கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் செய்தி மடல் 2010.04

Page 1
சங்க உறுப்பினர்களுக்கு மட்டும்
ஜி கொழும் 2. செ
வெளியீடு : 07 மாதம் : சி. கொழும்புத் தமிழ்ச் சங்க இணையத்தளத்த "செய்தி மடல்" என்பதன் ವ್ಹಿಶ್ವ வடிவம் இ இண்ையத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள். $606Guisg,6Tib:www.colombotamilsangam.com
தொலைபேசி இல . 2363759
தொலைநகல்: 2361381
கொழும்புத் தமி
ஆனி நடைபெறவிருக்கு
ségs O “விவாதச் கொழும்புத் தமிழ்ச் சங் பாடசாலை மாணவர்களு மொழியிலான விவாதப் ே தீர்மானித்துள்ளது.
LJ ML&fl606) LDMI6006)Isèb திறனையும், தனிமனித ஆளு புரிந்துணர்வையும் ஒற்றுவி தர்க்கிக்கும் ஆற்றல், சிந்த திறன் என்பவற்றை வ இப்போட்டியை நாம் நடாத்து போட்டிக்கான விண் 6 19.05.2010ஆம் திகதி 6 கொள்ளலாம். போட்டிகுறித் பாடசாலைகளுக்கு அனுப்பு
 

புத் தமிழ்ச் சங்கம்
O () ய்தி மடல் ந்திரை ஆண்டு : 2010
ல் "எம்மைப் பற்றி” எனும் பகுதியிலுள்ள ம்மடலாகும். மேலும் விபரங்களுக்கு எமது
Liaisogisfai): tamilsangamcolomboGyahoo.com
infoG)colombotamilsangam.com
ழ்ச் சங்கத்தில் LAT5Ls) ம் சிறப்பு நிகழ்வு
5 கனம்”
கம், கொழும்பு மாவட்டப் நக்கு இடையே தமிழ் பாட்டி ஒன்றை நடாத்தத்
ளுக்கிடையே வாசிக்கும் மையையும் மேம்படுத்துதல். மையையும் ஏற்படுத்துதல் னைப் பாங்கு, சமயோசிதத் ளர்த்தெடுத்தல் என்பன தற்கான நோக்கங்களாகும். னப் பங்களை இம் மாதம் வரை சங்கத்தில் பெற்றுக் 5 விபரமான அறிவித்தல்கள் ப்பட்டுள்ளன.

Page 2
gamaqas
t, i ngr mar sib i saol.autho
Pubu Jungunt
grondb (afgewd uesgis)
03-04-200 "கதை கதையாம் காரியமாம்" என்ற நிகழ்வில் திருமதி மனோரஞ்சிதம் வேல் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
roab Cogat uă5)
10-04-2010 "கதை கதையாம் காரியமாம்" என்ற நிகழ்வில் திருமதி ஜீ.ஈ.ஏ.ஜெசில்டா கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அமரர் செ.குணரத்தினம் அவர்களின் நினைவுப்பரவல்
10,04.200 கொழும்புத் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் அமரர் செகுணரத்தினம்
அவர்களது நினைவுப்பரவல் நிகழ்வில் திருமதி பத்மாவதி குணரத்தினமும் சங்கத் தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்களும் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தனர்.
தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்கள் உரையாற்றுகையில் அமரர் செகுணரத்தினம் அவர்கள் பல்துறை வல்லவராக மட்டுமல்லாது நல்லவராகவும் விளங்கினார். பண்பின் பிறப்பிடமாகவும் இருப்பிட மாகவும் வாழ்ந்தவர். 14 ஆண்டுகள் தமிழ்ச் சங்கத் தலைவராகவிருந்து அரும்பணியாற்றியவர். யாழ் இந்துவில் பயின்று பின் பட்டதாரியாகி, ஆசிரியராகி, அதன் பின் நிர்வாக சேவையில் இணைந்து சேவையாற்றினார். அரசசேவையி லிருந்து கொண்டே இலக்கியத்துறையிலும் சம அளவில் ஈடுபாடு கொண்டு கட்டுரைகள் கவிதைகளை எழுதியதோடு சமய சமூக நிறுவனங்களில் அக்கறையோடு ஈடுபட்டார். தமிழ்ச் சங்கப் பொன் விழா ஆண்டு மலரில் பல நல்ல கவிதைகளை எழுதியதோடு தமிழ்ச் சங்க இலட்சியம், நோக்கம் இவற்றை அழகாக அவற்றில் தந்துள்ளார், என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
அடுத்து ஆட்சிக்குழு உறுப்பினர் சமூக சோதி ச.இலகுப்பிள்ளை அவர்கள் நினைவுரை ஆற்றும்பொழுது சங்கக் கட்டிடம் உருவாவதற்கு காலஞ் சென்ற செ.குணரத்தினம் அவர்கள் எவ்வாறு உதவினார் என்ற விபரமான தகவல்களை எடுத்துரைத்தார். அவர் தலைவராக இருந்த போது தனது பணத்தையும் சங்க வளர்ச்சிக்காகச் செலவு செய்து, கட்டிடம் அமைப்பதற்கு தமிழவேள் க.இ.கந்தசுவாமி அவர்களோடு ஒத்துழைத்தார். நானும் என்னாலான உதவிகளைச் செய்தேன் என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளை தலைவர் திரு.என்.இராகவன் உரையாற்றினார். 1990ம் ஆண்டு வரை பழைய மாணவர் சங்கம் இருந்த நிலையை மாற்றி இன்றைய வளர்ச்சி நிலைக்கு உயர்த்தியவர் அமரர் செகுணரத்தினம் ஆவார். அவரது முகாமைத்துவச் சிறப்பும் வழிநடத்தும் பண்பும் சிறப்பானவை. தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் புலமையுள்ளவராக விளங்கினார். அவர் ஒரு நடமாடும் கலைக் களஞ்சியமாகத் திகழ்ந்தார். சகலதுறைகளிலும் பாண்டித்தியம் மிக்கவராய் விளங்கினார். இவரது இடது மூளையும் வலது மூளையும் சமமாக வேலை செய்தமையே இதற்குக் காரணம் எனலாம். யாழ் இந்து பழைய மாணவர் சங்க 100ஆவது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கான பல ஆலோசனைகளைக்
 

கூறியிருந்தார் என்றும் தெரிவித்தார்.
அடுத்து, உலக சைவப்பேரவை இலங்கைக் கிளையின் செயலாளர் திரு.மு.கதிர்காமநாதன் நினைவுரை நிகழ்த்தினர். அவர் பேசும் போது ஆன்மீக சேவை செய்பவர்களும் சமூக சேவை செய்பவர்களும் இறப்பதில்லை. அவர்கள் என்றும் எம்மிடையே வாழ்ந்து கொண்டேயிருப்பார்கள். அமரர் செ.குணரத்தினம் அவர்களும் நம்மிடையே என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெரியாராவர்ர் என்று கூறி அவர் சங்கத்துக்கு ஆற்றிய அரிய பணிகள் பற்றியும் அவரது குடும்பத்தோடு தனக்கிருந்த நெருங்கிய தொடர்புகள் பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார்.
அவரைத் தொடர்ந்து அஞ்சலிக் கவிதை பாட வந்த தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் ஜின்னாஹற் ஷரிபுத்தின் தனது கவிதைகளைப் பார்வையாளர் அனைவருக்கும் கொடுத்து அதிலிருந்து ஒரு கவிதையை மட்டும் பாடிக் காட்டினார். அமரர் செ.குணரத்தினம் அவர்களால் தனக்கு ஏற்பட்ட நன்மைகள் பற்றிப் பேசினார். "புனிதபூமி", "பண்டார வன்னியன்' போன்ற நூல்களுக்குப் பரிசு கிடைத்த வேளை என்னைப் பாராட்டிக் கவிதை எழுதியவர் அமரர் அவர்கள். அத்தோடு பரிசு கிடைத்த மேடையில் கட்டித் தழுவி முத்தமிட்டதைக் கூட என்னால் மறக்கமுடியாது. தனது கவிதைகளை என்னிடம் தந்து பிழை இருந்தால் திருத்துங்கள் என்று சொன்ன நல்ல, பண்பாளன். அவரது இழப்பு எமக்கு ஒரு பேரிழப்பு என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
அடுத்து அகில இலங்கை இந்து மாமன்றப் பொதுச் செயலாளர் திரு.கந்தையா நீலகண்டன் நினைவுரையாற்றினார். ஒரு சமுத்திரம் வற்றிவிட்டது. இன்னொரு சமுத்திரம் பிரவாகித்து ஓடி அடங்கியுள்ளது. அதில் ஒரு சிறு மீன் குஞ்சாக நான் வந்துள்ளேன். அமரர் பலரைப் போற்றியிருக்கிறார். பாடியிருக்கிறார். எனக்கும் அவருக்கும் 45 ஆண்டுகள் பழக்கமுள்ளது. அதிகார மிடுக்குடன் தான் பேசுவார். தனது செல்வாக்கினால் வன்னியில் யோகபுரம், செல்வபுரம் போன்ற கிராமங்கள் தோன்ற வழி செய்தார். இவை யோக சுவாமிகள், செல்லப்பா சுவாமிகள் நினைவாக உருவாக்கப்பட்டவை. யாழ் இந்து பழைய மாணவர் சங்கத்துடன் அவர் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு, அதன்வளர்ச்சியில் அவர் காட்டிய ஈடுபாடுகள் எல்லோரையும் உற்சாகப்படுத் தியவை. நூற்றாண்டு மலரில் சைவ சித்தாந்தம் பற்றிய அவரது கட்டுரை இடம்பெறவுள்ளது. அகில இலங்கை இந்து மாமன்றம் தற்போது அமைந்து இருக்கும் இடத்தைப் பெற்றுத் தருவதற்கு அயராது பாடுபட்டவர். யாழிலிருந்து மட்டக்களப்பு வரை அவரது சிந்தனை விரிந்து சென்றது என்றார். அவர் சங்கத் தலைவராக இருந்த போது தானும் இணைந்து பணியாற்றியமை பற்றியும் குறிப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து நீர் வழங்கல் வடிகால் அமைச்சு ஆலோசகர் திரு.ஏ.எம்.நஹியா நினைவுரையாற்றினார். எனது மேலதிகாரியாக விளங்கிய அமரர் செகுணரத்தினம் அவர்கள், ஒருவரது திறமையை மதித்து அவர்களை வழிநடத்தக் கூடியவர். அடிமட்டம் வரை இறங்கி மிக அன்பாகப் பழகியவர். அநீதியைத் தட்டிக் கேட்கும் கடமை வீரர். சில விடயங்களைக் கடுமையாக எதிர்ப்பார். வெளியில் காட்டமுடியாவிட்டால் தனக்குள்ளேயே எண்ணிக் கவலைப்படுவார். நாவலர் மரபில் வந்தவர்களிடம் கல்வி கற்றவர். சைவமும் தமிழும் அவரது இரத்தத்தில் ஓடின. நாவலர் பாரம்பரியத்தோடு, நெகிழ்வுத் தன்மை கொண்ட விபுலானந்தரிடம் கல்விகற்ற பண்டிதமணி கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வித்தியானந்தன் ஆகியோரிடம் பயின்று இரண்டு பாரம்பரியங் களுக்கும் சொந்தக்காரரானார். இவர் அறிஞர்களான பேராசிரியர் கைலாசபதி, முருகையன் ஆகியோருடன் சமகாலத்தில் பயின்றவர். இதனாலும் இவர் தனது தேடலை விருத்தி செய்ய வாய்ப்பேற்பட்டது. அரச அலுவலராகவிருந்த

Page 3
இவர் தமிழ்ப் பணியாற்ற அவருக்குக்கி ைத்த ஒரு களம் தமிழ்ச் சங்கம் எனலாம். இந்து கலாசார அமைச்சுச் செலயாளராகவிருந்த காலத்தில் மட்டக்களப்பு இசை நடனக்கல்லூரியை ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக மாற்றியமைத்தார். அவர் தன்னைத் தமிழ்ச் சங்கத்துடன் இணைத்துக் கொண்ட தோடு நில்லாது என் போன்ற பலரையும் அதில் இணைத்துக் கொண்டார். மலேசியாவில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மகாநாட்டுக்கு இலங்கையிலிருந்து 100 பிரதிநிதிகள் அரச செலவில் சென்றுவர உதவினார். தமிழ்ச் சங்க வரலாறு எழுதப்பட வேண்டும். ஆரம்பத்தில் சுவாமி விபுலானந்தரும் இரண்டு கூட்டங்களுக்கு வருகை தந்துள்ளார். திரு.பி.பி.தேவராஜ் அவர்கள் ராஜாங்க அமைச்சராக இருந்த போது, குணரத்தினம் அவர்கள் "இலக்கியச் செம்மல்" என்ற பட்டம் அளித்துக் கெளரவிக்கப்பட்டார். பல்துறைத் திறமை மிக்க பெரியார் நீண்ட காலம் எம்மிடையேயிருந்து தமிழ்ப் பணியாற்ற முடியாமல் போனது நமது துரதிஷ்டமே என்று பேசி இன்றைய நினைவுரையை நல்ல நிறைவுரையாக நிகழ்த்தி அமர்ந்தார் திருநஹியா அவர்கள். சங்கப் பொதுச் செயலாளர் தனது நன்றியுரையில் இன்றைய நிகழ்வு சிறப்புற அமைய உதவிய அனைவருக்கும் சபையோருக்கும் திருமதி பத்மாவதி குணரத்தினம் அவர்களுக்கும் நன்றி கூறினார். சங்க கீதத்துடன் நிகழ்வு
நிறைவுபெற்றது. இலக்கியக்களம் - நிகழ்வு 14 16.04.2010 அன்றைய இலக்கியக்களம் நிகழ்வில் "ஈழத்துத் தமிழ் நூல்களை உலகளவிய
ரீதியில் ஆவணப்படுத்தல்" என்னும் தலைப்பில் திரு.செல்வராஜா அவர்கள் உரையாற்றினார். நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய தமிழ்ச் சங்க நூலகக் குழுச் செயலாளர் வைத்திய கலாநிதி ஞானசேகரன் அவர்கள் தனது தலைமை யுரையில் உரைஞரைப்பற்றிய நல்ல அறிமுகமொன்றைச் செய்து வைத்தார். தொடர்ந்து பேசும் போது இன்றைய பேச்சாளர் நூலகம்.கொம் என்ற ஒரு இணையத்தளத்தை உருவாக்கி அதன் மூலம் பல அரிய சேவைகளை ஆற்றி வருகிறார். அத்தகைய சிறப்பான சேவையாற்றி வருபவிரைப் பார்ப்பதற்கென்றே பலர் வந்துள்ளனர். அவர் இங்கு தங்கியிருக்கும் நாட்களில் பல பகுதி களுக்கும் சென்று தனது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் என்று கூறி, திரு.செல்வராஜா அவர்களை உரையாற்றுமாறு அழைத்தார். வெளியீடுகளின் ஆவணப்பதிவின் அவசியம் பற்றி அறிய வேண்டும். வரலாற்றில் அந்நூலை நிரந்தரப் பதிவாக்கவேண்டும். தோற்றவர்களைப் பற்றியும் வெற்றி கொண்டவர் கள் தான் எழுதுகிறார்கள். தமிழ் எழுத்தாளர் என்னும் பொழுது இஸ்லாமியரை யும் அது உள்ளடக்கும். தமிழர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்துள்ளனர். மூன்றில் ஒரு பகுதியினர் வடக்கு கிழக்கிலும் மூன்றில் ஒரு பகுதியினர் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் வாழ்கின்றனர். 1917ஆம்
மலாயா வரலாற்றை எழுதியுள்ளனர். எனினும் அவர்களுக்கு ஈழத்தவர் என்ற அடையாளம் கொடுக்கப்படவில்லை.
நான் 2000ஆம் ஆண்டளவில் ஆவணத் தேட்டத்தைத் தொடங்கி னேன். ஒரு பகுதியில் வெளியிடப்படும் நூல் ஏனைய பகுதிகளுக்குக் கிடைப்பதில்லை. கடந்த 40 ஆண்டுகளாக நூல்களை நூலகங்களுக்கு வழங்கி வருகிறேன். இங்கு வரும்போது தமிழ்ச் சங்கத்துக்கு வழங்குகிறேன். நல்ல விநியோகத் திட்டம் எம்மிடையே இல்லை. இலண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலுள்ள பிரசித்தி பெற்ற நூலகங்களான British Library Oxford Cambridge Library, American Congress Library (Taipolidair தமிழ்ப் பிரிவுகளில் ஏராளமான தமிழ் நூல்களுண்டு. நூல்த் தேட்டம் பற்றிய ஒரு விழிப்புணர்வு வேண்டும் 1981இல் எனது முதலாவது இதழ் வெளியாகியது.
 

(அவரது இரண்டு வெளியீடுகள் சபையோரின் பார்வைக்கு விடப்பட்டன.)
இதுவரை 6 புத்தகங்கள் வெளியிடப்பட்டு விட்டன, 7வதும் 8வதும் தயாராக உள்ளன என்றார். இவை புலம்பெயர் வாழ்வால் ஏற்பட்ட நன்மைகள் என்றே கூறலாம்நூல்களை நூலகங்களுக்குச் சேர்ப்பியுங்கள், வெளியிட்டவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளலாம் என்று கூறி உரையை நிறைவு செய்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் சந்திரசேகரன் அவர்கள் கருத்துக் கூறும் பொழுது, தமிழ்ச் சங்கம் செய்ய வேண்டிய ஒரு பாரிய பணியை தனியொருவராக நின்று திரு.செல்வராஜ்ா அவர்கள் செய்து வருவதைப் பாராட்டினார். சுவடி ஆற்றுப் படை என்னும் 4 தொகுதிகளை திரு.ஜமீல் அவர்கள் வெளியிட்டுள்ளார். American Congress Libraryயில் இலங்கை பற்றி பல இனத்தவரும் எழுதிய தமிழ்ப் புத்தகங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.
எச்.ஐ.குணதிலக என்பவர் பல நூல்களை ஆவணப்படுத்தியுள்ளார். ஆவணக் காப்பகம் மிக நற்பயன் தரும் ஒன்றாகும். இவரது சேவை மேலும் தொடர எமது ஆதரவை வழங்குவோம் என்றார். சபையிலிருந்த மேலும் சிலரது கருத்துரைகளோடு அன்றைய நிகழ்வு நிறைவடைந்தது.
nrsoasůb (áFogast uč25)
17-04-2010
"கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில் திருமதி ஜீ.ஈ.ஏ.ஜெசில்டா கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அறிவோர் ஒன்று கடல்
21.04.2010
அன்றைய அறிவோர் ஒன்றுகூடலில் "முதியோரும் மூளையும்" என்னும் பொருள் பற்றி மனநல வைத்திய நிபுணர் கலாநிதி எஸ்.சிவதாஸ் அவர்கள் உரையாற்றினார். ஆட்சிக்குழு உறுப்பினர் செல்வி சற்சொரூபவதி நாதன் அவர்கள் தலைமையுரையாற்றும் போது உரைஞர் பற்றியும் அவர் உரையாற்ற விருக்கும் தலைப்புப் பற்றியும் சிறப்பான தலைமையுரையை ஆற்றினார்.
வைத்திய கலாநிதி உரையாற்றும்போது, முதியோர் என்பது வெறும் வயோதிபம் மட்டுமல்ல. ஞானத்தையும் தகைமையையும் கொண்டது. அவற்றை அடுத்த சந்ததிக்குக் கடத்திச் செல்ல இந்த ஞானமும் தகைமையும் உதவுகின்றது. முதியோர் சரியான தீர்மானம் எடுக்கும் திறமை பெறுகிறார்கள். நெல்சன் மண்டேலா 76வயதிலும் கோல்டா மேயர் 70 வயதிலும் முறையே தென்னாபிரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளை ஆளும் பொறுப்பையேற்று தமது நாடுகளைத் திறமையாக வழிநடத்தினர். முதியோர் பேரப்பிள்ளை களுக்கு பல ஆக்கத்திறன் மிக்க கதைகளைக் கூறுவர். முதியோரால் மரதன் ஒட்டம் முடியாது தான். ஆனால் மிகவும் பயனுள்ளவர்கள். 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் வாழும் நாடு யப்பானாகும் (ஒக்கினோ தீவு). உணவு முறை, நெருக்கீடுகள் அற்ற வாழ்வு (stress), ஆன்மீக ஈடுபாடு, பராமரிப்புடைய சமூகம் (caring community). இவை தான் இதற்குக் காரணமாகும்.
உலகில் 100 வயதுக்கு மேற்பட்ட 1000 பேரிடம் ஆய்வு செய்தபோது பரம்பரை, உடல்நலம், கல்வி (Education), ஆளுமை என்பனவற்றில் அவர்கள் சிறந்து விளங்கினர். இவற்றுள் பரம்பரையைத் தவிர ஏனையவை மாற்றப்படக் கூடியவை. ஒருவருக்கு 75 வயதாகிறது என்றால் எல்லா விதத்திலும் 75 விதமல்ல. உளவியல், சமூகவயது இவற்றில் விகிதாசாரம் குறைவாக இருக்கலாம். ஓய்வு பெற்ற நிலையில் பலர் ஆரோக்கியமாகவுள்ளனர் (இன்றைய அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நிரலில் பிரசுரமான குறள் நிகழ்ச்சிக்கு மிகவும் பொருத்தமானது. அதாவது "நோயுற்றவன், நோய்தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அருகிருந்து கொடுப்பவன் (caring Community) என்று மருத்துவ முறை நான்கு வகைப்பாகுபாடு உடையது) நோயை மாற்றுவதை விட

Page 4
(cure) நோயாளியைப் பராமரிப்பது (care) $கவும் அவசியமாகிறது.
அடுத்து மூளையை எடுத்துக் கொண்டால் அது சுருங்கும் இயல்பு டையது. நடுத்தர வயதில் வேகமும் குறைவு, அளவு பரிமாணமும் குறைவு. உயரமும் குறைவு. ஆனால் நரம்புக் கலங்களின் வளர்ச்சி தொடரும். கலங் களின் இயக்கத்தினால் மூளை இயல்பாக்கம் அடைகிறது. முதுமையில் வலது மூளையும் இடது முளையும் சேர்ந்து செயல்படுகின்றன. இழப்பினை இயல்பாக்கம் செய்யும் திறனையும் பெறுகின்றன. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும் போது, பராமரிப்பு மனநலத்தை மேம்படுத்தும், நாங்களே எம்மீதும் கவனம் செலுத்த வேண்டும்.
சூழலைக் கட்டுப்படுத்தும் சக்தி பெற்றவர்களாகத் திகழவேண்டும். நாம் வினைத்திறம் கொண்டவர்கள் என்ற உணர்வு வேண்டும். வயோதிபம், ஓய்வு, ஆரோக்கியமின்மை இயற்கையாக வருவது. முதியோராதல் என்பது ஒரு நீண்ட படிமுறை. எம்மை நாம் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். சரியான உணவு முறை, வாழ்க்கை முறை, மூளையைத் தூண்டுதல், நெகிழ்வுத் தன்மை, ஒரு செயலைக் கையாளும் திறன், சரியான சமூக உறவு இவற்றால் வாழ்க்கையை இனிமையாக்கலாம், முதியோர் ஞான முடையவர் செயற்திறன் மிக்கவர்கள் எனக் கூறி நிறைவு செய்தார்.
இலக்கியக்களம் நிகழ்வு
23.04.2010
அன்றைய நிகழ்வில் “கவிஞர் வைரமுத்துவின் கவிதைகள்" என்னும் பொருளில் முல்லை ரிஷானா அவர்கள் உரையாற்றினார். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய ஆட்சிக்குழு உறுப்பினர் திருமதி வசந்தி தயாபரன் தனது தலைமை உரையில் பேச்சாளர் பற்றிய விபரங்களைத் தொகுத்துக் கூறினார். 20ம் நூற்றாண்டில் கவியராசனாக விளங்கிய பாரதியார், அவர் பின் வந்த பாரதிதாசன் போன்றோரது பாடல்களை அடியொற்றி கவிஞர் வைரமுத்து பல பாடல்களைப் புனைந்துள்ளார். இவர், முதலில் மரபுக் கவிதைகளையும் சந்தக் கவிதைகளையும் பாடி வந்தவர் பின்னர் புதுக்கவிதைகளைப் பாடினர். 20,000 திரைப்படப்பாடல்களுக்கு மேல் பாடியுள்ள இவர் பத்மறி பட்டம், சிறந்த திரைப்படக் கவிஞர் விருது என்பனவற்றைப் பெற்றுள்ளார்.
மரபையறிந்து கொண்டே புதுக்கவிதை பாடியதால் இவர் கவிதைகள் நல்ல இலக்கியக் கருத்துக்கள் கொண்டவையாக விருந்தன. "நறுமுகையே நறுமுகையே” என்பது ஒரு சிறந்த பாடல். இவர், சினிமாவுக்கு எழுதிய முதற்பாடல், "இது ஒரு பொன் மாலைப்பொழுது" என்று கூறிய தலைவர் அப்பாடல் வரிகளை மிக இனிமையாகப் பாடியும் காட்டினார்.
அடுத்து பேச்சாளர் தனது உரையைத் தொடங்கும்போது நான் இலக்கிய உலகில் ஒரு சிறு பிஞ்சு. அந்தப் பிஞ்சு வெம்பாமல் பார்த்துக் கொள்வது இரசிகர்களின் கடமை. எனது பணியை வளர்க்கச் சந்தர்ப்பம் வழங்கிய தமிழ்ச் சங்கத்துக்கு நன்றி எனக் கூறினார். கவிஞர் வைரமுத்துவின் கவிதைகள் எல்லாம் வைரங்களே. அவற்றுள் என்னைக் கவர்ந்தவற்றை இயன்றவரை கூறுகின்றேன். உறங்கிக் கிடக்கும் மொட்டுக்களைப் பார்த்து கவிஞர் பாடிய "உதய காலமே. ” என்ற பாடலை இராகத்துடன் பாடினார். தனது கவிதைகளில் சமூகத்துக்கு அறிவுரை கூறும் கருத்துக்களை உள்ள டக்குவார். "கோடுகளும் சித்திரங்களே' என்னும் இவரது கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும். தனது கிராமத்தை அழகான கவிதையில் கவிஞர் பாடி யுள்ளார். மரபுக் கவிதைகளை எவ்வாறு வாழ வைக்கலாம் என்றும் பாடியுள்ளார். அவர் ஓரிடத்தில் விருத்தங்களும் வெண்பாக்களும் சந்தங்களும் சிறந்தவை எனக் குறிப்பிட்டுள்ளார். இலக்கணத்தை எண்ணிக் கொண்டு எழுதியபோது இலக்கணம் மட்டுமே தெரிந்தது. இலக்கணத்தை மறந்து எழுதிய போது இலக்கணமும் உயிரோட்டமும் இருந்தது என்று கூறியுள்ளார்.
 

உரைஞர், "மெளனமான நேரம்” என்ற பாடலை இனிமையாகப் பாடிக் காட்டினார். வைரமுத்து அவர்களின் கவிதை நூல்களைப் படிக்கும் போது பாத்திரங்களோடு நாமும் இணைந்து நடைபோடுவது போலிருக்கும். படித்த பின் சில நாட்கள் மனதை விட்டகலமாட்டா. அவர் எல்லாத்துறை களையும் தொட்டுப் பாடியுள்ளார். கடவுளுடைய எல்லாமே இரகசியம் தான் எனத் தனக்குச் சமாதானம் கூறுகிறார். மொத்தத்தில் ஒரு சிறந்த களமாக அமைந்திருந்தது. தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் உட்பட பலரும் தமது கருத்தைக் கூறியதும் கூட்டம் தமிழ் வாழ்த்துடன் நிறைவெய்தியது.
நூலகம் (சிறுவர் பகுதி)
24-04-2010
"கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில் திருமதி யோகேஸ்வரி கணபதிப்பிள்ளை கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதை களைக் கூறி மகிழ்வித்தார்.
Jel03garrakaldu 6Nafarrosa
25.04.2010
காலை 9.30 மணிக்கு ஆரம்பமான ஆரோக்கிய வாழ்வுக்கான கலந்துரையாடல் நிகழ்வில் உணவுக் கால்வாய் புற்றுநோய்கள் என்னும் தலைப்பில் கலந்துரை யாடல் இடம்பெற்றது. தமிழ்ச் சங்கத் துணை நிதிச்செயலாளர் வைத்திய கலாநிதி சி.அனுஷ்யந்தன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போது, இதுவரை புற்றுநோய் சம்பந்தமான தகவல்கள் தெளிவாக இல்லை என்று கூறினார். பெண்களுக்கு மார்புப் புற்றுநோய், கர்ப்பப்பைப் புற்றுநோய் போன்றவை ஏற்படுகின்றன. புற்றுநோய் சம்பந்தமான சிலகேள்விகளைச் சபையோரிடம் கேட்டு அவர்கள் மூலம் அவற்றுக்குரிய விடைகளையும் பெற்றுக் கொண்டு தனது தலைமையுரையை சிறப்பாக ஆற்றினார். எமது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை, போக்குவரவு வசதியின்மை என்பவற்றால் இந்நோயின் தாக்கம் வெளியில் தெரியாமலிருந்து வந்தது.
2005ம் ஆண்டுத் தகவலின்படி ஆண்களுக்கு வாய், தொண்டை, உணவுக்கால்வாய்களில் கூடுதலாக இந்நோய் இடம்பெறுவதாக அறியப்படு கிறது. புற்றுநோய் பயப்படக்கூடிய ஒரு நோயல்ல. இது சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படவேண்டும் முறையான சிகிச்சை, நம்பிக்கை, மனஉறுதி என்பவற்றால் இந்நோயை வெற்றி கொள்ளலாம் என்ற நம்பிக்கை தரும்
ஒன்று, தாக்கு தலுக்குட்பட்டு எதிர்ப்புச் சக்தி குறையும் போது கலங்கள் அழிக்கப்பட்டு நோய் உருவாகிறது என்றும் கூறினார்.
அடுத்து, வைத்திய கலாநிதி சி.எஸ்.நச்சினார்க்கினியன் அவர்கள் உரையாற்றிய போது கைத்தொலைபேசிக்குச் செல்லிடத்தொலைபேசி என்று பெயர் வைத்ததுபோல் இந்த நோய்க்கும் புற்று நோய் என பொருத்தமான பெயரை தமிழர் வைத்துள்ளனர் என்றார். ஆரம்பத்தில் ஒரு சிறு கட்டிதோன்றும். அது ஒரு கல்லின் தன்மையைக் கொண்டிருக்கும். காலப்போக்கில் அது புண்ணாகிப் புற்றுப்போல் தோற்றம் அடையும். உடலில் உள்ள கலங்கள் வித்தியாசமாகப் பிரிவதால் தான் இப்பிரச்சினை ஏற்படுகின்றது என்றும் கூறினார்.
நோய் அறிகுறிகளும் வெளிக்காட்டல்களும் என்பது பற்றி வைத்திய கலாநிதி எஸ்.எஸ்.அருளானந்தம் அவர்கள் நல்ல ஆலோசனைகளை வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து இந்நோய் பற்றிய பல தகவல்களையும் தீர்வு களையும் ஆலோசனைகளையும் சைவப் புலவர் சு.செல்லத்துரை அவர்கள் வழங்கினார். திருக்குறளை மேற்கோள் காட்டித் தனது உரையை ஆற்றினார்.

Page 5
நூல் வெளியீடு = "செந்தமிழ் வளம்பெற வழிகள்" ?5.ህ4. ጋI] 1[]
கலாபூஷணம், பன்மொழிப் புலவர், தமிழ்மணி த.கனகரத்தினம் அவர்களின் "செந்தமிழ் வளம்பெற வழிகள்” என்னும் நூல் வெளியீடு 25.04.2010 மாலை 5.30 மணியளவில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப் பட்டது. தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் திரு ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தி வைத்தார். நூலாசிரியர் சங்கத்தின் துணைக் காப்பளராக விருப்பதோடு பல நூல்களை சங்கத்தின் அனுசரணை புடன் வெளியிட்டுள்ளார். நூல் வெளிபபீட்டால் வந்த வருமானத்தின் ஒரு பகுதியைத் தமிழ்ச் சங்கத்துக்கு : " -
கே
வழங்கி உதவியுள்ளார் என்று
it is a Ng'. கூறினார்.
a ###
அடுத்து ஆசியுரை வழங்கிய சங்கத் துணைத் தலைவர் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் உரையாற்றுகையில், பன்மொழிப் புலவர் என்பவர் பல மொழிகளைத் துறை போகக் கற்றி ருக்க வேண்டும். புலவர் அவர் ே 疊_*愛蠶 களுக்கு 7 மொழிகளில் புலமையுண்டு. இவர் நாவலர் பரம்பரையில் வந்த பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களிடம் பயின்றவர். இந்திய அரசு தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவதற்கு முன்னரே தமிழை செம்மொழியாக பல அறிஞர்கள் அங்கீகரித்துள்ளனர். பாடநூல்களின் தந்தை என்று போற்றப்படுபவர் ஆறுமுகநாவலர் அவர்கள். அவரது வழியில் நல்ல பல நூல்களைத் தந்தவர் எமது நூலாசிரியர், மொழி, இலக்கண வழுவின்றி எழுதப்பட வேண்டும் தவறுகளற்ற நூல்கள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற விருப்புடன் எழுதப்பட்ட இந்நூல் மேல் நாட்டில் வசிப்பவர் களுக்கும் தொடர்பு சாதனங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக விளங்குகின்றது எனநா.
அவரைத் தொடர்ந்து சங்த் துணைத் தலைவர் வைத்திய கலாநிதி ஜின்னாஹ் ஷரீபுத்தின் புலவரை வாழ்த்தி நல்ல கவிதையை வாசித்து அளித்தார். கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் சோசந்திரசேகரன் அவர்கள் தலைமையுரையாற்றிய போது புலவர் கனகரத்தினம் அவர்களுடன் இனைந்து காவல்துறையினருக்குத் தமிழ் கற்பித்த தனது அனுபவங்களைக் கூறினார். ஒரு மொழியைப் பேசுவது மட்டும் போதாது. அதில் புலமையும் வேண்டும். இந்த வகையில், புலவர் அவர்கள் கிட்டத்தட்ட ஏழு மொழிகளையும் இலக்கணத்துடன் முறையாகக் கற்றவர். இன்று நாட்டில் மொழிக் கல்வி கற்பவர்களின் தொகை குறைந்து கொண்டு வருகின்றது. தொழில் வழங்குனர் தொழில்சார் பாடங்களைக் கற்றவர்களையே விரும்புகின்றார்கள். இதனால் கல்வி முறையையே மாற்ற வேண்டியுள்ளது. இதனால் வாரிசுகள் குறைந்து வருகின்றனர். இன்று மொழி சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. தமிழ்மொழியோடு பல மொழிகளையும் ஒப்பிட்டு எழுதிபபுள்ள அவரது திறமையைப் பாராட்டி தனது உரையை நிறைவு செய்தார். நூல் வெளியீட்டுரையை பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி வ.மகேஸ்வரன் அவர்கள் நிகழ்த்தினார். மொழி என்பது மொழியப் படுவது. இது காலந்தோறும் மாற்றமடைந்து கொண்டு வருகின்றது. மொழி எழுத்து, வழக்கு என இருவகைப்படும். வழக்கு மாற்றமடைந்து வருவது. ஒரு மொழி ஒரு பிரதேசத்துக்கு உரியதுமட்டுமல்ல. ஊடாட்டங்களின் போது பல்வேறு மாற்றங்களைச் சந்திக்கின்றது. பல இடர்ப்பாடுளையும்
豆。
 
 
 
 
 
 
 

சந்திக்க வேண்டியுள்ளது. புலவர், இவற்றை விளங்கி நூலை ஆக்கியுள்ளார். சரியான முறையில் இந்நூல் பயன்படுத்தப்பட வேண்டுமென்ற நோக்கில் எழுதப்பட்டுள்ளது. எமது மொழி 2000 ஆண்டுகளுக்கு முன் உள்ளது போல் இப்போது இல்லை. செம்மொழித் தமிழ், இடைக்காலத் தமிழ், நவீனத்துவச் தமிழ் என மாற்றமடைந்து வந்துள்ளது. திராவிட மொழிக் குடும்பத்தின் மூலமொழி தமிழ் மொழியாகும். இதை நூலாசிரியரும் வலியுறுத்திக் கூறியுள்ளார் எனக் குறிப்பிட்டு தனது உரையை நிறைவு செய்ததும் நூல் வெளியீடு இடம்பெற்றது. அகில இலங்கை இந்துமாமன்ற தலைவர் திரு.வி.கயிலாயபிள்ளை அவர்கள் தலைவரிடமிருந்து முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
இலங்கை ஒலிபரப்புக் சுட்டுத்தாபன ஆலோசகர் திருவிரதிருஞானசுந்தரம் அவர்கள் நயவுரை ஆற்றினார். இலங்கை வானொலியில் தமிழ் மொழி நிகழ்ச்சிகளை வழங்கிய காலங் களிலிருந்து புலவருடன் தொடர்பு இருக்கிறது. அக்காலத்தில் தமிழ் மொழி நிகழ்ச்சிகளை வழங்குவது மிக இலகுவாக இருந்தது. புலவர் போன்ற பலர் எமக்கு உதவியாக இருந்தனர். அவரது இந்நூல் நல்ல பயனுள்ள ஒரு நூல் அனைவரும் 鲇、酸 படித்துப் பயன்பெற வேண்டு AN மென்று கேட்டுக் கொண்டார். 昌
அடுத்து நயவுரை வழங்கிய சைவப்புலவர் சு.செல்லத்துரை அவர்கள் நூலாசிரியர் செம்மொழி மகாநாட்டுக்கு, "வீரசோழியமும் சிங்கள இலக்கணமும்" என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரை அனுப்பியுள்ளார். இப்போது மொழி இறக்கம் செய்து நூல்கள் எழுதப்படுகின்றன. தனித்தமிழ், கடுந்தமிழ் தான் உபயோகிக்கப்பட வேண்டுமா? என்று கேட்கிறார்கள். நாங்கள் ஏன் ஏறிச் செல்லக் கூடாது, என்ற சிந்தனை வளரவேண்டும், தமிழ் நியமத் தமிழ். இலக்கண வழு இல்லாமல் பயன்படுத்த வேண்டும். நூலிலுள்ள சில தலைப்புக்களையும் உதாரணங்களையும் சிறப்புகளையும் சுட்டிக் காட்டிப்பேசினார்.
சங்கத் துணைச் செயலாளர் சிபாஸ்க்கரா நன்றியுரை நிகழ்த்தினார். அவர் தனது நன்றியுரையின் போது போரினாலும் சுனாமியாலும் ஒருவரை அல்லது தாய், தந்தையர் இருவரையும் இழந்த 109 மானவர்கள் இளவாலை ஹென்றியரசர் கல்லுரரின் அதிபர் வணக்கத்துக்குரிய யேசுதாசன் அவர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நூல் வெளியீட்டால் பெறப்படும் நிதி அனைத்தும் இம்மாணவச் செல்வங்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்தார். ஹென்றியரசர் கல்லூரி அதிபரின் நன்றிக் கடிதத்தையும் வாசித்துக் காட்டி தலைவரிடம் கையளித்தார்.
அற்றைத் திங்கள்
28.4.20)
அன்றைய அற்றைத் திங்கள் நிகழ்வில் கவிஞர் மு.பொன்னம்பலம் அவர்கள் தனது வாழ்க்கை அனுபவங்கள் இலக்கியத்துரை, கவிதைத்துறையில் அவர் பெற்ற விருதுகள் ஆகியனபற்றி விரிவான உரையை ஆற்றினார். இந்நிகழ்வுக்கு சங்கத்தின் தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்கள் தலைமை தாங்கினார்.
அவர் தனது தலைமையுரையில் கவிஞர் முபொன்னம்பலம் அவர்கள் பற்றிய பல குறிப்புக்களையும் தெரிவித்தார். இலங்கையில் ஒரு முக்கிய

Page 6
தமிழிசை மரபில் 30.04.2010
இலக்கிய வாதியான கவிஞர் மு.பொன்னம்பலம் அவர்கள் கவிதை, குறுநாவல், இலக்கிய விமர்சனம், சிறுகதை, சிறுவர் இலக்கியம் எனப் பல துறைகளில் ஏராளமான பங்களிப்புகள் செய்துள்ளார். தமிழ் இலக்கியம் என்றில்லாது ஆங்கில மொழியிலும் இலக்கியத்திலும் விரிவான அறிவும் பரிச்சயமும் உடையவர். உலகளாவிய ஆங்கில இலக்கியம் என்னும் பின்புலத்திலிருந்து தமிழ் இலக்கிய வளர்ச்சியை மதிப்பிடக் கூடிய ஆற்றல் படைத்தவர். தமிழ்ச் சங்கத்தின் இந்நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு தனது இலக்கியச் சிந்தனைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள முன்வந்திருப்பது எமக்குப் பெருமையைத் தருகிறது. ஈழத்து இலக்கியத் துறையில் இவர் போன்ற ஆளுமையும் சாதனைகளையும் படைத்தவர்கள் ஒருசிலரே. மெய்யியலை ஆழமாகவும் சிறப்பாகவும் பயின்றுள்ள மு.பொன்னம்பலம் அவர்கள் இயற்கையில் ஒரு முதுபெரும் தமிழ் இலக்கியச் சிந்தனையாளர் ஆவார். இவருடைய தமையனார். திரு.மு.தளையசிங்கம் அவர்கள், அவரது காலத்தில் ஒரு புதிய கொள்கையையே முன்வைத்தவர்.
இலக்கியமானது வெறுமனே சமூக பொருளாதார நிலைப்பாட்டிலிருந்து செய்யப்படும் ஆய்வுடன் மட்டும் நின்றுவிடாது அதற்கும் அப்பாலுள்ள ஆத்மார்த்த தளத்திலிருந்து நோக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை வலியுறுத்து கின்ற கொள்கையின் பாற்பட்டவர் திரு.மு.பொ.அவர்கள்.
தமிழ் நாட்டு இலக்கிய உலகில் காத்திரமான இலக்கிய வாதிகளின் கவனத்தைக் கவர்ந்தவர் திரு.மு.பொ.இவ்வகையில் ஈழத்து இலக்கியத்துக்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை தேடித்தந்தவர். இவர் உயர் கல்வி கற்ற வேளையில் சமகாலத்தில் நானும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவன் என்பதைக் கூறிக் கொள்வதில் பெருமையடைகிறேன்.
கவிஞர் மு.பொ. அவர்கள் உரையாற்றுகையில் தனது இலக்கிய அனுபவங்களை விரிவாக எடுத்துக் கூறினார். இளமையிலிருந்து தனது கல்விச் செயற்பாடுகள், தனது குடும்பத்தவரின் பங்களிப்புகள் என்பன பற்றியும், இலக்கியத்துறையில் பல்வேறு பிரிவிலும் தான் பெற்றுக் கொண்ட அனுபவங் களையும் அதன் மூலம் தான் பெற்ற வெற்றிகளையும் சுட்டிக் காட்டினார். தமிழ் நாட்டு இலக்கிய வாதிகளாலும் எனது இலக்கியங்கள் பாராட்டுப் பட்டமை இலங்கைத் தமிழர்களுக்கு கிடைத்த பெருமையாகும். என்னைப் பற்றி இன்றைய தலைவரும் எனது நண்பருமான பேராசிரியர் சந்திரசேகரன் அவர்கள் பலவாறாகப் புகழ்ந்து பேசியுள்ளார். இவை எல்லாம் எனது இலக்கியப் பணிக்குக் கிடைத்த வெற்றியென்றே கூறலாம். விடாமுயற்சியும் ஆர்வமும் ஒருவர் மேற்கொள்ளும் துறையில் வெற்றி பெற வழி வகுக்கின்றன என்றும் கூறினார். பல பய்ன் தரக் கூடிய செய்திகளையும் சேகரிக்கக் கூடியதாக இவரது உரை அமைந்திருந்ததாக பலரும் பாராட்டிப் பேசினர்.
'அருளாளர் மாணிக்கவாசகர்' என்னும் தலைப்பில் திருமதி நிலானி கோபிசங்கர் அவர்கள் உரையிடைப்பட்ட பாட்டை மிகவும் சிறப்பாக நிகழ்த்தினார். தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.டபிள்யூ.எஸ்.செந்தில்நாதன் அவர்கள் தலைமையுரையாற்றினார். அவர் தனது உரையில் திருமதி நிலானி கோபிசங்கரின் கல்வித் தகைமை அவரது ஆற்றல் பற்றி எடுத்துக் கூறினார்.
முதலில், சென்னிப்பத்திலிருந்து ஒரு பாடலை இசையுடன் பாடி அடுத்ததாக பாரொடு விண்ணாய் என்னும் திருவாசகத்தை மோகன இராகத்தில் விருந்தமாக இசைத்தார். மிருதங்கம் இல்லாமலேயே கலாவித்தகர் எஸ்திபாகரன் அவர்களது வயலின் இசையுடன் அநேக திருவாசகங்களையும் பாடி மகிழ்வித்தார்.
 

மாணிக்கவாசகரது வாழ்க்கை முழுவதையும் கூறி இடையிடையே அவர் பாடிய திருவாசகங்களையும் பாடி எல்லோரையும் பரவசப்படுத்தினார். மாணிக்கவாசகருக்கு இறைவன் முத்தியளித்த வரலாற்றையும் விபரமாகக் கூறியதோடு சிவபுராணத்தையும் முழுவதுமாகப் பாடினார். திருப்பள்ளியெழுச்சி திருவெம்பாவைப் பாடல்களையும் பாடினார். புத்தரை வாதில் வென்றமையைக் கூறி திருச்சாழல் பாடல்களையும் பாடினார். திருப்படையாட்சிப் பாடல் யாத்திரைப்பத்து பாடல் ஆகியவற்றையும் பாடி மாணிவாசகர் இறைவனுடன் இரண்டறக் கலந்தார் எனக் கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.
ஓஷோவின் “ஒரு கோப்பைத் தேநீரி’லிருந்து சில துளிகள்
எழுத விரும்பியதை எழுத முடியாததால் கழுதாத கடிதத்தை அனுப்பியிருக்கிறாய். இது நல்லது. மெளனமாக இருப்பது மேலானது. ஆனால், ஒரு எச்சரிக்கை மெளனமும் பேசும், பேசும், பேசும் அப்படிப் பேசும்!
வார்த்தைகள் தம் ஆற்றலை இழந்துவிடும்போதும்
மெளனம் பேசும். ஒரு வரி வெளிப்படுத்தாத பொருளை இடைவெளி வெளிப்படுத்திவிடும். ஆனியத்தால் தழுவ முடியாதது எது?
மெளனத்தால் சொல்ல முடியாதது
எதுவுமே இல்லை. சொற்கள் தோற்று விடுகையில் மெளனம் அர்த்தம் கணக்க நிற்கும். வடிவங்கள் முடியும் இடத்தில் வடிவமின்மை ஆரம்பமாகி விடுகிறது. வேதங்கள் முடியும் இடத்தில் வேதாந்தம் ஆரம்பமாகி விடுகிறது. ஞானம் மடியும்போது "அப்பால்" ஆரம்பிக்கிறது. சொல்லிலிருந்து பெறும் விடுதலையே ge 660 D.
o o o o o e o o o e o o o o o o e o o e o o e o eo e o o o o e o o o o O O O O Ogo o
இருப்பான்.
உண்மை எங்கே இருக்கிறது? அதைத் தேடாதே.
தேடினால் கிடைக்குமா என்ன?
தேடுதலில், தேடுகிறவன் இருந்து கொண்டே
* அதனால், தேடாதே.
ஆனால், உன்னை இழநது விடு. o தன்னை இழப்பவரே - உண்மையைக் காண்டார்.
தேடு! தேடினால் - கண்டடைவாய்' - O
என்று நான் சொல்லமாட்டேன். 0° தன்னை இழப்பவனே கண்டடைவான்' என்று நான் சொல்கிறேன். o O
O

Page 7
awanafasirodh sshaya
கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல.07, 57ஆவது ஒழுங்கை, கொழும்பு 06.
வைகாசி நடைபெறவிருக்கும்
அற்றைத்திங்கள்
28.05.2010 மாதாந்தம் நடைபெறும் கலைச்செல்வன் அவர்கள் பேராசிரியர் சோ.சந்திரசே தாங்குவார்.
தமிழிசை மரபில்.
29.05.2010 தமிழிசை மரபில் "சுப்பி இசைக்கலைமணி திருமதி கள் உரையுடன் கூடிய இன ஆட்சிக்குழு உறுப்பினர் தொடக்கவுரை நிகழ்த்துவ
ஆரோக்கிய வாழ்வுக்கான கலந்துரையாட 30.05.2010 தமிழ்ச் சங்க துணை நிதிச்ெ அவர்களது தலைமையி வழிமுறைகளும்" என்னும் ரையாடல் இடம்பெறவுள்ள
 

மாதம் % நிகழ்வுகளுட் சில
அற்றைத்திங்கள் நிகழ்வில் கலைஞர் உரையாற்றவுள்ளார். தமிழ்ச் சங்கத் தலைவர் கரன் அவர்கள் இந்நிகழ்வுக்கு தலைமை
ரமணிய பாரதியார்” என்னும் தலைப்பில் ஜெகதாம்பிகை கிருபானந்தமூர்த்தி BA அவர் 6LDI iளர். இந்நிகழ்வுக்கு ரு.டபிள்யூ.எஸ்.செந்தில்நாதன் அவர்கள்
சயலாளர் வைத்திய கலாநிதி சி.அனுஷ்யந்தன் ) "உணவு ஒவ்வாமையும் - தவிர்க்கும் தலைப்பில் ஆரோக்கிய வாழ்வுக்கான கலந்து
l.