கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் செய்தி மடல் 2010.12

Page 1
சங்க உறுப்பினர்களுக்கு மட்டும்
sssr GERSITQugęLibL
ேே. செட வெளியீடு : 014 LDTgöLb :
தொழும்புத் தமிழ்ச் சங்க இணையத்தளத்தி "செய்தி மடல்" என்பதன் வடிவம் இ இணையத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள். S6; strugs sittib:www.colombotamilsangam.com தொலைபேசி இல . 2363759 தொலைநகல் 2361381
பொங்குப்
எங்கும் சங்கொடு நற்தாமரை சின் சங்கம்செய் பணிபலவும் தங்கநிகர் சூரியனைச் சுற் தண்பணிகள் செய்வதனால்
பொங்குகின்றோம் புதுவாழ்வும் பலவரிழ்ம்
豪リー স্বল্প ব্লািস্ট্র
திரு.மு.கதிர்காமநாதன் ஆ.இரகுபது தலைவர் பொதுச்
భక్స్టిళ్ల
 
 
 
 
 
 
 
 
 

ಕ್ಲ தமிழ்ச் சங்கம் Ďg5 UDL6ö
மார்கழி ஆண்டு : 2010
ம் "எம்மைப் பற்றி" என்னும் பகுதியிலுள்ள மடலாகும். மேலும் விபரங்களுக்கு எமது
Liaisorsif6): tamilsangamcolomboGyahoo.com
info(a)colombotamilsangam.com
னமாகத் தமிழ்ச் ழைத்துப் பொங்க றிவரப் பூமி
தமிழர் நாமும் * பொங்கல் பூமியெங்கும், பொலிந்து பொங்க ழிந்து பொங்க ? .
ாழ்த்தக்கள்!
பாலறிதரன் செதிருச்செல்வம் செயலாளர் நிதிச்செயலாளர்

Page 2
மார்கழி மாதம் தமிழ்ச்சங்கத்தில்
இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றிய rfshirurrisosur '''
அறிவோர்ஒன்று கூடல் . . . 0.12.201. அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வில் "சீரிய குடும்ப சமூக உறவுகள்" என்னும் தலைப்பில் ’சுவாமி பார்த்தசாரதியின் பிரதம சீடர் திருமதி வே.உமையாள் உரையாற்றினார். ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.க.ஞானசேகரம் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். இன்றைய பேச்சாளர் நாட்டின் பலமேடைகளிலும் சமூக் வாழ்வியல, உளவியல், பகவத்கீதை போன்ற பல்வேறு தலையங்கங்களிலும் சொற்பொழிவு ஆற்றி புகழ்பெற்றவர் என்று சுருக்கமாக அறிமுகம் செய்து வைத்தாா. பேச்சாளர் பேசும்போது, இன்று உறவுகள் நலிவடைந்து சீர்குலைந்த நிலையில் காணப்படுகின்றன. குடும்பங் களுக்கிடையே காணப்ப்டும் பிரச்சினைகளைக் கொண்டே இதனை அறியக் கூடியதாக உள்ளது.
சீரான குடும்ப, சமூக உறவுகள் இருந்திருந்தால் நாம் இந்த தலைப்பைத் தெரிந்தெடுக்க வேண்டிய தேவையில்லை. கொஞ்சம் சந்தோஷமாக இருக்கவென்று வந்தால் இங்கும் பிரச்சினை பற்றியே பேசுகிறீர்களே என நீங்கள் எண்ணுவது எனக்குத் தெரிகிறது. எமது வாழ்வு பற்றிய ஒரு விழிப்புணர்வு வேண்டும். தவறுகளைத் திருத்த முயலவேண்டும். அதனால் தான் உங்களைச் சிந்திக்கத் தூண்டுகிறேன்.
வாழ்க்கை எவ்வாறு வாழவேண்டுமென்ற தெளிவான அடிப்படை அறிவு முதலில் வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு கலை; அது நுட்பமானது. வாழ்க்கை பற்றிக் கற்பதற்கு முயற்சியும் நேரமும் தேவை.
எமக்குத் துன்பம் ஏற்படும்போது மற்றவர்களையும் உலகையும் குறைகூறுகிறோம். எமது பிரச்சினைக்குப் பிறரே காரணம் எனச் சொல்கிறோம். ஆனால் எல்லாவற்றுக்கும் காரணம் நாங்களே. எங்களைத் திருத்தினால் உலகத்தைத் திருத்தலாம். முகத்தி க்கும் கறுப்புப் புள்ளியைப் போக்கக் கண்ணாடியைத் துடைப் ால் பயனில்லை.
பலாப்பழம் சுவையாகவும் மணமாகவும் இருக்கலாம். ஆனால் அதை முறைப்படி எடுத்துச் சாப்பிடத் தெரிய வேண்டும். வாழ்க்கை என்பது அனுபவங்களின் ஓட்டமாகும். முதலாவது தனிமனித அனுபவம், இரண்டாவது உலக அனுபவம். உலகத்துக்கு ஏற்ப
VRfrdè Gugo CRIRhGub,
upa Bah Giahualaủ n-L6ò, toơIIb, L#ệ 6ĩ6ằp Qpsouth (36iĩị55 OT TLLLLS LLLLLLT LLSLLLS LTLLTCS TTT TTT TTTTT உள்ளடக்கியது.
புத்தி எதையும் சிந்திப்பது தீர்மானிப்பது, நாம் மனதை வைத்தா புத்தியை வைந்தா உறவுகளைப் பேணுகிறோம்? மனதை விட
 

tmlim
புத்தியைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும். வாழ்க்கையை வாழும் முறையற்றிய திறன் இருக்க வேண்டும்.
மிருகங்களுக்கு ஒரு செயலைத் தேர்வு செய்யவேண்டும் என்ற தேவை இல்லை. இந்த உரை மனிதர்களுக்கே தேவையானது. தகவல்கள் தான் முக்கியம். புத்திசாலித் தனம் உறவுகளைப் பேண போதாது. புத்தி (Intelect) தேவை.
சிந்தனையைத் தூண்டும் பல கதைகளைக் கூறி தனது உரைக்கு உரமூட்டினார். பயனுள்ள இவரது பேச்சைப் பலரும் பாராட்டினர்.
இலக்கியக்களம் 32
03. 2.201)
இலக்கியக்களம் நிகழ்வில் “திருமதிகலோச்சனா மேகநாதன்" என்னும் பொருள் பற்றி சட்டத்தரணி ஜி.இராஜகுலேந்திரா உரை யாற்றினார். இந்நிகழ்வுக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் திருமதி பத்மா சோமகாந்தன் தலைமை தாங்கினார்.
பேச்சாளர் பற்றிய அறிமுகவுரையில், திரு.இராஜகுலேந்திரா ஒரு சிறந்த பேச்சாளர். ஒரு பெண்ணைப் பற்றி பேசுவது மிகவும் வரவேற்கத்தக்கது. நானும் பெண்களைப் பற்றிப் பேசுவதில் மகிழ்ச்சி கொள்பவள். ஆணும் பெண்ணும் இணைந்து செல்லும் போது சமூகம் மேம்பாட்டையும். பெண்களது திறனும் வெளிக்
கொணரப்பட வேண்டும். பேச்சாளரும் அந்த வகையில் சிறந்த
கொள்கைகளைக் கொண்டவர். அவர் இப்பொழுது உரையாற்றுவார் எனக் கூறி அமர்ந்தார் தலைவர்.
எனது பேச்சின் தலைப்பில் ஒரு வியப்பு இருக்கிறது. சிலரைப் பற்றி அறிந்திருக்கிறோம். சிலர் ஆண்களால் அறியப்பட்டுள்ளனர். ஆனால் இவ்வாறானதொரு பெண் பாத்திரம் பலராலும் அறியப்பட வில்லை. பேசப்படவில்லை.
இந்த அம்மையாரைப் பற்றி 1947இல் ஒரு படம் கூட வெளி வந்துள்ளது. இராவணன் மகன் இந்திரஜித்தின் மனைவி தான் சுலோச்சனா. எஸ்.கே.ராமராஜன் என்பவர் மேகநாதன் பற்றி எழுதி வெளியிட் டுள்ளார். மனைவியின் உயிர், உடைமையெல்லாம் கணவனுக்கே சொந்தம் என்ற காலகட்டத்தில் வாழ்ந்தவள் ஆதிசேஷனுடைய மகள் சுலோச்சனா. சுலோச்சனா சிறந்த அழகி. மேகநாதன் இடி போன்ற ஒலியுடன் வாய்விட்டழுதவன். இந்திரனை வென்ற படியால் இந்திரஜித் என்ற பெயர் பெற்றான். அவன் ஒரு சிறந்த வீரன்.
தந்தை பிழைசெய்த போதும், தந்தையார் பக்கம் சென்று போரிட்டான். பல நாட்களின் பின், தான் போருக்குப் போகப் போகிறேன் என்று சொல்ல வந்தான். சுலோச்சனா மிகவும் வருந்து கிறாள். 20ம் நூற்றாண்டில் பாரதி காட்டிய பாஞ்சாலி அதாவது என்னை வைத்து ஆடிய பின் தம்மை வைத்து இழந்தனரா? தம்மை வைத்து சூதாடி தம்மை இழந்த பின் என்னை வைத்து ஆடினாரா? என்று கேட்டது போல் துணிவுடன் கேட்டாள். இன்னொருவனுடைய மனைவி யைக் கவர்ந்து வந்த உன் தந்தைக்காகப் போராடுவது நியாயமா? எனச் சிந்தித்துப்போ. அறம் நிற்கும் பக்கம் நின்று போராடச் ம் இழக்கத்தயார். நீ செல்வதால்
சென்றால் நான் எல்லா நல. பளையு

Page 3
தீராத பழியைத் தேடப் போகிறாய். இதுபோன்ற செயலுக்கு நான் துணை போகலாமா? அக்காலத்தில் பெண்களின் உரிமைக்காக இவளைப்போல் எவரும் குரல் கொடுக்கவில்லை.
நிகும்பலை யாகத்தில் இலக்குவனும் மேகநாதனும் போரிடு கின்றனர். இலக்குவனால் மேகநாதன் கரம் துண்ைடிக்கப்பட்டு அது சுலோச்சனாவின் மடியில் விழுகிறது. எனது கணவனுக்கு என்ன நடந்தது என்று அந்தக் கரத்திடம் கேட்க, அது முழுவரலாற்றையும் கூறியது. கரத்தைக் கொண்டு இராவணனிடம் செல்கிறாள். எனது கணவனுக்கு இறுதிக்கடன் செய்ய அவரது தலையைப் பெற்றுத் தரவேண்டும் என்று மன்றாடுகிறாள். இராவணன் மறுக்கிறான். நான் இராமனிடம் செல்லப்போகிறேன் என்று கூறிச் செல்கிறாள் சுலோச்சனா, அங்கு சென்று இராமனிடம் தலையைக் கேட்கிறாள். தலையை அனுமன் கொண்டுவந்து காட்டி இது உனது கனவ ணுinடயதா என்று கேட்கிறான். தலையைப் பார்த்து "நி யாரென்று சொல்' என்று சுலோச்சனா கேட்கிறாள். அப்போது தலை யார் என்று கூறியதும் தலையையும் கரத்தையும் பெற்று இறுதிக்கடன் முடித்து அந்தச் சிதையில் உடன்கட்டை ஏறுகிறாள். இவ்வாறான பெண் பாத்திரங்களை வெளிக் கொணர வேண்டும் என்ற உணர்வு எம்மத்தியில் ஏற்பட வேண்டும் எனக் கூறி நிறைவு செய்தார். ‘சப்பன்ஸ்”இல் இருந்த தலைப்பைச் சரியாகக் கண்டுபிடித்துக் கூறிய பொதுச் செயலாளருக்குப் பாராட்டும் தெரிவித்தார். இலவச வைத்திய பரிசோதனைகளும் ஆலோசனைகளும் 04.12.2 |) 10 கொழும்பு மருத்துவபீட தமிழ்ச் சங்க மாணவர்களின் அணு சரணையுடன் இலவச வைத்திய பரிசோதனைகளும் ஆலோசனை கரும் என்னும் நிகழ்வு தமிழச் சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டது. நிகழ்வை தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் ஆரம்
- - :: -
பித்து வைத்தார். இந்நிகழ்வில் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஒப்வொருவரினதும் உயரம் , எடை, கண் பார்வை, குருதிப் பரிசோதனை, குருதி அமுக்கம் என்பன பரிசோதிக்கப்பட்டு அவற்றுக்
குரிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன டைந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. இத்தகு பயனுள்ள பரிசோதனைகளும் ஆலோசனைகளும் தொடர்ந்து நடைபெற
வேண்டுமென பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
YSZSSSZSSSZZSLeeLSGGGCLCL S TCyL uTLTeTS sOsCCLTSLG GL
 
 

நூலகம் (சிறுவர் பகுதி) |l, 12.2010 "கதை கதையாம் காரியமாம்" என்ற நிகழ்வில் திருமதி ரதி சோதிலிங்கம் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அறிவோர்ஒன்று கூடல் 8, 12.2010 அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வில் "சுவாமி விபுலானந்தரும்,
புலவர் மணிபெரியதம்பிப்பிள்ளையும்" என்னும் தலைப்பில் வித்து வான் க.செபரத்தினம் (இளைப்பாறிய அதிபர்) அவர்கள் உரை யாற்றினார். ஆட்சிக்குழு உறுப்பினர் திருமதி றஜனி சந்திரலிங்கம் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். தலைவர் தமது உரையில், பேச்சாளர் தற்போது கனடாவில் வாழ்கிறார் எனவும் உதவி ஆசிரிய ராகவும், இலங்கை கல்வி நிர்வாக சேவையில் அதிபராகவும் கடமை யாற்றி ஓய்வுபெற்றார் எனவும் குறிப்பிட்டார். பல நூல்கள் எழுதி வெளியிட்ட இவர் "கிழக்கிலங்கையில் மண்ணின் புகழ் பூத்த மைந்தர்கள்' என்ற நூலை தொகுத்து வழங்கியுள்ளார். பல பரிசில்கள், பாராட்டுக்கள், பட்டங்களைப் பெற்ற இவர் இன்று ‘சுவாமி விபுலானந்தரும் புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையும்' என்ற தலைப்பில் பேச உள்ளார் எனக் கூறி சுவாமி விபுலானந்தரின் "வெள்ளை நிற மல்லிகையோ.." என்ற கவிதையையும் பாடி பேச்சாளரைப் பேச அழைத்தார்.
பேச்சாளர் வித்துவான் க.செபரத்தினம் "நான் இன்னமும் என்னை ஒரு மாணவனாகவே நினைக்கிறேன்” - இன்னமும் கற்றுக் கொண்டு தான் இருக்கிறேன் - இப்பொழுதும் நிறைய வாசிக்கிறேன் - நீங்களும் உங்களை மாணவர்களாகவே நினைத்துக்கொள்ள வேண்டும்" என்று அதிரடியாக ஆரம்பித்து அருமையாக சுமார் ஒரு மணி நேரம் தனது சொற்பொழிவை ஆற்றினார்.
சுவாமி விபுலானந்தரும், புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையும் கிழக்கு மாகாணம் தந்த இரண்டு தவப் புதல்வர்கள். ஆனால் இருவரும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கே சொந்தமானவர்கள். வடக்கு, கிழக்கு, மன்னார், மலையகம், வவுனியா என்று பிரிவு காட்டுவதால் தான் எம்மவர் இந்தக் கீழ் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார்கள் என்று கூறி இரு பெரும் தமிழறிஞர்களின் அருமை பெருமைகளையும், அவர்களுடைய ஒற்றுமையான பண்புகள், படைத்த நூல்கள், ஆற்றிய சமூக, சமய, தமிழ்ப் பணிகளை விரிவாக எடுத்துக் கூறினார்.
பார்வையாளர் கருத்துரையின் போது திருமதி பத்மா சோம காந்தன் அவர்கள் "கண்களை மூடி இவரது பேச்சை யாராவது கேட்டிருந்தால் யாரோ இருபத்தைந்து வயது இளைஞன் தான் பேசுகிறார் என்று எண்ணுவர்" என்று குறிப்பிட்டது சாலவும் பொருந்தும். அவரின் கூற்று உண்மைதான் நம்பமாட்டீர்கள்! பேச்சாளரின் வயது எண்பது!

Page 4
momem dalah Ssodakušalsrb 33 - . ', : ጎs : · “(ኘ” 10, 12.200 இலக்கியக்களம் நிகழ்வில் “படித்ததும் பிடித்ததும்" என்னும் பொருள் பற்றி கவிஞர் சடாகோபன் அவர்கள் உரையாற்றினார். ஆட்சிக்குழு உறுப்பினரும் பரிசில் நிதியச் செயலாளருமான திரு.ஆ.குகழுர்த்தி தலைமை தாங்கினார்.
தலைவர் தமது உரையில், பேச்சாளர் அரசில் உயர் பதவியிலிருந் தாலும் தமிழ்ச் சங்க மேடைக்குப் புதியவரல்ல என்றும் பல உரைகள், கருத்தரங்குகள், கவியரங்கங்களில் கலந்துகொண்டு அனைவரதும் பாராட்டைப் பெற்றவர் என்று கூறினார். நாடகங்களும் அரங்கேற்றி யுள்ளார். இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழும் இளைஞர்; அவரின் பின்னே ஒரு இளைஞர் பட்டாளம் உண்டு. கவிதைத் தொகுப்பொன்றையும் வெளியிட்டுள்ளார். அவரது மனைவியாரும் சங்க நிகழ்வுகளில் கலந்து கொள்பவர் என்று கூறி முன்பு சங்கத்தில் பிரசித்தி பெற்ற நிகழ்வாக இருந்த "படித்ததும் பிடித்ததும்" என்ற நிகழ்வின் பெயரையே தலைப்பாகக் கொண்டு உரையாற்றவுள்ளார். என்ன பேசப்போகின்றார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறி கவிஞரைப் பேச அழைத்தார்.
கவிஞர் சடாகோபன் முன்பு இங்கு நடந்த தனக்குப் பிடித்த நிகழ்வான "படித்ததும் பிடித்ததும்” நிகழ்வின் தலைப்பிலே கவிஞர் கருணாகரன் எழுதிய “பலியாடு” என்ற நூலிலிருந்து பிடித்த கவிதைகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் என்று கூறி தமது உரையை சுவாரசியமாக ஆரம்பித்தார்.
"நாங்கள் எதற்கு
சாட்சிகளாக்கப்பட்டிருக்கிறோம் அல்லது எதற்காக
சாட்சிகளாக்கப்பட்டிருக்கிறோம் எனக்கெதுவும் புரியவில்லை
பகலையும், இரவையும் கண்டு அஞ்சும் என்
கண்களை என்ன செய்வேன்?” என்ற ஆரம்ப கவிதையுடன் ஆரம்பித்த கவிஞர் தனக்கே இயல்பான பாணியில் கருணாகரனின் பல கவிதைகளை அவையோருடன் பகிர்ந்து கொண்டார்.
“தூக்கத்தைத் தொலைத்த கிழவன்” தனக்கு மிகவும் பிடித்த கவிதை எனக் கூறி “பின்னிரவில் தூக்கமின்றித் தவிக்கும் கிழவன் கனவு அழைத்துப் போகும் இளமைக் காலத்துக்கும் பிள்ளைகள் கொண்டு சென்ற தூக்கத்துக்குமிடையில் கிடந்து அவிகிறான்
அதிகாலையில் நிராதரவின் தத்தளிப்பு நிரம்பிய கிழவனின் குரலை கருணையுள்ள தொலைபேசி
 

எடுத்துச் செல்ல முயன்றபோதும் முடியவில்லை பிள்ளையின் இரவு கதவைச் சாத்தியிருந்தது ஆழ்ந்த உறக்கத்தில்.
அப்போது அங்கே நள்ளிரவு வழியற்ற கிழவன் தன்னுடைய சூரியனை பின்னிரவிலிருந்து பெயர்த்தெடுத்து அனுப்புகிறான் பிள்ளையின் குரலை அது எழுப்பட்டுமென்று.
உலகம் சுருங்கியதென்று சொன்னவர் கண்களில்
கொப்பளிக்கும் கண்ணிரை
எந்தப் போத்தலில் அடைப்பேன்?" என்ற கவிதையை ஆணித்தரமாக இரண்டு தரம் கூறி அமர்ந்தார். பார்வையாளர்கள் கனத்த இதயங்களுடன் வீடு சென்றனர்.
Suraosib (afgedio učeš60
1.12.2010 "கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில் செல்வி கலா வடிவேற்பிள்ளை கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
¿sign'Las 6soardsasá8orf
3.12.2010 இயல் இசை நாடகம் என்ற முத்தமிழையும் வளர்த்துவரும் எமது சங்கம் மார்கழி மாதம் தென்னிந்தியாவில் நடைபெறும் இசை விழாவுக்குக் கட்டியம் கூறுவது போல் எம்நாட்டிலும் இசைக் கலைஞர் இசைகளைப் பயன்படுத்தி இசை நிகழ்ச்சி வழங்க முன்வந்துள்ளது. அந்த வரிசையில் இன்றைய நிகழ்ச்சியில் முதுமாணி செல்வி ஹம்ஸத்வனி சோமசுந்தரக்குருக்கள் அவர்களின் இசைக்கச்சேரி இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு யாழ்.இராமநாதன் இசைக்கல்லூரியின் முதல் முறையாக இசைப்பட்டப் படிப்பை ஆரம்பித்து வைத்த சங்கத் தின் துணைத் தலைவர் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் தலைமை தாங்கினார். தனது உரையில் இசை பற்றியும், இசைக்கப் போகின்றவர் பற்றியும் சுருக்கமான குறிப்புக்களைக் கூறி கச்சேரிக்கு
வழி சமைத்தார்.
இசைக்கலைமாணி அவர்கள் ஆரம்பத்திலிருந்தே பல இனிமை யான கீர்த்தனைகளையும் ராகங்களையும் பாடி சபையோரை மகிழ்வித்தார். நல்ல குரல்வளம் கொண்ட அவருக்கு சிறந்த எதிர்காலம் உண்டெனப் பலரும் பேசிக் கொண்டனர். அணி செய்கலைஞர்களாக இசைக்கலா வித்தகர் திவாகரன் (வயலின்) இசைக்கலைமாணி மகேந்திரன்(மிருதங்கம்) கலந்து கொண்டு கச்சேரிக்கு மேலும் மெருகூட்டினர். கலாசூரி ரீமதி அருந்ததி ரீரங்கநாதன் அவர்கள் சிறப்புரை ஆற்றும்போது தமிழ்க் கீர்த்தனை

Page 5
இவரது இசைப்பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றும். இவர் பல போட்டிகளில் பங்குகொண்டு திறமையாகப் பாடியுள்ளார். அவரது திறமை மேலும் வளர வேண்டுமென வாழ்த்தினார். தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் கலைஞர்களுக்கு சங்க அன்பளிப்புக்களை வழங்கிக் கெளரவித்தார். பொதுச் செயலாளர் திரு.ஆ.இரகுபதி பாலறிதரன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி நன்றியுரையையும் ஆற்றி நிகழ்வை நிறைவு செய்தார். இந்த நாள் ஒரு அலுவலக தினமாக இருந்த போதும் மண்டபம் நிறைந்து
வழிந்தது குறிப்பிடத்தக்கது.
அறிவேர்ஒன்று கூடல் 15.12.201) அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வில் வடமாகாண சபை பொது சேவை ஆணைக்குழுவின் தலைவர் திரு.ப.க.பரமலிங்கம் அவர்கள் “மாறிவரும் அரச சேவை - ஒரு கண்ணோட்டம்” என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். ஆட்சிக்குழு உறுப்பினர் திருமதி புவனேஸ்வரி அரியரத்தினம் தலைமையேற்று உரையாற்றும் போது, பேச்சாளர் பற்றிய சில குறிப்புக்களைக் கூறினார். பேச்சாளர் நயினாதீவில் பிறந்து அங்கேயே உயர்கல்வியை நிறைவு செய்து எழுதுவினைஞர் சேவையில் தனது அரசபணியை ஆரம்பித்து நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, மொனறாகலை, கொழும்பு, திருகோணமலை போன்ற பல மாவட்டங்களிலும் பணியாற்றிய நல்ல அனுபவம் பெற்றவர். வடகிழக்கு மாகாண பொதுநிர்வாக சேவை அமைச்சின் செயலாள ராகப் பணியாற்றியதோடு வேறு அமைச்சுக்களிலும் பணியாற்றியதால் மாகாணசபையின் பயன்கள் பற்றி நன்கு தெரிந்திருக்கிறார் என்று கூறி அவரை உரையாற்றுமாறு அழைத்தார்.
பேச்சாளர் தனது உரையில் தமிழ்ச் சங்க செயலாளர் திரு.ஆ.இரகுபதி பாலழரீதரன் பலமுறை என்னிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்று உரையாற்றுகிறேன். அவரின் தந்தை அமரர், அதிபர் க.சபா-ஆனந்தர் BA(Lond) BOL(Madras) அவர்களுடன் நாடகம், பட்டிமன்றம் போன்ற வற்றில் பங்கு கொண்டுள்ளேன். அவர் எனக்கு ஒரு குருவாகவே விளங்கினார். எனது உயர்வில் மிகுந்த விருப்பம் கொண்டிருந்த அப்பெரியவரை நினைத்து இவ்வுரையை அவருக்கு அர்ப்பணிக் கின்றேன் என்று கூறினார்.
1957ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் அரசசேவைக்கு ஒரு தனிமதிப்பும், கெளரவமும் இருந்தது. தொழில் பாதுகாப்பு இருந்தது. இன்று அரச சேவை அரசியல் மயப்படுத்தப்பட்டுவிட்டது. 1957க்கு முற்பட்ட காலப் பகுதியில் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றவர் களே சிவில் சேவையில் இணைந்து கொண்டனர். அதன் பின்னர் இலங்கையரும் தெரிவு செய்யப்பட்டனர்.
முன்பு எமது மேற்பார்வையாளர்கள் நல்ல பலவிடயங்களை எளிமையாக எடுத்துக் கூறுவர். அன்று பொதுசன தொடர்பாடல் சிறபாக இருந்தது. ஒரு அலுவலகத்துக்கு ஒரு பொது மகனோ அல்லது வேறு நிறுவனமோ எழுதும் கடிதங்களுக்கு 3 நாட்களுக்குள்
 

பதில் அனுப்ப வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இவ்வாறான நிகழ்வு கிட்டத்தட்ட 10 வருடங்கள் தொடர்ந்தன.
மட்டக்களப்பில் 5 அரச அதிபர்களின் கீழ் வேலை செய்யும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அது எனது பொற்காலம். அக்காலத்தில் ஒரு அரச அதிபர் ஒரு இடத்தில் 6 அல்லது 8 மாதங்களே கடமையாற்றுவார். இன்று போல் 8, 10 வருடங்கள் கடமையாற்றுவ தில்லை. 70, 71களில் அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு சேவை யாக மாறத் தொடங்கிவிட்டது. சுதந்திரமாக இயங்க முடியவில்லை. இதன் காரணமாக மட்டக்களப்பில் அரச அதிபராகவிருந்த திரு.B.R.தேவராஜா, வவுனியா அரச அதிபர் திரு.நெவில் ஜெயவீர ஆகியோர் தமது பதவிகளை விட்டு விலகிச் சென்றனர்.
66, 67ம் ஆண்டுகளில் அரச சேவையில் பெண்கள் 15 வீதமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தனர். மாகாண சபை முறை வந்த பின் 20.9 வீதமாக உயர்ந்தது. நிர்வாக சேவையில் பெண்கள் இருந்த போதும் எதிர்பார்த்த பலன் இல்லையென்றே கூறலாம்.
1987இல் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை கிராமப்புற மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கொள்ளலாம். அந்தந்த மாகாண சபை களில் கடமையாற்றலாம். 1990இல் பிரேமதாச அவர்கள் நிர்வாகத்தை மக்களின் கைகளில் கொடுப்பதாகக் கூறி பன்முகப்படுத்தப்பட்டதாகச் செய்தார். பிரதேச செயலாளர்கள் மாகாண சபைக்குக் கீழ் கொண்டு வரப்பட்டனர். இதனால் பீதியடைந்த மத்திய அரசாங்கம், மாகாண சபையின் அனுமதியின்றியே அதிகாரங்களைப் படிப்படியாக தன்னிடம் எடுத்துக் கொண்டது.
மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு மாகாண சபை ஊழியர்களை விட சலுகைகள் கூடுதலாக வழங்கப்படுகின்றன. முரண்பட்ட முகாமைத்துவங்களால் பல சிரமங்கள் ஏற்பட்டன. அரச சேவையாளர் பலர் 83இன் பின் வடகிழக்கு மாகாணங்களிலிருந்து வெளியேறினர். 4490 சுற்று நிருபத்தால் பலர் ஓய்வு பெற்றனர்.
யுத்தம் முடிவடைந்த பின்னும் அரச சேவையாளருக்கு மேலதிக சுமைகள் (வடகிழக்கு மாகாணம்) ஏற்படலாயிற்று. மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என மேலதிக பணிகள் குவிந்தன. 1590 சுற்று நிருபப்படி இன, மாவட்ட அடிப்படையில் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு இடம் பெறவேண்டும் என பிரேமதாச அவர்கள் அறிவித்திருந்தும் இன்று நிர்வாக சேவைக்குத் தெரிவான 257 பேரில் ஒரு தமிழரும் இடம் பெறாதது விசித்திரமாக உள்ளது; வேதனையாக உள்ளது.
பொதுசன தொடர்பாடல் முறைமை ஒழுங்காகப் பின்பற்றப்படுவ தில்லை. இது மாகாணசபைகளில் ஒரளவு முன்னேற்றகரமாகவுள்ளது. ஒழுக்கக் கட்டுப்பாடு குறைவடைந்துள்ளது. கடமையுணர்வு கொண்ட வர்களும் தீர்மானம் எதுவும் எடுக்க முடியாத நிலையிலுள்ளனர். அரசியல் தலைமைத்துவம் சரியாக இயங்கினால் அரசசேவை அதை விடச் சிறப்பாக அமையும். நெப்போலியன், பாகியன் போன்றோரது எடுகோள்களைக் கூறி பயனுள்ள, நல்லதொரு உரையை நிறைவு செய்தார்.

Page 6
இலக்கியக்களம் 34 17.12.2010 இன்றைய நிகழ்வுக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.க.சுந்தரமூர்த்தி தலைமையேற்றார். ஆரம்பத்தில் தெய்வங்களைப் பாடி இலக்கியம் செய்தனர். பின்னர் மன்னர்களைப் பாடிப் பரிசு பெற்றனர். அதன் பின் மக்கள் மயப்படுத்தப்பட்ட காவியங்களைப் படைத்தார்கள். இம்மரபு இன்று வரை செவ்வனே நடைபெற்று வருகிறது எனக் கூறி பேச்சாளரை திரு.இரவீந்திரன் (ஆசிரியர்) அவர்களை உரையாற்று மாறு அழைத்தார்.
பேச்சாளர் உரையாற்றும் போது இலக்கியங்கள் பொதுமக்கள் சார்ந்த கருப்பொருளைத் தாங்கி இன்று வளர்ந்து வருகின்றன.
சங்க இலக்கியங்கள் பொதுமக்கள் பற்றிக் கூறுகின்றன. பத்துப் பாட்டு இலக்கியங்களில் ஆற்றுப்படுத்தும் செய்திகளைக் காணலாம். பரிசு பெற்ற புலவர்கள் ஏனைய புலவர்களை புரவலரை நோக்கி ஆற்றுப்படுத்தினர்.
தொல்காப்பியம் அடிநிலை மக்களின் வாழ்வை முன்னிலைப் படுத்துகின்றது. சங்க மருவிய காலத்தில் எழுந்த திருக்குறளும் பொதுமக்கள் சார்ந்ததே. உதாரணமாக “பிறப்பொக்கும் எல்லாவு யிர்க்கும்.” என்னும் குறளைக் கூறலாம். பல்லவர் காலத்திலும் இவ்வாறே இருந்தன. சிலப்பதிகாரம் குடிமக்கள் இலக்கியமாகும். பல்லவர் காலப் பக்தி இலக்கியங்களும் பொதுமக்கள் சார்ந்தவையே. சோழர்கால பெரியபுராணம் 63நாயன் மார்களைப் பற்றிக் குறிப்பிடு கையில் பொதுமக்கள் சார்ந்தவையாகவே காணப்படுகிறது. கண்ணப்ப நாயனார் சரித்திரம் கூறும்போது பக்தி உணர்வே மிகுந்து காணப்படு கிறது. நாயக்கர் கால இலக்கியங்கள் முழுவதும் மக்கள் சார்ந் தவையே. இரட்டையர், காளமேகம் போன்ற்வர்களது கவிகள் வசைப் பாடல்களாக இருந்தன. பள்ளு இலக்கியங்களும் பொதுமக்கள் சார்ந்தவையாகவே இருந்தன.
மன்னன், பள்ளி, ஆண்டகை தொடர்பாடல் பற்றிக் குறிப்பிட்டுள் 1ளனர். நொண்டி நாடகம் களவு இலக்கியம் பற்றிக் கூறுகிறது. குற்றாலக் குறிவஞ்சியில் குறி சொல்லுதல், கடவுள் வாழ்த்துச் செய்திகளைக் காணலாம்.
19ஆம், 20ஆம் நூற்றாண்டு இலக்கியங்கள் கிட்டத்தட்ட அனைத்தும் பொதுமக்கள் இலக்கியங்களாகவே காணப்படுகின்றன.
சங்கமருவிய காலத்தில் 11 அற இலக்கியங்கள் எழுந்துள்ளன. சங்க இலக்கியச் செய்யுள்களில் அறம் எவ்வாறு பேணப்பட்டது என்பதைக் காணலாம். அன்பும் அறனும் இணைந்து காணப்பட்டன. அறியாமையை அறுத்தெறிதல் எனப்பேசப்பட்டது. பன்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல். செறிவு எனப்படுவது கூறியது கூறாமை, நீதி தவறாது ஒழுகுதல் நிறைவு எனப்பட்டது. பொருள் இன்றியமையாதது. அதை அற வழியில் ஈட்டவேண்டுமெனப்படுகிறது.
வெறுமனே காதலும் போரும் என வாழ்ந்த மக்கள் சங்கமருவிய காலத்தில் அறக் கருத்துக்களைப் பேணும் தன்மையைக் காண்ப தோடு அறவழியில் பொருள் தேடுவதையும் காணலாம்.
சங்க இலக்கியங்களில் 60 அறப் பாடல்களைக் காண்கிறோம்.
 

grocasib
18.12.2010
அவரவர் செயல்களுக்கேற்ற பலன்களை ஒருவர் அனுபவித்தே திர வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.
சங்க இலக்கியங்களில் கூடுதலாக அற இலக்கியங்களைக் காணலாம். அங்கிருந்தே அது வளர்ச்சி பெற்று வருவதையும் காணலாம். நல்ல உவமைகள் கையாளப்பட்டுள்ளன. சங்க நூல்களில் உள்ளுறை உவமை, இறைச்சிப் பொருள் என்பன விரிவாகக் கூறப்பட் டுள்ளன. பல்லவர் காலப் பக்தி இலக்கியம் பற்றிப் பேசும் போது பல்லவர் கால பக்தி இயக்கங்கள் தான் பக்தி இலக்கியங்களை வளர்த்தன எனலாம், 12 ஆழ்வார்களும் சமயம், தத்துவம் பற்றி விரிவாகக் கூறியுள்ளனர். இராமானுஜர் பற்றியும் சங்கரர் பற்றியும் ஒப்பிட்டுப் பேசி நிறைவு செய்தார்.
(சிறுவர் பகுதி)
“கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில் செல்வி அ.வளர்மதி கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து
மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
ஆட்சிக்குழு கட்டம்
19.12.2010
காலை 10.00 மணியளவில் ஆட்சிக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
அற்றைத்திங்கள் - திருமதி வசந்தா வைத்தியநாதன் உரையாற்றினார்
20.12.2010
அற்றைத் திங்கள் நிகழ்வுக்கு சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காம நாதன் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் கூறியதாவது, அருள்மொழி அரசி வசந்தா வைத்தியநாதன் அவர் கள் ஒரு சிறந்த சமய, இலக்கியப் பேச்சாளர் என்பதை அனைவரும் அறிவீர்கள். அவரது உரையை முதியோர் மட்டுமல்ல இளைஞர் களும் கேட்டு இரசிக்கலாம் என்றார். இவர் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். தஞ்சாவூரில் பிறந்து ஆரம்பக்கல்வியை அங்கு பெற்ற பின் 9, 10, 11ஆம் வகுப்புகளில் தருமபுரம் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார். தருமபுர ஆதீனம் இவருக்கு “தொண்டர் திலகம்” என்ற பட்டத்தை வழங்கி கெளர வித்தது. இவரது உறவுக்காரரான வங்கியாளர் திரு வைத்தியநாதன் அவர்களை 1962ஆம் ஆண்டு திருமணம் செய்து இலங்கைக்கு வநதாா.
இவரது கணவர் யாழ்.நீர்வேலியில் பிறந்தவர். முதலில் காலியில் தங்கியிருந்தார். அவரது கணவர் தொழில் நிமித்தம் செல்லும் இடங் களெல்லாம் இவரும் சென்றார். அம்மா அவர்களுக்கு நல்லை ஆதீன முதல்வர் மணிபாகவதர் அவர்கள் “அருள்மொழி அரசி” என்னும் பட்டத்தை வழங்கிக் கெளரவித்தார் இந்தச் சிறந்த பட்டமே இவருக்கு இன்றும் நிலைத்து நிற்கிறது என்ற செய்திகளைக் கூறி
அம்மாவைப் பேசுமாறு கேட்டுக் கொண்டார்.
அம்மையார், இனிய ஒரு அம்பிகை பாடலுடன் தனது உரையைத் தொடங்கினார். இலக்கியம் என்பதே ஒரு காலக் கண்ணாடிதான்.
மனிதர்கள் கற்பனையிலே தான் அதிக காலம் வாழ்கிறார்கள்.
ஜர் རྟ

Page 7
எனது கணவர் எனக்கு மிக அனுசரணையாகவிருந்தார். நான் அடிக்கடி கடந்தகால நிகழ்வுகளை மீட்டிக் கொண்டிருப்பேன். திருமணம் இறைவனாலேயே தீர்மானிக்கப்படுகிறது. திருமணமாகி நாங்கள் முதன்முதலில் பார்த்த திரைப் படம் “பதிபக்தி".
ஆரம்பத்திலேயே பல்விதமான சமையலைப் பற்றிச் சொல்லி பார்வையாளர்கள் நாவில் எச்சில் ஊறும்படி செய்துவிட்டார். எச்சிலை விழுங்குவதற்கு முன் ஏனைய விடயங்களையும் கூறி அவற்றையும் விழுங்கும் படி செய்தார் எனலாம்.
10இற்கு மேற்பட்ட எண்ணிக்கையைக் கொண்டது எமது குடும்பம். கூடி இருந்து உண்பது விளையாடுவது என்பதே ஒரு அலாதி இன்பம். கம்பன் விழாவுக்கு வரும் விருந்தினருக்கு உணவு வழங்கும் பணியை நான் செய்து வந்தேன். இசைக்கச்சேரியை மிக நுட்பமாகச் செய்யும் திரு.சேஷகோபாலன். அவர்கள் உணவை மிக இரசித்து உண்பதே ஒரு தனி அழகு.
“வெல்லும் சொல்இன்மை அறிந்து ஒரு சொல்லைச் சொல்ல. வேண்டும்” என வள்ளுவர் சொன்னதில் எனக்கு உடன்பாடு உண்டு. அத்தகு பேச்சில் எனக்கு விருப்பம் மேலிட எனது பேச்சுக்கலையை வளர்ப்பதற்கு திருமதி TN.அனந்தநாயகி அவர்களை மானசீகக் குரு வாகக் கொண்டேன். குழந்தையம்மா, இராஜேஸ்வரி போன்றோரும் என்னைக் கவர்ந்த பேச்சாளர்கள்.
தாயும் தந்தையும் எனக்கு வழிகாட்டினர். நாம் படிக்கும் போது தாயாரும் எம்முடனிருப்பார். இயலுக்குத் தாயார் என்றால் இசைக்கு தந்தையார் உதவினார். பாடசாலையில் பல நாடகங்களில் நடித் துள்ளேன். மாங்கனி பெற்ற மங்கை, சம்பூர்ண இராமாயணம் போன்றவை அவற்றுட் சிலவாகும்.
தருமை ஆதீனம் காட்டிய கருணையினால் ஆசிரியரானேன். தருமை ஆதீனமும் நல்லை ஆதீனமும் எனக்குப் பட்டங்கள் வழங்கிக் கெளரவித்தன. கலாபூஷணம், சமாதான நீதிவான், ஜனாதிபதி விருது என்பன எனது பெற்றோரின் வளர்ப்பு முறையால் எனக்குக் கிடைத்தவை.
இலங்கைக்கு வந்த பின் நான் தொழில் பார்ப்பதை எனது கணவர் விரும்பவில்லை. ஆனால் எனது சமய, இலக்கியப் பணிகளுக்கு உறுதுணையாகவிருந்தார். எனது கணவர், நாயினாதீவு திரு விசாகப் பொருமான், கைலாசநாதக்குருக்கள் ஆகியோரையும் எனது குருமார்களாகக் குறிப்பிடலாம். துணிவு இருந்தால் தெய்வம் துணை நிற்கும். பெரியோர் நட்பு எனக்கு வழிகாட்டியது.
இந்து சமய கலாசார திணைக்களத்தின் அனுசரணையுடன் 200க்கு மேற்பட்ட கருத்தரங்குகளை நடாத்தியுள்ளேன். இலங்கை வானொலியில் பல சமய, இலக்கிய நிகழ்ச்சிகளைச் செய்துள்ளேன். நேர்முக வர்ணனையாளராகக் கடமையாற்றியுள்ளேன். கோயில் திருவிழாக்களில் நான் தான் முதலாவது பெண் நேர்முக வர்ணனை பூபாளராக இருப்பேன் என எண்ணுகின்றேன். உங்கள் சொத்து செல்வி சற்சொரூபவதி நாதன் எனக்குப் பல வழிகளில்
 
 
 

ஆலோசனை வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம், வவுனியா போன்ற இடங்களில் நான் போகாத கோயில்களே இல்லை எனலாம். சமயமும் இலக்கியமும் எனது இரு கண்கள் போன்றவை. இவ்வாறு பல பயன் மிக்க செய்திகளைக் கூறி தனது உரையை நிறைவு செய்தார். தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஒரு பழப் பொதி
வழங்கப்பட்டது. -
அறிவோர்ஒன்று கூடல் 22.12.2010 அறிவோர் ஒன்று கூடல் நிகழ்வில் மனவளக் கலை துணைப்
பேராசிரியர் திரு.சி.முருகானந்தவேல் அவர்கள் "அகமும் புறமும்" என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். ஆட்சிக்குழு உறுப்பினர் திருமதி சந்திரபவானி பரமசாமி அவர்கள் தலைமையேற்றார்.
சங்கத்தின் முன்னாள் தலைவர் அமரர் கா.பொ.இரத்தினம் அவர்களது மறைவுக்கு 2 நிமிடம் மெளனம் அனுஷ்டிக்கப்பட்டது. தலைவர் தனதுரையின் போது, நாங்கள் படித்த காலத்தில் ஆகம் என்ப தற்கு எதிர்ச்சொல் புறம் என்றும் சங்க காலத்தில் தமிழ்மக்கள் தமது வாழ்வியலை அகத்திணை புறத்திணை என வகுத்து வாழ்ந் தார்கள் எனவும் அறிந்து கொண்டோம். மேலும், வள்ளுவர் தனது நூலில் அகத்தூய்மை வாய்மையால் அமையும் என்றும் புறத்தூய்மை நீரால் அமையும் என்றும் கூறியுள்ளார்.
இன்றைய சூழ்நிலையில் எமது வாழ்வு ஒரு இயந்திர வாழ்வாகக் காணப்படுகிறது. எமது வாழ்வை ஒழுங்குபடுத்த அகமும் புறமும் தூய்மையாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது. இப்பெரு நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட மனவளக்கலை மன்றத்தின் துணைப் பேராசிரியர் எனது நண்பர். அவரது பேச்சு எமக்கு பயனுள்ளதாக அமையும் என எண்ணுகின்றேன். அவர் இப்பொழுது உரையாற்றுவார் என்று கூறி அமர்ந்தார்.
பேச்சாளர் தனது உரையைத் தொடங்கும்போது, இலங்கை மன வளக்கலை மன்றம் தமிழ்ச் சங்கத்தில் தான் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இன்று அம்மன்றத்தில் துணைப்பேராசிரி யராக வந்து உரையாற்றுவதையிட்டுப் பெருமையடைகிறேன். தன்னைப் பேசுமாறு அழைத்த தமிழ்ச் சங்கத்தினருக்கும் நன்றி கூறினார்.
வெளியே ஆராய்ந்தால் விஞ்ஞானம் உள்ளே ஆராய்ந்தால் மெய்ஞ்ஞானம், சிந்தனை தான் ஆரம்பம், சிந்தனையின் முடிவு ஞானம். உலகில் ஒருவரை மட்டும்தான் திருத்தலாம். அது நாமாகத் தான் இருக்கமுடியும். ஒரு அலை இயக்கம் தான் மனம். உயிர்ச் சக்தியின் எழுச்சிதான் எண்ணம். மனதை எமது ஆணைப்படி நடத்த முடியுமா? நான் யார்? என்ற கேள்வியை எழுப்பினால் இறைநிலை பற்றி அறியலாம். உலகிலுள்ள 650 கோடி மக்களும் ஓர் உயிரி லிருந்து தான் வந்தோம். முதலாவது நிலை இறைநிலை. தாயு மானவர் “அறிவேதான் தெய்வம்” என்பார். மனதை அடக்க நினைத் தால் அலையும்; அறிய நினைத்தால் அடங்கும். உள்ளத்தின் ஒழுங் கற்ற எண்ணம்தான் எதிரி. எமது மன அலைச் சுழலைக் கட்டுப் படுத்த வேண்டும். சாதாரணமாக மன அலைச் சுழல் 1440 வரை

Page 8
இருக்கும். இது Beeta எனப்படும். டெல்டா நிலைக்குச் சென்றால் “O தான் இருக்கும். மனவளக்கலையின் ஆரம்ப கர்த்தா வேதாந்திரி மகரிஷி அவர்களது மனஅலைச் சுழலைப் பரிசோதித்தவர் "O" நிலையில் இருந்ததை அவதானித்தார்கள்.
அகத் தாய்வுப் பயிற்சிகள் மூலம் மன எழுச்சிகளைக் கட்டுப்படுத் தலாம். சினம் தவிர்க்க வேண்டும். “வாழ்க வையகம்” என்னும் போது மேல் அண்ணத்திலுள்ள 2 சுரப்பிகளும் தொழிற்படும். காயகல்பப் பயிற்சி சித்தர்கள் வழி வந்தது. இப்பயிற்சிகளால் பாலரும் விருத்த ராவர் என்று சிவ வாக்கியர் பாடியுள்ளார். இந்தியாவில் தர்மபுரி என்னும் முழுக் கிராம மக்களும் இப்பயிற்சியைப் பயின்று பயன் பெறுகிறார்கள்.
உணவு உடல்மட்டும் பாயும். எண்ணங்கள் எங்கும் பாயும். எண்ணமே இயற்கையின் சிகரம். பாவப் பதிவு நீங்கும். உடலுக் ஐடடற்பயிற்சி மனதுக்கு தியானப் பயிற்சி. உயிருக்கு காயகல்பப் பயிற்சி. #உடல் பஞ்சபூதக் கூட்டு. ஆகாசம் என்ற விண்தான் உயிராக வந்தது. நாம் உண்னும் உணவை 7 தாதுக்களாக மாற்றுவது யார்? இறை நிலைதான். மற்றவர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருக்கிறோமா? அன்பும் கருணையும் இருந்தால் இறைவன். எண்ணங்களை நல்ல
சிந்தனையாக எழுப்பினால் புறவாழ்க்கை நல்லதாக அமையும்.
மனிதனது சிந்தனையாற்றலில் பூத்துக் குலுங்கும் மலர்களை மாலை யாகத் தொடுப்பது மனிதனே. சிந்தனையைச் செம்மைப்படுத்தினால் புறம் தூய்மையடையும், மனதில் தான் எண்ணமும் செயலும் உருவாகின்றது.
மகரிஷி மற்றவர்களை அறிஞர்களே, சிந்தனையாளர்களே என்று தான் விளிப்பார். “சொல்லால் மட்டும் நம்பாதே சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்” என்பார். “இயற்கையெனும் நந்தவனத்தில் பூத்த இறுதி மலர்தான் மனிதன்" ஏழு சக்கரங்களிலும் உயிர்ச்சக்தியை எழுப்பி துரியாதீத நிலைக்குச் செல்லவேண்டும். நான்மறை கற்றவர்கள் ஞானி யரல்ல. நான் மறையக் கற்பவர் தான் ஞானியர் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
சபையோர் குறிப்புரையின்போது தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்த பேராசிரியர் திருமதி முத்துலட்சுமி அவர்களும் நல்ல, பல கருத்துக்களைக் கூறினார். பிரார்த்தனை என்பது திருப்புலம்பலாக இருக்கவேண்டும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும், பிரார்த்தனை யின் உச்சத்தில் தியானம் வருகிறது. ஒவ்வொரு அணுவிலும் பதிவு உண்டு. நல்லது செய்தால் நல்லது நடக்கும். உயிரின் கசிவே மனம். புலன்களின் வழியாக உரசுகிறது. உயிரே மனமாகிறது. பிரார்த்தனை தற்காலிகமானது. தியானம் நிரந்தரமானது. வாழ்க வையகம் - வாழ்க வளமுடன் எனக் கூறி அன்றைய மாலைப் பொழுதை இனிமையாக்கி நிறைவு செய்தார்.
 

66 caisaoudikassorébo5 24.12.20)
: இலக்கியக்களம் நிகழ்வுக்கு சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் அவர்கள் தலைமை தாங்கினார். “பிறந்த மண்ணும் புகலிடமும்” - இலக்கிய உணர்வுகள் என்னும் பொருள் பற்றி லெமுருகபூபதி அவர்கள் உரையாற்றினார். : . . . . . . .
நீர்கொழும்பில் பிறந்த பேச்சாளர் ஆரம்பக்கல்வியை அங்கேயே கற்று சிலகாலம் யாழ்ப்பாணத்தில் பயின்று மீண்டும் நீர்கொழும்பில் கல்வியைத் தொடர்ந்து வீரசேகரி நிறுவனத்தில் பண்ணியாற்றி பின்னர் அவுஸ்திரேலியா நாட்டுக்குப் புலம்பெயர்ந்து பல இலக்கிய சமூகப் பணிகளை ஆற்றி வருகின்றார். சாகித்திய பரிசு பெற்ற ஒரு எழுத்தாளர்; சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் அமைப்பாளர் பொறுப்பை
ஏற்று இலங்கை வந்துள்ளார். அவரது பணிகள் வெற்றியடைய வாழ்த்தி
பேச்சாளரை உரையைத் தொடங்குமாறு வேண்டினார். முருகபூபதி அவர்கள் உரையாற்றும் போது, இன்றைய பேச்சு எனது அனுபவப் பதிவு என்று சொல்லலாம். கலந்துரையாடல் பாணியிலான தனது ஆரம்ப காலப் படிப்பு, பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரி விடுதியில் தங்கி கல்விகற்ற காலத்தில் ஏற்பட்ட வீட்டுச் சிந்தனையால் (Home sick) மீண்டும் நீர்கொழும்பில் கல்வியைத் தொடர்ந்த கதையைச் சுவாரஸ்யமாகக் கூறினார். உயர்கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு எழுத்துந் துறையிலி ஈடுபட்டேன். முற்போக்கு எழுந்தாளர் சங்கம் முகிழ்ந்த வேளையில் அவர்களுடன் நானும் ಅಣ್ಣ alsTallah,
கரி பந்திரிகை நிறுவனத்தில் இணைந்து பணியாற்றி துணை ஆசிரியர் நிலைக்கு வந்தேன். போர்க்கால சூழ் நிலையில் என் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் யாழ்ப்பாணம் சென்று செய்தி களைச் சேகரித்து வந்தேன். நான் பத்திரிகைத்துறையில் 10 வருடங்கள் வரையில் கடமையாற்றிய பின் புலம்பெயர்ந்து செல்லவேண்டிய நிலையேற்பட்டது.
பசுவும் கன்றும் பிரிந்தது போன்ற உணர்வு உண்டு. கிறிஸ்மஸ்தீவு அகதிகளுக்காகப் போராடினோம். அளவுக்கதிகமான பிரபல்யம் வந்ததால் நிம்மதியும் நித்திரையும் போய்விடும் என்பர்.
தமிழ்நாட்டிலுள்ள பல எழுத்தாளர்களுக்கு அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வதிவிட அனுமதி கிடைத்தும் மீண்டும் தமது நாட்டுக்குத் திரும்பிவிட்டனர். நான் எனக்குக் கிடைத்த வாய்ப்பை உதறித் தள்ளாமல் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகக் கொண்டு எனது குடும்பத்தாருடன் நிரந்தரமாக வசிக்கலானேன். புலம் பெயர்ந்து சென்றாலும் தாய் மண்ணை மறக்க முடியவில்லை.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும், மக்களுக்காக புலம் பெயர்ந்த நாடுகளிலுள்ள மக்களிடமிருந்து பல இலட்சம் ரூபாய்களைச் சேகரித்து வங்கியிலிட்டு அந்த வட்டியின் மூலம் வரும் பணத்தைக் கொண்டு உதவி வருகிறோம்.
கல்வியும் இலக்கியமும் தான் எமது சமுதாயத்தின் இரு கண்கள் என்பேன். இங்குள்ள எழுத்தாளர்களைத் தொடர்பு கொண்டு பெயர் களை எடுத்தேன். 89ஆம் ஆண்டு ‘சமாந்தரம்' என்ற புத்தகத்தை

Page 9
வெளியிட்டேன். அவுஸ்திரேலியாவில் அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு கல்வி நிலையத்தை ஆரம்பித்தேன். 1000 பிள்ளைகளுக்கு உதவி வருகிறோம். கொழும்புத் தமிழ்ச் சங்கமும் பாரிய பணிகளைச் செய்துள்ளனர்.
புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள இலக்கியவாதிகள் தமது வெளியீடு கள் மூலம் பெறும் பணத்தினை இழந்த மாணவர்களுக்கும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கும் வழங்க உதவி வருகின்றனர். ஒரு மாணவன் தனது அரங்கேற்றத்தின் மூலம் சேர்ந்த பணத்தினை எமது ஒன்றியத்துக்கு வழங்கி இம்மாணவர்களுக்கு உதவ முன் வந்தது எமது நெஞ்சை நெகிழச் செய்தது. பேச்சின் மத்தியில் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய மன்றம் ஆற்றிவரும் சேவைகளை ஒரு விபரணச் சித்திரமாகத் தொகுத்து வெளியிட்டு அதைக் காட்சிப் படுத்தியமை. பார்வையாளர்களின் மனங்களைத் தொட்டன.
அங்கு எப்போதாவது ஒரு ஒன்று கூடலில் தான் சந்திக் கிறோம். 50 மொழிகளில் வானொலி சேவையுண்டு. சிட்னியிலிருந்து 24 மணி வானொலி சேவையுண்டு. தலைமுறை இடைவெளி உண்டு. சாதி, சமய, மொழி பற்றி அதிக அக்கறையில்லை. மனித நேயம் மிக்கவர்கள். சிறுவர்களும் எமக்கு உதவுகின்றனர். "பறவைகள் என்ற நூலை தமிழ்ச் சங்கத்தில் வெளியிட்டு சுமார் 50 ஆயிரம் ருபா கொடுத்தார்.
இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம், வன்னி, திருமலை, மட்டக்களப்பு போன்ற இடங்களிலிருந்து சிறு வகுப்புகளிலிருந்து பல்கலைக்கழகம் வரை படிக்கும் மாணவர்களுக்கு உதவி வருகிறோம். இப்பணி தொடருகின்றது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு நிறைவடைந்த பின்னர் வன்னி சென்று மாணவர்களுக்கு உடை, உணவுப் பொதிகளை வழங்கவுள்ளோம். எல்லோரது உள்ளங்களையும் தொட்ட உணர்ச்சி மிகு உரையை ஆற்றியதைப் பலரும் பாராட்டினார்.
ஆரோக்கிய வாழ்வுக்கான கலந்துரையாடல்
26.12.2010 அன்று இடம்பெற்ற “ஆரோக்கிய விருத்தியில் கல்வியின் பங்கு” என்னும் மாதாந்த நிகழ்வுக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் தலைமையேற்றார். வழமைபோல வைத்திய கலாநிதிகள் சி.எஸ்.நச்சினார்க்கினியன், திருமதி விக்னவேணி செல்வநாதன், அகமது ஜின்னாஹற் ஷரிபுத்தீன், சி.அனுஷ்யந்தன், திரு.பி.இராசேந்திரா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை உளநல ஆலோசகர் திரு.கா.வைத்தீஸ்வரன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
அறிவோர்ஒன்று கடல்
29.12.2010 அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வில் “தமிழ்க் கல்வியின் இன்றைய நிலை பற்றி" அகில இலங்கை இந்துமாமன்ற கல்விச் செயலாளர் திரு.த.மனோகரன் அவர்கள் உரையாற்றினார். நிகழ்வுக்கு தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் தலைமை தாங்கினார். தலைவர் தனது உரையின் போது போர்த்துக்கேயர்,
 

ai
ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாடசாலைகள் அரசியல் சுதந்திரத்தின் பின் தேசிய மயமாக்கப்பட்டன. பல தமிழ்ப் பாடசாலைகள், தமிழ் ஆசிரியர் கலாசாலைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக தமிழ் மாணவர்களின் கல்வியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழ்ச் சங்கம் பெரும் முயற்சி எடுத்து தமிழ்ப் பாட நூல்களில் காணப்பட்ட பிழைகளைக் குறிப்பிட்டு கல்வி அமைச்சிற்கு தெரியப்படுத்தினோம். ஆனால், பாடப் புத்தகங் களில் இன்றும் பிழைகள் காணப்பட்டே வருகின்றன.
இது சம்பந்தமாக பல தகவல்களை திரு.மனோகரன் அவர்கள் சேகரித்து வைத்துள்ளார். இது பற்றிய ஆளுமை மிக்க அவர் தமிழ்க் கல்வியின் இன்றைய நிலை பற்றி உங்கள் முன் உரையாற்ற வருகிறார் எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்,
பேச்சாளர் திரு.த.மனோகரன் உரையாற்றுகையில் தமிழ் கல்வியின் இன்றைய நிலை பற்றி உரையாற்றுவதில் மகிழ்ச்சியடைகின்றேன். பேராசிரியர் அவர்கள் தமிழ் கல்வியின் உயர்வு பற்றி கூறினார். நான் அதன் இன்றைய தாழ்நிலை பற்றி கூற வந்துள்ளேன். இலவச
கல்வியை அறிமுகப்படுத்திய CWW.கன்னங்கராவின் கல்வித்
திட்டத்தால் தமிழ் மக்கள் குறிப்பாக மலையக மக்கள் பாதிக்கப் பட்டனர். இலங்கையில் 25 மாவட்டங்களில் அம்பாந்தோட்டை தவிர்ந்த 24 மாவட்டங்களிலும் தமிழ்ப் பாடசாலைகள் உண்டு. அவற்றின் நிலை பற்றி நாம் சிந்திப்பதில்லை. தகவல் தொழில்நுட்பம் முன் னேறியது என்கிறார்கள். தமிழ் மாணவர்களின் நிலை என்ன? தமிழ் மாணவர்கள் தேசிய கல்வி என்ற திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட வில்லை என்றே சொல்லலாம்.
கலாசாரம் பேணப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழ், முஸ்லீம் பாடசாலைகள் என வெவ்வேறாக பிரிக்கப்பட்டன. ஆனால் தமிழ் மாணவர்களின் விகிதசாரத்திற்கு ஏற்ற அதிபர்கள் நியமிக்கப்பட வில்லை. குருநாகலையில் உள்ள இந்து தமிழ்ப் பாடசாலைக்கு அதிபர் தரமற்ற சிங்கள ஆசிரியை நியமிக்கப்பட்டிருந்தார். அங்கு நடத்திய பயிலரங்கு பற்றிய செய்தியை பத்திரிகையில் எழுதினேன். பத்திரிகை செய்தியைப் பார்த்த ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் தலையிட்டதால் அதிபர் தரமுள்ள ஒருவர் தற்போது நியமிக்கப்பட் டுள்ளார். இந்து பிள்ளைகள் படிக்கும் தமிழ்ப் பாடசாலைகள் சிலவற்றில் இந்து சமயம் கற்பிக்கப்படுவதில்லை. களுத்துறை மாவட்டத்தில் A, B தரமுள்ள தமிழ்ப் பாடசாலை எதுவுமில்லை. மத்துகமவில் காணப் படும் தமிழ்ப் பாடசாலைகள் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப் படுகின்றன. தமிழ்ப் பாடசாலைகளுக்கு புத்தக விநியோகம் சரியாக நடைபெறுவதில்லை. தமிழ் அரசியல் வாதிகள் தமிழ் மாணவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும். தொழில் நுட்பக் கல்வி வசதி தமிழ்ப் பிரதேசங்கள் பலவற்றில் இல்லை. பதவி இருந்தால் தான் வேலை செய்யமுடியும் என்பதில்லை. மனம் இருந்தால் எதையும் சாதிக்கலாம். இவ்வாறு ஒவ்வொரு மாவட்டங்களி
லுமுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகள் பற்றி
விரிவான பல தகவல்களைக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

Page 10
இலக்கிபIக்களம் 36 31.12.2010 இன்றைய இலக்கியக்களம் நிகழ்வில் "தமிழ் சிறுகதை உலகில் பித்தனும் மெளனியும்" - ஓர் இலக்கிய சமூகவியல் ஒப்பாய்வு என்னும் பொருள் பற்றி தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு.ச.சசிதரன் அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்வுக்கு தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் செல்வி சற்சொருபவதி நாதன் அவர்கள் தலைமை தாங்கி பேசும்போது, சசிதரன் பற்றிய சிறிய அறிமுகத்தைச் செய்ததோடு இலக்கியத்தின் விரிசலில் ஒன்றே சிறுகதை என்றார். சிறுகதை ஒரு வாசகனை இழுத்துப் பிடிக்கக் கூடியதாயிருக்க வேண்டும். அத்துடன் அதை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டவேண்டும் அதுவே சிறந்த சிறுகதையாக இருக்க முடியும் என்று கூறி பேச்சாளரைப் பேச அழைத்தார்.
பேச்சாளர் உரையாற்றும் போது சிறுகதை, இலக்கியத்துக்கும் சமூகத்துக்குமிடையே ஒரு உறவுப்பாலமாக இருக்கவேண்டும். இருவரது சிறுகதைகளையும் ஒரு பரிசோதனையாக ஒப்பீட்டு முறையில் ஆராயும் புது முயற்சியே எனது உரையாகும் என்று ஆரம்பித்தார்.
காலனித்துவ ஆட்சியாளரின் பின் தமிழில் தோன்றிய புதிய இலக்கிய வடிவமே சிறுகதை. தமிழ்மொழி செய்யுள் மொழி எனப்படும். சங்க இலக்கியங்களில் கூட சிறுகதைப் படிமங்கள் காணப்படுகின்றன. 14ஆம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட சிறுகதை பற்றியே நான் பேசவுள்ளேன். விபுலானந்தர், பேராசிரியர் கைலாசபதி போன்றவர்கள் ஒப்பாய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளனர். மணிக் கொடி எழுத்தாளர் மெளனியும், இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பித்தனும் வித்தியாச மாள எழுத்தாளர்கள். அவர்களது சிறுகதைகள் செதுக்கப்பட்ட சிற்பம் போல அழகாக இருக்கும். சிறுகதை ஒரு பக்கத்திலிருந்து 100 பக்கங்கள் வரை எழுதப்படலாம். ஒரு கட்டுப்பாடு, முடிந்த முடிவு இல்லை. "வீட்டுக்குள் நின்று யன்னலால் பார்ப்பது சிறுகதை. வீதியில் நின்று வெளியே பார்ப்பது நாவல்" என்பார் இராஜாஜி.
புதுமைப்பித்தன் கதைகளில் ஏற்பட்ட ஆர்வ மிகுதியால் K.M.M.ஷா என்பவர் தனது பெயரைப் பித்தன் என்று மாற்றிக் கொண்டார். மறு மலர்ச்சிக் காலகட்டத்து ஏனைய எழுத்தாளர்கள் கவனிக்கப்பட்டது போல் பித்தனும் மெளனியும் கவனிக்கப்படவில்லை.
நத்தார் பண்டிகை, பாதிக் குழந்தை, அறுந்த கயிறு போன்ற சிறு கதைகளை பித்தன் எழுதியுள்ளார். இவற்றில் ஒரங்கட்டப்பட்ட பெண்கள் பற்றி தத்ருபமாகக் கூறுகிறார். “ஊர்வலம்" சிறுகதையில் அடிமட்டம் சார்ந்த மனிதர்கள் பற்றியும் எழுதியுள்ளார். முஸ்லிம்களின் வாழ் வியலைப் படம் பிடித்துக் காட்டுகிறார். இவர் 50களில் எழுதிய கதைகள் புதுவமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் நினைவூட்டுகின்றன, மெளனி யின் கதைகளில் சில பாத்திரங்கள் பேசாமலிருக்கும். மீட்டுப் பார்க்கும் போது அந்த மெளனம் வாசகரோடு பேசும். இவர் ஒரு கணித ஆசிரியர். தனித்து ஒதுங்கி வாழ்ந்தார். தன்னைப் பற்றியே என்றும் பேசுவார். மற்றவர்களுடன் சம்பாஷிப்பது மிகக் குறைவு.
ஒப்புமையை நோக்கும்போது இருவரும் புதுமைப் பித்தனால் பாதிக்கப்பட்டவர்கள். சொற்சிக்கனமுண்டு. ஓரங்கட்டப்பட்ட மனிதரைப்
= நம்பூச்சிங்க்சேய்தி:ல்
 
 

SS S L T LSLSL L LLL LSLLL LS S SLSSS L L L L S S
பற்றிப் பேசினர். குறைவாகவே எழுதியுள்ளனர். புதுமைப்பித்தன் என்ற மையக் கயிற்றின் இரு ஓரங்களிலும் தொங்குபவர்கள் மௌனியும், பித்தனும், பாத்திரப்படைப்பு. கதை மாந்தர், எழுத்து முறைமை எணர்னங்கள் என்பன ஒரே மாதிரியாக இருந்தன என்று கூறி உரையை நிறைவு செய்தார். பாராட்டப்பட வேண்டிய ஒரு புதிய
முயற்சி என பார்வையாளர் கூறினார்.
イエ。 ட21 முக்கிய அறிவித்தல்
மாற்றங்கள் செய்வது என பொது ச6 பட்டது. இது சம்பந்தமாக ஆலோச : அங்கத்தவர்கள் 2011.01.31 திக ஆதமிழ்ச் சங்க பொதுச் செய
-
S அறியத் தருமாறு ே
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ய் ப்பி
முன் னாள்த - கா.பொ.இரத்
பின் வளர்ச்சிக்காகவும் H :சங்கத்தின் உயர்வுக்காகவும்
தோ குப்பாார்:- கந்தசாமி மகா தேவா - வடிவமைப்பு:- உறுப்பான்மைக்குழுச் செயலாளர் செல்வி.சி. பத்தியஜோதி De eeu
(ဎွိစ္သူ႔ရြတ္တိ :தமிழ்ச்: செய்தி மட்i

Page 11
-
\
*Mడి.
stehuda
கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல.07, 57ஆவது ஒழுங்கை, கொழும்பு 6ெ.
உங்கள்
முதல் தெய்வம் - தா மிகவும் பெரிய சொத் மிகப் பெரிய வெகுமதி மிகவும் வேண்டாதது மிகவும் கொடிய நோ மிகவும் சுலபமானது மிகவும் கீழ்த்தரமான ஆபத்தை விளைவிப்ப செய்யக் கூடாதது - செய்ய வேண்டியது . நழுவவிடக் கூடாதது பிரியக் கூடாதது - ந மறக்கக் கூடாதது - I மன்னிக்கத் தெரிந்தவ மிக, மிக, மிக நல்ல இத்தகைய பணி நாட்கள் எல்ல
t
5
 

சிந்தனைக்கு
ய், தந்தை
து - கல்வி
தி - மன்னிப்பு
- வெறுப்பு
ப் - பேராசை
குற்றம் காணுதல்
விடயம் - பொறாமை
து - அதிகம் பேசுதல்
துரோகம்
உதவி
வாய்ப்பு
내
ன்றி
ன் - மனிதன்
நாள் -
புகளை கடைபிடித்தால் இனி வரும்
ாம் நல்ல நாளாக அமையும்.