கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விவேகானந்தன் 2000

Page 1


Page 2


Page 3


Page 4
N
color
 

鲇 دهانه آقای
. 鷺 ಫ್ಲಿ? l / ஜிர் oo 9 ஆண்டு | (്ച്ച്ஆம்
It

Page 5
აიზ ?? * Co KG ஒ ல்
字
விவேகானந்த ச6
(ஆரம்பம்:
10 عقة كوهي
20
[2
விவேகானந்த சபை பறீ
CasglibLITLifi66
"விவேகானந்தன் 75 ஆம் ஆண்டு (1
வெளியிட்டு
காலம்: I5-OI-2000
இடம்: விவேகானந்த
34, கொட்டா
திரு. மு. கந்தசாமி திரு. ம. நாகரத்தினம் திரு. க. இராஜபுவனஸ்வரன்
 
 
 
 
 

பை, கொழும்பு
1902)
ܨܘܟ65 *ܐܔ OO கொழும்பு தமிழு” நு a)5LD சித்திவிநாயகர் ஆலய gā LD)
2527
'öf6öfle)5ulleri 925-2000) Dai
5D5)|LI5)IIĎ:
மாலை 5.00 மணி
சபை மண்டபம் ஞ்சேனை, கொழும்பு-13.
UI)
திருமதி. வசந்தா வைத்தியநாதன் திரு. க. விவேகானந்தன் திரு. எம். ஆர். ராஜ்மோகன்

Page 6


Page 7
한
விநாயகர்
திருச்சிற்றும்பவம் திருவாக்கும்; செப்கருமங் கைகூட்டும்; விசஞ்சொற் பெருவாக்கும்; பீடும் விபருக்கும் - உருவாக்கும்: ஆதலால், வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் படிப்புவர்தம் கை.
-பதிவினாராந்திருமுறை திருச்சிற்றம்பலம்
83.3
 
 
 
 
 

&&&&&&&&&&&&&&&& 鹦
திருச்சிற்றர் படம் வானுலகும் மண்ணுலகும் வாமுமறை வாழப் பான்மைதரு செப்பதமிழ் பார்மிசை விளங்க ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நாஸ்னாப் யானைமுக னைப்பரவி அஞ்சலி புெப் சிற்பாம்
- சேக்கிழார் சுவாமிகள் திருச்சிற்பம்பலம்
8-3-3-3-3-3-3-

Page 8


Page 9
繼
翡
றி
i'BE LINE INTEGLITH Irish EF விநாயகர் ஜிர்ைே)
மஹாகும்பாபிெே
TIE0E05ED-2ےTI-=تےTI
ஐந்து கரத்தனை யான இந்தின் இளம்பிறை ே நந்தி மகன்றான ஞாE புந்தியில் வைத்தடி போ
ரீ விராட் புருஷனது சரீரமான பிரம்மாண்டத்தின் இடை வியந்து கூறப்பட்டதும் மகாமேருவின் சிகரங்களில் ஒன்றென கவர்னபுரியென நாயன்மார்களால் பதிகப்பாடல் பெற்ற புண்ணிய அமந்துள்ளவிவேகானந்தசபையில் கோயில் கொண்டெழுந்தரு பரிவாரமூர்த்திகளுக்கும், நூதன பிரதிஷ்டையான் முஷிக பலிபீட மாதம் 28ம்நாள் (12-12-1999)ஞாயிற்றுக்கிழமை திருவோண நகர் கான் 81 மணிமுதல் 913 மணிவரையுள்ள தனுர்லக்கின சுபமு பாலித்துள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்து தரிசித்து விநாயகப்
(15-12-1
J-2 - ||If]] )
7.I.
|}-1 - ) 12-10마
|-|| -|| 1-i고
12-||2-1
1
|
모
그
고,
தமிழ்நாள் கிழபை
ஞாயிறு திங்கள் ரெங்ாய்
புதள் வியாழன்
ஞாயிறு
Hifuliiiiii) I
காலை 82 மணிமுதல் 934 ம இரவு 100 மணிமுதல் நவக்கி மால்ை 500 மக்னிமுதல் கிரா வாஸ்து சாந்தி மிருத்சங்கிர ԼրITemքն 5 (M) լրքճքiրբEեն եր ாேபிஷேகம் கடஸ்தாபனம்: யாகபூஜைஅக்கினிகார்யம்பூ
1145 Dai 12 T In IT ■ காலை 9.00 மணிமுதல் மான 1130 மணிமுதல் 12.00 மணி மால்ை பிம்பகத்தி பூர்வ பக்சிம கா7ை00 மணிமுதல்யாகபூர் பாத்திரா தானம் முதலியன் மஹாகும்பாபிஷேகம் கோ-மங் பிரதமகுரு ஆசியுரை, விபூதிபிர LITETIGAL f5, LICYLDIGE FILpgiJ: #FFFITTI
13-12-1999 முதல் 25-12-1999 வரை மண்டாபிஷே ரும்பாபிஷேகப் பிரமகுருபிரதிஷ்டாகலாநிதி சிவபூந் சி.குஞ்சிதபாதக்கு
வன்பு பிரதிஷ்டா குருமார் கோயில் குருக்கள்
34. விவேகானந்த மேடு,
கொழும்பு-13.
தொலைபேசி 42846
॥
।॥
வையநீடுக மாம மெய்விரும்பிய து சைவ நன்னெறி தெய்வ வெண்டி
uu SSS SuS uu uuSuS SuSuSuSuS S S uS uSS qS SeS S S S S S S S S S SL S S S S S S S uu S uS u S S u u SSSHHS
 
 
 

===
المنطقة பை - விகாழும்பு ாத்தாரன அவர்டபந்தன
ஞாயிற்றுக்கிழமை
LSSeeSS SS SeeSeSeSSe S SSS SSSuSuSuS
岛
ಪ್ಲೆ: கண் முகத்தனை பாலும் எயிற்றனை னக் கொழுந்தினைப் ற்றுகின் றேனே.
நாடித் தாாமெனச் சாந்தோக்கியம் முதலாளிடபநிடதங்களில் த் தகE ஈசுவாச புராணத்தில் சுறப்பெற்றதும், குபேரபுரி : புத் தலங்காயுன்டயதுமான் இலங்கைத்திவின் தலைநகரத்தில் : ளியிருக்கும் சர்வாஷ்ட்வரதநீசித்திவிநாயகப்பெருமானுக்கும் : ங்களுக்கும் மங்களகரமான நிகழும் பிரமாதி வருவும் கார்த்திகை 3;
த்திரமும் சதுர்த்திநிதியும் அமிர்தயோகமும் சுட்டிய சுயவேளையில் 繼 சுடர்த்த வேளையில் மற்றாகும்பாபிஷேகம் நடைபெறத் திருவருள் பெருமாளின் திருவருள் பெற்றுய்யுமாறு வேண்டப்படுகின்றனர். 繼
விபரம் 繼 ளிேக்குள் கர்மாரம்பம் அணுக்ஞை திரவியகத்தி தளபதி ஹோமம் : கிரஹ ஹோமம். 盤 பராந்தி திராஹோமம் பிரவேசபவி: இரசோக்ன ஹோமம். 繼 স্নাত্নাLE நயனோன்மீவனம் தான்யாதி வாசம் EEurTք ELIITIL. 翡 |LTLLL 繼 காகர்ஷணம் யாத்ராஹோமம் கும்பம் யாகசாவா பிரவேசம் ஆர்னாவரபதி தீபாராதன்ைவேத தேவார தோத்திர பாராயண்ம் : | மணிக்குள் தூபி, திப பிம்ப ஸ்தாபனம் அஷ்டபந்தனம், : வத-தேவார பாராயணம்.
வ40 மணிவரை பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்தல்; காரேஸ் க்குள் சிற்பி தூபி அபிஷேகம், காலை யாகபூஜை பூர்ணாவதி. சந்தான்ம் விசேஷாத்ரபதி பூர்னாஹராதி வேத-தேவார பாராயண்ம். :
பூர்னாரதியாகதீபாராதனை வேத ஆசிர்வாத தேவார பாராயகனம் ா 8.1 மணிமுதல் தூபி அபிஷேகம்; யாககும்பம் புறப்பாடு, களதரிசனம் கர்பாவரான அபிஷேகம்யஜமானபிஷேகம்பங்சமர்ப்பனம், சாநம் வழங்கல் ஆசார்ய சம்பாவனை ஆசீர்வாதம், ஆசார்ய உற்சவம் : மிக்கும் பரிவாரமூர்த்தங்களுக்கும் விசேஷ பூஜை தீபாராதன்ை :
ம் 2612-1999 ஞாயிற்றுக்கிழமை மண்டலபூர்த்தி
| -பூந்பொன்னம்பலவாணேஸ்வரா தேர்நானம் கொழும்பு ဖွံ့ဖြုံ வறி பரமேஸ்வரக் குருக்கள் மற்றும் உதவியாளர்கள் : மா சத்தியவடிவேல் 繼
轟 ஈழ மன்னனுக . . . ... " البم புன்பர் விளங்கு: சிவஞானச்செல்வர் : தாந்தழைத் தோங்குக ந நிறுசிறக்கவே
ה". ההתשה", "הדו"חלו "הדה ל"ה", והיה "אל"ה" ו"ח"י "חדש "להודו" ו "=" ("

Page 10
75 ஆம் ஆண்டு மலர்
El ITIFETI
LlGTGCTGITT LLUIT GJISSET, Jln.
மகாகும்பாபிஷேக விஞ்ஞாபனம்
விநாயகர் பொன்னூஞ்சல் மீனாட்சி சுந்தரேசர் ஊஞ்சல் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தன் சிவபூரீ சி. குஞ்சிதபாதக் குருக்கள் வ விவேகானந்த சபைத் தலைவர் வாழ்த் அகில இலங்கை இந்து மாமன்றத் த5 விவேகானந்த சபை பொதுச் செயலா திரு. மா. சத்தியவடிவேல் ஆச்சாரி வ வெளியீட்டுவிழா நிகழ்ச்சிகள்
| | LD5uri g:LITLILJe
12, LIGTGOTETT LLUIT
13. விநாயகர் ஆ
| 4. LMGT5EITILL III
15. Ganapathi W.
16. ஆரணப் பெr
17 விநாயகரும்
18. TiiliiT GETT LILITT
 
 

ானந்தன் 2000
டக்கம்
அருளாசி லைவர் வாழ்த்துரை ாழ்த்துரை
ந்துரை லைவர் வாழ்த்துரை ளர் வாழ்த்துரை ழங்கிய செய்தி
FET
சுழி
லய அமைப்பு
வழிபாடு
Torship
ாருளோன்
அறுகும்
ஆயுதங்கள்
கும்பாபிஷேக மலர்
பக்கம்
iii
Wi
Wii
Wilii

Page 11
W.
9.
3.
32.
பிள்ளையார் - பெயர்களும் காரணமு
விநாயகர் திருவுருவங்கள்
(மூவர்ண ஒவியங்களுடன்)
GFELJE, GEEFT LIGJE, GITT
உலகை ஒன்றாய்க் காணும் திருமூல
ஐந்தொழில்களும் பூந் கணபதியும்
பிரதிஷ்டாகும்பாபிஷேகம் (1987)
கும்பாபிஷேகம் முதல் சங்காபிஷேகம்
அலங்கார வளைவு ஆலயம் - புகைப்
சுவாமி விவேகானந்தர் திருவுருவத்தி
ஓராண்டு நிறைவு (1998)
ஈராண்டு நிறைவு (1999)
'விவேகானந்தன்' சஞ்சிகை 1925 - 2
விநாயகர் - பிரணவத்தின் வடிவம்
பிள்ளையாருக்கு கல்யாணம்
மூஷிகவாகனர் அவதாரமும்
விக்கினராஜரின் விளையாடலும்
LleiteOSTLLITri Eigt, EL LII LGBT
பிள்ளையார் மந்திரம்

ர் கல்விநெறி - சைவநெறி
(1999) חוםםuם
படங்கள்
நிறப்பு விழா (1997)
000 (சிறுகுறிப்பு)
5()
59
63
65
43.

Page 12


Page 13
விவேகானந்த சை பொன்னூ
காப்பு
தரள நிறை அணிபவளம் இந்திர நீலம்
தயங்கு மணிமாளிகைகள் சிறந்து மேவும் அருண வெழில் பொங்கு கொழும் பதனில் சீலம் அணவு விவேகானந்த சபையைச் சாரும் பரவு மிசைக் கோயில் தனில் இனிது வாழும்
பனைக்கை முகப் பராபரனே உந்தன் மீது விரவுமன்பால் அடியேன் சொல் ஊஞ்சற்பாவில்
விக்கினங்கள் வாராமல் அருள் செய்வாயே.
நூல் உயரவிட்ட ஐந்தருப்பூஞ்சோலை நாப்பண்
ஒள்ளிய செம்பவளக்கால் நிரைய நாட்டி வயிரமதால் விட்டங்கள் குறுக்கே போக்கி
வளரொளிப் பொன்னால்நீள் சங்கிலிகள் வீக்கி வெயில் விடுமொன் பான்மணிகள் அழுத்திச் செய்த மின்னிலங்கும் ஆசனத்தில் இனிது மேவி உயர்சிகர கோபுரஞ்சூழ் விவேகானந்த
ஒண்பதியில் நாயகரே ஆடீரூஞ்சல். 1
சிவநெறியும் செந்தமிழும் தழைத்து வாழ தீய நெறி படராமல் மடிந்து மாள
தவம் நோன்பு செறிவறி வெஞ்ஞான்றும் சூழ
சாய்ந்து கொடும் பவவினைகள் யாவும் வீழ
நவக்கிரகம் நாளனைத்தும் நன்மைகூர
நாயகி வல்லபையோடு விவேகானந்த ܫ
அவை கிளர்பொற் கோயில் தனில் இனிது மேவும்
அழகு சித்தி விநாயகரே ஆடீரூஞ்சல். 2
 

பச் சித்திவிநாயகர் prfī
பிள்ளைக்கவி திரு. வ. சிவராசசிங்கம் பி.ஏ. (சிறப்பு)
இலையாவில் துயில்மால்கண் ணிலிபாம்பாக இமவதி முன் னிடுசாபம் பொடி நீறாக தலையாய கருணைபுரி அருட்ப்ரவாகச்
சால்பறிந்து நின்பதமே சார்வார் தங்கள் தொலையாத பவங்களெலாம் தொலைந்து மாயச்
சூழலொழித் தீடேற்ற விவேகானந்தச் சிலையாரும் கோயில் குடி யிருந்து வாழும்
சித்திவிநாயகப் பெருமான் ஆடீரூஞ்சல். 3
தந்தை மலையாளியுடன் அன்னையாகும்
சயிலமகள் நினதழகில் மகிழ்ச்சி கூர சிந்தை மலர் நினது பத மலரிற் சூடித்
திகழடியார் மன முருகிக் கண்ணிர் வார வந்துவழிபடுமன்பர் அல்லல் பாவ
வல்வினைகள் ஆதவன்முன்பணி போல்தீர செந்தமிழின் திறமாயும் விவேகானந்தச்
சித்தி விநாயகப் பெருமான் ஆடீரூஞ்சல். 4
புத்தகத்திலுறைமாதும் செவ்வண்ணத்துப் போதகத்திலுறைமாதும் கவரிவீச அத்திமுக சித்தி புத்தி மகிழ்கணேச
ஐங்கரவென் றருங்கவிஞர் கீர்த்திபேச மெய்த்திகழ் பொற்கலன்பிரபை சூழுமன்பர் மேனியிலே வெண்ணிற்று நிலவுபூச சித்திரப்பத் திகள்மலியும் விவேகானந்தத்
திருத்தளிவாழ் கற்பகமே ஆடீரூஞ்சல். 5

Page 14
முப்போதும் நாற்போது சொரிந்து நெஞ்சம்
மொழி மெய்முக் கரணங்கள் தூய்மையாக்கி தப்பாமே இருமலர்த்தாள் ஏத்துவார் தம்
தண்ணிதய மலர்நிகர்க்கும் புனிதமேவும் வைப்பாகத் திகழுமெழில் விவேகானந்த
வனப்புறு நற்பதி நாடி வருவோர்க்கெல்லாம் எப்போதும் அருள்பாலித் தினிதுமேவும்
இபமுகத்து நாயகரே ஆடீரூஞ்சல். 6
சதமகனும் சசியுமொருவடந் தொட்டாட்ட
சரமலர்மா ரன்ரதியோர்வடந் தொட்டாட்ட
கதிரவனார் ஒளிதிகழ்கண் ணாடிகாட்ட
கலை வளருமதியொளிர்வெண்குடை மேற்குட்ட
நிதிபதிமுன் விநயமுடன் அடப்பை நீட்ட நீரரசன் வாசநறும் பனிநீர் தூவ
அதிமதுர விசை கிளரும் விவேகானந்த
ஆலயத்தில் ஐங்கரரே ஆடீரூஞ்சல். 7
இசைபயிலும் இளமடவார் பாட்டும் தாளம் இணையவயி நயம்புரியு மிளமினார்தம் அசைதுரித சரணமுறு சிலம்பினார்ப்பும்
அருந்தமிழ்வே தம்பயில்வார் ஒலியும் நான்கு திசைதொறுஞ்சென்றெதிரொலிக்கும் விவேகானந்தச்
சேத்திரத்தில் அருளுருவா யினிதுமேவி கசிவுறு நெஞ்சினராகி வணங்கு வார்க்குக்
கதியருளும் கயமுகரே ஆடீரூஞ்சல். 8
dig 6th III
உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந்
தறிநிறுவி உறுதியாகத் தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி
இடைப்படுத்தித் தறுகட் பாசக் கள்ளவினைப் பசு போததக் கவளமிடக்
களுத்துண்டு கருணையென்னும் வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை
நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.
- பரஞ்சோதி முனிவர் (திருவிளையாடற் புராணம்)

நவமணியின் ஒளிகிளரு மகுடமாட
நல்லபய வரதகரம் இரண்டுமாட
புவனமனைத்தையு மடக்கு பண்டியாட புனையுதர பட்டிகையில் ரத்னமாட
தவளமய ஞானவுப வீதமாட
சரணமலர்த் துணைமருவு சதங்கையாட உவமையிலாத் தமிழ் பெருக்கும் விவேகானந்த
உயர்பதியிற் குடியிருப்பீர் ஆடீரூஞ்சல். 9 வணங்குவார் மனங்கசிந்து புளசித்தாட
வரம் பெற்றோர் உளமகிழ்ந்துகுதிகொண்டாட சுணங்குவா மிளநகிலார் நின்பேர்பாட
சுரர்குழாம் அது கேட்டு வருகை நாட கணங்குலாந் தீவினைகள் கதிகெட்டோட காப்பரணித் தலமாமென் றடியார் கூட குணங்குலாஞ் சான்றோர் வாழ் விவேகானந்தக் கோயிலுறை குஞ்சரமே ஆடீரூஞ்சல். 1 O
வாழ்த்து பூதலமா தெந்நாளும் பொலிந்து வாழி
பொன்மழை கார் தவறாது பொழிந்து வாழி ஏதமிலா தேருழவர் சிறந்து வாழி
இணையில் தமிழ் என்றென்றும் இனிது வாழி வேதமுடன் ஆகமங்கள் விளங்கி வாழி
மிகுசைவத்துறை பரிணாமித்து வாழி போதநெறி வளர் கீர்த்தி விவேகானந்தர்
பொற்தலத்தைங் கரநாதர் வாழி வாழி.
கர் பாடல்கள்
முற்பவத்தில் யான்புரிந்ததீவினைகள்
முழுதும் அகற்றும் முகத்தானை அற்பத்து எனை அழுத்தா ஐங்கரனைப் பிற்பவமும் அகற்றும் கோவைச் சொற்பொருது புரியாத வணிகர் குலம்
தினம் பணியும் துளைத்தானானை கற்பகத்தின் மிடி அகற்றும் கற்பகம் ஆம்
விநாயகனைக் கருத்துள் வைப்போம்.

Page 15
விவேகானந்த சபையில் முரி மீனாட்சி சுந்த8
காப்பு பொன்னுலகு பூதலத்தில் பொருந்திற்றென்னப்
பொலியுமனி மாளிகைசூளிகை செம்போது மின்னகலாப் பவனநிரை விளங்கித் தோன்றும்
வியன்பதியாம் வடகொழும்பு நகரில்கீர்த்தி ன்னுவிவேகானந்த சபைசார் கோயில் துலங்கிடுமீனாட்சிசுந்த ரேசர்மீது பன்னுதமிழ் ஊஞ்சற்பா வளரவேழப்
பசுங்குழவி விரைமலர்த்தாள் பணிகுவோமே.
நூல் தரளவிதா னப்பந்தர் நிழற்கீழ் செங்கேழ்
தம்பக்கால் நிரைநாட்டி ஊடுபோர்த்து மரகதவிட் டம்பூட்டி வயங்கு பொன்னால்
வடமாட்டி வயிரத்தால் பலகை கோட்டி விரைமலர்தூவிப்புரியா சனத்தில் மேவி
விவேகானந் தக்கழக வடியார்கூட்டம் விரும்பி இருமருங்காகி வடந் தொட்டாட்ட மீனாட்சி சுந்தரரே ஆடீரூஞ்சல்.
அடியார்கள் உளமாய கூடந்தன்னில்
அமைசீலம் நோன்பு செறிவறிவென் றோதும் படி நான்கும் காலாக நாட்டி மூன்றாய்ப்
பயில்குணங்கள் தமைவிட்டமாக்கி என்றும் பிடிநெகிழா அன்புச்சங் கிலிகள் பூட்டி
பிறங்குபக்திப் பேர்ப்பலகை மீதுநின்னை வடிவுடைமீனாட்சியம்மை சமேதராக
வைத்தாட்டி னாராடி மகிழ்வீர் ஊஞ்சல். 2
i
 

கோயில் கொண்டுள்ள ரளப்வரர் ஊடுந்சல்
பிள்ளைக்கவி திரு. வ. சிவராசசிங்கம் பி.ஏ. (சிறப்பு)
வளைத்தழும்பும் நகிற் தழும்பும் முன்னர்க்காஞ்சி வளநகரிற் பெற்றபுகழ் போதாதென்றே தழைத்தவிசைத் தமிழ்மதுரை மாறன் மாற்றால்
தழும்புற்ற பெருமாளே விவேகானந்தச் செழும்பதியில் எழுந்தருளி வந்தமர்ந்த
செய்தியினைக் கேட்டுவந்து திரண்ட அன்புப் பழுத்தமனந் தார் மகிழ ஆடீரூஞ்சல்
பராபரை மீனாட்சியுட னாடீர் ஊஞ்சல். 3
அஞ்சிறைவண் டினம்புரளுங் கொன்றைமாலை
அன்னைதடா தகைசூட்டு மணப்பொன்மாலை கொஞ்சுதமிழ்க் குமரகுரு பரனாராதி
குலவுகவி வாணர்பிர பந்தமாலை செஞ்சரணப் போதிலடி யார்கள் சேர்க்கும்
திவ்விய தோத்திரமாலை வர்க்கமாட விஞ்சுபுகழ் விவேகானந்தப்பூங்கோயில்
மீனாட்சி சுந்தரரே யாடீரூஞ்சல். 4.
கோலநெடுஞ் சடையிடையே நிலவும் வெள்ளைக்
குளிர்மதிய நிலவாட மதியமாட நீலவல்லி யங்கயற்கண் எழிற்காற்றாமல்
நெடிதுயிர்த்துக் கைமடமான் மறுகியாட மாலயனுங் காணாத மலர்ப்பொற்பாதம் வந்திப்பார் சிரமீது மருவியாட ஆலவாய்க் கோயிலென விவேகானந்த
அவைத்தளியிற் குடியிருப்பீர் ஆடீரூஞ்சல். 5

Page 16
சந்திரசூரியர்கள்நெடு வடந்தொட்டாட்ட
சதுர்முகர்நேரந்தணர்பல் லாண்டுகூற நந்திநிகர் கலைஞர்மிரு தங்கம் கொட்ட நாரதர்போ லிசைநிபுணர் கீதம்பாட இந்திரையும் சசியுநிகர் எழில்கொள்மாதர்
இருமருங்குங் கவரிகொள விவேகானந்த மந்திரத்தே குடியிருப்பீர் ஆடீரூஞ்சல்
மதுரைநாயகியாரோ டாடீர் ஊஞ்சல். 6
சுந்தரர்க்குத் தூதுபோய்த் திரிந்தலைந்தும்
தூமறைமாமுனிவர்வனம் பலிக்குழன்றும் வந்தியிடம் பிட்டமுதல் கேட்டுமிங்ங்ண்
மானமிழந் தலையாமல் மனைநடாத்தி சந்ததமும் இருந்தளிப்பீர் என்பாள்போல
தமிழ்க்கடம்ப வனத்திலுனைக் கைப்பிடித்த சுந்தரமா தேவியுடன் விவேகானந்தத்
தொல்பதியில் எழுந்தருள்வீர் ஆடீரூஞ்சல்.7
சேந்தனார் உவந்தளித்த இரதக் கூழின்
திவ்யசுவை கண்டசிர கம்பக்கூத்தும் தீந்தசையும் தேனுமளைந்துவந்தளித்த
திண்ணனார் படையலுக்கு மகிழும் ஆட்டும் பூந்துகில்மேல் வந்தியிட்ட பிட்டுக்காகப்
புரிநடமும் கண்டிலமெங் குறைகள்போக்க சார்ந்துவிவேகானந்தக் கோயில் வாழும்
செளந் தரரே கயற்கணியோ டாடீரூஞ்சல்.8
பிள்ளையார் பிள்ளையார் பெரு ஆற்றங்கரை மீதிலே அரசு வீற்றிருக்கும் பிள்ளையார் விை யானை முகம் கொண்டவ பானை வயிறு படைத்தவர் பக்த
கல்லினாலே செய்கினும் ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ் ஓம் நமசிவாய வென்ற ஐந் மந்திரத்தை நெஞ்சில் நாட்டும் ஓம் நமசிவாய சிவாய நம ஆறுமுக வேலனுக்கு அண்ணன் நேரும் துன்பம் யாவையும் கலியுகத்தின் விந்தையைக் கா எலியின் மீது ஏறியே இஷ் ஜெய கணேச ஜெய கணேச :ெ பூரீகணேச பூரீகணேச பூரீக

இருண்டவடி யார்மனத்தினுளம் விளர்ப்ப
இளமுத்துநகை கோட்டி யாடீரூஞ்சல் மருண்டவிழிக் கடையாலே எழில்கண்டம்மை
மகிழ்வடையுஞ் சொக்கேசர் ஆடீரூஞ்சல் திரண்டடியார் திருமறைகள் ஒதக்கேட்ட
திருச் செவியிற் குழையசைய ஆடீரூஞ்சல் தெருண்ட மனத்தார் வணங்க விவேகானந்தத்
திருத்தளியில் அருளரசே யாடீரூஞ்சல்.
வாழ்த்து
மாநிலமா தரசிவனப் போங்கி வாழ்க
மணிமுகில்வானம் பருவத்தாரை பெய்க ஆனினங்கள் அருகாது பெருகிமல்க
அரியதிரு முறை கோயில் தொறுமுழங்க தேனிகர்செந் தமிழ்சாலை மன்றமெங்கும்
திகழ்ந்திடுக சிவநாமம் சிறப்புற்றோங்க மேனிலைய புகழ்மருவு விவேகானந்த
வியன்தளிமீனாட்சிசுந்தரேசர் வாழி.
மை வாய்ந்த பிள்ளையார் :மர நிழலிலே னகள் தீர்க்கும் பிள்ளையார் ர் ஐந்து கரங்கள் உடையவர் ர் குறை தீர்ப்பவர் மண்ணினாலே செய்கினும் சில் நாட்டும் பிள்ளையார் தெழுத்து
பிள்ளையார்
ஓம் (ஒம் நமசிவாய) ாான பிள்ளையார் நீக்கிவைக்கும் பிள்ளையார் (பிள்ளையார்) Eவேண்டி அனுதினம் டம் போலச் சுற்றுவார் ய கணேச பாஹிமாம் ணேச ரட்சமாம்.
f

Page 17
நல்லை திருஞான
இரண்டாவது குருமஹா சந்நிதானம்
றுநீலறுந் சோமசுந்தர தேசிக ஞான
அவர்கள்
அன்பு நெஞ்சத்தீர்!
விவேகானந்த சபையில் எழுந்தருளியிருக்கு நடைபெறுவதையிட்டு மனநிறைவடைகின்றோ அனைவரும் சைவப்பண்பாட்டோடு வாழ்வதற்கு சபைகளில் விவேகானந்த சபையும் ஒன்றாகும். இச் பாடப் பரீட்சையை நடத்தி மாணவர் மத்தியி பாராட்டுக்குரியதாகும். வீரத்துறவி எனப் போற்றி இந்நிறுவனம் செய்கின்ற பணிகள் ஒவ்வொன் எழுந்தருளியிருக்கும் விநாயகன் சித்திவிநாயகன நம் சமயத்தில் முக்கிய வழிபாடாகும். அவரை வ பெறாது என்பது வரலாறு. விநாயகர் வழிபாடு கன் தலைவனாக இருக்கும் விநாயகர் தவறு செய்தல் வழிபாடாகும். அஞ்ஞான இருளை நீக்கி மெஞ்ஞா விநாயகருக்கு கோயில் அமைத்து கும்பாபிஷேகம் சபைக்கும், மக்களுக்கும் இறைவனுடைய ஆசி தொடர்ந்து நிறைவாகச் செய்யவும் தலைவர், செயல
இறைவன் ஆசீர்வதிப்பானாக.
என்றும் வேண்டு
 

சம்பந்தர் ஆதீனம்
- நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை.
சம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் வழங்கிய
ம் விநாயகப்பெருமானுக்கு மஹாகும்பாபிஷேகம் ம். இலங்கையில் உள்ள சைவத்தமிழ் மக்கள் தன்னிகரில்லா பணியாற்றிக் கொண்டிருக்கும் சபை வருடா வருடம் பாடசாலை மட்டத்தில் சமய ல் சமய அறிவினை ஊட்டிக்கொண்டிருப்பது ய சுவாமி விவேகானந்தர் பெயரினால் இயங்கும் ாறையும் ஆசீர்வதிக்குமுகமாக சபையினுள்ளே ாக எழுந்தருளி இருக்கிறான். விநாயக வழிபாடு ணங்காது எக்காரியம் தொடங்கினாலும் நிறைவு ண்டிப்பானதும் எளிமையானதும் ஆகும். சட்டத்தின் வனைத் திருத்தி நற்பிரஜை ஆக்குவது விநாயகர் ான ஒளியைத் தருவது விநாயகரின் அமைப்பாகும். செய்யும் சிவாச்சாரியர்களுக்கும், விவேகானந்த சிகிடைக்கவும் சபை தன்னுடைய பணிகளைத்
ாளர், பொருளாளர் உறுப்பினர்கள் அனைவரையும்
ம்ெ இன்ப அன்பு

Page 18
கொழும்பு இராமகிருவி
சுவாமி ஆத்
அவர்கள்
விவேகானந்த சபை கொழும்பு, இந்நாட 1897ம் ஆண்டு இந்நாட்டிற்கு சுவாமி விவேகான அமைக்கப்பட்டு, தொடர்ந்து பல தசாப்தங்களாக சைவசமய சிறார்களின் சமய அறிவை வளர்க்கும் பல ஆண்டுகளாக சிறப்புடன் நடைபெற்று வருவன் நடனப்பள்ளி முதலியனவும் இவர்களது பணிகளில்
அவர்களது சபை வளாகத்திலே அமைந்துள் சூழலை ஏற்படுத்தியுள்ளது. தினசரி பூஜையும், ெ வருகின்றன. இவ்வாலயம் புனருத்தாரணம் செ நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழா சி பிரார்த்திக்கின்றோம்.
விவேகானந்த சபையினருக்கு எங்கள் பாராட்
ஒ: நி: :
ଶ୍ରେ:
 

த்ண மிஷன் தலைவர்
மகனாநந்தா
வழங்கிய
ட்டின் மிகப்பழமையான சமய ஸ்தாபனமாகும். ாந்தர் விஜயம் செய்ததையொட்டி இந்த ஸ்தாபனம் நன்கு இயங்கி வருகிறது. நாடெங்கிலும் உள்ள நோக்கில் அவர்கள் நடத்தும் சைவசமயத் தேர்வு. தை பலரும் அறிவர். இது தவிர, பாலர் பள்ளி, இசை அடங்கும்.
ாள் சிறிய விநாயகர் ஆலயம், அங்கு ஒரு சமயச் விசேட பூஜைகளும் அங்கு தவறாமல் நடைபெற்று ய்யப்பட்டு எதிர்வரும் மாதத்தில் கும்பாபிஷேகம் றப்புடன் நடந்தேற இறைவனது திருவருளைப்
டுதல்களும், நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக!
: நி:
: بقيig

Page 19
பிரதிஷ்டா கலாநிதி சிவபூ சி, குஞ்சி
ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. - 3 *ஞ்: ஃக்ஃ &&&
A
堑 8 & 38.338
V. . . ് இ
ஏக தந்தம் சது LITS LDISIGE o அபயம் வரதம்
பிப்ரானம் மூவி ரக்தம் லம்போ கர்ணம் ரக்த ரக்த கந்தா நு ரகத புஷ்பைன்ட் பக்தாநூ கம்பித ஜகத்காரன ம ஆவிர்பூதம்ச ெ ப்ரக்ருதே புரு ஏவம்த் யாயதி ஸ்போகி போ
ஒற்றைக் கொம்பை உடையவனும், நான்கு அங்குசம், அபயமுத்திரை, வரதமுத்திரை இவைகளை கொண்டவனும், செந்நிறப் பொலிவுடன் தொங்கு செவிகளை உடையவனும், செந்நிறம் தோய்ந்த துகி அவயங்களை உடையவனும், மணக்கும் மலர்கள அளவுகடந்த கருணை உள்ளவனும், உலகத்தோற்ற: முன்னேதோன்றியவனும், பிரகிருதியிலிருந்தும் புழு கணபதியை எந்தத் தொண்டன் இடைவிடாது சிற் சிறந்த யோகமுணர்ந்தவனாகக் கருதப்பெறுகிறான இத் தன்மை வாய்ந்த விநாயகர் சுமுகர் என் ஒளவையார் முதலிய தெய்வப்புலமை கொண்டவர் வழிபட்டுய்ந்தார்கள். சிவன், விஷ்ணு கோயில்களி: சாணி, மண்ணிலும் உருவகித்து கூடுதல் வழிபாடு ெ கிடக்கும் மூலாதாரத்தை இருப்பிடமாகக் கொண்ட நம் நாட்டிலும் எக்காரியத்தைத் தொடங்கினும் என்ற சொல் இவரைக் குறிப்பது. அகார உகார மக நிற்பதாகும். எனவே பிரணவப் பொருளாம் மஹாக நிறைந்து விளங்கி எமக்கெல்லாம் உறுதுணையா சபையிலுள்ள ஆலயத்தில் எழுந்தருளியுள்ளார். ஆலய மாதம் 26ம் நாள் (12-12-1999) ஞாயிற்றுக்கிழ: அமிர்தயோகமும் கூடிய காலை 8.19 மணிமுதல் மஹாகும்பாபிஷேகம் நடைபெறத் திருவருள் பாலி வழிபடுவோமாக. சபையினருக்கும். இக்கும்பாபிலே விக்னேஸ்வரப் பெருமான் அருள்பாலிப்பாராக!
மேன்மை கொள் சைவ நீதி
 

தபாதக்குருக்கள் அவர்கள் வழங்கிய
N |ச்செய்தி
Š 3: 28., 33., 8., 33 838 538 3: 3- 18 - 3 ჯჯ. - ! SSS L S S S S LLLSS
பர்ஹஸ்தம் םLד6 TIBMן ח
ஹஸ்தைர் திகத்வஜம் தரம் சூர்ப
JTFFL
லிப்தாங்கம் பூஜிதம் தம் தேவம் ச்யுதம் hருஷ்டியா தெள ஷாத்பரம்
யோநித்தியம் கீநாம் வர!
திருக்கரங்களை உடையவனும், கைகளில் பாசம், ாத்தரித்து விளங்குபவனும், மூஷிகத்தைக் கொடியாகக் கின்ற உதரத்தை உடையவனும், சுளகு போன்ற ைெலயுடுத்தவனும், சிவப்புச் சந்தனத்தால் பூசப் பெற்ற ால் அர்ச்சிக்கப் பெற்றவனும், தொண்டர்களுடன் த்திற்கு காரணமாயுள்ளவனும், உலகத்தோற்றத்திற்கு நஷனிடமிருந்தும் வேறாகப் பிரிந்துள்ளவனும் ஆன தனை செய்து வருகிறானோ அவன் யோகிகளுள்
எனக் கணபதி உபநிஷத் தியானம் கூறுகிறது. ற பெயர் கொண்டும் வழிபடப்பெறுகிறார். நக்கீரர். களும், ஆதிசங்கரர் போன்ற அவதார புருஷர்களும் லும், அரச மரங்கள் முதலிய இடங்களிலும் மஞ்சள், பெறுபவரும் விநாயகரே. குண்டலினி சக்தி பொதிந்து
T
இவரை வழிபடாது தொடங்குவது கிடையாது. 'ஓம்' காரங்களைத் தன்னுள்ளே கொண்டு உலகைப் பரவி ணபதி முழுமுதற் கடவுளாக எங்கும் எப்பொருளிலும் கவும் விவேகானந்த சபையைக் காக்கும் பொருட்டு த்தைத்திருத்திப் புதுக்கிபிரமாதி வருஷம் கார்த்திகை மை திருவோண நட்சத்திரமும் சதுர்த்தி திதியும் 9.13 மணிவரையுள்ள தனுலக்ன சுபவேளையில் த்ெதிருக்கும் இந்நன்னாளில் நாமெல்லாம் போற்றி டிக வைபவத்தில் பங்குபற்றிய தொண்டர்களுக்கும்
விளங்குக உலகமெல்லாம்!

Page 20
விவேகானந்த
செ. சிவராசா
களியானைக் கன்றைக் கண ஒளியானைப் பாரோர்க் குத6 கண்ணுவதும் கைத்தலங்கள் நண்ணுவதும் நல்லார் கடன்.
உலகிலே வாழ்கின்ற மக்களெல்லாம் துன்பமி எண்ணியபடி எதுவுமே நடப்பதில்லை. அதற்குக் கா
“செய்தீ வினையிருக்க தெய் எய்த வருமோ இருநிதியம்."
“ஊழ்வினை உருத்து வந்து
“ஊழிற் பெருவலி யாவுள மற் சூழினும் தான்முந் துறும்."
“பல்லாவுள் உய்த்துவிடினும் வல்லதாம் தாய்நாடிக் கோட பழவினையும் அன்ன தகைத் கிழவனை நாடிக் கொளற்கு
வினையின் வலிமையைப் பழந்தமிழ் நூல்கள் வினையாகிய எதிரி வேரறத் தொலையவேண்டுெ பற்றவேண்டும். வந்த வினையையும் வருகின்ற வல்வி பெருமானே. கணபதி பூசை கைமேற்பலன்.
இந்த அற்புதத் தெய்வம் விவேகானந்த சபையி வழங்கவல்ல பூரீ சித்திவிநாயகராய் எழுந்தருளி மகாகும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடந்தேறி பொருத்தமான பணி. அறிஞர்களுடைய கட்டுரை அலங்கரிக்கின்றன. விழா மலர் சிவமணம் பர
பெருமகிழ்ச்சியுறுகின்றேன்.
 

பதியைச் செம்பொன்
பும் - அளியானைக்
கூப்புவதும் மற்றவன்தாள்
(பதினொராந் திருமுறை)
lன்றி இன்பமாகவே வாழ விரும்புவார்கள். ஆனால் ரணம் முற்பிறவிகளில் செய்த வினையே.
பவத்தை நொந்தக்கால்
ஊட்டும்"
றொன்று
குழக்கன்று லை - தொல்லைப் தே தற்செய்த
99
ர் வற்புறுத்துகின்றன, வலியுறுத்துகின்றன. இந்த மென்றால் விநாயகப் பெருமானுடைய திருவடியைப் னையையும் போக்குபவர் விக்னராஜனான வேழமுகப்
lன் வழிபடும் கடவுளாய் அனைத்து நன்மைகளையும் அருள்பாலிக்கின்றார். அவருக்கு மந்திர பூர்வாய் மண்டலாபிஷேகம் நிறைவேறி மலர் வெளியிடுவது களும், படங்களும், அரிய செய்திகளும் இம்மலரை ப்பிச் சிறந்த பயனை நல்குமாறு வாழ்த்துவதில்
க்கம்

Page 21
அகில இலங்கை இந்து வி. கையிலாசபிள்ளை
அன்புடையீர்!
விவேகானந்த சபையில் நிறுவப்பட்டிருக்கும் 6 யாவரும் அறிந்த விடயமாகும். விநாயகர் ஆலய கு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை அறிந்து
கும்பாபிஷேகம் நிறைவு பெற்று அடியார்கள் தரி அடியார்களுக்கு சகல செளபாக்கியங்களையும் ருளாலே கும்பாபிஷேகம் இனிது நிறைவேறும் என்ட
நாட்டில் அமைதியும் சமாதனமும் ஏற்படுவத வணங்குகின்றேன்.
 

மாமன்றத் தலைவர்
ா அவர்கள் வழங்கிய
விநாயகர் ஆலயம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது டமுழுக்கு இன்னமும் சில நாட்களில் செய்வதற்கு து மகிழ்ச்சி அடைகின்றேன்.
சனத்திற்கு விநாயகப் பெருமான் அருள் பாலித்து கொடுத்துதவுவார் என்பதில் ஐயமில்லை. அவன து திண்ணம்.
ற்கு அருள் புரியுமாறு விநாயகப் பெருமானை

Page 22
விவேகானந்து சபை ெ
(வாழ்த்து
“சுக்லாம் பரதரம் விஷ்ணு பிரசன்ன வதனம் த்யோ ஸர்வ விக்னோப சாந்த(
இந்த அண்டசராசரங்களினதும், சகல உய அமையும், ஆதி மந்திரமாம் பிரணவத்தின் உட்பொ( பக்தி சிரத்தையோடு வழிபடும் அடியவர்களின் விை வாய்ந்தது விநாயகப் பெருமானின் திருவருள்.
வேண்டுவார், வேண்டும் வரம் அளித்தருளும், வழிபட்ட பின்னரே எக்காரியத்தையும் தொடங்குவது போது ஏற்படும் விக்கினங்களை (இடையூறுகளை) என்று போற்றுகிறோம். விநாயகர் ஆலயங்களி நடைபெறும்போது, விநாயகப் பெருமானுக்கு முத மூர்த்திகளுக்குப் பூஜை செய்வார்கள். திருமண எ போன்ற சுபநிகழ்ச்சிகள் அனைத்தும் கைகூடுவ நிற்கின்றோம். இக்கருத்தினை மெய்ப்பிக்கும் வை சித்திவிநாயகரை, எமது சபை வளவிலே எழுந்தரு சிறிய தோற்றமுடையதாக இருந்தாலும், அதில் வீற் மகத்தானது என்பதைப் பல அடியவர்களின் அனுபவ
சித்தி விநாயகர் சபை வளவில் இருப்புக் கொண் தொடர்ந்து, கடந்த 12-12-1999 அன்று, சிவழீ குஞ்சி பெருமானுக்கு கும்பாபிஷேகம் ஆகம முறைப்படி இனி 14 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் சிறப்பாக நடை ஆராய்ச்சிக்கட்டுரைகளை உள்ளடக்கிய, ஒரு விசேட ஒவ்வொருவரும் தத்தம் இல்லங்களில் பேணிப் பா ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் தேடுதற்கரி யால் யாவரும் படித்துப் பயன் பெறவேண்டிய நூலாக
நல்குமாறு பிரார்த்திக்கின்றேன்.

பாதுச் செயலாளரின்
செய்க)
றும் சசிவர்ணம் சதுர்புஜம் யேத்
பிரினங்களினதும் தோற்றத்திற்குக் காரணமாய் ருளாய் அமைபவர் விநாயகப் பெருமான். தன்னைப் னைகளைப் பூண்டோடு அழித்து உய்விக்கும் சக்தி
கருணை மூர்த்தியாகிய விநாயகப் பெருமானை இந்துக்களின் மரபு. காரியங்களை மேற்கொள்ளும் நீக்குவதால் தான், அவரை நாம் “விக்கினேஸ்வரர்” ல் மட்டுமல்ல, ஏனைய ஆலயங்களிலும் பூஜை லாவதாகப் பூஜை செய்துவிட்டுத்தான், ஏனைய வைபவம் வித்தியாரம்பம், நூல் வெளியீடு என்பன தற்கு விநாயகப் பெருமானை முதலில் வேண்டி கையிலே, சகல காரிய சித்திக்கும் வழிவகுக்கும் ளச் செய்திருக்கிறோம். பார்ப்பதற்கு இவ் ஆலயம் றிருக்கும் விநாயகப் பெருமானது சக்தி எத்தனை ங்கள் நிரூபிக்கின்றன.
ாடு பன்னிரெண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தபாதக் குருக்கள் தலைமையில் ழரீ சித்தி விநாயகப் ரிதாக நிகழ்ந்தேறியது. அதையடுத்துத் தொடர்ந்து பெற்றது. கும்பாபிஷேகத்தை ஒட்டி, சிறந்த சைவ மலர் வெளிவரவுள்ளது. இம்மலர் சைவப்பெருமக்கள் துகாக்க வேண்டிய அரிய நூலாகும். மேலும் இவ் ய கருத்துக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளமை இது விளங்குகிறது. மலர் மணம் பரப்பி நன்மை பல
சிவஞானச் செல்வர் க. இராஜபுவனிஸ்வரன்
கெளரவ பொதுச் செயலாளர்

Page 23
அராலி கிழக்கு, சிற்பாசாரியார் திரு.
அவர்கள்
வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட புராண இந்து சமயம் சிறப்புற விளங்கியதென்பதற்குப் பல
இவ்வகையில் இலங்கையில் மேல் மாகா பிரயத்தனத்தாலும் அயராத உழைப்பாலும் அமை வதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
பஞ்ச கிருத்தியங்களுள் படைத்தல் தொழிலு: அவர்கள் முறையே மனுப்பிரமா, மயப்பிரமா, துவவி இவர்கள் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு வகையான ஜீவாத்மாக்களுக்குரிய உருவங்களைப் படைப்பார். வாக இருப்பார். இவர் கட்டிடங்கள் அமைப்பதிலு இதில் ஒவ்வொன்றிக்கும் அளவு பிரமாணங்கள் உ பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆலய அமைப்ட மறைந்த பிரபல சிற்பாசாரியார் அராலியூர் முருகே
இவ்வாலயத்தைச் சிறப்புற அமைத்துக் கெ அடுத்தபடியாக சபையினர்க்கும் எனது மனமா கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
 

வட்டுக்கோட்டை
மா. சத்தியவடிவேல் வழங்கிய
ன இதிகாச காலங்களிலேயே இலங்கைத்திவில்
ஆதாரங்கள் உள்ளன.
னத்தில் விவேகானந்த சபையினரின் மிகுந்த க்கப் பெற்ற விநாயகர் ஆலயம் குடமுழுக்குப் பெறு
க்கு கர்த்தா பிரம்மன் பிரமாக்கள் ஐந்து வகைப்படும். நடாபிரம்மா, சில்பிரமா, விஷ்வயியபிரமா எனப்படுவர். உருவகிப்பை மேற்கொண்டிருப்பார்கள். மனுப்பிரமா அதே போன்று கட்டிடக் கலைக்கு சில்பிரமா கர்த்தா ம் சிலைகள் செதுக்குவதிலும் முதன்மை பெறுவார். -ண்டு. அதன்படி இவ்வாலயம் உத்திரமட்ட வேலைப் விதிமுறைகளை நான் எனது குருவும் தந்தையுமாகிய சு மார்க்கண்டு அவர்களிடம் கற்றுக்கொண்டேன்.
காடுக்க சந்தர்ப்பத்தை வழங்கிய இறைவனுக்கும். ர்ந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்

Page 24
விவேகானந்த
சுவாமி விவேகானந்தரின்
காலம்
இடம்
பூஜையும், பஜைனயும்
மாலை 6.00 Lorrosu 6.10 மாலை 6.20 Lorrstnsu 6.30
மாலை 6.45 LDT6th6) 7.15
7.25 נה6הס6חLD மாலை 7.35 Lortsons) 7.45 மாலை 7.55 மாலை 8.10 நன்றியுரை தேவாரம்
།
3வது ஆண்ரு நிறை
15-01-2000 சனிக்கிழமை ம சிலையடி முன்றல்
இராமகிருஷ்ண மிஷன் கெ
x -assas-a- - - ------xes----------axis
சபையில் எழுந்தருளியு (jibLITLEGngzió I இடம்: சை தேவாரம்
செ. சிவ சுவாமி ஆ திரு. ந. திரு. சில திரு. தே ğ56lc5.V. 6 திரு.M. திரு.K. Sci. D. (பொன்ன திரு. P.
Sob. S.F திரு. S. திருமதி. திருமதி. திருமதி. திரு. ஜெ
தலைமை உரை ஆசியுரை •თ. மலர் வெளியீட்டு உரை முதற்பிரதி பெறுபவர் சிறப்புப் பிரதி பெறுபவர்கள்
----------. ----ex-- - - -----a-
பொங்க
சிறப்புரை கம்பவாரிதி E. ஜெயராஜ் கவியரங்கம்
“எண்ணக் குவைகளின் வண்
தலைமை - திருமிகு. (
“மகாகவி பாரதியின் பெண்மை நோக்கு” “பாவேந்தர் பாரதிதாசனின் பெண்மை நோ “கவியரசு கண்ணதாசனின் ஆன்மீக நோக் “கவிக்கோ அப்துல் ரகுமானின் பொதுஉட “கவிவேந்தர் வைரமுத்துவின் இளைஞர் ே
xi
 

யம் S.
á
சபை கொழும்பு திருவுருவச்சிலை நிறுவிய வு விழா 15-01-2000
ாலை 5.00 மணிக்கு
ாழும்பு
یہی معم-ہجہ * -- -- .ــــمہ۔۔۔۔۔بی۔۔------۔ ۔. -یہ
Səfirsən" riflığ55l6llömulsifari DauñT 66Erful
மண்டபம்
ராசா (P.C. சபைத் தலைவர்) ஆத்மகனானந்தாஜி (இராமகிருஷ்ண மிஷன், கொழும்பு) பரம்சோதி (மேலதிக செயலாளர், கலாசார அமைச்சு) பழநீ. குஞ்சிதபாதக் குருக்கள் சபந்து VT.V. தெய்வநாயகம்பிள்ளை கைலாசபிள்ளை (அகில இலங்கை இந்துமாமன்ற தலைவர்) நாகரத்தினம் (குழுத்தலைவர்) துரைராஜா (உபதலைவர்)
M. சுவாமிநாதன் னம்பலவாணேச்சரர் கோவில் அறங்காவலர்) பாலசுந்தரம் (தர்மகர்த்தா, வரதராஜ விநாயகர் ஆலயம்) '. சாமி (தலைவர், வட இலங்கை இந்து பரிபாலன சபை) " தனபாலா (தலைவர், சைவ முன்னேற்ற சங்கம்) ஜமுனா கணேசலிங்கம்
இந்திராணி யோகராஜா
வானதி ரவீந்திரன்
1. பி. ஜெயராம்
۔ جمعجمجمعمم- ......--۔مبرمیج۔۔۔۔۔۔ ۔۔۔ حوچ
ஸ் விழா
ணப் படையல் புத்தாயிரத்தில் புதிய பார்வை” மேமன் கவி அவர்கள்
- புலவர் திருமதி. பூரணம் ஏனாதிநாதன்
க்கு” - திருமிகு S. திருக்குமரன் க்கு” - திருமிகு. கங்கைவேணியன் மை நோக்கு" - திருமிகு, மேமன் கவி நாக்கு” - திருமிகு. க. சிவசங்கர்

Page 25
என்ற இரு சகாப்தங்களின் புகழ் போலவே ஆண் தொடர்ந்து வெளிவரும் சஞ்சிகைகளில் முதலிடம்
இப்பெருமை மிக்க சஞ்சிகையின் 75 ஆம் ஆ காத்துவரும் சித்தி விநாயகப் பெருமானின் ஆ பெருமையடைகிறது.
குறுகியகால அவகாசத்தில் தயாரிக்கப்ப பரிணாமங்களை முழுமையாக வெளிக்கொணர மிருந்து தொகுத்திருக்கிறோம். பிள்ளையார் சுழி ஆயுதங்கள், வாகனம், பெயர்கள், திருவுருவ வடி கதைகள் என மலரின் இதழ்கள் மணம் பரப்புகின்ற
இம் மலர் வெளியிடும் நாள் எமது சபை மு 3வது ஆண்டு நிறைவு விழாவாகவும் உள்ளதால் பார்க்கும் வண்ணம் ஒரு கட்டுரை அமைந்துள்ளது.அ அன்று வருவது இம்மலருக்கு மேலும் ஒரு சிறப்பை:
சான்றோர் பலரால் கூட்டிணைக்கப்பட்ட இக் முகத்தானின் திருவடியில் சமர்ப்பித்துப் பெருமிதம்
 

mGĪr FImĪŪUGūII
1902 இல் ஆரம்பிக்கப்பட்ட விவேகானந்த சபை து நூறாண்டு நிறைவைக் கொண்டாட ஆயத்த கிறது. 1925 இல் தொடங்கிய "விவேகானந்தன் சிகை இவ்வருடம் 75 ஆண்டுகளைப் பூர்த்தி ய்கிறது. விபுலானந்த அடிகளை முதலாசிரியராகக் ாண்டு ஆரம்பித்து விபுலானந்தர் - விவேகானந்தர் டுகள் கடந்தும் இன்றும் மங்காது இத்திருநாட்டில் பெற்றுத் திகழ்கிறது.
ஆண்டு மலரை சபையில் எழுந்தருளியிருந்து எமைக் லய கும்பாபிஷேக மலராக வெளியிடுவதில் சபை
ட்டதாயினும் விநாயகப் பெருமானின் பல்வேறு விரும்பி பலவித அம்சங்களை பல்வேறு நூல்களிலு |யிலிருந்து ஆரம்பித்து வழிபாடு, பொருள், அறுகு, வங்கள், மந்திரங்கள், பாடல்கள் மேலும் புராணக்
եմT.
ன்றலிலுள்ள விவேகானந்தரின் சிலையை நிறுவிய அச்சிலை நிறுவிய நிகழ்ச்சிகளை நினைவில் மீட்டிப் அத்துடன் இவ்விழா தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் த் தந்துள்ளது.
ச்சிறு புஷ்பத்தை மலர்க்குழுவின் சார்பில் பூந் வேழ கொள்கிறோம்.
மலர்க்குழு சார்பில் எம். ஆர். ராஜ்மோகன் நூலகப் பொறுப்பாளர்.
விவேகானந்த சபை.
liாந்த்ன்:பிரி:ே

Page 26
எழுத்தில் பிள்ளையார்:
ஏடுகளில் எழுதத் தொடங்கினாலும், கல்லில் எழுத்துக்களை வெட்டத் தொடங்கினாலும், காகி தங்களில் எழுதத் தொடங்கினாலும் பிள்ளையார் சுழியை முன்னர் இட்டே தொடங்குவது மரபு. மறந்தாவது பிள்ளையார் சுழி போடாமல் விட்டால் போதும்; பெரியவர்களுக்குக் கோபம் பொங்கிவந்து விடும். நாமாகத்தவற்றினை அறிந்துதிருந்தும்வரை அவர்கள் மறக்கருணை காட்டியே தீருவார்கள்.
பிள்ளையார் கழி பிறந்தது எப்படி?
இது இக்காலத்தில் பலருடைய கருத்துக் களைக் கவர்ந்திருக்கின்றது. அவரவர்களும் தங்கள் அறிவு அநுபவங்களுக்கு ஏற்பக் காரணம் காட்டி வருகின்றார்கள். அவைகளை எல்லாம் தொகுத்துணர்வதுகூட உண்மையை அறிந்து கொள்ள உறுதுணையாகும்.
சிலர், நம்முடைய எழுத்து வட்ட வடிவமானது. வட்டம் இயற்கையான வடிவம். குழந்தைகள் வட்டம் வட்டமாக எழுதுவதைப் பார்க்கின்றோம். அதுபோல, எழுதத் தொடங்குபவனும் வட்டம் இட்டான். விரைந்து எழுதும்போது வட்டத்தின் முடிவு நீளக் கோட்டில் முடியும். இதற்குப் "பிள்ளையார் சுழி என்று பெயர் சூட்டினர் சமயத்துறை சார்ந்த தக்கோர் என்பர்.
சிலர், ஏட்டிலும், தாளிலும் எழுதும்போது எழுதுகோலின் நேர்மையை ஆராயச் சுழித்து இழுத்தார்கள். வட்டமும், கோடுமான இருவடிவத் தையும் எழுத இந்த எழுதுகோல் பயன்படுமா என்று பார்க்கச் சுழித்து இழுத்தார்கள். தொடங்கிய
 
 

எழுத்தணிவயல் றுந் பஞ்சாகூடிர விநாயகர் ஆலய மஹாகும்பாபிஷேக மலர் (29-03-1956)
எதனையும் பிள்ளையாரோடு சேர்த்துவிடும் பெருந்தகையாளர்கள் இதனைப் பிள்ளையார் சுழி என்றனர் என்பர்.
சிலர், ஒம் என்பது முதல் எழுத்து. இதனை விரைந்து எழுதும்போது "உ" இப்படி எழுதினர். நன்றி மறவாத தமிழ் மக்கள் எழுத்துக்களுக்கு எல்லாந் தாயாகிய பிரணவத்தை முன்னெழு தியே, ஏனையவற்றைப் பின் எழுதினர். இந்தப் பிரணவம் பிள்ளையார் வடிவம். பிரணவத்தின் திரிந்த வடிவம் பிள்ளையார் சுழி என்பர்.
பிரணவமும் - பிள்ளையார் கழியும்:
ஓங்காரம் பரம்பொருளை உணர்த்தும் சொல். இதற்கு உயர்த்துவது என்றும் பொருள் உண்டு. ஒருமுறை விதிப்படி உச்சரித்தால்உச்சரித்தவனை உயர்வற உயர்ந்தகதியிற் சேர்ப்பது என்பது கருத்து. உபதேசம் பெற்ற ஆன்மா இதனை உச்சரித்த அளவில், பருவுடல் நுண்ணுடல் காரண வுடல் என்ற மூன்றுடலையும் அகற்றிப் பிரகிருதி மண்டலத்திற்கு மேலே உயர்வன் என்பது 6l6MTj,95 LDTửd.
இந்தப் பிரணவமே வேதமூலம். இதனைத் தியானித்து அநுபூதியடைந்தவன் சாவா மூவாப் பேரின்பநிலை எய்துகிறான். இந்தப் பிரணவம் உயிர்க்குற்றங்கள் அனைத்தையும் அகற்றி, அரனடிக்கீழ்ச் சேர்ப்பிக்கின்றது. இதுவே எல்லா ஒலிகட்கும் மூலகாரணம்; எல்லாத் தேவர்கட்கும் பிறப்பிடம்.
இதன் ஒலிவடிவம் அகாரம், உகாரம், மகாரம் இவை ஒவ்வொன்றின் பின்னரும் மனனுணர்ச் சியாலே (பைசந்திவாக்காக) தியானிக்கப்பெறும்

Page 27
அரைமாத்திரையொலி இவை நான்கும் கூடி யுள்ளன. இங்ங்ணம் கூடியுள்ள நிலை சமட்டிப் பிரணவம். இதன் வரிவடிவத்தை விளக்க உபநிட தங்களும், ஆகமங்களும் பல உவமைகளை எடுத்துக்காட்டியுள்ளன. அவற்றுள் முண்டகோப நிஷத் 'பிரணவம் வில் வடிவானது' என்றது. சர்ப்ப வடிவான குண்டலிநீ இது. மூலநாடி. அன்னத் தின் குரல் போன்ற ஒலியுடையது என்கிறது ஞானசித்தியாகமம்.
பிரணவம் ஐந்தெழுத்துக்களுடைய கூட்டம். முதல் உரு நட்சத்திர வடிவு. அதாவது வட்டப் புள்ளி O. இரண்டாம் வடிவு தண்டம் போலப் படுக்கையிற் கிடக்கும் நேர்கோடு ட , மூன்றாம் உரு வட்டம் O. நான்காம் உரு பிறைமதி அ. ஐந்தாம் உருவாகிய பிந்து புள்ளி வடிவு. இவற்றுள் வட்டப் புள்ளியும் நேர்கோடும் சேர்ந்து வட பிள்ளையார் சுழி ஆகிறது. இந்தச் சுழியை இட்டாலே போதும். பிள்ளையார் வணக்கம் ஆகிவிடுகிறது.
முன்னர்க் காட்டிய வண்ணம் ஒலிவடிவிலும் வரிவடிவிலும் ஐந்தன் கூட்டாகிய பிரணவத்தின் அகரம் சிவம்; உகரம் சக்தி; மகரம் மலம்: நாதம் மாயை, பிந்து உயிர். இவற்றுள் அகர உகர வடி வாக உள்ள வட பிள்ளையார் சுழி சிவசக்திகளின் சேர்க்கையாகும்.
மற்றோரிடத்தில், திருமூலர் அகாரம் உயிர், உகாரம் இறை, மகாரம் மலம் என்று அருளினார். இக்கருத்தையும் ஊன்றி அனுபவித்து, அகர உகரக் கூறாக இணைந்த பிள்ளையார் சுழியையும் உற்றுநோக்குவோம். இறையுடன் நாம் ஒன்றி யிருக்கும் நிலையைக் காண்போம். தாடலைபோல அகாரமாகிய உயிர், உகாரமாகிய் இறைவனோடு இயைந்து, அகாரமாகிய உயிர் வடிவம் அற்று, உகரவடிவே வடிவாய் - பிள்ளையார் சுழியாய் - அத்துவிதமாய் நிற்கும் சுத்தாத்துவித சித்தாந்த முத்திநிலையைத் தெரிவிக்கும் குறியீடாகும்.இந்த இயைபு நம்மையறியாமலே நம்வாழ்க்கையில் சிந்தாந்தச் செந்நெறி கலந்திருப்பதைக் காட்டும் சிறந்த சான்றாகும்.
பிரணவத்தின் ஐந்து கூறுகளுக்கும் உரிய அதிதேவதைகள் இன்னார் இன்னார் என்று

கூறவந்த சிவஞானபோதம் அகரத்திற்குப் பிரமனையும், உகரத்திற்குத்திருமாலையும், மகரத்திற்கு உருத்திரனையும், விந்துவிற்கு மகேசனையும், நாதத்திற்குச் சதாசிவனையும் கூறிற்று. இதனையும் நம் மனத்துட்கொண்டு பிள்ளையார் சுழியைப் பார்ப்போம். எழுதத்தொடங் குவது என்பது இலக்கிய சிருஷ்டி. அதற்கு முன் பிரமனை அதிதெய்வமாகக் கொண்ட அகரத்தின் கூறாகிய இெதனையும், தோன் றிய இலக்கியம் நின்று நிலவுதற் பொருட்டுத் திருமாலை அதிதெய்வமாகக் கொண்ட உகரத் தின் கூறாகிய ட இதனையும் இணைத்து லட பிள்ளையார் சுழியாக எழுதுகிறோம். இதன் அடிப்படையுண்மை தோன்றிய இலக்கியமாகிய அறிவுக்கோயில், என்றும் நின்று நிலவுவதாகுக என்ற நற்குறிப்பாக இருத்தல் நம்மனோர்க்குச் சிறந்த ஞானவிருந்தாகும். இங்ங்ணம் பிரமாதி களை அதிதெய்வங்களாகச் சொன்னது உபசாரம்.
Oவட்டம் நகாரம்.டபடுக்கையான நேர்கோடு மகாரம். 0, இது சிகாரம். அ பிறைமதி வகாரம். பிந்து யகாரம். இவை திருவைந்தெழுத்தின் வடிவு. இவற்றில் வட்ட வடிவாகிய நகாரமும் கோட்டு வடிவாகிய மகாரமும் சேர்ந்த பிள்ளையார் சுழி நம என்றதன் வடிவாகும். இதற்கு, வணக்கம் என்பது பொருள். வணக்கமாவது ஆணவத்தின் விளைவான தற்போதமடங்கித் தான் சிற்றறிவும் சிறுதொழிலும் உடையவன்; முற்றறிவும் முற்றுத் தொழிலும் உடைய பரம்பொருளின் உடைமை என்பதை அறிந்து அடங்கி இருத்தல். பிள்ளையார் சுழியை இட்டால் பசுபோதம் அடங்கிப்போக, பதிபோதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது இயற் றப்பெறும் தொழில்கள் யாவும் சிவன் செயலே என்பதைக் காட்டும் அடையாளமாகும்.
இனி மற்றொரு முறையும் வேறு பெயரும்:
பிந்து புள்ளி வடிவம்; இது சக்தி. நாதம் சிவம்: இது தண்ட வடிவம். இவ்விரண்டின் இணைப்பு பிள்ளையார் சுழி.நாதபிந்துக்களை ஒலிப்பது எப்படி? முடியாது. அதனாலே இது பெயர்மாத்திரையான் உணரவேண்டியதாயிற்று. இத்தகைய அநாதி மூலப்பொருள்களாகிய சிவசக்திகளின் நினை

Page 28
வோடு, அவற்றின் வேறாகாத - இணைந்து ழ்ழ் உண்டான பிள்ளையாரை நினைவூட்டப்
பிள்ளையார் சுழிஇடப்பெறுகின்றது. ஒலிக்க முடியாமையால் இதனை "ஊமை எழுத்து என்ற ழைப்பர் பெரியோர் சாத்திர நூல்கள் இதனை மெளனாக்கரம், மூல மனு, மெளனக்குறி என்ற பெயர்களால் வழங்கு கின்றன.
இதுகாறுங் கூறியவற்றால், பிள்ளையார் சுழி மூலமனுவாகிய பிரணவத்தின் சிதைந்தவடிவே என்பதும், உயிரும் இறையும், சிவமும் சக்தியும், ஒன்றாகக் கலந்துள்ள நிலையைக் காட்டும்
ിILIf }},
firl
4 (கிங்க்ான்ந்துள்:
 

அடையாளமாம் என்பதும், இதனை எழுதுவதன் வாயிலாக ஆன்மாக்கள் தற்போதங்கெட்டு, பதி ஞானமே வரப்பெறுகின்றனர் என்பதும், அந்நிலை யில் இயற்றப்பெறுஞ் செயல்கள் யாவும் சிவன் செயலேயாக விளக்கம் பெறும் என்பதும் உணர்த் தப்பெற்றன.
இவ்வண்ணம், எண்ணத்திலும் எழுத்திலும் செயலிலும் கலந்து நின்று காத்துவருகின்ற பிள்ளையாரை வணங்கும் பழக்கம், வழிவழியாகப் பரவிவரத்தலைப்பட்டது.
Jш ВЕНЕЦЈLDLILI

Page 29
சைவசமயத்தவர்களாகிய நாம் எல்லாம் மார் கழிப் பிள்ளையார் என்னும் வணக்க முறையை நன்கு அறிவோம். மரபு முறையாக வீட்டு முன்றிலிலோ, வழிபாட்டு அறை வாயிலிலோ ஏற்ற தூய்மையான இடம் அமைத்துக் கோலம் போட்டுச் சாணத்தினாலோ, மஞ்சள் மாவினாலோ பிள்ளையார் பிடித்து வைத்துவைத்து வணக்கம் செலுத்துதலே மார்கழிப் பிள்ளையார் வழிபாடு என்பது. இவ்வாறு செய்வத னால் அவ்வீட்டுக்கு பல நன்மைகள் உண்டாகும் என்பது சைவ மக்களின் நம்பிக்கை. மார்கழி மாதம் முழுவதும் வைக்கப்படுகின்ற பிள்ளையார்கள். தைப்பொங்கல் அன்று வைத்துவனங் கிய பிள்ளையாருடன் கொண்டு செல்லப்பட்டுக் கடலிலோ, ஆற்றிலோ, குளத்திலோ சேர்க்கப்படும்.
மகாராஷ்டிரம் என்பது இந்தியா வின் மேலைச் சமுத்திர தீரத்திலே பம்பாய் அல்லது மும்பாய் என்பத னைத் தலைநகராப் க் கொண்ட
மாநிலமாகும். அங்கு பிள்ளையார் வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறு கின்றது. இதற்காகச் செய்யப்படுகின்ற மிகப் பெரிய பிள்ளையார் உருவங்கள் வழிபாடு நிறை வெய்தியபின் இந்து சமுத்திரத்தில் சேர்க்கப்படு கின்றன. தொன்று தொட்டு இவ்வாறு செய்து வருவதனாற்பிள்ளையாரின் உருவங்கள் மறைந்து விட அவருடைய வழிபாட்டு மரபு முறை மட்டுமே எஞ்சுகின்றது.
இலங்கை முழுவதும் பல்வேறு வகையிற் பிள்ளையார் வழிபாடு நடைபெறுகின்றது.
 
 

ஓம்
IL)
முருகா!
வே. வல்லி புரம், B.Sc., Diրեւում in Edicinitial
ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர், கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை பிள்ளையார் வழிபாடு பரவியிருக்கின்றது. அத்துடன் நேபாளம், திபேத்து. மலாயா, சிங்கப்பூர், தென்ஆபிரிக்கா ஆகியவற்றுடன் இந்துக்கள் வாழ்கின்ற பிற நாடுகளிலும் பிள்ளையார் வழிபாடு நடைபெறுகின்றது. ஆப்கானிஸ்தான். மத்திய ஆசியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா, யாவா. சுமாத்திரா, போர்ணியோ, இத்தாலி, மத்திய அமெரிக்கா முதலான இடங்களிற் பிள்ளையார் வழிபாடு நடைபெற்றதற்கான சான்றுகள் கிடைக்கின்றன.
இவ்வழிபாடு சைவசமயத்திற்குச் சிறப்பாக உரியதெனினும் வைணவம், பெளத்தம், சமணம் முதலிய பிற சமயங்களும் இவ் வழிபாட்டை ஏற்றுக் கொள்கின்றன. இத்தகைய மகிமை படைத்ததாய், நம் சமய பாரம் பரியத்துடன் பின்னிப் பிணைந்தி ருக்கும் பிள்ளையார் வழிபாடு பற்றி நாம் அறிந்திருத்தல் இன்றியமை யாததாகும். எனவே இந்த வழி பாட்டின் ஆதிமூலத்தைச் சற்று ஆராய்ந்து பார்த்தல் சாலப் பொருத்தமானது.
திருக்கைலாசமலை என்பது இமய மலைத் தொடரின் சிகரங்களில் ஒன்று. அங்கு சிவபெரு மானின் ஈடிணையற்ற கோயில் இருக்கின்ற தெனக் கூறுவது ஐதிகம். உண்மையில் அந்த மலைச் சிகரத்தில் பனிக்கட்டியின் இயற்கை அமைப்பு மிகப் பெரியதொரு சிவலிங்கம் போலக் காட்சிதருகின்றது. அமரநாதர் கோயில் என்பதிற்

Page 30
鑫 குகை ஒன்றினுள்ளே பனிக்கட்டி பெரிய தொரு சிவலிங்கம் போல அமைந்திருக்
கிறது. இவ்வாறு பனிக்கட்டியால் அமைந்த சிவலிங்கங்களை வணங்கும் வழக்கம் நம் சமயத்தில் நிலவுகின்றது.திருக்கைலாசச் சிவலிங்கத்தினைப் பிரதட்சணம் செய்வதற்கு ஏறத்தாழ இருபது மைல் தூரம் கால்நடையாகச் சுற்றிவருதல் வேண்டும். இந்த யாத்திரையை மேற்கொள்பவர்கள் பெரும் பாலும் மீண்டு வருவதில்லை.இக் காரணத்தினால், சிவபதம் அடைந்தவர்களை வழக்காகக்"கைலாசம் போய்விட்டார்’ என்று கூறுவதனையும் நாம் கேட்டிருக்கலாம். திருநாவுக்கரசு நாயனார் இந்த யாத்திரையை, மேற்கொண்டார் என்பதனையும் அது நிறைவெய்தவில்லை என்பதனையும் நாம் அறிவோம். இந்த மலைச்சிகரத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து இரண்டாயிரத்து இருபத்தெட்டு அடியாகும். இதற்கு அயலில் மானசரூவர் என்னும் புண்ணிய தீர்த்தம் இருக்கிறது. இந்த மலைச் சிகரமும் மானசரூவர் ஏரியும் திபேத்து நாட்டு எல்லைக்குள் அடங்கியுள்ளன. தலாய்லாமாவின் ஆட்சிக்குப் பின்னர் திபேத்து நாட்டைச் சீனர்
கைப்பற்றியுள்ளனர்.
புவியியல் நிலைமை எவ்வாறிருப்பினும், நம் சமயத்தில் எண்ணுதற்கரிய மேன்மை பொருந்திய திருக்கைலாசத்தில் ஏழுகோடி மந்திரங்கள் அடங்கிய தெய்வீகமான மந்திர சித்திர மண்டபம் ஒன்று உள்ளதெனக்கொள்வது சைவசமயஐதிகம். ஆங்கு பார்வதி சமேதராய்ப் பரமேஸ்வரன் வீற்றிருக்கின்றார். மேலே கூறிய ஏழு கோடி மந்திரங்களுக்கும் நடுநாயகமாய்ச் சமஷ்டிரூபப் பிரணவமும் வியஷடிரூபப் பிரணவமும் விளங்கு கின்றன. சமஷ்டிரூபம் என்பது சூக்கும உருவம். வியஷடிரூபம் என்பது தூல உருவம். பரமேஸ்வரன் சமஷ்டிரூபப் பிரணவத்தையும் பார்வதிவியஷடிரூபப் பிரணவத்தை திருக்கண்ணோக்கஞ் செய்தவாறு அமர்ந்திருப்பர். அவ்வேளையிற் பிரணவாகாரப் பெருமானான பிள்ளையார் அருவநிலையிலிருந்து உருவ நிலைக்கு வருவார். பிரணவாகாரம் என்பதன் பொருள் பிரணவ அடையாளம் என்பது இந்த உருமாற்றம் "ஓம்" என்ற ஒலி இருக்கும் வரை தொடர்ச்சியாக நிகழ்வதொன்று எனவே, பிள்ளையார் எக்காலத்திலே தோன்றினார் என்ற
 
 

கேள்விக்கே இடமில்லை. சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து (சிவலிங்கத்திலுள்ள ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்பவற்றோடு அதோ முகமும் சேர்ந்து ஆறுமுகங்களாகி, அந்த ஆறுமுகங்களின் நெற்றிக் கண்களிலிருந்து) ஆறு தீப்பொறிகள் வெளிப்போந்த நிகழ்ச்சி இதற்குப் பிந்தியது. எனவே, முருகன் பிள்ளையாருக்கு இளவலா கின்றார். எனினும் இருவரும் ஓங்காரத்துள் அமைபவர் என்பதனை,"ஓங்காரத்து உள்ளொ ளிக்கு உள்ளே முருகன் உருவங்கண்டு தூங்கார்” என்று கந்தரலங்காரம் கூறுகின்றது.
ஒலி வடிவத்திலிருந்து வரிவடிவம் தோன்றும் பொழுது, முதலில் ஒருகோடும் பின்னர் ஒரு வளைவும் உண்டாகும். அதன் பின்னரே பிற உருவங்கள் தோன்றும். நம் சமயத்தில் கூறப் படுகின்ற பரம்பொருள் அருவ நிலையிலிருந்து அருவுருவ நிலைக்கு வரும் பொழுது, அதற்கு சிவலிங்க உருவம் கொடுக்கப்படுகின்றது. அது கோட்டினையும் வளைவினையும் மட்டும் உடைய தாய் அமைந்திருப்பதன் உட்பொருளை நாம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். சிவம் என்னும் பரம்பொருள் ஒம் என்னும் ஒலிச் சக்தியாய் உலகெங்கணும் நீக்கமற நிறைந் திருந்து, அஃதாவது வியாபித்திருந்து, திண்ம வடிவம் பெறும்பொழுது உண்டாகின்ற முதல் தோற்றம் சிவலிங்கம் என்பதனை நாம் உணர லாம். எனவே “சிவன்’ என்னும் பரம்பொருளின் பல்வேறு உருவத் தோற்றங்களே சிவபெருமான், பிள்ளையார், முருகன் என்னும் கடவுளர் என்ற அடிப்படை உண்மையை நாம் ஐயம்திரிபற அறிந்து கொள்ளல் வேண்டும்.
'ஓம்' என்பது ஒவாத ஒலி. அஃதாவது அது ஓயாது என்றும் ஒலித்துக் கொண்டுடிருக்கிற அற்புத சக்தி வெளிப்பாடு. அது வெற்றிடத்திலும் ஒலிக்கின்ற தனிச்சிறப்புடையது. இதற்குத் தோற்றமும் முடிவும் இல்லை. எனவே "ஒம்’ என்னும் பிரணவ மந்திரப் பொருளாயும் உருவாயும் அமைபவரான பிள்ளையாருக்குத் தோற்றமும் முடிவும் இல்லை என்பது போதரும்.
“ஓங்கார ரூபாய நம” என்கிறது பிள்ளை யாரின் பூஜை மந்திரம்.

Page 31
"பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன் சரன அற்புத மலர் தலைக்கு அணிவோமே" என்கிறது அதிவீரராமபாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை என்னும் நூலின் பிள்ளையார் வணக்கப்பாடல். இவை இரண்டும் பிரனவ மந்திரத்துடன் பிள்ளையாருக்குள்ள தொடர்பினை தெற்றெனப் புலப்படுத்துகின்றன.
சாதி வேறுபாடு இருந்தாலும் சமய வேறுபாடு இல்லாமல் நம் சமயம் இந்தியா எங்கணும் பரந்திருப்பதனால், வட இந்தியாவில் வழங்குகின்ற சமயக் கதை தென் இந்தியாவிலும் வழங்குவது பொது வழக்காய் இருக்கிறது. இதற்கு எடுத்துக் காட்டாக மார்கண்டேயர் கதையைக் கூறலாம். மார்க்கண்டேயரின் தந்தையாரான மிருகண்டு முனிவர் கங்கைக் கரையிலே தவம் செய்தார் என்பது கந்தபுராணக் கதை. ஆயின் காலனைக் காலால் உதைத்த தலம் திருக்கடவூர் தமிழ் நாட்டிலுள்ள சிவத்தலம் என்பதனை நாம் அறிவோம். சிவபெருமானின் நெற்றிக் கண்களி லிருந்து தோன்றிய தீப்பொறிகள் கங்கைக்கரை யில் உள்ள சரவணப் பொய்கையை அடைந்தன என்று கந்தபுராணங் கூறுகின்றது. எனினும் சரவணப் பொய்கை என்னும் புண்ணிய தீர்த்தம் பழனியில் இருக்கின்றது. வடநாட்டில் அது எங்கிருக்கின்றது என்று யாரும் கூறுவதில்லை. தமிழ் நாட்டிலுள்ள திருவலிவலம் என்னும் சிவத்தலத்திற் பிள்ளையார் தோன்றினார் என்னும் கதையும் திருக்கைலாச சிவத்தலத்திற் பிள்ளையார் தோன்றினார் என்னும் கதையுடன் தொடர்புடையதாய் இருக்கின்றது.
திருவலிவலம் என்னும் சிவன் கோயிற் சுவரில் ஆண் யானை உருவமும் பெண்யானை உருவமும் சித்திரங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆண் யானையைச் சிவபெருமானும் பெண் யானையை உமாதேவியாருந் திருக்கண் நோக் கம் செய்தனர். அப்பொழுது உயிர்பெற்றெழுந்த ஆண் யானையும் பெண் யானையும் புணர்ந்தத னால் யானைமுகக் கடவுளான பிள்ளையார் தோன்றினார் என்று அத்தலத்தின் புராணக் கதை கூறுகின்றது. இக்கதையை அமைத்துத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரம்

பாடினார். அதுவே "பிடியதன் உரு உமை ஜி. கொள" என்னும் தேவாரம் அதன் : கருத்தைக் கூர்ந்து நோக்கும் பொழுது பிள்ளையார் வழிபாட்டின் பெருமைக்குப் பங்கம் விளைவது போலத் தோன்றலாம். எனினும், சம்பந்தர் அவ்வத்தலத்தில் வழங்கிய மரபுக் கதைகளை அமைத்துத் தேவாரம் பாடினார் என்பதில் எத்தகைய ஐயமுமில்லை. தம்முடன் இருக்கின்ற அடியார்கள் கூறிய கோயில்கள் பற்றிய செய்திகளையும் அவர் தம் தேவாரங்களிற் சேர்த்துள்ளார். "மங்கையர்க்கரசி" என்னுந் திருவாலவாய்த் தேவாரத்தை, "பண்டு நால்வ ருக்கு" என்னும் திருக்கேதீஸ்வர தேவாரத்தையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். சம்பந்தர் திருவாலவாய்க் கோயிலை அடையுமுன்பு, குலச்சிறை நாயனார் கூறிய செய்திகளை அடிப் படையாகக் கொண்டு"மங்கையர்க்கரசி" என்னும் தேவாரம் பாடப்பட்டது. திருக்கேதீஸ்வரத்திற்கு அவர் வரவேயில்லை. தம் அடியார்கள் வழங்கிய செய்திகளை ஆதாரமாக வைத்து அத்தேவாரங்கள் LITLÜLILILLGOT.
కెన్స్త திருச்செங்காட்டங்குடி நரமுகக் கணபதி
உதவி தொல்பொருள் இலாகா சென்னா
பிள்ளையாரைக் குறிக்கும் சிற்பம் முதன் முதலாக இரண்டாம் நூற்றாண்டிலும் அவருக்குரிய முழுவிக்கிரகம் நான்காம் நூற்றாண்டிலும் தோன் றின என்று சென்னைத்தமிழ்க்கலைக்களஞ்சியம் கூறுகின்றது. அத்துடன் திருச்செங்காட்டங்குடி என்னும் சிவன் கோயிலில் மனித முகத்துடன் பிள்ளையார் விக்கிரகம் அமைக்கப்பட்டுள்ள தென்றும் அந்நூல் கூறுகின்றது. வழிபாடு செய்த பின்னர் பிள்ளையாரின் உருவங்களை நீர்நிலை களில் சேர்த்துவிட்டால் பழைய பிள்ளையார் உருவங்களை எங்கு காண்பது?

Page 32
வரலாற்று ஆராய்ச்சி என்னும் தோர ணப் போர்வையில் ஒளிந்துகொண்டு, பிள்ளையார் வழிபாடு மகாராஷ்டிரத்திலி ருந்து தமிழ் நாட்டுக்கு ஐந்தாம் நூற்றாண்டளவில் வந்ததென்று சிலர் கூறிவருகின்றனர். இது பெருந் தவறு. இவ்வாறு கூறுவதனாற் பழந்தமிழர் பிள்ளையார் வழிபாட்டை அறியாதவர்கள் என்னுந் தப்பெண்ணம் பொது மக்களிடையே காட்டுத் தீ போல பரவிப் பிள்ளையார் வழிபாடு செய்வோரின் நம்பிக்கையைக் கெடுத்துவிடும். வேதகாலத்திலும் சங்ககாலத்திலும் பிள்ளையார் வழிபாடு இருக்க வில்லை என்று கூறுவோரும் பலருளர். இக்கூற் றுக்கள் பற்றியும் ஆராய்தல் நம் கடமை.
யானை முகக் கடவுளாகிய பிள்ளையாரின் வழிபாடு, ஆரியர் இந்தியாவிற்கு புகுந்த காலத் திற்கு முன்பிலிருந்து, அஃதாவது சிந்துவெளி நாகரிகப் பழங்குடி மக்களின் காலத்திலிருந்து நிலவிவருகின்றதென்று “இந்திய வரலாறு” என்னும் நூல் கூறுகின்றது. இக்கூற்றினை “வியத்தகு இந்தியா” என்னும் வரலாற்று நூலும் ஆதரிக்கின்றது.
சிந்து வெளிநாகரிகம் ஆரியரின் வருகைக்கு ஐயாயிரம் ஆண்டுகள் முற்பட்டதிராவிட நாகரிகம். அதாவது புராதன இந்திய நாகரிகம் என்று அக்காலச் சித்திர எழுத்துக்களை வாசித்தறிந்த யூரி நொனரொசொவ்’ எனும் ரஷ்ய நாட்டு வரலாற்றுப் பேரறிஞர் தம் ஆராச்சி முடிபினை “ஸ்புற்ணிக்’ என்னும் சஞ்சிகையில் வெளியிட் டுள்ளார். இவருடைய கால ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு கணிக்கும் பொழுது, பிள்ளையார் வழிபாடு இற்றைக்கு எண்ணாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழந்தமிழ் மக்களி டையிற் சிறப்புற்றிருந்தது என்பதனை அறியும் பொழுது, அது நமக்கு வியப்பாக இருக்கலாம்.
இங்கிலாந்தில் வாழ்ந்த ஜேர்மனியரான மக்ஸ் முல்லர் என்பவர் மொழி ஆராய்ச்சியும் கீழைத்தேய பண்டைய வரலாற்று ஆராய்ச்சியும் செய்த அறிஞராவர். அவர் வேதங்கள் கி.மு. 1500 ஆம் ஆண்டுக்கு முற்பட்டவை என்றும் அவற்றுள்ளும் இருக்கு வேதமே முதன் முதலாகத் தோன்றிய
 
 

தென்றுங் கூறியுள்ளார். அவ்வேதத்தில் “கணாநாம் த் வாம் கணபதிஹம் ஹவா மஹே” என்று கணபதி வணக்கம் பற்றிய குறிப்பு இடம்பெறுகின்றது.
நம் சமயத்திலுள்ள எந்த மந்திரமும் பிரணவத்தைக் கூட்டாத வரை அது மந்திர மாகாது. ‘சிவாய நம’ என்பதனை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இத்தகைய முதன்மை வாய்ந்த பிரணவ மந்திரத்தின் பொருள் என்னவென்று தான் முருகப்பெருமான் வேதங் களைத் துறைபோகக் கற்ற பிரமதேவரிடங் கேட்டார். நம் சமய மந்திரத்தைப் பொருள் அறிந்து கூறுவதற்கு நாமும் அது பற்றி சிந்தித்தல் வேண்டும்.இதன் பொருள் இக்கட்டுரையில் ஏலவே கூறப்பட்டுள்ளது.
அண்ட கோளத்திலுள்ள உலகங்கள் அனைத்திற்கும் முதற் காரணமாயுள்ள பொருள் மகாமாயை எனப்படும். இதற்குத் தலைமை வகிக்கும் சக்தியே பிள்ளையார். இச்சக்தியை குண்டலினி சக்தி என்றும் கூறுவதுண்டு. யோகப் பயிற்சியிற் குண்டலினி சக்தி பாம்பின் உருவமாக மூலாதாரத்தில் சுருண்டுகிடப்பதாகக் கொள்ளப் படுகின்றது. பாம்பின் உருவத்திற்கும் துதிக்கை யின் வடிவுக்கும் ஒரேவழி ஒற்றுமை இருத்தலை நாம் அவதானித்தல் வேண்டும்.
மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்பன யோகப் பயிற்சியிற் கூறப்படுகின்ற ஆதாரங்களாகும். இந்த ஆறு தானங்களும் நம் உடலிலுள்ள முள்ளந்தண்டில் அமைந்திருத்தல் விஞ்ஞான அடிப்படையிலன்றி, மெஞ்ஞான அடிப்படையில் நம் சமய ஞானியரால் அனுபவவாயிலாக அறியப் பட்ட உண்மையாகும். இந்த ஆறு ஆதாரங் களுக்கும். அப்பால் உச்சியின் நடுவிற் பிரமரந்திரம் என்னும் துளையுள்ளது. அதற்கு மேலே பன்னி ரண்டு விரலிடை உயரத்தில் சகஸ்ராரம் என்னும் தானம் உள்ளது. இவை எல்லாம் சைவக் கோயில்களிலுள்ள கொடிமரத்திலும் அமைக் கப்பட்டுள்ளன. கொடித் தம்பத்தில் மூலாதாரம் என்பது அதன் அடியிலிருக்கும். அங்கேயே கொடித்தம்ப பூஜை நடைபெறும். அங்குள்ள

Page 33
முக்கிய அம்சம் சிற்பமாகவோ, விக்கிரகமா கவோ ஒரு பிள்ளையாரை வைத்திருத்தலாகும். இந்த உருவம் மூலாதார சக்தியைக் குறிக் கின்றது. நம் உடலின் முள்ளந்தண்டின் அடியில் மூலாதாரம் என்னும் தானம் இருக்கிறது. உடலில் இதுவே மூலாதாரக் கணபதிக்குரிய தானம். இதற்கு மேலே சுவாதிட்டனம் பிரமதேவருக்கும், மணிபூரகம் திருமாலுக்கும், அநாகதம் உருத்திர னுக்கும் உரிய தானங்களாகும். இவ்வாறான யோகப் பயிற்சியில் முதலாவதாக இடம் பெறுபவர் பிள்ளையார் என்பதனை நாம் அறிதல் வேண்டும்.
மகோற்சவம் என்னுங் கொடியேற்றத் திருவிழாவிலே பக்குவம் அடைந்த ஒர் ஆன்மா மூலாதாரத்திலே ஆரம்பித்து சகஸ்ராரம் என்னும் மோட்ச நிலையை எய்தும் பாங்கு புறத்தில் வைத்துப் புலப்படுகின்றது. யோகப் பயிற்சியில் ஈடுபடுகின்ற ஒருவர் தம் ஆன்மாவை மூலாதாரத்திலிருந்து உயர்த்திச் சென்று சகஸ்ராரத்திற் பரம்பொருளுடன் சங்கமமாகச் செய்கின்றார். இதுவே சமாதி நிலை எனப்படும். சகஸ்ராரத்திலிருந்து இறங்கி மீண்டும் மூலா தாரத்தை அடைந்த பின் அவர் சீவன் முத்தராய் உலகில் உலாவித்திரிவார். இவ்வாறாக அகத்தே பேரின்பத்தை அனுபவிக்கும் பாங்கினை யோகப் பயிற்சி புலப்படுத்துகின்றது. புறத்தே கொடிமரத்தில் மோட்ச நிலையைக் காணுதல் ஆகமாந்தமாகவும் அகத்தே சமாதி நிலையாகிய பேரின்ப நிலையை எய்துதல் வேதாந்தமாகவும் விளங்குதலை நாம் அறிதல் வேண்டும். எனினும் இந்த இரண்டு வேளைகளிலும் மூலாதாரசக்தியாகப் பிள்ளையார் இடம்பெறுகிறாரென்பது தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்.
இறைவழிபாட்டு கிரியைகள் அனைத்தும் முட்டின்றி முற்றுப்பெற விக்கினேஸ்வரனை வழிபடுதல் அன்றுதொட்டு இன்றுவரை நிலவி வருகின்ற வழக்கமாகும். இவற்றை ஆரம்பிக்கும் பொழுது விக்கினேஸ்வரனை அலங்கரித்து பூசித்து, நாம் செய்யவிருக்கும் இன்னகருமம் இடரின்றி நிறைவெய்த அருள் செய்ய வேண்டு மென்று அவர் முன்னிலையிற் சங்கற்பம் செய்தல் நம் சமய மரபாகும். இதற்கான காரணம் பற்றியும் நாம் ஆராய்ந்து பார்க்கலாம்.

கந்தபுராணம் விநாயகரின் திருஅவ தாரம் பற்றிய செய்தியைத் தருகின்றது.
“மருளறப் புகலுநான் மறைகளிற் றிகழுமெய்ப் பொருளென படுமவன் புவனமுற் றவர்கள் தம் இருளறுத் தவர்மனத் திடர்தவிர்த் தருளவோர் அருளுருத் தனையெடுத் தவதரித் துளனவன்”
என்னும் பாடலில் அச் செய்தி அமைந்தி ருக்கின்றது. இவ்வாறு அவர் அவதரித்த பின்னர் சிவபெருமான் அவருக்கு எவ்வாறு அருள் செய்தார் என்பதனை வேறொரு பாடல் கூறுகின்றது.
“என்னரே யாயினும் யாவதொன் றெண்ணுதல் முன்னரே யுனதுதாள் முடியுறப் பணிவரேல் அன்னர்தஞ் சிந்தைபோ லாக்குதி யலதுணை உன்னலார் செய்கையை ஊறுசெய் திடுதி நீ"
என்பதே சிவபெருமான் பிள்ளையாருக்கு கொடுத்தருளிய பணி. "உன்னை வழிபடுவோர் எண்ணியது எண்ணியாங்கு எய்த அருள் புரி: உன்னை நினையாதவர்கள் செய்யும் கருமங் களுக்கு ஊறுசெய்” என்பது அப்பாடலின் பொருள். இவ்வாறு வரங்கொடுத்தருளிய சிவபெருமான் திரிபுர தகனஞ் செய்வதற்கெனச் சிறப்பாக அமைக்கப்பட்ட தேரின் மீது எழுந்தருளினார். அப்பொழுதுதேரின் அச்சு முறிந்தது. தம் மைந்தன் விக்னேஸ்வரனை நினையாமல் தாம் செய்த அக்கருமம் தடைப்பட்டது என்பதைச் சிவபெருமான் உணர்ந்தார். எனவே அவருடைய குறையைச் சிவபெருமான் தீர்த்தார் என்பது புராணக்கதை. சைவக் கோயில்களில் நடைபெறுகின்ற கிரியை கள், பூஜைகள், திருவிழாக்கள் முதலிய அனைத்தும் பிள்ளையார் பூஜையுடன் ஆரம்பித்தலை நாம் இன்றும் காணலாம்.
நாம் யாதாயினும் எழுதத் தொடங்கும் பொழுது பிள்ளையார் சுழி இட்டே ஆரம்பிக் கின்றோம். இந்தக் குறியீடு பற்றித் தமிழக அறிஞர் கி.வா. ஜகநாதன் ஆராய்ச்சி செய்துள்ளார். ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தின் சுருங்கிய வடிவமே பிள்ளையார் சுழி என்றுதாம் கண்டறிந்த ஆராய்ச்சி முடிவினைக் கலைமகள்" என்னும் தமிழ் சஞ்சி கையில் ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவர் வெளியிட்டிருக்கிறார். இந்த

Page 34
முடிவினை சைவசமய அறிஞர்கள் வேறு பலரும் ஏற்றுக் கொள்கின்றனர். இதற்குக் காரணம் பிள்ளையார் சுழி வாளா இடுகுறி யாய் இருத்தலைக் காட்டிலும் காரணக்குறி பாயிருத்தல் சாலச் சிறந்தது என்பதாகும்.
இனி பிள்ளையார் சந்நிதியில் குட்டிக் கும்பிடும் வழக்கம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி வழக்கில் இருக்குங் கதையையும் நாம் பார்க்கலாம். கைலாசகிரியிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்த அகத்திய முனிவர் ஓர் இடத் திலே தம் கமண்டல நீரை நிலத்தில் வைத்தார். பிள்ளையார் காக்கையுருவில் வந்து அந்த கமண் டலத்தின் மீது அமர்ந்தார். அகத்தியர் காக்கையைக் கலைத்தார். அது கமண்டலத்தைக் கவிழ்த்தது. இத னால் கோபமுற்ற அகத்தியர் காக்கை யைத் துரத்தினார்.திடீரென காக்கை ஒரு சிறுவனாக உருமாறியது. அவர் சிறுவனின் நெற்றியில் குட்ட முயன் றார். அக்கணமே பிள்ளையார் தம் சுய உருவில் அவருக்கு காட்சி கொடுத் தார். பிள்ளையாரைக் கண்டவுடன் நடுக்குற்ற அகத்தியர் தாம் செய்ய முயன்ற பெரும் பிழையை உணர்ந்து மனம் நொந்தார். இதற்குப் பிராயச் சித்தமாகத் தம் இரண்டு கைகளா லும் தம் நெற்றியிலே தாமே குட்டிப் பிள்ளையாரை வணங்கினர் என்பது கர்ணபரம்பரைக்கதை.இந்த நிகழ்ச்சி உண்மையோ, பொய்யோ என்ற ஆராய்ச்சியின்றி, குட்டிக் கும்பிடுதல் பிள்ளையாருக்குரிய சிறப்பான வணக்க முறை யாகப் பொது வழக்கில் வந்துவிட்டது.
தோப்புக்கரணம் போடுவதற்கான காரணத் தையும் நாம் அறிதல் வேண்டும். கயமுகன் என்னும் அசுரன் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றான். அதன் பின்னர் அவன் தேவர்களைத் துன்புறுத்தத் தொடங்கி னான். அவர்கள் காலை, நண்பகல், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் தன் முன்னே வந்து ஆயிரத்தெட்டு முறை தோப்புக்கரணம் போட வேண்டும் என்று அவன் ஆணையிட்டான். செவிகள் இரண்டினையும் கைகளிரண்டினாலும்
 

மாறிப்பிடித்துக் கொண்டு இருந்து எழும்புதல் தோப்புக்கரணம் எனப்படும். இவ்வாறு செய்து சலிப்படைந்த தேவர்கள் சிவபெருமானிடஞ் சென்று முறையிட்டனர். கயமுகனை வென்று தேவர்களுக்கு அருள்பாலிப்பதற்காகச் சிவபெரு மான் பிள்ளையாரை அவனிடம் அனுப்பினார். பிள்ளையார் அவனுடன் பெரும் போர் புரிந்தார். எனினும் ஆயுதங்களாற் கொல்ல முடியாதவாறு வரம்பெற்ற அந்த அசுரனை அவர் வெல்ல முடியவில்லை. எனவே அவர்தம் வலக் கொம்பினை முறித்து அவன் மீது செலுத்தினார். அது அவனைப் பிளக்க பெருச்சாளி உருவெடுத்து அவரை எதிர்த்தான். அப்பொழுது பிள்ளையார் அவனுக்கு மெய்யறிவு புகட்ட அவன் "ஐயனே. யான் உமக்கு அடிமை" என்று பிள்ளையாரை வணங்கி நின்றான். அவர்தம் வாகனமாக அவனை ஏற்று அவனுக்கு அருள்புரிந்தார்.
கயமுக அசுரன் செய்த கொடு மைகளைப் பிள்ளையார் ஒழித்து விட்டார் என்பதனால் மிகவும் மகிழ்ச் சியுற்ற தேவர்கள் பிள்ளையாருக்கு முன்னே சென்று தாமாகவே ஆயி ரத்தெட்டு முறை தோப்புக்கரணம் போட ஆரம்பித்தனர். அவ்வேளையிற் பிள்ளையார் தமக்கு மூன்று முறை தோப்புக்கரணம் போட்டால் போதும் என்று அவர்கள் மீது கருண்ைகாட்டி அருள் புரிந்தார். அன்றுதொட்டு இன்றுவரை அவரை வணங்குவோர் அனைவரும் அவருடைய சந்நிதியில் அவ்வாறு செய்து வழிபடுகின்றனர் என்பது புராணக்கதை.
பிள்ளையார், பார்வதி பரமேஸ்வரரின் பிள்ளை என்று கொள்வது சைவமக்களின் உபசார வழக்கு அவர்களுக்கு முருகன் என்றும் ஒரு பிள்ளை இருப்பதனால், இவரை மூத்த பிள்ளை பிள்ளையார் என்று கூறுவார்கள். இவ்வாறாகவே அவருக்குப் பிள்ளையார் என்ற பெயர் தோன்றுவதாயிற்று. 'பிள்ளை' என்ற பெயருடன் (ஆர்) என்னும் உயர்வுச்சிறப்பு விகுதி சேர்த்து பிள்ளையார் என்னும் பெயர் உண்டாயிற்று.

Page 35
இனி அவருடைய உரு அமைப்புப் பற்றிய தத்துவக்கருத்தினை ஆராயலாம். பிற கடவுளுக்கு இல்லாத தொப்பை வயிறு இவருக்கு இருத்தல் வியப்பிற்குரியது. இதனால் இலம்போதரர் என்னும் பெயரும் இவருக்கு வழங்குகின்றது. அண்டங்கள் அனைத்தும் மோதகம் போன்றது உருண்டை வடிவின. அவை அனைத்தும் அவருடைய உதரத்தினுள் அடக்கம் என்பது அவருடைய பெருவயிற்றுக்கான தத்துவ விளக்கமாகும். இந்த அண்டங்களை வயிற்றினுள் வைத்துச் சுமப்பவர் என்று கருதி, அவருடைய கால்கள் விகிதாசாரத்திற்கு ஒவ்வாத வகையில் மிகப் பெரியனவாகக் காணப்படுகின்றன. அவருடைய செவி அசைவினால் அண்டங்கள் இயக்கப் படுகின்றன. அப்பொழுது அவருடைய கையில் இருக்கின்ற பாசமும் அங்குசமும் அவற்றின் இயக்கங்களை வரையறை செய்கின்றன.
அவருடைய கையில் எப்பொழுதும் இருக் கின்ற மோதகம் பற்றியும் நாம் சற்று சிந்தித்தல் வேண்டும். மோதகத்தினுள் இருக்கின்ற பயற்றம் பருப்பு, மசியாது தனித்தனியாக நின்று, நான்’ என்னுஞ் செருக்கைக் காட்டுவது போல் இருப்பதனால், அது ஆணவ மலத்தின் குறியீடாக அமைகின்றது. தேங்காய்த் துருவல் மோதகத் தினுள்ளே மிகச் சிக்கலாகக் கலந்திருப்பதால், வாழ்க்கையிற் பல சிக்கல்களுக்கு காரணமாய் இருக்கின்ற கன்ம வினையைக் குறிக்கின்றது. சர்க்கரை, பயற்றம் பருப்புடனும் தேங்காய்த் துருவலுடனுஞ் சேர்ந்து குமைந்து தன் இயல் பைக் காட்டாமல் மறைந்திருக்கின்றது. சர்க்கரை கபில நிறம் இருளைப் போன்றது. அதனி இனிமை நம்மை மயக்குகின்றது. இவ்வாறு மயக்கும் தன்மை உடையதாய் இருள் போல இருப்பது மாயை ஆகும். பயற்றம் பருப்பு, தேங்காய்த் துருவல், சர்க்கரை ஆகிய மூன்றும் சேர்க்கப்பட்ட கலவையை நாம் மாவினால் மூடி உருண்டை செய்கின்றோம். ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் உடம்பு என்னும் கோதினுள் இருந்து ஆன்மாவை வருத்துகின்றன. மோத கத்தை உண்டுவிட்டால் அது வயிற்றினுள் சென்று சீரணித்து அழிந்துவிடும். அவ்வாறே நாமும் மும்மலங்களையும் புசித்தே அதாவது அனுபவித்தே தொலைத்தல் வேண்டும். ஆயின் இந்த மூவகை வினைகளையும் பிள்ளையார்

துண்டிக்கவல்லவர். அவ் வினைகளை வேரோடு களைய வல்லவர். அவ்வாறு களைந்த வினைகள் அவருடைய கையில் இருக்கும். அதனையே அவருடைய கையில் இருக்கும் மோதகம் குறிக்கின்றது. தம் அடியார் களின் வினைகளைத் துண்டிப்பவர் என்னுங்
கருத்தில் வக்கிரதுண்டர் என்றொரு பெயர் அவ ருக்கு வழங்குகின்றது. “விநாயகனே வெவ்வினை யை வேரறுக்க வல்லான்” என்று மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை" கூறுகின்றது.
நிலத்தின் கீழ் மறைந்திருந்து மண்ணை அகழ்ந்து மக்களுக்கு ஊறு செய்கின்ற பெருச்சாளி அவருடைய வாகனமாய் அமைகின்றது. உள்ளி ருந்து நமக்குக் கேட்டினை விளைவிக்கின்ற உலகப்பற்றுக்களைப் பெருச்சாளி வாகனம் குறிப்பால் உணர்த்துகின்றது. அவருடைய அடியார்களுக்கு இந்தப் பற்றுக்கள் எல்லாம் அவருடைய வாகனமாகி அமுங்கிவிடும்.
மட்டுவில் வடக்கில் மருதமர நிழலில் வீற்றிருந்து தம் அடியார்களுக்கு அருள்பாலிப்பவர் மருதடிப் பிள்ளையார். அவர் அடியேனின் குலதெய்வம். நம் குலத்தைச் சேர்ந்தவரான சிவபதம் அடைந்த அ. பொன்னுத்துரை தேசிகர் என்பவர் அக்கோயிலின் பூசகராய் இருந்தவர். அவரே அடியேனுக்கு ஏடுதொடக்கி உரிய காலத்திற் சிவதீட்சை செய்து நம் சமய மரபுகள் பற்றிய அறிவினையும் புகட்டியவராவர்.
அக்கோயிலின் மூலஸ்தானத்தில் ஓங்கார உருவான சுயம்பு மூர்த்தியாகப் பிள்ளையார் வீற்றிருந்து தம் அடியார்களுக்கு அனுக்கிரகம் செய்து வருகின்றார். ஊமைப்பிள்ளை வாய் பேசும் அற்புதம் இன்றைக்கு ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன் அங்கு நிகழ்ந்தது. இந்த மருதடிப் பிள்ளையாரே அடியேனின் வாழ்க் கையை நெறிப்படுத்துகின்றார். அவருக்கு அடி யேன் நன்றிக் கடப்பாடு உடையேன் என்பதனை வெளிப்படுத்து முகமாக இந்த சுயசரிதைக் குறிப்பு ஈண்டு இடம் பெறுகின்றது.
விவேகானந்த சபையின் பிள்ளையார்
கோயிலின்/குழ்ழரபிஷேகமலரில் வெளியிடு
FASA s sry

Page 36
வதற்காக, அடியேனின் இஷ்டதெய்வமாகிய * பிள்ளையார் பற்றி ஆய்வுக் கண்ணோக்கில்
அமைந்துள்ள இக்கட்டுரையை வரைவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். இதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தித்தந்த விவேகானந்த சபையாருக்கு நன்றி நவில்கிறேன். இந்தக் கட்டுரையை மட்டுவில் மருதடிப் பிள்ளையாரின் பெயரால், விவேகானந்த சபையின் விக்னேஸ் வரப் பெருமானின் பாதாரவிந்தங்களுக்குச் சமர்ப்பணம் செய்கின்றேன்.
ஓம் சாந்தி! சாந்தி சாந்தி!
உசாத்துணை ஆவணங்கள்:
கந்தபுராணம்
பதினொராந்திருமுறை - மூத்தநாயனார் திருவிரட்டைமணிமாலை - கபிலதேவநாயனார்
The Oxford School Atlas மதுரைத் தமிழ்ப் பேரகராதி
கணபதி
கணபதி ஒம் கணபதி ஒம் கருத்தினில் கந்தனைக் க
கணபதி ஒம் கணபதி ஒம் கள்ளம் கபடுமாயை நீக்கிடு
கணபதி ஒம் கணபதி ஒம் உள்ளமதில் அன்பை நிறை
கணபதி ஒம் கணபதி ஒம் தாழ்மையும் தூய்மையும் தர
வித்தைக் கிறைவா கணந நேர்மை தொழிலில் படியம் சக்தித் தொழிலே அணை தாழ்ந்த நமக்கு சஞ்சலமே
பக்தி யுடையார் காரியத்தி பகரார் மிகுந்த பொறுமைய வித்து முளைக்கும் தன்மை மெல்ல மெல்ல செய்து பய
 
 

1 O.
1.
12.
வெற்றிவேற்கை - அதிவீரராம பாண்டியர் சைவத்திருக்கோவிற் கிரியைநெறி - கா. கைலாசநாதக் குருக்கள் பிரதேச அபிவிருத்தி, இந்துசமய, இந்து கலாசார, தமிழ் அலுவல்களுக்கான முன்னாள் அமைச்சர் மாண்புமிகு செ. இராசதுரை அவர்கள் 1984-08-30 அன்று வானொலியில் நிகழ்த்திய பேச்சின் பிரதி. History of India - Mukerjee "HOW DIDHARAPPAPERISH"-'5000 years before the arrival of the Aryas on the Indian subcontinent, the Indus Valley boasted a highly developed civilization; Research findings of Soviet Scholars led by YURI KNOROZOV, D.Sc. (History), who have deciphered Proto Indian Texts. (SPUTNIK). கந்தரலங்காரம் - அருணகிரிநாதர் சிவஞானபோதம்
வியத்தகு இந்தியா - ஏ. எல். பஷாம்
LIITLib
ாட்டிடுவாய் (கணபதி)
வொய் (கணபதி)
த்திடுவாய் (கணபதி)
நதிடுவாய் (கணபதி)
ாதா
50)LD ந்துமிடில்
(கணபதி)
ல் புடன் யைப் போல்
6T60)L6JTrf
(கணபதி)

Page 37
Ganapati Worship is immensely popular among the Hindus all Over the World and he is Said to be the most Worshipped deity of the Hindu pantheon. Temples dedicated exclusively to Ganapati exceed in number the temples to all other Hindu deities put together. The Temples of other Hindu Gods also hawe sanctums dedicated to Ganapati.
Ganapati is regarded as the god of Success and Wisdom, and as the bestower of earthly prosperity and Well being. He is deemed to be the initiator of activities and at the beginning of every undertaking Ganapati is propitiated. Auth Orsin WOkehinatthe Commencement of books. The belief that Whatever is undertaken disregarding this deity is bound to meet with impediments is deep rooted in the minds of One and al. At the same time he is considered to be very merciful, indulgent and forgiving to those who beseech his blessings. By Worshipping him, evils are averted, misfortune staWed off and obstacles Overcome. In all ritualistic Worships the very first things go to Ganapati and all prayers are prefaced with an invocation to him. Devotees propitiate it first and entreat his Sanction and help to their worship of their Chi OSen deities.
Puranas that date beginning from about the 3rd century A.D. refer to Ganapati, and his Worship came into Vogue, in all probability, around the 8th century A.D. in the Mathura region of India. It spread to China, Thailand, Cambodia, Tibet, Afghanistan, Japan and to
 
 

Prof. S. Thillainathan
South Asian Countries before the 10th century A.D. Tradition holds that an image of Ganapati Was brought as booty from Vatapi (Tamil form of Badami) by the Pallava general Paranjo ti (Who later became a Saivite Saintand changed his name to Ciruttondar) following the conquest of Badami by the Pallava ruler Narasimha Varman I (630-638 A.D.) and hence the deity is referred to as Watapi Ganapati. In Sri Lanka, several temples are dedicated to Ganapati and he also finds a place in many other Hindu and Buddhist Shrines.
Though a legend represents that he sprang from the Scurf of Parvati's body, he is generally regarded as the eldest son of Siva and Parvati. He is Said to hawe been Created to guard and guide the deeds of the mortals. His name Ganapati means, the Lord of the Ganas or hosts, especially those attendant upon Siva. He is also called Ganesha and Garlan athlia.
Ganapati is an elephant headed * - God. He is gigantic, yellow in Colour, has a protuberant belly, long ears, four hands, three eyes, and sits on a rat. In One hand he holds a shell, in another a discus, in the third hand a club, and in the fourth a Water-lily.
Mythology abounds in stories a CCOunting for the elephant head of Ganapati. One is that his mother Parvati, proud of her child, showed him to Sani (Saturn) forgetful of the baleful effects of Sani's glance. When Sani looked
rகானந்தன் :) 13:

Page 38
the head of the child was burnt to ashes. 盛 Brahma told Parvati in her distress to
replace the head with the first head she could find and that happened to be of an elephant's.
According to another legend the transformation took place during the Skanda Valli romance. Ganapati assumed the from of a mad elephant and pursued valli to throw her into the hands of his brother Skanda who had fallen in love with the Vadda girl Valli.
Another story is that when Parvati went to her bath she asked her son to guard the door. When he blocked Siva who wished to enter, Siva got annoyed and cut off the head of Ganapati. Then to appease his consort Parvati, Siva replaced it with the first head on which he could lay his hands on and that was an elephant's.
As stated in another legend, this strange personification represent AUM, the sound symbol of the cosmic reality. The conventional figures indicating AUM in most languages of India bear a resemblance to a great extent the elephants hand, ears and trunk twisted into various poses.
Ganapati is single tusked entity and
therefore called Ekadanta. The loss of one tusk is also accounted for by some legends. According to one, it was severed when Parasurama threw his axe following an altercation when Ganapati opposed his entrance to see Siva who was sleeping at Kailas.
Another story is that Ganapati broke and of his tusks to write down the great epic Mahabharata from the dictation of sage Vyasa. Ganapati agreed to serve as the scribblerto Vyasa, the author of Mahabharata. When the iron-spike which he was recording the epic on palm leaves Snapped, Ganapati broke his right tusk, used it as the pen and accomplished the undertaking successfully.
Ganapati has numerous designations. Vinayaka, Vighnahari (remover of obstacles),
 

Vigneswara (Lord and master of obstacles), Gajanāna, Gajavadana, Karimukha (elephant faced), Ainkaran (five handed-including the trunk), Dwi deka (double bodied-animal and human), Lambakarna (long eared) Siddhitata (Success giver) Mahaganapati (the great and unparalleled) are some of them.
The popular Tamil name for Ganapati is Pillayar Which means a noble child. He is depicted as a child in texts and art. In the jungle country Ganapati assumes the role of a forest God. North of Anuradhapura, on the main road that goes through jungles to Jaffna, 20 miles south of Elephant Pass, there is a hamlet named Murikandi. It has become famous because of the way-side shrine for Ganapati there called Murikandi Pillayar Kovil. Travellers usually stop and worship there. There is a wide-spread belief that those who do not stop to make obeisance Would face difficulties. It is told that a European who refused to stop of his car infront of this temple got killed in accident. About 30 years ago the author of this article witnessed a car overturning about 50 yards away form this shrine. Some youngsters in the car were singing "baila' songs to the annoyance of devotees gathered in of the shrine and the car did not stop. In the accident the passengers escaped with minor injuries.
The Worship to Ganapati is the easiest and most informal of all the forms of homage. Ritualistic rules are not rigidly adhered to in the worship of Ganapati. Cowdung ball with aruku grass (Agrostis linearis) fixed on them symbolize Ganapati. Coconuts, Ganapati's favourite fruits, are broken at his shrine to appease him. Food gifts offered to him are of Sugar, peas and rice-flour. Circumambulating the deity thrice is the most common mode of worship. Another pattern peculiar to the worship of Ganapati is knocking thrice on the head with both fists. Sitting and standing thrice in front of him holding the left ear with the right hand and the right ear with the left hand is a mark of obedience and submission.

Page 39
பண்ணியம் ஏந்துங் கரந்தனக் காக்கிப்
பால்நிலா மருப்பமர் திருக்கை விண்ணவர்க் காக்கி, அரதனக் கலச
வியன்கரந் தந்தைதாய்க் காக்கிக் கண்ணில்ஆ ணவவெங் கரிபிணித் தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும் அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபற் சகாயனை அகந்தழிஇக் களிப்பாம்.
(தணிகைப் புராணம்)
இறைவனின் அளவிறந்த ஆற்றல்களை, சிந்நாள், சிற்றறிவுடைய மக்கள் உளங்கொளற் பொருட்டு பல திருவுருவங்களாகச் சமைத்தனர் நம் முன்னோர். அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டு நிற்கும் அப்பரம் பொருளுக்கு உருவம் இல்லை, குணம் இல்லை, நிறம் இல்லை, குறி இல்லை, உருவமும் குணமும், குறியும்,நிறமுமற்ற அப்பொரு ளுக்கு உருவங்களைக் கற்பித்தோம், குணங் களைக் கற்பித்தோம், வரலாறுகளை உண்டாக்கி னோம். காரணம் என்ன? எல்லை கடந்து, எங்கும் வியாபித்து எங்கும் தங்கியுள்ள பொருளை (இறை - தங்குதல் - இறு என்னும் பகுதியின் அடியாகப் பிறந்ததே இறைவன் என்ற சொல்.) நாம் அறிந்து, உணர்ந்து, உற்று உய்த்து அறியவேண்டும் என்ப தற்காக, அதற்காக எழுந்ததே கடவுளரின் திருவுருவங்கள்.
கண்ணுக்குத் தெரிகின்றது கடல் நீர். அது கதிரவனின் வெப்பத்தால் ஆவியாகி மேகமாகி, குளிர்ந்து கருங்கொண்டலாகி மேலும் குளிர்ந்து மழையாகின்றது. மண்ணிலே வீழ்ந்து தண்ணீராக ஒடுகின்றது. அந்நீர் மேலும் மேலும் குளிர்ந்தால் பனிக்கட்டியாக மாறுகின்றது. கடல் நீர் ஆவியான நிலையில் கண்ணிற்குத் தோற்றாது. கரிய மேக மானால் கண்ணிற்குத் தெரியும் கையினால் எட்டமுடியாது. அம்மேகமே மழை நீரானால் கண்ணிற்கும் எட்டும், கைக்கும் எட்டும். ஆனால் கரத்தினால் பிடிக்கமுடியாது. அதே நீர் பனிக் கட்டியாகும் பொழுது கண்ணிற்கும் எட்டும். கரத்தினாலும் பற்றலாம்.
 

总 பாருளோன்
வித்துவான் திருமதி. வசந்தா வைத்தியநாதன்
இதைப் போன்றதுதான் இறை இயல்பு. பொறி புலன்களுக்கு எட்டாது. கடல் நீரின் ஆவியைப் போன்றிருந்தவன் கரிய மேகத்தைப் போல ஐம்பூதங்களாகப் பார்வையிலே தோற்றியவன், உண்ணும் நீராக, உயிர்ப்பாக நாம் வணங்கும் விக்கிரகங்களில் தோற்றம் கொள்கின்றான். புலன்களுக்கு அகப்படாதிருந்த ஒன்று தோற்ற நிலைக்கு வருகின்றது. (விசேஷேண க்ருஹ்யதே - விக்ரஹ:) வடமொழியிலே புரியாத நீண்ட தொடர்ச் சொல்லை “ஸமாஸம்" என்று கூறு வார்கள். அந்த நீண்ட சொற்றொடரை, சிறு சிறு சொற்களாகப் பொருள் உணர பிரித்துச் சொல் வதை விக்ரஹம் என்பர். புரியாத சொற்கூட்டம் புரியும் நிலைக்கு வருகின்றது. இதேபோல புலன்களால் கிரகிக்க, முடியாத ஸ்மாஸ் நிலையிலே உள்ள பரப்பிரும்மம் மக்கள் உணர்வதற்காக சொற்பிரித்துப் பொருள்கொள்ளும் விக்ரஹ நிலையை அடைகின்றது. இது இறைவனின் எல்லையில்லாத கருணையின் அடையாளம்.
இறைவனின் எண்ணிறந்த ஆற்றல்களில் இடையூறுகளைதலும் ஒன்று அந்த ஆற்றலின் ஒட்டுமொத்த உருவமே விநாயகன். இவருடைய திருவுருவம் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடு. கணபதி முதற்கண் வழிபடும் கடவுளாதலின் பிரணவமாகிய ஓங்காரம் அவருக்குரியதாயிற்று. பிள்ளையாரின் ஒடிந்த தந்தம், கிரீடம், ஒடியாத மருப்பு, துதிக்கை, பேழைவயிறு இவற்றை எண் ணக்கோட்டால் இணைத்தால் கிடைப்பது கரிமுக வனின் வடிவம்.
இனி இவரது திருவுருவத்தில் அமைந்துள்ள நான்கு திருக்கரங்கள் அமரர் கூறாகவும், வேழ முகம் விலங்கின் கூறாகவும், பேழை வயிறும் குறுங் கால்களும் பூதக்கூறாகவும், வலது பாகம் தந்தம் இன்மை பெண்ணாகவும், இடப்பாகம் தந்தம் உண்மை ஆணாகவும் கொண்டு உலகிலுள்ள அனைத்துப்பொருளும் (அஃறிணை, உயர்திணை) தன்னுள் அடக்கம் எனச் சொல்லாமற் சொல்லும் விந்தைமிகு வடிவத்தைக் காணலாம்.

Page 40
திருவடி:- கரிமுகவனுடைய கழல்கள் இரண்டுமே ஞானத்தின் நிலைக்களன். வந்த வினையும், வருகின்ற வல்வினையை யும் போக்கும் திறத்தன. யானையானது தனது காலிலே அடிவைப்பவனை முடிமீது ஏற்றும். அதுபோல ஆனைமுகனின் அடிதாழ்பவர்களை அவன் மோட்ச உலகிற்கு ஏற்றுவான். தனது திருவடியிலே அறுகு இட்டு வணங்கியவர்க்கு நலமறாத சுகபோகத்தை அருள்வான். மற்றைய புற்களைப் போல எளிதாக அகற்ற முடியாதது அறுகு. மேலும் மண்ணிலே ஆறு இடங்களிலே பற்றி வளரும் இயல்பினைக் கொண்டது. ஆறு ஆதாரங்களிலும் ஓங்கி ஒளிரும் ஐங்கரனை வணங்க அறுகம்புல் சிறந்ததாய் அமைகின்றது.
பேழை வயிறு:- பிரமாண்டங்கள் அனைத்தும் அவனுள் அடக்கம் என்பதைக் குறிக்கின்றது.
பாம்பு:- இது உதரபந்தனமாகப் பயன்படு கின்றது. மூலாதாரத்தின் நாயகன் விநாயகன். மூலாதாரத்தில் மூன்றரைச் சுற்றுள்ள பாம்பு வடிவமாக குண்டலினி சக்தி உறங்குகின்றது. இதனைக் குறிக்கும் முகமாகவே பாம்பை வயிற் றிலே அணிந்திருக்கின்றான்.
ஐந்து கரங்கள்:- தன்னை அடைந்தவர்களைக் காக்க ஒருகரம் அபயகரமாகவும், பூர்ணத்திலிருந்து (முழுமை) பூரணத்தை எடுத்தாலும் மீதமாக வுள்ளதும் பூரணமே என்ற மகாவாக்கியத்தின் பொருளை விளக்கும் மோதகத்தை ஒரு கரத்திலும், உயிர்களைப் பிணித்துள்ள பாசத்தை அடக்கும் கரமாக ஒருகரமும், மதம் பிடித்துள்ள யானையை அடக்கும் அங்குசப் படையை ஆன்மாவைப் பற்றி யுள்ள அகப்பகையை ஒடுக்கும் முகமாக ஒரு கரத்தில் தாங்கியும், உலகின் எந்த மூலையிலிருந் தாலும் தனது அடியவர்களின் அன்பென நீண்டு அவர்களைப் பற்றிக்காக்கும் ஊறு உணர்ச்சிமிக்க துதிக்கரமுமாக ஐங்கரனாக விளங்குகின்றான் பிரணவப் பெரியோன்.
கொம்பு- பதிஞானம், பாசஞானம் ஆன்மா விற்குரியது. ஐந்தாம் வேதமெனப் போற்றப்படும் அறக்கருத்துக்களின் நிலைக்களமான மகாபா ரதத்தை எழுதும் பொருட்டு தனது வலது கொம்பை ஒடித்து எழுத்தாணியாக்கினான் விநாயகன். உலகில் வாழும் உயிரினங்களுக்கு அழகை அளிப்பது அதன் உறுப்புக்களே. மயிலிற்கு அதன்
 
 

தோகை, மானிற்குக் கொம்பு, மீனிற்குக் கண், அன்னத்தின் மென்மைத் தூவி இவைகள் அவைகளுக்கு எழில்மிகுவிக்கின்றன. அதுபோல யானையின் சிறப்பிற்கு அதன் தந்தமே அடிப்படைக் காரணம்.
“யானை இருந்தாலும் ஆயிரம் பொன் யானை இறந்தாலும் ஆயிரம் பொன்”
என்ற தொடர் அதன் விலைமதிப்பற்ற வளைந்த கோடுகளை எண்ணியே எழுந்தது. அப்படிப்பட்ட அழகூட்டும், விலைமதிக்கவொண்ணாக்கோட்டை ஒடித்துப் பாரதக் கதையை மேருவரையில் பொறித்தார் என்றால் இவ்வுலகில் அறம் நிலைக்க வேண்டும், தர்மசிந்தனை மேலோங்க வேண்டும் என்ற தியாகத்தின் பிரதிபலிப்பே.
செவி:- சுளகு போன்ற அகன்ற செவிகள் உயிர்களின் மலவெப்பத்தைத் தணிக்கின்றது. மேலம் சுளகு தன்னிடம் சேர்நத பொருள்களில் தீயதைப் போக்கி, நல்லதையே தங்கவைத்துக் கொள்கின்றது என்ற உண்மையை சூர்ப்பகர்ண னின் செவிகள் உணர்த்துகின்றது.
கண்கள்:- சூரிய, சந்திர, அக்கினியே த்ரியம் பகனின் நேத்திரங்கள்.
முடி-பிறைச் சந்திரனைத்தரித்துள்ள தன்மை குற்றங்கள் புரிந்தாரேனும், அதனை உணர்ந்து தனது திருவடியில் வழிபடுபவர்களாயின் அதனைப் பொறுத்து ஏற்றுக்கொள்ளும் கடலனைய கருணையைச் சுட்டுகின்றது.
"அனோரணியான்; மஹதோமஹரீயான்" என்பதற்கொப்ப அணுவிற்குள் அணுவாகவும், அண் டத்திற்குள் அண்டமாகவும், திகழும் பெருமான் பாகனுடைய கட்டுக்குள் அகப்படும் களிறுபோன்று பக்தர்களின் அன்பிற்குள் கட்டுண்டு நிற்கும் ஆனை முக அண்ணல் கொழும்பு மாநகரத்திலே அமைந் துள்ள, பழம்பெருமை மிக்க விவேகானந்த சபை யிலே, ஓடிவரும் காரணர்க்கு உண்மைப் பொரு ளாக, துன்பத்தால் வாடிடும் அன்பர்களின் துயர் தீர்க்கும் கற்பகக் கன்றாய், வேண்டுவார் வேண்டு வதை ஈயும் பூநீசித்தி விநாயகப் பெருமானாக எழுந்தருளியுள்ளார். பெருமானின் மகாகும்பா பிஷேகம் சிறப்புற நிறைவேறி அதன் பிரசாதமாக இம்மலர் மலர்கின்றது. அனைவரும் இதனைப் பெற்றுப் பயனுற வாழ்வாங்கு வாழ்வோமாக.

Page 41
அறிமுகம்
"ஒம் பிரணவ சொரூபாய நம' பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்" என்ற வேதமும் தோத்திரமும் விநாயகப் பெருமானின் சிறப்புக் களை வெளிப்படுத்தியுள்ளன, "யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை" எனத் திருமூலர் அருளியுள்ளார். ஈரலிப்பான பிரதேசத்திலும், வெப்பமான பிரதேசத்திலும் இயற்கையாகப்படரும் புல்லினமாக அறுகு வளர்கிறது. ஆல் போல் தழைத்து அறுகு போல வேரூன்றி வாழ வாழ்த்து கின்றோம். விநாயகப் பெருமானை அர்ச்சனை செய்வதற்கு மிகவும் உகந்தது அறுகாகும். பார்க்கவ புராணம் எனச் சிறப்பிக்கப்படும் விநாயக புராணத்தின் உபாசனா காண்டத்தில் அறுகின் பெருமை விளக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு சுலப மகாராஜன் கதை, கவுண்டிய முனிவர் கதை என்பன சிறப்பிக்கப்பட்டுள்ளன. கவுண்டிய முனிவர் அறுகின் சிறப்பை அவரின் பத்தினிக்கு கூறும் வகையில் அனலாசுரன் கதை, ஜனகமகாராஜன் கதை, திரிசுரன் கதை, அர்ச்சிக்கப்பட்ட அறுகின்
refl6oln STS er LISST அமைந்துள்ளன.
விநாயக அடியார்களிற்கு இக்கதைகளை மிக எளிய முறையில் அறிமுகம் செய்யும் பணி யினை அடிப்படையாகக் கொண்டதாக இக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது.
சுலப மகாராஜன் கதை
சுலப மகாராஜா அவந்திநகரை அரசு செய்தார். மதிசூதனன் ராஜாவிடம் பிச்சை கேட்டுவந்தான். அவன் சிவபெருமானின் திருவடிகளில் பக்தி உடையவன்; தூயவெண்ணிறு அணிந்திருந்தான். மகாராஜா அவனது உருவத்தோற்றத்தைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்.மதிசூதனன் மிகுந்தகோபம்
 

Fឆ្នាំ២. II. TTT. முருகேசு
அடைந்தான். மகாராஜாவைப் பார்த்து "எருதாகப் பிறந்து புல்லைத் தின்று திரிவாய்" எனச் சாபமிட்டான். அரசியான சுபத்திரை கோபமடைந்து "உடல் முழுவதும் வெண்ணிறு பூசியிருக்கிறாய்; உன் உள்ளத்தில் இரக்கம் இல்லை; அறிவாளிகள் தவறை மன்னிப்பார்கள் : மகாராஜா என எண்ணாது கழுதைபோல சபித்துவிட்டாய்; சல வைத் தொழிலாளியின் கையில் சிக்கி, முதுகு வலிக்க அழுக்கு மூட்டை சுமக்கும் கழுதையாக அவதிப் படுவாய்" என சாபமிட்டாள். மதிசூதனன் அரசியை நோக்கி "நீயும் சண்டாளப் பெண்ணாகப் புலைச்சேரியில் திரிந்து அவதிப்படுவாய்" எனச்
TLLLL.
கோபம் எல்லாத் தீவினைகளும் படர கொழு கொம்பாயிற்று. சுலப மகாராஜா எருதாகவும். அரசியான சுபத்திரை சண்டாளப் பெண்ணாகவும். மதுசூதனன் கழுதையாகவும் பிறந்து துன்பம் அடைந்தனர். ஒருநாள் விதிவசத்தால் மூவரும் ஒரிடத்திற்கு வந்தபோது பெருமழை கொட்டியது. எருது,கழுதை என்பன மழைக்கு ஒதுங்க விநாயகப் பெருமானின் ஆலயப் பக்கம் சென்றன. சண்டாளப் பெண் புற்கட்டுடன் மழைக்கு ஒதுங்க அங்கு சென்றாள். அவளின் புற் கட்டை எருதும், கழுதையும் தின்ன ஆரம்பித்தன. ஆத்திரமடைந்த பெண் எருதையும் கழுதையையும் தடியால் அடித்தாள். கழுதை வருத்தமிகுதியால் பெரிய சத்தமிட்டது. கழுதை காலால் எருதை உதைத்தது. எருதுகொம்பினால் கழுதையை முட்டியது.ஆகவே கோயில் வீதியில் பெரிய சண்டை ஏற்பட்டது.
முனிவர் விநாயகர் ஆலயத்தில் சதுர்த்திப் பூசையைச் செய்துகொண்டிருந்தனர். ஆலய வீதியில் ஏற்பட்ட சண்டையால் சதுர்த்திப் பூசைக்கு இடையூறு ஏற்பட்டது. சண்டாளப் பெண் எருது, கழுதை என்பவற்றை கோபம் அடைந்த முனிவர் பலதடவை அடித்தனர். அவை வேதனைதாங்காது

Page 42
பல தடவை ஆலய வீதியில் ஓடின. காற்றும் மழையும் அதிகமாக இருந்தது. அப்போது சண்டாளப் பெண்ணின் கையில் இருந்த புற்கள் சிலவும், எருது கழுதை ஆகியவற்றின் வாயிலிருந்த புற்கள் சிலவும் விநாயகப் பெருமான் சந்நிதிக்கு முன் விழுந்தன. அவை காற்றினால் மேலேழுந்து முறையே விநாயகப் பெருமானின் திருமுடி, தும்பிக்கை, திருவடி ஆகிய இடங்களில் போய்ச் சேர்ந்தன. ஆயினும் எருது,கழுதை,பெண் ஆகியோர் வேதனை தாங்காது இறுதியில் உயிர்நீத்தனர்.
முனிவர் ஆலயத்தின் தூய்மை இழக்கப்பட்ட மையை உணர்ந்தனர். ஆலயத்தைச் சுத்தம் செய்தனர், நீராடினர், கும்பம் முதலானவற்றை மீண்டும் வைத்தனர். விநாயகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்தனர். தூபதீபம் காட்டினர். நைவேத்தியம் படைத்தனர். பூஜையை முழுமையாக நிறைவு செய்தனர். விநாயகப் பெருமான் அம்மூவர் மீதும் கருணை கொண்டார். விநாயக சதுர்த்தி நாளில் மூவரும் உணவின்றி ஆலயத்தை வலம் வந்தனர். அறுகம் புல்லால் அர்ச்சனை செய்தனர். இம்மூவர் பொருட்டாகச் சிறப்புப் பூசை முனிவர் களால் நடாத்தப்பட்டன. தாழ்ந்த உயிரினமாக விளங்கிய இம்மூவரும் தமது உடல் தெய்வீக வடிவம் பெற்று விநாயகப் பெருமானின் திருவடி களைச் சென்றடைந்தனர். விநாயக சதுர்த்தி நாளில் அறுகினால் அர்ச்சனை செய்வதன் முதன்மை சொல்லும் அளவினதன்று.
கவுண்டிய முனிவர் கதை
கவுண்டிய முனிவர் விநாயகப் பெருமானின் திருவுருவைப் பிரதிஷ்டை செய்தார். நாள்தோறும் பதினாறாயிரம் அறுகுகளால் அர்ச்சனை செய்தார். நறுமணம் வீசும் மலர்கள் எவற்றையும் அர்ச்ச னைக்குப் பயன்படுத்தவில்லை. முனிவரின் பத்தி னிக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. எனவே பயபக்தியுடன் முனிவரிடம் அறுகம்புல்லினால் அர்ச்சித்தமைக் குரிய காரணத்தைக் கேட்டாள். கவுண்டிய முனிவர் அனலாசுரன் கதையைப் பத்தினிக்கு இயம்பினார்.
யமதர்மராஜனது மகன் அனலாசுரன். அவன் கண்கள் சிவந்து காணப்பட்டன. வெண்மையான கோரப் பற்கள் கலப்பையைப் போன்று காணப் பட்டன. அவன் பயங்கரமானவனாகக் காணப் பட்டான். யமதர்மராஜன் அனலாசுரனைக் கண்டு
 
 

பயமடைந்தான். அனலாசுரன் பூலோகத்தை அழித்தான். தேவ உலகம் சென்றான். தேவர்கள் அனலாசுரன் தம்மை நோக்கி வருவதை அறிந் தனர். திருமால் முன்னிலையில் தமக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கூறினர்.
திருமால், விநாயகப்பெருமானின் திருவுருவை மனத்தில் தியானித்தார். தேவர்களின் துன்பத்தை விநாயகப் பெருமானுக்கு முறையிட்டார். விநாயகப் பெருமான் திருவுள்ளம் இரங்கி ஒரு பிராமணச் சிறுவன் போலத் தோன்றினார். திருமால் தேவர்களுடன் அவரை வழிபட்டார். அப்போது அனலாசுரன் வந்தான். அவ்விடத்தில் விநாயகப் பெருமான் தோன்றினார். "அனலாசுரனே! உலகத்தைப் பலவழிகளில் துன்புறுத்தினாய். இவ்வுலகத்தைவிட என் வயிற்றிலும் பழம் பெரும் உலகங்கள் உள்ளன. அவற்றையும் ஒருகை பார்” என விநாயகப் பெருமான் கூறினார். அனலாசுரனை விழுங்கினார். இதனைத் தேவர்கள் பார்த்து அதிசயித்தனர். அதேசமயம் விநாயகப் பெருமானின் வயிற்றில் வெப்ப உணர்வு ஏற்பட்டது.இதனைத்தேவர்களும் அனுபவித்தனர். இதனால் தேவர்கள் துயரமடைந்து பல்வேறு செயல்களில் ஈடுபட்டனர். சந்திரன் அமுத கிரணங்களைப் பொழிந்தான், வருணன் குளிர்ந்த நீரினால் அபிஷேகம் செய்தான். இவற்றால் எப்பலனும் ஏற்படவில்லை.
எண்பத்தெண்ணாயிரம் முனிவர் ஒவ்வொரு வரும் இருபத்தொரு அறுகுகளினால் விநாயகப் பெருமானின் திருமுடி முதல் திருவடி வரை அர்ச்சனை செய்தனர். இதனால் விநாயகப் பெருமானின் வயிற்றில் ஏற்பட்ட அனல் நீங்கியது. மூவுலகங்களும் குளிர்ந்தன. விநாயகப் பெருமான் முனிவர்களை நோக்கி “தவசீலர்களே என் வயிற்றிலிருந்த அனலானது தேவர்கள் செய்த உபசாரங்களினால் நீங்கவில்லை. நீங்கள் அர்ச்சித்த அறுகினால் நீங்கிவிட்டது. பலவகை அறுகு, இருபத்தோர் அறுகு அல்லது ஓர் அறுகு பயன்படுத்திச் செய்யும் அர்ச்சனை எளிமை யான முறையில் மகிழ்விக்கிறது" எனத் திருவாய் மலர்ந்தருளினார். முனிவர், தேவர் முதலானவர் விநாயகரின் அருளைப் பெற்றனர். தேவர்கள் அவ்விடத்தில் விநாயகப் பெருமானின் திருவுரு வைப் பிரதிஷ்டை செய்தனர். அவ்விநாயகப் பெருமான் காலாணலப்பிரசமர் எனவும் பாலசந்திரர் எனவும் அழைக்கப்பட்டார்.

Page 43
ஜனகமகாராஜன், திரிசுரன் கதை
ஜனகமகாராஜன் மிதிலாபுரிப் பட்டினத்தை அரசாண்டார். அவர் நற்பண்பு வாய்ந்தவர், தத்துவ நூல்களைப் படித்தவர். ஆனால் உண் மையான பரஞானத்தை அறியாதிருந்தார். அபேதவாதத்தால் பரம்பொருள் தான் என அகம் பாவம் கொண்டார். மகாகணபதி ஜனகன்னின் அகம் பாவத்தை நீக்க எண்ணினார். ஜனகமகாராஜன் அரண்மனை வாயிலில் குஷ்டரோகியாக, பசியு டையவராகச் சென்றார். மகாராஜா வறியவரை அழைத்து உணவு பரிமாறு வித்தார். ஆனால் தீராத பசி மறையவில்லை. எனவே களஞ்சியங்களில் சேகரிக் ஜீ கப்பட்ட உணவு வகையை உண்ணுமாறு வேண்டப் பட்டார். எனினும் அவரது பசி மாறவில்லை. இது
uYS 0a LLLSS LL LLLLLLH LLSLS LLLLa மகாராஜா மலைத்தார். இவ் வளவு உணவுப் பொருட்
களாலும் உமது பசி திர வில்லை. உமது பசியைத் தீர்க்கக் கூடியவரை நாடிச் செல்லலாம் என விநயமாக மகாராஜா வேண்டினார்.
திரிசுரன் ஏழைப்பிராமணன். நாள்தோறும் விநாயகர் பூசை செய்பவன்.திரிசுரனின் வீட்டிற்குக் குஷ்டரோகியான பசியுடையவர் சென்றார். அப்போது திரிசுரன் விநாயகர் பூசை செய்து கொண்டிருந்தான். திரிசுரனின் மனைவி விரோசனை பணிவிடை செய்தாள். இருவரும் குஷ்டரோகியான பசியுடையவரை வரவேற்று உபசரித்தனர். "ஜனகமகாரஜனின் அரண்மனை யில் என் பசிக்குப் போதிய உணவு கிடைக்க வில்லை. பசிதீர உன்னை நாடி இவ்விடம் வந்தேன்" எனப் புன்னகையுடன் கூறினார். விநாயக பூசை செய்தபின் மிகுதியாக இருக்கும் அறுகு ஒன் றைத் தவிர வேறு தானியம் ஒன்றும் இல்லை எனத் தழுதழுத்த குரலில் விரோசனை வறுமை நிலையை வெளிப்படுத்தினாள். அன்புடன் வழங் கும் எதனையும் ஏற்பதாகக் கூறினார். விரோசனை
 

யிடம் இருந்து ஒர் அறுகம் புல்லைப் ஆ. பெற்று வாயில் இட்டு விழுங்கி தொந்தி இ யைத் தடவினார். அகோரப்பசி நீங்கியது. 昌、 விநாயகப் பெருமான் சடாமகுடத்தில் அறுகு சந்தி ரத்தைத் தரித்தவராக நான்கு திருக்கரங் களுடன் காட்சியளித்தார். திரிசுரனும் விரோச னையும் விநாயகப் பெருமானை வழிபட்டனர். திரிசுரனின் வீடு, பொன் பொருள் ஏவலாளர் நிறைந்த மாளிகையாயிற்று. மிதிலாபுரி நகரிலும் பொன்னும் பொருளும் நிறைந்தன. ஜனக மகாராஜன் தீராப் பசிப்பிணியாளரே காரணம்
என உணர்ந்தான்.
விநாயகப் பெருமான் திருவடிகளை வழிபடும் பொருட்டு திரிசுரன் மாளி கைக்கு வந்தான். விநாயகப் பெருமான் அருளால் தத் துவ ஞானத்தை முழுமை யாக உணர்ந்து வீடுபேறு அடைந்தான்.
அர்ச்சனை செய்யப்பட்ட அறுகின் மகிமை
கவுண்டிய முனிவர் விநாயகப் பெருமானை அர்ச்சனை செய்தார். உலக மக்கள் அனைவரும் நற்பேறுகளை அடைய வேண்டும் என்பதே அவரது நோக்கமாக அமைந்தது. மிதிலாபுரியில் ஜனக மகாராஜனும் திரிசுரனும் விநாயகப் பெருமானின் அருள்பெற்ற கதையை முனிவரிடம் இருந்துமுனிவரின் பத்தினி அறிந்தார்.முனிவரைப் பயபக்தியுடன் வணங்கினாள். திரிசுரனைவிட அதிகளவு அறுகுகளினால் விநாயகப் பெருமானை அர்ச்சனை செய்கின்றோம். எமக்கு மட்டும் நற் பேறு ஏற்படாமைக்குரிய காரணம் யாது என Els CITESSOT Tri.
கவுண்டிய முனிவர் விநாயகப் பெருமானைப் பூஜித்த ஓர் அறுகினை பத்தினியிடம் வழங்கினார். இந்த அறுகம் புல்லிற்குச் சமமான நிறையுடைய பொன்னைத் தேவர்களின் அரசனான இந்திர னிடம் பெற்றுவரும்படி கூறினார். இந்திரன்

Page 44
ரிஷி பத்தினியை வரவேற்று
உபசரித்தான். செல்வத்
திற்கு அதிபதியான குபேர னிடம் சென்று பொன்னைப் பெறு மாறு கூறினான். குபேரன், ரிஷி பத்தினியை வரவேற்றான். தாயே வேண்டியளவு பொன்னை எடுத் துக்கொள் என்றான். ரிஷி பத்தினி அறுகம் புல்லின் எடைக்குச் சம னான பொன்னை மட்டுமே கேட் டார். எனவே தராசின் ஓர் தட் டில் அறுகம் புல்லும் மறுதட்டில் பொன்னும் வைக்கப்பட்டன. அறுகு வைக்கப்பட்ட தட்டுத் தாழ. பொன் வைக்கப்பட்ட தட்டு உயர்ந்தது. இந் நிலையை உணர்ந்த இந்திரன் முதலான தேவர்கள் விநாயகப் பெருமானை அர்ச்சித்த அறுகின் மகிமையை உணர்ந்து கவுண்டிய முனிவரிடம் வந்தனர். ஆதிபரம் பொருளான விநாயகப் பெருமானை அர்ச்சித்த ஓர் அறுகம் புல்லிற்குப் புவனம் முழுவதிலும் உள்ள அஷ்ட் ஐஸ்வரியங்களும் ஈடாகாது என இயம்பினார். கவுண்டிய முனிவ ருக்கு இணையான விநாயக அடியவர் இல்லை எனக்கூறி முனிவரை அனைவரும் வழிபட்டனர்.
விநாய
வேண்டிய அடியார்க்கெல்லாம் வேண்டி வந்தனை செய்யார்க் வேண்டுவார் வேண்டிற்றெல்ல
LDTStor L- துட்டர்களைக் கொல்
விநாயகனே வெவ்வினையை விநாயகனே வேட்கைதனி வி விண்ணிற்கும் மண்ணிற்கும் ந கண்ணிற் பணிமின் கனிந்து.
(2)வேகானந்தள் 2006
 
 

முடிவுரை
புராண கதைகளின் ஊடாக வழிபாட்டு மரபுகளை அறிந்து பயன்பெற்றனர். சுலப மகாராஜன் கதை, ஜனகமகாராஜன் கதை என்பன வழிபாட்டு முறைமை யினை வெளிப்படுத்தியுள்ளன. ஆனால் கவுண்டிய முனிவரால் கூறப்பட்ட அனலாசுரன் கதை, திரிசுரன் கதை என்பன கதை மரபினை மட்டும் உள்ளடக்கி அமை
யவில்லை. அவை விநாயகப்பெருமா
னின் திருவயிற்று வெப்பம், பசி என்பவற்றை நீக்கின என்பதுடன் நிறைவு பெறவில்லை.
அறுகின் மருத்துவ குணப் பண்புகள் வெளிப்படுத் தப்பட்டுள்ளன. அர்ச்சிக்கப்பட்ட அறுகின் மகத் துவம் யாது? அறிவியல் ரீதியாக விநாயக வழி பாட்டைச் சிந்திப்பதும், அறுகின் மருத்துவ குணப் பண்புகளை ஆராய்வதும், விநாயக அடியவர்களின்
பணிகளின் கூறுகளாக அமைந்து வருகின்றன.
விக்கினங்கெடுப்பாய் போற்றி கு விக்கினங்கொடுப்பாய் போற்றி
ாம் விளைத்தருள் விமல போற்றி
லு மறமிகுமன்ன போற்றி,
வேரனுக்க வல்லான்
ப்பான் - விநாயனே
ாதனுமாந் தன்மையினாற்

Page 45
பிள்ளையார்
காலதேவன் நமது வாழ்க்கைப் பாதையை பல்வேறு வழிகளில், பலநாட்டு மக்களுடைய கூட்டுறவைக்கொண்டு கணந்தோறும் மாற்றி அமைக்கின்றான். அதனால் நமது அகவாழ்வு புறவாழ்வு இரண்டுமே மாறுகின்றன. நமது பண் டைய வாழ்வியலின் துணைப்பொருள்களான பாத்திரபண்டங்களும், போர்க்கருவிகளும் இன்று வேற்றுருவத்தில் வேறு வேறு பெயர் தாங்கி நிற்கின்றன. சில மறைந்தே போயின. சில பெயர் மட்டும் மறைந்து போயின. ஆதலால் அவற்றைப் பற்றி இந்த இருபத்தொராம் நூற்றாண்டில் வாழ்கின்ற நாம் தெரிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாதது.
கருவிகள் கருவிகளாக இருந்தகாலத்தில் காரியப்பாட்டிற்கு வேண்டிய உருவும், தகுதியும் உடையனவாக இருந்தன. அவற்றில், ஆடம் பரமும் அணியழகும் அடிவைக்கத் தொடங்கிய காலத்து, எத்தனையோ இழப்பு வேலைகளும், கொடிக்கருக்கு வேலைகளும், சிற்ப சித்திர வேலைகளும் கலந்துவிட்டன. அதனால் அவை ஆயுதங்களா? அல்லது அணியா? என்று கூற முடி யாதநிலை நமக்கு ஏற்பட்டுவிட்டது.அவ்வண்ணமே (ஆயுதங்களை) போர்க்கருவிகளை மக்கள் கையாண்ட காலத்துக் கருவிகளாகவே இருந்தன. மன்னர்களும் மந்திரிகளும் கையாளுவனவற்றில் சித்திரம் கலந்தன. கடவுட் கைகளில் இருப்பன என்றும் காட்சிப் பொருளாகவே இருப்பதால் அவை அழகுப்பொருகளாகவே ஆயின. ஆதலால் அவைகளின் இயற்கையமைப்பும், இன்று கடவு ளார்கரங்களில் விளங்கும் அமைப்பையும் தெரிந்து கொள்ள வேண்டியது இன்றிமையாதது. மற்றும், நாட்டிற்கு நாடு கருவிகளினுடைய அமைப்பு மாறியிருக்கிறது.
 

ஆயுதங்கள்
எழுத்தணிவபால் ரு பஞ்சாசஷர விநாயகர் ஆலய மஹாகும்பாபிஷேக மலர் (29-03-1956)
கல்லுக்கு உயிர்கொடுத்து, கற்பனைக்கு உறைவிடமாக்கி, கலைத்தெய்வத்தின் கரு னையை விளங்கச் செய்த பல்லவர்களில் முற் காலப் பல்லவர்கள் சாளுக்கியர்கள் இவர்களின் சிற்பங்களில் கருவிகளின் அமைப்பு நிலை வேறு. அவற்றினின்றும், பிற்காலச் சாளுக்கிய, பல்லவ, ஹொய்சள மன்னர்களின் சிற்பங்களிலுள்ள கருவிகளின் அமைப்பு முற்றிலும் வேறுபட்டது. அவற்றைக் கிடைத்தவரையில் கணபதி கரங் களிலுள்ள கருவி வகைகளைக் கொண்டு காட்ட முயலுவோம்.
(1) LIITFi:
இது கயிறு. பகைவர்களின் கையையும், கால்களையும் கட்டப் பயன்படும். ஒருகயிறு அல்லது இரண்டு மூன்று கயிறுகள் சேர்த்து, எளிதில் அவிழ்க்கும் சுருக்குமுடிச்சாக இடப் பட்டிருக்கும். சுருக்கிடாமல் வளை பமாகவும் இருக்கும். விநாயகருக்குச் சிறப்பான கருவி. நாகமே பாசமாக அமைவதும் உண்டு. இதனை நாகபாசம் என்பார்கள். இதன் வகைகளும் நான்கு.
(2) அங்குசம்:
இது யானையை அடக்கப்பயன் படுவது. இரும்பாற் செய்யப்பெற்ற வளைந்த மூக்கும், குத்தியடக்கக்கூடிய ஒரு கூரிய நேரான பகுதியும் உடை யது. நீளமான கழிகளிற் செருகப்பெற்றி ருக்கும். யானைப்பாகன் இதனை யானைக் காதிலே மாட்டித் தொங்கவிட் டிருப்பான்.இதில் இரண்டு உருவங்கள் உள்ளன. விநாயகருக்கு உரிய சிறப்புக்கருவிகளில் இதுவும் ஒன்று.

Page 46
(3) தந்தம்:
ஒடிந்த யானைக்கொம்பு.
(4) வேதாளம்:
தசை நாரில்லாத அச்சமும் அருவெறுப்புந் தரத்தக்க பூத வடி வாக இருப்பது. இதனை ஏவிப் பகைவர்களை விழுங்கச் செய் வது வழக்கம். இது வீரகணபதி கரங்கள் ஒன்றில் இருக்கிறது.
(5) சக்தி
இது வேல், ஆறு கூரிய பகுதிகளை யுடையது. தகட்டு வடிவானது. முருக னுக்குச் சிறப்பானது. விநாயகரும் வீரகணபதியாக விளங்கும்போது தாங் கியிருக்கிறார். இது பிடித்தபடியே எறியும் கருவிகளில் ஒன்று. வேல் மட்டும் இரும் பாலானது. இதனை நடுவில் பிடித்து எறி வது வழக்கம். இருமருங்கும் குத்தும் இயல்பினது. யானையெறிந்த வேல் ஏந்தல் இனிது என்பர் வள்ளுவரும்.
(6) il-PI Li L (ArToW);
இது வில்லை வளைத்து அதில் வைத்து எய்யப்பெறுங்கருவி. நுனி சுடரியமுள் போன் றது. நுனிமட்டும் இரும்பாலானது. நுனியை ஒரு கழியிற் செருகியிருப்பார்கள். அதனது வால்பக்கத்தில் கழுகின் இறகுகளையும், மற்ற பறவை இறகுகளையும் கட்டியிருப் பார்கள். பெரும்பாலும் கழுகிற்கே இது பயன் படும். இறகு கட்டுவது விரைந்து காற்றை ஊடுருவிச் செல்வதற்காகவே.
(7 ពិ
இது அம்பு எய்யப்பயன்படுவது மூங்கில் சிலையென்னும் மரம் முதலான வளையக் கூடிய நார் மரத்தால் செய்யப்பெறுவது. இந்த வில்லினது இருதலையிலும் தோல், அல்லது நார்க்கயிற்றானியன்ற நாண் கட்டப்பெற்றிருக்கும். வில்லை வளைத்து நானை இறுகக்கட்டி, அதன் நடுவில்
 
 
 

அம்பை வைத்து விடுவது வழக்கம். எவ்வளவுக் கெவ்வளவு வில்லின் வலியும், நாணிண் உறுதியும், இழுத்துவிடுபவன் வன்மையும் இருக்கின்ற னவோ அவ்வளவுக்கவ்வளவு அம்பின் வேகமும், தைக்கும் வன்மையும் மிகும். அம்பு பட்டவுடன் இறப்பதற்காக அதன் நுனியில் விஷம் தோய்த்து வைத்தலும் வழக்கம். அம்பின் நுனி பிறைமதி போலக் கவர்பட்டதாகவும் இருக்கும். இதற்குப் பிறையம்பு என்று பெயர்.
(8) சக்கரம்:
அது விஷ்ணுவுக்கு உரிய சிறப்பான கருவி. இதன் அமைப்பு அனைவருக்கும் நன்கு தெரிந் ததே. இதில் இருவகையுண்டு. ஒன்று தேருருளை போன்றது. மற்றது வளையம் போன்றது. இது அழகுப் பொரு ளாக எத்தனையோ வடிவங்களிற் காணப்பெறு கின்றன.
() கத் தி:
இது இன்று அறவே மறந்து போன கருவி. தலைப்பகுதி குண்டாகத் தடித்துள்ள நீளக் கழியிற் கோக்கப் பெற்றுள்ள கருவி. இதுவும் பகைவரை அடிக்கப்பயன்படுவது. தலைப்பக்கம் ஒரு மண்டைஓடு போலவும், கம்பி முழங் கால் எலும்பாகவும் கூட அமைந்திருப்ப துண்டு. இதனைக் குத்துக்கத்தியாகிய
பிச்சுவா" என்பாரும் உளர்.
(IC) (BJLJL):
இது கத்தி வெட்டைத் தடுப் பதற்காகப் பயன்படுவது. பலகை யாலும், வலுவுள்ள காட்டெருமை, EF LLD IT, IẾrī LLIT SINGOT. 5, IT GETLIT மிருகம் இவற்றின் தோலாலும் செய்யப்பெறும். சதுரம், நீளச் சதுரம், வட்டம், முக்கோணம் முதலிய பலவடிவங்களிற் செய்யப் பெறும்.

Page 47
(11) சம்மட்டி:
இது இரும்பாலியன்ற கனத்த தலைப்பகுதியை உடையது. இதன் நடுவில் துளையிடப் பெற்றிருக் கும். இதில் கைபிடிக்கும் சிறுகழி யைக் கோர்த்திருப்பார்கள். இது வும் உடையவன் கையைவிட்டு அசுலாதபடி எதிரியை அடித்துத் தாக்கப் பயன்படுத்தப்பெறும்.
(2) கதை:
குண்டாந்தடி, இதில் பலவகைகள் காலாந்தரத்தில் ஏற்பட்டன. பகை வர்களை அடித்து நொறுக்கப்பயன் படுவது. பிணிகயை விட்டு அகலாதபடி, காவலாக இருந்து, உடையவனைப் பாதுகாப்பது.
(13) நாகபாசம்:
曹
இதுவும் பாசவகைகளில் ஒன்று.
(14) சூலம்:
இது மூன்று நுணிகளையுடயது. சிவபெருமானுக்குச் சிறப்பாக உரியது. சுரைவரையிலும் எ.கு இரும் பாற் செய்யப் பெற்றது. நீளமான மரக் காம்பிற் கோர்க்கப் பெற்றிருக்கும்.
(15) குந்தாலி
இன்று, வன்மையான நிலப்பாறை சுளை உடைக்கப் பயன்பெறும். தலை கனத்து கூரிய நுனியோடு இருக்கும் இரும்பானியன்ற கருவி இது. இதில்
பல வகைகள் உள்ளன.
(1f:) Ir:Iք:
இன்று மரங்களை வெட்டப் பயன் பெறுவதாக எறியென்னும் பெயருடன் வழங்குகிறது. மிகக் கூர்மையானது. "வாய்ச்சி" என்னும் மரஞ்செதுக்குங் கருவியினின்றும் முற்றிலும் வேறுபட்டது. தீப்பிழம்பு என்பதும் உண்டு. சிவபெருமா னுக்கு விருப்பமான கருவி.
 
 
 
 
 
 
 
 
 
 

( 17), 609, Illi
இது வெற்றிக்கு அறிகுறியானது. துணியாலியன்றது. அடையாளம் எழு தப்பெற்றது. இதனையும் விநாயகப் பெருமான் தமது திருக்கையில் தாங்கியிருக்கின்றார்.
(18) தனிடம்:
இது நீளமான கைத்தடி, மரத்தாலானது.
(19) J.I Do) I L.ğl'ı i:
நீர் வைத்துள்ள கலம். ஒரு மரத்தின் காயால் இயன்றது. முனிவர்கள், அந்தணர்கள் தங் கள் நாட் கடனைக் கழிப்பதற்காக வைத்திருப்பார்கள். இதுவும் அக்ஷமாலையும் ஆயுதங்கள் அல்லவானாலும், திருவுருவநிலையை அறிந்து கொள்ள உதவும் கருவிகள்.
(20) LI JIEJ:
இது சற்றேறக்குறைய மழுப்போன்ற கருவிதான். ஆனாலும் மழுவின்வாய் சதுரமாக இருக்கும். இதன்வாய் சற்று வளைந்து கூரியதாக இருக்கும். இதுவும் காம்பில் செறிக்கப் பெற்றுப் பயன் படுத்தப்பெறும் கருவியாகும்.
(21) கரும் வில்:
கரும்பால் செய்யப்பெற்ற வில். இது மன்மதனுக்குரிய சிறப்பான கருவி. யோகி யாக இருக்கும் மற்றைய தெய்வங்களும், காமேஸ்வரியாகிய காமாட்சியும் தாங்கி யருப்பர்.
(22) சங்கம்:
இதுவும் விஷ்ணுவுக்குரிய சிறந்த ஆயுதம், வெற்றியை அறிவிக்கும் கருவி. பகைவர்களை இதன் ஒலி கேட்டதுமே ஒடுங்கி அடங்கச்செய்யும் அச்சக்கருவி யுமாம். இதிலும் பல வடிவங்கள்
E-ET

Page 48
(23) புஷ்பபாணம்:
தாமரை, அசோகு, மா, முல்லை, நீலம் என்ற ஐந்து பூக்களாலியன்ற பாணம். இவற்றை மன்மதன் மக்களிடத் தில் காமநினைப்பூட்ட எய்வன். போக நிலையில் மற்றத் தெய்வங்களும் தாங்குவதுண்டு.
(25) அசஷமாலை
உருத்திராக்ஷ மாலை. இது தனித் தனியே ஒரு மாலையாகத் திருவுருவங் களில் தொங்குவதும் உண்டு. மிகப் பழைமையான திருவுருவங்களில் இது ஒராயுதம் போல் இருப்பதைக் காணலாம்.
(24 ) BIJI, ITL Lif:
மரம் பிளக்கப் பயன்படும் கருவி போலப் பகைவரின் உடலைப் பிளக்க இது பயன்படுவது. இரும்பால், வாய் கூர்மையாகப் பின்பக்கம் கனமானதாக அமைந்துள்ளது.
(23) JFIT IDT Lilli:
இது கவரிமான் வால்மயிரினால் ஆனது. ஓர் ஆயுதம் அன்று. ஆனா லும் விநாயகப்பெருமானுடைய திருவு ருவ அடையாளங்களில் ஒன்றாகை யால் ஆயுதவரிசையில் இது இடம் பெற்றிருக்கிறது.
விநாயகர்
ஒளவையார்
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங் கலந்துனக்கு நான்தருவேன்-கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந் தா.
(நல்வழி)
G4) திங்கன்னர்த்தின் 200:
 
 

(27) கட்டுவாங்கம்:
இது நீளமான கத்தி, போரில் படை களை வெட்டப் பயன்படுவது. இதில் ஒருமுனையுடையதும், இருமுனையுடை யதும் என இருவகை உண்டு. குத்துக் கத்தியாகக் கூரிய நுனி உடையதும் உண்டு. பழங்கால மன்னர்கள் இடுப்பில் செருகியிருப்பது வழக்கம்.
(28) தீ அகல்:
ஒரு தீப்பிழம்பு, தீ அகலாகிய மழு வின் வடிவும் இப்படியேதான் இருக்கும்.
(29) வினை:
இது ஒரு இசைக்கருவி. போர்க காலங்களில் தளர்ந்த படைவீரர்களுக்கு உணர்ச்சியூட்டப் பயன்படுவது.
பாடல்கள்
шпцрш60p6һ1
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலாாள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு.
(மூதுரை)

Page 49
விநாயகப் பெருமானின் ெ
LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLLLLS LLL LL LLL LLLLL S LLLLLLLL LL LLL LLL LLLL LLLL LL LLL LLL LLLL LLL LLLLLLLLS
மனிதனைப் பல பெயரிட்டு அழைப்பது வழக்க மில்லை. ஒரு மனிதன் ஊருக்கு ஒரு பெயராக வைத்துக் கொண்டு அலைவானாயின் அவனை நேர்மையான மனிதன் என்று சொல்லமாட்டோம். அங்ங்ணமிருக்கக் கடவுளுக்கு மட்டும் பலபெயரிட்டு அழைக்கின்றோம். ஒன்றை மட்டும் சிந்திக்க வேண்டும். மனிதன் ஏமாற்று வித்தைக்காரனா னால் ஊருக்கு ஒரு பெயரைத் தானே வைத்துக் கொண்டு திரிவான். கடவுள் எந்தப் பெயரையும், தனக்குத் தானே எங்கும், என்றும் வைத்துக் கொள்வதில்லை. கடவுட் பெயர்களை அனைத்தும் அன்புகொண்ட மனிதன் அவர் அருள் வழங்கு நிலையை அகத்து எண்ணி, அவருக்குப் பெயர் இட்டு அழைத்து, தன் நன்றியறிதலைத் தெரிவித்து ஆனந்திக்க வகுத்துக் கொண்டவை. இவன் வைக்கும் ஒரு பெயர்கூட அவர் தன்மையை முழுதும் அறிவிப்பன அல்ல. பொதுவாகப் பொருள் களுக்குப் பெயரிடுவது அப்பொருளின் குணம், வடிவு முதலிய காரணம் பற்றியும் இடுகுறியாகவும் என்பதை உலகம் நன்கு அறியும். குணக்கோட் டையிலும், வடிவு, வரம்பிலும், நிறச் சூழலிலும் அகப்படாத - அவற்றைக் கடந்துள்ள இறைவனுக்கு ஒரு பெயரமைவது இயலுமா? வழிபடுகின்ற அன்பர்கள் எந்தெந்தக் குணங்களில் எவ்வெப் போது ஈடுபடுகிறார்களே அந்தந்தப் பெயர்களை அமைத்துத் தாமே வழங்குவர். அதனாலே அவ ருக்கு ஆயிரம் திருநாமங்கள் உளவாயின.
இறைவனுடைய அருட்டன்மை எல்லையற்றது. மக்கள் அதனோடு ஒன்றி நின்று உணருவ தென்பதும், உணர்ந்ததை அநுபவத்திற் கொண்டு வருவது என்பதும், அதற்கேற்ப இறைவனுக்குப் பல பெயர்களையிட்டழைப்பதும் அரியவற்றுள் அரியசெயல். அவ்வண்ணம் சூட்டப்பெற்ற பல பெயர்களிலும் கலந்து, அவற்றையுங்கடந்துநிற்கும் குணநலத்தை உடையவர் இறைவர். இங்ங்ணமே விநாயகப் பெருமானுக்கும் பல திருநாமங்கள் அமைந்துள்ளன. அவை யாவும் அவருடைய வீரம்,

பயர்களும் காரணங்களும்
LLLLLL LL LLL LLL LLL LLLL LL LLLLLLLLS
எழுத்தணிவயல் றுநீ பஞ்சாகூடிர விநாயகர் ஆலய மஹாகும்பாபிஷேக மலர் (29-03-1956)
கருணை, தோற்றம் முதலாகிய வரலாறுகளைப் பற்றி வந்த பெயர்கள். அவற்றுள் சிறந்தன சில வற்றைப் பொருளுடன் தெரிவிப்போம்.
கணபதிக’- போதல் அதாவது ஞானநெறியில் எழுதல் என்பது பொருள். 'ந' - மோட்சம். "பதி - பரம்பொருள். அதாவது ஞானநெறியில் நின்று எய்தப் பெறும் பரம்பொருள் என்பது பொருள். கணேசர் என்பதும் இப்பொருளானதே.
ஏகதந்தர் - அளவில்லாத பெரிய ஆற்றலையு டையவர். ஏரம்பர் - இளைத்தவர்களை இடையூறு நீக்கிப் பாதுகாப்பவர். லம்போதரர் - எல்லா உலகங்களும், இடையூறு எய்தாமே பாதுகாக்கும் சரிந்த தொந்தியர். கஜானனர், சூர்ப்பகர்ணர் என்பன அன்பர்களின் இடையூறுகளை நீக்கி, கருணைக் காற்றையளித்து, மேனோக்கும் உண்மை ஞானத்தை உதவுபவர் என்னும் பொருளன. குகாக்கிரசர், ஸ்கந்தபூர்வசர் என்பன முருகனுக்கு முன்பிறந்தவர் என்ற காரணத்தால் வந்த நாமங்கள். விநாயகர் தனக்கு ஒருதலை வனின்றித் தானே தலைவனாக விளங்குபவர் என்று வாமன புராணமும், அன்பர்களின் தீமை களை விலக்கிநன்னெறியிற் செலுத்துபவர் என்று பவிஷ்யோத்ர புராணமும் கூறுகின்றன. விகடர் என்பது அவர் ஆடிய விகடக் கூத்துக் காரணமாக விளைந்த பெயர். விக்னராசர், விக்கினவிநாயகர் என்பன இடையூறுகளுக்கு எல்லாம் தலைவராக, அவற்றை அடக்கியாள்பவர் என்னும் பொருளன. தூமகேது என்பது வரலாறுகளில் தூமன் என்னும் அரக்கனைக் கேதுபோல் அடக்கியாண்டு ஞானம் நல்குதலான் வந்தபெயராகவும், வால்நட்சத்திரம் போல இடையூறுகளுக்கும் தீயோர்களுக்கும் தீமை செய்து நல்லோரைக் காத்தலான் வந்த பெயராகவும் கொள்வர் பெரியோர். இவ்வண்ணம் பல பெயர்கள் அவருடைய அருள் வண்மையைக் காட்டுவனவாக அமைந்துள்ளன.

Page 50
1. பாவ கணபதி
பல்வகைப்பட்ட பழுத்த புத்தம் புதிய தன்மை கொண்ட பழங்களாய கதலி, மாம்பழம், பலாப்பழம், கரும்பு ஆகியவற்றை ஏந்தியுள்ளார். இவை பூமியினது செழிப்புத் தன்மையையும், நிறைவுத் தன்மையையும் வெளிப்படுத்துகின்றன.
1. BALA GANIAPATI
Bala Ganapati holds a variety of fresh fruits in his hands, including banana, mango, Sugarcane and jackfruit, representing the abundance and fertility of the earth.
2. தருண கணபதி
தருண கணபதி எண்கரங்களுடன் அவற்றிலே பல்லினப் பழங்களையும், ஆயுதங்களையும் தாங்கியிருக்கின்றார். அவரது உடலமைப்பு தேயோன்மயமானது. இது இளைஞரின் மலர்வைக் குறிக்கிறது.
2. TARUNA GANAPATI
Eight-armed, Taruna Ganapati holds a variety of fruits and implements in his hands, His features are brilliant. representing the blossoming of youth.
3. பக்தி கணபதி
அரிவு வெட்டுக் காலத்திலே நிலவெறித்து நிற்கும் முழுமதியைப் போல பக்தி கணபதி பார் வைக்கு மனோரம்மியமானவராக இருக்கின்றார். அவரது நான்கு கரங்களிலேயும், கதலிப்பழம், மாம்பழம், ஒரு கலசத்தில் பாயசம், தேங்காய் ஆகியவற்றைக் கொண்டுள்ளார்.
 

DIQ, 6)IIb Ở) 6Ոெ : 7,
3. BHAK GANAPA
Shining like the full moon in the harvest season, Bhakti Ganapati is indeed pleasant to look upon. In His four hands He holds a banana, a mango and a pot of payasam (a Sweet pudding) and a coconut.
4. வீர கணபதி
வீர கணபதி கோர நிலையைக் கொண்டவர். நின்ற நிலையில் பல கைகளைக் கொண்டு அவற்றில் பல்வகைப்பட்ட ஆயுதங்களாய அங்குசம், வாள், கத்தி, வில்லு, பரசு ஆகியவற்றைத் தாங்கியுள்ளார். அவரது தோற்றம் சக்தி மிக்கதும் அதிகாரபூர்வமானதுமாக அமைந்துள்ளது.
4. VIRA GANAPAT
Vira Ganapati is a fierce pose. Standing, manyarmed, holding every a variety of weapon - goad, sword, shakti, bow. battle - axe and the like. His presence is commanding and powerful.
5. Füğü öGILIği
இருந்த இருப்பில் நான்கு கரங்களைக் கொண்டவராய் அவரது இடது தொடையிலே சக்திகளுள் ஒருவரை இருத்தியிருக்கிறார். சக்தி கணபதியானவர் கிருகஸ்தனைப் (இல்லத்தவனை) பாதுகாவல் செய்கிறார். அவர் பாசத்தையும், அங்கு சத்தையும் ஏந்தியிருக்கிறார்.
5. SHAKTI GANAPATI
Seated, four-armed, with one of His shaktis seated on His left knee, Shakti Ganapatiguards the grihastha (house-holder). He holds the noose and goad.

Page 51
6. gıbe HOIL I
சில வேளைகளில் நான்கு தலைகளுடன் காணப்படுகின்றார். திவிஜ கணபதியின் ஆயுதங் களாவன பாசம், அங்குசமும் சில நூல்களின் படி ஏடும் (புத்தகம்) கமண்டலமும் மற்றும் ஆயுதங் களும அடங்கும.
6. DVIJA GANAPAT
Sometimes represented with four heads. Dvija Ganapati's implement include a noose, a goad and according to some texts, a book, a kamandalu (water vessel) and weapons.
7. சித்தி கணபதி
பொன்னிறம் பொருந்தியவர். பச்சை வர்ணமும் பூசப்பட்டவர். சித்தி கணபதியை பெரும்பாலும் பல தலைகளைக் கொண்டவராகக் சித்திரிக்கப் பட்டுள்ளது. அவர் தம் கரங்களிலே பரசு (கோடரி), மாம்பழம், கரும்பு, இனிப்புப் பண்டங்களை வைத்தி ருக்கின்றார்.
7. SIDDH GANAPAT
Gold color, shaded in green, Siddhi Ganapati is often shown with many heads. He holds the Parashu (axe) mango, Sugarcane and Some Sweets.
8. உச்சிவழ்ட கணபதி
ஆறுகரங்களும் மாதுளம்பழம், தாமரை, மாலை, இனிப்புப் பண்டம் மற்றும் ஆயுதங்களை யும் தாங்கி இருக்கின்றன. உச்சிஷ்ட கணபதி நீல நிற மேனியர்; சில வேளைகளில் வீணையும் ஏந்தியிருக்கின்றார்.
8. UCCHISHTA GANAPAT
Six-armed, holding the pomegranate, lotus, mala, Sweets and weapons, Ucchishta Ganapati has a blue complexion and may be shown holding a vina.

9. விக்கினராஜ கணபதி
சுடர்விடும் பொன்னிற மேனியைக் கொண் டவர் விக்கினராஜகணபதி. தனது வாகனமாகிய மூஷிகம் மீது அமர்ந்துள்ளார். நான்கு கரங்களைக் கொண்டு அவற்றில் அங்குசம், பாசம், ஒடித்த மருப்பு மோதகம் என்பவற்றைத் தாங்கியுள்ளார்.
9. VIGHINARAJA GANAPATI
With features of brilliant gold hue. Vighna Ganapati rides on His vahana, the mouse. Fourarmed, He holds His noose and gold, broken tusk and modaka.
10. கழிப்ர கணபதி இவர் நின்ற முகூர்த்தத்தினைக் கொண்டவர். க்ஷிப்ர கணபதி சிவப்பு நிறம் பொருந்தியவர். பக்தரிடையே மிகுந்த அன்பும், பற்றும் கொண்டவர். அவரது நான்கு கரங்களிலேயும் தாமரை, மருப்பு, பாசம், அங்குசம் ஆகியனவற்றைக் கொண்டுள்ளார்.
10. KSHPRA GANAPATI
A standing murthi, Kshipra Ganapati is red-complexioned and highly popular with His devotees. His four hands hold the lotus and tusk-point, noose and goad.
11. ஏரம்ப கணபதி
ஐந்து முகம் கொண்டு சிங்கம் மீது அமர்ந்து வருவதாக இருக்கும். ஏரம்ப கணபதியின் கைகளிலே பல்வகையான ஆயுதங்களையும், உணவுப் பண்டங்களையும் காணலாம். அத்துடன் அவரது இரு கரங்கள் அருளையும், அபயத்தையும் அபிநயிக்கின்றன.
11. HERAMBA GANAPAT
Five-faced and riding on a lion, this murthi of Sri Ganapati holds many weapons and edibles, and offers the mudras (gestures) of protection and blessing.

Page 52
12. வர கணபதி
செவ்வண்ணர், யானைமுகவர். முக்கண்ணர். பாசம் அங்குசங்களைத் தரித்தவர். தேன் நிறைந்த மண்டையையுடையவர். பிறைமுடியர்.
13. LDT HOUTLUlf
இடது புறத்திலே சக்திகளுள் ஒருவரால்
அணையப்பெற்று விளங்கும் மகா கணபதியான வர் சிவந்த நிறமுடையவர். எண்கரங்களைக் கொண்டவர். அவற்றிலே பல்வேறு ஆயுதங்களும், பழங்களையும் கொண்டுள்ளார்.
13. MAHAGANAPAT
Usually shown accompanied by one of His shaktis on His left, Maha Ganapati is red-complexioned and gas eight hands which hold various weapons and fruits.
14. Siagu aso ng
எண்கரங்களைக் கொண்டவர். அவற்றிலே
பல்வகைப்பட்ட ஆயுதங்கள் பழங்களையுடையவர். அவர் மஞ்சள் நிறம் பொருந்திய கற்பகதருவின் கீழ் இருப்பதாகக் கூறப்படுகிறது.
14. VIJAYA GANAPATI
Eight-arrmed, holding various weapons and fruits. Vijaya Ganapati is said to be sitting under a yellow kalpa-vriksha (wish-fulfilling tree)
 

15. நிருத்த கணபதி
இடது அல்லது வலது காலை ஊன்றியபடி நடன நிலையில் நிற்பவர். இந்த மூர்த்தம் ஆறு கரங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் ஆயு தங்கள், பழங்கள், ஆகியனவற்றை ஏந்தி துரிதப் பாடான செயற்பாட்டினையும், மகிழ்ச்சியையும்
பிரதிபலித்து நிற்கின்றன.
15. NRUTTA GANAPAT
A dancing pose, standing on either the right or left leg, this murthi is sixarmed, holding weapons and fruits, and represents lively activity and joy.
16. ஊர்த்தவ கணபதி
தனது இடது புறத்திலே சக்திகளில் ஒருவரை அமர்த்தியவராய் ஊர்த்தவ கணபதி பொன் னிறமேனி கொண்டுள்ளார். ஆறு கரங்களிலும் பல்வகைப்பட்ட ஆயுதங்கள், பழங்கள், கரும்பு, உணவுப் பண்டங்கள் ஆகியனவற்றை வைத் துள்ளார்.
16. URDHVA GANAPAT
Seated with one of His shaktis on His left. Urdhva Ganapati is golden-complexioned, six
armed, holding various weapons, fruits, sugarcane and edibles.
急

Page 53
W
W
■
I
|
W
#EnW 閭』
3. Lijf EEGIJDIIJf BHAKT GANAPATI
 
 

GITTI "HI GITIILIH TAR UNA GANAPATI
2. "iյլIէ:
||||
4. fig ini LJG VIRA GANAPATI

Page 54


Page 55
HEJTIT LIGH SHAKTI GANIA PATI
M
W
W l W W W W W
W M
W M W W W W
W AAN M MMMM|| W W
W
W
M W
|| || W W
l W
W
M W W W W M |
I
|M. WWWWWW
WAARIKWAWO
W
I
 
 

6。五町
#Iblir P T GITIILIH DVIJA GAINA PATI
W W կ
W 。 獸
M W l t
| W L I իրիկ W M - Hill
W M
*
W
H
下 LALAWAIIAN W ITIM W W M W KIINNIMALILI W W
WIWIT
WATU W
WIWIT ■ WN
M M MANM|| H W
W T Hill W | T 屿 UTAWAN MIT
* "TIL M * W TARTA
L Mill
MALL
M
t

Page 56


Page 57
9. lījiff JIJI I HITTLIG WIGH NA RAJA GANAPATI
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||TTTTTTTTTTTTTTTTTTTTTTTTT W 川W) M MI
| W I W * M
T
I W W W "
Antonio Montgoria:Arturaturik, 11. JULİīLI ELIGIITILIGÍ HERAMBA GANAPATI
 
 

10. dnůU EHITTILJS KSHIPRA GANAPATI
TITI, M
I
|M.
*
M I
'
MANN
I W W W
W W
NAWA
W W |
W
W Wt"M
W W
* T
| W . 5 ܐܢ ANNULLANWANINIWAN
|ा
M
III
N
W NUHAN ATTIVITETETT l M
| W
W W
WIWITEITUMELAWAN W
W
予。三い。 KWA WWW
li. UMUMNYUWUN M

Page 58


Page 59
13. DJ 1,5 MAHAGANAPATI
MIMIMI I MIMIM I
W
I
W W Mill
W W I W
W
15. říjjji Hobi JLJILJEG NI RUTTA GANAPATI
 

14. GT722LI I ET GOTIILIH WIJAYA GAINA PATI
W
W.
I
W 壓 I W M
|
W التالي |
16. Jiijill FilILJ URDHWA GANAPATI

Page 60


Page 61
எல்லாச் சமயங்களுக்கும் வணக்கக் கோயில் கள் உண்டு. "கோ" என்றால் இறைவன். "இல்" என்றால் அவன் இருக்குமிடம். திருக்கோயிலில் லாத ஊர் 'அடவி காடேயென்று' திருநாவுக்கரசு நாயனார் பாடியது இங்கு குறிப்பிடத்தக்கது.
கோயில்கள் சைவ ஆகமங்களில் கூறும் விதிமுறைப்படி அமைக்கப்பட வேண்டும். கோயில் கட்டுமிடத்தைத் தேர்தெடுத்து அகழ்ந்து ஆகம விதிப்படி செய்யும் கிரியைகளை சிவாச்சாரி யார்களைக் கொண்டு செய்விக்க வேண்டும். கோயில் அமைப்பு, இறைவனின் மூர்த்தங்கள் எழுந்தருளுமிடங்கள். கோபுரங்கள் வீதிகள் ஆகியவற்றை சிவாச்சாரியார்கள், சிற்பக் கலை ஞர்களின் உதவியைக் கொண்டு அமைத்தல் வேண்டும்.
உடம்பில் உயிர் விளங்குவது போல கோயில் களில் இறைவன் விளங்குகின்றான்."ஊன் உடம்பு ஆலயம் சீவன் சிவலிங்கம்" எனத் திருமூலநாயனா ரின் திருமந்திரம் பகர்வது இங்கு நினைவு கூரத்தக்கது. கோயிலின் மூலஸ்தானம் அல்லது கர்ப்பக்கிரகம் அக்கோயிலின் பிரதானமூர்த்தியின் உருவமோ, அருஉருவமோ இருக்குமிடமாகும். மனிதன் உடல்போல கோயில் அமைப்பைக் கவனத்திற்கெடுத்துக்கொண்டால் தத்துவரீதியில் சிரசு - கர்ப்பக்கிரகம், கழுத்து - அர்த்தமண்டபம், மார்பு - மகாமண்டபம், நாபி - யாகசாலை, தொடை - ஸ்தம்பமண்டபம், பாதம் - கோபுரவாசல்
ஆகிய முறைகளில் அமைகின்றது.
கருவறையில் இருக்கும் பிரதான மூர்த்தி கருங்கல்லாலும், விழாக்காலங்களில் உலா வரும் உற்சவமூர்த்தி பஞ்சலோகங்களாலும் ஆக்கப்பட் டதாக இருக்கும். உற்சவமூர்த்தி மகாமண்ட பத்திலிருக்கும். பஞ்சலோகங்கள் பஞ்சகிருத்தியங் களைக் குறிக்கும். கருவறையின் மேலிருக்கும்.
 

ID. bTJ, juggg.T in J.P.U.M. (ELLs, T50ft)
விமானம் படிப்படியாக குறுகிமேற்போவது ஆன்மா படிப்படியாக உலகப்பற்றை விட்டு இறைவனை நோக்கி மேல் போவதைக் காட்டும். விமானம் மேலுள்ள கலசம் ஆன்மா சிதாகாசத்தோடு ஐக்கியப்படுவதைக் காட்டும்.
ஸ்தம்பமண்டபத்தில் நந்திதேவர். பலிபீடம், கொடிமரம் ஆகிய மூன்று உருவங்கள் உண்டு. இவைகளில் முதலிரண்டும் கருங் கல்லால் ஆக்கப்பட்டதாயிருக்கும். நந்திதேவர் பசுவையும் (ஆன்மாவையும்). பலிபீடம் பாசம் நீங்குவதையும், கொடிமரம் பதியையும் (இறைவனடி) விளக்கும் சின்னங்களாக அமையும். சிவன்கோயிலில் நந்தியி ருப்பது போல இதர கோயில்களில் அக்கோபி லுக்குள்ள பிரதான மூர்த்தியின் வாகன உரு வங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
கொடிஸ்தம்பத்தின் தத்துவத்தை விளக் குங்கால் கொடிமரம் பதியையும், கொடிச் சீலை பசுவையும், கயிறு பாசத்தையும் குறிக்கும். மேலும் கொடிமரத்தை உற்றுநோக்கினால் அதில் 6 வட்ட வடிவமான முடிச்சுக்களைக் கான லாம். இவை மனித உடம்பில் சூக்கும நாடியிலி ருக்கும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களையும் அவைகளுக்குரிய தெய்வங் களான கணபதி, பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவம் ஆகியவைகளையும் விளங்கும். ஆறு ஆதாரங்களுக்கூடாக குண்ட லினி சக்தி ஊடுருவிச் சென்று இறைவனுடன் ஐக்கியப்படுவதை கொடி ஸ்தம்பத்தில் கொடிச் சீலை கொடித்திருவிழாவிலன்று ஏற்றுவதைக் காட்டும். இது யோக மார்க்கத்தால் இறைவனை அடைதலைக் காட்டும்.
திருக்கோயில்கள் எல்லாவற்றுக்கும் சுற்று வீதிகளுண்டு, பெரிய கோயில்களுக்கு மூன்று

Page 62
鑫 அல்லது ஐந்து வீதிகளும், சிறிய கோயில் களுக்கு ஒன்று அல்லது இரண்டு வீதிகளு முண்டு. எல்லாக் கோயில்களின் உள்வீதி யிலும் சில மூர்த்திகளைக் காணலாம். இவை பரிவார மூர்த்திகள் எனப்படும். இவைகளும் இறைவனின் வெவ்வேறு வடிவங்களே. மூர்த்திகள் எல்லாவற்றிக்கும் விநாயகனே தலைவனாக விளங்குவதால் விநாயகனை முதலில் வணங்கியே மற்றத் தெய்வங்களை வழிபடவேண்டும். விநாயகர் என்பதன் பொருள் தனக்கு மேல் எவருமில்லை யென்பதாகும். விநாயகன் என்றால் ஒப்பற்ற தலைவன் என்பது பொருள். அவனே கணங்கள் எல்லாவற்றிக்கும் தலைவனாம், அதனால் அவ னுக்கு கணபதி என்று இன்னுமொரு பெயர். விநாயகனை முதலில் தொழாவிட்டால் விக்கி னங்கள் விளையக்கூடும். அவனே விக்கினங்களை விலக்கியாள்பவன். ஆதலால் அவனை விக்னேஸ் வரன் என்றும் அழைப்பர். எனவே சைவ ஸ்தாப னங்களில் விநாயகனுக்கே முதலிடம் கொடுப்பது மிகவும் பொருத்தமானதாகும். இனி வீதிகளை நோக்கும் போது மதுரை மீனாட்சியம்மன் கோயி லைச் சுற்றி ஐந்து வீதிகளுண்டு. இவற்றின் தத்துவத்தை விளக்கின், மனித உடம்புகளாக அன்ன, பிராண, மன, விஞ்ஞான, ஆனந்தமய கோசங் களைக் குறிக்கும். இவைகள் முறையே ஸ்துTல, சூக்கும, குண, கஞ்சுக, காரண சரீரங்கள் எனப்படும். பஞ்சலோகங்களுள் ஆத்மா இருப்ப தையே ஐந்து வீதிகளுள் பிரதானமூர்த்தி இருப்பது விளக்கும்.
கோயில்கள் கட்டி முடிந்ததும் அவைகளை வழிபாட்டுக்கு விடமுன் கும் பாபிஷேகம் (குடமுழுக்கு) செய்ய வேண்டியது அவசியம். இக் கிரியை ஆகம வல்லுனராகிய சிரேஷ்ட சிவாச்சாரி யர்களைக் கொண்டு நடத்துவர். கும்பாபிஷேகக் கிரியைகள் நடக்கும்போது கருவறையின் மேலுள்ள விமானத்தில் உச்சியிலுள்ள கலசத்துக்கு கும்பத்திலுள்ள நீரினால் அபிஷேகம் செய்யப்படும். கும்பாபிஷேகத்தை அடுத்துச் சில நாட்களுக்கு மண்டலாபிஷேகம் இடம்பெறும். இக்கிரியைகள் எல்லாவற்றையும் ஆகமமுறைப்படி சிவாச்சாரி யர்கள் நிறைவேற்றி வைப்பார்கள்.
மண்டலாபிஷேகம் முடிந்ததும் ஆலயங்கள்
அடியார்கள் வழிபாட்டிற்குத் திறந்துவிடப்படும். தினமும் ஆறு அல்லது மூன்று காலப் பூசைகள்
 

நடைபெறும். இவைகள் நித்திய பூசையெனக் கூறப்படும். இவற்றைவிட விசேட தினங்களில் விசேட பூசை, சங்காபிஷேகம், நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறும். வருட மொருமுறை கோயில்களில் கொடியேற்றி பத்துப் பதினைந்து அல்லது இருபத்தைந்து நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும். திருவிழாக் காலங் களில் மூர்த்தி வீதி வலம் வருவது இறைவன் எல்லாவுயிர்களையும் காத்து அருள் புரிவதைக் குறிக்கும். திருவிழாக்களினிறுதியில் தேர், தீர்த்தத் திருவிழாக்கள் இடம்பெறும்.
தேரின் வடிவம் ஆத்மீக வளர்ச்சியையும் ஆன்மா முத்தி பெறும் நிலையையும் குறிக்கும். ஆன்மா பிறவியெடுக்குமுன் ஆணவத்துடன் கூடியிருக்கும் நிலை கேவல நிலையெனப்படும். இந்நிலையைத் தேரினடிப்பாகம் குறிக்கும். ஆத்மா பிறவியெடுத்துகலை முதலிய தத்துவங்கள் சேர்ந்த நிலை சகல நிலையெனப்படும். இந்நிலை யைத் தேரின் நடுப்பாகமும் அதனுள் இறைவன் எழுந்தருளும் பீடமும் குறிக்கும். தேரின் மேற்பாகம் ஐந்து வட்டங்களாக ஒடுங்கி மேலே போவது ஆன்மாவின் சுத்த நிலையைக் குறிக்கும் உச்சியி லிருக்கும் கலசம் முத்தி நிலையைக் குறிக்கும்.
தேர்த்திருவிழாவுக்கு அடுத்தநாள் தீர்த்தத் திருவிழா நடைபெறும். அது ஆத்மா அருள் வெள்ளத்தில் குளிப்பதை விளக்கும். மேலும் மலங்கள் நீங்கி ஆத்மா சத்தினிபாத நிலையை யடைதலைக் குறிக்கும்.
அடியார்கள் சரியை கிரியை மார்க்க முறைப் படி கோயில் வழிபாடு செய்வதால் இருவினை யொப்பை (மலபரிபாகத்தை) கிட்ட அவர்களுக்கு யோகமார்க்கமாகிய தியான நிஷ்டை கைகூடு கின்றது. அதற்குக் குருவும் வாய்க்கப் பெறு கின்றது. திருக்கோயில் வழிபாட்டால் (சரியை கிரியையால்) சாலோக சாமீபநிலைகளை அடைந்த சாதகன் தாரண தியானம் சமாதி ஆகிய யோக மார்க்கங்களால் சாரூப நிலையை அடைகிறான். ஈற்றில் ஞானநிலையெய்தி சாயுச்சிய நிலையை அடைந்து இவ்வுலகிலேயே ஜீவன்முத்தனாய் வாழ்கின்றான். எனவே மேற்கூறியவாறு சாதகர் கள் சரியை கிரியை யோக ஞான மார்க்கங்களை அனுஷ்டித்து வீடுபேற்றைப் பெறுவார்களாக.
“மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்".

Page 63
சமய, தத்துவ, ஆன்மிக நூலாகப் போற்றப் படுகின்ற திருமந்திரம் சிறந்த கல்விக் கருத்துக்கள் பலவற்றை உள்ளடக்கியுள்ளது. உலகை ஒன்றாகக் காண்பதே கல்வியென்ற தத்துவத்தை முதலில் ஈந்தவர் திருமூலர். அது சைவத் தமிழர் தத்துவ மாகிப்பின் உலகத்தத்துவமாகிவிட்டது. கல்வியின் பயனாக எழுகின்ற அன்பு, ஒப்பரவு, கண்ணோட்டம், வாய்மை, அருள், சாந்தி, சமாதானம் என்பன வாழ்க்கையின் அடித்தளம் ஆக அமையும் போது மனித வாழ்க்கை அனைத்து உலக நோக்கி னைக் கொண்டதாகிவிடும். குறுகிய எண்ணங் கள், மனப்பாங்குகள் என்பன அகன்றுவிடும்.
சைவநெறி ஓங்கும்.
திருமந்திரத்தில் சமயமும் மெய்யறிவும் ஒன்றித்திருப்பதைக் காணலாம். உலகியலும் ஆன்மிகமும் ஒன்றிற்கொன்று முரண்படாமல் இணைந்து செல்வதை நோக்கலாம். சைவத்தின் நிலைப்பாடும் அதுவே.
கல்வி வேறு. வாழ்க்கை வேறு அல்ல என்றும் வாழ்க்கையே கல்வி, கல்வியே வாழ்க்கை என்றும் இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கல்விச் சிந்தனையாளராக போற்றப்படுகின்ற அமெரிக்க ரான ஜோன் டூயி குறிப்பிடுகின்றார். இன்றைக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இதே கருத்தைத் திருமூலர் கூறியுள்ளமை எம்மையெல்லாம் வியக்க வைக்கின்றது.
துணை அதுவாய் வரும் தூயநல் கல்வியே என்பது திருமந்திரம். வாழ்க்கைக்கு உறு துணையாக வருவது தூயநற் கல்வியாகும். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று சேர்ந்ததே மனித வாழ்க்கை. கல்விக்குப் பயன்களாக, இம்மூன்றும் விளங்குகின்றன. கல்வியே இவற்றை
 

குமாரசாமி சோமசுந்தரம்
வழங்குகின்றன. மனித வாழ்க்கையை அறம், பொருள், இன்பத்தோடு கூடிச் செம்மையாக வாழ்ந்தவர், வீடுபேறு என்னும் முத்தியின்பத் தையும் அடைவர். எனவே அறம், பொருள், இன்பத்தோடு வீடுபேற்றையும் நல்குவது கல்வி.
கல்லாமையின் இழிவு பற்றித் திருமூலர் குறிப்பிடம் போது, “கல்லா மனிதர் கயவர் உலகில் பொல்லா வினைத்துயர் போகச்செய் வாரே” (314) என்கிறார்.
தூய கல்வியை கற்காத மனிதர்கள் தம் வாழ்க்கையை மட்டுமன்றி மற்றையோர் வாழ்க் கையினையும் குழப்பி, அமைதியைக் கெடுத்து அழிவினை ஏற்படுத்தும் கயவர்களாகிவிடுவர். கல்வியைக் கல்லாமையால் மனிதரில் ஏற்கனவே உள்ள அறியாமை, மேலும் பெருகுகிறது. அறியாமையே துன்பங்களுக்குக் காரணம் என்ப தைத் திருமூலர் பல இடங்களில், திருமந்திரத்தில் எடுத்துக் காட்டியுள்ளார். ஆதலால் கல்லாத அறி விலிகளைக் காணவும் கூடாது; அவர்கள் சொற் களுக்கு ஒரு போதும் செவி சாய்க்கவும் ஆகாது என்கிறார் திருமூலர்.
உலகநீதியை ஒம்பி, ஒழுகி, கருமங்களை ஆற்றுவதற்கு நல்ல கல்வியறிவு வேண்டும். தெய்வ நீதியை மதித்து வாழ; மனித குல தர்மங்களை அறிந்து அவற்றுடன் பொருந்தி வாழ; இயற்கை ளுடன் இசைந்தும், இணைந்தும் வாழச் சிறந்த கல்வி தேவை. அது பற்றியே கல்விக்கு முதன்மை யும் முக்கியத்துவமும் அளிக்கின்றார் திருமூலர்.
கல்வி தரும் முக்கிய பண்புகளுள் ஒன்று நடுவுநிலைமையாகும். மனித வாழ்விற்கு நடுவு நிற்றல் எனும் பண்பு முக்கியமானது இந்த உலகம் குழப்பங்கள் நிறைந்து, அமைதி குன்றிக் காணப்

Page 64
படுகின்றதே, அவ்வாறான அவலநிலை உலகில் நிலவுவதற்குக் காரணமென்ன? என்னும் கேள்விக்குத் திருமூலர் பின்வரு மாறு பதிலளிக்கின்றார்.
“நடுவு நில்லாது இவ் உலகம் சரிந்து
கெடுகின்றது." (337)
மனிதர்களிடையே நடுவுநிற்றல் எனும் பண்பு இல்லாமல் போய்விட்டது. அவர்கள் நீதியிலிருந்து தவறிவிட்டார்கள். நேர்மையீனம் பெருகிவிட்டது. ஊழல்கள் மலிந்துவிட்டன. வன்மை மேலாதிக்கம் செலுத்துகின்றது. உலகம் சமநிலையை நடுவு நிலைமையைப் பக்கம் சாராமையை இழந்துவிட்டமையினால், குழம்பி விட்டது. சரிந்து விட்டது; அமைதியை இழந்து தவிக்கின்றது. இந்த அவலத்திலிருந்து உலகம் மீட்சி பெறுவதற்கு உறுதுணை, தூய நற்கல்வி யேயாகும். உலகின் எல்லா இடங்களிலும் ஆன்மீக வளமும், வண்மையும், திண்மையும் ஏற் படுத்தவல்ல ஞான ஒளியை ஏற்படுத்தும் கல்வி யையே தூயநற்கல்வி என்பர். அதனாலேயே துன்பங்களுக்கெல்லாம் காரணமான அஞ்ஞான இருளை, அறியாமை அரக்கனை அகற்றமுடியும்.
கல்வி கற்றும் அறிவைப் பெற்றுக் கொள்ளா தவரும், கற்ற அறிவை ஒழுங்காகப் பயன்படுத் தாதவரும் கல்லாதவர்களுக்குச் சமம். அத்தகை யவரும் கல்லாத மூடர்கள் போன்று உலகினுக்கு ஊறுவிளைவிக்கின்றனர். அவர்கள் கல்வி கற்ற அயோக்கியர்கள் ஆவர். அவர்கள் பெற்ற கல்வி ஒரு போதும் எவர்களுக்கும் சிறந்த துணையாக மாட்டாது. கூடாத துணைகளை வைத்திருப்
பதிலும், நீக்கிவிடுவதே மேலானதாகும்.
“வழி துணையாய் மருந்தாய் இருந்தார் முன் கழித் துணையாம் கற்றிலாதவர் சிந்தை ஒழித் துணையாம் உம்பராய் உலகு ஏழும் வழித் துணையாம் பெரும்தன்மை வல்லானே” (297)
தூய கல்வியானது நமக்கு வழித்துணை யாகவும், துன்பங்களுக்கு மருந்தாகவும் உள்ளது. மாறாக, கூடாத கல்வி, மக்கட் பண்பினைத் தராத கல்வி, என்றும் கூடாத துணையாகவும், கொடிய
நஞ்சாகவும் நமக்கு வந்துவிடுகின்றது.
 
 

எமது பிறப்பின் நோக்கம், உடம் பின் தேவை, உயிரின் நோக்கம் என்பவற்றை நிறைவேற்றும் கல்வியே உண்மைக் கல்வி, தூயநற் கல்வி. வெறும் உலகாயுத பணப்பலம் தருகின்ற, புகழ், பலம் பெருக்குகின்ற, சமூக அந்தஸ்தை அதிகரிக்கின்ற கல்வியையே இன் றைய உலகு கல்வி என்று அழைக்கின்றது. அத்தகைய கல்வியைக் கற்பவர்கள் ஆசைப் பெருக்கத்தினால் அல்லல் உறுகின்றனர். அக் கல்வி, துன்பங்களுக்கு ஏதுவாகின்றது. அதனால் அக்கல்வி கூடாத துணையாகி விடுகின்றது. அத்தகைய கல்வி அவர்களை அழிவுக்கு இட்டுச் செல்கின்றது அவர்களும் அழிந்து போகின்றார்கள்; மற்றவர்களையும் அழித்து விடுகின்றார்கள். இதுபற்றியே திருமூலரும்,
“கல்வியுடையார் கழிந்து ஒடிப் போகின்றார்” என்கிறார். தூய்மையற்ற கல்வியைக் கற்றவரின் நிலைபற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
உண்மைக் கல்வி உலகளாவியது தூய்மை யானது. அத்தகைய தூயநற்கல்வியை முழுமை யாகக் கற்று அறிந்தவர்களின் கருத்துக்கள், ஆக்கங்கள் பிறரை வாழ்விப்பன: காலத்தால் அழியாதன மனிதப் பண்புகளையும் தெய்வீகப் பண்புகளையும் மனிதரில் விருத்தி செய்கின்ற கல்வியே உண்மைக் கல்வியாகும். அதுவே தூயநற்கல்வி எனத் திருமூலர் கூறுகின்றார். அத்துTயநற் கல்வியே இம்மை வாழ்விற்கு, அதன் முடிவில் வரும் இறை பயணத்திற்கும் உறுதுணையாக வரும் துTயநற் கல்வியைக் கற்ற பெருமக்கள் என்றும் பேரின்பம் பெற்று இனிது வாழ்வார்கள்.
தூயநற்கல்வியின் பயன் தூய நல்லறிவு. தூயநல்லறிவுக்குப் பயன் தூயநல்லொழுக்கம். பிறப்பின் நோக்கமும் உயிரின் நோக்கமும் இவற்றை அடைதலே. இவற்றை அடைதலின் மூலமே இறுதி நோக்கமாகிய இறைவனை அடைதல் கைகூடப்பெறும்.
தன்னையறிதற்குத் தூயநற்கல்வி துணை யாகின்றது. தன்னைப் பற்றிய உண்மையை உணர்ந்து கொள்கின்றவர்கள் அப்படியானால்

Page 65
தன்னை ஆராயாதவர்கள் ஒரு போதும் உண் மையை அறிய மட்டார்கள். உண்மையை அறியாத வரையில் இறையின்பமாகிய பேரின் பத்தை அனுபவிக்கமுடியாது. பிறவித் துன்பங்களில் மீண்டும் அழுந்தநேரிடும்.
சர்வ சீவராசிகளிலும், உயிரற்றவைகளிலும் இறைவன் என்னும் உண்மை வியாபித்துள்ளது. தன்னை ஆய்ந்துகொள்ள உதவும் கல்வியைக் கற்றவர்களுக்கே இந்த உண்மை புலப்படும். எல்லாவற்றிலும், எல்லாரிலும் இருப்பது ஒரே இறைவன், ஒரே உண்மைப் பொருள் என்னும் உணர்வு உறுதியாகும் போது, பிறருக்குத் தீங்கு செய்வதிலிருந்து ஒதுங்கிக் கொள்வோம் உலகினை ஒன்றாகக் காணும்போது, நாமெல் லாரும் உலகின் அங்கங்கள், உறுப்புக்கள் ஆகின்றோம். ஒர் உறுப்பிற்குத் தீங்கு செய்யப் பட்டு, ஊனம் ஏற்படும்போது, முழுப் பொருளுமே, முழு உலகமுமே பழுதாகிவிடுகிறது. உலகை ஒன்றாகக் காணும் பேற்றினைக் கல்வியளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டினைத் திருமூலர் கல்விநெறி கொண்டுள்ளது இதனாலேயேயாகும்.
“கல்லாத மூடரைக் காணவும் ஆகாது” என்று திருமூலர் குறிப்பிடுவதிலிருந்து பிறக்கும் கருத்து, என்னவெனில் மாந்தர்கள் ஒவ்வொருவரும் கல்வியைக் கற்கவேண்டும் என்று அவர் கொண் டுள்ள உறுதியான கொள்கையாகும்.
எல்லோர்க்கும் கல்வி: கல்வியில் சமவாய்ப்பு: கல்வி ஒவ்வொருவரினதும் அடிப்படை உரிமை; எல்லோராலும் கற்கமுடியும்; கல்வியை எப் பருவத்திலும் எக்காலத்திலும் கற்கமுடியும்; கல்வியைக் கற்க மறுப்பவன் வாழமறுக்கிறான், போன்று கல்விக் கருத்துக்கள் யாவற்றையும் உள்ளடக்கிய நிலையில் இவ்வுலகிலுள்ள எல்லோரையுமே விளித்து “ஒதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்தபின் ஒதிஉணர்ந்தவர் ஓங்கி நின்றாரே” என்கிறார் திருமூலர். கல்வியின் சிறப்பை அறிந்து அதனை எல்லோரும் கற்று உயர்வும் உய்வும் பெறவேண்டும் என்பதே திருமூலரின் நோக்கமாக இருந்தது.
“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று அற்புதமாக மொழிந்தவரல்லவா, திருமூலர்.

எனவேதான் கற்றுணர்ந்து எய்திய பெரும் பேற்றினை, பேரின்பத்தை உலகில் வாழும் அனைவரும் எவ்வித பாகுபாடுமின்றிப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற பெரு விருப்பினராய்க் கல்வியை "ஒதுமின்', 'கேள்மின்"
'உணர்மின்’ என எடுத்து இயம்புகின்றார்.
கற்றும், கேட்டும், உணர்ந்தும், தெளிந்தும் விட்டால் மாத்திரம் போதாது. கற்றபடி நிற்றல் என்னும் இறுதிநிலையினை நிறைவு செய்தல் அவசியமாகும். அப்போதுதான் ஒருவர் கல்வியின் முழுமையை எய்தப் பெற்றவராகக் கொள் ளப்படுவர். எல்லா நிலைகளிலும் தேறியவர்களே உலகில் நற்குடிகளாக, உலகக் குடிமக்களாக, சான்றோராக ஓங்கி நிற்பவர்கள் ஆவர்.
கல்வி, கேள்வி, கேட்டமைதல், கல்லாமை என்னும் மூன்று தலைப்புக்களில் திருமூலர் கல்வி பற்றிய தமது சிந்தனைகளைத் தருகின்றார். கல்வியைக் கற்கவேண்டும் என்கிறார்; அவ்வாறு கற்கமுடியாதவர் கேள்வி மூலமாவது அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடு கின்றார். “கற்றிலனாயினும் கேட்க" என்ற கூற்றையும் இவ்விடத்திலே நோக்கற்பாலது. கல்வியைக் கற்றுப்பெறாமலும், கேட்டுப் பெறாமலும் இருப்பவர்களே கல்லாதவர்கள். கல்லாதவர்களை மூடர்கள் எனத் திருமூலர் கூறுகின்றார். அவர்களைப் பார்க்கவும் கூடாது; அவர்கள் சொல் கேட்கவும் கூடாது என்று நம்மையெல்லாம் எச்சரிக்கை செய்கின்றார். முதலில் மிக உயர்ந்த நிலையில் வாழ்வதற்கு இன்றியமையாததான கல்வியைப் பற்றிக் கூறிய திருமூலர் அது சாத்தியப்படாவிட்டால், குறைந்தபட்சம் கேள்வி அறிவை யாதல் பெறுக என ஆலோசனை கூறியுள்ளார். அதையும் செய்ய முடியவில்லை யானால், மனிதர்கள் பெரும் இழிவை அடைவர் என்கிறார். கல்விகற்றல் ஒர் அறமாகும். கல்லாமை மறம் ஆகும். அறம் செய்யப்பட வேண்டியது. மறம் தவிர்க்கப்பட வேண்டியது. அறம் மனித குலத் தைக் காக்கும் சக்தி படைத்தது.
கல்வி கற்று உயர்வது மானுடத்தின் அதி உயர் குறிக்கோளாகும். கல்லாமை மானுடத்தைத் தாழ்நிலைக்குத் தள்ளிவிடுகிறது. அதனாலேயே திருமூலர் எந்த அளவிற்குக் கல்வியைப் போற்றி

Page 66
ع5 عیح
ଖୁଁ னாரோ, அந்த அளவிற்குக் கல்லாமையை தூற்றியும் உள்ளார். கல்வி மூலம் மக்களி டையே அன்பினையும் அருளையும் ஆனந்தத்
தையும் பரப்ப முடியும் என்று சிந்தித்தவர் திருமூலர்.
அறம் பெருக்கவும், அறம் காக்கவும், கல்வி துணை புரியவேண்டும். தூய கல்வியின் பயனே. ஒருவன் தன்னை முற்றாக உணர்தல். தம்மை முற்றாக உணர்ந்தவரே அறத்தைவிடாமல் செய்வார்கள்; அறத்தின் காவலராக விளங்கு வார்கள் தாம் அறிவார் அறம் தாங்கி நின்றார் என்பது திருமந்திரம். எல்லோருடனும் எல்லா வற்றையும் பகிர்ந்து கொள்ளல்; எல்லாச் சீவராசி களினதும் நலன்களைக் கருத்தில் கொண்டு வாழ்தல்; எல்லோர்க்கும் அன்பு செய்தல்; தம் உடல், பொருள், ஆவியனைத்தையும் அர்பணித் துப் பிறர் உயர்வதற்காகத் தொண்டு செய்தல். என்பவற்றை உள்ளடக்கியதே ஒப்புரவு. ஒப்புர வாளனாக உயர்வது மானுடத்தின் மேலெல்லை என்கிறார் ஒர் அறிஞர். திருமூலரின் கல்விநெறி கற்போனை ஒப்புரவாளனாக்க முயல்கின்றது. உலகினை உய்விக்கும் ஆற்றலை மனிதனுக்கு வழங்கும் கல்வி நெறியாக அது திகழ்கின்றது.
ஆன்மீகத்தை இலக்காகக் கொண்ட திருமூலர் கல்விநெறி, உலகியல் தொடர்பான வாழ்க்கையைச் செம்மைப்படுத்துதலையும் அந்த இலக்கினுள் உள்ளடக்கியே உள்ளது என்பதைத் திருமந்திரத்தைக் கற்கும்போதுஅறியமுடிகின்றது.
திருமூலர் திருமந்திர
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
மண்ணுலகத் தினிற் பிறவி மாசற எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக் கண்ணுதலுடைய தோர்களிற்று மாமுகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்.
உச்சியின் மகுடம்மின்ன ஒளிர்தர நுதலினோடை வச்சிர மருப்பின் ஒற்றை மணிகொள்கிம்புரிவயங்க மெய்ச்செவிக் கவரிதுரங்கவேழ மாமுகம்கொண்டுற்ற
கச்சியின் விகடசக்கரக் கணபதிக்கன்பு செய்வாம்.
 
 
 

ஆன்மிகத்தை உலகியலிருந்து தனிமைப் படுத்தக் கூடாது. திருமூலரின் சிந்தனை களையும், கல்விநெறியையும் ஆராயுமிடத்து இவ்வுண்மைகளை அறிந்துகொள்ள முடிகின்றது மாத்திரமல்ல ஆன்மிகமும் உலகியலும் இணைந்த ஒரு செம்மையான வாழ்வு முறையை இவ்வுலக மாந்தர்கள் மேற்கொள்ள வேண்டும் என விழைந்தார் என்பதையும் தெரிந்துகொள்ள முடிகின்றது. இவ்வுயர்ந்த வாழ்வினை எய்துவ தனைக் குறிக்கோளாகக் கொண்டதே திருமூலர் நெறியாகும்.
திருமூலர், ஒரு குறிப்பிட்ட தொகுதி மக்களுக்கோ, வரையறைக்குட்பட்ட காலத்திற்கு மட்டும் பொருத்தக் கூடியதாகவோ தமது கல்விநெறியை அமைக்கவில்லை. எல்லோ ருக்கும், எத்தரப்பினருக்கும், எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் அவரின் கல்விநெறி திகழ்கின்றது. ஒழுக்கப் பண்பாடுகள், மனிதப் பண்புகள் மனித விழுமியங்கள் என்பவற்றை விருத்தி செய்ய உதவும் திருமூலர் கல்விநெறி உலகளாவிய தன்மையைக் கொண்டுள்ளது. அன்பு நெறியை அதாவது சைவநெறியை மனித வாழ்க்கை நெறியாக அமைத்துத் தருவது. திருமூலர் கல்விநெறி. உலகை ஒன்றாகக் காண இக்கல்விநெறி மானிடத்திற்கு உதவு கிறது. சமகால உலகம் வேண்டி நிற்பது இத்த கைய சீரிய கல்விநெறியையேயாகும்.
ம் - பத்தாந்திருமுறை
வானுலகும் மண்ணுலகும் வாழ மறைவாழ பான்மை தருசெய்யதமிழ் பார்மிசை விளங்க ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்
ஆனைமுகனைப் பரவியஞ்சலி செய்கிற்பாம்.
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை கணபதி என்றிடக் காலனும் கைதொழும் கணபதி என்றிடக் கருமம் ஆதலால் கணபதி என்றிடக் கருமம் இல்லையே.
திருவுங் கல்வியுஞ் சீரும் தழைக்கவும் கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும் பருவ மாய்நம துள்ளம் பழுக்கவும் பெருகு மாழத்தப் பிள்ளையைப் பேணு வாம்.

Page 67
తోుతాతా
வேதவியாசர் 18 புராணங்களையும் 4 வேதங்களையும் இயற்றினார். இவைகள் பெரும் தபோ நிஷ்டையில் இறைவனால் கூறப்பட்ட உண்மைகளின் அல்லது தத்துவங்களின் கதை வடிவங்களாகும். புராணக்கதைகள் யாவும் உண் மையானவை. அவைகளுக்கு பின்னால் மறைந் திருக்கும் தெய்வீகத் தத்துவங்களும் இணையாக உண்மையானவை. எனவே தத்துவங்களைப் படிக்கும் மக்கள் அவைகளை விளக்க உதவும் புராணக் கதைகளைப் புறக்கணிக்கக் கூடாது.
யுகங்கள் மொத்தம் 4 வகைப்படும். கிருதயுகம், திரேதாயுகம், துலாபரயுகம், கலியுகம் என்பவை களே அவைகள். சர்வேஸ்வரனான இறைவன் யுகங்கள் தோறும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களையும் செய்கிறார்.
படைத்தல் படைக்கும் தொழிலை இறைவன் செய்வது 84 லட்சம் வேறுபட்ட யோனிகளைக் கொண்டுதான். அதாவது ஊர்வன, பறப்பன, நடப்பன இன்னும் எத்தனை வகைகள் உண்டோ. அவைகளில் உள்ள யாவும் இந்த 84 லட்சம் யோனிக்களுக்குள் அடங்கும். எனவே குரங்கிலி ருந்து பிறந்தவன் மனிதன் என்பது தவறு. அதை வெளியிட்ட டார்வின் என்ற ஆராய்ச்சியாளர் தனது கருத்துத் தவறானது என்பதை வெளி யிட்டபோது மக்கள் அறியாமையினுள் அவரைக் கொன்றுவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. எனவே புலிக்கு புலியும், சிங்கத்திற்கு சிங்கமும், எலிக்கு எலியும் என்பது போல் ஓரினத்திலிருந்து தோன்றும். எதுவும் அதன் தாயைப் போன்றுதான் இருக்கமுடியும் என்பது நாம் நடைமுறையில் காணும் உண்மை. எனவே 84 லட்சம் யோனி களின் (ஜீவராசிகள்) வழியாகத் தான் இறைவன் படைப்புத் தொழிலை செய்கிறான்.
காத்தல் பிரும்மா, விஷ்ணு, ருத்ரன் எனப்படும் மும்மூர்த்திகளுள் “விஷ்ணு" என்பவரே இத் தொழிலைச் செய்கிறார். உண்மையில் காத்தல் என்பதன் தத்துவம் என்னவென்றால் “மாயை'

4s.
2.
விநாயகர் புராணம்
யிலிருந்து நம்மைக் காப்பாற்றுவது என்பதாகும். அதாவது "புலனடக்கம்" பெற்று தவநிலையில் நிலைத்திருக்கும் திறனைப்பெறுவது என்பதாகும். எனவே தான் தவத்தில் சிறந்த யாவறும் இவரை “கபட சூத்திரதாரி" என்று அழைக்கின்றனர். இவரது அருள் மிகவும் அவசியமாகிறது. யோகம், தவம் என்பது யாவர்க்கும் பொது அதில் வெற்றி பெற்று அரிய சக்திகளையும்,சித்திகளையும் பெறுவது அசுரர்களுக்கு தேவர்களுக்கும் மற்றும் மகான்களுக்கும் பொதுவானது ஆயினும் அவர் களுள் நல்லோரை தீயோர் அழிக்காமல் காப்பது விஷ்ணுவின் லீலைகள்.
அழித்தல் "அழிவு" என்பது படைப்பின் இறுதிக் கட்டம். படைக்கப்பட்டவை யாவும் காலத்திற்கு கட்டுப்பட்டவைகள். எனவே உரிய காலம் வந்ததும் அவைகள் மறைந்துவிட வேண்டும். இந்த மறை விற்குக் காரணமாக இருந்து அழிப்பதைத் தனது விளையாட்டாகக் கொண்டிருக்கும் இவரே "ருத்ரன்" எனப்படுவார். இவரை வணங்குவதும் இவரது அருளைப்பெறுவதும் எக்காரியத்திற்கும் இன்றியமையாதது. "மகா ருத்ரன்" எனப்படும் இவரே நமது தேகத்தத்துவங்களுக்கும் சலனங் களுக்கும் கூட காரணமாயிருக்கிறார். உடல் அழியாமல் இருந்தால்தான் மனிதன் எதனையும் சாதிக்க முடியும். எனவே இந்த சவம் சிவமாகும் நிலையை அடைய நாம் செய்யும் தவத்திற்கு இவரது கருணை மிக முக்கியமாகிறது.
மறைத்தல்இறைவன் படைத்த "மாயை' மற்றும் “அறியாமை" சக்தியேநம்மை மயக்கத்தில் ஆழ்த்தும் விதியாகவும் நியதியாகவும் செயல்படுகின்றன. முன்வினை பயனுக்கேற்ப நமது புலன்கள், மதி. மூச்சு, தேக இயக்கம் என்பவைகள் செயல்படு கின்றன. இதனால் நமது மனம், புத்தி, சித்தம். உணர்வு என்றவைகள் நம்மை பலவித உணர்ச்சி களுக்கும், ஆசைகளுக்கும், எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் அடிமையாக்கிவிடுகின்றன. இவைகளை வென்று புலனடக்கம் பெறுவதே யோகம் தவம் என்பவைகள். ஆக மனிதன்

Page 68
தனது ஆறாவது அறிவிற்கு அப்பாற்பட்ட பெரும் “ஞானவெளி" யை எட்டி பிடிப்பதற்கு தடையான இந்த இயற்கைச் சக்தியே “மாயை" எனப்படும். இது நமது முற்பிறவிகளில் செய்த வினைகளின் மொத்த பலன் என்பது தெளிவு. ܝ - - --
அருளல் முன்வினைப் பயனுக்கேற்ப நமது புலன்கள் மற்றும் தேகத்தத்துவம் இவையாவும் செயல்படுகின்றன என்றும் அவைகளே மாயை (அல்லது) அறியாமை எனப்படுகிறது. என்பதை யும் மேலே கண்டோம். அவைகளை இறைவன் திருவருள் கொண்டு தான் வெல்லமுடியும். இறை வனின் இந்த கருணையைத்தான் அருளல் என்று அழைக்கின்றோம்.
மேற்கூறிய ஐந்தொழில்களையும் செய்யும் பரமாத்துமாவை "சர்வேஸ்வரன்" அல்லது “ஆதிமூலம்” என்றும் பலவாறாக அழைக்கிறோம். மாயை என்பது அறிவின் மயக்கம் (அல்லது) அறிவிற்கு உண்மைகள் புலப்படாமல் இருக்கும் நிலை (அல்லது) காலம் என்று கூறலாம். இந்த மதி மயக்கம் மூன்று விதமான கர்ம வினைகளின் பயனாக செயல்பட்டு நமது தேக, மதி மற்றும் ஆத்ம இயக்கத் தத்துவங்களைப் பாதிக்கின்றன. முற்பிறவியில் செய்த வினைகளின் பயன்கள் என்றும் இனிவரப்போகும் பிறவிகளில் நமது வினை களின் பயன்களாக கிடைக்கப்போவதை என்றும் “சாஸ்திரங்கள்" அழைக்கப்படுகின்றன. இவை களின் பயன்கள் முன்பின் மாறியும் நமது தேகம், மதி, ஆத்மா இவைகளை ஆக்கிரமித்து செயல்படும். எனவே தான் ஜோதிடம், வைத்தியம், ஆகமம் போன்ற பல சாஸ்திரங்களை முன்னோர்கள் வகுத்து இருக்கின்றனர். இவைகளின் துணை கொண்டு வருங்காலம், நிகழ்காலம், கடந்த காலம் இவைகளையுணர்ந்து இவைகளின் பலாபலன்களும் ஏற்ப ஆவணசெய்துமக்கள் தங்கள் வாழ்வில் அமைதியைப் பெறவேண்டும் என்றும் முன்னோர்கள் விரும்பினார்கள். எனவேதவத்தில் சிறந்த முனிவர்கள் இதுபோல் பல சாஸ்திரங்களை இறைவன் கருணையின் பேரில் உணர்ந்து சாஸ்தி ரங்களாக எழுதியிருக்கின்றனர்.
மேற்கூறியபடி வினைப்பயனாக ஏற்படும் மதி மயக்கத்தை "மாயை" என்று அழைக்கிறோம். மனிதனுக்கு ஏற்படும் இந்த மயக்கத்திற்கு “சிறு மாயை' எனப்டும். இது போல் தேவதை களுக்கும். (இந்திரன், சந்திரன் போன்று) மதி
 
 

மயக்கம் ஏற்படும். அதற்கு “பெரு மாயை' என்று பெயர். இந்த இரு மாயைகளுக்கும் அதிபதியே “ழரீ மஹா கணபதி” ஆவார். எனவே தான் "முழு முதற்கடவுள்" என்றும் ஆதி மூலம் என்று தேவர்களாலும் போற்றப்படுகிறார். முதலில் கூறிய ஐந்தொழில்களையும் இயக்கும் சக்தியை துதிக்கையுடன் கூடிய இவரது ஐங்கரங்கள் உணர்த்துகின்றன. எனவேதான் 18 சித்தர்களுள் தலைசிறந்து விளங்கும் “திருமூலநாயனார்" இவரை “ஐந்துகரத்தனை ஆனைமுகத்தனை என்று வர்ணிக்கின்றனர்" இதைத்தான் விநாயக ரின் பெரும்கருணை பெற்ற ஒளவையாரும் இவரை “வானோரும் காதலால் கூப்புவர் தம் கை" என்று வர்ணிக்கின்றனர். ஆதலால் சிறுமாயை, பெரு மாயை என்ற இரண்டிற்கும் அப்பாற்பட்டு அவை களின் அதிதேவதையாக இவர் விளங்குகிறார்.
முன் சொன்னபபடியே 4 யுகங்களில் ஒவ் வொரு விதமான சக்தியும் தேக அமைப்பும், அறி வும் அமைகின்றன. உதாரணமாக அசுரன், இராட்சதன் போன்ற இனங்கள் முன்யுகங்களில் நடந்த பெரும் சமயங்களை வால்மீகி, வியாசர் போன்ற மகரிஷிகள் புராணங்களாகவும், இதிகா சங்களாகவும் படைத்தனர். ஆனால் எல்லா யுகங் களிலும் படைக்கப்பட்ட ஜீவன்களையும் சிறு தேவதைகளையும் ஆட்கொண்டு மதியிழக்கச் செய்வது இவ்விரண்டு மாயைகள் தான். எனவே காரண காரியங்களைக் கொண்டு இறைவனின் திருவிளையாடல்களால் ஏற்படும். இவைகளின் விளைவுகள் தான் புராணங்களாகவும் இதிகாசங் களாகவும் தோன்றியுள்ளன. மேலும் இவைகளைப் பெரும் தவநிலையில் படைத்த நமது முன்னோர் கள். மனிதனின் வாழ்க்கைக்கு உகந்தவரும் அவனது ஆன்மீக (அ) அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற வாறும் அமைத்து இவைகளால் மனிதன் தன்னை யும் தன்னை சூழ்ந்துள்ள இயற்கையின் தத்து வங்களையும் உணரும்படி செய்துள்ளனர். எனவே இவைகளைப் படிக்கும் நாம் புராணங்களில் காணப்படும் கதைகளையும், அதில் நிறைந்தி ருக்கும் பெரும் உண்மைகளையும் சமமான கண் ணோட்டத்துடன் பக்தியுடன் காணவேண்டும். உயிரும், உடலும் போன்ற இவைகள் இரண்டும் கதைகளும் + தத்துவங்களும் மனிதனுக்கு பெரும் சிந்தனைத் திறனையும், ஆழ்ந்த தெய்வ பக்தி யையும் தரவல்லன. "நேற்று, இன்று. நாளை" என்ற மூன்றையும் இணைக்கும் பாலம் இது போன்ற தத்துவம் ஒன்றுதான்.

Page 69
சித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதிஷ்டா கும்பாபிஷேகம் பிரபவ ஆண்டு வைகாசி 18ம் நாள் (01-06-1987) இடம்பெற்றது.
இவ்வாலயம் அமைப்பதற்கு முன்பு சபையின் கட்டிடத்தின் வடதிசையில் பூசையறையொன்று அமைக்கப்பட்டு அவ்வறையில் சபையின் வழிபா டுகள், நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றன. அப் பூசையறைக்கு முன்பகுதியில் அமைந்திருந்த மண்டபத்தில் தற்போது பாலர் பாடசாலை நடை பெற்று வருகிறது.
09-11-1970இல் சபையின் இருமாடிக் கட்டிடம் அமைத்தபோது பழைய கட்டிடத்தின் ஒருபகுதி இதனுடன் இணைக்கப்பட்டதனால் இப்பூசையறை அவ்விடத்திலிருந்து மாற்றவேண்டிய நிலை ஏற் பட்டது. புதிய கட்டிடம் மாடிக் கட்டிடம் ஆகையால் கீழ்மண்டபத்தில் வழிபாட்டறை வைப்பதில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றின. எனினும் தற்காலிகமாக தற்போது வசந்த மண்டபம் அமைந் துள்ள இடத்தில் பூசையறை அமைக்கப்பட்டது. எனினும் நிரந்தரமான ஒரு வழிபாட்டிடம் தேவை என்ற எண்ணம் சபையோடு தொடர்புடைய எல் லோர் மனதிலும் இருந்தது. இக்காலகட்டத்தில் தொடர்ச்சியாக நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள், அமைதியின்மை காரணமாக அகதிகள் GTLD5) மண்டபத்தில் மூன்று வருடகாலமாகத் தங்கியி ருந்தனர். மேலும் சபைக் கட்டிடத்தை இராணு
வத்தினரும் தமது பாவனைக்காகப் பலதடவை கள் கேட்டிருந்தனர். அவ்வேளையில் சமய ஸ்தாபனமான இம்மண்டபம் புனித இடமாகப் பேணப்பட வேண்டும் என்று கூறி அந்நிலையிலி ருந்து தவிர்த்துக் கொண்டோம். பிறமதத்தினர் புரிந்து கொள்வதற்கும். இப்பிரச்சினைகளிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கும் ஆலயம் ஒன்றினை அமைப்பதே தகுந்த தீர்வு என முடிவு செய்ததன் பலனே இவ்வாலயத்தின் தோற்றமாகும்.
திருவருளின் பயனால் குரோதன ஆண்டு தை மாதம் 12ம் நாள் (25-01-1986) காலை 7.30
 

மணிக்கும் 8.30 மணிக்கும் இடையேயான சுப முகூர்த்தத்தில் அத்திவாரம் இடப்பட்டது. ஆலயத் திருப்பணி ஆரம்பித்து சைவப் பெருமக்களின் நிதி உதவியோடு நிறைவேறி, பிரபவ, வருடம் வைகாசித் திங்கள் 18ம் நாள் (01-06-1987) திங்கட்கிழமை பூர்வபஞ்சமி திதியும் சித்தயோகமும் பூசநட்சத் திரமும் கூடிய சுபவேளையில் அதிகாலை 5.52 மணிமுதல் 6.42 மணிவரையுள்ள ரிஷபலக்ன சுபமுகூர்த்தத்தில் பிரதிஷ்டா பூஷணம் சிவபூந் குஞ்சிதபாதக்குருக்கள் அவர்களினால் பூந் சித்தி விநாயகருக்குப்பிரதிஷ்டாகும்பாபிஷேகம் செய்யப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 14 நாட்கள் மண்டலாபிஷேகம் இடம்பெற்றது. இவ்வாலயம் ஏனைய ஆலயங்களைப்போல் அல்லாது வணக்கத் தலமாகவும் பக்தர்களுக்குத் தியானம் செய்யும் நிலையமாகவும் அமையவேண்டும் என்ற நோக் கோடு விசேட நாட்களில் தவிர்ந்த ஏனைய நாட் களில் காலை மாலை இருவேளைப் பூசைகளும் இடம்பெற்று வருகின்றன.
03-02-1991 இல் திருமுறை முற்றோதல் சபை ஆலயத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப் பட்டது. இதற்குக் காரணழாக அமைந்தவர்கள் வைத்தியநாதன் தம்பதியினர். திருமுறை முற் றோதலுக்கு ஆலயத்தில் சிவலிங்கம் ஒன்று தேவை என்று எண்ணியபோது அதற்கான பன உதவியைக் காலஞ்சென்ற டாக்டர் இ. குகதாசன் அவர்கள் எமக்குத்தந்துதவினார்.மீனாட்சி அம்மன் விக்கிரகத்திற்கான பணத்தை வழக்கறிஞரும் பொன்னம்பலவாணேஸ்வர ஆலய அறங்காவல ருமான திரு. D. M. சுவாமிநாதன் அவர்கள் உவந்தளித்தார். அன்று தொடக்கம் ஆண்டு தோறும் பன்னிரு திருமுறை முற்றோதல் நிகழ்ச்சி சபையில் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சபையினர் சமய குரவர்களின் குருபூசைத் தினங்களைச் சிறப்பாகக் கொண்டாடி வருவது வழக்கம், சமயகுரவர் நால்வரின் திருவுருவங்
Kisij, 20čo X 37.

Page 70
களைத் தென்னிந்தியாவிலிருந்து தருவித் துள்ளோம். அதற்குரிய செலவினங்களை திரு. S.P. சாமி, திரு. பெ. கருப்பையா, திரு. க. மயில்வாகனம், திரு. V. செல்வநாயகம்
リ
என்போர் ஏற்றுக் கொண்டனர்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்ற ஆகம விதிக்கேற்ப சித்தி விநாயகருக்கு மீண்டும் கும் பாபிஷேகம் நடைபெறவேண்டும் என்ற நோக்கில் வெகுதானிய ஆண்டு கார்த்திகைத் திங்கள் (22-11-1998) திருதியை திதியும் மூல நட்சத்திரமும் அமிர்தசித்த யோகமும் கூடிய நன்னாளில் காலை 8.00 மணிமுதல் 9.00 மணி வரைக்குள்ளாக பாலஸ்தாபனம் நடைபெற்றது.
20-11-1998 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி சுபமுகூர்த்தத்தில் கர்ம ஆரம்பம் தொடங் கப்பெற்று 21-11-1998 சனிக்கிழமை காலை வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரணம், யாக ஆயத்தங் கள் முதலியன நடைபெற்றன. மாலை 6.00 மணி முதல் அங்குரார்ப்பணம், யாகபூஜை, பிரசன்னா பிஷேகம், பூஜை, கடஸ்தாபனம், கலாகர்ஷணம், யாத்திராஹோமம், கும்பம் யாகசாலா பிரவேசம், ஹோமம், யாகபூஜை, தீபாராதனை, பிம்பசலனம், தூபி சலனம், திரிபந்தனம்.
22-11-1998 சனிக்கிழமை காலை பிம்பசுத்தி, பூர்வபச்சிம சந்தானம், யாகபூஜை, மகாபூர்ணாகுதி, தூபி அபிஷேகம், மஹாபிஷேகம், பூஜை, ஆசீர்வாதம் நடைபெற்றன.
திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடை
பெற்றன. துவாரபாலகர், பலிபீடம், மூஷிகம் அமைக்கப்பட்டு மேலும் சிற்பாசாரியர்களின்
திருமூலர் தி
இருட்டறை மூலை யிருந்த குமாரி குருட்டுக் கிழனைக் கூடல் குறித்துக் குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி மருட்டி அவனை மணம் புரிந்தாளே.
 
 

கைவண்ணங்களால் பண்டிகையுடன் கூடிய சிற்பங்களும் விசேடமாக அமைக்கப்பட்டுள்ளன. பாலஸ்தாபனம் முடிந்து ஒருவருட காலத்துள் மீண்டும் சித்திவிநாயகருக்கு குடமுழுக்கு இடம்பெற்றது.
06-12-1999 இல் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு 12-12-1999 ஞாயிற்றுக்கிழமை மகாகும்பாபிஷேகம் நிறைவேறியது. கால்மண்டலாபிஷேகம் நடை பெற்று 26-12-1999 ஞாயிற்றுக்கிழமை பகல் 108 சங்காபிஷேகத்துடன் நிறைவு பெற்றது.
புத்தாயிரம் ஆண்டின் புதுவரவைக் குறிக்கு முகமாக சபை முன்றலில் ஒர் அலங்கார வளைவு அமைக்கப்பட்டு அன்பர்களை அகமும், முகமும் மலர வரவேற்பது எண்ண இனிமை தருகின்றது. பிரதிஷ்டா கும்பாபிஷேகத்தில் மண்டலாபி ஷேகம் செய்தவர்களின் பட்டியல்.
02-06-87 திரு. ஆ. செ. நடராசா 03-06-87 கொ/ விவேகானந்த வித்தியாலய இந்துமன்றம் 04-06-87 திரு. க. இராஜபுவனிஸ்வரன் 05-06-87 திரு. மு. சந்திரபால் 06-06-87 Dr. க. வேலாயுதபிள்ளை 07-06-87 திருமதி. P. சுப்பிரமணியம் 08-06-87 திரு. S. பொன்னையா 09-06-87 திரு. V. செல்வநாயகம் 10-06-87 திரு. சி. நா. சண்முகநாதன் 11-06-87 திரு. S. K. துரைராசா 12-06-87 திரு. பெ. கருப்பையா 13-06-87 திரு. ஆ. குணநாயகம் 14-06-87 திரு. த. துரைசிங்கம் 15-06-87 திரு. மு. க. கருணாகரன்
ருமந்திரம்
விளக்கைப் பிளந்து விளக்கினை யேற்றி விளக்கினுக்குள்ளே விளக்கினைத் தூண்டி விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலு மாமே.

Page 71
韃『』『Egュ』ョショョ園園g』鳴r 』』『』シ
學 册
疆歌歌歌##歌母歌歌普蚤串影器张景景珊
『 』를高等學高等學高等學高等學高等學堂高等學高等學高等學高等學官學堂基音聲器官學事中學事記事官學高等學堂記事的基成基高等學論활
!*® ( Nos - g - I } upes hoff-FI is orog særoroo širos, horiae soo 电台—青h) u民間:宮村uwag müüguna H1國道n軍民軍 ng&m國gh lo; ĝis sisuoris, șitsus, izņūış, sügis lozitī£ğını, Tılsırıs, sūrenigių, Lloff işoğĝis laeosofů stoso itsaesi, Esso
giosługɔUııırıgio) 11:1łļos úUı Wümu且圆圈g1点唱h :Fiqiðìılæg, ontos e ossiles LaertsoUso
@
『
용 용 용 용
|
 
 
 

疊鬣
*El fiqisuo:
PA*u월r월事t; 확학urTE3 ma.J-www)"관학교용 활활au불r법tows 't F
Igos tempļEolehầLEĢĒ, "Tiltīstī, īsstū „sı olhos, sırısı!-IIae in ısraelis, si Issısı Losso; slegusī ogle: „Esuriosios
!stylopaesek, Noisiae sĩ Lưısır'ıssı!! saestos@@ ₪ogoloisrig storiilae ɖoɖrī£®rı ısısoljs&\s+sios rūro so giosoɛsɛ sɔŋɛı sırīsī£; £®) qisaegs- upopriusormae ısıtırır, 5, En sorolt, shısaenaei osoɛɛılıngısı 5'ıĦpriņķīņās, sosnov 占真4mhrmur盛事u画gg@gılıı,sırı seștiriossae suae now '1px sertaessae rniri o os rossferuelossos
(qiro:Faerosos, senzog, une nærının orgo urte, si so sosisi) 1!!!!!īNo s'ısırıssı!= '') [Fiies : sī£; sritįossae -плTпЕл-пшнгї현AurTrm활T***藏哈dfostas fissijoisoitosLE - 白唱****鹽シ
『』調 SLLLJL LLTLLSZ ZYZS0K LLLLLLLLLLLLY LSLKYK KYYYYY LL0K KKHTT L 恩引*******』』『*』『『』匾h *nnn壘唱劑』』m已* Hühu國已 KKLKYK ZYYSL JZ YYYLCSKS YC L YYY LS KZL LS L LL LLLS
绊景景姆景母母景崇叠叠量叠叠避景母来母鲁景叠
母惡光光母串母母母班母母母專母舟母班母母母母母*非母母音母母母哥哥劑
垂
공공
(三國LE T그n그5니m국에 관gung그
"El -sıgısı ole, 그中gMga 는長民國道도g드中그연國)U역)
色n)电遇与点己望信“寺 ( Z8 - 9 - 1 ) 1,9 ugi qi-g Į įgijos ruotoo ɗos) flori úUGI
|QCJI (Isso £409)||IŲs) l-lisos ísı ļosmisso (八
interror&##istriĝi αργή
*í:

Page 72
* ിBബ6][i] முதலாவது விநாயகர் பிரதி
""
முதலாவது விநாயகர் பிரதிஷ்டா கும்பாபிஷேச இடம்பெற்றது. அன்றைய தினம் வெளியிட்ட விசே தினம் இடம்பெற்ற கும்பாபிஷேக விஞ்ஞாபனத் மேலும் இம் மலரில்,
ஆசிய
(அ) நல்லை ஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் பூநீல
(ஆ) சுவாமி பிரேமானந்தா-இராமகிருஷ்ண மிவு (இ) பிரம்மபூந் சி. குஞ்சிதபாதக் குருக்கள் - பிரதம (ஈ) பிரதேச அபிவிருத்தி, இந்துசமய, இந்து கலா
(உ) சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
கட் "பள்ளித் தலமனைத்துங்
செ. வேலாயுதபிள்ளை B.A
ஆகியன அ
նմiեIIա5
ஜய கணேச ஜய கணேச ஜய கணேச ப பூரீ கணேச பூரீ கணேச பூரீ கணேச ரட் கனநாதம் கனநாதம் ஈஸ்வர புத்ரம் க விக்நவிநாயக கனநாதம் சித்திவிநாயக பார்வதிபுத்ரம் கணநாதம் முக்தி பிரதாப மூசrதிக வாகன கனநாதம் மோதஹஹ சிவசிவ கெஜமுக கனநாதா, சிவகன6 வாவா வாவா அங்குசபாசா வந்தருளின் உமைதருபாலா குருமணியே உந்தனன மகாகனபதே குருசரனம் மனம் மகிழ்ந்
சரணம் சரணம் தந்திமுகா சரவணபவனு
(40) விக்கானந்தன்:

"" FELL եliIIլքլեւկ '''s, வழ்டா தம்பாபிBவரக விபரம் st
கம் பிரபவ, வருஷம் வைகாசி 18ம் நாள் (01-06-1987) ட மலரின் முதற்பக்கத்தின் அமைப்பையும், அன்றைய ந்தின் விபரத்தையும் காணக்கூடியதாக உள்ளது.
|ரைகள்:
பூரீ சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள் $ன், கொழும்பு
குரு, பூரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானம்
சார அமைச்சர் மாண்புமிகு செல்லையா இராசதுரை
டுரை: ங் கோயில் செய்குவோம்" (Hons) (ஒய்வுபெற்ற பிரதம கல்வி அதிகாரி)
டங்கியுள்ளன.
ĪT UI Gi
ாஹிமாம்
FLDITún (ஜய கணேச)
னநாதம்
5 கனநாதம்
கனநாதம் ஸ்தா கனநாதம் (கனநாதம்)
வந்தித குணநாதா *பந் தந்திடுநேசா hடக்கலம் அடியோமே து வந்தருள் சரணம் னுக்குயர் துணைவா (சிவ சிவ)

Page 73
கும்பாபிஷே
சங்காபிஷே
பிரபஞ்சமெங்கும் பரந்து விரிந்துள்ள இறைய ருளை ஆச்சாரியர் மந்திரம், பாவனை, கிரியைகள் மூலம் அக்கினியிலும் கும்பத்திலும் ஆவாகனம் செய்து பின்பு ஸ்தாபிக்கப்பட்ட திருவுருவத்திலே சேர்த்து நிலைபெறுத்தலே கும்பாபிஷேகம் ஆகும்.
சிவாகமங்கள், ஆலயக் கிரியைகளை நான்கு பிரிவுகளாக வகுத்துள்ளன. அவை, கர்ஷணம், பிரதிஷ்டை உற்சவம், பிராயச்சித்தம் ஆகும். இவற் றுள் பிரதிஷ்டை அநாவர்த்தனம், ஆவர்த்தனம், புனராவர்த்தனம், அந்தரிதம் என நான்கு வகைப் படும். ஆகம விதிப்படி ஆலயமொன்றைப் புதிதாக அமைத்து அங்கு இறைவனைப் பிரதிஷ்டை செய் தல் அநாவர்த்தனப் பிரதிஷ்டை ஆகும். நெடுங் காலமாக நித்திய நைமித்தியங்கள் நிகழ்ந்துவரும் ஆலயத்தில் எதிர்பாராத விதமாக தீவிபத்து, நில நடுக்கம், மண்மாரி பொழிதல் முதலியன் ஏற்பட்டு மீண்டும் முன்போல ஆலயம் ஒன்றை நிர்மாணிப்பது ஆவர்த்தன பிரதிஷ்டை எனப்படும். ஆலய கோபுரம், மண்டபம்,திருச்சுற்று இவைகள் பழுதுபட்டிருந்தால் அவைகளைத் திருத்தி அமைத்துப் பிரதிஷ்டை செய்வதைப் புனராவர்த்தனப் பிரதிஷ்டை அல்லது ஜீர்னோத்தாரணம் என்பர். பாலஸ்தாபனம் செய் யாது ஜிர்னோத்தாரணம் செய்தல் தகாது. பன்னி ரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமமாகக் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். நாய், கழுதை, பன்றி, சமயப் பிரஷ்டர்கள் இவர்கள் நுழைந்தாலும் அல்லது ஆலயத்தினுள் மக்கள் எவரேனும் இறப் பினும், மிருகங்கள் கொல்லப்படினும் செய்யப்படும் பிராயச்சித்த பிரதிஷ்டை அந்தரித பிரதிஷ்டை ஆகும்.
விவேகானந்த சபையில் அருள்வெள்ளமாக வீற்றிருக்கும் பூரீ சித்திவிநாயகப் பெருமானை அமைத்து முதற் கும்பாபிஷேகம் பிரபவ ஆண்டு வைகாசித் திங்கள் 18ம் நாள் திங்கட்கிழமை

236id cupg56\o 236id 626O).
வித்துவான் திருமதி. வசந்தா வைத்தியநாதன்
(01-06-1987) பூர்வபஞ்சமிதிதியும் சித்தயோகமும் பூசநட்சத்திரமும் கூடிய சுபவேளையில் காலை 5.52 மணிமுதல் 6.42 மணிவரையிலான ரிஷபலக்னத்தில் சிவபூநீ குஞ்சிதபாதக்குருக்கள் அவர்கள் தலைமை யில் நிகழ்ந்தது. கும்பாபிஷேகம் நிகழ்ந்து பன் னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதாலும் மூஷிகம், பலிபீடம், துவாரபாலகர் புதிதாக அமைக்கவேண்டி உள்ளதாலும், கருவறை விமானம் பழுதுபார்க்க வேண்டியதாலும் பூநீ விநாயகப் பெருமானை பாலஸ்தாபனம் செய்து விரைவில் கும்பாபிஷேகம் நிகழ்த்தவேண்டும் என்று சபையினர் தீர்மானித் தனர். அதன் நிகழ்வாக பூரீ சித்திவிநாயகப் பெரு மானின் பாலஸ்தாபனம் 22-11-1998 வெகுதானிய ஆண்டு கார்த்திகைத் திங்கள் திருதியைத் திதியும் மூல நட்சத்திரமும் கூடிய சுபமுகூர்த்தத்தில் பிரதிஷ்டா பூஷணம் சிவபூரீ குஞ்சிதபாதக்குருக் கள் அவர்கள் நிகழ்த்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருப்பணி வேலைகள் ஆரம்பமாயின. புதிதாகத் துவாரபாலகர் களும், முகப்பில் தந்தை யாகிய சிவபெருமானிட மிருந்து ஐங்கரன் ஞானக் கனியைப் பெறுங்காட்சி யும் சுதை உருவங்களாக அமைக்கப்பட்டுள்ளன. கருவறை விமானத்தைப் பழுதுபார்த்து வண்ணம் தீட்டப்பெற்றது. புதிதாக மூஷிகமும், பலிபீடமும் அமைக்கப்பட்டன. திருப் பணிகள் அனைத்தும் நிறைவேறியதும் பிரதம சிவாச்சாரியரினால் கும்பாபிஷேகத்திற்கான நன்னாளும் குறிக்கப்பெற்றது.
சபையின் செயற்குழு 15-05-1999 இல் கூடி கும்பாபிஷேக மலர் ஒன்று வெளியிடப்படவேண்டும்

Page 74
葱 என்றும் விரும்பி அதற்கான மலர்க்குழு திரு.மு. கந்தசாமி அவர்களைத் தலைவராக வும், திரு. க. இராஜபுவனிஸ்வரன், திரு. க. விவேகானந்தன், திரு. ம. நாகரத்தினம், திரு. இராஜ்மோகன், திருமதி. வசந்தா வைத்தியநாதன் முதலியவர்களை உறுப்பினர்களாகவும் கொண்டு அமைக்கப்பெற்றது.
ழரீ சித்திவிநாயகர் ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன மஹாகும்பாபிஷேக விழா 05-12-1999 ஞாயிறு காலை 8.22 மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமத்துடன் தொடங்கிகலாகர்ஷணம், கடஸ்தாபனம், யாகபூஜை, விசேட திரவிய ஹோமம், எண்ணெய்க் காப்பு முதலிய அனைத்துக் கிரியைகளும் பூரணமாக நிறைவேறி 12-12-1999 ஞாயிறு அதிகாலை 7.00 மணிமுதல் யாகபூஜை, மஹாபூர்ணாஹாதி, தீபாராதனை, வேத, ஆசீர் வாத, தேவார பாராயணங்களுடன் பக்தர்களின் பரவசமுழக்கம் 'அரோஹரா என்று ஒலிக்க மஹா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நிறைவேறியது.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து பிரதம சிவாச்சாரியார், பக்தர்கள் அனைவருக்கும் மனம் நிறைய ஆசியுரை வழங்கினார். சபைச் செயலாளர் திருமிகு. க. இராஜபுவனிஸ்வரன் கும்பாபிஷேக விழாவை இனிதே நிறைவேற்றித் தந்த பிரதம சிவாச்சாரியாருக்கும், ஏனைய குருக்கள்மாருக் கும், ஒத்துழைப்பு நல்கிய அன்பர்கள் அனைவ ருக்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்தார். பக்தர்கள் அனைவரும் திருவருட் பிரசாதம் பெற்று மகிழ்ந்தனர்.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து பதினான்கு நாட்கள் மண்டலாபிஷேக விழாவும் தும்பிக்கையான்
திருமூலர்த
மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர் நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர் பனையுள் இருந்த பருந்தது போல நினையா தவர்க்கில் ைநின் இன்பந் தானே.
பண்டித ராவார் பதினெட்டுப் பாடையுங் கண்டவர் கூறுங் கருத்தறி வார்என்க பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும் அண்ட முதலான அறஞ்சொன்ன வாறே.
 
 

திருவருளால் இனிதே நிறைவேறியது. ஒவ்வொரு நாள் விழா அபிஷேகப் பொறுப்பையும் அன்பர்கள் மகிழ்வுடன் பகிர்ந்துகொண்டனர்.
13-12-99 திருமதி. விமலகாந்தன் 14-12-99 திரு. ந. சிவன் 15-12-99 திரு. P. தங்கமயில் 16-12-99 திரு. க. கணேசலிங்கம் 17-12-99 திரு. ம. நாகரத்தினம் 18-12-99 திரு. வி. கயிலாசப்பிள்ளை 19-12-99 திரு. S. சிவராசா 20-12-99 திரு. S. சரவணமுத்து 21-12-99 திரு. S. பஞ்சாட்சரம் 22-12-99 திரு. மு. கந்தசாமி 23-12-99 திருமதி. வானதி இரவீந்திரன் 24-12-99 திரு. வி. செல்வநாயகம் 25-12-99 திரு. கந்தையா நீலகண்டன் 26-12-99 அன்று சபையின் உபயமாக 108 சங்காபிஷேகத்தை பிரதம சிவாச்சாரியார் சிவழநீ சி. குஞ்சிதபாதக் குருக்கள் அவர்கள் நடத்திவைத்துச் சிறப்பித்தார்.
ழரீ சித்திவிநாயகப் பெருமான் புதுப்பொலிவு டன் திருவருள் நிலையமாக, தன்னை நாடிவரும் அடியார்களின் உளத் துயரத்தையும், உடற்
துயரத்தையும் ஒழித்து கருணை பூத்துத் திருவருள் பொழியும் திருக்கோலம் காணத் தெவிட்டாத தொன்று.
வேண்டும் வரம் அருளும் வேழமுகனின் திருவடி பணிந்து நலம்பல பெறுவோமாக.
ருமந்திரம்
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார் இடப்பக்க மேஇறை நொந்தது என்றார் கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.
ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப் பூண்டுகொண் டாரும் புகுந்தறி வாரில்லை நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினுந் தூண்டு விளக்கின் சுடரறி யாரே.

Page 75


Page 76


Page 77
சுவாமி விவேகானந்தரின் தி
அஞ்சல் தலை
பாரதத்தாய் பெற்றெடுத்த அருட்பெருஞ் செல்வரும் தலைசிறந்த தத்துவ ஞானியுமாகிய சுவாமி விவேகானந்தர் அவதரித்தன் பய்னாகவே, நமது மண்ணில் வேர் பரப்பத்தொடங்கிய மேனாட்டு வாழ்வுமுறைகள் களையப்பட்டு இந்தியப் பண்பாடு செழித்தது. அவர் கொட்டிய ஞானமுரசு உலகின் பல பாகங்களிலும் எதிரொலித்தது. அத்தகைய அற்புத ஞான சிரேஷ்டருக்கு விவேகானந்த சபை முன்றலில் 94 அடி உயரமான மிக கம்பீரமான வெண்கலத்தாலாகிய திருவுருவச்சிலை அமைப்பு விழா 1997 ஜனவரி மாதம் 15ம் நாள் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பெற்றது.
காலை 8.00 மணியளவில் கொழும்பு ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளுடன் அனைத்துத் தமிழ் பாடசாலை மாணவ மாணவிகள் பங்குகொண்ட ஊர்வலம் மங்கள் இசை ஒலிக்க, பதாதைகள் ஆனந்தமாகக் காற்றினில் அசைய, நடுவணதாக அமைக்கப்பட்ட அழகிய ஊர்தியில் சுவாமி விவேகானந்தரின் திருவுருவம் மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்டு, இராஜ ஹம்சமாக மிதந்துவர, ஆயிரக்கணக்கான இளைய தலை முறையினரின் ஏகோபித்த குரல் எழுச்சி கீத மாக விண்னை நிறைக்க, ஊர்வலம் ஆலயத்தி னின்று புறப்பட்டுத் தம்பையாசத்திரம், செட்டியார் தெரு, கன்னாரத்தெரு, ஜிந்துப்பிட்டி வழியாக விவேகானந்த சபையை வந்தடைந்தது. வழி எங்கும் பூரண கும்ப மாலை மரியாதைகள் மக்களின் மனப்பெருக்கத்தை அளவிட்டது.
விவேகானந்த மணிமண்டபம் முன்பாக அமைக் கப்பட்ட அலங்காரப் பந்தலில் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. காலை 9.30 மணிக்கு ஊர்வலம் சபையை வந்தடைந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்க, பண்ணிசை வாணர் திரு. பி. வி. ராமன்
 

p வெளியீடும்
gV 3, Iji (05-06-1997)
குழுவினரின் பக்தி கீதம் காற்றில் கமழ, சிறுவர் சிறுமியர் மலரஞ்சலி நிகழ்த்த இராமகிருஷ்ண மிஷன் (இந்தியா) உபதலைவரும், பேராளருமாகிய பூரீமத் சுவாமி ரங்கானந்தாஜி மகராஜ், சுவாமி விவேகானந்தரின் கம்பீரமான, அழகு மிக்க திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தார். பின்னர் கொழும்பு இராமகிருஷ்ண மிஷனின் தலைவர் பூரீமத் சுவாமி ஆத்மகனானந்தா அவர்களின் வரவேற்புரையுடன் கூட்டம் ஆரம்பமாகியது. பூரீமத் சுவாமி ரங்கானந்தாஜி மகராஜ் அவர்கள் ஆசியுரை வழங்கினார். சுவாமி விவேகானந்தரின் திருவுருவம் பொறித்த ரூபா 2.50 முத்திரையும். முதல்நாள் தபால் உறையும் தபால் தந்தி தொலைத் தொடர்பு அமைச்சர் மாண்புமிகு மங்களசமரவீர அவர்களினால் வெளியிட்டு வைக்கப்பெற்றது. சுவாமி விவேகானந்தரின் அற்புத ஆளுமை பற்றிய சிறந்த உரை சென்னை இராமகிருஷ்ண மிஷனின் தலைவர் பூரீமத் சுவாமி கெளதமா னந்தாஜி மகராஜ் அவர்களால் நிகழ்த்தப்பெற் றது. விழாவில் இந்தியத் தூதுவர் கெளரவ திரு. நரேஷ்வர் தயாள், கொழும்பு மாநகரசபை முதல்வர் வணக்கத்திற்குரிய திரு. கே. கணேச லிங்கம் முதலானோரும் கலந்துகொண்டு உரை யாற்றிச் சிறப்பித்தனர்.
நிறைவாக விவேகானந்த சபைச் செயலாளர் திரு. க. இராஜபுவனிஸ்வரன் நன்றி உரையுடனும் அதனைத் தொடர்ந்து மங்கள வாழ்த்துடனும் விழா இனிது நிறைவெய்தியது.
ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பெற்றது. அன்று மாலை 6.00 மணிக்கு சபை மண்டபத்தில் கொழும்பு இந்து மகளிர் மன்றம் நடத்திய, சுவாமி விவேகானந்தர் காலத்துப் பெண்மணிகள் என்ற தலைப்பில் நாடகக் கலை நிகழ்ச்சி சிறப்பாக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Page 78
சுவாமி விவேகானந்த நூற்றாண்டு விழாவி
சுவாமி இராமகிருஷ்ணர் கண்டெடுத்த ஆணிமுத்து, ஆன்மிகக் கொடுமுடி, வீரர் விவேகானந்தர் முதன் முதலாகத் தன் திருப் பாதங்களை இலங்கை மண்மீது பதித்தது 1893 மே மாதத்தில் ஒருநாள். சிகாகோ சர்வ மத சபையில் கலந்து கொள்வதற்காகச் சென்ற பொழுது அவர் சென்ற கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் சுவாமி விவேகானந்தர் கொழும்பு நகரைச் சுற்றிப் பார்த் தார். ஆனால் அவரை அன்று இலங்கை மக்கள் அடையாளம் காணவில்லை.
இதே காட்சி 1897 ஜனவரி 15ல் தலைகீழாக மாறிவிட்டது. அன்று மாலையில் சேவியர் தம்பதி கள், குட்வின் புடைசூழத் தன் வீரக் கழல்களை இம்மண்ணில் பதித்தபொழுது ஆர்ப்பரிக்கும் கடலலைகளையும் விஞ்சி மக்கள் ஆர்ப்பரித்தனர், வரவேற்றனர், வாழ்த்திசைத்தனர்.
இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க நந்நாளை ஒரு நூறு ஆண்டுகள் கழித்து 1997 ஜனவரி 15ல் கொழும்பு - விவேகானந்த சபை மிக விரிவாகக் கொண்டாட அத்திவாரமிட்டது. அதன் விளைவு தான் 96" உயரமுள்ள அற்புதமான விவேகானந்த சுவாமிகளின் திருவுருவம் சபை முன்றலில் அமைக்கப்பட்டமை. ஆரம்ப விழாவும், ஊர்வலம், சிலை திறப்பு, அஞ்சல் தலை வெளியீடு, கலை நிகழ்ச்சிகள் என மிகச் சிறப்பான தோற்றம் கொண்டது. ஒராண்டுகள் இலங்கைத் திருநா டெங்கும் கோலாகலமாகப் பல்வேறு வடிவங்களில் விழாக்கள் வடிவம் கொண்டன. 1998 பெப்ரவரி 14 ஆந் திகதி மாலை 5.00 மணியளவில் சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜய நூற்றாண்டு விழாவின் ஒராண்டு நிறைவு விழா, மண்டபம் கொள்ளாத மக்கள் கூட்டத்துடனும், மனம் கொள்ளாத மகிழ்ச்சி மீதுாறல்களுடனும், மங்கள வாத்தியம் ஒலிக்க சுவாமிஜியின் திருவுருவத் திருமுன் புஷ் பாஞ்சலியுடன் ஆரம்பமாகியது. மங்கள விளக்கேற்றலுக்குப் பிறகு கம்பளை ழரீ முத்துமாரியம்மன் தமிழ் வித்தியாலய மாணவ
 
 

ரின் இலங்கை விஜய ண் ஓராண்டு நிறைவு
விவேகானந்தன் இதழ் (03-05-1998)
மாணவிகள் எழுப்பிய பஜனை இன்னொலி
மண்டபத்தையும், மக்கள் மனத்தையும் நிறைத்தது.
அடுத்ததாக விவேகானந்த சபைத் தலைவர் திருமிகு. வி. கயிலாசப்பிள்ளை வரவேற்புக் கூற,
ழரீமத். ஆத்மகனானந்தாஜி மகராஜ் ஆசியுரை
வழங்க, "விவேகானந்தன்” என்ற வரலாற்றுச்
சிறப்புமிக்க மலரை இலங்கைக்கான இந்தியத்
தூதுவர் மாண்புமிகு ஷிவ்ஷங்கர் மேனன் அவர்கள்
சிறப்பாக வெளியிட்டு வைத்துச் சுருக்கமான
உரையாற்றினார்.
மலரின் அறிமுக உரையை கலாச்சாரச் செயலாளர் திருமதி. வசந்தா வைத்தியநாதன் தெளிவுபெற விளக்க, விருந்தினர்களுக்கு விசேட மலர்கள் அளிக்கப்பெற்றன. சிறப்பு விருந் தினர்களாக சுவாமி சித்ரூபானந்தா அவர்கள் (தலைவர்-பருத்தித்துறை இராமகிருஷ்ணசாரதா சேவாச்சிரமம்), நகரபிதா கரு ஜயசூரிய அவர்கள், கெளரவ திருமதி. ஆர். எம். புலேந்திரன் (பா.உ.). திரு. டி. எம். சுவாமிநாதன் அவர்கள், திரு. கே. கணேசலிங்கம் அவர்கள் (முன்னைநாள் நகரபிதா) முதலியோர் கலந்து சிறப்பித்தனர்.
நிறைவாக விவேகானந்த சபை நடனமன்ற ஆசிரியை செல்வி. W. ஞானாம்பிகை அவர்களின் நெறியாள்கையில் உருவாகிய நடனமன்ற மாண விகளின் நாட்டிய நிகழ்ச்சியும் கலைநயத்துடன் பரிணமித்து நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு மெருகூட்டியது.
சுவாமி விவேகானந்தரின் இரண்டாவது ஆண்டு விழா
சபை முன்றலில் கம்பீரமாகக் காட்சிதரும் வீரத்துறவிசுவாமி விவேகானந்தரின் இரண்டாவது ஆண்டு விழா 17-01-1999 நடந்தேறியது. பஜனை யுடனும் சிறப்பு வழிபாடுகள் செம்மையாக நடந் தேறின. அன்று நண்பகல் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

Page 79
விவேகா
1925.
சபையின் வெளி
தோற்றம்:-
வீரத்துறவி விவேகானந்தரின் பெயரால் அமைக்கப்பெற்ற இச்சபையின் நிகழ்வுகளை, மேற் கொள்ள இருக்கும் பணிகளை, அதன் பயன்களை சபை அங்கத்தவர்களுக்கு அவ்வப்பொழுது அறி விக்கும் முகமாக 1925 ஆண்டு மார்கழித் திங்கள் அன்று தோற்றுவிக்கப்பெற்றதே"விவேகானந்தன்” என்னும் திங்கள் வெளியீடு.
இதன் முதல் ஆசிரியராக இருந்து வெளி யீட்டிற்குப் பெருமை சேர்த்த பெரியார் யாழ் நூல் வித்தகர் விபுலானந்த அடிகளாவர்.
ஆக்கம்:-
சுவாமி விபுலானந்த அடிகள் கொழும்பு இராமகிருஷ்ண மிஷனின் தலைவராகப் பொறுப் பேற்றுப் பணியாற்றிய பொழுது "விவேகானந்த னின்” ஆசிரியராக இருந்து இதழைச் சிறப்பாக்க அடிகளார் ஆற்றிய தொண்டு அளப்பரியது. அவரது அயராத உழைப்பே வெளியீட்டிற்கு வெற்றித் திலகமிட்டது. சுவாமிகளுக்கு உதவிக் கரமாக அமைந்து சகலதுறைகளிலும் முன்னின்று உழைத்த பெரியார் பண்டிதர் எம். தம்பையா அவர்கள். அவர்களது தொண்டினை இந்நேரத் தில் நாம் நினைவுகூர்வது மிகப்பொருத்தமானது.
விரிவு:-
திங்கள் வெளியீடான "விவேகானந்தனுக்கு” தோற்றக் காலத்தில் 765 அன்பர்களே அங்கத்தவர் களாக இருந்தனர். இந்த நிலை நாளடைவில் சற்று வளர்ச்சியுற்று அங்கத்தவர்களின் தொகை 1176 ஆக உயர்ந்தது. பத்திரிகை அச்சிட ரூபா 1626.85 வருவாயாகவும், செலவுத் தொகை ரூபா 1564-72 ஆகவும் இருந்தது. பத்திரிகையை

() () 6可鲈56可
- 2000 யீடு- சிறுகுறிப்பு
அச்சிட நான்கு அச்சகங்களை அணுகிய பொழு தில் குறைந்த செலவிலும், குறிப்பிட்ட கால வரை யறையிலும் பத்திரிகையை வெளிக்கொணர இயலாத நிலையும் உருவாகியது.
இதனைக் கருத்திற் கொண்ட நிர்வாக சபையினர் சபைக்கெனத் தனியாக அச்சகம் ஒன்றை நிறுவ முயன்றார்களாயினும் அன்றைய நிதிநிலைமை அம்முயற்சிக்குத்தடைக்கல்லானது.
1929ல் "விவேகானந்தன்” இதழை சகல அங்கத்தவர்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டு, அது நடை முறைப்படுத்தப்பட்டது.
1932ல் நிதிப் பற்றாக்குறை காரணமாக "விவேகானந்தன்” பணி தடைப்பட்டது. ஆனாலும் அவன் ஆண்டறிக்கை உருவில் வெளிவந்தான்.
விசேட மலர்கள்:-
1987ல் சபையில் ஸ்தாபிக்கப்பட்ட பூரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்தின் பொழுதும், 1997ல் சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜய நூற்றாண்டு விழா நினைவாக சபையில் நிறுவப்பட்ட விவேகானந்தர் திருவுருவத் திறப்பு விழாவின் பொழுதும் விசேட மலர்களை வெளி யிட்டுச் சபை பெருமிதம் கொண்டது.
நிறைவு;-
கடந்த மூன்றாண்டுகளாக "காலாண்டு” இதழாக வெளிவரும் "விவேகானந்தன்” சபையின் அங்கத்தவர்களுக்கும், சபையினர் நடாத்தும் இலங்கை சைவ சமய பாடப் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்துப் பாடசாலைகளுக்கும் இலவச வெளிீழ்க்கி"கிடைத்து வருகிறது.

Page 80
ஆரம்பத்தில் சபையின் நிகழ்வுகளையே தாங்கிவந்த இந்த இதழ் நாளடைவில் சமயம், இலக்கியம் இவைகளுக்கும் இடம் அளித்து விரிந்து மலராக மலர்ந்துள்ளது.
இவ்வளவு மகிழ்வுக்குள்ளும் உள்ள ஒரு உறுத்தல், ஆண்டுதோறும் விவேகானந்தனுக் காகவும் ஏனைய அலுவல்களுக்குமாகத் தேர்ந் தெடுக்கப்பெறும் பொறுப்பாளர்களில் ஒருசிலர் கடமையைக் கவனத்தில் கொள்ளாதது கவலைக் குரியதாகவுள்ளது. எனினும் பொதுமக்களின் பயன் கருதி கெளரவ பொருளாளர் அவர்களும், கலாசாரச் செயலாளர் அவர்களும் இம்முயற்சியை முன்னெடுத்துச் செயல்படுகின்றனர்.
இன்று. இந்திய ஞான தீபத்தின் இலங்கை விஜய நூற்றாண்டு விழாவின் நிறைவிலே சுவாமி களைப் பற்றிய சிறப்புச் செய்திகள், அவர் ஆற்றிய
திருமூலர்த
கொலையே களவுகட் காமம்பொய் கூறல் மலைவான பாதக மாம்அவை நீக்கித் தலையாஞ்சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க் கிலையாம் இவைஞா னந்தத் திருத்தாலே.
நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி நாடோறும் நாடி அவன்நெறி நாடானேல் நாடோறும் நாடு கெடுமூட நண்ணு மால் நாடோறும் செல்வம் நரபதி குன்றுமே.
தத்தஞ் சமயத் தகுதிநில் லாதாரை அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி எத்தன் டமுஞ்செயும் அம்மையில் இம்மைக்கே மெய்த்தண் டஞ்செய்வ தவ்வேந்தன் கடனே.
மண்ணுறாயிர் கட்கணைத்து மாறாதளித்துநல நண்ணு நவக்கிரகப் பாமாலை நான்பாட நண்ணுலவு திங்களனி தங்குமுயர் செஞ்சடையருண் மகிழ்செய்
கங்கையருளைங் கரனார் காப்பு.
 
 

உரைகள், அவரது சிந்தனைகள், ஒரு ஆண்டு காலத்திலே (1997-1998) இலங்கை முழுதும் நடைபெற்ற நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளின் தொகுப்பு நிழற்படக் கோவை அனைத்தையும் தாங்கி வரும் "விவேகானந்தன்” சிறப்பிதழ் ஆராய்ச்சிப் பெட்டகமாக இலங்குகின்றது.
சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயம் இலங்கைக்கு மட்டுமல்ல இந்திய ஆன்மிக எழுச்சிக்கும் இட்ட அடிக்கல். ஒவ்வொரு இந்து மகனின் உள்ளத்திலும் அவரது உபதேசங்கள் அடிமணம் வரை சென்று வேரூன்றி ஒரு யுகப் புரட்சிக்கே வித்திட்டதெனலாம்.
வாழ்க விவேகானந்தர் நாமம்!
வெல்க அவரது ஆன்மிகப் பணிகள்!
திருமந்திரம்
அவனை ஒழிய அகரரும் இல்லை அவனன்றிச் செய்யும் அருந்தவ மில்லை அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை அவனன்றி ஊர்புகு மாறறி யேனே.
தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன் ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை சேயினும் நல்லன் அணியன்நல் வன்பர்க்குத் தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.
மனத்தில் எழுகின்ற மாயநன் னாடன் நினைத்த தறிவன் எனில்தான் நினைக்கிலர் எனக்கிறை அன்பிலன் என்பர் இறைவன் பிழைக்கநின்றார்பக்கம் பேணிநின்றானே.
பிறப்பிலி பிஞ்ஞகன் பேரருளாளன் இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும் துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால் மறப்பிலி மாயா விருத்தமு மாமே.

Page 81
விநாயகர்-பிரன
<2
விநாயகர் சிவபெருமானது சக்தி அம்சமாகத் தோன்றிய ஒரு மூர்த்தமே. அதனால் இவர் சிவகுமாரர் என்றுஞ் சொல்லப்படுவார். ஆயின் இவர் சிவத்தின் வடிவினரேயன்றி சிவத்தின் வேறல்லர்.
உலகங்கள் முதற் தோன்றுதற்கு முதற் காரணமாயுள்ளது, மகாமாயை அல்லது பிரணவம் எனப்படும். அதற்கு தலைமையாய் இருக்கும் சிவசக்திக்கும் விநாயகர் என்று பெயர். தனக்கு மேலான ஒருவர், தலைவர் இல்லாதவர் என்ற பொருளை உணர்த்துவது விநாயகர் என்னும் பெயர். நாம் எடுக்கும் எக்கருமமும் இடையூறு இன்றி இனிது முடிதற் பொருட்டு விநாயகர் அருளை வேண்டி வணங்குதல் தொன்று தொட்ட மரபாகும். தம்மை அன்பால் வணங்கும் அடியவர் களுக்கு விக்கினங்களை (இடையூறுகளை) நீக்குங் கடவுளாதலின் விக்கினேசுவரர் எனவும் இவர் போற்றப்படுவர். தன்னை அடைந்தோர்க்கு ஞானத்தினால் மோட்சத்தைக் கொடுக்கும் சிவசொரூபி என்றதனால் கணபதி என்ற பெயரும் பெறுவார். (க+ண + பதி = கணபதி, க- ஞானம், ண- மோட்சம், பதி- தலைவர்). மேலும் மனித உடலின் மூலாதாரத்தில் அதன் அதிதெய்வமாக இருந்து குண்டலினி சத்தியை நடத்துபவராக இருப்பவர் கணபதி என்றும் யோகசாத்திரம் கூறும்.
விநாயகர் பிரணவ வடிவினர். பிரணவம் வட்ட வடிவைக் குறிக்கும். இயற்கை அசைவுகளெல்லாம் வட்டமானவையே. வட்டத்துக்கு முடிவு இல்லை. வேறெந்த வடிவுக்கும் முடிவு உண்டு. இவர் பிரணவ வடிவினராக இருப்பது சகலமுந் தோன்றுவதற்கு முதற் காரணர் என்பதை விளக்கும். “கணபதி” என்ற பெயர் மூலப்பொருள்களுக்குத் தலைவன் என்ற பொருளையும் உணர்த்துவதாகும். இப் பெயரும் முதற்காரணமென்பதை விளக்குகின்றது.
 

வத்தின் வடிவம் )
须
60) 6) 9 Dub - LIITL T6b
வேதமானது சிவபெருமானை முதல், இடை, கடைகளில் பிரகாசப்படுத்துகின்றது. அது முதலில் "ஓம்" என்று தொடங்குகின்றது. இந்த ஓம்’ பிரணவம் என்று சொல்லப்படுவது. இதன் வடிவமே விநாயகக் கடவுள். வேதத்தின் முதல் எழுத்து விநாயகரது சுத்தஞான வடிவம் என்பதை விநாயகரது திருவுருவமே உணர்த்துகின்றது. இதனையே “கைவேழமுகம்” என்று பெரியோர் கூறுவர். மேலும் "முந்தை வேத முதலெழுத்தாகிய எந்தை” எனவும், “மூல மொழிப்பொருளாமெந்தை" எனவும் "தாரகப் பிரமமான மாககயமுகத்து வள்ளல்" எனவும் கந்தபுராணம் கூறுவதும் இதனை யேயாம்.இதுபற்றியே விநாயகரை முதலில் வழிபடும் மரபு போற்றப்பட்டு வருகின்றது. சிவபெருமான் அவருக்கு அருளிச் செய்ததும் இதுவே என
உண்மை நூல்கள் கூறுகின்றன.
பிரணவத்தின் வரிவடிவம் முதற்பகுதி நட்சத்திர வடிவம் என்றும்; இரண்டாம் பகுதி தண்டவடி வமாக அமைந்திருப்பதாகவும் காமிக ஆகமம் கூறுவதாகக் கூறுவர். எனவே இவ்விரண்டு உறுப்புகளும் (0+-=உ) கலந்த வடிவம் ஊமை எழுத்து என்றும், மூலமனு என்றும், பிள்ளையார் சுழி என்றும், மெளனாக்கரம் என்றும் கூறப்படும். இப்படிப் பலவாறாகக் கூறப்படும் பிள்ளையார் சுழியாகிய "உ" என்னும் எழுத்து. நாத விந்து களின் வரிவடிவாம்.'உ' என்ற அடையாளத்திலுள்ள வட்டம் (0) விந்து - சத்தியையும், கோடு (-) நாதம் - சிவத்தையும், அதாவது சிவம் சத்தி ஆகிய இரண்டையும் அடக்கியுள்ளது. "மோனமே குறி யாதா முதலெழுத் தருளிய” என்ற கந்தபுரா ணத்திலும், “கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங் கருதியஞ் சலிசெய்கு வாம்” என்ற தாயு மான சுவாமிகள் பாடலாலும் உணரப்படும்.
விநாயகர் பிரணவவடிவினர் என்பதைக் காட்டு வதற்காகவே மோதகம், தேங்காய். மாதுளம்பழம்

Page 82
as முதலிய வட்டப் பொருட்கள் நிவேதிக்கப் 数 படுகின்றன. இன்னும் அவர் சத்துவகுணத்
தினராகையால் பால், தேன், சர்க்கரை, பருப்பு, அவல் முதலிய பதார்த்தங்கள் நிவேதிக்கப் படுகின்ற்னவாம்.
கயமுகாசுரன் என்பவனாற் செய்யப்பட்ட கொடுமைகளை அடக்கித் தேவர்களை மீட்டு, அவ் அசுரனை ஆட்கொள்வதற்காக இறைவன் கொண்ட திருக்கோலமே விநாயகராவார்.
விநாயகர் யானைமுகம், பருத்த தொந்தி, மூன்று திருக்கண், இரண்டு திருவடி, இருந்த பாவனை கயமுகாசுரனைக் கொல்ல முறித்த கொம்பும், அங்குசமும் (யானைத்தோட்டி) தாங்கிய வலதுகைகள் இரண்டும், பாசமும் மோதகமும் தாங்கிய இடது கைகள் இரண்டு, துதிக்கை ஆகிய ஐந்து திருக்கைகள் கொண்ட திருக் கோலத்தில் பிருச்சாளி ஊர்தியில் (வாகனத் தில்) அமர்ந்திருத்தலையே தம் திருவுருவமாகக் கொண்டவர்.
இயற்கையான யானைக்குத் தொந்தி வயிறு இருப்பதில்லை. ஆயின் சகல அண்டங்களும், சராசரங்களும் ஓங்காரமென்னும் பிரணவத்துள் அடங்குவதால், அவ்வடிவினராகிய யானைமுகப் பிள்ளையாருக்குத் தொந்தி வயிறு (தாழி வயிறு) அமைந்திருப்பது இயல்பாகின்றது. திருக்கண்கள் மூன்றும், இச்சை, கிரியை, ஞானம் ஆகிய மூன்றையும் குறிப்பனவாம் பரஞானத்தால் எதனையும் காண வேண்டும் என்பதைக் குறிப்பது நெற்றிக்கண். அவர் தோற்றத்தில் காணும் விரிந்த காதுகள் அன்பர்கள் கூறுவதைக் கேட்கும் ஆவல் உடையவர் என்பதைக் காட்டுவதாகும்.
கயமுகசங்காரத்தின் பொருட்டு முரிக்கப் பட்டதாலேயே ஒற்றைக் கொம்பை ஏந்தி நிற்பது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங் களையும் நீக்குபவர் தாம் என்பதை அடியவர்க்கு அறிவித்தற்காகவாம்.
ஆன்மாக்களை அநாதியே பந்தித்த ஆணவ மலமாகிய யானையைப் பாசமென்னும் கயிற்றாற் கட்டி அங்குசத்தால் அடக்கி, மறைத்தல் என்னுந் தொழிலைச் செய்பவர் தாம் என்பதை உணர்த்து வதற்காகவே பாசாங்குகளை ஏந்தியுள்ளார்.
 
 

ஆணவ வடிவமான கயமுகனுடைய சேனை களைப் பாசத்தால் கட்டி, கணிச்சியால் (கோடரி யால்) அடக்கி, அவனது மலவலி கெட்டுப் பெருச்சாளி வடிவமாக வர, அவனுக்கு நீங்காத ஞானத்தைக் கொடுத்துச் சுத்தனாக்கித் தனது வாகனமாகும் பேற்றினைக் கொடுத்து அடிமை கொண்டதனால், ஆணவம் என்ற மதங்கொண்ட யானையை அடக்கி ஆன்மாவை அடிமை கொண்டவர் இவர் என்பது இனிது விளங்கும்.
விநாயகரைப்பூசித்துப்பெறற்கரும் பேறுகளும், தெய்வப் புலமையும் பெற்ற பிற்காலத்து ஒளவையார் பாடிய விநாயகர் அகவலில் வரம் “கோடாயுதத்தால் கொடுவினை களைந்து” என்ற அடியாலும் “கண்ணிலான வெங்கரிபிடித்தடக்கிக் கரிகினேற் குருகையுமாக்கும்” என்ற தணிகைப் புராணப் திருவாக்காலும் அறிந்து கொள்ளலாம்.
பிள்ளையாருக்குரிய நிவேதனப் பொருள்களா கிய அவல், பொரி, பெரியகடலை போன்றவை வறுபட்டு முளை இழந்த விதைகளைக் குறிப்பன. இவை விநாயகருக்கு நிவேதிப்பது விநாயகரை அண்டித் தம்மை அர்ப்பணிப்போருடைய வினைப் பயன்கள் வறுபட்டுப் பிறவித் துன்பமுளை இழந்து பேரின்பம் கிடைக்கும் என்பதைக் காட்டவேயாம்.
மேலும் அண்டங்கள் கோழி முட்டை வடிவின, முட்டைக்கு அண்டம் என்பது இன்னோர் பெய ராகும். இப்பெருமானுக்குரிய இன்னொரு நிவே தனப்பொருளாகிய மாதுளம்பழப்பருப்பு ஒவ்வொன் றும் ஒவ்வொரு சிறு முட்டை வடிவான தனித்தனி அண்டமாகவும், நூற்றுக்கணக்கான அப்பருப்புக் களை அண்டங்களாகக் கொண்ட மாதுளங்கனி ஒவ்வொன்றும் அகிலாண்டமாகவும் உருவகப்படுத் திக் கூறப்பட்டிருப்பது அறிந்து நினைந்து நினைந்து வியக்கத் தக்கதாகும்.
பத்திநெறி, ஞானநெறி ஆகிய இரண்டிலும் மிக இன்றியமையாத சாதனம் மனத்தாழ்மை (பணிவு) ஆகும். "நான்” என்ற அகங்காரம் அற்ற நிலைமை இதுவாகும்.மற்றெல்லா மூர்த்திகளுக்கும் நிலத்தில் விழுந்த இலைகளும், பூக்களும் உதவாதன வாகும். ஆயின் பிள்ளையார் விரும்பவது யாவரும் மிதித்து நடமாடும் புல்லாகிய அறுகாகும். தன்னை அண்டி வழிபடுவோர்க்கு எளிதில் வந்து இன்பம்

Page 83
விழைக்கும் பேற்றை அளிப்பர் என்பதைக் காட்டுவது இதுவாகும்.
அர்ச்சனை செய்யும் அறுகு, ஒரே காம்பில் மூன்று கவருடையனவாக இருத்தல் வேண்டும். இம்மூன்றும் ஊசி முனையாகவும் இருக்கும். அல்லது அடியில் ஒன்று சேர்ந்து இருக்கம். எடுத்த காரியங்களில் விக்கினமின்றி வெற்றி பெறுவோர் மனம், வாக்கு, காயம், ஆகிய மூன்றையும் கூர்மைப் படுத்த வேண்டும் என்பதையும், இம் மூன்றையும் ஒற்றுமைப்படுத்தி அடக்கமாக ஒரே சிந்தனையில் (ஏகாக் கிரத சித்தம்) வைத்திருக்க வேண்டும் என்பவற்றைக் குறிப்பன இதன் விளக்கம்.
(திருமூலர்த்
அப்பனை நந்தியை ஆரா அமுதினை ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால் அப்பரி சீசன் அருள்பெற லாமே.
மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின் நேரியும் நின்றங் கிளைக்கின்ற காலத்து ஆரிய மும்தமிழும்உடனேசொல்லிக்
காரிகை மார்க்குக் கருணைசெய் தானே.
பின்னைநின் றென்னே பிறவி பெறுவது முன்னைநன்றாக முயல்தவம் செய்கிலர் என்னைநன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே.
யாவர்க்கு மாமிறை வற்கொரு பச்சிலை யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே.
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரஞ் செற்றவன் என்பர்கள் மூடர்கள் முப்புர மாவது மும்மல காரியம் அப்புர மெய்தமை யாரறி வாரே.

பிள்ளையாரை வழிபடும்போது மூன்று முறை குட்டிக் கீழே குந்தி எழுவதும், மனம், இ. வாக்கு, காயம் ஆகிய மூன்றையும் குட்டி அடக்கி ஆள்வதையே குறிக்கும். குலைந்துபோன முப்புரிநூல் ஊசிக் காதுக்குள் புகாததுபோல, சிதறுண்ட மனமொழி மெய்கள் காரியசித்தி கொடாமல் விக்கினங்களை உண்டு பண்ணி விடுவனவாம்.
துளசி தவிர்ந்த மலர்கள் விநாயகர் பூசைக்கு உகந்தனவாம்.
ருமந்திரம்
புளிக்கண்ட வர்க்குப் புனலூறு மாபோல் களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கெல்லாம் அளிக்கும் அருட்கண்ணிர் சோர்நஞ்சுருக்கும் ஒளிக்குளா னந்தத் தமுதுாறும் உள்ளத்தே.
விந்துவிலுஞ்சுழி நாதம் எழுந்திடப் பந்தத் தலைவி பதினாறு கலையதாய் கந்தர வாகரங்கரினுடம் பாயினான்
அந்தமும் இன்றியே ஐம்பத் தொன்றாயதே.
திவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம் உவமா மகேசர் உருத்திர தேவர் தவமால் பிரமீசர் தம்மில் தாம்பெற்ற நவ ஆகமம் எங்கள் நந்திபெற் றானே.
மண்ணகத்தான்ஒக்கும் வானகத்தான்ஒக்கும் விண்ணகத்தான்ஒக்கும் வேதகத்தான்ஒக்கும் பண்ணகத்தின்னிசை பாடலுற் றானுக்கே கண்ணகத் தேநின்று காதலித் தேனே.
யாம்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் வான்பற்றிநின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரந் தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

Page 84
பிரம்மதேவன் விதிக்கிரமப்படி சகல உலகங் களையும் படைத்தவுடன் ஆத்ம கோடிகள் பலவும் ஓங்கி நிலைபெற்று வாழ்ந்தன. நான்முகனின் இரு புத்திரிகளான சித்தியும், புத்தியும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து திருமணப்பருவம் அடைந்தார்கள்.தமது சித்தத்தில் இருத்தியுள்ள முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானுக்கே தம் புத்திரிகள் இருவரையும் திருமணம் முடித்து வைக்க வேண்டுமென்று பிரம்ம தேவன் பெரிதும் மனம் விரும்பினார். அதன்படியே நாரதரைக் கைலா சத்திற்குச் சென்று திருமணம் பேசி வரும்படியாக அனுப்பி வைத்தார்.
அச்சமயம் ஒரு காரணத்தை முன்னிட்டு விநாயகர் கைலை மலையிலே சிவபெருமானுக் குப் புத்திரராக அவதரித்தி ருந்தார். அங்கே தங்க மயமாக மின்னும் சபாமண்டபத்தின் முன்னால் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட சிம்மாசனத் தின் மேல் பூதகணங்களும், தேவகணங்களும் புடைசூழ கணேசர் அமர்ந்திருந்தார். அவரைத் தரிசிப்பதற்காக நாரத - v. முனிவர் வெகு ஆர்வத் தோடு வந்து விநாயகரின் திருவடித்தாமரைகளை வணங்கினார். பிறகு நாரதர் தம் கையில் ஏந்தியிருந்த வீணையின் நரம்புகளை மீட்டி இசையமுதைப் பொழிந்தபடியே, விநாயகப் பெருமா னின் பெருமைகளைப் பாடி அருளைப் பெற்றுக்கொண்டு புன்முறுவலுடன் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
"கருணை மதம்பொழியும் கணேசரே! உம்மி டம் நான் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்றிருக்கிறது அதை நீர் காது கொடுத்துக் கேட்க வேண்டும். என் தந்தையான பத்மாசனப் பிரமதேவர் தமது தியாக சிந்தையிலிருந்து தோன்றி
 
 
 

விநாயகர் புராணம்
யவர்களான சித்தி, புத்தி என்னும் இரண்டு புத்திரிகளையும் உமக்கே திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று விரும்புகிறார். அங்க லட்சணங்களோடு அழகான ஆண்மக்களை அவர் படைக்கும் போதெல்லாம் உம் திருவுருவங்களை நினைத்தே படைப்பார்! அழகான பெண்மக்களைப் படைக்கும்போதே சித்தி, புத்தி என்னும் தன் இரு கன்னிப் பெண்களை நினைத்தே படைப்பார்! அப்படியென்றால் உமக்கு பொருத்தமான அவ்விரு மங் கையரின் அதியற்புத அழகை என்னால் அளவிட்டுக் கூற முடியுமா? இருந்தாலும் என் னால் முடிந்தவரை அவர் களுடைய அங்கலாவண்யங் களை உள்ளங்கால் முதல் உச்சி வரை வர்ணித்துச் சொல்ல விரும்புகிறேன். அவற் றைத் தயவு செய்து கொஞ்சம் கேட்க வேண்டும் !" என்று நாரதர் இரு கன்னிகளின் பேரழகையெல்லாம் அங்கமங்க மாக வர்ணிக்கத் தொடங்கி விட்டார்.
"அப்பெண்ணின் உள்ளங் கால்களோ அதிகப் பருமனும், -- மெலிவும் இல்லாமல் மிக மிருது வாக இருக்கும். அனிச்சமலர் பட்டாலும் வெதும்பிக் குழையும் அவ்வுள்ளங்கால்களில் கொடி ரேகை, மச்சரேகை, கவிகைரேகை, சக்கர ரேகை முதலான பலவித ரேகைகளும் அமைந்து அழகான செந்தாமரைப் பூப்போல் சிவந்திருக்கும்; கால் விரல்களோ அதிகமாக நீண்டோ, குறுகியோ, நேராகவோ இல்லாமல் சகல லட்சணங்களும் வாய்க்கப் பெற்று பவள மணிகளையும் தோற் கடிக்கும்படி பிரகாசிக்கும். கால் விரல் நகங்களோ செங்கழுநீர் மலரையும் சந்திரனையும் விட அழகாகவும் சிறிது சிவந்தும் சிறிது வெளுத்தும்
வட்டமாக அமைந்து பளபளக்கும். புறவடிகளோ

Page 85
நரம்புகள், ரோமங்கள் எதுவும் வெளிப்படாதபடியும் மிருதுவாகவும் இருக்கும் குதிக்கால்களோ அதிக உப்பலும், உயரமும் இல்லாமல் கைப்பந்து களைப் போலிருக்கும். பொன்னை எடைபோடும் சிறிய தராசுத் தட்டைப் போல பரல்கள் வட்டமாக இருக்கும். தொடைகள் எலும்பும், நரம்பும் ரோமமும் தோன்றாமல் சிவப்பாகவும் வாழைத் தண்டுகள் போல மொழுமொழுவெனவும் இருக்கும். கனைக் கால்கள் அம்புறாத் துணிபோல இருக்கும். முழங் கால்கள் வட்டமாகத் தாளத்தை ஒத்திருக்கும். மிருதுவான தொடையோடு சேர்ந்த நிதம்பமோ இருபத்துநான்கு அங்குல அளவு அமைந்திருக்கும். அது மதம் பொழியும் மத மதப்பான யானையின் பிடரியைப் போல இருந்து ஆமையையும் தோற் கடிக்கும். வயிறு மடிப்புக்களில் நெருங்கிய மிருது வான மயிர்கள் உள்ளடங்கி, இடது பக்கத்தில் பவளம் போன்ற வளைவுகள் இல்லாமல் அழகாகவும் சிவப்பாகவும் இருக்கும். மார்பின் தன பாரங் களால் இடைமெலிந்து வருந் தும், உந்தி வலம் சுழிந்து ஒளி வீசும். வயிறு பலவிதமான வளைவுகளும், ரோமங்களும், நீளமான மடிப்புக்களும் இல்லா மல் மூன்று நளினமான ரேகை களோடு சொல்லொணாத அழகோடு விளங்கும். விலாப் புறங்கள் எலும்பு, நரம்பு, ரோமம் ஆகியவைகள் தெரியாமலும் நடுவில் குழிந்துமில்லாமலும் திேNT மென்மையாகவும் இருக்கும். المحداثيا * மார்பில் இரண்டு தனங்களும் ஒரே மாதிரியான இரண்டு தாமரை மொட்டுக் களைப் போல அமைந்து மார்பு முற்றும் நிறையப் பருத்துப் பூரித்து நிமிர்ந்திருக்கும். அவற்றின் காம்புகள் வலிமையான சக்கரங்கள் போல ஒரே மாதிரியாக இருக்கும். கழுத்தின் அடிப்புறம் அதிக நீளமும் குறுகலும் இல்லாமலும் எலும்பு தெரியாமலும் அழகாக இருக்கும். அதுமட்டுமா? மூங்கில் போன்ற தோள்கள்! மகர வீணைக்கு இணையான முன்னங் கைகள் காட்டில் திரியும் முயலின் வயிற்றைப்போல் மிருதுவான உள்ளங்கைகள் மலர் மொக்குகள் போன்ற கைவிரல்கள் வெண்புள்ளிகள் விழாமல் கிளிவாய் போன்ற பளபளப்பான விரல் நகங்கள்
 

கூனல் இல்லாத கவர்ச்சிகரமான முதுகு! ŝiŝa எழில் பொருந்திய பிடரி மூன்று ரேகைகள் స్త్రీ சுட்டி அழகு வாய்ந்த கண்டம்! இன்பமூட்டும்
இனிமையான மோவாய் பவளத் துண்டுபோல் இரண்டு பக்கமும் குவிந்து அழகான ரேகை பொருந்திப்பிரகாசிக்கும் கீழ் உதடு, அதற்கு மேல் சிறிது உயர்ந்து அழகு ததும்பும் மேல்உதடு, மயில் இறகின் அடிகளையும், வெண்மணிகளையும் முல்லைமொட்டுகளையும் போன்ற பல்வரிசை மிருதுவான நாக்கு வனப்பான பவளவாய்! அதில் மெல்லியதொரு புன்சிரிப்பு எள்ளுப்பூ போன்ற மூக்கு நீலமணி போல் செவ்வரி படர்ந்த நீண்ட விழிகள்! வில்போன்ற வளைந்த புருவங்கள்! பூவிதழ்கள் போன்ற காதுகள்! பிறை நிலா நெற்றி. குளுமையான ஆகாய கங்கை யில் பூத்த தாமரை போல் நீண்டு விளங்கும் முகம்! பூங்கொத்து கள் கம கமவென்று நறுமணம் வீசக் கறுத்து அடர்ந்த கூந்தல் இன்னும் அச் சுந்தரிகளின் அழகுப் பொலிவுகளையும் வனப் பின் சாயல்களையும் எவ்வளவு வர்ணித்தாலும் முற்றிலும் எவரா லும் வர்ணித்துரைக்க முடியாது! நேரில் பார்த்துத்தான் உணர முடியும், விநாயகரே! என்று நாரதர் கூறிவிட்டுப் புன்சிரிப்பு பூத்தார். அவற்றை யெல்லாம் கேட்டதும் விநாயகர் சம்மதித்து விடை கூறினார்.
நாரதர் உடனே பிரமலோ கத்திற்குச் சென்று சித்தி, புத்தி எனும் இரண்டு கன்னிகைகளையும் சந்தித்து, "பூவுலகம் செழிக்கத் தோன்றிய பூங் கொடிகளே! நான் கைலாயம் சென்று கணேசரை வணங்கி உங்களுடைய அழகுக் கவர்ச்சியெல்லாம் அவருக்கு வர்ணித்துக் கூறினேன். அவற்றைக் கேட்டதும் அவர் மனம் இளகி உங்கள் இருவரையும் திருமணம் செய்து கொள்ள விரும்பியிருக்கிறார் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்!" என்றார் புன்சிரிப்போடு.
அதைக் கேட்டுப் பிரம்ம புத்திரிகள் பெரிதும் மகிழ்ந்து விநாயகரையே மணம்புரிந்து கொள்ள வேண்டுமென்று மிகவும் ஆவல் கொண்டார்கள்.
இனினேகானந்தன் 2005)

Page 86
பிறகு நாரதர் தம் தந்தையான பிரம்ம தேவனிடம் சென்று. தான் தூண்டிவிட்டு வந்த விஷயங்களை யெல்லாம் விவரித்துச் சொன்னார். அதைக் கேட்டு பிரம்மதேவனும் மனம் பூரித்தார். தம் குமரிகளின் திருமணத்தை விரைவில் நடத்த வேண்டும் என்று எண்ணமிட்டார். மாப் பிள்ளை விநாயகரின் பெற்றோரான சிவபெருமா னும் பார்வதியும் இருக்குமிடம் சென்று திருமணத் திற்குச் சம்மதம் பெறவேண்டுமென்று தீர்மானித்து கைலையங் கிரியை நோக்கி உடனே பிரமன் புறப்பட்டார்.
G1 e 6 su LLI FL, LIF 55 மூவர்க்கு முதல்வரான சிவ பிரான் தம் பத்தினி பார்வதி யோடு வீற்றிருந்தார். அவ ரைக் கண்டதும் பிரமதேவன் பணிந்து பலமுறை துதித்தார். உமாமஹேஸ்வரர் அவரை நோக்கி, "நான்முகா! நீ இங்கே வந்த காரணம் என்ன?" என்று கேட்டார். அதற்கு பிரமன் ஐயனே! மும்மூர்த்திகளையும் உருவாக்கி முத்தொழில் களையும் நடத்திவரச் செய்த வர் விநாயகர் அவர் இப்போது உம் புத்திரனாகவும் மனப் பருவத்தினராகவும் இருப்ப தால் இலட்சுமியும் கண்டு நானத்தக்கப் பேரழகிகளான சித்தி, புத்தி என்னும் என்னு டைய புத்திரிகள் இருவரையும் அவருக்குத் திருமணம் கொடுக்க ஆசைப்படு கிறேன்! அதற்குத் தங்களது சம்மதத்தைப் பெறுவதற்காகவே வந்தேன்" என்று கூறினார்.
அதை சிவபெருமான் செவியுற்றுக் கேட்டதும் கணிவோடு தன் மனைவி பார்வதிதேவியின் முகத்தைப் பார்த்தார். பார்வதியோ புன்சிரிப்புக் கொண்டு பிரம்மாவை நோக்கி, "எங்கள் கனேச னுக்கு உம் செல்விகளைத் திருமணம் செய்வதால் அனைவருக்குமே நன்மை விளையும். எனவே விரைவில் விவாகத்தை நடத்திவிடலாம்! என்று தன் இசைவைத் தெரிவித்தாள்.
பிரம்மதேவன் பெருமகிழ்ச்சியடைந்து விடை பெற்றுச் சென்று விநாயகரிடமே வந்து அவரை
( 52 (ஆக்ரீன்ந்தன்:)
 

வணங்கிவிட்டுத் தம் உள்ளக்கிடக்கையைத் Glipfl:Glé. H,6ürt GOTTri.
'விநாயகமூர்த்தியே! இவ்வுலகங்களைச் சிருஷ்டிக்கும்படி முன்பொரு தடவை இரண்டு சக்திகளை எனக்கு அளித்தருளினீர் அச்சக்தி கள் இப்போது என் புத்திரிகளாகத் தோன்றித் திருமணப் பருவத்தில் பூத்துக் குலுங்கும் பூங் கொடிகளாக வளர்ந்திருக்கிறார்கள். அவர்களை நீர்திருமணம் செய்தருள வேண்டும் பெண்களோடு ஆண்கள் உள்ளமுவந்து கூடினாலன்றி படைப்புத் தொழில் பிரகாசிக்காது. ஆகையால் நீர் மணம் புரிந்து கொள்ள வரவேண் டும்" என்று பிரம்ம தேவன் கூறவும் அஷ்டமூர்த்த வடிவ மான வேழ முகத்து விநாயகர் தம்முடைய சம்மதத்தை ஒரு புன்சிரிப்பின் மூலமாகத் தெரி வித்தார். பிரமாவே ! உம் புத்திரிகளின் திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை யெல்லாம் ஏற்பாடு செய்யும். நாம் அனைவரோடும் வருகி றோம் என்றார்.
அதன் பிறகு பிரம்மதேவன் வைகுண்டம் சென்று லட்சுமி நாதரான திருமாலை வனங் கித் தம் இரு புத்திரிகளின் திருமணம் பற்றித் தெரிவித் தார். பிறகு அங்கிருந்து அகன்று தமது சத்தியலோ கத்திற்கு வந்து சேர்ந்தார்.
விநாயகரின் திருமண ஏற்பாடுகள் அதி மும்முரமாக நடைபெறலாயின. சகல ரிஷிகளும், சகல மன்னாதி மன்னர்களும் சகல தேவர்களும், தேவேந்திரனும், மற்றுமுள்ள யாவரும் தங்கள் தங்கள் குடும்பங்களோடு, விரைந்து வரவேண்டு மென்று சத்தியலோகத்தைச் சேர்ந்த தேவ தூதர்கள் திருமண அழைப்பிதழ்களை சகல லோகங்களுக்கும் கொண்டு சென்றார்கள்.
விநாயகமூர்த்தியின் திருக்கல்யாண வைபவத் தைத் தரிசிப்பதற்காக வரப்போகும் மூவுலக வாசிகளும் அமர்வதற்குத் தகுதியான மாளிகை களையும் கல்யாண மண்டபத்தையும் முறைப்படி மிக நேர்த்தியாய் அமைத்துக் கொடுக்கும்

Page 87
பொறுப்பு தேவசிற்பியான விசுவகர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
தேவசிற்பி விசுவகர்மா அதிக மகிழ்ச்சியடைந் தவனாக சொர்க்கலோகம் போன்ற ஒரு பெரிய நகரத்தையே தன்னுடைய ஆற்றலால் நிர்மா னித்தான். அந்நகரைச் சுற்றி உயரமான மதில் களும் நாற்புறத்திலும் விசித்திரமான கோபுரங் களையும் எழுப்பினான். திருமண விழாவைக் காண வருபவர்கள் மனோ உற்சாகத்தோடு தங்குவதற்கேற்ற மாடமாளிகைகளையும், கூட கோபுரங்களையும் அந்நகரினுள் உருவாக்கினான். விசாலமான வீதிகள், இடையிடையே சித்திரக் கூடங்கள், சலவைக்கல் மண்டபங்கள், சந்திர காந்தத் திண்ணைகள், பண்டார அறைகள், மலர்த்தாடாகங்கள், நன்னீர் ஓடைகள், கிணறுகள், கணிச்சோலைகள், பழத்தோப்புகள், பரிமளிக்கும் நந்தவனங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டன. பிறகு அந்த நகரத்தின் நடுவில் மணச் சடங்குகளை நடத்துவதற்கென்று ஒரு கல்யாண மண்டபத்தை விஸ்தாரமாக உருவாக்கி அதன் மத்தியில் நவரத்தினமயமான சிங்காதனமொன்றையும் அதைச் சுற்றி விருந்தினர்கள் அமர்வதற்குரிய பீடங்களையும் பலவித கலைநுட்பங்களுடன் வினோதமாக அமைத்து தங்க மயமாக ஒளிரும் அம்மண்டபத்தின் மேற்பரப்புகளிலும் பட்டு ஜோடனைகளோடு கூடிய விதானங்களிலும் மலர் மாலைகளும் முத்து மாலைகளும், மயிற்பீலிகளும் தொங்கவிடப்பட்டன. நவமணிகள் இழைத்த சுவர்ப்பக்கத்திலும், பெரும் பெரும் தூண்களிலும் பொற்பாவைகள், சித்திரப் பதுமைகள், பிரதிபிம்பக் கண்ணாடிகள் முதலானவை நிலை நிறுத்தப் பட்டன. கல்யாணத்துக்குரிய ஓம குண்டமும் விசாலமாக அமைக்கப்பட்டது. இவ்வாறு தேவ சிற்பி ஒரு மாபெரும் நகரைத்தையே நிர்மாணித் ததும் பிரும்மா மகிழ்ந்து ஆகாய கங்கையை வருவித்து தருப்பை சமித்து, மாவிலை முதலான ஒமப் பொருட்களைச் சேகரித்தார்.
அந்நகரம் முழுவதும் பந்தல்கள் போடப் பட்டுத்தோரணங்கள் கட்டப்பட்டன. வாழை, கமுகு, தென்னங் குலை முதலிய பொருட்களைக் கொண்டு பந்தலின் முகப்புகளும் மற்ற பக்கங்களும் அழகாக அலங்கரிக்கப்பட்டன. தெருக்களி லெல்லாம் புழுதி அடங்கும்படி பனி நீர் தெளிக்கப் பட்டது. முற்றமெங்கும் சந்தனக் குழம்பினால் மெழுகி பல வினோதமான கோலங்கள் இடப்

பட்டன. பாலிகை, கரகம் முதலான 隱 மங்கலங்களும் வரிசைப்படுத்தப்பட்டன. திருவிளக்கு, குடவிளக்கு, சரவிளக்குகள் " எல்லாம் அமைக்கப்பட்டன. இவ்வாறு கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது தேவதூதர்களிடமிருந்து திருமண அழைப்பிதழ் கிடைக்கப் பெற்ற அனைவரும் உடனே கல்யாண வைபவத்தைக் காண சத்தியலோகத்தை நோக்கிப் புறப்படலா னார்கள்.
சந்திரர் சூரியர் முதலிய நவக்கிரகங்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தெண் ணாயிரம் மாமுனிவர்கள், கருடர், கந்தர்வர்கள், சித்தர், வித்தியாதரர், போகபூமியர், விண்ணுலக வாசிகள், மண்ணுலகவாசிகள், பாதாளவாசிகள், ஆதிசேடன் முதலான நாகவேந்தர்கள் மற்றும் தீவாந்தரங்க்ளில் வசிப்போர் தங்கள் தங்கள் மனைவி, மக்கள் சுற்றத்தினர் புடைசூழ ஏராள மாகத்திரண்டுகணேசமூர்த்தியின் திருக்கல்யாண மகோற்சவத்தைத் தரிசிக்க பெரும் உற்சா கத்தோடு விரைந்து வந்தார்கள். கடையுகத்தில் ஏழு கடல்களும் கரைபுரண்டு ஒன்றாகத் திரண் டெழுந்து இமயமலையை நோக்கிச் சூழ்ந்து வருவது போல் பல உலகத்து விருந்தினர் அனை வரும் ஓவென்ற சப்தம் நாற்புறமும் முழக்க மிடத்திரண்டுவந்துதேவசிற்பிநிர்மானித்திருக்கும் திருக்கல்யாண நகருக்கு வந்து சூழ்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு வேண்டிய சகல ஆபரணங்களையும் உணவு வகை முதலானவற் றையும் கொடுத்து வரும்படி, சங்கநிதி, பதுமநிதி சிந்தாமணி, பஞ்சதரு, காமதேனு என்பவற்றிக்கு பிரம்மதேவன் கட்டளையிட்டார். அவைகளும் பிரம்மன் இட்ட கட்டளைப்படி சகல செல்வங் களையும் வந்தவர்களுக்கெல்லாம் வாரிவழங்கின. அவைகளை இந்திரன் முதலிய சகல தேவர்களும் பெற்றுக் கொண்டு வேறொரு தெய்வலோகத்தில் இருப்பவர்கள் போல பெரும் ஆனந்தக் கடலில் அழுந்தி லயித்திருந்தார்கள். அந்நகரத்தில் எங்கு பார்த்தாலும் ஆடல் பாடல்களும் கேளிக்கை களுமாக ஒரே கோலாகலமாக விளங்கியது. வீடுகள் தோறும் பெரிய பெரிய கோலங்கள் போடப்பட்டு லசுஷ்மிகரமாகக் காட்சியளித்தன. அந்நகரில் பன்னிரு சூரியர்களும், சந்திரர்களும் ஜோதி விளக்குகளும் ஒருங்கே கூடியிருந்ததால் இரவு பகல் எனும் வித்தியாசமே அங்கு தெரியவில்லை! கற்பக விருட்சம் வாரி வழங்கும் அணிமணிகளை எல்லாம் ஆடவரும் பெண்களும் அள்ளி அள்ளித்

Page 88
தங்கள் உடம்பெங்கும் பூண்டு மகிழ்ந்ததால்
அவர்களுக்கிடையே ஆண் பெண் என்ற
வித்தி யாசம் கூடத் தெரியவில்லை! வந்திருக்கும் விருந்தினரில் சிலர் அங்குள்ள ஐவகை மரச் சோலைகளின் அதியற் புதங்களைப் பார்த்தபடியே மெய்மறந்து நின்றனர். இளமை மிடுக்குள்ள சில காதலர்கள் பூஞ்சேலையில் புகுந்து பலவாறாக விளையாடித் திரிந்தார்கள்.
தாமரை மொட்டுக்கள் போல் தனங்கள் குலுங்க விளையாடும் மங்கையரில் சிலர் அம்மானை ஆடினார்கள். சிலர் பூப் பந்தாடினார்கள். சிலர் புனலில் விளையாடினார் கள். சிலர் ஊஞ்சலாடி னார்கள். சிலர் தங்கள் காதலரைத் தேடினார் கள். சிலர் அக் காதல ரோடு கூடிக்களித்தார் கள். சிலர் கிளிமொழி களைப் பரிகசித்து விளை பாடினார்கள். இவ்வாறு மங்கையரெல்லாம் பூஞ் சோ  ைலகளெங் கும் புகுந்து திரிந்தார்கள். மன்மதனும் கண்டு நாணப் படத்தக்க மைந்தர்களில் சிலர் யானைகள், குதிரை கள் ஆடுகள், காடை கவுதாரி கோழிகள் முத லானவற்றைப் போரிட வைத்து வெற்றி கூவி வேடிக்கை பார்த்தார்கள். வசிட்டர் முதலான மகரி ஷிகளில் சிலர் தர்க்க வாதமும் சிலர் பொருள் வாதமும் சிலர் கர்மவாதமும் சிலர்மோட்சவாதமும் புரிந்தார்கள். சனகர் முதலான மகரிஷிகளில் பதி பசுபாசங்களின் தன்மைகளைப் பற்றி உரையாடிய வண்ண மிருந்தார்கள். அட்டமா சித்தி பெற்ற சித்தர்களோ தம்மைக் கும் பிடாதவர்களை யெல்லாம் கும்பிட வைத்து பலவித அற்புத சித்து
விளையாட்டுக்கள் காட்டினார்கள். இவ்வாறு திருமண விழாவைக் காண வந்திருந்தவர்களின் உற்சாகத்தையும், கல்யாண மண்டபங்களின் அலங்கார சிற்பங்களையும் இதற்கு மேலும் யாரால்தான் வர்ணித்துக் கூறமுடியும்
:மும்புதசு.
 
 

திருமண ஏற்பாடுகள் அனைத்தும் திருப்தியாக முடிந்ததும் நாரதமுனிவர் பெரும் உற்சாகத்தோடு கைலாயத்திற்குச் சென்று சிவபெருமானை வணங்கி அவரிடம் திருமண ஏற்பாடுகளைப் பற்றிக் கூறி உடனே புறப்பட வேண்டுமென்று விண் ணப்பித்தார். சிவபெருமான் தன் மைந்தராகிய விநாயகரை அழைத்து குழந்தாய்! பிரமனுடைய புத்திரிகளான சித்தி, புத்தி இருரையும் உனக்கு மணமுடிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்தாகி விட்டது. விரைவில் நீ மனக்கோலம் பூண்டு
புறப்படு!" என்று கூறினார்.
தந்தையின் வாக் கைச் சிரமேற்கொண்டு. விநாயகர் தெய்வ கங் கையில் நீராடி வந்து திருமண அலங்காரம் புனையலானார். இடை யிலே பட்டுப்பிதாம்பரமும் கைககளிலே பொன்னா பரணங்களும், மார்பிலும், தோள்களிலும் வாசனை சந்தனப்பூச்சும், தலை யிலே பொன் முடிகள் பதித்த பொன்முடியும். அதைச்சுற்றிக் கொன்றை மாலையும், கழுத்திலே முத துமா லைகளும் மார்பிலே நவமணி ஆபர ணங்களும் காதுகளிலே மகர குண்டலங்களும் கைகளிலே கடகங்களும் விரல்களில் மோதிரமும், இடையிலே உதரபந்தன மும் கால்களிலே சிலம்புகளும் பூண்டு நெற்றியில் வெண்திருநீறுபூசி அதன் நடுவில் வாசனை கலந்த குங்குமத்திலகமிட்டுக் கண்டோர் பிரமிக்கத்தக்க வண்ணம் மணமகன் கோலத்தில் விநாயகர் காட்சியளித்தார்.
தங்கள் மகனின் கண்கொள்ளா அழகைப் பார்த்து சிவபெருமானும் பார்வதிதேவியும் உவகை கொண்டார்கள். பிறகு துவாதசாதித்தர், ஏகாதச ருத்திரர், அட்டவித்தியேஸ்வர, அஷ்டவசுக்கள், அஷ்டதிக் பாலகர்கள் முதலான தேவர்கள் புடைசூழ திருமணக்கோலம் பூண்ட விநாயகர் ஐயிராவதத்தின் மேலேறியும், சிவபெருமானும்

Page 89
பார்வதியும் ரிஷப வாகனத்தில் ஏறியும், வேல் முருகக் கடவுள் மயில் வாகனத்தில் ஏறியும் மணமகளின் வீட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென் றார்கள். நிசம்பன் முதலான பூதகணத்தலைவர் களும் நந்தீஸ்வரரும் மற்றுமுள்ள சிவகணங்களும் புடைசூழ்ந்தன. ஓம் என்னும் பிரணவ மந்திரம், வேதங்கள், கலைகள், காலங்கள், ராசிகள் பலவிதமாக மந்திரங்கள் இருபத்தெட்டு ஆகமங்கள் என்பனகூட ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேவ வடிவம் பெற்று மாப்பிள்ளை வீட்டாரின் பந்து ஜனங்களாக ஊர்வலத்தில் வந்தன.
இவ்வாறு மாப்பிள்ளை விநாயகர் திருமண உலா புறப்பட்டு வரும் வழி நெடு கிலும் பூதணங்கள் இவர் புகழ் பாடியும், தவமுனி வர்கள் வேதம் ஒதியும், சந்திர வட்டக் குடைகள் வாணவெளியை மறைப்பது போல் உயர்ந்து வரவும் பலவிதப் பட்டுக் கொடிகள் Nక్రే இருபக்கங்களில் நெருங் M تي تم| கவும் சிலர் ஆலவட்டங்
空m。
5 ‰..ዩ፪ يائيjiمجتم NSN'\<
སྙཕྱི་ཕྱོགས་ * EFETT AFTLD50 IJF GITT (pg. ELJITESÕIT 懿、熬
*
୍ வற்றை வீசவும் பலவித வாத்தியக் கருவிகள் இடை விடாமல் ஒலிக்கவும் இன்
* னும் எண்ணற்ற கோலா = %で7 கலங்களோடு கடல் பெருகு S. *エリア_。 வதுபோல் கூட்டம் திரண்டு இல் :
円 فترى أو ينتقل வநதது. 238ہشتم
பார்வதி பரேமஸ் வ ரரோடு மற்றும் தேவகணங்கள் பூதகணங்களோடு ஆகாய வழியில் வரும் மாப்பிள்ளை விநாயகரைக் கண்டு பிரம தேவனும் திருமாலும் பெரு மகிழ்ச்சியடைந்தவர்களாய்எதிர்கொண்டுசென்று வரவேற்று, கற்பக மலர்களைத் தூவி அருச்சித்து வனங்கினார்கள். பிறகு மாப்பிள்ளை விநாயகரை இராஜ வீதியில் வலமாக அழைத்துச் சென்று திருக்கல்யான மண்டபத்தில் அமர்த்தினார்கள்.
உடனே பிரம்மாவின் மனைவியான சரஸ்வதி கங்கை ஜலத்தினால் மாப்பிள்ளை விநாயகரின் பாதங்களில் நீர்வார்த்தாள். அப்பாதங்களை
 
 
 

பிரம்மா பெரும் வணக்கத்தோடு கழுவி 3.
மெல்லிய ஆடையினால் துடைத்தார். 55
-*-
جنگ
அதன் பிறகு, எல்லோரும் தத்தம் ஆசனத் தில் அமர்ந்தார்கள். மண்டபத்தின் மத்தியி லுள்ள மாணிக்க சிம்மாசனத்தில் மாப்பிள்ளையார் அமர்ந்து தேவமங்கையரின் ஆடல் பாடல்களை யெல்லாம் பார்த்தார். ஏராளமான மங்கலமாதர்கள் தனித்தனியான பொன்தட்டுக்களில் வெள்ளடை பாகு, வாழைப்பழம் தெங்கின் கனி, பலாமுதலான L. El 낸 வகைகள் இரத்தினா பரனங்கள் பூமாலை கள், சித்திரப் Lu Li L T 50 L + GIT முதலானவற்றை எடுத்துக் கொண்டு அட்டமங்கலத்து டன் பல இன்னரிசைக் கருவிகள் முழக்கமிட நசு ரத்து வீதியை வலமாகச் சுற்றி வந்து கல்யாண மண் டபத்தின் ஒருபுறம் வைத்து விட்டுக் கும்பிட்டார்கள். அந்தச் சமயம் அந்தப்புறத் தில் அழகுப் பதுமைகளாகக் காட்சியளிக்கும் சித்தி, புத்தி என்னும் இரு மன்ப்பெண் களையும் சரஸ்வதி. இந்தி ராணி, இலக்குமி, அதிதி, அனுசூயை, அருந்ததி எனும் ஆறு மாதர்களும் வாழ்த்தி GTTriggiT. LDGCTLoLIGITESET ஒரு இரத்தினாசனத்தில் உட்கார வைத்து அவர் களுக்கு தேவமங்கையர் திருமஞ்சனம் ஆட்டலானார்கள். புனுகுமுதலான முப்பத் திரண்டு பொருட்களும் கஸ்தூரி முதலான ஐவகை வாசனைத் திரவியங்களும் சந்தனக் குழம்பும் கலந்து பக்குவமாகக் காய்ச்சிய பரிமளத் தைலத்தை மணப்பெண்களின் கூந்தலிற் தடவிச் சில மாதர் உற்சாகத்தோடு மங்கல வாழ்த்துக்கள் கூறி நலங்கிட்டார்கள். யானையின் மத்தகத்தின் மீது கொண்டு வந்த கங்கை நீரை ஊற்றித் திருமஞ்சனமாட்டிய பிறகு பணிபோன்ற மெல்லிய ஆடைகளால் ஒற்றி ஈரம் போகத் துடைத்தார்கள்.

Page 90
இடுப்பில் பட்டாடைகளை உடுத்தி
வைத்தார்கள். இயற்கையிலே குளுமையும்
வெப்பமும் ஒருங்கே பொருந்திய மார்பகதனங்கள் மீது சந்தனக் குழம்பை அள்ளி அள்ளிப் பூசிச் சிரித்தார்கள். கூந்தலுக்கு அகில் புகை முதலான வாசனைகளை ஊட்டி சீப்பினால் வாரி, இரத்தின மாலைகளும் மலர் மாலைகளும் சூடிக் கொண்டையிட்டார்கள். கருமேகம் போன்ற உச்சிக் கொண்டையில் முல்லை மாலைகளைச் சுற்றி அலங்கரித்து கருமேகம் வெள்ளி மயமான நீர் தாரைகளைப் பொழிவது போல் அதில் முத்துமாலைகளைத் தொங்க விட்டார்கள். தலையில் சந்திரப்பிறை, மயிலனி, நெற்றியில் நுதலணி, மாலை முதலான அணிகள் சூட்டி, செற்றியில் சிவப்புத்திலகமிட்டு கண்களுக்கு மைதீட்டி, மூக்கில் முத்துமணிகளையும் காதுகளில் நீலோற்பல மலர்களையும் அன்னக்கொய்புகளையும் முத்தினால் செய்த கன்னப்பூ எனும் அணியையும் பதுமராகக் குண்டலத்தையும் பன்மணிகளினால் செய்த கண்டசரத்தையும் பூரிக்கும் மார்புத் தனங்களில் கச்சையையும், தோள்களில் வாகு வளையங்களையும், கைகளில் வளையல்களையும், விரல்களில் மோதிரங்களையும் அணிவித்தார்கள். பெரும் மதப்புள்ள கொங்கைகளுக்குப் பல வரிசைகள் அளிப்பது போல் மாணிக்க மாலை, முத்துமாலை, வைரமாலை முதலான பலவிதமான ரத்தின மாலைகளோடு பூமாலைகளையும் புனைந்தார்கள். மணிவடம் அரைப்படிகைகளைச் சூட்டினார்கள் கால்களில் பாடகம், சதங்கை தண்டை, நூபுரம் பாத சாலம் பொன் மோதிரம் முதலியனவைகளைச் சூட்டி செம்மையும் பஞ்சுக் குழம்பும் தீட்டினார்கள். இவ்வளவு செயற்கை யலங்காரங்களையும் மிஞ்சும் வண்ணம் இயற்கை யழகும் அதிகம் வாய்த்தவர்கள் அம்மணப்பெண்கள் என்பதை எடுத்துக் காட்டுவது போல் அவர்களின் இடுப்பு முதல் தோள் வரை மிக மெல்லிய ஆடையை அணிவித்தார்கள். இவ்விதம் சித்தி என்னும் மணப்பெண்ணிற்கு இலக்குமியும் அதிதியும் இந்திராணியும் புத்திஎன்னும் மணப்பெண்ணிற்கு அனுசூயையும் அருந்ததியும் ரதியும் அலங்காரங்கள் செய்துவிட்டு, சிவபெருமானின் இடப்பக்கம் அமர்ந்திருக்கும் பார்வதி தேவியின் கடைக்கண் பார்வைக்கு அருகே வந்து தேவி! தாங்கள்
 

சொன்னபடி மணப்பெண்களுக்கு எல்லாம் நடத்தி முடித்துவிட்டோம்! என்றார்கள். பிறகு பார்வதி தேவியின் ஏவலின்படி அவர்கள் திரும்பி வந்து மணப்பெண்களை நவமணிப் பல்லக்கில் ஏற்றித் தேவ கன்னியரும் தோழிகளும் வெண்பட்டுக் குடைகளும் மயிற்பீலிகளும் பலவிதச் சின்னக் கொடிகளும் புடைசூழ, பலவித வாத்தியங்களும் முழக்கமிட உலாப்புறப்பட்டு வீதிவலம் வரச் செய்து திருக்கல்யாண மண்டபத்தில் கொண்டு வந்து இறக்கினார்கள். அம்மண்டபத்தில் கல்யாணத்தை நடத்தும் குருவாக ஜனக மகா முனிவரே அமர்ந்து தருப்பை வெண் பொரி முதலானவற்றோடு முகூர்த்த நேரத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார். சித்தி, புத்தி எனும் மணப்பெண்கள் இருவரும் விநாயகரின் அருகில் போய் கற்பக மரத்தின் இருபுறமும் படர்ந்திருக்கும் காமவல்லிக் கொடிகள் போல் கணேசரின் இருபுறமும் அமர்ந்தார்கள். அவர்களின் வெளிறிய முகங்கள் இப்பொழுது ஆனந்தத்தால் மலர்ந்தன.
மணச் சடங்கு தொடங்கியதும். சகலகலா நிபுணரான ஜனக முனிவர் சங்கல்பம் இயற்றி, புண்ணியாவசனம் செய்து கணேசரை வேத ஆகமங்களால் துதித்துத் தேன் கலந்த பாலும் பழமும் கொடுத்து அருக்கியம் பாத்தியம் ஆசமனம் என்னும் மூன்று மந்திர நீர்களும் கொடுத்து, மணப்பெண்களுக்குக் கூறை முதலானவற்றை அணியச் செய்துவிட்டு பிரம்மதேவரைக் கூப்பிட் டார். பிரம்மா வேகமாக வந்து மணத்தம்பதிகளைப் பார்த்து மனம் பூரித்து விநாயகரை கைகூப்பிக் கும்பிட்டுவிட்டுத் தம்மருகில் நிற்கும் பத்தினியான சரஸ்வதியைக் குறிப்பாகப் பார்த்தார். உடனே சரஸ்வதி பல தேவ மகளிரோடு விரைந்து சென்று திருமஞ்சனம், கற்பகமலர், தூபதீபம் முதலான வற்றை தங்கப் பாத்திரங்களில் ஏந்தி வந்து தன் கணவர் அருகில் நின்றாள்.
ஜனக முனிவர் கூறியபடி பிரம்மா மாப்பிள்ளை விநாயகருக்கு பாதபூஜை செய்ய முனைந்து விநாயகரின் திருவடிகளை ஒரு தங்கத் தட்டில் சேர்த்து வைத்து, தன் பத்தினி பொற்குடத்தில் ஏந்தி வைத்திருக்கும் கங்கை நீரை வார்த்துப் பாதங்களைக் கழுவி ஒற்றாடையால் துடைத்து சந்தனக்குழம்பை அப்பி மலர் அர்ச்சனைகள்

Page 91
செய்து, சாம்பிராணி, தூபம் காட்டி கற்பூர அஞ்சனம் கொடுத்து சோடா உபசாரங்களோடு பூஜைகளை நிறைவேற்றினார். பிறகு தம் கன்னிகளான சித்தி, புத்திகளின் கைகளை எடுத்துவிநாயகரின் கைகளில் சேர்த்து, நான் வளர்த்த என் செல்வங் களை ஏற்றருள வேண்டும்' என்று வேண்டிக் கொண்டு தம் மனைவி சரஸ்வதி கங்கை நீர் வார்க்கக் கன்னிகாதானம் செய்து கொடுத்தார். வாழைப்பழம் முதலான கனிவர்க்கங்களையும், கரும்புச் சாறு, பசும்பால், தேன், கற்கண்டு முதலானவற்றையும் பொற்பாத்திரத்தில் நிரப்பி புசித்தருள வேண்டும்! என்று நிவேதனம் செய்தார். அதன் பிறகு மங்களபேரிகை, மத்தளம், சங்கு முதலான பலவித இன்னிசைக் கருவிகளும் முழுக்கமிட, தேவர் முனிவர் முதலானவரெல்லாம் பெரும் உற்சாகத்தோடு கரகோஷம் செய்து "ஜெய! ஜெய! போற்றிட தேவேந்திரன் திக்கு பாலகர்கள் முதலானவரெல்லாம் மங்கள வாழ்த்துக்கள் கூறிட அத்திரி முதலான தவமகரிஷிளெல்லாம் வேதங்களால் துதித்திட, தேவதுந்துபிகள் வானில் கணகணவென்று பேரொலிசெய்ய,ஜனக முனிவர் மணமக்களுக்கு நவக்கிரக ஒமம் முதலான வற்றையெல்லாம் செய்து, ஓமத் தீயிலிருந்து எடுத்த மைக்குழம்பை விநாயகரின் நெற்றியில் இட்டுப் பிறகு விநாயகரைக் கொண்டே மணப்பெண்களின் நெற்றியிலும் அதை இடச்செய்து மணச் சடங்கை யெல்லாம் முறையாகச் செய்துமுடித்தார்.
பிறகு மகாகணபதிக்கு மகாவிஷ்ணுவே LDITSsir ளைத் தோழனாக இருந்து கைகொடுத்து அவரை ஆசனத்திலிருந்து எழுப்பியதும் மணப்பெண்களாக சித்தி, புத்தியின் விரல்களைப் பற்றிக் கொண்டு மும்முறை தீவலம் வந்து மணப்பெண்களின் பாதங்களைத் தன் கைகளால் தூக்கி நிலத்தி லிட்டு பிறகு அம்மியின் மீது வைத்து அருந்ததி பார்த்தார். இவ்வாறு சகல தேவர்களின் சாட்சியாகத் திருமணச் சடங்குகள் அனைத்தும் முறையாக முடிந்ததும் விநாயகர் தம் புத்திளம் மனைவிகளோடு தம் பொற்றோரான பார்வதி பரமேஸ்வரரின் திருவடிகளில் விழுந்து வணங் கினார். அவரையும் மருமகள்களையும் பார்வதி யும் பரமசிவனும் ஆசீர்வாதம் செய்து மனம் பூரித்து விட்டுத் திருமாலைப் பார்த்தார்கள். திருமால்

அனைவருக்கும் முறைப்படித்தாம்பூலங்கள் ஜி கொடுத்தார். கற்பகதரு முதலானவையும் * எல்லோ ருக்கும் வேண்டியதையெல்லாம் -
வழங்கின. விரிசடையில் பிறைசூடிய சிவபெருமான் எல்லோருக்கும் வேண்டியவரங்களைக் கொடுத்து விட்டுத் தம் தேவியோடு மற்றோரு இடத்திற்குச் சென்று அமர்ந்தார்.
அதன் பிறகு புதுமணமக்களின் ஊர்வலம் புறப்படலாயிற்று. மணப்பெண்களான சித்தி, புத்தி இருவரும் அழகான ரத்தினப்பல்லக்கில் ஏறி வர, மாப்பிள்ளை விநாயகர் ஐராவதத்தில் ஏறிவர ஏழு கடலும் பொங்கியெழுவது போல் எண்ணற்ற வாத்தியங்கள் பேரொலி முழங்கிட, மடைதிறந்த வெள்ளம்போல் மங்கல வாழ்த்துக்கள் மகிழ்ந்து பெருகிட தேவர்கள் புஷ்பமாரி பொழிந்திட சந்திரவட்டை குடைகள் வானத்தை மூடிட, அநேக விருதுக் கொடிகள் அண்ட முகட்டை مساوات الاول இருபுறங்களிலும் வரிசை வரிசையாகக் கவரிகள் வீசிட இணையற்ற ஆலவட்டங்கள் எப்புறமும் அசைந்து ஆடிட, கின்னரர்கள் இசை பாடிட, அப்சரசுகள் அலாதியாக நடனமாடிட, நாலாபுறமும் கும்பல் வந்து குவிந்திட அவர்களையெல்லாம் நந்திதேவர் தம் வெள்ளிப்பிரம்பால் விலக்கி வழி வெட்டிவிட மணமக்கள் வீதியில் பவனி வந்தார்கள். அப்போது வழியிலுள்ள பெண்களில் சிலர் நீராஞ்சனம், பூரணகும்பம், முளைப்பாலிகை, மணிவிளக்கு முதலான மங்கலப் பொருள்களை ஏந்திய வாழ்த்தொலி செய்தார்கள். சில பெண் களோ சர்க்கரையும், வாழைப்பழம் முதலான கனி வகைகளையும் குதூகலத்தோடு வீசினார்கள். நறுமணமலர்கள், சந்தனம், கதம்பம், பன்னீர் முதலானவற்றைச் சில பெண்கள் வீசி ஏறிந்தார்கள். இவ்வாறு ஆனந்தப் பரவசத்தோடு அனைவரும் பற்பல காரியங்களைச் செய்தும், கைகூப்பித் தொழுதும்மணமக்களை வாயார வாழ்த்தினார்கள். அப்பெண்களில் இளமை வேட்கை மிகுந்த சில மங்கையர்கள் அதியற்புதமான அங்க லாவண்யங்களையெல்லாம் கண்ணுக்கு விருந் தாகக் கண்டு தங்கள் உடம்பெல்லாம் பூமியில் இறுகி அழுந்தும்படி விழுந்து வணங்கி, மெய் சிலிர்த்துச் செயலற்றவர்களாகி ஆசை வெள்ளம் என்னும் பெருங்கடலில் மூழ்கியபடியே கிடந்

Page 92
தார்கள். அவ்வாறு மையலுற்றுக் கிடக்கும் 懿 பெண்களில் ஒருத்தி சற்றுச்சுயஉணர்வு
வரப்பெற்று எழுந்து, 'ஆஹா ! இந்த மாப்பிள்ளையாரைப் போல் ஆணழகர் இந்த அகிலத்தில் யார்தான் உண்டு!" என்று ஆசை வசப்பட்டுத் தென்றல் காற்றில் அசையவும் பூங்கொடிபோல் துவண்டபடி கூறினாள். அதைக் கேட்ட மற்றொருத்தி ‘அடியே நான் கட்டித் தழுவ நினைத்திருக்கும் அந்த ஆணழகரை நீ அப்படி ஆசையோடு பார்த்தாயோ! என்று வெகுண்டு சீறினாள். இன்னொருத்தியோ, "ஆஹா! அந்த மாப்பிள்ளையின் உடம்பில் அணியப் பெற்ற்தா லன்றோ அத்தனை ஆபரணங்களுக் குங்கூட அழகுண்டாயிருக்கிறது!’ என்று வியந் துரைத்து விம்மினாள். அதைக் கேட்டதும் அருகி ருந்த மற்றொருத்தி சட்டென்று திரும்பிச் சீறி, அடியே! நீ உயிரோடு இருக்க விரும்பினால் அந்த ஆணழகரின் மீதுகொண்ட நினைப்பைவிட்டுவிடு! ஏனென்றால் உனக்கு முன்பே என் மனதை அவரிடம் தூது அனுப்பியிருக்கிறேன்!" என்று குமுறினாள். இன்னும் ஒருத்தி தன் முகத்தை நோக்கிநிமிர்ந்திருக்கும் தன்மார்பின்தனங்களைப் பரிதாபமாகப் பார்த்து, ஆ தனங்களே! அதோ மணப்பெண்களான சித்தி புத்தி இருவரும் தங்கள் முகத்தை நோக்கி நிமிர்ந்திருக்கும் தனங்களை மாப்பிள்ளை விநாயகர் கட்டித் தழுவும்படியான அரும்பெரும் தவம் செய்திருக்கிறார்கள். அத்தனங் களைப் போல நீங்களும் வீணாக ஏன் என் முகத்தை நிமிர்ந்து பார்க்கிறீர்கள்? அவரைக் கூடி மகிழும் படியான பாக்கியம் முற்பிறவியில் நாம் செய்ய வில்லையே? என்று ஏங்கி ஏங்கிப் பெருமூச்சு விட்டாள். இன்னும் ஒருத்திமாப்பிள்ளை விநாயகர் மீது கொண்ட அடக்கொணாத காதலால் காணு மிடமெல்லாம் அவரைப் போலவே பல உருவெளித் தோற்றங்களைக் கண்டு கண்டு திகைத்து, ஆ அந்த ஆணழகரான மாப்பிள்ளை ஒருவரா, பலரா? என்று குழும்பி தன் சீலையும் மேகலையும் நெகிழ்வதையும் உணராமல் செயலற்று நின்றாள். இவ்விதம் வீதியெங்கும் அங்காங்கு அளவிலாத காமவேகம் கொண்டு மையலாகிநிற்கும் மங்கையர் கூட்டத்தினுள் கைகூப்பிக்கும்பிடும் வளைகரங்கள்
 

பல தென்பட்டன. சில இளம்பெண்களின் கைகளில் அணிந்திருக்கும் வளையல்களோ, அந்தக் கட்டழ கரைக் கட்டித் தழுவ முடியாத கைகளில் நாம் இருந்துதான் என்ன பயன்? என்று சோர்ந்து கழன்று விழுந்தன. சில பெண்களின் கூந்தல்களோ தங்கள் உள்ளத்து வேட்கையை மாப்பிள்ளையா ருக்கு உணர்த்த முயல்வது போல் அவிழ்ந்து தொங்கின. அவ்வாறு மாப்பிள்ளை ஊர்வலம் வரும்போது சில பூங்கோதைகள் ஆனந்தப் பரவ சத்தில் கூத்தாடினார்கள். சில கலைச்செல்விகள் நுட்பம் தெரிந்து பாடினார்கள், சில அரிவையர்கள் குறிஞ்சி முதலான பண் இசைத்தார்கள். சில தெரிவையர்கள் தங்கள் கற்பனையில் ஊடலும் கூடலும் புரிவதாக பாவனை செய்துகொண்டு தத்தளித்தார்கள். இவ்வாறு பல பருவத்து வயதுப் பெண்களும் தெருக்களெல்லாம் நிறைந்து நின்று காதல்பித்துக்கொள்ளும்படி மாப்பிள்ளை விநாயகர் தெருக்களில் ஊர்வலம் வந்து கடைசியாக மறு படியும் மாளிகைக்குள் நுழைந்தார். அப்போது காமதேனு முதலானவையெல்லாம் மாற்றுருவம் கொண்டு வந்தவருக்கெல்லாம் ஏராளமான செல்வங்களை வாரிவாரிமழைபோல் சொரிந்தன.
விநாயகரின் திருக்கல்யாண வைபவங்கள் அனைத்தும் நிறைவேறியதும் தேவர் முதலான விருந்தினர் எல்லாம் சிவபெருமானும் பார்வதியும் அமர்ந்திருக்கும் திருச்சபைக்குச் சென்று விழுந்து வணங்கி விடைபெற்றுக் கொண்டு புத்திளம் மனைவிகளோடு பொலிவுற வீற்றிருக்கும் மாப் பிள்ளை விநாயகரிடமும் சென்று அவரையும் பலமுறை போற்றித்துதித்து, பலவாறாகவும் விழுந்து வணங்கிவிட்டு அவருடைய திருவருளைப் பெற்றுக் கொண்டு அவரவர் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றார்கள். அதன் பிறகு பரமசிவன் தம் கணத் தினர் புடைசூழ சித்தி புத்தியின் மணவாளரான கணேசரை அழைத்துக் கொண்டு கைலாயத் திற்குத் திரும்பிச் சென்றார் மாப்பிள்ளை விநாயக ரும் தம் வாசஸ்தலத்திற்குச் சென்று தம் புத்திளம் மனைவிகளான சித்தி, புத்திகளோடு கூடி மகிழ்ந்து எல்லாவிதமான போகங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தார்.

Page 93
முன்னொரு காலத்தில் இமயமலைச்சாரலில் சவுபரி என்னும் முனிவர் ஒருவர் இருந்தார். அவர் மனோரமை எனும் மனதிற்கினிய மனைவியோடு இல்லறம் நடத்தித் தன்னிடம் வருபவர்களுக்கு அறநூல்களை உபதேசித்து வந்தார். அவரும் மனோரமையும் சிறந்த சிவபக்தர்களாக விளங்கி
5.
ஒருநாள் முனிவர் நதியில் நீராடச் சென்றி ருந்தார். அவர் மனைவி மனோரமை ஆசிரமத்தில் வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்தாள். அச் சமயத்தில் வானவெளி யில் சஞ்சரித்துக் கொண் டிருந்த கிரவுஞ்சன் என் னும் ஒரு கந்தர்வராஜன் ஆசிரமத்தில் தனித்தி ருக்கும் ரிஷிபத்தினி யைப் பார்த்துவிட்டான். உடனே அவள் அழகில் மயங்கி மோகதாபம் மேலிட ஆகாயத்திலி ருந்து நூலறுந்த பட்டம் போல் கீழிறிங்கி வந்து ஆச்சிரமத்தினுள் நுழைந் தான். ஒரு வார்த்தையும் பேசாமல் அடங்காத ஆசையோடு அவன் சட் டென்று மனோரமையின்
WAII,
AJIŽiriiñ
يعية اليا
Siar پڑتی
를 ,ே 鸥
கையைத் தன் கைகளால் பிடித்து இழுத்தான்.
உடனே பூனையைக் கண்ட பசுங்கிளிபோல் ரிஷிபத்தினி மனோரமை பதறித்துடித்து நடுநடுங் கினாள். பிறகு தன் கற்புள்ளத்தில் மூண்ட கோபத் தினால்யானை மீது பாயும் சிங்கத்தைப் போல
 
 

KAIKKIMIKKIMIKA
ട്രഖ %22
須
44 ހަލިޣު
χ
விநாயகர் புராணம்
வெகுண்டு சீறி, அடப்பாவி என் கணவர் இல்லாத சமயத்தில் இங்கு வந்து என் கையைப் பிடித்து கூடிக்குலாவ(இழுக்கிறாயே, என்கரத்தை உடனே விட்டுவிடு! இல்லாவிட்டால் உன்னை இந்த நிமிஷமே சாம்பலாக்கிவிடுவேன்' என்று கோபத் துடன் சீறினாள்.
அதே சமயத்தில் நீரா டச் சென்றிருந்த முனிவர் தம் ஆசிரமத்திற்குத் திரும்பி வந்தார். தன் பத்தினியின் கையைக் கிரவுஞ்சன் பிடித்திருப்ப தைப் பார்த்தவுடன் ஆத் திரம் பொங்கி அவர் விழி களில் அனற்பொறி பறந் தது. புருவங்கள் நெறிய, உதடுகள் துடிதுடிக்க அவர் கூவினார்.
அட, துஷ்டனே ஒரு குற்றமும் அறியாத என் மனைவியை நீ கரம் பற்றி இழுக்க வேண்டிய கார னமென்ன? நீ செய்த குற்றத்திற்குத் தண்ட SO) 5 DTLLITTF LDSCOT 50 SPTS தோண்டி வளையில் பதுங் கும் மூஷிகமாக (பெருச்சா ளியாக) மாறக்கடவாய்!
என்று சபித்தார்.
அதைக் கேட்டவுடன் கிரவுஞ்சன் அளவிலாத அச்சம்கொண்டு தவஞானியே வானவெளியில் பறந்து கொண்டிருந்த நான் தற்செயலாக இவள் அழகைக் கண்டு மதிமயங்கினேன். மோக வசத் தால் நான் அறியாமல் செய்துவிட்ட பிழையை மன்னித்தருள வேண்டும்! எனக்குத் தாங்கள்
விவகானந்தன் s
--

Page 94
இட்ட சாபத்தையும் நீக்கியுதவ வேண்டும்! இனி தங்கள் திருவடிகளில் அடியேன் சரணம்! என்று முனிவரின் திருவடிகளில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தான்.
இயற்கையிலே விருப்பு, வெறுப்பில்லாமல் பற்றற்ற மனப்பான்மையோடு விளங்கும் சவுபரி முனிவர் அவனை உற்றுப் பார்த்துவிட்டு, கனிவு ததும்பும் குரலில் கிரவுஞ்சனே! நெருப்பினுடைய சூடு குளிர்ந்தாலும், நீரினுடைய குளிர்ச்சி சூடா னாலும் என் வாக்கு ஒருநாளும் பொய்யாகாது. நீ அடாத செயல் புரிந்தாய் என்றாலும் அதற்காக உடனே என்னிடம் மன்னிப்புக் கேட்டுச் சரண டைந்ததால், உனக்குச் சாபவிமோசனத்தை யும் சொல்லுகிறேன். இன்னும் சில நாட்களில் சிவகுமாரரான விநாயகப் பெருமான் பராசுவ முனிவரின் ஆசிரமத்தில் ஒர் அவதாரம் செய்யப் போகிறார். அப்போது அவருக்கு நீ பெருச்சாளி வாகனமாகித் தேவாதி தேவர்களுக்கும் எட்டாத அரும் பெரும் பாக்கியத்தை அடைவாயாக! என்று முனிவர் கூறினார்.
அந்தக்கணமே கிரவுஞ்சன் பெரியதொருமலை யைப் போல் பெருஞ்சாளியாக மாறி உலகமெங்கும் மூஷிகமாகவே திரிந்து கொண்டிருந்தான்.
இப்படியிருக்கும் போது ஒருநாள் தேவேந்திர னின் சபைக்கு நாரத முனிவர் சென்றிருந்தார். அவரை இந்திரன் முகமலர்ச்சியோடு எதிர் கொண்டு வரவேற்று வணங்கி மிகவும் உபசரித்தார்.
கலகப்பிரியரான நாரதமுனிவர் மனமகிழ்ந்தவர் போல் புன்சிரிப்புபூத்து, தேவராஜனே! பூலோகத்தில் நான் ஒரு அதியசத்தைப் பார்த்தேன். இதை உன் னிடம் சொன்னால் உனக்கும் தேவர்களுக்கும் நன்மையாக இருக்குமோ என்று நினைத்து உடனே இங்குவந்தேன். அந்த பூலோக அதிசயத் தைச் சொல்லுகிறேன் கேள்! பூலோகத்தில் இமயமலைக்கும் விந்தியமலைக்கும் இடையில் ஏகவதி என்ற ஒரு நகரம் இருக்கிறது. அந்த நகரத்து அரசனான அபினந்தனன் இப்போது மாபெரும் யாகம் ஒன்றைச் செய்யத் துவங்கியி ருக்கிறான். அந்த யாகத்திற்கு உன்னைக் குறிக் காமல் உனக்குரிய சொர்க்கலோக போகங்கள் அனைத்தையும் தானே அடையவேண்டும் என்று குறித்தே அந்த யாகத்தை நடத்துகின்றான்.
 
 
 

இந்தக் கணத்திலேயே இந்தப்பூலோக மன்னனை நீ வென்றடக்கி அவன் யாகத்தை அழித்துவிட வேண்டும்! இல்லாவிட்டால் யாகத்தின் முதல் நாளிலேயே உன் பதவியை நீ இழக்க நேரிடும்? என்று சொல்லிவிட்டுப் போனார்.
தேவேந்திரன் பெரிதும் மனம் கலங்கி, இதற்கு என்ன செய்வோம் என்று சிந்தனை செய்தான். தனக்கும் சந்திரனுக்கும் பிரமனுக்கும் அவிர்ப்பாகம் கொடுக்காமல் யாருக்கும் எந்த யாக காரியம் செய்யக்கூடாது என்று வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்க இப்போது அந்த விதிமுறையிலி ருந்து தவறி யாகம் செய்யப்போகும் அபிநந்த ராஜனை அழிக்க வல்லவன் காலஞபியேதான் என்று தேவேந்திரன் தன் மனதால் அவனை நினைத்த வுடன் அக்கால ரூபியே இந்திரனுக்கு முன்னால் தோன்றினான்.
'காலரூபியே! நீ பல உருவங்களெடுத்து இந்தக் கணமே பூலோகம் சென்று. என் பதவியைப் பறிப்பதற்காக யாகம் செய்யப்போகும் அபிநந்தன ராஜனை வென்றொழித்து அவன் செய்யப்போகும் யாகத்திற்கு பலவித இடையூறுகளை ஏற்படுத்தி அடியோடு நாசம் செய்துவிடு! என்று தேவேந்திரன் அவனிடம் கூறினான்.
இந்திரனின் கட்டளையை சிரமேற் கொண்ட காலரூபி பலவிதமான விசித்திர உருவங்களெ டுத்து அளவுகடந்த ஆத்திரத்தோடுபூலோகத்தை அடைந்தான். அங்கு அபிநந்தனராஜனுடைய யாக சாலையில் மிகுந்த அட்டகாசத்துடன் நுழைந்து யாகத்திற்காகச் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பண்டங்களையெல்லாம் துவம்சம் செய்து, யாக சாலையையே உருவமில்லாமல் அழித்துப் புழுதி மேடாக்கினான். அவனை எதிர்க்க வந்த அபிநந்த னையும், யாகத்தலைவர்களையும் கொன்று அங்கு வந்திருந்த மற்றவர்களையும் அழித்தொழித்தான்.
இத்துடன் அவன் விடவில்லை. பல திசைகளி லும் காலாக்கினியைப் போல் பாய்ந்து சென்று பூவுலகில் எங்கெங்கு யாகங்கள் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் யாகம் நடக்க முடியாதபடி அவை களை அழித்துச் சிலரை வெவ்வேறான உருவங் களாலும் சிலரை உருவமில்லாமலும் அரூபமாகவும் தாக்கி நாசம் செய்து கொண்டே வந்தான்.
அவனால் துன்பத்திற்கு ஆளான முனிவர்கள்

Page 95
அனைவரும் ஓரிடத்தில் ஒன்றாகத் திரண்டு அனைத்தையும் படைக்கவும் துடைக்கவும் வல்லவ ரான விநாயக மூர்த்தியைத் துதித்துக் தங்கள் துயரங்களை எடுத்துச்சொல்லி முறையிட்டார்கள். அவர்களிடம் கருணைக் கொண்டு விநாயகப் பெருமான் ஒரு குரு வடிவம் தாங்கி, அவர்கள் எதிரில் காட்சியளித்து, முனிசிரேஷ்டர்களே! உங்கள் கவலையை இன்றோடு விட்டுவிடுங்கள்! விக்கினங்கள் இழைத்து வரும் காலருபியான விக்கினனை அடக்கவும் வேத நெறிகள் வளரவும் பக்தர் களுக்கு நன்மை புரியவும் நான் ஒரு அவதாரம் எடுப்பேன்! பல தவங்கள் புரிந்துள்ள வரேனிய ராஜனுடைய இல்லத்தில் அதி விரைவிலேயே நான் அவதரித்து உங்கள் துயரங்களைத் துடைப் பேன் என்று கூறினார்.
அதைக் கேட்ட மாதவர்கள் பெரிதும் மனம் மகிழ்ந்தார்கள்.
இந்நிலையில் வரேணியன் என்னும் ஒரு வேந்தன் இருந் தான். அவன் மாபெரும் தவங் களைச் செய்து தேவர்களும் போற்றும்படியான புகழ் பெற்றி ருந்தான். அவனும் எத்த னையோ தானதர்மங்கள் செய்து வந்தும் அவனுக்கும் புத்திரப் பேறே கிடைக்க வில்லை. கடைசியில் விநாயகப் பெருமானின் திருவருளினால்
அவன் மனைவி புட்பகை கர்ப்பம் தரித்து ஆண் குழந்தையொன் றைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தையை விநாயக மூர்த்தியானவர் அங்கிருந்தவர்களுக்கு தெரியா தபடி மறைத்துவிட்டுத் தாமே ஒரு குழந்தையாக மாறினார்.
அரசியின் குழந்தையைப் பார்க்க ஆவலோடு அங்கு வந்தவர்கள் அனைவரும் அக்குழந்தை மிக அழகோடும் யானை முகத்தோடும், மழு முதலிய ஆயுதங்களை ஏந்தியநான்கு கைகளோடும் நீண்ட தும்பிக்கையோடும். தொந்தி வயிற்றோடும் காட்சி
 

யளிப்பதைக் கண்டு ஆ! இது என்ன ஜ்
அதிசயமான குழந்தை என்று பயந்து ஓடிப் థ్రో (LITFTTr†FFFT. ...ཟང་། །བ་
அதைக் கண்ட அரசி புட்பகை, ஐயோ! இத்தனை நாட்களாக பிள்ளை வரத்தை விரும்பி அளவற்ற தானதருமங்களையும் தவங்களையும் செய்து வந்தோமே! இப்போது புத்திரப் பேறு கிடைத்தது என்று அளவற்ற மகிழ்ச்சியில் இருக்கும்போது இத்தகைய வடிவத்தில் குழந்தை பிறந்துவிட்டதே! என்று பலவா நாகப் புலம்பி பெரும் சுடச்சலிட்டு அழுதாள். வரேனியராஜனும் வந்து அக்குழந்தையைப் பார்த்து விட்டு, அந்த விசித்திரக் குழந் தையால் நமக்குத் துன்பந்தான் வரும் என்று நினைத்து நடுங் கினான். அதனால் அவன் சில வீரர்களைக் கூவியழைத்து இக்குழந்தையை இந்த இரவிலே இப்போதே எடுத்துக் கொண்டு போய் மடுக்கரையில் தள்ளி விட்டு வாருங்கள்! என்று கட்டளையிட்டான்.அதன்படியே வீரர்கள் குழந்தையை எடுத்துச் சென்று பராசுவ முனிவரின் ஆசிரமத்திற்கு அருகிலுள்ள மடுக்கரையில் புல்தரையின் மீது சில இலைதழைகளைப் பறித்துப் போட்டு அதன் மீது பிள்ளையைக் கிடத்தி விட்டுச் சென்றார்கள். அக்குழந்தையை புலி முதலான மிருகங்கள் எல்லாம் கண்டு மனமுருகி ஊனுறக்க மின்றிப் பாதுகாத்தன. மறுநாட் காலை யில் தடாகக் கரைக்கு நீராட வந்த பராசுவ முனிவர் அங்கே பசுந்தழைகள் மேல் அழகான குழந்தையொன்று அதிபிரகாசத்துடன் படுத்திருப்பதைக் கண்டு ஆனந்தப்பரவசமடைந்த வராக, அக்குழந்தையை தம் கைகளில் வாரியெ
டுத்துக் கொண்டார். தாம் செய்த தவப்பயனாலும் வேதங்களாலும் அழிய வொண்ணாத விநாயகப் பெருமான் குழந்தையாக அவதரித்து இங்கு தம்மிடம் வந்திருக்கிறார் என்று எண்ணி மனம் பூரித்தவராக, அக்குழந்தையை தமது ஆசிரமத்
நீர்கள் Taf
TE "آئی____میڈیا"

Page 96
திற்கு எடுத்துச் சென்றார். அங்கு தம்
பத்தினியான வீரியவத்ஸ்லையைக் கூப்பிட்டு
அவளிடம் குழந்தையைக் கொடுத்தார். அக் குழந்தையை வாங்கிய வீரியவஸ் தலை பாரத்தால் தனங்கள் விம்மவும் உதடுகள் பரவ சத்தால் துடிக்கவும், உச்சி முகந்து தன்னையறியாமலே தனங்களில் பால் சுரக்க அதை ஊட்டி அருமை பெருமையாக வளர்க்கலானாள்.
இவ்வாறாக பராசுவ முனிவரின் ஆசிரமத்தில் குழந்தை உருவத்தில் அவத ரித்த விநாயகப் பெருமான் நாளொரு மேனியும் பொழு தொரு வண்ணமுமாக வளர்பிறைச் சந்திரனைப் போல அருமையாக வளர்ந்து வந்தார். அச்சமயம் முன்பொரு நாள் சவுபரி முனிவரால் சபிக்கப்பட்ட கிரவுஞ்சன் என்ற மூஷிகம் (பெருச்சாளி) ஒருநாள் பராசுவ முனிவரின் ஆசிரமத்திற்கு அருகில் வந்தது. அது அங்குள்ள மலைகளைக் குடைந்து கற்களைத் தள்ளியும், சுவர்களைக் கெல்லித் தகர்த் தும், மரங்களை வேருடன் பிடுங்கிச் சாய்த்தும், வேள்விக்குரிய ஒமகுண்டம் முதலானவைகளைத் தோண்டிக் குழிப்பறித்தும், ஆசிரமத்திலுள்ள துணிகள் புத்தகங்களை எல் லாம் கடித்துக் குதறி யும் நாசம் செய்தும், அட்டகாசம் செய்தும் வந்தது. அதன் தொல்லையைப் பராசுவ முனிவரால் பொறுக்கவே முடியவில்லை. இதற்கென்ன செய்வது என்று தெரியாமல்
அவர் மனம் குழம்பினார்.
அதை அறிந்து கொண்டு விநாயகர், அந்த மூஷிகத்தை அடக்க முனைந்து அதன்மீது தம் பாசக்கயிற்றை ஏவினார். அதைக் கண்ட மூஷிகம் சகல உலகங்களிலும் துளைத்துச் சுற்றித்திரிந்து தப்ப முயன்று சிவலோகம் வரை சென்றுவிட்டது. ஆனால் விநாயகர் ஏவிய பாசம் மூஷிகம் சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து துரத்திச் சென்று.
 
 
 

பெருச்சாளியின் வல்லமையெல்லாம் அடங்கும் படியாக அதைப் பிடித்து கட்டியிழுத்து விநாயக மூர்த்திக்கு எதிராகக் கொண்டு வந்துநிறுத்தியது.
அப்போது அந்தப் பெருஞ்சாளி பிள்ளையா ரின் திருமுகத்தை ஏறிட்டு நோக்கி, "ஆண்டவனே! அடி யேனை அக்கிரமக் காரன் என்று நினைத்து அழித்துவிடா தீர்கள்! நான் முற்பிறவியில் கிரவுஞ்சன் என்ற கந்தவராஜ னாக இருந்தேன். ஒருநான் சவுபரி முனிவருடைய பத்தினி
யாகிய மனோரமை என்பவ ܕ■ f.- Liki, Gille ----
எளின் புதுமையான அழகில் பெரிதும் மயங்கி காமவசப்பட்ட வனாய் அவள் கையை அனுமதியில்லாமலேயே பிடித்திழுத்து விட்டேன். அதை முனிவர் அறிந்து என் மீது கோபம் கொண்டு என்னை மண் தோண்டும் மூஷிகமாக மாறும்படி சபித்துவிட்டார். அதன்பிறகு நான் அவ ரைச் சரணடைந்து சாப விமோசனம் கேட்டேன். அதனால் மனமிரங்கிய முனிவர் என்னைத் தங்கள் வாகனமாக ஆக்கிக் கொள்ளும் காலம் வரும் என்று கூறினார். அதன் படியே நான் இப்போது தங்கள் சரணடைந்தி ருக்கிறேன். என்னைக் காத்து இரட்சிக்க
வேண்டுமென்று இரஞ்சியது.
"மூஷிகமே! உனது சரித்திரம் எனக்கு முன்பே தெரியும். அதனால் இப்போது உன்னைக் கொல்லாமல் பிடித்துக் கட்டிக் கொண்டு வரும் படி எனது பாசத்தை ஏவினேன். இனி எதற்கும் கவலைப்பட வேண் டாம்! இன்று முதல் நீ எனக்கு உன்னத வாகனமாக இருந்து வருவாய்" என்று கூறி அருளி னார். பிறகு சின்னப்பிள்ளையார் அதன் முதுகில் ஏறியமர்ந்து திக்குகள் அனைத்திற்கும் ஒட்டிச் சென்று விளையாடிவிட்டு ஆசிரமத்திற்குத் திரும்பினார்.

Page 97
  

Page 98
விநாயகர் வாழ்த்து மண்ணுல கத்தினிற் பிறவி மாசற எண்ணிய பொருளெலா மெளிதின் முற்றுறக் கண்ணுத லுடையதோர் களிற்று மாமுகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்.
விருத்தாசல புராணம் திருவுங் கல்வியுஞ் சீரும் தழைக்கவும் கருனை பூக்கவும் தீமையைக் காய்க்கவும் பருவ மாய்நம துள்ளம் பழுக்கவும் பெருகு மாழத்துப் பிள்ளையைப் பேணுவாம்.
திருமூலர் திருமந்திரம் - ஆறாந் தந்திரம் ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
மூத்தநாயனார் திருவிரட்டைமணிமாலை கபிலதேவ நாயனார் இயற்றியது
திருவாக்குஞ் செய்கருமங்கைக்கூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர் தம் கை.
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கைதனிவிப்பான்-விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும்நாதனுமாந்தன்மையினாற் கண்ணிற் பணிமின் கனிந்து,
கனங்கொண்ட வல்வினைகள் கண்கொண்ட நெற்றிப் பனங்கொண்ட பாந்தட்சடைமேல்-மனங்கொண்ட தாதகத்ததேன்முரலுங்கொன்றையான் தந்தளித்த போதகத்தின் தாள்பணியப் போம்.
களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன் ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக் கண்ணுவதுங் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்றாள் நண்ணுவதும் நல்லார் கடன்.
திருநாரையூர் விநாயகர் திருவிரட்டைமணிமாலை நம்பியாண்டார் நம்பி இயற்றியது
என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத் தன்னை நினையத் தருகின்றான் - புன்னை விரசுமகிழ் சோலைவியன் நாரையூர் முக்கண் அரசுமகிழ் அத்திமுகத் தான்.
(ஆ) விக்காண்க்கள் :)

மலஞ்செய்த வல்வினை நோக்கி
உலகை வலம்வருமப் புலஞ்செய்த காட்சிக் குமரற்கு முன்னே புரிசடைமேற் சலஞ்செய்த நாரைப் பதியரன் தன்னைக் கணிதரவே வலஞ்செய்து கொண்ட மதக்களி றேயுனை வாழ்த்துவனே.
நாரணன் முன்பணிந் தேத்தநின்
றெல்லை நடாவியவத் தேரண வந்திரு நாரையூர்
மன்னு சிவன்மகனே காரண னேனம் கணபதி யேநற் கரிவதனா ஆரண நுண்பொரு ளேயென்
பவர்க்கில்லை அல்லல்களே.
திருப்புகழ்
உம்பர் தருதேனு மணிக் கசிவாகி
ஒண்கடலிற் தேனமுதத் துணர்வூறி இன்ப ரசத் தேபருகிப் LUGJEFTSJüri
என்ற னுயிர்க் காதரவு ற் றருள்வாயே
தம்பி தனக்காக வனத் தனைவோனே
தந்தை வலத்தா லருள்கைக் கனியோனே
அன்பர் தமக் கானநிலைப் பொருளோனே
ஐந்து கரத் தானைமுகப் பெருமாளே.
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுக கனடிபேணிக் கற்றிடு மடியவர் புத்தியிலுறைபவ
கற்பகமென வினை கடிதேகும் மத்தமும் மதியமும் வைத்திடு மரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே முத்தமிழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம் அச்சது பொடிசெய்த அதிதிரா அத்துயரதுகொடு சுப்பிரமணிபடும் அப்புன மதனிடை LILJ LDT அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கணம் மனமருள் பெருமாளே.

Page 99
சுக்லாம் பரத சசிவர்ணம் ச பிரசன்ன வத சர்வ விக்னே
கஜாந நாய விக்ன ராஜாய வக்கிர துண்ட ஸித்திப்ரதாய கணாதிபாய பார்வதி தநயாய (89sDJüb uTuu ஏகதந்தாய வரபரதாய அக்ர பூஜ்யாய பாலகப்ரியாய நித்தியப்ரும்மசர் அச்வத்த மூல வ யோகி ஹ்ருந் நி மோதக பகூகா தூர்வாங் குரார வித்யா ராஜாய மூஷிக வாஹநா விநாயகாய அக்ஞான நாசக பித்ரு பக்திமதே வீரகணபதயே க்ஞானகணபத( ஸித்த ஸேவிதா
ஒம் க்ரந்தக்ருதே ஓம் லம்போதராய ஓம் மஹேச்வரா ே ஓம் ஓங்கார ரூபா
 

ரம் விஷ்ணு
o
துர்ப் புஜம் 60Tib
த்யாயேத் சாந்தே 5
நம;
t நம நம
நம
நம
நம
நம
நம
நம
Tf நம னே நம T6)T நம
UL ຫມrມ நம நம
5uTu நம நம
நம
நம
SJ Tus நம நம
நம
நம
நம
நம
நம
நம
D
ாதகராய
நம
ய நம

Page 100
Լl5: சுக்கில அம்பரம் - வெள்ளை வஸ்திரம்; தரம் - தரி சந்திரனின் வருணமான வெண்ணிறம்; சதுர் புஜம் - த்யாயேத் - தியானித்தல்; சர்வ விக்கினம் - எல்லா
6lші
வெள்ளை வஸ்திரம தரித்தவரும் எங்கும் வியாபக மகிழ்ந்த முகமும் உடையவரமான விநாயகரைத்
செய்யும்.
மந்திரப்
1. கஜாந நாய நம Ա II 2. விக்ன ராஜாய நம AO ତ୍ରି 3. வக்கிர துண்டாய நம ଗ, 4. ஸித்திப்ரதாய நம ar சி 5. கனாதிபாய நம 6. பார்வதீ தநயாய நம a7. GaspJúd LTU நம LO 8. ஏகதந்தாய நம 영9 9. வரப்ரதாய நம AA 6 10. அக்ர பூஜ்யாய நம AO (UP 11. LITsujirfluTuj நம AO 12. நித்தியப்ரும்மசாரினே நம f5. 13. அச்வத்த மூல வாஸாய நம 9| 14. யோகி ஹ்ருந் நிவாஸாய நம Gu 15. மோதக பகூர்காய நம NA (3L 16. தூர்வாங் குராரத்யாய நம 9گی| 17. வித்யா ராஜாய நம O 6 18. மூஷிக வாஹநாய நம ଗ। 19. 65 TuuJ95 Tuu நம ஒ 20. அக்ஞான நாசகராய நம AWA فتگے} 21. பித்ரு பக்திமதே நம Sg 22. வீரகணபதியே நம 6S 23. க்ஞான கணபதயே நம ஞ 24. ஸித்த ஸேவிதாய நம சி 25. க்ரந்தக்ருதே நம கி 26. லம்போதராய நம aua ଗ; 27. மஹேச்வரா மோதகராய நம மே
28. ஓங்கார eBus Tuu நம AO ஒ
 

ճյ6Ծյց`
த்தல்; விஷ்ணும் - எங்கும் வியாபகம்; சசிவர்ணம் - நான்கு கைகள்; பிரசன்ன வதனம் - மகிழ்ந்த முகம்; விக்கினங்களையும்; சாந்தயே - சாந்தி செய்யும்.
ாழிப்பு
மாணவரும் வெண்ணிறத்தவரும் நான்கு புயங்களும் தியானித்தல் எல்லா விக்கினங்களையுஞ் சாந்தி
பொருள்
ானை முகத்தவனுக்கு வணக்கம் டையூறுகளை ஆள்பவனுக்கு வணக்கம் காடிய வினைகளைத் துண்டிப்பவனுக்கு வணக்கம் த்தி தருபவனுக்கு வணக்கம் ணங்களின் அதிபதிக்கு வணக்கம் ர்வதியின் தனயணுக்கு வணக்கம் காவீரனுக்கு வணக்கம் ற்றைக் கொம்பனுக்கு வணக்கம் Júd FFLu6iggjësE வணக்கம் தல் பூஜையாளனுக்கு வணக்கம் லகர் பிரியனுக்கு வணக்கம் த்திய பிரும்மச்சாரிக்கு வணக்கம் ரச மரத்தடியில் வசிப்பவனுக்கு வணக்கம் பாகியரின் இதயத்தில் இருப்பவனுக்கு வணக்கம் Dாதக பட்சணப் பிரியனுக்கு வணக்கம் றுகம்புற் பூஜைக்குரியவனுக்கு வணக்கம் த்தைக்கு அரசனுக்கு வணக்கம் பருச்சாளி வாகனனுக்கு வணக்கம் ப்பற்ற தலைவனுக்கு வணக்கம் ஞ்ஞானத்தை அழிப்பவனுக்கு வணக்கம் தாமீது பக்தி உடையவனுக்கு வணக்கம் ர கணங்களின் அதிபதிக்கு வணக்கம் ானியர் கணங்களின் அதிபதிக்கு வணக்கம் த்தர்கள் சேவிப்பவனுக்கு வணக்கம் ரந்தங்களின் கருத்தாவுக்கு வணக்கம் தாப்பை வயிற்றணுக்கு வணக்கம் கேஸ்வரனை மகிழ்விப்பவனுக்கு வணக்கம்
ங்கார உருவினனுக்கு வணக்கம்

Page 101


Page 102


Page 103

,\",| ov/\o,W1sy/*怒恒》《ኅyy《彩龄s_o^,(o|| (/\s/\o,| (v/ 德奥ミミ 「?'역》
-W*----**''**"』**

Page 104
然ra (, ,'\「3*/>*力*刀》*刀》
 


Page 105


Page 106

୧୮C_୯@୯
SL L L L L L L L S000S LSLSLL LL LLL LS aL LSS LLLL L LLLLL SS 00S SSYK00 0 0 0S0 0 0 00 S S S S S S S S S S