆழத்தே பாதை பிளக்கு மொலி அவ்வப்போ(து) ஈழம் முழுதும் எதிரொலித்துக் கொண்டிருக்கஉண்ட களையில் உறக்கம் கலையுதென மிண்டிச் சில பேர் விசனம் அடைந்தொன்றுகூடிஒரு திட்டம் கொண்டு வந்தார், நம்மையிவர் மீறி இது செய்ய விட்டால் வரும் மோசம்! தாமே பெறுவதுவோ தண்ணீர்? நீாமில்லாமல் ஆமோ ஒரு வாழ்(வு)? அதனை உணர வைப்போம் 'ஆற்றை மறித்தால் அவர் தம் கிணற்றில் நீர் ஊற்றும் கிடைக்காது’ - உறுதி செய்து கொண்டார்கள்.
வடக்கிருத்தல் 1O2
சோ.பத்மநாதன்
 

பச்சைப் பயிரும் பயன் மரமும் தோப்புகளும் உச்சி கருகி உயிரூசல் ஆடுவதும்
கோயில் குளங்கூடக் குண்டுக் கிலக்காகித் தீயில் கருகுவதும் கண்டிரங்கா ஜென்மங்கள் பொழிகின்ற குண்டுகளால் மக்கள் உடல் சிதறி அழிகின்ற பொல்லா அவலம் இயற்றுபவர் கொடுமைக்கு முன்னே குனிந்து நடுங்காது அடிமைத் தளையை அறுத்தெறிய வேண்டாமோ?
தென்னை பனைகள் சிதறுண்டு போனாலும் என்ன? அதனால் இடிந்து போய் உட்கார்ந்தெம் ஏலாமை சொல்ல இது நேரம் அல்ல; இன்று பாலாய் நிலவு பொழிகிறது - பெளர்ணமிநாள்
மீண்டும் எமது நிலத்தில் பனை வடலி தோன்றி நிமிர்க, துயரம் பொடிபடுக மீண்டும் அண்ணாவி முழக்கும் உடுக்கின் ஒலி நீண்ட இரவுப் பொழுதில் நிகழட்டும்! ஊதும் குழல் பெய் சுருட்டி இனியிரண்டு காதும் அமுதம் பொழிக! கடலோரம் ஈர மணலில் இனி நாம் நடக்கலாம்
பாலாய் நிலவு பொழிகிறது - பெளர்ணமிநாள்!
(யாழ் மாநகராட்சிமன்று நடத்திய பெளர்ணமிக்கவியரங்கம், 07.06.90)
வடக்கிருத்தல் 103
சோ.பத்மநாதன்

Page 64
இழப்பு
முற்றாய் எனது முகம் மறந்து போயிற்று வெற்றார வாரம் விலகிநாள் ஆயிற்று! முன்னாடி நூறுமுறைநின்று பார்த்தாலும் கண்ணாடி என்முகத்தைக் காட்ட மறுக்கிறது அந்தி பகலாய் அலங்காரம் செய்கையிலே நின்று குனிந்து நிமிர்ந்து கண்ணாடியினுள் பார்த்த முகமே பறிபோக, நானிங்கே காத்திருக்கின் றேன்இக் கடவை. பயணிபோல்,
வாயிற் புறமிருந்து வந்த குரல்கேட்டு
போய் எட்டிப் பார்த்தேன்.
புழுதி படிந்த உடை,
வாரப் படாத தலை,
வயது பத்திருக்கும்,
ஆவலாய் எல்லாம் விழியால் அளக்கின்ற
பாலன் இவள்தம்பி போலும். 'பசிக்குது’ என்ற சொல் என்னைச் சுண்டி இழுக்க,
இப்பிஞ்சுகளை இல்லந்தொறும் ஏறி
இரந்துண்ண ஏவுகிற
பெற்றோர் மேல் கோபம் பிறக்க வினவினேன்:
"கொம்மா அடுத்ததெரு, கொப்பர் பிறிதொன்றில்
இம்மாதிரி நீங்கள் எத்தனைபேர்?"
ஏசும் எனை அந்த இளசு இடைமறித்துப் பேசும், 'எம்மைப் பெற்றோர் உயிரோடில்லைப் பெரியீர்,
வடக்கி
104.
சா.பதமத ாதன்
 
 
 
 
 

மோதல் ஒன்றின் பின்வங்க முற்றுகையில் அன்னவர்கள் சாகடிக்கப்பட்டார்கள்
தப்பி நெடுந்துரம் வந்தோம், சீவிக்க வழியறியோம்' என்றுரைத்த பிஞ்சுமுகமே பிறகும் வருவதனால்
முற்றாய் எனது முகம் மறந்து போயிற்று வெற்றார வாரம் விலகிநாள் ஆயிற்று!
நோயுற் றிருக்கும் உறவினரைப் பார்க்கவென்று வாயிற் காப்போனை வணங்கி விடைபெற்று கண்டவரை எல்லாம் வழிகேட்டறிந்து கொண்டு மண்டபங்கள் மூன்று கடந்து வரும்வேளை, ஒரிளம்பெண் தோளில் உடல்சாய்த்து மற்றொருத்தி நேரெதிரில் வந்தாள், நிமிர்ந்தேன், திடுக்கிட்டேன்: பாதிக்கை இல்லை, விகார முகத் தழும்பு, ஏதுக்கும் அஞ்சா இயல்பு, இளமைக் கனவுகளை தூர ஒதுக்கிச் சுதந்திரத்துக் கானபெரும் போரில் உடலைப் புடம்போட் டெடுத்தவளின் அந்த விகார முகழே அடிக்கடியென் சிந்தனையாம் வெள்ளித் திரையில் தெரிவதனால்
முற்றாய் எனது முகம் மறந்து போயிற்று வெற்றார வாரம் விலகிநாள் ஆயிற்று.
அன்று சனிக்கிழமை, ஆலயத்தில் பக்தர்கள், சந்தையிலே சற்றுச் சனநெருக்கம், காய்கறிகள், தேங்காய், மண்ணெண்ணெய், தீப்பெட்டி, பால்மா, சோப்
வாங்க வந்தோர் எல்லாம் வழிநெடுக!
வடக்கி
சோ.பத்மநாதன்

Page 65
எங்கிருந்தோ குண்டு விமானம் குறிபார்த்து வட்டமிட அங்காடி நின்றோர் கிலிகொண்டலமந்து எங்கேனும் ஓடிப்போய்த் தப்பினால் போதுமென ஏறி, இடறி, விழுந்து, மிதியுண்டவாறு சிதறுகையில், வான முகடிடிந்த சத்தம் செவியை இரண்டுதரம் தாக்கிற்று! சூழ்ந்த புகையும், கரியும், சொரிகல்லும் ஒய்ந்த பிறகோடிப் பார்த்தேன் உருக்குலைந்த தேவாலயத்தின் படியெல்லாம் செங்குருதி, பாரச் சிலுவையொடு மீட்பர் - படிகளிலே! ஒலம், முனகல், அழுகை, உறுப்பிழந்த கோலத் தொடு மனிதக் குவியல்
அதனிடையே முண்டம் இழந்த மனிதத் தலையொன்று கண்டேன், அதுவே கனவும் நனவுமாய்ப் போக, கண்ணாடி புதிதாய் எதைக் காட்டும்! ஆகநான் இப்போ அதைப்பார்க்கப் போவதில்லை!
எல்லார் முகத்தும் எழுதிவைத்த சோகங்கள் சொல்லால் எழுதாக் கவியாய், சுயம்புவாய், ஏக்கப் பெருமூச்சாய் ஈடேறாக் கனவாய் - என்
தோற்றத்தில் காணும் சுவடாய்ப் பதிந்ததினால்
முற்றாய் எனது முகம் மறந்து போயிற்று வெற்றார வாரம் விலகிநாள் ஆயிற்று
மல்லிகை, 1992
வடக்கிருத்தல் 106
சோ.பத்மநாதன்
 

தாண்டிக்குளத்தெல்லை தாண்டி நடக்கையிலே.
"குளிருது டடி socks எங்கே?" மழலை மிழற்றிற்று
டடி மம்மியைப் பார்க்க.
மம்மி கைகால் உறைகளை அணிந்துவிட குழந்தை தூங்கிப் போயிற்று.
சுவிட்சர்லாந்தில் வாழும் ஒரு தமிழ்க்குடும்பம் தாயகம் நோக்கிப் போய் கொண்டிருக்கிறது; வேர்களை தேடி விரைகிறது போக வேண்டியதுதான்.
ஓங்கி ஒலிக்கும் மனக்குறளி என்காதில், “தாங்குமா இந்தத் தளிர்?
காலுக்கும் கைக்கும் உறையின்றிக் கண்வளரான் பாலுக்குள் சீரியலைப் போட்டுக் கிளறியுண்ணும் இந்தப் பயலா கிளாலிக் கடல் தாண்டி வெந்து கிடக்கின்ற மண்ணை மிதிக்கவல்லான்? தாங்காது அம்மா இத் தளிர் அந்த வெக்கையினை தாங்காது; டடி, மம்மி கூட அதைத் தாங்கார்கள்! தாயகத்தில் இந்த தளிர் சிலிர்த்து வளராது! நோயெதிர்த்து நிற்காத நோஞ்சான், தமிழ் மண்ணில்
வடக்கிருத்தல் 107
GsFmr. பத் நாதன

Page 66
ரீவி, பிறிஜ், ஐஸ்கிறீம், கேக் எனும் சுகங்கள்
ஏதுமிலா வாழ்க்கை; இவர் கற்பனைகளுக்கு
தோது வராது என்று துலாம்பரமாய்த் தெரிகிறது"
2
எண்பதோ முன்பின் இரண்டொன்று இருக்கலாம், தென்னிலங்கை நோக்கிப் பயணம், தளர்ச்சி உடல் எங்கும்,
ஆறாக வியர்வை
மனையாள் தோளில் தொங்கித் தயங்கி தொடர்ந்து நடைபயிலும் இந்த மனிதர்க்காய் இதயம் நெகிழ்கிறது! 'யாருக் கிரங்குகிறாய்? யார் பொருட்டு நோகின்றாய்? வேரடியின் மண்ணை உதறித்தன் பிள்ளைகளை போக்கடித்து மேற்கே புகலிடங்கள் தேடுதற்கு ஈடுவைத்தும் கையில் இருந்த முதல் தொலைத்தும் வீடு விற்றும் தாலிக்கொடி விற்றும் - தம்முன்னோர் தேடி வைத்த செல்வம் தொலைத்ததன்றி வேறேதும் செய்தறியாச் சென்மத்துக் கா, நீ இரங்குகிறாய்? மெய்விழும் போதும் வெளிநாடு மேல் என்னும் பொய்யருக்காக புலம்பல் தவிர் கௌந்தேய அற்ற குளத்தில் அறுநீர்ப்பறவை - இவை! கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போல், குளத்தோடு ஒட்டி உறவாடு வோர்ை இனங் காண்பாய்’ மாதவன் என்றன் மயக்கம் ஒழித்திடுவான் கீதை புதிது மொழிந்தான் - தெளிந்தேன் நான்.
வடக்கிருத்தல் 108
சோ.பத்மநாதன்
 

3
சூனியமாய் உள்ள பிரதேசம், அப்பாலோ ராணுவத்தின் கட்டுப் பாடு, நடக்கின்றேன், தோளில் சுமை, ஆனால் நடையில் சுறுசுறுப்பு நீளும் வழி
பாதை ஒரம் ஒரு வேலியிலே செவ்வரத்தம் பூக்கள் சிலிர்த்து சிரிக்கும்! உள்ளே கூரையிலா வீடு, குடியிருப் போர் யாருமில்லை, போரில் அடியுண்ட தழும்பு சுமந்தபடி நிற்கிறது, எங்கள் நிகழ்கால வரலாறு கற்பவர்க்கு வாய்த்ததொரு கற்சாசனமாக,
கட்டியவன் எங்கே, கனவுகளும் எங்கேயோ! மொட்டையாய் சுற்றிவர பற்றை முளைத்தபடி நிற்கிறது, ஆனாலும் முற்றத்தில் ஓங்கி வளர்கிறது தானாய், தனியே வடலி - பனையொன்று! ஷெல்லடிக்கும் குண்டுக்கும் சிறிதும் சளைக்காது வல்லமையாய் ஓங்கி வளரும் பனைவடலி! கருக்கு வாள் ஏந்தி களம்புகுந்து தன்வீட்டை நொருக்குவார்க் கென்றும் பணியாது, தன்மானம் காக்கும் பனையை வியந்து வியந்து கண்ணால் நோக்கினேன், நின்றேன் நொடிந்து விழேன்நிச்சயமாய்.
மல்லிகை, 30ஆவது ஆண்டுமலர்
வடக்கிருத்தல் 109
சோ.பத்மந ாதன்

Page 67
உன்னி உன்னி உழக்குகிறாய் ஊர் ஊராகச் சுற்றுகிறாய் என்ன என்ன அவசரமோ என்ன என்ன நெருக்கடியோ
உன்னைச் சுமந்து பெற்றாளை உயிராய்க் கருதி வளர்த்தாளை பின்னால் இருத்தி சைக்கிளிலே பிய்த்துக் கொண்டு போகின்றாய்
அண்ணன் அயல்நாடு அலைகின்றான் அப்பன் ஷெல்லால் அடியுண்டான் பெண்ணே நீயோ இங்கிருந்து பெரிய சுமைகள் சுமக்கின்றாய்.
சின்னக் காலின் வலுவெல்லாம் சேர்ந்து வலித்தே உழக்குகிற உன்னைக் காணும் போதெல்லாம் உள்ளம் பாகாய் உருகுதடி
உன்னி உன்னி உழக்குகிறாய் ஊர் ஊராகச் சுற்றுகிறாய் உன்னைத் தெருவில் காண்கையில் என் உயிரே சிலிர்த்துப் போகுதடி.
உன்னி உன்னி உழக்குகிறாய் ஊர் ஊராகச் சுற்றுகிறாய் சின்னப் பெண்ணே உன்னால் நம் தேசம் நிமிரப் போகின்றது
வெளிச்சம்
வடக்கிருத்தல் 110
சோ.பத்மநாதன்
 

கறுப்புச் சந்தைக்காரர்களே
கறுப்புச் சந்தைக்காரர்களே - நல்ல காற்றடிக்குது தூற்றுங்களே பொறுப்பில்லாத அரசாங்கம் -எம்மைப் போட்டடிக்குது பாருங்களே -கறுப்புச் சந்தைக் காரர்களே.
சீனி விற்கிறீர், அரிசி விற்கிறீர் தெயிலை விற்கிறீர் பொயிலை விற்கிறீர் ஏணி வைப்பினும் எட்டொனாவிலை ஏற்றி எங்களைச் சாகடிக்கிறீர். கறுப்புச் சந்தைக் காரர்களே. விளக்கு வைக்கமண் ணெண்ணெய் இன்றி என் வீடிருட்டிலே மூழ்க, வீதியில் முழத்தினுக்கொரு கடை விரித்தொரு போத்தல் விற்கிறீர், "நூற்றி, ஐம்பது" கறுப்புச் சந்தைக் காரர்களே. உள்ளி விற்கிறீர், மல்லி விற்கிறீர், உயர்தர சவர்க்காரம் விற்கிறீர் கொள்ளி வைக்கவும் விறகி லாதஇக் கொடிய மண்ணில் உம் கொடிபறக்குது கறுப்புச் சந்தைக் காரர்களே
குண்டு ஷெல்களுக்(கு) அஞ்சி ஒடலாம் கொடிய வெஞ்சிறைப் பட்டு மீளலாம் உங்கள் கைகளில் எங்கள் வாழ்க்கையா? உய்ய வேறொரு மார்க்கம் இல்லையா? கறுப்புச் சந்தைக் காரர்களே, காற்றடிக்குது தூற்றுங்களே.
முரசொலி, 20.09.90
வடக்கிருத்தல் 111
சோ.பத்மநாதன்

Page 68
எங்கள் பொழுதும் இனிதே
வர்த்தகம் செய்ய வழிகள் பல இருக்கு யுத்த நிலைமை மிகச் சாதகமாய்த் தானிருக்கு மின்சாரம் இல்லை விளக்கெரிக்கும் மண்ணெண்ணெய் தன்பாட்டுக்கு ஏறும், இறங்கும், தலைமறையும் பொம்மர் கிளாலிக் கடல் மேல் பறந்தாலோ நம்ம சனம் விலையை நாலு மடங்குயர்த்தும் தீப்பெட்டியை கண்டு மாசம் இரண்டாச்சு மாப்பெட்டி, சீனி, மருந்து வகைகளெல்லாம் உச்சவிலை, தேங்காய் இருபதுக்கு மேலாலை.
வர்த்தகம் செய்ய வழிகள் பல இருக்கு யுத்த நிலைமை மிகச் சாதகமாய்த் தானிருக்கு
பொச்சுமட்டை ஈரம், புகையாய்க் கிளம்புதடி பூவரசு, வேம்பு, புளி, இலுப்பை, மஞ்சமுன்னா வெட்டிப் பிளந்து விறகாக்கினோம் -எல்லாம் ஒட்டமுடிய, உள்ளேபோய் வேரெல்லாம் தோண்டி எடுத்துச் சுடுதண்ணி வைக்கின்றோம். ஆண்டிகளைப் போலப் பல்லாயிரம் பேர் வீடுகளை விட்டுப் புறப்பட்டு வீதி வழி பிள்ளை.
குட்டி தொடர நடக்கும் கொடுமையிடை, வாந்தி, இருமல், வயிற்றோட்டம், மலேரியா, சூழ்ந்து, வருத்தம் சுகப்படலாம் என்றாலோ மாத்திரைகள் வாரா வடக்கே, அதற்கென்று யாத்திரை போக முடியுமா? கிளாலியினைத் தாண்டும் துணிவு தமிழரிடை அதிகம்! மீண்டும் தொடங்கும் மிடுக்கும் மிக அதிகம்! ஆனபடியால், அயராது, இவர்கள் முன் போனவழிவிட்டு புதுவழியிற் போகின்றார்.
வடக்கிருத்தல் III2.
சோ.பத்மநாதன்
 

வர்த்தகம் செய்ய வழிகள் பல இருக்கு யுத்த நிலைமை மிகச் சாதகமாய்த் தானிருக்கு.
கர்ப்பூரம், சைக்கிள், கடதாசி, மின்கலங்கள் இப்பால் வருதல் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புக்குப் பழுதாம், விளக்கங்கள் தோதாகச் சொல்வார், நாம் துக்கப்படுவதில்லை! கோயில் விழாக்கள், குடிபுகுதல், கல்யாணம் ஒய்வு பெறுவோர்க் குபசார வைபவங்கள் இங்கு குறையின்றி எல்லாம் நடந்தேற எங்கள் பொழுதும் இனிதே கழிகிறது.
காற்று வெளியில் கனக்கும் விறகுசுமை ஏற்றி வருவோரை ஏறெடுத்துப் பார்ப்பதுண்டா? ஒயா உழைப்புக்கு இவர்கள் உதாரணங்கள்சாயாத -சற்றும் சலிக்காத-உள்ளத்தோர் வேலை வாய்ப்பென்று வெளிநாடு செல்வோர்தம் எண்ணிக்கையால் பிழைப்போர் ஏராளம், ஏராளம்! கண்ணிற் படாமல் காசோடு போனவர்கள் ஏராளம் என்றாலும் இத்தனைக்குப் பின்னாலும் தாராளமாய் ஒடும் தமிழர் தொகை அதிகம் ஆரோடு நோக? இதை ஆருக்குச் சொல்லி அழ? ஊரோடு ஒத்தோடவா? உய்யவழிதேடவா? போரோயக் காணோம், புகைமண்டலத்திடையே ஆராரோ என்றே அவதிப் படுகின்றோம் ஈமத்தெழும் நெருப்பும் எரிந்து தணிவதுண்டு சாமத் திருளும் விலக, விடிவதுண்டு வாழ்வை நினைப்போர் மனஞ்சோர்ந்து வாடிப்போய்
வீழ்வரோ? காண்போம் விடிவு!
வெளிச்சம்
வடக்கிருத்தல் 113
சோ.பத்மநாதன்

Page 69
மண்மீட்பு
பூரணமும் ஞானமலரும் உடன்பிறந்தோர் ஆரும் அறிவர் அவர்க்கிருந்த ஒட்டுறவை பாட்டனார் காலப் பனங்காணி, நெல்வயல், வீட்டு முற்றத்து 'விலாட் மா, பின்வேலியில் நிற்கும் புளியமரம் நீண்ட பல த்ென்னை,
எல்லாம் படைத்தே இருந்தவர்கள்,
ஞானமலர் வாத்தியார் ஒருவருக்கு வாழ்க்கைத் துணையானாள், மூத்தவளைக் கல்யாணம் செய்தவரோ
கூட்டுறவுச்சங்க அலுவலகத்தில் கணக்காளர்.
பிள்ளைகுட்டி என்றும், பிரச்சினைகள் என்றும், கையில் இருந்த பொருள் கரைய, சிக்கனமாய் வாழும் வழிகுறித்து வாத்தியார் ஆராய்ந்தார்.
வடக்கிருத்தல் 114
சோ. f 25 ாதன்
 
 
 
 

('பாழும் போர் எம்மை படுத்துகிற பாடு, இன்னும் நீளும் போல் எல்லே கிடக்கு') நிரந்தரமாய் காணி பிரித்து எல்லைக் கல்லடித்தார் நெல்வயலே வேணும் என நின்று ஞானா பெற, தென்னை மற்றவளுக்காச்சு பனைவளவு வல்லிபுரம் குத்தகைக்கு போச்சு, புளியை உலுப்பி இரு பெண்டுகளும் பங்கிடுவர்.
ஞானமலர் கணவன் கண்டிக்கு மாறி அதிபராய்க் கையேற்கப் போனான் குடும்பமும் கூடப் புறப்படவே ஞானா தமக்கையிடம் சொல்வாள் நயமாக, 'போக்குவரத்து புரிவதினிக் கஷ்டம் வீட்டைப் பார்த்துக் கொள், வயலின் வருவாயை என்கணக்கில் வை; நான் வசதிக்கு தக்கபடி இங்குவருவன், எழுதுகிறன் கடிதம்."
காலச் சகடம் உருள, கடிதங்கள் நீளும், குறுகும் நெடுநாள் இடைநிற்கும்,
போரும் சனங்கள் புலம் பெயர்ந்து திண்டாடும், வாடும் பயண வசதிக் குறைவுகளும், தந்த பிரிவால் தமக்கை இருபாலையிலும் தங்கை குடும்பத்துடன் அக் கரையிலுமாய் சீவியங்கள் ஒட,
திடீரென் றொருகாலை ஞானமலர் யாழ்ப்பாணம் வந்தாள். 'கடிதம் ஒன்றும் ஏன் எழுதவில்லை? எழிலன் கொழும்பிலையா? தாண்டிக்குளத்தில் சனமாமோ?
வடக்கிருத்தல் 115
சோ.பத்மநாதன்

Page 70
"ரோச்" பற்றி வேண்டினனியோ?
இப்ப விடுறானே? இஞ்சபார் நல்லா நனைஞ்சிட்டாய் ஞானா, உடுப்புக்களை எல்லாம் கிணற்றடியில்போடு, குளி - நான் தோசை சுட்டெடுப்பதற்குள்' சுழன்று வந்தாள் பூரணம் முன் விட்டகுறை தொட்டகுறை பேசிமுடித்தார்கள் உண்ட களைதீர உறங்கி எழுந்தார்கள். தன்வளவில் தங்கை உலவிவரும் வேளை‘என்ன இது, எல்லைக்கு இரண்டுமுழம் இப்பாலே நின்ற வேம் பெங்கே?"
நிமிர்ந்தாள்,
அது தமக்கை பங்குக்குள் அன்றோ படாரித்து நிக்குது! ‘'வேலி என்ரை பக்கம் விலகியல்லோ வந்திருக்குநாலு முழம் இருக்கும்! நல்லாத்தான் காணியளைப் பார்க்கிறாய்! நானென்ன பாடையிலே போட்டனெண்டோ சேர்க்கிறாய் காணி?’ சிலிர்த்தெழுந்தாள் ஞானமலர்.
ஆம்பிளையஸ் தத்தம் அணிகளிலே நின்றார்கள்! தோம்புறுதிக் கட்டை துருவி ஆராய்ந்தார்கள்! வாதாடி நாலுமணி நேரம் தர்க்கித்தார், ஆதாரம் தேடி அலைந்து திரிந்தார்கள் வைத்த முதல் கரைய மன்றுகளில் நிற்கின்றார் செத்த உறவைச் சிறிதும் கருதாமல்!
மல்லிகை
வடக்கிருத்தல் 116
Gynr. பத்மநாதன்
 

கூப்பாடு போடுவதால் மட்டும் கை கூடுவதோ
1.
எங்கையடி பிள்ளை இவன்செழியன் போயிட்டான்?* 'பொன்னம்பலம் கடைக்கு - பொச்சுமட்டை வாங்க எணை' "பொச்சுமட்டை கூட கடைவழிய விக்கினமே? ஏத்திவர வண்டில், இவன் பிடிச்சுப் போடுவனே?" 'ஆச்சி, உனக்கிதெல்லாம் சொல்லி விளங்காது; போட்டுக் குடையிறாய். பொச்சுமட்டை நாலோடை வாறான் செழியன். மரவள்ளி அவியுதெனை’’ (தாய் உள்ளே போக "பொடி"யைத் தனியவைத்து) 'நீ எவ்வளவுக்கு வாங்கினனி?" 'நாலுமட்டை பத்துரூபா ஆச்சி’ 'பாழ்படுவார் வாயிலைமண் இப்படியே போடுறது" 'ஏன் ஆச்சி திட்டுறநீ" 'பின்னையென்ன, என்ரை பெரிய வளவில் எண்டா தென்னைமட்டும் நாப்பதடா பாளை, உரிமட்டை எங்கும் கிடக்குமெடா ஏழை எளியதுகள் வந்து பொறுக்கும், நான் வாயே திறப்பதில்லை சித்திரைக் கஞ்சிக்கும் திருவெம்பாப் பூசைக்கும் எத்தனை குலையள் இறக்கிக் குடுப்பன்!
வடக்கிருத்தல் 117
Gynt. பத்மநாதன்

Page 71
இப்ப பொச்சுமட்டை வாங்க புதுநாணயமாய்த்தான் பிச்சை எடுக்கிறியள்! (பெத்தாச்சி சொல்லுகிற பன்னாலைக் காணி பரப்பு பதினாறும் பொன்னாய் விளைகின்ற பொக்கணை நெல்வயலும்
ஏழுதலை முறைக்குப் போதுமென்பதுண்மைதான்)
2
ஆலடியில் கூட்டுறவுக் கடையின் முன் கூட்டம் ஆடவர்கள், அரிவையர்கள், சிறுவர், முதியோர்கள், காலையிலே, கைப்பைகள், முத்திரைகள், காட்டு’
கைத்தடிகள், குடை, செருப்பு, புடைசூழ நின்றார்.
'இந்தமுறை நிவாரணத்துக்கு என்ன குடுக்கினமாம்?* 'இரண்டு கிலோ சீனியெனை, அஞ்சு கிலோ மாவாம்’ (கந்தையரும் கண்மணியும் உரையாட லானார்) 'கார்த்திகை மாதத்தரிசி புழுக்கூடு - கல்லு' பூநகரி நெல்லரிசி சாப்பிட்ட சுவையும் பொன்னாலை வயலிலே புதிரெடுத்துப் பொங்கும் 'நாநயமும் அசைபோட்டபடி இவர்கள் நின்றார் நடுவெயிலில் நிவாரணத்தை எதிர்பார்த்த தவத்தில்.
3
'சூசை துலைக்கே???
'தொட்டிலடி வரைக்கும் மேரி -இளையவள் -பிள்ளைப் பெத்து அஞ்சுநாள் ஏதும் நகரை, திரளி அகப்படுதோ பாப்பமெண்டு போறன்’
-பதிலளிக்கிறான் சூசை.
18
சா.பதமநாதன
 
 

ஆழக்கடலை அளந்த தொழிலாளி தாழையடி, நாகர்கோயில், மணற்காடு, வெற்றிலைக் கேணிவரை தோணி செலுத்தித்தன் வெற்றிக் கொடிநட்ட வீரன் -இவன் சூசை நாறல் கருவாட்டைத் தேடி நடக்கின்றான்.
4.
ஏனிவ் வலைச்சல்? எதனால் அவலங்கள்? ஏன் நம் நிலமும் கடலும் எமதில்லை? வீடெல்லாம் ஏனிவ் வெறுமை? -மிக அடர்ந்த காடெல்லாம் ஏன் ஆரவாரம்? செழியன்ரை ஆச்சி
விறகுக்கு ஆரைப்போய் நோகிறது? பொன்னாய் விளைகின்ற பூமி எங்கு போனதுவோ? சூசை செலுத்திய தோணி தொலைந்ததுமேன்? வீசி விரித்த வலைநாசம் ஆனதுமேன்? மணம்புரிந்த நாலாம் மாதமே, காங்கேசு பறந்து விட்டான் செழியன் தகப்பன் முகமறியான் பன்னாலைக் காணி பராமரிக்க ஆளில்லை பொன்னாலை பூநகரி எங்கும் புகுந்தவெள்ளம் GL G35) G அழிக்காமல் வரம்புகட்ட ஆளில்லை அயல்நாட்டு வாழ்க்கை அதுவே சுகமென்று போனார் இளைஞர் -புலம்பியென்ன ஆகிறது?
சுற்றிவர நெருப்பு, துலாவிழுந்து கிடக்கிறது பட்டை, கயிறு இல்லை, பாறிக் கிடக்கிறது ஆடுகால் சும்மா வயிற்றில் அடித்தென்ன?
வடக்கிருத்தல் 19
சோ.பத்மநாதன்

Page 72
'ஒடிவா’ என்றால் ஒருத்தன் வருவானே? தந்தை தளர்கின்ற போது, அவனைத் தாங்குதற்கு மைந்தன் இங்கில்லாது 'மாறி விட்டால்?.. தோணியினைக் காப்பாற்றுவது ஆராம்? ஆழக் கடலோரம்
கூப்பாடு போட்டால்
விடியல் கை கூடுவதோ?
-வெளிச்சம் வைகாசி 95.
- சா.பத்மநாதன்
 
 
 

ஆருக்குச் சொல்லி அழ?
இரண்டு நாளாக இதயம் தவிக்கிறது புரண்டு படுக்கிறேன் பொழுது புலரவில்லை வந்த Telexஐ வாசித்த நேரம் முதல் எந்த வழியும் எனக்குத் தெரியவில்லை வீதி விளக்கு மவுனத் தவமியற்றும் கூதல் எலும்புத் துளைகள் வரை அடிக்கும் தூக்கக் கலக்கத்தில் சூசன் முணுமுணுப்பாள் மாக்றெற் எங்கள் மகள் பூக் குவியலாய் தொட்டிலிலே தூங்குகிறாள்; தூக்கம் எனக்கேது? கட்டிலைவிட்டுக் கணப்பருகே போகின்றேன் நெஞ்சில் பழைய நினைவு குமிழியிடும்.
வடக்கிருத்தல் 12.
சோ.பத்மநாதன்

Page 73
அஞ்சு வருஷமோ ஆறோ இருக்கலாம் பாரதத்தின் பாதச்சுவடு தமிழ்மண்ணில் ஆழப் பதிந்த அநியாய நாள்கள் அவை! ஷெல்லடியை வாங்கிச் சிதறுண்ட வீடுகளும் அல்லல்பட்டாற்றா(து) அகதிமுகாங்கள் தொறும் பட்டினியும் நோயும் துரத்த மனை, பிள்ளைகுட்டிகளோடு குடிபெயர்ந்த கூட்டத்தில் வேங்கை பதுங்கி இருக்கும் பிடிப்பமென தாங்கள் அணியாய்த் தலையாட்டி கூடவந்தும் ஏதும் அறியா இளைஞர்களைப் பிடித்து மோதி உதைத்து மிதித்து வதைசெய்தும் பிள்ளை பிடித்துப் பெரிய படையமைத்தும் கொள்ளை அடித்தும் கொடுமை பிறபுரிந்தும் வந்தபொழு(து) அன்னை மனங்கலங்கி "ஐயோ நான் முந்தித் தவமிருந்து முந்நூறு நாள் சுமந்து பெற்ற குஞ்சு இந்தப் பிரளுவார் கைப்படவோ! நிக்கிறியள் சும்மா' - நெருக்குவாரப்படுத்தி, ஆமிக்ககப்படா தாழக் கிடங்கு வெட்டிச் சேமித்த பொன்னகையும், செல்லத்துரையரெட்டை எட்டுப் பரப்புநிலம் ஈடுவைத்துப் பெற்றதையும், செட்டி யொடு போட்ட சீட்டாலை வந்ததையும், சேர்த்துத் திரட்டிச் சிவரா மிடங்கொடுத்து காத்திருந்து காத்திருந்து கண்பூத்த வேளையிலே தந்திவர எங்கள் தவம் பலித்து விட்டதென சந்தி வயிரவர்க்கும் சந்நிதிக்கும் அர்ச்சனைகள் பண்ணி, நாள் பார்த்துப்பயணம் தொடங்கிய, பின், எண்ணி இருபது நாள் சிங்கப்பூர், பாங்கொக் என்(று) ஏஜென்ற் இழுத்த இழுப்புக்கெலாம் இசைந்து சாஜென்ற் கண்ணுக்குத் தப்பி இந்த நாட்டுக்குள் கால்வைத்த அக்கணமே கைதாகி அவர்கள் அதன்
வடக்கிருத்தல் 22
சோ.பத்மநாதன்
 
 

மேல்வைத்த நீண்ட விசாரணையெல்லாம் தேறி சீலன் உதவியால் வேலை தேடிக்கொண்டு காலைமுதல் இரவு வரை மாடாய் உழைத்(து) அன்னை பட்ட கடன் தீர்த்து வருகையிலே பாலசிங்கம்மட்டுவிலான் -என்னிடம் வந்துரைப்பான்; “மச்சான் இப் பிச்சைப் பிழைப்புஎத்தனைநாள் பிழைப்பதடா நிச்சயமாய் இங்கு நிலைக்க விருப்பமெண்டால் இங்கொருத்தியைக் கட்(டு); எளிதாய்க் குடியுரிமை தந்திடுவர் என்றான்'
‘‘அடப்பாவி, ஊரிலெனக்கு
அத்தை மகள் இருக்க அந்நியப்பெண் ஏதுக்கு? புத்தி கலங்கவில்லை, போடா போ’ என்றேன் நான் 'பிழைக்கத் தெரியாத பிள்ளை! இது சும்மா எழுத்துக்கு! உனக்கு குடியுரிமை வாய்த்த பின்னர் தள்ளலாம், அவள்கூட சம்மதிப்பாள், மச்சான் இவ் வெள்ளையர்கள் நாட்டு விபரமிது’ பாலசிங்கம் சொன்னபடி நானுமிவள் சூசனுமாய் அந்நாட்டு மின்னியக்க வண்டியிற்போய் விவாகப் பதிவு செய்தோம்.
அத்தோடு போச்சா! அவள்வேலை போம், காலை பத்துமணிக்கு நான் ஹோட்டலுக்குப் போவதுண்டு. நாடகப் பித்தெனக்கு extra நடிகை அவள் பாடக னாய்என்னை சேர்த்தாள் குழுவொன்றில் பாரீஸ் நகரில் பவனி, படகோட்டம் சீரிய ஸாய்ப் போச்சு, அவளோ சிக்கென்றெனைப்பிடிக்க காரிய மெல்லாம் கடுகதியில் ஒடுது இனி ஆரைக் குறைசொல்ல? ஆருக்குச் சொல்லி அழ? செய்திகளை ஊருக்கெழுதும் துணிவில்லேன்
வடக்கிருத்தல் 123
சோ.பத்மநாதன்

Page 74
-- பொய்யுரைகள் ஒன்றன்பின் ஒன்றாய்ப் புனைந்தெழுதிக் காலத்தை தள்ளிக் கலியாணம் தள்ளாத கோலத்திலிருந்தேன், குமுறுகின்ற நெஞ்சோடு!
முந்தநாள் வந்த Telexஇன் முழுக்கருத்தும் சிந்தை கலக்கி எடுக்கு(து) -எழிலரசி ஆம், அவள் என் அத்தை மகள்அக் கடல்தாண்டி ஆமிக் கெடுபிடிக்குத் தப்பிக் கொழும்பு வந்து வானூர்தி ஏறி வருகின்றாளாம் அவளை நானே போய்க் கூட்டி வரவேண்டுமாம். 'தாலி கூறையெலாம் கையில் கொடுத்திருக்கின்றேன் இனி வேறை சுணக்கம் இருக்கா தெனநம்பும் - தம்பிமுத்து’’
கைகால்கள் தந்தி அடிக்குதெனை நம்பி வரும் எழில்முன் நானெப்படிப் போக? சூசனுக் கீதெல்லாம் சொல்லி விளங்காது பாச மகள்கண்ணில் பல்லா யிரம்கனவு நாளை வரும் எழிலுக் கென்னதான் சொன்னாலும் ஆளை விடமாட்டாள் அழுதுபுலம் பிடுவாள் காலைப் பிடித்துக் கதறி ஞாயம் கேட்பாள் calஎடுப்பாள் எல்லாம் கொழும்புக் கறிவிப்பாள் அப்பர் அறிஞ்சால் அரிவாள் எடுப்பார் நான் இப்ப என்ன செய்ய? இயலும்வழி சொல்லுங்கோ! அத்தை மகள் வந்தென் ஆவிகவர்வாளோ? நித்திரையும் இல்லை, இனி நிம்மதியும் கூட இல்லை!
(1993 தைப்பொங்கற்கவியரங்கு-கரவெட்டி) மல்லிகை, ஜுலை 93
24
 
 

வீதி வழிவந்த விருட்சங்கள்
பார்வதி வீட்டு முகப்பில் பரபரப்பு 'ஆர் கொணர்ந்த செய்தி?" அறிய முடியவில்லை எத்திக்குப் போகிறது? எங்கை ஒதுங்குவது?
புத்திக்குள் ஏதும் புலப்படுவதாயில்லை
காணிக்குப் போய் ஆட்டைக் கையோடு அவிழ்த்து வந்த மாணிக்கவேலு மனைவி யிடம் சொன்னான் 'வயசான நாங்கள் மடிந்தால் கவலையில்லை இளசுகளை ஊரில் இருக்க விடலாமே? 'முன்னரங்கைத் தாக்கி முறித்து படை புகவே பின்னடைவு கண்டோம்' -பெடியள் அறிவிப்பாம் விக்கித்து நின்றார் விழுங்கும் இருளில் ஒரு திக்கும் தெரியார் திகைத்து
அடையாள அட்டை முதல்
ஆவணங்கள், காசு, நகை
உடை, சாவி - எல்லாம்
ஒருபை திணித்தவரும்
சோ.பத்மநாதன்

Page 75
தோளில் பசியால் துவண்டு கிட்ந்த இளம் வாழைக்குருத்தை சுமந்து நடந்தவளும்மூப்பால் தளர்ந்து முடங்கிக் கிடந்த தாய் - தேப்பனைக் காவி நடந்த திருமகனும்எள்போடக் கூட இயலாதவாறு இவர்கள் அள்ளுண்டு வந்தார், அகலத்தெரு நிறைத்தார்.
சோளகத்தில் 'அம்பிட்ட பஞ்சு சுழல்வதுபோல் வாழிடத்தை விட்டு வழிமாறி வந்தார்கள் வேர் ஆழப்பாய்ந்த விருட்சங்கள் வீதி வழி
ஏராளமாக இடம் பெயர்ந்து வந்தன காண்.
நாக்கு வற்ள நடையால் உடல் தளர, தூக்கச் சுமையும் துயரப் பெருஞ்சுமையும் ஏக்கச் சுமையும்எல்லாம் அழுத்த ஒரு போக்கிடத்தைத் தேடிப் புலம் பெயர்ந்து வந்தார்கள் கார் இரையும் சைக்கிள் கடுகும்
வடக்கிருத்தல் 126
சோ.பத்மநாதன்
 
 
 

கன இருளில் ஆர் வரவுக்காக ஆர் காத்திருப்பதுவாம்? தூறல் தொடங்கி மழையாய்த் தொடர்ந்தது எங்கே ஆறுவது? யார் யாரை ஆற்றுவது? அங்கங்கே நின்றால் நெருக்கம் அதிகரிக்கும் என்பதனால்
சென்றார் மனிசர் திரண்டு.
நின்றார் இருந்தார் தவழ்ந்தார் நடந்தார்கள் ஒன்றா, இரண்டா, ஓராயிரம் துன்பம் மரத்தடிகள், கோயில், மடம் பாடசாலை - எலாம் நிறைத்து நெருக்கி நீக்கம்ற நின்றார்கள்.
(வேறு) கார் உருண்டன 'வான்' உருண்டன கட்டை வண்டிகள் தாம் உருண்டன பாரடங்கலும் ஒடும் வாகனம்
பயணமாயின பாதை நீளமும்
நாய் குரைத்தன ஆடு கத்தின நள்ளிருட்டினில் கொள்ளியோடு போம் பேய்கள் ஒத்தன வாகனத் தொடர் பிடரில் மோதுவ, இடறி ஒடுவ
வடக்கிருத்தல் 127
சோ.பத்மநாதன்

Page 76
இவ்விரண்டு பேர் சைக்கிள் ஏறுவர் இயலுமானதற் கதிகமாகவே ஒவ்வொருத்தரும் சுமைகள் காவினார்
உயிர்கைக் கொண்டு தாம் ஊர்ந்து போயினார்.
குடுகுடு கிழம் கோலொ டூர்ந்தன குழந்தைகள் விரல் பற்றி ஊர்ந்தன நடுநடுங்கிநள்ளிரவெலாம் ஒரு நாடிலாதவர் போல ஊர்ந்தனர்
குழந்தைகள் பசியால் அரற்றின குளிரிலே கிழம் நடுநடுங்கின இழந்த வைகளை எண்ணி எண்ணி நெஞ்சு ஏங்குவார் அலார் தூங்குவார் இலர்.
வான் பிளந்தது போல் பொழிந்தது மழை, நடந்தவர் அற நனைந்தனர் ஏன் எதற்கெனும் கேள்வி ஆயிரம் இதய மேடையில் எதிரொலிக்கவே
செம்ம ணித்தெரு இரும ருங்கிலும் சேற்றி லேவிழுந் தெழும்பினார் சிலர் கண்பனித்தது விண், இருட்டிடை கால் வலித்திட மேல் நடந்தனர்
(வேறு) நெஞ்சு வலியும் நெடுமூச்சுமாய் கமலம் அஞ்சு மைல் நடந்தாள் அப்பால் அடிபெயரக் கூட இயல்ாது குந்தி இருந்து விட்டாள்
வடக்கிருத்தல் 128
சோ.பத்மநாதன்
 

ஒடும் வியர்வை'உரை குழறும், 'ஒகோ கோ, போடும் மருந்துப் பொதி வீட்டு மேசையிலே' சூழ இருந்து துடிதுடிப்பதன்றி அந்த வேளை எது செய்வார் 1 மக்கள் அருகிருக்க - மாணிக்கத்துக்கேதோ சொல்ல முயன்றாள், வாய் கோணிற்று, மேனி குளிர்ந்து செயலிழக்க, போயிற்று சீவன்! அழுது புலம்பினார் தாயின் பிரிவால் தவித்தார் குழியொன்றில் இட்டார், மண் போட்டார், இரங்கி அழுது கண்ணிர் விட்டார், நடந்தார் விரைந்து!
(வேறு) ஊழிஎன நீண்ட இரவு ஒருவாறு முடிய உதித்துவரும் சூரியனின் ஒளிக்கற்றை விரிய வீழுகிற ஷெல்லுக்கு விலகி உயிர் பிழைத்து விடியலிலே கைதடியின் வெளிகடந்து போனார்.
மட்டுவில் கல்வயலோடு நுணாவில் சரசாலை வானுயர்ந்த தென்னை கொடு வரவேற்புக்கூற பட்டதுயர் அச்சமெலாம் சற்றகல வந்தார் பசிதாக மொடுவாழ அறியாத மக்கள்
129
க்கிருத்
சோ.பத்மநாதன்,

Page 77
தள்ளாத வயதினிலே உயிரொருகைப் பிடித்துத் தவழ்ந்துதவழ்ந்தூர்ந்துரர்ந்து தவளும்முதியவர்கள் பொல்லாத நோயோடு போராடித் தோற்போர்
புலம் பெயர்வோர் ஊனமுற்றோர் எனப்புதிய இனங்கள்
தாவாரம் வாய்ப்பதுவே பெரும்பேறென் பார்கள் சாய்ந்திருக்கப் புறந்திண்ணை தேடியலை வார்கள் ஓயாத மழைக்கொதுங்க இடமின்றி, நனைந்த
உடை உடலின் வெப்பத்தில் உலரவிட லானார்.
பாய்க்கெங்கு போகிறது? தலையணைதான் ஏது? பாத்திரங்கள் யார்தருவர்? பசிக்கொடுமை தாளோம் நோய்க்குமருந் தில்லை; மருத்துவருமிடம் பெயர்ந்தார் நூறுதுயர் யார் யாருக் காறுதல்சொல்லுவது
'வீடுவயல் காணி நிலம் பொருள்பண்டம் விட்டோம் விளைபொருளும் யந்திரசாதனங்களும் கைவிட்டோம் ஆடுகளும் கோழிகளும் மாடுகளும் விட்டோம் ஆச்சி அப்பு தேடி வைத்த ஆதனமும் விட்டோம்
செய்த பயிர் பயன்தருமுன் திக்கற்றுப் போனோம் தேடிவைத்த தேட்டத்தை கைவிட்டு நடந்தோம். நெய்ததுணி தறியோடு கிடக்கவெளிக் கிட்டோம் நேற்றுவரை அனுபவித்த நிம்மதியை இழந்தோம்.
வடக்கிருத்தல் 130
சோ.பத்மநாதன்
 

வேலிவிராய் தறித்துவிற காக்கும் வழி கற்றோம் வீதிதொறும் மண்ணெண்ணெய் முகவர்களைப்
படைத்தோம் காலிமனை தொறும்கதவு நிலைபெயர்த்து விற்றோம் காணிநிலம் ஈடுவைத்து வெளிநாடு பறந்தோம்.
ஷெல்லடியால் உடல் சிதறி மடிபவரைக் கண்டோம் செங்குருதி பாய்ந்தெமது மண் சிவக்கக் கண்டோம் உள்ளபொருள் அழியமனை உருக்குலைய நாங்கள்
ஊர்தோறும் கையேந்தி அலைந்துதிரிந்தலுத்தோம்
விடியல் அகப்படுமென்று நம்பி நெடுங்காலம் விழிபூக்கக் கீழ்த்திசைவான் பார்த்திருந்து களைத்தோம் கொடிய இனப்போரென்னும் புயலில் அகப்பட்ட -- கொடியாகப் பலர்கால் மிதிபட்டுச் சலித்தோம்.
தம்பிக்கும் அண்ணனுக்கும் இடையில் எல்லை ஒன்றால் தகராறு மூண்டு கொலை விழுந்த கதை ஆச்சு நம்பிக்கை ஒன்றுமட்டும் அழிவினிலும் எஞ்சி
நமக்குளது, நாளை ஒளி பிறக்கும்’ எனச் சொல்வார்
மார்கழி, 1995
வடக்கிருத்தல் 131
சோ.பத்மநாதன்

Page 78
பெண்ணாய் எடுத்த பிறவி
நெஞ்சில் ஒருநெருடல் -நேரம் கழிந்ததென்று கொஞ்சம் விரைவாய் மிதித்து, அந்தக் குச்சொழுங்கை தாண்டி தவராசா வீட்டு முடக்காலை நீண்டு கிடக்கும் வடலி வளவேர்ரம்
பளீரென இருசோடிக் கண்கள் !
பார்த்தேன் அவையிரண்டும் பெண்கள் !
காலைப் பணியில் கழுவி எடுத்தந்த மூலையிலே காட்சிக்கு முன்னிறுத்தி விட்டதுபோல் பளிரென இருசோடிக் கண்கள்! பார்த்தேன் அவையிரண்டும் பெண்கள்!
இந்தக் குளிரை, வெயிலை, எழும்பசியை இந்த இளசுகள் தாம் எவ்வாறு தாங்குவதாம்? காது செவிடுபடக் செல்கின்ற கார் லொறிகள் மோத உயிர்பிரிய நேரின்?
இவற்றுக்கு என்ன எதிர்காலம்? எத்தனை நாள் வாழ்வு? வலை பின்னும் மனம்.
எனது சைக்கிள் உருள்கிறது.
வடக்கிருத்தல் 132
சோ.பத்மநாதன்
 

நிச்சயமற்ற நிலைேையிலும் அந்த நாய்க் குட்டிகளின் கண்ணில் குடியிருந்த நம்பிக்கை
நெஞ்சைப் பிழியும்
நினைவில்
இருசோடிக் கண்கள் வரும். அவை, அக் காலைப்பொழுதில், எனைக் கெஞ்சி உரைத்த மொழி கேளாது வந்தேனே பிஞ்சுகளின் நம்பிக்கை பிய்த்தெறிந்து விட்டேனே.
தாயை, உடன்பிறந்த தம்பியரைத் தாம்பிரித்த தீய மனித இனத்தின் சிறுமையினைச் சொல்லி எனது மனசைத் தொடுவதற்கோ புல்லின் நுனியிற் பணிபோல நின்றிருந்தீர்?
பெண்ணாய் எடுத்த பிறவிக் கொடுந்துயரை, கண்ணால் -எழுதாக் கவியாய்- உரைப்பதற்கோ நின்றீர் எனக்காக - நீண்ட வழிபார்த்து?
நன்றியிலா மானிடவன் நான்.
-மல்லிகை, ஜனவரி 93
வடக்கிருத்தல் 133
& ళ్ల சோ.பத்மநாதன்

Page 79
உபகுப்தனுக்காக காத்திருக்கையில்.
திரும்பிப் பார்க்கிறேன். வாழ்க்கை படமாக விரிகிறது. பிஞ்சு வயதில்
தாயைப் பிரிந்து, வேண்டார் பிறவியாய் வீட்டுக்கு வீடு அலைந்து கடைசியில், பொன்னாச்சியின் வாசலில் ஒதுங்கி ஆச்சியின் பேரன் ஒளித்துக் கொணர்ந்து தரும் ஒரு கவளத்தில் உயிரைப் பிடித்து.
வேறு பெண்கள் இல்லாத சூழல், பருவம் தரும் மினுமினுப்பு எனக்கோ வான உச்சியில் உலாவும் உணர்வு! என் பார்வைக்கு
சகவாசத்துக்கு
ஏங்கும் ஆண்களை உதாசீனம் செய்வதில் உள்ள சுகம் எனக்காக சண்டையிடும் ஆண்களை லட்சியம் செய்யாது,
அட, அது ஒரு காலம்!
தொல்லைகள், உறவுகள், சுமைகள்
மாதங்கள் உருண்டோட,
வடக்கிருத்தல் 134
சோ.பத்மநாதன்
 

பிள்ளைகுட்டிதிகாரியாக நான்! எனக்கு இரண்டு பெண்கள் சரித்திரம் திரும்புகிறது பெண்கள் கண்ணுக் கெட்டாத தூரத்தில் காலம் உருள்கிறது உறவுகள், சுமைகள், பிரிவுகள், பெற்ற ஆண்கள் 'பெரிய இடங்களில் ‘வாழ்க்கைப்பட்டுள்ளதாக’ தகவல். நானோ பொன்னாச்சிக் கிழவியின் கோடியில் அடுத்தடுத்து வந்த பிரசவங்களால் உடல் நலிவுற்று
யாரும் என்னைப் பொருட்படுத்தக் காணோம் பொன்னாச்சி பேரனுக்கு சொல்கிறாள்: ‘அப்பவே சொன்னன் கேட்டியா, பெட்டையை ஆதரித்தால் தொல்லை எண்டு? எத்தனை தரம் பெட்டைகளைச் சுமந்து திரியிறாய்?
அதோ,
ஒரு பெட்டையைச் சுற்றி எத்தனை இளசுகள்! மனிச வர்க்கத்தில் என்றால் தலைகீழ்! ஆனால், எங்களிடையேயோ! என்னை யாரும் தேடுவதாய் இல்லை பொன்னாச்சி வீட்டுக் கோடியில் ஒரு பழம் சாக்கில் நான்
ஓர் உபகுப்தனுக்காக காத்துக்கொண்டு.
மல்லிகை
வடக்கிருத்தல் 135
சோ.பத்மநாதன்

Page 80
வீடுபேறு
ஆறுமாத அஞ்ஞாத வாசம் மீண்டு வந்தேன், வீடு நிற்கிறதே
வீட்டின் மேலே கூரை நிற்கிறதே உடைமைகள். ஒரு சில களவு போனாலும் பெரும்பாலானவை இருந்தன, கிடந்தன மிதிவெடி எதையும் மிதித்திலம் ஆண்டவன் பேரருளால் நாம் பிழைத்தனம் என்று ஆறுதலாகச் சுற்றிப் பார்க்கிறேன்
வடக்கிருத்தல் 136
சோ.பத்மநாதன்
 

வழமையாய் என்னை வரவேற்கின்ற சீவன் 'கறுவல் இல்லை சிவசிவா அயலெலாம் பார்க்கிறேன் பாதை, கிணற்றடி, பற்றை பறுகெலாம் அன்றும் அடுத்த ஒருசில நாளும் தடவிப் பார்த்து, பார்த்து, ஏமாந்தேன்.
மனமோ ஐப்பசி மாதத்து ஒருநாள் மாலைப்பொழுதை இரை மீட்கிறது வாழ்ந்த மண்ணைமனையைத் துறந்து கையில்
ஒரிரு பைகள் எடுத்து குழந்தை குட்டிகளை கிழடு கட்டைகளை ஏற்றிப் புறப்படும் வேளை
நீ நின்றாய் காவலாய் நாம் கைவிட்ட வீட்டுக்கு
காவலாய், கடமை வீரனாய் நின்றாய்.
வடக்கிருத்தல் 37
சோ.பத்மநாதன்

Page 81
பிறகுபுகலிடத்திருந்து மும்முறை வந்தேன் கையில் உணவுப் பொதியுடன் கண்டதும்
களிகொண்டு தாவினாய், குதித்தாய், மோந்தாய்
சுற்றி ஓடி
ஏதேதோ சொன்னாய்.
மூன்றாம் முறைபிரிவு தாங்காது பின்னே தொடர்ந்தாய் கல்லாய் மனதை இறுக்கிக் கொண்டு கல்லால் எறிந்து உன்னை நானே துரத்தினேன்
இன்று
நீயில்லை உன்றன் நினைவே கனக்கிறது ஒவ்வொரு நாயையும் உற்றுப் பார்க்கிறேன்: அவையோ
குட்டை பிடித்து
மயிரெலாம் கொட்டி அலைந்து திரியும் அங்காடி நாய்கள்! மனித சகவாசம் இன்றி சூனியப் பகுதியில் அடிக்கடி கேட்கும்
வடக்கிருத்தல் 138
சோ.பத்மநாதன்
 

துப்பாக்கி வேட்டொலிக் காற்றாது ஓடி பயந்து, பயந்து
பழகிய நாய்கள் மீண்டு வந்த மனிதரைக் கண்டு விலகி விலகி ஓடும் நாய்கள் அவற்றிடை,
நீயில்லை, உன்றன் நினைவே கனக்கிறது.
நாம் கைவிட்ட வீட்டைக் காக்கும் முயற்சியில் உயிரை விட்டிருப்பாய் என்ற உண்மை உறைக்கும் போதெல்லாம் குற்ற உணர்வால் குறுகிப் போகிறேன் உடைந்த வீடுகள், ! இழந்த உடைமைகள், பிரிந்த உறவுகள்,
பெயர்ந்த மனிதர்- என்று ஐந்தொகைக் கணக்கு முடிக்கும் வேளையில், உன் பேரில் உள்ள 'வரவு' என்னிடம் நீ பற்றியதை விட அதிகமாய்ப் போனதால் அடைக்க முடியவில்லை! 'அழித்து எழுத லாம் எனிலோ அனுமதி தரநீ அருகில் இல்லையே.
தூண்டி’ - சித்திரை, 1996
வடக்கிருத்தல் 139
சோ.பத்மநாதன்

Page 82
அற்புதப்பணி
இந்த மூவெழு நாள்களும் நீவிர் இணையி லாததோர் சாதனை செய்தீர் ஐந்தடித்ததும் துள்ளி எழுந்தீர் ஆர்வமாயுடற் பயிற்சிகள் செய்தீர் விந்தை யொன்று நிகழுதென் றெண்ணி விரிவுரைகளைக் கேட்டுக் களைத்தீர் சொந்தமாகவும் சிந்தனை செய்தீர் சூழ லோடிசை வாகி யிருந்தீர்.
சிந்து பாடிச் சிலிர்த்தெழுந் தீர்கள் சிற்ப சித்திரத் துறைநுழைந் தீர், கால் நொந்த போதுந் தளர்ந்திட லின்றி நுண்கலை -பரதம் பயின் lர்கள். சந்தக் கொஞ்சு தமிழ்க்கவி பாடி தனித்துங் கூடியும் நாடகம் ஆடி வந்த வேலை முடிந்த தென்பீரா?
வாழ்க்கை இன்று தொடங்குதல் காணிர்.
140
Grrr. பத மநாதன்
 
 
 
 

நேற்றைப் பேரழிவைநினைந் தேங்கி நெஞ்சயர்ந்து புல்ம்புதல் வேண்டா. ஏற்ற மாபணி முற்றுவிப் போமென்(று) இன்று சூளுரை செய்க, எழுக! ஆற்றல் மிக்கவர் நீரென்றறிந்தே ஆர்வ மிக்குநம் "அரும்புகள் தந்தோம் போற்றி அன்னவர் திறமைசா லிகளாய்ப்
பொலியச் செய்க, புகழடைவீர்கள்.
ஊதியத்துக் காக உயிர்க்காய் ஒடு கின்றவர் தொகையினைக்கண்டு நீர் திகைத்துத் தளர்வுறல் ஒழிக! நேர்மை, தொண்டுளம் செய்கிற தொழிலில் ஆர்வம், அர்ப்பணிப்(பு) ஆகிய குணங்கள் ༡ அமையவேண்டும்ஆ சிரியருக் கின்றேல் பாதை மாறிய பயணங்கள் செய்த
பழிவந் தெய்தும், பகிடியீதல்ல.
ஒற்றைத் தீபத்தினாற் பல ஏற்றி உலகெலாமொளி வீசச்செய் கின்ற வித்தை ஆசிரியத்தொழில் ஆகும்! வேறு செய்யப்பல் லாயிரர் வருவர்! பெற்ற தாய்த்திருநாட்ட்ை மொழியைப் பேண எத்தனைபேர்வரு வார்கள் அற்புதப் பணி ஆசிரி யப்பணி அதுசெயத்துணிந் தீர்நீவிர் வாழ்க! (யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக நடைபெற்ற சேவைக்கு முந்திய ஆசிரியர் பயிற்சியின் முடிவில், இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் வாசிக்கப்பட்டது) - 1989
வடக்கிருத்தல் 141
சோ.பத்மநாதன்

Page 83
மதியம் திரும்பிய பின்.
'பிள்ளை படிக்கும் வயதில், இதுபாவம், சொல்லுக் கேளாமல் தொடங்கி, சனி, ஞாயிறு என்றுபா ராமல் அலையுது ஒரு பொழுது நின்றறியாதிந்தாள் வெயிலில் - பிறஷரடி தோளில் ஒருநோ - தொடங்கி ஒருமாதம் நூலகத்தில் அள்ளிவந்த புத்தகக்கட்டோடு, அந்த மூலையிலே குந்தி இருந்தால் முடியுமோ வேலை? எனக்கு விசராய் வருகுதடி"
பக்கத்து வீட்டுப் பரிமளத்தின் தோள்களில், தன் துக்கச் சுமையை இறக்கிச் சுகம் காண்பாள். அட்மிஷனில் தேறி அருஞ்சாதனை புரிதல் பற்றி ஒருவார்த்தை பாவிசொல்ல மாட்டாளாம்.
வடக்கிருத்தல் 142
சோ.பத்மநாதன்
 
 

மின்சாரம் நின்றுபோய் வீடே பொலிவிழக்க சம்சாரம் செய்துவரும் சகாயத்துக் கீடாய் இழுப்புக் கொடியில் ஒருதொட்டி நீரிறைத்து உடுப்புத் துவைத்து முறையாய் உலரவிட்டு வெந்ததும் வேகாததுமாய்ப் பறித்தெடுத்து நின்ற நிலையில் கவளம் விழுங்கிவிட்டு காலை புறப்பட்டுக் காவல் அரணில்மரம் நாலு சுமந்து, வழியில் ஹெலிகொப்ரர் சுற்றிச் சுடப்போய் மதகுள் சுருண்டு முள் தைக்கத் தவழ்ந்து சயிக்கிள் தனில் மீளத் தாவி வளாகம் வரும்வழியில், சந்தியிலே நீளுகிற க்யூவுக்கென நெஞ்சு பறிகொடுத்து, சின்னண்ணை வீட்டில் சிறு can எடுத்துப்போய் மண்ணெண்ணெய் வாங்க மணிநேரம் செலவிட்டு.
'கொப்பி குடுக்கினமாம் அஞ்சாறு வாங்குங்கோ சுப்புறு கடையிலே சோப்பிருக்காம் - கேக்குதே? ரோச் பற்றி வாங்குங்கோ - கட்டாயம்! சாமத்தில் ஆச்சி இருமினால் ஆரெழும்பிப் பாக்கிறது? மாவின்றி அப்பம் கிளம்ப மறுக்குதப்பா லீவு எடுங்கோ, நாளைக்கு லீலா கலியாணம்' என்று மனையாட்டி இட்ட பணிகளெலாம் ஒன்றும் மறவா(து) உளத்தில் நிறுத்திவந்தால்.
மாஸ்லோவின் கொள்கை வரமறுக்கும்! தோண்டைக்கின் பூனை கதவுப் பொறியைத் தொடமறுக்கும்! பிளேற்றோவின் தத்துவங்கள் பெஸ்ரலொஜிக் கூடாக முளைக்கத் தொடங்குகையில்
மொன்ரிஸோரி சேர்ந்து கொள்வா!
வடக்கிருத்தல் 143
சோ.பத்மநாதன்

Page 84
இரவில் படிக்க இருந்தால். எனதுமகள் குரல்; 'எழுதித் தாருங்கோ கட்டுரை-இப்பொழுதே' ஏழாம் ஆண்டு- ஆனால் இரண்டு முழுப்பக்க நீளம், தலைப்போ தமிழர்தம் பண்பாடு
ஐம்பதிலும் அப்பன் படுமல்லல் கண்டு நொந்தென் குஞ்சுக் குழந்தை குமுறி அழுதகண்ணீர் குண்டு நிரம்பி, குதிரை குளிப்பாட்டி ஏரி நிரம்பி எருமை குளிப்பாட்டி இஞ்சிக்குப் பாய்ந்து இலுப்பையடி நனைத்து தென்னைக்குப் பாய்ந்து தெருவுக்குடைத்துப்போய் எள்ளுக்குப் பாய்ந்து இலவ மரஞ்சுற்றி ہ۔ வெண்டிக்குப் பாய்ந்து விளாத்தியடி நனைக்க.
வாத்தியை நொந்து மனசாரவே திட்டித் தீர்த்துத் திருக்குறளில் மேற்கோளும் போட்டு "இதனை நாளை கொடு, அவனென் படைப்பில் குறைசொன்னால் ஆளை நிறுத்தி அடிப்பன் செருப்பாலை” பின்னையென்ன, எங்கள் தமிழ்ப் பண்பாட்டுக் கோலங்கள் இன்னும் எனக்கே புரியவில்லை, இவனோ சின்னஞ் சிறிசு அறியும் எனநினைக்கும் செம்மறியை என்ன செய்யலாம் என்று எனக்கொருக்கா சொல்லுங்கோ
-கலைமலர், 1994 (தொழில் செய்து கொண்டு படிப்பை மேற்கொள்ளும் ஆசிரியர்களுடைய இடர்ப்பாடுகளை விபரிக்கும் இக்கவிதை யாழ் பல்கலைக்கழகத்தில் அரங்கேறியது 1990)
வடக்கிருத்தல் 144
சோ.பத்மநாதன்
 
 
 

விடுதலை பெற்ற தென்கீபிரிக்காவுக்கு வாழ்த்து
அதிரும் ஆபிரிக்க முரசம்
வின்முட்டும் மலைத்தொடரும் மிகநீண்ட ஆறும்இரு புறமும் சூழ்ந்து மண்முத்தம் இடும்ஆழி கொழிக்கின்ற வளம், வைரம் செம்பொன் -எல்லாம் அந்நியர்கள் கொள்ளையிட வாயிழந்து மூன்றுநூற் றாண்டாய் வீழ்ந்த தென்னகமே "ஆபிரிக்கத் திருநாடே* அதிர்கிறதுன் முரசு மீண்டும்.
வீசுகிற காற்றின்று விடிவுனக்கு எனச்சொல்லக் கேட்டேன் அம்மா நீசுமந்த விலங்கெல்லாம் பொடியாக இன்றுதலை நிமிர்ந்தாய், வாழி நாசமுற வந்தபகை ஒழித்துவிடுதலைபெற்ற நாடே வாழ்க கூசுநிற வெறியென்னும் தீக்குளித்துப் புதுக்கோலம் கொண்டாய் வாழ்க.
தடியடி, கண்ணீர்ப்புகை துப் பாக்கிசிறைக் கூடம் எனத் தழல் மேல் நின்ற படிபுரிந்த தவமெல்லாம் பலித்திடநீ விடுதலைப்பூ பாளம் பாடும் விடியலிது, நின்மைந்தர் சீறியெழும் வேகத்தில் விலங்கு யாவும் பொடிபடு நல்வேளையிது புதியயுகம் நோக்கி நடை போடு தாயே.
-தாயகம், 31.08.94
வடக்கிருத்தல் 145
சோ.பத்மநாதன்

Page 85
வாழுவாய் பண்டார வன்னியனே
அந்நியரைச் சாடி அடிமைத் தளையறுக்க முன்னின்றாய் வன்னி முழுதாண்ட - மன்னவனே பாடுகிறோம் உன்னைப் பணிகின்றோம் உன்கதையை நாடகமாய் ஆடி நயக்கின்றோம் - மேடையிலே சொற்பொழிவு செய்து சுவைகின்றோம், உன்னுருவைக் கற்பனையில் கண்டு களிக்கின்றோம் - அற்புதந்தான் எவ்வாறு நீயில் விருநூறாண் டானபின்னும்
இவ்வா றிறவா(து) இருக்கின்றாய்? -ஒவ்வாத ஆட்சி அகற்றி அடிமை விலங்கொடித்து மீட்சி பெறவிழையும் வீரர்விடு -மூச்சில்நீ வாழுவாய், உன்னை வணங்கும் இனமொரு நாள்
மீளுமாம், காணும் விடிவு.
வடக்கிருத்தல் 146
சோ.பத்மநாதன்
 

மாமனிதன் மண்டேலா
மண்டேலா மீண்டிந்நாள் வருகின்றாய் எனுஞ்செய்தி வானில் வந்து நெஞ்செல்லாம் நிறைகின்ற(து) ஐயாநி வெஞ்சிறையில் நெடுநாள் வீழ்ந்தும் ஒன்றாலும் குறையாத நெஞ்சுறுதி யொடுநின்றிவ் வுலக மெல்லாம் கொண்டாடும் மாமனித னாய்நிமிர்ந்தாய்
வெள்ளையர்தம் கூற்ற மானாய்.
வடக்கிருத்தல் 147
சோ.பத்மநாதன்

Page 86
நின்வரவுக் காய்இந்நாள் நின்மக்க்ள் விழித்திருப்பர், நேரில் வந்துன் புன்னகையைக் கையசைவைக் கண்டுடலம் புளதிப்பர், உலக மெல்லாம் உன்னிப்பாய் நீசொல்லும் ஒவ்வொருசொல் லும் கேட்கும், ஓகோ, இந்நாள் உன்திருநாள் மண்டேலா உத்தமனே
யாருயர்ந்தார் உன்னைப் போல!
நிறம் பெரிதென் றொருநெறியை நிலைநாட்டத் தலைகீழாய் நிற்பார் முன்னே அறம் பெரிதென் பதுநிறுவி மாமனித னாய்நிமிர்ந்தாய் ஐயா! முற்றுந் துறந்தவருள் எவர்உன்போல் சுகமனைத்தும் துறந்துதவம் தொடர்ந்து செய்தார் நிறைந்தபுகழ் படைத்துயர்ந்தாய் நெல்சன்மன் டேலாநீ நீடு வாழ்க.
மாறாத கொள்கையொடு நிற்பவரெல் லாருமுனை வணங்கு வார்கள்
ஆறாத வடுச்சுமந்து வாழ்கின்ற மக்கள்பலம் அடைவர் உன்னால் கூறாத நாவில்லை, குளிராத மனமில்லை, உன்பேர் இந்நாள் ஏறாத அரங்கில்லை, எழுதாத ஏடில்லை, எழுக, வெல்க!
(நெல்சன் மண்டேலா சிறைமீளும் செய்தி கேட்டபோது) - தினபதி
வடக்கிருத்தல் 148
சோ.பத்மநாதன்
 

முட்டைக்குள்ளே விந்தை படைப்பவன்
'கைவினை, சிற்பம், ஒவியம் - இன்ன கவின்கலை வல்லவர் என்று பொய் பல சொல்லிப் பழைமையின் நிழலில் போயொதுங்குவர்இவர்’ என்று வையகம் இகழத் தலைகுனிந் திருந்தோம் வந்தனை, உனது கை வண்ணம் ஐய, சண்முகனே கண்டதும் நிமிர்ந்தோம், அடட நீ ஒரு பெருந் தமிழன்
தூரிகை முட்டைத் துளையினுட் செலுத்தி தொடர்ந்து பல் லாண்டுகள் முயன்று விர, நீ செய்த விந்தைகள் கண்டால் விடுவனோ பாரதி? எழுந்து, ‘யாரடா தமிழன் திறமைகள் தெரியா(து) உளறுகின்றவன்? இங்கு வந்து பாரடா தம்பி சண்முகன், ஆம் என்
பாண்டியன் படைத்ததை’ என்பான்.
சோ.பத்மநாதன்

Page 87
அம்பலக் கூத்தன் ஆடலும், புத்தன் அமைதி சொட் டிடுமுக மலரும், மன்பதைக்காக சிலுவையில் ஏசு மாய்வதும் மராட்டிய நாட்டின் சிங்கமாம் வீர சிவாஜிவா ளோடு சிலிர்த்தெழு தோற்றமும், கோதுள் எங்ங்னம் வைத்தாய், எங்கிது கற்றாய், இணையிலோய் நீ பெருங் கலைஞன்!
ஒரு சிறு குறளால் உலகினை யளந்த வள்ளுவன் திருவுரு இங்கோர் அரிசியால் ஆக்கி அற்புதம் புரிந்தாய் அனைத்துல கிலுமுனைப் போலப் புரிய வல்லவர்யார், மானிட முயற்சி போய்த்தொடும் கொடுமுடி இதுவா ! அரிதரிதைய தலைவணங்குகிறோம் ஆண்டவன் நினைக்கருள் புரிக.
மாம்பழம் சேலம் பட்டுநூலாடை வழங்கும்.ஊர் சேலம் என்றென்று நாம்பல வாறல் வூரினை இந்த நாள்வரை புகழ்ந்துவந் துள்ளோம் கூம்பிய முட்டைக் கோதுளோர் உலகைக் கொண்டுவந்தவன்பெரும் கலைஞன் ஆம்புகழாளன் சண்முகன் வாழும் அந்தவூர் சேலமென் றழைப்போம்!
(சேலம் சண்முகம் என்ற கலைஞர் முட்டைக் கோதுக்குள் நீட்டிய சித்திரங்களின் கண்காட்சியைப் பார்த்த பரவசத்தில் பாடியது) சிந்தாமணி 11.07.82
வடக்கிருத்தல் 150
சோ.பத்மநாதன்
 


Page 88


Page 89
ஆங்கில ஆசிரியராக விரிவுரையாளராக உ கலாசாலை அதிபரா
தமிழ், ஆங்கிலம் ஆ யுடைய சோ.பவின் ெ fdb55T666 Journal (1987)96)]Lñ, Pel (1992)விலும் வெளிவ இவருக்கு மிக்க ஈடு
விமர்சகர், சொற்பொ பன்முக ஆளுமை ட
 

"" = جسکے
சோ.ப என்ற முதலெழுத்துக்
* களால் இலக்கிய உலகில் நன்கு
அறியப்படும் சோ.பத்மநாதன் யாழ் இந்துக் கல்லுாரியின் பழைய மாணவர். பேராதனை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயின்ற இவர் பிரிட்டிஷ் கவுன்சில் புலமைப்பரிசு பெற்று இங்கிலாந்தின் றெடிங் பல்கலைக் கழகத்தில் பட்டப்பின்படிப்பை மேற்கொண்டவர்.
வாழ்க்கையை ஆரம்பித்த இவர், டயர்ந்து, இன்று பலாவி ஆசிரிய க விளங்குகிறார்.
பூகிய இரு மொழிகளிலும் தேர்ச்சிமாழிபெயர்ப்புக் கவிதைகள் அமெof South Asian Literature, Michigan nguin New Writing in Sri Lanka ந்துள்ளன. ஆபிரிக்க இலக்கியத்தில் பாடுண்டு.
ாழிவாளர், நாடக ஆர்வலர் என்ற டைத்தவர் இந்தக்கவிஞர்.